கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லூர்க் கந்தன் பாமாலை

Page 1


Page 2

நல்லூர்க் கந்தன்
TOTO
சி. இராசரத்தினம் இறைமணி)
அகிலம் வெளியீடு
2O1Ο

Page 3
நூல்
நூலாசிரியர்
முகவரி
பதிப்பு
முதற்பதிப்பு
பதிப்புரிமை
அளவு
பக்கம்
வெளியீடு
அச்சுப்பதிப்பு
நல்லூர்க் கந்தன் பாமாலை
வைத்தியகலாநிதி சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம்,ஜே.பி. (இறைமணி)
* வேலணை கிழக்கு, வேலணை.
* 121, இரண்டாம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்.
மூன்றாவது பதிப்பு, ஆவணி 2010
நல்லூரான் பற்றால் மலர்ந்த பூக்கள்
ஆசிரியருக்கு
22.5cm x 15.00cm
12
அகிலம் வெளியீடு
கரிகணன் பிறிண்டேர்ஸ்
424, கே.கே.எஸ். றோட், யாழ்ப்பாணம்.

சமர்ப்பணம்
பற்றால் மலர்ந்தவிப் பூக்களால் அர்ச்சித்தேன் முற்றறிவு பெற்றவனே நல்லூரா - சற்றேதுங் குற்ற மிருந்தாற் பொறுத்துக்கொள் கற்போர்க்கு நற்கருணை செய்வாய் நயந்து.

Page 4

நல்லூர்க் கந்தன்
LIFTD606)
விநாயகர் துதி (வெண்பா)
நல்லூர் முருகன்மேல் நான்பாடும் பாக்களிலே சொல்வளங்கள் நன்கு சுவைபடவே - நல்லறிவு தும்பிக்கை யானேதுணைநின்று தந்தருள்வாய்
நம்பினேன் உன்னருளை நான்.
நாமகள் துதி (வெண்பா)
செந்தமிழால் நல்லூர்ச் சிவன்மகனை வெண்பாவால் வந்தனைகள் செய்து வழிபடவே - சிந்தித்தேன் நாமகளே நாவுறைந்து நற்கருணை தந்திடவுன் தூமலர்ப் பாதந்துணை.
மலர்ந்த பூக்கள் (வெண்பா)
மலர்ந்த நல்லூரின் ஆரம்ப உற்சவத்தைத் தேடி வருமடியார் கூட்டங்கள் - பாடியே
ஆர்ப்பரித்துக் கூறும் அரோகரா வேல்முருகா ஈர்க்கும் இறையருளை இங்கு. OI
தூரத்துரர் மக்கள் சிலர்பாத யாத்திரையாய்ச் சேர வழியிலே சேரும்மற் -றுாரவரும்
கூடி வருவார்கள் குமரன் விழாக்கான
நாடியே நல்லூர் நயந்து. 02
Ol

Page 5
பாசங்கள் நீங்கப் பசுபதியோ டொன்றிணையும் நேசத்தை நன்கு நினைவுறுத்தும் - பூசனையாய்க் கொண்டாடு கின்ற கொடியேற்றம் நல்லூரிற் கண்டாலே முத்திதருங் காண்.
ஊர்வீதி யாலே உடம்பால் உருண்டுதலஞ் சேர்கின்ற பக்தர் செயலுக்குத் - தீர்வாகப்
பேறருளி நல்லூர்ப் பெருமான் அவர்குற்ற ஊறகற்று வாரென்றுணர்.
நல்லை நகர்ப்பதியை நாடியே நாள்தோறும் எல்லையிலாக் காவடிகள் ஏந்திவரும் - நல்லடியார் காவடிக் கந்தனெனுங் காரணப்பேர் சூட்டினார்
சேவடிக்கே சேருஞ் சிறப்பு.
தூங்குதுலாக் காவடியைக் கண்டு பரவசத்தால் ஓங்கியெழும் ஒசை உணர்வலைகள் - ஆங்கடியார் பக்திப் பெருக்கைமிகக் கூட்டுதே நல்லூரின்
சக்திக் கிவைகளே சான்று.
ஊசிச் செடிலேற்றி ஊறுகளை உண்டாக்கி ஆசிபெறக் காவடிகள் ஆடுவார் - நேசித்த நல்லடியார் கூட்டத்தை நல்லூரிற் கண்டிறைஞ்சப்
பொல்லா வினைகளெலாம் போம்.
ஆறுபடை வீடுடைய ஆறுமுகன் ஈழத்தில் வீறுடனே வந்து விளங்குதலம் - தேறுங்கால் அல்லும் பகலும் அடியார் தொழுகின்ற நல்லூரா மென்றே நவில்.
0.3
04
05
O6
O7
O8

