கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1959-1960

Page 1
இலங்கைப் பல்கலைச்
స్ట్ర్యో
ইয়
 
 
 
 
 

கழகம், பேராதனே.
" పా -_

Page 2
மக்கள் வைத்திய சாலை கே. கே. எஸ். வீதி, சுன்னுகம்.
ஸ்தாபிதம்: 28-11-58 மக்கள் நன்மையையும், வசதியையும், சுகாதார
வாழ்க்கையையும் நோக்கமாகக் கொண்ட சிறந்த வைத்தியசாலை"இதுவே.
தினந்தோறும் திறக்கப்பட்டிருக்கும் நேரம் கால 7-30 தொடக்கம் மால 9 மணிவரை.
உயர்தரச் சிகிச்சை பெற உதவுமிடம் மக்கள் வைத்திய சாலை
g 69 6
we Possess all Latest Patent Medicines for - Sale
SERVICE AVAILABLE DAY AND NIGHT OUR MOTTO IS SERVICE
NM EO I CA IL COFF OCER A VVA Y S AVA I LA EBL E
PEOPLE'S DISPENSARY
CHUNNAKAMI
MANAGING PROP: MR. K. S. KAN DAH

திருகிருமதிசெல்வி
பற்களை வெண்மையாகவும்
'e வைத்துக்கொள்ள உதவிசெய்வது"
இன்றே வாங்கி உபயோகியுங்கள்
விநியோகஸ்தர்கள்
ஜெகஜோதி அன் கோ. குருதெனிய, - - கண்டி
홍
சந்திரா கிரைண்டிங் மில்ஸ்ே அரைப்பாளர்! fibu2UTUL UTGIT !!!
நவீன, சுகாதார முறைப்படி தயர்ரிக்கப்பட்ட உயர்ந்தரக மிளகாய்த்தூள், மசாலைத்தூள்வகைகளும், சிறந்த கோப்பி, அரிசி, கடலை, குரக்கன் மாவகைகளும், சில்லறையாகவும், மொத்தமாகவும் இங்கேவிற்கப்படும்.
,率一张一崇 மொத்த வியாபாரிகட்குத் தகுந்த கழிவு உண்டு
,张一柴一拳
சந்திரா கிரைண்டர்ஸ் 40. பேராதனை வீதி, கண்டி கிளை - 118, நியூ சென்றல் மார்க்கட், கண்டி

Page 3
'இறவாத புகழுடைய தமிழ் நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் "
— uT7gŠu Tfr
O O. O.
ஈழநாட்டில் தலைசிறந்த பாடநூல்கள் "கலைவாணி பிரசுரங்களே! பல்கலைக்கழகப் புத்தகங்களுக்கும் சகலவிதமான வாசிகசாலை பாடசாலைப் புத்தகங்க களுக்கும் பலவித சிறந்த அச்சுவேலைகளுக்கும் விஜயம் செய்யுங்கள்
கலை வாணி புத்தக நிலையம்
10, பிரதான வீதி, 130. திருக்கோணமலை வீதி,
யாழ்ப்பாணம். கண்டி தொலைபேசி 221 தந்தி: 'கலைவாணி" தொலைபேசி 7196
உங்கள் கலியாணம்
நெருங்கிவிட்டதா?
அப்படி யானுல்
சிறந்த நகைகள் செய்வதற்குத் தகுந்த இடம் யாழ்ரன் ஸ்ரோர்ஸ் Goumr. LuTUT SF fräussuo
103, கொழும்பு விதி, கண்டி,

lt Pays You to Visit
COTTON TEXTILES
Occasions
O O VHOESA. & REAL
O O
28, Trincomalie Street, KANDY.

Page 4
KAYAN STORES
GENERAL MERCHANTS KA N. D Y
கல்யாணி ஸ்டோர்ஸ் 55, பிரவுன் ரிக் வீதி, கண் டி.
CEYL ON ELECTRICAS
FOR ALL YOUR REQUIREMENT'S VISIT OUR
ve SHOW - R O OM FOR ALL YOUR PROBLEMS consULT US Jaffna Agents for G. E. C. REFRIGERATORS, Flood Master Water Pumps, J. A. P, Industrial Engines, Mozart Radios, Vino Spring beds etc. etc. Y WE UNDERTAKE ELECTRIC WIRING & PIPE WORK
OUR GREATEST REWARD IS YOUR ENTIRE SATISFACTION.
A - TRAL WILL CONVNCE YOU
சிலோன் எலெக் ரிக்கல் ஸ்
180, ஆஸ்பத்திரி வீதி, * யாழ்ப்பாணம் பெரியகடை.

Visit YARLTON STORES
for your household
ʻN'RSKʻTLRSS
AORNG SPECIALISTS
No. 1 ST CRCss streET Telephone No 7421 CO LO MEBO ,
ஈழத்து மங்கையரே ! உங்கள் புன்னகைக்குக்குச் சிறப்புத்தர உங்கள் அழகு பன்மடங்காக
எங்கள் பவுன் தங்க நகைகளையே அணியுங்கள்
ஸ்வர்ண மஹால் நகை மாளிகை ஈழத்து தலைநகரின் மிகப்பிரபல நகை வியாபாரிகள் 147, செட்டியார் தெரு, - கொழும்பு.
தொலைபேசி: 3090 sis; ; ORNAMENT

Page 5
காலத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும் போது கவர்ச்சி மிக்க உங்கள் படம்
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்
களிப்பை உண்டாக்கும் !
அத்தகைய படங்களை கல்லமுறையில் எடுக்க ஏற்ற இடம்
拳
பிறின்ஸ் ஸ்ரூடியோ கே. கே. எ ஸ். வீ தி. arwoo சுன்னுகம்.
பிளாஷ் லைட் போட்டோ ஆ சினிமா சிலைட்டுகள்
பிரேம் பண்ணுதல் டி புளொக் த கலர்போட்டோ ஆகியவற்றை விசேட திறமையுடன் செய்து கொடுப்போம்
யாழ்ரதம் ராக்ஸி பிடியுங்கள் ! மைலுக்கு 60 சதம் குறைந்த செலவில் வசதியான பிரயாணம் பணிவு, உற்சாகம், நேர்மையுள்ள சாரதிகள் நிதானமான சலார்-நீங்கள் கொடுப்பது மீட்டர்
காட்டுவதையே வாக்குவாதம் வேண்டாம்-மீட்டரைக் கவனியுங்கள் பிரயாணிகள் இன்சூர் செய்யப்பட்டுள்ளனர் முக்கியமான இடங்களில் பிடிக்கலாம்
டெலிபோன் இலக்கம் 690 யாழ் ரதம் லிமிடெட்,
கே. கே. எஸ். வீதி, · யாழ்ப்பாணம்

JOHNSTON'S
HADABUJG
AFE BBDROOM SPRAY KIILS MOSQUITOEs, FLIES
AND
OTHER INSECTS.
O
SAFE TO USE NEAR
CHILDREN-PETS-FOOD ( 14 oz. Oan Rs. 8-50)
O
SOE AGENTs.
M. P. GoMEZ & Co., Ltd, COLOM 23O
STAY IN KANDY
AT THE
(Castle 9Cotel
Spacious and well Ventilated Rooms Excellent Food-both Western and Eastern Dishes, Special Terns for Parties and Visitors from Abroad
ARTHUR 4, S-VA
MANA
TATAS FPFRE SENT Eau-de cologne
O - Perfunned , Coconut hair-oil O Perfumed Castor hair-oil O Shampoo O
LAL VANI's
A W A N is R O S., MAN ST, COLOM BO
For Reliable Dental Mechanism CONSULT
Chen Koong
13, Castle Hill Street KAND Y

Page 6
STERLINGS
f O r PARKER PENS
and
WRISTLETS
STERLING PRODUCTS Ltd. 99, Main Street,
COLOMBO.
வேண்டுமா? . .
- - - * விரும்பி வாருங்கள்! செக்கோ சிலேவக்கியாவிலிருந்து வந்திருக்கின்றன
- 53, Gai Sad, sir H CHIEFS e 9ò (1350) L5, si TOWELS மேலும் எல்லா இனமான புடவைகளும் கிடைக்கும்,
எ ங் கே?
LiՓTUS STՓԱՅE 157 & 159 Second Cross Street, COOMBO.
PHONE: 2285

இளங்கதிர்
பன்னிரண்டாவது ஆண்டு மலர்
ஆசிரியர்: (p. த8ளயசிங்கம்
தமிழ்ச் சங்கம் இலங்கைப் பல்கலைக் கழகம்
பேராதனை

Page 7

L ഞ - 1] ! பக்கம்.
3 . எமக்கு ? - ஆசிரியர் "طالطوائف 设料 புதுமைப் பித்தனுக்குப் பின்.
- சி. தில்லைநாதன் . 9 42. மலரும் மங்கையும் - பவானி . 19
யாழ்ப்பாணத்துச் சாசனங்கள்
- கா. இந்திரபாலா . 22 இ அணைத்த கை ! - உதயணன் . 30 சிறுகதைப் போட்டி - ஆசிரியர் . 34 in மனப்புண் சி. தில்லைநாதன் . 36
எப்படி இருக்கிறது, உலகம்?
- சுசீலா சின்னத்துரை . 46 அழைப்பிதழ் - அ. சண்முகதாஸ் . 56 பச்சைப் புதிது - அ. சண்முகதாஸ் . 63 வாசிற்றிக்கா? வாம்மா வா! - நளினி . 64 மனிதன் நீயே! - சுந்தரம் . 69 ᏛᎩ தமிழ்ச்சங்க ஆண்டறிக்கை - செயலாளர் . 70 "கொடு கொட்டி' ஆடல் - இராஜபாரதி . 73 சத்தி வழிபாடு
- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை . 78 நிலவைப் பிடித்திடுவேன் - நாதன் . 83 ரூ.494றநானூற்றில் ஒரு பாட்டு
O - வி. செல்வநாயகம், M. A. . 84 ᏛᏙᎩ இல்லறத்தின் நற்கனி - ஞானரெத்தினம் . 89
பண்தேய்த்த மொழியினுர் கொண்டேத்தும் கோவலன் tanpassos - கலாநிதி சு. வித்தியானந்தன் . 9.
தமிழ்த்தாய் மடியிற்றவழுந் தவமுனி
- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை . 109 \s /திராவிடத் தாய் - கலாநிதி அ. சதாசிவம் . 112
ஒரு வார்த்தை - ஆசிரியர் . II 7

Page 8
அறிஞர்தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிக் குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்! நறுமண இதழ்ப் பெண்ணேஉன் நலம்காணுர் ஞாலம் காணுர் - பாரதிதாசன்


Page 9
( !lis urīņuso “Foers o ffigios ) —

"(七Aeg757m한 「원) A事的는定常長史的 原 : 드中守, '(Aug&TTOT-5).5mm토長sinu일r역半ng守 ''는본 통改定常g '(Aus &T-7A『어司)長%그니1仁宮村~的 原 역&ga& ' (MyAgA(Ag&lrT&C) 편rm仁宮5on.JETra:事官學는 그 "동"fாழகு?七闽生运us@自唱等m)·身 SLLLL 0 LLLL KKSK0KYYCKKYS0KKKYYY SLLLLSYSY0KKKYLKK SL SJY YSLLLLSYYK KKYLLKKK SKYY SLLL YYSLLLSYKKKYYL L S KKKYJJi SLLL LLL LLLLL00J0S00YY L KYYYY Y YYKKK S0L LYYSLLYSKKK KLL K
; + \cos no ĶEJT
: soloogste sofs

Page 10
e MP/MPSM
... - سبز، ن. این شیراز، ن.ن. சங்கக காபபாளர்
பெருந் தலைவர்: பெரும் பொருளாளர்:  ീഖ്
துணைத் தலைவர்.
செயலாளர்:
இதழாசிரியர்:
பொருளாளர்:
உறுப்பினர்:
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கலாநிதி சு. வித்தியானந்தன்
மு.கணேசசுந்தரம்
க. சீவநாயகம்
மு. தளையசிங்கம்
சி. பாலசுப்பிரமணியம்
சொ. கணேசநாதன்
செல்வி நா.சிவசுப்பிரமணியம்
செல்வி ச. உலோட்டன்
 
 
 

மலர் 12. 1959-60.
இளங் கதிர்
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், பேராதன
விடியுமா எமக்கு? Q ஓர் எழுத்தாளர் மகாநாடு! முழுக்க முழுக்க
இs)ே ஈழத்தமிழ் எழுத்தாளர்களே முன் நின்று நடத்தி
வெற்றியும் காண முயலும் மகாநாடு!
எழுத்துத் துறையில் மட்டுமல்ல இக்காலத் தமிழ் இலக்கியத் தின் எந்தத் துறையிலும் அக்கறை கொண்ட ஈழத்தமிழர் ஒவ் வொருவரும் நம்பிக்கையோடு மூச்சுவிடக்கூடிய செய்தி!
எழுத்தாளர்கள் என்ருல் "இங்கும் இருக்கிருர்களா?’ என்ற கேள்வி அயல் நாட்டாரிடம் மட்டுமல்ல, எம்மிடமும் நிலவிவரும் இந்த வேளையில், இவ்வாண்டின் பிற்பகுதியில் நடைபெறப்போகும் இத்தகைய ஒரு நிகழ்ச்சி எமது இலக்கியம் சம்பந்தப்பட்ட பிரச் சனை தீருவதற்கு வழிகாணமட்டுமல்ல, எம்மைப்பற்றிக் கேவல மாக நினைத்துக் கொள்ளும் எல்லோருக்கும் எம்மைச் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவும் மிகவும் உதவும் என்பதை மறுக்க (pl. LIITgl.

Page 11
என்ருலும் ஒரு கேள்வி இன்னும் நிற்கத்தான் செய்கிறது.
ஈழத்து எழுத்தாளர்களுக்கும் விடிவு என்பது வந்துவிடுமா?
ஒன்றல்ல, ஒன்பது மகாநாடுகள் நடத்தித் தீர்த்தாலுங்கூட அந்தக் கேள்வி தேயாமல், குறுகாமல் நீடித்து நிற்கும் என்பதை மறுக்க எந்தவிதப் பலமான ஆதாரமும் இல்லை என்று ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.
காரணம் அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதில் இன்னுெரு கேள்வியாக முளைத்து விடுவதே!
இலக்கிய சேவை என்பதையே முக்கிய நோக்கமாக வைத்துக் கொண்டு பலமான மூலதன அத்திவாரத்தில் எழுந்து வெற்றி யோடு இயங்கும் தமிழ்ச் சஞ்சிகை ஏதாவது ஈழத்திலும் உண்டா ?
வெகு சமீபத்தில் ஆரம்பித்து ஆண்டு விழாவையும் கொண் டாடிய ஓரிரு இதழ்கள் ஈழத்தில் இன்று வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனல், இலக்கிய சேவையையே நோக்கமாகக் கொண்டு இயங்கினலும், போதிய மூலதனம்பெற்ற முயற்சிகளாய் அவை இல்லை. வெறும் இளம் உள்ளங்களின் உணர்ச்சிகளையும் உற்சாகத்தையும் மட்டுமே மூலதனமாக வைத்தெழுந்து, போதிய பணமில்லாத காரணத்தால் இடையில் படுத்துவிட்ட எத்தனை எத் தனையோ இதழ்கள் இதற்குமுன் வெளிவந்திருக்கின்றன. அவற் றின் சரித்திரத்தை வைத்துக்கொண்டு ஆராயும்போது, இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் இந்த இரண்டொரு இதழ்களும் நீண்டகாலம் நீடித்து நிற்குமென்ற நம்பிக்கையை ஊட்டுவனவாய் இல்லை. அப்படி நீடித்து நின்ருலும் அது ஏற்கனவே உதவிகோரி நிற்கும் எழுத்தாளர்களினதும் ஓரிரு பரந்த மனப்பான்மை கொண்ட இலக்கியப் பிரியர்களினதும் உதவியின் செலவில் நிற் குமே ஒழிய, ஆதரவு தேடி நிற்கும் அந்த எழுத்தாளர்களுக்குப் பெருமளவில் உதவுவதாய் இருக்கமுடியாது.
ஆக, ஈழத்தில் அப்படி ஒரு இதழும் இல்லை என்றுதான் நாம் கொள்ளவேண்டும்.
அப்படி நாம் கூறும்போது எதிர்ப்பக்கமிருந்து எழும் கேள்வி களும் நமக்குக் கேட்கத்தான் செய்கின்றன.

5
'தரமான இலக்கிய இதழுக்குமுன், தரமான எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கிருர்களா ?
*எழுத்தாளர்கள் இல்லாமல் நமக்கெதற்கு இதழ் க ள் வேண்டும்?"
ஆனல் -
தரம் என்பது எந்தத் தொழிலிலும் சும்மா வந்துவிடுவதில்லை. எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடும்போது அந்தத் தொழிலைத் தன் சொந்தத் தொழிலாக மட்டுமல்லாமல் தன் ஒரேயொரு முக்கிய தொழிலாகவும் கருதும்போதுதான் உண்மையான தரம் என்ப தைக் காணமுடிகிறது. அந்த நிலையில் தரமான படைப்புகளைப் படைக்கக்கூடிய தரமான எழுத்தாளர்கள் இருக்கிருர்களா என்ற கேள்வியை முந்திக்கொண்டு அவற்றை உருவாக்கக்கூடிய தரமான சூழ்நிலையும் வசதிகளும் இருக்கின்றனவா நம்மிடையே என்ற இன்னெரு கேள்வி எழுந்து விடுகிறது.
எழுத்துத் துறையை, அதாவது இலக்கியம் படைப்பதை மட் டுமே, நம்பி வாழும் எழுத்தாளர்கள் எம்மிடையே இருக்கிருர் களா? அதாவது அப்படி வாழக்கூடிய வசதி இருக்கிறதா?
ஆயிரம் பதினுயிரம் என்று அள்ளிக்கொட்டும் ஒரு கலைமகளோ ஆனந்த விகடனே எம்மிடம் இருக்கிறதா? படைப்புக்கேற்ற பலன்தான் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து படைக்கத் தூண் டக்கூடிய பணத்தையாவது கொடுக்கக்கூடிய பத்திரிகைகளாவது எம்மிடையே இருக்கின்றனவா?
அதுதான் போகட்டும். மாதத்திற்கு நூற்றுக்கணக்கான இலக்கியப் படைப்புக்களை வெளியிடக்கூடிய வசதி தமிழ்நாட்டில் இருப்பதுபோல் எம்மிடையே இல்லாவிட்டாலும் திருப்திப்படக் கூடிய அளவுக்காவது எம்மிடையே உண்டா?
பதில் முந்திய கேள்விக்குக் கிடைத்தது போலவேதான்.
அப்படி ஒன்றும் எம்மிடம் இல்லை!
சொல்லப்போனல் இப்படித்தான் சொல்லவேண்டும். அரசி
சியல் செய்திகளுக்கும் அன்ருடம் நிகழும் வேறு சில்லறை விஷயங் களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவரும் புதினத்தாள்களின் தய

Page 12
6
வில்தான் ஈழத் தமிழர்களின் இலக்கிய வளர்ச்சியும் இங்குள்ள எழுத்தாளர்களின் முன்னேற்றமும் தொங்கிக் கொண்டிருக் கின்றன.
அடுத்தவரின் காலைப் பற்றிக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் நிலை பரிதாபகரமானது.
ஆனல், அதைவிடப் பரிதாபகரமானது ஏற்கனவே தொங்கிக் கொண்டிருப்பவரின் காலைப் பற்றிக்கொண்டு இன்னெருவர் தொங் குவது.
இலக்கியமல்லாத சாதாரண புதினங்களின் தயவில் வாழும் செய்தித் தாள்களின் காலைப் பற்றிக்கொண்டு தொங்கும் ஈழத்து எழுத்தாளர்களின் முன்னேற்றமும் இலக்கியமும் அப்படி ஒரு படு பயங்கரமான நிலையில்தான் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அதனுல்தான் நாம் சொல்லுகின்ருேம் எம் நாட்டிலும் இலக் கிய இதழ் எழவேண்டுமென்று.
ஏற்கனவே தமிழ் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்காக வெளிவந்து கொண்டிருக்கின்றனவே! இன்னும் நாமும் ஏன் வெளியிட வேண் டும்? - இடையில் அப்படிக் கேட்போரும் உண்டு.
ஆணுல் ஒன்று -
அவர்களின் படைப்புகள், இதழ்கள் எல்லாம் செலவாகுவ தற்கு முக்கிய சந்தையாக எம்நாடு இருப்பதுபோல் எம்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் செலவாகுவதற்கு அங்கே அவை ஏதும் சந்தை அமைத்துத் தருகின்றனவா?
சரி சமனுகத்தான் வெண்டாம், சராசரியாகவாவது தங்கள் நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுபோல் எம் நாட்டு எழுத் தாளர்களையும் அவை ஊக்குவிக்கின்றனவா?
அல்ல, அப்படி எதிர்பார்ப்பதுதான் சரியா?
இப்படி எல்லாம் கேட்டுவிட்டதால் அவற்றுக்கு எதிராக நாம் துவேஷம் வளர்க்க முனைகிருேம் என்பதல்லக் கருத்து.
தமிழ் நாட்டிலிருந்தல்ல, வேறு எந்த நாட்டிலிருந்தென்றலும் தரமான இலக்கியங்கள் எமக்கு வரவேண்டும் என்பதுதான் எமது நோக்கம். ஆனல், அத்துடன் எம் நோக்கம் குறுகிவிடக் கூடாது.

7
அடுத்த வீட்டுக் குழந்தை அழகாக இருந்தால் அதை எம்மால் பார்த்து மகிழத்தான் முடியும். கூடிப் போனல் இரண்டொரு தரம் தொட்டுத் தூக்கியும் பார்க்கலாம். ஆனல், அதற்கு உரிமை HTராட்ட முடியுமா? அது கொடுக்கும் இன்பம். செல்வம் எல்லா விற்றையும் நாமே மொத்தமாக அனுபவிக்க முடியுமா?
முடியாது!
சொந்தம் பாராட்டச் சொந்தமாக ஒரு பிள்ளை பெற்றுத் சி"ன் ஆகவேண்டும் அப்படி நினைப்பது அடுத்த வீட்டுக் குழந் தைக்கு எதிராகத் துவேஷம் வளர்ப்பதாகவோ சுயநலமாகவோ இருக்காது.
அப்படித்தான் இலக்கிய இதழ் பிரச்சனையும்.
ஆனல், யார் அப்படிச் செய்வது?
எந்தத் தொழிலுக்கும் பணம் வேண்டும். இலக்கிய இதழுக் கும் அப்படித்தான். பணம் பணம் என்று பார்த்துப்பாராமல் கொட்டத் தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் உள் நாட்டு இதழொன்றைத் தூக்கிவைத்து "இதுக்குத்தான முப்பது சிதம்?' என்று பரிகசிக்கும் எம் வாசகர்களைத் திருப்திப்படுத்துவது மல்லாமல், அயல் நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டுவதோடு, எம் நாட்டு எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, அவர்களின் நிலையை வளம்படுத்தவும் முடியும்
அப்படிச் செய்ய எம்மால் முடியுமா?
உண்மைதான், பார்த்துப் பாராமல் பணத்தை அள்ளிக் கொட்ட எம்மிடையே ஒரு அழகப்பச்செட்டியாரோ ஓர் ஆனந்த விகடன் வாசனே இல்லை என்பது. ஆனல் ஐந்து குமுதங்களையும்

Page 13
8
ஐந்து ஆனந்த விகடன்களையும் ஒரே சமயத்தில் வெளியிடக்கூடிய மூலதனம் எம்மவர் சிலரிடம் அணுவசியமாக முடங்கிக் கிடக்கிறது என்பதும் உண்மையேதான்.
அவர்களைத்தான் கேட்கிருேம், திறந்தால் ஒரு சுருட்டுக்கடை அ ல் லது ஒரு பிடவைக்கடை என்றுதான் இருக்கவேண்டுமா வென்று. அழகிய இலக்கிய இதழ்கள் வெளியிடலாமே! அதைத் தொடர்ந்து பெரும் பெரும் பதிப்பகங்கள் நடத்தலாமே! உங்க ளுக்கு எழுதத் தெரியவேண்டும் என்று இல்லை. பணம் போட்டு விட்டாலே போதும். எழுதிக் குவிக்க, எடுத்து நடத்த, எட்டுத் திக்கும் வெற்றிகொட்டச் செய்ய எழுத்தாளர்கள் இருக்கிறர்கள்! எழுத்தாளர்கள் இருக்கிறர்கள்! "
இது கேட்குமா அவர்களுக்கு ?
இனியாவது எமக்கு விடியுமா?
 

புதுமைப்பித்தனுக்குப் பின் . . . ! - சி. தில்லைநாதன் -
ந்ெத நாட்டிலும் இலக்கியம் காலத்தின் சமுதாய பொருளாதாரச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடியே உருவெடுக்கு மென்று இலக்கிய ஆராய்ச்சியாளர் கூறுவர். சமுதாய, பொரு ளாதாரத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் இலக்கியத்தின் போக்கிலும் மாற்றங்களை எற்படுத்தும். காலத்தின் தேவைக் கேற்பவே பொறுப்புள்ள கலைஞன் இலக்கியங்களைப் படைப்ப துண்டு. ஆம்.இவர் பழைய பாதை யிலேயே சுவடு மாரு மல் செல்லப்பார்ப்பார்கள். ஆனல் விழிப்புணர்ச்சியும், புதுமையில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட கலைஞர்கள் இலக்கியத்தின் போக்கை மாற்றியமைக்கத் தயங்க மாட்டார்கள். அப்படிப் பழைய பாதையைவிட்டுப் புதிய பாதையில் துணிவுடன் நடைபோட அசுரத்துணிவும் திறமையும் அவசிய மாகும். அப்படியான துணிவோடும் திறமையோடும் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய வளர்ச்சித் திருப்பங்களை ஏற்படுத்திய வர்களுள்ளே புதுமைப் பித்தனும் ஒருவர்.
புதுமைப்பித்தன் சொந்தமாக இருநூறு சிறுகதைகள் வரை எழுதினர், நூறு கதைகள்வரை மொழிபெயர்த்தார். அவற்றேடு விமரிசனங்கள், கட்டுரைகள், கவிதைகள், ஒற்றையங்க நாடகங் கள், திரைக்கதை வசனங்கள், முடிவுறமல் நிற்கும் சில நாவல்கள் நெடுங்கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறர். தமிழ் வசன நடையிலே ஒருபுதிய திருப்பத்தை ஏற்படுத்தினர். ஆனல் அவர் புகழ்பெறுவதற்கும். புதிய ஒரு பரம்பரையின் வழிகாட்டியென மதிக்கப்படுவதற்கும் காரணமாயிருந்தவை அவரது சிறுகதைகளே.
தமிழ்ச்சிறு கதை வரலாற்றினை இங்கே நோக்குவது அவசியம். என்று மனிதன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றனே அன்றே அடுத்து என்ன நடக்குமென்பதை நினைக்கலானன். அதுவே கதைகேட்கும் *ஆர்வம் வளரக் காரணமாயிற்று. இராமாயண மகாபாரதங்களில் கிளைக்கதைகள் உண்டு. ஏசுநாதர் நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், பாட்டி கதைகள் வேதாளக்கதைகள் எல்லாம்

Page 14
O
இருந்தன. ஆனல் இன்றைய சிறுகதைகளுக்கும் அவற்றிற்கும் தொடர்பு இல்லை. கதை வேறு சிறுகதை வேறு எனலாம். கதை இலக்கியத்தின் ஒரு தனித்துறையல்ல. பரமாந்தகுரு கதை களும் விக்கிரமாதித்தன் கதைகளும் மேலே சொல்லப்பட்ட மற்றக் கதைகளும் பொய்யை அடிப்படையாகக் கொண்டு இன்பமரகப் பொழுதுபோக்கப் பயனுகும் வண்ணம் எழுதப்பட்டவை. சிறுகதை என்பது இலக்கியத்தில் ஒரு தனித்துறை”கோவை, உலா, அந்தாதி, பரணி, காவல் போன்றவை எவ்வாறு தனித்துறைகளோ அவ்வாறே சிறுகதையும் இலக்கியத்திலே ஒரு தனித் துறை.
*மேடுைகள் பலவற்றில் நாவல், நாடகம் ஆகியவற்றின் பின்னர்தான் சிறுகதை உருவம் பெற்றது. ஆனல் ஆங்கில மொழித் தொடர்பின் பயனல் நாம் எடுத்த எடுப்பிலேயே சிறுகதைக்குத் தாவி விட்டோம். எமது ஆரம்பச் சிறுகதைகள் சில சொந்தக்கற்பனைகளாகவும், அனேகமானவை பிற மொழிக் கதைகளைச் சிதைத்து உருமாற்றி எழுதப்பட்டவையாகவும், மொழிபெயர்க்கப்பட்டவையாகவும் இருந்தன.
ஆங்கில இலக்கியத்தில் 18-ம் 19-ம் நூற்றண்டுகளில் நாவல் சிறுகதைத் துறைகள் வேகமாக வளர்ந்தன. அங்கும் ஆரம்ப காலக் கதைகள் அனேகமாகக் காதல், காம, கற்பனைக் கதைகளாகவே இருந்தன. இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலம் படித்த தமிழர்களிடையே இந்நவீன இலக்கியத்தைத் தமிழிலே கொண்டுவரவேண்டுமென்ற ஆவல் பிறந்தது. ஆரம்ப கட்டத்தில்- தமிழ் நாட்டிலும் காதல், கற்பூனைக் கதைகள்ே எழுதப்பட்டன. தமிழ் மரபை ஒட்டி வ. வெ. சு. ஐயர், பாரதி ஆகியோர் கதைகள் எழுதினர்கள். பாரதியார் ஆங்கில பிரெஞ்சுச் சிறுகதைகளையும் தாகூரின் சிறுகதைகளையும் அறிந்து கதைகள் எழுதிய போதிலும், தமது கதைகளில் உருவத்தை வழிந்தோட விட்டுவிடுகிறர். வ, வெ. சு. ஐயரைத் தமிழ்ச்சிறு கதைத் தந்தை என்பது வழக்கமாகிவிட்டது.
இதன்பின்னர் தமிழ்ச் சிறு கதை வளர்ந்த துறைகளை மூன்ருக வகுப்பர். முதலாவது விதவைகளை உயர்த்துவதற்கும்

ll
பழமையை அறிவதற்கும், தீயபழக்க வழக்கங்களை ஒழிப்பதற்கும் அ. மாதவையா, டாக்டர். உ. வே. சாமிநாதையர், இராஜாஜி போன்றவர்களால் எழுதப்பட்ட கதைகள். அப்படியான கதைகள் எழுதுபவர்கள் பலர் இன்றும் இருக்கிறர்கள். அடுத்தபடியாகப் பத்திரிகைகளுக்காக எழுதப்படும் கதைகளைச் சொல்லலாம் சாதாரணமாக மற்றவர்கள் ஏற்கெனவே கையாண்ட விஷயங் களைப் படிக்கக்கூடிய நடையிலே, வாசகர்களை நினைவில் வைத்துக்கொண்டு எழுதப்படுபவை இக்கதைகள். பிரச்சினைகளை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் இக் கதாசிரியர்கள் மனித மனத்தின் குறைபாட்டைப் புரிந்துகொண்டு; அவர்களை ஈர்க்கும் விதமாகக் கதைகள் சொல்லும் திறமைபடைத்தவர்கள். கல்கியை இத்துறையில் வழிகாட்டியெனலாம். இன்று எராளம் வாசகர்கள் ஆஹா என்று பாராட் டும் விதமாகப் பத்திரிகைகளுக்குக் கதையெழுதுபவர்கள் ஏராளம்பேர் இருக்கிறர்கள். அவர் களுடைய கதைகளிலும் சில இலக்கியத்தகுதி பெற்ற சிறுகதை களாய் அமைந்துவிடுகின்றன என்பதையும் நாம் ஏற்றேயாக வேண்டும்.
மூன்ருவதாக இலுக்கிப் பிரக்ஞையுள்ள சிறு கதைகளைக் குறிப்பிடலாம், சிறுகதைத் துறையில் "மணிக்கொடிப் பரம்பரை ஆரம்பித்த பரீட்சைகளே இப்படியான சிறுகதைகள் தோன்ற வழிவகுத்தன. இந்தப் பரீட்சைகளைத் தீவிரமாக நடாத்தியவர்கள் புதுமைப்பித்தன், கு. ப. ரா. மெளனி, லா, சா, ரா, பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியம் ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தத்த மக்கென ஒரு தனி நடையை அமைத்துக்கொண்டு பல கோணங்களிலிருந்து சிறுகதைகள் புனைய ஆரம்பித்தனர்.
இவர்களுக்குள் புதுமைப்பித்தன் அனைவருக்கும் தலையாய ஒரு இடம் பெற்றர். தனக்கே உரித்தான தனி நடையிலே, தாவித்தாவிச் செல்லும் புதிய நடையிலே, வார்த்தைகளின் பொருளனைத்தும் வேகம் பெறத்தக்க ஒரு நடையிலே அவர் எழுதினர். தனது சிறுகதைகளிலே நடை முறைச் சம்பவங் களையும், அன்றுடம் தெருவிலும் வீட்டிலும் காணக் கூடிய 蠶器茜器 சித்திரித்தார். சாதாரணமாக மனிதரிடையேயுள்ளஆசாபாசங்களையும், எண்ண எழுச்சிகளையும்,

Page 15
12 குறை நிறைகளையும் துணிச்சலுடன் தமிழிலே முதல்-முதல்
&Wkwkwwwwa Mornis.
எழுதமுற்பட்ட எழுத்தாளஞன புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியிலே ஒரு புதிய பாதைக்கு அடிகோலியவர்,
அவரது நடையின் வேகிமு பாத்திடவேதமுமே அவரது எழுத்தை உயர்ந்த இலக்கிய உருவமாக்கித் தமிழ் இலக்கியத்திலே உயர்ந்த நிலை பெற்றுக் கொடுத்தன, புதுமைப்பித்தனுக்குப் பின்பே தமிழ் வசனத்திற்கு ஒரு தனிமதிப்பு ஏற்பட்டது. அவரது கதைகளைச் சிறந்தவையாக்கியது அவரது கற்பனை வள ιο மட்டுமல்ல; வ8 Sliban யூழ்தன். மற்றவர்கள் இ லகு வில் சொல்லமுடியாத விடயங்களை இழுத்துவந்து சில சொற்களில் நிறுத்திக் காட்டும் திறமை அவருக்கு இருந்தது, "இருபதாம் நூற்றண்டில் தமிழ்க் கவிதைக் குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவன் பாரதி; தமிழ் வசனத்திற்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவ்ர் புதுமைப்பித்தன் " என்று திரு அழகிரி சாமி சொல்வதிலிருந்து புதுமைப்பித்தனின் வசனநடைச் சிறப்பு விளங்கும், புதுமைப்பித்தனே, "கருத்தின் வேகத்தை யே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச் செல்லும் நடை ஒன்றை அமைத்துக்கொண்டேன்” என்று தனது வ ச ன நடையைப் பற்றிச் சொல்லியிருக்கிறர்.
புதுமைப்பித்தனது உயிருள் எந்ேதித் திருஷ்டி க்கு 'வாடாமல்லிகை" என்ற கதையிலே சரசுவைக் காட்டியிருக்கும் விதமும் "பொன் னகரத்தில் அம்மாளுவைக் காட்டியிருக்கும் விதமும் போதிய உதாரணங்களாகும். அவரது பாத்திரங்களில் அனேகமா ன வை நெஞ்சைவிட்டகலமாட்டா, படிப்போர் இதயங்கள் பாத்திரங்களோடு ஒன்றித் துடி க்கும் படியாக, உலகின் வறுமையையும் கசப்பையும் சுருக்கமான வார்த்தைகளில்
whivampynxrowsilk-whism.Marw twy
எடுத்துக்கூறிவிடும் திறமை இவருக்கு நிரம்ப உண்டு.
* பொன்னகரம்* என்ற கதையின் இறுதிவசனங்களில் எவ்வளவோ சுருக்கமாக அம்மாளுவின் பரிதாப நிலையை எம் நெஞ்சங்கள்ல் குத்தி நிறுத்திவிடுகிறர்.
"அவனுக்குப் பால்கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக்

3.
கூலிபோட இன்னும் இரண்டு காட்கள் இருக்கிறது. வீட்டில் காசேது ? ܫ
அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிருள். *கும் மிருட்டு. பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனல் அது மேகத்தில் மறைந்து கொண்டால், முனிசிப்பாலிடி என்ன செய்யமுடியும் ?
எப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது; திரும்பி வருகிருள்.
சந்தின் பக்கத்தில் ஒருவன்,-அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் "கண்" வைத்திருந்தவன்,
இருவரும் இருளில் மறைகிறர்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால்கஞ்சி வார்க்கத்தான் !
என்னமோ கற்பு, கற்பு, என்று கதைக்கிறீர்களே? இதுதான், ஐயா, பொன்னகரம் !" கணவன்மேல் அன்புகுன்ருத ஒருபெண் கற்பைக் காசுக்கு விற்றுக் கணவனுக்குக் கஞ்சிவார்க்கும் நிகழ்ச்சியையும் சமூகத்தின் குறைபாட்டையும் கேலியாக; ஆனல் நம்மை உறுத்தும் வகையில் சொல்லிவிடுகிறர்.
மெளனியும் லா. சா. ராவும் தம்தமக்குரிய தனி நடைகளைக் கையாண்டிருப்பது உண்மையே. இருவரும் கதை சொல்லும் போக்கு மிக விசித்திரமானது; பொதுமக்களுக்கு இலகுவில் புரியாததுங்கூட, இவர்களது இலக்கிய இரசிகர்கள் மட்டுமே திரும்பத்திரும்ப் அவர்களுடைய எழுத்துக்களைப் படித்துப்புரிந்து கொள்ள முயன்று, பாராட்டுகிறர்கள்,
அ. கி. கோபாலன் சொல்வதுபோல மனிதஉள்ளத்தோடு நெருங்கிய உறவுகொண்டாடி, வாழ்க்கையில் தாம் கண்ட அனுபவங்களை உன்னத சித்திரமாகத் தம்கதைகளில் புனைந்தவர் புதுமைப்பித்தன். பொழுதுபோக்கிற்காக அல்லாமல் மனிதப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டே கதைகள் எழுதினர். இருட்டிலே இருந்த சமூகத்தின் ஊழல்களைக் கீறிப் பிளந்து காட்டினர். சமூகத்ை வித்தரமான கேள்விக் குறிகளை
அடுத்தினுர்.
'" : -- "*"

Page 16
4.
ஆனல் புதுமைப்பித்தனின் வாரிசெனப்படும் திரு. ரகுநாதன் சொல்வதுபோலப் புதுமைப்பித்தன் மக்கள்படும் அவஸ்தையைக் கண்டு சீறியெழுந்து முகஞ்சுழித்தாரே யன்றிக் கொடுமையையும் கசப்பையும் போக்க வழிபார்க்கவில்லை. கொடுமைகளைக் காட்டி * கதைத்துவிட்டு விலகிநிற்கமுனைந்தார். மாக்ஸிம் கார்க்கியைப்போல மக்களோடு ஒட்டி நின்று இல்க்கியங்கள் சிருஷ்டித்துச் சிறந்த வழிகாட்டியாகத் திகழவில்லை. படம் பிடித்துக் காட்டும் முறைக்கும் சாத்தியத்திற்கும் இடைப்பட்ட கிலையிலே படைக்கப் பட்டவை அவரது சிறுகதைகள். யதார்த்துவத்தை எதிர்கால நம்பிக்கை நோக்கி அவர் திருப்பிவிடவில்லை, வாழ்க்கையின் அன்ருட வேதனைக்குரலை மறந்து சிரிப்பதற்குக் கதை சொன்னரே பன்றி வேதனையைத் தீர்க்கும் மார்க்கத்தைக் காட்ட முயலவில்லை. அவரது எழுத்துக்கள் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டின; எள்ளி நகையாடின. ஆனல் உயர்ந்த இலட்சியத்தை நோக்கிச் சமூகத்தை இழுத்துச் செல்லவில்லை; உந்தித்தள்ளவில்லை. ...
ஒன்றுமட்டும் நாம் துணிவாகக்கூறலாம். புதுமைப்பித்த ணுக்குப் பின் தோன்றிய பரந்த எழுத்தாளர் வரிசையிலே புதுமைப்பித்தனது ஈர்த்துச் செல்லும் வேகத்தில் எவரும் சிறுகதை எழுதமுனையவில்லை; எழுதமுடியவில்லை. ஆனல் புதுமைப்பித்தனுக்குப்பின் தோன்றிய ஒரு இளைஞர் பரம்பரை
醬 மனிதவர்க்கத்துடன் ஒன்றி, நின்று yQui களது முற்போக்கான எழுச்சிகளையும் படம்பிடித்துக்காட்டும் விதமாக எழுதினர்கள் என்பதையும் எழுதுகிறர்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இந்தப் பரம்பரையின் சிறுகதைகள் பெரும்பாலும் யதார்த்த கிலுணுய நோக்கியவையே. வாழ்க்கையிலே கண்டன வற்றையும், கண்டமுறையிலே சாத்திய மானவற்றையும், அநீதியைக்கண்டு மனிதவினம் கொதித்தெழுவதையும், நீதியை நிலைநாட்ட மக்கள் போராடமுயலும் திறனையும் மனேதர்மத்துடன் சித் திரிக்க இவர்கள் முயன்றுள்ளனர் என்று கூறலாம். இந்தப் பரம்பரையில் தாய்த்தமிழ்நாட்டில் சிதம்பர ரகுநரத ன், சுந்தர ፪" to ቻff if,

5
வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், கிருஷ்ணன் நம்பி, கு. அழகிரிசாமி, ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
இந்த இடத்தில் ஈழத்தமிழகத்தின் சிறுகதை வரலாற்றைப் பற்றியும் குறிப்பிடவேண்டியது அலுசியமாகும். முதுமைப்பித்த னுக்குமுன் ஈழத்திலே வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தின் ஆகியோர் கற்பனை , காதல் அடிப் படையிலே சிறுகதைகளை எழுதினர்கள். புதுமைப்பித்தனின் இறுதிக்கால கட்டத்தில் மறுமலர்ச்சிப் பத்திரிகை மூலம் தி. ச. வரதராசன், அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, கனக செந்திநாதன் ஆகியோரைக்கொண்ட புதியபரம்பரை ஒன்று உதித்தது. பொரு ளாதார எற்றத் தாழ்வுகள், சாதிசமயப் பிரச்சினைகள், காதல் ஆகியன இவர்களது கதைகளுக்கு அடிப்படைப் பொருட்களாக அமைந்தன. , . . . . . . .
புதுமைப்பித்தனுக்குப் பின்னர் ஈழத்துத் தமிழ்ப் பத்திரி கைகள் அனைத்திலும் சிறுகதைகள் ஒழுங்காக வெளியிடப் படலாயின. ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய
பத்கிரிகைகளில் வாராவாரம் ஒவ்வொரு சிறுகதை யேனும் இடம்
பெறலாயிற்று, சமூகச் சூழலை மறந்த கற்பனை, காதல் கதைகளே பெரும்பான்மையான எழுத்தாளர்கள் எழுதியபோதிலும் ஒருசில எழுத்தாளர்கள் ஈழத்து மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த சிறுகதைகளைப் படைக்க முற்பட்டனர். இவ்வளர்ச்சி சென்ற ஓரிரு ஆண்டுகளில் மிகவும் வலுப்பெற்று வளர்ந்து வருவதைக் காணலாம். இந்தவளர்ச்சியை ஊக்குவித்தும் உறுதிப்படுத்தியும் வருவன சுதந்திரன் தினகரன் போன்ற பத்திரிகைகள், ஒரு இளைஞர் கூட்டமே இந்த வளர்ச்சியின் உயிரோட்டமாக விளங்குகின்றது. இந்த வளர்ச்சியுடன் நிற்க முடியாது போலும் திருவாளர்கள் வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், அ.செ. மு. சம்பந்தன் ஆகியோர் சிறுகதை உலகிலே யிருந்து அனேகமாக ஒதுங்கி விட்டனர்.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களிடையே யதார்த்த பூர்வமான சிறுகதைகளைப் படைப்பதில் பலர் முயன்று வருகின்றனர். இத் துறையில் வெற்றி கண் டோர் என்று டானியல்,
”ድ*xyme...››
Max

Page 17
6
வ, அ. இராசரத்தினம், செ. கணேசலிங்கன், டொமினிக்ஜீவா, விரதர் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களுடைய சிறுகதைகள். தாய்நாட்டிலுள்ள சிறந்த எழுத்தாளர்கள் என்று கூறப்படுபவர் களுடைய கதைகளுக்கு, எந்தவிதத்திலும் தாழ்ந்தவையல்ல. இவர்கள் தாய் நாட்டுப்பத்திரிகைகளிலும் நல்ல இடமும் மதிப்பும் ஈட்டியிருக்கிருர் களென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுள் திரு. செ கணேசலிங்கன் தமது சிறுகதைகளைச் சோசலிஸ யதார்த்துவத்தைநோக்கி எழுதமுனைகிறர் என்று தெரிகிறது. இவர் கதையைச் சொல்லும் முறையினை விட, சொல்லும் பொருளி லேயே கூடியகவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது.
இவர்களுக்கெல்லாம் முன்னேடியான புதுமைப்பித்தன் துணிச்சலான சில நடுநிலை விமரிசனங்களும் எழுதியிருக்கிருர், இவர் பாட்டு எழுதுவதிலும் ஏதோ புதிய முறையை ஆரம்பித்து வைத்தார். ஆனல் அதில் வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை. நாவல் எழுதுவதிலும் இவருக்கு வெற்றிகிட்டவில்லை. ஆனல் சிறுகதைத் துறையில், திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு புதிய பரம்பரைக்கே வழிகாட்டியெனித்தகும் பெருமை பெற்ருர் இவருக்குப் பின்னர் தான் பூரணத்துவம்ான சிறுகதை இலக்கியம் தமிழ்மொழியில் ஆரம்பித்ததெனலாம்.
புதுமைப்பித்தனுக்குப்பிந்திய எழுத்தாளரின் நிலை பற்றி. அறிய இன்றைய விமரிசகர்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். விமரிசனம் செய்யும் போது அச்சுப்பற்றியும், அட்டை யின் தடிப்புக்குறித்தும், கடதாசியின் பளபளப்புப் பற்றியும். எழுத்துக்களின் அளவுபற்றியும் பக்திபந்தியாக எழுதுவார்கள். இவர்களுள் சும் மா புகழ்பவர்களும், எல்லாவற்றையும் குறைகூறித்தாழ்த்தி எழுதுபவர்களும்தான் நிரம்ப இருக்கிருர்கள். கருத்து வேறுபாட்டிற்கு மதிப்புக்கொடுத்து விருப்புவெறுப்பின்றி ஆராயும் பண்பு இவர்களுக்கு வாய்ப்பது அதுபோலும்.
புதுமைப்பித்தன், கு. பா. ரா, ಇಜ್ಜಣ್ಣೆ: மறைந்துபோனது தமிழ்ச்சிறுகதை உலகத்திற்குப்பெரும் கஷ்டம். ஆனல் அவர்களுக்கு அது இலாபம். அவர்கள் உயிரோடு இருந்தபோது இந்தவிமரிசகர்கள் அவர்களைப் புகழ முன்வரவில்லை.

