கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகதி

Page 1


Page 2

S ö®eላላጣሳጓ9
Ola

Page 3
நூற்குறிப்பு
Oas
உரிமை நீ.பி. அருளானந்தம்
முதற்பதிப்பு: ஆனி 2007 உருபா : 350.
1SBN 978-955-1055-03-5
AGATHI HI GAGAWAIS:
suBJECT சிறுகதைத்தொகுதி
ஆசிஃபர்: COLLECTION OF THE SHORTFSTORIES
நீ.பி. அருளானந்தம் AUTHOR, i. N.P. ARULANANTHAM || Georges
FIRSTEDITION: Soflof 37' divory is
JUNE - 2007 கிருஷ்ணபிள்ளை அமுதா PLELISHED BY ు
YÄ? -Eysy of A. THRUMAGAL PATHIPPAGAM | கே.வி. மணி
No.07, LLIYANAVENUE, (florani, Gen.
MT.LAWINIA | Ĝk2u6zf2z762: TELEPHONE: 4967027 திருமகள் பதிப்பகம்
PRINTED இல, 7, வில்லியன்சாலை, RANYAs GRAPHICs (sPRINT).
அச்சுப்திப்பு:
இல, 253 - ஜீ காலி வீதி,
COLOMBO - O6.
TELEPHONE: 575827
கொழும்பு - 06.

ര്ജുമ്
வழமையாக நீ.பி.அருளானந்தம் அவர்களின் ஆக்கங்களை மணிக் கொடி எழுத்தாளர் இலக்கிய ஞானி வல்லிக் கண்ணனின் அணிந்துரைகளே அலங்கரித்தன. ஆனால்இன்று அவரின்மையால் நண்பர்நீபி.அருளானந்தத்தின் வேண்டுகோளுக் கிணங்க இலக்கியக் கடலான அவரின்இடத்தில் இன்று ஒரு சிறுநீர்த்துளிபோல் நறுக்கென்று நாலு வார்த்தை முகிழ முயன்றிருக்கின்றேன்.
இது நண்பர் அருளானந்தத்தின் ஆறாவது படைப்பு. இலங்கை இந்திய நூல்களில் நண்பர் பிரசவித்த பத்துக் கதைகள் இச்சிறுகதைத் தொகுப்பில் உங்கள் மனதைத்தொடஇனிய படைப்பாக வெளியாகின்றது.
இவரின் எழுத்துக்கள்: மொழியை வலையாக மாற்றிவீசிப்பிடிக்கும் யதார்த்தங்களின் பதிவுகள் யுத்தத்தால் வாழ்வின் பெரும்பகுதியைத் தொலைத்து வாடிவதங்கி நிற்கும் மக்களின் மனக் குமுறல்கள். கற்பனையின் வார்ப்புகளல்ல, மாறாக காலம் கிழித்த காயத்தின் வடுக்கள். எம்மண் இழந்துவரும் அடையாளங்களின் மீள்பதிவுகள் காலச்சக்கரத்தால் பின்னோக்கிப் போய்விட்ட எம் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், மொழிவழக்குகளை முன்னிறுத்தும் முயற்சி மனங்களின் புகைச்சல்கள், கோணலான எண்ணங்கள், தவறுதல்கள், யுத்தத்தால் அழிந்து செல்லும் சமநிலை, கலப்பற்ற சுதந்திரம் நோக்கிய அலசல்கள்.
இங்கு ஏங்கும் மனச்சுமையுடன் சுதந்திரவிடியலிற்காய் காத்திருந்து நடமாடும் பாத்திரங்களில் நீங்கள்கூட ஒருவராக இருக்கலாம்.
இன்று எம் மண்ணில் சோகம் திரண்டு நெஞ்சில் நிரந்தரமாய் நிற்க நடைப்பிணங்களாக உலாவரும் மனிதர்களில் ஒருவரான கந்தையா அலைச்சல் என்ற கதையில் உலாவி மறைந்து போகின்றார். சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் தள்ளி விட்டுப் போய்விட்ட யுத்தம், நின்றுபோன வேவிச்சண்டைகள், கூலிகளாகிவிட்ட தோட்டக்காரர்கள், ஏமாற்றிவிட்டுச் சென்ற சமாதானம் போன்ற அமைதிப்படைவந்தகாலநினைவுகள் இதில் ஆவணப்படுத்தப்படுகிறது.

Page 4
கனவுகளின் நினைவுகூரலான கண்ணுக்குள் நூறுவிதத்தில் நாளைய விடியலை நிச்சயமற்றதாக்கிவாழ்வின் எல்லைக்குச்செல்லும் காதல் வயப்பட்டவனையும், கனடா மாப்பிள்ளைக்காக காலடியில் இருந்தவனை அற்பமாக நோக்கி அது குழம்பிவிட்ட காரணத்தால் மீண்டும் அவன் நினைப்பை நாடும் இக்காலத்துப் பெண்மைகளின் யதார்த்தங்களை எம் கண்முன்நிழலாடவிட்டு விடுகின்றார்.
யாழ் மண்ணின் இயற்கையுடன் இணைந்த முன்னைய தலைமுறையின் பெருமை பேசும் வீடு, அதில் உலாவரும் காற்றினால் மரங்கள் அசைந்து எழுப்பும் ஒலிகள். இயற்கையோடு இணைந்ததன்மையின் விபரிப்பு ஆடு வேலியால் தலை நீட்டியதற்காக சண்டைபோட்டவர்கள் இன்று அமைதிப்படை வெட்டிச்செல்லும் போதுகாட்டும் மெளனம், மனித மீட்பும் விடியலும் வருமா என வீடுகளைக் கூடுகளாக்கி வாழும் மனிதர்கள், இராணுவத்தலைவர்சுகமாக முகாம்திரும்பும்வரையில்நிம்மதிப் பெருமூச்சை இழந்து தவிக்கும் மக்கள், மனக்கரையில் பொங்கும் ஞாபக அலைகளை அட்டையில் அடிக்க விடுகின்றார்.
ஒரு குருவியின் கேள்வியாக ஒரு கவிஞனின் உள்ளுணர்வுகளின் புலம்பல், இயற்கையிலிருந்து விலகும் வாழ்வு தேடித்தரும் அழிவுகள், உணர்வுகள் நெஞ்சில் குறுக்கும் நெடுக்குமாய் கோலமிட கலப்பற்ற சுதந்திரத்திற்கும், குருவிகளுக்குமாய் ஏங்கும் மனிதமனத்தின் சலனங்கள் கற்பித்தலில் எமக்குப் பாடங்களாகின்றன.
தமிழில் பாண்டித்தியம் பெற்றோர் எழுதும் மரபுக்கவிதையை மீறி புதுக்கவிதை எழுவதுபோல் வாசிக்கும் உங்களையே கதாபாத்திரமாக்கும் அப்பா/மகள், துணிவுடனும் தெளிவுடனும் நெஞ்சைப் பிழிய வைக்கும் புதுமையான கதை. இது காலத்தின் தேவை. பரிமாணச் சிகரத்திற்கான படிக்கட்டாக, வருங்காலத்திற்கு வழங்கியிருக்கின்றார்-பதியுங்கள் மனதில்
யுத்தத்தின் பிரசவிப்பு , உலகையே சுமக்கும் பாரமாக தலையில் வலிக்கும் ஞாபகமுடிச்சுக்கள். ஊர்விட்டு ஊர்வந்து படும் அவலங்கள். புதிய ஊர், புதிய மனிதர்கள், புதிய தொழில் சரிந்த வாழ்வை நிமிர்த்தும் முயற்சிகள். இந்நூற்றாண்டின் இருண்ட இதிகாசமாக உலகம் முழுவதும் கேட்கும் வார்த்தைதான் அகதி-உலாவவிட்டிருக்கிறார்.
நண்பரின் மலையகம் நோக்கிய பார்வை. தேயிலையுடன் சேர்த்து கிள்ளப்படும் இளமைகள். லயத்து வாழ்க்கையிலிருந்து இன்னமும் பிடுங்கப்படாத வேர்கள். காலத்தின்கைகள் வரலாற்றைப் புரட்டினாலும் இவர்களது பக்கங்கள் இன்னும் வெறுமையாகத்தான்.
1W

ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும் கொண்டு காதலனுடன் கனவுலகம் சென்றுவிட்ட மகளின் நம்பிக்கைத் துரோகத்தாலும், குற்ற உணர்வாலும் ஆற்றோடு போய்விட்ட மாரிமுத்துவின் வாழ்க்கை அலசப்பட்டுள்ளது.
யுத்தத்தின் கோரவடுக்கள், பெறுமதியற்றுப்போய்விட்ட மனித உயிர்கள், நெஞ்சில் மூண்ட நெருப்பால் ஒவ்வொருவர் மனதிலும் எரியும் யாககுண்டங்கள். ஞாபகங்களின் வலியோடு வார்த்தைகளை மூடுகிறது மெளனப் போர்வை. இது இரத்தம் கிளர்த்தும் முள்முடியின் சாரம்.
யுத்தக்கறையானால் நேரத்துடன் மேயப்பட்ட இளமைகள், மனைவியின்மீது கழிவிரக்கம். மனிதர்களின் உன்னதங்கள், உன்மத்தங்கள் வேறுபட்ட நோக்கில் பயணிக்க, மனிதாபிமான உணர்வுக்கடிவாளங்களால் உணர்ச்சிப் புரவிகளை அடக்கி வெற்றி கொள்ள முயலும் நாயகன். இது ஒரு கணநேரச் சம்பவமாக பதிவாகியுள்ளது இந்நூலில்.
ஒர் அமானுஷ்ய சக்தி படைத்தவன் மூலமாக இழந்துபோன மண்வாசனையை சுவாசத்தில் இருத்தி அனுபவிக்கும் முயற்சி , நல்ல மணங்களின் இன்பங்களை நன்றாக அனுபவித்த கூட்டுப்புழு போன்றவனின் காதல்சிலிர்ப்புகள் சொல்லப்படும்விதம், இரவுப்பெண்வானக்கூந்தலில்சூடும் நட்சத்திரங்கள் போல் ஒளிர்கின்றது வாசனை என்னும் கதை.
இவரின் எழுத்தில் உலாவிவரும் உவமானங்கள், இயற்கையின் வர்ணனைகள் எம்மை நிகழ்வுகளை நோக்கி இழுத்துச்செல்கின்றன.
அண்மையில் கறுப்பு ஞாயிறு சிறுகதைத் தொகுதிக்கு கிடைத்த சாகித்திய மண்டலப்பரிசு இவரின் எழுத்திற்கு கிடைத்த ஓர் அங்கீகாரமே.
இவரின் கதைகளில் அலசப்படும் விடயங்கள் இன்றுள்ளவர்களால் உணரப்படமுடியாது போகலாம். ஆனால்எதிர்காலம் இதனை ஏந்திஎடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இனியும் எழுதிட வாழ்த்தும்
GJ. GTGris.&fbeseOTgment (SLEAS) (இலங்கை கல்வி நிர்வாக சேவை) 73/44, சரணங்கர பிளேஸ்,
தெஹிவளை. 30.06.2007

Page 5
கொழும்பு தமிழ்ச்சங்கநூலகத்தில், பிரேம்-ரமேஷ் எழுதிய 'மகாமுனி நூலை எடுக்கப் போன சமயம் அதை நீபி. அருளானந்தம் அவர்கள் முன்பதிவு செய்து வைத்திருந்ததை அறியமுடிந்தது. அந்தநூலை அவர்எனக்காக விட்டுத் தந்தார். அதற்கு முன்னரே நீ.பி. அருளானந்தம் அவர்களின் கதைகளைப் படித்திருந்தேன். அவர் மிக நவீன கதைகளினதும் ஆர்வலர் என்பது எனக்கு ஆச்சரியமாகவேயிருந்தது.
ஒரு எழுத்தாளரின் பல கதைகளை ஒருசேர வாசிக்கக் கிடைக்கும் போது, அந்த எழுத்தாளரின் மனதையும் ஒரளவுக்கேனும் நாம் நெருங்கிவிடமுடிகிறது. சகமனதொன்று நமக்கு நெருக்கமாவதன் மூலம், அதுவரை நாமறியாத சில அனுபவங்களையும், மனநிலைகளையும் அறியும் வாய்ப்பை அளிப்பதே எழுத்தின்முக்கிய உபயோகமாகவும் இருக்கிறது. சொந்த வாழ்வின் விளைவாக நாம் பெற்று வைத்திருக்கும் அனுபவமும், வாசிப்பினால் நாமறியும் எழுத்தாளரின் அனுபவமும் இப்போது நம்மிடம் உள்ளன. அவை உடன்பாடாகவோ எதிர்மறையாகவோ ஒன்றோடொன்று தர்க்கித்து வினையாற்றத் தொடங்குகின்றன. சில படைப்புகள் நமது முடிவுகளில் மாற்றத்தையோ விரிவையோ கொண்டுவருகின்றன.
நீபீ அருளானந்தம் அவர்களின் இந்தக் கதைகளில் இருந்து அவரது மனதின் போக்கையும் வாழ்வு நோக்கையும் ஒருவாறு நாம் தொகுத்துக் கொள்ள முடிகிறது.
இன்றைய சூழல் நெருக்கடிகளால் ஏமாற்றி அலைக்கழிக்கப்படுகின்ற ஈழத்துக் குடிமகன்களில் ஒருவராக அவரும் இருக்கிறார். தொடர்ந்து ஏமாற்றப்படுவதால் உருவாகிற கோபமும், கழிவிரக்கமும், நன்மையை எதிர்பார்க்கும் மனதுக்குரிய கனவுகளுமாக, அவரது கதைகள் உடனடி அவசரங்களைக் கொட்டிவிடும் களமாயமைகின்றன.
எல்லாக் கதைகளினுள்ளும் முன்னைநாட் பெருமைமிகு வாழ்வின் வற்றாத தாகம் சுழித்தோடியபடி இருக்கிறது.
இலட்சியவாதம், நன்னெறியுணர்த்தல், சமூகத்தில் தாழ்ந்த மனிதர்களை விதந்துரைத்தல், ஒவ்வாமைகளின் மீதான உணர்வுக் கொந்தளிப்பு போன்றன இக்கதைகளின் சட்டகங்களாயமைகின்றன.
ஏதிலிகளிடம் உள்ள இன்சுபாவமும் சகமனிதனுக்கு ஆதரவு நீட்டும் நேசஇயல்பும், இன்னொரு சூழ்நிலையில் நாம் விரும்பாத சங்கடமாகவும் vi

கீழ்மையாகவும் வெளிப்படக்கூடும் என்பதைச் சொல்லும் ஒரு கதையும் இத்தொகுதியில் உண்டு. (அகதி)
சுந்தர ராமசாமி சொன்னது போல, மனிதனின் மிக முக்கியமான பிரச்சினை சகமனிதர்களிடமிருந்து எப்படித் தப்புவது என்பதுதான். ஒருவகையில் பார்த்தால் இதுதான் எல்லாக் கதைகளையும் உருவாக்குகிறது என்று சொல்லிவிடலாம்.
மனித உறவின்நுட்பங்களுக்கெல்லாம் இன்று சாட்சியாக விளங்குபவை சிறுகதைகளே. மனித உறவின்மேன்மையையும் கீழ்மைகளையும் இருளையும் ஒளியையும், துக்கத்தையும், பரசவத்தையும் காட்டி நம் அனுபவப் பரப்பை விரிப்பவை கதைகள்.
மிகைபடாத வகையில், வாழ்வுக்கோணம் ஒன்றினைக் கதையின் மூலம் காட்டிவிடுவது சுலபமான வேலையல்ல. வாசகனின்நம்பிக்கைக்கும் அவனது அனுபவத்தள விரிவுக்கும் உகந்ததாய்க் கதைகளைப் படைக்கும் வேலை என்பது எழுத்தாளன் உயிரைப்பிழிந்தெடுக்கும் வேலையாகும். உலகின்மீதும் மனிதர்கள் மீதும் பரிவு சுரக்காமல் இதைச் செய்யமுடியாது. எழுதுகிறவர்கள் எல்லோரும் இந்தப் பரிவினால் உந்தப்படுகிறவர்களாகவ்ே இருப்பார்கள். ஆனால், எழுதப்படும் அனைத்துக்கதைகளுமே வாசகனிடம் நம்பதத்தன்மை பெற்றுக் கவர்ந்து விடுவதென்பது சிரமசாத்தியமான ஒன்றே.
என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ள முடியாத ஒர் இருளச்சமான வாழ்வுநிலையையும், தொல்லைகளுக்குள் நுழைந்துவிடாமல் தப்பித்துப் போய்க்கொண்டிருத்தலே போதும் என்கிறதான வாழ்வுப் பழக்கத்தையும் சுட்டும் கதை(இரத்தம் கிளர்த்தும் முள்முடி) இருக்கும் அதேசமயம், காதல் தோல்வி ஒன்றின் நம்பமுடியாததான நிகழ்வுப் போக்கைக் காட்டும் (கண்ணுக்குள் நூறுவிதம்) கதையும் உண்டு.
புதிய புதிய கதை சொல்லும் உத்திகளின் மீது ஆசிரியருக்குள்ள ஆர்வத்தைக் காட்டுவதாக அப்பாஃமகள் கதை உள்ளது. சிறு சம்பவ விபரிப்பில் வாழ்க்கைக்கூறொன்றை விரித்துக் காட்டமுனையும் கதைகளாக 'கற்பித்தல்','ஒரு காலை நேரச் சம்பவம்', 'இரத்தம் கிளர்த்தும் முள்முடி' ஆகியன உண்டு.
எழுத்தில் வேகமும் சரளமும் மிகுந்த நேர்ப் பேச்சின் தன்மை காணப்படுவதையும் குறிப்பிட வேண்டும். சிசு செல்லப்பாவின் ஜீவனாம்சம்' vii

Page 6
நாவலின் மொழிநடை தன்னை மிகவும் ஈர்த்ததாக, பேசும்போது ஒருமுறை குறிப்பிட்டார் அருளானந்தம். பேச்சின் ஒலிஇயைபுடையதாக நிறைய மரபுத்தொடர்களுடன்கூடிய அந்த வெளிப்படையான மொழிநடையையே இத்தொகுதிக் கதைகளிலும் காணமுடிகிறது.
கதைகளை பூடகம் தவிர்த்துப் பட்டவதர்த்தனமான மொழியில் கூறும் போது, சிலசமயங்களில் தேவையை மீறி அதிகப்படியான மொழிதல்ஏற்பட்டு விடுவதைத் தவிர்க்கமுடியாது போகிறது.
'கற்பித்தல்"கதையில் -
‘செண்பகம். செண்பகம்'; என்று மகிழ்ச்சி அலைகள் மனதிலே புரண்டெழ மனைவிச்ை கூப்பிட்டார் அவர். என்ற வரியில் தொடங்கி, 'உடலில் அழகு ஏறிய அந்தக் குஞ்சுகளைப் பார்க்கும் போது அவளது பிரகாசமான பெரும் தடங்கண்கள் மேலும் விரிந்தன." என்பதுவரை இருக்கும் இரண்டு பந்திகளில் அவர் கொண்டுவரும் நிகழ்ச்சியையும் உணர்ச்சியையும்-திரும்ப ஒரு பார்வைத்திருத்துகைக்கு உட்படுத்தியிருந்தால் அவரால்இரண்டு அல்லது மூன்று வரிகளிலேயே கொண்டு வந்திருக்கமுடியும் என்று தோன்றுகிறது.
மற்றபடி, எத்தனை பலவீனமானதெனினும் வாழ்வை மீட்டெடுக்கிற
குரல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. தன் கதைகள் மூலம் அருளானந்தம் அவர்கள் செய்ய விழைவதும் அதுவே!
Agubvyýývňaom skelevWi
(24.06.2007)
viii

என்னுரை
எழுத்தாளன் தன்னுடைய அச்சத்தைக் தவிர்க்க வேண்டும். மனம் திறந்து எழுத வேண்டும், என்று பிரபலமான எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். இதன் மூலம்தான் எமது தமிழ் இலக்கியம் உலகத் தரத்தை எட்டும் நிலைக்கு வரும் என்றும் அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
ஆனால், இவர்கள் எல்லாம் சொல்வது போல 'என்மனத்திலுள்ளதை யெல்லாம் இன்றைய சூழ்நிலையில் வெளிப்படையாக என்னால் கதைகளில் எழுதிட முடிகிறதா? '
இந்தக் கேள்வியின் குடைவு, என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது. கரையேறாக் கிணற்றுத் தவளைகளை காலம் கணி டு கொள்வதில்லையென்றால், அந்தக் கிணற்றுத் தவளைகளைப் போலத்தானா என் நிலையும் இலக்கியம் படைப்பதில் இருந்து கொண்டிருக்கிறது?
அப்படியென்று இல்லாமல் மனம் திறந்து எழுதும் எழுத்து எனக்கு வாய்த்து விட்டதா? - என்று இவைகளைத்தான் இன்றைய பொழுதில் என் மனத்துள்ளே நினைத்து நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறேன். அவ்வாறாக நினைத்து நான் என் மனத்துள்ளே போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுதிய கதைகள் தான் இவை! உங்கள் சுகமான காலத்தை மனதிலே எழுதுங்கள், உங்கள் துன்பமான காலத்தை கல்லிலே எழுதுங்கள் என்று சொன்னார் 'பெர்னாட்ஷா அந்த அறிஞர் சொன்ன இந்த இரண்டு வகையான உபதேசங்களில் எது எனக்கு இன்றைக்குப் பொருந்துகிறது? இன்றைய சூழ்நிலையில் எதற்கு நான் முக்கியம் கொடுத்து எழுத வேண்டும்? என்று தான் நான் சிந்திக்கிறேன்.
உலகம் எவ்வளவு சீக்கிரமாக மரணித்து ஒடுகிறது, என்பதை எண்ணிப் பதறியபடிதான் நாம் இன்று வாழ்க்கையை நடத்துகிறோம். படுகொலைகள், பெருவதை முகாம்கள் எனத் தொடரும் எம் இனத்தின் துன்ப துயரங்களை எழுதாமல் வேறு எதைத்தான் என்னைப் போன்ற ஒருவனால் எழுத முடியும்?
இதன் காரணமாகத் தான் இடையூறு போன்ற நெருப்பு வளையங்களில் சிக்கிய சில சம்பவங்களை நான் கதைகளாக வடித்தேன். சோகம் மிக்க வரலாற்றுக்குரிய மேதைகளைப் படைத்த சிறப்பு உலகில் வேறு எந்த இலக்கியத்தையும் விட ரூஷ்ய இலக்கியத்துக்கே அதிகம் உண்டு என்று பல அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
ix

Page 7
அப்படி அவர்கள் பெருமைப் படுத்தும் ரூஷ்ய இலக்கியம் போல் ஒரு காலத்தில் ஈழத்து இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங்களும் உலகத்தரத்தை எட்டி எமக்கெல்லாம் புகழ் சேர்க்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த நூலிலுள்ள கதைகளைப் பற்றி நானே அவற்றுக்கு மகுடம் சவூட்டிப் புகழ்ந்து கூறிக்கொண்டு போனால், பிறகு கதைகளைப் படிக்கும் போது வாசகர்களுக்குச் சலிப்புத் தட்டிவிடவும் கூடும். எனவே தான் நான் எழுதியவற்றை நானே உங்களுக்கு விளக்கிச் சொல்ல வரவில்லை. எழுதுவதற்கு ஒருவன், அவன் எழுதியதை எடுத்து விபரித்துச் சொல்வதற்கு ஒருவர் என்ற ஒழுங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன் நான்.
ஆனாலும் இவைகளை எடுத்துச் சொல்லும் ஒருவர் 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்கிற மாதிரியாகத்தான் தன் பார்வையில் தன் மூளைக்குப் பிடிபடுகின்ற கருத்தைச் சொல்லுவார். என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு வாசகர் தன் நோக்கில் எனக்கு என் கதைகளைப் பற்றி என்ன கூறவருகிறாரோ. அதற்கு நான் செவிசாய்க்கிறேன். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.
என் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி இந்நூலுக்கு அணிந்துரை எழுதித் தந்திருக்கும் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் திரு. ஏ.எஸ்.சற்குணராசா அவர்கள் புல்துறைகள் சார்ந்த நூல்களையும் படித்து அதைப்பற்றி ஆரும் கேட்டால் சொற்சுவை பொருட்சுவையுடன் கூறத்தக்க கவித்துவத் தன்மை கொண்டவர். நயம்பட உரை என்ற மூதுரைக்கு அமையத் தான் படித்து ரசித்ததை மற்றையவருக்கு இவர் எடுத்துக் கூறுவார். இவர் O/L வகுப்பு மாணவருக்காக எழுதிய சித்திரக்கலை எனும் நூல் பதினோராயிரம் பிரதிகள் விற்றுத்தீர்ந்து இன்று மறு பிரசுரமும் கண்டிருக்கிறது. அத்தகைய திறமை கொண்டவர் இந்நூலுக்கும் அணிந்துரை எழுதித்தந்துள்ளதையிட்டு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.
இன்னும் இந்நூலிலுள்ள கதைகளைப்பற்றி தனக்கேயுரிய விமர்சனப் பாணியோடு சாரமுள்ள ஆழமான தன் கருத்தினையும் கூறியிருக்கிறார் திரு. சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் திரு.சிவகுமார் அவர்களைப்பற்றி யாருக்கும் நான் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அன்னாரை இந்நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் யாவரும் நன்கு அறிவார்கள். அவர் ஈழத்திலுள்ள சிறந்த விமர்சகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். நல்லதோர் கவிஞர், ஒலிபரப்பாளர், அன்னார் நட்புடன் நான் கேட்டதற்கிணங்கி என் கதைகளைப்பற்றிய தன் கருத்தை எழுத்தில் வடித்துத் தந்தார். அதற்காக
X

நான் அவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மேல் அன்பும் பண்பும் கொண்டு இருப்பதுதான் மனித வாழ்க்கைக்குச் சிறந்தது. இந்த மனிதப் பண்பைதன் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் வல்லிக் கண்ணன் ஐயா அவர்கள். அவர் இன்று மறைந்து விட்டார். ஆனாலும், இந்நூலுக்கான என்னுரையை நான் எழுத ஆரம்பிக்கும் போது அவர் நினைவில் சில கணம் பேனாவை எழுதாமல் வைத்துக் கொணர் டு நான் வாடிக்கொண்டிருந்தபடி மெளனம் காக்கிறேன். என்னை எந்நேரமும் எழுதிக் குவியுங்கள் எழுதிக் குவியுங்கள்! என்று உற்சாகப்படுத்திய அந்தக் குரல்" இனி எனக்குக் கேட்கப் போவதில்லை என்று நினைக்கும் போதெல்லாம், என் மனதில் கவலை கூழ்ந்து விடுகிறது என்றாலும் அவர் எனக்குச் சொல்லிப் போன அறிவுரைகளை என்வாழ்வில் நான் என்றும் மறக்கப் போவதில்லை. அவர் எனக்குச் செய்யச் சொல்லியதை, நான் என்றும் தொடர்ந்து செய்யவே செய்வேன்! நிச்சயம் நான் தொர்ந்து எழுதவே செய்வேன்! எழுதிக் கொண்டே என் வாழ்வை முடித்துக் கொள்வேன்!
இன்னும், இதற்கு மேல் எதையும் என்னைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு, என் இலக்கிய முன்னேற்றத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து என்னை உற்சாகப்படுத்திவரும் நண்பர்களை, நான் இவ்வேளை நன்றியுணர்வோடு நினைவு கூருகிறேன். அவர்கள் எனக்கு வழங்கும் ஆசிகளுக்கும் ஆலோசனைகளுக்குமாக நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, எனும் அளவுக்கு நான் மனம் நெகிழ்ந்து விடுகிறேன். அவர்களைப் போலவே என் நூல்களை பணம் கொடுத்து வாங்கி உதவி புரிந்து வரும் அன்பர்களுக்கெல்லாம் நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் தான் என்னை, என்பணியைத் தொடர்ந்து செய்ய ஊக்குவித்து வருபவர்கள். அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி மலர்கள்.
இல, 7, லில்லியன்சாலை வணக்கத்துடன் கல்கிசை. நீபி. அருளானந்தம் தொ.பே. 4967027
O722734954
xi

Page 8
ܪܐSܝG
مودم همان (1) (2) Aaarsei rir.Sé ܝܗܝܺܘ (?)
ܘܬܶgܫ (ܘ)
(S) Oldsdom/vo Aai
(6) A ها به « ده نامه ها بوده نهم (۶) (a) do od RanАre (veli (vo (9) Qe Amenn Gao Sédado
(to) ambanan
xii
11
19
39
53
78
110
144
162
171

xiii
அண்மையில் மறைந்த இலக்கிய ஞானி வல்லிக்கண்ணன் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

Page 9

WapauÁMÚ
ਪੁp Tani கந்தையாவுக்கு வயது
எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த வயதுக்குள்ளே தன் ஒரேயொரு மகனின் மரணத்தையும், அதையடுத்து சில மாதங்களில் தன் மருமகளின் சாவையும் ஒன்றன் பின் ஒன்றாக அவர் பார்த்து விட்டார். இதனால் இதயத்துள் ஒரு சோகம் திரண்டு வந்து அவரிடம் நிரந்தரமாக நின்று கொண்டது.
அதனால் அவரிடம் இதுநாள் வரையில் இருந்த பழைய உற்சாகமெல்லாம், இன்று எங்கு போனது என்று தெரியாத அளவுக்கு அவரிடமிருந்து தொலைந்தது போல் போய்விட்டது. இப்பொழுது அவர் நன்றாகக் கூனிப்போய் விட்டார். தளர்ந்து நடக்கிறார். பல்லெல்லாம் அடுத்தடுத்து விழுந்து போனது. அதிகமாகப் பேசுவதே இல்லை. சிரிப்பதும் இல்லை. அப்படிச் சிரித்தாலும் அவரைப் பார்க்கும்போது அழுகிறது மாதிரி இருக்கிறது. கொஞ்சம் செவிடுகொஞ்சம் குருடு-எண்ணெய்யற்ற பொக்கு தானியம் போல் இன்றைய நிலையில் அவர் ஆகிவிட்டார். செக்கில் பூட்டிய மாடு போலத்தான் இன்று அவரது வாழ்க்கை உயிரற்றதாகி விட்டது.
அவருடைய குடும்பத்தில் இப்பொழுது நெருங்கிய இரத்த உறவென்று இருப்பவர்கள், மகனுடைய இரண்டு பெண்பிள்ளைகளான அந்த அவருடைய பேர்த்திகள் இருவர் மட்டும்தான். அவர்களிலே ஒருத்தி வவுனியாவில் இருக்கிறாள். மற்றவள் திருகோண மலையில் சீவியம். இந்த இருவருக்கும் பிள்ளை குட்டிகள் நிறைய ്.dി.eിത്രസ്ത്രി ീക്രി

Page 10
இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்திலேயும் கீழ்மட்டத்தில் என்று கணிக்கக்கூடிய, ஏழ்மையின் நிலைமையில் கிடந்து சீவிப்பவர்கள் அவர்கள். ‘அந்த நிலைமையிலுள்ள அவர்களுடைய குடும்பத்துக்குள்ளே நானும் போய் சேர்ந்துகொண்டு’ என்று இதையெல்லாம் நினைத்துப்பார்த்துத்தான் அவர்களோடு சென்று தானும் இருந்து கொள்ள அவர் விரும்பவில்லை. அதைவிட அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ‘அச்சுவேலி' என்கிற கிராமத்தில் அங்கே சின்னதொரு வீடு என்றாலும் அவருக்குள்ள சொந்த வீடு அது. யுத்தம்நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அந்தச் சுற்று வட்டாரத்திலே ‘செல் அடியிலிருந்து தப்பித்துக் கொண்டது இவருடைய வீடு ஒன்றுதான். சுவரில் செல்தெறிந்த காயம் பட்டதொன்றுதான் அந்த வீட்டுக்கு வந்த ஒரேயொரு குறை. அத்தோடு தாள்வாரப்பக்கமாக உடைந்து உதிர்ந்த நான்கு ஓடுகளிடையே பனங்கம்புகளும் தெரிந்தது. அதையெல்லாம் யுத்தநிறுத்தம் வந்த வேளை அதில் வந்திருந்து கொண்டு, மேசன் பிடித்து வைத்துச் சிமிண்டு’ பூசித்திருத்தி, கையோடு அவனைக் கொண்டு, நான்கு புது ஒடுகளையும் அதில் போட்டுச் சரி செய்து விட்டார் அவர்.
அந்த வளவுக்குள்ளே “செல் விழுந்து போய், உலக்கைகளைப் போல் மொட்டையாகிப் போன பனைகளைப் பார்த்து, முதன் முதலில் அங்கே வீட்டைப் பார்க்க வந்த போது அவர் அழுதார். பக்கத்து வீட்டுச் செல்லையா அவர் அழுவதை மெளனமாகப் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டுடிருந்து விட்டு, ஒன்றைப் பற்றியுமே அவரோடு வாய்பேசாது இருந்து விட்டு தன் வீட்டுக் காணிக்குப் பிறகு போய் விட்டார். செல்லையாவுக்கு தன் வீடே எறிகணை விழுந்து அது அங்கு இருந்த இடமே தெரியாமல் போய் விட்டதே என்கிற பெருங்கவலை மனத்தில்! ஆனாலும், மகன் ஒருவன் கனடாவில் இருக்கிறான் என்ற மனத்திடம் அவருக்கு அச்சுவேலியிலிருந்து யுத்தகாலத்தில் வெளியேறிய வசதி படைத்தவரெல்லாம் ‘சமாதானம் வந்திட்டு இனிப் போய்க் காணி பூமி வீட்டைப் பாத்திட்டு வருவோம்!” - என்று நினைத்துக்கொண்டு, ஆவலும் அவசரமுமாகப் புறப்பட்டு கொழும்பிலிருந்து இங்கே வந்தார்கள் அப்படி வந்தவர்களில் சிலர் வீடே தங்களுக்கு இல்லாமலாகிப் போன கொடுமையை தங்கள் கண்களாலே நேரே பார்த்துவிட்டு பிறகும், கொழும்பில் இருந்து சீவிக்கத் திரும்பிப் போய் விட்டார்கள். அவர்களுடைய வளவுகளில் செல் அடி விழாமல் தப்பிய தென்னைகளில் உள்ள தேங்காய்களை, ஆர்யாரோ கிரமமாக வந்து அதற்குள்ளே சுற்றிப் பார்த்து விட்டு மரத்திலே ஏறிப் பிடுங்குகிறார்கள். அதனுடன் இளநீரையும் பிடுங்கி, அங்கே ஆறுதலாக மரங்களுக்குக் கீழே நிழலில் இருந்துகொண்டு, கத்தியால் வெட்டிப் போட்டுக் குடிக்கிறார்கள். தாகம்
நீ.பி.அருாரணநிதர் 2 eീമി

தீர்த்த வாய்க்கு பிறகு அதிலே சற்றைக்கு இருந்து அவர்களுக்குக் கொஞ்சம் கதைக்கவும் தானே வேண்டும். ‘ஓ! இந்த வேலிச் சண்டைகள் பிடித்தவயளெல்லாம் இப்ப கொழும்பில.” - சொல்லி விட்டுச் சிரிக்கிறான் மரத்திலேறி தேங்காய், இளநீர் பிடிங்கியவன்.
‘இனி இங்க வாறத்துக்கு அவயஞக்கு என்ன கிடக்கு?
அவயளுக்குக் கட்டின வீடே இங்க இல்ல!” - இன்னொருவன் சொல்லும் போது ஏளனம் அவன் உதடுகளில், “எண்டாலும் வெளிநாட்டிலிருந்து அவேயளுக்குக் காசுகள் வருது பிள்ளேயஸ் அங்கயிருந்து அனுப்புதுகள் அவேயளுக்கு! அத்தில்ல வெள்ளவேத்தேயிலை வீடு வாசல் வாங்கிட்டினம். இங்க வீடு வாயிலை விட்டிட்டுப் போனாலும் செளக்கியமாத்தான் அங்க கொழும்புப் பக்கம் இருந்து சீவிக்கினம்!” - இதைச் சொன்னவன் பொறாமையில் முகத்தை வாடப் போட்டுக் கொண்டான். கேட்டவர்களும் தலையைத் தொங்கப் போட்டபடி யோசித்தவாறு இருந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அங்கு நின்ற தென்னை மரங்கள் எங்கே கேட்கப் போகின்றன? ஆனாலும், பக்கத்து வீட்டுக் கந்தையா இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வேலியிலுள்ள பூவரசுக் கொவ்வைச் சடைத்தலுக்குப் பக்கத்திலே மறைவாக நின்று ஒட்டுக்கேட்டுவிட்டார். அவர்கள் சொன்ன தெல்லாம் நெஞ்சுப் பைக்குள் கொள்முதல் ஆகிவிட்டது அவருக்கு. தங்கிய இடம் பிறகு அரித்துக் கொண்டிருந்தது. அதையிட்டு அவர் அங்கே போய் அவர்களிடம் ‘நீங்கள் ஆர் எவர்?’ என்று விசாரிக்கப் போனால் அந்தக் காணி உரிமையாளர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களைச் சொந்தம் கொண்டாடுவார்கள் இவர்கள்!இப்படி உரிமை பாராட்ட இவர்களைப் போல பலரும் வெளிக்கிட்டகாலம் தானே இது? ஆதலினாலே அவருக்கு மனத்தில் பயம் சூழ்ந்து விட்டது. அந்தப் பக்கம் தலையைக்காட்டாமல் பேசாமல் போய் வீட்டுக்குள்ளே பிறகு இருந்து விட்டார். அந்த வீடுதான் அவரது வளை! அவரது அரண் எத்தனை வெளிச்சமானாலும் அங்கு மாத்திரம் தொங்கும் இருள்தான் அவருக்குத் தஞ்சம். க-கூக-க்-கூகூ கூ!! எங்கோ மரப் பொந்திலிருந்து ஏதோ ஒரு பறவை!
சிங்களப் பேரின வாத அரசாங்கம் தன் பெரிய இரானுவத்தைக் குவித்து வைத்திருந்த இடம் அந்தப் பலாலி அச்சுவேலி அதற்குக் கிட்டிய கிராமம். யுத்த காலத்தில் இராணுவம் செலுத்திவிட்ட செல்கள் பரவி விழுந்து கொண்டிருந்த இடங்களில் இந்த அச்சுவேலிக் கிராமமும் சேர்ந்ததுதான். இங்கே தோட்டம் செய்து செம்மையாக வாழ்ந்தவரெல்லாம் யுத்தத்தின் தாக்கத்தால் அந்தத் தொழிலைச் செய்ய முடியாமல் போக, சயிக்கிளிலே கூலிக்குப் பாரம்கட்டி இழுக்கிற பிழைப்புக்கு பிறகு ஆளாகிவிட்டார்கள். முகங்களைச் சுழித்துக்கொண்டு, வெயர்த்து வெந்து போய் கடும் வெயிலிலே அந்தச் சயிக்கிள் ஓட்டம் அவர்களுக்கு அதனால்,
ർ.dി.മിത്രനുക്രി 3 eിമ്നി

Page 11
பூசணிக்காய் மாதிரிபார்க்கப் பொசிப்பாக இருந்தவரெல்லாம் வறுமையில் முருங்கைக்காய் மாதிரி உடல் மெலிந்து கெட்டுப் போய் ஆளே மாறிப் போய் விட்டார்கள். பனங்கள்ளுக்குடித்து அடிவயிறு முட்டிக் கலையம் போல திரண்டு மினுமினுப்பாயிருந்த தொந்திகளெல்லாம், அவர்களுக்கு எப்படி வற்றிப் போனது? - என்பது ஏதோ புரியாத மாயம் போலத்தான் இருந்தது. இவர்களிடம் அதைப் பற்றி கேட்கின்ற காலம் இதுவல்ல என்று நினைத்து, யாருமேதங்கள் வாயை இதன் காரணமாகத் திறப்பதில்லை.
எந்த வருசத்திலும், நல்லூர்க் கோயில் திரு விழா நல்ல மாதிரியாகத்தான் நடந்து முடிகிறது. இடம் பெயர்ந்து சுற்றிச் சுற்றி அந்தக் குடாநாட்டுக்குள்ளே இருந்து சீவித்தவர்களெல்லாம்தங்கள் கஷ்டங்களையெல்லாம் மறந்துவிட்டு திருவிழாக் காலங்களிலே அந்தக் கோயிலுக்கு வந்தார்கள். நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். காவடிதூக்கி “கந்தனை” மகிழ்வித்தார்கள். அந்தக் கோயிலிலே இருக்கும் வரை, கவலைகள் மறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியுமாயிருந்தது அவர்களுக்கு. ஆனாலும் கோயிலை விட்டு தங்கள் தங்களது இருக்கும் இடத்தே திரும்பிப் போகும் போது, துன்பச்சுமை தலைமீதேறிக் கொண்டது அவர்களுக்கு.
கந்தையா எல்லோரும் எடுத்தவுடன் சொல்வது போல நல்லூர்க் கந்தனை, செல்வக் கந்தனென்று புகழ்வார். "சன்னிதி முருகனை ‘அன்னதானக் கந்தன்’ என்று ஒரு பக்தி உணர்வோடு கூறுவார். செல்வச் சன்னிதி முருகனிடம் போகும் போதெல்லாம், ஆர்த்மார்த்திக சுகத்தை அவர் கண்டவர். அங்கே போய் கும்பிட்டு வருவது கூட அவருக்கு நிலைத்தா என்றால், அதுவும் இல்லை. இலங்கை இராணுவம் போய், இந்திய இராணுவம் அங்கு வந்தும், கோயில்பக்கம் ஒருவரையும் போகவிடவில்லை. இந்தியாவிலிருந்து வந்தார்கள், அமைதிப் படை நாங்கள் என்று சொல்லிக் கொண்டு. இங்கே வந்த பின்பு தான் தெரிந்தது, அவர்கள் சத்தியத்தைக் காக்க வரவில்லை சண்டைக்காகவே வந்தார்களென்று ஒருநாள் பத்துப்பேர் இருக்கும் - அந்த இந்திய இராணுவ சிப்பாய்கள் இவரின் வீட்டுக்கு வந்து - "முருக்கா. முருக்கா” என்றார்கள். “முருகா முருகா” - என்றார் இவரும் சேர்ந்து அவர்களைப் பார்த்துப் பயபக்தியோடு, “முருக்கா முருக்கா” - என்று பின்பும் அவர்கள் சொல்ல, அப்பொழுதுதான் இவர் நன்றாக சிந்தித்துப் பார்த்தார். முருகா என்ற அந்தச் சொல்லிடையே இந்த இக்கன்னாவை உள்ளே நுழைத்து, வேறு எதையோ ஒன்றை அவர்கள் கூறுகிறார்களென்று. அவருக்குப் பிற்பாடு ஒருவாறு இது மூளைக்குப்பிடிபட்டுவிட்டது.
இப்பொழுது "முருக்கா முருக்கா” என்று உடல் பாஷையையும் உக்கிரமாக அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களில் தலைப்பாகை
.dി.ീn് 4 அத்தி

கட்டியிருந்தவன் ஒருவன் சீக்கியன் என்று பார்க்கும் போது இருவருக்குத் தெரிந்தது. அவன் கை விரல்களைக் குவித்து வைத்துக்கொண்டு, தன் தலைப் பாகைக்கு மேலே அந்தக் குவித்த கை விரல்களைக் கொண்டு போய் மேலும் கீழுமாக அசைத்துக்காட்டுகிறான் அவன் காட்டிய சாடை ரோமானிய போர் வீரனின் தலைக் கவசம்தான் உடனே இவருக்கு ஞாபகம் வந்தது. ஆனாலும் அதைச் சொன்னால், உதைதான் தனக்கு விழுமென்று எச்சிலை உள்ளே விழுங்கி விழித்துக்கொண்டு "நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு விளங்கவில்லை’ என்றார் தன் கைப்பாஷையாலும் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இவர்!
இந்த நேரம் பக்கத்து வேலிப்பொட்டுக்காலே புகுந்து, தனிச்சேவலொன்று இவரது வீட்டுமுற்றத்தடிப் பக்கமாக ராஜா நடை நடந்து கொண்டு வந்தது. அதைப் பார்த்ததும் அந்தச் சிப்பாய்களினது கண்களெல்லாம் விழியாலே சுடும் அளவுக்கு துவக்குகளைப் போல் மாறியதாகிவிட்டன. உடனே “முருக்கா முருக்கா" என்று எல்லோரும் ஒரே நேரத்தில் அதைப் பார்த்து மகிழ்ச்சியூடே சேவல் போல் குரலெடுத்துச் சத்தம் போட்டனர். அந்த நேரம் சேவலோ வென்றால் அவர்களின் குரல் கேட்டு “கொக் கொக்” என்று கழுத்தை முன்னால் நீட்டிநீட்டிச் சத்தம் போட்டது. பின்பு பயத்தில் “கொடேர் கொடேர்” என்று வேறு ஒரு விதமான சத்தம் போட்டுக் கொண்டு வேலிப் பொட்டுக்காலே புகுந்து செட்டை அடித்தபடி விரைந்தது. முருக்கா என்றால்கோழியா? அவன் இவ்வளவு நேரம் கோழியைத்தான் கேட்டுக் கொண்டு நின்றிருக்கிறான் என்று அவருக்கு தெட்டத் தெளிவாக இப்போது தான் விளங்கியது. கோழியே வளர்க்காத அவரிடம் கோழி எப்படி இருக்கும். அவர்களுக்குப் பிடித்துக் கொடுப்பதற்கு? அந்தக் கோழி பக்கத்து வீட்டுக் காரரினது என்று சொன்னாலும் அவருடைய மனசாட்சிக்கு அது பிழைதானே? அவர்களது கைகளிலிருக்கும் துவக்குகளையும் நெஞ்சில் பட்டி போட்ட படி அந்தப் பைகளிலிருக்கும் குண்டுகளையும் நினைத்துப் பார்க்கப் பயமாகத்தான் இருக்கிறது இவருக்கு. ஆனாலும் உண்மை என்று ஒன்று எப்பொழுதும் அழியாததென ஒரு நம்பிக்கை இருக்கிறதே! அதைச் சொல்வதற்கு என்ன பயம்? - என்று நினைத்து விட்டு, அவர்களுக்கு விளங்கக் கூடிய அளவிலே கைப்பாஷையையும் காட்டி வடிவாக வாயாலும் தன்னுடைய நிலையை இவர் விளங்கச் சொன்னார் அவர்களுக்கு - “என்னட்ட கோழி ஒண்டும் இல்ல நான் அதுகளை வளக்குறேல்ல" - என்று. இதையெல்லாம் விளங்கிக் கொள்ள இயலாத அளவிலா அங்கு வந்த அவர்கள் இருக்கிறார்கள். அவர் சொன்னதெல்லாமே பிறகு நன்றாக அவர்களுக்கு விளங்கிவிட்டது. ஆனாலும், தாங்கள் இராணுவத்தினர் என்ற மமதையான நினைப்பில் அவர் சொன்னதை அவர்கள் நம்பமறுத்தார்கள். இதன் காரணமாக,
தி.சி.அருாரணத்தச் 5 മിശ്രി

Page 12
இவரோடு முதலில் கதை கொடுத்தவன், தான் வைத்திருந்த துவக்கைத் தூக்கி இவரின் நெஞ்சின் மேலே சூழல் முனையை வைத்து அழுத்தினான். அவனது பார்வை "உன்னை ஒருவகை பார்க்கிறேன்?” என்ற மாதிரி அவரது முகத்தில் முத்திரை குத்தியது.‘எல்.ரி.ரி ? ”
அவன் சொல்ல இவர் கலங்கிவிட்டார். தூக்குக் கயிற்றை கழுத்தில் சுருக்கிட்டு விட்டாற் போல அப்பொழுது அவருக்கு இருந்தது. இந்த "எல்.ரிரி” - என்கிற சொற்பிரயோகத்தை தமிழ் மக்கள் மேல் பாவித்து இம்சைக்குள்ளாக்கலாம் என்பதை, இலங்கை இராணுவம் மாத்திரம் செய்யவில்லை' இந்திய இராணுவம் வந்தும் அதையேதான் செய்கிறது என்று, அவர் தன் அனுபவத்தில் அதை இப்பொழுது நேருக்கு நேராக கண்டு கொண்டார். “எங்கோ இளைஞர்கள் துவக்கைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்களென்றால் அதையிட்டு நானும் எல்.ரியா? இந்தக் கிழவனும்?” - அவர் இதை நினைத்தபடி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டுநிற்க, அவர்கள் பேசாத பேச்செல்லாம் அவரைப் பார்த்துப் பேசிவிட்டு வேலிக் கடவுக்குள்ளாலே நுழைந்து வெளியேறி விட்டார்கள். “வேலிகளையே அடைச்சு அறிக்கை பண்ண வேணாம் எண்டு ஒரு புதுச்சட்டம் - தாங்கள் வளவுகள் வழியதிரியப் போட்டிருக்கிறாங்கள் - எங்கயோ கிடந்து வந்த பரதேசி நாயஸ்” அவர்களைப் போக விட்டு பின்புறமாக அவர்களை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு இவ்வாறெல்லாம் அவர்நினைத்தார். அவரது மனம் திரும்பத்திரும்ப அவர்களை “நாயஸ்! பேயஸ் மூதேசியள்! என்று வைதபடியே இருந்தது. தன்னாலே ஒன்றும் ஆகாவிட்டாலும் கோபம் மாத்திரம் மூக்கைப் பொத்துக் கொண்டு இப்படியான நேரங்களிலே வந்து விடுகிறது அவருக்கு. என்னதான் செய்கிறது? என்று நினைத்துக் கொண்டு வீட்டுச் சுவரிலேசாய்ந்து கொண்டார். ஒரு நிமிஷம் ஒரு இடத்தில் நின்றால் பக்கத்திலிருக்கிற ஏதாவது சுவர், வேலி, அல்லது மரத்தின்மீது வலதுதோளைச் சாய்த்து நிற்பது அவர் வழக்கம்.
அவர் இப்பொழுது கோபப்பட்டபடி இருக்கிறாரா? அல்லது யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாரா? அப்படி என்ன ஒரு யோசனையோ? பின்னே யோசனை இருக்காதா? அந்த ஞாபகமெல்லாம் வருகிறதே இப்பொழுது அவருக்கு.
இந்திய அமைதிப் படை இங்கு வந்ததன் பின்பு, முதன்முதல் பேருந்திலே ஏறி, புடலங்காய் மாதிரி கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றபடி அவர் பயணித்த அந்தப் பிரயாணம்! பேர்த்தியை ஒருக்கால்போய் பார்த்துக் கொண்டு வருவோமென்று வவுனியாவுக்குப் போன அன்றைத்தினம்தானே இந்தச் சம்பவமும் நடந்தது.
இடம் ஆனையிறவு - இராணுவப் பரிசோதனை முகாம் - எத்தனை இளம் பெண்கள் என்னோடு சேர்ந்து அந்த பஸ்ஸிலே பிரயாணம் 9.dി.രൂ0% 6
ീമി

பண்ணிக் கொண்டிருந்தார்கள்? கைக்குழந்தையோடு இளம் தாய்மார்கள் அவர்களிற் சிலர்! இளம் பெண்களெல்லாம் குட்டைப் பாவாடை அணிந்தால் அது இந்திய இராணுவத்துக்கு வெறுப்பாம், என்று சேலையை அழகாக உடுத்தி நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டுவந்திருந்தார்கள். அந்த இடத்திலே பஸ்ஸாலே இறங்க வேண்டுமாம்’ என்பது அவர்களது சட்டம்! நானும் எல்லோரும் இறங்கியாவிட்டது - கொஞ்சதூரம் அதிலேயிருந்து நடக்கவும் வேண்டுமாம்! - நானும் அவர்களும் அவ்விடத்துக்கு நடத்தாகிவிட்டது - இனி முற்றுஞ் சோதித்தல் என்றார்கள் - ஆணிகளுக்கும் பெண்களுக்கும்தான்!முதலில் எல்லோருக்கும் அடையாள அட்டை பார்த்தார்கள் பிறகு பெண்பொலிசார் இன்னும் இந்தியாவிலிருந்து இங்கு வரவில்லை அதனால் நாங்களே பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது என்று சொல்லி, வந்த பெண்களை ஒருவர் பின் ஒருவராக சீலை மறைப்புக்குள்ளே வாருங்கள் என்று கூப்பிட்டார்கள். என்ன அநியாயம்?
அந்தப் பெண்களை, காந்தி மகான் உடுத்திய அந்த இடுப்புத்துண்டு அளவு உயரத்துக்கு, மேலே சேலையைத் தூக்கிப் பிடித்துக் காட்டச் சொன்னார்கள். தமிழ்ப் பெண்களெல்லாம்தொடைப் பக்கத்திலே வெடிகுண்டைக் கட்டிவைத்து மறைத்துக் கொண்டு போகிறார்களாம்! என்ன அநியாயமிது? இன்னுமொரு அக்கிரமத்தையும் அவர்கள் செய்தார்கள். போட்டிருக்கும் ரவிக்கைக்குள்ளும் குண்டு இருக்குமென்று சட்டைப் பின்னெல்லாம் அவிழ்த்து, பெண்களின் மார்பகங்களை தங்கள் கண்ணுக்குப் பார்க்கக் காட்டச் சொன்னார்கள். நாங்கள் தாய் நாடு என்று பெரிதாக மதிப்பளித்தோம் அந்தத் தாய் நாட்டிலிருந்து இங்கே வந்தவர்கள் எம் தாய்க் குலத்தையே இம்சைப் படுத்துகிறாார்களே? “ இப்படி இங்கே சோதனைச் சாவடிகளை வைத்து, தமிழ்ப் பெண்களை காமத்தால் உற்று நோக்கிக் கழிக்கின்றார்களே?
அந்த நினைவுகள் அவருக்கு அத்துடன் தடைப்பட்டு நின்று விட்டது. தூரத்தில்எங்கோ கருங்குயில் கூவிக் கொண்டிருந்தது. அதன் சோகமான குரலைக் கேட்க அவர் மனது வலித்தது. வழமையாக பலாலிப்பக்கம் விட்டு விட்டுக் கேட்கும் மெஷின்தூக்கிள் பொடபொடப்பு இப்பொழுது அவருக்குப் பசிக்கின்றது மாதிரி இருந்தது. நேற்றுப் போய் சாப்பாட்டுக் கடையிலே கணவாய்க் கறியோடு நண்டுக்காலும் சேர்த்து சோறு சாப்பிட்டதில், அது வயிற்றுக்குள்ளே போய் வார்களாவும் சவ்வுகளாவும் பிரிந்து சீரணிக்க முடியாமற் போனதோடு வயிற்று வலியையும் உண்டாக்கி விட்டதே? என்று கலங்கினார். “இன்று இரவு
நாலு இடியப்பம் சாப்பிட்டால் காணும்!” - என்று எண்ணிக் கொண்டு கடைப்பக்கம் போக பிறகு வெளிக்கிட்டார் தி.பி.அருாரணத்தச் 7
ിക്രി

Page 13
புழுக்கவாடையுள்ள பளுப்புநிற வேட்டிதான் உடுத்தியிருந்தது. அதைத்தழைய விட்டுக் கொண்டு அவர்நடந்தார். கடைவீதியால் அவர்போகும் போது, அவரை அறிந்து கொண்டதாகப் பாவிப்பவர்களின் முகத்தில் கூட பழக்கமின்மையின் திரை தான் இருக்கிறது. வீதியில் காண்கின்ற உறவினர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி வேர்களை ஊன்றப் பார்ப்பது கூட அபத்தம்தான் என்று அவருக்கு இப்பொழுது புரிகிறது. நான் கிழவன்' - தாங்கள் வந்து என்னுடன் கதை கொடுத்தால் தங்கள் மேல் என் பாரம் பிறகு விழுந்துவிடும் என்ற பயமா அவர்களுக்கு? - "யாருக்கு யாரோடு தான் நிரந்தரமான உறவு உள்ளது? தக்க தருணத்தில் எடுத்து அணியும் முகமூடிதான் உள்ளது” என்று நினைத்து அவர் தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டார்.
“பட்டினியில பிள்ளையளெல்லாம் அங்க வீட்டுக்குள்ள வதங்கிப் போய்க் கிடக்குதுகள் .கெதியா வீட்ட போய்ச் சேர வேணும்! “- அவருக்குப் பக்கத்தாலே எலும்புதெரியும் ஏழ்மையுடன் ஒரு பெண் விரைவாக நடந்து போகிறாள். தளர்வடைந்த அவளுடைய கையிலே இருப்பது ஒரேயொரு மரவள்ளிக் கிழங்கு மட்டும் தான்! எத்தனை பேருக்கென்று அதைப் பிரித்துக் கொடுத்து பசியாற்றப் போகிறாளோ? அதை நினைத்தபடி அவருடைய பார்வை முன்னால் தெரிந்த வைரவர் கோயில் கோபுரத்தைத் தொட்டு சறுக்கிக் கீழே வந்தது.
அவர் அந்த இலுப்பை மரத்துக்குக் கீழே இருந்த சாப்பாட்டுக் கடையில் போய் கதிரையில் குந்தினார். “தம்பி ம் - ம் - ம் நாலு இடியப்பம் தாங்கோ.” என்று தெளிவில்லாத தோய்ந்த குரலில் கேட்டார். நாலு இடியப்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கால்மரத்துப் போனது. மரத்துப் போகப் போக காலைமாற்றி மாற்றி முழங்காலுக்கு மேலே மடித்துப் போட்டுக் கொண்டார். “என்ன இடியப்பம் இது? பாதி இளகிபாதி இறுகிக்கிடக்கு” புறுபுறுத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இளந்தாரி வயதில் தட்டிலே வேணமட்டும் இறைய இறையச் சாப்பிட்டதெல்லாம் ஞாபகம் வருகிறது அவருக்கு. சாப்பாட்டுக்கான காசைக் கொடுத்ததும், தளதளப்பானதனது அகன்ற கையை நீட்டி மிகுதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் நடந்து முடிந்ததாகி விட்டது அவருக்கு. வீதியால் வரும் போது பார்த்துக் கொண்டுவந்த அந்தக் கோயிலுக்கு, சாப்பிட்டாகியதும் போனார்."வைரவா அப்பனே!” கண்களில் நீர் கழகழ' வென்று ஒழுகியது. உடனே கண்களை மூடிக்கொண்டார். கண்ணீர் விட்டதில் கொதிப்பேறியிருந்த அவருடைய நரம்புகள் சாந்தி பெற்றன. மூடிய கண்களை திறப்பதற்கு அவர் செய்த முயற்சியில் புருவங்கள் துடித்தன. ஒருவாறு கண்களைத் திறந்து கொண்டு கோயில் வாசலில் போய் இருந்தார்.
அதிலே இருந்தவாறு வானத்தைப் பார்த்துக் கொண்டு, பறந்து
.dി.ീരൂmä 8 அத்தி

மறையும் பறவைகளையும் தவழ்ந்து செல்லும் மேகங்களையும் மங்கலான தன் கண்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தார். கதிரவனின் சாய்ந்த ஒளிக்கிரணங்கள் அங்கிருந்த மரங்களின் இலைகளின் மீது வீசிக்கொண்டிருந்தது பகலை இரவுக்கு இட்டுச் செல்லும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நன்றாக இருள் சூழ்ந்து விட்டது."இதிலே இருந்ததில் எவ்வளவு நேரத்தைப் போக்கடித்து விட்டேன்” - என்ற நினைப்புடன் வீட்டுக்குப்போக அந்த வீதியாலே பிறகு நடக்க ஆரம்பித்தார். நடை அவரைக் குடிபோல் தள்ளுகிறது. அந்த இருட்டுக்குள் ஒன்றையும் அவரால் வள்ளிசாகப் பார்க்கவே முடியவில்லை. கண்களை முரட்டுத்தனமாக கசக்கிக் கொண்டு பார்த்தார். ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. இருள் தோற்றுவிக்கும் தோற்றங்கள் மட்டும் கண்ணுக்குள் விழுந்து கொண்டிருந்தன. காலடியில் ஏதோதடுக் -
‘ஐயோ’ காலில் உராய்ந்து விட்டது அந்தக் கல். நோவைத்தாங்கிக்கொண்டு முன்னால் நடந்தார்.
எப்பவோ செத்துப்போன மின்சார விளக்குகளுக்கு இன்னும் கூட உயிர் வரவில்லையே? - என்று நினைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தார். மின்சாரம் இல்லாத இடத்திலே வாழ்கிறவன் வானத்து நட்சத்திரங்களையும் நிலவின் ஒளியையும் நம்பித்த்ானே இரவு வேளைகளில் வெளியே நடமாட வேண்டும். அந்த நினைப்பில் அவர் தலையை நிமிர்த்தி மேலே பார்த்தபோது மின்னல் வானத்தில் கிளை பிரிந்து மறைந்தது. அதுவும் அவரது கண்களுக்கு பெரிதாகத் துலங்கிட வில்லை. அவருக்கு முன்னே அந்த வீதியால் ஒரு இராணுவ வாகனம் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தின் முகப்பு விளக்குகள் உமிழும் கண்களைக் குருடாக்கும் ஒளி வெள்ள வீச்சுகளில், வீதியில் நின்றபடியே அவர் தடுமாறினார். கண் இமைதட்டுகிற நேரம் தான், வாகனம் அவரைத்தாண்டும் வேளையில் பின் பக்கத்தால் அவரை ஒரு தட்டுத்தட்டி விட்டுப் போய் விட்டது. அப்படியே சுழன்று போய் பொத்தைக் கள்ளிப் பற்றைக்குள் விழுந்தார். அதில் விழுந்த கையோடு மொத்தக் கள்ளிகள் முள்கைகளால் அவருடைய உடம்பில் உரசி ரத்தக் கோடுகளை உண்டு பண்ணின. நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் ஊசிகள் குத்தின மாதிரி வலி அவர் ஒரு மாதிரி வாயை வெட்டி வெட்டி வலித்தார். இந்த நிமிடமோ. அடுத்தநிமிடமோ என்றவாறு தெரியும்படி வெட்டி வெட்டி இழுத்துக் கிடந்தார். புறாக்குஞ்சின் முனகல் போல் சத்தம் மட்டும் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பற்றைக்குள் கிடந்த அவரை அந்த வீதியால் போன ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. அவர் அந்த இரவு முழுக்க அதிலே கிடந்து வேதனைப்பட்டு பனியால் உறைந்தார். உதடுகளில், கைகால்களில் அவருக்கு உணர்வுமரக்க
தி.சி.அருாரனந்தச் 9 ക്രി

