கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆமைக்குணம்

Page 1

இருந்தே
سمصے محصے

Page 2

|
円

Page 3
ஆமைக்குணம்
ஆசிரியர்
a flail)
முதற் பதிப்பு எலக்ரோனிக் ஓவியம் கதைகளுக்கான ஒவியம் பின்புற அட்டை புகைப்படம்
கணனித் தட்டச்சமைப்பு
பதிப்பு
அச்சுப்பதிப்பு
விலை
சிறுகதைத் தொகுதி நிபி. அருளானந்தம் ஆக்கியோனுக்கே : TA 2004
கெளதமன் ( 647645 ) : pg555 sor Dip, in Art (U.S.A.)
கே.வி. மணி
ஒளிப்பதிவாளர் சென்னை)
நளினி திருமகளிர் பதிப்பகம்
இல, 144, 2ம் குறுக்குத்தெரு வவுனியா
ஏ.ஜே. பிறிண்ஸ்
தெஹிவலை)
ரூ 200.00
ISBN 955-1055-00-4
ARMALKUNAM
SUBJECT WUTHOR COPYRIGHT FIRST EDITON PUBLISHED BY
PRINTED
PRICE
: COLLECTION OF SHORT STORIES : N. P. ARULANANTHAM. : AUTHOR
: MAY 2004 : THIRUMAGAL PATHEPAGAM,
NO, 144, 2NPCROSS STREET WAWUNTIYA
: A.J. PRINTS
44, STATION ROAD, DEHIWALA TEL: 739765,723205,723209
: Rs. 200, OC)

வல்லிக்கண்ணன்
அணிந்துரை
சிறுகதை வாழ்க்கை உண்மைகளைப் படம்பிடித்துக் காட்டுவது. அகண்ட வாழ்வின், விசாலமான உலகத்தின், குறிப்பிட்ட சிலசில அம்சங்களைக் காட்சிப் படுத்தும் சாளரங்கள் ஆகவும் சிறுகதைகள் விளங்குகின்றன. காலம், சூழ்நிலை, சமூகமற்றும் நாட்டின் நிலைமைகள், பலதரப்பட்ட மனிதர்களின் இயல்புகளும் நடவடிக்கை களும் போன்றவை வெவ்வேறு நிலை மனிதர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் பதிவுகளாகவும் அமைகின்றன சிறுகதைகள், சமுதாய மனிதர்களின் பலவிதச் செயல்பாடுகளையும், தனிநபர்களின் அனுபவங்கள் உணர்வுச் சுழிப்புகள் உணர்ச்சிக் குமைதல்கள் முதலியவற்றையும் விவரிக்கிற சொற்சித்திரங்களாகவும் சிறுகதைகள் தோன்றுகின்றன.
இந்த விதமான சகல தன்மைகளையும் கொண்டனவாக இருக் கின்றன நீ.பி.அருளானந்தம் எழுதியுள்ள சிறுகதைகள்.
இனவெறியும் அதிகாரவெறியும் கொண்டவர்களின் போக்குக ளினால் அப்பாவி மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே பலவாறான பாதிப்புகளுக்கும் ஆளாகி, அகதிகளாய், ஊர்விட்டு ஊர் சென்று அனுபவிக்க நேர்ந்துள்ள கொடுமைகளையும், அவலங்களையும், சிறுமைகளையும் நீ.பி.அருளானந்தம் உணர்ச்சிகரமான கதைகளில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
"மாபெரும் புறப்பாடு அத்தகைய கதைகளில் ஒன்று. இராணுவத்தி னரின் ஆக்கிரமிப்புக்கும் தாக்குதல்களுக்கும் பயந்து யாழ்ப்பாணத்

Page 4
4
தமிழர்கள் தங்கள் இருப்பிடம் விட்டு ஊர் ஊராக அலைந்து திரிந்து துன்புறுவதை இக் கதை உள்ளவாறு சித்திரிக்கிறது.
'முன் ஒரு காலத்தில் எகிப்திய மன்னன் பார்வோனின் கீழ் அடிமைப்பட்டுப் போய் கிடந்த இஸ்ரவேலர்களை விடுத்து ஜெகோவா தேவனின் கட்டளைப்படி மோசே என்பவர் அவர்களை பாலும் தேனும் பொழிகின்ற கானா என்கிற தேசத்துக்கு அழைத்துப் போனார். ஆனால், இங்கே பாலும் தேனும் பொழிகின்ற செழிப்புடைய யாழ்நகரை விட்டு அனாதரவான நிலையில் யாரிடமிருந்தும் எந்த உதவிகளும் இன்றி, எங்கே போகின்றோம் என்ற திக்குமில்லாத திசையுமில்லாத நோக்கில் அகதிகளாக மக்கள் வெளியேறுகிறார்கள். தாம் பிறந்த ஊருடன் இன்று வரை தொப்புள் கொடி உறவை வைத்திருப்பவர்கள் அது வெட்டுண்டது போல் உணர்ந்து நொந்தபடி போகிறார்கள். எல்லோரது முகத்திலும் சொந்த மண்ணை இழந்த சோகம் புரிகிறது. இப்படி மக்கள் நிலையை உருக்கமாக விவரிக்கிறது இந்தக் கதை.
தமிழர்கள் ஊர்விட்டு ஊர் போக நேர்கையில், வழியில் இராணுவத்தினர் அவர்களை மறித்து, சோதனை என்கிற பெயரில் மிரட்டி, அப்பாவி மக்களை சுட்டுக் கொல்கிறார்கள். தமிழர்கள் விட்டில் பூச்சிகள் போல் செத்து மடிவதை விட்டில்' என்ற கதை, ஒரு அப்பாவியின் அனுபவங்கள் வாயிலாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு பாவமும் அறியாத மக்கள் ஏன் கொல்லப் படுகிறார்கள்? அடக்குமுறையின் உச்சகட்ட நடவடிக்கையாக இப்படியான இனப்படு கொலைகளா என்ற சிந்தனையை எழுப்புகிறது இந்தக் கதை.
யுத்தம் வந்து சகலரினதும் வாழ்க்கையை சீரழித்து சின்னா பின்னமாக்கி வந்த போது, அதிலே அகப்பட்டுத் தவிப்பவர்களின் திண்டாட்டங்களை நீ.பி.அருளானந்தம் இன்னும் சில கதைகளிலும் பதிவு செய்திருக்கிறார்.
வவுனியாவிற்குள் நுழைவதற்கு முன் இராணுவத்தின் சென்ரிக்கு வெளியே மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிற சிறுமைகள், அவமதிப்புகள், கஷ்டங்கள் முதலியவற்றை ஒருவரின் எண்ண ஒட்டமாகச் சொல்கிற கொந்தல்", ஊரைவிட்டு ஓடாமல் சொந்த விட்டில் தங்க நேரிடும் அபலைகள், முதியவர்கள் எதிர்கொள்கிற கொடுமைகளைச் சொல்லும் "கோரம்' ஆகிய கதைகள் உணர்ச்சிச் சித்திரிப்புகளாக அமைந்துள்ளன.
மக்களின் இத் துயர நிலைமைகளைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் பெற முனைவோர் பற்றியும் - சாமான்களை ஏற்றிச் செல்லும்

5
லாரிகளுக்காக அநியாய வாடகை வசூலிப்பவர்கள், தாகம் தணிக்கத் தவிப்போரிடம் ஒரு சோடா பாட்டில் நூறு ரூபாய் விலை என்று பணம் பறிப்பவர்கள், மற்றும் லஞ்சம் கேட்பவர்கள் பற்றியும் இக் கதைகள் குறிப்பிடுகின்றன. அதன் மூலம் பல்வேறு மனித இயல்பு களைப் புரிய வைக்கின்றன.
உழைத்து உழைத்தே பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கைத் துயரங்களை அருளானந்தம் அநேக கதைகளில் சுட்டியிருக்கிறார்.
குடும்பத் தலைவன் குடித்துக்குடித்து, மனைவியையும் பெண்மக் களையும் கஷ்டப்படுத்திவிட்டுச் சாகிறான். மூத்த மகள் பொறுப்புடன் குடும்ப பாரத்தை ஏற்று, தாயையும் இரண்டு தங்கைகளையும் வாழவைப்பதற்காகத் தன் வாழ்வை தியாகம் செய்து, உடல் மெலிந்த போதிலும் ஊக்கத்துடன் உழைத்து, பணம் சேமிக்கிறாள். அவளது வாழ்க்கை நோக்கை விரதம்' எனும் கதை நன்கு சித்திரிக்கிறது. கடினமாக உழைத்துப் பிழைக்க முற்படுகிற பெண்களை ‘முதலாளியாக இருக்கிற ஆண்கள் பாலியல் ரீதியில் சுரண்ட ஆசைப்பட்டுச் செயல்புரியும் நிலை சமூகத்தில் நீடிக்கிறது. அத்தகைய பெண்கள் . முதலாளிகள் பற்றிய கதைகள் ‘சிலந்தி
துன்பக் கேணி ஆகியவை.
‘சிலந்தி முதலாளியை எதிர்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு பெண்ணின் தன்மான உணர்வைப் புலப்படுத்துகிறது. துன்பக்கேணி முதலாளியின் இயல்புகள், அவருக்கு உதவும் தரகனின் போக்கு, பலியான அபலைப் பெண் தற்கொலை செய்து கொள்ள நேரிடுவது, அவள் கணவனின் பலவீனங்கள் ஆகியவற்றை யதார்த்தமாக விவரிக்கிறது.
‘சிலந்தி கதையில் வரும் மீனாட்சி, அவளை அடைய விரும்பும் முதலாளியிடம் சுடச்சுடக் குறிப்பிடுகிறாள்: "நீங்கள்ளாம் வசதியான பெரிய முதலாளி. உங்க மாதிரி முதலாளிங்க தங்களோட சம்சாரங்களை பத்தினியா வைச்சிருக்கப் பாடுபடுறாங்க. ஆனா தங்ககிட்ட வேலை செஞ்கிக்கிற கூலிக்காரன் பெண்டாட்டியயெல்லாம் வைப்பாட்டியா வைச்சிக்க நினைக்கிறாங்க. இது என்ன நியாயம் முதலாளி. உங்க மாதிரி முதலாளி கிட்ட வேலை செய்யிறது முள்ளுப்பத்தைக்க சிக்கிட்டுத் தவிக்கிற மாதிரித் தான் முடிஞ்சிக்கும். உழைக்கும் பெண்ணின் மனத்துணிவைக் காட்டுகிறது இப்பேச்சு.
வறுமை, சமூகச் சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் காரணமாகத் தவறிவிட நேரிட்டு, பின்னர் விபசாரத்தையே வாழ்க்கை முறையாகக் கொண்டு

Page 5
6
விடுகிற பெண்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலையையும் வாழ்வையும் 'அலைஅடங்கவில்லை" கதை சுவாரசியமாகக் கூறுகிறது.
பெண் வாழ்க்கையின் சிக்கலான சமயத்தில் சாதுர்யமாக முடிவெடுத்து, சாமர்த்தியமாகச் செயல்புரியக் கூடிய திறமை உடையவள் என்று ‘ஆமைக் குணம் கதை உணர்த்துகிறது. திருமண தினத்தின் முதல் இரவின் போது, கணவன் தனது இளம்பருவக் காதல் அனுபங்கள் பற்றிப் பேசுகிறான். புது மனைவி யையும் அவளது பாலியகால சிநேதிதங்கள் பற்றிக் கூறும்படி தூண்டுகிறான். ஆண் அப்படி வெளிப்படையாகச் சொல்வதனால் விபரீத விளைவுகள் நேர்ந்துவிடா. ஆனால் பெண் தனது முந்தைய காதல் அனுபவங்களை வெளிப்படுத்தினால், அவளுக்கு பாதிப்புகள் ஏற்படும். இதை எண்ணிப்பார்த்த மனைவி அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிடுகிறாள்.
அவளைப் பற்றிய மதிப்பீடு கதையில் அழகாகப் பதிவாகியுள்ளது. அவள் உண்மையில் சாமர்த்தியசாலி. அவள் தன் மனதை திறந்த பெட்டகமாக வைத்துக் கொள்ள விரும்பவில்லை. மாறாக அவை களை மனதில் மூடிவைத்துக் கொண்டாள். ஆமை முட்டைகளை புதைப்பது போல அவளும் அந்த சம்பவத்தை வெளிக்கொணராது மனதில் குழிபறித்து புதைத்துவிட்டாள்.
இவ்விதம் பெண் உள்ளத்தையும் உணர்வுகளையும் நல்ல முறையில் கதைகளில் எடுத்துக்காட்டும் அருளானந்தத்தின் திறமை பாராட்டப்பட வேண்டியது ஆகும்.
அன்பு, மனிதநேயம், மன்னிக்கும் உயர்பண்பு, செய்த குற்றத்துக் காக வருந்தி மன்னிப்பு கோரும் நற்பண்பு போன்ற சிறப்புகளை வலியுறுத்தும் கதைகளையும் அருளானந்தம் எழுதியிருக்கிறார். திருட்டுகள் பல செய்த ஒருவன் மனம் திருந்தி மன்னிப்பை யாசிப்பதைக் கூறும் ‘வடு, உறவை முறித்துக் கொண்டு பகைவர்கள் போல் வாழ்ந்த அண்ணனும் தம்பியும் பிற்காலத்தில் மனம்மாறி அன்புடன் நெருங்கியதை விவரிக்கும் 'பாவமன்னிப்பு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் ‘அம்மாவின் இரக்கம்’ ஆகியவை படித்துச் சுவைக்கப்பட வேண்டியவை.
தன் அயலவரின் சந்தோஷத்திலும் துக்கத்திலும் கலந்து ஒற்றுமையாகவும் அன்பாகவும் சீவிப்பவன் தான் உண்மையான கிறிஸ்தவன் என ‘வடு கதை மூலம் அறிவுறுத்தும் அருளானந்தம் விசால நோக்கையும் முற்போக்குச் சிந்தனைகளையும் கதைகள்

7
மூலம் எடுத்துரைக்கிறார்.
கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை ஆடம்பரமாகவும் பகட்டாகவும் பெரும் பணச் செலவுடனும் கொண்டாட வேண்டியதில்லை. ‘இந்த ஆடம்பரங்களெல்லாம் எதுக்கு? இதுகளுக்குச் செலவு செய்யிற காசுகளை ஏழை எளியதுகளுக்குக் குடுத்தா, கால்வயிறு அரை வயிறு சாப்பிடுற அதுகள் சந்தோஷமாயிருக்கும். எளியவனுக்கு உடுக்க உடையும் பசித்தவனுக்கு உணவும் அளித்தாக வேண்டும் என்று கிறிஸ்தவ தருமம் சொல்லுது. அதால, வசதியுள்ள நாங்கள் இதுகளுக்கெண்டு வீணாய்ச் சிலவளிக்கிற காசை அதுகளிட்ட குடுக்க லாம் தானே!’ என்று ‘திருநாள் வந்தது கதையில் வருகிற தந்தை நல்லுரை புகல்வதாகக் கூறுவது போற்றுதலுக்கு உரியது.
இறந்த பிறகும் சாதி பேதங்கள், உயர்வு தாழ்வுகள் பேசி இடுகாட்டிலும் பிரிவுகள் காட்டி சிலரை ஒதுக்கும் வழக்கத்தைக் கண்டனம் செய்கிறது 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் கதை. "செத்தா நாங்களெல்லாம் இந்த மண்ணுக்குத் தானே போறதப்பா! அதுக்குள்ளேயும் எனசாதி, நீண்டார் சாதி, பலபட்டைச் சாதி என்றெல்லாம் பாகுபாடுங்களும் பிரிவினைகளும் எப்பவுமே திருந்தாத மிருகசாதிகள்!' என்று உண்மையை குடாகப் பதியவைக்கிறது இந்தக் கதை.
வெறும் பொழுது போக்கிற்கான கதைகளை நீ.பி.அருளானந்தம் எழுதுவதில்லை. வாழ்க்கை யாநார்த்தங்களை படிக்கிறவர் மனசில் பதியும்படி சுட்டிக்காட்டி, அவருள் சிந்தனை ஒளியைத் தூண்டும் விதத்தில் அவர் கதைகள் எழுதுகிறார். அதே சமயம் காலத்தினால் ஏற்படுகிற பலவித மாற்றங்ளையும், மறைந்து “போன (அல்லது மறைந்து கொண்டிருக்கிற) மரபுகளையும், புதிய போக்குகளையும், சிதைவுகளையும் சீரழிவுகளையும் கூட, வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அவர் கதைகள் படைக்கிறார்.
'இப்போதைய காலம் மாதிரியல்ல அப்போது. அயலில் செத்த வீடு என்றால் அப்போதெல்லாம் அடுப்பு மூட்ட மாட்டார்கள். செத்த சவம் சுடுகாடு போனதன் பின்பு தான் அயல்வீட்டு அடுப்புகளில் உலையேறும். அப்படியாக மக்களெல்லாம் தங்களது சுற்றத்தவர் சூழ இருக்க பிறர் சினேகத்தோடு சீவித்த காலம் அது!’ (பறை ஒலி)
கல்யாணப் பெண் தாலி கட்டும்போது வெள்ளை ஆடையுடன் இருப்பது தான் கிறிஸ்தவ சமூகத்தின் சம்பிரதாயம். ஆனால், மறுமணம் செய்து கொள்கிற பெண் தாலி கட்டும் போது வர்ணச் சேலை தான் உடுத்த வேணும். அது தான் வழமை. (சடங்கு)

Page 6
8
"இந்தக் காலத்துப் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் அம்மாமாரின் கைக்குத் தான் பிள்ளைகளிடமிருந்து பணம் வந்து சேரும். அவர்கள் கைகளிலிருந்து தான் அளவு கணக்குப் போட்டு அப்பாமார்களுக்குப் பின்பு பணம் பட்டுவாடாவாகும். (ஆமைக்குணம்)
இவை போன்ற செய்திகளை, கதையோடு கதையாக, கதை மாந்தர் ஒருவரின் நினைப்பாக அல்லது சிலரின் உரையாடலாகக் கலந்து தந்திருப்பது அருளானந்தத்தின் எழுத்தாற்றலுக்கு சான்றுகள் ஆகும்.
"அப்பிள் பழவாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும் எனும் கதை வித்தியாசமான ஒரு சித்திரிப்பு சொந்த நாட்டிலிருந்து அகதியாக அயல் நாடு சேர்ந்து அங்கு தங்குகிறவர்களில் சிலர், சிரமப்பட்டு சீவியம் செய்வதை விரும்பாமல், போதைப் பொருள் கடத்தல் போன்ற தவறான வழிகளில் ஈடுபட்டு, சுலபமாகவும் விரைவாகவும் மிகுபணம் சேர்த்து, கண்டபடி வாழ்க்கைச் சுகங்களை அனுபவிப்பதிலும், பெண்களை வஞ்சிப்பதிலும் முனைப்பு உடையவர் களாக மாறிவிடுகிறார்கள். அப்படிபட்ட ஒருவனின் அனுபவங்களையும், அவனது பகட்டான வாழ்வில் மயங்கி சுகங்களுக்கு ஆசைப்படுகிற உறவுக்காரர் ஒருவர் உண்மைகளை அறிந்து விழிப்பு உணர்வு பெறுவதையும் இந்தக் கதை ரசமாக விவரிக்கிறது.
இந்த விதமாக அகண்ட நோக்குடனும், ஆழ்ந்த கூரிய பார்வை யுடனும், மனிதர்களின் இயல்புகளையும் வாழ்க்கை யதார்த்தங் களையும் சீர்தூக்கி, சிந்தனை ஒளியும் கற்பனை வர்ணமும் ஏற்றி, நல்ல கதைகளை உருவாக்கியிருக்கிறார் நீ.பி.அருளானந்தம். ஆமைக்குணம்’ எனும் இந்நூல் அவருடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு என்று எண்ணுகிறேன். இதே ரீதியில் அவர் மேலும் பல சிறந்த சிறுகதைகளை எழுதி இன்னும் பல தொகுப்புகளை வெளியிடுவதற்குக் காலம் துணைபுரியட்டும். வாழ்த்துக்கள்.
வல்லிக்கண்ணன்
10, வள்ளலார் குடியிருப்பு
புதுத்தெரு, லாயிட்ஸ் ரோடு (o I, GI - 600005.

நீ.பி.அருளானந்தத்தின் சிறுகதை ஆக்கத்திறன் - சில
அவதானிப்புக்கள் நண்பர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் பன்னிரண்டு சிறுகதை கள் அடங்கிய "மாற்றங்களை மறுப்பதற்கில்லை' எனும் அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி (2002)மே மாதத்தில் வெளி வந்தது. ஏப்ரல் 2003 - ல் வெளி வந்த 'கபனிகரம் இருபத்திரண்டு சிறுகதைகள் அடங்கிய அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதி யாகும். இப்பொழுது மேலும், இருபத்திரண்டு சிறுகதைகளைச் சேர்த்து இந்த 'ஆமைக்குணம் - சிறுகதைத் தொகுதி DIT60( טום நி1 கோபாலகிருஸ்ணன் மூன்றாவதாக வெளிக்கொணர்ந் ாங்க துள்ளார். அவரது முதல் இரு (செங்கதிரோன்) நூல்களிலும் வெளிவந்த சிறுகதைகள் முழுவதையும் எனக்குப் படிக்கக் கிடைத்தது. அவற்றைப் படித்த அனுபவங்களின் அடிப்ப டையிலும் அண்மைக் காலமாக அவரோடு அன்பாகப்பழகி அவரது எழுத்தனுபவங்களையும் தெரிந்துகொண்ட அடிப்படையிலும் இச் சிறுகதைத் தொகுதி (ஆமைக்குனம்) பற்றிய எனது சிறுவிமர்சனக் குறிப்பினை இங்கு முன்னுரையாக முன்வைக்கிறேன்.
சிறுகதைகள் பற்றிய வரைவிலக்கினங்களைப் பலரும் பல விதமாக முன்வைத்திருக்கிறார்கள். தமிழில் சிறுகதைகள் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே ஏனைய கலை இலக்கிய வடிவங்களைப் போலவே அதுவும் காலதேச வர்த்தமான மாற்றங்களை உள்வாங்கி உருவம் - உள்ளடக்கம், உத்தி - ஓட்டம் என்பவற்றில் மாற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்து வந்துள்ளது. எது எப்படியிருப்பினும் சிறுகதை என்பது ஒரு காட்சியை வீட்டுக்குள் இருந்தவாறு சாளரம் ஒன்றினூடாகப் பார்ப்பது என்றும், நாவல் என்பது அதேகாட்சியை வீட்டுக்கு வெளியே முற்றத்தில் வந்து நின்று பார்ப்பது போல என்றும் எழுத்தாளர் ஒருவர் கூறிய கூற்றினை மனத்திருத்தியே இந்நூலிலுள்ள சிறுகதைகளைப் பார்க்க விழைகின்றேன்.
இச்சிறுகதைகள் யாவும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை. "துணைவி அழைக்கிறாள் சிறுகதை மனைவியை இழந்த - மனைவி

Page 7
10
மீது மாசற்ற அன்பு கொண்ட கணவன் ஒருவனின் அக உணர்வைப் பிரதிபலிப்பது. ‘அலை அடங்கவில்லை' எனும் கதை வறுமை காரணமாக வாழ்வில் விபச்சாரியாகிவிட்ட ஒர் இளம் யுவதியின் பரிசுத்தமான மன உணர்வுகளையும் அவளுக்காகக் கழிவிரக்கம் கொள்ளும் ஓர் ஆண்மகனின் சிந்தனையையும் வெளிப்படுத்துவது. பணம் படைத்த எசமானனின் காம இச்சைக்குப் பலியாகித் தற்கொலை செய்துகொள்ளும் - காசில்லாவிட்டாலும் கவரிமான் வாழ்க்கை வாழ ஏங்கிய ஓர் ஏழைப் பெண்ணின் முடிவைச்சொல் வதன் மூலம் சமூகத்தில் ‘கண்ணியவான்களாகக் காட்டிக் கொண்டு கடைந்தெடுத்த ‘காவாலிப் பயல்களாக வாழ்கின்ற சமுதாய போலி களையும் அத்தகையோருக்குத் துணைபோகும் “தரகர்களையும் தோலுரித்துக் காட்டுகிறது.
"துன்பக்கேணியில்’ எனும் சிறுகதை இன்னொரு கதையான ‘சிலந்தியும் இதுபோன்றதொரு கதைதான் என்றாலும் இதில் வரும் மீனாட்சி காமுக முதலாளியிடமிருந்து தன்னைத் தப்பித்துக் கொள்கிறாள். எசமானர்களிடம் இத்தகைய அனுபவங்களுக்குள்ளா கும் வேலைக்காரப் பெண்கள் மீனாட்சியைப் போன்று புத்தியாகவும் உறுதியாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்ற பயனுள்ள நடை முறைச் சாத்தியமான அறிவுரையைச் ‘சிலந்தி சிறுகதை தருகிறது. இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்து அதனால் ஏற்பட்ட யுத்தம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்களை எத்தகைய அவலங்க ளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாக்கியுள்ளன என்பதைக் காட்டுவன ‘விட்டில்’, ‘கொந்தல்', 'மாபெரும் புறப்பாடு', 'கோரம்' எனும் கதைகள்.
சடங்கு சம்பிரதாயங்கள் சிலவேளைகளில் எவ்வாறு பெண்களின் மென்மையான மன உணர்வுகளில் இரத்தம் வடியச் செய்கின்றன என்பதைக் கூறுவது 'சடங்கு'. அப்பெண்களுக்காகக் கவலை கொள்ளும் கதாசிரியரின் உள்ளமும் இக்கதையில் தெரிகிறது. ‘பெட்டைக்குட்டி’ எனும் சிறுகதை பெண்கள் என்பதற்காக அவர்களை நாம் இழிவாக நோக்கக் கூடாது என்பதைக் கூறும் குறியீட்டுக்கதை. 'பறை ஒலி’, ‘வடு ஆகிய சிறுகதைகள் நூலாசிரியர் நண்பர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் சிறுகதை ஆக்கத்திறமைக்கும் அவரது அதாவது எழுத்தாளன் ஒருவனுக்குக் கட்டாயம் இருக்க வேண்டிய உயரிய சமுதாய நோக்கங்களுக்கும் கட்டியம் கூறி
ീങpങ്ങ.
இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள எல்லாச் சிறுகதைகள் பற்றிய குறிப்புக்களையும் இங்கு நான் தருவது அவசியமல்ல. ஏனைய

11
சிறுகதைகள் பற்றி வாசகர்களே படித்துத் தெரிந்து கொள்வது பயனுள்ளதாகும். எனினும் நீ.பி.அருளானந்தம் அவர்களின் சிறுகதைகள் குறித்த மேலும் சில அவதானிப்புகளை முன்வைக்காமல் எனது இந்த முன்னுரை முழுமைபெறாது.
பிறர் ஈன நிலைகண்டு துள்ளும் உள்ளம் நல்லதொரு இலக்கிய வாதிக்கு இருக்கும். அந்த உள்ளத்தை நீ.பி.அருளானந்தத்திடம் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மூலம் காணமுடிகிறது. தன்னைச் சூழவுள்ள சுற்றாடலில் நடைபெறுகின்ற மனித துயரங்களை - அநியாயங்களை - அக்கிரமங்களை நேர்மையீனங்களை - போலித் தனங்களைக்கண்டு அவர் அடையும் மனித நேய உணர்வுகளை அதீத கற்பனைகளில்லாமலும் - யதார்த்தபூர்வமாகவும் அழகியல் அம்சங்களோடும் கலா நேர்த்தியுடன் இக்கதைகளினுடாக வெளிப் படுத்தியிருக்கிறார் என்பதே இச்சிறுகதைகளின் சிறப்பும் வெற்றியும் ஆகும். மேலும் இவரது சிறுகதைகளிலே நான் அவதானித்துவந்த பண்பு என்னவெனில் பிரச்சாரவாடை இருக்காது. சினிமாவைப் போன்று அதீத கற்பனையில் படைக்கப்பட்ட இலட்சிய கதாபாத்திரங்கள் இருக்கமாட்டாது. கதைமாந்தர்கள் சாதாரணமானவர்களாகவும் . சராசரி மனிதர்களாகவும் - இயல்பானவர்களாகவுமே இருப்பர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளிலும் இப்பண்புகளையே என்னால் அவதானிக்க முடிந்தது. ஒரு சில இலக்கியப் படைப்பின் யதார்த்தப் பண்பிற்கு இது அவசியமானது.
இயல்பான - சரளமான மொழிநடை கதையொன்றை வாசிப்பது போலல்லாமல் கதையொன்றை ஒருவர் கூறக் கேட்பது போன்ற ஓர் இலகுவான கதையோட்டம் பேச்சுவழக்குத் தமிழே கையாளப் படுவது இச்சிறுகதைகளுக்கு இத்தன்மைகளை வழங்குகிறது எனலாம். நவீன சிறுகதை உத்தி எனும் பெயரில் வேண்டத்தகாத உத்திகளை யெல்லாம் வில்லங்கமாகப் புகுத்தி விரும்பத்தகாத பரிசோதனை களிலெல்லாம் இறங்கி வாசகர்களைச் சிரமப்படுத்தாமல் சிக்கலற்ற கதையோட்டம் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் இன்னுமொரு ժpմպ,
சிறுகதைகள் யாவும் ஒரு சமூகப் பிரக்ஞையோடு படைக்கப் பட்டுள்ளன. சமூகத்துக்கு ஒரு காத்திரமான செய்தியை அதிக ஆரவாரங்களில்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நாசூக்காகச் சொல்ல வைக்கின்றன. இதுவே நீபி.அருளானந்தத்தின் தனித்துவம் எனலாம். முடிகிற இடத்திலிருந்து வாசகனைச் சிந்திக்க வைப்பதே நல்லதொரு சிறுகதை. இப்பண்பு இத்தொகுதியிலுள்ள எல்லாச் சிறுகதைகளிலுமே காணப்படுகின்றது.
எளிமையான - இலகுவான - சரளமான - பேச்சுமொழிப்பண்பு

Page 8
12
கலந்த - கலாநேர்த்தியான மொழி நடைக்குச் சில உதாரணங்கள்
"துன்பக்கேணியில்' எனும் கதையில்வரும், "மூச்சாக வளர்ந்திருக்கும் அந்தத் தென்னைமரங்கள் அம் மண்ணின் செழுமையைப் பறைசாற்றுகின்றன’
'சடங்கு கதையில்வரும், “அம்மா மலாரடித்துப்போய் சக்கப்பணிய நிலத்தில் இருந்து விட்டாள் தன் சிந்தனை மடுவின் ஆழத்தில் அவள் மூழ்கியிருந்தாள்”
'பறை ஒலி கதையில்வரும், ‘பால்யத்தின் சில்வண்டுக் குரல் உடைந்து கரகரப்பு ஏறிய காலத்திலிருந்து.”
‘வடு கதையில்வரும், “அவன் போன பின்பு குண்டிக்குப் பிறகாலே அவனைப் பரிகாசம் பண்ணிக்கொள்வார்கள்”
‘கருணைக்கொலை கதையில்வரும், “அந்தநேரம் அவர்களது வீட்டுக் கோடிப்புறத்தில் நின்ற இடுப்பு வளைந்த முருங்கை மரமொன்று கடபுடா என்ற சத்தத்துடன் முறிந்து விழுந்தது”
தேய்ந்துபோன உவமைகளைக் கையாளாமல் பொருத்தமான புதிய உவமைச் சொற்றொடர்கள் சிறுகதைக்கு மெருகூட்டுகின்றன. உதாரணத்துக்கு, ‘துணைவி அழைக்கின்றாள்’ கதையில், ‘அவர்களது விழிமலர்கள் நண்பகல் கமலங்களாய் அகலமலர்ந் திருந்தன”
‘அலை அடங்கவில்லை" கதையில், “சின்னவெள்ளரிப்பழம் போலிருந்த அந்தக் குழந்தையின்.”
துன்பக்கேணியில் கதையில், முள்தைக்காமல் செடிமேயக் கற்றுக் கொண்ட ஆட்டைப்போல.”
‘கொந்தல் கதையில், “முறிந்து ஊசலாடிக் கொண்டிருந்த அவர்களது மனசெல்லாம் வெள்ளம் வடிந்த நாணலைப் போல தலைதுாக்கின’
'பறை ஒலி கதையில், “மேளத்தை அடிக்கும் போதெல்லாம் அவனது தொந்தி சிறுகுளத்து அலையாய் ஆடும்” −
"மாபெரும் புறப்பாடு கதையில், “நாவும் சுரைக்குடுவைபோல சுவையற்றிருந்தது”
'வடு கதையில், “மரியாதையாக எழுந்து ஒரு புல்லிதழைப் போல் வளைந்து நின்றான்”

13
“கிணற்றிலே பாதாளக் கொக்கி போட்டு கயிற்றறுந்து வீழ்ந்த வாளியைத்தேடி துழாவுவது போல ஞாபகமின்றி தொலைந்ததாய் விட்டுப்போன அவன் பெயரை திரும்பவும் நினைவில் கொண்டு வந்து சேர்க்க அவர் படாதபாடுபட்டார்.”
‘கோரம் கதையில், “இராணுவத்தினரது கண்களும் கொள்ளிக் கட்டை போல் தகதகவென்று சிவந்து இருந்தன”
‘மாபெரும் புறப்பாடு கதையில், யாழ்ப்பாண இடப்பெயர்வு பற்றி,
“இந்த மாபெரும் புறப்பாடு எங்கேதான் போய் முடியப் போகின் றதோ!. முன் ஒருகாலத்தில் எகிப்திய மன்னர் பார்வோனின் கீழ் அடிமைப்பட்டுப் போய்க்கிடந்த இஸ்ரவேலர்களை விடுவித்து ‘ஜெகோவா’ தேவனின் கட்டளைப்படி "மோசே என்பவர் அவர்களை பாலும் தேனும் பொழிகின்ற கானா' என்கிற தேசத்துக்கு அழைத் துப்போனார். ஆனால் இங்கே பாலும் தேனும் பொழிகின்ற செழிப்பு டைய யாழ் நகரைவிட்டு அனாதரவான நிலையில் யாரிடமிருந்தும் எந்த உதவிகளும் இன்றி எங்கே போகிறோம் என்ற திக்குமில்லை திசையுமில்லாத நோக்கில் அகதிகளாக மக்கள் வெளியேறுகிறார்கள். தாம்பிறந்த ஊருடன் இன்றுவரை தொப்பூள் கொடி உறவை வைத்திருப்பவர்கள் அது வெட்டுண்டது போல் உணர்ந்து நொந்தபடி போகிறார்கள். எல்லோரது முகத்திலும் சொந்த மண்ணை இழந்த சோகம் தெரிகிறது. இதையெல்லாம் பார்த்து அதையெல்லாம் அவர் நினைக்கவேண்டியதாய் ஏன் வந்தது, அவர் பைபிளை தவறாமல் படிப்பவர். தன் வாழ்வின் நிகழ்வுகளையெல்லாம் பைபிள் வசனங்களில் பொருத்திப்பார்ப்பது எப்பொழுதுமே அவருக்குப் பழக்கமாகிவிட்டது. என வருகின்ற கதாசிரியரின் "தற்குறிப்பேற்ற வரிகள் சுட்டும் சிறுகதை உத்தியும் எனது அவதானிப்பைப் பெற்றது.
ஒரு பானை சோற்றின் சில பருக்கைகளே நான் மேலே காட்டியுள்ளவை. வாசகர்கள் தாங்களே இத்தொகுதியிலுள்ள சிறு கதைகள் முழுவதையும் படித்துப் பசியாறுவதே தர்மம்.
இந்நூலுக்கு முன்னுரை எழுதுமாறு அன்புக்கட்டளை இட்ட நூலாசிரியர் நண்பர் நீ.பி.அருளானந்தம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
97 ‘சி’, ஹம்டன் ஒழுங்கை த. கோபாலகிருஸ்ணன் கொழும்பு - 06 (செங்கதிரோன்) 01 - 05 - 2004

Page 9
14
என்னுரை
Iெழ்க்கைக்கே இலக்கியம் - கலை வாழ்வை ஒட்டியே இருக்க வேண்டும். சமகால சமூக பிரக்ஞை இல்லாத எழுத்துக்கள் நிலை நிற்காது, என்பதாகத்தான் இன்றைய இலக்கியவாதிகளின் ஒருமித்த கருத்துக்கள் இருக்கின்றன.
இப்படியான அவர்களின் அபிப்பிராயங்களை வைத்து நாம் வாழும் வாழ்க்கைக் காலத்தை ஆராய்ந்துபார்த்தால், இந்த நாட்டில் தொடர்ந்து இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம், தமிழ்ப் பேசும் மக்களின் கால்வாசி வயதை விழுங்கி அந்தக் காலத்தின் அவர்களது நிம்மதியான வாழ்வைச் சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டிருக்கிறது என்றுதான் கணித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
துன்பியலான அந்தக் காலத்தை அனுபவித்துக் கழித்து தங்கள் இளமையைப் போக்கடித்தவர்களை எண்ணிப்பார்க்கையில் இப்பொழுதும் என் இதயம் நைந்து நோகிறது.
மனிதனின் முழுமையான பூரணத்துவ வாழ்வை சிதைத்துவிட்டது கடந்துபோன அந்தக் கொடிய யுத்தம்.
இப்படியாக இதையெல்லாம் அங்கிருந்து அனுபவித்துக் கழித்த என்னைப் போன்ற எழுத்தாளன் ஒருவனுக்கு எழுதுவதற்கென்று உட்கார்ந்தால் சிந்தையில் என்ன உதயமாகுமென்று சற்று நீங்கள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்?
கடந்துபோன அந்தக் கொடிய காலத்தில் - வாழ்வின் சுதந்திரம் என்ற சிறகுகளை இழந்து வேதனையுடன் அல்லாடித் திரிந்து ஆதங்கப்பட்டவர்களின் உள்ளங்களில் நடக்கும் நாடகத்தை குறிப் பறிந்து - நின்று நிதானமாகக் கவனித்து, அவர்களையே இங்கு நான் எழுதிய கதைகளில் வரும் பாத்திரங்களாக வடித்துள்ளேன். சில கதைகளில் ஊடாடும் கதைமாந்தர்களைக் கொண்டு சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான போராட்ட உணர்ச்சிகளை முடியுமான வரை சித்திரித்துக் காட்டவும் முயன்று இருக்கிறேன்.
மண்ணாசை காட்டும் கிராம வாழ்க்கை, மனிதரின் மகிழ்ச்சிகள், துன்பங்கள், திருவிழாக்கள் - ஆகியவற்றை, வாழ்க்கைப்பார்வை யோடு சித்திரிக்கும் கதைகளிற் சில என் நேரடி வாழ்பனுவங்களின் வாயிலாகவே எழுதப்பட்டிருக்கின்றன.
இவைகள் என் மனத்தின் அடிப்படையான மிகவும் ஆழமான

15
சுதந்திர வேட்கையிலிருந்து உருவாகியுள்ள கதைகள்.
இதன் மூலமாக அன்பும் பண்பும் இரக்கமும் கொண்ட - இயற்கை யோடு ஒன்றி வாழவிரும்பும் போலித்தனமற்ற சமுதாயச் குழலை படம் பிடித்துக் காட்டுவதுதான் என் முழு நோக்கமாகும்.
இக் கதைகள் எல்லாவற்றிலும் யதார்த்தமான வாழ்க்கையைத்தான் நீங்கள் தரிசிப்பீர்கள். சென்ற காலத்தில் நடந்த நிஜ நிகழ்ச்சிகளின் நிழல்கள் உங்கள் மனத்திலும் விரிந்து விழச்செய்வதற்கு நான் முயன்றிருக்கிறேன்.
இந்த உலக வாழ்க்கையில் எல்லாமே எங்கும் நடக்கிறது. முன்னைய காலத்தில் நடந்ததுதான் இன்றும் நம் வாழ்க்கையில் நடக்கிறது. இன்று நடப்பதுதான் இனிவரும் காலங்களிலும் நடக்கும்; என்று சில அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். நாங்கள் வாழும் காலத்தில் இவையெல்லாவற்றையும் நாங்கள் கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். காதாலே கேட்கின்றோம். வாழ்வில் உள்ள அத்தனையையும் இன்றும் நாங்கள் அனுபவிக்கின்றோம். ஆனால், எழுதும்போது சிலதுகள் தவிர்க்கப்பட்டுப்போய் விடுகின்றன. அதனால் பலதையும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் வாசகர் களுக்கு கிட்டாததாய்ப் போய்விடுகிறது. என்றாலும், என்னளவில் நான் அறிந்தவைகளை மன ஓர்மத்துடன் எடுத்துச் சொல்வதற்கே எப்பொழுதும் தயாராகவுள்ளேன்.
'ஆமைக் குணம்’ என்கிற இச்சிறுகதைத் தொகுதியில் உள்ள எல்லாக் கதைகளுமே உளவியல் பாங்கில் பாத்திரங்களின் உள் ளத்து அமுங்கல் குண இயல்புகளை மூக்குமுழிகளுடன் முழுமையாக வெளிக்கொணர்ந்து வாசகர்களுக்கு படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்திருக்கின்றன. கதைகளில் வரும் முக்கிய சம்பவங்களில் அவர்களது மனத்தில் எழுகின்ற கோணல்மாணல்களையும் ஆசாபாசங்களையும் ஏமாற்றங்களையும் விசித்திரங்களையும் யதார்த்தமான ரீதியில் வெளிப்படுகின்றதை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் 'ஆமைக் குணம்’ என்ற இந்த நூலினது தலைப்பு உள்ளே அடங்கலாயுள்ள அனைத்துக் கதைகளின் உட்கருத்தினை அடி நீரோட்டமாக இருந்து பிரதிபலிப்பதாய் இருக்கின்றதாகவே எனக்குத் தெரிகிறது.
நாற்பது ஆண்டு காலத்தின் என் இலக்கிய வாழ்வில் பல சமூக மேடை நாடகங்களை எழுதி அவற்றை நான் மேடையேற்றியும் இருக் கிறேன். இக்கால வட்டத்துக்குள் மூன்று சிறுகதைத் தொகுதிகளை யும் வெளியிட்டமை எனக்கோர் மனத்திருப்தியாகவும் இருக்கிறது.

Page 10
16
இச்சிறுகதைத் தொகுதிக்கு - இலக்கியப் பழம் வல்லிக் கண்ணன் அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை எழுதித் தந்துள்ளார். அதன் பொருட்டு முதுபெரும் எழுத்தாளர்; மதிப்புக்குரிய வல்லிக் கண்ணன் ஐயா அவர்களுக்கு, முதற்கண் என் நன்றியை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
அதையடுத்து, பொதுவாக என் சிறுகதைகளையெல்லாம் மதிப்பிட்டு அதற்கு சிறந்ததொரு விவரணம் எழுதித் தந்திருக்கும்; கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளரும் ‘ஓலை’ ஆசிரியருமான கவிஞர் செங்கதிரோன் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
மேற்கொண்டு இந்நூலிலுள்ள கதைகளுக்கும் முகப்பு அட்டைக்கும் பொருத்தமாய் பாத்திரங்களின் உணர்ச்சிகளை ஒழுங்கு செய்து ஓவியப்படுத்தித் தந்திருக்கும் ஓவியக்கலைஞர்களான கெளதமனுக் கும், முகுந்தனுக்கும் என் நன்றிகள். AW
இன்னும் என் நன்றிக்குப் பாத்திரமாய் இந்நூல் உருப்பெற கணனி யில் எழுத்துப்பதிவு செய்து கொடுத்த செல்வி நளினியும் இருக்கின்றார். இவர்களுடன் நான் என்றும் நினைவில் வைத்திருக்கவேண்டியவர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி யாவார். நூல் வெளியீட்டு விழா ஒழுங்குகளை தொடர்ந்து எனக்கு செய்து கொடுத்து ஒத்தாசை நல்கிவரும் அவருக்கும் என் நன்றியை கூறுகிறேன்.
இன்னும் இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகளை பத்திரிகை களிலும் இலக்கியச் சஞ்சிகைகளிலும் பிரசுரித்து உதவிய ஆசிரியர் குழாமிற்கும் - நான் வெளியிடும் நூல்களை வாங்கி ஆதரவு நல்கி வரும் அனைத்துத் தமிழார்வம் கொண்ட நெஞ்சங்களுக்கும் இருகரம் கூப்பி நன்றி கூறிக்கொள்கின்றேன்.
அன்புடன் நீ.பி.அருளானந்தம்
திருமகள் பதிப்பகம் இல, 144 2ஆம் குறுக்குத்தெரு வவுனியா தொ.பே.இல. 0722784954

17
ஆமைக் குணம் 1, விட்டில் 8, சடங்கு 19, பறை ஒலி 26, கொந்தல் 31, சிலந்தி 42, பாவமன்னிப்பு 51, ()
பெட்டைக் குட்டி 36, துன்பக் கேணியில் 960లిడిక 0ே, மாபெரும் புறப்பாடு 88, கருணைக்
கொலை 79, விரதம் 85, நுளம்பு 98, குணம்
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் 102, திருநாள் வந்தது 107, i
a 6. அலை அடங்கவில்லை 鸟 அரு mrsarykdb 112, அம்மாவின் இரக்கம் 120, துணைவி அழைக்கிறாள் 126, வடு 181, கோரம் 141, அப்பிள்பழ வாசமும் நெருஞ்சிமுட்களின் உறுத்தல்களும் 147; காந்தல் 17,

Page 11
S.
சமர்ப்பணம்
صيحصد"
gLUmr நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா
அவர்களுக்கு.

ള് நீ.பி.அருளானந்தம் 1
இந்த இரவு, எரித்துக் கொண்டிருக்கும் பால் நிலவு, எல்லாமே எனக்காகத்தான் என்ற கற்பனையில் திளைத்தபடி மாதங்கியின் வரவுக்காக அந்த அறையில் காத்துக் கிடந்தான் ரமணன்.
அதிகப்படியாக தமிழ்ச் சினிமாக்களைப் பார்த்து அதிலேயே தன் சிந்தையைச் செலுத்தி மயங்கிக் கிடந்தவன் ரமணன். அந்தப் புளுகுக்கதைகளில் வருகிற சம்பவங்கள் யதார்த்தத்தில் தன் வாழ்விலும் நடக்கும் என்பதை நம்பி அவன் அநேககாலமாக கற்பனைத் தேர் ஒட்டிக் கொண்டிருந்தான். அதைக்கொண்டு கல்யாண மாகிய இன்றைய தன் முதல் இரவில் கணவன் மனைவி உறவெல் லாம் சினிமா போல் இருக்க வேண்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பு.
இங்கே உள்ள தமிழர்களின் பழக்கவழக்கத்தில் இந்திய தேசத்து தமிழர்களின் பழக்க வழக்கங்கள் அநேகம் பின்பற்றப்படுவதில்லை

Page 12
2 ஆமைக்குணம்
என்பது ரமணன் அறிந்து கொண்ட விஷயம். பள்ளியறையை அலங்கரிக்கும் பூச்சரங்களும் - பூ உதிர்த்திப் போட்டு வைத்திருக்கும் மெத்தையும் - பாலும்பழமும் - மணப்பெண் கணவன் காலடியில் வீழ்ந்து வணங்குவதும் இங்கே ஒன்றும் முதலிரவில் நடப்பதில்லை - அந்த ஆயத்தங்களும் செய்கைகளும் இங்கில்லையென்பது ஒரு பெருங்குறையாக அவன் மனதை சஞ்சலப்படுத்தினாலும் மிகுதியெல்லாமே சினிமா போல் இன்று தனக்கு இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவன் அவைகளுக்காகத் தன்னை தயார் படுத்தினான்.
இரவில் அவன் எப்போதும் பல்துலக்கிவிட்டுப் படுக்கும் வழக்கம் இல்லை. இன்றென்று பத்து நிமிடம் வரையிலாய் அவன் பல்துலக்கிக் கொண்டுவிட்டு வாய் கொப்புளித்தான். அன்றிரவு அறையை விட்டு வெளியில் போய் யாருக்குமே முகத்தைக் காட்டக் கூடாது என்ற சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் நிறைவேற்றி விட்டு உடலெங்கும் நறுமணவாசனையிட்டுக் கொண்டு அந்த அறைக்குள்ளாக அவன் இருந்தான். r
கல்யாண வீட்டுப்பந்தலடியில் இன்னும் இளைஞர்களது கொட்டம் அடங்கிப்போனதாக இல்லை. ரமணனின் நெருங்கிய நண்பர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்தும் திருமணத்திற்கு வருகைதந்திருந் 560TIT.
“நாங்கள் கப்பல்காரர். இந்த உலகத்தில எங்கட காலடி படாத இடமேயில்ல” என்று தமிழில் தங்கள் பேச்சை தொடங்கி கொச்சை யாக ஆங்கிலத்தில் அவர்களில் ஓரிரு பேர் அந்த ஊர்க்காரரில் சிலரை அதிலே இருத்திவைத்துக் கொண்டு அலட்டிக் கொண்டி ருந்தனர்.
“நாங்கள் கனடா சிற்றிசன்..” என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்குப் போட்டியாக நளினமாக ஆங்கிலம் பேசிக்கொண்டி ருந்த மற்றைய இரண்டு இளைஞர்கள் கதையை இடை நடுவில் நிறுத்திக்கொண்டு “எங்கட அந்த குறைப்போத்தல் விஸ்கியை எங்ககாணேல்ல” என்று அவ்விடமெங்கும் தேடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குள் அங்கிருந்த ஒருவன் சினிமாப்பாடலொன்றை பாட ஆரம்பித்தான். பக்கவாத்தியமில்லாததால் அவன் பாடிய அந்தப் புதிய பாடல் சுரம் கெட்டு சோடைகண்டது.
நல்ல கனத்த வெறியில் இருந்தவன் “உது வேண்டாம் செளந்தர ராஜன் பாடின பழைய பாட்டொண்டைப் படியும் கேப்பம்” என்று அவனிடம் நேயர்விருப்பம் கேட்டான்.
வெளி விறாந்தையில் பனையோலைப் பாய்களை விரித்து இரண்டு
9

இS நீ.பி.அருளானந்தம் 3
கிழவர்கள் படுத்துக் கிடந்தார்கள். ஒருவர் பாயில் கிடந்தவாறே அந்த இளைஞர்கள் செய்கிற அட்டகாசத்தையெல்லாம் பார்த்துவிட்டு ‘இவங்கள் எங்களையும் ஒருகண் நித்திரைகொள்ள விடாம தாங்களும் நித்திரை கொள்ளாம ராவுமுழுக்க உதில இருந்து கொண்டு கூத்தடிப்பாங்கள் போலக் கிடக்கு” என்று தனக்குப் பக்கத்தில் பாயில் படுத்துக்கிடந்தவரைப் பார்த்து அரற்றினார். அவருக்கு அந்த இளைஞர்கள் போட்ட கும்மாளத்தில் நித்திரை குழம்பிவிட்டது. எழுந்து பாயில் இருந்துகொண்டு கல்யாணவீட்டில் தான் ஏற்கனவே எடுத்துப் பத்திரப்படுத்திவைத்திருந்த சிகரெட்டில் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகைவிட்டுக் கொண்டார்.
வயது போன அம்மாமாரும் கொஞ்சம்பேர் சேர்ந்து அடுத்த அறையில் இருந்து அரட்டையடித்தனர். தங்கள் வீட்டு வரவு செலவு பற்றியெல்லாம் அவர்களது கதை நீண்டது. இந்தக்காலப் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் அம்மாமாரின் கைக்குத்தான் பிள்ளைகளிடமிருந்து பணம் வந்து சேரும் அவர்கள் கைகளிலிருந்துதான் அளவு கணக்குப்போட்டு அப்பாமார்களுக்கு பின்பு பணம் பட்டுவாடாவாகும். எனவே அதற்குள் ளும் இன்னும் புதிய திட்டங்களைத் தீட்டி அவர்களின் கொடுப்பனவு களை மேலும் குறைக்கின்ற திட்டத்தில் அவர்களெல்லாம் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்கள். -
இளம்பெண்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குள்ளே இருந்து அவர்கள் பலகதைகளையும் கதைத்தனர். வெளிநாட்டு இளைஞர்களை விசாரிக்க விருப்பமுள்ளவர்களாகவே அவர்களது கதைப்போக்கு இருந்தது. ஒரு சிலருக்கு அந்த வாலிபர்களது விவரங்கள் தெரியும். அப்படித்தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் தெரியாதவர்களுக்கு அவர்கள்பிட்டு வைத்துக்கொண்டிருந்தனர். இந்தக் கதையெல்லாம் ஒழிந்ததும் சினிமாவில் தொடங்கி உடுத்து அழகுபார்ப்பது வரை வாயுளையாமல் கதைத்தனர். அடுத்து அன்றைய திருமணத்தில் மாப்பிள்ளை பெண்பிள்ளை பொருத்தம் பற்றியும் அவர்களுக்குள்ளே தர்க்கம் எழுந்தது. நேரம் செல்லச்செல்ல ஒவ்வொருவராக தங்கள் கல்யாணக் கனவுகளிலே சஞ்சரித்துக் கொண்டு அவர்கள் நித்திரையாகினர்.
கடிகாரத்தில் எழுந்த மணியோசை நேரம் பத்தரை என்பதாக சுட்டுகிறது. அப்போதுதான் மாதங்கி பள்ளியறைக்குள் ஒரு புள்ளி மானைப்போல் நுழைந்தாள். கதவை சத்தமின்றி தாழ்ப்பாளிட்டுவிட்டு; “ஏன் இவ்வளவு நேரம்?” என்று ரமணன் மாதங்கியிடம் வினவ; “ம்..” என்ற ஸ்தம்பித்தலோடு கடைக்கண்களால் அவனைப் பார்த்துக்கொண்டு. அவள் சிரித்தாள்.

Page 13
4. ஆமைக்குணம்
"பிளாஸ்க்கில என்ன இருக்கு? "இது ரீ. நீங்க அடிக்கடி ரீ குடிக்கிறனிங்களாம்” "அப்பிடியெல்லாம் இரவில ஒண்டும் பழக்கமில்ல பகலிலதான் வேனும்” Fift' “என்ன சரி? “குடிக்காட்டி இருக்கட்டும்!” “இல்லையில்லை குடிப்பன்! நீர் கொண்டந்ததால இண்டைக்கு இதையெல்லாம் நான் குடிப்பன். நீர் உம்மட கையால ஊத்தித்தர அதை நான் குடிக்கவெண்டு எனக்குக்கொள்ளை ஆசையாயிருக்கு”
'Gurru.” “இல்லை இது நிசம் எதுக்கு நான் உம்மட்ட பொய் சொல்ல வேணும் இது மட்டுமில்ல வாழ்க்கையில எனக்கு முன்னம் நடந்தது எதையும் நான் உம்மட்ட மறைக்கமாட்டன் என்னட்டையுள்ள எல்லா விஷயத்தையும் உமக்கு நான் சொல்லுவன் நீர் என்ரை மனுவழியெல்லே”
அதைக்கேட்டு அவள் சிரிக்கிறாள். தனது இன்ப உணர்ச்சிகளை யும் மன மகிழ்ச்சியையும் சிரிப்பாலே கணவனுக்குப் புரியவைக்கும் ஒரு பெண்ணாக மாதங்கி அங்கே தன்னை வெளிக்காட்டுகிறாள்.
' 66 ਲੰ8?' அவனுக்கு அவள்வாயாலே சொல்ல, எதையும் கேட்க வேண்டு மென்கிற ஆசை.
“இல்லை அப்பிடி என்னதான் நீங்க சொல்லப்போறியள் எண்டு நினைச்சன்?”
“இருக்கு கனக்க விஷயங்கள் இருக்கு. எனக்கும் உமக்கும் இது பேசிச் செய்த கலியாணமெண்டதால இப்பதானே அதெல்லாத்தை யும் ஒழுங்காய் உம்மோட கதைக்க ஏலுமாய்க் கிடக்கு. இப்பிடியிரு மன்” அவளது கையை அவன் பற்றினான். அவனது ஸ்பரிசம் அறிந்ததும் அவளுக்கு உடலெல்லாம் மதாளித்து ஸ்தனங்கள் இறுகுவதுபோல் இருந்தது. தனக்குப் பக்கத்தில் ஒட்டினாற்போல் அவளை அமரச் செய்தான் அவன். உடனே அந்த உணர்ச்சியில் ஆலிலைபோலிருந்த அவளது வயிற்றுப் பகுதி உள்ளடங்கியது. சுவாசத்தை ஆழவெளியே விட்டுக்கொண்டு நாணத்துடன் அவள் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் தாக்குண்டு உணர்ச்சி மேலிட்டு அவனும் அவளைப் போல் கிறங்கினாலும் அதையெல்லாம் அவன் மேவிவிட்டு தான் சொல்லவேண்டிய கதையிலேதான் கவனம்

இS நீ.பி.அருளானந்தம் s
கொண்டு உஷாராகினான்.
“நான் முன்னம் ஒருத்தியை காதலிச்சன். அவளும் என்னை காதலிச்சாள் அதைத்தான் உமக்கு நான் முக்கியமாச் சொல்ல வேணும்.”
“பிறகு என்ன நடந்தது?”
“என்ன நடந்தது. அப்பிடி நீர் நினைக்கிற மாதிரி ஒண்டுமே நடக்கேல்ல. ரெண்டுபேரும் ஆளையாள் விரும்பியிருந்தம் ஆனா அவவின்ரை வீட்டில தாய் தேப்பன் இதுக்கு ஒத்துக்கொள்ளேல்ல. அதால தாய்தேப்பன்ரை சொல்வழியைக் கேட்டு அவவும் அவயள் பேசின கலியாணத்தைச் செய்திட்டா.”
அவ அப்பிடிச் செய்திருக்கக்கூடாது”
“இல்லை. நீர் நினைக்கிறமாதிரியில்ல அவளில பிழை யொண்டும் நான் சொல்லமாட்டன். அதையொண்டையும் நான் பெரிசாயெடுக்கேல்ல. எங்கடையதை பெரிசா காதலெண்டும் சொல்லுறதுக்கில்ல. எங்கள் ரெண்டு பேருக்கும் சாதுவா ஒரு விருப்பம் மாத்திரம் இருந்தது ஆனா அது பிறகு சரிவரேல்ல எனக்கும் அதால பாதிப்பெண்டு ஒண்டுமில்ல அவளுக்கும் அப்பிடித் தான் இருக்குமெண்டு நெக்கிறன்.”
‘அப்ப என்னை எப்பிடி விரும்பி இந்த கலியாணத்துக்கு ஒம்பட்டீங்க?”
“உம்முடைய போட்டோவைப் பாத்தன் அந்தப் போட்டோவைப் பாத்தவுடனேயே பொம்பிளையை எனக்குப் பிடிச்சுப்போச்சு ஒமெண்டு சொல்லிட்டன்”
இந்த நேரம் அவளை தன்பக்கம் மெல்ல இழுத்து வைத்து ரமணன் அணைத்துக்கொண்டான். அந்த இதமான சுகத்தில் அவளது உடம்பில் "ஜிவ்ஜிவ்வென்று சூடேறும் உணர்ச்சி ஏற்பட்டது. முதல் இரவில் பள்ளியறையில் பலவித ஆசைகள் புதுத் தம்பதிகளிடையே கொழுந்து விட்டெரியும் என்பது இயற்கைதானே, அவனும் அவளைப் போலவே உச்ச உணர்ச்சிவசப்பட்டான். இருந்தாலும் அவன் தன்னையடக்கி நேரத்தைக் கடத்திக்கொண்டு;
“உமக்கும் சுதந்திரமிருக்கு மாதங்கி. உம்மட்டையும் அப்பிடி ஏதுமிருந்தால் சொல்லுமன்" என்றான்.
“என்னத்தைச் சொல்ல? அவள் தடுமாறாது அவனைக் கேட்டாள்.
“உமக்கும் முந்திய காலத்தில என்னைப்போல சம்பவம் ஏதாவது நடந்திருக்கும். விரும்பினா அதை நீர் சொல்லலாம். - எனக் கெண்டா பழைய சீவியத்தைப் பற்றி எந்தமாதிரியும் அக்கறையில்ல

Page 14
6 ஆமைக்குணம் அதுக்குள்ளயெல்லாம் குற்றம் கண்டுபிடிச்சு வாழ்க்கையை சீரழிக்கிற மடையன் நானில்ல. இனிமேல் நாங்கள் வாழுற உண்மையான வாழ்க்கையைப்பற்றித்தான் எனக்குக் கருசனை. என்னைப்பற்றிச் சொன்னதிலயிருந்து உமக்கும் என்ர கொள்கை விளங்கியிருக்கு மெண்டு நெக்கிறன் இப்ப என்னட்ட எந்த மூடுமந்திரமும் இல்லை நான் ஒப்பின்காட்”
“அதேமாதிரித்தான் நானும். உங்களின்ரை கொள்கைதான் நானும். உண்மையாய் உங்களை எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு” அவனது அணைப்பில் இருந்து விலகி அவனது முகத்தைத் துணிந்து பார்த்துக்கொண்டு மேலும் அவள் சொன்னாள். “எனக்கு நாலுவருஷமா வீட்டில உள்ளவயள் கலியாணம் பேசத்துவங்கீட்டினம். என்ர அப்பா அம்மா என்ரை கலியாணத்தில அக்கறைப்பட்டு அதுக் காக பிரயாசைப்பட்டுக்கொண்டிருக்க வேற ஒண்டையுமே நினைக்க எனக்குத் தேவையில்லாததெண்ட மாதிரியிருந்தது. இப்ப நல்ல இடத்திலையும் எனக்குக் கலியாணமாயிட்டுது எனக்கென்னகுறை” இப்படிச் சொல்லுமளவிற்கு தனது இளமைக்கால காதல் விஷயத்தில் மாதங்கி அப்போது மிகவும் ஜாக்கிரதையாக இருந்தாள். உஷார்மடைச்சியாகி தானும் ரமணன் மாதிரி இங்கே உணர்ச்சிவசப் பட்டு ஏதாவது ஏடாகூடமாக வெளியே உளறிக்கொட்டிவிடக் கூடாது என்று அவளுக்கு விழிப்பு இருந்தது. அதனாலே அவள் தன்னை கட்டுப்படுத்தினாள்.
ஆண்கள் இப்படி எதையும் சொல்லுவார்கள், செய்வார்கள், குற்றப்பட்டுக் கறைபடிந்தாலும் எப்படியோ அதைக் கழுவி ஒருகாலம் சுத்தவாளியாக மாறிவிடுவார்கள். பெண்களுக்கென்றால் அப்படியா? இப்படிக் கணவன் சொன்னாரே அதுபோல் அவளும் சொல்ல வெளிக்கிட்டால் அது பிறகு அவளுக்குப் பாதகமாகிவிடுமே?
உண்மையில் அவள் தனக்கு முன்பு ஏற்பட்ட காதலை இப்படியான பிரச்சினைகள் இருக்கும்போது மனம் துணிந்து எப்படிச் சொல்லு வாள். ஆண்களில் யாரைத்தான் நம்பமுடியும். கட்டிய புருஷனென்றா லும் அவனும் ஆண்தானே? - ஆண்பிள்ளைக்குணம் அவனுக்கும் இருக்கும் தானே?. அவனைப்போல அவளும் தனது காதல் கதையை உளறினால் இந்த இரவு முடியமட்டும் அவன் பல் இளிப்பான். இன்னும் பல இரவுகள் இப்படியே பிரச்சினையின்றிக் கடக்கலாம். ஆனால், உறுதியற்ற இந்த முப்பது நாள் இருக்கும் மோகம் குறைந்த பிறகு தனது சுயரூபத்தை இவர் காட்டிவிடாமலா விடப்போகிறார்.
அவள் உண்மையில் சாமர்த்தியசாலி. இதையெல்லாம் நினைத்து

AES நீ.பி.அருளானந்தம் 7
அவள் தன்மனதை திறந்த பெட்டகமாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை. மாறாக சோதனை செய்து அவைகளை மனத்தில் மூடிவைத்துக்கொண்டாள். ஆமை முட்டைகளை புதைப்பது போல் அவளும் அந்தச் சம்பவத்தை வெளிக்கொணராது மனத்தில் குழி பறித்து புதைத்துவிட்டாள்.
இருவரினதும் மெளனம் அந்த அறையின் நிசப்தத்தை நீடித்துக் கொண்டிருந்தது. இன்னும் அந்த இரவு கழிந்துகொண்டு வீணாவதை அவனும் சகித்துப் பார்த்துக்கொண்டிருப்பதாக இல்லை. அந்த அறையில் ஒளிரும் எல்லா மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு அவளை அணைத்தான் அவன். அந்த அணைப்பில் கிடந்து அவள் நெளிந்து கொண்டிருந்தாள்.
நிலவும் சரிந்துபோய்க்கொண்டிருந்தது. போதையிலே கண்ணை மூடிக்கொண்டு பந்தலடியில் இருந்த இளைஞன் ஒருவன் மட்டும் இன்னும் உறங்கவில்லை.
தூங்காத கண் என்று ஒன்று
துடிக்கின்ற மனம் என்று ஒன்று.
இந்த சினிமாப் பாடலைத் தொடங்கி அந்த இரவு வெப்பம் கடந்து தொடங்கிய இதமான குளில் அவன் பாடிக்கொண்டிருந்தான். இரவுநேரத்து தெளிந்த தூய காற்று இவனுடைய இனிப்பான பாட்டின் இன்னிசையை நாலாபக்கமும் சுமந்து சென்றது. அந்த நேரம் அவனுக்குத் தொண்டை திறந்திருந்தது. பாட்டும் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதைக் கேட்டு இரசிக்கும் நிலையில் யாருமே நித்திரை முழிப்பாய் இல்லை. கல்யாண வீட்டில் எல்லாருமே அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். அவன் யாரை நினைத்துக் கொண்டு பாட்டுப்பாடுகிறான் என்று யாருக்கும் தெரிய வில்லை. அவன் கதிரையில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு உள்ளே விழித்துக்கொண்டிருந்தான் திரும்பவும் அதே பாட்டை பாடிப்பாடி தனிமையிலே அவன் இனிமை கண்டான்.
- தினகரன் வாரமஞ்சளி (2003ம் வருடம் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி)
6

Page 15
" கிண்ணிவெடி வெடிச்சது போல பெரிசாயொரு வெடிச்சத்தம் கேட்டுதே. அந்த விதியால இவ்வளவு சனத்தோட உள்ள பஸ்சைக் கொண்டுபோனா கெடுதிவருமெல்லே' அவன் இப்படியொரு கேள்வியை பளல் நடத்துநரிடம் போய் உறைப்பாகக் கேட்டான்.
ஆனால் உள்ளே பஸ்ஸிற்குள் இருந்த யாருமே அவனுக்கு இசைவாகப் பேச தங்கள் பொன்னான வாய்களை திறந்து கொள்ள வில்லை, இருந்தாலும், ஏனோ எல்லோரினது பார்வையும் அதை ஆமோதிப்பது போல அவன் நின்று கொண்டிருக்கும் பக்கமாகவே குத்திட்டபடி நிற்கின்றன.
பேருந்து விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் அவ்விடமிருந்து சத்தம் கேட்ட அந்த இடம் சுமார் நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர்க எாக இருக்கலாம். அவனது கணிப்புச் சரியானதுதானென்று உறுதிப்
 

