கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 2004-2005

Page 1
இ 篮 s କ୍ଳୀ, ଛୁଇଁ -
தமிழ்ச் சங்கம், பேராத
 

2004/2005

Page 2
glulooo. LIL GILLEDGE56 சேட்டிங், ஆட்டிங் isujћhпал
gigol EDLEis é9enerġgħjbjb
t இநீ்திற்றுரண்தி
நெல்வியடி, கரவெட்டி. 0212263238
ノ
 
 
 
 
 
 
 
 

பேராதனைப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சங்கம்
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
O O இளங்கதிர் 36வது ஆண்டு மல்ர்
2004 || 2005
இதழாசிரியர்: ஜெ.ஆன் யாழினி.

Page 3
இதழாசிரியர்:
வெளியீடு:
அச்சுப்பதிப்பு:
O இளங்கதிர் 2004 - 2005 தமிழ்ச் சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம்
ஜெ.ஆன் யாழினி.
தமிழ்ச் சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை
இலங்கை. Web: http://www.pdn.ac.lk/socs/tamilsoc Email: tamilsocGlpdn.ac.lk
வர்தா பதிப்பகம் 85C, பிட்டுனுகம, முறுதகஹமுல - 20526. Tp: 0773240541, 0777860250 Web: www.vardhapub.8m.com Email: Vardhapublication(agmail.com

தமிழ்ச்சங்க கீதம்
புகழ் திகழ் தமிழ் மகள் புவிமீ தாளும் பொன்னாள் வருக! வருக! மகிழ்வுறு தமிழ்நில மாந்தர்கள் பண்பு மலை விளக்காவே ஒளிர்க சகலரும் ஒருதாய் தன்பிள்ளைகள்போல் சமத்துவம் மாகவே வாழ்க தனித்துவம் காத்திட எழுக! எங்கள் தமிழ் குற ளறநெறி தழைக்க தாயக மணிக்கொடி துலங்க பனித்திடு மலைசூழ் பழநகர் பேரா தனையுயர் தமிழ்க் கலை மன்றம் வளர்க! வளர்க! வளர்க மாநிலம் போற்றிட வளர்க!
வளம்தரு மாவலி நதிமருங் கமைந்த பேராதனைப் பல்கலை மன்றில் விளைந்திடு பயிராய் விளங்கிடு சங்கம் வீறு கொண் டிலங்கி மிளிர்க இளந்தமிழ் மாணவர் இன்கலைக் கோட்டம் இவ்வுலக குளவரை துலங்க ஈழமணி நாடுவுயர்க! எங்கள் நாளைய வாழ்வும் உயர்க நமதிறை அருண்வழி பொலிக பாளையின் குளிர்தரு மலைசூழ் பேரா தனைத் தமிழ்ப் பணியகம் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! பல்லாண் டுயர்வுடன் வாழ்க.
மெட்டு: “ஜன கண மன” எனும் இந்திய தேசிய கீதம் ஆக்கம் : சந்திரதாசன் இளங்கதிர் (2004 - 2005) (iii) தமிழ்ச் சங்கம்

Page 4
சிமருந்தலைவரின் வாழ்த்துச் சிசய்தி
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்படும் இளங்கதிர் மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சியட்ைகிறேன். இச்சங்கம் இப்பல்கலைக்கழகத்தின் தமிழ் பேசும் மாணவர்களின் பிரதான பண்பாட்டு அமைப்புகளுள் ஒன்றாகச் செயற்பட்டு வருவதோடு மட்டுமன்றி இலங்கையில் கலை இலக்கிய வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்து வருகின்றது.
1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த இதழான இளங்கதிர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரிர்களுக்கும் உரிய ஒரு வெளியீட்டுக் களமாகச் செயற்பட்டு வருகின்றது. இளங்கதிரில் எழுதிய மாணவ எழுத்தாளர்கள் பலர் இன்று இலங்கையின் பிரபல எழுத்தாளர்களாக விளங்குகின்றனர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை முதல் தமிழ்துறை பேராசிரியர்களும் ஏனைய துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் தங்கள் ஆக்கங்களை வெளியீட்டு இளங்கதிரை ஒரு காத்திரமான பல்கலைக்கழக வெள்யீடாக வளர்த்துள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் பல்லின பண்பாட்டுப் பாரம்பரியத்தை அதன் உண்மையான அர்த்தத்தில் தொடர்ந்து பேணிவரும் ஒரே ஒரு பல்ககிைக்கழகமாகும். இப் பல்ககைக்கழகத் தமிழ்ச் சங்கமும் அதன் வருடாந்த வெளியீடான இளங்கதிரும் இந்த ஆரோக்கியமான பண்பாட்டுப் பாரம்பரியத்தை தொடர்ச்சியாகப் பேணிவருகின்றது.
எதிர்காலத்திலும் இவற்றின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் பேராதனைப் பல்கலைக்கழகம் பெருந்தலைவர் பேராதனை. தமிழ்ச் சங்கம்
இாங்கதிர் (2004 - 2005) ( iv) தமிழ்ச் சங்கம்
 

பெரும் பொருளாளரின் வாழ்த்துக்கள்
பழம் பெரும் சங்கங்களுள் ஒன்றான பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கிய நடவடிக்கைகள் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்றது, மகிழ்ச்சிக்குரிய விவிடயமாகும். இதில் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு மலரான இளங்கதிரின் பங்கு மிகப்பெரியது.
தமிழ் இலக்கியம், பண்பாடு முதலியவற்றை வளர்ப்பதையும்
தமிழறிவைப் பரப்புவதையும் கலை ஆக்கங்களை ஊக்குவிப்பதையும்
பிரதான நோக்கமாகக் கொண்டு இச்சஞ்சிகை வெளியிடப்படுகிறது.
எதிர் கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அறிவையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்வதற்கு, உகந்த முறையில் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளும் இளங்கதிரின் வெளியீடுகளும் அமையவேண்டி வாழ்த்துகிறேன்.
விஞ்ஞான பீடம் கலாநிதி சரவணகுமார் பேராதனைப் பல்கலைக்கழகம் பெரும்பொருளாளர் பேராதனை. தமிழ்ச்சங்கம்
இளங்கதிர் (2004 - 2005) ( v ) தமிழ்ச் சங்கம்

Page 5
தலைவரின் வாழ்த்துச் சிசய்தி
தமிழின் வளர்ச்சியிலே சங்கங்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. அந்த வகையில் ஈழத்தமிழ் வரலாற்றில் பல தசாப்தங்களுக்கும் மேலாக பேராதனைப்பல்கலைக் கழக தமிழ்ச் சங்கம் குறிப்பிடத்தக்க பணியினை ஆற்றியள்ளமையைக் காணக்கூடியதாயுள்ளது. சிறப்பாக தமிழ்ச்சங்கத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் இளங்கதிர், தனித்து ஒரு சஞ்சிகையாக மட்டுமன்றித் தமிழ் மொழி கலாசாரம் சார்ந்த துறைகளுக்கு ஒரு காப்பாக செயற்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான இதழ், பல்கலைக்கழக ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கலை, இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி வருவதோடு, சமகால நிகழ்வுகளின் தாக்கத்தையும் கொண்டுள்ளது.
இவ் வேளையில் இளங் கதிரிணி வெளியீட்டுக்கு உறுதுணையாயிருந்த அனைவரையும் நன்றியோடு பார்க்கிறேன். இனிவரும் காலங்களிலும் இளங்கதிரின் பணி தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
பொறியியல்பீடம் க.தயாநிதி பேராதனைப் பல்கலைக்கழகம் தலைவர
தமிழ்ச்சங்கம்
AAToisagSä (2004 - 2005) (vi) தமிழ்ச் சங்கம்
 

இதழாசிரியரிடமிருந்து
ஒவ்வொரு வருடமும் தமிழ்ச் சங்கம் பிரசவித்து வந்த இளங்கதிர் எனும் மழலையை, இவ்வருடம் உங்கள் கரங்களிலே தவழவிட வேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் செயற்குழுவின் முன் வைக்கப்பட்ட போது சற்றே திணறித்தான் போனோம். இயற்கையும் இனவாதமும் கை கோர்த்துக் கொண்டு இலங்கையைப் புரட்டிப் போட்ட காலத்தில் பல தடைகளையும் மீறி இவ்விதழை மலர வைத்திருக்கின்றோம்
கணனிப் பதிப்பு எனும் வகையில், இளங்கதிர் ஊனங்களுடன் பிறக்காமலிருக்க வேண்டுமென்பதில் எங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கின்றோம்.
இம்மலரில் பல்வேறு பிரதேசங்கள் சார்ந்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கூடவே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் சிறுகதைஞம் இணைக்கப்பட்டுள்ளன.
சுனாமியரின் சோகங்களுக்கும் , பல கலைக் கழக வேலைப்பளுக்களுக்கும் இடையிலும் விரிவுரையாளர்களும், இளம் படைப்பாளர்களும், இம்முயற்சியில் முழு ஒத்துழைப்பையும் தந்த தமிழ்ச்சங்க செயற்குமூ உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் இளங்கதிரை உங்கள் கரங்களிலே தந்துவிட்ட
திருப்தியோடு.
கலைப்பீடம் ஜெ.ஆன் யாழினி பேராதனைப் பல்கலைக்கழகம் இதழாசிரியர் பேராதனை. தமிழ்ச்சங்கம்
இனங்கதிர் (2004 - 2005) (vii) தமிழ்ச் சங்கம்

Page 6
தமிழ்ச்சங்க சிசயற்குழு உறுப்பினர்கள் 200 - 2005
பெருந்தலைவர் பெரும்பொருளாளர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் கலாநிதி சரவணகுமார் தலைவர். தமிழ்த்துறை தாவரவியற் துறை
தலைவர் உபதலைவர் க.தயாநிதி சி.பத்மநிரூபன
GEFLUGuo T5T j இளம் பொருளாளர் வா.அம்பிகை க.அருணன்
வெளியீட்டு அலுவலகர் இதழாசிரியர்
த.தர்மசிறி செல்வி.ஜெ.ஆன் யாழினி
செயற்குழு உறுப்பினர்கள்
திரு. ந.சிவதீபன் திரு. எல்.சுதாகரன் செல்வி. சீரஞ்சிதா திரு. வே.க.பிரசன்னா திரு. ஆ.வாகீஸ்வரன் திரு. க.காண்டீபன் திரு. த.மயூரன் திரு. செ.ஜோன்நிருபன் செல்வி. சி.கிருஸ்ணலீலா திரு. த.விநாயகதாசன்
இளங்கதிர் (2004 - 2005) (viii) தமிழ்ச் சங்கம்
 

YLLLLLYYY0 SKKKSYY SLLLLS SLKKKK SLLLLLLSLL LLLLSK KLLLLLLSK'lae Foss's sognoloji
'Lo,'Irqisor it-3 'ĠsitToos 'solon. Toso, strų pusr: 'Quae sālsensaern siirro (sr:sansnog· Ľuaegroissī. Ģiņš no ĶĒĶgu-ig
S007 - †00z Issosios IIIŤ-a sfî sêgirmes) oorg/seșĝigis

Page 7

பொருளடக்கம்
01 போர்த்துக்கேயர் கால அரசியல் சமயச் சூழலும்
தமிழ் இலக்கிய வளர்ச்சியும் O 1 02 சிலாபப் பிரதேசச் சிறுதெய்வ வழிபாட்டில்
காளி, கண்ணகி 08 03 நீயே எல்லாமுமாகி . 18
04. கனகிபுராணம் : ஒரு பண்பாட்டுச் சிதைவின்
குறிகாட்டி 05 இலங்கையின் இனமோதலை விளங்கிக் கொள்ளல் 33
19
06 முடிந்தால் திருந்திக்கொள்...! 47
07 மலைத்தாயப் 48 08 ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும்.
வளர்ச்சியும் ஒரு சில குறிப்புகள் 52 09 மாதவி பிறப்புத் தொடர்பான சில குறிப்புகள் 68 10 கனவுகள் கலைகின்றன 76 11 இழிவுபடுத்தப்பட்ட தமிழர் கலை 78 12 செப்பறைச் சிதம்பர சுவாமிகள்: ஒர் அறிமுகம் 81 13 இலங்கையின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் 94 14 மழையின் ஒலங்கள் 102 15 தெம்மாங்குப் பாடல்கள் - ஓர் ஆய்வு 103 16 எழு திச் செல்லும் விதியின் கைகள்
உமர் கையாமின் ருபையாத் - ஒரு பார்வை 114 17 பிறழ்வுகள்! 19
18 நான்கு கவிதைகளும் ஒரு சிறுகதையும்
மறுமலர்ச்சி இதழில் மஹாகவியின் படைப்புகள்
சில குறிப்புகள் 128 19 வன்னியின் வரலாற்றில் பண்டார வன்னியன் 136 20 ஒரு ஜீவ பிரவாகம் 1 42
இாங்கதிர் (2004 - 2005) ( xi) தமிழ்ச் சங்கம்

Page 8
போர்த்துக்கேயர் கால அரசியல் சமயச் சூழலும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்
கலாநிதி துரை. மனோகரன்
தமிழ்த்துறை
இலங்கைக்கு முதல் முதல் வந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஐரோப்பிய நாட்டவராகப் போர்த்துக்கேயர் விளங்குகின்றனர். கி.பி.1505 இல் இலங்கைக்கு வருகை தந்த போர்த்துக்கேயர் கி.பி.1543 இல் கோட்டை அரசின் மீது தமது மேலாதிக்கத்தை நிறுவினர். கி.பி.1597 இல் கோட்டை அரசு முழுமையாகப் போர்த்துக்கேயரின் வசமானது. ஆனால் அவர்களுக்கும் யாழ்பாண அரசுக்கும் இடையிலான தொடர்பு கி.பி.1543 இல் இருந்துதான் ஆரம்பமாகின்றது. கோட்டை அரசின் மீது மிக விரைவாகவே தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முடிந்த போர்த்துக்கேயருக்கு யாழ்ப்பாண அரசின் மீதான தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அதிக காலம் பிடித்தது. கி.பி.1591 இலேயே யாழ்ப்பாண அரசின் மீது தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்த அவர்களால் முடிந்தது. கி.பி. 1621 இல் யாழ்ப்பாணத்தில் தமது நேரடி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு, அவர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் காலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு யாழ்ப்பாண மன்னர்களும் மக்களும் அவர்களது ஆக்கிரமிப்புக்கு எதிராக காட்டிய எதிர்ப்புணர்வே முக்கிய காரணமாகும். ஆயினும் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தின் நிலைமைகள் போர்த்துக்கேயருக்குச் சாதகமாகவே அமையத் தொடங்கின. யாழ்ப்பாண அரசுக்கு ஏற்பட்ட வர்த்தகத்துறைப் பாதிப்புக்களால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கின. யாழ்ப்பாண அரசின் பிற்பகுதியில், இவற்றுக்கு முகம் கொடுத்து அரசியல் தலைமைத் திறனுடன் செயற்படக் கூடிய மன்னர்கள் இல்லாமையும் போர்த்துக்கேயருக்குச் சாதகமாக அமைந்தது. முதலாம் சங்கிலி மன்னன் போர்த்துக்கேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியதைப் போன்று, பின்வந்த மன்னர்களால் செயற்பட முடியவில்லை. யாழ்ப்பாண அரசின் இறுதி மன்னனாக விளங்கிய சங்கிலி குமாரன் திறமை வாய்ந்தவனாகவோ, மக்களின் ஆதாரவைப்பெற்றவனாகவோ விளங்கவில்லை. போர்த்துக்கேயரின் மதப் பரப்பல் முயற்சிகளும் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. இவற்றோடு போர்த்துக்கேயரின் கடற்படை, தரைப்படை பலமும் அவர்கள் தமது ஆட்சியை யாழ்ப்பாணத்தில் இளங்கதிர் (2004 - 2005) (0) தமிழ்ச் சங்கம்

நிறுவுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. கி.பி. 1621 இல் யாழ்ப்பாணத்தில் தமது ஆட்சியை ஏற்படுத்திய போர்த்துக்கேயர் கி.பி.1658 இல் ஒல்லாந்தரிடம் தமது ஆட்சியைப் பறி, கொடுக்கும் வரை ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சி தமிழ் பிரதேசங்களில் முப்பத்தேழு ஆண்டுகள் இடம் பெற்றது.
இலங்கையில் போர்த்துக்கேயர் படிப்படியாக காலூன்றிய போது தம் மதத்தை பரப்புவதில் அதிக அக்கறையைச் செலுத்தத் தொடங்கினர். அவர்கள் மதத்தையும் அரசியலையும் மிக நெருக்கமானவையாகவே கருதினர். அவர்கள் காலத்தில் பிரான்சிஸ்கன் சபை, இயேசு சபை, டொமினிக்கன் சபை, ஒகாஸ்ரீனியன் சபை ஆகியவை கத்தோலிக்க மதத்தை இலங்கையில் பரப்பும் முயற்சியில் ஈடுபாடு காட்டின. கோட்டை இராச்சியத்தில் கத்தோலிக்கத்தை அரச மதம் ஆக்குவதில் இத்தகைய சபையினர் தீவிரமாகச் செயற்பட்டனர்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியான மன்னாரில் பிரான்ஸிஸ்கன் சவேரியார் என்ற கத்தோலிக்க மத குருவின் சிஷ்யனால் மிகக் குறுகிய காலத்தில் பலர் மதம் மாற்றப்பட்டனர். மதம் மாறிய அறுநூறு பேர் முதலாம் சங்கிலியினால் கொலை செய்விக்கப்பட்டனர். ஆயினும் கி.பி.1591 முதல் கத்தோலிக்க மதம் பரவுவதற்குச் சாதகமான அரசியல் சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. இந்த ஆண்டிலிருந்து பிரான்ஸிஸ்கன் சபைக் குருமார் யாழ்ப்பாண இராச்சியத்தில் தமது மத மாற்ற முயற்சிகளில் சுதந்திரமாக ஈடுபடும் நிலை உருவாகியது. உயர் உத்தியோகத்தர்களைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வெற்றி பெறவும் முடிந்தது. கி.பி. 1619 இல் சங்கிலி குமாரன் கைது செய்யப்பட்டதோடு மிஷனரிமாரின் செயற்பாடுகள் வலுப்பெற ஆரம்பித்தன. இயேசு சபையைச் சார்ந்தோர் கி.பி. 1622 இல் யாழ்ப்பாணத்தில் கல்லூரி ஒன்றினை நிறுவினர். அக்கல்லூரியே போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைமையகமாக விளங்கியது. யாழ்ப்பாண தமிழ் மன்னரது வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்து மத குருமாரும், மக்களும் தமது எதிர்ப்பை காட்ட முடியாத நிலையே காணப்பட்டது. இந்து மத பாரம்பரியங்கள், வழிபாட்டு முறைகள் சிலவற்றையும் கத்தோலிக்கத்தில் புகுத்தியதன் மூலம் சாதாரண மக்களையும் கவர்ந்திளுக்கும் மதமாக கத்தோலிக்கம் விளங்கியது.
இளங்கதிர் (2004 - 2005) (O2) தமிழ்ச் சங்கம்

Page 9
பிற மதங்களை கடுமையாக நோக்கிய போர்த்துக்கேயர் ஆட்சியில் பல இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டதோடு, இந்து மதப்பாரம்பரியங்களை ஒழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டப்பட்டது. கத்தோலிக்க மதத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. போர்த்துக்கேயரின் அட்டுழியங்களை வெறுத்து ஞானப்பிரகாசர் போன்ற அறிஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தமிழ் நாட்டில் புகலிடம் தேடி, அங்கு அரும்பணி ஆற்றினர். கத்தோலிக்கத்துக்கு மாறிய மக்களுக்கு சலுகைகளும், கெளரவங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் காலத்து நீதி மன்ற தீர்ப்புக்களிற் கூட, கத்தோலிக்க மதத்தை சார்ந்தோருக்கு மிதமான தன்டனைகளும், அம்மதத்தை சாராதோருக்கு கொடுரமான தண்டனைகளும் விதிக்கப்பட்டன. கி.பி. 1618 இல் கத்தோலிக்க மதம் சார்ந்த சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படக் கூடாது என்னும் சட்டத்தினைப் போர்த்துக்கேயர் உருவாக்கினர்.
அரசசார்பான தொழில்களில் கத்தோலிக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் பெறவிரும்பியோர் இயல்பாகவே அம்மதத்துக்கு மாறினர். கத்தோலிக்கத்தை தழுவியவர்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. மரணப் படுக்கையிலேனும் ஒருவர் கத்தோலிக்கத்துக்கு மாறுமிடத்து அவரது சொத்துக்கள் அரசுக்குச் செல்லாது குறிப்பிட்டவரின் வாரிசுகளுக்குச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
மதம் பரப்புவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயற்பட்ட கத்தோலிக்க குருமார்கள் கல்வி தொடர்பாகவும் அக்கறை செலுத்தினர். கத்தோலிக்க குருமாரே ஆசிரியராகவும் விளங்கினர். அவர்கள் மொழி, இசை, நாடகம் முதலியவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். கத்தோலிக்க குருமார் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியையும், 25 பாடசாலைகளையும் உருவாக்கினர். ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் மதம் பரப்புதலைச் செய்து வந்த அவர்கள் காலப்போக்கில் இந் நாட்டு மொழிகளைக் கற்று, அவற்றின் மூலம் மத போதனைகளைச் செய்தனர். மதக் கல்வி போதிப்பதே அவர்களின் கல்விச் செயற் பாட்டின் முக்கிய அம்சமாக இருந்தது. பாடசாலைகளும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன. போர்த்துக்கேயர் காலத்தில் இயேசு சபையினரே கல்விச் செயற்பாடுகளில் அதிகமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டனர். இாங்கதிர் (2004 - 2005) (03) தமிழ்ச் சங்கம்

போர்த்துக்கேயர் காலத்துக் கல்விச் செயற்பாட்டில் நடிப்புத் தொழிற்பாடு முக்கிய இடத்தினை பெற்றிருந்தது. நாடகங்கள் ஊடாகக் கத்தோலிக்க மதச் சிந்தனைகளைப் பொது மக்கள் மத்தியில் இலகுவாகப் புகுத்தலாம் என்ற தெளிவினைக் கொண்டவர்களாகக் கத்தோலிக்க மதகுருமார் விளங்கினர். போர்த்துக்கேயர் காலத்திலிருந்து இலங்கையின் தமிழ் நாடகத் துறையில் புதிய வளர்ச்சிநிலை தோன்றுவதைக் காண முடிகிறது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டு முதலாக இலங்கையிற் பரவலாகத் தமிழ் நாடக முயற்சிகள் மக்கள் மத்தியில் படிப்படியாக செல்வாக்குப் பெற ஆரம்பித்தன. போர்த்துக்கேயர் வருகையை அடுத்து அவர்களது நாடகப் பாரம்பரியங்கள், கத்தோலிக்கம் பெருமளவு பரவிய மன்னார் முதலான பிரதேசங்களில் இலங்கைத் தமிழ் நாட்டின் பாரம்பரியத்துடன் கலந்து வளர்ச்சிபெற ஆரம்பித்தன. இது பற்றி பேராசிரியர் சி. மெளனகுரு குறிப்பிடுவன மனங்கொள்ளத்தக்கன.
*கத்தோலிக்கர் இலங்கையை ஆண்ட காலம் ஸ்பானிய நாடக வரலாற்றில் உச்சமான காலமாகக் காணப்படுகின்றது. சிறந்த நாடகப் பாரம்பரியம் மிக்க ஒரு நாட்டில் இருந்து வந்த போர்த்துக்கேயர்கள் தமி மோடு தமது நாடக மரபுகளையும் கொணர்ந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அம் மரபுகளை அவ்வண்ணமே தராது இங்கு இருந்து கூத்து மரபுகளுடன் இணைத்தனர் என்பதே வரலாற்றுக்கு ஒத்த கருத்தாகும்.”
போர்த்துக்கேயர் காலத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் கிராமிய நாடகங்கள் வாயிலாகக் கத்தோலிக்க மதக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இயேசு சபையினர் தெல்லிப்பழையில் தேவாலயத்துக்கு அருகில் நாடகங்களை மேடையேற்றி, மக்களை தமது மதத்துக்கு கவர்ந்திளுத்தமை பற்றிக் கூறப்படுகிறது. போர்த்துக்கேயர் காலத்து நாடகத்துறை தொடர்பாக நோக்கும் போது யாழ்ப்பாண தமிழ் மன்னர், காலத்தை விட பிரதேச எல்லைகள் மேலும் விரிவு பெறுவதைக் காண முடிகிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு என்பவற்றோடு மன்னார் சிலாபம் ஆகிய பிரதேசங்களும் தமிழ் நாடக வளர்ச்சியிற் பங்கு கொள்கின்றன.
இளங்கதிர் (2004 - 2005) (04) தமிழ்ச் சங்கம்

Page 10
போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் புதிய போக்கு ஆரம்பிப்பதைக் காணலாம். கத்தோலிக்க மதம் அரச மதமாக விளங்கியமையால் அம்மதச் சார்பான நூல்களே அக்கால கட்டத்தில் தோன்றின. இந்து இஸ்லாமியச் சார்புடைய நூல்களையும், பிற பொது நூல்களையும் காண்பதற்கில்லை. போர்த்துக்கேயர் காலத்தில் தோன்றிய நூல்களில் இன்று கிடைப்பவை ஞானப் பள்ளு, சந்தியாகுமாயோர் அம்மானை (அர்ச்யாகப்பர் அம்மானை) ஆகியவையாகும்.
ஞானப்பள்ளு இலங்கையில் தோன்றிய இரண்டாவது பள்ளு நூலாக விளங்குகிறது. இப்போது கிடைக்கும் இலங்கைப் பள்ளு நூல்களில் இந்நூல் மாத்திரமே சிதைவின்றி முழுமையாகக் கிடைத்துள்ளது. கத்தோலிக்க மதச்சார்பான இந்நூல் இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு விளங்குகின்றது. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஞானப் பள்ளு கி.பி. 1642 இல் தோன்றியிருக்கலாம் எனச் சுவாமி ஞானப் பிரகாசர் கருதுகின்றார். கதையமைப்பைப் பொறுத்தவரையில் ஞானப் பள்ளு பொதுவான பள்ளு இலக்கிய மரபை அடியொற்றிச் செல்லினும் பிற பள்ளு நூல்களினின்றும் சில அம்சங்களில் வேறு பட்டதாகவே அமைந்துள்ளது. பள்ளு இலக்கியத்தைப் பொறுத்தவரை அதில் பள்ளன், மூத்த பள்ளி, பண்ணைக்காரன் ஆகிய மூன்று பாத்திரங்களும் பாட்டுடைத் தலைவனின் ஊரைச் சேர்ந்தோராகவும், இளைய பள்ளி வேற்றுாரைச் சார்ந்தவளாகவும் படைக்கப்படுவதே மரபு. ஆயினும் ஞானப் பள்ளில் அம் மரபு பின்பற்றப்படவில்லை. முதல் மூவரும் செருசலையைச் (Jerusalam) சேர்ந்தோராகவும், இளைய பள்ளி கத்தோலிக்கத் திருச் சபையினதும் போப் பாண்டவரினதும் தலைமைப் பீடமாக விளங்கும் உரோமாபுரியைச் (Rome) சார்ந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளனர். இவ்வம்சம் ஞானப் பள்ளைப் பிற பள்ளு நூல்ளினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதை அவதானிக்கலாம்.
இப்பள்ளில் இளைய பள்ளியின் பாத்திரம் முற்றுமுழுதாக வேறுபட்ட அமைப்பிலேயே வார்க்கப்பட்டுள்ளது. பிற பள்ளு நூல்களிற் போன்று அவள் ஆடம்பரக்காரியாகப் படைக்கப்படவில்லை. பாட்டுடைத் தலைவரான இயேசுவின் மீது பற்றுக் கொண்டு சமய வாழ்வு வாழ்பவளாக அவள் சித்திரிக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. ஞானப் பள்ளில் இடம் பெற்றுள்ள பிற மூன்று பாத்திரங்களும் கூட பிற பள்ளு நூல்களினின்றும் வேறுபட்ட பாத்திர இளங்கதிர் (2004 - 2005) (05) தமிழ்ச் சங்கம்

இயல்பு கொண்டவையாகவே காணப்படுகின்றன. இப்பள்ளில் இடம் பெறும் மூத்த பள்ளி சமய ஒழுக்கத்தினின்றும் குன்றிய பரிதாபத்துக்குரிய பாத்திரமாகவே வார்க்கப்பட்டுள்ளாள். இந்நூலில் இடம் பெறும் பள்ளன் என்னும் பாத்திரம் உண்மைக் கத்தோலிக்க ஊழியனாகப் படைக்கப் பட்டுள்ளது. மற்றைய பள்ளு நூல்களில் பரிகாசத்துக்குரிய பாத்திரமாகப் படைக்கப்படும் பண்ணைக்காரன் ஞானப் பள்ளில் கத்தோலிக்க மத குரு ஒருவருக்குரிய பண்பு கொண்டவானாகச் சித்திரிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்.
போர்த்துக்கேயர் காலத்தில் இயற்றப்பட்ட ஞானப்பள்ளில், அப்போதைய போர்த்துக்கேய மன்னன் பற்றிய புகழுரையும் இடம் பெற்றுள்ளது. “பேரான பாராளும் பிடுத்துக்கால் மனுவென்றன் பிரதானம் வீசவே கூவாய் குயிலே’ என அமைந்துள்ளது அப்புகழுரை. இயேசுவின் பெருமையையும், கத்தோலிக்க மதக் கருத்துக்களையும் கூறுவதே நூலாசிரியரின் நோக்கமாக இருந்தமையால் மேலை நாட்டையே அவர் களமாகக் கொண்டுள்ளார். ஆயினும் மேலைப்புலத்துக்கு இயல்பான முறையில் இயற்கை வருணனையைச் செய்ய இயலாத இடர்பாடு அவருக்கு நேர்ந்துவிட்டது.
ஞானப் பள்ளு 257 பாடல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சிந்து, கலிப்பா, தரு, விருத்தம், வெண்பா ஆகிய யாப்புக்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியர் தமது சமய விடயங்களை எடுத்துரைப்பதில் கொண்ட ஆர்வத்தை முற்று முழுதாகத் தமது கவித்துவத்தில் காட்டவில்லை. ஆங்காங்கு சிற் சில பகுதிகளே சற்றுச் சுவையாக உள்ளன.
போர்த்துக்கேயர் காலத்தில் பேதுருப் புலவரால் கி.பி.1647 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது, சந்தியாகுமாயோர் அம்மானையாகும். இதற்கு அர்ச் யாகப்பர் அம்மானை என்ற பிறிதொரு பெயரும் உண்டு. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சாவகச்சேரிக்குக் கிழக்காகச் சில மைல்கள் தொலைவில் உள்ள கிளாலி என்ற இடத்தில் அமைந்துள்ள தேவாலயத்தைக் கொண்டு விளங்கும் யாக்கோபு என்று குறிப்பிடப்படும் அர்ச் ஜேம்ஸ் (St. James) என்னும் புனிதர் மீது பாடப்பட்டதே இவ்வம்மானை ஆகும். போர்த்துக்கேயர் காலத்தில் அத்தேவாலயத் திருவிழாவுக்கெனப் பல ஊர்களினின்றும் பெருமளவிற் கூடும் பக்தர்களின் நலன் கருதிச் சந்தியாகுமாயோர் அம்மானை பாடப்பட்டது. அக்காலத்தில் தெல்லிப்பளையில் சமயப் பணியாற்றிய இளங்கதிர் (2004 - 2005) (06) தமிழ்ச் சங்கம்

Page 11
சுவங்கறுவாலூயிஸ் சுவாமியாரின் வழிகாட்டுதலிலும், ஏற்கனவே தமிழ் நாட்டில் காவிய முறையிற் பாடப்பட்ட யாகப்பரின் கதையின் அடிப்படையிலும் பேதுருப் புலவர் இந்நூலைப் பாடினார்.
சந்தியாகுமாயோர் அம்மானை சாதாரண மக்களும் படித்துச் சுவைப்பதற்கேற்ற முறையில் அமைந்துள்ளது. கத்தோலிக்கம் இலங்கையில் பரவிய ஆரம்ப கட்டத்தில் அடி நிலை மக்களே அதிகமாக அம் மதத்தைப் பின்பற்றினர். அதனால் அவர்களுக்கேற்ற இலக்கிய வடிவமான அம்மானையில் பேதுருப்புலவர் புனிதரின் கதையைப் பாடியுள்ளார். எளிமையும் சுவையும் நிறைந்ததாகச் சந்தியாகுமாயோர் அம்மானை விளங்குகிறது.
கிருஷ்ணராசா,செ. (2000) இலங்கை வரலாறு (பாகம் 11) திருநெல்வேலி : யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். சதாசிவம்,ஆ. (தொகுப்பு)(1966) ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் கொழும்பு : சாகித்திய மண்டலம் சந்திரகாந்தன்,ஏ.ஜே.வி. (தொகுப்பு)(1993) தமிழ் பண்பாட்டில் கிறிஸ்தவம் திருநெல்வேலி : யாழ் பல்கலைக்கழகக் கிறிஸ்தவ மன்றம்
சிவலிங்க ராஜா,சி. (2003) ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, இரண்டாம் பதிப்பு, கொழும்பு : குமரன் புத்தக இல்லம். சிற்றம்பலம்,சி.க. (பதிப்பு) (1992) யாழ்ப்பாண இராச்சியம் திருநெல்வேலி : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, மனோகரன்,துரை. (1997)இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி கண்டி : கலைவாணி புத்தக நிலையம். நடராசா,க.செ. (1982) ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி கொழும்பு : கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
Abeyasinghe, Tikiri(1986) Jaffna Under the Perera, s.g. (1943) A History of Ceylon
இளங்கதிர் (2004 - 2005) (07) தமிழ்ச் சங்கம்

சிலாயப் பிரதேசச் சிறுதெய்வ வழிபாட்டில் காளி, கண்ணகி
நாராயணன் மல்லிகாதேவி, உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை.
இன்று தனித்துறையாக வளர்ச்சி கண்டிருக்கும் நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்வு முயற்சிகள் பலரினது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. நாட்டுப்புற வழக்காறுகளான நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப் பாடல் கள் , விடுகதைகள், கலைகள், விளையாட்டுக்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள் போன்றன, அவ்வப்பிரதேச மக்களின் பண்பாட்டம்சங்களையும் அவற்றின் மூலகங்களையும் அடையாளப்படுத்துவனவாக உள்ளன. இதுவே, இவ்வாறான ஆய்வு முயற்சிகளுக்குக் களமாக அமைகிறது எனலாம்.
பல்வேறுபட்ட இந்நாட்டுப்புற வழக்காறுகளுள் நாட்டுப்புற மக்களின் சிறுதெய்வ வழிபாடுகள் மிக முக்கிய இடம் பெறுகின்றன. இம்மக்களிடையே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது கிராமியத் தெய்வங்கள் குறித்த நம்பிக்கைகள் குறிப்பிடத்தக்கனவாயுள்ளன. இத்தெய்வங்களுக்கு வழிபாடுகள் இயற்றுவதன் மூலம் நோய் நொடிகள், துஷ்ட தேவதைகள் விலகவும், பிள்ளை வரம் வேண்டியும் மழை பெய்யவும் விரும்பிய எண்ணங்கள் கைகூடவும் இவர்கள் இத்தெய்வங்களை நம்பியே வாழ்கின்றனர். இத்தன்மை கிராமிய மக்களுக்கும் சிறு தெய்வங்களுக்குமிடையே காலங்காலமாக நிலவி வரும் நெருங்கிய பிணைப்பினை அடையாளப்படுத்துகிறது.
இதன்பொருட்டு இவர்களால் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறைகள் ஆகம விதிகளுக்கு முரணானவையாகவும் அச்சம் கொள்ளச் செய்பவையாகவும் புதுமையானவையாகவும் கூட இருப்பதைக் காணலாம். எனினும், மரபு ரீதியாகவும் தலைமுறை தலைமுறையாகவும் நடாத்தப்படும் இந்நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள் கிராமிய மக்களிடத்தில் மட்டுமன்றி இன்று ஏனைய நகர்ப்புற மக்கள் மத்தியிலும் வேற்று மொழியினரிடத்திலும் கூட செல்வாக்குப் பெற்றுத் திகழ்கின்றன.
அவ்வச் சமூக சூழ்நிலைகளுக்கேற்பவே இத்தகைய கிராமியத் தெய்வ வழிபாடுகள் இயற்றப்படுகின்றன. இதற்கமைய, சிலாபப் பிரதேச இளங்கதிர் (2004 - 2005) (08) தமிழ்ச் சங்கம்

Page 12
கிராமியத் தெய்வ வழிபாட்டம்சங்களும் முறைகளும் அச்சமூகச் சூழலுக்கு ஏற்பவே நிகழ்த்தப்படுகின்றமையைக் காணலாம். சிலாபப் பிரதேசத்தில் காளி, கண்ணகி, நாச்சியம்மன், ஐயனார் போன்ற சிறுதெய்வங்கள் காணப்படுவதுடன், அத்தெய்வங்களுக்கு சிறப்பான முறையில் ஆலயங்களும் எழுப்பப்பட்டுள்ளன. வருடந்தோறும் இத்தெய்வங்களுக்கு வழிபாடுகள் இயற்றப்பட்டாலும், இதில் காளி, கண் ணகையம்மனுக்குரிய வழிபாடுகள் சிறப்புக்குரியனவாக விளங்குகின்றன. இது, தமிழர் மத்தியில் மட்டுமல்லாமல் பல்வேறு பிரதேசச் சிங்கள இன மக்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
காளிடவழிபாடு
சிலாப நகரில் முன்னேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது இக் காளி கோயில். இது, ‘ழரீ மகா பத்ர காளி கோயில்’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இராவனேஸ்வரன் காளியை நவகாளியாகக் கண்டு வழிபட்ட ஸ்தலம் இதுவே என வரலாறுகள் கூறும். இதனால் இவ்வாலயம் மிகவும் பழம் பெருமை வாய்ந்த ஆலயமாகவே பலராலும் கருதப்படுகின்றது.
இவ்வாலயத்தின் வழிபாட்டு முறைமைகள் பெரும்பாலும் கிராமியத் தெய்வ செல்வாக்கிற்குட்பட்டு விளங்கினும், ஆலயத்தின் கட்டிட அமைப்பு ஆகம விதிகளுக்கு உட்பட்டதாய் அமைந்துள்ளது. காளி தேவி மூல மூர்த்தியாக வீற்றிருக்க ஆலயத்தினுள்ளும், வெளியிலும் பல்வேறு பரிவாரத் தெய்வங்களுக்கு சிறு சிறு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. நேர்த்தி மிக்க கட்டட அமைப்பைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு ஏழு வருடங்களுக்கு முன் கும் பாபிஷேகமும் சிறப்பான முறையில் செய்விக்கப்பட்டது. இவ்வாலயம் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவற்றையும் மூலஸ்தானத்தின் மீது அழகிய விமானத்தையும் கொணி டுள்ளது. ஆலய விமானத் திலும் சுவர் களிலும் சுற்றுப்புறங்களிலும் இந்திய சிற்ப வல்லுநர்களின் கலை வண்ணம் மிளிர்வதையும் காணலாம்.
தினமும் காலை, உச்சி, மாலை என மூன்று காலப் பூஜையும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நூற்று எட்டு லலிதா சகஸ்ர நாமமும் திங்கள் வியாழக்கிழமைகளில் ஆயிரத்தெட்டு லலிதா சகஸ்ர நாமமும் அம்மனுக்கு அர்ச்சிக்கப்படுவது வழக்கம். இளங்கதிர் (2004 - 2005) (09) தமிழ்ச் சங்கம்

இவ்வாலயத்தில் இடம்பெறும் விழாக்களில், வருடந்தோறும் ஆவணி மாதம் நடைபெறும் பத்து நாட்கள் கொண்ட உற்சவமும் நவராத்திரி விழாவும் குறிப்பிடத்தக்கனவாயுள்ளன. இவ்விரு விழாக் களிலும் நாட்டுப் புற வழக் காறுகள் தொடர்பான வழிபாட்டம்சங்களையே நாம் மிகுதியும் காணலாம். இவ்வகையில், கும்பம் வைத்தல், காப்புக்கட்டல், வேள்வி, மடைபரவல், வைரவர் மடை, அன்னதானம், காப்பு அவிழ்த்தல், பலியிடல், என இங்கு நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகள் பெரும்பாலும் சிறுதெய்வ வழிபாட்டுக் கூறுகளையே நினைவுபடுத்துகின்றன.
கும்பம் வைத்தல்
ஆகம விதிப் படி அமைத்த ஆலயங்களில் எவ்வாறு மகோற்சவத்தையொட்டிக் கொடியேற்றம் முக்கியத்துவப்படுத்தப் படுகின்றதோ, அதையொத்ததாக இவ்வாலய விழாத் தொடக்கத்திற்கு ‘கும்பம் வைத்தல்’ எனும் நிகழ்வு முக்கியத்துவப்படுகிறது. இதற்காக, முதலில் கும்பமொன்று தெரிவுசெய்யப்பட்டு அதைச்சுற்றி நூல் பின்னப்படும். பின், அக்கும்பத்தினுள் பல்வேறு மூலிகைகள் கொண்ட நீர் நிரப்பப்பட்டு அதன் மேல் மாவிலை மற்றும் தேங்காய் வைக்கப்பட்டு கும்பம் தயார்ப்படுத்தப்படும். பின்னர், நவதானியங்கள் முளைக்க விடப்படுவதற்கான ஆயத்தங்கள் இடம் பெறும். இதற்காகத் தெரியும் மண் ஆறு, கடல், புற்று ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் பெறப்பட்டதாக இருக்கும். அம்மண்ணை ஒரு வாழை இலையின் மீது பரப்பி, அதன் மேல் நவதானிய விதைகள் தூவப்படும், பின் அதன் நடுவில் தயார்ப்படுத்தப்பட்டிருந்த கும்பம் வைக்கப்பட்டு பூஜை நடைபெறும். இதுவே ‘கும்பம் வைத்தலாகும்
காப்புக் கட்டல்
‘கும்பம் வைத்தல்’ இடம்பெறும் நாளன்று ‘காப்புக் கட்டல்’ எனும் மற்றுமொரு சடங்கும் இடம்பெறும். சிறு மஞ்சள் துண்டொன்று நூலொன்றினால் கட்டப்பட்டு, கையில் கட்டப்படுவதே காப்புக் கட்டலாகும். ஆலய பிரதம பூசகர் உட்பட ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அனைத்து விக்கிரகங்களுக்கும் இக்காப்புக் கட்டல் எனும் சடங்கு நடைபெறும். காப்புக் கட்டப்பட்ட நாள் தொடக்கம் விழா நிறைவுறும் வரையில் காப்புக் கட்டப்பட்ட பூசகர் எக்காரணத்தைக் கொண்டும் ஆலயத்தை விட்டு வெளியே செல்ல இளங்கதிர் (2004 - 2005) (10) தமிழ்ச் சங்கம்

Page 13
மாட்டார். காப்புக் கட்டப்பட்ட இக்காலங்களில் ஆலய எல்லையில் உள்ள எவருக்கும் விஷப் பிராணிகளாலோ அல்லது தீய சக்திகளாலோ எவ்வித தீங்கும் நேர மாட்டாது என்பது இவ்வூர் மக்களின் உறுதியான நம்பிக்கையும் கண்கூடான உண்மையுமாக இருந்து வருகிறது.
இந்தப் பத்து நாட்களிலும், மூல மூர்த்தியான காளி தேவி உட்பட அனைத்துப் பரிவார தெய்வங்களுக்கும் தினமும் பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெறும்.
காப்பு அவிழ்த்தல்
விழாவின் இறுதி நாளான பத்தாம் நாள் காலை காப்பு கட்டப்பட்ட பூசாரி உட்பட ஆலய விக்கிரகங்களுக்கும் கட்டப்பட்ட காப்புக்கள் அவிழ்க்கப்படும் இதற்கு முன் நிகழ்வாக முளைக்கவிடப்பட்ட நவதானியங்கள் அறுக்கப்படும். பின், காப்பு அவிழ்க்கப்பட்டதும், அவிழ்க்கப்பட்ட இடத்தின் மீது அறுக்கப்பட்ட நவதானியங்கள் வைக்கப்பட்டு பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கும்ப நீர் எல்லா விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும்.
வேள்வியும் மடைபரவலும்
காப்பு அவிழ்த்தல் சடங்கு நிறைவுற்றதும் “வேள்வி ஆரம்பமாகும். வேள்வியில் நேர்த்திக்கடனுக்காக விடப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளும் கோழிகளும் பலியிடப்படும். பின்னர் பலியிடப்பட்ட மிருகங்களின் மாமிசத்தைக் கொண்டு மக்கள் உணவு சமைப்பர் சமைக்கப்பட்ட அவ்வுணவு காளி தேவியின் முன் மடையாகப் பரப்பப்பட்டு வழிபாடு நடாத்தப்படும். பின்னர், வைரவருக்கும் ஆடுகளும் கோழிகளும் பலியிடப்பட்டு, அவை சமைக்கப்பட்டு மடையாகப் பரப்பப்பட்டு பூஜைகள் இடம் பெறும். பின்னர் அங்கு குழுமியிருக்கும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
ஏனைய ஆலயங்களில் நவராத்திரி இறுதி நாளன்று ‘மானம்பூ இடம்பெறுவதைப் போன்று இங்கு இடம்பெறமாட்டாது, மாறாக இறுதிநாளான விஜயதசமி அன்று பலியிடப்பட்டு வைரவர் மடை’, அன்னதானம் போன்றனவே இடம்பெறும். இளங்கதிர் (2004 - 2005) (11) தமிழ்ச் சங்கம்

அன்னதானம் நிறைவுற்றதும் விழாவின் இறுதி நிகழ்வாக காப்பு அவிழ்க்கப்பட்ட பூசகர் வேட்டி சால்வை அணிவிக்கப்பட்டு தூப தீபம் காட்டப்பட்டவராய் மேள வாத்தியங்கள் முழங்க அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார். இத்துடன் இவ்விழா நிறைவுறும்.
ர்ணகி அம்மண்டவழி
பல தசாப்பதங்களுக்கு முன், சிலாப நகரில் திமிலை எனும் பிரதேசத்தில் அமைந்த ஒரு காட்டின் மாமரம் ஒன்றிற்குக் கீழ் பிள்ளையார் சிலையொன்றும் அச் சிலைக் கருகிலிருந்து அம்மானைக் காயப் கள் சிலவும் கணி டெடுக் கப்பட்டுள்ளன. அவ்வம்மானைக்காய்களைக் கண்ணகிக்குரியனவாகக் கொண்ட அப்பிரதேசவாசிகள் அதுமுதல் இன்று வரையில் அவ்விடத்தில் கண்ணகிக்கு சிறிய ஆலயம் ஒன்றையும் அமைத்து வழிபாடு இயற்றி வருவதைக் காணலாம். இவ்வாலய வழிபாடுகள் மற்றும் பூசைகள் யாவும் தலை முறை தலைமுறையாகவே நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்ணகியை மூல மூர்த்தியாகக் கொண்டுள்ள இவ்வாலயம் இன்று சற்று விசாலிக்கப்பட்டு ஆலயத்தைச் சூழ பிள்ளையார், முருகன், காளி, இடும்பன், வீரபத்திரர் போன்ற தெய்வங்களுக்கு சிறு சிறு ஆலயங்கள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன.
இவ்வாலயம் வயல்வெளிகளாலும் தென்னந் தோப்புக்களாலும் சூழப்பட்டுத் தனிமையான சூழலில் அமைந்து காணப்படுகிறது. இதனால் அம்மனுக்குத் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதில்லை. எப்போதாவது அடியார்கள் இவ்வாலயத்திற்கு வருகை தந்தால், அவர்களுக்காகவே கோயில் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். எனினும் வருடந்தோறும் இவ்வாலயத்தில் இடம்பெறும் ஐந்து நாட்கள் கொண்ட உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவர். கொடியேற்றம், சக்திக்கரகம், விஷேட பூஜை, மஞ்சள் நீராடல் தீர்த்தம், இடும்பன் பூஜை எனும் ஐந்து நிகழ்வுகளும் இவ்வைந்து நாட்களிலும் சிறப்புற இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கும்.
இளங்கதிர் (2004 - 2005) (12) தமிழ்ச் சங்கம்

Page 14
வைகாசி விசாகத்தில் வற்றாப்பளை அம்மன் பொங்கலன்று இவ்வாலயத்தில் கொடியேற்றப்படும். முதல் நாள் இரவு இதற்காக ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும். அடுத்த நாள் காலை கண்ணகி உட்பட ஆலய பரிவாரத் தெய்வங்கள் அனைத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெறும். பின்னர் பிராமண ஆசாரியார் ஒருவரினால் ‘புண்ணியதானம்’ எனும் பெயரில் ஒரு சிறு சடங்கு நடாத்தி முடிக்கப்பட்டு அவர் சென்றதும், ஆலய முன்றலில் கொடியேற்றம் ஆரம்பமாகும்.
முதலில், கொடிமரத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் ஒரு தட்டில் வைக்கப்பட்டு, ஆலய பூசகர் அதனை ஏந்திய வண்ணம் மூன்று முறை ஆலயத்தை வலம் வருவார். அவ்வேளையில் அவரின் மீது தெய்வம் ஏறியிருக்கும். இதை இவர்கள் ‘சந்நதம்’ அல்லது ' உரு’ என்றழைக்கின்றனர். பின்னர், மூலஸ்தானத்தை வந்தடைந்ததும் கோயில் உற்சவத்திற்கு தீங்கு ஏதும் நடக்கவிருப்பின் அதுகுறித்து கோயில் பரம்பரையைச் சாரந்த யாராவது ஒருவரிடம் குறி சொல்லுவார். பின், சந்நதம் நீங்கியவராகக் காணப்படுவார். இதை இவர்கள் ‘மலையேறல்’ என்பர்.
இதைத்தொடர்ந்து, கொடியேற்றத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும். கோயில் முன்றலில் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ஒற்றை எண்ணிக்கை கொண்டோரினால் அதற்கு மஞ்சள் தடவப்படும். பின்னர், கொடிமரத்திற்கடியில் தர்ப்பைப் புல்லும் வேப்பிலையும் சேர்த்துக் கட்டப்பட்டு கொடியேற்றப்படும். கொடியேறியதன் பின் கோயில் பிரதம பூசகர் வெண்பொங்கலும் உபயகாரர் சர்க்கரைப் பொங்கலும் பொங்குவர், இத்தினம் நவதானியமும் முளைக்க விடப்படும்.
கொடியேற்றம் முதல், ஆலய உற்சவங்கள் யாவும் நிறைவுறும் வரை அவற்றைப் பொறுப்பாக நின்று செய்பவர் இங்கு பட்டையம்’ என்றழைக்கப்படுவார்.
இரண்டாவது நாள் சக்திக் கரகம்’ எடுத்தல் இடம்பெறும். இத்தினத்தில் பட்டையம் கண்ணகியை மூலஸ்தானத்திலிருந்து வெளி மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து அலங்கரிப்பார்.
இதனைத்தொடர்ந்து கரகம், அக்கினிச்சட்டி எடுத்தல் என்பன இடம்பெறும். இதற்குத் தேவையான கரகம், அக்கினிச்சட்டி, வேப்பிலை, இளங்கதிர் (2004 - 2005) (13) தமிழ்ச் சங்கம்