நல்லூர் கதிர்காமம் சந்நிதிமா விட்டபுரம் எல்லாமே ஈழத் திருத்தலங்காண் - நல்லூரே ஆண்ட தமிழர் பரம்பரையின் அற்புதங்கள் பூண்டதல மென்பார் புகழ்ந்து. 09
செய்யும் தொழில்சிறக்கும் செவ்வேளின் செல்வாக்கால் எய்தும் பெருமை எழில்கூடும் - மெய்வருத்தந் தீருந் திருவருளுந் தேங்குவதை நல்லூரிற் பாருங்கள் பாடிப் பணிந்து. 10
பூர்வீகமான புதுமைகளாற் பேர்பெற்ற ஊர்நல்லூர் சைவம் ஒளிவீசும் - பேர்பெற்ற ஆலயங்கள் மண்டபங்கள் ஆதீனஞ் சத்திரங்கள் சாலப் பொருந்தியதே சான்று. . 11
நேரந் தவறாத பூசைகள் உற்சவங்கள் ஆரம்பம் பூர்த்தி அதன்நிகழ்வு - பூரணமாய் ஆற்றும் படுத்தும் விதிமுறைகள் நல்லூரின் ஏற்றத்துக் கான எழில். 12
ஒசை ஒளியாலே ஊற்றாகும் உள்ளத்தின் தேசையெலாம் நல்லூரிற் தேடலாம் - ஆசையுடன் ஆணவமும் போகும் அமர்ந்து தியானிக்கக் காணலாங் கந்தன் கழல். 13
ஒசை எழுப்புகிறார் உள்ளத்தைத் தொண்டதனாற் பூசையிலே எண்ணம் புகுந்துவிடும் - ஆசையெல்லாங் காற்றாய்ப் பறந்துவிடுங் கந்தாவுன் நல்லூரில் ஊற்றாகும் உள்ளத் தொளி. 14
03

Page 6
பற்றின் மயக்கத்தாற் பக்தரெலாம் நல்லூரில் சுற்றிச் சுழன்று தொழுகின்றார் - மற்றவர்கள் பார்த்துப் பரவசத்தாற் பாடுகிறார் ஆடுகிறார் ஆர்க்கும் ஒலிகளுக்குள் ஆழ்ந்து. 15
விக்கிரகம் நல்லூரில் வீதி வலம்வரவே அக்கிரமம் போகும் அமைதிவரும் - பக்குவத்தை ஆறுமுகன் வாயில் அமர்ந்து தியானிக்கத் தேறுமே உள்ளந் தெளிந்து. 16
செல்லடிபோற் சத்தம் சேயோன் முழவதிர எல்லோருங் கண்ணால் எழில்பருக - நல்லூரா கண்ணாரக் கண்டு களிப்புற்றேன் பூசனையை
எண்ணங்கள் ஈடேற வென்று. 17
தூக்கிய ராவணனுந் துன்புற் றருள்வேண்ட ஆக்க மளித்தருளும் ஆண்டவனின் - நோக்கத்தை நல்லூரிற் கயிலை விழாநிகழ்விற் காணவே நல்லறிவு கூடும் நமக்கு. 18
மஞ்சவிழா வன்று மாலையிலே பக்தரெலாம் விஞ்சுபுகழ் நல்லூரின் வித்தகனை - நெஞ்சமெனும் மஞ்சத்தி லேற்ற மயக்கமெலாம் போய்விடவே
எஞ்சுமவன் தஞ்சம் எமக்கு. 19
ஆறு முகனுதித்தே ஆணவத்தைப் போக்கியதைக் கூறுந் திருக்கார்த் திகைவிழா - பேறுபெறப் பேரொளியைத் தந்த பெருமானார் நல்லூரிற் பாரொளியாய் நிற்பான் பணி. 20
04

