கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் (நினைவு மலர்)

Page 1
. -------------------
 


Page 2


Page 3

2275N
சிவபதப்பேறு குறித்த SGoGOTG). DG)ří
26.11.2OO6

Page 4

போற்றுவியவருடத் தைப்பசியில்பூர்வத்தில் ஏற்றதிதிலுஞ்டிஸ்கந்தலுஷ்டி விரததினம் மென்பர்-ஆற்றலொடு பண்பமைந்த கோமான்'இறைமணி" நம்மைப் பிரிந்து விண்ணுலகம் வேட்ட தினம்.

Page 5

நினைவுமலர் --نگے
பஞ்சபுராணம்
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தனை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
தேவாரம்
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்கடன்பணி செய்து கிடப்பதே.
01

Page 6
ல்-நினைவுமலர்
திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரோடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறை யுறை சிவனே யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்ட நீ அருளிலை யானால் வார் கடல் உலகில் வாழ்விலேன் கண்டாய்
வருக வென்றருள் புரிவாயே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
(9LibLu6oulb é8,L-J Filabrieb வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகும் கழற உழறி
உமை மணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல்லாண்டு கூறுதுமே.
02

திருப்புராணம்
நன்மைபெரு கருள்நெறியே வந்தணைந்து நல்லூரின் மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந்தெழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்
திருப்புகழ்
இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனே சற்குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
வாழதது
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
03 நினைவு மலர் --نگے

Page 7
வேலனை மீள் அபிவிருத்தியே அஞ்சலி
தீவுப்பகுதியில் புகழ் பூத்த பெரியார் அமரர் சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம். 91 ஆவது வயதுவரை நிறைவாழ்வு கண்டு சிவபதம் அடைந்தார். வேலணையில் அவர் வளமுடைய பெற்றோருக்கு ஏக புத்திரன்ாகப் பிறந்து செளகரியமாக வாழ்ந்து முறையான கல்வி ஆசிரியனாக, அதிபராக 35 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்து அப்போதைய ஒய்வு நிலை நியமனத்திற்கேற்ப 55 வயதில் ஓய்வு பெற்றார். அவர் நீண்ட காலமாக வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்தமை குறிப்பிடத் தக்கது. இவர் கிராமத்து உற்றார், உறவினரால் அன்பாக
நேசிக்கப்பட்டவர்.
இவர் கிராம மட்டச் செயற்பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, கிராம சபை அங்கத்தவராகவும், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும், கிராம முன்னேற்றச் சங்கம், பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் அறங்காவலர் சபை அங்கத்தவராகவும் செயற்பட்டு, வேலணைக் கிராமத்தின் பல்துறை முன்னேற்றத்திலும், தீவகப் பிரதேச முன்னேற்றத்திலும் பெரும் பங்காற்றினார். தீவகப் பிரதேச பொருளாதார சமூக மற்றும் நிறுவன கூட்டமைப்பு வளர்ச்சியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கிராமிய மற்றும் தீவக மட்ட அரசியலிலும் மற்றும் தேசிய இனப்பிரச்சினையிலும் தன்னை இணைத்துக் கொண்டு பணிகள் பல புரிந்துள்ளார். சமாதான நீதவானாக இருந்து சமூக சேவைகள் பலவற்றைச் செய்துள்ளார்.
மேலும் இவர் ஒரு சிறந்த ஆயுள்வேத வைத்தியராகவும் திகழ்ந்தார். குறிப்பாக செங்கண்மாரி வைத்தியத்தில் நிபுணராகத் திகழ்ந்தார். அவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று பிணி நீங்கினர்.
நினைவு மலர் 04 తీ -ܪܬܵܐ

இவரிடம் செங்கண்மாரிக்குச் சிகிச்சை பெறுவதற்கு நாடளாவிய ரீதியில்
வருவது வழக்கம்.
1991ஆம் ஆண்டு தீவக இடப் பெயர்வு இவரது விவசாய செயற்பாட்டைப் பெரிதும் பாதித்தது. இதன் பின்னர் விவசாயத் துறையில் ஈடுபட முடியாது போயிற்று. வேலணையிலிருந்து மக்கள் வெளியேறிய நிகழ்வு, அவர் இறக்கும் வரையும் அவரை மிகவும் கவலை கொள்ள வைத்தது. உறவினர்களைக் காணும்போதெல்லாம்,
ஊர்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.
அவரும், அவரது மனைவி அமரர் ஆசிரியை உருக்குமணியும், எனது பெற்றோருடன் நீண்ட காலமாக ஒன்றாக ஆசிரியப் பணி புரிந்தார்கள். இரு குடும்பங்களும் நெருங்கிய நட்புறவால் பிணைக்கப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் எங்களைத் தமது பிள்ளைகள் போல் அன்புடன் பேணி வந்தவர்கள். அமரர் உருக்குமணியும் எனது காலம் சென்ற தாயாரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய அன்புத் தோழிகள் - வேலணையில் முன்னோடி பெண் ஆசிரியர்கள்.
பல்துறை விற்பன்னரான அமரர் சி.இராசரத்தினம் தனது குடும்பத்தை நன்கு பேணி பாதுகாத்ததுடன், கிராமத்து மக்களின் முன்னேற்றத்திலும் நிறைவான பணியாற்றியவர். அவர்கள் வேலணை மக்களின் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார். இன்று அழிந்து போயுள்ள வேலணைக் கிராமத்தின் மீள் அபிவிருத்தியே அன்னாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
ஆன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. முன்னாள் துணைவேந்தர்.
க்-நினைவு மலர் 05- ఉపీ

Page 8
O பாரம்பரியங்களைப்
பேணிய பண்பாளர்
அமரர் திரு. இராசரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பாரம்பரியமிக்க இக்கிராமத்திலுள்ளவர்கள் ஊக்கமாக உழைத்து முன்னேறும் இயல்பினைக் கொண்டவர்கள். சைவ சமய ஆசாரங்களை நன்கு அனுட்டிப்பவர்கள். அமரர் திரு இராசரத்தினம் அவர்கள் ஆசிரியப்பணியிலே இணைந்து அதிபராக உயர்ந்து இளைப்பாறியவர்.
எமது பாரம்பரியத்திலே தமிழாசிரியப்பணி மிகவும் சிறப்பாக மதிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழாசிரியர்கள் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணுவதிலும் கடைப்பிடிப்பதிலும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள் பக்தியோடு கடமையைக் கண்ணியமாக செய்பவர்கள். ஒழுக்க சீலர்களாக வாழ்ந்த தமிழாசிரியர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியானவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இந்த மரபிலேதான் அமரர் திரு. இராசரத்தினம் அவர்களும் தமது கல்விக் கடமையோடு. ஆலயத்திருப்பணிச் சபைகளிலும் கூட்டுறவுச் சங்க பணியிலும் இணைந்து செயற்பட்டுவந்தவர். இவர் தலைவராக இருந்த காலத்திலே வேலணைக் கூட்டுறவுச் சங்கம் செய்த சேவைகளை
மக்கள் மறக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.
அமரர் திரு. இராசரத்தினம் அவர்கள் தமிழ்ப் புலமையிலும் சிறந்து விளங்கினர். யாப்பிலக்கணத்தை வரன் முறையாக கற்ற இவர் அவ்வப் போது பத்திரிகைகளில் வெளியிட்ட கவிதைகளைப் பலரும் பாராட்டியுள்ளனர். நல்லூர் முருகன் மீது இவர் பாடிய பாமாலையும் வேலணை பெருங்குளத்து முத்துமாரி அம்மன் மீது இவர் பாடிய தோத்திரங்களும் இவரது கல்விச் சிறப்புக்குச் சான்றாகும்.
க்-நினைவுமலர் 06 دکے

யாழ்ப்பாணத்தின் குறிப்பாகத் தீவுப் பகுதியின் வாழ்வியற் கோலங்களை தமது எழுத்தின் மூலம் ஆவணப்படுத்தும் பெரும் பணியினை இவர் நன்கு நிறைவேற்றியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின்ஆரம்பகாலத்துத் தமிழ் மக்களின் உணவு, உடை, உறையுள், பண்பாடு கல்வி உள்ளிட்ட பல விடயங்களை இவரது நூல்
கொண்டுள்ளது.
எமது பாரம் பரியத்திலே சுதேச மருத்துவம் மிகவும் பழமை வாய்ந்ததும் புகழ் பெற்றதுமாகும். பரம்பரை பரம்பரையாக வந்த சுதேச வைத்திய முறைமைகளைச் கற்றும் கேட்டும் அறிந்தும் பணி செய்த சிறப்பு இவருக்கு உரியது. செங்கண் மாரி என்னும் நோயைத் தீர்ப்பதிலே இவர் தனித்துவமானதோர் இடத்தைப் பெற்றிருந்தார். அமராகும் வரை இவரது வைத்திய சேவை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பணியினைக் கரிசனையோடு செய்தமையால் இவரது
பிள்ளைகள் கல்வியிலே சிறந்து விளங்குகின்றனர்.
எமது பழமைப் பாரம்பரியங்களைப் பேணிய ஒரு தலை முறை இப்போது அருகிவருவதை அவதானிக்கின்றோம். பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் வகையிலே வாழ்ந்த அமரர் திரு.இராசரத்தினம் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
பேராசிரியர் இரா.குமாரவடிவேல்
பதில் துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்.
فکے 07 E60)6OT6 LD6of --نگے

Page 9
மண்ணின் மைந்தன்
வேலணையூர் தந்த தவப் புதல்வர்களில் திரு.சிதம்பரப் பிள்ளை இராசரத்தினம் அவர்கள் முதன்மையானவர். சிறப்பானவர். ஆறடி உயரமுள்ள அந்த ஆஜானுபாகுவை நினைத்துப் பார்க்கின்றேன்! நிமிர்ந்த நன்னடையும் கம்பீரமும் மிக்க அப் பெரியார், தலைதாழ்த்தி நடந்ததை நான் எப்பொழுதுமே பார்த்ததில்லை.
எனது சிறு பராயம் முதல், அவர் இயற்கை எய்திய இறுதிநாள் வரை, அவரைச் சந்தித்த சந்தர்ப்பங்களில் ஒரு பயங் கலந்த பக்திதான் என்னுள் பரவுவதுண்டு. இதன் காரணம் இன்றுவரை எனக்குத் தெரியாமலே இருக்கிறது. ஒரு வேளை அவரது தோற்றமும் குரலும் பேசும் தோரணையும் இதற்கான காரணமாகவே இருந்திருக்கூடும்.
இப்பெரியாரைப் பற்றிய எனது இந்த முன்முடிவும் மனப்பதிவும் அவரது வாழ்க்கைக் குறிப்பான "வாழ்வுச் சுவடுகள்" எனும் நூலைப் படித்த பின்னர் - புறநிலை சாராத அவரது அகவுணர்வுக் கசிவுகளால் பெரிதும் மாற்றமடைந்துள்ளது.
அன்பு, அரவணைப்பு, அகங்காரமற்ற பெருமை, நெருக்கம், நெகிழ்ந்துருகும் நேசம் புதியதை நாடும் பண்பு, கருமம் சார்பற்றுறுதி, சக மனிதர் மீதான பரிவு, இறைபக்தி என்று எல்லாவற்றிலுமே முதன்மை நாட்டத்தையும் தன்னை இழந்து செயற்படும் பணியையும் நாம் இவரிடம் தரிசிக்க முடியும்.
இத்தகைய பண்பு வளத்துடன் கூடிய இம் மனிதரின்
வாழ்க்கை, பலவெற்றிகளைக் கண்டதில் வியப்பேதுமில்லை.
நல்ல மைந்தனாக, குடும்பத் தலைவனாக, ஆசிரியனாக
வைத்தியனாக, விவசாயியாக, சமூகத் தொண்டனாக இப்பெரியார்
க்-நினைவு மலர் 08 فکے

வாழ்ந்த வாழ்க்கை அவரது சமகாலப் பெரியார்களுக்கு ஒரு வகையில் முன்மாதிரியென்று கூறலாம்.
குடும்பத்தில் ஏக புத்திரனாகத் தோன்றிய இவர் பெற்றோருக் கும் உற்றாருக்கும் செல்லப்பிள்ளையாகவும் நண்பர்களுக்கு
வழிகாட்டியாக வகை சொல்பவராகவும் விளங்கினார்.
தனது கல்வியை வேலணை மிஷன் பாடசாலையில் ஆரம்பித்த இவர் யாழில் உள்ள சேணியதெரு சர்மார்க்கப் போதனாவித்தியாசாலையிலும் கற்றார். வேலணை சரஸ்வதியில் மேல்வகுப்புக்களில் படித்துச் சிந்தியடைந்த இவர், ஆங்கில மொழியின் மேன்மை கருதி, சித்தங்கேணி சைவ ஆங்கில பாடசாலையிலும் பயின்றார்.
சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் எழுபதுகளின் ஆரம்பத்தில் முதலாம் தர அதிபராக உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியராக அவரது பணி அளப்பரியது. அவரிடம் கற்ற மாணவச் செல்வங்கள் பலர் இன்று உயர்நிலை உத்தியோகத்தர்களாகவும் கல்வியாளர்களாகவும் உலகம்
முழுவதும் பரவியிருப்பது நாம் நன்கு அறிந்த உண்மையாகும்.
துறைபோன வித்தகராகவும் துல்லியமான கல்விமானாகவும் இருந்தமையால் மிகச் சிறப்பான குடும்பத் தலைவராக இவரால் இருக்க முடிந்தது. இவரது துணைவியார் உருக்குமணி அவர்களும் நல்லாசிரியையாக இருந்தமை இவர்தம் பிள்ளைகள் கல்விப் புலமை
பெற அரிய சூழலை அமைத்துக் கொடுத்துள்ளது.
இவரது தலைமகள் திருமதி புஷ்பா கணேசலிங்கம் அவர்கள்
விஞ்ஞானப் பட்டதாரி. அத்துடன் முதுமானிப் பட்டமும் பெற்றவர். யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பணியை ஆரம்பித்த
&-நினைவு மலர் 09 -- دیتے

Page 10
இவர் பின்னர், அதிபராய், கல்வி அதிகாரியாய், பிரதிக் கல்விப் பணிப்பாளராய் பதவி வகித்து இளைப்பாறினார்.
அடுத்துப் பிறந்த இவரது மகளான திருமதி புஷ்பராசவதி சின்னையாவும் விஞ்ஞானப் பட்டதாரி. அத்துடன் முதுமானிப் பட்டதாரியும் கூட. இவர் பல பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் உப அதிபராய், அதிபராய்ப் பணி புரிந்தார். ஓய்வு பெற்ற பின்னர், தேசியக் கல்வி நிறுவனம் நடாத்தும் கல்வி டிப்ளோமா வகுப்புக்களுக்கு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது முதல் மகனான பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர். நற்பண்பாளர். உற்றார். உறவினர் நண்பர்களுககு உடன் உதவும் இயல்பினர். கலை இலக்கியத்தில் மிகுந்த விருப்பும் ஈடுபாடுமுடையவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலை மாணிப் பட்டப்படிப்பில் சித்தியடைந்து, களனி பல்கலைக் கழக்ததிலும் பின்னர் யாழ் பல்கலைக் கழ்கத்திலும் புவியியற்றுறை விரிவுரையாளராகக் கடமையூாற்றியதுடன், தற்சமயம் பேராசிரிய ராகவும் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாகவும் கடமையாற்றி வருகிறார். இவர் யாழ் பல்கலைக்கழக புறநிலைப் படிப்பு அலகின் செயற்பாட்டாளராக இருந்த காலத்து ஆற்றிய பணி என்றும்
மனங்கொள்ளத்தக்கதாகும்.
இவரது ஏனைய பிள்ளைகளான திரு.இ.பாலச்சந்திரன், திருஇ.ஜெயச்சந்திரன் ஆகியோர் வங்கியாளராகவும், ஒலிபரப்பா ளராகவும் கடமையாற்றியமை நாம் அறிந்த ஒன்றாகும்.
ஏனைய பிள்ளைகளும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு, தாய்தந்தையரின் பேர் விளங்கச் செயற்படுகிறார்கள்.
ܗܶܶ 10 f606OT6 LD6orf -ܒܳܠܐ