தென்னம்பூ, வேல், எலுமிச்சை, விறகு, உமி, முட்டை, சேவல், சந்தனம், குங்குமம், திருநீறு, காப்புக்கயிறு, வேட்டி போன்றன பட்டையத்தால் தீர்த்தக் கரைக்குச் சுமந்து செல்லப்படும். இவரைத்தொடர்ந்து அக்கினிச்சட்டி, கரகம் ஏந்தும் இரு பூசகர்களும் பக்தர்களும் சேவண்டி, சங்கு, நாட்டுப்பறை, மணி போன்ற நாட்டுப்புற வாத்தியங்கள் முழங்க பின்னால் செல்வர்.
தீர்த்தக்கரையில் காணும் ஒரு மருத மரத்தின் கீழ் கரகத்திற்குத் தேவையான நீர் அள்ளப்பட்டு கரகம் அலங்கரிக்கப்படும். அக்கினிச் சட்டியும் அவ்விடத்திலேயே தயார் செய்யப்படும். இவ்விரண்டையும் சுமந்து செல்லும் பூசகர்களும் அத்தீர்த்தக்கரையில் நீராடி அவர்களுக்கான வஸ்திரங்களை அணிந்ததன் பின், தெய்வமாகக் கருதப்படும் அம்மருத மரத்திற்கும் சந்நதம் வந்து ஆடத்தொடங்குவர். கையில் அக்கினிச்சட்டி ஏந்துபவர் கையில் சிலம்பு கொண்டு ஆடுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையில் உற்சவ தினங்களில் பூஜைகளுக்கு ஏதும் பாதகங்கள் நடக்கவிருந்தால் இருவராலும் குறி சொல்லப்படும். பின்னர் ‘காவு கொடுத்தல்’ எனும் பெயரில் அவ்விடத்தில் ஒரு சேவல் பலியிடப்படும். அக்கினிச் சட்டி ஏந்துபவர் அச்சேவலின் இரத்தத்தைக் குடித்து விட்டு அதைக் காட்டில் எறிவார். பின்னர் நாட்டுப்புற வாத்தியக் கருவிகள் முழங்கக் கோயிலை நோக்கி வருவர். வரும் வழியில் பலியிடல் எனும் பெயரில் முட்டைகள் வீசியெறியப்படும்.
கோயிலை வநீ தடை நீததும் , கரகம் கணி ணகி மூலஸ்தானத்திலும், அக்கினிச்சட்டி இடும்பன் மூலஸ்தானத்திலும் இறக்கப்படும். பின்னர், சந்நதம் வந்தாடும் இரு பூசாரிகளிடத்தும், அடியார்கள் தம் குறை கூறிக் குறி கேட்க அவர்களும் குறி சொல்வர். இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றலில் பொங்கல், அன்னதானம் போன்றன சமைக்கப்பட்டு, மடைபரப்பப்பட்டு பூஜை நடைபெற்ற பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இத்தினம் இரவு தேவாரங்கள் ஒலிக்க அம்மனை ஒரு சிறிய தேரில் ஆலயத்தை வலம் வரச் செய்வர். இத்தேரை இவர்கள் ‘கேடகம்’ என்றழைக்கின்றனர்.
மூன்றாம் நாள் நடைபெறும் நிகழ்வுகளை ‘விசேட பூஜை என்ற பெயர் கொண்டழைக்கின்றனர். இன்று, மறுபடியும் இரு பூசகர்களும் கரகம், அக்கினிச் சட்டி ஏந்திய வண்ணம் சந்நதம் இளங்கதிர் (2004 - 2005) (14) தமிழ்ச் சங்கம்

Page 15
வந்தாடுவர். பிறகு, அவற்றை ஏந்தியவர்களாய் அடியார்கள் புடைசூழ அவ்வூரில் காணும் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு இயற்றுவர். ஒவ்வொரு ஆலய முன்றலிலும் பட்டையத்தால் தேங்காய் உடைக்கப்படும்.
இவ்வூர்வலத்தின் முன் ஒருவர் கையில் வேல் ஏந்திச் செல்ல, ஊரவர் தங்கள் வீட்டு வாயில்களில் கும்பம் வைத்திருப்பர். இரு பூசகர்களும் தங்கள் தங்கள் வீட்டு வாயில்களை அண்மிக்க அவர்கள் பாதங்களில் கும்ப நீரை ஊற்றி வழிபடும் பக்தர்களுக்கு சந்நதம் வந்தாடும் பூசகர்கள் குறி சொல்லிச் செல்வர்.
இறுதியில் கோயிலை வந்தடைந்ததும் பொங்கல், அன்னதானம் போன்றன தயார்ப்படுத்தப்பட்டு மடைபரவப்படும்.
நான்காம் நாள் இடம்பெறுவது மஞ்சள் நீராடல் தீர்த்தம், என்பதாகும் . மூன்றாம் நாள் இரவு மீணி டும் கோயில் சுத்தப் படுத்தப் பட்டு புதிய வாழை மரங்கள் நடப்பட்டு அலங்கரிக்கப்படும். அடுத்த நாள் காலை, ஆலய முன்றலில் இரு அடுப்புக்கள் மூட்டப்பட்டு ஒன்றில் மஞ்சள் நீரும் இன்னுமொன்றில் பாலும் கொதிக்க விடப்படும். இதில் விஷேஷம் என்னவெனில், இரு அடுப்புக்களும் தென்னம் பாளையைக் கொண்டே எரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மஞ்சள் பானையைச் சுற்றி அடியார்கள் பொங்கலிடுவதுடன் சிலர் கும்மியடித்து அம்மன் புகழ் பாடுவதும் வழக்கம்.
பானைகளில் பாலும் மஞ்சளும் நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் சந்நதம் வந்தாடும் இரு பூசகர்களும் மஞ்சள் நீராட ஆயத்தமாவர். இருவரும் பானைகளுக்கருகில் வந்தடைந்து தென்னம்பூவும், வேப்பிலையும் கையில் கொண்டு கொதி நீரில் அதைத் தோய்த்து நீராடுவர். நீராடல் நிறைவுற்றதும், மக்களுக்கு குறியும் சொல்லப்படும்.
பின்னர் இருவரும் கரகம், அக்கினிச்சட்டி ஏந்தியவர்களாய் سمبر கோயிலை வலம் வந்து வளர்ந்திருக்கும் நவதானியத்தையும் எடுத்துக் கொண்டு வேல், வாள் சகிதம் தீர்த்தக்கரையை நோக்கிச் செல்வர். அங்கு முதலில் நவதானியத்தை நீரில் விடுவர். பின்னர், அக்கினிச்சட்டி ஏந்தியவர் அக்கினிச் சட்டியுடன் நீரில் குதிப்பார். அவரைத்தொடர்ந்து கரகம் வைத்திருப்பவர் கரகத்துடன் நீரில் இளங்கதிர் (2004 - 2005) (15) தமிழ்ச் சங்கம்

குதிப்பார். இவ்வேளை, கரகத்தில் இடப்பட்டிருக்கும் பணம், வேப்பிலை போன்ற பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் முண்டியடிப்பர். இவற்றை வீடுகளில் வைத்திருப்பதால் வளம் கொழிக்கும் என்பது அடியவர்களின் நம்பிக்கையாக உள்ளது. பின்னர் அவ்விடத்தில் இருக்கும் மருத மரத்திற்கும் பூசகர்களுக்கும் தீபதூபம் காட்டப்பட்டதும், சந்நதம் நீங்கியவர்களாக இருவரும் ஆலயம் நோக்கி வருவா.
மீண்டும் இரவு, கண்ணகியைக் கோயிலைச் சுற்றி வலம்வரச் செய்து, அம்மனை மூஸ் தானத்திற்கு எழுந்தருளச் செய்து கதவடைப்பர். இத்தினம் இரவு, பன்னிரண்டு மணியளவில் வீரபத்திரனுக்கு பொங்கலிடும் நிகழ்வு ஆரம்பமாகும். காவு கொடுத்தல் எனும் பெயரில் பல சேவல்களும் ஆடுகளும் பலியிடப்படும். பின், வீரபத்திரனுக்கு கள் போன்ற பலவித போதைப் பொருட்கள் படைக்கப்பட்டு வழிபாடு நடாத்தப்படும். இத்தருணம் பூசகர் சந்நதம் வந்தாடி மக்களுக்கு குறியும் சொல்வார்.
இது நிறைவுற்றதும் மீண்டும் இரவு மூன்று நான்கு மணியளவில் மாடன்சாமி எனும் மற்றுமொரு நாட்டுப்புறத் தெய்வத்திற்குப் பூசை ஆரம்பமாகும். அக்கினிச் சட்டி ஏந்தியவரின் மேல் மாடன் சாமி வர அவர் ஆடத்தொடங்குவார். பின்னர் நேர்ததிக்கடனுக்காக விடப்பட்டிருக்கும் ஆடு, கோழி போன்றன பலியிடப்பட்டு அவற்றின் இரத்தத்தைக் குடித்த பூசகர் ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு ஆடுவார். அவ்வேளை பலரும் குறிகேட்டு குறி சொல்லலும் இடம்பெறும்.
பின்னர், பலியாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவு மாடனுக்கு மடையாகப் பரப்பப்பட்டதன் பின், அடியவர்களுக்கு அன்னதானமாகவும் இடப்படும். இங்கு விசேடமாக *காயம் இடித்தல்’ எனும் நிகழ்வு இடம்பெறும், அதாவது பலவித மூலிகைகள் உரலில் இடிக்கப்படும். இக் கலவையையே காயம்’ என்பர். இது அடியவர்களுக்கு உணவாக வழங்கப்படுவதுடன் மாடனின் மடையில் கலந்தும் வைக்கப்பட்டு வழிபாடு இயற்றப்படும். இத் தினம் அடியவர்களால பொங்கலும் அன்னதானமும் வழங்கப் படுவதுடன் , ஆலய பு,சகரினால பொங் கல வைக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஆலய உற்சவங்கள் நிறைவுறும் நிலைக்கு வரும். இாங்கதிர் (2004 - 2005) (16) தமிழ்ச் சங்கம்

Page 16
அடுத்த நாள் காலை மீண்டும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு மூலஸ்தானக் கதவு திறக்கப்படும். இத்தினம் ஆலய பரம்பரையைச் சார்ந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர், கண்ணகி உட்பட எல்லா விக்கிரகங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதும் அம்மனுக்குரிய பொருட்கள் யாவும் சுத்தம் செய்யப்பட்டு பெட்டகத்தில் வைத்துப் பூட்டப்படும். அதனைத்தொடர்ந்து காளிக்கு விசேட பூசை ஆரம்பமாகும். காளி தேவிக்காக சேவல் பலியிடப்பட்டு, பொங்கலும் வைக்கப்பட்டு மடை பரவப்படும். இதன்பொருட்டு காளிக்காகத் தனியான கும்பமும் வைக்கப்படும், இங்கு பரவப்பட்ட மடையை பட்டையம், கோயில் பரம்பரையினர் மட்டுமே உணவாகக் கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
காளி பூசையைத் தொடர்ந்து இடும்பன் பூசை இடம் பெறும். இதை ‘உதிர வாய் துடைத்தல்’ என்றழைப்பர். இங்கும் பலியிடப்பட்டு மடை பரவப்படும். இவ்வுணவு பிரதம பூசகர், அக்னிச்சட்டி ஏந்தியவர், பட்டையம் முதலானோரால் மட்டுமே உண்ணப்படும்.
இந்நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றதும், கோயில் மூடப்படும். மீண்டும் ஆறு நாட்களின் பின்னரே கோயில் திறக்கப்படும். இதைக் கதவு திறத்தல், என்பர். இதற்கு முன் எக்காரணத்தைக் கொண்டும் கோயில் திறக்கப்படமாட்டாது. ஆறு நாட்களின் பின்னர் கோயில் திறக்கப்பட்டதும், கோயில் நீரால் சுத்தம் செய்யப்பட்டு, எல்லா விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் இடம்பெற்று பின்னர், வழக்கமான ஆலய பூஜைகள் ஆரம்பமாகும்.
இவ்வாலய விழாவின் போது, வில்லுப்பாட்டு கும்மி போன்ற கிராமியக் கலைகள் நிகழ்த்தப்பட்டு கண்ணகி வரலாறு பாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விரு ஆலய வழிபாட்டு நிகழ்வுகளிலும் சிறுதெய்வ வழிபாட்டுக் கூறுகளின் செல்வாக்கை நாம் மிகுதியும் காணலாம். அடியவர்கள் பிள்ளை வரம் வேண்டியும், நோய் நொடிகளிலிருந்து விடுபடவும், விரும்பிய எண்ணங்கள் கைகூடவும் இவ்வாலயங்களில் வழிபாடு இயற்றுவதனைக் காணலாம். இத்தன்மை தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சிங்கள இனத்தவர் மத்தியிலும் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கின்றது.
இன்று பிராமண ஆதிக்கமும் ஆகம முறையிலமைந்த பூஜை முறைகளும் மரபு - வழியாக வரும் பூசகர்களின் வெளியேற்றமும் இச்சிறுதெய்வ பண்பாட்டம்சங்களைச் சிறிது சிறிதாக மாற்றமுறச் செய்துகொண்டு வருதனை அவதானிக்கலாம். இவ்வாறு இந்துத்துவம் எனும் பெயரில் மறைந்து கொண்டுவரும் இந்நாட்டுப்புறப் பண்பாடுகளும் மரபுகளும் பேணப்படுவது அவசியமாகின்றது. இளங்கதிர் (2004 - 2005) (17) தமிழ்ச் சங்கம்

്ര
பேசாத நிசப்ரீதத்தில் உறங்காத விழிப்பில் யாருமற்ற தனிமையில் நீயே எல்லாமுமாகி
வார்த்தையும் உறக்கமும் தந்து தலைகோதி என் தனிமைதுரத்தும்
எல்லாமுமாகி .
செல்வி. ஜெஸிமா ஹமீட், உதவி விரிவுரையாளர், வரலாற்றுத்துறை.
அந்தராத்மாவாய் அருகிருக்கிறாய்.
ஆருயிரென அடிக்கடி எழுதிப்பார்த்ததுண்டு. வாழ்ந்து பார்த்ததென்னவோ நீ வந்த பின் தான். பிரிவென்றால் இமை வரைக்குமேனும் ஈரம் எப்போது மிகுந்ததில்லை. அழுதே கரைந்து போனது
நீ பிரிகிறாய் என்ற போதுதான்.
சாத்தியமற்றதன் பாதையொன்றில் உனக்குமெனக்குமான விபத்து நிகழாதே போயிருந்தால் இத்தனை வருத்தமேன் ..?
哈 நிம்மதியின் வரமாகவே காட்சி தந்தாய். சோகத்தின் சாபங்களை யார் விதைத்தது .?
இப்போதெல்லாம் என் மனவானம் கண்ணிரை மட்டுமே பூக்கிறது. எங்கே
என்னுயிர் கரைந்து தொலைந்திடுமோவெனத்தான் அடிக்கடி
பயப்படுகிறேன்.
தோழி,
அடிக்கொரு தரம் எனை சுகம் விசாரித்துவிடேன். அப்படியேனும்
கொஞ்சம்
உயிர் வாழ்ந்து கொள்கிறேன்.
இளங்கதிர் (2004 - 2005)
தமிழ்ச் சங்கம்

Page 17
கனகிபுராணம் : ஒரு பண்பாட்டுச் சிதைவிண் குறிகாட்டி
கலாநிதி V. மஹேஸ் வரன், தமிழ்த்துறை.
ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து புதிய சிந்தனை மரபுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. பாரம்பரிய மரபுசார் இலக்கிய முறைமைகளிலிருந்து மாறுபட்டு, பகுத்தறிவு, வரலாற்றுணர்வு, ஆங்கில அறிவு, சமூகநோக்கு முதலிய பண்புகளைத் தழுவிநின்று இலக்கணம், இலக்கியம், வரலாறு அறிவியல் ஆகிய துறைகளில் உழைத்த இலங்கையர்கள் பிற்காலத்தில் நினைவுகூரத்தக்க ஆக்கங்களைச் செய்தனர். இந்தவகையில் செய்யுள் இலக்கியத்தில் சமூகநோக்கை அக்காலத்தில் முன்வைத்தவர்களாக உடுப்பிட்டி குமாரசாமி முதலியார் (1791 - 1874) (கொள்ளை நோய் பற்றியும் கொடிய பஞ்சம் பற்றியும் (1846 - 67) ஐந்து கீர்த்தனைகள்), நட்டுவச் சுப்பையனார் (கனகி புராணம்) நீ. காசிநாதப் புலவர் (1796 - 1854) (தால புராணம் அல்லது பனங்காய்ப் புராணம்) கோப்பாய் வே. இராமலிங்கம் (கோட்டுப் புராணம்) தி. த. சரவணமுத்துப்பிள்ளை (தத்தைவிடு தூது) ஆகியயோரைக் குறிப்பிடுவது மரபாகிவிட்டது. இவற்றுள் கனகி புராணம் எழுந்த சூழல், அதன் வரலாற்றுப் பின்னணி, அத்தகையதொரு அங்கத் இலக்கியம் சுட்டி நிற்கும் பண்பாட்டின் சிதைவு முதலிய விடயங்iள் பற்றியே இக்கட்டுரை ஆராய்கின்றது.
கனகி புராணம் பற்றிய தகவல்கள் பாவலர் சரித்திர தீபகத்திலிருந்தும், செவிவழிச் செய்திகளுமாகவே எமக்குக் கிடைத்துள்ளன. இந்த இலக்கியம் ஏழாலையைச் சேர்ந்தவரும் வண்ணார் பண்ணையில் வகித்தவருமாகிய மேளகாரப் பகுதியைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையனார் என்பவரால் பாடப்பட்டதென்றும், அதில் 400 செய்யுட்கள் இருந்திருக்க வேண்டுமென்றும், சிலவே நமக்குக் கிடைத்தன என்றும் பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இது பின்நாட்களில் குறைச் செய்யுட்களுடன் நூலுருப் பெற்றது. நவாலி. சி.கந்தையா பிள்ளை என்பவர், நீர்வேலியைச் சேர்ந்த சி. சிற்சபேசன் என்பவர் தமது ஞாபகத்திலிருந்து சொல்லிய சில செய்யுட்களைத் தொகுத்து கனகிபுராணம் (தெரிகவிகள்) என 1937 இல் அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் கந்தையா பிள்ளையின் பதிப்பு இளங்கதிர் (2004 - 2005) (19) தமிழ்ச் சங்கம்

தவறானது என்று கருதிய வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் சில செய்யுட்களை 1961 இல் பதிப்பித்தார். கந்தையா பிள்ளையின் பதிப்பில் காப்பு, நாட்டுப்பாடல், மகளிர் புனலாடச் செல்லல், சுயம் வரப் படலம், வெட்டை காண் படலம் என்ற உப பிரிவுகளுடன் 29 செய்யுட்கள் காணப்படுகின்றன. இராமலிங்கம் பதிப்பில் காப்பு, நாட்டுப் படலம், சுயம்வரப்படலம், வெட்டை காண் படலம் எனும் பிரிவுகளுள் 25 செய்யுட்களே அச்சேறியுள்ளன. எமக்குக் கையளிக்கப்பட்ட மேற்குறித்த செய்யுட்களை ஆதாரமாகக் கொண்டும் ஊகங்களினடிப்படையிலுமே இவ்வாய்வைக் கட்டமைக்க வேண்டியுள்ளது.
கனகி புராணத்துச் செய்யுட்களாலும், பிறவாய்மொழித் தரவுகளாலும் அறியப்படும் கனகி புராணம் பற்றிய செய்தி இது தான் - வண்ணார் பண்ணைச் சிவன் கோயிலில் (வைத்தீசுவரன் கோயில்) கோயிற் பெண்டாகப் பணி புரியும் கனகி என்னும் தேவரடியாள் தனது பொருளியல் தேவைகருதி பொதுமகளாக மாறிய போது, அவளை அனுபவிக்கப்பலர் முனைந்தனர் என்றும் அவ்வாறு அவளிடம் சென்று வந்தவரிற் பலர் வெட்டைநோய் (மேகநோய்) என்னும் நோயால் பீடிக்கப்பட்டுத் துன்புற்றனர் என்பதுமேயாகும். இதனை வேடிக்கையாக அங்கதச் சுவையுடன் நூலாசிரியர் பாடியுள்ளார்.
II
கனகி புராணத்தை வெறுமனே அங்கத இலக்கியம் என்ற வரையறைக்குள் தள்ளிவிட முடியாது. இதனாலேயே பாவலர் சரித்திர தீபக ஆசிரியர், பேராசிரியர்கள் க. கணபதிப் பிள்ளை, பொ. பூலோக சிங் கம், க. கைலாசபதி ஆகியோர் இது பற்றி மிகவும் அவதானத்துடன் குறிப்பிட்டனர். சதாசிவம் பிள்ளை கனகிபுராண ஆசிரியரை “சரளநடைப் புலவர்” என வருணிக்கிறார்.
இவர் இயற்றிய கனகி சுயவரம் என்னும் நூல் இவரது இயற்கைப் புலமைத் திறமையையும், வருணனைச் சிறப்பையும், புத்தி சாதுரியத்தையும் நன்கு தெரிவிக்கின்றது. இந்நூலில் அக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பிரபுக்களைப் பற்றியும் பல சுவையான செய்திகள் மலிந்துள்ளன என்கிறார், க.கணபதிப்பிள்ளை.
பெ. பூலோகசிங்கம் இதனை அங்கத இலக்கியத்தின் சிறந்த எடுத்துக்காட்டு என்றும், சமூக சீர்திருத்த நோக்குடையது என்றும் குறிப்பிடுகின்றார்." இளங்கதிர் (2004 - 2005) (20) தமிழ்ச் சங்கம்

Page 18
“புராணம் என்ற சட்டகத்தை வைத்துக் கொண்டு பிரபுத்துவ உலகையே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார், புலவர். பள்ளுப் பிரபந்தங்களில் பண்ணைக்காரரையும் பண்ணை விசாரிப்பான்களையும் கிண்டல் செய்யும் போக்கில் அமைந்த அங்கதத்தின் குரலை இப்பாடல்களிற் கேட்கலாம். அக்காலப் பிரபுக்களின் சீரழிந்த ஒழுக்க நெறியினையும், பொதுவான தார்மீக வீழ்ச்சியினையும் நுண்ணிய அநுபவ உணர்வுடன் “கனகி புராணம்’ சித்தரிக்கின்றது என்று கருதுதல் மிகையாகாது” என்று க. கைலாசபதி குறிப்பிடுகின்றார்.
மேற் குறித்த கூற்றுகளிலிருந்து இரு விடயங்கள் புலானாகின்றன.
01. புராணவடிவம் என்பது அங்கத இலக்கிய வடிவமாக
உருமாற்றம் பெற்றமை. 02. யாழ்ப்பாணத்துப் பிரபுத்துவ கலாசாரத்தின் சீரழிவு
என்பவையே அவையாகும். இவற்றை நுனித்துப் பார்த்தல் அவசியமானதாகும்.
III
புராண மரபு என்பது தொன்மையானது. வடமொழியில் உருவான இம்மரபில் பஞ்ச இலட்சணம் என்ற இலக்கண வரன் முறையும், அதற்கேற்றாற் போல் எழுந்த பதினெண் புராணங்கள், உப புராணங்கள் என்ற பாரம்பரியமான மரபொன்றும் அதற்குண்டு. இப் புராணங்கள் தமிழிற்கு மிகப் பிற்காலத்திலேயே அறிமுகமாயின. இவற்றுக்குப் புறம்பாகத் தமிழில் புராணமரபு ஒன்று உருவாகியது. பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவை தமிழ்ப் புராண மரபின் வளர்ச்சியைக் காட்டுவன. இவற்றின் தொடர் விளைவாகத் தலபுராணங்கள் பல தமிழில் எழுந்தன. இன்னுஞ் சில காலங்களின் பின் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் என விரத மகிமைகள் புராணங்களாயின. இவற்றின் கடைக்கூறில் தால புராணம், கோட்டுப் புராணம், கனகி புராணம் என அவை குறுத்துப் போய் விட்டன.
உலகத் தோற்றம் (சர்க்கம்) உயிரிகளின் தோற்றம் ஒடுக்கம் (பிரதி சர்க்கம்), மன்னர் பரம்பரை கூறுதல் (வம்சம்), காலவரையறை, மநுக்களின் ஆட்சிக் காலங்களையும் கூறுதல் (மநுவந்தரம்), மன்னர் இளங்கதிர் (2004 - 2005) (21) தமிழ்ச் சங்கம்

பரம்பரையுடன் தொடர்புடைய கிளைக்கதைகளைக் கூறுவது (வம்சானு சரிதம்) என்ற பஞ்ச லட்சணங்களுக்கு அமைவாகப் புராணங்கள் எழுந்த காலம் போய், அவை சமூகமயப்படுத்தப்பட்டு அல்லது ஒரு துறை சார்ந்ததாக மாற்றியமைக்கப்பட்டு, இன்னும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற பிராந்திய வரையறைகளுக் குட் பட்டுத் தலபுராணங்களாகி, பழைய கதை அல்லது வரலாறு கூறுதல் என்ற வகையில் விரத மகிமைக் கதைகளாகி, இறுதியில் புராணம் சொல்லுதல் , சுய புராணம் பாடுதல் என்றவாறெல்லாம் நகைப்புக்குள்ளாகி, இவ்வடிவம் சென்று தேய்ந்து இற்று இறந்து போகிற சூழலில் தான் புராணம் என்பதை புனிதமான இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்கின்ற மரபிலிருந்து வழுவி, புராணத்தை அங்கத இலக்கியமாகவும் காண முற்பட்டனர். ஆயின், அந்த அங்கதத்தினூடு சமூக நோக்கும் சேர்ந்து செயற்பட்டதால் பழைய வடிவத்தில் புதிய சங்கதிகள் உருவாகின.
IV
கனகி புராணத்தினுTடாக வெளிவருவது யாழ்ப்பாணப் பிரபுத் துவக் கலாசாரத்தின் சீரழிவு என்று குறிப்பிடலாம் . யாழ்ப்பாணத்துப் பிரபுத்துவ முறைமை என்பது தமிழ்நாட்டில் உள்ளது போன்ற பண்ணையார் முறைமையோ அல்லது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது போன்ற போடியார் முறைமையோ அல்ல. பெரிய நிலவுடமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை. எனினும், விவசாயக் காணிகளின் உடைமை, அரசாங்க அநுசரணைகளால் ஏற்பட்ட கிராமத் தலைமை. அதிகாரம், வியாபாரத்தினால் ஏற்பட்ட பொருள்வளம் ஆகியவற்றை உடையவர்களே பிரபுக்களாகவிருந்தனர். இவர்கள் தமது செல்வம், செல்வாக்கு ஆகியவற்றுடன் சாதீயக் கட்டுமானத்திலும் உயர்ந்திருந்ததால் பிரபுத்துவத்தின் தொடர் விளைவான அடிமை, குடிமை முறைகளும் இங்கு நீடித்தன. இவர்களிற் சிலர் புலவர்களை ஆதரித்துமுள்ளனர். நல்லூர் சின்னத் தம்பிப் புலவர் பாடிய கரவைவேலன் கோவை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்தப் பிரபுத்துவக் கலாசாரத்தின் வாரிசுகள் தமக் கிருந்த செல்வம் செல் வாக்கினால் நெறி கெட்டு, மதுக்கடைகளிலும், சூதுப்பனைகளிலும், தாசியர் வீட்டிலும், சதுர்க் கச்சேரிகளிலும் காலத்தைச் செலவிட்டு தாமும் அழிந்து பொருளையும் அழித்த கதைகள் யாழ்ப்பாணத்தில் வாய்மொழி மரபாகப் பல நிலவி வருகின்றன. இந்தப் பின்புலத்தில் தான் கனகி வீட்டிற்கு விஜயம் செய்யும் கனவான்களை இனங்காண முடிகின்றது. இளங்கதிர் (2004 - 2005) (22) தமிழ்ச் சங்கம்

Page 19
பகட்டான ஆடை அணியும் மானிப்பாயார் மல்லாகத்து வீரர், நவாலியார் புத்தூர் மணியம், வட்டுக்கோட்டைச் சுப்பு, கோப்பாய் முத்துக்குமாரு, ஆனைக் கோட்டை வேளாளன் ஆறுமுகன், உடுவில் சொத்தி, ஊர்க்காவற்றுறை மணியம், கோப்பாய் மணியம் எனப் பல ஊர்களைச் சேர்ந்தவர்களும் கனகியின் கடைக் கணி நோக்கிற்காகத் தவங்கிடப்பதாகக் கவிஞர் குறிப்பிடுகின்றார். இவர்களது பெயர்களுடன் அவர்களது செயல்கள் பற்றி அங்கதமாக அவர் விபரிக்கின்றார்.
“உன்னைப் புணரும் அவாவுடையோன் எப்போதெனினும் உணதேவலாங்கெயென்று திரி யுமிவன் சுப்பிரமணியன் பெற்றெடுத்த சூனன் இவன் காண் நேரிழையே’
என்றும்
“தெருவினிற் சனிபோலிருந்து நினைத் தேடித் தேடித் தியங்கு சிவப் பிரகாசம் பேர் படைத்தவன் காண் பின்னோன் தம்பி இவனாமே”
என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். இதனைப் ‘புராணம் எனும் சட்டகத்தை வைத்துக் கொண்டு பிரபுத்துவ உலகையே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார் புலவர்’ எனக் கைலாசபதி குறிப்பிடுகின்றார். இவர்கள் மட்டுமல்ல நெல்லுக்கணக்கைப் பொய்யாகக் காட்டி ஊழல் புரிந்த வட்டுக்கோட்டை நெற் கணக்கில் வாழுஞ் சுப்பு, கோயில் பூசாரியான களஞ்சியக் குருக்கள், கோயில் தொண்டு புரியும் பண்டாரம், புடைவை வியாபாரம் செய்யும் நாட்டுக் கோட்டைச் செட்டி, கிறிஸ்தவனான நியூட்டன், திருகோணமலையைச் சேர்ந்த பிரபு சின்னையன் எனப் பலபேரும் கனகி தரிசனத்திற்காகக் காவலிருந்ததாக அவர் குறிப் பிடுகிறார். கனகியிடம் இவ்வாறானவர்கள் வந்தனரோ, இல்லையோ இவ்வாறான கலாசர சீர்கேடு ஒன்று இல்லாதிருந்தது என்று யாரும் மறுத்துக் கூறிவிட (ԼՔԼԳեւ ITՖl.
V
மேற்குறித்த விடயங்களுக்குப் புறம்பாகக் கனகிபுராணம் இன்னோரு பண்பாட்டுச் சிதைவின் எச்சமாகவும் இருந்துள்ளது இளங்கதிர் (2004 - 2005) (23). தமிழ்ச் சங்கம்

என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. தமிழகக் கோயில் வரலாற்றுடன் ஒன்றிணைந்து வந்த தேவரடியார் என்ற பெண்கள் பண்பாட்டுடன் இதனைப் பொருத்திப் பார்க்க முடியும். சங்க காலத்தில் “கொண்டி மகளிர்” என்ற கோயில் பெண்டுகள் தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை நீடித்த தேவதாஸிகள் வரையாக, கோயில் பண்பாட்டின் எச்சமாக இதனைக் கட்டமைக்க முடியும்.
கனகி என்ற பெணி கோயரில் பெனி டாகக் கடமையாற்றியுள்ளாள் என்பது,
“வண்ணார் பண்ணைச் சிவன் கோயில் தாசிகளுள் ஒருத்தியும் இற்றைக்குச் சிலகாலத்தின் முன் இறந்தவளுமாகிய கனகி’
என்று பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் குறிப்பிடுவதிலிருந்தும்,
“சித்திரமறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக்
கத்தனாம் வயித்தீசர்க்குத் கனத்ததோர் நடனஞ் செய்யும்
குத்திர மனத்தளாகுய் கொடியிடை கனகி” என்று கனகிபுராணத்துக் காப்புச் செய்யுள் மூலமாகவும் அறிய முடிகின்றது.
இந்நூலாசிரியரை நட்டுவச் சுப்பையனார், மேளகாரப் பகுதியைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையனார் என்றும் குறிப்பிடுவர். நட்டுவர் என்ற சொல் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இசை வேளாளரது சாதீய அடையாளமல்ல. நட்டுவனார் என்பது தொழில் முறைப் பெயர். கோயிற் பெண்டுகள் கோயிலில் நடனஞ் செய்யும் போது நட்டுவாங்கம் செய்தவர்களையே அது குறித்தது, தஞ்சாவூர் இராஜேசுவரக் கோயிலின் முதலாம் இராசராசனது தளிச் சேரிக் கல்வெட்டுக் குறிப்பிடும் 400 தளிச்சேரிப் பெண்டுகளுக்கு நட்டுவாங்கம் செய்ய எழுவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் “நட்டவம் செய்ய நட்டலம் ஒன்றிற்கு” என்றே அதில் குறிப்பிடப்பட்டள்ளனர். எனவே நட்டுவனார் என்பது ஒரு தொழிற் பெயர் என்பது இதன் மூலம் அறியப்படும். மேலும், இவர்களும் தளிச்சேரிக் குழுமத்தைச் சார்ந்தவர்களே. ஆண்கள் பலர் நட்டுவஞ் செய்வதுடன் நாதசுரம், தவில் முதலிய இசைக் கருவிகளையும் பின் நாட்களில் வாசிக்கத் தொடங்கினர். அப்போது இவர்கள் இசைவேளாளர் எனும் ஒரு இளங்கதிர் (2004 - 2005) (24) தமிழ்ச் சங்கம்

Page 20
குழுமமாக உருமாறினர். ஆகவே, நட்டுவச் சுப்பையனார் என்பவர் வண்ணார் பண்ணைச் சிவன் கோயிலில் பெண்கள் நடனமாடும் போது நட்டுவாங்கம் செய்தவர் என்றும் கருத இடமுண்டு. இவர்பற்றிய எந்தக் குறிப்பும் கனகி புராணத்தில் இல்லை என்பதும் மனங்கொள்ளத்தக்கது.
கோயிற் பெண்டுகள் முறைமை என்பது வண்ணார் பண்ணைச் சிவன்கோயிலில் நிலவியது என்பதை இன்னோர் வகையிலும் கட்டமைக்கலாம். இக்கோயில் வரலாறு யாழ்ப்பாணத்தில் குடியேறிய நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களின் வரலாற்றுடன் தொடர்புடையது. வண்ணார் பண்ணைச் சூழலில் இன்றுவரை செட்டிமார்களின் ஊடாட்டம் இருந்து வந்துள்ளது. நாவலருக்கு திருகேதீசுவரப் புனருத்தாரணத்தில் உடன் நின்றவர் யாழ்ப்பாணம் பசுபதிச் செட்டியார். இந்தக் குழுமத்தில் இருந்தே வந்தவர். செட்டியார் தெரு என்பது யாழ்ப்பாணத்தில் இன்றுவரை நீடித்துள்ளது. இந்த நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களுக்கு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுவரன் கோயிலுடன் (புள்ளிருக்கு வேளுர். இது சீர்காழிக்கும், சிதம்பரத்துக்கும் அண்மையில் உள்ளது) நெருங்கிய தொடர்புண்டு. நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் சித்திரை மாதத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பல ஊர்களிலிருந்தும் நேர்த்திக்கடன் செய்யக் கால்நடையாக வைத்தீசுவரன் கோயிலுக்குப் பாதயாத்திரை செய்வது இன்றுவரை நீடித்துள்ளது. எனவே புள்ளிருக்கு வேளுரின் அருட்டுணர்வினால் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் உருவாகிய வைத்தீசுவரன் கோயிலில் செட்டிமாரது ஆதிக்கம் நீடித்தது என்பதும், அக் கோயிற் பண்பாட்டில் தமிழகத்துக் கோயில் போலவே கோயிற் பெண்டுகள் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் தெளியலாம். மேலும் செட்டிமார்களுக்கும், இவ்வாறான பெண்களுக்கும் இடையேயான தொடர்பும் தேவையும் நீண்ட காலமாகவே இருந்துவந்துள்ளது என்பதையும் இவ்விடத்தில் மனங்கொள்ளல் அவசியம். (இது அவர்களது வியாபார நோக்குடனான புலப்பெயர்வுடன் தொடர்புபடுத்தி நோக்க வேண்டியது) செட்டிமாரது ஊடாட்டம் இப்பகுதியில் நிலவியது என்பதை
“ஒட்டைக் காதுடன் இருப்போன் ஒளிசேர் புடவை விற்கின்ற நாட்டுக் கோட்டையார் தமக்குள் நல்லாண்டப்பனல்லாளே”
இளங்கதிர் (2004 - 2005) (25) தமிழ்ச் சங்கம்

என்ற கனகி புராணக் செய்யுள் மூலமாகவும் அறிய முடிகின்றது.
உண்மையில் கோயில் பண்பாட்டின் ஓர் அங்கமாக இணைக் கப்பட்ட பெண்கள், குழுமம் , கொணர் டிமகளிர் , பிணாப்பிள்ளைகள், உத்திகள், பதியிலார், தளிச்சேரிப் பெண்டுகள், தேவரடியார் என்ற உயர் நிலைகளில் இருந்து தேவதாஸியாகி, பொதுமகளிராகி பண்பாட்டுச் சிதைவின் சின்னமாகினர் என்பது இவ்விடத்தில் நோக்கப்பட வேண்டியதும் அவசியமானதாகும்.
VI
மனித நாகரிக வரலாற்றில் காட்டு மிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்னும் மூன்று காலகட்டங்களுக்குரிய குடும்ப வடிவங்களாக குழுமணம், இணைக்குடும்பம், ஒரு தாரமணம் எனும் இவற்றைக் குறிப்பிடும் ஏங்கல்ஸ், ரத்த உறவுக் குடும்பம், புனலுவா குடும்பம், இணைக்குடும்பம் என்னும் மூன்று வடிவங்களைக் குறிப்பிடுகின்றார். ஆண் - பெண் என்ற உறவு பொது நிலையில் இருந்து வரையறை நிலைக்கு எவ்வாறு வளர்ந்தது என்பதே அதிற் சுட்டப்படும் விடயமாகும். சொத்துடைமை என்பது மனித சமூகத்தில் தலைதூக்கிய போது - ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உறவு நீடித்தது. பெண் பலரைப் புணரும் நிலைமாறி, கற்பு என்ற கட்டுப்பாட்டுடன் ஒருவனின் மனைவியாகினாள். இவ்வேளையில் பெண்களுக்கு இரு நிலைப்பட்ட வாழ்வுகிடைத்தது. ஒன்று (கற்பு நிலை) குடும்பத்துடன் வாழ்தல். மற்றையது பொதுமகளிராக வாழ்தல் ஆகும். சங்க இலக்கியங்களில் மருதத்திணை கூறும் ஊடல் ஒழுக்கமும், பரத்தமையும் இதற்குச் சான்றாகும். இக்காலத்தில் விறலி என்ற கலைக்குழுமத்தைச் சேர்ந்த பெண்ணும் இவ்வாறான நிலைக்குக் தள்ளப்பட்டாள் என்பர்.” இந்த வகைமையின் தொடர்ச்சியை சிலப்பதிகாரத்திலும் காணமுடியும். பெண்கள் கற்புடையோராக வீட்டிலிருத்தலும், கலைக் குழுமமாக இருப்பதும் இங்கு தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது." அதாவது பரத்தமை என்பது நிறுவனமயப் படுத்தப் பட்ட அமைப்பாக இயங் கியதைச் சிலப்பதிகாரத்தில் அவதானிக்கமுடிகின்றது.
மேற்குறித்தவற்றில் கலைக்குழுமத்தைச் சேர்ந்த பொது மகளிரே கோயிற்பெண்டுகளாக இணைந்திருக்க வேண்டும். ஆயின் இவர்கள் எக்காலத்தில் கோயிலுடன் இணைந்தார்கள் என்று வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. பட்டினப்பாலையில் கோயிலுடன் இளங்கதிர் (2004 - 2005) (26) தமிழ்ச் சங்கம்

Page 21
தொடர்புடைய ‘கொண்டிமகளிர் அந்தி மாட்டிய செந்தீ விளக்கம்’ பற்றிய குறிப்பு உண்டு. ஆயின் இவர்களை ஏவற்பெண்டிர், அல்லது சிறையெடுக்கப்பட்ட பெண்கள் என்று கூறுவாருமுளர். எனினும், தமிழ் நாட்டில் கோயிற் சேவையாளராய்ப் பெண்கள் இணைந்தமைக்கான தொன்மையான சான்றாக இதனைக் கொள்ளமுடியும். இங்கு இவர்களது பணி கோயிற் சேவை மட்டுமே. ஆயின் கோயிற் பெண்டுகள் கலைஞர்களாகவும் கோயிலுடன் இணைக்கப்பட்டபோதே அவர்களது ஊடாட்டம் மேலும் விரிவுபெறுகின்றது. தமிழகத்தில் கோயிற்பண்பாடு விரிவாக்கம் பெற்றபோதே இப்பெண்களும் கோயிலுடன் இணைந்திருக்க வேண்டும்.
புதிய பிராமணிய இயக்கமானது சமூகத்தின் பல தளங்களிலும் விரிவு கண்டது. பிரதானமாகக் கோயில்கள் மற்ற எல்லா நிறுவனங்களையும் விடச் சிறப்பான கவனத்துக்குள்ளாக வேண்டுமென்று அரசரும் பூசகரும் விரும்பினர். இதனாலேயே கோயில்களில் மைதுனச் சிற்பங்களைச் செதுக்குவித்தனர். மிகவும் அழகான கன்னிப் பெண்கள் பலரைக் கலை நிகழ்ச்சிக்காக இணைத்தனர். இதனால் நடனப் பெண் களைக் கோயிலில் வேலைக்கமர்த்தும் முறை உருவாயிற்று”
என ஏ. கே. சிங். குறிப்பிடுகின்றார்.?
தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் ஏற்பட்ட சைவ வைணவ சமயகலாசார மறுமலர்ச்சியில் புக்தி இயக்கத்துக்கு இசையும் நடனமும் தேவைப்பட்டது. தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி ‘சங்கரா சயபோற்றி போற்றி' என்று பாடலும் இசைப்பதுமான பக்தி முறைமை வளர்ச்சி பெற்றது. விழாக்கள் அதிகரித்தன. கலைநிகழ்வுகள் இதனால் அவசியமாயின. மேலும் அவைதீக மதங்களின் தருக்கம் சார்ந்த சமயப் பிரசாரத்தை வெல்வதற்கான களமாகக் கோயில் மாறியபோது அது மக்களைக் கவர்ந்து இழுக்கும் கலைக்கூடமாகவும் கட்டமைக்கப்பட்டது. பூசைகளிலும் விழாக்களிலும் நடனம், இசை முதலியன நிகழ்த்தப்பட்டபோது கோயில்கள் மக்களின் கவன ஈர்ப்புக்கு உள்ளாகின. கலை நிகழ்ச்சிகள் அதிகரிக்கவே கலைக் குழுமத்தைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுடன் இணைத்துக் கொள்வதும் அவசியமாயிற்று.
பக்தி இலக்கிய காலத்தில் கோயிற் பெண்கள் பற்றிய செய்திகளைப் பரவலாக அறிய முடிகின்றது. அவர்களை இளங்கதிர் (2004 - 2005) (27) தமிழ்ச் சங்கம்

மாணிக்கவாசகர் பினாப்பிள்ளைகள்' என்று குறிப்பிடுகின்றார். திருமங்கையாழ்வார் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சேர்ந்த பெண்களை, ஒப்பில்லா மாதர்கள்' என்று குறிப்பிடுகின்றார். இரண்டாம் நந்திவர் மனது நந்தீஸ்வரக் கோயில் கல்வெட்டு முப்பத்திரண்டு நடனமாதர் பற்றிக் குறிப்பிடுகின்றது." இதன் தொடர் வளர்ச்சியை சோழர் காலத்தில் அதிகமாகக் காணலாம். முதலாம் இராசராசனது தஞ்சாவூர் இராஜேஸ்வரக் கல்வெட்டு அங்கு கடமை புரிந்த சுமார் 400 பெண்கள் பற்றிய குறிப்புக்களைத் தருகின்றது."
சோழர் நாட்டிலிருந்து பல கோயில்களைச் சார்ந்தும், ஊர்களைச் சார்ந்தும் வாழ்ந்த கலைப் பெண்டிர் அல்லது தளிப்பெண்டிர் பலர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பெரிய கோயிலின் அயலில் குடியேற்றப்பட்டனர்.
‘ராஜராஜசுவரமுடைய தளிச்சேரிப் பெண்டுகளாகச் சோழ மண்டலத்துத் தளிச்சேரிகளில் நின்றுங் கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகள்”
என்று இச் செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவர்களுக்கான கடமைகள், ஊதியம் முதலான விடயங்கள் பற்றியும் அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அக்காலத்தில் தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் இப்பெண்டுகள் கடமையாற்றினர். சுசிந்திரம் கோயிற் கல்வெட்டுக்கள் இவர்கள் பற்றிய பல தகவல்களைத் தருகின்றன. இவர்கள் வெறும்னே கலைச் சேவையாளராக மட்டும் இயங்கவில்லை. நடனத்திற் சிறந்தோர் ‘தலைக்கோல் பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்டனர்." சில பெண்டுகள் கோயில் நிருவாகத்திலும் பங்கு கொணி டனர். மேலாக அரசர்களுடைய ஆசைக் கிழத்திகளாகவும் அந்தஸ்த்தில் உயர்ந்திருந்தனர்." கோயிற் பெண்டிர் பண்பாடு என்பது மிகவும் உச்சநிலையில் இக்காலத்தில் நிலவியது எனலாம். சோழரதும் பாண்டியரதும் வீழ்ச்சியைத் தொடர்ந்து தமிழகத்தில் முகலாயப் படையெடுப்புகள் நிகழ்ந்தபோது கோயிற் பண்பாடும் அதுசார்ந்த பெண் சேவையாளர் முறைமையும் சற்றே தளர்வுற்றது. எனினும், அதனைத் தொடர்ந்த விஜயநகர நாயக்கர் காலத்தில் இப்பண்பாடு மீண்டும் நடைமுறைக்கு வந்தது. ஆயின் பழைய கட்டுமானங்களுடன் அது இயங்கவில்லை. அரசு ஆதரவு
இளங்கதிர் (2004 - 2005) (28) தமிழ்ச் சங்கம்

Page 22
கோயில்களுக்குக் குறைந்து போக இப்பெண்கள், கோயில் பூசாரிகள், நிலக்கிழார்கள் (மிராசுதார்கள்), செட்டிமார் (நகரத்தார்), பிரபுக்கள் முதலியோரை நம்பி வாழவேண்டியேற்பட்டது. பொட்டுக்கட்டி வாழ்தல் என்ற முறைமை இதனால் ஏற்பட்டது. அவர்கள் காலகாலமாகப் பேணிவந்த நடனம் என்பது சதிராட்டமாக மாறியது. தேவரடியார் தேவதாஸிகளாயினர். அவர்களுக்கான சமூக அங்கீகாரம் செயலற்றுப் போனது. பணம் படைத்தோரிடம் தங்கி வாழ வேண்டிய பொருளியல் நெருக்கடிக்குள்ளாயினர். t
பிரித்தானியரது ஆட்சிக்காலத்திலும் இதே நிலை நீடித்தது. சில பெண்கள் சமஸ்தானத்து மகாராஜாக்களையும், அதிகாரிகளையும் சார்ந்துவாழ்ந்தனர். இதன் தொடர் வளர்ச்சியாக இவர்கள் விபச்சாரிகளாக உருமாறினர். இந்தப்பண்பாட்டுச் சிதைவைத் தடுக்கவே இந்தியாவில் தேவதாஸிகள் ஒழிப் புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும், இவர்கள் சிறு சிறு குழுமங்களாத் தனித்தும், கோயில்சார்ந்தும், இசை நடனக் கலைஞர்களாகவும் சதிராட்டக்காரர்களாகவும் இன்றுவரை நீடித்துள்ளனர்.”
தீண்டத்தகாதவர்கள் அல்லது ஒதுக்கப்பட்டவர்கள் என்று அறியப்பட்ட கலைக்குழுமம் ஒன்று, தேவை காரணமாகக் கோயிற் பண்பாட்டுடன் இணைந்து சமூக அங்கீகாரத்தையும், அந்தஸ்த்தையும் பெற்று உச்சநிலையில் இருந்து மீண்டும் அரசியல், சமூக பொருளாதாரக் காரணிகளால் வீழ்ச்சியடைந்து போனமையை இதனால் அறிய முடிகின்றது. இவ்வாறான மங்குதசைக் காலத்துக் கோயிற் பெண்டுகளின் நிலை எவ்வாறு இருந்தது என்பதற்குக் கனகிபுராணம் இலக்கிய உதாரணமாக அமைகின்றது.
யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையில் செட்டிமார்களின் ஆதிக்கம் நிலைத்தகாலத்தில் உருவான வைத்திஸ்வரன் கோயிலில் சேவையாற்றிய கோயிற்பெண்டுகளும் ஆரம்பத்தில் நல்ல நிலையில் சமூக அங்கீகாரத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆயின் காலமாற்றம் தமிழகத்துக் கோயிற் பெண்டுகளைப் போலவே இவர்களையும் புறந்தள்ளியது. பொருளாதார நெருக் கடிக்கு அவர்கள் தள்ளப்பட்டபோது யாழ்ப்பாணத்துப் பிரபுக்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். இந்தப் பின்புலத்திலே வைத்துத்தான் கனகிப்புராணத்தை நோக்க வேண்டியுள்ளது.
இளங்கதிர் (2004 - 2005) (29) தமிழ்ச் சங்கம்

இவ்வாறான குழுமங்களின் ஊடாட்டங்களும், அவர்களுக்கான சமூக மதிப்பும், எதிர்ப்பும் யாழ்மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஆறுமுகநாவலர் இப் பணி பாடு குறித்துப் பெரு விசனம் கொண்டிருந்தார். அவரது சுப்பிரபோதம், யாழ்ப்பாணச் சமயநிலை (1872), நல்லூர்க்கந்த சுவாமிகோயில் பத்திரிகை (1875), மித்தியவாத நிதர்சனம் (1876) எனும் பிரசுரங்களிலே அவர் கோயிற் பெண்டுகள்பற்றிக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
“உருத்திர கணிகையர் வியபிசாரம், மது மாமிச பக்ஷணம் முதலிய பாதகங்களின்றி சிவவேடம் பூண்டு சிவபக்தியில் சிறந்தவர்களென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாறாக இக் காலத் தார் கோயில் களெங் குமி LD ğ5] DIT Lről ag பசஷணமுடையவர்களாய் வரைவின்றி யாவரையும் புணரும் ஸ்திரிகளை உருத்திர கணிகையரென்று நியோகிக்கின்றார்கள்.”
என்று சுப்பிரபோதத்தில் பொதுவாகக் குறிப்பிடும் அவர்,
நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இவ்வாறான பெண்கள்
அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது கலை நிகழ்ச்சிகளுக்கு முதன்மையளிக்கப்பட்டதையும் வெகுவாகக் கண்டனம் செய்தார்.
‘நல்லூர் கந்தசுவாமி கோயிலாளர்களே . வசந்த மண்டபத்தினெதிரே மது மாமிச பட்கூடிணம், வியபிசாரம் முதலிய திமை ளெல லாம் நிறைநத பரத் தையர்களுடைய நடன சங்கீதங்களுக்கு ஐந்தாறு நாழிகை நேரம் மிக்க உவப்போடு கொடுக்கும் நீங்கள், திருவிழாச் செலவிறுக்கும் கொடையாளருடைய வேண்டுகோளின்படியே அவ்வசந்த மண்டபத்தினெதிரே ஒதுவார்கள் சாரங்கி வாசிக்கவுந் தேவாரம் ஒதவுந் தொடங்கியவுடனே தானே, தங்கள் நேரத் தைத் தேவாரம் கொள்ளை கொள்ளத் தொடங்குகின்றது என்று பொறாமை கொண்ட பரத்தையர்கள் இட்ட கட்டளையை உங்கள் சிரமேல் கொண்டு நைவேத்தியமெடுக்கும் படி வாத்தியத்தை முழக்குவித்துத் தேவாரத்துக்கு இடையூறு ஒரு சிறிதேனும் அஞ்சாது விளைத்த உங்கள் துர்ப்புத்தி எப்படிவந்து முடிந்தது.” என்று நல்லூர் கந்தசுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகையில் குறிப்பிடுகின்றார். கனகி புாணத்தின் யதார்த்த நிலையை அறிவதற்கு நாவலரின் கண்டனங்கள் சிறந்த ஆதாரங்களாகவுள்ளன.
இளங்கதிர் (2004 - 2005) (30) தமிழ்ச் சங்கம்

