கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2009.04-10

Page 1


Page 2
ושמונebbg T5 அலறிப்புடைத் து
隅-s,
9:55.5GTU) in அநாதைகள் ஆகினோமி ஆயினும் தொடர்வோம் எம் வாழ்வு.
 

ஓதம் செய்யேம் தளவாடிதம் சேய்யேம் பண்ணாகம் சொந்தியம்படி டிம்ாயகர் செய்வோம்
ஆசிரியர் குழு
தமிழ்மணி அகளங்கன் கந்தையா முறிகணேசன்
உதவி:
தபிரதாபன், செரஜனி
அச்சு:
மவ்ரிவிஷன் அச்சுக்கலையகம் " Iக் குறுக்குத்தெரு வவுனியா, &cl#፡m ሇኜL H I}፰d : ፲፱ጋiሶ፡ሶ''
வடிவமைப்பு கர னேஷ்
இலச்சினை பசிவ.ஆண்பு
THA'IIF SEJT-383) FLIIT தொடர்புகட்கு:
l 's "பொதிகை
அலைகரை விதி, இறம்பைக்குளம், வவுனியா தொபே !
| 30 திருநாவற் குளம்
Ғыll:5151ilшп,
{1호- 호 2:1 (Tf வெளியீடு:
HuDuzMa Y SaLL00Ha KKT S LCTS TMM LLLLLHkLkMSM TTuTuMMMMS
அஞ்சலிக் கட்டுரை கவிதைகள் يې ليك முற்றத்து மல்லிகைகள்,'
கவிதை --
விடியலை நோக்கி. அவர்கள் வரவைநோக்கி. இலக்கிய விழுமியம் பாருக்குள்ளே ஒரு நாடு பெண்கள் எழுச்சிப்பாடல் தமிழ்மொழி வளர்ச்சியில். வவுனியா கலை இலக்கிய. புலவர்களின் தீர்க்க தரிசனம் கைகள் உண்டு கால்கள் உண்டு
யான் கண்ட பல்துறை ஆராய்ச்சிப்.
மாருதம் பற்றி தினக்குரலில் வவுனியாவில் குறும்படங்கள் கவிதைகள்
நாண் கண்ட கனவு
கவிதை நவீன இலக்கியம் பற்றிய நோக்கு கவிதை இலங்கையின் தமிழ் திறனாய்வு. கவிதை 1ஆவது ஆண்டு நிறைவு விழா கவிதை
நாற்றுமேடை கலையரசின் நடிப்பு. பார்த்திபனின் பக்கங்கள்
நண்பர்களுக்குமட்டும்
דל
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் - 2009
Published by: Circle of Arts and Literary Friends. Wavuniya, SriLanke. Editors : Ahalangan & Kandah Shrigameshanemal: kshrganesham@yahoo.com

Page 3
மாருதம் 10 - 2003 சமூக கவி காள இங்கிய அரசிாக
உங்களுடன்.
மாருதம் சஞ்சிகையின் 10வது இதழுடன் வட்டத்தின்
பன்னீரானர்டு நிறைவின் தொடர்ச்சியில் மீண்டும் வாசகர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நெருக்கடி காரணமாக இடம் பெயர்ந்த வன்னி மக்களின் துண்ப துயரங்களில் நாமும் பங்குகொண்டிருந்தோம். வட்ட நண்பர்களின் ஒத்துழைப்புடன் எம்மால் இயன்ற உதவிகளை-உணவு, உடை, பால்மா வகைகள், மருந்துப் பொருட்கள் என இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கியிருந்தோம் வட்டத்தினுடைய செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குகொண்டு உழைத்த திருதவிேஜயசேகர் போன்றோர்களும் புலம்பெயர் எழுத்தாளர்களில் ஒருவரான திரு.வி.ஜீவகுமாரன் போன்றோரும் எமது வேண்டுகோள்களை ஏற்று வட்டத்தின் ஊடாகத் தம் பணி புரிந்தனர். அவர்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். இடம் பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் இந் நாட்களில் நாமும் எமது இலக்கிய வட்டச் செயற்பாடுகளை முடுக்கிவிட ஆயத்தமானோம். அந்தோ! சம்பவித்தது முதல் சம்பவம், எமது விட்ட உறுப்பினர் கவிஞர் கண்னையாவின் மராைம். அன்னாருக்கு எம் அஞ்சலிகள். அடுத்து இன்னுமொரு பேரிடி எமது வட்டத்தின் பொருளாளரும் மவிரிவிஷன் அச்சுக் கலையகத்தின் உரிமையாளரும் ஆசிரியருமாகிய திரு.கரனேர் அவர்களின் பரணம், நோய் காரணமாக இறந்த அன்னாருக்கு எம் அஞ்சலிகள் உரித்தாகட்டும். அவர் தம் குடும்பத்தினருக்கும், உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் அமரர் ரனேஷ் ஒரு மாணவனாகவும், இலக்கிய நண்பனாகவும் எம்முடன் வாழ்ந்திருந்தார். கலாநிதி நஇரவீந்திரன் மூலம் எமக்கு அறிமுகம் ஆகிய அந்நாளை நாமும் நினைந்து நவிக்கிறோம். இந்தப் வெது மலரின் ஆக்கத்தில் எம்மோடு சேர்ந்திருந்த அன்னாருக்கு இப் 10வது இதழைக் காணிக்கையாக்குகின்றோம்.
35.12.2009 - ஆசிரியர்கள்.

பாருதம் 1 - 2003 சமூக கட்வி கார அங்கிய சங்சிாக
அஞ்சலிக் கட்டுரை வட்டத்தின் பொருளாளர் அமரர் சுரனேஷ் நினைவாக.
га
முயற்சி உள்ளவர்க்கு ஒரு முன்னுதாரண புருஷர் அமரர் க.ரனேவுச்
கலாநிதி கந்தையா ரீகணேசன் - தலைவர, ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம்
'முயற்சி உள்ளவனுக்கு முன்னால் உலகம் பரந்து கிடக்கிறது. எங்கிருந்தும் தொடங்கலாம். குறிக்கோள்தான் முக்கியமானது. இலக்கு உள்ளவன் ஆரம்பிப்பான் முடிப்பான்’
மேற்கொண்ட தொடரை அமரர் கனகசபாபதி ரனேஷ் தனது மல்ரிவிஷன் அச்சுக்கலையகத்தின் முகட்பில் காட்சிக்கு வைத்திருந்தார். ஆமாம் இது அவருக்கு பொருத்தமான வசனங்கள் தான். ஓர் ஆசிரிய மாணவனாக வ"தேசிய கல்வியியற்கல்லூரியில் தனது தொழிற் கல்வியைத் தொடங்கிய அமரர ரனேஷ் விஞ்ஞான படிப்பித்தலுக்காக பயிற்சித் தாள்களை அச்சிட்டு வழங்க முன் வந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. அதற்காக ஒன்லைன் அச்சுக்கலையகத்தில் கேள்வித்தாள்களுடன் நின்றது ஒரு காட்சி.
இடையில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் அங்கத்துவராக எழுத்தாளரும், விரிவுரையாளருமாகிய கலாநிதி, நடேஷன் ரவீந்திரன் வழிகாட்டலில் எம்முடன் இணைந்தார். எமது வட்டத்தின் மாதாந்தக் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்வதிலும், அதற்கான கட்டுரைகளை அச்சுருவாக மற்றுவதிலும் எமக்கு ஒத்துழைப்பு தந்தார.
ஒரு கட்டத்தில் தானே ஒரு கணினியை வாங்கிப் பின்னர் ஒர அச்சியந்திரம் வாங்கி, தொடர்ந்து அதனை ஓர் அச்சுக்கலையகம் ஆக்கி அத்துடன் தனது சக உதரங்களைப் பினைத்து கணினிக் கலையில் மெல்ல மெல்ல பாண்டித்தியம் ஆகி மஸ்ரிவிஷன் அச்சுக்கலையகத்தை உருவாக்கினார்.
அதனை ஒரு பெரும் விருட்சமாக உருவாக்கும் கனவில் தனது மைத்துனர்களையும் இணைத்து கணினி அச்சுக்கோர்வையாளரயளையம் மற்றும் புத்தகம்
-3-

Page 4
ാസ്ത്രമh 10 - 2009, 8്യാb, ബി, ബബ് ജിബ്ളിu മിക
கட்டும் கலையில் இளைஞர்களையும் பயிற்றுவித்து பெரும் செயற்பாடு ஒன்றை முன்னிறுத்தினார். தொடர்ந்து போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான பணியில் தன்னையும் ஈடுபடுத்தி அப்பணியில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தனது அச்சுக்கலையினூடாக நிதானமான செலவில் அச்சுப் பணிகளைச் செய்து கொடுத்தார்.
வவுனியா கலைஇலக்கிய நண்பர்கள் வட்டத்தின் வெளியீடாக வெளிவந்த எனது "நிதர்ஷனத்தின் புத்திரர்கள்’ எனும் நூல் 2002இல் மல்ரிவிஷனின் முதலாவது பதிப்பாக வெளிவந்தது. அது மத்திய மாகாண இலக்கிய விருதுகளையும் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. எமது வட்டத்தின் பல வெளியீடுகளை அவர் வெளியிட்டதோடு தனது சொந்த வெளியீட்டு நிறுவனமான ‘விஞ்சு’ பதிப்பகத்தின் ஊடாகவும் பல நூல்களை வெளியிட முன் வந்தார். எமது வட்டத்தின் பருவ இதழான ‘மாருதம் மலரின் ஒன்பது இதழ்களையும் தொடர்ந்து வெளியிட்டு சாதனை புரிந்தது அவரது நிறுவனம்.
பத்தாவது இதழும் அவர் கைவண்ணத்தில் டிசெம்பர் மாதம் வெளிவர இருந்தது. அவரது மறைவால் இதன் வெளியீடு தாமதப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய விரும்புகிறோம். எமது வட்டத்தின் பொருளாளராக இருந்து எமது நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதோடு ஒரு புலமை சார் விமர்சகர் ஆகவும் கலைப் பார்வையுடன் கூடிய ரசிகராகவும் தனது கருத்துக்களைக் கூறி எமக்கும் ஒரு பின் ஊட்டலை வழங்கி வநதாா.
ஓர் ஆசிரியனாக, தனது சிறப்பான பணியைப் பாடசாலைகளில் மேற் கொண்டு அப்பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கும் அவர் உதவி வந்ததை அப்பாடசாலைகள் அறியும். தொடர்ந்து கல்வி மாணிப் பட்டத்தையும் நிர்வாக ரீதியில் அதிபர் தரத்தையும் எட்டிப் பிடித்த எங்கள் மாணவன் ரணேஷ் இவ்வளவும் போதும் என்று எம்மை விட்டு நீங்கியது காலத்தின் செயல் தானோ! என்றென்றும் சிரித்த முகம்! எப்போதும் செயல்! என்றும் படிப்பு என்று யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் ஆங்கில விரிவாக்கத் தராதரப் பத்திர பயிற்சி நெறியிலும் தன்னை ஈடுபடுத்தி சமகால ஆசிரியர்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தார். அவர் இந்த இளவயதில் எம்மை விட்டு நீங்கினாலும் அவரின் இந்த செயற்பாடு என்றும் முயற்சி உள்ளவர்களுக்கு ஓர் ஊக்கம் அளிக்கும் தன்மை கொண்டது என்பதில் ஐயம் இல்லை.
25.12.2009 நன்றி அமரர் கரணேஷ் நினைவுமலர் உன்அடையாளம் தொலையவில்லை

மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திரு மொழி
கை.தவலதா
தமிழே தளராதே தலையை குனியாதே தரணியில் நீ தனியிடம் பிடித்திட்டாய் தந்திரோபாயிகளின் தாகத்திற்கு தண்ணீராய் மாறிடாதே தட்டி வீழ்த்தியே உனை தடம்புரள வைத்திடுவர் தளராத மனதுடனே தலைதனை நிமிர்த்திடு
தானங்கள் பல உண்டு தாராள மனமுண்டு தானாக வந்து தமிழே தாரையாய் ஊற்றிடுவாய் எமக்கு தாலாட்டுப் பாடும் தாய்மார் முதல் தானைத் தலைவர் வரை தாமாக தமிழை உச்சரித்திடுவர் தாங்கிடும் சக்திகொண்டு தானாய் நிமிர்ந்திடுவாய்
தித்திப்பான உன் இனிமை திடம்பட வைக்குதெம்மை தினம் தினம் உனைப் பேசி எம் திறமைகளை வளர்த்திடுவோம் திருப்பங்கள் இருப்பினும் திமிருடன் உயர்ந்திடுவோம் திட்டித் தீர்ப்போரும் திருந்திப் பேசிடுவர் திணறிப் போனோரும் எம் திரு மொழியைப் பேசிடுவர்

Page 5
மாருதம் 10 . 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தலை விதி
-நவயுகா குகராஜா
மழை இப்பொழுது நம்மை நனைக்கவே யோசிக்கின்றது நிலா நம் முற்றத்தை மட்டும் தொடுவதேயில்லை. வசந்தம் நிரந்தர விடுமுறை எடுத்துக் கொண்டது. இருந்தும் நாம் சுவாசிக்கின்றோம் நம் உடல் நீங்கி - உயிர் போகின்ற வரை!
நாம் பட்ட பாடு நாய் பட்டிருக்காது காடு நம் வீடானது நம் வீடு காடானது இரண்டிலும் வாழ்ந்திருந்தோம் இரைதேடி அலைந்திருந்தோம்
படுக்கப் பாயில்லை உடுக்க உடையில்லை விலங்குக்கும் மனிதனுக்கும் சமத்துவம் பிழையில்லை
விலங்கியல் கற்றுக்கொண்டோம் பொருளியல் புரிந்து கொண்டோம் துப்பாக்கி முழக்கத்திலே
சங்கீதமும் கற்றுக் கொண்டோம்.
கண்முன்னே மரணம் கண்டோம் பட்டினியில் பேச்சிழந்தோம் செழித்த நம்மண்ணில் செல்வீச்சில் அங்கமிழந்தோம் இருந்தும், இன்றும் சுவாசிக்கின்றோம் - நம் உடல் நீங்கி - உயிர் போகின்றவரை!
- 6 -

.gt( 10 . 2009 (, (ഖി, മണ്ണ ജൂബക്ഷu ീതമ
و"جننجوجيم مجمع 8يميريين
முற்றத்து முல்லிகைக்ள்
- ந.பார்த்திபன் - விரிவுரையாளர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி -
அண்மையில் மூத்த எழுத்தாளர் ஒருவர் “இன்னமும் பாரதி, பாரதிதாசன், கல்கி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி. என்று தமிழகத்துக் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் புரட்டிப்புரட்டி எழுதி அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைப்பதை விடுத்து எமது நாட்டுக் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் என்ன? சற்று ஆத்திரத்துடன் குறிப்பிட்டார். இன்னுமொருவர் புத்தகக் கடைகளில் இன்னமும் தமிழ்நாட்டு நாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் கவிதை நூல்களும் கட்டுரைத் தொகுப்புகளும் தான் அதிகம் விற்பனையாகின்றன என்றும், நூலகங்களுக்கோ, பாடசாலைகளுக்கோ புத்தகங்களைக் கொள்வனவு செய்பவர்கள் ஈழத்து நூல்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள் என்றும் ஆதங்கப்பட்டார். மேலும் பட்டப்படிப்புகளுக்கும், கல்விமாணிப் படிப்புகளுக்கும் பாடப்பகுதிகளாக தமிழக எழுத்தாளர்களையும் அவள்தம் படைப்புகளையும் தேர்ந்தெடுத்துப் போடுவதும் இன்றும் கூடத் தொடர்கின்றது. பல்கலைக் கழகங்களில் மட்டும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவோர் ஈழத்துப் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் ஆய்வுப் பொருளாக கொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்தியமை கொஞ்சம் ஆறுதலைத் தந்தாலும் தமிழகத்தைத் தூக்கிப் பிடிக்கும் மனப்பாங்கு எம்மவர்கள் மத்தியில் அதிகம் இருப்பதாவே தோன்றுகின்றது.
இந்நிலையில் எம்மவர்கள் சளைத்தவர்கள.? எம்மவர்களது பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட முடியுமா? இவர்களை நாங்களே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற ரீதியில் கொண்டாடா விட்டால். மாறாக தமிழகத்து எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் நாங்கள் போற்றுமளவுக்கு எங்களது எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் அவர்கள் போற்றுகின்றார்களா? போன்ற வினாக்கள் எங்களுள் பலருக்கு ஏன் எழவில்லை என்ற வினாவே பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. எங்களுள் சிலருக்கு எழுந்த இந்த வினா தொடர்பாகச் சிந்தித்த போது எங்களவர்களும் நிறையச் சாதித்துள்ளமையும் இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் தடம் பதித்தவர்கள் சிலரது ஆற்றல்கள், ஆளுமைகள், தனித்துவங்கள், முன்மாதிரிகள் போன்ற விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென விரும்புகின்றேன்.
தமிழுக்கு உரைநடை வகுத்து அச்சியந்திரப் பாவனையை தமிழ்மொழிக்குப் பிரயோகித்து, வசன நடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்பட்ட ஆறுமுகநாவலர் காலத்தால் முற்பட்ட கல்விமான், சமயப் புரட்சியாளர் என்பது யாவரும் அறிந்ததே. ஆயினும் இவரது ஆற்றல், ஆளுமை, இலக்கியப் புலமை, தமிழ்த்தொண்டு என்பன உரிய மகத்துவத்துடன் தமிழகத்தில் போற்றப்படுகின்றதா? என்பது சிந்திக்க வேண்டிய
-7-

Page 6
மாருதம் 10 . 2009, சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஒன்று. நல்லை நகள் ஆறுமுக நாவலர் இல்லையேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே? என்று நாங்கள் உயர்வாக எண்ணுமளவிற்கு தமிழகம் எண்ணுகின்றதா? நாவலரின் சமகாலத்தவர்களுள் அவருக்கு நிகராக இருந்தவர்கள் தமிழுலகில் எங்கும் இருந்ததில்லை என்பது அவருடைய காலத்திருந்த தமிழ் அறிஞர்கள், அபிமானிகள் பலரது கருத்தாக இருந்தது என்று பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
கிறிஸ்தவ மத போதகர்கள் சமூக சேவைகள் பலவற்றை முன்னின்று நடத்தியதால் மக்களிடம் குறிப்பாக வறிய மக்களிடம் சுலபமாகச் செல்வாக்குப் பெற்று மதமாற்றம் செய்தனர். கிறிஸ்தவர் அச்சுக் கூடங்களை நிறுவி மக்களுக்கு விளங்கத்தக்க எளிய உரை நடையில் துண்டுப் பிரசுரங்களையும் நூல்களையும் வெளியிட்டுத் தம் கருத்துக்களைப் பரப்பியதால் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்தச் சூழ்நிலையில் இந்துமதம் நிலைதடுமாறிய பொழுது தமிழ் நாட்டுப் பழமையின் பாதுகாவலராக ஆறுமுகநாவலர் தோன்றினார். ஆறுமுகநாவலர் பழமை காக்கப் போராடும் பொழுது புதிய போராட்ட முறைகளைக் கையாண்டார். கிறிஸ்தவ மத போதகரோடு நெருங்கிப் பழகியும் விவிலியத்தை கிறிஸ்தவர்களுக்குத் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தும் வாழ நேர்ந்த காலத்து, அவர்களின் செயல்முறைகளைக் கண்டு கொதித்தெழுந்த உணர்ச்சியால், ஆறுமுகநாவலர் சைவப்பணி ஆற்றிவந்த முறைகள் புதியன. முள்ளை முள்ளல் களைவது போல் கிறிஸ்தவர்கள் கையாண்ட முறைகளைத் தாமும் கையாண்டே கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைத் தடுத்து சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்தார். சைவம் அழியக்கூடும் என்ற நிலை நீங்க முதல் போராளியாக களமிறங்கியவர் ஆறுமுகநாவலர். பல்லவர் கால பக்தி இலக்கியங்கள் பக்தி இயக்கமாக மாறியது போல் நாவலரது சைவ மறுமலர்ச்சிக்கு தமிழ் உரைநடை கைகொடுத்தது. சைவத்தைக் காக்க தமிழை ஆயுதமாகக் கொண்டு போராடிய நாவலர் தமிழுலகத்துக்கு முன்மாதிரியானவர். இந்தப் பெருமைக்குரிய எங்கள் முற்றத்து மல்லிகை எங்கள் நாட்டவர் என்பது எமக்குப் பெருமையும் மகிழ்ச்சியுமே. ஆயினும் தமிழகத்தோர் தமிழ் இலக்கிய, சமய வரலாறு எழுதுபவர்களுக்கு இவை தோற்றவில்லை. அவர்களது கருத்துக்களில் இவை ஆழமாகப் பதியப்படவுமில்லை.
சென்னைப் பல்கலைக்கழகத்து முதல் பட்டதாரி, புதுக்கோட்டை நீதிபதி, பிரித்தானிய அரசினால் இராவ் பகதுர் பட்டம் வழங்கப் பெற்றவர் என்ற பெருமைகளுக்கு உரியவர் என்பதால் அவர் தமது காலத்திலே பலராலும் “பெரிய மனிதர்’ என்று போற்றப்பட்டவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. செல்லுக்கும் சிதைவுக்கும் உள்ளாகி அழிந்து கொண்டிருந்த கலித்தொகை, வீரசோழியம், இலக்கண விளக்கம் முதலிய இலக்கண நூல்களையும் ஏடு தேடிப் பரிசோதித்து அச்சேற்றி வெளியிட்டவர். சிறந்த தமிழ் அறிஞர், கவிஞர், ஆய்வாளர் என்ற வகையில் தமிழிலக்கிய வரலாற்றில் சிறந்ததோர் இடத்தைப் பிடித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். உலகத் தமிழினமே மறவாது நினைவுகூரத் தக்கவர் என்றெல்லாம் நாம் கூறினாலும் தமிழகம் இவரை முறையாகப் போற்றுகின்றதா? உரிய மேன்மையைக் கொடுத்து கெளரவிக்கின்றதா?

ഥസ്ത്രb 10 . 2009 (, (ബ്, ടിബ ബി ടിങ്ങ്
“போட்டி, பொறாமை, பிறநாட்டவர் என்ற காழ்ப்புணர்வு என்பவற்றால், தமிழ் நாட்டவர், சிறப்பாகத் தமிழறிஞர்கள் இவரின் பெருமைகளையும் ஆற்றல்களையும் மறைக்க முற்பட்டமைக்கு ஆங்காங்கே பல சான்றுகள் உள்ளன” என பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிடுகின்றார். 19ம் நூற்றாண்டின் பொதுவான தமிழிலக்கிய வரலாற்றினை ஆராயும் போது காலவாராய்ச்சி, சரித்திரவுணர்வு, ஒப்பியல் நோக்கு, திறனாயும் தன்மை என்பன உ.வே.சாமிநாதையரைக் காட்டிலும் சி.வை தாமோதரம்பிள்ளையிடம் மிகுந்திருந்ததையும், பதிப்புக்கலையில் இலங்கைதான் தென்னகத்திற்கு வழிகாட்டியாக இருந்ததென்பதையும் ஆய்வு ரீதியாகக் குறிப்பிட்ட போதும் தமிழகத்தார் சி.வையை இரண்டாவதாக்கி உ.வேயை முதலாவதாக்குவதையும் பார்க்கிறோம். “சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்திற்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு” என பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை குறைபட்டுக் குறிப்பிட்டது மனங்கொள்ளத்தக்கது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர், இலங்கை பல்கலைக்கழகத்திலும் முதல் தமிழ்ப் பேராசிரியர், பல்துறைபன்மொழி விற்பன்னர் சுவாமி விபுலாநந்தரின் செல்வாக்கு தமிழ் கூறும் உலகில் விதந்து போற்றுதற்குரியது. நவீன கவிதையின் பிதாமகன் மகாகவி பாரதியை தமிழகம் புறக்கணித்திருந்த, கவனத்தில் கொள்ளாத நிலையில் (கஞ்சாக் கவிஞன், மரணவீட்டில், உன்மேனியில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கைக்கு ஆட்களில்லையே என்று பதினைந்து பேரளவில் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்தில் கலங்கிய நிலையில்) உலகறியச் செய்த தீர்க்கதரிசி சுவாமி விபுலாநந்தர். கல்வி, கவிதை, நாடகம், அறிவியல் எனச் சகல துறைகளிலும் முத்திரை பதித்த முத்தமிழ் வித்தகள் சுவாமி விபுலாநந்தர். பயிற்றப்பட்ட ஆங்கி ஆசிரியர், தமிழ்ப் பண்டிதர், விஞ்ஞான டிப்ளோமாப் பட்டதாரி எனத் தன் கல்வி ஆளுமையை (இற்றைவரை இந்த மூன்று நிலைத் தகுதிகளையும் பெற்றவர் இல் எனத் துணிந்து கூறத்தக்கவர்) உலகறியச் செய்தவர் எங்கள் நாட்டவர் என்று பெருமை கொள்கிறோம். ஆயினும் தமிழகத்தார் இவ்வளவு தூரம் சுவாமி அவர்க நினைவு கூரவில்லை, கெளரவிக்கவில்லை என்றே கூறவேண்டும். நாங்கள் தமிழதித்து அறிஞர்களை, அவர் தம் ஆக்கங்களை அதன் சிறப்புக்களை போற்றுமளவுக்கு கள் எங்களவரை போற்றவில்லை என்பது உண்மை.
தனது இலக்கியம் பற்றிய சொல்லாடலுக்கு இலக்கிய ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தியவர் (ஒப்பியல் இலக்கியம், இரு மகாகவிகள், தமிழ் விரயுகப்பாடல்கள்) தமிழ்ப் புதினம், சிறுகதை பற்றியெல்லாம் உத்தி, நயம், அழகு என்று காணி நிலத்திற்குள்ளேயே உழுது கொண்டிருக்காமல், அவைகளை விரிவான சமூக வரலாற்றுப் பின்புலத்தில் விளக்கியதன் மூலம், வெறுமனே கதைதானே என்று அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்த கல்வியாளர்கள் மத்தியில் இப்புத்திலக்கியங்களுக்குச் சிறப்பான அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தவர். பாரதியின் இடதுசாரிச் சிந்தனைகளைத் தன் உரத்த சிந்தனைகளால் வெளிக்கொணர்ந்தவர். பல மேலை நாட்டு இலக்கியக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர் (இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலில் முதன் முதல் எழுதி அறிமுகம் செய்தவர்) தமிழின் இலக்கியத் திறனாய்வுப் போக்கை
- 9

Page 7
ITII II - tal Eginiu 교fu Pri
இக்காலத் திறனாய்வுப் போக்காக முதன் முதலில் இரசனை முறைத் திறனாய்வு, பன்டிதத் திறனாய்வு (பாண்டித்தியத் திறனாய்வு, புத்திலக்கியத் திறனாய்வு சமூகவியல் திறனாய்வு என நுட்பமாக வகுத்து விளக்கிக் காட்டியவர், ஆகிய பெருமைகளுக்கெல்லாம் உரியவள் பேராசிரியர் கலாநிதி ககைலாசபதி அவர்கள் மேலைத்தேய கோட்பாடுகளுடன் மட்டும் புதைந்து விடாமல் நம்மவருக்கும் ஒரு கோட்பாடு இருந்திருக்கலாம் என மூல பாடத்தைத் தேடுகின்ற ஆய்வு நோக்கினைக் கொண்டிருந்ததுடன் புதுமையென எண்ணி தாண்பும் கண்மூடித்தனமாகக் கருத்தில் கொள்ளாது புதுமையின் துனையினால் பழமையின் சிறப்பைக் கண்ட பாரதியை ஒத்தவரானதுடன் பாரதி வழி ஒன்று தோன்றியிருப்பது போல பேராசிரிய கைலாசபதி வழியும் ஒன்றுண்டு எனப் புகழப்பட்ட திறனாய்வாளர் கைலாசபதி, அவரை ஓரளவு தமிழக எழுத்தாளர்கள் போற்றினாலும் க.நா.ச.வையாபுரிப்பிள்ளை, வெங்கட்சாமிநாதன் அளவுக்கு தமிழகம் போற்றவில்லை என்பது பலரது ஆதங்கம் தமிழகத்தோரை மிகைப்படுத்திக் காட்டுவதால் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் முழுமையாக எடுத்து நோக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.
லயஞான குபேர பூபதி என்றால் தவில் விதி வான் (மேளம்) தட்சணாமூர்த்தியைத்தான் குறிக்கும், மிக நீண்ட காலமாக நாதஸ்வரத்துக்குத் துணையாகத்தான் தவில் இசைக்கப்பட்டு வந்தது. தட்சணாமூர்த்தி காலத்திற்கு பின்னர் தான் தனித் தவில் கச்சேரி என்பது பிரபல்யமானது. தனித்தவில் வாசித்து தமிழக தவில் வித்வான்களையே தடுமாற வைத்த மாமேதை தட்சணாமூர்த்தி. இவர் நாதஸ்வரம் இல்லாமலேயே தவிலை மட்டும் வாசித்து கச்சேரியை களைகட்டச் செய்தவள். தவில் கச்சேரியின் முலம் தனக்கெனப் பெரும் கீத்தியையும் தவிலுக்குச் சிறந்த பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். ஆயினும் தமிழகத்தோர் வலங்கை மான் சண்முகம், சேதுராமன் பொன்னுச்சாமி என்று பெயர்களை உச்சரிக்குமளவுக்கு தட்சணாமூர்த்தியின் பெயரை உச்சரிக்கவில்லை. அவரது சமகாலத்தில் உள்ளனர்கள் மனதார மதித்த போதும் இன்று அவரது புகழும் மறக்கப்பட்டு பெயரும் மறைக்கப்பட்டுப் போயுள்ளது. எம்மவர்கள் சிந்திக்க வேண்டும்,
கமராவால் கதை சொல்லும் கலையைச் சிறப்பாக வளர்த்து தனக்கென பல வாரிசுகளை உருவாக்கிபள்ளவர் பாலுமகேந்திராபட்டா), தற்போது மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படங்களை நெறியாள்கை செய்பவர்களும், ஒளிப்பதிவில் சாகசங்களை நிகழ்த்துவோரும் பாலுமகேந்திராவின் கைவண்ணத்தில் உருவானவர்களே. ஆயினும் பாலுமகேந்திர இலங்கையர் என்ற காரணத்தினால் சினிமாத்துறையில் உரிய கெளரவம் கொடுக்கப்படவில்லை என்பது வெளிப்படை உண்மை.
தனது குரல் வளத்தால் உலகையே கட்டிப்போடும் வல்லமை பெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீட் அவர் உருவாக்கிய பல புதுமையான நிகழ்ச்சிகளைப் பின்பற்றி ஏன் அதே மாதிரி நிகழ்ச்சிகளை தமிழக அறிவிப்பாளர்களும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் இருந்தும் கறிவேட்பிலையாகத்தான் இவரும் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்
- 1 D =