ള് நீ.பி.அருளானந்தம் 9
படுத்திக்கொள்ள இடையிடையே இந்த பஸ்ஸை கையை நீட்டி மறித்து விட்டு உள்ளே ஏறிக் கொண்டிருப்பவர்களும் கூறுகிறார்கள். அவர்களிலே ஒருசிலர் கை, கால் என்று அங்கே பட்ட காயங் களுக்கும் கட்டுப்போட்டிருக்கிறார்கள். உலங்கு வானூர்தியிலிருந்து சரமாரியாக கீழே நிலத்தை நோக்கி பொழியப்பட்ட துப்பாக்கி ரவைகள் பட்டு சிராய்க்கப்பட்ட சிறு சிறு காயங்களுக்கு உட்பட்டவர் கள் அவர்கள். கட்டுப்போட்டிருந்த சீலைத்துண்டுகளிருந்தெல்லாம் கசிந்து ஊறிக் கொண்டிருக்கும் பச்சை இரத்தம் உடன் காயங்கள் அவை என்று பார்ப்பவர்க்கு ஊர்ஜிதப்படுத்தின. அவனும் அவற்றைப் பார்த்ததோடு.
"என்ன நடந்தது?" - என்று அவர்களை வினவ, "அந்த சத்தம் கேட்டதன் பிறகுதான் இப்படிப் பல அசம்பாவிதங்கள் பரவலாக எங்கும் நடந்துகொண்டிருக்கிறது' என்று அவர்கள் சொன்னார்கள்.
"வேண்டாம்! இதுக்குப்பின்னேயும் வெடிச்சத்தம் கேட்ட அந்தப் பாதையாலே இப்போதைக்கு பிரயாணம் பனன்ன வேணாம்' என்று மீண்டும் நடத்துநரிடம் விவரமாகச் சொல்லி பிரயாணத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டுமென்பதே அவன் நோக்கம், ஆனால், அவரோ இது காரியத்தில் கவனம் வைத்து அக்கறையெடுத்துக் கொண்டவராக இல்லை;
விரலிடுக்கில் மடித்துச் செருகியுள்ள ரூபாய் நோட்டுகளை இடையிடையே மறு கைவிரல்களால் நீவிவிட்டுக் கொண்டு சாக்குத் துணியில் தைத்துப் போட்டிருந்த கோட்டுப்பையில் கையை நுளைத்து சில்லறைகளையும் கிலுக்கிக் கொண்டு அசட்டையாக மிதிபலகைக் கம்பிக்குப் பாரமாய் அவர் நிற்கிறார். அப்படியாக நின்று கொண்டு சர்வசாதாரனமாக தனக்குத் தெரிந்த ஒரு ஞாயத்தையும் அப்போது அவர்களுக்குச் சொல்கிறார்.
"என்னத்துக்குப் பயப்பட வேணும் சொல்லுங்கோவன் பாப்பம். நாங்கள் றோட்டில போய்க்கொண்டிருக்கிற பிரயாணியள் எங்களை உவங்கள் ஒனன்டும் செய்யாங்கள் போக விட்டிடுவாங்கள்'
"ம்.சரி' நடத்துநர் சொல்கின்றாரே என்று அநேகம் பேருக்கு அதுவும் ஒரு நம்பிக்கை. ஆனாலும், அவனுக்கு இதுவெல்லாம் மிக நன்றாகவே விளங்கும், ஆபத்து நெருங்கிவந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தவிப்பு இருந்தது.
இரண்டு தோணியில் கால் வைத்தது மாதிரி என்பார்களே! அதேபோன்ற நிலைதான் இப்போது அவனுக்கு. ரொம்பவும் அந்தரப் பட்டுக்கொண்டு;

Page 16
10 விட்டில்
"இறங்குவோமா. இல்லை, இவர்களோடு இப்படியே பிரயாணம் பண்ணிப் போவோமா..” என்று மனசுக்குள் குழம்பியவாறே அவன் தவிக்கின்றான்.
"இங்கே இறங்கினால் கடை கண்ணி என்று ஒன்றும் இல்லை! அதனால் தண்ணிர் குடிக்க சாப்பிடவென்றும் வழி இல்லை! பார்க்கும் இடமெல்லாம் வெறிச் - என்று காட்சியளிக்கிறது. காயப்பட்டவர்கள் வேறு பஸ்சை மறித்து ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே வீட்டிற்கும் செலவுக்கு ஒரு சதமேனும் கொடுத்துவிட்டு வெளிக்கிட்டு வரவில்லை. அதுவும் ஒரு குறை1. இப்படி எல்லாமே மூளை யில் கிடந்து ஒரே குழப்பம். எதிலும் ஒரு முடிவுக்கு வரமுடியாத பதற்றம். இந்த நிலையிலே தலையை சுளுக்கியது போல் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு அந்த வாகனத்தின் அடித்தகரத்தை மாத்திரம் பார்த்தபடி சிந்தனையில் நேரத்தை செலவழித்துக் கொண்டி ருந்தபோது விக்கி விக்கி அந்த பஸ் அவ்விடத்தில் எல்லாரையும் ஒருமுறை குலுக்கி அடித்து நேரே நிமிரவைத்துவிட்டு நின்றது. அவனும் அதற்குள்ளே இத்தனையையும் சமாளித்துவிட்டு வெளியே பார்த்தான்.
வீதி நெடுகிலும் நட்டுவைத்தாற்போல ராணுவத்தினர் அநேகம் பேர் நிற்கிறார்கள். அவர்களது கைகளிலே புதிய நவீனரகத் துப்பாக்கிகள் பளபளத்து மின்னிக்கொண்டிருக்கின்றன.
“உங்கள் எல்லோருக்கும் வெடி இருக்கிறது. கீழே இறங்குங்கள்” நெருப்புத்துண்டுகள் மாதிரி வார்த்தைகளை வீசியபடி தங்கள் குரலுக்கு மேல் அவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அத்தோடு புராதன கெட்ட வார்த்தைகளும் அவர்கள் வாயிலிருந்து வெளிவந்தன. இடைவிட்டு, மீண்டும் அதே குரல்கள்தான் எச்சரிக்கை விடுக்கின்றன. “வெளியாலே இறங்கி வந்துவிடுங்கள். இல்லாவிட்டால் உள்ளே வெடிகுண்டை எறிவோம் அல்லது முற்றாக தீயிட்டுக் கொளுத்து (36JTLD'
அவர்களது கடுமை கலந்த வார்த்தைகளை திணறிப்போன மூச்சோடு அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.
பஸ்ஸிற்குள்ளே இப்போது ‘குய்யோ முறையோ’ என்று கதறி அழும் சத்தங்கள், குஞ்சு குளுவான்களை தூக்கி வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் இளைஞர்கள் முகத்தில் மரணக்களை, இயக்கமில்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் முதியவர்கள்.
என்றாலும், கீழே இறங்கி விடுவதைத்தவிர வேறு ஒரு வழியும் தோன்றாததால் மன தைரியம் மிக்க இரு ஆண்கள் முதன் முதலாக

ള് நீ.பி.அருளானந்தம் 11
கீழே இறங்கி விட்டார்கள். இறங்கி விட்டவர்கள் அவர்கள் பாஷையை யும் அறிந்திருந்ததால் அவர்களிடம் சில நடைமுறைகளைச் சொல்லி அதை மற்றைய எல்லாருக்கும் சொல்லுங்கள் என்று அவர்களை ராணுவத்தினர் பணிக்கிறார்கள்.
“பெண்களுக்கு நாங்கள் ஒரு கெடுதியும் செய்யமாட்டோம் பயப்படாமல் இறங்கி வரட்டாம் என்கிறாங்கள்”
அப்படி இவர்கள் தமிழிலே எல்லாருக்கும் புரியும்படி அவர்களது பாம்புச்சீறல் வார்த்தைகளை மொழிபெயர்த்துச் சொல்லத்தான் அனைவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இதற்குப்பிறகு பஸ்ஸிற்குள் இருந்த பெண்களெல்லாம் ஒருவாறு இறங்கிவிட்டார்கள். அவர்கள் இறங்கிப் போவதைப்பார்த்த நம்பிக்கையில் ஆண்களும் அவர்களுக்குப் பின்னால் ஒவ்வொருத்தராக இறங்கிக் கொண்டார்கள். இப்போ பஸ்ஸின் உள்ளே யாரும் இல்லை என்ற நிலை,
“இதற்குள்ளே இனியும் நின்று கொண்டிருப்பதற்கு இயலாது இறங்கிவிடவேண்டும்!” O
அப்படி நினைக்கையிலேதான் அடுத்த பெரும் அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது.
பஸ்ஸிற்கு அருகே சரமாரியாக துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள். மனம் படபடத்துப் போய் வியர்வை ஜனிக்க அசுர பயத்தோடு வெளியே பார்த்தான்.
அங்கே.
மூக்கு பட மண்ணை முத்தமிட்டபடி நிலத்தில் குப்புறப்படுக்க வைக்கப்பட்டிருந்த ஆண்கள் எல்லோரினது உடலிலும் சல்லடைக் கண்களாக குண்டு துளைத்த காயங்கள்.
கடவுளே. என்று கணிகளை மூடும் போது அடுத்துக் கேட்ட வெடிச்சத்தத்துடன் ஜன்னல் ஊடாக வந்து கையில் தெறிபட்டு குளிர்ச்சியாக வழிந்துகொண்டிருக்கிறது ஒருவித ஈரப்பசை. திகிலடைந்துபோய் மீண்டும் வெளியே பார்த்தால், மரத்தில் பழுத்து நிலத்தில் வீழ்ந்த பப்பாளிப்பழம் போல் கீழே நிரையில் கிடந்த ஒருவனது தலை குண்டடிபட்டு சிதைந்து கிடக்கிறது. அவனது மண்டையிலிருந்து தெறித்த பிசுபிசுப்பான ஊன் தனது கையில் வழிந்துகொண்டிருப்பதை இனிமேலும் அவனால் இன்னது அது என்று நிச்சயிக்காமல் இருக்கமுடியவில்லை!
‘கடவுளே இப்படியும் ஒரு நிலை வரவேண்டுமா? தெரு நாய்கள் போல இந்த இடத்தில் வந்து நாங்கள் எல்லோரும் சாக வேண்டுமா?” கதறியது அவனது மனம். பயத்தில் உடல் தசையும் “தடதட” வென்று ஆடியது. கீழே குனிந்து இருந்து இருக்கைத் தட்டுக்கு

Page 17
12 விட்டில்
இடையில் புகுந்து சுருண்டு கொண்டான்.
இதுவரையில் பஸ்ஸினுள் அவனையும் இன்னுமொரு கிழவரையும் தவிர வேறொருவரையும் காணாததால் எதுவித சந்தடிகளுமற்ற நிசப்தம். அதை விரட்டிவிட்டாற் போல் மிதிபலகையில் உதைப்புடன் கால் பதித்து யாரோ ஏறிவருகின்ற சப்பாத்துக்கால் சத்தங்கள். பயத்தில் கண்களை மூடிக்கொண்டிருந்த இவனுக்கு உள்ளே அடித்தாற்போல கேட்கிறது.
“பஸ்ஸிற்குள் இருந்து கீழே இறங்கி விடுங்கள். இல்லையேல் உள்ளே இருந்த இடத்தில் உங்களுக்கும் சமாதி கட்டிவிடுவோம்.” கட்டுவிரியன் பார்வையோடு உயிரை எடுக்க வந்த யமன் மாதிரி அந்த இருவரும் நிற்கிறார்கள். ரவைகளை கக்குவதற்குத் தயாராக கைகளிலுள்ள துப்பாக்கிக் குழல்கள் நேராக நீட்டப்பட்டபடி தயாராக இருக்கின்றன. -
ஏதோ ஒரு போதைவஸ்துவின் வெறி ஏற்றம் தான் அவர்களது இயல்பான முகத்தை மாற்றிவிட்டிருக்கிறது. கருவிழிகளின் கடையோரம் செக்கர் வானம் போல சிவந்து இருக்கிறது.
எரிமலைச் சீற்றத்தில் பார்த்ததும் இவன் மனத்தில் மின்னலைப்போல அந்த எண்ணம் விசிறி அடித்தது. உடனே இருக்கைக்குக் கீழ் இருந்து உருவிக்கொண்டு அவன் வெளியில் வந்துவிட்டான்.
அவர்களின் முன்னே செல்ல அவன் கால்வைக்க முதல் அந்தக் கிழவர் தான் தேர்போல அசைந்துகொண்டு அவர்களிடம் சென்றார். வேட்டி, சால்வை, விபூதி, பொட்டு என்று வைத்துக்கொண்டு பச்சைத் தமிழராக. ஆம்! அவர் ஒரு சைவப் பழம்தான்! எலிக்குஞ்சு கணக்கா முழியை உருட்டிக்கொண்டு,
"ஐயா! நான் திருக்கேஸ்வரம் சிவன் கோயிலுக்குப் போயிற்று திரும்பிவாறன். அதால, வேற ஒண்டும் எனக்குத் தெரியேல்ல. இதுதான் உண்மை’
இப்படிச் சொல்லிக்கொண்டு அவர்கள் அருகில் கிழவர் போவதற்கு முன் அந்த இருவரில் ஒருவன்;
"கிட்ட வராதே நாயே’ என்று சொல்லிக் கொண்டு பற்களை நருடிக் கடித்தவண்ணம் காலால் அவரை எட்டி உதைத்து விட்டான். அவனுக்கு தன்னுடைய துவக்கு பறிபோய்விடும் என்கின்ற பயம் போலும்!
அவனது உதையோடு பின்புறம் சரிந்து தொபுக்கடிரென்று கீழே விழுந்தார் கிழவர்.
இவனுக்கு இன்னமும் நடுங்க ஆரம்பித்து விட்டது. எழுபது வயதுக் கிழவருக்கே இந்த நிலை என்றால் எனக்கு எப்படியாகுமோ? என்று

ള് நீ.பி.அருளானந்தம் 13 அவன் நினைத்தான்.
எப்படியோ அவர்கள் நின்ற இடத்துக்கு நடந்து போவதற்கு முடியாமல் கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்ன ஆரம்பித்துவிட்டது இவனுக்கு. வெகு சிரமப்பட்டுச் சென்று, “சேர்’ என்று அவன் சொல்வதற்குள் “நிச்சயமாக நீ இங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியாது”. கறுமுறுத்துக் கொண்டு நின்ற ஒருவன் சொன்னான். இவனுக்கு வயிற்றைக் கலக்குவது போல இருந்தது. விகஸித்த குரலில். “இல்லை சேர் நான்” என்று இவன் சொல்ல ஆரம்பிக்க, “பொத்தடா வாயை” - சொல்லியதோடு அவனது இடது செவியில் உறைப்பாக விழுந்தது ஒரு அறை; காதுக்குள்ளே அவனுக்கு அப்போது ‘நொய்ங்’ என்று இருந்தது. அதனால் செவிப்பறையில் ஜவ்வு கிழிபட்டது மாதிரி உணர்ச்சி ஏற்பட்டது. கண்கள் கலங்கி கண்ணிர் வழிந்தது. ஒரு அழுகையும் கேவலுமாக வந்து கண்டதை அமுக்கிற்று.
“ஐந்து பிள்ளைகள் எனக்கு. எதுவித சம்மந்தமும் இல்லை! நான் குடும்பஸ்தன் என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்” தொண்டை கமற சிரமத்தோடு அவன் சொன்னான். அவனது நாசியும் உதடுகளும் சோகத்தில் துடித்தன. வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நின்றன.
'' (3'
ஒருவன் வாயிலிருந்து இந்த வார்த்தை மாத்திரம் வெளிவந்தது. கிடைத்த அந்த நல்ல சந்தர்ப்பத்தோடு பஸ்ஸின் கீழே இறங்கியதும் எதிரே கிடந்த பிணக்குவியல் தான் அவனை வரவேற்பது போல் காணப்பட்டது. அத்தனையும் வயது வந்த ஆண்களது சடலங்கள் தான். இளைஞரில் இருந்து நடுந்தர வயதுள்ளவர்கள் வரை துப்பாக்கி யால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களிடையே LL LLLLLL TTTLLLL LLLLLL TLLLLLLL LLLLTTTTLLTTTT TTTT TTTT வலிக்கும்படி செய்தது. அவன் போட்டிருந்த மூக்குக்கண்ணாடி கூட up a கவும் இல்லை. அந்தப் பிணக்குவியல் மேல் வாய் பிளந்தபடி இறந்து கிடந்தான் அவன். வயிற்றுப் பகுதியெங்கும் துப்பாக்கி ரவை கிழிந்துப் பாய்ந்து போறையாகக் குடைந்து சிதைத்து விட்டிருந்தது. அதைப்பார்க்க முடியாத நிலையில் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு அவன் வீதியிலே கால்வைத்தபோது அங்கே இரு மருங்கும் துப்பாக்கி சகிதமாய் நிற்கும் ராணுவத்தையே அவனால் காணக்கூடியதாய் இருந்தது.
வீதியின் மறு ஒரம் கான் வழியாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந் தது. அதற்கு அருகே வேலியாக நிரைக்கு நின்ற பூவரசு மரத்தின் கீழ் பெண்களும் சிறு பிள்ளைகளும் உட்கார்ந்திருந்தார்கள்.

Page 18
14 விட்டில்
கால்வாயால் ஓடுகிற தண்ணிலே அரைப்பாகம் தங்கள் உடல் நனைய குப்புறப் படுத்தபடி தலையை மாத்திரம் நிமிர வைத்துக் கொண்டு உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்ட வயது வந்த ஆண்களெல்லாம் "கிலி பிடித்துப்போய் மிரண்டு கொண்டிருந்தனர். அந்த இடத்தில் போய்த்தான், தானும் இருந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து நடந்துகொண்டிருந்தவனை, இரும்புக் கரம் ஒன்று அதிலே வைத்து இறுகப் பிடித்தது.
“எங்கே போகிறாய்?. யார் உன்னைப் போக விட்டது?” ஆத்திரத்தோடு கேட்டான் அவன். f
“அவர்கள்தான். அவர்கள் தான் என்னைப் போகவிட்டார்கள்” “பொய் சொல்கிறாய்? “இல்லவே இல்லை அந்த இருவரும்தான் உண்மையில் அதைச் சொன்னார்கள்” ஈனஸ்வரத்தில் சொன்னான்.
“வா கேட்போம்!. அறிந்த பிறகு பார், இருக்கிறது அநேகம் உனக்கு!”
அவனுக்கு நரம்புகளெல்லாம் கொரக்குப் பிடித்து சுண்டி இழுப்பது போல இருந்தது. தனது கிட்டிப்பிடியை இன்னும் அவன் விடவே இல்லை. அவர்கள் அருகில் அவனை இழுத்துப் போனான் அவன். என்ன சொல்வார்களோ இனிமேலும் என்ன நடக்குமோ? இப்போதும் ஜீவ மரணப்போராட்டம்தான். கண்களை மூடிக்கொண்டு சாவை வரவேற்போம் என்று தன்னையே மறந்து போகின்ற மயக்கம் போன்ற நிலைக்கு அவன் முயன்றுகொண்டிருக்கும் போது பஸ்ஸிற்குள் நிற்பவர்களோடு அவனைப் பிடித்தபடி நின்றவன் ஏதோ கேட்டுத் தெரிந்து கொண்டான். அதோடு இறுகப்பிடித்த கரம் இளகிவிட்டது.
““ (BLIT” ஒரு வார்த்தைதான். அவனுக்கு மின்னல் கெடுவுக்குள் விடுதலை. அங்கிருந்து போய் அவனும் அவர்களோடு வாய்க்காலடி யில் குப்புறப் படுத்தபடி கிடந்தான்.
அங்கேயும் மதப்பிரிவு. ராணுவத்தினர்தான் எல்லாரையும் பிரித்து இருத்திவிட்டிருந்தனர். இந்த ஜீவ மரணப் போராட்டத்தில் எல்லோருமே கடவுளரது நாமத்தை வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டு அடைக்கலம் தேடிக்கொண்டிருக் கிறார்கள். இவர்களுக்கு முன்பாக அங்கே நடந்துகொண்டிருக்கும் அழிவு வேலைகள் இன்னமும் முடிவு பெறவில்லை.
அவ்விடத்தின் சூழமைவில் எங்குமே சரவெடி கேட்பதுபோல் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
அருகே இருந்த சிறிய ஒரு நெல் ஆலை, ஓலைக் குடிசைகள்,

ള് நீ.பி.அருளானந்தம் 15 பசுக்களின் கொட்டில்கள் என்று ஒன்றுமே அவர்களால் மிச்சம் வைக்கப்படாது தீயிட்டுக் கொளுத்தி நாசமாக்கப்படுகின்றன. அந்த இடங்களிலே நெருப்பு “பகார்’ பற்றி ‘ஓ’ வென்று அகோரித்து எரிந்துகொண்டிருக்கிறது.
அந்த நேரமாக “படீர்” என்று பெரிதாக ஒரு துவக்கு வெடிச்சத்தம் தகரத்தைத் துளைத்துப் போவதுபோல பஸ்ஸினுள் இருந்து. அங்கே என்ன நடந்தது என்பதை அவனால் விளங்கிக்கொள்ள அதிக நேரமாகவில்லை!”
“ஐயோ. அந்த வயது போன கிழவரையுமா..?” - அவனது மனத்தில் கவலை அடையாய் அப்பிக்கொண்டது. தண்ணிருக்குள்ளே அவனது கால்கள் குளிர்ச்சி படகிடந்தும் உடலெங்கும் பயக்காய்ச்சல் காய்ந்து கொண்டிருந்தது.
“ஒரு பாவமும் அறியாத மக்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்?. அடக்குமுறையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக இப்படியான இனப்படுகொலைகளா..” - அவனது சிந்தையிலே இந்தக் கேள்வி தான் பூதாகரமாக எழுந்துநின்று கொண்டிருந்தது.
விட்டில் பூச்சிகள் போல் நாங்களே இந்த இடத்தில் வந்து உயிரைப் போக்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டதே. எங்களுக்கெல்லாம் எத்துணை மடத்தனம்.
‘எல்லாப் பிழைக்கும் காரணம் அவங்கள்தான். எங்கே அந்த மூளகெட்ட பஸ் சாரதியும் நடத்துநரும் நினைத்துக் கொண்டு அவ்விடத்தில் அக்கம் பக்கம் பார்ந்தான். அவர்கள் அங்கே இருப்ப வர்களாகத் தெரியவில்லை.
"அவர்களுக்கும் இவர்கள் சாவு மணி அடித்துவிட்டார்களா? இவைகளை யாரிடம் அவன் போய்க்கேட்பது. அங்குள்ள எல்லாருமே ஒருவரோடொருவர் ஒரு வார்ந்தையாகிலும் பேசாது பயத்தில் வாயை க்கிறார்கள். தங்களோடு வந்த உறவினர்களை கள் சகிக்கமுடியாத மனவேதனைகளிலும் தம்மைத் நாமே அடக்கிக் கொண்டு மெளனமாய் அழுகிறார்கள். அழுது கலங்கிய கண்களும் சிவந்து தடித்த மூக்குகளும் அழுகையில் துடிக்கும் உதடுகளுமாய் அவர்களெல்லோரும் காணப்படுகிறார்கள். கூடவே அவர்களோடு இருக்கின்ற அந்தப் பூப்போன்ற பிள்ளைகளும் தான் பயத்தால் நலுங்கி கண்ணிர் விடுகிறார்கள். அவர்களின் ஒலத்துக்கு ஒப்ப வீசிக்கொண்டிருக்கும் காற்றிற்கு அருகே நிற்கின்ற பனை ஓலைகளின் சத்தமும் உயரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக் கின்றது.
கொழுந்து வெற்றிலை கிள்ளி எறியப்பட்டது போல வாழவேண்டிய வயதுடைய இளவயதினர் சுட்டுக்கொல்லப்பட்டு வீசப்பட்டதை

Page 19
16 விட்டில்
நினைத்து நினைத்து அவனது மனம் மெளனமாய் அழுதது. இந்தச் சூழலிலே எங்கு பார்த்தாலும் சவ அமைதி. தூரத்தில் எட்டாத திசைகளில் பறவைகள் பயந்து கொண்டு பறக்கின்றன. பின்னேரமாகி விட்டதால் வானமும் இரத்தச் சேறு போல் குழம்பிக்கிடந்தது. அடிவானத்தில் சிவந்த கிரணப் பட்டைகள் தகதகத்துக் கொண்டிருந் தது. அந்த இடங்களிலே நெருப்புப் புகைதான் எல்லா இடங்களிலும் மண்டிக்கிடந்தது. பஸ் அருகே இருந்து அடித்த இரத்தக் கவிச்சி அவனுக்கு வயிற்றைக் குமட்டச் செய்தது.
ராணுவத்தின் இந்தக் கொடுமையான பேயாட்டம் எல்லாமே முடிவடைந்ததும் அவ்விடத்தில் அவர்களது தலைவன் வந்து நின்றான். வாயிலிருந்த சிகரட்டிலிருந்து நெருப்புக்கனிய - புகையை உள்ளே இழுத்து ஊதிக்கொண்டு,
“எல்லாமே முடிந்தாகிற்றா?” குறித்த அந்த இரு சிப்பாயினிடத்தும் வினவினான். “சரிவரச் செய்து முடித்துவிட்டோம்” “நல்லது இனி இருப்பவர்களை போகவிடுங்கள்” - கட்டளை பிறப்பித்து விட்டு அவன் போய் விட்டான்.
“இனிமேல் நீங்கள் இந்த வெளியினுடாக நடந்து போங்கள் uulfils)606).”
அந்தச் சிப்பாய் அப்படிச் சொல்ல இதயத்தை முட்கிளைகளால் கீறி இரத்தம் பாய வைத்ததைப்போல் அவர்களுக்கு இருந்தது. அவன் அப்படிச் சொல்வதைக் கேட்டு எல்லாருக்கும் ஆத்திரமாகத் தான் இருந்தது. அங்குள்ள ஒவ்வொருவர் மனத்திலும் அவர்களை வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் சுவாலை வீசிக் கனன்றது. அவனுக்கும் கோபம் பொத்துக்கொண்டுதான் வந்தது.
ஆனால், துப்பாக்கிச் சனியனுக்கு முன் அப்பாவி மக்களின் வாய் எப்பொழுதும் மெளனமாகவே இருக்கச் செய்கிறது.
எல்லாரும் எழுந்து வயற்காடுப் பக்கமாக துரிதமாக இப்போது நடந்துகொண்டிருக்கிறார்கள். நடக்கும்போது பயத்தில் அந்தக் கும்பலுக்குள்ளே இடைவெளி காணப்படாத அளவில் அதிக நெருக்கம் so on வரப்பிலே எல்லாரும் நடந்துபோய்க் கொள்ள வசதியில்லை. சேற்றுழவு முடிந்து பலகை அடித்து விட்டிருந்த இடமெல்லாம் கால்கள் புதையப் புதைய நடையில் அனைவருக்கும் இப்போது அவசரம். என்றாலும் அவர்களில் அதிகமானவர்களிடம் அழுகையும் பிலாக்கணமும்தான் இன்னமும் மாறாமல் இருக்கிறது.
"தம்பி உம்மை எப்படி அவங்கள் போக விட்டவங்கள்?” இந்த இறுக்கத்துக்குள்ளே அவனைப்பார்த்து நிறைய வயதைக்

இ நீ.பி.அருளானந்தம் 17
கடந்த ஒரு பெண் வியப்புடன் கேட்டாள்.
அதை அவள் கேட்கவும்; நல்ல கிரவல் மண்ணிலே தள்ளி விழுத்தி பந்தாக உருட்டிவிட்டதுபோல் வேதனையாக இருந்தது.
'அம்மா இந்தளவு வயது போயும் உங்களுக்கின்னும் அறிவு கொஞ்சமும் வளரேல்லயே! நான் ஏதோ ஏக்கத்தில மலாரடிச்சுப்போய் கிடக்கிறன். அதைக் கொஞ்சமும் யோசிக்காமல் இந்த நேரம் என்னைப்பார்த்து கேக்கிற கேள்வியே இது?
‘கோவப்படாத தம்பி அப்பிடியொண்டும் பிழையாய் நான் நினைக்கேல்ல நீர் உந்த வேட்டியை உடுத்திக்கொண்டு கண்ணுக்க குத்திற மாதிரி தெரியிறிரெல்லே அதாலதான் இப்பிடியெல்லாம் நினைச்சுட்டுக் கேட்டனான். பிழையெண்டால் மன்னிச்சிர்ரா தம்பி” அதற்குப்பிறகு அவள் வாயை மூடிக்கொண்டாள். ஆனால், அவள் சொல்லியதை வைத்து பழைய சம்பவம் ஒன்று நினைவில் திரும்ப வும் அவனுக்கு வந்து இதயத்தைக் குத்தி விட்டதுபோல் வேதனை உணர்வைக் கொடுத்தது.
அவனது நெருங்கிய நண்பரொருவர் அன்றொரு நாள் பொதுக் கூட்டமொன்றில் பேசும் போது இந்த விஷயத்தை முக்கியம் கொடுத்து காரசாரமாகப் பேசினார்.
"இந்த நாட்டிலே வாழும் பெரும்பான்மை இனத்தவர்போல அங்கே வாழுகின்ற தமிழராகிய நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்று வாழுகின்ற காலம் வரவேண்டும். இந்த வேட்டியை உடுத்தி சால்வையைப் போட்டுக்கொண்டு சுதந்திரமாக இந்த நாட்டிலே எல்லா இடங்களிலும் இடர் இல்லாமல் பயம் இல்லாமல் எப்பொழுது தமிழ் மகன் ஒருவன் சென்றுவரக்கூடிய காலம் வருமோ அப்பொழுது நான் எங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக எண்ண ATub,
நீர்க்க தரிசனம் போல் அந்த வேளையில் அவர் சொன்னது இன்றைப அனுபவத்தில் அவனுக்கு உண்மையென்றே மனசுக்கு உணரப்பட்டது. அந்தப் பெண்கூறிய வேட்டிக்கதையோடு அந்தச் ஒரு முறை நினைவில் வந்துநின்று கடந்து போயிற்று. வரப்புப்பூண்டுகள் கால் பாதங்களில் உராய உராய நடந்து இப்போது ஒரு காட்டுப் பகுதியையண்டி அவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள்.
ஒரு கொடிய யுத்த பூமியைத் தாண்டி அமைதிப்பூங்காவில் பிரவேசித்தது போல் அவனுக்கு இருந்தது. அது அந்தி வரும் நேரம், பறவைகளின் பல்வேறு ஒலிகளும் ஜிர் - ஜிர் என்று பூச்சி ஒலிகளும் மெல்ல மெல்ல இப்போது அவனது காதுகளில்

Page 20
18 விட்டில்
கேட்கின்றன. காட்டு மரங்கள் நிலத்தில் சொரிந்த உதிரிப் பூக்கள் அந்த ஒற்றையடிப் பாதையெங்கும் நெடுகக்கிடக்கிறது. காட்டுப்பூக்க ளின் போதை மணம் மனம் குழம்பிய நிலையிலும் அவனது நாசியைத் துளைக்கத்தான் செய்தது. அவனது பாதங்களில் நிலத்தில் பரவிக்கிடந்த சரளைக்கற்கள் குத்தின. செருப்பைத் தொலைத்து விட்டு வந்ததால் ஏற்பட்ட வேதனையை பல்லைக் கடித்தபடி சகித்துக் கொண்டு எட்டு மேல் எட்டு வைத்து அவன் நடந்தான். அப்படியே அவர்களெல்லாம் போகின்ற திசையில் ஒரு ஆறு காணப்பட்டது. பழுத்த இலைகளும் சருகுகளும் விழுந்து மூடிக்கிடக்க உறங்கிக் கிடக்கின்றதைப்போல அது காட்சி அளிக்கிறது. தண்ணீரைக் கண்ட தும் அநேகம் பேர் அதற்குள் போய் குளிர்ச்சிபட காலை வைத்துக் கொண்டார்கள். கைகளால் இலை தழைகளை விலக்கித் தண்ணிரை அள்ளி முகம், கை, கால்களை கழுவுகிறவர்களாகவும் அவர்களெல் லாம் இருக்கிறார்கள்.
யுத்தம் ஆரம்பித்த காலம் தொடங்கி இந்த நாட்டிலே தமிழர்களு டைய இரத்தம் சிந்தப்பட்டு இல்லாதிருக்கும் இடமென்று ஒரு இடமும் இல்லை. அப்படி இன்று வரை இரத்தம் சிந்தியிருந்தும் இதுவரையில் எங்களுக்கு வேண்டிய உரிமைகள் அனைத்தும் உடையதாக சுதந்திரம் என்பது கிடைப்பது மாத்திரம் சிக்கலாய் இருக்கிறதே. அந்த ஆற்றினோரம் ஒற்றையாய்ச் சற்றே நின்றபடி இவைகளை அவன் யோசித்துக்கொண்டிருந்தான். பிறகு அந்த ஆற்றில் அவனும் இறங்கி தனது நெடிய மேனியை ஆற்றுத் தண்ணிரில் அவன் நனைய விட்டான். இலைச்சாறு ஊறிய அந்தப் பச்சைத் தண்ணிருக்கு அவன் உடல் ஆறிக் குளிர்ந்தது. ஆனால் அவன் மனமோ நடந்தவைகளை மீண்டும் மீண்டும் எண்ணியெண்ணி வெகுவாக கொதித்துக் கொண்டேயிருந்தது.
- தாயகர் - இதழ் 48 (G'дғу Јууду уѓ-2003) கலைஇலக்கிய சமூகவிஞஞான இதழ்
இyஸ்டு

நீ.பி.அருளானந்தம் 19
இந்த வீட்டில் அக்காவை நினைத்து அதிகம் கவலைப்படுகின்ற வள் அம்மா ஒருத்திதான். வெந்துயரில் கிடந்து அவள் படும் பாட்டை நினைக்க எனக்கும் வாழ்க்கை கசந்து போகிறது.
அம்மாவுக்கு இந்த நேரங்களில் எப்படித்தான் நான் ஆறுதல் சொல்வேன்? அவளை ஆற்றித் தேற்றுகிறதுக்கு எனக்கு சக்தியும், தைரியமும் இல்லை. நானும் சில வேளைகளில் அம்மாவுடன் சேர்ந்து கொண்டு அழுது விடுகிறேன். அந்த அழுகை எனக்கு வருவது அம்மா அழுவதைப்பார்த்ததால் வந்த துயரம் மேலிட்ட தாலா அல்லது அக்காவின் வாழ்க்கைப் பாதிப்பை நினைத்ததாலா எதுக்கென்று என்னால் சரியாக குறிப்பிட முடியவில்லை.
என் அக்காவுக்கென்று இருப்பவள் நான் ஒரு தங்கை மட்டும்தான். அவளுக்கு தங்கை மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பியாகவும் இருந்து அந்த வெற்றிடத்தை நான்தான் நிரப்பி வந்தேன்.
அக்கா அழகிலே 'அப்சரஸ் போல இருப்பாள். அவள் மல்லிகை

Page 21
20 &FLIrig, என்றால் நான் மாம்பூ அதனாலென்ன. அவள் மாதிரி நான் அழகாக இல்லை என்பதுதான் எனக்குப் பெரிய நிம்மதி.
எனக்கு இழுத்துப் பறித்தாலும் அக்காவுக்கு நல்ல இடத்தில் சீக்கிரம் கல்யாணமாகிவிடும் என்பது என்னுள் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை, அந்த நம்பிக்கை எங்கள் குடும்பத்துக்குள் உள்ள எல்லாருக்கும் இருக்கச் செய்தது.
இருந்த அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வலு சுறுக்கா அக்காவுக்கு கல்யாணம் ஆகியது. அக்காவையும், அத்தானையும் கல்யாணத்தன்று பார்த்தவர்கள் பொருத்தமான நல்ல சோடி சேர்ந்திருக்கு என்று தான் வாயாரப் புகழ்ந்தார்கள்.
கல்யாண மண்டபத்துக்கு நூற்று ஐம்பது பேர்வரை வருகை தந்திருந்தார்கள். அக்கா உடுத்திருந்த கூறை அள்ளி எறிந்தது. அவள் போட்டிருந்த தங்க நகைகளோ ஏராளம். அவளது கழுத்தில் கிடந்த அகலப்பட்ட சங்கிலிகள் மின்னித் தகதகத்தன. சர்வாபரண பூஷிதையாக நட்சத்திரத்தைப்போல் பிரகாசித்தாள் அக்கா. அவளின் கழுத்தில் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கிடந்த சங்கிலிகளை தன் கைகளால் பிடித்து சரிப்படுத்திவிட்டார் அத்தான். இவர்கள் புறாப்போலவும், அன்னப்பட்சியைப் போலவுமானவர்கள். இலேசில் ஒருவரை விட்டு ஒருவர் ஒருகணமும் பிரிந்திருக்கமாட்டார்கள் என்று அபிப்பிராயம் சொன்னார்கள் கல்யாணப் பந்தலில் அமர்ந்திருக்கும் ஒருசிலர். எப்படியோ அவர்கள் சொல்லும் கதையை காதில் கேட்டு அம்மாவும் அப்பாவும் மனம் குளிர்ந்தார்கள்.
இடையிடையே அக்காவின் அருகில் சென்று அவர்களது சோடிப் பொருத்தம் பற்றி நான் பலவாறாகவும் புகழ்ந்துரைத்தேன். நான் மட்டும் இதைச் சொல்லவில்லை. வந்திருந்தவர்களெல்லாம் புகழ்கிறார்கள் என்றுரைத்தேன். அதைக் கேட்டு அக்காவுக்கு நாணத்தால் முகம் சிவந்துவிட்டது. அவளது கண்கள் செவ்வரியோடி அழகுடன் திகழ்ந்தன. செல்லமாக ஒருமுறை என் கன்னத்தில் அவள் கிள்ளினாள். அந்த இடத்திலே பிறகு என்னைப்பற்றி அத்தானிடம் புகழ்ந்து புகழ்ந்து சொல்லிச் சொல்லிக் களைத்தாள். அன்று இரவு அவர்களுக்கு முதலிரவு. அடுத்த நாள் காலையில் அதைப்பற்றி தனியே அக்காவிடம் கதைப்பதற்கு எனக்கோ வெட்கம். அக்கா என்றும் போல அன்றும் எல்லாரிடமும் சகஜமாகப் பழகினாள். சிரித்தாள். அவள் முகம் காலையில் கதிரவன் ஒளி பட மலர்ந்த செந்தாமரை மலர்போல் மலர்ந்திருந்தது. இரண்டு சுக்கிர தாரகை போல அவள் கண்களில் ஒளியுயிர் துளும்பி மிளிர்ந்தது. நல்ல மனத்திருப்தி அவள் முகத்திலே வெளித்தெரிந்தது. கொள்ள மாளா இன்ப வெள்ளம் பொங்கும் அவள் முகத்தைப்

ള് நீ.பி.அருளானந்தம் 21 பார்த்து நானும் என் மனசில் திருப்திப்பட்டேன்.
அந்த நேரத்தில் ‘நாம் இருவரும் ஒருவரையொருவர் விட்டு பிரிந்திருக்கப்போகிறோம்.” என்று அவள் சொன்னாள்.
அவளது நகை முகத்தில் கவலை நிழல்படிந்தது. எனக்கும் அவளைப் போல் கவலை வந்தாலும் நான் அந்த வேளையில் அதை வெளிக்காட்டவில்லை.
“அக்கா நீ எங்கிருந்தாலும் நன்றாக வாழவேண்டும் அதுதான் எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியாயிருக்கும்” என்றேன்.
‘எங்கோ கடல்கடந்து சென்று இருக்கவேண்டியதாயிருக்கிறதே” என்று மீண்டும் சொல்லி கவலைப்பட்டாள் அவள்.
“அது இயற்கைதானே. இராமனிருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி” என்று அவள் சொன்னதுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லி விட்டுச் சிரித்தேன் நான்.
“போடி எனக்கு எவ்வளவு கவலை இருக்கிறதென்று உனக்குத் Gg5rfuq DIT?”...... உன்னையும், அம்மாவையும், அப்பாவையும் பிரிந்து நான் எப்படி இருக்கப்போகிறேனோ.
அப்படிச் சொல்லும்போது அவள் கண்கள் கண்ணிரில் கிடந்து மிதப்பதாய்த் தெரிந்தது எனக்கு.
“அக்கா வேண்டாமக்கா. நல்ல நாளில் அழவேண்டாம்” “சிறிது காலத்தின் பின்பு நீ இங்கே திரும்பி வந்து எங்களையும் பார்த்துக்கொண்டு போகலாம்தானே” என்றும் நான் அவளுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னேன்.
அந்த மன ஆறுதலோடுதான் அவள் தன் கணவனோடு வெளிநாடு சென்றாள்.
அவள் சென்று ஒரு மாதம் கழிந்தது. இந்த ஒரு மாதகாலத்திற்குள் பல தடவைகள் தொலைபேசியில் அவள் எங்களுடன் கதைத்தாள். எங்களது சுகத்தை ஒவ்வொரு தொலைபேசி அழைப்பினிலும் கேட்டுத் தெரிந்தாள்.
தங்களது சுகத்தையும், மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள். ஆன இந்த ஒரு மாதத்திற்குள்ளேதான் இதெல்லாம்.
அதற்குப் பிறகு ஒரு கிழமையாய் அவள் தொலைபேசியைத் தொடவில்லை.
என்ன நடந்திருக்கும்? ஏன் அவள் சில நாட்களாக எங்களுடன் கதைக்கவில்லை?
அப்பாவும், அம்மாவும் நானும் இப்படி நினைத்துக் கவலைப் பட்டோம்.

Page 22
22 afLiig,
“கல்யாணமான புதுசுதானே. எங்கேயும் அழைப்பின் பேரில் விருந்துகளுக்குப் போவார்கள். அதனால் நேரமும் கிடைக்காது.” என்று தன் அபிப்பிராயத்தை சொன்னார் அப்பா!
அப்பா சொன்ன காரணம்போல இன்னும் பலதையும் பத்தையும் சேர்த்துவைத்து யோசித்துக் கொண்டு நானும் அம்மாவும் மனத்தைத் தேற்றிக்கொண்டிருந்தோம். இதெல்லாம் கொஞ்ச நாட்கள்தான். ஒருநாள் கொண்டுபோன சூட்கேசோடு அக்கா வீட்டு வாசற்படியில் வந்து நின்றாள்.
அப்பா அந்த நேரமாய் வீட்டில் இல்லை. የ» எனக்கும் அம்மாவுக்கும் அவளைப் பார்க்க திகைப்பாய் இருந்தது. என் நெஞ்சு திக்குத் திக்கென்று அடித்துக்கொண்டது. சதிரம் பதறியது. என் அக்காவா இவள்? அன்றலர்ந்த தாமரைபோல் அழகுடன் திகழ்ந்தவள். கண்கள் குழிவிழுந்து போய் கன்னங்களெல் லாம் ஒட்டி ஈர்க்குச்சிமாதிரி இந்தக் கோலத்தில் வந்திருக்கிறாளே!
அம்மா ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு. “பிள்ளை! நீ என்ன தனியா மட்டும் வந்திருக்கிறாய்?. அவர் உன்னோட கூடவா வரேல்லியோ?”
அவளது குரலின்தன்மை சந்தேகத்துடன் கிணற்றுக்குள் இருந்து கதைப்பவர் குரலையொத்ததாய் என் செவிகளில் வந்து விழுந்தது. அவள் தனக்கு நடந்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லும் போது அவற்றை நாங்கள் கேட்டுக்கொண்டு மரம்போல் நின்றோம். எங்கோ ஒரு சூனியப் பிரதேசத்தில் சிக்குண்டு தவிப்பவரைப்போல அந்த நேரம் பரிதவித்தோம்.
அக்கா அவரோடு என்னால் இனி வாழவே முடியாது என்று தீர்மானமாகச் சொன்னாள்.
அவரைத் திருத்துவதற்கு தான் பட்டபாட்டை சொல்லிச் சொல்லி அழுதாள்.
"குடிகாரனுடன் சீவிக்கலாம். விபசார குற்றம் புரிந்துகொண்டு திரிபவருடன் சீவிக்க இயலாதம்மா’ என்று அம்மாவின் காலைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
விழிநீர் வழிய அக்கா சொன்னதையெல்லாம் கேட்க இதயத்திலே உள்ள ஏதோ ஒரு ரத்த நாளம் அறுந்து விழுந்துவிட்டதுபோல இருந்தது எனக்கு.
விபசாரம் என்ற சொல்லைக் கேட்கவே என் உடலெல்லாம் BGBGäléöO.
துடிக்கத் துடிக்க கிடக்கிற எயிட்ஸால் பாதிக்கப்பட்ட பயங்கர மனித வடிவங்கள் என் மனக்கண்முன்னே அப்போது காட்சிக்கு

ള് நீ.பி.அருளானந்தம் 23
வந்து நின்றன. நான் படித்த சமுத்திரம் எழுதிய ‘பாலைப்புறா" நாவலிலுள்ள சில சம்பவங்களும் இடையிடையே ஞாபகத்தில் வந்து படம் போல் மனத்தில் காட்சியளித்து என்னைப் பயமுறுத்தின.
“வேண்டாமக்கா இதோட நீ தப்பியதே காணும்” என்று கத்தியபடி நான் சொன்னேன்.
அம்மா மலாரடித்துப்போய் சக்கப்பணிய நிலத்தில் இருந்து விட்டாள்.
விபசார குற்றத்துக்காக பைபிளிலும் விவாகரத்துக்கு இடமிருக்கிறது என்று அக்காவைப் பார்த்து நான் ஆறுதல் சொன்னேன்.
அவளோ. தலைகவிழ்ந்தபடி மரங்கள் பழுத்த இலைகளை உதிர்ப்பதுபோல் கண்ணிர் சிந்தியபடி இருந்தாள்.
அவளுக்கும் நான் சொன்னவைகளைப் பற்றிய விவரம் தெரியும். தன் சிந்தனை மடுவின் ஆழத்தில் அவள் மூழ்கியிருந்தாள். அவளது மெளனத்தை சம்மதத்தின் அறிகுறியாக எடுத்துக் கொண்டு இந்த நேரம் மேலும் அதைப்பற்றி கதைப்பது உசிதமல்லவென்று நானும் பேசாமலிருந்தேன்.
இது நடந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. எங்கள் வீட்டில் முன்பெல்லாம் இருந்த கலகலப்பே இல்லாது போய்விட்டது. முள்ளும், கள்ளியும் காடாக வளர்ந்த தோட்டம் போல இந்த உலகம் எங்களுக் குத் தோன்றிற்று. ஏனோ தானோ நாங்களும் கடமைக்கு இந்த உலகில் சீவிக்கிறோம் என்று நினைக்கும் படியாக எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. அப்படியே மண்ணுக்குள் மறைந்த வேராய் பல மாதங்கள் இந்த வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம்.
என்றாலும், நாள் செல்ல நாள் செல்ல நாங்களும் சலிப்பாறி னோம். வாழவேண்டும் என்று எங்கள் மனத்தில் உறுதி ஏற்பட்டது. அக்காவுக்கு இரண்டு வருடத்திற்குள் விவாகரத்துக் கிடைத்தது. பழையனவற்றையெல்லாம் மறந்து மனத்தில் புதுத்தெம்பு எங்களுக்கு வந்துவிட்டது.
அப்பா எந்தப் பிரச்சினைக்கும் முகங்கொடுத்து நிற்கக்கூடிய திறமை படைத்தவர். எவ்வளவு சிக்கல் சிடுக்கு இருந்தாலும் மனம் தளராதவர், துணிவுள்ளவர்.
அக்காவுக்கு நல்ல ஒரு வரன் தேடுவதிலே அவர் மும்முரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
இந்தநேரம் சொந்தக்காரர்களும் வந்து அக்காவுக்கு தைரியம் சொன்னார்கள். ஒரு கிழவி வந்து கிழிகிழியென்று அவனைக் கிழித்தாள்.
"அந்த கிலிசை கெட்ட ஊத்தையனை நீ விட்டிட்டு வந்தது

Page 23
24 afLIrie) தான் நல்லது பிள்ளை’ என்று காறித்துப்பாத விதமாக அவனைப் பேசிவிட்டு.
"அப்படிக் கொந்த தறுதும்பன் பிள்ளையையும் தந்திட்டு எக்கணம் உன்னை றோட்டிலையும் விட்டிருப்பான். ஆனா, கெட்டித்தனமா நீ தப்பீட்டாய். உனக்கு வயசிருக்கு. நல்ல வடிவிருக்கு. ஆண்டவனே யெண்டு உனக்கொரு இடம் கட்டாயம் வரத்தான் செய்யும். p கவலைப்படாத பிள்ளை. இப்பிடி நடந்ததும் ஒரு வழிக்குப் பார்த்தா உனக்கு நன்மைக்கெண்டுதான் நினையாத்தை” என்று சொல்லி ஆற்றித் தேற்றிவிட்டுப்போனா.
சில வயது போனதுகளும் நளினக் கதைகள் கதைக்கிறதை விட்டிட்டு இப்ப திருந்தீட்டுதுகள். என்றுதான் நான் அந்தக் கிழவி சொன்னதை வைத்துக் கணித்தேன். எனக்கு அந்தக் கிழவி சொன்னவைகளைக் கேட்க சந்தோஷமாகவிருந்தது. மனசுக்கு ஆறுதலாகவுமிருந்தது.
அப்பா எங்களுக்கென்றிருந்த பல காணிகளை விலையைப் பாராது எளிய விலைக்கு விற்றார். அந்தக் காசைக் கொண்டுபோய் அக்காவினுடைய பெயரில் வங்கியில் வைப்புக் கணக்கில் சேர்த்தார். நீருயர வரப்புயரும் என்ற ஒளவையாரின் பாடல் வரிகள் நினைவில் வருகிற மாதிரி வங்கியிலிட்ட அக்காவின் பணத்தொகைக்கு ஏற்றதாய் கல்யாணம் பேசிப்போன இடங்களில் அக்காவின் சீதனத் தொகை யும் உயர்ந்த அளவுக்குப் போய் நின்று கொண்டது.
அந்தத் தொகையையும் விரும்பி அக்காவின் இன்றைய நிலைமை யையும் அறிந்து கொண்டு வறிய குடும்பத்துச் சம்பந்தம் ஒன்று எங்கள் வீடுதேடி வந்தது.
அவர்கள் வீட்டில் இரண்டு பெண்கள். ஒன்றும் இல்லாத்தனத்தில் கல்யாணமாகாமல் இருந்தார்கள். தன் சகோதரிகளுக்கு சீதனப் பணத்தை அப்படியே கொடுத்துவிடுவேன் என்று மாப்பிள்ளை சொன்னார்.
“உள்ளது உரியது எல்லாம் இப்படி அள்ளிக் கொடுத்தால் என்ன ஆகும்”. என்று நாங்கள் முதலில் நினைத்தோம்.
எப்படியோ போகட்டும். நல்ல இடமாக்கிடைச்சால் சரி என்று நினைத்துக்கொண்டு மாப்பிளையின் குணநலன்களைப் பார்த்து மனசுக்குப் பிடித்துப்போனதால் சரி என்பதாய் ஒப்புக்கொண்டார்
9 UT.
கோயிலிலே சிம்பிளாக கலியாணத்தை நடத்துவம். நெருங்கிய உறவின் முறையார் என்று இருப்பவர்களை மாத்திரம் கூப்பிட்டால் காணும்." என்றார்கள் அவர்கள். அதற்கும் “சரி” என்றதாய்

ള് நீ.பி.அருளானந்தம் 25
நாங்களும் விருப்பத்தைச் சொன்னோம். இன்னும் மூன்று நாள் கழிந்து அக்காவின் கல்யாணம் நடக்க இருந்தது.
கல்யாணப் பெண் தாலிகட்டும் போது வெள்ளை ஆடையுடன் இருப்பதுதான் கிறிஸ்தவ சமூகத்தின் சம்பிரதாயம். தாலிகட்டிய பின்பு மணப்பெண் கூறை உடுத்துவதுதான் இங்கே இவர்கள் வழமையாக கடைப்பிடித்து வரும் மரபு.
ஆனால், மறுமணம் செய்து கொள்கின்ற பெண் தாலிகட்டும்போது வர்ணச்சேலைதான் உடுத்தவேணும். அதுதான் எங்கள் வழமை என்று அம்மா பிடிச்சிராவியாய் இருந்தாள்.
குமர்ப்பெட்டையள் தான் இந்த நேரத்தில் வெள்ளை உடுத்து றது. ரெண்டாங் கலியாணம் முடிக்கிற பொம்பிள்ளையஸ் வெள்ளை உடுப்பு உடுத்திறகில்லை. அதுவடிவில்லை. சரியில்லை. என்றும், அவா விளக்கம் சொன்னா, அவவுக்கு குழந்தைப்பிள்ளைப் புத்தி. ஆனால் எனக்கு?
அம்மா சொன்னதைக் கேட்க மன எரிச்சலாகவும் மனவருத்த மாகவும் இருந்தது. அவவுடைய பேச்சில் விளக்கெண்ணெய் கலந்திருப்பதுபோல் எனக்குப்பட்டது. இதனால் கோபமான கோபம் வந்தது எனக்கு. அக்கா ஒரு பாவமும் அறியாதவள். ஒழுக்கத்தின் உறைவிடமாக இன்று வரையிலும் சீவித்தவள். அவளுக்கு இந்தக் கதியா? என்று நான் விசனப்பட்டேன்.
ஆனால், அக்கா தன்னை பரிசுத்தமாக வைத்துக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டு உண்மையாக தன்னை அதற்கு ஒப்புவித்தாள். அவள் இன்று தாலிகட்டும் போது வர்ண உடை அணிந்து தன்னை மற்றவரிடமிருந்து தாழ்த்திக்கொள்ள வேண்டியிருக் கிறது. பெண்களுக்கு இந்த சமூகம் செய்யும் அநீதியல்லவா இது? இந்த மடத்தனங்களையெல்லாம் எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்பது. பெண்களுக்கு மட்டும் இப்படியான தீக்கோல் சூடுகள் போன்ற செயல்பாடுகள் ஏன்? உதட்டை மெதுவாகக் கடித்துக்கொண்டு எரிச்சரிலுடன் அந்தத் துன்பத்தையும் சேர்த்து உள்ளே விழுங்கினேன். வேறு என்னதான் செய்ய முடிகிறது?
- ஞாயிறு தினக்குரல் (74 டிசம்பர் 2003)

Page 24
26 பறை ஒலி
இப்போதிருக்கும் சின்னஞ் சிறுசுகளுக்கு வினாசி என்கிற பெயருடைய மேளகாரனைத் தெரியாது. காவோலையாய்ப்போன பழசுகளான எங்களுக்குத்தான் இப்பொழுதும் அவன் கண்முன்னே நிற்பதுபோல் இருக்கின்றான்.
பறைமேளம் என்றால் என்ன குறையா?. அதையும் 'தவில் கேட்கின்ற இரசனையில் வைத்து ஒருகாலம் இரசித்தவன்தான் நான்! அதுவும் வினாசி வாசித்தானென்றால் அதிலே பெரிதாய் ஒரு இரசனை எனக்குண்டு. எந்தச் செத்த வீட்டுக்கும் அவன்தான் அப்போது வந்து விளாசிவிட்டுப் போவான்.
இப்போதைய காலம் மாதிரியல்ல அப்போது. அயலில் செத்த வீடு என்றால் அப்போதெல்லாம் அடுப்பு மூட்டமாட்டார்கள். செத்த சவம் சுடுகாடுபோனதன் பின்புதான் அயல்வீட்டு அடுப்புகளில் உலையேறும். அப்படியாக மக்களெல்லாம் தங்களது சுற்றத்தவர் சூழ இருக்க பிறர்சினேகத்தோடு சீவித்த காலம் அது அப்படியான
 

21 நீ.பி.அருளானந்தம் 27
காலப் பொழுதிலேதான் என் இளமைக்காலமும் இன்பமாயிருந்தது. ஆதலினால்தான் அவைகள் என் சிந்தனையில் இன்னும் இருந்து கொண்டு துளிர் விட்டவண்ணமாய் இருக்கிறது.
பால்யத்தின் சில்வண்டுக் குரல் உடைந்து கரகரப்பு ஏறியகாலத்தி லிருந்து நான் எங்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் நடக்கும் செத்த வீடுகளுக்குப் போகத் தொடங்கிவிட்டேன். கல்யாண வீட்டுக்குப் போகாவிட்டாலும் ஒருமனிதனின் சாவிட்டுக்குப்போயே ஆகவேண்டும் என்று அந்த நாளில் பெரியவர்களெல்லாம் சொல்லுவார்கள்.
இதனால் நாலுபேர்களைப் போல நானும் அந்த வயதிலேயே செத்தவீடுகளுக்குப் போக ஆரம்பித்தேன். அழுகுரல் கேட்கும் இடம்தான் சாவீடு. ஆனாலும், அதை மேவி அங்கு கேட்கும் வினாசியினது பறைமேளச் சத்தம் என்னை கவலையிலிருந்து மீட்கக் கூடியதாய் இருந்தது. சாவிட்டுச் சோகத்திற்குள்ளும் அது எனக்கு ஒருவித சுகம்தந்தது. என்னைப்போலத்தான் அங்குள்ள பல பேர்களுக்கும் இருந்திருக்கும். அதுவும் ஒரு காரணம் அந்தக் காலத்தில் இந்தப் பறைமேளம் நிலைத்திருந்ததற்கு - என்று இப்பொழுதும் நான் சிலவேளைகளில் நினைத்துப் பார்க்கிறேன்.
வினாசி பழங்குடிகள் போல நல்லகறுத்தான் தேக்கு நிகர் தேகம் அவனுக்கு இடுப்பில் பளுப்பு நிறமான லுங்கி கட்டியிருப்பான் - அரையில் பனைமட்டை அகலத்துக்கு ஒரு இடுப்புப்பட்டி - உதடுகள் வெற்றிலைச் சாயத்தில் ஊறிப்போய் செக்கச் சிவர் நிறத்தில் என்நேரமும் இருக்கும் - இடதுதோளில் தூக்கிப்போட்ட பறைமேளத் தோடு சொல்லியனுப்பிய வீடுகளுக்கு துணை மேளகாரனையும் கூட்டிக்கொண்டு நேரத்துக்கு அவன் வந்துவிடுவான்.
உதயத்தின் ஒளிபடர்வதற்கு முன்னால் செத்தவீட்டு ஒப்பாரியுடன் மேளத்தைக் கொட்டி ஊரையே எழுப்பி விடுவான் வினாசி, அப்படியாக இன்ன இடத்தில் இன்னாரது வீட்டில் சாவீடு என்று, முதன் முதல் ஊருக்குள் அறிவிப்புக் கொடுப்பவன் வினாசியாகத்தான் இருந்தான்.
இந்த அறிவிப்பை மட்டுமல்ல. கிராமத்தின் எந்த ஒரு அரச நடவடிக்கை அமுலாக்கல்களையும் அறிவிப்புச் செய்கின்ற அந்த அரச ஊழியத்தையும் அவன் செய்துவந்தான்.
புதுக்கூப்பன் விநியோகம் தொடங்கி சோலைவரி செலுத்தக் கோரும் நடவடிக்கையிறாக வீதிவழியே பறை போட்டு அவன் அறிவித்தல் செய்வான். அப்படியானவன் தனக்கு பக்கமேளம் அடிப்பதற்கு மகனைத்தான் பழக்கி வைத்திருந்தான். பார்க்கும்போது அந்த பக்கமேளம் அடிக்கையிலே அப்படி பெரிதாக ஒன்றும் சுருதி மாற்றம் இல்லாத மாதிரித்தான் தோன்றும்.

Page 25
28 பறை ஒலி
5 é.
டக்க. டக்க. டக்க” - என்கிற ஒரே மாதிரியான சப்தம் வரக்கூடியதாக - நுனியில் வளையம் போட்டுக்கட்டப்பட்டிருக்கும் இரு குச்சிகளை வைத்து பக்கமேளகாரன் சளைக்காமல் அந்தக் கொட்டில் தங்குதரிப்பில்லாமல் அடித்துக்கொண்டிருப்பான்.
வினாசியோ..! தான் அடிக்கும் பெரிய மேளத்திலிருந்து பலவாறான ஒலிகளையும் ஒலிக்கச் செய்வான். இறங்கி ஏறும் தாளகதியில் மேளத்தை அவன் அடிப்பான். சிலவேளை உடுக்குப் போன்ற துள்ளல் நடையுடனும் அவனது மேளம் பேசும். அப்படி மேளத்தை அடிக்கும் போதெல்லாம் அவனது தொந்தி சிறுகுளத்து அலையாய் ஆடும்.
அந்த நாளில் மேளம் கொண்டு வினாசி வந்தால் அவன் இருப்பதற்கு தென்னை மரத்திலிருந்து பச்சை ஓலையை வெட்டி நிலத்தில் போடுவார்கள். நிறைய வெற்றிலைச் செல்வத்தையும், சுருட்டு நெருப்பெட்டியையும் எடுத்து வந்து அவன் கைகளில் கொடுப்பார்கள். இப்படி அவனுக்கென்றதாய் உள்ள எல்லா உபசரணைகளையும் சற்றும் பிசகாமல் செத்த வீட்டுக்காரர்கள் செய்துமுடிப்பார்கள்.
இப்படியெல்லாம் அவன் அனுபவிக்கும் அளவில் செத்தவீடென்பது கலியான வீட்டில் கிடைக்கும் சுகம் போலத்தான் அவனுக்கிருந்தது. குடிக்குக்குடி - பணத்துக்குப் பணம் - என்று தேவையானதெல்லாம் வந்து, அந்த நாள்தான் அவனது வீட்டினருக்கும் ‘சுபதினம் போலிருந்தது. Φ எப்பொழுதும் செத்த வீட்டுக்குப் போனால் அங்கு வினாசியைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய வசதியாகத்தான் நான் பந்தலின் கீழ் இருப்பேன். அந்த மேளச்சத்தம் என் செவிப்பறையில் உறைப்பாக விழவேண்டும் என்பதிலே கொள்ளை ஆசை எனக்குண்டு.
“வினாசி” - என்று மெதுவாகக் கூப்பிட்டு அவனைப் பார்த்துக் கொண்டு நான் ஒரு முறை தலையை ஆட்டினால் அவன் சிரிப்பான். “நல்லாய் ஒரு விளாசு விளாசி அடி” - என்கிற விதத்தில் உள்ள என் சைகைகளின் பொருளை உணர்ந்ததாய் எனக்கு விளக்கிட அவனும் ஒருமுறை என்னைப் பார்த்து தலையை ஆட்டுவான்.
அவனுக்கு வெறி ஏறவேண்டும். வெறி ஏற ஏற அவனது அடிக்கு, மேளமும் நாதம் பேசும். எப்பவும் சவ ஊர்வலத்திலே பறை முழக்கிக்கொண்டு அவன்தான் எல்லாருக்கும் முன்னாலே போவான். சந்தி சந்தியாய் நின்று மேளத்தை உரக்க அடித்து ஒரு கலக்குக் கலக்கிவிட்டு - பின்பு நடப்பான்.
"வினாசி இந்தா பத்து” - என்று ஒருவர் அவனுக்கு முன்னே

ള് நீ.பி.அருளானந்தம் 29
நிலத்தில் காசை வீசி எறிவார். அந்தப் பத்துக்கு ஒரு வித அடி மேளத்திலே விளாசி அடிப்பான் வினாசி!
போட்டிக்கு இன்னொருவர் முன்னேவருவார்; “இந்தா இருபது அந்த மாதிரி அடி” - என்று விலாசமாய் நிற்பார்.
வினாசி இன்னும் கொஞ்சம் சத்தம் பெரிதாய்வர மேளத்திலே தன் கைவரிசையைக் காட்டுவான். அடி அகோரத்தில் அந்த நேரமாக அவனது தொப்புள் உள்வாங்குவது தெரியும்.
இப்படியே செத்த வீட்டுக்காரர்கள் தங்கள் கவலையோடும், வந்தவர்களில் ஒருசிலர் மேளகாரனை பராக்குப் பார்த்ததோடுமாய் சுடலையை நோக்கிப் போவார்கள். நான் அங்கே சுடலையில் ஒருபுறம் நிற்கும் காட்டாமணக்குச் செடிகளுக்குப் பக்கத்தே போய் நிற்பேன். சுடலையில் நடக்கின்ற அந்திமச் சடங்குக்கெல்லாம் வினாசி மேளம் அடிப்பான். அவன் கைசோர்ந்ததாய் எப்பொழுதிலும் இல்லை. பிரேதத்துக்கு கொள்ளி வைப்போடுதான் அவனுக்கு வேலை முடியும். அவன் நல்ல ஒரு கலைஞன். அந்த நேரம் அவனில்லாமல் சூரன் ஆட்டம் நடந்ததாயில்லை. அந்த சூரன் போரிலும் அவன்தான் மேளம். பண்டாரிகுளம் கோயில் அம்மன் பவனி வருகையிலும், அவனே மேளகாரன். குடியிருப்புப் பிள்ளையார் கோயிலில் நடக்கும் மானம்பூ திருவிழாவிலும் அவனே வந்து மேளம் அடிப்பான். வாழை வெட்டும் போதும் மேளத்தை அடித்து பூசாரிக்கு உரு ஏற்றுவான். இதெல்லாம் அவன் வாழ்ந்த ஒருகாலத்தின்கதை. அப்பொழுதிருந்த சில சம்பிரதாயங்கள் இப்பொழுதிற்கில்லை. அதைமாற்றிவிட்டது விஞ்ஞான வளர்ச்சி. அந்தப் போக்கில் சென்று மாறிவிட்டது சமூகம். என்றாலும், மனத்தில் பசுமையாய்ப் படர்ந்திருக்கும் இனிமையான அந்த நினைவுகள் மீண்டும் அவைகளை நிஜமாக மாற்றி என் கண்களால் பார்க்க வேண்டுமென்றே துடிக்கின்றன.
ஊருக்கு நான் சென்றிருந்தபோது அந்த ஆசைமனம் என்னை பலதிக்கிலும் இழுத்துச் சென்றது. காலத்தின் இடைவெளி தூரத்தைக் கொண்டு வினாசி இறந்திருப்பான் என்று எனக்குத்தெரியும். அதன்பொருட்டு இந்தளவு காலம் அவன் உயிர்வாழ்வதற்கில்லை என்றே நான் நம்பினேன். என்றாலும், அவனது மகனை ஒரு நாள் நான் கடைவீதியில் வைத்துக் கண்டேன். பழைய செழிப்பில்லை அவனிடம். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி அவன் நன்றாய் உலர்ந்துவிட்டான். என்னைக் கண்டதும் கண்கலங்க நின்று ‘அப்பா செத்திட்டார்” - என்று கவலையில் தோய்ந்தான். அவன் மேல் எனக்கு இரக்கமான இரக்கம் வந்தது.
“சரி இப்ப நீ என்ன செயிறாய். மேளம்” - என்று அந்த

Page 26
3O பறை ஒலி
கடைசிச் சொல்லை மாத்திரம் நசுக்கிக்கொண்டு விளக்கம் கேட்டேன் நான்!.
"அப்பா செத்தபிறகு நான் மட்டும் தனிய என்ன செய்ய. மேளம் அடிக்கிறத விட்டிட்டன் உங்கின கூலி வேலையளுக்குப் போறன். அந்த நேரம் ஒரு ஆமானமான தொழிலைப் பழகியிருந்தா இத்தறுதிக்கு கயிட்டமில்லாமல் சீவிச்சிருப்பன். இப்ப நான் அலையிற அலைச்சல் ஒரு தெருநாய் அலையாது. அப்பா என்ர வருங்கால சீவியத்தை நெச்சுப்பாக்கேல்ல. நானும் அப்பத் தைக்கு உதுகளை நெக்கேல்ல. பரம்பரைத் தொழிலெண்டு செய்து வந்தம். இப்ப எனக்கு வகுத்துப்பாட்டிற்கே களப்டமாயிருக்கு..!" அழுவாரைப்போலச் சொல்லிச்சலித்துவிட்டு தன்கவலையையும் என்மேல் சுமத்திவிட்டு அவன் போய்விட்டான். அவன்போனபின்பு பழையகாலத்து சிந்தனைகள் எனக்கு வலுத்தது. வினாசியினது மேளச்சத்தம் என்காதுகளில் கேட்பது போலத்தான் அப்போது ஒரு பிரமை எழுந்தது எனக்கு.
- தினமுரசு வாரமலர் (DVFPiaf. If – 20, 2004)

ള് நீ.பி.அருளானந்தம் 3.
தென்னை மரத்தில் உள்ள பாளை விரிப்பின்மேல் அமர்ந்தபடி ஒரு அணில், தண்டுகளில் நெருக்கடித்திருக்கும் மொக்குகளை ஒவ்வொன்றாக கொறித்துச் சுவைத்தபடி இருக்கிறது. அதற்கருகில் நிற்கும் மாமரத்தின் கீழ்க்கிளையில் பசுமையும் மஞ்சளும் கலந்த இரண்டு செங்காய்களும் இவரது கண்களில் தட்டுப்படுகிறது. பழுக்க வைப்பதற்கு பறித்தெடுக்கப்படவேண்டிய செங்காய்கள்தான் அவை, ஆனாலும், நினைவெல்லாம் அவருக்கு இடம்பெயர்ந்த அன்று நடந்த அந்தச் சம்பவங்களையே அசை போட்டுப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. அதைவிட இந்தச் செங்காய்கள் என்ன அதிக அவசியம்? இவர் அந்தச் சிந்தனை முட்டத்துக்குள்ளேயே தன் கவனம் முழுவதை யும் உட்செலுத்தினார்.