Page 14
ஆரம்பித்தது. விரைவில் மூளை மோசமாகப் பாதிக்கப்பட, நிறுத்த முடியாமல் அவருக்கு உடல் நடுங்கியது. விறைத்துக் கொண்டு வந்த உடம்பு, நிரந்தரமான கடைசி விறைப்பிலே அவருக்குப் பிற்பாடு கட்டையாகிவிட்டது.
அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் காலையில் இழவுச் செய்தி பறந்தது பேர்த்திமார்களுக்கு வவுனியாவில் இருப்பவள் பின்னேர வேளை பஸ்ஸில் வந்து சேர்ந்தாள். பொழுது படவும் திருகோண மலையிலிருந்து மூத்தவள் வந்தாள். இளையவளுக்கு நெஞ்சுவருத்தம்! அவள் ஓங்கி அழுகிறாள். அவளது குரலில் எருமைக் கன்றின் தீனம்! அவளது அந்த நோயின் குரல் கேட்டுக் கொண்டிருப்பவர்களை அஞ்ச வைக்கிறது. மூத்த பேர்த்தியின் அடிவயிற்றிலிருந்து கக்கலும் கரைசலுமாக, பீறிட்டு வருகிறது பிரளய ஒலி அவள் ஏங்கி ஏங்கி அழுகிறாள். அந்த இழவு வீட்டுக்கு வந்திருந்தவரெல்லாம் நேரமாகிவிட்டது என்று சொல்லி அவசரப்படுத்தினார்கள். பந்தலில் நின்ற ஆண்கள், அது வாகிவிட்ட அவரைச் சுமந்து கொண்டு சுடலைக்குக் கொண்டு போனார்கள். மயானத்துச் சடங்கெல்லாம் நிறைவேறி விடவும் ஈமத்தீ எரிகிறது.
கட்டையில் நெருப்புப் பற்றி எரிவதைப் பார்த்துவிட்டு, வந்தவர்களெல்லாம் சுடலையை விட்டு வெளியேறுகிறார்கள். இழவு வீட்டுக்கு வந்ததினால் தலையில் தண்ணீர் அள்ளி ஊற்றி தோய்ந்து விட வேண்டுமென்று அவசர நடை நடந்தார்கள். ஆனாலும் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திட அவர்களால் முடியவில்லை. அந்தக் கிராமத்துப் பக்கம் கேட்ட கண்ணிவெடிச்சத்தம் அவர்களைத் திடுக்கிடவைத்தது. அதன் காரணமாய் நேரே கிறிஸ்தவ தேவாலயத்தில் போய் அவர்களெல்லாம் தஞ்சமடைந்தார்கள். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் பற்றி இவர்களெல்லாம் இப்பொழுது கவலைப்படாத நிலை. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே இவர்கள் இப்போது ஓடி எங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
தாமரை (ஆகஸ்ட் - 2006)
தி.சி.அருாரனதிதச் 10 ø%4

இறுதிதுரி நூறு விதர்
இன்று காலை மழையும் மந்தாரமுமாகத் துயரந்தோய்ந்தது போல், நுவரேலியா நகரம் எனக்குத் தோன்றியது. எனக்கும் வெறுத்துப்போகும் “சீச்சீ” - யென்றதாய் மனசு கிடந்து சலித்தது. இன்றைய நாள் மட்டுமே இந்த விடியலை நான் பார்க்கக்கூடும், ஆனால் நாளைய விடியல் எனக்கு நிர்ணயமில்லை! என்று நினைத்துக் கொண்டு நான் தங்கி இருந்த அந்த ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினேன். ஹோட்டல் அருகாமையில் அந்த வீதியின் அருகே ஒரு பக்கம் வாடகைக் கார்கள் நிறுத்த வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை நான் பிறகு நாடினேன். அங்கு நின்றிருந்த வாகனங்களில் மூன்று நான்கு மோட்டார் கார் வாகனங்களைக் கடந்தும் முன்னாலே நான் நடந்து கொண்டிருந்தேன். ஒட்டுநர் இருக்கைகளில் அமர்ந்திருந்த அந்தக் கார்ச் சாரதிகள் என்னைக் கண்டு சிரித்தார்கள். நான் பதிலுக்குச் சிரிக்கவில்லை. (சிரிக்கக்கூடிய நிலையிலேயா நான் இருக்கிறேன்?) என்றாலும் எனக்குப்பிடித்த ஒரு கார்ச் சாரதியின் முகத்தை அவர்களுக்குள்ளே நான் தேடினேன். என்னைப் போல சிரிக்காமல் சாந்தமாயிருந்த ஒருமுகம் அவர்களுக்குள்ளேயிருந்து என்னைப் பார்ப்பது போல் தெரிய அவரண்டையில் போய் நான்நின்றேன். அந்தக் கார்க் கதவில் இறக்கிக்கிடந்த கண்ணாடிக்குள்ளாலே என்னைப் பார்த்து அவர் ‘எங்கே ஐயா போகவேணும்?” என்று
്.dി.eിത്രസ്ത്രക്രി ബി

Page 15
கேட்டார் பணிவாக, அவர் கேட்கவும் நான் அவரின் அருகில் சென்று அவரது கனிந்த கன்னத்துச் சதைகொண்ட முகத்தைப் பார்த்தேன். “இப்படி அளவான கதை பேச்சுத்தான் எனக்குத்தேவை” என்று என் மனத்துள்ளே நான் நினைத்துக் கொண்டு, ‘அங்கே உள்ள அந்த உலக முடிவின் பக்கம்” என்று என்நிலையை நினைத்துக் கொண்டு சோகமாக அவருக்குச் சொன்னேன். “வேல்ட் எண்ட் போகவா?” என்று அவர் நான் சொன்னதை ஆங்கிலத்தில் கூறிவிட்டு என்னைப்பார்த்துச் சிரித்தார். கையில் ரூபாய் புரளப்போகிறதென்ற நம்பிக்கையில் அவருக்கு இப்போது மகிழ்ச்சி. அவர் இப்போது சிரித்தது எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரை எனக்கு ஏலவே மனதுக்குப் பிடித்துக் கொண்டதால் ‘போவம் கெதியா அங்க?” என்று சொல்லிவிட்டு, காரின் கதவைத் திறந்து உள்ளே ஏறி பின் இருக்கையில் நான் அமர்ந்து கொண்டேன் “காரை எடும்” என்றேன் பிற்பாடு.
கார் அந்த மலைத்தொடருள்ள பாதைவழியே விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. அவர் கார் ஒட்டியபடி எனக்கும் பிறகு கதை சொல்ல வெளிக்கிட்டார். ‘பூரீலங்காவில் உள்ள எல்லா இடத்திலயும் பார்க்க, அந்த இடம்தான் பாக்க வடிவான இடம்! எல்லா இடத்திலயிருந்தும் இந்த இடத்தைப்பாக்க டூறிஸ்ட் வாராங்க. நீங்க என்ன யாழ்ப்பாணமா?” இப்போது அவர் தன் தலையைத் திருப்பி பின்னால் இருந்த என் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தன் பார்வையை நேரே பாதையின் பக்கமாகத் திருப்பிக்கொண்டார். என்றாலும் மேல் கண்ணாடிவழியாக பின்னால் இருந்த என்னை அவர் இடையிடையே பார்த்தார். நான் சாரதி ஆசனத்துக்குப் பின்னால் இருந்த என் இருக்கையை மாற்றி இடப்பக்கம் கதவோரமாய் தள்ளிப்போய் இருந்தேன். மேல்க் கண்ணாடியிலிருந்து அவர் என்னைப் பார்ப்பது எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. ‘என்ன நான் கேட்டன். தம்பி நீங்க யாழ்ப்பாணமா ஐயா?” அவர் மீண்டும் சப்தசுத்தமாய் என்னைக் கேட்டார். என் நெஞ்சுக் குமுறலுக்கிடையே நான் “ஓம்” - என்று மெதுவாக அவருக்குப் பதிலளித்தேன். அவ்வேளை அசட்டுக்கண்ணிர் என்கண்களில் நிறைந்துவிட்டது. அவருக்கு, கவனம் இப்போது வாகனம் ஒட்டுவதில் இருக்கவேண்டும், வீதியின் வளைவுகள் அதிகப்பட தெரியவும் அவர் கார் ஒட்டுவதில், கவனத்தை வைத்துக் கொண்டார். நான் இப்பொழுது யோசித்தேன்! இவரை விட இறுகிய முகமனிதனாக உள்ள ஒருவரைப் பார்த்து நான் பிடித்திருக்கலாமே என்று. எனது பார்வை கண்ணாடிக்கு வெளியே வெறித்தது. அது ஒரு இலக்குமின்றியதான வெறும் வெறிப்பு! அனைத்தையும் வெறுக்கும் வெறிப்பு மிக அதிக வன்முறையுடன் மொத்த உலகத்தையும் வெறிப்பதைப் போன்ற பார்வையில் அந்த மலைத் தொடர்களைப்
தி.சி.அருானந்தர் 12 eീമി

பார்த்துக் கொண்டேன். என்மனதுக்குள் என்னைக் கொன்றுதீர்க்கும் பயங்கரப் பரிசாசு ஒன்று வேட்டைப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு உறுத்தல். அந்த விஷமக்காரக் குட்டிச் சாத்தான் கிடந்து குதிபோடுவது போன்ற உணர்வு. மூக்கிலே எனக்கு இடுகாட்டின் நாற்றம் வந்து அடிக்கிறது. உடன் என் இருதயம் அப்படி அடித்துக்கொண்டது. கொஞ்சம் காய்ச்சல் அடிப்பது போலவும் ஒரு மாதிரியாக எனக்கு இருக்கிறது. மெல்லிய நடுக்கமும் பெருமூச்சும் என் உடலில் இருந்து வெளிப்பட, திரும்பவும் கதவுக் கண்ணாடிக்கு வெளியே தெரியும் இயற்கைக் காட்சிகளைப் பார்த்தேன். அந்த இடம் பூராகவும் என் கண்களில் ஒளியின் மினுமினுப்புச் சிறிதுமின்றி ஒரு முதுமைப்பருவம் எப்படியிருக்குமோ அப்படியாகத் தெரிந்தது. அவைகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க என் மனம் ஈடுபாடில்லாது போக நான் என் கண்பார்வையைத் திருப்பி காருக்குள்ளே என் முன்னாலிருந்த அந்தச் சாரதியின் பிரடிப்பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தன் வாகன ஓட்டுதலுக்கேற்ப தலையாட்டிக் கொண்டிருக்க, வேறு ஒரு இடமும் என்பார்வையைத் திருப்பாது நான் அவரின் பிரடியையே தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியே வெறுப்புடன் நான் நேரத்தைப் போக்கடித்தேன். கார் விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. நான் இன்னும் அவர் பிரடிப்பக்கத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் தன்தலையில் வளைந்த கத்திகளை நட்டாற் போலிருந்த தலைமயிர்களை இடக்கையால் தடவிக்கொண்டு ‘அந்த இடத்துக்கு நாங்கள் வந்து சேந்திட்டமையா.’ என்று சொல்லியவண்ணம் ஸ்டேரிங்கை சுழற்றி வாகனத்தைத்திருப்பி, வேறுவாகனங்களும் நின்றுகொண்டிருந்த அந்த வாகனத்தரிப்பிடத்தில் தன் மோட்டார்காரை ஒட்டிவந்து நிறுத்தினார். இறுகிப்போன சக்கை மனத்தோடு நான் அந்தக் காரிலிருந்து இறங்கினேன். அழுக்கு பட்டன் வைத்த என் மணிபர்சை காற்சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்து, சிப்பைத் திறந்து, அவருக்கு நான் காரின் வாடகைப் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். “நீங்கள் உவ்விடமெல்லாம் போய் வந்தபிறவு உங்களை திரும்பவும் உங்களிடத்தில் கொண்டுபோய் விடும் போதல்லவே நான் பணத்தை வாங்கிக்கொள்ளவேணும் “- என்றார் அவர். குளிர் காற்று வீறிட்டு வீசியது. நான் அவரைப் பார்த்து துயராந்த முறையில் புன்னகைபுரிந்தேன். ‘வேண்டாம் நான் திரும்புவது.” என்று சொற்களை றப்பர் போல் இழுத்தேன். "நீங்க என்னைப் பார்த்துக் கொண்டு இனி இதில நிக்க அவசியமில்ல. போகலாம்!” என்று நான் அவருக்குத் தலையை ஆட்டிக்கொண்டு பிற்பாடு சொன்னேன். ‘நான் இனிமேல் திரும்பிவராத வேறோர் உலகத்துக்கல்லவா இனிப்போகப் போகிறேன் இது தானே
.dി.ീnക്രി 13 eികഴി

Page 16
உண்மை!’ என்று எனக் குத் தானே அவருக்குக் கேட்காத அளவுக்குமெதுவான குரலில் சொல்லிக்கொண்டேன். உடனே நான் அவரைப் பார்ப்பதை விட்டுத்தொலைத்துவிட்டு, முன்னால் நடந்தேன். அந்த மோட்டார்கார் வந்தவழியே திரும்பிப் போவது போல் சத்தம் என் காதுகளில் பின்னாலிருந்து கேட்டது. குளிர் சுற்றிச் சூழ்ந்துள்ள அந்த இடத்திலே, கொஞ்சம் தூரவாய் நான் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த இடத்திலே என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்று பார்க்க என்பார்வையைச் சுழற்றினேன். மேடும், பள்ளமும், சமதரையுமான அந்த இடத்திலே, ஆங்காங்கே கலைந்த வாக்கில் பலபேர் நின்றுகொண்டிருந்தார்கள். நடுத்தர வயதுப் பெண்கள் தங்களுக்குள் ஏதாவது பேசிக் கொள்வதும், யாராவது பேசினால் கவனிப்பதுமாக நின்றார்கள். அந்த மேட்டு நிலப்பகுதியிலே நான்கு மரைக்குட்டிகள் நின்றுகொண்டிருந்தன. அவற்றுக்கு ஒரு பெண், தன் கையிலிருந்த வாழைச் சீப்புப் பழத்திலிருந்து, ஒவ்வொருபழம் பிய்த்து நீட்டி தின்னக் கொடுத்தவாறு இருந்தாள். அவள் போட்டிருந்த ஜீன்ஸ்’ முரட்டுப்பட்டுத் துணியில் இருந்தது. தசைப்பற்றான தன் தொடைகளை இறுக்கிப்பிடிக்கும் அளவுக்கு அதை அவள் அணிந்திருந்தாள். இவையெல்லாம் என்பார்வைச் சுழற்சியில் தானாய்ப் பதிந்தவைதான். எனினும் நானாக ஒன்றையும் அங்கே விருப்பத்தோடு பார்க்கவில்லை. புஷ்பம் அணிந்து சந்தணம் பூசி உல்லாசமாய் இருக்கிறதாக, எனக்குத் தெரிகின்ற அந்த நகர வாசிகளை நான் எண் மனநிலையில் இவ வேளை பார்க்கவிரும்பவில்லை. என் முடிவைத் தேடுகின்றவழியில் இவர்களை ஏன் நான் பார்க்க வேண்டும்? என்று நினைத்துக்கொண்டு அங்கே இருந்த அலுவலகத்தில் சென்று பணத்தைச் செலுத்தி பிரவேசச் சீட்டைப் பெற்றேன்.
நான் போக வேண்டிய வழிக்கு அந்த நேரம் கதவு திறக்கப்பட்டது. அதே நேரம் அந்த வழிக்கு அருகாமையில் உள்ள அந்தப்பாதையால் போவதற்கும் வழியைத் திறந்துவிட்டார்கள். அது இலங்கையின் இரண்டாவது பெரிய மலைப் பகுதியான கிரிகாலப்பொத்தை மலைக்குப் போகின்ற வழியென அங்கே எழுதிப் போட்டிருந்த அந்த எழுத்துப் பலகையில் உள்ள குறிப்பைப் படித்து நான் தெரிந்து கொண்டேன். என் பிரவேசச் சீட்டை அந்தக் கேற் வாசலில் நின்ற உத்தியோகத்தரிடம் கொடுத்தேன். அதை அவர் வாங்கிப்பார்த்து விட்டு “பிளாஸ்டிக் பொருட்கள், சொப்பிங்பைகள் வைத்திருக்கிறீர்களா?” - என்று என்னைக் கேட்டார். நான் "அப்படியொன்றும் என்னிடத்தில் இல்லை!” - என்றேன். அவர்: “நீங்கள் போகலாம்” - என்றார். நான் அவ்விடமிருந்து அந்தப் பாதைவழியே தனியே நடக்க ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் கொஞ்ச தூரம்
தி.பி.அருளானந்தச் 14
ീക്രി

தள்ளி போய்க் கொண்டிருந்தவர்கள் சிரிப்பும் கதையுமாகச் சென்று கொணடிருந்தார்கள். நான் அவர்களின் சிரிப்பையும் கதையையும் பார்த்துக் கொண்டு நடந்தேன். என் மனத்தில் தனிமையும் சஞ்சலமும் கருக்கிருட்டாய் மூடியிருந்தது. அந்த இருள் அடர்ந்து பரந்து உச்சத்தை அடைந்து நிலைத்து விட்டதைப் போல் இருந்தது.
நடந்துகொண்டிருந்த எனக்குப் பின்னால் யாரோ ஒருவர் வருவதாக ஒரு அருக்கு. நான் தலையை இடப்பக்கம் திருப்பினேன். எனக்குப் பின்னால் வருபவள் ஒரு வெள்ளைக் காரியென்று எனக்குத் தெரிந்தது. அவள் தன் விரிந்த பார்வையை என்மேல் விதைத்தாள். அவளது புருவவளைவில் கோரைப் புதர்கள் காடாய் அடர்ந்து சிரித்தன. அவள் “ஹலோ” என்று சன்னமான குரலில் உதடு பிரித்து விட்டு, விறுவிறுவென்று எனக்கு முன்னே நடந்தாள். நானும் அவளுக்குப் பின்னாலே என் நடையின் வேகத்தைக் கூட்டினேன். இந்த நிம்மதியற்ற என் நடையை நீடித்துக் கொண்டிருக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றியது. அந்தக்குளிருக்குள்ளே நடைக்கு என்கால்கள் நன்றாகத்தான் செயல்பட்டன. “பலிகொடுக்கும் நேரம் எல்லாமே நிசப்தமாகிவிடும்” . என்று என் மனதுக் குநான் இடையிடையே இப் போது சொல்லிக்கொண்டேன். எனக்குச் சொந்தமான அந்த நிம்மதியான உலகத்தில் நுழைந்துவிட வேண்டும்' என்ற அவசரம் என்க்கு வரவரக் கூடிக்கொண்டே வந்தது.
நான் நடந்துகொண்டிருந்த அந்தப் பாதையருகில், இருந்த புல்லுக்குள், ஒரு கறுத்தப் பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்ன என்று பார்த்து அதைப்படிக்கவும் தான் நான் வேண்டியிருந்தது “காக்கையைப் பார்ப்பதற்கென்றா இங்கே இவ்விடம் நீங்கள் வந்தீர்கள்” - என்றிருந்த அந்த வாசகம் என்னில் சினத்தை மூட்டியது. இந்தக் குளிர்பொங்கும் மலைப்பகுதியான இடத்திலே காக்கையை யார்தான் பார்க்கவருவார்கள்? காக்கை வாழக்கூடிய இடமா இந்த இடம்? காகம் இல்லாத ஊரில்லை என்று ஒரு கதைக்கு ஆரும் சொன்னாலும் இங்கே அந்தக் காக்கை சீவிக்கச் சூழல் ஏது இங்குண்டு? இந்த உலகமே ஏமாற்றுத்தானா? எனக்குவந்த ஆத்திரத்தோடு சட்டைக்கைகளைச் சுருட்டி மடித்துவிட்டுக் கொண்டு நடந்தேன்.
கனவொன்றின் நினைவு கூரல் போன்ற அந்த நிகழ்வுகளின் காட்சியடுக்குகள், என் நினைவிலே முடிவில்லாத வரிசையில் வரத்தொடங்கின. சரியாக அந்நினைவு ஊசிபோல் ஏறியது. அவளுடன் நான் பழகிய அந்த நிகழ்வு வாழ்வெல்லாம் மங்காத ஒளி வீசிய இனிமையிலும் இனிமையான நினைவாய், என் மனத்தில் இப்போதும் தான் நிலைத்திருக்கிறது. ஆனாலும் ஏன் அவள் என்னைப் பிறகு ஏமாற்றினாள்? கனடா மாப்பிள்ளை என்று அவளுக்கு ஒரு கலியாணம்
தி.சி.அருளானந்தச் 15 MAM

Page 17
பேசிவர என்னைப் பிறகு அவள் கைகழுவி விட்டாளே? ஆரம்பத்தில் அவள் என்னுடன் பழக்கமான நாட்களில் அருமையிலும் அருமையாக என்னைப்பார்த்து இன்முகம் காட்டி புன்னகை புரிந்து விட்டு, தனக்கு அக்கம் பக்கம் நிற்கும் இளைஞரில் கர்வமாகப் பார்வையைத் திருப்பும் காட்சி என் மனத்தைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் சொஞ்சமாக அவள் என்னுடன் நன்றாகத்தான் பழகினாள் எத்தனையோ இதயங்கள் அவள் நிழல் ஆவதற்குத் துடித்துக்கொண்டிருக்கும் போது அவள் என்மீதுதான் அன்பாய் இருந்தாள் நான் வேறு ஒன்றைப் பற்றியுமே சிந்திக்காது அவள்மேல் காதல் கொண்டிருந்தேன். உனது பெயரை எத்தனை தரம் சொன்னாலும் வாய் அலுக்காது’ என்று நான் அவளிடத்தில் ஒருநாள் சொன்னேன். என் ஒவ்வொரு செய்கையிலும்’ எனக்கு அவள்மேல் உள்ள காதலை நான் அன்று வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். அவளுடைய கண்கள் எவ்வளவு பெரியகண்கள், எல்லாவற்றையும் கவனிக்கும் கண்கள்! ஆனால் புரிந்து கொள்ளமுடியாத ஏதோ உணர்வுகள் அவள் கண்களில் தென்பட்டன. அவள் என் செய்கைகள் ஒன்றையும் கவனியாது அகம்பாவம் மிக்க மெளனத்தைக் கடைப்பிடித்தாள். ஒரு நாள் அவளிடம் நான் என்காதலை, என் மனதைத் திறந்து சொன்னேன். அவள் கதிரையில் உட்கார்ந்தபடி தன்னுடைய கொலுசு பூட்டிய பாதத்தினால் தரையில் தட்டியபடி என்னை ஏளனமாகப் பார்த்தாள். என்னை அவமதிக்கும் அற்புதமான ஒரு எள்ளல், அவளுடைய மேல் உதட்டில் பாவனையாக வெளிப்பட்டது என் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு என் காதலைச் சொல்லி அவளிடம் நான் கெஞ்சும் போது தன் கண்களைத் தணித்துக் கொண்டு அவள் என்பார்வையைத் தணித்துக்கொள்ள முயன்றாள். ‘அப்படியானால் நீ என்னில் அன்பே வைக்கவில்லையா? என்னை நீ விரும்பவில்லையா?” (அவள் இன்னும் சந்தேகப்படுகிறாள் என்று நான் நினைத்தேன்) என் சித்தத்துக்குக் கட்டுப்படாது பேசுவதைப் போல எனக்கு இருந்தது. என் குரல் கடுமையாக, காட்டுத்தனமாக கடிக்கிறாற்போல அவளுக்கு இருந்திருக்க வேண்டும். அவள் என் முகத்திலடித்தாற்போல சிரித்தாள். அவள் உதடுகள் இப்படிச் சிரித்துச் சிரித்துத்தான் இறுகியிருக்குமோ” என்பது போல எனக்கிருந்தது. ஈரக் கருமுந்திரிகளெனக் கறு கறுத்துப் பளிச்சிட்ட தன் கரிய விழிகளால் என்னை அவள் பார்த்தாள். தலையை அசைவின்றி அசைத்துக் கொண்டாள். ‘நீங்கள் என்னை ஒரு நண்பியாக மாத்திரம் நினைத்தால் உங்களைப் பற்றிய என்நினைவு மேலும் உன்னதமாகிவிடும். இந்த நினைவை நான் எப்போதும் கண்ணின் கருமணியெனப் பாதுகாப்பேன்" என்றாள் தீர்மானமாக, அவள் தன் வாதங்களின் விசேஷத் தெளிவை தனக்குத்தானே மெச்சிக் கொள்கிறாளா? இதைக் கேட்கவும் எவ்வளவு
്.dി.eിത്രസ്ത്രി 16 eീക്രി

பாதிப்பு எனக்கு? என் ஆயுட்கால முழுமைக்கும் இது காணுமே எனக்கு? எனக்கேற்பட்ட திகைப்பில் பேச நா எழவில்லை. நெஞ்சு நெருக்கென்றது மாதிரி ஆகிவிட்டது எனக்கு திடுமென நான் தொண்டு கிழமாகக் கூனிப்போய், கண்கள் ஒளியிழந்து, முகத்தில் சுருக்கங்கள் விழுந்துவிட்ட நிலைக்குப் போய்விட்டதாக உணர்ந்தேன். என்றாலும் என்னை ஆற்றிக்கொண்டு மீண்டும் பல முறை அவளிடம் கெஞ்சினேன். ஆனால் அவள் மேலும் மேலும் ஆர்வமடைந்து என்னுடன் வாதாடினாள். உன்னுடன் உள்ள நட்பு முடிந்து விட்டது என்றாள். 'எல்லாம் முடிந்து விட்டதாம்” எவ்வளவு கொடுரமான கத்தரிக்கப்பட்ட வார்த்தைகள். கடைசியாக நான் வார்த்தைகளை விழுங்கிட்டு ஒரு கட்டைமாதிரி அசையாமல் நின்றேன். அப்படி நின்றுகொண்டு நான் அவளது கண்ணுக்குள் எட்டிப் பார்த்தேன். ஆம் நான் நினைத்தது சரிதான்! அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். எனக்கு ஆத்திரம் வந்தது என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நானும் அவளைப் போல் சிரிப்பதற்கு முயன்றேன். அது ஒரு மோசமான முயற்சியாயிருந்தது. சிரிப்பு வரவில்லை எனக்கு, ஆனாலும் என்னுடைய முகவாய் அழுகைக்காக அதிர்ந்து கொண்டுதான் இருந்தது.
அவள் அள்ளியெறிந்தது போல என்னை அலட்சியமாகப் பேசிய பிறகு அவளுக்கு முன்னாலே நான் பிற்பாடு நின்றுகொண்டிருக்கவில்லை. ஏமாற்றுவது உனக்கு இரண்டாந் தோலாகிவிட்டது. ஒரு ஆணை அவன் மனத்தின் அடி ஆழம்வரை போய் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடக்கூடிய பெண் நீ” - என்று அவளுக்கு சுடச்சுடப் பேசிவிட்டு என்வீட்டுக்கு நான் வந்தேன். அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்து, அந்த மனப்புயலால் காற்றில் அலையும் சருகுபோல் என் உடம்புகுலுங்கியது. கானல் நீரைக் கண்டமான்கள், தாகத்தைத் தணித்துக் கொள்ள உயிரைத் கொடுத்து ஓடி ஒடி ஒடி கடைசியில் துள்ளி விழுந்தே செத்துப்போய்விட்ட கதைதான் என்கதையும் என்று, என் வீட்டில் இருந்து கொண்டு என் காதல் தோல்வியையும் அவள் எனக்குச் செய்த துரோகத்தையும் நினைத்து உருகி உருகி நான் உளுத்தேன். ஓர் ஏழை அனாதை போல நான் அழுதேன். இருட்குகையில் ஒதுங்கி விட்ட நிலைபோல் அன்றிரவு என் படுக்கை அறையில் நான் நேரத்தைக் கழித்தேன்.
அடுத்த நாள் காலை, அந்த வீதியாலே நான் போகும்போது அவள் என் முன்னே எதிர்ப்பட்டாள். ‘நான் இங்கு தங்கியிருக்கப் போறவளல்ல இன்னும் கொஞ்ச நாளில் இந்த இடத்தைவிட்டு கனடா போகிறவள்” - என்று எதிரே நான் வரும்போது அறிவித்துச் சென்ற அந்த முகபாவம் அவளிடம் இருப்பதைக் கண்டேன். எனக்கு வேல் கம்பை வயிற்றுக்குள் செருகியது மாதிரி அப்போது இருந்தது. அந்தமன வேதனையுடன் இந்த வாழ்க்கையே இனி எனக்கு வாழ்வதற்கு வேண்டாம் என்றதைப் போல் உடனே எனக்கு ஆகிவிட்டது. அந்த அவமதிப்பும்
മ.deത്രസ്ത്രി 17 eീഴ്കി

Page 18
அவமதிக்கப்பட்ட அகம்பாவமும் எனக்குள்ளாலேயே மேலோங்கினதால் நான் என்னைப் பழிவாங்கவிரும்பினேன்.
இங்கு வந்து நடந்த நடையில், நான் சேரவேண்டி நினைத்து வந்த கடைசி மலையின் அருகே நான் வந்துவிட்டேன். அந்த மலைப் பாறையெங்கும், அரளிப்பான காடு என் கண்களுக்குத் தெரிகிறது. மலையில் ஏறி உச்சியில் போய் நிற்க உடல்குளிர்ச்சியாக இருக்கிறது எனக்கு. சிகரத்திலிருந்து பாதாளம் என்னை இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சரிவில் ஒருவர் சறுக்காமல் இருக்கமுடியாது என்றதைப்போல் தெரிந்த இடத்துக்கு இன்னும் நான் நகர்ந்தேன். என் நெற்றிப்பொட்டிலே குளிர்ச்சியான உணர்ச்சி பரவியது என் நெற்றி சில்லிட்டது. கடவுளுக்கு முன்னால் பேசுவதைப்போல ‘நான் இதிலே விழுந்து தற்கொலை செய்யப்போகிறேன், தற்கொலை செய்யப்போகிறேன்” என்று அந்த உண்மையை நான் வெளியே சொல்லிக் கத்தினேன். வார்த்தைகள் அங்கே அவசியமில்லை என்பது மாதிரி எனக்கும் பிறகு அது விளங்கியது. அவள் நினைவை இத்தருணம் நான் வரவழைத்துக் கொண்டேன். சிலவினாடிகள் நான் அசையவுமில்லை, மூச்சு விடவுமில்லை. என் உணர்ச்சிக்கும் மனதுக்கும் நான் முறுக்கேற்றிக் கொண்டு அவள் நினைவு என்னைக் கீழே தள்ளிவிடுவதை நான் எதிர்பார்த்தபோது:
மெளனம் தொடர்ந்தது என் காற்சட்டைபையிலிருந்த கைபேசி கெக்கட்டமிட்டுச் சிரித்தது. அந்தச் சிரிப்பை நான் நிறுத்தினேன். அதிலே கேட்டது அவள் குரல்தான்! அழகாகக் கதைத்தாள்! “பேசிவந்த அந்தக் கலியாண சம்பந்தம் தனக்கு வீட்டிலே குழம்பிவிட்டதாம். அதிலிருந்து அவளுக்கு சதா என் நினைப்பேதானாம்.” நான் இப்பொழுது சிரித்தேன். “இந்தப் பாதையில் இனிமேல் எனக்குப் போகமுடியாது உலகம் இங்கே முடிந்து விட்டது மாதித் தெரிகிறது எனக்கு. இந்த மலையில் அதன் உச்சியில் ஏறிப்போய் இப்போ நான் நிற்கிறேன்!” என்றேன் நான்' அவசர அவசரமாக, "பிளிஸ் உங்கள் மனதை இனிக் குழப்பிக் கொள்ளாதீர்கள்?” என்றாள் அவள்! “இந்த மலை உச்சியிலிருந்து இதோ இப்பொழுதே நான் உன்னிடம் இறங்கிவருகிறேன்” - என்றேன் நான்! ‘நானும் என் நிலையிலிருந்து நன்றாக இப்போ இறங்கியே நிற்கிறேன், என்னை உடனே வந்து சந்தியுங்கள்!” என்றாள் அவள். எனக்கு இப் பொழுது வாழ்க்கை அவசியம்! வாழ்க்கை! என்கின்றதைப்போல் மனம் மாறிவிட்டது. என் உயிரும் உணர்வும் மகிழ்ச்சியில், அளவிட்டுக்கூறமுடியாத மகிழ்ச்சியில் திழைத்திருக்க, மலையிலிருந்து கீழேவர இறங்கிக்கொண்டிருக்கிறேன்.
தாமரை (GuD- 2007)
..ീരൂസ്ത്രി 18 அத்தி

C4DC
அ ந்த இந்திய இராணுவத்தின் தலைவன் எங்கள் வீட்டை வந்து பார்த்துவிட்டுப்போய், இன்று ஆறாவது நாள் எங்களுக்கு மிக மெதுவாக நகர்கிறது. அவர் வந்து எங்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டுப்போன அந்தச் சனிக்கிழமை நாள் தொடங்கி, எங்கள் கண்பார்வையிலெல்லாம் கவலை வந்து அடையாய் அப்பிவிட்டது.
"திடுமென்று தங்கள் கூடாரங்களுடன் வந்து இங்கு அவர்கள் எங்கள் காணி வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டால், பிறகு நாங்கள் இங்கிருந்து வீட்டால் இல்லாமல் உடனே எங்கேயாவது எழும்பிப் போக வேண்டியதுதான் ” என்று நான் குசினியில் வந்து சாப்பாடு சாப்பிடுகிற நேரமெல்லாம், என் மனைவி இதையே திரும்பத்திரும்ப எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் அதைச் சொல்லச் சொல்ல, எனக்கும் அதைக் கேட்கக் கேட்க, எல்லாமே மனதுக்குள் கிடந்து புழுங்கிப் புழுங்கி அவிச்சலாக இருந்தது. வீட்டுக்கு வந்தால் தான் அவள் அதைச் சொல்ல மூளை உளைச்சலாகிறது என்று பார்த்தால், வெளியாலேயும் இந்த ஊர்க்காரர்கள் இதையே என்னிடம் கேட்டுக் கேட்டு நெஞ்சைக் குத்திப் பிய்த்தது, போல வலியை உண்டாக்கி விட்டிருந்தார்கள்.
“என்ன. அந்த ஆமிக்காரர் உங்கடை வீட்டுக்கு வந்து அந்த வீட்டையும் வடிவாய் பாத்திட்டு, பிறகு வெளிவளவு முழுக்கலும் சுற்றிப் பார்த்துக் கொண்டு போனவையாம்.? அவங்களுக்கு உங்கட காணியில
தி.சி.அருள%ரந்தச்
ീക്രി

Page 19
நல்லாக் கண்பட்டிட்டாக்கும். உங்கடை அந்தப் பெரிய விசாலமான வளவும், அந்த வளவுக்கநிக்கிற பெருத்த பெருத்த நிழல் மரங்களும், மேலால நிக்கிற நல்ல தண்ணிருள்ள அந்தக் கிணறும், ஒரு பெருத்த ஆமிப்பட்டாளமே அதில வந்து இருக்க நல்ல வசதியான இடந்தானே.?” என்று அவர்கள் அபிப்பிராயம் சொல்லவும், எனக்கு நெஞ்சில் நன்றாகப் பயம் பிடித்து விட்டது. நான், இவர்களுமெல்லாம் இப்படிச் சொல்கின்றார்களே' என்று மனசுக்குள்ளாக அவர்களை நன்றாகத் திட்டித் தீர்த்தேன். என்றாலும் அவர்கள் சொன்ன பிரகாரம், அப்படியாகப் பிறகு ஏதும் எனக்கு நடந்து விடுமோ? என்று நினைத்துப் பயந்து கொண்டு, அன்று காப்டன் எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது அவர் என்னுடன் கதைத்ததையும், வீட்டைச் சுற்றிப் பார்த்ததுமான சம்பவங்களையும் திரும்பவும் நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன்.
அன்று என் வீட்டுக்கு வந்த அந்த அச்சுவேலி இராணுவப்படை அணியின் தலைவர், மெழுகுதிரி போலத்தான் ஒரு வெளுறிய வெள்ளை நிறமுடையவர். உயரமான லட்சணமான உருவமும், கடுகடுப்பு வாய்ந்த முகபாவமும், கருடமுக்கு என்று கூறுவார்களே. அதைப் போன்ற மூக்கையும் அவர் அமையப் பெற்றவர். கன்னத்தில் இறங்கி காதைத் தீண்டும் கூரிய மீசையும், அந்த மீசையின் இறக்கம் வரை கன்னத்தில் சயிற்பார்ன்ஸ்சும் அவர் வைத்திருந்தார். தலைமுடிசுருள்சுருளாக அவருக்கு இருந்தது. அவர் விடியல் போதிலே வெள்ளை நிறத்து பனியன் சோட்ஸ்சுடன், அந்தச் சங்கானை வீதியால் நடந்து, ஒட்டகப்புலம் தேவமாதா கோயில் மட்டும்போய்ப் பிறகு அங்கிருந்து திரும்பி வருகிறவர். ஆனாலும் அவர் தனியத்தான் மாத்திரம் அந்த வீதியால் நடந்து போகிறவரல்ல, அவருக்கென்று முப்பது சிப்பாய்கள் வரை அவரைக் காபாந்து பண்ணிக் கொண்டுதான் துவக்குகளுடன் அவருக்குப் பிறகாலே நடந்து போவார்கள். அந்தச் சிப்பாய்களின் இந்த எண்ணிக்கைக்கணக்கு, நான் சரியாக அவர்களைப் பார்த்து எண்ணி வைத்துக் கொண்டதுதான். இப்போ அதிலே போகின்ற அவருக்கு ஏதும் ஒரு விபரீதம் இந்த வீதியில் போகும் வேளையில் நடந்து விடாது, திரும்பியும் அவர் வந்து, தன் பாசறைக்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டுமென்று, நானும் என் குடும்பத்தவரெல்லாம் எங்கள் தென் மூலைக்கோயில் புனித சூசையப்பரை நெஞ்சில் ஆழமான பக்தியோடு நினைத்துக் கொண்டு அவ்வேளையில் மன்றாடிக்கொள்வோம். என் குடும்பம் மட்டுமல்ல இந்த வணக்கத்தைச் செலுத்துவது' எங்கள் ஊர் - எங்கள் ரத்தமான சொந்தக் காரர்களுக்கெல்லாம் இது தான் அப்போது கடவுள் மன்றாட்டுச் செபமாக
960LDulb. தி.சி.சுதாரத்தச் 20
ീമി

அன்றன்றுள்ள எங்களப்பம் எங்களுக்கு ஒன்றுதாரும்' - என்கிற தங்கள் வாழ்க்கைத்தேவைக்கான வேண்டுதல் செபங்களெல்லாம் அந்தக் காப்டன் பாசறைக்குப் போய்ச் சேர்ந்ததன் பிறகுதான் - பிறகு அவர்கள் தங்களுக்காகவென்று மன ஆறுதலாக இருந்து கொண்டு சொல்லிக் கொள்வார்கள்! அப்படியான நிலைபரத்திலே தான், இந்த ஊரிலுள்ள சனங்களுக்கு இவர்களது வெளி நடமாட்ட மெல்லாம் மனதைப் போட்டு சித்திரவதை செய்து கொண்டிருந்தன.
புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இவ்விடங்களிலே யுத்தம் ஆரம்பித்திருந்தாலும், அந்தக் காப்டன் என்று நான் குறிப்பிடுகின்ற அவர், எங்கள் கிராமத்து வீதியாலே போகும் போது, இங்குள்ள பொது மக்கள் யாரையாவது கண்டுவிட்டால், அமைதியான முகத்தோடு அவர்களைப் பார்த்து அவர் உடனே அழகாகச் சிரிப்பார்.
“காலை வந்தனம்.!” - என்று தணிந்த குரலில், ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுத்தான், அவர் பிறகு தன் நடையைத் தொடர்வார். அவர் எப்படித்தான் அன்பாகச் சிரித்தாலும், வந்தனம் சொல்லிவிட்டுப் போனாலும், எங்களைப் போன்ற யாவருக்கும் இந்த இராணுவத்தினரது குணம் எப்படியென்று நன்றாக அது தெரிந்த தொன்றுதானே? இவை எல்லாமே தெரியவருவதற்கு எங்களுக்கு எவ்வளவு கூஅனுபவம் இந்தயுத்தம் எங்கள் பிரதேசங்களில் ஆரம்பித்த காலத்திலிருந்து கிடைத்திருக்கிறது.
முன்பு இலங்கை இராணுவம் எம்மிடங்களிலே, ஆக்கிரமித்தல் யுக்தியோடு முன்னேறி வரும் போது, அவ் வேளையும் இராணுவத்தைப்பற்றிய சகல துஷ்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எல்லாருமே பார்த்தோம் அவர்கள் இருந்த காவலரண்களிலே எவ்வளவோ கொடுமைகளை அவர்கள் அதில் இருந்தவாறு எங்களுக்குச் செய்கையில், நாம்அவற்றை நன்றாக அவ்வேளையில் அனுபவித்துக் கழித்தோம். எங்களைப் பார்த்துச் சினேகிதமாகச் சிரித்துப் பேசிய அவர்களே தங்களுக்கு ஏதாவது கெடுதல் நடந்துவிட்டால், என்ன ஏது? என்று ஒரு கேட்டுக் கேள்வியுமில்லாமல் அதிலேயே எங்களைப் பிறகு துவக்கால் சுட்டும் தள்ளி விடுவார்கள் என்பது இங்குள்ள தமிழர்கள் யாவருக்கும் தான் அது தெரிந்ததான ஒரு விஷயம் தானே?
தங்களுக்கு ஒரு கெடுதலென்றால் தங்கள் எதிரில் கண்ணில் எம்பிட்ட அப்பாவிகளான சனங்கள் ஆரையும் சுட்டுத்தள்ளி விட்டு; அவர்களைப் புலி' - என்று முத்திரை குத்தி விடுவது தானே அவர்களுக்கும் முடியுமான தொன்று. அப்படியான அவர்களைப் போலத்தானே இந்திய இராணுவமான இவர்களும்! இவர்கள் புலிகளோடுதான் தங்களுக்கு யுத்தம் என்று
நீ.பி.அருஈரனந்தர் 21 Møll?

Page 20
அதைத்தொடங்கிய போது, யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு உள்ளே நுழைந்து, நோயாளிகளாகப் படுத்துக் கிடந்த அப்பாவிச் சனங்களை துவக்கால் சுட்டுத்தள்ளிக் கொன்றார்கள். அங்கு வைத்தியசாலையில் வேலைசெய்கின்ற தாதிகள், டாக்டர்கள் என்று கடமையிலிருந்த அவர்களையும் சுட்டுக் கொலை செய்து விட்டுப் போனார்கள்.
அமைதிப்படை என்று தமக்கு ஒரு முகமூடியை அணிந்து வந்து, இங்கு தமிழர்களான எங்களை இப் போது ஏமாற்றி விட்டிருக்கின்றவர்களல்லவா இவர்கள்? இலங்கை இராணுவத்தை விட இன்னும் நூறு மடங்கு இம்சை எங்களுக்குத் தருகிற இராணுவம்தானே இப்போது இங்கே வந்திருக்கிற இந்த இந்திய இராணுவம்!
இங்கே எனக்கும் அந்த இராணுவத்தின் தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட முதல் சந்திப்பு. அன்று காலையில், அவர் என் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியால் செல்கின்ற வேளையில் தான் நிகழ்ந்தது. ஆமாம் . காலையில் நான் வெளி விறாந்தைக் கதவைத் திறந்து கொண்டு, அப்போது வீட்டால் இருந்து வெளிக்கிட்டேன். வழமையாக என் கடை வியாபாரத்தைப் போய்ப் பார்ப்பதற்கென்று' நான் வெளிக்கிடும் நேரம்தான் அது நான் வெளிக்கிளம்பும் அந்த நேரத்தில் அவர் அந்த வீதியாலே போவதில்லை என்பது நான் நன்கு அறிந்த விஷயம்! என்றாலும், இன்று அந்த நிலைமாறி எனக்குக் கஷ்ட காலம் பிடித்தது போலத்தான் ஆகிவிட்டது. நான் வெளிக்கிடும் அந்த நேரத்தில், இருந்தாற் போல தொடங்கிய பலத்த காற்றொன்று, எங்கும் வீசிக்கொள்ளத் தொடங்கியது. அந்தக் காற்றாலே என் வீட்டின் விறாந்தைக்கு அருகே நின்ற அந்தப் பெரிய மாமரத்தின் கிளைப் பகுதிகள், அது வீசிய திசைக்கு இலைகளைக் குவித்துக் கொண்டு அலை வீசியதைப்போல ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன. அந்த டிப்பிசன் மாமரத்தில் வழமையை விட இம்முறை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாங்காய்கள், காய் காய்த்துத் தள்ளியிருந்தன. அதிலே உள்ள ஒவ்வொரு காயும் அரைக் கிலோவைத் தாண்டும் அளவுக்கு அபாரக்காய்ப்பு. இந்த மரத்திலே, கீழ்க்கிளையில் தாழ்ந்து தொங்கும் காய்கள், அதாலே நான் நடந்து போகும் போது தலையில் இடிக்கும் தடவும்! அப்படியாகவும் இருந்தது.
இப்போது அந்தக் காற்றின் தூக்கியடித்தலுக்கு, பாரம் தாங்க முடியாதிருந்த அந்த இரண்டு முற்றிய மாங்காய்கள் காம்பு ஒடிந்த பாலோடு அந்த விறாந்தை ஒட்டின் மேலேதடாரென்று அடித்தபடி அப்போது அதிலே வீழ்ந்தன. அந்த இரண்டு மாங்காய்களும் ஒடுகளைச் சகவடிவத்தில் வெடிப்புண்டாக்கி விட்டு, தக்கென்று நிலத்திலே பிறகு விழுந்தன. நான் உடனே அதிலே போய், அந்த ஓடுடைந்த வெளிச்சங்களைப் பார்த்தேன். அதிலே உடைந்த ஒடுகளைப் பார்த்து ിഞ്ഞച്ഛ്" 22 AlAs

கணக்கெடுத்துக் கொண்டு முற்றத்தடிக்கு நடந்து வந்தேன். நான் ஒடுடைந்து பாழாய்ப் போன மனக்கவலையோடு தலையைக் குனிந்தபடி போய் படலையடியில் என் தலையை நிமிர்த்த.
காப்டன் சரியாக அந்த நேரம், கேற்வாசலடிக்கு முன்னால் உள்ள அந்த வீதியில் போனார். உடனே அவர் என்னைப் படலையருகில் வரக் கண்டுவிட்டார். என்னைக் கண்டதும், அவரின் முகம் சட்டென்று மலர்ந்தது.
ஆனால்,அவரைக்கண்ட மறுவினாடியே, கருமேகங்களுக்கிடையே சிக்கின மதியமென எண்முகம் இருண்டது.
அவர் யாரையாவது கண்டால், உடனே சொல்வது போல என்னையும் கண்டவுடன் “குட்மோனிங்!” என்றார்.
அவர் அதைச் சொல்லி விட்டு, அப்படியே நடந்து கொண்டு போய் விடுவாரென்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் தன் நடையில் நிறுத்தம் போட்டு விட்டு, உடனே அதிலேயே பனங்குத்தியாய் நின்றுவிட்டார். அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த இராணுவச் சிப்பாய்களெல்லாம், மதில் சுவர் அருகே போய், காட்டுப் பல்லி போல் அதில் ஒட்டிக் கொண்டு நினறுவிட்டார்கள். அவர் என்னைப் பார்த்துப் பிற்பாடு சிரித்துவிட்டு. V6,
“இது உங்கள் சொந்த வீடா? அல்லது அரசாங்கத்துக்கு உரியதா..? ” - என்று தன் பளிச்சிடும் கண்களுடன் கேட்டார். எனக்கென்றால் அவர் கேட்ட கேள்வியே புதினமாக இருந்தது. “ஏன் அவர் என்னை இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்.? ” - என்ற ஒரு பயத்தை என் மனசுக்குள்ளாக வைத்துக் கொண்டு
“இது எங்கள் வீடு தான்! எங்கள் சொந்த வீடுதான். அரசாங்கச் சொத்தல்ல." - என்று எழுச்சியற்ற குரலில் வார்த்தைகளை இழுத்தவாறு நான் அவருக்குச் சொன்னேன். ஆனாலும் நான் சொன்னதை அவர் கேட்டுச் சிந்திக்கிற மாதிரியாக எனக்குத் தெரிந்தார்.
“இந்த வீட்டிலே எத்தனை பேர் இருக்கின்றீர்கள்.?” என்று சிறிது மெளனம் காத்துவிட்டு பிறகு அவர் என்னைக் கேட்டார்.
"நானும் மனைவியும் பிள்ளைகளுமாக, எல்லாமாக ஆறுபேர்! ” - என்று வாயில் ஊறிய எச்சிலை விழுங்கிக் கொண்டு, நான் அவருக்குச் சொன்னேன். இப்போது வீசிய அந்தக் காற்றுக்கும், கொதித்த என் உடல் ஆறாமல் நெற்றியிலும் கழுத்திலும் எனக்குச் சிறிது வேர்வை துளிர்த்தது.
அவர் தன் புருவங்களை கூட்டிச் சுழித்தபடி, என்னிலிருந்த பார்வையைத் திருப்பி, என் வீட்டு விறாந்தையை அதிலே நின்றவாறு பார்த்தார். அவரது ஒளிமிகுந்த கண்கள் அப்போது இன்னும் ஒளிர்ந்ததைப் போல எனக்குத் தெரிந்தது. அவர் அங்கே பார்க்கிறார் என்பதை அறிந்து
தி.சி.அருா%னந்தச் 23 eിക്രി

Page 21
கொண்டு, நானும் அவரது பார்வைக்கு இடையூறு செய்யாமல் கொஞ்சம் தள்ளி நின்றேன். அவர் நின்ற இடத்திலிருந்து, அந்த வெளி விறாந்தையைத் தன் பார்வையால் அளந்தார்.
நான் அவரது முகத்தில் ஏதும் மாறுதல் புலப்படுகிறதா? என்று கவனித்துக் கொண்டு, பதற்றத் தோடும் பயத் தோடும் நின்று கொண்டிருந்தேன். அவர் அந்த விறாந்தையைப் பார்த்த போது தன் முகத்தில் வெளிப்படுத்திய வியப்பை உடனே நான் கண்டு பிடித்து விட்டேன். அந்த விறாந்தையை முதலில் பார்க்கும் போது வேறு எவருக்கும உடனே ஏற்படும் ஒரு வியப்புத்தான் இவருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் உடனே உணர்ந்து கொண்டேன். வேறு யாருமாக இருந்தால், அந்த விறாந்தையை அவர்கள் பார்த்த கணத்தில்: “என்ன இப்பிடிப் பெரிய ஒரு வெளி விறாந்தையாய் இந்த வீட்டு விறாந்தையைப் பார்க்க இருக்குது.? இவ்வளவு பெரிசாய் உதைக் கட்டி விட என்ன தேவை.?” - என்றெல்லாம் என்னிடம் விளக்கம் கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நான் உடனே என்மனம் பொங்கி வழிய, எனக்குள் ஒரு பெருமையை வளர்த்துக் கொண்டு, என்குடும்பத்தின் பாரம்பரியம், தொன்மை பெருமையெல்லாம் கதைத்துவிட்டு," இது என் பாட்டன் கட்டிய வீடுதானே . அதுவும் அவர் இந்த ஊருக்குள்ளே முதல் முதல் கட்டிய கல்வீடு - அவர் நல்ல வசதியாக வாழ்ந்தவர் - எல்லாமே தனக்கு நல்ல வசதியாயிருக்க வேணுமெண்டு இந்த நாற்சார் வீட்டைக் கட்டினார். அந்த அவர்களது பரம்பரையில் இப்போ நான் வந்து, இதுகளையெல்லாம் நான் அனுபவிக்கிறன். இந்த வீட்டில கிட்டின காலத்தில நடந்த என்ர பெண்பிள்ளையின்ரை சாமத்தியச் சடங்குக்கு இந்த விறாந்தயிலதான் அண்டைக்கு ஒரேபந்தியில் அப்படியே நூறு பேரை ஒரேயடியா இருத்திவைச்சு அவயஞக்கு நான் சாப்பிடவும் குடுத்தனான்.” - என்று என் வீட்டில் முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை, என் நினைவில் வைரம் போல் ஒளி குன்றாஅளவில் வைத்துக் கொண்டு பெருமையாய்க் கூறிச் சிரித்து மகிழ்ந்திருப்பேன்.
ஆனால், இப்போது . அந்த காப்டன் பார்த்த பார்வையில், அவர் இதைப் பற்றி எதையாவது என்னிடம் கேட்டுவிட்டால் என்னத்தைச் சொல்லி நான் எல்லாவற்றையும் அவரிடம் சமாளித்துக் கொள்வது.? - என்ற அந்தச் சிந்தனையே என்னில் வலுத்தபடி இருந்தது.
நான் இவற்றையெல்லாம் நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்க. அவர் விறாந்தையில் பதித்த தன் கண் பார்வையைத் திருப்பிடாது அப்படியே படலைக்குள்ளாக நடந்தவாறு முற்றத்தடிக்கு நேரே வந்துவிட்டார்.
"இந்த விறாந்தை நல்ல நீளமும் வசதியுமானதுதான். ! " என்று தன்பாட்டுக்கு அதிலே நின்றபடி சொன்னார். எனக்கு நெஞ்சுக்குள் உடனே திருக்கென்றது.
தி.சி.அருாரதிதச் 24 அத்தி

“உள்ளே உள்ள இந்த வீட்டின் அறைகளும் அப்படியென்றால் பெரிதாகத்தானே இருக்கும் என்ன..?”
அவர் அதிகாரமுள்ள ஒரு தலையாட்டலுடனும், அப்படியானதோர் சிரிப்புடனும், என்னைப் பார்த்துக் கேட்டார். அவர் கேட்டதற்கு நான், அடிமைக் குனிவுடன் நின்றவாறு பரிதாபமாகச் சிரித்துக் கொண்டு “உள்ளே உள்ள அறைகளும் நீங்கள் சொன்னது போல பெரிதுதான்.!” - என்று என் சுட்டுவிரலை நீட்டி, வீட்டுப்பக்கம் சுட்டியபடி சொன்னேன். அப்போது என் ஆட்காட்டி விரல் கூட பலம் குன்றி, என் மனம் போல சோர்வாக வளைந்தே இருந்தது.
"அப்போ உள்ளே நான் வந்து உங்கள் வீட்டை ஒரு முறை பார்க்கலாமா?” என்று பிறகு அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
அவர் அப்படி என்னைக் கேட்காமல் விட்டாலும், நானாக அவரை, உள்ளே நீங்கள் வந்து வீட்டையும் பார்க்கலாம். - என்று அழைக்கவே முன்பு எண்ணமிட்டிருந்தேன். அவர் ஒரு முறை என் வீட்டுக்குள்ளேயும் வந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு போனால் - அதனால் சில சந்தேகங்களையும் தன்னிடமிருந்து தீர்த்துக் கொள்ள அது அவருக்கு ஒரு வடிகாலாயிருக்கும்-என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனாலும், என்னைவிடவும் அவர் இதிலே முந்திக் கொண்டது, அவர் இஷ்டத்துக்கு நானும் உடனே அமைவாக கீழ்ப்படிந்து நடப்பது போல அதுவும் நல்லதாக எனக்குத் தெரிந்தது. நான் உடனே -" வாருங்கள் ஐயா. நீங்கள் வீட்டுக்குள்ளே வந்து தாராளமாய் எல்லாவற்றையும் அங்கே பார்க்கலாம்.!” - என்று சொன்னேன். அப்படிச் சொன்ன கையோடு, வீட்டுப் படிகளிலே போய் நான் ஏறி நின்று கொண்டு, என் கைகளிரண்டையும் தாழ்த்தி வைத்தபடி, அவரை அவ்விடத்திற்கு வரவேற்றேன். அவர் இப்போது ஒரு நண்பனைப் போல என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நடந்து வந்து, வீட்டு வாசற் படிகளில் ஏறினார். அத்தருணம் வெளியே நின்று கொண்டிருந்த பத்துப் பதினைந்து சிப்பாய்கள் என் வீட்டுவளவுக்குள்ளே வந்து புகுந்து விட்டார்கள். அவர்களெல்லாம் உள்ளே வந்த தருணத்தோடு, என் வீட்டைச் சுற்றி வரக் காவல் நிற்கிறார்களென இப்போது நான் எனக்குள் ஊகித்துக் கொண்டேன்.
நான் போய் அதிலே நின்று கொண்டு, என் வீட்டுக் கதவைத் தட்டினேன். "சந்திரா. சந்திரா. ”, என்று என் மனைவியின் பெயரைச் சொல்லியபடி நான் கதவைத் தட்டுகிற போது, அவரும் என் அருகில் நின்று திறக்கப் போகும் கதவை பார்த்துக் கொண்டு நின்றார். "இந்த வீட்டின் பின்புறமாகவுள்ள சமையலறையிலிருந்து கொஞ்சம் தூரம் இங்கே இந்தக் கதவைத் திறப்பதற்காக நடந்து வரவேண்டும்.” என்று நான் அவருக்கு அந்தக் கதவைத் திறக்கக் காலம் தாழ்த்துவதற்கான காரணத்தைச் சொன்னேன். இப்படியெல்லாம் விளக்கங்களும் விபரங்களும் தி.பி.அருஈரந்தச் 25 മിക്രി

Page 22
யாரோ சம்பந்தமில்லாத அந்நியன் ஒருவருக்குச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமாயிருக்கிறதே? என்று என் மனதுக்குள் நினைத்தபோது - அது எனக்கு அருவருப்பாயிருந்தது என்றாலும், அந்த வெறுப்பை வெளிக்காட்டாது, என் களையான முகத்தை அவருக்கு நான் காட்டிக் கொண்டிருந்தேன்.
‘அவரைப் பார்த்து நான் இதழ் பிரியாப் புன்னகையை உதிர்த்தேன். ஆனால் அவரோ, நான் மட்டும் சிரிக்கலாம்! நீ சிரிக்கக்கூடாது' - என்கிற பார்வையுடன் இப்போது என்னைப் பார்த்தபடி நின்றார். ‘எப்படியாகவெல்லாம் இருந்தாற் போல் இந்த இராணுவத்தினர்கள பச்சோந்தியாக தங்களை உடனுக்குடன் மாற்றிக் கொள்கிறார்கள் - என்கிற ஒரு மனக் குழப்பத்தோடு பிறகும் நான் வாசல் கதவைத் தட்டியபடி என் மனைவியை அதிலே வரும்படி அழைத்தேன். இந்திய அமைதிப்படை இங்கிருந்து வெளியேறி, பிறகு யுத்தப் படை நாட்டுக்குள் நுழைந்து இப்போது எங்கும் பரவலாய் இவ்விடயங்களில் இருந்து கொண்டதன் பிறகு, இங்கே எந்த ஒரு வீடுகளின் கதவுகள், ஜன்னல்களும் எந்நேரமும் மூடப்பட்டுள்ள நிலையில் தான் காணப்படுகின்றன. எங்கிருந்தாவது இராணுவத்தினரால் துரத்தப்பட்டு ஓடி வருபவர்கள் - அல்லது இராணுவத்தினரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி வருபவர்கள் - அப்படியாக வந்து தங்கள் வீடுகளில் புகுந்து விட்டால், அதனால் தங்களுக்கு இராணுவத்தால் பலத்த இம்சை ஏற்பட்டுவிடுமென்று எல்லோருக்கும் ஒரே பயம்! .
அதனால் இந்த நடவடிக்கை எல்லாவீட்டிலும் நாளாந்தம் உள்ளது போல, என் வீட்டிலும் இருந்தது. இன்று காலையிலும் நான் கதவைத் திறந்து கொண்டு வெளியே காலை வைக்க, வழமை போல் என் மனைவியும் எனக்குப் பிறகாலே வந்து உடனேயே கதவைப்பூட்டி உள்தாளிட்டுக் குறுக்குப் பலகையும் போட்டு விட்டாள். அவளுக்கு இப்போது இராணுவம் வந்து வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருப்பது எல்லாம் ஒன்றும் அறியாததாய்த்தான் இருந்திருக்க வேண்டும்.
இன்னும் இவர்கள் வந்த காலத்திலிருந்து, ஊருக்குள் உள்ள கிடுகுவேலிக்கதியால்களையெல்லாம் வெட்டித்தள்ளித் தாங்கள் ஒவ்வொரு வளவுக்காலேயெல்லாம் நுழைந்து போய் வரப் பாதைகளும் வைத்திருந்தார்கள். முன்பென்றால் அரிக்கன் ஆட்டுக்குட்டி அடைப்பு வேலியின் சிறுவழியைப் பயன்படுத்தி, தலைநுழைத்து வழியைப் பெரிதாக்கினாலே ஆட்டுக்காரனோடு காணிக்காரர்கள் சண்டைக்குப் போய் விடுவார்கள். ஆனால் இராணுவம் வேலிகளை வெட்டியதையிட்டு எல்லாரும் வாயைப் பொத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள்
அதன் மூலம் ஊர்மாடுகளுக்கெல்லாம் மேய்புலம், குடியிருக்கும் வளவுகள் என்றாகி விட்டது. அதன் காரணமாய் என் வளவுக்குள்ளாகவும் மேய்ச்சல் சுதந்திரம் அவைகளுக்குக் கிடைத்தது. இப்போது ரீ.ரி.அருாரனதிதச் 26 Møll?