TYYT S Kaa0LS KuueHSL LLuTS KLMLLLLLL LLLLLLTMT LMMuMMMLKS
இபபடியே பட்டியற் படுத்திக்கொண்டு போனது இக்கட்டுரையின் நோக்கமல்ல. எம்வர்களின் சிறப்புக்களை, சாதனைகளை, தனித்துவங்களை தமிழகம் எவ்வளவு தூரம் கவனிப்பைக் கொடுக்கிறது? ஆயினும் நாங்கள் தமிழகத்தின் சகல விடயங்களையும் அதிக கவனிப்பைக் கொடுத்துப் பாக்கிறோம். எமது எழுத்துக்களை, எமது இலக்கிய கர்த்தாக்களை உரிய அங்கீகாரத்துடன் தமிழகம் நோக்காத நிலையில் அவர்களது ஆக்கங்களை, படைப்புக்களை விட்டால் எமக்கு வேறு கதியில்லை என்ற கண்முடித்தனமான மாயையில் 2 புல்வது பொருத்தமா? தரமானதைத் தெரிவு செய்கிறோம் என்ற கோதாவில் துதிபாடும் அளவுக்கு நாம் போவது சரியானதா?
எமது மட்டமான ரசிகத்தனம் சினிமாவையும், திரையிசைப் பாடல்களையும், சின்னத்திரைகளையும் (டெளி ராமா போன்ற நிகழ்ச்சிகள் பாய்ந்து மாய்ந்து பார்ப்பதையும் ரசிப்பதையும் தடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஆனால் தரமான உயர்வான இலக்கிய ரசிகத்தனம் கொண்டோராவது இதனை உணர்ந்து எம்மவரது ஆக்கங்களையும் எங்கள் இலக்கிய காத்தாக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்து நூல்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தைக் குறைத்து எங்கள் நாட்டவரது நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், மாற்றாந் தோட்டத்து மல்லிகை மண்க்கும். எம் முற்றத்து மiளிகைகளும் மனக்கும் என்பதை மனங்கொள்ள வேண்டும், தாய் நாடு என்று நாங்கள் போற்றுமளவுக்கு தாய் நாட்டினர் எங்களைப் போற்றவில்லை. அவர்கள் மாற்றாந் தாய் மனட்பங்கிலே தான் செயற்படுகிறாகள் என்பதை அண்மைக்கால அரசியல் போக்கிலேயும் அவதானித்த பின்னும் எங்களுக்குப் புத்தி வரவேண்டாமோ?
ടി.g, 三 ീ15: الله لا
இடம் பெயர்ந்தவர்களுக்கான வட்டத்தினர் சமூகப்பணிகள்
鹰
} =_~ "क""→→ اگلي
வவுனியா பிரதேச உதவிசெயலாளர் திரு.ஏ.சிறி அவர்களிடம் உணவுபொதிகளை வழங்குபர் தமிழ்மணி அகளங்கன் மற்றும் கலாநிதி கழிகனேசன் நன்றி தினக்குரல் 31.07.2009
-

Page 8
மாருதம் 10 - 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
எனை ஆளும் என் தேவதைக்கு
- தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா -
யுகங்களாய் வருத்தும்
ஒவ்வொரு நிமிடமும்
உன் அன்பினை தவிர
ஞாபகங்கள் ஏதுமில்லை!
வேலைத்தளத்தில் போராட்டங்கள்
ஆயிரம் தான் - எனினும்
இதயத்தின் அடித்தளத்தில் நியமர்ந்து
எனை உற்சாகப்படுத்துகிறாய்!
கூண்டிலிருந்து விடுபட்ட கிளியாய்
உனைக் காண மாலை வேளை
ஓடி வருகிறேன்.
காலைகளில் மட்டும் சிறகுடைந்த
குருவியாய் வாடி விடுகின்றேன்!
எனை ஏற்றவளே! எனக்கு ஏற்றவளே! பருவத் தவிப்பில் பரிதவித்த எனக்கு பக்குவமாய் விளக்கினாய் பலி சொல்லும் உலகம் பற்றி.
தடுமாற்றம் கண்ட என் இதயத்துக்கு தடம் மாறிடாத படி அறிவுரை தந்தாய்!
என் வாழ்க்கைப் பயணத்தை
விபத்தில் வீழ்த்திடாமல் சரியாக வழிநடத்தக் கூடிய சாரதி நீ தானம்மா!
என் மேல் காட்டும் உன் புனித நேசத்துக்கு.
என் ஆயுள் முழுக்க நான் உனக்கு மட்டுமே சொந்தமடி
சகியே!
- 2 -

மாருதம் 10 - 2009, சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
விடியலை நோக்கி ஒரு நீண்ட பயணம்
த.பிரதாபன் - உளவளத் துணையாளர்
ஒரு நாள் அமெரிக்காவில், மக்கள் பரபரப்பாகக் காணப்பட்டனர். அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்குக் காரணம். வர்த்தகத்தில் ஏற்பட்ட திடீர்ச் சரிவினால் பல பங்குதாரர்கள் பெருநஷ்டம் அடைந்தனர்.
இவ்வாறு நஷ்டம் அடைந்த பலருள் பில் - டபிள்யூ (Bil.W) என்பவரும் ஒருவராவர். இந்தச் சரிவினால் பில் - டபிள்யூ மிகவும் மனமுடைந்து போனார். தனது மனக் கவலையைப் போக்கிக் கொள்வதற்கு மதுவின் உதவியை நாடினார். இது மாதிரியான வேளைகளிலெல்லாம் இவர் உட்கொள்ளும் மதுவின் அளவும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
நண்பர்களுடன் சேர்ந்து மதுஅருந்துவதை வாடிக்கையாக்கினார். நாட்கள் செல்லச் செல்ல இவர் அருந்தும் மதுவின் அளவும் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு சில மாதங்களின் பின்னர், பங்குச்சந்தையின் நிலை சீரடைந்தது. ஆனபோதும் பில் - டபிள்யூவினால் மதுபாவனையை நிறுத்த முடியாதிருந்தது.
தினமும் மது அருந்த வேண்டும் போல், இவருக்கு மதுவின் மீது பிரியம் ஏற்பட்டிருந்தது. இவரால் மதுபாவனையை நிறுத்த முடியவில்லை. மது இல்லாத வாழ்க்கையை இவரால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. பில்-டபிள்யூவின் நிலையைக்கண்டு இவரது மனைவி மிகுந்த மனவேதனையடைந்தார்.
ஒரு நாள் இருவருமாகச் சேர்ந்து அமெரிக்காவிலே உள்ள மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றனர். அங்கு குடிநோய், மற்றும் போதைப் பொருட்பாவனை ஆகியவற்றிற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் வைத்தியர்களுள் மிகவும் புகழ்பெற்றவராகத் திகழ்ந்து வரும் Dr.வில்லியம் டி சிக்வொர்த் என்பவரைச் சந்தித்தனர்.
மதுபாவனை என்பது குணப்படுத்த முடியாத ஒருவித “நோய்”. இதனை மருத்துவ ரீதியாகமட்டும் குணப்படுத்த முடியாது என்பதை டாக்டர் சில்க் வொர்த் விளக்கிக் கூறினார்.
ஆனபோதும் இந்த நோயினை பூரணமாகக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்ன வெனில் “இந்த உலகில் ஒரு மகாசக்தி இருக்கிறது’ என்று நம்புவதுடன் அந்தச் சக்தியைச் சார்ந்து இருப்பார்களேயானால் இலகுவில் இக் குடிநோயில் இருந்து மீண்டுவிடலாம் எனக் கூறினார்.
- 13

Page 9
uാസ്ത്രh 10 . 2009, 6്യാ6,6tബി ഓൺ ീങ്ങളിധ ിക്കു
வைத்தியர் கூறிய ஆலோசனைகள் இவரது மனதில் மிக ஆழமாக பதிந்தன. இப் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்று தீவிர சிந்தனையில் மூழ்கினார். திடீர் என்று ஒரு நாள் இவரது மனதில் புதுமையான சிந்தனையொன்று உதயமானது.
ஒரு குடிநோயாளியை இன்னொரு குடிநோயாளியால்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமென்று உறுதிபட நம்பினார். ஆதலால் தன் மனதிலுள்ள அனைத்தையும் மனந்திறந்து இன்னொரு குடிநோயாளியிடம் கூறவேண்டும்போல் உணர்ந்தார். இவ்வாறு மனதிலுள்ள அனைத்தையும் கொட்டித் தீர்ப்பதன் மூலமாக தன் மனச்சுமைகள் முழுவதையும் இறக்கி வைத்துவிடலாமென்று உறுதிபட நம்பினார்.
தன் மனதில் தோன்றிய எண்ணத்தை Dr.சில்க்வொர்த்திடம் தெரிவித்தார். தன்னைப் போன்றதொரு இன்னொரு குடிநோயாளியைச் சந்திக்கும் வாய்ப்பை தனக்கு ஏற்பாடுசெய்து தரும்படி வேண்டிநின்றார்.
வைத்தியர் கூறிய ஆலோசனைகளின்படி அமெரிக்க “ஒகியா” மாநிலத்திலுள்ள அக்ரான் நகரத்து மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சைபெற்றுவந்த ஒரு குடிநோயாளியைச் சந்தித்து அவருடன் உரையாடினார்.
“என் பெயர் பில் - டபிள்யூ நான் ஒரு மோசமான குடிகாரன் நான் குடிபோதையில் பலருக்கு தீங்கிழைத்திருக்கிறேன். என் மனைவியை நான் கொடுமைப்படுத்தியிருக்கிறேன்’ என்று தன்னிடமுள்ள அனைத்துக் குறைகளையும் மற்றக்குடிநோயாளிக்கு மடை திறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்த்தார்.
இவரது பேச்சு அப் புதியவருக்கு விசித்திரமாக இருந்ததுடன் ஆச்சரியமாகவும் இருந்தது. திடீரென்று வந்த ஒருவர் வந்ததும் தன்னைப்பற்றிய பெருமைகளைப் பேசாது தன்னிடமுள்ள குறைகளை இவர் ஏன் என்னிடம் கூறவேண்டும்? எண்றெண்ணி மனக்குழப்பம் அடைந்தார்.
இருந்த போதும் பில்-டபிள்யூவின் பேச்சு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இவ்வாறாக இருவரும் பல தடவைகள் சந்தித்து தம்மிடமுள்ள குறை நிறைகளையும் தாம் மது போதையில் மற்றவருக்குச் செய்த தீமைகளைப் பற்றியும் மனந்திறந்து உரையாடினார்கள்.
இவ் உலகில் ஒரு “மகாசக்தி” இருக்கிறது. நாம் அதனைச் சார்ந்திருப்போமேயானால் குடி நோயிலிருந்து மீண்டுவிடலாம் என்று உறுதிபட நம்பினர்கள் இவர்கள் இருவரும் இணைந்து 1935 யூன் 10ம் திகதியில் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். இவ் அமைப்புக்கு 1939ம் ஆண்டளவில் அல்க்ஹ ஹோலிக்ஸ் அனானிமஸ் (AlcoholicSAnonimouse) என்று பெயர் சூட்டினார்கள்.
இதன் பயனாக இவர்கள் இருவரும் அன்றிலிருந்து இறக்கும்வரை “ஒரு
一l车一 N
N

மாருதம் 10 - 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சொட்டு”மதுவையேனும் நாடவில்லை. இந்த அமைப்பை சுருக்கமாக ஏ.ஏ(A.A) என்று பெயர் சூட்டி அழைக்கத் தொடங்கினார்கள். இவ் இயக்கத்தை பில்டபிள்யூ (Bil.W)வும், Dr.பொப் (Bob)ம் ஸ்தாபித்தவர்கள் ஆவார்கள். ஏ.ஏ இயக்கத்தின் மகாத்மாவாக Dr.வில்லியம்.டி.சில்க்வொர்த்தை கருதுகிறார்கள்.
இவர்கள் இருவரது அயராத முயற்சியினாலும், இவர்களுடன் இணைந்த மற்றைய குடி நோயாளிகளின் கடும் உழைப்பினாலும் உலகின் பல பாகங்களிலும் ஏ.ஏ. இயக்கமானது தன் கிளைகளைப் பரப்பி பெருவிருட்சமாக வளர்ந்துவருகிறது.
ஏ.ஏ இயக்கமானது அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, தென்அமெரிக்கா, தென்ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்று 141ற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவருவதாக ஏ.ஏ இயக்கத்தின் பிக்-புக்கில் (Big Book) குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் இயக்கத்தில் ஆண்களும் பெண்களுமாக பல இலட்சம் மக்கள் இணைந்து புத்துயிர் பெற்று வருகிறார்கள். ஆண்டுக்கு 7 சதவீதத்தினால் குடியிலிருந்து பலர் மீண்டும் வருவதாகவும் 15 சதவீதத்திற்கு மேல் பெண்கள் இணைந்திருப்பதாகவும் 1951ல் வெளிவந்த பிக் புக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“லாஸ்க்கார்’ என்னும் விருதினை 1951ல் ஏ.ஏ இயக்கத்திற்கு அமெரிக்க GuTgleg60T systdbdu spasib (The American Public Health Association) 6.jpsids கெளரவித்தது.
ஏ.ஏ இயக்கமானது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ் நாட்டிலும் இயங்கி வருகிறது. இவ் இயக்கமானது இலங்கைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு பம்பலப்பிட்டிய, கல்கிச, நுகேகொட, வத்தளை, றாகம, மாகோ போன்ற இடங்களிலும், மன்னார் பேசாலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலும் ஏ.ஏ.இயக்கம் இயங்கிவருவதாக அறியமுடிகிறது.
வவுனியாவிற்கு ஏ.ஏ இயக்கத்தினை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான MSF (H) 2003 யூன் 31ம் திகதி கொழும்பிலிருந்து அழைத்துவந்தது. MSF (H) நிறுவனமானது தனது சேவையை இடைநிறுத்திவிட்டு இலங்கையிலிருந்து செல்லும்போது 2004 மார்ச் 1ம் திகதியன்று “சேட்" (SHADE) உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனத்தை உருவாக்கி அதனுடன் ஏ.ஏ. இயக்கத்தை இணைத்துவிட்டுச் சென்றது.
வவுனியாவில் ஏ.ஏ இயக்கமானது பூந்தோட்டம் நலன்புரி நிலையங்களிலும், நெளுக்குளம் நலன்புரி நிலையத்திலும், தரணிக்குளம் மீள் குடியேற்றத்திட்டத்திலும், செட்டிகுளம் மெனிக் பாமிலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக
-15 -

Page 10
பாருதL 1 - 2003 சமூக கருவி கr) ாேக்கிய சஆசிாக
பணிபுரிந்துவருகின்றது.
தற்போது வவுனியா பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் ஏ.ஏ இயக்கத்தவர்களுக்கான மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது. அத்துடன் உளநல வைத்தியரின் ஆலோசனைகளும், சிகிச்சைகளும் இடம்பெற்றுவருகின்றன.
உலகளாவியரீதியில் ஏது இயக்கத்தில் கத்தோலிக்கர்கள், யூதரகள், இந்துக்கள், பெளத்தரகள், முஸ்லிம்கள் போன்ற அனைத்து மதத்தினரும் இணைந்து குடிநோயிலிருந்து மீண்டுவருகிறாள்கள்.
இவ் இயக்கமானது இனம், மொழி, மதம், சாதி, அரசியல், ஏற்றத்தாழ்வு போன்ற பாகுபாடின்றிய ஒரு சகோதரத்துவ அமைப்பாதும்,
ஏ.ஏ இயக்கத்தில் இணைவதற்கு எந்தவிதமான பணமும் அறவிடப்படமாட்டாது. "குடியை விடவேண்டும்" என்ற மனப்பூர்வமான விருப்பம் ஒன்றே போதுமானதாகும்.
தகவல்களை தந்துதவிய ஏ.ஏ.பாலனுக்கு நன்றிகள்)
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்'
ஈழத்து சஞர்சிகைகள்
க்
.::iiiiiiiiiiiii.
岔
 

MMLGOeKK HHH S S 0 000 KKLMS TMMuS TLMLML MKSYLTT MCMM MM
அவர்கள் வரவை நோக்கி.
- பூநகர் பொன். தில்லைநாதன் -
பேரும் புகழோடும் வாழ்ந்து வந்த சதாசிவம் உடையார் வீட்டில் வந்த சோகசம்பவம் நடைபெற்று இன்று ஆறு நாட்கள் நகர்ந்து விட்டன. நேற்று ஐந்தாம் நாள் செலவு எனப்படும் கிரியைகள் தடல் புடலாக நடைபெற்று முடிந்து விட்டது. எடுபிடி ஆட்கள், உறவினர்கள் என ஒன்று சேர்ந்து உடையாரின் மனைவியின் படத்தை வைத்து அதன் முன்னே பல தரப்பட்ட உணவுப்பண்டங்கள், பழவகைகள், இறைச்சி, மீன்வகைகள் எனப் படைத்து செக்கலுக்கு முன் பந்தம் பிடித்தபடி சகல உணவுவகைகளையும் கடகத்தில் படைத்து ஒரு குழுவினர் சுமந்து சென்று தகனம் நடைபெற்ற சுடலையில் படைத்து தீபம் காட்டி அக்குழுவின திரும்பி வந்தனர்.
வந்திருந்த எல்லோரும் தமக்கு பிடித்தமான உணவுகளை வயிறு புடைக்க உண்டகளையில் முன்னேடோடப்பட்டிருந்த தகரபந்தலில் ஒரு சில படுத்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த எடுபிடிகளுக்கு உடையாரின் உபயம் கிடைத்ததால் அவர்கள் எந்தவித கவலையும் அற்றவர்களாக குடித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தார்கள் நேரம் நடுச்சாமம் என்பதை சாமக் கோழி கூவி ஊருக்கு அறிவிப்பது போல் இருந்தது. இந்த அகால நேரம் வரை சாமனைக் கட்டிலில் படுத்திருந்த சதாசிவம் உடையார் உள்ளம் அமைதி இழந்தவராய் மனம் குமுறித் தவித்துக் கொண்டிருந்தார் அவரின் உள்ளக்குமுறலை யாரும் பகிர்ந்து கொள்வதாக வோ. அவருக்கு ஆறுதல் சுறவோ இல்லாத நிலைமைதான் அங்கு இருந்தது. "நான் தவறு செய்திட்டன். நான் தவறு செய்திட்டன்' அவர் வாய் முணு முனுத்தது. அருகே இருந்த சங்கானை எடுத்து நிரம்ப புகையிலையை அடைந்தார். தீப் பெட்டியை தட்டிப் பற்றவைத்த படி புகையை இழுத்து இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தார்.
இன்று ஆறாவது நாள் இதுவரையும் ஐந்து நாள்களாக உறவுகளென்றும், அயலவர்கள் என்றும் அங்கு தங்கியிருந்தவர்கள் மெல்ல, மெல்ல உடையார் வீட்டில் இருந்து பயனம் சொல்லி தங்கள் தங்கள் இருப்பிடம் நோக்கி நகர்ந்து கொண்; ருந்தன. உடையார் விட்டில் பணிவிடைசெய்யும் சங்கரனும், பண்னை மாடுகளை மேய்த்து பட்டி அடைக்கும் வேலனும் தான் தஞ்சம் அடிக்ா; அவள் தங்கை முறையான சரசுவும் வந்து போவாள் நல்ல உணவு வகைகள், ஆசை பண்டங்கள் செய்தால் அப்பண்டங்கள் உடையார் வாய்க்கும் சுவை ஊட்டும்.
OOmm TTLT S ST TTTTT SLLL T0T SLLL LL0Y LLLS G LLLLLLS L LOTLOMaS பார்த்த நாலாவது பரம்பரையாக உடையார் வேலையைச் செய்து அரச சேவையில் இருந்து பணியை நிறைவு செய்து ஓய்வூதியம் பெற்று வாழ்பவர் தான் சதாசிவம் உடையார், பரம்பரை முதிரங்களாக நெர்காணிகள், மாட்டுபட்டி, எருமை மாட்டுப்பாட்டி,
-7 -

Page 11
umgaĝib 10 - 2009, aseps, asistino, aaB5o S6oéafu arafe Das
என ஏராளம் சொத்துக்கள். இவற்றை கவனித்து பராமரிக்க எடுபிடி ஆட்கள். செல்வச் சிறப்புடன் வாழ்ந்த இவருக்கு மூன்று ஆண்பிள்ளைகள் பரம்பரையாக கல்வியில் நாட்டம் கொண்ட குடும்பம் என்றவகையில் யாழ்ப்பாணத்தில் தம்பிள்ளைகளை நல்ல கல்வியைப் பெற . ஒழுங்கு செய்ததனால் அவர்கள் உயர் வகுப்புவரை கல்வி கற்றிருந்தார்கள்.
பாடசாலை விடுமுறைக் காலம் என்றால் யாழ் நகரப்பாடசாலை ஒன்றின் மாணவர் கூட்டம் உடையார் பிள்ளைகளின் ஒத்தார் குழுக்கள் உடையார் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள் உடையாரும் மனைவி செல்லம்மாவும் தங்கள் பிள்ளைகளைப் போல உபசரிப்பதும், வரவேற்பதும் அம்மாணவர்களுக்கு உடையார் குடும்பத்தின்மீது மிகுந்த பற்றையும் பிணைப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
விடுமுறை காலத்தின் போது வரும் மாணவர்களுக்கு வழங்கி உபசரிப்பதற்காக பனை ஓலையால் இழைக்கப்பட்ட உமல்களில் புழுக்கொடியல் தோட்டுப்புழுக்கொடியல், பாணிப்பனாட்டு என சேர்த்து பாதுகாப்பாக வைத்திருப்பாள் செல்லம்மா. விருந்தோம்பும் பண்பு என்பது அவளது பரம்பரையாக வந்த சிறப்பியல்பாகும்.
பூநகள் மொட்டக்கறுப்பன் அரிசிப்பிட்டின் சுவையையும் பூநகரின் ஒடியல் கூளின் சுவையையும் அறிந்த நண்பர்கள் இக்கிராமத்துக்கு வர நான் முந்தி நீ முந்தி என்று நிற்பதும். அவர்களைச் சமாதானப்படுத்தி. அடுத்த விடுமுறைக்கு நீங்கள் எனச் சொல்லி சமாளிப்பதிலே உடையாரின் பிள்ளைகளுக்கு பெரும் சங்கடமும் ஏற்பட்டுவிடும்.
அந்த வருடம் டிசம்பர் விடுமுறைக்கு பூநகருக்கு வந்து அக்கிராமத்தின் வனப்பை கண்டு கழித்து சுவையான உணவுகளை உண்ணவும் பெரு விரும்பம் கொண்ட சக மாணவர்கள் உடையாரின் பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றிருந்தார்கள் நாள்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அன்று காலை பல இடங்களில் பாதைத் தடைகள் பஸ்களில் சோதனை சுற்றிவளைப்பு விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்று பல்வேறு பட்ட இடங்களிலும் வேட்டுச்சத்தங்கள். இன விடுதலைக்காக போராட்டம் நடத்திய இரு குழுக்களிடையே மோதல் மக்கள் எந்த விடயமும், அறியாதவர்களாக தமது வாய்க்கு வந்தபடி போராளிக்குழுக்களை சாதகமாகவும் பாதகமாகவும் திட்டித் தீர்த்தார்கள் “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு வேட்டைதானே’ தமிழர் தலைவிதியை எண்ணி தலையை உடைத்தார்கள் தமிழ் புத்திஜீவிகள்.
யாழ்நகரின் நிலை அறிந்த சதாசிவம் உடையாரும் மனைவியும் நேராத கோயில் எல்லாம் நேர்த்தி வைத்தார்கள் செல்லித்தீவு அம்மனுக்கு ஒரு நேர்த்தி திகிரி விநாயகருக்கு, சோபால பிட்டிசித்தி விநாயகருக்கு எல்லாம் வெள்ளைச் சீலை எடுத்து கீலமாகக் கிழித்து மஞ்சள் தூள் தண்ணிபூசி சில்லறை நாணயங்களைக் கட்டி முடிச்சுப்போட்டு வேட்யிலைப்பத்தியும் சேர்ந்த வளையில் கட்டி மன்றாடிக் கொண்டிருந்தாள். GeF6)6OLDLDIT
- 18

uDribb 10 - 2009, spes, astos, assu 26áthau arfbané
“நான் ஒருக்கா பட்டணம் போய் பார்த்துவரலாமெண்டால் சங்குப்பிட்டி கேரதீவு பாதையோட்டம் நிப்பாட்டியாச்சுதாம்’ எண்டு சொல்லி பெருமூச்சு விட்டார் உடையார் அன்று அவர்கள் வீட்டில் அடுப்பு வேகவில்லை. பின்வளவுப்பக்கம் போய் கொப்பறாத் தேங்காய் ஒண்டை உடைச்சுக் கொண்டுவந்து கை நிறைய புழுக்கொடியலையும் எடுத்து அசை போட்ட வண்ணம் இருந்த கதிரனும், வேலனும் ஐயா நீங்கள் சாமி தெய்வத்துக்கு ஒரு குறையும் விடேல்லை. அம்மனுக்கு பங்குனித்திங்கள் குளிர்த்தியையும் சிறப்பாய்த்தானே செய்தனிங்கள் உங்கடை பிள்ளையஞக்கு, தம்பியவைக்கு ஒரு கரைச்சலும் விட செல்லி அம்மன் வர மாட்டா அவையள் போடிங்கிலைதானே கவனமாய் இருப்பினம் கவலைப்படாதையுங்கோ என ஆறுதல் கூறினான்.
அன்றைய நாள் யாழ் நகரம் அதிர்ந்து கொண்டிருந்தது பல இடங்களில் சந்திகளில் ரயர்கள் எரிக்கப்படுவதாகவும் சில இடங்களில் இளைஞர்களின் பிணங்கள் எரிவதாகவும் அக்கல்லூரியின் காவலாளி மூலம் செய்தியை அறிந்து கொண்ட மூவரும் இரவோடு இரவாக பாடசாலை விடுதியை விட்டு வெளியேறி ஆள்அரவ மற்ற கண்டிவீதியில் நாவற்குளியை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தனர்.
அந்த நள்ளிரவு நேரத்தில் நாவற்குளிச் சந்தியில் அனல் விட்டு எரிந்த தீ மெல்ல மெல்ல அணைந்து கொண்டிருந்தது. அரைகுறையாக எரிந்த உடலங்களை அந்த வெம்தணலில் கண்டதும் அவர்கள் குருதி உறைவது போல் இருந்தது. இளையவனான செந்தில் மூத்த அண்ணனைக் கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழத்தொடங்கினான் சிறியவனான அவனை ஒருவாறு சமாளித்துக் கொண்டு விடிவதற்குள் யாருடைய கண்ணிலும் பட்டுவிடாவண்ணம் கேரதீவு கரையை அண்மித்து விடவேண்டும் என்ற எண்ணத்தோடு பசி அலுப்பை மறந்து வேகமாக நடந்து கொண்டிருந்தனர்.
அறுகு வெளி, மறவன் புலவு, தனங்களப்பு என அச்சிற்றுார்களின் பரந்து விரிந்து பச்சைப்பசேலனக் காட்சியளித்த அவ்வயல்வெளிகளினுடே நீண்டு செல்லும் அவ்வீதியிலே, வேகமாக மூவரும் நடந்து கொண்டிருந்தனர். மாரிகால மழைக்குளிரும், கடற்காற்றும் அவர்கள் உடலில் மோதி மோதி பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் நிலையில் தம் ஊரைச்சென்று அடைந்து விடவேண்டு மென்ற ஒரே நோக்கில் தாம் என்றுமே பட்டறியாத இத்துன்பக் கடலில் மூழ்கிய படி வயல் வெளிகளைத்தாண்டிக்கடல் நடுவே ஊடறத்துச் செல்லும் பாதையிலே நடந்து கொண்டிருக்கும் அவர்கள் கண்ணுக்கு கேரதீவுத்துறை நன்கு தெரிந்தது. வேகமாக பொங்கி மேலெழுந்து அடிக்கும் அலைகள் அவர்கள் மீது உப்பு நீரை வாரி இறைக்கிறது அலையோடு சேர்ந்து தள்ளும் கயல்மீன்கள் வீதியில் விழுந்து துடிதுடித்து வீதியை தாண்டி மறுபக்கம் போய்க்கடலில் விழும் காட்சியையும், தாமதித்து நின்று இரசிக்க முடியாதவாறு விரைந்து சென்று கிழக்கு வெளிக்கும் நேரம் கேரதீவுத் துறையை அடைந்தனர்.
அத்துறை வெறிச் சோடிக் கிடந்தது வள்ள ஒட்டுநர்களோ அத்துறையில் கடமைபுரியும் முகாமையாளர், ஊழியர்கள் எவரையும் காணமுடியவில்லை ஒருகணம்
-19