கற்ற குடும்பம் கல்வியாளர் பலர் நிரம்பிய குடும்பமென்பதால் இவரது மருமக்களும் பேரப்பிள்ளைகளும் வல்லமையில் சோடைபோனவர்கள் அல்லர். குலத்தின் பெருமை பேசக் கூடிய
தகைமையாளர்களாகவே விளங்குகிறார்கள்.
"கருவிலே திருவுடையார்" என்பது பெரியோர் வாக்கு, அதற்கமைவாக இவரது தந்தையார் திரு.வி.சிதம்பரப்பிள்ளைபோல வைத்தியத்தில் இவரும் மிகுந்த செல்வாக்குமிக்கவராக விளங்கினார்.
மிகச் சிறு வயதிலேயே இவரது வைத்தியம் பணி தொடங்கிவிட்டது. நோயுற்ற சிறு குழந்தை ஒன்றுக்கு மருந்து கொடுத்து, பரிகரித்து நோயிலிருந்து அக்குழந்தையை இவர் காப்பாற்றினார். தகப்பனார் வீட்டில் இல்லாத வேளையில் இது நடந்தது. அன்று ஆரம்பமான இவரது வைத்தியப் பணி அவரது இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. செங்கண்மாரி நோய்க்கு வைத்தியம் செய்வதில் இவர் நிபுணத்துவம் மிக்கவராக விளங்கினார்.
இவர் வைத்திய சாஸ்திரத்தை தகப்பனாரிடம் இருந்தும் தனது சிறியதந்தையார் திரு.வி. நடராஜபிள்ளை அவர்களிடமிருந்தும் கற்றுத் தெளிவு பெற்றுத் துறை போன வித்தகரானார். 1944ஆம் ஆண்டு வைத்தியராகப் பதவி பெற்ற இவர் 1984இல் சித்த வைத்தியக் கலாநிதி ஆகும் பேற்றினைப் பெற்றார். யாழ்ப்பாண அகில இலங்கை சித்த ஆயுள் வேத வைத்திய சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும் "வைத்தியன்" எனும் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியமை இவரது சிறப்புக்குச் சான்றுகளாய் அமைந்தவையாகும்.
வேலணை கரு மண்பூமியாக இருப்பினும் விவசாயம்
செய்வதற்கேற்ற தட்ப வெப்பத்தையும், நீர்வளத்தையும் உடைய பூமி, அந்த அருமந்த மண் தொட்டு வளம்பெருக்கியவர்களில் இவரும்
یکے 11 நினைவு மலர் --نگے

Page 11
ஒருவர். இளமைக் காலத்தில் நெற் பயிற் செய்கையில் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்தார். 1950களில் - கிளிநொச்சி, கல்மடுவில் பயிர் செய்தமை இவரது கமக்கார வாழ்வின் மைல்கல் எனலாம். பின்னர் இவரது முயற்சிகள் பணப் பயிர்களான புகையிலை, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பயிரிடுவதிலேயே செலவாகியது.
* விவசாய வழி வந்த செல்வத்தை அவர் தனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும். உற்றவர்களுக்கும், உதவி கோரி வந்தவர் களுக்கும் அதிக அளவு பயன்படுத்தினார்.
சமூக அளவில் இவர் ஆசிரியராக மட்டும் இயங்கவில்லை. இவர் கரம் பட்டுத் துலங்காத பணிகள் எதுவுமே இல்லை என்று
சொல்லும் வகையில் செய்றபட்டார்.
இவர் வேலணைக் கிராம சங்க உறுப்பினராக, தலைவராக கூட்டுறவாளராக இயங்கியதோடு பயிர்ச் செய்கைக்குழு, சனசமூக நிலையங்கள், சமாசங்கள் ஆகியவற்றின் உயர்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடி யவரராகத் திகழ்ந்ததோடு, அவர்களது சிக்கல்களை, சிடுக்குகளை தீர்த்து வைப்பதில் சமர்த்தராகவும் சம நோக்குடையவராகவும் திகழ்ந்தார்.
இத்தகைய பெருமகனை நீதி அமைச்சு - ஊர்மக்கள், மக்கள் மன்றப் பிரதிநிதிகள்,விருப்பத்திற்கமைவாக 1978ஆம் ஆண்டு சமாதான நீதிவானாக நியமித்துக் கெளரவம் செய்துள்ளது. அவர் தம் சமூகப் பணிகளுக்கு அரசும், மக்களும் அளித்த சிறப்பான
அங்கீகாரமாக இதனைக் கொள்ளலாம்.
இவரது தமிழ்ப் புலமையும் இலக்கியப் பணியும் குறித்து சொல்லக் கூடிய ஒன்றாகும். மரபு சார் கவிதைகளையே இவர் எழுதிய போதும் வீரியம் மிக்க மொழியாட்சியும் உயிர்ப்பும் செழுமையும்
άι- நினைவுமலர் 12 یکے

இவரது கவிதை மொழக்கு உண்டு. கவிதை புனைவது மட்டுமல்ல இசையிலும், இசைப் பயிற்சியிலும் தனது இளமைக் காலத்தில் மிகுந்த ஈடுபாடுகாட்டி வந்துள்ளார்.
"புதியன விரும்பு" என்பது பாரதியின் புதிய ஆத்திசூடி இவர் மாந்திரிகம், மனோ வசியம் என தனது கற்றற்பரப்பை விரிவு படுத்தியமை, பிற்போக்குத் தனமானது எனக் கருதாமல் ஒரு வகைப் புதுமை நாட்டமாகவே நாம் பார்த்தல் வேண்டும். தீர்க்கமான முருக பக்தரான இவர் உருவ வழிவபாட்டை ஒதுக்கி, குரு மகராஜ் அவர்களைக் குருவாக ஏற்றுக்கொண்டமைகூட சற்று வித்தியாசமாக எதையும் செய்து பார்க்கவேண்டுமென்ற அவரது ஆர்வத்தையே காட்டுகிறது.
அஷ்டாவதானியும் பன்முகவீச்சும் கொண்ட இவர் அடிப்படையில் வேலணை மண்ணின் மைந்தனாகவே வாழ்ந்தார். இடப்பெயர்வும் அதனடியான துயர்மிகு வாழ்வும் அவரைப் பெரிதும் பாதித்தன. இழந்த விழுமியங்களையும் நமது வேலணையும் வேலணை மக்களும் பெற்றிட வேண்டுமென்பது அவரது நெடுங்கனவாகும். அவரது கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு ஊரவராகிய நமது பணி அயர்வற்றதாக இருக்க வேண்டும். அவ்வழி முயல்வது நமது கடமையாகும்.
மீளவும் ஒருமுறை அந்த ஆஜானுபாகுவை திரண்ட உதடுகளுடனும் விசாலித்த கண்களுடனும் தடித்த வில்லைகளுடைய மூக்குக் கண்ணாடியுடனும் நினைவு கூர விழைகின்றேன். அவ்வாறு நினைவுகூரும் வேளை எனது உடல் புளகாங்கிதமுறுவதையும் மனம் மட்டிட முடியாத அளவு பெருமையுறுவதையும் என்னால் உணர முடிகின்றது. அவரது நாமம் நமது ஊர் மக்களின் நெஞ்சங்களில் நீடு வாழும் எனும் நம்பிக்கை எனக்கு நிரம்பவும் உண்டு
க.சட்டநாதன், ஆசிரியர்.
Cആi-jങ്ങങ്ങഖ Dബ് 13 دکے

Page 12
ஆயிரம் பிறைகண்ட வித்தகர்
உள்ளம் போல் கம்பீரமான தோற்றம், நெற்றியில் துலக்கமான வெண்ணிறும் சந்தனத் திலகமும், வரவேற்கும் புன்னகை தவழும் தமிழ்ப்பற்றும் கொண்ட வதனம், பால் நிறத்தை எள்ளும் தூய தேசிய உடை, நீண்ட பரமாஸ்சால்வையுடன் காட்சி தருவார் வைத்தியக் கலாநிதி சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம்.
எளிய பேச்சு நடை, வார்த்தைகளை அளந்து சிக்கனத்தோடு கருத்துக்களை முன்வைக்கும் மொழி ஆற்றல், மக்கள் தலைவனாக, நெறியாளராக, சமூக சேவைகயாளராக ஏற்றுக் கொண்டமைக்கான அத்தனை உயரிய நற்பண்புகளின் கூட்டே அமரர் இராசரத்தினம் மண்ணின் சிறப்பால் சிலர் பெருமையுறுகிறார்கள். சிலரின் பிறப்பால் மண் பெருமை அடைகிறது. அமரர் இராசரெத்தினம் பிறந்தமையினால் வேலணை மேலும் தன் பெருமையை உயர்த்திக் கொண்டது. யாழ்! வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் கடமையாற்றிய போது பல மாணவர்களை நல் மாணாக்கராக்கி பல்வேறு அரச பதவிகளில் அமரச் செய்து தொழில் அதிபராகவும் விளங்க வழி காட்டி, அப்பாடைசாலை ஒரு தரமான பாடசாலை யென்று தீவகத்தில் விளங்கும் வகையில்
அயராது உழைத்தவர்.
இவர் தமது விருப்பப்படி வேலணையைச் சார்ந்த ஆசிரியை உருக்குமணியை இல்லத் துணைவியாக ஏற்றார். இருவரும் சைவவித்தியாவிருத்திச் சங்க இந்து போட்) முகாமையின் கீழ் கடமையாற்றினார்கள். ஈற்றில் இவர் திறமை மிக்க சிறந்த நிர்வாகியாகக் காணப்பட்டமையினால் யாழ் வேலணை ஆத்திசூடி வித்தியா சாலையில் அதிபராக இருந்து ஓய்வுபெற்றார்.
دکے 14 நினைவுமலர் --نگے

ஓர் ஆசிரியரிடம் அல்லது நாட்டின் தலைவரிடம் காணப்பட வேண்டிய தருமம், நீதி, நேர்மை, அர்ப்பணிப்பு, பொறுமை, தேசபக்தி, தெய்வ பக்தி, அன்பு ஆகிய குணங்கள் காணப்பட்டன. இவரது பாரபட்சமற்ற செயற்பாடு, உறுதியான நேர்மைப் பேசசு, விரிந்த மனப்பாங்கு யாவும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. ஆகையினால் நாட்டிலுள்ள பொது நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை இவர் வகிக்க வேண்யிருந்தது. இவருடைய சேவையின் பயனாக அரசாங்கம் இவரை ஒரு சமாதான நீதிபதியாக நியமித்துக் கெளரவித்தது.
அமரர் தனக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்து மறைந்தவர். செய்த அளப்பரிய சேவைகள் மக்கள் மனதிலிருந்து என்றும் மறையாதவை. அந்த வகையில் தனது செல்வத்தின் ஒரு பகுதியையும், தான் கற்ற கல்வி அறிவினால் தனது மனித சக்தியையும் பயன்படுத்தி மக்களின் நலன் கருதி கல்வி, சமயம், சமூகப் பணி, வைத்தியப்பணி ஆகிய பணிகளை மனம் சலிக்காது ஆற்றி வந்தார்.
இறைமணி என்ற புனைப்பெயரில் இவர்து பல கட்டுர்ைகளும் பல பாக்களும் தினசரிப் பத்திரிகையில் வெளி வந்தன. பின் வேலணைப் பெருங்குளம் முத்துமாரி அம்மன் , நல்லூர் கந்தசாமி ஆகிய தெய்வங்களின் மீது பக்திச்சுவை சொட்டச் சொட்ட பல கவிகளை ஆக்கி புத்தக வடிவில் வெளியிட்டார். அவருடைய ஆக்கங்களின் அர்த்தங்களைப் பல அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இதனாலேயே வேலணைப் பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் பரிபாலன சபைத் தலைவராக நீண்ட காலம் பொறுப்பேற்றுத் திறம்பட
நடாத்தினார்.
கூட்டுறவு இயக்கத்தின் உதவி, நன்மை யாவற்றையும் நன்கு அறிந்தவராகையினால் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக குறிப்பாக விவசாயிகள், கடற்றொழி
فکے 15 நினைவுமலர்--4ے

Page 13
லாளர்கள், மற்றும் வேறு தொழில் செய்பவர்களுக்கும் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார். பின் வேலணைப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பதவியை ஏற்ற காலத்தில் சங்கத்திற்கு நிரந்தரக் கட்டிடம் வேண்டுமென்று தீவுப் பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கி, அவரின் ஆலோசனையின்படி வங்களாவடியில் காணி வாங்கி நிரந்தரமாக கட்டிடம் அமைக்க முன்நின்றவர்களுள் இவரும் ஒருவராக இருந்து செயற்பட்டதினால் கட்டிடம் அமைந்து, மக்கள் அன்றாடத் தேவைகளுக்கு தேவையான பொருட்களை விட விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல், உரவகை, கிருமிநாசினி, மண்ணெண்ணெய் மருந்து தெளிக்கும் கருவிகளை கமநலசேவை நிலையங்களுக்கூடாக வருவித்து நியமன விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கி அக் கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிகாட்டினார்.
இவர் தான் பிறந்த மண்ணை அதிகம் நேசித்தமையினால் வேலணைக் கிராமம் சகல வளங்களோடும் விளங்க வேண்டுமென்ற பேரவாவினாலும் அக்காலத்தில் தீவுப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தொடர்பு கொண்டு வேலணைக்கு ஒரு தனிக்கிராம சபை, தீவு மக்களுக்கு உயர் கல்வி நிறுவனமாகிய வேலணை மத்திய கல்லூரி, கமநல சேவை நிலையம், கல்வி வலயம், மிருக வைத்தியசாலை, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நிறுவுவதற்கு அரும்பாடு பட்டவர்களில் அமரரும் முக்கிய பங்கேற்று உழைத்தார்.
"சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" −
"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்ற புறநாநூறு மற்றும் திருக்குறள் வாக்கியங்களுக்கமைய தம்பிள்ளைகளை நல்லவராகவும், வல்லவராகவும் கற்பித்து பல்கலைக்கழகப் பட்டங்கள் பெற்று கல்விப் பணியாளர், அதிபர், பல்கலைக் கழகப் பீடாதிபதி, வங்கி முகாமையாளர் போன்ற பல்வேறு
அரச உயர் பதவிகளை வகிக்க வழிகாட்டினர். இதைப் பின்பற்றியே
கீ-நினைவுமலர் 16-- خٹکے

இவரது பேரப்பிள்ளை களும் பல துறைகளிலும் கல்வி கற்று கல்விமான்களாக இருக்கின்றார்கள் என்றால் இவர் பிறருக்குச் செய்த சேவையின் பயனும் இவரது வழிகாட்டலும் என்று கூறினால் அது மிகையாகாது.
"தக்கார்தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்"
என்பது திருக்குறள். அவரின் பெயரால் எஞ்சி நிற்கும் அவர்களது பணிகளை அவர் விட்டுச் சென்ற பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் தொடர்ந்து செய்தல் வேண்டும் அன்னாரின் நற் சேவையின் பிரதிபலிப்பு அன்னாரின் குடும்ப முன்னேற்றத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.
தெய்வப் புலவர் கண்ட அன்புடைமை அருளுடைமை, பண்புடைமை என்பவற்றுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார். தமர், பிறர், பெரியார், சிறியார், கற்றார், கல்லாதார் என்ற வேற்றுமை பாராது வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பல்முக வித்தகர். இவர் ஆயிரம்பிறை கண்டு பெரு வாழ்வு பெற்றவர். இவரது ஆத்மா தில்லைக் கூத்தனின் திருவடியில் பேரானந்தப் பெருவாழ்வு பெற வேலணை பெருங்குளம் முத்துமாரிஅம்பாளைத்தியானிப்போமாக,
ஒம் சாந்தி 1 சாந்திய சாந்தி!!!
பொ.நடராசா
இளைப்பாறிய அதிபர் யா வேலணை சரஸ்வதி வித்தியாலயம்.
* தேவையற்ற வேலைகள் எங்களைக் களைப் படையச் செய்கின்றன. தேவையான வேலைகள் எங்களுக்கு மகிழ்வைத் தருகின்றன.
& ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருப்பவர்
களின் உள்ளம் களைப்படைவதில்லை.
க்-நினைவு மலர் 17 یکے

Page 14
வரலாற்றில் தடம் பதித்த பெருந்தகை
உலகில் பலர் தோன்றுகின்றார்கள். மறைகின்றார்கள். இது இயற்கையின் நியதி இவர்களில் ஒரு சிலரே மக்கள் மனங்களில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள். மறைந்தும் மறையாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் தடம் பதித்தவர்களாகிறார்கள். அத்தகையோரில் ஒருவரே அண்மையில் இறையடி சேர்ந்த அமரர்.சி.இராசரத்தினம் அவர்களாவார்.
அமரர் சி.இராசரத்தினம் அவர்கள் ஒரு முழுமையான மனிதர். "வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த" பெருந்தகை, ஆயிரம் பிறை கண்டவர். தாம் பிறந்த வேலணை மண்ணுக்குப் பெருமை தேடித் தந்தவர். சிறந்த மதியூகி, நேர்மை, திறமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் கொண்டவர். எடுத்த கருமத்தைத் தொடுத்து முடிக்கும் நெஞ்சுரம் கொண்டவர். வேலணையின் வரலாற்றில் அழியா இடம்
பெற்ற சாதனையாளர்களுள் ஒருவர்.
அமரர் இராசரத்தினம் அவர்களின் பணிகள் பன்முகப் பட்டவை. ஆசிரியராக, அதிபராக, கூட்டுறவாளராக, சமூக சேவையாளராக, வைத்தியராக, சமயத் தலைவராக, சிறந்த விவசாயியாக, அரசியல்வாதியாக இவரை நாம் கண்டிருக்கின்றோம். அத்தனை துறைகளிலும் அவர் தமது முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளார். மக்களுக்கு ஆற்றும் சேவை மகேஸ்வரனுக்கு ஆற்றும் சேவை என்பர். அதிலும் வைத்திய சேவை மகத்தானது. அது வைத்திய நாதனது (சிவனது) சேவைக்கு நிகரானது என்பர். தமது தந்தையார் காட்டிய வழியினைத் தொடர்ந்து பாரம்பரிய வைத்திய சேவையை
இறுதிவரை ஆற்றியவர் இவர் "செங்கண்மாரி (மஞ்சள் காமாளை)
نکلے 18 நினைவுமலர் --نگے