Page 27
32 கொந்தல்
இடம்பெயர்ந்தவேளை தன் குடும்பத்துடன் வன்னிக்கு வந்தபோது இவர் பட்டபாடு. அப்பப்பா..!!.
அதையெல்லாம் இலகுவில் சொல்லி விளக்க முடியாதவை! வீட்டுக் குருவிகள் இந்த நாட்டில் அழிந்து வரும் நிலையில் இருக்கிறதென்று சொல்கிறார்கள். ஆனால், வன்னிக்கு வந்தபோது தான் இவர் அங்கே அந்தப் பறவையினத்தைக் கண்டார். அங்கே இக் குருவிகளுக்கும் அவர்களது வீடுகளில் புகலிடம் கிடைக்கின்றன. சுதந்திரமாக அந்த வீடுகளிலெல்லாம் அக்குருவிகள் கூடுகட்டி வாழ்கின்றன.
அந்தக் குருவிகளுக்கு மட்டுமா புகலிடம்? யாழ்க்குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்க்கெல்லாம் அவர்கள் தங்கள் வீடுகளில் இருக்க இடம் கொடுத்தார்கள். உண்ண உணவுமளித்து உபசரித்தார்கள். •ሩ
இவரது குடும்பத்தினருக்கும் ஒரு புண்ணியவாளர் தன் வீட்டில் இருக்க இடம் அளித்தார். இவரையும், மனைவியையும், இரண்டு பெண்பிள்ளைகளையும் தன் வீட்டிலே வைத்திருக்க வீடு அவருக்கு அவ்வளவு செளகரியமில்லைத்தான். என்றாலும் அந்தக் குடும்பத்து அங்கத்தவர்கள் எல்லாருக்கும் இளகிய மனசு. இயற்கையோடு ஒன்றி வாழ்பவருக்கு இரக்கமுள்ள மனசும் இருக்கும்! அப்படித்தான் ஒரு அபிப்பிராயத்தை இவர் தன் மனசிலே வளர்த்தார். விடியும் போதே சோகமான நாளாகத்தான் இடம்பெயர்ந்து வந்திருந்த வேளையில் இவர்களுக்கெல்லாம் இருந்தது. வவுனியா நகர்ப்பகுதிக்குள் எப்படியாவது உட்சென்றுவிட வேண்டுமென்கிற அவதி ஒரு புறம், இளம் பிள்ளைகளையும் தங்களுடன் பாதுகாப்பாய் கூட்டிப்போக வேண்டுமே? - என்ற மனக்கவலை மறுபுறம். இப்படி யாக இந்தப் பிரச்சினையில் கிடந்து தங்களைப் போலவே மற்றவர் களும் திண்டாடித் திரிவதை இவர்கள் கண்டார்கள். இவரது கைதனில் கொஞ்சம்போல பணம்தான் இடம்பெயர்ந்து வந்த வேளையில் செலவுக்கென்று இருந்தது. அது கரைவதற்குள் கொழும்புக்குச் சென்று விடவேண்டும் என்ற கவலை இவரை ஆட்கொண்டது.
கொழும்பிலிருக்கும் இவரது மகன் ஒரு தனியார் ஸ்தாபனத்தில் வேலை பார்க்கின்றார். இப்போது அந்தப் பிள்ளையை நம்பியே கொழும்புக்குப் போவது இவர்களது திட்டம்.
இவர் ஒரு தோட்டக்காரர். யுத்தம் வந்து சகலரினதும் வாழ்க் கையை சீரழித்து சின்னாபின்னமாக்கிவந்த போது அதிலே அகப்பட்டு இவரும் பலவருடங்களாகத் திண்டாடித்தவித்தார். அச்சுவேலியில், செம்மண்பாடுடைய தரையில் ஒரு கால் செய்கை பண்ணப்பட்டு செழித்து விளைந்த பெரும் மரக்கறித் தோட்டங்களெல்லாம் இந்த

V ള് நீஃபி.அருளானந்தம் 33
யுத்தம் தொடர்ந்ததில், மருந்தில்லாமல் பசளையில்லாமல் ஒரு மனிதன் கைவிரிக்கும் அளவு நிலத்துக்குள் பிறகு செய்கை குறுகிப்போயும் விட்டது.
அதையும் சீராய் செய்ய முடியாமல் தவித்தவர் இவர். செய்த தோட்டத்தையும் ஆமி வருகிறார்கள்’ என்று கேள்விப்பட்டால், விட்டு விட்டு எங்கேனும் ஓடவேண்டும். அது தண்ணின்றி பல நாட்கள் கிடந்து வாடியபிறகு. மீண்டும் அதை உயிர்ப்பிக்கச் செய்த முயற்சிகள் பயனற்றே போயின.
இப்படியும் ஒரு வாழ்வா..? - என்று வயதுக்கு வந்துவிட்ட தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு இவர் ஏங்கினார். அந்த நேரம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கொழும்பி லிருந்து மகன் அனுப்புகிற பணத்தை வவுனியாவில் வந்து இவர் வாங்கிப் போக வேண்டும். மகனும் தன் சம்பளத்துக்கேற்றாப் போலத்தான் வீட்டுக்குப் பணம் அனுப்பி வைப்பார். அதை வாங்கிப் போக மாத்திரம் பிரயாணத்துக்கென்று இவருக்கு எவ்வளவு செலவு. போக வர கணக்குப்பார்த்தால் ரெட்டிப்புச் செலவு 6IC5b......... அதைவிட உடம்புக்கும் கிளாலிக் கடல் பயணத்தாலே அலுப்பும்வேறு. இப்படி எத்தனை இடியேறுகள். இந்த உத்தரிப் பெல்லாம் இனிமேல் வேண்டாம் என்பதாய்த்தான் பிறகு இருக்கும். ‘ஓ! வாழ்வு எவ்வளவு கவலையானது என்றதாய்த்தான் இவை களையெல்லாம் பட்டுக்கழிக்கும் போது இவரது மனம் எண்ணும். முன்பு பலமுறை இப்படி வவுனியாவுக்குப்போய் வந்த அனுபவத்தில் அங்கே சென்ரியில் ஆமியின் கெடுபிடிகளையெல்லாம் நன்றாய் அனுபவித்து துன்பப்பட்டவர் இவர்.
வவுனியாவிற்குள் நுழைவதற்குமுன் இராணுவத்தின் சென்ரிக்கு வெளியே கால் கடுக்கக் காத்திருந்து, காத்திருந்து காலைவேளை கடந்து மதியத்துக்குக்கிட்டவாய்த்தான் உள்ளே செல்வதற்கு அவர்கள் அனுமதிப்பார்கள். அதுவும், வேண்டா வெறுப்பாகத்தான் அங்கே காத்திருக்கின்ற சனத்தை ராணுவத்தினர் உள்ளே போக விடுவார்கள். அப்போது இவர்களைப் பார்க்கின்ற விறைப்பு முழியிலிருந்து வெறுப்பு, கோபம், சந்தேகம், துவேஷம் என்பனவற்றை அவர்கள் அள்ளி வீசுவார்கள்.
உடலெல்லாம் தடவு தடவென்று தடவி, பையெல்லாம் உதறு உதறென்று உதறி தடுமாறி விழிக்கும் சிலரை கெட்ட புராதன வார்த்தைகளாலும் பேசி மனிதர்களைப்போல் எண்ணாது மந்தை களைப் போலத்தான் இவர்களையெல்லாம் அந்த ராணுவத்தினர் நடத்துவார்கள்.
அப்படியாகவெல்லாம் கஷ்டப்பட்டு உள்ளே சென்ற பிறகுதான்

Page 28
34 கொந்தல்
இவருக்கு அதிக திடுக்காட்டமாய் இருக்கும். உள்ளே சொற்ப இடத்துக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்து ‘பாஸ் கொடுக்கும் இடத்தில் இறங்கியதும்தான் மனம் 'திக்குத்திக்கு’ என்று இவருக்கு அடித்துக் கொள்ளும்.
“ஒய். ஐடி குடு. ၇% வளைத்து நின்று எல்லாரிடமும் அங்கே வாங்கி விடுவார்கள் அடையாள அட்டையை. இந்த அடையாள அட்டையைக் காட்டி
பதிந்துதான் நகரின் உள்ளே போய் இருப்பதற்கு அங்கே பாஸ் பெற முடியும்.
“எல்லாமா அங்கினியா போப்போ. - எனும் புறங்கை அசைவால் அனைவரையும் விரட்டுகின்றார்கள் அவர்கள்.
இனிமேல் உள்ளே வந்தவர்கள் எல்லாரிலும் இவர்களது அதிகாரந் தான் கொடிகட்டிப் பறக்கும். அவர்களது சர்வாதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகத்தான் இவர்களெல்லாம் அடங்கி ஒடுங்கி இருந்து நடந்து கொள்ள வேண்டும். மீறி இங்கு யாரும் மூச்சு விட்டால் கூட ஆபத்துதான்! அப்படி மீறியதற்குத் தண்டனையாக நடு வெயிலுக் குள் நாள் முழுக்க நிற்க வேண்டிவரும். அடி உதையும் அவர்களிடம் வாங்கிக்கட்ட வேண்டியும் வரும். சிலவேளை, வந்த இடத்திற்கே சென்ரியிலிருந்து துரத்தியும் விட்டு விடுவார்கள்.
அடையாள அட்டையை வாங்கினாற்பிறகு ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு அங்கே விசாரணை தொடங்கும் நகருக்குள்ளே போகின்ற மனிதருக்கெல்லாம் ஒவ்வொரு பிரச்சினைகள் தலைமேலே சுமையாக இருக்கும். . அதைப்பற்றியெல்லாம் அந்தப் பொலிஸ்காரர்களுக்கு எதுவித அக்கறையுமில்லை. தங்கள் பிரச்சினைகளை இவர்கள் விவரமாகச் சொன்னாலும் அவர்கள் கேட்கும் நிலையிலில்லை.
அவர்களுக்கு வேண்டியதெல்லாம் புலிகள் எங்கே காம்ப் போட்டிருக்கிறார்கள்? எங்கே பதுங்கு குழி வெட்டுகிறார்கள்? எந்தவிதமான ஆயுதங்களையெல்லாம் அவர்கள் வைத்திருக் கிறார்கள்? - என்பவைதான்!
எல்லாரையும் கூப்பிட்டு விசாரித்து முடித்து விட்டு கடைசியாகத் தான் இவரை அங்கே வரும்படி கூப்பிட்டார்கள்.
அவர்களிடம் தான், இவரது அடையாள அட்டை இருக்கிறதே! பெயரைக் கூப்பிட்டதோடு அந்த அறைக்குள்ளே இவர் போனார். மரியாதையுடன் "ஐயா இப்புடி இருங்க!” என்று தான் அங்கு இருந்து விசாரணை செய்கிற பொலிஸ்காரர் முதலில் இவருடன் கதைத்தார். அந்தப் பண்பான பேச்சைக் கேட்டு “அடடா பொலிஸ் காரர்களும் இப்படியாக மரியாதையாகக் கதைக்கின்றார்களே!” என்றதாய்த்தான் இவர் அப்பொழுது ஆச்சரியப்பட்டார். "ஐயா இங்கே பாருங்க.
99.

ള് நீ.பி.அருளானந்தம் 35 இந்த புலி அங்க இருக்கிறது நீங்க பாத்துருக்கீங்க தானே?”
“ஓம். ஓம்!” என்கிறதாய் எச்சிலை விழுங்கிக் கொண்டு இவர் சொன்னார். இனியும் என்னென்னவெல்லாம் கேட்டு வைக்கப் போகின்றாரோ? என்கிற பயத்துடன் இவர் இருக்கும்போது;
“எங்கயெல்லாம் அவுங்களே அங்கின நீங்க பாத்திருக்கீங்க". என்று பொலிஸ்பார்வையோடு அடுத்தகேள்விக்கணையைத் தொடுக்கின்றார் அவர். அப்படி அவர் கேட்ட கேள்வியினாலே, கால்களுக்குக் கீழே பூமி நகர்வது போல் இருந்தது இவருக்கு.
துவக்கைக் கண்டாலே கண்களை இறுக்கவும் மூடிக் கொள்கின்ற; அப்படியான பயந்த சுபாவம் இவருக்கு. ‘என்னிடம் போய் இதையெல்லாம் கேட்டு வைக்கின்றாரே? - என்று அதனால் இவருக்கு மனம் குழம்பிவிட்டது.
வவுனியாவுக்குப் போனால் சென்ரியில் வைத்து இப்படியான விசாரணைகள் உண்டு என்பது அங்கு போய் வருபவர்களுக்கு நன்றாய்த் தெரியும். பலரும் அங்கு போய் வருபவர்களிடம் அவற் றைக் கேட்டு அங்கெல்லாம் போய் எப்படியாக பொலிஸ்காரர்களை சமாளிப்பது என்பது பற்றி முன்பே அதற்குரிய ஒத்திகை ஒன்றை தங்கள் மனசுக்குள்ளே நடத்திக் கொள்வார்கள்.
அதிகமாக அங்கே உள்ளே வருகின்ற எல்லாருடைய பதில் களும் ஒன்றாய் இருப்பதைக் கவனித்து அந்தப் பொலிஸ் அதிகாரி களுக்கும் ஆத்திரம் வரும். இவரும் மற்றவர்களைப் போலவே அவர் கேட்ட கேள்விக்கு முன்பு தான் ஒத்திகை பார்த்து வைத் திருந்த அந்தப் பல்லவியைப் பாடினார்.
“சேர். அவங்கள் எங்கயும் துவக்கோடதான் போவாங்கள். றோட்டாலதான் போவாங்கள். அதைவிட வேறொண்டும் எனக் கெண்டாத் தெரியாது. நான் அவயளோட கதைக்கிறதுமில்லை” “பட்டுவா. என்னுடா நீ என்ன மட்டேயன் ஆக்குறுயா?. லீமா வுட்றியா நீ எனிக்கி?”
அப்பப்பா! எவ்வளவு கர்ண கடுரமான வார்த்தைகள்? சொற்ப வேளைக்கு முன் இவர் என்னை ஐயா என்று அழைத்தாரே அந்த மரியாதையெல்லாம் கண நேரத்துக்குள் எங்கே போயிற்று?. என்று அவரது இன்னொரு முகத்தைக்கண்டு இவருக்கு ஏமாற்றம். காலையிலிருந்து இப்பொழுதைய நேரம் வரையிலும் தண்ணிர் வெந்நீர் என்று குடிக்க இல்லாமல் கிடந்து காய்ந்தவருக்கு நாவும் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது போல் இருந்தது. என்றாலும் வலுவாக கஷ்டப்பட்டு.”
“நான் அவயளை றோட்டு வழிய கண்டதொழிய கதைக்கக்

Page 29
38 கொந்தல்
கிதைக்கேல்லை ஐயா. எங்க அவேயள் இருக்கினம் எண்டெல்லாம் உண்ணாணை எனக்கெண்டாத் தெரியாது நான் பிள்ளை குட்டிக் காரன். உதெல்லாத்தையும் நான் போய்ப் பார்த்ததுமில்லைக் கொண்டதுமில்லை” அவர் வெருட்டிய வெருட்டில் நன்றாகப் பயந்து என்ன சொல்கின்றேன் என்று தெரியாத விதத்தில் இவர் அலட்டினார். “அடோ நிப்பட்டுடா. அம்மட்ட. பாடுவாறாஸ்கல். நீ. நீ. புலி என்னுடா? ”
“ஐயோ நான் புலி இல்லை சேர்! " “ஒ. ஒ. அய்த்தான் சுவர். நீ ஒறிஜினல் புலிதான்!” “ஐயோ ஐயா நான் கயிற்றப்பட்டவன். பிள்ளை குட்டிக்காரன் ஐயா நான்!”
“பொத்துடா வாய். நீ புலிதான். நீ இன்னிக்கு வவுனியா போறது சரிவாறகில்லே. திரும்பி ஒன்னே நான் அவுங்குட இடங் நான் அனுப்புறது. நீ புலிதான். சுவர் சுவர் நீ புலி சப்போட்!” பொலிஸ்காரருக்கு கேந்தி கூடிவிட்டது. பல்லை நெருநெருத்துச் சினக்கொதிப்பால் பயங்கரமாயிருந்தார் அவர். அப்படியான கடுமையான சொற்கள் இவரது மூளையின் இண்டு இடுக்குகளிலும் ஒவ்வொரு நரம்பிலும் ரப்பம் போல் அறுக்கத்தொடங்கிவிட்டது. அதனால் உடல் குறாவிப்போய் உடுத்திருந்த வேட்டி இடையைவிட்டு கழரும் அளவுக்கு பயத்தால் உடல் மெலிந்ததைப் போலவும் இவர் ஆகிவிட்டார். சலம்சலமாய் உடலும் வேர்த்தது.
“ஐயா சத்தியமாச் சொல்லுறன் நான் அவங்களுக்கு சப்போட்டு மில்லை ஒண்டுமில்லை நான் சொல்லுறதுகளையும் நம்புங்கோ. ஐயா! இவரது மனத்துயரம் முழுக்கவும் முகத்தின் மூலம் வெளிப்படை யாகத் தெரிந்தது. இவரது முகத்தைப்போலவே விசாரணையின் போது பலரது முகங்களையும் கண்டு பழகிப்போய் மனம் கல்லாய்ப் போய்விட்ட அந்த பொலிஸ்காரர் எவ்வித சலனமுமின்றி கொஞ்ச நேரம் இருந்து யோசித்து விட்டு வெறுப்புடன் இவரது அடையாள அட்டையை தன்கையில் எடுத்து நீட்டினார்.
"இந்த வாட்டி நாண் உன்னே விட்றேன் இனி நீ அப்புறம் இங்கினேவா வந்தது எல்லாம் சர்றியா எனிக்கி நீ சொல்லோனும் சறியா” மிருகத்தனமான அலட்சிய பாவத்துடன் அவர் சொன்னார். அவர் சொன்னதுக்கு உடனே தலையைத்தான் லேசாக இவர் ஆட்டினார். அடையாள அட்டையை கையில் வாங்கிக் கொண்டால் போதுமென்று இவருக்கு அப்போது இருந்தது. வெளியே உள்ள அந்த மண்டபத்தில் வந்தவர்கள் முழுக்க நிரையில் நின்றுகொண்டிருக் கிறார்கள். அங்கேதான் ஒருநாள் பாஸ் கொடுபடும் என்பதால் இவரும் போய் அவர்களுடன் ஒரு நிரையின் பின்னால் நின்று

இ நீ.பி.அருளானந்தம் 37
கொண்டார்.
“என்ன மாதிரி ஆணவம் பிடிச்சவங்கள். அக்கிரமக் காரன்கள்” என்று பொலிஸ்காரர்களையும் ராணுவத்தினரையும் ‘பாஸ் எடுக்க வென்று நிரையில் நின்றபோது இவரது உள்ளம் நினைத்துப் பார்த் தது. அதனால் சுரணையுள்ள இவரது உள்ளம் அடிபட்டு விழுந்த கருவண்டைப்போல் சுழன்று சுழன்று துடித்தது.
இவர் உள்ளே வரும்போது சென்ரியில் வைத்துக் கண்ட சம்பவமொன்று மீண்டும் இவரது கண்ணுக்கு முன் பளிரடித்தபடி காட்சிக்கு வந்தது.
அங்கேயிருந்து இவருடன் உள்ளே வந்தவன்தான் அவன் - அவனுக்கு நடுத்தர வயதுதான் இருக்கும் - சரியான நாட்டுக்கட்டைவாயில் ஒரு சுருட்டை வைத்துப் புகைத்துக் கொண்டிருந்தான்/ அவன் உல்லாசமாக அதிலே நின்றபடி சுருட்டுப் புகைப்பதைக் கண்ட ஒரு ராணுவத்தினன்.
“சுருட்டு பத்துகறனுவாத ஏக்க கண்ட. காப்பாங் ஒய்” (அதை சாப்பிடு) என்று துவக்குப்பட்டியை தோளிலிருந்து கழற்றி துவக்குக் குழலை நேராய் அவன் முன் நீட்டினான். அவனது அதட்டலிலே பயத்திலும் பதட்டத்திலும் ஆட்பட்டுப்போய் நெருப்புடன் அந்தச் சுருட்டையே சப்பி விழுங்கிவிட்டான் அந்த அப்பாவி. அதை விழுங் கும் வேளையில் சுருட்டுக்காரத்தால் மார்புக்கூடு பிரிந்து விரியும்படி யாக அவனை ஊடறுத்தது இருமல். அந்த விகாரக்காட்சியைக் காணவும் நீண்ட பெருமூச்சுகள் இவரிடத்தில் உண்டாகியது. அதனால் மனசுக்குள் இவருக்கு அக்கினிப்பந்து சுழன்றது.
"நாங்களெல்லாம் இவர்களது கண்களுக்கு மனிதர்களல்ல. மிருகங்கள்1. காட்டிலிருந்து வழிமாறி நாட்டுக்கு வந்து விட்ட மிருகங்கள். என்கிறதாய் நினைத்து இவரது மனம் நரக வேதனைப் பட்டது - உலகம் புளித்தது.
எப்படியோ அந்த நிரையில் நீண்ட நேரமாய் நின்றிருந்து நிலத்தில் குழி பறித்து. நகர்ந்து நகர்ந்து சென்று ‘பாஸ்சுடன் சூரியன் மேற்கே கீழடிபோக ஆரம்பிக்க வவுனியாவிற்குள் சென்றார் இவர். நெடுகவம் அதிலே நின்றிருந்ததில் கால்களும் ‘பூர் பூர்- என்று அவருக்கு வீங்கிவிட்டது.
பட்ட இம்சைக்கெல்லாம் மன அமைதிதேடி காற்றில்மிதக்கும் பஞ்சுபோல் மதுக்கடைகளுக்கு அங்கே சிலர் பறந்தோடினர். உள்ளே வந்த வியாபாரிகள் கடை வழியேநின்று சந்திரிகா பையினுள் சாமான்களை வாங்கி திணித்துக்கட்டி காலையிலே மீண்டும் புறப்படும் நிலைக்கு தங்களை தயார் படுத்துகிறார்கள்.
இவர் கொழும்பிலுள்ள தன் மகனுடன் தொலைபேசியில் தொடர்பு

Page 30
38 கொந்தல்
கொண்டு கதைப்பதற்காக ஒரு கொமினிகேசனுக்குள் நுழைந்தார். தொலைபேசியில் கதைத்தபோது மகன் நாளைக்கு வருவதாகக் கூறினார்.
பிறகு கடையிலே சாப்பாடு - லொட்ஜிலேபடுக்கை - என்று அந்தப் பணத்தை மகனிடம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போகும்வரையும் ஏதோ அன்நிய நாடு ஒன்றிற்குள் ஒரு எதிரியைப் போல புகுந்து பயத்துடன் இருந்து விட்டு திரும்ப வேண்டியதான ஒரு துர்ப்பாக்கியநிலை இவருக்கு ஏற்பட்டது.
கோடை இடி இடித்தது மாதிரி நெஞ்சை அதிரவைக்கிறது இந்த நினைவுகள். அவைகளை நினைத்துத்தான் இவருக்கு இப்பொழுதும் கவலை. தான்பட்ட இம்சைகளையெல்லாம் தன் பிள்ளைகளும் அவர்களிடம் படவேண்டியதாய் வருமோ?- என்று தன்னை எரித்துக் கொண்டிருந்தார்.
பொழுது பட்டுப் போனால் இவரது குடும்பத்தவரும் அந்த வீட்டுச் சொந்தக்காரர்களும் வெளியே வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டு இந்தப் பிரச்சினையில் நாட்டு நடப்புகள் பற்றித்தான் கதைத்துக் கொள்வார்கள்.
“யாழ்ப்பாணத்தில இருந்து வந்த அந்தக் குடும்பம் நேற்று பெண்டு பிள்ளையளோட சென்ரியால உள்ளே போயிட்டுதுகளாம். இண்டைக்கு அடுத்தவீட்டில இருந்த ஆக்களும் பிள்ளையளோட உள்ள போயிட்டுதுகளாம்"
இப்படியான செய்திகளை அந்த வீட்டுச் சொந்தக்காரரிடமிருந்து காதில் கேட்கக் கேட்கத்தான் இவர்களுக்கு உள்ளம் சோர்வடையும் ஒரு நிலை தோன்றும். இதெல்லாவற்றையும் கேள்விப்பட அன்று இரவு இவர்களுக்கு ஒழுங்கான நித்திரையுமில்லை நிம்மதியுமில்லை! விடியற்காலையில் குளிர்ந்த காற்று வீசிய பொழுதுங்கூட இவர்கள் கண்ணோடு கண்மூடவில்லை!
ஒவ்வொரு நாளும் காலையில் உடுப்புப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு இவர்களெல்லாம் வானில் ஏறிப்போய் இறங்கி அங்கு வந்திருக்கும் மற்ற சனங்களோடு வவுனியாவிற்குள் போக சென்ரிக்கு அருகில் நிற்பார்கள். கொக்குகள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு நீர்ப்பரப்பையே உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதுபோல் இவர்களும் அந்த ஆமி சென்ரியை பார்த்துக்கொண்டிருப்பார்கள். தங்களையும் கூப்பிட்டு உள்ளே போக விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மதியம் வரை அதிலே கால் கடுக்க நின்று சோளம் போட்டால் பொரியாகி விடும் அப்படியானதொரு வெயிலில் கிடந்து காய்வார்கள். வெயிலுக் குள் நின்று கொண்டிருந்ததால் அவர்களின் முகங்களெல்லாம் தோல்சிவிய கருணைக்கிழங்கைப்போல ஆகிவிடும்.

ള് நீ.பி.அருளானந்தம் 39
‘அப்பா! தண்ணியத் தண்ணியக் குடிச்சும் அடங்காம நெஞ்சு எரியிறமாதிரிக் கிடக்கு. உங்கனைக்க ஒரு சோடா வாங்கி நானும். எல்லாரும். குடிப்பமே”
இவரது மூத்த மகள் தாகத்தைத் தாங்கமாட்டாள் கொண்டு வந்த தண்ணிரை கடக்குக் கடக்கென்று குடித்து முடித்து விட்டு அதிலே நிற்கும்போது சோடாவுக்கு ஏங்குவாள்.
அவள் கேட்டவுடனே “வாங்கிக் குடியனம்மா” - என்பார் இவர், விலையைக்கேட்டால் அந்த இடத்தில் “நூறு ரூபாய்தான் அதை விடக்குறைக்கேலாது” என்பார்கள் அவர்கள்.
“சரி சரி குடும்” என்று அவரே சோடாவை வாங்கிக் கொடுப்பார். அதை கையில் வாங்கிக் கொண்டு மகள் இவரிடம் கேட்பாள் “ஏனப்பா. ஜி.ஏ யின்ரை லிஸ்டில எங்கட பேரையும் குடுத்திருக் கிறியள்தானே. இந்த சென்ரியில இருந்து எங்கடை பேரையும் சொல்லி ஆமி கூப்பிடும்தானே?” “என்னவோ அம்மா. அப்பொருக் கால் உள்ள போகேக்கை அங்கின கஸ்டப்பட்டு நானும் ஜி.ஏ-யிட் டப் பதிஞ்சநான்தான். பிறகு அதுகளைப்பற்றி எனக்கு என்னதான் விளங்கும் இவர்கள் தான் இனி எங்களைக் கூப்பிடோணும்”
“என். னனப்பா நீங்கள் சொல்றியள். ஒண்டரை மாசமாய் வவுனியாவுக்க போறதுக்கு ஒவ்வொரு நாளும் நாங்களும் இங்கினை வந்து நிண்டு கொண்டு தூங்கிறம். ஏப்பை சாப்பையாத்தான் நாங்களும் இதில நிக்கிறம்போல. உங்க போறதுகளெல்லாம் பேர்கூப்பிடக் கூப்பிடப் போகுதுகள். ஆனா இவங்கள் எங்கட பேரைச் சொல்லி கூப்பிடேல்லயே அப்பா!” விரக்தியுள்ள அவளது பேச்சு காய்ந்துபோன இலைச்சருகுகளின் குவியலாக இருந்தது. இதை சொல்லும்போது கவலையினால் அவளது கண்கள் குளமாகின் றன. இவரது மனைவியும் நொந்து நூலாகிற மாதிரி வாடிவிட்டாள். இளைய மகள் எல்லா கவலைகளையும் பொறுத்துக்கொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள்.
லஞ்சம். லஞ்சம். எங்கேயும் இந்த லஞ்ச ஊழல்கள்தான் இந்தப் பிரச்சினையின் போது தலைவிரித்தாடுகிறது.
ஆண்டபண்டம் முழுவதையும் விட்டு விட்டு உப்புக் கல்லுக்கும் துப்பில்லாத நிலையில் உடு துணி மணிகளை மட்டும் கொண்டு இடம் பெயர்ந்து வந்தவர்களிடமும் லஞ்சம் பெறாது கடமையாற்று வதற்கு யாருமே அப்போது தயாராக இல்லை.
பொலிஸ், ஆமி, கிராம சேவகர்கள் - என்கிற கூட்டமே லஞ்சப்பட்டாளங்களாக இருந்து மக்களின் பணத்திலே பசியாறி னார்கள். ‘பாஸ்' என்ற பேய் இவர்களுக்கு சாதகமாயிருந்து மக்களின்

Page 31
40 கொந்தல் பணத்தை கொள்ளையிட்டுக் கொடுத்தது.
இப்படி அலையுண்டு வந்தவர்களின் பணத்திலே இந்த வேளை களில் அவர்களெல்லாம் கொழுத்தார்கள். பெரும் வாழ்க்கை வசதிகளைக் கண்டார்கள்.
இவரும் இப்படி சில இடங்களில் திரிந்து நம்பிப் பணத்தை செலவழித்து கடைசியில் ஏமாந்தார்.
வீட்டிலே அதையெல்லாம் சொல்ல முடியாததால் அவர்களுக் குத் தெரியாமல் எல்லாவற்றையும் மூடி மறைத்தார்.
இப்போது கையில் இருந்த சொற்பப் பணமும் இவருக்குக் கரைந்து கொண்டிருந்தது.
“எப்பவெண்டாலும் ஒரு நாளைக்கு எங்களை உள்ள போக விடத்தானே வேணும்?”
மனத்தில் மண்டிக் கிடக்கிறது இந்த நம்பிக்கை. இப்படியாக இவர் ஒவ்வொரு நாளும் அந்த ஆமி சென்ரியடியில் வைத்து தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொள்வது அன்று ஏனோ அது வெறும் பேச்சல்ல. நிஜம்தான்! என்றதாய் ஆகிவிட்டது. இவரது குடும்பமும் அந்த நன்நாளில் உள்ளே போவதற்குக் கிடைத்தது. பாதை திறந்தது என்ற மகிழ்வில்தான் இவரது குடும்பம் உள்ளே சென்றது. ஆனால், உள்ளே போய் பட்டுக்கழித்த வேதனையெல்லாம் இலகுவில் சொல்லி விளக்கிட முடியாதவை.
மாறி மாறி பல முகாம்களில் இருந்து வாடிய வாழ்க்கை ஒரு மனிதனின் ஆகக்குறைந்த எளிய வாழ்க்கையிலும் பார்க்க இழிவு வாழ்க்கையாக இவர்களுக்கு இருந்தது.
எஸ்கிமோக்களின் ‘இக்ளு வீடுகளைப் போன்ற இட விஸ்தாரமற்ற குறுகலான இடங்களில் மாடுகளை விரட்டி மடக்கிக் கொண்டு போய் பட்டியில் அடைத்தது மாதிரி இவர்களை அடைத்து விட்டு பன்றிக்குத் தீனி போட்டது போல் சாப்பாடு கொடுத்ததை எந்த ஜென்மத்திலும் மறக்கமுடியாது.
எங்கோ ஒரு நாளில் எவருக்கும் விடுதலை இருக்கும். அது இவர்களுக்கும் உண்டு என்பதாய் ஒரு நாள் விடிந்தது. காடாந்த காரமான சிறை போன்ற அந்த இடத்தில் இருந்து வெளியேற இவர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
கோழிக்கூடு முகாமிலிருந்த இவர்களுக்கு அன்று கொழும்புக் குப் போக பாஸ் கிடைத்தது. முறிந்து ஊசலாடிக் கொண்டிருந்த அவர்களது மனசெல்லாம் வெள்ளம் வடிந்த நாணலைப்போல தலைதூக்கின. அந்த முகாமிலிருந்து அவர்களுக்கு அன்று விடுதலை. இவர்களது மனங்களிலே அந்தப் பொழுதின் ஆனந்தம்

இS நீஃபி.அருளானந்தம் 41
குமிழிட்டுக் கொப்பளித்துப் பெருகிற்று. இவர் மகிழ்ச்சியுடன் சிரித் தார். இவரது மனைவியும் அவரோடு சேர்ந்து சிரித்தாள். தாயையும் தகப்பனையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளும் சந்தோஷத்தில் சிரித்தார்கள். இவ்வளவு காலமும் சீரழிந்து போன வாழ்க்கையில் இப்போதுதான் அவர்களால் உண்மையில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது.
இருந்தும் என்ன பயன் யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இவர்களால் பிற்பாடு முற்றிலும் ஈடுசெய்து கொள்ள முடியவில்லை. பெண்பிள்ளைகளுக்கு வயது போய் விட்டதாலும் போதிய பணம் கையில் இல்லாததாலும் சீதனச் சந்தையில் பெண் பிள்ளைகளை கரை சேர்க்க ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க இவர் பல வழிகளிலும் எதிர் நீச்சல் போட்டார்.
ஒருவாறு பிள்ளைகளின் காரியம் முடிந்தது. என்றாலும் தன் சொந்த ஊரை விட்டு வந்து இன்று வாடகை வீட்டில் இருக்கும் இவருக்கு ஒழுங்காக இரவில் நித்திரையில்லை, நிம்மதியில்லை!
வீடு வாசல் இழந்த சோகம் இவரது முகத்தில் இருட்டாய் அப்பியிருக்கிறது. யாருடையதோ ஒரு இடம் யாருடையதோ ஒரு வீடு எனதென்று சொல்ல இங்கு ஏதுண்டு என்ற ஏக்கம்.
இந்த நிலம் எனக்குச் சொந்தமில்லை! இந்த வீடு எனக்குச் சொந்தமில்லை! இந்த மரம், நிழல், காற்று, தண்ணிர் ஒன்றுமே எனக்குச் சொந்தமில்லை! என்தாயக பூமியில் மீண்டும் போய் வாழக்கிடைக்குமா?
ஒவ்வொரு கணமும் இதே ஏக்கம்தான் இவரது மனத்தை கொத்திக் கிளறிக் கொண்டிருக்கிறது. என்ன ஏது என்று தெரியாத திக் பிரமையிலேயே இவர் எந்நேரமும் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கி றார். அள்ளி அள்ளிப் பிடிக்கும்போதும் பிடிப்பை வழுக்கிக் கொண்டு தூர தூரப் போகும் வாழ்க்கை. இவர் விருப்பம்போல இயங்க முடியாமற்போகும் போதாமைதான் இது, இந்தச் சிந்தனைக ளெல்லாம் மந்தித்து மறைவதற்குள்.
‘ஏதடா அந்தச் செங்காய் நிலத்தில் விழுந்துவிட்டதே' - என்று அந்த மாமரத்தின் அடியில்போய்ப் பார்த்தார் இவர்.
அந்த மாங்காயை கீழே விழுத்திய அணில் மறுமறு மரத்துக்குத் தாவிப் பாய்ந்து சென்றது. நிலத்தில் கிடந்த மாங்காயை காலால் தட்டிப் பார்த்தார்.
அது கொந்திக் கிடப்பது தெரிந்தது.
கணையாழி
(Gio Loraité - 2004) -o-HaKOOOC

Page 32
மீனாட்சிக்கு செய்து முடிக்க வேண்டியதாய் பல வேலைகள் இன்னமும் இருந்து கொண்டிருந்தன. கைச் சுருக்காக அத்தனையும் செய்து முடித்தால்தான் நேரத்தோடு வேலையை விட்டு கடை கண்ணிக்கு அவளால் போகமுடியும். நாளைய பொழுது மலர்ந்தால் சித்திரைப் புது வருஷம்! அதற்காக அவள், தனது ஐந்து வயதுச் செல்வத்திற்கு அழகானதொரு பட்டுச் சட்டை வாங்கவேண்டும்!
எதைப்போட்டாலும் அவன் அழகாகத்தான் இருப்பான், அவன்
 

ള് நீ.பி.அருளானந்தம் 43
அப்பனைப்போல. என்றாலும் இந்தப் புது வருஷத்துடன் அவனுக்கு ஐந்து வயது நிறைவடைகிறதாகக் கணக்கு வருகிறது. அதாலே, இந்த வருஷத்துக்கு பிரமாதமாய் தெரிவு செய்து ஒரு சட்டை வாங்க வேண்டும். பிற்பாடு, அவருக்கும்தான்! ஒரு சாரமாகிலும் பார்த்து வாங்கிப் போகவேணும். பாவம் மனுசன்! அந்த ஒரு சாரத்தையே தனியே எத்தனை நாள்தான் உடுத்திருந்து பிறகு கழுவிப்போட்டு அதையே காயமட்டும் பார்த்து நம்பி இருப்பார்!. அடுத்து பட்சணம் ஏதாவது பண்ண வேண்டும். அதற்காக, எண்ணெய் சட்டி அடுப்பேற எவ்வளவெல்லாமோ செலவாகுமாமே?
ஊரெல்லாம் நாளைக்கு புதுவருஷக் கொண்டாட்டம். இரவு அக்கம்பக்கத்து சிறுசுகளெல்லாம் பட்டாசு வெடிப்பார்கள். மத்தாப்பூ கொளுத்துவார்கள். என் கண்ணன் கையிலும் மத்தாப்பூக்குச்சியைக் கொடுத்து கொளுத்தச் சொல்லிவிட்டு அவன் கைகளைப் பிடித்துச் சுற்ற வேண்டும். அந்த மத்தாப்புகள் விண்மீன்களாக சிதறி உதிரும் அழுகைப்பார்த்து என்.செல்வம் மகிழ்ச்சியில் சிரிக்கையிலே எவ்வளவு அளப்பரிய ஆனந்தம் எங்களுக்கு!
இத்தனையும் கொத்தாகச் சேர்த்து நினைத்துப் பார்த்த மீனாட்சிக்கு. நேரம் போகிறதாயில்லையே என்ற அவதியான நிலை!
மொத்தமாக உள்ள இத்தனை காரியங்களையும் வீட்டுக்கு சிறப்பாய்ச் செய்ய வேண்டிய கடமையில் உள்ளவர் அவள் புருஷன்தான்! என்றாலும், காளிக்குத்தான் இன்று எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய உடம்புக்கு முடியாமல் போய் விட்டதே -
நன்றி விசுவாசமாய் மாடு மாதிரி பாடுபட்டதற்கு இந்த முதலாளி என் புருஷனுக்கு என்னத்தைத்தான் குடுத்துக் கிழிச்சார்?. காலையில் எழும்பி லொறியில நாட்டுக்குப் போய் தானியங்களை அளந்து சாயந்தரம் இங்கினையா வந்து ஸ்டோரில முடைங்களை அட்டி போட்டு அடுக்கு மட்டும் எம்முட்டு வேலை அவருக்கு! அவைகளைக் கொள்முதல் செஞ்சிக்க நாட்டுப்புறம் போனா சாக்கிலே கிடக்கிற சாமான்களை நிலத்தில கொட்டி மறு சாக்குக்கு அள்ளிப் போட்டு நிரப்பி சணலால வாயை தைச்சிக்க வேணும்.
அப்புறம் அதை லொறிக்குத் தூக்கிப் போக வேணும். அதுக்குள்ளேயும் அளவுகணக்காய் அட்டிபோட்டு அடுக்கவேணும் இந்த வேலையாலே உள்ள தூசுதும்பு எல்லாத்தையும் மேல் வழிய வாங்கி "கச கச வென்ற அந்த கடிவேதனையோடு லொறியில திரும்பி வந்து கொண்டிருக்கிறப்போ எங்காவது ஆறு

Page 33
44 சிலந்தி குளத்தைக் கண்ணால கண்டிட்டா லொறியை நிற்பாட்டச் சொல்லிட்டு குளிச்சு முழுகவும்தானே வேணும் அப்படி முழுகிக் குளிச்சப்பிறகு வேலை முடிஞ்சு உழைச்சுக்களைச்ச மனுசனுக்கு துாக்கம் வரும்தானே? லொறி ஓடிக் கொண்டிருந்தப்போ பின்னாடி மூட்டைமேல இருந்தவருக்கு அசதில கண்ணை சுழட்டியிருக்கு. தன்னை அறியாம கிடந்து தூங்கிட்டாரு.
அந்தப் பாழும் தூக்கம் வந்து கெடுத்ததால்தானே அவரு லொறியில பின்னாடி இருந்து கீழே விழுந்தாரு. அதனால நாரிப் பக்கம் அடிபட்டு இன்ணைக்கு பாரமான ஒரு வேலையாச்சும் செய்யமுடியாம போயிச்சே!. பெரிசா பச்சைக்கோடு போட்ட கோணியில வாய்முட்ட உளுந்து போட்டு தைச்சாச்கூட மவராசன் குழந்தையைத் தூக்கிற மாதிரி இலேசா முதுகில தூக்கிப் போவாரு.
ஆனா, இண்ணிக்கி குடிக்கிற தண்ணிச் செம்பையே கையில இத்துணுண்டு நேரம் கூட வைச்சிக்க முடியாம கிடந்து தவிக்கி றாரே?. மகமாயி என் மவராசன் அதில உசிரோட தப்பிச்சதுவே யேன்தாலிபாக்கியம்.
புல்லானாலும் எனக்கு என்புருஷன்தான் வேணும் வேலை செய் யாம அது வீட்டில கெடந்தாலும் இத்தினிக்காலமா சம்பாரிச்சுக் குடுத்த அவருக்கு என் கை இனி உழைச்சுப் போடும்!”
தன்பாட்டுக்கு இருந்து இப்படியெல்லாம் சொல்லி மனசை தேற்றிக் கொண்டாள் அவள்!
ஜன்னலின்றி மூடிக்கட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய களஞ்சிய அறையிலே இருந்து மீனாட்சி தன்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தாள். அந்தக் களஞ்சிய அறையின் ஒரேயொரு கதவுமட்டும் முழுமையாகத் திறந்திருந்தது. இதனால், அங்கே போதியகாற்று உள்ளே வராததால் தானியங்களின் வாடையும் தூசு தும்புகளின் வீச்சமுமாகவே அறை முழுக்கவும் முட்டியிருந்தது. கீழே நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த பெரிய படங்கில் ஒரு புறம் குவிக்கப்பட்டிருந்த நிலக்கடலையை சுளகால் புடைத்து சப்பிசவலை நீக்கி - சாக்குகளில் மூச்சுவிடாமல் அள்ளிப்போட்டு சலித்துப்போய் பெருமூச்சுசெறிந்தாள் அவள். அவள் சுளகால் கடலையை புடைத்துக் கொட்டும் அழகை வாசலில் நின்றவாறு விழியிமைக்காமல் பார்த்த வண்ணம், குப்புசாமி முதலாளி சில நிமிடங்கள் சிலைபோல நின்றார். உடல் உழைப்பால் உருண்டு திரண்டிருந்த அவளது அங்கலாவண்யங்களையும், இயற்கையாகவே செழிப்பாக வளம் பெற்றிருந்த அவளது கறுநிற மேனி மினுமினுப்பையும் பார்க்கையிலே

ള് நீ.பி.அருளானந்தம் 45
அவரது ஆசைத்தீ மேலும் எண்ணெய் ஊற்றி விட்டாற் போல் பற்றி எரிந்தது.
குப்புசாமிக்கு, அழகும் குணமுமாய் மனைவி வீட்டில் இருந்தாலும் குறையும் குற்றமுமாய் அந்த ஆஸ்துமா வியாதி அவளிடத்தில் குடிகொண்டு விட்டதால், நோயாளி என்ற ஸ்தானத்திலேயே அவள் வீட்டில் காலத்தை ஒட்டவேண்டியவளாய் இருந்தாள். மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் அவளுக்கு, அலோபதி, ஹோமியோபதி, சித்த வைத்தியம் என்று மாறிமாறிப் பார்க்காத வைத்தியமில்லை! சாப்பி டாத மாத்திரைகளுமில்லை!
மனைவியின் இந்த நிலையைக் கண்டு குப்புசாமிக்கு மனவருத்த மாகத்தான் இருந்தது. என்றாலும், உடல்வருத்தம் ஒன்றுமேயில்லாத அவருடைய தேக்கு நிகர் தேகம் - விலாப்புடைக்கத் தின்று தின்று திமிர் முற்றியதால், எங்கேனும் நுனிப்புல் மேயும் வழியிலேயே வேகம் கொடுத்துக்கொண்டிருந்தது. இதற்காகவே தனது வீட்டில் வேலை செய்யும் மீனாட்சியை அவர் செக்குமாடு மாதிரி சுற்றி சுற்றித் திரிந்தார். எப்போதாவது தனது இச்சைக்கு மீனாட்சி பச்சைக் கொடிகாட்ட மாட்டாளா, என்றவாறிருந்து அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஏங்கித் தவம்கிடந்தார். முன்பு அவரிடம் நன்றி விசுவாசமாய் பலகாலம் வேலை பார்த்த காளியின் மனைவிதான் மீனாட்சி என்றாலும் அவரது பணச் செருக்கு எல்லாவற்றையும் மறந்து நாய்க் குணம்கொண்டு அவளையே மோப்பம் பிடித்துக் கொண்டு அலைந்தது.
ஒரு காலை நீட்டி மறு காலை மடித்தவண்ணம் இருந்தவாறு சப்பிக் கடலையைப் புடைத்து குமியலாக கொட்டிக் கொண்டிருந்த வளின் கவனம், சுளகைவிட்டு ஒரு கணம் வாசலண்டையில் சென்றது. அங்கே முதலாளி நின்றுகொண்டு தன்னையே கண்கொத்திப் பாம்புபோல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நழுவிக்கிடந்த முந்தானையை இழுத்து விட்டு அவள் சரி செய்து கொண்டாள். உடனே சாதுரியமாக பேச்சைக் கொடுத்து, அவரை அங்கிருந்து அகற்றி விடும் நோக்கில்.
“ஏனுங்க முதலாளி வேற வேலை ஏதாச்சும் இருக்குங்களா..? அப்பிடீன்னு இருந்தா அங்கினையா நிண்ணுகிட்டே சொல்லிட்டுப் போங்க. அப்படியே ஒழுங்கா எல்லாத்தையும் நான் செஞ்சிடறேன்!” - என்றாள்.
"இல்லை மீனாட்சி! இப்போ ஒண்ணும் அவசரமில்லை! நீ ஆறுதலா செஞ்சிக்க நாளைக்கு வருஷம் பிறக்குதெல்ல அதால absol LLG..... நாளையிண்ணிக்குத்தான் கடலையெல்லாம்

Page 34
46 சிலந்தி கடைக்கெடுத்திட்டுப் போவேணும்! அப்புறம் தான், கொழும்புக்கு விலை விசாரிச்சு லொறிக்குப் போடணும். நான்வந்ததெல்லாம் அந்த சமாச்சாரத்துக் கில்ல!. நீ வருஷத்துக்கு பணம் கேட்டி யெல்ல அதைப் பத்தித்தான் பேசணும். எல்லாம் மறந்திடுச்சு!. அண்ணைக்கு நீ எவ்வளவு பணம் கேட்டே?”
மறதி இருந்தால் குப்புசாமி ஒரு பெரிய வியாபாரியாக கொழுத்த பணக்காரனாக வந்திருக்கவேமாட்டார். அவர் கள்ள மூளையில் நரி. மீனாட்சி அன்று கேட்ட பணம் ஞாபகத்தில் அவருக்கு இப்பொழுதும் நிலைத்திருந்தது. என்றாலும், அவளை தன்வைலையில் சிக்க வைப்பதற்கு இப்படியான சந்தர்ப்பம் இனிமேலும் கிடைக்காது என்பது அவரது கள்ளமுள்ள மனசிலே அலைதட்டிக் கொண்டிருந்தது. இதனால்தான் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சிலந்திவலை போல் பாவித்து அவளை அதில் சிக்கவைக்கின்ற தந்திரத்திலே அவர் முழுவதுமாக முனைந்து நின்றார்.
ஆனால், மீனாட்சியின் இன்றைய நிலையோ பரிதாபமாயிருந் தது! நாளைய வருஷத்தை நினைத்ததும் குப்புசாமியின் மாய் மாலத்தை அறிந்து கொள்ள அவளால் முடியவில்லை, இதனால், இப்பொழுதும் அவள் மீண்டும் அவரிடம் இரப்புடன் நின்றாள்.
“முதலாளி அண்ணைக்கு ஆயிரம் ரூபா எனக்கு கடனா கொடுங் கோண்ணனே!. அப்புறம் அந்த தொகையில இருந்து இருபது ரூபா வீதம் எனக்குக் குடுக்கிற நாளாந்த கூலியில இருந்து பிடிச்சுக்குங்க எண்டேனா. புது வருசம் வருதில்லையா, என் பிள்ளைக்கும் அதையிதைவாங்கிக் கொடுக்கணும். சின்னஞ்சிறிசு அதுக்கும் நாலு குழந்தைங்களுக்கு இருக்கிற ஆசை இருக்கும், அதாலதான் இந்தப் பணத்தை உங்ககிட்ட நான் கடனா கேட்டுக்கிறேன்!.”
‘இதெல்லாம் எனக்கு என்ன பெரிய த்ொகை மீனாட்சி. அதுக்கு மேலாலையும் நான் உனக்கு தர்றன். நீ ஒண்னும் திருப்பிக் குடுத்துக்கவேணாம்! காளி இருக்கிறப்போ இந்த மாதிரி நல்ல நாள் பெருநாளுகளில புதுசா அவனுக்கு துணிமணியும் சேர்த்து குடுப்பேனா. இப்போ அவன் உடம்புக்கு முடியாம போயிட்டான். இப்ப நீ இங்க வேலைக்கு வந்திட்டாயில்ல. அதனால இந்த வாட்டி உனக்கு புதுசா புடவை எடுத்து வைச்சிருக்கேன். நேரத் தோட ஐஞ்சு மணிவாட்டி நீ வேலைய முடிச்சுக்கிட்டுவா!. எல்லாத்தையும் தர்றேன்!.
உனக்காகத்தான் எல்லாமே!” - என்று கூறியபடி கண்களால் அவளை சாப்பிட்டுவிட்டு.

ള് நீ.பி.அருளானந்தம் 47
“வீட்டில அம்மாவும் இண்ணிக்கி நாலுமணிவாட்டி கோயிலுக்குப் பூடுவா”. என்ற கதையையும் சேர்த்து அவளிடம் வாழைப்பழ ஊசியாய் பேசினார்.
“அது ஒண்ணுமே எனக்கு வேணாம் முதலாளி. நான் கேட்ட னல்ல அந்தப் பணத்தை மாத்திரம் கடனாக் குடுங்க. அதிலயே நான் எல்லாத்தையும் திருப்தியர் வாங்கிக்குவேன்!. அப்போ நான் வேலையை சீக்கிரமா முடிக்கணுங்க!” - என்று அவரை அந்த இடத்தைவிட்டு அகற்ற அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தலைப்பட்டாள் அவள்.
அதிலே நின்றதில் பலன் ஒன்றும் கிடைக்காததால் ஆயாசம் தீர்க்க ஒரு பெருமூச்சை விட்டு விட்டு. ‘இந்தப் பூனை கள்ளங் கண்டு விட்டதோ?. என்றவாறான குழப்பத்தில் அந்த இடத்தைவிட்டு பக்கத்தே இருந்த கணக்கு எழுதும் அறைக்குள் நுளைந்தார் அவர்!
‘சனிப்பிடிபானுங்க!. வெருவாக்கலங்கெட்டதுக!. கூலி வேலைக்கி வந்திட்டோமுண்ணு பொம்மனாட்டிகளையெல்லாம் என்னவா நினைக்கிறாங்க?” என்று அவரை திட்டித் தீாத்தவாறே தனது ஆக்ரோஷத்தையெல்லாம் சுளகில் காட்டி, படக்குப்படக் கென்று விரைவாக கடலையை புடைத்துத் தள்ளினாள் மீனாட்சி. லொறியில விழுந்து நாரி உடைஞ்ச மனுசனுக்கு வைத்தியத்துக் கிண்ணு செலவுக்கு ஐநூறு ரூபாக்கு மேல ஒரு சதம் கூட இந்த ஒரு வருஷம்முடியுது குடுக்கல்ல. எனக்கிப்போ அள்ளிக் குடுக்கிறதுக்குப் பாகாயில்லே உருகிக்கிறாரு!” - என்று அவளது வாய் முணு முணுத்தது.
குப்புசாமி முதலாளி வாசலில் வந்து நின்றவாறு தேவையில்லாத விஷயங்களையெல்லாம் பன்னிப்பன்னிப் பேசிவிட்டுப்போன தோரணை மீனாட்சிக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை! அவளுக்காக அவர் பரிதாபப்பட்டு வழிந்த விதமும் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்திருந்
55.
முன்பு இப்படித்தான் அந்தக் களஞ்சிய அறையினுள் அவர் வந்திருந்த தருணம் அவளும் அங்கு வேலையாக இருந்தாள். அந்த நேரம் அட்டியில் கிடந்த மூடையொன்று இலேசாக கட்டு இளகி வாய் பிளந்திருந்தது. இத்தறுதிக்கு அது முழுவதும் வாய் பிளந்ததாய் விடவே உளுந்து மணிகள் மேலே இருந்து கீழே நிலத்தில் வாரி இறைத்தன. அதைக் கண்டதும் மீனாட்சி எழுந்து நின்று கைகளை உயர்த்தி மேலே உள்ள கோணிப்பையின் வாயை குவித்துப் பிடித்தாள். இச்சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாய்

Page 35
48 சிலந்தி பயன்படுத்த நினைத்த குப்புசாமி விரைந்துசென்று அவளோடு ஒட்ட நின்று அணைத்து தானும் உதவுவது போல் பாவனை செய்தார்.
மீனாட்சிக்கோ அவர்கிட்ட வந்ததும் நெஞ்சில் 'திகில்' என்றது. அவரது தேகம்பட்டது தீயைத் தீண்டிவிட்டாற்போல் இருந்தது. தாடைகள் வலிக்குமளவிற்கு பல்லைக் கடித்து மெல்ல வாளை மீன்போல நெளிந்து நழுவி அந்த இடத்தில் அவரிடமிருந்து தப்பினாள். இவையெல்லாம் பழங்கதைதான் ஆனாலும் மலப்புழு மாதிரி அவளது மனத்தில் நெளிகிறது அந்த அருவருப்பான சம்பவம். நாள் முழுவதும் நடந்து ஓய்ந்த கதிரவன் மேற்குப் பக்கம் வானவிளிம்பை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தான். மீனாட்சி வெயிலைப் பார்த்தாள். மாலைவெயில் பொன்ரேகையாக வீசியது. களஞ்சிய அறையின் முன்புறம் நிழல்சாய்ந்திருந்தது. அவள் கணக்குப் போட்டது மாதிரி ஐந்து மணியாகும்போல் அந்த மாலை நிழல்முழக்கியது. வேலையை நிறுத்தி பொருட்களை ஒழுங்கு வைத்த பிறகு கணக்கர் அறையின் வெளிப்படியில் நின்று ஜன்னல் பக்கமாக சிறிது எட்டிப்பார்த்தாள். அவள் வதனம் காணவும் குப்புசாமி காந்தம் இழுத்ததுபோன்ற வேகத்தில் வாசலண்டையிற் சென்று அவளை உள்ளே வருமாறு அழைத்தார். மேலும் ஒரு படியின் மேலே காலை வைத்து கதவோடு நின்ற அவள் “போகணுங்க முதலாளி! பணத்தைக் கொடுங்க! இண்ணைய என் கூலியும் வரணும்!. அதையும் சேர்த்து கொடுத்திடுங்க!” - என்றாள்!
“என்ன மீனாட்சி அதுக்குள்ள அவசரமா?. இங்க பாத்தியா உனக்காக புடவை பணமெல்லாம் எடுத்து வைச்சிருங்கேன். ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரமாத்தர்றேன்!. மேலும் என்பேச்சைக் கேட்டு சம்மதிச்சீன்னா வேண்டியமட்டும் தர்றேன்! நீ இங்க வந்து சும்மா நிண்ணாலும் சம்பளம் போட்டுத் தர்றேன்!. என்னமாதிரித் தானே நீயும், காளியும் ஏலாவாளியாப் போயிட்டான். அது போல என் மனைவியும் நோயாளியாப் போயிட்டா. யாருக்கும் இது தெரியவராது. நாம ரெண்டுபேரும் சந்தோசமா இருந்தா என்ன?. அது உனக்கும் கூட நல்லது!” - என்று இன்னும் அவர் கதைகளை அடுக்கிக்கொண்டு போக மீனாட்சியின் முகம் கோணல் மாணலாகி யது. அவள் பத்திரிரகாளியாக மாறி கோபாவேசம் கொண்டு எழுந்தாள்.
"ஆமாங்க முதலாளி! நீங்க சொல்லுறது எல்லாமே உங்களுக்கு &fries......... ஆனா, கூலி வேலை செய்தாலும் நாங்க மானத்தோட வாழ விரும்புறமுங்க! உங்க சம்சாரத்துக்கு நீங்க துரோகம் செய்யலாம். ஆனா என் புருஷன் இம்புட்டு காலமும் எனக்கு

ള് நீ.பி.அருளானந்தம் 49
துரோகமே செய்ய நினைக்கலிங்க!
நானும் சாகுவாட்டியும் அவருக்கு துரோகம் செய்ய மாட்டேனுங்க! நீங்கல்லாம் வசதியான பெரிய முதலாளி உங்க மாதிரி முதலாளிங்க தங்களோட சம்சாரங்களை பத்தினியா வைச்சிருக்கப் பாடுபடுறாங்க! ஆனா, தங்ககிட்ட வேலை செஞ்சிக்கிற கூலிக்காரன் பெண்டாட்டிய யெல்லாம் வைப்பாட்டியா வைச்சிக்க நினைக்கிறாங்க! இது என்ன நியாயம் முதலாளி? உங்க மாதிரி முதலாளிகிட்ட பொம்பளைங்க வேலை செய்யிறது முள்ளுப் பத்தைக்க சிக்கிக்கிட்டு தவிக்கிறமாதிரித் தான் முடிஞ்சிக்கும். எனக்கு உங்க வேலையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம். இண்ணைக்குத்தாற என்கூலியை குடுங்கபோதும்!” - என்று அவள் அச்சமும் ஆசூயையும் உச்சமாய்க் கொண்டு எடுத்தெறிந்தது போல் பேசினாள். அவளது கண்களில் எரிதழல்கள் சுடர்விட்டன.
குப்புசாமி மீனாட்சியின் ரெளத்திரம் கண்டு உடல் வியர்த்து விட்டார். என்றாலும் உதப்பலை வெளிக்காட்டாது வேண்டுமென்று ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு “பிளைக்கத் தெரியாத துங்க..! என்று சொல்லிக்கொண்டு மேசைலாச்சியைத் திறந்து அவளது நாள் கூலியை மட்டும் எடுத்து கையில் நீட்டினார். “அங்கினையாவே மேசை மேல வையுங்க!”. என்று மீனாட்சி விறைப்பாகக் கூறியதும் மேசை மீது பணத்தை வைத்தார் அவர். அவள் அதை எடுத்துக்கொண்டு திடுதிடுவென்று நிலம் அதிரும்படி நடந்து அங்கிருந்து வெளியேறினாள். அவளது பாதச் சுவடுகள் முற்றத்திலெங்கும் அவர் போட்டுவைத்திருந்த மணலிலே முழுமை யாய் அழுந்திப் பதிந்திருந்தன. அந்தச் சுவடுகளைப் பார்த்து பயந்துபோன குப்புசாமி கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து விட்டார்.
பெண்புலிபோல் வேகம் கொண்டு வீறாப்பாக வீதியிலே நடந்து சென்று கொண்டிருந்தாள் மீனாட்சி. கொஞ்ச தூரம் சென்றதும் தன்பாலகனின் பால் வடியும் முகம் ஞாபகத்தில் வரவே அவள் நடை சோர்ந்து போனாள். இடையிடையே கேட்ட பட்டாசு வெடிச் சத்தங்கள் புதுவருஷத் திருநாளை அவளுக்கு நினைவு படுத்திக்கொண்டிருந்தன. வீட்டுக்குச் சென்றால் தன் செல்வமகன் வெறுங்கைகளைப் பார்த்து மனம் வெதும்பி விடுவானே. என்ற கவலை மனசை கடைந்தெடுத்தது. எனவே அந்த வீதியினருகில் தளதளவென்று தளிர்களும் கிளைகளுமாய் நின்ற வேம்பு மரத்தடியில் சென்று ஒற்றையாகச் சற்றே நின்றவள் இனியேதும் வழியுண்டோ. என்ற கவலையில் மூழ்கியவளாய் விழித்தாள்! வேலை போய்விட்டதே

Page 36
50 சிலந்தி என்ற நினைப்பு அப்போது அவளுக்கு வரவில்லை! உறுதியான உடலும் முயற்சியும் இருக்கையில் எங்கும் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது!
அன்பும், பண்பும், ஆதரவுமுள்ள குடும்பத்தில் எந்தநாளும் சுபதினம் தான்! அதைப்பற்றியும் அவள் மனதை அலட்டிக்கொள்ள வில்லை! ஆனால், தேயிலைக் கொழுந்து போல் இருக்கும் தன் செல்வ மகன் குழந்தைத் தனத்தில் அவற்றிக்கெல்லாம் ஆசைப்பட்டு ஏங்குவானே?. என்ற அந்த வேதனைதான் மாம்பழத்துக்குள் வண்டு போல இருந்து அவளது மனதை அரித்தது. இதனால் அவளது நாசியும் உதடுகளும் தாதை சோகத்தில் துடித்தன! அவள் முகமெல்லாம் வாடி வதங்கியது! அந்த வெப்பக்காய்ச்சலில் நெற்றியில் புரண்டுகிடந்த கூந்தலும் வேர்வையோடு முகத்தில் ஒட்டிப்போயிருந்தது. அவற்றை சோர்வடைந்த கைகளைக் கொண்டு பக்கமாக ஒதுக்கிக்கொள்ள முயன்றவளுக்கு முல்லை மொட்டுவடிவில் முக்கில் அணிந்திருந்த ஒற்றைக் கல் மூக்குத்தி விரல்களை முத்தமிட்டது.
அந்த மூக்குத்தியின் நினைவு மின்னலென வந்ததுமே அவளது உள்ளம் வெண்தாமரையாய் விரிந்தது உற்சாகமாக நொடிப் பொழுதில் கைகளால் அதைக் கழற்றி அவள் எடுத்தாள். பின்பு அதை சுத்தமாகத் துடைத்தாள். அவள் கண்கள் போல் அதுவும் ஒளியை வீசியது மன அமைதியோடு அவளே அதற்கு ஒரு மதிப்புப் போட்டாள். "ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம அந்தத் தங்க நகையை விற்கலாம்!” அந்த நம்பிக்கையில் அவள் மனம் திருப்தி கண்டது. அதை நகைக்கடையில் விற்றால், நாளை அவளது குடும்பத்துக்கு நிறைவான புதுவருஷம், மூக்கு முளியாகப்போய் விட்டாலும் செல்வமகனின் குதூகலத்தை நினைக்கையில் கவலைகள் அனைத் தும் மறந்துபோய் களிப்பு ஏற்பட்டது அவளுக்கு.
(2002)
உடுவிடு)sஅ

ള് நி. Ls. அருளானந்தம் 51
57ள் பூசைக்குக் கூட ஒவ்வொருநாளும் அதிகாலையில் நித்திரை விட்டு எழுந்து கோயிலுக்குப் போய் வருபவர் சேவியர். அவருக்கு மட்டுமல்ல இந்தப் பழக்கம் - குடும்பமே அவர் செல்லும் வழியைப் பின்பற்றித்தான் இன்றளவும் நடக்கிறது.
'கோயில் நடவடிக்கைகளிலே இப்படியான ஒழுங்கு சேவியர் குடும்பத்திலேயேதான் இருக்கு' - என்கிறதான நல்ல ஒரு பெயர் அவர்களுக்கு ஊரிலே உள்ள கிறிஸ்தவ சமூகத்தினரிடத்தும் இருக் கிறது.
இப்போ, தபசுகாலம் தொடங்கியதிலிருந்து அவரது வீட்டிலே எல்லாருமே சுத்த போசனம்தான்.
இந்தத் தபசு காலத்தில் ஒறுத்தல் தான தருமங்கள் செய்வதிலே சேவியர் குடும்பம் முன்னணியில் நிற்கும். அந்தளவு ஆசாரத்தை இவர்களெல்லாம் குடும்பத்தில் கடைப் பிடிக்கப்பழகியிருந்தார்கள். தபசு காலத்திலே வீட்டில், ஒவ்வொரு நாளும் வியாகுல பிரசங்க

Page 37
52 பாவ மன்னிப்பு
புத்தகத்தை எடுத்து ராகத்தோடு அதைப் படிப்பதற்கு சேவியர் மறப்பதில்லை. வளர்ந்த அவரது பிள்ளைகளெல்லாம் தாய் வாழைக் குப் பக்கத்தே நிற்கும் வாழைக் குட்டிகளைப் போல அவருக்குப் பக்கத்தில் ஒட்ட இருந்து அதைக் கேட்பார்கள்.
சேவியரின் மனைவியும் வாசற்படியில் இருந்து கொண்டு சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு அவர் படிக்கிறதை வியாகுலத்தோடே கேட்டு இயேசுவின் திருப்பாடுகளை சிந்தித்துக் கொண்டிருப்பாள்.
ஒரு நாளைக்கு ஒரு பிரசங்கம் என்ற கணக்கில் ஒன்பது நாட்களும் அந்த ஒன்பது வியாகுல பிரசங்கங்களை கேட்பவர் மனதுருக அவர் ராகத்தோடே படித்து முடிப்பார். பிறகும் அவற்றை அப்படியே அவர் தபசு காலம் முடியுமட்டும் தொடர்ந்து வாசிப்பார்.
இதைப்படித்த பின்பு புத்தகத்தை மூடி வைத்து விட்டு சேவியர் சிறிது நேரம் ஆறி அமர்ந்து யோசித்துக்கொண்டு மெளனமாக இருப்பார். கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரம் தியானிப்பார். ஆனாலும், அவரது மனசாட்சி எப்போதோ செய்த ஒரு குற்றத்தை எடுத்துக்காட்டி மீண்டும் மனசுக்குள் உறுத்தத் தொடங்கிவிடும். அந்தக் குற்றம் ஈட்டியாக உருமாறி அவர் மனசை உருவகுத்தி விடும். இந்த உறுத்தலிலே அவர், இந்தத் தபசு காலத்திலே செய்து வருகின்ற செபம், தயம், தானம் எல்லாமே பெறுமதி அற்றதாய், உருக்குலைந்ததாய் ஆகிவிடுவதை உணர்வார்.
‘கடவுளுக்கு முன்பாக பாவம் செய்திருக்கிறாய்? கடவுளுடைய சட்டத்தை நீ மீறிவிட்டாய்?". என்று எங்கோ கிணற்றிலிருந்து கேட்பது போல ஒரு குரல். சாட்டையால் அடிப்பது போல அவர் மனசைக் காயப்படுத்தும்.
“நான் பாவியா?. நான் பாவியா?. மனசில் ஒன்ற மறுக்கின்ற வெள்ளாடு மேய்ச்சலிலே. அவர்.
“நான் என்ன பாவம் செய்தேன். ?ܕܙ ஏதோ ஒன்றை வெளியே தெரியாமல் மறைத்துக்கொண்டு பொய் சொல்லுவதாக அவரும் உணருகிறார்.
‘கடவுளுக்கு முன்பாக எதையும் நீ மறைக்கவோ. மறுக்கவோ முடியாது” என்று இன்னுமொரு கேள்வி உறுத்துகிறது. "நான் பாவிதான்! நான் பாவிதான்! பாவம் செய்தவன்தான்!” அவர் தன் மனசுக்குள் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்.
"கேவலம் ஒரு வேலிச் சண்டையாலே ஒரேயொரு சகோதரனைப் பகைச்சுக்கொண்டேனே. ?” அந்தக் குற்றத்தை உணர்ந்து
99.