வள்ளி யெனுமுயிரை வாதாடி நல்லூரான் கொள்ளும் இயல்பைக் குறித்தவிழா - உள்ளத்திற் தெய்வீகப் பண்பைத் தெரிவிக்குந் தீர்வதனால் உய்யும் வழியுண் டுயிர்க்கு. 21
சப்பரத்தி லேறிவருஞ் சண்முகனை நல்லூரில் எப்பொழுதுங் காண இயலாது - தப்பாது பாசங் குறுகப் பரம்பொருளோ டான்மாவும்
நேசமுறுங் காட்சியது காண். 22
தேரிலே ஊரவருந் தேவர்சிறை மீட்டவனை நேரிலே பார்த்து நினைந்துருகிப் - பூரித்து கும்பிட் டுருண்டு கூத்தாடிப் பாடியே நம்பிநல்லூரனை நாடு. 23
தேர்வடத்தை நல்லூரிற் தொட்டபடி வீதியிலே ஈர்க்கும் பணியை எதிர்பார்த்துக் - காக்கிறார் வெய்யிலிலே வாடி வியர்த்துக் களைத்தாலும் உய்வுதரும் தொண்டென்றுணர்ந்து. 24
தேர்தான் மனிதருடல் தெய்வம் அதனியக்கம் தேர்குடையில் ஆன்மாவின் ஈடேற்றம் - நேர்த்தியாய்ப் பேரின்ப வாழ்வு பெருகுவதை நல்லூரான் தேரிலே ஊரத் தெளி. 25
தீர்த்த விழாவன்று திருக்குளத்தில் நல்லூரில் ஆர்ப்பரித்து மூழ்கும் அடியார்க்கு - தீர்த்தத்தாற் பாவங்கள் தீரும் பணிந்தாடிக் கொண்டாட
ஆவலுந் தீரும் அவர்க்கு. 26
().5

Page 7
பூங்கா வனத்தன்று பூசிப்போம் நல்லூரில் ஆங்கழகுக் காய்வளரும் பூமரங்கள் - தீங்கான சூழலை மாசகற்றுஞ் சூக்குமமாம் மக்களுயிர் வாழ வகுத்த வழி. 27
நல்லூரின் கந்தா உனைநாடி வந்தவர்க்குப்
பொல்லாதன வெல்லாம் போகுமே - நில்லாது துன்பங்கள் நீங்குஞ் சுகவாழ்வு கைகூடும்
இன்பங்கள் பொங்கும் இனிது. 28
தங்கம்பொன் வெள்ளி தகதகக்குங் கல்வைரம் மங்காத் தாளமணிப் பூணாரம் - தொங்கவொளி வீசுகின்ற வேலொடு வெள்ளி மயிலேறும்
ஈசுபரன் எங்கள் இறை. 29
நல்லூரின் தேரடியில் நான்குருவைக் கண்டதுபோல் எல்லாருங் காணலாம் என்றார்கள் - நல்லறிவு பெற்ற சிவயோகி பேணும்நற் சிந்தனையில் முற்றிப் பழுத்த முனி. 30
யாழ்ப்பாண மக்கள் யாவருமுன் சேவடியைச் சூழ்கின்றார் அச்சந் தொனிக்காமல் - வாழ்வருளிக் கந்தா கடம்பா கதிர்காமா நல்லூரா
சிந்தா குலந்தீரச் செய். 31
விரக்தி இனியின்றி வீண்பேச்சு மின்றி உரத்தோ டுயிர்வாழ மக்கள் - சிரத்தையுடன் தேவர்சிறை மீட்ட செவ்வேளே நல்லூரின்
காவலனே காக்கக் கடன். 32
06

வீதி வலமாக வந்தவினை தீர்க்கின்ற சோதி முகங்காணச் சோகம்போம் - பிதியெலாம் தூசாகி இன்பச் சுடர்வீசும் நல்லூரான்
ஊசாட வந்தநல் ஊர். 33
விந்தையாய்ச் சோடித்து வீதி வலமூருங் கந்தையன் காட்சியினை நல்லூரிற் - சந்தித்தாற் சிந்தை மகிழுஞ் சுகத்தோடு செல்வாக்கும்
வந்தடையும் வாழ்வில் வளம். 34
கொலைகளவு கள்காமம் சூதுவா தென்று அலைகின்ற மக்கள் அமைதிபெற - நிலையான வாழ்வளிக்க நல்லூரில் வாழும் பரஞ்சோதி
ஊழ்வினைகள் தீர்ப்பார் உவந்து. 35
சூரன்போர் பார்க்கவே சூழும் அடியார்கள் வீரத்தோ டாணவத்தை வென்றருளக் - காரணமாம் கற்பனையை நல்லூரிற் கண்டு களித்திடலாம் உற்சவத்தின் உட்பொருளை ஒர்ந்து. 36
அஞ்சிப் பயந்து அகதிகளாய் ஓடாமல் கெஞ்சுகிறோம் கண்கண்ட தெய்வமுனைத் - தஞ்சமளி காக்கக் கடனுனக்கு கந்தாநல்லூரானே ஆக்கமருள் அச்சம் அகற்று. 37
அம்புவியில் மக்களுயிர்க் கஞ்சாமல் வாழ்ந்திடவே தெம்புதரும் நல்லூரின் செவ்வேளே - நம்புகிறோம் பொம்பர் கெலிசெல் புரட்டுகளுக் கஞ்சாமல் இம்பரிலே வாழ்வளிப்பீர் என்று. 38
()7