Page 23
கோயிற் பெண்டுகளாகவிருந்து பின்னர் சதிராட்டக்காரர்களாக மாறி யாழ்ப்பாணத்துக் கோயிற் திருவிழாக்களில் பங்கு கொண்ட இவ்வாறான செயற்பாடுகள் இருபதாம் நூற்றாண்டின் கடைக் கூறுவரை நிலைத்தன. இவர்களைச் சின்னமேளக்காரர் என்றழைத்தனர் (பெரியமேளம் என்பது தவில், நாதசுவரக் குழுக்களைக் குறித்தது) எனினும் காலவோட்டத்தில் இவர்களது கலைநிகழ்வுகள் கோயிலில் இருந்தும் விலக்கப்பட்டன. இவ்வாறான குழுமங்களைச் சேர்ந்தவர்கள் பிற சமூகங்களுடன் பெரும்பாலும் இணைந்து விட்டதால் தனித்து அடையாளமுடையவர்களாகத் தற்காலத்தில் இவர்களை இனங்கான முடியாதுள்ளது.
முடிவாகக், கனகிபுராணம் என்பது அங்கத இலக்கியம், பழையவடிவத்தில் புதியபாடு பொருள் கொண்டது, சமூக சீர்திருத்த இலக்கியம், பிரபுத்துவ கலாசாரத்தின் சிதைவை வெளிப்படுத்தும் இலக்கியம் என்ற மதிப்பீடுகளுக்குப் புறம்பாக கோயிற்பண்பாட்டுடன் தம் மை இணைத்துக் கொணர் டு சேவையாளராகவும் , கலைஞர்களாகவும் நீண்டகாலம் நிலைத்து புகழ், பொருளியல்வளம் என்பவற்றால் உன்னத நிலைபெற்றிருந்த பெண்கள் குழுமம் காலமாற்றத்தால் பண்பாட்டுத்தளத்தினின்றும் வழுவியபோது அந்தப்பண்பாட்டுச் சிதைவினை வெளிப்படுத்தும் இலக்கியமாக ஒரு பண்பாட்டுச் சிதைவின் எச்சத்தை விபரிக்கும் இலக்கிய ஆதாரமாகக் கனகிபுராணம் விளங்குகிறது எனலாம்.
அடிக்குறிப்புகள்
01. கைலாசபதி. க. (1986) ஈழத்து இலக்கிய முன்னோடிகள்.
மக்கள் வெளியீடு: சென்னை ப. 27 02. சதாசிவம் பிள்ளை. (1886) பாவலர் சரித்திர தீபகம். 03. கணபதிப்பிள்ளை, க. (1996) ஈழத்து வாழ்வும் வளமும், குமரன்
வெளியீட்டகம் (2ஆம் பதிப்பு): சென்னை ப. 81 04. பூலோக சிங்கம், பொ. (1970) தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர்
பெரு முயற்சிகள். கலைவானி புத்தக நிலையம் யாழ்ப்பாணம்
L. 92
05. கைலாசபதி, க. மு. கு. நூ. ப. 37
06. மேலது. ப. 27
07. SII. VOL II, Part III. No. 66, 8.274
08. ரவிக்குமார். (2003) சோசலிசமும் குடும்பம் ரசியாவை
முன்வைத்து சில குறிப்புகள். நிறப்பிரிகை. ப. 35
இளங்கதிர் (2004 - 2005) (31) தமிழ்ச் சங்கம்

O9.
10.
11. 12.
13.
14.
15. 16. 17. 18.
19. 2O.
21.
22.
மாதையன், பெ.(2003) சங்க இலக்கியத்தில் விறலி. தெ.பொ.மீ.அறக்கட்டளைக் கருத்தரங்கம்- தட்டச்சுப்பிரதி ப.8
(அ) சிலப்பதிகாரம். இந்திரவிழா ஊரெடுத்தகாதை,204- 227 ஊர்காண்காதை 146 - 167 (ஆ) மாதையன். பெ. (2003) சிலப்பதிகாரத்திற்
குடும்பவாழ்க்கை, புதிய நோக்கில் சிலப்பதிகாரம்,
கருத்தரங்குக் கட்டுரை பூம்புகார் தட்டச்சுப்பிரதி ப.
பட்டினப்பாலை. 246 - 249 Singh. A. K (1990) Devadasi system in Ancient India H.K. Publishers, Delhi — pp — 40 — 41 மகேஸ்வரன். வ. (2004) இடைக்காலத் தமிழகத்துச் சைவக் கோயில்கள் ஒரு சமூக நோக்கு, முனைவர் பட்ட ஆய்வேடு தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ப. 140 திருவெம்பாவை பாடல் 01 பெரிய திரு மொழி 11 : 3 : 2 SIT, vol iv, No — 827 SII, vol III, part III, No. 66 Pillai. K. K(1953) A monograph-the sucindram Tenple, kelakhsetra publicalions Adyar. P. 173 SII, vol XXIII, No. 223 (அ) முதலாம் இராசராசனது பட்டத்தரசிகளுள் ஒருத்தியான பஞ்சவன் மாதேவி என்பவள் அவனிகந்தர்புரத்து
தேவனார் நக்கன் தில்லையழகி என்ற தேவரடியாரது LD56TT6 Tir. Subbarayalu, Y, (1970) The state in medieval
south india 600- 1350 pp. 26-27 (ஆ) திருவாருர் தியாகேசர் ஆலயத்தில் முதலாம் இராசேந்திரனது ஆசைக்கிழத்தியான அணுக்கியார் பரவை நங்கை பல நிவந்தங்களை வழங்கியுள்ளார்கள்.
SII, vol, iv, No5, 223, 644 குமுதம் தீராநதி என்ற சஞ்சிகையில் (ஆகஸ்ட 2003) இக்குழுமத்தின் பரம்பரையில் வந்த திலகம் என்ற பெண்மணி இது தொடர்பான விவரமான பேட்டியொன்றை அளித்துள்ளார். பார்க்க, பூலோகசிங்கம், பொ. மு. கு. நூ. பக் 93 - 94
மு.மின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹற்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹவுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹற் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(திருக்குர்ஆன் 5:8)
இளங்கதிர் (2004 - 2005) (32) தமிழ்ச் சங்கம்

Page 24
இலங்கையின் இனமோதலை விளங்கிக் கொள்ளல் UNDERSTANDING ETHNICCONFLICT OFSRI LANKA
S.பாஸ்கரன், உதவி விரிவுரைளாளர் அரசறிவியல் துறை.
அரசியல் அமைதியின்மையினர் தோந்நம்
வரலாற்று ரீதியாக இலங்கைத் தீவில் ஒரு பல்லினசமுதாயம் இருந்து வந்துள்ளது. அவ்வாறே அரசியல் ரீதியாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் காலத்துக்குக் காலம் இருந்து வந்துள்ளன. ஐரோப்பியர் இலங்கையை ஆளத் தொடங்கிய போது இலங்கையில் மூன்று முக்கிய அரசுகளும் பல சிற்றரசுகளும் காணப்பட்டன. வடக்கில் ஓர் அரசு, மலையகத்தில் ஓர் அரசு, தென் மேற்கில் ஓர் அரசு என அமைந்திருந்த மூன்று பெரும் அரசுகள், அம் மூன்று பிரதேசங்களுக்கிடையே சமூக, பணி பாட்டு வேறுபாடுகள் வலுவடைவதற்கு உதவின.
17ம், 18ம், நூற்றாண்டுகளில் தென் மேற்கில் இருந்த அரசு போர்த்துக்கீசராலும் பின்னர் ஒல்லாந்தராலும் ஆளப்பட மலையகத்து அரசு தொடர்ந்து சுதந்திரமாக இருந்ததனால் முன்னரே ஏற்படத் தொடங்கியிருநீ த வேறுபாடுகள் மேலும் அவி விரு பிரதெசங்களுக்கிடையில் உக்கிரமடைந்தன. இதனால் கண்டிச் சிங்களவர், கீழ் நாட்டுச் சிங்களவர் என்று சிங்கள மக்கள் இரண்டாகப் பிரிவதற்கு வழி திறக்கப்பட்டது. 17ம், 18ம் நூற்றாண்டுகளிலே வடக்கே இருந்த தமிழ் இராச்சியமாகிய யாழ்ப்பான அரசும் போர்த்துக்கீசராலும் ஒல்லாந்தராலும் ஆளப்பட்டாலும் இப்பிரதேசம் தென்மேற்குப் பிரதேசத்தில் இருந்து வேறாக நிர்வகிக்கப்பட்டதனால் முன்னைய வேறுபாடுகள் தொடர்ந்தும் இருப்பதற்கு நிலைமை உகந்ததாக இருந்தது.
இதனால் 19ம் நூற்றாண்டு இலங்கை ஒர் ஒன்றிணைக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் நவீன காலத்தை அடைய இங்கு பல்லின சமுதாய அமைப்பு ஒன்று மாற்ற முடியாத வகையில் வளர்ந்திருந்தது. இதனை ஆரம்பத்திலிருந்து ஆங்கில ஆட்சியாளர்கள் அங்கீகரித்திருந்தனர். 1833ல் முதன் முறையாக இலங்கையில் ஓர் சட்ட சபை அமைக்கப்பட்ட போது அதில் ஒரு சிங்களவருக்கும் ஒரு தமிழருக்கும் இளங்கதிர் (2004 - 2005) (33) தமிழ்ச் சங்கம்

அங்கத்துவம் அழிக்கப்பட்டது. இச்செயல் இலங்கையிலே தமிழரும் சிங்களவரும் இரு வேறுபட்ட இனங்களாக வாழ்கின்றனர் என்பதனையும் அவர்களுக்கு வெவ்வேறு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதனையும் ஆங்கிலேயர் தொடக்கத்திலேயே அங்கீகரித்திருந்தனர். என்பதை உணர்த்துவதாய் அமைந்தது. 1889ல் இருந்து கண்டிச் சிங்களவருக்கு வேறாக பிரதிநிதித்துவம் வழங்கியமை இலங்கையின் பல்லின அமைப்பினை அவர்கள் தொடர்ந்து அங்கீகரித்தனர் என்பதை வலியுறுத்துகின்றது.
1833 தொடக்கம் 1920 வரை இலங்கையின் சட்டவாக்க சபையில் கரை நாட்டுச் சிங்களவருக்கும் தமிழருக்கும் ஒரே அளவான பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. அத்துடன் சிங்களவரும், தமிழரும் 1920 வரை இலங்கையின் பெரும்பான்மை இனங்கள் என்று கருதப்படடனர்.
ஆனால், 1920ல் நிலைமை மாறியது. அந்த ஆண்டின் பின்னர் திடீரென தழிழர் சிறுபான்மையோராகக் கருதப்பட்டனர். புதிய சட்டவாக்க சபையில் முன்பு போல் அவர்களுக்கு கரை நாட்டுச் சிங்களவருடன் சமமான பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. 1921ஆம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட யாப்பின்படி 23 உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களைக் கொண்ட சட்ட சபையில் நான்கு தமிழருக்கு மட்டுமே (இந்தியத் தமிழர் உட்பட) இடமிருந்து.
இந்நிலையில் தான், அனைத்து இலங்கையர் தேசியவாதத்தில் நம்பிக்கை இழந்தோராய், தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகத் தொடங்கினர். இவ்வாறு சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் வெளியேற்றத்தில் தொடங்கி இன்று வரை தமிழர்கள் சிறுபான்மையினராகப் புறக்கணிக்கப்படும் நிலைக்கு உட்பட்டு வருகின்றனர்."
இலங்கையில் ஏற்பட்டுள்ள இவ்வினமுரண்பாடு ஆயுதப் போராட்டம் வரைக்கும் நீண்டு வளர்ந்துள்ளது. இதனால் இலங்கை அரசியலில் அமைதியின்மையும், அபிவிருத்தியின்மையும் தலை தூக்கியுள்ளது. இருபது ஆண்டுகால விளைவுகளை நோக்கும் போது விரைவான தீர்வொன்றின் அவசியம் அனைவராலும் உணரப்படுகின்றது." இளங்கதிர் (2004 - 2005) (34) தமிழ்ச் சங்கம்

Page 25
இன முரண்பாட்டைத் தோந்றுவித்த காரணிகள்.
இலங்கையின் இனமுரண்பாட்டைத் தோற்றுவித்த காரணிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.?
1. வரலாற்றுக் காரணிகள் 2. அரசியற் காரணிகள் 3. பொருளாதாரக் காரணிகள் 4. புவியியற் காரணிகள்
வரலாந்றுக் காரணிகள்
வரலாற்று அடிப்படையில் புராணப் பதிவேடாகிய மகாவம்சத்தின் மரபுக் கதைகளும் இந்திய உபகண்டத்தினின்றும் எழக்கூடிய படையெடுப்புக்கள் ஏற்படுத்திய அச்சமும் சிங்களவர்களிடையே தீவிர போக்கை ஏற்படுத்தியதால் சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையே பிளவுகள் ஏற்படக் காரணமாயின."
சிங்கள இனத்தின் வரலாற்றை விபரிப்பதாகக் கொள்ளும் புராணப்
பதிவேடாகிய மகா வம்சத்தின் முற்பகுதி,
‘புத்தர் அருகே நின்ற தேவேந்திரனிடம் கூறியதாவது ‘இலல”(Lala) நாட்டிலிருந்து சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன் தன் தொண்டர் எழுநூற்றவருடன் இலங்கையை வந்தடைந்துள்ளான். தேவேந்திரனே! எனது நல்லறம் இலங்கையிலே நிலைத்து நிற்கும். ஆகவே அவனையும் அவன்
தொண்டர்களையும் இலங்கையில் பாதுகாப்பாயாக."
எனக் கூறப்பட்டதாக விளங்குகின்றது.
இந்த அடிப்படையில் துட்டகைமுனு எனும் சிங்கள அரசனுக்கும் எல்லாளன் எனும் தமிழ் அரசனுக்குமிடையே நடை பெற்ற போரில் துட்டகைமுனுவை பெளத்தத்தின் பாதுகாவலன் எனக் காட்டி தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாதம் வளர்க்கப்பட்டு தீவிரப்படுத்தப்படடிருக்கிறது.*
இவ்விதம் வேரூன்றப்பட்ட சிங்கள பெளத்தக் கொள்கை இன முரண்பாட்டை வளர்ப்பதில் தீவிர பங்காற்றியது.
தென் னிந்தியப் படையெடுப்புக் கள் இலங்கையில்
சிங்களவருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன. பலமிக்க இாங்கதிர் (2004 - 2005) (35) தமிழ்ச் சங்கம்

பாண்டிய, பல்லவ, சோழ அரசுகள் தென்னிந்தியாவில் தோன்றிய போது இவ் வித படையெடுப்புக் கள் மூலம் இலங்கை கைப்பற்றப்படலாம் என்ற அச்சம் அவர்களிடம் ஆழ வேரூன்றியது. இதனடிப்படையில் வரலாற்று ஏடுகளில் வடிவமைக்கப்பட்ட சிங்கள கருத்தமைவு சிங்கள தமிழ் முரண்பாட்டை வளர்க்கத் துணைபுரிந்தது."
அரசியந் காரணிகள்
அரசியல் அடிப்படையில் இனமுரண்பாட்டைத் தோற்றுவித்த காரணிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. இனங்களுக்கிடையேயான சமமற்ற பிரதிநிதித்துவ
விகிதாசாரம் h−
2. மதம், மொழி, குடியுரிமைச் சட்ட ஏற்பாடுகள்
3. நிறைவேற்றப் படாத ஒப்பந்தங்கள் மீதான
நம்பிக்கையின்மை
4. தமிழ் - சிங்களவர்களிடையே ஏற்பட்ட இனக்
கலவரங்கள்.
இனங்களுக்கிடையேயான சமமந்ந பிரதிநிதித்துவ விகிதாசாரம்
ஆரம்பத்தில் சமமாகக் காணப்பட்ட இனங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ விகிதாசாரம் காலப்போக்கில் சமமற்றதாக மாற்றமடைய, தமிழர்கள் திடீரென சிறுபான்மையினராகக் கருதப்பட்டனர். இதனால் நம்பிக்கையிழந்த தமிழர்கள் மத்தியில் தோன்றிய இன உணர்வு இன முரண்பாடு வளர்வதற்கு வித்திட்டது.
1833ல் இலங்கையில் அமைக்கப்பட்ட சட்ட சபையில் ஒரு சிங் கள வருகி கும் ஒரு தமிழருக்கும் அங்கத் துவம் அளிக்கப்பட்டிருந்தது. இச்சம பிரதநிதித்துவம் 1833 தொடக்கம் 1920 வரை தொடர்ந்தது. ஆனால் 1920ல் நிலைமை மாறியது. 1921 ம் ஆணி டில அமுலா கி கப்பட்ட யாப் பின் படி 23 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களைக் கொண்ட சட்டவாக்க சபையில் நான்கு (இந்தியத் தமிழர் உட்பட) தமிழருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேதான் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து நம்பிக்கையிழந்து சேர் பொன்னம்பலம் அருணாசலம் வெளியேறி தமிழ் மகாஜன சபையை அமைத்தார். இதிலிருந்து தமிழர்கள் மத்தியில் இன உணர்வு வளரலாயிற்று." இளங்கதிர் (2004 - 2005) (36) தமிழ்ச் சங்கம்

Page 26
1931ம், 1936ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் சிறுபான்மையோரது சனத் தொகை விகிதாசாரத்துக்குரிய ஆசனங்கள் கிடைக்கவில்லை.
அட்டவணை
சட்ட சபைத் தேர்தல் முடிவுகள் 1931 - 1936
வருடம்பெருபான்மை சிறுபான்மையோர் கூட்டுத்தொகையும்மொத்தம்
யோர் % மும்
இல. தமி| இந், தமி முஸ்லிம்கள் ஏனையோர்
1931, 37(80.43%) 3 2 3 9(9.56%) 46 1936. 39(78%) 8 2 1 1 (22%) 50
மூலம்:கீதபொன்கலன்.ச,‘பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்’ சென்னை,1987,பக் 40.
1931ம் ஆண்டு தேர்தலில் நம்பிக்கையிழந்த தமிழர்கள்
யாழ்ப்பாணத்தில் பகிஷ்கரித்தனர். 1931ம் ஆண்டு தேர்தலோடு பெரும் பாலான அமைச்சுக்களைப் பெற்ற சிங்கள இனம் 1936ம் ஆண்டு தேர்தலை அடுத்து ‘முழுச் சிங்கள அமைச்சரவையை’ பெற்றெடுத்த இக்கட்டத்தில் இருந்து தமிழர் இன உணர்வு தீவிரமடைந்தது.
இதன் அடிப்படையிலேயே தமிழ் காங்கிரசைச் சேர்ந்த ஜி.ஜி. பொன்னம்பலம் சோல்பரி கமிஷன் முன் 50 : 50 கோரிக்கையை முன் வைத்தார்.
எனினும் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் சிறுபான்மையினரது பிரதிநிதிகள் விகிதாசாரம் குறைந்து கொண்டே வந்தது.
அட்டவணை
தேர்தல் முடிவுகள் (1947 - 1977)
ஆண்டு ಇಜ್ಡ சிறுபான்மை இனங்கள் ாேக்கம்
இல. தமி இந். தமி முஸ்லிம் மொத்தம் 1947 | 68(71.57%) | 13(13.68%) | 7(7.36%)| 7(7.36%) | 27(2842%)| 95+6 1952 75(78.94%) 12(12.63%) - 8(8.42%) | 20Ꮚ1.05%)[ 95+6 95+6 )20%(19 )7.36%(7 -ســ | (%12.63)12 || (%80)76 || 1956 1960 122(80.79%) 18(11.92%) — 11(7.28%), 29(1920%) 151 1965 123(81.45%) 18(11.92%) - 10(6.22%) 28(18.34%) 151 1970 124(82.01%) 18(11.92%) - 9(5.96%). 27(17.88%) 151 1977 |136(80.95%) 19(11.03%) 1 12(7.14%). 32(19.04%) 168 மூலம : “பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்” பக் - 43.
இளங்கதிர் (2004 - 2005) (37) தமிழ்ச் சங்கம்

இவ்வாறு தொடர்ந்து பேணப்பட்ட சமமற்ற பிரதிநிதித்துவ விகிதாசாரம் காரணமாக சிறுபான்மையினர் நம்பிக்கையிழந்து இன உணர்வை வளர்ப்பதில் முன் னின்றதால் இன முரண்பாடு தீவிரமடையலாயிற்று.
மதம், மொழி, குடியுரிமைச் சட்ட ஏற்பாடுகள்
மதம், மொழி, குடியுரிமை என்பவற்றில் இயல்பாகவே இனங்களுக்கிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும் சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கையில் மதச் சார்பற்ற கொள்கை கடைப் பிடிக்கப்பட்டு அனைத்து மதங்களும் சம அந்தஸ்து உடையனவாகவும், மக்களின் மொழிகள் என்ற முறையில் சிங் களமும் தமிழும் சம அந்தஸ்துடையனவாகவும் காணப்பட்டன."
ஆயினும் சோல்பரி யாப்பின் 29ம் சரத்தின் 2ம், 3ம், 4ம், உப பிரிவுகளில் எல்லா இனத்தையும் சமயத்தையும் சேரந்தவர்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் விதிகள் காணப்பட்டிருந்த போதும்,' 1ம் குடியரசு யாப்பில் பெளத்த மத அத்தியாயம் ஏற்படுத்தப்பட்டு பெளத்த மதத்திற்கு முதன்மையிடம் வழங்கப்பட்டதும் 1956ல் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தனிச் சிங்கள மொழி கொண்டு வரப்பட்டதும், 1948ல் இலங்கைக் குடியுரிமைச் சட்டமும், 1949ல் இந்திய பாக்கிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டமும் கொண்டு வந்து இந்திய வம்சாவழியினரின் குடியுரிமையைப் பறித்ததும் சிறுபான்மையினர் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தி, இன உணர்வை தூண்டுவதற்கு வழி வகுத்தது."
நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் மீதான நம்பிக்கையின்மை
இனங்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்க தலைவர்களால் பல ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. எனினும் இவ்வொப்பந்தங்கள் எதுவும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு சிறிதேனும் பயன்படவில்லை. ஒப்பந்தங்கள் என்ற போர்வையில் தமிழ்த் தலைவர்கள் நம்பவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இவை யாவும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழர்களுக்கு இருந்த நம்பிக்கையை சிதைத்தது. இந்த நம்பிக்கைச் சிதைவு இன முரண்பாடு வளர்வதற்கு வழி வகுத்தது." இாங்கதிர் (2004 - 2005) (38) தமிழ்ச் சங்கம்

Page 27
1956ல் கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டத்தைத் தொடர்ந்து தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்குவதை நோக்காகக் கொண்டு இன முரண்பாட்டுத் தீர்வுக்காக 1957ல் பண்டா - செல்வா ஒப்பந்தமும், 1956ல் டட்லி - செல்வா ஒப்பந்தமும் கொண்டு வரப்பட்டது. ஆயினும் பெளத்த பிக்குமார்களினதும் தீவிர இனவாத சக்திகளினதும் அச்சுறுத்தல் காரணமாக 1957ல் பண்டாரநாயக்கா தனது ஒப்பந்தத்தைக் கைவிட்டும் தமிழர்களின் நம்பகத் தன்மையை சிதைத்து இன முரண்பாட்டை தீவிரமாக்கினார்."
தமிழர் சிங்களவர்களிடையே ஏற்பட்ட இனக் கலவரங்கள்
வளர்ச்சியடைந்த இன முரண்பாட்டின் விளைவாக, 1958, 1971, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் - கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் உயிர், உடைமைச் சேதங்கள் பெருமளவில் ஏற்பட்டன. இக்கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்பு தமிழர்கள் மத்தியில் இன உணர்வைத் தூண்டி இன முரண்பாட்டை வளர்க்க உதவியது.
பொருளாதாரக் காரணிகள்
பொருளாதார அடிப்படையில் இன முரண்பாட்டைத் தோற்றுவித்த காரணிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. அரசாங்கக் குடியேற்றங்கள் 2. தமிழரும் வேலை வாய்ப்புக்களும் 3. கல்வியும் தமிழர் புறக்கணிப்பும்.
அரசாங்கக் குடியேற்றங்கள்
சுதந்திரத்திற்கு முன்னர் இடம் பெற்ற குடியேற்ற திட்டங்கள் யாவும் மேலதிகமான குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நோக்குடன் புத் தளம் , அநுராதபுரம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட, சுதந்திரத்திற்கு பின் அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் யாவும் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களிலேயே மேற்கொள்ளப்பட்டன. திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், அம்பாறை, வவுனியா போன்ற பிரதேசங்கள் அரசாங்கத்தினால் குடியேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டன. இதனால் தமிழர்கள் தமது பாரம் பரிய பிரதேசத்தில் நிலங்ளை இழந்து
இளங்கதிர் (2004 - 2005) (39) தமிழ்ச் சங்கம்

அகதிகளாயினர். இது இன உணர்வைத் தூண்டி இன முரண்பாடு வளர்வதற்கு வித்திட்டது.*
அட்டவணை
தமிழ்ப் பிரதேசங்களில் அரசாங்க குடியேற்றங்களினால் ஏற்பட்ட சனத்தொகை மாற்ற விளைவு விகிதாசாரம்
மாவட்டம் 1881 1981 188 1981 1881 1981
தமிழர் தமிழர் முஸ்லிம் முஸ்லிம் | சிங்களவர் சிங்களவர் திருக்கோணமலை 64.8% | 36.4%| 25.9% | 29% 4.2% 33.6% மட்டக்களப்பு 61.35%. 41.9% 30.65%. 32.2% 4.5% 24.9% மன்னார் 67.5%. 63.8% 31.1% 26.6% 0.7% 8.1% வவுனியா 84.6% 76.3% 7.3% 6.9% 7.4% 16.6% மூலம் : 'பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்’
பக்- 109,119,125,129 (தொகுக்கப்பட்டது)
தமிழரும் வேலைவாய்ப்பு வசதிகள் சுதந்திரத்திற்குப் பின் படிப்படியாக குறைக்கப்படலாயின. 1956ம் ஆண்டு ‘சிங்களம்” நிர்வாக மொழியாக்கப்பட்ட பின் இந்நிலைமை தீவிரமடைந்தது. சுதந்திரம் பெற்ற போது 1956க்கு முன்னர் அரசாங்க சேவையில் அமர்த்தப்பட்ட 82,000 பேரினுள் 30% பேர் தமிழர்களாக காணப்பட்டனர். இது 1970ம் ஆண்டில் 6% மாக குறைவடைந்தது. இதனால் தமிழர்கள் மனக்கசப்படைந்தவர்களாக இன உணர்வினை பேண முன்னின்றனர். இதனால் இன முரண்பாடு தீவிரமடையலாயிற்று.*
அட்டவணை
அரசாங்க சேவையில் தமிழர் விகிதாசாரம்?
தொழிற்துறை 1956 1965 1970 நிர்வாகத் துறை 30% 20% 5% எழுதுவினைஞர் a 50% 30% 5% தொழில் நுணுக்கத் துறை 60% 30% 10% ஆயுதப் படையினர் 40% 30% 1% தொழிலாளர் பிரிவினர் 40% 20% 5%
eyp61)LB : Sri Lanka and The Tamil Liberation Struggle
இளங்கதிர் (2004 - 2005) (40) தமிழ்ச் சங்கம்

Page 28
கல்வியும் தமிழர் புறக்கணிப்பும்
பல்கலைகழக அனுமதி முறையில் ஏற்படுத்தப்பட்ட தரப்படுத்தல் தேசிய இன முரண்பாட்டை வளர்த்தது. 1970ம் ஆணி டுக் கு முனி தரத் திணி அடிப் படையிலேயே பல்கலைகழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபடியால் இனப்பாகுபாடு பல்கலைக்கழக அனுமதியில் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் 1970க்கு பின் இம்முறையானது நிறுத்தப்பட்டு இன அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி தரப்பட்டது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியில் விரக்தி உருவாகக் காரணமாக அமைந்ததுடன், இன உணர்வைத் தீவிரப்படுத்தி இன முரண்பாட்டுக்கும் இட்டுச் சென்றது.*
அட்டவணை
பல்கலைக்கழக அனுமதி 1969 - 1980
1969/70 1970/71 1971/72 73 74 80/81
பாட வகுப்பு விஞ்|கலை வி க வி வி 85 வி1 க விI க சிங்களவர் %157,788.4| 60.61899 632| 92.667,4191.5| 75.486 178/9819
% % % % % % % % % % % %
தமிழர்% 39.8 7, 135.3 I 7.6|33.6| 48|29.5| 6.1 120.9| 10|21.518.0
% % % % % % % % % % % %
மூலம் : இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியும் பட்டதாரி தொழில்களும் எனும் ஆய்வு நூலில் இருந்து பெறப்பட்டது.*
புவியியற் காரணிகள்
இலங்கை இன முரண்பாட்டை வளர்ப்பதில் புவியியற் காரணிகளும் பங்காற்றியுள்ளன. இந்து சமுத்திரத்தின் இந்திய உப கண்டப் பகுதியில் இலங்கை அமைந்திருப்பதும், தென்னிந்தியப் படையெடுப்புக்கள் காலம் காலமாக இலங்கையில் ஏற்பட்டு வந்தமையும், இலங்கை தமிழர்களுக்காகத் தென்னிந்தியத் தமிழர்கள் அடிக்கடி குரல் எழுப்பி வந்திருப்பதும், ஈழப் போராளிகளுக்கான களமாக தென்னிந்தியா கருதப்பட்டு வந்ததும், இலங்கை இனமுரண்பாட்டில் இந்தியாவின் தலையீடு காணப்பட்டதும், அத்தலையீட்டின் உச்சமாக இந்திய இராணுவம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு உட்பட்டு இலங்கை வந்ததும் பெரும்பான்மையினரான சிங்களவர் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வினை ஏற்படுத்தியது. இளங்கதிர் (2004 - 2005) (41) தமிழ்ச் சங்கம்

இவ்வச்ச உணர்வு தமிழர்களைத் தென்னிந்திய தமிழர்களுடன் இணைத் து பெரும் பாணி மையினராகவும் , தம் மை ச் சிறுபான்மையினராகவும் கருதும் மன நிலைக்கு சிங்களவரை இட்டுச் சென்றது. இந்நிலை தமது இருப்பு தொடர்பான கேள்வியை சிங்களவர்களுக்கு ஏற்படுத்தியது. தமிழர்களிடமிருந்து தம்மை பாதுகாக்க வேண்டும் என்ற மனோநிலை சிங்களவர்களிடம் தோன்றியது. இது இன முரண்பாடு தீவிரமடைவதற்கு காரணமாக அமைந்தது.'
இலங்கையில் தமிழர் - சிங்களவர்களுக்கிடையே தோன்றிய முரண்பாடு இருபது வருடங்களின் பின் இன்று உள் நாட்டு யுத்தமாக உருவெடுத்திருக்கின்றது. இவ்உள் நாட்டு யுத்தம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் பாரதூரமானவை. இவை இலங்கையின் எதிர் காலத் தையே கேளிர் விக்குள் ளாகி கியுள்ளன. இதனால் இவ்வினமுரண்பாடு விரைவில் தீர்க்கப்படுவது அவசியமானது.
இலங்கையின் இனமோதல் த் தீர்வுக்கான முயற்சிகள்
இலங்கையில் அதிகாரப் பகிர்வு முயற்சிகள், 1926ல் S.WR.D. பண்டாரநாயக்கா முன் வைத்த சமஸ்டிக்கான யோசனையுடன் முன் ஆரம்பிக்கின்றன.
1926ல் S.W.R.D பண்டாரநாயக்கா, சமஸ்டி அமைப்புக்கான தனது முதலாவது யோசனையை முன்வைத்தார். 1926 யூலையில் யாழ்ப்பாணத்தில் மாணவர் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பண்டாரநாயக்கா ‘எங்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு சமஸ்டி முறை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
1927ல் கண்டியர் தேசிய பேரவை, தன்னாட்சியுடைய வடக்கு கிழக்கு மாகாணங்களை முதலாவது பகுதியாகவும், கண்டி பிரதேச மாகாணங்களை இரண்டாவது பகுதியாகவும், தெற்கு மேற்கு மாகாணங்களை மூன்றாவது பகுதியாகவும் கொண்ட சமஸ்டி ஆட்சி முறை பற்றி டொனமூர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை கூறியது.*
1928ல் டொனமூர் ஆணைக்குழு மேற்கொண்ட சிபார்சில் மாகாணசபை அமைப்பு முறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. ஆயினும் டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் மாகாண சபைகள் அமைக்கும் முயற்சி மேற் கொள்ளப்படவில்லை.* இாங்கதிர் (2004 - 2005) (42) தமிழ்ச் சங்கம்

Page 29
1940ல் டொனமூர் அமைச்சரவையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவிருந்த S.W.R.D. பண்டாரநாயக்கா, பிராந்திய சபைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக நடைமுறையில் இருந்த கச்சேரி முறையை ஒழித்துப் பிராந்திய சபைகளை ஏற்படுத்துவதெ இவரது நோக்கம். ஆயினும் பல்வேறு காரணங்களினால் இம்முயற்சி கைகூடவில்லை.”
1949ல் சமஸ்டிக் கொள்கையின் அடிப்படையில் S.J.V. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்துச் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். ஆயினும் 1956 வரை இக்கட்சியின் கோரிக்கையை பெரும்பான்மைக் கட்சிகள் பொருட்படுத்தவில்லை.*
1957ம் ஆண்டு பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தில் பிராந்திய சபைகள் மீண்டும் பிரேரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி வட மாகாணம் ஒரு பிராந்தியமாகவும், கீழ் மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட வேண்டும் என்றும் , இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்தியங்கள் மாகாண எல்லைகளை மீறி ஒன்று சேரவும், ஒரு பிராந்தியம் பலவாகப் பிரியவும் அனுமதிக்கப்படலாம் என்றும் இரு தலைவர்களும் சம்மதித்தனர். இதுவே முதல் தடவையாக ஒரு பிரதேச ரீதியான நிர்வாக முறையை தற்போதுள்ள மாகாணங்களின் அடிப்படையில் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி. ஆனால் துரதிஷ்டவசமாக இது நிராகரிக்கப்பட்டதுடன் கைவிடப்பட்டுத் தோல்வியடைந்தது.*
1963ல் மாவட்ட ரீதியான ஓர் அதிகாரப் பகிர்வு முறையினை ஏற்படுத்துவதற்காக பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஓர் குழுவை நியமித்திருந்தார். இதனடிப்படையில் 1964ல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைப்பதற்கான முயற்சிகள் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் 1965ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துடன் இது கைவிடப்பட்டது."
1965ல் டட்லி சேனாநாயக்காவுக்கும் - செல்வநாயகத் துக்குமிடையில் மீண்டும் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்தத்தில் பரஸ்பரம் உடன்படக் கூடியவறான மாவட்ட சபை முறையினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு இரு தலைவர்களும் உடன்பட்டனர். அதன் படி, 1967ல் மாவட்ட சபை மசோதா இளங்கதிர் (2004 - 2005) (43) தமிழ்ச் சங்கம்

தயாரிக்கப்பட்டது. பல நெருக்குதல்கள் காரணமாக மேற்குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மசோதாவும் கைவிடப்பட்டது.
1977ம் ஆண்டு ஐ.தே.கட்சிக்கிணங்க 1980ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மசோதா வரையப்பட்டது. பாராளுமன்றம் மசோதாவை நிறைவேற்றியது. இச்சட்டம் மாவட்ட சபைகளுக்கும் மாவட்ட அமைச்சர்களுக்கும் ஏற்பாடு செய்ததுடன் நாடு முழுவதிற்கும் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.?
1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை, அதிகாரப் பகிர்வு வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாகும். இதுவே சட்டபூர்வமாக 13ம் சட்டத்திருத்தத்தின் கீழ் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றுபடவும், எட்டு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும் வழிவகுத்தது. ஆனால் இந்த நடவடிக் கை நேர்மையாக செய்யப்பட்ட உடன்படிக்கையல்ல. இது மாகாணங்களுக்கான அதிகாரங்களை உண்மையாக வழங்கியிருக்கவில்லை. அப்படியிருந்தபோதும் வழங்கப் பட்ட அதிகாரங்கள் s (up (p. 60) Dust 85 அமுல்படுத்தப்படவில்லை. எந்த மாகாணத்துக்கு அதிகாரப்பகிர்வு செய்ய வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ அங்கு அவ் அதிகாரம் பறிக்கப்பட்டது. எனவே மாகாணசபை முறை தோல்வியிலேயே முடிவடைந்தது.*
1992ல் மங்கள முனசிங்காவின் விஷேட தெரிவுக் குழு அதிகாரப் பகிர்வு முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ளபடி அதற்குச் சமமாக அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் திட்டம் ஒன்றை இத் தெரிவுக்குழு முன் வைத்தது. ஆயினும் இம்முயற்சி பலரது எதிர்ப்பின் காரணமாக தோல்வியிலேயே முடிவடைந்தது.*
1994ல் காமினி திசாநாயக்கா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப்பகிர்வின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மாகாண சபைகளுக்கான 13ம் திருத்தச் சட்டஅதிகாரப் பகிர்வானது தெளிவற்றுக் காணப்பட்டதால் மத்திய அரசாங்கத்துக் கும் மாகாண அரசாங் கத்துக் கும் இடையில் அதிகாரம் தெளிவாக
இளங்கதிர் (2004 - 2005) (44) t தமிழ்ச் சங்கம்

Page 30
வரையறுக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் மாகாண சபைகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.*
1994 ஆகஸ்டில் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்க இன முரண்பாட்டுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய தீர்வுப் பெட்டகத்தை முன் வைத்தது. கடந்த கால அதிகாரப் பகிர்வு முயற்சிகளுடன் ஒப்பிடும் போது தனது விசேட அடிப்படை அம்சங்களை இழந்ததால் இன்று தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.*
1995 ஆகஸ்டில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசால் முன் வைக்கப்பட்ட தீர்வு திட்டத்தின் முதலாவது வரைவு, வடக்கு கிழக்கு இணைந்த திட்டத்தையும் 'இலங்கை குடியரசு கலைக்கப்பட முடியாத பிராந்தியங்களின் ஒன்றியம் என்பதையும் கொண்டமைந்து முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வு முயற்சியாகக் குறிப்பிடப்படடது."
1996 பெப்ரவரியில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டம் மறுவரைவுக்கு உட்பட்டது. இரண்டாவது வரைவில் வடக்கு - கிழக்கு இணைவு கேள்விக்குள்ளானது. ஆகக் குறைந்தது தமிழ் கட்சிகளுடன் கூட கலந்தோசிக்காது இம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. வடக்கு - கிழக்கு இணைப்பென்பது மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலமே தீர்மானிக்கப்படும் என்று வடக்கு - முஸ்லிம்களுக்கென தனியான ஒர் அலகு வேண்டுமா என்பதும் இம்மக்கள் தீர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.*
1997ல் மூன்றாவது வரைபு கொண்டு வரப்பட்டது. இதில் இரண்டாவது வரைபில் இடம் பெற்ற விடயங்களுடன் நிறைவேற்று ஜனாதிபதி மாற்றம் தொடர்பான புதிய அம்சம் ஒன்றும் இணைக்கப்பட்டது”
ஆயினும் இறுதியாக ஆகஸ்ட் 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் நான்காம் வரைபு, ‘இலங்கை குடியரசானது மத்தியினதும் பிராந்தியங்களினதும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர இறைமைத்துவமுடைய தன்னாதிக்க அரசு” எனக் குறிப்பிடுகின்றது. இது பிராந்தியங்களின் ஒன்றியம் என்பதில் இருந்து நீங்கி மீண்டும் ஒற்றையாட்சிக்கே இளங்கதிர் (2004 - 2005) (45) தமிழ்ச் சங்கம்

செல்லும் தனி மை யை இனங் காட்டுகின்றது. இதனால முன்னேற்றகரமாக கருதப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வு சிந்தனை தோல்வியடையும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது."
இதன் பின்னர், இன்று யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை இடம் பெற்று வருவது யாவரும் அறிந்ததே.
ஆயினும் இன முரண்பாட்டை தீர்க்கக்கூடிய வகையில், அனைத்து இனக்குழுக்களும் திருப்தியடையக் கூடிய வகையில் ஓர் திருப்திகரமான தர்வு முயற்சி இனி று வரை மேற்கொள்ளப்படவில்லை. ஓர் திருப்திகரமான ஒரு தீர்வு முயற்சி மேற்கொள்ளப்படுவது. மிகவும் அவசியமானது."
உசாத்துணை நூல்கள்
AMBALAVANAR SIVARASAH Politics of Tamil Nationallism in Sri Lanka
South Asian Publishres New Deli
BASTAMPILLAIBERTRAM "Devolution and power sharing, The means
to pease and Development" Sri Lanka, The Devolution Debate, ICES Colombo, 1996
BASTIAMPILLAIBERTRAM Devolution in a multi ethnic Society.
marage instutite, 1995
ELAZAR, DENIEL. J Why federalism?" federa lism and
political intergratin, Tutledove, 1979
JAYADEVA UYANGODA “The state and process of devolution in Sri
Lanka" devolution and development in Sri Lanka, ICES, Colombo 1994
LEEREAD, BASU, RUMKI “Public administration” Conceots and
theories, sterlin publishers, New Delhi, 1990
PERIS GIL “Towards effective devolution' Sri Lanka. The
devolution Debate, ICES, 1996
PONNAMBALAM SATHCHI “Sri Lanka abd the Tamil liberation struggle”
Londin (1983)
இளங்கதிர் (2004 - 2005) (46) தமிழ்ச் சங்கம்

Page 31
முடிந்தால் திருந்திக்கொள்.
ஸ்.சுதாகரன் (அளவை கலைக்கரன்) 2° வருடம், பொறியியற்பீடம்.
எழுத்து தேசத்தின் எரிமலை நெருப்பு நாம்.! புத்தகங்களுக்கு வெள்ளையடிக்கும் பூச்சிகளின் சாம்ராஜ்யத்தில் ஆயுதங்களுக்கெல்லாம் புதைகுழிகள் அமைப்போம்.! புதிதாத எழுதநினைக்கும்போது சரித்தித்தில் பல சாக்கடைகள். எந்தக் கிரகத்திலாவது இவ்வளவு கொடுமையிருக்காது.! சூரியனைச் சிறையெடுக்கும் விட்டில் பூச்சிகளாய்க் கூச்சலிடும் அரசியல் முகமூடிகள்.! திருத்தமுடியாத நிலையில் நாடுகளின் ஜ(சி)னநாயகம்.! ஒலிம்பிக்கில் மட்டும் ஒற்றுமையாய் நடைபவனி ஊர்வலம். அமெரிக்காவும் ஈராக்கும் அங்குமட்டும் கைகுலுக்கும்.! பாலஸ்தீனம் பற்றியெரிகையில் பார்ப்பதற்கு யாருமில்லை.! அரபாத்தின் ஆழ்துயிலுக்கு அஞ்சலிப்பூக்கள் பலர் கண்களில்..! (நரிகளுக்கும் நீலிக்கண்ணிர்வரும்) தேசியங்களுக்குக் கொள்ளிவைத்து ஆதிக்கவெறியின் அட்டூழியங்கள். முடிந்தால் திருந்திக்கொள்ளுங்கள் இல்லாவிடில் ஓர் அணுகுண்டு போதும், பூமியைக் கல்லறைக்கு அனுப்ப.!
இளங்கதிர் (2004 - 2005) (47) தமிழ்ச் சங்கம்

UDø6og5/rü
ஜோ. தியாகராஜா, இரண்டாம் வருடம், கலைப்பீடம்.
“ட்ேய் என்னடா சின்ராசு எங்கடா போயி தொலைஞ்ச? பாவிப்பயலே, உன்னப் பெத்ததுக்கு நான் படுற கஷ்டம், என்னடா இப்படி பண்ற? டேய் சின்னராசு” என்றாவறு பள்ளமும் மேடுமாய் கட்டுகள் ஒன்றுமின்றி இருந்த படிகளில் வேகமாக ஏறி, ஒரு பக்கத்தில் உடைந்து சரிந்து சாமியாடிக்கொண்டிருக்கும் கூரையுடன் இருக்கும் கோயில் வாசலை அடைந்தாள், பூவாயி. அவள் கட்டியிருந்த மாராப்பு சேலையும் தலையில் போட்டுவிட்டு மறந்துபோன அந்த மங்கலான வேட்டியும் அவள் 5ம் நம்பர் மலையில் தேயிலைச் செடிகளுடன் பட்ட அவஸ்தையை தெளிவாகக் காட்டியது.
“என்னக்கா எங்க போறிக காலுகையி கூட கழுவாம
படங்கும் அவுக்கல” இது கோயில் லயத்து தெய்வானையின் குரல். அதைக்கேட்டுத் திரும்பிய பூவாயி, “அந்த எருமப்பய எங்கபோயி தொலைஞ்சானோ தெரியலடி, படிக்கதா ஒழுங்கா போகல, வீட்லயாவது ஒழுங்கா இருடான்னா கேக்குறானா அவன். என்னத்த சொல்லு, வடிக்கிற எடத்துலதான் நிக்கிறான். மலைக்குப் போனா கணக்கனோட அவதி. வீட்டுக்கு வந்தா இவனோட அவதி” என்று சொல்லிவிட்டு தலையில் போட்டிருந்த வேஷ்டியினால் முகத்தைத் துடைத்து கொள்கிறாள். முகத்தில் முத்துக்களாய் இருந்த வியர்வைத்துளிகளை உள்வாங்கிக் கொண்ட அந்த துணி அதற்கு கைமாறாக தன்னிடமிருந்த அழுக்கைப் பூவாயி முகத்துக்கு கொடுத்தது.
“சரிக்கா நீ போ, நான் சின்ராசக் கண்டா வரச் சொல்றேன்’ என்றுவிட்டு தெய்வானை நகர, நடக்கக் கூட சீவனி அற்றுப்போயிருந்தாலும் தனது 50வது வயதிலும் அறுபது எழுபது என்று பேருக்கு மேல் கொழுந்தெடுக்கும் பூவாயி புலம்பிக்கொண்டே வீட்டுக்கு வருகிறாள், வீட்டைத் திறந்தவளுக்கு ‘திக்’ என்கிறது. ‘ராக்கையில் செம்பு பிரண்டிருக்கே’ என்று அவசரமாக ராக்கையின் அருகில் சென்றவள், நேற்று தான் வாங்கிவந்து வைத்திருந்த தன்னுடைய சீட்டுப் பணத்தைக் காணாமல் கண்கள் இருள, விடே இளங்கதிர் (2004 - 2005) (48) தமிழ்ச் சங்கம்

Page 32
சுற்ற தலையை கைகளால் பொத்திக்கொண்டு நடுவிட்டில் உட்கார்ந்து விட்டாள்.
“ஐயோ, ஐயையோ, என் பாவிமகனே பலிகார சண்டாளா, பிச்சிப் பிச்சி புடுங்கிப் போயாக் கஷ்டப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கொடங்கயில முடிஞ்சுவச்சி, சிறுக சிறுக சேர்த்து சீட்டு காசு போட்டுவச்சேன். சின்னசாதிப்பயலே! சிறு வேலை செய்திட்டியே நீ நல்லா இருப்பியா? தாயோட காசையே களவு எடுக்குறியே, பாவி! நீ நாசமா போகணும். கடவுள் உன்னோட கண்ணப் புடுங்கனும்” என்று கதற, அதற்குள் அந்த ஆறடி காம்பிறாவிற்குள் அப்படியொரு கூட்டம். ஆளுக்கொரு பக்கமாய் பூவாயியை சுற்றி புடுங்கி எடுக்க, காலையிலிருந்து சாப்பாடில்லாமல் களைத்துப்போயிருந்த பூவாயி கதைக்கத் திராணியற்று, கைகால்கள் நடுங்க, நாக்கு வரண்டுபோக “தண்ணி கொஞ்சம் தாங்களே” என்று கதறும்போது கடவுள்கூட ஒரு கணம் கண்ணீர் வடித்திருப்பார். கொடுக்கப்பட்ட தண்ணிரின் துணையால் உறங்கிக்கிடந்த தன்னுடைய வயிற்றை விழிக்கவைத்து, கண்களை சுருக்கிக் கொண்டுவந்த இருளை, இரண்டுமுறை தெளித்துவிட்ட தண்ணீரில் நீக்கிவிட்டு நிமிர்ந்துபார்க்கிறாள், பூவாயி. அந்த நீட்டுலயத்து ஆட்களே நிற்பதைப் பார்த்துவிட்டு, “ஆளுகளா நாயத்த கேட்டிங்களா! நான் பெத்த மகனே என்னோட நானுாறு ரூபா களவெடுத்துட்டான். நா நாயா கஷ்டப்பட்டு ஓடா உழைச்சி உருகி சேர்த்தபணம். நேற்றுதாண்டி சீட்டுக்காசு வாங்கினேன் வேலைக்குப் போயிட்டுவந்து இன்னைக்கு அந்திக்கு நாட்டு கடைக்குப்போயி அரிசி வாங்கனுமின்னு அடிவயித்தக் கட்டிவைத்து சேர்த்தபணத்த படுபாவி எடுத்துட்டு போயிட்டானே’ என்று குமுறினாள்.
பார்வதியிடம் லாம்பெண்ணெய், பக்கத்து வீட்டில் ஒரு சுண்டு அரிசி என்று அன்றைய அந்திப்பொழுதிலும் தனது வழமையான கடமைகளை ஆரம்பித்த பூவாயி முணுக் முணுக் என்று எரியும் குப்பிலாம்பின் உதவியுடன் அன்றாடம் தான் செய்யும் அடுப்படி வேலைகளைத் தொடங்குகிறாள். இன்னும் ஐந்தோ பத்தோ நிமிடத்தில் நிற்கக்கூட முடியாமல் நிறைபோதையில் வருவான் சின்னராசு வந்தவுடன் கொட்டிக்கொள்ள வஞ்சகமில்லாமல் ஏதாவது வேண்டும் அவனுக்கு. இன்று அப்புவளை தோட்டத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டு அங்கும் இங்கும் களவெடுத்து அடகுவைத்துக் குடித்து குடத்தை மட்டும் நிரப்பிக்கொண்டு குட்டிச்சுவராய்ப் போய்க்கொண்டிருக்கும் போக்கிரி சின்னராக, இளங்கதிர் (2004 - 2005) (49) தமிழ்ச் சங்கம்

அவள் வயிற்றில் ஒரு தீ சுடர்விட்டு எரிய, அடுப்பில் ஏனோ தீ பற்ற மறுத்தது. ஒரு வழியாய் பச்சை விறகைப் பற்றவைத்து விட்டு உலையை வைத்து, கறிக்கு ஒன்றுமில்லாமல் ஒரு படி உப்பையும் நான்கைந்து பட்டக்கொச்சிக்காய்களையும் அம்மியில் வைத்து பரக். பரக் என்று அரைத்துக் கொண்டிருக்கும்போதே அடாவடித்தனத்தின் அரசன் சின்னராசுவின் சின்னத்தனமான வார்த்தைகள் பூவாயின் காதுகளில் கல்லாய் விழுகிறது. இவ்வளவு நேரமும் எரிந்துகொண்டு இருந்தவள் எழுந்து வெளியே வந்து பார்க்கிறாள். அந்தப் பட்டமரத்துச் சந்தியில் பள்ளம் மேடு பாராமல் வீராப் பாய் நினி னு கொணி டு நீணி ட வார் தி தைகளை அளந்துகொண்டிருக்கிறாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள்ள வருவான், சோறு போடும்பான், போடுறதுக்கு முன்னமே பொட்டி முட்டிய ஒடப்பான், பொறுக்கிப்பயல்’ என்று தனது வாய்க்குள்ளேயே முனகிக்கொண்டு வாசலில் நின்றவள், விருட்டு என்று வீட்டுக்குள் ஓடிவிட,
“ஏய் பூவாயி ஒம்புருஷன் என்னைய பெத்துட்டு போயிட்டான். நீ என்னய வளர்க்குறேன்னு ஊர் முழுக்க சொல்லிகிட்டு திரியிற. என்னத்த வளர்த்துபுட்ட? சின்னராசுன்னு பேருமட்டும் வச்சிட்ட சோற சரி ஒழுங்கா போடு” என்று கத்திவிட்டு அருகிலிருந்த காலியான பெட்டியை தட்டுகிறான். பென்ஷன் கொடுக்கவேண்டியது பூவாயிக்கு மட்டுமல்ல அந்த பெட்டிக்கும்தான் என்பதை அது உண்மையாகவே உணர்த்துகிறது.
அடுத்த நிமிடம் அடுப்பிலிருந்து பானை இறக்கப்படுகிறது. அடுப்பு சாம்பல் பானைக்கு பட்டை போடுகிறது. அடுத்த கணம் அது அவன் முன் வைக்கப்படுகிறது அரைத்த சம்பலையும் அரைப்பானை சோற்றையும் அரைநிமிடத்தில் அரைத்துவிட்டு “இது என்னா மண்ணாங்கட்டி, ஒழுங்கா ஒரு கறிவைக்க தெரியாதோ? இந்த கட்டசம்பல்ல எவன் சோறு திம்பான்?” என்று தட்டை தூக்கி பூவாயியை நோக்கி எறிய, அது அவளின் தலையில் பட்ட அடுத்த கணமே தலைவெடித்து ரத்தம் பீச்சிட தரையில் விழுகிறாள். பூவாயி நினைவு வந்துபார்த்தபோது 7ம் கட்டை ஆஸ்வத்திரியில் ஆறாம் நம்பர் வாட்டில் ஆதரவின்றி கிடக்கிறாள். அசைக்கக்கூட முடியாத உடம்பை அசைத்துப் பார்த்து தோற்றுப்போய் கட்டிலில் விழுந்தவள் அடுத்தகணமே சிந்திக்கிறாள், ‘அந்தப்பயல் எங்கபோயி சாப்பிடுவான்? இளங்கதிர் (2004 - 2005) (50) தமிழ்ச் சங்கம்