நோய்க்குச் சிகிச்சை பெற வேண்டின் சிதம்பரப்பிள்ளை அவர்களின் மகனிடம் செல்லுங்கள்" எனச் சாதாரண மக்கள் கூறுமளவுக்கு, தீவகத்திலும், யாழ் - மாவட்டத்திலும் பெயர் பெற்றவராகத் திகழ்ந்த பெருமைக்குரியவர். தமது பத்தொன்பதாவது வயதில் ஆங்கில ஆசிரியராகக் கல்விப் பணியேற்ற இவர் ஆசிரியராக, அதிபராக ஆற்றிய பணிகள் பல. அவை விரிக்கிற் பெருகும். தம் வாழ்நாள் முழுதும் வேலணையின் கல்வி வளர்ச்சிக்காக அயராது தொண்டாற்றி
யமையை அனைவருமறிவர்.
வேலணைக் கிராம சபையின் இரண்டாம் வட்டார உறுப்பினராக 1944இல் போட்டியின்றித் தெரிவு செய்யப் பெற்றதன் மூலம் அரசியற் துறையில் புகுந்த இவர் நிகழ்த்திய சாதனைகள் பல. கிராம சபைத்தலைவர்களை உருவாக்கும் சக்தி மிக்கவராகவும் இவர் விளங்கினார். கூட்டுறவுத் துறையில் தீவிர பங்கு கொண்டு உழைத்த அமரர் இராசரத்தினம் வேலணைப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாதவையாகும். யாழ் பண்ணை போக்குவரத்துச் சங்கத்திலும் இவர் பெரும் பங்கு கொண்டிருந்தமை போற்றுதற்குரியதே.
பயிர்ச்செய்கைக் குழுத் தலைவராக, வேலணை பிரசைகள் குழுத் தலைவராக, இணக்க சபைத் தலைவராக இவர் ஆற்றிய பணிகள் என்றும் மறக்க முடியாதவை. இவர் தமது சேவைகளை வேலணையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. சமூகஜோதி, இராசவாசல் முதலியார் சிதியாகராசா தலைமையில் இயங்கிய யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தில் இணைந்து அருந்தொண்டாற்றினார். சமாசத்தின் பொருளாளராக இருமுறை போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டமை இவரது சேவைகளுக்குக்
கிடைத்த சான்று எனலாம்.
&-நினைவு D6Off 19 తీ

Page 15
வாழ்வாங்கு வாழ்ந்து, மறைந்த இப்பெருமகனாரின் பணிகள் வருங்கால சமுதாயத்திற்கு வழி காட்டுமென நம்புகிறேன். அன்னாரின் இழப்பு எம் பிறந்த மண்ணுக்கு - வேலணைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் பூதவுடல் மறைந்தாலும் அவரது புகழுடல் வேலணை மக்கள் தம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். வரலாற்றில் தடம் பதித்த இப் பெருந்தகையின் ஆன்மா வேலண்ை கிழக்கு அருள் மிகு முத்துமாரியம்மன் திருவடிகளில் சாந்தி பெறப்பிரார்த்திக்கின்றேன்.
சமாணிக்கவாசகர் வேலணை.
gesag-=s>SCOOs==-
அந்தக் குத்துவிளக்குகள் தலைமாட்டில் எரிந்துகொண்டிருக்கின்றன. அவை எரிந்தாலென்ன, அணைந்தாலென்ன? அந்தப்படுக்கையில் கிடக்கும் மனித விளக்கு அணைந்துவிட்டது. அது எரிந்து கொண்டிருந்தவரை குத்துவிளக்கு களுக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த விளக்குக்கு ஊற்றும் எண்ணெயை இறைவன் ஊற்றாமல் விட்டுவிட்டான்.
கண்ணதாசன் -s coco-695
یکے 20 நினைவு மலர் --نگے

பண்பும் நுண்ணறிவும்
மிக்க ஆசான்
அன்பும் பண்பும் ஆழ்ந்த நுண்ணறிவும் மிக்க ஆசானாக, மருத்துவக் கலாநிதியாக விளங்கித் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தனது இறுதிக் காலம் வரை தொண்டுப் பணி செய்து வந்த பெரியார் திரு.சி.இராசரத்தினம் அவர்களின் மறைவு மிகுந்த துயரைத் தருகின்றது.
பல ஆண்டுகளாக அன்னாரை நான் அறிந்தவனென்ற வகையில் அவர் நல்ல திறமைசாலியாக, பண்பாளராக, மக்கள் எவரும் மதித்து அன்பு செய்யக்கூடிய நிலையில் பெருமைக்குரியவராக வாழ்ந்தவர். பொது வாழ்வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்டமைந்த செயல்பாடுகளால் வேலணையூர் மக்கள் பெரிதும் நன்மை பெற்று வந்தார்கள். பிறந்த ஊரில் சமுதாயத்தில் அரசியலைத் தீர்மானிக்கக்கூடிய ஆற்றல் மிக்க சக்தியாக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து சாதனை படைத்தவர்.
நன் மக்களைப் பெற்று அவர்களைச் சான்றோர்களாக்கிப் பெருமை கண்டவர். ஆங்கில மொழியில் ஆசானாக விளங்கிய போதும் இவர் தமிழில் மிகுந்த புலமை உள்ளவராகப் புகழ் சேர வாழ்ந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் சிறந்த கவிஞராக எழுத்தாளராகத் திகழ்ந்து தீவகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
மேலும் 40 ஆண்டுகளுக்கு மேல் பரம்பரைத் தமிழ் மருத்துவ நிபுணராக, கலாநிதியாக விளங்கிச் செயல்பட்டு மக்களின் நோய் நொடிகளை நீக்கி அவர்களின் நல வாழ்வுக்கு உறுதுணையாக வாழ்ந்த கதை மக்கள் மனதில் என்றும் நிற்கும்.
دیتے 21 நினைவு மலர்--نگے

Page 16
ஆசிரியர்ப் பணியின் மூலம் அநேகமாணவர்களை உருவாக்கிய பெருமை யுடன் தமிழுக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் பல்லாண்டுகளாகத் தொண்டாற்றி வந்த அமரர் ஆசிரியர் திரு.சி.இராசரத்தினம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத தொன்றாகும்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த துயரங்களைத் தெரிவிப் பதுடன் அவரின் பாசமிகு குடும்பத்தினருடன் பிரிவுத் துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
ஆ.சண்முகலிங்கம் பொதுச் செயலாளர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.
* படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகுக்குள் நுழையக்கூடாது. மனிதன் உலகத்திலே வாழலாம் ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.
* ஒருவன் எப்போதும் உண்மையினையே பேசுகின்றவனாக இருந்தால்
அல்லாமல் உண்மையே உருவான இறைவனைக் காண முடியாது.
fങ്ങങ്ങഖ് ഥബ് 22 ఉపీ− ܭܵܬܵܐ
 
 

பயன் தந்த பெரு விருட்சம்
வேலணையில் புகழ் பூத்த வைத்திய பாரம்பரியத்தில் வந்துதித்த அமரர் சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் "தன்கடன் பணி செய்து கிடப்பதே" என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப 91 ஆண்டு கள் வாழ்ந்து காட்டிய பெருமகன். சமூகம், சமயம், அரசியல் பொருளாதாரம், சுட்டுறவுச் செயற்பாடு, ஆசிரியப் பணி, வைத்தியம் என்ற பல துறைகளிலும் வியப்புறு சாதனைகள் நிலை நாட்டிய ஒரு பல்பரிமாணம் கொண்ட மனிதனாக அவர் சிறப்புப் பெறுகின்றார்.
வெள்ளை வேட்டி, சால்வை தரித்த தேசிய உடை கொண்ட ஆஜானுபாகுவாக கம்பீரத் தோற்றம், ஆளுமைமிக்க பேச்சு, கண்டிப்புடன் கூடிய ஒரு வசிகர புன்முறுவல், தடித்த கண்ணாடி எதனையும் சமாளிக்கும் அதீத ஆற்றல். இவை அனைத்தும் அவரை நம் கண் முன்னே கொண்டுவருகின்றன.
வேலணைக் கிராமத்திலும், தீவுப் பகுதியிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் புகழ் பரப்பிய ஓர் அற்புத மனிதனாக அமரர் விளங்கினார். வேலணைக் கிராமத்தின் மீது அவர் கொண்ட பற்று அலாதியானது. வேலணைக் கிராமத்தின் , இலங்கைத் தமிழர் அரசியல் வாழ்வில் நவீன வரலாற்றைத் திறம்பட எடுத்தியம்பும் வல்லமை கொண்டவராகவும், நடமாடும் நூலகமாக அவர் விளங்கியவர். அரசியல் வரலாறு, சமூக வரலாறு, சமூக அபிவிருத்தியாகட்டும். அவரிடமிருந்த நிறைய விடயங்களை நாம் அறிந்து கொண்டோம். கடந்த 75 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்றை நன்குணர்ந்து செயற்பட்டவராக அவர் விளங்கினார். தீவுப் பகுதிக்கெனத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறப்பினர்களின் ஆலோசகராக அவர் செயற்பட்டுள்ளார். அவரது ஆலோசனை,
فکے 23 நினைவு மலர் --نگے

Page 17
வழிகாட்டல் என்பன தீவகத்தின் மத்திய நிலையமாக வேலணைக் கிராமம் தலை நிமிர்ந்து எழ வழிவகுத்தது.
ஆசிரியராக, அதிபராக, கிராம சங்கத் தலைவராக, பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத் தலைவராக, தீவகத்தின் பராளுமன்ற உறுப்பினர்களின் மதியூகியாக, நாடு போற்றும் தலைவராக, வைத்தியராக, சிறப்புறு கவிஞராக, அகில இலங்கைச் சமாதான நீதிவானாக, விவசாயியாக, இருமொழிப்புலமையாளனாக, வேலணை பெருங்குளத் தம்பாள் மீது மாறாத காதல் கொண்டவராக அவரின் சேவைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்னாரை இழந்து துயருறும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள், அனைவருக்கும் ஆறுதல்
கூறுவதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
ஒம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
பேராசிரியர் ச.சத்தியசீலன் (M.A., PhD)
தலைவர், வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
"முன் எச்சரிக்கையில் மனிதன் விதியின் தடையைத் தாண்டவே முடியாது. விதியின் அகண்ட வேகத்தில் மனிதனின் அறிவுமங்கிவிடுகிறது." 7ைமர்சன்
لگے 24 நினைவுமலர்--نگے
 
 
 
 
 

"வேலனையில் விளைந்த முத்து"
மனித வாழ்வில் பிறந்தவர் இறப்பது முடிந்த முடிபு. ஆனால் இறப்பினும் இறவாமல் இருப்பவர் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே எனக்கும், எம் போன்ற பலருக்கும் நல்வழி காட்டியாக இவ்வுலகில் நல்வாழ்வு வாழ்ந்து 27.10.2006 இல் கந்தர் ஷஷ்டியில் "வேலைணையில் விளைந்த முத்து" உயர்திரு. இராசரெத்தினம் கந்தனின் திருவடிக் கமலத்தில் இணைந்துள்ளார்.
இச்செய்தி கேட்டு பெரிதும் மனம் வேதனையும் விரக்தியும் அடைந்தேன். இவரின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ளவும் அவரின் அஸ்தியை இராமேஸ்வரத்தின் கண்ணேயுள்ள புனித வெள்ளக் கடற்கரையில் சங்கமிப்பதற்குச் சென்றுள்ளதும் எனக்கு கிடைத்த பெரும் பேறு என்றே கருதுகின்றேன்.
அன்னாரை இறைவன், மானிட (ரூபமாக உருவில் பூமியில் அவதரிக்கச் செய்து, நலிந்தவர்களுக்கும், கதியற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேவை அறிந்து ஆற்றிய சேவைகளையும், எடுத்துக் கூறுவதாயின் இது எண்ணிலும் எழுத்திலும் அடங்காது.
இருப்பினும், அன்னார் ஆற்றிய சேவைகளில் மிக முக்கியமான சிலவற்றை எடுத்துக் கூறுவது எனது நன்றிக் கடன் எனக் கருதுகிறன்ே.
வேலணைக் கிராமத்திலும் சரி, தீவகத்திலும் சரி, ஏனைய மாவட்டங்களிலும் சரி, இவரும், இவரது துணைவியாரும் கல்விச் சேவையின் மூலம் பல நல்ல மாணவர்களை இந்நாட்டில் உருவாக்கிய பெருமைக்குரியவர்கள். அந்த வகையில் அவரின் மாணவர் என்ற
வகையில் யானும் பெருமிதம் அடைகின்றேன். கல்விச் சேவைக்கு
دیتے 25 நினைவு மலர் --نکے

Page 18
ஆதாரமாக தீவுப் பகுதியில் தனிச் சிறப்புடன் இன்றும் விளங்கி வருகின்ற "வேலணை மத்திய மகா வித்தியாலயம்" வித்திடுவதற்கும் மூல வேராகத் திகழ்ந்த பெரியாரும் இவரேயாவார். இவ்வித்தியாலயம் இன்றும் வெளிச்ச வீடாகத் திகழ்ந்து வருவதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
தீவுப் பகுதியிலுள்ள சகல நிறுவனங்கள், சபைகள், கிராமச் சங்கங்கள் மற்றும் ஆலய பரிபாலனசபைகளில் தலைமைத்துவம் தாங்கி, நேர்மை, நீதி சத்தியம் என்பவற்றை மனதில் கொண்ட, நல்வழி
காட்டிய பேரறிஞராகத் திகழ்ந்துள்ளார்.
அன்னார் ஆசிரியர், வைத்தியர், சமாதானநீதிபதி, மாந்திரிகர், அரங்கியல்ஞானி, கவிஞர், ஏழைகளின் தொண்டன், இறை பக்தன், சிறந்த விவசாயி, " வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உள்ளான்" என்பதை இவ்வுலகில் செயல் வடிவில் அமைத்துக் காட்டிய வீரன் என்றால் மிகையாகாது.
ஏழைகளின் சமூக நலனுக்குத் தழ்மை'அர்ப்பணித்து, சமூகத் தொண்டனாகத் தம்மை மாற்றி, சமூகங்கள் முன்னேற்றம் அடைவதற்கு வழி வகுத்த மாபெரும் தலைவர் என்பதை, வேலணை வாழ் கிராம
மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.
1974ஆம் ஆண்டு கெளரவ மாண்புமிகு விவசாய அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட இவர், வேலணையில் விவசாய சேவை நிலையம் அமைப்பதற்கு அரும்பாடு பட்ட பெரியாரும் ஆவார். விவசாய சேவை நிலையத்தின் விளைவு பெருக்கக் குழுவில் விவசாய பிரதிநிதியாக இருந்து விவசாயம் முன்னேற ஆற்றிய சேவைகள் இன்றும் மறக்க முடியாதவை.
இதே போல் வேலணை வங்களாவடியில் வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க இரு மாடி கட்டிடங்களை அமைப்பதற்கு அரும்பாடுபட்ட பெரியாரும் இவரேயாவார்.
یکے 26 நினைவுமலர் --نگے

1988ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் வேலணைக் கிராமத்துக்குள் பிரவேசித்தபோது, இக்கிராம மக்கள் படுகின்ற வேதனைகளையும், சிரமங்களையும், கஸ்டங்களையும் உணர்ந்த இவர், வெள்ளைக் கொடியுடன் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து இக்கிரா மக்களின் பாரம்பரிய இயல்பு வாழ்க்கை நிலைமை களை தெளிவாகத் தெரியப்படுத்தினவ்விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் மக்களைத் தானே பொறுப்பேற்று நின்று தீவுப் பகுதி மக்களை பாதுகாத்த பெருமையும், பேறும் திரு.சி.இராசரத்தினம் அவர்களுக்கே உரியது என்பதை எவராலும் மறக்க முடியாது.
இது போன்ற எத்தனையோ செய்ய முடியாத செயல்களை அவரது தற்துணிவு திறமையினால் செய்வதற்கு, இவர் தெய்வ சீடனாக, "மணிமகிட முடி தரித்து, பேராட்சி செய்கின்ற பெருங்குள முத்துமாரி அம்பாள்" அருளாட்சி செய்கின்ற இப் புண்ணிய பூமி ஆகிய வேலணை கிழக்கில் தர்மநெறி தவறாத வைத்திய பரம்பரையில், வந்துதித்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நற் செயலாற்றிய விளைந்த முத்தை"நாம் இழந்து விட்டோம்,
இவரின் ஆத்மா சாந்தி அடைய வேலணை பெருங்குள முத்துமாரி அம்பாளைப் பிரார்த்தித்து இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் எமது நேதாஜி சமூக மக்களின் சார்பிலும், தீவுப்பகுதி வாழ் விவசாயிகள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்பன்
வே.பி.சண்முகநாதன் வேலணைகிழக்கு, வேலணை - 3. (இலிகிதர் கமநல சேவை நல்லூர்.)
"--நினைவு மலர் 27 دیکے