இன்று சிறநத சிறுகதை எழுத்தாளரென்று போற்றப்படும் புதுமைப்பித்தனுக்கு இலக்கிய உலகத்தில் அவரது காலத்தில் நண்பரைவிடப் பகைவரே அதிகமாக இருந்தனர். மறைந்துபோன பின்புதான் நம்மவர்கள் புகழேணியை உயர்த்திப் பிடிப்பார்கள். இந்த விமரிசகர்கள் இன்றுள்ள எழுத்தாளர்களை நீதியாக எடை போடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?. செத்தவர்கள் தங்களோடு சிறுகதையையும் கொண்டுபோய்விட்டார்கள் என்று அலறுகிறர்கள். சிறுகதை வரலாற்றினைக் கூறும்போது புதுமைப் பித்தனுக்குப்பின் அது வளரவில்லை என்று கூறுவதே வழக்க மாகிவிட்டது. ஆனல் புதுமைப்பித்தன் அப்படியொன்றும் புதுமை யைக்காட்டிவிட்டு அதைக்கொண்டு மறைந்துவிடவில்லை. புதிய ஒரு பரம்பரையை அவர் தொடக்கிவிட்டுச் சென் றர். இந்த விமரிசகர்கள் பொறுப்பற்ற முறையிலே இன்றைய எழுத்தாளரைத் தாழ்த்திப் பேசுவதாலோ, எழுதுவதாலோ தமிழ்ச்சிறுகதை வளர்ச் சிக்குத் தொண்டு செய்துவிட முடியாது. இந்த நாட்டில் எத்தனையோ இடர்களுக்கு இடையினிலே இலக்கிய ஏணியில் அடிவைக்க ஆவலோடு முன்வரும் இளைஞர்களுடைய கொஞ்ச நம்பிக்கையையும் இவர்கள் சிதறடித்து விடுகிறர்கள். அதைச் செய்யாமல் விட்டார்களானுல் அதுவே தமிழிலக்கியத்துக்கு அவர்கள் செய்யும் பெரும்சேவையாகும். அதற்காக எல்லா வற்றையும் உயர்த்திப் போற்றிக் கொண்டிருக்கவேண்டுமென்பதும் இல்லை. நம்பிக்கை ஊட்டவேண்டும். அதோடுவளர்ச்சி குன்றி விடாமல் பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியும் விமரிசகர்களுக்கு வேண்டும்,
புதுமைப்பித்தனுேடு தமிழ்ச் சிறுகதையின் சிறப்பு மாண்டு போய் விட்டது என்பது தவறு. உலகத்துச் சிறுகதைகளோடு தலைநிமிர்ந்து நிற்கும் தகுதி.எமது சிறிகதைகளுக்கு நிச்சயமாக உண்டு. ஏனைய துறைகளை விடச்சிறுகத்ைத் துறையிலேயே தமிழ்மொழி கூடிய முன்னேற்றம் பெற்றிருக்கிறது. 'தமிழ்ச் சிறுகதை இன்று ப்ொருளின் சுவையிலும், நானுவித வளர்ச்சியிலும் மேலைநாட்டுச் சிறந்த சிறுகதைகளுக்குச் சரிநிகர் சமானமாக நின்று விளங்கி வருகின்றது” என்று சிறுகதை

Page 18
18
ஒரு கலை' என்ற தமது நூலிலே திரு. ப. கோதண்டராமன் கூறியிருப்பது முற்றும் உண்மையே.
இன்று தமிழின் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமுள்ள பத்திரிகைகளும் இயக்கங்களும் சிறுகதை வளர்ச்சியில் பெரும் சிரத்தை காட்டுகின்றன. இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் சிறுகதைப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. எழுத்தாளர்களும் சாதாரண மனிதர்கள்தான். அவர்களுக்குப் புகழும் வேண்டும்; பொருளும் வேண்டும். அவற்றைக் கொடுத்துத் தைரியம் ஊட்டாது, சும்மா கலை யார் வத்தால் தம்மையும் தம் வயிற்றையும் மறந்து அவர்கள் எழுதிக் கொட்டிக் கொண்டிருப்பார்கள் என்று எதிர் பார்ப்பது தவறு. இன்று ஏராளமான பத்திரிகைகள் தோன்றியிருப்பதால் சிறுகதைகளும் ஏராளம் எழுதப்படுகின்றன. புதுமைப்பித்தன் காட்டிய வழியிலே முன்னேறிச் செல்லத் துடிக்கும் நம் இளம் எழத்தாளர்களின் பரந்துபட்ட சிறுகதைத் தோட்டத்திலே வாடாத மலர்கள் பல மலர்ந்துள்ளன. வாடி உதிரும் மலர்களும் ஏராளம் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவையும் அந்தத் தோட்டத்திலே மணம் பரப்பமுடியாமல் உதிர்ந்து, போனலும், வாடாத மலர்கள் பிறந்து நறுமணம் பரப்புவதற்கு, பசளையாகப் பயன்படும்.
இலக்கியப் படைப்பு
" தாகூர் சிறந்த கவியாயிற்றே; ஏன் அவர் தம் நேரத்தையும் சக்தியையும் சிறு கதைகள் எழுதி வீணுக்க வேண்டும் ? கவிதைக்கே அவர் தன் நேரத்தைப் பயன்படுத்தினுல் அது * உலகிற்குப் பெரும்பயன் அளிக்குமே !’ என்று ஒரு படிப்பாளர்
கேட்டபோது ரவீந்திரர் சொன்ன பதில் இதுதான்; ; ;
"நான் ஏன் சிறுகதைகளை எழுதுகிறேன் என்றல் அவைகளை * எழுதாமலிருக்க என்னல் இயலவில்லை’
 

++++++++++++++++++++++++++++++
・十
மலரும மங்கையும ;
+++++++++++++ ++++++++++++ பவானி
i
செழித்து வளர்ந்து நிற்கும் ரோஜாச்செடி. அதன் பசிய இலைகளின் மினுமினுப்பிலே, பூசினுற்போலப் பளபளத்த உடலின் மென்மையிலே-இளமையின் பூரிப்புப் பொங்கி நின்றது. குருதியிலே தோய்த்தெடுத்த மென் விரலின் கூர்போன்று அச்செடியில் ஒரே ஒரு அரும்பு. செம்மை பரந்தோடிய பூவிதழ் களைக் குவித்து, மொட்டவிழ்க்கும் பருவத்தின் மோகனம் பொங்க மெல்லத் தலைசாய்த்து நின்ருள் அந்தச் செடிமங்கை. அவள் தன் பிறப்புமுதல் கண்டு உணர்ந்து பழகிய சூழல் இன்னும் மாறுதலற்றுக் கிடந்தது. அருகிலே, அவளை அழவிட்டு வேடிக்கை பார்த்தும், அணைத்து ஆறுதல் கூறியும் துணைகின்ற மல்லிகையும் சண்பகமும் உல்லாசமாய்ச் சிரித்தன. அவளைக் குறும்பு செய்து கோபமூட்டி, அழகு பார்க்கும் மாமரமும் சப்பாத்திச் செடியும் மறுபுறத்தில் நின்றன. மேலே, என்றும், அவளைக்கருணையோடு பார்க்கும் வானம்; கீழே, அவளைப் பாசத்தில் தோய்த்து ஏந்தும் மண்மகள்; அவளை ஆட்டி, அல்க் கழித்துச் சிணுங்க வைக்கும் தென்றல் - எப்பொழுதும் போல்தான் இருந்தன. ஆனல் அரும்பின் உள்ளத்தில்மட்டும் ஒரு மாறுதல். பழகிப்போன உறவுகளிலே புதுமை தோன்றியது. ஸ்பரிசத்திலே அவள் உடல் ஏனே புல்லரித்தது. தன்னை நோக்கும் கண்கள் அர்த்தம் பொதிந்த பார்வையைத் தன்மேல் வீசுவன போலிருந்தன. அவர்களின் கருத்திலே மாறுதல் தோன்றுவது போல் அவளுக்குப் பட்டது. எதற்காகவோ அரும்பின் உள்ளம் கூசி நடுங்கியது. இனமறியாப் பயத்தோடு ஆர்வமும் மனதை கிறைத்தது. அன்று இன்னுேரு புதுமை, புரியாத மனநிலையோடு போராடி நின்ற அரும்பு மிக அருகிலே ரீங்கார ஓசை கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். நேற்றுவரை அவளை நிமிர்ந்து பார்க்கத் தவறிய தேன்வண்டு, அவளை ஒரு பொருட்டாக மதித்து அருகில் வரவும் நினைக்காத தேன்வண்டு, இன்று அவளையே வட்டமிட்டு பீங்காரம் செய்தது. அதன் ஆர்வ கோக்கைத்தாங்க இயலாது,

Page 19
2O
அவள் தலை தன்னையறியாது சாய்ந்தது. முகத்தில் நாணம் ஏறியது, போதவிழும் நிலையின் புத்தழகு கண்டு வண்டுகள் மனம் கிறங்கி வட்டமிட்டன. செடியை கட்டு, உரமூட்டி, நீர் பாய்ச்சி, வேலியமைத்துக் காத்து வளர்த்தவர்கள் முதல் அரும் பின் மலர்ச்சியை ஆவலோடு காத்து நின்றனர். அரும்பு மலரும் காலம் வந்தது-ஆனல் இதழ்கள் விரிய வில்லை. மொட்டு கட்டவிழ்த்து மலரவில்லை. நாளாக, உயிர்ரத்தம் பாய்ந்தோடிக் கிடந்த இதழ்கள் நிறம் குன்றி, சோகை படிந்து மெல்லப் பழுப்பு நிறம் காட்டி நலிந்தன. பருவ எழிலின் பூரிப்பையும், போதை யூட்டும் செளந்தரியத்தையும் அள்ளியிறைத்து நின்ற அதே சமயத்தில் கள்ளமாய்க் கரந்து தன் உள்ளத்தை அரித்து வந்த எரிப்புழுவை (Camber) அரும்புப்பெண் அறியவில்லை, உரு வத்தின் எழிலில் மயங்கியவர்கள் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்ட நோயை உணரவில்லை. வாழ்வை எதிர்பார்த்து நின்ற அரும்பு வஞ்சிக்கப்பட்டாள். இதழ் விரியா மொட்டாகவே, மணம் கமழா அரும்பாகவே தன் வாழ்வை முடித்துக்கொண்டாள். அரும்பின் முடிவைக் கண்டி மனிதன் கண் ணிர் விட்டான் அவளுக்காக அவன் உள்ளம் அழுதது; ஒலமிட்டது. அவள் ஜீவ ஓட்டத்தை நச்சுநதியாக்கி அவள் அழிவிற்குக் காரணமான எரிப் புழுவைச் சபித்தான். வாழ்விழந்த போதிலும் அரும்பு தனக்காக வருத்தப்படும் மனித உள்ளத்தையாவது கண்டாள்.
II
பூத்துக் குலுங்கவிருக்கும் போதுகளைத் தாங்கி நிற்கும் மலர்க்கொடி போல் பருவத்தின் செழிப்போடு வாழ்க்கையின் கடை வாசலில் காலெடுத்து வைக்கும் மங்கையொருத்தி, மணல் வீடு கட்டி, மரப்பாச்சியோடு விளையாடிய பெண் ஓரிரவிற்குள் தன் உள்ளத்தில் பெரும் புரட்சியொன்றினை உணர்ந்தாள். என்றும் அவளைச் சூழ்ந்து கின்ற குடும்பத்தார், நட்பினர், அயலார் அன்று தன்னை வேற்றுமையோடு நோக்குவதாக அவள் உள்ளத்தில் பட்டது. அவளுடய துடுக்குப் பேச்சும் விளையாட்டுப் புத்தியும். எங்கோ பதுங்கிக் கொண்டன. அவளை அன்று வரையும் விளை யாட்டுப் பெண்ணெனக் கருதி வந்தோர் எல்லோரும் புதிய கண்களோடு அவளைப் பார்த்தனர், பெதும்பைப் பருவத்தின்

21
எல்லைக்கோட்டிலே மங்கைப் பருவத்தின் மலர்ச்சி விளிம்பிலே இளமையின் எழிலோ டு புதுமை பொங்க நின்ருள். அவள் உள்ளத்திலே இனந்தெரியாத ஆசையிலே, கனவுகள், புரியாத கற்பனைகள், புத் துணர்வுகள் - எல்லாம் முகிழ்த்து மலர வழிதேடின. பெண்மையின் மலர்ச்சியைக் கண்டு மனித மனங்கள் மயங்கின; அந்த அழகுக் கொள்ளையிலே உள்ளம் இழந்தன: இன்பக்கிளுகிளுப்பிலே இறுமாந்து கிடந்தன. பருவம் வந்தது. ஆயினும் போதவிழவில்லை. தன்னிலை உணரா மங்கையின் வாழ் 'விலே வஞ்சனை வண்டொன்று வழிகண்டுவிட்டது; சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளை உள்ளத்தைக் கறைப்படுத்த முயன்றது. பெண்மை மொக்குப் பூரணமலர்ச்சியை அடையுமுன் பொலிவிழக்கலாயிற்று. கயமையின் வெம்மையைத் தாங்க இயலாது மங்கையின் மலர்மனம் வெம்பிக் கருகலாயிற்று. "பெண்மை நிறைவை எதிர்பார்த்து நின்ற குறை நிலையில் வாழ்வுத் திரையிலிருந்து நழுவிவிடும் நிலை வந்தது. இத்தனைக்கும் காரணம் யார்? கவலைப்படுவாரில்லை! அறியாத மங்கையெனினும் தான் செய்யாத குற்றத்திற்குப் பொறுப்பேற்று நிற்கும் அவல நிலை அவளுடையது. அவள் நிலை உணர்ந்து அன்பு காட்டத்தான் உலகத்தில் எவருமில்லை. நலியும் உள்ளத்திற்கு நன்மலர்ச்சியூட்ட நினைத்தவரில்லை. வாடும் அரும்பிற்கு வளம் ஊட்ட வகைபலதேடி வருந்திய மனிதன், மங்கையின் மனம் வெதும்பி அழியும்போது: வெறியாட்டம் ஆடுகிருன். அவள் மலரிதயத்தை இதழ் இதழாகப் பிய்த்தெறிகிறன். வாடும் அரும்புக்காகக் கண்ணீர் சிந்திய மனிதன், வாழத்தவிக்கும் பெண் ணிதயத்தைக் காலடியில் போட்டுக் கசக்குகிறன். மலரின் வாழ்வில் மங்கையின் தத்துவம் அடங்கியதென்பர். எனின் மனித மனத்தில் இக் கோணல்
"அழகான பெண், ஆண்வேடம் போட்டதைப் பார்த்
திருக்கிறீர்களா ?-பார்த்திருந்தால் ஆண்களுக்கே உரிய
கம்பீரமான அழகு என்னவென்று புரியும்" B v . A m. Till 60
'நல்லொழுக்கமில்லாத அழகு மணமில்லாத மலர்தான் !
- பிரஞ்ச்

Page 20
யாழ்ப்பாணத்துச் சாசனங்கள்
* கா. இந்திரபாலா *
கில்லிலுஞ் செம்பு முதலிய உலோகங்களிலும், களிமட் பொருட்களிலும் பிறகடினமான பொருட்களிலும் பொறிக்கப் பெற்றிருக்கும் எழுத்துக் கள் சாசனங்கள் என்னும் பொதுப்பெயரின் கீழடங்குவன எனலாம். சாசன வியல் (epigraphy) தொல் பொருளியலின் மிக முக்கிய பகுதி களிலொன்று. பழைய கால வரலாற்றராய்ச்சிக்குச் சாசனங்களி லிருந்து மிக முக்கியமான சான்றுகளைப் பெறலாம் . நம்மீழ காடு சாசனங்கள் நிறைந்தநாடு. ஈராயிரத்திற்கு மேற்பட்ட சாசனங்கள் இங்கிருப்பதாகக்கூறப்படுகின்றது. இவற்றுட் பெருந்தொகை யான சாசனங்கள் வட மத்திய மாகாணத்தில் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தை "ப் பொறுத்தவரை, அங்கு இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட சாசனங்கள் மிக மிக அரிதென்றே கூறவேண்டும்
கி. மு. மூன்ருந்நூற்றண்டிற்கு முன்பிருந்தே யாழ்ப்பாணம் நாகரிகமடைந்த மக்கள் வாழுமிடமாக விருந்ததென்பது மகா வம்சத்திற்காணப்படும் வரலாற்றுக்குறிப்புக்களாலும் பிறசான்று களாலும் அறியக்கூடியதாயிருக்கின்றது. மெளரியப் பெருமன்னர் களின் கீழ்ச்சிறப்புற்றிருந்த தாமிரலிப்தி (Tamralipti) என்னும் பெருந்துறைக்குச்செல்லும் ஈழத்துக்கப்பல்கள் யாழ்ப்பாணத்து வட மேற்குக்கரையிலிருந்த சம்புத் துறை (Jambukola) என்னுந்துறையிலிருந்தே சென்றன வென்றும் , அத்துறையிலே தான் சங்க மித் தை அரசங்கன்றுடன் வந்திறங்கினரென்றும் , சம்புத்துறைக் கருகாமையிற் பல பெளத்த விகாரைகளும் Viharas) 5660) J 356Jub (Dagobas) 5 – ju "L 60 வென்றும் * மகா வம்சம் கூறும். இவை மட்டுமல்ல, கந்தரோடை , வ ல் லி புரம் ", புத்தூர் , பொன் னுலை 9, மாகியப்பிட்டி " ஆகிய இடங்களிலும் புத்தகோயில்கள் இருந்தனவென்பது தொல் பொருளாராய்ச்சியினு ற் பெறப்பட்ட உண்மையாகும். அநுரதபுர மன்னர்களின் ஆட் சிக்குட்பட்டுச் சிறப்புடன் விளங்கிய யாழ்ப்பாணத்தில்,

23
இலங்கையின் மற்றப்பாகங்களிற் கண்டெடுத்தது போலல்லாது, ஒரு சில சாசனங்களே கண்டெடுக்கப்பட்டிருப்பது மிக ஆச்சரிய மாக விருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் கூறலாம். சிங்களமக்கள் பெளத்த கோயில்கள் நிறுவி வாழ்ந்த இடத்தில், காலப் போக்கில் பிற சமயத்தவர் களாகிய தமிழர்கள் குடி யேறியதன் காரணமாகப் பெளத்த ஆலயங்கள் சைவக்கோயில் களாக மாறியது மட்டுமன்றி, ஆங்காங்கு கிடந்த கல்வெட்டுக் களும் கவனிப்பாரில்லாது மண்ணில் மறைந்தோ சிதைந்தோ போயிருக்கலாம். இப்படி நடந்திருக்கலாமெனக் கொள்வதற்குச் சான்றுகளுள. கந் த ரோ டையிற் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளும் தகபைகளின் பாகங்களும் தமிழ் மக்களாற் கவனிக்கப் படாது விடப்பட்டதாற் சிதைந்து போனது மட்டுமல்லாமல், சேலைதுவைக்குங் கற்களாகவும் ", படிக்கற்களாகவும் ", வைரவர் கோயில்களிற் தேங்காய் உடைக்குங்கற்களாகவுந், தகாத வேலை கட்குப்பயன் படுத்தப்பட்டன. வல்லிபுரத்திலுள்ள விஷ்ணு கோயில் ஆதியிற் பெளத்த ஆலயமாக விருந்திருக்கவேண்டு மென்று கொள்வதற்கு அங்கு காணப்பட்டபொன் னேட்டின் சான்றுளது ", அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த கல்வெட்டு. களோ பிற சாசனங்களோ சிங்களமொழியிலேயே இருந்திருக்க வேண்டும், ஆதலால் அக்கல்வெட்டுக்களும் பெளத்த சிலை களடைந்தகதியையடைந்திருக்குமெனக் கருத இடமுண்டு. மேலும் யாழ்ப்பாணத்தைப் போத்துக் கேயர் கைப்பற்றிய போது, நல் லூர்கோட்டையையும் பிறகட்டிடங்களையுந் தகர்த்துக் கோட்டை யும் வீடுகளும் கட்டியபடியால், தமிழ் மன்னர்களாற் பொறிப்பிக் கப்பட்ட கல்வெட்டுக்கள் பல சிதைவுற் றன . அத்தோடு, யாழ்ப்பாணத்தில் முறையான புதைபொருளாராய்ச்சிகள் பல இன்னும் நடாத்தப்படாததால், மண்ணிற் புதைந்திருக்கக்கூடிய பல சாசனங்கள் கண்டுபிடிக்கப்படாதிருக்கின்றன வென இன் ணுெரு காரணமுங்கூறலாம்.
ஈழநாட்டிலுள்ள மிகப்பழைய கல்வெட்டுக்கள் பிராமி எழுத் திலேயே பொறிக்கப்பட்டுள்ளன.கி.மு.3 ம் நூற்றண்டைச் சேர்ந்த பிராம்பிக்குகைக் கல்வெட்டுக்களின் எழுத்துக்கள் அசோகன் காலத்துப் பிராமியின் தென்னுட்டுவர்க்கத்தைச் (Southern type)சேர்ந்தவை. தமிழ் எழுத்துக்களைப் போலத்தற்காலச் சிங்கள

Page 21
24
எழுத்துக்களும் இப்பிராமியினின்றுந் தோன்றியவையே. இவ்வெ ழுத்துக்களாலெழுதப்பட்ட பழைய சாசனங்கள் யாழ்ப்பாணத்தில் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. கிறித்துவிற்கு முற்பட்ட 3 நூற்றண்டுகளில் கு கைகளிலும் பாறைகளிலுமே பெரும் பாலுஞ் சாசனங்கள் பொறிக்கப்பட்டமையாலும், அத்தகைய குகைகளும் பாறைகளும் யாழ்ப்பாணத்தில் இல்லாத காரணத் தினுலும் மிகப்பழைய பிராமிக்கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் இல்லையெனக்கூறலாம். எனினும் கற்பலகைகளில் (Stabs) இவ்வெழுத்துக்களாற் சாசனங்கள் பொறிக்கப்பெற்றிருக்கலாம். ஆனல், இதுவரையும் பழையபிராமிக்கல்வெட்டோ பிறசாசனமோ யாழ்ப்பாணத்திற் காணப்படவில்லை. அங்குகாணப்பட்ட மிகப் பழைய சாசனம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டைச்சேர்ந்த சிறிது வளர்ச்சிபெற்ற பிராமியிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துச் சாசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது வல்லிபுரத்துப் பொன்னேடாகும் (Valipuram Goldplate). இதுவே ஈழத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஒரேயொரு பொன்னேடாகும். மேலும், யாழ்ப்பாணத்தின் ஆகிவர லாற்றுக்கு அரிய சான்றுகள் இதனின்றும் பெறக்கூடியதாயிருக கின்றதனுலும் இது மிகச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகின்றது. இப்பொன்னேடு 1936ம் ஆண்டளவிற் கண்டெடுக்கப்பட்டதெ னத்தெரியவருகின்றது. வல்லிபுர விஷ்ணு கோயிலுக்குச் சொந்த மானநிலத்திற் பழைய கட்டிடமொன்றின் அத்திவாரத்தின் கீழ் இப்பொன்னேடு கண்டெடுக்கப்பட்டு, முன்னே நாட்தொல்தொரு ளாராய்ச்சியதிபர் கலாநிதி செ. பரணவித்தான அவர்களிடம் பார்வையிடுவதற்குக் கொடுக்கப்பட்டு, மீண்டுஞ் சொந்தக்காரரி டங் கொடுக்கப்பட்டது". இவ்வரிய பொன்னேட்டினைத்தொல் பொருளாராய்ச்சிப்பகுதியினர் விலைக்குப் பெற்றுக்கொள்ளப் பலமுயற்சிகள் எடுத்தும் அவைபயனற்றுப் போயின. இதுபற்றிப் பேராசிரியர் பரணவித்தான அவர்களிடம் அண்மையிற் கேட்ட போது, இப்பொன்னேடு புலோலிராஜா என அழைக்கப்பட்ட ஒருவரிடம் இருந்ததாகவும், அவர்பற்றிய தகவல் எதுவும் தங்களாற். பெறமுடியாமற் போனதாகவும் மிகவருத்தத்துடன் தெரிவித்தார். இப்பொன்னேடு 3% அங்குல நீளமும், ஒரு அங்குல அகலமும்

25
உடையது. இதிலுள்ள சாசனத்தின் மொழி பழைய சிங்கள மாகும். இது வசப மகாராசனின் காலத்தைச் (கி. பி. 126-170) சேர்ந்தது, இது கலாநிதி செ. பரணவித்தான அவர்களாற் பதிப்பிக்கப்பட்டுள்ளது . இச்சாசனம் பின்வருமாறு:-
සිදධ මහරජ වහ ය හ රජෙහි අමෙතෙ ඉසිගිරයෙ නකදිව බුජමෙනි බදකර අතනෙහි පියගුක තිස විහර කරිතෙ, 19
(ஸித்த் மஹறஜவஹ ய ஹ றஜெஹி அம்ெதெ இஸிகிறயெநகதிவ புஜ மெனி பதகற அதனெஹி பியகுக திஸ் விஹறகறிதெ) 20,
இதன் பொருள் : மகாராசா வஹயருடைய ஆட்சியில் அம்ைச்சர் இஸிகிறய (ர்) நகதிவில் ஆளுகையில் 'பதகறஅதன்யில் பியகுக திஸ (என்பவர் இவ்) விஹாரையைக் கட்டுவித்தார். இங்கு ‘வஹய' என்பது வசப மகாராசாவாகும், நகதிவு" என்பது நாகதீவு (பாழ்ப்பாணம்) ஆகும். கி. பி. இரண்டாம் நூற்றண்டள வில் யாழ்ப்பாணம் அநுராதபுரமன்னர்களின் கீழ் ஒரு மாகாண மாகவிருந்து அம்மன்னர்களின் அமைச்சர்களால் ஆளப்பட்டு வந்ததென இதனற் பெறப்படும். பத கற அதன' என்பது வல்லி புரத்தின் பழைய பெயராக விருக்கவேண்டும் 91.
காலஒழுங்கின்படி அடுத்ததாக உள்ளது அண்மையிற் கிடைத்த கந்தரோடை முத்திரை (Sea) ஆகும். இதுபற்றிய தகவல் எதுவும் இதுவரை ஓரிடத்திலுங்குறிப்பிடப்படாததால், அத்தகவலை ஈண்டுத்தருவது பொருத்த மெனக்கருதுகின்றேன், யாழ்ப்பாணத்திலுள்ள தொல் பொருட் த லங்களுள் (archaeological sites) 63 (pátful DITGOTs sis. Gyrol யாகும். கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு சிறு முத்திரை சென்ற ஆண்டு ஐப்பசி மாதத்தில் எங்கள் பல்கலைக் கழகத்திற்குக்கொண்டுவரப்பட்டது. அதிலுள்ள சிறு எழுத்துக் களை எங்கள் தொல் பொருளியற். கலாநிதி பரணவித்தான அவர்களின் உதவியால் வாசிப்பதற்கே அது கொண்டுவரப்பட்டது, அதன் சொந்தக்காரர் எனக்கூறப்பட்டவர்,

Page 22
26
யாழ்ப்பாணக்கல்லூரி வரலாற்று விரிவுரையாளர் கலாநிதி W. R. (8groTibaio (Dr. W. R. Holmes) GT cirgith 9.Qidfissisir மகனுவார். இச் சிறுவர் கந்தரோடையிலிருக்கும் ஒரு சிறு வனிடமிருந்து இம் முத் திரையைப் பெற்றதாகக்கூறினராம். அதிலுள்ள எழுத்துக்களை எளிதாக வாசித்த பேராசிரியர் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக்கூறினர். V
இம் முத்திரை சிவத்தக் "கார்ணிலியன்” (red carnelian) எனப்படும் மணிவகையைச் சேர்ந்த பொருளினலானது (semiprecious stone). S5 sir SGIT is 1.02 Qafairs Billi (centimetre), அகலம் ஒரு சென்ரிமீட்டர். இதிலுள்ள சாசனம் “6 62 GODI - $ 6iv Lu” (Visnubhutisya) 6T 6ör SD) tid (Ngưb வேற்றுமை உருபுள்ள வடமொழிப்பெயராகும், இச்சாசனம் வளர்ச்சியடைந்த தென் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் நாகார்ஜுனிக்கொண்டாவிலுள்ள 3ம், 4ம் நூற்றண்டுச் சாசனங்களின் எழுத்துக்களை ஒத்திருக்கின்றன. இக்கரரணத்தினுல் இம் முத்திரை கி. பி. 3ம் அல்லது 4ம் நூற்றண்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டுமென்றும், இது தென் இந்தியாவிலிருந்து அக்காலத்திற் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டு மென்றும் பேராசிரியர் பரணவித்தான அவர்கள் அபிப் பிராய்க்தெரிவித்தார். அவர் அறிந்தமட்டில், இதுவே இலங்கையிற் டெடுக்கப்பட்ட ஒரேயொரு எழுத்துப்பொறித்த முத்திரை ம், தற்பொழுது இது தொல்பொருளாராய்ச்சிப் பகுதியின
s *இதற்கடுத்ததாகவுள்ள சாசனம் முதலாம் பராக்கிரமபாகுவின் ங்கினுதீவுக்கல்வெட்டாகும். இதுவே யாழ்ப்பாணப் பகுதியில் இதுவரைகிடைத்த மிகப்பழைய தமிழ்க்கல்வெட்டாகும். இதன் காலம்:கி.பி. பன்னிரண்டாம் நூற்றண்டு. இக்கல்வெட்டுதற் பொழுது கயினுதீவு நாகபூஷணியம்மன் கோயில் வாயிலிலுளது. துரதிஷ்டவசமாக இக் கல்வெட்டு இருதுண்டுகளாகப்பிளவு பட்டுள்ளது. ஒருதுண்டு கோயிற் சுவரோடு சேர்ந்துக்கட்டப் பட்டுள்ளது.எஞ்சிய கற்பலகையின் இருபக்கங்களிலுஞ் சாசனம் இருக்கின்றது. ஆனல் ஒருபக்கத்தில் இரும்பு ஆயுதங்கள்
 
 
 
 
 
 
 

27
தீட்டப்பட்டதால் அப்பக்கத்திலுள்ள சாசனம் சிதைந்துள்ளது. பழையனவற்றைப்பேனும் பண்பு நமது கோயில் களிற் கூட இல்லாததினற்ருன் இந் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றப்பக்கத் திலுள்ள சாசனத்தை வாசித்து முதன் முதல் வெளியிட்டவர் முதலியார் இராசநாயகம் அவர்களே *. இவர் வெளியிட்ட 'வாசிப்பில்" (reading) அநேக பிழைகளுள. இதன் சரியான 'வாசிப்பு பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களிடமுள்ளது. இது இன்னும் பதிப்பித்து வெளியிடப்படவில்லை. “ஊராத்துறை'யிலும் பிறவடதுறைகளிலும் வந்து சேரும் பிற தேசத் தவர் என்ன செய்யவேண்டுமென்றும், அத் துறைகளில் வந்தடையுங், கப்பல்கள் தங்கள் பண்டங்களில் எவ்வளவு பகுதியை மன்னனு டைய பண்டாரத்திற்குக் கொடுக்கவேண்டு மென்றும் இக்கல் வெட்டிற்கூறப்பட்டுள்ளது *.
முதலாம் பராக்கிரமபாகுவிற்குப்பின் ஏறக்குறைய நூருண்டுகள் கழிந்ததும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர்கள் தனிராச்சிய மமைத்து ஆளத்தொடங்கினர் எனக் கொள்ளலாம் ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்டமன்னர்கள் அங்கு ஆண்ட தாக அறிகிறேம். அம்மன்னர்களில் ஒருவர் தென்னிலங்கைக்குப் படை யெடுத்துச் சென்று சிங்கள மன்னனைத்தோற்கடித்து, அவ்வெற்றியினை எடுத்துக் கூறும் வெண்பாவொன்றினையுங் கல்லிலே பொறித்து விட்டுத்திரும்பினுன் 24. இக்கல்வெட்டுக் கேகாலையிற் கண்டெடுக்கப்பட்டுக் கொழும்புப்பொருட்காட்சிச் சாலைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. தென்னிலங்கையிற் கல்வெட்டுப்பொறித்த மன்னர்கள் தங்கள் இராச்சியத்திற்பொறிக் காமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆனல் அவர்கள் பொறிப்பித்த முழுக்கல்வெட்டுக்கள் நமக்குக்கிடைத்தில. போர்த்துக்கேயர் நல்லூர்க் கோட்டையையும் அங்குள்ள அரண்மனை க்ளேயும் இடித்தபோது அங்கிருந்த தமிழ்க்கல்வெட்டுக்களுஞ் சிதைவுற்றன நல்லூர்க்கோட்டையின் கற்களைக் கொண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணக்கோட்டையையும் பல வீடுகளை புமமைத்தனர். சாசனம் பொறித்த கற்கள் கோட்டை மதிலில் வைத்துக்கட்டப்பட்டுள்ளன. வேறு சாசனக்கற்கள் பறங்கித் தருவிலுள்ள பழைய வீடுகளிற் படிக் கற்களாகக் கட்டப்

Page 23
28
பட்டுள்ளன. இவற்றுள் பஜகா நந்தர் வீட்டிலுள்ளது சிறப்பானதென திரு. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் தமது நூலிற்குறிப்பிட்டுள்ளார் 2. ,
இவற்றைவிட யாழ்ப்பாணத்தரசர்களுடைய காலத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்துக்கல்வெட்டு இன்னென்றுண்டு. அது உரும்பராயிற் கருணுகரப்பிள்ளையார் கோயிலிலுளது. இதன்காலம் 1567 (கி.பி.) ஆகும் இக்கல்வெட்டில் கருணுகரப்பிள்ளையார் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது . துரதிஷ்டவசமாக இக்கல் வெட்டும் கோயில் மூலஸ்தானத்தில் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தரசர் காலத் தைச்சேர்ந்த வேறுசாசனங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை,
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தைக்கைப் பற்றி ஆண்டகாலத்தில் அவர்கள் அநேக கிறித்துவக்கோயில் களையும் பிறகட்டிடங்களையுமமைத்து ஆங்காங்கே பலசாசனங் களையும் பொறித்துள்ளனர். இச்சாசனங்கள் போர்த்து கேய ஒல்லாந்த மொழிகளிலுள. போர்த்துக்கேய ஒல்லாந்த ஆட்சிக் கர்லவரலாற்றுக்குப்போதிய பிறசான்றுகளுளதால், இச் சா ச னங்கள் பெரிதுஞ்சிறப்பு வாய்ந்தவை ய ல் ல. எனினும் போர்த்துககேய ஒல்லாந்த தேசத்தவர்களின் ஆட்சியை நினைவு படுத்துஞ் சின்னங்களாக இவை இருக்கின்றன. பின் வரும் ஒல்லாந்த மொழிச் சாசனம் வட்டுக்கோட்டைக் கிறித்துவக் கோயிலின் வாயிற்கதவின் மேல், சுவரிலே வைத்துக்கட்டப்பட் டுள்ள கல்லில்ே பொறிக்கப்பட்டுள்ளது :-
| “Doen Maken door den Heer Commandeur Laurens Pyl AnnO 1678.” (டூன் மாக்கென் டோர் டேன் ஹேயர் கொம்மண்டோயர் லௌறென்ஸ் பீல் அன்னுே 1678) "சேனைத்தலைவன் லெளறென்ஸ் பீலினுல் (இது) கட்டுவிக்கப்பட்டது, 1678-ம் ஆண்டு ’ 27,
கிறித்துவிற்கு முற்பட்ட காலங் தொட்டு யாழ்ப்பாணம் நாகரீகமடைந்தி மக்கள் வாழ்ந்த இடமாகத்திகழ்ந்து வந்திருக்

29
கின்றது. பரதகண்டத்தினின்றும் படகோட்டி வர்திக்கிங்கள மக்கள் அங்கு வாழ்ந்தார்கள். புத்தர் போதித்த புனிதமதம் அங்குபரவியிருந்தது. அநுரதபுர அரசர்கள் அமைச்சர்கள் மூலம் அங்கு ஆட்சிசெலுத்தினர். தெ விட்டாத தீந்தமிழைப்பேசிக் கொண்டு தென்னுட்டுத்தமிழர்கள் அங்குவந்தனர். வடவீழம் தமிழ்நாடாகியது. தமிழரசு நிறுவப்பட்டது. திராவிட நாகரிகம் பரவியது. இன்று அங்கு அந்நாகரிகம் நிலைத்துகிற்கிறது. இவ்வாறு ஈராயிரமாண்டுகட்கு மேற்பட்ட வரலாறுடைய பகுதியில் சாசனங் கள் அதிகமாகக் காணப்படாததற்குக்காரணமென்ன? பூமாதேவி ஒருவளே இதற்கு விடைபகர்வாள். அவள் ஒளித்துக்கொண்ட சாசனங்களும் பிறபொருட்களும் வெளிப்பட்டாற்ரும் யாழ்ப்பான வரலாற்றைச் செம்மையாக எழுதமுடியும்: ஆகையால், யாழ்ப்பான த்தில் புதைபொருளாய்வு அவசியம் நடைபெறவேண்டும்.
1. சாசனங்களைப் பற்றி விரிவாக அறிதற்குக் கலைக்களஞ்சியத்ன்த (பாகம் 4 ப. 547) ப்பார்க்கவும், 2. இக்கட்டுரையில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் யாழ்ப்பாணக்குடா நாட்டையும் அதனருகேயுள்ள ġssaq Basar uqij e5gó ġgi ró jibdlsior ADs. 3, Mahavamsa (Mhv.) 11, 23. 4. Mhv. 19:23, 5. Mhv. 20:25; 60 60, 6, Journal of the Ceylon Branch of Royal Asiatic Society (J. C. B. R. A.S.) Vol. XXVII No. 70. PP. 22-23. 7. Epigraphia Zeylanica (E.Z.) Vol. IV P. 237, 8. Archaeological Survey of Ceylon-Annual , Report (A.S.C.A.R) 1955 PP 17-18 9, A.S.C.A.R. 1949. P. 8 10, J.C.B.R.A.s. Vol. XXVIII No. 72 P. 43, 11, J.O.B.R.A.s. Wol. XXVI No. 70, P, 25. 12, Ibid. 3. Ibid. 14, E.Z. Wol, TV P. 237 15, யாழ்ப்பாணச் சரித்திரம்- ஆ. முேத்துத்தம்பிப் பிள்ளை (3-ம் பதிப்பு-1933) P. பக் 73 அடிக்குறிப்பு. 16, B, Z Vol. IV PP 229-237 17. E.Z. Vol. IV P. 287 18, Ibid. 19. Ibid 20. சிங்களத்திலுள்ள சில எழுத்துக்கள் தமிழிலில்லையாதலால், தமிழ்எழுத்தாக்கத்திற் குறியிட்ட எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன--த-da, த-dha, ப-ba, க-க, 21. பருத்தித்துறைப் பகுதியில் இன்றும் குடத்தனை, மயிலியத்தன என அத்தனையில் முடியும் சிங்கள இடப்பெயர்கள் உண்டு. 22. Ancient JafnaC. Rasanayagam P. 208.23. Ibid. PP. 308-209 24. A.S.C.A.R. 1892 Kegalle. Report P. 85, 25, Lrgüur 600Täefšo ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை. பக் 73 அடிக்குறிப்பு. 26. Ancient Jaffna P. 257, 27. இச்சாசனத்தின் தமிழெழுத்தாக்கத்திற்கும் மொழிபெயர்ப்பிற்கும் கலாநிதி கே. மற்சல் (Dr. K. Maze) அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். . . . .