இராணுவத்தினர் வளவுக்குள்ளே அங்குமிங்குமாகப் போய் நின்று கொண்டிருக்கவும், அதன் மூலம் உள்ளே குசினிக்குள் இருந்து கொண்டிருக்கும் அவளுக்கு - வெளியே ஏதாவது அசுமாத்தமாயிருந்தால் 'மாடுகள் கன்றுகள் வந்து வளவுக்குள் மேய்கிறதாயிருக்கும்' - என்று தான் எண்ணியிருப்பாள்.
நான் அந்த நினைவுகளுடனே இன்னும் அந்தக் கதவைப் போட்டுப் பலமாகத் தட்டிக் கொள்ள, பழைய காலத்துக் கதவு அது என்பதால், அதுவும் பூட்டி இருக்கும் இடை வெளிக்குள் கிடந்து கட கடத்துச் சத்தம் போட்டது. உடன் கதவைப் போட்டுத்தட்டுவதை ஒயவிட்டுவிட்டு, “சந்திரா. சந்திரா.” என்று கொஞ்சம் உரத்துச் சத்தம் வைத்தபடி பிறகும் என் மனைவியை நான் அழைத்தேன்.
இப்போது உள்ளே கதவின் குறுக்குப் பலகை விலகும் சத்தம் கேட்டது. அதன் பிறகு மேலே ஏற்றியிருந்த தாள்பாளையும் இறக்கிக் கதவைத் திறந்தாள் என் மனைவி அவள் கதவைத் திறந்து விட்டு, என் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து பயத்திலே அந்தக் கதவின் அருகில் ஒதுங்கிப் போய் நின்றாள். நான் உடனே அவளைப் பார்த்து “பிரச்சினை ஒன்றுமில்லை! இவர் உள்ளே இந்த வீட்டை வந்து பாக்கிறதுக்கு விருப்பப்பட்டு என்னைக் கேட்டார்?” - என்று அவளுக்கு தைரியம் ஏற்றி விட விபரத்தைச் சொன்னேன். ஆனாலும் அவளுக்கு இன்னும் நெஞ்சுக் குழிக்குள் பயம்தான் நிறைந்து கிடக்கிறது என்பதாய்த்தான் எனக்குத் தெரிந்தது.
* நீங்கள் உள்ளே வாருங்கள்.” - என்று திறந்த கதவின் முன்னால் நின்ற அவரை நான் பிறகு உள்ளே அழைத்தேன். நான் அழைக்கவும் அவர் இப்பொழுது ஏதோ எங்களுக்கு சொந்தபந்தம் உடையவர் ஒருவரைப் போல நின்று, எங்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தபடி அந்தக் கதவு வாசலாலே உள்ளே வந்தார். அவர் இப்போது எங்களைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு; எனக்கு முள்ளும் பூவும் போலத் தெரிந்தது. -
அந்த நுழைவாசல் கதவுக்கு எதிரே உள்ள மற்றைய வாசல் சுவரின் மேல், பெரிய குழந்தை இயேசு படம் மாட்டப்பட்டிருந்தது. அவர் முன்கதவால் உள்ளே வருகின்ற போது, அதிலே தன் பார்வைக்குத் தெரிந்த அந்தக் குழந்தை இயேசு படத்தைத் தான் முதன்முதலாகப் பார்த்தார். அந்த வாசலறை இருட்டுக்குள் படவிளக்கு மினுமினுத்துக் கொண்டிருந்தது. அந்த விளக்கு ஒளியிலே குழந்தை இயேசுவின் சிவப்புப் போர்வையுடுப்பு, ஒளிகூட்டி மினுக்கியது. அவர் அதன் மேலிருந்த தன் பார்வையை இறக்கி இடப்பக்கம், வலப்பக்கமிருந்த அந்த இரு அறைகளையும் பார்த்தார். அவர் அங்கே பார்க்கவும், அந்தச் திரைச்சீலையிட்டிருந்த இருபக்கக் கதவுகளையும் என் கைவிரலால் சுட்டிக்
.dിത്രസ്ത്രക്രി 27 eിക്രി

Page 23
காட்டியபடி "இவையிரண்டும் படுக்கை அறைகள்” - என்றேன் நான்.
சொல்லியதோடு முன்னால் போய் அந்தக் கதவுச் சீலையை நான் அவர் பார்க்கக் கூடியதாய் விலக்கிப் பிடித்தேன்.
அவர் அதிலே வந்து நின்று கொண்டு உள்ளே பார்த்தார். தன் தலையை 'சரி . என்ற மாதிரித்தினுசாக ஆட்டிக் காண்பித்தார். நான் சீலையைப் பிடித்திருந்த கையை விட்டுவிட்டு அடுத்த அறைக்கதவின் தொங்கு சீலையையும் முன்னையப் போலவே அவர் பார்க்கும்படி விலக்கிக் காண்பித்தேன். அவர் கதவருகில் வந்து அந்த அறையையும் பார்த்தார். அவர் அந்த அறைக்குள் தன் பார்வையை வைத்தபடி நிற்க, நான் அந்தத் திரைச் சீலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அந்தச் சுவர் மூலையிலே நித்தியமான சோகத்துடன் நிற்கின்ற மாதிரித் தெரிந்த என் மனைவியைப் பார்த்தேன். முகம் வாடிப் போய் நின்ற அவளின் பரிதாப நிலையைப் பார்த்து எனக்குக் கவலையாயிருந்தது. என் விழிகளில் பதியும் அவளது ஒளிரும் கண்கள் பதற்றமிகு கேள்விகளால் என்னை நிரப்பிக் கொண்டிருக்க, நானும் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
காப்டன் அந்த அறையை இமைகளின் ஒரத்தில் ஒதுக்கித் திரும்பிய தன் விழிகளால் பார்த்து விட்டுப், பிறகு வீட்டின் உள் விறாந்தையை அதிலே நின்றவாறு பார்த்தார். நான் உடனே அவர் பார்வை விழுகின்ற பக்கத்தில் நிழல் போல் என்னை அவருக்குத் தெரியும் அளவுக்கு வைத்துக் கொண்டு " இதிலேயும் உள்ளே இந்த வீட்டுக்கு ஒரு பெரிய விறாந்தை உள்ளது! ஒரு பக்கம் அறைகளும் இருக்கின்றன.!” என்று என் குரலின் சத்தத்தைக் கூட்டி, அவருக்கு நன்றாகக் கேட்குமாறு சொன்னேன்.
நான் சொல்லவும் அவர் அந்த விறாந்தைப் பக்கமாக நடந்து வந்தார். அதிலே அவர் வந்து நின்ற பிறகு, அந்த விறாந்தை நீளத்துக்கு இருந்த உருட்டுத்தூண்களை ஒரு முறை பார்த்தார். அந்த இடத்தில் வீட்டுக்குள்ளாலே உள்ள முற்றத்தில் ஒரு திராட்சைப் பந்தல் நாங்கள் போட்டிருந்தோம். வளைகளில் பொருத்திக் கிடந்த அந்தக் கம்பி வலைகளுக்கு மேலே, அந்தக் கொடி சிலிர்ப்பாகப் பார்வைக்குப் படும்படி இருந்தது. பச்சையான பிஞ்சுக் காய்களும் அதிலே குலை விட்டிருந்தன. அவர் அதைப் பார்த்து விட்டுச் சிரித்தார்.
அவர் சிரிக்கவும் என் மனைவியின் முகத்தில் கொஞ்சம் களை பிறந்திருந்தது. அவள் முகத்தில் மங்கிய நிழல் வெளிச்சம் போல் ஒரு ஆறுதலான மாறுதல் இப்போது காணப்பட்டது. எனக்கும் இதய பாரம் ஒழிந்து தண்ணீர் ஓடுகிற மாதிரி குளுமை உணர்ச்சி நெஞ்சுக்குள் ஏற்பட்டது.
அவர் அந்தத் திராட்சைக் கொடியையும் விறாந்தைப் பக்கத்து அறைகளையும் பார்த்துவிட்டு, "இப்படி வசதியான வீடுகளையும் தி.பி.அருாரணத்தச் 28
ീഴ്കി

செழிப்பான இயற்கைக் காட்சிகளையும் கொண்டதாக எங்கள் இடங்கள் எல்லாம் இல்லை! இப்படியெல்லாம் நன்றாக வசதியாகச் சீவிக்கிற உங்களுக்கு ஏன் இந்தக் கொடிய யுத்தம் தேவைப்படுகிறது.? " - என்று என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
நான் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு பதிலேதும் சொல்லாமல் மெளனம் காத்தேன். அவர் கேட்டதுக்கு உணர்ச்சி வசப்பட்டு உள்ள உண்மையைச் சொல்லி ஏன் வீணே வம்பு தும்பில் பிறகு மாட்டிக் கொள்ளுவான், என்று எனக்கு நானே உடனே வாய்ப் பூட்டுப் போட்டுக் கொண்டேன்.
நான் பதில் ஏதும் சொல்லாததைப் பற்றி ஏதும் அக்கறை இல்லாததைப் போலத்தான் அவரும் இருந்தார். விறாந்தையின் முன்னால் பிறகு நடந்தார். நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். அவர் அந்தடானாப்பட இருந்த விறாந்தை வழியாகத் திரும்பி குசினிப் பக்கத்திலிருக்கும் பின் கதவடியில் போய் நின்றார். குசினிக்குள்ளே என்பிள்ளைகள் எல்லாரும் பயத்தில் தாங்கள் வெளியே மூச்சு விடுவது கூடக் கேக்காத அளவுக்கு இருந்து கொண்டிருந்தார்கள் குசினி அடுப்பில் புதுவத்தல் மிளகாய் வீச்சம் கொண்ட குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அதிலே போய் நின்று கதவுக்குப் பக்கத்தே அடுக்கிக் கிடந்த விறகுத் துண்டங்களையும் , பனை மட்டை, பொச்சு மட்டைகளையும் பார்த்துக் கொண்டு நிற்க.
நான் அந்தப் பின் கதவுக்குப் போடப்பட்டிருந்த குறுக்குப் பலகையைத் தூக்கி எடுத்துவிட்டு அந்தக் கதவைத் திறந்து விட்டேன். அந்த வாசலுக்கு எதிரே வெளியே பின் முற்றத்தில் நின்ற அந்த முருங்கைமரம், இரண்டு முழக்காய்களை தடித்தடியாக நீட்டி பாரம் கொடுத்தால் கிளை சரித்துக் கிடந்தது.அவர் திறந்த கதவு வழியாய்த் தெரிந்த, சதையேறின பருவமான அந்த முருங்கைக்காய்களைப் பார்த்துக் கொண்டு அந்தப்படிகளிலிருந்து இறங்கி வெளியே கோடிப்புறத்து முற்றத்தில்போய் நின்றார். நானும் காந்தம் போல அவருடன் இழுபட்டுப் போய் அவரின் அருகில் நின்று கொண்டேன். அந்த முருங்கைக்குப் பக்கத்திலே, கறுப்புப்பனை அடிமரம் மாதிரி முறுகிய உடலுடைய ஒரு சிப்பாய் நின்று கொண்டு, என்னைப் பார்த்தால் போலக்காட்டாமல் எங்கோ உளி கொண்டு பிளந்தாற் போல பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.நானும் அவனைப் பார்க்காத மாதிரி இருந்தவாறு அவனைக் கவனித்துக் கொண்டு, பிறகு குசினி வாசல் பக்கம் பார்த்தேன். அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த என் மனைவியும், அந்த ஆமிக்காரனைத் துவக்குடன் கண்டு இப்போது திடுக்கிட்டுப் போய் அதிலே நிற்கிறாள் என்று எனக்கு உடனே அது விளங்கியது.
காப்டனுக்கும் எங்கள் இருவரினதும் பயத்தன்மை விளங்கியிருக்க
മീ.dി.മിത്രസ്ത്രക്രി 29 eീഴ്കി

Page 24
வேண்டும். என் மனைவி தன்னைக் கண்டு மிகவும் திகிலடைந்து விட்டாள் என்பதை அவர் நன்றாகவே பிறகு உணர்ந்திருக்க வேண்டும். எனவே தான் அவர் கதவண்டையில் நின்று திகிலடைந்து போய் இருக்கும் என் மனைவியைப் பார்த்து, “நீங்கள் பயப்படாமல் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள்.” - என்று சாந்தமாக அவளைப் பார்த்து சிரித்தபடி கூறினார். ஆனாலும் நான் வெளியே அவர்களுடன் நின்று கொண்டிருக்கும் காரணத்தால் எனக்கு யாதேனும் ஆகி விட்டிடுமோ என்கிற மனப்பயத்தால் அவளும் கதவைப் பூட்டாமல் அதிலே நின்றபடி என்னைப் பார்த்துக் கொண்டு நின்றாள். சில நிமிடங்களை பிரச்சினையின்றி அவரோடு கழித்ததில், எனக்கும் இப்போது ஒருவாறு மனத்தில் தெம்பு பிறந்து விட்டது என்னைப் போலவே அந்தக் காப்டனும் ஒரு சாதாரண மனிதராக; அதிலே துவக்குகளோடு நின்று கொண்டிருந்த சிப்பாய்களும் அவ்விதமே சாதாரணமானவர்களாக என் மனதுக்குத் தோன்றிட ஆரம்பித்தது.
இதன் காரணமாக, இதுவரையில் எனக்கிருந்த மனப்பயம் சற்று என்னிடமிருந்து விலக ஆரம்பித்தது. இதன் பிறகு நான் அவரைக் கூட்டிச சென்று எங்கள் காணிக்குள் உள்ள அந்தக் கிணற்றை அவருக்குக் காண்பித்தேன்.
அந்தக் கிணற்றருகில் பூவரசம் மரங்களில் அளவாய்க் கணக்காய்க் கட்டப்பட்டுக் கிடந்த குறுக்குத் தடிகளில் கிடந்த துலாவையும் அதிலே கட்டியிருந்த கயிற்று வாளியையும்அவர் புதினமாகப் பார்த்தார். அந்தத் துலா இருந்த இடத்துக்குக் கொஞ்சம் தள்ளியதாய் ஒரு கரிய நெடும் தனிப்பனை யொன்று அதிலே நின்றது. அந்தப் பனையைத் தழுவிப் பிடித்தபடி மலைப் பாம்பு போல் ஒரு வேம்பு மரம் அதிலே சுற்றிப் பிணைந்து வளர்ந்து கிடந்தது.
உடல் அலுப்புத்தீர வைக்கும் ஒரு வித கசப்புச் சுவை கலந்த கள்ளுற்றுடைய பனை அது.அவர் அந்தப் பனை வளர்த்தியையும் - தன் அபரிமிதமான ஆரோக்கிய இலைகளால் நிழல் தரும் அந்த வேம்பின் பிணைப்பையும், அதிலே கீழே நிலத்தில் கிடந்த வேப்பம் கொட்டைகளின் மேல் கால் மிதித்து நின்றபடி ஒரு கலைஞனின் உணர்ச்சி பூர்வமான பார்வையோடு மேலே பார்த்தார்.
நானும், சீவல் காரனிடம் வாங்கி வழமையாகப் பொழுது படவும் குடிக்கின்ற அந்தப் பனங்கள்ளின் அபூர்வமான ருசியை நினைவில் வைத்துக் கொண்டு, அந்தப் பனையில் கட்டிக்கிடந்த முட்டிகளைப் பார்த்தேன். அந்தக் கள்ளின் மணமும் சுவையும் சிறிது நேரம் வரை என் வாயில் தங்கி இருந்தன.
இனி அந்த வளவில் ஒன்றையும் நான் அவருக்குக் காட்டக்கூடியதாக இல்லை, என்று நினைத்தபடி, நான் என் கையைக் கட்டிக்கொண்டு, அந்த மரத்தின் கீழ் நாள் தோறும் விழும் வேப்பம்பழங்கள்
9
தி.சி.அருானந்தச் 30
ീകൃി

தரையில் காய்ந்து சிதறிக்கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே காயக்காயக் கிடந்த வேப்பம் விதைகள் வெண்மைமிக்கதாய் எனக்குத் தெரிந்தன.
அவருக்கும் அந்த வளவில் இனி ஒன்றையும் பார்ப்பதற்கு இல்லை என்கிறது மாதிரித்தான் இருந்திருக்க வேண்டும், அதனால் நான் அவரை முன்னம் கூட்டி வந்த அந்தக் கொடிப்பாதை வழியாக, இப்போது என் முன்னால், அவர் நடந்து போகத் தொடங்கினார்.
அந்த என் வளவுக்குள் நின்ற குடை இலை தரித்த இலுப்பை வேம்பு மாமரங்களின் கிளைகளில் இருந்த குயில்கள், ஒன்றையொன்று விடாமல் கூவி அழைத்தன. அந்த மரங்களுக்குக் கீழேயுள்ள நிலத்தில் தருக்கள் உதிர்ந்த தழைகளைக் கிளறிக் கொண்டு, தவிட்டு நிறக்குருவிகளும் கத்திக் கொண்டிருந்தன. வேம்பு மரங்களில் இருந்த காகங்கள் விழுந்தடித்துக் கொண்டு இரைச்சலுடன் வேப்பங் கொத்துக்களிலிருந்த வேப்பம் பழங்களைக் கொத்தி விழுங்கிக் கொண்டிருந்தன. அந்த வேப்பம் பழத்தின் வாசம் என் வீட்டுப்பக்கத்திலெல்லாம் தெளிக்கப்பட்டது மாதிரித்தான் மணத்துக் கொண்டிருந்தது.
அவர் முத்துப் போன்ற கூழாங்கற்கள் கிடந்த அந்தக் கொடி போன்ற பாதையாலே தான் நடந்து கொண்டிருந்தவாறு, என் வீட்டுப் பக்கமுள்ள அந்த மரச்சோலையான வளவைப்பார்த்தார். காடு போல கிளைகள் பரப்பி அந்த இடத்தையே நிரப்பி நிற்கின்ற அந்த மரங்களைப் பார்த்துவிட்டு,
அந்த மரங்களிலிருந்து கீச்சுக் கீச்சென்று ஆலாபனையிடும் பல் வகைப் பறவைகளின் சிலம்பலையும் காதால் கேட்டுவிட்டு,
"ஏன் இந்தப் பரும் பரும் மரங்களையெல்லாம் இப்படி இந்த வளவுக்குள்ளே வளர விட்டிருக்கீறீர்கள்”
என்று அதிலே போகும் வேளையில் திரும்பி நின்றபடி என்னிடம் இதை அவர் கேட்டார்.
"இவற்றையெல்லாம் என்பாட்டனார் தான் நட்டு வளரவிட்டவர் அவருக்குப் பெரிய மரங்களை இப்படித் தன் வளவுக்குள்ளே நட்டு வளர வைக்க வேண்டுமென்பதில் ஆசை இருந்தது. இப்படி மரங்களை அதிலே நிறையவே நட்டு வைத்து இந்த வளவுக்கும் சிங்காரத் தோப்பு என்று பெயரையும் அவர் வைத்திருந்தார்.” என்று அவருக்கு நான் இதை புரியும்படி சொன்னேன்.
நான் அப்படி சொல்லவும் அவருக்கு உதடுகளில் மெல்லிய பிரகாசம் போன்று ஒரு புன்னகை தவழ்ந்தது.
“நல்லது நல்லது! அப்படியெல்லாம் ஒரு மனிதர் செய்வது இந்தச் சூழலுக்கு எவ்வளவு நல்லது .” - என்று தன்னில் ஒரு
தி.சி.அருாரத்தச் 31 Aகி

Page 25
யோசனையோடு இருந்து, கருத்தார்ந்த முறையில் பிறகு இதைச் சொன்னார் அவர். அதன் பிறகும் அவர்: “இந்தச் சிங்காரத் தோப்பு என்பது என்ன? அந்தச் சொல் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.” . என்று என்னிடம் கோட்டார்.
நான் உடனே அந்தச் சொல்லை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்திச் சொல்ல இரண்டு சொற்களைத் தெரிந்தெடுத்தேன். அந்த இரண்டும் பைபிள் புத்தகத்திலே உள்ள ஆதியாகமம் அதிகாரத்திலிருந்து உடனே எனக்கு ஞாபகத்தில் வந்தது.
“சிங்காரத் தோப்பு என்றால் பரடைஸ் என்றும் அர்த்தம் கொள்ளலாம் அல்லது முதல் மனிதன் ஆதாம் ஏவாள் வாழ்வதற்கு கடவுள் படைத்த ஏதேன் தோட்டம் என்ற அந்தச் சொல்லையும் பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம்” - என்று நான் அவருக்கு அதை விளங்கப்படுத்தினேன்.
“பரடைஸ் . பரடைஸ். ” - என்று நான் சொன்னதுக்கு தானும் அதையே சிரித்தபடி சொல்லிக் கொண்டு என்னைப் பார்த்து அப்பொழுது அவர் தன் தலையை ஆட்டினார்.
“உங்களைப் போல் இவ்விடம் உள்ள எல்லாரும் கிறிஸ்ரியனா?” என்று அவர் என்னைக் கேட்டார். நான் "ஆம்" - என்றேன்.
“சரி நீங்கள் உங்கள் அலுவல்களை இனிப்பார்க்கலாம், நானும் புறப்படுகிறேன். நன்றி!” - என்று விட்டு என்னைப் பார்த்து அவர் சிரித்தார். அப்படிச் சிரித்துக் கொண்டபடியே அவர் அதிலே வந்ததும் என் வீட்டுப் பின்புற வாசலை அவர் பார்த்தார்.
இன்னும் அந்த வாசல்பக்கத்தில் என் மனைவி நின்று கொண்டு நாங்கள் வருவதை அவ்விடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்துச் சிரித்தபடியே வீட்டுக் கோடிப்புறத்தால் அப்படியே முன்னால் உள்ள படலையடிக்குப் போக நடந்தார். அவரை நானும் பின் தொடர்ந்தவாறு போனேன்.
முருங்கை மரத்துக்குப் பக்கத்தில் நின்ற சிப்பாய் இப்போது எனக்குப் பின்னாலே வந்து கொண்டிருந்தான். நான் அந்த வெளி வீதியோரம் நின்ற அந்தப் புளிய மரத்து இலைச்சடைவையும், அதனுடன் சேர்ந்து தெரிந்த கன்னிப் பூக்களையும், அதில் நடந்து வந்து கொண்டிருந்த போது அக்கறையுடன் பார்த்துக் கொண்டு வந்தேன். அந்தப் புளிய மரத்து மரமுடிகளின் மீது, காலைச் சிகப்பு மாறாத சூரியனின் செவ்வொளிச் சிதறல்கள் விழுந்து, தெளிவற்ற பசுமை எல்லாவற்றையும் மரகதப் பிரகாசமாக்கியிருந்தது. அதைப் பார்க்கவும், "கடை திறக்க நேரம் எனக்குச் செல்கிறதே" - என்று எனக்கு மனத்தினுள் ஒரு கவலை. என் கையிலே மணிக்கூடு கட்டியிருந்தாலும், அதிலே பார்த்து நேரம் செல்கின்றதே என்ற பதற்றம் காலை வேளையில் எனக்கு
99
தி.சி.அருளானந்தச் 32
ീകൃി

வருவதில்லை. ஆனாலும் அந்தப் புளியமரத்திலே வெயில் விழும் போது, தான் காலை நேரத்தின் போக்கு எனக்குப் பதற்றத்தையும் பதகளிப்பையும் மனத்திலே ஏற்படுத்தி விடுகிறது.
இன்னும் நான் அவருக்குப் பிறகாலே அந்தப் படலையடிக்குப் போகும் ஒற்றையடித் தடத்தில் ’பிரிந்து நடந்து கொண்டு வந்தேன். அப்படி நடக்கும் போது நான் அந்தப் புளிய மரத்தையும், தொடர்ந்து பார்த்த பார்வையுடன் வந்தேன். அந்த மரத்தின் முடிப் பந்தின் மேலே, எங்கும் அமராத அந்தப் பறவை இன்னும் பறந்து கொண்டே இருந்தது. என் மனத்தைப் போல..!
படலையருகில் அவர் சென்ற தருணம் என்னை அவர், சடக் கென்று தன் தலையைத் திருப்பி பின்னால் பார்த்தார். என் மனதைக் குழப்பிடாத சாந்தமான அந்தப் பார்வையை தன்னிலே வைத்துக் கொண்டு "நான் வருகிறேன். நன்றி!” - என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு அவர் தான் போக வேண்டிய இடத்துக்கு வியக்கத்தக்க வேகத்துடனும், திடமாகவும் மடமடவென்று அந்த வீதியாலே மீண்டும் நடக்கத் தொடங்கி விட்டார். ** நான் என் வீட்டுப் படலைப் பக்கம் அதிலே நடைவழியில் நின்று கொண்டிருக்க - என் இடக்கைப் பக்கமாகவும் - அங்காலே என் வலக்கைப் பக்கமாகவும், என்வளவுக்குள்ளே இவ்வளவு நேரமாய் நின்று கொண்டிருந்த சிப்பாய்கள், தங்கள் துவக்குகளை தோளில் வைத்துப் பிடித்தபடி ஒரு பூவைச் சுமப்பது போல அதைச் சுமந்து கொண்டு அவருக்குப் பின்னாலே வெளியே போக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் அப்படியாக வெளியேறிய பிறகுதான் எனக்கு மனதுக்கு நிம்மதியாக இருந்தது என்றாலும் என் உடல் இவ்வளவு நேரம் பயத்தின் மூலம் ஏற்பட்ட விரைவான இரத்த ஓட்டம் காரணமாய் வெப்பத்தை ஏற்றி விட்டிருந்தது.
நான் அவர்களெல்லாம் கண்பார்வையிலிருந்து மறைந்து போன பிறகு இப்போது இனி, எனக்கு வேலை நிறைய இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு, திரும்பவும் வீட்டுக் கோடிப்புறத்துக்குப் போனேன். அங்கே என் மனைவியைப் பார்த்து "நான் இனிக் கடைக்குப் போகப் புறப்படுகிறேன்” என்று விட்டு அங்கிருந்து கால் நடையாகப் புறப்பட்டேன். விரைவு கூட்டிய என் நடையின் நிமித்தம் அந்த வீதியில் ஒரு கணக்கான தூரத்தை நான் கடந்து விட்டது மாதிரி எனக்கு இப்போது இருந்தது. என் வீட்டுக்கும் கடைத் தெருவுக்கும் இடைப்பட்ட தூரத்திலிருக்கும் வீதியோரத்து புனித சூசையப்பரின் சொரூபம் கண்டதும, அவரையும் அதிலே போய் கண்ணாடிப் பெட்டிக்கு மேல் கையை வைத்து - அதன் பின்பு, என் கையை நானே அவரை முத்தி செய்தது போல நினைத்து முத்தித்துக் கொண்டு மீண்டும் நடந்தேன். இப்போது என் மனதில் தி.சி.அருளானந்தச் 33 eിഴി

Page 26
முத்தி செய்து விட்டு வந்த புனித சூசையப்பரின் கையிலுள்ள அந்தப் பொலிவு கொண்ட லில்லி மலர்கள் பூத்திருப்பதைப் போல இருந்தது. அந்த லில்லி மலர்களிலே, காலைச்சூரிய ஒளி அப்போது தங்கி நின்றதான காட்சி இப்போதும் கூட என் கண்களுக்குள்ளே மறையாமல் இருந்து கொண்டிருப்பது போல, நான் நடந்து கொண்டிருக்கும் அவ்வேளையிலும் எனக்கிருந்தது. காலையின் குளிர் காற்று பதமாய் தென்றலாகிக் கொண்டிருந்தது. நான் அந்தத் தென்றல் காற்றை சுவாசித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நடந்தேன்.
அந்தக் கடைத்தெருப் பக்கத்திலுள்ள பழைய கல் வீட்டில் இப்போது இந்திய இராணுவத்தினர் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீடு வீதியோரமாகக் கட்டப்பட்டிருந்ததால், அதற்கு முன்னால் அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கென தூண்கள் நிறுத்தி அதில் எட்டுப் பட்டு முட்கம்பிகளும் பொருத்தி வைத்திருந்தார்கள்.
அந்த முள் வேலிக்கம்பியிலே, ஒரு பாலித்தீன் பைக் கசங்கல் தொங்கிப் போய்க் காற்றுக்குக் கொடி போல் அசைந்து கொண்டிருந்தது. வண்ணப்பட்டாம் பூச்சிகளும் வெண்ணிறப்பட்டாம் பூச்சிகளுடன் சேர்ந்து அந்த முட்கம்பிகளின் இடைவெளியாலே சுதந்திரமாகப் பறந்து போனபடி இருந்தன. முற்றிய காய் வெடித்து வந்த பஞ்சின் ஊர்திகள், காற்று வானில் மேலே ஏறியும் அங்கங்கே இறங்கியும் காற்றில் எழுந்தபடி அந்தக் காம்புக்கு மேலாலே போய்க் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. அவ்விடத்தை நான் நெருங்கும் போது, சாமான் பெட்டி கட்டிய சயிக்கிளோடு பலர் அதிலே நிரையாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த இடம் ஒரு பரிசோதனை இராணுவ முகாம்தான் என்பதால் இராணுவத்தினர் பலர் அந்த வீதியிலே நின்று கொண்டிருந்தார்கள்.
அதிலே நிற்கின்ற எல்லா இராணுவத்தினர்களது வாயிலும், எங்களுக்குப் புரியாத அந்தப் பாஷைதான் வெளிவந்து கொண்டிருந்தது. அவர்களுடைய அந்தப் பாஷை அதிலே நிற்கின்றவர்களுக்கு விளங்குவதாகத்தான் தங்களுக்குள் நினைத்து அவர்களிடம் அவர்கள் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
தாங்கள் சொல்வதை விளங்கி அவர்கள் நடக்க வேண்டும் என்பதாக, அவர்கள் மீது அவர்கள் அதிகாரம் செலுத்திக் கொண்டு இருந்தார்கள் - விசாரணயிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பேசுகிற மொழி உலகமெங்கும் உள்ள மக்கள் அறிந்த மொழி போல அவர்களது நினைப்பு,
அந்தப் பெட்டிகளின் உள்ளே பழம் நசிபடாது பாதுகாப்பாகப் போடப்பட்டிருந்த வாழை இலைச் சருகுகளை தங்கள் முறம் போன்ற கைகளை விட்டு விலக்கிப் பார்த்தார்கள். அந்தப் பெட்டிக்குள்ளே கிடந்தவைகள் திராட்சைப்பழங்கள் தான் என்று நன்றாகத் தெரிந்து
தி.சி.அருாரத்தச் 34 அத்தி

கொண்டவிடத்து,
" Go Go ' என்று தம் கண்களை கடும் குரோதத்துடன் சுருக்கிக் கொண்டு, வெறுப்புடன் அவர்களைப் பார்த்துக் கூறினார்கள். அவர்களுடைய வார்த்தைகள் குசுப் போல் நாறியது. அந்தக் கறுத்தச் சீக்கியத் தலைப்பாக்கட்டும், கடலை எண்ணெய்ப் பிசுக்குடன் அவர்களிடமிருந்து எழுந்து வந்த செம்மறியாட்டு மொச்சை மணமும், அவர்களுக்கென்றதாய் உள்ள 'அந்தக் கரகரத்த குரலும், அதாலே போய்க் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்து எனக்குக் கூட அது எட்டிக் காய்க் கசப்பாகத்தான் இருந்தது. அந்த அவர்களினது நெடி’ எனக்கும் கூட நாசி துளைத்தது. நான் பார்க்க அவர்களெல்லாம் தங்கள் அகலக் கைகளை அந்தச் சயிக்கிளில் கட்டியிருந்த பெட்டிகளுக்குள் ஆழ விட்டுத் துழாவிப் பார்த்தார்கள். அப்படிப் பார்த்த பிறகு தான், அவர்களையெல்லாம் அதாலே போக விட்டுக் கொண்டிருந்தார்கள். திராட்சைப் பெட்டிகளை சயிக்கிளில் கொண்டு வந்தவர்களுக்கு, அந்த வாழையிலைச் சருகுகள் பெட்டிக்குள்ளே குழம்பிப்போனதில் பழத்துக்கு அணைப்பில்லாமல் நசிந்து விடப் போகின்றதே என்ற ஒரு கவலை! அந்தக் கவலையை மட்டும் மனதுக்குள் வைத்துக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்த் பொருளில் ஒரு இழப்புமில்லாமல் அந்த இடத்தைக் கடந்து சந்தையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
ஆனால், தக் காளிப் பழப் பெட்டிகளுடன் அதிலே வந்தவர்க்கெல்லாம் ஏற்பட்டது மன விசாரம் தான்! அவர்களின் உள்ள மெல்லாம் கூன் பட்டுப்போய் விட்டன. அவர்கள் “டொமட்டோ டொமட்டோ” - என்று சொல்லிக் கொண்டு அங்கு அவர்கள் கொண்டு வந்த தக்காளிப் பெட்டிகளிலெல்லாம் கைவிட்டு நிறைய தங்களுக்கென்று அள்ளியெடுத்தார்கள் தங்கள் காற்சட்டைப் பைகளுக்குள்ளே நிரம்ப நிரம்ப அவற்றை அவர்கள் போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகும் அந்தப் பெட்டிகளிலிருந்து எடுத்து தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு அவற்றைச் சாப்பிடவும் ஆரம்பித்தார்கள். ஏதோ ராட்ஷஸப் பறவை, கூரான கை நகங்களில் எடுத்துச் சாப்பிடுவதைப் போல அப்போது அவர்களைப் பார்க்கவும் எனக்கு இருந்தது.
ஒவ்வொரு பழப் பெட்டியிலும் கால்வாசிக்கு மேலே பழங்கள் குறைந்து போக, அந்தக் குறைப்பெட்டிகளோடு கறுத்துப் போன முகத்துடன், சயிக்கிளை அந்த முகாம் கழியுமட்டும் உருட்டிக் கொண்டு போனார்கள், பலாலிப் பக்கத்துத் தோட்டக்காரர்கள்.
நானும், அதிலே என் பார்வையில் பட்ட சம்பவங்களையெல்லாம் நன்றாகப் பார்த்தபடியே மனக் கொதிப்போடு நடந்து கொண்டிருந்தேன்.
தி.சி.அருாரத்தச் 35
ീകൃി

Page 27
என் முன்னால் தக்காளிப் பெட்டியுடன் உள்ள தன் சயிக்கிளை உருட்டிக் கொண்டு போன அந்த நடுத்தர வயதைக் கடந்தவர், சயிக்கிள் பெடஸில் காலை வைத்து அப்படியே சீற்றில் ஏறி இருந்து கொள்வதற்கான முயற்சியில் செயல்பட்டார். ஆனால் சயிக்கிளின் கான்டில் பகுதி, அவர் பெடலைத் தட்டித் தட்டி ஏற முயற்சிக்கும் போது, ஒரு பக்கம் வெட்டித் திரும்பினாற் போலப் போனது. உடனே அவர் சயிக்கிள் பாருக்குள்ளாலே காலை நிலத்தில் ஊன்றி, கான்டிலை அப்படியே ஒரு கையால் பிடித்தபடி, சைக்கிளைக் கீழே சரிய விட்டுவிட்டார். அவ்வேளை சரிந்த பெட்டியிலிருந்து பழமெல்லாம் வீதியில் உருண்டோடியது. வீதியில் விழுந்து உருண்டு கொண்டிருக்கும் பழங்களைப் பார்த்து விட்டு, “ஐயையே. சேச்சே.” என்றார் அவர்.இப்போது ஒரு கையால் பிடித்திருந்த அந்தக் காண்டியையும், அதோடு அவர் நிலத்திலே விழ அப்படியே விட்டு விட்டார்.
அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த எனக்கும் அதைப் பார்க்க பெரிய கவலையாகி விட்டது. நானும் உடனே என் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வீதியில் சிந்திக் கிடந்த தக்காளிப்பழங்களைப் பொறுக்கத் தொடங்கினேன்.அவர் சயிக்கிளைத் தூக்கி நிறுத்தி ஸ்ராண்டைப் போட்டு விட்டு, அந்தப் பெட்டியை அவிழ்த்து நிலத்தில் வைத்தார். நான் பழத்தைப் பொறுக்கி அந்தப் பெட்டிக்குள்ளே போட, அவரும் என் முகத்தைத் தன் கவலைப் பார்வையோடு பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சை விட்டபடி, தானும் கீழே குனிந்து அதிலே விழுந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்கிப் பெட்டிக்குள் போட்டார்.
நான் அதிலே தக்காளிப் பழங்களைப் பொறுக்கியபடி, முன்னம் நான் நடந்து வந்திருந்த வீதியின் நேராகப் பார்வையையும் செலுத்தினேன். என் பார்வை நீண்டிருந்த தொலைவிலே இன்னும் அவர்கள் போய்ப் போய் நின்று கொண்டிருப்பது, தொலை தூரத்துக் காட்சியாக என் கண்களில் அத்தருணம் விழுந்தபடி இருந்தது. அவர்களெல்லாம் பொய்க் கால்களோடு ராஜ நடை நடப்பவர்களாக நான் அவ்வேளையில் நினைத்து அவ்விதம் நான் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொண்டேன். அதிலே தான் கொண்டு வந்த பழத்தைக் கீழே விழக் கொட்டிவிட்டு, இப்போ அதைப் பொறுக்கிக் கொண்டிருப்பவரும்' என்னைப் போலவே இடையிடையே தன் வேலையில் இருந்து கொண்டு அங்கே பார்ப்பவராக எனக்குக் காணப்பட்டார். அவரிடம் முன்னம் இருந்த கவலை மறைந்து இப்போது ரெளத்திரம் முகத்தில் வெளிப்பட்டது.
"நாங்கள் எங்கட பலாலித் தோட்டத்துத் தரையில, மிதி வெடியள் அங்கதாட்டிருக்கிறாங்கள் எண்டு போட்டு அதுகளையெல்லாம் விட்டுட்டு இடம் பெயர்ந்து போய் இருக்கிற இடம் வழிய அங்க வேற ஆக்களினட நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இப்ப தோட்டம் செய்யிறம். எங்கட
தி.சி.அருளானந்தச் 36
Møll?

வீட்டுச் சீவியப்பாடு போறதே நாங்கள் செய்யிற இந்தத் தக்காளித் தோட்டச் செய்கையிலதான்! ஆனா இப்ப இந்தச் சவம் பிடிச்ச சண்டை துவங்கின நாள் தொடங்கி இந்தத்தக்காளிப்பழத்தையும் நாங்கள் வெளியிடத்துச் சந்தை வழிய அனுப்பிவிக்கிறதுக்கும் பெரியபாடாய்த்தான் வந்திட்டுது! இப்ப இங்க மண் எண்ணை உரம் விக்கிற விலையளில உள்ளுர்ச் சந்தையிக்க இதை விக்கக் கொண்டு போனா, அங்க கிலோ ஒரு ரூபாய் விலை வைச்சு யாவாரியள் கேக்கிறாங்கள். அந்த ஒரு ரூவாய்க்கும் செடியில ஆஞ்ச பழத்தைக் கொண்டுபோய் வித்துப் போடுவமெண்டு காலேல பெட்டியைக் கட்டி இதுகளைக் கொண்டு நாங்கள் சந்தைக்கு வெளிக்கிட்டு வந்தா, இதில இந்த நாசமறுவார் நிண்டு கொண்டு, அரை வாசிப் பழத்தை உதில எடுத்துத் திண்டு விட்டிடுறாங்கள். இப்பிடியெல்லாம் இருக்கிற நிலையில நாங்கள் எங்கட சீவியப் பாட்டை எப்பிடித்தான் கொண்டு போறது.?” அவர் முகத்தில் ஒரு சோக பாவத்துடன் என்னைப் பார்த்துச் சொன்னார். அவருக்கேற்பட்ட வேதனையான உணர்வு அவரை அக்கணத்தில் விம்மியழுது தீர்க்க வேண்டிய தொன்றாக கூர்மைப்படுத்தியிருப்பதாகத்தான் நான் உணர்ந்து கொண்டேன். அவர் பலாலிப்பக்கத்துத் தக்காளிப் பழத்தைப் பற்றி எனக்குச் சொல்லி வரும்போது, நான் முன்னம் அவ்விடங்களுக்கு தட்டி வானில் செல்லும் போது அங்குள்ள தோட்டங்களில் பார்த்த, பச்சைப்பசேலன்று கடலாய் அடர்ந்த தக்காளிச் செடிகளை ஒருகணம் என் நினைவில் நிறுத்திப் பார்த்தேன். அவ்விடங்களில் திடுமுகுடான வளர்ச்சியோடு மொசுமொசு வென்றிருக்கும் அந்தச் செடிகளில் காய்களும் பழங்களும் வகையாகக் கட்டியிருக்கும் அந்தக் காட்சி என் மனதில் நின்று அசைந்தபடி சில கணங்கள் நின்று குளிர்ந்தது.
அதிலே கடைசியாகக் கிடந்து பொறுக்கி எடுத்த நான்கு தக்காளிப்பழங்களை, நான் அவரின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டு அந்தப் பெட்டிக்குள் மெதுவாகப் போட்டேன். அப்படி அவைகளை அந்தக் குறைப் பெட்டிக்குள் போடும் போது, அதற்குள்ளே என் கண்பார்வையும் போனது. அந்தப் பெட்டிக்குள்ளே, சிகப்பும் மஞ்சளும் பச்சையும் கலந்த' சிறிய அப்பிள் போன்ற வடிவமாயுள்ள தக்காளிப்பழங்களில், சில கொட்டுப் பட்டதில் வெடித்துப் போய் நீர்விட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க எனக்குச் சித்திரவதை ஏற்படுத்தியது. என் மனதுக்குள்ளே எரிந்து கொள்ளத் தொடங்கியது. நான் அதற்குள்ளே பார்த்து விட்டு பிறகு அவரைப் பார்த்து "நான் வருகிறேன்.” என்றாற் போல அவருக்கு என் தலையை ஆட்டிக் காண்பித்து விட்டு மீண்டும் அந்த வீதியாலே நடக்கத் தொடங்கினேன். நான் அதிலே நடந்து கொண்டிருந்தபோது என்னைக் கடந்து அவர்களுடைய ஆமி டிரக் வாகனம் ஒன்று இயந்திரம் படுதடைந்தது போல் வெட்டி வெட்டி இயங்கத்
தி.சி.அருாரணத்தச் 37 eീക്രി

Page 28
தொடங்கியபடி முன்னாலே போய்க் கொண்டிருந்தது. அதனுடைய இயந்திரச் சத்தம் என் செவிகளை முழுதும் நிரப்பிக் கொண்டிருந்தன. அந்த நேரம் எனக்கு முன்னே அந்த வீதியால், இரண்டு சிப்பாய்கள், தங்களுடைய அந்தப் பரிசோதனை முகாமுக்குச் செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் எனக்குப் புரியாத அவர்களது பாஷையில், அதிலே வரும் வேளையில் உரையாடிக் கொண்டு வந்தார்கள். நான் அவர்களில் கவனம் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்க, அந்த வீதியில் தீட்டப்பட்டது போலத் தோய்ந்த கூர்முனைத் தோற்றமுடைய கல்லொன்று என்கால் விரல் நுனியைச் செருப்புக்கு மேலாலே வலிக்க வலிக்கக் குத்தி விட்டது என்றாலும் அந்த வேதனையைப் பொறுத்துக் கொண்டு ஒரு காலை நொண்டியபடி என் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அந்தச் சிப்பாய்கள் இருவரும் என்னைக் கடந்து அப்போது போய்க் கொண்டிருந்தார்கள். இன்னும் அந்தக் கசபுசவென்ற தங்கள் கதையை விடாமல் கதைத்துக் கொண்டே அவர்களிருவரும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கதைத்துப் போகும் கதையில் ஒரு சொல் கூட எனக்கு விளங்கவில்லை. என்றாலும் அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டு போன சொற்களில் - இடையிடையே அவர்கள் வாயிலிருந்து வெளிவந்த,
"டொமாட்டோ மொமாட்டோ.” , என்கிற சொற்கள் மட்டும் எனக்கு - அது மீன் சந்தையில் மாறி மாறி கேக்கும் சப்தங்களிலிருந்து கேட்ட ஒரு தெளிவான சொல்லாக நன்கு விளங்கும்படியாயிருந்தது. நான் கடைக்குப் போய்ச் சேரமட்டும் அந்த டொமட்டோ என்கிற சொல் மட்டும் - நுரை உடைந்து மறைவது போல உடனே மறையாது, மீண்டும் மீண்டும் அது என் காதுகளில் நாராசமாய் ஒலித்தவண்ணம் இருந்து கொண்டேயிருந்தது.
(2007)
.dി.ആസ്ത്രി 38 4%A842

குறித்தவி
எழுதிப் பழகின கையை அவருக்கு வெறுமே சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. கை 'ங்ம ங்ம’ என்கவும் . அ - மணக்கம் விதையின் பளபளப்போடு உள்ள வெறும் கடதாசித் தாள்களை, மேசைமேல் எடுத்துவைத்து விட்டு, எழுத்து வேலையில் தன் முழுக் கவனத்தையும் அவர் வைத்தபடி இருந்தார்.
ஆழமாக அவர் சிந்தித்துக் கொண்டதிலே, அருமையானதோர் கவிதை எழுத வந்தது. அதை எழுதப் புகுந்த வேளைதான் அந்த ஜன்னலுக்குள்ளால் பறந்து வந்த குருவியின் சிறகடிப்புச் சத்தம் அவருக்குக் கேட்டது. உடனே எழுத்து வேலையை நிறுத்தி விட்டு குருவியின் பறத்தலை அவர் பார்த்தார். அந்தக் குருவி மூன்று தடவைகள் அறைக்குள் சுற்றிப் பறந்து விட்டுப் போய், பிறகு அந்த ஜன்னல் கம்பியைக் காலால் பிடித்துக் கொண்டு சரிந்து அதிலே நின்றது. அந்தக் குருவியை அவர் பார்த்தார். முதல் மூன்று தடவைகளாக அந்த அறைக்குள் வந்து அவர் வெளியே துரத்திவிட்ட அதே குருவிதான்!
அந்தக் கொண்டைக்கிளாறுதான்! அவரைக் கண்டு அதற்கு அவ்வளவாக மிரட்சியுமில்லை, பயமுமில்லை, என்றவாறுதான் அதனது நிலை இருந்தது.
கொண்டைக் கிளாறு அந்த ஜன்னல் கம்பியில் இருந்து கொண்டு, அந்த அறைச் சுவரிலே மின்சார
മ.dി.eിത്രസ്ത്രക്രി eികഴി

Page 29
விளக்கின் மேல் பொருத்திக் கிடந்த கம்பி வளையத்தைப் பார்த்தது. அந்த வளையத்திலே சுற்றியும் கீழே தொங்கிக் கொண்டிருந்த பளபளப்பான வெண்மை நிறக் கண்ணாடிச் சரங்கள் அசையாது அப்படியே நிலையாய் இருந்தன. குருவி அந்தண்டைக்குப் போகச் சிறகடித்தது. அந்தக் கம்பி வளையத்தின்மேல் பறந்து போய் நின்றது. மேலேறும் வரிசையிலும் கீழிறங்கும் வரிசையிலுமாய் வித்தியாசமான ஒரு ஸ்தாயியில் சத்தம் வைத்தது. தலையை அங்காலேயும் இங்காலேயுமாக வெட்டி வெட்டித் திருப்பியபடி வட்டக் கண்ணால் அவரையும் பார்த்தது. அது ஏன் வீட்டுக்குள்ளே பறந்து வந்திருக்கிறது? எதற்காக அந்த மின் விளக்கு வளையத்திலே போய் நிற்கிறது? . என்கிற காரணமெல்லாம் அவர் நன்றாக அறிவார். அவருக்கு தற்சமயம் எழுதுவதை நிறுத்த வேண்டிய நிலைமை வந்து விட்டது. தான் எழுத வேண்டிய கவிதைக்கு தீயே’ என்ற ஒரு தலைப்பை மாத்திரம் எழுதிவிட்டு, பேனாவை மேசை மீது அவர் உருள விட்டார். தான் இருந்து கொண்டிருந்த நாற்காலியைப் பின்னால் நகர்த்தினார். நாற்காலியில் இருந்து அவர் எழுந்து நின்ற போதும் குருவி அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அதுதான் அந்த இடத்தை விட்டுப் பறப்போமா; இல்லை இப்படியே இருக்கும் இந்த இடத்தில் நின்று கொள்வோமா, என்ற தன் செய்கையினை அவருக்குக் காண்பித்துக் கொண்டிருந்தது. அவர் அதை வெளியே துரத்தி விட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். "சூ - - - - - - ச்து." . என்றபடி அது நின்று கொண்டிருந்த சுவரின் அருகே போகப் போனார். அவர் அந்த இடத்தை நெருங்க முதல், இன்னொரு பறத்தல் சத்தம் ஜன்னல் உள்ள பக்கமிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தார். இதன் இணைதான் அது என்று அங்கே பார்த்ததும் உடனே அவர் ஊகித்துக் கொண்டார். அது அந்த அறை ஜன்னலுக்குப் பக்கத்திலே இன்னமும் சிறகடித்துக் கொண்டு சுற்றி வட்டமிட்டுப் பறந்தபடி நின்றது. ஒரே நேரத்தில் இரண்டு குருவிகளினது சத்தமும் அவரது அறையை நிறைத்தது போல இருந்தன. அந்தக் குருவிகளை விரட்டத் தன் கைக்குள் எதையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. மேசையில் கிடந்த அந்தக் காகிதக் கட்டுத்தான் அந்தரத்துக்கு உதவியது. அதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு "ஆச்சூச். ஆ.” - என்று விசிறி விரிப்பாய் அந்தக் காகிதக் கட்டை அசைத்து குருவிக்குப் பயம் காட்டினார். அதைக் கண்டு விட்டு இரண்டு குருவிகளும் கலவரமாகக் கத்தல்களிட்டன. பிறகு எதையோ அவருக்குச் சொல்லிப் பேசி விட்டுப் பறப்பது போல அந்தக் குருவிகள் இரண்டும் தாங்கள் பறந்து உள்ளே வந்த அந்த ஜன்னலின் வழியாகவே மீண்டும் வெளியே பறந்து விட்டன.
அந்தக் குருவிகள் வெளியே பறந்த பின்பு அவர் உடம்பும் திருப்தியால் மூச்சு விட்டுக் கொண்டது. ஓரளவு மினுங்கினார் அவர்.
ഴ്ച.dി.ആസ്ത്ര് 40
ീമി

தன் தலையைச் சொரிந்தார். கையில் வைத்திருந்த வெற்றுச் கடதாசிகளுடன் மேசையருகில் உள்ள நாற்காலியில் திரும்பவும் போய் இருந்தார்.
அவர் எழுத வேண்டுமென்று புனைந்து வைத்திருந்த கவிதை வரிகள், ஒரு நீரூற்றுப் போல அவர் நினைவில் மீண்டும் பிரசவித்தது. முன்னம் அந்தக் கதிரையில் இருந்த வேளை, அந்தக் கவிதைக்குத் தலைப்பிட்டிருந்த தாளிலே கவிதையை நிறைவு செய்ய அவர் எழுதவும் ஆயத்தமானார். அவரது சிந்தனையில் மூவுலகத்தொன்றான இப் பூவுலகத்துக் காடெல் லாம் வெயிலின் உஷ்ணம் மிகுந்து எரியத்தொடங்குவது போல தரிசனமானது. அந்த நாசகாரத்தீ காட்டு வளங்கள் அனைத்தையும் எரித்துச் சாம்பல் மேடாக்குகிறது. தீ நாக்குகளிலிருந்து தப்பி ஓட முயலும் மிருகங்கள் கூட்டமாக நிறைந்து விட்டன. பறவைகள் கூட்டம் கூட்டமாய் தப்ப வழி தெரியாமல் பறந்து தீய்ந்து மாய்கின்றன. எங்கும் ஒரே புகை மண்டலம். மனிதனுக்கு வெறுப்பான புகை மனிதனுக்கு விரோதமான புகை! சற்று முன் அந்த அறையினுள் பறந்து வந்த அதே குருவி, அவர் முன் நின்று புலம்புவதைப் போல இருக்கிறது. அந்தக் குருவியின் புலம்பலை ஒரு கவிதையாக அவர் எழுத ஆரம்பித்த போது, எழுதுகின்ற தன்கையும் அந்தத் தீ நாக்குகளால் வேகுகின்ற மாதிரி அவருக்குச் சூடான தோர் உணர்வு! நெருப்புச் சட்டி ஒன்றை தன் தலை மீது யாரோ தூக்கி வைத்து விட்டது போல ஒரு கொதிப்பு
அந்தக் காடெல்லாம் எரிந்தழிந்து போவதை நினைத்துக் கொண்டு, "தீயே. ” - என்று தான் எழுதி வைத்த தலைப்பை வாசித்து ஒருமுறை அவர் நெடுமூச்செறிந்தார். விட்ட பெருமூச்சும் அனலாகத் தகித்தபடி வந்தது அவருக்கு. அடுத்த கவிதை வரிகளை எழுதுகின்ற வேளை . அதுவும் அவரது மனத்தினைச் சுட்டது. உன் நெற்றிக் கண்ணால் நீசரை எரிப்பதற்குப் பதில் காட்டை எரித்தாயே. எழுதிய அந்த மூன்று வரிகளிலும் தன் மனக் குமுறலை அவர் வெளியிட்டார். எழுதி முடித்த அந்த மூன்று வரிகளையும் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார்.
அந்தக் குருவி எங்கோ இருந்து கொண்டு இன்னமும் அழுது புலம்புகிறது மாதிரி ஒருவித பிரமையாக அவருக்கு இருந்தது.
அடுத்து எழுதும் கவிதை வரிகள் அந்தக் குருவியின் புலம்பலாக இருந்தன.
எம் கூடும் குஞ்சும்
தணலில் எரிந்து கருகிட
.dി.eിത്രസ്ത്രക്രി 41 eിക്രി

Page 30
யாருக்கு வஞ்சனை செய்தோம். இப்போது நாங்களும் அகதிகள் தானா..? எழுதிய கவிதை நன்றாக, பொருத்தமாக அமைந்து விட்டது போல கவிதையைத் திரும்பவும் வாசித்த போது அது அவருக்கு மனத்திருப்தியாக இருந்தது. தன் மனக் கனம் சகலத்தையும் எழுதிய காகிதத்தின் மேல் வைப்பது போல நினைத்துக் கொண்டவாறு; மேசை மேல் கிடந்த அந்தக் கண்ணாடிக் கல்லை எடுத்து அதன் மேல் வைத்தார். பக்கத்து வீட்டிலிருந்து பல நாய்கள் குரைப்பது போல சத்தம் கேட்கத் தொடங்கியது. குடும்பச் சண்டைதான்! அவர்களுடைய குடும்பத்தில் சதா பணத்துக்காக நடக்கும் சச்சரவுகள் சொல்லி முடியாது - "எல்லா சாமான் சட்டுக்களும் மலை போல பெரிசாய் இப்ப விலை விலை. ! " - என்று அவள் சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வது வீதி முழுவதும் கேட்கும். தன் புருஷனிடம் பணத்தைக் கேட்டுக் கத்திக் கொண்டிருக்கும் அவள் சண்டைக் காரியல்ல, ஒ, இல்லவே இல்ல, அவள் நல்லவள் பாவம் ஆறு பிள்ளைகள் அவளுக்கு. கணவர் காலையில் வேலைக்கென்று வெளியே வெளிக்கிட்டுப் போய் விடுவார். அதற்குப் பிறகு வீட்டிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் பின்னேரம் மட்டும் அவள் தானே முகம் கொடுக்க வேண்டும்?
அடுத்த வீட்டுப் பிரச்சினையை எழுது மேசையில் தன் கைகளை ஊன்றியபடி அவர் யோசித்துக் கொண்டிருக்க, இருந்தாற் போல அந்த இறக்கைகளினது விசிறல் சத்தம் மீண்டும் அந்த அறைக்குள்ளே அடர்ந்தது. பறந்து வந்த அந்த இரு குருவிகளில் ஒன்று முன்னம் தான் வந்து நின்ற அந்தக் கம்பி வளையத்தின் மேல் வந்து அமர்ந்தது. மற்றக் குருவி எங்கே என்ற தேடலோடு திரும்பிப் பார்த்தார். அது அங்கே இப்போது ஜன்னலுக்கு மேலே உள்ள சுவரில் காற்றுப் புக வைத்துக் கட்டியுள்ள சித்திரக்கல் வளைவுக்குள்ளே போய் நின்று கொண்டிருந்தது. அந்த வளைவுக்குள்ளே நின்று கொண்டிருப்பது ஆண் குருவி தான்! என்று இரண்டையும் பார்த்து, பின்பு, அவர் அடையாளம் தெரிந்து கொண்டார். திரும்பவும் அந்தக் குருவிகளை விரட்ட வேண்டும் என்ற எரிச்சல் அவருக்கு வந்தது. சடுதியான, பயங்கரமான தூண்டும் ஒரு விசைச் சக்தியால் எழுந்தார். துப்பாக்கியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு குறிவைத்துச் சுட்டது மாதிரி, தன் கையால் குருவிக்குப் பயம் காட்டினார். கம்பி வளையத்தின் மேல் இருந்து கொண்டிருந்த குருவி "ஊஹிம்.” அதை விட்டு எங்கும் அது அசையவே இல்லை.
“அதில உந்த ஜன்னலுக்குப் பக்கத்தில பெரியதொரு மாமரம் சோக்காய் வளந்து நிக்குது. அதுக்குக் கிட்டத்தில கூடையா வளந்து நிக்கிற அந்தச் செரிமரமும் உங்களுக்கு இன்னும் நல்ல வசதியாயிருக்கு. அதில போய் உங்கட குருவிக் கூட்டக் கட்டலாம் தானே.? இதில
தி.சி.அருளானந்தச் 42
ീമി