Page 12
ാസ്ത്രh 10 - 2009 (, 6്, ഓങ്ങ് (ിധ {6
சிந்தித்த மூத்தவன் சந்திரன் கரையிலே கட்டப்பட்டிருந்த சிறிய தோணியின் கட்டை அவிழ்த்து விடுவித்துக்கொண்டு தன் சகோதரர் இருவரையும் ஏற்றிக்கொண்டு கண்ணுக்கு தெரியும் சங்குப்பிட்டித்துறையை நோக்கி தோணியில் இருந்த தண்டை எடுத்து வலித்துக் கொண்டிருந்தான். கிழக்கு வானம் வெழுத்து சூரிய பகவான் வெளிக்கிளம்பப் போவதை அடிவானம் குறிகாட்டி நின்றது.
முற்றிலும் எதிர்பார்காத ஒரு விடயம் அவர்களுக்கு மரணபயத்தை ஏற்படுத்தி அவர்களை அல்லோலகல்லோலப்பட வைத்தது அவர்கள் பயணம் செய்த தோணி கரையைத் தட்டும் நேரம் வானத்தை நோக்கி பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்ட அத்துறையில் பதிங்கிஇருந்த இராணுவசிப்பாய்கள் இவர்களை நோக்கி ஓடிவந்தார்கள் மூவரையும் இறக்கி விசாரணையில் ஈடுபட்டனர். துருவித் துருவி கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
மூத்தவன் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவனாதலால் அங்கு பொறுப்பான அதிகாரிக்கு தன் நிலைமையை விளங்கினான் யாழ்ப்பாண நிலைமையை இவர்கள் மூலம் கேட்டறிந்த பொறுப்பதிகாரி நாம் ரோந்து போகும் போது தம்மோடு ஆங்கில மொழியில் உரையாடும் சதாசிவம் உடையாரில் நல்லமதிப்பு வைத்திருந்தான் உடனடியாக செம்பன் குன்று இராணுவமுகாமுக்கு செல்லவிருந்த ஜீப்வண்டியில் அவர்களை ஏற்றி பத்திரமாக அவர்கள் வீட்டில் சேர்க்கும்படி கட்டளை இட்டான்.
அதிகாலை எழுந்து பெருங்குழப்பத்தில் இருந்த உடையார் குடும்பத்துக்கு தம்பிள்ளைகளின் வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உண்டயாரின் பிள்ளைகள் வந்து விட்டார்கள் என்ற செய்தி காற்றோடு காற்றாக ஊரெல்லாம் பரவியதுபோல ஊர் மக்கள் நலம் விசாரித்துச் சென்றனர். தம்பிள்ளைகள் பட்ட அவலங்களையும் ஊரின் நிலைமையையிட்டும் பெருங்கவலை கொண்டார் உடையார்.
நாளுக்கு நாள் உடையாருக்கும் மனைவிக்கும் கவலை அதிகரித்துக் கொண்டே சென்றது. விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியும் கிராமங்கள் தோறும் கருத்தரங்குகள் நடைபெறுவதும். இளைஞர்கள் இணைவதும் நடைபெற்றுக்கொண்டிருக்க அதே நேரத்தில் இராணுவ ரோந்துகளும் சுற்றிவளைப்புக்கள் கைதுகள் நிகழத் தொடங்கியது.
உடையாரும் மனைவியும் இணைந்து தீர்க்கமான முடிவுக்கு வந்தவர்களாக தம் இளையவன் தமக்குத்துணையாகவும் தம் சொத்துகளை பராமரிக்கவும் வைத்துக் கொண்டு மூத்தவர்கள் இருவரையும் மேற்குலக நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
சகோதரர் இருவரும் தம் தாய் தந்தையரைப் பிரிந்து செல்லப் பின் வாங்கிய போதும் பெற்ரோரின் தட்டிக்கழிக்க முடியாத வற்புறுத்தலால் அவர்கள் பயணத்தை மேற்கொண்டு நோர்வே நாட்டிலும், கனடாவிலும் அகதிகளாக தஞ்சமடைந்து தமது அறிவாற்றலால் சொற்ப நாள்களில் அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டனர்.
ー20ー 。

மாருதம் 10 . 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
விடுதலைப் போராட்டம் துரித வளர்ச்சி அடைந்து இராணுவத்துடனான மோதல்கள் தினம் தினம் இடம் பெற்று பெரும் பிரதேசத்தை போராளிகள் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மக்களின் ஆதரவு பெற்று பல்வேறு கட்டுமானப் பணிகள் கொண்டு துரித வளர்ச்சி கண்டது.
பல நாடுகளின் முயற்சி யோடு மோதல் நிறுத்தம் ஏற்பட்டு சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகின பல ஆண்டுகளுக்குபின் உடையாரின் மூத்தவன் தம் பிறந்த நாட்டைத் தரிசித்தான் தன் உறவு முறை மச்சாள் சரசுவின் மகளுக்கும் இவனுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
குதுகலத்துடன் கழிந்த சில நாட்கள். தன்பயணத்துக்கான நடவடிக்கையில் ஈடுபட்ட மூத்தவனிடம் “சின்னவன் இஞ்சை இருக்கிறது பாதுகாப்பில்லை அவனையும் கூட்டிக் கொண்டு போ” உடையார் கூறவும் மூத்தவன் வாயடைத்து ஊமையாய் நின்றான். சற்று சிந்தித்தவனாய் அப்பா நீங்கள் படுத்தபாயிலை கிடந்திட்டால் இல்லை உங்களுக் கொண்டென்டால் மூத்தவன் வார்த்தை “தம்பி அவன் சின்னவன்ரை போக்கு எனக்கு பிடிக்கேல்லை நான் சொல்லிறபடிசெய்.”
தான் செய்யும் தவறை உணராமல் உடையார் பேசினார். தன் தம்பி மனைவியுடன் கண்கள் குளமாக விடைபெற்றுச் சென்றனர். தன் அன்புத் துணைவிசெல்லம்மாவின் பிரிவு, கலகலப்பாக எந்நேரமும் துலங்கிய வீட்டில் இப்போ யாரும் எட்டிப்பார்க்காத நிலைமை, மூன்று ஆண்பிள்ளைகளைப் பெற்ற செல்லம்மாவுக்கு கொள்ளிவைக்க ஒருத்தனும் இல்லாமல் இருந்த நிலையை எண்ணி எண்ணி பெருமூச்சுவிட்டவண்ணம் துரும்பாக இளைத்து விட்டார் உடையார். சிறுபிள்ளைபோல தேம்பித் தேம்பி அழும் உடையாரைத் தேற்ற ஆறுதல் கூற சங்கரனும், வேலனுமே இருந்தார்கள்.
படுத்த படுக்கையானார் உடையார். பெருங்கவலை வாட்டும் நிலையில் உணவையும் குறைத்துக்கொண்டார். தன் பிள்ளைகளுக்கு உடன் தமது நிலையை அறிவிக்கும் படி தங்கை செல்லம்மாவை கேட்டுக் கொண்டார். தினம், தினம் பிள்ளைகளுக்கு தொலைபேசியில் தகவல் போய்க் கொண்டிருந்தது.
அன்னம், தண்ணி அற்ற நிலையில் நாள்கள் கழிந்த நிலையில் இருக்கிறது. அவர்கள் வரவுக்காய் கட்டையாய்க்கிடந்து புரள்கிறார் உடையார். உடையாருக்கு கடுமையாம் ஊர் மக்கள் வருவதும் போவதுமாக உள்ளனர்.
பிள்ளைகளுக்காக காத்துக் கிடக்குது பெற்றுவளர்த்த தாய்க்கு வராத பிள்ளையஸ் தகப்பனுக்கு வரப்போகினமே. ஊரார் குரல் உடையாரின் காதில் விழுகிறது. கையை அசைக்கிறார் கண்கள் நிலையாகிறது ஒரு பெரியவர் தேவாரம் பாடுகிறார்.
பூரண அமைதி அவலஒலி மெதுவாக எழுகிறது.
O
ー21ー

Page 13
மாருதம் 10 . 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இலக்கியத்தில் விழுமியம்
- மகலைச்செல்வி -
மக்களின் பண்பாடு கலைமரபு என்பவற்றைப் பிரதிபலித்துக் காட்டும் சரித்திரம் பற்றி கூறுவது இலக்கியமாகும். மனிதனிடத்தில் காண்ப்படும் உயர்வான பண்புகள் விழுமியங்கள் எனப்படும். அந்தவகையில் இலக்கியங்களில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றுள், அறம், ஒழுக்கம், கற்பு, வாய்மை, நீதி போன்ற பல மேலான விழுமிய பண்புகள் உள்ளன. அவற்றை இலக்கிய ரீதியாக நோக்குவோம்.
உலகத்தார் போற்றும் பொதுநூலாக விளங்கும் திருக்குறளில் அறம்பற்றியும், ஒழுக்கம் பற்றியும், வாய்மைபற்றியும் கூறப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒழுக்கம் பற்றி திருக்குறளில்
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்”
என்றவரிகள் ஒழுக்கத்தின் உயர்வையும் அதன் மேன்மையையும் குறிப்பிட்டு விழுமியத்தை உணர்த்துகிறது. மற்றும் அறம் பற்றியும் திருக்குறளில் கூறும் போது
“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்”
இவ்வாறு பல விழுமியப்பண்புகள் உள்ளடக்கிய மகத்துவமான நூலே திருக்குறள்.
மற்றும் சிலப்பதிகாரத்தினை நோக்கும் போது இதில் கற்பு பற்றியும் அதன் வலிமை பற்றியும் கூறப்பட்டுள்ளது. கண்ணகி கற்புக்கரசியாக வாழ்ந்தமையையும் அவளது கற்பின் வலிமையால் மதுரையை எரித்ததையும் குறிப்பிடலாம். அடுத்து மணிமேகலை எனும் இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவியான மணிமேகலையின் அறச்செயலைக் குறிப்பிடலாம்.
அதாவது மணிமேகலை அமுதசுரபி மூலம் பசியினைத் தீர்த்து சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமையையும் குறிப்பிடலாம். கொடை பற்றிய விழுமியக்கருத்து மகாபாரதத்தில் கர்ணன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது கர்ணன் இறக்காமல் இருந்ததற்கு அவனது கொடையே காரணமாக அமைந்துள்ளது. தர்மம் தலைகாக்கும் என்ற கருத்துக்கமைய கர்ணன் தனது தருமத்தை கொடுத்த பின் இறந்தான்.
நீதி தவறாமை, பாரபட்சம் காட்டாமை போன்ற விழுமிய கருத்துக்களுக்கு மனுநீதி கண்ட சோழனின் கதையினை எடுத்துக்காட்டாக கூறலாம். அதாவது மனுநீதிகண்ட சோழனின் மகன் பசுக்கன்றை தேர்ச்சில்லால் ஏற்றிக் கொன்ற போது அவர்தன் மகனுக்கும் அதே தண்டனையை வழங்கியமையை குறிப்பிடலாம். பிறர் மனை
- 22

மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
விரும்பாமை என்பது சிறந்த விழுமியம். இதனை தவறி நடந்தால் நிச்சயமாக இறைவனால் தண்டிக்கப்படுவார். இதற்கு எடுத்துக்காட்டாக இராமாயணத்தை குறிப்பிடலாம்.
அதாவது இராவணன் இராமனுடைய மனைவி சீதையை கடத்தி வருதல் அதனால் இலங்கை அழிவுக்கு உட்படுவதோடு இராவணனும் கொல்லப்படுகின்றான். ஒருவர் கஷடப்படும் போது நாம் உதவி செய்ய முற்படுகின்றோம். அது எமது விழுமியப்பண்பினை எடுத்துக்காட்டுகிறது. அந்தவகையில் சிறாப்புராணம் எனும் இலக்கியத்தில் நபி(ஸல்) அவர்கள் மானுக்காக பிணை நிற்கின்றார். அதனுடைய துன்பத்தினை நீக்கும் நோக்கோடு அவர் செயற்பட்டதனை குறிப்பிடலாம்.
அவற்றோடு இராமாயணத்தில் இராமனுக்கு அனுமன் உதவி செய்தமை, மற்றும் அணில், குரங்குகள் என்பன உதவி செய்தமை மூலமும் விழுமியப்பண்பு மனிதனிடம் மட்டுமன்றி விலங்குகளிடமும் காணப்படுகின்றன. ஆனாலும் இன்றைய கால கட்டத்தில் அந்த விழுமியப்பண்புகள் மனிதனிடம் இருந்து அற்றுப்போகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். உணவு அனைவருக்கும் அத்தியவசியமானது. அந்த உணவினை பிறருக்கு கொடுத்து உண்பது எவ்வளவு பெரிய மேலான பண்பு. அந்த வகையில் இளையான்குடிமாறநாயனார் சிறந்தவர்.
இளையான்குடிமாற நாயனார் விருந்தளிக்க வேண்டும் என்பதற்காக சிரமப்பட்டு மழையில் நனைந்து பல சிரமங்களையும் தாண்டி தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு சிவனடியார்க்கு உணவு அளித்தார். மற்றும் சகோதர ஒற்றுமை குறைவான இந்த காலகட்டத்தில் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதற்கு எடுத்துக்காட்டாக பஞ்சபாண்டவர்களின் ஒற்றுமை, இராமன் இலக்குவனின் சகோதரபாசம். என்பனவற்றை மகாபாரத, இராமாயண இலக்கியங்களினூடாக காணலாம். இந்நூல்கள் சிறந்த விழுமியப்பண்புகளை விளக்கியுள்ளது.
தாய், தந்தை கூறும் வார்த்தைகளை தட்டாது அவர்களின் சொற்படி நடத்தலும் சிறந்த விழுமியம் ஆகும். அந்த வகையில் பஞ்சபாண்டவர்கள் தாய் சொல்லைக் கேட்டு திரெளபதையை ஐவரும் திருமணம் செய்து கொண்டமை, இராமன் தசரத சக்கரவர்த்தியான தனது தந்தையின் சொல்கேட்டு அவருடைய வார்த்தையை மதித்து 14 வருடங்கள் வனவாசம் செய்தமை என்பனவற்றைக் குறிப்பிடலாம். மற்றும் இறைவன் மீது உள்ள பக்தியும் ஒரு வகையில் விழுமியப்பண்பாக கருதமுடியும்.
எனவே இன்றைய காலகட்டத்தில் விழுமியம் என்ற கருத்து மனிதனிடத்தில் அற்றுவிட்டது. கொலை, கொள்ளை, போட்டி, பொறாமை என்பவற்றுடன் வாழும் மக்களுக்கு இவ்வாறான கருத்துகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. விழுமியப்பண்புகள் மனித வாழ்வில் விழுமியத்தை ஏற்படுத்த முடியும். இவ் இலக்கியங்கள் மூலமே இன்றும் சிலரிடம் விழுமியப்பண்புகள் மேலோங்கி
காணப்படுகின்றது.
23

Page 14
மாருதம் 10 . 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பாதி நினைவுச் சிறுகதை போட்டி
பாருக்குள்ளே ஒரு நாடு
-வேதில்லைநாதன்
உடன் பிறந் தார்களைப் போலே - இவ் வுலகில் மனிதரெல் லாரும் இடம்பெரி துண்டு வையத்தில் - இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்
நள்ளிரவில் வந்த அந்தச் செய்தி கண்மணியின் தூக்கத்தைப் பறக்கடித்து விட்டது; அவளைக் கலவரம் அடையவும் வைத்து விட்டது. அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் அவளது மனதுக்கினிய பார்த்திபனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு, “ஏய் ஒன்பது மணிக்குத்தானே கோல் பண்ணினாய். இப்ப என்ன அப்படி அவசரம்?’ தூக்கங்கலையாத குரலில் செல்லமாய்ச் சிணுங்கினாள் கண்மணி.
பார்த்திபன் குரலில் இறுக்கந் தொனித்தது, “கண்மனி, ஆறு மணியளவில் புறப்படத் தயாராக நில், நீ உடனே கொழும்புவர வேணும். உன்னைக் கூட்டிவரத்தான் காரில் வந்து கொண்டிருக்கிறன்.”
கண்மனியின் தூக்கந் திடீரெனக் கலைய “என்ன பார்த்தி, என்ன நடந்தது?" என அவள் பதற, அந்த நேரம் பார்த்து அவளது கையடக்கத் தொலைபேசியில் 'சிக்னல் தொலைந்தது"
பார்த்திபனோடு தொடர்புகொள்ள எண்ணற்ற தடவைகள் முயன்று தோற்றுப் போய் மீண்டும் படுக்கயையில் விழுந்து தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தாள் கண்மணி.
மருந்துகள், மாத்திரைகள் என்று காலத்தைக் கழிக்கும் அப்பாவுக்கு ஏதும் நடந்திருக்குமோ! அண்ணனிடம் வியாபாரப் பொறுப்புகளை எப்போதோ பாரங்கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்த அவருக்குத் தானே எமனாகிவிட்டேனோ என அவள் மனக் கிலேசமடைந்தாள். பலமாதங்களுக்கு முன்னர் மரணங்கள் மலிந்த இந்த இலங்கையின் கிழக்குப் பிரதேசக் கடற்கரை நகருக்கு அவள் பணியேற்க வந்த போது “போகாதே, அம்மா” என அவர் எவ்வளவோ கெஞ்சினார். அவள் மேல் உயிரையே வைத்திருந்த அவரைப் பிரிவுத் துயரில் ஆழ்த்தியதும் அவள்தானே என்ற அச்சம் அவளைத் தொற்றிக் கொண்டது.
அவளது தந்தையாரைப் போலவே செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருந்த பார்த்திபன் அவள் வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை எனச் சாதித்தபோது
一2车一
 
 

மாருதம் 10 - 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சந்சிகை
அவள் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக, கறாராக, “இங்கே பார், பார்த்தி, நான் உன்னை விரும்புறது உண்மைதான். அதுக்காக உன்ரை தலையிடுகைளை நான் அனுமதிக்கப்போவதில்லை" கலியாணத்துக்குப் பிறகு வேணுமெண்டா நாங்கள் கலந்து பேசி ஏதும் முடிவெடுக்கலாம். இப்ப என்னை என்பாட்டில் விடு.” என்று கூறியதைப் போலத் தகப்பனாரிடம் அவளால் கூற முடியவில்லை.
அவரிடம் கெஞ்சிக் கூத்தாடித் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டாள் அவள். ஆனாலும் பார்த்திபனைப் போல அவரால் அவளை மன்னிக்கமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவளோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாவிட்டால் பார்த்திபனுக்குத் தூக்கமே வராது. அவரோ அவள் பேசினால் கூடத் தனது ஆசைகளை அடக்கி வைத்துக் கொண்டு ஏதோ மனைவியின் வற்புறுத்தலுக்காக வேண்டா வெறுப்பாகப் பேசுவது போலப் பேசுவார்.
ஆயினும் பேசும்போது அவர் குரலில் பாசம் பொங்கி வழியும். “கவனம் அம்மா, கவனம் அம்மா” எனத் திருப்பித் திருப்பிக் கூறுவார். இங்கே அரசுக்கும், போராளிக் குழு ஒன்றுக்கும் நடக்கும் பேர், அதில் இரு பகுதியிலும் மடியும் ஆயுததாரிகள், இடையில் அகப்பட்டு மடியும் அப்பாவிகள், இறந்த பின்னர் இடையில் அகப்பட்டதாக முத்திரை குத்தப்படும் அப்பாவிகள், குழுச் சண்டைகளில் பறிக்கப்படும் உயிர்கள் என உயிருக்கு மதிப்பே இல்லாத உதிரங் கலந்த இந்த மண்மீது அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாளே என்ற அச்சந்தான் அவர் மனதை அரித்துத் தின்று கொண்டிருந்தது.
திடும். திடும். திடும். பீரங்கிக் குண்டுகள் எழுப்பிய சத்தம் கண்மணி இருந்த வீட்டையும் அவளது நெஞ்சத்தையும் அதிரவைக்க அவள் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். மனப் பிரமை,வேறொன்றுமில்லை. சற்றே கண் அயர்ந்து விட்டாள் போலிருக்கிறது.
இங்குள்ள பல்கலைக்கழக கல்லூரியில் அவள் பதவியேற்ற ஆரம்ப நாட்களில் இந்த நகரிலிருந்து இரவு வேளைகளில் எங்கோ தொலைவில் போராளிகளின் பிடியிலிருந்ததாகக் கருதப்பட்ட ஒரு கிராமத்தை நோக்கி இடை விடாது ஏவப்பட்ட பல்குழல் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்திய அச்சம் இப்பொழுது போர் சற்றே ஓய்ந்த நிலையிலும் அவளைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது.
அந்த நாட்களில் அப்பாவின் ஆலோசனையையும் மீறி இங்கே வந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழவேண்டியிருக்கிறதே என அவ்வப்போது தோன்றினாலும், இயல்பாகவே அவளுக்கிருந்த துணிச்சலும், காலாதிகாலமாக வடக்குக் கிழக்கு வாழ் மக்கள் இந்த இன்னலைத் தாங்கி வாழ்கிறபோது தான்மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா என்ற எண்ணமும் அவளுக்கு ஆறுதலைத் தந்தன.
மீண்டும் சில நிமிடங்கள் பார்த்திபனோடு தொடர்பு கொள்ள முயன்று வீணாகிப் போன நிலையில் கண்மணி கட்டிலில் சாய்ந்தாள். மேனிப் படபடப்பு அடங்காத
-2S -

Page 15
மாருதம் 10 - 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சியக
நிலையில் தகப்பனாரின் நினைவுகளிலிருந்து தன்னைப் பலவந்தமாகத் திசை திருப்பிய கண்மணி தனது உறக்கத்தைக் கலைத்த அந்த இரவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாள்.
கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு இப்படிக் குண்டுகளைக் கொட்டுவதை விடுத்து அரசு சமாதான முயற்சிகளில் தீவிரமாக இறங்கலாமே என அப்போதெல்லாம் கண்மணிக்கு ஆவேசம் பொங்கும். அரச தரப்பினர் நேசக் கரம் நீட்டுவதாகக் கூறுவது உதட்டளவில் தானா எனவும் தோன்றும்.
கண்மணியின் தொலைபேசி திடீரென அவளை அழைத்தது. அவள் அதைக் கையிலெடுப்பதற்குள்ளாகவே அது வாயை மூடிக்கொண்டது. அவளைப் போலவே பார்த்திபனும் தொடர்பை ஏற்படுத்த முயன்று கொண்டு தான் இருந்தான்.
அம்மாவுக்கு ஏதும் நேர்ந்திருக்காது. அவர் சுகதேகி. மனதில் இருக்கும் பாரங்களை அவர் உடனுக்குடன் கொட்டிவிடுவதால் நோய் அவரை எளிதில் எட்டிப் பார்ப்பதில்லை. அண்ணன் தவசீலன் வாகனங்களை வேகமாகச் செலுத்துபவன். அவனுக்கேதும்.?
அப்படி ஒன்றும் ஆகியிருக்காது என அவள் மனதைத் திடப்படுத்த முயன்றாள். தவசீலனும் அவளும் அடிக்கடி மோதிக் கொண்டாலும் பாசம் மிகுந்தவர்கள். அவர்களது பாட்டனும் பாட்டியும் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், தந்தையார் தலை நகள் கொழும்பில் வியாபாரத்தில் தன்னை ஒரு பெரும்புள்ளியாக நிலைநிறுத்திக் கொண்டதால் அவர்கள் இருவரும் கொழும்பிலே பிறந்து வாழ்ந்தவர்கள். தவசீலனும் அவளைப் போலவே கொழும்பில் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் அவனுக்கு வியாபாரத்திலேயே குறி. தகப்பனாரின் வியாபார சாம்ராச்சியத்தை மேலும் ஸ்திரப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தான் அவன்.
தவசீலனும் அவள் இங்கே வருவதை மூர்க்கமாக எதிர்த்தான். போராளிகள் என்ற சொல்லே அவனுக்கு வேப்பங் காயாக இருந்தது. “போ, போ நீயும் அந்தக் கேடு கெட்டவங்களோட சேர்ந்து போராடு" என அவன் கத்தினான். “அவங்கள் தமிழ் மக்களைக் காப்பாற்றுறாங்களோ? அவங்களால் தானே தமிழனுக்கு இந்தக் கதி"
“அண்ணை, நான் அங்கை இங்லிஷ் லெச்சரராகத்தானே இருக்கப் போறன். ஏன் கத்தி வீணா உடம்பைக் கெடுக்கிறாய்?" என அவளை அறியாமலே அவளுங்கத்த இருவருஞ் சிரித்தது இப்பொழுத அவளது ஞாபகத்துக்கு வருகிறது.
“அதுக்கில்லை கண்மணி, நீயும் அங்கை போய்ச் சீரழிய வேணுமா? அதுதான் எனக்குக் கவலை" தவசீலனின் சுருதி இறங்கியது. இங்கை நாங்கள் சிங்களவர் மத்தியிலை எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறம். அங்கை அவங்கள் குட்டையைக் குழப்பிறாங்களே.”
-26

Lorrish 10 - 2009, spas, ests, asansu sudhai stiana,
கண்மணி அவனது வார்த்தைகளை இப்போ நினைத்து நெடுமூச்செறிந்தாள். அவளது பதட்டத்தின் மத்தியிலும் அரசாங்கத்தின் பிரசாரத்தையே தவசீலனின் வார்த்தைகளும் பிரதிபலித்ததாக அவளுக்குத் தோன்றுகிறது.
கொழும்பிலே தமிழ் மக்கள் சந்தோஷமாக, சகல சுதந்திரங்களுடனும் வாழ்வதாக அரசு செய்து வரும் பிரசாரங் குறித்து அவளது சக விரிவுரையாளர் ஒருவர் கூறியது கண்மணியின் ஞாபகத்துக்கு வருகிறது.
“தமிழரைத் தலைநகரிலிருந்து விரட்ட முயன்றுதானே அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிக் கொட்டிக்கொண்டார்கள்” அந்த விரிவுரையாளர் அதற்குமேல் எதையுஞ் சொல்லவிரும்பா விட்டாலும் தான் பிறப்பதற்கு முன்பாக அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலை குறித்தும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பிரதானமாக, ஏனைய நாடுகளின் தலையீடுகள் குறித்தும் அவள் கேள்வியுற்றிருந்தாள்.
அண்ணாவுக்கு ஏதும் நடந்திருக்காது எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்ட அவள், தமையன் ஒருதடவை யாவது இங்கே வந்து நடப்பதை அவதானிக்க வேண்டுமென விரும்புகிறாள்.
இலங்கையில் இனப் பிரச்சினை உண்டு என உலகநாடுகளே ஏற்றுக் கொண்ட
நிலையில், பிடிவாதமாக ஓர் அரசு முற்றுமுழுதாக ஆயுத பலத்தையே நம்பியிருக்கும் அவலம் தவசீலனுக்கு ஏன் புரியவில்லை என்பது அவளுக்கு மர்மமாகவே இருக்கிறது.
சிங்கள, தமிழ் இஸ்லாமியரான மூவினமக்களதும் அவலம் தொடர் கதையாக மாறியிருக்கும் அதே வேளையில் அவள் பணிபுரியுங் கல்லூரியில் நிலைமை வேறுபட்டிருந்த தன்மை அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவள் பதவியேற்ற ஆரம்பகாலத்தில் மூவின மாணவர்கட்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ள அந்தக் கல்லூரி மாணவர் தொகையின் இன விகிதாசாரம் ஏறத்தாழ நாட்டு மக்கள் தொகையின் இன விகிதாசாரத்துக்கு இயைவாகவே அமைந்திருக்கிறது. ஆயினும் வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தான் எத்தனை வேறுபாடுகள்.
வளாகத்துக்கு வெளியே துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த உடல்களைக் கண்டுங் காணாதவராக, வெடிகுண்டுச் சத்தங்களைக் கேட்டுங் கேட்காதவராக தம்மைக் காப்பவர் என்று சொல்பவரையும் மீட்பவர் என்று சொல்பவரையும் அறிந்தும் அறியாதவராக மக்கள் மூச்சு விடவும் அஞ்சி நிற்கின்றனர்.
வளாகத்துக்குள்ளேயோ சிரிப்புங் களிப்புங் கேலியுங் கிண்டலுமாக வண்ண வண்ண ஆடைகளில் வாலிபச் செழுமையுடனுங் குறும்புடனும் இன பேதத்தை மறந்து மாணவர்கள் வளையவருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
- 27

Page 16
மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கண்மணி மாணவரோடு மாணவராகக் கலகலப்பானவளாகவும் சில நேரங்களில் கண்டிப்பு மிக்க ஆசிரியையாகவும் வேண்டியவாறு மாறி மாணவர் மனங்களில் இடம் பிடித்திருப்பவள். மீண்டும் தொலைபேசியோடு போராட்டம், மீண்டுஞ் சலிப்பு, மீண்டும் பதட்டம் எனக் கட்டிலில் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்ற கண்மணிக்கு இருந்தாற் போலிருந்து ஏனோ தவசீலனுக்குத்தான் ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. இது அசட்டுத்தனம் எனத் தன்னைத்தானே கடிந்து கொள்கிற கண்மணி வலிந்து தனக்கும் தமையனுக்கும் இறுதியாக ஏற்பட்ட மோதலுக்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டுவருகிறாள்.
இனவேற்றுமையை அறவே மறந்து இந்த மாணவர்கள் இவ்வளவு இயல்பாகப் பழகுகிறார்களே, சமூகத்திலுள்ள முரண்பாடுகள் தோற்றுவித்த வடுக்களேதும் இவர்களிடத்தில் இல்லையா என அவ்வவ்போது கண்மணி தன்னைத்தானே கேட்டுக் கொள்வதுண்டு.
அவளது கேள்விக்கு விடை அளிப்பது போல அண்மையில் ஒரு நாள் அமைந்தது. அன்று தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களுக்கு வித்திட்டவளே அஞ்சலி என்ற மாணவிதான்.
மின்னலாகத் திரியும் அந்த மாணவி வட பகுதியைச் சேர்ந்தவள். அவளுக்கு ஏற்கெனவே சிறிது சிங்களந் தெரிந்திருந்தது. அவள் பாட்டு, ஆட்டம், நடிப்பு என்பனவற்றில் கைதேர்ந்தவள். அவள் ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம். அம்மாவை வாங்கமுடியுமா? என்ற சினிமாப் பாடலை அபிநயத்துடன் பாடி அதற்குச் சிங்களத்தில் விளக்கமுங் கூறியதை ஒருநாள் கண்மணி அவதானித்திருந்தாள்.
இத்தகைய கலகலப்பே வடிவான அஞ்சலிக்குள் இன்னொரு அஞ்சலி உறங்கிக் கொண்டிருப்பதை அறியும் வாய்ப்பு அன்றுதான் கண்மணிக்கு ஏற்பட்டது.
கண்மணி அவர்களுக்கு ஆங்கிலங் கற்பித்துக்கொண்டிருந்த வேளையிலே அச்சம்பவம் நிகழ்ந்தது. சில தலைப்புகளை அவர்களிடங் கொடுத்த அவள் அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து ஒவ்வொரு மாணவரும் இரண்டு நிமிடங்களுக்குக் குறையாது பேசவேண்டுமெனப் பணித்திருந்தாள்.
அஞ்சலியின் முறை வந்தபோது My father என்ற தலைப்பில் அவள் உற்சாகமாகவே பேச்சை ஆரம்பித்தாள். ஒரு நிமிடங் கடந்த நிலையில் திடீரென அவள் முகம் மாறியது. “நாளைக்கு எனது பிறந்ததினம். ஆனால் அதைக் கொண்டாட அப்பா உயிருடன் இல்லையே” என ஆங்கிலத்தில் கூறி விம்மி அழுத அவள் ஆங்கிலத்தில் பேசமுடியாது தமிழில் சத்தமிட்டாள்.
“ஒரு பாவமும் அறியாத அப்பாவை எங்கள் கண்முன்னாலையே சுட்ட அந்த
ܚܝ 28 ܚ

மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சந்சிகை
ஆமிக்கார மிருகங்களை என்னால் மன்னிக்க முடியுமா? சாகிறதுக்குச் சற்றுமுன்வரை எங்களோடை சிரிச்சுப் பேசிய அப்பா இரத்த வெள்ளத்தில் துடிச்சதைத்தான் என்னால் மறக்க முடியுமா?” என அவள் கதறியழுததைக் கேட்டு மொழிவிளங்காத சில சிங்கள மாணவியரின் கண்களுங் கலங்கின.
அவளை ஒருவாறு தேற்றி அமரவைத்த பின்னர் My Brother என்ற தலைப்பில் பேசத் தொடங்கிய ஒரு சிங்கள மாணவி மயங்கிச் சரிந்தாள் அவளது வறிய குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டுப் படையில் சேர்ந்த அவளது தமையன் இன்னொரு சகோதரியின் திருமணத்துக்காக வீடுநோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவன் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் கண்ணிவெடியிற் சிக்கியதால் உடல் சிதறி மாண்டுபோனான்.
இவையெல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஓர் இஸ்லாமிய மாணவனின் கண்களில் தென்பட்ட வெறி கண்மணியைக் கலங்க வைத்தது. ஒரு பக்கமுஞ் சார விரும்பாது அவர்கள் இருந்தும் வேண்டாத சூழலில் அகப்பட்டுப் பிறந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியரில் அவனது குடும்பமும்
ஒனறு.
இத்தனை சோகங்களையுஞ் சுமந்துகொண்டு அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தது ஒரு நல்ல அறிகுறியாகவே அவளுக்குத் தோன்றியது. நடந்த சம்பவங்கள் குறித்து அன்றிரவு தவபாலனோடு தொலைபேசியில் உரையாடினாள் கண்மணி. தனது கவலைகளை அண்ணனோடு பகிர்ந்து கொள்ளவே அவள் விரும்பினாள். அவனோ கத்தினான்.
“அவங்களை அதுதான் அந்தப் போராட்ட வீரன்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லு எல்லாஞ் சரிவரும். அவை மக்களைக் காக்கினமோ, வதைக்கினமோ? நீயும் அங்கை இருந்து சாகாமல் இங்கை வந்து சேர். இவங்கள் மனுஷன்கள், அவங்கள் மிருகங்கள்.”
“அவங்களை ஆயுதந் தூக்க வைச்சது யார்? அவர்கள் உன்னைப்போலச் சுயநலவாதியள் இல்லை" அவளும் பதிலுக்குக் கத்தியவாறே தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தாள். போர் என்று வந்துவிட்டாலே மனிதப் பண்புகள் அற்றுத்தான் போய்விடுகின்றன. இன்று சிரித்துக் களிக்கும் இந்த மாணவர்கள் நாளை போர்க்களத்தில் சந்தித்தால் என்ன செய்வார்கள் எனச் சிந்தித்துப் பார்க்கவே அவள் விரும்பவில்லை.
அதிகாலை ஐந்துமணிஆகிறது. இன்னும் தொலைபேசித் தொடர்பு
கிடைக்கவில்லை. தவசீலனோடு போட்ட சண்டைவேறு அவளது மனதைக் குடைகிறது. அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கக் கூடாது என அவள் ஆண்டவனை வேண்டுகிறாள்.
திடீரென்று தொலைபேசி அலறுகிறது. பார்த்திபனின் குரலைக் கேட்டு அவளது குரல் தழுதழுக்கிறத. “என்ன நடந்தது பார்த்தி?” அப்பாவுக்கு ஒண்டுமில்லையே?”
ー29ー

Page 17
uorrenbeub 10 - 2009, 6Felip6, 655bGl), 666m6u gesuébéu erabdflames
“அப்பாவுக்கு ஒண்டுமில்லை. தவசீலனுக்குத்தான். “அண்ணணுக்கென்ன?" அவள் அழத்தொடங்கினாள். “அழாதை கண்மணி. அவனுக்கொண்டுமில்லை. இரவு ஒன்பது மணிபோல யாரோ சிஐடி எண்டு சொல்லி அவனை விசாரிக்க வேணும் எண்டு கூட்டிப் போனவையாம். மாமாவின்ரை செல்வாக்கு உனக்குத் தெரியுந்தானே? யோசிக்கவே தேவையில்லை. இங்கை வழியொல்லாம் ஒரே ஆமி செக்கிங். நான் வர நேரமாகும். நீ ஒய்வாகப் படுத்திரு." தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தான் பார்த்திபன். “கடவுளே இது என்ன சோதனை, அண்ணன் அவங்களை மலைபோல நம்பியிருந்தானே” கண்மணியின் கண்மணிகள் நிரம்பிவழிகின்றன. அண்மைக்காலமாக நடைபெறுகிற கடத்தல் கொலைச் சம்பவங்கள் அவள் கண்முன் காட்சிகளாக விரிகின்றன. தலையணையில் முகம்
புதைத்து விம்மி விம்மி அழுகிறாள் அவள்.
OOO
பெண்கள் எழுச்சிப் பாடல்
-கந்தையா யூரீகணேசன்
வருக வருக தாயே என்று போற்றுவோம் தருக உங்கள் அருளே என்று வணங்குவோம் பெருமையுடன் பெண்கள் புகழ் பாடுவோம் அருமையுடன் அனுதினமும் ஆடுவோம்
தந்தெனத்தன தாளங்கள் போடுவோம் துந்துபி மேளங்கள் பல முழங்குவோம் சிந்தனையில் மாற்றங்கள் - நாம் செய்குவோம் வந்தனங்கள் கூறி உம்மை வாழ்த்துவோம்.
எட்டுத்திக்கும் எங்கள் குரல் உயர்த்துவோம். கட்டுக்கள் பல உடைத்து முன்னேறுவோம்.
தட்டிக் கேட்டு எங்கள் உரிமை நாட்டுவோம் பட்டொளிவீச எங்கள் கொடி தூக்குவோம்.
- 30 -

ഥG 10 - 2009 (, (ി, ജബ് (ബ്ധ (ിക്കു
தமிழ்மொழி வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு
-நதியா
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய முதுமொழி தமிழ்மொழி” என்ற வரிகள் நம் காதில், ரீங்காரமிட்டு நிற்கக் காண்கிறோம். பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் ஒரு சில மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பதை உலக மொழிகளின் வரலாறு பறைசாற்றி நிற்பதைக் காண்கின்றோம். இத்தகைய தமிழ்மொழி வளர்ச்சியில் வெகுசனத் தொடர்பு சாதனங்களின் பங்களிப்பு அளப்பரியது.
அந்த வகையில் 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள இக்கால கட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. கைத்தொழில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. கைத்தொழில் புரட்சிக்கு அடுத்ததாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய புரட்சியாக தகவற்புரட்சியே அமைகின்றது எனக் கூறப்படுகின்றது. இத்தகவல் யுகத்தின் பிரதான சாதனம் இணையம் என்றால் அது மிகையாகாது.
இணையமானது ஒரு வல்லரசின் இராணுவத்தேவைக்காக பிறந்தது. இது உலகமயமாக்கும் சந்தையை பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. இது தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு என்கின்ற இரு இராட்சதத் தொழில்நுட்ப துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் உருவானது. இணையத்திலிருந்து பலவகையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. இணையமானது ஓர் உலக மக்களின் சொத்து என்பதனால் புதிது புதிதான சேவைகளை ஆராய்ச்சியாளர்கள் காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று இணையம் அழைக்கப்படுகின்றது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உள்ளவர்களை இணைக்க இணையம் போல் ஓர் ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை. இணையம் ஒரு வித்தியாசமான ஊடகம். புத்தகங்கள் ஒரே சமயத்தில் பல மொழிகள் பேசுவதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வலையகம் ஒரே சமயத்தில் பல மொழிகளைப் பேச முடியும். இப்படியாக ஒரு சிறந்த ஊடகமாக இணையம் திகழ்கின்றது.
20ஆம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சி குறித்துப் பிற்காலத்தில் திரும்பி
-31 -

Page 18
HMTLuMMa LL S 00uHCLS MMLM S YLkMS TLSMM SKLSuMLTt uYk ue
பார்க்கும் எந்த ஓர் ஆராய்ச்சியாளனும் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஒரு திமilத் திருப்பத்தைக் கண்டுகொள்ளாமல் போகமாட்டான். அந்தத் திருப்பந்தான் தமிழும் கணிப்பொறி நுட்பமும் கைகோர்த்துக் கொண்ட ஓர் அற்புத நிகழ்வாகும்.
மொழி ஊடகங்களின் மூலமாகவே நிலைத்து நிற்கின்றது. தொடர்ந்து நிலவுகின்றது. பேச்சும் எழுத்தும் அவற்றிர்கேயுரிய ஊடகங்களின் மூலமாகப் பயணித்து மொழிவழி சமூகங்களை நிலவச் செய்கின்றன. ஆரம்பத்தில் கல்வெட்டிலும் ஓலையிலும் இருந்த தமிழை அச்சுக்கு கொண்டு வருவதற்கு அச்சுப்பொறி கண்டுபிடிப்பு உதவியது. இவ்வற்புதத் தொழில்நுட்பம் என்ற ஒன்றையும் கொண்டு வந்தது. தமிழ் இந்த நூற்றாண்டில் கணினி நடைமுறைக்கு வந்தது.
இன்றைய தகவல் தொழில்நுட்பப|கத்தில் ஒரு புதிய மொழிச் சாதனம் உருவாகும் போது முடியும் என்ற நிலைமை உருவாகிவிட்டது. இன்று விட்டுக்கு வீடு இணையம் வந்து விட்டது. எனவே இந்த வேகத்தில் தமிழ் மொழியும் வளர வேண்டுமாயின் தமிழ் கணினி மயப்படுத்தல் அவசியமான தொன்றாகும். எனவே கணினியில் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய விதமான கணினித் தமிழ் உருவாவது அவசியமானதொன்றாகும்
இன்று அறிவியல், மருத்துவத் துறையில் தமிழ்ச் சொற்கள் இல்லாமல் போய்விட்டன. அதற்குக் காரணம் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் போது அதற்கான கலைச்சொற்கள் அறிமுகப்படுத்தப்படாதது தான். எனவே கணிப்பொறித் துறையில் புதுப்புதுக் கருவிகளும், கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகளுக்கும் தமிழ்ச் சொற்களை உருவாக்கி கணினித் தமிழர்சங்க "வெப்'தளத்தில் அறிமுகப்படுத்த இருக்கின்றார்கள். இப்படியாக மாதம் 200 சொற்களைபானது அறிமுகம் செய்யவுள்ளார்கள்.
இலங்கைத் தமிழர்கள் தொடர்பான செய்திகளை இன்று தினசரி வெளியிடும் வெப்தளமாக 'தமிழ் நெட்' உள்ளது. கடந்த சில வருடகாலமாக ஆங்கிலத்தில் மட்டும் வெளியாகிய இத்தளத்தின் செய்திச் சேவையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பிரபலமடைந்துள்ள இத்தளத்தை http: www.tamilnet.com/tamil என்ற முகவரியில் பார்வையிட முடியும்.
ஓலைச் சுவடிகளில் வளர்ந்த தமிழ் இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சக்கட்டமாகவுள்ள இணையத்தில் வளரத் தொடங்கியுள்ளது. இணையத்தில் தமிழர்களின் செயற்பாடானது ஆசியாவிலுள்ள ஏனைய மொழிகள் அனைத்துடனும் போட்டி போடக் கூடியளவிற்கு தமிழ் முன்னேறியுள்ளது. இதற்கான பங்களிப்பை இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களுடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் செய்துள்ளனர்.
தமிழ் சம்பந்தமான பத்திரிகைகள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள், சினிமா, இலக்கிய ஆய்வுகள், ஆவணப்படுத்தப்படல், அரசியல் ஆய்வுகள், மென் பொருட்கள்
- -

MMDMLMuOuTa L SlL00E BBLeS S TLLTS TTLLL LLLLLLLLMTMM TTMMMMML
என்பன இணையத்தில் தாராளமாக கிடைக்கின்றன.
இரண்பத்தில் தமிழ் அகராதிகள், கலைச் சொற்கள், சுருக்கச் சொற்கள். நிகண்டுகள் தமிழ் ஆவணக் காப்பகங்கள் என்பன உருவாக்கப்படவிருக்கின்றன.
நாம் ஒரு பன்னாட்டுத் தமிழ் உறவை வேறு ஊடகங்கள் மூலம் சாத்தியப்படுத்த முடியவில்லை. ஆனால் மகத்தான வியூகங்களை அமைக்காமலேயே அதை இணையம் சாதிக்கின்றது. அந்த வரிசையில் மேற்கூறப்பட்ட யாவும் இனையத்தின் மூலம் தமிழ் மொழியில் ஏற்பட்ட வளர்ச்சிகளே,
JIJIJ
ஈழத்திர்வெளிவருமர் சஞர்சிகைகள்
|-
-33

Page 19
மாருதம் 10 . 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால்
விருது வழங்கிக் கெளரவிக்கப் பெற்றோர் விபரம்
தொகுப்பு : கவிமைந்தன்
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமானது 1997ம் ஆண்டு பெப்ரவரி மாத முழுநிலாநாளன்று உதயமானது. சமூகத்திலே இயங்கும் கலை, இலக்கிய கள்த்தாக்களை, கெளரவிக்கும் நிகழ்வானது, வட்டத்தின் ஆண்டு விழாக்கள் தோறும் இடம்பெற்று வருகின்றது. பிறமாவட்டங்களில் இருந்து வந்து, வவுனியாமாவட்டத்திலே, கலை இலக்கியப் பணியினை ஆற்றிய, கலை இலக்கிய கர்த்தாக்கள், மாலைசூட்டி, பொன்னாடை போர்த்தி, விருதுவழங்கிக் கெளரவிக்கப்பட்டு வருகின்றார்கள்.
வட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா சித்திரை - 2002 இல் நடைபெற்ற வேளை 1. இலக்கியச் செல்வர் எனும் விருதுவழங்கி முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம்
அவர்களும் 2. நாடகச் செல்வர் எனும் விருதுவழங்கி திரு.எஸ்.ரி.அரசு அவர்களும்
கெளரவிக்கப்பெற்றனர்.
பார்க்க மாருதம் இதழ் - 01 ஆறாவது ஆண்டு நிறைவு விழா ஐப்பசி - 2008 3. சிறுவர் இலக்கியச் செல்வர் எனும் விருது வழங்கி
திரு.ச.அருளானந்தம் அவள்களும் 4. கல்வியியற் செல்வர் எனும் விருது வழங்கி
திரு.ச.அழகரத்தினம் அவர்களும் கெளரவிக்கப்பெற்றனர்.
பார்க்க மாருதம் இதழ் - 04 எட்டாவது ஆண்டு நிறைவு விழா சித்திரை - 2005 5. இலக்கியச் செல்வர் எனும் விருதுவழங்கி திரு.பொன் தெய்வேந்திரன் அவர்களும் 6. இலக்கியச் செல்வர் எனும் விருது வழங்கி கண்டாவளைக் கவிராயர்
திரு.சி.கு.இராசையா அவர்களும் கெளரவிக்கப் பெற்றனர்.
பார்க்க மாருதம் இதழ் - 06 ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா சித்திரை - 2006 7. இசைச் செல்வர் எனும் விருது வழங்கி திரு.கந்தையா கனகேஸ்வரன் அவர்களும் 8. இசைச் செல்வி எனும் விருதுவழங்கி
திருமதி.விமலலோஜினி கனகேஸ்வரன் அவர்களும் கலைத்தம்பதிகளாகக் கெளரவம் பெற்றனர்.
பார்க்க மாருதம் இதழ் - 07 பத்தாவது ஆண்டு நிறைவு விழா சித்திரை - 2007 9. சிற்பக்கலைச் செல்வர் எனும் விருதினைப்பெற்று திரு.சு.சண்முகவடிவேல்
-34.

மாருதம் 10 . 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அவர்களும் 10. இசைச் செல்வர் எனும் விருதினைப்பெற்று திரு.கே.ஆர்.சிவசோதி அவர்களும்
கெளரவம் பெற்றனர்.
பார்க்க மாருதம் இதழ் - 08
பதினோராவது ஆண்டு நிறைவு விழா ஐப்பசி - 2008 11. நாடகக் கலைச் செல்வர் எனும் விருதினைப் பெற்று திரு.பி.ஏ.சி ஆனந்தராசா
அவர்களும் 12. நாடகக் கலைச் செல்வர் எனும் விருதினைப்பெற்று திரு.அருணா செல்லத்துரை
அவர்களும் கெளரவம் பெற்றனர்.
பார்க்க மாருதம் இதழ் - 09
வட்டத்தின் பாராட்டினைப் பெறும் இருவர் 7வது (சித்திரை 2004) ஆண்டு விழாவில் கலாபூஷணம் கவிஞர் கண்ணையா திரு.மு.இராமையா அவர்களையும் இலக்கிய சமூகத்தொண்டர் சூடாமணி திரு.இ.கா.கணபதிப்பிள்ளை அவர்களையும் வட்டம் பாராட்டிக் கெளரவித்தது
பார்க்க மாருதம் இதழ் -05
அட்டைப்பட அதிதிகளாகக் கெளரவிக்கப்பெற்றோர். வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினது நீண்டநாள் கனவு, ஐந்தாவது ஆண்டு நிறைவில் நனவாகியது.
கலை இலக்கியச் சஞ்சிகையொன்றை வெளியிடவேண்டும் என்ற நண்பர்களது கோரிக்கைக்கு இணங்க சித்திரை - 2002இல் “மாருதம்’எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
மாருதமானது “மெல்லெனப் பாயும் தண்ணிரைப்போல கல்லையும் அரித்துச் செல்லும்” என்று முதலாவது இதழிலேயே ஆசிரியரினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
01. சித்திரை 2003 இதழ் 3
போராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மாருதத்தின் அட்டைப்பட அதிதியாகக் கெளரவிக்கப்பட்டார்.
02. ஐப்பசி 2003 இதழ் 4
அமரர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் அட்டைப்பட அதிதியாகக் கெளரவம் பெற்றார்.
03. ஐப்பசி 2007 இதழ் - 08
அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை அவர்கள் அட்டைப்பட அதிதியாகக் கெளரவம் பெற்றார்.
04. ஐப்பசி 2008 இதழ் - 09
அமரர் பண்டிதர் வ.சு.இராஜஐயனார் அவர்கள் அட்டைப்பட அதிதியாகக் கெளரவிக்கப்பெற்றார்.
ー35ー

Page 20
மாருதம் 10 . 2009, சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
புலவர்களின் தீர்க்க தரிசனம்
Z தமிழ்மணி அகளங்கன்.
நம் முன்னோர்கள் தம் அனுபவங்களையும் சிந்தனைகளையும் மிக அற்புதமாகக் கவிதைகளிலே பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
மனித வாழ்க்கை பற்றிய அவர்களது பார்வைகள் சிலவேளைகளில் விரக்தியின் வெளிப்பாடுகளோ என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியிருந்தன.
அவர்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு பழம் புராண இதிகாசக் கதைகளை ஆதாரமாகக் கூறி விளக்கும் இலக்கிய நூல்கள் பல இருக்கின்றன.
இருப்பினும் எமது இன்றைய அவல வாழ்க்கையிலே அன்றாட நிகழ்வுகளையே உதாரணங்களாக்கிப் பார்க்கக் கூடிய பரிதாபநிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது வேதனையான உண்மையாகும்.
நாலடியார் என்ற அறநூலில் ஒரு பாடலில் சொல்லப்பட்ட கருத்து பின் வருமாறு அமைகின்றது.
அறுசுவை உணவை அன்புள்ள மனைவி அருகிருந்து, இன்னும் உண்ணுங்கள் இன்னும் உண்ணுங்கள் என்று விரும்பி ஊட்ட, போதும் போதும் என்று கூறி மறுபிடி உணவை மறுத்து விலக்கி உண்டவரும் வறுமைப்பட்டு கூழ் குடிக்கக் கூட வழியின்றிக் கையேந்தி இரந்து இன்னொருவர் முன்னிலையில் நிற்க வேண்டி வரலாம். அதனால் செல்வம் நிலையானதல்ல. என்கிறார் ஒரு புலவர்.
வாழ்க்கை நிலை எந்நேரத்திலும் மாறலாம் என்பதைத் தத்துவமாக எடுத்துரைத்த புலவனின் தீர்க்க தரிசனத்தை என்னென்று சொல்லி விளக்க, எப்படி நான் வியக்க.
அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனின் செல்வம்ஒன்று உண்டாக வைக்கற்பாற் றன்று.
(நாலடியார் . 01)
வெண் கொற்றக் குடை நிழலில் யானையின் அம்பாரியிலிருந்து உலாப்போன
மன்னர்களும் கால்கடுக்க, நடக்க முடியாமல் தள்ளாடி, சிற்றூருக்குச் செல்ல வேண்டி
வந்தாலும் வரும் என்றான் அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன் தனது வெற்றிவேற்கை -36 -

* மாருதம் 10 - 2009 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
எனப்படும் நறுந்தொகையில்.
குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஒருர் நண்ணினும் நண்ணுவர்.
இதைமட்டுமா சொன்னான். மலைபோன்ற திரண்ட பெருஞ் செல்வந்தரும் அதாவது சங்க நிதி பதுமநிதி என்ற அளவுகொண்ட இருநிதி வளம் படைத்த பெருஞ் செல்வந்தரும் அச் சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் ஒரே நாளில் இறந்தும் போகலாம் என்றான்.
குன்றத் தனைஇரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிகுவர்.
அனுபவிக்காமல் இறந்து போவது வேறு விடயம். ஆனால் உண்ண உணவின்றிக் கையேந்தி அவமானப்படுவது நினைக்க முடியாத கொடுமையல்லவா. அதனையும் சொல்கிறான் அவ் அரசன்.
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடைகினும் அடைகுவர்.
சிறப்பு செல்வம் பெருமை யாவும் படைத்த பெரியோரும் (அறக்கூழ்ச் சாலை) புண்ணியத்துக்காகக் கூழ் வார்க்கும் இடத்துக்குச் சென்று சேரவேண்யும் வரலாம் என்றான். m
இது மட்டுமல்ல இன்னொன்றும் சொன்னான். ஏழு மாடிக் கட்டிடங்கள் கூட அடியற்று நிலத்தில் விழ, அந்நகரம் கழுதை மேய்கின்ற பாழ் நிலமாக மாறவேண்டியும் வரலாம் என்றான்.
எழுநிலை மாடம் கால்சாய்ந்துக்குக்
கழுதை மேய்ப்பாழ் ஆயினும் ஆகும்.
இதை வாசிக்கும் உங்கள் நினைவுக்கு வருவனவற்றை நான் தடுக்கவில்லை. மனிதனின் சொற்ப கால அற்ப சந்தோச வாழ்க்கைபற்றித் தத்துவ முரைக்கிறார் நாலடியார்ப் புலவர் ஒருவர்.
கோவிலிலே வேள்வி செய்கின்ற காலத்தில் ஆடுகளை வெட்டுவது அக்கால வழக்கம். ஆட்டைக் குளிப்பாட்டி அதன் நெற்றியில் திருநீறுபூசி சந்தனகுங்குமப் பொட்டுகள் வைத்து அலங்கரித்து மாலை போட்டு இழுத்துவருவார்கள்.
ஆடு, ராஜநடை போட்டு மகிழ்ச்சியாகவரும். தன்னை வெட்டப் போகின்றார்கள் என்பது ஆட்டுக்குத் தெரியாது. வெட்டுகின்ற களத்துக்கு ஆட்டைக் கொண்டுவருவார்கள். வெறியாட்டுச் செய்து வெட்டுகின்ற பூசாரி கையிலே ஒரு வாள் வைத்திருப்பான். வாளோடு வேப்பம் குழைகளையும் சேர்த்துப் பிடித்திருப்பான்.
பூசாரி ஆட்டை வெட்டுவதற்கு முன் தெய்வம் ஏறப்பெற்றவனாக உருவந்து ஆடுவான். அதை வெறியாட்டு என்பர்.
பூசாரி உரு ஏறப்பெற்றவனாக ஆடும்போது அவனது கூர்வாளோடு
- 37

Page 21
ഥGb 10 - 2009 (, (, ടൺ (ിധ {്ടിഭ
பொருந்தியிருக்கும் வேப்பங்குழைகளை அந்த ஆடு எட்டி எட்டிக் கடித்து மகிழும்.
தன்னை வெட்டப் போகிறான் பூசாரி என்பதையோ, இன்னும் கணப்போதில் கொல்லப்படப்போகிறோமே என்பதையோ அறியாத கொலைக்களத்து ஆடு, எட்டி எட்டி வேப்பங்குழைகளைக் கடித்து மகிழ்வது போன்ற நிலையில்லாத மகிழ்ச்சியை அறிவுடையார் விரும்புவதில்லை என்று உலக இன்பம் பற்றிக் கூறுகிறார் நாலடியார்ப் Լյ6Ù6)յfr.
வெறிஅயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர் தயங்க
மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யார்கண் இல.
(நாலடியார் - 16)
இன்றைய எங்கள் நிலையை இவ்வளவு தீர்க்க தரிசனமாகச் சொல்லிவிட்டாரே புலவர்.
காட்டிலே கொடிய விலங்கொன்று துரத்த தப்பி ஓடிவந்த ஒருவன் பாழ்ங்கிணற்றுக்குள் விழ்ந்தானாம். தெய்வாதீனமாக மரவேரொன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கீழே பார்த்தானாம். நீருக்குள்ளே கொடிய விஷப்பாம்புகள்.
மேலே ஏறினால் கொடிய விலங்கு. கீழே விழுந்தால் விஷப்பாம்புகள். செய்வதறியாது திகைத்துத் தொங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பக்கத்திலே இருந்த மரத்திலிருந்து தேன்வதை சிதைந்து தேன் சிந்துவதைக் கண்டு நாக்கை நீட்டித் தேனைச் சுவைத்தானாம். s
இந்த நிலையில்தான் மனித வாழ்க்கை என்றனர் சிலபுலவர்கள். குருடனைப் பார்த்து ராஜவிழி விழிக்கச் சொன்னது போல பலர் எம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள். குருடன் எப்படி ராஜவிழி விழிப்பது.
கிழிந்த சிறு கோவணத்தோடு குளிரிலே கிடந்து நடுங்குபவனைப் பார்த்து உடுத்தியிருப்பதை அவிழ்த்துப் போர்த்திப்படு, இழுத்து மூடு என்றால் அவன் என்ன செய்வான்.
இன்றைய அவல நிலையை அண்மையில் வவுனியாவில் வெளியிடப்பட்ட நலமுடன் என்ற மனநலத்துறை சார்ந்த புத்தகத்திலே டாக்டர் சிவதாஸ் அவர்கள் அருமையாக வெளிப்படுத்தியிருந்தார். “இரண்டு கைகளையும் மனிதாபிமான மீட்புப் பணியில் இழந்த பிஞ்சுப் பாலகனைப் பார்த்துப் பரிதவித்த அவர் சொல்கிறார் இந்தப் பாலகனிடம் இனி யாரும் ஆயுதங்களை வழங்கவும் முடியாது. இவனால் யாருக்கும் புள்ளடியிடவும் முடியாது.”
காலத்துயரைக் காலம் ஆற்றட்டும். நாமும் நம்மாலான பணி செய்வோம்.
O
-38 -

மாருதம் 10 . 2009 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கைகள் உண்டு கால்கள் உண்டு
-கந்தையா ரீகணேசன்
23.11.2008இல் வவுனியாசாமிசிறுவர்இல்லமானவர்களால்நடிக்கப்பட்டது வட்டத்தின் uவது
ஆண்டுவிழாவிலும் மேடையேற்றப்பட்டது நடிகர்கள் மேடைக்கு வருதல் மேடையில் அமர்தல் நித்திரை கொள்ளுதல்
பாடல்: பொழுதும் விடிந்தது புவனம் விழித்தது.
உழுது வாழ்ந்திடும் உயர்வோர் விழித்தனர் பமுதில்லா வாழ்வு பக்குவமாய் சேர்ந்திட அழுகை அற்ற உலகு அவனியில் உதித்தது.
அசைவுடனும் சந்தத்துடனும் பாடுதல்
ரவிசாந் விஜயரூபன் அஜித் விஜய செந்தூரன் விஜய மிதுவடின்
ரவிசாத் செந்தூர் அஜித் ഥിgഖങ്ങ ரவிசாந்
காலை விடிந்து விட்டது எல்லோரும் எழும்புங்கோ இப்படி படுத்துக்கிடந்தால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது. எனக்குப் பஞ்சியாயிருக்கு என்ன உனக்குப் பஞ்சியாயிருக்கோ எனக்குக் கால் வலிக்குது
என்ன கால் வலிக்குதோ
எனக்குத் தலையிடிக்கிது ஐயா!
ம் சரியாப்போச்சு இப்ப எல்லோருக்கும் கதை சொல்லப் போறன்.
கதையா! அப்ப எனக்கு நல்ல சிரிப்புக் கதையாச் சொல்லுங்கோவன். ஐயா! எனக்கு சண்டைக் கதையாச் சொல்லுங்க முதலில் எழும்பி முகத்தைக் கழுவுங்கோ.
பாடல் ( லல்லல்.) முகம் கழுவுதல்
விஜய செந்தூர் விஜய UFTL6).
யார் பைப்பைப் பூட்டாமல் வந்தது ஐயா மன்னித்து விடுங்கோ சரி எல்லோரும் வழிபாட்டிற்குச் செல்வோம். உலகெல்லாம் வாழ்விக்கும் சாயிசா எங்கள் நிலமைகளை சீர்செய்யும் சாயிசா கலகலப்பாய் வாழ்ந்திடவே சாயீசா பலமருள்வாய் எமக்கெல்லாம் சாயிசா ஒடி ஒடி உழைத்திடவே சாயிசா
-39 -