Page 24
அனைத்த கை !
حمحمAAA
- உதயணன் -
நான் எனக்காக வாழ்வதா? அப்பா அம்மாவுக்காக வாழ்வதா? ஊர் உலகத்துக்காக வாழ்வதா? இந்த பிரச்சினைக்கு நான் இந்த நிமிடத்திலேயே முடிவு காணவேண்டும்.
நான் எனக்காகத்தான் வாழ்வேன் என்று சொன்னதன் பலன் நேற்றுத் தெரிந்தது. எனது தகப்பனர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்று தெய்வாதீனமாக உயிர் தப்பினர். அம்மாவோ, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, "உன்னைப் பெற்ற நேரம் ஒரு மரக்கட்டையைப் பெற்றிருக்கலாமே" என்று ஒப்பாரி வைத்தாள். ஊர் மக்களோ எனது முகத்தில் காறி உமிழ்ந்தார்கள்.
அப்படியென்றல். 2 எல்லோருமாகச் சேர்ந்து எனக்குக் குழையடித்தார்கள். பெண்ணை ரதி என்றர்கள். சீதனமாக யானை வரும் குதிரை வரும் தேர்வரும் சப்பரம் வரும் என்று சொல்லி என்னைப் பைத்திய மாக்கிவிட்டார்கள்.
ஆமாம், எனது பிதா மாதாவை உயிரோடு விட்டுவைக்க விரும்பினுல், அவர்கள் காட்டிய பெண்ணுக்கு நான் மாலையிட வேண்டியதுதான்.
* இங்கே கையெழுத்துப்போடுங்கள்” என்று கல்யாணப் பதிவுகாரர் சொன்னர், போட்டுவிட்டேன். இனி, தமயந்தி சட்டப்படி எனது மனைவி. அவளுக்குப் பெயர் தமயந்தி என்று யாரோ சொல்லக் கேட்டதே தவிர, அவளுடைய முகத்தை நான் ஏறிட்டுப் பார்த்ததுகூட இல்லை.
கையெழுத்துப் போட்ட பேணுவை மூடிவைக்குமுன்னர் ஒரு தந்தி வந்தது. எனது நண்பன் ஒருவன் கொழும் பிலிருந்து அடித்திருந்தான் - உடன் வரும்படி !

3.
+++++十+
கொழும்பில்-+++++++ *நடராஜா! நீ அப்பாவாகி விட்டாய். சுமதி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றிருக்கிறள்" என்று நண்பன் என்னை வரவேற்றன்.
என்ன ...? ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். "குழந்தைக்கு தகப்பனர் யார்?" என்று யாரோ ஆஸ்பத் திரியில் கேட்டார்கள். உண்மையைச் சொல்லவும் பயமா ?
9
"நான்தான் -!” என்றேன். * இங்கே கையெழுத்துப் போடுங்கள்" என்றர்கள். அங்கே தமயந்தியின் கணவனுகக் கையெழுத்துப் போட்டு இன்னும் இருபத்திநாலு மணித்தியாலங்கள் ஆகவில்லை. அதற்கிடையில். .
染 崇
"காதல் செய்வோம் வாரீர்” என்று என்னை யாரும் அழைத்ததன்பேரில் நான் பல்கலைக் கழத்தில் நுழையவில்லை. எனக்கும் ஒரு கோக்கம் இருந்தது; அதனுல்தான் பிரவேசித்தேன். அதற்காக -
கோவிலுக்குப் போகும்பொழுது பாதை யில் புதையலைக் கண்டால், "அந்தோ! கோவிலுக்குச் செல்வதுதான் என் நோக்கம், புதையலைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டேன்," என்று எந்தப் பைத்தியக்காரனுவது சொல்லுவான ? உண்மை ; நான் என் பாதையிலே கண்டெடுத்த புதையல்தான் சுமதி.
சாதாரண பெண்களின் மத்தியில் சுமதியை நிற்கவைத்துச் சுமாரான அழகி என்று சொல்லலாம். பத்து ரூபாச் சேலையைப் பாதி உடல் தெரியக்கட்டும் பகட்டுப் பாவையர் நடுவில் நிறுத்திப் பேரழகி என்று சொல்லலாம். கலீர் கலீர் என்று தங்க நாணயங் கள் உருளும் - அவள் நகைத்தால் ! காதுகளில் தேன் ஒடிப் பெருகும் - அவள் முத்துக்களை உதிர்த்தால்!

Page 25
இத்தனைக்கும் - நான் தொடர்ந்தா ற் போல இரண்டு நிமிடங்களுக்கு அவளோடு பேசியதில்லை. சேர்ந்தாற்போல ஐந்து நிமிடங்களுக்கு அவளே உற்றும் பார்த்ததில்லை. ஏன், அவளைப்பற்றி நான் அதிகம் கினைத்ததுகூட இல்லை.
என்னுேடு படிக்கிறர்களே மாணவர்கள் என்ற பெயரில் சில "எமகாதகப் பேர்வழிகள், அவர்கள் ஒரு கைங்கரியம் செய்தார்கள், அணுவசியமாக என் பெயரையும் சுமதியின் பெயரையும் சேர்த்து ஒரு கதையைக் கட்டி வகுப்பிலும் விடுதியிலும் குதிக்க விட்டார்கள். அதன் பயன்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சுமதியின் போக்கை அறிய வற்பட்டேன். அவள் என்னேடு பேசச் சங்கோசப்பட்டாள். எனது ஆவல் அவளுடைய சங்கோசத்தை விழுங்கி ஏப்பம் விட்டது. அங்கே பிறந்தது. காதல்.
சுமதி! நீ காட்டிய, அன்பினுல்தான் நான் உண்டேன். நீ காட்டிய பரிவினுல்தான் நான் உறங்கினேன். நீ காட்டிய ஆதரவி குல்தான் கான் உயிர்தரித்தேன். நீ காட்டிய கண்டிப்பினுல்தான் கல்வியில் நாட்டம் வைத்தேன். ஆமாம், என் ஆசைக் கண்ணே உன்னுல்தான் கான் இன்று மனிதனுக உலவுகிறேன்.
எமது படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது. அதோடு நாங்கள்
பிரியவேண்டிய கடைசி நிமிடமும் வந்தது. ஐயோ. சுமதியும் நானும் கொட்டிய கண்ணீர் - யாராவது நம்பாவிட்டால் போய்ப்பார்க் கல்ாம்; இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. நதி.
மழை இருட்டிலும் ஒரு மின்னல் தோன்றுவதுபோல எங்கள் கெட்ட காலத்திலும் ஒரு கல்ல நேரம் வந்தது. எனக்கு கொழும்பில் ஒரு உத்தியோகம் கிடைக்க, அவளும் அங்கு ஒரு ஆசிரியை ஆணுள்.
நான் அவளுடைய மடியிலே தலையை வைத்துப் படுத்து, அவளுடைய விழிகள் ஊடாக ஆகாயவெளிக்குத் தாவி ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துச் சுவர் எழுப்பினேன்.
 

33
சமயம் வந்தபொழுதுதாற்றுச் சுழன்றடித்தது சுவர் இடிந்து தரைமட்டமாகியது. மிஞ்சியதோ?
ஒரு குழந்தை 9 a E5 6 tu வயிற்றில் !
崇 缘
"எஸ் Jib LJATagsör ʼ........... கையெழுத்துப் போட்டுவிட்டு நிமிர்ந்த என்ன, கால்கள் இழுத்து வந்து சுமதியின் கட்டிலுக்கு எதிரே விட்டன.
எவ்வளவோ நேரத்துக்குப் பிறகு அப்பொழுதுதான் பிரக்ஞை திரும்பியதாம்.மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். எங்களுக்கு 'பிள்ளைக் கலி தீர்க்க வந்த குறைமாதக் குழந்தை" அவளுடைய தலை மாட்டில், ஒரு தொட்டிலில், உணர்வற்றுக் கிடந்தது. -
"உங்களுக்குக் கல்யாணப் பதிவு முடிந்துவிட்டதாம்.!" சுமதி சொன்னுள்.
நான் திடுக்கிட்டேன். * அப்பா எல்லாம் எழுதியிருந்தார்." சுமதி தொடர்ந்தான், *தமயந்தி எனது உடன் பிறந்த அக்காதான். நீங்கள் எங்கே யென்றலும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்"
அவளுடைய உள்ளக்கடல் பெருக்கெடுத்துக் கடைக் கண்களில் வழிபறித்துக் கன்னம் வழியே பாய்ந்தது. அவள் மாடிப்படியில் மயங்கி விழுந்து குறைமாதப் பிரசவம் ஆன்தன் காரணம் எனக்கு இப்பொழுதுதான் புரியத்தொடங்கியது. அடித்து வைத்த சிலையாக நின்றேன். • శి; ',
சில்லிட்டு, தொண்டையை எதுவோ அடைத்துக் கொண்டதால் கான் பேசவில்லை; பேசமுடியவில்லை.
*இவனேடு பேசி இனி என்ன பயன்' என்ற இறுதி முடி வுக்கு அவள் வந்துவிட்டாள் போலும், அதன் மேல் அவளும் -
பேசவில்லை!
nത്ത'ത്തം (கற்பனை)

Page 26
KIEKKANSKE ¥¥ಣ್ಣ சிறுகதைப்போட்டி :
郤必邸些爱呼呼爱爱爱呼哆哆 澳%圣*蟒整、羟怪呼
யல்நாட்டு எழுத்தாளர்களைப்போல் அழகாய் எழுது வதற்கு கம்மிடையே யார் இருக்கிருர்கள் என்று சதா குறைபட்டுக் கொள்வதால் மட்டும் நம்மிடையே சிறந்த எழுத்தாளர்கள் வளர்ந்து விடமாட்டார்கள். இருக்கிற எழுத்தாளர்கள் எழுதும் ஒவ்வொரு கதையையும் தொடர்ந்து தவருமல் படித்துப்பாராட்டு வதுகூட அத்தனை பெரிய ஆக்கத்தை ஏற்படுத்தமாட்டாது. எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பவுண் என்ற அளவுக்கு அடுத்தநாடுகளில் கிலைமை முன்னேறி விட்டதென்றல் வெறும் பாராட்டை மட்டும் வைத்துக்கொண்டு அந்தகாட்டு எழுத்தாளர் களின் தரத்த்ை இங்கும் எதிர்பார்ப்பது வேடிக்கையேதான். எத்தனையோ கம் எழுத்தாளர்கள் எவ்வளவோதிறமை இருந்தும் அத்தனை பெரியதாய் ஒன்றும் சாதிக்காமல் இலைமறை காய்களாய் மறைந்து விடுகிருர்கள் என்ருல் அதற்குக் காரணம் இந்தப்பணம் சேராத வ்ெறும் பாராட்டேதான்.
இப்படி ஒரு கிலையில்தான் நாம் இரண்டாவது தடவையாகத் தொடர்ந்து சிறுகதைப்போட்டி நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைகளுக்கு இரண்டு தங்கப்பதக்கங்களை வழங்கியுள்ளோம். யாரும் செய்திராத சாதனை பறைதட்டிப் பெருமைப்படக்கூடிய செய்தி! நாம் தேர்ந்தெடுத்த கதைகள் அரிய தரத்தையுடைய சிறந்த சிறுகதைகள் என்று கூறமுடியாமல் போனுலும் சிறந்த சிருஷ்டிகளை உருவாக்குவதற்கு, சிறந்த சிருஷ்டிகர்த்தாக்கள் உருவாகுவதற்கு காரணமாக அமையக்கூடிய ஒரு சிறந்த பணியை மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகச் செய்கிருேம் என்ற முறையிலாவது நாம் பெருமைப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக் கிறது. ... . . . .
முதற்பரிசு பெற்ற கதைக்குக் கொடுக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை யாழ்ப்பாணத்து வள்ளல் டாக்டர் சி. சுப்பிரமணியம் L.M.S., L.R.C.P., & S. J.P. O.B.E., LD68 (pass suprijá () i.

35
சென்ற முறையும் முதற்பரிசுக்குரிய தங்கப் பதக்கத்தை அவர்தான் தந்து உதவினர். அவருக்கு எங்கள் நன்றி என்றென்றும் உரித்தாகும். இரண்டாவது கதைக்குரிய தங்கப் பதக்கத்தை யாழ்ப்பாணத்து "ஐக்கிய இலாப நிதி' இயக்க அதிபரும் இளவாலை கனகசபை வித்தியாலயத்தின் முகாமைக் காரருமான திரு. எல். கனக சபை அன்போடு வழங்கினர், அவருக்கும் நாம் என்றும் நன்றியுடையவராவோம். மூன்றவது கதைக்குரிய பரிசுநூல்களை நம் தமிழ்ச்சங்கம் வழங்கியது.
போட்டிக்கு வந்த சிறுகதைகளைப் பரிசீலனைசெய்யும் பொறுப்பை இலக்கிய உலகில் பெரும் முக்கியஸ்தர்களாய் விளங்கும் மூவர் ஏற்றுக்கொண்டனர். எத்தனையோ இளம் எழுத்தாளர்களை உருவாக்கியும் எத்தனையோ எழுத்தாளர்களின் பெரும் பெரும் படைப்புக் க்ளை அரங்கேற்றியும் இலக்கியத் தொண்டு செய்யும் பழுத்த பத்திரிகையாசிரியரான சுதந்திரன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அவர்கள் ஒருவர். ஈழத்துத்தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு உதயணன் அவர்கள் இன்னொருவர். தலைசிறந்த ஈழத்து இலக்கிய இதழான தலைச் செல்வியின் ஆசிரியரும் "ஈழத்துச்சிறுகதை"த் தொகுதியைத் தொகுத்தவருமான திரு. சி. சரவணபவன் B.A. (சிற்பி) மற்றவர். இவர்கள் மூவருக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
பரிசில்களைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கக் கலைவிழாவின் போது பேராசிரியர் கலாநிதி க. கணபதி பிள்ளை அவர்கள் வழங்கினர். . . . .
- ஆசிரியர்
எழுத் து நடை
"சொல்வதற்கு ஏதாவது உங்கள் உள்ளத்தில் வைத்திருங்கள் அதை முடிந்த வரையில், ஆழமான பொருள் பொதிந்த கருத்துக்களை வைத்துத் தெழிவாகக்கூறுங்கள். அதுதான் எழுத்து நடையின் இரகசியம்.
- மத்யூஆர்னல்ட்

Page 27
முதற்பரிசு பெற்றகதை
அங்கயற்கண்ணி ”- سے سخے - : t---- மனபபுண ++++ சி. தில்லைாதன் டிடி+++++ தலைவர் அறிமுகப் ++++++ٹہ படுத்தியதற்கேற்ப அவள் கண்கள் அழகாகத்தான் இருந்தன. ஆனல் மொத்தத்தில் அவள் ஒன்றும் அதிருபவதியாயிருக்க வில்லையே. புதியமாணவரின் விவாதம் நடந்தது. "பெண்களுக்குச் சம உரிமை வேண்டும்' என்று அவள் பேசினள். அவள் எழுந்த போதுகாக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரியநிறம் என்று நான் மூணு முணுத்தேனே இல்லையோ, என் நண்பரெல்லாம் கொல்லென்று சிரித்தனர், கறுப்பாய் இருந்தும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லையே. என்னைமட்டும் ஒருபார்வைபார்த்தாள். அந்தப்பார்வைமட்டும் ஏன் அப்படி இருக்கவேண்டும்? என்ன பும்மறந்து அவள் பேச்சில் ஈடுபட்டேன். பழையமாணவரின் கூக்குரலுக்கிடையேயும் அவள் குயிலோசை கலீரென ஒலித்தது. அமுதமாயிருந்தது அவள் பேச்சு ; குரலில் மட்டுமல்ல, பொருளிலும்.
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் ;: வழக்கத்தைத் ள் ளி மிதித்துடுவோம்". இதை அவள்
பாடிய போது கான் உணர்ச்சிவசப்பட்டேன். பாரதியின் கவிதைகளுக்கு அத்தனை பெரும்சக்தி உண்டென்பதை அப் dues உணர்ந்தேன். பாரதி கனவில்கண்ட புதுமைப்பெண் இrம், அவளது கம்பீரமான தோற்றத்தையும் குரலையும் நான் கிண்வில் சந்தித்தேன்.
என்ன விசித்திரமானது இந்த மனம் ? அது ஏன் இரவெல் லாம் அவளைப்பற்றியே எண்ணவேண்டும்?. அவள்யார்? எப்படிப் பட்டவள்? அவளைப்பற்றி நான் ஏன் நினைக்கவேண்டும்? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. என்மனம் எதையோ எண்ணித் துடித்தது, அட பொல்லாத மனம் என்னையும் மீறி அப்படியா சுழன்றடிக்க வேண்டும். அவள்யாரோ போகிருள். இந்த மனம் ஏன் இப்படி அலயவேண்டும்? என்மீது எனக்கே ஆத்திரமாய் வந்தது.
...
எங்கிருந்து வந்ததோ? எதோ சொல்விட்டேன்,
 
 

* நேற்று மிகவும் நன்றகப் பேசினீர்களே'
* ஆங்! ரொம்தத் தாங்ஸ். உங்கள் பேச்சும் மிக நன்ற யிருந்தது." அவள் பேச்சில் ஒரு கவர்ச்சி கூடியே காணப்பட்டது. அந்தக்கண்கள் என்னை ஏன் அப்படிப் பார்த்தன? அவள் என்னைப் பாராட்டியது என் எனக்கு அத்தனை குதூகலத்தைத் தரவேண்டும்?. எத்தனையோ நண்பர்கள் வேறு பாராட்டிஞர்களே!
‘நான் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதில்லை. அதை நானே சிருஷ்டித்துக்கொள்வேன்" என்ருனும் நெப்போ லியன், நானும் அவனுக்குச் சளைக்காமல் அவளோடு பேசச் சந்தர்ப்பங்களைச் சிருஷ்டித்துக்கொண்டேன். ஒருங்ாளைக்காவது அவளைக் காணு விட்டால் எனக்குப் பொழுதே போகாது, அவளுடைய அழகு விழிகளையும் புன்னகை தவழும் இதழ்களையும் என்னல்மறக்கமுடிகிறதா? விரிவுரைகளுக்குப் ப்ோகும்போதும் வரும்போதும், வீதியிலே அத்தனை அழகான பெண்கள் சென்ற போதிலும் என் கண்கள் மட்டும் ஏன் அவளையே தேடின? அவள் என்னைப்பார்த்து 5 கைத் துவிட்டால் போதும், அன்றைய விரிவுரைகளை ஒருசொற்கூடத் தவறவிடாமல் எழுதிவிடுவேன். ஒரு நாள் என்னுடைய தமிழ்ப்பாடக் குறிப்புக்களை அவள் கேட்டாள். ஆஹா! அமெரிக்காவைக் கண்டபோது காலம்பஸ் அவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பான ?
இப்படி ஒரு பைத்தியம் வரும்போது எத்தனையோ பைத்தியக் கார எண்ணங்கள் தோன்றுமாம். காசு சுண்டிப் பார்ப்பேன். சீட்டுப் போட்டுப் பார்ப்பேன். எல்லாம் அவளை அடையலாமா என்றுதான். என் ஆசைக்கு விரோதமாக அதில் விழுந்தபோ தெல்லாம் நானடைந்த வேதனை. ? என் எண்ணக்கனவுகள் எத்தனை? அவள் பின்னலை விளையாட்டாக இழுப்பேன். அவள் கோபமாக நடிப்பாள். நான் குனிந்து அவள் கண்களுக்குள் ஊதுவேன். அவள் கண்களைப் பொத்திக்கொண்டு சிணுங்கு வாள். நான் அழவேண்டாமென்று மன்ருடுவேன். அவள் திடீரென முத்துப்பல்வரிசை தெரியச் சிரிப்பாள். ஆஹா ! எத்தனை மகிழ்ச்சி? எல்லாம் கனவு. பகற்கனவு,
எத்தனையோ இரவுகள் நான் கண்விழித்து 'அவளை ஏன் இப்படி நேசிக்கவேண்டும்" என்ற கார்ண்த்தை அறிய மண்டையை

Page 28
38
உடைத்துக் கொண்டிருந்தேன். அவள் அபார அழகியாயிருந் தாளா ? அப்படி ஒன்றும் பிரமாதமாயிருக்கவில்லையே. சென்ற பிறவியில் அவளுக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்க வேண்டும். அவள் என்னை எப்படி நினைக்கிருளோ ?. ஒர் ஆவுக்கு இருகொம்பு முளைப்பதுபோல் இருவர்க்குக்காதல் ஒருமிக்க வளரு மென்று பொருளிலக்கணம் கூறுகிறதே. அப்படியானல் அவளும் என்னைப்போல் துடித்திருக்கவேண்டுமே. யாருக்குத் தெரியும்? அவள் அத்தனை ஆசையோடு என்னிடம் பேசினளே. ஒருநாள் “உங்களைக் காணவில்லையானுல் எனக்கு நிம்ம தியே யில் லை" என்று கான் சொல்லிவிட்டபோது அவள் ஏன் அப் படித் தலைகுனிந்து நகைத்திருக்கவேண்டும்? "உங்களுக்கு அப்படி வில்லையா” என்று மீண்டும் நான் கேட்டபோது அவள் தாழ்ந்த தலையோடு கடைக் கண்ணை என்பக்கம் உயர்த்தி அப்படி நகைத்ததன் அர்த்தம் தான் என்ன ?
ஓர் இருதயத்தை இரண்டாக உடைத்து இறைவன் ஒரு ஆணுகவும் ஒரு பெண்ணுகவும் படைப்பானும், அவை ஒன்றை ஒன்று அடையத் துடிப்பதே காதலாம், அப் படி யென்றல் அவளுடைய மனம் என்னை அடையத் துடித் திருக்கு மா? இல்லாவிட்டால் என் மனம்மட்டும் ஏன் அத்தனை துடிப்புத்துடித் திருக்கவேண்டும்?
அவளை ஏன் விரும்பினேன் என்று எனக்குத்தெரியவில்லை. அவளுடைய ஒவ்வொரு செயலும் எனக்குப் பிடித்தது. ஒருநாள் என் போக்கைக் கண்டித்து என் நண்பனெருவன் பேசியபோது எத்தனை ஆத்திரப்பட்டேன்? அவளிடம் நான் அப்படி நம்பிக்கை வைத்துப்பழகியது அவனுக்குப் பிடிக்கவில்லை. பெண்கள் சும்மா சிரித்துப் பேசுவார்கள், நம்பக்கூடாது' என்றன். அவளு டைய செயல்கள் எனக்குப் பிடித்தனவென்று அவனுக்கும் பிடிக்கவேண்டுமென்றில்லையே என் உற்ற நண்பனுயிருந்த அவனுடன் அன்றைக்குப்பின் கான் பேசவேயில்லை.
எங்கள் நட்பும் பேச்சும் மூன்று வருடங்கள் நம்பிக்கையோடு கழிந்தன." பரீட்சை முடிந்தது. "இன்று அவள் போய்விடுவாள். எதிர்காலத் திட்டம் என்ன?’ என்று மனம் ஏங்கியது, பிரியுமுன்

{ 39
அவளைச்சந்திக்கத் துடித்தேன். சந்தித்து எதெல்லாமோபேச விரும்பினேன். நினைத்ததை வெளியாகச் சொல்ல முடியாத கோழையாகி விடுவேனே என்ற அச்சம், கடைசிச் சந்தர்ப்பம் ! புகைவண்டி நிலையத்தில் சந்தித்தேன். என்னைக் கண்டதும் மலர்ந்த முகத்தோடு வந்து பேசினுள், அப் போது அந்தப் பாழாய்ப்போன தோழிகள் வேறு பட்டாளம் போல்வந்து சேர்ந்து விடவேண்டுமா? வண்டி வந்தது. வண்டி நகரும் போது என் விழிகளும் அவள் விழிகளும் ஏன் அப்படி ஒன்றை ஒன்று விழுங்க முயன்ற ன ? இரண்டுதுளிக்கண்ணீர் என் பார்வையை மறைத் தன. அவள் சேலைத்தலைப்பால் சிவந்த கண்களைத் துடைத்துக் கொண்டாள். இதையெல்லாம் பொருட்படுத்தாது அந்த இதயமற்ற வண்டி ஓடிற்று, நான் தனியாய் விடப்பட்டு நின்றேன். s .، ،
என் எதிர்காலம் என்னுகப் போகிறது? அவளை மட்டும் அடைய முடியாமல் போனல் என் வாழ்வில் மகிழ்வேது? அமைதியேது? வாழ்வுதான் எது? அவளுக்கு ஒரு கடிதம் வரைவதென முடிவுசெய்தேன். வரைந்தேன், என் இதயத்து உணர்ச்சிகளையெல்லாம் வடிகட்டி வரைந்தேன். அவளுக்கு நம்பிக்கையேற்படும்படி உருக்கமாக விரிவாக வரைந்தேன்.
பதிலுக்காக எத்தனையோ ஆவலோடு காத்துக் கிடந்தேன். எப்படி எழுதுவாளோ? அவள் மட்டும் என் எண்ணத்துக்குச் சம்மதித்து எழுதிவிட்டால். ? எவராலும், எந்தச் சக்தியாலும் எமது இன்பவாழ்வைத் தடை செய்யமுடியுமா? எத்தனதுன்பம் எதிர்வந்தாலும் அவளை நான் கைவிடமாட்டேன், கைவிடமுடியாது. அப்படி என் எண்ணம் பலித்துவிட்டால் .. ? அப்பப்பா, நினைக் கவே எத்தனை குதூகலம், இருப்பே கொள்ளவில்லை. நாம் இந்த உலகத்துக்கே இன்ப வாழ்வென்றல் என்ன? இல்லற மென்பதென்ன ? ஒத்தவாழ்வு எத்தனை இனியது? என்றெல் லாம் பறைசாற்றி விடமாட்டோமா? அவள் எத்தனை உரிமை யோடு என்னிடம் போராடுவாள், ஊடல் கொள்ளுவாள், துடுக் காகப் பேசுவாள். நான் சரண்புகுந்து விடமாட்டேனு? என்மீது எத்தனை அன்பு காட்டப்போகிருள்? நான் மட்டும் என்னவாம்? அவளது முகம் வாடினல் என் நெஞ்சமே குருதி கொட்டாதா?

Page 29
40
ஐயோ மனமே! எத்தனை இன்பக்கோட்டைகள் கட்டினுய் ?.
நாட்கணக்காய், வாரக்கணக்காய் காத்திருந்தேன் அவள் பதிலுக்காக. நான் கடிதமெழுதி வாரங்கள் நான்காகிவிட்டன, என் உள்ளத்தில் அச்சம் மேலிட்டது. அந்தஸ்து, குடும்ப, குல வேறுபாடு எதாவது எம் காதலைத் தீர்த்துவிடுமா? நாம் எல்லோரும் மனிதர்கள் தானே. அவள் ஏதோ , பார்ப்பனர் பரம்பரையாம்.
அன்று எனக்கு ஒரு திருமண அழைப்பும் ஒரு கடிதமும் வந்தன. திருமண அழைப்பை மூலையிலே வீசிவிட்டுக் கடிதத்தை ஆவலோடு பிரித்தேன், " அன்புள்ள மகனுக்கு . . " சா! அப்பாவா அதை எழுதியிருக்க வேண்டும்? எனக்கு ஏமாற்ற மாகவும் துக்கமாகவும் இருந்தது என்ன செய்வது? படித்துத் தானே தீரவேண்டும். படித்தேன். கலியாணம் பேசுகிறேன், பெண்பார்த்தேன், சாதகங்கள் பொருத்தம், நாள் பார்த்தேன், அந்தஸ்த்துக்குத் தகுந்த இடம், எழுபதாயிரம் சீதனம், வீடு ஒன்று வசதியோடு ...” என்றெல்லாம் என்னவென்னவோ கிறுக்கியிருந்தார். எனக்கு ஆத்திரமாத்திரமாய் வந்து, கடிதத்தைக் கிழித்துக் கூடையிலே வீசினேன். யாழ்ப்பாணத்தாரே இப்படித் தான். ஒருவன் ஒரு உத்தியோகம் பெற்றுவிட்டால் போதும். ஆயிரம் கலியாணம் பேசிவிடுவார்கள். பெண்பார்த்தாராம். யாருக்குவேண்டும் இந்தச் சாதகத்துக்கேற்ற பெண்? அந்தஸ்த் தரம், கல்யாணம் செய்யும் போதும் அந்தஸ்த்து, சீ. இப்படியா தமிழர் வாழவேண்டும்? அங்கயற்கண்ணி என்ன விரும்பினுல் என்ன செய்யப் போகிறது இந்த அந்தஸ்த்து? இருமணம் ஒரு மித்தால் அந்தஸ்த்தும் வேற்றுமையும் என்ன வெட்டிப் பிடுங்கி விடுமா?. எழுபதாயிரம் சீதனமாம். எந்த முட்டாளையாவது பேடியையாவது ஏமாற்றுவதுதானே. வீடாம் வசதியாம். என்ன வசதி எனக்குத் தரப்போகிறர்கள் இவர்கள்? எரிச்சலால் என் மனம் பொருமியது.
சலிப்போடு அந்தச் திருமண அழைப்பிதழை எடுத்துப் பிரித்தேன். உல்கமே சுழன்றது. வாய்விட்டுக் கதறிவிட்டேன். என் நெஞ்சம் வேகி எரிந்தது. மனம் குமுறி அழுதது என் மனதி லிருந்த ஆசைக் கன்வின் நம்பிக்கைகளை எல்லாம் சிதறடித்தது

41
போல என் குமுறல்களையும் அழுத்தி விட அந்தத் திருமண அழைப்பிதழால் முடியவில்லை. அது என்னைப் பார்த்துச் சிரித்தது. 'திருநிறைச்செல்வன் தியாகராசாவிற்கும் திரு நிறைச் செல்வி அங்கயற்கண்ணிக்கும் திருமணம் நடாத் தப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராய்ச் சமூகந்தந்து மணமக்களை ஆசீர்வதித்துச் சபையைச் சிறப்பித்தேகுமாறு வேண்டுகின்றேம்'
ஆசீர் வதிப்பதாவது, மண்ணுங்கட்டி இந்தப் பாழ்பட்ட உலகத்தையே எரித்து விட வேண்டும் என என் உள்ளம் துடித் தது. உலகோர் அனைவருமே குதூகலமாக வாழ்வது போலவும் நான் மட்டும் ஒரு நடைப்பிணமாவது போலவும் உணர்ந்ததேன், காதலினுல் வெந்துகொண்டிருந்த என் இதயம் வெடித்து இரத்தம் பீறிட்டு ஒடுவதுபோலிருந்தது. நான் சுய நினைவு பெறச் சில நாட்களாயின. அப்போதும் என் இதயப் புண் ஆறவில்லை. இதயத்தில் சீழ்பிடித்து ஊனம் வடிந்து கொண்டே இருந்தது. அதை இங்கிருந்து ஆற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். மலாயாவிலிருந்த நண்பனுெருவனுக்குக்கடிதம் எழுதிவிட்டு அங்கு புறப்பட்டேன். அங்கு சேர்ந்த சில மாதங் களில் ஐரோப் பாவில் யுத்த ம் ஆரம்பித்துவிட்டது, பின்னர் கிழக்கில்...! V
2
இருபது ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் திரும்பி னேன். இந்த இருபது ஆண்டுகளில் உலகிலே எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. என் வாழ்வில் நடைபெற்ற மாற்றங்களும் கொஞ்சமல்ல.
அங்கயற்கண்ணியை மறந்து விடுவதற்கு என் நண்பன் வழிகூறினன். அவன் சொன்ன வழியின்படி, சாந்தினியைத் திருமணம் செய்து கொண்டேன். அங்கயற்கண்ணி இடம்பெற்ற என் உள்ளத்தில் வேறு எந்தப் பெண்ணும் அதே அளவு இடத்தைப் பெற்றுவிமுடடியாது. அவளை இழ்ந்தபோது எனக்கு எல்லாப் பெண்களும் ஒரேமாதிரியே இருந்தனர். சாந்தினி அடக் கமான குடும்பப்பெண். அவளோடு அமைதியான குடும்பம்

Page 30
42
நடாத்தினேன். என்னைக் கணவனுகப்பெற்றதில் அவள் பெருமைப்பட்டாள். ஒரு பெண்ணிற்குத் தாயாகியதில் கூட அவளுக்குப் பெருமைதான். என் மகளுக்குக் கொழும்பு நகரத் தைப் பார்க்கவே புதுமையாக இருக்கிறது. அதோ பிளாட் பாரத்தில் உலாவிக்கொண்டு நிற்கிருள். அங்கயற்கண்ணியை அன்று நான் வழியனுப்பவந்த அதே பிளாட்பாரம். அன்று அங்கயற்கண்ணி உடுத்திருந்ததுபோன்ற மஞ்சள் சேலையே இன்று என்மகள் கட்டியிருக்கிருள். எனக்கு மிகப்பிடித்தமான சேலை அதுதான். அழகான வாலிபரைத்தேடும் வயதல்லவா? வேடிக்கைபார்ப்பதாக அவள் எனக்கு நடித்துக் காட்டுகிருள்.
நான்கூட இந்த இருபது வருடங்கள் சாந்தினியின் கணவனுக நடித்தவன் தானே. அவள் என்றுமே என்னைச் சந்தேகித்தது கிடையாது. என் இதயப்புண் சில வருடங்களில் ஓரளவு ஆறியிருந்தது உண்மையே. ஆயினும் அதனுல் ஏற்பட்ட வடு அதை ஏவராலுமே கிரவிவிட முடியாது. இலங்கைக்கு ஒரு தடவையாவது போகவேண்டும் என்று சாந்தினி எத்தனே தடவை அடம்பிடித்தாள். நான் ஏதேதோ சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்து வந்தேன். பதினெட்டு வருடங்களே இப்படிக் கழித்தேன். இனிமேலும் ஏமாற்ற முடியாத நிலையிலேயே புறப்பட ஒப்புக் கொண்டேன்.
கப்பல் எறியதுமே ஆறிப்போயிருந்த வடுவின் ஓரத்தில் புண் புரைய ஆரம்பித்தது. சிறிதாகச் சீழ் வடியவும் ஆரம்பித்தது. இதனை க்ான் எதிர்பார்த்தே இத்தனை காலமும் கடத்தி வந்தேன். இதைச் சாந்தினிக்கு எப்படி விளக்கமுடியும் ?
மனப்புண்ணினுலும், உளப் போராட்டத்தாலும் இருபது ஆண்டுகளில் என் உடலிலேயே எவ்வளவு மாற்றம். மயிர் கரைத்து விட்டது. உடலெல்லாம் சோர்ந்து, முகமெல்லாம் எலும்புகள் பீறிடத்தொடங்கிவிட்டன. அங்கயற்கண்ணி என்னைப்பார்த்தால் என்ன நினைப்பாள்? என்னை அடையாளம் கண்டு கொள்வாளா? அவள்தான் இப்பொழுது எப்படி இருப்பாள் ? காலம் அவளின் இளமையையும் கண்களின் எழிலையும் எப்படியெல்லாம் சிதைத் திருக்கும்? இன்று என் மகள் இருப்பதுபோல் அல்லவா அன்று அவள் இருந்தாள். என் மகளிற்கு அவளின் பெயரைத்தானே

43
குறுகத் தறித்துக் கயற்கண்ணி என்று வைத்தேன். சாந்தினிக்கு அந்தப்பெயர் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை ? நான் அந்தப் பெயர் தான் சூட்டவேண்டுமென இறுகப் பிடித்தேன். அவள் எனக்காக ஒப்புக் கொண்டாள். இப்பெயர் சூட்டியதால் எனக்குத் தொல்லை கூட இருந்தது. எவ்வேளையிலும் கயற்கண்ணியைப் பெயர் சொல்லி அழைத்ததும் அங்கயற்கண்ணியின் ஞாபகம் வந்துவிடும் எப்படித்தான் இருந்தபோதிலும் என் காதல் கினைவாக அவளின் பெயரைச் சூட்டியதில் ஒருவகைத் திருப்தி. அங்கயற்கண்ணியை ஒரு காலத்தில் காண நேர்ந்தால் அதை அவளுக்குச் சொல்லிக் காட்டவேண்டுமென எண்ணியிருந்தேன். அவளைக் காண்பதற் காக அவள் வீட்டிற்குச் செல்லலாமா? அவள் கணவன் சந்தேகிப்பான ? இந்த வயதிலுமா?
பிளாட்பாரத்தில் வண்டி வந்து நின்றது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறர்கள். வண்டி இவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடிவிடும் என்றபயமா ? வண்டி புறப்பட அரைமணி நேரம் இருந்தது. -
பொருட்களை ஏற்றிவிட்டுச் சாந்தினியையும் ஏறச் செய்தேன், கயற்கண்ணியைக் காணவில்லை. பட்டணங்களில் பழகிய பெண்களே இப்படித்தான். பத்து நிமிடங்கள் முன்னதாகமட்டும் புகைவண்டி நிலையத்திற்குப் போனுல் போதாதா என்று ஒட்டலில் கேட்டாள். நானே அவசரப்பட்டு அழைத்து வந்தேன். இப்போது வண்டி புறப்படும்போதுதான் வருவா ள் போல் இருக்கிறது. பிளாட்பாரத்தில் என்ன வேடிக்கை பார்க்கிருள்? யாரோட்ாவது பேசிக்கொண்டு நிற் கி ருளா ? இருப்புக்கொள்ளாது எட்டிப் பார்த்தேன், அடுத்த பெட்டியின் எதிரே யாரோ ஒரு இளைஞனேடு அவள் பேசிக்கொண்டு நின்ருள். என்ன துணிச்சல்?
அவளை அழைத்து வருவதற்காக இறங்கி நடந்தேன். என்னைக்கண்டதும் அவள் சிறிது திடுக் குற்ற ள். பின்னர் சமாளித்துக் கொண்டே “ இவர்தான் என் அப்பா” என்று அந்த இளைஞனுக்கு அறிமுகப்படுத்தினுள்.
"அப்பா, இவர் மிஸ்டர் கண்ணனும். உங்களுடைய பெயரேதான். இவர் எங்க அம்மாவுடைய கிராமமேதானம். ஆனல்

Page 31
44.
எங்கள் ஒருவரையும் தெரியாது என்று சொல்லுகிருர். இவரும் இன்று இதே வண்டியில் தாயாருடன் பயணம்செய்கிருர்.”
"அப்படியா? ரொம்ப நல்லது. உங்கம்மா இருபத்தைந்து வருடங்களின் பின்னர் வருகிரு. அவருக்கு எப்படித் தெரியும்?” என் பெயரைக்கொண்ட அந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தேன். எங்கோ பார்த்த முகம்போலத்தோன்றியது.
'கண்ணன்” என்று பெட்டியிலிருந்து ஒருகுரல் வந்தது. எங்கோ பழக்கப்பட்டகுரல், முற் பிறவியிலா? நான் திரும்பிப் பார்த்தேன். அவனும் திரும் பிப் பார்த்தான் வண்டியின் யன்னலூடாக ஒரு முகம் தெரிந்தது.
“என்னம்மா" என்று அந்த இளைஞன் அழைத்தான். தாயாரின் கவனம் மகனிலிருந்து என்பக்கம் திரும்பியது. என் விழிகளும் அவள் விழிகளும் மோதின, அதே கயல்விழிகள். காலத்தால் முகத்தின் தேர்ல்-சுருங்கியிருந்தது. நெற்றியிலே சுருக்கம். மயிர் வெள்ளிக்கம்பிபோல் கரையோடியிருந்தது. ஒரு வெள்ளைச்சேலை உடுத்திருந்தாள். நான் என் சுயநினைவிற்கு வரச் சில கணங்கள் சென்றன. என்னைச் சமாளித்துக் கொண்டேன். என் கால்கள் அவளை நோக்கி நடந்தன. அண்மையில் சென்று நின்றேன்.
"நீங்களா?" என்ற வார்த்தை அவள் அடித்தொண்டை பிலிருந்து வந்தது. அவள் கண்கள் கலங்கின. வர இருந்த கண்ணீரைத் தடுத்துக் கொண்டாள். கண்ணனும் என் மகளும் எம் மிருவரையும் மாறிமாறிப் பார்த்தனர்.
* இது என் மகன் கண்ணன்” - அவள் தன் மகனை அறிமுகப்படுத்தினுள்,
" இது என் மகள் கயற்கண்ணி' - நான் என் மகளை அறிமுகப்படுத்தினேன்.
* அழகான பெண், இங்கே வாங்கம்மா"-என என் மகளை அழைத்து அணைத்துக் கொண்டாள்.
'உங்கள் மகன்கூட நல்ல அழகான வாலிபன்" என்று அவள் மகனின் முதுகில் நான் தட்டிக் கொடுத்தேன்.