ള് நீ.பி.அருளானந்தம் 53
பச்சாத்தாபப்படுகிறார். உன் சகோதரனிடம் காலையிலே சண்டை யிட்டால் அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகு முன் அவனிடம் சென்று ஒப்புரவாகி விடு என்று பைபிள் வசனித்திருப்பதை ஒரு முறை ஞாபகத்தில் கொண்டு வந்து சிந்திக்கிறார்.
கூடப் பிறந்த தம்பி யோசேப்புவோடு இவர் சண்டையிட்டு பின்பு கதைக்காதிருந்து காத்திருந்து ஐந்து வருடங்களாகிறது.
‘இன்னும் நான் அவனுடன் ஒப்புரவாகி விடவில்லையே? இது அவருக்குள் நடக்கும் மனப் போராட்டம். வெளியே இது மனைவிக்கும் தெரியவில்லை. பிள்ளைகளுக்கும் தெரியவில்லை. மன வைராக்கியத்தில் இவைகளையெல்லாம் வெளியே சொல்லா மல் இருந்து கொண்டிருக்கிறார்.
‘சாப்பிட வாங்களன்?” மனைவி அவரை அழைக்கிறாள். “வேண்டாம்”. இதயத்தை அழுத்துகிற வதைப்புடன் இப்படிச் சொல்லிவிட்டுப்போய் முகம்குப்புற படுக்கையில் விழுந்து படுத்து விட்டார். ஆனாலும், நித்திரை வரவில்லை. பஞ்சு மெத்தையில் படுத்தபடி தனது வசதியான வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறார். சலவைக்கல் தட்டுக்களில் பழங்களை வைத்துக்கொண்டு சாப்பிடும் தன்னுடைய வாழ்க்கை வசதியையும் தம்பியினுடைய ஏழ்மையையும் நினைத்துப் பார்க்கிறார்.
யோசேப்பு இருதய சிகிச்சைக்கென்று உலகமெல்லாம் கடன் வாங்கிக்கொண்டு திரிந்ததையும் காணியை அடமானம் வைக்க வகை வழி தெரியாமல் அலைந்ததையும் குமர்களை கரைசேர்க்க இல்லாத் தனத்தில் அவன்பட்ட பாட்டையும் நினைக்க மனக்கிலே சத்தில் அவர் நெஞ்சு தாமரை இலைத் தண்ணிரெனத் தளம்புகிறது. மூச்சுவிட இயலாதமாதிரி பின்பு அவருக்கு இருக்கிறது. மனப்போராட் டத்தோடு இதன் பின்பு எழுந்து உட்கார்ந்துகொண்டார்.
தம்பிக்கும் தனக்கும் நடந்த அந்த வேலிச் சண்டை பின்பு ஞாபகம் வருகிறது. எள்ளத்தனையான அந்தப் பிரச்சினையை மலையத் தனையாக்கி அன்பான ஒரேயொரு சகோதரனை பகைத்ததுதான் மிச்சம். சுத்தபோசனம் என்று சாப்பிட்டு என்னதான் வந்தது எனக்கு? இந்த மனம் சுத்தப்படவில்லையே? இந்த மனம் செம்மைப்பட வில்லையே..? தனக்குத் தானே தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுகிறது.
இயேசுவின் வார்த்தைப்படி மனம் திரும்பு என்கிறது அவருடைய மனம், அவருடைய கண்களில் கண்ணிர் வழிகிறது. பாசச் சுமை கண்ணிரில் கொஞ்சம் சொஞ்சமாக கரைகிறது. விடியும்வரை

Page 38
54 பாவ மன்னிப்பு
நித்திரை கொள்ளாது அந்தப்படுக்கையிலேயே அவர் சப்பணமிட்டுக் கொண்டு இருந்தார். நித்திரையில்லாததால் கண்களும் கொள்ளிக் கட்டையாக அவருக்குப் பழுத்து விட்டது.
விடிந்த அந்த நாள் பெரிய வெள்ளிக்கிழமை. சிலுவை முத்திக்கு முன்பு அந்தக் கோயிலிலே திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்பட்டு வருவது வழக்கமாயிருந்தது.
திரைச்சீலை விலக, திருச்சிலுவையில் அறையுண்டிருக்கும் இயேசுவின் திருவுருவம் தெரிகிறது.
சேவியர், முழங்காலிட்டபடி நடுக்கோயிலில் இருக்கிறார். இயேசு வின் திருப்பார்வை தன் மேல் விழுவது போல் அவருக்கு இருக்கிறது. சிலுவையில் இருந்து சுகிர்தம் மொழியும் இயேசுவை சேவியர் பக்தியோடு பார்த்தபடி இருக்கிறார். ஒவ்வொரு வசனிப்புக்கும் கோயிலுக்குள் இருந்து தேவாலயப் பறை ஒலிக்கிறது. சேவியரின் மனம் வேறு யோசனைகளில் சிதறிடாது அந்த ஏழு வசனங்களிலும் ஒன்றித்து உருகுகிறது.
இயேசு ஈறாந்தத்தில் வசனித்த ஏழாம் வசனத்தை அங்கு வாசிக்கும் போது எல்லாருமே எழுந்து முழந்தாள் படியிட்டு இருக்கிறார்கள். சேவியர் தனது கைகளை இறுகவும் கும்பிட்டுக் கொண்டு பக்திப் பயத்துடன் இருக்கிறார்.
‘என் பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆத்துமத்தைக் கையளிக்கிறேன் - என்ற இறுதி வசனத்தை அங்கு வாசிக்கும் போது அங்கே சிலுவையில் காட்சியளிக்கும் ஆண்டவருடைய இருநேத்திரங்கள் ஏறிச் சொருகித், திருச்சிரசு கவிழ்தலையாய் விழுந்து சிகழிகை புளதித்துத், திருமுகமண்டலம் வெளிறப்பட்டுச் சகல சவுந்தரியமும் ஒழித்துச் - சருவாங்கத்தின் உதிரஞ்சுண்டிச் சமஸ்தருக்கும் சீவனாகிய ஆண்டவர், பிராணனடங்கிச் - செத்தவர் களைச் சீவிக்கப் பண்ணுகிற ஆண்டவர் அங்கே மரிக்கிறார். உடனே எல்லாரும்;
‘சர்வ தயாபரயேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில் தயவாயிருஞ்சுவாமி தயவாயிரும்” என்று பலத்த சத்தமாய்ச் சொல்கிறார்கள். சேவியரும் இதை கண் கலங்கச் சொல்லி விட்டு பக்கத்திலே பார்க்கும் போது, அங்கே யோசேப்புவும் அவருக்குக் கொஞ்சம் தள்ளி இருந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரம் இருவர் பார்வையிலும் குரோதம் தெரியவில்லை. பாசம்தான் வெளிப்படுகிறது. பிழை தீர்க்கிற மந்திரத் தைப் படிக்கும் போது ஒருவர் மற்றவரிடம் மன்னிப்புக் கோருவது

ള് நீ.பி.அருளானந்தம் 55
போலவும் பார்வையால் பேசுகிறார்கள். அவர்களிடம் குருத்துவிட்டுத் தோன்றும் அன்பின் முளை மெல்ல மெல்ல வெளிப்படுகிறது.
சிலுவை முக்தி எல்லாம் முடிந்த பின்பு ஆசந்தி தூக்குகிறார்கள். இயேசுவின் அந்த இறுதி ஊர்வலத்திலே அண்ணனும் தம்பியும் மெழுகுவர்த்திகளுடன் அருகருகே செல்கிறார்கள்.
இப்போதும் அவர்களுக்கு கதைத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. “தம்பி வந்து முதலில் கதைக்கட்டும்." "ஏன் அண்ணன் கதைத்தால் என்னவாம்.?” என்கிறதாய் இருவருக் குள்ளும் ஒரு கெளரவப் பிரச்சினை.
ஆசந்தி கோயிலுக்குள்ளே வந்து விட்டது. பீடத்தில் வழிபாட்டுக் காக அதைக்கொண்டுவந்து வைத்ததும் முத்தி செய்ய சனம் அங்கே முண்டியடிக்கின்றனர். ஒரு சிலர் திருச் சொரூபத்தை நூலால் அளக்கின்றனர். இதைக்கட்டிக் கொண்டால் பிணி அற்றுப் போகும் என்பது பலரது நம்பிக்கை.
அந்த நம்பிக்கையிலே சேவியரும் திருச் சொரூபத்தை நூலால் அளந்தார். கோயிலுக்கு உள்ளே நின்ற தம்பியிடம் சென்று அவனது கையைப்பிடித்து ஒரு பேச்சும் பேசாது நூலை அவர் கையில் கட்டிவிட்டு;
“உனக்கெல்லா வருத்தமும் இனி மாறிடும் என்னையும் மன்னிச் சிர்ரா” என்றார்.
கோயில் என்று இல்லாமல் அங்கே இருவரும் ஆளையாள் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்.
“நாளைக்கு நான் உன்ர வீட்ட குடும்பத்தோட வாறன். நீ என்ற வீட்ட உயிர்த்த ஞாயிறுக்கு குடும்பத்தோட வரவேணும்” என்று அண்ணா சொல்லுகிறார். அதைக் கேட்டு தம்பி சிரிக்கிறான். அவர்களுக்குப் பக்கத்தில் அவர்களுடைய குடும்பங்களில் உள்ள எல்லாரும் சிரித்த முகங்களோடு சந்தோஷமாகக் கலந்து நிற்கிறார்கள். இயேசு சிலுவையில் பாடுபட்டுச் சிந்திய திரு இரத்தம் தங்கள் பாவக் கறைகளை அகற்றி பாவமன்னிப்பு தந்திருப்பதாக அவர்களெல்லாரும் எண்ணுகிறார்கள்.
தினகரன் வாரமஞ்சளி (2003ம் வருடம் யூலை மாதம் 06ம் திகதி)
蘇?畜。

Page 39
56 பெட்டைக்குட்டி
ஆனாலும் நான் நித்திரைவிட்டு எழுந்தேன். மனைவியும் அந்த நேரமாக எழுந்து குசினிக்குச் சென்றிருக்க வேண்டும். அதை ஊர்ஜிதம் செய்ய சமையலறையில் அவள் பாத்திரங்கள் அலம்பி வைக்கும் சத்தம் எனக்குக் கேட்கிறது.
நான் நித்திரைச் சோம்பல் விலகுமட்டும் கொஞ்ச நேரம் அப்படியே கட்டிலின்மீது இருந்தேன். பிறகு குளியல் அறைக்குப் போனேன். பல்லைத்தீட்டி முகம் கழுவினேன். அந்த வேலை முடிந்ததும்.
"இனிமேல் போய் கோப்பியைக் குடிப்போம். என்ற எண்ணம் வந்தது.
குளிருக்காகவென்று வெறும் மேலிலே ஒரு பெனியனை எடுத்து அணிந்து கொண்டேன். பின்பு வீட்டுக்குப் பின்னாலுள்ள அடுப்பங் கரைக்குச் சென்றேன்.
சமையலறையில், காலை உணவு தயாரிக்க மனைவிதயாரா கின்றாள் என்று அங்கு பார்க்கும்போது எனக்குத் தெரிந்தது. அவளுக்குப்பக்கத்தில் துருவிய தேங்காய்ப் பூ ஒரு கிண்ணம் நிறையக்கிடந்தது. அவள் ஒரு சிறங்கை வெங்காயத்தையும் தனக்குப்
 

இ நீ.பி.அருளானந்தம் 57
பக்கத்தில் சுளகில் வைத்திருந்தாள். அதிலிருந்து காய்களை ஒவ்வொன்றாக கையில் எடுத்து தலை நுள்ளி தோலுரித்துக் கொண்டிருந்தாள்.
நான் குசினியில் இருக்கிற கதிரையில் போய் இருந்ததும் செய்து கொண்டிருந்த வேலையைவிட்டு விட்டு அவள் எழுந்து நின்றாள். "வெங்காயம் பேந்து கோப்பியிலும் மணக்கும்' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கழுவுகிறபேசினில் கிடந்த துண்டுச் சவுக்காரத்தை எடுத்தாள். கைகளுக்குச் சோப்புப் போட்டாள். பிறகு, அப்படியே முழுங்கையிலிருந்து விரல்கள்வரையாக முழுக்கவும் தண்ணிரால் சுத்தமாக கழுவிவிட்டு கோப்பி போட்டுத் தந்தாள்.
நான் கோப்பியை கையில் வாங்கி ருசித்துக் குடிக்க. "பூனை குட்டி போட்டிருக்கிறது. " என்ற புதுச் சமாச்சாரத்தை சொல்லி விட்டுச் சிரித்தாள் மனைவி.
நானும் அதைக் கேட்டு அவசரத்தில் எழுந்து கையிலுள்ள கோப்பையில் கோப்பி ததும்புகிற நிலையில். 'Il. ബ് குட்டி போட்டிருக்கு.’ என்று ஆவலோடு அவளைக் கேட்டேன். அவள் உடனே கையிலுள்ள வளையல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒலியெழுப்ப.
"அடுப்புக்கட்டுக்குக் கீழே’ என்று எனக்குச் சைகை காட்டிச் சொன்னாள்.
கோப்பியை ஒரு உறிஞ்சல் உறிஞ்சிக் குடித்து முடித்து கோப்பையை பாத்திரங்கள் வைக்கும் கட்டின் மேல் வைத்து விட்டு நான் உடனே அடுப்புக் கட்டின் அருகே சென்றேன். நின்றபடி குனிந்துகொண்டு அந்தக் கட்டுக்குக் கீழே பார்த்தேன். மின்சார விளக்கு ஒளியில் அந்தப் பூனைக்குட்டிகள் அங்கே துலாம்பரமாக எனக்குத்தெரிந்தன. வீடு துப்பரவாக்கும்போது முன்பு நான் எலிக்குஞ்சுகளைப் பார்த்ததுண்டு. ஆனாலும் இப்போதுதான் நான் உடன்பிறந்த பூனைக்குட்டிகளை முதன் முதலாகப் பார்க்கிறேன்.
அதற்குக்காரணமும் இருந்தது, என்தாயார் வீட்டில் பூனையை வளர்ப்பதற்கு விரும்புவதில்லை. பூனையை வளர்த்தால் அதன் மூலம் வீட்டிலுள்ளவர்க்கு ஈளை நோய் வரும் என்ற பயம் அவருக்கு. இத னால் பிறந்த உடனே பூனைக்குட்டிகளைப் பார்க்க எனக்கு இளம் வயதில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனக்குத் திருமணமாகி பிள்ளை களும் பிறந்து இத்தனை காலத்துக்குப் பின் இந்தத் தாய்ப்பூனையும் எங்கிருந்தோதான் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அதற்கு யாரோ நோப்பட அடித்து விட்டதால் அடிபட்ட அந்தக் காலை இழுத்து இழுத்து நடந்து இங்கே வந்து தஞ்சமடைந்தது.
பிறகு என்ன. மனைவியும் இரக்கப்பட்டாள். நானும் சரி

Page 40
58 பெட்டைக்குட்டி
என்றேன் பின்பு அது எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டது. பெட்டைப் பூனை அந்தப்பூனை. இப்போது அது குட்டி போட்டுவிட்டது.
அந்தக் குட்டிப் பூனைகள் ஒன்றின் மேல் ஒன்றாக கிடப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். தாய்ப்பூனை குட்டிகளுக்கு அருகே கிடந்து அவைகளை நாவினால் நக்கிக் கொண்டிருந்தது.
“பாவம். பாவம். மூண்டு பூனைக்குட்டியள். என்று சொல்லிக்கொண்டு மனைவி என் அருகில் வந்தாள் - அவளைப் பார்த்து.
“இரவுதான் இந்தப்பூனை குட்டிபோட்டிருக்கும்” என்கிறதாய் நான் சொன்னேன்.
என்று கொண்டு என்னோடு சேர்ந்து குனிந்தவாறு ’ ......... ظا நின்றபடி மீளவும் ஒரு முறை அவள் பூனைக் குட்டிகளை ஆவலோடு பார்த்தாள்.
பூக்களின் மென்மையை வெளிக்காட்டுகிற மாதிரி அந்தப் பூனைக்குட்டிகளைப் பார்க்கும்போது எனக்குத்தெரிந்தது. அந்தப் பச்சை உடம்புகளைப் பார்த்துக் கொண்டு
‘இனி இதுகளை என்ன செய்வம்?” என்று நான் மனைவியிடம் ஆலோசனை கேட்டேன்.
“இப்படியே இதுகளை இங்கினையா இருக்க விடுவோமே” என்று அவள் ஆதுரத்துடன் என்னைக்கேட்டாள்.
“வேற என்னதான் செய்யிறது. பழைய சாமான் போடுற அறையில இதுகளைக் கொண்டோய்ப் போட்டா அங்கின மழைக்கு ஒழுகுமே” என்று நானும் அவளோடு ஒற்றுமையாய் அந்த விடயத்தில் நின்றேன்.
“இருந்திட்டுப் போகட்டும் எனக்கெண்டால் ஒரு பிரச்சினையும் இல்லை அது ஒரு பக்கமாக்கிடக்கும் நான் ஒரு பக்கமா இருந்து என்ரை வேலையை குசினிக்க பார்க்கலாம் ஒரு இடைஞ்சலும் எனக்கு இல்லை!” என்றாள் அவள்.
நாங்கள் இருவரும் இப்படியே கதைத்துக் கொண்டிருந்தோம். அந்த நேரம் எங்கள் இரண்டு பெண் பிள்ளைகளும் படுக்கையால் எழுந்து அங்கே சமையலறைக்கு வந்து விட்டார்கள்.
நாங்கள் பூனை குட்டி போட்டதை விரிவாக எடுத்துச் சொல்ல அவர்களும் எங்களைப்போல் சென்று அவைகளைப் பார்த்தார்கள். எங்கள் மூத்த மகள் பூனைக் குட்டிகளைப் பார்த்துவிட்டு "ஐயோ. ஆக். புழு நெளியிற மாதிரி நெளியிது” என்று தன்னுடைய உடலை ஒருமுறை நெளித்துக்கொண்டு சொன்னாள். "அக்கா பெட்டை எத்தினை கடுவன் எத்தினை எண்டு கண்டு பிடிச்சுச் சொல்லும்” என்று இளையமகள் தன் அக்காவிடம் கேட்டாள்.
99.

இ நீ.பி.அருளானந்தம்
அவள் அப்படிக் கேட்டவுடன்தான் அதைப்பற்றியெல்லாம் எனக்கு சிந்தனை ஓட்டம் போனது.
இதற்குள்ளே “அதைப்பற்றியெல்லாம் இப்ப பாக்கத் தெரியாது குட்டியள் வளரத்தான் அதையெல்லாம் சரியாக் கண்டு பிடிக்கலாம்" என்றாள் மனைவி.
பின்பு கொஞ்சநேரம் அவள் யோசித்துக் கொண்டு இருந்து விட்டு
“பெட்டைக் குட்டியள் எண்டால் சரியான கரைச்சல், அதுகளை வீடுவழிய வைச்சுக் கொண்டிருந்தால் நெடுகலும் குட்டியளைப் போட்டுக் கொண்டிருக்கும் என்று என்னைப் பார்த்துக் கொண்டு அவள் சொன்னாள்.
‘எல்லாம் பூனையள் வளரட்டும் பேந்து அதுகளை யோசிப்பம்" என்றேன் நான்.
“கடுவன் எண்டால் ஒரு குட்டியை எடுத்து வீட்டில வைச்சு வளர்க்கலாம் பெட்டைக் குட்டியள் எண்டால் இங்கை ஒண்டும் வேணாம். அது பேந்து இங்க கிடந்து கொண்டு குட்டியளைப் போட்டுக் கொண்டிருக்கும் அதால வேற எங்கயும் கொண்டோய் அதுகளை றோட்டு வழிய விட்டிட்டு வந்திடோணும்” என்றாள் மனைவி.
மனைவி சொன்னவைகளைக் கேட்க எனக்கு மனவருத்தமாக இருந்தது. அதிலும், “பெட்டைக்குட்டியள் ஒண்டும் இங்கே வேணாம்” என்று அவள் சொல்லி விட்டதில் மிகவும் மனம் நொந்து போய் எனது இரண்டு பெண் பிள்ளைகளைத்தான் ஒரு முறை நான் ஏறெடுத்துப் பார்த்தேன். பின்னர் திரும்பவும் திரும்பவும் மனைவி சொன்ன சொற்களைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கடுமையாக நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த யோசனை களின் பின்பு ஒரு முடிவுக்கு வந்து;
‘அந்தப் பூனைக்குட்டிகள் முழுக்கலும் பெட்டைக் குட்டிகளாய் இருந்தாலும் பரவாயில்லை அவயளை வீட்டிலவைச்சு வளர்ப்பம். ஆராவது பிறகு வந்து எங்களுக்கு வளர்க்கத் தாருங்கோவெண்டு கேட்டால் கொடுப்போம். என்று நான் நினைத்தேன்.
அப்படி நினைத்துக் கொண்டே எனக்கிருக்கும் இரண்டு பெண் பிள்ளைகளையும் நான் ஒரு முறைபாசத்தோடு பார்த்தேன். அவர்களோ. அதிலொன்றும் பிறகு அக்கறையில்லாதது மாதிரி இருந்து விட்டு வேறு விஷயம் ஒன்றில் தங்கள் கவனத்தை திருப்பியி ருந்தார்கள். தங்கள் கல்லூரியில் நேற்று நடந்த சம்பவமொன்றின் சரி பிழையை விவாதிப்பதில் அப்போது அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். aikoupra, amunoast - (2009)

Page 41
60 துன்பக் கேணியில்
அந்தத் தென்னந்தோட்டம் அபரிமிதமான அழகுடன் கூடிய ஒரு இடம். யாழ்குடாநாட்டிலுள்ள கிளாலி என்ற ஊரில் அதுதான் பெருந்தோட்டம். அந்தத் தோட்டத்திலுள்ள ஒவ்வொரு தென்னை மரத்தினிலும் நெருங்கியடித்தபடி காணப்படும் தேங்காய்க் குலைகள் தொங்குகின்றன. மூச்சாக வளர்ந்திருக்கும் அந்தத் தென்னை மரங்கள் அந்த மண்ணின் செழுமையை பறைசாற்றுகின்றன.
இந்தக் காட்சிகளையெல்லாம் அங்கே பார்க்கின்றவர்கள் மனத்தில் எதை நினைப்பார்கள்! இதிலே வருகின்ற வருமானத்தையெல்லாம் யார் அள்ளுகிறார்கள் என்கிறதாய் வரும் கேள்வியைத்தானே தங்கள் மனத்தில் கொள்வார்கள்.
கனகசபை என்பவர்தான் இந்தத் தோட்டத்துக்கு உடமையாளர். அவர் அந்த தோட்டத்தைச் சுற்றி பார்த்துக்கொண்டு சில வேளை
 

இ நீ.பி.அருளானந்தம் 61
களில் வலம் வரும்போது அந்த குச்சு ஒழுங்கையால் போகிறவர்க ளெல்லாம் அவரின் மேல் கண்ணோட்டிக் கொண்டுதான் செல்கிறார் கள். தோட்டத்துக்கு வந்தால் சாதாரணமாக ஒரு சாரத்தையும் மேலிலே ஒரு பெனியனையும் அவர் அணிந்து கொள்வார். கழுத்தில் மாத்திரம் நாய்ச்சங்கிலிபோல் கனத்த நிறையுள்ள பெரியதொரு பவுண் சங்கிலி அவரது பண அந்தஸ்தை எல்லாருக்கும் பறைசாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரியும்.
இந்தப் பெரிய தோட்டத்துக்கு உறுதியான காவல் வேலி உண்டு. என்றாலும், கள்வர்களை காணிக்குள் வராது காவல் காக்கவும் தோட்ட வேலைகளை செய்து கொண்டிருப்பதற்கும் அவருக்கு ஒரு வேலையாள் தேவைதானே? அதற்காக, யாழ்குடாநாட்டில் பல இடங்களிலும் தேடித்திரிந்து கடைசியில் 'பளையில் இருந்த ஒரு இளங் குடும்பத்தைக் கூட்டி வந்து "மாதச் சம்பளம் போட்டுத் தர்றன்” என்று சொல்லி அவர்களை தன்தோட்டத்தில் அவர் குடியிருக்க வைத்தார். ஆனால், அங்கிருந்த கொஞ்ச நாட்களுக்குள் ளேயே அந்தக் குடும்பத்தவர்க்கு கனகசபைமேல் வெறுப்பு வந்துவிட்டது. அவருக்கு நோவு படாமல் சிற்சில காரணங்களைச் சொல்லிக்கொண்டு, காணியை விட்டு அவர்கள் போய்விட்டார்கள். கனகசபை கல்யாணமே செய்யாமல் காலத்தைக் கடத்தியவர். நாற்பது வயதைக் கடந்தாலும் ஆள் நல்ல சரீரவாகு உடையவர். கருங்காலி மாதிரி உடம்பு அவருக்கு. பெண்கள் விஷயத்தில் இவர் சபலபுத்தியுடையவர். அந்த விஷயத்திலே நல்ல அனுபவ சாலிக்கட்டையாகவும் அவர் இருந்தார். முள்தைக்காமல் செடிமேயக் கற்றுக் கொண்ட ஆட்டைப்போல இதிலே வருகின்ற பிரச்சினைகளிலி ருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு கவனமாக இருக்கவும் அவர் கற்றுக் கொண்டிருந்தார்.
இதற்கெல்லாம் ஏற்றாப் போல் அந்தத் தோட்டத்து சூழ்நிலை அவருக்கு சாதகமாய் அமைந்திருந்தது என்றுதான் கூற வேண்டும். தென்னந்தோட்டத்துக்கு கூலி வேலைக்கென்று கும்பலாக வரும் ஏழை பாழைகளிலே தனக்கு ஒத்துப் போகக் கூடிய ஒரு பெண்ணைப் பார்த்து "இண்டைக்கு உனக்குச் சமையல் வேலை" என்பார்!
அன்று அவள் சமைப்பாள். அங்கே அவருக்கு சாப்பாடுக்கு சமையலும் ஆகும், அதோடு அவரது ஆசையும் நிறைவேறிவிடும். பின்னேரமாகியதும் அவர்களுக்குக் கூலியைக் கொடுத்து, அந்தக் குறித்த பெண்ணுக்கு இரகசியமாக கூலியைவிட கொஞ்சம் கூடுதலாகவும் பணத்தைக் கொடுத்து எல்லாரையும் அனுப்பிவிடுவார். இப்படியே காலம் போனாலும், தோட்டத்திலே ஒரு குடும்பத்தை நிரந்தரமாக இருக்க குடியிருந்த வேண்டும், என்ற எண்ணம்

Page 42
62 துன்பக் கேணியில்
அவருடைய மனதிலே ஆழ வேரூன்றியிருந்தது.
‘இந்த இடத்திலயிருந்து வேலைக்கெண்டு ஆள் பிடிச்சால் கொஞ்சநாளைக்க ஏனும் ஒரு சாட்டைச் சொல்லிக்கொண்டு வெளிக் கிட்டிடுவாங்கள் அதால வேற எங்கினையும் இருந்துதான் வேலைக்கு ஒரு குடும்பத்தைக் கூட்டிவரோணும்' என்று மனத்தில் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் கனகசபை,
இந்த நேரத்திலே அவரது நோக்கத்தை நிறைவேற்ற அங்கே இருக்கின்ற ஒரு புரோக்கரும் அவரைத் தேடிவந்தார்.
“நான் உங்களுக்கு தோட்டக் காட்டில போய் வேலைக்கு ஒரு இளங் குடும்பத்தை பிடிச்சுக் கொண்டு வந்து தர்றன்’ என்று சொன்னார்.
“இஞ்சையார் பிடிச்சுக் கொண்டாறது இளங்குடும்பமாயிருக்க வேணும். தோட்டத்துக்குப் பொருத்தமா பொம்பிளையும் நல்ல லச்சணமாயிருக்க வேணும். அப்பதான்ராப்பா தோட்டத்துக்கு நல்லம். லெச்சுமிகரம் வரும்” என்றார் இவர்!
புரோக்கருக்கும் இவரது நாட்டம் விளங்கும். “தோட்டத்துக்குப் பொருத்தமாயிருக்கப் பார்க்கிறாரோ தனக்குப் பொருத்தமாயிருக்கத் தேடுறாரோ?” என்று மனத்திற்குள் அவரை சாடிக்கொண்டு;
*எந்தச்சனியன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்ற தன்புரோக்கர் கொள்கையில் ஸ்திரமாக நின்று கொண்டு அவரிடம் காசை வாங்கி கண்டிக்குப் போக அவர் பஸ் ஏறினார்.
பிறகு கண்டியில் போய் இறங்கி "கொத்மலை' என்ற இடத்துக்கு பஸ்பிடித்துப் போய் தனக்குத்தெரிந்த புரோக்கர் இருக்கும் அந்த லாயத்துக்குச் சென்றார். அவரும் தரகர் இவரும் தரகர்! இரண்டு பேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? தேயிலைத் தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்த ஒரு தம்பதியருக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி குழையடித்து தங்கள் வழிக்குக் கொண்டுவந்து விட்டார்கள் இந்த இருவரும். அவர்களது தரகு வேலை சுளுவாக முடிந்தது. அவளுக்குப் பெயர் வள்ளி. அவளது புருஷனுக்குப் பெயர் சிங்காரம். W
சாப்பாடு போட்டுச் சம்பளம் - என்று கேட்டவுடனேயே கற்பனை வானில் இறக்கை கட்டி அவர்கள் பறக்கத் தொடங்கி விட்டார்கள். காசைச் சேர்த்து ஒரு காலம் அங்கே யாழ்ப்பாணத்தில் ஒரு துண்டு காணியும் வாங்கலாம் - தோட்டம் செய்யலாம் - அங்கேயே குடியிருக்கலாம் - பிள்ளைகளென்று வந்தால் அவர்களுக்கும் அங்கே கல்வி வசதி - மருந்துக்கு பெரியாஸ்பத்திரி - இப்படி எத்தனை வசதி, இங்குண்டா அவையாவும்?

இ நீ.பி.அருளானந்தம் 63
என்று இருவருமாக யோசித்தார்கள். இருவருடைய மனமும் பல மகோன்னதமான கோட்டைகளைக் கட்டின. வருங்காலத்தை நினைத்து நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
மகிழ்ச்சியுடன் “இப்பவே கிளம்புறம்” என்று சொல்லியபடி அவர்களும் வெளிக்கிடத்தயாராகி விட்டார்கள்.
"கொத்மலை தரகருக்கு கொடுக்கவேண்டிய தரகுப் பணத்தை நோட்டு நோட்டாக இழுத்து நீட்டிவிட்டு தம்பதியினரையும் கூட்டிக் கொண்டு கனகசபையின் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார் யாழ்ப்பாணத்துத் தரகர்.
மாட்டைப் பார்த்து வாங்குவது போல் கனகசபை வள்ளியையும் சிங்காரத்தையும் பார்வையால் அளந்தார். பின்பு வள்ளியை மாத்திரம் தன்பார்வையால் உடம்பு முழுக்கத் தடவினார். வள்ளியின் வயதும் உடல் வாளிப்பும் அவருக்கு மெத்தப் பிடித்துப் போயிற்று.
சிங்காரமும் வள்ளியும் தங்கள் முதலாளியை கைகொடுத்த தெய்வமாக நினைத்துப் பார்த்தார்கள். கனகசபையின் முகம் கள்ளங் கபடமில்லாத யாழ்ப்பாணத்து முகம் மாதிரியும், வள்ளலாரின் முகம் மாதிரியும் சாந்த சொரூபமாக அவர்களுடைய கண்களுக்குத் தெரிந்தது. இத்தனை நாள் தாங்கள் தோட்டம் வழியே கிடந்து பட்ட கஷ்டம் நீங்கி சுகவாழ்வு கிடைத்திருப்பதாக அக்கணம் அவர்கள் நம்பினார்கள்.
அவர்கள் நம்பியதுக்கேற்றதாய் சில நாட்கள் நல்ல விதமாய்த்தான் நகர்ந்தன. தேயிலைத் தோட்டத்தில் இருந்த வள்ளிக்கு இப்போ தென்னந்தோப்பு புது அழகாய்த் தெரிந்தது. தென்னங்கிளிபோல் அந்தச் சோலையெங்கும் அவள் சுதந்திரமாக சுற்றித்திரிந்தாள். கணவனும் மனைவியும் தங்கள் வீட்டு வேலைகளாக நினைத்து அங்குள்ள வேலைகளை கருமமாக செய்துகொண்டு மகிழ்ச்சியாக அங்கே இருந்தார்கள்.
உதிர்ந்த ஒலைகளை முடைந்து போடுவதுதான் வள்ளிக்கு அந்தத் தென்னந்தோட்டத்தில் வேலை. ஒற்றைக் கிடுகில் ஒயிலாக இருந்து கொண்டு கிடுகு இழைக்கும் வள்ளியை காணும்போது கனகசபை சிலநாட்கள் கஷ்டப்பட்டுதன் மனதை அடக்கிவைத்திருந்தார்.
ஆனாலும், நெருப்பாகத் தகிக்கும் அடங்காத அவர் ஆசை கட்டுக்கு மீறிவிட கண்கொத்திப் பாம்பு போல் அவரது பார்வை அவளையே குறிபார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கிவிட்டது. நடையிலே ஒரு சிங்காரமும் நடக்கும் கைவீச்சிலே ஒரு கவர்ச்சியும் கொண்ட வள்ளியை எப்படியாவது அனுபவிக்க வேண்டும் என்று அவர் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.
வள்ளியும் இவரது பார்வையில் உள்ள விபரீதத்தை பிறகு உணரந்

Page 43
64 துன்பக் கேணியில்
தொடங்கிவிட்டாள். முதலாளியின் சபல புத்தி போகப்போக அவளுக்கு நன்றாகவே விளங்கத் தொடங்கிவிட்டது. இங்கே வந்து இந்தப் பொறிக்குள் ஒரு எலியைப்போல மாட்டிக்கொண்டு விட்டேனே' என்று அவள் மனம் நொந்தாள்.
“திரும்பியும் நாம தேயிலைத் தோட்டத்துப்பக்கம் போயிடுவ முங்க”
என்று கணவனைப் பார்த்து ஒரு நாள் இரவு பாயில் படுத்திருந்த பொழுது அவள் கேட்டாள்.
“இங்க என்னடி குறை எதுக்குண்ணு நீ அங்க போவணுமிண்ணு நாண்டுக்கிட்டு நிக்கிறே” என்று அவளைப் பார்த்து அவன் திருப்பிக் கேட்டான்.
“எனக்கிண்ணா இங்கயிருக்கப் பிடிக்கலேங்க பயமாயிருக்கு” அவள் அப்படிச் சொல்லவும், அந்தக் குடிசையே கலகலக்க அவன் கெக்கட்டமிட்டுச் சிரித்தான்.
“அசடே ஏண்டி பயப்பிர்றே நான் இருக்கனெல்லே” “இல்லீங்க. அதில வந்து நம்ம மொதலாளி” “தங்கமானவருடி அவரை மாதிரி இந்த லோகத்தில எங்க தேடினாச்சும் ஒரு மனுசன் கிடைக்கமாட்டான் இதை நீ நல்லா தெரிஞ்சுக்கோ. சும்மா தொணதொணக்காம கப்புண்ணுவாயை மூடிக்கிட்டுப்படு” என்றான் அவன்.
சிங்காரத்துக்கு தென்னந்தோட்டத்து வேலையையும் காவல் வேலையையும் செய்வது உடலுக்கு மிகவும் களைப்பாகத்தான் இருந்தது. அப்படி ஒண்டியாய்க்கிடந்து அவன் உருக்குலைந்தாலும் நாளாந்தம் இலவசமாக "முதலாளி கொடுக்கும் கள்ளுத் தண்ணியில் களைப்பெல்லாம் பஞ்சாய்ப் பறந்தது போலத்தான் அவனுக்குத் தெரிந்தது. இதனால் காலையில் மண்வெட்டியைத் தூக்கினால் பொழுதுபட குருவி அடைகிற நேரம்மட்டும் அங்கே ஒரு அடிமை மாதிரி அவன் வேலை செய்து கொண்டிருந்தான்.
இந்தத் தென்னங்கள்ளுக்கு நாளடைவில் அவன் அடிமைப்பட்டுப் போக முதலாளியின்மேல் அவனுக்கிருந்த மரியாதை அபரிமித மாகியது. எண்சாண் உடம்பையும் ஒரு சாணாய் ஒடுக்கிக்கொண்டு கனகசபை ஒரு வேலையை சொல்ல முதலே அதை செய்து முடித்து விடுமளவிற்கு அவன்தயாராய் நின்றான்.
இவற்றுக்கெல்லாம் அவனுக்குக் கொடுக்கப்பட்ட அந்தத் தென்னங் ser0e esgotorTaÉlugã.
இந்தக் கள்ளையும் கனகசப்ை காசு கொடுத்து வாங்குவதில்லை. தன் தோட்டத்து மரங்களில் ஓரிரண்டை சீவுவதற்கென்று கொடுத்து

ള് நீ.பி.அருளானந்தம் 65
அதற்குக் காசைவாங்காது கள்ளை நாளாந்தம் வாங்கினார்.
அந்தச் சீவல்காரன் ஒவ்வொரு நாளும் வந்து கள்ளை இறக்கி அவருக்குரியதை வீட்டு விறாந்தையில் உள்ள பானையில் வார்த்து விட்டுப் போவான்.
பழைய மொந்தையிலே இருக்கும் புதிய கள்ளிலே கொஞ்சத்தை கனகசபை குடிப்பார். மிகுதியையெல்லாம் சிங்காரத்துக்குக் குடிக்கக் கொடுத்து அவனை தான் சொல்வதெல்லாம் செய்யும்படி வளைத்தார்.
அன்று காலை; “மீன் வாங்கிக் கொண்டாடா” என்று நூறு ரூபாயைக் கொடுத்து சிங்காரத்தை கடற்கரைப் பக்கம் அனுப்பினார் கனகசபை.
‘காத்துவாக்கில நன்னா உலாத்திக்கிட்டு வரலாம்’ என்ற எண்ணத்தோடு சிங்காரம் கறிப்பையை எடுத்துக் கொண்டு கடற்கரைப் பக்கம் போனான். அந்த நேரம் தோட்டத்துக் கிணற்றில் உடலெங்கும் ஒரு சுகானந்தசிலிர்ப்பு ஏற்பட ஆனந்தத்துடன் வள்ளி குளித்துக் கொண்டிந்தாள். வீட்டு விறாந்தையில் நின்றபடி குளுகுளுவென்று சருவாங்கஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த வள்ளியை கனகசபை பார்த்தார்.
தொப்ப தொப்ப நனைந்த சேலையின் உள்ளேதெரியும் அவளது உடல் அங்கங்களை அவரது காமக்கண்கள் வலை விரித்தன. அங்கே நின்றவாறு வைத்த கண்மாறாமல் அவளையே அவர் பார்த்துக்கொண்டிந்தார். அவரது மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது. உப்பூறிக்கரித்த வெக்கையான கிளாலிக் கடற்காற்றுக்கு அவருடைய உடம்பும் சூடேறத் தொடங்கிற்று. வள்ளி இதை யெல்லாம் கவனிக்கவில்லை. அவள் குளித்து விட்டு ஈரப்புடவையைக் களைந்து கிணற்றுக் கொடியில் போட்டிருந்த ரவிக்கையையும் சேலையையும் எடுத்து உடைமாற்றினாள். அவள் உடைமாற்றி உடுத்துவதைப் பார்த்த போது மூண்டெழுந்த தீயிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது அவருக்கு.
அவள் கிணற்றடியை விட்டு குடிசைக்குப் போய்ச் சேரவும் இவரும் சத்தம் காட்டாது சர்ப்பமூச்சு விட்டுக்கொண்டு அவளுக்குப் பின்னாலே போனார். அவள் குடிசைக்கதவைச் சாத்தும்போது அவர் தென்னை மர மறைவில் நின்றார். பின்பு அங்குமிங்குமாக பார்த்தபடி கரையான் புற்றில் கருநாகம் புகுந்தது மாதிரி வள்ளியின் குடிசைக்குள் நுளைந்தார்.
குடிசைக்குள்ளே கனகசபையைக் கண்டதும் வள்ளி விதிர் விதிர்த்துப் போனாள் மனத்தில் பயம் ஆயிரம் சிறகுகளால் அழுந்த

Page 44
66 துன்பக் கேணியில்
“மொதலாளி” என்று நாக்குழறினாள். ஒன்றும் செய்வதற்கு வழி தெரியாது கல்லாய் உறைந்து நின்றாள் அவள். அப்படி திகைத்துப் போய் மரம்போல் அவள் நிற்க.
பாம்பின் வாய்த் தேரைபோல் அவரிடம் அவள் அகப்பட்டுக் கொண்டாள். கனகசபை மிருகமானார். அவள் பிணமானாள்.
சொற்ப வேளையில் பின் கனகசபை குடிசையை விட்டு தன் வீட்டுப்பக்கம் போய் விட்டார்.
இத்தனைக்கும் உதறியடித்துக்கொண்டு கனகசபையை சாடிப் பேசுவதற்கு வள்ளிக்கு துணிவுவரவில்லை. சற்றுமுன் நடந்த கொடுரம் இதயத்தை முள்கிளைகளால் கீறி இரத்தம் பாயவைத்ததைப்போல் இருந்தது அவளுக்கு. தன்பாட்டுக்கு குடிசைக்குள் இருந்து அவள் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு விம்மிவிம்மி மூச்சு வந்து கொண்டிருந்தது.
சிங்காரம் கறிப்பையுடன் குடிசைக்கு வந்தான். “என்ன நடந்துச்சடி இழவே. இப்படி அழுதுகிட்டேயிருக்கே சீக்கிரமா சமைடி ஐயாவுக்கு சாப்பாட்டுக்கு நேரமாகுதெல்லே” என்று அதட்டினான்.
அந்த அதட்டலோடு அவளது அழுகையும் பலத்தது. “நானு இங்கிட்டு இனிமேல் இருக்க விரும்பல தோட்டக்காடுக்கு போவப்புறன். வாங்கபோயிடுவம்”
என்று அவனிடம் கெஞ்சினாள். “நாம இப்பயில்ல இனிமேல எப்போதைக்குமே இருக்கிறது இந்தத் தோட்டத்திலதான். இந்தத் தோட்டத்தில இருந்துக்கிட்டுத்தான் நாம ரெண்டு பேரும் சாகிறதும் அதை நீ நன்னா நெச்சுக்க. (86)lp கதையேயேன் கூட நீ பேசவேணாம்” என்று கொதித்தான் அவன். அப்படி உதம்பிப்பேசிவிட்டு கொண்டுவந்த கறிப்பையை கோபத்தோடு அதிலே ஒரு பக்கமாக போட்டு விட்டு முதலாளியின் வீட்டுக்கு அவன் போனான்.
கனகசபை தந்திரசாலி. சிங்காரத்தின் பலவீனம் அவருக்கு நன்றாய்த் தெரியும். அன்றைக்கு அந்த விறாந்தையில் இருந்த மொந்தைக்கள் முழுவதையும்;
"நீ இண்டைக்கு முழுக்கலுமா குடி” என்று சொல்லி அவனுக்கு அவர் கொடுத்தார். அவ்வளவற்றையும் குடித்துவிட்டு கவலையுடன் சிங்காரம் காவல் குடிலில் போய்ப்படுத்தான்.
கூடக்குடித்ததால் கள் வெறி அவனது அறிவை கிறங்க அடித்தது. தலைகறணமான வெறியில் அவன் தன்னையறியாது நல்ல நித்திரை கொண்டான். அப்படிக்கிடந்தவன் கிழக்கு வெளுக்கலுற்ற வேளைதான்

ള് நீ.பி.அருளானந்தம் 67
பின்பு கண்விழித்தான். அவன் விழிப்புற்றவேளை சுற்றிவர நின்ற தென்னைகளின் ஒலமான சத்தம் அவனது காதுகளில் கேட்டது. சட்டென்று அவனுக்கு வள்ளியின் ஞாபகம் வந்தது. உடனே எழுந்து தள்ளாடிக் கொண்டு நடந்து வந்து தனது குடிசைக் கதவைத் திறந்தான்.
அங்கே முகட்டு நடுவளையில் தொங்கிய கயிற்றிலே கழுத்தில் சுருக்கிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தது ஒரு உடல். விழிக்கோளங் களிலிருந்து விழிகள் பிதுங்கி நிற்கின்றன. கழுத்து நீலம் பாரித்து கன்றிப்போய் விட்டிருந்தது.
அது வள்ளி என்று அறிந்து கொண்டதும் அலறினான், துடித்தான், துவண்டான் சிங்காரம், அவனது ஒலக் குரல் கேட்டு கனகசபையும் குடிசைக்கு விழுந்தடித்துக் கொண்டுவந்தார்.
“இந்த இளம் வயசில அநியாயமாச் செத்துப் போட்டாளே” என்று அவரும் முணுமுணுத்தார். மனத்திற்குள்ளே வள்ளி செத்தது அவருக்கு நிம்மதியாகவும் இருந்தது.
அன்று வள்ளியினுடைய மரண விசாரணையில்; வள்ளி பழையபடி தேயிலைத் தோட்டத்திலே போய் இருக்க விரும்பியதாகவும் அதை சிங்காரம் விரும்பாமல் அவளை தென்னந் தோட்டத்திலே இருக்கும்படி கூறியதாகவும் அதற்காக அவள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும் ஏட்டில் பதியப்பட்டது.
அது நடந்து முடிந்த பின்பு சிங்காரம் வள்ளியின் அந்திமக் கிரிகைகளைப் புரிந்தான் கண்ணிரைச் சொரிந்தான்.
வள்ளி இறந்தாற் பிறகு தனியே சிங்காரத்தை தோட்டத்தில் வைத்துக் கொண்டிருக்க கனகசபைக்கு விருப்பமில்லை. சிங்காரத் துக்கு உள்ளம் புண்பட்டுநைந்து போயிற்று. அவன், பித்துக் குளியைப்போல் அந்தத் தோட்டம் வழியே வேலை செய்யாது வாய் பிதற்றிக் கொண்டு திரிந்தான். இதையெல்லாம் சாக்காகவைத்து கொஞ்சப்பணத்தை சிங்காரத்தின் கையில் கொடுத்து திரும்பவும் அவனை கனகசபை தேயிலைத் தோட்டத்துக்கு அனுப்பி விட்டார். இப்போது புதுக்குடும்பம் ஒன்றைக் கொண்டுவந்து தன் தோட்டத்தில் குடியிருக்க வைப்பதற்கு கனகசபைதிட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இந்தநேரம் அந்தத் தோட்டத்தில் நடந்த சகல சம்பவங்களையும் அறிந்து கொண்டு யாழ்ப்பாணத்துத் தரகரும் கனகசபையின் தென்னந்தோப்புக்கு வந்தார். முன்பு மாதிரி பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு மீண்டும் அவர் கொத்மலை தரகரைப் போய்ப்பார்க்க பஸ்ஸில் புறப்பட்டுப் போனார்.
-o-HsOOCOah-e- (2003)

Page 45
GSB மாபெரும் புறப்பாடு
ைெனவி பிள்ளைகளை மேலும் இந்த இடத்தில் வைத்துக்
கொண்டிருக்காது பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டேன். என்கிறதாகச் சொல்லக்கூடிய நிம்மதி அன்ரனுக்கு இப்போது இருந்தது. அடுத்துச் சிலநாட்களாக யாழ்ப்பாணத்தில் கூட இருக்க முடியாத அளவுக்கு "செல் சத்தங்கள் காதைப்பிளப்பது போல் இருக்க உடனே இடம் மாறும் முடிவை அவர் எடுத்திருந்தார்.
வீட்டிலே மனைவிக்கு அது விருப்பமில்லை! நேற்றைக்கு முதல் நாள் பின்னேரம் இதைப் பற்றிப் பேசும்போது.
"இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பமே." - என்றாள்.
"நீர் நினைக்கிறது மாதிரியில்ல இன்னும் ரெண்டொரு நாளில சிங்கள ஆமி யாழ்ப்பாணத்துக்க வந்திடும், அப்படி ஒரு பேச்சு காதில அடிபடுது' என்றார் இவர். அதைக்கேட்டு அவளும் கவலைப்
莺
 

ള് நீ.பி.அருளானந்தம் 69
பட்டுக்கொண்டு சிந்தித்தாள். அவர்களது கனிஷ்ட புத்திரன் வெளியே போய் உலாத்திவிட்டுவந்து மேல் சட்டையைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு.
" அப்பா!. ஆமிக் காறங்கள் நீர் வேலியைத் தாண்டி வந்திட்டாங்களாம். எண்டுதான் கதைக்கிறாங்கள்!' - என்றான். அவன் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவனது இரு சகோதரிகளும் சற்பிரசாத ஆசீர்வாதம் முடிந்து மாதா கோயிலி லிருந்து வந்து நின்றார்கள். மூத்தவள் தம்பி சொல்வதைக் கேட்டுவிட்டு.
"ஒமோம். கோயிலேயும் உதைப்பற்றித்தான் கதைக்கினம்! ஒண்டிரண்டு ஆட்கள்தான் ஆசீர்வாதத்துக்கும் வந்திருந்தவயள்!" என்றாள்.
'தம்பிப்பிள்ளை. குருநகர் சவுக்காலைப்பக்கம் போகாதேயு மென்ன. அங்கதான் "செல் விழுகுது. நேற்று ரவில கனக்க "செல் சத்தம் கேட்டுதெல்லே அங்கதான் அதெல்லாம் விழுந்ததாம். சவக்காலைச் சுவர் உடைஞ்சு சிதறுப்பட்டுக் கிடக்காம்' மூத்தவளுக்கு இளையவளான குணசீலி தம்பிக்குச் சொன்னாள்.
"எங்க நான் ஒருக்கால் அங்கினையாய்ப் போய் அதுகளை நேரபாத்திட்டு வந்திர்ரனே!” என்று சொல்லிக்கொண்டு அவன் வெளிக்கிடவும்.
"சும்மா கொஞ்சம் வீட்டிலயே இரும் நீர்!. வெளியால வெளிக்கிட வேணாம்!" என்றாள் அக்காள். அப்படி அவள் எறி சொல்லாய்ச் சொல்ல அவன் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு, எல்லாருக்கும் முன்பாக வெறுப்பாகி நின்றான்.
'தம்பியாண்டானுக்கு ஒண்டுமே முகத்துக்கு நேர சொல்லப்படாது. சரியான மூக்குறுஞ்சு மூஞ்சூறு' திரும்பவும் கடிந்து கொண்டாள் தமக்கை.
"இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு கொஞ்சமும் பயமில்ல. யோசனையுமில்ல. நாங்கள் ஏதோ பிள்ளையளை வீட்டுக்க வைச்சு பொத்திப் பொத்தி வளக்கிறம் அதுகளுக்கு என்ன நடக்கப் போகுதோவெண்டு நாங்க இங்க துடிச்சுக்கொண்டிருக்கிறம். ஆனா, அதுகளென்னெண்டால் ஒரு விளையாட்டுவிளையாடிக்கொண்டு திரியிதுகள்' இப்படியாக அன்னை அதட்டிவிரட்டவும் மகன் அடங்கிவிட்டான்.
இப்படியான குடும்ப விஷயத்திலெல்லாம் தகப்பன் எப்படியாக நடந்து கொள்வாரென்று நினைக்கின்றீர்கள்?
அவர் பிள்ளைகளை சினம் வரப்பண்ணக் கூடியதாக எப்போதுமே

Page 46
70 மாபெரும் புறப்பாடு
கண்டித்துப் பேசுவதில்லை. எதற்கும் தன்மையாக நல்ல, நல்ல ஆலோசனைகளை தக்கநேரத்தில் அவர் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்வார். சாலமோன் அரசன் எழுதிய நீதிமொழிகளை பைபிளிலிருந்து படித்துப் பெறப்பட்டதால் உண்டாகிய அறிவு குடும்பவாழ்வை நல்வழிப்படுத்த அவருக்குத் துணைநிற்கிறது. அதனால்தான் இந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த அறிவை துணையாகக் கொண்டு தீர்க்கமான ஒரு முடிவை அவர் வேளைக்கே எடுத்தார். அவர் எடுத்த தீர்மானத்தின்படி குடும்பத்தை யாழ்ப்பாணத்தி லிருந்து மிரிசுவிலுக்குப் போகவைக்க லொறி ஒன்றை கூலிக்குப் பிடிப்போம் என்று வெளிக்கிட்டதில். அங்கே ஐயாயிரம் ரூபாய் இரக்கமில்லாமல் கேட்டார்கள். கூலி உச்சம்! என்று எங்கெங்குமே அலைந்தலைந்து கேட்டாலும் அதே தொகையைத்தான் திரும்பத் திரும்ப வாகனகாரர்களிடமிருந்து கேட்கமுடிந்தது. எல்லா சனங்களுக்கும் அவதி ஓட்டம் இருக்கும்போது இங்கே குறைவான கூலிக்கு வாகனம் பிடிப்பது அசாத்தியமானது என்ற நிலைமை விளங்கியது. அவர் ஒன்றும் கனதனவான் அல்ல. என்றாலும், இந்த நேரம் பத்தைந்தைப் பார்க்கக் கூடாது என்று அவர் நினைத்தார். இதனால் பிறகு “சரி” என்று சொல்லி அதற்கு ஒத்துக்கொண்டு ஒரு லொறியைப்பிடித்து வந்து பாத்திரம் பண்டங்களையும் ஏற்றி விலை மதிப்புள்ளபொருட்களையும் அதில் ஏற்றினார்.
“இப்படி உள்ளதுரியதெல்லாம் எங்கேயாவது போய் இருந்து சீவிக்க காப்பாற்றப்படவேண்டுமே என்ற நோக்கில் செயல்பட்டார். எல்லா காரியமும் ஆகிமுடிந்ததும் வாகனத்தில் வீட்டார்கள் ஏறும்போது; .
“நீங்களும் வரலாம்தானே உங்கதனியக்கிடந்து என்ன செய்யப்போறிங்க' - என்று அவருடைய மனைவி கேட்டாள்.
“உடனே எங்கயும் வெளிக்கிட்டுப்போக சயிக்கில் கிடக்கு. இரவுக்கு நீங்க வைச்சிட்டுப் போற சாப்பாடிருக்கு. தேத்தண்ணி குடிக்கவெண்டும் பிளாஸ்க்கில சுடுதண்ணியிருக்கு நீங்க பயப்பிடாதே யுங்கோ நான் இருந்து பாத்திட்டு வாறனே’ என்றார் அவர்.
அவர்கள் வெளிக்கிட்டுப் போனதற்குப்பிறகு அன்று முழுக்க எல்லா இடமும் அலைக்கழிந்து திரிந்து அங்கம் உலைந்துபோன சோர்வில் விட்டு வெளி விறாந்தையில் கிடந்த வாங்கில் போய்ப் படுத்ததும் அப்படியே அவர் கண்ணயர்ந்து விட்டார்.
இயற்கையின் எழில் கொஞ்சும் யாழ் குடாநாட்டிலே ஒருகாலம் பறவைகளின் இன்னிசைகானம்தான் காலையும் மாலையும் இங்கு வாழ்ந்தவர்கள் செவிகளில் கேட்டுக்கொண்டிருந்தன. இப்போதோ!

@ நீ.பி.அருளானந்தம் 71 பயங்கர ‘செல்’ சத்தங்கள்தான் இங்கிருப்பவர்கள் நெஞ்சங்களை தக்குத்தக்கு’ என்று அடித்துக்கொள்ளச் செய்கின்றன. இங்கு சீவிப்பவர்கள் யாராவது யுத்தம் நடக்கும் காலத்தில் ஒரு நாளைக் காவது நிம்மதியாக நித்திரை கொண்டிருப்பார்களா? சொல்லட்டும் பார்க்கலாம்!
பின்னேரக்கைக்கு அவ்விடத்துக்கருகில் வந்து விழுந்து வெடித்த செல்களின் சத்தங்களைக் கேட்டு பதறி உதறிக் கலக்கமுற, அன்ரன் எழுந்துவிட்டார். ‘அயர்ந்து நித்திரை கொண்டுவிட்டேனா? - என்று பயப்பட்டுப்போய் தன்னைத்தானே அவர் கேள்விகேட்டுக்கொண்டார். இப்படியான நேரங்களில் ‘சவம் போல கிடந்து நித்திரை கொள்ளக் கூடாது' என்றுதான் எல்லாரும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.
*செல்’ சத்தங்களை அடுத்து, வெளிவீதி வழியே ஒலிபெருக்கி யில் - சோல்லிக்கொண்டு போன அறிவித்தல் சரியாக அவருக்கு விளங்கவில்லை. வீட்டுக்கு வெளியே வந்தால் விஷயத்தை அறிந்து கொள்ளலாம்' - என்று வீதிக்கு வந்தார்.
அவரைப்போலவே அடுத்த வீட்டுக்காரரெல்லாம் அவ்விடத்தில் வந்து மொய்த்திருந்தார்கள். ‘என்ன நடந்ததோ’. நினைக்கப் பயமாக இருந்தது அவருக்கு.
“பீக்கரில என்ன சொல்லிக்கொண்டு போகினம்? - என்று அண்டை வீட்டுக்காரரைக் கண்டதும் கேட்டார்.
“எல்லாரையும் யாழ்ப்பாணத்தால வெளிக்கிட்டுப் போகட்டாம்!” ‘விளங்கேல்ல?” “மூண்டு மணித்தியாலத்துக்க எல்லாரும் இங்கயிருந்து உடன அங்கால வேற இடங்களுக்கு போயிட வேணுமாமப்பா. தம்பிமார் சொல்லுகினம்" - மனம் உடைந்து போய் அவர் சொன்னார்.
அங்கு நிற்கின்றவர்கள் முகத்திலெல்லாம் ஏமாற்றத்தின் சாயலே முகங்களில் வியாபித்திருந்தது.
‘இன்னும் மூன்று மணித்தியாலங்களா? ‘டிக்டிக்டிக்’ என்று நேரம் சென்று கொண்டிருப்பதான உணர்வு சுவாசக்காற்றையும் உஷ்ணமாக அவரிடமிருந்து வெளியேற்றியது. பதைக்கப்பதைக்க வீட்டுக்கு வந்து சைக்கிளை எடுத்தார். அடிவயிறு வலிக்குமட்டும் காற்றுப் பம்மைக் கொண்டு நிறையக் காற்றடிததார். சாப்பாடு போட்டு மூடி வைத்திருந்த கிண்ணத்தை வயர்ப் பைக்குள் வைத்தார். சுடுதண்ணிர்ப் போத்தலையும் பையினுள் பாட்டமாக நுழைத்தார். வீட்டைப்பூட்டி சாவியை எடுக்கும் போது வீட்டுநாய் அவருடைய காலை நக்கியது.

Page 47
72 மாபெரும் புறப்பாடு
'பாவம். கறுமம்! எல்லாரும் நாயை மறந்திட்டுப் போகிறமே என்ன செய்வம்'
யோசித்துக்கொண்டு மாத்திரம் அங்கு அவர் நிற்கவில்லை. வீட்டுக்கு முன் உள்ள கடைக்கு ஓடினார்.
“இரண்டு றாத்தல் பாண் தாருங்கோ’
‘அண்ணை1. லொறியில சாமான்களை ஏத்திறம். என்னத்துக் கெண்டு தெரியுந்தானே உங்களுக்கு!” - முதலாளி இப்படியாக சொன்னார்.
“தம்பி.! - அவரைப்பார்த்து இரந்தார் இவர். “கொண்டுபோங்கோ. இந்தாங்கோ’ பாணை எடுத்து நீட்டினார் கடைக்காரர்.
இவர் கையோடு காசை நீட்டினார். “சும்மா போங்கோய்யா!. ஒண்டுமே விளங்காத மாதிரி இந்த நேரத்தில நிண்டு கொண்டு செல்லம் விளையாடுறீங்க. இந்தாப்பா உடையிற சாமான்களை தனிய கவனமாவை. சுறுக்குப்பண்ணி ஏத்துங்கோப்பா”
இவரையும் அவர் நீட்டிய காசையும் கணக்கெடுக்காது வேலையாட்களோடு சேர்ந்து கடை முதலாளியும் சாமான் சக்கட்டுகளை தூக்கிப் போட்டுக்கொண்டு நின்றார். வில்போல் வளைந்து முதுகு முறிகிற அளவுக்கு அவர்கள் வேலை செய்வதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு பாணோடு அவர் வீட்டுக்குத் திரும்பினார். முழுப்பாணையும் விண்டு, விண்டு ஒரு சட்டியில் போட்டு நாய்க்கு வைத்துவிட்டு வீட்டைப் பூட்டியதும் வீட்டு வாசலில் கிடந்த செருப்புகளை பாதத்தால் துழாவி அணிந்து கொண்டு சயிக்கிளுடன் உடனே அவர் வீதிக்கு வந்தார்.
அங்கே சாதாரணமாக இருக்குமாப்போலத்தான் சயிக்கிளிலே சனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள். வீதியில் சன நெரிசலும் இல்லை. இடைவிட்டு மண்ணெண்ணெய்யில் ஒடுகின்ற வாகனங்கள் தான் ஆட்களை விலத்திக்கொண்டு விரைவாகச் சென்று கொண்டிருந்தன. இதே வீதியைப் போலத்தான் கண்டி வீதியும் நெரிசலில்லாமல் போக்குவரத்துக்கு சுலபமாக இருக்கும் என்று அன்ரன் மனதுக்குள் கணக்குப் போட்டார். தடையில்லாமல் சுலபமாக சயிக்கிளில் சவாரி செய்யலாம் என்ற தனது திட்டத்தில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.
ஆனால், கண்டி வீதியை நெருங்கியதும் நிலைமை வேறு விதமாக இருந்தது. வீதியை நிறைத்து தலை எண்ணிப் பார்க்க முடியாத சனக்கூட்டம் திரள்திரளாகப் போகக் கண்டு அவர் அயர்ந்து விட்டார்.

