கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுபாதி 2010.04-06

Page 1
கவிதைக்கான
இதழ் 04
சித்திை
 
 

அ
-
,、
-
выптөuоптоболо75р
- ஆணி 2OO

Page 2
காதல் பூங்கா
சென்றிருந்தேன் நான் காதலின் பூங்காவுக்க JËTELITETI I till:Talibility, Tirs i நான் வழியேயாக விளையாடு புதரை நடுவே முளைத்திருந்து ஒருதேவாலயம்
தேவாலயத்தின் கது: ஆபigருது மனிதன் விலக்கவேண்டியவைகுறித்து எழுதப்பட்டிருந்தது அகதவுகளில் ஆகவே நான் மீண்டு காதவிங் பூங்கா நோக்கிப்பார்வையைத் திருப்பினேன்
OTL TLLLL Tu u BKTLLLLLTTTTuTss SsYLLLS
இப்போதோ அப்பூங்காவில் பெரும் என்னணிக்கையில் பு:தழ்கள் பூக்கள் நிறைந்திருக்க வேற்பு இத்தில் கல்லருகள் காப்பு:வடமதநருக்கள் தும் நாளாந்தப் பிரார்த்தனை முழுத்துவிடு அங்கிருந்தகாட்டுரோஜாக்களுடனேயே கனவுகளானது மகிழ்ச்சிகளையும்
சேதுக் கட்டிய ாே |
ஆங்கிலமூலம் வில்லியம்பிளேக் தமிழில்-சத்தியதாசன்

கவிதைக்கான காலாண்டிதழ்
சித்திரை - ஆரிை 2010
பிந்திரை - ஆணி 2010
கவிதைகள் L II flII I : TiiIiiiiiIiiiI
3LL II T.ifil
3.IIIII * Umali||ITT *). IFTir
I tiu [3 L III Giu)
闰.酉únT芷 அ.புகசேனன் தானாவிஷ்ணு சித்தாந்தன் விநோதிரி விருபதாஸ்
மொழியாக்கக் கவிதைகள்
filiili il Gilli,
- சந்தியதாசன் நியூப்பர் விஜயின் -சஞ்சாக் கறுப்புக் கள்ளன்
கட்டுரைகள் Fl.ITELJosip ந.சத்தியபாடின் சிகரம் பாரதி கருணாகரன்
பத்தி
தின்வி1
நூல் அறிமுகம்
Hi, III i III lan III copil
கடிதங்கள்
أكيلية تلك

Page 3
ssa?fut சித்தாந்தன்
இணை ஆசிரியர்
சி.ரமேஷ் மருதம் கேதீஸ்
அட்டைப்படம்
நாடோடியும் அவளது குழந்தையும்/கடதாசி, கரிக்கடிடி கே.எம்.ஆதிமூலம்
இதழ் வடிவமைப்பு
பா.அகிலன்
அச்சாக்கம்
சுரபி பதிப்பகம், நாவலர் வீதி, ιι Πίρι η παρτίο,
தொடர்பு முகவரி மறுபாதி,
அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்,
விலை 30/- (இலங்கை)
தொலைபேசி: Ο094. OO1 3008.806
LÖldöTaoğ86o: marupaathy@gmail.com оlavoo: marupaathy.blogspot.com
DேறுUஎதி கவிதைக்கான காலாண்டிதழ் சித்திரை - ஆணி 2010
வணக்கம்,
பெரும் அவலம் ஒன்றைத் தமிழ் மக் கள் சந்தித்து ஓராண்டு கடந்துவிடிடது.
மிகக் கொடிய அவலங்களையும் சாவுகளையும் சந்தித்திருக்கின்ற மக்கள், எல்லாவற்றிலும் இருந்தும் மீள வேண் டிய தேவை இருக்கின்றது. மக்களும் அத னையே விரும்புகின்றனர். ஆயினும் யுத் தத்தின் கொஆரம் ஒன்றும் மறக்கக் கூடி யனவல்ல.
இடம்பெயர்ந்த மக்களில் பெரும் பகு தியினரும் சொந்த இடங்களில் குடியமர்த் தப்படிருள்ளனர். எனினும் பெரும்பான் மையான மக்களும் தமக்குரியதான வசதி கள் சரியானமுறையில் செய்துதரப்பட வில்லை எனக் குறைபடுகின்றனர்.
மீள்குடியேற்றம் என்பது வெறுமனே சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவ தல்ல. அந்த மக்கள் மீளவும் தங்கள் வாழ்வைக் கடிடியெழுப்புவதற்கான வழி களையும் ஏற்படுத்துவதாகும்.
இதனைப் புரிந்துகொண்டு இத னோரு சம்பந்தப்படிட அனைத்துத் தரப் பினரும் செயற்பட வேண்டும். எந்த முடி வையும் தராது முடிந்து போயுள்ள இந்த யுத்தம் தந்தது இழப்புக்களைத்தான்.
இந்த அழிவு யுத்தத்தில் இறந்து போன அனைவரையும் நாம் நினைவிற் கொள்வதோடு, நீதியான சமாதானம் ஒன்றுக்காகவும் காத்திருக்கின்றோம்.
ஆசிரியர்
சித்திரை - ஆணி 2010
மறுபாதி 2

O
ஆகவே என்னை நீங்கள் கொலை செய்யலாம்
நீதிகேட்டு வழக்காg நாட்டை எரிக்கும் வல்லமை இல்லை உங்களது கழுகுப் பார்வையைக் களைந்து எறியவோ குறியை வெட்டி எறியவோ எனக்கான ஒன்றும் இல்லை செத்துப்போன இந்தப் புல்லும் கல்லும் சாட்சி சொல்ல வரப்போவதுமில்லை என்ன செய்தாலும் உங்களை யாரும் தட்ஜக் கேட்கப் போவதுமில்லை
மேலும் உங்களுக்கு நான் தாயும் இல்லை சகோதரியும் இல்லை
ஆகவே என்னை நீங்கள் கொலை செய்ய
நிறையவே காரணங்கள் உள்ளன.
- பெரிய ஐங்கரன்
திரை - ஆணி 2010
மனுவதிே 3

Page 4
ஈழத்து தமிழ்க் கவிதைப் புலத்தில் கவிஞனின் இயங்கியலும் இருப்பும்
- சி.ரமேஷ்
எம்.ஏ.நுஃமானைத் தொகுப்பாளராகக் கொண்டு 1969 பங்குனித் திங்களில் காலாண்டு கவிதை இதழாகப் பரிணமித்த‘கவிஞன்” கலைமதிப்புடைய காத்திரமான கவிதை இதழாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டது. ஈழத்தின் நவீன கவிதைப் புனைவினை ஆழமாகப் பதிவு செய்த இவ்விதழ், கவிதை பற்றிய விமர்சன நோக்கை வளர்த்தெடுப்பதற்கும் சர்வதேசக் கவிதைகளின் தரத்தை மட்டிட்டுப் புரிந்துகொள்வதற்கும் கால்கோளாக அமைந்தது என லாம். வாசகர் சங்க வெளியீடாக வந்த கவிஞன் 11.09.1970இல் மஹாகவியின் கோடை என்னும் கவிதை நாடகத்தைத் தாங்கி வந்த ஐந்தாவது இதழுடன் தன்னை முடித்துக் கொண் டது. கலையாக்கத்திலும் சமூகப் பெறுமானத்திலும் வாசகர் தொகையிலும் நமது இன்றைய எல்லைகளை விரிவுபடுத்தவேண்டும் என்னும் தார்மீக நோக்கை அவாவி நின்ற கவிஞன் விரிந்து வரும் தமிழ்க்கவிதைப் பரப்பின் சகல புதிய அம்சங்களுக்குரிய பக்கச் சார்பற்ற ஒரு வெளியீட்டுக் களமாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி அவ்வழி இயங்கியது.
கவிதையின் அதீத வெளிப்பாட்டை அழகியலாகவும் கருத்தியலாகவும் வெளிப்படுத்திய இவ்விதழில் சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான், முருகையன், மஹாகவி, நீலாவணன், அண்ணல், மு.பொன்னம்பலம் அ.யேசுராசா, பாண்டியூரன் உள்ளிட்ட இருபத்திமூன்று கவிஞர்களின் முப்பத்தெட்டுக் கவிதைகள் வெளியாகின. இச்சஞ்சிகையில் வெளியான கவி தைகளில் மிக நீண்ட கவிதையாக எம்.ஏ.நுஃமானின் ‘அதிமானிடன்’ (237 அடிகள்) என் னும் கவிதையும் மிகச் சிறிய கவிதையாக நாக.மகாலிங்கத்தின் ‘போர்ப்பாட்டு’ (8 அடி) என் னும் கவிதையும் பிரசுரமாயின.
.. நவீன கவிதைகளின் பிரசுரத்தளமாகக் கவிஞன் வெளிவருவ
தற்கு முன்னரே 1950இல் மாத இதழாக வரதரின் ‘தேன்மொழி யும் 1964இல் காலாண்டிதழாக “நோக்கு’ என்னும் சஞ்சிகையும் வெளிவந்திருந்தன. தேன்மொழி கவிதைத்துறைக்காற்றிய சேவை மிகவதிகம். பதினாறு பக்கங்கள் கொண்ட இவ்விதழில் ஒவ்வொரு இதழின் அட்டையிலும் சோமசுந்தரப் புலவரின் பாடலிடம் பெற்றது. இதனைப் போன்று ஒவ்வொரு இதழின் பின்னட்டையிலும் ஒரு கவி ஞர் அறிமுகப்படுத்தப்பட்டார். அ.ந.கந்தசாமி போன்றோரால் இவ் விதழில் பிறமொழிக் கவிதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட் டன. இலங்கையில் தமிழ்க் கவிதைகளுக்காக வெளிவந்த முதல் இதழ் என்னும் வகையில் சிறப்பித்துக் கூறப்படும் தேன்மொழி "ட ஆறு இதழ்களுடன் நின்று போனது. ஈழத்து நவீன கவிதையியலுக்கான அடிப்படைக் கூறுகளையும் அன்றைய தமிழ்க் கவி தையின் போக்குகளையும் இனம்காட்டிச்சென்றதேன்மொழியைத் தொடர்ந்து, இ.இரத்தினம், இ.முருகையன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழே “நோக்கு’ ஆகும். இவ்விதழ் மரபுரீதியான தமிழ்க் கவிதைகளைத் தனக்குள் அதிகளவில் உள்வாங்கிக் கொண் டதுடன் செவ்விய தமிழ்மொழியை அடியொற்றிய பண்டிதப் போக்கிலமைந்த கவிதை இதழாக வும் தன்னை வடிவமைத்துக் கொண்டது. பிறமொழிக் கவிதைகளுக்கும் கவிதை பற்றிய பிற
எம.ஏ.நுஃமான
சித்திரை - ஆனி 2010 மனுபாகி 4
 
 

நாட்டவர் கருத்துக்களுக்கும் முன்னுரிமையளித்த நோக்கு, மயகோவ்ஸ்கி, கியூசினி, எவ்கு செங்கோ முதலிய சோவியத் கவிஞர்களையும் காசியா லோகா, மிகுவெல் உனாமுனோ முதலிய ஸ்பானியக் கவிஞர்களையும் பூடிலியர்க் போல்வலரி முதலான பிரான்சியக் கவிஞர் களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. நான்காவது இதழை சேக்ஸ்பியர் கவிதை ஏடாகப் பிரசுரித்த நோக்கு, புதுமைக்கும் பழமைக்கும் பாலமாக அமைந்தது 1970களில் வெளிவந்த இவ்விதழ் ஆறாவது இதழுடன் தன்னை முடித்துக் கொண்டது.
கவிதையைச் சமூகச் செயற்பாட்டுடன் பிரக்ஞை பூர்வமாக அணுகும் வகையில் மூன்றா வது கவிதை ஏடாக ஈழத்தில் வெளிவந்த “கவிஞன்’ நவீன கவிதைச் சிற்றேடுகளான கவிதை, நிலம், யாத்ரா, தவிர, நடுகை, நீங்களும் எழுதலாம், மறுபாதி முதலான இதழ்களுக்கு முன் மாதிரியாகவும் அக்காலப் படைப்பிலக்கிய ஆளுமைகளுக்கிடையிலான பரிவர்த்தனைக் கள மாகவும் இயங்கியது எனலாம். கலைத்துவமிக்க நேர்த்தியான கவிதைகள் பலவற்றைத் தன் னுள் உள்ளடக்கியிருந்த கவிஞன் அழகியல் தன்மையற்ற ஆக்கபூர்வமான இதழாகவும் அமைந்தது என்னும் வகையில் ஈழத்திலக்கியத்தில் கவிஞனின் இடம் முக்கியமானது.
சமுதாயத்திலுள்ள நடப்பியல் வாழ்வையும் மக்கள் படும் அவலங்களையும் சித்திரிக்கும் கவிஞன் கவிதைகள் பாசங்கற்றவை, பவித்திரமான பாரம்பரிய நீரோட்டத்தில் கட்டுருபவை வாழ்வியல் அனுபவங்களை நடத்தைசார் மாற்றங்களுக்கூடாகப் பதிவுசெய்பவை. நாம் அன் றாட வ்ாழ்வில் நாள் தோறும் காணும் பாடசாலை வாத்தியாரையும் (பாவம் வாத்தியார்), தாயை நினைத்து நினைத்து மனம் குமையும் மகவையும் முதிப்பீடு ஆழ்கடலில் அழகுப் பயணம் போகும் மீனவனையும் (பயணம்), ஞாயிற்றுக்கிழமைப் பொழுதில் விடியாத இருளில் பனிப் புகார் தன்னில் இனிய துயில் கெடுக்கும் மாதா கோயில் மணியோசை கேட்டுச் சினுங்கும் மானிடப் பிறவியையும் ஒரு ஞாயிற்றுக்கிழமை) சீர்திருத்தம் என்னும் பெயரில் நாகரிக மாயைக்குள் மூழ்கி அநாகரிகமாய் நடக்கும் ஜீவனற்ற ஆத்மாக்களையும் சீர்திருத்தம்) கவிஞ னெங்கும் தரிசிக்கலாம். மனித வாழ்வும் அதன் உயிர்ப்பும் நிணமும் சதையுமாகக் கவிஞ னில் விரவி நிற்கிறது. தேர்ந்த சொல்லும் கட்டிறுக்கமும் கவித்துவ அழகியலும் நிறைந்த இக் கவிதைகள் புதிய பாடுபொருளுக்கூடாக இயல்பினை அவாவி நிற்கின்றன.
கவிஞன் இதழின் காத்திரத்தன்மைக்கும் அதன் நிலைபேற்றிற்கும் உள் நின்று உழைப் பினை நல்கியவர்களாக எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் போன்றோரைக் கூறலாம். விரிந்ததளத்தில் நிறைந்த படைப்புகளைத்தந்தவர்களாக மஹாகவி, முருகையன், மு.பொன் னம்பலம் முதலானவர்களையும் குறைந்த படைப்புக்களை நல்கிநிறைந்ததளத்தில் பிரவேசித் தவர்களாக அ.யேசுராசா, மருதூர்க்கொத்தன், அண்ணல், நீலாவணன், மு.சடாட்சரன், ஜீவா ஜீவரெத்தினம், தான்தோன்றிக் கவிராயர் போன்ற பலரைக் கூறலாம். இவர்களில் எம்.ஏ.நுஃ மான், சண்முகம் சிவலிங்கம் முதலானோரின் பணிகள் அதிமுக்கியமானவை. இவ்விதழின் தொகுப்பாளரான எம்.ஏ.நுஃமான் படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் பன்முகத் தளங்களில் இயங்கியதுடன் இதழின் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் பங்காற்றினார்.
கவிஞனில் நான்கு கவிதைகளையும் இரண்டு விமர்சனங்களையும் எழுதிய நுஃமான், ஐந்தாவது இதழில் மஹாகவியின் “கோடைக்கு ஓர் அறிமுகமும் செய்திருந்தார். மனிதர்க ளின் உணர்வுநிலை உந்துதல்களை கலை வனப்புடன் சூழலுக்கேற்ப இலக்கியப் படைப்புக்க ளாக மாற்றி அமைத்தோருள் முக்கியமானவராகக் குறிப்பிடப்படும் நுஃமான், ஆழ்பொருள் கொண்ட உணர்வாழமிக்க கவிதைகளைக் கவிஞன் இதழில் படைத்துள்ளார். “இசைத்துத் தெளிவாக / மினுக்கிமினுக்கி/விதித்து மதர்த்த அழகோடு/உணர்ச்சிப் பெருக்கில் / நனைத் துப் பிழிந்த கவியாகும்.” என்னும் நீலாவணன் வாக்குக்கமைய நுஃமானால் எழுதப்பட்ட இக்கவிதைகள் ஓசை ஒருங்குடன் வாழ்வின் அநுபவ நிலைகளை காட்சிப்படுத்துபவையாக அமைகின்றன.
சித்திரை - ஆனி 2010 மேலுUதிெ