45
வண்டி புறப்பட மணி அடித்தது. எல்லோரும் பெட்டியில் ஏறிக்கொண்டோம்.
சாந்தினி தூங்கிக்கொண்டிருந்தாள். நாங்கள தூக்கமின்றி இரவுபூராவும் உரையாடினேம் எனக்குத் தூக்கம் வந்தபோதும் கண்ணனுடைய குரலும் கயற்கண்ணியின் குரலும் பெட்டியின் அடுத்த அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தன.
என் வாழ்வில் இருபது வருடங்களாகக்கிட்டாத ஓர்
சாந்தி கிட்டியதுபோல "ணன்மனம் ஒருவிதப் பூரணத்துவ கிலை அடைந்தது.
O இலக்கியம் O
'மனிதன் தன்னைத்தான் அறிந்துகொள்ள் உதவிசெய்வது "
தன்னம்பிக்ககையை வலுப்படுத்துவது; உண்மையைக் காண்பதற்கான முயற்சிக்கு ஆதரவளிப்பது: மக்களிடத்திலுள்ள நல்லவற்றைக் காண வகை செய்வது; மக்களுடைய இதயங்களில் வெக்கம், கடுங்கோபம், வீரம் ஆகிய உணர்ச்சிகளைக் கிளறுவது; வாழ்க்கையின் மேலான இலட் சியத்துக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்கு வலிமை ஊட்டுவது; மனிதனத் தூய்மைப்படுத்துவது ஆகியவை
இலக்கியத்தின் நோக்கமாகும்"
- மக்ஸிம் கார்க்கி. விக

Page 32
இரண்டாம் பரிசு பெற்றகதை
o எப்படி இருக்கிறது, உலகம்? **ら。ら****** ********፥ சுசீலா சின்னத்துரை : ᎦᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᎦ
வெட்டி வெட்டி வீழ்த்துவோரையும் வாழ வைக் கும் வாழைகள். பூவும், பிஞ்சும் காயும் கனியுமாக ஆங்காங்கு காட்டி இலைகளோடு ஒட்டி உறவாடி நிற்கும் சிறு குலைகள். இத்தகைய ஓர் வாழைத்தோட்டம். குடியிருக்குஞ் சிறிய ஒரு வீடு. பெட்டியில் ஐம்பது ரூபாய் நோட்டுகள். இவ்வளவுதான் காவேரியின் தந்தை அவள் தாயாராகிய பூங் கோதைக்குத் தேடி வைத்து விட்டுச் சென்ற செல்வங்கள். போதா குற்ைக்குப் பெரும்பாரமாக காவேரியையும் விட்டுச்சென்ருர், அப்போது அவளுக்கு ஐந்துவயது தான்-பிஞ்சுப்பருவம்.
கணவன் நெடும்பிரிவால் கலங்குந்தங்கைக்கு, அண்ணுவான இந்மோதரம் அளித்த் ஆறுதல்; கொடுத்தவாக்கு: "நானிருக் கிறேன் உனக்கு ஒரு மகள்-ஐந்து வயது, எனக்கு ஒரு மகன் பத்து வயது. எங்கே போகப்போகிறது நான் தேடிவைத்திருக்கும் பொருளெல்லாம்? உள்ளத்தால் பொய்யாது. இவர் உரைத்தவை தானிவை. அவளும் நம்பினள். நம்பத்தான் வேண்டும். அண்ணன் தங்கையென்ருல் அவர்களைப்போல அன்புடையார் காணக்கிடைக்காது இவர் ஊராகிய நல்லூரில்.
அண்ணன் தங்கையிருவருக்குமிடையில் பாசம் விசை விசையாய் பெருகத் தொடங்கவே, வந்ததுமோசம். முளையிலே கிள்ளியெறி யாவிடின், களையமுடியாதென்று நினைத்து விட்டாள் தாமோதர னின் மனைவி லஷ்மி, ‘பிச்சைக்காரப் பெண்ணுக்கு, முதுசொம்? உள்ள என் பிள்ளையைக் கட்டிக் கொடுக்கவா?’ என்றும் எண்ணி யிருப்பாள் அந்த நாளில்.
எதுவகையும் பாசத்தை முறிக்க நினைத்தாள்; ஒரு வாரம்இரண்டு வாரம்-ஒரு மாதத்துக்குள்ளேயே முறித்து விட்டாள் நினைத்தால் பெண்களுக்கு இதுவா ஒரு பெரியவேலை? அந்த வீட்டு முற்றத்திற்கும் கால்எடுத்து வைக்காதவகையில் தாமோதரத்தைத் தடுத்துவிட்டாள் லஷ்மி, தடுத்தது என்ன, இல்லாத கோள்பல சொல்லி-அண்ணன் தங்கை உறவுக்கே கொள்ளி சொருகி விட்டாள்.
翻 'alaysi யாரைத் தான் கைவிடப்போகின்ருர், ஆக்கிய கடவுளுக்கு ஆளத்தான் தெரியாதா?’ என்ற எண்ணத்தோடு,

47
'வாழைத்தோட்டமுண்டு - நாமுண்டு காலையிற் சுட்டுவிக்கும் அப்பமும் துணையுண்டு’ என்ற திருப்தியுடன்,காலத்தைத்தள்ளியது, பூங்கோதையின் குடும்பம். அப்போ காவேரிக்கும் வயது பத்தாகி விட்டது. அவள் படிப்பை நிறுத்தவில்லை அவள் தாய். கர்வேரி கன்னிப் பருவமடைந்தபின்னும், கண்டவர்கள் ஏதும் சொல்லு வார்களே, என்றஞ்சாது, ஈன்று புறந்தந்ததுமன்றி-சான்ருேராக் குவது தன்தலையிவே பொறுத்துவிட்டதே என்று மணஞ்சோராது, பள்ளிக்கனுப்பி, அவள் அறிவை தமிழ்ப்பண்பை - பெண்மையை வளர்த்துக்கொண்டே இருந்தாள் அவள் தாய். அதிகம் கூறுவா னேன், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கும் நின்ற காவேரி திறமையான வெற்றி பெற்ருள், பயிற்சிக்காகக் கழகத்துள்புகுந்தும் விட்டாள் பண்புள்ள பெண்ணுக.
அன்பு - நானுடமை - அடக்கம்-அறிவு அத்தனையுங் கெடாத தமிழ் மங்கையாக, கழகப்படிப்பை முடித்துக்கொண்டு வெளிவர வேண்டுபென்பதே காவேரியின் அவா.
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் பலருள் ஒருவன் சேகர் அறிவுத்தேன் பருகத்துடிக்கும், ஜோஜ்-சேற் மின்மினிப்பூச்சிகள் எத்தனை: அவன் அழகில் மயங்கி அவனையே மாயக்குளியில் வீழ்த்த நினைக்கும் நைலோன் வண்ணுத்திப் பூச்சிகள் எத்தனை தேவை யெனுந்தந்தியைப் பின்தொடர்ந்து பறந்து வந்து அவன் பெட்டி யை நிரப்பும் பணத்தைக் கண்டு கண்ணுலும் பல்லாலும் மெல்ல அவன் பணத்தைத்தட்ட நினைக்கும் பூலோக நட்சத்திரங்கள் . எத்தனை!. -
இத்தனைப்பூச்சிகளும் நட்சத்திரங்களும் வட்டமடித்துக்கிட்ட வரவும் தொட்டுப் பதம்பார்க்க முடியாத-எட்டத்தே, எவர்க்குங் கிட்டாத கனியாக அவன் அடங்கிவாழ்ந்தான்.
"உடன்பிறவாவிடினும் பிற நங்கையரெல்லாம் என் தங்கை யரே, என்னுங்கொள்கையுடன் வாழும் சேகரை, இப்பல்கலைக் கழகத்துள் கால்வைத்ததும் வைக்காததுமான நிலையிலேய்ே அவன் இதயத்தை-தங்கையின் பிரிவால் அன்பு நீர் வற்றியிருக்கும் அவன் இதயத்தை-தொட்டுவிட்டாள் எவர்க்குமில்லாத தனிப்பண்பால்காவேரி. அழகே பெயராக, அதற்குப் பொருத்தமான அழகு. அதரப்பூச்சும் அஞ்சனத்தீட்டலும் இல்லை. அங்க அசைவுகளை அப்படியே காட்டி நிற்கும் ஆபாச உடையும் இல்லை கருங்கூந்தலை குதிரை வாலாக்கித் தன்னைக் குதிரையாக்கும் கோணங்கிநடையு மில்லை. தமிழே பெண்வடிவமான பிம்பமாகவே விளங்கினுள்.
யாழுங்குழலும் அவள் தமிழ்ப்பேச்சின் இனிமையில் அடி பட்டுச் சாய்ந்தன. தமிழ் எழுத்து நடையைக்கண்டு ஆங்கில மொழிநடை ஏங்கித் தவித்தது.

Page 33
48
அன்று சொன்ஞளே, தமிழ் சங்கத்துணை செயலாளராகத் தன்னைத் தேர்ந்தெடுத்த அன்று.
'தமிழ் மொழியை உயிருக்குநேராக-மேலாக மதிக்கின்றேன் ஆங்கிலமும் படித்தேன்-படித்துவருகிறேன் உதட்டிற்கு அழகாக உழைப்புக்கு இலக்காக."
எத்துணைத் தமிழ்ப்பற்று அவள் பேச்சிலே-அன்று எத்தனைக் கரங்களின் பேரோலி-அவற்றிற்கிடையே ஒருவனின் வாய்மொழி"அப்பக்காரி என நாவினல் சுட்டுவிட்டான். நீறுபட எரித்த சிவன் போல அவளும் கனல் கக்கப் பார்த்துவிட்டாள் அவன. வரதராஜன.
நிற்க, தமிழ்ப்பண்பால்-அமிழ்தினும் இனிய சொல் ஆற்றலால் சேகரின் உள்ளத்தையே அள்ளிவிட்டாள். அண்ணுவுக்கொரு ஒப்பற்ற தங்கையென எண்ணி நடந்தாள்-புன்னகை புரிந்தாள் புதித்தமுல்லை போல.
கடல் ஆழங்காணலாம்-பெண்கள் மன ஆழம்காண முடியா று கூறுவார்களே-நம்பலாமா இவளையும்? ஆண்களைத் தான் முடியுமா ? என பலவாருக எண்ணிய சேகரையே சில வேளைகளில் அவன் கண்கள் ஏமாற்றி விடுகின்றன. காவேரியின் லப்பருக துடியாய்த்துடித்தன. ஏன்? தங்கையின் அழகை நய்ந்து அண்ணு மகிழுதல் இயற்கைதானே ? எங்கிருந்தோ வந்தாள். . . அவன் இதயப் பொய்கையில் தூய புத்தம்புதிய மேலராகப்பூத்து நின்ருளே. . . . . .
"அப்பக்காரி" என்று அழைத்துவிட்டால் ஏதோ அவமானம் ஏன்று எண்ணினன் வரதன்-படித்தறிந்த முட்டாள். இன்றைய ரஷ்ய நாட்டின் தலைவன் குருஷ்ஷேவ் முதல் எத்தனையோ தல வர்கள் எல்லாம், ஏழ்மையின் கோரப்பிடியிலே சிக்கித் தவித்த வர்கள் தான் என்பதை மறந்து உளறித் தள்ளிவிட்டான் வரலாறு படித்தவன்.
"வரதனை உனக்கு முன்பே தெரியுமா, அப்படி அவனுக்கு என்ன தீங்கு செய்துவிட்டாய் நீ?" என்ருெரு கணகொடுத்தாள் காவேரியின் தோழி நளினி. விம்மி அழுதாள் காவேரி,
"என்னை மன்னித்து விடு. உன் மனத் தைப் புண்படுத்தி விட்டேன் காவேரி" என்று கவலையுடனுரைத்தாள் நளினி.
"தோழி என்ற உரிமையில் இல்லை நளினி, உனக்கில்லாத உரிமை வேறுயாருக்கு?அவரைப்பற்றி உனக்கேதும் தெரியுமா?" என்று தெரியாதவள் போலக் கேட்டாள் காவேரி,
 
 
 
 

49.
அவனைப்பற்றிச் சற்றுத் தெரிந்த நளினிக்கு விடைஅழிப்பது கஷ்டாமாயிருக்கவில்லை, "அதிகம் படித்தவன் போல நடிக்கிருன்- W அகம் பாவம் பிடித்தவன் போல் காணப்படுகிறன் சு ஒழுக்கத்திற் கெட்டவணுகத் தெரியவில்லை-ஆனல் வலிய எவரையும் வம்புக்கு இழுப்பான்'
'இது நாள்வரையும் சொல்லாதிருந்துவிட்ட்ேன், சொல்ல
சந்தர்ப்பமும் கிட்டவில்லை, நளினி-அவர் என் மாமன் தாமோத ரத்தின் மகன், அதனுல் தான் பலபேர் முன்னிலையில் "அப்பக்காரி! எனத்தலையில் தூக்கிவைத்து விட்டான். நல்ல தொரு அத்தான் வந்து வாய்த்திருக்கிருன்.'
. . . "வர்தனில் குறை கூறிப்பயனில்லை, எல்லாம் அவர் தாய்செய்தவேலை-என் ஐந்து வயதில் தந்தை இறந்துவிட்டார். என்.தாயார் என்னை வளர்த்துப் படிக்க வைத்து விட்டார். என் தாயார் அண்ணு தாமோதரம். அவருக்கு எங்களிடத்திலுள்ள பாசம் தன் வீட்டில் உள்ள பொருளுக்குச் சேதம் என்று நினைத் தாள் அவர் மனைவி லஷ்மி, பாசத்தை வெட்டத்திட்டஞ்செய் தாள்-வெட்டிவிட்டாள். இரு குடும்பங்க்ளும் இப்போ கீரியும் பாம்பும் போல.' என்று தன் குடும்ப லரலாற்றைக்கூறிஞள் காவேரி, 'இவளுக்கு ஆறுதல்மொழி கூறினுள் நளினி.
:பணமும் குலமும்-பெருமை அடித்துக் கொள்ளும் உலகம் அழிந்துவிட்டது காவேரி, குணமும் கலநலமுந்தான் பாராட்டப் படுகிறது. கலையின் பொற்பாதங்களிலே - பணம் மண்டியிட்டு வணங்கத்தொடங்கிவிட்டது இப்போ-இவ்வுண்மையை இன்றில்லை என்ருே ஒரு நாள் அறியத்தான் போகிருய்.1 . , , ,
"குடும்ப விரோதந்தான் அன்றைய குரோதக் சொல்லிற்கு காரணம் நளினி-அது வரதன் தவறல்ல-என்ன இருந்தாலும் அத்தான் அல்லவா..?' * '.
**ஆம்! வரதன் மீது குறை சுமத்தவும் விரும்புவாயா நீ காவேரி 1 நம்பமாட்டாய்-நானும் சின்னஞ்சிறு வயதில் தாயை இழந்தேன், தந்தையின் தாயாளகுணத்திலே வளர்ந்தேன். என்னை வளர்த்து இந்நிலைக்குக்கொண்டு வருவதற்கு என் தந்தை அடைந்த துன்பம் சொல்ல முடியாது.என் தந்தையும் ஒரு சாதாரண தொழி லாளிய்ே . . உலகமே ஒரு நாடகம் என்ருல்-இப்பல்கலைக்கழகமும் அதன் ஒருபகுதிதான்ே! இங்கே படிக்கும் மாணவ மாணவிகளுள். பலர் தம்பொருட்குறையை இன்னுமுள்ள - குணக்கேடுகளை மூடி மறைத்துத்தான் வாழ்கின்ருர்கள் - வாழவேண்டும் - இல்லையேல் காறியுமிழ்ந்துவிடும்' என்ருள் நளினி.

Page 34
50.
இதுகாறும் மெளன்மாயிருந்த காவேரி பதில் கூறினுள், *நளினி நாஞேஅப்படி வாழ விரும்பவில்லை - என்றும் - எங்கும் ஒன்று போல் ஒரே தன்மையாகத்தான் வாழவிரும்புகிறேன்."
மாலை மணி நான்கு அடித்து ஓய்ந்தது. வீணுகக் காலத்தைப் போக்காது இருவரும் தேநீர் அருந்தச் சென்றனர். காவேரியின் வாடிய உள்ளித் தைப் படம்பிடித்துக்காட்டியது அவள் அழகிய முகம்.
அன்று இரவு முழுதும் ஆத்திரத்தால் நவிழ்த் தான் வரதராஜன். 'எங்கள்குடும்ப விவகாரத்த்ையே சபைக்கு எடுத்துசந்தி சிரிக்கவைத்து விட்டேன். அவளை அவமானப்படுத்த நினைத் தேன். "அப்பக்காரி என்ற சொல் என்னையே அவமானப்படுத்தி விட்டது.
* .விளக்கம் கேட்பார்கள் - விளக்கிச் சொல்லுவேன் ஏளனஞ்செய்வார்கள் அவளை, என்று எண்ணினேன் - என்னையே ஏளனஞ் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
.அவள் பேச்சைக்கேட்கும்போதும் 'ഷൂ', ' என வாய் பிளக்கிருர்கள். எதற்கெடுத்தாலும் புகழ்கின்றர்கள் - அழகு யார்ைத் தான் மயக்காது-அதனுடன் அறிவுஞ் சேர்ந்துவிட்டால் மிகுதியைக் கூறுவானேன் ? . காவேரி அழகி தான் ! அறிவு நிறைந்தவள் தான் அந்தப்பயல் சேகர் அன்பாகப் பேசுவதும் சிரிப்பதும்-அதைப்பார்த்துக் கொண்டு நான் சும்மா இருப்பதும் இயலுமா ? . தமிழ்ச் சங்கச்செயலாளன் என்ற பெருமையில் தன்னையே மறந்து விடுகிருன் - இவளும் அவனுடன் பறந்து இன்பச்சிறகடிக்கிருள்.
حمتع۔ع جو
............ அவர்களைக் குறை கூறியும் பயன் என்ன? என் தாய் எங்கள் இரு வீட்டிற்கும் வைத்த நெருப்பு என் நெஞ்சத்தையே சுட்டெரிக்கிறது. காவேரி எழிலரசி மாத்திரமா - கலையரசியும் தான். இன்னுஞ்சில நாட்களாகப் பட்டதாரியாக வெளியேறப் போகின்ருள்-எத்தனை பேர் அவளைத் திருமணஞ் செய்யப்போட்டி போடப் போகின்றர்கள். ஏன்? என் மாமன் மகள் எனக்கேன் அந்தப் பாக்கியம் கிடைக்கக்கூடாது? சேகர் அன்பை அவள் முன்னரே அடைந்திருக்கக்கூடும் - அன்றியும் என் தாய் விட்டு விடவா போகின்ருள். இன்றே அவளை நேரில் கண்டு சமாதானஞ் செய்து கொண்டு . ஏன் - என் அன்பை ஏற்கும்படி கேட்டால் என்ன?.
.சீ.சீ.என்ன இருந்தாலும் நான் ஒரு ஆண், நாளை பட்டதாரியாக வெளியேறப் போகின்றவன் . . .அவளிடம்
 

51
மண்டியிடுவதா-ஏன் அவளே வந்து நடந்ததெல்லாவற்றையும் சிறந்துவிடும்படியாகக்கேட்டு, என் மனப்புண்ணை மாற்ற முன் ரக்கூடாதா? வந்தால் அவள் மானம் போய்விடுமா?’
இவ்வளவும் நித்திரைபோல் கண்ணமூடிக்கொண்டு கிடந்த வரதன் உள்ளத்தின்கண் எழுந்த சிந்தனைச் சித்திரங்கள். கண் விழித்தும் இப் போராட் டந் தீர்ந்ததா? இல்லை, யோசனைக் கடலிலேயே மீண்டும் மூழ்கினன்.
இம்மனப்போராட்டம் காவேரியையும் தாக்கியது போலும். அவளும் நிம்மதியைக் காணுதவ ளாய் தத்தளித்தாள். கன்னி ஒருத்தியும் காளை ஒருவனுஞ் சந்தித்துக் கதைத்துவிட்டா
களங்கம் கற்பிக்கத் தவறுவதுஇல்லை இந்த உலகம்.
தமிழ்ச்சங்கத்தின் பேரால் தாங்களே, சேகரையும் காவேரி யையும் செயலாளர்களாகத் தெரிந்தெடுத்தார்கள். இது காரண மாகப் பல தடவைகளில் சந்தித்து நெருங்கிப் பழக வேண்டியநிலை. ஏற்பட்டது. போற்றிய வாயினலேயே தூற்றத்தொடங்கிவிட் டார்கள். காரணம் எது வா யிருப்பினும் சேகரும் காவேரியும் நீண்டநேரம் இருந்து கதைக்கக் கூடாத காலமும் வந்துவிட்டது. தமிழ்விழா நடந்துகொண்டிருந்தது அன்று-விழாச்செயலாளர் இருவருக்கும் அதிக வேலையிருந்தது -ஓயாது சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம்-சிரிப்பு வரத்தான் செய்யும். அன்று அவரிருவரும். கூடிப் பேசும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கண்கள் அவர்களைக் கேலி செய்வனபோல் பார்த்தன. தன் சகபாடிகளின் மனப் போக்கை நகைப்பை- ஏழனத்தை காவேரி வெறுத்தாள்-.
.'எவ்வளவு பொல்லாத உலகமப்பா இது! தனிமையில், வாழவிடமாட்டார்கள் - சேர்த்துப் பணியாற்ற வைத்துவிட்டு பணியாற்றி வாழவிடமாட்டார்கள்.
.படிக்காத பாமரமக்களாய் இருப்பின் இவர்களைத் தட்டிக் கழித்து விடலாம்-...பட்டதாரிகளாய் பயிற்சிபெறும் புல்கலைக் கழக மாணவர்களல்லவா இவர்கள்? பகுத்தறிவில்லா மிருகங்களே இவர்களைப் பார்த்து சிரிக்குமல்லவா ?. - - , r; . .அத்தான் வரதராஜனின் வஞ்சக உள்ளந்தான் இம்மாண
வர்கள் இடையே சதிராடுகிறதோ...என்னவோ..? : " . .இல்லை! பாவம்! அன்று தவறிழைத்தது ஏதோ உண்மை
தான். பின்பு வ ரதன் என்னைத் தனிம்ையில் சந்திக்கும்
போதெல்லாம்-முன்புதான் விட்டபிழையை உணர்ந்து பச்சாத்
தாடிப்படுபவர் போலல்லவா நடந்து கொள்கிருன் - நிமிர்ந்த தலேஜ்னே தாழ்ந்து விடுகிறதே!"

Page 35
52.
வர்தனுட்ைய ஆப்ாசப்பேச்சும், புரியாத நடையும் காவேரி யின் ஏழை மனதில் பல கேள்விகளை எழுப்பியதில் வியப்பொன் நில்லை-எனினும் சேகரின் நட்பு அதைக்காட்டிலும் பன்மடங்கு மேலாக அவளை வாட்டியது. பல்கலைக்கழகத்தில் அண்ணு-தங்கை பாசத்தோடு கூடித்திரிந்த உறவும் அவளுக்குப்புரியாத புதிராகத் தான் திகழ்ந்தது. s ܀ ` ،
"கன்னியொருத்தியை அடிக்கடி சந்தித்துக் கதைப்பதற் கேற்றசூழ்நிலையில் சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் - அதனைப் பயன்படுத்திக்கொண்டு தனக்கும் அவளுக்கும் இடையே ஆபாசத் தொடர்பு இருப்பதாகக்கயிறு திரித்து, வெளியே பெருமை யடித்துக்கொள்ளும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிருர்கள். அப்பச்சோந்திகளில் ஏன் சேகரும் ஒருவனுய் இருக்கக்கூடாது" என்று தன்னைத்தான் கேட்டாள். ஆனல் ஒரு கணப்பொழுதிலித் தப்பான எண்ணம் அவள் மனதை விட்டோட, தன் கேள்விக்குத் தானே விடையையளித்தாள்-. : r
' .'ஆண்களில் மட்டுமா? பெண்களிலும் இக்குணம் படைத் தவர்கள் இருக்கத்தான் செய்கிருர்கள் . ஆனல் சேகரோ
ல்லை. என்னுடன் சேகர் நடந்துகொண்ட வகையிலோபேச்சிலோ-செயலிலோ-பாவனையிலோ-சிறிதளவும் விபரீதமான போக்கைக் காணமுடியவில்லையே."
தனிமையில் பல நாள் கண்டி க்குச் சென்றிருந்தார்கள்படிபகத்தில் பல நூல்களைப்புரட்டி குறிப்பு எடுக்கும் போதெல் லாம் பலமணிகள் நேரம், செலவழித்திருந்தார்கள். இத்தகைய எத்தனையோ சந்தர்ப்பங்கள் சேகருக்குச் சாதகமாய் நின்றும் அவர் அவற்றைப் பயன்படுத்த இல்லை-ஆம் ! சேகர் தன் உள்ளத் தில் தவருண எண்ணத்திற்கு இடங்கொடுப்பவனல்ல.
அன்று நடந்த நிகழ்ச்சி தான், எல்லாம் உள்ளத்தும் தவறன எண்ணத்தைத் தூவிவிட்டது, என்பதை இப்போது தான் முற்முக உணர்ந்தாள் காவேரி. அத்தகைய நிலையில் அவ்ளும் காண்பவளாய் இருந்திருப்பின் அவள் உள்ளத்தும் தவருன கருத்து பதியத்தான் செய்யும். ,
இந்நாள் வரையும்-பெருமையோடு இக்கழகத்திருந்த காவேரி, பயிற்சி முடிந்து வெளியேறும் போதா வீண்பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டும். அவள் தாயும் இச்செய்தியை உண்மையென்று நம்பிவிட்டால் அவர் மணம் தாங்க முடியாத வேதனையடையும் இச்சந்தேகம் நீங்கத்தான் வழியேது? அடுத்த நாள் தொடங்க இருக்கும் இறுதிப் பரீட்சை முடிந்துவிட்டால் . . . . . · ·
பரீட்சை முடிவுற்ற மகிழ்ச்சி . எல்லா. மாணவர்களும இன்ப பொழுதுபோக்குக்காக எங்கெல்லாமோபோய்விட்டார்கள்:

53
'நீ மாத்திரம் ஏன் போகவில்லை வரதா?’ என்ற ஒரு பல்லவியை *டுத்தார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி - காவேரியைப் பற்றிய வரலாற்று அநுபல்லவியை-சரணத்தை-அவன் வாயிலாகக் கேட்கலாமென்ற நம்பிக்கையில்.
'அப்படி ஒன்றுமில்லை ஐயா, உடல்நலம் சரியில்லை’ என்ருன் வரதன். ‘எல்லாம் எனக் குத் தெரியும் வரதா - எதனையும் ஆராய்ந்து பாராது முடிவு செய்வது பேராபத்து - வா-அப்படி ஆற்றேரமாகச் செல்வோம்" என்று அன்பு ததும்பும் குரலில்
தன் மனக்குழப்பத்தைக் காட்ட விரும்பாது வரதன், கலாநிதி கூறியதற்கு உடன்பட்டான். இரு வரும் வெளியேறினர்கள். 1. மாலை நேரமாக இருந்ததினல் அவ்விடத்தில் பலர் வந்திருந் தனர். இருவரும் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு நடந்தனர். எங்கும் அமைதி நிலவிற்று. ஆனல் அமைதிக்குப்பின் புயல்வருவது இயற்கை நியதியல்லவா-சடுதியில் வரதன் 'ஐயா ! அதோபாருங் கள்-இப்போது என்ன சொல்லுகின்றீர்கள்?’ எனச் சிலைபோல் நின்றுகொண்டு கோபங்கக்கும் பேய்போல் அலறிஞன்-கண்கொட் டாது பார்த்தபடி.
* வரதா ! இருவரைக் காண்பது உண்மை-ஆஞல் அவர்கள் உறவாடல் இதுவாகத்தானிருக்கும் என்பதை எவ்வாறு கணித்து விட முடியும். சற்று மறைந்துநின்று கவனித்துக்கேட்போம்' எனக் கலாநிதி பதிலளிக்கவும், இருவரும் ஒரு மரத்தண்டை மறைந் திருந்து அவர் உரையாடலை செவிமடுத்தனர்.
உலகத்திலேயே இருக்கவேண்டுமென வந்த மனிதன், அதிலி ருந்து ஒழித்தோடவும் முடியுமா? உலகத்தின் கண்ணைக்கட்டி எச்செயலையுஞ் செய்யமுடியுமா? "நாம் கதைப்பதைக் கேளாதே" எனக்கூறி அதன் செவியைப் பொத்தவும் முடியுமா? இதைக் காவேரியும் சேகரும் அறிந்திலர் போலும். தங்கள் தூய அன்பில் களங்கத்தைப் புகுத்த இவ்வுலகம் என்றும்-எப்போதும் தயாராக இருக்கிறதென அறிந்து, தன் எண்ணக் கருத்தினை எவ்வாறேனும் காவேரிக்குக் கூற வேண்டுமென நிச்சயித்த சேகர், அவளை மறைவாக ஆற்றங்கரையில் ஒரு தனித்த இடத்தில் கூட்டிச் சென்றன். ஆனல் இங்கும் பிறரை விதியே அழைத்துவரும் எனச் சேகர் அறியாதவனய்க் காவேரிக்குத் தன் மனதையே வெளியாக எடுத்துரைத்துவிட்டான்.
‘எல்லோரும் வெளியே செல்ல நாங்கள் மட்டும் இவ்விடத் தில் . . . . . " எனக்கூறிய காவேரிக்குப் பதிலை அளித்தான் சேகர் 'தனியே இருக்கிருேம், எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள

Page 36
54
பழியைத்துடைக்கவேயன்றி - பிழையைச்செய்யும் நோக்கமாக வல்ல. அதனுல் அஞ்சவேண்டியதில்லை. . . . காவேரி! . . . இன்று தான் என் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறேன். . . . மறைத்து வைத்திருந்த மர்மம் ஒன்றை எடுத்துக்கூறப்போகிறேன் . . . . . O U 9 உன்னைப்போல் கலையரசியாகத்திகழ்ந்து பட்டதாரிப் படிப்பை எட்டிப்பிடிக்கவிருக்கும்போது பதினெட்டு வயது.மைதிலி என்னும் பெயர்பூண்ட என் தங்கையை இழந்தேன்-அவளை வாரி வாயில் போட்டது ஒரு வலிய நோய் . . . . . அன்று தொட்டு நடைப்பிணமாகத் திரிந்தேன்-என் உயிர்த் தங்கையை மறக்க முடியாத சோகத்தால். ஏதோ ஒரு நல்ல காலம்-என்னை இக் கழ கத்தில் கால்எடுத்து வைக்கச்செய்தது. ஆனல் அமைதியைக் காண முடியவில்லை . . . . காவேரி, ஏதோ நீ வந்தாய்-கண்டேன்-தமிழ் மொழி மாதா எங்களை ஒன்று கூட்டிவைத்தாள் - இழந்த என் தங்கையைப் பெற்றவன் போலானேன். துன்பப்புயல் வீசிய என் உள்ளத்தில் அன்புத்தென்றல் வீசத்தொடங்கியது. இதையுனக்குச் சொன்னல் நீ என்ன நினைப்பாயோ என்றிருந்துவிட்டேன். و و ஒன்றும் அறியாஞானிபோல் இது காறும் ம்ெளனம் பூண்டு நின்ற காவேரி பேசமுற்பட்டாள்.
‘அண்ணு, இது என்ன? உங்கள் அன்பும் பண்பும் நான் அறி யாதவளா? வேறென்றுமில்லை-அந்த மழைநாள், மழை சோனமாரி யாகப்பெய்து கொண்டே இருந்தது-ஒரு குடைக்கீழ் இருவர்.யார்
தான் சந்தேகப்படமாட்டார்கள் . அண்ணு, வீடு செல்ல இன்னுமிரு நாட்கள் இடையே எப்படித் தீரப்போகிறது இவ் வசைச் சொற்கள். ஊர்வாயை மூடத்தான் உலைமூடி கிடை யாதே. 9 y
'காவேரி, அஞ்சாதே, உன் அத்தான் வரதனச் சந்தித்தேன். நீண்ட நேரமாகப் பேசினேம். உன் பேச்சையுமெடுத்தேன்-நடந்த வற்றை எல்லாமெடுத்துக் கூறினேன், அனைத்தையுங் கேட்டான்நம்புபவன் போலவும் நம்பாதவன் போலவும் நடந்துகொண்டான் வரதனின் தாய் செய்த சதியேயன்றி வேறேதும் கோபமும் வரது னிடமுனக்கு இல்லையே. காவேரி, எங்கள் மீது சுமத்தப்பட்ட பழி தீரவேண்டும்; அழுகிக் கிடக்கும் மூடப் பழக்க வழக்கங்கள் நிறைந்த சமுதாயத்தைச் சீர்திருத்தவேண்டும்; எங்கள் சகோதர அன்பு நிலைபெறவேண்டும் - இம்மூன்றையுந்தானே நீ விரும்புகின் ருய். இவை நிறைவேற ஒரேயொரு வழிதானுண்டு. நீயும் வரதராஜனும் திருமணஞ் செய்துகொள்ளவேண்டும். முடித்து வைப்பது என் பாரம்.’’ என்ற சேகரைப் பார்த்துக் காவேரி . ‘அண்ணு உடன்பிறந்த சகோதரன் இல்லாக் குறையைத் தீர்த்து வருகிறது உங்கள் பாசம் ஏதோ உங்கள் எண்ணத்திற்கு உயிர்
ra prin yr Arn AA

55
கொடுக்க முயன்று பாருங்கள்'என்று கூறவும், இதுவரை மெளனம் பூண்டு மறைந்து நின்ற கலாநிதி வரதனத் தோளில் தட்டி,
* வரதா, எப்படி இருக்கிறது உலகம்? இருவருக்கிடையே இருக்குந் தூய அன்பின் தூய்மைக்கே சாட்சிகொடுக்க மறுக்கும் இவ்வுலகத்தில் நீயும் ஒருவன்தானே. எத்தகைய விஷயத்தையே னும் நன்கறியாது மனத்தினலோ - வாக்கினலோ தப்பாக ஊகித் துத் திட்டாதே’ என அவனுக்கு புத்தியும், 'விதி கூட்டி வைக்கும் இத்தொடர்பு என்றும் இறுதியே நிற்கக்கடவது" என ஆசியும்
கூறி வரதனையும் அழைத்துச் சென்ருன், 7*
--θ--
燃激螺_q,&o_燃监监
s2k)(1966t மகோன்னதமான நோக்கம் இதுவே: மனித னுடைய பிரதிபின்பத்தை அவனை விட உயர்ந்ததாகப் படைத்து, மிக மேலான வாழ்க்கைக்கு அதன்மூலம் மனிதனை இட்டுச் செல்வதே.” - பஸ் டர்னு க்
"பெற்றேராலும், கணவனுலும், மக்களாலும் அன்பு செலுத்தப் படுபவள் குடும்பப் பெண் ! அவள் காலடியில் அழகு ச ர ண டை கிற து" - மாக்கூன்.

Page 37
++++ மூன்ரும் பரிசுபெற்ற கதை ++++++++++++++++++++++++ r
அழைப்பிதழ்
- - - - - - - +++++++++++++++++++++ அ. சண்முகதாஸ் ***
i
i
விரிவுரை முடிந்தவுடன் ஒரு கையில் புத்தகங்களுடனும் சேலைத் தலைப்பை மற்றக் கையால் முறுக்கிக்கெண்டும் ஒய்யார மாக விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் வாசுகி. அலங் காரமாகப் புடையன் பாம்புபோல் பின்னிவிட்டிருந்த ஒற்றைப் பின்னலும், உடலுடனேயே ஒட்டிக் கொண்டிருந்த பட்டுச் சேலை யும், அதற்குத் தகுந்தாற்போல் அணிந்திருந்த சட்டையும் அவள் நடைக்கு மெருகேற்றின. பாடம் படித்து முடித்துவிட்ட இரு விழிகள், அம் மானின் நடையைத் தூரத்திலேயே நின்று பார்த் துக் கொண்டிருந்தன. ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த அவ் விழிகள் அவளை அப்படியே விழுங்கி விடுவன போன்று நோக் கின. ஒய்யார நடை மறைந்தது. பெரு மூச்சு விட்டபடியே இரு விழிகளையும் வேறு பக்கம் திருப்பிக்கெண்டு நடந்தான் சேகர்.
சேகர் நடந்துகொண்டே யிருந்தான். அவன் மனம் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவத்தையே நினைந்து கொண்டிருந்தது.
அன்றுதான் சேகருக்கு விரிவுரை வகுப்பு முதன்முதல் ஆரம்ப மாக விருந்தது. விரிவுரை வகுப்புக்குள் நுழைந்த சேகரின் கண்கள் நெருப்பைத் தொட்ட கை விரல்கள் போன்று திகைப் படைந்தன. உருக்கி வார்த்த பொற்பாவை போல் அமர்ந்திருந் தாள் வாசுசி. சக மாணவிகளே கண்டு பொருமைப்படத் தக்க அழகுச் சிலையாக உட்கார்ந்திருந்தாள் அவள். பெண்களே அவள் அழகைப் பருகும்போது, சேகர் இதற்கு விதி விலக்கல்லவே. ஏதோ புத்தகத்தைப் பார்ப்பன போன்றிருந்த வாசுகியின் விழிகள் சேகர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் அவனை நோக்கின. இரு கூரிய அம்புகள் தன்மேல் பாய்வதுபோன்ற உணர்ச்சியடைந்தான் சேகர், வாசுகி பார்த்த பார்வையோ சாதாரணமாக வகுப்புக் குள் நுழைபவரைப் பார்ப்பது போல்தான் இருந்தது. ஆனல், சேகரோ அவளைக் கண்டவுடன் அன்று தொடக்கம் அவள்மேல் ஒருவித விருப்பங்கொண்டான். உள்ளத்திலுள்ள விருப்பத்தை அவளிடம் அப்டடியே கூறிவிடுவோமாவெனப் பலநாள் அவன் எண்ணிஞன். ஆணுல், அவனிடம் அவ்வளவு தைரியம் இருக்க வில்லை. எவ்வளவு நாட்கள்தான் இங்ஙனம் பொறுத்திருப்பான்

57
சேகர்? அன்று அவன் துணிந்துவிட்டான். விரிவுரை வகுப்புக் குள் புகுந்தவுடன் வாசுகி பக்கலில் ஓர் ஆசனமிருப்பதை அவன் கண்டுவிட்டு உடனே அவ்வாசனத்தில் போய் அமர்ந்துகொண்" டான். உட்காருவதற்குத் துணிவுபெற்ற சேகருக்கு அவளுடன் எங்ஙனம் பேச்சை ஆரம்பிப்பதென்பது இன்னுமொரு பிரச்சினை பாயிற்று. வாசுகி என்பது அவளுடைய பெயர் என்பதை வேறு பாரிடமோ அவன் கேட்டறிந்தவனகிலும், அவள் பெயர் தெரி யாதவன் போன்று பேச்சை ஆரம்பிப்பதற்காக,
'தங்களுடைய பெயர் என்னவோ?’ என்று மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டான் சேகர். ஆண்கள் பக்கத்தில் இருந்தறியாத வாசுகி, சேகர் இங்ங்ணம் திடீரெனக் கேட்ட கேள்வியைக் கேட்டி வுடன் திடுக்கிட்டாள். எனினும் தன்னைச் சமாளித்துக்கொண்டு,
'வாசுகி’ என்று கூறிவிட்டுத் தலையைக் கவிழ்த்துக்கொண் டாள். விரிவுரையாளர் வந்து விரிவுரையாற்றத் தொடங்கிவிட் டார். விரிவுரையைக் கூர்ந்து கவனிப்பவள் போலிருந்தாள் வாசுகி. அப்போது சேகர், :
'உங்களுடைய ஊர் எது?’ என்று மற்றக் கேள்வியைப் போட்டான். விரிவுரைக்கிடையில் கதைப்பதை விரும்பாதவள் போன்று,
* தயவுசெய்து உங்கள் கதையைக் கொஞ்சம் நிறுத்துவீர் களா?’ என்று சற்றுச்சினத்துடனேயே கேட்டுவிட்டாள் வாசுகி. இதைக் கேட்ட சேகருக்கு ஆயிரந் தேள்கள் சேர்ந்து கொட்டியது போன்ற உணர்ச்சி உண்டாகியது. அவன் தன் மனத்துள்,
‘சே, இவள் ஒரு பெண்ணு! இவ்வளவு காலமும் கதைக்கச் சந்தர்ப்பங் கிடைக்கவில்லையென்று ஏங்கியிருந்த எனக்கு இன்று கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கதைக்கலா, மென்ருல் அப்படியே முகத்திலே கரியைப் பூசிவிட்டாளே. மற் றய மாணவ மாணவிகள் இதைக் கவனித்திருந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்' என்று நினைந்து வருந்தினன். அவன் மனம் விரிவுரையிலுஞ் செல்லவில்லை; முகம் வாசுகி பக்கம் திரும்பவு மில்லை. ஆனல், வாசுகிமேல் வைத்த அன்பையும் அவனல் மாற்ற முடியாதிருந்தது. : 、
விரிவுரை முடிந்ததும் முடியாததுமாக வாசுகி விடுக் கென எழுந்து முன் கதவு வழியாகப் போவதற்குச் சென்று கொண்டிருந்
“நடந்த விடயத்தை வேறு யாரிடமும் கூறி விடுவாளோ" என்ற பயத்துடன் சேகர் எழும்பி அவள் சென்ற வழியாகவே

Page 38
58
சென்று வாயிலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அவள் விடுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள்.
e o A a e - e a அன்று நடந்த சம்பவத்தை நினைந்து கொண்டே நடந்த சேகர் தற்செயலாக,
*சேகர்' என்று அவன் நண்பன் சோமு கூப்பிட்ட குரலில் பழைய் நிலைக்கு வந்துவிட்டான். சோமு சேகரின் உற்ற நண் பன். எதுவித இரகசியத்தையும் அவன் சோமுவிடம் கூருது இருந்ததில்லை. ஆனல், கடந்தவாரம் தனக்கு நேர்ந்த அவமா னத்தைப்பற்றிய விடையத்தைப் பற்றிச் சோமுவிடங் கூறவில்லை. ஆனல், இப்பொழுது அதை அவனிடம் கூறினல்தான் மனத்துக்கு ஆறுதல் கிடைக்குமென நினைந்த சேகர் கடந்த வாரம் விரிவுரை வகுப்பில் நடந்த வரலாற்றை எடுத்துக் கூறினன். அவன் கூறிய வற்றைக் கேட்ட சோமு,
**பெண்களே இப்படித்தானப்பா, ஒன்றையும் யோசியா மல் எதையுங் கூறிவிடுவார்கள். என்று பெண்கள் தாங்களும் சற்றுப் படித்தவர்கள் என்று உணர்கிருர்களோ, அன்று தொடக்கம், தாங்கள் ஆண்களைவிட ஒன்றிலும் குறைந்த வர்களல்லவென நினைத்து ஒருவித மரியாதையுமின்றிக் கதைக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த ரகத்தைச் சேர்ந்த வளாய்த்தான் இருப்பாள் வாசுகியும். ஆனல், முதலில் எதையும் யோசியாமல் ஒருவர் மனதைப் புண்படுத்திவிட்டுப் பின்பு வருந்துகிற பண்பும் அவர்களிடம் இல்லாமலில்லை’ என்று பெண்களேப்பற்றி ஒருசிறிய விரிவுரையாற்றிவிட்டான். ‘சோமு, நான் என்னடா செய்வது? எனக்கோ அவள்மேல் அதிக விருப்பம்; "ஆனல், அவளோ இதை உணர்கிருளில்லை. இதற்கு என்னடா செய்வது?’ என்று கேட்டான் சேகர்.
சேகரின் நிலையை நன்குணர்ந்த சோமு அவனுக்காகத் துக்கப் பட்டான். அவனுக்கு எப்படியாவது ஒரு யோசனை கூறவேண்டு மென நினைத்த சோமு திடீரென,
'அடே சேகர், எனக்கொரு யோசனை தோன்றுகிறது. நாளை எங்கள் விடுதியில் "டின்னர் நடக்கப்போவது உனக்குத் தெரியுமல்லவா. நாளைக் காலை வாசுகியைத் தனியாகச் சந் தித்து. எங்கள் விடுதி ‘டின்னர் அழைப் பி த ழ் ஒன்றைக் கொடுத்துப்பார். அன்று விரிவுரை கேட்கும் ஆர்வத்தில் நீ கேட்ட கேள்விக்குப் பதில் கூருது சினந்தாள். இன்று சில வேளை அவள் இணங்கக் கூடும். எதற்கும் இதனுல் அவ ளுடைய மனதைச் சோதித்துப் பார்த்துவிடலாமல்லவா?" என்று கூறினன்.