Page 33
எவன் அவனுக்கு சோறுபோடப் போறான்? சொந்தக்காரங்களையும் சொற்களாலேயே கொண்ணுட்டான். என்ன செய்யிறானோ? சாப்பாட்டுக்கு ஒரு நேரப் பசியக் கூட அவனால் தாங்கமுடியாதே? நினைத்துக்கொண்டிருக்கும் போதே அடுத்த வாட்டுக்கு அப்புவளை ஆட்கள் ஓடிப் போவது சன்னலினூடாகத் தெரிகிறது. என்ன விஷயம் என்று விளங்காத போதும் புரிந்து கொள்ள முடியாத ஒரு வேதனையுடன் அந்த சன்னலினூடாகப் பார்த்துக் கொண்டிருந் தவளுக்கு அடுத்த கட்டிலில் உள்ள பெண் கதைப்பது காதில் விழவே அவள் பேச்சில் கவனத்தை ஊன்றுகிறாள்.
“அது வந்துபுள்ளே, அந்த அப்புவள தோட்டத்தில ஆரோ ஒரு பொடியன் கசிப்பு வடிக்கப் பொயிட்டிருக்கி, பொலிஸ் தொரத்த பொடியன் ஒடிப் போயி ஒளிஞ்சிருச்சி, காட்டுலே. அங்கே பாம்பு கடிச்சிருக்கி, பொடியன் நேத்துராவே முடிஞ்சி இப்பதான் பொணம் கொண்டுவந்திருக்கி’ என்று கூற அதைக்கேட்ட பூவாயி, அழுகை பொங்கியெழ, இறந்துபோனது தன் மகன் சின்னராசு என்று நினைத்து, “ஐயா சின்னராசு! என்னவிட்டுப் போயிட்டியே, ஐயா என்ன ஆசுப்பத்திரிக்கு அனுப்பிட்டு நீ ஆருகிட்டயும் சொல் லாமப் போயிட்டியே! ஆறுமணி ஆயிட்டா அங்க இங்க போகாதன்னு அடிச்சடிச்சி அழுதேனே. இப்ப அடிவயிற்றில் நெருப்பக் கட்டிட்டு போயிட்டியே” என்று கதறினாள். “அம்மா சும்மா சத்தம் போடவாணாம். செத்தது செவனு மகன், உங்கமகன் பொலிஸ் கொண்டு பொயிட்டிரிக்கி சும்மா கத்தவாணாம்” என்று கூறிவிட்டு நகரவும், இரண்டு நாட்களாக இரணம் எதுவுமில்லாமல் இடிந்துபோயிருந்த பூவாயி தன் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக கண் மூடினாள், நிரந்தரமாக.
"தந்தையை மறப்பர் மைந்தர்,
தமையனை மறப்பன் தம்பி; பைந்தளிர்ப் பசிய மேனிப்
பயில்நடைக் குதலை யாரை அந்தகன் செகுத்த காலை
யதனையு மறப்பு ரையா செந்தமிழ்த் தாயை யன்னார்
மறப்பது தெளிய கி."வோம்’ (பண்டிதர். சோ. இளமுருகனார்)
இளங்கதிர் (2004 - 2005) (51) தமிழ்ச் சங்கம்

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும் ஒரு சில குறிப்புகள்
பேராசிரியர் க. அருணாசலம் M.A.ph.D தமிழ்த்துறை
புனைகதை ஒர் அறிமுகம்:
உலக மொழிகளில் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெறும் இலக்கிய வடிவங்களுள் ‘புனைகதை’ இலக் கியமே முதன்மையிடத்தைப் பெற்றுத்திகழ்கிறது. ஆரம்பத்தில் இத்தாலிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் தோற்றம் பெற்ற இப்புனைகதை இலக்கியம், ஆங்கில மொழியில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வேரூன்றிக், காலப்போக்கில் உலகம்முழுவதும் பரவலாயிற்று.
ஆங்கில மொழியிற் புனைகதை இலக்கிய வளர்ச்சி பெரிய பிரித்தானியாவில் மட்டுமன்றிக் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கீழைத்தேய நாடுகள் முதலியவற்றிலும் காணப்படுவது போன்று, இன்று தமிழ்ப் புனைகதை இலக்கியமும் தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் மட்டுமன்றி ஜேர்மனி, பிரான்சு, சுவிற்சலாந்து, நோர்வே, டென்மார்க், பெரியபிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் வளர்ச்சியடைந்துவருகின்றது. தமிழகத்தினைப் போன்றே ஈழத்திலும் புனைகதை இலக்கியத்தின் ஒரு பிரிவான சிறுகதை இலக்கியம் இன்று பூரணம் பெற்ற ஓர் இலக்கிய வடிவமாக வளர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
II
தமிழ் புனைகதை இலக் கியத் திணி தோற்றத்திற் குமி வளர்ச்சிக்குமான காரணங்கள்
இந்தியா, இலங்கை முதலான கீழை நாடுகளில் ஏறத்தாழக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிராணி சியர் முதலிய மேலைநாட் டவர் களது ஆதிக்கம் இடம்பெற்றபோதும் இவர்களது ஆட்சியைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரித்தானியரது ஆட்சியின் போதே கீழைநாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு இந்தியாவோ அதன் ஒரு கூறான தமிழகமோ, ஈழமோ விதிவிலக்கல்ல.
இளங்கதிர் (2004 - 2005) (52) தமிழ்ச் சங்கம்

Page 34
பிரித்தானியராட்சிக்காலத்தில் தமிழகத்திலும் அதன் அயலே அமைந்துள்ள ஈழத்திலும் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இம்மாற்றங்கள் பாரம்பரியமாக நிலவிவந்த அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறைகளிற் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தின.
பிரித்தானியராட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள், நிர்வாகச் சீர்திருத்தங்கள், ஆங்கிலக் கல்விவிருத்தி, நவீன கல்வியின் வளர்ச்சி, அச்சியந்திர விருத்தி, மத்திய தரவர்க்கத்தின் தோற்றம், மறுமலர்ச்சிக்கருத்துக்களின் பரம்பல், உரைநடைவளர்ச்சி, நவீனத்துவப் போக்கு, பாரம்பரியச் சமுதாய அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், நிலப்பிரபுத்துவ வீழ்ச்சி, தனிமனிதன் சகலதுறைகளிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியமை, பத்திரிகைத்துறையின் வளர்ச்சி முதலியவற்றினால் “மேலைநாட்டுச் சரக்கு” எனத் தமிழ்ச் சிறுகதை மன்னனால் கூறப்பட்ட ‘புனைகதை’ இலக்கியமும் முதலிலே தமிழகத்திலும் பின்னர் ஈழத்திலும் தோன்றி வளரலாயிற்று.
தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்படும் வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்) காலத்திலும், அதற்குச் சற்று முன்னரும் பலர் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டனர். காலம்காலமாக இடம்பெற்றுவந்த மரபுக்கதைகள் பலவும் நவீன உருவ உத்திகளுடன் கூடிய சிறுகதைகளுக்கும் மரபுக் கதைகளுக்கும் இடையிற் பாலமாக அமைந்த சிறிய கதைகள் பலவும் அச்சு வாகனமேறின. இதே நிலைமையினை நாம் ஈழத்திலும் அவதானிக்க முடிகின்றது.
III
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை முயற்சிகள்:
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை முதல்வர்களாக இலங்கையர் கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரைக் கொள்வது இன்று மரபாகிவிட்டது. அதிற் பெருமளவு உண்மையும் உண்டு என்பதை இலகுவில் மறுக்க முடியாது. ஆயின், இவர்களது சமகாலத்திலும் அதற்குச் சற்று முன்னரும் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்ட ஈழத்தறிஞர்களையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும். இலங்கையர் கோனின் சிறுகதைகளுட் கணிசமானவை "வெள்ளிப் இளங்கதிர் (2004 - 2005) (53) தமிழ்ச் சங்கம்

பாதசரம்' என்னும் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சி. வைத்தியலிங்கத்தின் கதைகளுட் கணிசமானவை ‘கங்காகிதம் என்னும் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சம்பந்தனது கதைகளுட் கணிசமானவை, ‘சம்பந்தன் சிறுகதைகள்’ என்னும் தொகுதியில் இடம் பெற்றன.
இதேபோன்று இவர்களுக்குச் சற்றுமுன்னரும் இவர்களது சமகாலத்திலும் இலங்கையில் பலர் கதை இலக்கியம் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் மரபு வழிக்கதைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட முனைந்தனர். அத்தகையவர்களுள் ஆனால்ட் சதாசிவம்பிள்ளை, சோ. சிவபாதசுந்தரம், கோ. நடேசையர், நவாலியூர் சோ. நடராஜன், ஆனந்தன், பாணன் முதலியோர் விதந்து குறிப்பிடத்தக் கவர்கள். மரபுக்கதைகள் பல கதாசிந்தாமணி, கற்பவளத்திரட்டு, ஹைதாஷா சரித்திரப் பின்னெறிக் கதாசங்கிரகம் முதலிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் நன்னெறிக் கதாசங்கிரகம் முதலியன மரபுக் கதைகளாகவோ அன்றி நவீன உருவ உத்திகளுடன் கூடிய சிறுகதைகளாகவோ அன்றி இரண்டு வகைக் கதைகளுக்குமிடையில் பாலம் போல் அமைந் துள்ளமையையும் நாம் மிகுதியான கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
IV
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதைகளின் முக்கிய பண்புகள்:
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதையாசிரியர்களுள் , ‘மும்மூர்த்திகள்’ எனப் போற்றப்படும் இலங்கையர் கோன், வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரது கதைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய பண்புகள் சிலவற்றை இங்கு நோக்கலாம்.
இலங்கையர்கோனும் வைத்தியலிங்கமும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகுந்த பரிச்சயம் பெற்றவர்கள், சம்பந்தன் வடமொழியிலும் தமிழிலும் நன்கு பரிச்சயம் பெற்றவர், மூவரும் யாழ்ப்பாணக் குடா நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், நெருங்கிய அல்லது தூரத்து உறவினர்கள்.
பொதுவாக நோக்குகையில் இம் மூவரது கதைகளிலும் கிராமியப் பண்புகள், ஆண் - பெண் உறவு, மன உணர்வுப் போராட்டங்கள், மென்மையான காதல் உணர்வுகள், காதலுக்குத் இளங்கதிர் (2004 - 2005) (54) தமிழ்ச் சங்கம்

Page 35
தடையாக அமையும் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், புராண இதிகாச நிகழ்ச்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், மண்வாசனை முதலியன முக்கியத்துவம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். இவர்களது சிறுகதைகள் பல ஈழத்தின் பல்வேறு பாகங்களைக் களமாகக் கொண்டமைந்துள்ள பொழுதும் ஈழத்துமக்களுக்கே பிரத்தியேகமாகவுரிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
தமிழகத்தின் மணிக்கொடி எழுத்தாளர்களுள் மெளனி, கு.ப.ரா., பிச்சமூர்த்தி, சிதம்பரசுப்பிரமணியன் ஆகியோரது சிறுகதைகளின் நேரடித் தாக்கமும், மேலைநாடுகளைச் சேர்ந்த சிறுகதை ஆசிரியர்கள் சிலரின் பாதிப்பும் இவர்களது கதைகளிற் காணப்படுகின்றன. இம்மூவரும் சமூக நோக்குக்கு முக்கியத்துவமளிக்காவிடினும் கலைத்துவம் மிக்க கதைகளைப் படைத்துள்ளமை விதந்து கூறக்கூடியதொன்றாகும். ஈழத்து மண்ணிலே தமிழ்ச்சிறுகதை இலக்கியம் வேரூன்றவும் வளர்ச்சியடையவும் பலமான அத்திவாரத்தை இம் மூவரும் இட்டனர் என்பதில் ஐயமில்லை.
ʼ V
மறுமலர்ச்சிக் காலச் சிறுகதைகள்:
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஏறத்தாழ 1940களின் ஆரம்பம்முதல் 1950 களின் முற்பகுதிவரையிலான காலப்பகுதியை மறுமலர்ச்சிக் காலம் எனலாம். 1943 ஆம் ஆண்டு வரதர் முதலியோரது ஒத்துழைப்புடன் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப்பக்கபலமாக ஈழத்தின் மணிக் கொடிப் பத்திரிகை எனப்போற்றப்படும் மறுமலர்ச்சி என்னும் பத்திரிகை 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப் பகுதிச் சிறுகதைகளில் மறுமலர்ச்சிக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுவதற்கு மேற்படிச்சங்கமும் பத்திரிகையும் முக்கிய பங்காற்றின என்பதில் ஐயமில்லை.
பாரதியார், புதுமைப்பித்தன் முதலியோரது படைப்புகளின் தாக்கமும், காந்தியத்தின் செல் வாக்கும் , மணிக் கொடிப் பத்திரிகையிலும் அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலும் இடம் பெற்ற இலக்கியப் பரிசீலனைகளும், 1930ம் ஆண்டுமுதல் ஈழத்தில் வெளிவந்த ஈழகேசரிப் இாங்கதிர் (2004 - 2005) (55) தமிச் சங்கம்

பத்திரிகையும் வீரகேசரிப் பத்திரிகையும் மறுமலர்ச்சிக் கருத்துகளுக்கு வரவேற்பளித்தமையும் இக்காலப் பகுதியில் எழுந்த சிறுகதைகளில் மறுமலர்ச்சிக் கருத்துகள் முனைப்புப் பெறுவதற்கும் சமூகசீர்திருத்தக் கருத்துகள் அழுத்தம் பெறுவதற்கும் வழிசமைத்தன எனலாம்.
தொடக்ககாலச் சிறுகதை ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்தும் எழுதலாயினர். அதேசமயம் மறுமலர்ச்சிச் சிந்தனையிலும் சமூக சீர்திருத்தச் சிந்தனையிலும் தீவிர ஈடுபாடு கொணி ட இளந்தலைமுறையினர் பலரும் சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் காட்டினர். அத்தகையவர்களுள் அ.செ. முருகானந்தம், தி.ச. வரதராசன், அ.ந. கந்தசாமி, வ.அ. ராசரத்தினம், பித்தன (கே.எம்,ஷா), சு. வேலுப்பிள்ளை, கனக செந்தினாதன், தாழையடி சபாரத்தினம் , இராஜநாயகன், சு. நல்லையா, ஆனந்தன் சோ. தியாகராஜன், இராஜ அரியரத்தினம், நாவற்குழியூர் நடராஜன், கு. பெரியதம்பி, கே. கணேஸ் முதலியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தக் கவர்கள், இவர்களுட் கணிசமானோர் ஆரம்ப முயற்சிகளுடன் தமது எழுத்துப்பணிகளை நிறுத்தி விட்டமை துர்ப்பாக்கியமே.
மேற்குறிப்பிட்டவர்களுள் பலரது கதைகள் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. வ.அ. இராசரத்தினத்தின் தோணி', 'ஒருகாவியம் நிறைவுபெறுகிறது. தி.ச. வரதராசனின் “கயமை மயக்கம்”, “வரதர் கதைகள்’, பித்தனின் “பித்தன் கதைகள்’, சொக்கனின் “கடல்”, கனக செந்தினாதனின் “வெண் சங்கு’, செங்கையாழியான் தொகுத்தளித்த “மறுமலர்ச்சிச் சிறுகதைகள்’, க. சிவகுருநாதனின் “கசின் சிறுகதைகள்”, எஸ். பொன்னுத்துரை தொகுத்தளித்த “காந்தீயக் கதைகள்’, சு. வே.யின் மண்வாசனை, அ.செ. முருகான நீ தணிணி கதைகள் முதலியன இவ் வகையில் மனங்கொள்ளத்தக்கவை.
VI
மறுமலர்ச்சிக் காலச் சிறுகதைகளின் முக்கிய பண்புகள்:
இக்காலகட்டப் பகுதியைச் சேர்ந்த சிறுகதையாசிரியர்கள் பலர் மறுமலர்ச்சிச் சிந்தனைகளாலும் சமூகச்சீர்திருத்தக் கருத்துகளாலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர்கள்; முற்போக்குச் சிந்தனைகளை வரவேற்றவர்கள் என்பதனை அவர்களது சிறுகதைகள் மட்டுமன்றி, இளங்கதிர் (2004 - 2005) (56) தமிழ்ச் சங்கம்

Page 36
அவர்களுட் சிலர் எழுதியுள்ள கட்டுரைகளும் நிருபிக்கின்றன. இவையே இக்கால கட்டச் சிறுகதைகளில் முனைப்புப் பெற்று விளங்குவதனையும் அவதானிக்கலாம்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் தமிழகத்துச் சிறுகதைகளின் பிரதிபலிப்பாகவன்றி ஈழத்தின் பல பாகங்களிலும் வாழுகின்ற மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பனவாகவும் ஈழத்து மண்வாசனையைப் புலப்படுத்துவனவாகவும் அமைதல் வேண்டும்; ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் மத்தியில் காலங்காலமாக ஊறிப் போயிருக்கும் மூடநம்பிக்கைகளையும் அறியாமையையும் அகற்றுதல் வேண்டும்; அவர்கள் மத்தியில் மறுமலர்ச்சிக் கருத்துகளும் முற்போக்குச் சிந்தனைகளும் சுவறவேண்டும் என்னும் துடிப்புடன் இக் கால கட்டத் துச் சிறுகதையாசிரியர் கள் பலரும் செயற்பட்டுள்ளமையை நாம் அவதானிக்க முடிகின்றது.
சமுதாயத்திலும் சமயத்திலும் காலம் காலமாக நிலவிவந்துள்ள குறைபாடுகள் பலவற்றை வணி மையாகக் கணிடித்தனர் . கண்டித்ததோடு மட்டும் நில்லாது அவற்றுக்கான மாற்றுக் கருத்துகளையும் புதிய சிந்தனைகளையும் துணிகர ஆண்மையுடன் முன்வைத்தனர். இதற்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாக முதுபெரும் எழுத்தாளரான வரதரின் “கயமைமயக்கம்” என்னும் சிறுகதைத் தொகுதியில் அமைந்துள்ள பல கதைகளும், பித்தனின் ‘பாதிக் குழந்தை” யும் அ.ந.கந்தசாமியின் கதைகள் சிலவும் திகழ்கின்றன.
தமிழகத்தின் இலக்கிய மரபினை அழுங்குப் பிடியாகப் பின்பற்றும் போக்கினை விடுத்து, ஈழத்திற்கெனத் தனித்துவமான இலக்கியப் பாரம்பரியம் வளர்வதற்கு இவர்களே முதலில் வழிசமைத்தனர் என்பதில் ஐயமில்லை. இவர்களது சிறுகதை களிலேயே முதன்முதல் ‘சமுதாயநோக்கு’ அல்லது சமுதாய அக்கறை முனைப்புப் பெறத் தொடங்குவதனையும் அவதானிக்கலாம்.
பொதுவாக இக்கால கட்டத்து எழுத்தாளர்கள் பலர் தமது சிறுகதைகளின் மூலமாக, காலத்திற்கொவ்வாத பழையமரபுகளை நீக்கவும் புதியசிந்தனைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பவும் தமது இலட்சிய வேகத்தையும் இலக்கிய வேட்கையையும் முற்போக்குச் சிந்தனைகளையும் பரப்பவும் முயன்றுள்ளதை அவதானிக்கலாம். இளங்கதிர் (2004 - 2005) (57) தமிழ்ச் சங்கம்

இவர்களது முயற்சிகள் மூலமே ஈழத்தித் தமிழ்ச்சி கன் புதிய பாதையில் வீறுநடை போடத் தொடங்கிற்று; உருவத்தி உள்ளடக்கத்திலும் சிறப்புப் பெறலாயிற்று; ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் ஆழமான வளர்ச்சிக்கும் அகலமான விகசிப்புக்கும் அடிகோலலாயிற்று; அடுத்து வரும் கால கட்டவளர்ச்சிகளுக்கு முன்மாதிரியாக அமையலாயிற்று.
VII
தேசிய விழிப் புணர்ச் சிக் காலம் அலி லது சமுதாய விழிப்புணர்ச்சிக் காலம்:
இக்காலகட்டத்தை இரண்டுபெரும் பிரிவுகளாக வகுத்து நோக்கலாம் அவையாவன.
01. 1950 களின் நடுப்பகுதியிலிருந்து 1960 களின் நடுப்பகுதிவரை.
02. 1960களின் பிற்பகுதியிலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை.
இக்காலப் பகுதிச்சிறுகதை வளர்ச்சிப் போக்கை நிர்ணயித்த, காரணிகளை இருவகையாக நோக்கலாம். அவையாவன (01) அகக் காரணிகள் (02) புறக்காரணிகள்
s இலங்கை சுதந்திரம் அடைந்ததும் உடனடியாகப் பெரும் மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றமும், அரசினால் மேற்கொள்ளப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ சட்டமும், 1950 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனரீதியான வன்செயல்களும் தமிழ்மக்கள் மத்தியில் பெரும்விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தின.
> எடுத்ததற்கெல்லாம் தமிழகத்தை எதிர்நோக்கியிருந்த இலங்கைத் தமிழ்மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படலாயிற்று. பிரதேச ரீதியான வேறுபாடுகள் ஒரளவு மழுங்கி இலங்கை வாழ்தமிழ் மக்கள் என்னும் தேசிய ரீதியிலான விழிப்புணர்வு ஏற்படலாயிற்று. இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கெனத் தனித்துவமானதோர் பாரம் பரியம் உண்டு, இலங்கைத் தமிழ் இலக்கியம் இலங்கைத்தமிழ் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தேசிய இலக்கியமாக அமைதல் வேண்டும் என்னும் எண்ணக்கரு வளர்ச்சியடையலாயிற்று.
இளங்கதிர் (2004 - 2005) (58) தமிழ்ச் சங்கம்

Page 37
s இலவசகல வித் திட்டத் தினாலும் 1960 களின் தொடக்கத்திலிருந்து பல்கலைக்கழகம் வரைமேற் கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி விருத்தியினலும் கல்விவளர்ச்சி சகல மட்டங்களிலும் பரவலாயிற்று. பின்தங்கிய பிரதேசங்கள், பின்தங்கிய கிராமப் புறங்கள் , பிணி தங்கிய குடும் பங்கள் எனப் பலமட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைந்து உயர் கல்வியைப் பெறலாயினர். இவர்களுட் கணிசமானோர் ஆக்க இலக்கியத்துறையில் தீவிர ஆர்வம் காட்டினர்.
> சமூகத்திற் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. ஆண்டாண்டு காலமாகச் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அறியாமை மூலமாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் விழிப்புற்றெழுந்து தமது உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடத் தலைப்பட்டனர். ஆரம்பக் கல்வியை மட்டும் கற்ற பலர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதோடு இலக்கியத்தையும் போராட்டச் சாதனமாகப் பயன்படுத்தினர்.
S. இவர்களது போராட்டங்களுக்கும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் மேலும் உந்து சக்தி அளிக்கும் வகையில் இடதுசாரிக் கருத்துகள் வலுவூட்டின. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வீறுடன் செயற்பட்டு இவற்றை மென்மேலும் முன்னெடுத்துச் சென்றது.
சிறுகதை, நாவல் இலக்கியங்கள் ‘இழிசனர் இலக்கியம்’ எனப் பழமைவாதிகளால் எள்ளிநகையாடப்பட்ட போது முற்போக்குவாதிகள் அதற்கெதிராகப் பெரும் போராட்டத்தையே நடாத்தி வெற்றியீட்டினர்.
> தொழிற்சங்கங்களின் வளர்ச்சினால் சமூகத்தின் அடித்தள மக்கள் மத்தியிலும் இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் விழிப்புணர்வும் எழுச்சியும் ஏற்பட்டமை
தமிழகத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் செல்வாக்கு இலங்கையின் பலதுறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
s பொதுவுடைமை நாடுகளினின்றும் பரவிய பொதுவுடைமைத்
தத்துவமும், சோஷலிசச் சிந்தனைகளும், அவைசார்பான நூல்களும் இளங்கதிர் (2004 - 2005) (59) தமிழ்ச் சங்கம்

இலக்கியங்களும் தமிழ்மொழியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெறலாயின; இலக்கிய கர்த்தாக்கள் பலரை ஈர்க்கலாயின.
S. இக்காலப் பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்திருந்த பகீரதன், கி.வா. ஜகந்நாதன் முதலியோர் ஈழத்து இலக்கியம் பற்றித்தெரிவித்த அலட்சியமான கருத்துகளும் செய்த உபதேசங்களும் ஈழத்து இலக்கிய கர்த்தாக்களை விழிப்புற்றெழச் செய்தன.
s தினகரன், சுதந்திரன், தேசாபிமானி, பாட்டாளி, பாரதி, மல்லிகை முதலிய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற இலக்கியக்கருத்தரங்குகளும் எழுத்தாளர் மாநாடுகளும் இலக்கிய நெறிப்பாடு பற்றிய கருத்துமோதல்களும் திறனாய்வு முயற்சிகளும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தகுந்த முறையில் வளர்ச்சியடைய உதவலாயின.
s இலங்கையில் யாழ்ப்பாணம் , மட்டக் களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு அப்பால் வன்னி, மலையகம் முதலிய பிரதேசங்களிலும், பெரும்பான்மை மக்களால் சூழப் பட்ட பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் தென்மேற்கு வடமேற்குப் பிரதேசங்களிலும் ஏறத்தாழ 1960களின் பிற்பகுதியிலிருந்து நவீன இலக்கிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டமையும், முஸ்லிம் இளந்தலை முறையினரும் பெண்களும்’ நவீன இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டமையும், சிறுகதைத் தொகுதிகள் பல வெளிவரத் தொடங்கியமையும், தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம், யதார்த்த இலக்கியம் ஆகியனபற்றிய கருத்துகள் வலுவடைந்தமையும் மனங்கொளத்தக்கவை.
ஏறத்தாழ 1950களின் ஆரம்பத்திலிருந்து சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ். அகஸ்தியர், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், சிற்பி, என்.எஸ். எம். ராமையா, காவலுார் இராசதுரை, நீர் வை. பொன்னையன், முத்துலிங்கம், நா. க. தங்கரத்தினம் முதலியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
1960களிற் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் மு.தளையசிங்கம், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், பெனடிக் இளங்கதிர் (2004 - 2005) (60) தமிழ்ச் சங்கம்

Page 38
பாலன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், கே. வி. நடராசன், தெணியான், க. சதாசிவம், நெல்லை க. பேரன், சாந்தன், மருதூர்க் கொத்தன், புதுமைப்பிரியை, குந்தவை, பவானி, நந்திமுதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1960களின் இறுதியிலும் 1970களிலும் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுடன் வன்னியூர்க் கவிராயர், திக்குவெல்லைகமால், அ. யேசுராசா, லெ. முருகபூபதி, சி. சண்முகநாதன், பொ. பத்மநாதன், எஸ். எம். இக்பால், என். கே. மகாலிங்கம், மருதூர் வாணன், எஸ். பாக்கியசாமி, காவலூர் எஸ். ஜெகந்நாதன், ப. ஆப்டீன், அ.ஸ. அப்துஸ்ஸமது, சட்டநாதன், அமுதன், வை. மு. திருநர்வுக்கரசு, சுதாராஜ், மு. கனகராசா, மு. பொன்னம்பலம், குப்பிளான் ஐ. சண்முகம், சசி. கிருஷ்ணமூர்த்தி, யாதவன், நீள்கரை நம்பி, செளமினி, தி. ஞானசேகரன் எம். எம். நூர்டீன், துரை, சுப்பிரமணியன், க.நவம், எம். எச். எம்.ஷம்ஸ் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
VII
இக்காலகட்டப்பகுதியில் எழுந்த சிறுகதைகளில் சமகாலப் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறுவதையும் சிறுகதை எழுத்தாளர் பலர் பிரச்சினைகளை அலசுவதுடன் மட்டும் நில்லாது அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும் தீர்வு மார்க்கங்களையும் தமது கதைகளில் விண் டு காட்டுவதையும் காணலாம். முற்பட்ட காலக்கதைகளிலும் பார்க்க இக்காலப் பகுதிக் கதைகளில் பொருள் விரிவையும் அடிப்படையான கருத்துமாற்றங்களையும் காணலாம்.
முற்போக்குச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படும் இக்காலப் பகுதிச் சிறுகதைகள் காலத்தின் குரலாகவும், காலத்தின் தேவைக்கேற்றன வாகவும், ஈழத்தின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பனவாகவும், சமூகத்தைமுன்னேற்றப் பாதையை நோக்கிச் செலுத்துவனவாகவும் யதார்த்தப்பண்பு மிக்கவையாகவும், சமூதாய ஆவணங்களாகவும் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.
மறுமலர்ச்சிக்காலப் பகுதியில் அங்கும் இங்குமாகத் தொட்டுக் காட்டப்பட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பல இக்காலப் பகுதிக் கதைகளில் விரிவாகவும் ஆழமாகவும் நோக்கப்பட்டுள்ளன. சாதிப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, சீதனப் பிரச்சினை, சுரண்டற் இளங்கதிர் (2004 - 2005) (61) தமிழ்ச் சங்கம்

கொடுமை, வேலையில் லாத் திணி டாட்டம் , இனரீதியான வன்செயல்கள், இனமுரண்பாடு முதலியன இக்காலப் பகுதிக் கதைகளில் முக்கியம் பெற்றுள்ளன.
இக்காலப்பகுதியைச் சேர்ந்தசிறுகதை எழுத்தாளர்கள் பலர் சமூகததின் தாழ்த்தப்பட்ட பகுதியினரிடையேயிருந்தும், தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள் முதலியோர் மத்தியிலிருந்தும் தோன்றியமையினால் போலும், அது காலவரை எழுத்தாளர்கள் அதிகக்கவனம் செலுத்தாத, சமூகத்தின் தாழ்ந்த நிலையிலுள்ள வர்களதும் தொழிலாளர், மீனவர்கள், விவசாயிகள் முதலியோரதும் பல்வகைப்பட்ட பிரச்சினைகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் எண்ணங்கள் அபிலாஷைகளையும் மனிதாபிமானத்துடனும் யதார்த்தத்துடனும் தமது கதைகளிற் பிரதிபலித்துள்ளமை விண்டுரைக்கத்தக்கதாகும்.
இக் காலப் பகுதி எழுத்தாளர்கள் பலர் கதைகளின் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் பரவலான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டனர். முற்பட்டகாலப் பகுதி எழுத்தாளர்கள் தொடுவதற்கு அஞ்சியவிடயங்கள் பல இக்காலப் பகுதிக் கதைகளில் விரிவாகவும் ஆழமாகவும் நோக்கப்பட்டுள்ளன. சமகால சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் பொதுவுடைமை மலர்ச்சியின் மூலமே விடிவுகாணமுடியும் என்னும் கருத்துப் பலரது கதைகளின் அடிநாதமாக ஒலிக்கின்றது. ஈழத்துத் தமிழர் சமூகத்தில் விசுவரூபம் பெற்றுள்ள இன, மொழிப்பிரச்சினைகள் இக் காலப் பகுதிச் சிறுகதையாசிரியர் களினி அதிக வனத்திற்குள் ளாகாமை ஆய்வுக்குரியதாகும்.
VIII
1960களின் பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட மாற்றங்கள்:
ஏறத்தாழ 1960களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சில ஏற்படலாயின. அதுகாலவரை பிரசித்திபெற்ற சிறுகதை எழுத்தாளர்களாக விளங்கிய
பலர் நாவலி , நாடகம் முதலிய துறைகளிற் கவனம் செலுத்தமுற்பட்டனர். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளின் களம்
இளங்கதிர் (2004 - 2005) (62) தமிழ்ச் சங்கம்

Page 39
விரிவடையலாயிற்று. 1960 களின் பிற்பகுதி வரை பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மக்கள் பசெறிந்து வாழும் பிரதேசங்களும் கொழும்பு நகரப் பிரதேசமும் சிறுகதைகளின் களங்களாக முக்கிய இடம் பெற்றிருந்தன. 1960 களின் பிற்பகுதியிலிருந்து நீர்கொழும்பு, திக் குவல் லை, அநுராதபுரம் , குருநாகல் , கெக் கிராவை, மினுவாங்கொடை, இரத்தினபுரி, பேருவலை முதலிய சிங்கள மக்கள் செறிந்துவாழும் பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பலர் தோன்றிப் புதிய கருத்து வீச்சுடன் சிறுகதைகளை எழுதி வருதல் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும்.
திக்வல்லை எழுத்தாளர் சங்கம், மாத்தளை மக்கள் இலக்கியவட்டம் முதலியனவும், சஞ்சிகைகள் சிலவும் இவர்களது முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பணியாற்றிவருதல் போற்றத்தக்கதாகும். குறிப்பாகப் பலதசாப்தங்களாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராது உழைத்து வரும் மல்லிகையின் பெரும்பணி விதந்து கூறக் கூடியதாகும். மேலும் 1960 களின் பிற்பகுதியிலிருந்தே வன்னிப் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளாகிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலும், உடப்பு, புத்தளம் முதலிய பகுதிகளிலும், அம்பாறைமாவட்டத்திலும் சிறுகதை உள்ளிட்ட நவீன இலக்கியமுயற்சிகள் மேற்கொள்ளப்படலாயின.
1960களின் பிற்பகுதியிலிருந்து மலையகத் தொழிலாளர் மத்தியிலேயே பிறந்துவளர்ந்து அவர்களது துயரம் தோய்ந்த வாழ்க் கைப் போராட்டங்களையும் பிரச்சினைகளையும் இன்னல்களையும், அநுபவபூர்வமாக உணர்ந்த இளைஞர்கள் பலர் சிறுகதை எழுதும் முயற்சியில் ஈடுபடலாயினர். இவர்களுக்கு முன்பே மலையத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கணிசமான அளவு சிறுகதைகள் வெளிவந்துள்ள போதும் அக் கதைகளிற் காணமுடியாத சில சிறப்பம் சங்களை இவ்விளைஞர்களது கதைகளிற் காணலாம்.
மலையத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் என் .எஸ். எம். இராமையா, தெளிவத்தைஜோசப், மாத்தளைசோமு, மாத்தளை வடிவேலன், பூரணி, மலரன்பன், சாரல்நாடன், மலைச்செல்வன், பன்னீர்ச்செல்வன், திருச்செந்துர்ரன், பொ. கிருஷ்ணசாமி, நூரளை சண்முகநாதன், க்ேகாலை கைலைநாதன் முதலியோரும் தொழில் நிமித்தமாக மலைய்த்தில் நீண்டகாலம் வாழ்ந்தவர்களும் வாழ்ந்து இாங்கதிர் (2004 - 2005) (63) தமிழ்ச் சங்கம்

வருபவர்களான பெனடிக்ற்பாலன், நந்தி, டேவிட், ஞானசேகரன், சதாசிவம் முதலியோரும் குறிப்பிடத் தக்கவர்கள்.
“தமிழ் நாட் டு எழுதி தாளர் களைவிட இலங்கை எழுத்தாளர்களின் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலை மிக ஆழமானது, நுணுக்கமானது என்று சொல்லலாம். இலங்கை எழுத்தாளர்களின் தனித்தன்மையே சமுதாயப்பார்வை தான்’ எனத்தமிழ் நாட்டுத் திறானாய்வாளர் ஒருவர் ஈழத்துச் சிறுகதைகள் பற்றிக் கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
XV
தமிழ்த் தேசிய எழுச்சிக் காலம்: (1983ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே, இந்தநாட்டில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பமாயிற்றெனலாம். இந்த நாட்டின் தேசியத்தலைவர்களுள் மிக முக்கியமானவர்கள் எனப் போற்றப்பட்ட சகோதரர்களான, சேர்.பொன்னம்பலம் இராமநாதனும் சேர் . பொன்னம்பலம் அருணாசலமும் நாடு போற்ற வாழ்ந்தாலும் பெரும் பான்மை அதிகாரவர்க்கத்தினர் தமிழர்களைப் புறக்கணிப்பதையும், சட்ட சபையில் தமிழருக்கு உரிய ஸ்தானத்தைக் கொடுக்கத் தயாரில்லை எனபதையும் கண்டு தம் வாழ்நாளின் பிற்பகுதியில் மனமுடைந்து போனார்கள். அவர்களைத் தொடர்ந்து, தமிழ்த்தலைவர்கள் பலர் பலதசாப்தங்களாகச் சாத்வீகப் போராட்டம் நடத்தினர். பலவழிகளிலும் பலதுறைகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது உரிமைகளின் பொருட்டும் விடுதலைக்காகவும் பலதசாப்தங்களாக நாடத்திவந்த சாத்வீகப் போராட்டம் 1970 களின் நடுப் பகுதியிலிருந்து இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாகப் பரிணமிக்கலாயிற்று. 1980 களின் ஆரம்பத்திலிருந்து போராட்டம் மிக உக்கிரம் பெறத் தொடங்கியதுடன் அனைத்துலகின் கவனத்தையும் ஈர்க்கலாயிற்று.
போரட் டச் சூழி நிலைகளினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் பிறகாரணங்களாலும் உயர் கல்வி அறிவைப் பெற்றவர்களான இளைந்தலை முறையினர் பல்லாயிரக் கணக்கில் அகதிகளாகவும், தொழில் தேடுவோராகவும் கடல் கடந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கும் மேற்கத்தைய நாடுகள் பலவற்றுக்கும் இளங்கதிர் (2004 - 2005) (64) . தமிழ்ச் சங்கம்

Page 40
செல்லலாயினர். இவை காரணமாக நாட்டின் சகல சமூகங்களிலும் சமூக அமைப்புகளிலும் சமுதாய மதிப்பீடுகள், நியதிகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் முதலியவற்றிலும் மாற்றங்கள் பல வேகமாக ஏற்படலாயின.
ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் வேகமான மாற்றங்கள் பல ஏற்படத் தொடங்கின. அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகளும் இனங்களும் சமூகங்களும் பிரதேசங்களும் விழிப்புணர்ச்சி கொண்டு தமது விடுதலைக்காவும், உரிமைகளின் பொருட்டும் அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் ஈவிரக்கமற்ற சுரண்டற் கொடுரங்களுக்கும் எதிராகத் கிளர்ந்தெழுந்து தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து போராடிச் சுதந்திரம் பெற்றுக் கொண்டடிருக்கின்றன, சுதந்திரத்தின் பொருட்டுத் தொடர்ந்து போராடுகின்றன.
இத்தகைய போராட்டங்கள் பல சாத்வீக அடிப்படையில் ஆரம்பித்துக் காலகதியில் ஆயுதப் போராட்டங்களாகவும் பரிணமிப்பது இயல்பானதாகும் இந்நிலையில் மக்களது நிலைப்பாடுகளை மென் மேலும் முன்னெடுத்துச் செல்வது கலை இலக்கியங்களின் தவிர்க்கமுடியாத பணி ஆகின்றது. உலகம் முழுவதிலும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் (பாலஸ்தீனம், வியட்னாம், நிக்கரகுவா, எல் சல்வடோர், சிலி முதலிய நாடுகளின் அணி மைக்கால இலக்கியங்கள் இவ்வகையில் கூர்ந்து நோக்கத்தக்கவை) நாம் இன்று நிதர்சனமாகக் காணும் உண்மை இதுவாகும்.
கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் முன்னர் எப்போதையும் விட பெண்விடுதலை தொடர்பான சிந்தனைகளும் செயற்பாடுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. தமிழ் இலக்கிய உலகில், பெண்ணியம்’ என்னும் சொல்லாட்சி இன்று பெருவழக்குப் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இன்று சகலதுறைகளிலும் பெண்கள் முன்னேறிவருகின்றனர். பெண் விடுதலைக்காகப் பெண்ணிய அமைப்புகள் பல தீவிரமாகச், செயற்பட்டு வருகின்றன. ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற நிலைமாறிக் கல்வித்துறையிற் பெண்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். உலகமே வியக்கும் வண்ணம், பூங்கொடிகளாக விளங்கிய பெண்கள் இன்று போர்க் கொடிகளாக மாறிப் போர்க்களம் இறங்கிப் போராடிக் இளங்கதிர் (2004 - 2005) (65) தமிழ்ச் சங்கம்

கொணி டிருக்கின்றனர், போராடிக் கொணி டே இலக்கிய கர்த்தாக்களாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிக அளவிலான பெணி கள் இனிறு இலக்கியம் படைத் துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் கேள்விப்பட்டிராத கணனி, இணையம், மின் அஞ்சல், தொலைமடல் முதலியன இன்று மக்கள் மத்தியிற் பெருஞ் செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்றையயுகம் கணனி யுகம் எனப் போற்றப்படுகின்றது. கணனியின் செல்வாக்கும் ஈழத்துத் தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியிற் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.
கடந்த இருபதாண்டுகாலச் சிறுகதை வளர்ச்சியிற் காணத்தக்க சில அம்சங்களாவன: யுத்தச் சூழ்நிலைகாரணமாக இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் நாட்டைவிட்டு புகலிட நாடுகளுக்குச் சென்று விட்ட போதும் பல நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்கள் தோன்றிச் சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். அதிக அளவிலான பெண்கள் எழுத்துத் துறையிற் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஈழத்துச் சிறுகதைகளுக்கான களங்கள் நாடுமுழுவதும் வியாபித்துள்ளதுடன் கடல் கடந்த நாடுகளையும் களங்களாகக் கொண்டு அகில உலகச் சிறுகதைகளாகப் பரிணமித்துள்ளன.
பல்லவர் காலப் பக்தி இயக்கத்தின் போதும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதும், திராவிட இயக்க எழுச்சியின் போதும், பொதுவுடைமை இயக்கச் செயற்பாடுகளின் போதும், அவ்வவ் இயக்க கர்த்தாக்கள் பலர் இலக்கிய கர்த்தாக்களாகவும் விளங்கியதுபோலவே கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராளிகள் பலர் இலக்கிய கர்த்தாக்களாகவும் விளங்கி வருதல் மனங்கொள்ளத் தக் கது மேலும் யுத்த கால ச் சூழநிலையிலேயே அதிக எண்ணிக்கையான சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து கொண்டிருப்பதும் மனங்கொள்ளத்தக்கது.
இக்காலப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் சிறுகதைகளைப் படைத்துவருகின்றனர். அவர்கள் எல்லோரையும் இச் சிறுகட்டுரையிற்
9. D (LP L9uUT 95 இளங்கதிர் (2004 - 2005) (66) தமிழ்ச் சங்கம்

Page 41
பொதுவாக நோக்குகையில், 1980 களுக்கு முன்னரே எழுத்துத்துறையில் கால் பதித்திருந்த பலர், யுத்தகாலச் சூழ் நிலையிலும் தொடர்ந்து எழுதிவந்துள்ளதை அவதானிக்கலாம். 1980 களிலும் 1990 களிலும் எழுதத் தொடங்கிய இளந்தலைமுறையினர் பலருள் கணிசமானோர் இன்று நாடறிந்த சிறுகதையாசிரியர்களாக விளங் குவதையும் சிறுகதைத் தொகுதிகள் பலவற்றை வெளியிட்டுள்ளதையும் காணலாம்.
தெணியான், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ.யோகநாதன், லெ. முருகபூபதி, பத்மா சோமகாந்தன், அ.முத்துலிங்கம், நந்தி, எஸ். அகஸ்தியர் (சில ஆண்டுகளுக்கு முன்னர் அமரத்துவம் அடைந்து விட்டார்) எஸ். பொன்னுத்துரை, மு.பொன்னம்பலம், புலோலியூர் சதாசிவம், தி, ஞானசேகரன், கோகிலா மகேந்திரன், சுதாராஜ், தாமரைச் செல்வி, மண்டுர் அசோகா, அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், திக்குவல்லை கமால், க. தணிகாசலம், மு.பஷீர் முதலிய மூத்த எழுத்தாளர் பலரும் தொடர்ந்தும் எழுதி வருகின்றனர். இவர்களுள் அதிகமானோர். யுத்தகாலச் சூழ்நிலையையும் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புகளையும் மையமாகக் கொண்டு பல சிறுகதைகளைப் படைத்துள்ளனர். இவர்களுள்ளும், செங்கை ஆழியானும் செ. யோகநாதனும் யுத்தத்தின் பாதிப்புகளை மையமாகக் கொண்டு அதிக எண்ணிக்கையான கதைகளைப் படைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
மு.மின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹற்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹற் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹற் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
(திருக்குர்ஆன் 4:135)
-ܥ
இளங்கதிர் (2004 - 2005) (67) தமிழ்ச் சங்கம்

மாதவி பிறப்புத் தொடர்பான சில குறிப்புகள்
பரா.ரதீஸ் مح۔
உதவி விரிவுரையாளர்
தமிழ்த்துறை
சோழ நாட்டிலே பூம்புகாரிலே பிறந்தவள், மாதவி. ஆடல்,
பாடல், அழகு ஆகிய மூன்றும் ஒருங்கே கைவரப்பெற்றவள்;
ஏழாண்டுகள் முறையாகக் கலை பயின்றவள் , பிறப்பில்
குறைவில்லாதவள். இவளது பன்னிரண்டாவது வயதிலே இவளை எமக்கு அறிமுகப்படுத்துகின்றார் இளங்கோ.
“பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய முன்றின் ஒன்று குறை படாமல் ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் ஆறு ஆண்டில் ஆழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி ...”
இவற்றோடு மட்டும் நின்றுவிடாது, மாதவியின் மூலம் பற்றியும் இளங்கோ பேசுகின்றார். அதாவது, எந்த மரபிலே வந்தவள் என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார். அகத்தியரின் சாபத்தின் விளைவாக ஊர்வசி, மாதவியாக இப் பூமியில் வந்துபிறந்தாள். இப்படிப் பிறந்த மாதவியின் மரபிலே வந்தவள் தான் இந்த மாதவி என்கின்றார். இது பற்றிய விரிவான செய்தியினைக் 'கடல் ஆடு காதை” யில் காண்கின்றோம் இந்திரன் சபையிலே ஊர்வசி நடனமாடினாள். இந்திரனுடைய மகன் சயந்தன் ஊர்வசியை உற்று நோக்கினான். ஊர்வசியும் காதல் வசப்பட்டு சயந்தனைப் பார்க்கலானாள். இதனால், நடனத்தில் தாளம் தப்பியது. சீற்றம் கொண்ட அகத்தியர் ஊர்வசிக்குச் சாபமிடுகின்றார். இதனால் ஊர்வசி மாதவியாக வந்து பிறக்கின்றாள். அவ்வாறு பிறந்த மாதவியின் மரபிலே வந்தவள் தான் இந்த மாதவி. இதனை இளங்கோ பின்வருமாறு பாடுவார்.
“நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரப்பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய இளங்கதிர் (2004 - 2005) (68) தமிழ்ச் சங்கம்

Page 42
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி, மங்கலம் இழப்ப, வீணை மண்மிசைத் தங்குக இவள்’ எனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழி முதல் தோன்றிய அங்கு அரவு அல்குல் ஆடலும் காண்குதும்
அகத்தியரது சாபத்தினால் வந்து பிறந்த மாதவி வேறு, சிலப்பதிகாரம் கூறும் மாதவி வேறு. அகத்தியரின் சாபத்தினால் வந்து பிறந்த மாதவியின் மரபிலே வந்தவள், சிலப்பதிகாரம் காட்டும் மாதவி. “மங்கை மாதவி வழி முதல் தோன்றிய. ’ ‘மாதவி மரபின் மாதவி இவள். ’ போன்ற அடிகள் மேற்குறிப்பிட்ட செய்தியினைத் தெளிவுபடுத்துகின்றன. இளங்கோ மாதவியின் மரபு பற்றிக் கூறினாரே ஒழிய, இவளது மறுபிறப்புப் பற்றிக் கூறவில்லை என்பதைச் சிலம்பைக் கற்போர் நன்கு உணர்வர்.
மாநாய்கனுடைய மகள் கண்ணகி என்றும், மாசாத்துவானின் மகன் கோவலன் என்றும் கூறிய இளங்கோ, மாதவியின் தந்தை பெயரையோ தாயின் பெயரையோ கூறவில்லை. சிலம்பிற்கு உரையெழுதியவர்கள் மாதவியின் தாய் சித்திராபதி என்கின்றனர். சிலப்பதிகாரத்திலே இல்லாத இப் பெயரை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. மணிகேமலையில் மாதவியின் தாய் சித்திராபதி என்று கூறப்படுகின்றது. இதனை மணிமேகலை, ஊரலருரைத்த காதையில் வரும் பின்வரும் அடிகளிலிருந்து அறிகின்றோம்.
“மணிமேகலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச் சித்திராபதி தான் செல்லலுற்று இரங்கித்.
99
எனவே, சிலம்பில் இல்லாத “சித்திராபதி” என்ற பெயரை, உரையாசிரியர்கள் மணிமேகலையிலிருந்து பெற்றிருக்கின்றார்கள் என்பது தெளிவு. தழிழகத்தில் தோன்றிய கோவலன் கதை, மாதவியின் தாய் வசந்தமாலை என்கின்றது. சிலப்பதிகாரத்திலே மாதவியின் தோழியின் பெயர் வசந்தமாலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் தோன்றிய கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை, தழிழகத்தில் தோன்றிய கோவலன் கதை என்பன மாதவியின் இளங்கதிர் (2004 - 2005) (69) தமிழ்ச் சங்கம்

முற்பிறப்புப் பற்றிப் பேசுகின்றன. இதில் கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன ஒருவிதமாகவும், கோவலன் கதை இன்னொரு விதமாகவும் மாதவியின் முற்பிறப்புப் பற்றிப் பேசுவதைக் காணலாம். தேவலோகத்திலே இந்திரனுடைய சபையிலே ஊர்வசி நடனமாடுகின்றாள். நாரத முனிவர் வீணை வாசிக்கின்றார். இந்திரனுடைய மகனாகிய சயந்தன் ஊர்வசியைப் பார்க்கலானான். ஊர்வசியும் சயந்தன் மீது காதல் கொண்டாள். இதனால் நாரத முனிவரின் வாத்திய தாள இசையில் இருந்து ஊர்வசி விலகலானாள். கோபம் கொண்ட நாரதர் சாபமிடுகின்றார். நாரதர் சாபத்தின் படி, ஊர்வசி திருக்கடையூரிலே கணிகை குலத்திலே சித்திராபதிக்கு மகளாக மாதவி சென்ற பெயரிலே வந்துபிறக்கின்றாள். இந்திரனுடைய மகன் சயந்தன், பூம்புகார்ப் பட்டினத்திலே வணிக குலத்திலே மாசாத்துவானுக்கு மகனாக கோவலன் என்ற பெயரிலே வந்து பிறக்கின்றான். இச் செய்தியினைக் கோவலனார் கதையிலே காண்கின்றோம்.
“மணி சிறந்த பரிபுரமும் வரு சதங்கை தண்டையுடன் அணி சிறந்த பாதமதில் அணிந்த நல்ல ஊர்வசியும் பணி திகழும் இயல், இசையும் நாரதரும் பண்பாடத் தணி புகழும் இந்திரன் முன் சாரி பல ஆடுவளாம் “ஆடுகின்ற அளவு தன்னில் அமர்ந்து நின்ற மதகரியின் கோடு கொண்ட முலையாளைக் குறித்து நல்ல வாசவனும் நாடி மிகக் கொண்டாடி நலம் மிகுந்த களரி தன்னில் ஈடுபடச் சயந்தனும் இவளைவெட்டிப் பார்த்தனனே’ “பார்த்தளவில் இருவர் தங்கள் பார்வையும் அங்கு ஒன்றாகி ஆர்த்த திசை அது நீங்கி அங்கெழுந்த சந்திரன் போல் ஏத்தியிரு கை குவித்து இலங்குவளை தாமரை போல் வோத்திதயம் பொன்னிறமாய் மெய் மயங்கி விழுந்தனனே’
“விழுந்தளவில் யாழ் முனிவன் மிக்க தன் கை யாழ்பாட ஒழுங்கு வழி ஆடாமல் ஊதாரித்தாள் என வெகுண்டு செழுந்தரள நகையாளைச் செய்யிழையை ஊர்வசியை அழுந்து புவி அதனில் கணிகையாக நீ போய்ப் பிறவுமென்றார்’
s
“ஆகவென்று ஊர்வசியை அருள் முனிவன் தான் சபித்து வாகு பெறு இந்திரன் தன் மதலை சயந்தன் தனையும் ஏக முறப் புவிமீதே இனிப்பிறப்பாய் இவள் மீதே மோகம் உற்று இறந்திடு என்று முனிவனுத்தான் சபித்தனனே' இளங்கதிர் (2004 - 2005) (70) , தமிழ்ச் சங்கம்