Page 5
மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியைச் சித்திரிக்கும் நுஃமானின் “அதிமானிடன்' வாழ் வியல் போராட்டங்களுக்கூடாக மனிதன் அடைந்த அதிஉன்னத நிலையை எடுத்துரைக்கிறது. ”அடர்ந்த காட்டில் இருட்குகையுள் பரட்டைத் தலையுடன் பிறந்த மேனியாய் மாசிசம் புசிக்கும் ஆரம்ப கால மனிதன், காலமாறுதலுக்கேற்ப மனித நடத்தைசார் வாழ்வியலை உள்வாங்கி படிப்படியாக வளர்ச்சியடைந்து உலகை ஒரு கைப்பிடிக்குள் அடக்கி விண்வெளியைக் கடந்து கோளவெளிக்குள் பிரவேசிக்கும் மனிதனாக மாறுகிறான்’என்பதை விளக்கி நிற்கின்றார். சமூகப்புறப்பெருண்மைக் கூடாகக் காட்சிப்படுத்துகிறார். இக்கவிதைராகுல்சாங்கிருத்தியனின் “வால்கா முதல் கங்கை வரை” என்னும் நூலின் தொடர்ச்சியாகவும் முருகையனின் “ஆதி பகவன்’ என்னும் கவிதையின் முன்மாதிரியாகவும் கொள்ளப்படுகிறது. 畿 ଽ புகையிரதிலையத்தில் அல்லலுறும் பயணியின் மன அவஸ் தைகளைத் துல்லியமாகப் பதிவுசெய்யும் "புகைவண்டிக்காக காத்தி ருக்கையில்’ என்னும் கவிதை விவரண முறையியலுக்கூடாகத் தன்னை வெளிப்படுத்த நுஃமானின் “மீண்டும் துப்பாக்கி வெடிக் கிறது” என்னும் கவிதை நிகழ்வொன்றின் நிஜத்தைகாட்சிப் படிமங் களுக்கூடாக எடுத்துரைக்கிறது. "ஹோசிமின் நினைவாக எழுதப் பட்ட இக்கவிதை அக்கால தமிழிலக்கியத்தில் வெளிப்பாட்டு முறை யாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிற்கால ஈழத்தின் போர்க் கவிதைகளுக்கு முன்னோடிக் கவிதையாக அமையும் இக்கவிதை இறுக்கமான மரபுக் கவிதையாக அன்றி எளிமையான சொற் சேர்க்கையால் உருவான யாப்பு வழிக் கவிதையாக இயங்குகிறது. မား။ பொதுவுடமைச் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையையும் புரட்
சியை வரவேற்பதில் ஆர்வமும் கொண்டகால கட்டத்தில் ‘கவிஞன் முகிழ்ந்தமையால் அது மாக்சியச் சித்தாந்தக் கருத்துக்களுடன் இசைந்த,கவிதைகளையும் சுவீகரித்துக் கொண்டது. இவ்வகையில் ரஷ்சியக்கவி 'அன்றைய ஊறென்ஸ்கியின் கவிதை கள் இரண்டினை 'இலையுதிர்காலம்’, 'பனிப்புகார் வீதி’ என்னும் தலைப்பிட்டு தமிழுக்கு மொழிபெயர்த்த “சசி” என்னும் சண்முகம் சிவலிங்கம் இதனைப் போன்று லூர்ச்-சீ, ஃபு-க போன்றோரின் கவிதைகளை முறையே "சாங்கிங்நகர்ப் படகுகள்’ ‘மாடுகள் ஒட்டும் பெண்’ என்னும் தலைப்புக்களில் மொழிபெயர்த்தார் மொழிபெயர்ப்பைப் போன்று கவிஞனில் வெளி வந்த கவிதைகள் சில இயக்கவியல், பொருள் முதல்வாத அடிப்படையில் சுரண்டலையும் சுரண்டலுக்கெதிரான புரட்சியையும் வெளிப்படுத்திநின்றன. நுஃமானின் “நாங்கள் கோபமுற் றெழும்போது உன் வதனத்தில் புன்னகை மலர்க” என்னும் கவிதை இதற்குத்தக்க சான்றாக அமைகின்றது. வர்க்கச் சுரண்டலும் சுரண்டலால் நலிந்து நொடியும் தொழிலாளர் வாழ்வும் இக்கவிதையில் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் ஈற்றில் புரட் சித்தீ கொளுந்து விட்டெரியும் என்பதை நிகரமை இயல்பு நவிற்சிக்கூடாக இக்கவிதையில் நுஃமான் எடுத்துரைப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கவிஞன் பிரசவித்த மிக நல்ல கவிதைகளில் ஒன்று அயேசுராசாவின் “நல்லம்மாவின் நெருப்புச்சட்டி’ வறுமையும் வறுமைக்குள் உழலும் நல்லம்மாவின் வாழ்வும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. “பற்றியெரி சிரட்டைத்தணல் கரிபற்ற, தணல் நிறைந்த நெருப்புச் சட்டிகள் வீசுகிற பெருவெக்கை” என்னும் வரிகளுக்கூடாகப் பிரவகிக்கும் வெக்கை நல்லம் மாவை மட்டும் தாக்காமல் அதனை உள்வாங்கும் வாசகனையும் தாக்குகிறது. இதனைப் போலவே வறுமையை வெளிப்படுத்தும் சி.மெளனகுருவின் “நிலவே உன்னைப்பாட நேர மில்லை” என்னும் கவிதை செறிவான வசனத்தன்மையற்றுமுறையான வடிவமின்றி அலங் கார வார்த்தைகளாகவேயுள்ளது. “வளிபோன டயர்போல / மடிகின்ற வயிறும் /சளிவழியும்
m d'Aweikisté.
சித்திரை - ஆனி 2010 பDலுள்ே
6
தி
 

மூக்கோடு / உணர்வற்ற நிலையும்” எனக்கூறி வறுமைக்குள் உழலும் மனித விம்பத்தை சி.மெளனகுரு காட்டும்போது அதில் உயிர்ப்பில்லை, உணர்வில்லை நீர்த்துப்போன அலங்கா ரமே எஞ்சி நிற்கிறது.
“ஜீவனை அரித்து வாழ்வை முடக்கும் வறுமையின் கொடுமை” ஜீவா ஜீவரத்தினத்தின் “உன்னைப்போல் நானும் ஒரு முறை சாகவேணும்” என்னும் கவிதையில் அங்கதமாய் மிளிர்கிறது. “கச்சைதான் கட்டுதற்கும் / கால்முழத் துண்டுமின்றி / எச்சிலைப் பொறுக்கி வாழ்ந்தோம்’ என வறுமைக்குள் உழன்று நொடிந்து வாழும் யதார்த்த நிலையைக் காட்சிப் படுத்திய கவிஞர் பிணக்கோலம் ஒன்றினாலேயே கந்தல் வாழ்வும் நளினமாகும் என்பதை “வாலாமணி வெள்ளை வேட்டிச்சால்வை/நேர்த்தியாய் உடுத்தியுள்ளார்/நீபுதுமாப்பிள்ளை தானே ! . இந்த நாள் ஒன்றே வாழ்வின் இனிமையை நுகர்கின்றாய்” என்னும் வரிகளுக் கூடாக நுட்பமாகத் தீட்டுகின்றார். இருக்கும்போது எளிமையாக வாழ்பவனை ஏறெடுத்துப் பாராச் சமூகம் இறந்த பிறகு அவனை ஏத்திப் போற்றுவதில் அர்த்தமில்லை என்பதை இக் கவிதை நன்கெடுத்துரைக்கிறது.
சண்முகம் சிவலிங்கத்தின் “ஆக்காண்டி”, “சந்தியிலே நிற்கிறேன்’ என்னும் கவிதைக ளில் வறுமை புறக்காட்சிக்கூடாக நிலைபெறுகிறது. “ஆக்காண்டி ஆக்காண்டி எங்ஸ்கங்கே முட்டைவைத்தாய்” என்னும் நாட்டார் பாடலடி சண்முகம் சிவலிங்கத்தின் கரங்களில்உழைப் பாளியின் உதிரத்தைப் பாடும் கவிதையாய் உருக்கொள்கிறது. உழைப்புக்கேற்ப உள்தியமின் மையால் தொழிலாளியின் மெய்வருத்தம் “கடலிலே கண்டதெல்லாம் / கைக்கு வரவில்லை / வயலிலே கண்டதெல்லாம் / மடிக்கு வரவில்லை” என்னும் வரிகளில் மிகையற்று வெளிப் படுகிறது. வாழ்வின் பஞ்சம் என்றைக்கும் தீராது என்பதை “குஞ்சு பசியோடு/கூட்டில் கிடந்த தென்று/இன்னும் இரைதேடி/ஏழுலுலகும் சுற்றி வந்தேன்’ என்றுபுலக்காட்சிப் படிமங்களுக் கூடாகச் சித்திரிக்கும் சண்முகம் சிவலிங்கம் உழைப்பாளி பொங்கி எழுவதாலோ பொல் லாங்கு பேசுவதாலோ எவ்வித பயனும் இல்லை என்பதை வாழ்வின் நிதர்சனங்களுக்கூடா கவே எடுத்துரைக்கிறார்.
இராமாயணம், இரகுவம்சம் ஆகிய நூல்களில் மாத்திரமன்றி வெள்ளைக்கால் சுப்பிர மணிய முதலியார் (அகலிகை வெண்பர்), ஞானி (அகலிகை, சது.சுப்பிரமணிய யோகியார் (அகலியா), ந.பிச்சமூர்த்தி (உயிர் மகள்), புதுமைப் பித்தன் (அகல்யை, சாபவிமோசனம்), க.கைலாசபதி (அகலிகையும் கற்பு நெறியும்) முதலானோரால் எடுத்துரைக்கப்பெற்ற “அக லிகை” கவிஞன் முதலாவது இதழில் மஹாகவியாலும் பாடப்படுகிறது. அறுசீர் விருத்தமாக அமையும் இக்கவிதை பதினாறு பாடல்களையுடையது. இந்திரனை அறியாது சோரம்போன அகலிகை அதனை அறிந்த கணத்திலேயே கல்லாய்ச் சமைந்தாள் என மஹாகவி காட்சிப் படுத்துவது தூல சிந்தனையின் யதார்த்த வெளிப்பாடே. அகலிகை என்னும் தொன்மத்துக்கு புதிய வடிவம் கொடுத்த மஹாகவியின் இக்கவிதை தனித்துவமானது தார்மீகக் கண் கொண்டு நோக்கத்தக்கது.
சாதியத்தின் பெயரால் ஈழத்தில் “ஒடுக்கப்பட்டவரின் வாழ்வியல்’ இலக்கியமாகப் பரிண, மித்த சூழலில் “கவிஞன்” ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலைக் குருதி சொட்டச் சொட்ட இலக் கியமாகப் படைத்தது. அவ்வகையில் கவிஞன் இதழ் மூன்றில் வெளியான “தேரும் திங்க ளும்’ இ.சிவானந்தனின் “கொழும்பிலொரு கோலம் சிவலோகமானாலும்’ என்னும் கவி தைகள் குறிப்பிடத்தக்கன. கட்புலப் படிமங்களுக்கூடாகச் சாதியக் கொடுமைகளை வெளிப் படுத்தும் இவ்விரு கவிதைகளும் வாழ்வியல் அனுபவங்களுக்கூடான மீநிலையில் எழுகின் றன. இறை சந்நிதியில் சாதியத்தின் பெயரால் நடந்த குரூரப் படுகொலையை முன்னைய கவிதை பதிவுசெய்ய பின்னைய கவிதை இலங்கையின் கல்விச் சீர்திருத்தத்தால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல்திற்கு தகியாது புளுங்கி மாயும்
yw
சித்திரை - ஆணி 2010 ஜூறுவதிே 7

Page 6
மேட்டிமைகளின் மன உணர்வையும் பிரதிபலிக்கிறது. அப்பட்டமான வாழ்வியலின் அனுபவமாக முகிழும் இக்கவிதை யாழ் சமூகத்தின் பண்பாட்டுச் சிந்தனைகளுக் கூடாகத் தன்னை முன்னிறுத்துகிறது.
காதல் வயப்பட்ட அக அனுபவ உலகைப்பாடும் கவிதைகளுக்கும் கவிஞன் களம் அமைத்துக் கொடுத்தது. ஜீவா ஜீவரத்தினத்தின் “பக்க பேதம்’ பளில் காரியப்பரின் “உயிர்ப்பு’ அன்பு முகையதினின் “ஒரு கணநேரச் சந்திப்பு’ முதலான கவிதைகள் இவ் வகைக்குள் உள்ளடங்குபவை. பெண்ணை மையப்படுத்தி நிற்கும் இக்கவிதைகள் அழகியல் தன்மையற்றவை துலக்கமான மொழிக்கூடான நுண்ணுணர்வின் வெளிப்பாடே இக்கவிதை
56T 66.6LD.
கவிஞன் இதழில் வெளியான நுஃமான், சண்முகம் சிவலிங்கத்தின் கட்டுரைகள் ஈழத்து தமிழிலக்கியப் பரப்பில் நவீன கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கும் விமரிசன ரீதியாக அதனை அறிந்து அணுகிக் கொள்வதற்கும் உதவுகின்றன. நுஃமானின் “பேச்சுமொழியும் கவிதையும்”, “கவியரங்கு கவிதைகள்’ முதலான கட்டுரைகளும் சண்முகம் சிவலிங்கத்தின் “இன்றைய தமிழ்க் கவிதை பற்றிச் சில அவதானங்கள்’ என்னும் தொடர் கட்டுரையும் அஞ் சிறைத்தும்பியின் "கோபுரவாசல் பற்றிய குறிப்பு” முதலானவையும் கவிஞன் இதழில் வெளி வந்தன. “திறனாய்வுக் கட்டுரைகள்”“மொழியும் இலக்கியமும்” என்னும் நூல்களில் பின்னா ளில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட“பேச்சு மொழியும் கவிதையும்” என்னும் கட்டுரை கவிதையில் பேச்சொலியின் முக்கியத்துவத்தை அவாவி நிற்கிறது. இக்கட்டுரை முருகையனின் “பேச்சோ சையும் பாட்டோசையும்’ என்னும் கட்டுரையுடன் ஒப்பிட்டு நோக்கி ஆராயத்தக்கது. நுஃமா னின் பிறிதொரு கட்டுரையான “கவியரங்குக் கவிதைகள்’ கவியரங்கக் கவிதைகளின் இயங்கு தளத்தையும் அதன் படைப்பிலக்கிய ஆளுமைகளையும் தமிழிலக்கியத்துக்கு அறி முகம் செய்கிறது.
கவிஞன் மூன்றாவது நான்காவது இதழில் தொடர் கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்ட “இன் றைய தமிழ்க் கவிதை பற்றிச் சில அவதானங்கள்’ என்னும் கட்டுரை 1970களுக்கு முன் வந்த நவீன கவிதையின் இயங்கியல் தளத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. பொதுமக்களிடையே கவிதைக்கு மதிப்பில்லை எனக்கூறி கவிதைப் பிரச்சினை களை ஆராயும் இக்கட்டுரை, கவிதை எழுதப்படும் நோக்கை நான்காக வகைப்படுத்தி ஆராய் வதுடன் வாழ்நிலை அடியாகப் பிறக்கும் கவிதைகளின் பிரதான கூறுகளையும் ஆராய்கிறது. கவிதை கட்டுரை எனப் பன்முக பரிமாணங்களில் இயங்கிய கவிஞன் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் முக்கிய பங்காற்றியது. சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற மேலைத் தேய கீழைத்தேய கவிதை மொழி பெயர்ப்புக்களை வாசகருக்கு அறிமுகம் செய்த கவிஞன் நிகழ்கால நன்மை கருதி ரஷ்ஷிய சீன ஜேர்மனிய ஆங்கிலக் கவிதைகளையே தமிழில் மொழி பெயர்த்தது. கவிஞன் முதல் இதழில் ஹன்ஸ் மாக்னஸ் என்கன்ஸ்பேகர் எழுதிய மூன்று புதிய கவிதைகள் “தூரத்துவீடு”, “பட்டோலை”, “வரலாற்றுப் போக்கு’ என்னும் தலைப்பின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டதைப் போன்று இரண்டாம் மூன்றாம் இதழில் சசி என் னும் பெயரில் சண்முகம் சிவலிங்கத்தால் ரஷ்ஷிய சீனக் கவிதைகளும் மொழிபெயர்க்கப்பட் டன. சண்முகம் சிவலிங்கத்தால் நான்காவது இதழில் மொழிபெயர்க்கப்பட்ட எட்கார் லீமான்ற் றேஸ், அமிலோவல், கார்ல் சேன்பேர்க், வோல்ற் விற்மன் ஆகியோரின் நான்கு அமெரிக்க கவிதைகளும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. உரைச் செம்மையுடன் சொற்சிக்கனத் தோடு மொழிபெயர்க்கப்பட்ட சண்முகம் சிவலிங்கத்தின் கவிதையைப் போன்று, யாப்பிலக் கணத்தோடு மொழிச் செம்மையும் இயைந்து வரும் வண்ணம் மஹாகவியால் “முழங்கால்” என்னும் தலைப்பின்கீழ் ஜேர்மன் கவிதைஒன்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலைத் தேய நவீன கவிதை இயங்கியலை அறியும் வகையில் மொழிபெயர்க்கப்பட்ட இக்கவிதைகள்
சித்திரை - ஆணி 2010 மூலுUஎதி 8