முதல் அப்ப நீங்க கூடுகட்டி பிறகு என்ன நடந்திச்செண்டு உங்களுக்கு மறந்து போச்சோ..? ”
குருவிகளுக்குத் தான் சொல்வது விளங்காது என்று தெரிந்திருந்தும் தன்னை ஆற்றுவித்துக் கொள்ள தன் மன உளைச்சலை வெளியே வார்த்தைகளில் கொட்டித் தீர்த்தார் அவர். "என்ன உங்க சத்தம்.? நீங்களே உங்களுக்குள்ளா இருந்து நெடுக அப்பிடிக் கதைச்சுக் கொண்டிருக்குறீங்க. ? " - என்று அவரது அறை வாசலில் வந்து நின்று கொண்டதும் கேட்டாள் செண்பகம். " பங்க பார்! திரும்பியும் அதே குருவியள் இந்த அறையிக்கயா இப்ப வரத் துவங்கீட்டுது..!”, என்று மனைவிக்குச் சொன்னார் அவர். அவள் குறிப்பாக அங்கே தான் பார்த்தாள். அந்த இடத்திலே தான் - முன்பு ஒரு குருவி வந்து கூடு கட்டியிருந்தது என்பது தன் ஞாபகச் சேகரிப்பிலிருந்து அவளுக்கு நன்றாய் ஞாபகம் வந்தது. அந்தக் குருவி அதிலே நின்றவாறு சத்தமிட்டது.
அவள் நட்சத்திரக் கண்களுடன் அதைப் பார்த்தாள். “முன்னம் வந்து கூடு கட்டின அதே குருவிதான் இது போல. ! “ அவளும் ஒருவித மன எரிச்சலுடன் கூறினாள்."என்ன இதுகளுக்கு நான் இனிச் செய்யிறது.? நான் வெளிய துரத்திவிடத் துரத்தி விட பேந்தும் பேந்தும் இதுக்குள்ளயா அதுகள் வந்துநிக்குது.” "நீங்கள் முதல் விட்ட பிழைதான் இதுக்கெல்லாம் காரணமெண்டு உங்களுக்கு இப்ப விளங்குதே.? அப்பவே அறையுக்க கூடு கட்ட விடாம வெளியால நீங்க துரத்தித் துரத்தி விட்டிருந்தா இப்பவெல்லாம் இதுகள் பேந்தும் இங்க அறையிக்க வந்திராது.”
"உனக்கு என்னை எதிலையும் வைச்சுப் பிழை கண்டு பிடிக்கிறது தான் வேலை என்ன? முன்னம் உந்தக் குருவி என்ர அறையிக்க வரேக்க தஞ்சம் கோரி வருகுது . மிருதுவான தளம் எல்லாம் போட்டு அந்தக் குருவி கூடு கட்டுது பாவம்! அது முட்டை இட்டுக் குஞ்சு பொரிச்சப்பிறகு போகட்டும்! எண்டு விட்டு வைச்சன். ஆனா அதில இந்தக் குருவி கூடுகட்டி, முட்டை இட்டு அடை காக்கத் தொடங்கேக்க தான், பிறகு அப்பிடியெல்லாம் நடக்குமெண்டு எனக்கும் அது விளங்கிச்சு. இப்பயும் அதே வேலையைச் செய்யத்தானே இந்தக் குருவி எத்தனிக்குது.! அந்தக் கம்பிக்குக் கீழ இருக்கிற பல்ப்பை நான் ரவயில போட, குருவியின்ரை முட்டையில அதின்ரை வெளிச்சச் சூடு பிடிக்கும்.! அதால பிறகு உந்தக் குருவியின்ர முட்டை கூழாயிடும்! பிறகு எங்க பேந்து அது குஞ்சு பொரிக்கிறது? முதல் அப்பிடியெல்லாம் நடந்தது உந்தக் குருவிக்கு எங்க விளங்கப் போகுது.? அது அப்பிடி பட்டுக் கழிச்சும் திரும்பவும் அதிலயாயே இப்ப கூடு கட்டநிக்குது..!”
"எல்லாத்துக்கும் முதல் உதில நீங்க குருவியைக் கூடுகட்ட விட்டா. முட்டையிட்டு உது அடைகாக்கிறதுக்கு அதில இருக்கைய்க,
தீசிஅருாணத்தச் 43 മിഴി

Page 31
மேல இருந்து அது உங்கட படுக்கிற கட்டிலுக்குப் பக்கத்தில பீச்சித் தள்ளும்.! அதின்ரைஅந்த வேலையால இந்த எங்கட இருக்கிற வீடெல்லாம் பேந்து கிடந்து நாறும்.! எனக்கு அதால எத்தினை போத்தல் டெட்ரோல் செலவு? இப்பிடித்தேவையில்லாத வேலயளத்தான் நீங்க இருந்து கொண்டு பாப்பீங்க..? நாங்க இப்ப இருக்கிற இந்த வீடே வாடகை வீடு. இந்த வீட்டு ஒணர் வந்து பாத்திட்டு நாங்கள் ஒரு குப்பைச் சனங்கள் எண்டும் பேசுவார். இதெல்லாம் தேவையா. ? ” அவளது கேள்வியின் ஒவ்வொரு பக்கத்தையும் நிறுத்துப் பார்க்க முயற்சித்தார் அவர்.
நிதானமாகக் கழுத்தறுக்கிற கசாப்புக் கடைக்காரன் மாதிரி, வார்த்தைகளால் அவள் அறுத்துக் கொண்டு போவாள் என்பது அவருக்குத் தெரியும்.
“சரி, சரி, கதைய அப்பிடியே நிப்பாட்டு. ஆரெவரையும் இங்க இந்த வீட்டில நாங்கள் சேத்து வைச்சிருக்கவுமில்ல. இங்க அவற்றை வீட்டுச் சுவரில ஒரு ஆணி அடிக்கவுமில்ல.! இதுக்க குருவி வந்து கூடு கட்டுறத்துக்கு வீட்டுக்காரன் எப்பிடி எங்களப் பேச ஏலும்.? நாங்களும் ஒரு நேரம் அகதியளா அங்கயும் இங்கயும் இருக்க இடம் இல்லாமல் அலைஞ்சு கொண்டு திரிஞ்சனாங்கள்தானே? நாங்களும் இடம் பெயர்ந்து அலைஞ்சு திரிஞ்ச காலத்தில, முகம் தெரியாத மனுசரிண்ட வீடுகள் வழிய போயும் அவயிண்ட வீடு வழிய தங்கி இருக்க இடம் தாங்கோ வெண்டு கேட்டிருக்கிறம். அந்த மனிசரும் எங்கட நிலையைப் பார்த்து மனசிரங்கி எங்களத் தங்கட அவயின்ர வீட்டில இருக்க விட்டதுகள்தானே? அந்த நினைப்பெல்லாம் இப்பவும் என்னட்ட நெடுக இருக்குகண்டியோ..? இப்ப இந்தக் குருவி வந்து கூடுகட்டயிக்கவும் அதை நினைச்சுத்தான் நானும் என்ரை அறைக்க, சரி கூடு கட்டட்டுமன் எண்டு விட்டன்..! அந்தப் பீ நாத்தத்தையும் என்ன செய்யிறதெண்டு பொறுத்துக் கொண்டிருந்தன்..!"
“சரி சரி! அப்பிடி நீங்க விட்டீங்க! அதால பிறகு உந்தக் குருவிகளுக்கு என்ன நன்மை நீங்க செய்தீங்க..? அதுகள் கூடு கட்டி இட்ட முட்டையும் பொரிச்சுக் குஞ்சு வராம கூழ் முட்டையாயிட்டுது. அந்த மடக்குருவி வந்து பேந்தும் அந்த பல்ப்பு வளையத்துக்கு மேலதானே இப்பவும் கூடு கட்ட வெண்டு நிக்கிது.? அந்தச் சுவர் பல்ப்பை ராவேல எரிய விடாம நூத்துப் போட்டு நீங்க இருட்டுக்க இருப்பீங்களே? சரி இருட்டுக்க அப்படி நீங்க இருப்பீங்க எண்டு வையுங்கோவன். ஆனா எங்கயும் படிக்கிறதுக்கு எழுதுறத்துக்கெண்டு வேற இடம் ராவேல உங்களுக்கு இங்க வீட்டுக்கதோதா இருக்கா.: ? அதைவிட இந்தக் குருவியள் என்ன அடைக்கலாங் குருவியள் மாதிரி பெரிசாச் சொல்லக்கூடியதா வீட்டுக்குருவியளே? வீட்டுக்கவந்து கூடு
தி.சி.அருளானந்தச் 44
ീമി

கட்டுறதுக்கெண்டு விட. மனுசன் தான் இயற்கையை விட்டு வர வரத் தன்ரை சீவியத்தில விலகிப் போறானெண்டா = உதுகளும் அப்பிடிப்போக நாங்க காரணமாயிருக்கிறதா. ?”
செண்பகத்தின் கருத்து அவளது ஒவ்வொரு சொல்லிலும் கனத்தது. அவள் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும், அடைக்கலாங் குருவி கண்ணாடியின் மேல் கால்களால் தொற்றிக் கொண்டு, அதில் தெரியும் பிம்பத்தைக் கொத்திக் கொண்டிருப்பது போல, அவரின் மனத்திலே தட்டித் தெறித்த கணக்கில் இருந்து கொண்டிருந்தன.
“ஓம் நீ சொல்றதுஞ் சரியாகத்தான் இருக்கு இந்த முறை கணி டிப்பா இதுகளை அந்த இடத்திலை கூடுகட்ட நான் விடுறேல்லத்தான். இதுகளை எப்பிடியும் வெளியே உள்ள மரத்தில கூடுகட்ட விடத்தான் செய்ய வேணும்! அதுக்காக இதுகள ரெண்டு மூண்டு நாளுக்கிருந்து வெளிய போகத் துரத்திவிடுறதான் இனி என்ரை வேல.! இப்பவும் இதுகளைப் பாத்தியே நாங்கள் ரெண்டு பேரும் எங்கட கதையோட இருக்கிறம், அதுகள் இதுக்குள்ள தங்கடபாடு.! அந்தக் கிறிலுக்குள்ள இருக்கிறவரைப்பார்! அவர்தான் ஆண்குருவி !” "உவ்வைக்கு உடைஞ்சு கிடக்கிற அந்தத் தும்புத் தடியை எடுத்துத் தாறன்! கையில உதுகளைத் துரத்த நீங்க வைச்சிருங்கோ.!” வீட்டு மூலைக்குள் கிடந்த தடியைக் கொண்டு வந்து அவள் கீொடுத்தாள்.
“ஒய். ஆக்.!” என்று = கம்பை அவர் குருவிக்குப் பக்கத்தில் உயர்த்தினார். அந்தக் கம்பைக் கண்டதும் புயல் காற்றாய் வெளியே பறந்தது பெண் குருவி ஆண் குருவியும் பெண் குருவியுடன் சுறுக்காய்ப் பின்னாலே சேர்ந்து கொண்டு பறந்தது.
“ எனக்கு என்ரை வேலயள் அங்க குசினிக்க நிறையக்கிடக்கு! நான் போவப் போறன். !” - என்று சொல்லிவிட்டு செண்பகமும் போய் விட்டாள். அவர் கையில் கம்போடு காவல் அதிலே இருந்து கொண்டார். அந்தக் குருவிகளை வீட்டுக்குள் வரவர வெளியே கலைத்துக் கொண்டிருப்பதே அன்று முழுக்க அவரின் வேலையாக இருந்தது.
அடுத்த நாள் அந்த இரண்டு குருவிகளும் நண்பகலுக்குப் பின்னே முதலாந்தடவையாக அங்கே அந்த அறைக்குள் பறந்து வந்தன.
"நான் நேற்றுக் கலைச்சுக் கலைச்சு உங்களை வெளியே போக விட்டது இப்ப மறந்து போச்சுதா..? பேந்தும் பேந்தும் உள்ளுக்கவா வாறியள்.?” . என்று அவர் குருவிகளைப் பார்த்துக் கொண்டு கேட்டார். அந்தப் பெண் குருவி மின்சார விளக்குப் பூட்டியிருந்து வளையத்தடிக்கு வரவில்லை. இரண்டு குருவிகளும் அந்தச் சித்திரக் கல் வளைவினுக்குள்ளே இருந்தபடி, அவரைச் சபிப்பது போல சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அவர் கம்பை எடுத்து நீட்டிக் காட்டினார். குருவிகள் கம்பைக் கண்டதும் அதாலே அப்படியே வெளியே பறந்து
தி.பி.அருளரந்தச் 45
ക്രി

Page 32
விட்டன. அதற்குப் பிறகு பொழுதுபட்டவரை அந்தக் குருவிகள் திரும்பி அவருடைய அறைப்பக்கம் வரவே இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை வந்தது, அந்த நாளும் இரவாகி நடுநிசியாகி விடிந்து போய்விட்டது. ஆம் விடிந்து விட்டது! சனிக்கிழமையும் பிறந்து விட்டது! அந்தக் குருவிகளை அவர் தன் கணணால் காணவில்லை. அதனால் மனத்தில் அவருக்கு ஒருவித உஷ்ணம், புழுங்கல். சங்கிலி சுற்றி இறுக்கியது போல மார்பில் வலி வருத்தத்தோடு யோசித்துக் கொண்டிருந்தார். அந்த நாளுக்கு அடுத்த நாள் போல - காலை வெயில் அந்த வாசலில் விழுந்து கொண்டிருந்த நேரம் அவர் அந்த வாசல்படியில் இருந்து இறங்கிக் கீழே நின்று கொண்டிருந்தார். பக்கத்து வீடுகளிலே பெண்கள் பம்பரம் மாதிரி வீட்டைச் சுற்றிப் பெருக்கும் - கழுவும் . கூட்டும் துடைக்கும் துவைக்கும், சத்தங்கள் அவரின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. நேற்று இரவு எட்டு மணிக்குப் பின்பு, தூக்கலாய் வாசனை விழா நடத்திய பவள மல்லிகைப் பூக்கள் மரத்திலிருந்து கீழே அந்த வாசலுக்குப் பக்கத்தில் கொட்டுப் பட்டுக் கிடந்தன. அந்தக் கசங்கல் மணக்கைகள் மூச்சில் பருத்துப் பருத்து சுவாசத்தில் ஏற அவர் முகர்ந்தார். அதோடு அந்தச் செரிமரத்தின் பூக்களையும் வெயில் வெளிச்சத்துடன் பார்த்துக் கொண்டு, காலை நேரத்தை இலகுவாகக் கழிக்கலாம் போல அவருக்கு இருந்தது. அந்த அரியதான அழகான செர்ரிமரத்துப் பூக்கள் பார்க்க இனிமையாக அவருக்கு இருந்தன. செர்ரிமரம் பூவெடுக்கும் காலம் தான் இது. அதிலே உள்ள புதுமொட்டுக்கள் எல்லாம் ஏதும் அறியாத கன்னிப் பெண்கள் போல குவிந்தபடி கிடந்தன. சின்னச் சின்னதாய், நட்சத்திரமாய், கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் கன்னிப்பூக்கள் அவரின் கண்களுக்குள் நிறைந்ததாய் இருந்தன. ஆனாலும் நெடிதான நேரம் தனியே அந்தப் பூச் செழிப்பிலேயே தன் கவனம் முழுதும் வைத்தபடி இருக்க அவரால் முடியவில்லை. "என்ன சத்தம் அந்தச் செரிமரத்துக் கூடலுக்குள்ளே. ? " = என்றவாறு புலன் அவ்விடத்தில் போனது அவருக்கு
அந்தக் கிளைக் கூடலுக்குள்ளே "கீச்சுக் கீச்சென்று' - முன்பு அவருக்குப் பழக்கப் பட்ட அதே குருவிச் சத்தங்கள் கேட்டன.
அந்தக் குருவிகள் தானா?
அந்த ஐமிச்சத்தை தன் மனத்தில் வைத்துக் கொண்டு செர்ரி மரத்தின் அருகே போனார். இரண்டு கைகளாலும் மரத்தின் கொடி போன்ற நீண்ட வாதுகளைப் பிடித்து விரித்துக் கொண்டு அதற்குள்ளே பார்த்தார். விறுக்கென்று இரண்டு குருவிகள் அதற்குள்ளே இருந்து வெளிப்பறந்தன. அந்த மரக்கூடலிலிருந்து அவரது கண்களில் பட்டும் படாததுமாய்த் தெரிந்ததும் மறைந்து விட்ட அந்தக் குருவிகள் . என்ன சாதிக் குருவிகள். ??
நீ.பி.அருா%னந்தச் 46. eീമി

அவைகள் அந்தக் கொண்டைக் கிளாறுகள்தான்! மனத்தில் அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார். அந்தக் குருவிகள் பறந்து போனதன் பின்பும் தன் மனத்துக்குள்ளேயிருந்து எழுந்த ஒரு கேள்வியோடு . அந்த மரத்தின் கிளைகளை விலக்கி விலக்கி பல பக்கங்களிலிருந்தும் உள்ளே அவர் பார்த்தார். அதற்குள்ளே ஒரு கெவட்டைக் கிளையில் பருமன் குறைந்த வளைந்த காய்ந்த நெட்டுகள் கூட்டுக்கு அத்திபாரமாய் வைக்கப்பட்டிருந்தன. அதைப்பார்த்ததும்.’
"இதிலை அந்தக் குருவிகள் தான் இப்ப கூடுகட்டுது." - என்றதாய் மனச் சந்தோஷப் பட்டார் அவர். செண்பகத்திடம் உடனே போய் இதைச் சொல்லிவிட வேண்டும் போல தவிப்பாக இருந்தது. கிளைகளை விலக்கிப் பிடித்திருந்த கையை எடுத்து விட்டு, செண்பகம் வேலையாய் இருந்த குசினிக்குப் போனார். செர்ரிமரத்தின் தாழ்நிழல் குசினிப் பக்கம் வரை நீண்டிருந்தது.
"திரும்பியும் அந்த ரெண்டு குவியளும் அதில இப்ப வந்திட்டுது.! ". என்று குசினிக்குப் போன கையோடு அவளுக்குச் சொன்னார். செண்பகத்துக்கு அவர் சொன்னது சரியாக விளங்கவில்லை. அவரின் முகத்தைப் பார்த்தாள் அவள் அவரிடத்தில் சந்தோஷக் களை தெரிந்தது. அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது!
“வீட்டுக்க திரும்பவும் அதுகள் வந்திட்டதா..? - ஏதும் புரியாத அளவில் கேட்டாள்.
" இல்ல இல்ல வீட்டுக்குள்ள அதுகள் இப்ப வரேல்ல.” " அப்ப எங்கயெண்டு இப்ப நீங்க சொல்ல வந்தீங்க..?” " அந்தச் செரி மரத்துக்குள்ள .” - தன் வாய் முழுக்கவும் திறந்து சந்தோஷச் சிரிப்புச் சிரித்தார் அவர்.
" அதிலேயா..? அதே குருவியள் தானா. ? " அதே குருவியள் தான்! இப்ப வாசல் பக்கத்து அந்த மரத்திலயாக் கூடு கட்டுறதுக்கு வெளிக்கிட்டிருக்கு. இப்பதான் கூடு கட்டத் துவங்குகினம்! ரெண்டு மூண்டு தும்பும் தூசியும் துப்பட்டையுமாய, அதில மரத்துக் கெவட்டைக்க இருக்க நான் கண்டன்.”
"அதைப் போய்ப் பாத்துப் பாத்து நீங்க பிறகு அதுகளுக்குப் பயங்காட்டி எங்கயும் பேந்து கலைச்சு விட்ராதேயுங்கோ.?”
“நானேன் கலைக்கிறன்.? "இல்ல நீங்க முதல் அதுகளை வீட்டுக்க கூடுகட்ட விடாமக் கலைச்சதில இப்ப உங்களைக் கண்டா அதுகளுக்கும் பயமா இருக்கும்.” "அப்ப அந்தக் குற்றம் என்னிலதான் எண்டு நீ சுமத்தி விடுறதுக்குத் தெண்டிக்கிறியோ..?”
“உங்களுக்கு ஒண்டுமே கதை சொல்லேலாது.” - என்று சொல்லிக்கொண்டு எண்ணைத் தாச்சியிலே வெட்டி வைத்த கத்தரிக்காய்த்
yy
py
.dി.e്ത്രണങ്ങക്രി 47 eിക്രി

Page 33
துண்டங்களை அவள் கொட்டினாள். “ஸ்.ஆஸ் " . என்ற பொரி பொரியும் சத்தம் பெரிதாக எழுந்து தணிந்து கொண்டிருந்தது. கத்தரிக்காய் எண்ணெய்யில் வெந்து கறுத்துச் சுருங்கிக் கொண்டிருந்தது. இனி ஒரு கதையும் அவளுக்குச் சொல்ல இல்லை என்ற அளவிலே, திரும்பவும்
தன் அறைக்கு அவர் வந்து சேர்ந்தார். பிறகு அந்த வாசற்படியிலே நின்று கொண்டு அந்தச் செர்ரி மரத்தை அவர் பார்த்தார். செர்ரிமரக் கூடலிலே மேலே உள்ள மென் கிளையில் கொம்பாடும் சலனம் அவருக்குத் தெரிந்தது.
அங்கே இனி என்ன நடக்கப் போகிறது? - அந்தக் குருவிகள் கூடுகட்டவும் ஆரம்பித்து விட்டன.
அவைகள் இருந்து தங்கள் பாட்டிலே தங்களது வேலையைச் செய்யட்டும் - நான் இருந்து என்பாட்டிலே என் வேலையைப் பார்த்துக் கொள்வோம் - என்று நினைத்துக் கொண்டு தன் எழுத்து வேலையைத் தொடர ஆரம்பித்தார் அவர்.
பூக்கள் நிறம் மாறுவது போல நாட்களும் சென்று கொண்டிருந்தன. அன்று காலை வெயிலேறவிட்டுக் குளித்தபின், ஈரம் உலரத்தலையைப் பிரித்து அடித்து உலர்த்தியபடியே அவரது அறை வாசற் படியில்வந்து நின்றாள் செண்பகம். அவளது நீண்ட சிலுப்பிக் கொண்டிருந்த கூந்தல் கற்றைகள் அவளைச் சுற்றி விழுந்து, அவளது அழகிய உருவத்துக் கொப்பான ஒளிவட்டத்தைப் பரப்பியது. “ இந்த முடிய உலர விட்டுச் சிக்கெடுக்க எனக்கு நேரமில்லை.!” - என்று அவள் அதிலே நின்றபடி சொல்லிக் கொண்டிருக்க . அவர் அந்த அறைக்குள் மவ்னமாக இருந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிக் கொண்டிருந்தது ஒரு கவிதையாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கவிதையை அவர் எழுதப் புகுந்தது முதல் உலகில் யுத்தமில்லை என்பது போல் நேரம் பரிசுத்தமாய் அவருக்குக் கடந்து சென்று கொண்டிருந்தது.
“இப்பவெல்லாம் அதுக்குள்ள கூட்டுக்க இருக்கிற தங்கட குஞ்சுகளுக்கு அந்தக் குருவியள் புழுபூச்சி வேட்டையாடி ஏராளமாக் கொண்டந்து குடுக்குதுகள். ? அந்த ரெண்டு குருவிகளும் கூட்டுக்க போகேக்கிள, உள்ள கீச்சுச் சத்தங்கள் உரக்க அதிகமாக் கேக்கும். அத நீங்க எப்பவுமாவது பாத்திருக்கிறியளா? ஆனா நானெண்டா இதால குசினிக்குப் போகேக்க வரேக்க அதுகளை நெடுகலும் பாக்கிறனான்!” அவர் ஒரு பக்கம் தன் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்க, செண்பகம் செர்ரி மரத்தைப் பார்த்துக் கொண்டு அவருக்குச் கேட்கட்டும் என்றதாய் இதைச் சொன்னாள். அவர் தான் எழுதிக் கொண்டிருந்தாலும் அப்போது அவள் சொன்ன கதையிலே தன் புலனை விட்டார்.
"இங்க என்னப் பார் நீ செண்பகம்! இதுதான் கதை இவ்வளவு ፰.dኒaòጣጎጭበኋöö 48 அத்தி

நாள் செண்டு போச்சு நான் நீ சொன்ன மாதிரி பெரிசா அதைப் பாத்துக் கொண்டிருக்கேல்ல. அது ஏன் எண்டொருக்கால் நீ சொல்லன் штLшић?”
"ஏனாம். ? " - என்று தான் கேட்ட கேள்வியை இழுத்தாள் அவள் எனக்கெண்டா எந்தவித இடைஞ்சலுமில்லாம சுதந்திரமாயிருந்து சீவிக்கத்தான் விருப்பம். அதே மாதிரி இன்னொரு மனுசரிண்ட சுதந்திரத்திலயும் நான் தலையிட்டுக் கரைச்சல் குடுக்க எப்பவும் விரும்புறேல்ல. இந்த உலகத்தில இயற்கையா உள்ளதுகள் எல்லாத்தையும் நான் விரும்புறன். அதே போல இந்த இயற்கையை விட்டு விலகிப்போகிற வாழ்க்கையையும் நான் வெறுக்கிறன். அந்தக் குருவிகளின்ர கதையும் இதுதான்! அது முதல் இந்த வீட்டுக்க கூடு கட்டவரேக்க எனக்கு விருப்பமில்லயெண்டாலும், பிறகு என்ன செய்யிறதெண்டு நினைச்சு இரக்கப்பட்டு அதுகள வீட்டுக்க கூடுகட்டவிட்டன். ஆனா வீட்டுக்க கூடு கட்டி அதுகளுக்கு என்ன நடந்தது? தீமைதான் வந்தது! பிறகும் அதுகள் தங்களுக்கு நடந்ததை உணராமல் திரும்பவும் வீட்டுக்க வரையிக்க எனக்கு அது எரிச்சலாயிருந்தது. அதால அதுகளை நான் வெளிய துரத்திவிட்டன். இப்ப அதுகள் தங்கட இயல்பான வாழ்க்கைக்கு இயற்கையோட சேந்து கொண்டுதுகள். இதுக்குப்பிறகு அதுகள் கூடுகட்டுது, குஞ்சு பொரிக்குது எண்டு பாத்துக் கொண்டிருக்கிறது எனக்கு வேலையில்ல. அதுகளை அதுகளின்ர பாட்டுக்கு சுதந்திரமா நான் விட்டிட வேணும்! அது தான் என்ர விருப்பம்! இதெல்லாம் இன்னும் உனக்கு விளங்கேல்லப் போல..? என்னப்பற்றி இன்னும் உனக்குத் தெரியேல்லப் போல.!”
"நான் கேட்டதுக்கு இவ்வளவு பெரிய புராணமே தேவை?” "இல்ல உனக்குச் சரியா விளங்கியிருக்க மாட்டுது எண்டு கொஞ்சம் விரிவா இதைச் சொன்னன்.”
“உங்களை மாதிரி எனக்கும் எல்லாம் விளங்கும்.!” அவர் அவள் சொன்னதைக் கேட்டு விட்டு மெல்லாச் சிரித்தார். செர்ரிமரத்துக்குள் குருவிக் குஞ்சுகள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கூடலுக்குள்ளே இருந்து இலைப் பரப்பின் வெளியே எட்டிப் பார்த்து விட்டு ஆண் கொண்டைக் கிளாறு வெளியே பறந்தது. பெண் குருவியும் ஆண் குருவிக்குப் பின்னால் விரைவாகப் பறந்தபடி மாமரத்தடியாலே போய் ஒரு கூரைக்குப் பின் மறைந்தது.
ዘ”
செர்ரிமரம் பூக்கள் மாறிக் காயை வளர்த்துக் கொண்டிருந்தது. அன்று பின்னேர வேளை - மேகம் ஈரக் கருந்துணியாய்க் கறுத்துக் கிடந்தது. மிகத் தாழ்வாக ஆகாசம் வந்து விட்டதோ? எனும் படியாக நெருக்கத்துடன் இருந்தது. வானில் வெட்டிச் சரிந்த ஒரு மின்னல் “பளி.ச்.பளி.ச்” . சென்று நான்கு பக்கமும் கொடிவீசி மறைந்தது. மின்னல் வெட்டோடு இடியின் வெடிப்பு இருந்தாற் போல மழை ஜோ' தி.சி.அருாரதிதர் 49 ക്രി

Page 34
. வென பெரிய ஒலத்துடன் இரைந்து கொண்டு தொலைவிலிருந்து கடந்து வந்தது. காற்றும் சுழன்றடித்தது! மழை குறையவே இல்லை! மரங்கள் பேயாய் ஆடின மண்குளிர்ந்து மரம் குளிர்ந்து போகுமளவிற்கு அந்த மழை நன்றாக அடித்து ஊற்றிவிட்டு இருட்டுப்படவும் விட்டுவிட்டது. அவர் இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு, இருந்து சிறிது நேரம் புத்தகம் படித்த பின்பு, படுக்கைக்குப் போனார். கட்டிலில் படுத்துக் கிடந்த போது, அவருக்கு அந்தக் குருவிகளின் ஞாபகம் வந்தது. பின்னேரம் பெய்த மழைக்கும், அடித்த காற்றுக்கும், அந்தக் குருவிகளுக்கு ஏதும் நடந்திருக்குமோ? என்ற ஏக்கம் அவரின் மனத்தைப் போட்டுப் பிய்த்தெடுத்தது. அந்த நினைப்பிலே நித்திரையின்றி நடுநிசிவரை சோகக் கறுக் கடலில் கிடந்தார் அவர்.
விடியல் பொழுது, மென் வெளிச்சத்தோடு குளிர்மையுடன் மலர்ந்தது. பட்சி ஜாலங்களின் கீச் கீச்" - சென்ற சத்தங்கள் அந்தக் குளிர்மைக்கு இனிமை சேர்த்ததாய் இருந்தன. சூரிய ஒளிக்கதிர்கள் மழையின் குளிர்ச்சிக்கு மருதாணி இட்டாற் போல எங்கும் தங்க நிறத்தில் தகதக வென ஜொலிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பிந்திப் படுத்ததிலே அவர் விடியல் முறிந்து, நேரம் சென்று தான் நித்திரைவிட்டு எழும்பினார். அவர் கட்டிலால் எழுந்தவுடன் வந்து கதவைத் திறந்து விட்டு முதன் முதல் பார்த்த இடம் அந்தச் செர்ரிமரமாகத் தான் இருந்தது. அந்தச் செர்ரிமரக் கூடலுக்கு மேலே இலைத்தழைப் பெங்கினும் மழை ஈரம் இன்னும் சிலிர்த்து இருந்தது. ஆனாலும், அந்த மரம் எதையுமே வெளிக்காட்டாத அமைதியுடன் இருக்கக் கண்டு, அவர் ஒரு கணம் திகைத்து நின்றார்.
"அந்தக் குருவிகளுக்கு ஏதும் நடந்திருக்குமோ..?” மனதுக்குள் இந்தக் கேள்வி அவரைப் போட்டுப் பிசைந்தெடுத்தது. நெஞ்சில் உள்ள அந்த நெருடலோடு அந்தச் செர்ரி மரத்தருகில் நின்ற மாமரத்தைப் பார்த்தார். அந்த மரத்துக் கிளையில், தாவித் திரியாமல் சோம்பித்தயங்கி ஒரு அணில், சணலில் செய்தது போல உள்ள தன் சிறிய உடம்பைச் சுமந்து கொண்டு இருந்து கொண்டிருந்தது. அதே கிளையின் நுனியில். அவர் தன் கண்ணால் அங்கே காண்பதை அப்போது நம்பவே முடியாததாய்த்தான் இருந்தது! நன்றாக அந்த மாமரத்தின் கீழே வந்து நின்று இலைகளற்றுத் தெரிவும் ஒரு இடைவெளியூடாக துலக்கமாக அங்கே பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சியில், அவரது மன வெளிமுமுழுவதும் குப்பெனக் குகூகலம் கூத்தாடியது. ஒரு பரவசக் குளிர் உடலெல்லாம் பரந்து கிடக்க, அந்த மரக்கிளையில் மெளனமாய் இருந்து கொண்டிருக்கும் குருவிக் குஞ்சுகளைப் பார்த்தார். அந்தக் குருவிக்குஞ்சுகள் இரண்டும் மொட்டுக்களைப் போல அந்தக் கிளையில் சமர்த்தாய் அமர்ந்திருந்தன.
“செண்பகம் . செண்பகம்!” - என்று மகிழ்ச்சி அலைகள் மனதிலே புரண்டெழ மனைவியைக் கூப்பிட்டார் அவர். செண்பகம் அவர்
ഴ്ച.dി.ആസ്ത്രക്രി 50
ീക്രി

கூப்பிட்ட குரலுக்கு “ ஒம் ஓம்! இந்தாவாறன்..!” - என்று சொல்லியபடி அறைக்குள் இருந்து வெளியே வெளிக்கிட்டாள். அவள் அந்த மரத்துக்குக் கிட்டவாக வந்து சேர்ந்ததும் " என்ன. என்ன?” - என்று கேட்டபடி, அவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, அவர் பார்த்துக் கொண்டு நிற்கும் அந்த மரக்கிளையையும் பார்த்தாள்.
“இந்தக் கொண்டைக் கிளாறுக் குருவிகளிண்ட ரெண்டு குஞ்சுக் குருவியளும் அந்தா அந்தக் கிளையில நிக்குது பாரும்!” - என்று அவைகளை அவர் தன் மனைவிக்குக் காட்டினார். அவள் உடனே தன் கணவர் கையால் சுட்டிக் காட்டிய மரக்கிளையின் பக்கம் ஆவலோடு பார்த்தாள். கிளையில் அமர்ந்திருந்த அந்த இரு குருவிகளையும், உடனே அவள் கண்டாள். கூடுதலான மென்மையாயும், கூடுதலான அழகாயும், அந்தக் குருவிகளைப் பார்க்கும் போது அவளுக்கு இருந்தது. உடலில் அழகு ஏறிய அந்தக் குஞ்சுகளைப் பார்க்கும் போது, அவளது பிரகாசமான பெரும் தடங்கண்கள் மேலும் விரிந்தன. நுங்கின் குளிர்ச்சியாய்க் கண்களும் குளிர்ந்தது அவளுக்கு. அந்தக் குளிர்ச்சியில் உடல் உலுக்கிக் கொண்ட போது, ஒருவிதமான உடல் உச்ச பரவசமும் அவளுக்கு ஏற்பட்டது.
“எங்க அந்தக் தாய்க் குருவியயையும் தகப்பன் குருவியையும் இதுகளோட காணேல்ல.?” - என்று அவரைக் கேட்டபடி, மனது பூவனமாய்ச் சிரிக்க அங்கே அவள் இன்னும் ஆவலோடு பார்த்தபடி நின்றாள். அவள் அதைச் சொல்லிவாய் மூடவில்லை. அந்த இரு குருவிகளும் அந்தக் குருவிக் குஞ்சுகள் இருந்த மரக்கிளையை நோக்கி, சத்தமிட்டுக் கொண்டு விர்ரென்ற வேகத்துடன்அதிலே பறந்து வந்து நின்றன. அவைகளைக் கண்டதும், குஞ்சுக் குருவிகளும் இடைவெளிவிடாது கத்துக் கத்தத் தொடங்கின. தாய்ப்பறவையும் தகப்பன் பறவையும் சந்தோஷமாகக் கசபுசவென்று பேசிக் கொண்டன.
அந்தப் பறவைகளினது சத்தங்கள், ஒரு பெரும் ஆலமரத்துக்குக் கீழே கேட்கும் கீச்சிட்ட குருவிச் சத்தங்களாய்க் கேட்குமளவிற்கு, அவருக்கும் அவளுக்கும் அப்போது இருந்தன. அந்தக் கிளை மீது அமர்ந்திருந்த தாய்க் குருவியும் தகப்பன் குருவியும் அதிலே வந்த பின்பு, இப்படித்தான் பறக்க வேண்டுமென்று குஞ்சுகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தன. குஞ்சுகளுக்குப் பயம்! தாய்ப்பறவை பறந்து இவ்வளவு சுலபம் என்று செய்து காட்டியும், அவற்றிற்கு நம்பிக்கை வரவில்லை. என்றாலும், பிறகு அந்த இரண்டு குருவிக் குஞ்சுகளும், பயந்தபடியே சிறகை விரித்துப் பறக்க முயற்சிக்கும் விதம்அழகானதோர் கலையம்சம் போல அவர்களுக்குத் தெரிந்தன.
பயம், ஆவல், மகிழ்ச்சி, புதிய அனுபவத்தின் சுவடுகள், எல்லாம் அந்தக் குருவிகளின் செய்கையில் நின்று வெளிப்படுவதை அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது கண்கள் விரிந்து கொண்டே இருந்தன.
 ിത്രസ്ത്ര് 51
കക്രി

Page 35
அவர்கள் அங்கே பார்த்துக் கொண்டிருந்த நேரம், முதலில் அந்தத் தகப்பன் பறவை, நம்பிக்கையுடன் முன்னால் அவைகளுக்கு ஒரு வழிகாட்டலாய் பறந்து சென்றது. அப்படியே அந்த நேர்த்திசையில், எங்கோ பறந்து கொண்டே அது போய்க் கொண்டிருந்தது. அது பறந்து போன பின்பு, தாய்ப்பறவையும் அதே திசையில் அதிலிருந்து வெளிக்கிட்டுப் பறந்து போகத் தொடங்கிவிட்டது. குஞ்சுக் குருவிகளை தனியே அதில் விட்டுவிட்டு அவைகள் தங்கள் பாட்டுக்கு பறந்து போகிறதே. இவைகளுக்கு பறக்கமுடியுமோ, முடியாதோ..? - என்று சிந்தித்தபடியே அவர்களும், மஞ்சள் கருவாய் இருந்து, பின் குஞ்சான அந்தக் குருவிக் குஞ்சுகளைப் பரிதாபத்தோடு பார்த்தபடி இருந்தார்கள். ஆனாலும் அவர்களின் எதிர்பார்ப்பினைத் திருப்திப்படுத்துவது போல - அதிலே இருந்த இரண்டு குருவிகளில் ஒரு குருவிதன் சிறகை அப்போது விரித்தது. அந்தச் சிறகு விரிப்போடு அந்தக் கிளையில் பிக்கவாட்டுக்குக் கால்களை விலக்கி விலக்கி வைத்துக் கொண்டு, பறக்கும் அவாவுடன் அந்தக் குருவி அதிலே நின்றது.
"பறப்பற.” - என்று அவர்களும் தத்துப்புத்தென ஒரு குழந்தையைப் போல நடக்கும் அந்தக் குருவியைப் பார்த்து தங்கள் மனதுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
அந்தக் குருவியும், அப்போது அவர்களின் மனவேகத்தைப்
புரிந்து கொண்டது போல, அந்தக் கிளையை விட்டு உருட்டி அடித்துக்
கொண்டு விழுந்து, சிறகு அடித்துத் தாழப் பறக்க ஆரம்பித்து, அப்படியே தொடர்ந்த பறத்தலுடன் மிதந்தபடி போய் அது பிற்பாடு மறைந்து விட்டது.
'கடைசியாக இது இப்போ தனித்து விட்டதே? - என்ற ஏக்கம் மற்றக் குருவியைப் பார்த்தபோது அவர்களுக்கு ஏற்பட்டது.
“இது ஒரு பாவம்! பாவம்!” - என்று அதைப் பார்த்து இப்போ பரிதாபப்பட்டார்கள் அவர்கள்.
ஆனாலும், தாங்கள் அதைப்பார்த்து அனுதாபப்படுவதிலே அர்த்தமில்லை என்பது போல அவர்களுக்குப் பிறகு அது விளங்கியது. அந்தக் கிளையில் தங்கித் தயங்கி நின்று கொண்டிருந்த தனித்த குருவியும், முன்னம் பறந்து போன அந்தக் குருவிக் குஞ்சு போலவே முதன் முதலான தன் பறத்தலுடன் அழகாகக் காற்றில் மிதந்தபடி, இயற்கையாகவுள்ள அறிவுடன் அந்த வழியாகவே பறந்து போனது. அந்தச் சின்னக் குருவிகள் இரண்டும் சிறகடித்துப் பறந்து மறைந்ததன் பின்பு அவர்கள் இருவரது மனத்திலும் மகிழ்ச்சி ததும்பி வழிந்தன. மழைத்துளிகளை தன் சிறகிலிருந்து உதிர்க்கும் குருவியைப் போல மனத்தில் இருவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டு, அந்தக் குருவிகள் பறந்து சென்ற திசை வாயை ஒரு சில கணங்கள் அதிலே நின்றபடி அவர்கள் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்!
(2007)
தி.சி.அருாரதிதச் 52
ീകൃി

eീ00 /ശ്രമി
சரியாகப் போன மாதத் தொடக்கத்தில்தான் உங்கள் மகள் தமிழ்ச் செல்வி லண்டன் நகரிலிருந்து உங்களுடன் கதைத்திருந்தாள். அது நன்றாய் உங்கள் ஞாபகத்தில் இப் போதும் இருந்து கொண்டுதானிருக்கிறது.
அந்தத் தொலைபேசி அழைப்பில் அவள் முதன் முதல் பேசிய வார்த்தை:
"அப்பா எப்பிடியப்பா. நீங்க சுகமாய் இருக்கிறீங்களா.. ? ”. என்பதுதானே?
‘என் மகள் தன் அப்பாவிலே எவ்வளவு பாசத்தை வைத்திருக்கிறாள்! அன்பைப் பொழிகிறாள்!" - என்றதாய் அவள் அப்படி உங்களைக் கேட்கவும், உங்கள் மனத்துக்குள்ளே மிகவும் அதைப் பெரிதாய் நினைத்து உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள்.
ஒரு கூடை முல்லைப் பூக்களை, உங்கள் தலையில் யாரோ அப்போது கொட்டினாற்போல உடனே நீங்கள் பூரித்துப் போனீர்களல்லவா? உங்களுக்குப் பிள்ளை என்று இருப்பது அவள் ஒருத்தி மட்டுமேதான்! உங்கள் மனைவியின் உயிர் பிரிந்து போனதற்குப் பிறகு உள்ள தொப்பூள் கொடி உறவென்பது உங்களுக்கு அவள் மட்டும்தானே? இவையெல்லாம் உங்கள் நினைவிலே சுழன்றபடி இருந்து கொண்டிருக்கிறதா?
“ஹலோ. ஹலோ. - என்னப்பா நீங்க ஒண்டுமே பேசாம இருக்கிறீங்க.? ” - என்று அவள் திரும்பவும் உங்களைக் கேட்கவும் தான். ്.dി.eിത്രസ്ത്രക്രി

Page 36
மகள் என் சுகத்தையல்லவா இப்போது கேட்கிறாள்.? . என்று உடனே நீங்கள் கனவிலிருந்து விடுபட்டதைப் போல மீண்டும் சுயநிலைக்கு வருகிறீர்கள்.
“ஓம் மகள்! நான் நல்ல சுகந்தானம்மா..! நீ எப்பிடியம்மா அங்கின இருக்கிறாய்..? " - என்று நீங்கள் ஆவலுடன் மகளைக் கேட்கிறீர்கள்.
இந்த உலகத்தில் உங்களுக்குள்ள, சொத்து சுகம் எல்லாமே உங்கள் மகள் ஒருத்தி மட்டும் தானே? அவளது சுகத்தைத் தெரிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வம் உங்களுக்கு. அவள், தான் . சுகமாக, சந்தோஷமாக இருக்கிறேன்' - என்பதைக் கூறும் போது, உங்களுக்கிருக்கின்ற உடல் வருத்தமெல்லாமே உடனே தொலைந்து விடுகிறது போல ஆகிவிடுகிறதே! அப்படி அவள் தன் சுகத்தை நல்ல முறையில் சொல்லக் கேட்கும் போது தானே உங்களுக்கும் அது நிம்மதியாக இருக்கும்!
உங்கள் அருமை மகள் தமிழ்ச் செல்வி தொலைபேசியினூடே கலகல' வென்று சிரிக்கிறாள். மகளின் சிரிப்பொலியைக் கேட்டு விட்டு, சந்தோஷ மலர்ச்சியில் நீங்களும்தான் அவளைப் போலவே சிரித்துக் கொள்கிறீர்கள்.
அவள் சொல்கிறாள். " நான் நல்ல சுகமாயிருக்கிறன் அப்பா..! நீங்கள் மகளைக் கேட்கிறீர்கள் : “அவர் என்ர மகனம் மா.அவர் எப்பிடி சுகமாய் இருக்கிறாராம்மா..?
நீங்கள் மருமகனைத்தான் மகன் என்று சொல்லிக் கேட்டு சுகம் விசாரிக்கிறீர்கள். அவரை உங்கள் சொந்த மகன் என்று தான் எப்போதும் நீங்கள் நினைத்து, அவர் மேல் பாசம் வைத்திருக்கிறீர்கள். அவரைப் பெற்ற மகனாக நீங்கள் நினைத்துப் பாராட்டி வரும் போது, உங்களையும் அவர் தன்னைப் பெற்ற தந்தை போலத்தானே நினைத்து அன்பு செலுத்துவார்? எப்போதும் அவர் உங்களை மாமா' என்று முறை சொல் அழைக்காமல், அப்பா' என்றே அன்புடன் அழைக்கிறாரல்லவா..?
உங்களோடு கதைக்கவென்று மகள் அங்கே தொலைபேசியைக் கையில் எடுத்தால், ரிசீவரை அவள் லேசில் கீழே வைத்து விட மாட்டாள். நெடுநேரம் நிறுத்தாமல் தொடர்ந்து அவள் கதைத்துக் கொண்டே
ருப்பாள்.
“இப்பிடியே நேரம் செண்டிச்செண்டா பிறகு ரெலிபோன் கதைச்ச காசு ஒரு தொகையளவில வந்திடுமெல்லே அம்மா..? இதுக்கு அவர் ஒண்டும் உன்னை ஏசமாட்டாரா..? ”
என்று நீங்கள் அதை அவளிடம் கேட்கிறீர்கள். "அப்பிடி ஒண்டும் அவர் எனக்குச் சொல்லமாட்டார் அப்பா.
s
.dി.മിത്രസ്ത്ര് 54 ീഴി

எனக்கு நீங்க ஒருத்தர் மட்டும் தானேயப்பா இருக்கிறீங்க..? ஆனா அவருக்கெண்டால் அவருடைய சகோதரங்களும், அதோட அவருக்கு அம்மா, அப்பாவெண்டு எல்லாரும் இருக்கினம்.? அவர் அவயள் எல்லாரோடையும் தான் கதைக்கிறார்! ஆனாலும் அவருக்கெண்டால் அவயள் எல்லோரையும் விட என்னில தான் நேசம் அதிகம்! என்னில அவர் உயிரையே வைச்சிருக்கிற மாதிரி அன்பா இருக்கிறார்! அதால நான் உங்களோட இப்பிடிக் கதைக்கிறதைப் பற்றி, அவர் ஒண்டும் எனக்குச் சொல்றேல்ல. அவரும் கை நிறைய இங்க லண்டனில சம்பாதிக்கிறார். அதால இது பெரிய ஒரு செலவெண்டில்லையே இங்கயெல்லாம் அப்பா..? ”
இதை உங்கள் மகள் சொல்லவும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு, வேறோர் சம்பவத்தை அவளிடம் இவ்வேளையில் கேட்க வேண்டுமென்பதாய் உடனே அது நினைவில் வருகிறது.
“வீடு சொந்தமாய் நாங்கள் வாங்கியிருக்கிறமெண்டு அப்ப ஒருக்கா எனக்குச் சொன்னியள் மகள்.? அந்தப் புதுவீட்டுக்கு நீங்கள் இப்ப குடியிருக்கப் போயிற்றியளாம்மா..? ”
"அதையும் தானப்பா உங்களுக்கு நான் சொல்லுவம் எண்டு நினைச்சு இப்ப போன்’ எடுத்தன்! எங்கட புது வீட்டுக்கு நேற்றைக்கே நாங்கள் வந்திட்டமப்பா. நாங்க வாங்கி இருக்கிற இந்த வீடு, முதல் நாங்கள் வாடைக்கிருந்த அந்த வீட்ட விட நல்ல வசதியான வீடு.1 முத்தத்தில உள்ள பூக்களிண்ட வடிவ லேசில நான் வாயால சொல்லவே முடியாது. அவ்வேளவு வடிவப்பா..!” - மகள் இவ்வாறு பூக்களைப் பற்றி சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருக்க - அதற்குள்ளே உங்களுக்கு இறந்து போன உங்கள் மனைவியினது ஞாபகமும் சேர்ந்து வந்து விடுகிறது.
உங்கள் மகள், தன் வீட்டுப் பூஞ்செடிகளிலுள்ள பூக்களின் நிறங்களைக் கூறுகிறாள்.
அந்தப் பூக்கள். இளஞ்சிவப்பு, ஆகாய நீல, பொன்மஞ்சள் பூக்கள், எனச் சொல்லிப் புகழ்கிறாள்! அந்தப் பூக்களில் சிலவை, கொத்துக் கொத்தான ரோஜாப் பூக்களாம்!
ஆம்! இப்போது. உங்கள், மனக் கண்ணிலே உங்கள் பிரிய மனைவி றோசலின்தான் ஒரு தேவதை போன்ற அழகுடன் காட்சி தருகிறாள். தெல்லிப்பளையிலுள்ள உங்கள் சொந்த வீட்டிலே, அந்த முற்றத்தில் உள்ள பூந்தோட்டத்துக்குள் நின்று அவளும் காலையில் - மொட்டவிழ்ந்து கிடக்கும் புத்தம் புதிய ரோஜாப் பூக்களை உங்களுக்குக் காட்டிவிட்டு,
"நான் வைச்ச ரோஜாச் செடியளெல்லாம் பூக்கொத்துகளாப்
وو
பூப்பூத்திருக்கு. - என்று சொல்லி மகிழ்ச்சியில் சிரிக்கிறாள்.
്.dിമിത്രസങ്ങഴ 55 ീക്രി

Page 37
“என்ன மாதிரி அழகான மென்மையான பூக்கள் பாருங்கள்!” - என்று பரவசத்துடன் புன்னகை செய்தபடி திரும்பவும் அவள் உங்களுக்குச் சொல்கிறாள். பூச்செடிகள் இருந்த ஒவ்வொரு பாத்திக்குள்ளாலும் அவள் நடந்து சொல்லும் போது அவளைச் சுற்றிலும் ஒரு விந்தை உலகம் பரந்து விரிந்து கிடப்பதை நீங்கள் காண்கின்றீர்கள்.
“இங்கேயுள்ள எங்கட வீட்டுப் பூந்தோட்டத்தில எல்லா நிறங்களிலும் ரோஜாப் பூக்கள் சிலிர்த்துப் பூத்திருக்கப்பா! எண்டாலும் அந்தப் பூக்களுக்குள்ள செக்கச் செவேலெண்டு பூத்திருக்கிற இந்த ரோசா மட்டும் ஏன் மற்றதுகளில இருந்து மாறுபட்டிருக்கு எண்டதுதான் எனக்குப் புரியாத புதிரா இருக்கு!” - என்று உங்கள் மகளும் லண்டன் வீட்டிலுள்ள, அந்தப் பூந்தோட்டத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பது தொலைபேசியில் உங்கள் காதுகளுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் காதுக்குள் மகள் சொல்வது கொஞ்சம் சத்தமாக விழவும் - மனைவியின் நினைவு அதனால் உங்களுக்கு விடுபட்டுப் போய் விடுகிறது. மகள் சொல்லிக் கொண்டிருக்கும் கதையிலே, உங்கள் கவனத்தை இவ்வேளை குவிக்கிறீர்கள்.
"அப்பா நீங்க ஒழுங்கா நேரா நேரத்துக்கு குளுசை மருந்துகளை மறக்காம எடுத்துப் போடுங்கோ அப்பா?” “ஓம் எல்லாத்தையும் நான் சரியாத்தான் போடுறனான்பிள்ள..!"
"டொக்டர் உங்கள வரச் சொல்லுற நாளில எல்லாம் போய் அவரிட்டயும் உங்கட வருத்தம் எல்லாத்தையும் சொல்லிக் காட்டுங்கோ. அவர் எழுதித்தாற மருந்துகளையும் ஒழுங்கா எடுங்கோ அப்பா?”
“அதையும் வேளா வேளைக்கு நான் நெடுகச் செய்து கொண்டுதான் வாறன் பிள்ள..!
“உங்கின சாப்பாடு எல்லாம் உங்களுக்கு எப்பிடியப்பா..? சமைக்க உங்களுக்கு இப்பவும் ஏலுமா அப்பா..?”
"தனிய ஒராளுக்கு என்னம்மா பெரிய சமையல் சாப்பாடு.! எல்லா மரக்கறியளையும் வெட்டிப் போட்டு ஒரு கறி ஒரு சோறு சமைச்சா அது காணும் தானே சாப்பிடுறதுக்கு எனக்கு..!”
"எண்டாலும் ஒரு வேலையாளை நீங்க வைச்சுக் கொண்டா இதெல்லாம் கஸ்டமில்லத்தானே உங்களுக்கு.?”
"அதெல்லாம் ஒருவரும் நான் இருக்கிற இந்த வீட்டுக்க எப்பவுமே எனக்கு வேண்டாமம்மா. என்ர கையால நான் சமைச்சுத் தின்னுறதுதான் எனக்கெண்டா விருப்பம்! அதுதான் சுத்தம்பிள்ள! தனியாளா நான் இருந்தா எனக்கொரு தொந்தரவுமில்ல. அது எனக்கு நிம்மதி.!”
"பிள்ள உனக்கும் இப்ப சரியா நாள் கிட்டீட்டெல்லேயம்மா. அதப் பற்றி ஒண்டும் எனக்கு நீ இவ்வளவு நேரமாச்
ரீ.சி.அருாரனதிதச் 56 124

சொல்லேல்லயேயம்மா..?
நீங்கள் ஆர்வத்துடன் மகளைக் கேட்கிறீர்கள். ஆனால் அவள் குரல் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதிலை உங்களுக்குச் சொல்லும் போது வெகுவாகத் தணிந்தே ஒலிக்கிறது. ?..மகள் நான் கேட்ட கேள்வியோடு கலக்கமடைந்து விட்டாளா ۔۔۔۔ - என்று நீங்கள் ஒரு முறை யோசிக்கிறீர்கள்.
வழமையாக பிரசவத்திற்கு நாள் கிட்டும் போது, மகப்பேற்றுக்கென்று செல்லவிருக்கும் தாய்க்கு ஒரு மனப்பயம் இருந்து கொள்ளவே செய்யும். அது நிறைமாதப் பிள்ளைத்தாச்சியாய் இருக்கும் ஒருத்திக்கு வருவது இயல்புதானே..?
குழந்தைப் பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி எடுத்து வருவது போலத்தானே சொல்லுவதற்கு இருக்கும். விபத்துப் போன்ற அதிலே தப்பித்து அவள் உயிருடன் திரும்ப வேண்டும். பிறக்கும் குழந்தையும் சுகமாக, நலமாக − ஒரு குறையுமில்லாமலும் பிறக்க வேண்டும். இப்பிடியெல்லாம் நிறைவாயிருக்க - அதெல்லாமே அந்தக் கடவுளின் சித்தமல்லவா..! என்று நீங்கள் பெற்ற அனுபவத்தில் இதையெல்லாம் சற்று நேரம் நினைத்துப் பார்க்கிறீர்கள்.
"அப்பா அங்க மாதிரியெண்டில்லாம இங்கயெல்லாம் நல்ல டொக்டர்மார், கிளினிக்கில என்னையும் பிறக்கப் போகிற பிள்ளயையும் வடிவா பரிசோதிச்செல்லாம் பாத்தவயள் அப்பா. முன்னம் எனக்கு நடந்த அந்தத் துக்கமான சம்பவத்தையெல்லாம் அவயஞம் கேட்டு மனவருத்தமும் பட்டவயள். இப்ப என்ர வயித்தில உள்ள குழந்தை ஆரோக்கியமாயிருக்கெண்டும் அவயள் சொல்லுகினம்! ஆனா எனக்குப் பிறக்கிற பிள்ள ஆம்பிளப் பிள்ளையா, இல்லாட்டி பெம்பிளப் பிள்ளயா..? எண்டு இதுவரை அதுகளப்பற்றி ஒண்டும் அவயள் எங்களுக்குச் சொல்லேல்ல. அவயள் 'ஸ்கான்' பண்ணி என்னையெல்லாம் வடிவாத்தான் பாத்தவயள். அதால பிறக்கப் போகிற பிள்ள ஆம்பிளப் பிள்ளையா அல்லாட்டிப் பெம்பிளப்பிள்ளையா எண்டுறதெல்லாம் அவயளுக்கு நல்லாத் தெரியும் . ஆனாலும் எங்களுக்கு அவயள் அதுகளப்பற்றி ஒண்டுமே சொல்லேல்ல. வேற நாடுகளில இதைப்பற்றி தாய் தகப்பன்மாருக்கெல்லாம் சொல்லுகினம். ஆனா இந்த லண்டன் மாநகரில அப்பிடி ஒண்டும் எங்கள மாதிரி ஆசியாப் பக்கத்தில இருந்து வாறவயளுக்குச் சொல்லுறேல்லயாம்.”
“என்னம்மா ஒரு கத இப்பிடியா நீ எனக்குச் சொல்லுறாய்.? பிறக்கப் போற பிள்ளய அப்பிடியாத் தெரிஞ்சு கொள்ளுறதில எங்களுக்கு என்னம்மா அதால வரப் போகுது .? பிறக்கிற பிள்ள சுகமாய் பிறந்து நீயும் நல்ல சுகமாப் பிறகு இருந்தா அதுவே எங்களுக்குக் காணும் பிள்ள.1 ஆம்பிளப் பிள்ளயோ பெம்பிளப்பிள்ளயோ பெத்தெடுத்தா எல்லாம் அதுகள் எங்களுக்குப் பிள்ளையஸ்தானே..? அதில என்ன .dി.eിത്രസ്ത്രക്രി 57 eിക്രി

Page 38
ஒரு ஏற்றமெண்டும் குறைவெண்டும் ஒரு வித்தியாசமிருக்கு சொல்லன் நீபாப்பம்! பெம்பிளப் பிள்ளயஞக்கெண்டா வீட்டுக்கையுள்ள கஷ்ட நஷ்டங்களெல்லாம் வடிவா விளங்கும். தாய் தேப்பனையும் வயது போனா அன்பா ஆதரவா அதுகள் தான் பக்கத்தில இருந்து வடிவாய்ப் பாக்குங்கள். தண்ணி வென்னியாவது நேரத்துக்கு வைச்சும் தாகத்துக்கு அதுகள் குடிக்கவெண்டாலும் குடுக்குங்கள். ஒரு கதைக்கு நீ என்னை எடுத்துப் பாரன் மகள். எனக்கிருக்கிறது என்ர மகள் நீ ஒருத்தி மட்டும் தானேயம்மா..? எனக்கெல்லாம் இப்ப என்ன கவ்லை? என்ன குறை.? சொல்லு நீ பாப்பம் மகள்.?”
நீங்கள் அப்பிடிச் சொல்ல. தன்னைப் பற்றி, அவள் ஒரு கணம் யோசித்திருந்து விட்டு 'கல, கல' வென்று பிற்பாடு சிரிக்கிறாள். மீண்டும் தனக்குள்ளே அவள் யோசித்துப் பார்க்கிறாள்.
ஓம்! அப்பா சொல்லுறது உண்மைதான்! எனக்கும் ஒரு மகள் பிறந்தால். அவளும் அச்சு அசலாக என்னைப் போலவே சாயலாகத்தானே வருவாள்.? ஏன்ர குணம் போலத்தானே அவளுக்கும் &SLTuulb இருக்கும்? அவளும் தன்ர அப்பா அம்மாவை என்னப் போலத்தானே நேசிப்பாள் பாசத்தோட இருப்பாள் பணிவிடையெல்லாமே செய்வாள். ஓம் எனக்குப் பிறக்கிறது, பெம்பிளப் பிள்ளையாப் பிறந்தாத்தான் நல்லம்.! எனக்குப் பெம்பிளப் பிள்ளதான் வேணும்.!
உடனே தகப்பனுக்கு அவள் சொல்கிறாள் : "அப்பா உங்களப் போலவே எனக்கும் அப்பா பெம்பிளப்பிள்ள தான் வேணும். எனக்கும் நீங்கள் விரும்புறது மாதிரி பெம்பிளப் பிள்ள தானப்பா பிறக்க வேணுமெண்டு ஆசை.!
அவள் ஒரு தடவைக்கு இருதடவை முன்பு உங்களுக்குச் சொன்னதையே பிறகும் சொல்லுகிறாள்.
"கடவுள் உன்ர விருப்பப்படி எல்லாம் குறைவில்லாம நிறைவாகத் தருவாரம்மா. ஒண்டுக்கும் நீ இனிமேப்பட்டு கவலப்படாத.!” - என்று மகளுக்கு நீங்கள் ஆறுதல் சொல்கிறீர்கள்.
இந்த உங்கள் இருவரதும் உரையாடலுக்குள்ளே . நீங்கள் அதற்குள் ஒரு விஷயத்தை, மகளிடம் கேட்டுவிட வேண்டுமென்று ஆவல்படுகிறீர்கள். அந்த விஷயத்தை மகளிடம் கேட்பதற்கு முன்பு, அதைப்பற்றிய ஏதோ ஒருவித சோகமும் உங்களை வந்து சூழ்வதைப் போல இருக்கிறது. இனம் புரியாத ஒர் துயரம் உங்கள் மனதில் கொடிவிட்டுப் படர்வதை நீங்கள் உணர்கிறீர்கள். மனத்தின் ஆழத்தில் எங்கோ ஒரு மூலையில், ஒதுக்கிப் போட்டு வைத்த அந்தத் துயர நினைவு. மீண்டும் உங்கள் மனத்திலே இருந்து முளை தூக்கி எழுகிறதா..?
அந்தத் துயர நினைவை என்னாலேயே இது நாள் வரையிலாக
தி.சி.அருள%னந்தச் 58
ീഴി