Page 22
LLLLLLE L SSS 0000S LMS TMS TTMML uLLTTT LTTMM
விஜய
UTL6) விஜய
ரவிசாந்
பாடல்
விஜய பாடல்
பார்த்தி செந்தூர் அஜித் மிதுவடின் செந்தூர் கபில் செ.சகிக் செந்தூர் உதயா பார்த்தி கபில் விக்கி
தேடி உமை சரணடைந்தோம் சாயிசா ஆடிப்பாடி வாழ்ந்திடவே சாயிசா கூடி நாமும் கும்பிடுவோம் சாயிசா
எல்லோரும் உணவுக்கூடத்திற்குச் சென்று தேநீர் குடித்து விட்டு வாருங்கள். (லல்லல்.) தேநீர் குடித்து முடித்தல் ஒருத்தரும் தேநீரை மிச்சம் விடக்கூடாது. கண்ட இடத்தில் ஊற்றக்கூடாது துப்பக்கூடாது. தேநீர் கப்பைக் கழுவிவிட்டு புத்தகம் எடுத்து வாருங்கள் பைப்பை பூட்டுங்கோ (எல்லோரும் படித்தல்) படிக்க வேண்டும் படிக்கவேண்டும் தம்பி நல்லாய்ப் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் தம்பி (02) முடிக்க வேண்டும் கடமைகளைத் தம்பி நன்றாய் முடிக்க வேண்டும் கடமைகளைத் தம்பி கைகளுண்டு கால்களுண்டு தம்பி - இரண்டு கண்ணுமுண்டு கருத்தும் உண்டு தம்பி மேலே மேலே பார்த்து நீயும் ஏங்காதே உன் மேன்மைகளைப் பறைசாற்று தம்பி (02)
(படிக்க வேண்டும்) சரி எல்லோரும் புத்தகத்தை வைத்து விட்டு வின்)ளயாட வாருங்கள் கவடியடிக்கக் கவடியடிக்கக் கைகால் முறியக் கைகால் முறியக் காலுக்கு மருந்து தேடிக்கட்டு தேடிக்கட்டு தேடிக்கட்டு (2) ஆலையிலே சோலையிலே ஆலங்காட்டிச் சந்தையிலே கிட்டிப் புல்லும் பம்பரமும் கிறுக்கியடிக்க UT6)T(3 UT6)T(B) JIT6)TB ஐயோ! என்னத் தோண்டியெடுங்கோ பேயோ? பிசாசோ? பூதமோ (கிட்டப் போய்ப் பார்த்தல்) டேய்! கவனமடா செந்தூர் பாதுகாப்புக்கு தடியை கொண்டுபோடா ஒமோம், பொறடா பயமாவேற இருக்கிறது. அடேய்! இது ஒரு விளக்கடா நான் தான் அலாவுதீனின் அற்புத விளக்கு அலாவுதீனா? அற்புத விளக்கா?
- AO

மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பார்த்தி விக்கி சசி செ.சசி
செந்தூர்
9-35u JT பார்த்தி So g5u T பாடல்
பார்த்தி
செந்தூர்
பார்த்தி செந்தூர் மிது
பார்த்தி அஜித்
கஜீபன் பார்த்தி
கஜி
U(TL6)
ஓம்நான் அற்புத விளக்குத்தான். நான் கேட்டதெல்லாம் தருவேன். என்ன கேட்டதெல்லாம் தருவீரோ
சத்தியமாவோ அற்புத விளக்கே! எனக்கு ஒரு ஐஸ்கிறீம் தருவியோ? (மோட்டார் சைக்கிள் சத்தத்துடன்.) எனக்கொரு மோட்டார் சைக்கி தருவிரோ! ஹலோ யார் பேசிறது? அப்படி பேசுகின்ற போன் தருவீரோ?
உனக்கு எப்படிப்பட்ட போன் வேணும்?
செல்போன் கேட்பதை தருபவன் நான்தம்பி தம்பி நன்றாகக் கேட்டுக் கொள்ளும் தம்பிதம்பி பாட்டினில் சொல்லி விட்டேன் தம்பி தம்பி சட்டென்று கேட்டுவிடும் தம்பி தம்பி பட்டங்கள் பதவியென்ன தம்பி தம்பி தட்டாமல் கேட்டுவிடும் தம்பி தம்பி நான் கேட்டதெல்லாம் தருவேன் நீங்கள் விரும்பியதைத் தருவேன் அற்புத விளக்கே! எனக்கெண்டா விளையாட நல்ல விருப்பம் எனக்கொரு பற்றும் போலும் வேணும். என்னமாதிரி போலும் என்னமாதிரிபெட்டும் வேணும். எனக்கு ஆசுகு பெட் வேணும். எனக்கொண்டா ஒரு பிரச்சினை எனக்கு அந்த ராஜேஸ்வரி ரீச்சர் நிறைய Homework தாரா. நீ அதை எனக்குச் செஞ்சுதருவியோ? சரி செய்து தருகிறேன். எனக்கும் ஒரு பிரச்சினை ரோட்டில என்னடா எண்டா பிச்சைக்காரன் ஐயா பிச்சதா? அம்மா பிச்சதா? என்று ஒரே தொல்லை. நீ அவர்களிற்கு பணத்தைக் கொடுத்து பிச்சையெடுக்காமல் செய். ஓ! அற்புத விளக்கே நீ இங்கிருந்து போய்விடு. ஏன் நான் இங்கிருந்து போக வேண்டும்! ... مایعگ ... اگ ... اگ கடவுள் எமக்கு கைகள், கால்கள், கண், காது அனைத்தையும் தந்திருக்கிறார். போதாததற்கு சுயமாக சிந்தித்து செயற்பட மூளையையும் தந்திருக்கிறார். (எனவே அற்புதவிளக்கேநீ இங்கிருந்து சென்றுவிடு) ஆகவே நாம் அனைவரும் இன்றிலிருந்து உழைத்து வாழ்வோம். கைகளுண்டு கால்களுண்டு உழைத்து வாழுவோம் (ஒம்) மெய்யான உடம்பும் உண்டு மேன்மை கொள்ளுவோம் மந்திரத்தால் மாங்காய்கள் காய்க்க வேண்டாம் தந்திரத்தால் தரணியில் நாம் வாழவேண்டாம்
(ஒம்)
- 4 -

Page 23
மTr 2009 சமூக கல்வி கAE இலக்கிய அரிவாக
உண்மையான உழைப்புடனே முயற்சி கொள்வோம் பண்புடனே வாழ்வதற்கு பழகிக் கொள்ளுவோம் நல்ல நல்ல மனிதருடன் நட்புக் கொள்ளுவோம் பாடுபட்டு வாழ்வதிலே இன்பம் கானுவோம்.
(ஒய்) 03
உடப்பூர் வீரசொக்கணிணி இரு நூல்கள் (சிறுகதைகள், கவிதைகள்)
தெலோமியின் இரு நூல்கள்
state 4
 
 
 

பாருது i - : சமூக கவி காEL இலக்கிய சருசிாக
யான் கண்ட பல்துறை ஆராய்ச்சிப் பேரறிஞர் பேராசிரியர் கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை அவர்கள்
மு.கௌரிகாந்தன் - விரிவுரையாளர் வதேசிய கல்வியியற் கல்லூரி
1982ஆம் ஆண்டு நண்பர் பூரீகணேசன் (கலாநிதி) முதலானோருடன் யாழ் எய்ரான்லி வீதியிலுள்ள பட்டப்படிப்புகள் கல்லூரியிலே கலை முதற் தேர்வுக்காக தமிழை ஒருபாடமாகக் கற்றுக் கொண்டிருந்த காலத்திலே பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர் களைப் பற்றி அறியும் வாய்ட்பேற்பட்டது. அப்போது யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியிலே ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த திருசிமெளனகுரு (கலாநிதி பேராசிரியா ) அவர்கள் எங்களுக்குத் தமிழ்ப்பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்போது பேராசிரிய வேலுப்பிள்ளை அவர்களைப் பற்றியும் அவருடைய "தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்', 'தமிழ் வரலாற்றிலக்கணம்' ஆகிய நூல்களின் பயன்பாட்டைப்பற்றியும் கூறுவார். பரீட்சைத் தேவைக்காக அப்போது அவற்றை நாம் படித்தபடியால் அவற்றின் முழுமையான பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. ஆயினும் பேராசிரியரை நேரிலே சந்தித்து அவரிடமிருந்து பலவற்றை அறியவேண்டுமென்ற ஆர்வம் உள்ளுணர்வாக இருந்தது.
1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர் பேராசிரியர் யாழ்ப்பானப்பல்கலைக் கழகத்திற்கு மாற்றலாகி வந்து விட்டா என்ற செய்தியறிந்து அவரை தென் புலோவியில் உள்ள அவரது "சிங்கை நகள்' இல்லத்தில் சந்தித்தேன். இவரது பெயர் பழைய பெயர் என்றபடியால் வயது முதிர்ந்தவராக இருக்கக் கூடும் என்று எண்ணிக்கொண்டு மேலங்கியின்றி இளமையாக வெள்ளை வேட்டியுடன் வெளிவிறாந்தையில் வாசித்துக் கொண்டிருந்த பேராசிரியரிடமே "பேராசிரியர் வேலுப்பிள்ளையைக் காணவேண்டும்' என்று தெரிவித்ததும் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு எழுந்து "இப்படி இருங்கள் வருகிறேன்" என்று கூறிவிட்டு மேலங்கியை அணிந்து கொண்டுவந்து என்னைப்பற்றி விரிவாக விசாரித்து விட்டு எனது எதிர்கால இலட்சியத்தைப்பற்றிக் கேட்டார். நான் "தமிழ் படிக்கவேண்டும்" என்றேன். பரீட்சைக்குப் படிப்பது அறிவுக்குப படிப்பது தொடர்பாக வயது, அனுபவம். தகுதி வித்தியாசம் பாராது நீண்ட நேரம் நானாக எழுந்து வரும் வரை எவ்வித சலிப்புமின்றி பயனுள்ள கருத்துக்களைக் கூறியிருந்தார்.
பேராசிரியரின் வழிகாட்டலின்படி அவரது பலநூல்களையும் கிடைக்கும் நேரமெல்லாம் கருத்தூன்றிப் படிப்பேன். பேராசிரியரிடம் நேரிலே படித்தவர்களிடம் அவரது கற்பித்தலைப் பற்றிக் கேட்டபோது சிலர் ஒப்பீட்டுரீதியில் அவரது விரிவுரைகளைவிட அவரின் எழுத்துக்கள் அற்புதமானவை என்று தெரிவித்தார்கள். மானவர்களுக்கும் ஏனையோர்க்கும் உதவக்கூடியவை அவள் நூல்கள் தாம்,
-4 -

Page 24
LLLCLTHTT Y SK000S KuKLMMS YTMTTS TKLL LLkuTTMT sukM eeeeLL
மரபிலக்கணம் மொழியியல், இலக்கியவரலாறு, சாசனவியல், சமயம் போன்ற பலதுறைகளில் பேராசிரியர் ஆழமான அறிவும் ஆர்வமும் உள்ளவர், "தமிழ் வரலாற்றிலக்கனம்' (1966, 1979, 2007). "தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்' (1989, 1978, 1999) "சாசனமும் தமிழும்" (1971) ‘தமிழர் சமயவரலாறு' (1980, 1985) "Ceylon Tamil Inscriptions Part 1 & Part II', 'Pandya Inscriptions - A language Study', 'A study of the Dialects of Inscriptional Tamil Girlsl Sir sigifu நூல்களில் குறிப்பிடத்தக்கவை.
கலாநிதி வேலுப்பிள்ளை மரபிலக்கணத்திலும் மொழியியலிலும் பெற்ற தேர்ச்சியினை இவருடைய தமிழ் வரலாற்றிலக்கணம் நூலில் கண்டு கொள்ளலாம். இந்நூல் வரலாற்று மொழியியலின் (Historical Linguistics) பார்பட்டது. தொல்காப்பிய, பவனந்தியார் தொட்டு ஆறுமுகநாவலர் வரையுள்ள இலக்கண கலைஞர்களதும் இலக்கண உரையாசிரியர்களதும், பேராசிரியர் ரா.சீனிவாசன், மு.வரதராசன் வையாபுரிப்பிள்ளை போன்ற மொழியியலாளரகளதும் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்துப் படிப்பதற்கு இந்நூல் துனைசெய்கிறது. தஞ்சைப் பல்கலைக்கழக சிறப்பாய்வாளர் பண்டிதர் க.வீரகத்தி (1922 - 1996) அவர்களின் "பிற்கால இலக்கண் மாற்றங்கள் எனும் ஆய்வு நூலுக்கு பேராசிரியரின் நூலே முன்னோடி எனலாம்.
வேலுப்பிள்ளை அவர்களின் அரிய சாதனையினை எடுத்துக்காட்டும் அடுத்த நூல் "தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் என்பதாகும் தமிழிலக்கிய வரலாற்றைப் பகுப்பாய்வு செய்வதிலே ஒரு புதுமையினை இந்த நூல் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழரின் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு சிந்தனைபூர்வமாக காலங்களைப் பகுத்துத் தந்துள்ளார்.
தமிழோடு தொடர்புடைய கலைகளைப் பயில்வார்க்கு இன்னொரு முக்கிய நூல் இவரின் சாசனமும் தமிழும் என்பதாகும். சாசனக்கல்வி எவ்வகையில் தமிழ்க் கல்விக்கு உதவுகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இது அமைகிறது. இங்கையில் விரல்விட்டு எண்னக்கூடிய சாசனவியல் அறிஞர்களில் முதன்மையானவராக பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை நிகழ்கிறார். இவர் இத்துறையில் பிரகாசிக்க வழிகாட்டியவர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை (1903 - 1968) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “சாசனமும் தமிழும் நூலைக் காண்பது அரிதாகிவிட்டது. இதன் மறுபதிப்பு வெளிவர வேண்டியது அவசியத் தேவை.
பேராசிரியருடைய இந்துசமயம் தொடர்பான விரிந்ததும் ஆழமானதுமான அறிவினையும், உளவியல் அறிவினையும், தமிழ்ச் சைவப்பற்றையும் ஆற்றல்மிக்கதும் கவர்ச்சியானதுமான தமிழ் உரைநடையினையும் கொண்ட இன்னொரு நூல் "தமிழர் சமய வரலாறு. இந்த நூலில் இந்துசமய பகுத்தறிவுக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றது. இயன்றளவு சமய நம்பிக்கைகள் சிதையாதவகையில் கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சுருங்கக் கூறின் காலத்தின் தேவையுணர்ந்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
一单晶一

MTMT C S aa0LLYS Kuee LMTTS YLLMLL YKLTTkM BMMMM
பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் பேராதனை, யாழ்ப்பாணம், சுவீடன், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலே பணியாற்றிய பெருமைக்குரியவ1 தமிழத்துறையிலே கடமையாற்றிய காலத்தில் இரண்டு காலநிதிப்பட்டங்களைப் பெற்ற இவருக்கு மூன்றாவது கெளரவ இலக்கிய கலாநிதிப்பட்டத்தை இவரது 80ஆவது வயதிலே இவர் பணியாற்றிய HTTT SG LTYtLLL SLLLLLLmLLLSLLLL CCTTSlLTTmT aTTTTTT S TTSTTTTLLL குறிப்பிடத்தக்கது.
ஞானசம்பந்தருடைய சமன. பெளதத கண்டனம், நாவுககரசருக்கு சைவத்தில் உள்ள இடம், சுந்தரருடைய சைவம பற்றிய பார்வை, மணிவாசகருடைய பெளத்த கண்டனம் பற்றிய ஆய்வு என்பனவற்றை உள்ளடக்கியவகைபிலே இவருடைய ஆங்கில மொழிமூலமான ஆய்வுக்கே மூன்றாவது கலாநிதிப்பட்டம் கிடைத்தது.
தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வாழ்ந்து வரும் பேராசிரியன் ஆவேலுப்பிள்ளை அவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமது பவளவிழாவைக் கண்டுகளிக்க உள்ளார் அதற்கிடையில் அவரால் பல்வேறு சஞ்சிகைகளிலே எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவில் வெளிவரவேண்டும் பேராசிரியர் தமது தாயகத்திற்குத் திரும்பி தமிழ்ப்பணியாற்ற அன்புக்கரம் நீட்டி அழைத்து நிற்கின்றோம்
பேராசிரியர் ஆ.

Page 25
YMKKK L S KLLL0 KKTT S TTkMMS TTMku OLLeTLkT LLuLTu MSY
பதிவு - 1
மாருதம் இதழ் 19 பற்றி தினக்குரலில்
- ஜெமதுவந்தி -
புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு களமைத்துக் கொடுக்கும் மாருதம் சித்திரை - ஐப்பசி 2008 ஒன்பதாவது அரையாண்டு இதழ் பல கலை, இலக்கிய சமூக கல்விசார் படைப்புகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. பண்டித வ.சு.இராஜ ஐயனாரின் அட்டைப் படத்துடன் 80 பக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.
1899ஆம் ஆண்டு வவுனியாவில் பிறந்த வ.ச.இராஜ ஐயனாரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களையும் சிறப்புக்களையும் பற்றிப் பேசுகிறார்கள் சித்தாந்தன், அடுத்து வன்னிப் பிரதேச பல்கலைக்கழக அறிஞள் வரிசையில் சிறப்பிடம் பெறும் பேராசிரியர் நா.சுப்பிரமணியனின் தமிழ்பணி பற்றி அலசுகிறார் மு.கெளரிகாந்தன்,
கவிதைகளின் வரிசையில் சோபவின் "பன்னல், எஸ்ரி அரசுவின் "பாவனை பண்ணுதல், வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின "பெண்ணே நீ அடிமையாகாதே. என்.சுவேதனின் "மனதில் உறுதி வேண்டும்'. சுதர்ஷிகாவின் "பாரதி, அகளங்கனின் "கவிதைகள் ஏழு நாசரோஜாவின் "தோல்வி, அபேனாட்டின் "உன்னைக் காணவில்லை' இளைய நம்பியின் "புரியவில்லை' நா.தியாகராசாவின் "நல்லா சான்களே, சு.சிவதாஷினியின் "நட்பிற்குள் ஏன் வேலி' , காதல் செய்' போன்றவை சிறப்பிடம் பெறுகின்றன.
முநந்தகுமாரின் "என்ரை அப்பாவும் என்னோட. சிவதரவழினியின் 'ஏன் இப்படிச் செய்தாய்', தி.காயத்திரியின் "ரீச்சர் வாங்கோ' க.தர்சிகாவின் சுமங்கலி" ஆகிய சிறுகதைகள் சிறப்பாக களம் கண்டிருக்கின்றன.
வன்னியின் முதல் பாவேடாக வெளிவந்திருக்கும் "கவிச்சரங்கள் 1, 2, 3 பற்றியதோர் பார்வை தொடர்ந்து நாடகக் கலைஞர் சந்தியா யோசை அந்தோனிப்பிள்ளையுடனான் பேட்டியும் புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டத்தின் விருது பெறும் கலைஞர்கள் வரிசையில் நாடகக் கலைச்செல்வர் பி.ஏ.சி.ஆனந்தராசா, அருனா செல்லத்துரை ஆகியோரது குறிப்புகள் இடம்பெறுகின்றன. இறுதியாக பதிவுகள், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினூடாக வெளியீடு செய்யப்பட்ட நூல்கள் பற்றிய விபரங்களுடன் நூல் இனிதே நிறைவு கண்டிருக்கிறது. இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு களமமைத்துக் கொடுக்கும் மருதம் இதழின் பணியை தமிழ் உலகு தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
一直B一
 

01. யாழ்தேவி.
(?, ജ_{16|61
D3. FILLTil
நாயுமானா
()4, Gratitute
(5, ஏக்கம்
06. Li'll
07. உயிர்ப்பு
18. "HJ|| || ||
MTuTT LS S 0LL0LCS KKMS MTTekS LkLLL YTTTMM MBaMTMML
வவுனியாவில் குறும்படங்கள்
- வளவன் -
இதுவே வவுனியாவில் தயாரிக்கப்பட்ட முதல் குறும்படம். இதன் பிரதியாக்கத்தை தமிழ்மணி அகளங்கன் எழுதியிருந்தார். அருனா செல்லத்துரை இதனை நெறிப்படுத்தி படத்தொகுப்பும் செய்திருந்தார். புவனேஸ்வரன், (பொனக்ளஸ்) படப்பிடிப்பைச் செய்தார், வவுனியா நகரசபை இதனைத் தயாரித்தது. யாழ்ப்பான பல்கலைக்கழக வவுனியா வளாக கலை கலாசார மன்றத்தயாரிப்பில் விரிவுரையாளர் கந்தையா ரீகணேசன் நெறிப்படுத்திய குழந்தை ம.சண்முகலிங்கத்தின் உறவுகள் தொலைக்காட்சி
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வவுனியா வளாக கலை கலாசார மன்றத் தயாரிப்பில் தொலைக்காட்சி மேடை நாடகம், குழந்தை ம.சண்முகலிங்கம் பிரதி செறியாள்கை கந்தையா ரீகணேசன் தமிழ்மணி அகளங்கனின் செஞ்சோற்றுக் கடன் என்ற வானொலி நாடகம் திரு.சு.பூபாலசிங்கம் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு திரு கிருஷ்ண குமார் அவர்களால் நெறியாளுகை செய்யப்பட்டு தயாரிக்கட்பட்டது. இது ஒளிபதிவு செய்யப்பட்ட நாடகம் Elbtal-Tir, வடமாகான கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச் சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தயாரிப்பு கதை (மூலக்கரு) பண்பாட்டலுவல்கள் தினைக் கள உதவிப் பணிப்பாளர் திருமதி.என்.ரீதேவி. திரைக்கதை வசனம் நெறியாளுகை கந்தையா பூரீகந்தவேள். உதவி மாணிக்கம் ஜெகன், பாடல்கள் தமிழ்மணி அகளங்கன், மாணிக்கம் ஜெகன் இசை கந்தப்பு ஜெயந்தன் படப்படிப்பு புவனேஸ்வரன் (பொனெகளt) கதை, பாடல், நெறியாளுகை ஒளிப்பதிவு தயாரிப்பு, படத்தொகுப்பு சுபாஸ் (பொன்வீடியோ) இசை கந்தப்பு ஜெயந்தன், இது வடமாகான பண்பாட்டலுவல்கள் அமைச்சு நடாத்திய குறும்படப் போட்டியில் Iம் இடம் பெற்றது. மேடை நாடகம், ஒளிப்பதிவு செய்யப்பட்டது. தயாரிப்பு விபுலம் அரங்கியற் கலைக் கழகம, நெறியாளுகை கந்தையா பூரீகந்தவேள், (இன்னும் வெளியிடப்படவில்லை) கதை, நெறியாளுகை தயாரிப்பு சுவரதகுமார் இசை கந்தப்பு
- "-

Page 26
LMMMLeu 0 LLL000S TMMS ekkMMS TLLM LLukLeTe BekMM
ஜெயந்தன், பாடல் த.பிரதாபன் ஒளிப்பதிவு சுபாஸ் (பொன்வீடியோ)
09. பள்ளிக்கூடம் கதை, நெறியாளுகை, கந்தையா ரீகந்தவேள் உதவி மாணிக்கம் ஜெகன பாடல்.த.பிரதாபன், இசை கந்தப்பு ஜெயந்தன். விபுலம் அரங்கியற் கலைக் கழக வெளியீடு (கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது)
I (), if G E.C.கிரியேசன்ஸ் தயாரித்தது. இயக்கம் சந்துரு.இசை சாள்ஸ்
சவரிமுத்து 11. நடு தயாரிப்பு, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் உதவி
வவுனியூர் இரா உதயணன், நெறியாளுகை வினோத (இன்னும் வெளியிடப்படாததால் முழுமையான தகவல்கள் தரப்படவிலலை.
இவை வவுனியாவின் குறும்பட வளர்ச்சி பற்றிய ஆரம்பத் தகவல்க் குறிப்புக்களே. அடுத்த மாருதம் இதழில் இது முழுமை பெறும் மேற்குறித்த குறும்படத் தயாரிப்பாளரகள் முழுமையான தகவல்கள் தந்தால் உதவியாக இருக்கும்.
நன்றி.
வவுனிWவில் வெளிவந்த குறும்படங்கள்
புளி மான்கரிந்தார்.
பள்ளிக்கூடம்
-- தி: இ : '
- F = f =" - ===
sa tini=عي El TIT
=====
சிட்டு
- 3
 
 
 

|[[F 10 - 2.3 ± (! (I ഋഷി (ടി
வலையில் பட்ட மான்
- சிவநெறிப் புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி -
அலை அலைபாய் மக்களெல்லாம்
அலைந்துலைந்து வந்ததுரன் தொலைநோக்கில் லாததனால்
தொகுத்ததுவம் துன்பமெல்லாம் al 6JTIGI ilegi(LLLL LICITEăIELIIT GÜ.
வளபாய்ச்சிக்கி அவரிருந்தார் தலையதுபோகும் என்று கண்டார்
தடையினைமீறியே இங்குவந்தாள்.
(வேறு)
வந்தவர் வந்தார் வளமுடனே
வாழ்க்கையை வாழ்ந்திட வழியில்ேைப்
பந்தமும் பாசமும் உடையவரும்
பலநாட் பார்க்க முடிகுவதோ
அந்தோ இறைவா நீதுண்ைபாம்
என்றே அவரும் வாடுகின்றார்
இந்தா என்று அரசுதவி
அளித்திட வேண்டும் இவர்களுக்கே
இவர்களுக் கென்றே இடமுண்டு
இருப்பிடம் செல்ல விடவேண்டும் அவர்களுக் குள்ள நிலங்களிலே
ஆற்றலைக் காட்டி உயர்ந்திடுவார் தவறென்ன செய்தார் இவர்களுமே
தண்டிக்கப் படவே கூடாது புவர்கள் யுவதி ஆனவரும்
உயர்ந்திட வேவழி காணவேண்டும்
வேண்டும் வேண்டும் கல்வியென்று
விழுந்து விழுந்து படித்தபின்னே ஆண்டுகள் போவது தானும்கண்டு
" அவதிப் படுகின்றார் மனத்துளஇன்று கூண்டில் இருந்த குருவியென
- 4일 -

Page 27
மருதம் 1 -2000 சமூக கங்வி கரை இருக்கிய சநifiாக
கொடுமையுள் நீங்கி வந்துவிட்டார். பாண்டித் தியம்பார்க்க பிள்ளைகளும்
பல்கலைக்கழகம் செல்லவேண்டும்.
கண்ணிராறு உடையவரே
கடவுளே என்று கைதொழுதோம் கண்ணி ராறு உடையவராய்
கலங்கிட வைத்ததும் அவரதனோ வென்னி ராறு உடையவராம்
வேணிய னார்தம் திருமகனே விண்ணீர் ஆறு போல் வீழ்ந்து
வெந்து மடிய விடலாமோ
வவுனியாவின் வெளிவந்த
மழலை கீதங்கள்
புலம்பெயர் நாவலர் ஒன்று
zagrar Eyvini Advery
=岳曰一
 
 
 

பாருதம் 2 - 200: சமூக கருவி அகல இயக்கிய சநசிாக
நாமே
எமக்கென்றும்
||11|| பா சுமந்தார்கள்.? நெற்றிக் கண்ணிலிருந்தோ வானத்தில் தோன்றிய நட்சத்திரத்திலிருந்தோ ஒளிப்பிம்பமாகவோ தோன்றியவர்களல்ல, முதுகிலே சிலுவையைச் சுமக்கவும்
கன்னாம்பு அறையைக் குளிராக்கவும்
பட்ட மரங்களைத் துளிர்க்கச் செய்யவும் வரண்ட நிலத்தில் நதிகளை உற்பளிக்கவும் fili filo-E531TTTiiiiii (j-LigLLITT Jul. முட்கம்பிகள் எங்கள் முகத்தில் குத்தத்தான் செய்யும் பசியால் வயிறும் தாகத்தால் நாவும் வரளத்தான் செய்யும் புன்கள் வலிக்கும் பாதங்கள் நோகும்
உறவுகளின் இழப்பும் உணர்வும் உயிரை அளித்து துவம்சம் செய்யும் அடியும் உதையும் சுடுசொற்களும் கூட வதைக்கத்தான் செய்யும் கன்னிர் வரவில்லை என்பதால் அழுவதில்லை என்று
பாரும் அாத்தம் கொள்ள வேண்டாம் அதற்கும் அப்பால் நிற்கின்றோம்.
-5-
- முத்துமொழியான்
புதுமைகள் ஏதும் நிகழ்ந்து நாங்கள் மீட்சிக்கப்படுவோமென்றோ திடீரென்று எங்கள் அவதாரத்தை உணர்ந்து உம்பர் உலகத்தில் வைக்கப்படுவோமென்றோ கற்பனையில் திளைக்கவில்லை. இன்னமும் அந்த ஒரு துண்டு நிலமும் குடிசையும் முற்றத்துப் பாலைமர நிழலும். இதற்குளளேயே எங்கள் சொக்கமுண்டு, தேவ உலகுண்டு அங்கே
நாமே பிரம்மம் எங்கள் ஆன்மாவை அறிந்துகொண்ட ஒரு சாதாரன
தாயின் வயிற்றுக் குழந்தைகள் தான் நாங்கள்

Page 28
orb 10 - 2009 ep, Eb, 66 64u sõna
எவரெஸ்ட்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
குணத்திலே நீயொரு துரும்பு அன்பிலே நீயொரு அரும்பு முயற்சியில் நீயொரு எறும்பு விகடத்தில் நீயொரு குறும்பு நிஜத்தில் நியென்னை விரும்பு மனதிலே நீயெனக்கு தளும்பு கொடுப்பாயா நியெனக்கு மருந்து இல்லை விழுவாயா என்மேல் எரிந்து நினைக்கின்றேன் நான் என்னை மறந்து நினைவிலே நீயெனக்கு விருந்து
பெயரிலே நீயொரு ரகரம்
வீரத்திலே நீயொரு சிங்கம் நினைத்தால் புன்னகை அமரும் அதரம் என் மனதிலே நீ எவரெஸ்டு சிகரம்!
מוקשldש-ם
மேகமே நீ கண்ணி வடிக்கிறாயா பன்னி தெளிக்கிறாயா பொறு காலம் தீர்மானிக்கும் உரிமையை அப்போது உன் கண்ணிரும் பன்னிராகிவிடும்
அன்று
LD60)pu hair ஒவ்வொருதுளியிலும் அவள் முகம் தெரிந்தது இன்று
ー52ー
அபேனாட்
உதிரம் சொரிகிறது வா வரம் தா வலிமை தனைத் தர f 6oIII
எழு எழு நாளை விடியல் பூக்கட்டும்.