தமிழிலக்கியப் பரப்பை சீர்மைப்படுத்தி விரிவுபடுத்த உதவின.
ஈழத்துத் தமிழிலக்கியச் சூழலில் நவீன கவிதைகளின் பிரசுரக் களமாகவும் கவிதை பற் றிய முறைமையான விமர்சனதளமாகவும் விளங்கிய “கவிஞன்” அற்ப ஆயுளில் தன்னை முடித்துக் கொண்டது. நவீன இலக்கிய வளர்ச்சிக்கான பிற்புலத்தில் காத்திரமான படைப்புக் கூடாகப் பிரக்ஞைபூர்வமான படைப்பிலக்கிய ஆளுமைகளை ஈழத்து தமிழிலக்கியத்துக்கு அறிமுகப்படுத்திய “கவிஞன்’ எடுத்த நோக்குக்கேற்ப கவிதையைக் கலைத்தரமிக்க சமூக பெறுமானம் உடையதாக ஆக்கியது. யதார்த்த கவிதை இலக்கிய உருவாக்கத்துக்கான முக் கிய ஊற்றாகச் சுரக்கத் தொடங்கிய இவ்விதழ் தமிழிலக்கியப் புலத்தில் புதுமை, முற்போக்கு, அழகியல் அம்சங்களுக்கூடாக கலைத்துவ மிக்க காலத்தால் அழியாத இதழாகத் தன்னை
முன்னிறுத்திக் கொண்டது. O
O O O நானும் அவர்களும் முன்னையதிலும் அவர்கள்
*$!!ffaf56D6T6]L - Gund *ෂ්ගfiL3D அதிகமாயுள்ளார்கள்
அவர்கள் என்னை மறுதலித்தாலும்
அதிகமான விருப்புடன்
வெகுதூரம் சென்றுவிட்டார்கள்
அவர்களுடைய என்னை
தங்களை என்னிடமிருந்து
ஏந்திச் செல்கிறார்கள்
பறித்துச் செல்வதாக நினைத்துக் கொண்டு
அவர்களையும் என்னையும்விட அவர்களுடைய நானும் என்னுடைய அவர்களும் விரோதங்கொண்ட பொழுதுகளில் என்னுடைய நானைக் கண்டேன்
அவர்களும் நானும் உள்ளவரை அவர்களுடைய நானும் என்னுடைய அவர்களும்
SG36Té, MOR இருப்பார்கள் காயங்களோடு
கவிதை நூல்களுக்கான விமர்சனங்களுக்கு தங்கள் நூல்களை அனுப்புகின்ற படைப்பாளிகள்நூலின் இரண்டுபிரதிகளைஅனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்
ப்படுகின்றீர்கள். ளப்படுகின்றீர்கள் - ஆசிரியர் -
சித்திரை - ஆனி 2010 மூனுபவிதி 9

Page 7
“மறுபாதி’ இதழ் மூன்றின் கவிதைகள் சில குறிப்புகள்
- ந.சத்தியபாலன்
“மறுபாதி” கவிதைக்கான காலாண்டிதழ் நவீனத் தமிழ்க் கவிதைக்குத் தன்னாலான பணியினை மெய்யான சிரத்தையோடும் ஈடுபாட்டோடும் ஆற்றிவருகிறது. “கவிதை” என்னும் மொழிசார் கலையின் ஆழ அகலங்கள் பற்றிய கூர்ந்த பிரக்ஞையோடு அதை ஒரு ஆரோக்கி யமான தடத்தில் முன்னெடுத்து வருவது பாராட்டி வரவேற்கவேண்டிய விடயம்.
மூன்றாவது மறுபாதியில் வெளிவந்துள்ள கவிதைகள் பற்றிய ஒரு மீள் பார்வையினை முன்வைப்பதே இக்குறிப்புகளின் நோக்கம்.
ந. பிச்சமூர்த்தி, வரதர், தான்யா, பா. அகிலன், தபின், ந. சத்தியபாலன், தீபச்செல்வன், மருதம் கேதீஸ், எஸ்.பாயிஸா அலி, சண்முகம் சிவகுமார் ஆகியோரின் கவிதைகள் இவ்வித ழில் வெளியாகியுள்ளன. −
இதழை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முன்னைய இரண்டு இதழ்களைக் காட்டிலும் இவ்விதழ் சிறப்பாய் அமைந்துள்ளதெனவே சொல்லத் தோன்றுகிறது. எனவே இத்தகைய கனதி தொடர்ந்தும் பேணப்படுதலின் அவசியத்தை அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.
ந. பிச்சமூர்த்தி 1934ல் எழுதிய ‘காதல்’, வரதர் 1943ல் எழுதிய “ஓர் இரவிலே’ ஆகிய கவிதைகள் நவீன கவிதையின் ஐம்பதாண்டு காலநிறைவின் நினைவையொட்டியும் இந்தியா ஈழம் ஆகியவற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட நவீன கவிதைகள் என்ற காரணத்திற்காக வும் பிரசுரிக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் தம்பாற் கொண்டுள்ள சில தனித்துவப் பண்புகள் கருதி கவனிப்பைப் பெற்றுமுள்ளன.
ந. பிச்சமூர்த்தியின் “காதல்’ குயில்களின் குரல்வழி இயைகிற் மெல்லுணர்வின் “தழல் குழைத்துத் தேனாக்கிய”இனிமையை அந்த அனுபவத்தின் துயர்ச் சுகத்தை மொழிவழி கொண்டு வந்திருக்கிற ஒரு படைப்பு: 1934ல் கவிதை மொழியின் கட்டமைப்பு இறுக்கமாகப் பேணப்பட்ட ஒரு சூழலில் கட்டவிழ்ந்தநவீன கவிதைநடை எங்ங்ணம் படைப்பாளியின் வெளிப் பாட்டு முனைப்புக்கு உரியதோர் களமாய் விளங்கியது என்பதற்கு இக்கவிதை ஒரு சரியான உதாரணம், வரதரின் “ஓர் இரவிலே’ மனித வரையறைகள், மதிப்பீடுகள், கண்டுபிடிப்புகள் யாவற்றையும் தாண்டி நின்று தாண்டவமாடும் இயற்கையின் சீற்றத்தை, வேகத்தை, கட்டு டைப்பை மொழிக்குள் கொண்டு வருகின்ற ஒரு முயற்சி. வார்த்தைக்குள் அகப்படாத ஒரு அனுபவத்தை வார்த்தையிற் சிறைப்பிடிக்கும் ஒரு எத்தனம்.
இதைப் படிக்கையில் பாரதியின் “சட்டச்சட சட்டச்சட சட்டச்சட சட்டா.கொட்டியிடிக்குது மேகம்.” நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. o
மனுஷ துயரங்களில் உச்சமான ஒன்று, கண்டுகொள்ளப்படாமை அல்லது புரிந்து கொள் ளப்படாமையாகும். அதிலும் ஆழமானது பொருத்தமற்ற அல்லது எதிர்மறையான கணிப் போடு கையாளப்படுதல். தான்யாவின் முதற் கவிதை இவ்வுணர்வினையே எம்முடன் பகிர்ந்து கொள்ள முனைவதாகப்படுகிறது.
இணைந்திருந்த ஒரு பிரியத்துக்குரிய ஜீவன் பிரிந்து போன பிறகு ஒரு பெண்ணின் மனத் தவிப்பும் துயரும் இரண்டாவது கவிதையில் சித்திரிக்கப்படுகிறது.
இந்த இரண்டு கவிதைகளும் வாசகரிடத்தில் தொற்ற வைக்க முனையும் அனுபவம் இன் னும் கொஞ்சம் இறுக்கமான சொல் முறையை, இன்னும் மெளனத்தைக் கொண்டிருப்பின் தனது தரத்தில் இன்னும் உயர்ந்திருக்கலாம் எனப்படுகிறது. திறந்த ஒரு வெளிப்பாட்டைக்
சித்திரை - ஆணி 2010 புற்றுUதிெ 10

காட்டிலும் சுரீரென விழும் ஒரு கண நேரப்பார்வை காவிப் போகுமே அர்த்தங்கள் அதுபோல, ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும் அழுத்தமான ஒரு நீடித்ததீண்டல் பேசிப்போகுமே செய்தி கள் அதுபோல.
கவிதையில் தனக்கேயான ஒரு இயங்குதளத்தை வரித்துள்ள பா.அகிலனின் ‘பேராடை பெருநிலம்: மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம், ஆகிய கவிதைகள் பரந்துபட்டதும் ஆழ்ந்தது மான ஒரு கவனிப்பை, ஒரு கூர்ந்த பார்வையைக் கோரி நிற்பன. “வார்த்தைகளை அவற்றின் நிர்ணயகரமான அர்த்தங்களை இடைவிடாது உடைத்துத் திறந்து முடிவில்லாது செல்லும் ஒரு மனமூட்டத்தின் பயணப் பாதையில்த்தான் இலக்கியங்கள் சித்திக்கின்றன’ என அவரே ஒரு பின்னுரையில் குறிப்பிடுவது போலத் தனது கவிதை மொழியூடாக அவர் விரிக்கும் அனுபவ உலகம் பரந்த தாய் தொலைவு அறியாததாய் அமைகிறது. வாழ்வு பற்றிய, உலகு பற்றிய, இருப்பு பற்றிய விசாரங்களை விசாரிப்புக்களை எம்முள் விதைக்கிறது. தேடுபவர்கள் கண்டடைவார்கள்
வாழ்வில் நேரிடும் அபூர்வத் தருணங்கள் பற்றிய ஒரு கவனிப்புக்கு எம்மை அழைத்துச் செல்வதாய் அமைகிறது தபினின் “தேம்பியழும் முத்தமொன்று’ இக்கவிதை தன் நேர்ப் பொருளில் விரிக்கின்ற காட்சி இயல்பானதொன்றாகத்தன்னை அடையாளம் காட்டும்போதும் அது கொள்ளும் படிம அர்த்தத்தில் மனித வாழ்வின் அறியப்படாத மூலைகளில் நேரிடும் அரிதான கணங்களின் சாசுவதத் தன்மையை எடுத்துரைப்பதாகக் கொள்ளலாம். தத்தம் திசைவழி தொடர்வோரின் பயணங்களில் தபின் சொல்லும் முத்தத்தின் தேம்பல் ஒலி கேட்ட படியே இருக்கிறது. w
இவ்விதழின் அடுத்த இரு கவிதைகளும் என்னுண்டயவை எனவே அந்தக் கவிதைகள் என்னுள் சம்பவித்த வகையினையும் அவற்றினூடான எனது பரிமாறல்களையும் இங்கு முன் வைப்பதே பொருத்தமாகும் என நினைக்கிறேன். ஒரு கவிதைக்கான “பொறி” எந்தத்திசையி லிருந்தும் எந்தக் கணத்திலிருந்தும் நினைவின் எந்த மூலையிலிருந்தும் கிளம்ப முடியும்.
“எழுதாத மடலொன்றின் கதை’க்கான முதல்வரி ஏதோ ஒரு நினையாத கணத்தில் என் னுள் தோன்றியது. அவ்வரி தன்னுள் விரித்த பொருளின் அடியொற்றுகையில் அன்றாட வாழ் வின் அனுபவம் பற்றிய ஒரு பதிவாக அது என்னுள் வளர்ந்தது. சுடர் உயிராகவும் அதன் துடிப்பு வாழ்வு குறித்த தவிப்பாகவும் எது பற்றியும் அக்கறையின்றி வீசியபடியிருக்கிற காற்று காலமாகவும் உருவகமாகி அக்கவிதை வளர்ந்தது. காற்றின் செயல் தன்னிச்சையானது. நெய்யு றிஞ்சும் திரியில் தரித்து நிற்கிற சுடரின் பலமோ தன் வசமற்றது. ஆனாலும் வேண்டுதல்கள். தரித்து நிற் பதற்கான கோரிக்கைகள். எல்லாம் தத்தம் வரை யான பலத்தோடு. கணங்களே முடிவற்று உருண் Lll.
இரும்பு அரண்களுள் தம்மை அடைத்துக் கொண்டு பகல்களைக் கறுப்பாக்கும் மனிதர்கள் நிரம்பிய இந்தப் பூமியில் கேட்பவர்கள் அற்றுப் போய்க் கொண்டிருக்கையில் பல காலைகள் இருட் டில்தலைகுப்புறவிழும் நிலைதான் தொடந்தபடியிருக்கிறது என்பது பற்றிய எனது ஆதங்கமே. ‘ஒருகறுப்பு நாளின் ஜனனம் தீபச்செல்வனின் ‘எல்லாக் கண்களையும் இழந்த சகோதரி யின் கனவு’ யதார்த்தத்தின் நிழற்படமான இக்கவிதையைப் படிக்கையில் மனத்திரையில் விரியும் துயரக் காட்சிகளையும் குருதியின் வாடையையும் தவிர்க்க இயலாது.
எனினும் தீபச்செல்வன் இத்ணிழ்நேர்த்திரகச் செதுக்கியிருக்கலாம்
சித்திரை - ஆணி 2010 றேறுவவதி 11

Page 8
என்றே சொல்லத் தோன்றுகிறது. சொற் களைக் குறைத்து ஒரு இறுக்கமான அமைப் பைத்தந்திருக்க முடியும். தோன்றுகிற எல்லா வற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகத்தைக் கட்டுப்படுத்தி சொல்லிடை வெளிகளூடாகவும் மெளனத்தினூடாகவும் ஒரு கனதியைத் தோற்றுவித்திருப்பின் அவ ரது கவிதை மேலும் மெருகுபெற்று ஆழ மான ஒரு படைப்பாகியிருக்க முடியும்.
அதிகமும் பூடகத்தன்மையைத் தனது கவிதைகளின் இயல்பாய்க் கொள்ள முனை கிறாரோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கும் விதத்தில் அமைந்தது மருதம் கேதீஸின் “தமயந்தி வடிவிலான கண்ணாடிக் குவளை யில் எனது உலகை ஒரு புள்ளியாகக் காண் கிறேன்’ என்னும் கவிதை, படித்த பலரையும் திகைப்புக்குள்ளாக்கிய, குழப்பத்துடனான கேள்விகளைத் தந்த கவிதையாக உள்ளது.
ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு புதிர்
போலாக்கி வாசகர்களைச் சோதிக்கிறாரோ? என ஐயம் எழுகிறது.
ஒரு கவிஞன் தான் காணும் ஒவ்வொன் றையும் தனது சுயமான புரிதலோடு அர்த்தப் படுத்தும் உரிமை உடையவன்தான் எனி னும் கவிதைக்குள் வாசகன் நுழைவதற்கு ஒரு சிறு வழியையாவது வைத்திருக்கக் கூடாதோ..? படிமமும் குறியீடும் வாசக னைப் பயமுறுத்தும் கருவிகளாகி விடாமல் அவர் பார்த்துக் கொள்ள வேண்டும்-அல் லது அமரர் லா.ச.ராமாமிர்தம் சொல்வது போல “புரிதல் என்பது அவரவர் நெஞ்சின் மீட்டலுக்கு ஏற்ப“ என்று சொல்லிவிடு 6in (8grt?
எஸ்.பாயிஸா அலியின் அரூபமான வன்’ இரக்கமில்லாத தன்னுட் சுருக்கிப் போகும் சுயநல உலகம் பற்றிய ஒரு பதிவு “என்றைக்கும் போலவே தொழுகைப் பாயால் அளவீடு செய்யப்படும் கண்ணின் உப்புச் செறிவு” என்னும் தொடர் மனசைத் தொடுகிறது. எனினும் அதிகமாய்ச் சொற்க ளைக் கொட்டியுள்ளாரோ? என்ற ஐயத்தை இக்கவிதை தோற்றுவிக்கிறது.‘கட்டிறுக்கம் ஒரு நல்ல கவிதிைக்குத் தேவையான பண்பு என்பதை சுந்தரராமசாமி போன்றோர் வலி யுறுத்துவதைக் கவனிக்கவேண்டும்.
சண்முகம் சிவகுமாரின் ‘நான் முதிரும் ரோஜாப் புதர்’ மறுபரிசீலனைக்குப் பிறகு பிர சுரிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு கவிதை. பூடகத்தன்மையுடன் கூறுதல் ஒரு கவிதைப் பண்பு தான் எனினும் கவிதையின் நகர்வு படைப்பாளியின் நோக்கத் தெளிவை வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கவிதையி லும் சொற்தேர்வு-தெளிவு இவை குறித்த மிகையான உள்ளுணர்வோடு படைப்பாளி தொழிற்படுதல் அவசியமெனத் சொல்லத் தோன்றுகிறது.
நவீன கவிதைக்கான சீரிய பணியை மேற்கொள்ளும் மறுபாதி, தான் தேர்வு செய் யும் படைப்புகள் குறித்து இன்னமும் விழிப்பு டனும் தெளிவுடனும் இருந்தால் நன்றாயிருக் குமே என்று தோன்றியமையே இக்கட்டுரை எழுதப்படக் காரணமாகிறது. O
சித்திரை - ஆணி 2010
மறுபதி 12
 