Page 19
பல்துறைப் பரிமானங்களுடன்
வாழ்ந்த பெருமகன்
யாழ்ப்பாணத்தின் கிராமியத் தன்னிறைவுப் பொருளாதாரத் திலும் அதன் கட்டமைப்பிலும் ஆசிரியத்துவம் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. மரபு வழி யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பில் ஆசிரியத்துவம் காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்ததை அவதானிக்க முடியும். நீதியின் வடிவமாகவும் ஆற்றலின் வடிவமாகவும் சமூகம் ஆசிரியர்களைக் கண்டது. ஆசிரியர்கள் வெறுமனே கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிடாது சமூகம் பற்றிய திறனாய்வுச் சிந்தனைகளின் மூல ஊற்றாகவும் விளங்கினார்கள்.
ஆசிரியத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள். பலர் சமூகத்தில் இன்றும் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு பின்னணியில் கிராமியக் கட்டமைப்பில் முடிசூடா மன்னர்களாக ஒரு சில ஆசிரியர்கள் வாழ்ந்தார்கள். அண்மையில் அமரத்துவமடைந்த வேலணை அமரர் சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களும் பல்துறைப் பரிமாணங்களுடன் சமூகத் தலைவராக விளங்கினார். அமரர் இராசரத்தினம் அவர்கள் தமது பிரதேசம், தமது சமூகம் பற்றி அதீதமான பற்ருறுதியோடு பணியாற்றியவர். சமூக அபிவிருத்திக்காகப் பல்துறைகளிலும் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்தவர். ஆசிரியராக, அதிபராக, வைத்தியராக, கூட்டுறவளாராக, கிராமத் தலைவராக, கவிஞராக எழுத்தாளராக, நல்லதோர் விவசாயியாக, பிரதேசமட்ட அரசியல் சக்தியை தீர்மானிப்பவராக, நல்ல ஆலோசகராக, துன்பம் வருகின்ற போது பலருக்கு உதவுபவராக, இளையதலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக இவரை நாம் தரிசித்ததுண்டு.
இவரை ஊரிலே எல்லோரும் அன்பாக "கண்ணாடி" இராசரத்தினம்" என்று அழைப்பதை நாம் கேட்டிருக்கின்றோம். கிராம மட்டத்தில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் தீர்ப்பாளராகவும்
க்-நினைவு Deoff 28 یکے

விளங்கியவர். "வாத்தியார்" சொன்னால் அதில் நியாயம் இருக்கும் என்று பலரும் கூற நான் கேட்டிருக்கின்றேன். வேலணைப் பிரதேச சமய, சமூக, அரசியல், கூட்டுறவு போன்ற துறைகளில் அமரர் இராசரத்தினம் அவர்களின் காத்திரமான பங்களிப்பை இலகுவில் எவரும் மறந்து விடமாட்டார்கள். இவரது பன்முக அனுவங்களை இவரது "வாழ்வுச் சுவடுகள்" நூலில் நாம் தரிசிக்க முடியும்.
இவருக்கும், இவரது குடும்பத்தவர்களுக்கும் வேலணை மத்திய கல்லூரியோடு மிக நெருங்கிய தொடர்புகள் இருந்து வருகின்றன. இவரது பிள்ளைகளான திருமதி. புசின்னையா, திருமதிசற்குணநாதன் ஆகியோர் எமது கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியர்களாக விளங்கினார்கள், கலைப்பீடாதிபதியாக விளங்கும் பேராசிரியர்இரா.சிவச்சந்திரன் அவர்கள் எமது கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவர். அதுமட்டுமன்றி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக இருந்து எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகின்றார்.
"தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்" என்பது போல் அமரர் இராசரத்தினம் அவர்களின் பணியை அவரது குடும்பத்தவர்கள் தொடர்வார்கள். இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாக அமரர் இராசரத்தினம் அவர்களின் இழப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு அன்பும், ஆதரவும் நிழலும் வழங்கிய ஒரு பெரு விருட்சம் சாய்ந்துள்ளது. என்ன செய்வது மரணம் எல்லோர்க்கும் ஒருநாள் வந்துதானே செல்லும். இதுவே மாற்ற முடியாத உலக நியதி என்பதை எண்ணி ஆறுதல்
கொள்வோம்.
வேலணை மத்திய கல்லூரிச் சமூகம் அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல வேலணை பெருங்குளத்து முத்துமாரியம்மனின் பாதார விந்தங்களில் நித்தியானந்தப் பேறடையவும் சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றது.
பொன்னம்பலம் அருணகிரிநாதர் அதிபர் வேலணை மத்தியகல்லூரி.
க்-நினைவுமலர் 29 ఉు

Page 20
அண்னர் அமரரின்
அருஞ் சேவைகள்
வேலணை முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் பெருங்கு ளத்தில் வட கரையில் பனைவளவுகள் நிறைந்த "கூளா தோட்டம்" என்பது சிறு குறிச்சி. பனை ஓலையால் வேய்ந்த கூரை வீடு. மண்ணால் ஆனசுவர். இரண்டு மூன்று மாட்டுக் கொட்டில்கள், பட்டி மாடுகள், பால்மாடுகள், எருது மாடுகள், வைக்கோல் பட்டடைகள் அங்கே காட்சியளிக்கும். பரியாரியார் சிதம்பரப்பிள்ளை ஒரு முன்னோடியான விவசாயியுங்கூட அமரர் இராசரத்தினம் மிஷன் பாடசாலையிலும் சரஸ்வதி வித்தியாசாலையிலும் கல்வி கற்று அதே பாடசாலையில் ஆசிரியராகக் கடமையேற்றார். மனைவி ருக்குமணி அவர்கள் ஐயனார் வித்தியாசாலையில் கடமை புரிந்தார். இவற்றுக்கு சைவ வித்தியாவிருத்திச் சங்க முகாமையாளர் இராசரத்தினம் அவர்கள் ஒத்தாசை புரிந்தார்.
வேலணைக் கிராம சபையில் தன்னை இணைத்துக் கொண்டு பல சேவைகளைப் புரிந்தார். சாட்டி சுடலைமடம் நன்னீர்க் கிணறுகள், குடி நீர் விநியோகம், மண்கும்பான் வேலணை, சாட்டி வீதிகள் புனரமைப்பு பண்ணைப் படகுச் சேவை ஐக்கிய நாணய சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பிரசைகள் குழு, பயிர்ச்செய்கை குழு, விளைபொருட் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் எல்லாம் புத்துயிர் பெற முன்னின்று உழைத்தார்.
வேலணை மத்தியமகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்படுவதில் இருந்த தில்லுமுல்லு, பண்ணைத் தாம்போதியில் எழுந்த பிரச்சினை யெல்லாம் அமரரின் மதிநுட்பத்தால் தீர்த்து வைக்கப்பட்டன. மேற்கூர் கிழக்கூர், செட்டிப் புலம், துறையூர் என்று ஏற்ற இறக்கம் சாதி மத இன பேதமின்றி சேவை செய்தார்.
க்-நினைவுமலர் 30 دکے

அம்பாள் ஆலய நிர்வாகம் சமாதானமாக நடக்க ஆவன செய்தார். இவரது சேவைகள் உணர்ந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடமிருந்து சமாதானநீதவான் (J.P) என்ற பட்டத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.
ஆசிரியர், அதிபர், கிராமத் தலைவர், அரசியல்வாதி சமூக சேவையாளர், விவசாயி, சமாதானநீதிபதி, எழுத்தாளர், இசைப்பிரியர், என்பவற்றுடன் மாந்திரீகரும் கவிஞரும் ஆவார்.
தந்தையும் மைந்தனும் செங்கண்மாரி வைத்தியத்தில் சிறப்புப் பெற்றவர்கள் சப்த தீவுகளிலும் யாழ் குடாநாட்டிலும் நோயாளிகள்
தேடிச் செல்வார்கள்.
அன்னாரின் சேவைகளை விபரித்து எழுத முடியாதவை கட்டுக்கடக்ாதவை. வைத்திய கலாநிதி சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் ஒரு மாபெரு மனிதர் என்பதை வெளிக்காட்டி, அன்னாரின் அளப்பரிய சேவைகளைப் பாராட்டி, அவரது ஆன்மா சாந்தியடைய இந்த வேளையில் பிரார்த்திப்போமாக.!
தம்பி. சி.கோ.ச.(J.P)
"நடவாதது என்ன முயற்சித்தாலும் நடக்காது நடப்பது என்னதடை செய்தாலும் நில்லாது"
ரமணரிஷி
க்-நினைவு LD6Off- 31 ܒ݁ܳܗܶܶ

Page 21
புலம் பெயர்ந்த காலத்திலும் செங்கண்மாரி நோய்தீர்த்த செம்மல்
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து துன்னாலை கரவெட்டியில் வசித்தகாலம் 1996 சித்திரை வருடப்பிறப்பன்று எனது மகனுக்கு காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் உடன்அவரை யாழ் போதானா வைத்தியசாலை வைத்தியநிபுணர் ஒருவரிடம் காட்டினேன். அவர் சோதித்து விட்டு இது "செங்கண்மாரி" நோய் கவனமாக செயற்படுமாறு கூறினார். எனக்கு அறிந்தவர் ஒருவர் மகனை செங்கண்மாரி வைத்தியர் இராசரத்தினம் ஐயா அவர்களிடம் உடன் கூட்டிச் செல்லுமாறு கூறினார். அப்பொழுது ஐயா அவர்கள் மீசாலையில் அவரது மகள் வீட்டில் இருந்தார். உடன் செயற்பட்டேன். அவர் மகனைப் பரிசோத்து நோயை உறுதிப்படுத்தினார். மருந்துகள் தந்தார். பத்தியங்கள் பற்றிக் கூறினார் சில மூலிகைகளைப் பெற்று எப்படி செயற்பட வேண்டும் என்று கூறினார். அவர் கூறிய படி செயற்பட்டேன். இடைக்கிடை துன்னாலைக்கும் மீசாலைக்கும் சைக்கிளில் பயணம் செய்து ஐயா அவர்களிடம் ஆலோசனை பெற்று வைத்தியம் செய்வித்தேன். மகன் சிறப்பாகக் குணப்பட்டார். அப்பொழுது தான் ஐயா அவர்கள் உண்மையில் செங்கண்மாரி வைத்தியர் என்பதை உணர்ந்தேன் எனது மகனை அக்கால கட்டத்தில் காப்பாறித்தந்த ஐயா அவர்களை தெய்வமாகவே நான் கருதுகின்றேன். அவரின் இச் சேவையை தொடர்ந்து செய்வதற்கு அவரின் சந்ததியினர் முன்வர வேண்டும். ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
அன்பன் ஒருவன்
க்-நனைவு மலா

என் இதயத்திலிருந்து.
என்னைப் பெற்று வளர்த்துப் பேணி பாதுகாத்து, எனது நலனில் அக்கறை கொண்டு என் பிள்ளைகளின் உயர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த என் ஐயா அம்மா இருவரது முதிர்வு காலங்களில் அவர்களுடன் இருந்து கடமையை நிறைவேற்றிய நிம்மதி என்னுள்
நிறைவாக உள்ளது.
"நான் பிறந்த நாளிலிருந்து அவர்களுடனேயே இருந்து என் வீட்டில் என் முன்னிலையில் அவர்கள் தெய்வமாகிவிட்டனர்" எனக் குருக்கள் ஐயா அவர்கள் கூறியமைக் கிணங்க சாமியறையில் அம்மாவின் திருவுருவப் படம் உள்ளது. இதே போன்று தந்தையாரின் இறப்பில் வருந்தி அழுதபோது என்னைத் தேற்றிய குருக்கள் ஐயா அவர்களும் கந்தவடிஷ்டி அன்று இறந்த தந்தையும் தெய்வமாகி விட்டார் என்று கூறியமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அன்னையின் படத்துடன் தந்தையின் படத்தையும் வைத்து வழிபடும் வாய்ப்பு எமக்குள்ளதே என்று மனஅமைதி அடைகிறேன்.
எனது தங்கை புஷ்பரெத்தினவதி தந்தையின் கடமைகளை மன நிறைவோடு நிறைவேற்றுவதும், நேரத்திற்கு நேரம் அவருக்கு உணவளித்து மருந்து வேலைகளை அவருடன் பங்கிட்டுச் செய்வதைப் பார்க்கும் பேதெல்லாம் மனம் பூரித்துப் போவேன் பிள்ளைகளின் அன்பையும் பணிவிடைகளையும் பெறுவதற்கு தந்தை எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என எண்ணுவதும் உண்டு. தங்கையின் எதிர்காலம் சிறப்புற அமையத் தேவையான வற்றைச் செய்த மனத் திருப்தியுடன் அவர் பேசுவதை அடிக்கடி கேட்டு பூரித்திருக்கிறேன். இத்தகைய தந்தைக்கு பிள்ளைகளாகப் பிறப்பதற்கு நாங்கள் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
فکے 33 நினைவு மலர் ܒܼܰܪܵܗܿ

Page 22
இறுதி நாட்கள் வரை தன் வைத்தியத் தொழிலை மகிழ்வோடும் கடமை உணர்வோடும் நிறைவேற்றிக் கொண்டிருந்தவர். நாட்டுப் பிரச்சனையால் சற்று மனம் தளர்ந்து இருந்தார் ஆனாலும் இறுதி மூச்சு வரை கவிதை எழுதியுள்ளார். தனது வைத்திய அறையிலேயே தனது இன்னுயிரை நீத்தார். இறுதிவரை உறுதியாக இருந்து கடமை வீரனாக வாழ்ந்த என் தந்தை தெய்வமாக அனைவரது உள்ளங்களிலும்
வீற்றிருந்து அருள் பாலிப்பார் என பரிபூரணமாக நம்புகிறேன்.
திருமதி. புஷ்பராசவதி சின்னையா
cgi-eoCOs
நீ எல்லை அற்றவன். 7 மரணமற்றவன். பிறப்ப்ற்றவன். எல்லையற்ற ஆத்மா ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பொருந்தாது. எழுந்திரு விழித்துக் கொள். எழுந்து நின்று போராடு. மக்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு, அவர்கள் தங்களுடைய மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலின் வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு.
• மனிதனே மேலானவன், எல்லா மிருகங்களை விடவும் எல்லாத் தேவர்களை விடவும் மனிதன் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.
-—==ం@ంజ==—99 -
கி-நினைவு மலர் 34-- کے

நினைவுகளின் ஊர்வலம்
மனித மனங்களில் எதிர் காலம் கனவுகளாக மலர, இறந்த காலம் நினைவுகளாக நிலைத்து விடுகின்றது. காலக் கணிப்பில் முந்தியன மங்கலாகவும், பிந்தியன தெளிவாகவும் தெரிகின்றன. என் அருமைத் தந்தை பற்றிய நினைவுகள் பல் ஆயிரமாக மனக் கண்முன் பவனிவருகின்றன.
பால வயதில் வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டிய தோற்றம், ஐந்து வயதில் விரல் பிடித்து, பச்சை அரிசியின் மீது எழுத வைத்து, ஏடு தொடக்கிய காட்சி, யாழ் நகர் சென்று வரும்போதெல்லாம் கடதாசிப் பையினுள், இதரை வாழைப்பழம், தோடம்பழம், திராட்சைப்பழம் என்பன வாங்கி வந்து உண்ணத் தந்து உவந்திருந்த உருவம், நோயுற்ற போது பரிதவித்துப் பதைபதைத்து, மருந்து உரைத்துத் தந்த காட்சி, குறுணி குறுணியாக மருந்துக் குளிசைகளை உருட்டி, வட்டச் சுளகினுள் காய வைத்த தோற்றம், தோளில் ஒரு வெள்ளைத் துவாயுடன், அங்கும் இங்கும் நடந்து திரிந்து தனது கருமங்களை ஆற்றிய கோலம், கார்க் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு பாடசாலைக்குக் கூட்டிச் செல்லக் காத்திருந்த வடிவம்.
இவ்வாறாக மனக் கண்முன்நினைவுகளின் தொடர்ச்சியான ஊர்வலம்.
வேலணையில் கூழா தோட்டம் எனும் குறிச்சி, எமது மூதாதையர்களின் வாழிடம். ஆயுர்வேத வைத்தியம், மாந்திரீகம், சோதிட சாஸ்திரம், விஷகடி வைத்தியம் எனும் துறைகளில் புலமை பெற்றிருந்த இவர்கள், பிறர் நலம் பேணும் பேரன்பு மிகுந்தவர்களாக இருந்தமையால் ஊர் மக்களின் பெரு மதிப்புக்குப் பாத்திரமாக விளங்கினர். நெடிய கம்பீரமான தோற்றம், மிதப்புப் பல், அளவற்ற தன் நம்பிக்கை, அசாத்தியத் துணிவு என்பன இவர்களின் ஆளுமைக் கூறுகள். இக் குடும்பத்தைச் சார்ந்த தந்தையர், கோபிக்காமல்,
க்-நினைவுமலர் 35 ఉు