Page 43
“தான் முனிவனிடுஞ் சாபத்தால் அவனும் மாசார்தர்க் கான் மருவு மகனாகி அவதரித்துப் புவியில் ஒரு மான் மதனாய்க் கண்ணகையை மணஞ்சூட்ட வார்த்தையிட்டுத் தான் மருவு கோலராய்ச் சரியொக்க வளர்ந்தனரே”
“தனமருவு முனிவனிடுஞ் சாபமதால் ஊர்வசியும் இன மருவுந் திருக்கடையூர் என்னும் அந்தப் பட்டணத்தில் மன மருவு கணிகையவள் மாது சித்திரபதி வயிற்றில் அன மருவு நாகமணியாமெனவும் உற்பவித்தனளே’
எனக் கோவலனார் கதை, கோவலன் மாதவி முற்பிறப்புப் பற்றிக் கூறுகின்றது. கோவலனார் கதையின் படி ஊர்வசிக்குச் சாபமிட்டவன் நாரதன். சிலம்பிலே அகத்தியன் சாபமிடுகின்றான்.
“தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திரச் சிறுவனொடு தலைக் கோல் தானத்துச் சாபம் நீங்கிய.”
இவை சிலப்பதிகார வரிகள். ‘தெய்வ மால்வரைத் திருமுனி என்பது அகத்தியனைக் குறிக்கின்றது. அகத்தியன் பொதிகை மலையிலே வாழ்ந்தவன் என்று கூறும் மரபு எம்மிடத்தே உள்ளது. அகத்தியன் சாபமிடும் போது நாரதன் அங்கிருந்தான். ஊர்வசியின் நாட்டியத்திற்கு வீணை வாசித்தவன் நாரதன் தான். கடல் ஆடு காதையில் இதனைக் காணலாம். கோவலனா கதையிலும் ஊர்வசியின் நாட்டியத்திற்கு நாரதனே வீணை வாசிக்கின்றான். அவனே சாபமிடுகின்றான். கோவலனார் கதையிலே வருகின்ற “யாழ்முனிவன்” என்ற சொற்றொடர் நாரதனைக் குறிக்கின்றது. வீணை வாசிப்பதில் நாரதன் வல்லவன் ஆதலால் அவனை “யாழ் முனிவன்’ என்று அழைக்கும் மரபு உண்டு.
கண்ணகி வழக்குரையும் மாதவியின் முற்பிறப்புப் பற்றிக் கோவலனார் கதையைப் போன்றே கூறுகின்றது. கோவலனார் கதையின் படி சயந்தன், கோவலனாகப் பிறக்கின்றான். கண்ணகி வழக்குரையின் படி மூங்கிலாகத் தோன்றுகின்றான். பாண்டியரின் குடைக் காம்பிற்காக அந்த மூங்கில் வெட்டப்படுகின்றது. இச் செய்தியினைக் கூறும் பாடல்கள் வருமாறு;
இளங்கதிர் (2004 - 2005) (71) தமிழ்ச் சங்கம்

“ஆக என்று அங்கு உறுவசியை அருள் முனிவனும் சபித்து வாகு பெற இந்திரன் தன் மதலை செய்ந்திரனையும் ஏகியுடன் மண் மீதில் இனிய பசுங் கழையாக மோகமுற முனைத்து எழு என்றே முயன்றவனையும் சபித்தார்’
“தான் முனிவன் இடுஞ்சாபம் தப்பாமல் உறுவசியும் மான் விழியாள் சித்திரபதி வயிற்றில் வந்து அங்கு அவதரிக்க தேனவிழ்தார் செயந்திரனும் திகிரியென முனைத்தெழுந்தான் மீனவன் முன் குடைக்காம்பாய் வெட்டி வந்து அங்கு இட்டனரே”
இங்கே இழை, திகிரி ஆகிய சொற்கள் மூங்கிலைக் குறித்து நிற்பதைக் காணலாம்.
பகையரசர்களை வெற்றி கொண்டு, அவர்களிடத்திலே பெற்றுக் கொண்ட வெண்கொற்றக் குடையின் காம்பில் ஏழு சாண் வெட்டி எடுப்பர். இக் கோலை நன்கு அலங்கரிப்பர். இந்திரனுடைய மகன் சயந்தனெனக் கொண்டு வழிபாடு இயற்றுவர். இத் தலைக் கோலை வழிபாடு இயற்றிய பின்பு உல்ாவாகக் கொண்டு சென்று, பின்னர் நாட்டிய அரங்கிற்கு முன்னதாக வைப்பர். அதன் பின் நாட்டியமாடத் தொடங்குவர் இம் மரபினைச் சிலப்பதிகார அரங்கேற்று காதையில் காண்கின்றோம். இம் மரபினுடாகக், குடைக்காம்பை சயந்தனாகக் கொள்ளும் முறைமையைக் காண்கிறோம். இதனைப் பின்வரும் சிலப்பதிகார அடிகளில் தரிசிக்கலாம்.
காவல் வெண் குடை மன்னவன் கோயில் இந்திரச் சிறுவன் சயந்தன் ஆக என வந்தனை செய்து, .
சயந்தன் மூங்கிலாகத் தோன்றினான் என்றும், அம்மூங்கில் பாண்டியரது குடைக்காம்பிற்கு வெட்டப்பட்டது என்றும் கண்ணகி வழக்குரை கூறும் செய்தி, சிலப்பதிகாரத்தில் கூறப்படும் இச் செய்தியில் இருந்து பெறப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே கோவலனார் கதையும், கண்ணகி வழக்குரையும் மாதவியின் முற்பிறப்பு ஊர்வசியெனக் கூறி நிற்பதைக்
EST 60 OT6NDTLb. இளங்கதிர் (2004 - 2005) (72) தமிழ்ச் சங்கம்

Page 44
கோவலன் கதை மாதவியின் முற்பிறப்புப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது. மதுரையிலே, பாண்டியர்கள் தமக்குப் பிள்ளைப் பாக்கியம் இல் லாத காரணத்தினால் , காளிமீது கோபம் கொணி டு காளிகோயிலைப் பூட்டினார்கள். இக் கோயிலுக்கு விளக்கு வைக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
“காளியம்மன் சத்நிதியைக் கதவடைத்தார் பாண்டியர்கள் சாத்திக் கதவடைத்துத் தான் பூட்டி மண்ணறைந்தார் தேடி ஒருவரிங்கு திரு விளக்கு ஏற்றினோரை காளியம்மள் கோயிலுக்கு கன விளக்கு வைத்தவரை ஆர் விளக்கேற்றினும் ஆக்கினைகள் செய்திடுவோம் எவர் விளக்கேற்றினாலும் இரண்டு துண்டாக்கிடுவோம்”
இந் நிலையில் வாணிபனொருவன் எண்ணெய் விற்க வருகின்றான். யாருமே அவனிடம் எண்ணெய் வாங்கவில்லை. இதனால் காளி கோயிலுக்குச் சென்று, காளியை வேண்டலானான்.
“எண்ணெய் விற்க வந்தாலே ஏந்திழையே உந்தனுக்கு ஆயிரம் முதல் விளக்கு அன்பாக வைப்பேனென்று பிரார்த்தனை செய்து விட்டு பிரியமுடன் போனானே’
காளியே! என்னுடைய எண்ணெய் எல்லாம் விற்று முடிந்தால் உனக்கு ஆயிரம் திருவிளக்கு ஏற்றுவேன் என்று கூறிச் சென்றான். காளி அருளால் எண்ணெய் விற்று முடிந்தது. வணிகனும் ஆயிரம் திருவிளக்கு ஏற்றி முடித்தான். -م
எண்ணெய் வாணிபன் விளக்கு வைத்ததைப் பாண்டியர்கள் அறிந்தார்கள். அவனுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். மறுபிறப்பில் எண்ணெய் வாணிபன் கோவலனாகப் பிறக்கின்றான். இவனுடைய மனைவி மாதவியாகப் பிறக்கின்றாள். காளி கண்ணகியாகப் பிறக்கின்றாள். மாதவி திருக்கடையூரிலே, தேவ தாசி மரபிலே வசந்த மாலைக்கு மகளாக வந்துபிறக்கின்றாள்.
“கடையூர் வசந்த மாலை கன்னியொரு தேவதாசி அவள் - பிள்ளையில்லையென்று பெருந்தபசு தானிருந்தாள் அப்போது சொக்கலிங்கம் ஆண்டவனாரேது செய்வார் வாணிச்சி தன்னுயிரை மகாதேவர் தாம் எடுத்து எலுமிச்சங் கனியாக்கி இன்பமுடன் தாம் கொடுத்தார் இளங்கதிர் (2004 - 2005) (73) தமிழ்ச் சங்கம்

வாங்கி மனமகிழ்ந்து வசந்த மாலை உண்டாளே. அதுவே தான் மாதமாக ஆரணங்கு கர்ப்பமதாய் பத்து மாதம் சென்று பைந்தொடியும் பெற்றெடுத்தாள்”
என, மாதவியினது பிறப்பு, மறுபிறப்புப் பற்றிக் கோவலன் கதை கூறும்.
"........ பூம்புகார்ப் பொன்தொடி மாதவி தன் வாக்கினால் ஆடு அரங்கின் வந்து”
என்ற சிலப்பதிகார அடிகளினுடாக, மாதவி பூம்புகாரில் பிறந்தாள் என்பதை அறிகின்றோம். கண்ணகி வழக்குரையும் மாதவி பூம்புகாரில் பிறந்தவள் என்றே கூறுகின்றது. இதனைப் பின்வரும் அடிகளில் காணலாம்.
'கடையூர் வசந்த மாலை கன்னியொரு தேவ தாசி அவள் - பிள்ளையில்லையென்று பெருந்தபசு தானிருந்தாள்’
என்ற கோவலன் கதை அடிகளினுடாகவும்
66
. திருக்கடையூர் என்னும் அந்தப் பட்டணத்தில் மனமருவு கணிகையவள் மாது சித்திராபதி வயிற்றில்."
என்ற கோவலனார் கதை அடிகளினுடாகவும் மேலே கூறிய செய்தியினை அறிந்து கொள்ளலாம்.
பூம்புகார் காவிரிக் கரையில் அமைந்துள்ள கடற்கரைப் பட்டினம், சோழ நாட்டினுடைய தலை நகரமாக விளங்கியது. திருக்கடவூர் காவிரித் தென் கரையில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மாயவரம் - தரங்கபாடி புகை வண்டிப் பாதையில் திருக்கடவூர் நிலையம் உள்ளது திருக்கடவூரை, திருக்கடையூர் என்றும் அழைப்பர்.
‘நன்கடையூர் பற்பலவும் நன்றி மறவாது எத்தும் தென்கடையூர் ஆனந்தத் தேறலே’
என்ற இராமலிங்க சுவாமிகளின் அடிகளினுடாக கடவூர், கடையூர் என்றும் அழைக்கப்படுவதைக் காண்கின்றோம்.
இளங்கதிர் (2004 - 2005) (74) தமிழ்ச் சங்கம்

Page 45
பூம்புகார் வேறு. திருக்கடையூர் வேறு. ஆனால் இரண்டு இடங்களும் சோழ நாட்டில் தான் அமைந்துள்ளன. புகாரின் முதன்மையை அல்லது பிரபல்யத்தைக் கருத்திற் கொண்டு இளங்கோ, திருக்கடையூர் என்று குறிப்பிடாமல், பூம்புகார் என்று கூறினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அல்லதுசிலப்பதிகார காலத்தில், புகார் நகரத்தின் எல்லைக்கு உட்பட்ட ஊராக கடையூர் விளங்கியிருக் கலாம். எனவே பொதுமையைக் கருத்திற் கொண்டு இளங்கோ புகார் என்றிருக்கலாம். இளங்கோ திருக்கடையூர் பற்றிக் குறிப்பிடாத காரணத்தால் கோவலன் கதை, கோவலனார் கதை ஆசிரியர்கள் வாய்மொழி மரபில் இருந்து இதனைப் பெற்றுக் கொண்டார்களோ என்றும் எண்ணலாம். இவ் வகையில், சிலப்பதிகாரம், கோவலன் கதை, கோலவனார் கதை, கண்ணகி வழக்குரை, என்பவற்றின் வாயிலாக, மாதவியின் பிறப்புத் தொடர்பான செய்திகளை நாம் கண்டு கொள்ளலாம்.
துணை நூல்கள்:
கந்தையா வீ. சி. (பதிப்பாசிரியர்) (1968) கண்ணகி வழக்குரை மட்டக்களப்பு: இந்து சமய விருத்திச் சங்கம்
சுப்பிரமணியன், ச.வே (உரையாசிரியர்) (2001) சிலப்பதிகாரம் சென்னை: கங்கை புத்தக நிலையம்
சல்லையா, மா.கே (பதிப்பாசிரியர்) (1962) கோவலனார் கதை பருத்தித்துறை
புகழேந்திரப்புலவர் (இவர் பாடியதாகக் கூறப்படுகின்றது) (1949) கோவலன் கதை சென்னை: ஒ ஆதிமூலம் சன்
புலியூர் கேசிகக் (தெளிவுரை) (2000) சிலப் பதிகாரம் சென்னை: பாரிநிலையம்
வேங்கடசாமி நாட்டார் ந. மு (உரையாசிரியர்கள்) (1963) சிலப்பதிகாரம்
சென்னை : கழகவெளியீடு
கலைக் களஞ்சியம்
பாலுச்சாமி, நா (முதன்மைப் பதிப்பாசிரியர்) (1988) வா ழ' வ ய ற
களஞ்சியம் (தொகுதி-10) தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக் கழகம்
பத்மநாதன், சி (பிரதம பதிப்பாசிரியர்) (1996) இந்து கலைக்களஞ்சியம்
(தொகுதி - i) (கொழும்பு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (1998) இந்துக் கலைக் களஞ்சியம் (தொகுதி iv)
கொழும்பு: இந்து சமயகலாசார, அலுவல்கள் திணைக்களம்
இளங்கதிர் (2004 - 2005) (75) தமிழ்ச் சங்கம்

கனவுகள் கலைகின்றன
கனவைக் கூட நிஜமென்றெண்ணி சயனத்தில் இருந்து சடுதியாய் விழித்திடும் - எம் விழுதுகளைக் கூட வெட்டிக் கொன்றனர் - இது வெறும் கனவல்ல - எம் கண்களால் கண்ட காலனின் காட்சி.
பள்ளிப் பறவைகளின் வெள்ளைச் சட்டைகள் கூட செங்குருதியில் தோய்க்கப்பட்ட காலம் இது. வெண்புறாவைப் போல் சமாதானத்துக்காய் சிறகடித்துப் பறந்த சின்னக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லையவர்கள், பாலியல் கற்றுக் கொடுப்பதில்.
இதுவெல்லாம் கனவல்ல. காலத்தால் அழியாத - எம் இதயத்தை பிழிகின்ற விசனம் கொண்ட நிஜங்களே .
கூலிக்கு வேலை தேடி - அந்த வேலைக் கரைக்குச் சென்ற - எம் உயிரினும் மேலான உறவுகளை. ரத்தத்தில் விளைந்த எம் முத்துக்களை. குழி தோண்டிப் புதைத்தனர், குள்ள நரிகள் - இதைச் சந்திரனே சாட்சி சொல்லும்.
இளங்கதிர் (2004 - 2005) . (76)
தமிழ்ச் சங்கம்

Page 46
ஆளிருள் அகற்றும் கல்வி ஒளிதந்து எம்மை ஆளாக்க நினைத்த
ஆசானை விட்டார்களா..? அந்த ஆண்டவனைத் தானும் அவர்கள் மதித்தார்களா ..? பூசைக்குப் பூவைக்கும் - அந்தப் புனிதத் தாயைக் கூட சாமிக்குப் படையலாக்கியவர்கள்
- அவர்கள்.
கர்ப்பிணித் தாயின் கற்பைக் கூடப் பரிசோதித்துப் பார்க்கத் தவறவில்லையவர்கள். யாரைத்தான் விட்டார்கள்? ஆடுமாடுகள் போலெம்மை அடித்து நொருக்கினார்கள். எம் மாடுகளை எல்லாம் மடி கட்டிக் கொண்டு போயினர், மீதியானவற்றைத் தீயிட்டுக் கொழுத்திவிட்டு .
இவையெல்லாம் வெறும் கனவல்ல. கங்கும் இயதங்களின் கனமான நினைவுகள். இவற்றையெல்லாம் நாம் வருந்திப் பெறவில்லை. ‘தமிழன் என்ற பட்டத்தினாற் கிடைத்த பாராட்டும் பரிசில்களும்’ .
போனது போகட்டும் இருப்பதைப் பார்ப்போமென்று கோர்த்த கைகள் இன்று வேர்த்து நிற்பதும் வெறும் கனவல்ல, நிஜமே . மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன, சமாதானப் பெண்கர்ப்பமாகி. ஆனால் ..?
எத்தனை கனவுகள் எம் இனத்தின் அத்தனை இதயங்களிலும். ஆட்சிக்கு வருகின்ற அத்தனை பேரும் இதனையேன் மொத்தமே மறுக்கின்றார்கள்? கதிரைக்சாகக் கத்திக் கொள்ளும் இவர்கள் ஏன் எம்மினத்தின் கருணைக்காக மெளனிக்கின்றார்கள்? -இதனால் அத்தனை கனவுகளும் கலைகின்றன, இன்று மீண்டுமோர் யுத்தத்தினை எண்ணி .
வீசுவது .
கலைப்பீடம் பேராதனை
இளங்கதிர் (2004 - 2005)
தமிழ்ச் சங்கம்

இழிவுபடுத்தப்பட்ட தமிழர் கலை
இரா. தேவமாறன், 1LD 6)|(5LLb, பொறியியற் பீடம்.
இருபத் தோராம் நூற் றாணி டில மனிதனி காலடி எடுத்துவைத்துவிட்டாலும், எமது தமிழ் சமூக கட்டமைப்புகளின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகச் சொற்பம். தமிழ்க்கலாசாரம் மற்றும் பணி பாடுகள் உனி ன த நிலையில் வைத் துப் போற்றப்பட்டுவருகின்றன. எனினும் இவற்றில் சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. இந்த வகையிலே எமது சமூகப் பாகுபாட்டின் காரணமாக பின்தள்ளப்பட்ட ஒரு தொன்மையான கலை 'பறை' அறைதல் ஆகும்.
"பறை' மேளம் என்றவுடன் எமது நினைவில் வருவது கோவில் வேள்வியும், மரண ஊர்வலமும் மட்டுமே. இலங்கையை பொறுத்தவரையில் இவ் இரு நிகழ்வுகளில் மட்டுமே “பறை” பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. அது மட்டுமின்றி தமிழர்களின் அதிபழமையான இந்த வாத்தியக் கருவியையும் அதைக் கையாள்பவர்களையும், இழிந்த நிலைக்கு நமது சமூக அமைப்பு தள்ளியிருக்கின்றது.
உண்மையில் “பறை” அறைதல் என்பது, தமிழ் சமூக அமைப்பில் இரண்டறக்கலந்திருந்த மிகத் தொன்மையான ஒரு கலையாகும். தமிழரின் தொன்மையான இலக்கிய நூலான தொல்காப்பியம், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பிரிவில் கருப்பொருளில் ஒன்றாக பறையைச் சித்தரிக்கின்றது. அதே சமயம், ஐவகை நிலப்பிரிவிற்கும் ஐவகைப்பறை இருந்ததாகக் கூறப்படுகின்றது. தொண்டகம், முருகிறம், என்பன குறிஞ்சி நிலத்துக்குரியவையாகவும், அவை குறிஞ்சிப்பறை என பொது மொழியாலும் குறிப்பிடப்பட்டன. துடி’ என்பது பாலை நிலத்துக்குரிய பறையாக பாலைப்பறை எனக் குறிப்பிடப்பட்டது. பம்பை, ‘ஏறங்கோட் பறை' என்பன முல்லை நிலத்துக்குரிய பறையாக முல்லைப்பறையென குறிப்பிடப்பட்டது. ‘இணை’ என்பது மருதப்பறை எனவும், காப்பறை என்ப்து நெய்தற்பறையாகவும் குறிப்பிடப்பட்டன.
இளங்கதிர் (2004 - 2005) (78) தமிழ்ச் சங்கம்

Page 47
பறையின் ஒலியைக்கொண்டு பேரோசைப்பறை, போர்ப்பறை, வெருப்பறை, வெறியாட்டுப்பறை என்றெல்லாம் அவற்றிற்கு பெயர் சூட்டப்பட்டன. தவளையின் குரலை உடையபறை தட்டைப்பறை எனப்பட்டது. சாவுப்பறை தண்ணகம்’ எனப்பட்டது. பொதுவாக பறை என்பது ஏனைய தோற்கருவிகளைப் போன்று தோலால் போர்த்தப்பட்ட ஒரு கருவி. இக்கருவி ஒருமுகமுடையதாகவும், இருமுகமுடைய தாகவும் இருந்தது. ஒருமுகமுடைய பறை ஒருகண் இரும்பறை என்றும், இரட்டை முகங்களை உடையபறை இணைமுகப்பறை என்றும் வழங்கப்பட்டு வந்தது.
இன்று வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகைகள், தொலைபேசி, தொலைநகல்கள் போன்ற தொடர்பாடல் சாதனங்கள் செய்கின்ற வேலையை ஆரம்பகால தமிழர்கள் சமூக அமைப்பில் பல்வேறு பறைகளும் செய்தன. இன்று நவீன தகவல் தொடர்பு சாதனங்களைக் கையாள்பவர்களைப் பத்திரிகையாளர்கள், தொலைத்தொடர்பாளர்கள் என்று எவ்வாறு சமூகம் உயர் அங்கீகாரம் கொடுத்து வைத்திருக்கின்றதோ, அதேபோன்றே பறை அறையும் தொழில் புரிந்தவர்களுக்கும் அன்றைய சமூக அமைப்பில் உயர் அங்கீகாரம் இருந்தது. அன்றைய சமூக அமைப்பு இயங்குவதற்கு பறை அறைதல் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துவரும் காலத்தில், கரைகளில் உடைப்பெடுக்கும் போது அந்த உடைப்பை உடனடியாகக் கட்டி ஊரைக் காப்பதற்கு ஆற்றின் கரை காப்பாளர்கள் பறை அறைந்து மக்களை அழைப்பர். அதற்கு இளேற்றுதற் பறை என்று சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. எதிரி நாட்டவன் தம் நாட்டின் மீது படையெடுக்கும் போது போர் வீரர்களை போருக்கு அணி திரட்டுமாறு கோருவதற்குப் பறை அறையப்படும். அது போர்ப்பறை எனப்படும்.
அதுபோல் ஒரு நாட்டை வெற்றி கொண்டபின், அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கும் பறை அறைவது நமது முன்னோரின் மரபாக இருந்தது. அந்தபறை வெற்றிப்பறை எனப்பட்டது. தோல் வியையும் பறையறைந்து அறிவிக்கும் வழக்கம் நம்மவர்களிடையே இருந்தது. இந்தப்பறை மற்றய பறைகளை விட வித்தியாசமான ஓசையைக் கொண்டதாக இருந்தது. இந்தப்பறை ஒலிக்கும் போது பற்பலவகை மொழிகளும் ஒப்பாரிகளும் சொல்லப்பட்டதாக இலக்கியங்கள் சான்றுபகர்கின்றன. இளங்கதிர் (2004 - 2005) (79) தமிழ்ச் சங்கம்

வயல களிலே வேலை செயப் யும் உழவர்களை ஊக்குவிப்பதற்காக இணை என்ற மருதப்பறை ஒலிக்கப்பட்டது. வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் போதும் பறை ஒலித்து கொண்டாடப்பட்டது. அது அரிப்பறை என அழைக்கப்பட்டது. அவ்வாறே கிழங்கு வகைகளைப் பயிர் செய்துவிட்டு அவற்றைக் காட்டுப் பன்றிகள் சேதமாக்காதவாறு பறை ஒலிக்கப்பட்டது. இது பன்றிப்பறை எனப்பட்டது.
செய்திகள் மக்களுக்கு அறிவிக்கப்படும் போதும் பறை அறைந்தே அறிவிக்கப்பட்டது. இவ்வாறான பறை அறையும் போது யானைமீது பறையை ஏற்றி ஒலித்து மன்னனின் பெயரால் சொல்லவேண்டிய செய்திகளைச் சொல்வதும் இருந்துவந்த வழக்கம். திருமணத்தின்போதும் பறை அறைந்து கொண்டாடும் வழக்கம் தமிழர் பெருவழக்கமாக இருந்தது. இந்தப் பறை மணப் பறை என அழைக்கப்பட்டது.
இறந்த வீட்டுக்குச்சென்று பறையடிப்பது சாவுப்பறை என அழைக்கப்பட்டது. இந்தப்பறை ஒலியை மற்றைய பறைகளிலிருந்து வேறுபடுத்த ஒருமுறை அடித்து நிறுத்திவிட்டு, அதாவது சிறிய இடைவெளி விட்டு மறுபடியும் அடிப்பர். சாவுப் பறை என அழைக்கப்பட்ட இந்தப்பறை ‘தழிஇம்,தழிஇம்’ என ஒலித்ததாகவும், சாவு ஊர்வலத் தில ஒலித் தபறை (சாவு மேளம் ) ‘டொண்டொண்டோடு’ என ஒலித்ததாகவும் நான்மணிக்கடிகை என்ற நூல் தெரிவிக்கின்றது.
இவ்வாறு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்தப்பறை இன்று நலிந்துபோய் ஒதுக்கிவைக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு கலையாகிவிட்டது. புலம்பெயர் தமிழர் வாழ்கின்ற நாடுகளில், தாயகத்தைப் போல் சமூக புறந்தள்ளுகைகள் இல்லாதிருந்தும், இங்கு கூட பறை இழிவாக, சாதி அடிப்படையில் புறந்தள்ளப்படுவது மிக வருந்தத்தக்க விடயம். பரந்துபட்ட தமிழ் மக்களின் தேசிய வாத்தியமும் தேசிய கலையுமான பறைமேளக் கலை நாகரீக மனிதனால் கூடப் புறந்தள்ளப்படுவது கவலைக்குரிய விடயமே.
“உன் வீடு உன் பக்கத்து வீட்டின் இடையில் வைத்த சுவரை இடித்து, வீதிகள் இடையில் திரையை விலக்கி நாட்டோடு நாட்டை இணைத்து மேலே ஏறி நின்று பாரடா எங்கும்!
- பாரதிதாசன் -
இளங்கதிர் (2004 - 2005) (80) தமிழ்ச் சங்கம்

Page 48
செப்பறைச் சிதம்பர சுவாமிகள்: ஒர் அறிமுகம்
செப்பறைச் சிதம்பர சுவாமிகள் ஈழநாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழ நாட்டின் வட பகுதியான யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாகிய கொடிகாமத்தில் சைவசமய வாழ்வியல் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வந்த வேலாயுதம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது கிராமிய குடும்பச் சூழ்நிலைகள் அவரது சைவசமய வாழ்வியல் பயிற்சி நெறிக்கும் தமிழ், வடமொழிப் புலமை நெறிகளை வளர்த்துச் செல்வதற்கும் களமாக அமைந்தன. தமிழ் மொழிக் கல்வியை, குறிப்பாக இலக்கணம் , புராணம் முதலானவற்றை சபாதிப் பிள்ளை அவர்களிடத்தும் வடமொழிக் கல்வியினை மந்துவில் சுப்பிரமணியக் குருக்களிடம் கற்றனர்.
மொழிப்புலமைக்கு அப்பால், அவரது சமயப்பற்றும் அதனை உணர்வு பூர்வமாகவும், உடல் வழியாகவும் அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பமும் மேலாங்கி நின்றதால் யாத்திரை வழி நின்று ஆலய தரிசனம் செய்ய விரும்பினார். ஈழ நாட்டில் பல தலங்களையும் தரிசித்த அவர், காசி விசுவநாதப் பெருமானையும் சிதம்பரம் தில்லை நடராசப் பெருமானையும் தரிக்சிக்கப் பெருவிருப்பம் கொண்டு தமிழ் நாட்டிற்குப் புறப்பட்டார். காசியையும் சிதம்பரத்தையும் பல தடவை தரிசனம் செய்த செப்பறைச் சிதம்பர சுவாமி தமிழ் நாட்டை வாழ்விடமாகக் கொண்டு ஆற்றிய ஆத்மீகப் பணிகளையும் தமிழ் மொழி, சமயப் பணிகளையும் பின்வருமாறு நோக்கலாம்.
ஆத்மீகப் பணிகள்
(அ) யாத்திரை மேற்கொள்ளல் (ஆ) பிரசங்கம் செய்தல்
கல்விப் பணி
(அ) கற்பித்தல் (ஆ) உரை நூல்கள் எழுதல் (இ) கண்டன. நூல்களை எழுதல்
இளங்கதிர் (2004 - 2005) (81) தமிழ்ச் சங்கம்

சமயப்பணி
(அ) வடமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்தல் (ஆ) சமயம் சார்பான கண்டனப் பிரசுரங்களை வெளியிடல் (இ) மடத்தையும் நூல்நிலையத்தையும் நிறுவுதல்
(1) ஆண்மீகப் பணிகள்:
1. யாத்திரையும் சேத்திர தரிசனமும்
‘ஆக்கையாற் பயனென் - அரன் கோயிற் வலம் வந்து
ழுக்கையாலட்டிய போற்றியென்னாத விவ் ஆக்கையாற்
பயனென்
கால்களாற் பயனென் - கறைக் கண்டனுறை கோயில்
கோலக்கோபுரக் கோகரணஞ் கூழாக் கால்களாற் பயனென்’
எனினும் அப்பர் சுவாமிகளின் திருவங் கமாலை , யாத்திரையினதும் கோயிற் தரிசனத்தினதும் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சைவசமயிகளுக்கு வெளிப்படுத்தி நிற்கும். அவ்வகையில் இத்தகைய வழிபாட்டு நெறியில் மிகுந்த நம்பிக்கை கொண்ட செப்பறை சிதம்பரசுவாமிகளது யாத்திரைகளையும் சேத்திர தரிசனங்களையும் பின்வருமாறு வகுத்து நோக்கலாம்.
(அ) சிதம்பரயாத்திரையும் தில்லை நடராசர்தரிசனமும் (ஆ) காசியாத்திரையும் காசி விசுவநாதர் தரிசனமும் (இ) செப்பறை யாத்திரையும் கூத்தர் தரிசனமும் (ஈ) தமிழ்நாட்டிலுள்ள சைவாலயயாத்திரையும் தரிசனமும்
(அ) சிதம்பரயாத்திரையும், தில்லை நடராசர் தரிசனமும்
செப்பறை சிதம்பர காவமிகள் ஈழநாட்டினின்று யாத்திரையின் பொருட்டு புறப்படுவதற்கு முன்பாகத் தில்லைத் தரிசனமும் காசியில் சிவப்பேறும் கிட்ட வேண்டும் என்ற நன்நோக்குடன் புறப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து தில்லைத் தரிசனத்தின் பொருட்டு யாத்திரை யாகப் புறப்பட்ட சிதம்பரசுவாமிகள் முதலில் சிதம்பரத்தை அடைந்து, தில்லை நடராசப் பெருமானைத் தரிசித்து தனது அவாவின் பாசத்தின் பெரும் பகுதியைக் குறைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து காசிக்குப் புறப்பட்ட சிதம்பர சுவாமிகள் சில மாதங்கள் தங்கிவிட்டு சிதம்பர தரிசனத்தின் பொருட்டு சிதம்பரம் திரும்பினார். இளங்கதிர் (2004 - 2005) (82) தமிழ்ச் சங்கம்

Page 49
சிதம்பரத்தில் இருந்து செப்பறைக்குப் புறப்பட்ட சுவாமிகள் மீண்டும் சிதம்பர தரிசனத்தின் பொருட்டு சிதம்பரம் திரும்பினார். சிதம்பரத்தில் இருந்து காசிக்குப் புறப்பட்ட சுவாமிகள் சில மாதங்கள் அங்கிருந்துவிட்டு மீண்டும் சிதம்பரம் திரும்பினார். இவற்றுக்கெல்லாம் அடிப்படை சிதம்பர தரிசனம் முத்தியைக் கொடுக்கும் என்பதில் அவர் கொண்டிருந்த அசையாத நம்பிக்கை யேயாகும். சிதம்பர மான்மியம் பற்றிப் பாடவந்த குமர குருபரர்;
“தீர்த்த மென்பது சிவகங்கையே
ஏத்த ருந்தல மெழிற்புலி பூரே மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே”
எனப்பாடியிருப்பதையும், நாவலரவர்கள் சிதம்பரத்தின் பெரும் சிறப்புப் பற்றி எடுத்துரைக்கும் பொழுது:
‘எல்லாவற்றிவும் எல்லா முதன்மையும் எல்லாவநுக் கிரகமும் உடைய முழு முதற் கடவுள் தாம் ஒருவரேயாயப், பசுக்களாகிய ஆன்மாக்களெல்லாந் தமக்கு என்று உடைமைப் பொருள்களே யாகத் தாம் என்றும் உடையவரயே நின்று, பசுபதி எனப்படும் சிவபெருமான், பிரபஞ்சமெங்குமாகி, நீக்கமற வியாபித்து நிற்பர், ஆயினும் இவ்வுண்மையை யாவருக்கும் விளங்காது; ஆதலினாலே, முத்தியடைதல் எளிதன்று. இதனைச் சிவ்பெருமானே திருவுளங் கொண்டு தம்மை ஆன்மாக்கள் வழிபட்டுய்யும் பொருடடு, எண்ணில்லாத முக்கியஸ்தலங்களைப் பூமியில் வைத்தருளினார். இவைகளுக்குள்ளே. அறுபத்தெட்டுத் தலங்கள் சிறந்தன. அவ்வறுபத்தெட்டுத் தலங்களுள்ளே, திருவாரூர், காசி, சிதம்பரம் என்னும் மூன்று தலங்கள் சிறந்தன. திருவாரூரிலே சிறுபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்தவர்களும், முத்தியை அடைவார்கள்.
திருவாரூலே பிறத்தல், முன்செய்த புண்ணிய மிகுதியினாலே, தானே நேர்படினல்லது, செயற்கையால் அடையத் தக்கதன்று காசியில் இறக்கலாமெனின், பிறர் பொருள் கொள்ளாது, பாவத்துக்குப் பயந்து தரும நெறியினாலே சம்பாதித்த பொருள் கொண்டு, சென்ம நேசத்தை விடுத்து, வழியிலே இறவாது, உயிர்தங்கிக் சென்று, காசியை அடைந்து, இறக்கும் வரையும் நல்லொழுக் கத்தோடும் , அத்திருப்பதியிலே இருந்து, இறப்பது எளிதின் முடிவதன்று.
இளங்கதிர் (2004 - 2005) (83) தமிழ்ச் சங்கம்

சிதம்பரத்திலோவெனிற் சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்த மாத்திரத்தேமுத்தி சித்திக்கும். இன்னும், தக்கிண தேசத்தார் சிதம்பரத்தை நீங்கி முத்தியைத'தேடிக் காசிக்குச் சென்றால், அது முத்தியைக் கொடுப்பதில்லை; உத்திர தேசத்தார் சிதம்பரம் முத்தி தரும் என்று வந்து சேர்ந்தால், இது முத்தியைக் கொடுக்கும். ஆதலினாலே, சிதம்பரமே எல்லாத் தலங்களினுஞ் சிறந்தது.
என எடுத்துரைப்பதையும் மனங்கொள்ளும் பொழுது செம்பறைச் சிதம்பர சுவாமிகளும் இவற்றை மனத்தில் இருத்தியே சிதம்பர தரிசனத்தை மறவாது செய்து வந்தார் எனக் குறிப்பிடலாம்.
(ஆ) காசியாத்திரையும் காசி விசுவநாதர் தல தரிசனமும்
சிதம்பரத்தில் பல ஆண்டுகள் தங்கி, தில்லை நடராசனைத் தரிசித்து இன்புற்ற சுவாமிகள், முத்திக்கு வித்தாகிய காசி விசுவநாதரைத் தரிசிக்கும் பொருட்டு யாத்திரையாகக் காசிக்குப் புறப்பட்டார். காசி யாத்திரை செல்லும் வழியில் திருக்களாத்தி, திருப்பரும்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக் கொண்டு, கங்கையில் தீர்த்தமாடி, அதன் வலப்பக்கமாக வந்து காசி விசுவநாதரைத் தரிசித்தார் என்பர். அங்கு சில மாதங்கள் தங்கியிருந்தார். பல தீர்த்தங்களில் தீர்த்தமாடினார். பல சாதுக்களுடன் ஒன்றாக உறைந்து வாழ்ந்து நன்கு உறவாடினார். வட நாட்டின் யாத்திரையையும் சேத்திரமும் அவரது பாசக் குறைப்புக்கும் ஆன்மீக விசுவாசத்துக்கும் மிகுந்த நாட்டத்திற்கும் வித்திட்டன. செப்பறை, சிதம்பரம் முதலான இடங்களில் இருந்தும் சுவாமிகள் பல தடவைகள் காசியாத்திரை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(இ) திருநெல்வேலி, செப்பறைப் பதிக்கு யாத்திரையும் கூத்தர்
தரிசனமும்
சுவாமிகள் சிதம்பரத்தில் வாழ்ந்த காலத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க தலமாகவும் சோழப் பெருமன்னர்களால் நன்கு போற்றப் பட்டதுமான திருநெல்வேலியில் தணி பொருனை ஆற்றங்கரையிலே செப்பறை என்றும் தலத்தில் கூத்தப்பெருமான் அருள் பாலித்து வருகிறார் என்ற செய்தியை அறிந்ததும், செப்பறை கூத்தப் பெருமானின் தரிசனத்தின் பொருட்டு சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலியை அடைந்து, பொருனையாற்றில் இளங்கதிர் (2004 - 2005) (84) தமிழ்ச் சங்கம்

Page 50
தீர்த்தமாடிச் செப்பறைக் கூத்தப் பெருமானை தரிசனம் செய்தனர். சிதம்பர சுவாமியின் தலயாத்திரையும் ஆலய தரிசனமும், அவரை முழுமையான நையிட்டிக பிரம்மசாரிய வாழ்வுக்கும், ஆன்மீக ஞான நாட்டத்திற்கும் வழிநடத்தின. அதன் மூலம் அவர் சிறந்த ஞானாசிரியர்
ge,60TTT.
(ஈ) தமிழ் நாட்டிலுள்ள சைவத் திருத்தலங்களுக்கு
யாத்திரையும், தலதரிசனம் செய்தலும்.
சிதம்பரத்தில் இருந்து காசிக்கு யாத்திரையாகச் சென்று காசி விசுவநாதனைச் தரிசித்த சிதம்பர சுவாமிகள் தமிழ் நாட்டிலுள்ள சைவாலயங்களுக்கு யாத்திரை செய்து, அங்கு எழுந்தருளியிருக்கும் கடவுளர்களைத் தரிசிக்க விரும்பினார். அதன் பொருட்டு பல தலங்களுக்கும் சென்று அங்கு வீற்றிருக்கும் கடவுளர்களைத் தரிசனம் செய்தனர். அதனால் அவர் சில ஆண்டுகள் யாத்திரைவாசியாகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக சிதம்பரத்தை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தனர்.
11. பிரசங்கமும் புராணபடனமும் செய்தல்
பிரசங்கமும் புராணபடனமும் நாவலரவர்களின் சமய மீட்டுருவாக்கத்தால் சைவசமயிகளுக்குக் கிடைத்த பெரும் சொத்து. சிதம்பர சுவாமிக்கு இவற்றை ஈழநாட்டில் ஆற்றுப்படுத்தற்குப் பல புலவரும் ஆலயங்களும் இருந்தன. இவை ஈழநாட்டவரின் முதிசம். சுவாமிகள் நாவலர் மாணவமரபில் வரவில்லையாயினும் நாவலர் பாரம்பரியத்தின் தாக்கம் அவரிடம் இருந்தது. அத்துடன் நாவலர் மரபில் வந்த பலர் தமிழ் நாட்டிலும் குறிப்பாக சிதம்பரத்திலும் வாழ்ந்து வந்தனர். நாவலரவர்களின் சைவப்பிரகாச வித்தியாசாலையும் அதற்குரிய அதர்மாசனங்களும் சிதம்பரத்தையும் சிதம்பரத்தைச் சுற்றியும் இருந்தன. அவற்றைப் பராமரிப்பதற்கு மீனவர் மரபில் வந்த சதாசிவம்பிள்ளை, மறைஞான சம்பந்தர், சபாபதி நாவலர், மகவேற்பிள்ளை முதலானோர் இருந்தனர். சேத்திர தரிசனத்தின் பொருட்டுப் புறப்பட்ட சிதம்பர சுவாமிக்கு இவர்களது இருப்பு புதிய உத்வேகத்தை அளித்தது எனலாம். நாவலர் மரபில் வந்தோர் ஆசிரியத் தொழிலோடு நின்றுவிடாது மடங்கள், ஆதீனங்கள், ஆலயங்கள், பிரபுக்கள் இல்லங்கள் முதலான இடங்களில் பிரசங்கமும் புராணபடனம் செய்து வந்தனர். சில சமயங்களில் புராண விளக்கமும் செய்து வந்தனர். இந்த வகையில் சிதம்பர இளங்கதிர் (2004 - 2005) (85) தமிழ்ச் சங்கம்

சுவாமிகளுக்கும் இவை தொழில்சார் கல்வியாகவே இருந்தன. சில சமயம் நாவலர் மாணவரின் ஒத்தாசைகளும் சுவாமிக்குக் கிடைத்தன. திருவாவடுதுறை, தஞ்சை தாயுமானவர் மடம், வள்ளுவர் மடம், ஆலயங்கள் முதலான இடங்களில் சுவாமிகள் பிரசங்கமும் புராணபடனமும் அல்லது புராண விளக்கமும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(2) கல்விப்பணி:
1. கற்பித்தல்:
சுவாமிகள் தமிழ் மொழியிலும் சங்கத மொழியிலும் நன்கு புலமை பெற்றிருந்தவர். அப்புலமைக்கு மெருகூட்டுவனவாக நாவலர் மாணவபரம்பரையின் உறவும், பிரசங்கமும் புராண படனமும் அமைந்தன. சுவாமிகள் செப்பறைப் பதியில் வாழ்ந்த காலத்தில் செப்பறைப்பதி மடாலயபதி கனகசபாபதி தேசிகர் அவர்கள், சுவாமிகளின் தவவேடத்தையும் கருணையையும், புலமையையும் கண்டு அவரை அழைத்துக் கொண்டு இராசவல்லிபுரத்திலுள்ள மடத்துக்கு சென்றனர். உள்ளன்போடு பூசித்து வந்தார். அங்கிருந்த காலத்தில் சுவாமிகள் சிவநேயச் செல்வர்களுக்குச் சிவஞான போதம் முதலான சித்தாந்த நூல்களையும் பெரிய புராணம், கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் , தணிகை புராணம் முதலான புராணங்களையும் அவற்றினர் நுணி பொருட்களையும் திருமுறைகளையும் அருள் கருத்துக்களையும் எடுத்து உரைத்து வநதாா.
சுவாமிகள் இராசவல்லிபுரத்தில் அமைந்திருந்த திருவள்ளுவர் மடத்துக்கு அவ்வப் பொழுது சென்று சைவசித்தாந்த நூல்களையும் புராணங்களையும் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் கற்பித்து வந்தார். அத்துடன் தஞ்சை தாயுமானவர் மடத்திலும் அங்கு எழுந்தருளி இருந்த தாயுமானவர் சந்திதானம் அவர்கள் வேண்டுதலின் பேரிலும் சிலகாலம் போதனாசிரியராக இருந்து வந்தார். இறுதியாக சுவாமிகள் சிதம்பரத்தில் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் தெருவில் 'சிவஞானத் திருத்தணி என்னும் கலாசாலையில் சைவசித்தாந்த வகுப்புக்களை நடத்திவந்தார். செப்பறைச் சுவாமிகளின் மாணவ பரம்பரையில் பேராசிரியர்களான கா. சுப்பிரமணியபிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலானோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இளங்கதிர் (2004 - 2005) (86) தமிழ்ச் சங்கம்

Page 51
II. உரை நூல்களை எழுதுதல்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நூல் வளர்ச்சிக்கு ஈழ நாட்டவர் மிகுந்த பங்களிப்பினைச் செய்துள்ளனர். ஆறுமுகநாவலர், வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை, சுன்னாகம் குமார சுவாமிப் புலவர் அவ்வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுள் ஒருவராகச் செப்பறை சிதம்பர சுவாமிகள் இனங்காணப்பட்டுள்ளார். இவர் அப்பர் சுவாமிகளின் திருவிருத்தங்களுக்கும் திருவாசகப் பதிகங்கள் சிலவற்றுக்கும் சிவப்பிரகாசத்துக்கும் உரை கண்டுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு வரை திரு முறைகளுக்குக், குறிப்பாகத் தேவாரம் திருவாசகங்களுக்கு உரை எழுதக் கூடாது என்பது சைவர்களின் பொதுவான நம்பிக்கையாக இருந்து வந்தது.
'சைவ அடியார்களின் அருள்வாக்கிற்கு - சிவனருட்
செல்வர்களின் திருப்பாடலுக்கு - ஆண்டவனே விரும்பிக்
கேட்ட தெய்வபாடலுக்கு, ஆற்றல் மிகுந்த
மறைமொழிக்கு எளியவர்களாகிய, நாம் உரை எழுத
முடியுமா? நாம் எங்கே? திருமுறை எங்கே?” என்று
திருவாசகத்துக்கும் ஏனைய திருமுறைக்கும் உரை எழுதக்கூடாது. அவற்றின் உட்பொருட்களை அடியவர்களே ஒதி, ஓதி உணர்ந்து இன்புற வேண்டும், உள்ளத்தால் உணர்த்துகின்ற உயர் கருத்தை நாவால் உரைப்பதும் கையால் எழுதுவதும் கூடாது, எழுத்தும், சொல்லும் திருமுறைகளின் உட் பொருளை உணர்த்தா”
என்னும் காரணங்களால் சைவ அறிஞர்களும் புலவோரும் திருமுறைகளுக்குக் குறிப்பாகத் தேவாரம் . திருவாசகம் , திருமுறைகளுக்கு உரை எழுதத் தயங்கினர். இந்த நிலையில் இக் கட்டுப் பாடுகளையெல லாம் மீறி தேவாரதி திற்கும் திருவாசகத்துக்கும் உரை எழுத முயன்றமை, அவற்றில் சுவாமிகள் கொண்டிருந்த ஈடுபாடும், பொருள் உணர்ந்து பாடுவதன் மூலம் அவற்றின் இறை சக்தி பாடுவோரின் வேண்டுதலை நிறைவு செய்வதோடு அவர்களை இறைவன் பால் ஆற்றப்படுத்தவும் முடியும் என்ற அவரது நம்பிக்கையுமே யாகும்.
நாவலர் அவர்கள் திருமறைகளுக்கு உரை எழுதாவிட்டாலும் அவற்றுக்கு உரை எழுதப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இளங்கதிர் (2004 - 2005) (87) தமிழ்ச் சங்கம்

உணர்ந்திருந்தார். அவர் தமது நூல்களில் திருமறைகளின் பொருளை உள்நுழைத்துவிட்டு, அதற்கு எடுத்துக்காட்டுக்களாகத் திருமறைகளை முழுமையாகவும் அல்லது வேண்டும் அடிகளை மட்டும் கொடுத்துச் செல்வது அவர்களது விருப்பத்தின் வெளிப்பாடெனலாம். பிற்காலத்தில் தமிழ்நாட்டு தமிழ் அறிஞர் ஒருவர் திருமறைகளுக்கு உரை எழுதப்பட வேண்டியதின் முக்கியத்துவத்தினைப் பின்வருமாறு புலப்படுத்துகிறார்.
‘பன்னிரெண்டு திருமுறை முழுவதையும் படித்துப் பொருள் உணர்ந்து இன்புறல் மிகமிக அருமையான காரியம். எல்லாப் பொருட்களுக்கும் பொருள் தெளிவாக விளங்கும் என்று சொல்ல முடியாது பழங் காலத்தில் திவ்விய பிரபந்தத்துக்குச் சில பெரியோர்கள் உரை வகுத்தது போல், திருமுறைகளுக்கும் யாரேனும் வகுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போதுள்ள மூலத்தில் எத்தனையோ பிழைகள் இருக்கின்றன. பல பாடல்களுக்கு எத்தனைதான் மண்டையை உடைத்துக்கொண்டாலும் பொருள் விளங்குவதில்லை”
பொதுவாகச் சுவாமிகளின் திருமுறைகளின் உரையை நோக்கும் பொழுது நாவலர் அவர்களது உள்ளுணர்விற்கு வடிவம் கொடுத்தார் போலும், எனத்தோன்றுகிறது:
III. கண்டன நூல்களை எழுதுதல்
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிக் காலப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் புலமையாளன் அரசன் சண்முகனார், பிரபுக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் செல்வச் செருக்கால் கல்வி கற்க மறந்தார். ஆனால் பின்னர் சோழவந்தான் கண்ணிடத்துத் தலைவராகிய சிவப்பிரகாச அடிகளிடம் பயின்று பெரும் வித்துவான் ஆகினார். மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளி, மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி முதலான கல்லூரிகளிலே ஆசிரியராகப் பணிப்புரிந்தவர். ஈழ நாட்டிற்கும் வருகை தந்தவர். இவர் பல்வேறு ஆற்றல் கொண்ட ஒரு புலமையாளன். கவித்துவத்திலும் தர்க்கத்திலும் அவருக்கு அவரே நிகர் என்று சொல்லக் கூடியவர். 効。
அரசன் சண்முகனார் பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் மாயை மாற்று மலை, தொல்காப்பியச் சண்முகவிருத்தி, திருக்குறள் சண்முகவிருத்தி, ஒரு பெயர் என் மொழியாராய்ச்சி, இசை நுணுக்கச் சிற்றுரை முதலான நூல்கள் இளங்கதிர் (2004 - 2005) (88) தமிழ்ச் சங்கம்

Page 52
அவரது கவித்துவத்துக்கும் புலமைச் செருக்குக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இந்நூல்களுள் 'தொல்காப்பியச் சண்முகவிருத்தி என்னும் நூலுக்கு சிதம்பரத்தில் வசித்தவரும் திருவாவடுதுறை மகாவித்துவானுமாகிய யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் “அரசர் சண்முகவிருத்தியநுபத்திப் பிரதிபத்தி முதற் பாகம்’ எனப் பெயரிட்டு ஒரு கண்டன நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். அதற்கு அரசர் சண்முகனார் ‘அம்பலவாண நாவலர் போலியுரை மறுப்பு’ என்னும் நூலினை எழுதி, மதுரை விவேக பானு அச்சியந்திரசாலையில் 1913 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினார்.
அம்பலவாண நாவலர் தமது கண்டனத்தில் சிவஞான யோகிகள் பற்றி சண்முகனார் தூஷணை செய்து எழுதியுள்ளார் என்றும் அதனை நிராகரிக்கும் பொருட்டே இக்கண்டனம் எழுதப்படுவதாயும் அத்துடன் சந்நிதானத்தின் திருவுளக் குறிப்பின்படி அதனை அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளேன், என்றும் குறிப்பிட்டுள்ளார். சபாபதி நாவலரின் கண்டனத்துக்கு பிரதி கண்டனம் செய்யும் வகையில் அரசன் சண்முகனாரின், ‘அம்பலவாண நாவலர் போலியுரை மறுப்பு' என்னும் நூலில் நாவலர் அவர்களின் கருத்துக்கள் மாத்திரம் கண்டிக்கப்படாது, ஈழ நாட்டவரையும் இழுத்துப் பழிப்பது போலவும் எழுதியுள்ளார். இது அரசன் சண்முகனாரின ஆற்றாமை போலும்.
அவற்றுள் சிலவற்றை இங்கு நோக்கலாம்:
(அ) ஈழத்து நின்று போந்து நமது புண்ணிய பூமியாகிய பாண்டிப்
பழம் பதியில் வசித்தும் நிந்தை மேற்கொண்டெழுதலை விடாத அம்பலவாண நாவரென்பாரொருவர். (ஆ) ஈழத்தார் தம் மேற்கோளைச் சாதியாது வாரண முதலாயின போன்று காரணமின்றியுஞ் சண்டையிட்டுப் பழிசுமத்தலான். (இ) வாக்கியங்களைப் பிழையின்றியெழுதவறியாத இவரன்றே
bT66) usT5ff
இத்தகைய கணிடனங்கள் தமிழ் சங்கேத மொழிப் புலமைகளும் கொணி ட ஈழத்தவரும் மடாலயத்தினர் ஞானாசிரியருமாகிய சிதம்பர சுவாமியைப் பெரிதும் பாதிற்று போலும். இதனால் அரசன் சண்முகனார் எழுதிய தொல்காப்பியச் சண்முக விருத்தி என்றும் நூலுக்கு பிரதிகண்ைடனம் செய்யும் வகையில் 'தொல்காப்பிய சண்முக விருத்தி மறுப்பு என்னும் நூலை எழுதி
இளங்கதிர் (2004 - 2005) (89) தமிழ்ச் சங்கம்