Page 8
குடையால வட்டங் கொடிமுரசு தீபம் படைசா மரைவீசும் பக்தர் - புடைசூழ வீதிவலம் போகும் வேந்தனே நல்லூரா
பாதிப்பு வாராமற் பார்.
நல்லூர் கொடியேற்றஞ் சப்பரம் தேர்தீர்த்தம் எல்லாமே இந்துமத ஆன்மீகம் - சொல்வதுதான் காட்சிகளைக் கண்டு கருத்திற் பதித்தாலே மீட்சி வருமினி மேல்.
பச்சைவிழா நல்லூரிற் பார்த்தபின் ஊரெங்கும் எச்சத்துக் காகமரம் நாட்டுங்கள் - இச்சகத்தில் பெய்யும் மழையதிகம் பெருகுமே நீர்நிலைகள் எய்தும் வளத்தோ டெழில்.
விண்ணில் எழுந்துரசால் முகில்கறுத்து நல்லைநகர் மண்ணில் மழைசுழியாய்ப் பெய்யுதே - எண்ணற்ற
மக்கள் திருவிழாக் காணவந்தூசாடும்
பக்க விளைவின் பலன்.
நல்லூர் அசையா மணியோசை நாள்தோறும்
39
40
41
42
அல்லகலும் போதில் அசைந்துவரச் - சொல்முருகா
வாயில்வர வாழ்த்தி வழிபடவே நல்லூரான் கோயிலுக்குப் போம்போங் குறை.
தண்டா யுதங்கை தரித்ததுதோள் வாகைத்தார் கொண்டகொடி சேவல் குலவுமயில் - தண்டா மரையின் சிவந்த மலர்முகநல்லூரா விரைவாய் அருள்வாய் விருது.
08
43
44

காணுங் கொலையச்சங் காடைத் தனமிழப்பு வேணுமா இன்னமுந்தான் வேலவனே - தோணுதா போராற் றமிழர் புலம்பெயர்தல் நல்லூரா
தேராயோ நீயிதற்கோர் தீர்ப்பு. 45
வாழ்விக்க வந்த வடிவேலா நல்லூரா ஊழ்வினையாற் துன்பங்களுற்றாலுஞ் - சூழ்நிலையிற் பக்தியாலுன்னைப் பணியவைத் தவ்வினையின்
சக்தி விளையாமற் சாடு. 46
தத்துவத்தைக் காட்டித் தரிசிக்க வைத்தெமக்கு முத்திதரும் நல்லூர் முருகனே - இத்துணையுஞ் சச்சரவுக் கஞ்சிச் சலனப்பட் டோமினிமேல் அச்சமின்றி வாழ அருள். 47
சூர்தடிந்த நல்லூரா சூழலை விட்டிந்தப் பார்வந்து பாவைகரம் பற்றியதேன் - ஆர்வமுடன் ஆணவத்தைப் போக்கியபின் ஆன்மாவை ஈடேற்றும்
வேணவா தானே விடை 48
தெய்வத்தைத் தேடித் திசைதெரியா தோடுகிறோம் உய்ய வழியொன்று சொல்முருகா - மெய்யடியார் கூட்டத்தைப் பார்த்துக் குதூகலிக்கும் நல்லூரா நாட்டில் அமைதிநிலை நாட்டு. 49
பாடும் பணியைப் பணித்தவனே நல்லூரா நாடும் இழந்து நகரிழந்து - பாடுபடும்
மக்களைப் பார்த்து மனம்வருந்திப் பாடுகின்றேன்
புக்ககத்திற் கழைத்துப் போ. 50
())