Page 23
திட்டாமல், அடிக்காமல் பிள்ளைகளை வளர்க்கும் பாங்கினை மரபு வழியாகப் பேணிவந்தனர். ஊரவர்களையும் பேணி முரண்பாடுகளை யும் தவிர்த்து, பரஸ்பர நல்லெண்ணத்தைக் காத்து சுமுகமான உறவைப் பேணி வந்தனர். இப் பரம்பரயின் தலைமகனாக விளங்கிய, பாட்டனாரின் ஒரே வாரிசாக என் தந்தை உதித்தார். இம் மரபு வழிக் கோலத்துக்கு அமையவே எங்கள் வளர்ப்பு முறையும் அமைந்திருந்தது. நீண்ட தனது ஆயுட் காலத்தில், எமது தந்தை சுடுசொல் கூறியதையோ, ஆத்திரப்பட்டு அதட்டி வெருட்டியதையோ நாம் அறியோம். ஒரு கோபப் பார்வை கூட என் நினைவில் இல்லை. இது எப்படி அவருக்குச் சாத்தியமாயிற்று என பிற் காலத்தில் நான் நினைத்ததுண்டு. அன்பு நிறைந்த செயற்பாடுகளாலும், தெளிவான கருத்துப் பரிமாற்றத்தாலும், நல்லது கெட்டதை உணர வைத்து எம்மை ஆற்றுப்படுத்தினார். அறிவாற்றலும் அரிய நற் பண்புகளும் நிறைந்த குணவதியான எமது அன்னை, அவருக்கு உறுதுணையாக விளங்கி, குடும்ப நலன் பேணிவந்தார்
பெண் கல்வி பிரபல்யம் பெற்றிராத அன்றைய கால கட்டத்தில், யாழ்ப்பாணத்தில் தலை சிறந்த பாடசாலையாக விளங்கிய சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் எம்மைச் சேர்த்து, ஆங்கிலக் கல்விக்கு அடித்தளமிட்டமை அவரது தூர நோக்குக்கு எடுத்துக் காட்டாகும். மிக இள வயதில் குடும்பத்தின் பாசப் பிணைப்பில் இருந்து விலகி, விடுதியில் தங்கியிருந்த எமது மனத் தவிப்பு, சனிக்கிழமை தோறும் அவர் வருகையால் மெல்ல மெல்லக் குறையலாயிற்று. வீட்டில் இருந்து உணவுப் பண்டங்களைக் கொண்டு வந்து தந்து, அளவளாவிச் சென்ற அந்த அன்புருவை நினைக்க நினைக்க நெஞ்சம் நெக்குருகின்றது. பாடசாலை முன்னேற்ற அறிக்கையை அவரிடம் காட்ட நாங்கள் பயந்ததேயில்லை. குறைந்த புள்ளி பெற்றிருந்தாலும் கூட ஒரு புன் சிரிப்புடன் அதனைப் பெரிதுபடுத்தாமல் விட்ட அவரது பெருந்தன்மையே, உந்து சக்தியாக விளங்கி ஊக்கத்துடன் கற்க ஏதுவாயிற்று
க்-நினைவுமலர் 36 یکے

நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் சாதனங்கள் எங்கள் வீட்டில் விரைவில் வந்து சேர்ந்துவிடும். இவ்வாறு கார், ரேடியோ, கிராமபோன் போன்றன பயன்பாட்டுக்கு வந்தன. நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது, எமது பாடசாலையில் புகைப்படம் சார்ந்த அலை பரவி இருந்தது. ஒரு கமரா பற்றிய கனவு எனக்கு இருந்த போதும் தந்தையாரிடம் கேட்கத் தயக்கம். இந்தக் கால கட்டத்தில் இந்தியா சென்று வந்த அவர் ஒரு அஃபா பெட்டிக் கமராவைத் தந்த போது அக மகிழ்ந்து போனேன். இவ்வாறே, அழகிய சிறிய பெண்களது பார்க்கர் பேனா, ரொலெக்ஸ், கைக்டிகாரம் எனும் மாணவப் பருவத்துக்கு
கனவுகளும் நனவாகின.
நேர்த்தியாகவும் தூய்மையாகவும் உடை அணிவது எனது தந்தையின் வழக்கம். தூய வெள்ளை பரமாஸ் வேட்டி சால்வையும், வெள்ளை சேட்டும் எப்பொழுதும் அணிவார். கையில் ஒரு கறுப்புப் பட்டிக் கைக் கடிகாரம் இந்த உடையில் அவர் கம்பீரமாகக் காட்சி தருவார். எமது தந்தையார் என்னிடம் ஒரே ஒரு உதவி மட்டுமே தன் வாழ்நாளில் கேட்டதுண்டு. பரமாஸ் சால்வை மெல்லிய ரிசுப் பேப்பர் போன்றிருக்கும். பல சலவைக்குப் பின் சால்வைகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு அந்தச் சால்வையிலேயே நூல் பிரித்தெடுத்து இழை போடுவது எனக்குக் கை வந்த கலை. விடுதலைக் காலத்தில் இவற்றை நான் தைத்து வைப்பதுண்டு. எனது தங்கை வேவிக்கு வாய் துடுக்கு அதிகம். "ஐயா ஏன் எப்பொழுதும்பழைய சால்வையைப் போடுகிறீர்கள். புதிது வாங்கினால் என்ன" என்று கேட்ட போது "புதிது போடும் ஆசை எனக்கு ஏற்பட்டால் நீங்கள் பழையது அணிய நேரிடலாம்." என சிரித்துக் கொண்டே சொன்ன கூற்றில் புதைந்திருந்த தற் தியாகத்தின் தாற்பரியத்தை உணர்த்திடும் அறிவாற்றல் அன்று எமக்கு இருக்கவில்லை.
எங்கள் குடும்ப வாழ்க்கையில் தலையிடாத கொள்கையைக்
கடைபபிடித்து மருமக்களைப் பேணி கண்ணியம் காத்து,
க்-நினைவுமலர் : 37-دیتے ہ

Page 24
பேரப்பிள்ளைகளைச் சீராட்டிப் பாராட்டிப், பூட்டப் பிள்ளைகளைக் கண்டு களித்து, எவரிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் இறுதிக் காலம் வரை வாழ்ந்து மறைந்த தந்தையை நினைக்கும் தோறும் மனம் பெருமிதம் கொள்கின்றது. அவருக்கு எந்த ஒரு கைமாறும் செய்யவில்லையே என உள் மனதில் சதா ஒரு உறுத்தல். இது பற்றி அண்மையில் அவரிடம் தெரிவித்த போது அவர் கூறிய வார்த்தைகள் என் மீன உழைச்சலுக்கு மருந்தாக அமைந்தன.
"மூத்த மகளான நீ இள வயதில் சிறப்பாகக் கல்வி கற்று, மற்றைய பிள்ளைகளுக்கு வழி காட்டியதே எனக்குச் செய்த உபகாரம். மேலும் இடப் பெயர்வின் போது, நூற்றுக்கு மேற்பட்ட குழுவாக நாங்கள் மீசாலையில் உனது வீட்டில் தங்கியிருந்தபோது, நீ செய்த சேவை ஆயுளுக்குப் போதுமானது. அது மட்டுமா, பிறக்கும் போதே கேட்டை நட்சத்திரத்தில் உதித்து, அதிஷ்டத்தையும் கூடவே கொண்டு வந்த மகளல்லவா" என ஆறுதல் கூறி தேறுதல் செய்த பெருந் தன்மைக்கு ஈடும் உண்டோ. அவரது மகளாகப் பிறக்க என்ன தவம்
செய்தேனோ!
ஆசிரியராக, சமூக சேவகராக, வைத்தியராக, எவருக்கும் உதவிடும் உற்ற நண்பராக, நொடிப் பொழுதில் கவி எழுதும் வல்லோனாக, அன்புத் தந்தையாக, அருமைப் பேரனாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வமாகிவிட்ட எனது தந்தையை நினைக்குந்தோறும் மனம் அதிசயத்தில் ஆழ்ந்து போகின்றது. ஒரு தனிமனிதனிடம் இத்தனை ஆற்றலா என ஆச்சரியம் மேலோங்குகிறது. கண்மூடித் திறப்பதற்குள் அமரத்துவம் எய்தியதால் இறப்பிலும் ஒரு தனித்துவம்.
அவரது ஆன்மாசந்தியடைய எனது ஆராதனைகள்.
மகள் புஸ்பலதிகவதி கணேசலிங்கம்
نگے 38 நினைவுமலர்- یکے

ஐயா என்னும் அன்புச் சமுத்திரத்தின் நினைவுத் துளிகள் éfleGuo
"தந்தை மகற்காற்றும் உதவி அவையகத்து
முந்தியிருப்பச் செயல்"
என்ற வள்ளுவன் வாக்கினை நிறைவேற்றிய தந்தை நீங்கள். உங்கள் மக்கள் எல்லோரையும் அவையகத்து முந்தியிருக்கச் செய்தீர்களே ஐயா! உங்கள் ஆளுமைதான் என்னே! நீங்கள் எங்கள் கல்விக்காகத் தேர்ந்தெடுத்த பாடசாலைகளை ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி எட்டுப் பிள்ளைகளையும் இத்தகைய பாடசாலைகளில் கல்வி கற்க வாய்ப்பை ஏற்படுத்திய உங்கள் செயலானது எண்ணிப் பார்ப்பதற்கே அரிதானது. எங்கள் வாழ்வில், வளர்ச்சியில் நீங்கள் வகித்த பங்கு ஒரு சாதாரண தந்தையின் பங்கு அல்ல. ஒரு தெய்வீகத் தந்தையின் பங்காகவே நான் கருதுகிறேன். கற்பனைக்கு அப்பாற்பட்ட தந்தையாக நீங்கள் செயலாற்றினிர்கள். இத்தகைய தந்தைக்குப் பிள்ளைகளாகப் பிறந்த நாங்கள் பாக்கிய
சாலிகள்.
கண்டிப்பு, கடுஞ்சொல், கோபம் எதையுமே நான் உங்களிடம் காணவில்லை. இருந்தும் எவ்வாறு பள்ணபாகவும் பக்குவமாகவும் எங்களை வளர்த்தெடுத்தீர்கள். இதுவும் உங்களிடம் காணப்படும் தனித்துவமான தீர்க்கதரிசனப் பண்பாகவே நான் கருதுகிறேன். இவை யாவும் உங்களிடம் காணப்பட்ட ஒரு தெய்வீகத்
தன்மையாலேயே வழிநடத்தப்பட்டதாகவே நான் உணர்கிறேன்.
பிள்ளைகளை மட்டுமா பேரப்பிள்ளைகளையும் அல்லவா வழி நடத்தினீர்கள். ஏணிப்படிகளில் ஏற்றினீர்கள். பேரப்பிள்ளைகளை நீங்கள் ஊக்குவிக்கும் தன்மையையும் பரிசளித்து மகிழும்
தம்மையையும் நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.
ܗܶܶ 39 நினைவுமலர் --نگے

Page 25
எனது மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடம் எடுத்து சித்தி பெற்ற போது நீங்கள் அடைந்த மகிழ்ச்சியை நினைக்கிறேன். உங்கள் முகமலர்ச்சி என் கண்முன் நிழலாடுகிறது ஐயா. பேரப்பிள்ளைகளின் வளர்ச்சியில் கண்டு மகிழ்ந்தீர்,
உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் நான் உங்களைப் பார்க்க அடிக்கடி வருவேன் என்னைக் கண்டதும் உங்கள் மனம் மகிழும். என்ன மகளே என்று கேட்பீர்கள். அதிலே அந்தக் குரலிலே தொனிக்கும் அன்புக்கு எல்லையே இருக்காது ஐயா. என் தலையைத் தடவிக்கதை கேட்பீர்களே. நினைக்கவே கண்கள் பனிக்கின்றது ஐயா.
ஐயா நீங்கள் தெய்வம். தெய்வமாக இருந்து எங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவதை நான் உணர்கிறேன்.
மகள், சிவமலர்.
க்-நினைவுமலர் 40 ܭܵܬܵܐ

காண்பேனா அந்தக் கருணை
முகத்தை இனி .
தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கிணங்க புகழுடன் மறைந்த என் அன்பு ஐயாவே! உங்கள் மறைவு என்னைக் கலங்க வைக்கிறது. நீங்கள் பிறந்த நாள்முதல் இம் மண்ணை விட்டு மறையும் வரை பிறர் நலனுக்காகவே வாழ்ந்தீர்கள் ஐயா! நீங்கள் இப்பாரை விட்டுப் பறந்த செய்தி கனவாகிப் போகாதா என்று என் மனம் தவிக்கிறதே. தியாக தீபமே உங்கள் தியாக சிந்தனையை இனி நான்
காண்பேனா.?
நான் பிறந்த நாள் முதல் நான் படித்துப் பட்டம் பெற்று டாக்டராகி வேலைக்குப் போகும்வரை உங்கள் அருகிருந்து , உங்கள் நிழலில், உங்கள் பாசப் பிடிக்குள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள், உங்கள் அரவணைப்பிற்குள் வளரும் பாக்கியத்தைப் பெற்ற பேத்தி என்ற பெருமை எனக்குண்டு. என் வளர்ச்சியில் நான் ஏறிய ஒவ்வொரு படியும் உங்கள் முயற்சியின் வெற்றிதான். என் பெற்றோரை விட மேலாக நீங்கள் என்மீது காட்டிய ஆர்வமும் அக்கறையும்தான் எனக்கு வளமான வாழ்க்கையை அமைத்துத் தந்தது. ஐயா! அக்கறை மிளிரும் அந்த அழகுமுகத்தை இனி நான் காண்பேனா?.
என் குழந்தைப் பருவத்தில் ஏடு தொடக்கி என்னைப் பாலர் வகுப்பிற்குக் கூட்டிச் செல்லும் போது, வாழ்க்கையின் நன்நெறிகளை அழகான கதைகள் மூலம் என் பிஞ்சு மனத்தில் பதிய வைத்தீர்கள் அன்பு அடக்கம், பொறுமை, நிதானம், நீதி, தன்னம்பிக்கை, அறம், ஒழுக்கம், விடாமுயற்சி, அஞ்சாமை போன்ற அரிய குணங்கள் அனைத்தும் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினீர்கள். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும். என்று கோடுபோட்டு எங்களை வாழ வைத்த கொள்கையின் சிகரமே
உங்களை சிங்கார முகத்தை இனி நான் காண்பேனா?.
&-நினைவுமலர் 41 -- دلکے

Page 26
நான் நோயினால் பாதிக்கப்பட்ட வேளைகளில் உங்கள் சிகிச்சைதான் என் உயிர் காக்கும் கவசமாய் அமைந்தது. கசப்பான மருந்து வேண்டாம் என்று நான் அழுது அடம்பிடிக்கும் போது, அதற்குள் தேனை ஊற்றித் தித்திக்க வைப்பீர்களே. மறக்க முடியமா? என் வாழ்க்கையில் வேலைக்காக மருத்துவமனைக்குச் சென்றேனே யொழிய நோய் என்று சென்றதில்லை. அருகிருந்து மருந்து தந்து ஆறுதல் தந்தீர்கள் ஆனால் உங்கள் அருமைப் பேத்திநான் உங்கள் உயிர் பிரியும் வேளையில் ஒரு பேத்தியாக, டாக்டராக என் கடமைகளைச் செய்யவில்லை. உங்கள் உயிரை மீட்க முடியவில் லையே ஐயா! வேதனையில் என்மனம் வெந்து போகிறதே! அந்தத் தெய்வீக முகத்தை இனி நான் காண்பேனா?.
வேலணையில் நீங்கள் ஆற்றிய பணிகளை வரையறுத்துக் கூற வார்த்தைகள் போதாது. அரசியலில், ஆன்மீகத்தில், சமூக நலப் பணிகளில் நீங்கள் காட்டிய பற்றும், பாசமும், விவேகமும் மக்கள் போற்றும் மன்னனாக அங்கு வாழ வைத்தது. ஊர்மக்கள் உரிமையுடன் வாழப் போராடிய இலட்சிய வாதியாக மக்கள் வாழ்க்கைக்கு வலுச் சேர்த்து சேவையாற்றிக் குதூகலித்திருந்தீர்கள். வருடப் பிறப்பன்று உங்கள் கையால் கைவிசேடம் வாங்க வரும் மக்களைப் பார்த்து நான் மலைத்து நிற்பதுண்டு. காலை முதல் மாலைவரை மன நிறைவுடன் வளமாக வாழ வாழ்த்தி உங்கள் கைகளால் கைவிசேடம் பெற்று மகிழும் மக்களைக் கண்டு பிரமிப்படைவேன். உண்மைதான் உங்கள் வாழ்த்து மக்களை வாழ வைத்தது. நானும் என் மழலைப் பருவம் தொட்டு உங்களை விட்டுப் பிரிந்து கொழும்பு போகும்வரை உங்கள் கைகளால் கைவிசேடம் பெறும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன். வாழ்க்கையில் துன்பம் என்ன என்று நான் அப்பொழுது அறிந்ததில்லை. அதை அறிந்து கொள்ள என்னை நீங்கள் விட்டதில்லை. நான் வெளிநாடு வந்தபோது அடிக்கடி உங்களை வந்து பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பிரிவுத்துயரை மட்டும்தான் சுமந்து வந்தேன். ஆனால் அது நிரந்தரமாகப் பிரிவாகும் என்று கனவிலும் நான்
&-நினைவு மலர் 42 க்