மகத்தான நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது
என்னுடைய களஞ்சியங்களிலிருந்து முதலில் எனக்கே எல்லாம்
மலைப் பொந்திலிருந்து கசியும் ஈரம் திமிறும் குமுழிகள் என்மீது நிரம்பி ஒழன
நீர்வீழ்ச்சிகளின் ஆர்ப்பரிப்பை நிகழ்த்தும் ஓவியத்தில் மீன்கள் இரைகளை உண்ணுகின்றன
பூவரசம் பூக்கள் மிதந்து மிதந்து செல்கின்றன
ஒவ்வொரு புதிய கங்ைகளை ஒவ்வொரு புதிய புன்னகைகளை ஒவ்வொரு புதுவானத்திலும் ஒவ்வொரு பறவைகளாக்கிப் பறக்கவிடுகின்றேன்
என்னுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகின்றேன் எல்லையற்ற அதன் எல்லையை நிர்னயிக்கிறேன்
எனது ருசியின் முழுமையை முழுமையின் ருசிக்குப் பரிமாறுகின்றேன்
எனக்கு மேலும் பசித்தது
என்னைக் கலைத்துப் போட்டு
உன்னத் தொடங்கினேன்
- அனார்
காட்சி அறையிலிருந்து தப்பிவந்த நீர்ச்சிலை
சித்திரை - ஆணி 2010 மறுப்ாதி 13

Page 9
அந்தச் சூரியன் மூழ்கிவிட்டது
கடல்தாண்டிப் போகவுமில்லை அடவி வழியே பதங்கிய பg நீள்தூரம் கடக்கவுமில்லை
நீரில் மூழ்கியவாறு தீ கரையேறிய நாளில் நிலத்தில் பதுங்கிக் கொண்டு புயல் முற்றவெளிக்கு வந்த நாளில்
ஆகாயத்தின் அருகுகளினூடாகப் புறப்பட்ட இgயோசைகள்
தலைக்கு மேலாக மையங் கொண்ட நாளில் சூரியன் உன்மத்தங்கொண்டு அலையத் தொடங்கியது
சூரியன் உருவாக்கிய நகரங்கள் அஞ்சியபg சிதறியோடத் தொடங்கின அது வளர்த்த பயிர் நிலங்கள் கருகத் தொடங்கின ஆகாயமெங்கும் தீப்பிடித்த பொழுதில் கரியனின் பிரகாசம்
மெல்ல மெல்ல
வஐயலாயிற்று
யாரும் சென்றடைய முடியாத ஏரியொன்றில் கடைசியாக அது மறைந்து கொண்டிருந்தது நீர்ப்பரப்பில் உதிரத்தைக் கரைத்தபg
கரியன் செத்துப்போன நிலத்தை ஒளழியின் பெருமழை நனைத்தது அது உருவாக்கிய பட்ஜனங்களில் நிரந்தர இருள் பgயலாயிற்று
JIT) 855si (8.82
சூரியன் மூழ்கிய ஆகாயம்
- ஃபஹமா ஜஹான்
சித்திரை - ஆனி 2010
றேறுவாகி 14
 
 

ஓவியம் வரைகையில் தூரிகை புரியும் புன்னகையின் நிதானங்களோடு எஸ்.நளிமின் *இலை துளிர்த்துக் குயில் கூவும்’
- எஸ். பாயிஸா அலி
தொன்று தொட்டே இலக்கிய மணம் இடையறாது கமழும் கிழக்கிலங்கையின் மட்டக்களப் புப் பிரதேச வாசியான எஸ். நளிம் சிறந்த கவிஞர் மட்டுமின்றி ஓவியம், சிறுகதை, பத்தி (சிதறி வீழ்ந்த மைத்துளியின் அழகு-எங்கள் தேசம்), நூலாய்வுகள் எனப் பன்முகத்தளங்களில் தொடர்ச்சியாய் இயங்கி வரும் இளைய தலைமுறைப் படைப்பாளி. இவரின் முதல் கவிதைத் தொகுப்பான 'கடைசிச்சொட்டு உசிரில் 2000 ஆம் ஆண்டின் வடகிழக்கு மாகாண சாகித்திய விருதினைப் பெற்ற தொகுதி. இவரின் இரண்டாவது தொகுப்பான 'இலை துளிர்த்துக் குயில் கூவும் தொகுதியைக்கூடமுகப்பு, வடிவமைப்பு, தளக்கோலம், உள்ளடக்கம், ஓவியம் உள்ள டங்கலாக காத்திரமான வரிகள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வெகு கச்சிதமா கவே செய்திருக்கிறார்.
பல்வேறு சஞ்சிகை, நூல்களுக்கு அட்டைப்படம் வரைந்ததன் தூரிகையையே இங்கு அட் டையிலிருத்தித் தன் படைப்பாற்றலுக்கு வெளிச்சமிட்டதோடு நேர்த்தியிலும் முன்னட்டையின் தரம் பேணியிருக்கிறார் கவிஞர்.
‘போரோய்ந்து துயர் நீங்கின் இலை துளிர்த்துக் குயில் கூவும் நமக்குள்ளே’ என்னும் வரிகள் தசாப்தங்கள் தாண்டியும் இடைவிடாது தொடர்ந்த யுத்தத்தாலும் அது விதைத்த ஆறாரணங்களாலும் நிம்மதியிழந்த நிலையில்த் தவிக்கும் ஆயிரமாயிரம் இதயங் களின் இயலாமைப் பெருமூச்சுக்களின் சமாதானத்திற்கான, இன நல்லுறவிற்கான ஏக்கத்தி னையும் அமைதியான வாழ்விற்கான அவசியத்தையும் வலுவாய் உணர்த்தி நிற்கிறது.
உள்ளேயுள்ள 60 கவிதைகளிலும் பெரும்பாலானவற்றில் போரின் அழிவுகளும், இன வன்முறையும் சமாதானத்திற்கான ஏக்கமுமே பாடுபொருளாகி ஒரு இனத்தின் அழிவையும் இழைக்கப்பட்ட அநீதிகளையும் வரலாற்றின் முகங்களின் கண்ணாடியாகிப்போன வன்முறை யின் அழகியல் கெடாமல் பேசி நிற்கிறது.
‘சமாதான இருளில்’, ‘சுமையா’, ‘இன்னுமொரு தேசியகீதம்’, ’பாட்டியின் ஈறல்’, 16.09.2003','கபன் துணிக்குவியல்’,‘சமாதானப்பலி’,'நடுநிசி வாழ்க்கை','நும்ரூத்தைக் கண்டநாள்','சந்தாக்குப் பயணிகள்','பசுத்தோல் போர்த்தி’, ‘பிறழ்வு','கேள்வி’, ‘மரணம் மரணமில்லை’,‘இருக்குக் கதிரிலிட்ட மழைமுட்டை','நிலா ஒழிந்த இரவில்’, ‘கலவரம்’, ‘சமா தானப் பலி’,"மொழி ஈர்ப்பு விசை’போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். படைப்பாளனது பார்வையின் தனித்தன்மையே இலக்கியம் சுவையாவதற்கு மூலகார ணம். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் “கல்லின் கதையும் அறிவேன் - அதைக் காவியமாக்கி வைப்பேன் - புல்லின் பேச்சும் அறிவேன் - அதைப் புராணமாக வடிப்பேன்.”
சித்திரை - ஆணி 2010 elegea? Is

Page 10
என்றாரே அது எப்படி முடிந்தது அவருக்கு. கவிஞனின் கண்களோ சுற்றிலும் பார்ப்பவை. சுற்றியுள்ள பொருட்களை முற்றிலும் பார்ப்பவை. கண்கள் வழியே மனதால் காண்பவை. யாவையும் உணர்ச்சி ததும்பும் உயிர்த் துடிப்போடு பார்ப்பவை. கல்லையும் புல்லையும் கல் லும் புல்லுமாகவே காணும் வெற்றுப் பார்வையாளர்களிடையே சடப்பொருட்களையே ஊனும் உயிர்த்துடிப்பும் உள்ளதாகக் கண்டு அவற்றின் காரணமாகத் தன் உள்ளத்தால் படித்த உணர்ச்சிப் பார்வையை கவிதையாய் மொழி பெயர்க்கின்றான் கவிஞன்.
இங்கேயும் அழகியல் சார்ந்து பின்னப்பட்ட இவரது கவிதைகளில் பரவசமூட்டக் கூடிய படி மங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து களிப்பூட்டி நிற்கிறது. “பாணிச்சேவல் குரல் எழுப்பித் தொண்டை கம்ம’ எனும் கவிதையில் “வானம் ஒரு குப்பைத்திடல் / கசக்கி வீசிய முகில் குவிந்து/கழுத்துவரைக்கும் வெள்ளம்/நான் அதிகாலைப் பாணிச்சேவல் / உதயசூரி யன் கவிழ்ந்து / ஈர்க்குத்தடியாகிப் பெருக்காதா / எங்கிலும் மழைக் குப்பை குப்பை” எனும் போது வானம் ஒரு குப்பைத் திடலாகி சூரியன் ஈர்க்குத் தடியாகி மழையோ குப்பையாகி ஒரடி மேலே போய் கவிஞனோ பாணிச் சேவலாகி விடுகிறான்.
“தலைக்குள் அணில்’ கவிதையில் தென்னை மரம் இளம் பெண்ணாய் படிமப்பட்டிருக்கி றது. “சைக்கிளில் காலூன்றி / முற்றத்தில் நின்று /பாளை வெடித்துச் சிரிக்கிறாயே’ எனும் போது தென்னை மரத்தில் சாத்தி வைக்கப்படும் சைக்கிள் /வழமையாகவே வீட்டு முற்றங்க ளில் காணும் காட்சியொன்றுகவிதையாய்த்தொடங்குகிறது. “உச்சியில் அள்ளிமுடிந்த கேசம் / காற்றுக்குக் கலைந்தாடும் /ஆனால் உன் தலைக்குள் அணில்’ எனும் போதும் வயதுக்கு வந்து / காதில் அணிந்த மணப்பந்தல் / காற்றுக்காடி உதிர்கிறது.’ எனும் போதும் ஆடி அசையும் தென்னங் கீற்றுகளும் அதற்குள் ஒளிந்து விளையாடும் அணில் குஞ்சுகளும் சொரிந்து பரவிக்கிடக்கும் தென்னம் பூக்களும் எவர் மனதிலும் படமாய் விரியும்.
“தவளை கத்தும் மழை” எனும் கவிதையில் “ஊன்றுகோலற்ற கிழவன் வானம் / பூமிக் கிழவி தகராறா? / புரிந்துணர்வு எங்குண்டு? / சீலைப் பேன் புழுத்து /உடலெலாம் ஊரும் அவஸ்தை /சிந்தனையில் சீழ் கட்டி / தெறிக்கும் வலி /பழம் புண் ஆறா /அனைத்துக்கும் வெயில் வேண்டும்.’ எனும் வரிகளில் மழைக்காட்சிகள் புதுப் புது அர்த்தங்களைப் பொழிந்து போகிறது.
மேலும் பல கவிதைகளும் வேறுபல கவிதா அனுபவங்களை எமக்குள் அசைபோட வைக் கின்றன. அசிங்கம் சூழ் வாழ்வில் “உயரப் பறந்தவன் /தவறிச் சேற்றில் வீழ்ந்ததுபோல்” எனும்போது பாரதியின் நல்லதோர் வீணை செய்தே. வரிகளும் நினைவை நெருடும். “கோடையின்றி கொட்டும் மழை / மூழ்குவோர் மூழ்க / நீந்துவோர் நீந்த / கரை சேர்க்க யாருண்டு’ எனும் வரிகளிலும் “நிழலுக்கு யார் சமைத்துப் போட்டதும் / சட்டை தைத்துத்தந் ததும் “நிஜத்தை நிழலாக்கி /நிழலே நிஜமாகும் கொடூரன் மனித நிழல் மட்டும்தான்.” எனும் போதும் கண்ணதாசன் கொஞ்சமாய் மனக் கண்முன் தோன்றி மறைவார்.
“வாழ்க்கையே ஒரு தேடல்தான்’ எனத் தொடரும் வைரமுத்துவின் வரிகளை மிஞ்சிப் போகும் இவரின் “தூரத்து ஒற்றைக் குயிலின் கானமாய்’ எனத் தொடங்கும் தேடல் கவிதை “நீ தந்ததையெல்லாம் திருப்பித்தா என்றால் / தந்து விடலாம்தான் இவைகளையும் திருப்பித் தர ஒரு வழியிருந்தால்’ என முடியும். ஒருவரில் ஒருவர் சாய்ந்து என்ற கவிதையில் பல வரி கள் தன் அன்பைப் புறக்கணித்த துணையின் இரும்பு மனத்தை விமர்சிப்பதாகவும் அதன் அன்பையே மறுபடியும் வேண்டி நிற்பதாயும் வெளிப்படுகிறது. கவிஞர் அனாரின் காதலைக் கொல்லும் தேவையிலும் இத்தொனி தொக்கி நிற்பதை அவதானிக்கலாம்.
இக்கவிதைத் தொகுதியிலுள்ள உணர்வுபூர்வமான கவிதைகளில் “பாட்டியின் ஈறல்”கவி தையும் ஒன்று. “என் குழந்தைகளின் அகதி நாமம் அழிய வேணும் /என் தந்தை தாய்க்கரு கில் நானும் அடங்கப் பெறவேணும் / மண்ணின் குழந்தைகளே என் மண்ணைத் தாருங்
சித்திரை - ஆணி 2010 பDனுபவதி 16
S 셀

கள்.” எனக் கதறும்போது இரும்பே உருகி ஓடும் வெம்மை நம் நெஞ்சுக் குழிக்குள் கனல்கி றது. உலகத்து அகதித்தாய்களின் மொத்த வலியின் உரு இங்கே வரிகளாக்கப்பட்டு மஹ்மூத் தர்வீசையும், சு.வில்வரத்தினத்தையும் அஷ்ரப் சிஹாப்தீனையும் இன்னும் பல கவிஞர்களை யும் நினைவூட்டிச் செல்கிறது.
மேலும் “என்றும் சிலுசிலுத்தபடியே இருக்கின்ற ஒரு சின்னநதி, ஒரு கவிதை இலையான், ஆழமற்றவர்போல் காட்டும் ஆழம் கொண்டவர். நல்ல மனிதனையும் நல்ல கவிஞனையும் தேடித்தான் காணவேண்டும் நளிமைக் கூட.” என்ற கவிஞர் சோலைக்கிளியின் வரிகளும் இங்கு நினைவிலிருத்த வேண்டியதொன்று.
இக்கவிதைத் தொகுப்பில் நான் அவதானித்த மற்றொரு விடயம் வரிகளுக்கு முடிவுக்குறி கள் இடப்படாமை. தன்விவரிப்புக்களையும் தாண்டிக் கவிதைக்குள் புதிய கூறுகளைப் பொருத் திப் புதிய பொருளையும் நாடிச் செல்லும் படியாக வாசகனின் சிந்தனைகள் விரிவடைய வேண்டுமெனக் கவிஞர் எண்ணினாரோ தெரியவில்லை.
விசேடமாகக் குறிப்பிட்டுக் கூறவேண்டிய இன்னுமொரு விடயம் “கத்தம், நெல்லுப்பாய், குட்டை, குழப்பி, கொள்ளிவாய்ப்பேய், போயிலை அருந்தியபச்சோந்தி, பாணிச்சேவல், சீச்சிப் பொறுக்கி, தலையாரி, நடுச்சாமம், ஈறல், ஒப்பாரி, ஒட்டு நோண்டி போன்ற கிழக்கு மாகாண - அதிலும் குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்துக்கே உரித்தான வட்டார வழக்குச் சொற்களும் அத்தோடு அம்மிக் கல் உருளைக்குள் நசுக்காமல், உரலுக்குள் இடியாகி இடிக்காமல், காலி டுக்கில் பன்னிழைத்து, கொண்டைக்குள் பேன் துழாவும் செம்பகத்தி” போன்ற தொடர்களும் பெரும்பாலும் அழிந்துவிட்ட அல்லது அழியக் காத்திருக்கும் எமது கிராமத்துப் பண்பாட்டு அம்சங்களை எம் கண்முன்னே கொண்டு வருகிறது.
இவ்வாறாக கிராமத்து மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் சமூக வரலாற்று ஆய்வுக் கூறுகளையும் விபரிக்கும் கவிதை வரிகள் கவிஞரின் கிராமத்துத் தொன்மை மனதின் ஆய்வு ரசனைக்குச் சான்றாக மிளிர்கிறது. எமது பண்பாட்டம்சங்களையும் கலாசாரத்தையும் பேணிக் காத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் ஒப்படைக்க வேண்டுமென்ற உணர்வு கல்வியிய லாளர்களிடையேயும் ஆய்வாளர்களிடையேயும் வேரூன்றத் தொடங்கியுள்ள இந்நாட்களில் இக்கவிதை முயற்சி வரவேற்கத்தக்கதே.
இதைவிடவும் “சமாதான இருளில்’, ‘மயில் துளிர்த்து கொக்கும் பூக்கா”, “கண்ணைக் கரிக்கும் உளிச் சிதறல்’, ‘விஷஜந்து”, “குட்டை குழப்பி’ போன்றவை நாறிக்கிடக்கும் அரசி யல் குப்பைகள்ை வரிகளால் கிளறிப் பார்க்கிறது. அதிலும் உள் வீட்டு அரசியலின் ஏமாற்றமா கிப்போன எதிர்பார்ப்புகளை எள்ளற் சுவையோடும் வலியோடும் கூறி நிற்கிறது.
“ஓவியம் போன்றது கவிதை” என்றார் உரோமப் பேரறிஞர் ஒரேசு. நளீமின் கவிதைக ளும் இதற்குப் பொருந்துவதோடு அவரின் நவீன ஓவியங்களும் இங்கே கவிதைகளாய் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். பெரும்பாலும் ஒவ்வொரு கவிதையோடும் அதனைச் சார்ந்து நிற்கும் நவீன ஓவியங்கள் நம் உள்ளங்களுக்குள் வர்ணங்களை வாரி இறைக்கின்றன. “வர்ணத்தில் உயிர்த்த பட்சி”, “சவால்”, “விரல் நாக்கில் கலர் கலராய் எச் சில்” போன்ற கவிதைகள் நவீன ஓவியமாய் உயிர்த்தெழுகின்றன.
புதுக்கவிதையில் இன்று முன்னணியில் இருக்கும் எமது சில மூத்த கவிஞர்கள் தம் கவி தைகளைத் தொடர்ந்தும் பொதுவான ஒரு இலக்கிய மொழியில் எழுதிக் கொண்டிருக்க, மறு புறம் சில நவீன கவிஞர்களோ நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற பெயர்களில் சொற் களையும் படிமங்களையும் நோக்கமின்றிச் சிதறடித்து கவிதையை இருண்மை நிலைக்குள் ளாக்கிவாசகருக்குமூளைவிறைப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்க, இலை துளிர்ப்பதுபோல பூமலர்வதுபோல மிக இயல்பாய் விரிகிற இவரது கவிதைமொழி. நிச்சயம் காலத்தை வென்று நிற்கும். O
சித்திரை - ஆனி 2010 மூனுபவிதி 17