இலி நீ.பி.அருளானந்தம் 73
அங்கே சயிக்கிளிலிருந்து இறங்கி நடப்பதைத் தவிர வேறு வழி இல்லாததால் அவர்களுடனே அவரும் சேர்ந்து கொண்டு சயிக்கிளை உருட்டிக்கொண்டு நடக்கலுற்றார்.
யாழ்குடா நாடெங்கும் வீதியின் இருமருங்கினிலும் தோரணங்கள் கட்டி சிறப்பாக விழாவெடுத்த உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு அவருக்கு அப்போது நினைவில் வந்துநின்றது. அதுதான் யாழ்ப்பாணத்தில் அவர் வீதிவழியே பெரிதாகக் கண்ட சனக்கூட்டம், இத்தனை காலம் கடந்து கண்டிவீதியிலே அந்தளவு சனக்கூட்டத்தை திரும்பவும் காண்கயிலே பிரமிப்பு இவருக்கு.
நடந்து கொண்டிருக்கும்போது ஆளுக்காள் அங்கே கதைத்துக் கொள்வதை இவரால் பார்க்க முடியாவிட்டாலும் அவர்களது பேச்சுக் குரல்கள் ‘கலாமுலாமென்று இவரது காதிலும் விழுந்துகொண்டே இருக்கின்றன.
திரண்டுவரும் சனங்களின் வேர்வை மணமும் அலையடிக்கின்றது. அவர்கள் அணிந்திருக்கிற காலணிகளால் உண்டாகும் அமளியும் தொடர்ந்தாற்போல் கேட்கிறது. இந்த நெரிசலுக்குள்ளே தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்களே. என்று அக்கம் பக்கம் திரும்பி ஆரையும் அவரால் பார்க்கவே முடியவில்லை. அதற்குள்ளே மாட்டு வண்டில்களும், லொறிகளும், பழைய ஒஸ்ரின் மொடல் கார்களும் வேறு அங்கே சனங்களோடு போட்டி போட்டுக்கொண்டு ஊடுருவிப் போக பிரயத்தனப்படுபவை போல் தென்படுகின்றன. இந்தமாதிரி நெருக்கடியான கஷ்டமான காட்சிகளைக் காணும் புதிய அனுபவம் உமட்டலாக இருந்தது அவருக்கு.
சைக்கிளை உருட்டிக்கொண்டு அந்த நெரிசலுக்குள்ளே செவ்வையாய் நடக்க அவரால் இயலவில்லை. பையப்பைய நடந்துகொண்டே ஒருவர் பிறகாலே ஒருவராய் செல்வது அன்ரனுக்கு பெரும்பாடாக இருக்கிறது. கால்களில் இருக்கும் பழைய செருப்பு அறுந்துவிடாமல் லாவகமான கோணங்களில் பதித்து நடக்க வேண்டியதான கவனமும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. நல்லூர் கோயிலில் அங்கப் பிரதட்சிணம் பண்ணும் பக்தர்களை அன்ரன் கண்டிருக்கிறார். கடைசியாக இளைத்துக் களைத்து உருண்டு கொண்டிருக்கும் அவர்களுக்குப் பின்னால் போகின்றவர்கள்போல இப்போது அவரும் இருப்பவராக அறிகிறார்.
இந்த மாபெரும் புறப்பாடு எங்கேதான் போய் முடியப் போகின்றதோ!.
முன் ஒரு காலத்தில் எகிப்திய மன்னன் பார்வோனின் கீழ் அடிமைப் பட்டுப்போய்க் கிடந்த இஸ்ரவேலர்களை விடுத்து ‘ஜெகோவா" தேவனின் கட்டளைப்படி ‘மோசே என்பவர், அவர்களை பாலும்

Page 48
74 மாபெரும் புறப்பாடு
தேனும் பொழிகின்ற கானா’ என்கின்ற தேசத்துக்கு அழைத்துப் போனார். ஆனால், இங்கே பாலும் தேனும் பொழிகின்ற செழிப்புடைய யாழ்நகரைவிட்டு அனாதரவான நிலையில் யாரிடமிருந்தும் எந்த உதவிகளும் இன்றி எங்கே போகின்றோம் என்ற திக்குமில்லை திசையுமில்லாத நோக்கில் அகதிகளாக மக்கள் வெளியேறுகிறார்கள். தாம் பிறந்த ஊருடன் இன்றுவரை தொப்பூள் கொடி உறவை வைத்திருப்பவர்கள் அது வெட்டுண்டது போல் உணர்ந்து நொந்தபடி போகிறார்கள். எல்லாரது முகத்திலும் சொந்த மண்ணை இழந்த சோகம் தெரிகிறது.
இதையெல்லாம் பார்த்து அதையெல்லாம் அவர் நினைக்க வேண்டியதாய் ஏன் வந்தது? அவர் பைபிளை தவறாமல் படிப்பவர். தன்வாழ்வின் நிகழ்வுகளையெல்லாம் பைபிள் வசனங்களில் பொருத்திப்பார்ப்பது எப்பொழுதுமே அவருக்குப் பழக்கமாகிவிட்டது. இன்னமும் அவர் அங்கே பார்க்கும்போது. ‘கடக்கடக்' என்று மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும் தாளகதியும் ஒலிக்க ஒரு மாட்டுவண்டி அவருக்கு முன்னாலே அந்த வீதியாலே போய்க் கொண்டிருந்தது.
அந்த மாட்டு வண்டிலில் அம்மி, குழவி, கனமானதடித்த கடகம், ஆட்டுக்கல் கூட ஏற்றப்பட்டுள்ளதாய்த் தெரிகிறது.
அதற்கு மேலே எத்தனை மண்வெட்டிகள், கலப்பைமேழிகள். எங்கே போய் இவர்கள் தோட்டம் கொத்தப் போகிறார்கள்? நிலத்தை உழுது விவசாயம் செய்யப்போகிறார்கள்?
உண்மை நிலை இதுதான் அவர்கள் விவசாயிகள் அவர்களுக்குத் தேவை மண் வெட்டியும் கலப்பையும்தான். ஆனால், இந்த நாட்டில் இனத்துவேஷம் கக்கும் போர் வெறிகொண்ட அரசியல்வாதிகளுக்கும், மதகுருமாருக்கும் என்னதேவையாக இருக்கிறது? இந்த நாட்டில் நீடித்த ஒரு யுத்தமும் அந்த யுத்தத்துக்குத் தேவையான ஆயுதங்களும் தான் தேவையாக இருக்கிறது. யுத்தம் தொடர வேண்டும் அதிலே அவர்களுக்குப் பல நன்மைகள் இருக்கின்றன.
‘அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். தேசத்தாருக்கு விரோதமாக தேசத்தார் பட்டயம் எடுப்பதில்லை! இனி அவர்கள் யுத்தத்தை கற்பதுமில்லை!"
என்கிற இந்த வார்த்தைகள் ஐக்கிய நாட்டு சபையின் சதுக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. உலக சமாதானத்தை உருவாக்கும் லட்சியமுடைய இந்த மேற்கோளானது தீர்க்கதரிசி ஏசயாவால் முன்பு எழுதப்பட்டது. பைபிளில் உள்ளவாக்கியம் அது. இன்று ஐக்கிய நாடுகள் சபை அதை எழுதிவைத்திருக்கிறது.

ള് நீ.பி.அருளானந்தம் 75
ஆனால், பட்டயங்களை கலப்பைக் கொழுக்களாக அடிக்க ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு நாட்டு அரசாங் கமாவது மனதார விரும்புகிறதா.
இந்த விஷயங்கள் யாவற்றையுமே அந்த வீதியால் நடந்து கொண்டிருக்கும்போது அன்ரன் ஞாபகப்படுத்திக்கொண்டு சிறிது நேரம் சிந்தித்தார். இவைகளையன்றி வேறு என்னதான் இந்த இடத்திலே அவருக்கு நினைவு வரும். இந்த இடப்பெயர்வுக்குப் பின் நாளைய வாழ்வு என்ன? பிள்ளைகளினது நிலை என்ன?
அதைச் சுற்றியும் நினைத்துக்கொண்டு மூளையைப் போட்டு குழப்பிக்கொண்டிருக்கையிலே நேரம் போனதே அவருக்குத் தெரியவில்லை. இருட்டுப்பட்டு ஒரு மணித்தியாலம் கடந்துவிட்டதாகத் தோன்றியது. இருட்டுக்குள்ளே குருட்டாம் போக்கிலே எல்லாரும் நடந்துகொண்டிருக்கிறார்கள். கண்கள் நல்லாய் இருட்டுக்குள் பழகி விட்டவர்கள்தானே இவர்கள். எங்கிருந்தோவெல்லாம் பெயர் தெரியாப் பூச்சிகள் கத்திக் கொண்டிருக்கின்றன. மோட்டார் வாகனங்களின் விளக்குகளும் அரிக்கன் விளக்குகளும் பிறகு வீதியை வெளிச்சமாக்கு கின்றன. வெட்ட வெளியான வானமெங்கும் நட்சத்திரங்கள் பூத்துப்போய்க்கிடந்தன. அங்கே விண்வீழ்கொள்ளி இறங்கி மறைந்ததையும் அன்ரன் கண்டார்.
இந்த வழியே சுமைகளை தலையில் வைத்து கழுத்து வேர்க்கப்பலர் நடந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட மொத்தக் கம்பிலே தொட்டில்போல்கட்டி முன்னுக்கும் பின்னுக்கும் இரண்டு தைரியமான ஆண்கள் சுமக்க அந்த ஏணைக்குள்ளே தோல் சுருங்கி வற்றி உலர்ந்துபோன உடம்பையுடைய ஒரு கிழவி பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு குந்திக் கொண்டிருக்கிறாள். இக்கட்டான இந்த வேளையிலே ஆளையாள் சுமக்க வேண்டிய சுமை. வீட்டிலே நீட்டி நிமிர்ந்து கிடந்து சாகவேண்டிய கொள கொளத்த பழம் மாதிரி இருக்கும் கிழங்களுக்கும் இடப்பெயர்வு.
இந்த வேளையிலே பொசுபொசென்று மழையும் தூறுகிறது. மின்னல் வாள்போல் மேகத்தை வெட்டுகிறது. காற்று மந்தகாசமாக வீசிக் கொண்டிருந்தது. இவ்விதம் பல காட்சிகளையும் கண்டு துன்பக் கடலில் அமிழ்ந்து போயிருந்தார் அன்ரன். மேலும் அவரை உசுப்பி விட்டது போல விழிக்கச் செய்தது ஒரு பெண்ணின் குரல்;
“தம்பி!. தம்பி. தம்பி” சனக்கூட்டத்துக்குள் அவருக்கு கிட்டவிருந்தும் கேட்கிறது மாதிரி இருக்கிறது. எட்டவிருந்தும் கேட்கின்றது போல ஐயமாகவும்
தெரிகிறது அழுவாரைப் போன்ற அவளது அவலக்குரல்.
அந்தநேரம் தன் மகனையும் ஒரு முறை அவர் நினைத்தார்.

Page 49
78 மாபெரும் புறப்பாடு
உடனே மனத்தில் சந்தேகப்பூச்சி ஊரத் தொடங்கிவிட்டது அவருக்கு. இதனால் நெற்றியில் அவருக்கு யோசனைச் சுருக்கங்கள் எழுந்தன. என்றாலும் மனசைத் திடப்படுத்தி சமாளித்துக்கொண்டு அந்தப் பெண்ணைப் பற்றித்தான் பிறகு அவர் நினைத்தார். இந்த நெரிசலுக் குள்ளே தன்னுடைய தம்பியை எப்படித்தான் அவள் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறாள். என்ற ஐமிச்சம் அவருக்கு வந்தது. இதனால் குரல் வந்த தூரம் மட்டும் பிசகாத பார்வையாய்ப் lustfig5Tir.
ஒருமுகம் அழுதுவடிந்தபடி அங்கே அவருக்குத் தெரிந்தது. அவள்தான். அவளேதான். சிவந்து கன்றிப்போன அந்த முகத்தைப்பார்க்கையில் ஐயோபாவம் என்றிருந்தது அவருக்கு
ஆனால், வினாடிகள் கடந்து கொண்டிருக்க மனிதத் தலைகள் அவள் முகத்தை மறைத்துப்போக அவரும் நடையோடு அந்த இடத்தை விட்டு கடந்துவிட்டார்.
என்றாலும் தம்பி. தம்பி என்ற அந்தக் குரல் அவரது காதில் ரீங்கரித்த வண்ணம் மனத்தைக் கரைத்துக் கொண்டேயிருந்தது.
அப்படியே நடை நடையாய் நடந்து கொண்டிருந்ததில் களைத்துப் போனார் அன்ரன். பசிவேறு குடலை விறாண்டவும் செய்தது. இதனால் வசதியாக வீதி மதகுக்குப் பக்கத்திலே அவர் நின்று கொண்டார். சயிக்கிளை சிமென்டுக்கட்டில் சரித்து விட்டு சாப்பாடிருந்த கிண்ணத்தை பையிலிருந்து எடுத்து ஒரு கவளம் சாதத்தைப் பிசைந்து வாயில் வைத்தார். அது தொண்டை வழியே இறங்கியதும் ஏனோ வயிறு செம்மினாப் போல இருந்தது அவருக்கு. நாவும் சுரைக்குடுவை போல சுவையற்றிருந்தது. இதனால் மேற்கொண்டு ஒரு கவளமாயினும் அவரால் சாப்பிடவே முடியவில்லை.
இப்போதும் ‘தம்பி தம்பி’ என்ற அந்தக் குரல்தான் காதில் கேட்டுக்கொண்டிருப்பதான ஒரு பிரமை எழுந்தது அவருக்கு.
இப்போது கேட்பதுபோலிருப்பது வெறும் நினைவுதான் அது உண்மையில்லை என்பது அவருக்குத் தெரியும். என்றாலும் மனத்தில் வீணாகப் பல எண்ணங்கள் காளான்களாக முளைக்கத் தொடங்கின. உடனே சாப்பாட்டுக் கிண்ணத்தை மூடினார். தாகம் எடுத்தது. தண்ணிரைக் கொண்டுவராத தவற்றை இப்போதுதான் அவர் அறிந்தார்.
என்றாலும் சுடுதண்ணிர்ப் போத்தலிலுள்ள வெந்நீரை மூடியில் ஊற்றினார். சுடுநீரின் ஆவி வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தது. சின்ன மூடியையும் கழற்றி ஆறமட்டும் கைநோவு எடுக்க ஆற்றினார்.

ള് நீ.பி.அருளானந்தம் 77
பின்பு குடித்தார். என்னவோ அந்தக் குளிர்ச்சியற்ற தண்ணிருக்குத் தவனம் அடங்கவில்லை. திரும்பவும் எல்லாவற்றையும் மூடி பையில் வைத்து விட்டு மீண்டும் அவர் நடையைக் கட்டினார்.
நடு நிசி கடந்து சாவகச்சேரியை அண்மித்ததும் சன நெரிசல் குறைந்து விட்டது. அவரால் ஒருவாறு சயிக்கிளில் ஏறி சவாரி செய்ய முடிந்தது. குளிரால் விறைத்துக் களைத்தும் தொடர்ந்து பல மைல் கடந்த சயிக்கிள் சவாரியின் பின்பாக.
‘விடியட்டும். அதின் பிறகு மனுவழி பிள்ளையஸ் இருக்கிற சொந்தக் காரற்ற வீட்ட போய்ச் சேரலாம்' - என்ற எண்ணத்தில் வீதியருகிருந்த பஸ் தரிப்புக் கூடாரத்தில் சயிக்கிளைவிட்டுப் பூட்டி விட்டு கால் கைகளை நீட்டிக்கொண்டு சிமெந்துக்கட்டில் படுத்தார்.
'ஆர் படுத்திருக்கிறது?” உடல் அலுப்பிலே அருவருப்பாக இருந்தது அவர்களது கேள்வி. இரண்டு இளைஞர்கள் தங்குமிடத்துக்கு வெளியே நின்று கொண்டிருப்பதை மங்கிய வெளிச்சம் காட்டியது.
“அது நான்!” “நான் எண்டால் ஆர் நீர்? “இப்ப எனக்கு சரியான விலாசமில்ல நான் அகதி!” தனது வேதனைகளை இப்படியாக வார்த்தைகளில் கொட்டினார். அவர்கள் இருவரும் மெளனமாகி விட்டார்கள். '6, IITLITUrt (SurroLib' ஒருவன் கூப்பிட்டான். பிற்பாடு சத்தமில்லை! எழுந்திருந்தவாறு வெளியே பார்த்தார். அவர்களைக் காணவில்லை. தேய்ந்த நிலவு வானத்தில் தெரிந்தது. விடிந்தது போலவும் இருந்தது. சயிக்கிளை எடுத்துக்கொண்டு மனைவி பிள்ளைகள் இருக்கும் குறிப்பிட்ட இடத்துக்குப்போனார்.
அந்த வேளை கிழக்குவெளுத்து உதயம் கண்டது. சேவலின் கொக்கரக்கோவும் குருவிகளின் கிசு மிசுப்பும் கேட்கத்தொடங்கி விட்டது. அந்த விடியலிலே படலைக்கு வெளியால் அவர்கள் எல்லாரும் நின்றார்கள். நித்திரை வெறியில் அவருக்குத் தலை "கிறு கிறுத்தது.
"ஏன் இதில எல்லாருமா நிண்டு கொண்டிருக்கிறியள்?” பாம்புபோல் ஊர்ந்து நெளிந்த சந்தேகத்தோடு அவர் கேட்டார். பதில் இல்லை!

Page 50
78 மாபெரும் புறப்பாடு
அவர்களுடைய முகம் துயரத்தால் கரிக்கட்டை போல் ஒழியிழந்து கிடந்தது.
"என்ன நடந்தது? தம்பி எங்கே?' பதட்டத்தோடு கேட்டார். அப்பொழுதும் பேச்சில்லை! "ஊமைக் கோட்டான்களே சொல்லுங்கோவன் வாயைத்திறந்து?" - என்றைக்குமில்லாதவாறு புதிதாக இன்றைக்கு அவருக்குக் கோபம் வந்தது. அதைக் கணக்கெடுக்காது இரண்டு பெண்பிள்ளைகளும் சோகமே உருவாக நின்றார்கள். தாய் திக் பிரமைபிடித்தவள் போல் இருந்தாள். இதயத்தை இயங்கவிடாமல் யாரோ அழுத்திப் பிடிப்பது போல வேதனை அவருக்கு எழுந்தது. பய்த்தால் நலுங்க நெஞ்சடிப்பு அதிகரித்தது அவருக்கு
'தம்பி எங்க தம்பி எங்கயெண்டு சொல்லுங்கோ' கேட்டவாறு உள்ளம் துடிதுடித்தார். பயங்கர நினைவுகள் அவரது உடலைச் சாம்பிவதைத்துக் கொண்டன.
'தம்பியைக் காணோமப்பா இயக்கத்துக்கு ஒடீட்டான் போல இருக்கு துக்கசாகரத்தில் அழுகை பொத்துக்கொண்டுவர அடித் தொண்டைகமற குணசீலி சொல்லிக் கதறினாள்.
தம்பி. அடமோனே. Jाका"
அவர் வாய்பிதற்ற ஆரம்பித்துவிட்டார். அவரது உள்ளம் காளவாயாய்க் கொதித்தது. பேதலித்துப்போயிருக்கும் அவருடைய சாகரக்கண்களிலிருந்து கண்ணிர்வழிந்து கீழே நிலத்தில் விழுந்து சிதறின. இந்தத் துன்பமிகுதியாலே உடை, உடல் குறித்த அக்கறை ஏதுமற்று புழுதியில் அப்படியே 'தக் கென அவர் உட்கார்ந்து விட்டார். அப்போது இரவு கேட்ட அந்தப் பெண்ணினுடைய துன்பக் குரல் நினைவுகளில் இழையோடி திரும்பவும் செவிகளில். தம்பி. தம்பி என்று இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருப்பது போல் அவருக்குத்தோன்றியது. இப்போது அந்தக் குரல்தனது சோகத்தில் பங்கு கொள்வதாகவும் அவர் உணர்ந்தார்.
அவரைப்போல அவரது குடும்பத்தினர்களும் திக் பிரமை பிடித்துப் போய் நின்றார்கள். அவர்கள் எல்லாரும் நிலை குத்திப்போன கண்களால் ஒருவரையொருவர் பார்த்தபடி கண்ணிர் வடித்தார்கள்.
ஒலை - 24 கொழும்பு தமிழ்ச் சங்க மாதாந்த மடல் (OTii 2004)
 

சி/வின் மடியில் மரணவேதனையை இப்பொழுதுதான் அவள் அனுபவிக்கிறாள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்று உணரச் சக்தியில்லாதவெறும் சதைக் கோளமாக அவள் கட்டிலின் மீது கிடக்கிறாள். அவள் அனுபவிக்கிற உடல்வேதனையைக் கண்டு மனம் வெதும்புகிறான் பக்கத்தில் நிற்கும் அவளது மகன். அவளுக்கு வயதுபோய் விட்டதுதான்! என்றாலும், “அன்னை' என்கிற பாசத்தினால் மனம் உடைந்து போய் அவன் அழுகிறான். தாயின் இந்தக் கடைசிநேரத்திலே அவன் வரக்கிடைத்தது பாக்கியம்தான்! அவளுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு எல்லா உதவிகளையும் அவன் செய்கிறான். சிலவேளைகளில் வாயிலிருந்து சளி வெளிப்பட்டால் துணிகளால் துடைக்கிறான். சாடையாக "விசிறியால் காற்றுப்பட விசிறிவிடுகிறான்.
சிறுநீரகத்தில் சிறு குழாயொன்று அவளுக்குப் பொருத்தப் பட்டிருக்கிறது. அதிலிருந்து சொட்டுச் சொட்டாக ஒழுகும் சிறl

Page 51
80 கருணைக் கொலை
கண்ணாடிப்போத்தலொன்றில் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அதையும் சில மணித்தியாலங்களுக்கு ஒரு முறை மலசல கூடத்தில்கொண்டு போய் கொட்டி சுத்தம் செய்து வைக்கிறான். இன்னநேரத்துக்கு இன்னமருந்து என்றும் எடுத்து அவளின் வாய்க்குள் போட்டு கொஞ்சம் தண்ணிரை வாயில் விடுகின்றான்.
கிழவிக்கு நல்ல அறிவு இருக்கிறது. குளிசையை வாயில் வைத்தால் அதை விழுங்கவேண்டும் என்று நன்றாக விளங்குகிறது. தொண்டையில் பொறுப்பது போல் கஷ்டப்பட்டாலும் பிரயத்தனப்பட்டு அவள் விழுங்கிவிடுகிறாள்.
மகனைப் பார்க்கிறாள். எதை எதையோவெல்லாம் அவனிடத் தில் சொல்ல வேண்டுமென்று அவளுக்கு அவா. ஆனாலும், அவைகளையெல்லாம் வார்த்தைகளால் சொல்லி விளங்கவைக்க அவளுக்கு இயலவில்லை! பேசமுடியாதபடி நாக்கு அவளுக்கு தொண்டைக்குள் இழுத்துக் கொண்டு விட்டது. கோணல் வாய் வெளிவரும் வார்த்தைகளை உருவமற்றதாய்ச் சிதைத்து விடுகிறது. குத்திட்டபடி நிலைத்திருக்கும் அவளது பார்வையிலிருந்து எதையும் கண்டு பிடிக்க இயலாத குழப்பத்தில் மகன் இருக்கிறான். என்றாலும், பாசம் எனும் வெளிப்பாடு அவள்பார்வையில் புலப்படு கிறது. இரவு வந்தால், தாயின் அருகில் இருக்கும் இவன் மிகவும் கஷ்டப்படுகிறான். தூக்கத்தின் முன்பு எந்த அன்புதான் நிலைநிற்கும். என்றாலும் அந்த மருந்துப்போத்தலின் அருகில் அவன் விழித்திருக்க வேண்டும் போலத்தான் இருக்கிறது. இது அவன் செய்யவேண்டிய கட்டாயமான கடமை. அவனது கடைசிக் காலத்திலும் இப்படியாக ஒருத்தன் அவனுக்கு உதவி செய்வான் என்கிறதாய் ஒரு நம்பிக்கை. “கடவுளே! அம்மாவின் கஷ்டத்தை நிவர்த்திக்க அவளது ஆவியைப் போக்கிடமாட்டாயா?” - என்று கூட அவன் நினைத்து விட்டான்.
அப்படி தான் நினைத்ததில் பாவமில்லை என்றும் நினைக்கி றான். அவன் அம்மாவுடன் இருக்கும் அறைக்கு முன்னால் விசாலமானதொரு ‘ஹால் இருக்கிறது. அங்கே அவனது அக்காவின் பிள்ளைகள் இரண்டுபேர் சோபாவில் இருக்கிறார்கள். அங்கு இருந்து கொண்டு அவர்கள் பாடசாலைப் புத்தகங்களை விரித்து வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாட்டிக்கு உதவி செய்ய வேண்டுமென்ற பொறுப்பு அவர்களிடத்தே இல்லை! அப்படி அவர்களைப் போல இருப்பதற்கு இவனுக்கு முடியுமா? பெற்ற தாயை பிள்ளை பார்க்காமல் வேறு யார்தான் 器 பார்த்து உதவி செய்வார்கள்? இப்படியாக அந்தக் கடமையை செய்ய வேண்டும் என்பதாய் அவனுக்குச் சிந்தனை!

ള് நீஃபி.அருளானந்தம் 81
இதற்குள்ளே பழைய நினைவுகளும் அவனுக்கு வருகின்றன. அவனது இளம் பிராயகாலத்துக் கனவுகள் எல்லையற்ற கடல் போல் பரிமாணம் கொண்டதாய் மனத்தில் விரிந்தது.
சின்ன வயசில் அவன் இருக்கும்போது ‘வெல்வெட்' துணியில் அம்மா தனக்கு கால்சட்டை தைத்துப்போட்டு விட்டது. சமையலறையி னுள் பலகையில் தன்னை இருக்கவைத்து சுடச்சுட தோசை சுட்டு சாப்பிட தந்தது, உடம்பு முழுக்க நல்லெண்ணெய்யைப் பூசி சீயாக்காய் அரப்பு அவித்து தலையில் தேய்த்து குளிப்பாட்டிவிட்டது. விளக்கெண்ணெய்யை மூக்கைப்பிடித்துக் கொண்டு பருக்கிவிட்டது இன்னும் எவ்வளவோ காரியங்கள் சங்கிலிக் கோர்வைபோல் தொடர்ச்சியாக நினைவில் வருகின்றன. அதற்குள்ளே அவனுக்கு பிடிக்காத சில சம்பவங்களும் நினைவில் வரத்தான் செய்தன. காலையில் நித்திரைப்பாயால் எழும்பாது விட்டால் ‘தொண தொண வென்று பேசிக்கொண்டிருப்பது. அந்தப்பேச்சுக்கும் எழும்பாது விட்டால் படுக்கையில் வைத்தே பிரம்படிபோடுவது. இன்னும், பெட்டைகளோடு அப்போது சேர்ந்து விளையாடுவதைக் கண்டால் “பெடியனுக்கென்ன பெட்டையளோட ஒரு விளையாட்டு’ - என்று பேசியது. அதை யெல்லாம் இந்த இடத்திலிருந்தவாறே நினைத்து அவன் பொழுதைப் போக்கடித்துக் கொண்டிருந்தான்.
இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? எத்தனை நாட்கள்? - இதற்குள்ளே கிழவிக்கு படுக்கைப் புண்ணும் பிடித்து அதுவும் பெரிய தொல்லையாகிவிட்டது அவனுக்கு. அப்படியே கிழவியை ஒருக்களித்து படுக்கவைத்துப் பிடித்துக்கொண்டு சுடுநீரால் புண்களையெல்லாம் கழுவித்துடைத்துப் புயமாவைப் பூசினான். அவளது தலைமயிரும் சிக்கெடுத்ததாய்விட்டது. ஒழுங்காக தலை மயிரைவாரிநேர்த்தி செய்யமுடியாது சீப்பு இடையில் சிக்கிவிடுகிறது. அதனால், சடைஏறிய மயிரை வெட்டித்தள்ளி மொட்டையாக்கி பேனெல்லாம் களைந்து சுத்தப்படுத்தினான்.
சாகும்வரை இரத்தம் குடிக்கும் அந்தத் தலைப்பேனிலே அவனுக்கு ஒரு அருவருப்பு, அதையெல்லாம் அழித்தொழிக்க வேண்டுமென்ற துடிப்பு, நெருப்புச் சட்டியை பக்கத்தில் வைத்து தலைப்பேன் முழுவதும் அதிலே வாரிப்போட்டான். சடசடத்துப் பொசுங்கியது நெருப்பில் விழுந்த பேன்கள்.
இப்படியெல்லாம் இந்த அறையில் கிடந்து இவன் ஒருவன் மட்டும்தான் மாய்கின்றான். ‘நான்மட்டும்தானா அம்மாவுக்குப் பிள்ளை?. மற்றப் பிள்ளைகளுக்கெல்லாம் இந்தக் கடமை இல்லையா?” என்கிறதாய் அவனுக்கு ஆத்திரமும் வருகிறது. அம்மா

Page 52
82 கருணைக் கொலை
இறந்தாற் பிறகு சாவீட்டுக்கு வந்து சேரலாம் என்ற நினைவில் இருந்து கொண்டிருக்கும் அந்த நான்கு சகோதரர்களிலும் அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது.
“ஒ. !! என்ன ஜென்மங்கள் அவர்கள்?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க;
“உங்களுக்கு மட்டும் தானோ அம்மாவைப் பார்க்கவெண்ட கடமையிருக்கு. ஏன் அவயஞக்கெல்லாம் இந்தக் கடமை இல்லையாமோ?” - என்று அவனது மனைவியும் மனசைக் குடைவதுபோல் அவனைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கி றாள். இதற்கு அவனுக்கு என்ன பதில் கூறுவதென்று புரியவில்லை! இப்படி ஏதாவது பிரச்சினைகள் எழலாம் என்பதால்தான் தன் மனைவியைக்கூட இந்த வேலைகளில் இருந்தெல்லாம் ஒதுங்கி யிருக்க வைத்து விட்டு தானே மட்டும் தாயைக் கவனிப்பதில் குறியாயிருந்தான்.
அவனது அக்காவின் வீட்டில்தான் இதெல்லாம் நடக்கிறது. தாய்க்கு ஒரேயொரு பெண்பிள்ளைதான் அவள். அவளுக்குத்தான் இந்தப் பெரிய கடமையெல்லாம் உண்டு. அவள்தான் இதையெல்லாம் செய்யவேண்டும். என்றாலும், மேம்பார்வைக்குத்தான் அவள் அங்கு ஒரு ஆளாய் இருக்கிறாள். தாயின் கட்டிலுக்கு அருகில் அவள் ஒரு போழ்திலும் வந்ததே இல்லை!
“இப்பவெப்பிடி இருக்குத் தம்பி அம்மாவுக்கு?” - என்று மட்டும் கதவுக்கு வெளியே நின்று கேள்வி கேட்டுவிட்டுப் போவதோடு சரி அத்துடன் அவளது கடமை முடிந்ததாய்விடும். இதெல்லாமே கிழவிக்கு விளங்கும். இந்த நேரத்தில் அவளது கண்களிலிருந்து செங்குத்தாய் கண்ணிர் காது வரையில் வழியும். அவன் ஒரு சீலைத் துண்டால் அதை துடைத்துவிடுவான். எல்லாவற்றையும் நினைத்து மனசுக்குள் அவன் அழுகிறான்.
“இப்படிக் கிடந்து அழுந்தி நீயேனெனை சீரழியவேணும்" - என்று பொறுமையை இழந்துபோய் அவன் தாயைப் பார்த்துக் கூறிவிட்டான். அவள் தன் கண்களை மூடிக்கொள்கிறாள். அவன் கூறியதை கடவுளிடம் இரப்பவளாக அவள் இருக்கவேண்டும். இரவிலே கொடுக்கும் நித்திரைக் குளிசைக்கும் ஒழுங்கான நித்திரையில்லை கிழவிக்கு.
“இண்டைக்குக் கொஞ்சம் கூடவாக் குளிசையைக் குடுத்துப் பாப்பமே” என்கிறாள் தமக்கை r
"ஏன்? - என்று அவன் தயங்கிக் கொண்டு கேட்க "உடல்வருத்தம் தெரியாம நல்லா நித்திரை கொள்ளட்டும் தம்பி"

ള് நீ.பி.அருளானந்தம் 83 என்று அவள் சொல்கிறாள்.
‘உதைத்தான் நானும் யோசிச்சன் அக்கா. எண்டாலும் கூடக்குடுக்கக் கூடாதெண்டு டாக்குத்தர் சொன்னார்.”
“உப்படித்தான் அவேயளெல்லாம் சொல்லுவினம். ஆனா இப்படிக் கிடந்து வேதனைப்படுகிறது எங்கட அம்மாவெல்லே.?”
“நீ சொல்லுறதும் சரிதான் உப்புடிக் கிடந்தெல்லாம் அம்மா வேதனைப்படுறதை இரவுவழிய எத்தினை நாள்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.”
“ஆறுதலா அம்மா நித்திரை கொள்ளட்டும் தம்பி அதுகளைக் குடு”
“நீ சொல்லுறாயெண்டு தான் நானும் குடுக்கிறன்!” “நாங்க ரெண்டுபேரும்தானே அம்மாவைப் பார்க்கிறம் இதெல்லாம் எங்களுக்குள்ளேயே இருந்திட்டுப் போவட்டும்”
‘'நீ சொல்லுறதும் சரிதான் அம்மாவுக்கு ஆறுதலாயிருக்க ஒண்டைச் செய்யிறதில என்ன பாவம் இருக்கு. சொல்லன் பாப்பம்?” கிழவிக்கும் விருப்பம்தான் ஆறுதலான நித்திரைக்கு அவளும் தயாராகி விட்டது போலத்தான் தெரிந்தது.
வாய்க்குள் போடப்பட்ட குளிசைகளை அவள் ஆவலுடன் விழுங்கினாள். அன்று இரவு அக்காவுக்கும் தம்பிக்கும் பெரி வெள்ளிக்கிழமைக்கு அடுத்துவரும் சனிக்கிழமை இரவு மாதிரி உயிர்ப்பில்லாத இரவாய் நடுநிசிவரையும் இருந்தது. அக்கம் பக்கத்து வீட்டு நாய்கள் ஊளையிடுவது பேய்கள் ஊளையிடுவது மாதிரி அவர்களுக்குக் கேட்டது. அந்தநேரம் அவர்களது வீட்டுக் கோடிப் புறத்தில் நின்ற இடுப்பு வளைந்த முருங்கை மரமொன்று ‘கடபுடா' வென்ற சத்தத்துடன் முறிந்து விழுந்தது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு தூக்கமென்பதே தொலைந்ததாய் இருந்தது. அக்காவும் தம்பியும் பொழுது விடிந்து விட்டதைப் பார்த்தார்கள். ஆனால் கிழவியோ. ஒன்றுமே அறியாத நிலையில் மடிந்துவிட்டாள். தாய் இறந்துவிட்டதை அறிந்ததும் மகனுக்கு மூச்சு திக்குமுக்காடியது. திணறிக்கொண்டு ஏதோ ஒரு பெரியகுற்றத்தை செய்தவன்போல் கைகளால் முகத்தை மறைத்தான். உடனே அவனுக்கு அழுகை வந்தது. குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுதான். எல்லாரும் கிழவி கிடந்த கட்டிலின் அருகே வந்து துக்க ஆவேசம் அடங்கும்வரை ‘ஓ’ வென்று ஒலம் வைத்தழுதார்கள். அக்காவுக்கும் தம்பிக்கும் அழுகையின்மேல் அழுகையாக வந்தது குற்ற உணர்வுடன் அவர்கள் மூசுமூசென்று அழுதுகொண்டிருந்

Page 53
84 கருணைக் கொலை
தார்கள்.
"கிழவி வயசுபோய்த்தான் செத்திருக்கு" - என்கிறதாய் செத்த வீட்டுக்கு வந்தவர்கள் தங்களை சமாதானப்படுத்தி மற்றவர்களையும் சமாதானப்படுத்தினார்கள். ஆனால், அப்படியாகச் சொல்லி அக்காவையும் தம்பியையும் மாத்திரம் சமாதானப் படுத்துவதற்கு அவர்களுக்கு இயலாமல் போய்விட்டது. அவர்கள் எதையும் காதில்போட்டுக் கொள்ளாது தங்கள்பாட்டுக்கு அழுது கொண்டே இருந்தார்கள். அவர்கள் மனத்தில் ஒரே ஒரு எண்ணம் பேய் போல் நின்று தலைவிரித்தாடியது. அவர்கள் செய்து விட்டசெயலை உள்ளம் இடித்து இடித்துக் காண்பித்தது. வருஷங்கள் மறைந்தால் ஞாபகம் மறையும் என்பார்கள். ஆனால், அவர்கள் விஷயத்தில் அதற்கு நேர் மாறாகவே இருந்து வருகிறது. அவர்களது முகங்கள் தொலை பட்டுச் செத்த சவம் போலத்தான் கிடக்கிறது. அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து இன்றுவரை அவர்கள் தங்கள் மனசாட்சியுடன் மல்யுத்தம் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.
தினமுரசு வாரமலர் (மே - 22, 2004)

ള് நீ.பி.அருளானந்தம் B
செவ்வந்தி வழமைபோல அன்றும் விடியற்காலையில் நித்திரைவிட்டு எழுந்து விட்டாள். வாசற் கதவை திறந்து விட்டு கருணைக்கிழங்கு மூடை பத்திரமாக முற்றத்தில் கிடக்கின்றதா?. என்றதான தன் ஐயத்தைப் போக்கிக் கொள்ள ஒரு முறை அந்த அரையிருட்டுக்குள் தன் கண்பார்வையை ஒட்டினாள். உருளையான அந்த மூடை அப்படியே முற்றத்தில் பூதாகரமாய் கிடப்பது அவள் கண்களுக்குத் தெள்ளென தெரிந்தது.
"தோட்டத்து மண்ணுக்குள் கிடக்கும் கருணைக் கிழங்கும் இந்தக் காலம் களவு போகிறதாம்'- என்று அவள் கிழங்கு வாங்கப் போகும் தோட்டத்துப் பக்கங்களில் கதை அடிபட்டது.
செவ்வந்தி மரக்கறிகளை வாங்கி விற்கின்ற ஒரு வியாபாரி, கிழங்கை வியாபாரத்துக்கென்று தோட்டத்திலிருந்து வாங்கிவரும் போது, பயம் - அவளது மனதைப் போட்டு ஆட்டி வைத்தது. இதற்காக என்னதான் ஒரு முன்னேற்பாட்டை அவள் செய்து கொள்வாள்?
அங்கே அவள் வசிக்கும் அந்த ஒலைக் குடிசைக்குள்ளே இரவில்

Page 54
88 விரதம்
இந்த மூடையைப்போட்டு பாதுகாப்பாய் வைத்துக் கொள்ளவும் வசதியில்லை! அது சின்ன ஒரு குடிசை. அந்தக் குடிசைக்குத் தகுந்தாற்போல், உள்ளே ஒண்டி இருக்கின்ற ஒடுக்கமான ஒரு குசினி, அப்படி இந்த லட்சணத்தில் உள்ளே மூடையைப்போட்டு வைக்க அங்கு வசதியாய் சிறு இடமாவது வேண்டுமே?
செவ்வந்திக்கு இரண்டு தங்கைமார்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் அவளும் தாயும் சேர்ந்து மொத்தமாக இப்போ குடும்பத்திலிருப்பவர்கள் நான்கு பேர்கள். இந்தக் குடிசையில் இரவு கையைக்காலை நீட்டிப் படுப்பதே இவர்களுக்குப் பெரியபாடு அதற்குள்ளே இந்தப்பெரு மூடையையும் போட்டால் நிச்சயமாக" யாராவது அவர்களுக்குள்ளே இரண்டு பேர் வெளிமுற்றத்தைத் தான் இரவு படுத்துக்கொள்வதற்கு தேட வேண்டியதாய்வரும். அப்பன் உயிருடன் இருக்கும்போதும் இந்த ஏழ்மை நிலைதான், இப்பொழுதும் மாறிவிடாத அதே நிலைமைதான், இனிமேலும் இதைப்போன்றே தொடர்ந்து வாழ்க்கையை வாழவேண்டியதாய் இருக்குமோ..? - என்று அவள் அவற்றை முன்னும் பின்னுமாக யோசித்தாள்.
இப்படித்தான் சில நேரங்களில் இருந்தாற்போல அந்த நினைவு கள் கிளர்ந்தெழுந்ததும் தன்னையும் ஒரு முறை நினைத்து சினந்து கொள்கிறாள் செவ்வந்தி.
அவளுக்கு வைத்தார்களே ஒரு பெயர். செவ்வந்தியென்று. அந்தப் பெயரை தனக்கு வைத்தவரிலே அவளுக்குக் கடுப்பாக வருகிறது. எதற்காக அந்த அழகிய மலரின் பெயரை தனக்கு வைத்தார்கள் என்று நினைக்கையில் வியப்பாகவும் அவளுக்கு இருக்கிறது. காய்ப்பேறிய கரடுமுரடான தனது கரங்களைப் பார்த்துவிட்டு இதை நினைத்து சில வேளைகளில் அவளுக்கு சிரிப்பும் வருகிறது.
அந்த முற்றத்தில் அவள் நிற்கும் போது காலை வேளையில் இருந்தாற்போல் வீசிய கூதிற்காற்று அவளது உடலை விறைப்பாக மாற்றிவிடும் அளவுக்கு வீசியது. அந்தக் காற்றில் அவளது குடிசைக்குப் பக்கத்தே அடர்ந்து பரந்து நின்ற வேப்பமரத்தின் குழைகள் சிலிர்த்தன. உயர்ந்து நின்று ஊரை ஆளும் பனைகளின் ஒலைகளும் விஸ் விஸ்! என்று சப்தம் எழுப்பின. அதோடு மரத்தில் நிரம்பியிருந்த பறவைகள் கலைந்தெழுந்தன. அந்த அசைவில் இரண்டொரு வேப்பம் பழங்கள் கீழே கிடந்த 'இறை கூடை” யில் விழுந்து ‘டப்டப் வென்று சத்தத்தை உண்டு பண்ணின.
இந்தச் சத்தத்துடன் வேப்பமரத்து வேர்க்குழியினடியில் முடங்கிப் படுத்துக்கிடந்த ‘சொறி நாயொன்று எழுந்து சடசடத்து உதறிக்

87 நீ.பி.அருளானந்தம் کھ
கொண்டு சிலிம்பல் வேலிப் பொட்டால் புகுந்து எங்கோ நோக்கி வேகமாக ஓடியது.
அந்த வேப்பமரத்துக்குக் கிட்டவாய் அவள் நிற்கும் போது பனம் பழத்தின் வாசம் அவளது சுவாசத்தில்பட்டது. விழுந்து பிளந்து கிடக்கும் பனம் பழங்களையும் பொறுக்கி எடுத்து அவள் அங்கு ஒரு ஓரமாகப் போட்டாள். நேற்று மதிய வேளையில் அவள் கழுவிக்காயப் போட்ட சட்டை கொடியில் விறைத்து முடமுடத்துக் கிடந்தது. அதையும் கொடியிலிருந்து உருவி எடுத்து அவள் தன் தோளில் போட்டுக் கொண்டாள். அதன் பின் தன் இரு கைகளையும் சேர்த்து சூடுபறக்க தேய்த்து விட்டு ஒலைத் தட்டியைச் சாத்திக் கொண்டு மீண்டும் அவள் அந்த ஒலைக் குடிசைக்குள்ளே சென்றாள். தங்கைகள் இருவரும் பாயில் படுத்திருந்தபடி அந்த மெல்லிய தான போர்வைக்குள் சுருண்டு கொண்டு கிடப்பதைப் பார்க்க அவளுக்குப் பரிதாபகரமாக இருந்தது. பழசாய்ப்போய் கிழிந்து விடும் அளவுக்கு இப்போது இருக்கின்ற அந்தச் சேலை அம்மாவின் கலியாணச் சேலையாம்!
அம்மா அந்தச் சேலையின் சரித்திரத்தை ஆயிரம் முறை வாயப்பாடு சொல்கிற மாதிரி திரும்பத்திரும்ப அவளுக்கும் தங்கைகளுக்குமாய் கேட்க சொல்லியிருக்கின்றா. '
அவளது அப்பா இருக்கிறாரே. அவர் ஒரு ஊதாரி. அவர் உயிருடன் இருந்த காலமெல்லாம் சதா குடிதான்! நாள்முழுக்க தவறணையில் இருந்து மிடாக் கணக்கில் சாராயத்தை குடித்து விட்டு வீட்டில் கிடக்கின்ற சாப்பாட்டையெல்லாம் மிச்சம் மீதியென்று யாருக்கும் ஒன்றும் வைக்காது வாயில் போட்டு வயிறு முட்டக் கொட்டிக் கொண்டு அப்படியே அந்த மண் நிலத்திலே சரிந்து கிடந்து வெறியில் புரண்டு கொண்டு கிடப்பார்.
“ஆ. ஊ. ” என்று சத்தம் போட்டபடி ராவு ராவாக அந்த இடத்திலே வெறியில் கிடந்து அவர் அங்காலேயும் இங்காலேயு மாக புரண்டு கொண்டிருக்க அந்தச் சின்ன வயதிலே கொலைப் பட்டினியோடு குந்திக் கொண்டிருந்தபடி தூங்க வேண்டியதான துர்ப் பாக்கியமான ஒரு நிலைமை இவர்களுக்கு.
வ்வந்திக்கு. அவளது இமைகள் கண்ணிரில் நனைந்து படபடக் கின்றன. இந்தக் குடும்பத்திலே மூத்த பிள்ளை செவ்வந்தி, அவளின் அம்மா ஒரு நோயாளி. இதனால், அப்பா இறந்த பின் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு இவள் தலையிலேயே வந்து விழுந்து விட்டது. ஏற்கனவே குடும்பம் நடந்து கொண்டிருந்த

Page 55
88 விரதம் லட்சணத்தில் அவளுக்கு படிப்பும் அரை குறைதான். அப்படியான வளுக்குப் போய் இப்போது உடனே யார் நல்ல ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்து உதவி செய்யப்போகிறார்கள்.
ஒருகால், குடிசைக் கைத்தொழிலாவது பழகுவோம், என்று சில நாட்கள் அவ்விடங்களில் போய் ஏதேதோ அந்த வேலைகளையும் அவள் கற்றாள். அதனால் கையில் கிடைத்த ஊதியம் இங்கே வீட்டிலே சாப்பாட்டிற்கும் கூட போதவில்லை. உடுப்புக்களும் கிழியல், கூரையும் பொத்தல், இந்த சூழ்நிலையில் கிடந்து கஷ்டத்திலே உழன்று நொந்து வாடும் போதுதான் இந்த வழி ஒரு நல்ல வழியாக அவளுக்கென்று திறந்தது. அம்மாவின் மூக்குத்தி, தோடு என்பவற்றோடு தனதும் தங்கைகளினதும் காதுத்தோடுகளை சேர்த்து விற்று சயிக்கிள் ஒன்றை அவள் வாங்கினாள். தனக்குத் தெரிந்த ஆட்களினது தோட்டம் வழியே சென்று கருணைக்கிழங்கை அவர்களிடம் கடனாகக் கேட்டாள். » . У
“ஒரு நாளில அதைக் கொண்டோய்ச் சந்தேக்கிள வித்துப் போட்டு உடனக்குடனயே உங்கட காசையும் தந்திடுவன்” - என்று சொன்னாள்.
அவளின் நிலைமையை அறிந்து பரிதாபப்பட்டுக் கொண்டு “உனக்கு வேண்டியதை நீ கொண்டு போ பிள்ளை” என்றார்கள் தோட்டக்காரர்கள்.
கருணைக்கிழங்கை சயிக்கிளில் வைத்துக் கட்டி ‘அச்சுவேலி யிலிருந்து திண்ணவேலி சந்தைக்கு அதைக் கொண்டுபோய் விடியலில் விற்க வேண்டும். ஏதோ முன்பு அந்த கஷ்டமான வாழ்க்கை யிலும் சயிக்கிள் ஒட அவள் கற்றுக்கொண்டிருந்ததால் நெடியதுரம் சயிக்கிள் ஓடிப் போவது அவளது உடம்புக்கு சலிப்பில்லாதிருந்தது. ஆனால், தோட்டப்பகுதிகளிலிருந்து மூடையை கரியரில் ஏற்றிக் கொண்டதும் அந்தக் கருணையற்ற கருணைக்கிழங்கு பிணப்பாரமாய் கரியரை அழுத்திக் கொண்டிருக்க கணுக்காலும் கெண்டைக் காலும் வலிக்க வலிக்க அந்த ஏறு வெயில் நேரம் காங்கை அலை அலையாக அடிக்கும் தார்வீதியில் சயிக்கிள் மிதிப்பதுதான் முதலில் அவளது உடலுக்கு வேதனையாக இருந்தது. பழகப்பழக எல்லாம் சரிதான். இப்போது ஐம்பதுக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட கிலோ பாரத்தை சயிக்கிளில் கட்டிக்கொண்டு அநாயாசமாக அவளும் சயிக்கிள் சவாரி விட பழகிவிட்டாள்.
அவள் கொண்டுபோகின்ற பொருட்களை சந்தையில் வாங்கு வதற்கென்றும் வாடிக்கையாளர்களும் பெருகி விட்டார்கள். ஒழுங்கான

இ நீ.பி.அருளானந்தம் 89
விலைக்கு லாபத்துடன் பேரம் பேசிவிற்கும் அளவுக்கும் வியாபார சூட்சுமத்தை அறிந்த ஒருத்தியாகிவிட்டாள் செவ்வந்தி,
அவளது ஊரில் திண்ணை தூங்கிகளாகவிருந்து வெட்டிப் பேச்சுப் பேசி பொழுதைக் கழிக்கும் ஆண்களெல்லாம் விழி கொள்ளும் அளவுக்கு அவளை விழுங்குவது போல் பார்த்து விட்டு வெப்பியாரப் பட்டு தலை கவிழ்கிறார்கள்.
“இப்பிடியான ஒரு பொம்பிளை கிடைச்சாளெண்டால். அவள் உழைச்சுத்தருவாள். நாங்க பேசாம கையைக் கால நீட்டியிருந்து சொகுசாச் சாப்பிட்டுக்கொண்டு கயிற்றப்படாமச் சீவிக்கலாம்”. என்று சொல்லி விட்டு இடிச்சிரிப்புச் சிரிக்கிறான் ஒரு சோம்பேறி.
அவன் சொல்வது அவளது காதிலும் விழுகிறது. அதை செவி
காத்துக்கொண்டு சயிக்கிளில் அவள் விர் - என்று விரைந்து போகிறாள்.
“இவள் முந்தியிருந்த மாதிரியா பாக்கேக்க இப்ப இல்லை. ஆம்பிளை மாதிரியா ஆளும் இப்ப மாறிட்டாள். சயிக்கிளை ஒடியோடி உடம்பும் இப்ப அவளுக்கு மரத்திட்டுது” என்று தேநீர்க் கடையிலிருந்து அவளுக்குக் கேட்கட்டுமென்று பலத்த சத்தமாய் விறுமதடியன் ஒருவன் ஒடிந்து விழுவார்போல் ஒல்லியாயிருக்கும் அந்த சிவலை ஆளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் சொன்ன சொற்கள் சட்டென்று நெஞ்சில் சிலாம்பு குத்தியது போல் இருக்கிறது அவளுக்கு. வாயும் நாக்கும் களைத்துப் போகுமட்டும் அவன் அதிலேயிருந்து அவளைப்பற்றி கதைப்பான் போலும். அந்தத் தடியனின் பேச்சையும் விரக்தியுடன் கேட்டுக்கொண்டே அவளும் சயிக்கிள் பெடலை பலமாக மிதிக்கின்றாள். 'முயலகனை கால்பாதத்தில் வைத்து சிவன் மிதிப்பது போல இந்த வலது காலால் அவனை மிதித்தாலென்ன? - என்று அவளுக்கு ஆத்திரம் வருகிறது. அந்த ஆத்திரத்தில் கால்கள் மிதிமேல் ஊன்றி மிதிக்க சயிக்கிள் வீச்சாகப் போகிறது.
எப்படியோ இந்த வியாபாரத்தில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த தன் உடலைப்போட்டு கசக்கி எடுத்து பாடுபட்டு உழைத்து கொஞ்சம் போல பணத்தை அவள் தன் கையில் சேர்த்துக் கொண்டு விட்டாள். அந்தப் பணத்தில் வீட்டைக் கொஞ்சம் பெருப்பிப்போமா? உடுப்புக்களை வாங்கி எல்லாரும் உடுத்திக் கொள்வோமா? தட்டு முட்டுச் சாமான்களை வாங்கி வீட்டில் போடுவோமா? - என்று முதலில் அவளுக்கு சிந்தனை ஓடிற்று.
"சாச்சா. வேணாம். இருக்கிறது இப்பத்தைக்குப் போதும்.

Page 56
90 விரதம் நாங்கள் மூண்டு பேரும் பெம்பிளையளாத்தான் பிறந்தம். என்னை நம்பி வீட்டில ரெண்டு மூண்டு சீவனுமிருந்து சீவிக்கிதுகள்' - என்ற அந்தக் கடமை உணர்வு எழுந்து பெரிதாக நின்று அவளை வாட்ட. “காசைச் சும்மா அப்பிடி இப்படியெண்டு சிலவழிச்சுக் கரியாக்கக் கூடாது". என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அச்சுவேலிச் சந்தையில் சீட்டுப் பிடிக்கும் கமலாவுடன் ஒரு சீட்டிலே அவள் கொளுவிக் கொண்டாள்.
“இது உன்ரை கலியாணத்துக்காய் சேர்க்கிறியோவே” - என்று செவ்வந்தியை நன்றாய் அறிந்த அவள் மிகவும் அவளிலே அக்கறைப்பட்டுப்போய் கேட்கிறாள்.
“இல்லையில்லை இது தங்கச்சீன்ரை கலியாணத்துக்கு” என்று அவள் சொல்லவும்;
"அக்காள் இருக்க தங்கச்சிக்கென்னடி கலியாணம்” என்று செவ்வந்தியின் சோகம் புரண்ட அமைதியான முகத்தைப் பார்த்துக்கொண்டு கமலம் கேட்கிறாள்.
“நான் கலியாணம் முடிச்சுப்போயிற்றா தங்கைச்சிமாரையும் அம்மாவையும் பார்க்க ஆரிருக்கினம்?. அப்பாவுமில்லை அதால இந்தக் குடும்பத்துக்கு நான்தானே பொறுப்பாயிருக்கவேணும். . சொல்லுங்கோவன் பார்ப்பம்” - என்று எதற்கும் அசையாத பனிக்கட்டி மாதிரி இருந்து கொண்டு இப்படி அவள் சொல்கிறாள். அவள் அப்படிச் சொன்னதோடு மறுபேச்சுக்கிடமில்லாமல் கமலம் வாயடைத்துப் போனாள். அவளது சீரியகுணத்தை மனசுக்குள் மெச்சிக் கொண்டு அவளது உடல் மாறுபாட்டையும் ஒரு முறை இவள் நோட்டம் விட்டாள். s
முன்பு அவளிடமிருந்த பெண்மையின் மென்மை அழகையும் முகலாவண்யத்தையும் சயிக்கிள் ஓட்டம் உறிஞ்சிக்குடித்து சாட்டைக் கம்புபோல் அவளை ஆக்கிவிட்டிருப்பதை இவளால் வெகுவாக கண்டுணர முடிந்தது. அத்துடன் சதை வற்றி எலும்புகள் கூடைப் பின்னல் மாதிரி தெரிகிறதையும் இவள் கண்டுகொண்டாள்.
'b..... பெண்ணாப்பிறந்தா இப்படித்தான் படாத பாடெல்லாம் படவேணும்!” - என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு செவ்வந்தியையும் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு தன் மரக்கறி வியாபாரத்தில் இறங்கி விட்டாள் அவள்!
சிட்டுக்காசை கொடுத்தாற் பிறகு செவ்வந்திக்கு வேறு என்ன வேலை இருக்கும்? கொஞ்ச நேரமாவது அவள் ஓய்வாக இருப்பாளா? - என்று நினைப்பதற்கே இடமில்லை! அவளுக்கு அந்தியும் சந்தி"

ള് நீ.பி.அருளானந்தம் 91
ஒய்வு ஒழிவின்றி வேலைதான்!
வீட்டிலே போய் சாப்பிட்ட கையோடு அந்த வெயிலிலே பல தோட்டங்களுக்கும் அவள் போய்த் திரிய வேண்டும். நாளைய வியாபாரத்துக்குத் தேவையான பொருட்களை லாபம் வைத்து விற்கக் கூடிய விலையில் தோட்டத்திலே கவனமாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இப்படித்தான் ஒவ்வொரு போழ்தும் சிறிதும் ஓய்வின்றி அவளுக் குக் கழிகிறது. வழமை போல இன்றும் காலையில் அதே வேலை யைத் தொடரவே அந்த நேரத்துக்கு அவள் விழித்தாள். முகம், கை, காலைக் கழுவியதோடு.
“பிள்ளை கோப்பியைக் குடி” - என்று தாய் கொண்டுவந்து ஒரு தகரக் குவளையில் கோப்பித் தண்ணியை கையில் வைத்துக் கொண்டு அவளிடமாக அதை நீட்டினாள்.
‘தங்கச்சிமார் நல்ல நித்திரையாக் கிடக்கிற நேரம் எழுப்பி அவயின்ரை நித்திரையைக் குழப்பி கஷ்டப்படுத்துறனே என்று அவளுக்கு ஒரு புறம் மன வேதனை மறுபுறம் அவர்கள் அந்த மூடையைத் தூக்கித் தரவேண்டுமே. என்கிற தேவை. இப்படி இந்த இரு விடயங்களையும் சிந்தித்து அவள் மனம் குழம்பும்போது, அவளது தாய் அயர்ந்து கிடந்த இருவரில் மூத்தவளை முதலில் தட்டி விட்டு நித்திரையால் அவளை எழவைத்தாள். அவள் எழுந்ததும் அதிலே நின்றபடி கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறித்தாள். அப்பொழுது அவளது அங்கங்கள் முழுதும் புதிய அழகையும் கவர்ச்சியையும் காட்டிக் கொண்டிருந்தன. அவளை அப்படியாக பார்க்கும்போது மூத்தவளுக்கு மனமெல்லாம் குளிர்ந்தது.
'இவளுக்கு வயது வந்து நெடு நெடு என்றும் வளர்ந்து விட்டாள். கடைசிச் சீட்டு கைக்குக் கிடைத்ததும் கல்கல்லாக வைத்து இவளுக்கு நகை செய்து போடவேண்டும். அப்படிப் போட்டான பிறகு பொறுப்பாக இவளைப் பார்க்கக் கூடிய ஒருவனாக தேடிப் பார்த்து அவனது கையில் இவளை பிடித்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி முடிக்கவேண்டும். அப்படி நினைத்துக் கொண்டாள். அதன் பிறகு இளைய தங்கையையும் அம்மாவைக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்துவிட வைத்துவிட்டு அவர்களையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய் அந்த மூடையைத் தூக்கி கரியரில் வைத்துக் கட்டிக் கொண்டு சயிக்கிள் மிதிமேல் அவள் கால் தூக்கி வைத்தாள். அவள் புறப்படும் போது ஒரு ஓணான் வீதியின் குறுக்காலே ஒடிற்று.
அன்று ஆடி அமாவாசை விரதநாள். விரத காரரெல்லாம் சந்தைக்கு மரக்கறி வாங்க படை எடுத்தது போல் வந்திருந்தனர்.

Page 57
92 விரதம்
அண்றைக்கென்று இருமடங்காய் விலைகள் உச்சம் பெற்று மரக்கறிகளெல்லாம் விற்றுக்கொண்டிருக்க / கருணைக்கிழங்கின் விலை உச்சம் பெறாது தனியே தூங்கிக்கிடக்குமா? அதுவும் நல்ல விலையேறி மற்ற மரக்கறிகளின் விலையோடு ஈடு கொடுப்பது போல்தான் விற்றுத் தீர்ந்தது.
செவ்வந்தியின் கையில் காசு குவிந்தது. அதைச் சுருட்டி அப்படியே ஒலைப்பைக்குள் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியுடன் அச்சுவேலிச் சந்தையில் இருக்கும் கமலாவிடம் அவள் சென்றாள். சீட்டுக் காசை கணக்குப்பார்த்து கழிவு தள்ளிக் கொடுத்த கையோடு.
"உனக்குத்தான் அடுத்த மாதத்து கடைசிச் சீட்டுக் காசு கிடைக்கப் போவுது' என்று சொன்னாள் கமலம்!
தனது உழைப்பின் பயனை செவ்வந்தி நினைத்து முகமெல்லாம் மலர சிரித்தபோது
"அடுத்த புதுச்சீட்டும் இந்த மாதத்தொடக்கத்திலேயே நான் துவங்கவெண்டு இருக்கிறன். நீ அதில சேருறியோவே' என்று கேட்டாள்.
"கட்டாயம் அதிலயும் எனக்கு ஒரு சீட்டு மறந்திடாமல் போடுங்கோ. ” - என்றாள் ஆவலுடன் செவ்வந்தி!
"இப்ப எடுக்கிற இந்தச் சீட்டுக்காசு உன்ரை மூத்த தங்கச்சி யின்ரை கலியாணச் செலவுக்கெண்டிறாய். அடுத்துப் போடுற சீட்டு ஆருக்காம்?. அது உனக்குத்தானே?.
உன்ரை கலியானத்துக்குத்தானே அது?” - என்று கமலம் ஆவலுடன் கேட்டாள்.
"அது என் ரை இளைய தங்கச்சியின் ரை கலியானச் செலவுகளுக்கு!!” என்று மதுரமான சாந்தத்துடன் சொல்லி விட்டு அங்கிருந்து நடையைக் கட்டினாள் செவ்வந்தி விழிகளில் வியப்புப் பூக்க அவள் அங்கிருந்து போவதையே சிறிது நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலம், செவ்வந்தியின் தியாக உள்ளத்தை நினைத்தபோது மனவேதனையில் அவளது கண்கள் கலங்கி இரண்டு நீர் முத்துக்கள் இமை விளிம்பில் துடித்து நின்றன.
(சிறுகதைத் தொகுப்பு) (திருகோணமலை இலக்கிய ஒன்றியம்)
N
-즌 突ー

வீக் வீக் வீக் என்கின்ற ஒலி வேகத்தில் மேசை மணிக்கூடு
அலாரம் சப்திக்கிறது. மேலும் நித்திரை கொள்ளும் நிலைக்கு உடல் ஏங்கினாலும் பஞ்சியை ஒரு புறம் போக்கிவிட்டு படுக்கை யிலிருந்து எழுந்து நீங்கள் உட்கார்ந்து விட்டீர்கள்.
அலாரம் இன்னமும் விடாமல் தொடர்ந்து அலறிக் கொண்டே இருக்கிறது. நுளம்பு வலையை ஒரு புறமாக மேலே தூக்கி விலக்கிக் கொண்டு கட்டிலால் இறங்கி வந்து அலாரத்தின் வாயைப் பொத்துகிறீர்கள்.
மூச்சைப் பிடித்துக் கொண்டு வாயையும் பொத்திக் கொண்டது போல் சத்தத்தை நிறுத்திக் கொண்டது கடிகாரம்,
நுளம்பு வலைக்குள் இருந்து வெளியே வந்ததுமே நுளம்புடன் போராடும் காலமும் ஆரம்பித்துள்ளதாய் ஒரு எண்ணம் தோன்று கிறது உங்களுக்கு. அந்த விடியலில் மூசிப் பெய்கிறது மாசிப்பணி குளிலே உங்கள் உடல் விறைப்பது போலிருக்கிறது. அந்த விறைப்புக்குள்ளே காலில் நுளம் கடிப்பது உங்களுக்கு எரிச்ச லும் புடைச்சலுமாக இருக்கிறது.