கருதவில்லை. என் கரை காணாக் கண்ணீரை உங்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன். என் கலங்கரை விளக்கே அந்தக்
களங்கமற்ற திருமுகத்தைக் இனி நான் காண.
பல்கலைக்கழகத்தில் என் மருத்துவப் படிப்பினை மேற்கொண்ட சமயம், என்னை உங்கள் பக்கத்தில் அமர வைத்து உங்கள் வைத்திய முறைகளை, அனுபவங்களை செய்ய வேண்டிய கருமங்களை, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அனுபவரீதியாக எடுத்துரைப்பீர்கள். ஆங்கில வைத்தியத்துடன் ஆயுர்வேத சித்த வைத்திய முறைகளையும் இணைக்க வேண்டும். அதில் ஆராச்சி செய்ய வேண்டும். தீரா நோய்களையும் தீர்க்கும் மூலிகைகள் என் வைத்திய முறையில் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி என் தொழிலில் வெற்றிபெற வேண்டும் என்பீர்கள் ஐயா! உங்களுடன் பகிர்ந்து கொண்ட மருத்துவ அனுபவங்களை இனி நான் யாருடன் பகிர்ந்துகொள்வேன். என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு அழகு பார்க்கும் அந்த அன்புமுகத்தை இனி நான் காண்பேனா?.
யாழ் மருத்துவ மனைக்கு வேலைப் பயிற்சிக்காய் என் தோழி நிதாவுடன் நான் செல்வதுண்டு. பயிற்சி முடிந்து வீட்டிற்கு வரச் சற்று தாமதமாகி விடும் "கவிதா இன்னும் வரவில்லையா" என்று கேட்டபடி பதைக்கும் மனத்துடன் நான் வரும் வழிமீது விழி வைத்துக் காத்திருப்பீர்களே!"சைக்கிளில் போவது சிரமம், கார் வாங்கித் தாறேன். கார் பழகிக்காரில் போய் வரலாமே" பாசத் தவிப்புடன் ஏங்கி நிற்கும் அந்த முகத்தை இனி நான் காண்பேனா?.
என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தெய்வமே 1 என் ஐயாவே நீங்கள் செய்தவற்றை வரையறுத்துக் கூற வார்த்தைகள் கிடைக்க வில்லை, என் நன்றிக் கடன் அடைக்க வழியும் கிடைக்கவில்ல்ை. நான் உங்களிடம் கடைசியாக விடைபெற்றுக் கொழும்பு சென்றபோது கலக்கத்துடன் விடைகொடுத்து வழியனுப்பிய அந்த முகம், கடைசியாக
ܦܶ 43 நினைவுமலர்-- یکے

Page 27
உயிருடன் நான் பார்த்த அந்த உண்மை முகத்தை இனி நான்
காண்பேனா?.
எம் உயர்வுக்காய் கடைசிவரை உழைத்த உத்தமரே! ஐயாவே மறக்க முடியுமா உங்களை என் உயிர் உள்வரை எம் இதயத்தின் தெய்வமாய் எமை வாழவைக்கும் உந்து சக்தியாய் என்றும் நீங்கள். வாழ்வீர்கள் "நல்லூர் முருகன் நமக்குண்டேல் என்னகுறை. எல்லாம் எளிதாக ஈடேறும்" என்று கடைசிக் கணத்தில் நீங்கள் எழுதிய வரிகளின் பொருள் என்ன? உங்கள் கடமைகளை இனி எம்மை முருகன் பார்த்துக் கொள்வான் என்று அந்தக் கந்தனிடம் பொறுப்பை ஒப்படைத்தீர்களா? . தாங்க முடியவில்லை! தவிக்குதே என் மனம் இனி வரும் பிறவிகளில் உங்கள் பேத்தியாகப் பிறக்கும் வரத்தை நீங்கள் தர வேண்டும். உங்கள் திரு முகத்தைக் காணாது துடிக்கும் உங்கள், !
கவிதா (மருத்துவ கலாநிதி கவிதா சூரியகுமார்)
ഖ്യു
நீ என்னுடையவன். உனக்கு உதவ நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன். என்னை உன்னுடையவளாக நினைத்துக்கொள். என்னுடையவை அன்ைத்தும் உனக்குச் சொந்தமானவையே. உன்னை யார் வெறுத்தாலும் என்னையே வெறுத்தவர்களாவார்கள். உன்னைப் பின்பற்றியவர்கள் என்னைப் பின்பற்றியவர்க ளாவார்கள். சில காரணங்களுக்காகவே நாம் இந்த உலகில் மனிதர்களாக பிறந்துள்ளோம். நீ என்னுள் இருக்கின்றாய். நான் உன்னுள் இருக்கின்றேன். எம்மிடையே உள்ள வேறுபாட்டை எவராலும் காணமுடியாது.
- = coco-69
نکے 44 நினைவுமலர் --نگے

அன்புப் பேரனுக்குப்
பேத்தியின் பேரன்பு மடல். என் பாசமிகு ஐயாவிற்கு.
நர்மி எழுதும் நன்றிக் கடிதமிது. 27.10.2006 அன்று இங்கு பி.ப. 3மணிஇருக்கும், கனடாவிலிருந்து அக்கா அனுஷாவின் தொலைபேசி அழைப்பு வந்தது. வழமையான நிகழ்வுதான் என்றெண்ணி "ஹலோ அனு" என்றேன். பதிலுக்கு அனுவின் வாயிலிருந்த வார்த்தைகள் வரவில்லை. விம்மி அழுதபடி, குரல் கரகரக்கப் பேச்சுத் தடுமாறியது. ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது. என்பதைக் கணப்பொழுதில் உணர்ந்து கொண்டேன்." என்ன அனு சொல்லும்" என்றேன்.
"நர்மி.ஐயா. போய்விட்டார்" என்ற செய்தி விக்கி, வெடித்து வெளிவந்தபோது என் தலை சுற்றியது. இரத்தம் உறைந்து போனது, என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. உடனிருந்த
என் தாயார் கதறிய கோலம் என்னைக் கதிகலங்க வைத்தது.
செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் நிறைவாக முடித்து விட்டேன், பிள்ளைகள், பேரமக்கள் மாண்புடன் வாழ்கின்றார்கள். பார்த்துப் பார்த்து மகிழ்ந்தது போதும் என்று உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நொடிப்பொழுதில் முடித்து, விண்ணக வாழ்வை விரும்பிச் சென்றுவிட்டீர்கள். இயற்கையின் நியதி இதுதான் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வழியும் என் விழிநீருக்கு அணைபோடவும் முடியவில்லை.
நான் பிறந்த நாள் முதல் என் மாதாவாக, பிதாவாக , குருவாக, நல்ல நண்பனாக இருந்து வழிகாட்டி வளர்த்தீர்கள். ஆயிரம் ஆயிரம் நினைவுகள், நிகழ்வுகள் என் எண்ணத்திரையில் ஒடிக்கொண்டிருக் கின்றன. அவற்றை அசைபோடுகிறேன்.
நினைவுமலர் 45 ఉ --س-ئے

Page 28
என் குழந்தைப் பருவத்தில், என் இரண்டு வயதில் கடும் காய்ச்சலினால் நான் பாதிக்கப்பட்ட போது, அவசர சிகிச்சை உடனடியாகத் தேவையென்று எண்ணிய நீங்கள், அர்த்த சாமத்தில் உரிய நேரத்தில் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு என்னைக் கொண்டு சென்று. சிகிச்சைக்கு வழிவகுத்து என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். முழுமையாகத் தேறி நான் வீடு வருவதற்கு இரண்டு மாதங்களாகிவிட்டன. அவ்விரு மாதங்களும் வேலணையிலிருந்து வேளை தவறாமல் நாளாந்தம் வந்து என் நலன் அறிந்து, அனைத்துத் தேவைகளையும் உடனிருந்து கவனித்தீர்கள். என்று என் அன்னை அடிக்கடி சொல்வார்கள். ஐயா, உங்கள் மதி நுட்பமும், தன்னலமற்ற, சாதுரியமான செயற்பாடுகளுமே என் உயிரை மீட்டெடுத்தது என்பதில் சந்தேகமில்லை. இவ்வுலகில் என்னை வாழ வைத்த தெய்வமே என் நயமிகு நன்றிகள் உங்களுக்குரியதே!
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்பதற்கிணங்க எனக்கு ஏடு தொடக்கி, அரிசியில் "அ" எழுதிய போது "நீ டாக்டராக வர வேண்டுமம்மா" என்று கூறி என் பிஞ்சு உள்ளத்தில் வாழ்க்கையின் லட்சிய விதையை அன்று விதைத்தீர்கள் இன்று அந்த லட்சியத்தை நான் அடைந்துவிட்டடேன். டாக்டர் பட்டம் பெற்று விட்டேன். என் பட்டமளிப்பு விழாவன்று உங்களுடன் உரையாடிய போது நீங்கள் அடைந்த மகிழ்ச்சியை அளவிட முடியாது
சிறு வயதில் சைக்கிள் ஓட வேண்டும் என்ற ஆசை வந்தபோது உங்களிடம் வந்து உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு "ஐயா எனக்குச் சைக்கிள் வேணும்" என்றேன். "சைக்கிள் ஓட ஆசையா' என்று சிரித்தபடி கேட்டீர்கள் "நாளை வாங்கலாம்" என்றீர்கள். மகிழ்ச்சியுடன் உங்கள் மடியில் தலை வைத்துப் படுத்துறங்கி விட்டேன். மறுநாள் புத்தம் புதிய சைக்கிள் என் கண்முன் நின்றது. எங்கள் வீட்டிற்கு முன் இருந்த வயல் வெளியில் என் சைக்கிள் பயிற்சி தொடங்கியது. ஆரம்பத்தில் நான் விழுவதும். நீங்கள் ஓடி வந்து
நினைவு மலர் 46 ఉ --نگے

பிடிப்பதும், "குட்டி நர்மி சைக்கிள் ஒடுறா" என்று சிரிக்க வைத்து, முயற்சி செய், முடியாததொன்றுமில்லை. என்று கூறுவதும். மூன்று வாரமளவில் நாளாந்த நிகழ்வுகளாக நடந்தன. உங்கள் களைப்பையும் பாராமல் பழகி விட்ட சைக்கிள் ஓட்டம்தான், போர்க்காலச் சூழலில் போக்குவரத்து வாகனங்கள் ஓடாத நேரத்தில் என் கல்வியை நான் தொடர, பாடசாலைக்குச் சென்றுவர உதவியது. "முயற்சிதான் வெற்றியின் ஏணிப்படிகள் என்ற உண்மையைப் பசுமரத்தாணியாகப்
பதிய வைத்த உங்கள் மறைவு என்னைக் கலங்க வைக்கிறதே!
என் எண்ண ஓடத்தை நிறத்திவிட எண்ணுகையில் மீண்டும் ஓர்
நினைவலைகள்
வழக்கமாகக் காலை 5 மணிக்கெழுந்து முகங் கழுவி, வெள்ளை வேட்டி, சால்வையணிந்து உங்கள் வைத்திய அறைக்குள் சென்று விடுவீர்கள். நோயாளரை நிதானமாகப் பார்த்து, அன்பாகப் பேசி மருந்து கொடுப்பீர்கள். நாளாந்தம் நடைபெறும் நிகழ்வுதான் ஒரு நாள் வைத்திய அறையில் நீங்கள் இல்லாத போது, நான் அங்கு சென்று நோயாளரைப் பார்ப்பது போலவும், மருந்து கொடுப்பது போலவும் பாவனை செய்த போது, மருந்துப் போத்தல் தவறுதலாக விழுந்து நொருங்கியது. சிறுமி நான் பயந்து அழுதேன். சத்தம் கேட்டு ஓடி வந்தீர்கள், என்னை எட்டித் தூக்கி, என் உடம்பில் ஏதும் காயமுண்டா என்று பதறிப் பார்த்தீர்கள். எதுவும் இல்லை என்றபின், " எதையும் கண்டு பயப்படக்கூடாது. தைரியம் வேண்டும், போய் விளையாடு" என்றீர்கள். அஞ்சுவது மடமை என்ற பாடத்தை அன்று எனக்கு உணர்த்தினிர்கள். இன்று இவ்வுலகில் நீங்கள்இல்லையே மனம் வெந்து தவிக்கிறோம்!
நாங்கள் வீட்டுக்கு வெளியே சென்றால் திரும்பி வரும்வரை
தவித்துக் கொண்டிருப்பீர்கள். சற்றுத் தாமதமானால் பாதி வழிக்குத் தேடிவருவீர்கள்.நினைந்து நினைந்து கண்கள் குளமாகிநிற்கின்றோம்.
நினைவு மலர் 47 తీ--نگے

Page 29
அன்பு , அடக்கம், நம்பிக்கை , விடா முயற்சி, அஞ்சாமை நேர்மை, நேரந் தவறாமை என்பன உங்களிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள். நான் பிறந்தநாள் முதல் 14 வருடங்களாக என் தேவைகளை அருகிருந்து பார்த்துப் பார்த்துச செய்தீர்கள். போர்க் காலச் சூழ்நிலையால் நாங்கள் புலம் பெயர்ந்து சென்றபோது தவித்த மனதுடனும், கலங்கிய கண்களுடனும் எமை வழியனுப்பி வைத்த நினைவு என் விழியில்நீர் வர வைக்கிறதே!
வெளிநாட்டிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதெல்லாம், எம் நலன் விசாரித்து, நாடு சீரானால் திரும்பி வாருங்கள் என்பீர்கள். நாடு சீசராகவும் இல்லை நாங்கள் வருவதற்கு வாய்ப்பும் கிட்டவில்லை. கடைசி நேரத்தில் கூட உங்கள் அன்பு முகத்தைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. எந்தப் பிறவியிலும் மீண்டும் உங்கள் பேத்தியாக நான் பிறக்க வேண்டும். என் நினைவு மடல்களை உங்கள் காலடியில் காணிக்கையாக்கி என் நன்றிக் கடனைச் சற்றேனும் நான் அடைய வேண்டும். நீங்கள் காட்டிய பாதையில் வாழும் உங்கள் அருமைப்பேத்தி.
நர்மி , (கலாநிதி நர்மதா குருபரன்)
g===రిరిరి==
• பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்.
• நீ உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவது தான் நீ சமய
வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கானமுதல் அறிகுறியாகும். e கண்ணுக்கு புலப்படும் கடவுளாக விளங்கும் ஒரு சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும். இதுவே வேதாந்தம் அறிவுரையாக வழங்கும் செய்தியாகும்.
—=ంణం-=-ఏకగ్
نکے 48 நினைவு மலர் --نگے

வாழ்வாய் என்றும் எம்மனதில்
நீராற் சூழ்ந்த வேலணையில் நிலவாய் எறித்த அற்புதனே, சீராய்க் கல்விஅறிவூட்டிச் சிறாரை வளர்த்த பெருமகனே, ஊரைப் பிரிந்து வாழ்ந்தாலும் உறவைப் பிரியா மேலவனே வேரைக் கூட மணக்க வைத்த வித்தகனே நீ மறைந்தனையோ?
செங்கன் மாரி நோய் தீர்க்க (ச்) சிறந்தார் உனைப்போல் ஆரிங்கு எங்கள் நாட்டு இயல்வுகளும் இனிய பெரிய பண்பாடும் உங்கள் கரத்தால் ஆவணமாய் உயிர் பெற்றுலவக் கண்டோமே மங்காப்புகழை நிறுவி இன்று மறைந்தாய்மறந்தாய் உறவுகளை.
கல்வி என்னும் புணையேறிக் கவிதைக் கடலிற் பயணித்த நல்ல புலவன் நீ என்று நயந்தோம் மகிழ்ந்தோம் வேலணையூர் சொல்லும் படிக்குப் பல பணிகள் செய்தாய் இன்றும் அவை நிற்க வல்லாய் ஓடி மறைந்தாயே வாழ்வாய் என்றும் எம்மனதில்.
எஸ்.சிவலிங்கராஜா.
கீ-நினைவுமலர் 49 -- ہلکے

Page 30
ஊரே தேசமாகி பின் ஊர் விரிந்த தேசமாகி யாவர்க்கும் வரமாய் கின்ளதந்த விருட்சங்கள்ே. நேற்றைய காலையில் விடைபெற்ற சிவா அப்பா நினைவுகளில் நெடுநாள் முன் போய்விட்ட என் அப்பா விஸ்வரூபம். எங்கள் அப்பாக்களின் ஆன்ம ரூபம். சங்கம் வளர்த்த எங்கள் ஊர்களின் சரித்திரமானிர்கள். எங்கள் தலைமுறை ஏற்றங்கள் யாவிலும் ஏணிகளானீர்கள். தேசத்தின் தேசியத்தின் ஆழ்ந்த பொருள் கனிவாய் வாழ்ந்துநிறைந்தீர்கள். நடையில், உடையில் அசைவுகள் அனைத்திலும் ஆத்ம வீரத்துடன் காலத்தை வென்றீர்கள் காலம் ஆகிநீன்றீர்கள். இன்று, ஊரிழந்து, உயிரிழந்து உயிர் நலிந்து வேரிழந்து துடிக்கின்றோம். இந்த கிளைகளுக்காய் மீண்டும் எழும் வரம் தருவீரோ.
பேராசிரியர். நாகலிங்கம் சண்முகலிங்கன்.
க்-நினைவுமலர் 50 -- تھے