வெளியிட்டார் போலும். (3). 0ouDuiú uaf
(அ) சங்கத மொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல்
மந்துவில் சுப்பிரமணிய ஐயரிடம் பயின்ற வடமொழிக்கல்வியும் காசி, சிதம்பரம் முதலான இடங்களில் நல்லாசிரியர்களிடம் கற்றுக் கொண்ட வடமொழி இலக்கியக் கல்வியும் பயிற்சியும் அவரை வடமொழிப் புலமையாளராக மாற்றிற்று. வேதத்தில், இடம் பெற்றுள்ள ரீ ருத்திரத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ‘பூரீ ருத்திர அத்தியாய பத்யம்” என்னும் பெயருடன் வெளியிட்டுள்ளார். ஈழத்தின் வடமொழி அறிஞர்களுள் ஒருவரான மு. ஞானப்பிரகாசம் அவர்கள் இந்நூல் பற்றியும் மொழிப்பெயர்ப்புப் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுவது யாவராலும் மனங்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.
‘சுவாமிகள் செப்பறை பதியில் இருந்த காலத்தில்.
வேதத்திலுள்ள ‘ரீ ருத்திரம்' எனப்படும் வேதசிரசைத் தமிழ் மொழியில் வடித்துத் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளார். ரீ ருத்திரம் வேதத்துக்கு இருதயம் போன்றது வேதம் அனைத்து உலகங்களையும் உள்ளடக்கித் தான் மேலெழுந்து வியாபித்து நின்று கோஷித்த பொழுது வெளிப்பட்ட அதி அற்புத மந்திரத் தொகுதியே 'ரீருத்திரம்' எனப்படும்”
சிதம்பர சுவாமியின் 'யூரீ ருத்திர அத்தியாய பத்யம்' என்னும் மொழி பெயர்ப்பு நூலில் இருந்து ஒரு பகுதியை இங்கு நோக்கலாம்.
அனுவாகம் 4
இருக்கும் உருவுடை உமக்கு வணக்கம் படுக்கும் உருவுடை உமக்கு வணக்கம் துயிலும் உருவுடை உமக்கு வணக்கம் நின்ற உருவுடை உமக்கு வணக்கம் சென்ற உருவுடை உமக்கு வணக்கம் அவையிடை அமரும் உமக்கு வணக்கம்
அனுவாகம் 11
புவியில் வாழும் உருத்திர கணத்தர்
அவர் தமக் குணவங் கத்திர மாகும்
அவர் தமக் கஞ்சலி ஆக்குதும் கிழக்கே இளங்கதிர் (2004 - 2005) (90) தமிழ்ச் சங்கம்

Page 53
அவர் தமக் கஞ்சலி ஆக்குதும் தெற்கே அவர் தமக் கஞ்சலி ஆக்குதும் மேற்கே அவர் தமக் கஞ்சலி ஆக்குதும் வடக்கே அவர் தமக் கஞ்சலி ஆக்குதும் மேலே உருத்திர கணங்கள் குஞற்றுதும் துதிமவ உருத்திர கணங்கள் உஞ்ஞற்றுக் சுகமித.
சுவாமிகளின் மொழி பெயர்ப்பின் ஆற்றலை நூலுடன் ஒப்பிட்டு மு. ஞானப்பிரகாசம் அவர்கள் குறிப்பிடுகையில்;
‘வேதமாகிய முதல் நூலின் கண்ணேயுள்ள கம்பீரமும், உன்னதமும் வேதகோஷ ஒலிச்சிறப்பும் சுவாமிகளின்து மொழிபெயர்ப்பு நூலில் அப்படி முற்று முழுவதுமாக நிழலிடுவதைக் காணும் பொழுது, சுவாமிகளின் அளப்பரும் பெருமையை நாங்கள் நினைக்கவே முடியாதவர்களாக இருக்கின்றோம்”
எனச் சிறப்பித்துக் குறிப்பிடுவது சுவாமிகளின் பன்மொழிப் புலமைக்கும் வேத இலக்கிய ஈடுபாட்டிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(ஆ) சமயச் சார்பான கண்டனப் பிரசாரங்களை வெளியிடல்
சிதம்பரத்தில் 'சிவஞானத் திருத்தளி’ என்னும் மடத்தை அமைத்து அதன் பீடாதிபதியாக அமர்ந்து கொண்ட சுவாமிகள, வேதாந்தம் பேசவும் மாயாவாதிகளுடன் வாதிட்டு சுத்தாத்துவித சித்தா நீதத்தை நிறுவுதலிலும் அதனை உணர் மைகளை வெளிப்படுத்துவதிலும் உண்மையாகவும் உறுதியாகவும் உழைத்தார்.
(இ) மடத்தையும் நூல் நிலையத்தையும் நிறுவுதல்:
சுவாமிகள் நையிட்டிகப் பிரமச்சாரியராக இருந்த பொழுதும் தன்னால் சைவத்தையும் அதன் வளர்ச்சிக் கருவியாகிய சைவசித்தாந்தத்தை வளர்த்தற்கும் தாபனம் பன்னு செய்வதற்கும் ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக கடுமையாக உழைத்தார். அவரது இலட்சியத்தை நன்கு மனங்கொண்டோரும் அவருக்கு உதவ முன் வந்தனர். இவற்றின் பெறுபேறாக சிதம்பரத்திலுள்ள செங்கழு நீர்ப் பிள்ளையார் கோயில் தெருவீதியில் ஒரு கட்டடம் வாங்கி, அதற்குச் ‘சிவஞானத்திருத்தணி இளங்கதிர் (2004 - 2005) (91) தமிழ்ச் சங்கம்

என்னும் திருப் பெயரிட்டார். அஹதொரு சைவம் சைவசித்தாந்தம் ஆகிய நெறிகளை வளர்க்கும் பீடமாக அமைத்து அப்பீடத்தின் பீடாதிபதியாக தாம் அமர்ந்து செயற்பட்டு வந்தார். அவ்நிறுவனத்தின் இலட்சியத்தையும் அமைத்தார். இந்நிறுவனத்தின் நோக்கங்களாகப் பின்வரும் விடயங்கள் அமைந்திருந்தன.
இலட்சியம்:
இந்த சரீரம் நமக்குக் கிடைத்தது முக்தி இன்பம் பெறும் பொருட்டேயாகும்
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும்
இறைவா போற்றி
ஞானத்தில் பெரியது சிவஞானம்.
செயற்பாடு:
里
பிரசங்கம் செய்தல், புராணபடனம் செய்தல்
சைவம், சைவ சிந்தாந்த நூல்களைப் போதித்தல், வெளியிடல்
மொழிபெயர்ப்புச் செய்தல்
பத்திரிகை நடத்தல், பிறமத கண்டனங்கள் செய்தல் குறிப்பாக
சேதாந்த கண்டனங்கள் செய்து சுயமதத்தை தாபித்தல்.
சிவனடிப்பேறு:
சிதம்பரம் 'சிவஞானத்திருத்தணி’ மடத்தில் இருந்து சைவத்தையும் சைவசித்தாந்தத்தையும் வளர்த்து வந்த சிதம்பர சுவாமிகள் ஒரு நாள் தன்குருநாதரை தரிசிக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றிய பொழுது, அவர் தஞ்சை அன்னப்பன் பேட்டையில் அமைந்த தாயுமானவர் மடத்தை நோக்கிப் புறப்பட்டு அங்கு சென்று தாயுமானவர் பண்டார சந்நிதியை வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றுச் சிலநாட்கள் அங்கிருந்து சிவபூசை செய்து, சிவத்தியானத்தில் இருந்து வந்தார் அவ்வாறு வீற்றிருக்கும் பொழுது செப்பைச் சிதம்பர சுவாமிகள் சிவனடிப் பேறு பெற்றனர்.
ஈழ நாட்டில் இருந்து, தமிழ் நாட்டில் வாழ்ந்து யாமார்க்கும் இளங்கதிர் (2004 - 2005) (92) தமிழ்ச் சங்கம்

Page 54
குடியல்லோம் என்ற இலட்சியத்துடன் இல்வாழ்வைத் துறந்து சிற்றம்பல தரிசனத்தின் மூலம் சிவமாக்கி இறைவன் திருவடிப் போற்றலாம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, அதற்காகச் சாதனை படைத்தற் பொருட் யாத்திரை செய்தல் தேவாரம் ஓதுதல், பெறுதல் முதலான சைவக் கைங்கரியங்களில் ஈடுபட்டு பொதுமக்களிடத்து ஆன்மீக இலாபத்தைக் காட்டி அதன் பயனை வினைகள் நீங்கிய, திருவடிப் பெற்றினைப் பெற்றார். சிதம்பர சுவாமிகள்.
சிதம்பர சுவாமிகள் ஈழநாட்டவராயினும் அவரின் ஆத்மீக யாத்திரை சரிவர ஆராயப்படவில்லை என்பது எமக்குக் கவலை தரும் விடயமாகும். இச்சிறிய குறிப்பு அவர் பற்றிய ஆய்வினைச் செய்தற்கு ஒரு படிக்கட்டாக அமையுமென நம்புகின்றேன்.
உசாத்துணை நூல்கள்:
கஅரவிந்தன், மு.வை, உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை
மு.கணபதிப்பிள்ளை, மு, 1967 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள், பாரி நிலையம், சென்னை, மதுரை.
அரசர் சண்முகனார் 1913, அம்பலவாண நாவலர் போலியுரை மறுப்பு சிவேக பாது அச்சியந்திரசாலை, சொக்கன் 1971, (பதி) யாழ் - நாயன்மார்கட்டு ரீ கிராக ராஜேஸ்வரி அம்மன் (பேய்ச்சியம்மன்) ஆலய மகா கும்பாபிஷேக மலர், சைவசமய அபிவிருத்திக்கழகம். நாயன்மார்கட்டு. பழநியப்பன், வெ. பழநி, உ, 1984, தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம், பகுதி I, அண்ணமாலைப் பல்கலைக்கழக வெளியீடு, அண்ணாமலைப்பல்கலைகழகம்.
‘புகழெனி னுயிரு மீவார்
புண்ணிபச் செய்கை நீங்கார்; பகனிவை மாறித் திங்கள்
பச்சிம மெழினும் வானம் மிகமிகத் துளங்கி மண்மேல்
வீழினு மடிமை வாழ்விற் புகவுளங் கொள்ளைர் ஜய
பூவுளோன் படைப்பு போலும் (பண்டிதர். சோ. இளமுருகனார்)
இளங்கதிர் (2004 - 2005) (93) தமிழ்ச் சங்கம்

இலங்கையின் முரண்பாட்ரு அரசியல் கலாசாரம்
ந. புஸ்பராசா, அரசறிவியல் விசேட துறை, விடுகை வருடம்,கலைப்பிடம்.
1. முகவுரை
இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் நிலவுவதைக் காணலாம். ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்கா போன்ற பல்வேறு தேசங்களிலும் இந்த முரண்பாட்டு அரசியல் கலாசாரம் நிலவுவதைக் காணலாம். காரணம் இந்தப் பிராந்தியங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் இன, மத, மொழி, சாதி, குலமரபு, பிரதேசம் போன்றவற்றின் அடிப்படையில் பிளவு பட்டுக் காணப்படுவதாகும். இந்த முரண்பட்ட அரசியல் கலாசாரமானது, அரசினைக் கட்டியெழுப்புதல், தேசத்தினைக் கட்டியெழுப்புதல், மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்குத் தடையாக இருப்பதைக் காணலாம். எனவே பல்லின சமூகத்தைக் கொண்ட நாடான இலங்கையிலும் இந்நிலை தொடர்வதைக் காணலாம்.
II. முரண்பாடு பற்றிய விளக்கம்
முரண்பட்ட அரசியல் கலாச்சாரத்தை விளங்கிக் கொள்வதற்கு முரண்பாடு பற்றிய எண்ணக்கருவினை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானதாகும். முரண்பாடு பற்றிய விளக்கம் மிகவும் சிக்கல் மிக்கதும், பிரச்சினைக்குரியதும் ஆகும். இதனால் முரண்பாடு என்பதை விளங்கிக் கொள்வதில் பொதுவான கருத்தொருமைப்பாடு இல்லாமலுள்ளது. இருந்தாலும், பிரபல்யமான விளக்கத்தில் முரண்பாடு என்பது சர்ச்சை (Dispute), நெருக்கடி (Crisis), சச்சரவு (Fight), வன்செயல் (Violence) என்ற வகையில் பல்வேறு சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மிக எளிமையாகக் குறிப்பிடின், இருவருக்கு அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு இடையிலோ அல்லது குழுக்களுக்கிடையிலே அல்லது நாடுகளுக்கிடையிலோ இடம் பெறும் உடன்பாடின்மை என முரண்பாட்டினைச் சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்தலாம். நடைமுறையில் அரசியல் செல்வாக்கு மற்றும் அந்தஸ்த்தினைப் பெறுவதற்காக வேறுபடும் இனக் குழுக்கள் முரண்படுகின்ற போது இளங்கதிர் (2004 - 2005) (94) தமிழ்ச் சங்கம்

Page 55
ஏற்படுகின்ற ஒத்தியங்காமை நிலையே முரண்பாட்டினைத் தோற்றுவிக்கின்றது.
III. அரசியல் கலாசாரம்
அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கருவை விளங்கிக் கொள்வதற்கு முன்னர் பொதுவாகக் கலாசாரம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானதாகும். ஏனெனில் அரசியல் கலாசாரமானது பொதுக்கலாசாரத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் கலாசாரம் என்பது சமூகத்தில் வாழ்கின்ற மக்களது நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகள், அவர்களது நடத்தைகள் என்பனவற்றை உள்ளடக்கியதொரு விடயமாகும். அரசியல் கலாசாரமானது பொதுக்கலாசாராத்தின் ஒரு தன்மையாகும் என்றும், அரசியல் கலாசாரத்தின் தன்மைகள் இந்த பொதுக்கலாசாரத்தில் இருந்தே புறப்படுகின்றன என்றும் ‘குடிமைக்கலாசாரம்” என்ற நூலில் Verba கருதுகின்றார்.
அரசியல் கலாசாரம் என்ற கற்கை நெறிக்கு பல்வேறு அறிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளதைக் காணலாம். இது 1960 356ssi) G.A. Almond, Powell, Verba (SuT6ip6.ifa,6ITT6) SyugüuLDT601 கற்கை நெறியாக வளர்த்தெடுக்கப்பட்டது. எனினும் 1942 களில் GunnaZMyrdal என்ற இன்னுமோர் அறிஞர் முதல் முதலாக ‘அரசியல் கலாசாரம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அது அப்போது விருத்தியடைந் திருக்கவில்லை. 1960 களில் விருத்தி பெற்ற அரசியல் கலாசாரம் 1990 களில் ஆரம்பத்தில் Mehral Kamrava 6T6ði Lu6uJT6ð Beger, Robert Pinkney, Larry Dia Mond போன்றவர்களின் கருத்துக்களை முன்நிறுத்தி அதற்கு புதிய வடிவத்தினைக் கொடுத்திருந்தார். இவ்வாறு அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கருவுக்கு பல்வேறு அறிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளதைக் காணலாம்.
அரசியல் கலாசாரமானது ஒரு சிக்கலான விடயமாகக் காணப்படுவதைக் காணலாம். அது ஒரு அரசில் சமூகத்தின் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் வாழ்க்கை முறையையும் குறிக்கும். இந்த வாழ்க்கை முறையில் விட்டுக்கொடுக்கும் பண்பு, பிறர் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்கும் தன்மை, ஜனநாயகப் பாரம்பரியம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. அது மக்களுடைய இளங்கதிர் (2004 - 2005) (95) தமிழ்ச் சங்கம்

எணர்ணங்கள் , தத் துவங்கள் மற்றும் உணர்வு ரீதியான வெளிப்பாடுகளையும் குறிக்கும். அது ஒரு அரசியற் செயற்தொகுதி, இயங்கும் சுற்றுச் சூழல், பண்பாடு ஆகியவற்றை ஆராய்கின்றது.
அரசியல் கலாசாரமானது எல்லா நாடுகளிலும் ஒரே விதமாகக் காணப்படுவதில்லை. அரசியல் அமைப்புகள் நாட்டுக்கு நாடு எவ்வாறு வேறுபட்டதாகக் காணப்படுகின்தோ அதே போல் அரசியல் கலாசாரம் நாட்டுக்கு நாடு வேறுப்பட்டுக் காணப்படுகிறது. இதனை “அரசியல் கலாசாரமும் அபிவிருத்தியும்” என்ற நூலில் G.A. ஆல்மன்ட் (G.A. Almond), 6of G6 sum (Sydney Varba) (3u6ip6. Ifras6ir '9Jau6) கலாசாரம் ஒரு அரசியற் செயற்தொகுதியின் சரித்திரம், பாராம்பரியம் என்பனவற்றோடு தொடர்புடையது” எனக்குறிப்பிடுகின்றனர். மேலும் எந்த ஒரு நாட்டிலும் முழுமையாக ஒரே வகையான அரசியல் கலாசாரம் நிலவுவதில் லை. அங்கு உப கலாசாரங்கள் காலப்போக்கில் உருவாக இடமுண்டு. வளர்முக நாடுகளில் இந்த உபகலாசாரங்களைப் பின்பற்றும் குழுக்களுக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வருவதைக் காணலாம்.
A. அரசியல் கலாசாரத்தின் வகைகள்
அரசியல் அறிஞர்கள் பல்வேறு நாடுகளிலும் நிலவும் அரசியல் கலாசாரத்தின் அடிப்படையில் அதனை வகைப்படுத்தியுள்ளதைக் காணலாம். அந்த வகையில் அரசியல் கலாசாரம் என்பதை முதல் முதலாக வகைப்படுத்தியவர்களாக Almond, Verba போன்றவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் இருவரும் ஐந்து நாடுகளின் அரசியல் கலாசாரத்தினை ஆய்வு செய்து 'அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல்' என்ற நூலை வெளியிட்டுள்ளனர். இதில் அவர்கள் 3 வகையான அரசியல் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.
96006), UT 660.
1. குறுகிய நோக்குடைய அரசியல் கலாசாரம்:-
இது அரசியல், சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய “சமூகங்களில் அரசியலில் காணப்படும் விசேட குணாம்சங்களைக் குறிப்பதாகும்.
2. எதிர்ப்புணர்வற்ற அரசியல் கலாசாரம்:-
இது அரசியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட அரசியல் சமூகங்களின் அரசியல் கலாசாரத்தை குறிப்பதாகும். மேலும் இங்கு வாழும் இளங்கதிர் (2004 - 2005) (96) தமிழ்ச் சங்கம்

Page 56
மக்கள் அரசாங்கம் தமது குறைந்த பட்சத் தேவையையாவது பூர்த்தி செய்தால் போதுமானது எனக் கருதுவதோடு தம் உயிர், உடமை, சொத்துக்களை அரசாங்கம் பாதுகாத்துத் தர வேண்டும் என எதிர்பார்கின்றனர்.
3. பங்கேற்கும் அரசியல் கலாசாரம்:-
இது அரசியல் ஈடுபாட்டின் அபிவிருத்தியைக் கோடிட்டுக்காட்டுவ தாகும். இது வளர்ச்சியடைந்த சமூகத்தில் காணப்படும் நிலையாகும்.
இவ்வாறு அரசியல் கலாசாரத்தின் வகைகளை Almond, Verba போன்றவர்கள் வகைப்படுத்தியுள்னர்.
B. அரசியல் கலாசாரத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
ஒரு நாட்டின் அரசியல் கலாசாரத்தினை நிர்ணயிக்கும் காரணிகளாக பல்வேறு காரணிகள் காணப்படுவதைக் காணலாம். அந்த வகையில் இன அடிப்படையிலான வேறுபாடு, கிராமப்புற, நகர்ப்புற வேறுபாடு, தலைமுறைக்கு இடையிலான இடைவெளி, போன்ற பல்வேறு காரணிகள் அரசியல் கலாசாரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகக் காணப்படுவதைக் காணலாம்.
IV. இலங்கையின் முரண்பட்ட அரசியல் கலாசாரமும்,
அது உருவாக வழி வகுத்த காரணிகளும்
அரசியல் கலாசாரமானது நாட்டுக்கு நாடு வேறுபடும் தன்மை உடையதாகும். அந்த வகையில் இலங்கையின் அரசியல் கலாசாரமானது முரண்பட்ட அரசியல் கலாசாரமாகக் காணப்படுவதைக் காணலாம். இங்கு முரண்பட்ட அரசியல் கலாசாரமானது தோற்றம் பெறுவதற்கு பல்வேறு காரணிகள் உந்துதலாக இருந்துள்ளதைக் காணலாம். இந்தப் பல்வேறு காரணிகள் முரண்பட்ட அரசியல் கலாசாரத்துக்குத் துணை நிற்கின்றவையாகக் காணப்படுகின்றன.
g)606).JuJIT660T,
1. பல்லின சமூகம்:-
இலங்கை ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். இங்கு இன அடிப்படையில் சிங்களவர் பெரும்பான்மையினராகவும். இளங்கதிர் (2004 - 2005) (97) தமிழ்ச் சங்கம்

தமிழர், முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும்காணப்படுகின்றனர். மதரீதியாகப் பார்த்தால் பெளத்தர்களே பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். ஏனைய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் ஆவர். இதில் சிங்களவர்களில் பெருபான்மையினர் பெளத்தர்களாவர். இவ்வாறு பல இன, மதத்தைப் பின்பற்றும் நாட்டில் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு அரசாங்கம் ஆதரவாக இருப்பதும், பெளத்தம் அரசாங்க மதமாக இருப்பதும் முரண்பட்ட அரசியல் கலாசாரம் தோன்றுவதற்கு காரணமாகக் காணப்படுகின்றது.
2. வரலாற்றுக் காரணிகள்:-
இலங்கையில் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் நிலவுவதற்கு வரலாற்று ரீதியான காரணிகளும் காரணமாகும். வரலாற்று ரீதியாக தாம் வகித்து வந்த பங்கு, தற்போதைய நிலை, அவற்றை மீண்டும் நிலை நிறுத்த முற்படும்போது வன்முறைகள் ஏற்படுகின்றது. இதில் வரலாற்று ஆதரங்களான மகாவம்சம், சூழவம்சம் போன்றவை பிரதான பங்கு வகிப்பதைக் காணலாம். எனவே முரண்பட்ட அரசியல் கலாசாரம் தோன்றுவதற்கு வரலாற்றுக் காரணிகள் துணைபுரிந்துள்ளதைக் 85.1600T6)TLD.
3. பிரித்தானியரது பிரித்தாளும் கொள்கை;-
இலங்கையில் முரண்பட்ட அரசியல் கலாசாரத்துக்கு பிரித்தானியரது பிரித்தாளும் கொள்கையும் காரணமாக இருந்துள்ளதைக் காணலாம். பிரித்தானியர் இங்கு வருகை தந்த போது இங்கு ஒற்றுமையே நிலவியது. ஆயினும் இது நிலைக்கவில்லை. பிரித்தானியர் இங்கிருந்த நிலையை (பல்லின சமூகத்தின் வேறுபாடுகள்) தமக்கு சாதகமாகக் கொள்ள சில தந்திரங்களைக் கடைப்பிடித்தனர். இதில் இலங்கையை ஆட்சி செய்த ஆள்பதிகளில் மன்னிங் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவர். தமது இரண்டு அரசியல் சிபாரிசுகளிலும் சிறுபான்மைத் தமிழரை ஒதுக்கி, பெரும்பான்மையினை சாதி அடிப்படையில் பிரித்து முரண்பாடுகளை வளர்த்தார். இவரது இத்தந்திரமான அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக, தேசிய ஐக்கியத்துக்காக உழைக்க முயன்ற ‘தேசிய காங்கிரஸ்ஸை” தனித்தனி இனப்பிரிவுகளுக்குட்பட்டதாக ஆக்கி உடைத்து அதனைச் சிதைத்தமையைக் கூறலாம். எனவே இந்தப் பிரித்தாளும் கொள்கை முரண்பாட்டு அரசியல் கலாசாரம் தோன்றுவதற்குக் காரணமாக
இருந்தது எனலாம். இளங்கதிர் (2004 - 2005) (98) தமிழ்ச் சங்கம்

Page 57
4. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை:-
இலங்கையில் காணப்படும் இனங்கள் ஒவ்வொன்றும் தமது நலத்தின் அடிப்படையில் செயற்படுவதில்லை. ஒரு இனம் மற்றயதில் நம்பிக்கை வைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. ஒரே நாட்டவர் என்ற அடிப்படையில் செயற்பட்டாமல் “இனம்’ என்ற அடிப்படையில் செயற்பட்டு தமது தேசியத்துவத்தை இனத்துவ அடிப்படையில் வெளிப்படுத்துவதனால் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை ஏற்பட்டு, முரண்பட்ட அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.
5. பொருளாதார இஸ்திரமின்மை:
இலங்கையின் முரண்பட்ட அரசியல் கலாசாரம் நிலவுவதற்கு வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பொருளாதார ரீதியான வளர்ச்சியின்மையும் காரணமாக அமைந்துள்ளது. இலங்கையில் வளங்கள் சமமாகப் பகிரப்படாமல் ஒரு சிலர் சலுகைகள் அனுபவித்தமையும், கிராமப்புற மக்கள் புறக்கணிப்பட்டமையும், இன ரீதியான புறக்கணிப்பு ஏற்றபட்டமையும் முரண்பட்ட அரசியல் கலாசாரம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதைக் காணலாம். 1960களில் இலங்கையில் பெளதீக வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், குறிப்பாக வயது வந்தோர் கல்வியறிவு, வாழ்வு எதிர்பார்ப்புக் காலம் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி ஜனநாயகத்துக்கு ஒரு சட்ட பூர்வத்தன்மையும், சர்வதேசக் கொள்கையும் தேடித் தந்தது. ஆனால் இத்தகைய வளர்ச்சி சனத்தொகைப் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்தது. இதனால் தமது எதிர்பார்ப்புகளும், அபிலாசைகளும் நிறைவேறாததால் விரக்தியுற்ற கல்வி கற்ற இளைஞர்கள் கிளர்ச்சி செய்தனர். 1971 சிங்கள பெளத்த இளைஞர்களின் J.VP கிளர்ச்சி ஏற்பட்டது. பின்னர் பிரிவினைவாதக் கிளர்ச்சி ஏற்பட்டது. 3.VP கிளர்ச்சி பற்றி எழுதிய 'ஊர்மிளாபத்ணிஸ்’ பின்வருமாறு கூறுகின்றார். சமூக மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, ஜனநாயக அரசில் ஆளும் ஆட்சி சமூகக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பை இளைஞர்களை மத்தியில் தூண்டியது. அவர்ளால் முடியாது எனக்கண்ட போது பல கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் மனப் பான்மையை உருவாக்கியது. எனவே முரண்பட்ட அரசியல் கலாசாரம் நிலவுவதற்கு பொருளாதார ஸ்திரமின்மை பிரதான காரணியாகக் காணப்படுவதை காணலாம். இளங்கதிர் (2004 - 2005) (99) தமிழ்ச் சங்கம்

6. அரசியல் கட்சிகள்:-
இலங்கையில் முரண்பட்ட கலாசாரம் நிலவுவதற்கு அரசியல் கட்சிகளும் பிரதான காரணமாகக் காணப்படுவதைக் காணலாம். மக்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கினாலும் கட்சிகள் மக்களை பிளவுபடுத்துவதைக் காணலாம். இலங்கையைப் பொறுத்தவரை இன்று தேசிய கட்சிகளைக் காண முடியாத நிலை காணப்படுவதைக் காணலாம். ஐ.தே.க. முரீ.சு. கட்சி ஆகியவை ஆட்சியைக் கைப்பற்றும் கட்சிகள் என்றவகையில் தேசிய கட்சிகளாகக் கருதப்பட்டபோதும், இதனை முழுமையாகத் தேசிய கட்சிகள் எனக் கூற முடியாது. ஏனெனில் இவற்றை சிறுபான்மை இன மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலை உருவாகியுள்ளதை காணலாம். ஒவ்வொரு இனக் குழுக்களது கட்சிகளும் தமது நலனை முன்நிறுத்திச் செயற்படுவதையும் அவ்வினக் குழுக்களிலிருந்து அக்கட்சிகளுக்கு ஆதரவு கிடைப்பதையும் காணலாம். உதாரணமாக வட கிழக்கு மக்களால் அமோக ஆதரவைப் பெற்ற கட்சியாக தமிழர் கூட்டமைப்பு, முஸ்லிம் மக்களின் மத்தியில் செல்வாக்குப் பெற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் என்பன காணப்படுவதைக் காணலாம். இலங்கையில் செயற்படும் கட்சிகள் அனைத்துமே தத்தமது மக்களைக் கவர்வதற்கு இனவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காணலாம். எனவே கட்சிகளின் செயற்பாடு முரண்பட்ட அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியதைக் காணலாம்.
7. அரசியல் தலைவர்கள்:-
இலங்கையில் முரண்பட்ட கலாசாரம் நிலவுவதற்கு அரசியல் தலைவர்களும் அவர்களது செயற்பாடுகளும் காரணமாக காணப்படுவதைக் காணலாம். அரசியல் தலைவர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகப் பெரும்பான்மை மக்களின் நலன்களை உறுதிப்படுத்தக் கூடியவகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காணலாம். இதற்கு உதாரணமாக 1948,49 களில் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் குடியுரிமையை மூன்று குடியுரிமைச்சட்டங்களைக் கொண்டு வந்து பறித்தமையும் , அரச உதவியுடன் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்களில் சிங்கள குடியேற்றத்திட்டங்கள்ை D.S.சேனநாயக் கா மேற் கொண்டதையும் காணலாம். மேலும் 1956 ஜூன் 5 இல் பண்டாரநாயக்காவின் ‘சிங்களம் மட்டும் தனியொரு உத்தியோக மொழியாகும்’ எனும் சட்டம் கொண்டுவரப்பட்டமையும், 1961 இல் இளங்கதிர் (2004 - 2005) (100) தமிழ்ச் சங்கம்

Page 58
சிறிமாவோ பண்டாராநாயக்க, சிங்களம் மட்டும் உத்தியோக பூர்வ மொழியாக வடகிழக்கில அமுல படுத்தும் சட்டம் கொண்டுவந்தமையும், 1972ம் ஆண்டு அவரால் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியல் யாப்பும், 1978ம் ஆண்டு து.சு. ஜெயவர்த்தனாவின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பும். அரசியல் தலைவர்கள் தமது நலன்களை, அடிப்படையாகக் கொண்டு மேற் கொண்டமையும், ஏனைய இனங்கள் புறக்கணிக்கப்பட்டமையும் இலங்கையில் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் தோன்றுவதற்கு காரணமாகக் காணப்படுகின்றன.
V. (ypiç6)q60)J
இவ்வாறு இலங்கையில் முரண்பட்ட அரசியல் கலாசாரம் தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் துணைநிற்பதையும், அவற்றின் விளைவால் முரண்பட்ட அரசியல் கலாசாரம் நிலவுவதையும் காணலாம். எனவே இத்தகைய காரணிகள் அரசியல் முறைமை பற்றியும், அரசியல் கொள்கை பற்றியும் மக்கள் இன, மத மொழி அடிப்படையில் தமது மனப்பாங்கு, நடத்தை, நம்பிக்கை போன்றவற்றை மாற்றி தங்களுக்குள் முரண்படும் உப கலாசாரங்களாகக் செயற்படுவதைக் காணலாம். இந்நிலை, அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். இந்த முரண்பட்ட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கான வழி, முரண்பட்ட அவர்களிடையே ஒத்தியங்கும் தன்மையை ஏற்படுத்துவதாகும். இது இலங்கையின் அரசியல் கலாசாரத்தை சிறந்ததொரு கலாசாரமாக மாற்றுவதற்கான வழி எனலாம்.
உசாத்துணை நூல்கள்
1. இ.ஜாஸ், எம்.எம். (2003) “மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் முரணி பாட்டுத் தீர்வும் இலங்கையின் நோர்வேயின் மத்தியஸ்தம் குறித்த ஓர் அறிமுகக் குறிப்பு.’ ‘அல் இன்ஷிராஹற்”2003 ஒன்பதாவது மலர், முஸ்லிம் மஜ்லில், பேராதனைப் பல்கலைக்கழகம்: பேராதனை. 2. சிவராசா. அ (1999) இலங்கையின் இன முரண்பாடும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தின்னூடான தீர்வும்.” கிழக்குப் பல்கலைக்கழகம். 3. சுதுவை நாதன். நா.ச. (2002) “அரசியற் சமூகவியல்,” உயர் கல்விச் சேவை நிலையம்: யாழ்ப்பாணம்.
4. நாதன், எஸ்.கே.எஸ். (2003) ‘தென்னாசியா’ (கட்டுரைத் தொகுப்பு) பாரதி பதிப்பகம்: யாழ்க்காணம். 5. அன்ரனி நோபேட் (1995) ‘சனநாயக அரசாங்கத்தின் மாதிரிகள்” பொதுசனகல்வி நிகழ்ச்சித்திட்டம்: மார்க்க நிறுவனம்.
இளங்கதிர் (2004 - 2005) (10) தமிழ்ச் சங்கம்

மழையின் ஒலங்கள்
கடல் கடந்த மேகம் தரையைத்தொடும் நேரம், மழை நீரும் மண்ணும் மதங்கொள்ளும்.
நீண்டு செல்லும் நதி ஓலமிட்டு நிமிர்ந்த மரங்களைக் குனியச் செய்யும்.
ஊருக்கொரு விருந்து உலையிடும் நெல்மணித்தாதுகள் மணல்களுடன் போட்டியிட்டு மன்றாடும்.
திசைமாறிய உயிர்கள். திண்டாடி விழும்போது ஒலமிட்ட நீரலைகள்
செவியினுள்ளே சிங்காரம் செய்யும்.
தட்டுத்தடுமாறிய உடைந்த கூரைகள் பாறைகளின் முதுகில் ஆனந்தத் தாண்டவமாடும்.
வீரநடை போட்டுவந்த வெள்ளத்தின் சிதறலை வெறிகொண்டு தடுக்கவந்த ஆயுதங்கள் .?
இளங்கதிர் (2004 - 2005) (102)
கோ. நளாயினி, முதலாம் வருடம், கலைப்பீடம்.
அம்மா! ஆ1 ஐயோ..! காப்பாற்றுங்கள்
என்ற அவலக் குரல்கள்
மன்றாடிக் களைத்த மனிதன் மறுவுயிர் பெற்றபோது வயிற்றுப்பசி மீண்டும் அவனை வைகுண்டம் அனுப்பும்.
கடவுள் விழிக்கவில்லை. காப்பாற்ற அரசும் வரவில்லை. இறந்த உடல்களை மீட்கமட்டும் வெளிநாட்டு உதவிகளுடன் அரசும் போட்டியிட்டு அனுதாபம் காட்டும்.
தமிழ்ச் சங்கம்

Page 59
சிதம்மாங்குப் பாடல்கள் - ஓர் ஆய்வு
திருமதி. ஆர். சோதிமலர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
தமிழ்த்துறை
நாட்டுப்புறப் பாடல்கள் தமக்கெனச் சில இலக்கியக்
கொள்கைகளைக் கொண்டு விளங்குகின்றன. இப்பாடல்களில்
இலக்கியம் என்ற சொல்லாட்சியினைக் காணமுடியாவிட்டாலும்
அதனோடு தொடர்புடைய பாடல், பாட்டு, கள்ளப்பாட்டு, வண்டிக்காரன்
பாட்டு, சடுகுடுபாட்டு, தாலாட்டு, தாராட்டு, ராராட்டு, ஒராட்டு, பாகலி,
வண்ணக்கலி, கீர்த்தனை, விருத்தம், தமிழ்ப்பாமாலை ஆகிய சொற்களால் அவை பயின்று வரக் காணலாம்.
நாட்டுப்புறப்பாடல்களைப் பலவகையாக வகைப்படுத்தலாம் அவை உணர்ச்சிப்பாடல்கள் (Emotional), வாழ்வியற் பாடல்கள் (Daily life), 6JTgp656 (pidu blasp66, UITL6)856ft (Critical monement of life), குழந்தைப் பாடல்கள், சமயப் பாடல்கள் என அமைகின்றன.
இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களுக்கும் தோட்டப்புற மக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தென்னிந்தியாவிலிருந்து வந்த இந்திய வம்சாவழி மக்கள் பெருமளவில் எழுத்தறி வற்றவர்களாகவே இருந்ததால் அவர்கள் மத்தியில் வாய்மொழி இலக் கியங்களே முக்கியத் துவம் பெற்று வருவதைக் காணக்கூடியதாயுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாகத் தங்களின் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தங்களது மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் - ஏக்கங்களை தாக்கங்களை, ஆசைகளையெல்லாம் திருவிழாப்பாடல்களாக, ஒப்பாரிப்பாடல்களாக, தாலாட்டுப்பாடல்களாக, கோலாட்டப் பாடல்களாக, கும்மிப்பாடல்களாக, தெம்மாங்குப் பாடல்களாக மிகவும் சிறந்த முறையில் எதுகை மோனைகளுடன் பாடி வருகின்றனர். இப்பாடல்களில் பெரும்பாலானவை தோட்டத் தொழிலாளர்களாலேயே பாடப்படுகின்றன.
இப்பாடல்கள் இன்றைய நிலையில் பெருமளவில் பழக்கத்தில் இல்லாவிட்டாலும், ஒருசில சந்தர்ப்பங்களில் வேலைத்தளங்களில் இளங்கதிர் (2004 - 2005) (103) தமிழ்ச் சங்கம்

அவர்களால் பாடப்படுவதாகவும் அறியமுடிகிறது. நாட்டார் பாடல்களில் தெம்மாங்குப் பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தெம்மாங்குப் பாடல்களை தழுவியே சில சினிமாப் பாடல்கள் கூட அமைந்திருப்பதைக் காணலாம்.
தெம்மாங்குப் பாடல்கள் நாற்சீர் ஒற்றையாகவும் மேல் வைப்பாகவும் அமைந்திருக்கும். மேல் வைப்பு என்பது கொலை முதலிய நிகழ்ச்சிகளைப் பாட ஏற்றதாக அமைந்திருக்கும். தெம்மாங்குப் பாடல்களில் பல வகைகளுண்டு. அவை நாளாந்தம் வாழ்வில் இடம் பெறுகின்ற சில்லறைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ அல்லது சச்சரவுகளையோ விவரிப்பனவாக அமைவதுடன் மட்டுமல்லாது, கேளிக்கைகளாகவும் அறிவுரை களாகவும் காணப்படுகின்றன.
தெம்மாங்குப் பாடல்களின் கருப்பொருளை மையமாகக் கொண்டு அவற்றைப் பகுத்து நோக்குவோமாயின், அவை பின்வரும்
பகுப்புக்குள் அடங்குவனவாக உள்ளன.
i. காதல் பாடல்கள்
ii. சக்களத்திப் பாடல்கள்
iii. கணவன் மனைவியருக்கிடையே பாடப்படும் பாடல்கள் iv. பெண்ணின் பெருமையைப் பாடும் பாடல்கள்
V. வேடிக்கையாகப் பாடுவது
vi. அத்தையும் மருமகனும் பாடுவது
vii. நிலையைக் கேலியாகப் பாடுவது
viii. அவை வணக்கப் பாடல்
காதல் பாடல்கள் பொதுவாக, காதலன் காதலியை எண்ணிப் பாடுவதாகவோ அல்லது காதலி காதலனின் பெருமையைப் பாடுவதாகவோ அமையும். இப்பாடல்களில் பெரும்பாலும் பிரிவுத் துயர் வெளிப்படக் காணலாம். முறைப்பெண் பாடுவதாகவும் இப்பாடல்கள் அமைவதுண்டு.
கணவன் மனைவியரிடையே பாடப்படும் பாடல்கள் பெரும்பாலும் உரையாடல் வடிவில் அமைந்திருக்கும். இப் பாடல்கள் பெரிதும் கணவனை விழித்துப் பாடுவதாகவும் அமையும் .
இளங்கதிர் (2004 - 2005) (104) தமிழ்ச் சங்கம்

Page 60
இப்பாடல்களினூடாக கணவன் மனைவியின் குறை காண்பதும், மனைவி கணவனின் குறைகளைக் எடுத்துச் சொல்வதும் சகஜமாகவே அமைந்துள்ளன. அத்துடன் கணவனின் கூடாத நடத்தை, சக்களத்தியின் தலையீடு, மதுப்பழக்கவழக்கங்கள் போன்றனவும் மனைவியினால் கணவனுக்கெதிராக எடுத்துரைக் கப்படும் குற்றச்சாட்டுகளாகவும் அமைவதைக் காணலாம்.
நாட்டுப்புறப்பாடல்களில் பெரிதும் பெண்களுக்கே முக்கிய பங்குண்டு. அதேபோலவே தெம்மாங்குப் பாடல்களும் பெரிதும் பெண்களாலேயே பாடப்படுகின்றன. அப்பாடல்கள் பெண்களின் அழகு, அடக்கம், அன்பு போன்றவற்றுடன் அவர்களின் பெருமையையும் உணர்த்துவதாக அமைகின்றது. கீழ்வரும் பாடலூடாக இத்தன்மைகள் வெளிப்படுகின்றன.
“முக்கழகைப் பாத்துக்கிட்டு - என்னை மூணுவருசம் கேட்டாங்க - நான் மாட்டன் மாட்டன் என்றதுக்கு மறுபடியும் கேட்டாங்க. கொண்டையழகைப் பாத்துக்கிட்டு - என்னை கொறக்குடியில கேட்டாங்க . நான் மாட்டன் மாட்டன் என்றதுக்கு மறுபடியும் கேட்டாங்க. நடையழகைப் பாத்துக்கிட்டு - என்னை நாச்சான் குளத்துல கேட்டாங்க - நான் மாட்டன் மாட்டன் என்றதுக்கு மறுபடியும் கேட்டாங்க. கண்ணழகைப் பாத்துக்கிட்டு - என்னை கண்ணுாரிலே கேட்டாங்க - நான் மாட்டன் மாட்டன் என்றதுக்கு மறுபடியும் கேட்டாங்க. வயத்தழகைப் பாத்துக்கிட்டு - என்னை வன்னிய குடியில கேட்டாங்க - நான் மாட்டன் மாட்டன் என்றதுக்கு மறுபடியும் கேட்டாங்க. நெத்தியழகைப் பாத்துக்கிட்டு - என்னை நேரத்தும் கூட கேட்டாங்க - நான் மாட்டன் மாட்டன் என்றதுக்கு மறுபடியும் கேட்டாங்க”
இப்பாடலானது தன்னைத் தானே பெருமைப் படுத்திக் கொள்வதாக அமைந்திருக்கின்றது. இதையொத்த பாடலொன்று சொக்கரி நாட்டுக்கூத்திலும், சொக்கரி என்ற பாத்திரத்தினுாடாக பாடப்படுவதைக் காணலாம். மேலும், இத்தெம்மாங்குப் பாடல் இளங்கதிர் (2004 - 2005) (105) தமிழ்ச் சங்கம்

பெண்ணின் பெருமித உணர்வினை “மாட்டன், மாட்டன்’ என்ற சொல்லாட்சி மூலம் உணர்த்துகின்றது.
தொம்மாங்குப் பாடல்களைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் காதலருக்குரியதாகவே காணப்படுகின்றது. அதிலும், ஆண், பெண  ைண எணர் னிப் பாடுவதே மிக உருக்கமாக அமைந்துள்ளதெனலாம். தன் காதலியைக் கண்ட நாள் முதலாக தனது வழமையான செயற்பாடுகளை மறந்து தவிக்கும் ஆண்களின் மனநிலையை வெளிப் படுத்துவதாக கீழ் வரும் இப் பாடல் அமைந்துள்ளது.
“காலம் கலிகாலமாச்சு. காலணாவும் ஒட்டையாச்சு ஆலாப் பறக்குதடி கடவுளே ஆலாப்பறக்குதடி கடவுளே நித்தம் நித்தம் நெல்லுசோறு நெய்மணக்குது சாமிச்சோறு ஆலாப்பறக்குதடி கடவுளே ஆலாப்பறக்குதடி கடவுளே’
“தானத்தில மீனிருக்க மதுரையில் நானிருக்க சேலத்தில் நீயிருக்க - தங்கமே தங்கம் சேர்ந்து நாம வாழ்வதெப்ப தங்கமே தங்கம் பாக்கப் பகட்டுதடி பம்பரம்போல் சுழலுதடி கேக்கப் பயமாகுதடி தங்கமே தங்கம் கேலிக்கிடம் ஆகுதடி தங்கமே தங்கம் தொட்டாலும் கைமணக்கும் தோளுரெண்டும் பூமணக்கும் கிளிமூக்கு மாம்பழத்தை - தங்கமேதங்கம் கிள்ளி விளையாடப் போறேன் . தங்கமே தங்கம்”
பேச்சு மொழிக்கேற்ப, ஏற்ற இறக்கத்துடன் ஏதுகை, மோனை ஒசைகள் பெருவரவுடன் ஒலிக்கும் இப்பாடல்கள் காதலர்களுக்கே ஏற்ற பாணியில் பரபரப்புடன் அமைந்திருப்பதைக் காணலாம்.
“கானக் கருங்குயிலே களையெடுக்கும் பெண்மயிலே நீலக் கருங்குயிலே - ஏதங்கமே நான் நிக்கட்டுமா போகட்டுமா? தங்கமே”
“பொட்டுமேல பொட்டுவச்சு பொட்டலிலே போறதங்கம் பொட்டலிலே பெய்தமழை - உன் பொட்டழியப் பெய்யலியே
இளங்கதிர் (2004 - 2005) (106) தமிழ்ச் சங்கம்

Page 61
பாலத்திலே நான் இருக்க பால்போல் நிலவடிக்க மின்னிட்டாம் பூச்சுபோல மின்னுதடி மேல்முருகி சீவி நல்ல சினுக்குமிட்டு சிங்கார கொண்டையிட்டு ஆத்தாடி இந்தக் கொண்டை ஆருகுடிய கெடுக்குமோடி ஒரு வருடகாலமாக ஒட்டுத் திண்ணை காத்திருந்தேன் சண்டாள பாதகத்தி - நீயும் சரிந்து கொண்டு போகலாமோ?”
மேலே பாடப் பட்ட பாடலில் வரும் “ஆருகுடிய கெடுக்குமோடி’ என்ற அடி வாயிலாக தான் அவள் அழகில் மயங்கிவிட்ட செய்தியை வேதனையுடன் வெளிப்படுத்துகிறான், காதலன். அதுமட்டுமன்றி, காத்திருந்தும் தகுந்த பதில் கிடைக்காத செய்தியை “சண்டாள பாதகத்தி’ என்று ஏக்கத்தவிப்புடன் கூறுவதும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது.
காதலர்கள் பொதுவாக தான் ஒருவர் மீது காதல் கொண்டு விட்டால், அந்நபரைப் பற்றிய விடயங்களைத் தேடிப் பார்ப்பதுமுண்டு. வாழ்க்கை பற்றிய பிற விடயங்களைத் தேடித் தெரிந்துக் கொள்ளாவிட்டாலும் கூட, அவர்களுக்கு பிற காதல்கள் யாராவது இருக்கின்றார்களா என அறியும் ஆவல் அவர்களுக்குத் தோன்றுவது இயல்பானதே. அத்தகைய மனவுணர்வுடன் தன் காதலியைப் பற்றித் தேடும் காதலனின் எண்ண உணர்வுகள் கீழ்வரும் இப்பாடலில் எடுத்துக் கூறப்படுகின்றது.
“கூடைமேலே கூட வச்சு கொழுந்தெடுக்கப் போகயிலே கூடையை யிறக்கி வச்சி கொழுந்த வார்த்த சொல்லுப் புள்ள’
“பின்னலு கொண்டை போட்டு பில்லு வெட்டப் போறவளே எந்தமலை கொந்தரப்பு எனக்கறிய சொல்லிப்போடி
அம்மத்தாறு தொங்கலிலே அஞ்சி றாத்த சீனிபோலே வட்ட வட்ட பாரயில வரகரிசி தீட்டயில
இளங்கதிர் (2004 - 2005) (107) தமிழ்ச் சங்கம்

ஆர் கொடுத்த சாயச் சேல ஆலவட்டம போடுதடி’
'கொழுந்தவார்த்தை சொல்லு' 'எனக்கறிய சொல்லிப் போடி, 'ஆர் கொடுத்த சாயச்சேல’ போன்ற சொல்லாட்சிகள் மூலம் அவளின் சம்மதத்தை எதிர்பார்த்தும் , அவளுக்கு வேறு யாராவது இருக்கின்றார்களா என அறிய முயற்சிப்பதும் குறிப்பாகச் சுட்டப்படுகிறது.
காதலன் மட்டுமன்றி, காதலியும் எதிலும் சளைத்தவளல்ல என்பதைக் காட்டுமுகமாக, காதலியர் பலரும் பல தெம்மாங்குப் பாடல்களைப் பாடியுள்ளனர். இத்தகைய பாடல்களில் காதனைது அழகு, திறமை என்பன காதலி வாயிலாகச் சிறப்பாக எடுத்துச் சொல்லப்படுகின்றது. W
“சின்னக் கிணத்துல கல்லு கெட்டி சிங்கார வொடம்புல துவைச்சு உடுத்தி வட்டக் கொண்டக்காரன் மாசாண மூர்த்தி:ாம் வார சிங்காரத்தைப் பாருங்களேன்.
திண்ணைய திண்ணையப் பாருங்களேன் சிங்காரத் திண்ணையைப் பாருங்களேன் வட்டப் பொட்டுக்காரன் மாசான மூர்த்திக்கு அழகுத் திண்ணையப் பாருங்களேன்.
படிப்பறியாப் பாமரப் பெண், தன் காதலன் வரும் பருவத்தை அச்சூழலில் விளையும் பயிர்களினைக் கொண்டே அறிந்துக் கொள்கிறாள். பருவத்தை அறிந்ததும், காதலன் கூறிச் சென்ற உறுதி வார்த்தையும் அவளின் நினைவிற்கு வருகின்றது. காதலனின் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் காதலியின் நிலையை உணர்த்துவதாகப் பின்வரும் பாடல் அமைகினறது. w
“சோளம் விதைக்கையிலே - மச்சான் சொல்லிவிட்டுப் போனியளே : சோளம் பயிராச்சே - நீங்க சொன்ன சொல்லு பொய்யாச்சே நெல்லுக்கு விதைக்கையிலே மச்சான். நேருக்கு வந்தியளே நெலலு பயிராச்சே - நீங்க வந்தவழி பொய்யாச்சே வரகு விதைக்கையிலே - மச்சான் வந்திட்டுப் போனியளே
இளங்கதிர் (2004 - 2005) (108) தமிழ்ர் சங்கம்

Page 62
வரகும் பயிராச்சே - நீங்க வந்தவழி பொய்யாச்சே சாமி விதைக்கையிலே - மச்சான் சரியாக வந்தியளே சாமி பயிராச்சே - நீங்க சொன்னது பொய்யாச்சே” இவ்விடத்தில் சங்ககாலக்காதலும், காதலனுக்காக கார்காலம்
வரை காத்திருக்கும் காதலியின் நிலைமையும், "அவரோ வாரார் தான் வந்தன்றே” என்ற முல்லைநிலப் பாடலடிகளும் நம் நினைவிற்கு வருகின்றன.
காதலன் காதலி தனித்தனியே தெம்மாங்கு பாடுவது மட்டுமன்றி, காதலர்கள் இருவரும் சேர்ந்து பாடுவதுமுண்டு. அத்தகைய பாடல்கள் கேள்வி பதிலாகவோ, அல்லது தமது மனவுணர்வுகளை, எதிர்ப்பார்ப்புகளை தடையின்றி மாறி மாறி எடுத்துரைப்பதாகவோ அமைந்திருக்கக் காணலாம்.
“கானக் கருங்குயிலே களையெடுக்கும் பெண்மயிலே நீலக் கருங்குயிலே - ஏதங்கம் நான் நிக்கட்டுமா போகட்டுமா? - தங்கமே போகச் சொன்னா பொல்லாப்பு நிக்கச் சொன்னா நெட்டுரம் பொழுதிருக்க வந்திடுங்க - ஏ தங்கமே சொல்லுக்கிடம் வைக்காதீங்க - தங்கமே
அத்த மகளே நீ என் அருமையுள்ள என் கொழுந்தி ஆளோட நிக்கும்போது - ஏ தங்கமே நான் ஆரைவிட்டுக் கூப்பிட்டும் - தங்கமே!
போகச் சொன்னா பொல்லாப்பு நிக்கச் சொன்னா நெட்டுரம்
பொழுதிருக்க வந்திடுங்க - ஏ தங்கமே நான் சொல்லுக்கிடம் வைக்காதீங்க - தங்கமே
தெம்மாங்குப் பாடல்களில் காதலர்களின் பாடல்கள் தனிச்சுவையாக அமைக்கினறன. அதே காதலர்கள் திருமணத்துக்குப் பின்பு பாடும் பாடல்கள் ஏனோ தானோ என்ற பாவனையில் அமைகின்றன. திருமணத்துக்குப் பின்பு குடும்ப வாழ்விலேற்படும் மனவுளைச்சல்களையும், கசப்பான உணர்வுகளையும் சிக்கல்களையும் வெளிப்படுத்துவனவாக அவை அமைக்கின்றன.
குடும்ப வாழ்க்கையில் கணவனின் குடிப் பழக்கம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பெரும் துன்பத்தைக் கொடுப்பதாக
இளங்கதிர் (2004 - 2005) (109) தமிழ்ச் சங்கம்