Page 58
4. நுளம்பு
நீங்கள் நித்திரை விட்டு எழும் நேரத்துக்கு வீட்டிலுள்ளவர்கள் எவராவது உங்களுடன் எழுந்து விடுவதில்லை. தனியே உங்கள் பாட்டுக்கு காலையிலே ஆற்றும் காரியங்களை ஒவ்வொன்றாக செயல்பட தொடங்குகிறீர்கள். முதன் முதலில் பல் தேய்க்கிறீர்கள். அடுத்து முகம், கை, கால்களைக் கழுவிவிட்டு கழிப்பறைக்குப் போகிறீர்கள். "கொமட்டில் குந்தி இந்த அரைநாழிகைக்குள் ஊசிக்குத்தலாய் முதுகில் கடிக்கிறது நுளம்பு;
"ஓ! என்ன வலி அது!” அதனால், வலக்கையை பின்புறமாக மடித்து, பெருவிரலை வளைத்து, முதுகைச் சொறிகிறீர்கள். சொறி வேதனையில் உங்களுக்கு மலவாசலும் அடைத்துவிட்டமாதிரி இருக்கிறது. மூச்சைப் பிடித்துக்கொண்டு நாலு தரம் முக்கி முக்கிப் பார்த்துவிட்டு திருப்தியில்லாத மனசுடன் ஜலசுத்தி செய்துவிட்டு கழிப்பறை யிலிருந்து வெளியே வருகிறீர்கள்.
இதுவெல்லாம் ஆயிற்றா? குளிருக்கு சுவெற்றரை அணிந்துகொண்டு சமையலறைக்குச் செல்கிறீர்கள். பிளாஸ்கில் கிடந்த வென்நீரைக் கொண்டு கோப்பி தயாரித்துப் பருகுகிறீர்கள். சமையலறைப் பக்கத்தே கழிவு நீர் ஒடும் வாய்க்காலிலிருந்து புளித்தநெடி காற்றிலே ‘இமிரி உங்கள் சுவாசத்தில் கலக்கிறது. அந்த நாற்றக்கலவை வலிமையாக “சுரீர்" என்று மூக்கை நிமிண்டுகிற நிமிண்டில் மூக்கை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறீர்கள்.
என்றாலும் அதைச் சகித்துக்கொண்டு ஒருவாறாக கோப்பியை குடிக்க ஆரம்பிக்கிறீர்கள். கால்களில் முன்பு நுளம்பு கடித்த இடம் அரிப்பெடுக்கிறது. கையால் சொறிந்து கொண்டு கோப்பியை குடித்தாகியதும் வழமை போல காலையிலே வெளியே நடந்து போய் வருவதற்காக வீட்டிலிருந்து வெளிக்கிடுகிறீர்கள். ஒழுங்காக காற்று விசாத உங்கள் வீட்டின் அருகே உள்ள பெருஞ்சுவர்களை தாண்டி வீதிக்கு வரும்போது புத்துணர்ச்சி மெல்ல மெல்ல உங்கள் உடலில் பரவுகிறது. நுளம்புத் தொல்லையிலிருந்து விடுபட்டது போல் நிம்மதி வீதியில் நடந்து கொண்டிருக்கும் போது உங்களது மனத்தில் ஊசலாடுகின்றது. பெருவீதியிலிருந்து ஒருகுறுகிய சந்தினூடாக நடந்துவந்து, இப்போது அலைகள் பரவித்திரும்பும் கடற்கரையில் காலைவைக்கிறீர்கள். கடற்கரைக்காற்று உடலில் பட்டதும் 'சுகம் சுகம் அது சொல்லொண்ணாத இன்பமானது என்றாப்போல உங்களது மனமும் மகிழ்ச்சியில் பாடுமாப்போலி ருக்கிறது. இந்த நிம்மதியில் உங்கள் கண்களைக் கவரும்

இ நீ.பி.அருளானந்தம் 0.
கிளிஞ்சலைப் பொறுக்கி எடுக்கிறீர்கள். அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றின் வர்ணமும் நயமும் ஆசையைத் தூண்ட வேண்டியதை யெல்லாம் பொறுக்கி எடுத்து காற்சட்டைப் பையினுள் போட்டுக் கொள்கிறீர்கள்.
கடற்கரை எதுவித இடைஞ்சலுமில்லாத யாவருக்கும் பொதுவான ஒரு இடம். இந்த இடத்திலே எந்தவிதமான போட்டியோ பொறாமையோ மனித மனங்களில் எழுவதில்லை. கடற்காற்று அப்படியாக இந்த இடத்தில் இருக்குமட்டும் மனிதர்களின் மனதை மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் மனமும் எதுவித சலன முமின்றி நிம்மதியுடனிருக்கிறது. உங்களது காலடி ஓசை கேட்டு பயத்தால் வளைக்குள் ஓடி முடங்கும் கடற்கரை நண்டு போல் இல்லாமல் அச்சமற்ற சுதந்திர உணர்வுடன் கைகளை வீசிக்கொண்டு விரைவாக நீங்கள் அவ்விடங்களில் நடக்கிறீர்கள்.
உங்களைப் போலும் அநேகர் அங்கு கடற்கரையில் உலாவு கிறார்கள். ஒரு சிலர் அந்த மணல் வெளியே ஒட்டப்பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் கைகளைக் கால்களை பலகோணங்களில் அசைத்து உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். கரைவலையைப் படுக்கப்போட்டு கடற்கரையில் நின்று கயிற்றை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் மீனவர்கள். மீன் பிடிக்க ஆழ்கடல் நோக்கி படகுகளில் சென்ற வலைஞர்களும் கரைநோக்கி திரும்புகிறார்கள். கடல் தண்ணிரில் நீராடும் ஒருசிலர் வாத்துக்கள் போல் முக்குளித்துக் கொண்டிருக்கிறார்கள். கடற்கரை நண்டைப் பிடித்துப் புசிக்க ஒரு சில பன்றிகளும் உறுமிக்கொண்டு அங்கே மணலை மூஞ்சியால் குத்தி உழுதுகொண்டிருக்கின்றன. இந்தக் காட்சிகளையெல்லாம் காண்பது உங்கள் மனதுக்கு இன்பம்தான் என்றாலும் காலை வெயில் கடற்கரையில் உறைப்பாய்விழ அவ்விடம் விட்டு நடையில் வேகம் கூட்டி சுறு சுறு - என்று நடந்து வீடு நோக்கி நீங்கள் வருகிறீர்கள்.
வீட்டிலே காலை வைத்ததும், நரகபாதாளத்துக்கு வந்துவிட்டமாதிரி ஒருவித அச்ச உணர்வு உங்கள் மனத்தில் மேலெழுகிறது. உங்களின் உள்ளமெங்கும் பயம் கிளை விரித்து பசாசு மரம்போல் சட்டென உருப்பெருகி விரிகிறது. உங்களை நோக்கி வரும் நுளம்புகளின் வருகையை வெறுப்பதோடு சமையலறைக்குச் சென்று மனைவி தயாரித்த காலைச்சாப்பாட்டை வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்.
மதிய சமையலுக்கு கறிகாய்களை நறுக்க உங்கள் மனைவி ஆரம்பித்துவிட்டாள். அவள் வேலை செய்து கொண்டிருக்கையில் கால்களில் அவளுக்கு நுளம்பு கடிக்கிறது. பெண்நுளம்பு இந்தப்

Page 59
96 நுளம்பு
பெண்ணைக் கடிக்கையில் அவள் படும் பாடு. உங்களுக்கு சிரிப்பாகவும் பிற்பாடு சினமாகவும் வருகிறது.
‘இந்த வீட்டை விட்டுவிட்டு வேறு வீடு ஒன்றைப்பார்த்து குடிபோனால் என்ன? இந்தக் கேள்வி உங்கள் மனத்தில் எழுகிறது. அடைக் கோழியின் மூக்கில் இறகு குத்தி முட்டை மேல் அமரவிடாமல் துரத்தும் வாழ்வாக இந்த வாழ்க்கை உங்களுக்குக் கசக்கிறது.
‘எங்கேயும் இந்த நுளம்புகள்தான்! சனியன் பிடிச்ச நுளம்புகள்! என்று பல இடத்திலும் பலரது வாயில் நின்றும் சொல்லக் கேள்விப் பட்டவைகள் பிறகு உங்கள் ஞாபகத்தில் வருகிறது.
“இந்த நுளம்புச் சனியன்களை ஒழிக்கேலாதா?’ என்று உங்கள் வாய் முணுமுணுக்கிறது.
“இந்த வளவுக்க மரங்கள் கூடிப்போச்சு புல்லும் பத்தையும் முளைச்சு காடாய்க்கிடக்கு அதுதான் நுளம்புகள் அதிகம்” என்கிறாள் உங்கள் மனைவி. "எந்தச் செடியை வெட்டுறது எதை வெட்டாமல் விடுறது எண்டு எங்களுக்கு ஒண்டுமாத் தெரியேல்ல நாங்கள் இந்த வீட்டில கூலிக்கிருக்கிறம். வீட்டுச் சொந்தக்காரன் வரேக்க இந்த இடைஞ்சல்களை அவரிட்ட சொல்லிப் பார்ப்பம்” என்கிறீர்கள் நீங்கள். இதன் பிறகு உங்கள் மனைவியும் தான் சொல்லாமல் விட்டதை இப்போது உங்களிடம் சொல்கிறாள்.
"அந்த நுளம்பு மருந்து அடிக்கிறவனும் காலத்தால வந்து மேலால அங்கினையா இங்கினையாவெண்டு சாட்டுக்கு ஏதோ அடிச்சிட்டுப் போறான். ஆனா அதுக்கெல்லாம் இப்ப இருக்கிற இந்த நுளம்புகள் அசராதுகள்” அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு சில கணம் அசையாமல் அப்படியே இருந்துகொண்டு யோசனையில் நீங்கள் ஆழ்ந்துவிடுகிறீர்கள். அதற்குள்ளே சுகாதாரப் பகுதியிலிருந்து வந்த உத்தியோகத்தர் நேற்று வீட்டில் கொடுத்துவிட்டுப் போன ஆனைக்கால் வியாதிக்குரிய தடைமருந்துக்குளிசை உங்கள் ஞாபகத்தில் வருகிறது. "அதை. அந்தத் தடுப்பு மருந்துக் குளிசையைப் போட்டீரா?” என்று நீங்கள் மனைவியைப் பார்த்துக் கேட்கிறீர்கள். எந்த வாக்கியங்களையும் ஒழுங்காக சொல்லி முடிக்காமல் அந்தரத்தில் விட்டுவிடுவது உங்களது வழக்கம். காற்சொல்லும் அரைச்சொல்லு மாய்ப் பேசி வாக்கியத்தை முடிக்க மறந்து அப்படியே தொங்கலில் ph G Gefrassir.
உங்கள் மனைவி நீங்கள் சொன்னவைகளை விளங்கிக் கொள்ளாமல் கிடந்து தடுமாறுகிறாள்.

ára ള് நீ.பி.அருளானந்தம் 97 “எந்த மருந்து? எந்த மருந்து” என்று தனக்குத்தானே சொல்லியபடி இருந்து விட்டு பின்பு உங்களைப்பார்த்து.
“விளக்கமாச் சொன்னாத்தானே?” என்று கேட்டுவிட்டு. அதன் பின்பு நீங்கள் சொன்னதை கண்டுபிடித்தவள்போல்.
“ஆனைக்கால் வியாதிக்குக் குடுத்திட்டுப்போன தடை மருந்துக் குளிசையோ?”
என்று நன்றாக விளங்கும்படி உங்களைப் பார்த்துக் கேட்கிறாள். நீங்கள் “ஆம்” என்பது போல் அவளுக்கு முன்பாக தலையை அசைத்து ஒப்புக்கொள்கிறீர்கள்.
தொண்டை கசந்து விடும் அந்த மாத்திரைகளை நினைத்ததும். “நாளைக்குக் குளிசையைப் போடுவமே?” என்று நாளைத் தள்ளுகிறாள் அவள்.
நீங்களும் அதில் அக்கறையில்லாதது மாதிரி இருந்துவிட்டு ஒன்றும் பதில் சொல்லாமல் சமையலறையை விட்டு வெளிக் கிடுகிறீர்கள்.
நீங்கள் போட்டிருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு சாரத்தை மட்டும் எடுத்து உடுத்திக்கொண்டு கையில்வைத்திருந்த அந்த உடுதுணிகளைக் கொண்டு போய் கொடியில் போடுகிறீர்கள்.
மேசையில் கிடந்த ‘கார்க்கியின் நாவலை எடுத்துக்” கொண்டு வெளியே கிடந்த கதிரையில் உடலை நன்றாக பின்னகர்த்தி சாய்ந்து ஆற்றுப்படுத்திக் கொண்டு புத்தகத்தை படிக்கத் தொடங்குகிறீர்கள். அதிலே இருந்த கொஞ்ச நேரத்துக்குள் உங்களை நோக்கி நுளம்புகள் படையாக பறந்து வருகின்றன.
தப்பித்தல் முறையை நன்கு கற்றுக் கொண்டதாய் இந்த நுளம்புகள் இருக்கின்றன. “கடிக்கும் போது ஒரு சாத்துச் சாத்துவோம்" - என்று நினைத்து, நீங்கள் கையைத்தூக்க, சாதுரியமாக பறந்து தப்பித்துக் கொள்கிறது இந்தப் புத்திசாலி நுளம்புகள். பார்வையில் படாதவாறு மறைவிடங்களில் இருந்து கடிப்பதிலேயெல்லாம் எப்படியான கள்ளப்புத்தித்தனம் இந்த நுளம்புகளுக்கு. சில நேரங்களில் நுளம்பை அடிப்பதற்கு எத்தனித்து உங்கள் கைகளாலேயே உங்களுக்கு நீங்கள் அடித்தும் கொள்கிறீர்கள். "அடசை1.”
தப்பிப்பறந்து விடும்நுளம்பு திரும்பவும் உங்களையே தேடி கடிக்க வருகிறது. இந்தநுளம்புகள், வயிற்றுப்பாகத்தையும் கால்பாதங் களிலும், முழங்கை முழங்கால்களையும் தேடித்தான் அதிகமாய்

Page 60
98 நுளம்பு
வந்து இரத்தம் குடிக்கவென்று உட்காருகின்றன. கணக்காக உங்கள் கையை நுளம்புக்கு நேராக நீட்டிக்கொண்டு குறிபார்த்து அடிக்கும்போது துரதிஷ்டம் பிடித்த சில நுளம்புகள் அடிபட்டு செத்து நிலத்தில் விழுகின்றன. அவைகளிலும் சில நுளம்புகள் இரத்தம் குடித்த ஊதலில் இருக்க அடிபடும் போது அதனிடமிருந்து இரத்தம் தெறித்து உங்களது தோலிலும் நனைகிறது. அந்த இடங்களிலே ஈக்கள் இரத்தவாடை பிடித்து வந்து உட்காருகின்றன. அது அருவருப்பாயிருக்க குழாயடிக்குச் சென்று நீங்கள் தண்ணிரால் கழுவிக்கொள்கிறீர்கள்;
புத்தகத்தின் உள்ளே சில பக்கங்களை புரட்டி படித்து முடிப்பதற் குள் எத்தனை இடர்ப்பாடு உங்களுக்கு. நுளம்புகள் இந்த உலகத்தி லிருந்து ஒழியவேண்டும் ஒழியவேண்டும்! என்று உங்கள் மனம் மந்திரம் ஜெபித்துக்கொண்டேயிருக்கிறது. இந்தவிதமான பதற்றத்தில் இரத்த அழுத்தமும் உங்களுக்குக் கூடிவிட்டதுபோல் ஐமிச்சம் வருகிறது. பிடரிப்பக்கம் விறைத்தது போலிருக்க தலையைமேலும் கீழும் அசைத்து வலியைப் போக்கிக்கொள்ளப் பார்க்கிறீர்கள். அப்படியாக ஒருதரம் கீழே தலையை சாய்த்து நிலத்தை நீங்கள் பார்க்கும்போது செத்துக் கிடக்கும் நுளம்புச் சவங்கள் இறக்கை விரித்தபடி மல்லாந்து கிடப்பது உங்கள் கண்களில் தெரிகிறது. அதிலே கிடக்கின்ற ஒருநுளம்பின் மெல்லிய சிறகை விரல்களைக் கொண்டு நுணுக்கமாகப் பிடித்துத்தூக்கி அதன் அவயவங்களை கண்களை பரக்கத்திறந்து பார்த்தபடி ஒவ்வொன்றாக நீங்கள் பரிசீலிக்கிறீர்கள். தமிழர்களுக்கு இயல்பாய் அமைந்த புத்தியான ஆராயும் புத்தி உங்களிடம் அலைமோதுகிறது. கடிக்கும் கடிவாயான கொடுக்கு அதற்கு நீட்டமாயிருக்கிறது. மடித்து உட்காரக்கூடிய நீட்டமுள்ள கால்கள், சிறகுகள் எல்லாமே சேர்ந்து ஒரு முக்கோண வடிவில் யுத்தகாலத்தில் நிமிடத்துக்கு நிமிடம் வானில் பறந்து கொண்டு திரியும் 'ஹெலியை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. இரத்தம் நிரப்பவிருக்கும் பவுசரைப் போன்ற அதன் வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமும் கறுப்பு நிறமுமான கோடுகளைக் கொண்டிருக் கிறது. இந்த மாதிரி நேர்த்தியான வரைகளை நல்ல ஒவியன் கூட அழகாக வரையமாட்டான்.
மனிதர்களின் குடியிருப்பாகிய இந்த உலகத்தை கூடுதலாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த நுளம்புகள் வம்சத்தை கையிலே பிடித்தபடி இன்னமும் வைத்துக்கொண்டிருக்க நீங்கள் விரும்பவில்லை. உங்கள் காலடிகளுக்குக் கிட்டவாக அதை நீங்கள் போட்டு விடுகிறீர்கள்.
நிலத்தில் விழுந்த அந்த நுளம்பை தேடிவந்த ஒரு எறும்பு

99 நீ.பி.அருளானந்தம் کے
சுறுசுறுப்பாகவிருந்து இழுத்துப்பார்க்கிறது. கொஞ்சம் தூரம் இழுத்துச் செல்வதற்குள் இருந்தாற்போல் மேலாக எகிறி விழுந்து புரண்டடிக்கிறது. அதற்கு அருகில் கிடக்கும் இன்னோர் செத்த நுளம்பை எங்கிருந்தோ பொதபொதவென்று கிளம்பி வரும் எறும்புப்பட்டாளம் வந்து மொய்க்கிறது. கறுத்த எறும்புகளுக்கு நுளம்பு கற்கண்டுபோலும் ஆளைக்கடிக்காத அந்த எறும்புகள் அந்தச் சடலங்களை இழுத்துக்கொண்டு சவஊர்வலமாகச் செல்லுகின்றன. இந்த நுளம்புகளோடு இருந்து வேதனைப்பட்டு நேரத்தை நீங்கள் வீணே போக்கிக்கொண்டிருக்க இரண்டுபேர் உங்கள் வீட்டைத் தேடிப்பிடித்து வருகிறார்கள். வெளிவாசலுக்கு முன்னாலுள்ள இரும்புக்கேற்றடியில் நிற்கும் அவர்களை காக்கைப்பார்வை பார்த்துவிட்டு “நீங்கள் வந்ததன் காரணம் என்ன?” என்று தொடங்கி முழுதும் விசாரித்தறிகிறீர்கள். “நீங்கள் இருக்கும் வீட்டின் சொந்தக் காரர் அனுப்பிய ஆட்கள்தான் நாங்கள். காணிக்குள்ள கிடக்கின்ற மரங்களை வெட்டித் துப்பரவாக்கி காற்று வரச் செய்வதும் வெளிச்சம் விழப்பண்ணுவதற்குமாய் வந்திருக்கிறோம்”
அதிலே ஒருவன் மூக்காலே கதைத்தான். அவன் சொன்னதைக் கேட்டு உங்களுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
“நல்லம் உங்கட பாட்டுக்கு வேலையைச் செய்யுங்கோ’ என்கிறீர்கள் நீங்கள். அவர்கள் காணிக்குள் காலடிவைத்ததும் முதன் முதலில் மலர்களைப் பிறப்பிக்காத அந்த மலட்டுச் செடிகளை யெல்லாம் நொடியளவில் வெட்டித் தள்ளுகிறார்கள். அந்தச் செடிகளுக்கு உள்ளே இருந்து புழுதிக் குருவிகள் வெளியே பறக்கின்றன. கொண்டைக் கிளாறுகள் சண்டையிட்டபடி மேலே பறந்து போயிற்று.
குழைக்கும்பலை அவர்கள் ஒருபக்கமாக இழுத்திழுத்து விடுகிறார்கள். முள்செடிகளை இழுக்கும்போது முள் மிளாறுகள் சரசரவென நிலத்தில் உராய்ந்து சென்றன. திரைபோட்டமாதிரி நெருக்கமான அந்தச் செடிகளையெல்லாம் தனிக்கம்புகளாக இருக்கும்படி ஆக்கிவிட்டு நெடுகுயர்ந்து நிற்கும் பலாமரத்தின் கிளைகளையும் தறித்து விழுத்துகிறார்கள். இப்போதுதான் பூவும் பிஞ்சுமாகவிருக்கும் அந்தப்பலா அழிவிலும் இயற்கையான தன் பலாவாசனையை பூவிலும் காயிலுமிருந்து பரப்பிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் நின்றவாறு பலாவிதவைக் கோலமாவதை ஆணி அடித்த தினுசில் விழிகள் நிலைத்திருக்க நீங்கள் பார்த்தபடி இருக்கிறீர்கள். பலாமரக்கிளைகளை வெட்டுவது முடிவுக்கு வந்ததுடன் இங்கே மரம் வெட்டுபவர்களின் நோக்கு அடுத்தாக கராம்பு மரத்தின் மீது

Page 61
100 நுளம்பு
செல்லுகிறது. அதன் மெல்லிய கெட்டுக்களை தறித்து வீழ்த்த அவர்களுக்கு அதிக நேரமாகவில்லை!
வடிவில் சிறிய இலைபோல் காட்சிதரும் கராம்பு மரத்தின் குழைகளை இழுத்துச் சென்று குழையோடு குழையாய் அமர பாடமாய்வைத்து அமர்த்துகிறார்கள் அவர்கள்.
இப்போ கராம்பு மரமும் மொட்டையே! அவர்கள் கைமீது இருக்கும் அரதப்பழசான கோப்பிக்கத்திக்கு இன்னும் அங்கே வேலை இருப்பதாகவே எண்ணுகிறீர்கள் நீங்கள். "அந்த மாமரத்தை மாத்திரம் வெட்டாமல் விட்டாலென்ன? பூச்சுமந்துகொண்டு அம்மரம் உள்ளதே? என்று கருணையும் இரக்கமுமாயிருக்க உங்கள் மனம் குழம்புகிறது. என்றாலும், வெளியே அதை அவர்களிடம் சொல்ல முடியாத நிலை!!! தீர்வு எல்லாவற்றிற்கும்தான்! தனியே அதைமாத்திரம் தடுத்து காப்பாற்று வது எப்படி? என்கிறதான உணர்வில் நீங்கள் மெளனமாகி விட்டீர்கள். இப்போது அந்த மரத்தின் கிளைகள் தறிக்கப்படுகின்றன. அந்த மரத்தோடு பின்னிப்பிணைந்து வளர்ந்திருந்த பவளமல்லிகையின் வாதுகளும் வெட்டப்படுகிறது. “பூமரம்! பூமரம்” என்று அடுத்த வளவுக்குள் இருந்தும் இரக்கப்பட்ட இரண்டு வார்த்தைகள்.
நீங்களோ புதிதாக ஒன்றை நினைத்து அதையே சிந்திக்கிறீர்கள். "நாங்கள் வீணே மரங்களை வெட்டும் நீசத்தனத்தை செய்யவில்லை! நுளம்புகள்தான் இவைகளை அழிக்கத் தூண்டுதலாயிருக்கின்றன. எனவே, குற்றம் நுளம்புகளுடையதே! அதற்காக தண்டனைபெற வேண்டியதும் நுளம்புகள்தான்!
இந்த எண்ணங்கள் உங்களது மனத்தில் அலையாடுகின்றன. அப்படிநினைத்து அவைகளை சபித்தபடி மாமரத்தை நீங்கள் துயரபாரத்துடன் பார்க்கிறீர்கள். மரத்திலிருந்த பொன்நிறப் பூக்க ளெல்லாம் கிளைகளுடன் சேர்ந்து வெட்டப்பட்டதாய் நிலத்தில் கிடப்பதைப் பார்க்க மனசை வேதனைத் தீ சுட்டுவிட்டு விலகுமாப் போலிருக்கிறது உங்களுக்கு.
என்றாலும், கவலையை வெளிக்காட்டாமல் அந்த ஏறு வெயிலில் விழிகள் சிவக்க வேர்வைவெள்ளமாய் வழிய வேலை செய்த அவர்களை உபசரித்து நீங்கள் வீட்டிலிருந்து அனுப்பி வைக்கிறீர்கள். விட்டு முற்றத்தில் குப்பைகூளம் ஒரு சிலும்பு கூடக் கிடையாது. அப்படி அவர்கள் துப்பரவாக்கி விட்டதையிட்டு உங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது.
வீட்டு வாசல் பக்கம் வெயில் உறுதியாக வீசுகிறது. வீட்டுச்

ള് நீ.பி.அருளானந்தம் 101
சூழலில் வெளிச்சம் படுவதும் நல்லதுதான். வெயில் வெளிச்சம் வாசலில் படுவதும் நன்மைக்குத்தான் என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாய் உங்கள் மனத்திற்கு சமாதானம் சொல்கிறீர்கள். மனைவியும் உங்களோடு சேர்ந்துகொண்டு நீங்கள் சொல்வதையே தானும் நினைப்பதாக காட்டிக்கொள்கிறாள். உங்களைப்பார்த்தபடி ஓரிழை புன்சிரிப்புடன்; ‘அப்பாடி இப்பதான் நல்லம் நுளம்பு இனிவராதுகள்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறாள் அவள்.
“நிழலில்லாட்டி என்ன! இந்த வெய்யிலையும் தாங்கலாம்! ஆனா, நுளம்புக்கடியை தாங்கேலாதப்பா!!!” என்று நீங்களும் ஒத்துப் பாடிவைக்கிறீர்கள். பின்பு மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் *கார்க்கியின் நாவலை எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பதற்கென்று உட்காருகிறீர்கள்.
ஆனால், அதே நுளம்புகள் உங்களைத் தேடிவருகின்றன! ‘இன்றையநாள் போகட்டும்! நாளையிலிருந்து நிம்மதியாப் படிப்போம்!’ என்கிற நோக்கில், புத்தகத்தை நீங்கள் மூடிவைக் கிறீர்கள். அப்படியே ஒவ்வொருநாளும் பொழுதுகள் விடிகின்றன. அலுத்துத் தேய்ந்து சாய்கின்றன. நுளம்பு இல்லாத உலகத்தை நோக்கித்தான் அதற்குப் பின்புவரும் நாளிலெல்லாம் உங்கள் எதிர்பார்ப்பு இருக்கின்றது. ஆனால்;
நுளம்புச் சனியன்களை ஒழிக்கும் விதத்தில் எந்த நடவடிக்கை களை நீங்கள் எடுத்தாலும் அழிக்க முடியாத நிலையில் அவைகள் இருந்துகொண்டு உங்களை தொல்லைப் படுத்துகிறதாயப் இருக்கின்றனவே?
தினகரன் வாரமஞ்சளி (2004ம் வருடம் பெப்ரவரி மாதம் 08ம் திகதி)
兹谷蚤

Page 62
O2 வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்
அநேகம் பேர் உட்காரக் கூடிய பந்தல் அது. தேவை ஏற்படும் போது எடுக்கவென்றும் ஒரு பக்கத்திலே கதிரைகள் அடுக்கியும் வைக்கப்படுகின்றன.
அவர் ஒரு மூலையில் போய் இருக்கிறார். அவரது அன்னை இறந்து விட்டார். கூடப்பிறந்த சகோதரியின் வீட்டிலேதான் செத்த விடு நடக்கிறது. அங்கே உறவின் முறையார் ஒருவரும் அவரோடு ஒட்டவில்லை. உள்ளே இருந்து அழுகுரல் கேட்கிறது. குரலைக் கொண்டு சகோதரிதான் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது.
பந்தலின்நடுவே வெற்றிலைத் தட்டைச்சுற்றி பலர் இருக்கிறார்கள். எல்லாரும் தெரிந்தவர்கள்தான் இருந்தும் ஒருவரும் அவரோடு கதைக்கவில்லை. கொஞ்சக் காலத்திலேயே அவர்கள் தங்களுக்கு
 

2 நீ.பி.அருளானந்தம் 103
நல்ல ஒரு வசதியைத் தேடிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்தது மண்ணெண்ணெய் வியாபாரம், பெற்றோல் வியாபாரமாம்! இங்கே வந்த பின்பு கேள்விப்பட்டார்.
யுத்தம் தொடங்கியபின் இந்த நாட்டில் அநேகம்பேர் பிச்சைக் காரர்களாகிவிட்டார்கள். சுண்டெலிகளாகவிருந்த பலர் பெருச்சாளி களாகவும் ஆகிவிட்டார்கள். இப்போது பிச்சைக்காரர்கள் பட்டியலிலே
95 JOELD GHL55E5LD.
உள் அறையில் இருந்து ஜோன் வெளியே வருகிறார். தனது அண்ணனை அங்கு நின்றவாறே பார்க்கிறார். பிறகு இவருக்குப் பக்கத்தில் வந்து விட்டார். "உள்ளவாங்களன் அண்னை உங்கயே இருந்திட்டால் எப்படி நடக்கவேண்டிய அலுவல்கள் நடக்கும்?
"நான் வந்து பெரிசா என்ன செய்யக் கிடக்கு. இங்கினைக்க நான் இருக்கிறன் தம்பி.”
ஜோன் அவரை விடவில்லை! "அங்க சொந்தம் பந்தமெண்டு உள்ள எல்லாரிண்டையும் பேரெழுதிக் கொண்டிருக்கினம். றேடியோவில குடுக்கவாம். அதோட பீக்கரிலயும் ஊர் முழுக்க சொல்லோனும்."
செத்த வீட்டிலும் விளம்பரம் விட்டுப் போகவில்லை. ஜேர்மனி, இங்கிலண்டு, கனடா, சுவிஸ் - என்று தம்பட்டமடிக்க வேணுமே.
அவருக்கு அப்படி பிள்ளைகளொன்றும் வெளிநாடுகளில் இல்லை. வன்னியில் இருக்கிற பிள்ளைகளை செத்த வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வவுனியாவுக்கு வரவே காசு களஞ்சு இல்லை.
"ஏதோ அவயள் தங்களுக்கு விருப்பப்பட்ட மாதிரியெல்லாம் எழுதிச் சொல்லட்டும்' - என்றவர், ஜோனிடம் கேட்டார். 'சவக் குழி வெட்ட ஆக்களப் பிடிச்சு விட்டாச்சே?” "ஓம் அண்ணை அதெல்லாம் வேளைக்கே ஒழுங்கு பண்ணி
யாச்சு. ஆIே. முந்தின மாதிரி நினைச்சாப்போல நாங்கள் சவுக்காலேக்க போய் வாறமாதிரி. இப்ப போகேலாது”
"ஏன் தம்பி?”
"அதுக்கெல்லாம் இப்பவண்ணை பேமிசன் எடுக்கவேணும், செத்த சவத்தை சவுக்காலைக்க புதைக்க ராணுவத்திட்டத்தான் போய் நிக்கவேணும். அங்கபோனா, அவேயட்டயிருந்து பலகேள்வியள் வரும். அதுக்கெல்லாம் பதில் சொல்லவேனும், பிறகு போம்நிரப்பிக் குடுத்து அதில அங்க இருக்கிற அதிகாரி கையொப்பம் வைச்சாப் பிறகுதான் குழிவெட்டிறதும், சவம் புதைக்கிறதுமெண்டு எல்லாம் அங்க செய்யலாம். அவயின்ரை பாதுகாப்பு வலையத்துக்க

Page 63
104 வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்
சவுக்காலை கிடக்கப்போய்த்தான் உந்த ஆக்கினை. எல்லாம் சவுக்காலைக்க அவயள்தாற குறிச்சநேரத்துக்குள்ள நடக்கவேண்டிய தையெல்லாம் செய்து முடிக்க வேணும். யாருட்ட இதுகளைச் சொல்லியழ” - என்று ஜோன் நெடியதாய் ஒரு பெருமூச்சை விட்டார். “என்ன இது உயிரோட இருக்கேக்கிளயும் இப்பத்தையக் காலத் தில பிரச்சனையா எங்களுக்குக் கிடக்கு. அடச் செத்தப்பிறகும் பிரச்சனை போலக் கிடக்கு1. என்னயிது சவம் பிடிச்ச சீவியமாக் கிடக்கு? - இப்படி அலுத்துச் சலித்து விட்டு மேற்கொண்டு விசாரித்தார்;
“குழிவெட்ட இப்பவும் பழைய ஆக்களே வருகினம்?” “இப்ப உவங்களையெல்லாம் கூலி வேலைக்கெண்டு பிடிக்கிறதும் கஷ்டமாப் போச்சண்ணை. என்ன செய்யிறது - காலம் மாறிட்டுது. இப்பவேற நெல்ல நல்ல தொழிலுகளையும் செய்யிறதுக்குப் படிச்சிட்டாங்கள்.”
“உப்பிடியெண்டால் இந்த வேலைக்கெண்டு ஆர் இப்ப வருகினம்?” “அவங்களிலதான் கொஞ்சம் பேர் இன்னும் விடாம இருந்து செய்து கொண்டிருக்கிறாங்கள். செட்டாத்தான் கிறாக்கி பண்ணிக் கதைச்சு உதுக்கெல்லாம் இப்ப பெரிவாரியாக் காசும் வாங்கிறாங்கள்.” - ஜோன் சினந்தார்.
“இந்த வேலைகளைச் செய்ய அவங்களும் இல்லாட்டி எவ்வேளவு கஷ்டம் தம்பி. எல்லாரும் முன்னேறத்தானே வேணும். ஏன் அதுக்கு நாங்கள் எரிச்சல் படுவான். அது சரி சவுக்காலேக்கை கிடங்கு வெட்ட சரியான இடம் ஆர் கொண்டோய்க் காட்டினது?”
"அக்கான்ரை மகன்தான்!. கடைசிக்கு மூத்தவர். அவருக்கு அங்கின எங்கட இடம் சரியாத்தெரியும். குறிப்பா அந்த இடத்தைக்காட்டுவார்’
தம்பி சொன்னதோடு முழுவிவரமும் அறிந்ததோடு அவர் மெளனமாகிவிட்டார். ஜோன் எழுந்து அங்கே தேவையான அலுவல் களை பார்க்கவென்று போய்விட்டார். இழவு வீட்டில் இந்த உலக வாழ்வு சாசுவதமில்லை என்ற சிந்தனைதான் யாவருக்கும் எழும். அதற்கு அங்கே கேட்கும் அழுகையும், புலம்பலும் ஊக்குவிப்பாக இருக்கவேண்டும். அவர் அங்கே வாய்க்கொருக்கால் தாம்பூலம் போட்டுக் கொண்டார். இறந்து விட்ட அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து மனசைக் கசக்கியது. கடைசி காலத்தில் அம்மா என்னோடு வன்னியில் வந்திருக்க எவ்வளவு முயற்சியெடுத்தா? அது எல்லாம் முடியாமல் போச்சே? யுத்தம் எத்தினை கெடுதிகளைச் செய்நிருக்கு. உயிரோட இருக்கேக்கை அம்மாவுக்கு செய்ய Camiauhiņuu ALGOLDuu6d6MT...... செய்யாம விட்டிட்டனோ?

ള് நீ.பி.அருளானந்தம் 105
அவரது கண்கள் மன வேதனையில் கண்ணிர்க் குளமாயின. தலையை உயர்த்தி பந்தல் முகட்டைப் பார்க்கிறார், விழிகளின் கடைவழியாக கண்ணிர் வழிந்து கீழே நிலத்தில் கொட்டியது.
நேரம் மெல்ல மெல்ல போய்க் கொண்டிருந்தது. அங்கே அறைக்குள் இருந்து செபம் சொல்கிறார்கள். பின்பு யார்யாரெல்லாமோ அழுது கதறுகிறார்கள். சவப்பெட்டிக்கருகில் அவரும் போய் நிற்கிறார். கடைசியாக தாயின் முகத்தைப் பார்த்தார். அதோடு பெட்டியின் மேல்பலகை மூடப்பட்டு அந்த இடத்தை விட்டு பிரேதப் பெட்டி தூக்கப்பட்டு விட்டது.
வீதியிலே சிலுவையை உயர்த்திப்பிடித்தபடி கோயில் சம்பிரதாய அங்கி அணிந்திருக்கும் பையன் ஒருவன் போகிறான். அவனை நடுவிலே போகவிட்டு இருவரிசையில் சனங்கள் வீதியிலே நடக்கிறார்கள்.
கோயில் வாசற்படியேறி உள்ளே சென்றதும், குருவானவர் வந்து பிரேதத்தை செபம் சொல்லி ஆசீர்வதித்தார். அதற்குப்பிறகு மீண்டும் மரண ஊர்வலம் ஆரம்பமாகி சவக்காலைக்கு வருகிறது.
சவக்காலை வாசலைத்தாண்டி உள்ளே கால்வைத்தவர்கள் உளுத்துமங்கிக் கொண்டிருந்த மரச்சிலுவைகளை ஆங்காங்கே கண்டனர். கட்டைச் சிலுவைகள் பலதும் விதை தெளித்திருந்தாற் போல அவர்களது கண்களுக்குக் காணப்பட்டன.
அதைப்பார்த்துக் கொண்டு உள்ளே போனவரிடமிருந்து ஒரு பிரச்சினை பூதாகாரமாய் கிளம்பியது.
“ஆர் இங்கின குழி வெட்டச் சொன்னது? சீ. அந்தச் சனியனைப் போய் இடம் காட்டிட்டுவாவெண்டு அனுப்பினனே?”
ஜோன் எரிதணல் மேல் நின்ற மாதிரி கொதித்தார். அப்போதுதான் இவரும் அங்கே பார்த்தார். அந்த இடம் சவக்காலைக்குள்ளே ஒரு ஒதுக்குப் புறமான இடம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கென்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும் நிலம்.
சவக்குழி அந்த இடமாகத்தான் வெட்டி விடப்பட்டிருந்தது. “அந்தப் பக்கத்திலபோய் வேணுமெண்டு விசும்புக்கு ஆரோ குழிவெட்டியிருக்கிறாங்கள்”
உறவினரெல்லாம் அருவருத்தபடி நின்று கொண்டு கன்னா பின்னா. என்று வாய்க்கு வந்த வசையெல்லாம் பேசி குறை சொன்னார்கள். அவருக்கு புண்ணிலே புளி பற்றியது மாதிரி கோபம் வந்தது. ‘இனி வேற ஒரு வழியும் இல்லை. புதுசாய் இங்க இனி வெட்டேலாது. செத்தா நாங்களெல்லாம் இந்த மண்ணுக்கதானே

Page 64
O6 வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்
போறதப்பா? அதுக்குள்ளயும் ஈனசாதி, தீண்டாச்சாதி, பலபட்டைச்சாதி எண்டதாய் பாகுபாடுகளும் பிரிவினைகளும். எப்பவுமே திருந்தாத மிருகசாதிகள்' இப்படியென்று அறம்புறமான பேச்சுக்கொடுத்து அவர்களை கிழிகிழி என்று கிழித்து விட்டார். அதனால் எல்லாரும் முகத்தை 'உம்' - மென்று வைத்துக்கொண்டு நின்றார்கள். சவஅடக்கம் களேபரத்தோடு ஒரு படியாய் முடிந்துவிட்டது.
ஒரு கிழமையின் பின் ஆத்துமாக்கள் பெருநாள் வந்தது. அன்று காலைப்பூசை முடிந்ததும் சவக்காலை சந்திப்புக்கென்று சனங்கள் அங்கு போவதற்கு ராணுவத்தினரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பூச்செண்டுகளையும் மெழுகுதிரிகளையும் வைத்துக்கொண்டு இறந்துபோன உறவினர்களை நினைத்தபடி அன்று பலர் சவக்காலைக்குள் நின்றார்கள். புல்லுக் காடாய் தெரிந்த இடுகாடு அன்று பூக்காடாய் மாறிக் காட்சியளித்தது.
தனது தாயைப் புதைத்திருந்த இடத்தில் கால்மாட்டுப் பக்கமாய் அங்கே இவரும் நின்று கொண்டிருக்கிறார். கையில் வைத்திருக்கும் மெழுகுதிரி அவரது கவலை கொண்ட மனசு போல எரிந்து உருகிக்கொண்டிருக்கிறது. அவருக்குப்பக்கத்தில் 'போகன் வில்லா பூவும் கையுமாய் செவேத்தியும் கவலையோடு நிற்கிறான்.
செவேத்தியின் தாயும் அந்த இடத்திலேதான் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது புதைக்கப்பட்டிருந்தாள். ஆத்துமாக்கள் பெருநாளான இன்று - அங்கே சவக்காலைக்கு அவருடைய சகோதரி வரவில்லை. சகோதரன் ஜோனும் வரவில்லை. சவக்காலைக்கு வந்திருந்த உறவினர்கள் அவர் நின்ற பக்கமாக தங்கள் கடைக் கண்ணாலும் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் ஒரு போதுமே மனம் திரும்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். அங்கே இருக்கும் வெள்ளையடித்த கல்லறைகள் போலவே அங்கு நின்றவர்க ளெல்லாம் அவருக்கும் செவேத்திக்கும் தெரிகிறார்கள்.
சவக்காலை சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது அவர் தீர்மானமாக ஒன்றை செவேத்திக்கு சொன்னார்.
"அடுத்த முறை வாற ஆத்துமாக்கள் பெருநாளைக்கு முன்னவா நாங்கள் ரெண்டு பேரும் சேந்து அதில ஒரு கட்டிடம் கட்டி முடிச்சிடு வோம். அதில எண்ரை அம்மாவின்ரை பெயரையும் உன்ரை அம்மான்ரை பேரையும் சரிசமானமாய் இருக்க அந்தக் கட்டிடத்தில எழுதி விடவும் வேணும்'
தினகரனர் (2002 வருடம் யூனி மாதம் 22ம் திகதி)
HOCODEH

ള് நீ.பி.அருளானந்தம் 107
கிருஷா வருஷம் வரும் கிறிஸ்மஸ் திருநாள் கொண்டாட் டத்திற்காக தனி ஒரு பெட்டியில் வைத்து இதுநாள் வரை பாதுகாத்திருந்த செயற்கை கிறிஸ்மஸ் மரத்தை வெளியில் எடுத்து வைத்து என் மகன் தூசு துடைத்துக்கொண்டிருந்தான்.
இந்த மரத்தையும் அதிலே தொங்கவிடப்பட்டு அலங்காரம் செய்ய வைத்திருக்கின்ற வர்ண ஒளிவிடும் மணிகளையும், காற்றில் சுழலும் வெள்ளிக் கடுதாசிகளையும், மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் காட்டும் கானக் கொச்சிக்காயளவு மின்சார ஒளி விளக்குகளையும் வீட்டுக்கு வாங்கிவந்து இன்றுடன் ஏழு வருடங்களாகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்து ஏழு வருடங்களாகிவிட்டது என்று அதைக் கொண்டு ஒரு முறை நான் நினைத்தேன். அப்படி நினைக்கும்போது பழைய வாழ்க்கையெல்லாம் நினைவில் வந்து மனவருத்தமாக இருந்தது.
கொழும்புக்கு வந்து சேர்ந்தாற்பிறகு பல கிறிஸ்மஸ் பெருநாட் களை நானும் குடும்பத்தினரும் இங்கே மகிழ்ச்சியுடன் கொண்டாடி னோம். கிறிஸ்மஸ் அலங்காரத்துக்கும் ஆடம்பரத்துக்கும் கொழும்பி

Page 65
108 திருநாள் வந்தது
லென்றால் ஒரு குறைவுமில்லை. இங்கே கிறிஸ்மஸ் நடு இரவில் வெடிக்கும் சரவெடிகள் காதையே செவிடாக்கிவிடும்போல் இருக்கும். சுவாசிக்கவே திண்டாடும் அளவுக்கு வெடியிலிருந்து உண்டா கும் மருந்துப்புகை காற்றுடன் விரவுதலால் சுற்றுச் சூழலையே கெடுத்து விடுமாப்போலவுமிருக்கும்.
இந்தநகரத்திலே ஒரு மாத காலத்துக்கு மின்சார வர்ண விளக்குகள் எங்கு காணினும் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
கடைகடையாக கண்ணாடிப் பெட்டிகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மரங்கள் - வெள்ளைத் தாடியுடனும் சிகப்புச் சட்டை குல்லாயுடனும் காட்சியளிக்கும் கிறிஸ்மஸ் பப்பா.
இப்படி எல்லாமே இங்கு கிறிஸ்மஸ் காலங்கள்ல் மனதை கொள்ளைகொள்ளும் பொழுதுபோக்காக இரவு முழுவதும் கழிந்து கொண்டிருக்கும்.
பார்வைக்கு இவை எல்லாமே சிங்காரிப்பாய் எனக்குத் தெரிந்தா லும் மனத்தளவிலே ஊரில் இருந்தபோது உண்டாகின்ற மகிழ்ச்சி சற்றும் இங்கே இல்லாத மாதிரியே இருந்தது.
மகனோவென்றால் இங்குள்ள ஆடம்பரங்களிலேதான் ஆட்பட்டுப் போய் விட்டான். அவனுடைய வயதுக்கும், வாலிபத்துக்கும் இந்த நகரவாழ்க்கை சொர்க்கமாகத் தெரிகிறது. இந்த நகரமும், நாகரிகமுமே சிறந்தது என்பதாக அவனது நினைப்பு. கல்லூரிப் படிப்பினாலே புதிய சினேகிதர்களும் நிறையவே அவனுக்குண்டு.
பிள்ளைகள் தலையெடுத்து விட்டால் தாய்மார்களும் அவர்க ளோடு சேர்ந்து கொண்டு நின்றுவிடுவார்கள். அவர்களுடைய கட்சி கூட்டுக் கட்சியாக பலம் கொண்டதாகிவிடும்.
ஆனால், தனிக்கட்சியாக தந்தையர்கள் ஆகிவிடுவதால் குடும் பத்தில் பலமில்லாதவர்களாகத்தான் அவர்கள் போய்விடுவார்கள்.
எனக்கும் இதேநிலைதான்! எத்தனைதரம் சொல்லிச் சொல்லி களைத்துவிட்டேன்;
"ஊரிலபோயிருப்பம். ஊரில போயிருப்பமென்று!” கேட்கிறார்களா இவர்கள்? மூத்தபிள்ளை ஒருவன் வெளிநாட்டிலிருக்கிறான். மாதா மாதம் "ஹலோ" என்றவுடன் கிலோ’வில் காசு வருகிறது. இப்படி இருக்கும்போது இவர்கள் அசும்புவார்களா இந்த இடத்தைவிட்டு?. இன்று இவர்களும் இங்குள்ளவர்கள் போல் எந்திரங்களாக மாறிவிட்டதைப் போலத்தான் பார்ப்பதற்கு

ള് நீ.பி.அருளானந்தம் 109 எனக்குத் தெரிகிறது.
இந்தளவு வயது எனக்கும் போய்விட்டதுதான்!. இப்பவும் எனக்கு எதையாவது சாப்பிட வாயில் வைக்கும்போது அம்மா சுட்ட தோசைதான் ஞாபகம் வருகிறது.
மலைப்பூவரசு இலை அகலத்துக்கு மொத்தம் மொத்தமாக அம்மா தோசை சுடுவா. அந்தத் தோசை இப்போதும் வாயில் இருந்து ருசித்துக் கொண்டிருப்பதாகத்தான் இன்றும் என் நினைப்பு.
கிறிஸ்மஸ்சுக்கெல்லாம் கேக்சுடுகிறார்களாம். இந்த கேக்கிலே என்னதான் அப்படி ஒரு ருசி இருக்கிறது?
கிறிஸ்மஸ் வருஷத்துக்கென்று அம்மா சுடும் முறுக்குக்கு இந்தக் கேக் ஈடாகுமா?
எள்ளுப் போட்டுச் சுட்ட முறுக்கு கறுக்கு முறுக்கென்று கடிக்க என்ன ருசி! அப்பப்பா. அதை சொல்லி மாளாது.
அந்தப் பயத்தம் உருண்டை அரியதரம் ரெண்டையும் கதலி வாழைப்பழத்தோட ஒருபிடி பிடிச்சா எப்பிடி இருக்கும்?
இப்பவும் நினைக்க உடனே எனக்கு நா ஊறுகிறது. என்னதான் செய்வது? அந்தக் காலமெல்லாம் மலையேறிக் கடந்து போய்விட்டது.
அந்தக் காலங்களில் பெருநாள் திருநாள் வந்தால் வீட்டுக்கு ஏழை பாழைகளும் வருவார்கள் - அவர்களுக்கெல்லாம் கொடுத்து நாங்களும் சாப்பிட்டு எவ்வளவு மகிழ்ச்சியாக அந்த நேரங்களில் இப்படியான பெருநாட்களை கொண்டாடுவோம். t
உற்றார் உறவினரெல்லாம் அயலட்டை வழிய இருக்க அவர்களுடைய வீடுகளுக்குப் போய் வந்து என்ன மாதிரி சந்தோஷ மாகவிருந்தது அந்த நாளைய வாழ்க்கை.
இன்று பிறந்த மண்ணில் இல்லாது அலைந்து எங்கெங்கோ வெல்லாம் திரிந்து கொண்டிருப்பதான ஒரு நரக வாழ்க்கை.
பணம் பரவலாக பலரிடமும் இப்போது இருக்கிறதுதான், ஆனால், மனஅமைதி, மன மகிழ்ச்சி யாரிடமாவது இருக்கிறதா?
பாலன் இயேசு மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார், அந்தப் பாலகனின் முகத்தில் உள்ள அமைதியும் சாந்தமும். வசதியுள்ள கோடீஸ்வரரின் முகத்தில் இருக்கிறதா?
இந்த நாலு சுவர்களுக்குள்ளாக அடைபட்டுக் கிடந்து கொண்டு பெருநாள் கொண்டாடுவதில் என்னதான் மகிழ்ச்சி இருக்கிறது. இப்படியெல்லாம் பலவாறாக நினைத்துக் கொண்டு மகனின் அருகில்

Page 66
110 திருநாள் வந்தது நான் நின்றேன்.
அந்தச் செயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் கிளைப் பாகங்களை பொருத்தி முழுமரமாக அதை ஒப்பேற்றி விட்டான் மகன்.
பின்பு மணிகளை எடுத்து ஒவ்வொரு கிளைகளிலும் கட்டினான். துண்டு துண்டாய்க்கிடந்த வெள்ளிநிற சுருள் கடுதாசிகளையும் லட்சணமான முறையில் கட்டித்துங்கவிட்டான். மென்காற்றுக்கு மணிகளும் கடுதாசிகளும் சுழலத் தொடங்கின. அந்த மரத்துக்கு மேலே கொடிப்பூ மாதிரி காட்சியளித்த மின்சார விளக்குகளை யெடுத்து வலைபோல அவன் போட்டான். அதன் பிறகு மின்சார இணைப்பை ஏற்படுத்தி மின் விளக்குகளை எரிய விட்டான்.
இந்த நேரம் அணிகலன்கள் பூண்டிருந்த அந்தக் கிறிஸ்மஸ் மரம் ஒளிக்கண்களுடன் சிங்காரமாய்ச் சிரிப்பதைப்போல் காணப்பட்டது.
அறையின் ஒவ்வொரு மூலையிலும் போய் நின்று கொண்டு மகன் அதன் வடிவைப் பார்த்தான்.
“வடிவாயிருக்கா அப்பா!” என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நான் “ஓம்” என்றேன். “அப்பா ஒரு குறை இருக்கு “என்ன..? “மரத்துக்கு மேல "சினோ விழுந்திருக்கிறது மாதிரி செய்துவிட வேணும்” என்றான் அவன்.
எனக்கென்ன தெரியும். அவன் சொன்னவைகளை விளங்காமல் நான் யோசித்தேன்.
"அப்பா! கனடாவில எல்லாம் கிறிஸ்மஸ் இரவில் "சினோ' விழாட்டி அழுகிறது மாதிரி அங்க இருக்கிறவங்க எல்லாம் கவலப் படுவாங்களாம்.”
"ஏன் அப்பிடி..?” என்று எனக்கு விளங்காததால் அவனைக் கேட்டேன்.
"கிறிஸ்மஸ்காலங்களில அதிகமா அங்க 'சினோ கொட்டும் அது கொட்டினாத்தான் நிலத்துக்குள்ள இரும்பு விளையும் எண்டு அவங்கள் சொல்லுவாங்களாம். அதனால்தான் கவலைப் படுறாங்கள்” என்றான் அவன்.
எனக்கும் அந்த நாட்டின் வளப்பத்தை கேட்க மனத்திலே ஆசை உண்டானது. எனது ஊரின் வள்ளண்மையைப்பற்றியும் அந்த நேரமாய் நான் அவனுக்குச் சொன்னேன்.
99

இ நீ.பி.அருளானந்தம் 111
“எங்கட இடத்திலையும் கச இருட்டில நடுச்சாமம் நல்ல பனிக்குள்ளால நாங்கள் நத்தார் பூசைக்குப் போவம். இப்ப வெண்டால் முந்தினது மாதிரி இல்ல ஊரில மரங்களையும் அதியம் வெட்டிப்போட்டாங்கள் அடுத்ததாய் பனியும் இப்ப குறைவுதான்” என்றேன் நான்.
மகனோ. நான் சொன்னதை கணக்கெடுத்தவனாக இல்லை. அவன் கிறிஸ்மஸ் பப்பா பொம்மையை அந்த மரத்தில் கட்டிக் கொண்டிருந்தான்.
“இந்த ஆடம்பரங்களெல்லாம் எதுக்கு? இதுகளுக்குச் செலவு செய்யிற காசுகளை ஏழை எளியதுகளுக்குக் குடுத்தா இந்த நாள் வளிய எண்டாலும் காவயிறு அரைவயிறு சாப்பிடுற அதுகள் சந்தோஷமாயிருக்கும். சண்டை முடிஞ்சு சமாதானம் வந்திட்டுதுதான் எண்டாலும் அதுகளிலபாதிக்கப்பட்டு வறுமையில கிடந்து உழலுற வயள் இன்னும் எத்தினை ஆயிரம் பேர் இந்த நாட்டில இன்னும் சீவிச்சுக் கொண்டிருக்கினம். எளியவனுக்கு உடுக்க உடையும் பசித்தவனுக்கு உணவும் அளித்தாக வேண்டும் என்று கிறிஸ்தவ தருமம் சொல்லுது. அதால, வசதியுள்ள நாங்கள் இதுகளுக்கெண்டு வீணாய்ச் சிலவளிக்கிற காசை அதுகளிட்ட குடுக்கலாம்தானே. *உன்னைப்போல உன்பிறத்தியானையும் நேசி' எண்டு யேசு சொன்னார். நாங்கள் உண்மையான கிறிஸ்தவரென்றால் கிறிஸ்து யேசு சொன்ன வாக்கியத்தை கடைப்பிடிச்சு நடக்க வேணும். கிறிஸ்து பிறந்த நாளை அப்படித்தான் நாங்க கொண்டாடவேணும். அதுதான் கடவுளின்ரை குமாரனுக்குப் பிடிச்சதாக இருக்கும்”
நான் மகனுக்கு இப்படி ஒரு நீண்ட பிரசங்கம் செய்தேன். அவனும் நான் சொன்னவைகளை காதில் வாங்கிக்கொண்டு கதிரையில் இருந்தபடி யோசித்துக்கொண்டிருந்தான்.
கிறிஸ்மஸ் திருநாளன்று பல நல்ல காரியங்களை செய்ய வேண்டுமென்று நான் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு உதவியாக இப்போது மகனும் ஒத்துழைப்பான் என்று சாந்தமா யிருக்கும் அவனுடைய முகத்தைப்பார்க்கையில் எனக்குத் தெரிந்தது.
தினகரன் வாரமஞ்சரி (2003ம் வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி)
奪

Page 67
112 அலை அடங்கவில்லை
செல்வச் சன்நிதி முருகன் கோயில் திருவிழாக் கோலத்தில் சிறப்பாகத் தெரிந்தது. இரவைப் பகலாக்கும் விதத்தில் மின்சார வர்ண விளக்குகள் அங்குள்ள மரங்கள் பூராவிலும் உள்ள கிளைகளில் இருந்து ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுர உச்சியில் பிரத்தியட்சமாய் உள்ள வேல் ஒன்று ஜெகஜ் ஜோதியாய் ஒளி வீசியபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதைப் போல தெரிந்தது. கருவறையில் காட்சிதரும் முருகனை வணங்கிவிட்டு கோயிலையும் மூன்றுமுறை வலம்வந்து மூலவரை வணங்குகிறார்கள் பக்தர்கள். கோயிலின் உள்ளே தவில் சத்தம் தொடங்குவது கேட்கிறது. நாதஸ்வரமும் தொடர்ந்தது.
அங்கே ஆலய முன்றில் - விண்ணார்ந்து வளர்ந்திருந்த ஒரு பெருமரத்துக்குக் கீழே அவன் நின்று கொண்டிருந்தான். அங்கு நின்றிருந்தபடி அழகான பட்டைக்கரை வேட்டி கட்டி வந்த தன்னைப் போன்ற இளைஞர்களையெல்லாம் அவன் புதினம் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இடங்களிலெல்லாம் நடந்து திரிகின்ற ாம் பெண்களின் மேனியில் வர்ண ஒளிகள் கவிந்ததால் -
 

ള് நீ.பி.அருளானந்தம் 113
தேவதைகளோ இவர்கள்? - என்று வியக்குமளவிற்கு அவனுக்குத் தெரிந்தார்கள்.
இளமை எண்ணங்கள் அவன் இதயத்தில் இருந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்போது அங்கே வேறு என்னத்தைத்தான் அவனது கண்கள் தேடும். சன்னதி முருகனைக் கும்பிடவென்று அவன் கோயிலுக்கு வந்திருந்தாலும் அழகே உருவான அந்த முருகனின் பக்தன் என்ற அளவில் காண்பதையெல்லாம் இரசிக்கும் அளவுக்கு அவன் ஒரு இரசிகனாகவே இருந்தான். பூ, செடியிலே பூத்திருக் கும்போது அதற்கு ஒரு அழகுதான் உண்டு. அதே பூக்கள் பூவையரின் கூந்தலில் இருக்கும்போது முன்னையதை விட அதற்குப் பேரழகு வந்து விடுவது வாஸ்தவம்தானே? - இதன் பொருட்டு அந்தப் பூக்களா, இல்லை பூவையரா, உண்மையில் அழகிற் சிறந்தவர்?. என்று அதற்கு விடை காணமுடியாமல் அதிலே நின்றபடி நினைத்துக் கொண்டு நாலாபுறமும் நடந்து திரிகின்ற அந்தப் பெண்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
இளமை இருக்கும் வரை எல்லாருமே அழகானவர்கள்தான்! அந்த அழகு என்னிடம் அதிகநாள் நிலைக்கவேண்டும் என்று அவனது மனம் ஆசைப்பட்டது. ஆலயமுன்றில் பார்த்த இடமெங்கும் கண் குளிரும் பொன்மணல். எத்தனையோ பேர் அந்த மணல் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒலிபெருக்கியிலிருந்து கேட்கும் சீர்காழியின் பக்திப்பாடல் கேட்கக் கேட்க தித்திப்பான தேனைப்போல சுவைக்கிறது. அந்த வெளியில் வீசுகிற காற்று உச்சுவாசத்தையும், நிச்சுவாசத் தையும் ஆனந்தப்படுத்தியது அவனுக்கு.
அங்கே நின்றுகொண்டு அங்குள்ளவர்கள் ஒவ்வொருவரையும் அவன் தன் மனசுக்குள்ளே கொண்டு வந்து கணக்குப் போட்டுப் பார்க்கிறான். அவன் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கிற அந்த இளம்தாயும் அவள் கணவனும் கனகுசாலாக கதைகள் பல சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தை மணலிலே சிறிது தூரம் தத்தித் தத்தி நடந்து சென்று விட்டு திரும்பிவிரைவாக காலடியெடுத்து வைத்து தாயின் மடியிலே வந்து விழுகிறது. பின்பு தாயின் முகத்தை பூப்போன்ற தன் பிஞ்சு விரல்களால் வருடிக்கொண்டு அன்னத்தின் வாய் போலிருக்கும் தன் சின்ன வாயைத்திறந்து 'அம்மா. அம்மா' என்று மழலை பேசுகிறது. குண்டுமணி மாதிரி சின்னச் சின்ன கண்கள் கொண்ட அந்தக் குழந்தையின் அழகு அவனைக் கட்டி இழுப்பதாக இருந்தது. சின்ன வெள்ளரிப்பழம் போலிருந்த அந்த குழந்தையின் பருவத்திலே அவன் மனம் அவ கொள்கிறது.

Page 68
114 அலை அடங்கவில்லை
'கள்ளம் கபடம் தெரியாத இந்தக் குழந்தை போல் நானிருந்தால்!’ என்று நினைத்துக் கொண்டு இன்னும் எட்டவாய் அவன் தன் பார்வையை நகர்த்துகிறான்.
இப்போது அவன் காண்பது ஒரு கிழத்தம்பதியினரை. உடல் சுருக்கங்கள் கண்டாலும் உள்ளம் சுருங்கி மூப்படையவில்லை அவர்களுக்கு. அந்தக் கிழவனின் பொக்கை வாய்ச் சிரிப்பினிலே மனம் நிறைவடைந்தவள்போல் முகம் மலர்ந்ததாய் காணப்படுகி றாள் அந்தக் கிழவி.
ஒரு மனிதன் தனது வாழ்க்கைக் காலத்தில் எத்தனை விசித்திரமான அனுபவங்களைக் காண்கிறான்.
குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவமென்று மாறு படும் இந்த வாழ்க்கைக் கோலத்தில் எதுதான் அவனுக்கு நிலைத்தி ருக்கிறது?
இந்தத் தத்துவார்த்தமான கேள்வியை அவன் தன் மனசிலே நினைத்துக் கொண்டே கோயில் கோபுரத்தைப் பார்த்தான்.
“ஓம்’ என்று ஒளி விளக்கால் எழுதியிருந்த அந்தப் பிரணவ மந்திரத்திலே அவன் மனம் ஒரு கணம் நிலைத்திருந்து மறுபடியும் அவனது பார்வை மணல் தரைக்கு மீண்டது.
அங்கே இருளும் ஒளியுமான ஒரு இடத்திலே இருக்கும் அந்த இளம் பெண்ணின் பார்வை தன்னைத் துளைப்பது மாதிரி அவனுக்குத் தெரிகிறது. இடையிடையே ஆனந்தமான புன்சிரிப்பும் அவளிடத்தே நின்று பிறக்கிறது. ஏதோ மின்னலைத் திடீரென்று பார்த்தது போல சிறிது நேரம் அவன் செயலோய்ந்து நின்றான். அவளை யாரென்று அவனுக்குத் தெரியவில்லை. சுழற்சியாக வருகின்ற சிந்தனை வட்டத்துக்குள்ளே அவளை யாரென்று ஞாபகத்தில் கொண்டுவர முடியாத நிலையில் அவன் திண்டாடுகிறான். இப்படி சிரிப்பதற்கு என்னை நன்றாக அறிந்தவளாக அவள் இருக்க வேண்டும்
'இவள் யார்?. என்று அறிய இன்னும் போட்டு தன் மூளையைக் குடைகிறான். அவளோ இவன் மீது வைத்த கண்பார்வையை விலத்தவில்லை! அவள் இதழோரங்களில் தொடர்ச்சியான புன்னகை. இங்கே என் அருகில் வா!- என்ற விதமாக அந்தப் பார்வை, இப்போ காந்தம் போல் அவனை அவளிடமாக இழுக்கிறது.
அவன் கூச்ச சுபாவம் உள்ளவன்தான்! என்றாலும், அதையெல் லாம் அந்த இடத்திலே போக்கிவிட்டு அவளின் பார்வை கொடுத்த துணிச்சலில் அவளுக்குக் கிட்டவாய்ப் போக நடந்தான்.
அவள் காலை மடித்து உட்கார்ந்து கொண்டிருக்கும் அழகே தனி அழகுதான். அந்த ஒயிலான சுந்தரி அவன் நடந்து வருகின்ற

ള് நீ.பி.அருளானந்தம் 115
பக்கமாய் தன் கழுத்தைத் திருப்பி பார்க்கிறாள். மயில் தோகை போல் அவள் உடுத்திருக்கும் அந்த குடைவெட்டுக் கவுண் அவளைச் சுற்றி நிலத்தில் விரிந்து கிடக்கிறது. அந்த ஆடைக்கு அவளது தேக வாளிப்பும், சோபையும் உயர்ந்து தோன்றிற்று.
அவள் ஒரு ரோஜாப் பூவை தலையிலும் சூடியிருக்கிறாள். கற்றையான தலைமுடியில் இருக்கும் அந்த ஒற்றை ரோஜா மலரின் மூலம் இன்னும் அவள் எடுப்பாகத் தெரிகிறாள். அவளது நெற்றியிலே நிலாப் பிறைபோல் இருக்கும் அந்தப் பொட்டு மின் ஒளிபட்டு வர்ணஜாலம் காட்டுகிறது. அவளது யெளவனத்தின் நிறைவு ஒவ்வொரு அங்கத்தின் அசைவிலும் தென்பட - அவளது மாந்தளிர் நிற மேனியழகை விழுங்குமாப்போல பார்த்துக் கொண்டு அவளுக்குக் கிட்டவாய் அவன் போனான்.
“சேகர்!’ என்று அவனின் பெயரை மயிலிறகு உதடுகளால் மென்மையாக அழைக்கிறாள் அவள்!- பின்பு சிரிக்கிறாள்.
சிரிக்கும் போது கன்னங்கள் நாவல் பழசிகப்பாய் மாறுகிறது. “என்ரை பெயர் எப்படித் தெரியும் உங்களுக்கு?’ என்று அவன் கேட்க,
“எனக்குத் தெரியும்!” என்று சொல்லியபடி விழிகளை அகலத் திறந்து முகம் விகசித்தாள் அவள்.
“உங்களின்ர முகத்தை எங்கையோ முந்தி நான் கண்ட மாதிரியாத்தான் கிடக்கு. எண்டாலும் எங்கனேக்க எப்பவா கண்டனான் எண்டதுகள்தான் இப்பஞாபகம் வருகுதில்ல!”
கடற்சோழிகளா நிலத்தில் கொட்டினாற்போல மீண்டும் அவன் சொல்வதைக் கேட்டு அவள் ‘கல கல வென்று சிரிக்கிறாள். அப்படிச் சிரித்தவள் தனது சிரிப்பை இடை நிறுத்திவிட்டு
"இன்னும் உங்களுக்கு நான் ஆரெண்டு ஞாபகத்துக்கு வரேல்லயே. கொஞ்சம் ஊண்டி யோசிச்சுப் பாருங்கோ. இந்தச் செல்வி ஆரெண்டு அப்ப உங்களுக்குத் தெரியும்”
“செல்வியெண்டா. எந்தச் செல்வி?” என்று விட்டு மீண்டும் தன் நினைவுகளை காலத்தின் பின்னோக்கிச் செலுத்தினான்
'இவள் அவளாகத்தான் இருக்கவேண்டும்?. இருக்கவேண்டு மென்பதாய் ஏன் ஒரு கேள்விக் குறியை வைக்கவேண்டும். அவள்தர்ன்!. நிச்சயமாக அவளாகத்தான் இவள் இருக்க வேண்டும். என்ற முடிவுக்கு வந்துவிட்டு.
“pájas. 5.... 5.... asudsob LDITiólulsñop Losefieron" - என்று அவளைக் கேட்டான் இவன்!