Page 11
வாழ்வின் எல்லா இழைகளையும் அறுத்துத் தெருவில் இறக்கிவிட்டது காலம்: முழுஇரவையும் ஒரு புள்ளியாக்கி முகத்தில் அறைந்துபோயிற்றுப் புயலாய், எனதன்பே காலத்தின் குரூரப் பற்களிடையிருந்து
உனது இதயத்தைக் காத்துக்கொள்ள உனக்கிருக்கும் தருனத்தைக் கொண்டு
நீ போய்விடு. இருளின் புள்ளியில் முழுவற்றுச் சுழலும் எனது வாழ்வின் [ଗ୍ରିgeଔର୍ଚ) நட்சத்திரச்சிறுதுண்டாயினும் பட்டொளிர முgயாதிருப்பதாகவும் என் மனமிடை படர்ந்த துயரின் வேர்களில் ஒருபுள்ளி நீர்தானும் விட்டகல முgயாதிருப்பதாயும் நீ வருத்தமுறக்கூடும் அல்லது நான் அவ்வாறு நினைக்கிறேன் எனக்கு நம்பிக்கையிருக்கிறது: காலத்தின் முன்னே வலுவிழந்து கிடக்கும் எனது விரல்களை
ஒளிரும் ஒரு தீக்குச்சியைப்போல நீ எப்போதாவது கண்டெடுப்பாய்: தெருவின் அலைவிலும் பசித்துயரிலும் இன்னும் எரிந்துவிடாதிருக்கும் அந்த நம்பிக்கையைக் காத்தபg எனதன்பே நீ போய்விடு எனது கனவுகள் கதியற்றலையும் காடுகளை இந்தத் தெருக்களையும் விடுத்து யுக நெருப்பின் சாம்பலிடை கிடக்கும் அந்தப் பறவையை நோக்கி
ராம் கிங்கர் பேஜ்
இன்னும் சேகரிக்கப்படாத புறாவின் சிறகுகளும் தெருவின் நிழலில் கரையும் நாங்களும்
சித்திரை - ஆனி 2010 மறுவளதி 18
 
 
 
 
 
 
 
 
 
 

சித்திரை - ஆணி 2010
என் அன்புக்கினிய தோழர்களே எனது காதலியிடம் சொல்லுங்கள் ஆயிரக்கனக்கில் மனிதர்கள் குழுமியிருந்த வனாந்தரத்திலிருந்து ܀ ஒரு மிருகம் என்னை இழுத்துச் சென்றுவிட்டது கடைசியாக நான் முத்தமிடவில்லை அவளது கண்க்ளின் வழமையாயிருக்கும் ஒளியை நான் கானவில்லை கனங்களின் முgவற்ற வலி தொடர்கிறது
கடைசிவரை நட்சத்திரங்களையே
எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள் எனது காலத்திலும் எனது காலமாயிருந்த அவளது காலத்திலும் நான் அவற்றைக்கானவில்லை என்னை ஒரு மிருகம் இழுத்துச் சென்றுவிட்டது
நான்
@6f8Dు
எனது சித்திரவதைக் காலங்களை அவளுக்கு ஞாபகப்படுத்த முடியாது எனவே தோழர்களே நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்திலும் நான் செத்துப்போவேன் என்பது பற்றிச் சொல்லுங்கள்
நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை நான் அவளுக்கு பரிசளிப்பது இதுவே முதற்தடவை எலரினும் அவளிடம் சொல்லுங்கள் அவர்கள் எனது இதயத்தை நசுக்கிவிட்டார்கள் மூளையை நசுக்கிவிட்டார்கள் என்னால் காற்றை உரை முடியவில்லை.
16-04-2006 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலைசெய்யப்பட்ட கவிஞரும், பத்திரிகையாளரும், சஞ்சிகை ஆசிரியருமான எஸ்போஸ், போஸ்நிஹாலே என்ற பெயர்களால் அறியப்படும் சந்திரபோஸ் சுதாகரின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரின் இரண்டு கவிதைகளை மறுபாதிமீள்பிரசுரம் செய்கிறது. (கவிதைகளுக்காக நன்றி - கனவுகளின் அழுகையொலி)

Page 12
எல்லைகளுக்குட்பட்டு இயங்கக்
கவிதை என்பது சிற்றோடை அல்ல
தமிழ்க் கவிதை வரலாற்றில் மரபுகள் உடைக்கப்பட்டு புதுக்கவிதை வரலாறு ஆரம் பித்த காலத்திலிருந்து இன்றுவரை'கவிதை' பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்றன. இந்த வாதங்கள், பல மாறுபட்ட கோணங்களில் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. சிலர் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்துவரும் அதே நேரம், வேறு சிலர்தம் கருத்தை முதன்மைப் படுத்தி பிறர் கருத்தை ஆராய்ந்தறியாது நிரா கரித்தும் வருகின்றனர்.
இன்னொருவரது கருத்தை விமர்சிக்க முனையும் விமர்சகர்கள் கருத்தை விட்டு விட்டு, கருத்தைத் தெரிவித்தவரைப் பற்றி தவறான முறையில் விமர்சிக்கின்றனர். இது ஆரோக்கியமான செயற்பாடல்ல. ஆனால் வாதப் பிரதிவாதங்களின் மூலம் கவிதைக் கலை குறித்து காலத்துக்குக் காலம் பல மாறுபட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அல்லது முன்வைப்பதற்கான முயற்சிகள்
- சிகரம் பாரதி
மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும் கவிதையானது தன்னை ஒரு தீர்மானத்துக் குள் அல்லது வரையறைக்குள் உள்ளடக்கிக் கொள்ளாமல் தன்போக்கில் பயணித்துக் கொண்டே விவாதங்களுக்கும் இடமளித்துச் செல்கிறது.
“ஒரு கலையானது வரைவிலக்கண மொன்றுக்குள் அடக்கப்படக்கூடியதா?’ என்ற கேள்வி நம்முன் எழுகிறது. வரை விலக்கணமானது குறித்த விடயத்திற்கான எல்லைகளை நிர்ணயித்து, அந்த எல்லைக் குள்ளேயே முழு விடயத்தையும் மட்டுப் படுத்திவிடுகிறது. கவிதைக் கலையானது எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கூடியதா என்றால் இல்லை என்பதே பதில். இதன் மூலம் கவிதைக்கென எந்தவொரு நிலை யான வரைவிலக்கணங்களும் இல்லை என்பது உறுதியாகிறது. எல்லைகளுக்குட் பட்டு இயங்க, கவிதை என்பது சிற்றோடை அல்ல; கவிதை என்பது காட்டாறு. தான்
சித்திரை - ஆனி 2010
மனுபாதி 20
 

விரும்பும் இடமெங்கும் தன் தடத்தைப் பதிக் கும். கவிதை குறித்த வரைவிலக்கணங்கள் யாவும், அவரவர் சுயகருத்தேயன்றி அங்கீ கரிக்கப்படத்தக்க வரைவிலக்கணமல்ல.
புதுக் கவிதையென்று பார்க்கும்போது அதன் முன்னோடியாகத் தமிழில் மஹாகவி பாரதியையே குறிப்பிடுகிறோம். புதுக்கவிதை இன்று பல பரிமாணங்களைக் பெற்றிருக் கின்றது. புதுக்கவிதைகளின் ஆட்சிக்காலம் இது. புதுக் கவிதைகள் செல்வாக்குப் பெற்ற தற்கான காரணம் எவ்வித வரையறையு மின்றி யாவராலும் எழுதக்கூடியதாக அமைந்துள்ளமையே எனலாம்.
கலையானது நிலைபெறும் போது அதற் குரிய தனித்தன்மையுடன் நிலை பெறுகின் றது. புதுக்கவிதையும் அதனைப் போன் றதே. வரிகளை உடைத்து போடுவது தான் புதுக்கவிதையல்ல. புதுக்கவிதையானது தானே அதற்குரிய தனித் தன்மையுடனும், அடையாளங்களுடனும்தன்னை இனம்காட் டுகிறது.
இதுவே கவிதையை ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும். ஆனால் நயமுடன் எழுதப்பட்ட ஒன்று கவிதையாகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு கட்டுரை கூட அவ் வாறு அமையலாம். ஆனால் கவிதைக்கே யுரிய சிறப்பம்சமாக இந்த நயத்தைக் குறிப் பிடலாம். கவிதையின் மீதான வாசகனின் ரசனையை இதுவே ஈர்த்து வைத்திருக்கிறது. கவிதையில் முக்கியமானது “பாடு பொருள்” அதாவது எந்த விடயத்தை மைய மாகக் கொண்டு கவிதை படைக்கப்படுகி றதோ அதுவே பாடுபொருளாகும். மஹாகவி பாடுபொருள் பற்றி “இன்னவைதான் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்! சோலை, கடல் மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள் மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்.” எனக் கூறியிருப்
பது பாடுபொருளின் உள்ளடக்க அமைவை வெளிப்படுத்தி நிற்கிறது.
மக்களின் யதார்த்த வாழ்வியலைச் சித்தி ரிக்கும் இலக்கியங்கள் படைக்கப்படுவதன் மூலமே ஒரு சமூக முன்னேற்றத்திற்கான விதை விருட்சமாக முடியும். எனவே பாடு பொருள் குறித்த தெளிவுடன் எதிர்காலத்தில் இலக்கியங்கள் (கவிதைகள்) படைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் காதல் என்ற கற்பனை உலகத்தைப் பாடுவதைவிட வறுமை என்றநிஜ உலகைப்பாடுவதே சாலச் சிறந்ததாகும்.
புதுக்கவிதையைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் “நன்கு பிரபலமானவர்கள்” என்று சொல்லப்படுபவர்களை மையமாக வைத்தே விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. வாசகர் என்ற நிலையிலிருந்து கூட ஆர்வத் தின் மிகுதியால் பலரால் கவிதைகள் எழுதப் படுகின்றன. புதுக் கவிதை தொடர்பான வாதங்களுக்கு இவ்வாறான வாசகர்களால் எழுதப்படும் கவிதைகள் கணக்கெடுக்கப்படு வதில்லை. முன்னணிக் கவிஞர்கள் எனப் படுவோரைப் பார்க்கிலும் இவர்களாலும் மிகச் சிறந்த கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக்கவிதை சரியாகக் கையாளப்படுகிறதா இல்லையா என்பதை இவர்களது கவிதை களையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யவேண்டும்.
புதுக்கவிதை எதிர்ப்பு வாதம் என்பது போலியானது. அது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. புதுக்கவிதை மக்களால் ஏற் கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு மக்களால் ரசிக் கப்பட்ட சூழலையே நாம் இன்று காண்கி றோம். இச்சந்தர்ப்பத்தில் புதுக்கவிதை தேவையா இல்லையா என்கிற வாதம் புறந் தள்ளப்பட வேண்டியது. மேலும், புதுக் கவிதை சரியாகக் கையாளப்படவில்லை என்று விமர்சிப்பவர்கள், அதனைச் சரியா கக் கையாளக் கற்றுத்தர முன்வருவ தில்லை. அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ மான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வீண் நியாயம் பேசுபவர்கள் செயற்படமட்டும்
சித்திரை - ஆணி 2010
DேனுUதிே 21

Page 13
முன் வருவதில்லை.
கவிதை என்பது மன உணர்வுகளின் ஒரு வெளிப்பாடே. சில புனைவுகளைச் சேர்த் துச் சொல்வதால் அதற்கென ஒரு தனிநடை யும் சிறப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. புனைவு களின்றி ஒரு நயமின்றிச் சொல்லப்பட்டால் அது ஒருபோதும் சிறந்த கவிதையாக மாட் டாது. வாசகனை ஈர்க்கும் காரணிகளில் புனைவுகளுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. நாம் சொல்ல வந்த கருத்துக்களை ஒப்பீடுக ளுடன் விளக்கும்போது அக்கவிதையில் ஒரு அழுத்தத்தை உணர முடிகிறது.
கவிதையில் கையாளப்படும்மொழிநடை குறித்துப் பேசும்போது வாசகர் மட்டத்திலி ருந்து முரணான ஒரு கருத்தே முன்வைக் கப்படுகிறது. அதாவது கவிதையில் கையா ளப்படும் மொழிநடை புரியவில்லை என்பதா கும். நான் மேலே குறிப்பிட்டபடி புனைவுக ளுடன் கவிதை எழுதும்போது சாதாரண மொழிநடையில் எழுதமுடியாது. மேலும் ஒரு மிகச் சிறந்த கவிதையானது குறிப்பிட்ட ஒரு அர்த்தத்தை மட்டும் நேரடியாக உணர்த்துவ தாக அமையக் கூடாது. வாசிப்பவரின் மன நிலையைப் பொறுத்து மாறுபட்ட அனுபவங் களை வழங்கக்கூடியதாக அமைய வேண் டும்.இதற்கு சாதாரண மொழிநடை பொருத்த மற்றது. கவிதையின் சிறப்பம்சங்கள் அதில் கையாளப்படும் மொழியும் ஒன்றாகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்க் கவிதையை ஈழத்துத்தமிழ்க்கவிதை, மலையகத் தமிழ்க்கவிதை என இரு வகைப் படுத்தியே பார்க்கப்படுகிறது. இவ்வாறு வகைப்படுத்தப்படக் காரணம் இரு பிரதேசங் களினதும் வாழ்க்கை முறையும் வாழ்க்கைத் தரமும் கழலும் மாறுபட்டு அமைந்திருப்பதா கும். எனினும் இலங்கையின் கவிதையை அடையாளப்படுத்த முனைவோர் ஈழத்துக் கவிதைகளை மட்டுமே கவனத்திற் கொள் கின்றனர். மலையகத் தமிழ்க் கவிதைகள் உரிய இடத்தைப் பெறாமல் போய்விட்டதா எனும் கேள்வி இவ்விடத்தில் எழுகிறது. பத் திரிகைகளாகட்டும் சஞ்சிகைகளாகட்டும் ஈழக் கவிதைகளுக்கே முன்னுரிமை வழங்கு
கின்றன. மலையக எழுத்தாளர்களின் கவி தைகளும் சரி அவர்களது நூலாக்கங்களும் சரி பெரிதாக அடையாளப்படுத்தப்படுவ தில்லை. இந்த நிலைமையின் பின்னணி என்ன என்பதை அறிய முடியவில்லை. ஆனால் இரு பிரதேசக் கவிதைகளுமே இன் னமும் முழுமையான விருத்தியை அடைய வில்லை என்பதே உண்மை.
மொழி என்ற எல்லையைக் கடக்கும் போது வானவில்லின் வர்ண ஜாலங்களாய் விரியும் படைப்புலகின் அதிசயங்கள் நம்மை வியக்கவைக்கின்றன. அந்த வகையில் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ஒரு முக் கிய இடத்தைப் பெறுகின்றன. இவ்வகைக் கவிதைகள் விசேடமாக நோக்கப்படுகின் றன. இதில் சிறப்பான அம்சம் என்ன வெனில் மொழிபெயர்த்து கவிதையை எழுது பவர் இருவகைப் பாத்திரத்தை வகிப்பதாகும். அதாவது எழுத்தாளனே வாசகனாகவும் இருப்பதாகும். எழுதுகின்ற எல்லோருமே எழுத்துத்துறையில் இருக்கின்ற எல்லோ ருமே வாசகர்களாகவும் இருப்பார்கள். ஆனால் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பொறுத்த வரையில் வாசகன் எழுத்தாளனா கவும் எழுத்தாளனே வாசகனாகவுமாக இரு வகைப் பணிகளையும் ஒரேநேரத்தில் ஆற்ற வேண்டியிருக்கிறது.
மூலக்கவிதையை எழுதுகையில் கவி ஞன் என்ன மன உணர்வைப் பிரதிபலித் தானோ அதே மன உணர்வை பெயர்ப்புக் கவிதையை எழுதுபவரும் வாசிப்பவரும் அடைய வேண்டியது அவசியமாகிறது. மூன்று தரப்பினர் சம்பந்தப்படும் இலக்கிய வடிவம் என்றால் இது தான்.
இன்று கவிதையானது பலதரப்பட்ட மக்க ளையும் சென்றடைகிறது. எனவே நாம் கவிதை பற்றிய ஆக்கபூர்வமான நடவடிக் கைகளை எடுக்க வேண்டியது அவசியமா கும். மரபுக் கவிதை, புதுக்கவிதை என்னும் எல்லைகளைக் கடந்து அதன் சூட்சுமங் களைப் புரிந்து கவிதையை அணுகுவதே எதிர்காலத்தில் வளமான கவிதையைக் கண்டடைவதற்கு வழிவகுக்கும். O
சித்திரை - ஆணி 2010