மாருதம் 10 - 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
- கயல்வண்ணன் வவுனியா
இல்லம் எங்கும் இன்பம் இல்லாள் மனது தங்கம் இல்லை என்ற சொல்லை இல்லா தொழிக்கும் மங்கை
அன்பு வெள்ளம் பாயும் அறிவு அங்கே ஆளும் பண்பு ஓங்கும் உள்ளம் பாசம் பரந்து வீசும்!
அயலும் உறவும் இவளின் உதவிக்காக ஏங்கும் உயரும் இவளால் ஊரும் ஒன்றுபட்டே வாழும்! இதயம் பூக்கும் இனிய இளைய கானம் பாடும் புதையலாகும் இல்லாள் பூந்தோட்டம் தந்த பூக்கள்!!
Ludié0)LD 595 Ugl60)LD பெருமை சேர்க்கும் பெண்மை வசந்தம் என்றும் இவளே வறுமை ஒழிக்கும் வங்கி!! சிறுகச் சிறுகச் சேர்த்து சிறப்பை வளர்க்கும் இல்லாள் வறுமை வந்தபோதும் வாடா மல்லிகை இல்லாள்!!!
- 53 -

Page 29
ഥh 10 - 2009 (, ( ( (ിധ ഭിക്കു
நான் கண்ட கனவு
ம.நிரேஷ்குமார் விரிவுரையாளர் ரீபாத கல்விக்கல்லூரி
ஏகாந்திர வெளியொன்றினூடாக சொர்க்கத்தை நோக்கிய என் பயணம் தொடர்கின்றது. நான் எனது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் விரைந்து கொண்டிருக்கிறேன். ஆங்காங்கே வானுயர்ந்து நிற்கின்ற மரங்களின் கனத்த மெளனம் ஒரு பயப்பிராந்தியை உண்டாக்குகிறது. எதிர்ப்படுகிறவர் முகமெல்லாம் “ஏனடா இந்தப் பக்கம் போகிறாய்?" என்று கேட்காமல் கேட்பது போன்ற ஆச்சரிய ரேகை.
“பிக்கப்' ஒன்று மின்னல் வேகத்தில் என்னைக் கடந்து செல்கிறது. NPHK 4004. ஓகோ இதில் செல்பவன் என் பிரதேசத்தை சேர்ந்தவன்! அவனைப் பின் தொடரும் நோக்கத்துடன் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரிக்கிறேன். அந்த வாகனத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. அப்படியொரு வேகம்!
“வேற்றுக்கிரக மனிதனாக இருப்பானோ?” அல்லது.
"பேய் பிசாசாக இருக்குமோ?”
ஏழு மணிக்குப் பிறகு வெளிக்கிட்டிருக்கலாம். இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றாது இருந்திருக்கும்.
இராட்சத சீப்புக்களால் காட்டு மரங்களை சீவி, உச்சி பிரித்து,வகிடெடுத்தது போன்ற, அகலம் குறைந்த தார் விதி கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு பரந்து செல்கிறது. காட்டுக்குள்ளிலிருந்து ஒலிக்கும் பறவையினங்களின் "கீச் கீச் ஒலி மகிழ்வையன்றி கிலியையே தருகிறது.
எருமை மாட்டுக் கூட்டமொன்று ஆடி அசைந்து, நடந்து வீதியைக் கடக்கிறது. நான் சட்டென பிறேக்கைப் பிடிக்க, ஒர் எருமை மாடு நின்று நிதானித்து என்னை முறைத்துப் பார்க்கிறது.
ஒரு காலத்தில் பச்சை வயல் வெளிகளாய் இருந்த இடமெல்லாம் காய்ந்து கருகி வெட்டை வெளியாய் கிடக்கிறது. வாய்க்கால் வழியே தண்ணி சலசலவென்று பாய்ந்தோடுகிறது. நீர் வளம் கொழிக்கின்ற பூமி. அப்படியானால் வாழைத் தோட்டங்களாலும், தென்னை மரங்களாலும் நிறைந்திருக்க வேண்டுமே! ஏதோ காரணங்களால் எல்லாம் வெட்ட வெளியாய் விரிந்து கிடக்கிறது.
ஒரு வேளை இஸ்ரேல் உருவாக முன்னர் பாலஸ்தீனமும், எரித்திரியா உருவாக முன்னர் எதியோப்பியாவும், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் யப்பானும் இப்படித்தான் இருந்திருக்குமோ?
அதோ அங்கே மனிதர்களின் நடமாட்டம். பச்சையுடையணிந்து ஏதோ புரியாத மொழியில் பேசுகிறார்கள். கைகளில் இயந்திரத் துப்பாக்கி, என்னைப் பார்த்ததும் அவர்களின் ஒரு பதட்டமும் பயமும் தொற்றிக் கொள்கிறது. விரல்கள் சுடும் வில்லில்
- 54 -

மாருதம் 10 - 2009 சமூக, கல்வி: கலை இலக்கிய சஞ்சிகை
தயாராக இருக்கிறது. நானும் என் காற்சட்டைப் பையைத் தொட்டுப்பார்க்கிறேன். எல்லாம் தயாராக இருக்கிறது. தேசிய அடையாள அட்டை, திணைக்கள அடையாள அட்டை இன்னும் ஏதேதோ அடையாள அட்டைகள்.
இப்போது ஏதோவொரு குடிமனை அண்மிக்கிறது. பெண்கள் சிலர் பற்றிக் லுங்கிகளை மார்புக்குக் குறுக்கே கட்டியிருக்கிறார்கள். நீரோட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கட்டுகள் தளர்நது, மார்பின் அழகுகள் தெரிவதைக் கூடக் கவனிக்காமல் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் வாலைக் குமரிகளும் பெண்களும், இயந்திரத் துப்பாக்கி வைத்திருந்தவனின் மொழியில் பேசிச் சிரிக்கிறார்கள். இந்த இயற்கை அழகில் மயங்கி, வேகத்தை குறைத்த நான் இயந்திரத் துப்பாக்கிக்காரனின் நினைவு வந்ததும் வேகத்தை அதிகரிக்கிறேன்.
பேரூந்தொன்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு பின்னால் வருவது கண்ணாடியில் தெறிக்கிறது. துலைக்கவசத்தை இழுத்து சரிசெய்தபடி வேகத்தை இன்னும் அதிகரிக்கின்றேன்.
இப்படியொரு வனாந்திரத்தைத் தாண்டி எங்கே சொர்க்கம் இருக்கப் போகிறது? “இடப் பிரச்சினை இல்லை.” "சுகாதாரப் பிரச்சினையில்லை.” “மக்களுக்கு மகிழ்வான வாழ்க்கை காத்திருக்கிறது. எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் இருக்கிறது. தீடீரென வீதி இரண்டு பக்கமும் திரும்புகிறது. நான் திகைத்து நிறுத்த ஒரு இயந்திரத் துப்பாக்கிக் காரன் அருகே வருகிறான். நான் தயாராக மறைத்து வைத்திருந்த அடையாள அட்டையை எடுக்கிறேன். அவன் புரிந்து வலப்பக்கம் சைகை காட்டினான் செல்லுமாறு. ஒன்றிரண்டு கட்டடங்கள் ஓரிருவரிடம் . பின்னர் மீண்டும் வனாந்தர வெளிகள்.? ஒ.இங்கிருந்த வனாந்தர வெளிகளைக் காணணவில்லையே..! உயர்ந்து வளர்ந்து நின்ற பாலை மரங்களும், முதிரை மரங்களும், வீரை மரங்களும் எங்கே? ஒன்றையும் காணவில்லை.
ஏராளமான பச்சையும், வெளுப்பு நிறமும் கலந்த கனரக வாகனங்கள் காவலரண்கள். பலர் பச்சை அரைக்காற்சட்டையுடன், கையில் துவாயுடன் பல் துலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கேயெங்கே சொர்க்கம் இருக்கப் போகிறது? போதும் இனி விழித்து விடலாமே என்ற எண்ணமேற்படுகிறது. வேண்டாம் இந்தக் கனவின் முடிவைப் பார்த்து விடலாம். மீண்டும் நடந்தது? அங்கேயிருந்த
புள் இனங்கள் எங்கே? மயில்கள் எங்கே? மான்கள் எங்கே? மரை இனங்கள் எங்கே? யானைகள் எங்கே? சிறுத்தைகள் கூட இருந்ததாகச் சொன்னார்களே? பண்டார வன்னியன் காலத்திருந்தே அவை இங்கேதானே வாழ்ந்து வந்தன. அவை எங்கே சென்றிருக்கும்.
ஒ.கொடிய நச்சுப் பாம்பும் கூட இங்கிருந்தனவே? அவை எங்கே சென்றிருக்கும்? வாழ்ந்த இடத்தை விட்டு அதிக தூரம் செல்லும் வழக்கம் பாம்புகளிடம் இல்லையே? அப்படியானால் அவை இங்கேதான் எங்காவது சுற்றிக் கொண்டிருக்குமா?
மோட்டார் சைக்கிள் விரைகிறது. மாபெரும் யுத்தப் பிரதேசம் கண் முன்னால்
-55
y y

Page 30
மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை விரிகிறது. யப்பான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘அமெரிக்கன் பேஸ் போன்றிருக்கிறது. யப்பான் போன்று தான் இங்கும் மக்களின் விருப்பம் கேட்கப்பட்டிருக்க மாட்டாது. காவலரண்களும், சிப்பாய்களும் பயத்தை ஏற்படுத்த விழித்து விடலாமா என்ற எண்ணமேற்படுகிறது. மீண்டும் இன்னும் கொஞ்சம் பார்த்து விடலாம் என்ற எண்ணமே வெல்கிறது.
அதோ அங்கே என்ன சனக்கூட்டம்? வரிசையாகக் காத்திருக்கிறார்கள்? ஒவ்வொருவர் கைகளிலும் பைகள் நெஞ்சின் ஏக்கங்கள்;முகங்களில் எதிர் பார்ப்புகளாய் தேங்கியிருக்கிறது. நானும் அவர்களில் ஒருவனாய் இணைந்து கொள்கிறேன்.
அவர்களின் பைகளை நோட்டம் விடுகிறேன். ஆடம்பரப் பொருட்களா அவை? ஊகூம். பாண் பருப்பு, கருவாடு, முருங்கைக்காய், தேயிலை, பால்மா, மண்ணெண்ணெய், ‘உணவுப் பிரச்சனை இல்லை எங்கோ கேட்ட ஞாபகம் இருக்கிறது. நான் மட்டும் தான் வெறும் கையனாக நிற்கிறேன். பரவாயில்லை. தேவைப்பட்டால் விழித்து விடலாம் தானே!
பல மணிநேரக் காத்திருப்பின் பின், இளம் யுவதிகள் சிலர், அன்ன நடையென அடியெடுத்து வைத்து வருகிறார்கள். அவர்கள் என் தாய்மொழியைப் பேசுகிறார்கள். அவர்களின் முகத்தில் புன்னகை ஒளி வீசுகிறது. மக்களை அண்மித்ததும், தமது முகங்களைக் கடுப்பாக்கிக் “பார்வையாளர்களுக்கு பின் பக்கத்தைக் காட்டக் கூடாது" என்கிறான்.
அந்த நேரத்திலும் ஓர் இளைஞன் பகிடி விடுகின்றான். பலரின் முகத்தில் புன்னகை தோன்றி மறைகின்றது.
நகைச்சுவையுணர்வும், நண்பர்களும் இருந்திராவிட்டால் எப்போதோ நான் இந்தப் பூமியை விட்டு மறைந்திருப்பேன் யாரோ ஓர் அறிஞன் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லியிருக்கிறான்.
அங்கே யார்? நான் பார்த்த இயந்திரத் துப்பாக்கி மனிதர்கள். வெறுங்கைகளோடு. நிராயுத பாணிகளாய். காத்திருந்த மக்கள் தயாராகி முண்டியடிக்கிறது.
ஒருவரையொருவர் முந்திச் செல்லும் முயற்சி.
காலை வாரும் முயற்சி.
காட்டி கொடுக்கும் முயற்சி.
எல்லாம் நடக்கிறது.
சீ என்ன மனிதர்கள் இவர்கள்.? எப்போது திருந்துவர்கள்? அல்லது திருந்தவே மாட்டார்களா? முழித்துவிட எண்ணமேற்படுகிறது. ஆனால். கண்களை மூடிக்கொள்கிறேன்.
இப்போது ஒவ்வொருவராக பெயர், ஊர், விலாசம் கேட்டுப் பதியப்படுகிறது. கையடக்கத் தெலைபேசிகளும் பறிக்கப்படுகின்றன. நானும் வாயில் வந்த சில விபரங்களைக் கொடுத்து 'டோக்கன் பெற்று கொள்கிறேன்.
புத்தம் புதிய முள்ளுக் கம்பியினால் நெருக்கமாக வரிந்து அமைக்கப்பட்ட ஒற்றையடிப் பாதையினுடாக உடம்பில் காயமேற்படாதவாறு லாவகமாக நடந்து அந்தக் காவலரணுக்குள் நுழைகின்றேன்.
கைகளை மேலே உயர்த்தச் சொல்லி, உச்சி முதல் உள்ளங்கால்வரை ஒரு தடவல். பின். உள்ளங்கால் முதல் உச்சிவரை ஒரு தடவல். என் மனைவி கூட
ー56ー

ാസ്ത്രമh 10 - 2009, 5p, ഓബ്, ബി ബ്ളu ിയമ
இப்படித் தடவியது கிடையாது.
‘தமிழரின் பாரம்பரிய உள்ளாடையான கோவணத்தைக் கைவிட்டது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது என்ற எண்ணமேற்பட என் உதடுகளில் புன்னகை மலர்கிறது. அவன் முறைத்துப் பார்த்ததை பொருட்படுத்தாமல் றோட்டை விரைவாகக் கடக்கிறேன். ஓ. என்ன அது? அங்கே மக்கள் கூட்டமொன்று முட்கம்பி தடுப்புக்கப்பால், முண்டியத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் முகங்களில் உறவுகளைத் தேடும் ஆவேசம் யார் இவர்கள் எந்த நாட்டின் போர்க்கைதிகள்? அவர்கள் பேசுகின்ற மொழி எனக்குப் பழக்கமான மொழியாக இருக்கிறதே? ஒ. அது என் தாய்மொழி. அப்படியானால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து கொண்டு வந்து இப்படி அடைக்கப்பட்டுள்ளார்கள்?
முட்கம்பித் தடுப்புக்கப்பால் ஓர் இளைஞர் கூட்டம் முண்டியத்துக் கொண்டு ஆவேசமாய்க் கத்தகிறது.
‘அண்ண ஆரத் தேடோணும்." “பெயரயும் நம்பரயும் தந்தால் கூட்டியந்துவிட நூறு ரூவா' “கூட்டியந்தாப் பிறகு காசத் தாங்கோ” “அலவுண்ஸ் பண்ணிக்க அம்பது ரூவா' யார் இவர்கள்.? புரியவில்லை எனக்கு முன்னால் வந்தவர்கள் அந்த இளைஞர்கள் நீட்டிய தாளில் பெயரையும் ஏதேதோ நம்பரையும் எழுதிக் கொடுக்கிறார்கள் அவர்கள் புள்ளெனப் பறந்தோடுகிறார்கள். கொடுத்தவர்கள் முகங்களில் ஏக்கங்கள். எதிர்பார்ப்புக்கள். தவிப்புக்கள். அப்பட்டமாய்த் தெரிகிறது.
“சேர் ஆரத் தேடோனும்? ஓர் இளைஞன் அதட்டலாகக் கேட்க, நான் சற்று விலகி, மார்புக்கு குறுக்காக கைகளைகட்டியபடி நிற்கிறேன். அந்த உறவுகளுக்கிடையிலான உரையாடல்களைச் செவிமடுக்கும் ஆவல் என் மனதின் ஒரு மூலையில் எட்டிப்பார்க்கிறது. “அண்ண குழந்தக்கு ஏதன் வேண்டவெண்டு போட்டான். அண்ணி மடீல வச்சுக் கொண்டிருந்தவா வெளிச்சம் வர சின்ன ஓட்டதான் கிடந்தது. படிரெண்டு வெடிச்சத்தம் கேக்க அண்ணி ரத்த வெள்ளத்தில மயங்கிப் போய்க் கிடக்கிறா. சின்னவன் துண்டு துண்டா சிதறிப் போய்க் கிடக்கிறான்.”
வெளியேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் இறையவனின் கருணையை எண்ணியோ என்னவோ அந்த இடத்திலேயே “பிரதட்டை’ செய்கிறாள். இன்னொரு பக்கம் பார்வையைத் திருப்புகிறேன். “அம்மா செத்தது கூட எனக்குத் தெரியாதடி தங்கச்சி” ஒரு தமக்கை நெஞ்சு விம்மி வெடிக்கிறாள். கட்டிப் பிடித்துக் கூட அழ முடியாத சோகம். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை ஓராயிரம் அம்புகளாய்த் தைத்து ரணகளமாக்குகிறது. அங்கே இன்னொரு தாய் கம்பியினூடாக கைகளை நுழைத்து கர்ப்பிணியான தன் மகளுக்கு ‘பணிஸ் ஊட்டுகிறாள் அவள் வயிற்றில் இருக்கும் அந்தப் பாலகன் இந்த கேடுகெட்ட உலகத்தைப் பார்க்க முன்னரே தன் தந்தையை இழந்து விட்டதை அவர்களின் வெறுமையான நெற்றி பறை சாற்றுகிறது. அவளது கண்களோ தண்ணிப் பஞ்சத்தை போக்கும் முயற்சியில் தாராளமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
ஓர் இளைஞன் ஆவேசமாகக் சொல்கிறான். “நீ கையெழுத்துப் போடாதயண. நான் வெளில வந்தாப் பிறகு எல்லாத்தயும் கவனிக்கிறன்” அந்தப் பெண்ணும் ஆமோதிப்பது போலத் தலையாட்டுகிறாள்.
-57

Page 31
LMOKTT HHS S uLLLES LTTL TLLTS TMMu MLMTTMM TMMMeMH
அங்கே ஒரு மூலையில். யார் அது? ஒரு கணவனும் மனைவியும் போலத் தெரிகிறதே! நான் இங்கிதம் கெட்டு அதனையும் செவிமடுக்கின்றேன். இருவரினதும் திருமணம் ஒரு பங்கருக்கருகே மரத்தடியில் நடந்த ஒருநாளில், திடீரென குண்டு மழை பொழியத் தொடங்கியதாம் திசைக்கொருவராய் சிதறியோடிய போது அவன் அவளையும், அவள் அவனையும் பிரிந்து தவறவிட்டு விட்டார்களாம். இப்போது தினம் தினம் முள்ளுக்கம்பியினூடாக சந்தித்துக் கொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ளதாம்.
அங்கே என்ன சல சலப்பு? பார்வையைத் திருப்புகின்றேன். பதின்மூன்று வயது மதிக்கத் தக்க சிறுமியொருத்தி, இரண்டாய் மடித்து கீழே குந்தியிருந்து "ஐயே அம்மா" என்று கத்துகிறாள். புரியாத இள வட்டம் சுற்றி வளைக்க, அந்தத் தாய் பட்ட வேதனை. இந்த உலகத்திலேயே எவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.
இன்னொரு புறத்தில், ஒரு தாய், முட்பத்தைந்து வயதிருக்கலாம் குழந்தையை கம்பி வேலிக்கு மேலால் தூக்கி, ஒரு முதியவரிடம் கொடுக்கிறாள். அந்தப் பிஞ்சு வயிறு ஒட்டி உலர்ந்து. என் நெஞ்சு வெடித்தது. நெலோமியின் ‘ஐந்து மணியாச்சா. கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.
அந்த முதியவர் குழந்தையை கட்டியனைத்து தன் முத்தத்தாலும், கண்ணீராலும் நனைக்கிறார். பேரனாக இருக்க வேண்டும்
பச்சையுடையணிந்தவன் அந்த முதியவரை ஏதோ சொல்லி மிரட்டுகிறான். அவர் கெஞ்சும் விழிகளால் அவனை மன்றாட்டமாகப் பார்க்கிறார், அவன் பொருட்படுத்தாமல் ஒற்றையைடி முட்கம்பிப் பாதையின் ஓரத்திற்கு அவரை இழுத்துக் கொண்டு வந்து விடுகிறான்.
பிள்ளையைக் கொடுத்த தாய் பதட்டமடைகிறாள். அவள் "அட்பா பிள்ளையைத் தாங்கோ' என்று கையை நீட்டிக் குளற. முதியவர் அவன் பிடியை உதறி. ஓடி வந்த பிள்ளையை கம்பி வேலிக்கு மேலால் கொடுக்கிறார். அந்த அவசரத்தில் பிள்ளையின் காலிஸ் முள்ளுக்கம்பி கிறிக் கிழித்து. அந்தப் பிஞ்சுப் பாலனின் செந்நிற இரத்தம் நிலத்தில் சிந்தி, பூமி செந்நிறமாகிறது.
"ஐயோ வேண்டாம் இந்தக் கொடுமை' என்று மற்றப் பக்கம் திரும்புகின்றேன். என் கண்களிலிருந்து தெறித்து விழுகின்ற கண்ணீரைப் பார்த்த ஓர் இளைஞன் "ஆர அண்ன தேடோனும். காசில்லாட்டியும் பரவாயில்லை" என்கிறான்.
நான் முடிவு செய்து விட்டேன். வேண்டாம் இந்தக் கனவு கனவென்றால் ஒப் இன்பம் ஊற்றெடுக்க வேண்டும் மனது ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும். மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும், நெஞ்சில் வேதனையையும், சொல்லவொனாத் துன்பத்தையும் கொடுப்பதென்றால் அந்தக் கனவே தேவையில்லை. கண்களை திறக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை பக்கத்தில் கையை நீட்டித் தேடுகிறேன் என் மனைவியையும் காணவில்லை. இது என்ன கொடுமை? நான் எங்கே இருக்கிறேன்? நான் கண்டது கனவில்லையா? உறுதிப் படுத்துவதற்காக என்னை நானே கிள்ளி பார்க்கிறேன்.
"ஆனந்தக் குமாரசாமி இடைத்துங்கல் நிவாரணக் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற அறிவித்தல் பலகை கண்களில் பளிச்சிடுகிறது.
O
- 58 =

HMMMOMM S0LL0HOS KKLkSYHkMLSS TTLMT LLkTTTT TCOHM LLLH
தனித்துவம்
- பா.அபூர்வன் -
39 LJJ LEYT GOT IDETI FIX-lstīstījis பனிப் பிரதேசங்களிலும் ஐஸ் கட்டியாகவும் பனித்துகள்களாகவும் திண்மமாகத் திகழ்வாய்
குளங்களிலும் ஆறுகளிலும் கடல்களிலும், கிணறுகளிலும் ஓடைகளிலும், நீர்த்தேக்கங்களிலும் தன்னிராய்
திரவமாகத் திகழ்வாய்
வான மண்டலத்திலோ fJ ITiiliJ ITE வாயுவாப் ப்ெப வருவாய்
முப்பொருளாக உன்னால் மட்டுமே (Li L LI JITI தன்னிகரில்லாத தன்னரே,
வவுனியாவில் வெளிவந்த இரு கவிதை நூலிகள்
[(§RS..ኞmm§
-
அழியாத Citā ī
---

Page 32
ഥ[b 10 - 2009 (, (ബ്, ടണ്ണ ജൂബിധ (
நவீன இலக்கியம் பற்றிய நோக்கு
சி.ஞானசுந்தரி'
தமிழ் மொழியின் வளர்ச்சிப் போக்கிலே காலத்தால் அழியாத செல்வமாக விளங்குவது இலக்கியங்களாகும். பண்டைய இலக்கியங்கள் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையைச் சித்தரித்தன. செய்யுள் வடிவங்கள் காதல், வீரம், கொடை, அறம், நிலையாமை புலவர்களின் வித்துவத் தன்மை, செருக்கு என்பவற்றை காட்டி நிற்கின்றன. அக்கால இலக்கியங்கள் “மரபு பேணப்பட வேண்டும்" என்ற தொல்காப்பியர் கூற்றிற்கிணங்க மரபை போற்றும் பண்புகளைக் கொண்டிருந்தன. சாதாரணமக்கள் அனைவருக்கும் விளங்கும் அளவில் அக்கால இலக்கியங்கள் இருந்ததாக கூறப்படவில்லை.
காலப்போக்கில் இலக்கியங்களில் மரபு மீறல் நடந்ததாக கூறப்படுகின்றது. இளங்கோ, திருத்தக்கதேவர் கம்பர், காரைக்காலம்மையார் போன்ற சிலரின் இலக்கியப் படைப்புக்கள் மரபுவழியினின்றும் சற்று விலகியுள்ளன. இவ்வகையில் இலக்கியங்கள் மாற்றம் பெற்று வந்திருப்பினும் பழமைக்கும் புதுமைக்கும் இடையே உடனடியாக மாற்றம் நிகழாது. ஒவ்வொரு காலப் பகுயிலும் நடப்பில் இருக்கின்ற பொருளாதார, அரசியல், சமுதாய அமைப்புக்களின் பிரதிபலிப்பாகவே இலக்கியச் சிந்தனைகளும் அமைகின்றன.
இலக்கியத்தின் தோற்றம், பண்பு, பாணி, பயன் என்பன குறித்துக் காலத்திற்குக் காலம் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதை எவரும் அறிவர்.
காலத்திற் கேற்ற வகைகள் - அவ்வக் காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை.
என பாரதியார் கூறுவார்
ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூற் செய்தி பிறிதொரு காலத்தில் மதிப்பிழந்து புறக்கணிக்கப்படுகின்றது. நவீன காலத்தில் கூறுவதை புதிதாக கூறுவதன் மூலம் இலக்கியம் படைக்கத் தலைப்படுகின்றது. புதுமையான உணர்ச்சிக்கு நவீன இலக்கியங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இலக்கியம் சந்தைப் பொருளாக மாற்றம் அடைகிறது. பண்டைய இலக்கியங்களனைத்தும் பெறுமதி கொண்டவை. நவீன இலக்கியத்தில் பெறுமதி அருகிவிட்டது. இலக்கியம் ஓர் இனத்தின பண்பாட்டை பேணும் பாதுகாவலன். நவீன இலக்கியங்களில் இப்பண்புகள் குறைவாகும். நவீன - 6O -

ഥb 10 . 2009 (, (ബി. ടബ് ജൂബിu gിയമ
இலக்கியங்கள் மாற்றங்களையே ஏற்படுத்துகின்றன. இதனால் சமுதாயத்தில் தீய செயற்பாடுகளில் மனிதனை ஈடுபடுத்தக் கூடியனவாக சில இலக்கியங்கள் அமைந்து விடுகின்றன. ,::4%میشہ اخ..............
மனிதப் பண்புகள் நவீன இலக்கியங்களில் குறைவாக இருந்தாலும், சமுதாய
விழிப்புணர்வு, ஆர்வம் ஏற்படுகின்றன என்பது மறுப்பதற்தில்லை.
2ھ بریج “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல " கால வகையினானே'
என்கிறது நன்னூல்.
பழையன கழிய புதிய பண்புகள் புகுந்தள்ளன எனக் கூறலாம். சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரசாரம் செய்யும் பண்புகளில் நவீன இலக்கியங்கள் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. நாவல், சிறுகதை, கவிதை என்பனவற்றில் இதனை இலகுவில் அறிந்து கொள்கின்றோம். பாரதி கூறுவது போன்று “எளியபதம், எளிதில் விளங்கும் தன்மை" கொண்டது நவீன இலக்கியங்கள். மக்கள் விரும்புதல், மக்களை கவருதல், சந்தைப்படுத்தும் இயல்பு, புதுமை போற்றும் பண்புகளை நவீன இலக்கியம் கொண்டுள்ளது.
நவீன இலக்கியம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல், பிரச்சினை, தேவைகளை அடைய வேண்டிய இலக்குகளை அடையவும், மக்களின் அபிலாசை, சமுதாயத்தை சீர்செய்யவும் தயங்கவில்லை. அரசியல், சமூக, சமய சீர்திருத்தத்திற்கு அனுகூலமான மனப்பான்மைகளை வளர்க்கும் பண்பு கொண்ட இலக்கியங்களும் தோன்றுகின்றன. யதார்த்த வாழ்க்கைச் சிக்கல், தனிநபர் போக்கு என்பவற்றையும் காட்டும் பண்பினை கொண்டுள்ளது.
நல்ல உணர்வுகள், பொதுப் பிரச்சனைகளைத் தீர்த்தல், நீதியை மதித்தல், அநீதியை எதிர்த்தல் போன்ற பண்புகள், ஏமாற்றம், கலக்கம், விரக்தி, சஞ்சலம், கோபம் போன்ற இறுதி முடிவுகளும் நவீன இலக்கியங்களில் காணமுடிகின்றது. எவ்வாறாயினும் மனிதப் பண்புகளை வளர்க்கும் தடமாக இலக்கியங்கள் திகழ வேண்டும். நவீன இலக்கியங்கள் மனிதனின் உயர்ச்சிக்கும், அவனது எதிர்கால உயர்வுக்குமான கண்ணாடியாகவும் அமைகின்றன.
தமிழ் அன்னைக்கு முத்தாரமாக வந்தவை இலக்கியங்கள். காலத்திற்கேற்ப புதிய வடிவங்களில் தோன்றி மனிதனை சீர்செய்யும் அழியாத செல்வங்கள் இலக்கியங்களாகும். இவை காலத்தின் சிகரங்களாகும். மக்களின் தேவைகளை அறிந்தே இலக்கியங்கள் காலத்திற்கு ஏற்ப தோன்றி மக்களை வாழ்விக்கின்றன. இனியும் வாழ்விக்கும்.
“நமக்குள் நல்ல விழுமியங்களை படிய வைப்பது இலக்கியமே”
- 6 -