அழித்து விட முடியவில்லை. . அப்படியாக என்னையே ஆட்டிவைக்கும் பெருந்துயரத்தை. முழுக்க முழுக்க அந்தத் தாக்கங்களுக்கு உள்ளான என் மகளாலே எப்படி இலகுவில் அதை மனத்திலிருந்து முற்றாக அழித்து விடமுடியும்.? அதையெல்லாம் என் மகளாலே இலகுவில் மறந்து விட முடியுமா..? அதுவும் திரும்பவும் அவளுக்கு வருகிற அதே மாதிரியான ஒரு சம்பவத்தில். அதைப்பற்றிய ஒருவித பயமும் திகிலும் அவள் மனத்தைப் போட்டு இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கத்தானே செய்யும்.? '
நீங்கள் இவையெல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு . காய்ந்த தொண்டையை நனைக்க எச்சிலை முண்டி விழுங்கிக் கொள்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்குள்ள அந்த நினைவுகளெல்லாம். எச்சிலைப் போல முண்டி விழுங்கித் தொலைத்து விடக் கூடிய சாமானியமானவைகளா? என்றாலும், உங்களை சுதாரித்தவாறு மனத்தைக் கொஞ்சம் திடப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் குரலின் தொனிப்பும் மகளோடு நீங்கள் இனிக் கதைக்கும் போது மாறியதாய் விடக் கூடாது என்று அதையும் கவனத்துடன் சரி செய்து கொள்ளப் பார்க்கிறீர்கள்.
“பிள்ள. பெறுமாசம் இதே மாசம் தானேயம்மா உனக்கு.? அப்ப நாள் உனக்குக் கிட்டத்தில இப்ப வந்திடும் போல . என்னம்மா அப்பிடியேபிள்ள..? ” VQ
மகளிடம் நீங்கள் அன்பொழுகக் கேட்கிறீர்கள். தனக்குத் தாயில்லாத அந்தக் குறையை உங்கள் மகள் எப்போதுமே தன் வாழ்வில் நினைத்துக் கவலையில் ஆழக் கூடாதென்று - சிறு வயதிலிருந்தே உங்கள் மகள் மேல் நீங்கள் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தீர்கள்? அவளும் உங்களுடைய வளர்ப்பில் எதுவித குறையும் - தான் அறியாமல் இருந்து தானே இதுவரை காலமும் வளர்ந்திருக்கிறாள்! என்றாலும் தன் அருகே தாயில்லாத ஒரு தனிமை = ஒரு பெண்ணைப், பிள்ளைப் பெறுகிற காலத்தில் போட்டு மனதை வாட்டிக் கொண்டிருக்கும் என்பது, உங்களுக்கும் தான் நன்றாக அது தெரிந்திருந்தது.
நீங்கள் இங்கே அதை நினைப்பது போலத்தான் அங்கே உள்ள உங்கள் மகளும் நினைத்து மனம் வாடியபடி இருந்து கொண்டிருக்கிறாள். "இன்னும் ஒன்பது நாள் தானப்பா சரியா எனக்குக் கணக்கு. 27ம் திகதியெண்டு குறிப்பா டொக்டரும் சொல்லியிருக்கிறார்!”
மகள் சொல்ல அதைக் கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு, ஏதோ உடலெல்லாம் உடனே புல்லரித்தாற் போல சிலிர்த்து விட்டது. உங்கள் வலக்கை தொலைபேசியின் ரிசீவரை பிடித்தபடி இருந்தாலும், இடக்கை விரல்களை இவ்வேளை இறுக்கிப் பொத்திக் கொள்கிறீர்கள். இப்பிடி ஏன் எனக்குள்ளே நான் ப்யந்து நடுங்குகிறேன்.? முன்பு நடந்தது போல என் மகளுக்கு இம்முறையும் ஏதாவது பிரசவ காலத்தில் ஆகிவிடுமோ? ܥܠ മ.dി.eിത്രസ്ത്രി 59
ീക്രി

Page 39
என்ன விசர் நினைப்பு இது.? கடவுளே ஏன் நான் அப்பிடியெல்லாம் தேவையில்லாமக் கற்பனை பண்ணிக் கொள்ள
வேணும்.?
நீங்கள் உங்கள் மனத்தை சமாதானப் படுத்திக் கொள்கிறீர்கள். - நல்லவற்றையே நாங்கள் எப்பவும் நினைப்பம்.! நல்லதுகளே
எங்களுக்கு இனி மேல நடக்குமெண்டு நாங்கள் இனிமேல எதிர்பாப்பம்." என்று நீங்கள் பிறகு நினைத்துக் கொண்டு, மகளின் மனத்தையும் திடப்படுத்திவிட, ஆறுதல் வார்த்தைகளை நீங்கள் தேடுகிறீர்கள்.
"நீ ஒண்டுக்குமே இனிமேல கவலப்படாதயம்மா. எல்லாமே அந்த கடவுளிண்ட கிருபையால நல்லபடியா இனி நடக்கும்.! நான் மடுக்கோயில் மாதாவுக்கு உன்னளவு மெழுதிரியும் வாங்கிக் கொண்டு வந்து கொளுத்துவன் . தொட்டில் பிள்ளயும் உம்மட காலடியில செய்து கொண்டு வந்து வைக்கிறனெண்டும் நேத்தி செய்து வைச்சிருக்கிறன். ஆஸ்பத்திரிக்கு நீ போக முன்னவாப் பிள்ள. மருத மடுத்தாயாரை மனதிலயா நீ நினைச்சுக் கொண்டு, உன்னட்ட நான் அனுப்பியிருக்கிற அந்தக் கோயில் மண்ண எடுத்து நெத்தியில பூசிக்கொண்டு மாதாவிண்ட முழு நம்பிக்ேையாட ஆஸ்பத்திரிக்குப்
போம்மா..! என்ர பிள்ள உனக்கொரு குறையும் இனிவராதம்மா ராசாத்தி. ஆண்டவர் உன்னை எப்பவும் கண்கலங்க விடமாட்டார்.! உன்னை அவர் ஆசிர்வதிப்பார்.!”
நீங்கள் இப்படியெல்லாம் உணர்ச்சி மேலிட்டுச் சொல்ல . உங்கள் மகளின் கண்களில் கண்ணீர் கசிந்து நிரம்பி விடுகிறது. அவளும் நீங்கள் தன் மீது வைத்திருக்கும் அளப்பரிய பாசத்தையறிந்து, மனம் உருகினாற்போல ஆகிவிடுகிறாள்.
"அப்பா நான் உங்களுக்கு செலவுக் கெண்டு கொஞ்சக் காசு, உண்டியலில இங்க போட்டிருக்கிறன். ! காசை உங்களுக்கு வீட்டை கொண்டாந்து அந்த ஆக்கள் தருவினம்.1 இனி நான் பிறகு ஆஸ்பத்திரியால வந்து தான் உங்களோட கதைப்பன்."
"ஓமம்மா ராசாத்தி. நான் எல்லாத்துக்கும் கடவுள நல்லா மன்றாடிக் கொண்டிருக்கிறன். ! பேரப்பிள்ள பிறந்த உடனே எனக்கும் ஒருக்கா அறிவிச்சு விடுங்கோம்மா..?”
“என்னப்பா நீங்க.? உங்களுக்குத்தான் முதன் முதல் நான் பிள்ள பிறந்தத உடன சொல்லச் சொல்லுவன் . நீங்க ஒண்டுக்கும் கவலப்படாதயுங்கோ அப்பா..?”
“எனக்கென்னம்மா அப்பிடிக் கவல.! எனக்குப் பேரனோ பேத்தியோ வரப்போகுது. நான் ஏன் பேந்து கவலைப்படப்போறன். நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறன்.
"அப்ப சரியப்பா. நான் எல்லாத்தையும் பேந்து உங்களுக்குச்
தி.சி.அருாரதிதசி 60 4%A842

சொல்லுறன். இப்ப எங்களுக்கு இங்க நடுச்சாம நேரம். நான் போனை இனி வைக்கிறனப்பா..? ”
“ஓம். ஒமப்பா..! பிள்ள நீ நல்லாப்படுத்து நித்திரயக் கொள்ளம்மா. சரி .1 சரியம்மா பிள்ள..!! ” - என்று சொல்லிக் கொண்டு நீங்களும் ரிசீவரைக் கீழே வைத்து விடுகிறீர்கள். சுவற்றிலே தொங்கும் மணிக்கூட்டைப் பார்க்கிறீர்கள். என்ன நேரம்.? சரியாக அதிலே ஐந்து மணி!
இன்றும் கொஞ்சத்திலே நேரம் - விடிந்து விடும் பக்கத்து வீட்டில் உள்ள மாமரத்தில் இரவு அடைகின்ற கரிச்சான் - குருவிகள் . அவைகளின் சங்கீத மொழியிலே பேசிக் கொண்டிருப்பது போல சத்தமிடுகின்றன. பள்ளி வாசலிலிருந்து, உரத்த குரலோடு 'பாங்கு அழைப்பு உங்களுக்குக் கேட்கிறது.
“அல்லாஹி அக்பர். அல்லாஹி அக்பர் அல்லா..!" அது அந்தப் பள்ளி வாசலைக் கடந்து, ஆகாய மார்க்கமாகப் பரவி வருகிறது. இனிமையாகத்தான் எல்லாமே கேட்பதற்கு இருக்கிறது. ஆனால் கவனம் அதிலே உங்களுக்குச் செல்லவில்லை. மகளைப் பற்றியே நினைவுகள் உங்களுக்கு அங்குமிங்குமாக அலைகின்றன.! லண்டன் மாப்பிளையைத்தான், மகளுக்கு நீங்கள் சம்பந்தம் பேசி கலியாணத்தை முடித்து வைத்தீர்கள். மாப்பிள்ளைக்கு நல்லி படிப்பு.! பண வசதியெல்லாம் நிறைய அவருக்கு உண்டு. அவரது குடும்பமும் நல்ல குடும்பம். மாப்பிள்ளைக்கும் நல்ல பழக்கங்கள்.! என்றெல்லாம் அறிந்துதான், அந்தக் கல்யாண சம்பந்தத்தில் துணிந்து நீங்கள் இறங்கினீர்கள். ஆனால் திருமணமாகி உடனே லண்டனுக்குப் போய்ச் சேர உங்கள் மகளுக்கு விசா கிடைக்கவில்லை. அவள் ஒரு வருட காலம் உங்களிடம் தான் இருக்க வேண்டியதாய் வந்து விட்டது. ஆனாலும் அவள் திருமணமாகியவள்தானே..? அதனால் அவள் தாய்மையடைந்து வயிற்றிலே தன் பிள்ளையைச் சுமந்து கொண்டிருந்தாள். மருமகனுக்கும் தான் அதனால் எவ்வளவு கவலை. எப்படியாவது தன் மனைவியை தன்னுடன் வரவழைத்துக் கொண்டு விடவேண்டுமென்று அவரும் தான் படாத பாடெல்லாம் பட்டுக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது காலம் லண்டனில் தங்கி இருந்தால் தான், அவருக்கும் அங்கே உரிமை பெற முடியும். அந்த நம்பிக்கை அவருக்கு இருந்து கொண்டிருந்தது என்றாலும் இங்கே உங்கள் மகளுக்குப் பிரசவகாலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இப்போது இங்கே வந்து மனைவியைப் பார்த்துப் போகக் கூடிய நிலைபரமும் அவருக்கென்றால் இல்லை. அவருக்கு அங்கே பலவீனமான இருப்புத்தான்!
இன்னும் ஒரு வருடம்! அந்த ஒரு வருடம் கழிந்து தான் அவருக்கு நிரந்தர உரிமை, இருக்க அங்கே கிடைக்குமாம்! அதற்குப் பிறகு தான் மகளும் அங்கே போய்ச் சேர விசா கிடைக்கும் என்றார்கள். தி.சி.அருளானந்தச் 61 eിക്രി

Page 40
மகள் அவ்வேளை இங்கே உங்களுடன் இருக்கும் போது அவளது முதல் பிரசவத்தின் போது நீங்கள் பட்டுவிட்ட பாடு.அந்தக் கஷ்டங்களெல்லாம் உங்கள் நினைவில் இப்போது சங்கிலித் தொடர் போல வந்து கொண்டிருக்கின்றன. உங்களை விட அந்தப் பிள்ளையைப் பெற்ற உங்கள் மகளுக்கு வந்த கவலைகளும் கஷ்டங்களும் - அது என்ன வாயால் ஒருவருக்குச் சுருங்கச் சொல்லி விளங்கப்படுத்தி விடக்கூடிய சாமானிய விஷயங்களா..?
அந்தச் சம்பவம் நடந்தபோது, அதனால் தனக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்க முடியாது அவள் கிடந்து துடித்தாள் - துவண்டாள் - அழுது குழறினாள் - அவளை ஆறுதல் படுத்த அப்போது உங்களாலும் கூட முடியவில்லை! ஒரு பக்கமிருந்து அவள் ஓ’ வென்று கூக்குரலிட்டு அழுகிறாள். ஆனால் அவளை விட நீங்கள் அப்போது பெரிதாய் அழத் தொடங்கிவிட்டீர்கள்.
ஒரு பக்கம் இதிலே உங்கள் மருமகனின் அழகையும் புலம்பலும் தொலைபேசியூடாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மகளும் மருமகனும் தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு - அங்குமிங்குமிருந்து ஒலம் வைத்துக் கொண்டிருக்க - உங்களுக்கு அந்த அறைக்குள் நின்று அதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை . குப்பென்று உங்களுக்கும் அழுகை வெடித்தாற் போல வெளியே வருகிறது. உங்களை அடக்க இயலாமல் உடனே அந்த அறையை விட்டு வெளியேறுகிறீர்கள். வீட்டுக் கோடிப் புறத்தடிக்குப் போய் அதிலே நின்று உங்கள் பாட்டுக்கிருந்து வாய்விட்டு அழுகிறீர்கள்.
உங்கள் வீட்டு நாய்க்குக் கூட, மனுசனைப் போல நல்ல அறிவு இருக்கிறது. அந்த நாய்க்கும், நடந்தது என்னவென்று தெரிந்து தான் இருக்கும் போல புரிகிறது. அது உங்களுக்குக் கிட்ட வாக வந்து . நீ ஏன் அழுகிறாய்..? அழாதே?
என்பதாக ஆறுதல் சொல்வது போல் உங்கள் கால்களை நாக்கால் நக்குகிறது. இப்போது அழுது கொண்டிருந்ததை விட, இன்னும் பெரிதாக நீங்கள் விக்கி விக்கி அழத்தொடங்கிவிட்டீர்கள்.
‘என்ன நடந்தது.? என்ன நடந்தது.? என்று வானைப் பார்த்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வழிய நீங்கள் கேட்கிறீர்கள்.’
அதற்குப் பிறகு உங்கள் மனத்துக்குள்ளேயிருந்து சில கேள்விகள் விஸ்வரூபமாய் எழுந்து நிற்கின்றன.
என்ன நடந்தது.? பிறந்த அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது.? ஏன் மகளுக்குப் பிறந்த அந்தப் பிள்ளை இறந்தது? தூங்குகிற மாதிரியே அந்தப் பச்சைப் பாலகன் நிரந்தரமாகப் பிறகு சாவில் தூங்கி விட்டானே? இப்படியும் ஒரு சாவு குழந்தைக்கு வருமா?
மருத்துவ விஞ்ஞானம் மனிதனின் சாவை பல ஆண்டுகள் தள்ளிப்
.dിത്രmതൃൾ 62 eീമി

போடுமளவிற்கு, இன்று உலகில் வளர்ந்து விட்டதாம்.? அது மனித குலத்திற்கு எவ்வளவு நன்மை.! பல காலம், தான் வாழவேண்டுமென்ற ஆசை, இதனாலே அவனுக்கு நிறைவேறுகிறதுதான். ஆனால் அந்த அளவுக்கு இன்று வளர்ந்திருக்கிற இந்த விஞ்ஞான உலகத்தினால், ஒரு சிறு குழந்தை என்ன காரணத்தால் இறந்தது என்பது கண்டு பிடிக்க இயலாத ஒரு மர்மமாய் இருக்கிறதாம்.
அந்தக் குழந்தை பிறந்து நாலு நாட்கள் வரை, நல்ல விதமாய்த்தான் பசியெடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தது. ஐந்தாம் நாள் காலையில் பாலைத் தாய்முலையில் குடித்து விட்டுப் படுத்த பிள்ளைக்கு, ஒரு அசுமாத்தமும் பிறகு இல்லையே..?
"அப்பா . அப்பா . என்னப்பா என்ர பிள்ள இப்படிக் கிடக்கு.? ஐயோ. ஐயோ வென்று, உங்கள் மகள் தன் பிள்ளையைப் பார்த்து விட்டுக் கத்திக் குழறினாள்.
நீங்களும் பிள்ளையைப் பார்த்தீர்கள்! இன்னமும் உங்கள் கைகளில் தூக்கிக் கூடப்பார்க்காத உங்கள் பேரப் பிள்ளையை, அப்பொழுது தான் உங்கள் கைகளில் தூக்கி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டீர்கள்! VA
உங்கள் மகள் "ஐயோ, ஐயோவென்று வாய்க்குள் புலம்பத் தொடங்கிவிட்டாள். அவளுக்குப் பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்பு கிடந்து, வேர்த்து நடுங்குகிறது. உங்களுக்கும் உங்களையறிந்திடாத விதத்தில் இருந்தாற் போல் உடலெல்லாம், குப்பென்று வேர்த்து விட்டது. சதுரமும் உங்களுக்குக் கிடுகிடுவென்று ஒரு பக்கம், நடுங்க ஆரம்பித்து விட்டது.
“பொறம்மா. போப்பொறு. பிள்ள குழந்தய நாங்க முதலில ஆஸ்பத்திரிக்கு உடனே கொண்டு போவம்.” - என்று நீங்கள் பதற்றத்துடன் சொல்கிறீர்கள்.
பிள்ளை பெற்று தையல் போட்ட பச்சை உடம்புக்காரி அவள்.! வீட்டுப் படிகளால் தடதடவென்று கீழே இறங்குகிறாள். அவளுடைய அவதிக்கு காலுக்குச் செருப்புக் கூட போட்டுக் கொள்ள அப்போது கிடைக்கவில்லை. அப்படியே அவள் வெறுங்காலுடன் வெளியே ஒடுகிறாள். ܫ “ஆட்டோ. ஆட்டோ? ” நல்ல சமயம் தான் வீதியில் போய்க் கொண்டிருந்த ஆட்டோவும் ஆஸ்பத்திரிக்குப் போகக் கிடைத்து விட்டது.
உங்களுக்கோ, இவ்வேளையில் வீட்டைக் கூடப் பூட்டிச் சாவியைக் கையில் எடுக்கக் கூட நேரமில்லை. கையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்த பிள்ளையுடன், ஆட்டோவிலே வந்து நீங்கள் ஏறி இருந்து விட்டீர்கள். உங்களோடு மகளும் அவசரமாக ஆட்டோவுக்குள் ஏறிக் தி.சி.அருளதிைதச் 63 ക്രി

Page 41
கொண்டாள். அவள் தன் பிள்ளையின் முகத்தைப் பார்க்காது, முகத்தை மறுபக்கம் திருப்பி வைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆட்டோவுக்குள் இருந்து கத்திக் குழறியபடி இருக்கிறாள்.
“என்ர பிள்ளைக்கு என்னப்பா..? என்னப்பா என்ர பிள்ளைக்கு நடந்தது .? ”
உங்களாலே அவள் கேட்கின்ற கேள்விக்கு என்ன பதிலைத்தான் கூறமுடியும்?
பிள்ளைக்கு என்ன நடந்தது.? நன்றாகத்தானே காலையும் கையையும் அசைத்தபடி பிள்ளை இருந்தது.? குழந்தை பாலும் காலேல தாயிற்றயிருந்து குடிச்சதுதானே'
என்று அவள் முன்னம் உங்களைக் கேட்ட கேள்வியுடன் மனதுக்குள் நீங்கள் நினைத்தபடி பிறகு பிள்ளையின் முகத்தைக் குனிந்து நீங்கள் பார்க்கிறீர்கள்.? ஒரு அசைவுமில்லை! பிள்ளையின் முகத்தில் உயிர்ப்பில்லாத ஒரு பிரதிபலிப்பு .! கையைப் பிடித்துப் பார்க்கிறீர்கள். சூடுமில்லை குளிருமில்லை என்கிறாற் போல, இரண்டுமே இல்லாததான ஒரு மென்மை. அதே மாதிரியாகத்தான் சரியாக இருக்கிறது.! அப்படி ஆகிவிட்டதா..? என்ன கடவுளே.1 ஐயோ ஐயோ! வென்று உங்கள் நெஞ்சுக்குள்ளே சொல்லியபடி மலைச் சுரம் வந்த மாதிரி நடுநடுங்குகிறீர்கள்.
அந்தத் தனியார் மருத்துவமனை வாசலடிக்கு ஆட்டோ வந்து விட்டது. வாசலடியில் ஆட்டோ நின்றதும், உங்கள் மகள் அதிலிருந்து இறங்கி மருத்துவமனை வாசலில் ஏறி உள்ளே ஒடிப் போகிறாள். நீங்கள் கைகளில் வைத்துக் கொண்டிருந்த பிள்ளையோடு, ஆட்டோவிலிருந்து இறங்கி அவளுக்குப் பின்னாலே விரைவாக அந்த வைத்தியசாலைக்குள் நடக்கிறீர்கள். அவசர சிகிச்சைப் பிரிவிலே இப்பொழுது நீங்கள் கொண்டு சென்ற குழந்தைக்கு உடனே மருத்துவர்கள் சேர்ந்து சிகிச்சையளிக்கிறார்கள். அந்தக் குழந்தை ஏலவே இறந்து விட்டது என்றதைத் தெரிந்து கொண்டும, தாய் மனதுக்குக் கொஞ்சம் சாந்தியளிக்க ஏதேதோவெல்லாம் அவர்கள் சிகிச்சையளிப்பது போல செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் கடவுளுக்கு அடுத்ததாக, உங்கள் கண்களிலே தென்படுகிற அந்த வைத்தியர்களைக் கண்ணாடி அறைக்கு வெளியாலே இருந்து பார்த்துக் கொண்டு, கை இரண்டையும் குவித்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறீர்கள். உங்கள் மகள் அந்த மருத்துவ மனையிலுள்ள விறாந்தையிலெல்லாம் ஐயோ ஐயோவென்று கூவியவாறு, அங்காலேயும் இங்காலேயுமாக நடந்து கொண்டு அலைகிறாள். உடல் பலகீனத்தில் அவளுக்கு மூச்சு இளைக்கிறது. பத்து நாள் தண்ணிரே காணாத பூஞ்செடிபோல, அவள் சோர்ந்து வாடியது போல காணப்படுகிறாள். நிமிடங்கள் கடந்து கொண்டு போக உங்களுக்கு எல்லாமே
தி.சி.அருாரதிதர் 64 அத்தி

விளங்கிவிட்டது. கண்ணெல்லாம் கலங்கி, கண்ணீர் கன்னங்களில் உங்களுக்கு ஊற்றுக் கண்ணிலிருந்து புறப்பட்டது போல வழிந்து கொண்டிருக்கிறது.
அர்மகெதோன் - வந்து இந்த உலகமே முழுதும் இருண்டு கொண்டு வருவது போல, உங்களுக்குக் காணப்படுகிறது.
மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவு அறையை விட்டு வெளியே வருகிறார்கள்.
"எங்களாலே ஒன்றும் செய்வதற்கு முடியாமல் போய்விட்டது.! - என்று தலையைக் கீழே தொங்கப் போட்டபடி உங்களுக்குக் கூறுகிறார்கள்.
அதைக் கேட்டதும் உங்கள் மகள் = அந்த ஆஸ்பத்திரி முழுவதுமாகக் கேட்கக் கூடிய சத்தத்தில்.
"ஐயோ என்ரே பிள்ள . என்ர பிள்ள. ” - என்று சொல்லிக் கத்துகிறாள். அந்த நிலத்திலெல்லாம் விழுந்து புரள்கிறாள். "என்ன இது பார்க்க எவ்வளவு எங்களுக்குப் பரிதாவமாயிக்கப்பா .? " - என்று அந்த மருத்துவ விடுதியில் நின்றவர்களெல்லாம், உங்கள் மகளை வந்து பார்த்து விட்டு, தங்களுக்குள்ளே மனவருத்தப்பட்டவாறு சொல்லிக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் உங்கள் இருவரையும் பார்க்க, துக்கமாய்த்தான் இருக்கிறது. இனியென்ன பிறந்த பிள்ளையும் மகளுக்கு இறந்துவிட்டது. அதன் உடலைக் கொண்டு போய் சவ அடக்கம் செய்ய அலுவல்களைப் பார்க்க வேண்டுமென்பதாய் - எல்லா ஆண்களுக்குமுரிய கடமையில் நீங்களும் அதை யோசிக்கிறீர்கள்.
"ஐயோ என்னால எதையும் தாங்கேலாது. என்ர பிள்ளய இனி நான் கடைசி வரையும் வந்து பாக்கவே பாக்க மாட்டன்..! என்னால அது மட்டும் இனி ஏலாது.! என்ரவயிறெல்லாம் பத்தி எரியுது.! நெஞ்செல்லாம் எனக்கு அடைக்குது. ஐயோ " - என்று உங்கள் மகள் கண்ணாடி அறைக்கு வெளியே நின்று கொண்டு பிள்ளையைப் பார்த்தபடி கத்தி அழுகிறாள்.
அவள் அப்படிச் சொல்லி அழ - நீங்களும் அவள் சொன்னவைகளைக் கேட்டு மனவருத்தத்தில் ஒரு குழந்தையைப் போல அதிலிருந்து கொண்டு தேம்புகிறீர்கள். உங்கள் இருவரதும் அழுகைக் குரல்கள், அந்த ஆஸ்பத்திரிக் கட்டடம் முழுவதையும் நிறைத்துக் கொண்டது மாதிரி அவ்வேளையில் இருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்ததெல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க, உங்களுக்கு இப்போது மனம் விரும்பவில்லை.
'எல்லாம் இனி எங்களுக்கு வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற அந்த விரக்தியையே மட்டும் ஏன் நான் நினைத்தபடி இருப்பான்? நடந்து முடிந்ததுகளையெல்லாம் ஏன் மீண்டும் நான் என் நினைவில் புதிப்பிப்பான்? தி.சி.அருாரத்தச் 65 அததி

Page 42
. என்று உங்கள் மனதுக்குள்ளே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அப்படியே நீங்கள் நினைத்துக் கொண்டதும் . என்ன அதிசயம்.! என்கிற கணக்கிலே உங்கள் மனநிலையின் மாற்றத்தை நீங்கள் உணர்கிறீர்கள். இவ்வளவு நேரம் உங்கள் மனத்துள்ளே நீங்கள் நினைத்துக் கவலைப்பட்டுக் கிடந்த அந்தத் துன்பப் படகு - பாறைப் பக்கமாக ஒரு மூலை திரும்பி, மறைந்து விட்டதைப் போல இப்போ உங்களுக்கு இருக்கிறது.
இப்போது உங்கள் மனத்தில் துன்ப அலைகள் அடிக்கவில்லை! துயரக் காற்று மோதவில்லை! அந்தச் சாவின் வாசனையும் அதற்கான அசைவுகளுமென்று யாதொன்றுமில்லை! ஒரு சிகப்பு மின்சார விளக்கு அணைந்து, தலையில் நிலவு உதிந்ததைப் போல இப்போது உங்களுக்கு இருக்கிறது.
"கிட்டடியில எனக்குப் பேத்தி பிறக்கப் போகிறாள் . " - என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதை நீங்கள் சொல்லிக் கொள்ளும் போது, ஒரு மந்திர வீணையின் கீதம் இன்பத்தை அள்ளி விசிறிக் கொண்டிருப்பது போல உங்களுக்கு இருக்கிறது. உங்கள் மனம் அவையாவற்றையும் நினைக்க, இன்பத்தில் துளுக்கிறது.
崇
அந்தத் தேதி 27ம், வந்து கடந்து போய்விட்டது. பிள்ளை பிறந்திருக்கும் . பிறந்திருக்கும் - என்பதாய் அந்த நாளுக்கு அடுத்து வரும் நாள்களையெல்லாம், நீங்கள் யோசனையுடனிருந்து எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். -
“என்ர மகள் எனக்குச் சொன்னவளெல்லே பிள்ள பிறந்த உடன அப்பாக்குத்தான் முதன் முதலில அறிவிப்பனெண்டு . ஆனாலும் பிறகு அங்கவுள்ள சந்தடிகளில இதையவள் மறந்து போயிட்டாளோ..? ” உங்களுக்கு மனதிலிருந்த ஆவலை நாள் கடந்து கொண்டு போக அடக்கவே முடியவில்லை. நானே தொலைபேசி மூலம் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி என்ன விஷயம் என்று கேட்டு விடுவோம் என்ற நினைப்பில் . தொலைபேசியின் இலக்கங்களை அழுத்தி லண்டனிலுள்ள உங்கள் மருமகனுடன் தொடர்பை ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள். ஆனால் தொலைபேசியோ விண்கூவும் சத்தத்தோடு, தொடர்பே இல்லாத துண்டிப்பை விளக்குகிறது.
ஏன் அவ்வாறு? என்று உங்களுக்கும் அது ஒன்றும் புரியவில்லை! உடனே எதிலும் உங்களை சமாதானப் படுத்திக் கொள்ளும் நிலைக்கே நீங்கள் திரும்பவும் ஆளாகிறீர்கள்.
அவர்களுக்கெல்லாம் இப்போது அங்கே எவ்வளவு வேலைகள் வில்லங்கப்பாடுகள் இருந்து கொண்டிருக்கும். ஆருமே ஒரு தி.சி.சுகுரதிைதச் 66 déwa?

உதவியில்லாத இடத்தில தாயையும் பிள்ளயயும் கூட இருந்து பராமரித்துப் பாக்கவே மருமகனுக்கும் அங்க பொழுது சரியாயிருக்கும்.! எனக்குத்தான் இங்க ஒருவேலயுமில்ல. சும்மா ஒரு இடத்தில இருந்து கொண்டு சாப்பிடுறதும் படுத்து நித்திர கொள்ளுறதுமாயிருக்கிறன் . ஆனா பிறநாட்டிலயிருந்து சீவிக்கிற ஆக்களுக்கு அப்பிடியா..? அவயளுக்கெல்லாம் எவ்வளவு சோலியள் அங்கின இருக்கும் எனக்குள்ள அவசரத்துக்கு எல்லாமே எனக்குச் செய்யவேணுமெண்டு நான் எதிர்பாத்தா அவயளுக்கும் அதுகளை இப்ப செய்ய முடியுமானதா நேரமும் இருக்க வேணுமே..? அதில்லாமலும் அப்பிடியா அவயள் ஏதும் எனக்கு உடன சொல்லி வைக்க வேணுமெண்டு என்ன அவசரம்.? என்னவோ தாயும் பிள்ளையும் இப்ப அங்க சுகமா இருந்தா அதுவே கடவுளேயெண்டு எனக்குத் திருப்தி. அவயள் ஆறுதலா நேரமுள்ள நேரம் பிறகு எனக்கும் எல்லாத்தையும் சொல்லட்டுமே..?” - என்று கடந்து வருகின்ற ஒவ்வொரு புதிய நாளின் விடியலிலெல்லாம், திரும்பத் திரும்ப இதையே நீங்கள் நினைத்து உங்களை ஆறுதல் படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் எத்தனை நாட்களுக்குத்தான் உங்கள் மனத்தை நீங்கள் அடக்கி ஆறுதல் படுத்தி வைத்திருக்க முடியும்?
மகள் சொன்ன அந்த 27ம் திகதியும் தாண்டி . அதற்கு மேல் ஒரு மாதமாகிவிட்ட நிலையில், உங்களுக்கு மனம் கிடந்து அலைபாயத் தொடங்கி விட்டது. தடுமாற்றத்துடனும், துக்கத்துடனும் அந்தத் தொலைபேசியையே, அதற்கு முன்னால் உள்ள கதிரையில் இருந்து கொண்டு, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கிவிட்டீர்கள். தொலைபேசியின் தொடர்ந்த மெளனம், உங்கள் மனத்தை நிலைகுலையச் செய்து நிம்மதியைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறது.
崇
அன்று விடிந்த பின் வீட்டு முற்றத்தில் வெயில் சாய்வாக விழுந்து கொண்டிருக்கும் நேரமாக, படலைக்கும் வாசலுக்குமாய் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். தபால்காரர் அந்த வேளையில் வந்தார். சயிக்கிள் மணி "கிணிங் கினிங்" - என்று பக்கத்து வீட்டுப் படலையருகில் கேட்கிறது. தபால்காரரை எதிர்பார்த்திருக்கும் தேவை உங்களுக்கெல்லாம் கிடையாது. தபால் தொடர்புகளுடன் கூடிய எந்தவித அலுவல்களும் இல்லாத நீங்கள், ஏன் இந்தத் தபால் வருகைக்காகவென்று காத்திருக்கப் போகிறீர்கள்? பக்கத்து வீட்டு நாய் தபால்காரர் படலையால் விலகிப் போகு மட்டும், உள்ளே நின்று குரைத்துக் கொண்டே இருக்கிறது. நாயின் குரைப்புச் சத்தம் = உங்கள் காதுகளில் விழுந்து கொண்டிருக்க = வழமையான உங்களுக்கிருக்கும் யோசனையோடு ஒரு இடத்திலென்று நின்று கொள்ளாது, முற்றத்தில் நீங்கள் நடந்து கொண்டவாறே தீவி.அருாரரந்தச் 67 சிததி

Page 43
இருக்கிறீர்கள்.
கிணிங் கிணிங் ”. என்று உங்கள் படலையருகிலும் சப்தம்! தபால்காரர் வந்து படலைக்கு அருகாக நிற்பதை கண்டுவிட்டீர்கள்!
"எனக்கா தபால் வந்திருக்கு .? " . என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொண்டு, படலையருகில் செல்லுகிறீர்கள்.
தபால்காரர் உங்களிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார்! அது பதிவு செய்யப்பட்ட தபால்!
எயார் மெயில்!” - கையெழுத்திட்டு அதை நீங்கள் உங்கள் கையில் வாங்குகிறீர்கள் - அவர் உங்களிடம் கடிதத்தைத் தந்து விட்டு திரும்பிப் போய் விட்டார். அந்தக் கடிதத்தை அனுப்பியிருப்பவர் யாரென்று அதிலே கவனம் போக - அனுப்புதலிலுள்ள விலாசத்தைப் படிக்கிறீர்கள். அதிலே மகளின் பெயர் - மருமகனின் பெயருடன் சேர்ந்ததாய் எழுதப்பட்டிருக்கிறது. அவசரப்பட்டுக் கொண்டு உறையைக் கிழித்து காகிதத்தின் மடிப்புக்களை விரிக்கிறீர்கள். முத்து முத்தாக மகளுடைய ஒவ்வொரு எழுத்தும், அச்சுப் பதித்தாற் போல அதிலே எழுதப்பட்டிருக்கிறது.
மகள் எழுதிக் காட்டிய கவிதைகளை முன்பெல்லாம் நீங்கள் படித்திருக்கிறீர்கள். ஆனால் இதுதான் அவள் உங்களுக்கு எழுதிய முதல் கடிதமென்று நினைப்பும் வருகிறது.
கையில் விரித்துப் பிடித்திருந்த கடிதத்தைப் படிப்பதிலே மனம் உங்களுக்கு அவாப் படுகிறது. இதிலே எனக்கு மகள் அப்பிடி எழுதக் கூடிய ஒரு விஷயம் தான் என்னவாயிருக்கும்.? " - என்று உங்கள் மனமும் கிடந்து குழம்புகிறது.
"அன்புள்ள அப்பா" . என்று அவள் எழுத ஆரம்பித்திருக்கிறாள். ஆனால் கடிதத் தொடக்கத்தில் தனதும் கணவரினதும் சுகத்தை அறிவித்தோ - உங்களதும் சுகத்தை மேலும் கேட்டு விசாரித்தோ - ஒரு வரியும் அதில் அவள் எழுதியிருக்கவில்லை!
கடிதத்தில் அடுத்ததாக தொடர்ந்து எழுதப்பட்டிருப்பவை: அப்பா! இந்தக் கடிதத்தை உங்கட கையில வாங்கிற வேள நீங்கள் ஆச்சரியப்பட்டுத்தான் இருப்பியள்.
தொலைபேசியில் உங்களோட எதையும் கதைக்கிறவள் கடிதத்தில அப்பிடி என்ன எனக்கு எழுதியிருக்கிறாள் .? - எண்டு இதன் காரணத்தயறியாது ஓர் குழப்பமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் . உண்மையில அப்பா நான் தொலைபேசியில இந்த விஷயத்தை உங்களுக்குச் சொல்ல வெளிக்கிட்டா அந்த விஷயத்தை உங்களுக்குச் சொல்லத் துவங்கும் போதே எனக்கு முழுவதுமாக எல்லாமே குழம்பி எதையும் ஒன்றை ஒழுங்காச் சொல்ல முடியாமல் நிலை குலைந்து போய் இருப்பன்!
நீ.பி.அருாரனந்தர் 68
ീകൃി

முக்கியமான ஒரு விஷயத்தை வாய் மூலம் ஒருவருக்குச் சொல்லுகிறதை விட, எழுத்தின் மூலமாத் தெரிவிக்கிறது மன ஆழத்திலுள்ள சில பல விஷயங்களையும் விரிவா தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
சொல்லப் போனால், நான் மிகப்பெரிய துர்ப்பாக்கியசாலியப்பா!' இந்த உலகத்தில எனக்கெண்டு வேறு எந்த உறவுகளும் இருக்கக் கூடாது - அப்படியாய் இனியும் உறவென்பது எனக்கு வரக்கூடாது! என்கிறதுதான் அந்தக் கடவுளிண்டையும் சித்தமாயிருக்கும் போல இருக்கு..! அப்பிடியாத்தான் நான் இப்பவெல்லாம் இதுகளை நினைக்க வேண்டியிருக்கு. சின்ன வயசிலயே நான் என்ர அம்மாவைப் பறி கொடுத்தன்! அம்மா இல்லாதது அந்த வயதிலயெல்லாம் எனக்கு எவ்வளவு தூரம் பெரிய கவலையாயிருந்துது?
எனக்குக் கலியாணமாகி குழந்தை கிடைச்ச போது, எனக்குள்ள அந்தக் கவலையள் எல்லாமே வரவரக் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சு, அதுக்குப் பிறகு எல்லாம் இல்லாமப் போயிடுமெண்டுதான் நான் நினைச்சன்!
அப்பிடி நான் அப்ப நம்பி இருந்ததும், ரெண்டொரு நாளிலேயே உடைஞ்சுது அந்த என்ர முதல்பிள்ள அப்பிடிச் செத்தாப் பிறகு, மனவருத்தங்களோடதான் நான் நாளக் கடத்தினன். அந்தப் பிள்ளை இறந்த மனவருத்தம் ஒருபக்கம் - வெளிநாட்டில உள்ள என்ர புருஷனிட்ட நான் போய்ச் சேரமுடியாத அவலம் ஒரு பக்கம் - எண்டு எல்லாமே ஒண்டாச் சேந்து அப்பவெல்லாம் என்னைப் போட்டு மனத்தை அறுத்திச்சு ஆனாலும் கடவுள் என்ரை பேரில அப்பத்தைக்கு கருணை காட்டினார். நான் ஒரு மாதிரியா இங்க என்ர புருஷனோட வந்து சேர்ந்தன். இங்க வந்து நான் இவரோட சீவிக்கத் தொடங்கினாப் பிறகு, எல்லா மனவருத்தங்களையும் மறந்திட்டு என்ர மடியில வைச்சு ஒரு குழந்தையப் பால் குடுத்து வளர்க்கிறதுக்கான கனாவ நான் காண வெளிக்கிட்டன் - நான் ஆசைப்பட்டது மாதிரி அது நிறைவேறிச்சு . தரிசாகக் கிடந்த என்ர கருப்பையில பேந்தும் ஒரு குழந்த ..! எனக்கெண்டா அதால எவ்வளவு சந்தோஷம் .1 இங்க வந்தாப்பிறகு என்ர அவர் வெளியால போயிருக்கிற பொழுதெல்லாம், ஒரு மணித்தியாலம் எனக்குப் போறது ஒரு யுகம் எண்ட மாதிரித்தான் கஷ்டமாய் இருந்துது . ஆனாலும் என்ர வயித்தில நான் சுமந்து கொண்டிருக்கிற குழந்தைய நினைக்க, . வானத்தில அப்பிடியே நான் பறக்கிற மாதிரியும், பூவுக்கு மேல நான் உட்கார்ந்திருக்கிறது போலயம், மெத்தையில நான் சாஞ்சு கிடக்கிற சுகம் மாதிரியும் - அதுகள் எல்லாமே என்ர மனதுக்குள்ள இன்ப அடுக்குகளாய் இருந்து கொண்டிருந்துச்சு.
நானும் இங்க ஒரு வைத்தியசாலையத் தெரிஞ்செடுத்து
தி.பி.அருாரத்தச் 69 eീകൃി

Page 44
கர்ப்பிணிகளுக்கான மாதாந்த வைத்தியப் பரிசோதனைக்கெண்டு போய்க் கொண்டிருந்தன். லண்டனில வந்திருக்கிற எங்கட ஆக்கள் சில பேர் சொல்லிச்சினம். பிள்ளைப் பெறவெண்டு நாங்கள் ஆஸ்பத்திரிக்குப் போனா, எங்கட ஆக்கள அவயள் வேறுபாடு காட்டித்தான் நடத்து வினமெண்டு. ஆனா நான் போன வைத்தியசாலையில தாதிகளில இருந்து, டொக்டர்மார் சிற்றுாழியர் வரையாக, எல்லாரும் என்னோட கனிவாயும் அக்கறையாவுந்தான் நடந்து கொண்டிச்சினம். அவையளின்ட பாரபட்சமில்லாத கவனிப்பு, முந்தி எனக்கிருந்த பிழையான கருத்தையெல்லாம் என்னட்டப் பிறகு மாத்திப்போட்டுது.
அப்பா நான் ஏன் இதுகளையெல்லாம் ஆதியோடந்தமாய் உங்களுக்கு பிட்டுப்பிட்டு வைச்சமாதிரி சொல்லுறன் தெரியுமா..? அதுக்கும் ஒரு காரணம் இருக்கத்தானேயப்பா செய்யும்.? எனக்கு உங்களவிட்டா வேறயாரப்பா இந்த உலகத்தில இருக்கினம் .? அப்பிடி எனக்குள்ள வேதனையை நான் ஆரிட்டயப்பா மனந்திறந்து சொல்லக் கூடியதாயிருக்கு.? உங்களுக்கு என்ர மனதில உள்ள கஷ்டத்தைச் சொல்லுறதால, அதால என்ர கவலையும் கொஞ்சம் ஆறிப்போற மாதிரித்தான் வரும்.! அப்பிடி இல்லாட்டி எல்லாத்தையும் நான் நினைச்சுக் கொண்டிருக்க, என்ர நெஞ்சே கிடந்து வெடிச்சுப் போடுமப்பா..! இதுகளை நான் உங்களுக்குச் சொல்லாட்டி - கயிறு என்ர கழுத்தை இறுக்கி முகுளத்தை நொறுக்கிற மாதிரி அந்தரமாயிருக்குமப்பா..?
உங்களுக்குக் கண்களெல்லாம் கலங்கிப் போய் விட்டது. கல்லால் ஒருவன் அடிக்க, காண்டீபம் எனும் வில்லால் ஒருவன் அடிக்க - என்கிறது மாதிரி உங்களை நோக்கி துன்பம் தொடர்கிறாற் போல உணர்கிறீர்கள். உங்கள் கண்களிலிருந்து காகிதத்தின் மேல் விழுந்த கண்ணீர்த் துளிகள் நட்சத்திரமாகத் தெறிக்கின்றன. தொடர்ந்தும் நீங்கள் கடிதத்தைப் படிக்கிறீர்கள் அப்பா இப்ப எனக்குப் பிறந்த என்ர மகள் . நீங்கள் எப்பத்தைக்குப் பிறக்கும் பிறக்கும் எண்டு எதிர்பார்த்திருந்த அந்த உங்கட பேரப்பிள்ள. எங்கட அந்த அருமைச் செல்வம். எங்கட கண்மணி . அந்த அழகிய ரோஜா. என்ர எண்ணங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது வண்ணங்களையும் மணத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தவள் . பிறந்து ஒரு அஞ்சே அஞ்சு நாள் தானப்பா இந்த உலகத்தில இருந்தாள். அந்த அஞ்சு நாள் மட்டும் இருந்திட்டு இந்தப் பிள்ளையும் என்ர முதல் பிள்ளை மாதிரி பிறகு செத்துப் போயிற்றப்பா. இந்தப் பிள்ளையும் அந்தப் பிள்ளை மாதிரியே சீக்கிரங்களில தன்ர வாழ்வை முடிச்சுக் கொண்டிட்டுது அப்பா. உங்கள் காதுகளுக்குள், மகளினது அழுகுரல் ஒரே ஒலமாகக் கேட்பது போல இருக்கிறது. கை கால் நரம்புகளெல்லாம் உங்களுக்கு விண்விண்ணென்றதாய் இழுக்கத் தொடங்கிவிட்டன. உடல் விதிர்த்து நடுங்குகிறது. அந்த நடுக்கத்துடன்
.dിമിത്രസ്മൃി 70 அத்தி

உடலில் உள்ள செல்களிலிருந்து பல கோடி அணுக்கள் உதிர்ந்து போவதைப் போல உங்களுக்கு இருக்கிறது. ஒரு பலசாலியான ஆள், தூரத்திலுள்ள காட்டிலிருந்து கோடாலியால், ஓயாமல் சலிக்காமல் மரம் வெட்டுவது போல டக் டக்” . கென்று ஒரு சத்தம் உங்கள் காதுக்குள் இடித்தபடி இருக்கின்றது. கண்பார்வை மங்கினாற் போல இருந்தாற் போல உங்களுக்கு வந்துவிட்டது. எழுத்துக்களை கூர்ந்து பார்த்துக் கொண்டு மிகுதியையும் நீங்கள் படிக்கிறீர்கள்.
எனது மகள் மண்ணில் உதித்து - ஐந்து நாள்களுக்குப் பிறகு மறைந்த அந்த மனதைப் பிளக்கும் சம்பவத்தை என் கண்ணிருடன் கலந்து இக்கடிதம் மூலம் உங்களுக்கு விபரித்துச் சொல்லுறனப்பா. புரட்டாசி மாதம் 27ம் திகதி - கடல் அலைகளைப் போல பிரசவ வலி எனக்கு வந்துது இந்த வலிக்கும் வேதனைக்கும் முதல் எனக்குப் பிறந்த பிள்ளையோட நான் பழக்கப்பட்டவள் தானே.? உடனே ஆஸ்பத்திரிக்கு என்னைக் கொண்டு போன போது பல காரணங்களின் நிமித்தமாக - அறுவை சிகிச்சை எனக்கு உடனே வைத்தியர்களால் தீர்மானிக்கப்பட்டு - 15 நிமிடங்களுக்குள் என் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
முழு அக்கறையோடத்தான் எல்லாத் தாதிமார்களும் அந்த சிசுவை - என்ர குட்டி தேவதையைக் கவனிச்சுக் கொண்டினம், என் மகளின் தலைமுடி அழகைப் பாத்து வியக்காத தாதிமார்களே அந்த வைத்தியசாலையில இல்ல. அவயளெல்லாம் "உனக்கு நல்ல அழகான மகள் பிறந்திருக்கிறாள் ” . எண்டு சொல்லி என்னை வாழ்த்தி மகிழ்ந்திச்சினம்.
அந்த வார்ட்டில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தாதியெண்டு, மாறி மாறி வந்து அவயள் வேலை செய்வினம். ஆனாலும் அவயள் எல்லாருமே என்னோட நல்ல அன்பாகத்தான் எப்பவும் நடந்து கொண்டிச்சினம்.
பிள்ளை பிறந்து நாலாம் நாள் வந்திட்டுது. அண்டைக்கு என்னை அவயள் “நீர் உம்முடைய வீட்டுக்கு பிள்ளையையும் கொண்டு இனி போகலாம்” - என்று சொல்லிச்சினம். போக முதல் அவயள் என்ர பிள்ளையை நல்லா முழுக்க பரிசோதிச்சுப் பாத்தினம். அதன் பார்க்கும் திறன், கேட்கும் திறன் - இதய ஓட்டம் - இரத்த அழுத்தம் - எண்டு இவைகள் எல்லாமே அவயளிண்ட பரிசோதனையில அடங்கி இருந்துது என்ர மகளுக்கு எவ்வளவு சின்னக் குரல் . அது எவ்வளவு உருக்கமா அழுகுது. நான் உடன என்ர பிள்ளையின்ர பசிக்கு முலைப்பாலைக் குடுத்தன். பிள்ளையும் வடிவாப் பாலக் குடிச்சிட்டுப் பேந்து படுத்திட்டுது அதெல்லாம் முடிஞ்சாப் பிறகு எங்கட குட்டி மகளைத் தூக்கிக் கொண்டு நானும் என்ர கணவனும் மனம் நிறைஞ்ச சந்தோஷத்தோட எங்கட
"திசிஅருானத்தச் 71
ീഴി

Page 45
வீட்ட வந்து சேந்தம். அடுத்த நாள் காலேல எல்லாம் வழமை போலத்தான் நடந்துது அண்டைக்குப் பின்னேரமும் பிள்ளைக்கு நான் பாலைக் குடுத்திட்டு குசினிக்கிள்ள போய் எனக்கிருந்த கொஞ்ச வேலையளையும் செய்திட்டு . இடையிக்க அறையிக்க வந்து என்ர குழந்தையப் பார்த்தா. ஒரு அசைவுமே இல்லையப்பா. கடவுளே கடவுளே.!
பிள்ளையை நான் பார்க்கேக்க அவள் நல்ல நித்திரை போலத்தானப்பா எனக்கெண்டாத் தெரிஞ்சிது!
பிறந்த குழந்தை நித்திரை கொள்ளுறது மாதிரி அமைதியா அவள் உறங்கிற மாதிரித்தான் அப்ப இருந்தாளப்பா.ஆனாலும் அது உண்மையான நித்திரையில்ல. ஒ அது அப்பிடி நித்திரையெண்டில்ல. எண்டு என்ர மூளைக்கு உடன ஒரு யோசினை தட்டுப் பட்டிச்சு. உடன நான் பிள்ளய சாதுவாப் பிடிச்சு அசுப்பிப் பாத்தன். ஒரு துளி அசைவெண்டாலுமில்ல . எண்டாலும் திரும்பத் திரும்ப பிள்ளையின்ர கையைத் தூக்கி நான் அசுப்பிப் பாத்தன் - எதிர்பாராத வினாடியில என்ர மகளின்ர அந்தப் பிஞ்சு விரலெண்டாலும் முதல் முதல் அசையும்.! அந்த அசைவோட என்ர மகள் தன்ரை கையை பூக்காம்புகளாய் நீட்டுவாள்! எண்டு நான் நம்பிக்கையோட பாத்தன் . ஆனா பிள்ளையின்ர ஒரு அசைவையும் பிறகு நான் காணேல்லயப்பா..!
ஐயோ அப்பா எனக்குப் பிறகு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல. எனக்கு கைகாலெல்லாம் பதை பதைப்பும் நடுக்கமுமா வந்திட்டுது என்ர முதுகெலும்பெல்லாம் நடு நடுங்க - என்ர முதல் பிள்ளையும் அண்டைக்கு இப்பிடியாத்தானே இருந்திச்சு = எண்டுறது எனக்கு உடன ஞாபகத்துக்கு வந்துது
என்ர பிள்ளைக்கு எல்லாம் செயலிழந்து போச்செண்டு; அது எனக்கு அப்ப உடன நல்லாத் தெரிஞ்சிட்டுது. எண்டாலும் என்ர மனம் அதத் துளியும் ஏற்கவேயில்ல. எப்பிடியாச்சும் கடவுளே என்ர செல்வத்த நான் காப்பாற்றியே ஆக வேணும் எண்ட பதைபதைப்பில, என்ர குஞ்ச நான்அப்பிடியே தூக்கி எடுத்துக் கொண்டு என்ர புருஷனிட்டக் கொண்டோடினன்.
அவர் பிள்ளையைப் பாத்திட்டு: "ஐயையோ என்ன இது.? பிள்ளைக்கொரு அசைவையும் இப்ப காணேல்ல.? கெதியா உடன பிள்ளயை நாங்கள் ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போவமெண்டார். அப்பிடி அவர் சொல்லிப் போட்டு - பிள்ளயை நான் அப்பிடியே தூக்கி வைச்சுக் கொண்டிருக்க - அவர் காரை ஸ்ராட்' பண்ணி எடுத்தார்.
கொஞ்ச தூரம் நாங்கள் அந்தக் காரில ஏறிப் போகேக்க - அவசர சிகிச்சைக்கான நம்பரை கான் போனில அடிச்சு விஷயத்தைச் சொன்னம். உடன அம்புலன்ஸ்' வந்து பிள்ளையை அவங்கள் கொண்டு
.dി.ത്രിസ്ത്ര് 72 ീമി

போச்சினம், நாங்கள் அவயள் வரச் சொல்லிப் போட்டுப் போன மாதிரி ஆஸ்பத்திரிக்குப் போனம். நான் அங்க போன உடன முந்தி எனக்கு நடந்த எல்லாத்தையும் நினைச்சு கத்தத் துவங்கீட்டன். என்ரயவர் என்னை அங்க உள்ள வரச் சொல்லிக் கூப்பிட்டார். நான் அவரைப் பாத்து . “நான் உள்ள அங்க வரமாட்டன். நீங்கள் போய் பிள்ளைக்கு என்ன எண்டு பாத்திட்டு வாங்கோ எண்டு கத்தத் துவங்கிட்டன்.
எண்டாலும் என்ர பிள்ளைக்கு என்னவும் அப்பிடியொண்டும் நடக்கவேபிடாது. ஆண்டவரே என்ரேயாண்டவரே" - எண்டு நான் கடவுள மன்றாடிக் கொண்டிருந்தன்.
என்ர அவர் உள்ள போய் கொஞ்ச நேரத்தால ஒரு தாதியோட கூடவா வந்து கொண்டிருந்தார். அவற்ற முகத்தை நான் அப்ப பாத்தன். அவற்றை முகம் உயிர்ப்பில்லாமல், ஆதரவில்லாமல் இருக்கிற மாதிரி இருந்துது ஏதோ வெளுத்துரெத்தமில்லாத மனுசன் மாதிரி அவர் இருந்தார். ஒளி இல்லாத கண்ணோட அவர் தன்ர முகத்தை நிமிர்த்தி என்னைப் பார்த்தார். பனி மலை போல இவற்றை முகமேன் இப்பிடி வெளுறலடைஞ்சிட்டு? - எண்டு நான் அவரைப் பாத்துப் பயந்தன்.
நான் நம்பிக்கையில்லாம என்ர கை அசைவால -.என்ன? . எண்டு அவரைப் பாத்துக் கேட்டன. அவர் இல்ல. " . எண்டுறது மாதிரி தன்ர தலையை அசைச்சார்.
எனக்கு உடன நெஞ்சே வெடிச்சமாதிரி வலி வந்திட்டுது. நானும் அவரும் பெரிசா அழுதம்! கடவுள் மேலயும் எனக்குக் கோபம் வந்துது 'இராமாயணத்தில. சுமதி அறுபதினாயிரம் பிள்ளையளை வேண்ட பிருகு முனிவர் எனப்பட்டவர் அப்பிடியே உனக்கு ஆகட்டுமெண்டு கூறி - அருள் செய்தாராம்!”
ஆனா எனக்கு இந்தக் கடவுள் தந்த ஒரு பிள்ளையைக் கூட உயிரோட இருக்கவிடாம எடுத்துப் போட்டாரே..? - எண்டு கடவுளையும் கண்கெட்ட கடவுள் எண்டு திட்டினன்.
நாங்கள் அதில இருக்க அந்த நேரம் தாதி வந்து, எங்கள் ரெண்டு பேரையும் உள்ள வாருங்கோ எண்டு கூப்பிட்டா.
அறுவை சிகிச்சை செய்து எனக்கு அஞ்சு நாள் தான் முடிஞ்சிருக்கு எண்டதால, உடம்பிலயும் எனக்கு வருத்தம் ஒரு பக்கம் . என்ர பெத்த பிள்ளையை நான் பறி கொடுத்த மன வேதனை ஒரு பக்கம் . இந்த ரெண்டுமே என்னப் போட்டு மனதைச் சரியா வாட்டிச்சிது. அங்க ஆஸ்பத்திரிக்குப் பிறகு தேவாலயப் பாதிரியார்’ ஒருவர் எங்களுக்காக அவயளால வரவழைக்கப்பட்டார். அவர் அங்க வந்து எங்கள் ரெண்டு பேருக்கும் ஆறுதல் சொன்னார்.
ரிசுருாரத்தசி 73 al

Page 46
பிள்ளையை ஆசிர்வதிச்சு ஞானஸ்னானம் கொடுத்து பெயரையும் பிள்ளைக்கு அவர் வைச்சார். எங்களுக்கு விரும்பமெண்டா இறந்து போன பிள்ளையை வந்து நாங்கள் பாக்கலாமெண்டு ஆஸ்பத்திரியால அழைப்பு வந்துது உயிர் இல்லாத என்ர மகள அந்தக் கோலத்திலயாப் பாக்கிற மனத்தைரியம் எனக்கு அப்ப இல்லாமப் போனதால, நான் உடனே வேண்டா மெண்டு அவயஞக்குச் சொல்லிப் போட்டன்.
பிறகு அங்க வைத்தியர் ஒருவர் வந்து, எங்களிட்ட விளக்கம் கேட்டார். என்ர உடல் ஆரோக்கியத்தைக் கருதி என்னை அங்க வைத்திய பரிசோதனைக் கெண்டு கூட்டிக் கொண்டு அவயள் போச்சினம். மருந்து குளுசைகளும் அவயள் எனக்குத் தந்திச்சினம். -
ஆஸ்பத்திரி பிறகு பொலிசுக்கு அறிவிச்சுது ஒரு இரகசியப் பொலிசும் - ஒரு அதிகாரியுமாக ரெண்டு பேர் அங்க வந்திச்சினம். அவயள் எங்களுக்குச் சொல்லிச்சினம்: "நாங்கள் கேட்கப் போகிற ஒவ்வொரு கேள்விகளும் உங்கட மனதச் சில நேரம் புண்படுத்தலாம். ஆனா இது எங்களின்ர கட்டாயமான ஒரு கடம! நாங்கள் உங்களிட்ட இந்த விசாரணைகளச் செய்தே ஆக வேணும்? - ஏன் இந்தக் குழந்தை செத்திச்சுது? என்ன காரணத்தால இந்தக் குழந்தைக்குச் சாவு வந்தது? எண்டதையெல்லாம் சரியாக் கண்டு பிடிக்க வேண்டியது எங்களினண்ட
எண்டு சொன்னார்கள். ஓம் ஓம்! எங்களுக்கும் இப்ப தெரிஞ்சு கொள்ள வேண்டியது அதுதான்’ (நான் உடன அவயள் சொல்ல இத மனதுக்குள்ள நினைச்சன்)
ஆனாலும் அவயளிண்ட சந்தேக வட்டத்துக்குள்ள நாங்களும் தான் அடக்கம் போல இருந்திச்சு (செத்த என்ர பிள்ளை பெம்பிளப் பிள் ளயா இருக்கிறதால இப்பிடி அவயஞக்கு சந்தேகமா இருக்குமோவெண்டும் நான் உடன மனதுக்க நினைச்சன்) என்னதான் செய்யிறது? அவயள் அப்பிடியாயெல்லாம் துருவித்துருவி எங்களைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாங்களும் சரியான மனவருத்தப்பட்டுக் கொண்டு தான் பதில்களைச் சொன்னம்.!
அந்த விசாரணைகள் முடிஞ்சாப் பிறகு, அவயள் எங்களை வீட்ட போகச் சொல்லிச்சினம்.
நாங்கள் வீட்டுக்குப் போக அங்கையும் ஒரு 'பொலிஸ்’ . அதிகாரி வந்து வீட்டப் பாத்தார். பிள்ளையை வைச்சிருந்த தொட்டிலையும் சுற்றுப் புறங்களையும் வடிவாப் போய்ப் பாத்திட்டு, 'வீட்டில எங்களோட ஆர் ஆர் இருக்கினம். எப்பிடி அவயள் உங்களோட.’ எண்டெல்லாம் கேட்டு அவர் தன்ர நோட் புக்கில அதெல்லாத்தையும் அவர் எழுதினார். பிள்ளை செத்து ரெண்டு கிழமையானதுக்குப் பிறகு, "பிரேத
நீ.பி.அருாரதிதச் 74
ീക്രി

பரிசோதனையெல்லாம் முடிஞ்சுது, நீங்கள் உங்கட மகளின்ட உடலை இனி அடக்கம் செய்யலாம்' - எண்டு அவயள் எங்களுக்கு அறிவிச்சினம். நாங்கள் பிறகு எங்கட சமயச் சடங்குகளோட, எங்கட அந்தச் சின்னத் தேவதையைக் கொண்டு போய் அடக்கம் செய்தம்.
ஆனால் இவ்வளவு நாள் செண்டும், என்ர பிள்ளை இறந்ததுக்கான காரணம் ஒண்டும் அவயஞக்கு வெளிப்படையாகத் தெரியேல்ல. அவயள் இன்னும் என்ர அந்தப் பிள்ளை இறந்ததுக்கான காரணத்த தாங்கள் ஆராஞ்சு கொண்டுதான் இருக்கிறம் எண்டுகினம்!
கிட்டத்தட்ட பிள்ளை இறந்து மூன்று கிழமை செண்டு என்ர பிள்ளை செத்துப் போனதுக்கான காரணத்த தாங்கள் இப்ப கண்டு பிடிச்சிட்டம் - எண்டு ஆஸ்பத்திரியால எங்களுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்துது இதுக்குள்ள என்ர வீட்டுக்கு அந்த ஆஸ்பத்திரியில இருந்து மூண்டு நாளுக்கு ஒரு முறை, தாதிமார் ஒவ்வொருக்காலும் வந்து என்ர உடம்பின்ர சுக நிலையப் பரிசோதிச்சுப் பார்த்துக் கொண்டு போச்சினம்! நாங்கள் அவயள் எங்களைக் கூப்பிட்ட மாதிரி பிறகு அங்க போக. அங்க எங்களுக்கான ஒரு ஒன்று கூடல் ஆயத்தமாயிருந்திச்சு. அந்த ஒன்று கூடலில. நாங்கள் . அடுத்து அந்த வைத்தியர்கள் - பொலிஸ் அதிகாரி - மொழி பெயர்ப்பாளர் - எண்டு பலரும் அடங்கி இருந்திச்சினம்.
அதில எங்கட பிள்ளை எப்பிடிப் பிறகு செத்தது எண்டுற காரணம் அவயளால எங்களுக்கு சொல்லப்பட்டுது.
"அது ஒரு இயற்கையான இறப்புத்தான்!” - எண்டு வந்திருந்த பொலிஸ் அதிகாரியும் சொல்லி தன்ர கேசை முடிச்சிட்டார். எங்களுக்குப் பிள்ளை இறந்தது மனதுக்குப் பெரிய தாங்கேலாத ஒரு மனவருத்தம் தான்! எண்டாலும் அகதியா ஒரு ஆதரவுமில்லாம - எங்கட சொந்த நாடுகளில யிருந்து வாழ ஏலாத நிலையில இங்க வந்திருக்கிற எங்களுக்கு - பிரித்தானியா போன்ற இந்த நாடுகள் - தங்கட சொந்த நாட்டு மக்களைப் போல எங்களையும் - எந்த வித பாராபட்சமில்லாம நடத்துறதக் கண்டு நாங்கள் எவ்வளவோ எங்களுக்கிருக்கிற இந்தக் கவலையளிலயும் ஆறுதல் பட்டம். எங்கட நாட்டில தமிழராய்ப் பிறந்த நாங்கள் பட்ட கேவலங்களையும் கஷ்டங்களையும் இந்த நாட்டில நாங்கள் வந்து வாழுற வாழ்க்கையோட நினைக்கேக்க எங்களுக்கு உடன எவ்வளவு ஆத்திரம் வருகுது? இங்க இந்த நாட்டில மனுசனை மனுசனா மதிச்சு மனித நேயத்தோட எங்கள இங்க சுதந்திரமா வாழுறதுக்கு விட்டிருக்கினம். ஆனா அங்கின எங்கட நாட்டிலயெல்லாம் ஒரு மனுசன்ர உயிர மதிப்பற்றதொன்றாகத்தானே கருதுகிற அளவுக்கு அங்க உள்ள இப்பத்தைய நிலைமை போய்க் கொண்டிருக்கு
அங்கயெல்லாம் எங்கடதமிழ்ப்பேசும் சனங்கள் அழிகிறதைப் பற்றியோ - நசிகிறதைப் பற்றியோ = நோயுறுவதைப் பற்றியோ . பட்டினி கிடக்கிறதைப் பற்றியோ - அலைந்து அகதியாய்த் திரிகிறதைப் பற்றியோ - எந்தக் கவலையும் ஆருக்குமே இல்ல!
ஆனாலுமப்பா. எங்கட சனங்கள் எங்க போய் இருந்தாலும்
சிஅருாணத்தச் 75 Mu?