எனது நகரம் என்னை
மிக வேகமாகக் கடந்து செல்கிறது
பிதுங்கி நிறைந்த பஸ்ஸை மறிக்காது adbdbugsbibuo)6 TFrf
o
நான.
நகரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாய்
ගඝ ඈ||G] தெரு அளக்கிறேன்
எனது அறையும் நானும் தனித்திருக்கிறோம்
ஸ்ரெயின்ஸன்
சித்திரை - ஆணி 2010
நேற்று என்னுடன் மிஞ்சியிருந்த வன்னத்துப்பூச்சியும் சுவரில் மோதி செட்டைகள் பிய்ந்து உருக்குலைந்து இறந்துபோயிருந்தது
வண்னத்துப்பூச்சியின் செட்டைகளை பத்திரப்படுத்துகிறேன்
பல்லியின் வால் ஒன்றும் தனியே இருந்தது
விட்டுக்கூரையின் சிலாகையில் சாரைப்பாம்பொன்று செட்டை கழட்gவிட்டு போயிருந்தது என்னை நகரம் கடந்து சென்ற பின்னும் புன்னகைத்தபg இருக்கும் உதட்டிலும் முகத்திலும் கடந்து போன வாகனங்களின் புகை பஐந்துபோயிருக்கின்றது
இன்னும் எழுத முஜயாமல்
மீதமிருக்கும்
கவிதைகளுடன்
எனது அறைக்கதவை யாரும் திறக்காதபடி மூgவிட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன் எனது நகரத்தை
- த. அஜந்தகுமார்
என்னைக்
கடந்து செல்லும் நகரம்
மூற்றுபவரி 23

Page 14
தொலைவில் ஒரு வீடு
- திவ்வியாவின் பக்கங்கள் -
வெய்யில் மடியத் தொடங்கியிருந்தது. என் நினைவுகள் சரியாக இருக்கின்றதாயின் அது 1991இன் மே மாதம். நல்லூர் மேற்கு வீதியில் அமைந்துள்ள கம்பன் கோட்டத்தில் செல்வரத்தி னம், சந்திரமதியாகி மாண்ட லோகிதாசனுக்காகப் புலம்பியழுகிறார். “மங்காத ரவி குலத்தே என் மாணிக்கரத்தினமே, திங்கள் மதி துலங்கும் என் செல்வமே.” பொல்லா அமைதி முடி வடையாததுக்கம்படியிறங்கி வெளியேறிச்செல்கிறது. யாரென இப்போது உடனடியாக நினை வுக்கு வராதவொரு நண்பர் சனங்களை விலத்தி வந்து சிவரமணியின் மரண முயற்சியை - தற்கொலையைக் காதோடு கூறுகிறார். கூடவே அங்கேயிருந்த செல்வியிடம் அதைப் பக்குவ மாக எடுத்துக் கூறுமாறும் கேட்கிறார். செல்வரத்தினம் கேவி நீண்டழுகிறார்.
செல்வியாற்றான் சிவரமணி எனக்கு அறிமுகமானார். சிவரமணி அறிமுகமான தருணம் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. கலை - இலக்கியம் மீதான என் இளம்பராயத்து ஆர்வம் காரணமாக பாடசாலை நாட்களிலேயே சில பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள். அதுவெல்லாம் ஒரு காலம். இந்தப் பழக்கம் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளுக்கு சாதாரணமாகச் சென்று வருமொரு ஆளாக என்னை ஆக்கியிருந்தது. இவ்வாறானவொரு நாளிற்றான் செல்வி, சிவரமணியை எனக்கு அறிமுகஞ் செய்துவைத் தார். தேநீர் அருந்துவதற்காக நண்பர்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தரமணி, என்னையும் கூட அழைத்தார். புதியவர்களுடன் சட்டெனப் பழகுவதில் சற்றுக் கூச்சமுடைய நான் அதை நாகரிகமாகத் தவிர்த்தேன். ஆனாலும் தேநீர்ச்சாலையிலிருந்து திரும்பிய ரமணி எனக்காக அளவிற் பெரிய "கன்டோஸ் சொக்ளேற்’வாங்கி வந்தார். தன்னைவிட வயதில் இளைய எனக்கு அது பிடிக்குமென்று அவர் நினைத்திருக்கக் கூடும். அவ்வாறு தான் ஆரம்பமானது பெரிய உருட்டு விழிகளுடைய, சற்றுப் பருத்த, குழந்தை இதயமுடைய பெண்ணுடனான குறுங்கால நட்பு.
இருபத்துமூன்று வயதில் தன் வாழ்வை முடித்துக் கொண்ட ரமணியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள். தந்தையாரது கலை-இலக்கிய அரசியலீடுபாடே ரமணியின் கலை-இலக்கிய அரசியல் ஈடுபாட்டின் முதற்தூண்டியெனக் கருதலாம். விதவையாகிவிட்ட தாயுடனும் தங்கை யுடனும் வாழ்ந்து வந்த அவர் அக்காலகட்டத்தில் பல்கலைக்கழகத்துள்ளும் வெளியிலும் தொழிற்பட்ட பல பெண்கள் அமைப்புக்களுடன் சேர்ந்து பணியாற்றினார். தமிழிலும் - ஆங்கி லத்திலும் பரந்துபட வாசிக்கும் பழக்கமுடைய ரமணி, இலக்கியத்திற்கப்பால் ஏனைய கலை வெளிப்பாடுகளிலும் பொதுப்படையாக ஆர்வம் கொண்டிருந்தார். அவரது தனியாற்றலும், அக்காலமும் அவரை முன்னோக்கிச் செலுத்தின. என்றபோதும் மத்தியதர வர்க்க வீடுகளிலி ருந்து பொது வெளிக்குள் நுழையும் பெண்கள் உள்ளும் புறமுமாகச் சந்திக்க வேண்டியிருந்த பல்வேறு பிரச்சனைகளால் அவர் மனரீதியான அழுத்தங்களை அதிகமாகவே பெற்றாரென எண்ணத் தோன்றுகிறது. தமிழர் அரசியலில் வலுவாக ஏற்படத் தொடங்கியிருந்த ஜனநாயக மின்மை அக்கால கட்டத்தில் முற்போக்கான சிந்தனை செயற்பாடுடைய இளைஞர் - யுவதி களை சிதறடித்தது போலவே ரமணியையும் பலமாகப் பாதித்ததென்றே சொல்ல வேண்டும். அவரது சுயகொலையில் இந்தக் காரணிகள் பலவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு
சித்திரை - ஆணி 2010 (Dறுபோதி 24
 

கொண்டனவென்றே கூறவேண்டும். அந்த இறப்பை ஒரு தனிமனித நிலவரமாக மட்டும் காண முடியவில்லை. அது குறித்த காலகட்டத்து நிலவரங்களின் குறிகாட்டிகளுள் ஒன்றுமாகும்.
ஈழத்துத் தமிழரசியலில் நிகழ்ந்தஇளைஞர் எழுச்சியின் பகைப் புலத்தில் உருவாகிய தமி ழர் கலை - இலக்கிய மலர்ச்சியின் பின்புலத்திலிருந்து உருவாகிய ஒரு தலைமுறையைச் சேர்ந்தவை ரமணியின் படைப்புக்கள். கவிதை எழுத்துக்களிலும், அக்கால கட்டத்தில் பிரபல மாகத் தொடங்கியிருந்த கவிதா நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றார். எண்பதுகளின் வரலாற்று நிலவரங்களால் சிவரமணி பிரசவிக்கப்பட்டிருந்தாலும் அவரது எழுத்துலக நுழைவு கூட எண் பதுகளில் ஆரம்பித்தாலும் சிவரமணி தனது பாடுபொருளிலும் - வெளிப்பாட்டிலும் ஒரு மாறு காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறார். அவரது ஆரம்ப காலகட்டக் கவிதைகளில் எண்பது களில் உருவான கவிதைகளின் கனத்தநிழல் படர்ந்துள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லைத் தான் அவ்வகையில், “என்னிடம் /ஒரேயொரு துப்பாக்கி / ஒரேயொரு கைக்குண்டு / என் எதிரிக்கெதிராய்ப்/போரைப் /பிரகடனம் செய்ய/என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி/ஒரேயொரு கைக்குண்டு / எனினும் நான் தளரவில்லை’ (1985) எனப் பிரகடனப்படுத்தும் ரமணி வானிற்கும் மண்ணிற்கும் இடையில் ஒரு புதிய கோட்டினை வரைகிறார். எண்பதுக ளில் சுடர்ந்து எரிந்த விடுதலை பற்றிய நம்பிக்கையும் - முன்னோக்கிய ஒரு பயணம் பற்றிய கனவுகளும் அவற்றுள் ஒட்டிக் கிடக்கின்றன. “விலங்குகளுக்கெல்லாம் / விலங்கொன்றைச் செய்த பின் / நாங்கள் பெறுவோம் / விடுதலை ஒன்றை” (986) எனவும் எழுதிய ரமணியின் நம்பிக்கைகள் 1989 இற்கு பிற்பட்ட கவிதைகளில் தோற்றுச் சரி கின்றன. “நான் / எனது நம் பிக்கைகளுடன் தோற்றுக்கொண்டி ருக்கிறேன்.” (989) என வாக்குமூலம் தரும் ரமணி“என்னிடம் / ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல /நம்பிக்கையும் முடிவும் சொல் லத்தக்க / வார்த்தைகள் இல்லை” (989) எனக் கூறவும் “வினாக் களுக்குரிய விடைகள் யாவும் / அச்சடிக்கப்பட்டுள்ளன.’ (1989) எனக் கூறவும் விளைகிறார். கூடவே எண்பதுகளின் கவிதைகளின் மீது கவிந்து கிடந்த கனவும் - நம்பிக்கையும் மனோரதியத்தனமும் (Romanticism) இந்த மேற்படி ரமணியின் கவிதைகளில் இல்லாமற் போவதனையும் சாதாரணமான வார்த்தைகள், மண்டிக் கிடக்கும் ஆழமான உணர்ச்சிகளின் மோதற் பரப்பிலிருந்து எழுகையில் பெறுகின்ற அசாதாரணமான கூரையும் - அதனால் இதயத்தை வெட்டிக் கீறி விடத்தக்க உணர்ச்சிப் பிரவாகத்தைத் தரத்தக்க நிலைகளையும் அவரது கவிதை வார்த்தைகள் அடைவ தையும் காண முடிகிறது.
அவரது மேற்படி பிற்பட்ட கவிதைகளுடாகப் பயணஞ் செய்யும்போது அவரது கவிதை களின் பேசுபொருளும் அதன் தொடராக அதன் தோற்றவுருவும் மாறி இருப்பதைத் துல்லிய மாக இனங் காண்கிறோம். அவரது அடிப்படை மனநிலையிலும் - உணர்நிலையிலும் மாற் றம் நிகழ்ந்துவிட்டதை அவை தெட்டத் தெளிவாகப் பதிவு செய்கின்றன. இந்த மாறு நிலவரம் என்பது எண்பதுகளின் கவிதைப் போக்கின் மாறுதலுமாகும். என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு மாறு காலகட்டத்தின் மிக முக்கியமான பிரதிநிதியா வார் என்பதுடன் தொண்ணுாறுகளின் போக்கின் முன்னோடியுமாகிறார் எனலாம். “கூனல் விழுந்த எம்/பொழுதுகளை நிமிர்த்தத்தக்க / மகிழ்ச்சி எதுவும் / எவரிடமும் இல்லை” (989 என அவரறிவிக்கும்போது அவரது “புதிய வாழ்வின் / சுதந்திர கீதத்தை /இசைத்துக் களிப் போம்/வாருங்கள் தோழியரே” (986) என அவரது முற்பட்ட வரிகள் உக்கி வீழ்ந்து மறைகின் றன.
சிவரமணி ஒரு கவித்துவக்ாழுT ಇಯಾ / கேட்ட கேள்விக்கு
சித்திரை - ஆனி 2010 மேனுவதிே 25
சிவரமணி)

Page 15
விடையில்லாத போது / மெளனமாயிருக்கவும் / மந்தைகள் போல எல்லாவற்றையும் பழகிக் கொண்ட” (989 சூழலுக்குள் பேசாதவர்களின்-பேச்சு மறுக்கப்பட்டவரின் மனச்சாட்சியாய்குரலாய் அவரிருந்தார். “தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும் /தீர்க்கதரிசிகளுக்கும் உரிய /இடமும் காலமும் போதனையும் கூட /இல்லாதொழிக்கப்பட்ட.” (989) வெளியில் அவரது குரல் முதற்குரல்களில் ஒன்றாய் ஒலிக்கத் தொடங்கியது. பல முதற்குரல்கள் போல ரமணி யின் குரலும் முதற்குரலானதால், ஒற்றைக் குரல்களுள் ஒன்றாய் இருந்தது. சகோதரப் படு கொலைகள், இந்திய ராணுவ வருகை என்ற இரு வரலாற்று யதார்த்தங்களின் மத்தியில் கைவிடப்பட்ட தமிழ்ப் பொதுமனிதனின் கைவிடப்பட்ட குரலாய் ஆனால் வரலாற்றுச் சாட்சிய மாய் ரமணியின் எழுத்துக்கள் பதிவாகின. “எனக்குப் பின்னால் / எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் / நானும் விடப்பட்டுள்ளேன்’ என அறிவிப்புச் செய்யும் சிவ ரமணி நமது காலத்து ஈழத்துக் கவிதையின் கவித்துவச் சாட்சியாயும், மனச் சாட்சியுமாய்ம் இருந்தார்.
சிவரமணி! இப்போதும் மயான காண்டத்தில் சாம்பர் காற்றுப் பறக்கும் வெளியில் சந்திர மதிபாடும் தோறும் உன் நினைவுகள் என்னுள் எழுந்து மனத்தை வாட்டிச் செல்கின்றன. பின் னர் காணாமற்போன அல்லது இறப்பதற்கு முன் நீ எரித்தவற்றுள் எரியுண்டு போயிருக்கக் கூடிய எனக்கு இறுதியாகக் காட்டிய கவிதையொன்றில் இடம்பெற்ற இரத்தம் சிவந்து ஊதிய செந்நிற இதயம், துக்கம், விரக்தி, கோபம் மற்றும் ஆசையும் கலந்து நிறைந்த பெண்ணிற்கு ஒரு கற்றை மலர்களாலும் இதயத்திலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சொற்களாலுமான ஒரு பூச்செண்டைக் காணிக்கை செய்ய விரும்புகிறேன்.
LLLLLLLLLLLLLL0LL000LLLLLLSLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL r நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.
இனியும் என்ன தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன்
ബ6Tഞങ്ങ
அவமானங்களாலும் அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்
ஆனால் உங்கள் எல்லோரினதும் கனவுகளின் மீது ஒரு அழுக்குக் குவியலாய் பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை அசுத்தம் செய்கிறேன்
(அவமானப்படுத்தப்பட்டவள் கவிதையிலிருந்து / 1990)
O
சித்திரை - ஆணி 2010 மனுபவதி 26
 