59
சோமுவின் யோசனை சரிதான் என்று ஏற்றுக்கொண்டாலும், சற்றுத் தயங்கியபடியே சேகர்,
“சோமு, அவள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வாளா? அல்லது அன்றுபோல் எரிந்து விழுகின்ருளோ' என்ருன். **அதற்கொன்றும் நீ பயப்படாதே, அழைத்துப்பார், அவள் இணங்காவிடில் விட்டுவிடு' என்ருன். நேரமாகிவிட்டதை உணர்ந்த நண்பர்கள் தங்கள் விடுதி யை நோக்கி ச் சென்ருர்கள். அன்று சனிக்கிழமை, சேகருக்கு விரிவுரைவகுப்பு ஒன்றுமில்லை. ஆனல், வாசுகிக்கு அன்று விரிவுரை வகுப்பிருப்பது சேகருக்குத் தெரியுமாகையால் காலை எட்டரை மணிக்கே விடுதியைவிட்டுக் கிளம்பினன். ஒன்பது மணிக்கு விரிவுரை முடிந்ததும் வாசுகி தனது சக மாணவிகளுடன் சிரித்துக் கதைத்துக்கொண்டு வந் தாள். அப்போது சேகர் அவளிடம் நேராகச் சென்று,
* மன்னிக்கவும். உங்களிடம் பேசலாமா?' என்று கேட்டான் ஏதோ தோழிகளிடம் முணுமுணுத்த வாசு கி சற்றுத் தயக்கத்துடன் சேகரிடம் போனள். சேகர் தான் கதைப்பது அவ ளுடைய தோழிகட்குக் கேளாமல் சற்றுத் தூரத்தில் போய் நின் முன். சேகரிடம் போன வாசுகி,
s
** என்னுடன் என்ன கதைக்கவேண்டும்’ என்ருள்.
சேகர் மனத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு,
**தயவு செய்து, இன்று எங்கள் விடுதியில் நடக்கப்போ கும் 'டினருக்கு வருவீர்களா?' என்று கேட்டான். இதைக் கேட்ட வாசுகியின் முகம் மாறியதை சேகர் மாத்திரமல்ல அவளுடைய தோழிகளும் கவனிக்காமலில்லை. w
‘என்னல் வரமுடியாது’ என்று அப்படியே கூறிவிட்டுத் தன் தோழிகளிடம் வந்தாள். நடந்த சம்பாஷணையை யூகித்து அறிந்து கொண்ட தோழிகள் ‘களுக்" கென்று சிரித்தார்கள். இவர்க ளுடைய சிரிப்பு சேகரை ஏளனஞ் செய்வதுபோன்றிருந்தது. இப் படி வாசுகி பெண்களிடையே வைத்து அவமானப் படுத்துவாளென நினைத்திராத சேகர், முகத்திலே துக்கந் தோயத் தலையைக் குனிந்த வண்ணம், தன் கால் போன திசைக்கு நடந்து கொண்டிருந்தான்.
சேகரின் அழைப்புக்கிணங்க மறுத்த வாசுகி தோழிகளுடன் விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தாள். அவள் தோழிகள் சேகரைப்பற்றிக் கிண்டல் வார்த்தைகளால் கேலிசெய்தபடியே வந் னர். ஆனல், வாசுகிக்கோ மனதில் ஒருவித ஆறுதலில்லாம விருந்தது. -

Page 39
அவள் தன் மனத்துள், 'என்னுல் தானே சேகரை, என் னுடைய தோழிகள் கிண்டல் பண்ணிக் கேலியாகக் கதைக்க வேண்டி நேரிட்டது. அன்றும் விரிவுரை வகுப்பில் என் னுடன் கதைக்கமுயன்ற சேகருக்குச் சுடச்சுடப் பதில் கொடுத் தேனே. இன்று நான் "டின்னருக்குப் போகாவிடில் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லியிருக்கலாமே. அதைவிட்டு அவரை அவமானப் படுத்துவது போல் ஒரேயடியாக வரமாட் டேன் என்று கூறிவிட்டேனே' என்று சிந்தித்தாள்.
சேகரில் ஏதோ பரிதாபம் பிறந்தது வாசுகிக்கு. அப் பரிதா பம் சேகரிடம் மன்னிப்புக் கேட்பதுடன் நின்றுவிடாமல் அதன் பின்பும் அவனிடம் அன்பு வைக்கக்கூடிய நிலைமை ஏற்படுத்தியது.
தன்னுல் ஏற்பட்ட அவமானத்திற்காகச் சேகரிடம் எப்படியா வது மன்னிப்புக் கேட்கத் துடித்தாள் வாசுகி, சேகருடன் நேரே கதைப்பதற்கு நாணினுள். ஆனல் அவனுடன் நேரே கதைப்பதற் குச் சந்தர்ப்பங் கிடைத்தபோதெல்லாம் தன்னுடைய நாணத்தை யும் விட்டுக் கதைக்க முயன்ருள். சேகரோ அவளை நேரே பார்த்தா லும் பெண்களுக்கு மத்தியில் வைத்து அவமானப்படுத்திவிடு வாளோ என்ற எண்ணத்தில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு சென்றுவிடுவான். முன்பு வாசுகியைக் கண்டால் தானகவே ஒருசிறு புன்னகை புரிபவன் இப்போது அவளை நிமிர்ந்துகூடப் பார்க்காது சென்றதால் வாசுகியின் முயற்சிகள் யாவும் வீணுயின. வாசுகியும் சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்த வண்ணமாகவே இருந்தாள்.
அன்று விவாதமொன்று நடைபெறவிருந்தது. இவ்விவாதத் தில் பங்குபற்றுபவர்களில் சேகரும் ஒருவன். “வரதராசன் ஒரு சிறந்த நாவலாசிரியன்' என்பதுபற்றி ஆதரித்துப் பேசுபவர்களில் ஒருவனுயிருந்தான் சேகர். ஒருசிலர் பேசியபின் சேகருடைய முறை வந்தது. வரதராசன் ஒரு சிறந்த நாவலாசிரியன் என நிரூ பிக்கப் பல உதாரணங்களையுங் கூறிக் கவர்ச்சியுள்ள முறையில் இனிமையாகப் பேசினன். அவனுடைய பேச்சை எல்லோரும் பாராட்டினர், விவாதம் முடிந்தவுடனேயே வாசுகி எல்லோருக்கும் முதல் எழும்பிச் சென்று அவனைப் பாராட்டுமுகமாக,
"உங்களுடைய பேச்சு இனிமையாயிருந்ததே' என்று கூறி விட்டு நின்ருள். வாசுகியைக் கண்ட சேகர் திடுக்கிட்டான்; அத்து டன் அவள் கூறியவற்றைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். ஆஞல், *நன்றி” என்ற வார்த்தையை மாத்திரங் கூறிவிட்டு வெளியே சென்ருன் சேகர். இந்தச் சந்தர்ப்பத்திலும் தனது கருத்தைத்

6.
தெரிவிக்க முடியவில்லையே எனத் துக்கப்பட்டாள் வாசுகி. அவ ளுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே விடுதிக்கு விரைந்து அங்கு சேகரிடம் சேர்ப்பிப்பதற்கென ஒரு கடிதம் வரைந்தாள்.
அன்புள்ள சேகருக்கு,
நான் தங்களுடைய மனம் நோவதற்குக் காரணமாயிருந்த தற்கு உங்களிடம் முதலிலேயே மன்னிப்புக் கோருகின்றேன்.
அன்று நீங்கள் என்னுடைய தோழிகளிடையே வைத்து உங்களுடைய விடுதி "டின்னருக்கு அழைத்தபோது "நான் வர மாட்டேன்' என்று அப்படியே திடீரென்று கூறிவிட்டு என் தோழிகளுடன் சென்றது தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். அன்று நீங்கள் விரிவுரை வகுப்பில் கதைக்க முயற்சித்த போதும் உங்களுடைய மனத்தை வருத்தக் கூடிய முறையில் நடந்து கொண்டேன் என்று இப்பொழுதுதான் நான் உணருகிறேன். நீங்கள் என்னுடன் கதைக்க முயன்றதையும், உங்களுடைய மனத்திலுள்ள கருத்தையும் இப்பொழுதுதான் நான் உணரமுடி கின்றது. நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகின்றேன். அப்படி நீங்கள் மன்னிப்பீர்களானுல் என்னை இன்று மாலைநேரம் பூந்தோட்டத்தில் சந்தியுங்கள்.
திரும்பவும், நான் உங்கள் மனதைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கோருகின்றேன்.
இங்ங்னம்-அன்புள்ள, வாசுகி.
கடிதத்தை அவசர அவசரமாக எழுதிய வாசுகி நூல் நிலையத் தில் சேகரைச் சந்திக்கலாமென நினைந்து விரைவாக வந்தாள். அவளும் நூல் நிலையத்தை நெருங்க 'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது' போல் சேகரும் அப்போதுதான் நூல் நிலையத் துக்குள் புகுந்துகொண்டிருந்தான். சேகரை நேரே கண்டு கடிதத் தைக் கொடுக்க வெட்கப்பட்டாள் வாசுகி, புத்தகங்களை வெளியே யுள்ள மேசைமேல் வைத்துவிட்டு உள்ளே சென்றன் சேகர். இது தான் தக்க சமயமென நினைத்த வாசுகி சேகரின் புத்தகமொன்றுக் குள் அக்கடிதத்தைத் திணித்தாள். ஆனல், நூல் நிலையத்துக்குள் ளிருந்து வாசுகியைக் கவனித்துக் கொண்டிருந்த சேகர் இதைக் கண்டுவிட்டான். அவனுக்கு விடயம் புரிந்து விட்டது; அத்துடன் அன்று விவாதம் முடிந்தவுடன் அவள் தன்னைப் பாராட்டியதும் அவன் நினைவில் வந்தது. இதை நினைத்து உள்ளூரச் சந்தோஷப்

Page 40
62
பட்டான் சேகர். ஆனல், என்ன கடிதத்தை வாசுகி என் புத்த கத்துள் வைத்தாளென்று அறிய அவனுக்கு ஆவலாயிருந்தது. உடனே வந்த வேலையையும் விட்டுவிட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு விடுதிக்குச் சென்ருன். அங்கு சென்று புத்தகத்தை விரித்துப் பார்த்தபோது “சேகருக்கு’ என்ற முகவரியுடன் ஒரு காகித உறை கிடந்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்த சேகர் வாசுகி தன்னை உணர்ந்து கொண்டாளே என்று மகிழ்ச்சியடைந் தான். “பெண்கள் முதலில் ஒன்றையும் யோசியாமல் செய்துவிட் டுப் பின்பு உணர்ந்து துக்கப்படுவார்கள்’ என்ற நண்பன் சோமு வின் அறிவுரையும் அவன் மனதில் வந்தது.
மாலை ஐந்து மணி இருக்கும் சேகர் பூந்தோட்டத்தில் ஒரு ஆச னத்தில் தனியாக அமர்ந்துகொண்டிருந்தான். சற்று நேரத்தில் வாசுகியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
அவள் வந்துகொண்டே, ‘'இப்பொழுதும் என்னை மன் னித்துவிடுங்கள். ஏனென்ருல் உங்கனை அதிக நேரம் இங்கு காத்திருக்க வைத்துவிட்டேன்’ என்று குறும்பாகக் கூறினுள்.
அவளுடைய மனமாற்றத்தையும் தன்னுடைய உள்ளக்கிடக் கையை அவள் புரிந்துகொண்டதையும் நினைந்து வியந்த சேகர்,
'உங்களுக்காகவென்ருல் எவ்வளவு நேரமும் நான் காத் திருப்பேனே' என்று சிரிப்புடன் கூறினன்.
அதைக் கேட்ட வாசுகி வெட்கத்தோடு தலையைக் குனிந்தாள். சேகருக்கோ அளவில்லாத மகிழ்ச்சி பொங்கியது.
தன் கையில் மடித்து வைத்திருந்த ஒரு கடதாசியை அவள் சேகரிடம் நீட்டி,
"இனிமேல் என்னை நீங்கள் ஏமாற்ற மாட்டீர்களென நம்பு கிறேன். இதை, என்னைப்போல் மறுக்கமாட்டீர்கள்’ என்று ஆந்த, விடுதி 'டின்னர் அழைப்பிதழை நீட்டினள். அந்த அழைப் பிதழ்தான் தன்னை வாசுகியோடு ஒன்று சேர்த்ததென நினைத்த சேகர் ஒரு சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டான்.
(usir 6th as bu2OT)

63.
1.
பச்சைப் புதிது r * சண்முகதாஸ்
"அசாதா?
*Ng/NYN /*AWN-Yr-Yr-Yr-YN MYN
சிவப்புச் சேட்டிங்கே நீ வாடா வென்றர்
சிரிப்போடே அறியாமற் கிட்டப்போனேன்
கவனமாய் எல்லோரும் பார்த்துநின்ருர்
கடக்கண்ணு லேதேதோ பேசினுர்கள்
எவடமடா ஊருனது பெயர்தானென்ன
ஏனிங்கு வந்தாயென் ருெருவன் கேட்டான்
தவருமல் எனது பெயர் வேலனென்று
தாழ்மையுடன் அவர்கட் கெடுத்துரைத்தேன்.
, அச்சமுட னவர்கட்குச் சொல்லாநிற்க
*அடே”யென்று வந்தானுேர் மீசைக்காரன் பச்சையிலும் பச்சையுடை வேலன்கானே
பகர்ந்திடடா என்றுஅவன் அதட்டினுனே பச்சையோடு புதிதென்ற வார்த்தைகூட்டிப்
பகர்ந்திட்டேன் போ'வென்ற ரப்போதெந்தன்
உச்சியிலே பெட்டியொன்றை வைத்துவிட்டு
உள்ளே கொண்டேகென்று ஒருவன்சொன்ஞன்.
பெட்டிவைத்துப் படியிறங்கி வரும்போதென்னைப்
பார்த்துவிட்டுப் பழையவர்கள் சேர்ந்துஒன்றாய் வட்டமாய் வந்துடன் நகைத்துநிற்க
வாளியொன்று கொண்டொருவன் கிட்டேவந்தான் கட்டாதகிணற்றுக்கு ஸ்ரில்லாத நீரைக்
கவனமாயள்ளி நீராடு என்ருன் தட்டாம லவண்கையின் வாளிவாங்கி
தவருதகற்பனை நீராடல் செய்தேன்.
புதியதொரு பச்சைமரம் வளரவேண்டி
புதுவரப்புக் கட்டிநீ ரூற்றவேண்டும் அதிசயமா மிவ்வார்தை தன்னைக்கேட்டு
அணுவளவும் சிந்திக்கா தறைக்குச்சென்றேன் சதியறியா நானுங்கண் துயிலும்போது
சடுதியிலே நீராட்டி விட்டாரென்னை புதியமரம் வளர்க்கின்ற புதுமைகண்டேன் س
புரிந்துகொண்டே னவரறிவைப் போற்றுகின்றேன்.

Page 41
Sவாம்மா வா
அன்புள்ள செங்கு!*
உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. அடுத்த வருடம் இங்கு நீ வருகிருயா? அப்பாடா! ஒருபடியாக நீயும் பாஸாகி விட்டாயே! அதிர்ஷ்டந்தான். ஒருவேளை அச்சுப் பிழையோ என்னவோ! அடுத்த வருடம் நான் இங்கு இருக்கமாட்டேன். ஆணுல், இந்த மூன்று வருட அனுபவத்தைக்கொண்டு உனக்குச் சில புத்திமதி களையாவது கூறலாம் என்று நினைக்கிறேன். உனக்குச் சிங்களம் தெரியாது. ஆங்கிலங்கூட அத்தனை அமோகமாக வராது. அந்த நிலையில் நீ முழுக்க முழுக்கத் தமிழ்ப் பெண்களுடன்தான் பழகிக் கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தவாறு சில சொல்லவேண் டும் என்பதே நான் இதை எழுதுவதின் நோக்கம்.
செங்கு முதலில் இங்கு வருவதற்காகப் புதுப்புது பிடவைகள் எல்லாம் வாங்கிவிட்டாயா? அங்குபோல் இங்கு கவுனே, பாவா டை சட்டையோ போட்டுக்கொள்ள முடியாது. ஸ்கேர்ட்ஸ்" போட்டுக் கொள்ளலாந் தான், ஆனல் அது உன்க்கு ஒத்துவராது! *குடுக்குக் குடுக்கு" என்று நீ நடக்கவும், "சரக்குச் சரக்கு’ என்று அது பம்பரம்போல் சுற்றவும் பார்க்கக் கண்ருவியாக இருக்கும். அதை விட்டுவிட்டுச் சாரிகளையே வாங்கிக்கொள். ஆணுல், அதற் காகத் தெரியாமல் கொள்ளாமல் நீ போய் வொயில் கியில், ஷியன் கிபன் என்று கண்டதெல்லாம் வாங்கித் தொலைத்து விடாதே. அதெல்லாம் இப்போது உனக்குச் சரி வராது. பாதி வழியில் அது நழுவி நொழுவி விழவும், உள்ளேயிருக்கும் அழுக்குப் பாவாடை சந்தர்ப்பம் தெரியாமல் வெளியே தலை நீட்டவும் அவற்றையெல் லாம் அள்ளிப் பிடித்துக்கொண்டு நீ தரிகணதோம் போடவும் பார்க்கப் பெரும் தெருக் கூத்தாகப் போய்விடும். இப்போதைக்கு அறுபதுக்கு அறுபது அல்லது அரவிந்த் என்று ஏதாவது இந்தியன் பருத்திச் சீலகளை வாங்கிக்கொள். கரடு முரடாக இருந்தாலும்
சு செங்கு - செங்கமலம்.
 

இடுப்பிலே கட்டினல் ஒட்டிக்கொண்டு இருந்துவிடும். அழுக்குத் தேரியாமல் அடுத்து அடுத்து அதையே உடுத்திக்கொள்ளவும் முடியும். அது மட்டுமா? "நாம் தமிழர்” என்று முத்திரை ஒட்டி 體嵩 போல் நாம் யார் என்பதை மற்றவர்கள் பளிச்சென்று புரிந்து கொள்வர். செங்கு! பாரதியார் சொல்லி விட்டாரே! இப் படியாவது நாம் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டா மாடி? V− .
உடுப்பு விஷயத்தை ஒட்டி இன்னுமொன்று சொல்லி விடுகி றேன். இங்கு அடிக்கடி மழை பெய்யும். ஆனல், அதற்கும் வழி இருக்கிறது. செங்கு உனக்கு றெயின் கேப் தெரியுமா, றெயின் கேப்? ஆமடி, அந்த எதிர் வீட்டுக் கிழவி போட்டுக் கொள்வாளே சொக்குப்பாயோ என்னவோவென்று. அதைப்போல றப்பர் துணி யால் செய்திருக்கும். அது ஒன்று வாங்கிக்கொள். அத்துடன் ஒரு குடை இருந்தாலும் நல்லம். ஆனல், அதற்காக நீ போய் அப்பா பாவிக்கும் அந்தப் பென்னம்பெரும் ஆதிகாலக் கிழியல் குடை யைத் தூக்கிக்கொண்டு வந்துவிடாதே. நாகரிகமாக ஒரு லேடீஸ் குடை வாங்கிக் கொள். அதோடு நாகரீகமாகப் பச்சை நூலால் உன் பெயரையும் பெரிதாக அதில் தைத்துக்கொள். மழை பெய் கிறதென்று குடை வாங்கிச் செல்லும் பையன்களுக்காவது உன் பெயர் தெரிந்திருக்கட்டுமே! *
செங்கு! இங்கு வந்தவுடன் நீ பிரமித்துப் போய்விடப் போகி ருய், பசை போட்டு ஒட்டி விட்டது போல் ஒன்றேடு ஒன்ருய் ஒட்டிக்கொண்டு ஒயிலாய்த் திரிவார்கள் காதல் ஜோடிகள்! ஏது, உனக்கும் அப்படித் திரியவேண்டும் என்று ஆசை வருகிறதா? அகநானூறு வாழ்க்கை வாழலாம் என்று ஆனந்தப்படுகிருயா? பாவம், அந்த ஆசையும் ஆனந்தமும் உனக்குள்ளேயே உருப் பெருமல் சாகவேண்டியதுதான். நீ யாழ்ப்பாணத்தில் இருந்தல் லவா வருகிருய்? உனக்கு அதெல்லாம் செய்ய முடியாது! உன் கலாச்சாரம் வேறு! ஏதோ கற்பு என்பது பையன்களுடன் கதைத்து விட்டாலே மடியை விட்டு நழுவித் தொழுவிக் கழன்று விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டது போல் நீ ஒரு தனிக் கட்சி அமைத்து வாழவேண்டும். பையன்களோடு நீகதைக்கவே கூடாது! அப்போதுதான் நீ கற்புள்ளவளாக மதிக்கப்படுவாய்!
செங்கு! அழாதேடி, காதலிக்கத்தானே முடியவில்லை? கவலை இல்லை. காதலைக் கண் நிறையப் பார்த்துவிட்டாலாவது போதா தா? இங்கு ஹில்டா விடுதி என்று ஒன்று இருக்கிறது. அங்கே அதற் கென்றே ஒரு பெரும் சுவர்கட்டி வைத்திருக்கிருர்கள். அந்தச் சுவ ரில் தொத்திக்கொண்டால் போதும். அல்லது அங்கே உள்ள

Page 42
66
கண்ணுடி யன்னல்களில் முகத்தைப் புகுத்திக்கொண்டால் போ தும். என்ன இன்பமான காட்சியடி! என்ன இன்பமான காட்சி! கை கோர்த்துத் திரியும் காதலர்கள் எல்லாம் உன் கண்களிட மிருந்து தப்பவே முடியாது! சிரிக்காதே, நீ இங்கு வந்தபிறகுதான் தெரியும். விரிவுரைச் சாப்பாடு எல்லாவற்றையும் மறந்து அப் படியே விடுப்புப் பார்த்துக்கொண்டு நின்று விடுவாய்!
செங்கு! உனக்கேன்டி இந்த ஆங்கிலம் மட்டும் வரமாட்டேன் என்கிறது? கடிதத்தில் பக்கத்துக்குப் பதினுயிரம் பிழைகள் வர எழுதியிருந்தாயே! கொடுத்துவைத்த பாஷை அது! உன் கை யில் சிக்குப்பட்ட பின்பும் அது பிழைத்திருக்கிறதே! இங்கு வந்த பின்பாவது எந்தநேரமும் தமிழில் பேசித் தொலைக்காதே. போகிற வருகிற நேரம் பின்னல் பையன்கள் வரும்போதாவது ஆங்கிலத் தில் பேசிப்பார். அத்தனை ஒன்றும் வேண்டாம். சும்மா, 'எனி வே எனிவே' என்று ஆரம்பி. பியத்துக்கொண்டு ஏதாவது தன் பாட்டில் வந்துவிடும். அப்படி ஒன்றும் வராவிட்டால் பயந்துவிடா தே. கடைசிக் கட்டுரைக்குத் தந்த கேள்வியாவது உனக்கு ஞாபகத் துக்கு வராதா? அதையாவது பார்த்துப் பாராமல் வெளுத்து விடு வெளுத்து! பின்னல் வரும் பையன்கள் பிரமித்துப் போவார்கள், உனக்கு ஆங்கிலம் மட்டுமல்ல பாடங்கள்கூடப் புரிகிறதே என்று! ஏதாவது பிழை ஏற்பட்டு விட்டால் கூடத் தயங்க வேண்டாம். யாராவது தலையில் போட்டு ‘அப்படிக் கமலா சொன்னுள், இப் படி ராணி சொன்னுள்" என்று மழுப்பிவிடு. அதுகூடப் புரியா மல் உன் வாயில் ஆங்கிலம் அமர்க்களம் புரிந்தால் அது உன் துர் அதிர்ஷ்டமேதான்.
செங்கு! இங்கு வந்தபின்பாவது நீ ஒரு நாகரீகப் பெண்ணுக நடிக்க வேண்டாமா? அதற்கும் ஒரிரு வழிகள் சொல்கிறேன். உனக்கு டெனிஸ் தெரியுமா, டெனிஸ்? றக்கட் தெரியுமா, றக்கட்? அந்த எதிர் வீட்டுப் பையன் காவித் திரிவதையா நினைக்கிருய்? சை, அதல்லடி, அவன் விளையாடுவது கிரிக்கட். காவித் திரிவது "பட்’. நான் சொல்வது டெனிஸ் றக்கட், அரிதட்டிலே கோடரிப் பிடிபோட்டது மாதிரி அழகாய் இருக்கும். அறுபதோ, எழுபதோ என்று பார்த்துப் பாராமல் கொடுத்து ஒன்றை வாங்கிக்கொள். உனக்கு அப்படி ஒன்றும் விளையாடத் தெரியவேண்டாம். சும்மா கொசுக் கலைப்பது போல் அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண் டால் போதும். பத்து எங்காவது பறக்கட்டுமே. அதைப்பற்றி நமக்கு ஏன் கவலை? ருேட்டில் யாராவது பையன் உன்னைப் பார்த் துப் பிரமித்துப் போகிருணு என்பதை மட்டும் பார்த்துக் கொண் டால் போதும். அதற்குப் பின் நீ ஒரு பெரிய இடத்துப் பெண் ணடி, பெரிய இடத்துப் பெண்!

67
இன்னுமொன்று, பயணம் போகும் போதெல்லாம் இந்த றக் கட்டையும் காவித்திரிய மறந்துவிடாதே. கோச்சியிலும், ஸ்டே ஸ்னிலும் நூறுபேராவது உன்னைப் பார்த்துப் பிரமித்துப் போவார். கள்! போதாதா? -
பயணம் போகும் போதெல்லாம் நீ இன்னுமொரு வேலையும் செய்துகொள்ள வேண்டும். பேராதனைப் பூங்கா இருக்கிறதல் லவா, பூங்கா, அங்கே போய் இரண்டு மூன்று பூஞ்செடிகள் வாங் கிக்கொள். ஒருவேளை அங்குபோய் "பெப்பே' என்று கூட உன்னல் சிங்களம் கதைக்க முடியாமல் இருக்கலாம். பறுவாய் இல்லை. அப் படியென்ருல் மெதுவாக இந்த ஆற்றங் கரையில் வளரும் ஏதாவது செடி கொடிகள் இரண்டையாவது பிடுங்கிச் சுற்றிக்கொள். ஊருக் குப் பயணம் போகும்போது அதையும் காவிக்கொண்டு போக வேண்டும். வீட்டில் நல்ல தண்ணிர் இல்லை, முற்றம் இல்லை என்று யாருக்கடி தெரியப்போகிறது? அங்கே கொண்டுபோய் ஆட்டுக்கு மாட்டுக்காவது போட்டுக் கொள்ளலாம். ஆனல், அதுவல்ல நான் சொல்வது. கோச்சியில் பெட்டி படுக்கைகளை எல்லாம் ஏற்றிவிட்டு கோச்சி புறப்படும் நேரமாகப்பார்த்து ஒற்றைக் காலைக் கோச்சிக்குள்ளும் மற்றக்காலை பிளாட்போர்மிலும் வைத்துக் கொண்டு 'என் பூஞ்செடி பூஞ்செடி!' என்று கத்தவேண்டும். யாராவது தொண்டன் ஒருத்தன் உனக்காகக் கோச்சிச் சங்கிலியை இழுத்து நிறுத்தி விடுவான். இன்னெருவன் ஓடிப்போய் அதை எடுத்துக்கொண்டு வந்து உன்னிடம் தந்திடுவான். பூ இவ்வளவு தான என்ரு கேட்கிருய்? செங்கு! உனக்கு இப்போது அதெல்லாம் விளங்காதடி, உங்கள் வீட்டில் பூஞ்செடிகள் வளர்க்கிருய் என்று ஒரு கோச்சியை நிறுத்தியே ஊரறிய விளம்பரம் செய்வது பெரிய பெரிய மனிதர்களுக்கே கிடைக்காத பாக்கியமடி, பாக்கியம்!
இங்கு வந்தபின் சிலவேளை நேரம் போகாமல் இருப்பது போ லத் தெரியும். அந்த வேளைகளில் யாராவது இங்குள்ள பெரிய மணி தர்களின் வீடுகளுக்குப் போய்விட்டால் போகிறது. தேங்காய் துருவுதல், மீன் கழுவுதல் போன்ற வேலைகள் பழகிக்கொள்வ தோடு ஒரு வம்பர் மகாசபை நிறுவியதாகவும் ஆகிறது.
செங்கு! சாப்பாட்டு மேசைக்குப் போகிறபோது தெரியாமல் கிரியாமல் சிங்களப் பெண்களோடு சேர்ந்து போய்விடாதே. கறண் டியும், முள்ள்ோடும் நீ கிண்டிக் கிளறும் கண்ருவியை அவர்கள் ஏன் பார்க்கவேண்டும்? பேசாமல் நம் தமிழர் கூட்டத்திலேயே இருந்துவிடு. கண்ணை மூடிக்கொண்டு வயிறு பிரியுமளவுக்கும் கையாலேயே வாய்க்குள் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம். யாருக்கடி நட்டம்? நீதான் பேர்சரி பேர்வழியாச்சே! இன்னு

Page 43
68
மொரு எச்சரிக்கை இங்கு “கோர்ஸஸ் என்று ஒரு கோரச் சாப் பாடு போடுவார்கள். ஆட்டுக்கு மாட்டுக்குப் போடுவது போல் பச்சையாகவே கோப்பையில் குழைகளைப் பரப்பிவிடுவார்கள். நீ உன்பாட்டில் அவற்றை எல்லாம் வாய்க்குள் அள்ளிப் போட்டு விடாதே. அது தொண்டைக்குள் பொறுத்துக் கொண்டு விக்கட்டி வரவும் நீ தண்ணிரை விழுங்கவும் அதற்கும் போகாமல் அது "கீச் கீச்" என்று தொண்டைக்குள்ளே குழல் ஊதவுமாய் அல்லோல கல்லோலமாகி விடும்!
செங்கு! நீ சினிமாப் படம் பார்த்திருக்கிருயா? தலைகாத்தான் தம்பி, கணவனே கண்கண்ட தெய்வம், மக்களைப் பெற்ற மகராசி எல்லாம் பார்த்தாய் என்று ஆண்டுக்கொருக்கால் எழுதுவாயே, அதெல்லாம் பட்டிக்காட்டுப் படங்கள். “அடல்ற்ஸ் ஒன்லி’ என்று காட்டப்படும் ஆங்கிலப்படங்கள் நீ பார்த்திருக்கமாட்டாய். இந்த நிலையில் இங்கு வந்தவுடனேயே அப்படி ஏதாவது படத்துக்குப் போய் அரை நிர்வாணக் காட்சிகளைப் பார்த்துவிட்டு "ஐயையோ! வெக்கமில்லாம கொஞ்சீனம்" என்று கத்திவிடாதே! உங்களுக் கென்று ஒவ்வொரு புதன் கிழமையும் சும்மா காசில்லாமல் ஆங்கி லப் படங்கள் காட்டுவார்கள். அவற்றை முதலில் பார்த்துத் தேர்ச்சி பெற்றபின்பே 'அடல்ற்ஸ் ஒன்லி பக்கம் தலைகாட்டு. மறந்துவிடாதே ஒவ்வொரு புதன்கிழமை மாலை 6-30 க்கு ஒரு இலவசச் சினிமா! எல்லாம் உனக்காக!
செங்கு! இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ எழுதலாமடி. ஆனல், நேரமும் வசதியுந்தான் இல்லை. கடைசியாக ஒன்று சொல்கிறேன் உனக்கு. எப்போதாவது, ஏதாவது தலைவி* கிலைவி யாக வாழவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதுண்டா? அப்படியென் ருல் இங்கு அருமையான வசதி உண்டு. குஷியாகத் தங்களுக்கென் றே கட்சியமைத்துக் கத்தித் திரியும் இரண்டொரு பையன்களைப் பார்த்து இரண்டொரு தரம் முறைத்துவிடு, அத்துடன் துணி விருந்தால் 'காவாலிகள்’’ என்று காது கேட்கச் சொல்லிவிடு. அவ் வளவும் போதும். நீ இங்குள்ள பெண்களுக்கெல்லாம் ஒரு தலைவி யாகிவிடுவாய். ஆமாம் அவர்கள் உன்னை அப்படி ஆக்கிவிடுவார் கள். நீ போனுலும் இங்கு உன் பெயர் என்றென்றுமே வாழுமடி என்றென்றுமே வாழும்! போதாதா?
இப்படிக்கு, உன் அக்காள் - நளினி.

69
மனிதன் நீயே ༽ །
(ரட்யாட் கிப்ளின் எழுதிய I என்னும்
கவிதையைத் தழுவியது.)
അ: [ ബ சூழவுள்ளோர் அறிவிழக்கக்கால் நீ என்று
சொல்லுகின்ற போதினிலும் கலங்கா நின்று ஆழமுள்ள நம்பிக்கை இழந்த போதும்
அலையாத மனதுடனே சமயம் ந்ோக்கி பாழான பொய்ச்செய்தி தாக்கக் கண்டும்
பாருள்ளோர் வெறுத்துன்னைப் பகரும் போதும் கீழான பண்பில்லா மேலோ ஞக > . கிளர்ச்சிதரும் நடிப்பின்றி நிற்பாயானல்.
கனவுகளை எசமாளுய்க் கருதா கெஞ்சும்
கனன்றுவரும் எண்ணத்திற் பற்றேயின்றி உனநாடு வெற்றியுடன் தோல்வி தன்னை
ஒன்ருக உள்ளமதில் கொள்ளும் பண்பும் நினைவதிலே தோன்றும் உண்மை மாற்றர் தம்மால்
நிந்திக்கப் படும்போதும் நிலையில் கின்று வனகின்ற கருத்தென்னும் மாடி வீழ்ந்தால்
மறுபடியும் செப்பமிடும் கருத்தே கொண்டால்.
་ཡས་མས་HI བསམ་ பாமரரைச் சேர்ந்தாங்கு பழகும் போதும்
பாராளும் மன்னருன அணைக்கும் போதும் மேதிக்கும் சுயப்பண்பை இழக்காதுந்தன்
நேசரோடு பகைவருண் வருத்தா நிற்கின் பூமிசையில் நம்புகையில் கர்வம் விட்டு
போகின்ற விஞடிகளைப் பயனதாக்கின் வாமமொளிர் வையகமே உனதாம் மற்று
வாழ்வதிலே உயர்ந்துவிடும் மனிதன் நீயே!
- "சுந்தரம் ?

Page 44
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க ஆண்டறிக்கை
1959
wrappom
மெது சங்கத்தின் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் எண்ணிக்கையில் குறைந்தவை எனினும் தரத்தில் உயர்ந்தவையாக இருந்தன வென்றே கூறவேண்டும். மூன்று தவணைகளைக்கொண்ட ஆண்டு ஒன்றில் முதல் இரு தவணைகளில் இயலும், மூன்ரும் தவணையில் இசை நாடகம் ஆகியனவும் முக்கிய இடம்பெறுவதே எமது சங்கத் தின் வழக்கம். ஆனல், நினையாப்பிரகாரமாக இவ் வருடத்தில் எமது செயற் குழுவிற்கு முதலிரு தவணைகள் மட்டுமே அளிக்கப் பட்டன. எனினும், இக் குறுகிய காலத்துள் சொற்போர், சொற்பொழிவு, இசைச் சித்திரம், சிலப்பதிகார விழா முதலிய பல் வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றன. இசை நாடக நிகழ்ச்சிகள் இடம்பெறும் கலைவிழாவை நடாத்துவதற்குச் சந்தர்ப் பம் கிடைக்காதபோதும், நாமெடுத்த 'சிலப்பதிகார விழா' எமது நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கதொன்ருகும்.
சங்க நிகழ்ச்சிகளில் முதலாவதாகப் புதிய மாணவரின் சொற் போர் நடைபெற்றது. ‘காதலுக்குப் பின்தான் கலியாணம் சிறந் தது' என்பதே எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள். பெண்கள் நால்வரும் ஆண்கள் நால்வரும் விவாதத்தில் பங்குபற்றினர். புதிய மாணவர் எண்மரும் தாம் அனுபவியாத அனுபவங்களையும், புதிய அபிப்பிராயங்களையும் கூறி விவாதத்திற்கு உயர்ந்த தரமளித் தனா.
தமிழ் நாட்டிலிருந்து இங்கு விஜயம்செய்த குழந்தைப் புலவர் திரு. அள. வள்ளியப்பா ஓர் அரிய சொற்பொழிவாற்றி எமது சங் கத்தைப் பெருமைப்படுத்தினர். குழந்தைப் புலவர், "தமிழ் மொழி வளர்ச்சியும், அதற்குத் தமிழர் ஆற்றவேண்டிய தொண் டும்’ என்னும் பொருள்பற்றிப் புதிய பொருட் செறிவுடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் பேசுகையில் எம் அனைவரையுமே குழந்தைகளாக்கிவிட்டார். அவருரை கேட்பதற்குக் கிடைத்த பாக்கியம் மகிழ்ச்சிக்குரியது.
இவ்வாண்டு நிகழ்ச்சிகளில் இசைச் சித்திரம் புதியதொன்ற கும். திருவாளர் வி. கி. ராஜதுரை அவர்களும், திரு. டி. சண்

7
முகதாசனும் "கிழக்கிலங்கையில் நாட்டுப் பாடல்கள் என்னும் பொருள் பற்றி ஓர் அரிய இசைச் சித்திரம் நடாத்திஞர்கள். மட்டக்களப்பில் மறைவாக இருக்கும் மாணிக்கம் போன்ற நாட் டுப்பாடல்களை மாணவரிற் பெரும்பாலோர் முதல் முதலாக மெட் டோடு கேட்டு மகிழ்வடைந்தனர்.
தமிழ்ப்பெருந் தலைவர் திரு. கு. வன்னியசிங்கம் அவர்களினது மறைவையொட்டி எமது சங்கம் ஓர் அனுதாபக்கூட்டம் கூடியது. விரிவுரையெனினும் சரி, சொற்பொழிவு எனினும் சரி ஒவ்வொரு சொல்லிலும் ஹாஸ்யக் கருத்துக்களையும், சம்பவங்களையும் மறை முகமாக நினைவூட்டுபவர் எமது கலாநிதி சு. வித்தியானந்தன். ஒரேயொரு முறை அவ்வாறின்றிக் கவலையே உருவாக நின்று மறைந்த தமிழ் மணியின் பெருமையையும் எமது நட்டத்தையும் கூறித் தமிழர் அன்புதான் தமிழ் அன்பு என்னும் உணர்ச்சியில் எம்மை ஆழ்த்தினர். தமிழ்ப் பணிகளில் தமிழ்ப் பெரியாரைப் பெருமைப்படுத்துவதும் ஒன்று என்பதே கூட்டத்தின் குறிக்கோளா கும். பிரதமர் பண்டார நாயகாவின் மறைவுச் செய்தியும் எட்டிய தால் கூட்டத்தில் அதற்கும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
சங்க நிகழ்ச்சிகளில் சொற் போர்கள் வழக்கமாக நடப்பவை எனினும், நாம் கற்கும் இலக்கியங்களிலேயே பொருளைத் தேர்ந் தெடுப்பது அரிது. “வாலி வதை நீதியுடையது' எ ன் னு ம் பொருளை முதல் முதலாகத் தேர்ந்தெடுத்து விவாதம் நடத்தியுள் ளோம். இவ்வாறு இலக்கியங்களிலேயுள்ள சந்தேகத்திற்கும், ஆராய்ச்சிக்கும் உரிய பொருள்களைப் பின்வரும் சங்கச் செயற்குழு வினரும் அங்கத்தவரும் தேர்ந்தெடுப்பாராக.
நாமெடுத்த சிலப்பதிகார விழா முக்கியமான ஒரு நிகழ்ச்சி. சங்க வரலாற்றில் இத்தகைய ஒரு விழாவை முதல் முதல் புகுத்திய தையிட்டு மகிழ்ச்சியடைகிருேம். "நெஞ்சையள்ளும் சிலப்பதி காரத்தின் பல்வேறு அம்சங்களிலும், எமது தமிழ்த்துறைப் பெரி யார்கள், சிந்தையள்ளும் சொற்பொழிவுகளாற்றிஞர்கள். கலாநிதி சு. வித்தியானந்தன், கலாநிதி சு சதாசிவம், திருவாளர் ச. தனஞ்செயராசசிங்கம், மாணவி செல்வி ஞான சிவசுப்ரமணியம் மாணவன் சி. தில்லைநாதன் ஆகியோர் முறையே, சிலப்பதிகாரம் ஒர் அரசியல் நூல், இளங்கோவின் கருத்தும் கற்பனையும், சிலப்பதி காரத்திற்புரட்சி, கற்புக்கரசி-கண்ணகியா மாதவியா ?, கண்ணகி யின் சீற்றம் என்னும் பொருள்கள்பற்றிப் பேசினர்கள். ஒரே சந் தர்ப்பத்தில் அரிய காப்பியத்தின் அம்சங்கள் அனைத்தையும் கேட் டறிந்து மாணவர் இன்புற்றனர்.

Page 45
72
ஆண்டுதோறும் நடைபெறும் கொழும்பு பேராதனைப் பல் கலைக் கழகங்களின் சொற்போரும் நடைபெற்றது. ‘ஈழத்தமிழருக் குத் தற்போதைய நிலைமையில் தனித் தமிழ்நாடே சிறந்தது' என் னும் அரசியல் பொருள் விவாதப்பொருளாக அமைந்தது. எமது சங்கத்தின் சார்பில் திருவாளர்கள், பானுதேவன், வி. கி. ராஜதுரை ச. லோகேஸ்வரன், இ. மகேந்திரன் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பங்குபற்றினர். நாட்டின் சூழலுக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளில் நிகழ்ந்த விவாதம் வெற்றிகர மாக நடந்தது.
இவ்வாண்டு நிகழ்ச்சிகள் யாவற்றையும் சிறப்பாக நடத்த ஊக்கமளித்து உதவிபுரிந்த பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர் களுக்கும், தமிழ்ச் சங்கத்தில் பற்றுள்ள சங்க அங்கத்தவர் அனைவ ருக்கும் எமது அன்புகலந்த நன்றி உரித்தாகுக.
கோமதி சோமசுந்தரம்
செயலாளர்.
 