அமைகின்றது. “குடிகுடியைக் கெடுக்கும்” என்பதற்கு ஏற்றவகையில், பல்வேறு பிரச்சினைகளுக்கும் அதுவே அடிப்படைக் காரணமாகின்றது. கணவனின் குடியால் மன நிம்மதியை இழந்த மனைவியொருத்தி பாடும் தெம்மாங்குப் பாடலானது மிகவும் சுவையாக அமைந்துள்ளது.
“எத்தனையோ புத்திகள எடுத்துரைத்தும் சாராயத்த நித்தம் போயி குடிக்கிறாயே நீயும் ஒரு ஆம்புளையா?”
'கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கால் ரூபாய்க்கு நான் குடிச்சா நட்ட முனக்கேதடி நாசமத்த பேய் மகளே’
கணவனுக்தெதிராக மனைவியும், மனைவிக்கு எதிராக கணவனுமாக குற்றம் சாடுவது குடும்ப வாழ்வில் சகஜமாகவே உள்ளது. கீழ்வரும் இப்பாடலானது மனைவி மீது கணவன் குறைகூறுவதாக அமைந்த தெம்மாங்குப் பாடலுக்கு சிறந்ததொரு உதாரணமாகும்.
“சட்டிப்பொட்டி கழுவவில்லை சமையல் வேல செய்யவில்ல வெட்டிப் பய மவளைகட்டி வெட்கக்கேடு ஊருக்குள்ளே வெரட்டப் போறேன் தாலியறுத்து விதவயப் போல - நான் வெகுபணத்தை இழந்து விட்டேன் - என் பெண்டாட்டியினாலே’
கணவன் குற்றச்சாட்டை எதிர்த்து மனைவி குறைகூறும் பகுதி மிகவும் சுவையாக அமைந்துள்ளது.
“கேளுங்கய்யா நாயத்தை
ஒரு நயாபைசா கொடுக்கவில்லை
பாயை நானும் சுருட்டிக்கிட்டு போய்ப்படுத்தேன் தின்ணையிலே
பாவி மனுசன் அடிக்கிறானே பசிவெறியாலே - இந்தப் பட்ட இடம் வீங்கிப் போச்சு பணியாரம் போல”
இளங்கதிர் (2004 - 2005) (110) தமிழ்ச் சங்கம்

Page 63
தனக்கெதிராகக் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கணவன், மனைவிக்கெதிராகப் பின்வருமாறு பாடுகின்றான். இப்பகுதியானது ஏழ்மையிலும் குடும்ப நிலை உணர்ந்து செயற்படுகின்ற கணவனின் பக்குவத்தையும் தன்மானத்தையும் புலப்படுத்துவதாயுள்ளது.
‘கஞ்சிக்குப் பணம் கொடுத்தா களவாண்டு வச்சிருக்கா. அஞ்சுபைசா மிச்சம் பண்ணி அனுப்பி வைப்பா அப்பாவீடு. ஆடி ஓடி சம்பாதிச்சது அத்தனையும் போச்சு - இந்த அடங்காத நீலியால அவமான மாச்சு’
கணவனின் குடும்பத்தாராலேயே தன் குடும்பவாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதென்பதை மனைவி கணவனுக்கெதிராக நாசூக்காக எடுத்துரைப்பது மட்மன்றி, பெண்டாட்டி அருமையற்றவுனக்கு பெண்டாட்டி எதற்கு என்றவொரு கேள்வியையும் கேட்கிறாள்.
‘அள்ளி அள்ளி குடுக்குறாரே அவருடைய அக்காளுக்கு சல்லிகூடத் தருவதில்ல சாப்பாட்டுக்கும் வழியுமில்ல தாலிகட்டிய நாள் முதலா சண்டையா இருக்கு - இந்த சவுடால காரணுக்குப் பெண்டாட்டி எதற்கு?”
மனைவியின் கேவலமான வார்த்தைகளைக் கேட்ட கணவன் எது எப்படி இருப்பினும் கணவன் என்ற மரியாதையைக் கூட கொடுக்க வில்லையே என்று குற்றம் சாட்டி ஒதுக்க முயற்சி செய்கிறான். இவனின் இத்தகையப் போக்கு குடும்ப வாழ்வில் ஆண் ஆதிக்கத்தையும் மனைவியின் அடிமை வாழ்க்கையினையும் பிரதிபலிப்பதாகவே அமைகின்றது.
‘மணவாளா என்று சொல்லி மதிப்புவச்சு பேசவில்லை இனி இவள வச்சிருந்தா ஏகச்சண்டை குடும்பத்தில எல்லோருக்கும் நமஸ்காரங்க போயிட்டுமே வாரேன் - இனி இவளைவச்சு வாழுறவன் பைத்தியக்காரன்’
கலியாணம் வரை ஒருவரையொருவர் குறைகாணாது, நிறைவையே கண்ட காதலர்கள், கணவன் - மனைவி ஆனபின்பு தான் ஒருவரையொருவர் குறை காணுகின்றனர். தாம் முன்பு நிறைவாகக் கண்ட அத்தனையும் அவர்களுக்குப் பின்பு குறைவாகவே தோன்றுகின்றது. தாம் ஒருவரையொருவர் மட்டுமன்றி, இரு பரம்பரையைப் பற்றியுேம் குறை கூறும் அவர்கள், கண்டதெல்லாம்
இளங்கதிர் (2004 - 2005) (III) தமிழ்ச் சங்கம்

குறைபாடே. ஆகாத மாமியார் கால்பட்டாலும் குற்றம் கைப்பட்டாலும் குற்றம் என்பதற்கேற்ப கணவன் மனைவியிடத்தே முழுவதாகக் குறை காணும் தன்மையை பின்வரும் பாடல் விளக்குகின்றது.
‘மாமனார் கைநொண்டி மாமியார் கால் நொண்டி மாலையிட்ட பெண்டாட்டிக்கோ மனம் நொண்டி வீட்ட விளக்க மாட்டா விளக்கக் கொழுத்தமாட்டா ஏனென்று கேக்கப்போனா கேக்கப்போனா ஏறுக்கு மாறு பேசிடுவா ஏ அய்யாமாரே இன்னுமொரு சேதி கேளுங்கோ படுத்த பாயைச் சுருட்டமாட்டா பாக்கு வெத்திலை மடிக்கமாட்டா கோயிலக் கண்டா கும்பிடமாட்டா கொண்டவனுக்குப் பணியமாட்டா வட்டுவலு செம்ப பூசமாட்டா வாரிக்குப்ப போடமாட்டா குனிஞ்சு முத்தம் தெளிக்கமாட்டா கூடுதல் குறைவு கேக்கமாட்டா ஏனென்று கேக்கப்போனா கேக்கப்போனா ஏறுக்கு மாறு சொல்லி விடுவா தானே ஒரு தண்டுவசாலி பெரிய தண்டுவசாலி”
மேற்பட்ட இப்பாடலானது உலகநடப்பின் யதார்த்தத்தை வெகுவாக விவரிப்பதாக அமைந்துள்ளது.
திருமண வாழ்வில் சந்கேமே பெரிதும் சந்தோஷத்தைக் கெடுப்பதாக உள்ளது. “சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு’ என்பதற்கேற்ப, சந்தேகத்தால் சந்தோஷம் இல்லாமற் போவதுண்டு. சந்தேகங்கள் சிலவேளை சரியாக அமைவதும் உண்டு. கணவன் மனைவிமீதும் மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொள்வதுண்டு. கணவனின் நடத்தையை பற்றிச் சந்தேகங் கொண்ட மனைவி, அவனின் கள்ளக் காதலியை தனது சக்களத்தியாக எண்ணி, அவளது தோற்றத்தைப் பின்வருமாறு தெம்மாங்குப் பாடலாகப் பாடுகிறாள்.
“கெண்டைக்காலு பெருத்தவளாம் கிளையிலேயும் ஆகாதும்பா வண்ணக்காலும் பெருத்தவளாம் வளவிலேயும் ஆகாதும்பா மொன்ன மூஞ்சி சக்களத்தி முத்தத்துக்கு ஆகாதடி பனங்கா மூஞ்சி சக்களத்தி பந்தலுக்கு அகாதடி இளங்கதிர் (2004 - 2005) (112) தமிழ்ச் சங்கம்

Page 64
முட்டுக்காலு சக்களத்தி முத்தத்தில் ஆகாதடி அன்னநடை நடக்காதடி ஆம்பிளைக்கு ஆகாதடி’
கெண்டடைக்கால், மொன்னமூஞ்சி பனங்கா மூஞ்சி என்ற சொல்லாட்சிகள், ஆகாத சக்காளத்தியை அவமானப்படுத்தி அவலட்சணமாக்கிக் காட்ட முறைமனைவி பயன்படுத்திய சொற்களாகும். இத்தெம்மாங்குப் பாடலானது முக்கூடற்பள்ளில் பண்ணைக் காரனைப் பழித்துப் பாட பயன்படுத்திய சொல்லாட்சிகளை நினைவு கூறுவதாயுள்ளது.
தெம்மாங்குப் பாடல்கள் பலவும் கீழ்த்தர நடத்தையைப்பாடப் பயன்பட்டுள்ளன. இவற்றுக்கொரு உதாரணமாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.
‘ஆத்தோரம் பாவநாகம் ஆரியத்துறை மில்லாபிசு - அங்கே அடக்குவாரு இல்லாமல் ஆளுக்கொரு வைப்பாட்டி’
இப்பாடலினுடாக சங்ககாலம் தொடக்கம் வழக்கம் பெற்றிருந்த மருத நிலப்பண்பாட்டு வளர்ச்சி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தெம்மாங்குப்பாடல்கள் பல, அவை வணக்கப்பாடல்களாக அமைந்துள்ளன.
“அல்லி மலரெடுத்து அண்ணாவியக் கும்பிட்டோம். அழகான ஊருக்கு நாங்க அன்புடனே வந்திப்போம். பிச்சி மலரெடுத்து புண்ணியரைக் கும்பிட்டோம். பேரு பெத்த ஊருக்கு - நாங்க பெருமையோடு வந்திட்டோம் தந்தனத்தான் பாட்டுப்பாடி வந்தேன் குயிலே. வருசவச்சி இன்னும் சொல்லி தந்தானக் குயிலே. ஆதி முகத்தெடுத்து அன்னியரைப் போலவந்து ஐயன் அறிந்து வந்த சுவாமிமலை கும்பிட்டனடி. சாத்தான் குளத்துப்பட்டி என்ராசத்தி நீயும் சம்மதிச்சு வந்தாயடி என்கண்ணாட்டி’
இவ்வாறு தெம்மாங்குப் பாடல்கள் காதல் பாடல்களாகவும், கணவன் மனைவியர் பாடலாகவும் ஊரார் பாடல்களாகவம் அவை வணக்கப் பாடல்களாகவும் பாடப்பட்டு வருகின்றன. இத்தெம்மாங்குப் பாடல்கள் ஆரம்பக் கால சினிமாப் பாடல்கள் பல்வற்றுக்கு அடிப்படையாக அமைந்ததென்பதும் எடுத்துக் கூறப்பட வேண்டியதே. தெம்மாங்குத் தழுவல் பாடல்கள் இன்றும் நடைமுறையிலுள்ளமை கண்கூடே. இளங்கதிர் (2004 - 2005) (113) தமிழ்ச் சங்கம்

எழுதிச் சிசல்லும் விதியின் கைகள் . உமர் கையாமினி ருமையாத் - ஒரு பார்வை
ஜெ. இல்ஹாம் கலைப்பீடம்
இன்றும் கவிஞர்கள் பலராலும் தத்தமது பாடல்களில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பயன்படுத்தப்படும் வாசகம், ‘எழுதிச் செல்லும் விதியின் கைகள், எழுதி எழுதி மேற்செல்லும்.’ என்பது. இதனைப் பலர் எங்கிருந்து வந்தது என்பதை அறியாமலே பாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இது, கவிஞன் ஒருவனேயல்லாத, ஆனாலும் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கவிதையின் உரிமையாளனால் பயன்படுத்தப்பட்ட வாசகம், ஆம்! உலகப் பிரசித்தி பெற்ற உமர் கையாமின் ருபையாத்தில் ஆளப்பட்ட வாசகம் அது.
‘ருபாய்’ என்பது பாரசீகப் பாவினங்களில் ஒன்று. ருபாய் என்பதன் பன்மையே ரூபையாத். தமிழில் வெண்பா, விருத்தம் சிந்து என்பது போல ரூபாய் பாரசீகத்தில் பயன்படுத்தப்படுகிறது. நாலடிகளால் ஆன ருபாயில் முதல் ஈரடிகளும், இறுதியடிகளும் ஒரே எதுகை பெற்றிருக்க வேண்டும். மூன்றாம் அடி சாதாரணமாகவும் இருக்கலாம்; ஏனைய அடிகளின் கடைசி எதுகை போலவும் இருக்கலாம்.
ருபையாத் இயற்றப்பட்டுப் பல்லாண்டுகள் பார்ப்பாரற்றுக் கிடந்தது. இதனை .பிட்ஸ் ஜெரால்ட் ஆங்கிலத்தில மொழிபெயர்த்தார். அம்மொழிபெயர்ப்பு காலங்கடந்து கண்டு பிடிக்கப்பட்ட போதே உமர் கையாம் இனங்காணப்பட்டார். ருபையாத் உலகப் பிரசித்தி பெற்றது.
இதனை உலகப் பிரசித்திபெறச் செய்த "பிட்ஸ் ஜெரால்ட் ஒர் செல்வந்தர். வாழ்க்கையை ‘இலகு வாக வாழ்ந்து முடிக்க விரும்பியவர். இவருக்கு ருபையாத் இந்தரீதியிலேயே பட்டது. உலகியல் வாழ்வில் மூழ்கடிக்கும் தத்துவங்களை அவர் அதிற் கண்டார். மீண்டும் படித்தார். ருபையாத் அவரை இன்னும் ஆழத்துக்கு அழைத்துச் சென்றது. இவ்வாறு ஒரே கவிதையை ஒருவர் தான் இறக்கும்வரை முயன்று 5 முறைகளில் மொழிபெயர்த்தார் என்றால் இளங்கதிர் (2004 - 2005) (114) தமிழ்ச் சங்கம்

Page 65
அதன் மர்மம் தான் என்ன? அது சுருக்கமானது; நிலையானது; கருத்துடையது; மருத்துவமாக உயிரோட்டம் தருவது; Eat, drink and be meuy’ எனும் தத்துவத்தின் ஆழத்தை பிட்ஸ்ஸ"க்குக் காட்டியது.
‘இலக்குகள் இலட்சியங்கள் அற்றவராக வாழ்ந்தவர் ஃபிட்ஸ்’ என்கிறார், ஜி. எப். மெய்னி ருபையாத் தத்துவங்கள் தனக்கு இப்படி ஒரு சமூகத்தை உருவாக்கித் தராதா என்ற எண்ணம் ஃபிட்ஸ்"க்கு. எனவே, கீழைத்தேய மெய்யியல் சமய தத்துவங்கள் மேலைத்தேய மயமாய் மாற்றப்பட்டன. அதுவே உலகப் பிரசிசித்தமானது. ஐந்தாந்தரமாக மொழி பெயர்த்தது அச்சேற முன், மறைந்து போன '.பிட்ஸ் ஜெரால்ட் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் 500 கோணங்களில் பார்க்கக் கூடத் தவறியிருக்கமாட் டார். மேலைத்தேயர்களின் உல்லாசபுரங்கள் இன்றும் ‘உமர்கையாம்’ எனப் பெயர் பெறும் அளவுக்கு ருபையாத்தைப் பயன்படுத்தியுள்ளார், ஃபிட்ஸ்ஜெரால்ட்.
இவ்வாறு மேலைத்தேயரால், விட்டில் பூச்சிகள் விழுந்து மடியும் தீபமாய் குன்றிலிடப்பட்ட தீபம், அது வரை காலமும் குடத்துள் விளக்காய் கீழைத்தேயத்திலிருந்தது. மீண்டும் அதனை மேலைத் தேயரிடமிருந்து வாங்கிய கீழைத்தேயம் தமிழிலும் தம் எண்ணப்படி மொழிபெயர்க்கத் தொடங்கியது. அந்தவகையில் பாலபாரதி சுப்பிரமணியோகி, எஸ். கிருஷ்ணமாச்சாரியார், கவிமணி, சாமிசிதம்பரனார், சி. கதிரவேலுப்பிள்ளை, அப்துல் காதர் லெப்பை ஆகியோர் தமிழில் மொழிபெயர்த்தனர்.
அவர்கள் ருபையாத்தை ஒவ்வொரு கோணங்களில் கண்டனர். சிலருக்கு அது கிண்ணத்தில் நிரப்பப்பட்ட மதுவாகத் தோன்றியது. கவிமணிக்கு அது இந்தியப் பண்பாட்டோடு பிணைந்தது. அப்துல் காதர் லெப்பைக்கு ருபையாத்தில் இஸ்லாமியத் தத்துவங்கள் மிளிர்ந்தன. ஆனாலும் சமய தத்துவங்களைத் தேடிய அனைவரும் ஒரு சில புள்ளிகளில் திக்கற்று நின்றது உண்மையே. சில தத்துவங்களுக்குத் தாமே பொருள் விளங்காது வந்தவழிகண்டு கொள்க’ என விட்டு விலகினர்.
உதாரணம்
அப்துல் காதர் லெப்பை தமது மொழி பெயர்ப்பின் 30வது பாடலுக்கான விளக்கத்தில், ‘மதுவை இஸ்லாம் கண்டிப்பாகத் தடைசெய்கிறது. இதனை விரும்பும்படியாக இவர் எப்படிப் பாடியிருக்க முடியும்' என்கிறார்.
இளங்கதிர் (2004 - 2005) (5) தமிழ்ச் சங்கம்

இத்த்கையவர்கள் கவிதையைக் கவிதையாய்க் காணத் தவறுபவர்கள். மொத்தத்தில் ருபையாத்தை மொழி பெயர்த்த அனைவரும் “படைப்பாளன் இறந்துவிட்டான்; படைப்பு வாழ்கிறது என்ற கொள்கைக்கு முரணானவர்கள். படைப்பாளனின் பின்னணியைச் சரியாகத் தேடி அதன் வழி படைப்பைப் பார்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. படைப்பைக் கொண்டு படைப்பாளனுக்குப் பின்னணி படைக்கவே இவர்கள் முயல்கின்றனர்.
இவர்களது மொழிபெயர்ப்புகளை இவர்களது பின்னணி தெரியாது படிக்க முடியாது என்பது மட்டும் உண்மையாகவுள்ளது.
உதாரணம்
கவிமணியின் மொழி பெயர்ப்பின் 106வது பாடல்
‘வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு: கலசம் நிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு”
இதில் கவிமணி கம்பநாடன், தெய்வீக பக்தன் எனும் தமது பின்னணியைப் படம் போட்டுக்காட்டியுள்ளார். இதே பாடலை, பாலபாரதி சு.து.க யோகியார் வேறுபட்டமுறையில் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்.
6
‘மாதவிப் பூங்கொடி நிழலில் மணிக்கவிதை நூலொன்றும் தீதறு செந்தேன் மதுவும் தீங்கனியும் - பக்கத்தில் காதலி நீ பாட்டிசைத்துக் கனிவோடு கூட்டுவையேல் ஏதும் இனிக் கவலையில்லை இதுவன்றோ பரமபதம்’
எனத் தானும் ஓர் தமிழ் நாடனி என்பதை இனங்காட்டிக்கொள்கிறார். ஏனைய மொழிபெயர்ப்புக்களிற்றான் இத்தகையபிரச்சினை என்றால், பாரசீகத்தில் எழுந்த மூல ருபையாத் விளக்கங்களும் பல்வேறு பாரசீக அறிஞர்களால் வேறுபட்ட முறைகளில் வழங்கப்பட்டுள்ளன. இங்கு மொழிபெயர்ப்புத் தொடர்பாக
இளங்கதிர் (2004 - 2005) (116) தமிழ்ச் சங்கம்

Page 66
பெஞ்சமின் டேவிட் கூறும் கருத்தும் நோக்கத் தக்கது. ‘ஆங்கிலத்திலிருந்து பிரஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஷேக்ஸ் பியரின் நாடக நூலை மீண்டும் பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மூலநூலைப் பார்க்காமலே மொழிபெயர்க்கப்பட்டால் அது அந்த ஆங்கில மூல நாடக அமைப்பாக இருக்குமா? அதனுடைய நடை, முறை, வேகம், இனிமை ஆகியவை அப்படியே அமைந்து விடுமா?.” என்கிறார். கட்டுரைகளில் இவை சாத்தியமானாலும், கலை, படைப்பிலக்கியங்களில் இல்லை என்றே சொல்ல நேரிடும்.
ருபையாத்தை நோக்குமிடத்து உண்மையில் உமர்கையாம் ஒரு புதிராகவே தோன்றுகிறார். இறைஞானம் மிகுந்த சூபியாக விளங்கும் உமர், தனது படைப்புக்கள் மூலம் இறைநேசர்தான் என்பதைப் புலப்படுத்துகிறாரா, அல்லது இறைவனுக்கே சவால் விடுகிறாரா என்பது எந்த மொழிபெயர்ப்பாளராலும் விளக்கப்படவில்லை.
‘இறைவா நீயே என்னைப் படைத்தாய். என் விதியை எழுதினாயப் , நான் செய்யும் பாவங்கள் ஏலவே உன்னால் எழதப்பட்டவை, எனின் நான் மட்டும் ஏன் பாவத்தாளியாக நரகம் செல்லவேண்டும்? என்கின்றபோது ‘விதி" யை ஆணித்தரமாக அவர் நம்புவதையும் நொந்து கொள்வதையும் காணமுடிகிறது.
'நீ மன்னிப்பவன், என் தீய செயல்களுக்காய் எனக்குத்தண்டனை என்றால் எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம், எனக் கருத்துப்படக் கிண்டல் செய்கிறார்; சிந்திக்கவைக்கிறார். ‘இன்னும் ஒரு நூற்றாண்டு நான் பாவத்திலேயே வாழ்வேன். இறைவன் கருணையைவிட என் பாவங்கள் மிகைத்து விடுகின்றனவா எனப்பார்ப்போம்,' எ ன ற கருத்துள்ள செய்யுளில் இறைவனுக்குச் சவால் விடுகின்றாரா, இறை அன்பைக் காட்டுகிறாரா?
இத்தனைப் பொருள்கள் புதைந்துள்ள ருபையாத்தின், புகழ் பெற்ற தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இவற்றைக் காணமுடியவில்லை. ‘‘நேற்றைய அழகி, இன்றைய மாளிகைச் சுவர் மண்ணாகச் சிரிக்கிறாள், அவள் வண்ணக்கன்னங்களைக் கிள்ளிய கைகளோ எங்கோ ஓர் சீனச் சுவராயிருக்கலாம்,' என வாழ்வின நிலையாமையைப் புலப்படுத்திய உமர் தன் ருபையாத் நிலைத்துப்
இளங்கதிர் (2004 - 2005) (117) தமிழ்ச் சங்கம்

பேசப்படலாம், ஆனால் அதன் அர்த்தங்கள் சிதைந்து சிலைகளுக்குள் கல்லாகிவிடுமோ என அஞ்சும் காலமும் அருகில்தான்.
எது எப்படியிருப்பினும், உமர்கையாமுஞ் சரி, எட்வர்ட்'.பிட்ஸ் ஜெரால்ட்டும் சரி, தாம் உலகில் உயிரோடு இருக்கும்போது இத்தனை தூரம் பேசப்படவில்லை. அவர்களும், தங்கள் படைப்பும் மொழிபெயர்ப்பும் உலகில் இத்தனை சர்ச்சைகளைக்கிளப்பும் என்பதைச் சிந்தித்திருக்கவே மாட்டார்கள்.
*Who am i?’ என்ற மெய்யியல் அடிப்படைக் கேள்விக்கான விததையிட்ட உமர்கையாமும், அதனைத் தழுவிய ஜெரால்ட்டும்,
இன்னும் அந்தக் கேள்விக்குள் உலகையே பூட்டி வைத்திருப்பது மறுக்க முடியாத மெய்யியல் சார் உண்மையாகும்.
சான்றாதாரம்
அப்துல்காதர் லெப்பை (1965) உமர் கையாமின் ருபையாத கல்கின்னை, மணிக்குரல் பதிப்பகம்.
சுபாசுசந்திரபோசு.பெ (1997) பார்வையும் பதிவும் சென்னை: நியூபுக்சென்சரி
கணி. ஆர். பி. எம் (1995) பாரசீகப் பெருங்கவிஞர்கள் (F) புஸ்லின் டெக்ஸ்ட் டர்காநகர்
தேசிக விநாயகம் பிள்ளை (1965) உமர் கைய்யாம் சென்னை: பாரிநிலையம்
Edward Fitz Gerald (1995) Rubaiyat of Omal Khayyam Culeutta: Rupa & co.
Rasamhansa Yoganaada (1996) The Rubayat of Omar Khayya crystal publishes.
பெஞ்சமின் டேவிட்கெல்தானி (1998) பைபிளின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது சென்னை: பசுங்கதிர் பதிப்பகம்
இளங்கதிர் (2004 - 2005) (118) தமிழ்ச் சங்கம்

Page 67
பிறழ்வுகள்!
கெ.சர்வேஸ்வரன் , விஞ்ஞான பீடம்.
பத்தாண்டுகளுக்குப் பின்னான பிரவேசம்! பாதம் தரையில் பாவிட ஏதென்று தெரியாத, தெரிய அவ்வேளையில் முயலாத, ஓர் உணர்சியொழுக்கோட்டத்தால் உரோமங்கள் குத்திட்டன. வருத்திய வாகனம், சுட்ட வெயில் சொல்லாமல் அதனுள் பதுங்கிக்கொண்டன. வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத கணங்கள் அவை வாழ்க்கையில் சிலவற்றை இழந்தால்தான் சிலவற்றை பெறலாமோ! மனக்குரங்கு தாவ அக்கணங்கள் புறக்காட்சிகளில் கரையத் தொடங்கின.
புதிய பஸ் தரிப்பிடம், வானொலியில் சினிமாப் பாடல், ஆங்காங்கே சினிமாப் போஸ்டர்கள், பாதையோரக் கடைகள், பச்சைத் துணியணிந்த போலீஸ், பார்க்கும் பக்கமெல்லாம் பழக்கடைகள், அதிஸ்டலாபச் சீட்டுக்கள். ஆங்காங்கே அருமை பெருமையாக ஓரிரு அக்காமார்!
தசாப் த காலத் தில நிறையவே தன் னை ச் செழுமைப்படுத்தியிருக்கிறது நமது நகரம். பார்த்த முகங்கள் ஏதாவது பார்வையில் படுகிறதா? முன்னரெல் லாம் பத்திலொன்று பார்த்தமுகமாயிருக்கும். முன்னால் சைக்கிளை உருட்டிக்கொண்டு வருவது யார்? ஒ ராசண்ணை!
“அணி ணை, ஆரேண்டு தெரியுதே?’ கணிணாடியை நடுவிரலால் சரிசெய்துகொண்டு உற்றுப்பார்க்கிறார்.
“இம். இல்லைத் தம்பி. மட்டுப்பிடிக்கேலாமல் கிடக்கு”
“அண்ணை, நான் தான் உங்கடை கருணையற்றை மூத்தவன், இப்பதான் வாறன்’
“எட அப்படியே, எப்படித் தம்பி இருக்கிறீர்? அப்பா நீர் நாளைக்கு வரப்போறதாவெல்லே சொன்னவர்?’
“ஓம் அணி ணை, வீட்டுக் காறருக்கு அப் படித்தான் சொன்னனான். முதன் நாளே திடீரெண்டு வெளிக்கிட்டு வந்து ஒரு
'சொக்” குடுக்கலாம் எண்டுதான்.” இளங்கதிர் (2004 - 2005) (119) தமிழ்ச் சங்கம்

"அப்படியே! நல்ல விசயம். டேய் மருதா இஞ்சவா. இவரை ஒருக்கா கொண்டுபொய் பிறக்கிறாசியர் குமரற்றை வீட்டுக்கு மூண்டாவது வீட்டிலை விட்டிட்டுவா’ என்றார்.
“நான் வாறன் அண்ணை’
ஆட்டோ வீட்டை நோக்கியது.
வழி நெடுகவம் நீண்டன முடிவற்ற மாற்றங்கள். புதிய கட்டடங்கள், கடைகள், அடிக்கொரு தொலைபேசி நிலையங்கள், நிமிடத்துக்கொரு பஸ்கள், தலைதெறிக்க ஓடும் புத்தம் புதிய மோட்டார் வண்டிகள். இன்னும் எத்தனையோ!
பார்க்கும் பத்தில் பதினொரு புதுக்காட்சிகள்!
‘வீட்டுக்குப் போனவுடன் அம்மா என்ன சொல்லுவா? அப்பா? தம்பி இந்த நேரம் வீட்டிலை இருப்பானோ? வீட்டு வாசலில் இறங்கி பேரைச் சொல்லாமல் யாரோ வெளியாள் மாதிரித்தான் கூப்பிடவேணும்! தம்பிக்கு வாங்கிக் கொண்டுவந்த போனைக் கொஞ்ச நேரம் கெஞ்ச வைச்சுத்தான் குடுக்கவேணும், அதுக்கு முதல் ஆட்டோகாரனுட்டை வாசல்லை “கோன்’ அடிக்கவேண்டாம் எண்டு சொல்லவேணும். பிறகு சொல்லுவம்'.
பருத்தித்துறை வீதியிலிருந்து ஆட்டோ எங்கள் ஊர் பாதைக்குள் புகுந்து கொண்டது. கிறவல் பாதை தாருடை உடுத்தியிருக்கிறது.
‘அண்ணை எப்ப இந்த ரோட்டுப் போட்டவை?”
“இப்ப மூண்டு மாசத்துக்கு முன்னந்தான்’
"ஆ, இந்தத்திருப்பத்திலை தான் நான் முன்னம் ஒருக்கா சறுக்கி விழுந்தனான். தம்பியற்ரை வீடு? ஆ. அப்படியே இருக்குது. அந்த வீட்டிலை முந்தியொரு கடி நாய் நிண்டது. நடுரோட்டிலைதான் அது படுத்திருக்கும். பெல் அடிச்சா அதுக்குப் பிடிக்காது. சைக்கிளைக் கலைச்சுக்கொண்டு வரும். ஆனா நாங்கள் ரியூசனுக்குப் போகேக்க வம் புக்கு நாயக் கடந்து பெல லடிச் சுக் கொணி டு வீச்சா இளங்கதிர் (2004 - 2005) (120) தமிழ்ச் சங்கம்

Page 68
உழக்கிக்கொண்டு பறப்பம். ஒரு நாள் அப்படித்தான் வீச்சாப்போய்த் திரும்பேக்க சறுக்கி விழுந்து முழங்கை எல்லாம் உரஞ்சினது. ஒ இப்ப அந்த சிராய்ப்பு அடையாளம் கூட இல்லை. நல்லகாலம் சைக்கிள் விழுந்த சத்தத்துக்கு நாய் பயந்து நிண்டிட்டுது!’
“தம்பி நீர் சசின்ரை அண்ணரே?”
é < 29
ஓம
“முகத்தில் தெரிது’
தம்பிமேல் பொறாமையாக இருந்தது. இவருடைய தம்பியா, என்பது மாறி, இவருடைய அண்ணரா? என்று கேட்கும் அளவுக்கு எனது முகவரி தொலைந்திருக்கிறது, பத்துவருடத்தில்!
ஊரில் சைக்கிளில் போகிறவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுற்றுப் பார்க்கிறேன். நிறையவே புது முகங்களாக இருக்கின்றன. சிலர் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போகிறார்கள்.
வீடு கிட்ட வருகிறது! இல்லை நாங்கள் நெருங்குகிறோம். இன்னும் மூன்று திருப்பங்கள் .
“எப்பவிலை இருந்தண்ணை ரோட்டுகளிலை வல்லாம் ‘லயிற்று’ப் போட்டவை? சொல்லமறந்துபோட்டன். வீட்டுக்கு முன்னுக்கு நிப்பாட்டிப்போட்டுக் கோர்ன் அடிக்காதையுங்கோ’
“அது அந்த அந்த வீட்டுக்காரர்தான் தங்கடை வீட்டுக்கு முன்னாலை கொழுவி வைச்சிருக்கினம். மின்சார சபையாலை போடேல்லை!’
அதோ வீடு!
ஆ.
அம்மா, அப்பா, தம்பி, போதாக்குறைக்குப் பக்கத்துவிட்டு ஆச்சி எல்லோரும் சொல்லிவைத்தால் போல் வாசலில் நிற்கிறார்கள். என்ன நடந்தது? எப்படி இவர்களுக்குத் தெரியும்?
இளங்கதிர் (2004 - 2005) (121) தமிழ்ச் சங்கம்

“என்ன தம்பி முன் னுக்கே சொல்லியிருந்தா பஸ் ஸ்ராண்டுக்கே வந்திருப்பம்தானே” அம்மா கட்டியணைத்துக் கொண்டார். அப்பா வந்து தலையத் தடவினார். சந்தோசத்தில் வார்த்தைகள் புதைந்துகொண்டன.
“அண்ணை நான் போகவேனும்”
“ஓ.’ அப்பா காசு கொடுத்து அனுப்பினார்.
“நான் இப்ப வாறன் எண்டு உங்களுக்கெப்பிடித் தெரியும்?”
“இஞ்ச அம்மாவுக்குக் காலமேலையிருந்து புரக்கடிச்சபடி, காகமும் காலமையில இருந்து கத்திக்கொண்டிருந்தது. அம்மா ‘ஆரோ வரப்போகினம். ஆரோ முக்கியமான ஆக்கள்தான் போலகிடக்கு. காகம் நான் போற போற இடடெல்லாம் வந்து நிண்டு கத்துது எண்டு சொன்னவா, சரியாத்தான் போச்சு” என்றார் ஆச்சி.
“இப்பதான் ராசண்ணை ரவுனுக்க நிண்டு போன் பண்ணினவர்” என்றான் தம்பி.
எனக்குப் பத்திக்கொண்டு வந்தது. ஏன் ராசண்ணையை வழியில் கண்டோம் என்றாகிவிட்டது. அவர், தான் நல்லபெயர் எடுக்க இப்படியா என்னுடைய எதிர்பார்ப்புகளை உடைக்கவேண்டும். ஆனால் அவர் மீது மட்டும் குறைசொல்லமுடியாது. நான்தானே அடிக்கடி கதைப்பதற்காக வீட்டுக்கு ஒரு போன் வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி வாங்கிவித்தேன்.
எங்களுடைய வீட்டில்தான் எத்தனை மாற்றம். வேலிகள் சுவராகியிருக்கின்றன. வீட்டிற்கு முன்னால் புதிய தாழ்வாரம். உள்ளே நான் அனுப்பிய சீ.டி. பிளேயர் ஒருபக்கத்தில் தன்பாட்டில் ‘மண் மதராசா. பாடிக் கொணி டிருக்கிறது. மறுபுறத்தில் மனையாள்வோரை ஆண்டுகொண்டிருக்கும் ரி.வி.
“என்ன நாடகமே..?”
“ஒ. “பாசமா பணமா’ நல்ல நாடகம். நான் இன்னும் ஒண்டையும் விடேல்லை.” பெருமையடித்தார் அம்மா. இளங்கதிர் (2004 - 2005) (122) தமிழ்ச் சங்கம்

Page 69
“இஞ்சே உந்த விசர்க்கதையை விட்டிட்டு பிள்ளைக்கு என்ன குடிக்க வேணும் எண்டு கேட்டுக் குடன். இப்ப உந்த விசர் நாடகங்களாலை யாழ்ப்பாணத்துச் சனம் சரியான சோம்பேறிகளாப் போகுது. முந்தி உந்த புளியடியில் எத்தனை பொடி பொட்டையள் வந்து விளையாடும். இப்ப அதுகளும் விசர்நாடகங்களைப் பாக்கத் தொடங்கி, வாறதேயில்லை. இப்ப எல்லா வீட்டிலையிலையும் வெளிநாட்டுக் காசு பூந்து விளையாடுறதாலை ரி.வி. வாங்க வெளிக்கிட்டினம்.” இது அப்பா.
“தம்பி என்ன குடிக்கிற? கூலாத் தரவோ இல்லாட்டி தேத்தண்ணி தரவோ?’
“கூலாத் தாங்கோ, எப்படி அப்பா, பிறிட்ஜ் இப்ப பிரச்சினையில்லாம வேலை செய்யிதே?”
“ஓம், அதிலை இப்ப பிரச்சினையில்லை. எப்பிடித் தம்பி வெய்யில் தாங்கேலாமல் கிடக்கே’
“ஓம் கொஞ்சம் வெக்கையாத் தான் கிடக்கு. உந்த வேலிக் கிழுவையள் எல்லாம் தறிபட்டுப்போச்செல்லே! அதுதான் போல கிடக்கு”
“ஊருக்கை சனங்கள் குறஞ்சுபோச்சென்ன! வரேக்கை பாத்தன் எல்லாம் புதுப் புது முகங்களாக் கிடக்கு”
“ஓம் , இன்னும் குறைஞ் சாலும் கவலப் படேலாது. எல்லாச்சனமும் பெடியளெண்டால் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிறதலையும், பெட் டையளெண்டால் வெளிநாட்டிலை கலியாணஞ் செய்து குடுக்கிறதிலையுமெல்லே நிக்கிது. இருக்கிற ஒண்டுரெண்டு பெடி பெட்டையஞம் கிளாஸ் அது இது எண்டெல்லே திரியுது. இப்ப இஞ்சை தியேட்டர்களுக்கும் குறைவில்லையெல்லே. ஏன், போன முறை கோயில் வேட்டைக்குச் சாமி தூக்கியாட ஆனமான ஆளில் லாமல் இணுவில்லையிருந்தெல்லே ஆள் பிடிச்சவை’ என்றார் அப்பர்.
“பெரியாம்பி எப்படியிருக்கிறார். அவரெல்லே முந்தி முழங்கால் குத்திறது’
இளங்கதிர் (2004 - 2005) (123) தமிழ்ச் சங்கம்

“அவனும் கலியாணம் கட்டி, பிள்ளையஞம் இருக்கு. ஆளுக்குக் குடில பெரிய வண்டியும் வச்சிட்டுது. முந்தின மாதிரி ஆளால ஏலாது. இப்ப லான்மாஸ்டர் ஒண்டு வச்சுக்கொண்டு உங்கை செல்லன். பொன்னனுக்கெல்லாம் உழுதுகொண்டு திரியிறான். *கயறுக் கும் வோறவனி . இப் ப எல் லாச் சனமும் வீடு கட்டிறத்தில்லையெல்லே நிக்கிது. அதிலை நல்ல உழைப்பு ஆளுக்கு”
“சசியனுக்கு இண்டைக்குக் கிளாசுகள் ஒண்டுமில்லையே? டவுனுக்கே கிளாசுக்குப் போறனி’
“ஓம், இண்டைக்கு இல்லை”
“அதையேன் பேசுவான் தம் பி. இஞ்சை என்னைப் படுத்திறபாட்டை, எந்தநாளும் மோட்டச்சைக்கிள் ஒண்டு வாங்கித் தரச் சொல் லி நச்சரிக்கிறானி , சைக் கிள் ளை போகக் கஷடமாக் கிடக் காம் . அங் கை எல லாரும் கிளாசுக் கு மோட்டர்சைக்கிள்ளைதான் வாறவையாம்”
‘அப்பா சனம் சோம்பேறியாப்போச்சு எண்டு சொன்னது சரிதான் போலகிடக்கு. முந்தி நாங்கள் டவுனுக்குக் கிளாசக்குப் போறதும் சைக்கிள்ளைதான், பள்ளிக்கூடம் போறதும் சைக்கிள்ளைதான், மூண்டு நாலுபேர் பரலலாகப் போவம். போகேக்கை அடிச்ச கொட்டங்கள். கொசப்புகள். இந்த சுகங்களெல்லாம் இண்டைக்கு இல்லாமல் போய்க்கொண்டிருக்குதோ?’
- Χ --
காலையில் சரியாக ஐந்து மணிக்கு முருகனுடைய மணி மட்டும் தவறாது அடிக்கிறது. ஐஞ்சு மணிக்கே பாத்திரங்கள் குசினிக்குள் உருண்டன முன்னரப்போல்.
“என்ன தம்பி நித்திரை வரேல்லையே? நேரங்கிடக்கு, இப்ப அஞ்சுமணிதான். கொஞ்சநேரம் போய்ப் படுமன்? என்றார் முந்தி காலை நாலரைக்கு தவறாது எழுப்பிவிடும் அம்மா.
“இல்லையம்மா நித்திரை வரல்ேலை, ஏன் அம்மா முந்திய மாதிரி இப்ப கிளியள் மாமரத்துக்கு வரறேல்லையே?’
இளங்கதிர் (2004 - 2005) (124) தமிழ்ச் சங்கம்

Page 70
“அதையேன் பேசுவான், மரம் முழுக்க குருவிச்சை பிடிச்சுப்போய்க் கிடக்கு, எங்கடை ஆடுகால்லை விழுந்து ‘செல்’ சன்னங்கள் அதிலை பட்டதாலையோ என்னவோ நாங்கள் இடம்பெயர்ந்து வந்தாப் பிறகு அது ஒழுங்காக் காய்க்கிறதும் இல்லை. அப்பா அதைத் தறிச்சுப்போட்டு, பழைய சாமான் போட, சைக்கிள் விட அதிலையொரு “ஸ்ரோர்’ மாதிரி ஒண்டு கட்டவேணும் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறார்”.
பக்கென்று நெஞ்சு
‘அந்தக் கறுத்தக் கொழும்பான் என்ன ஒரு ருசி. இந்த உலகத்திலை எந்த மாம்பழம் ருசி எண்டு கேட்டால் அதுதான் எண்டு நான் பயப்பிடாமல் சொல்வேன். ஏன் இந்தியன் ஆமிப் பிரச்சினேக்கை இந்த மரந்தான் ஒரு குடும்பத்துக்குத் தஞ்சம் கொடுத்தது. லேசுப்பட்டதே. ஊஞ்சல் கட்டியாடிய நாட்களையெல்லாம் மறக்க முடியுமே. சீ. அதைத் தறிக்கவேணுமே?”
“தமி பி நீ ஒரு கி கா அம் மா வை இணி டைக் குக் விதானையாற்றை மகள் வசந்தியின் ரை கலியாணத்துக்குக் கூட்டிக்கொண்டு போவன். நீயும் நாலுபேரைச் சந்திக்கலாம். எனக்கும் டவுனுக்க ஒரு வேலை கிடக்கு” அப்பர்.
“முந் தின அதே வீடுதானே? பள்ளிக் கூடத்துக்குப் பின்னாலையெல்லே?”
“ஒ. ஆனா போகேக்கை கடையடியால சுத்திப்போ.”
“சரி நான் கூட்டிக்கொண்டு போறன். எத்தினை மணிக்குப் போகவேனும்?”
அம்மாவை முன்னுக்குப் போகச்சொல்லிவிட்டு பின்னாலே உட்கார்ந்துகொண்டேன், பிளாஸ்திக் கதிரையில். சொக்கட்டான் பந்தலும் அதன் அலங்காரங்களும் பணத்தின் பங்கை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
அம் மா அடிக் கடி ஆட்களை ஒவ்வொருவராகக் கூட்டிக் கொணர் டு வந்து என  ைன அறிமுகப்படுத் தி வைத்துக்கொண்டிருந்தார். அவர்களும் பதிலுக்கு "ஆள் நல்லா இளங்கதிர் (2004 - 2005) (25) தமிழ்ச் சங்கம்

வளந்திட்டதிலை அடையாளந் தெரியேல்லை”, ஆள் மெலிஞ்சுபோச்சு, ஆள் கண்ணாடி போட்டதிலை மட்டுப்பிடிக்கோலாமல் கிடக்கு’ ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லிவிட்டுப் போனார்கள். எனக்கு அது போதும் போதுமென்றாகிவிட்டது. அம்மா ஒவ்வொருத்தருடனும் வரும்போது எழுந்து நின்று சிரித்து, தலையாட்டி, சிரித்து. இதுதான் என் பங்கு. மிகுதியெல்லாம் அம்மாவே கூட்டிக் குறைத்துச் சொல்லிக்கொள்ளுவார், ஆளுக்கேத்தமாதிரி.
கலியாணத்தில் இளந்தலைமுறையினரை முன்னரைப் போன்று காணமுடியவில்லை. அதனாலோ என்னவோ களைகட்டியிருக்க வில்லை. திருமணம் ஏதோ நடக்கவேண்டும் என்பதற்காக நடப்பதுபோல் இருந்தது. முன்னரைப்போன்றல்லாமல் வந்த சனங்களும் வரவேண்டும் என்பதற்காக வருவதுமாதிரிப்பட்டது. சிலர் கையில் ‘செல் போனை' வைத்து ஏதேதோ அழுத்திக் கொண்டிருந்தார்கள். கல்யாணம் செய்துவைக்கும் மதகுரு கூட இதற்கிடையில் இரண்டுதடவைக்குமேல் ‘போன்’ பேசிவிட்டார். அவா, வேறு கல்யாணத்துக்கும் வருவதாகச் சொல்லிவிட்டாரோ என்னவோ!?
சில பெண்கள் கும் பல கும் பலாக இருந்து ஏதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். பலர் நாடகத்தைப் பற்றி அலசிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த பந்தங்கள் பந்தபாசங்களைப் பற்றிய பரிமாறல்கள் பம்மாத்தாகி, நாடகம் பார்ப்பது கெளரவமாகவும் கருதப்படுகிறது போலும்!. சில இளநங்கைகளைப் பார்க்கையில் அவர்கள் தவறுதலாக, அல்லது மறந்து போய் தங்களது தங்கைமார்களின் உடைகளை உடுத்துவந்துவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றியது!
“முந்தி கல்யாணமெண்டால் என்னொரு பம்பல் கல்யாணம் எண்டா பத்துப் பெடியள் வருவாங்கள். இரண்டு மூண்டு நாளா டெக்கிரேட் பண்ணுவம். வாழை கட்டுவம். வாழையிலைகள் வெட்டப்போவம். தேங்காய் புடுங்குவம். அப்படியொரு அயலோட ஒன்றின வாழ்க்கையா, கோபப்பட்டாலும் அடிப்பட்டாலும் வாழ்க்கையில் ஏதோ ஒரு உயிர் இருந்தது.
“இப்ப எதுக்கெடுத்தாலும் ‘கென்றாக்” டெக்கிரேசனுக்குக் கென்றாக், பாத்திரத்துக்குக் கொன்றாக், கட்டிற வாழைக்குக்கூட கென்றாக்! இஞ்சை இப்ப வாழ்க்கையே கொன்றாக்கில இளங்கதிர் (2004 - 2005) (126) தமிழ்ச் சங்கம்

Page 71
பணத்திலைதான் ஒடிக்கொண்டிருக்கு பந்தங்களை மிதித்து பணங்கள் சர்வாதிகாரம் பண்ணத்தொடங்கிவிட்டன.
- Χ -
நாளைக்குத் திரும்பவேண்டும். கோயில், பள்ளிக்கூடம், பாதை, மரங்கள், வீட்டுவேலிகள், மதவடி, பற்றைநிறைந்த கால்பந்துத் திடல், ஊசிலி மெசின். என்று எங்கள் ஊரையே முடிந்தவரை என்னுடைய கமிராவுக்குள் அடக்கிக் கொண்டேன் அந்நியப்பட்டுக்கொண்டிருக்கும் இளஞ்சந்ததிக்கு அது காட்சிப்பொருளாகவேனும் இருக்கட்டும்.
அந்நியத்திற்குள் அடிபட்ட பத்துவருடங்களை அடியோடு மறக்க எதிர்பார்த்து வந்த சுகங்கள்வற்றி, இங்கும் இன்னொரு அந்நியத்திற்குள் பிரவேசித்துவிட்டதான உணர்வு ஏற்பட்டது. பல பிறழ்வுகளுக்கு நானும் ஒரு ஊக்கியாகியிருக்கிறேன் , இருக்கப்போகிறேன் என்று எண்ணுகையில் உள்ளுக்குள் ஏதோ செய்கிறது. ஆனால் சில பிறழ்வுகள்!?
*கன்னித்தாய் பயந்த மைந்தர் கவரிமா வனைய நீரார் மன்னிய வுயிர்போல் மந்றைச்
சாதியை மதிப்ப; பென்றும் பன்னிடும் பழிக்குச் சாகும்
பான்மையர், மறந்துங் கேடும் இன்னலும் பிறர்க்குச் செய்யா,
ரின்சொனு மருளு மிக்கார்’ (பண்டிதர். சோ. இளமுருகனார்)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹற்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
(திருக்குர்ஆன் 61:2-3)
இளங்கதிர் (2004 - 2005) (127) தமிழ்ச் சங்கம்

நாண்கு கவிதைகளும் ஒரு சிறுகதையும் மறுமலர்ச்சி இதழில் மஹாகவியின் படைப்புகள் சில குறிப்புகள்
ஈழத்திலே 1943 ஆம் ஆண்டில் உருவாகிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் வெளியீடே 'மறுமலர்ச்சி’ (1946 - 1948) எனும் இதழ் ஆகும். மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்கள் பலரும் மறுமலர்ச்சியில் எழுதினர். மறுமலாச்சியில் கவிதை, சிறுகதை எனும் இரண்டையும் எழுதிய சிலரில் மஹாகவியும் ஒருவராவார். இச் சிறு கட்டுரையில் மறுமலர்ச்சி இதழில் வெளியாகிய மஹாகவியின் படைப்புகள் பற்றி மட்டுமே நோக்கப்படுகிறது.
I
மறுமலர்ச்சி இதழில் வெளியாகிய மஹாகவியின் படைப்புகள் அவ் இதழில் வெளியாகிய ஏனைய படைப்பாளிகளின் படைப்புகளுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கையில் மிகக் குறைவானவை. அந்த வகையில் மறுமலர்ச்சியில் மஹாகவியின் நான்கு கவிதைகளும் ஒரு சிறுகதையும் வெளியாகியுள்ளன. இரவு (சித்திரை 1946), காதலுள்ளம் (ஆடி 1946 .23), காதலியாள் (சித்திரை 1947.ப.38) ஆகிய மூன்று கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை.
அத்துடன் “அலையெடுத்த கடலென.” (கார்தித்கை 1946) எனத் தொடங்கும் தலைப்பிடப்படாத அட்டைப் படக் கவிதையையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். மறுமலர்ச்சியில் வெளிவந்த அவரது சிறுகதை “தூக்கணாங் குருவிக் கூடு” (ஆனி 1946 ப. 9 - 12) என்பதாகும். கவிதைகள் “மஹாகவி’ என்ற புனைபெயரோடும் சிறுகதை துருத்திரமூரத்தி என்ற பெயரிலும் (து. உருத்திரமூர்த்தி என்றல்ல) வெளியாகின. இப்படைப்புகளை கவிதைகள், சிறுகதை என்றவகையில் தனித்தனியே நோக்குவோம்.
III
மஹாகவியின் “இரவு' என்ற கவிதை, ஆடம்பரம் மிகுந்த பட்டணம் ஒன்றின் இரவுநேர அமைதியைப் பற்றியது. “மஹாகவியின்
இளங்கதிர் (2004 - 2005) (128) தமிழ்ச் சங்கம்