Page 47
கடைசி மட்டும் திருந்தவே திருந்திடாதுகள், எண்டுறது போலத்தான் அதுகள் தங்களிட்டயுள்ள சில பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் எப்பவும் போல வைச்சுக் கொண்டிருக்குதுகள்.
என்ர புருஷனிண்ட தமக்கை ஒருத்தி இங்க லண்டனிலயா இருக்கிறது உங்களுக்கும் அது தெரிஞ்சது தானே..? அவ என்ர பிள்ள செத்துப் போச்செண்டு கேள்விப்பட்டு - உடன எங்கட வீட்டுக்கு வந்தா. அதுக்குப் பிறவும் இடைக்கிட எங்கட வீட்ட வந்து எங்களோட ஆறுதலுக்கு கதைச்சுப் போட்டும் போய்க் கொண்டிருந்த்ா.
ஒரு நாள் அவ. எங்கட வீட்டில நிக்கேய்க்க . தன்ர தம்பியோட தனியவா நிண்டு ஒரு இடத்தில கதைச்சுக் கொண்டிருந்தா - நான் இருந்தாப் போல அவயள் கதைச்சுக் கொண்டு நிண்ட இடத்தடிக்குப் பக்கத்தில என்னத்தையோ எடுத்துப் போகவெண்டு போயிருந்தன்.
நான் அங்க போன நேரம் மச்சாள் என்னைக் காணேல்ல - என்ர அவரும் அவ சொல்லுற கதையளக் கேட்டுக் கொண்டிருந்ததில என்னையும் கவனிக்காமல் இருந்திட்டார். அதில வந்த எனக்கு மச்சாள் சொல்லிக் கொண்டிருக்கிறது அப்பிடியே எல்லாம் வடிவாக் கேட்டுது. அவ என்னைப்பற்றி அவருக்கு என்னவெல்லாம் அப்ப சொன்னா தெரியுமாப்பா..? "என்ர பிள்ள ரெண்டும் எனக்கச் செத்தது. எங்கட பரம்பரையிலயுள்ள ஜினில உள்ள குறைபாடாம். எங்களிண்ட பரம்பரையில அப்பிடியாக் குறை இருக்கிறதாலத்தான் ரெண்டு பிள்ளயஞம் அப்பிடி எனக்குச் செத்ததாம்.” பிறகும் அவ தன்ர தம்பிக்கு என்ன சொல்லுறாவெண்டு தெரியுமே அப்பா.
அவ சொல்லுறா. “இப்பிடித்தான் இவ ஒவ்வொரு பிள்ளையும் பெறப்பெற அதெல்லாம் உயிரோட இல்லாம செத்ததாவும் போயிடும். அதால பேசாம நீ இவளிட்டயிருந்து விவாகரத்த வாங்கிப்போட்டு வேற ஒரு தோதான பொம்பிளையா நேரத்தோட கலியாணத்த முடி. இல்லாட்டி உன்ர பரம்பரையே பேந்து உனக்கு இல்லாமப் போயிடும் தம்பி.” = அப்பிடியெண்டுறா அப்பா. எனக்கு அப்பா அவ அப்பிடியெல்லாம் சொல்லேக்க அவவின்ர சொல்லுகள் ஒவ்வொண்டும் நாத்தம் பிடிச்ச வெளவால் வந்து என்னில முட்டி மோதுற மாதிரித்தான் கேட்க அருவருப்பாயிருந்துது
என்ன மாதிரி ஒரு மனச்சாட்சியே இல்லாத கதைய அவ வந்து இந்த நேரத்தில இப்பிடி அவருக்குச் சொல்லுறா அப்பா..? என்ர நெஞ்செல்லாம் இதுகளைக் கேட்க எனக்கு நெருப்பா அப்ப மலர்த்துப் போச்சு. -
இதை அவ சொல்லிப் போட்டுப் போன அண்டைக்கு இராத்திரி சாப்பிடாம நான் முடிவில்லாம அழுது கொண்டிருந்தன். என்னாலயா படுத்து நித்திரை கொள்ளவே முடியேல்ல. அவ்வளவு மனவேதனையா எனக்குப் போட்டுது. இலையெல்லாம் கொட்டுப்பட்ட மரங்கள் . மேல உள்ள வானத்த வெறிச்சபடி நிக்கிற மாதிரி நானும் இருக்கிறதா நெச்சுக் கொண்டு அழுதபடி கிடந்தன். அவருக்கும் துக்கத்தைச் சுமக்க ஏலாத
ർ.dി.oന്നങ്ങ% 76 அத்தி

அளவுக்குத்தான் இருந்திருக்க வேணும். அண்டைக்கெண்டு அவர் நல்லா விஸ்கியக் குடிச்சுப் போட்டு அந்த விஸ்கிப் புலம்பலோட கட்டிலில நித்திரையாக் கிடந்தார்.
எனக்கெண்டா இப்ப வெல்லாம் மனதில எத நினைச்சாலும் கசப்பேறிக் கொண்டே வருகுதப்பா. வெளிக் காட்டேலாத கோவமும் ஆதங்கமும் நிராசையுமாத்தான், நான் இப்ப என்ர வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறன். எனக்கு இப்ப நித்திரையே இரவில லேசிய வருகுதில்ல. அப்பிடி வந்தாலும், நான் கண்ண மூடுற நேரமெல்லாம் என்ர பிள்ளை என்னைக் கனிவோட உற்றப் பாக்கிற மாதிரித்தான் தெரியுது என்ர ஆசைகளெல்லாம் இப்ப எனக்குச் செத்துப் போச்சுது. நான் இப்ப ஒரு மரக்கட்டை மாதிரியான நிலைக்குத்தான் வந்திட்டனப்பா. இப்ப எனக்கு ஒவ்வொரு நாளும் என்ர மச்சாள் சொல்லிப் போட்டுப் போன கதையளை நெச்சித் தான் ஒரே யோசினை. அப்பிடி அவ சொல்லுறது மாதிரி எங்கட பரம்பரையில ஏதும் இருக்குமோவெண்டு எனக்கும் ஒரு பயம் பிடிச்சிட்டுது. அப்பிடி ஏதும் அம்மாவின்ர வழியில இருந்தோ ஆல்லாட்டி அப்பான்ர வழியிலயிருந்தோ, எனக்கு இப்பிடி ஏதும் குறை வந்ததாயிருக்குமோ வெண்டு நானும் தான் இப்ப கிடந்து யோசிக்கிறன்.
அப்பிடி ஏதும் இருந்தா உங்களுக்கு அதைப்பற்றி ஏதும் தெரிஞ்சிருக்கும்.! அதை உங்களிட்டயிருந்து நானும் கொஞ்சம் அறிஞ்சிடுவோமெண்டுதான், இப்பிடியெல்லாம் விவரமாக உங்களுக்கு நான் கடிதம் எழுதவும் வெளிக்கிட்டன்.
அப்பிடி எங்கட பரம்பரையில ஏதாவது குறைகுற்றமிருந்தா, விபரமா அது முழுவதையும் எனக்குக் கடிதத்தில நீங்க எழு அனுப்புங்கோ அப்பா -
அத்தோடு மகளின் கடிதம் நிறைவு பெற்றுவிட்டது. மகளின் கடிதத்தைப் படித்து முடித்த போது ஆயாசமும் சோர்வுமாக உங்களுக்கு வந்து விட்டது.
'பூ' பட்டாலும் நோகிற மாதிரி உள்ள என்ர பிள்ள - இப்ப எவ்வளவு கஷ்டத்தைத் தாங்கிறாள்? - என்று நீங்கள் வாய்விட்டுச் சொல்லி அழுகிறீர்கள்.
நீர் மண்டிய கண்களோடும் உடைந்த இருதயத்தோடும் மேலே தலையை நிமிர்த்தி வானத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கே பகலில் எவ்வாறு நட்சத்திரங்கள் உங்கள் கண்களுக்குப் புலப்படும்? என்றாலும், "நட்சத்திரங்கள் போலப் பல்கிப் பெருகிய சந்ததிகளைக் கொண்டதம்மா எங்கட குடும்பம் பரம்பரை. அப்பிடிக் குறைவில்லாத எங்கட பரம்பரையில எங்க குறையிருக்கெண்டு நான்கண்டு அத உனக்குச் சொல்லுவன்?” - என்று வானத்தைப் பார்த்தபடி சொல்லி விட்டு, காற்றில் ஆடும் புல்லைப் போல நீங்கள் ஆடி விழுந்து கொண்டே உங்கள் படுக்கை அறையில் உடனே போய்ச் சேர்ந்து விடவென்று நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
(2007)
serie 77

Page 48
eീക്രീ
கொழும்பில் வசிக்கும் அனேகரைப் போலத்தான் இன்று நாங்களும் எல்லோரையும் போல இங்கு ஒரு அடிமைகள் வாடகை வீட்டில் சீவியம். யாழ்ப்பாணத்திலுள்ள எங்கள் சொந்த வீட்டை விட்டு வெளிக்கிட்டதில், இப்போது வெட்கக் கேடான நிலை. சிறை வாசம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது தான் அதை நான் உணர்கிறேன். அந்தத் துன்ப அடையாளம் என் முகத்தில் பச்சை குத்தி இருப்பதை உங்களால் காண முடியும். இங்கே இனம் புரியாத குழப்பம் நிலவுவதைப் போலத்தான் ஒவ்வொரு நாட்களும் எனக்குக் கழிகின்றன. கழுத்தை நெரித்துக் கொல்பவரின் அமைதியான முகங்களையும் தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு சுழல் மாற்றம் என் வாழ்வில் வருமென கனவிலும் நினைக்கவில்லை. இத்தகைய அக்கிரமத்தையெல்லாம் நான் அறிந்து கொள்ளவேண்டுமென்பது என் விதி
இவற்றுக்காக நான் எந்த வரலாற்றையும் சொல்ல வரவில்லை. ஒருவருக்கு இதைப்பற்றி என்ன தெரியுமோ அது போலத்தான் எனக்கும் தெரியும். என்றாலும் கொழும்புத் தலைநகரில் நடைபெறும் மோசமான செயல்களை எல்லோரும் முணுமுணுப்பது குறித்து நானும் ஆத்திரத்துடன் இருந்து தான் யோசித்துப் பார்க்கிறேன். மனித எலும்புக் கூடுகளை பண்டமாற்றாக விற்கின்ற கொடிய காலம் இது இந்தப் பேராசைக்காரர்களது வியாபாரத்திலே சீர்திருத்தம் எங்கே வரப் போகிறது.பணம் வைத்திருப்பது தான்
தி.சி.அருளதைச்
 

எப்போதுமே சந்தோஷத்தைத் தீர்மானிக்கும் - என்று ஒரு ஒழுக்கம் வந்துவிட்டது எல்லோரிடமும் . அதைத்தான் ஒரு சிறந்த நல்லொழுக்கமாக விளக்கமளிக்கின்றார்கள் ஒரு சிலர், இங்கே ஒரு கீழ்த்தட்டுப் பிரிவினராகத்தான், அவர்களுக்கு எங்களைப் பற்றிய ஒரு
6,6060D,
எல்லா எதிர்ப்புக்கும் எதிராக தங்கள் விருப்பத்தைத் திணிக்கப் பார்க்கிறார்கள் அரசியலாளர்கள். அதற்காகப் புனிதக் குலுக்கல் இடையிடையே இங்கே நடக்கிறது. இதையெல்லாம் நினைக்கும் போது, இருட்டைத் தேடி விழிகள் அலைய, என் அறைக்குள்ளே போய் சில நிமிடங்கள் அமைதி இருளில் கிடந்து விடுகிறேன். உடல் ஒரு மோசமான உருக்குலைவிற்குப் போகிறது. துக்கமே தீர்வாகி விடுகிறது. மாறுபட்ட உணர்மைகளின் விபரங்களை தாங்கி நிற்கும் ஒரு சில தினப்பத்திரிகைகளைப் படித்துப் படித்துக் கோபத்தில் இரத்த அழுத்தம் எனக்கு ஒவ்வொரு நாளும் ரொம்ப எகிறுகிறது. எல்லாம் முகமூடிகள்! நேரடியாகப் பதில் சொல்ல எவராலும் முடியவில்லை! ஊடகங்கள் முகமூடித் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. இந்த மக்கள் விதியின் தீர்ப்புக்குத் தலைவணங்கி, அதன் வழியில் தங்கள் வாழ்க்கையையும் நம்பிக்கைகளையும் சஞ்சலங்களையும் நடத்துபவர்களாகி விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் தங்கள் சாவைத் தள்ளிப் போட விேண்டுமென்பதே இன்றைய நிலை. அது தான் அவர்களது குறியீட்டு அமைப்பு அவர்களது வாழ்வில் இந்த உலக சீவியம் நீடித்திருக்க வேண்டும்.
எனக்கு நாரி உளைகிறது. வயிறு புண்ணாய் நோகிறது. நேராக நிமிர்ந்து இருக்க முடியவில்லை. வயது கொஞ்சம்தான்! இந்த நிலை ஏன் வந்தது? எல்லாமே இடம் பெயர்ந்து அலைந்ததினால் வந்த வினை. வருத்தத்தில் எல்லோரும் கிடந்து இப்போது உழல்கிறோம். தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற இடங்களிலெல்லாம் மருந்துக் கடைகள் பெருகிவிட்டன - என்று சொல்கிறார் என் நண்பர் ஒருவர்.
எனக்கு இந்த வருத்தம் வந்ததைப் பற்றியது ஒரு பெருங்கதை! அதைக் கேட்க விருப்பப்படுகிறவர்களுக்கு நான் சொல்லியே ஆக வேண்டும் ! யாழ்ப்பாணத்தில் நாங்கள் வசித்த போது, ஊருக்குள்ளேயெல்லாம் பொம்மர் போட்ட குண்டுகள் விழுந்து, மக்கள் மரித்துக் கொண்டிருந்தார்கள், குண்டு விழுந்த இடங்களிலே, சிலர் பீஸ் பீஸாகச் சிதறினார்கள். வீட்டுக்கு மேல் குண்டு விழுந்தால் பெரிய தூண்கள் கூட கிழிந்து எங்கோ பறந்து சென்று விழுந்து விடும் எல்லா மூலையிலும் எல்லாமே ஒவ்வொன்றாகச் சிதறிக் கிடக்கும். இவையே இப்படி உருக்குலைந்தால், சதையும் எலும்புமான மனிதரின் உடல் குண்டு வெடிப்புக்கு எம்மாத்திரம்? நான் இறந்தவர்களின் சவ ஊர்வலத்தில் போய், அங்கங்கே இடுகாட்டில் சிதறிக் கிடக்கிற
ഞ്ഞ് 79

Page 49
சிலுவைகளைத்தான் கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். எனது உறவினர் சிலர் அப்படி இறந்து போகவும், நீள மெழுகு வர்த்திகள் எரியும் தேவாலயத்தில் நடக்கும் பூசைப் பலியில் நின்று நான் மெளனமாக அழுதேன். என் ஆவியையே துருவுவது போல துக்கம் பெருக்கெடுத்தது. அந்த மெழுகு வர்த்திகள் அசைந்து அசைந்து எரிவது, உருகித் துடித்து உயிரை விடுவது போல பார்க்கவும் எனக்கு இருந்தது.
அங்கே நாங்கள் இருந்து வேளை, யுத்தச் சூழல் போகப் போகப் பிறகு உக்கிரமடைந்தது. சனமெல்லாம் திரண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டார்கள், நாங்களும் அந்த மோட்ச லோகத்தை விட்டு உடுப்புகள் மாத்திரம் கைகளிலிருக்க; வெளியே தள்ளப்பட்டது போல வெளியேறினோம் என்னிடம் அவசரமாகத் தேவைப்படும் பணம் கொஞ்சம் கையில் இருந்தது. அதனுடன் கிளாலிக் கடலைக் கடந்து அங்கிருந்து புதுக்குடியிருப்புக்கு வந்தோம் இடம்பெயர்வினால் வாழ்க்கை எங்களுக்கு நிம்மதியாயில்லை. என்னை அந்தரங்கமான பெரு வியாதி போன்ற துயரம் தின்று கொண்டிருந்தது.
மனைவியையும் என் ஒரேயொரு பெண் பிள்ளையையும் வைத்துக் கொண்டு - சீவியப் பாட்டுக்கு இனி நான் என்ன செய்வது? என்று திகைத்தேன்.
"கேப்பாப் புலவுப் பக்கம் வீடு போட்டு இருக்க மரம் தடியள் நிறையக்கிடக்கு . கிடுகும் அங்கனைக்குள்ள வாங்கலாம்! தோட்டமும் செய்துகிய்து சீவிக்கலாம்.! அங்க போங்கோ.! - என்று ஒருவர் எனக்கு ஆலோசனை சொன்னார்.
தன்னுடைய சொந்த ஊர் இந்த ஊர்தான்! புதுக்குடியிருப்பு. - என்றார் பின்பு
“எனக்குத் தோட்டம் செய்து பெரிய அனுவவமில்லயே.?” "நிலத்தில விதை விதைச்சு தண்ணியூத்திப்பாத்தா தானா அது விளைஞ்சு பலன்தரும். நிலத்தை நம்பிப்பாடுபட்டா அது எப்பவும் எங்களைக் கைவிடாது.”
அவர் இவ்விதம் சொல்லும் போது; விரக்தியால் ஆழ்ந்திருந்த அமைதியிலிருந்து நான் விழித்துக் கொண்டேன். நான் ஒரு முழுத் தோட்டக்காரன் ஆகிவிட்ட மாதிரி என்னை நான் நினைத்துக் கொண்டேன். நல்ல மகிழ்ச்சியாக மனம் இருந்தது.
"எண்டாலும் நான் தனிய இந்தத் தொழிலில எப்பிடி நம்பி இறங்கிறது.?”
ஒரு பக்கம் நம்பிக்கையீனம் இழுத்தது. "ஏன் இதுக்குப் போய் நீங்க பின்னடிக்கிறீங்க? இடம்பெயர்ந்து வாற ஆக்களுக்கெல்லாம் இங்க எங்கயும் - ஊருக்க உள்ளவயள் - ஆளும்பேருமாச் சேந்து எல்லா உதவியளையும் செய்வினம்.”
وو )
தி.சி.அருளானந்தச் 80
MASA

என்னே ஒரு ஆறுதலான வார்த்தை.! நிம்மதியாக ஒரு மூச்சு விட்டேன். வஞ்சகமில்லாமல் அவரும் சிரித்தார். "நீங்கள் சொல்லுற மாதிரி தோட்டம் செய்யிறதெண்டா நாங்கள் அங்க போய் என்ன பயிர் இப்போதைக்கு நடலாம்?” - யோசனையோடு கேட்டேன்.
"ஐயோ அம்மாடி. இப்ப அங்க நல்ல கச்சான் நடுகைக் காலம்! ஒரு கடலை மணிக்கு நாப்பது கச்சான் கடலை யெண்டு அந்த மண்ணில நட்டியளெண்டா விளையும்.” - என் மனதுக்குள்ளே கடலைச் செடிகளின் மஞ்சள் பூக்கள் பூத்து தென்றல் காற்றுக்கு ஆடின. கடலை மணிமண்ணுக்குள் உப்பி முளைத்து நாற்பதைத் தாண்டி, அறுபது வரை விளைந்தது. எல்லாவற்றையும் சாக்குச் சாக்காக எண்ணி ஒரு இடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தேன்.
"என்ன யோசனை யோசிக்கிறியள்.?” - என்று என் கண்களைத் தரிசிக்க முயற்சித்தவாறு கேட்டார் - நான் இதுவரை கண்டறியாத அந்தப் புது முகம். "இல்ல. ! விதைக்கெண்டு நட நல்ல கடலை எங்கயும் தேட வேணுமே. ? எங்க அந்தக் கடலை கிடைக்கும்.?” - என்று கேட்டேன்.
“கடலை விளையிற இந்த இடங்களில கச்சோன் விதைக் கடலைக்கா பஞ்சம். நீங்க ஒரு 'லொறி லோட் விதைக் கடலை வாங்க வேணுமெண்டாலும் எங்கயும் இந்த இடத்தில உடன வாங்கலாம். ஆனாலும் விதைக் கடலைக்கேன் இப்பபோய் நீங்க காசை அதில போடுறியள். அந்தக் கடலையைக் கூட கடனாகத்தர ஒரு இடமிருக்கு.” "அது எங்க.?” . நான் வாயும் கண்ணும் விரியக் கேட்டேன்.
"சொல்லுறனே அத.! அங்க எங்கட பெடியளிட்டப்போய் நீங்க கேளுங்கோ . கஷ்டப்பட்ட தோட்டக் காரருக்கெல்லாம் அவயள் நல்லா உதவி செய்யினம். ஒரு மூடை கச்சான் விதைக்கடலை நீங்கள் வாங்கினா - விளைஞ்ச பிறகு அதே மாதிரிக் காஞ்ச கச்சானா - அரை மூடையும் கூடவா அவயஞக்குத் திருப்பிக் குடுக்க வேணும் - அது நட்டமில்லத்தானே உங்களுக்கு.?”
எனக்கு மனம் நிறைந்தது. புதிய தொழிலைத் தொடங்கப் போகின்ற உற்சாகம் மனதில் பிறந்தது. என் முகத்தை உற்றுப் பார்த்தார்
96 IIT.
"அங்கயெல்லாம் யாழ்ப்பாணத்தில என்ன மாதிரி நீங்களெல்லாம் வசதியா இருந்திருப்பியள்.? இப்ப இடம்பெயர்ந்து எல்லோருக்கும் கஷ்டம்தான் என்ன?”
நான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சோகமாகத் தலையாட்டினேன். இருவரும் நாங்கள் கதையோடு கதையாய் நிற்க புதிய ஆள் ஒருவர் அதிலே வந்தார். அவர் நான் கதைத்துக் தி.சி.அருள%னந்தர் 81 eിക്രി

Page 50
கொண்டிருந்தவரைப் பார்த்து,
“பொன்ராசா.” - என்றார். "ஒ. சிவஞானமே! எங்காலயப்பா பயணம்.? " - என்று அவரை வினோதமான அழுத்தம் வைத்துக் கேட்டார்; என்னோடு இதுவரை கதைத்தபடி நின்றவர்.
"இவர் பாரும் யாழ்ப்பாணத்தில இருந்து இப்ப அகதியா வந்திருக்கிறார்.! - என்று எனக்கு அகதிப் பெயர் வைத்து அவருக்கு அறிமுகம் செய்தார் பொன்ராசா.
நான் அவர் வைத்த பெயரைச் சுமந்து கொண்டு சோகம் வெளிப்பட சிவஞானத்தைப் பார்த்தேன். அகதி என்ற பெயரினால் எனக்கு ஏற்பட்ட மனச்சுமை ஒரு உலகத்தையே நான் சுமக்கின்றது மாதிரி என்னை அழுத்தியது.
"இடம் பெயர்ந்திட்டாச் சிரமந்தான். இப்ப நீங்க குடும்பத்தோட எங்க தங்கி இருக்கிறீங்க.? " - என்று அவர் அக்கறையோடு கேட்டார்.
“கோயிலுக்குப் பக்கத்தில.” "உதில தள்ளியுள்ள அந்தத் தென்னந் தோட்டத்துக்குப் பக்கத்தில என்ன..?”
“ஓம்.” - என்று நான் அவருக்குச் சொன்னபோது - சமுத்திர கோஷம் மாதிரியும் அந்த 'ஓம்' - என்று நான் சொன்னதன் ஒசை என் காதுகளில் கேட்டது. அதற்குப் பிறகு இடம்பெயர்ந்து பயணித்த போது கேட்ட கிளாலிக் கடல் அலைகள் - சப்த அலைகளாய் என் காதுகளில் கேட்குமாப் போல மோதிக் கொண்டே இருந்தன.
“சீவிக்கிற இடம் வழிய இருந்து சீவிக்கேலாமல் மனுசருக்கு என்ன சீவியம் இது? பாருங்கோ எங்கட சனத்தின்ர வாழ்க்கையெல்லாம் எப்பிடிச் சீரழிஞ்சு போய்க் கிடக்கெண்டு.?”
நாக சர்ப்பத்தின் சீறல் மாதிரி வார்த்தைகள் அவரின் உதட்டை விட்டுப் புறப்பட்டன.
"இனி நீங்க என்ன செய்யப் போறிங்க.?அங்க இப்ப நீங் தங்கி இருக்கிற அந்த இடம் - குடும்பத்தோட இருக்க அவ்வளவு பெரிய வசதியெண்டதாயில்லயே.?” - என்று தான் முன்னர் சொன்னதன் தொடர்ச்சியாகவே சொல்வது போல கேட்டார் சிவஞானம் ,
"அதான் நான் இவரோட இப்ப கதைச்சுப் போட்டு கேப்பாப்புலவுப் பக்கம் இவரைப் போய் இருக்கச் சொன்னனான். அங்க இருந்து தோட்டம் கீட்டமும் இப்பத்தைக்கு இவர் செய்யலாம் தானே.?” - என்று மெதுவாகக் கூறினார் பொன்ராசா.
"உண்மையா நீங்க சொன்னது இவருக்கு நல்ல யோசனை! இவரால தோட்டம் செய்ய முடியும் முடியாதா என்ன? அங்க இருக்கிறது நல்லம். நல்லம்!” - என்று அவரும் பிறகு சொன்னார். என் எண்ணங்களை
99
தி.பி.அருளானந்தர் 82
ീക്രി

- எனது ஓடிக் குவியும் நினைவுகளைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்து கொண்டு, எனக்கு வழிகாட்டியவர்களாக நான் அவர்களைப் பற்றி நினைத்தேன். இருளுற்ற என் வாழ்வில் வெளிச்சத்தைக் காட்டியவர்களாக, நான் அந்த இருவரையும் நன்றியோடு பார்த்தேன். இன்னும் அதிலே நின்றபடி அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தால் எனக்கு மிகவும் மனம் ஆறுதலாக இருக்கும் போல் இருந்தது. எனக்கு மன ஆறுதல் வேண்டும்! - அந்த ஆறுதலைப் பெற - அவர்களுடன் நின்று கதைத்துக் கொண்டிருப்பதே நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்க, அங்கே வந்து பொன்ராசாவுடன் கதையைத் தொடர்ந்து கொண்டு நின்ற சிவஞானம்.
“காலேல நெடுங்கேணிப் பக்கமிருந்து காட்டுப் பண்டி இறைச்சி இங்க வந்து வில்படுகுது.” என்று கறிக் கதையிலே அவரின் கவனத்தை தன் பக்கமாகத் திருப்பினார்.
"அடட. இதெனக்கு வீட்ட நிண்டு நான் வெளிக்கிட்ட நேரம் முதல் தெரியாமப் போச்சு .கன நாளாச்சு வீட்டில றச்சி காச்சி.”
"அப்ப நீரும் இறச்சி வாங்க வர வாறிரோ.?” “காசு அங்க என்ரை வீட்டிலயெல்லோ போய் எடுத்தர வேணும் சிவஞானம்.?”
"நான் இப்ப உமக்குக் கை மாத்தாத் தாறனே காச.! நீர் பேந்து வாங்கின காசை எனக்குத் திருப்பித்தாருமன்.?”
"ஐயோ நீர் செய்யிறதிது பெரும் உதவி . அது நல்லதாப் போச்சுக் கண்டீரோ எனக்கு..!”
"அப்ப வாரும் கொஞ்சம் சுறுக்கா நடந்து அங்க நாங்க போவம்.! சனம் பேந்து கிடக்கிற தெல்லாத்தையும் வாங்கி முடிச்சிடுங்கள்.!” - என்றார் சிவஞானம். இருவரும் என்னைப் பார்த்தனர்.
நான்; “சரி நீங்க போங்கோ பிறகு சந்திப்பம்.!” என்றேன். "அந்தத் தென்னந்தோட்டத்துக்குப் பக்கத்துக் கோயிலுக்கு அங்கால தள்ளியுள்ள வீடு தானே.?” - என்று பொன்ராசா திரும்பவும் என்னைக் கேட்டுக் கொண்டார்.
“ஓம் ஓம் அதே தான்! நீங்கள் இப்ப சொல்லுற அதே இடந்தான்.!” - என்று சந்தோஷமான முகத்துடன் நான் சொல்லிக் கொள்ள.
"அப்ப . நாங்க வாறம்! வாறம்..!" என்று இருவரும் ஒரே நேரத்தில் என்னைப் பார்த்துச் சொல்லி விட்டு அவுக் அவுக்கென்று இருவரும் அதாலே நடக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டுப் போனதன் பின்பே நான் வீட்டுக்குப் போக நடையைத் தொடர்ந்தேன். பரந்த தென்னஞ் சோலைப் பக்கத்துக் கரையாலே, நான் நடந்த போது - ஏகமான உஷ்ணம்! ஆனால், உள்ளத்திலோ குதூகலம்! என் இதயத்தைக் கடித்துத் தின்று മ.dി.eിത്രസ്ത്രക്രി 83
ീക്രി

Page 51
கொண்டிருந்த புழு விழுந்து விட்டது. எனக்குத் தொழில் கிடைத்து விட்டது. இனிப்பயமில்லை! என் கண்களில் களிப்பு இருந்தது - அந்த மண் பாதையால் நடந்து வந்து குறித்த ஓரிடத்தில் திரும்பி, நான் இருந்த வீட்டுக்குப் போனேன்.
நான் அந்த வீட்டுக்குப் போகவும் - பக்கத்து வீடுகளிலே இருந்து என் மனைவியையும் பிள்ளையையும் பார்க்க வென்று வந்த சில பெண்கள், அங்கிருந்து கொண்டு என்னைப் பார்த்து தங்களை அறிமுகப் படுத்தும் நோக்கில் சிரித்தார்கள். இடம் பெயர்ந்ததைக் கதைத்துத் துக்கப்பட்டார்கள். பெருமூச்சு விட்டார்கள். அந்தப் பெண்கள் என்னைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள் என்று நினைத்து! நான் தலையைத் திருப்பிக் கொண்டேன். என் எண்ணங்கள் குழம்பி வருத்தம் தோய்ந்தது. “என்ன செய்யிறதுங்கோ. தனிய எங்களுக்கு மாத்திரம் இந்த நிலை வந்ததே. எல்லாச் சனமும் தானே இப்ப அங்க இருந்து வெளிக்கிட்டிருக்குதுகள் .?” - என்று மனைவி அவர்களுக்குச் சொன்னாள் அவளுடைய பதில் அடியற்ற பாதாளத்திலிருந்து வந்தது போலிருந்தது. வந்திருந்த பெண்களெல்லாம், உண்மையையும், பொய்யையும் பேசிவிட்டு வெளிக்கிட்டார்கள். அவர்களிலே நன்றாய் உடுத்திப் படுத்திக் கொண்டு, நாகரீகமாய் வந்த ஒருத்தி வீட்டுக்குள்ளாலே நடந்து போகும் போது, அசுத்தமான இடங்களில் கால் வைப்பது போல, கால் நுனியில் நடந்தவாறு வெளியே போனாள்.
நான் : “ உஸ்” ஸென்ற சப்தத்துடன் பாயை விரித்துப் போட்டு அதிலே கனம் பட சக்கப்பணிய இருந்தேன்.
"சாப்பாடு சமைச்சதைக் கொண்டாறன்.” - என்றாள் மனைவி. “இப்ப எனக்குப் பசிக்கேல்ல.” "எண்டாலும் காலேல கொஞ்சம் கொறிச்சுப் போட்டுப் போனதுக்கு இப்ப எண்டாலும் வயித்தக் காயவிடாமச் சாப்பிடுங்கோ. எங்க போனாலும் நாங்கள் எங்களைக் கவனிச்சுக் கொள்ள வேணும். வேளா வேளைக்குச் சாப்பிட வேணும்.
அவள் சொல்லிவிட்டுச் சாப்பாட்டைக் கொண்டு வந்து, நான் இருந்த இடத்தில் குனிந்தபடி கீழே பீங்கானை வைத்தாள். கழுத்தில் அவள் போட்டிருந்த பவுண் கொடி ஊஞ்சல் போல ஆடியது. அதை விற்க எனக்குக் காலம் கிட்டுகிறது மாதிரி அதைப் பார்த்ததும் நினைத்தேன். சாப்பிடப் பிறகு எனக்கு மனமே வரவில்லை.
"தட்டில போட்ட சோறாறப் போகுது சாப்பிடுங்கோ. ” - என்று அவள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். அதனால் கொஞ்சம் எடுத்து உணர்வேயில்லாமல் சாப்பிட்டேன். பீங்கானில் கிடந்த சாப்பாட்டில் பெரும் பகுதி சாப்பிடப்படாமல் கிடந்தது. தண்ணிரைக் குடித்தவுடன் பாயிலிருந்து எழுந்து விட்டேன்.
s
ரீ.பி.அருாணத்தச் 84 94

செம்பில் தண்ணீர் கொண்டு வந்து முற்றத்தில் நின்று நான்கை கழுவ அவள் எனக்குத் தண்ணிரை ஊற்றினாள். நான் கைகழுவி விட்டு மிச்சத் தண்ணிரை வாங்கிப் பிறகும் குடித்தேன்.
"இங்கயிருந்து கோப்பாப்புலவு எண்டுற இடத்துக்குப் போய் இருக்கத்தான் எல்லாரும் இப்ப சொல்லுகினம். அதுதான் எங்களுக்கு இனி நல்லதாயிக்கும் போல.”
இதைச் சொல்லி வாய் மூடவில்லை. பொம்மரின் உறுமல் கேட்டது. இருவரும் உடனே நாங்கள் வீட்டுக்குள் போய் விட்டோம். பொத்துப் பொத்தென்று இரு குண்டுகள் எங்கோ கொஞ்சம் தொலைவில் விழுந்து வெடித்தன.
"கிளுங்' - கென்று எல்லாம் அதிர்ச்சியாய் ஆடின. ‘இதெல்லாம் இயற்கையாய் நடப்பது போல இப்போது எங்களுக்குப் பழக்கந்தான்!’
ஆனால் மனைவி அந்த உட்கூரையின் உச்சிப் பகுதியைப் பார்த்தபடி
“ இந்த வீடு விழுந்து உடையப் போகுதோ..?” - என்ற சொன்னாள்.
“பழைய வீடு தானே.” நான் பதில் சொல்லும் போது குண்டு போட்ட பொம்கர் கூரைக்கு மேலாலே பறந்து போனது போனது அப்படியே நேராகப் போய்த் தொலைந்து விட்டது.
"எங்க நாங்க போவ மெண்டு சொன்னியள்?” - அவள் ஞாபகத்தில் வைத்திருந்ததைக் கேட்டாள்.
"கேப்பாப்புலவு எண்டுற இடம் இங்கயிருந்து ஏழெட்டுக் கட்டை தூரம் வருமாம். காட்டுப் பகுதிக் கிராமம். அங்க தோட்டமும் செய்யலாமெண்டு சொல்லுறாங்கள்.”
“ஓ, சும்மா இருந்து கொண்டு எப்பிடி நெடுகலும் உள்ளதை வைச்சு நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு தொழிலும் இருக்கிற இடத்தில இப்ப வேணும் தானே.?” நாங்கள் இருவரும் கதைப்பதை அந்த அறையின் இருளடைந்த மூலையில் நின்றவாறு மகளும் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் இருட்டுக்குள் நின்ற மகளைப் பார்த்தேன். அவள் யோசனையோடு நீளக் குழல் அலையும் தன் தலையைக் குனிந்து கொண்டாள். எனக்கு கவலையில் மனம் வறண்டது. கண்களில் ஒளி மங்கியது.
“இங்ககக்கூசுக்கு நாங்கள் போறதும் கரைச்சலாயிருக்கு..! பக்கத்து வீட்டில காலேல போய் நிண்டு அதுக்காகத் தொண்ணாந்து கொண்டு நிக்க வேண்டிக் கிடக்கு..!” மனவிை கையைப் பிசைந்து
நீ.பி.அருாரத்தச் 85
ീഴ്കി

Page 52
கொண்டு அடங்கிய குரலில் சொன்னாள்.
அந்த இருள் விழுந்திருந்த பக்கமாக கொலுசு கலங்சிச் சப்தித்தன. பின் வாசலுக்கு மகள் நடந்து போகிறாள் போல' - என்று நினைத்துக் கொண்டு நான் மனைவியைப் பார்த்தேன்.
“என்ன செய்யிறது.? அதான் கேப்பாப் புலவுக்குப் போவமெண்டு பாக்கிறன். அங்க காட்டுப் பக்கம் தானே. எல்லாத்துக்கும் வசதியாயிருக்கும். ஏதோ இருந்து அங்கின தோட்டத்தைக் கீட்டத்தையாவது செய்தும் பாப்பம்." நான் சொல்ல அவளது கண்களில் நீர் ததும்பியது.
"அப்ப நாங்க எப்ப வெளிக்கிட வெண்டு ஆயத்தம் பண்ணுறது. அவள் கேட்க. “எனக் கெண்டா நாளைக்காகிலும் 'ஓம்' தான்!” - என்றேன். "அங்க இருந்து இடம்பெயர்ந்து இங்க வந்து இனி இங்கயிருந்த அங்க போக ஊரிப்பட்ட சிலவு பிடிக்கப் போகுது.” - என்று அவள் உடனே சொன்னாள். அன்று இரவு நித்திரைக்கென்று, அசங்காது அலுக்காது பாயில் கிடந்த போதும், தோட்டம் செய்கிற நினைப்பில், இன்ப விளக்கு எனக்கு எரிந்து கொண்டே இருந்தது. ஆசை என்னைக் கேப்பாப் புலவுக்குத் தள்ளிச் சென்று கொண்டிருந்தது. நான் முன்னம் கண்டு கதைத்த அந்த இருவரின் கனத்த மோதிரமணிந்த விரல்கள் என் தலையைத் தடவுகிற மாதிரி இருந்தன. சுகமாக இருந்தது - என்னைச் சப்ர மஞ்சத்தில் கிடத்தி சாமரம் வீசுகிற மாதிரி இன்பம் - நான் மயங்கி நித்திரையாகி விட்டேன்.
崇
99
ዘ”
அன்று விடிந்த பிறகு, புதுக்குடியிருப்பில் வாங்கிய பானை சட்டிகளை சாக்கில் போட்டுக் கட்டிக் கொண்டு கேப்பாப்புலவுக்குப் போக ஒரு லாண்ட் மாஸ்டர் மிசினைப் பிடித்துக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம்.
நாங்கள் பயணித்த அந்த வீதியின் இருபக்கங்களிலும் கொடி படர்ந்த மரங்கள். அந்தக் காட்டைப்பார்த்துக் கொண்டு என் மகள்: " இந்த மனம் சோர்ந்த சமயத்தில இந்தக்காடுகளைப் பாக்க ஆச்சரியமாயிருக்கு. - என்று சொன்னாள். “இந்தக் காடுகளைப் பாக்கிறதுக்கு. பருந்துகளப் போல கறுப்புப் புள்ளிகள் மாதிரி - அவ்வளவு தூரம் வானத்தில உயரப் பறந்தபடி நின்று பார்க்க வேணும்.” - என்று நான் மகளுக்குச் சொன்னேன்.
சந்தோஷமாக நானும் மனைவியும் மகளும் கதைத்துக் கொண்டிருக்க கேப்பாப் புலவு வந்து விட்டது. ஒரு புளிய மரத்துக்குக் கீழே மிசின் வந்து நின்றது. "இதில நாங்கள் இறங்கிறம் ” - என்று
.dികnd 86 ←፺ፊራ)

மிசின் காரருக்கு நான் சொன்னேன். பேசிய கூலியைக் கொடுத்து விட்டு நாங்களே சாமான்களையும் இறக்கிக் கொண்டோம் மிசின் திரும்பிப் போய் விட்டது.
அகதிகளின் நிலைமை எப்போதுமே இப்படித்தான் அலைச்சல் - அவர்களது நிம்மதியையே நாசம் செய்து விடும். அவர்களுக்கு சுகமெல்லாம் வெறும் கற்பனை. என்று இவையெல்லாம் நன்றாக எனக்கு இவ்வேளையில் விளங்கியது. அந்த வீதியில் போகிறவர் - வருகிறவரெல்லாம் எங்கள் முகங்களையே கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டு போகிறார்கள். யாரிடம் போய் எங்கள் நிலையைச் சொல்வதென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன் - ஊர் ஊராய் மாறுகையில் சிதறிய சொந்தங்களை நினைத்து நான் கவலைப்பட்டவாறு நின்றேன். சிறிது நேரத்தில் எனக்கு ஒன்றையும் பார்க்கச் சகிக்கவில்லை! ஒன்றும் தோன்றவில்லை! அவர்களை நினைத்துக் கொண்டு விட்ட சுவாசத்தோடு அவர்களை இனிமேல் மறந்து விடவும் வேண்டும் என்பதாய் என் மனம் சொன்னது. ஏனென்றால் அவர்கள் எனக்குச் செய்ததெல்லாம் அப்படி - நன்றி கெட்டவர்கள் அவர்கள்! இது தான் நான் கண்டு பிடித்த உண்மை!
பொழுது உச்சிக்கு ஏறி வெயிலின் தாக்கம் அதிகமாயிற்று. அந்த வீதி நிசப்தம் பூண்டது மாதிரி இருந்தது. அந்தப் புளியமரத்துக்கு அருகே, மண் எடுத்த குழியில் நாய் ஒன்று நின்று தண்ணீர் நக்கிக் குடித்துக் கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து நாலைந்து பேர், நாய் ஒன்றைத் துரத்தியபடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நாய்க்கு எறிந்த - செக்கச் சிவந்த இறுகிய செங்கற் துண்டுகளெல்லாம் நாய் ஓடிவந்த பக்கம் வீசப்பட்டதாய் முன்னால் வந்து விழுந்தன. பற்கள் தெரிய உறுமிக் கொண்டு முன்னாலே நாய் ஓடிக் கொண்டிருந்தது.
"உது விசர் நாயாக்கும் பாக்கப் பயமாயிருக்கு . ஆண்டவரே யேசுவே இங்கால நீங்க வாங்கோ இந்தப் பக்கமா மறைவில நிப்பம் வாங்கோ..?” - என்று என் மனைவி சத்தம் போட்டாள்.
"இங்காலயா நீயும் வாம்மா இப்பிடி இந்தப் பக்கமா வாம்மா..?” என்று சொல்லியபடி நான் - மகளின் கையில் பிடித்து அவளைக் கூட்டிக் கொண்டு புளிய மரத்துக்குப் பின்னால் போனேன். கீழே இருந்த ஒரு கட்டுத் தடியை கையில் எடுத்து வைத்துக் கொண்டு "இதுக்குப் பின்னாலயா ஒதுங்கி நில்லுங்கோ.” - என்று மனைவிக்கும் மகளுக்கும் சொன்னேன். மறைந்திருந்த புளிய மரத்தால் இருந்து நான் எட்டிப் பார்த்த போது, ஓடி வந்த நாய் - நாயுண்ணிப் பூஞ்செடிகளுக்குள்ளாலே புகுந்து ஓடிப்போய் - முன்னாலுள்ள வளவின் கிளுவை வேலி முட்களுக்குள் தலையை நுழைத்துப் போராடி - மறுபுறம் போய் விட்டது.
தி.சி.சுகுாணத்தச் 87 eീക്രി

Page 53
"விசர். விசர் நாய்..!” - என்று அதிலே நாயைத் துரத்தி வந்தவர் சொன்னார்.
"விசர் நாய் கடிச்சா ஊசியும் இங்க இப்ப இல்லயே.?” . என்று நான் சொன்னேன். அவர் ஒரு தீவைப் போல் தனித்திருந்த என் அருகில் வந்தார்.
"நீங்கள் இப்பிடி மூண்டு பேர் சாமான் சக்கட்டுக்களோட இந்தப் புளியடிக்குக் கீழ நிக்கிறியளெண்டு அதில தேத்தண்ணிக்கடையில கொஞ்சப் பேர் நிண்டு இதக் கதைச்சவயள்.”
“ஓ .! ” - என்றவாறு அவருடன் பேச்சைத் தொடரும் விருப்பத்தில் நான் அவரின் அருகில் சென்றேன்.
"நான் பேந்து அவயள் அப்பிடிச் சொல்லக் கேட்டுப் போட்டு இதில உங்கள வந்து ஒருக்காச் சந்திப்பமெண்டு நினைச்சன். அதுக்க இந்த விசர் நாய் வர துரத்த வெளிக்கிட்டிட்டம். பாம்பு கடிச்சாலும் ஏதோ தப்பலாம் இங்க அதுக்கு வைத்தியம் செய்யினம். ஆனா விசர் நாய் கடிச்சா பெரிய இழவு. ஊசி மருந்து, நீங்களும் அப்ப எனக்குச் சொன்ன மாதிரி இங்க இல்லயே.?”
“அது தானுங்கோ நாயக் காணவும் நாங்க மலைச்சுப் போயிட்டம்.! எங்களுக்கு அதைக் காணவும் உசிர் போன மாதிரி உடன பயம் பிடிச்சிட்டுங்கோ.!” - என்று மனைவி சொல்லிக் கொண்டு எனக்குப் பக்கத்திலே வந்தாள்.
"நீங்க என்ன இப்பிடி வந்து ஒருவரோடயும் ஒண்டும் கதைக்காம பேசாம நடு றோட்டில நிண்டு கொண்டு இருக்கிறீங்க.? போதாக்குறைக்கு இந்தக் குமர்ப்பிள்ளயயும் வைச்சுக் கொண்டு இதில நிண்டு தூங்குறீங்க..? யாழ்ப்பாணம் தானே நீங்க..?”
"அங்க இருந்து தான் அகதியா வந்திருக்கிறம் “உது என்ன ஒரு கதை? அகதியெண்டு நீங்க சொல்லுறீங்க - உங்களுக்கு மட்டுமெண்டே எங்களுக்கும் எப்ப உந்த நிலை வரப் போகுதோ..?” "அங்கயெண்டாலுங்கோ இனி இருக்கவே ஏலாது. சண்டை சரியா முத்திப் போட்டுது. அள்ளுகொள்ளையாச் சனம் கிளாலியில வந்து இங்க வர அடிபடுதுகள். நாங்கள் அதுக்குள்ளால வரப்பட்டபாடு.” "அதானே சண்டைக்குள்ள அதுக்க கிடந்து என்ன செய்யிறது.? இங்கால வந்து சேந்ததுதான் உங்களுக்கு இப்ப நல்லம்.”
"ஆனாலும் நாங்க வரேக்க வீட்டேயிருந்து ஒரு சாமானும் எடுத்து வரேலாமப் போச்சு.”
“என்ன சாமான்! உயிர் எங்களுக்குத் தப்பி மனுசர் நாங்கள் இப்ப இருக்கிறதே காணுமுங்கோ. உயிரோட இருந்தா காசு பணம் நாளைக்கும் தேடலாம்.”
"ஆனாலும் நாங்க இப்ப இருக்க ஒரு நல்ல இடம் நீ.பி.அருள%ந்தச் 88 அததி

கிடைக்கேல்ல. புதுக்குடியிருப்புப் பக்கம் உள்ளவயள் இங்கின நாங்கள் போய்ச் சேந்தா - இருக்க நல்ல இடம் ஆரும் பாத்துத் தருவினம் எண்டவயள். வீடு போட்டிருக்கவும் மரம் தடியள் - இடவசதிகள் இங்க கிடக்கெண்டவயள்.” −
“ஓ நிறைய இங்க எல்லாம் கிடக்கு.? ஆனாலும் வீடு போடக் கீடவெண்டு உங்களுக்கேன் அந்தக் கரைச்சல் . எங்கட சொந்த வீடு பெரிய கல்வீடொண்டு இங்க கிடக்கு. நாங்க சின்னத்தக்கச்சிக்கு அந்த வீட்டச் சீதனமாக் குடுத்திருக்கிறம். அதில ஒரு அறை அந்த வீட்டில சும்மா கிடக்கு! அதில நீங்க இருக்கலாம்.
அற்புதமான நிம்மதியான கதையை அவர் சொன்னார். அவர் கம்பீரமாக உயர்ந்து வளர்ந்த ஆண் சிங்கம் மாதிரி பார்க்க இருந்தார்.
“உங்கட பேர்.?” "ஆனந்தனுங்கோ.” நான் அவரிடம் கதைத்த கையோடு மனைவியின் முகத்தை நோக்கினேன். அவள் முகம் கொஞ்சம் களைகட்டினாற் போல எனக்குப் பார்க்கவும் தெரிந்தது. மகளும் சந்தோஷ மலர்ச்சியில் நின்றாள்.
“இங்கேருங்கோ. நீங்க இதில கொஞ்சம் நிண்டு கொள்ளுங்கோ. நான் உதில கிட்டப்போயிற்று எங்கட வண்டிலில மாடுகளைப் பூட்டிக் கொண்டு வந்திடுறன்.” V
அவர் கையிலே கொண்டு வந்திருந்த கம்பை விசுக்கிக் கொண்டு வெளிக்கிட்டார். சொன்னது மாதிரி கொஞ்ச நேரத்துக்குள்ளாக, மாட்டு வண்டிலையும் அதிலே கொண்டு வந்து விட்டார். கிடந்த சாமான்களை அவரே வண்டிலிலும் ஏற்றினார். நாங்கள் வண்டிலில் ஏறி இருந்தோம். சலங்கை ஒலியோடு மாடுகள் நடந்தன. ஊரைப் பார்த்துக் கொண்டு போக, கிட்டிய தூரத்தில் ஒரு பெரியவளவுக்கு முன்னால் வண்டிலைக் கொண்டு வந்து ஆனந்தன் நிறுத்தினார்.
வண்டிலை நிறுத்திப் பிடிகயிற்றைக் கட்டிவிட்டு, இறங்கிப் பின்னால் வந்தார். நாங்களும் வண்டிலிலிருந்து கீழே இறங்கினோம். அவரே எங்கள் சாமான்களையெல்லாம் கீழே இறக்கி வைத்தார். பிறகு படலைக்குப் பக்கத்தில் வண்டிலைக் கொண்டு போய் விட்டு, மாடுகளை அவிழ்த்துக் கொண்டு போய் வேலிக் கம்பில் கட்டிப் போட்டு விட்டு உள்ளே காணிக்குள் போனார்.
ஐந்து நிமிடங்கள் கழியவில்லை. உள்ளே போனவர் திரும்பிப் படலையடிக்கு வந்தார்.
அவருக்குப் பின்னாலே வருவது. அது யாராக இருக்கும். ! அவர் தனக்கு ஒரு தங்கை இருப்பதாகச் சொன்னாரே . ? அவள் தான் இவளோ. ? “வாங்கோ. வாங்கோ!” - என்று அவள் எங்களுக்குப் தி.சி.அருாரணத்தச் 89
ക്രി

Page 54
பழக்கமானவள் போல், சொல்லிச் சிரித்துக் கொண்டு வந்தாள். ஆனந்தன் வந்து அதிலே முன்னம் தான் இறக்கி வைத்திருந்த பானை சட்டி போட்டுக் கட்டிய சாக்கைத் தூக்கினார்.
"யோசிக்காதயுங்கோ எங்கட அண்ணை எனக்கு வந்து உங்கட விசயம் எல்லாஞ் சொன்னவர். பாவங்கள் நீங்கள்! ஒருத்தரையும் இந்த ஊருக்குள்ள தெரியாம நம்பி வந்திருக்கிறீங்க . இந்தத் தங்கச்சியும் இப்பிடி அதில அங்க றோட்டில நிக்கி தெண்டு சொல்ல எனக்குக் கவலையாயிட்டுது. இங்க எங்கட வீட்டில ஒரு அறை சும்மா கிடக்குங்கோ. அதில வந்து நீங்க இருக்குமட்டும் வடிவா இருந்திட்டுப் போங்கோ. நாங்களும் உங்களுக்கொரு சகோதரங்கள் மாதிரித்தான்! ஒண்டுக்கும் நீங்க யோசியாதயுங்கோ..? அண்ண அந்த உடுப்பு பாக்கையும் நீங்களே தூக்கியாருங்கோ. இதுகள் பாவங்கள்! அலைஞ்சு கிலைஞ்செல்லாம் களைச்சுப் போய் வந்திருக்கிதுகள்.”
என்ன அன்பான வார்த்தைகள் என் மனைவி அவளைப் பார்த்து கண்ணிர்க் கண்களோடு புன்னகைத்தாள். என் மகள் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றாள்.
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் தானே என்று நான் விறைத்துப் போய் நின்றேன்!
"இனி என்ன யோசினை உங்களுக்கு.? வாங்களன் வளவுக்க போவம்!” - என்று எங்களைக் கூப்பிட்டார் ஆனந்தன். "ராணி நீ கூட்டிக் கொண்டு போவன் அவயள உள்ள" - என்று அவர் தன் தங்கையைப் பார்த்துச் சொன்னார். " வாங்கோ வாங்கோ.” - என்று கொண்டு அவளும் என் மனைவியையும் மகளையும் அழைத்தவாறு நின்றாள். நாங்கள் எல்லோரும் போய் படலைக்காலே நுழைந்து, நன்றாக மலர்ந்த மாதுளம் மரங்களடர்ந்த காணிக்குள்ளாலே நடந்து, அந்த வீட்டுப் படியில் ஏறினோம். அந்த அறைக்கதவை ஆனந்தனின் தங்கச்சி திறப்பைப் போட்டுத் திறந்து எங்களுக்குக் காட்டினாள். வெளிவிறாந்தையையும் பாவிக்கலாம்' - என்று அவள் சொன்னாள். அவள் கலியாணம் முடித்து மூன்று மாதங்கள் தானாம்!' - என்று அதையும் சொன்னாள்.
ஆனந்தன் எல்லா ஒழுங்குகளையும் எங்களுக்குச் செய்து தந்து விட்டு தன் வீட்டுக்குப் போய் விட்டார். அவருக்கு ரெண்டு பிள்ளயஸ் இருக்கினம். நெடுங்கேணியிலதான் கலியாணமும் செய்திருக்கிறார். அண்ணியெண்டா நல்லவ.!’ என்றெல்லாம் ராணி தன் தமையனைப் பற்றிச் சொன்னாள். எங்களுக்கு ஒரு சின்ன ஒலைக் கொட்டிலைக் காட்டி "இதில நீங்க சமைக்கலாம். இதுதான் குசினி .” - என்று அதையும் அவள் ஒழுங்குபடுத்தித் தந்தாள். பிட்டுக்கு மாக்கிடந்ததால் இரவுச் சாப்பாட்டை மனைவி சமைப்பதற்கு குசினியில் அடுக்குகளைச் செய்யத் தொடங்கி விட்டாள்.
நீ.பி.அருாராந்தச் 90 சித்தி