രത്തെത്സു
S. M e S “கொடு கொட்டி” ஆடல் : S)
இராஜபாரதி ಆಆಆಆಆಆಆಆಆಆ .....................ین
S) శీs=ఆఆపాఆఆకాశీ
பக்தி விநயம் மிக்க கிராமப் புறத்து மக்கள் அம்மன் ஆலயங் கள் தோறும், ஆண்டுக்கொருமுறை விழாவெடுக்குங்கால் அன்ன வள் மனங்குளிர்ந்து சாந்திபெறக்'குளுத்திப்பாடல்"களைப்பாடிக் கூப்பிய கரங்களைக் கொட்டி நின்ருடும் ஒருவகை வழிபாட்டுஆடலே ‘‘கொடுகொட்டி ஆடல்' எனப்படும்.
இவ்வாடல் முறை, பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் கோயில்களிலே, இன்றும் வழங்குகிறது ! கொடுகொட்டியாடல் என்பது 'கொடுங்கொட்டி” யாடலென்பதின் விகாரமாகும். அதா வது: ஊர்ப்புறங்களிற் பஞ்சமும் பசியும் நோய் துன்பங்களும் ஏற்படுவது, அம்மனின் கோபாவேஷத்தினலேயென்னும் ஐதீகங் கொண்ட கிராமிய மக்கள், இக்கொடுமைகள் மறைந்தொழிய வேண்டி, அம்மாளின் புகழ் கூறியாடுவது, எனக்கருத்துப்படும்.
இவ்வாடலையிட்டுச் சிலப்பதிகாரக் கடலாடுகாதையும் பரக்கப் பேசுகின்றது. மல்லன் மூதூரிலே, மகிழ்விழாவெடுத்த காலை, மாதவியாடிய பதினுெரு வகையாடல்களுள் முதலிடத்து வைத்து எண்ணப்படுவது இக்கொட்டாடலே, அது:
* பாரதியாடிய பாரதி யரங்கத்துத் திரிபுரமெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப வுமையவள் ஒருதிற ஞக வோங்கிய விமையவ னுடிய கொடுகொட்டி யாடலும் தேர் முன் நின்ற திசைமுகன் காணப் பாரதி யாடிய வியன் பாண்டரங்கமும்.”
என்று தொடரும் 'கடலாடு காதை" வரிகளால் நன்கு புலணுகும். “பாரதி' எனப் பெயர் பெறும் பைரவித் தாய், அதாவது துர்க்கை யம்மாள், அவள் அரங்காகிய சுடுகாட்டிலாடிக் களித்த இவ்வாட

Page 46
74
லையே இன்னும் ஈழத்துத் தமிழ் கூறுமூரெல்லாம். பின்பற்றியாடு கின்றன. அதிலும் சிறப்பாக, இப்பாரம்பரிய வழிபாட்டுக் கூத்தை தெறிநிரை தவருது வழங்கி வரும் பெருமை, மட்டகளப் புக் கிராமப்புறங்களையே சேரும்.
இனி, கொடுகாட்டியாடலின் முதலாவது அம்சமான குயிற் கும்மியாட்டைப் பார்ப்போம்.
莎@
தன்ன னன்ன நான னன்னத் - தன்ன னன்ன நாண னன்னத் தந்தனத நான நன்னத் தந்தனத் தான - தெய், தெய் தந்தானந் தான நந்த தான தந்தின
事 崇
1
மட்டுநக ரெட்டுத் திக்கும் - கட்டியாளும் மகமாயி அட்டதிசைக் காவலரும் அஞ்சலிக்கவே - கூய், கூய் ! ஆனந்த தோத்திரங்களைப் பாடாய் குயிலே - கூய், கூய்! அற்புதத் திருவடியை நாடாய் குயிலே !
2
காளி, சூலி, நீலி, என்றே - கணக்கற்ற பேர் வழங்கும் கற்பரசி பொற்பதத்தைத் தேடாய் குயிலே - கூய், கூய் ! கைகொட்டி மெய் சிவிர்க்க ஆடாய்குயிலே - கூய், கூய் ! கஞ்சவடி தஞ்சமென்றே பாடாய் குயிலே
3
சீரிலங்கு மூர்களெங்கும் - பேர்விளங்கு பைரவித்தாய் தாரிலங்கு நெஞ்சமலர் தான் குளிரவே - கூய், கூய்! தண்டமிழ்க் கவிமுறைகள் பாடாய் குயிலே - கூய், கூய் ! தாவு மணிக் கையடித்தே ஆடாய் குயிலே
4.
பாண்டரங்க மேறியாடும் பார்வதியாள் முகம் மாறிப் பைந்தமிழ்க் கிராம மெல்லாம் பத்தினியானள் - அன்னுள் பஞ்ச கலியாணக் கூத்தைப் பாராய் குயிலே - ஆ. ó5fr.、.... பட்டடிச் சதங்கை யொலி தேராய் குயிலே

75
5 கொட்டுடுக்கை ஒசை கேட்டுக் - கோல வெள்ளி மால் வரையில் கட்டு மணிக் காலணி கலீர், கலீர், எனக் - கூய், கூய் ! காடேறியாள் ஆட ராகம் பாடாய், குயிலே - கூய், கூய் ! கதம்பவனத்திற் சென்றே தேடாய் குயிலே.
6 மட்டறு புகழ் படைத்த - மாரியம்மன் சன்னதியில் மங்களம் பொலியச் செம் பண், மாணிக்க வாயால் - நீயே மாமரத்தின் மேலிருந்து மீட்டாய் குயிலே - கூய் .கூய் ) மண்ணும் விண்ணும் ஆர்க்குமொலி ஈட்டாய் குயிலே !
崇 。 肇 染
இனி இப்பக்தியாடலின் இரண்டாவது அம்சமாகிய வசந்தன் பாடல்களைப் பார்ப்போம்
- முத்திரைத் தரு -
தன்னுனேத் தன்னுனேத் தனத் - தானத் தந்தினத்
- தன்னனே தின்னனேத் தின்னுனேத் தினத் - தீன திந்தினத் தின்னனே
1 மெய்யோ டுளங்குளிர "லங்கா"
மேதினி யெங்கும் நலம் பெருக, வைகாசிப் பெளர்ணமி தோறுமே
வந்தனை செய்து விழாவெடுப்போம் ! - தன்னுனேத்.
2 பொல்லாத ஆக்கினைகள் துயர்
விக்கிடவே வரும் விக்கினங்கள் எல்லா மகற்றி ரட்சிப்பவள்
ஈரடி மேற் சிரந் தாழ்ந்திடுவோம் - தன்னுனேத்.
3 உக்கிர உட்டணம் வாத சிலேற்பனம்
உற்பத்தியாக்கிடும் நோய் வகைகள் திக்கெட்டு மின்றியே, அற்ருெழிய அருள்
தேவியைப் போற்றி நின்ருடிடுவோம் ! - தன்னுனேத்.

Page 47
76
புல்லாய்ப் புழுவாகிப் புவி
எல்லை மறைக்கும் மரமாகி, எல்லாப் பிறவியும் கொண்டே
இளைக்குந் துயரினை நீக்கிடுவாள்
-தன்னுனேத் .
5
காருண்யம் பாடுவோம், கைகொட்டியாடுவோம் !
காத்தவள் பேரிலே கை குவிப்போம் ! ஊரெல்லாஞ் சீரும் சிறப்பும் பொலிவுற
M ஓங்கார மாதாவைத் தோத்தரிப்போம்
- தன்னுனேத்.
6
வெள்ளிப்பணி வரை உச்சியிலே, ஐயன்
வெற்றிக் கரம் பிடித்தாடுபவள்
உள்ளங் குளிர்ந்தே அருள் பொழிய, உயர்
தெள்ளிய தீந்தமிழ் பாடிடுவோம்!
7
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
வெற்றிக் கதம்பவனக் குயிலே ! செம்பவளத் திரு மேனியாளைக் கூவிச்
சேவித்திடும் பதம் பாடிடுவோம்
- தன்னுனேத் .
8 பக்தி வினையவர் சித்த முவப்பவள்
அர்த்தநாரீஸ்வரி, வித்தகியை தத்தை மொழிச் சிவகாமியளைப் பெருந் . தத்வ மசிப் பொருளானவளை

77
9
ஏற்றுவோம் போற்றுவோம் இன்னிசை பாடுவோம்"
நாற்றிசையாளரும் வந்திடுவீர், காற்றுள் அணுவுட் கடலுள் நடம் புரி
கற்புடைச் செல்வியை பாடுவமே
- தன்னுனேத்.
கடைசியாகக் கொடுகொட்டியாடலின் இறுதிக் கட்டமாய மங்கல வாழ்த்துப் பாடலைக் கேட்போம் :-
ஆதி பரம் பொருட் காதியாய் நின்ருெளிர்
அம்மையளுக் கிசை மங்களமே !
அஞ்சன் நீள் விழி யாளகி லாண்டவெம்
அம்மையஞக் கிசை மங்களமே !
சோதியுருவினள் சொர்க்க வகத்தினள்
சுந்தரத் தேவிக்கு மங்களமே! சொல்லு ளடங்காத தொல்புகழ் மாண்டவச்
சோபித நாயகி மங்களமே !
-- Pigb --

Page 48
சத்தி வழிபாடு
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளே
(9. சராசரத்தின் தோற்றத்திற்கும் பெருக்கத்திற்கும் சத்தியே முதற்காரணமென எகிப்து சுமர் முதலிய நாடுகளிலும் பரத நாட்டிலும் வாழ்ந்த பண்டைக்கால மக்கள் கருதிவந்தனர். அதன் பயனுய் மாந்தரின் நலனுக்கு வேண்டிய பண்புகள் பல அவ ரிடத்து இருப்பதாகக் கருதினர்.
பரத நாட்டுச் சமய வரலாற்றில் சத்தி பெரியதோர் இடம் வகிக்கின்றது. வேதவழிபாட்டு முறையிலும் திராவிடவழிபாட்டு முறையிலும் பெண்தெய்வ வழிபாடுகள் உள்ளன. ஆனுல் வேத வழிபாட்டு முறையில் பெண்தெய்வங்களுக்கு அவ்வளவு பெரிய இடம் கொடுக்கப்படவில்லே, திராவிட வழிபாட்டு முறையில் அவற்றிற்கு உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திராவிட நாகரிகம் செழித்தோங்கிய இடங்களில் பெண்தெய்வ வழிபாடு பண்டைக்காலந்தொட்டே வேரூன்றியுள்ளது. பரத நாட்டிலே சமன் பெளத்த சமயங்களின் ஆதிக்கம் குறைந்து இந்துசமயப்பிரி வுகள் பின்னருத் த&லதுரக்கியபொழுது அப்பிரிவுகளில் சத்திவழி பாடு உன்னத இடத்தைப் பெறத் தொடங்கியது.
தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொரு ஊரின் வெளிப்புறத்தும் அவ்வூர் மக்களின் நலனேக் காப்பாற்றுவதற்காகத் தேவி கோயில் கள் இடம் பெற்றுள்ளன.

79
இப்பொழுதுள்ள இத்து சமய வழிபாட்டிலமைந்துள்ள ஒவ் வொரு ஆண்தெய்வத்திற்கும் ஒவ்வொரு பெண்தெய்வமும் அதன் சத்தியாக அமைந்துள்ளது. இப் பெண் தெய்வங்கள் ஒவ்வொன் றும் ஆதி பராசத்தியின் பல்வேறு தொழிலேச் செய்யும் பல்வேறு தோற்றங்கள். அன்றியும் சத்தி வழிபாட்டு முறை உபநிடதங் களிலும், புராணங்களிலும், தந்திரங்களிலும் வத்துள்ளது. இங்கு கூறிய சத்தி வழிபாட்டு முறை ஆண் தெய்வங்களோடு தொடர் புடைய பெண் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாட்டு முறையி னின்றும் வேறுபட்டது. இவ்வழிபாட்டைச் சாக்த சமயம் எனக் கூறுவர். இது சைவ வைணவம் போலவே தனிப்பட்ட சமயமாய் அமைந்துள்ளது. இச் சமயத்திலும் பல பிரிவுகள் உள்ளன. ஒவ் வொன்றிற்கும் தனிப்பட்ட கொள்கையும் சித்தாந்தமும் சமய தீட்சைகளுமுள்ளன; இதன் பொருட்டாய்ச் சாக்த சமயத்திற் கெனவே தனிப்பட்ட புராணங்களும் எழுந்துள்ளன.
சாக்த சமயத்தின்படி மகா தேவியே உலகத்திற்கு முதலாவர். விட்டுணு பிரமா முதலியோரின் சத்திகள் இவரின் தோற்றங்கள் என்பர். சிவனின் சத்தி உனமீ. அவருக்குப் பல உருவங்களுண்டு. அவையாவன: தேவி, பார்வதி, கெளரி, சதி, துர்க்கை, பைரவி, காளி, சாமுண்டி, கராளா, பவானி ஆகும். இம் முகூர்த்தங்கள் பலவற்றில் அவர் அருளுருவத்தைக் கொண்டுள்ளார். அருளுருவத் தில் உயிர்களுக்கு நன்மை செய்வார்; கோர உருவத்தில் அழித்தல் தொழிஃ மேற்கொள்வார். அண்டசராசரங்களுக்குத் தாயும் ஏது வுமாகிய அம்மை கருணேச் செயல்களோடு கொடுமைச் செயல்க 2ளயும் புரிந்து நிற்றல் விந்தையே. எனினும் உண்மை அவ்வாறே. அதன் காரணமாய்ச் சாக்த சமயம் இரு கூருப் அமைந்துள்ளது.
அவையாவன தட்சிண மார்க்கம், வாம மார்க்கம், தட்சினை மார்க்கத்திலுள்ளார் தங்கள் சமயக்கிரியைகளே யாதொரு ஒளிப்பு மறைப்பின்றி வெளிப்படையாகச் செய்து ஒழுகுவர் சாக்த சமயத் தில் பொரும்பாலோர் இதனைச் சேர்ந்தவர்களே. வாம மார்க்கத் தார் தங்கள் வழிபாட்டு முறையை மறைவாகச் செய்வர். அவர்க ளுடைய வழிபாட்டுமுறை அவர்களுக்கு மட்டுமேயன்றிப் பிறருக் குத் தெரியவராது. மத்தியம் (மது) மத்சியம் (மீன்) மாமிசம் (ஊன்) முத்திரா (தானியம்) மைதுனம் (புணர்ச்சி) ஆகிய ஐவகை நுகர்ச்சிகளே நுகர்ந்து முத்தி பெறலாம் என்பது அவர் த்சிதாந்தம்.

Page 49
8O
வாம மார்க்கத்தாரது முக்கிய வழிபாட்டுக் கிரியைகளு ளொன்று சக்கர பூசை, நடு நிசியில் ஓர் மறைவிடத்தில் ஒரு குறிப் பிட்ட தொகையினரான மகளிரும் அத்தொகை ஆண்களும் ஒருங்கு சேர்ந்து மேற் கூறிய ஐந்து போகங்களையும் நுகர்ந்து வழி படுதலே இப் பூசையாகும். எனினும் இப் பூசையின் உண்மை அவருக்கேயன்றிப் பிறரெவருக்குந் தெரியமாட்டாது. அவ் வழி பாட்டு முறை மிகுந்த கட்டுப்பாட்டுடனேயே நடைபெறும். சக் 5灰 பூசையாற்றுமுகத்தான் வந்து கூடிய கூட்டத்தார் இங்கு கூறிய ஐவகை நுகர்ச்சியையும் தங்கள் ஐம்புல வேட்கையைத் தணிப்பதற்காக நுகர்வதல்ல; அதனைத் தங்கள் சமயக்கடமையும் அதற்குவேண்டிய கிரியையும் என எண்ணுவர். இவ்வகையான வழிபாட்டில் உடற்புணர்ச்சி கணவன் மனைவியருக்கிடையேயே நடைபெறல் வேண்டுமென்பது விதி. எக்காரணம் பற்றியேர் சக் கர பூசையில் ஒருவன் தனது மனைவியின்றி வேருெரு பெண்ணுேடு கலந்துகொண்டால் அப்பெண் அவன் வாழ்நாள் வரைக்கும் அவ
னது ஆன்மீக மனைவியாயிருப்பாள்.
இவற்றினின்று வாமமார்க்கத்திலுள்ளார் ஐம்புல நுகர்ச்சியே வாழ்க்கையின் ஊதியம் என எண்ணிநிற்கும் சிற்றின்பவெறியர் என நினைத்தல் கூடாது. வழிபாடு நடக்குமிடங்களில் இவ்வாறு நடந்தபோதும் இவர் ஒழுக்கம் சிறிதேனும் களங்கமற்றது. தமது கொள்கையையும் வழிபாட்டு முறையையும்பற்றி மிகுந்த பெருமை பாராட்டுவர். அதன் காரணமாகத் தம்மைச் சித்தர் (நிறைவெய் தியவர்) என்றும் ஏனையோரைப் பசுக்கள் (மிருகங்கள்) என்றும் கூறிக்கொள்வர். சாதி வேறுபாடு அவருக்குள் சிறிதேனும் இல்லை. பெண்மையைப் போற்றுவோர் அவரைப்போல் பிறிதொரு கூட் டத்தாருமில்லை.
சாக்த சமயம் வங்காளத்திலே பெரிதும் அநுட்டிக்கப்பட்டு வந்தது. இப்பொழுதும் அங்கு பெருவழக்காயுண்டு. தேவியைப் பற்றி அங்குள்ள புலவர் பலர் சிறந்த பாடல்கள் பலவற்றை வங்

81
காள மொழியில் பாடியுள்ளனர். அவருள் தலைசிறந்தோர் இராம
பிரசாதசென், கமலாகாந்தபட்டாச்சாரி, நீலகண்ட மகோபாத் தியாயர் முதலியோராவர். மகாகவி தாகூருடைய பாடல்களி லும் சாக்த சமயக் கொள்கைகள் பரந்துள்ளன. வங்காளத்தில் வாழ்ந்த இராமக்கிருட்டின பரமகம்சரும் சத்தி வழிபாட்டுக்கா ரரே; அவரது சீடர் விவேகானந்தரும் அவ்வாறே.
சாக்த சமயம் பரதநாட்டில் இடத்துக்கிடம் வேறுவேறு உரு வங்களையும் கொள்கைகளையும் எடுத்தது. புவிந்தர், சவரர் முத லிய கூட்டத்தினர் தேவியின் கொடிய உருவங்களை வணங்கி வந்த னர். அவையாவன காளி, கராளா, சண்டி, சாமுண்டி இம் முகூர்த்தங்களுக்கும், அடர்ந்த காட்டிலும் விந்திய மலைச்சாரலி லும் உள்ளவர்கள் வணங்கும் துர்க்கைக்கும், கள்ளும், ஊனும் படைத்து வழிபடுவர். அருள் முகூர்த்தங்களான பார்வதி, உமை, இலட்சுமி முதலியவற்றை நாடெங்கணும் வழிபடுவர்.
அம்மை வழிபாடு பண்டுதொட்டுத் தமிழ்நாட்டிலும் இருந்து வருகின்றது. அதற்குத் தமிழிலக்கியம் சான்றுபகரும். அம்மை யை, ஐயை (தாய்) எனவும் கொற்றவை (வெற்றித்தாய்) எனவும் பெயரிட்டு வணங்கி வந்தனர். அவர் மறக்குடி மக்களின் வழிபடு தெய்வம். வெற்றியிலும் துன்பத்திலும் அவரையே வணங்குவர். போர்க்களங்களில் அவர் உலாவித் திரிந்து தமக்கு வெற்றியீட்டித் தருவதாக அவர்கள் நம்பினர். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றில் இத் தெய்வத்தைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளலாம்,
இன்றும் தமிழகத்தில் காளி, துர்க்கை, மாரியம்மன், முதலிய பெண் தெய்வங்கள் பெருவழக்கிலுள்ளன. அவற்றினை ஆகம முறைப்படியும் நாட்டு முறைப்படியும் வணங்குவர். அன்றியும் இவை வீட்டுத் தெய்வங்களாகவும் அமைந்துள்ளன. பல தொத்து

Page 50
82
நோய்கள் நாட்டில் வந்தால் மாரியம்மனுக்குக் குளிர்த்திபோட்டு அந்நோயினின்றும் தம்மை நீக்கும்வண்ணம் வேண்டிநிற்பர்.
தென்னட்டிலும் பல பெரியார்கள் அம்மை வழிபாட்டில் ஈடு பட்டிருந்தனரெனத் தெரிகின்றது. ஆதிசங்கரர், கம்பன், குமர குருபரர், பாரதியார் முதலியோர் அம்மைமீது சிறந்த பத்திப் பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.
 

83
நிலவைப் பிடித்திடுவேன்
* நாதன்
வானத்தில் வந்து விளையாடி வெண்ணிலவே சோனத்தில் சொர்ணம் சொரிந்துநின்று-நாணினிக்கச் சந்ததமும் என்நெஞ்சில் சார்ந்திருந்த நீயெனக்குச் சொந்தமானல் தப்பென்ன சொல்.
விண்மீது நீயிருக்க மண்மீது நானிருந்து வெண்ணிலவே வாவென்ருல் வாராயாம்-எண்ணம் மறந்திடுவென் ருலும் மறுக்கிறதே உன்னை மறந்தும் மறக்கா மனம்.
எத்தனையோ காலங்கள் என்சொந்த நெஞ்சத்தில் வித்தைகள் காட்டியநீ வேட்கையையும்-பத்தாமல் எந்தனுக்குத் தந்தபின்னர் எட்டாமல் போவதெனில் சொந்தம்விட் டுய்வேனே சொல்.
உன்னை அகப்படுத்தித் தன்னுள் வசமாக்கி என்னை வருத்திடுமோர் எண்ணத்தால்-வான்மேல் இருண்ட கருமுகிலான் ஈண்டி முனையப் பொருமிடுதே என்நெஞ்ச்ம் பார்.
என்ருலும் நீயவனை ஏமாற்றி விட்டதனை நன்முய்ப் பலதடவை நான்கண்டேன்-என்நினைவே இன்னும் சிலநாள் எனக்காய்நீ காத்திருந்தால் உன்னை அடைவேன் உகந்து.
உன்னையங்கு வந்தடைதல் ஊன்களுர்க்கு ஆகாது என்றநிலை மாறிற்று இப்போது-இன்று மனிதன்யான் மேலேறும் மாண்புகண்டு விட்டேன் இனிச்சேர்வோம் ஒன்ருய் இசைந்து.
சாதிக்க ஏலாச் செயல்களுக்குச் சான்ருக மேதினியோன் உன்னை மருவுதலை-ஆதிமுதற் சொன்னவர்கள் இன்றுன்னைச் சேர்ந்திடவென் விஞ்ஞான வன்மையினைக் கண்டிழிப்பார் வாய்,

Page 51
புறநானூற்றில் ஒரு பாட்டு * வி. செல்வநாயகம். M. A. *
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுந்த தமிழ்ப் பாட்டுக்களை நாம் படிக்கவேண்டுமாயின் அவற்றைப் புற நானூற்றிலே படிக்கலாம். நூல் வடிவில் அவை இன்று வரையும் போற்றப்பட்டு வந்தமையே அவற்றின் சிறப்புக்குப் போதிய சான் ருகும். அக்காலத்திலே அவை மட்டுமல்ல, வேறு பல புறப் பாட் டுக்களும் நாட்டில் இருந்தன. அவற்றுள்ளே தெரிந்து கோக்கப் பட்டவையே புறநானூற்றிலுள்ளவை. அங்ங்ணம் அவை கோக்கப் பட்டுப் பல ஆண்டுகள் சென்றபின் அவற்றிற்குத் திணைதுறைகள் வகுக்கப்பட்டன. இன்னும் பல ஆண்டுகள் சென்றபின்னரே உரை வகுக்கப்பட்டது. அக்காலந் தொடக்கமாகத் தமிழ் நாட் டில் வாழ்ந்த புலவர்களும், உரையாசிரியர்களும் அந்நூற் பாக்களை எடுத்து ஆண்டுவந்திருக்கின்றனர். இவ்வாறு போற்றப்பட்டு வந்த இப் பாக்களை நாம் படிக்கிருேம். ஆனல், அவற்றுட் பலவற் றைப் படித்து அனுபவிக்க முடிகிறதில்லை. அதனல், எமக்குப் பாட்டைப் படித்து அனுபவிக்கக் கூடிய தகுதி இல்லையென்று சொல்ல முடியாது; ஏனெனில், பாரதியார் பாட்டு எதுவானுலுஞ் சரி, அதைப் படித்து நல்லாக அனுபவிக்கிருேம். திருவாசகத்தைக் கேட்டு அனுபவிக்காத செவி இல்லை; உருகாத நெஞ்சு இல்லை. அப்படியிருந்தும் புறநானூற்றுச் செய்யுட்களைப் படித்து அனுப விக்க முடியாதிருப்பதற்கு வேறு காரணம் இருத்தல் வேண்டும். அப்பாட்டுக்களின் மொழி நடை, பொருள் மரபு, அவை குறிக் கும் வாழ்க்கை நிலை முதலியன் ஆ காரணங்களுட் சிலவாகலாம். பண்டைக் காலத்து மொழிநடை வேறு, இக்காலத்தில் வழங்கும் மொழிநடை வேறு. பாட்டிலுள்ள சொற்கள் குறிக்கும் பொருளை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியாதவிடத்து அப்பாட்டைப் படித்து அனுபவிக்க முடியாது. புறநானூற்றுச் செய்யுட்களுக்கு உரை உண்டு. ஆகவே, அதன் உதவிகொண்டு பாட்டுக்களின் பொருளை ஒரளவிற்காயினும் அறிந்துகொள்ளலாம். அப்படியிருந் தும் பாட்டைப் படித்து அனுபவிக்க முடிகிறதில்லை. ஏனெனில், அக்காலத்து மக்கள் வாழ்க்கையையும், மக்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய சிறப்புவாய்ந்த ஒழுக்கம் முதலானவற்றையும் நாம் கற்பினை செய்து காண முடிகிறதில்லை. அதனலேதான் புற நானூற்றுச் செய்யுட்களுட் பலவற்றை நாம் படித்து அனுபவிக்க முடியாதிருக்கிறது.

85
சங்க காலத்து மக்கள் வாழ்க்கையில் வீரமும் கொடையும் இரு கண்கள் போல விளங்கின. போரும்.வறுமையும் நாட்டிலே மலிந்து கிடந்தன. அதனல், வீரத்தையும் கொடையையும் சிறப் பித்துப் பாடினர்கள் புலவர்கள். அந்தக் காலத்தில் மக்களுணர்ச் சியைத் தூண்டிய வீரரின் அருஞ் செயல்களை நாம் இப்பொழுது கற்பனை செய்து காணவும் முடியாதிருக்கிறது. நாட்டுப்பற்று மக்க :ளுடைய இரத்தத்திற் கலந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்முடைய நாட்டுக்குத் தீங்குவிளைவிக்க எண்ணிய பகைவன் நாட்டை எவ் வகையானும் அழிப்பதிலே மக்களுக்கு ஆர்வமும் ஊக்கமும் கலந் திருந்தன. தன் நாட்டின் நன்மைக்காகத்தன்.உயிரையும் தியா
கஞ்செய்ய முன்வந்த வீரனைச் சங்கத்துச் சான்றேர்கள் மனங்குளி ரப் பாடினர். அந்த உணர்ச்சிகள் இன்று மதிப்பிழந்து விட்டன.
அவை நாம் போற்றிப் பாராட்ட இயலாத உணர்ச்சிகளாகிவிட் டன. இது காலத்தால் ஏற்பட்ட மாறுதலாகும். ஆகவே, அந்த
வீர உணர்ச்சிகளைக் கற்பனைசெய்து காண்பதற்கு இன்று நம்
வாழ்க்கைமுறை இடமளிக்கவில்லை. அதனல், நாம் அச்செய்யுட்
களைப் படித்து அனுபவிக்க முடிகிறதில்லை.
வீர உணர்ச்சியைப் புலப்படுத்தும் வகையிலே புறநானூற்றி லுள்ள செய்யுட்களுக்கிடையே வேறுபாடு உண்டு. ஒருவனின் வீரத்தை வெளிப்படுத்தும்பொழுது, அதை நேர்முகமாக வெளிப் படுத்துவதுமுண்டு, மறைமுகமாக வெளிப்படுத்துவதுமுண்டு. பகைவன் ஒருவனுடைய நாடு அழிந்ததற்கு இரங்கிப் புலவன் பாடும்பொழுது, அந் நாட்டை அழித்த வீரனின் புகழையே மறை முகமாகப் பாராட்டுகின்றன். பகைவனுடைய நாட்டை அழித்த ஒரு வீரனை நேரிற் கண்டு அவனிடத்தேயுள்ள வீரப்பண்பைப் பாடு தல் நேர்முகமாகப் பாராட்டுதலாகும். அவன் வீரத்தை ஒரே பாட்டில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அமைத்துப் பாடுத லும் உண்டு. அத்தகைய பாட்டொன்று வருமாறு:-
களிறு கடைஇயதாட் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையாற் கண்ணுெளிர்வரூஉங் கவின்சாபத்து மாமறுத்த மலர்மார்பிற்
ருேல்பெயரிய வெறுழ்முன்பின் எல்லையு மிரவு மெண்ணுய் பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்

Page 52
86
கொள்ளை மேவலை யாகலி னல்ல இல்லவா குடவா லியறேர் வளவ “தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே. இப்பாட்டின் கீழ் திணை-வஞ்சி; துறை-கொற்றவள்ளை; மழ புல வஞ்சியுமாம் என்று குறிக்கப்பட்டுள்ளது. எதிர்சென்று பகை
வன்-நாட்டைக்-தரக்குதல் வஞ்சியாகும். பகைவர் நாட்டின் அழிபுக்கு இரங்குதல் கொற்றவள்ளையின்டாற்படும். பகைவர்நாட்
டைக் கொள்ளையூட்டி வீடுகள் பாழ்படக் கொள்ளைகொண்ட வீரச் செயலைப் புனைந்து கூறுவது மழபுலவஞ்சியின்பாற்படும். எரிபரந் தெடுத்தல் என்னுந் துறைக்கும் இப்பாட்டு உதாரணமாகக் காட் டப்பட்டுள்ளது. எரிபரந்தெடுத்தலாவது ஓர் அரசன் பகைப்புலத் துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலாகும். துறைகள் எவ்வாருயினும் அரசனுெருவனுடைய வீரப்பண்பே நேர்முகமாக வும் மறைமுகமாகவும் இப்பாட்டிலே சித்திரிக்கப்படுகின்றது. இப் பாட்டைக்கொண்டே சங்கத்துச் சான்றேர்கள் எப்படிப் பாடினர் கள் என்பதை ஒருவாறு கணிக்கலாம்.
புலவன் பாடும்பொழுது இரண்டு வகையாகப் பாடுதலுண்டு. அவற்றுள் ஒன்று, அவன் ஓர் அனுபவத்தைப் பெறுகின்ற நேரத்தி லேயே அதற்கு வடிவம் அமைத்தல்; மற்றது, அந்த உணர்ச்சி அனு பவத்தை உள்ளத்திலுே.தங்கவைத்து, சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் கழிந்தபின், அதற்கு வடிவம் அமைத்தல், புலவனின் உணர்ச்சிகள் அவ்வப்போதே கலை வடிவங்கொண்டு வெளிவரு தற்கு உதாரணங்கள் பலவற்றைப் புறநானூற்றிலே காணலாம். நாம் மேலே காட்டிய செய்யுளும் அத்தகையதொன்றே. பகைவர் நாட்டுக்கு எரியூட்டி, அதை அழித்து மீண்ட ஒரு வீரனைப் புலவர் நேரிற் கண்டு, தாம் கண்டவாறே பாடிய பாட்டு அது. பகைவர் நாட்டை அழிக்கப் போகும்பொழுது இரவிற் போதலும் உண்டு, பகலிற் போதலும் உண்டு. இரவிலே தீக்கொளுவுதல் இலகுவா னது. பகலிலே தீக்கொளுவுதல் எல்லார்க்கும் எளிதன்று. ஊரில் உள்ளவர்கள் விழிப்பாயிருக்கும் பகற் காலத்தில் அதை அழிப்பதற் குப் படைப்பலம் மட்டுமன்றி மிக்கவீரமும் வேண்டும். பாட்டிலே குறிக்கப்பட்ட அரசன் மிக்க வீரன் என்பது அவன் பகலென்றும் இரவென்றும் எண்ணுது எரியூட்டி அழிக்கும் ஆற்றலுடையவன் என்று கூறுவதிலிருந்து தெரிகிறது. அத்தகைய வீரன் பகைவர் நாட்டை எரிக்கு இரையாக்கி மீண்டுவந்து நின்றபோது அவ
 

87
லுடைய வீரச் செயலே அவன் தோற்றத்திற் கண்டுபாடுகிருர் புல வர்ஃப்கைவர்நாடு அழிந்ததை அவனுடைய அங்கங்கள்ே அறி *றுத்துகின்றன. பாட்டின் முதல் ஆறு அடிகளிலும் அவனுடைய தோற்றுப்பெசலிவு சித்திரிக்கப் படுகிறது. ஏனைய அடிகளில் நாடிஇன் புலப்படுத்தப்படுகிறது. அவ் வீரனைச் சித்திரிக் கும் ஆறு அடிகளும் வஞ்சி ஒசையிலும் ஏனைய அடிகள் அகவலோ
சையிலும் அமைந்திருத்தல் நோக்கற்பாலது. ಕ್ಲಿಷ್ಠೀ துரங்க
அகவலோசை துன்ப உணர்ச்சியை வெளிப்படுத்துதற்கு மிக்க பொருத்தமுடையது) அதஞலேயே அகத்திணைப் பொருளைச் சங்கப் புலவர்கள் அகவலோ சையில் அமைத்துப் பாடினர். அகத்திணைச் செய்யுட்கள்யாவும் துன்ப உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன என்பதைச் சங்கச் செய்யுட்களைப்படித்தறியலாம். ஆகவே, வீரச்சுவையைக் குறிக் கத் துரங்கலோசையயுைம் துன்பச் சுவையைக் குறிக்க அகவலோ
சையையும் புலவர் ஒரே பாட்டிற் கையாண்டனர். *
லோசை போருக்கும் வீரத்துக்கும் உ ரியது) registswrwayswat
இனி அவ்வீரனுடைய தோற்றம் எவ்வாறு சித்திரிக்கப்படுகின் றது என்பதை நோக்குவோம். அவனுடைய நிலையைப் பார்த்த வுடனே பகைவர் நாட்டை அழித்து அவன் மீண்டுள்ளான் என்பது புலவருக்குத் தென்படுகிறது. ஆகவே, அதைக்கண்டவாறே வரு னிக்கின்ருர் புலவர். அவன் யானையின்மீது ஏறிப் போர்புரிந்த வகையினை அவன் தாள்களும், வீரப்போர் புரிந்த வகையினை அவன் அடியில் விளங்கும் வீரச்சூழலும் புலப்படுத்துகின்றன என்று புலவர் கூறுகிருர். அவன் அடி திருந்தடி என்று கூறப்பட்டுள்ளது. இலக்கணத்தாற் றிருந்திய அடி என்று உரை கூறப்பட்டுள்ளது. என்ன இலக்கணத்தால் எப்படித் திருத்திய அடி என்பதை நாம் தெளிந்துகொள்ள முடியாதிருக்கின்றது. போர்த் தொழிலில் வெற்றிபெற்று விளங்கக்கூடிய ஒருவனுக்கு அஞ்சா நெஞ்சம் இருத் தல் மட்டும் போதாது; போர் புரிந்து வெற்றி பெறுதற்கு ஏற்ற உறுப்புகள் அமைந்த உடம்பும் வேண்டும். ஆகவே, அவனுடைய திருந்திய அடியைப் புலவர் பாராட்டுகின்றனர். அம்பொடு பொருத காரணத்தாற் கவிந்திருக்கும் தன்மைபொருத்திய அவன் கை அடுத்து வருணிக்கப்படுகிறது. கவி வண்கை என்பதற்கு ‘இடக்கவிந்த வள்ளிய கை' என்று உரை கூறப்பட்டிருக்கிறது.
அது பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. போர்புரிந்து வீர 苓荔警 பார்த்து அவன் வீரக் குறிப்பைப் பாட்டிலமைக்கும் முயற்சியில் முனைந்து நிற்கும் புலவ ஒனுக்கு அது அனுகூலப்படுமுன்னரே அவ்வீரனின் வள்ளன்மையைக்
கூறப்புகுதல் பொருத்தமற்றது. புலவர்கள் அப்படிக் கூறமாட் டார்கள். அவ்வாறு பாட்டிலே மற்றென்று விரிக்கும்போது பாட்

Page 53
88
டிலுள்ள ஒருஜழுப்பாடு கலைந்துவிடும். ஆகவே, வில்லிலே அழ்பை லுைத்து எய்யும் பயிற்சியாற் சிறப்புற்று விளங்கும் தன்மையே ஈண்டு. குறிக்கப்படுகிறது எனக் கொள்ளுதலே பொருத்த முடைத்து. அதைத் தொடர்ந்து அதனேடு தொடர்புடைய வில் குறிக்கப்படுகின்றது. அவன் வீரன் என்பதற்கு அறிகுறியாக அந்தவில் அவன் தோழிலே தொங்கும் காட்சியும், நாணை இழுத்து அம்பைச் செலுத்தும் பயிற்சி காரணமாக நெஞ்சிலே உண்டான கறையும் தொடர்ந்து கூறப்படுகின்றன. 'மாமறுத்த மலர் மார்பு' என்பதற்குத் திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கு ஏதுவாகிய பரந்த மார்பு’ என்று உரையெழுதியிருப்பது உரையாசிரியரின் கல்வியறிவையும் கற்பனைத் திறனையும் கண்டு இன்புறுதற்கு ஏதுவா கின்றதன்றிப் பாட்டிலுள்ள உணர்ச்சி அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வழிகாட்டுவதாக இல்லை. திருவுடை மன்னனைத் திருமா லாகக் கொள்ளுதலும் அவன் மார்பிலே திருமகள் வீற்றிருப்ப 臀 கொள்ளுதலும் பிற்காலழயபாகும். ஆசிரியர் தம்முடைய காலத்தில் வழங்கியதொன்றைச் சங்ககாலத்திலும் வழங்கியதாகக் கொண் டு உரையெழுதினரென்றே கருதவேண்டியிருக்கிறது. வில்லிலே நாணப் பூட்டி, அதை இழுத்து அம்பை எய்யும்போது, அந்நாண் எய்பவன் நெஞ்சில் உரைஞ்சுதலால், அவன் மார்பிலே தழும்பு ஏற்படுவதுண்டு. அது அவனுடைய விற்பயிற்சித்கும், வீரத் துக்கும் அறிகுறியாகின்றது. அதைக் காட்டவே ‘மாமறுத்த மலர் மரர்பு என்று புலவர்கூறினர் எனக்கொண்டால் அவனைப்பற்றிய விருணனையிற் காணப்படும் ஒருமைப்பாடு கலைந்துவிடாது. இங்ங் னம் அவனுடைய அங்கங்களிற் காணப்படும் வீரக் குறிகளை ஒவ் வொன்ருகச் சுட்டியபின், அவனுடம்பு முழுவதிலும் செறிந்து கிடக்கும் வலிமையைத் தோல் பெயரிய எறுழ் முன்பு’ என ஈற் றிலே கூறியிருப்பதை நோக்கும் பொழுது, அவனுடைய தோற்றப் பொலிவினைநாம் தெளிவாகக் கற்பனைசெய்து காணமுடிகிறது. அவ் வீரஜன எம் அகக்கண்முன் முதலிலே தோற்றுவித்து, அதன்பின் அவனல் நாட்டுக்கு ஏற்பட்ட அழிவைப் புலவர் சித்திரிக்கின்றனர். உண்ழை அனுபவம் ஒன்றைப் புலவர் இப்பாட்டிலே சித்திரித்துக் கர்ட்டுகின்றனர் என்பதை இப்பாட்டினை ஊன்றிப் படித்து அறிய ஸ்ாம், பாட்டின் இறுதியிலுள்ள மூன்று அடிகளும் அந்த நாட்டின் செழிப்பைக் கூறுகின்றன. அத்தகைய நாட்டிலே மக்கள் திரளாக வாழ்ந்தார்கள் என்பதும், அதை அழியவிடாது காப்பாற்ற முயன் நிருப்பார்கள் என்பதும், அங்கனம் முயன்றும் அது முடியவில்லை யென்பதும், அது முடியாமையின் அதை அழித்த அரசன் சிறந்த வீரன் என்பதும் புலப்படுகின்றன. இவ்வாறெல்லாம் அவ் வீர னின் புகழே அப்பாடிற் சிறப்பிக்கப்படுகின்றது.

89
இல்லறத்தின் நற்கனி
YSie ஞானரெத்தினம் St&FR
இல்லறத்தின் “இங்கேவா?? சொல்லழகு சொக்குகிறேன் பொல்லாத பிறந்தனையோ வல்லதல்லோ வாவாவந்
கண்களிலே காசினியில் பண்சேர்க்கும் பாரெல்லாம் திண்டோள்கள் திருத்தந்தை
S6:ST 6 IIT ffffi கை வரிசை
மாதா உன் மர்மமுடைச் **தாதா'வென் தாங்கிடவே போதாது புலம்பிடுவே தீதேனு தீஞ்சுவையாம் உன்சிறுகால் உன்னதமாம் அன்பினது அன்னை பிதா துன்பமது தூரனறிந்
நற்கணியாம் உன்னுடைய காண(ச்)சிறு எண்மறந்து உலகினிடை
ஈசனது வாய்திறவாப்
தேறுமடி
மின்னுகின்ற உண்டோதான் பசியதொரு உன் அடியில் கொண்ட ஒரு யாகிலுமுன் பாகுமிட காட்டிடுவாய்
ஊட்டலினை சைகையினல் றரற்றிடுவாய் மறந்துபிற என்னை வந்து னென்று அடம் மறியாதே அமுதினேயும்
கையசைவு
நாட்டியத்திற்.
சின்னமதாய் பாசமதைத் வாழ்க்கையிலே தோடிஉன
மழலைத் தேனே! எழிலைக்காணச் நடையைக்காணச் பாரேன்இந்தப் நீயேன்கண்ணே! விளையாடல்தான் பச்சைப் பாலா மீதேதானே.
கருத்து இந்தக்
மழலைச் சொல்லால் விழுமே பாலா வீரனுந்தன் சிறு கை காலால் மெங்குமுந்தன்
யார்க்குண்டிதே.
மறந்தாற்கூட அழுகையூடு
யாருமுன்னத்
வேலைசெய்தால் தூக்காவிட்டால்
பிடிப்பாயெந்தத்
பொக்ச்ைவாயால் சிதறச் செய்வா ய். உலகிலெந்த
கீடாகும் நல் வந்துதித்து
தூண்டிவிட்டுத்
வந்தாற் கூடத்
தருகில் வந்து

Page 54
90
இன்ப முகம் இல்லறமும்
தொட்டிலது தூங்குதலில் இட்டமுடன் எச்சிலை நீ பட்டமசூ LirrihafGay திட்டமுடன் திருவிளக்காய்
பெரியார்கள் பேர்மொழிகட் உரியோனென் உத்தமமாம் தெரியாது தெவிட்டாத புரியாது பூவுலகில்
தவழ்ந்துவிளை தட்டிக் கொண் உவந்தே நான் ஒடியே அவமாகும் அந்நிலையில் கவனமுடன் "களுக்கென
காதலினுல் கணவனுடன் மோதலினல் முறைபலநாள்
ostg5 LO மடியினிலே ஆதரவிை அழகுருவம்
பார்த்தவுடன்
நல்லறமாய்
உன்னுடைய மாத்திரமே ஒருமுத்தங் கன்னமதில் டாதிபதி பிறந்திட்டாற் உண்டெந்தன் மிளிர்கின்ருய்
இவ்வுலகில் கீடாவாய் (இ)ராட்சியத்திற் ஆத்துமத்தைப் நீ செய்யும் இன்பமதை நீ இருத்தல் வாழ்ந்திடலே
யாடுதலில் டோடிடுவாய் பின்வந்தால் சென்றிடுவாய் இம்முயற்சி விரைவாக போட்டியிலே ஓர் சிரிப்பொலியைக்
கொள்கைகளின் மனைவியவள் உறவுகெட நீடித்து ஈரைந்து தவழ்ந்து நல்கிடுவாய் காட்டியுடன்
ஒடச் செய்வாய் ஓங்கச் செய்வாய்
வீடு என்றுந் சுவையைக் காண்பா கொடு என்ருலே ஏற்றி வைப்பாய் தனக்கு நீதான் பாக்கியங்கள் சின்னப்பாலா இல்லில் நீதான்.
உதிர்ந்துவிட்ட (இ)யேசுநாதர் கென்று சொன்ன பெற்ருயல்லோ செயல்களெல்லாம் நல்குமிப் பார் போலே மாந்தர் புனிதமென்பாய்
எந்தனுள்ளம் பிடிக்க உன்னை GTiಙ್ಗT விட்டு
*ர்ந்து வந்தால் என்றுகூறும் நன்செய்தே நீ வெற்றிகொண்டு காட்டிச் செல்வாய்.
வேறுபாட்டால் உற்ருர், பெற்gர் வாழ்ந்து காட்டும் நிற்குங்காலை கழிந்த பின்னர் தருங்காட்சி மூலம் அவர்க்கு நீதான் ஆறச் செய்வாய்.
 