"வேலனைந்த விழுமியதோர்
நெஞ்சத்தான்"
வேலணைந்த விழுமியதோர் நெஞ்சத்தானை வேலணையூர் பெற்றெடுத்த விறலோன் தன்னை தாலமது நிமிர்ந்துறையும் பான்மை போல ஞாலமதில் நெடிதுயர்ந்த தோற்றத்தோடு பால் நிகர்த்த வெண்ணிறத்தான் வெள்ளையுள்ளம் மாலெனவே கொண்டுயர்ந்து தொண்டுபல மேவி துயர்துடைத்தோன் சமூகமது ஏறு நீ ஏறெனவே பயக்குறுநல் மக்கட்செல்வம் பாங்குடனே பெற்ற ஏறு.
எழுகோல் ஆட்சி செய்யபழுதிலாப்பனுவல் பல யாத்த தீரன் கொழு கொம்பு படர்ந்துயர்ந்த பாங்கைப் போல தழுவியே தமிழினத்தைக் காத்த மேலோன் பல்துறையும் பல கலையும் பயின்ற வல்லான் நல்லுலகின் மருந்தெனவே நயந்த சீரோன். பல்பிணிகள் போக்குமொரு வைத்தியம் மேவி சொல்லரிய தொண்டு நிதம் சொரிந்த செம்மல் ஆயிர நற்பிறை கண்டு அரனடியை அடைந்தார் மாதே.
இறை மணியென்றினிய பெயர் பூண்டு வேலோன் புகழ்பாடி உருகிநிதம் நின்ற சான்றோன் வெண்பாவிற் புகழேந்தி விருத்தமெனும் ஒண்பாவிற்குயர்கம்பன் என்று சொன்னார் வியப்பில்லை வெண்பாவிற்கு சிதம்பரனார் இராசரத்தினமென்றியம்பலாமே
இனித்தமுடன் நல்லூரான் புகழ்மாலை இயம்பிட்ட பெற்றிதன்னை
பனித்தலையன் புதல்வனை நாம் பார்த்தவாறே
நினைவு மலர் 51

Page 31
பைந்தமிழின் ஓட்டமங்கு பரவக் காண்போம். தகை சான்ற மேலோன் தரணி வாழ்வில் முகை வெடித்த முல்லையென விளங்கிநிற்கும் எச்சங்கள் நிறைவாகக் கண்டு நின்றான் கற்றவர் வியக்கும் கனத்த செல்வம் கல்விதன்னை உற்றதோர் உயர் சிறார்கள் பெற்ற செல்வன்
நித்தம் நாம் நினைவுகூர இத்தரையில் வாழ்ந்து சென்ற நித்திலமே இராசரத்தினமே நின்னைப் பாட இத்தரையில் என்போன்ற இதயங்கள் கோடி கோடி.
கோ.சி.வேலாயுதம்
(g-ജ്ഞ.
f எந்த அளவிற்கு இறைவனை நாடுகிறாயோ அந்த அளவிற்கு உன் பலவீனங்கள் உன்னை விட்டு நீங்கிப் போகும். நீ செய்ய வேண்டியதை முழுமனதோடு செய்து விட்டுப் பயனை
இறைவனிடம் விட்டுவிடு.
யாரேனும் குறைகூறினால் அது உண்மையாக இருந்தால் உன்னைத் திருத்திக்கொள். பொய்யாக இருந்தால் சிரித்துப் பொருட்படுத்தாமல் விட்டுவிடு.
கி-நினைவுமலர் 52-- لگے
 

"பேர்த்தி" என்று செல்லமாக அழைப்பார்.
அப்பப்பா!உச்சரிக்கும் போதே அவரின் கம்பீர தோற்றமும் நேர்பார்வையும் நினைவிற்கு வருகிறது.
(ՄXԱ) வைத்தியருக்குரிய தகைமைக்குரிய ஜீவன் அவர் எனது வைத்தியத் துறைக்குரிய ஈர்ப்பின் அத்திவாரம் அவர் என் ஒவ்வொரு படிநிலையிலும் முழுத் திருப்தி அடைந்த ஆத்மா அனுபவபூர்வமான அவரது செயல்கள்,அறிவுரைகள், வெகுவாக என்னை வியக்க வைத்திருக்கின்றன. இல்லையெனாக் கொடைவள்ளல், பிறர்க்குதவுவதில் மனநிம்மதியடைந்த உத்தம மனிதர் ஊர்மக்கள், அவர்களின் தேவை, வசதிகள் பூர்த்தியாக்க அரும்பாடுபட்ட பெரியார் பாரிய இழப்புகள்,இடம்பெயர்வுகளால் மனச்சோர்வடையாமல் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட தைரியவான் சுதந்திரமான முற்போக்கு சிந்தனை,செயல் உடையவர் சிறந்த சமூக சேவையாளர், பேர்த்தி என்று உரிமையோடும் அன்போடும் செல்லமாகவும் அழைக்கும் அப்பப்பா இப்போ எம்மோடு இல்லையே! அழியா அவரின் நினைவுகள் எப்போதும் எனக்குள் பதிந்திருக்கும்.
பேர்த்தி யாழினி. (வைத்திய கலாநிதி யாழினி அரவிந்தன்)
க்-நினைவுமலர் 53 ఉు

Page 32
செல்லப் பேர்த்தியின்
சில துளிகள் . I
மலரகம் மலருமா மீண்டும்:
சிறுமியாய்த் துள்ளித்திரிந்த காலம் மலரகத்தில்
பச்மையாய் இன்றும் வசந்தம் வீசும் நினைவுகள் நினைத்துப் பார்க்கின்றேன்.
இல்லை மறந்தால் தானே நினைத்துப் பார்க்க 'ஐயா என்ற வார்த்தை எத்தனை ஆயிரம் இல்லை லட்சம் தடவை ஒலித்திருக்கும் அங்கு நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஐயாதான் உற்றார் உறவினர் தொழிலாளர் பிள்ளைகள் பேரன்மார் பேத்திமார், பூட்டன்மார், பூட்டி என்று எல்லோருக்கும் ஐயாதான்
ஐயாவுக்குநிகர் ஐயாதான் என்று கூறினால் அது மிகையாகாது.
ஒன்றா இரண்டா எழுதுவதற்கு உங்கள் வாழ்க்கை ஒரு சரித்திரம் நூற்றாண்டு வரலாறு ஒவ்வொரு நாளும் சரித்திர நாட்களாக வாழ்ந்த உங்கள் வாழ்க்கை இரவுபகலாய் எத்தனை எத்தனை மனிதர்கள் தெரிந்தவர், தெரியாதவர் வைத்தியம்,வேலை, குடும்ப ஆலோசனை,அரசியல் ஆலோசனை, சமாதான நீதிவான். என்று உங்களை நாடி வரும் எல்லோருக்கும் உதவிகள் ஆலோசனைகள் வழங்கி மலரகத்தில் ஒரு தலைவனாய் வேலணையூருக்கு ஒரு அரசனாய் வலம்
வந்ததை மறக்க முடியுமா.
என் அதிஷ்டம் உங்கள் நிழலில் வளரக் கிடைத்தது.
தந்தைக்குத்தந்தையாய், பேராசானாய்,நண்பனாய்
یکے 54 நினைவு மலர்- دیکے

எல்லாம் . எல்லாம் நீங்கள் பாடசாலைக்கு அழைத்துச் சென்று அழைத்து வந்து நாள் நேரம் தவறாமல் உங்கள் அத்தனை அவசர உலகில் என்னைக் கவனித்ததை நினைத்துப் பார்க்கிறேன் நான் சிறுமியாக அல்ல வளர்ந்த பிறகும் பல்கலைக்கழகத்திற்கு போய் வரும் போதும் என்றுமே என் முன்னேற்றத்தில் அக்கறையாய் இருந்தீர்கள். எனது திருமணத்திற்கு நீங்கள் எழுதிய வாழ்த்துப்பா அது வாழ்த்துப்பா மட்டுமல்ல உங்கள் ஆசீர்வாதம். அது எனக்குக் கிடைத்த அதிஷ்டம். எப்போது நான் தொலைபேசியில் அழைத்தாலும்
"எப்ப இங்கே வாரீங்க? உன் பிள்ளை பள்ளிக்கூடம் போறானா?" என்கிற கேள்விகளுடன் உங்கள் குரல்தான் மறுமுனையில்
எப்போதும் கம்பீரமாக ஒலிக்கும்.
எதைச் செய்தாலும் முறையாக சரியாக செய்வதில் ஒரு நேர்த்தி எது செய்தாலும் அதில் தராதரம் முதன்மை இருக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கை உற்றார், உறவினர்,நண்பர்கள் எல்லோரிடமும் நீங்கள் பழகும் விதம் அவர்கள் மீது கொண்ட அன்பு, மரியாதை நினைத்துப் பார்க்கின்றேன் உங்களால் மட்டும்தான் முடியும் அது இன்று நேற்று அல்ல என்றுமே இராசரத்தின வாத்தியாரின்
பேத்தி என்று என்னை அறிமுகம் செய்யத்தான் எத்தனை பெருமை. நாள் தவறாமல் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக ஆரம்பித்து நீங்கள் மாலை வரை இயங்கும் விதம் என் கண்முன்நிற்கிறது. நோய் என்று ஒருநாளும் படுத்ததுநான் அறியேன்
க்-நினைவு மலர் 55

Page 33
இறுதிநாள்வரை உங்கள் கடமைகளை தேவைகளை நீங்கள் செய்த விதம். இறுதிநாள் வரை வைத்தியம் செய்து பிறந்தது முதல் இறக்கும் வரை முதல்வனாய் வாழ்ந்து மரணத்தையும் வென்ற உங்கள் வாழ்க்கை ஒரு காவியம்
நீங்கள் ஒரு காவியநாயகர்.
நினைத்துப் பார்க்கிறேன் மீண்டும் அந்த நாட்களை மலரகத்தில் எத்தனை பேர் எத்தனை நிகழ்வுகள் அத்தனையும் உங்களைச் சுற்றி நீங்கள் தலைவனாய் அந்த சுகம் சந்தோஷம் மீண்டும் மலருமா மலரகத்தில்.
அனுஷா ரவிக்குமார்
g—=eరిరిరి=—
எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும் அழுது கெஞ்சி நின்றாலும் , தொழுது வேண்டி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் , வழுவிப்பின்னால் நீங்கியொரு வார்த்தை யொன்றை மாற்றிடுமோ, அழுத கண்ணிர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தையேனும் அழித்திடுமோ.
(பாரசீக மொழியில் உமர்கய்யாம்,
தமிழில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
- = cocoa-69
یکے 56 நினைவு மலர் --نگے

என்றைக்கும் நெஞ்சகத்தே இறவாத சீனி ஐயா..!
எந்தை எமைப்பிரிந்த ஏக்கமது தீரவில்லை என் சீனி ஐயா நீயும் எமை விட்டு சென்றனையோ..? அன்பால் அரவணைத்து ஆறுதல்தான் கூறுவதற்கு உன்போல் யாருளரோ உயிரிங்கே துடிக்குதையா.
சென்ற இடமெல்லாம் சிரித்த முகத்துடனே நன்றாய் இருந்தனையோ நாம் கதைத்தநாளதனில் வென்றான் காலனவன் வேதனையில் நாம் துடிக்கும்
கன்றாய் இருந்திங்கு கலங்குகின்றோம் கேட்கலையோ?
பிறப்பென்று வந்துவிட்டால் பிறழாத நியதியாய் இறப்பதுவும் கூடவரும் இதை மாற்ற யாருளரோ.? மறக்காதே இதையென்று மருத்துவர்நீ மறந்தாய் மறக்காத வேதனையால் மாளுகின்றோம் நீயறியாய்.
துன்பமது சூழ்கையிலே தூர்க்கும் காரமதுவாய் அன்பைச் சொரிந்தாயே அன்புள்ள சீனி ஐயா. இன்றைக்கில்லையென்றால் ஏற்றிடுமோ எம் இதய என்றைக்கும் நெஞ்சகத்தே இறவாத சீனி ஐயா.
செல்லத்துரை தானேஸ்வரன்.
ܭܵܬܵܐநினைவு மலர் 57 é --نگے

Page 34
"சோதி" என்றழைத்த குரல்
ஒய்ந்ததுவோ..?
என் அன்புத் தெய்வமே ஆருயிர் ஐயாவே எம்மை விட்டேகிடவும் உங்கள் உள்ளம் எண்ணியதோ பாசத்தைக் கொட்டிநற்பாங்குடன் வளர்த்தீர்கள் பதைபதைக்க வைத்து விட்டுப் பரமனடிசேர்ந்ததென்ன?
கந்தவடிஷ்டி விரதத்தைக் கருத்துடன் அனுசரித்து சொந்தங்கள் நலன் காக்க கந்தா உனை வேண்டிநின்றேன் பேதை என் வேண்டுதலைப் பேரிடியாக்கிவிட்டு பாசமிகு தந்தையை நீ அழைத்த நோக்கமென்ன?
உற்றார் உருகிநிற்க உடனிருந்தோர் துடிதுடிக்க பெற்றெடுத்த பெருமக்கள் பேதலித்துநிலையிழக்க பற்று மிக்க ஊர்மக்கள் பதறித் துடிதுடிக்க கணப் பொழுதில் கந்தவேள் கழல் சேர்ந்த மாயமென்ன
பார்புகழ் வைத்தியனாய் பண்புள்ள ஆசானாய் நீதிநெறிதவறாத சமாதான நீதிவானாய் கன்னல் கவிஞராய் காவியநாயகனாய் ஊர் போற்றும் உத்தமனாய் வாழ்ந்து மறைந்தீர்கள்.
சமூகத்தின்பாற் கொண்ட அளப்பரிய அன்பதனால் சீர்திருத்த வாதியாய் சாதனைகள் படைத்தீர்கள் பிறருக்குதவும் நற்பேருபகாரியாய் மானிலம் போற்றும் பெருநிலை அடைந்தீர்கள்.
புத்திக் கூர்மையாலும் பேச்சுத் திறனாலும்
மண்ணை நேசித்த மாண்புமிகு பண்பாலும்
தேசிய நோக்குடன் பொதுப்பணியாற்றியதால் தலமைப் பதவிகளைத் தாங்கி மகிழ்ந்தீர்கள்
58 நினைவு LD6Off --نگے

பெற்றெடுத்துப் பேரிட்டுப்பெருமையுடன் வளர்த்தெடுத்து பட்டங்கள் மட்டுமல்ல பதவிகளும் பெற வைத்து வையத்தில் வாழ்வாங்கு வாழ வழிவகுத்து எம் காவற் தெய்வமாய் காலமெல்லாம் காத்தீர்கள்.
அடித்து வளர்க்கவில்லை வெஞ்சினமும் கொண்டதில்லை அன்புக் கூட்டிற்குள் அடைத்து வளர்த்தீர்கள் எந்த வேளையிலும் எம் நலனைச் சுவாசித்து நெஞ்சோடு எம்மைச் சுமந்துநின்றீர்கள்
பேரப்பிள்ளைகளைப் பேணி வளர்த்தீர்கள் பெருமையுடன் அவர் வாழ்வை அழகுஅணி செய்தீர்கள் செயல் முடித்த வீரனாய் சென்ற எம் செல்வமே செய்வதறியாது செயலிழந்து நிற்கின்றோம்.
நேசமிகு அன்னையைப் பறிகொடுத்துநின்றவேளை பாசக்கரம் நீட்டிப்பாங்குடன் அணைத்தீர்கள் அன்னைக்கு அன்னையாய் தந்தைக்குத்தந்தையாய் ஆறாத் துயராற்றும் அருமருந்தானீர்கள்.
மக்கள் கடன் அனைத்தும் மாண்புடன் முடித்துவிட்டேன் மானிலத்தில் செய்வதற்கு இனி ஏதுமில்லையென்று மன்னன் வருகைக்காய் விண்ணகத்தில் காத்திருக்கும் காதல் மனையாளைக் காணச் சென்றனையோ?
கேட்டதனைத்தையும் கொடுத்த என் தந்தையே கேட்கின்றேன் உங்களிடம் மீண்டுமோர் யாசகம் என்மகளின் வயிற்றில் நீங்கள் வந்துதிக்க வேண்டும். அள்ளி அரவணைத்து ஆசையுடன் தாலாட்டிநான் மகிழ வேண்டும்.
இல்லை இனி எனக்குப் பிறவி என்று சொல்லி என் ஆசைத் தவிப்பிற்கு அணை போட்டு விடாதீர்கள்
59 நினைவு மலர் ------دھے