பொழுதுபட்டு விளக்கு ஏற்றி ராணி விறாந்தையில் வைத்த நேரம் ஆனந்தன் வந்தார். “ம் இனி என்ன உங்களுக்குக் குறை.? இந்த வீடு பிரச்சினையில்லைத்தானே.?” - ஆனந்தன் கேட்க எனக்கு நன்றியுணர்வு பெருகியது” பெரிய உதவி நீங்க எங்களுக்குச் செய்திருக்கிறீங்க.” - என்று நான் சொன்னேன். "இதென்ன கதை இப்பிடியும் செய்யாட்டி தமிழர் எண்டு நாங்க இருந்து என்ன பிரயோசனம். ?”
“எல்லாரும் அப்பிடி உங்கள மாதிரி இல்லத்தானே.?” "அப்பிடி இல்லாத ஆக்களிண்ட கதையை விடுங்கோ. நாங்களெண்டா இப்பிடித்தான். ! எங்களிண்ட குணமெல்லாம் இப் பிடித்தான் ! எங்கட அப்பாவும் அம்மாவும் அப் பிடிக் கொத்தவையள்தான்! அவயள் தங்களுக்குள்ள காணியில தோட்டம் செய்து கொண்டு தங்களிண்ட சீவியப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கினம்! எங்களுக்கெண்டா ஊருக்குள்ள நிறைய மாடு கண்டுகள் இருக்கு. ஆனா நான் மட்டும் அப்பா அம்மாவோட சேருறேல்ல. எல்லாரும் என்னை கழிச்சு வைச்சிருக்கினம். நான் என்ரை இஸ்டத்துக்குப் போய் கலியாணம் முடிச்சதெண்டு அவையஞக்கு என்னில இப்ப விருப்பமில்ல. அவயிண்ட உதவி ତହୁଁt@lib இல்ல எனக்கு. நான் தணிக்கை அடிச்சுத்தான் சீவிக்கிறன்.
"அப்ப நீங்க என்ன தொழில் செய்யிறீங்க?” “தோட்டம்தான். கொஞ்சம் வயலும் செய்யிறன். அடுத்து இப்ப கச்சான் தான் கொத்திப் போட வேணும். அதுக்குத்தான் இருந்து கொண்டு அடுக்குப் பண்ணறன். நீங்கள் அப்பிடி அங்க இருக்கேய்க்க என்ன தொழில் செய்தீங்க.?”
" அங்க நான் செய்தது கடையாவாரந்தான்.” "அப்ப இங்கயும் எங்காவது அப்பிடி யாவாரம் துவங்கிச் செய்யலாமே.”
“யாவாரமென்ன யாவாரம் தோட்டம் கீட்டம் இங்க செய்யிறது தான் பாக்க நல்லது போலக் கிடக்கு..!
"ஓ . அதெண்டா உண்மை! இங்க வடிவா எங்கயும் தோட்டம் செய்யிறதுக்கு நல்ல வசதிகள் நிறையக் கிடக்கு. அப்பிடி இங்க தோட்டம் செய்யிறதா இருந்தா என்ன பயிர் செய்யிறதுக்கு உங்களுக்கு உத்தேசம்!”
"கடல நடலாம் எண்டு புதுக்குடியிருப்பில சொல்லிச்சினம்!” "ஓ நானும் அதை மறந்திட்டன். சொன்னாப் போல அதுதான் இங்க இப்ப திறம்!”
“காணி இருக்குமோ செய்ய?” “இந்த உலகமெல்லாம் இடமிருக்கு எத்தினை காணியள்
്.dി.മിത്രസ്ത്രക്രി 91 ീക്രി

Page 55
தோட்டம் செய்யாமச் சும்மா விடுதரையாக்கிடக்கு. ஆத்துக் கரைப்பக்கம் ஊ-ரிப்-பட்ட காணியள் கிடக்கு. என்ரை சொந்த மச்சான் ஒராளிண்ட காணியும் அது வழிய சும்மா கிடக்கு.”
"அப்ப அதைக் கேட்டா குத்தகைக்குச் செய்யத் தருவாரோ.?” "குத்தக என்ன அதுக்குப் போய்க் குத்தகை! உங்கள மாதிரி பாவங்கள்-இடம்பெயர்ந்து வாற ஆக்களிட்டப் போய் குத்தகை எங்கட சனம் வாங்குமே? அதோட மச்சானிட்டப் போய் இதெல்லாம் நான் கேக்கத் தேவயில்ல. நான் தான் உங்கட காணியில தோட்டம் செய்ய அவயளுக்குக் குடுத்திருக்கிறனெண்டா அவர் பேந்து மூச்சும் காட்டமாட்டார். அந்தளவுக்கு நான் அவருக்கு முன்னம் பெரிய பெரிய உதவிகளும் செய்திருக்கிறன். அதால நான் சொன்னா அவர் ஒண்டும் பேந்து பறையார்.”
"அப்ப அந்தக் காணியப் போய் ஒரு நாளைக்குப் பாப்பமே..?” “நாளைக் கெண்டாலும் நான் ஓம் தான்! போய்ப்பாப்பம் ரெண்டுபேரும்.”
“சரி அப்ப எல்லாஞ் சரி. 1 இன்னு மொண்டு எனக்கு சொல்லக் கிடக்கு.?” s
நான் சொல்லிக் கொண்டிருந்த தருணம் காற்று வீசியடித்தது. நிமிர்ந்து எரிந்த விளக்கின் சுடர் கொந்தளித்து அலைந்தது.
“எனக் கெண்டா இந்தத் தோட்ட வேலையளில அவளவா அனுபவமில்ல. சும்மா வீட்டுத் தோட்டம் மட்டும் அப்ப செய்திருக்கிறன். ஆனாப் பெரிய வயலோ. மரக்கறித் தோட்டமோ . எனக்குச் செய்தெடுத்துப் பழக்கமில்ல.!
"இதுக்கேன் போய் யோசிக்கிறீங்க. நான் இருக்கிறன் தானே! உங்களோட கூட நாடவா நிண்டு எல்லா ஒழுங்குகளையும் நான் செய்து தந்து விட்டுட்டுப் போறனே. ?”
"அப்பிடிச் செய்து தந்திட்டு நீங்க எங்க போறது பேந்து? நீங்களும் என்னோட சேந்து பங்காய் அதைச் செய்யுங்கோ? ”
"என்னட்ட அப்பிடியெல்லாம் சேர்ந்து செய்ய பண வசதியில்ல. ஆனா நான் உங்களுக்கு ஏலுமான உதவி செய்து தாறனே?”
"அப்பிடியெண்டு உது என்ன ஒரு கதை.? நீங்களும் சேந்து என்னோட பாடுபடுறியள் தானே?. நான் முதலைப் போடுறதெண்டாலும் இதுகளைத் தெரிஞ்ச ஒராள்தானே எல்லாத்தையும் செய்து எடுத்து எங்களுக்குத் தரவேணும்!”
ஆனந்தன் மெளனம் காத்தார். நான் கதையைத் தொடர்ந்தேன். "அதால நறுக்காக் கதைப்பம்! நீங்க என்னோட சேந்து கச்சான் தோட்டத்தச் செய்யுங்கோ வருறதில மூண்டில ஒரு பங்கு உங்களுக்கு. ரெண்டு பங்கு எனக்கு! நான் முதல் விடுறன்!” "சரி உங்கட விருப்பம் போல செய்யுங்கோ. நாளைக் காலேல காணியில
நீ.பி.அருாரந்தச் 92 அத்தி

போய் கொட்டில முதல் எதுக்கும் போடுவம். விடிய நான் வண்டிலப்பூட்டிக் கொண்டு வாறன். அங்க ஆத்தங்கரையில பனைவளவு ஒண்டு கிடக்கு அதில ஓலை வெட்டிப் போட்டுக் கொண்டு நேராக் காணிக்குப் போவம்.”
ஆனந்தன் சொல்லிக் கொண்டிருக்க, நான் ஆனந்தக் கடலில் மிதந்து கொண்டிருந்தேன். வாழ்வைப் பற்றிய நம்பிக்கை என் மனதில் குருத்து விட்டு எழுந்து விரிந்தது.
ஆனந்தனின் மச்சானும் இவ்வேளையில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். மூன்று பேரும் பிறகு பைம்பலாக விறாந்தையில் இருந்து பரஸ்பரம் ஒரு வரையொருவர் பார்த்தபடி கதைத்துக் கொண்டிருந்தோம். நேரம் செல்ல, ஆனந்தன் தன் வீட்டுக்குப் போக விட்டு - எங்களுக்கு இரவுச் சாப்பாடும் ஆன பிறகு - என் மனைவியும் மகளுமாகப் போய் அந்த அறையிலே படுத்துவிட்டார்கள். நான் விறாந்தையிலே பாயை விரித்துப் போட்டுக் கொண்டு அதிலே படுத்துக்கிடந்தபடி, அப்படியே வெளியே தெரியும் வானத்தைப் பார்த்தபடி கிடந்தேன். வானவளையத்திலே மங்கலான வெளிச்சம்! காட்டு மணத்திலும் வெதுவெதுப்பிலும் நான் இருக்கும் வேளை சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது. எங்கும் நிலா வெளிச்சம் நிறைந்திருந்தது. அந்த விறாந்தையின் வாசலிலும் துருவ நட்சத்திரம் போல ஒரு லாத்தர் விளக்கு தொங்கிக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தபடியே நான் பிறகு நித்திரையாகி விட்டேன்.
崇
இரவு நல்ல பலத்த காற்று - மழைச்சத்தம் கேட்டு நான் விழித்தெழுந்த போது இருட்டாக இருந்தது. பிறகு விடிந்த கையோடு ஆனந்தன் வண்டியைப் பூட்டிக் கொண்டு வந்து விட்டார். வீட்டில் தேநீர் குடித்த கையோடு நாங்கள் வண்டிலிலே பானை சட்டி கயிறு கம்புகளைப் போட்டுக் கொண்டு, ஆற்றங்கரைக் காட்டுப் பக்கம் போனோம்.
“ராவு நல்ல மழை பெஞ்சது உழவுக்கும் லேசாய்ப் போட்டுது. கொட்டில் போட்ட கையோட உழவையும் முடிச்சிடுவம்.” - என்றார் அவர்.
காட்டுப் பாதையாலே வண்டில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. பக்கத்திலே ஆறு ஓடுவதாக ஆனந்தன் சொன்னார். எனக்கு ஆற்றுப் பள்ளம் அதிலிருந்து பார்க்கவும் தெரிந்தது. ஆனால் தண்ணிரை அதிலே நான் காணவில்லை. என் கண்ணுக்கு தண்ணிர் தென்படவில்லை. அதற்குப் பக்கத்தில் போய்ப் பார்த்தால் தானே தண்ணிர் ஒடுவது தெரியும் தூரவாக உள்ள பாதை வழியாகத்தானே இப்போது வண்டில் போகிறது.
தி.சி.அருாணத்தச் 93 eിക്രി

Page 56
ஒரு கூட்டம் மாடுகள் இடை வெளியில் தெரிந்த புல்லுப் பரப்பில் நின்று கொண்டிருந்தன. வண்டிலைத் துரத்திக் கொண்டு இரண்டு மாடுகள் ஓடிவந்தன. நான் பயந்தேன். ஆனந்தன் வண்டில் மாடுகளை விரைவாகக்
கலைத்தார்.”
"நீங்க சிகப்புச் சட்டை போட்டிருக்கிறீங்க அதான் மாடுகள் கண்டு வெருண்டிட்டுது.” - என்று பிறகு கொஞ்ச தூரம் வண்டில்
போக விட்டு அவர் எனக்குச் சொன்னார். பனைக்கூடல் வந்து விட்டது. ஒலைச்சிறகுகளை பனைகளிலே ஏறி அவர் கொட்டில் போடவென்று வெட்டி விழுத்தினார். எனக்குக் குடிக்க நுங்குக் குலையும் வெட்டிப் போட்டார். நான்கத்தியால் - நுங்குச் சதைக்கண்களில் மேடு தட்டி நிற்கின்ற அளவுக்குக் காயை வெட்டி, அதற்குள் என் விரலை விட்டு தண்ணிரையும் குடித்து சதையையும் தின்றேன். ஒலையெல்லாம் வெட்டி முடிய நானும் அவரும் அவற்றை வண்டிலில் ஏற்றினோம். அங்கிருந்து நேராகக் காணியில் போய்த்தான் வண்டில் பிறகு நின்றது. அந்தக் காணி வெட்ட வெளியாய் இருந்தது. இடையிடையே புல் மண்டிக் கிடந்தது. பயிர் செழித்து வளரக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. சந்தேகம் இல்லை! நல்ல நிலம் தான்! என்று நான் அந்த இடத்தைப் பார்த்ததும் நினைத்தேன். செருப்பை ஓரமாக அதிலே கழற்றி வைத்து விட்டு அந்த நிலத்திலே வெறுங்காலோடு நடந்தேன். மண்ணிரம் காலுக்குக் குளிர்மையாக இருந்தது. காணிக்குப் பக்கத்திலே அந்த ஆற்று வழித்தண்ணீர் ஓடுகிற பள்ளமும் தெரிந்தது. ஆற்றுப் பக்கத்து மருத மரங்களில், குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிப் பாய்ந்தடி போய்க் கொண்டிருந்தன. அந்தக் காணிக்குள்ளே மயிலும் முயலும், அதுகளின் பாட்டுக்கு அங்காலேயும் இங்காலேயுமாக ஓடிக் கொண்டிருந்தன. ஆனந்தன் கொட்டில் போடும் வேலையை ஆரம்பித்தார். இடையிலே வேலையை நிறுத்திப் போய் ஆற்றுத் தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து சோறு கறி சமைத்தார். நானும் அவருக்கு உதவினேன். மத்தியானம் சமைத்த சோறு கறியை நாங்கள் சாப்பிட்டோம். பக்கத்துக் காணியில் தோட்டம் செய்தவரெல்லாம் வந்து கொட்டில் போட எங்களுக்கு உதவி செய்தார்கள். பின்னேரம் கொட்டில் போடுகிற வேலை முடிந்தது. பொழுது படவும் ஆனந்தன் வண்டிலில் மாடுகளைப் பூட்டினார். இருவரும் வீட்டுக்குப் போனோம்.
崇
முந்த நாள் போலவே அடுத்த நாள் காலையிலும் வீட்டிலிருந்து வெளிக்கிட்டு காணிக்கு நாங்கள் வந்தோம். கலப்பையை வண்டிலில் கொண்டு வந்திருந்ததால், உழவு வேலையை உடனே ஆரம்பித்து விட்டார் ஆனந்தன். அந்த வண்டில் மாடுகளே உழவுக்கும் பயன்பட்டன. காலையில தி.சி.அருாரதிதர் 94 அததி

தொடங்கிய உழவு வேலையை அவர் நிறுத்தவே இல்லை. கொஞ்சம் வந்து, வட்ட இலைக்காட்டு மரத்துக்குக் கீழ் இருந்து ஓய்வு எடுத்து விட்டு, அவர் தேநீர் போட்டுக் குடித்தார். மாட்டுக்கும் தீனியைத் தண்ணிரை வைத்தகையோடு - பிறகும் உழவு வேலை தொடங்கி விட்டது. மாடுகளுக்கும் அவருக்கும் உழுது காலோய்ந்து விட்டது. அந்த மாடுகள் கலப்பை இழுத்துக் கொடுக்க மிகுந்த சிரமம் கொண்டன. ஆனந்தன் அந்தக் கலப்பையை அசைத்து அசைத்து, மேலே தூக்கி காலால் மிதுத்துத் தள்ளி, ஏர் சுணங்கி நிற்காமல் கூடுதலான நிலத்தை உழுதார். ஆளுக்கு நல்ல களைப்பாகி விட்டது. பொழுதும் படுகிற நேரமாய் வந்தது. மாடுகளுக்கு ஓய்வு கொடுத்து ஆற்றுக் கரையில் கட்டி விட்டு, கொட்டிலிலே அவர் வந்து படுத்து விட்டார். நான் இரவுச் சாப்பாட்டுக்கு அதிலே கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கிப் போட்டு - அடுப்பில் நெருப்பை மூட்டி - மாக்குழைத்து றொட்டி சுட்டேன். றொட்டியைச் சாப்பிட்டு விட்டு திரும்பவும் போய் படுத்து விட்டார் ஆனந்தன். இருள் நன்றாக கவிந்து கொண்டு வந்தது. திடுக்கிட்டு ஆனந்தன் எழும்பினார். “நெருப்புப் போட வேணும் ஆன வந்திடும் இரவில” - என்று எனக்குக் கூறி விட்டுப் போய், பெரிய மரக்கட்டைகளை கோடரி கொண்டு வெட்டித் தூக்கி வந்து, கொட்டிலுக் கருகினிலே தீ மூட்டி வைத்தார்.
காட்டு நுளம்பு உடம்பெல்லாம் கடிகடியென்று கடித்தது. குத்துக் குத்தென்று ஊசியாய்க் குத்தியது என்றாலும் காட்டு வெப்பத்திற்கு இரவு நான் நல்ல நித்திரையாய்ப் போனேன். நடுச்சாமம் சென்று மரங்கள் முறியும் சத்தத்தோடு யானை பிழிறும் சத்தம் கிட்டவாகக் கேட்டது. குடிலுக்கு முன்னாலுள்ள கட்டைகள் எரிவதடங்கிப் புகை கக்கிக் கொண்டிருந்தன. நான் எழும்பிப் போய்க் கட்டைகளை நெருக்கி வைத்து சுளகால் காற்று வீசினேன். விறகில் நெருப்புப் பிடித்து எரிந்தது. அப்படியே வந்து படுத்தவன் தான் நான் - பிறகும் நல்ல நித்திரையாகி விட்டேன். கண் விழித்தால் - நன்றாக விடிந்து விட்டது!
崇
அன்று எங்கள் காணியில் வேலை செய்ய கூலிக்கு ஆறு ஆட்களைப் பிடித்தோம். பாத்தி கட்டல் மும்முரமாய் நடந்தது. அந்த வேலை முடிந்து, அடுத்த நாள் ஆனந்தன் வீட்டில் நான் பணத்தைக் கொடுத்து ஏலவே வாங்கிப் போட்டிருந்த கச்சான் விதைக் கடலைகளை கொட்டி வைத்து - பதினைந்து பேர் வரை இருந்து, விதைக் கடலை மணிகளை எடுக்கக் கோது உடைத்தார்கள்.
அவர்களது வேலையெல்லாம் முடிந்ததும், கூலியைக் கொடுத்து நான் கொப்பியில் கணக்கு எழுதி வைத்துக் கொண்டேன்.
ஆற்றுத் தண்ணிரை அதிலிருந்து தோட்டத்துக்கு இறைப்பதற்கு,
 ില്ക്ക് 95
ക്രി

Page 57
தண்ணீர் இறைக்கும் இயந்திரம் தேவை - காசுக்கு ஏன் வாங்குவான் - வாடகைக்கு அதைப் பிடிப்போம் - என்று ஆனந்தன் சொன்னார். நான்: “ உங்களிண்ட யோசனைப்படி செய்வம்” - என்றேன்.
“இறைப்புக்கு நாங்கள் நாள் கணக்குப் போட்டுக் காசு எடுப்பம்.” - என்றார் மிசின் சொந்தக் காரர். "தண்ணீர் போக்கும் குழாயும் மிசினோட நீங்க சேத்துத் தரவேணும்?” - என்று சரியாக அதை நான் கேட்டுக் கொண்டேன்.
“இனி மிசின் கிடைச்சிட்டுது தண்ணீர் இறைச்சு கடலை போடுற தொண்டு தான் பாக்கி ” - என்று ஆனந்தன் சொல்லி விட்டு நிலத்தைக் கொத்திக் கடலை போட பத்துக் கூலியாட்களைப் பிடித்துக் கொண்டு வந்தார். ஒரு பக்கம் தண்ணீர் இறைப்புடன் நீர் வற்றிய மண் தரையிலெல்லாம் வேலைக்கென்று வந்தவர்கள் ஆளுக்கொரு நிரையில் நின்று நிலத்தைக் கொத்திக் கொத்தி கடலை போட்டு மண்மூடினார்கள். ஆனந்தன் தண்ணீர் பாயும் வரப்புகளிளெல்லாம் பயித்தை வெண்டியென்று மரக்கறி விதைகளையும் இடையிடையே ஊன்றினார். காணிக்குள் கடலை நடுகை ஒழுங்காக நடந்து முடிந்து விட்டது. விதை நடுகை முடிந்த பிறகு நாங்கள் இரண்டு பேரும் அந்தக் கொட்டிலிலே காவல் கிடந்து கொண்டு நேரத்துக்கு நேரம் சமைத்துச் சாப்பிடுவதும், கூத்துப் பாட்டுகள் படிப்பதும், ஊர்க்கதைகள் கதைப்பதுமாய் நேரத்தைப் போக்கடித்தோம். எங்கள் பக்கத்துக் காணியிலே கடலைத் தோட்டம் போட்டிருந்தவர், தனியே கொட்டிலில் இருந்து சமைத்து மூட்டிச் சாப்பிட்டுக் கொண்டு கிடந்தார். வேளைக்கு அவர் கடலை கொத்திப் போட்டிருந்ததால் - காலத்துக்கு அந்தச் செடிகளின் அடிப்பகுதிகளிலெல்லாம் மஞ்சள் பூக்கள் பூத்திருந்தன.
நாங்கள் காணியில் நட்டிருந்த கடலை விதைகளெல்லாம் - அன்று தான் முளைவிட்டு தரை பெயர்த்துத் தூக்கியிருந்தன. சில நாள்களுக்குள் அவை நன்றாய் வளர்ந்து பச்சை வீசிக் கிளம்பி விட்டன. குருத்தடித்து மளமளவென்று இலை வீசிக் கடலைச் செடிகள் அடர்ந்தன. தண்டு தடித்து வீரியமாய்ச் செடிகள் நின்றன். தண்ணீர் இறைத்து நின்றபடி செடிகளைப் பார்க்கவே எனக்கும் ஆனந்தனுக்கும் சந்தோஷம்தான். எங்களுக்கு நெஞ்சம் நிறைந்தது. அவைகள் பிறகு பூப்பூக்கவும் நாங்கள் இருவரும் அவற்றைப் பார்த்துப் பார்த்து மனம் பூரித்துப் போனோம். பூத்த பூக்களை கருந்தும்பிகள் பறந்து வட்ட மடித்தன. தேனீக்கள் ரீங்காரமிட்டபடி - வந்திருந்து விலகின. இரவிலே தோட்டத்தில் நின்று வானைப் பார்த்தால் அங்கு முகில்கள் இல்லை. விண்மீன்கள் நிறைந்து கிடந்தன. அவைகள் வெளிச்சம் சிமிட்டிக் கொண்டிருந்தன. கீழே குனிந்து நிலத்தைப் பார்த்தால், கடலைப் பூக்கள் நட்சத்திர இரகசியத்தை ஏறிட்டு நோக்குவது போலத்தான் தெரியும். இவைகளைப் பார்க்கவே ஒரு தனி சுகம் எனக்கு.
தி.பி.அருளானந்தச் 96
ീകൃി

ஒரு நாள் இரண்டு மூன்று கடலைச் செடிகளைப் பிடுங்கி எண்ணிப் பார்த்து விட்டு நாற்பது கடலைகள் வரை ஒரு செடியில் விளைஞ்சுருக்கு' - என்று சந்தோஷம் பட்டவாறு சொன்னார் ஆனந்தன். நானும் விளைந்திருந்த வேர்க் கடலைகளைப் பார்த்து விட்டு மகிழ்வுற்றேன். கடலை முற்றி வர இன்னும் நாளாகும் என்று ஆனந்தன் சொன்னார்.
இதன் பிறகு தான், கடலை போட்ட காணிக்குள் தங்கி இருந்த எங்கள் இருவருக்குள்ளும் மனக் கசப்புகள் வளரத் தொடங்கின. இந்த மனக் கசப்புகளுக்கெல்லாம் ஒவ்வொரு பிரச்சினைகள், அந்தத் தோட்டத்துச் செய்கையில் நாளாந்தம் எங்களுக்கு உருவாகின. முக்கியமான தண்ணீர்ப் பிரச்சினையே முதன் முதலில் வந்தது தோட்டத்து இறைப்புக்கென நம்பியிருந்த அந்த ஆற்றுத் தண்ணிரை, போதிய அளவு எங்கள் பக்கத்துக்கு வர விடாமல், தொலைவிலுள்ள காணியில் தோட்டம் செய்தவரெல்லாம் தண்ணீரை மறித்துக் கட்டி தங்களது தோட்டப் பயிர்களுக்கு இறைக்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் பொங்கி வழிய ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த தண்ணிர், வாய்க்காலில் கோவணத்துண்டு அளவில் ஒடுங்கிப் போய்ப் பாயத் தொடங்கி விட்டது. அவர்களது தேவை முடிந்த தருணத்தில் தான் ஏதோ மிசினரல் இறைக்கக் கூடிய தண்ணீர் கொஞ்சம் வாய்க்காலில் ஒடும். இதனால் எங்களது தோட்டத்துக்கு இறைக்க, தண்ணீர்ப் பற்றாக்குறையாக வந்து விட்டது. கச்சான் பயிர்கள் சோர்ந்து வாடிவிட்டன. தோட்டத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தனும் மனம் மாறிவிட்டார். "வீட்டுக்கொருக்கால் நான் போயிற்று வாறன்” - என்று சொல்லி விட்டுப் போனால், நான்கு நாட்கள் கழிந்த பிறகு தான் திரும்பியும் வந்து அவர் தோட்டத்துக்குள் கால் வைப்பார். அதற்குப் பிறகு அவரது வருகையின் இடைவெளி இன்னும் அதிகரித்தது. அவர் வருவதே பிறகு அபூர்வமாகி விட்டது.
“எல்லாம் எனக்கு வாய்ச்ச தோட்டச் செய்கைக்காரன் அவ்வளவு லட்சணம் - இண்டைக்காகிலும் அவர் இந்தக் காவல் கொட்டிலுக்கு வந்தா அது பெரிய கடவுளிண்ட புண்ணியம்" - என்று அவரைப் பார்த்துக் கொண்டு நான் கொட்டிலில் காவல் கிடக்கத் தொடங்கினேன். 'குளம் வற்றி பறவைகள் எல்லாம் பறந்த கதை போலத்தான், இந்தத் தோட்டத்தில ஆம்பல் கிழங்கு போல நான் கிடக்க வேண்டியதாய்ப் போட்டுது. இந்த ஆத்துத் தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு இந்தக் காட்டு மண்ணோட மண்ணா நான் அழுக வேண்டியது தான்!” - என்று எனக்கும் கவலை ஏற்பட்டது.
இந்த யோசனைகளாலே சுருட்டுக்களை கட்டுக்கட்டாய் வைத்து எந்த நேரமும் புகைக்கத் தொடங்கிவிட்டேன். நீலநிறமாகச் சுருண்ட சுருட்டுப் புகையிலே சிலநேரம் என் சிந்தனையை நாட்டி விட்டபடி இருந்து கொண்டிருந்தேன். தி.சி.அருாரத்தச் 97
ീക്രി

Page 58
தண்ணீர் இறைப்புக் குறைவென்றாலும், நாங்கள் நட்டு முளைத்த பயிற்றைக் கொடி முற்றிக் காய் காய்த்து விட்டது. கிளித் தொல்லையும் குரங்குத் தொல்லையும் உயிர்வாதை ஒடி ஓடி விரட்டி மாள முடியவில்லை எனக்கு.
வெயில் சுளிரென்று அறைவதால் காவல் கொட்டிலில் கூட இருக்க முடியவில்லை. அவ்வளவு வெதுப்பம். நான் அந்த ஆற்றுக் கரையில் உள்ள மருத மரங்களுக்குக் கீழே போய் மாலையாகும் வரை இருந்து கொண்டு, வான்வரை ஓங்கிய அந்த மரங்களையும், கிளை பரப்பி விழுதுச் சடைகள் ஆட ஆட நின்ற ஆல மரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். மரத்தின் கிளைகளும் வளைவுகளும் ஏராளமான நினைவுகளை எனக்கு இழுத்து வரும். எதைப் பற்றியும் எனக் கென்று தீர்மானமான பார்வை இல்லையென்பதால், ஓர் கசப்பு நிலை வந்து விடும் அப்போது,
ஒரு நாள் போல ஏதோ தாராளமான மனதுடன், ஆற்றுத் தண்ணிரை மறித்து வைத்திராது அவர்கள் தண்ணீரைத் திறந்து பாய்வதற்கு விட்டிருந்தார்கள். தண்ணீரைக் கண்டதோடு இயந்திரத்தை இயக்கி அளவுகணக்காய் தண்ணிரைப் பாத்திகளுக்கு விட்டுக் கட்டிவிட்டு - சீக்கிரமாய் அந்தத் தண்ணீரில் கையோடு குளித்தும் விடுவோம் என்று நினைத்துக் கொண்டு ஆற்றுத் தண்ணீருக்குள் போய் நான் இறங்கினேன். மஞ்சள் பளுப்பு இலைகள் தண்ணிருக்கு மேலே மிதந்து போய்க் கொண்டிருந்தன. அவற்றை கைகளால் விலக்கி விலக்கி வீசிக் கொண்டிருந்தபடி, குனிந்த தலையைத் தண்ணிருக்குள் முங்கி எழுந்தவாறு முழுகினேன். மஞ்சள் இலைகளை விலக்கிய போது அந்தத் தண்ணிாப்பரப்பிலே - துண்டு துண்டாக அதுவும் மஞ்சள் நிறத்தில் சிதைவுகளோடு ஏதோ மிதந்து போவது போலத் தெரிந்தது. அது என்னவென்று முதலில் ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. என்றாலும் அது அசிங்கமாகவுமிருந்து - என்னை அது அணுகுவது மாதிரியுமாக ஓர் அருவருப்பு. இன்னும் என்ன என்று எனக்கு அது சரியாகப் பிடிபடவில்லை. தண்ணீரை சிறிய அலைகளாய் என்னைச் சுற்றிய அளவில் பிரிய கைகளால் விலக்கிய தருணம்; உள்ளே கிழிபடும் நீருக்குள்ளாலேயிருந்து மேலே பொதுக்கென்று மிதந்து வந்தது சில கட்டிகள். அவை என்ன வென்று இப்போது தான் நான் கண்டுபிடித்தேன். வாய் கொப்பளித்தது - முகம் கழுவியது - தண்ணிர் குடித்தது - சோறு சமைத்தது - கறி சமைத்தது - என்று நான் முன்பு அந்தத் தண்ணிரைப் பாவித்துச் செய்த எல்லாமே ஞாபகத்தில் வந்து புரண்டன. அதனால் அந்தக் குளிப்பாலே எனக்கு உடல் குளிரவில்லை. மீறி நெருப்புத் தண்ணீரிலே கிடந்தது போல உடல் முழுக்க எரிந்தது. அருவருப்போ வென்றால் வார்த்தைகளில் அவற்றை வர்ணிக்கவே
.dി.ീn് 98 മീകി

முடியாது. காலை சுற்றிய பாம்பிடமிருந்து தப்பிக்கும் உதறலுடன் ஆற்றுக்கு வெளியே ஒரு பாய்ச்சலுடன் நான் வெளிக்கிட்டேன். என் உடல் பல முறை நடுங்கியது.
தண்ணீரை நான் குழப்பி விட்ட சத்தம் கேட்டு, கொஞ்சம் தள்ளிய மர வேர்ப்பள்ளத்துக் கிடங்கில் கிடந்த முதலை’ வாலைத் தண்ணீரில் அடித்தது. அந்த வன்மீன் புரண்டடிக்கும். சத்தம் பெரிதாய்க் கேட்டது. நான் தலை ஈரம் துவட்டாமல் தண்ணிர் சொட்டச் சொட்ட நடந்து போய்ப் பக்கத்துக் கொட்டிலில் உள்ளவருக்கு (அவர் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்) இந்த விஷயத்தைச் சொன்னேன். ஆனால் அவர் நான் சொன்ன எதையும் பெரிதாய் எடுக்கவில்லை. "இங்கயுள்ள தோட்டங்களில இருக்கிறவயள் எல்லாம் இப்பிடி அசிங்க வேலையும் செய்து போட்டு - அதையே தான் பிறகு தாங்களும் எடுத்துக் குடிக்கிறாங்கள் - இதிலதான் எடுத்து சமைச்சும் அவங்கள் சாப்பிடுறாங்கள்” என்று அவர் இதை எனக்குச் சர்வ சாதாரணமான ஒரு விஷயம் போல் கூறினார்.
“மலத் தண்ணிர் 99 என்று நான் சொல்லிவிட்டுக் காறித்துப்பினேன்.
நான் அப்படிச் செய்து கொண்டு அதிலே நின்றபடி அவஸ்தைப்படுவதைப் பார்த்து அவருக்கு முகம் கறுத்தது.க
"அந்தச் சனங்களை எப்பவுமே திருத்தேலாது. எங்க எண்டு எவரைப் பிடிச்செலலாம் இதப் பற்றி நாங்கள் போய்ச் சொல்லேலும்.?”
- என்று அவரும் மனம் நொந்தார். அதற்கு மேல் நானும் அவருடன் கதைக்காது கொட்டிலுக்குத் திரும்பி வந்து விட்டேன். அன்று மதியத்துக்கென்று சாப்பாடு ஒன்றுமே நான் சமைக்கவில்லை. பசித்தாலும் சமைக்க வெறுப்புடன் வயிற்றைக் காயப் போட்டுக் கொண்டு பட்டினியாய்க் கிடந்தேன். பகலவன் மருத மரத்து உச்சியில் விதிர்த்திருக்கும் இலைக் கூடலுக்குப் பின்னே மறையலானான். காடு பிறகு இருண்டு விட்டது. நான் போய் சோகத்துடன் கொட்டிலுக்குள் படுத்து விட்டேன். ராத்திரி முழுக்க எனக்கு நரி ஊளை கேட்டபடி இருந்தது. ஒரு நரி உரக்க ஊளையிட்ட சத்தத்திலே திடுமென்று விழித்துக் கொண்டேன் நடுக்கத்துடன். மறுபடியும் தூங்க எனக்குப் பயமாக இருந்தது. தேய்த்து, சொறிந்து, உதைத்து, உருண்டு முனகிக் கொண்டு சாக்கில் கிடந்தேன்.
崇
அடுத்தநாள் ஆனந்தன் விடிந்த பொழுதில் வந்தார். அவரைக் கண்டதும் என் ஒவ்வொரு நிமிடத்தையும் அவரைத் திருப்திப்படுத்தத் திட்டமிட வேண்டுமென்று நினைத்தேன். அல்லாவிட்டால் அவர் வீட்டுக்குச் சென்று விடுவார். நான் தனியே இந்தக் காவல் கொட்டிலில் படுக்க வேண்டுமே. ? ரீசி.அருா%ரந்தச் 99 as4.

Page 59
என்றாலும் ஒரு கவலையுமில்லாமல் முகத்தை வைத்திருந்த அவரைப் பார்க்கவும், எனக்கு நல்ல ஆத்திரம் வந்து விட்டது. இவ்வளவு நாளும் அந்த ஆற்றுத் தண்ணீரின் சீர்கேட்டை எனக்குக் கூறாது அவர் மறைத்து வைத்துக் கொண்டதில், இன்னும் எனக்கு அவர் மீது அதிக கோபம் வந்தது.
“ ஆனந்தன் இப்பிடி நீர் எனக்குச் செய்யிற தொண்டும் நல்லாயில்ல. கடலை சரியா இதுக்க விளையேல்ல எண்டு கண்டதும் நீர் இந்தத் தோட்டத்தை விட்டு மாறப் பாக்கிறீர் . ஆனா இதுக்க முதலைப் போட்டவன் நான்! எனக்குத்தான் இதில் எல்லாம் பாதிப்பு! அதுவும் இடம்பெயர்ந்து வந்து கையில உள்ள என்ரை காசையெல்லாம் இதில அள்ளி வீசிச் சில வழிச்சுக் கொட்டிப் போட்டு நான் நிக்கிறன். இது சரியான பெருத்த அநியாய மெனக்கு.”
என்று கத்தியபடியே அவருடைய தவறை அவருக்கு வலியுறுத்தும் வகையில், என் ஆள்காட்டி விரலால் குத்திக் குத்திக் காட்டினேன்.
* இதென்ன உங்கட கோமாளித்தனம்! இதுக்கேன் அப்பிடிக் கத்துறியள்? பக்கத்துத் தோட்டக்காரருக்கெல்லாம் நீங்கள் சொல்லுறது கேக்க வேணுமெண்டு உங்களுக்கு ஆசை போல! அங்க இருந்து இங்க இடம்பெயர்ந்து வந்து சண்டித்தனம்!” என்று உறைப்பாக ஒரு கதை அவர் எனக்குச் சொன்னார். அதைச் சொன்ன கணமே தவறை உணர்ந்து அவர் நாக்கைக் கடித்துக் கொண்டார்.
என்றாலும் அதற்குப் பிறகு இறுகிய முகத்தோடு கம்பீரமாய் அதிலே நின்று அவர் விலகிச் சென்றார். அவர் அடுத்த காணிக் கொட்டிலை நோக்கிப் போவதை, நான் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் அழுகையைப் பொங்கியது. "ஆக இனி அவர் இங்க தோட்டப் பக்கம் வரவே மாட்டார். நான் தனியன் தான் இனி.! ” - என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி நான் இருக்க - கொஞ்ச நேரம் அடுத்த பக்கத்துக் கொட்டிக்குப் போய் அவர்களிடம் இருந்து கதைத்து விட்டு, ஆனந்தன் திரும்பவும் எங்கள் கொட்டிலுக்கு வந்தார்.
காவல் கொட்டிலின் முன்னால் கவனிப்பற்ற அடுப்புப் புகைந்து கொண்டிருந்தது. அவர் வீட்டிலிருந்து இங்கு வரும் போது கூட்டிக் கொண்டு வந்திருந்த நாய்கள் இரண்டும் அந்த அடுப்புக்குப் பக்கத்திலே தூங்கிக் கொண்டிருந்தன. ஒரு நாய்க்கு முதுகு அடிக்கடி குலுங்கியது. தூக்கத்தில் மெதுவாக அது முனங்கிக் கொண்டது. அடுப்புக்குப் பக்கத்திலே ஆனந்தன் வந்து நிற்க நான் அவரைப் பார்க்காமல் அடுப்புப் புகையையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் கை விரல்கள் இவ்வளவு நாளும் வளர்ந்து விட்ட என் முகத்தாடியில் தேங்கித் தேங்கி உலாவிக்
ரீ.சி.அருா%னதிதச் 100
ീമി

கொண்டிருந்தன. அதை விட்டு விரல்களை என்னால் எடுக்க முடியவில்லை. யோசனை...!!
“எனக்கு ஆரும் உதவி செய்யப் போறதில்ல. அகதியா வெளிக்கிட்ட நான் ஏமாத்துப் பட்டுப் போனன். ஏமாத்துப் பட்டடிட்டன்." - என்று என் பாட்டுக்கு இருந்து சொன்னேன் இப்போது மெதுவாக அவர் எனக்குச் சொன்னார் : “அண்ணை நீங்க ஒண்டுக்கும் மனவருத்தப்படாதையுங்கோ. எனக்கும் எங்கயும் போய் வேலை செய்து கிய்து உழைச்சுக் கொண்டந்து காசைக் குடுத்தாத்தான் அங்களன்ர வீட்டுச் சீவியம் போகும். ஆனாலும் இனி நான் இந்த இடத்த விட்டு ஒரு இடமும் போகமாட்டன். இங்கயே கொட்டிலில கட்டாயம் உங்களோட நான் இனிக் கிடந்திடுறன். உந்தப் பக்கத்திலவுள்ள காணிக்கார ஆளும் தண்ணிப் பிரச்சனையெண்டு நீங்க சொன்னதா ஏதோ எனக்கும் சொன்னார். நான் இனி அந்தத் தண்ணியச் சுட வைச்சு வடிகட்டி சுத்தமா உங்களுக்குத்தாறன். இதவிட நான் என்ன செய்யிறது. ”
நான் அதற்கு ஒரு பதிலும் அவருக்குச் சொல்லவில்லை. பேசாமல் என் பாட்டுக்கு இருந்தேன். “நீங்க இருங்கோ நான் காட்டுக்க நாயளைக் கூட்டிக் கொண்டு போய் ஏதாவது வேட்டை பாத்துக் கொண்டு வாறன். கட்டாயம் இப்ப காலை வெய்யிலுக்கு உடும்பு காட்டுக்க எம்பிடும்.!”
எனக்குச் சொல்லிவிட்டு ஆனந்தன் நாய்களைக் கொண்டு வெளிக்கிட்டு விட்டார். கொஞ்ச நேரப் பொழுது தான் நான் அதில் இருந்தேன். அதற்குள் காட்டுக்குள் போன ஆனந்தன் உடனே திரும்பவும் காவல் கொட்டிலுக்கு வந்து சேர்ந்து விட்டார். அவரின் கையில் நாய்கள் வேட்கையாடிப் பிடித்த, ஒரு கணக்கான வளர்த்தியடைந்த உடும்பு இருந்தது. அந்த உடும்பை பின்பக்கமாக வாலை வளைத்து கொடித் தண்டில் கட்டி எடுத்து வந்திருந்தார். கொண்டு வந்த உடும்பை வட்ட இலை மரத்துக் கிளையில் கயிறு போட்டுக் கட்டி, அவர் உரிக்கத் தொடங்கினார். கழுத்தாம் பகுதிகளில் தொடங்கி நெஞ்சு வயிறு வால் பகுதிகளின் தோல் கோட்டைக் கழற்றி, குடலைப் பதமாய் உருவி வீசி விட்டு; நாக்கை நீளமாகத் தள்ளியபடி இருந்த உடும்பின் தலையை வெட்டி விட்டு, தனியே அதன் உடல் பகுதியை மட்டும் எடுத்தார். சமையல் நடந்தது. உடும்புக்கறி சோறு என்று பின்னேரச் சாப்பாடு தயாரானது.
"அரியண்டத்தை விட்டிட்டு அதை ஒண்டும் யோசியாம சோறு கறியைச் சாப்பிடுங்கோ. எல்லா நஞ்சுகளும் நெருப்புச் சூட்டில அழிஞ்சுபோயிடும்.!” - என்று சொல்லி விட்டு, அவர் தனக்கு “சரியாப் பசிக்குது" - என்று சொல்லிவிட்டு, முதலில் தான் சாப்பிட ஆரம்பித்தார்.
தி.சி.அருாரத்தச் 101
ീകൃി

Page 60
நானும் அவர் சாப்பிடுவதைப் பார்த்து தாங்க முடியாத என் பசியையும் பொறுக்காது, தட்டில் சோறு கறியைப் போட்டுச் சாப்பிட்டேன். ஆனந்தன் கொட்டிலுக்கு வந்த சேர்ந்தது எனக்கு இப்போது மன ஆறுதலாய் இருந்தது.
எல்லாம் அமைதி, இப்போது எனக்குப் படுத்து நித்திரை கொள்ள வேண்டும்! எனக்கு ஒய்வு அவசியம்! என்கிறதாய் இருந்தது. நான் போய் சாக்கை விரித்துப் படுத்தேன். ஆனந்தனும் நான் படுத்துக் கிடந்த இடத்துக்கு அங்காலே சாக்குத் துண்டில் படுத்துக் கிடந்தார்.
“பக்கத்துக் காணிக்கார ஆளுக்கு நல்ல முத்தலான கடலை விளைச்சல்! நல்ல மணிப்பிடிப்பு.!
என்று அவர் சொல்லிக் கொண்டு கிடந்தார். நான் ஒன்றும் பறையவில்லை. பக்கத்துத் தோட்டக்காரரின் விளைச்சலைப் பார்த்து நான் ஏன் வாய் ஊற வேண்டும் என்பதாய் நான் நினைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தேன். எல்லா யோசனையையும் வைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தபடி கொட்டிலுக்கு வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்தேன். அந்த நீலத்துக்கு நிகராக எந்த நீலத்தைத்தான் சொல்ல முடியும் என்று அந்தத் துன்பத்துக்குள்ளும் என்னிடம் ரசிப்புத்தன்மை பிறந்தது. இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ற இடம் தான் காடு, என்று பிறகு நினைத்துக் கொண்டு அப்படியே நித்திரையாகி விட்டேன். 崇
அந்தக் காவல் குடிலில் கிடந்து கொண்டு எல்லாவற்றையும் அதிகமாகப் போட்டு யோசித்துக் கொண்டிருந்ததில் - மனம் ஒடுங்கி ஒடுங்கி உடம்பும் எனக்கு ஒடுங்கிப் போய் விட்டது. தாடியும் நன்றாய் வளர்ந்து ஆளே நான் மாறியதாய் விட்டேன். ஆனந்தன் எங்கும் போகாது என் கூடவே தான் எப்போதும் அந்தத் தோட்டத்தில் இருந்தார். தண்ணிர்ப் பிரச்சினையாலே எங்கள் தோட்டத்துக் காணியில் கச்சான் நன்றாய் விளையவில்லை. தாங்க முடியாத வெயில் தொடர்ந்து எறித்ததால், ஆற்றில் தண்ணிர் வரத்தும் குறைந்து விட்டது. அந்தக் காடு கரைகளெல்லாம் கச்சான் கடலை பிடுங்கி முடிந்து விட்டது. பக்கத்துத் தோட்டங்களை விட்டு ஆட்கள் வெளிக்கிடவும், யானைகள் எங்கள் தோட்டம் பக்கமாக வரத் தொடங்கி விட்டன. தனிக் காட்டுக்குள் நாங்கள் இருப்பவர்களாக இப்போது ஆகிவிட்டோம். "கச்சான் பெரிசாய் விளையேல்லயே . இப்பிடியே இந்தத் தோட்டத்தை விட்டிட்டுப் போயிற்றால் என்ன?” - என்கிற மாதிரி ஒரு வெறுப்பு என மனதில் வளரத் தொடங்கி விட்டது.
“இந்தத் தோட்டம் செய்தது காணும். இனி இந்தத் தோட்ட வேலையே எனக்கு வேணாம்.! எல்லாத்தையும் இப்பிடியே நிலத்துக்கு
தி.சி.அருா%ந்தச் 102
ീക്രി

அழிஞ்சு போக விட்டுப்போட்டு இனியாயிலும் இருக்கிற வீடு வழிய போய்ச் சேருவம். - என்று நான் ஒரு முடிவுக்கு வர.
நாலு பேர் அங்கே இப்போது அந்தத் தோட்டங்களில் இருப்பவர்கள் வந்து சொன்னார்கள்:
"நீங்கள் அப்பிடியெல்லாம் ஒருக்காலும் நினைக்கவேபிடாது..? அந்த மாதிரி ஒருக்காலுமே செய்யப்பிடாது. ? தோட்டம் செய்யிறதெண்டு வெளிக்கிட்டீங்க. ஆனா விளைஞ்சு பேந்து வாறதெல்லாம் அந்தக் கடவுள் பாத்துத் தாறது தானுங்கோ..? அதால நீங்கள் இப்ப செய்த இந்தத் தோட்டத்தில கடலை நல்லா விளையேல்ல எண்டு போட்டு நெச்சு இதை விட்டிட்டுப் போனா, பிறகு நீங்க எப்பவுமே உங்கட சீவியத்தில விவசாயம் எண்டதே செய்யேலாம சாபம் விழுந்திடும்.! பூமாதேவி உங்களைச் சபிச்சிடுவா. மனுசன் சாப்பிடுறத, மண்ணில மண்ணாப் போக எப்பவும் நாங்க விடப்பிடாது..? அது ஒரு அநியாயம் பிடிச்ச வேலை. அதால நீங்க நினையுங்கோ. எனக்கு அளந்தது இவ்வளவு தானெண்டு. அதை நினைச்சுக் கொண்டு
இதில விளையிறதெவ்வளவோ . என்ன செய்யிறது. நீங்க அதை நிலத்தில் விடாம புடுங்கி எடுங்கோ. அதுதான் தோட்டக்காரன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய லட்சணம். ஓம் நாங்க
''
சொல்லுறதெல்லாம் முழுக்க உண்மை பாருங்கோ.
அவர்கள் தாங்கள் பின்பற்றி வரும் ஞாயமான நடவடிக்கையைச் சொன்னார்கள். அவர்கள் போனதற்குப் பிறகும், எங்கள் தோட்டத்துக்கு வந்த வேறு பலரது வாயினிலெல்லாம் இந்த மாதிரியான வசனங்களே சிக்குப்படாமல் ஒத்த மாதிரியாக வெளிவந்தன. நான் அவர்கள் சொன்ன சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் பிறகு நடக்க வேண்டி வந்து விட்டது. “சரி வாறது வரட்டும். என்ன கஷ்டம் வந்தாலும் சரி இருந்து காணிக்க கிடக்கிறத பிடுங்கி எடுத்துக் கொண்டு போவம்!” - என்று பொறுமையுடன் இருந்தேன்.
ஆனந்தனும் முன்பு ஒரு நாள் தன் வாயால் எனக்குச் சொன்னது போலவே என்னை விட்டுப் பிரியாமல் கூட இருந்தார். காலம் நெருங்க நாங்கள் ஒரு நாள் கடலை முழுக்கவும் கூலி ஆள் வைத்து இழுத்தோம். காதில் தொங்கட்டான் தொங்குகிறது மாதிரி, ஒவ்வொரு கடலைச் செடியிலும் இவ்விரண்டு ஒரு கொட்டைக் கச்சான்கள் மாத்திரம் அதிலே வேரில் தொங்கிக் கொண்டிருந்தன.
“படு நட்டம்.!” - என்று அதனை நினைத்துக் கொண்ட கவலையோடு - மண்ணிலிருந்து இழுத்தெடுத்த செடிகளிலுள்ள கடலைகளையெல்லாம் கொட்டிலில் போட்டு நாங்கள் அந்த ஆள்களைக் கொண்டு பிடுங்கி எடுத்து சாக்கில் போட்டோம் அந்த மண்ணில் விளைந்து நாங்கள் எடுத்ததில் விதைக் கடலை கூட ஒழுங்காகத் தேறவில்லை.
தி.சி.அருஈரனந்தச் 103

Page 61
கூலி என்று அவர்கள் செய்த வேலைக்கு, என்கையில் கடைசியாக இருந்த பணமெல்லாம் தொலைந்தது என்றாலும் கஷ்டப்பட்டு வேலை செய்த அவர்களுக்கு, மனம் நோகாமல் நான் கூலி கொடுத்து அனுப்பினேன்.
நாங்கள் கடலை பிடுங்குவதைக் கேள்விப்பட்டு, எங்கள் தோட்டத்துக்குக் கொஞ்சம் தொலைவில் கடலை போட்டிருந்த தோட்டக்காரர் அவ்விடத்துக்கு வந்திருந்தார். கடலையைத் தனக்கு ஒரு விலை போட்டுத் தரும்படி, கடலையெல்லாம் பிடுங்கி சாக்கில் போட்ட பிறகு கேட்டார். நான் அவர் கேட்ட விலைக்கு அதை நிறுக்காது மதிப்புப் போட்டுக் கொடுத்து விட்டுக் காசை வாங்கினேன். வாங்கிய பணத்திலே அரைவாசிக் காசை ஆனந்தனுக்குக் கொடுத்தேன்.
கடலை பிடுங்கிய நிலமெல்லாம் வெறுமையாக இருந்தது. பிடுங்கிய கடலைச் செடிகளை ஒரு பக்கத்தில் மலை போல குவித்துப் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்து நான் வெறுமை பட சிரித்தேன். சந்திரபாபு ஒரு சினிமாப படத்தில் பாடிய “ஒன்றுமே தெரியல்லே உலகத்திலே. என்னவோ நடக்குது மர்மாய் இருக்குது. - என்ற பாட்டு எனக்குத் தோதாக இருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். ஆனந்தனும் தோட்டச் செய்கையை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர் தோட்டத்தையே நம்பிச் சீவிப்பவர். என்னை விட அவருக்கு இன்னமும் கவலை அதிகம் இருக்கும், என்று நான் நினைத்தேன். நான் நினைத்ததை விட அவர் நன்றாக சோர்ந்து போய்த்தான் இருந்தார்.
அவர்: “காலையில் நாங்கள் இங்கயிருந்து வீட்டுக்குப் போக வெளிக்கிடுவம்” - என்று விட்டுப் போய் பொழுதுபட கொட்டிலில் படுத்து விட்டார்.
எனக்கோ - என்னத்துக்காக நான் இங்கே வந்தேன்? - இவ்வளவு நாளும் என்ன நான் செய்து கொண்டிருந்தேன்? - எனக்கு என்ன நடந்தது - இனி என்ன நான் செய்யப் போகிறன்? - என்று யோசித்தும் ஒரு அர்த்தமும் விளங்காத நிலையில் இருந்தது. மூளை மந்தமாக இருந்தது. நானும் கொட்டிலுக்குள் இருந்து யோசித்து விட்டுப் படுத்து விட்டேன்.
崇
நன்றாய் விடிந்த பிறகு மன - உடல் உளைச்சலோடு நான் நித்திரையால் எழுந்தேன். ஆனந்தன் மரக் குச்சு ஒன்றை வைத்துப் பல் தீட்டிக் கொண்டிருந்தார்.
நான் நித்திரையால் எழும்பியதைக் கண்டு விட்டு: " அண்ணை இனியென்னண்ண நாங்கள் இனி வீட்ட போக நடையைக் கட்டுவம்.” என்றார். ..ത്രിസ്ത്രി 104 ീക്രി

நானும் அவர் சொல்ல: ஒம் பேந்தென்ன இனி என்ன கிடக்கிங்க இதுக்குள்ள நிண்டு கொண்டிருக்க ? கெதியா வெளிக்கிடுவம்!” - என்றேன்.
"சாமான்கள் இப்பிடியே இதில கிடக்கட்டும் அண்ண! இதுகளைப் பேந்து நான் வண்டிலக் கொண்டு வந்து ஏத்துறன்! இப்பிடியே இப்ப நாங்க வெளிக்கிட்டு வீட்ட போவம் எங்களோட இந்த வேட்டை நாய்களும் நிக்குதுகள் தானே. அதால போகேய்க்க காட்டுக்கால ஏதாச்சும் பாத்துக் கொண்டு போவம் . இந்த நேரம் முயல் அல்லாட்டி உடும்பு கட்டாயம் சந்திக்கும். அங்க போனா இண்டைக்காகிலும் கொண்டு போறதை வைச்சு வீட்டில நல்ல கறி சமைச் செண்டாலும் தின்னலாம்."அவர் சொல்ல நானும் அதற்கு ஒம்பட்டேன். நாய்களை உடனே ஆனந்தன் முன்னால் விரட்டிக் கலைத்து விட்டு காட்டுக்குள் போக வெளிக்கிட்டார். நான் ஆனந்தனுக்குப் பின்னால் நடந்தேன். தவிட்டை கரம்பை ஆரை மரத்துக் காட்டுக்குள்ளாலே நாங்கள் விலத்திப் போக, பெருமரக் காடு வெளிப்பட்டது. நாய்கள் இரண்டும் காட்டுக்குள் மூர்க்கமாக மோப்பம் பிடித்துக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தன. காய்ந்த இலைச் சருகுப் படைகளுக்கு மேலே கால் வைத்து நடக்கும் போது பூச்சிகள், பாம்புகள் கடித்து விடுமோ என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது. குருவிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. குரங்குகளின் பாய்ச்சல் சத்தங்களும் பெரிய மரங்களின் மேலே இருந்து கேட்டன. தேரைகள் குதித்தோடி இலைகளுக்குள் பதுங்கிக் கொண்டன. சூரிய ஒளியைக் காணாத நிழல் மூட்டமாய் அந்தக் காட்டுக்குள்ளே நாங்கள் நடந்து போகின்ற இடங்கள் இருந்தன.
ஆனந்தனுக்கு அந்தக் காடு பழக்கம். அவர் விறுவிறுவென்று, தடிகளைக் கொடிகளை விலக்கி ஊடறுத்து உள்ளே நடந்து கொண்டிருந்தார். காடு அவருக்கு, அப்படி நுழைந்து போக விலகிக் கொடுப்பது மாதிரி பார்க்கவும் எனக்கு இருந்தது. நான் அவருக்கு ஈடுகொடுத்து மிகவும் சிரமத்துடன் அதற்குள்ளே நடந்து கொண்டிருந்தேன். நாய்கள் இரண்டும் முதன் முதல் அந்தக் காட்டுக்குள்ளே ஒரு உடும்பை மறித்தன. அந்த உடும்பு தப்பி ஓடப்பார்த்தது. ஆனாலும் அந்த இரண்டு நாய்களில் ஒரு நாய், அதை ஒடிப் போய் வாயால் கவ்விப் பிடித்து நிலத்திலடித்தது. இலைச் சருகுகள் அங்கு மிங்கும் பறந்தன. ஆனந்தன் உடனே அந்த நாயின் அருகே கையில் இருந்த கம்பை ஓங்கியபடி ஒடிப் போனார். அவர் கிட்டவாக வரவும் நாய் உடனே உடும்பை வாயிலிருந்து கீழே போட்டது. உடும்புக்கு ஒரேயொரு அடி முதுகில் உறைப்பாகப் போட்டார் ஆனந்தன். அடிவாங்கிய பிறகு உடும்பால் ஒட முடியவில்லை. கிடந்து அரக்கியது.
ஆனந்தன் உடும்பின் தலையை விரல்களால் பிடித்து நிலத்தோடு வைத்து அழுத்திக் கொண்டு - அருகில் கிடந்த கொடித்தண்டை
ളുഞ്ഞി 105

Page 62
மறுகையால் பிடித்து இழுத்தறுத்து எடுத்து - உடும்பின் வாலை தலையடிக்கு வளைத்து அந்தக் கொடியால் கட்டினார்.
கொடித்தண்டில் கட்டிய உடும்பை என்னிடத்தில் பிறகு தந்தார். நான் உடும்பை ஒரு கையில் தூக்கிக் கொண்டு, ஆனந்தன் முன்னால் நடக்க அவருக்குப் பின்னால் போனேன். நாய்கள் முன்போல மோப்பம் பிடித்தபடி காட்டுக்குள் அலைந்தவாறு போய்க் கொண்டிருந்தன. அந்த ஒரு உடும்பு அகப்பட்டதற்குப் பிறகு வேறு ஒரு மிருகம் கூட எங்கள் கண்களுக்கு அகப்படவில்லை. ஆனாலும் ஒரு காட்டுக் கோழியொன்று தட்டுப்பட்டது. அதுவும் நாய் துரத்தப் பறந்து விட்டது. எனக்கு தாகம் எடுத்தது. "தண்ணீர் உடாய்க்குது” என்று ஆனந்தனுக்கு நான் சொன்னேன். அவர் ஒரு கொடியை அவ்விடங்களில் தேடிப்பிடித்து வெட்டினார். அந்தக் கொடியின் உள்ளே உள்ள நரம்புகளிலெல்லாம் தண்ணீர் நிறைந்திருந்தது. நான் வெட்டுப் பக்கத்தில் வாய் வைக்க அவர் கொடியை உயர்த்திப் பிடித்தார். ருசியான தண்ணீர் குடித்தேன். அவரும் கண்கவர் சிவப்புப் பூக்கள் நிரம்பியிருந்த படர்கொடிக்குப் பக்கத்தில் இன்னொரு சவண்ட கொடியை வெட்டி தண்ணீர் குடித்தார். பிறகு நாங்கள் நடந்தோம். கரை தெரியாக் காடு, நாங்கள் நடக்க நடக்க நீண்டு கொண்டிருந்தது. இந்தக் காடு விட்டுப் போய் எப்போது வெளியான இடம் வரும் என்று எனக்கு அவதியாயிருந்தது. காற்றே வீசாத வெட்கையான அந்த அடர்காட்டுக்குள் இருந்து எப்போது நான் வெளியே வெளிக்கிடுவேன்? என்று எனக்கு அந்தரமாயிருந்தது. அங்கே காட்டுக்குள் தெரிந்த ஒரு பெரிய மரத்தை குறிப்பாய் வைத்துக் கொண்டு ' எங்களுக்கு றோட்டுப்பாதை கிட்ட வந்திட்டுது.” என்று சொன்னார் ஆனந்தன். எனக்கு அதைக் கேட்கவும் முகத்தில் காற்றுப் பட்டது மாதிரி ஒரு சுகமாக இருந்தது. வீட்டுக்கு இனிப் போய் நான் சேரப்போகிறேன் என்கிற மகிழ்ச்சி, ஒரு பக்கம் மனத்தில் எழுந்தது. என்றாலும் வீட்டுக்கு ஒரு பெரிய தொழிலைச் செய்தும், வெறுங்கையுடன் போகிறேனே என்று நான் பிறகு கவலைப்பட்டேன். “விற்ற கடலையில் கொஞ்சத்தையாவது வீட்டுக்கு அவித்துச் சாப்பிடவென்று கொண்டு போய் இருக்கலாம். மகளுக்கு அவித்த உப்பிட்ட வேர்க் கடலையென்றால் அபாரமான விருப்பம். எனக்கொரு அறிவுமில்லை” - என்றதாய் நினைத்தேன்.
காடு கடந்து வெளிப்பட்டு வந்து விட்டோம். காட்டு மணத்திலும் வெதுவெதுப்பிலும் நடந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நான் - காற்றின் சுகத்தை அனுபவித்தேன். தெளிவடைந்திருந்த ஆகாயத்தைப் பார்த்தபடி உடும்பையும் கையில் கொண்டு ஆனந்தனுக்குப் பிறகாலே நான் நடந்தேன். வீதியில் கொஞ்ச தூரம் நடந்து போன பின்பு ஆனந்தன் ஒரு இடத்தில் நின்றார். அவர் நின்ற இடத்துக்குப் பக்கத்திலே அந்த வீதியோடு பொருந்திய ஒரு கொடிப்பாதை தெரிந்தது. அந்தப் பாதை
தி.பி.அருள%ந்தச் 106 அததி