Page 9
ஈழப் போரோய இணக்கம் விரைந்துவர வாழ வழிதா வடிவேலா - வேழமுகன் தம்பியே நல்லூரா தாயகம் மீண்டுவர நம்பினோ முன்னடியை நாம். 51
சுற்றிவர யாழ்ப்பாணஞ் சூழப்பட் டிப்போதும் முற்றுகைக்குள்ளாய் முடங்கியதே - வற்றும் உடலோடு மக்கள் உயிரூசலாடும்
இடமாநல்லூரா இது. 52
குண்டோச்சு கின்ற கொடுமை யினித்தொடரக் கண்டு கலங்காமற் கார்முருகா - வண்டமிழா நல்லூர்ப் பதியோனே நாளு மடியார்கள் அல்லலின்றி வாழ அருள். 53
ஆறுமுகன் நல்லூரில் ஆட்சி புரிவதனால் ஊறுவரா தென்றுவகை யோடிருக்க - வீறுகொண்டு வந்த படையால் மருண்டோடச் செய்தவனே சொந்தவிடம் மீளவழி சொல். 54
அன்புடனே நல்லூரா ஆறுமுகா உன்நாமம் என்றுமே ஒதாத நாளில்லைக் - கன்றாவைத் தேடுவது போலுன்னைத் தேடுகிறேனோடிவந்து கூடுகின்ற வாறெனக்குக் கூறு. 55
மாரி மழைபொழியும் மக்கள் துயர்தீரும் பாரிற் பசுமை படருமே - தேரிறங்கும் பச்சைவிழா நல்லூரிற் பார்க்கும் பயனாலே இச்சையெலாந் தீரும் எமக்கு. 56

பஞ்சம்போர் வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நல்லூரான் ஆறுமுகன் - தஞ்சமெனுஞ் சொல்லும் பலிக்குமினிச் சோகமெலாந் தீர்ந்திடவே நல்லதுகை கூடும் நமக்கு. 57
நல்லூர் முருகன் நமக்குண்டே லென்னகுறை எல்லாம் எளிதாக ஈடேறும் - பொல்லாங்கு போவேன்றாற் போகும் பொருளும் புகலிடமும் வாவென்னச் சேருமே வந்து. 58
விண்ணவரை மீட்டெடுத்த வேல்முருகன் நல்லூரான் கண்கண்ட தெய்வங் கலியுகத்தில் - மண்மீட்டுத் தந்தானே உற்சவமுந் தப்பாமற் கொண்டாடிப் பந்தமுடன் போற்றப் பணிந்து. 59
நீதி கிடைக்கட்டும் நீளும்போ ரோயட்டும் பீதியின்றி வாழும் பெரும்பேற்றை - ஆதிசிவன் மைந்தனே நல்லூர் வடிவேலா தந்திடுவாய் இந்தா எனத்தா னெமக்கு. 60

Page 10


Page 11
சொந்தப் டெ சோதிட uffiu சிதம்பரப்பிள்ளை பத்திரிகைக
இராசரத்தினம் (இறைமணி)
LD8 Tត្វ
சொந்த மீது இவரின்
திருவி மடல்கள். நீ களிலும் இவ
ஆசிரி
s ராகவும், ச LDT60terr. 5
பணிபுரிந்தா
6TLD g5! முருகன் ே என்னும்
உதவியுள்ள
& 6p :
 
 
 
 
 
 
 
 

ঠু 墅 D ரில் வெகுகாலத்திற்கு முன்பே பிரசுர டப்பெற்றவை. ×৪২
ந ஊரிலுள்ள பல தெய்வத் தல க பக்திப்பாடல்கள் பிரசுரமாகியுள்ளன.
ழாக்கள், பாராட்டுவிழாக்கள், வாழ்த்து X
நினைவுமலர்களெனப் பல வெளியீடு ரின் ஆக்கங்கள் பிரபலமானவை.
யராகவும். அதிபராகவும், வைத்திய
மூக சேவையாளராகவும் பிரசித்த மாதான நீதிவானாகவும் மதிப்போடு
盲,
வேண்டுகோளுக்காக நல்லூர் பரில் 'நல்லூர்க்கந்தன் பாமாலை" இப்பாடற் தொகுதியை யாத்து frrfi.
5 கன வழு வின்றி ஆன் மிகக் செறிந்த இவரின் பாடல்கள் பாராட்டற் pத்துதித்துப் பயன்பெறத்தக்கன.
"அகிலம்" வெளியீட்டினர் ©g,62 160 off, 2010