Page 35
சொர்க்கத்திற் சென்றவர்க்கு பிறப்பேது என்று சொன்னால் பக்கத்தில் எனக்கோர் இடம் ஒதுக்கி வையுங்கள்
பிறப்பதுவும் இறப்பதுவும் உலக நியதியென்பர் நடப்பது யாவும் விதிப்படிதான் என்பார்கள் விதியதுதான் என்றெண்ணி விலக்கிவிட முடியவில்லை. வுேரற்ற மரமாக வேதனையில் துடிக்கின்றோம்.
தொலைபேசி அழைப்பினை நான் தொடுத்திருக்கும் போதெல்லாம் "ஹலோ சோதி" என்ற குரல் கணிரென ஒலித்து நிற்கும் ஆயிரம் கேள்விகளை அழகாய் அடுக்குவீர்கள் அதில் "எப்ப வருவாய்" என்ற வினா மட்டும் தப்பாமல் இடம்பெறும்.
உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில் யாழ் மண்ணிலன்றி வேறெங்கோ நீங்கள் வாழ்ந்திருந்தால் பறந்து வந்துங்கள் பாதங்களில் விழுந்திருப்பேன் இறுதிக் கிரியைகளை உடனிருந்து செய்திருப்பேன்.
மண்ணிலே நீங்கள் மறைந்து மாதமொன்றுஆனதையா கணப் பொழுதும் உம் நினைவைக் கலைக்க முடியவில்லை. என் இதயத் துடிப்பின் இறுதி ஒலிகேட்டும்வரை "இறைமணியே" என் இதயநாதமாய் இசைமீட்டி வாழ்வீர்கள்.
ஒம் சாந்தி ! சாந்தி!! சாந்தி!!!
உங்கள் பாசமிகு மகள் கடைக்குட்டி
சோதி
&-நினைவுமலர் 60 یکے

வேலனையின் தலவிருட்சம்
வேலணையின் தல விருட்சம் கூழாதோட்டத்தின் குல விருட்சம் தீவெங்கும் கிளை படர்ந்து நிழல் தந்த பெருவிருட்சம் ஆல் வேல் பனையோடு தென்னைகளும் சாய்ந்த போதும் (சாய்க்கப்பட்டபோது) சாயாத எம்முள்ளம் வானுயர்ந்த பெருவிருட்சம் நீயும் சாய்ந்தாய் என்ற கொடும் செய்தி கேட்டதும் சாந்ததுவே. செய்தி கேட்டு திடுக்கிட்ட இதயங்கள் துடிக்கவும் மறுத்தனவே மண் மீளும் தீவகம் செழிக்கும் வேலணையும் கொழித்திடும் இனி, இன்னொரு விருட்சத்திற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது அரண்மனையின் சக்கரவர்த்தினி உருக்குமணி அன்றில்லை (02.05.1985) வேலணையின் தல விருட்சம் இன்றில்லையே.
சி.ஞானேஸ்வரன் B.A. Dip in Edu. S.L.T.S.
க்-நினைவுமலர் 61-- دیتے

Page 36
OUR BELOVED GRANDFATHER
The sudden demise of our beloved grand father has caused us emmense grief. Memories about him flood Qur minds. Being the first born grandchildren of his eldest daughter, we basked in his unlimitted love. He bestwowed deep devotion and doted on us. He was always delighted to see us whenever we visited him in his spacious and well kept bungalow at Velanai. We were pampered with delicious sea food, prepared by our late grandmother. He taught us to swim in a nearby pond and took us on trips in his car, and on lonely roads. allowed us to hold the steering wheel which thrilled us beyond measure. Playing in the sand at the Chaddi beach at Velanai was our favourite past time, while our grandfather Saton a log and Supervised us.
In Our Walks to and fro from the house to his agricultural lands, grandfather would chat cheerfully and in a subtle way, convey the importance of education and developing a balanced and self - confident personality. Being an eminent Aurvedic physician, he cajoled us to learn the intricacies of this medical field. To his deep regret we did not have the inclination or the time to get involyed in this field.
A teacher and Principal, education was his forte. Ever Concerned about the Welfare of his students he was
یکے 62 நினைவு மலர் --نگے

loved and respected by them. 'e was fondly called the spectacle master, due to his usage of the spectacles from an early age.
A true son of the village of his birth, he did yeoman service towards the upliftment of the village in all aspects. The displacement, due to military operations, from his root devastated him. He never recovered from this overwhelming grief. The longing to return to his ancestral land was not fulfilled in his life time.
A tall, fair and handsome man, always neatly attired in white national dress, he was an imposing person. His talents were multifarious. He was a dedicated Social worker, an orator, writer poet and an accomplished musician. He could play the harmonium superbly. Above all he was a person who radiated love and concern towards everyone.
Our inability to pay our last respects personally to him will be a life - long regret. He filled our hearts with joy, encouraged us to aspire high, smoothened the path we walked on and enveloping us in his deep love and devotion guided us by his wisdon, towards a promising future. Oh! how we miss his foot steps, welcoming smile and endearing words. We will always treasure his memory.
We convey our heartfelt condolences, to all those near and dear to him, specially to our mother, her brothers
and sisters.
May his soul rest in efernol Peoce.
Your loving grand children, Mathy, Arul, Siva, Čhutty and Raj
க்-நினைவுமலர் 63ー ܒܿܪܵܗܿ

Page 37
TO MY SWEET LOVING GREAT GRANDPA
My momtellsme about you all the time Why you have to leaveme, still I'm so small didn't even say bye, why could't you stay? | still-remember you, how can leverforget you
I want you to hold me one last time, I want to look at you one last time
want to tell you that love you But its just not possible now that you're gone
No chance to hugyou No chance to see you No chance to tell you that I want you No chance to tell you that miss you
finally understand that there's no chance The sweet loving great grandpa that once knew ls away fromme, far, faraway No matter where you're, you will always be in my heart.
From your Great Grand Kids Seshan and Aron.
MY SWEET GREAT GRAND FATHER
I love you, you are SWeet, I miss you
What is death,
don't understand, Come, hold my hand, Let us play.
Your Sweet great grand daughter Ashwini Aivachandran.
دیکے 64 நினைவுமலர் --نگے

IN LOVING MEMORY OF OUR GREAT GRANDFATHER
four tears could build a stairway And our memories together were a lane We would walk towards heaven And bring you home to us again
No farewell words were spoken There was no time to say goodbye You were gone before we knew it And only God knows why
Now in heaven, Aiya, please Keep watch over your dearest children and their children Andalways remember, Won't you please You were loved like no other
You have left uScherished memories Your love is still our guide and though we cannot see you You're always at Our side
Ayear we came to see you in your home The things that we had spoken of The memories we had shared Can be linked to no greater love
Thank God we saw you before it was late The gratitude we have toward God is fartoo great
Our family chain is broken and nothing seems the same Butas God calls us one by one the chain will link again.
From your loving great grand children Archana, Arathana, Jadhushan.
க்-நினைவுமலர் 65کے ســ

Page 38
TO THE BEST GRANDPA EVER
A loving tribute to our irreplaceable Aiah from his youngest granddaughter
You are my friend, You are my guide How much I love you How much miss you Words Cannot describe these, Nor the pain I feel
Once upon a time, looking back in years In the land of Velanai, you were the king of lands!
was a little kid peeping from behind you Feeling so safe and secure ـ ـ Like nothing in this world can ever touch me! You were so tall, not just in physique but in every way. The heights of your values, discipline, love and generosity Were so high, such that no man can ever reach
I grew up every inch of the way LOOking up at you, immersed in your love and strong character Having played a prank on my mother, I'd run to you You'd sit on a chair in the front verandah, So Smart in White and white Reading the newspaper as you often did My tiny legs will find you straight and crouched I'd be in
your lap
♔- நினைவுமலர் 66 دیکے

So safe from anything I'd face! My mother would emerge, about to Complain, but Aiah, you'd say "don't touch my granddaughter", so stern A cheeky Smile would present As you knew it was probably my fault My mother would return knowing was out of bounds! Your love was just beyond any rules Oh grandpa, knowing I'll never sit in your lap again Hurts more than you can ever imagine!
Throughout all those years, You taught me so manythings that I hold dearest You had more answers than lever had questions.
read a clock at an age so tender All because your teaching Could not be finer. You changed the clock to digits AS for this little girl, roman numerals proved just too
difficult. Holding my hand, you softly wrote my first words in rice This day, my hand pens at The University of Melbourne All due to your intiation! Like a Swan that feathers its flock
You'd escort me to and from School The school bell would chime, Alas, end of the day I'd say Burden of a backpack I'd carry Slowly making my way to the library There, Aiah, my saviour, you'd be Browsing many books and chatting cheerfully
ܗܶܶ 67 நினைவு மலர் --نگے

Page 39
"Visitha, you are here", you'd say With a smile everlasting to this very day Exclusive right of that name you had Mocking it every so often like a lad The friendship we shared is beyond prose That sacred bond remains in my heart fresh as a rose! You'd take my bag and treat me with lollies Plentiful to share With friends That very moment in your unique way You taught me to share is to care
This Was not just a day's event, But a routine for years so many Oh grandpa, wish those days will come back To hold your hand and do that walk
The accredited poet and writer that you were Your autobiography was an insight to this merel You wrote so splendidly the tales of your youth Where you produced acclaimed poetry at an age so
naÏVe! A triumphant politician, a caring doctor, a justice of peace You had roles so many but a goal of one! Glad to help relieve any form of stress Provide justice to those denied Happy no matter what there was to do For the better of mankind No task was ever too difficult for you Aiah, Definitely a master of all arts! You played the harmonium with such ease
دکے 68 நினைவு மலர் --<کے

Oh grandpa, instited in my bharatha natyam, That music Will never Cease As ponder over a life without you Shakespeare's words lure my mind! "To-morrow, and to-morrow, and to-morrow Creeps in this petty pace from day to day A part of me was forever torn The minute heard you were no more Bewildered and shocked repeatedly questioned How can you leave me? Aiah, How can you leave me? Sometimes I quiz why God took you away from me Suddenly an inner peace would fill as I'd think "Maybe He wanted a grandpa just like mine" Strong, gracious and serene, Aiah, You deserve to live in paradise And shown the finer things! Now know leaving us was not your choice at all, But an unwritten rule of God Whatever might come and go In Our hearts you'll always remain Never to leave us ever again! You are my hero, you are my pride!
pledge to thee now to walk in your footsteps And uphold your legacy So proud of you grandpa, so proud indeed! You and your unconditional love Will always remain as treasures in my heart, today,
tomorroW and forever
Yours ever grateful and loving granddaughter “Visitha" Vijitha Satkunanathan (Melbourne, Australia)
ܒ݁ܳܗܶܶ 69 நினைவு மலர் --<کے

Page 40
:±2 ವಷ್ರ :
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான இளைப்பாறிய அதி பர் வைத்திய கலாநிதி வேலணை சி.இராசரத்தினம் (இறைமணி) தீனது 91 ஆவது வயதில் நேற்றுக் * sfa"Lósf@57 Tr.
இவர் நல்லூர் முருகன் பெயரில் 'நல்லுர்க் கந்தன் பாமாலை" என் னும் பாடற் தொகுதியை பாடி யுள்ளார். அந்நூலின் கவிதைகள் நல்லூர் முருகனின் திருவிழாக்கா லங்களில் உள்ளூர் தினசரிகளில் தினமும் பிரசுரமாகி வந்தன.
இவரின் கவிதைகள் புனை பெயரிலும், சொந்தப் பெயரிலும் ஈழகேசரி, இந்து சாதனம், சோதிட பரிபாலினி, வீரகேசரி, ஈழநாடு
வேலணை இறைமணி இராசரத்தினம்
91ஆவது வயதில் நேற்றுக் காலமா
எமது ஆசானும் கலைப்பீடாதிபதியுமாகிய பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
arri
போன்ற பத்திரி
 ைக க வி ல்
அவ்வப்போது
ரrட் டுக் களை பெற்றுள்ளன. இவரது ஆக்கங்
கள், பாராட்டு விழாக்கள், வாழ்த்து மடல்கள், நினைவு மலர்கள் எனப் பல வெளி யீடுகளிலும் பிரபலமாகின. ஆசிரி யராகவும், அதிபராகவும், வைத்தி யராகவும், சமூக சேவையாளராக வும், சமாதான நீதிவானாகவும் மதிப்போடு பணிபுரிந்து பலரின் பா ராட்டுக்களையும் பெற்ற வரவார்.
அவர்களின் அன்புத் தந்தை 曾 வைத்திய கலாநிதி சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம்
(இளைப்பாறிய அதிபர்) அவர்கள் 27.10.2006 அன்று காலமான செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கால் லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்.
புவியியற் கழகம், யாழ். பல்கலைக்கழகம்,
(54691)
s
70
நினைவு மலர்- <کے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைப் பாறிய அதி கபரும், மக்களின் கைராசி வைத்தியரும், வேலணைக் கிராமசபை முன்னாள் தலைவரும், எழுத்தாளரும், வேலணை ப.நோ.கூ. சங் |கத்தின் முன்னாள் தலை "வரும், சந்திரா கூட்டுறவுப் பண்டகசாலை ஸ்தாபகருமாகிய பேரறிஞர் வேலணையூர் வைத்தியக் கலாநிதி சிதம்பரப்பிள்ளை
இராசரெத்தினம் அவர்கள் 27.10.2006 அன்று காலமான தையிட்டு ஆழ்ந்த துயர் அடைகின்றோம். |
அவரது ஆத்மா சாந்தியடைய வங் களாவடி பூரீ முருகனின் பாதம் பணிந்து நிற்கின்றோம். 8**ئن(
வேலணை, வங்களாவடி பூரீ முருகன் ஆலய பரிபாலன சபையினர், வேலணை " வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்.
71 நினைவு மலர் --فکے

Page 41
துயர் பகிர்தல் வைத்திய கலாநிதி சிதம்பரப்பிள்ளை இராசரெத்தினம் (இளைப்பாறிய அதிபர்) எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியைகளான திருமதி பு:சின் னையா, திருமதி இ.சற்குணநாதன் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தின் உப தலைவர்களுள் ஒருவரான கலைப்பீடாதிபதி பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் பல்துறை விற் பனருமான சி.இராசரெத்தினம் அவர்கள் காலமாகிய செய்தி அறிந்து துயரடைந்தோம். v.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவர் தம் குடும்பத்தினர் துயரத்தில் நாமும்பங்குகொள்கிறோம். குடும்பத் தவாகன அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழைய மாணவர் சங்கம்,
(54784) வேலணை மத்திய கல்லூரி.
கண்ணர் அஞ்சலி
வைத்திய கலாநிதி சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் m (இளைப்பாறிய அதிவர்) * .*
எமது துறையின் பேராசிரியரும் கலைப்பீடாதிபதியுமாகிய பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்களின் அன்புத் தந்தை 27.10.2006 அன்று காலமான செய்திகேட்டு ஆழ்ந்த கவலை கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேலணை பெருங்குளத்து முத்துமாரி அம்மனை இறைஞ்சுகின்றோம். புவியியற்றுறையினர், (54692) யாழ். பல்கலைக்கழகம்.
i
7
2
நினைவுமலர் --نگے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிந்திக்கச் சில வரிகள்
பிறர் செய்வதில், எது உனக்குப் பிடிக்கவில்லையோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே. நல்லதையோ, தீயதையோ எதை ஒருவன் செய்தாலும் அதன் விளைவுகள் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது. பணம் போகும் போது அதற்கு நூறு கால்கள், வரும் போது இரண்டு கால்கள். நீ சந்தோசமாக இருக்கும்போது வாக்குறுதிகளைக் கொடுக்காதே. நீ கவலையோடு இருக்கும் போது கடிதங்களை எழுதாதே. தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கின்றது. சோம்பலின் விளைவு வறுமை, முயற்சியின் விளைவு மூலதனம் நெற்றியைக் காயப்படுத்துவதை விட முதுகை வளைத்துச் செல்வது நல்லது. விழுவது வெட்கமல்ல விழுந்து கிடப்பதே வெட்கமானது. அறிவு இல்லாத கண்ணியம் பலவீனமானது, பயனற்றது. ஆனால் கண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது, அஞ்சத்தக்கது. நல்ல அறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில் இருந்த போதிலும் அதைத் தேடிச் செல்.
&-நினைவுமலர் 73 తు

Page 42
நன்றிகள் பற்பல.
எமது குடும்ப விளக்கின் அணைவின் போது முன்னின்று உதவியவர்களுக்கும், எம் துயரில் பங்குகொண்டது மட்டுமன்றி மரணக் கிரியைகளிலும், இறுதி யாத்திரையிலும் பங்குகொண்ட அன்பு உள்ளங்களுக்கும் , தொலைபேசி, தந்தி மூலம் உள் நாட்டிலிருந்தும், வெளிநாடு களிலிருந்தும் அனுதாபங்களைத் தெரிவித்து எமது துயரைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணிர் அஞ்சலிகளை பத்திரிகை
மூலமாகவும், பிரசுரங்கள் மூலமாகவும். வழங்கிய அன்பான நெஞ்சங்களுக்கும், மலர்மாலை சூட்டியும், மலர் வளையம் சாத்தியும் கெளரவித்தவர்களுக்கும், அந்தியேட்டி, சபிண்டீகரண நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும், இம் மலரினை அழகுற அச்சிட்டுத் தந்த கரிகனன் பிறிண்டேர்ஸ் நிறுவனத்தினருக்கும், பல்வேறு வகைகளில் உதவிகள், ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள், அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி இல,121, 2ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். i. O TP: 2459,2454, 3274 குடும்பத்தினர் Fax: 021 222 24.54 x M &-நினைவு மலர் 74-- دلکے
 


Page 43


Page 44

to, 'aeae
ou||ssssssssssssssssssss