Page 69
118 அலை அடங்கவில்லை
அவன் அப்படிக்கேட்டதும் அவள் இதழ்க் கடையில் சிரிப்பு சுழித்தது. உடனே தன்கை விரல்களை பந்தாய் வாய்க்குள் அடக்கிக்கொண்டு “ஓம்!” என்கிறதாய் இருக்க தலையை மட்டும் ஆட்டினாள்.
"கனகாலம். உன்னைக்கண்டு. எட்டு வருசங்கள் - இருக்குமா? அப்பவெல்லாம் நாங்க மாமி மாமியெண்டு உன்ரை அம்மாவைக் கூப்பிட்டு பகிடி பண்ணுவம் அது உனக்கு ஞாபகம் இருக்கே?”
அவன் அப்படி சொல்லவும் அவளுக்கிருந்த உற்சாகம் புஸ் சென்று இறங்கிவிட்டது. அவளுக்குக் கவலைவந்து விட்டது. சொட்டு நீர்சுமந்த விழிச் சுடர்களோடு அவள் கீழே தலையைத் தாழ்த்தி, நிலத்தைப் பார்த்தாள். பின்பு விரல்களால் நிலத்தில் கோடு கிழித்தபடி அவள் இருந்தாள்.
அந்த நேரம் அவனது நினைவுகள் அவளது சின்ன வயதுக் காலக் கதையை ஊன்றி ஊன்றி ஆராய்ந்தது. இப்பொழுதுக்கும் அப்பொழுதுக்கும் உள்ள இடைவெளி எட்டு வருஷங்கள்.
அப்பொழுது இவளுக்கு பன்னிரெண்டு வயதிருக்கும். இவளும் தாயுமாக சேர்ந்து அந்நேரம் கடைத்தெரு வழியே பிச்சை எடுத்துக்கொண்டு திரிந்தார்கள். கழுகுமாதிரி அலையும் காமுகரினது கணி பார்வைகள் அப்பொழுதே, பேதமைக்கும் மங்கைப் பருவத்துக்கும் இடையே இளமை நெருடும் அவள் மேனியை துளைக்கத் தொடங்கியதாகிவிட்டன. தங்கள் காமப் பசிக்கு மலைப்பாம்பு போல் அவளை விழுங்க அவர்களெல்லாம் காவல் கிடந்தார்கள். அவர்களிடமிருந்தெல்லாம் இவள் பிழைப்பாளா? - என்று இவனுக்கு சந்தேகம் இருக்கவும் செய்தது.
இவளின் தாய் ஒரு மன நோயாளி இந்தப் பூவைப்பாதுகாக்க ஒரு முள் வேலியாய் அவள் இருக்கமாட்டாள் என்றே அவன் நினைத்தான். இப்படியாய் இருந்த காலத்தில் திடீரென்று இந்த இருவரையும் அந்த ஊரில் காணவில்லை! என்ன நடந்தது அவர்களுக்கு? - என்று எல்லாரும்தான் விசாரித்தார்கள். என்றாலும் பிற்பாடு அவர்களைப் பற்றிய கதை அவர்களுக்கு ஒர் பழங் ஐதயாய் ஆகிவிட்டது. அந்த நினைவுகளிலிருந்து அவன் விடுபட்ட "உன்ர அம்மாவுக்கு என்ன நடந்தது? - என்று அவளைக் (a LIT.
"அம்மாக்கு மூளைப்பிசகு கூடி பேந்து ஒரு வாய்ச் சோறு கூட சாப்பிடாமலும் விட்டுப் போட்டா. பிறகு அப்படியேயிருந்து அன்னந் நண்ணி ஒண்டுமேயில்லாமக் கிடந்து தன்ரை உசிரையே விட்டு விட்டா.." இப்படிச் சொல்லியதோடு அவள் சிறிது நேரம் மெளனமாக

ള് நீ.பி.அருளானந்தம் 117
இருந்தாள்.
“அதுக்குப்பிறகு?” - என்று கேட்டு அவன், அவளது மெளனத்தைக் கலைத்தான்.
“எங்க நான் இனி போறதெண்டு அதுக்குப்பிறகு எனக்கு ஒண்டுமே தெரியேல்ல. எங்களுக்கும் சொந்தக்காரர் இருக்கினமெண்டுதான் முந்தி அம்மா எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தவ. எண்டாலும் அம்மா செத்தாப்பிறகு சொந்தக்காரரிண்ட வீடு வழிய போக எனக்கு விருப்பம் வரேல்ல. அம்மா இல்லாமல் றோட்டு வழிய திரிய எனக்குப் பயமாயிருந்திச்சு. அதால ஒரு வீட்டில வேலைக்காரியா வேலைக்குச் சேர்ந்தன். அங்க நடந்த கதையைச் சொல்லேக்க கொஞ்சம் மறைச்சும் சொல்லவேணும். அந்த வீட்டுக்காறன் காமவெறிபிடிச்ச தூர்த்தத்தனம் நிரம்பி என்ன இரவு வழிய வந்து படுத்த பாயில வைச்சு தொந்தரவு செய்வான். எங்கயும் நான் அப்ப போகவழி தெரியாததால பிறகு அவன்ரை சபல சித்தம் போக்க நானும் அவன்ரை விருப்பத்துக்கு 'ஓம்' பட்டுப் போனன். இது அவன்ரை மனுசிக்கும் பிறகு தெரிய வந்திச்சு. அதால அந்த வீட்டில இருந்து நான் கலைக்கப்பட்டன். அதுக்குப் பிறகு ஒழுங்கா வாழ ஒரு வழியும் தெரியாம வேற ஒரு பிழையான வாழ்க்கைக்கு நான் என்னை தயார் படுத்தினன். வாழ்க்கை என்னை கடுமையாச் சோதிச்சதால அதுக்கெல்லாம் நான் துணிஞ்சன். இப்ப நான் பழைய செல்வியில்ல பலருக்கும் தெரிஞ்ச செல்வி. நான் இப்ப சாம்பலத் திண்டு வெண்ணெய்யைப் பூசிக்கொண்டு திரியிறன். நான் எருக்கம் பூமாதிரியானவள். ரோசாப்பூ மாதிரியானவளல்ல சேகர் நான்!”
“என்ன சொல்லுறாய் நீ?” “பொம்பிளையளை விட ஆம்பிளையஸ்தான் ஒண்டுமே தெரியாத வயள் போல வேசம் போடுறவயள். நான் பச்சையாச் சொல்ல வேணுமே என்ரை வாயால நான் ஒரு வேசையெண்டு” பட்டவர்த்தன மாக அவனைக் கேட்டாள் அவள்!
அவன் விழி இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந் தான். அப்படி அவள் சொன்னாலும் அவனால் அவள் சொல்வதை யெல்லாம் நம்ப முடியவில்லை. அவள் கைபடாத ரோஜோ போன்றே அவனது கண்களுக்குத் தெரிந்தாள். பரிசுத்ததன்மை கர்ணனின் கவசம் போல் அவளைச் சுற்றி இருப்பதாக அவனுக்குத் தெரிந்தது. ஒரு பெண்ணுக்குரிய பரிபூரண லட்சணங்களும் அடங்கியதாய் காட்சிதரும் இவளா விபசாரி?
“இல்லை நான் நம்பேல்ல உன்ரை மனச்சுத்தம் முகத்தில தெரியுது கள்ளங்கபடமில்லாதவள் மாதிரித்தான் நீ எனத்துத் தெரியிறாய். நான் பூவாக நினச்சு உன்னைப் பார்க்கிறன். நீய்ேன்

Page 70
118 அலை அடங்கவில்லை
முள்ளாய் உன்னை நெக்கிறாய்?”
"நீங்கள் உங்களையே ஏமாத்துறிங்க சேகர். உங்களுக்கு தீர்த்தத்தையும் தெரியேல்ல சாக்கடையையும் தெரியேல்ல, உலகத்தை அறியாத ஒரு அப்பாவியாத்தான் நீங்க எனக்குத் தெரியிறீங்க .”
"நீ நெக்கிறதுதான் பிழை உன்ரை பழைய சீவியத்தை நான் திரும்பிப் பார்க்கேல்ல நீயும் கடந்து போன காலத்தில நடந்து போன சம்பவங்களையெல்லாம் மறந்திடு. அதுக்கெல்லாம் நான் ஒத்தாசையாயிருக்கிறன். உண்மையா என்ரை மனதைத் திறந்து சொல்லுகிறன். உன்னை நான் வாழவைக்கிறன் செல்வி. என்னை நம்பு.”
இதைக் கேட்டதும் அவள் தனக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியாது கெக்கட்டமிட்டுச் சிரித்தாள். அவளது சிரிப்பில் க்ரைந்து மறைந் திருக்கின்ற உண்மை என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. அவர்களுக்குத் தூரமாய் இருந்தவர்கள் கண்பார்வையெல்லாம் இவர்களது பக்கமாக அந்த நேரம் ஒருமித்துத் திரும்பின. கண்களா அல்லது கட்டுவிரியன்களா என்பது மாதிரியாக இருந்தது அவர்களது பார்வை. அவர்களது பார்வையிலிருந்து தப்பிவிட அவனது பார்வை மரங்களிலே உள்ள வர்ணவிளக்குகளின் பக்கமாகக் கவிந்தது.
‘'எதுக்கும் உனக்கு இந்தச் சிரிப்பு எங்கயிருந்துதான் வருகிறதோ?”
என்று சொல்லி அவன் அலுத்துக்கொண்டான். ‘வாழ்க்கையில அது ஒன்று மட்டும்தானே எனக்கு நிம்மதி. சந்தோசம் வந்தாலும் சிரிக்கிறன். கவலைவந்திட்டாலும் சிரிக்கிறன். ஏன். எதுக்குச் சிரிக்கிறனெண்டு எனக்கே தெரியேல்ல சேகர்! அப்படியா நான் போயிட்டன். எல்லாத் துன்பத்தையும் அனுபவிச்சு அனுபவிச்சு மரத்துப் போயிட்டுது மனம். உடம்புமப்பிடித்தான் மரத்துப்போச்சு. உண்ணான உங்களுக்கு மட்டும்தான் இதுகளை மனம் திறந்து நான் சொல்லுறன்.”
அஸ்தமிக்கும் ஆதவனைக் கண்ட அல்லி மலரைப்போல் அவள் முகம் வாடிவிட்டது.
"எல்லாஞ் சரி. உன்னை நான் வாழவைக்கிறனெண்டு மன உறுதி எடுத்துக்கொண்டு முன்னம் நான் அதையெல்லாம் உனக்கு மனசைத் திறந்து சொன்னன் அதைக் கேட்டிட்டு நீயேன் சிரிக்க Onlys"
"90LDTub affě asi 6oTT6göIT 6........ உண்மையிலேயே நீங்க சொன்னதுகளைக் கேட்டு மனம் சந்தோசப்பட்டுத்தான் நான் சிரிச்சன்.

இS நீ.பி.அருளானந்தம் 110
இந்த விசயத்தில ஏகப்பட்ட எதிர்ப்பு வருமெண்டு இருந்தாலும் அதுக்கெல்லாம் துணிஞ்சதாய் நீங்க நிக்கிறீங்க. அதை நெச்சு எனக்கு சந்தோசம்தான்! உங்கடை கொள்கையள் உங்களை பெரியவராக்கும். ஆனா, உங்களைப்போல என்னால வாழமுடியாது. குற்ற உணர்ச்சிகளோட உங்களோட சேர்ந்து வாழேக்க நான் மனம் கருகிப்போயிடுவன். வேண்டாம் சேகர்! இப்படியெல்லாம் செய்து உங்களை நீங்க சங்கை குலைக்க வேணாம். நான் உங்களை உண்மையிலேயே மதிக்கிறன். வாடுற பயிரைக் கண்டாக் கூட வண்டுகிற மனம் கொண்டவராய் நீங்க இருக்கிறீங்க. அப்பிடி நல்லதொரு மனம் உங்களுக்கு! அது எனக்கு நல்லாவும் விளங்குது. உங்களை மாதிரி குணம் உள்ளவயளை நான் உண்மையாவே மதிக்கிறன். என்ரை உயிர் இருக்குமட்டும் உங்களை நான் ஞாபகத்தில வைச்சிருப்பன். எண்டாலும் இப்போதைக்கு நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போயிடுங்கோ. பிளிஸ் சேகர். நான் சொல்றதைக் கேளுங்கோ. என்னை நிம்மதியா இதில இருக்க விடுங்கோ'
அப்படி அவள் சொல்வதைக் கேட்டு உடனே அவன் மனம் சோர்ந்து விட்டான். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் உணர்ச்சி வசப்படுபவன். எப்போதுமே உண்மை பேசவேண்டும் என்ற கொள்கை உடையவன். அப்படியானவனுக்கு அவள் அவ்வாறு சொல்லியது யாரோ நான்கு பேர்முன் அம்மணப்படுத்தப்பட்டது மாதிரியான கூச்சமாக வந்தது. திடீரென்று அவனது உள்ளத்தில் விழிப்பு ஏற்பட்டது. இந்தச் சொற்ப நேரத்தில் இப்படியெல்லாம் உணர்ச்சிவசப் பட்டு விட்டேனா?- என்று அவன் தன்னையே மனசுக்குள்ளாகக் கேட்டுக்கொண்டான்.
அந்த மரங்களிலிருந்தெல்லாம் சட சடவென இறகடித்துக் கீழ் இறங்கும் காக்கைகள் கூட்டம் போல் அவன் சற்று முன் எடுத்த தீர்மானம் மனத்திலிருந்து வெளிக்கிட்டு எங்கேயோ பரந்தவெளியில் பறந்ததுமாதிரிப்போனது. கூரையேறிக் கோழி பிடிக்காதவன் வானத்திலேறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம்!’ என்று யாரோ ஒருவன் அவனைப்பார்த்து கேள்வி கேட்டுவிட்டு கேலி செய்து சிரிப்பது போலவும் ஒரு பிரமை அவனது மனத்தில் எழுந்தது. உடனே அங்கிருந்து செல்வியிடம்கூட கூறி விடை பெற்றுக்கொள்ளாது அவ்விடத்தை விட்டு கிறு கிறுவென்று அவன் நடந்தான். கோயில் வளாகத்தைத் தாண்டி பஸ் தரிப்பு நிலையத்தை அவனி சென்றடைந்தபோது தட்டிவான் ஒன்று அச்சுவேலிக்குப் போகவென்று புறப்பட ஆயத்தமாயிருந்தது.
-o-HaCOOH-0-
(2009)

Page 71
அம்மாவின் இரக்கம்
2O
சின் அம்மா உடல் ஆரோக்கியம் உள்ளவர். அவர் நல்ல பொது அறிவும் படைத்தவர். அம்பாளைப் பார்த்தாற்போல தெய்வீக அழகும் உள்ளவர். இப்படியெல்லாம் சொல்ல முகத்தில் அப்படியொரு வாகு அவருக்கு எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல குணவதி என் தாயைப் போன்ற குணவதியான வேறு ஒருவரை அருமையாகத்தான் எங்கேயாவது பார்க்க முடியும்,
ஒரு சிறு எறும்புக்கும் அடைக்கலங்குருவிக்கும் கூட என் அம்மா மனம் இரங்குவார். அம்மா அரிசி புடைத்தால் காணும் அந்தச் சத்தத்திற்கு அடைக்கலாங் குருவிகள் 'ஜிவ் - வென்று பறந்து வது முற்றத்தடியில் நிறையும், அரிசிக்குறுணல்களை அம்மா

ള് நீ.பி.அருளானந்தம் 121
சுளகிலிருந்து கொழித்துப்போட அவைகளும் தத்தித்தத்தி நின்று தீனி பொறுக்கும்.
அடைக்கலங் குருவி வந்து வீட்டு முகட்டில் கூடு கட்டினால் குடும்பம் செழிக்கும் என்று ஒரு சாஸ்திரம் அம்மா சொல்லுவார். அப்படி எங்கள் வீடுகளிலே அடைக்கலம் தேடும் அந்தக் குருவிகளை இம்சை பண்ணாது இரக்கம் காட்ட வேண்டும் - என்றும் எனக்கெல்லாம் அந்த வயதில் அம்மா அறிவுரை சொல்லுவார்.
அதையெல்லாம் கேட்டுக் கொண்டு 'திருதிரு வென்று விழித்துக் கொண்டு பூனை போல ஒன்றுமே தெரியாத மாதிரி அமசடக்கமாக நான் இருப்பேன்.
சுண்டுவில் - இருக்கும் அந்த இடத்தை நோக்கி இவ்வேளை என் கவனமெல்லாம் வீச்சாகப் போய்ப்பதியும்.
கோடிப்புறத்துத் தோட்டத்து மரவள்ளித்தடியில் அது தொங்கிக் கொண்டிருப்பதை நினைத்து அப்போது என் மனசில் கலவரமும் எழும். யார் கண்ணிலும் படாது அங்கு நான் ஒழித்து வைத்திருக் கும் அந்தச் ‘சுண்டுவில் எப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கவலையும் எனக்கு வரும்,
நான் ஒரு "சுண்டுவில் "விண்ணன்' என்பது ஊரிலுள்ள பெடியன்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பள்ளிக்கூடம் விட்டபின்பு அந்த லீவு நாளிலெல்லாம் வீட்டார்களுக்குத் தெரியாமல் வேலிக்குள் மறைந்து பதுங்கித்திரிந்து, நான் சுண்டுவில்லால் குருவிகளுக்குச் சாக அடிப்பேன்.
வேலிகளில் உள்ள மரங்கள் கொடிகளிலே சின்னப்பறவை களெல்லாம் சிறகடித்துப் பறந்துவந்து நிற்கும். ஆள் அரவம் காட்டாது கொவ்வைக் கொடிகள் முடியுள்ள மரத்துக்குக் கீழே மூச்சையும் அடக்கினாற் போல நின்று கொண்டு சுண்டுவில்லின் கல்லை இழுத்து குருவிக்கு நான் அடிப்பேன். "சிளக்' - கென்ற 'றபரின் சுருளல் சத்தத்தோடு விர் - ரென்று கல் விரைவாகச் சென்று குருவியைத் தாக்கும்.
'அர்ச்சுனனின் குறிபோல் என்குறியும் என்றுமே தப்பியதென் றில்லை. அப்படிக் குறிபார்த்து அடித்து விழுத்தும் வில்லாண்மைத் திறமையைக் கண்டு என் ஊர்ப் பெடியன்களுக்கெல்லாம் வியப்புத் தான்.
எத்தனை குருவிகளை இத்தனை நாளைக்குள் நான் சாக அடித்திருக்கிறேன் என்று குருவிகள் கல்லடிபட்டு கீழே விழும்போது நான் கணக்கெடுத்து வைத்துக் கொள்வேன். அதை ஒரு சாதனையாக இரவில் படுக்கும் போதும் நான் நினைத்துப் பார்ப்பேன்.

Page 72
12 அம்மாவின் இரக்கம்
நித்திரையிலெல்லாம் குருவிக்கனவுகளே அதிகமாய் எனக்கு வரும். அந்தக் கனவுகளில் குருவிகளெல்லாம் சேர்ந்து என்னைத் துன்புறுத்துவதுமாதிரி சில சம்பவங்களும் அந்தக் காட்சியில் வரும். குருவிகளை அடிக்கப் போய் வேலிக்கரையில் நான் பதுங்கி நின்றால், அப்போது சின்னஞ்சிறு குருவிகள்தான் என்பார்வையில் அகப்படும்.
கொட்டைப் பாக்குச்சிட்டு, தேன்சிட்டு, கரிக்குருவி, கொண்ட லாத்தி, மாம்பழத்தி, குக்குறுப்பான், வெடிவால் குருவி, தச்சன் குருவி, நிறைய மஞ்சள் கழுத்துக் கொண்ட தூக்கணாங் குருவிகள் - என்று எல்லாம் வேலியிலுள்ள பூவரசு, முள்முருங்கை, கிளுவை, ஆமணக்கு, அரலி மரங்களில் வந்து வெயிலுக்கு கொஞ்சம் இருந்து இளைப்பாறும். இந்த நேரம் அவைகளை நான் சுண்டு வில்லால் அடிக்கும் போது சிலவேளை கல் இலக்குத் தப்பி எகிறிப்போய் அடுத்த வீட்டுக் கூரையின் மேலும் தவறுதலாய் விழுந்து விடும்.
“அறுதலி பெத்ததுகள். வேசைபடையள். அங்காற்றா கெற்றப்போல் வைச்சு அடிக்கிறது?. ஒடுங்கடாங்காலை. அடிக்கிறவரை உண்ணாணக் கண்ணால நான் கண்டனெண்டா அவற்ரை கையை முழுக்க முறிச்சு அடுப்புக்க நான் வைச்சிடுவன்!”
“ஒ.!! அது பெரிதான ஒரு மிரட்டல் சத்தம்தான்!
அடுத்த வீட்டு அன்னம் ஆச்சியின் ஏச்சு அண்டங் காக்கையின் கத்தல் போலத்தான் இருக்கிறது. அவருக்குத் தோதாய், உடனே வீட்டுக்குள்ளாலிருந்து வெளியே முற்றத்தடிக்கு வந்து என் அம்மாவும் Q(5(p60s);
'ஆர் எவர் இங்கின வந்து நிண்டு கொண்டு உது வழிய குருவியடிக்கிறவர். எந்தப்பெடி அந்தப் பெடியெண்டு நானும் ஒருக்காக் கண்டுபிடிச்சனெண்டா பிறகுதான் இருக்கு எல்லாம் அவருக்குக் கண்டியோ. கறும இழவுகளை ஏன்தான் உந்தப் பெடியள் செய்து கொண்டு திரியிதுகளோ எனக்கெண்டாத் தெரியேல்ல. இந்தப் பாவத்தையெல்லாம் ஏன் உதுகள் செய்யிதுகள்.?”
எனக்கு அம்மா ஏதுவதைக் கேட்க “பக்பக்” - கென்று நெஞ்சடிக் கும். உடனே கையிலுள்ள சுண்டு வில்லை சுறுக்காக பூவரசு மரப்பொந்திற்குள் போட்டுவிட்டு வேலியருகாலே நடந்து வந்து ஒன்றுமே தெரியாத நல்ல பிள்ளை மாதிரி நான், வளவின் நடை வாசற்படியில் போய் உட்கார்ந்து விடுவேன்.
எங்கள் வீட்டுக்கு வெளியே மேற்குப் பக்கமாகச் செல்லும் வீநிவழியாகச் சென்றால் காட்டுப்பக்கமாக இருக்கும் காளி என்ற

ള് பி.அருளானந்தம் 123
பெயருடைய கிழவியின் ஒலைக்குடிசை வரும். அதைத்தாண்டி வரும் வயிரவர் கோயிலைக் கடந்து சிறிது தூரம் அந்தப்பாதை வழியே நடந்தால் 'பளபள வென்று தளிர்த்த இரண்டு பெரிய ஆல மரங்களும் ஒரு கூழா மரமும் நிற்கின்ற அந்த இடம் வரும்.
மனிதச் சந்தடிகளற்ற அந்த இடத்திலேதான் பெரும் பறவைகள் கிளையாகப் பறந்து வந்து அந்த மரங்களில் தங்கும். பட்சிகள் அலை அலையாகப் பாடிக் கொண்டிருக்கும் அந்த மரங்களில், பழம்தின்னும் குருவிகளை வேட்டையாட நானும் என் நண்பர்களும் அங்கே படையெடுத்தாற் போல சில நாளிற் போவோம்.
ஆலம் பழத்தை முழுதாய் விழுங்கிவிடும் அண்டங்காக்கை முதல், கிளி, குயில், தவிட்டுப் புறா, காட்டுப் புறா, வெடிவால் குருவி இன்னும் எத்தனையோ பறவைகள் ஜாதியெல்லாம் வர்ணம், வர்ணமாக எங்களுக்குத் தெரிய கிளைகளில் இருந்து கொண்டு பழம் தின்னும். சில குருவிகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவி விளையாடிக் கொண்டிருக்கும். அவை களைப் பார்த்து நாங்கள் சுண்டு வில்லால் அடிக்கும் போது விசிறி போன்ற இறக்கையை விரித்தபடி அடிபட்ட குருவிகள் மரத்திலிருந்து கீழே பொத்தென்று நிலத்தில் விழும். இப்படியெல்லாம் பறவைகளை வருத்தி வதைத்துக்கொல்லும் தீயதொரு விளையாட்டுத் தனத் திலிருந்து எப்படி நான் பிறகு விடுபட்டேன்? - என்று இப்போது நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது.
அம்மாவின் முன்மாதிரியான செயல்களை கண்டுகொண்டதால் தான் அந்தவயதில் நான் திருந்தினேன் என்று நிச்சயமாக என்னால் இப்போது சொல்லமுடியும்.
அப்படி நான் மனம் மாறியதுக்குக் காரணமாய் அம்மா செய்த ஒரு காரியம் என்மனத்தில் ஆழப்பதிந்தது. அந்தச் சம்பவம் ஒன்றே நான்திருந்தி விடுவதற்கு பிறகு வழிகோலியது.
எங்கள் வீடு விசாலமானதொரு கல்வீடு. அந்த வீட்டுக்கு முன்னாலே இடப்பக்கமாக ஒரு மால் - எங்கள் வயல்களிலிருந்து அறுப்புக்கு அறுப்பு வரும் நெல்மூடைகளை அடுக்கி வைப்பதற் கென்றுதான் அது கட்டிவிடப்பட்டிருந்தது. கிடுகோலையால் கூரை வேய்ந்திருந்த அந்த மாலில், வெயில் காலம் போகுமட்டும் குளிர்ச்சிக்காக அவ்விடத்தில்தான் நாங்கள் போய் பகலைக் கெல்லாம் இருந்து கொண்டு நேரத்தைக் கழிப்போம். அந்தக் கீற்றுக் கொட்டகை வெயிலுக்கு எங்களுக்கு இதமாக இருக்கும். அதற்குள்ளே சில காலங்களில் அடைக்கலங்குருவிகள் வந்து கூடுகளைக் கட்டிக் கொண்டிருக்கும்.

Page 73
24 அம்மாவின் இரக்கம்
சோடி சோடியாக அவைகள் பறந்து வந்து மாலிலுள்ள முகடுகளில் கூடுகளைக் கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து - அவைகள் வளர்ந்த பிற்பாடுதான், கூட்டிக்கொண்டு பறந்து போகும்.
எப்போதும் என் அம்மாவுக்கு தன் வேலையோடு அந்தக் குருவி களிலேயும் கவனம் இருந்து வந்தது.
அதன் நலனிலே அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை நாங்கள் கண்டு கொள்ள ஒரு சந்தர்ப்பமும் எங்களுக்குக் கிடைத்தது. அந்த முறை சித்திரைக் குழப்பத்தில் இரைந்து கொட்டும் சோனா வாரி மழை பெய்தது. காற்றும் பேயென அடித்துச் சீறியது. அந்தக் காற்றைத் தாங்கமுடியாமல் மாலில் வேய்ந்திருந்த கிடுகோலைகளின் கட்டுக்களும் நெகிழ்ந்தன. கிடுகோலைகளை மேலும் கீழுமாக அடித்துச் சிதைத்து ஓட்டை போட்டதாய் ஆக்கிவிட்ட பின்புதான் காற்றும் அமர்ந்தது.
நெல் மூடைகளெல்லாம் அப்போது பெய்த மழைத்தண்ணிர் ஒழுக்குப்பட்டு நனைந்து கெட்டன. அதனால் மூடையிலுள்ள நெல் புழுங்கியவாசனை அடித்தது.
அடுத்த நாள் புதிதாக கிடுகோலைக் கட்டுக்களை வாங்கி அந்தக் கொட்டிலை கூலியாட்களைப் போட்டு வேய வேண்டும் - என்று என் தந்தை அவசரப்பட்டார்.
நெல்லெல்லாம் மழைத் தண்ணிரில் ஊறி சாக்குடன் கிடந்து முழுவதும் கெட்டுத் தொலையப் போகின்றதேயென்று அவருக்குக்
566)6).
நெல்லைக் காயப்போட்டு எடுக்க வசதியான களமும் இல்லை - படங்குகளும் ஈரம் இதோடு இன்னும் வந்து மழை பிடித்தால் மீந்து போய் உள்ள நெல்லெல்லாம் நனைந்து பயிராகிவிடுமே? - என்று மனம் துடிக்கின்ற நிலைமையில் அவர் இருந்தார். அம்மாவுக் கும் அப்பாவைப் போல் அதிலே அக்கறை உண்டுதான்! என்றாலும், அதற்கும் மேலாக அந்த மாலுக்குள் கூடுகட்டியிருக்கும் அடைக்கலங் குருவிகளிடத்தேதான் அவருக்கு மிகவும் அக்கறை எழுந்தது.
"பாவம் அந்தக் குருவியள்! இப்ப நாங்கள் கூரை மேச்சலுக் கெண்டு கிடுகைப்பிரிச்சுப் போட்டால் அதுகளின்ரை கூடுகளும் சிதைஞ்சு குஞ்சுகளும் நிலத்தில விழுந்து செத்துப்போகும். இதையெல்லாம் காபாந்து பண்ணி வருகிற மேய்ச்சல்காரர் அக்கறையா வேலை செய்ய மாட்டினம். அதால, இப்பத்தைக்கு கூரை மேய்ச்சலை கொஞ்ச நாளைக்கு நாங்க தள்ளிப் போடுவம். அந்தக் குருவியள் தங்கடை குஞ்சுகளெல்லாம் வளர கூட்டிக்

ള് நீ.பி.அருளானந்தம் 125
கொண்டு பறந்தாப் பிறகு. பேந்து உந்த மேய்ச்சல் வேலையைப் பார்ப்பம். அது மட்டும் உந்தநெல்லு மூடையளையெல்லாம் தூக்கிக் கொண்டோய் எங்கடை தாயறைக்கை அடுக்கிவிடுங் கோப்பா. எங்களுக்கென்ன, இரவில படுக்கைக்கு வெளி விறாந்தையை வடிவாக் கூட்டிப் போட்டு அதில பாய்களைப் போட்டுக் கொண்டு படுக்கலாந்தானே?”
அம்மா, அந்தக் குருவிகளுக்குப் பரிந்துகொண்டு அப்பாவிடம் இப்படிச்சொன்னார். அப்பாவுக்கு அம்மாவின் சொல்லே வேதம்.
அம்மாவின் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அவருடைய விருப்பத்தின்படியே எல்லாவற்றையும் அப்பா செய்து முடித்தார்.
இந்த நிகழ்வு என் மனசுக்குள்ளே பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்தக் குருவிக் கூட்டத்திற்காக, என் அம்மா வீட்டிலுள்ள தானிய மூடைகளைக்கூட இழப்பதற்குத் தயாராய் இருக்கின்றாரே, என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு வருடம் முழுக்க வயலில் இருந்து வரும் அந்த நெல்லைக் கொண்டுதான் அதை அரிசியாக்கி நாங்கள் சோறு சமைப்போம். அப்படியான அந்த நெல்லை விட அந்தக் குருவிகளை என் அம்மா பெரிதாக மதிக்கின்றாரே? - என்கிறதாய் நினைக்கையில், அந்தக் குருவிகளுக்கெல்லாம் நான் செய்து வந்த வதைகள் நினைவில் வந்து அந்தக் குற்ற உணர்ச்சிகள் என் நெஞ்சில் நெருஞ்சி முட்களாய் உறுத்தியது. அந்த உறுத்தலின் வேதனையோடு போய் நான் உடனே, அந்த மரப் பொந்தில் ஒளித்து வைத்திருந்த சுண்டு வில்லை வெளியில் எடுத்தேன். அதை உடனடியாக எரித்துப் பொசுக்கி விடவேண்டுமென்று எனக்கு ஆவேசம் வந்தது. அதற்காக கீழே நிலத்தில் பரவிக் கிடந்த பூவரசம் இலைச்சருகுகளைக் கூட்டிக் குவியலாக்கினேன். பிறகு காய்ந்த சுள்ளிகளையும் அதில் பொறுக்கிப் போட்டு அதற்குத் தீ வைத்தேன். இத்தனை நாள் என் கையில் கொண்டு திரிந்த அந்தக் கொலைக் கருவியை அத்தீயினில் எறிந்தேன். சுண்டு வில் ‘தீக்குள் விழ தீக்கங்குகள் செவ்வொழிக் கண்கள் காட்டி பிரகாசித்தன. 'றப்பர்’ நாற்றக்கலவையை வெளிவிட்டுக் கொண்டு அந்தச் சுண்டு வில் எரிந்து அதிலே சாம்பலானது. அந்தச் சாம்பலை என் கண்ணால் கண்ட பின்புதான் ஈரச்சாக்குமாதிரி கனத்துப் போன என் மனசு சாந்தியாகி நிம்மதியைப் பெற்றது.
(2004)
蘇で。

Page 74
துணைவி அழைக்கிறாள்
கொடைக்கானலிலுள்ள அந்த இடம் பூராகவே தைல வகைகள் விற்கும் கடைகளால் நிறைந்திருக்கின்றன. அந்த வீதியாலே நடந்து போகின்ற உல்லாசப் பிரயாணிகளை, அங்கே தைல வியாபாரம் செய்யும் எண்ணெய் வாணிபர்கள் அந்தப் பொருட்களை வாங்காமல் போவதற்கு விடுகிறார்களில்லை.
"யூகலிப்டஸ்' ஒயில். மூட்டுவலித்தைலம். வாங்க சார்.
יין
வாங்கிக்குங்க சார்.1
எல்லாத் கடைகளிலிருந்தும் தொடர்ந்து இதேமாதிரியான விற்பனைக் குரல்கள்தான் அவ்விடமிருந்து அங்கே போகின்றவர்கள்
 

ള് நீ.பி.அருளானந்தம் 127 செவிகளில் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன.
உடலுக்கு இதமான குளிர்ச்சி கொடுக்கும் சுகளில்தானமாகிய கொடைக்கானல் என்கிற இடத்திலே இந்த மருத்துவகுணமுள்ள தைல வகைகள்தான் அந்த இடத்தில் தயாரிக்கப்படும் விசேஷித்த ஒரு பொருளாய் விற்கப்படுகிறது.
அங்கே கடை விரித்திருக்கும் வியாபாரிகளது அழைப்புகளோடு அவ்விடமிருந்தெல்லாம் வீசிக்கொண்டிருக்கும் தைல வகைகளின் கார மணம் பனிக்காற்றுடன் கலந்து வந்து நாசிக்குள் புகுந்து, உடல் நரம்புகளின் உள்ளேயெல்லாம் சென்று பாய்வது போல குமரய்யாவிற்கு இருக்கிறது.
கொடைக்கானல் குளிர் சுவாத்தியத்துக்கு உடம்புக்கு அது மிகவும் இதமாக இருக்கிறது அவருக்கு.
அவரைத் தவிர அங்கே சொகுசு பஸ்ஸில் வந்திறங்கிய பிரயாணிக ளெல்லாம் மிகவும் உற்சாகத்தோடு எதிரே தெரிகின்ற மலைப்பாதை வழியே நடந்து, கண்ணாடிக் கம்பளம் போன்ற பனிமூட்டம் பசுமை அடர்ந்த மலைக்காடுகளை மறைத்து அகலும் அழகைப் பார்க்கப் போய்விட்டார்கள்.
இவர் நிற்கும் இடத்தில் நெருப்புத் தணலில் சோளப் பொத்தியை வாட்டி, உப்பு மசாலாத் தூள் தடவியும் அந்தச் சுவையான உணவு நன்றாக விற்பனை நடக்கிறது. மண்ணிலிருந்து உடன் பிடுங்கிவந்த கரட் கிழங்குகளை செவ்வனே கழுவி செவ்வந்திப்பூ நிறம் போலிருக் குமதை கத்தியால் வெட்டி பதித்து உள்ளே உப்பு மிளகாய்த் தூளிட்டும் ஒரு பக்கத்தில் வியாபாரம் அமோகமாகப் போகிறது. எல்லாவற்றிற்கும் போட்டியாக மலிவு விலையில் உப்பிட்டவித்த வேர்க்கடலை வியாபாரம் இன்னொரு பக்கம். அங்கே நிற்கிறவர்கள் எல்லாருடைய வாயும்தான் ஆடிக்கொண்டிருக்கின்றன.
குளிருக்கு நல்ல பசி இருக்குமாமே? அதனால், அந்த இடத்தில் நின்றபடியே ஓரிரு கணப்பொழுது கடந்து போவதற்குள் கையை மேலே உயர்த்தி விறைத்துச் சோம்பல் முறித்தார் குமரய்யா,
அதன் பிறகு அந்தக் கடைகளுக்கு முன்னே நின்றபடி மாறி மாறி அந்த நொறுக்குத் தீன்பண்டங்களை ஒவ்வொன்றாக வாங்கி அவர் தன் வாயினிலே போட்டுக்கொண்டார். அவற்றில் உறைப் பென்ன, உப்பென்ன எல்லாச் சுவையும் அளவோடு "ஆகா. அமிர்தம்..” என்ற மாதிரி மனத்திருப்தியாக இருந்தது அவருக்கு, கொஞ்சம் வாய் ருசி அடங்கிப்போக எதிர்க் கடையிலே நுழைந்து யாழ்ப்பாணத்துப் பாஷையான "தேத்தண்ணீர்" என்ற சொல்லை

Page 75
128 துணைவி அழைக்கிறாள்
வாயிலிருந்து வெளியே வரமுதல் உள்ளே விழுங்கிவிட்டு, “பிளாக் ம' என்று கேட்டு வாங்கிக் குடித்தார்.
மனைவி இறந்தபின் தட்டத்தனியே வீட்டில் கிடந்து மனம்வெதும்பிக் கொண்டிருந்த இவரை மகன்தான் வெளிநாட்டிலிருந்து ஒரு தொகைக் காசை அனுப்பி இப்படி ஒரு உலாப் போவதற்கு வைத்திருந்தான். "அப்பா. வீட்டில தனியாயிருந்தா பழைய நினைவெல்லாம் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து, அம்மாவை நினைச்சு நினைச்சு நீங்கள் வலுவா மனம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பியள். அப்பிடி இருக்காம உங்கட மனசைத் தேற்றிக்கொள்ள அதுக்கு நான் ஒரு வழி சொல்லுறன். அதுக்காகத்தான் இப்ப நான் உங்களுக்கு இந்தக் காசையே அனுப்பி வைக்கிறன். அங்க உங்களுக்கு விருப்பமான இடங்களையெல்லாம் பாருங்கோ’ என்று ஆலோசனை கூறினான். "இவ்வளவு வயசாகியும் ஒரு இடமும் போய் என்னால பாக்கக் கிடைக்கேலேயே’ என்ற மனக்குறை முன்பெல்லாம் அவருக்கு இருந்தது. ஆனால், மனைவி இறந்தாற் பிறகு எங்கேனும் போய்த் திரிய அவருக்கு அவ்வளவாக விருப்பமில்லை. என்றாலும் இன்றைய காலப்பொழுதில் இப்படியாகவேனும் எங்காவது போய் மனத்திலுள்ள கவலையினை நிவர்த்திப்போம் என்ற கொள்கையில் இவ்விடமாக வர அவர் வெளிக்கிட்டுவிட்டார்.
அவருடைய ஆருயிர் மனைவிதான் தவமணி! தன் மனைவியை அதிலே நின்றபடி ஒரு கணம் நினைத்ததும் மனத்திலே கவலை வந்துவிட்டது அவருக்கு.
தன்னுடன் அவள் வாழ்ந்த காலத்திலெல்லாம் பொறுமையே பூஷணம் என்றிருந்தாளே! "
என்று நினைத்ததும் இன்னமும் உள்ளுக்குள்ளே மிகவும் கவலை அதிர்ந்தது அவருக்கு. இந்த எண்ணங்களில் குமைந்துகொண்டே நில நடை - என்று பலகையில் எழுதிப்போட்டுக் கிடந்த அந்த இடத்தின் மலையோரப் பாதைவழியாக மேல் நோக்கி அவர் நடக்க ஆரம்பித்தார். உறுதியான சதுரக் கருங்கற்கள் பதித்திருந்த அந்தப் பாதையிலே நடக்கும்போது குமரய்யாவிற்கு மனம் நன்றாகத்தானி ருந்தது. அந்தப் பாதைவழியாக இளம் காதல் ஜோடிகளெல்லாம் ஒருவரையொருவர் கைகளால் இடுப்பை வளைத்து இறுக்கிப்பிடித்தபடி கிளுகிளுப்புடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது விழிமலர் கள் நண்பகல் கமலங்களாய் அகல மலர்ந்திருக்கின்றன. ஜோடி ஜோடியாகத்தான் எல்லாரும் அந்தக் குளிரின் சுகத்தை அவ்விடத் தில் அனுபவிக்க வந்தவர்களாகத் தெரிகிறார்கள்.
குமரய்யா அவர்களையெல்லாம் பார்த்து, ஏறித் தாழும் பெரு

ള് நீ.பி.அருளானந்தம் 129
மூச்சுக்களை விட்டுக் கண் கலங்கிக்கொண்டே தன் மனைவியை வெகுவாக நினைத்துக்கொண்டார். இதனால் உணர்ச்சி அவருள்ளில் பொங்கி எழுந்தது. அதை அடக்கிக்கொள்ள மலைமுகடுகளைப் பார்க்கின்றார் அவர்.
ஒரு பொழுது அவர் பார்வையில் மலையும் அதை மூடிய அடர்ந்த காடும் பளிச்சென்று கண்களுக்குத் தெரிகிறது. இன்னோர் பொழுது அவையாவுமே வெண்பனிப் புகாரில் மறைந்து வெள்ளை வெளேர் என்று மாத்திரம் காணக் கிடைக்கிறது.
அங்கே பனிமூட்டம் மலைகளை மறைப்பதைப் பார்த்து மனைவியை பறிகொடுத்தது போல் அவர் ஏங்குகிறார்.
இந்த இடத்தின் குளிருக்கேற்ற ஆடைகளை அவர் அணிந்திருக்க வில்லை. இப்போது அணிந்திருக்கும் ஆடையெல்லாம் பனிக் குளி ருக்கு உப்பியது போல அவருக்குத் தெரிகிறது. குளிர் ஊசிக் குத்தலாய் உடம்பில் தைத்தது அவருக்கு.
உடனே குமரய்யா தன் மனைவியை மீண்டும் நினைக்கிறார். உயரமும் உருட்சியும் திரட்சியுமாக எடுப்பாயிருக்கும் அவள் தனக்குப் பக்கத்தில் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நடந்து வருவதான பிரக்ஞையில் அவர் இருக்கிறார்.
அவரின் உள்ளம் சிலிர்த்து இதயம் நின்று அடித்துக்கொண்டது. உண்மையிலேயே தனக்குப் பக்கத்தில் தவமணி நடந்து வருகின்றது போல்தான் அவருக்கு ஒரு பிரமை,
அந்தப் பிரமையில் முழுவதும் மூழ்கிப்போய் தவமணியுடன் நேருக்கு நேர் கதைப்பதாகக் கற்பனை செய்துகொண்டு வார்த்தை களைக் கொட்டத் தொடங்கினார்.
“தவமணி கவனமம்மா! கவனமாப் பார்த்து வாம்மா!” என்று தனக்குத்தானே முதலில் சொல்லிக்கொண்டார். பிற்பாடு கண்ணில் தெரிகின்ற காட்சிகளையெல்லாம் ஒவ்வொன்றாக அவளுக்குக் காட்டி ஒரு குழந்தைபோல குதூகலிப்புடன் பேசத் தொடங்கிவிட்டார்.
“பூவைப் பாரன். இந்தக் குளிருக்கு ஜில்லெண்டு உசிராக் கிடக்கு. காடுகளையும் தான் பார். எல்லாம் பச்சை பச்சையா பாக்கக் கண்ணுக்கு குளிர்ச்சியாக் கிடக்கு. பார்க்கிற எல்லாத்திலை யும் உசிர்ப்பிருக்கு. காஞ்சு செத்ததாமெண்டு இந்தக் குளுமையான இடத்தில் ஒண்டுமேயில்லை. இந்தக் குளிர் சுவாத்தியத்துக்கு அப்படியா ஒண்டையுமே பாக்கத் தெரியேல்ல. இங்க கட்டாயம் வா. நாங்க ரெண்டு பேரும் இதையுந்தான் ஒருக்காப் போய்ப் பாக்க வேணும். இந்த இடந்தான் உங்கின பலபேரும் கதைக்கிற அந்த சூசைட்ஸ்பொட். காதலில தோல்வி அடைஞ்சவயனெல்லாம்

Page 76
130 துணைவி அழைக்கிறாள்
இதில விழுந்துதான் செத்திருக்கினமாம். பயங்கரமான ஒரு இடந்தானிது. பாவங்கள் அப்பிடிப்பட்ட காதல் ஜோடிகள். அது களுக்கு இந்த இடத்தில விழுந்துதான் சாகிறதுக்கு கொடுப்பினை இருந்திருக்கு. அடட நான் இங்க ஏதோ உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறன். நீ எங்கினையா அங்கயெல்லாம் போய்க்கொண்டி ருக்கிறாய். தவமணி சொல்லுறதைக் கொஞ்சம் கேள் அங்காலயா யெல்லாம் நீ போவாத. அதான் அபாயமான இடங்கள். அங்கினை யாப் போவாத ஐயையோ என்னையும் இதில சரிச்சு கீழே விழுத்திற மாதிரியிருக்குது. ஆ. ஆ.
அந்தத் திடமான கம்பீரமான மலையில் இருந்து அவருக்கு கால்கள் சறுக்கிவிட்டன. பனி மூட்டத்துக்குள் பாரமற்ற பஞ்சைப் போல் பறந்து கொண்டிருப்பதாகத்தான் இப்போது அவருக்கு உணர்வு இருக்கிறது.
அந்த உணர்வுகளில் சிலிர்ப்பில் அவரின் ரோமங்களெல்லாம் குத்தீட்டி போல் நேராக நிமிர்ந்துவிட்டன. பள்ளத்தாக்கிலே திட்டுத் திட்டாகவிருக்கும் பாறைப் படுக்கைகளின் மேல் அவரின் உடல் மோதிச் சிதறக் காத்திருக்கும் அந்த சொற்ப வேளைக்குள்ளேதன்னுடைய கால முள் நிற்கப் போகும் தறுவாயிலே.
முதன் முதலாக அவர் கனடாவில் இருக்கும் தன் ஒரேயொரு மகனை நினைக்கிறார்.
அதற்குள்ளாகவே இறந்துபோன மனைவியையும் ஒருமுறை மின்னல் வேகத்தில் நினைத்துக்கொண்டார்.
அதே போழ்தில். கீழே அதலபாதாளத்தில் மதாளித்து வளர்ந்து நிற்கும் "யூகலிப்டஸ்' மரங்களின் நீட்டமான இலைகளிலிருந்து வழியும் பணித்துளிகள் பொட்டுப் பொட்டென்று பாறைகளில் விழுந்து கொண்டிருக்கின்றன. பாறைப் படுக்கையை இரத்த அபிஷேகத்துக்கு ஆயத்தப்படுத்துகின்றதைப் போல் அந்தக் கற்பீடத்தை நனைத்துக் கொண்டிருக்கின்றன பனித்துளிகள்,
தினமுரசு வாரமலர் (GLIS, 22 - 28 - 2004)
El SS-43C5

ള് நீ.பி.அருளானந்தம்
.."
S.
விந்துவரும் பொழுதினில் கண்ணுறக்கம் கலைந்து எழுந்தார் பிற்டர். குருவிகளின் "கிசுமுசுப்பு அந்நேரமாய்க் கேட்கத் தொடங்கியி ருந்தது. விடியல் வேளையிலும் சித்திரை மாதத்துப் புழுக்கம் இருந்தது. இந்த நேரம் அவரது வீட்டுக்கு சிறிது தூரம் ஒட்டியதாய் இருக்கும் சிமியோன் வீட்டுப் பக்கமாக எழுந்த தேவாலயப் பறை ஒலி, நாற்திசையிலும் ஒலித்தது. அந்த இரைச்சல் சத்தம் கேட்டு வெருண்டு போன நாய்களெல்லாம் ஒழுங்கை வழியிலே நின்று, காலிடையே வாலொடுக்கி கமாரிட்டுக் குரைத்தன.
நாளாந்தம் மணியோசை கேட்டுப் பழகிய அவரது செவிகள் இன்றைய பறை ஒலியைக் கேட்கவும் பரிதவித்தது.

Page 77
132 வடு
“அட்டட்ட. இண்டைக்குப் பெரிய வெள்ளிக்கிழமை.!!” என்கிறதாய் நினைத்தபடி அவர் பக்தியோடு எழுந்து கொண்டார். காலைக் கடன்களை அவர் முடித்தவேளை. அருணோதயமானது. கீழ்வானம் ரோஜா நிறமானது. வீட்டு விறாந்தையிலே வந்து சிறிது நேரமாக அவர் நின்றார். முற்றத்தில் நின்ற மாமரத்தின் இலையடர்ந்த கிளைகளினின்று இன்பமான புள்ளிசை செவி மகிழவந்தது. சித்திரை மாதத்து வசந்தக் காலையின் நன்மணத் தென்றல் அவரது உடலைத் தழுவியது. அதிலொரு கணநேரம் இன்பம் துய்த்தார் அவர்.
என்றாலும் ஒரு சோகமே அன்று புவியெங்கும் பரந்து கிடப்பதாய் நினைத்து அவர் கற்பனை செய்து கொண்டார். பெரிய வெள்ளிக் கிழமையின் பரிசுத்தத்தின் மகிமையை பக்தியோடு தன்னுள் நினைத்துப் பார்த்தார்.
இயேசு சிலுவையில் மரணித்த அன்றைய நாளில் பூவுலகமே, அழுவதைப் போல துயர வெளிப்பாட்டைக் காட்டியதும், “கபாலஸ்தலத்தில் இயேசு சிலுவையில் அறையுண்டிருந்தவேளைஎன் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று மகாசத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டதும், அவ்வேளை பூமி யெங்கும் அந்தகாரம் உண்டாயிருந்தது என்றும், அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது- என்றும், அது தொடர்பான கிறிஸ்துவின் சரித்திர சம்பவங்கள் நிரையில் வந்து தொடராக அவர் நினைவலைகளில் தவழ்ந்து சென்றன. va
பரிசுத்தமான அந்தச் சம்பவங்களை அமைதியான அந்தக் காலைப்போழ்திலே ஞாபகத்தில் நிறுத்திப் பார்த்தபோது மனமும் கூடவே பரிசுத்தமானதைப்போல் மாறியது அவருக்கு.
அப்படியே அதிலே நின்று கொண்டிராமல் வாசற்படிகளிலிறங்கி கீழே முற்றத்தடிக்கு அவர் வந்தார்.
இடிந்த ஒரு பக்கத்து மதில் அங்கே வேலிப்படலைக்கு அருகே விழுந்துகிடப்பதைக்காண அவரது ஊரிலே நடந்த கடந்த காலத்துச் சம்பவங்களும் அவருக்கு ஞாபகம் வந்தது.
யுத்தத்தின் வடுவை தாங்கி நிற்கின்ற ஞாபகச் சின்னம்தான் அந்தச் சுவர்.
அதை அந்த இடம் விட்டு வேறு இடம்தனில் அகற்றாமல் "இருக்கைக்கென்று இங்கேயே இருக்கட்டும்” என்றதாய் நினைத்து இன்றுவரையிலும் அதை விட்டு வைத்திருந்தார்.
அதிலே போய் கொஞ்சநேரம் குந்தி இருந்து காலைச் சோம்பலின்

இ நீ.பி.அருளானந்தம் 133 ஆயாசம் தீர்த்தார் அவர்.
அந்த நேரம் அவருடைய உறவினர்கள் பலர் வீதி வழியாக கோயிலுக்குப் போக நடந்து கொண்டிருந்தனர்.
காலைவேளையில் சற்பிரசாத சந்திப்பு இருக்கும், மாலை வேளையிலே சிலுவை முத்தி, பிறகு ஆசந்தி. இவைகள் எல்லாமே பெரிய வெள்ளியன்று கோயிலில் நடக்கும் விசேஷித்த ஆராதனைகள். எல்லாரும் தூய வெண்நிற ஆடை அணிந்து இந்த நாளினதும் தங்களினதும் பரிசுத்த தனத்தை வெளியுலகினரின் கண்களுக்குக் காண்பித்தவாறே செல்வதை அவர் கண்ணுற்றபடி இருந்தார்.
“நேரமாகுது நானும் இனி கோயிலுக்குப் போக வெளிக்கிட்டிட வேணும்.”
என்கிறதாய் நினைத்து அவர் அந்த இருக்கையை விட்டு எழுந்தபோதுதான் பக்கத்து வீட்டு சிமியோன் அவரைத் தேடி அங்கே வந்தார்.
“நீர் வரேல்லயோவே கோயிலுக்கு?. சற்பிரசாத சந்திப்புக்கு!” “அதான் இப்ப வெளிக்கிடவா நான் இருக்கிறன்!” “வீட்டில மனுசி பிள்ளையஸ் போகேல்லயோ கோயிலுக்கு? ‘அவேயள் விடிய முந்தியே கோயிலுக்கு வெளிக்கிட்டுப் போயிற்றினம். இனித்தான் நான் வெளிக்கிட்டுப் போவேணும்!” “அது சரி. உமக்கொரு சங்கதி சொல்ல வேணும்! அதுதான் உம்மைப் பார்க்க இங்கினையா வந்தன்!” “அதென்ன அப்பிடியொரு புதினம்?” “பெரியபுதினம் தான் இது பாரும். எங்கடை ‘பரபாஸ்சு அவன்தான் எங்கட ஊருக்க ஊருப்பட்ட களவுகளெல்லாம் எடுத்த அந்தக் கள்ளப் பயல். அந்த உருட்டுப் பிரட்டுக்காரனுமெல்லே எண்டைக்குமில்லாம புதினமா இண்டைக்கெண்டு பார்த்து கோயிலுக் குப் போறான். கோயிலுக்குப் போய் அந்தப் பசாசு பிடிப்பானுக்கு என்னதான் நன்மை கிடைக்கப்போகுது. உவன். அந்தச் சத்துராதி. பாயிலகிடந்து இழுத்து இழுத்து சீரழிஞ்சுகிடந்துதான் சாவான். செத்தும் நேராய் அடி நரக பாதாளத்துக் குத்தான் போவான். அங்ககிடந்து செய்த கறுமத்துக்கெல்லாம் உத்தரிப்பான்". நெருப்புத் துண்டுகள் மாதிரி வார்த்தைகளை அவர் வீசினார். சிமியோன் ஒரு போக்கான மனிதர் வாய்சளப்பல்காரர்;
ஆனால் பீற்டரோ திராட்சைக் கனியைப்போல இனிமையான சுபாவங்கள் நிறைந்தவர். இதனால், அவருடைய மோசமான

Page 78
134 வடு வசைகளை ஒருகாதால் கேட்டு மற்றக்காதால் விட்டு விட்டு;
"உண்மையாச் சொல்றீரோ அவன் கோயிலுக்குப் போறானே?” என்று மாத்திரம் கேட்டு ஆச்சரியப்பட்டார்.
"பொய்யேன் சொல்றன் நான் அதுவும் இண்டைய நாளில பகுடிக்கும் சொல்லன். நீர் கோயிலுக்கு வாறிர்தானே அங்க வந்து பார்க்கேக்க சந்தேகம் உமக்குத் திரும்தானே?. நிக்க நிக்க நேரமாவுது பீற்றர்.
நீருடன கோயிலுக்குப் போக வெளிக்கிட்டிடுவீர்தானே?” சிமியோன் அவசரப்பட்டுக் கொண்டு நின்றார். "நீங்க கோயிலுக்குப் போக வெளிக்கிட்டு வந்து கொண்டிருந் தனியள் அப்பிடியே முன்னால நடங்கோ உங்களுக்குப் பிறகால நான் வந்து கொண்டிருப்பன்'.
இப்படி பீற்டர் சொன்னவுடன் சிமியோன் புறப்பட்டு விட்டார். அவர் போனதும் பரபாஸ்தான் பிற்டரின் நினைவுதனில் நின்று சுழன்றார்.
பரபாஸ்" என்ற பெயரை கிறிஸ்தவர்கள் தங்களுக்குப் பெயராக சூட்டிக்கொள்வதில்லை. ஏனென்றால் அவன் ஒரு கள்வன். கொலைகாரன். உலகத்து அக்கிரமங்களையெல்லாம் செய்த ஒரு சண்டாளப் பாவி அவன். “பரபாஸ் சிறைப்பட்டிருந்த காலம் "இயேசுவையும் பிடித்து வைத்திருந்தார்கள். காவல் பண்ணப் பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ அவனை அவர்களுக்காக விடுதலையாக் குவது ‘பாஸோவர்' பண்டிகை தோறும் பிலாத்துவின் வழக்கமா யிருந்தது. ஆனாலும் பரபாஸை தங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவி விட்டார்கள். இதனால் பரபாஸிற்கு விடுதலை கிடைத்தது. இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறையும்படிக்கு பிலாத்து தீர்ப்பு வழங்கினான். அப்படியாக உள்ளதே பரபாஸின் சரித்திரம். என்றாலும் அவன் கடைசி நாட்களில் திருந்திய வனாய் ஆகியதிற்கும் சரித்திரமுண்டு.
பரபாஸ்" என்கிற இவன் ஒரு எபிரேயன். அவனது வாழ்க்கையின் கடைசிக்காலத்தில் ரோமாபுரியில் ஒரு தீ வைப்புச் சம்பவத்தின்போது அவனையும் கிறிஸ்தவன் என்று கைது செய்து பின்பு அவனை சிலுவையில் அறைந்து கொன்றதாகவும் ‘பேர்லாகர் ஷெஸ்டினின் பரபாஸ் என்கிற உலகப் புகழ்பெற்ற நாவலில் எழுதப்பட்டிருக்கிறது. "நோபல் பரிசு பெற்ற அந்த நாவலை பீற்டரும் விருப்பப்பட்டு ஒருமுறைக்கு பலமுறை படித்திருந்ததால் அதில் வருகின்ற

இS நீ.பி.அருளானந்தம் 135 அப்படியான சில சம்பவங்களை அவர் ஞாபகப்படுத்திப்பார்த்தார். ‘இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த "யூதாஸ்காரி யோத்து தான் செய்த பாவத்தைநினைத்து மனம் திருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. அவன் நான்றுகொண்டு செத்தான். ஆனால் பரபாஸ் சிறிதுசிறிதாக மனம் திருந்தியவனாய் ஆகி இறுதியில் சிலுவை மரத்திலும் அதற்காக உயிர் விட்டான். அவனுக்குத் தாயார் கிடையாது. தகப்பனாரும் கிடையாது. உற்றார் உறவினர் என்று சொல்லிக்கொள்ள அவன் அறிந்த வரையில் அவனுக்கு யாரும் கிடையாது.
ஆனால், சிமியோன் பட்டப்பெயர் சூட்டி பரபாஸ்" என்றதாக அழைத்த இவனுக்கோ மனைவி இருக்கிறாள். என்றாலும் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை!
*பிள்ளை இல்லாத குறையே தனக்குப் பெருங்குறை' - என்று இவன் அச்சுவேலியிலுள்ள எல்லாரிடமும் கூறி மனவருத்தப்படு வான். என்றாலும், இவன் மனச்சஞ்சலத்திலே யாரும் இரக்கப்பட்டு பங்குகொள்வதில்லை. பேருக்கு அதிலே நின்று அவன் சொல்வதை கேட்டுவிட்டு அவன் போனபின்பு குண்டிக்குப் பிறகாலே அவனை பரிகாசம் பண்ணிக்கொள்வார்கள்.
“தன்னைப்போலவே பிறக்கிற பிள்ளைக்கும் பேந்து திருடப் பழக்கி எடுப்பான். அதுவும் பேந்து இவனை மாதிரியே களவெடுத்துக்கொண்டு எங்களுக்கு ஆக்கினை தரும்”
என்று இப்படியாக அவர்கள் நையாண்டி பண்ணிக்கொள்வது அவனுக்கும் காதில் விழத்தான் செய்தது. என்றாலும் குற்றமிழைத்துப் பழக்கமானவனுக்கு இதெல்லாம் சகஜமாகிவிட்டது. எனவே அவனும் இரத்தத்தில் ஊறிப்போய் விட்டாற்போல சூடு சுரணையற்றிருந்தான். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் யுத்தம் நடைபெற்ற வேளையிலே அச்சுவேலியிலுள்ள எல்லா வீடுகளிலும் களவுபோவதென்பது அந்த நேரங்களில் சர்வசாதாரணமான நிகழ்வாக இருந்தது. பலாலி ராணுவத் தளத்துக்கு கிட்டியுள்ள கிராமமாய் இந்த இடம் இருந்ததால் ராணுவம் முன்னேறி குடியிருப்புப் பகுதியில் நுழையும்போது சனங்கள் அமளி துமளிப்பட்டுக்கொண்டு. தட்டுமுட்டுகள், பணங்காசுகள், குஞ்சு குழந்தைகளை எங்கேயனுப்ப. என்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் அவிழ்த்துக் கொட்டிய தேசிக்காய் மாதிரி ஒவ்வொரு திசையிலும் போய் விடுவார்கள். இப்படியாக சனங்கள் ஓட்டமும் சாட்டமுமாக இருக்கும் நேரங்களிலேதான் அங்கே வீடுகளிலே உள்ள பொருட்கள் களவு போகும்.

Page 79
136 வடு
ஊருக்குள் வந்த ராணுவம் முன்னேற முடியாமல் திரும்பிப் பலாலிக்குப் போனதன் பின்புதான் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி சனங்கள் வருவார்கள். அப்படி வருகிறவர்கள்;
"ஐயோ..! எங்கட வீட்டில அதைக்காணேல்லயே. இதைக் காணேல்லயே. கோழியைக் காணேல்லயே. கோப்பையைக் காணேல்லயே என்கிறதாய்ச் சொல்லி தலையிலடித்துக்கொள்வார்கள். அதன் பிறகு அத்தனை களவுகளையும் பரபாஸ்' என்று சொல்லப் படும் அவன் தலைமீதுதான் சுமத்திவிடுவார்கள்.
என்றாலும் இதையெல்லாம் அவனிடம் போய் நேரில் கேட்க அவர்களுக்கு துணிவில்லை. நல்ல பாம்பைப் பார்த்தால் எவ்வளவு பயமோ. அவ்வளவு பயம் அவனோடு போய்க் கதைப்பதற்கு.
இதனால் சும்மா வீட்டில் இருந்து தங்கள் பாட்டுக்கு அவனை திட்டித்தீர்த்து கோபத்தை ஆற்றுவது ஒன்றேதான் இவர்களுக்கு செய்யக்கூடுமானதாயிருந்தது. h−
பீற்டரின் வீட்டிலும் அதுமாதிரி பல பொருட்கள் அந்தவேளை தனில் இப்படியாக களவு போயிருந்தன.
“சூசையப்பு போறதெல்லாம் போய்த்துலையட்டும். வீட்டில உள்ள ஆக்களுக்கு ஒண்டும் வராமல் காப்பாற்றப்பட்டாலே காணும்”
என்கிறதாய் அவர் சொல்லிக்கொள்வார். அவருக்குப் பெரிய பொக்கிஷமாயிருந்தது புத்தகங்கள்தான். எப்பொழுதும் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டு திரும்பிவரும்போது முதலில் போய் புத்தகங்களைத்தான் அவர் சரியாக இருக்கிறதா?. என்று கணக்குப் பார்ப்பார். இந்தப் புத்தகங்களை அங்கே யார்தான் திருடப்போகிறார்கள்?. வைத்தது வைத்தபடி ஒன்றுமே குறையாது அப்படியே அவைகள் இருக்கும். அதைப் பார்த்த பின்புதான் அவருக்கு நிம்மதியே வரும்.
“ஐயையோ கோயிலுக்குப்போக நேரம் போயிற்றே. இத்தறுதிக்கு திருமணித்தியாலமும் துவங்கி இருக்குமே" - என்று தன்பாட்டுக்கு சொல்லிக்கொண்டு அதிலே நின்றபடி பீற்டர் இப்போது பதறியடித்தார். உடனே வீட்டுக்குள்ளே போய் அலுமாரியைத் திறந்தார். நாலு பேரைப்போல நாமும் உடுபாவனையைப் பின்பற்றவேண்டும் என்று நினைத்து வெளுத்த வெள்ளை வேட்டியையும் சேட்டையும் எடுத்து உடுத்திக்கொண்டு அவர் கோயிலுக்குப் போனார்.
ஆராதனை தொடங்கிப்போய் கோயிலுக்குள் காலை வைத்தால் எல்லாரும் வருகின்றவரை புதினமாகப் பார்ப்பார்கள். அவர்கள் பார்வை படவும் குற்ற உணர்வு மேலிடும். இதன்பொருட்டு பீற்டரின்

இS நீ.பி.அருளானந்தம் 137 நடைவேகம் விரைவுபட்டு குதிரைவேகமானது.
ஆனால், அங்கு போனபோது அப்பொழுதுதான் திருமணித்தி யாலம் தொடங்கியிருந்தது. மன ஆறுதலுடன் சென்று திருமணித்தி யால ஆராதனையில் சிந்தை சிதறாமல் இருந்து அவர் மன்றாடி னார். ஆராதனை முடிந்த பிறகும் சிறிது நேரம் கோயிலுக் குள்ளேயே இருந்துவிட்டு ஆறுதலாக வெளியே வெளிக்கிட்டார். வழிபாடு முடிந்து விட்டதால் அந்த நேரம் கோயிலிலே சனங்களை அதிகம் அவரால் காணமுடியவில்லை. தளர் நடையில் மெது மெதுவாக நடந்து தன் வீட்டுப் படலையை அணுகினார்.
அங்கே காணிக்குள்ளாகக் கிடக்கும் அந்த இடிந்த சுவரில் இருந்து கொண்டிருப்பவனை இன்னார் என்று கண்டு கொண்டதும் அவருக்கு ஆச்சரியமாயிருந்தது.
“பரபாஸ். ஏன் இங்கவந்தான்?. என்ன சேதி எண்டொருக்கால் விசாரிப்பமே”. என்று யோசித்துக்கொண்டு
“தம்பி நீரே!. நான் ஆரெண்டுபாத்தன்!. என்ராம்பி இந்தப் பக்கம்?
“ஆங்ா. இருமிரும்” என்று அவன் எழுந்து நிற்க எத்தனித்தபோது கையமர்த்திக்காட்டிவிட்டு அவன் அருகில் வந்தார்.
“நானும் கோயிலுக்கு வந்தனான் ஐயா”. வந்து வீட்டொருக்கால் போட்டு உங்கட்டையாவாறன்’-அவன் இப்படித்தான் ஆரம்பித்தான். அவருக்கு முன் மரியாதையாக எழுந்து ஒரு புல்லிதழைப்போல் வளைந்து நின்றான்.
“நல்லம் நல்லம் கோயிலுக்குப் போறது நல்லம்தானே. ஆலயம் தொழுவது சாலவும் நன்று எண்டு தானே சொல்லி இருக்கினம்” என்று இப்படியாக சொன்னார் அவர்.
"நான் இப்ப முந்திய மாதிரியில்ல. திரிந்தீட்டன் ஐயா!. இவ்வளவு காலம் செய்ததுகளெல்லாம் பிழை எண்டதாய் எனக்குத் தெரியுது. இண்டைக்குப் பெரிய வெள்ளி இண்டேயோட இனிநான் நல்லவனாயிட வேணும். அதான் என்ரை மணவைராக்கியம். நாலுபேர் மாதிரி நானும் நல்ல விதமாய் சீவிக்கவேணும். இந்த மாதிரி உத்தரிப்பு ஒண்டும் இல்லாமலினி செவ்வையா நடக்கோனும் அதுதான் எனக்கு இப்ப ஆசை.”
“இவன் என்ன இப்புடிச் சொல்லுறானே!” என்று ஆச்சரியம்தான் பிற்டருக்கு என்றாலும் அவனது மனமாற்றத்தைக்கண்டு இவருக் கும் மகிழ்ச்சியாயிருந்தது.
“திருந்துறது நல்லம்தானே தம்பி!. நீர் திருந்திச் சிவிச்சால்

Page 80
138 வடு அது உமக்கும் நல்லம் பிறத்தியாருக்கும் நல்லம். எண்டாலும் மனிதன் பலவீனன்தானே தம்பி. அதாலதான் பாவம் செய்யிறான். ஆனாலும் கடவுளுக்குப் பயந்தவன் திரும்பவும் அந்தப் பாவத்தை செய்ய மாட்டான், திருந்தி நடப்பான்!. கடவுளின்ரை குமாரன் இந்த உலகத்தில பிறந்தது பாவிகளை இரட்சிக்கத்தான் தம்பி. நீதிமான்களை ரட்சிக்க அவர் இந்த உலத்தில பிறக்கேல்ல. அதால உம்மை மாதிரிப் பிள்ளையளில தான் கடவுள் அதிகமா நேசமாயிருப்பார்!”
இப்படியாக பீற்டர் அவன் மனத்தை திடப்படுத்தினார். “நீங்கள் உப்பிடி மதுரமாய்ச் சொல்ல எனக்கெவ்வளவு ஆறுதலாயிருக்கு உப்பிடியான இரக்கவாளியான மனுசர் ஒருவரிட் டைத்தான் நானும் மனந்திறந்து எல்லாத்தையும் சொல்லி ஆறுத லடையவேணும் என்ரை மனுசி இப்ப பிள்ளைத்தாச்சியாயிருக்காள் ஐயா!. பிள்ளை இல்லையெண்டு இவ்வளவு காலமும் மனவருத் தப்பட்டோம். இப்ப கடவுள் கண் திறந்திருக்கிறார். தெய்வ சகாயமாய் எங்களுக்கு இருந்தகுறை இப்ப விலகிப்போச்சு.
அவனுக்கு ஆனந்தமோ ஆனந்தம் அளப்பரிய ஆனந்தமாயி ருந்தது!
அதைச் சொல்லிவிட்டு அவன் முகம் மலர நின்றான். செல்வத்தில் சிறந்தது பிள்ளைச் செல்வம். அந்தச் செல்வம் தன்னிடம் இல்லையென்பது அவனுக்குப் பெருங்குறையாக இருந்திருக்கும். இனிமேல் அது தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியில் அவன் சிரிக்கிறான். தன் அயலவனின் சந்தோஷத்திலும், துக்கத்திலும் கலந்து ஒற்றுமையாகவும் அன்பாகவும் சீவிப்பவன்தானே உண்மை யில் கிறிஸ்தவன்!
பிற்டரும் அவனது சந்தோஷத்தில் கலந்துகொண்டார். அவரும் மகிழ்ச்சியில் சிரித்தார்.
“எனக்கும் இப்பிடி நீர் சொல்லக் கேக்கேக்கிள சந்தோசமாயிருக் குத் தம்பி.!!”
என்று சொல்லாலும் விளக்கினார். அப்போது அவன், தான் கொண்டுவந்த பையிலிருந்து ஒரு பித்தளைச் செம்பை வெளியில் எடுத்தான்.
புளிபோட்டு நன்றாக மினுக்கியிருந்ததால் அது பொன்னென்றும் செம்பென்றும் தெரியாத அளவுக்கு பளபளவென்றிருந்தது. கிளி உருவம் பொறித்த பழங்காலத்துச் செம்பு அது
அதைக் கண்டவுடன் பிற்டருக்குத் தெரிந்துவிட்டது. அது தன்

ള് நீ.பி.அருளானந்தம் 139 வீட்டுச் சொத்து என்று. في
ஆனாலும் பேசாதிருந்தார். இருவருக்கிடையிலும் மெளனமான சிறிது நேர இடைவெளி! நிமிடம் கரைந்து நேரம் நீண்டது. ஆனாலும், பேசமுந்திக் கொண்டவன் அவன்தான்!
"ஐயா! உங்கட வீட்டுச் செம்புதான்! இதைக் குடுத்திட்டுப் போகத் தான் நான் வந்தன்! இப்பிடி நான் அப்ப எடுத்த எல்லாச் சாமான் களையும் அவேயள் அவேயளிட்டக் குடுத்திட்டுத்தான் நான் வாறன்! நான் அப்ப உந்தச் சின்னச் சின்னக் களவுகளெடுத்துத் திரிஞ் சவன்தான். ஆனா இனி, கடவுள் சத்தியமா நான்களவே எடுக்கன்! நான் களவெடுத்துத் திரியிறதால சங்கையீனம் ஆருக்கு?. பிள்ளைக்குத் தானே?. இதால பிள்ளைக்கும் பேந்து ஒரு கள்ளப் பேர் வந்திடும். என்ரை கொடி கோத்திரமும் இப்பிடித்தானெண்டும் கதைப்பினம். இதுகளை நெச்சு நெச்சுத்தான் இப்ப எனக்குப் பெரிய கவலை கள்ளன்ரை பிள்ளையெண்டு எங்களுக்குப் பிறக்கிற பிள்ளையைச் சொல்லுறதுக்கு நான் ஆளாயிருக்கப்பிடாது.
அப்பிடி பிள்ளைக்கு ஈனம் வைக்க எனக்கு விருப்பமில்லை. அப்பிடியெல்லாம் என்ரை பிள்ளை வெப்பியாரப்பட நான் வைக்கப்பிடாது. அந்தப் பிள்ளைக்கு நான் முன் மாதிரியா நடக்க வேணும். நல்ல வழிகாட்டியாய் இருக்கவேணும்!. என்ரை பிள்ளையை நல்லவன் பெரியவனெண்டு ஊரெல்லாம் சொல்ல வேணும். அதுதான் என்ரை ஆசை ஐயா!. உங்கட செம்பை நீங்க எடுங்கோ!. நான் செய்ததுகளையும் மன்னியுங்கோ ஐயா!” அவனது கண்களில் கண்ணிர் தளும்பிவிட்டது. மன வேதனைப் படுகின்றான் அவனைத் தேற்ருவோம் என்று பீற்டர் நினைத்தார்.
“அதெல்லாத்தையும் இனி நீர் மறந்திடும்! நீர் இப்பதிருந்தீட்டீர் தானே! பிறகேன் பழையதை நினைச்சுக் கவலைப்படுறீர். இன்னுமொண்டை நான் சந்தோசமாச் சொல்லுறன். இந்தச் செம்பு இனி உமக்குத்தான். இதை நீரே இனி வைச்சிரும்”
'28uust............ !!!יי t
“சரி பறுவாயில்ல!. என்ரை ஞாபகமா நீர் இதை வைச்சுக் கொள்ளுமன். இதை அன்பா நான் உமக்குத்தாறன். சரிதானே! உதுமட்டுமில்ல!. இனி உமக்கு என்ன உதவி வேணுமோ என்னட்ட வந்து கூசாம அதுகளைக்கேளும். என்னால ஏலுமானது எல்லாத்தையும் உமக்கு நான் செய்தருவன்! அதோட இன்னு மோண்டையும் சொல்லவேணும்! உங்களுக்குப் பிள்ளை பிறந்தாப்

Page 81
140 வடு பிறகு பிள்ளைக்கு ஞானஸ் ஸ்னானம் கொடுக்கேக்க அந்தப் பிள்ளைக்கு தொட்ட தகப்பன் நான்தான்!. நான்வந்து கோயிலில உம்மடை பிள்ளைக்கு தலை தொடுவன். என்ன மாதிரி. அது உமக்கு விருப்பம்தானே?”
காற்றினால் மேகங்கலைந்து தெளிந்து நிலவும் சுடர் வான்போல இந்த அன்புரைகளால் அவன் முகம் தெளிந்தது.
"ஐயா!. நீங்கள் சொல்லுறதெல்லாம் கேக்கைய்க்க இனியில்லை யெண்டளவு சந்தோசமாயிருக்கு! கோயிலால வந்து நீங்க தண்ணி வென்னி குடிக்காமல் களைச்சுப் போயிருப்பியள். நான் இண்டைக் குப் போயிற்று பிறகொரு நாளைக்கு ஆறுதலா வந்து சந்திக்கிற னையா. சரி வரப்போறனையா. நான் வாறனையா. அப்ப நான் வர்றன். வர்றன் ஐயா..!"
அவரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அப்படியெல்லாம் சொல்லிய வண்ணமாக அந்தப் பையையும் ஒரு கையில் கொண்டு அவன் போய்க்கொண்டிருந்தான்.
அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்ற பீற்டர். அவனது உண்மையான சொந்தப் பெயரை தன் ஞாபகத்தில் கொண்டு வருவதற்காய் சிறிது நேரம் சிரமப்பட்டார்.
கிணற்றிலே பாதாளக் கொக்கி போட்டு கயிற்றறுந்து வீழ்ந்த வாளியை தேடித் துளாவுவது போல ஞாபகமின்றி தொலைந்ததாய் விடுபட்டுப்போன அவன் பெயரை திரும்பவும் நினைவில் கொண்டு வந்து சேர்க்க அவர் படாதபாடுபட்டார்.
பரபாஸ். பரபாஸ் - என்று அவனது பட்டப் பெயரைச் சொல்லிச் சொல்லி அவனது சொந்தப் பெயரை ஞாபகத்தில் மீட்டுக்கொள்ள முதலில் அவர் கடுமையாக பிரயத்தனப்பட்டார்.
அப்படியே மீண்டும் மீண்டும் தன் மூளையைப் போட்டு கசக்கிப் பிழிந்தவரையில் இறுதியில் சடுதியாக அவருக்கு அதில் வெற்றியும் கைகூடியது.
கபிரியேல்!. கபிரியேல்!. என்றவாறு அவனது சொந்தப் பெயரை இப்போது அவரது வாய் உச்சரித்தது. தானும் இந்தப் பரிசுத்த நாளிலே இருந்து திருந்தவேண்டியதாய்த்தான் உள்ளது. என்றும் அவர் இப்போது உணர்ந்தார்.
"பேசுவே இரக்கமாயிரும்” என்று கண்களை முடிக்கொண்டு சிறிது நேரம் அதிலே நின்றுகொண்டு அவர் ஜெபித்தார்.
兹否°9沅
(2004)

ള് நீ.பி.அருளானந்தம் 141
வுெனியா நகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் படைத்தளத்திற்கு முன்னால் பாரிய வெடிச்சத்தம் கேட்டதோடு சிப்பாய்கள் வெளிக் கிளம்பிவிட்டார்கள். அருகே நாங்கள் வசித்த கிராமத்துக்குள் அவர்கள் படையெடுத்து வந்தார்கள். அப்போது அவர்களது துப்பாக்கியிலிருந்து வெடிகள் பட்டாசுக்கட்டு கொளுத்தினாற்போல் சடசடவென்று வெடித்தன.
அவர்கள் வெளிக்கிளம்பிய நேரம் பொழுது புலரத்தொடங்கிற்று. வானம் உயரப்போய்விட்டமாதிரி இருந்தது. அதில் இருந்த வெள்ளிகள் மங்கிக் கொண்டு வந்தன. கிழக்கில் சிவப்பேறிற்று. அதேபோல ராணுவத்தினரது கண்களும் கொள்ளிக்கட்டை போல்
தகதக வென்றிருந்தன.