Page 33
ub 10 - 2008 (, ബി. ടഞ്ഞബ ഭൂബാക്കിu ിട
முற்றத்துப் பூஞ்செடியே
ச.சிவதுர்க்கா
முற்றத்துப் பூஞ்செடியே காலையில் கண்விழிக்கும் போது 666ങ്ങ கவர்ந்திழுக்கும் அற்புதப்பொருளே!
எனது உள்ளத்திற்கு உவகையையும் கண்ணிற்குக் குளிர்மையையும் தாராளமாய் வழங்கி ஒரு நாட்பொழுதை - எனக்கு இனிமையாக்குவதும் நீதானே மழையில் மட்டுமல்ல வெளியிலும் வரட்சியிலும் கூட நீ எனக்காகப் பூத்துக்குலுங்கினாய் - ஆனால் நீ வரட்சியில் வாடும் போது நான்.?
என்குடிநீரைக் கூட
உனக்கு
வளர்நீராக்குவேன்
a 62

LLLLLL 0 S 0000S TTS TTtS TMLLL YLLTTMT TTMM
இலங்கையின் தமிழ் திறனாய்வு வளர்ச்சி
-UIT.& flesG)T -
திறனாய்வு என்பது தமிழ்ச்சொல், விமர்சனம் என்பது வடமொழிச்சொல். இப்பதங்கள் ஒரே பொருளைக் குறிக்கும். படைப்புக்கலையை அனுபவிக்கும் அதே மனத்திலிருந்து தான் திறனாய்வும் முகிழ்கின்றது. ஆயினும் பெரும்பாலன வாசகள்களிடம்
“இப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” “இது அவ்வளவு சரியாகப்படவில்லை” என்ற அடிப்படையிலேயே இந்த அரிய திறனாய்வக்கலை நின்றுவிடுகின்றது.
ஒரு சிலரே “அது ஏன் நெஞ்சைத் தொடுகிற்னது” “இப்படி இருப்பதால் என்ன குறை?" என விளக்கிக்கூற முற்படுகின்றனர். இந்த விளக்கம் முறையான பயிற்சியுடன் வெளிவரும் போது அதுவே திறனாய்வுக் கலையாகி விடுகின்றது. இலக்கியத்தை மாத்திரம் ஆராய்வதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. இந்த திறனாய்வு அந்த ஆராய்ச்சி அகலமாகவும், ஆழமாகவும் அமையவும் இந்தக் கலை துணை செய்கின்றது. புதிய இலக்கியங்களைப் படைப்பதற்கும். பல சமயங்களில் திறனாய்வு தூண்டுகோலாக அமைகின்றது.
இலக்கிய ஆராய்ச்சியில் நடுநிலையாக நின்று ஆராய்தல் மனப்போக்கிற்கு ஏற்பவும் பயிற்சிக்கும் ஏற்பவே திறனாய்வு செய்கின்றான். மேல்நாட்டில் அரிஸ்டோட்டில் இலக்கிய ஆராய்ச்சியினைத் தொடக்கி வைத்தார். ஈழத்தில் 19 ஆம் நூற்றாண்டளவிலேயே திறனாய்வுக்கலை முகிழ்த்தது. இக் காலக்கட்டத்தில் ஆறுமுகநாவலரே எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னோடியாவர். நாவலர் கந்தபுராணம் முதலியவற்றிக்கு உரை எழுதினார்.
வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளைஅவர்களும் சமயம் சார்ந்த தத்துவ நூல்களிற்கு உரைகள், நயம் கொழிக்க எழுதியுள்ளார். தனிப்புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வெளியிடும் மரபை ஈழத்து விமர்சனத்துறையில் தொடக்கி வைத்தவர் கனக செந்திநாதன். இவரது நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளில் இரசனை முறையின் பாதிப்பைக் காணலாம். கிறிஸ்துவ மினரி நிறுவனங்களின் தொழிற்பாடு காரணமாக அந்நிய நாடுகளில் கலாசாரம் பாரம்பரியங்களை அறிவதற்கும் அந்நியநாடுகளிக் இலக்கியப் பரிச்சயத்தைப் பெறுவதற்கும் ஒப்பியல் ரீதியான தேடலுக்கு வழி ஏற்பட்டது.
இதனால் கலாசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்களாக
கடமை ஆற்றியதால் ஏற்பட்ட பரந்துபட்ட இலக்கிய ஞானத்தினாலும் இலங்கைத் - 63 -

Page 34
மாருதம் 10 . 2009 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் அடுத்த பரம்பரை உருவாகியது. சுவாமி விபுலானந்தர் சி.கணபதிபிள்ளை, பண்டிதர் பொ.கிருணபிள்ளை, ச.மகாலிங்கம் பேராசிரியர் வி.செல்வநாயகம் என்போர் குறிப்பிடக் கூடியவர்கள். ஈழத்தில் சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள் நவீன திறனாய்வு முயற்சிகளுக்கு முன்னோடியாக உள்ளது.
பழந்தமிழ்க் கவிஞரின் சொல்நயம், பொருள் நயம் போன்றவற்றை எடுத்துக்காட்டி தனது விமர்சனத்தை மேற்கொண்டார். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். இவர்கள் இரசனை முறைத் திறனாய்வாளராகவே விளங்குகின்றனர். 1940களில் ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது. இவை பழைய சிந்தனை மரபிற்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாகவே தோற்றம் பெற்றன. புனைகதைத்துறையில் ஈடுபட்டோரே திறனாய்விலும் ஈடுப்பட்டனர்.
தாம் படைத்த இலக்கியங்களின் புதுமையை நியாயப்படுத்தி எழுதவேண்டிய அவசியம் இக்கால எழுத்தாளரிற்கு இருந்தது. இவர்களின் வெளியீட்டுக்கு ஈழகேசரி தளமாய் இருந்தது. சிவபாதசுந்தரம் இலங்கையர்கோன் அசெ. முருகானந்தன் போன்றோர் சமகாலப் புனைகதை இலக்கியம் பற்றி விமர்சனக் கட்டுரைகளை எழுதினர். நாடகம், பிறகலைகள் பற்றியும் விமர்சனம் செய்தனர். திறனாய்வுகள் செயல்முறை விமர்சனத்தின் அப்பால் கட்டுரைகள் ஆகும் இலக்கியத்தின் உருவம் உள்ளடக்கம் அதன் சமூகச்சார்பு ஆகியவை கொள்கை ரீதியாக இவற்றில் அமைந்தன.
இலங்கையர்கோன் அந.கந்தசாமி, கே.கணிே பேராசிரியர் க.கணபதிபிள்ளை அசெ.முருகானந்தன் என்போர் குறிப்பிடக் கூடியவர்கள் “வீரகேசரி, ஈழகேசரி, மறுமலர்ச்சி, தினகரன்' போன்ற பக்திரிகைகளும் பங்காற்றின. 1950-1960 வரை ஈழத்து இலக்கிய விமர்சன முயற்சி வளர்ச்சியுற்றது 1956 இன் பின் ஏறபட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய தனித்துவ சிந்தனை வளர்ச்சி பெற்றது. அதன் பின் இதனால் தேசிய இலக்கியக் கோட்பாடு வடிவம் பெற்றது.
1950களின் பிற்பகுதியிலிருந்து 1960களின் முற்பகுதி வரை ஈழத்தில் இலக்கிய மேடைகளிலும் பத்திரிகைகளிலும் தொடர்புசாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் இடம் பெற்றன. வாழ்வின் யதார்த்தபூர்வமான வடிவம் நாவல், சிறுகதையில் வெளிப்பட்டது. ஈழத்து இலக்கிய விமர்சனத்துறையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டை பிரசாரப்படுத்திய முன்னணி விமர்சகர்களே 1950-1960களில் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குவாதத்தை அல்லது மார்க்சிய முறையைப் பிரயோகித்தனர். கைலாசபதி சிவத்தம்பி போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள். கா.சிவத்தம்பியின் விமர்சன முயற்சிகள் பெரும்பாலும் வரலாறுகள் கொண்டவையாகவும் மார்க்சிய அழகியல் சார்ந்தவையாகவுமுள்ளன.
அ.ந.கந்தசாமி, இளங்கீரன், செல்வராசன் போன்றோரும் முற்போக்கு கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினர். இலங்கைத் தமிழ் இலக்கிய திறனாய்வுக்கலை
-64 -

ാസ്ത്രh 10 - 2009 (്യാ, btഖി, മഞ്ഞണ ബാമിu G
வளர இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்தறை 1950-1960களில் சிறந்த பணியாற்றியது. இதற்கு அடித்தளம் இட்டவர் பேராசியர் வி.செல்வநாயகம் பல்கலைக்கழகம் மூலம் தோன்றிய திறனாய்வாளர்களான க.கலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முருகையன் எஸ்.தில்லைநாதன் ஈழத்தில் தமிழ்க்கலைகள் இலக்கியங்கள் பற்றி ஆங்கில மொழி மூலமும் விமர்சனப் பார்வை செலுத்தப்பட்டு வந்தது. இதில் பேராசிரியர் சு.வித்தியானந்தன், க.கைலாசபதி. கா.சிவத்தம்பி, கே.எஸ்.சிவகுமரன் குறிப்பிடக்கூடியவர்கள்.
1960களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கை முன்வைக்கப்பட்டன இலக்கிய ஆய்வு, இலக்கியப்புலமை, இலக்கிய வரலாற்றுணர்வு வளர்ச்சிபெற்றன. “முற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர். எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், பிரபஞ்ச யதார்த்தவாதக் கொள்கையை முன்வைத்தார். 1960 இலக்கிய விமர்சனக் கொள்கைகள் ஈழத்தில் சித்தாந்த ரீதியில் வளர்ச்சியுற்றன.
1970களில் இலக்கியத்தில் உருவ உள்ளடக்க இயைபினையும், இலக்கியத்தின் கலைப் பெறுமானத்தையும் அழித்தும் விமர்சனக் குரல்கள் முற்போக்கு விமர்சன உலகில் ஒலிக்கத் தொடங்கின. எம்.ஏ.நு.மான், சண்முகம் சிவலிங்கம் போன்றோர் இதில் குறிப்பிடக் கூடியவர்கள் 1980களில் விமர்சனங்களில் முற்போக்குவாதம். அரசியல்வாதம் என இரு துருவப்பட்ட விவாதம் நடந்ததே தவிர 1980களில் உலக முக்கியத்துவம் பெற்றிருந்த அமைப்பியல் வாதம் பின் அமைப்பியல் வாதம் இருக்கவே இல்லை.
ஈழத்தில் விமர்சனத்துறை பத்திரிகை நூல்கள் வாயிலாக மாத்திரமின்றி வானொலி கருத்தரங்கு கலை இலக்கிய விழாக்கள் மூலமும் வளர்ச்சி அடைந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த 30வருடங்களாக கலை இலக்கிய விமர்சனங்களை ஒலிபரப்புகின்றது. இவற்றில் திரைப்பட விமர்சனங்களும் நூல் விமர்சனங்களும் அடங்கும். எம்.ஏ.நு."மான் எழுதிய கட்டுரை தனிப்படைப்பு என்ற வகையில் மஹாகவியின் சாதாரண மனிதனது சரித்திரம் பற்றிய சண்முகம் சிவலிங்கம் எழுதிய விமர்சனம் முக்கியமானது.
விமர்சனத்துறையில் ஆ.சிவநேசச்செல்வன் சித்ரலேகா,மனோன்மணி, சண்முகதாஸ், துரைமனோகரன், கே.எஸ்.சிவகுமாரன், சி.மெளனகுரு, எம்.எச்.எம்.சன்ஸ் ஈடுபட்டனர் ஈழத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் எம்.ஏ.நு"மான் போன்றோர் இத்துறையில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு திறனாய்வு மிக உண்னத வளர்ச்சியினை கண்டுள்ளது. “இன்றைய இலக்கிய விமர்சனம் நாளைய இலக்கிய வரலாற்றுக்கான திருடி கண்ணாடி" எனலாம்.

Page 35
மாருதம் 10 . 2009 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
காத்திருக்கிறேன் அவனுக்காக.
சி.ஞானசுந்தரி
மழை பெய்து ஓய்ந்த அழகான அமைதியான நேரம் கையில் குடையுடன் அவன் வரவை எதிர்பார்த்து வீதியோரம் காத்திருக்கிறேன் அவனுக்காக!
தனிமையில் இருக்கும் என் நினைவுகள் அவனை நோக்கி நகர்ந்தன அவனது பேச்சின் இனிய குரல் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று எனது உள்ளம் துடிக்க அவன் கொஞ்சும் மொழியை மனதோடு மீட்டிப்பார்க்கிறேன் அவன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அவனுக்காக!
மீண்டும் மீண்டும் பார்க்கத் துடிக்கும் அழகிய முகம் என் கண்களில் ஆனந்தக் காட்சி என் மேனியைத் தொட்டு உரசும் மென்மையான கைகள் பாசத்தில் பொழியும் முத்தங்கள் அவன் வரவை காணத் தவிக்கிறேன். காத்திருக்கிறேன் அவனுக்காக!
அவன் செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் கோபத்தைத் தூண்டினாலும் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டுமே அந்தக் குறும்புகள்
ー66ー

மாருதம் 10 . 2009 சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பிடிவாத குணமும் கோபமும் விரும்பியதை பெற அவன் செய்யும் சூழ்ச்சி கெட்டிக்காரன்தான். அந்த சேட்டைகளைக் காண காத்திருக்கிறேன் அவனுக்காக.
தான் சிரித்து என்னையும் சிரிக்கச் செய்யும் புன்னகை கலந்த முகம் என் கண்முன்னே தோன்றிமறைய காலம் முழுதும் அவனுக்காகவென்று என் வாழ்வை அர்ப்பணித்து காத்திருக்கிறேன் அவனுக்காக.
வரும் காலம் முழுவதும் என்னை வாழவைப்பான் என்ற நம்பிக்கையில் கனவுகளைச் சுமந்து கொண்டு அவனுக்காக எல்லா உறவுகளுமாய் என்னை மாற்றிக் கொண்டு அவனை அணைத்து முத்தமிட காத்திருக்கிறேன் அவனுக்காக!
மணியோசை சத்தம் நினைவை திருப்ப பாடசாலையை திரும்பிப் பார்த்தேன் அவன் வரவைக் கண்டு அருகில் சென்று அணைத்து முத்தமிட்டு கைகளை கோர்த்தபடி வீட்டை நோக்கி அழைத்துச் சென்றேன் என் மகனை!
-67

Page 36
மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பதிவு - 2
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 1ஆவது ஆண்டு நிறைவு விழா
- தர்மினி பத்மநாதன்
வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 11ஆவது அண்டு நிறைவு நாள் நிகழ்வு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய அவலப்பட்ட சமூக சூழலில் இந்நிகழ்வுகள் தேவைதானா? என்ற கேள்விகளுக்குமப்பால் அந்த அந்தக் காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாய பணியும் இருக்கத்தான் செய்கின்றது. இன்றைய நிகழ்வில் நாடகங்கள், இசை, நாடகப் பாடல்கள் என்பனவும் அளிக்கை செய்யப்பட்டுள்ளதுடன் பல்வேறு துறைகளில் தம் பங்களிப்பை செய்தமையோடு சமூகத்தின் மத்தியில் தம்மை அடையாளப்படுத்தியதுடன் தமிழ் மக்களின் வேர்களை ஆவணங்களாகவும் சமூக கற்கைகளாகவும் தந்து எம் கலைகளுடன் ஆழ வேர் கொண்ட நாடகக் கலைஞர்களான அருணா செல்லத்துரை பி.ஏ.சி. ஆனந்தராஜா ஆகியோரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் கெளரவிக்கத் தறவில்லை. அந்தவகையில் பி.ஏ.சி.ஆனந்தராஜா அருணா செல்லத்துரை ஆகியோருக்கும் நாடகக் கலைச் செல்வர் எனும் விருந்தினை வழங்கிக் கெளரவித்த பெருமையும் வட்டத்திற்குண்டு.
நாடகக் கலைச் செல்வர் பீ.ஏ.சி.ஆனந்தராஜா வவுனியா இறம்பைக் குளத்தைச் சேந்தவர். இவர் நாடகக் கலைஞராகவும் உளவளத் துணையாளராகவும் தம்மை உருவாக்கி கொண்டவர். இவர் சேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களில் நடித்து பரிசில்கள் பல பெற்றதுடன் தமிழ் ஆசிய குழாத்தின் வழிகாட்டலில் தமிழ் நாடகங்களிலும் நடித்து பரிசில்களையும் பெற்றவர். 1980இல் எழுதப்பட்ட இவரது இருட்டினுள் குருட்டாட்டம் எனும் நாடகம் சிறப்பிடம் பெறுகின்றது. அத்தடன் யாழ்ப்பாண சேக்ஸ்பியர் என 1970 களில் அழைக்கப்பட்ட கே.கே. சோமசுந்தரத்தினால் உந்தப் பெற்று “மக்பத் ஒத்தெல்லோ “யூலியஸ்சீகர் போன்ற நாடகங்களையும் தமிழில் சுருக்கி எழுதித் தயாரித்துக் கொண்டார். 1982இல் பூந்தான் யோசப்பின் உதவியுடன் கருங்குயில் குன்றத்து கொலை' எனும் நாடகத்தை அரங்கேற்றினார். இவரது சமய மற்றும் சிறுவர் நாடகம் கொண்ட தொகுதியான “இருட்டினுள் குருட்டாட்டம் மற்றும் அன்புக் கரங்கள் எனும் உளவியல் அனுபவ எழுத்துக்கள் ஆகிய நூல்கள் வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. ‘உளவளத்துணை மற்றும் ஆங்கிலத்தில் Psycho Social Care For Children' எனும் நூலையும் வெளியிட்டடுள்ளர். இவர் ஒரு சமூக சேவையாளன் என்பது குறிப்பிடத்தக்கது.
- 68

மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
நாடகக் கலைச் செல்வர் அருணா செல்லத்துரை முள்ளியவளையைச் சேர்ந்தவர். 23ஆவது வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சி உதவித் தயாரிப்பாளராக இணைந்தார். தொடர்ந்து 1999இல் சக்தி தொலைக்காட்சியில் பணிப்பாளராக கடமையாற்றி இன்று வரை ஆலோசகராகவும் கடமை புரிகின்றார். இவரது ‘வீடு' தொலைக்காட்சி நாடக நூலைத் தொடர்ந்து மெல்லிசைப் பாடல்கள் (1994) நந்தியுடையார் (1996 சாகித்திய மண்டல பரிசு) இலங்கையில் தொலைக்காட்சி (1997 வடக்கு கிழக்கு மாகாண பரிசு). வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் (2000) அகதிமுகாம் (2001) அடங்காப்பற்று வன்னி வரலாறு (2002) பண்டாரவன்னியன் குருவிச்சிநாச்சியார் (2003) அடங்காப்பற்று வன்னி வரலாறு (பாகம் 02) சுதேசசத் தலைமைகள் (2005) தொலைக்காட்சி செய்திகள் (2008) பண்டார வன்னியன் பாகம் -01 (2004), கிறிஸ்துவுக்கு முன், கி.பி. (2004) பாகம் -03 எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். வடக்கு மகாணக் கல்வியமைச்சுக்காக ‘ஒரு நாள்' எனும் வீடியோ குறும் படத்தை (2008)இல் இயக்கியிருந்தார். யாழ்தேவி', 'தண்டனை' எனும் குறும் படங்களையும் இயக்கியதோடு வேழம்படுத்த வீராங்கனை (ஒளிப்பேழை) ‘நந்தியுடையார் (ஒலிப்பேழை ஒளிப்பேழை) என்பவற்றையும் வெளியிட்டுள்ளார். பல பட்டங்களையும் பெற்ற இவர் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் விருது கலாவிநோதன் (1992) தொடர்பியல் வித்தகள் (1994) மற்றும் ‘உண்டா, அபிநந்தன என்ற தங்க விருதையும் சிறந்த வானொலி நாடகப் பிரதிக்காக (நந்தியுடையார்) 1996இல் பெற்றுக்கொண்டார்.
இவர்களுக்கான கெளரவிப்புரையில் கலாநிதி கந்தையா றிகணேசன் குறிப்பிடுகையில் இவர்கள் எம் மண்ணின் விழுதுகள் எமக்கு முன்னுதாரணமாக அவர்களை இந்த மண் கெளரவிக்கின்றது.’ என்றார்.
இந்த மாவட்டத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது இந்த நிகழ்வு. எமது கலை, கலாசாரத்தை எம்மவர்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. அதனை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் செய்கின்றது. எனக்கூறியதுடன் தொடர்ந்தும் இத்தகைய செயற்பாடுகளுக்கு சகல படைப்பாளிகளையும் உள்வாங்கி அடுத்த சந்ததிக்கு கொடுக்க வேண்டும். என்றும் அதற்காக தாம் தமது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். அரச அதிபர் பி.எஸ்.எம்டசார்ள்ஸ் மேலும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து “சகல வழிகளிலும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் பங்காகவும் பலமாகவும் இருந்து செயற்படும்
எனவும் உறுதியளித்தார். வளாக முதல்வர் பேராசியர் சு.இராஜதுரை.
O
- 69

Page 37
LMMLLTC Y 0LLLS KTY S TTkeTS kkkLLLLLL LLuLTLTTTM BZMeMMTLCL
குவலய்த்தில் கிடைக்குமா ஓரிடம்
குடியிருக்க எமக்கு குவலயத்தில் ஓரிடம் கண்டுகொள்ள வேண்டுமென்றே பூகோளவரைபடத்தில் பூதக்கண்ணாடி கொண்டு பூவிழி பூத்துப்போகும் வரை தேடியலைந்தேன் ஒரு துண்டு நிலத்தை
வயலும் வயல்சார் மருதம் மலையும் மலைசார் குறிஞ்சி கடலும் கடல்சா நெய்தல் காடும் காடுசார் முல்லை இவைகள் கேட்டோ மில்லை பாலையென்றாலும் பரவாயில்லை குடியிருக்க மைக்கு குவலயத்தில் ஓரிடம்
வல்விலங்கு வாழ் ଶ୍IOT<!ili।
வளநதிபாயா வனாந்தரமானாலும் கற்பாரானாலும் கருவேலங்காடானாலும் சேற்றுநிலமானாலும் செந்நெல் விளையாத் தரிசானாலும் எமக்கு வேண்டுவதெல்லாம் குடியிருக்க எங்களினம் குவலயத்தில் ஓரிடம்,
எல்லா நிலங்களும் போல்லா நாடுகளின்
= ID -
- நந்தா
ஆதிக்கத்துக்குள்ளேயே ஆட்பட்டுள்ளன. இருந்தாலும் ஓரிடம் இன்னமும் இந்நாடுகளின் ஆதிக்கவெறிக்குள்ளே ஆட்படவில்லையோ..! அதுதான்
அந்தாட்டிக்கா அவனியின் தென்முனை பனியுரைப்பெருநிலம்,
உறைபனியிலும் உயிர்வாழ்ந்திடும் வகைதெரிந்திடில் அவ்விடமே ஓரிடம் குடியிருக்க எமக்கு குவலயத்தில் ஓரிடம்,

|ITItali II) - 2-3 trajt, கti'ஆதியகங் নাম্নী"lang=
கந்தையா பூஜிகணேசனின் பத்தி எழுத்துக்கள் நாற்றுமேடை - ஒரு விமர்சின்க் குறிப்பு
ந:தகபரன், ஆசிரியர் யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கஜிே
ஈழத்தில் பத்தி எழுத்துக்கள் பத்திரிகைகள் முதல் சிற்றேடுகள் ஈறாக பெறுமதி மிக்க இடத்தினைப் பெற்றுத் திகழ்கின்றன. எளிமையான வடிவில் ஆவணப்படுத்துவதற்குரிய விடயங்கள் அநுபவப்பகிர்வுகள் என வாசகர்களுக்கு சிந்தனைக் கிளர்வைத் தரத்தக்கனவாக பத்திகள் அமைகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்படும் இவ் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு நூலுருப்பெறும் நிகழ்வுகளும் கவனிப்பிற்குரியதாகின்றன. அவ்வகையில் புதிய வரவான கலாநிதி கரீகணேசன் அவர்கள் எழுதிய நாற்றுமேடை என்ற நூலானது வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் 2008 மார்கழியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,
நூலாசிரியர், தான் கல்விகற்ற மானிப்பாய் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் பேராயிரவர் அவர்களின் பெயரினைப் புனைபெயராகக் கொண்டு பத்திகளை எழுதியுள்ளார். யுத்தம் தணிந்து சமாதானச் சூழல் நிலவிய 2003, 2011 காலப்பகுதிகளில் ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கலை, இலக்கிய, சமய, சமூக பண்பாட்டு விடயங்களை மையப்படுத்தி செந்தணல் பத்திரிகையில் எழுதப்பட்ட பதினெட்டு பத்தி எழுத்துக்களின் தொகுப்பு இந்நூலில் அடங்கியுள்ளது.
பாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக ஆங்கிலத்துறை விரிவுரையாளரான ரீகணேசன் அவர்கள் சமூகம் குறித்த நுண்மையான புரிதலும், படைப்புத்திறனும் கொண்டவர் கலை, இலக்கிய கல்வித்தளங்களில் வீச்சுடன் இயங்குபவர். நாடகத்துறையின் பால் இள்ை கொண்ட ஈடுபாடு இந்நூலிலும் எதிரொலிக்கிறது. பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய ரீதியாக நடைபெற்ற பல்வேறு நாடக நிகழ்வுகள் குறித்த பதிவுகளும், பார்வைகளும் இவரது கலை ஈடுபாட்டினைச் சுட்டி நிற்கின்றன. தமிழர்கள் தம் தனித்துவ அடையாளங்களைப் பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நூலாசிரியர், நாடக நிகழ்த்துகையில் வெளிப்படும் குறைபாடுகளை ஆக்கபூர்வமான விமர்சனமாக முன்வைத்துள்ளமையையும் காணமுடிகின்றது. எதிர்வினைகளைத் தூண்டக்கூடிய கருத்துக்களை துணிச்சலாக வெளிப்படுத்தும் தன்மையை நூலின் பல பகுதிகளில் நோக்கலாம்,
" அரங்கப் பிரக்ஞை அற்று நடிப்பு அகரவரிசை அறியாது ஒப்பனையின் பொருத்தப்பாடு இன்றி எழுத்துருவின் முக்கியத்துவம் பேணாது உரையாடல் பாணியில் இசையின் பயன்பாட்டைப் பேணாது ஏனோ தானோ என்று மேடையேற்றிவிட்டுப் போகிறார்கள்"
【L)
-71 -
- 221

Page 38
ഥb 10 - 2009 (, (, (ബ ജൂബിu ിക്കു
என்று தமிழ்த்தின நாடகப் போட்டிகள் குறித்த இவரது நறுக்கான பார்வையை
உதாரணமாகக் குறிப்பிடலாம. அரங்கச் செயற்பாட்டில் தமிழர்களுக்கான தேசிய அரங்கு
பற்றிய நோக்கை கட்டுரைகளின் பல்வேறு இடங்களில் ஆசிரியர் அழுத்தி உரைத்துள்ளார்.
இத் தொகுப்பு நூலில் கலைக் கூடல் வழி தமிழ் சிங்கள கலைஞர்களுக்கிடையேயான புரிதலையும், பண்பாடுசார் அடையாளங்களை கலைவழி உணர்ந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட எத்தனங்களையும் சமாதான காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் வழியே பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சமூகத்தில் புரையோடிப்போன வழக்கக் கொடுமைகள் தமிழர்களின் அரசியல், பண்பாட்டு விழுமியச் சிந்தனைகள், என்பவற்றோடு கலைத்துறைகள் நிகழ்வுகள் பலவற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் நூலில் வெளிப்பட்டுள்ளன. ஸ்கிறிப்ரெற் (Script writing wrokshop) அமைப்பினுாடாக யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளில் நடாத்தப்பட்ட பயிற்சி முகாமின் விளைவாக வெளியிடப்பட்ட ஏழு குறும்படங்கள் குறித்த அனுபவப் பதிவுகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.
வாழ்க்கைப் புலத்தின் மைய ஓட்டங்களைக் கணித்து தமிழர்தம் பண்பாட்டுத்தளத்தில் நின்று நோக்கும் முதிர்ச்சியான நூலாசிரியரின் பார்வை இந்நூலில் பரவியுள்ளது. தான் பேசவிழைந்த பொருளை குறுகிய எல்லைக்குள் முடக்கிவிடாது சமூகத்தோடு நெருங்கி ஊடாடி பரந்த நோக்கில் தன் பதிவுகளை மேற்கொண்டுள்ளார். வன்னியில் நடைபெற்ற முன்பள்ளி மேம்பாட்டு நிறுவனத்தின் செயற்பாடு முதல் உலக இந்து மாநாடு வரைசமூகப்புலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளும் அவைசார்ந்த விளக்கங்களும் இவ்வகையில் கவனிப்பிற்குரியனவாகும்.
வாசகரை ஈர்க்கும் வகையிலான தலைப்பு, கருப்பொருளை எடுத்துச் சொல்லும் எளிமையான மொழிநடை, கூறவிழைந்த விடயத்தை தயக்கமின்றி வெளிப்படுத்தும் துணிச்சல், சுருக்கச் சொல்லல் என பத்தி எழுத்துக்களுக்கு இருக்கக் கூடிய பண்புகள் பலவற்றைப் பேணி சிந்தனைக் கிளர்வைத் தருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளைக்
கொண்டதாகவும் நாற்றுமேடை நூல் வெளிவந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
அஞ்சலிகள் மறைந்து போன ஈழத்து மற்றும் தமிழக எழுத்தாளர்கள் கலைஞர்கள்,
கவிஞர் இ.முருகையன் கவிஞர் மு.இராமையா (கவிஞர் கண்ணையா) அமரர் கரணேஷ் இசையரசி டி.கேயட்டம்பாள்
ஆகியோருக்கு வட்டத்தின் அஞ்சலிகள்
-72
 