ஆங்கிலமூலம்-நியூப்பர் ஜெயின் தமிழில் - கஞ்சாக் கறுப்புக் கள்ளன்
எனது எழுத்தாக்கங்களை ஒரு பிறவுன் பையில் வைத்திருந்தேன் வேலைக்குப் போகும்போது ரிக்ஷாவில் அவற்றைவிட்டு விட்டேன்
எனது பாடல்கள் மரத்தாலான மேல்மாgப் பழக்கட்டுகளில் பொக்கற்றிலிருந்து நழுவிவிட்டன யாராவது ஒருவர் அதனை பொறுக்கியிருக்கலாம்
நீ இரண்டு மாதங்களின்முன் பிரிந்து சென்றபோது எனது இதயம் உன்னிடம் நழுவியது நீ இப்போது கட்டாயமாக அதைத் தொலைத்திருப்பாய்
பொறுப்பில்லாததால் வந்த சாவு
அ. யுகசேனனின் ά566)Φ
உடுத்திக் கொள்வதற்கு 6াঠোদ্ভOlিLib வேறு ஆடைகள் இல்லை பறவைகள் உதிர்த்த சிறகுகளைத் தவிர
சிறகுகளில்
நூல் ஒருவி ஆடைகளை நெய்யலாம் 6IගI dpගගIනආ|qdu நினைவில் வந்துபோகிறது நினைவு தவறிய ஒரு பறவையின் அழுகுரல்
சித்திரை - ஆணி 2010
Dேனுபவிதி 27

Page 16
அறையின் மத்தியில் உதிர்ந்து கிடக்கும் விழிகள் நினைவில் வரும் போதெல்லாம் 6UTiba DD56ir
தமது முகங்களை கன்னாgயில் பார்ப்பதற்கு அச்சப்படுகின்றன அல்லது வெறுக்கின்றன.
நடுநிசிகளில் பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன அவைகளின் விழிகளுள் படர்கின்றன உதிர்ந்து கிடக்கும் மிரட்டும் விழிகள்
6LTliba)|Deb6T fiflig (8Udrif) மனநிலையில் இருப்பதில்லை
மிரட்டும் விழிகள் 7 ޙަހ ஆரிையழக்கின்றன அதன் அஜ் மனதில் ല്പ്
○
Ꭳ ܓܠ எப்போதும் அறையின் 《་ ஏதாவதொரு மூலையில் دسمج மெளனமாய் முகத்தில் சோகம் நிரம்ப அம்மனமாக சிலவேளை உறங்குகின்றன அல்லது விழித்திருக்கின்றன.
பொம்மைகள் விழித்திருக்கும் போதும் அல்லது உறங்கும்போதும் அவற்றின் விழிகள் கொடுரமான மிருகமொன்றினதாகவோ
கொடுரமான மனிதனொருவனுடையதாகவோ GB 5 čfů 6UT ĎaD D65 6 தம் அடையாளம் காட்டுகின்றன.
சித்திரை - ஆனி 2010 மனுரோதி 28
 
 
 

- சித்தாந்தன்
ஒளிக்குப் புறம்பாக
Doi8pgåĉ5ūUI°L LD6ībTILLIĝ56D5 சாத்திக் கொண்டிருக்கிறான் இரவின் கத்திரதாரி
மண்ணகழ்ந்துவெளியெடுத்த வருங்கோயிற்சிதைந்த சிற்பம் அதன் மூலையில் சிதிலங்களாக குவிக்கப்பட்டிருக்கிறது
முரண்கள் விருட்ஷங்களாய் කිග6II 6]fiගීගෆිII]éඩ් மண்டபச்சுவர்களில் மோதிக் கலைகின்றன புறாக்கள்
மாமிசம் நாறும் வெளியில் விக்கிரப் புனைவு விதிகளை கட்டவிழ்க்கிறான் சிற்பி
எல்லாச் சிலைகளிலும் மிருகங்கள் விழித்துக் கிடக்கின்றன
மந்திரங்களால் ஆக்கப்பட்ட பெருங்கோயில் புதையுண்ட காலச்சரிவில் நிரைநிரையாக முளைக்கின்றன புத்தம் புதிய விக்கிரகங்கள்
பாதி விழி மூgய விக்கிரகங்களில் சாவைச் சூgய மகா வாக்கியங்கள்
எல்லாக் கதவுகளையும் சாத்திவிடுங்கள் புலன்மேய வந்திருக்கிறது கற்களாலாய காலம்
பெருங்கோயில் புதையுண்ட மனற்தரையில் ஒயாப் பெருங்குரலில் யாரோ கதறியழுகிறார்கள்
நிர்க்கதியாக்கப்பட்ட கடைசி மனிதனின் குரலாக அதிருக்கலாம்.
பெருங்கோயிற் சிதைந்த சிற்பத்தின் வரைபடம்

Page 17
மனவுற்றின் நிகழ்வெளி
படைப்பு மனமும் கவிதையும்
- கருணாகரன்
கவிதை என்பது என்ன என்று பலரும் எழுதியுள் ளனர். என்றாலும் இன்னும் கவிதையைக் குறித்த வியாக்கியானங்களும் விளக்கங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவரவர் நோக்கு, அவரவர் தளங்கள், அவரவர் அனுபவம், அவரவர் சிந்தனை போன்ற காரணங்கள் கவிதையைக் குறித்த விளக் கங்களாவும்புரிதல்களாகவும் இருக்கின்றன. கவிதை குறித்த கேள்விகளாகவும் உள்ளன. என்றாலும் கவி தையைக் குறித்து இன்னும் தெளிவாக்க முடிய ഖിബങ്ങബ.
சிலருக்கு கவிதை ஒரு மொழிசார்ந்த செயல்பாடு. வேறு சிலருக்கு அது உணர்வை மையமாகக் கொண்ட நுண்வெளிப்பாடு. அல்லது உணர் வுப் பரிமாற்ற வடிவம். வேறு சிலருக்கு அது அரசியல் செயல்பாட்டுக்கான கருவி. இன்னொரு சாராருக்கு, கவிதை எல்லாவற்றுக்குமான ஒரு மன இயக்கம். இப்படிப் பலவகையான அணு குதல்கள் கவிதை குறித்து உள்ளன. ஆகவே கவிதை குறித்த விவாதங்கள் முடிவடைவ தில்லை. அது முடிவடையப் போவதுமில்லை. அது ஒரு முடிவற்ற புதிராகவும் விநோதமாகவும் பேசப் பேச பேசக் கூடிய விசயமாகவும் இருக்கிறது.
படைப்பு என்பது எப்போதும் வினோதங்களையும் புதிரையும் அடிப்படையாகக் கொண்டது. அது எந்தப் படைப்பாக இருந்தாலும். இயற்கை ஒரு படைப்பு இயற்கையின் விநோதங்கள் முடிவடைவதில்லை. அதன் புதிரும் தீர்வதில்லை. கணந்தோறும் அது புதிய புதிய அனுபவங் களையும் உணர்வுகளையும் தந்து கொண்டேயிருக்கும். அதைப் போலவே கலையும் இலக் கியமும்.
கலையும் இலக்கியமும் படைப்புகள். மனிதனின் படைப்புகள். அனுபவத்தினதும் சிந் தனை, எண்ணம், உணர்வு, ஆற்றல் என்ற பல அம்சங்களின் கூட்டுவிளைவுகளினதும் வெளிப்பாடு. ஆகவே இந்தப் படைப்புகளின் புதிரும் விநோதமும் தீர்வதில்லை. புதிரும் விநோ தமும் எப்போதும் சுவை, சுவ்ாரஸ்யம் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டவை. கலை இலக்கியப் படைப்புகளில் உள்ள சுவை, சுவாரஸ்யம் போன்றனவும் இந்த அடிப்படையிலான ങ്ങഖu.
ஆனால், இயற்கைப்படைப்பைப்பற்றிவிமர்சனங்கள் இருப்பதில்லை. அவற்றைப்பற்றிய விசாரணையை விஞ்ஞானம் செய்கிறது. அந்த வகையும் துறையும் வேறு. ஆனால், விமர்ச னங்களை யாரும் செய்வதில்லை. அந்தப்படைப்பாளியை யாரும் சரியாக இனங்காணாததன் விளைவாக விமர்சனங்களை வைக்க முடியாதிருக்கலாம். இலக்கியம் கலை போன்றவற்றை மனிதர்கள் படைப்பதால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விவாதங்கள் நடத்தப்படு கின்றன. விளக்கங்கள் கோரப்படுகின்றன. மறுப்புக்ளும் கண்டனங்களும் கூட எழுப்பப்படு கின்றன.
simC3sFIT
சித்திரை - ஆனி 2010 மனுவளதி 30
 

ஆகவே, இந்தத் தொடர் விளக்கங்கள், விவாதங்களின்படி இன்னொரு பார்வையில் கவிதை என்பது அடிப்படையில் ஒரு சமூகப் பொருள் என்றுநோக்கலாம். இது மனிதர்களால் படைக்கப்பட்ட சமூக பொருள். இயற்கைப் படைப்புக்கு இருக்கும் அத்தனை அழியா வியப்புக ரும் இந்தப் படைப்புக்கும் உண்டு. எல்லையற்ற வியாபிப்புகளில் இந்தப் படைப்பின் வியப்பு கள் இருக்கின்றன. இது ஒரு விரிவான விசயம். இதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் LUFTässorTub.
இங்கே கவிதை என்ற படைப்பைப் பற்றி, அது தனிமனிதப் படைப்பாகவும் சமூகப் பொரு ளாகவும் இருப்பதைப் பற்றிப் பார்போம். கவிதையை ஒரு கவி, தன்னுடைய வெளிப்பாடாகபடைப்பாக முன்வைக்கிறார். ஆகையால் அதுதனிமனிதஉற்பத்தியாகிறது. ஆனால், அந்தத் தனிமனித உற்பத்தியானது, சமூகத்தின் கூட்டு அனுபவத்திலிருந்து பெற்றதே. அல்லது கூட்டு அனுபவங்களின் வெளிப்பாடே இந்தக் கூட்டுஅனுபவம் சமகாலத்திலிருந்துகடந்தகாலத்தின் ஆழம் வரை செல்கிறது.
அதாவது ஒரு கவி தன்னுடைய அனுபவங்களையும் உணர்வுகளையும் சமூகத்திட மிருந்தே பெற்றுக் கொள்கிறார். சமூகமும் காலமும் அவருக்கு இந்த அறிவைக் கொடுக்கின் றன. வேத காலங்களில் முனிவர்களுக்கும்கூட அவர்களுக்கு முந்திய தலைமுறைகளின் ஞானப்பரிமாற்றம் நடந்திருக்கிறது. அந்த ஞானப் பரிமாற்றம் என்பது முந்தைய தலைமுறை களின் கூட்டு அனுபவத்திரட்சியே. நாம் படிக்கின்ற கல்வி, நாம் பேசுகின்ற மொழி, நாம் பயன் படுத்துகின்ற பொருட்கள், நாம் வாழ்கின்ற வாழ்க்கை எல்லாமே எங்களுக்கு முதல் தலை முறைகள் உருவாக்கியதளத்திலிருந்தும் பெறுமானங்களில் இருந்தும் கிடைத்தவையே. அல் லது அந்தச் சேகரிப்புகளில் இருந்து நாம் பெற்றவையே. ஆகவே அவை முந்தைய சமூகக் கூட்டுப் பெறுமானங்கள், வெளிப்பாடுகளே.
இதை நாம் இலக்கியத்தில் போர்க்காலம், அகதிக் காலம், பக்தி எழுச்சிக் காலம், இன வெழுச்சிக் காலம், ஜனநாயகத்துக்கான மறுமலர்ச்சிக் காலம், அடக்குமுறைக் காலம், விடுத லைப் போராட்ட காலம், நிலப் பிரபுத்துவ காலம், மன்னர் காலம் போன்ற எண்ணற்ற கால கட்டக் கவிதைப் போக்குகளில் இருந்தும் இலக்கியங்களில் இருந்தும் அறிய முடியும்.
அதேவேளை ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திலிருந்தும் காலத்திலிருந்தும் தன் னுடைய கவிதைக்கான அனுபவத்தையும் உணர்வையும் பெற்றாலும், அவருடைய கவிதை என்பது அவருடைய கவிதையாகவே - தனித்து-தனித்துவமாகவே இருக்கிறது என்பதையும் அவதானிக்க வேண்டும். என்ன தான் பொதுத்தளங்களில் இருந்தும் கடந்த காலச் சேகரிப்பு களிலிருந்தும் அனுபவங்களையும் மொழியையும் அறிவையும் பிற ஏதுக்களையும் பெற்றா லும் ஒரு கவியினுடைய கவிதை எப்படியோ தனி அடையாளங்களை - தனித்துவ அம்சங் களைக் கொண்டிருக்கிறது. அந்தத் தனி அடையாளங்கள் எங்கிருந்து, எப்படிக் கிடைக்கின் றன?
இது ஒரு வியப்பான சங்கதியே. ஒவ்வொரு மனிதரும் தனி ஆட்கள், தனித் தனியான உறுப்புகள், தனித்தனியான பசி, துக்கம், மகிழ்ச்சி, வேட்கை, தாகம் போன்ற புலன்உணர்வு களையும் குளிர், வெப்பம் போன்ற உணர்கையையும் பெறக்கூடிய ஒழுங்கமைப்பைக் கொண் டவர்கள். ஆகவே இந்த வகையில் அவர்கள் தனியர்களே.
ஆனால், மனிதர்கள் என்ற அளவிலும் உறுப்புகளின் பொதுவான தொழிற்பாடு ஒன்றே என்ற அளவிலும் அவர்கள் பொதுவானவர்கள். பசி எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், அது தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் பசிக்கிறது. இப்படி எல்லாத் தனி அனுபவங்க ளுக்குள்ளும் தனி உணர்வுகளுக்குள்ளும் ஒரு பொதுவும் தனியும் கலந்திருக்கிறது.
ஆகவே பொதுவும் தனியும் கலந்த உலகம் இது. ஒவ்வொரு மனிதரும் தனித்தனி உலகங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் பொது உலகத்திலும் சேர்ந்து
சித்திரை - ஆனி 2010 மேனுபாதி 31

Page 18
கொள்கின்றனர். ஒவ்வொருவரும் பொது உலகில் இருக்கும் அதேவேளை தனியர்களாகவும் உள்ளனர். நாம் எங்களுடைய வீட்டிலிருக்கிறோம். அதேவேளை வீதியில் இறங்கி எல்லோரு டனும் சேர்ந்தும் கொள்கிறோம். இதுபோல, ஒரு வகையில் இது வேடிக்கை தான். புதிரும்கூடத் தான். அதேவேளை இதுவொரு கணிதம், பிரபஞ்சக் குடும்பத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் தனித்தனிக் கோள்கள், கிரகங்களைப் போலவே,
ஆகையால் பொதுவும் தனியும் கலந்த உலகத்தில் அந்தந்த நிலைக் கேற்ப அவரவர் பாத்திரங்களும் மாறுபடுகின்றன. அவரவர் ஆற்றலுக்கேற்ப அவரவர் வெளிப்பாடுகளும் அமைகின்றன. இங்கே அனுபவமும் பயிற்சியும் கூட முக்கியமான பங்கை வகிக்கின்றன. படைப்பாக்க அனுபவத்துக்கு அப்பாலும் படைப்புக்குரிய உள்ளடக்கத்துக்கான வாழ்க்கை அனுபவம் - தரிசனம் என்பதும் படைப்பின் பெறுமானத்தை நிர்ணயிக்கிறது.
இங்கே பெறுமானம் என்பதுதணியே படைப்பினுள்ளிருக்கும் பொருளை-கருத்தை மட்டும் குறிக்கவில்லை. பொருளுடன் அதற்குரிய வெளிப்பாட்டு முறை, அந்த வெளிப்பாட்டு முறை யில் இருக்கும் மொழி, வடிவம், கூறல் முறை போன்ற எண்ணற்ற அம்சங்களின் வழியாக அடையும் கலைப் பெறுமானத்தையுமாகும்.
இதன்படி என்னதான் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த எல்லாக் கவிகளும் ஒரே மாதிரிக் கவிதையை எழுதவும் முடியாது, அணுகவும் முடியாது என்பது புரி யும். ஆனால், சிலகாலகட்ட நிகழ்ச்சிகள் வாழ்வை ஆழமாகப் பாதிக்கும்போது அந்தக் கூட்டு அனுபவம் கனதியாகிறது. அது அப்போது ஒத்ததன்மையுடையதாக, ஒரு கூட்டுணர்வை அடிப் படையாகக் கொண்டதாக அமைகிறது. இதற்கு ஏராளம் உதாரணங்கள் வரலாறு எங்கும் உண்டு. எங்களிடமும்-தமிழ்ச் சமூகத்திடமும்-உண்டு. சங்க காலக் கவிதைகள், பக்தி எழுச் சிக் காலக் கவிதைகள் என ஒரு பெரும் பாரம்பரியத்தை தமிழ்ச் சமூகத்திடமும் காணலாம். பின்னைய காலத்தில் ஈழத்தில் சாதியத்துக்கு எதிரான போராட்ட காலம், இனவிடுதலைப் போராட்ட காலம், பெண்களின் விழிப்புணர்வுக் காலம், அரச பயங்கரவாத காலம், போர்க் காலம், அகதிக் காலம், எதிர்ப்புக் கவிதைகளின் காலம் அல்லது எதிர்ப்பரசியலின் காலம் என்று இந்த அடையாளம் மிக நீண்டதாக இருக்கிறது. “மரணித்துள் வாழ்வோம்” கவிதைத் தொகுதி இதற்கு ஒரு நல்ல அண்மைய உதாரணம்.
பொது-தனி என்றோ கூட்டு அனுபவத்தின் வெளிப்பாடு என்றோ அல்லது அதற்கப்பால் அவரவர் அனுபவங்கள், உணர்வுகளில் இருந்து தனியாக என்றோ, எப்படியாவது கவிதை யைப் பெற்றாலும் எந்தச் சமூகப் பொருளுக்கும்-படைப்புக்கும்-பல வகையான பரிமாணங்க ளும் அடிப்படைகளும் இருப்பதைப் போல கவிதைக்கும் பல பரிமாணங்களும் உண்டு. அடிப் படைப் பிரிதல்களும் உண்டு.
அதைப்போல தனிக்கூட்டு உணர்வுக் கவிதைகளிலும் இந்த வகைப் பரிமாணங்களும் பிரிதல்களும் இருக்கின்றன. தனிக்கூட்டு என்பது என்ன? காதல் ஒரு தனி உணர்வு. ஆனால், அந்தக் காதலின் அடுத்த கட்டம் என்பது தனியாக இருப்பதில்லை. அது பொதுவா கிறது. அது மற்றவருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு இணைவு என்று வரும்போது கூட்டாகிறது. அத்துடன் அது சமூக விளைவும் ஆகிறது.
காதலுக்கு சாதிய ரீதியான எதிர்ப்போ மத ரீதியான எதிர்ப்போ வர்க்க ரீதியான தடைகளோ அல்லது ஆதரவோ வரும்போது அது எத்தகைய தன்மையைப் பெறுகிறது? தனி என்ற வரை யறைகளைக் கடந்து அது சமூக நிலைக்கு வந்து விடுகிறது. எனவே அந்த எதிர்ப்புநிலை அல் லது அங்கீகார நிலை என்பது சமூகஞ் சார்ந்தது. அது பொது வெளி சார்ந்ததாகவே அமை கிறது. இந்தப் பொது வெளியானது கூட்டின்-கூட்டு அம்சத்தின் விளைவே.
எனவே இந்தத் தனி உணர்வு தவிர்க்க முடியாமல் கூட்டு விளைவாகிறது. ஆகவேதான் இதைத்தனிக்கூட்டு என அழைக்க வேண்டியுள்ளது. மனிதர்கள் தனியனான கூட்டுப் பிராணி
சித்திரை - ஆணி 2010 Dனுபவிதி 32