Page 82
அவர்களது படை நகர்வை துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் பறை சாற்றின. நரகமே பூமியில் வந்தது மாதிரி அப்போது அங்கிருப்பவர் கள் எல்லோருக்கும் இருந்தது. இதனால் அந்த ஊருக்குள்ளே பின்பு ஒரு சனமும் துணிச்சலுடன் இருக்கவில்லை. கல்லெறியில் கலைந்து பறந்த பறவைக் கூட்டம்போல அந்த இடங்களில் இருந்தவர்களெல்லாம் நாற்புறமும் சிதறி ஓடிவிட்டார்கள். கையில் கிடைத்த முக்கியமான பொருட்களை அவசரம் அவசரமாக தூக்கி எடுத்துக் கொண்டு தங்களுடன் குஞ்சு குருமான்களையும் கூட்டிக்கொண்டு எல்லாருமே தத்தமக்கு பாதுகாப்பு என்று கருதிய பாதையின் வழியே போய்விட்டார்கள்.
என்றாலும் அவர்களைப்போல வெளிக்கிளம்பிட முடியாது அந்த வீட்டில் எழுபது வயதைக் கடந்த அந்தக் கிழவி ஒருத்திதான் தனித்து விடப்பட்டுப் போனவளாய் இருந்தாள். பாவம். அவளுக்கு ஒழுங்காக நடக்கவும் முடியவில்லை. அவளை அவ்விடத்திலிருந்து நடத்திக் கூட்டிக்கொண்டு போக யாரும் உதவுவதற்கும் வரவில்லை. அந்த வீட்டுக்குள்ளே அவள் இருக்கின்ற இடத்தருகே ஒரு 'பிஸ்கட் பொட்டலம் மட்டும் வைக்கப்பட்டிருக்கிறது. அவள் தன்வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற ஒரேயொரு செல்வமகள் அதைமட்டும் எடுத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.
தான் ஓர் அனாதை போல அவ்விடத்திலே இருப்பதை நினைத்து கிழவிக்கு துயரம் மேலிட்டது. குமுறிவரும் அழுகையை அடக்கிக் கொள்வதற்காக வானத்தை நோக்கி தலைநிமிர்ந்து அவள் பெருமூச்சு விட்டாள். அதன் பிறகு தான் வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்களை சங்கிலித்தொடராக நினைத்துப் பார்த்தாள். நினைவுகள் கொஞ்சம் சொஞ்சமாக தெளிவான உருவம் பெற்றன.
அவளது இளமைக் காலத்திலேதான் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்தது. இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்த காலத்தி லும் யுத்தத்தைப்பற்றி அவளுக்கு எவ்வித பயமும் அப்போது ஏற்பட்டதேயில்லை. அன்று நடந்த அந்த யுத்தமெல்லாம் எங்கு நடந்ததென்று அவளால் நன்றாக அறியவும் முடியவில்லை. அந்த யுத்தம் நடந்த காலத்திலெல்லாம் அவள் வசித்த வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் சிப்பாய்கள் போவதையும் வருவதையும் அவள் பார்த்திருக்கிறாள். காப்பிரிகள் என்ற இனத்தவரோடு இன்னும் பல நாட்டுக்காரர்களை அந்த நேரங்களில் அவள் கண்டிருந்தாள். என்றாலும் இந்த அட்டைக்கறுப்பு நிறத்தையுடைய காப்பிரிகளைப் பார்த்தால்தான் அவளுக்கு அதிக பயம் ஏற்படும். அச்சமயம் வீட்டுக்குள்ளே ஓடிச் சென்று கதவைச்சாத்தி தாழ்ப்பாள் இட்டுக் கொண்டு அச்சத்தோடு அவள் இருந்துகொள்வாள். அவள்

ള് நீ.பி.அருளானந்தம் 143
பாடசாலைக்குச் சென்று கல்வி பயிலும் காலத்திலும் அந்த யுத்தம் நடந்துகொண்டு இருந்ததாக இன்றும் அவள் பலருடன் கதைத்துக் கொள்வாள். அந்த நேரம் விமானத்திலிருந்து குண்டுவீசும்போது கரிக்கோலை வாயில் வைத்து பற்களால் கடித்துக்கொண்டு அப்படியே கீழே நிலத்தில் விழுந்து படுக்கச்சொல்வார்கள் அவளைக்கல்வி கற்பித்த ஆசிரியர்கள். இன்றைக்கும் அவளால் சுலபமாக மறக்க முடியாத பிரதானமான சம்பவங்கள் இவை. அதையெல்லாம் இன்று நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்த காலத்துடன் அவள் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
அந்த நேரம் இந்த மண்ணில் கால்வைத்து பிறநாட்டு சிப்பாய்களே எங்களை எதுவிதத்திலும் இம்சைப்படுத்தவில்லை. ஆனால், இன்றைய நிலை? வேலியே பயிரை மேய்வது போல் நீதியற்ற செயல் நடக்கிறதே? - என்று அவள் சிந்தித்தாள்.
'கடவுளே இந்தச் சண்டையெல்லாம் எங்கட காலத்தோட முடியட்டும். இனிவாற சந்ததிகள் இந்தக்கொடுமையான நீசத்தனங் களையெல்லாம் ஒரு முறைகூட கண்ணாலகாணாம சீவிக்கட்டும்" என்று அவள் அதிலிருந்து கொண்டு நினைத்துக் கண்கலங்குகிறாள். அவள் இருக்கின்ற இந்த வீட்டில் ஒரேயொரு ஜன்னலைத்தவிர மற்றைய கதவுகளெல்லாம் முற்றாக பூட்டப்பட்டு இருக்கிறது. திறந்து இருந்த அந்த ஜன்னலின் ஊடே வீசிய காற்று அழுகுரல் போன்ற ஓசையுடன் அவளுக்குக் கேட்கிறது. அந்தக் காற்றின் இரைச்சலோடு "கொறகொற' வென்ற டிரக் வாகனத்தின் ஒசையும் காதுகளில் மந்தமாக அவளுக்குக்கேட்கிறது.
சதைப்பிடிப்பில்லாத தனது வளைந்துபோன கால்களை மடித்து வைத்துக்கொண்டு பயத்தோடு அந்த வீட்டுக்குள்ளே கிடக்கின்ற மேசைக்குக்கீழே அவள் குந்திக்கொண்டு இருக்கின்றாள். இப்போது என்ன நேரமிருக்கும்? என்று அறிந்து கொள்ள அவளுக்கு ஆர்வமாக இருக்கிறது. ஆனாலும், பக்கத்து சுவரில் இருக்கும் மணிக்கூட்டை சரியாய்க்கூட பார்க்க முடியாதபடி கிழவியினது பார்வை மங்கிப்போய் இருந்தது.
கிழவியின் வீட்டுக்குத் தொலைவாய் கேட்டுக்கொண்டிருந்த துவக்கு வேட்டுச் சத்தங்கள் கிட்டிய தூரத்திலிருந்து கேட்கத்தொடங்கியதும் தன்குழிவிழுந்த கண்களால் மிரண்டு மிரண்டு விழித்துக்கொண்டு மிகவும் பயப்பீதியில் நடுநடுங்கத் தொடங்கிவிட்டாள். சிறிது நேரத்தில் துவக்கு வெடியுடன் வெளிப்பட்ட மருந்து நெடியும் வந்து சுவாசத்தில் பட அவள் நிலைகுலைந்து போய்விட்டாள்.
இப்போது குய்யோ முறையோவென்று பக்கத்து வீட்டுக்குள் இருந்தும் ஒருசிலர் ஒலம் வைத்தழுகிறார்கள். அதைக்கேட்க,

Page 83
144 - கோரம்
கிழவிக்கு பெரிதாக நெஞ்சடிக்கத் தொடங்கியது. அந்தக்குடும்பத் தினரும் எங்கும் வெளிக்கிட்டுப்போகாது வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறார்கள் - என்று அவளுக்கு அப்போது விளங்கிவிட்டது. இந்தக்கிராமத்தில் எல்லோரும் வீடுகளிலே இராது வெளிக்கிட்டுப் போன பின்பும் தனியே குடும்பமாக இருக்கின்றவர்கள் இவர்கள்தான். நேற்றுத்தான் அந்த வீட்டிலிருந்து அந்தப்பிள்ளைகளின் தாய் இங்கு வந்து தன்வீட்டு நிலைபரத்தை கிழவியிடம் எடுத்துக்கூறி வெகுவாகக் கவலைப்பட்டாள்.
"ஆச்சி, கையிலயெண்டால் ஒரு சேமும் இல்லை. இங்கினைப் பக்கங்களிலயும் ஏதாவது அப்பிடியிப்பிடியெண்டு அசம்பாவிதமேதும் நடந்துதெண்டா வீட்டை விட்டுட்டு வெளிக்கிட்டுப் போய் வேற எங்கினையாச்சும் இருந்து என்னதான் செய்யேலும். இப்பிடி எங்கை யும் அகதியெண்டதாய் வெளிக்கிட்டா அப்படிப்போற இடம்வழிய அதையிதை வாங்க காசு கையில வைச்சிருக்க வேணும். இந்தச் சின்னப் பிள்ளையளையும் வைச்சுக்கொண்டு ஒருபொட்டுப்பொடி கூட இல்லாம ஓட்டாண்டி கணக்காய் இருந்து கொண்டு போற இடம்வழிய பிச்சையெடுக்கிறதைக் காட்டிலும் வீட்ட இருந்து சாகிறதுதான் மேல்”
இப்படி அவள் தன்நிலைமையைச் சொல்லக் கேட்டதும் கிழவி, மிகவும் கவலைப்பட்டாள். அதோடு இதை கிழவியின் மகளும் கேட்டு வெகுவாய் மனம் நொந்தாள். அவளும் பக்கத்து வீட்டிலிருக் கும் இந்தக் குடும்பத்துக்கு இடையிடையே அதைஇதைக் கொடுத்து வயிற்றுப்பசியாற்றி உதவி செய்துவந்தவள்தான்.
என்றாலும் இப்படியான யுத்தகாலத்தில் ஒருவர் கஷ்டத்தை இன்னொருவர் சுமக்க இயலாத நிலை. தன் குடும்பத்துத் தேவைகளையே பூர்த்தி செய்வதற்கு திண்டாடும் நிலைமையில் மற்றவர்கள் குடும்ப கஷ்டத்தையும் சேர்த்து தலையில் தூக்கி வைத்துக்கொண்டு சுமக்க யாரால்தான் இயலும்?
முதலில் கொஞ்சம் மனஉறுதியோடு அந்த வீட்டில் இருந்தவர்களை அருகில் கேட்ட துவக்கு வெடிச் சத்தங்கள் பயத்தால் அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது.
அவர்களுக்கு மூத்த பிள்ளை பெண்பிள்ளை, அவளுக்கு பத்துவயதிருக்கும். அடுத்தது ஆண்பிள்ளை. அவனுக்கு ஆறுவயதாகி |றது. மூன்றாவது தொட்டிலில் கிடக்கும் ஆறுமாதக்குழந்தை. அந்தக் குழந்தையின் அழுகுரலை மேவி கணவன் மனைவி மற்றும் அந்த இரு பிள்ளைகள் யாவரும் பலத்து அழுகிறார்கள்.
அந்தநேரம் அந்த வீட்டில் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்கிறது.

ള് நீ.பி.அருளானந்தம் 145
அதைத்தொடர்ந்து வீட்டினுள்ளே தொடர்ந்து கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் நாற்றிசைகளிலும் எதிரொலித்து வானையும் பிளந்தாற்போலிருக்கிறது.
இதற்குப் பிறகு ஒரே மயான அமைதி. அந்த அழுகுரல்களும் நிலத்தினுள் அடங்கிப்போவது மாதிரியான நிலை. வீட்டினுள் இருந்த கிழவிக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவளது எலும்புக்குருத்துக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்ற பேரதிர்ச்சியாய் இருக்கிறது. மனத்தைப்புரட்டும் துர்வாடை ஜன்னலினூடாக வருவது மாதிரி அவளுக்கு இருக்கிறது.
அந்த வேளையில் கிழவி இருக்கின்ற வீட்டுப் பின்கதவை யாரோ தட்டுகிறார்கள்.
"ஆச்சி. ஆச்சி. கதவைத் திறவுங்கோ' கிழவி தன் காதை மூக்களவிற்கு விரித்துக் கொண்டு மூச்சை அடக்கிக்கொண்டு மீண்டும் கேட்டாள். கூப்பிடும் அந்த குரலுக்குரியவள், அவர்களது மூத்த மகள்தான் என்று பின்பு அவள் புரிந்து கொண்டாள். ஒருவாறாக தன் மரமரத்த கால்களில் கைகளை ஊன்றிக்கொண்டு அவள் எழுந்து நின்றாள். துக்கம் நிறைந்த நீண்ட பெருமூச்சின் சீற்றம் அவளிடம் ஒலித்தது. அவளது முழங்கால் எலும்புகள் ஆட்டம் கண்டன. அலை அலையாக சங்கிலிக் கோர்வை யாக வந்த இருமல் அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று. ஒருவாறாக எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு தள்ளாடித்தள்ளாடி நடந்துபோய் கதவுக்குமிழில் கைவைத்து பலம் கொண்டமட்டும் அதைத் திருப்பினாள். சிறியதொரு திருப்பலுடன் தடைப்பட்டாற்போல நிறுத்திக் கொண்டது அந்தக்குமிழ், பூட்டியிருக்கிறது கதவு என்று புரிந்துகொண்டாள் கிழவி இதற்குள் அந்தச்சிறுமி கதவைத் தட்டுவது நின்றுவிட்டது.
"ஆச்சி. ஆச்சி. தண்ணி. தண்ணி." கடைசியாக அந்த அனுங்குதலோடு அடங்கியும் விட்டது அவளது குரல். கிழவிக்கு விளங்கிவிட்டது உடலில் துப்பாக்கி ரவை துளைத்த காயத்துடன் அவ்விடமாக அவள் வந்திருக்கிறாள் என்று அவள் ஊகித்துக் கொண்டாள். உடனே துயரத்தைத் தாங்காது, "ஐயோ. ஐயோ...' வென்று அதிலிருந்தபடியே கதறினாள். அந்த இடத்தை விட்டு தாண்டிப்போன ராணுவத்துக்கு கிழவியின் ஒப்பாரி கேட்க வில்லை. ஒன்றுமே அறியாத அப்பாவிகளான, அந்த ஏழைக் குடும்பத்தையே கொன்றொழித்து அதம் பண்ணிவிட்டு வெறித்தனமான மமதையில் ராணுவத்தினர் பிசாசுகளைப்போல அவ்விடங்களில் போய்க் கொண்டிருந்தார்கள்.

Page 84
146 கோரம்
கிழவியோ துக்கத்தை தாளமாட்டாது சுவரில் தனது தலையை "டங்கு டங்கு” என்று மோதிக்கொண்டாள். பிறகு முகத்திலும் மண்டையிலும் கைகளால் அடித்துக்கொண்டு அழுதாள். அவளது மயிரற்ற இமையினுள்ளிருந்து பூஞ்சையடைந்த அவள் கண்களில் கண்ணிர் சுரந்தது. விழியோரங்களிலிருந்து கன்னத்தில் வழிந்த கண்ணிர் வாய்க்குள் இறங்கிக்கரித்தது. பல்லில்லாமல் உரு அழிந்துபோன அவள் வாயிலிருந்து சளிசளியாக வந்தது. முக்கலும் முனகலுமோடு கீழே நிலத்தில் சாய்ந்து தனது வளைந்துபோன கால்களை அவள் நீட்டிக்கொள்ள அதிகம் பாடுபட்டாள். அவளது தொண்டைக்குழியில் பிராணன் துடித்துக்கொண்டிருந்தது. கிழவியின் மூச்சு நிற்குமுன்பாக அவளது வெளுத்த முகத்தில் கடைசியாக கவலை படிந்த முறுவல் தோன்றி மறைந்தது.
தாயகம் - 49 (ஜனவரி 2004)
கலை இலக்கிய சமுக விஞ்ஞான இதழ்
----E-00-EH

ള് நீ.பி.அருளானந்தம் 147
Tெமன் மருமோன் எண்டுற மரியாதையேயில்லாமல் ரெண்டு பேரும் மச்சான்மார் மாதிரி தோளில கைபோட்டுத் திரியிறிய ளென்ன?"
என்று அக்கா கோப்பியை எங்கள் இருவருக்கும் தருகிற கையோடு ஏசுவது போல் பேசுகிறா. மருமகனோ சிரிக்கிறான்.
அக்கா சொல்வதைக் கேட்க எனக்கென்றால் அது வெட்க மாத்தானிருக்கு. ஆனாலும், தோளுக்கு மிஞ்சினால் தோழன்தானே?
அதுவும் அவன் வெளிநாடு சென்று வந்திருக்கிறான் மேலைத்தேய

Page 85
48 அப்பிள் பழவாசமும் நெருஞ்சிமுட்களின் உறுத்தல்களும்
நாகரிகத்தைக் கற்றுவந்து அதையெல்லாம் இப்போது எனக்குக் கற்பிக்கும் குருவல்லவா அவன்.
"அவனைப் போய் மருமகன் என்று வெருட்டி நடப்பிப்பது இனிமேல் நடக்குமா. ၇»
அவன் இங்கு வந்த வேளை எனக்கும் வயல் விதைப்பு முடிந்துவிட்டது. அதனால் சதா அவனுடனேயே நான் ஊர் சுற்றித் திரிகிறேன்.
இந்த ஊரில் உள்ள பட்டிக்காட்டானெல்லாம் என்னையொரு பட்டணத்தான் நிலையில்வைத்தே பார்ப்பவராயிருந்தார்கள். மற்றவரிலிருந்து நான் ஒரு பிறிம்பான மனிதன் என்று காட்டக் கூடிய அனைத்துத் திறமையும் எனக்கிருந்தது. நான் போடுகிற விதம் விதமான உடுப்புகள், நடை, பேச்சு எல்லாமே வித்தியாச மாயிருக்க பார்த்துக்கொள்வதில் என் கவனிப்பு இருந்து வந்தது.
இப்போது என் அக்கா மகன் - இவன்தான் என் மருமகன் வந்திருக்கிறான். என் போக்குக்கேற்றதாய் நடந்து கொள்ளும் நல்லதொரு மருமகன் அவன்.
‘'நீ எப்போ திரும்பிக் கனடா பயணம்?” - நான் அவனைக் கேட்டுப்பார்த்தேன்.
“ரெண்டு வருசமாகும் மாமா!...” அவன் ஒரு நீண்ட காலத்தைச் சொன்னான்.
“ரெண்டு வருசமா!” எனக்கென்றால் அதைக் கேட்டவுடனே நல்ல சந்தோஷம். இப்படியே கொஞ்ச நாள் ஜாலியாக பொழுது கழியும் என்பதை நினைக்கவே தித்திப்பாக இருந்தது. இதை விட இன்னுமோர் நல்ல சேதி!
மூன்று நண்பர்களோடு கெனடாவில் இருந்து அவன் வந்திருப்ப தாகச் சொன்னான்.
நாங்கள் "கனடா" என்று சொல்வதை இவன் ‘கெனடா என்று
அமெரிக்க ஸ்டைலில் அழகாக உச்சரிக்கிறான். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
"மாம்மா!. அவங்களும் இங்க வருவாங்கள். @lഖങ്കബ്
என்னட்ட வரவும் நான் உங்களை அவங்களுக்கு இன்ருடியுஸ் பண்ணிவைக்கிறன். நல்ல பெடியங்கள் மாமா அவங்கள்!”.
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னான். அதைக் கேட்க எனக்கும் மனசுக்குக் குளிச்சியாயிருந்தது. அட்லாண்டிக்காவில் போய் இறங்கி பனிப்பிரதேசத்தைப் பாாத்த குளிர்ச்சி அது.
மருமகன் வரும்போது பல 'விஸ்கி' போத்தல்களையும் கொண்டு

ള് நீ.பி.அருளானந்தம் 149
வந்திருந்தான். உயர்ரக சிகரெட்டுகள், சேட்ஸ், டிரவுசர்ஸ், கொலோன் இத்தியாதியெல்லாம் கொண்டுவந்திருந்தானா. சேட், டிரவுசர்ஸ் ஒரு சோடி எனக்கும்தான் கொடுத்தான். ஆனால், அந்த விஸ்கியை மாத்திரம் வேறு நண்பர் ஒருவர் வீட்டுக்குக் கொண்டுபோய் அந்த வீட்டு நண்பருக்கும் ஒரு டிரிங் (DRING) கொடுத்து பேதமில்லாமல் நானும் அவனும் எதிரெதிராக கிட்டவாக இருந்து ‘டிறாம் (DRAM) கணக்கில் வார்த்து உள்ளேபோட்டுக் கொண்டிருந்தோம்.
முதல் எடுப்புக்கு ஒரு டிறாம் குடித்துவிட்டு இரண்டாவது எடுப்புக் காய் வாயும் கிளாசும் காய உட்கார்ந்திருந்த அந்த நண்பருக்கு மீண்டும் ஒரு புல் கிளாஸ் மருமகன் வார்த்து விட்டான்.
அதுக்குப்பிறகு எங்கள் பாடுதான். அதிகத்துக்கு அதிகத்துக்குப் போட்டு மருமகனுக்கு வெறிவந்து விட்டது. கழுத்திலிருந்த நரம்புகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிப்பிணைந்து வீங்கியிருந்தது அவனுக்கு. வெறியேறினால் அப்படித்தான் இருக்குமாம்.
அவன் டேஸ்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு “ஒரு பாட்டுப் பாடுங்களன் மாமா” என்று கேட்டான்.
தண்ணியடித்துக்கொண்டு பாட்டுக்கள் பாடுவதிலே எனக்கொரு தனிக் குவழி உண்டு பழங்காலத்து சினிமாவில் உள்ள சோகப் பாடல்களைப் படித்து வெறியாயிருப்பவரையெல்லாம் அழவைத்து விடுவதில் எனக்குத் திறனுமுண்டு. இதுவெல்லாம் எனக்கு கள்ளுக் கொட்டில் பழைய அனுபவம்.
அதனால் அவன் சொன்னவுடனே சோக ராகத்தை இசைக்கத் தொடங்கினேன். ‘அமிர்தவர்ஷினிக்கு மழை பெய்யுமோ இல்லையோ அதை நானறியேன். ஆனால், நான் பாடும்பாட்டுக்கு மருமகன் மூக்கைச் சிந்தி அழுவான் என்று நன்றாகவே நம்பிக்கையுற்றேன். இந்த நம்பிக்கையூடே சோகப்பாட்டு ஒன்றை மனசை உருக்கும் வண்ணமாக இழுத்துவிட்டேன். வீட்டுக்கார நண்பர் ஒரு மண் பானையை வைத்துக்கொண்டு ‘கடம் வித்துவான் மாதிரி தலையை ஆட்டிக்கொண்டு தபுக்கு தபுக்கென்று அடித்து கணிசமான அளவு பாட்டுக்கேற்றதாய் சுருதி சேர்த்தார்.
போச்சடா. அவன் அழுதே விட்டான். எனக்கு வெற்றிதான்! ஆனால், பாட்டைக் கேட்டது முதல் இதயத்தை அழுத்துகிற வதைப்புடன் அவன் துடித்தான்.
துயரம்தான் மிக வினோதமான மனிதர்களை பிறருக்கு அறிமுகப் படுத்துகிறது.
சோகத்தை தாங்கிக்கொள்ள இயலாது “இங்கேயிருந்து வெளிக்கிடுவம் மாமா!” என்றான் அவன்.

Page 86
150 அப்பிள் பழவாசமும் நெருஞ்சிமுட்களின் உறுத்தல்களும்
அக்கண ஆனந்தம் எனக்கு பறந்ததாய் விட்டது. அவனை நான் துன்புறச் செய்திட்டேனோ?. என்றுதான் திகிலுற்றேன். என் கையை இறுகத்தன் கைகளால் பிடித்துக்கொண்டு அவன் வீதியில் நடந்தான். தசையும், நரம்பும் முறுக்கேறி முயங்கி இருப்பதை அவன் என்னை பிடித்திருக்கும் கிடுக்குப் பிடியில் உணர்ந்தேன்.
நாற் சந்திக்கு வந்ததும் சந்தியில் உள்ள மதகில் என்னை அவன் உட்காரச் சொன்னான். நான் உட்காரவும் அருகே அவனும் இருந்துவிட்டான். அவன் இருக்கும் வேளையில் கண்கள் அவனுக்கு இலந்தைப்பழம் போல் சிவந்திருக்கக் கண்டேன்.
“கெனடா நல்லதொரு இடம் மாமா எனக்குத்தான் அங்க போய் வாழத்தெரியாமல் போச்சு. அகதிகளெண்டு எங்களை அங்கீகரிச்சு அவங்கள் கூடுதலாய் எங்களுக்குக் காசைத் தந்தாங்கள். ஆனா, காசைக் கண்டோடன எங்கட வீடுகளை நாங்க மறந்தம் குடி, அது இது எண்டு எங்கட நோக்கங்களே பிறகு மாறிப் போச்சு.
எல்லாத்துக்கும் கெடுதியாய், டிரக்ஸ்சுக்கும் போதை வஸ்து களுக்கும் அடிமையாயிட்டம்” சொல்லிக்கொண்டு வந்தவன் இடை நடுவில் நிறுத்தினான்.
நான் தலைகுனிந்தபடி கீழே நிலத்தைப் பார்த்துக்கொண்டு அவன் சொல்கின்றதெல்லாம் கேட்டவாறிருந்தேன். அவன் சொல்லிவந்த கதை இடையே தடைப்பட்டுவிட்டதும் உடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தேன்.
எனக்கு இயல்பாகவே கற்பனா சக்தி அதிகம். போதை வஸ்துக்கள் என்று அவன் சொல்லவும் அவன் முகத்தை நான் உற்று நோக்கினேன். அங்கே அவன் முகத்தில் "பொப்பி மலர்த் தோட்டத்தையே பார்த்த மாதிரி இப்போது எனக்கு இருந்தது. "இருக்கும் இவன் போதைவஸ்துக்கு அடிமைப்பட்டுப்போய் இருப்பான்” என்று நான் நினைத்துக் கொண்டிருக்க; அவன் தன் கதையை மேலும் தொடர்ந்தான்.
"ஆரம்பத்தில எனக்கு இங்கிலீசே தெரியேல்ல மாமா? நானும் இங்க வந்திருக்கிற என்ர அந்த மூண்டு பிரன்சும் அகதிக்காசு வர அதை எடுத்துக்கொண்டு முதல் முதலா டிஸ்கோவுக்குப் போனம். கெனடியன் கெனடியன்தான் மாமா கரெக்டா அந்தத் தியதிக்கு எங்களுக்கெல்லாம் காசனுப்பி வைச்சிடுவான்.
"பிறகு” என்று கேட்டுவிட்டு நான் வாயைப் பிளந்து கொண்டி ருக்க வேண்டியதாய் இருந்தது. vr
அவன் ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்புப் பற்ற வைத்தான் பற்களை எல்லாம் சேர்த்து இறுகப்பதித்துக்கொண்டு இதழ் விரித்து

இலி நீ.பி.அருளானந்தம் 151
புகையை உறிஞ்சி உள்ளே இழுத்தான். அவன் செய்வதெல்லாமே ஒரு புதிய பாணியாக எனக்குத் தெரிந்தது. அவன் செய்கைகள் ஒவ்வொன்றும் எனக்கு இரசிக்கும் படியாக இருந்தது.
அவன் கண்களை நன்றாக அகல விழித்து மேலே வானிலுள்ள நட்சத்திரங்களை எண்ணிப் பார்ப்பது போல் சிறிது நேரம் இருந்துவிட்டு ‘மாமா நான் ஒரு கெனடியன் கேளைத் (Girl)தான் கலியாணம் முடிச்சன். வெள்ளைக்காரி” என்றான்.
எனக்கு திக்கென்று இருந்தது “பாவி. படுபாவி. gഖഖണഖ நாளா இது இங்க வீட்டுக்கும் தெரியாதே.” என்று நினைத்துவிட்டு அந்த அதிர்ச்சியை என்னிலிருந்து வெறியேறவிடாது அடக்கி மறைத்துக்கொண்டு
“எப்படியடா இதெல்லாம் நடந்தது?’ என்று குரலைத் தாழ்த்திய வாறு கேட்டேன்.
“டிஸ்கோவுக்குப்போய்த்தான் பிடிச்சன். அங்கபோய் குடிச்சிட்டு வெறியில பாட்டுப்பாடிக்கொண்டிருந்தோமா மாமா. அவளும் கொக்கா கோலாவை வைச்சு குடிச்சுக் குடிச்சுக்கொண்டு என்னையே குறிப்பாப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எங்கள் நாலு பேருக்கிளையும் என்னைத்தான் வடிவாப்பார்த்து தனக்குக் கிட்ட வாவென்று கூப்பிட்டாள். &T........ ரோஸ்சாப்பூ இதழ் மாதிரி பார்க்க அவளிருந்தாள் மாமா”
நீரின் அதிர்விலிருந்து தண்ணிர் வளையங்கள் இடைவிடாமல் விரிகின்றதுபோல அவன் சொன்னதும். அவள் எப்படி இருப்பாள் என்று சிந்தனையை நான் விரிய விட்டேன்.
பூவெல்லாம் நான் கண்டதுதானே. இவன் சொல்லும் அந்தப் பூவையை நான் காணாது அவள் அழகை எப்படித்தான் அறிவேன். அவன் கை விரல்கள் கால்சட்டைப் பைக்குள் சென்று புகைப்படம் ஒன்றை வெளியே கொண்டுவந்தது.
“அடப்பாவி!. எல்லாம் திட்டம் போட்டுத்தான் தயாராய் வைத்துக்கொண்டிருக்கிறாயா?” - என்று நினைத்துக்கொண்டு அவன் தந்த புகைப்படத்தைப் பார்த்தேன்.
“வெள்ளைக்கார பெம்பிளையஞக்கு அழகேயில்லை. சுறா மீன் மாதிரி வெளிறிய தோற்றந்தான் அவயஞக்கு. என்று சிலரை இங்கவரேக்க மட்டும் பார்த்துப் போட்டு தப்புக் கணக்கு போட்டுவிடுறம். உதெல்லாம் எவ்வளவு மடைத்தனமென்று அவளைப் பார்த்தவுடன நான் நினைச்சன்”
அந்த அளவுக்கு கொள்ளை அழகுடன் அவள் காட்சியளித்தாள். செழுமையான மார்பகங்களோடு பாறையில் இருந்து செதுக்கப்

Page 87
152 அப்பிள் பழவாசமும் நெருஞ்சிமுட்களின் உறுத்தல்களும்
பட்டவள் போல் அவள் இருந்தாள். அச்சு அடையாளமெல்லாம்
மர்லின்மன்றோ' என்ற கவர்ச்சி நடிகை மாதிரி இருந்தது.
அவளைப் போலவே காங்கை அடிக்கும் கண்களின் வசியம் இவளுக்குமிருந்தது. இதைக்கொண்டு இவளை அழகி என்று யாரும் சொல்லத் தயங்க முடியாது என்று நான் நினைத்தேன்.
அந்த வெள்ளைக்காரிக்கும் அவனுக்குமுள்ள உள்ளிரகசியத்தை கேட்டு பிடுங்கிக்கொள்ள எனக்கு அதிகம் ஆவலாயிருந்தது.
“பிறகு. பிறகு, நடந்ததைத் சொல்லன்?” என்றேன். “மாமா வேல்ட் இன்டர் நசனல் லாங்விச் எதுவென்று உங்களுக்குத் G5sful DIT?”
".................... நான் விழித்தேன்' “சைகையால விளக்கிறது. அப்ப எனக்கு இங்கிலீஸ் தெரியாது அதால அந்த மெதேட்டைத்தான் நான் பிக்கப் பண்ணினன். அதுவே அவளுக்கு என்மேல கூடுதலா ஆசையை வளர்த்திட்டுது. பிறகு. பிறகு ரெண்டு பேருமா அடுத்தடுத்து அந்த டிஸ்கோவுக்கு வந்து சந்திச்சம். எனக்கும் பிறகு அவளால இங்கிலீஸ் கொஞ்சம் கொஞ்சமா இம்புருவாயிட்டுது”
“அதுக்குப் பிறகு” இது நான். “அதுகள் எல்லாத்துக்கும் கொள்ளையாயங்க காசு வேணுமே DTUDT.......... அதை எப்பிடி கெனடாவில தேடுறதெண்டு நான் மூளையைப் போட்டு குழப்பினன். அவள் மாதிரி ஒரு வெள்ளைக்காரியை என்னை மாதிரி ஒருவன் வைச்சிருக்கிறதெண்டா முதலாவது காசு வேணும். அடுத்தது ‘பொடிபில்ட்' பண்ணி உடம்பை ஸ்ரோங்காய் வைச்சிருக்கவேணும். ரெண்டாவது விஷயத்தைப்பற்றி எனக்குக் கவலை இருக்கேல்ல ஆனா, காசு?. அதுக்கும் அங்க சில பிரன்ஸ்சால வழி கிடைச்சுது. ஹெரோயின் பிசினஸ் ell......... முதலில சம்பளத்துக்குக் கடத்தினன். பிறகு கையில காசு சேர நானே அதை காசு கொடுத்து வாங்கி சொந்தமா அந்த பிசினஸ்சை பெரிசாச் செய்தன். வாங்கேக்க அது நல்ல சரக்கோவெண்டு பார்க்க முதலில நான்தான் ரெஸ்ட் பண்ணி பார்க்கவேணும் அதுக்காக அதை சூடாக்கி மூக்கு விரிய வாடை பிடிக்கத் தொடங்கினன். ter.......... சொர்க்கமே பூமியில வந்தது மாதிரி ஒரு சுகம் மாமா. அப்பிடி. அப்பிடியாய்த்தான் அது இருக்கும். என்னமாதிரி அந்தப் போதையிலே வருகிற இன்பசுகம் இருக்குமெண்டு உங்களுக்குச் சொல்ல எனக்குத் தெரியாமலிருக்கு” அந்த நினைப்போடு தன் அருகிலே முன்பு வைத்த சிகரெட் பெட்டியை மதகில் இருந்தவாறே அங்குமிங்கும் அவன் தேடினான். நாள் அவனது தவிப்பை புரிந்துகொண்டு, பார்த்து அதை

ള് நீ . அருளானந்தம் 153
எடுத்துக்கொடுத்தேன். அதிலொரு சிகரெட்டை எடுத்து அவன் பற்றவைத்துக்கொண்டான். சிறிது நேரம் கதைக்காமலிருந்து தன் நினைவிலே அவன் ஆழ்ந்திருந்தான்.
நான் எதிரே தெரிந்த மரத்தில் உள்ள வறண்ட கொண்டல் காய்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் காய்கள் காற்றுக்கு ஒன்றுடன் ஒன்று அடிபட்டு சப்தம் எழுப்பின. ஏனோ என்மனம் சலனப்பட்டது. ஆள்காட்டி குருவிகள் எழுந்து தூரத்திலிருந்து கத்துவது கேட்டது. அக்காவின் சாகரக் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்து கீழே விழுந்து சிதறி என் காலில் பட்டதுபோல் நினைப்பு வந்தது. உடனே திடுக்கிட்டு விட்டேன்.
என்னைத் திரும்பிப் பார்த்து “என்னமாமா. ?” - என்று கேட்டு விட்டு “கேளுங்களன்மாமா..” என்று அவன் பிறகும் உள்ள மிச்ச சொச்சங்களை சொல்ல ஆரம்பித்தான்.
“எங்களுக்குத்தான் கட்டுப்பாடுகள் ஒழுக்கமெல்லாமிருக்கு ஆனா, வெள்ளைக்காரங்களிட்ட அது இல்லையெண்டு நாங்கள் நினைக்கிறது isopLDITLDIT......... நான் அவளை கலியாணம் முடிக்க நினைச்சன் ஆனா, அவள் தன்ர பேரன்சிட்டயும், பிறதரிட்டயும் கேட்டு சம்மதப் பட்டாப் பிறகுதான் சரிவரும், எண்டதாய் சொல்லிட்டா.
இப்ப என்னட்ட சரியான காசிருக்கு. ஒண்டுக்கு ரெண்டெண்டு காரும் இருக்கு. ஒருநாள் வீட்டுக்கு டின்னருக்கு வாவெண்டு கூப்பிட்டாள். நான் காரை எடுத்துக்கொண்டு அவளின்ர வீட்ட போனன். என்னையவங்கள் பாத்திட்டு. இவன் அகதியாய் வந்தவன். இப்ப கையில கழுத்திலயெல்லாம் பெரிய நாய்ச் சங்கிலி மொத்தத்தில கோல்டை அடுக்கியிருக்கிறான். சிமெக்கிலின் செய்யிறான் போல. ஹெரோயின் பிஸ்னஸ்சாத்தான் இருக்க வேணும்.
வேண்டாம் விட்டிடு இவனை' - எண்டிருக்கிறாங்கள். ‘‘ஏணி அவளுக்கு நீ செய்த யாவாரம் முதலில தெரியேல்லயா..?” - நான் ஒரு குறுக்குக் கேள்வியை அவனிடம் கேட்கவேண்டியிருந்தது.
"S6ð606o LDTIDT............. இவ்வளவுக்கும் அவளுக்கு நான் அதைப்பற்றி செல்லேல்ல. ஆனா, அவள் நல்லவள் மாமா!. என்னையே கலியாணம் முடிக்கவேணுமெண்டு அவங்களிட்ட பிடிவாதம் பிடிச்சாள். அதால, அவங்களும் பிறகு ஒமெண்டிட்டாங் கள். நானும் இங்க வீட்டுக்குத் தெரியாமல் அவளை கலியாணம் முடிச்சன். அதுக்குப்பிறகு ஒரு வடிவான ஆம்பிளைப் பிள்ளையும் கிடைச்சுது. ஆனா, நான் ஹெரோயினுக்கு அடிமையாயிட்டன். அதில்லாமல் என்னால ஒண்டுமே செய்யேலாத நிலை. பிறகு,

Page 88
154 அப்பிள் பழவாசமும் நெருஞ்சிமுட்களின் உறுத்தல்களும் பிசினஸ்சிலயும் என்ரை சாமான்களும் சில இடங்களில அடிபட்டுப் போயிட்டுது. காசுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக் கஷ்டங்கள் வந்திச்சு. எப்பிடியாச் சம்பாரிச்சனோ அப்படியே வந்ததெல்லாம் வந்த வழியாவே போயிட்டுது. என்னோட இருக்கப் பிடியாம அவளும் பிள்ளையைக் கொண்டு வெளிக்கிட்டு தனியவிடு பாத்து போயிருந்திட்டாள். அதுக்குப் பிறகு அவளுக்கும் எனக்கும் நல்ல ஒரு உறவும் இருக்கேல்ல. பிள்ளையை மட்டும் வந்து நீங்கள் எப்பவும் பார்க்கலாமெண்டாள். என்னிலதான் எல்லாப் பிழையளும் அவளில பிழையில்ல மாமா.”
இப்படி துக்கம் வந்து அதிகத்துக்கு, அதிகத்துக்கு வளர்ந்திட்டா அழுகை கிடையாதுதான். அவன் அதிகம் சலிக்காமல்தான் இவ்வளவையும் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தான். என்றாலும் அவனுக்கு ஏற்பட்ட துன்பம், கண்ணிர், வலி, காயம், மனப்புண் முதலியவைகளை என்னாலும் ஓரளவு உணர்ந்துகொள்ள முடிந்தது. அவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. என் மருமகனல்லவா அவன். ஆறுதலுக்காக கொஞ்சம் அவனின் முதுகை தடவிவிட்டேன். இப்போது சிறிது தேறியவனாய் அவன் மாறியிருந்தான் என்றாலும் அவன் தன் பிள்ளையை பற்றி சொல்லும்போது மிகவும் குற்ற உணர்வோடு துடிதுடிப்பதை நான் நன்றாக அவதானித்தேன்.
“அந்தப் பிள்ளையின்ரைபாடு. எங்கயிருக்கு அந்தப் பிள்ளை” என்று பிள்ளையைக் குறித்து விவரம் கேட்டேன்.
"எல்லாம் பெயிலியர். வாழ்க்கையே எனக்குப் பெயிலியர். அப்படியென்று நெடுமூச்செறிந்தான். அவனது குரலின் ஆழமும், அழகும், செழுமையும் போகப்போக மறைந்துகொண்டு வருகிறது மாதிரி இருந்தது. கிணற்றுக்குள் இருந்து கூப்பிடுபவன் போல
99
'DITLDIT................. * என்றான்.
என்னவென்று கேட்டேன். "என்ரைபிள்ளை. என்ரபிள்ளை. 99.
இப்போதுதான் அவன் கண்களில் கண்ணிர் புலுபுலுத்தது, முட்புதருக்குள் மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டிபோல் கத்தினான். "புதிய பறவைப்படத்தில் சிவாஜிகணேசன் மூக்கை சீறுவதுபோல் சப்தமாக சிறிவிட்டு
"ஒருநாள் நான் நல்லவெறி. காரைக்கொண்டு
டப்போனன் மாமா” என்றான்
"ஏன் போனாய்? அண்டைக்குப் போய் சண்டை பிடிச்சியே? - ST COL,
"aðan No!. O

ള് நீ.பி.அருளானந்தம் 155
*பின்னென்ன செய்தாய்?” “பிள்ளையைத்தா? காரிலகொண்டுபோயிற்று கொண்டந்து விடுறன் எண்டன்’
“உங்களுக்கு இப்ப நல்லவெறி பிறகு ஒருநாள் ஆறுதலா வந்து கூட்டிக்கொண்டு போங்களன்?” என்றாள்.
நான் அவளிண்ட சொல்லைக் கேட்கேல்ல விடென்ரை பிள்ளையையெண்டு நாண்டு கொண்டு நிண்டன்.
அதுக்குப் பிறகு. என்னதான் செய்யிறதெண்டு என்ரை காருக்க கொண்டுவந்து பிள்ளையை விட்டாள்.
“பிள்ளைக்கு பெல்ட்டைப் போட்டுவிடுங்கோ’ எண்டாள். 'பிள்ளை பிரியாயிருந்து விளையாடட்டுமெண்டு சொல்லி உடனேயே நான் காரை அதால எடுத்திட்டன்.
நான் அடிச்சிருந்தது ஹெரோயின். பயங்கர ஸ்பீட்டா காரை விட்டன். இல்லை பிளேன் மாதிரி பறந்தன். பிள்ளை சிரிச்சுச்
சிரிச்சு புதினம் பார்த்துக்கொண்டிருந்தான். அதெல்லாம் கனநேரமாயில்ல. கைய்ஸ்பீட். நோ. இப்ப எனக்கு கொன்றோல் இல்லை. கார். அது பிரண்டிட்டிது.
தலைகீழாப்பிரண்டிட்டுது. பிரண்டு, பிரண்டு. பிள்ளையும் அதுக்கதான். உருண்டு பிரண்டு. அப்பிடித்தானிருக்கும் எனக்கொன்றுமே பேந்து நினைவில்ல.
குழந்தை. குழந்தை. ஒன்தஸ்பொட். நான் கொஸ்பிட்டலில முழிச்சன்.
இப்போது எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி அவன் இருந்துகொண்டான்.
அவன் அழுகின்றானா. என்ன செய்கிறான்? என்பதில் என்கவனம் செல்லவில்லை.
அந்தக் குழந்தை இறந்ததுதான் எனக்குக் கவலையாக இருந்தது. அந்தக் குழந்தை கைகால் உடைந்து, கபாலம் நொருங்கி, உடம்பெல்லாம் கிழிந்து சிதிலமாகிக் கிடக்கும் காட்சியே என்மனக் கண் கண்டுகொண்டிருந்தது.
இனிமேல் என்னத்தைக் கேட்பது என்று சோம்பிப்போய் நான் சும்மாவிருந்தேன். எல்லா அழிவிற்கும் சீர் குலைவிற்கும் காரணம் அந்தப் போதை வஸ்துக்கள். என்று எனக்கு அந்த போதை வஸ்தின் மேல் ஆத்திரம் வந்தது.
அதற்குப் பிறகு அளவு கணக்கில்லாமல் தான் போதை வஸ்துக்களை பாவித்துக்கொண்டதாக அவன் சொன்னான்.
ஒருநாள் நூறு கிராம் ஹெரோயினோடு தான் பொலிசில்

Page 89
156 அப்பிள் பழுவாசமும் நெருஞ்சிமுட்களின் உறுத்தல்களும்
மாட்டிக்கொண்டதாகவும், உள்ள சொத்து எல்லாம் விற்று செல வழித்து வழக்காடியும் வழக்குத் தள்ளுப்படாது கோட்டில் தனக்கு சிறைக்குத் தீர்ப்பு வழங்கியதால் எட்டுவருடங்கள் சிறைவாசமிருந்து வாடியதாகவும், அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் நன்நடத்தையில் (Good Conduct) அவன் சீவிக்க வேண்டுமென்று தீர்ப்பு இருந்ததாகவும் அவன் சொன்னான்.
இந்தக் காலத்தில் ஒருநாளுக்கு ஒரு ரின் பியர் - மிஞ்சினால் இரண்டு ரின் பியர் மட்டுமே தனக்கு குடிக்கலாமென்று கட்டுப்பாடு இருந்ததாகவும்
எந்த பாருக்கோ (Bar) டிஸ்கோவுக்கோ செல்லமுடியாது என்று பொலிஸ் தனக்கு சட்டம் போட்டுவிட்டதாகவும் விசனத்துடன் அவன் சொல்லி அழுதான்.
இனிமேல் தான் கெனடாவில் வாழ முடியாது என்று கண்டு "சிறீலங்காவிற்கு வந்தேன் என்று தன்கதையை சொல்லி முடித் தான.
எல்லாம் பார்த்து, கேட்டு, சுவாசித்து, ருசித்து, உணர்ந்து, கழித்து, இன்பமாய் வாழ்ந்த கட்டை இன்று இந்த மதகில் இருந்து கொண்டிருக்கிறானே என்று எனக்குப் பரிதாபமாயிருந்தது.
வெளிநாடு என்று நினைக்கவே எனக்கொரு பயமாயிருந்தது. "மருமோன் காலேல நான் வாறன்ரா' - என்று சொல்லிவிட்டு என்விட்டுக்கு நான் போனேன். வந்துபடுத்து நித்திரை கொண்டு காலையிலேயே நான் எழுந்து விட்டேன்.
வழமையாகக் குடிக்கின்ற கோப்பியைக் கூட அன்று காலையில் நான் குடிக்கவில்லை. இரவு சாப்பிடாமல் வெறுவயிற்றுடன் படுத்துவிட்டதால் வயிறு புகைச்சலாகவும் காய்ந்து ஒட்டியும் இருந்தது. குசினிக்குப்போனேன். பழஞ்சோற்றுக் கஞ்சி பானையில் இருந்தது. சோற்றைப் பிழிந்து தனியே எடுத்துவிட்டு கஞ்சியை மட்டும் கிண்ணம் நிரம்பவிட்டு மடக்கு மடக்கென்று வயிறு முட்டக்குடித்து வயிற்றை குளிரச் செய்தேன்.
"இனிமேல் இப்படி ஒரு சோலியே வானாலிலும் வேண்டாம்" - என்று எண்ணித் தீர்மானித்தபடி என் தொழிலை நினைத்து தலை வனங்கிக்கொண்டு ஒழுங்காக நேரே என் வயலைப் போய் பார்க்கக்
TTECEIT.
ஒலை - 27 கொழும்புத் தமிழ்ச் சங்கம் மாதாந்த மடல் (பூண் - 2004)
-HoboCo-H-

இ நீ.பி.அருளானந்தம் 157
LTக்டர் ரஞ்சித்குமாருக்கு அந்த உண்மையை அவளிடம் சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. அதைத் தெரியாத மாதிரி மறைத்துப் பொய் சொல்வதற்கும் இயலாத அளவுக்கு அவர் இருந்தார்.
அவர் ஒரு மகப்பேற்று வைத்தியர். விஞ்ஞான கருவி அதை வெளிப்படையாகவே தெரிவிக்கும்போது அவர் அதை அவளிடம் தெரிவிக்காது மறைத்துவிட முடியுமா?

Page 90
158 காத்தல்
அந்தக் கர்ப்பிணித் தாயை 'ஸ்கான்’ (SCAN) பண்ணிப் பார்த்த போது நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் அது பெண் குழந்தைதான் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் அவர் தெரிந்து கொண்டுவிட்டார். தொப்புள் கொடி மறைப்பது போலிருந்தது கொஞ்சம் சந்தேகத்தில் ஆழ்த்தினாலும் இத்தனை நாள் உள்ள அனுபவ அறிவைக் கொண்டு ஆழ்ந்து சிந்தித்தபோது - அது பெண் குழந்தைதான் - என்று அவருக்கு அச்சொட்டாகத் தெரியவந்தது.
அவளோ அவரைப் பரிதாபமாகவும் ஏக்கத்துடனும் பார்க்கிறாள். “டொக்டர் என்ன குழந்தையெண்டு சொல்லுங்கோ?” அவருக்கு அவள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வ தென்றே தெரியவில்லை!. என்றாலும்,
“குழந்தை நல்ல ஆரோக்கியமாயிருக்கு” - என்று மாத்திரம் அவர் சொல்கிறார்.
அது அவளுக்கும் மகிழ்ச்சிதான்! என்றாலும் திரும்பவும் விடாது “என்ன குழந்தை டாக்டர் ஆனா?. இல்லாட்டி..?” அதற்கு மேலும் கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்க முடியாத மனவேதனையின் தாக்கம் பந்தாய் சுருண்டு தொண்டைக்குள் வந்து அடைக்க, அவள் முகம், அஸ்தமிக்கும் ஆதவனைக் கண்ட அல்லி மலரைப் போல குவிந்துவிட்டது.
“இல்லாட்டி' - என்ற அந்த வார்த்தையோடு சிறிது நேர நிசப்தத்தின் பின் “இதுவும் பெண்குழந்தையாயிருக்குமோ?” - என்று அழுவாரைப் போல அவரைக் கேட்கிறாள்.
ரஞ்சித்குமாருக்கு அவளது நிலைமையை யோசித்துப் பார்க்கவும் மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது. இந்தத் தனியார் மகப்பேற்று நிலையத்தில் அவளுக்கு கடந்த வருடங்களில் இரண்டு பிள்ளைகள் பிறந்திருந்தன. இவரே அவளுடைய மகப்பேறுக்குச் சிகிச்சையளித்த டாக்டராகவிருந்தார். அப்படியாக அவர்களது குடும்ப டாக்டராகவும் இருந்த பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைக்குப் பிறகு மூன்றாவதாய் இப்போது பிறக்கப்போவதும் பெண் குழந்தைதான் என்று சொல்வதற்கு அவருக்கு எப்படித்தான் மனம் வரும்.
அவரது வைத்திய சேவைக்கால அநுபவத்தில் பிறக்கப்போவது ஆண் பிள்ளையா டொக்டர்? - என்று ஆர்வத்துடன் கேட்கின்ற தாய் தந்தையர்களைத் தானே இவ்வளவு காலமும் அவர் கண்டுவந்திருக்கிறார். அடுத்தடுத்து ஆண் குழந்தைகளை மாத்திரம் பெற்றுக்கொண்ட தாய்மார்கள் பிறகு பெண் குழந்தை வேண்டுமென் கிறார்கள். இவளுக்கு ஏற்கனவே பிறந்த இரண்டு பிள்ளைகளுமே பெண் குழந்தைகள். அவளின் ஆசையில் ஒரு ஆண் மகவுக்காக

ള് நீ.பி.அருளானந்தம் 159
ஆவலுடன் காத்துக்கிடப்பது நியாயம்தானே? அதைவிட பாவம் அவளுக்கு வீட்டில் என்ன தொந்தரவோ? கணவரிடமிருந்தும் அவரைச் சார்ந்த சொந்த பந்தத்தினரிடமிருந்தும் - வெறுப்புக்களும் கடுப்புகளும் கூடியிருந்தாலும் இருக்கலாமல்லவா?
இவள் இங்கு இன்று வருவதற்கு முன்னால், காலையில் ஒரு கர்ப்பிணிப் பெண் "ஸ்கான்' பண்ணிப் பார்த்து ஆணா, பெண்ணா - பிறக்கப்போவது என்ன குழந்தை? - என்று தெரிந்துகொள்ளும் முகமாக இவரிடம் வந்திருந்தாள். கருத்தரித்து இன்றுடன் ஐந்து மாதமாகிறது அவளுக்கு. ‘ஸ்கான்' சோதனையில் அவளை உட்படுத்தியபோது ஆண் குழந்தையென்று நிச்சயமாக அவளுக்குத் தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு இதுவே முதற் பேறு. அவளது தாயும் மாமியாரும் கூடவே அவளுடன் துணைக்கு வந்திருந்தனர். முதற்பிள்ளை அதுவும் ஆண் குழந்தை என்பதால் எதுவித தயக்க மின்றி ரஞ்சித்குமார் கர்ப்பிணித்தாயுடன் கூடவே வந்த அந்த இருவரையும் கூப்பிட்டு;
“உங்கள் காலத்தில் இதுவெல்லாம் இருந்ததா? இப்படியெல்லாம் வயிற்றிலிருக்கும் பிள்ளையைப் பார்க்க உங்களுக்குக் கிடைத்திருக் குமா?. பாருங்கள் உங்கள் பேரனை எப்படியெல்லாம் கையைக் காலை போட்டடிக்கிறான் - துள்ளுகிறானென்று!”
என்று சொல்லி ஸ்கான்' பண்ணும்போது திரையில் விழுந்ததை அவர்களுக்குக் காட்டினார்.
அதைப் பார்த்துவிட்டு அந்தப் பாட்டிமார்கள் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி! - நன்றாக பேரனை அதிலே பார்த்து மகிழ்ச்சியில் கெக்கட்டமிட்டுச் சிரித்துக்கொண்டார்கள். 'ஸ்கான்' பண்ண்ணி முடிந்ததும் அவளது தாயும் மாமியும் சேர்ந்து பாசத்தோடு அவளைக் கட்டியணைத்துக்கொண்டு வீட்டுக்குக் கூட்டிப்போனார்கள்.
ஆனால், இவளுக்கோ இந்த முறை உதவிக்கென்று இங்கு யாருமே அவளுடன் கூட வரவில்லை. இதனால் அவளைப் பார்க்க அவருக்கு மிகவும் பரிதாபமாகவும் இரக்கமாகவும் இருந்தது.
பெண் குழந்தைதான் இம்முறையும் என்று சொல்லிவிட்டால் அவள் இப்போ மனங்கலங்கி கவலையடைவாள். அது பின்பு பிள்ளைக்கும் தாய்க்கும் பாதிப்பை உண்டாக்கும் என்று நினைத்து,
*இதற்கு என்ன வழி?. என்று ரஞ்சித்குமார் யோசித்தார். தாயின தும் பிள்ளையினதும் மற்றும் அவளது குடும்பச் சூழலிலும் நலம் காக்க சமயோசிதமாக அவர் தனது மனதை உறுதிப்படுத்திக் ே இதற்கு ஒரு விளக்கத்தை அவளுக்குக் கூற வேண்டியதாயி (555.

Page 91
180 காத்தல்
"குழந்தை ஆணா, இல்லை பெண்ணா? - என்று உறுதியாகக் கூற முடியாது ஐமிச்சாமாயிருக்கிறது. தொப்புள் கொடி மறைப்பதால் நிச்சயமாக இப்போது ஒன்றும் கூறுவதற்கு முடியாதிருக்கிறது.”
இப்படிச் சொல்லுவது அவளுக்கு - அவளைச் சார்ந்த சொந்தத்தி னரிடமிருந்து வெறுப்பை அதிகம் ஏற்படுத்தாது என்றே அவர் நினைத்தார். ஒரு டொக்டர் என்ற மட்டில் கர்ப்பிணித் தாய்க்கு சுகப் பிரசவம் ஆகும் வரைக்கும் - அறிவுரையும் ஆறுதலும் கூறி உதவ வேண்டும் என்பதையே தன் கடமையாக அவர் உணர்ந்தார். இந்த ஒழுங்கையெல்லாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய கடமை உணர்வில் ஒரு பொய்யை அவளுக்குக் கூற வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலையில் டொக்டர் ரஞ்சித்குமாரின் நிலை இருந்தது.
தினமுரசு வாரமலர் (Gio O9 - 15, 2004)


Page 92

|
* 17:7 - ܘܢܫܕܪܝܘܬܐ"
ਅ '"' , ')
"I ".
29 ܐܢܓܠܣܛܢܠ

Page 93
|エEN 955、1055-00-4 556
-ܨܚ2 ܓܠܠ .
ஆசிரியரின் நுால்கள் * மாற்றங்களை
மறுப்பதற்கில்லை சிறுகதைத் தொகு
சிறுகதைத் தொகுதி
சிறுகதைத் தொகுதி
 
 

வறும் பொழுது போக்கிற்கான தைகளை நீபி.அருளானந்தம் ழதுவதில்லை. வாழ்க்கை நார்த்தங்களை படிக்கிறவர் மனசில் தியும்படி சுட்டிக்காட்டி, அவருள் தனை ஒளியைத் தூண்டும் விதத்தில் வர் கதைகள் எழுதுகிறார். அதேசமயம் லத்தினால் ஏற்படுகிற விதமாற்றங்களையும், மறைந்துபோன புல்லது மறைந்து கொண்டிருக்கிற) புகளையும், புதிய போக்குகளையும், தைவுகளையும் சீரழிவுகளையும்கூட சகர்களின் கவனத்துக்குக் கொண்டு ருவதற்காகவும் அவர் கதைகள் டைக்கிறார்.
ந்த விதமான அகண்ட நோக்குடனும், ழ்ந்த கூரிய பார்வையுடனும், னிதர்களின் இயல்புகளையும் வாழ்க்கை தார்த்தங்களையும் சீர்தூக்கி, சிந்தனை ரியும் கற்பனை வர்ணமும் ஏற்றி, நல்ல தைகளை உருவாக்கியிருக்கிறார் பி.அருளானந்தம்
மைக்குணம்’ எனும் இந்நூல் வருடைய மூன்றாவது சிறுகதைத் தாகுப்பு என்று எண்ணுகிறேன். இதே யில் அவர் மேலும் பல சிறந்த தைகளை எழுதி இன்னும் பல ாகுப்புகளை வெளியிடுவதற்குக் காலம் ணைபுரியட்டும் வாழ்த்துக்கள்
வல்லிக்கண்ணன்
சென்னை