 

மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கலையரசின் நடிப்பு முறைமை - ஒரு பகிரல் கந்தையா ரீகந்தவேள் (ஆசிரியர் வ/விபுலாநந்தாக் கல்லூரி)
ஈழத்து நவீன தமிழ் அரங்கின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் விதந்து பேசப்படுபவர் கலையரசு க.சொர்ணலிங்கம் அவர்கள். இவர் நவீன தமிழ் அரங்கின் தந்தை என வர்ணிக்கப்படுவர். நாடகமே தன்நினைவு நாடகமே தன் வாழ்வு. என வாழ்ந்தவர். ஈழத்தின் வடபால் அமைந்த மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பில் ‘இலங்கா சுபோத விலாச சபை என்ற நாடக நிறுவனத்தை 1913ம் ஆண்டிலே ஸ்தாபித்து நாடகத் தயாரிப்புக்களை மேற்கொண்டவர். இவரது நாடக ஈடுபாட்டின் காரணமாக ஈழத்தில் சொல்லாடல் அரங்கு ஒன்று அறிமுகமாகியது. இவர் நாடகத்துறையில் நடிகராக நெறியாளராக, தயாரிப்பாளராக வேட உடை விதானிப்பாளராக காட்சி விதானிப்பாளராக பணியாற்றி பல்பரிமாண முடையதொரு கலைஞராக விளங்கினர். ஏறத்தாள ஈழத்து நவீன தமிழ் அரங்கில் மூன்று தசாப்தத்துக்கு மேல் நாடகப் பணியாற்றி தனக்கென சிறப்பானதொரு இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
பம்பல் சம்பந்த முதலியாரை மானசீகக் குருவாகக் கொண்டு நமது நாடக அனுபவங்களைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் ஈழத்துக்கு சொல்லாமல் அரங்கு ஒன்றை அறிமுகம் செய்தார். வாணிபுர வணிகன், சாரங்கதாரா பாதுகாபட்டா பிசேகம். சகுந்தலை, வேதாள உலகம், மனோகரா, முதலான நாடகங்களை கலையரசு தயாரித்து வெற்றிகண்டார். இவற்றோடு தோரோட்டி மகன், வள்ளி திருமணம் ஆகிய நாடகங்களையும் தயாரித்துள்ளார்.
கலையரசு ஒத்திகையினை நுணுக்கமாக மேற்கொண்டு நாடகம் தயாரிக்கும் முறையினை அறிமுகப்படுத்தினார். படச்சட்ட மேடையிலேயே இவரது நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. படச்சட்ட மேடைப் பரப்பினை நன்கு திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி நடிகர்களை நடிக்க வகை செய்தார். நடிகர்களது அசைவுகள் பாத்திரப் பண்பினை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டன. பாத்திரங்களின் குணப் பண்பை வெளிப்படுத்தும் வகையில் உணர்வு வெளிப்பாடு அமைக்கப்பட்டன.
யதார்த்த பூர்வமானதாகவே பெரும்பாலும் பாத்திரங்களின் வெளிப்பாடுகள் அமைந்திருந்தன. உதாரணமாக கூனி பாத்திரத்தினை அமைப்பதற்கு வயது முதிர்ந்த மூதாட்டிகள் பலரை அவதானித்து அவரில் ஒருவரைத் தெரிவு செய்து அவர்களின் பேச்சு முறை, பாவனை முறை, அவர்களது நிற்கும் நிலைகள், அசையும் முறைகள் வெற்றிலை போடும் முறை போன்ற யாவற்றையும் அவதானித்து பாத்திரத்தினைப் படைத்தார். பார்வையாளர்களை நம்பவைப்பதற்கும், திருப்திப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் நடிகர்கள் தம் பாத்திரங்களைப் படைக்க வேண்டும். என்பதை கலையரசு
-73 -

Page 39
* மாருதம் 10 . 2009 சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
விரும்பினார்.
திட்டமிடப்பட்ட அளவுகள் பாத்திரங்களுக் கிடையிலான பார்வைத் தொடர்புகள் மேடைப் பரப்பின் சகல பகுதிகளையும் பயன்படுத்துதல், அவரவர். இடங்களில் நின்று தத்தம் உரையாடல்களைப் பேசுதல், இயல்பான உச்சரிப்புக்களுக்கு முக்கியத்துவமளித்தல் முதலான அம்சங்களின் அதிக அக்கறை செலுத்துவார்.
கலையரசு காலத்தில் கிராமங்களில் கூத்துக்களும், பாரிவழி நாடகங்களும் மேடையேறி வந்தன. நகரத்தவர்களின் அபிலாசைகளை விளங்கிக் கொண்ட கலையரசு நகள்ப்புறப் பார்வையாளருகக்கு ஏற்ற வகையில் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்குள் ஆற்றுகை செய்யக் கூடிய நாடகங்களையும் தயார்செய்து அவற்றை அரங்கேற்றி வந்தார். இவ்வாறான செயற்பாடுகளினால் நகரத்து பார்வையாளர் மத்தியில் ஒரு அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்டனர்.
நாடகங்களைத் தயாரித்ததுமட்டுமல்லாமல் அவற்றை உரிய நேரத்தில் அரங்கேற்றவும் வகை செய்தார். காட்சி மாற்றங்களை உரிய வேளைகளில் அரங்கினுள் நுழையச் செய்யவும் வகை செய்தார்.
பெண்பாத்திரச் சித்திரிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதற்காக அதிக பயிற்சி அளிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆண்களே பெண்பாத்திரத்தை தாங்கி நடித்தனர். தானே கூனிப் பாத்திரத்தை நடித்தார். மனோகரா நடாகத்தில் திரு.செ.சு. இராஜலிங்கத்தை விஜயாவாக நடிக்க வைத்துள்ளார். விரும்பிய விதமே நாடகத்தில் க.சரவண முத்துவை ஆதிரையாக நடிக்க வைத்துள்ளார்.
வேடஉடை ஒப்பனை பாத்திரங்களின் பணியை வெளிக் கொணர்ந்து வேட உடையினை மிகுந்த சிரத்தையுடன் கலையரசு கையாண்டு நாடக ஆற்றுகையின் வெற்றிக்கு உதவினார். தானே தமது நாடகங்களில் வரும் பாத்திரங்களுக்கான வேட உடைகளைத் திட்டமிட்டு அதனை தயாரித்து அணிந்து கொண்டார். கூனி, விசுவாமித்திரன், தத்தன், சகுந்தலை, சைலொக், முதலான பாத்திரங்களுக்கு தானே வேட உடைகளைத் தயாரித்து தானே ஒப்பனைகளை மேற் கொண்டமை பற்றி தமது நாடகமும் நானும் எனும் நூலில் விபரித்துள்ளார்.
கலையரசு நடிகராக தன்னை இனங்காட்டிக் கொண்டதே அதிகம். தாம் தயாரிக்கும் நாடகங்களில் பெரும்பாலும் ஒரு பாத்திரத்தை தெரிவு செய்து கொள்வார். பாதுகாபட்ட பிஷேகத்தில் கூனி பாத்திரத்தையும், சகுந்தலை நாடகத்தில் “விசுவா மித்திரர்’ எனும் பாத்திரமும் வேதாள உலகம் நாடகத்தில் ‘தத்தன்' எனும் பாத்திரமும் வாணிபுரவணிகனில் "சைலோக்' எனும் பாத்திரமும் கலையரசுக்குப் புகழை இட்டித் தநதன.
நெறியாள்கை முறையில் கலையரசுக் கெனத் தனியானதொரு இடமுண்டு அக்காலத்தில் நெறியாளர்கள் ‘கொண்டெக்ரர் என அழைக்கப்பட்டனர். நாடகத் தயாரிப்பில்
-74 -

ഥ[h 10 - 2009, 9്യാദ്, ബ, മണ്ഡ ബജീuള്ളിക്കു
கொண்டெக்ரரின் பங்கு முக்கியமானது. இவர் தமது ஒத்திகை முறையில் அதிக கவனம் செலுத்தினார்கள். ஒத்திகையின் போது நேரக்கட்டுப்பாட்டினை மிகவும் கண்டிப்போடு கடைப்பிடித்தார். ஒத்திகையின் போது நாடக நடிகர்கள் யாவரும் பிரசன்னமாயிருத்தல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். பாத்திரப் பொருத்தத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நடிகர்கள் யாராக இருந்தாலும் பொருத்தமான பாத்திரத்தினை ஏற்று நடிக்க வேண்டும். பெரிய பாத்திரம். சிறிய பாத்திரம் என்று யாரும் கருதக் கூடாது என்பதையும் வலியுறுத்துவார். இதனால் தானே சில நாட்களில் சிறிய பாத்திரத்தினை ஏற்று நடித்ததுமுண்டு. தமது நாடக குழுவில் அங்கம் வகிக்காதோரை நடிகராகப் பயன்படுத்தவதில்லை நடிகர் ஒருவர் தேவையெனின் தமது நாடகக் குழுவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக தமது நாடகக் குழுவில் இணைந்த பின்பே அவரை நடிகராக இணைத்துக் கொள்வார். ஒரு முறை ஒரு நாடகம் நடிப்பதற்கு பொருத்தமான நடிகள் தமது குழுவில் இல்லாமையால் யாழ்ப்பாணத்தில் பொருத்தமான நடிகள் இருப்பதை அறிந்து அவரை கொழும்புக்கு அழைத்து வந்து தமது குழுவுக்குரிய சட்டதிட்டத்தின் படி கொழும்பில் ஒரு நிறுவனத்தில் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொடுத்த பின்பே அவர் தமது நாடகக் குழுவில் இணைத்துக் கொண்டார். அதன் பின்பே அவரை குறித்த நாடகத்தில் நடிக்க வகை செய்தார்.
இவரது நாடகக்குழு தொழில் முறையாக வன்றி பொழுது போக்கு ரீதியாக அரங்கினை வளர்த்தெடுத்தார். ஒரு நாடக நிறுவனத்தில் இடம் பெறும் பல்வேறு கலைஞர்களையும் வினைஞர்களையும் தனித்தனியே நியமித்து நாடகத்தை சிறந்த முறையில் படைக்க வழிசெய்தார். மேடை முகாமையாளர் நினைவூட்டுநர், காட்சிவிதானியாளர், இசைவிதானிப்பாளர், என்போரை நியமித்துக் கொண்டார்.
ஒளியூட்டலில் விசேட கவனம் செலுத்தினார். அக்காலத்தில் அரங்கில் பயன்படுத்தப்பட்ட ஒளி விளக்குகள் அதன் தன்மைகள் அதனை தாம் பயன்படுத்திய விதம் பற்றியும் சொர்ணலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பார்ப்போர் பகுதியிலும் ஒளி விளக்குகள் ஒளிரச் செய்தல் வேண்டும். எனக் கூறி அவற்றை நடைமுறைப்படுத்தினார். நாடகத்தின் காட்சி அமைப்புக்கேற்ப ஒளிவிதானிப்பினை நன்கு திட்டமிட்டுக் கொள்வார். பல வர்ண ஒளிகளைப் பயன்படுத்தினார். முன் ஒளியூட்டுகை பக்க ஒளியூட்டுகை எனப் பல ஒளியூட்டுகை முறைகளைக் கையாண்டார். நாடகத்தயாரிப்பு ஒன்றுக்காக 500 ஒளி விளக்குகள் பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடுகின்றார். இரவு, பகல் முதலான காலங்களையும் புலப்படுத்த ஒளியூட்டலை பயன்படுத்தினார். தமது அரங்கின் ஒளியூட்டல் பற்றி தானே வியந்து நிற்பதையும் 85T600T6) Tub.
இவரது நாடத் தயாரிப்புக்களில் வசனங்களுடன் பாடல்களும் பயன்படுத்தப்பட்டன. பாடல்களுக்கு பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டன. பின்னணி இசைக்கருவியாக ஹார்மோனியம், மிருதங்கம் போன்றன பயன்படுத்தப்பட்டன.
கலையரசு பயன்படுத்திய நடிப்பு முறைமை தனித்தவம் பொருந்தியது. இதன்
-75 -

Page 40
மாந்து 10 - 2003 சமூக கள்வி காங் இணக்கிய அரசிாக
காரணமாக அவரது நடிப்பு முறைமையை கலையரசு முறைமை என்று அரங்கியலாளர்கள் குறிப்பிடுவர். இவரது நடிப்பு முறைமை ஒத்திகை முறையிலேயே தங்கியுள்ளது. ஒத்திகைக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை நாம் உற்று நோக்குகின்ற போது ரஸ்சிய நாடகவியலாளரான கொன்ஸ் ரன்ரயின் ஸ்ரெனிmiலாவ்ஸ்கி உருவாக்கிய முறைமைக் கோட்பாட்டை ஒத்ததாக இருந்தது. அவரது நடிப்பு முறையில் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாள். அதேபோன்று சொர்ணலிங்கமும் நடிப்புப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அத்தோடு எப்ரெணிளப்ளவளங்கி இயற்பண்பு யதார்த்த நடிப்புக்கு முக்கியத்தவம் கொடுப்பார். இதனை சொர்ணலிங்கம் அவர்களும் கடைப்பிடித்தது போன்று இருக்கும்.
நடிகர் ஒருவர் பாத்திரமாகவே பொழுதல் என்றவகையில் கூடுதல் கவனம் எடுப்பாள். இதற்காக அதிக நேர நடிப்புப் பயிற்சியை வழங்கினார். பயிற்சியில் அதிக அக்கறை செலுத்தியதன் மூலம் பாத்திரப்படைப்பில் வெற்றியிட்டினார். இதுவே கலையரசு நடிப்பு முறைமை, என ஒரு பாணி நடிப்பில் உருவாக்க கலையரசு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றிள் நவீன நாடகம் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைய வகை செய்தமை அதனை கட்டுப்பாட்டுடன் வழி நடத்தியமை இலங்கா கபோத விலாச சபையைத் தோற்றுவித்தமை பழைய கூத்து மற்றும் பார்" மரபிற்குப் புறம்பாக சொல்லாடல் அரங்கினை வளர்த் தெடுத்தமை முதலான பணிகளுடாக ஈழத்து தமிழ் நவீன நாடகத்தின் தந்தை என வர்ணிக்கப்பட்டார். இவர் தமது நடிப்பு அனுபவத்தினூடாக உருவாக்கிய நடிப்பு முறைமை கலையரசு முறைமை என அழைக்கப்பட்டு வருகின்றது.
2009 - அரச இலக்கிய விருது வயறுவோர் ஈரபத்திய ாேந்த்ா = வங்காக ஆழியான் ஆதராந்திய நகராபு Pata= - பாங்கன் தீபீய் அந்நகள் = அாஷ்ரஃப் சிராப்ஸ்
வெதுடன் பங்கிய நாயியிருந்து - .ேபி. ஆனாாந்தா
line S L S TTL TYT TLTTTLTLzCC TLTLL CeMMTYSskkLLLLM LLLT LLLLT
- yl III-lip II:
Tsuu radnih na ", ir, Liljamu
ir SS LTTLMLTLT LLeq S qTLTT LMS LLtttLLt
மியூரைந்த பாதங் = வடிாரியூர் ரா உதயாள் - விநிரல்ாக = நாட பூததுக்காரன்
ஒரு காரைநகரின் ககத - இாரு ஆகைச்செப்டம் FULF Egт -ia si = கட்டி முயலும் கட்டிப் பயறும்
- ஓ.கே. ஆாநாதன்
m-ria and I rea - mirii. II, og ாளித ப்ர்சியம் - li litru E3 - Ljisiqii
=வா. சனாதி E.Eண்டாக மத்தியு La 'Lihasil. Palmisłgih தமிழர் பண்பும் - அர். ஸ்ரநாதன் வழிபெயர்ப்பு
சிறுகள் இனக்கியம் == Fi, FL hir T r erliği g3
- Eric triaமோன்யர்ப்பு
TT TTeTTTT KTTTTLLL SSS S MMakTLLTLTLTT S MSLLLMTSLLLLL LLekkLLTLS
கருதட்சாை - க்தரகர்யத் கமாய்
ஆராதியங்ங் புதுகிரேசா ஜூாம் வந்திராவிந்து سخ'
 

LBBuuKS LSK00H KMS SYkkMS LLLLLLTMT MLMMY
ந பார்த்திபனின் பக்கம் - 1
மன்னார் செல்வி.கி.மேரி மரிய கொறற்றி டயஸின் செதுக்கிய சிற்பம் கவிதைத் தொகுதி ஓர் அறிமுகக் குறிப்பு
சிலுவிை:ைச் சுந்து நீங்களை மீட்டாப்
னே கொண்டு தேசம் 'rே
வரத் தொடு :ேே
சிலுரே
நீங்களும் வேண்டும்
உதருள் ைேர்தி
என்று இவரின் கவிதைகளினூடு சர்வ மத தெய்வங்களையும் வேண்டி நிற்கிறார். உயர்தரம் படிக்கும் சின்ன வயதிலும் சீரிய சிந்தனையோடு கவிதை படைத்துள்ளார். இந்தப் பக்குவம் இருப்பின் இலங்கைத் திருநாடு இந்த இழிநிலைக்குப் போகுமா? இவருடைய பெரும்பாலான கவிதைகள் சமூகச் சீர்கேடுகளைக் கண்டு குமுறுகின்ற மனத்தின் வெளிப்பாடுகளாகவே அமைகின்றன.
ali ť:2,ť:
ேேந்தங்களை
செலிப் புதைத்து விட்டு
விண்முறைகள்ை
Irras) billi wriġ ġ-gr iffi frażil,
என்று யதார்த்தத்தைக் கூறுகிறாள். பெரியோர்கள் சிந்திக்கத்
தவறிய விடயங்களைக் கவிஞர் கருத்தில் கொள்வது மகிழ்ச்சியைத் தருகின்றது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒப்பனை முகங்களால்ல என் கவிதைகள் என்று தன் கவிவரிகளைக் கூறிக்கொண்டு 24 கவிதைகளால் அலங்கரித்து செதுக்கிய சிற்பத்தை வடித்துள்ளாள் கையில் மனச்சாட்சி, நெஞ்சில் உறுதி, வாக்கில் உண்மை ஆக மொத்தத்தில் உண்மையைக் கானத்துடிக்கும் உண்மை என் கவிகள் என்று கவிஞர் கூறுவது கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாசகர்களுக்கு புரியும்,
துே விழுத்து
தேச பீட்க
பிரம் கொடு குரு:ே
என்ற கவிவரிகள் இந்த மாநிலம் பயனுற வல்லமை தாராயோ என்று பாரதி கேட்டது போல எம் காதுகளில் ஒலிக்கிறது.
--

Page 41
TTK S S 0L000 KKLMTS YTeeMS MLYLMK K0TTTM EaMMMLee
ஓர் அஞ்சலிக் குறிப்பு
கவிஞர் இ. முருகையன் است صدا
ஈழத்தின் மூத்த கவிஞர் இ. முருகையன். இவர், 1933 ஆம் வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள சாவகச்சேரி நகரில், கல்வயல் என்ற ஊரில் பிறந்தவர்.
பிரக்ஞைபூர்வமான மொழி, விஞ்ஞானப் பார்வை, அறிவுசார்ந்த கவிநயம். பழந்தமிழ்ச் சொற்களும் கிராமிய வட்டாரச் சொற்களும் கலந்துவரும் பேச்சோசை நடை மரபுப் பா வடிவங்களுடன் புதுமை கலக்கும் கவிதை நயம் எனப் பல பரிமானங்களுடன் கவிதை படைத்துள்ளவர்.
"நெடும்பகல்' 'ஆதிபகவன்'. 'அது அவர்கள்', 'மாடும் கயிறுகள் அறுக்கும்', 'ஒவ்வொரு பூவும் புல்லும் பிள்ளையும் எனச் சிறந்த பல கவிதை நூல்களைத் தந்துள்ளார். ஆசிரியர், நூற்பதிப்பாளர், கல்விப் பணிப்பாளர், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர் எனப் பல பதவிகளை வகித்த இவர், சிறந்த மொழிபேயர்ப்பாளரும் கூட
"பில்கணியம்', 'கரவபங்கம்' ஆகிய கிரேக்க நாடகங்களையும் சேக்ஷபியரின் பல ஆங்கில நாடகங்களையும் திறம்பட மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
"ஒரு வரம் என்பது இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதை நூலாகும்,
"கடுழியம்' எனும் நாடகம் மூலம் தமிழ் நாடக அரங்கில் திருப்பத்தை ஏற்படுத்தியவர். 'வந்து சேர்ந்தன', 'கோபுர வாசல்" "மேற்பூச்சு' 'வெறியாட்டு "சங்கடங்கள் போன்ற பா மற்றும் வசன நாடகங்களையும் "உயிரத்த மனிதர்' என்ற கூத்து நாடகப் பிரதியையும் எழுதியுள்ளார்.
"மொழிபெயர்ப்பு நுட்பம்', "இன்றைய உலகில் இலக்கியம்' ஆகிய சிறந்த நூல்களின் ஆசிரியருமான இவர் ஒரு முதுகலைமாணி ஆவார். இவருடைய கலை இலக்கியச் சேவையைக் கெளரவித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கது. சிறுவர்களைக் கவரும் வண்ணம் இவரால் எழுதப்பட்ட ரயில் பாடலில் இன ஒற்றுமையையும் இழையோட விட்டிருக்கிறார்.
- -
 

மாருது 0 - 2001 சக கLE காவடிவங்கிய சாக
ந பார்த்திபனின் பக்கம் - 2
ராசாத்தியின் "தனித்திருத்தல்" கவிதைத் தொகுப்புப் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பு
படி கலாசார வட்டத்தின் முதல் பதிப்பாக வெ.தவராஜா எழுதிய 29 கவிதைகளின் தொகுப்பாக 51பக்கங்களில் வெளிவந்திருக்கிறது "தனித்திருத்தல்' நிலக்வழி தவராஜாவின் பதிப்புரையும் கலாநிதி செ.யோகராசாவின் முன்னுரையும் கவிஞர் வாசுதேவனின் குறிப்புரையும் கவிஞர் வெ.தவராஜாவின் வருகை உரையும் என 15 பக்கங்கள் கொண்ட விதந்துரைப்புகளுடன் வெளிவந்திருக்கிறது "தனித்திருத்தல்
பாரிடம் துப்பாக்கியிருக்கலாம்.' சிதைக்கப்படும் சிறுவர்களிடமும் சீரழிக்கப்படும் பெண்களிடமும் சுரண்டப்படுகின்ற தொழிலாளியிடமும் இருக்கட்டும். மறைத்து வைத்திருப்பது தெரியாத ஒரு மாயத்துப்பாக்கி,
LSLSSSLSLSLSLSLSLS S L SLSLSSLLSLSLSL
என்று தன் கருத்தை எடுத்துரைப்பதனூடாக தன் நிலைப்பாட்டையும் மனப்பாங்கையும் காட்டியுள்ளார் கவிஞர்.
"அண்மைக்காலத் தொகுப்புகளுள் கணிசமானவற்றின் உள்ளடக்கம் திரும்பத் திரும்பக் காதல், வாழ்க்கை பற்றிய தத்துவப் போதனைகள், பேரினவாத ஒடுக்குமுறைகள் என்ற வட்டத்தினுள் சுழன்று சுழன்று வர இத்தொகுப்பு அவற்றோடு வேறு பல விடயங்கள் பற்றியும் பேசுகிறது. சமகாலத் தொகுப்புகளிலிருந்து இத்தொகுப்பு விலகி நிற்பது முதற்கண் குறிப்பிட வேண்டியதாகின்றது' என்று விமர்சகர், கலாநிதி செ.யோகராசா குறிப்பிட்ட சுற்று மிகவும் பொருத்தமானதென்பதை இத்தொகுப்பை வாசிக்கும் வாசகள்கள் புரிந்து கொள்ள முடியும். வெ.தவராஜாவின் "தனித்திருத்தல் ஆரோக்கியமான கவிதைச் குழிகுழுBFஜநிறுத்துநின்றது.

Page 42
மாருதம் 3 - 2009 சமூக கல்வி கIE டேக்கிய சஞ்சிகை
மண்ணுலகில் விண்ணுலகில் 1942 2009
O9 11
2 18
முனுசாமி இராமையா J.P கவிஞர் கண்ணையா
(கலாபூசணம், கவியெழில், சமூகசேவையாளர், சமாதான நீதவான், கூட்டுறவாளர்)
கண்ணீரை மையாக்கி வான்முகில் மேகங்கள் கவிதையாய் அழுகிறோம் கண்ணிரைப் பொழியும்வரை கவியெழில் கண்ணையா - உம் கவிதையால் வேள்விசெய்வோம் பிரிவுத் துயரமது - எம் பூவுலகில் தவழ்ந்திட்ட பரந்த இலக்கிய வானில் கவியெழிலே - உம்மை
சோகத் தூறலைத் தூவுகின்றதே. அழைத்ததோ வானுலகம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்திI என்றென்றும் உம் பிரிவுத் துயரால் வாடிநிற்குதே வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
ŠU} –
 

பTது 1 - 2009 சமூக கEU நாள அளக்கிய சஞ்சியாக
GHLIDI Iii.
கனகசபாபதி ரனேஷ்
TTL OTOTTTT OO a gTTT t OLLL S TTTTTT GT TK L a uT T tTmTtOTT TuTY TL LLL TTS
уѓ:wя? f'li dati, 39 jiss:II JJ II ATTI II rii, ነTሖ'ቇዴቭ &hISI፥]W}jWI பித்தாளari, ரசினாய், r நீக்கிய நண்பர்வீர் வட்டத்தின் விளிையீட்டானtள்,
iiiIIi i ta' Triq isir g, நi நவம்பர், நம் வரிதா', எந்தக் ரிக்கிசுதர் கண் வழ்ந்த விேற
}_offs")I 'llự#if:{It" 7 ': தனி உயவு பெற்றrயா? நுதல் போட்டுத் தொழில் தொடங்லி 11: fಳೆ', முன்னேற்ற மீண்டார். 'வஜுர் பிரத்த மாத:ே
ன்ேறு: ዘLVነጋußßናን!›TWuhgJJIJዕIWW? ர்ர்க் ரீாற்றம் முதந்து
y fairs? I til Aafr' : ' f J ಔıyı *
எழந்து விரிந்து உர்ந்தார்? 3 黜, எந்து மீனவத் ஆரிாய், அதிராய், விேலும் lடு உr mரி ந்ேது
உள் துயரில் வாடி உள் ஆத்ம சாந்திக்காபப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
ஆநாத்துயரில் நண்பர்கள் | 1 | ' ' ||}} வவுனியா கலை இலக்கிய
நண்பர்கள் வட்டம்,
ܒ11ܲܕ݁uܕ mn 41ܥܢ1 ܕ ܐܨ+ 11ܒܩܢܝ ܒ ܬܐ ܕ ܐ

Page 43
Lnmetili 11 - 2:3 ĝi ĝi.  TAE, Tălişîo, fili:IDEOJ இழக்கிய சஞ்சீட்க
வவுனியாவிலி வெளிவந்த நூலி யறுப்பாண கவிதை இதழி
క్ష్ مع الوادي فيما
Perior 國 ॥
நார்ப்ாநநீர் ாது "டிருக்கு
...ith Hurrini
கரு புரோ"
-。
-- it
நாகார்பூந்தாரா
it is
ܕܬ ܬ5+1 ܒ ܕܕܢܩ ܒܕ ܕܒܼܝܩܐ ܒܨ+
= = = = = = = ك ميني=== القياس 1 يقدمي يهد .
யூடிங்
===قق===
===
==
is ர்ேட்ர்ட்டிடங்ா
=====
புளிர்நருந்ா ======== '' - 'Alsi Filadimir TAL = html = f iam in oiiiiiiiiiiiiiiis ***
li li sar ir-rilu fi Ħ ĦĦ Ħ -
uLS euuL LSLSSSS S SAAS TCuLS L S AS KS S MLLLLLLLLSLLLLLLSK LS LL LLLL
 
 
 
 
 
 
 

L LLKK S S0KHK TTTE S KKTLL S KKLLKYmLLTM MaLMLS
வாழ்த்துக்கள் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் 2008க்கான இலக்கிய விருதுகள் இரண்டை தமது நூல்களான பத்தினித்தெய்வம் (நாட்டிய நாடகங்கள்) வேரும் விழுதும் (இலக்கிய விமர்சனங்கள்) ஆகியவற்றுக்கு பெற்றுக்கொண்ட தமிழ்மணி அகளங்கனுக்கு வட்டத்தின் வாழ்த்துக்கள்
|NS RATNAM & RROS |
N.S.RATNAM & BROS
Deaders in all kinds of electronic items and spares
59 AeA TE KONTIDA
No:ó, /s/ Cross Street, la Uniya. Te Fay 24 - 222 1237
LLS
. . . . . . . . . . . . .
GARWALHO) OPTICALS
No 13, Bus Stand Complex, Waw uniya. T.P: 024 22226449
Prop: Ranji

Page 44
LTLLSkTT SL0LES KKLLLLSSSTTMS MLMLL LLTTMM MMMMTT
வெங்கடேஸ்வரா
பல்பொருள் வாணிப நிலையம்
&a):15, Luaumoia வவுனியா தொ.பே. இல : 024 2222418
இகாழு'! , , - -
霍, آلة . ܩܝܘ( ته نه ؤلا] ".
இல.23, 24, சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா.
O24, 22.21227
-E -

இரசாயன உரங்கள், விருமி நாசினிகள் விற்பனையாளர்.
Ea): 27, LIEFTiGig, GugyaluII.
Ι) καβγί λη EAectrica/ Goods & Punding Items
35Α, Βαν S/ακα Sβορρίκg (οκηρίαΧ., Station Road, Wa Uri niya. Pione 2247 - 2222572

Page 45