பண்தேய்த்த மொழியினுர் கொண்டேத்தும் கோவலன்
இ கலாநிதி சு வித்தியானந்தன் *3
Dங்கல வாழ்த்திற் சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்தரங் &geese களாகிய கண்ணகியையும் கோவலனையும் இளங்கோ வடிகள் அறிமுகப்படுத்துகின்ருர், முதலிற் கண்ணகி யைக் குறிப்பிடுகின்றர். அவளுடைய அழகைப் போற்றிய அடிகள், "தீதிலா வடமீனின் திறமிவள் திறம்" என்றும், ‘மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்’ என்றும் அவ ளுடைய கற்பையும் குணப் பெருமையையும் பாராட்டிக் கூறு கிருர், அடுத்து, கோவலனைப்பற்றிக் கூறும்போது அவனது சால்பு பற்றி ஏதும் குறிப்பிடாது, அழகையும் புகழையுமே போற்றிக் கூறு கிருர், வேறு நூல்களில் வரும் கதைத் தலைவரிலும் கோவலன் வேறுபட்டவன் என்பதையும், அவனது செயல்களே அவனுக்கு அழிவைத்தேடப் போகின்றன என்பதையும் முன்னேடியாகக் கூறு. வது போல, மடவார் கோவலனைப் பாராட்டினர் என்ற கூற்றில் பெறவைக்கின்ருர், "பண்தேய்த்த மொழியிஞர் காதலாற் கொண். டேத்துங் கிழமையோன்' என்பதே அவனைப்பற்றிய அறிமுகம். எனவே, மண்தேய்த்த புகழும், மதிமுக மடவார் காமக்குறிப்பினை உட்கொண்டு புகழும் உரிமையும் ஒழிய, சிறந்த தலைவனுக்குரிய அறிவு, பொறுமை, ஒர்ப்பு, கடைப்பிடி முதலிய பண்புகள் அவt னிடம் இல்லை என்பதைத் தொடக்கத்திலேயே அறிந்து கொள்ளும் படி செய்கிருர்,
மனையறம்படுத்த காதையில் கோவலன் கண்ணகியை "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே G தனே' என்று அன்புடன் பாராட்டும் போது அவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று எண்ணுகிருேம். ஆனல், கோவலன் இடையீடில்லாத இன்பத்தை நாடியவன். அவனிடம்

Page 55
92
மிகுந்திருந்த இன்பம் நுகருமாசையைக் கண்ணகியாலே தீர்க்க முடியவில்லை. அவள் தீர்க்க முயலவுமில்லை. எனவே தனது ஆசை யைத் தீர்ப்பதற்குப் பரத்தையரை நாடினன். நகர நம்பியர் திரி திரு மறுகிற் கோவலனும் பரத்தையரை நாடித் திரிகிறன். அம் மறுகில் நின்று மாலையை விலைகூறிய கூனியைக் கண்ட கோவலன், தன் ஆசையைத் தீர்ப்பதற்கேற்ற வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ந்து, மாலையை வாங்கி, கூனிதன்னெடு. மணமனைபுக்கு மாதவிதன்னெடு அணைவுறுவைகலின் அயர்ந்தனன். எனவே வடு நீங்கு சிறப்பின் கண்ணகி தன்போலக் காமநுகர்ச்சியில் ஈடுபாடில் லாததால் அவளை மறந்து, இடையீடற்ற இன்பம் நல்கிக் கொண் டிருந்த மாதவியை விடுதலறியா விருப்பினனுகி அவளுடன் தங்கி விட்டான். .-
இங்கு கவனிக்கவேண்டியது யாதெனின், அன்று அரச நீதியும் சமுதாயமும் கணிகை மாதர் வாழ்வு தொழில் முதலியவற்றை ஏற்றுக்கொண்டன. இளைஞர் பரத்தைமை மேற்கொண்டு ஒழுகு வது இழிவாக அன்று கருதப்படவில்லை. கோவலன்கூட, மாதவி யைவிட்டுப் பின்பு பிரிந்தபோது, பொருளை இழக்க நேர்ந்ததே என்று உள்ளம் வருந்தினனே ஒழியத் தனது மானத்திற்கு இழுக்கு உண்டானதாகக் கொள்ளவில்லை.
சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக் குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த இலம்பாடு நாணுத் தருமெனக்கு
(களுத்திறமுரைத்த காதை 69-71) என்பதே அவன் கூற்று.
எனவே, பொது மகளிரும் ஆடல் மகளிரும் ஏராளமாயிருந்த காலத்திலே - நகர இளைஞர் அத்தகையோர் வாழ்வை இன்ப வாழ் வெனக் கொண்டு பணம் கொடுத்துக் குறைவில்லாது நுகர்ந்து வந்த காலத்திலே - விலைகூறி விற்கப்படும் இன்பத்திற்கு ஈடாகக் கொடுக்கப்படும் பொருள்வளமும், அவ்வாறு கொடுத்து அனுபவிக் கும் காமவேட்கையும் உடையவனுக இருந்தான் கோவலன். ஆகவே, தான் விரும்பிய அழகும் கலையும் பருவமும் குணமும் உடையவளாய், தன் உள்ளம் நிறைவு கொள்ளத் தான் விரும்பி வந்த இன்பத்தைத் தனக்கு வரையாது அள்ளி அளிப்பவளாய் விளங்கிய மாதவியை அவன் அடைந்தது அவனுக்குக் குற்றம் போலத் தோன்றவில்லை. இதனலேயே மாதவியின் மாலையைத் தானுக்வ்ே சென்று கூச்சமின்றி வாங்கிஞன் வாங்கிக் கூனியுடன்

93
தெருவழியே யாவரும் காணக்கூடியதாக ஒளிவு மறைவு இன்றி மாதவி இல்லத்திற்குச் சென்றன். x
இந்திர விழவூரெடுத்த காதையில்,
p5ans unr டாயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபிற் கோவலன்
என்று கூறுவதன்மூலம், தான் பெறவிரும்பிய இன்பத்தைக் கண் ணகியிடம் பெறமுடியாததனுல், பரத்தையர் சேரியிலே சுற்றித் திரியும் வழக்கம் உடையவன் என்ற பொருள்பெற வைக்கின்ருர் ஆசிரியர். இத்தகைய கோவலன் பூவுக்குப்பூத் தேனுண்டு தாவித் திரியும் வண்டினை ஒத்தவனெனக் கூறப்படுவதால், மாதவியோடு கூடுவதற்கு முன்னும் பரத்தையர் ஒழுக்கமுடையவனுக விளங்கி ஞன் என்ற கருத்துப் படுகின்றது. இதனலேயே, கூனி விலைகூறிய மாலையைத் தானகப் பொருள் கொடுத்து வாங்கினன். கோவலன் மாதவியை அடையமுன் மாதவி கோவலனை அடிக்கடி சந்தித்து மயக்கியதாகவோ, அவள் மயக்கத்திலே கோவுலன் தன்னையும் அறியாமல் மூழ்கிக்கொண்டதாகவோ இளங்கோவடிகள்' கூறவில்லை.
எனவே, முன்னரே பெண்ணின்பத்தில் திளைத்து உள்ளம் நிறையாது, காமப் பெருக்கெடுத்து மாதவியைத் தேடிவந்த கோவலன், தான் முன்புபெருத இன்பத்தை மாதவியிடம் பெற்று, திருப்தியடைந்து, கண்ணகியை மறந்திருக்கிருன். ஆஞல், தான் செய்தது தவறென்ருே, பிறர் அறிந்தாற் குற்றம் ஏற்படும் என் ருே அவன் எண்ணவில்லை; சமுதாயமும் கருதவில்லை. பரத்தைய ருக்குப் பணம் கொடுத்து இன்பம் நுகர்ந்த கோவலன், மாதவி யிடம் சென்றபோதும் பணம் கொடுத்து இன்பங்காணவே சென் மூன். ஆனல், அவள் அளித்த இன்பம் அவன்.இச்சையைத் தீர்த் தது. அதனல் அவளைவிட்டு வேருெரு பரத்தையையும் நாடாது. அவளை வேருெருவன் பெறுவதற்கு உடன்படாது, அவளின் மன யிலேயே தங்கிவிட்டான். பொருளுக்குத்தான் இன்பம் அளிக்கின் முள் என்ற எண்ணம் மட்டும் அவன் உள்ளத்திலிருந்து ஒருபொ தும் அகலவில்லை. இதஞலேயே தன்னிடமிருந்த பொருள் யாவற் றையும் அளந்துகொட்டி மாதவியையும் அவளைச் சேர்ந்தோரை
மகிழ்வித்தான். s
மாதவியின் காதல் மயூக்கம் கோவலன் உள்ளத்தில் நிறைந்து விட்டது. தன் பெற்ருேர் என்ன செய்வது என அறியாது ஏங்கிய

Page 56
94.
தையோ, கண்ணகியின் தாய் தந்தையர் மகளின் நிலைகண்டு திகைத்திருந்ததையோ, உலகம் பலவிதமாகக் கதைப்பதையோ அவன் பொருட்படுத்தவில்லை. மாதவியும் முடிவுபெருத இடை யீடற்ற இன்பத்தைக் கோவலனுக்கு அளிக்கப் பலவாறு முயன் ருள். ஏனெனில், கோவலன் தன்னிடத்து அளவில்லாத அன்பு கொண்டிருந்தபோதும், தான் பிறந்தகுடி பரத்தையர் குடிஎன்ற காரணத்தினுல், தான் அவன்மேற் கொண்ட காதலை உண்மைக் காதலென உணராது, தன்னிலும் அழகுபடைத்த வேருெரு பெண்ணைக் கண்டால், தன்னைக் கைவிடக் கூடுமென அஞ்சினுள். இதனலேயே கலவியும் புலவியும் அளித்து அவனை என்றும் மகிழ் வித்தாள். அவளுக்கு அவனே கதி; அவன் உள்ளங்கொண்டவரை அவள் வாழ்வு மலர்ந்திருந்தது.
ஆனல், கோவலனின் தடுமாறு உள்ளம், அவளின் மலர்ந்த வாழ்விற்குக் குழிதோண்டும் கட்டம் இனி வருகின்றது. மாதவி இந்திர விழாவின்போது பலர் முன்னிலையில் ஆடியதும், அவள் ஆட்டத்தையும் அழகையும் கண்டு பலரும் அவளைப் பாராட்டிய தும் கோவலனுக்குப் பிடிக்கவில்லை. தன் ஒருவனுக்கே உரியவள் அவள் என்று கொண்ட கோவலன், அவளைப் பிறரும் கண்டு இன் புற உள்ளம் பொறுக்கவில்லை. அவளுக்குப் பணம் வாரிவாரி இறைத்ததினலே தனக்கு வறுமை ஏற்பட்டு விட்டதே என்ற ஏக்க மும் உள்ளத்தை உறுத்தியது. பொருளற்று இருக்குந் தன்மேல் அவள் அன்பு காட்டுவாளா என ஐயுற்ருன், இந்நிலையில் அவள் பலர்கூடிய சபையில் ஆடி அவர்களை மகிழ்வித்ததைக் கண்ட போது, அவள் மற்றவர் மீது காதலன்பு கொண்டாளோ என்ற ஐயம் குடிகொண்டது. எனவே ஊடற் கோலமொடு இருந்தோன (கடலாடு காதை 75) மாதவி அடைந்து, தன்னை அலங்கரித்து, கூடலும் ஊடலும் அளித்தாள். அவ்வேளையில் மாதவியின் உள் ளத்தில் ஓர் ஆசை எழுந்தது. மடலவிழ் கானற் கடல்விளையாட் டுக் காண்டல் வேண்டுமெனக் கோவலனிடம் கேட்டாள். அவ னும் உடன்பட்டான். இருவரும் கணவனும் மனைவியும் போலப் பலர் காண, ஊர் நடுவே சென்று, கானலை அடைந்து, புன்னையின் நிழலிற் புதுமணற் பரப்பில் அமளிமிசை இருந்தனர்.
கானலில் நடந்தவை கோவலனின் ஐயத்தையும் வெறுப்பை
--ސންS ........................جمع: حمد ح"!:عح“"2"0مبم oتشدسمسلم............م... "مسیحابۂ யும் வளர்த்தன. மிகுதியான அன்புடையாரிடத்து ஐயம் தோன்றி 'வளர்வது இயல்பே. கோவலனின் வரிப்பாட்டைக் கேட்ட மாதவி, அவன் கண்ணகியையோ வேறு பெண்ணையோ
நாடுகிருனென ஐயுற்ருள்.

95
எனவே,
கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ்வாங்கித் தானுமோர் குறிப்பினள்போற் கானல்வரிப் பாடற்பாணி பாடத்தொடங்கினுள் (கானல்வரி 24) .
கானல்வரி தான்பாட மாதவி ஒன்றின்மேல் மனம்வைத்துப் பாடியதைக்கேட்ட கோவலன் கோபமுற்ருன். மனைவி, பெற்ருர், உறவினர் யாவரையுங்கைவிட்டு, தன்னிடம் இருந்த பொருள் முழுவதையும் அவளுக்கு வாரியிறைத்து, யாவற்றையும்.இழந்து. நின்ற கோவலன் உள்ளம் புண்பட்டது. மாதவி இவ்வாறு ஐயம் கொள்வது தன்னை விட்டுவிடுவதற்கே எனத் தவருக எண்ணினன். பொதுப் பெண்டிர் குலத்துப் பிறந்தவள் தன்வசமுள்ள பொருள் குறைந்ததும் தன்னைக் கைவிடக் கருதியதனல், தன் குலத்துக்குரிய குணத்தைக் காட்டிவிட்டாள் எனக்கொண்டான். தடுமாமுன் நிலையிலுள்ள உள்ளமே இதற்குக் காரணமாகும்.
தன்னிடம் பொருள் இல்லை. மனைவியிடமோ பெற்றேரிடமோ இனிப் பொருள் பெறமுடியாது. நண்பரும் இனத்தாரும் கண்ணெ டுத்தும் பாரார். இவற்றை எண்ண எண்ண அவன் மனம் குழம்பி யது. எனவே,
‘மாயப்பொய் பலகூட்டு மாயத்தாளை’
விட்டு (கானல்வரி 52), ஏவலாளர் உடன் சூழ்தர, அங்கிருந்து அகலுகிருன். இடையீடற்ற இன்பத்தை நாடி, இதுவரை அவ் வின்பத்தை நுகர்ந்த கோவலன், இப்பொழுதுதான் முதன்முதல் துன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிருன். கோவலனின் இன்ப வேட்கை அவனைக் கண்ணகியிடமிருந்து பிரித் து; தடுமாறு உள்ளம் அவனை மாதவியிடமிருந்து பிரித்தது. இரு பிரிவுக்கும் அவனே தாலாக இருந்தான். 'மாயப்பொய் பல கூட்டும் ūdīruši தாள்’ என்று வெறுத்த மாதவியைத் 'தீது இலஸ்; என் தீது" - என்று அவனே பின்பு (புறஞ்சேரியிறுத்த காதை 94-95) கூறு வதிலிருந்து, மாதவி பிரிவுக்கும் அவனே பொறுப்பை ஏற்கவேண்டு மெனத் தெரிகின்றது. ... .33exasess'ssass-e-York
மாதவியை விட்டுப் பிரிந்த கோவலன் நேரே கண்ணகி வீட் டுக்குப் போகவில்லை. கடைவீதியிற் காணப்படுகிருன்.
கூல மறுகிற் கோவலன் எனச் சிலப்பதிகாரம் இதனைக் குறிப்பிடுகின்றது (வேனிற் காதை73). கோவலன் வரப்பெருததனல் வருந்திய மாதவி வயந்த

Page 57
96
மாலையை அவனிடம் மாலை ஒன்றுடன் அனுப்புகிருள். வயந்த மாலை அவனைக் கடைவீதியிற் கண்டு ஒலையைக் கொடுத்தாள். தடு மாற்றமான மனநிலையே, அவனை நேரே கண்ணகியிடம் அழைத் துச் செல்லாது, மறுகுதொறும் திரியச்செய்தது. இந்நிலையிலேயே மாதவியின் ஒலை கைக்கெட்டியது. இது அவன் வெறுப்பை அதிகரித் தது.மாதவி தனக்குக் கலவியும் புலவியும் அளித்துச்செய்த வித்தை களைப் பழித்து, அவள் தன்னுடன் நடந்துகொண்ட முறைகளை எட்டு வகை வரிக்கூத்தாக எடுத்து மொழிந்தான். இப்பகுதிகளி லும் அவனுடைய உறுதியற்ற உள்ளமே புலப்படுகின்றது. அவன்
பொழுதும் இன்பத்தையே நாடினன் என்றும், மாதவி அவ னுடைய இன்பநுகர்வு ஆசையைப் பெருகச்செய்து அவன் விரும் பியவாறு இன்பம் அளித்து வந்தாள் என்றும் இப் பகுதிகளிலிருந்து அறியலாம்.
மாதவியிடத்து ஏற்பட்ட வெறுப்புக் கண்ணகியிடத்து விருப் பாக மாறியது. தான் பிறந்து வாழ்ந்த புகாரை மறப்பதற்கும், தான் அனுபவித்த இன்பவாழ்வை ஒதுக்குவதற்கும் ஊரைவிட்டுச் செல்வதே வழியெனத் துணிந்தான். அவ்வாறு செல்லுமுன், கண் ணகியைக் கண்டு, நடந்ததைக் கூறிப்போகலாமெனக் கருதினன். கருதியவன் நேரே அவள் வீடுநோக்கிச் செல்கின்றன். அங்கு கண்ணகியைக் கண்டதும், அவள் நலம்பற்றி விசாரிக்கவில்லை. உற்ருர் உறவினர்பற்றிக் கேட்கவில்லை. பொருளெல்லாம் தோற்று நிற்பது தனக்கு வெட்கமாயிருக்கிறதென்றே கூறுகிருன்.
சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக் குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த விலம்பாடு நாணுத் தருமெனக்கு
என்பதே அப்பகுதி (கணுத்திற முரைத்த காதை, 69-71).
இவன் இவ்வாறு கூற, ம? நலங்கேழ் முறுவல் நகை முகங் காட்டுகிருள். எப்போது வருவாரென எதிர்பார்த்த கணவன் வந்ததையிட்டு அவள் மகிழ்ச்சிகொள்ளக் கோவலன் இடங் கொடுக்கவில்லை. பல நாட்களுக்குப்பின் வந்த கணவனிடம் உடல் நலம் விசாரிக்கவோ, உபசரித்து உணவு கொடுக்கவோ, ஆறுத லாகச் சிறிது நேரம் ஓய்ந்திருந்து இன்பக் கதைகள் பேசவோ இடங் கொடாது. பொருள் யாவற்றையும் இழந்து நாணங்கொண்டேன் என்று கூறக்கேட்ட கண்ணகி,

97
நலங்கேழ் முறுவ னகைமுகம்
காட்டினுள் (கனத்திறமுரைத்த காதை 71) . அவள் முகத்திலே தவழ்ந்த இம்முறுவல் மகிழ்ச்சியைக் குறிக்கின்றதா, வெறுப்பைக் காட்டுகின்றதா, ஏளனமாய் அமைந்ததா, குறும்பா? யார் அறிவர் பெண் உள்ளம்! மூன்றே மூன்று சொற்கள் விடையாக வருகின் றன:
சிலம்பு உள கொண்ம் (களுத்திறமுரைத்த காதை 73)
மாதவியை விட்டுத் தன்னிடம் வந்தவனுடன் அன்புமொழி பேசி மகிழ்ச்சி பொங்கச் செய்ய அவள் முயலவில்லை; அவளும் பொருள்
.
பற்றியே பேசினுள். இவ்வாறு அவள் பேசியது கோவலன் உள் ளத்தைத் திருப்பியது.
சிலம்பு முதலாகச் சென்ற கலனே
டுலந்த பொரு வீட்டுத லுற்றேன் என்ருன் (கனத்திற முரைத்த காதை 74-75). இவ்வாறு கூறிய கோவலன் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. இம்முறை போலவே முன்பு பலதடவை பெற்றுச் சென்ற அணி எதனையும் கண்ணகி பின்பு கண்டதில்லையே; அதே கதிதான் சிலம்புக்கும் நேரி டக் கூடுமென அவள் ஐயங்கொள்ளலாம். எனவே,
மாடமதுரை யகத்துச்சென் றென்னேடிங் கேடலர் கோதா யெழுக
என்று உறுதிமொழி கூறித் தன்னுடன் மதுரைக்கு-வரும்படி அழைத்தான்.
இவ்விடத்தில் கோவலன் உடைந்த உள்ளம் தெற்றெனப் புலப்படுகின்றது. மாதவியின் மோகத்தாற் குலந்தரு வான் பொருட் குன்றந் தொலைந்துவிட்டது. தான் கதியென இருந்த மாதவியும் தன்மேல் ஐயங்கொண்டுவிட்டாள். புகார் நகரில் இனிப் பலவிதமான புகார்கள் எழும். பலரும் பலவிதமாகப் பேசு வார்கள். எனவே தூர தேசத்திற்குச் சென்ருல் இவற்றிலிருந்து திப்பிக் கொள்ளலாமென எண்ணினன். ஆனல், தான்போகும் வழி எப்படிப் பட்டதென அவனுக்குத் தெரியாது; தெரிய விரும் பவுமில்லை. அங்கு சென்று என்செய்வதென்ற திட்டமும் இன்னும் வகுக்கவில்லை. போகவேண்டுமென்ற வெறியே இருந்தது. W.
கண்ணகியும் உடன்போக உடன்பட்டாள். பெற்ருேரிடம் விடைபெறவோ, பயணத்திற்கு அடுக்குச் செய்யவோ, அவள்

Page 58
98
உள்ளம் எண்ணம் கொள்ளவில்லை. புறப்படும் நாள் நல்ல நாளோ, போகும்வழி எப்படி இருக்குமோ என்பன பற்றிய கவலைகூட இல்லை. தான் உடன் சென்ருல் அவன் மாதவியிடம் மீண்டும் செல்லுதலைத் தடுக்கலாமென்று எண்ணியிருக்கக்கூடும். ஆகவே,
கங்குற் கனைசுடர் கால்சீயா முன் வீட்டைவிட்டு, வேறு உதவியின்றி, யாரும் அறியாமற் கோவல னுடன் புறப்பட்டாள் (கனத்திறமுரைத்த காதை 79). போக வேண்டும் என்ற வெறியே அவளிடமும் குடிகொண்டது.
புகார்க்காண்டத்தின் இறுதியில், சிறப்பாகக் களுத்திற முரைத்த காதையிலும், நாடுகாண் காதையிலும், கோவலன் பண்பிலும் கண்ணகி பண்ழிலும் திருப்பத்தைக் கரண்தின்றேம். மாதவியிடமிருந்து திரும்பியபோது, கோவலன்தான் பலஆண்டுக ளாகக் கண்ணகியைக் கைவிட்டிருந்ததையும் அதனுல் அவளுக்கு கொடுமை கள் ஏற்பட்டதையும் எண்ணியிருக்கவேண்டும். இனியாகுதல் அவள் பிரிவென்பதை அறியாது தன்னுடன் இருத் தல் வேண்டுமென விரும்பியிருக்கவேண்டும். இந்த மனத்திருப் பமே அவளையும் மதுரைக்கு உடன் அழைத்துச் செல்லத் தூண்டி யது. தனியாக மதுரைக்குச் சென்ருல் ஒருவேளை பழையபடி பரத்தை ஒழுக்கத்தில் செல்லக்கூடும்; கண்ணகியும், தன்னைவிட்டு வெகுதூரம்செல்ல முயல்கிருன் என ஐயுறக்கூடும். எனவே உடன் அழைத்துச் செல்லத் துணிந்தான். மேலும் கண்ணகியிலும் மாதவி சிறந்தவள் எனக்கருதி அவளிடம் சென்றவன், அங்கு அத்தகைய
பன்மடங்கு ஆர்வமுடன் கண்ணகியிடம் உந்தப்பட்டிருத்தல் வேண்டும். இதுவே உலக இயற்கையும். இக் காரணங்களினலேயே மாடமதுரைக்குத் தன்னேடு ஏகுக என்றன்.
கண்ணகி குணத்திலும் ஒரு திருப்பத்தைக் காணலாம். திரு மணம் முடிந்து இல்லறம் நடத்தத் தொடங்கிய காலத்தில், அணு பவக் குறைவினல், செல்வமாக வளர்ந்த வளர்ப்பினல், உறுதி யான உள்ளப் பாங்கினைப் பெருதிருந்த காரணத்தினல், கோவல னின் காதலை நெகிழவிடாது வளர்க்கும் முறையை அறிந்திராமல் வாழ்ந்தாள். பின் உலகியல் அனுபவும்.வளர வளரத் தான் கோவலனின் உள்ளத்தினை ஆட்கொள்ளத்-தவறியதை உணர்ந்' திருக்க வேண்டும். இதனல், தான் எவ்வளவு கவலைகளுக்கும் துன் பங்களுக்கும் உட்பட்டிருந்தபோதும், தன் கணவன் சிதைவுற்ற உள்ளத்தோடு தன்னை நாடிவந்தபோது, அந்தச் சந்தர்ப்பத்தைப்

99
பயன்படுத்தி, அவன் மனமாற்றத்தை நிலைக்கச்செய்ய வேண்டு மென அவள் விரும்பினள். எப்பொழுதாவது கோவலன் தன் னுடன் வரும்படி தன்னை அழைப்பானென அவள் கனவிலும் கருதி யிராள். எனவே, "நீயும் வருக" என்று அவன் கேட்டதும், அவள் உள்ளத்தில் திருப்பம் ஏற்பட்டது. என்ன இடையூறு நேரினும் இனித் தன்னைவிட்டுப் பிரியச் சந்தர்ப்பம் அளிக்கக்கூடாது என அவள் எண்ணினள். மாற்று மொழி கூருது, வேறு எண்ணம் எது வும் இல்லாது, போவதற்கு ஒருவித ஒழுங்கும் செய்யாது, உடன் கணவனுேடு சென்ருள். எது நேரினும் இனி க் கணவனுடனேயே என் வாழ்க்கை என்று அவள் உறுதிகொண்டுவிட்டாள். சிதைந்த எனது வாழ்க்கையைப் பொருளீட்டிச் செம்மையாக அமைப்பேன்; மனைவியும் என்னுடன் இருத்தல்வேண்டும் என்று அவனும் உறுதி கொண்டுவிட்டான்.
புறப்பட்ட இருவரும் காவிரியாற்றின் வடதிசையிலிருக்கும் மலர்ச்சோலையுள் நுழைந்து கவுந்தியடிகள் இருக்கும் இடத்தை அடைந்தனர். ஒரு காவததுாரம் கடந்தபின்பு, கண்ணகி அடி வருந்தி, பல குறுமூச்சுக்களை விட்டு, தளர்ச்சியுற்ருள். எனினும் அதனைக்காட்டாது,
முதிராக் கிளவியின் முள்ளெயி றிலங்க மதுரை மூதூர் யாதென வினவுகின்ருள் (நாடுகாண் காதை 40-41). கண்ணகியின் மென் மையை அறிந்த கோவலன் அன்புடன்,
ஆறைங் காதம் . . . . . . அணித்து என்று நகைத்துக் கூறுகிருன். என்ன மாற்றம், இவர்கள் தொடர் பில். சுயநலமற்ற அன்பான பேச்சை இப்பொழுதுதான் இவர்க ளிடம் காணுகின்ருேம்.
கவுந்தியடிகளுடன் இருவரும் கூடி, மூவருமாக மதுரைக்குச் செல்கின்றனர். வழியில், ஒரிடத்தில் இருவரையும் இருத்திவிட்டு, நீர் தேடச் செல்கின்றன் கோவலன். அவனைக் கெளசிகன் என்ப வன் சந்திக்கிருன், மாதவியின் தூதுவணுகக் கோவலனைத் தேடி வருபவனே இவன். இவன் கோவலனைக் கண்டதும் கோவலன் தானுே என மயங்கினனென ஆசிரியர் கூறுகின்ருர்,
காதலி தன்ளுேடு கானகம் போந்ததற் கூதுலைக் குருகி னுயிர்த்தனன் கலங்கி யுட்புலம் புறுதலி னுருவந் திரிய

Page 59
OO
என்பதே அப்பகுதி. கோவலன், ஊதி எரிக்கும் உலை நெருப்புப் போலக் குமுறினன்; மனதில் புலம்பினன்; உருவம் திரிந்து காணப் பட்டான். போதற்கரிய காட்டு வழியில், அடிவருந்த மெய்சோரத் தன் காதலி நடக்க நேரிட்டதே என்ற எண்ணத்தினுல் அவன் உருவே குலைந்துவிட்டது. எவ்வளவோ சிறப்புகளுடன் ஒருவிதக் குறைவுமில்லாது இருக்கவேண்டிய கண்ணகி, வாழ்வின் உயர் நிலையிலிருந்து ஒரு கணத்தில் கீழே தள்ளப்பட்டதை எண்ணி எண்ணி, அடையாளம் கண்டறிய முடியாதளவுக்குக் கோவலனின் உடல்நிலை மாறிவிட்டது.
இவ்வாறு தோற்றமளித்த கோவலனிடம் மாதவியின் வரலாற் றைக் கூறுகிருன் கெளசிகன். அதனைக் கேட்கக் கேட்கக் கோவல னின் உள்ளம் துடிதுடித்தது. அவள் வரைந்த ஒலையைக் கெளசி கன் நீட்டுகின்றன். கோவலன் அதனைப்பெறப் பின்வாங்குகின் முன். ஒலையில் திரும்பிவரும்படி கேட்டிருப்பாள். தவிக்கவிட்டு வந்தவளிடம் என்னென்று திரும்பிச் செல்வது? அங்கு போவதா யின், இந்த வழியாகத் தன்னுடன் வந்த கண்ணகியின் நிலை என் ணுவது? என்றெல்லாம்.உள்ளம் கலங்கினன். ஆனல், மாதவியோடு கூடி உறைந்த காலத்தில் பூசிய நெய்யின் மணத்தினைக் கூந்தலா லிட்ட மண் இலச்சினை உணர்த்திக்காட்ட, அவ்வேட்டினை விரித்துப் படித்தான். அது அவன் எதிர்பார்த்ததிற்கு மாருக உயர்ந்த முறையில் அமைந்திருந்தது.
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டுங் குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோ டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சங் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
என்று வரையப்பட்ட ஓலையைப் படித்தான் (புறஞ்சேரியிறுத்த
காதை 87-92). படித்ததும்,
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி யென்றி தென்றே யெய்திய துணர்ந்து
மனத்திட்பம் பெறுகிருன். 'தன்தீது இலஸ், என்தீது’ என்று உணர்ந்த கோவலன், அம்முடங்கல் தன்பயத்தோர்க்குப் பொற் புடைத்தாகலின்,தன் குரவர்களிடம் அதனைக்காட்டும்படி கெளசிக னிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினுன்.

lO
மூவரும் மாலைப் பொழுதில் வையை ஆற்றைக் கடந்து அதன் தென்கரையை அடைந்தனர். கண்ணகியைப்பற்றிக் கவலை கொண்டு, கவுந்தியடிகளைக் கைதொழுதேத்தி,
'நெறியின் நீங்கிய நீர்மையேன் அறியாத் தேயத் தாரிடை யுழந்து சிறுமை யுற்றேன்'
ஆகவே,
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னுேர்க் கென்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
கண்ணகி தங்கள் பாதுகாப்பினள் எனக்கூறி, மதுரைபோய்ப் பொருள் தேடுவதற்கு ஆவன செய்யும்வரை கண்ணகியைப் பாது காக்க வேண்டுமென விடைவேண்டினன் (ஊர்காண் காதை 17-23). அதற்குக் கவுந்தியடிகள்,
வருந்தா தேகி மன்னவன் கூடற்
பொருந்துழி யறிந்து போதீங்கு என்று ஆறுதல்கூறி ஊக்கம் அளித்து வழியனுப்பி வைத்தாள் (6162). மதுரைக்குச் சென்று, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவா என்று அடிகள் கூறியதை ஏற்றுச்சென்ற கோவலன், அவ்வொழுங் குகளைச் செய்வதற்காக மதுரைக்குள் புகுகின்ருன். ஆனல், மதுரை யைச்சுற்றிப் பார்த்துவிட்டு மாலைநேரத்தில் திரும்பி வருகின்றன். மதுரையிலுள்ள வணிக மரபினருக்குத் தன் னிலை உணர்த்தி, பொருள் தேடுவதற்கு உரிய ஏற்பாடுகள் பற்றி என்ன செய்தா னென்ருே, ஏன் அதுபற்றி ஒன்றும் செய்யாது திரும்பினுனென்ருே இளங்கோ அடிகள் கூறவில்லை. மதுரையின் சிறப்பைக் கெளந்தி ஐயைக்கு எடுத்து மொழிந்தானேயொழிய, வணிகரைக் கண்ட தாகவோ, வணிக ஏற்பாடு செய்ததாகவோ அவன் கூறவில்லை. வணிகரோடு தன் நிலைபற்றிப் பேசுதல் மானக்கேடு என எண்ணித் திரும்பியிருத்தல் வேண்டும். ----------
இந்நிலையிலே, அங்கு வந்த மாதரியிடம் கவுந்தியடிகள் கண் ணகியை அடைக்கலமாக ஒப்படைக்கிறர். இதற்குக் காரணம், கோவலன் மேலுள்ள நம்பிக்கைக் குறைவே. பொருள் தேடுவ தற்கு ஆவன செய்யச் சென்றவன், அத்துறையில் ஒருவித ஒழுங் குஞ் செய்யாது திரும்பி வந்தது கவுந்தியடிகளின் உள்ளத்தைப் பெரிதும் வருத்தியது. பொறுப்பை ஏற்று நடக்கத் தெரியாதவனை நம்பி அவனிடம். கண்ணகியை ஒப்படைத்தல் ஏற்புடையதன்று

Page 60
O2
என அவள் எண்ணியிருத்தல் வேண்டும். ஆகவேதான், கோவ லன் முன்னிலையிலேயே கண்ணகி மாதரியிடம் அடைக்கலமாக ஒப் படைக்கப்பட்டாள். கோவலன் தடுமாறு உள்ளத்தான், நம்பிக் கைக் குரியவனல்லன் எனக் கவுந்தியடிகளே கொண்டார் என்பதை இது நன்கு காட்டுகின்றது. १
மாதரியிடம் ஒப்படைக்குமுன், மாடலன் என்ற மறையவன் அங்குவந்து, கவுந்தியடிகளுக்குக் கோவலனின் சிறப்புக்களை எடுத் துக் கூறுகின்றன். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் ஆசிரியர் கோவல னின் நற்பண்புகளை வேருெரு பாத்திரம் மூலம் அறியத்தருகின்ருர், அடைக்கலக் காதையில் வரும் இம் மறையோன் கூற்று, முதலில் மாதவியின் மகள் மணிமேகலையின் பிறப்பைக் குறிப்பிடுகின்றது. கோவலன் மாதவியோடு கூடிவாழ்ந்த காலத்து மாதவி கருவுற் ருள். காமத்தாற் சேர்ந்தவள் கருவுற்றபோது, காமம்-குறையாது, வேருெரு பெண்ணிடம் செல்லாது, தன் குழந்தையின் தோற் றத்தை எதிர்பார்த்த வண்ணம் மாதவி அருகே அன்புடன் வாழ்ந் தான் கோவலன். இது அவன் நற்பண்புகளுள் ஒன்று. கண்ணகி உரிமைப் பெண்ணுக இருந்தும் அவனுக்குத் தகப்பன்' என்னும் பெருமையை அளித்து ஏற்றம் செய்யவில்லை. எனவே கோவலன் தனது குடிப்பெருமை கருதியோ, மாதவி பொதுப்பெண்டிர் ஆகையால் அவள் குடிச்சிறுமை கருதியோ அவளைக் கைவிடாது, உடன் இருந்து, மணிமேகலை பிறந்த கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டான்.
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அவளுக்குக் குலதெய்வப் பெயராகிய மணிமேகலை என்னும் பெயரை இடுங்களென ஆர்வத்துடனும் உரிமையுடனும் கூறினன் (அடைக்கலக் காதை 37). காம வசப் பயனகத் தன் காமக் கிழத்திக்குப் பிறந்த குழந்தையாயினும் தன் குல விளக்கு என்ற காரணத்தால் இவ்வாறு செய்தான்.
'.
தொடர்ந்து அவனது கொடை வன்மையை மாடலன் கூறு கின்ருன். மணிமேகலையைப் பெயரிட்ட ஞான்று,
மங்கல மடந்தை மாதவி தன்னேடு செம்பொன் மாரி செங்கையிற்
பொழிந்தான் (அடைக்கலக் காதை 40-41). கீரியைக் கொன்ற அந்தணன் மனைவியின் செய்துயர் நீங்கக்

O3
கானம்போன கணவனைக் கூட்டி
யொல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வனகவும் விளங்கினன் (அடைக்கலக் காதை 73-75). பொய்ச் சான்று சொன்ன ஒருவனைப் பூதங்கொல்ல, அவனுக்காகத் தன் உயிரையே கொடுக்க முன்வந்து, பூதம் மறுக்க அவன்தன்,
சுற்றத் தோர்க்குந் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த செம்மலாகவும் திகழ்ந்தான் (அடைக்கலக் காதை 88-90) .
அடைக்கலக் காதைக்கு முன்னுள்ள புறஞ்சேரியிறுத்த காதை யில், கோவலன் எவரும் அறியாமற் கண்ணகியுடன் ஊரை விட்டுச் சென்றபோது,
இன்னுயி ரிழந்த யாக்கை யென்னத் துன்னிய சுற்றந் துயர்க்கடல் வீழ்ந்ததும்,
அருந்திறல் பிரிந்த வயோத்தி போலப் பொரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் கூறப்படுகின்றன (புறஞ்சேரியிறுத்த காதை 59-66). இப் பகுதி களிற் கோவலன் சுற்றத்தாருக்கும் ஊராருக்கும் உறுதுணையாக.../ இருந்து புகழ்பெற்ருன் என்று அவனது நற்பண்பு கூறப்படுகின்றது.
மாடலன் வாயிலாகக் கோவலனின் கொடைப் பண்பு மட்டு மல்ல, வீரச் சிறப்பும் கூறப்படுகின்றது. மணிமேகலைக்குப் பெய V ரிட்ட காலத்திற் பொருள் பெற வந்தான் தளர்ந்த நடையையும் வளைந்த யாக்கையையும் உடைய மறையோன் ஒருவன். அவனை மதங்கொண்ட யானையொன்று தாக்கியது. அப்போது கோவ லன் விரைந்து சென்று,
உயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குக் கடக்களிறு அடக்கினன் (அடைக்கலக் காதை 48-53) .
அன்பு, கொடைப் பண்பு, வீரம் முதலிய குணங்களிற் சிறந்து விளங்கிய கோவலன், கலை உணர்ச்சியும் அதிகம் பெற்றிருந்தான்.