கள். அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதால் சமூகமாகவும் அந்தச் சமூகத்தின் ஒரு அலகாகவும் இருக்கிறார்கள்.
ஆகவே ஒன்று தனி உணர்வாகவும் இருக்கிறது. கூட்டு விளைவாகவும் இருக்கிறது. தனி உணர்வில் அது அடையும் வெளிப்பாடு, அது கவிதையாகும் போது பெறும் தனித்தன்மை என்பது ஒருவகை. அது தனி உணர்வு சார்ந்தது. அதேவேளை அது அடுத்த கட்டத்தில் கூட்டு விளைவாகும் போதும் சமூக விளைவாகும் போதும் அடைகின்ற வெளிப்பாடு இன்னொரு வகையாகிறது.
உதாரணமாக காதல் அன்பைத் தளமாகக் கொண்டது. பருவத்தின் வேட்கையையும் பால் உணர்வையும் பால் வேறுபாடுகளையும் உள்ளம்சங்களாகக் கொண்டது. எனவே அது தனி மனதில், தனி உணர்வில் உருவாகி, வெளிப்பாடடைகிறது. அப்போது அது தனிப் பண்பை அதிகமாகக் கொண்டிருக்கிறது.
காதற்பெருக்கு என்பது தனிப்பட்டது, தனியான உணர்ச்சி சார்ந்தது என்றபோதும் காதலை எதிர்கொள்கின்ற நிகழ்ச்சியானது சமூக நிலைப்பட்டது. அப்படிக் காதலை எதிர்கொள் ளும்போது அது - அந்தக் கவிதை சமூகக் கவிதையாகிறது.
கவிதைக்குரிய அடிப்படையும் சவாலும் இங்கேதான் உருவாகின்றது. தனி உணர்வையும் தனி அனுபவம், அறிவு, ஆற்றல், ஆளுமை, வெளிப்பாட்டுத்திறன், பயிற்சி, தேர்ச்சி போன்ற எண்ணற்ற அம்சங்களையும் சமூகத்தின் அறிவு, அதன் கூட்டு மனப்பதிவு என்பவற்றையும் எப்படி ஒரு கவி இணைத்து தன்னுடைய படைப்பை நிகழ்த்துகிறார் என்பதைப் பொறுத்தே ஒரு கவிதை அமைகிறது. படைக்கப்பட்ட கவிதையை எதிர்கொள்கின்ற வாசக மனத்தில் ஏராளம் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. கவிதையை எதிர்கொள்ளும் போது அந்த அம்சங்கள் வாசக மனதில் மதிப்பீட்டுக் கருவிகளாகத் தொழிற்படுகின்றன. இதுவொரு கணினிப் பொறி முறை அமைப்புத்தான்.
எந்தப் படைப்பும் பல கலவைகளின் கூட்டே எதுவும் எல்லாம். சேர்மானங்கள் இல்லாமல் ரசம்கூட வைக்க முடியாது. தனியானது எல்லாமே வெறுமையாகி விடுகின்றன. மணல் கூட பல கனிமங்களின் கூட்டுத்தான் அல்லது சேர்மானந்தான். ஆனாலும் அந்த மணலை நாம் வேறு சேர்மானங்களுக்குட்படுத்தாமல் விடும்போது அது மணலாக - பாலை வெளியாகவே மிஞ்சுகிறது. அந்தப் பாலை வெளியிலும் அழகிருக்கிறதே, அதற்கும் ஒரு உயிர்ப்புண்டே, அதற்கொரு அர்த்தம் இருக்கிறதே, அங்கும் வாழ்விருக்கிறதே என்று தோன்றலாம். உண்மை ஆனால் அதுவும் மணல்களின் சேர்மானங்களால் ஆன ஒரு வடிவமும் அடிப்படையுமே. அந்த மணற் துகள்களில் உள்ள சேர்மானங்களின் விளைவான விளைவே அது. ஆகவே படைப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படையாக கூட்டு, கலவை, சேர்மானம், இணைவு என்ற அம் சங்கள் அவசியமாகின்றன.
ஆகவே, தனி - கூட்டு என்ற இந்த அம்சங்களை வெற்றிகரமாகக் கையாண்டு சிறப்பாக தன் படைப்பைப் படைக்கும் ஒரு கலைஞர், அந்தப் படைப்பினுடாக நீடித்து விடுகிறார். படைப் புக்கு இருக்கும் சிறப்பும் நீட்சியும் படைப்பாளிக்கும் வந்து சேர்கிறது. எனவே எழுதப்படும் ஒவ் வொரு கவிதையும் அது எழுதப்படும் கணத்திலிருந்து அதற்கு முந்திய அத்தனை கணங் களையும் உள்ளடக்கி, அந்தக் கணங்களை வென்று தீரவேண்டும். அது வரையான கணங் களைக் கடக்க வேண்டும். இதுவரையான நிறங்களிலிருந்தும் கோலங்களிலிருந்தும் சாயல்க ளில் இருந்தும் நீங்கி, அவற்றைவிடப் புதுமையுடையதாக, வேறொரு நிறப்பரிமாணங்களோடு இருக்கவேண்டும்.
மனமும் அத்தகைய புதிய நிறப் பிரிகைகளையே அவாவுகிறது. ஒவ்வொரு துளி வேட்கை யும் அவாவும் எண்ணற்ற சவால்களே. கவி எப்போதும் சவால்களின் முனையில் நிற்கும் ஒரு இயங்கியே. O
சித்திரை - ஆணி 2010 ہو۔۔ Dேனுபதிே 33

Page 19
வி நோ தி னி
ஒரு வீடு
காலம் யாருக்குங் காத்திராது நழுவுகிறது நாற்றிசைப் பாதைகளில் எதிர்ப்படும் மாந்தரில் எவரும் அறிந்தவராயில்லை.
பயனங்களில் கடக்கின்ற பிரதேசங்களின் தேசப் படங்களில்
முகவரி பற்றிய சந்தேகங்களுந் தீர்வதாயில்லை.
விரையும் வாகனத்தினூடு தென்படும் இளரோரக் குழல்
ගඝIIJගééAlb dfilD|f| யாரோ கைவிட்ட ஒரு விடு வெளேரென்ற செம்மறியாட்டுக் கூட்டம் சூரியகாந்திப் பூக்கள் சிறுபழக்கடை என எல்லாமே எப்போதோ விட்டுப் பிரிந்தவைகளையும் அழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்றையும் ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முழுவதில்லை.
க வி  ைத க ள்
சந்தித்தல்
சந்திப்பதற்கென ஒரு நாளின் மாலையைத் தேர்ந்தேன்
கொஞ்சம் கவிதைகள் boിമ്നൻ രൂroിത്ര காதலின் சுவை கலந்த தேநீர் வாசனை தந்து வரவேற்க மலர்கள் எல்லாம் ஆயத்தமாக
அழகிய மாலைகளும் கடிகாரமும் யாருக்காயுங் காத்திருப்பதில்லை
மஞ்சள் மாலை மெதுவாகக் கறுக்க மனலில் பரவும் நீரெனப் பரந்தது இரவு
நிகழாதுபோன வருகையும் பகிரப்படாத கவிதைகளும் சொல்லப்படாத காதலும் பருகப்படாத தேநீரும் வாடும் பூக்களோடு ஒவ்வொரு அழகிய மாலையிலும் எங்கோ ஒரு விட்டின் தோட்டத்தில் கைவிடப்படுகின்றன
தனி இதழ் ஆண்டுச் சந்தா
(தபாற் செலவு உடீபட)
சந்தாசெலுத்தவிரும்புவோர்:
ச.உதயனன் கொமர்ஷல் வங்கி,
கனக்கு இல. -3060070929 u Tipůu Teorb.
சித்திரை - ஆணி 2010
ஜூனுவாகி 34
 
 

விமலதாஸ் கவிதைகள்
Ο1
அதிகாலை வானம் இருண்டிருந்தது சூரியனைக் காணவில்லை காற்று விசத் தயங்கியது
O2
ParaDIDయే ஒருவித ஒலியுடன் அங்குமிங்கும் ஒழுக்கொண்டிருக்கிறது பிரியத்துக்குரிய ஜூன் நாய்
நேற்று மாலை களற்றிப் போட்ட உடுப்புக்களில் மDைக்கிறது ஜூன் வாசம் சீர் செய்யப்படாத படுக்கை துவாயில் இன்னும் வியர்வை ஈரம்
இறுதிக் கிரியைக்காக
விதியெங்கும் అు ஆழ்ந்த அமைதி 6igਨੰp6060960
புதைக்கபட்டுவிட்டது.
எல்லாமும்
எல்லாமுமாய் இருந்த
எங்கள் இறுதிப் பயனம்
66)Lu6ifiabdplguilt
விழிகளுடன் நான்
விருப்பமின்றி நீ
போக மறுத்த இதயம்
வெழுத்துச் சிதறியது.
வடலி வெளியீடு எண். 8/13, சுந்தரர் தெரு, ாளாகான் எம்ஜிஆர் நகர்,
கருணாகர சென்னை 600 078, பலி ஆடு தமிழ்நாடு.
sascoso: 100As இந்தியவில்
சித்திரை - ஆனி 2010
மேலுUதிே 35

Page 20
தங்கள் மறுபாதி சஞ்சிகையின் 2 பிரதிகளை அண்மையிலே வாசித்தேள்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆரோக்கியமாகக் கவிதைக்கென ஒரு சிறுசஞ்சிகை வெளிவருவது குறித்த வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் உற்கள் வெளியீடுகளைத் தொடர்ந்தும் பெற ஏதா
வது வெளிநாட்டுச் சந்தா முறை உள்ளதா? இங்கே சில பேர் விநியோகிக்கிறார்
கள் என்று நினைக்கிறேன்.
யாக உங்களிடமிருந்து அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளவும் வழிகளை அறிய விரும்புகிறேன்.
''' التي
மறுவளது:
Halifieri, fil-FIKI FIL-FTE firi takarigi
: Tall -FR -- Li Ħlief : -o-T=1
Է6Ն அவர்கள் என்னிடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருக்கிறார்கள். நேரடி
மறுபாதி - 3 வாசிக்கக் கிடைத்ததும் மிக மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் பாதியே உன்னில் தவின்ற சகோதர மொழிக் கவிதையின் மொழிபெயர்ப்பை வாசித்தேன். உளம்நெகிழ்ந்தேன்.
எம்மினம் படும்பாட்டை சகோதர இனத்தவர்களும் புரிந்து கொண்டமை மன ஆறுதலைத் தருகிறது. அதனை மொழிபெயர்த்த ஃபஹறிமா ஜஹான் அவர்களுக்கு நன்றி கள். திவ்வியாவின் பக்கங்கள் அழகாக நீண்டு செல்வதும் மறுபாதிக்கு மெருகூட்டுகிறது. தா.இராமலிங்கம் பற்றிய திவ்வியாளின் பார்வை மிக வித்தியாசமாக உள்ளது.
சில கவிதைகள் வாசகனுக்குப் புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மறுபாதியின் அட்டைப் படங்கள் உளத் தாக்கத்தை உண்டு பண்ணாத படங்களாக வந்தால்
சிறப்பாக இருக்கும். கருனாகரனின் கவிதை பற்றிய கட்டுரை மிக முக்கியமான பார்வையைக்
கொண்டிருக்கிறது.
தமிழ்க் கவிதையின் ஐம்பதாண்டு கால வளர்ச்சியினை நினைவுறுத்துவதற்காகப் பிரசு
ரிக்கப்பட்ட ரமேழிேன் கட்டுரை அருமையாக உள்ளது. பிச்சமூர்த்தி, வரதர் போன்றோரின் கவிதைகளும் புதுக்கவிதையின் பரிமானத்தைப் புரிய வைத்தன. மேலைநாட்டுக் கவிஞரின் படைப்புக்கள், அறிமுகங்களையும் பிரசுரித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என நினைக்கி
றேன்.
GUSTiuf RFಣಿ!
சித்திவிநாயகர் நூல் நிலையம், ສູງ Touຕໍ່ ଶ୍ମ yIt [[ଷ୍ଟ୍ ।
பாம்ப்பாணம், பேசற்க կ:
Fll:2=
சித்திரை - ஆணி 2010
್.14-1 #
 
 

நான்கு நல்ல நண்பர்கள் பார்.
Willi Lğırlığı, Eflığını Tigegerçılır. Hazılı,LLi ikisi
ாங்கள் தெரிவுசெய்யும் உற்ற நண்பன் நான்கு பேருடன் 'மாப்பே புதிதாங் அறிமுகம் விருப்பப்படுகிறது. SLT 4 Friends
| FIT (Irel லேன் மற்றும் சிற்றிலிங்க்பின்கொடுப்பனவுவசதியுள்ள சகல தொலைபேசி உரிமை பாளர்களும் இச்சேவையைப் பெறலாம்': வீட்டு மற்றும் வியாபாரப் பாவனையாளர்களுக்கும் இது பொருந்தும்
நீங்கள் தெரிவுசெய்யும் நான்கு உள்நாட்டுத்தொலைபேசி இலக்கங்களுள் துறந்துஇராடுST தொலைபேசி இலக்கங்களும் மிகுதிஇரண்டுSTதொலைபேசி இக்கங்களையோ அல்லது வேறு
BTT YLLLTLLLTTtMuTSLLL TT LLLLLLaLLLL
இச்சேவையை பறுவதற்கு பதிவுக்கட்டணமாக DFருபாபும் மாதாந்தவாடகையாக E= ரூபாயும் செலுத்தவேண்டும்.
நீங்கள் விரும்பித் தெரிவுசெய்தஐக்கங்களஒரு கடினப் பட்டியல் மாதத்திற்குள் 4 தடவைகள் ாத்திரம்மாற்றமுடியும்
முதல்தடவையாக இலக்கங்களைத் தெரிவுசெய்வதற்குக்கட்டணம் இல்லை. இலக்கத்தைமாற்றுவ நந்த ஒரு இக்கத்திற்கு 25 ரூபாவும் அறவிடப்படும்
SILTAFFET grgago SDBript இரவு 9மணிமுதல்
|L ரேன9iரநிமிடத்திற்கு கா: மணிவரை நிமிடத்திற்து
தொலைபேசி இலக்கங்களுக்கு I-1 50 சதம் ான்யதோலைபேசி இலக்கங்களுக்கு 2 50 சதம்
பகல் அழைப்புக்களுக்கும் ஆரம்பக் கடனம் ரூ.150சதம் அரச வரிகளுக்கு உட்படும்
<} |{3|| || ||
ELIE மேலதிக விபரங்களுக்கு (011) 555555

Page 21
NEW ASIA No: 285, Galle Road
リieWas
 
 
 
 

VAVelavate, Coonhoo O6. 重58 0重4988裹95 anstex gmail.com