Page 72
ஆரம்பகாலக் கவிதைகளில் நகரமும் கிராமமும் எதிர் எதிர் நிலைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. நகரம் மனிதவாழ்வுக்கு உகந்ததன்று; பொய் நாகரிகம் மிகுந்தது; மனித மனத்தை மரத்துப் போகச் செய்வது பதிலாக, கிராமம் மனோரம்மியமானது; அதுவே முட்டொழிந்து வாழத்தக்க இன்பபுரி” (எம். ஏ. நு.மான் 2003) என்ற வகையில் இரவு' என்ற கவிதையும் மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளில் ஒன்றே என்று கூறத்தோன்றுகிறது.
19ம் நூற்றாண்டிலே மேலைத்தேயக் கவிதை அரங்கில் காணப்பட்ட கற்பனாவாதக் கண்ணோட்டத்தின் விளைவாகவும், சாதாரண ஒரு கிராம மனிதன் நகரத்தின் இரவு நேரத்தில் அனுபவிக்கும் அமைதியான இலக்கியப் பிரதியாகவும் மேற்படி கவிதையை நோக்கமுடியும். கிராமம், யாழ்ப்பாணம் செல்வேன், செல்லாக்காசு என்ற மூன்று கவிதைகளும் கிராமம்பற்றிப் பாடுகின்ற கவிதைகளில் முக்கியமானவை. இம் மூன்று கவிதைகளிலிருந்து “இரவு' என்ற கவிதை கிராமத்தின் அமைதியை மறைமுகமாகப் புரிய வைக்கிறது என்று கூற முடியும். பட்டணம் ஒன்றில் வசித்து வரும் கிராமத்துவாசி ஒருவர், தனது கிராமத்தின் அமைதியை இரவு நேரத்திலேயே பட்டணத்தில் அனுபவிக்கிறார், என்ற கருத்துப்படவே கவிதையை,வாசிக்க முடிகிறது. சிறப்பாகச் சொல்லப் போனால் மஹாகவி தனது அளவெட்டிக் கிராமத்தின் அமைதியைத் தான் கொழும்பில் வேலைசெய்யத் தொடங்கிய ஆரமபகாலத்தில் இரவு நேரத்திலேயே அனுபவிக்க முடிவதைக் கவிதையாக்கினார் எனலாம். பட்டணம் ஒன்றின் தன்மை மீதான சினப்பைக் கவிதையில் காணமுடிகிறது. 1945 - 1952 வரை மஹாகவி கொழும்பில் திறைசேரியிலே எழுதுவினைஞராகக் கடமையாற்றியபோது 46 களுக்கு முன்னர் இந்தக்கவிதையை எழுதியிருத்தல் வேண்டும். “அமைதி காணுதல்” கவிதையின் தொனி எனலாம்.
பட்டணம் சனநடமாட்டம், ரேடியோ அறிவிப்புகள், வாகன இரைச்சல்கள் என்பன நிறைந்தது, இவை கவிஞருக்கு பகல் நேர அமைதியைக் குலைக்கிறது. இத்தகைய பகல் நேரத்தின் மீது எரிச்சல் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இரவு வருகிறது, இரவின் வரவை எண்ணிக் கவி உள்ளம் களிக்கிறது; கவிதை பிறக்கிறது.
இளங்கதிர் (2004 - 2005) (129) தமிழ்ச் சங்கம்

“கூச்சலிடும் ரேடியோக் கூக்குரல்கள் ஒயவும்
கூட்டம்போடும் மாந்தர் தம்
குகைகளிலே தூங்கவும், ஒச்சலின்றி வண்டிகள் ஒடுகின்ற வீதியில் ஒன்றுமின்றிப் போகவும் இரவுவந்து சேர்ந்தது!’
பட்டணத்தின் ஆரவாரங்களை நாடிச் செல்லும் இயல்பிலிருந்து மாறுபட்ட உள்ளத்தினை இக் கவிதையின் தொடரும் பகுதிகளில்
காணமுடிகிறது.
“பட்டணத்திலேயுள Lu6Tu6TüGL 6)TLb பாலைவனம் மீதிலே
பால்மழைபொ ழிந்ததுபோல்
நட்டநடு, ராவர நல்லநேரம் வந்தது நாலுதிசை தம்மிலும் நிம்மதி பிறந்தது”
அடங்கிப்போன பட்டணத்தினுடைய அமைதி தனக்கு மட்டும் அல்லாது, நாலு திசைக்கும் நிம்மதி கொடுப்பதாகக் கூறுகிறார். இரவு நேரம், தனக்குக் கொடுக்கும் அமைதியை அனைவருக்கும் பொதுமைப்படுத்திக் கூறும் பண்பையும் காணமுடிகிறது.
இத்தகைய இரவு நேரம் புதுமையானது என்பதையும், மெளனத்தின் அழகை ரசிக்கும் கவிதை உள்ளம், மெளனம் அதற்குக் கொடுக்கும் ஆறுதல் முதலியவற்றையும் கவிதையின் இறுதிப் பகுதி
புலப்படுத்துகிறது.
“சன்னல்களைச் சாத்தியச் சனமெலாம் உறங்கிட சலனமற்ற ராவில் இரு &ITLDLDT86)|td SIL-! என்னபுதுமையில் இங்(கு)
இளங்கதிர் (2004 - 2005) (30)
தமிழ்ச் சங்கம்

Page 73
எத்திசையும் மெளனியாய் எழில் சிறந்திருக்குது ஆறுதல் கொடுக்குது’
மஹாகவி கொழும் பில வேலை செய்த காலத்தில் , அப்பட்டணவாழ்வில், கிராமத்தின் அமைதியைப் பகலில் காணமுடியாது தவித்து இரவு நேரம் தரும் அமைதியை நிம் மதியாக அனுபவித்ததைக் கவிதையாக்கினார், எனக் கருதமுடிகிறது.
மஹாகவியின் காதலுள்ளம், காதலியாள் என்ற இரு கவிதைகளும். அகத்துறை சார்ந்தவை. மறுமலர்ச்சி இதழ்கள் சமுதாயத்தில் உள்ள அனைத்து அனுபவங்களையும் வெளிப்படுத்தும் படைப்புகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில், ‘காதல்’ என்ற பணி பினையும் அவை பாடு பொருளாகக் கொண்டுள்ளன. மறுமலர்ச்சிக்காலத்தில் மறுமலர்ச்சி இதழில் எழுதியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவே விளங்குகின்றனர். இந்த வகையில் இவர்கள் தமது பருவத்திற்கேற்ப காதல் என்ற பண்பினைப் பாடினர் எனக் கருதமுடியும்.
மஹாகவி, வரதர், யாழ்ப்பாணன், சாரதா போன்ற இளைஞர்கள் காதலைப் பாடுபொருளாகக் கொண்டு பல கவிதைகளை மறுமலர்ச்சி இதழில் எழுதியுள்ளனர். காதலுள்ளம், காதலியாள் என்ற இரு கவிதைகளை எழுதியபோது மஹாகவிக்கு 19,20 வயதாக இருந்திருக்கும் எனக்கருத முடிகிறது (மஹாகவியின் காலம் 1927 - 1971) இருகவிதைகளும் பிரசுரமான காலம் 1946, 1947)
‘காதலுள்ளம்’ என்ற கவிதை உடல் ரீதியான புற அழகு சம்பந்தப்பட்ட கவிதையாக அல்லாது, உள்ளத்து ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாக அமைந்து காணப்படுகிறது.
“கடல் மணலைக் குவித்தாற்போ லேயிருக்கும் கன்முலைகளைச் செதுக்கும் காலச்சிற்பி உடல்சோர வருகின்ற முதுமையாலே அதுவுந்தான் அழிகிறது! முழுதாய் முற்றி, வடிவாகப் பழுத்தபழக் கன்னமெல்லாம் வீழ்ந்தழுகித் தான்போகும் துடியைப் போன்ற, இடையுந்தான் இப்படியே இருக்கப்போவ(து) இளங்கதிர் (2004 - 2005) (3) தமிழ்ச் சங்கம்

இல்லை! கா மத்திற்கும் உண்டே எல்லை! பாற்கடலில் ஆலமாம் எண்ணின் வேல்கள் பழுதாகும், பாயும், பின்னும்? தென்றற் காற்றலைக்கும் கருங்கூந்தல் முகிலும் என்றும் கார்முகிலாய் இருக்கமாட்டாது! வெள்ளிக் காற்சிலம்பும் கைவளையும் கதைத்துக்கொள்ள கைவீசி வருகின்றாள், காலத்திற்குத் தோற்றுவிட்டால், நடைதளர்ந்து கையிற்கோலும் ஏற்றுவிட்டால், காமத்திற்கிடம் அங்கேது?
என்றெல்லாம் புற அழகு நலன்கள் மீது கேள்வி எழுப்புகிறார். இந்த நலன்கள் யாவும் என்றோ ஒரு நாள் அழியக் கூடியது.
“மாதர் முகத்தை நினக்கினை கூறுவர் வெண்ணிலாவே; அ-து வயதிற் கவலையில் நோயிற் கெடுவது வெண்ணிலாவே'
என்ற பாடற் பகுதியில் குறிப்பிடுவது இவ்விடத்தில் நோக்கத் தக்கது. மஹாகவியும் காலமிகுதியினால் களையிழந்து போவதை விடுத்து இல்வாழ்க்கை என்பது மிகவும் சிரமம் என்பதை உணர்ந்து, எத்தகைய துன்பம் நிறைந்த இல்வாழ்க்கைப் பயணம் என்றாலும் அப்பயணத்தில் ஒன்றாக இணைந்து வாழும் காதல் உள்ளமே வேண்டும். என்கிறார்.
“முத்திருக்கும் பவளத்தின் கிமிளில் மட்டும் மயங்கிவிட்டபின், அவற்றையெல்லாம் காலக்கள்வன் எத்திவிட்டபின், ஆசை ஒழிந்துபோகும்! ஆதலினால் அணங்கேயுன் எழில்களெல்லாம் வாழ்க்கையிலே பயணம் போக “பாதையெது வானாலும் கஷ்டப்பட்டும் அத்தானும் நானுமாய் போக வேண்டும்” என்று சொல்லும் காதலுளம் அதுவும் வேண்டும்’
“அதுவும் வேண்டும்’ என்பதால் ஏனையவையும் வேண்டும் என்று மறைமுகமாகத் தெரிவிக்கிறார். இக் கவிதையில் புற அழகினுTடான காதலை விடுத்து உள்ளத்து விருப்பிற்கான வேண்டுதலே முனைப்புப் பெறுகிறது.
‘காதலியாள்’ என்ற கவிதை காற்று வாங்குவதற்காக காலையில் சோலையூடு பயணித்த ஒருவன் அழகிய பெண்ணொருத்தி இளங்கதிர் (2004 - 2005) (132) தமிழ்ச் சங்கம்

Page 74
நீர் அள்ளவருவதைக் கண்டு அவள் மீது காதல் கொள்வதும், இறுதியில் அவள் அவனது காதலைத் தான் ஏற்றுக் கொண்டதாக வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. இக்கவிதையில் இயற்கை வருணனை, காதற்பெண் பற்றிய வருணனை என்பன சிறப்புற அமைந்துள்ளன.
“கன இருட்டைக் கதிர் கிழிக்கக் காலையாக கஷ்டமெல்லாம் மறந்துவிட, காற்றுவாங்கும், நினைவொடு யான் சென்றிருந்தேன், சோலையூடு, நீள்நிழல்கள் நிலத்தினிலே கோலங்கீற், மனமுருகக் குயில்பாட, மயில்களாடும் மாமரங்கள், மலர்ந்து மணம் வீசுஞ்சோலை எனைமறந்து நடந்து செல எந்தன் அகம் ஈர்த்தணைத்தாள் தென்றலவள் அந்தநேரம் வளைகின்ற இடையினிலே குடமொன்றேந்தி வார்குழலில் வாயவிழும் வசனம் ஏந்தி கிளிமொழியாள் என்னுடைய நெஞ்சைக்கிள்ளி
29
என்று தொடர்கிறது கவிதை இறுதியில்
S LS S LSL SL SL SL SL LSL LSL SSLL LSL LSL LSL LS LS LS S S S S S SL LSS LSL LSL LSL LSL LS LSL LSL LSL LSL SLL LSL S SL S S S S S S LSL LSL பட்சம் பொங்கக் கடைவிழியில் கருவண்டைச் செலுத்திக் காதல் கக்கவிட்டாள் காதலியாள்! கண்டேன் இன்பம்!
என்று நிறைவுபெறுகிறது. இது முன்னைய காதற் கவிதையிலிருந்து வித்தியாசமானதாக தெரிகிறது.
“அலையெடுத்த கடலென.’ என்று தொடங்கும் கவிதையை நோக்குகையில், இக் கவிதை பாரதியின் கவிதாவிலாசம் பற்றியும், அவனது கவிதையின் செயல்வன்மையையும், பாரதிக்குத் தமிழர்கள் செய்யவேண்டிய செய்கைபற்றியும் பேசுவதாக அமைகிறது.
தமிழின் மறுமலர்ச்சியை விரும்பியவர்கள், மறுமலர்ச்சியாளர்கள். பாரதியை அதிகம் முதன்மைப்படுத்தினர். ஈழத்து மறுமலர்ச்சிக் குழுவினரும் பாரதியை முதன்மைப்படுத்தினர். அவர்கள் பாரதியின் பாதையில் பயணித்தவர்களே என்பதை அவர்களின் எழுத்துக்களில் 35/760016) TLb. இளங்கதிர் (2004 - 2005) (133) தமிழ்ச் சங்கம்

“மறுமலர்ச்சிக் கவிஞரான சுப்பிரமண்ய பாரதியாரின் ஜனன தினத்தில் இந்த மறுமலர்ச்சி இதழைத் தமிழ் ரசிகர்களின் முன்பாகச் சமர்ப்பிக்கிறோம். பாரதியின் நினைவு, நம்மைக் கைகொடுத்தது தூக்கிவிடுகிறது தமது லவரியப் பாதையிலே இந்தநினைவு நமது முயற்சிகளுக்குச் சிரஞ்சீவித் தன்மை அளிக்கிறது” என்று பாரதிக்காக வெளியிட்ட இதழினி முகத்துவாரத்தில் (இதழ் 8) கூறப்படுவது அவதானிப்புக்குரியது அந்தவகையிலேயே பாரதிபற்றி அவர்கள் பாடினர்.
மஹாகவியும் பின்வருமாறு பாடுகிறார்.
“அலையெடுத்த கடலென ஆற்றல் கொண்ட பாரதிக் கலைஞனின் கவிதை இக் காசினியெலாம் பெரும் ஒலிகிளர்த்த வேணும் - நாம் ஒன்று பட்டு நின்று பல் சிலை செதுக்கி நாட்டுவோம், செந்தமிழர் நாடெலாம்”
இக்கவிதை அட்டைப்படத்தின் கீழ்ப் பகுதியிலே மஹாகவி என்ற பெயரோடு பிரசுரமாகியது. இந்த இதழிலேதான் நாவற்குழியூர் நடராஜனும், ‘கேட்டியோ அன்றுனைக்
கீழ்மைப்படுத்திய
நாட்டிலே உன்கவி
நாதம் நிறைந்தது
ஈட்டிவேல் வாளெனத்
தீட்டிநீ விட்டசொற்
பாட்டினால் மெத்தளைப்
பாரம் குறைந்தது’
என்று எழுதியுள்ளார். எனவே குறிப்பிட்டுக்காட்டிய மஹாகவியின் நான்கு கவிதைகளும் நான்கு விதமாய் அமைந்துள்ளன. அத்துடன் கிராமப்பேச்சுத் தமிழையும் கவிதையோடு இணைத்து ஒருவித வாழ்வியல் அனுபவத்தைத் தருகின்றன. செய்யுள் என்பதிலிருந்து வேறுபட்டு அதாவது செய்யுள் மறைந்து கவிதை மேலோங்கி நிற்பதையும் காணமுடிகிறது.
இளங்கதிர் (2004 - 2005) (134) தமிழ்ச் சங்கம்

Page 75
III
மறுமலர்ச்சி இதழில் மஹாகவி எழுதிய சிறுகதை, ‘தூக்கணாங் குருவிக் கூடு' என்பதாகும். மனிதனை உயர்திணை என்றும் ஏனைய உயிரினங்களை அ..ஹிணை என்றும் கூறுவது தொல்காப்பியர் வழிவரும் மரபு உயர்திணையுடன் அ.றிணையை ஒப்பிட்டு உயர்திணையே உயர்ந்தது என்று கூறும் இலக்கியங்களும், அ. றிணையே உயர்ந்தது என்று கூறும் இலக்கியங்களும் உள்ளன. தூக்காணங் குருவிக் கூடு என்ற சிறுகதை ஒப்பீட்டின் அடிப்படையில் அஃறிணையே உயர்ந்தது என்று கூறமுயலுகிறது.
புளியமரம் ஒன்றின் கீழ் பனையோலையால் வேயப்பட்ட சிறியகுடிசை, அதில் ஆறுபேர் கொண்ட குடும்பம்; அதுவும் ஏழை விவசாயக் குடும்பம். அன்று மழைநாள் குடும்பத்தலைவன் கடும்மழை பெய்யப்போவதை இயற்கையின் அறிகுறிகளால் அறிகிறான். அந்த மழைக்கு குடிசை மீது மரம் முறிந்து விழுந்து அழிந்து போகலாம் என்று அவன் எண்ணுகிறான். ஆனால் பனையில் தொங்கிக் கொண்டிருந்த தூக்கணாங் குருவிக் கூட்டில் உள்ள குருவிகளின் நிலைபின்வருமாறு காணப்படுகிறது என்று ஆசிரியர் கூறுகிறார்.
“தூக்கணாங் குருவிகள் மட்டும் சுகமாக ஒன்றின் இறகை ஒன்று சொண்டினால் கோதிக்கொண்டிருக்கும்’
இதன் மூலம் பெய்யப்போகின்ற பெருமழைக்கு முன் அக் குருவிக் கூடும் குருவிகளும் எம்மாத்திரம்? ஆனால் மரணத்தின் விளிம்பிலும் அவை சந்தோசமாய் இருக்கின்றனவே! ஆறறிவுடைய மனிதனோ அஞ்சி அஞ்சிச் சாகிறான் என்பதைப் புலப்படுத்த முயலுகிறார். மஹாகவிக்கு கவிதைபோல சிறுகதை கைவரவில்லை என்பதைப் புலப்படுத்த இச்சிறுகதையே போதுமானது. ஒரு சாதாரண வாசகன் கூட எழுத்தாளன் ஒருவனின் ஆரம்பகாலக் கிறுக்கலாக இக் கதை அமைந்துள்ளதை அறிந்துகொள்வான். ஆழ்ந்து வாசிப்பவர்கள் இதனைச் சிறுகதையே அன்று என்று நிராகரித்தாலும் ஆச்சரியப்படுவத்கில்லை. ஆனால், ‘இன்னல் உழைப்பு ஏழ்மை அன்பு என்பவற்றைப்பாடுங்கள்’ என்று கூறிய மஹாகவியின் உள்ளத்தை இக் கதையிலும் காண முடிகிறது என்பதும் மறுக்கமுடியாததுதான். இளங்கதிர் (2004 - 2005) (135) தமிழ்ச் சங்கம்

வண்ணியின் வரலாற்றில் பண்டார வண்ணியண்
எஸ்.பிரமிளா, விடுகை வருடம், கலைப்பீடம்.
ஈழநாட்டின் ஆதித்தமிழ்ப் பிரதேசங்களுள்ளே, வன்னி நாடும் ஒன்றாகும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட, எல்லாள மன்னன் காலத்துக்குப் பலபல நூற்றாண்டுகள் முன்னரே தமிழ் மக்கள் ஈழத்திலே குடிகொண்டு வாழ்ந்திருந்த போதும், அதற்கான வரலாற்றுக் குறிப்புக்கள் எதுவும் யாராலும் குறித்து வைக்கப்படவில்லை. ஆங்காங்கு காணப்படும் புதைபொருள் ஆதாரங்களைக் கொண்டு அவ்வுண்மை இப்பொழுது நிலைநாட்டப்பட்டு வருகின்றதே தவிர, வேறு வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு அதனை நிறுவுதல் மிகவும் கடினமான காரியமாயிருக்கிறது. ஆனால் வன்னி நாட்டைப் பொறுத்தளவில் அதன் வரலாற்றினை அவ்வப்போது அறிஞர்கள் ஆங்காங்கு குறித்து வைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாகும்.
மன்னன் பண்டார வன்னியன் வரலாற்றை அறிவதற்கு எமக்குக் கிடைக்கும் சான்றுகள் மிகக் குறைவு. கிடைக்கும் சான்றுகளும் ஆங்கிலேயராலேயே எழுதப்படவையாகும்.
காலத்துக்குகாலம் வன்னிப்பிரதேசத்தின் எல்லை நீண்டும் குறுகியும் காணப்பட்ட போதிலும், பொதுவாக ஈழமணித் திருநாட்டின் வடபகுதியிலே சுமார் 2000 சதுர்மைல் விஸ்தீரணமுடைய பிரதேசமாக மிளிர்வது வன்னிநாடு.
வடக்கே யாழ்ப்பாணப் பரவைக் கடலையும், கிழக்கே திருகோணமலை மாவட்டத்தையும், தெற்கே அருவியாற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும் எல்லையாகவுடைய இப் பிரதேசம் வன்னியர்களால் ஆளப்பட்டமையால் வன்னிநாடு எனப் பெயர் பெற்றது. வன்னிநாடு என்னும் பெயர் ஏற்படுவதற்கு முன்னர் இப்பகுதி அடங்காப்பற்று என்னும் பெயரைப் பெற்றிருந்தது. இப் பகுதி மன்னரும் மக்களும் வடக்கே யாழ்ப்பாண மன்னர்களுக்கோ, தெற்கே அனுராதபுர அரசர்க்கோ அடிபணியாது, சுதந்திரமாக வாழ்ந்ததாலேயே இப்பெயரைப் பெற்றதென்பர்.
வன்னியர் தென்னிந்தியாவில் வாழ்ந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த மிகப் பிரசித்திபெற்ற போர்வீரர் இனம், நாளடைவில் அரச இளங்கதிர் (2004 - 2005) (136) தமிழ்ச் சங்கம்

Page 76
இனமாக மாறியதாக டீ. ராகவன் கூறுகிறார். இலங்கையில் தமிழர் வாழ்ந்த பகுதிகளிலிருந்த வன்னிச் சிற்றரசுகள் பற்றிய மரபுவழிக் கதைகள் 16ஆம் நூற்றாண்டு முதலாக எழுதப்பெற்ற தமிழ் வரலாற்று நூல்களிற் காணப்படுகின்றன.
கைலை வன்னியனைப் போலவே ஆங்கிலேயர் காலத்தில், அவர்களுக்கு அடிபணிய மறுத்து, நற்றுண் ணியாக ஆட்சி செலுத்தியவன் பண்டார வன்னியன். இவனுடைய வீரவரலாறு கிட்டத்தட்ட தமிழகத்தின் மன்னனான வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறை ஒத்திருக்கின்றது.
வீரஞ்செறிந்த மன்னர் பரம்பரையிலே, வன்னிநாட்டின் கடைசி மன்னனாகவும், ஈழத்தின் (இலங்கை) ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னமாகவும் திகழ்ந்தவன், குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். இவன் 1777ம் ஆண்டு பிறந்ததாகவும், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியிலும் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
இவனது தாயாரின் பெயர் பெருவல்; முத்த சகோதரியின் பெயர் நல்லநாச்சியார்; இளைய சகோதரன் பெயர் பெருமையினார் (முள்ளியவளையை அரசாண்டவன்) என்றும் இவனுடைய இராசதானி பண்டாரிக்குளத்தில் அமைந்திருந்ததென்றும் எம். எஸ். கந்தசாமி கூறியுள்ளார். பண்டாரிக்குளம் நெடுங்கேணிப் பிரதேசத்திற்கு அண்மையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பண்டாரவன்னியன் நுவரகலவியாவைச் சேர்ந்தவன் எனச் சிலரும், முல்லைத்தீவைச் சேர்ந்தவன் என வேறுசிலரும் கருதுகின்றனர். இவ்வீரனது யுத்த நடவடிக்கைகள் அனைத்தும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலேயே இடம்பெற்றிருக்கின்றன. தற்போது சிங்களப் பிரதேசமாக இருக்கும் நுவரகலவியா முன்பு தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியாகத் திகழ்ந்திருக்க வேண்டும்.
இலங்கையில் வீரஞ்செறிந்த சிற்றரசர்களாக விளங்கியவர்கள், வன்னியர்களே. இவர்களுடைய வீரத்தைக் கண்டு போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் அஞ்சினர். பிரித்தானியர்களுக்கு அதிக தொல்லை கொடுத்தவர்கள் வன்னியர்களே. அதிலும் ஒல்லாந்தருக்கு அதிக இளங்கதிர் (2004 - 2005) (137) தமிழ்ச் சங்கம்

தொல்லை கொடுத்தவள், வன்னிச்சிமரிய செம்பத்தி என்ற அரசியே. இவளின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல் இவளைக் கொழும்புக் கோட்டையின், மறியல் சாலையில் அடைத்து வைத்திருந்ததாக ஜே.பி. லூயிஸ் குறிப்பிடுகின்றார்.
ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும், முறையே 1658, 1796 ஆண்டுகளில் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பிடித்தவுடனேயே, தாங்களே வன்னிநாட்டிற்கும் ஆட்சியாளர் என எண்ணினர். அதனால் வன்னி மன்னரைத் திறை செலுத்துமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தேசாதிபதியின் தர்பாருக்குச் சமுகமளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர். எனினும் வன்னி மன்னர் அந்நியரின் மேலாணையை முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை.
திறை கொடுப்பதாக ஏற்றுக்கொண்ட வன்னியர்கள் திறை கொடுக்காமலும், தர்பாருக்குப் போகாமல் விட்டபோதும், ஒல்லாந்தர் அவர்களோடு பகைக்க விரும்பவில்லை.
பனங்காமத்தை ஆண்ட கைலாய வன்னியன் ஒல்லாந்த தேசாதிபதியின் தர்பாருக்குப் தொடர்ச்சியாக பன்னிரெண்டு ஆண்டுகள் போகாது விட்ட்ான். வன்னி மன்னரைப் பகைக்கின் அவர்கள் கண்டி மன்னனுடன் சேர்ந்து கொண்டு தம்மை எதிர்ப்பரென ஒல்லாந்தர் அஞ்சினர்.
அரிப்புக்கோட்டையை குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் உதவியுடன் பிடித்துவிடுவரென ஆங்கிலேயரும் அஞ்சினர். வன்னியர் யாழ்ப்பாணம் மீது படையெடுப்பதை தடுப்பதற்கு ஆனையிறவில் கோட்டைகட்டிப் பாதுகாத்தனர்.
வன்னி இராச்சியத்தின் நிர்வாகப்பிரிவான திருகோணமலைப் பகுதியின் பொறுப்பை தன் மூத்த சகோதரியான நல்லாச்சியிடமும், பனங் காமப் பகுதியை தனது இளைய சகோதரியான ஊமைநாச்சியிடமும் ஒப்படைத்து வன்னிராச்சியம் முழுவதையும் திறம்பட ஆட்சி செய்தான் பண்டார வன்னியன். அவனது கால்பட்ட பூமியில் தங்கள் நிழல் கூடப் படமுடியாமல் நின்று திகைத்தனர் அன்றைய ஆங்கிலேயர்கள்.
இவன் கண்டிய மன்னனின் அழைப்பின் பேரில் கண்டி இராச்சியத்தைக் காப்பாற்ற உதவும் பொருட்டு கண்டிக்குச் சென்ற இளங்கதிர் (2004 - 2005) (39) தமிழ்ச் சங்கம்

Page 77
சமயம்பார்த்து, ஆங்கிலேயர் முல்லைத்தீவைக் கைப்பற்றினர். இதனால் ஆத்திரமடை நீ த பணி டார வன்னியண் தனது படைகளைத்திரட்டி முல்லைத்தீவிலுள்ள ஆங்கிலக் கோட்டைமீது உக்கிரமான தாக்குதல்களைத் தொடுத்தான. இவனின் படைகளின் தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வள்ளங்கள் மூலமாக யாழ்ப்பாணத்தை நோக்கி ஆங்கிலப்படைகள் தப்பி ஓடின. 1803 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25ம் திகதி மீண்டும் முல்லைத்தீவு பண்டார வன்னியனால் கைப்பற்றப்பட்டது.
ஆங்கிலப் படைகள் மீண்டும் முல்லைத்தீவைக் கைப்பற்ற திட்டங்களை வகுத்தன. இத்திட்டத்தின்படி திருகோணமலையில் இருந்தும் , மன்னாரில் இருந்தும் படைகளை நகர்த்த ஆயத்தமானார்கள். திருகோணமலையில் இருந்து நகர்த்தப்பட்ட படைக்கு எட்வேசட் மெச்சினும், யாழ்ப்பாணத்திலிருந்து நகர்த்தப்பட்ட படைக்கு 19ம் றெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த தளபதி லெப்டினன் ஜோன்யுவலும், மன்னாரிலிருந்து நகர்த்தப்பட்ட படையணிக்கு கப்டன் வொன் நிபேர்க்கும் தலைமை தாங்கினார்கள்.
ஆங்கிலேயரினால் வன்னிநோக்கிய படையெடுப்புக்கு திட்டங்கள் தீட்டப்படுவதனை பண்டாரவன்னியன் ஏற்கனவே அறிந்திருந்தான். ஆனால் மன்னாரிலிருந்து படைகள் நகர்த்தப்படும் என்பதனை அவன் அறிந்திருக்கவில்லை. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்தும், திருகோணமலையிலிருந்தும் நகர்த்தப்படும் படைகளைத் தாக்குவதற்கே பண்டாரவன்னியன் தரைப் படையணிகளை நிறுத்தியிருந்தான்.
யாழ்ப்பாணத்தில் இருந்துவரும் ஆங்கிலப்படையைத் தாக்கி அழிப்பதற்காக கற்சிலைமடு என்னும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த படையணியுடன் பண்டாரவன்னியன் இருந்தான். அச்சமயம் மன்னாரிலிருந்து வந்த வொன் றிபேக்கின் படையணி எதிர்பாராத விதமாக தாக்குதலை நடாத்தியது. இத்தாக்குதலில் 1803ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் நாள் அதிகாலை பண்டாரவன்னியன் கற்சிலைமடுவில் வைத்து தோற்கடிக்கப்பட்டான். அச்சமயத்திலே பண்டார வன்னியனது படைகளிடமிருந்து கண்டிய மன்னனின் முத்திரை பொறிக்கப்பட்ட பீரங்கி ஒன்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்ட இத்தினத்தை கப்டன்
இளங்கதிர் (2004 - 2005) (139) தமிழ்ச் சங்கம்

பொன்றிபேக் நடுகல் ஒன்றில் பதித்து அதனை அவ்விடத்திலேயே நாட்டியும் விட்டான்.
இதனோடு பணி டாரவன் னியன் ஓய்ந்துவிடவில்லை. வன்னியிலேயே மறைந்திருந்து, ஆங்கிலேயரை மீண்டும் தாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். இதனொரு வெளிப்பாடாக 1810ம் ஆண்டு மே மாதத்தில கண்டிப் பிரதேசத்தவர்களுடன் இணைந்து கிழக்கு முனை, தெற்கு முனைப் பகுதிகளில் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினான்.
பண்டார வன்னியன், தாம் கைப்பற்றிய பிரதேசங்கள் மீது படையெடுக்கலாம் என்று அஞ்சிய ஆங்கிலேயர்கள் தமது எல்லைப் பகுதிகளான வெடிவைத்தல், வவுனியா ஆகிய இடங்களில் தமது பாதுகாப்புப் படைகளை உசார் நிலையில் வைத்தனர். 1810ம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் பண்டாரவன்னியன் கண்டித்திசாவையின் உதவியோடு வன்னியைத் தாக்க இருப்பதாக மேற்பற்றுக் கிழக்கு முதலியார் கதிர் காம நாயகம், கலக்டர் ரேணருக்குச் செய்தியனுப்பினார். உடனே ஆங்கிலேயர்கள் வன்னியின் படைபலத்தினை அதிகரித்தார்கள்.
போர் மீண்டும் ஆரம்பமாகியது. திருகோணமலையில் இருந்து வந்த ஆங்கிலப் படையினை நல்லநாச்சான் வன்னிச்சியினது படைகளும் எதிர்த்துப் போராடின. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஆங்கிலப் படையினரைப் பண்டாரவன்னியன் முறிகண்டிக்கு அண்மையலுள்ள 18ம் போர் என்னும் இடத்தில் வழிமறித்துத் தாக்கினான். இத் தாக்குதலில் பண்டார வன்னியன் படைகளால் ஆங்கிலப் படைகளை எதிர் கொள்ள முடியவில்லை.
மீணடும் பண்டார வன்னியன் 1811ம் ஆண்டு உன்டயாவுர் என்னும் இடத்தில் ஆங்கிலேயேருக்கு எதிராகட் போர் தொடுத்து அப் போரிலே படுகாயமடைந்தான். அவனை அவனது படைவீரர்கள் பனங்காமததுக்கு எடுத்துச் சென்று பராமாதது வருங்கால், தனது 34வது வயதில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்டான் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இச் செய்தியினை அறிந்த அவனது காதலி குருவிச்சி நாச்சியாரும், அவனது சகோதரி நல்லநாச்சியாரும் கார்த்திகைக் கிழங்கினை உண்டு உயிர்மாய்த்ததாகக் கூறப்படுகின்றது.
இளங்கதிர் (2004 - 2005) (40) தமிழ்ச் சங்கம்

Page 78
பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன் என்பதே எல்லோரும் அறிந்த செய்தி. இன்னும் கூட காட்டிக் கொடுப்போரை காக்கை வன்னியன் பரம்பரை என்று கூறிக் கொள்வதைக் காணலாம். சங்கிலி மன்னனையும் காக்கை வன்னியனே காட்டிக் கொடுத்தான் என்றும் கூறப்படுகின்றது. உண்மையில் காக்கை வன்னியன் என்னும் பெயருடைய ஒருவன் வன்னி நாட்டின் வரலாற்றில் இல்லை.
மாதகல் மயில் வாகனப் புலவர் முதன் முதலாக ஒரு காக்கைவன்னியனை உருவாக்கியிருக்கிறார். சங்கிலிக்கும் பரநிருபசிங்கத்திற்குமிடையே மயில்வாகனப் புலவர் தரும் காக்கை வன்னியன், பிரம்மா படைக்காத பெற்றோர் இட்ட பெயர். காகோ (Gago) என்ற பேர்த்துக்கிச மொழிச் சொல்லுக்குக் கெஜான்னையன் என்பது பொருள். போர்த்துக்கிச வரலாற்றுக் குறிப்புக்கள் இரண்டு காகோமாரைப் குறிப்பிடுகின்றன. ஒருவன் புவிராச பண்டாரத்தின் மாப்பிள்ளையும் தளபதியுமாவான். மற்றவன் எதிர்மன்னசிங்கன். வன்னியன், அல்லாதவனை வன்னியனாக்கி காகோ என்ற பெயரைக் காக்கை என விளங்கிக் கொண்டு மயில் வாகனப் புலவர் தோற்றுவித்த சிருஷ்டியே, சங்கிலி நாடகத்தில் வரும் காக்கை வன்னியன், ஊர்காவற்துறை தலைவன் எனக் குறிப்பிடப்படுகின்ற பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன் என்பது கர்ண பரம்பரைக் கதையே. உண்மையில் கதிர்காமநாயக முதலியாரே பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தார். இவரையே காக்கை வன்னியன் என மக்கள் அழைத்திருக்கலாம்.
வன்னி இராச்சியத்தினை அந்நிய ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து காப்பாற்ற இறுதிவரை போராடிய இறுதித் தமிழ் மன்னன், பண்டார வன்னியன் என்பது சரித்திரச் சான்றாகவுள்ளது. தன்னலங்கருதாது வன்னியைக் காப்பாற்ற இறுதிவரை போராடி தன்னுயிரை அம்மண்ணிலேயே நீத்த இந்த மாவீரனது சிலை இன்றும் கற்சிலைமடுவில் காணப்படுகின்றது.
ஈழத்தமிழர் வாழும் பிரதேசங்களில் வன்னிநாடே இறுதிவரை மண்ணின் சுதந்திரத்தைக் கட்டிக் காத்துள்ளது. வன்னியைத் தொடர்ந்து சில காலம் ஆண்டவர்களும் நிம்மதியாக ஆட்சி புரிந்ததும் இல்லை; வன்னியரும் அடங்கிச் சும்மா இருந்ததில்லை.
இளங்கதிர் (2004 - 2005) (141) தமிழ்ச் சங்கம்

ஒரு ஜீவ பீரவாதம்
உன் பார்வைக்கு என்னவோ அது சொட்டும் துளிகள்!
அறிவாயா நீ அந்த பிரவாகத்தின் உருவாக்கத்தை?
என் அந்தரங்கக் கிடாரத்தில் ஆத்மா நெளியும் ஒரு புழுவாக. சுயவதைக்குள் சாற்றினைப் பிழியும் - அந்த பிழிவு என் இதயத்தில் பிரவாகத்தை ஊற்றெடுக்கச் செய்யும்!
அறிவாயா நீ. அந்த பிரவாகத்தின் மருங்கே நிசர்சனம் நின்று கொண்டு கை பிசைவதை? நேசத்தின் தூய்மை கையசைப்பதை? நம்பிக்கையின் கண்கள் கலங்குவதை?
திருடப்பட்ட மாதங்களையும் மணித்துளிகளையும்
ஷர்மிளா ஜெயக்குமார், 1" வருடம், விஞ்ஞான பீடம்.
தேடித் தேடியே அது ஒடும் - அது ஊற்றெடுக்கும் உயரத்தில் துயரத்தின்
சாயல் மூச்செறிக்கும்!
கன்னத்தின் மீது விட்டுச் சென்ற சுவடுகளில் கவலைத் திட்டுகள் உறைந்திருக்கும்!
கண்ணிர் என்று பெயரிட்டால் கண்களின் கழிவு என்றாகிவிடும்.
கனவுகளை கண்களால் காண்கிறோம் தப்புக் கணக்கு போடும் வரை,
அதற்கு
கண்ணிரென்ற பெயர் இருந்து விட்டுப் போகட்டும் - உன்னதம் அறிந்தவர்களே, எப்போது அதற்கு புதுப் பெயரிடுவது?
இளங்கதிர் (2004 - 2005)
(142) தமிழ்ச் சங்கம்

Page 79
சங்க நடவடிக்கைகள் - உOOபு
19.01.2004 வருடாந்தப் பொதுக்கூட்டம்
இடம் : கலைப்பீட கன்னங்கரா மண்டபம்
அதிதி: பெரும் பொருளாளர் கலாநிதி ப.சரவணகுமார், புதிய செயற்குழு பொறுப்பேற்றல்
24.01.2004 ஆதவனின் இரண்டு நாடகங்கள்
இடம் : பொறியியற்பீட ஈ.ஓ.ஈ பெரேரா அரங்கு
புல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற “உணர்வுகள் விற்பனைக்கில்லை”, தெல்தோட்டை மலைமகள் மத்திய கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற “உரிமைக்குரல்”, ஆகிய திரு. ஆதவன் அவர்களது இரு நாடகங்கள் தமிழ்ச்சங்க அனுசரணையில் மேடையேற்றப்பட்டன.
10.03.2004 ஆலோசனைக் கூட்டம்
இடம் : கலைப்பீட கன்னங்கரா மண்டபம்
சங்க நடவடிக்கைகள் ஒழுங்கு செய்வதில் உள்ள சிக்கல்கள், புதிய கருத்துக் களர் ஆலோசனைகள் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது. பேராசிரியர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
15.06.2004 புதுவசந்தம்
இடம் : பொறியியற்பீட ஈ.ஓ.ஈ பெரேரா அரங்கு
புதுமுக மாணவர்களின் இசை, நடன, நாடக நிகழ்ச்சிகள்
மேடையேற்றப்பட்டன. பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இளங்கதிர் (2004 - 2005) (143) தமிழ்ச் சங்கம்

17.07.2004 புராரம்பரிய விளையாட்டுப் போட்டி
இடம்: பல்கலைக்கழக மைதானம்
நடுவர்கள் : பொறியியற் பீட உதவி விரிவுரையாளர்களும் போதனாசிரியர்களும்.
போட்டிகள்: கிளித்தட்டு
கிட்டிப்புள்ளு
கபடி
நண்டோட்டம்
முட்டியடித்தல்
19.07.2004 - 24.07.2004 கூத்துப் பயிற்சசில் பட்டறை
SLLd : W.U.S
மன்னாரில் இருந்து வருகை தந்த இரண்டு அண்ணாவியர்களினால் “வாலி வதை” கூத்து பயிற்றுவிக்கப்பட்டது.
31.07.2004 *வாலி வதை” கூத்து
இடம் : மாத்தளை கலாச்சார மண்டபம்
மாத்தளை முத்துமாரி அம்மன் சைவ மகா சபையின் அனுசரணையுடன் கூத்து நடத்தப்பட்டது. பங்குபற்றிய கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
18.08.2004 , 25.08.2004 பீடங்களுக்கிடையிலான விவாதச் சுற்றுப்போட்டிகள்
இடம் : கலைப்பீட கன்னங்கரா மண்டபம்
நடுவர்கள்: கலைப்பீட விரிவுரையாளர்கள்
முதற் சுற்றுப்போட்டிகள் நடந்தேறின. தவிர்க்கமுடியாத காரணங்களால் இறுதிச் சுற்றுக்கள் இம்முறை நடைபெறவில்லை.
இளங்கதிர் (2004 - 2005) (44) தமிழ்ச் சங்கம்

Page 80
27.10.2004 - 29.0.2004 நாடகம் பட்டறை
இடம் : W.U.S
மலைவாணன் அவர்களினால் நாடிகல்பட்டறை நடத்தப்பட்டது. இங்கு பயிற்றப்பட்ட நாடகங்கள் தொடர்ந்து இடம் பெற்ற கலை நிகழ்வின் போது மேடையேற்றப்பட்டன.
08.11.2004 “உயர்மலை ஊக்கினால் உயர்ந்திடும் தமிழ்?
இடம் : பொறியியற்பீட ஈ.ஓ.ஈ பெரேரா அரங்கு
அதிதிகள; பேராசிரியர் எம்.ஏ.நு.மான்
கலாநிதி ப.சரவணகுமார் திரு டங்ஸ்ரன் எஸ். சாமவேல் (மலைவாணன்) திரு. தேவதாஸன் ஜெயசிங் (தொடர்பு சஞ்சிகை ஆசிரியர்) திரு. ஏன் செல்வராசா திரு. வே. இராசைய்யா
இக்கலை நிகழ்வில் ரீ வாணி த.ம.வி. உடவளவ, மற்றும் எபட்ஸ்போட் த.ம.வி. நானு ஒயா ஆகிய பாடசாலை மாணவர்களது நடன, நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரு. தேவதாஸன் ஜெயசிங் அவர்களது கருத்துரையும் பல்கலைக்கழக மாணவர்களது கவியரங்கம், நாடங்கள் என்பன இடம்பெற்றன. பங்குபற்றிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வா. அம்பிகை
விஞ்ஞான பீடம் 40 பேராதனைப் பல்கலைக்கழகம் செயலாளா பேராதனை. தமிழ்ச்சங்கம்
தமிழ்ச் சங்கம் ۔ ۔ سے وagDن:۹۲ھ6

நன்றிகளோடு நினைக்கிநோம்
• இம் மலருக்காக ஆக்கங்கள் தந்துதவிய அனைத்துப்
படைப்பாளிகளையும்
பல வகைகளிலும் உதவி புரிந்த உதவி விரிவுரையாளர்
திரு. பரா றதீஸ் அவர்களையும் 9 அழகாக அச்சிட்டுதவிய வர்தா பதிப்பகத்தாருக்கும் உரிமையா6ார்
ஸியா உல் ஹக் அவர்களையும் V−
9 ஆலோசனைகளை வழங்கிய பெருந்தலைவர்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களையும்.
gDJ )2004 - 2005( (146) தமிழ்ச் சங்கம்ھی۔۔۔۔۔ ۔ہجی

Page 81

பவளவிழா நிகழ்வுகளில் இருந்து

Page 82


Page 83

سمي
இன்மய்யிண்ஹைர்
புடவை அழகு பொருள் வாணிபம்
اللہ
ܨܲܪ ܨܬܡܸܔܔܛ_S_2ܝܵܢ.
]ந்ததொ வல்லுனர்களால் இதில தத் டிவிசன்களில்செய்து
இந்நடுங்
இாங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்

Page 84
SOLE DISTRIBUTORS DAMRpF NATURES
E
222, KASTHURIAR ROAD, JAFFNA
L, 21D(DOSU KA
Book Shop Electrical
Screen Priimtiny 酯
सा يس
حياتصاد
Nellioidy, Kouroveddy. Tel: O21 2263073, 0777222561
இளங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்
 
 
 
 
 
 
 
 

ר
னேஸ்வரரநகிைறகம்
ιι (τυρύυ ταυτώ
AMBIGAI GALANCHIYAM
304 (110), மருத்துவமனை வீதி, யாழ்ಗುಹಾಯಿ! YARтом мир семвг.
鶯
48. கஸ்தூரியார் Te: O777-24.6461 / O21-222 6330 سد"
இளங்கதிர் 2004 - 2005} தமிழ்ச் சங்கம்

Page 85
மென்மைக்கு மெருகேற்றும் இளமைக்கு எழிலூட்டும்
தெழகந்தி:2228290
熙爲
ப, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்ப ELIU
*
SRI KUMARAN HARDWA
DELEARS IN: Building Moterials
(sssteske" fieef, Geners, so Lilie,
θαήe αίρεέ,0ιφίε και, | || βίαι ικαιι, 6.7.ύίρρα, έέε) *型圈
酪
83,Stanley Road, Jaffna Tel: 222 2798 U
ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــخ" طصد سي
VIRGINERDIRS
104A, Stanley Road, Jaffna Te: 2222479
في இளங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்
 
 
 
 
 
 
 
 

N
சீவசத்தி இரும்பகம்
பளம் நிலைய முன்பாக, பிரதான வீதி,
EEajuly2. தொலைத்தொடர்புகட்கு மருதம் ,Gu:07OH 22229, O70 - 22329,070 21аз7 - ܢܠ
இளங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்

Page 86
SELVADURAI CycLE STORES
NELLLADY, KARAVEDIDY.
E இஜஇதிவதிஜி
பஸ் நிலையம்,சிநல்லியடி,கரவெட்டி
ÍcHITHAMPARAPPILLAI BOOKDE POT
خا இளங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்
 
 
 

тен оz1-22.22.19е
FT-17 * " .
dt D/2.ཊིg ། ༣་ LO" W MA ''
(புடைவைக்கடற்) ஹ க்ணைத்துப் புடவைகளின் ஆT மொத்த சில்லறை வியாபாரிகள்
122 Egypsy POWER HõusE R0 AD), "y" 黛』 JAFFNAA
Branchi:
இளவரசி சேலைச்சோலை
El (பட்ருப்புடவைகளின் சாம்ராஜ்யம்)
AWAHASTERTL:
(Specialist Wedding Screes)
韃57, நவீன சந்தை,யாழ்ப்பாணம். * 鷺
TI: O2T2222503
الم
இாங்கதிர் (2004 - 2005)
ليس தமிழ்ச் சங்கம்

Page 87
WBC' TAMIL STUDENTS SCIENCE FACULTY.
SARATI AKRATISFATIANUA GREAM HOUSE وإليبييرN
A6292,056),
(च- o
பூங்கா
ᏯᎧ)ᎧᎧᏪᏪ
GAN PO
இளங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்
 
 
 
 
 
 
 
 

毒 க.அ.சிண்ணையாவும் மைந்தர்களும்
மேசை விரிப்பு, வாகன, தளபாட ஆசனத் தயாரிப்பு பாதணி உற்பத்திப் பொருட்கள் விற்பனையாளர்கள்
73, களப்துரியார் விதி, யாழ்ப்பாணம்.
WORKS
آي
SAXONICAL DENNÄ
516.Hospital Road, Jafກຊ໌
இாங்கதிர் (2004 - 2005) - தமிழ்ச் சங்கம்

Page 88
s ggA جمہ čině čisđћIDm 匈Dö噬胞兹
ற கருமார நகையூகும நவீன அழகிய தங்க ஆபரணங்களுக்கு "'
சிறந்த ஸ்தாபனம்
205/6,கஸ்தூரியார் வீதி,
ராஜா தியேட்டர் கட்டிடம், யாழ்ப்பாணம்.
தொ.பே.இல, 2225385
ĝ48, ĝ5GKRÜ985ö & Soóš6ŝis
GENERAL MERCHANT & COMMISSION AGENT
B1, göynestaåssig, ungsiungulli. Tip: 021-222 2043
&മ0
ரைன் வாச் 8 றேடியோ
91,kasthuriyar Road, Te| 021 222GB Jafna. Mobile:0777.567785.
இளங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்
 
 
 
 
 
 

நந்தலிலே இரும்பலம் HARDWARE Dealers in Hardware, Engineering Tools, Power Tools,
Masonery, Carpentry Tools, Building Materials, WET GARINDER, Patimts
JAFFNA
CAR & WAN FOR HRE ColoñloO, JGfinG & SolngWGe$eMGeS
R.KIRI, POLIIKANDY. V.W.T.
PAINTING coNTRAಣ್ಣORS
III
: тР: o77 зоз9658
آي
இளங்கதிர் (2004 - 2005)
தமிழ்ச் சங்கம்

Page 89
*
O Ο O மடேண் Wரோர்ல் NODERN STORES
Book, Mogozine, NeWSpaper & Stotionery Deciler
| || || ||
مجھتے۔
مجھ سے
Bus stand, Nelliyady. أنمي GSLNGANATEAN CO
Textiles Merchants
FITJ, FII, A
திருமணப்பட்டு சாறிகளுக்கு
TIL GIGIMÕTigulu ஒரே இடம்
13, 14, Grand Bazzar, Jaffna.
இளங்கதிர் (2004 - 2003) தமிழ்ச் சங்கம்
 
 
 
 
 
 
 
 
 

[G Grean (HOUSG
FIEIIIlls
HiñoFiii IIIrishõli f面 ரூபா"
15.StanleStanley Road, is Jaffna. Lp; 021-2222ó76 -டை
Erndit: Caldiele C(CESThet||k SIBI
ألبير இளங்கதிர் (2004 - 2005) தமிழ்ச் சங்கம்

Page 90
தங்கையரின் புன்னகையுடன்
பொன்ாகையும் அழகு சேர்க்க அவற்றை 攸置 r
எண்ம் போய் ஆத்தித் திருடங்கள்
ת
TI ---- *కార్తా =
g F. స్ట్రో
HL S TTTTT TT S LL TTTL 00LT TLLLLSLLLLLLTLS என்றென் III II fil
...
i:
:- -
::: LL LTHaTSS S KKLTTT S STTLTLLLLS S MOkTOTTSLYLSkLkLLkuLTLMLMkOeLOTLLLLL
செய்து பெற்றிட சிறந்த'த்ாபாடம்,
হল।
தங்ஆர்டிகை சியாபார்: :ستندi
Сће Vii:Naksaji: Akgamma
iyalanufcuctiir gščbli 1/3, Kasthuriai Road, 3:43: :ஓவித் Jaffna. :r:ë: ozzzag-1895 uur" beriër"b-U
ாலசிங்கம்பூத்தகசாலை
U
4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். Tp:02-2226693
PIFERNANNODO
PolyEDITTEEL Dental and Opticals Works W *、
237, Stanley Road, 23, Bus Stand, Jaffna. Jaffna. இளங்திைர் 2004 - 2005 தமிழ்ச் சங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 


Page 91
இஸ்லாமிய இணையத்தளங்கள் பற்றிய முழுமையான தகவல்களுடன் கூடிய
இணைய விபரக்கொத்து
(Web Directory)
(ஆங்கிலம்)- தமிழ் H சிங்களம் )
Vidh೧)
Offset, Screen, Digitas Printing
Branch
85 C, Pitumugama, 67,Matale Road, Akurana Muruthagamula-20526, Kandy. (Opp. Zia Hospital Junction)
Tel: O773240541, O777B 6025o Web WWW, Wardhap Lub.8m.com,
E-mail : wardhapublicationsgrnail.com, zahziaulha Tail.com W -ட-கிழ்த் திங் سميسر இாங்கதிர் - 25 y 15f1;"| ཁ་ན་ཌ་ தமிழ்ச் ്
 

Ζούδ (Μύ
கு கண்ணாடி இகம்
2-jBO)LD: டாக்டர் றெஜி சொலமன் T.p: o2 2225569
、 நெல்லியடியில் பார்வையிடும் நாட்கள் όισού αυτά, αδια τιμ στ, σσδ புதிய நேரம்: 8.00 - 11.30 மணி
552, ஆஸ்பத்திரி வீதி,
μι τιύύυ ταοτώ. திரு (ஆஸ்பத்திரி வைரவர் கோயில் முன்பண்"
ólö5/rigð/TUti sjö, 6hybrissťuse. (சிலகழ்மீதியேட்டர் அருகில்

Page 92
DISTRIBUTORS OF ELECTRICAL
WATATER PUM
PVC Pipes & Fittings
 
 

EMS AND ELECTRICAL APPLIANCES PS, S & WALLTILES.
02:275,459இg