Page 61
C4
மாதவியோ மரபுப்படி ஏழு ஆண்டு இசை பயின்று அதிற் பயிற்சி உடையவள். அத்தகைய மாதவி உவக்கும்படி கோவலன் கானல் வரி பாடினன். இது கலைத்துறையில் அவன் பெற்றிருந்த பயிற்சி யைக் குறிக்கின்றது. மதுரைக்குப் போகும் வழியில் ஓரிடத்தில் போர்க்களப் பாணருடன் உரிமையுறக் கலந்து, செங்கோட்டு யாழில் பண்களை அவர்களோடு கலந்து வாசித்தானென அறி கிருேம் (புறஞ்சேரி இறுத்த காதை 105-113). இவையாவும் இவன் சிறந்த கலைஞன் என்பதை வலியுறுத்துகின்றன.
மாடலன் வாயிலாகக் கோவலனின் அன்பு, கொடை, வீரம் முதலிய சிறந்த பண்புகளைக் கவுந்தியடிகள் கேட்டபோதும், அவன் மேலுள்ள நம்பிக்கைக் குறைவினலேயே கண்ணகியை மாதரியிடம் ஒப்படைத்தார். கோவலன் தான்செய்த குற்றங்களை உணர்ந்து வருந்தும் பண்புபெற்றிருந்த போதும், திருந்தும் குணத்தைப் பெறவில்லையெனக் கவுந்தியடிகள் கருதியிருத்தல் வேண்டும்.
மாதரியின் இல்லத்தில் கண்ணகியும் கோவலனும் உறைகின் றனர். கோவலனுக்கு உணவு ஆக்குவதற்கு வேண்டிய பொருட் களைக் கண்ணகி கேட்க, இடைக்குல மடந்தையர் மடைக்கலமும் பொருளும் மகிழ்வோடு அளித்தனர். ஐயை எரிமூட்டக், கண் ணகி உணவு ஆக்கத் தொடங்குகின்ருள். இதுவரை ஏவலாளர் பாகஞ்செய்து கொடுக்க உண்டவள் கண்ணகி. இப்பொழுது,
மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன (கொலைக்களக் காதை 29-31). முன்பு கணவனுக்கு உணவு பாகஞ்செய்து உண்பித்ததை அறியாத கண்ணகி, இப்பொழுது தன் மெல்லிய விரல்கள் சிவக்க, திருமுகம் வியர்க்க, செங்கண் சிவக்கத் தானே உணவை ஆக்கி, கவின்பெறப் புனைந்த தவிசிற் கோவலனை இருத்தி, காதலன் அடிகளைக் கழுவி, கழுவிய நீரை அங்கையால் வணங்கி மாற்றி,
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக வீங்கு என அழைத்தாள் (கொலைக்களக் காதை 41-43). இடைக்குல மடந்தையர், இருவரையும் கண்டு கண்ணனும் அவன்காதலியுமோ வென விம்மிதம் எய்தினர்

O5
கண்ணகியளித்த உணவை உண்டதும், கோவலன் இனிதிருக் கக் காதலி அடைக்காய் ஈந்தனள். கண்ணகி கணவனிடம் இவ் வளவு அன்போடும் உரிமையோடும் முன்பு நடந்ததை நாம் அறி யோம். இவர்களது இல்லற வாழ்க்கையில் இதுவரை இத்தகைய ஒருமைப்பாடு இருக்கவில்லை. இல்லற வாழ்க்கைத் தொடக்கத்தி லிருந்தே"கண்ண கி இவ்வாறு ஒழுகியிருந்தாற் கதை வேருக, அமைந்திருக்கும். இதுவரை செய்யத் தவறியதைக் கண்ணகி இப் பொழுது முழு மூச்சுடன் செய்கின்ருள். அவளுடைய பண்பிலே ஒரு திருப்பம் உண்மையாகவே ஏற்பட்டுவிட்டது. கணவனின் அன்பை வளர்க்கும் துறையில் இறங்கி, அவன் உள்ளம் குளிர, அவன் உவக்கத் தொண்டாற்றத் தொடங்கிவிட்டாள். அவ ளுடைய அன்புப் பெருக்கையும் ஈடுபாட்டையும் பணிவையும் கண்ட கோவலன், அவளிடத்து அன்பு பெருகி, உரிமை பாராட்டிப் பலவாறு எண்ணத்தொடங்கினன். தன்னுடைய சிறுமைகளைப் பொருட்படுத்தாது ஆதரித்துத் தன்னுடன் கொடிய வழியாக வந்த அவள் பெருமையை எண்ணி, அருகே அழைத்து,
எம்முது குரவர் என்னுற் றனர்கொல் மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கி யாவதும் அறியேன் வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
என இரங்குகின்ருன் (கொலைக்களக் காதை 60-68). தாய் தந்தையர் கதி என்னவோ, பரத்தையர் முதலியோருடன் தீய நெறியில் ஒழுகிப் பிறர் நகைப்புக்கு உள்ளான எனக்கு இனி நன் னெறி உண்டோ, பெற்றேர் கட்டளையை மீறி நடந்து, மாதவிக் குஞ் சிறுமை செய்தேனே' என்று தன்னையே தான் நொந்த கோவ லன், தொடர்ந்து அவளைக் கேட்கின்றன்: ‘மாநகர் மருங்கு நீ எழுகனன்றேன். நீ ஒன்றும் பேசாது உடன் எழுந்தாய். ஏன் இவ்வாறு செய்தனை?'. அதற்கு அவள்,
போற்ரு வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்ரு வுள்ள வாழ்க்கையே தைலி
னேற்றெழுந் தனள்யான்

Page 62
106
எனக் கூறுகின்ருள் (கொலைக்களக் காதை 81-83) . பெரியோர் வெறுக்கும் தீய ஒழுக்கத்தினைத் தான் விரும்பியபோதும், தன் னுடைய சொல்லைச் சிறிதும் மாற்ற நினையாது, ஏற்று, உடன் எழுந்துவந்த அவளின் பெருங்குணம் கோவலனை அவள்பால் மேலும் மேலும் இழுத்தது. அவள் நடந்துகொண்ட விதத்தை,
என்னெடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
எனப் பாராட்டி (கொலைக்களக் காதை 88-91),
சீறடிச் சிலம்பி னென்றுகொண் டியான்போய் மாறி வருவன் மயங்கா தொழிக
எனத் தேற்றித் (கொலைக்களக் காதை (92-93). தன்னுடன் அணைத்துத் தழுவி, அவளது தனி மை யை நோக்கி உள்ளம் கொதித்து, தன் கண்களில் நிறைந்த நீரை அவள் அறியாமல் மறைத்து, அவ்வில்லத்தினை விட்டு ஏகிஞன்.
ஒற்றைச் சிலம்புடன் சென்ற கோவலன், பொற்கொல்லனைக் கண்டு, அவனை அணுசி,
காவலன் றேவிக் காவதோர் காற்கணி நீலிலை யிடுதற் காதியோ எனக் கேட்டான் (111-112). அதற்கு அவன்,
கோப்பெருந் தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புற வில்லை யென்முன் போந்து விறன்மிகு வேந்தற்கு விளம்பியான்
வருமளவும் நீயென் சிறுகுடிலில் இருப்பாயாக எனக் கூறி, சிலம் பைப் பெற்றுச் சென்ருன் (121-124).
சென்ற கொல்லன், தான் வஞ்சித்துக்கொண்ட கோப்பெருந் தேவியின் சிலம்பைக் களவாடியவன் கோவலனெனக் கூறித் தன் கள்ளத்தை மறைக்கக் கருதி, ஊடற் கோலத்தோடு பெருந்தேவி யுடன் இருந்த பாண்டிய மன்னனை அடைந்து, கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் தன் சிறுகுடிலகத்து இருப்பதாக மொழிந்தான். பாண்டிய மன்னன் யாவற்றையும் ஆராய்ந்து பாராது, ஊர்காப் பாளரைக்கூவி, கள்வனைக் கொன்று அச்சிலம்பு ஈங்கு கொணர்க

107
என்ரு:ன். பொற்கொல்லன் வீடடைந்து, காவலாளருள் கல்லாக் களிமகன் ஒருவன் தன் வெள்ளிய வாளாலே கோவலனை வெட்டி ஞன். வெட்ட,
விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன். நல்ல குடும்பத்தில் செல்வத்துடன் பிறந்து, இடையீடில்லாக் காம விருப்பத்தினுல் மணந்த மனைவியையும் கைவிட்டு, பரத்தைமை பூண்டு, பொதுமகளாகிய மாதவியை அடைந்து, மலைபோன்ற பொருளை இழந்து, தடுமாறு உள்ளத்தால் காமக்கிழத்திமேல் வெறுப்புற்று, அவளைக் கைவிட்டு, உடைந்த உள்ளத்தோடு உரி மைப் பெண்ணுகிய கண்ணகியிடம் புகலடைந்து, அவளுடன் பிறப் பகம் நீங்கி, பொருளீட்டப் பிறநாடு அடைந்து, தன்னை நல்வழி யிலே திருப்பியவளின் காற் சிலம்பை விற்று, அதை முதலாகக் கொண்டு, பொருள் தேடிப் புதுவாழ்வு அமைக்க எண்ணிய கோவ லன் வீழ்ந்தான்.
உரிமைப் பெண்ணுகிய கண்ணகியுடனும் காதற் பெண்டாகிய மாதவியுடனும் காதல் கொண்டு ஒழுகியவன் கோவலன். அவன் கண்ணகியிடத்துக் கற்பையும் பணிவையுமே முதலிற் கண்டான்; தன் காம இச்சைகளைத் தீர்க்கும் ஆற்றலை, கலவியும் புலவியும் அளித்து இடையீடற்ற இன்பத்கை கொடுக்கும் திறமையைக் காணவில்லை. மாதவியிடம் அன்பு கண்டான் இடையீடற்ற இன்ப விளைவுக்குத் திருப்தி அளிக்கும் ஆற்றலையுங் கண் டான். பிறர் அவள் ஆடலைப் போற்றுதலையே பொருத கோவலன் தடு மாறு உள்ளத்தால், அவளை வெறுத்து, பிரிந்து, கண்ணகியை அடைந்தான்; உள்ளம் திட்பமுற, மாதவி தீதிலள், தன்தீது என உணர்ந்தான். தனக்கு உரிமையானவள் தன்னுல் முறையற்ற விதத்தில் ஒதுக்கப்பட்டுப் பல இன்னல்களுக்குட்பட்டு நடத்தப் பட்டபோதும், திக்கற்ற நிலையிலிருந்த தன்னேடு ஏதுங் கூருது உடன்வந்ததஞல், உள்ளம் மாறி, அவளுடன் இன்பமாக இல்லறம்
நடத்தத் திட்டம் வகுத்தான். போட்ட திட்டம் உருவாகுவதற்கு
முன்பே அவன் வாழ்வுக்கு முடிவு ஏற்பட்டுவிட்டது.
குறைபாட்டுடன் விளங்குவது மக்கள் இயல்பு. சிலப்பதிகாரத் தின் முக்கிய கதாபாத்திரங்களாகிய கோவலன் கண்ணகி மாதவி

Page 63
108
ஆகியோரும் இதற்கு விலக்கு அல்லர். ஆணுற் கண்ணகியும் மாதவி யும் குறைகளை உணர்ந்து, அவற்றை நீக்கித் தம்மைப் பண்படுத்திக் கொண்டமையால் உயர்வடைகின்றனர். குறைகளை எண்ணி உணர்ந்ததோடு நின்றுவிட்டமையால், தடுமாறும் உள் ள ங் கொண்ட கோவலன் கண்ணகி போலவோ மாதவி போலவோ உயர்வு அடைய முடியவில்லை. பல ஆண்டுகளாகத் தீய நெறியில் ஒழுகியவன், தனது குற்றத்தை உணர்ந்து, புதிய வாழ்வு வாழத் துணிந்தான். அம்முயற்சியில் வெற்றி பெறுவதற்கு முன்பே, முயற்சியின் தொடக்கத்திலேயே வெட்டி வீழ்த்தப்பட்டான். நாடகத்தின் சோக உணர்ச்சியை இந்நிகழ்ச்சி அதிகரிக்கின்றது. கோவலன் திருத்திநடந்து புதியவாழ்வு வாழ்ந்ததாகக் கதை ஒடி யிருந்தால், சோகம் இவ்வளவிற்கு நிலைத்திராது. சிலப்பதிகாரத் தின் முக்கிய ஆண்பாத்திரமாகிய கோவலனை இளங்கோவடிகள் ஏன் இவ்வாறு படைத்தார்? கண்ணகியைத் தெய்வமாக்கி வழி படச்செய்தல் வேண்டுமென்ற குறிக்கோளிலேயே பெரிதும் ஈடுபட் டுக், கோவலன் வாழ்விலே திருந்துவது கண்ணகியாற்ருன் என் பதைக் காட்ட விரும்பிஞரா? கோவலன் கண்ணகி கணவன் என் பதஞலேயே சிறப்புப் பெறுகின்ருஞ? கண்ணகியின் உயர்வுக்குக் கோவலன் ஒரு கருவியா?
 

தமிழ்த்தாய் மடியிற்றவழுந் தவமு னி
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
குறள் வெண்பா. அத்தன் கணேசையன் ஆர்பொன் னடியினை சித்தத் திருத்தும் செறிந்து.
கேரிசை ஆசிரியப்பா.
சீர்பெறு வளங்கள் திகழுறு மீழப் பேர்பெறு நாட்டிற் பேணுயாழ்ப் பாணத்துச் செந்தமிழ்ப் புலமை சிறப்புற நடாத்திய அறுமுக நாவலன் அருமைசேர் மருகன் விளங்கு புகழோன் வித்துவ சிரோமணி பொன்னம் பலவன் புலவர்த மேந்தல் தன்பா லடைந்தே இன்றமிழ் கற்றேன் பண்டைய இலக்கணம் பல்வகை இலக்கியம் பாங்குறக் கற்றுப் பழுநிய அறிவினன்; மாணவர்க் கறிவை வளம்பெறு முகிலெனப் பொழிந்திடும் வள்ளல் பொருவிருெல் காப்பியன் புகழ்பெறு மீழத் தரசர்வழி வந்த அரச கேசரி ஆக்கு நூலைக் கருதியா ராய்ந்து கவின்பெறு முறையுடன் உலகுக் களித்த ஓங்குமெய்ப் புலவன் காமுறக் கற்ற கல்வியை வந்தடை மாணவர்க் களித்து மாணக் களித்தலே இன்பமாய்க் கொண்ட இயல்பமை உவாத்தி; யாழ்ப்பா ணத்தமிழ்க் கல்விப் பரம்பரை விளங்க வைத்த விழுப்புறு செல்வன்; புன்னை நகர்வாழ் சின்னைய அந்தணன் வளர்தரு தவத்தால் வந்தருள் தோன்றல்; மாணவர் குழாங்கள் பேணியே மகிழத் தண்டமிழ்க் கலைகள் சாற்றிடும் பெரியோன்; தன்னுயிர்த் துணையெனத் தாங்கிய உளத்தொடு மன்னுடிகழ் படைத்த வறுத்தலை விளானில்

Page 64
1 lO
நித்தம் வணங்கிடும் விநாயகன் முன்றிலிற் பண்புடனமைத்த பர்ணகக் குடிசையிற் பன்னுள் வாழ்ந்து வண்டமிழ் வளர்த்துத் தமிழ்த்தாய் வயிற்றிற் றவழுந் தவமுனி சாற்றருங் கீர்த்தித் தமிழ்ப்பெரு யோகி; புகழுறு கணேசப் பேர்பெறு மையன் தமிழ்மொழிக் காற்றிய தகவுறு தொண்டும் தெள்ளும் கலைகளை அள்ளி மாணவர்க் கன்புடன் அளித்த அளப்பரு தொண்டும் நீனெடுங் கால முலகில் நிலைத்து நின்று நிலவுக செழித்தே.
கொச்சகக் கலிப்பா.
உண்மகிழ்ந்து மாணவர்க ளுந்தனடி யமர்ந்திருக்கத் தண்மகிழ்ந்த மனத்தோடு சார்ந்தபல தமிழ்நூல்கள் கண்மகிழ அவரவர்க்குக் கருதிமிக அன்புடனே திண்ணமுற ஊட்டுவாய் திருந்துதமிழ்க் குருதேவா !
கருதுதமி பூழிலக்கணங்கள் கசக்குமிந்த நாட்களிலும் மருவுவெறுப் பெதுவுமெழா மாண்புடைய வழியதணுல் பொருதருதொல் காப்பியமும் போந்தபிற இலக்கணமும் துருவிமீக வாராய்ந்து சொல்லுவையே சொல்லாளா!
வறியவர்க்குள் வறியவனி வந்தடையு மாணவர்க்குச் செறியுமுன்றன் றமிழ்ச்செல்வம் தேர்ந்தபெரு மனத்துடனே நறியசெழு மருள்பொங்கி நல்கிடுவாய் நாவலனே உறவுமிகப் பாராட்டி ஒன்றருமைத் தந்தையைப்போல் !
என்னேயுன் னருட்செல்வம் என்றுநா மினிப்பெறுவோம் பொன்னேபோற் போற்றுமுன்றன் போதமொழி பெற்றுநின்று மன்னே திளைத்திடுநாள் வருமோ எனப்புகல்வாய் தன்னேரில் தண்ணளிசேர் தனித்தபெரும் பாவலனே ! வழுக்காறு செல்லுகின்ற வம்புசெறி பாவலர்கள் இழுக்காற்று வழியதன லிகலில்லை எனநவிலும் ஒழுக்காற்று முறையதனை யுன்னிடத்தே கண்டிலமால் அழுக்காறு சிறிதுமிலா அன்புசெறி குணக்குன்றே !
கட்டளைக் கலித்துறை. தன்னேர் பிலாத தகைசால் புலவ தமிழ்வளர்க்கும் நின்னேர் புளாரையிந் நாட்களிற் கண்டில நீணிலத்தில்

1
கொன்னே தமிழ்ப்பெரும் பண்டிதரா மென்று கருதிநின்று மன்னே கழியும் மடைப்பெரு மாந்தர் கணக்கதென்னே
வளர்த்தாய் தமிழினை மானுறு வாழ்க்கையி னுாதியமென் றுளத்தே யமைத்துநின் ருேங்கு மழுக்கறு பண்புபெற்ருய் துளக்காத வுன்னருந் தொண்டினை வாழ்த்தித் தொழுதலன்றி அளப்பாரு முண்டோநின் ஆன்ற அருமைக் குணத்தினையே
தாவும் புகழ்செறி தாமோ தரேந்திரன் தண்புவியில் ஒவுத் தமிழ்ப்பெருந் தொல்காப் பியத்திற் குயிரளிக்க மேவுன் னறிவால் வளர்த்தே யதனை விளங்கவைத்த பாவுன் றமிழ்த்தொண்டு பன்னற் கரியது பாரகத்தே
மன்னு முலகிற் பதவிகள் வேண்டி மனிதரெல்லாம் பன்னுந் தமிழைப் படித்தே நிலையைப் பெருக்கிநிற்க உன்னி யுளத்தி லதன்மே லிருந்தவுன் பேர்விருப்பால் துன்னிப் படித்துக் களித்தாய் செயலிது சொல்லரிதே.
மண்டே ருலகில் இறைவனைக் காண வலிந்துமிகத் தண்டோடு யோகுடன் பத்தி முதலாய மார்க்கங்களைக்
கொண்டே ஒழுகியும் காணுத மாந்தர் குழைந்து நிற்கக் கண்டாய் சிவத்தைக் கருதும் தமிழின் கலைகளிலே.
எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம் மல்கிடுக தமிழர்மொழி மன்னிடுமிந் நாட்டில் வளங்களொடு மன்பதைகள் வாழ்ந்திடுக நாளும்
பல்கிடுக தமிழ்க்கலைகள் தலைதூக்கி யாங்கும் பன்னுபெரு மறுமுகவன் பரம்பரைக ளோங்க.
நல்கிடுமெங் கணேசையன் தொண்டுபல ஊழி நானிலத்தில் வீருேடு நின்றுநிதம் வாழி வெல்கிடுக நற்றமிழர் எத்துறையி லேனும் விளங்குமிறை தன்கருணை தந்தருள்க மாதோ.
※ 崇 தினகரன்’ தமிழ் விழாவிலே வித்துவ சிரோமணி
சி. கணேசையர் அவர்கள் திருவுருவப் படத்தைத் திரைநீக்கஞ் செய்துவைத்தகாலை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் பாடிய பாக்கள்.

Page 65
- திராவிடத் தாய்
(கலாநிதி அ. சதாசிவம்)
ÇGys=
திமிழ் மொழியின் தாயாகிய திராவிடத்தின் பண்பியல்பு களை அறியும் ஆவல் கொண்டு இன்று பல தமிழறிஞர்கள் உழைத்து வருகின்றனர். திராவிடம் தமிழைத் தன் வயிற்றினின்று தோற்றுவித்தது போலவே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கோண்டா, கொலாமி, பர்சி, தோடா, கோடா, குயி, பிரா குவி, மால்டா, குருக்கு முதலிய மொழிகளையும் தோற்றுவித்துள் ளது. இம்மொழிகளெல்லாம் தாய் மொழியின் சிற்சில இயல்பு களைக் கொண்டுள்ளனவே தவிர எல்லா இயல்புகளையும் ஒருங்கு காட்டவில்லை என்பது தி ரா விட விற்பன்னர் கண்ட முடிபு. மொழிகள் தாம் வாழும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பத் தம் பண்பை மாற்றிக்கொள்கின்றன.எனவே ஆரியத்தின் எல்லைக்குள் வாழும் பிராகுவி, பர்சி முதலிய மொழிகள் ஆரியத்தின் பண் புகள் பலவற்றைக்கொண்டு விளங்குவதும், ஆரியத்தின் எல்லையில் வாழும் தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள் ஆரியத்தின் பண்புகள் சிலவற்றைக் கொண்டு விளங்குவதும் இயல்பாகும். இந்தியாவின் தென்னெல்லையில் தமிழ் வாழுகின்றமையின் அது ஆரியத்தின் தாக்குதல்களுக்கு அகப்படாதிருப்பதும் ஆரியத்தின் இயல்புகள் சிலவற்றையாவது பெரு திருப்பதும் இயல்பு. இதுகா றும் கூறியவற்றிலிருந்து பிறமொழிகளின் தாக்குதல்களுக்கு உட் படாததும் திராவிடத்தின் மூத்த மகளாகக் கருதப்படுவதுமாகிய தமிழே தாயின் பண்புகளைக் காட்டவல்லது என்பது போதரும்.
முதலாவதாகத் திராவிடத்தின் ஒலிகளைப்பற்றி ஆராய்வோம். தமிழில் உள்ள பதின்மூன்று உயிரொலிகளுள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என்ற பத்து ஒலிகளுமே திராவிடத் தாய் மொழியில் இருந்தன என அறியக்கிடக்கின்றது. ஐ,_ஒளு"ஆகிய இரண்டு கூட்டெழுத்துக்களும் ஆய்தமாகிய மெய்யுயிர் ஒலியெழுத் தும் வடமொழியினின்றும் நுழைந்தவை. திராவிட மொழிகளி லுள்ள சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவ்வுண்மை விளங் கும். "அவை’, ‘மலை’ போன்ற தமிழ்ச் சொற்களுக்கு ஒப்பான மலையாளச் சொற்கள் "அவ’, ‘மல’ என்பவாகும். திராவிடத்தில்

13
‘அ’ இருந்த இடங்களில் 'ஐ', 'ஒள' என்பன தமிழில் வந்தன. ஆதித் திராவிடத்தில் ஆய்தமும் இல்லை. தமிழில் அது பெரும்பா லும் புணர் மொழியிடையேயும் குற்றியலுகர மொழிகளிலுமே பண்டு பயின்று வந்தது. இன்று அது அருகிவிட்டது. தமிழ்மொழி யானது திராவிடத்தினின்றும் பிரிந்து தனிமொழியான பின்பே இவ் ஐ, ஒள, ஃ என்ற மூவொலிகளும் தமிழை அடைந்தன என்று திட்டமாகக் கூறமுடிகிறது.
கசதப முதலிய வல்லின ஒலிகள் இன்று மொழிக்கு முதலிலும் இடையிலும் ஒரே மாதிரி உச்சரிக்கப்படுவதில்லை என்பதை எம் நாளாந்தப் பேச்சு வழக்கிலிருந்தே அறியலாம். 'க' என்னும் எழுத்து கறுப்பு என்ற சொல்லின் முதனிலையில் நிற்கும்போது வலி தாக உச்சரிக்கப்படுகின்றது, அகம் என்ற சொல்லில் அது ஆங் கில "h" என்ற எழுத்துப்போல் மெலிதாக உச்சரிக்கப்படுகிறது. இது போன்றே "ப" என்னும் எழுத்து பருத்தி என்ற சொல்லின் முதனிலையில் நிற்கும்போது வலிதாகவும் “கோபம்’ என்ற சொல் லில் 'b' என்ற ஆங்கில எழுத்துப்போல் மெலிதாகவும் உச்சரிக்கப் படுகின்றது. இவ்விதம் ஓரெழுத்து இரண்டுவிதமாக உச்சரிக் கும் முறை பிற திராவிட மொழிகளில் இல்லை. அவையெல்லாம் ஒரெழுத்துக்கு ஒரே உச்சரிப்பு இருக்கத்தக்கதாக வடமொழி எழுத்துக்களைக் கடன்வாங்கித் தம்மொழிகளில் அமைத்துக்கொண் டன, பிற மொழிகளிலிருந்து ஒலியெழுத்துக்களைக் கடன்வாங்க விருப்பமில்லாத தமிழ்மொழியானது தாய்த் திராவிடத்திலிருந்து தான் பெற்ற ஒலியெழுத்துக்களையே இன்றும் வழக்கில் வைத்திருக் கின்றது. ஆதித் திராவிடத்தில் ஓர் எழுத்துக்கு ஓர் ஒலியே இருந் தது என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். தமிழில் வல்லொலி ஒன்று இருவகையே உச்சரிக்கப்படுவதற்கும் ஏனைத் திராவிட மொழிகளில் வடமொழி ஒலிகள் வந்து நுழையவேண்டிய தேவை ஏற்பட்டதற்கும் காரணம் பிறமொழிக் கலப்பாகும். பண்டைக் காலத்தில் வாழ்ந்த திராவிடமக்கள் தம் நாளாந்த தேவைகளை விளக்கிக் கூறுவதற்கேற்ற சொற்களோடு திருப்தியடைந்தனர். பிறமொழிகளைப் பேசிய மக்கள் திராவிடர்களோடு கலந்து வாழ்ந் தமையின் அம்மக்கள் பேசிய சொற்கள் திராவிட மொழிகளோடு கலக்கலாயின. இக் காரணத்தால் பிறமொழியொலிகளின் தேவை திராவிட மொழிக்கு ஏற்றட்டது.
இரண்டாவதாக ஆதித் திராவிடத்தின் மொழியமைப்பைப் பற்றிக் காண்போம். பெயர், வினையாகிய இருவகைச்சொற்களே திராவிடமொழியில் இருந்தன. இடைச் சொல், உரிச்சொல் என்

Page 66
114
பன பெயர்வினையின் திரிபுகள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. தமிழில் உள்ள இடைநிலைகள், சாரியைகள், விகுதிகள், வேற்றுமை உருபுகள் ஆதியனவெல்லாம் இடைச்சொற்களே. இவையெல்லாம் ஆதியில் முழுச் சொற்களாக நின்று பின் காலப் போக்கில் திரிந்தவை. மொழிநூல் விற்பன்னராகிய ஜெஸ்பேர் சன் முதலியோரது கருத்தும் இதுவே. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வகுத்தவராகிய கால்டுவெல் ஐயர் திராவிடம் சித்தியமொழிக் குடும்பத்தோடு தொடர்புடையது என்கிருர், சித்தியமொழிக் குடும்பத்தில் சொற்களைப் பொருளுக்கியைய ஒன் றன்பின் ஒன்ருக அடுக்குவதனல் பொருள் புலப்படும்முறை இருந்து வருகின்றது. ‘நான் கந்தன் தோட்டம்" கூட்டிக்கொண்டு செல்கி றேன்" என்பதுபோன்று சித்தியமொழி வசனங்கள் நிற்கும். இதனை விரித்துவிட்டால் ‘நான் கந்தனைத் தோட்டத்திற்குக் கூட்டிக் கொண்டு செல்கிறேன்" என நிற்கும். * . .
மொழியில் என்றும் மாருது நிற்கும் சொற்கள் இப்பெயர்த ளும் வினையடிக்ளுமாகும். யான், நீ முதலிய தன்மை முன்னிலைப் பெயர்கள் இன்று எல்லாத் திராவிட மொழிகளிலும் பெரிதும் மாற்றம் பெருது நிற்கின்றன; ஒலியளவில் மாத்திரம் சிறிது மாற் றம்பெற்றுள்ளன. வினையடிகள் மொழியின் உயிர்நிலைகளாகும். இவ்வினையடிகள் இன்றும் முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்றுக்க ளாகத் தமிழ் மொழியில் வழக்கில் இருக்கின்றன. "நீ அடி’ "இங்கே வா’ முதலிய வசனங்களை நோக்குக. தமிழ்மொழியின் ஆரம்ப வளர்ச்சிக்காலத்தில் வினையடிகள் மாத்திரமே வழக்கில் இருந்தன என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. தமிழ் வினையடிகள் பெயர்ச் செற்கள் என்பது உரையாசிரியர் பலரின் கருத்து. வினை யடிகள் பெரும்பாலும் ஒரசைச் சொற்கள். எனவே திராவிடத் தாய் குறுகிய வினையடிகளையும் இடப்பெயர்களையும் கொண்டு விளங்கியது என்பது கருதத்தக்கது.
இடைச் சொற்கள் காலத்தை உணர்த்தும் முறை தமிழ்வழக் காகும். சங்கத்தமிழில் நிகழ்கால இடைநிலைகள் இல்லை. எனவே திராவிட வினைச்சொற்கள் இறந்தகாலம் இறந்தகாலமல்லாத காலம் ஆகிய இருகாலங்களையே உணர்த்தின.
உ. ம். ஆடி ஞான்" (யான்) *செய்யும் நீ"
இவ்விரு வசனங்களையும் ஆராயின் திராவிட மொழியின் பண்புகள் பல பெறப்படும். முதலுரவூதாக எச்சங்கள் முற்றுக்கள். என்ற

5
இருவகைப் பிரிவினைகள் திராவிட வினைச்சொற்களில் இருந்திருக்க வில்லை. தொல்காப்பியச் சூத்திரங்கள் பல இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. ஆடி, செய்யும் முதலிய சொற்கள் இடத் துக் கேற்றவாறு எச்ச, முற்றுப் பொருள்களைத் தந்து நிற்பதைச் சங்க இலக்கியங்களும் எடுத்துக் காட்டுகின்றன. 'ஆட்" என்ற வினையடியை நீட்டி உச்சரிக்க அது இறந்தகாலத்தை யுணர்த்தும் ‘அடி என்ற வினையுருவம் பெறுகிறது. அறிஇ, சினைஇ, பெறீஇ முதலிய வழக்கிறந்த உருவங்களை நோக்குக. இகர இறுதி வினைச் சொற்கள் இறந்த காலத்தையுணர்த்தியமை போலவே உகர ஊகா ரச் சொற்களும் உணர்த்தின. செய்(த்)உ, செய்(ப்) உ, செய்(ய்) ஊ (செய்து, செய்பு, செய்யூ) முதலிய உருவங்கள் திராவிட மொழியின் இயல்புகளை எடுத்துக் காட்டுகின்றன. இவற்றில் உள்ள த், ப், ய் என்னும் மெய்கள் காலத்தைச் சுட்டாது இனிய உச்சரிப்பின் பொருட்டு அமைந்திருக்கின்றன. வருதி, வருதும் முதலிய வருங்காலச் சொற்களிற் கூட ‘த்’ என்னும் மெய் வருவ தைக் காணலாம். எனவே இறந்தகால வினைச்சொற்கள் பகுதி விகுதியாகிய இரண்டை மாத்திரமே கொண்டு நிற்றல் உணரத்
நிகழ்கால வருங்கால வினைச்சொற்கள் எல்லாம் இறந்த காலச் சொற்கள் போன்று பகுதி விகுதி மாத்திரமே கொண்டு நின்றன. உம், செய்(ய்) உம், நட (க்க்) உம், அறி(ய்)உம் (செய்யும், நடக்கும் அறியும்) என்பன. திராவிட மொழியில் இச் சொற்கள் முற்ருயும் எச்சமாகியும் இருதிணை ஐம் பால் மூவிடங்களை உணர்த்தின. இன்று மலையாளமொழி விளங்கு வது போலவே ஆதித் திராவிட மொழியும் திணைபால் காட்டும் விகுதிகளற்ற வினைச் சொற்கள் கொண்டு விளங்கிற்று என்பர் திராவிட மொழியாராய்ச்சியாளர். ஆதியில் பெயர்ச்சொற்களே திணைபால் காட்டின. வினைச் சொல்லின் பின்னே நின்ற பெயர்ச்
.Avvaxwmtwrv***ww عدها "مهند به تسمیه
சொல்லே காலகதியில் வினைச் சொல்லோடு சேர்ந்து இணைந்து நிற்.
waxx.
கும் நிலுை பெற்றது. உ. ம்.
நோகு யான் > நேரகு+ ஏ(யா)ன் >
நோகு+ (வ்) ஏன் > நோகுவேன் > நோவேன்.
இங்கு 'யான்" என்னும் தன்மை ஒருமை இடப்பெயர் *ஏன்' என மாறி "நோகு' என்னும் வினையோடு இணைந்து வந்துள்ளமையை

Page 67
116
அவதானிக்கலாம். இங்ஙனமே ஏனைய இடப் பெயர்களும் வினைச் சொல்லோடு சேர்ந்து திணைபால் காட்டும் இடைச் சொல்லாகச் சுருங்கிய உருவம் பெற்று நிற்கும் உண்மையை உணரலாம்.
மேலே காட்டிய உதாரணங்கள் திராவிடத் தாயின் இன் னேர் முக்கிய பண்பை விளக்குவதையும் நாம் காணலாம். அதா வது வினைச் சொல்லே திராவிட வசன அமைப்பில் முதலாவதாக
S``**m~ ́: ̊(*ኃm፥ ለW❖mmሪሓws›8(ሕ...8
நின்றது என்பது."எழுவாயாகிய பெயர்ச் சொல் வசனத்தின் இறுதியில் நின்று செய்வோனைச் சுட்டிற்று. "மாடு ஓடியது" என் பது போன்று எழுவாயை முதலிலும் பயனிலையை ஈற்றிலும் எழு தும் இக்கால முறை திராவிட மொழியின் வசன அமைப்பிற்கு முரளுனது என்பர் திராவிட ஆராய்ச்சியாளர்.

ஒரு வார்த்தை
10லர் ஒன்று வெளியிடுவது மகத்தான செயல் மட்டுமல்ல, மலையை ஒத்த வேலையுங்கூட. இவ்வாண்டு மலரை வெளியிடுவதில் ஏற்பட்ட கஷ்டமும் அதனல் ஏற்பட்ட தாமதமும் எனக்குப் புகட்டிய உண்மை அது. கடைசி வருடச் சோதனை, வாழ்க்கைப் ப்ோராட்டங்கள் போன்றவை இம் மலரை மொட்டி லேயே சாகடித்துக் கருகவைத்திருக்கும் கீழ்க்காண்பவர்களின் பேருதவி கிடைத்திருக்காவிட்டால், மலர் விரிந்து மணம்பரப்பச் செய்வதில் என்னவிட அதிக பங்குகொண்டவர்கள் அவர்கள்.
நம் தமிழ்ச்சங்கப் பொருளாளர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின் உதவி அளக்கமுடியாதது. சிறுகதைப் போட்டிக் குரிய தங்கப் பதக்கங்கள் செய்விப்பது தொடக்கம், அச்சகம் ஒன் றில் வேலையை ஒப்படைத்துப் பொறுப்பேற்பதூடாக, விடுதலை நாட்களில் நாள்தோறும் "ப்றுாப்" படிப்பதுவரை அவரே செய்து உதவிஞர். விரிவுரை வகுப்புக்கள், வெளியூர்ப் பிரயாணங்கள், சொற்பொழிவுகள், கலைக்கழகப் பணிகள் என்று நாட்டுக்குழைப்ப வரின் உதவி நமக்குக் கிடைத்ததுபற்றிப் பெருமைப்படுகிருேம். இதழாசிரியர் என்ற பெயர் எனக்கு இருக்க, அதற்குரிய பணியை மறைமுகமாக அவர் செய்துமுடித்த பெருந்தன்மையை மறக்க முடியாது, முதலில் அவருக்கு என் இதயங்கலந்த நன்றி.
விளம்பரங்கள் இல்லாமல் வெளிவந்திருக்காது இம்மலர். அவற்றைத் தேடும் பணியில் கண்டிக்கென்றும் கொழும்புக்கென் றும் நாட்கணக்காய்த் தன் வேலைகளையும் கவனியாது என்னுடன் அலைந்து பாடுபட்ட அந்தச் "செயல் வீரன் திரு. க. சீவநாயகத்தின் பணி மேம்பட்டது. இதே துறையில் உதவி புரிந்த மற்றும் திரு. லோகேஸ்வரன், திரு. பாலசுப்பிரமணியம், திரு. சண்முகம் போன்றவர்களுக்கும் என் நன்றி. மலர் சம்பந்தமான வேலை

Page 68
18
களைத் துரிதப்படுத்தியவர் நண்பர் திரு. தில்லைநாதன். உதவி ஆசிரியர் என்ற ஒரு பெயர் இல்லாமல் பணிபுரிந்தவர் அவர். அவரை மறக்கவே முடியாது.
கடைசியாக, கட்டுரைகள் தந்துதவிய பேராசிரியர் க. கணப திப்பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந்தன், கலாநிதி ஆ. சதாசிவம், திரு. வி. செல்வநாயகம் ஆகியோருக்கும், ஏனையோருக்கும் என் நன்றி. கேட்டவுடனேயே கதையனுப்பி வைத்த நண்பர் உதயணனுக்கும் என் நன்றி. அத்துடன் விளம்பரங்கள் தந்த வர்த்தகர்களுக்கும் மலரைச் சீரியமுறையில் வெளியிட்டுதவிய கிங்ஸ்லி அச்சகத்தாருக்கும் நன்றியோ நன்றி!
- ஆசிரியர்.
கிங்ஸ்லி அச்சகம்
கொழும்பு விதி
 

மல்லிகா ஸ்டோர்ஸ்
தவ தானிய மா விரிகை
வீட்டுப்பாவனைக்குரிய எல்லா விதமான பல்சரக்குச் சாமான்களும்
* அரிசி, மா, சீனி
முதலிய பொருட்களும்
* பீடி சிகறெட், சுருட்டு புகையிலை
என்பனவும்
* எண்ணெய், கரி,
முதலானவைகளும்
எங்களிடம் மொத்தமாகவோ சில்லறையாகவோ
பெற்றுக்கொள்ளலாம்
உங்களை மகிழ்விப்பதே
எங்களின் கடமையாகும்
தயவுசெய்து ஒரு முறை தரிசித்துப்பாருங்கள் !
MAKA STORES
No. 59, BROWN RIGG STREET, KANDY. Ph0ኅኔፀ 7083 Grants 'MURUGAN'

Page 69
DANAS
Sensational Offer of
Tennis, Hocky and all other out - door and indoor Games
AT
Most Competitive Prices Special Rates to Schools Colleges and Clubs
O DIANA & Co., Ltd.
24, WARD STREET,
ESTD 1917
FOR |
o Pure Sovereign Gold Jewellery
巫蕊 Artistic Designs
VISIT
W. MUTTA
'Jewellers' 95 COLOMBO STREET.
ΚΑΙΝΟΥ
- KAN D Y - Prices are Comparatively low Te: DIANA Phone; 575 Prop:- Mutiah Faranthaman
Phone: 256 Grams: RADA
The House of Quality
& Service
More than Thousand Varieties in
Piece Goods
&
* Ready Made Appare SUITABLE FOR Ladies, Gentlemen & Children Stockists of
Bridal Veils, Benares Sarees Silk Fabrics & High Class Worsteds
Raja Stores
89-91, CoLOMBO STREET, KANDY
எங்களிடம் சுத்தமான ШпрШШI600
நல்லெண்ணெய் புகையிலே
சுருட்டு
சாய்ப்புச்சாமான்கள்
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
விற்கப்படும்
வி. வே. சண்முகம் !
154, கொழும்பு வீதி, கண்டி

Building Materials Zéta: Supplies FOR 3— Hardware ܘܣܘcܠ
\ Papers
Chettinad Corporation Priv. Ltd.
P. Ο ΕΟΧ 19 PHONE 522 - KANDY -
JEWELLERIES p
NAGALINGAMS
REPUTED JEWELLERS SINCE 1902
Jewellery Dept. 708 T'Phones
Textile Dept. 7246
V. K. M. Nagalingam & Sons.
JEWELLERS, RADIO & TEXTILE DEALERS 97 & 101, Colombo Street, KANDY

Page 70
STUDIO-PHOENIX
KAN O Y
V
Highest
Satisfaction
எல்லா இனமான புடவைகளுக்கும்
|
கண்டிமாநகரில் பிரசித்திபெற்ற இடம்
66 凸开 ஸ் 6 தி 99 Saraswathy
90, COLOMBO STREET,
KANDY
உங்கள் அன்ருட வீட்டுத்தேவைக்கான பலசரக்குச் சாமான்கள்
பிண்ணுக்கு
எண்ணெய் வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்களிடம் கிடைக்கும். நேரில் விஜயம் செய்யுங்கள். அல்லது கண்டி 7133 நிர். டெலிபோன் இலக்கத்துக்குப் போன் செய்யுங்கள் மகேஸ்வரி ஸ்டோர்ஸ் 34 கெசல் வீதி, கண்டி
HL CAPTA, THE LEAONG MOTOR FRM
ESTABLISHED 1900
We Stock Genuine
Spares for
WAUXHAILS BEDFORDS OPELS " VICTOR FIATS MORRIS ETC.
Stockists of
Michelin, Dunlop, Firestone, Goodyear and Bridge Stone - Tyres -
Always at your Service
M. ISMAIL. & Co.
PHONE KANDY GRAMs 4. I SMA I Ls

"இளங்கதிரை" அழகாக அச்சிட்டது கிங்ஸ் லி அச்சகம் !
உங்களுக்குத் தேவையான சக ல அச்சு வேலைகளுக்கும் கிங்ஸ்லி அச்சகத்திற்கு விஜயஞ் செய்யுங்கள்
கிங்ஸ் லி அச்சகம் 22, பிரவுண்ரிக் வீதி, * 205, கொழும்பு வீதி. கண் டி.
டெலிபோன்: 529
For all Your Household Needs in
O MILK FOOD: Cow & Gate, Lactogen, Glaxo,
Ostermilk etc., etc. O TINNED FOODS – Groceries – Patent
Medicines. O BISCUITS (all varieties) & Cheese, O Toilet Requisites & Perfumes
WHISKY BRANDY a GIN s WINE a BEER & LIQUOURS To Suit All Tastes And Needs. Supplies Always in Stocks
A. C O M P E T T W E PR C. E. s. Wholesale & Retail Dealers:
A SUPPAH & SONS
266, MAN STREET, - COLOMBO 14. Phone 2459 Grams: "TONG"

Page 71

விரைவில் எதிர் பாருங்கள்
சினிமாஸ் திரைகளில்
கணக்கற்ற கலைக்காவியங்களில் சிலவற்றை கீழே தருகிறேம்.
|*புனர் ஜென்மம்' 'பொன்விளையும் பூமி"
சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன்
பத்மினி பத்மினி
“JTGDuf &bulóón" "தேசிங்கு ராஜன்" எம். ஜி. ராமச்சந்திரன் எம். ஜி. ராமச்சந்திரன் பத்மினி பானுமதி
மகனே கேன்" "மாதவி'
எஸ். எஸ். ராஜேந்தியன் ஆர். எஸ். மனேகர் புஸ்.லாதா தேவிகா
“JFF GFGOD Gau” *ராஜ மகுடம்"
என். டி. ராமரான் என். டி. ராமராவ் செளகார் ஜானகி ராஜ சுலோசன
'மீண்ட சுவர்க்கம்?? “Gus” ஜெமினி கணேசன் சிவாஜி கணேசன்
பத்மினி பி. சரோஜா தேவி
"இருமணம் கலந்தால் திருமணம்'
பிரேம் நசிர் - எம். என். ராஜம்,

Page 72
DAATKAA S
Always in the Fo Unsurpassed S
* ** SAR
IN LATTEST
彎 藝
Remember your Chic
DESESENO ASU
x+ SLACKS & 1
AA SSPSC
LAOI ES” & TALORING GU,
LANKA S
75, COLOMBO ST.
இது இலங்கைப் பல்கலைக் இ கண்டி, கொழும்பு வீதி, நிர், 2 கிங்ஸ்லி அச்சகத்தில் அச்சி
_
 

"N'ORBIS,
refront with election of ,
EES
DEAS'
ice
SHIRTS. r
AUTY
GENT's ARANTE :)
SSASLSASAASASASASASASeiSASASAS SSASeLSSASALLL S AAAAS SAAAAAS AAAAALASLS
TORES
EET. KANDY
ழகத் தமிச்சங்கம் சார்பாக
05-ம் இல்லத்திலிருக்கும் ட்டு வெளியிடப்பெற்றது.