வழியாக எச்சில் துப்பியபடியும் சுருட்டுப் புகை விட்ட படியும் பலபேர் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் அந்த வழியாலே சுறுக்காய் நடந்து உள்ளே போய்க் கொண்டுமிருந்தார்கள்.
“முருகா. நான் சரியாக் களைச்சுப் போனன் அண்ண. அந்தக் கள்ளுக் கொட்டிலில போய் கொஞ்சம் கள்ளுத் தண்ணி தாகத்துக்குக் குடிச்சிட்டு வாறன். நீங்களும் வாறியளோ..?”
"இல்ல வேண்டாம்! நீங்க போய் குடிச்சிட்டு வாங்கோ.” என்றேன் நான்.
" அப்ப நீங்க..? ”
" நான் இதில நிக்கிறன். ”
th....... ” - என்று விட்டு அவர் நான் கையில் வைத்திருந்த உடும்பைப் பார்த்தார்.
"உதைக் கையில வைச்சுக் கொண்டிருக்க . போற வாற
ஆக்கள் உங்கட கையையும் உங்களையும் பாக்க உங்களுக்கு அது
ஒரு மாதியாயிருக்கும். "அப்ப அந்தப் பத்தையடியில உடும்ப மறைவாப் போட்டு
விடுறனுங்கோ.?”
* அச்சோ உடும்பு உருவு தடத்தாலயம் உருவிக் கொண்டு
தப்பி ஓடீடும். கெட்ட சாமான்!” V"Y,
"அப்ப என்ன செய்ய. ?” “கொண்டாங்க இங்க என்ர கையில் அதை . நான் அதை
போற கொட்டிலில போட்டிட்டு உவரை வடிவாப் பாத்துக் கொண்டபடி கள்ளையும் குடிச்சிட்டுக் கொண்டாறன்.”
“சரி .” - என்று நான் உடும்பை அவரின் கையில் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டு கள்ளுக் கொட்டிலடிக்குப் போனார். நான் அதிலே போய் ஒரு மரத்துக்குக் கீழே நிழலுக்குள் நின்றேன். எங்களோடு வந்த வேட்டை நாய்களும், எங்கும் போகாது அதிலே நின்றன. நான் அதிலே வீதியின் கரையோரம் காய்ந்து நிற்கும் முள் மரங்களைப் பார்த்து விட்டு என்காலைக் குனிந்து பார்த்தேன். கால்களில் முள்கிழித்த சிறு கோடுகளும், சிறிய சதைக் கிழிவின் ரணப்பாடும் எனக்குத் தெரிந்தது - எரிந்தது! காற்று வீச கொஞ்சம் குணமாயிருந்தது! ஆனந்தன் போய் முப்பது நிமிடமளவில் திரும்பி வந்தார். நான் அவரைப் பார்த்தேன்! கீழே அவர் எச்சில் துப்பிக் கொண்டும் பொங்கிப் பொங்கி ஏப்பம் விட்டுக்கொண்டும் வந்தார். அவரின் கையைப் பார்த்தேன்! வெறுங்கையாக வந்தார்.
“உடும்பு எங்கே? ” - என்று கேட்டேன். " அதென்ன ஒரு உடும்பு இறைச்சியே இல்லாத சின்னவழுவல்குட்டி! ஒருத்தர் கொட்டிலில இருந்து கேட்டார். காசுக்குக் குடுத்திட்டன் கள்ளுச் செலவு அதோட போச்சு எல்லாம் போச்சு. இப்ப வெறுங்கையோட
தி.பி.அருாரத்தச் 107 ക്രി

Page 63
''
நாங்க போறம் . - என்றார்.
நான் அவர் இப்படிச் சொன்ன பிறகு அந்த உடும்புக் கதைபற்றி ஒரு பேச்சும் அவரிடம் தொடரவில்லை. மெளனமாக நடக்கத் தொடங்கினேன். நாய்களும் எங்களோடு வந்து கொண்டிருந்தன.
"இந்த நாய்களை எங்களோட சேத்து அங்க ஊருக்குள்ள கூட்டிக் கொண்டு போகப்பிடாது ஊருக்குள்ள வேட்ட நாயளைக் கூட்டிக்கொண்டு கையில ஒண்டும் இல்லாமப் போனா பெரிய வெக்கக் கேடு.! வேட்டைக்கு நாயளோட போயிற்று வெறுங்கையோட வாறாங்கள் எண்டு சொல்லி பிறகு எல்லாரும் பழிப்பாங்கள்.
"அதுக்கென்ன இப்ப நாங்கள் செய்யிறது.? சொன்னதுக்கு நான் கேட்டேன்.
“என்னதான் செய்யிறது.? நாயளை எங்களுக்கு முன்னால வீட்ட போகக் கலைச்சுப் போட்டு நாங்கள் ஆறுதலாப் பின்னால பிறகு
- என்று அவர்
போவம்.!” - என்று அவர் சொன்னார்.
ஆனந்தன் கையிலே சின்னச் சின்னக் கல்லை எடுத்து வைத்துக்கொண்டு "ஆச் .ஆ . வீட்ட ஒடு வீட்ட ஒடு.” - என்று
சொல்லியபடி அந்த நாய்களுக்கு கல் எறிந்து கலைத்தார்.
அவரது செய்கை முன்னமும் அந்த நாய்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் என்பது போலத்தான் எனக்குப் பார்க்கத் தெரிந்தது. அந்த நாய்களின் அப்போதைய அந்த ஓட்டம் அதை எனக்கு நிரூபித்துக் காட்டியது. நாய்கள் நாங்கள் நின்ற இடத்திலிருந்து அந்த நேர் வீதியின் தொலைதூரமாகப் போனதன் பின்பு, நாங்கள் இருவரும் நடக்கத் தொடங்கினோம்.
"காதற்ற ஊசியும் வராது காணும் கடைவழிக்கே” என்று எனக்குக் கூறியபடி ஆனந்தன் நடந்து கொண்டிருந்தார். எனக்கு நடந்து கொண்டிருக்க வயிற்றுக்குள்ளே சுள்கள்ளென்று குத்தியது. தோட்டம் செய்ய ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குப் பிறகிருந்து இந்தக் குத்து வலி எனக்கு ஆரம்பித்திருந்தது.
அது தான் எனக்கு பிறகு உணர் டான எல்லா வருத்தங்களுக்கெல்லாம் தொடக்கம் அந்தத் தோட்டச் செய்கைக்குப்போய் நான் வாங்கிக் கொண்டு வந்த வருத்தம், கொஞ்சம் கொஞ்சமாக நான் அங்கு இருந்தபோது என் உடலில் உரத்துக் கொண்டு வந்தது. அந்த வீட்டில் போய்ச் சேர்ந்த கொஞ்ச நாளில் நரம்புகள் வலுவிழந்து, எலும்புக்கும் தசைக்கும் உள்ள உறவு சரியாக இல்லாமல் ஆகிவிட்டது. நடந்தால் தள்ளாடத் தொடங்கியது எப்போதும் படுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தெளிவாக என்னால் ஒருவரோடு கதைக்கவும் முடியவில்லை. மூச்சுக் குழலில், குரல் நாண்களில் கோளாறும் ஏற்பட்டு விட்டது. அப்படித்தான் நான் தளர்ந்து போனேன். மனதில் பல வகைக் குழப்பங்கள். உடல் ஒத்துழைப்பு வரவரக் குறைந்து
தி.சி.அருாரத்தச் 108 മീകി

விட்டது. அதனால் எனக்கு வேண்டாம் அந்த ஊர் - என்ற மாதிரி வெறுப்பு வந்து விட்டது.
இடம் பெயர்ந்து வன்னியில் இருந்து அனேகர் அப்பொழுது வவுனியாவிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து நானும் ஒரு முடிவுக்குவந்து என் குடும்பத்துடன் வவுனியாவுக்குப்போக, அங்கே இராணுவ முகாமின் முன்னால் நின்று தூங்கினேன். ஒருநாள் எங்களை அவர்கள் உள்ளுக்குப் போக அனுமதித்தார்கள். உள்ளே வவுனியாவிற்குள் சென்றநான் என் குடும்பத்தாருடன் கோழிக் கூட்டுக்காம்பில் காய்ந்துகிடந்து, கொழம்புக்குப் போகப் பாஸ் எடுத்துக் கொண்டு ஒருவாறு அவர்களோடு இங்கே வந்து சேர்ந்தேன். போர்ச் சூழல் மனிதனை கிழத்தனத்துக்குப் போக பயிற்று விக்கிறது என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. நாற்பது வயதில் ஒரு மனிதனுக்கு தள்ளாட்டம் வந்து விடுமா? என்று யாராவது கேட்டால் - போர் நடக்கிற எங்களது இடங்களில் இருந்தால் அது வந்து விடுமென்றே அமைதியாக இருந்து கொண்டு நான் சொல்வேன். இந்த எனது அமைதி சொல்லப் போனால் ஒரு போலித்தனமானதுதான்! இதையெல்லாம் நான் சொல்லும்போது நியாயப்படி பார்த்தால் எனக்குச் சரியான கோபம் பொத்துக் கொண்டு வரவேண்டும். ஆனாலும் எனக்குள்ள இரத்த அழுத்த நோய் குறித்த எச்சரிக்கையில் என்னவோ ஒரு வாறாக அந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டுதான் நான் சாந்தியாக இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. எனக்குள்ள சில நோய்களை இன்று முற்றாகக் குணப்படுத்தவே முடியாத நிலைமையும் சேர்ந்து வந்து விட்டது.
“கடவுளே . இங்க வந்து என்ர மகள ஒருவன்ரகையில் பிடிச்சுக் குடுத்திட்டதே இண்டைக்கு எனக்குப் பெரிய நிம்மதியாயிருக்கு. .! என்ர மகள அப்பிடி நான் ஒருவரின்ர கையில பிடிச்சுக் குடுக்குமட்டும் இந்த உடம்பில உயிர் உதிராம நான் பார்த்துக் கொண்டதே எனக்குப் பெரியபாடுதான். எண்டாலும் அந்த வருத்தங்களளோட வதைபட்டுக் கொண்டு இண்டளவுக்கும் நான் சீவிச்சுக்கொண்டுதானிருக்கிறன்..! இதெல்லாம் அந்தக் கடவுளின்ட கிருபைதான்!.
நான், உடலின் சுமையைப் பூரணமாக இந்த உலகத்துக்கு ஒப்படைத்துவிட்டு, எப்ப வானத்தைப் போய்ச் சேருவனோ அது எனக்கு ஒண்டும் சரியாத் தெரியாது! அதெல்லாம் என்னைப் படைத்த அந்தக்கடவுள் ஒருவருக்கு மட்டுந்தான் வெட்ட வெளிச்சம்! அதனால் ன்றைய என்னுடைய நிலைமை எப்போதும் பிரார்த்தனைக்கு உரியது என்றுதான், இன்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
(ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் 10 ஜூன் 2007 தொடங்கி சில வாரங்கள் தொடராக வெளிவந்தகதை)
தி.சி.அதாரத்தச் 109
ത്രി
然°
&

Page 64
ஒரிகுறுமி ஒரிகுரியூரி
தே யிலைத் தோட்டத்துப் பகுதி அன்று ஒரு திருவிழாவாக இருந்தது. புரட்டாசி மாதம் கடைசிச் செவ்வாய் அம்மனுக்குகந்த நாள். அதனால் அந்த லாயம் - வீடுகளுக்கு அருகே உள்ள பத்திரகாளி " அம்மன் கோயிலில் பின்னேரம் பொங்கல் நடந்தது. காளி அம்மனுக்குக் காதோலை, கறுகமணி வைத்துப் பூசையாகி நைவேத்தியம் படைத்ததற்குப் பிறகு, கோயிலுக்கு வந்திருந்த எல்லாருக்கும் பொங்கல் உண்ணக் கிடைத்தது. பொங்கலை வாங்கித்தின்று விட்டு சிறு பிள்ளைகள் கைகளை நக்கினர். அந்த இனிப்புப் பொங் கலைத் தின்றதில் பிள்ளைகளுக்கெல்லாம் விரைவில் தூக்கக் கலக்கம் வந்து விட்டது. அவர்களெல்லாம் நேரத்தோடு தங்களது லாயம் வீடுகளிலே, இரவு கிழிந்த பாய்களிலே நிறைந்த வயிற்றுடன் குறுகி முடங்கிப் படுத்துக் குறட்டை விட்டு உறங்கத் தொடங்கி விட்டார்கள்.
அம்மன் கோயிலிலிருந்து, உடுக்கை ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. உடுக்கையின் ஓங்காரத் தொனி அதிகமாகி ஜாருகமகம்' போன்ற ஒரு நாதம் வர வர மேலெழும்பியபடி இருந்தது. அந்தத் தோட்டத்துப் பக்கம் உள்ள வீடுகளில் இருந்தவர்க்கெல்லாம் அந்த உடுக்கின் ஒலி, கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது.
கோயில் பக்கமிருந்து பட்டாசு வெடிகளும் கேட்டுக் கொண்டிருந்தன. பலருக்கு அதனால் தூக்கம் தொலைந்து போனது வருடம் ஒரு முறை வரும்
.dി.eിത്രസ്ത്രക്രി മിക്രി
 

கோயில் திருவிழா என்பதால், பல ஆண்களுக்கு சாராயம் குடித்துப் போதை ஏறியிருந்தது. அவர்களிற் சிலர் வீட்டிலே தங்கள் மனைவிமாரோடு சண்டை போட்டுக் கொண்டிருந்திார்கள்
அங்கே உள்ள பல ஆண்களின் நிலைமை இவ்வாறாக இருந்தாலும், கோயில் திருவிழா ஆரம்பமான காலமிருந்து "மாரிமுத்து” சாராயத்தை வாயிலே வைக்காமல் இருந்தான். மச்சம் மாமிசம் சாப்பிடாமல் அவன் விரதமும் காத்திருந்தான். அவன் விரதம் காத்தலுக்கு முக்கிய ஒரு காரணமிருந்தது.
தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்கள் இருவர், அவன் கண்காண இருந்தாற் போல அங்கே திடீர்ப் பணக்காரர்கள் ஆகியிருந்தார்கள். அந்த இருவரும் தோட்டத்து வேலையை விட்டு விட்டு இரத்தினக்கல் தோண்டியெடுக்கப் போனார்கள். அவர்களை அதிஷ்ட தேவதையானவள் முகம் பார்த்தாள். அவர்களுக்கு உயிர் மாதிரியுள்ள விலை மதிக்க முடியாத இரத்தினக்கற்கள் இரண்டு கிடைத்தன.
அவர்களுக்கு அந்த இரத்தினக் கற்கள் கிடைக்கப் பெற்றதற்குப் பிறகு, சாசுவதமாக தன்னுடைய தேடியலைதலின் பின்னணியில் மாரிமுத்துவும் இரண்டு இரத்தினக்கற்களை மாணிக்க கங்கைக் கரையில் இருக்கக் கனவு கண்டான். 9a
அந்தக் கனவு அவன் உறக்கத்திலல்ல! விழிப்பு நிலையில்! அப்படி அவன் கனவு காண்பதென்பது அதற்குப் பிற்பாடும் எந்நேரமும் அவனைத் தொடர்ந்தது. இதனால் கொஞ்ச நாளாக இரத்தினக் கல் தோண்டியெடுக்கிற பேராசை தன்னிடத்தில் கொண்டு, அவன் பைத்தியம் பிடித்த அளவிலும் அலைந்து கொண்டு திரிந்தான். தான் செய்து வந்த தேயிலைத் தோட்டத்து வேலை இதனால் அவனுக்குக் கசந்து விட்டது. வாழ் நாள் முழுவதும் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து என்ன பயனைத்தான் நாங்கள் கண்டோம்? இங்கே மாடு மாதிரி நாளாந்தம் கிடந்து உழைத்தும் ஒழுங்காக வயிற்றுக்குச் சாப்பிட எங்கள் குடும்பத்திலுள்ளவர்களுக்குக் கிடைக்கிறதா? சதா காலமும் இந்தக் கோதுமை மா ரொட்டியும் சம்பலும் தான் எங்களுக்குச் சாப்பாடென்று தலையில் எங்களுக்கு எழுதி வைத்த ஒரு விதியா..? எங்களுக்கு இந்தத் தோட்டத்தில் கிடந்து பாடுபட்டு உழைத்து என்னதான் ஒரு முன்னேற்றம் வந்திருக்கிறது? - சரி வேறு எந்த முன்னேற்றமும் தான் எங்களுக்கு வேண்டாமென்று அவற்றை ஒரு பக்கம் வைத்து விடுவோம்! ஆனாலும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையாவது வாங்கிக்கொள்ள, நாங்கள் பெறுகின்ற கூலிப் பணத்தினால் முடிகிறதா? வீட்டிலே படுக்க ஒழுங்கான பாய் இல்லை . பிள்ளை குட்டிகளுக்குப் போட்டுக் கொள்ள நல்ல உடுதுணியில்லை
தி.சி.அருாரத்தச் 111 ക്രി

Page 65
- இப்படி நசுக்கிப் பிழியும் வறுமையே வாழ்நாளெல்லாம் எங்களுக்கு வாழ்க்கையென்றால், இந்த வாழ்க்கையை நாங்கள் வாழ்கிறதில் என்ன அர்த்தம்தான் எங்களுக்கு இருக்கப் போகிறது? ’
இப்படியெல்லாம் மாரிமுத்து நினைத்த வேளை, அவனுக்குத் தேயிலைத் தோட்டத்திலே தங்களைப் போன்ற ஆண்களையும் பெண்களையும் அடிமைகள் போல நடத்தி வேலை வேலையென்று உயிரையே வாங்கி விடுகிற தோட்டத்துத் துரைமார்களிலும், கண்காணிமார்களிலும், ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
"சம்பளம் என்று ஒரு சிறிய தொகைப் பணத்தை மட்டும் மாதா மாதம் தொழிலாளர்களான எங்களுக்கு நீட்டி அளந்து விட்டு, இந்தத் தேயிலைத் தோட்டத்தில் எங்களைப் போட்டு எப்படியெல்லாம் அவர்கள் வேலை வாங்குகிறார்கள்.
"தொரே வருவாரு. வந்து ஓங்க வேலங்களேயெல்லாம் ஒரு வாட்டி பாத்திக் கிட்டுத்தான் போய்க்கிவாரு. அப்புறமா என்ன ஒண்ணுக்குமே கொறே நெச்சுப்பிட வேணாம். ஓங்களுக்கு கரெட்டா நானு சொல்லிப்புட்டேன்.”
என்பாரு கங்காணி!
அவர் சொல்லிவிட்டதுக்கு எதிர் வார்த்தை ஆராவது கதைக்கிறார்களா? எல்லோரும் ஈச்ச முள்ளால் வாயைத் தைத்துப் போட்டது மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு, அவர் சொல்லுகின்ற வேலைகளையெல்லாம் மறுக்காமல் பிறகு செய்து கொண்டு தானே இருப்பார்கள்?
காலையில் நாங்கள் வேலைக்குப் போனால் 375 மரத்துக்கு நாங்கள் கவாத்து வெட்ட வேண்டுமென்று அவர் வேலை வைப்பார். அந்த வேலைக்குப் பிற்பாடு பத்து அடிநீளமுள்ள கம்பாலே பத்துத்தரம் அளந்து கோடு கீறிய தரையிலே கான் வெட்ட வேணும். அந்தக் கான் வெட்டுகிற வேலையை அடுத்து மண்ணை மூன்று நிரைக்குக் கீழே போட வேணும். அதற்குப் பிறகு கங்கு குத்தி அள்ளியாக வேணும். இந்த வேலைகளை விட தேயிலைச் செடிகளுக்கு உரம் போடுவது - மருந்து அடிப்பது - செடிகளுக்குப் பாதுகாவல் செய்வது என்று ஒரு நூறாயிரம் வேலை நாங்கள் செய்யச் செய்ய கங்காணி அதிலே நின்று கொண்டு ஒவ்வொருநாளும்; நாகபாம்பு கொத்திக் கொத்திப் பிடுங்குகிற மாதிரி சொல்லிக் கொண்டுதானே இருப்பார். தேயிலைத் தேசத்தில் சில காலங்களில் பனி பலமாக விழ ஆரம்பிக்கும் சில அடி தூரத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று தெரியாமல் பனிப் புகார் மூடி நிற்கும்! 'வாடை தேயிலைத் தோட்டத்தில் இறங்கி வேலை செய்கின்றவர்களை நடுக்கும் உடுத்திருக்கும் துணிகள் கூட அவர்களுக்கு நனைந்து குளிர்ந்து விடும்! கீழ்த்தாடைப் பற்கள் மேற்பற்களோடு
தி.சி.அருாந்ைதச் 12
ീമി

கணக்கில்லாத வேகத்தில் அடித்துக் கொள்ளும்! இந்தக் குளிருக்குள்ளேயெல்லாம் தேயிலைக் கொழுந்து கிள்ளிக் கிள்ளியே உடம்பு தேய்ந்து விட்ட பெண்களெல்லாம் நின்று, தங்கள் கொழுந்து பறிக்கும் வேலையைச் செய்து கொண்டுதானிருப்பார்கள். கொழுந்து கொய்யும் போது தேயிலையின் இலைவாசமும், மழை வாசமும், பிடிக்க நனைந்து கொண்டு, துருதுருவென்று சுறுசுறுப்பாக வேலை பார்ப்பது அவர்களுக்கென்றால் பழக்கமாகிவிட்டது.
என்ன செய்வது? கூலி தமக்குக் குறைவென்றாலும் இந்த வேலையை விட்டு விட்டால் அவர்களுக்கு வேறு என்ன வேலைதான் செய்யக் கிடைக்கும்? இந்தப் பெண்களுக்கு தோட்டத்தை விட்டுப் போனால் வேறு ஒரு வேலை எங்கும் போய் பெற்றுக் கொள்ள முடியாத நிலை. அதற்கு வேண்டுமான தகுதி ஒன்றும் இவர்களிடம் இல்லை. கல்வி அறிவில்லாத இவர்களில் பலரை எங்காவது வீட்டு வேலைக்காகத்தான் ஆருமே கேட்டு அழைப்பார்கள். அந்த வேலைகளுக்கென்று இவர்கள் சென்றால், அவர்களின் குடும்ப வாழ்க்கையே பிறகு முற்றாக நாறிவிடும். தன் மனைவி செலுவம்மா தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் வேலைக்குப் போவதையிட்டு அதுவும் மாரிமுத்து விற்கு நினைக்கக் கவலையாயிருந்தது. தேயிலைகொய்யும் வேலையுடன் அவள் தன் தொழிலை பிறகு நிறுத்துவதில்லை. இன்னும் அதைவிட வேறு வேலைகளையும் தன் வீட்டுத் தேவைகருதி, அவள் செய்து கொண்டுதான் இருந்தாள். இந்தக் குடும்பத்திற்காக அவள் பாடுபட்டு ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். 'வீட்டிலே ஒரு நல்ல சாதி பசுமாடு வாங்கிக் கட்டினால், அதிலிருந்து பால் கிடைக்கும். அந்தப் பாலை விற்கலாம்! பணம் பண்ணலாம்! வீட்டிலும் உள்ளவர்கள் நாங்கள் வயிறு குளிர பால் குடிக்கலாம்! தயிர் சாப்பிடலாம்!’ என்று ஒவ்வொரு நாளும் இதே கதைதான், தோட்டத்தால் இருந்து வீட்டுக்கு வந்த கையோடு அவளுக்கு.
அந்தக் கதை அவள் வாயிலிருந்து வரவும், அதற்கு ஒரு காரணமுண்டு. வீட்டிலே, அவள்தான் ஒரு பசுமாட்டை வாங்கிக் கட்டி வளர்க்க முடியாது போய் விட்டாலும், அடுத்த லாயத்தில் குடியிருக்கும், வேலு வீட்டு சம்சாரம் வளர்க்கும் பசு மாட்டிற்கு நாளாந்தம் அவள்தான் புல் லுக் கொண்டு வந்து போடுவாள். விடிய முன்னே தொலைக்காட்டிலிருந்து சுமக்க முடியாத ஒரு கட்டுப்புல் அறுத்துக் கொண்டுவந்து விட்டுத்தான், அவளுக்கு வேறு அடுத்த சோலி. ரொட்டி தட்டி கல்லுக்குப் போடுவதோ - மற்றும்படியுள்ள வீட்டு வேலைகள் பலதும் பார்ப்பதோ - தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கென்று வெளிக்கிடுவதோ - என்று எல்லாமே அந்த வேலை முடிந்த பிற்பாடுதான் அவள் பார்ப்பாள். அவள் தன் மாட்டுக்குப் புல்லுக் கொண்டு வந்து
தி.பி.அருாரணத்தர் 113 Møé

Page 66
போடும் வேலைக்காக, பால் கறக்கும் போது ஒரு போத்தல் பால்' வேலு சம்சாரம் செலுவம்மாவிற்குக் கொடுப்பாள். அதை வாங்கிக் கொண்டு தன் வீட்டுக்குப் போனால் - "இந்தப் பாலுக்கு ஒழுங்கான தேயிலைத்தூள் போட்டுக் குடிக்க எங்களுக்கு வகையில்லையே? . என்று செலுவம்மாவிற்கு அதனால் ஒரு குறை இருக்கும்.
தேயிலைத் தோட்டத்தில் வேலை என்று எங்களுக்கு ஒரு பெயர் மட்டும் உண்டு. ஆனால் வீட்டிலே தேநீர் போட்டுக் குடிக்க நல்ல தரமான தேயிலைத் தூள் எப்போதுமே எங்களிடம் இல்லையே.? ' . என்று அவள் கவலைப்பட்டுக் கொள்வாள்.
கொழுந்தைப் பறித்து கூடையில் போட்டு ஸ்டோருக்கு அதைக் கொண்டு போகும் போது, கொஞ்சம் கொழுந்திலைகளை தனது தேயிலைத் தேவைக்காகவென்று வீட்டிலே செலுவம்மா’ தருணம் பார்த்து அள்ளி வைத்து விட்டு சில வேளைகளில் செல்வாள். பிறகு அங்கிருந்து அவள் வேலை முடிந்து வந்தவுடனே, இதைப் போட்டு உரலில் இடித்து, அதை வெயிலில் பிறகு காய வைத்து, தாச்சியில் போட்டு வறுத்தெடுத்து வாசம் பிறந்த உடனே இறக்கி அவள் வைத்துக் கொள்வாள். இதைப் பத்து நாட்களுக்கு மட்டும் வைத்து அவள் வீட்டுத் தேவைக்கு தேநீருக்காகப் பாவிக்கலாம்.
வங்கடி' - என்ற இந்த வீட்டுத் தயாரிப்புத் தேயிலையைக் குடித்துக் குடித்து செலுவம்மாவின் மகள் நங்கைக்கும் அது வர வர வெறுத்துக் கொண்டே வந்தது.
அவளுக்கு மாறாத சாயம் தரும் முதல் தரமான தேயிலைத் தூள் போட்டு கொஞ்ச நாட்களுக்கு "தேநீர்’ குடிக்கவென்று ஆசையோவென்றால் அது அவளிடத்திலிருக்கும் விபரிக்க முடியாத அடக்க முடியாத ஆசை.
செலுவம்மாவுக்கும் மாரிமுத்துவிற்கும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென்று இவள் நங்கை’ ஒருத்தி மட்டும்தான் செல்லப்பிள்ளை. ஆனாலும் அவள் பிறக்கும் போது வீட்டில் விளக்கற்ற வெறுமையான ஒரு வறுமை நிலை தான் மாரிமுத்துவுக்கும் இருந்தது. அந்த வறுமையிலும் நங்கை’ பிறந்து தேயிலைச் செடிபோல பொசு பொசுவென்று பிறகு வளர்ந்தாள். உடல் தகதகவென வளர்ச்சியடைந்து, பதின்மூன்று வயதிலே அவள் பூங்கொடி மாதிரி பசேலென்று மலர்ந்து கொட்டினாள். அந்த லாயம் வீடுகளிலே உள்ள எல்லாப் பெண்பிள்ளைகளுக்கு முன், கண்கரிக்க வளர்ந்து குதிர்ந்து போன அவளைக் காண்பவர்களெல்லாம், தம்புருவங்கள் புல்லரிக்கப் பார்த்து விட்டு:
"அம்மன் செல கணக்கா அப்புடீன்னு ஒரு வார்ப்பு இவளு.
وو
தேவத கணக்கா அம்புட்டு ஒரு லட்செணொம். என்று தங்களுக்குள்
്.dി.eിത്രസ്ത്രക്രി 14 ീകൃി

அவளைப் பற்றி பேசிக் கொள்ளத் தலைப்பட்டார்கள். செலுவம்மா தன் மகள் வயசுக்கு வந்ததோடு கடன உடன வாங்கி மகளுக்கு நீல நிறத்தில் பட்டுப் பாவாடை வாங்கிக் கட்டி, பட்டுத் தாவணியும் போட்டு விட்டிருந்தாள். நங்கை தன் கனிந்த முகத்தில் பவுடரிட்டுக் கொண்டு புதுப்பாவாடையுடனும் தாவணியுடனும் மான்’ போல அங்குமிங்குமாக ஒடித் திரிந்தாள்.
தங்களுக்கு ஒரேயொரு பிள்ளை நங்கைதான் என்று கண்டு கொண்டதன் பின்பு, அவளுக்குப் பெரிசாகச் செல்லம் கொடுத்து எட்டாம் வகுப்புடன் அவளது பள்ளிப் படிப்பையும் நிறுத்தி விட்டான் 'மாரிமுத்து' அங்கேயுள்ள தோட்டத்தொழிலாளர் குடும்பங்களிலே, வயது வந்த பெண்களெல்லாம் பிறகு தேயிலைத் தோட்டத்திலே கொழுந்து கொய்யும் வேலைக்குப் போக ஆரம்பித்து விடுவார்கள். நங்கையும் இப்போது அதற்குத் தகுதியானவள். "தோட்டத்து வேலைக்கு அவள இனிமேலாட்டி நீ விட்டுக்கோயேண்டீ.?” - என்று கழுத்தும் காதும் நிர்வாணமான பல ஏழைப் பெண்கள் செலுவம்மாவிடம் கூறியும், செலுவம்மா அவர்கள் கூற்றை முற்றாக நிராகரித்து விட்டாள். மாரிமுத்துவுக்கோ, அவர்களெல்லாம் அப்படிச் சொன்னதைப் பிறகு செலுவம்மா' வாயால் கேட்டு, கேந்தி விஷம் போல தலையடிக்கு ஏறிவிட்டது. ஒரு நாள் "லாயம் பக்கம் பெரிய ரகளை ஒன்றை எல்லாரோடும் அவன் எடுத்துவிட்டான். அந்தக் கதையை எடுத்த பெண்களெல்லாம் இவன் எடுத்த பெரிய ரகளையிலே வெருண்டு போய் - "நாங்கெல்லாம் அப்புடீண்ணு ஏதாச்சுமே செலுவம்மாத்தாய்க்கு சொல்லிக்கல மாரிமுத்து அண்ணே." . என்று தங்களுக்கு அவனிடம் அடிவாங்கிக் கொள்ளாத ஒரு குறையிலே, பின் வாங்கிய மாதிரி பிறகு வாயைப் பொத்திக் கொண்டு இருந்து விட்டார்கள்.
ஆனாலும் பதினாறு வயது நங்கைக்கு ஆகிய உடனே, வீட்டிலிருக்கும் தாவணித் தேவதையான அவளைப் பார்க்க, அவ்விடத்து வாலிபக் காளைகளெல்லாம் அவள் வீட்டு முன் வீதியாலே, சினிமாப் பாட்டு தம் உதடுகளில் குணுங்க, அடிக்கொரு தரம் அதால் போகவும் வரவும் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் பிசாசுக் கண்பார்வையெல்லாம், நங்கை வீட்டுப் படியாலே வழுக்கி, வீட்டுக்குள் துழாவிவிட்டு விலகிப் போய்க் கொண்டிருந்தன.
“கோயில் சிலை போல நல்ல கறுப்பில் குழைத்த மேனியென்றாலும் எல்லாரும் பார்த்து ஏங்கும் அளவிற்கு அப்பேர்ப்பட்டதோர் அழகியாக இருந்தாள் நங்கை, அவள் சிரித்தால் முகத்திலோர் அழகு விரியும். கெண்டை மீன்' போன்ற அவள் கண்களில் ஒளி துள்ளும். அவளுக்கிருக்கும் தாமரை மொட்டு வடிவம் போன்ற சன்னமான இடுப்பும் - நசிந்த இடுப்புக்கு மேல் நன்றாக முழுமையடைந்த
മ.dി.മിത്രസ്ത്രി 115
ീക്രി

Page 67
மார்புகளும் = உருண்டு திரண்டு கீழிறங்கும் தொடைகளும் - இப்படி வணைந்து வனைந்து கொடுத்த அவளது மோகன வசீகர உடலழகைக் காண அவர்களுக்கெல்லாம் மனசு "கிளு கிளு’ - வென்றிருந்தன. அவர்களெல்லாம் சதாகாலமும் அந்தப் பூப்பெய்திய பூவின் நினைவுகளுடன் இருந்து கொண்டிருந்தார்கள். ஆனால் நங்கையோ தன்னைப் பார்த்துப் பல் இளிக்கும் கறுத்த உடல் கண்ண பிரான்களையும், கருக்கு மீசைக்கார வாலிபர்களையும், கட்டான உடலானாலும் மொட்டத்தலைப் பூதம் போன்ற குட்டையான தோற்றம் கொண்டவர்களையும் கண்டு, வெறுப்பான பார்வையைத்தான் அவர்கள் மேல் அள்ளி வீசினாள்.
வீட்டு வாசலிலே அவள் நின்றால், அதாலே போகும் வாலிபர்களை ஒரே ஓர் எட்டு பின்புறமாக எடுத்து வைத்து, விலகி நின்றே அவள் பார்ப்பாள். அந்த மன்மத வாலிபர்கள் அவளது வீட்டு வாசல் பக்கமாகப் பார்த்து ஏங்கிக் கொண்டு போகும் போது, தன்னைப் பார்ப்பதற்காக இவர்களெல்லாம் இப்படியாய் ஏங்குகிறார்களே? ' . என்று அவளுக்கு மனதுக்குள் மத்தாப்பூ விரிந்து கொட்டும். அவர்கள் அவ்வாறு தன்னைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு கித்தாப்பு! அந்த இன்ப நினைவில் இரவு பாயில் படுக்கும் போதெல்லாம், அவள் தலையணையை அள்ளி அணைத்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். செலுவம்மாவிற்கு இந்த வாலிபர்களெல்லாம் தன் மகளிலே ‘கண்' கொழுக்கி போடுவது தெரியும். அந்தப் பயல்களின் சிரிப்பில் தன் மகள் விழுந்து ஏதும் கதை பிறந்திடுமென்றும் அவளுக்கு வேறு ஒரு பயமும் மனத்தில் இருந்தது. அவள் தான் வீட்டிலிருக்கும் போது, அனேகம் பொழுதுகள், வீட்டு வேலை தனக்கில்லாத வேளையெல்லாம் அந்த வாசலில் தான் குந்தி இருப்பாள்.
தான் வீட்டிலில்லாத வேளைகளிலும் இந்த வீட்டைப்பார்க்க அவர்களுக்கு ஒரு பயம் மனத்தில் இருக்க வேண்டுமென்று கருதி, அதாலே போய் வருகின்ற வாலிபப் பசங்களை எங்கோயே தன் பார்வையை நிலைத்த மாதிரி வைத்துக் கொண்டு:
“ஒடு காலிப் பரம்பரைங்க. துப்புக் கெட்ட நாயிக! ஒரு வேல வெட்டியுமே இல்லாம திரிஞ்சிக்கிற இவனுங்க ஒரு உப்புக் கல்லுக்காச்சும் பெறுவாங்களா..? " - என்று திட்டவும் அவர்களை ஏசவும் செய்வாள். அவள் இவ்வாறாக திட்டுவதும் ஏசுவதும் குறிப்பாகத் தங்களைப் பார்த்துத்தான்! என்று நன்றாக அறிந்து கொண்ட மன்மதக் குஞ்சுகள் சிலர், அந்த வழியாலே தாங்கள் போதை பிறகு நிறுத்தியே விட்டிருந்தார்கள். அவர்கள் நங்கை மேல் கொண்டிருந்த ஆசையின் கனவுகளெல்லாம் பனிக்கட்டி உடைவது போல “கல கல' வென்று உடைந்து சிதறிவிட்டன. நங்கை தங்களுக்குக் கிடைக்கவில்லையே’
9.dി.eിത്രmരക്രി 116 dø

என்று பெருமூச்சு விட்ட பொழுது, அவர்களது நாசித் துவாரங்கள் காந்தலெடுத்தன.
இவர்களெல்லாம் தங்கள் சுழட்டலை தற்சமயமாக நிறுத்திக் கொண்டு விட்ட பிறகு, கடைத் தெருப் பக்கம் பார்பர் ஷாப்பில்’ . நல்ல உத்ஸாகமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த காந்தரூபனுக்கு அவன் நண்பர்கள் பலர் சொன்னதன் மூலம், நங்கையின் மணம் அறிய வேண்டுமென்ற ஆசை வலுத்து விட்டது.
சில நாளாய் அவனும் இப்போது நங்கை வீட்டுப் பக்கம் உள்ள வீதியில் வந்து திரியத் தொடங்கினான். ஒரு நாள் நங்கையைப் பார்த்து, சிற்பிகள் போன்ற தன் பற்கள் தெரிய, கண்ஜாடை காட்டியும் அவன் சிரித்தான்.
தேயிலைச் செடிகளுக்கு மேலே அந்நேரம் குளிர்காற்று குபு, குபு - என்று வீசிக் கொண்டிருந்தது. குளிர்காற்று ஜில்லென்று முகத்தைத் தழுவ அவனைப் பார்ப்பது விசித்திரமான அனுபவமாக அவளுக்கு இருந்தது. நங்கைக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவனது சிரிப்பில் அவளும் ஒரு விதத்தில் மயங்கிய மாதிரியாகி விட்டாள். அவனது பார்வையின் மோக மொட்டு, அவளது மேனியைத் தொட்டது. காந்த ரூபன் அவ்வேளை கையில்லாாத பனியன் போட்டிருந்தான். அவனுடைய உருண்ட தோள்களில் குத்தியிருந்த மீன் பச்சை அந்த மாலையின் மங்கிய வெளிச்சத்தில் நங்கைக்கு துலக்கமாகத் தெரிந்தது. அவனது தோள்களின் அழகும் பருமையும், அவளை தவிக்க அடித்தன. அந்த மீன்பச்சை அவனுக்கு அழகாக இருப்பதை, அவளும் பார்த்து ரசித்தாள். தன் கண்ணாடிக் கைவளையங்கள் ஒலிக்க, அவனுடைய முதுகைத்தான் கட்டிப் பிடிப்பது போலவும் ஒரு கனவு உடனே அவளுக்கு வந்து விட்டது.
நாள் செல்லச் செல்ல, காந்த ரூபன் மீது நங்கைக்கும் மனதில் காதல் அரும்பத் தொடங்கிவிட்டது. அவனது பார்வைக்குப் பார்வை அவளும் ஈடுகொடுக்கத் தொடங்கினாள். காந்தரூபனின் 'சடக் சடக் - கென்ற செருப்போசையை சரியாகக் கேட்டுத் தெரிந்து அனுபவப்பட்டு விட்டாள் அவள். அந்த வேளை பாத்திரங்களைதான் இருந்து விளக்கிக் கொண்டிருந்தாலும், அவைகளை அப்படியே விட்டுவிட்டு, சாம்பல் ஒட்டிய கையோடு நேரே வாசல் பக்கமாக அவள் வந்து விடுவாள்.
காந்தரூபன் அவளைப் பார்த்து கையசைத்துக் காட்டவும் ஆரம்பித்து விட்டான். அவளும் தோதுக்குத் தலையாட்டவும் ஆரம்பித்து விட்டாள். அவனது பிளந்தெறியும் பார்வை அவன் போன பிற்பாடும், இன்னும் அவளுக்குத் தகிக்கிற மாதிரி இருக்கத் தொடங்கிவிட்டது. தின்று ருசிக்கும் தினவெடுத்த தன் கண்பார்வையால், தன்னைவாரி விழுங்கி விடுவான் போல அவளுக்கு இருந்தது. அதனால் அவன்
.dി.eിത്രസ്ത്രക്രി 117 அததி

Page 68
கண்களை, அவள் மறக்க முடியாது பெரிதும் திண்டாடினாள்.
ஒரு நாள் நங்கையின் வீட்டுப் பின்புறத்தில், தேயிலைச் செடிகளின் கீழ் அடர்த்தியாயிறங்கும் இருட்டுக்குள்ளே காந்தரூபன் நின்றான். அந்தத் தொலைவான இடத்தில் நின்று அவன் இருமினான். பனி மூட்டத்துள் அருகாமையில் எங்கோ ஒரு சேவல் கூவியது. வீட்டிலே அவ்வேளை ஒருவரும் இல்லை என்பதால், நங்கை பின்புறமாகப் போய் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பிற்பாடும் அவளை தன் கையசைத்து - "இங்கே வா' - என்பது போல் அழைத்தான். நங்கைக்கென்றால் உடல் பயத்தில் ஆலிலை மாதிரி நடுங்கத் தொடங்கிவிட்டது. என்ன செய்வதென்றே அவளுக்கு ஒன்றும் அந்த நேரம் தெரியவில்லை. இதை ஒரு குருவியும் அறிஞ்சிடாம இருக்க வேணுமே என்று தன் கையை எடுத்து நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டு, சுற்று முற்றும் பார்த்தாள் அவள். அப்படி அவள் நினைத்துப் பயப்படுமாப் போல ஒருவரும் அந்தப் பக்கம் இல்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. காந்தரூபன் திரும்பவும் சைகை செய்து அவளை அழைத்தான். அவள் இப்போதும் நின்று விழித்தாள். அவன் பிற்பாடும் வா. வா' - என்பது போல் முன்னம் மாதிரியே அழைத்தான். நங்கை தோற்றுப் போனது மாதிரிப் போய்விட்ட்ாள். அவன் அழைப்பு காந்தம் மாதிரியாக அவளை இழுத்தது. காந்த ரூபனின் புயல் அவளைச் ஆறையாடியது போல இருந்தது. அடிமேல் அடி வைத்து அவள் அவனிருந்த இடத்தை நோக்கி பிறகு நடக்க வெளிக்கிட்டாள். அவனுக்குக் கிட்டவாக வந்ததும், அந்தக் குளிருக்குள்ளும் அவளுக்கு வேர்த்தது. காந்தரூபன் அவளை காந்தப் பார்வை பார்த்தான்.
“என்னக் கண்ணுகிட்டு யேன் நீ பயந்துக்குறே? அப்புடிக்கொத்த ஆளா நானு.? ” என்று அவளை அவன் மென்மையான குரலால் கேட்டான்.
தூரத்திலுள்ள மலையருவியின் ஒசை காற்றில் மோதி, பெருகிக் கொண்டே இருந்தது. அந்த அருவியின் ஒசையுடன் அவன் குரலும் கேட்க அவளுக்கு இன்பமாக இருந்தது என்றாலும் அவளுக்கு மனத்தில் திக், திக் - கென்றது.
“எங்கம்மா இதெல்லாம் அறிஞ்சுக் கிட்டா என்னேக் கொண்ணுப்புடுவா.” - என்று சொல்லிக் கொண்டு அவள் மூச்சுக்காற்று முழுவதையும் வெளிவிட்டாள்.
"ஏன் அப்புடியா நீ பயப்பர்றே தோட்டப் பக்கம் ஆராச்சும் லவ்ப் பண்ணிக்காம இருக்காணுங்களா..?”
“அதில்லே.” “என்னே இல்ல. நான் ஒன்ன மனசுக்கு விரும்பிக் கிட்டதாலதானே பாடுபர்றேன். நீயும் கூட என்ன விரும்பிக் கிட்டதால
99
தி.சி.அருாரதிதச் 118 44

y»
தானே இம்புட்டு தூரம் என்கிட்டயா வந்து கிட்டே..?
அவள் மெளனமாய் நின்றாள். "நீ ஒண்ணுக்குமே கிடந்து பயப்புட்டுக்காத. இப்ப வாட்டி நானு ஒனக்கொரு கடிதம் தந்துக்கிறேன். அத நீ படிச்சுப்பிட்டு பதில எழுதி நாளைக்கு பின்னேர வாட்டி இருட்டுறப்ப இதிலயா யேன் கிட்ட கொண்ணந்து தந்துப்புடு என்ன..? ”
"ஐயையே எங்கப்பன் ஆத்தா ஆராச்சும் வீட்ட அப்பவாட்டி இருந்துக்கு வாங்களே.”
“வீட்ல தானே இருப்பானுங்க தோட்டத்துக்கயேன் இறங்கப் புறாங்க..?
அதற்கும் அவள் மெளனம் காத்தாள். கைகளைப் பிசைந்தாள். காந்த ரூபன் அவளது கையைப் பிடித்தான்.
"அப்பிடியொண்ணுமே வாணாம்.”. என்று அவள் சொன்னாள். ஆனால் காந்தனின் கைப்பிடியிலிருந்து தன் கையை அவள் விடுவித்துக் கொள்ளவில்லை. அவன் ஒரு கையால் அவள் கையைப் பற்றிக் கொண்டு மறு கையை தன் காற்சட்டைப் பைக்குள் விட்டு தான் வைத்திருந்த கடிதத்தை எடுத்து அவளின் கையில் திணித்தான். நங்கையின் விரல்கள் அவன் தன் கைக்குள் கடிதத்தை வைத்தவுடன் அதை இறுகப் பற்றிக் கொண்டன.
"நான் இனி போய்க்கிறேன். நான் போய்க்கிறேன்” என்று அவள் அந்தரப்பட்டுக் கொண்டு சொன்னாள். அவள் பயந்து கிடக்கிறாள் என்றறிந்து காந்தரூபன் அவளைப் பிடித்திருந்த தன் கையை விட்டு விட்டான். “போறே சரி. நங்கா. அப்புறம் என்ன ஏமாத்திப்புடாத கட்டாயமா நான் சொல்லுறது மாதிரி நீ வந்துக்கணும்! "
y:9
"உம்ம்ம். கொட்டினாள் அவள்.
“என்னம். ம். இதுக்குப் பதில எனக்குக் கட்டாயமா எழுதிக்கிட்டு கொண்டரணும்.!”
“ub......”
“என்ன எல்லாத்துக்கும் அதே கணக்கா.ம். lf.... எண்ணுக்கிறே.? ”
காந்தரூபன் அவ்வாறு பேசப் பேச நங்கைக்கு உணர்ச்சி உற்சாகம் வலுத்தது. அவளுக்கு கண்கள் விரிந்து கொண்டே இருந்தன. அவனை அருகில் கண்டது அவளுக்கு இன்பமாக இருந்தது. அந்தி சாயும் அந்த இருட்டு வேளையிலும் அவன் அழகாகத்தான் இருக்கிறான் என்று நினைத்து அவள் மகிழ்ந்தாள். தன்னை அறியாமலேயே ஆனந்தத்தில் சிரிப்பு வந்தது அவளுக்கு. பனி நீர் மலரின் அழகுமிக்க புன்சிரிப்புச் சிரித்தாள் அவள். அப்படிச் சிரித்த உடனே பிறகு தன் வீட்டு ஞாபகமும் வந்து திகிலடைந்து விட்டாள் அவள்.
தி.சி.அருாரத்தச் 119 ലീക്രി

Page 69
"ஐயையோ எங்கம்மா இன்னேரவாட்டி வீட்ட இருந்து கிட்டு என்னியக் கூப்பிட்டிருக்கும். நான் ஒடனே போயிக்கணும். நான் வர்றேன்.” - என்று அவள் உடனே திரும்பி தன் வீட்டுப் பக்கம் பார்த்தாள். மறுபடியும் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனின் முகத்தை வடிவாகப் பார்த்தாள். "நான் அப்ப வர்றேன்” - என்று அவனுக்கு அவள் சொன்னாள். "மறந்துக்காம இதே நேரவாட்டி நாளைக்கு.” - என்றான் அவன்.
அவள் முன்னைய மாதிரி அதே “ம்.” கொட்டலோடு தேயிலைச் செடிகளை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தாள்.
காந்த ரூபன் அவள் போவதைப் பார்த்துக் கொண்டு வில்லைப் போல ஒரு புறமாகச் சாய்ந்து காற்சட்டைப் பையிலுள்ள சிகரெட் பெட்டியையும் லைட்டரையும் கையில் எடுத்து, ஒரு சிகரெட்டுக்குத் தீக் கொளுத்திப் புகை விட்டான். அந்தப் புகையின்பத்திலே அவன் இதயமும் சேர்ந்து துடித்தது. நங்கை மேல் உள்ள ஆசைக் கனவுகளை சுமந்து கொண்டு, காந்த ரூபன் தான் வந்த வழியே திரும்பியும் நடந்தான்.
தோட்டப் பக்கமிருந்து வந்த நங்கை கையிலிருந்த கடிதத்தை தன் பாவாடை இடுப்புக்குள்ளே செருகிக் கொண்டு குளிர்ந்த தண்ணீரால் காலைக் கழுவினாள். செலுவம்மா விளக்கை ஏற்றி லாந்தரை மேலும் திரி நீட்டி விட்டு இருந்தாள். வீட்டுக்குப் பின்புறமிருந்து கண்ணாடி வளையல்கள் குலுங்கின. செருப்புச் சத்தமும் அவளது பாவாடை எழுப்பிய சலசலப்பும் அறையிலிருந்த அவளுக்குக் கேட்டது.
"நங்கா.” - என்று மகளை அவள் கூப்பிட்டாள். "நானு இங்கிட்டுத்தாம்மா இருக்கிறேன்.” "அது தெரியுது குரலக் கேட்டாத் தெரியாதா..? எங்க போனா..?” “ஓரிடங்கக்குமே நானு போயிருக்கலம்மா. ராமாயி இங்கிட்டு வந்தாப்புல அவளோம் நானுவும் பின் புறவாட்டியிருந்து சும்மா பேசிக்கிட்டிருந்தோம்.”
"ராவான பின்னாடி கொமேரு புள்ளங்களுக்கு என்னடி ஒரு கதயும் கிதேயும் வேணுமானாக் கெடக்கு. இங்கிட்டு விட்டுக்கயா வந்து நீ பேசாம மூலேல இருந்துக்கடி.”
செலுவம்மா அவளுக்கு உறைப்பாக ஏச்சுக் கொடுத்தாள். அறைக்குள் இருந்து மனைவியின் அந்த ஏச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவின் பீடி, பெற்றோல் மாக்ஸ் விளக்குப் போல நடு நடுவே ஒளி சிந்திக் கொண்டிருந்தது. மாரிமுத்து தன் மகளின் வருங்கால வாழ்வை பிறகு யோசித்துக் கொண்டிருந்தான். மகளைப் பற்றிய நினைவோடு, வழமையாக அவனுக்கு வரும் அந்த இரத்தினக் கற்களின் சிந்தனையும் கூடவே அவனுக்கு வந்தது. இவ்வளவு காலமும் மாணிக்க கங்கைக் கரையில் புதைந்திருந்த அந்த இரண்டு கற்களும்,
 ില്ക്കുന്നഴ്സ് 120 co%é

தன் வீட்டிலுள்ள பழைய மேசை லாச்சிக்குள் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான்.
அதை நினைக்கவும் - இது ஒரு அதிசயமான நிகழ்வென்றாகி விட்டது அவனுக்கு. அந்தக் கற்கள் இரண்டும் பலரும் கதைத்துக் கொள்வது போல - உயிருள்ள கற்களேதான்! என்று அவன் நம்பினான். அதற்கு உயிர் இருப்பதால் தானே தான் விரும்பும் ஒருவரிடம் அது இப்போது வந்தும் சேர்ந்திருக்கிறது' - என்று அவனுக்கு அது விளங்கியது.
இந்த செல்வம் எனக்கு வந்து சேர்ந்தாற் பிறகு. எப்படியெல்லாம் நான் மாறிவிட்டேன்? என்கிற சந்தோஷ நினைவு அதையடுத்து அவனுக்கு வந்தது.
நங்கையின் கைகளிலே கண்ணாடி வளையல்கள் இருக்க இப்போ அவன் காணவே இல்லை. அந்தக் கண்ணாடி வளையல்களுக்குப் பதிலாக, அவள் போட்டிருக்கிற கை வளையல்கள் எல்லாமே முத்துப் பதித்த தங்கத்தகட்டு வளையல்களாய் அவன் கண்காண மின்னுகின்றன.
அவள் காதுகளில் ..! குணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த அந்தத் தோடுகள் மறைந்து இப்போ ரெத்தினக் கல்பதித்த தோடுகள் டால் அடிக்கின்றன. துரை வீட்டுப் பங்களா மாதிரி ஒரு பங்களா! அங்கே இருக்கிற இவன் மனைவி செலுவம்மாவை தன்னாலேயே இவனுக்கு அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அத்தனை உடல் மினுமினுப்புடன், அவள் சொகுசான பங்களா வாசியாகி விட்டாள். அவள் நன்றாக உடுத்துப் படுத்துச் சிங்காரித்துக் கொண்டு, சோபாவிலே சாய்ந்த வண்ணம் பகல் நித்திரை கொள்கிறாள்.
இதற்குப் பிறகு, அவன் தன்னை எந்த நிலையில் இதற்குள்ளே இருப்பதாக வைத்துப் பார்க்கலாமென்று நினைத்தான்.
அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதியில், தேயிலைத் தோட்டத்துத் துரையின் வாழ்வுதான் எல்லோரிலும் பார்க்க வசதிகள் நிறைந்தது, என்பது அவனுக்குத் தெரியும். அந்தத் தோட்டத்துத் துரை தன் பங்களாவின் முன்னாலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து திராட்சை ரசம் பருகுவதை, பல தடவைகள் அவன் கண்டிருக்கிறான். அந்தத் திராட்சை மது, இனிப்பும் புளிப்பும் கசப்புமான சுவைக்கலப்புள்ளது என்று அவன் பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அதை அவன் குடித்ததோவென்றால், தன் வாழ்நாளிலெல்லாம் இல்லை! அந்த ருசி அவனுக்குத் தெரியவே தெரியாது விட்டாலும், அதைத்தான் இப்போது குடிப்பதாக அவன் நினைத்துப் பார்த்தான். அந்த நினைவோடு, அது அவனுக்கு உடனே ஆச்சரியமாக வந்து விட்டது. அவன் நாவு திரர்ட்சை மதுவை சுவைத்ததாக நினைத்துக் கொள்ளவும், இனித்தது!
ഴ്ച.dിത്രസ്ത്രക്രി 121
ിക്രി

Page 70
சொண்டை வாயினுள்ளே நாவுடன் மடித்துச் சேர்த்தான். அப்பொழுது, புளித்தது!
குறை பீடியின் நெருப்பு அவன் கை விரலைச் சுட்டது. கீழே போட்டு விட்டுப் பார்த்தான். வீட்டு லாந்தர் விளக்குத்தான் அவனுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்தது. அதோடு அந்த நினைவுகளெல்லாம் அவனுக்குத் தொலைந்தன. போய்ப் பாயில் படுத்து விட்டான் அவன்.
崇
அன்று காலையில் ஒட்டைச் சாக்கில் புல் வெட்டித் திணித்து அடைத்துக் கொண்டு வந்து, அதைப் பசு மாட்டிற்குப் போட்டு விட்டு - தனக்குள்ள மற்ற வேலைகளையும் செய்து முடித்தாள் செலுவம்மா. வீட்டு வேலைகள் எல்லாம் முடிய, தோட்ட வேலை குறித்து ஞாபகம் அவளுக்கு வந்தது. அந்தத் தேயிலைத் தோட்ட வேலையை லட்சியமாக்கி, அவள் வீட்டாலிருந்து வெளிக்கிட்டு, தேயிலைச் செடிகளின் கரையினூடாக வேலைக்குப் போக நடந்தாள்.
மாரிமுத்துவும் மனைவி போன கையோடு, அது வரை தின்ற ரொட்டி குடித்த காட்டாவுடன், வெளியே புறப்பட்டுப் போனான். நங்கை தான் ஒளித்து மறைத்து வைத்திருந்த காதல் கடிதத்தை எடுத்து அதன் மடிப்புகளை விரித்தாள். அவன் எழுதிய காதல் கடிதத்தை அவள் படிக்கும் போது, அவளும் அவன் மேல் காதல் வயப்பட்டு உணர்வுகளின் மிக அதிக விகசிப்பில் இருந்தாள். அந்தக் கடிதம் முடிவிலும், பதில்! பதில்! - என்று எத்தனையோ தடவைகள் தெளிவாக வரிவரியாக அவன் எழுதிக் கேட்டிருந்தான். அந்தப் பதில் எனும் கேள்வி, அவள் மனத்தில் பதிந்து அவளைப் போட்டுத் துன்புறுத்தியது. அவள் பட்ட மனத்துயரத்திலே காதலுக்கு எதிராக எந்தவித தடை வந்தாலும், அதை நான் எதிர் கொள்ள வேண்டும் என்கிற மனத் தைரியம் அவளிடம் பிறந்தது.
அந்த உணர்ச்சிகளினூடே, காந்த ரூபன் எழுதிய கடிதத்திற்கு தானும் பதிலை காகிதத்தில் வரைந்தாள் நங்கை, தான் எழுதிய கடிதத்தை ஒரு முறை படித்துப் பார்த்தாள். அவளுக்கே நான் இப்படியெல்லாம் எழுதினேனா? ' - என்று அதைப் படித்து முடித்த போது ஆச்சரியமாயிருந்தது.
அன்று பின்னேரம் தேயிலைத் தோட்டம் சரியான ஒரு துக்க தினத்தை அனுஷ்டித்தது. தோட்டப் பகுதியில் குடியிருந்த, வயசு போன கிழவி ஒருத்தி இறந்து விட்டாள் என்பதற்காக, எல்லோரும் சாவிட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். வேலை விட்டு வந்த செலுவம்மாவும் வெளியே சுற்றித் திரிந்து விட்டுவந்த மாரிமுத்துவும், நாலுபேர் அங்கே
தி.சி.அருாரத்தச் 122 அத்தி

போகிற மாதிரி தாங்களும் அங்கே போய் முகத்தைக் காட்டிவிட்டு வர வேண்டுமென்று நங்கைக்குச் சொல்லி விட்டு, அங்கு போக வெளிக்கிட்டுப் போனார்கள்.
அப்பால் மாலை வெயிலில் தேயிலைச் செடிகளின் பசுமை பிரகாசித்துக் கொண்டிருந்தது.
மலையான மலையெங்கினும், வீதியான வீதியெங்கிலும் ஏறியிறங்கி, விறகுச் சுள்ளிகளை உடைத்துக் கட்டி தலையில் சுமந்து கொண்டு போகிற பெண்கள் சிலரை நங்கை வீட்டு வாசல் படியில் நின்று பார்த்தாள். மலைகளின் பின்னாலே அந்தி வெயில் மங்கிக் கொண்டு போனது மங்கைக்கு யோசனை பலத்தது. தவளை சுவாசிப்பது போல் சுவாசித்துக் கொண்டு, வீட்டுக்குப் பின்னாலே போனாள். அவளது இடுப்புப் பாவாடையின் இறுக்கத்துக்குள்ளே, அவள் எழுதி வைத்திருந்த கடிதம் நசிந்தபடி கிடந்தது. பார்வையை அவள் நேற்று நின்ற இடத்திலே படரவிட்ட போது, அங்கே காந்தரூபன் தனக்காகக் காத்து நிற்பது அவளுக்குத் தெரிந்தது. அவளுக்கு நெஞ்சு படபடத்தது. ஆனாலும், நேற்றைய தைரியத்தில் இப்போதும் அவனிடத்தில் போக, ஒவ்வொரு அடியாக தன் காலை முன்னே வைத்தாள். பிறகு மளமளவென்று செடிகளில் தன் கைபட்ட இலைக் குலுங்கலோடு, கரையோரமிருந்த கொடிப்பாதையாலே விரைவாக அவள் நடந்தாள். நங்கை தன்னிடம் வருகிறதைக் கண்டு விட்டு, காந்தரூபனும் தேயிலைக் கொழுந்தின் குளிச்சியுடன் நின்றான். நங்கை அவனுக்குக் கிட்டவாக வந்த நேரம்; எதிர்த்தாற் போல உள்ள வீதியில் தோட்டத்தில் வேலை செய்கிற பெண்கள் சிலர், சிரிப்பும் கேலியும் கிண்டலுமாய், ஊர்ப் பொரணிகளைப் பேசிக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
நங்கை அவர்களைக் கண்டு விட்டுப் பயந்து போய்: “ ஐயையோ நம்ம வீட்டுப் பக்கமுள்ளவ அங்கிட்டுப் போய்க்கிறாங்க. கண்ணுட்டா என்ர உசிரே போயிடும். நானு என்ன இப்போ செஞ்சிக்கிறது? " - என்று உடனே வாய் குழறி விட்டாள். உடனே காந்தன் அவளின் கையைப் பிடித்து இழுத்து, முழந்தாள் மட்டும் வளர்ந்திருந்த தேயிலைச் செடிகளுக்குள்ளே அவளையும் குனிய வைத்து மறைத்து, தானும் அதற்குள்ளவாக மறைந்து இருந்து கொண்டான். அவள் பிறகும் ஏதோ பேசவென்று வாயைத்திறந்தாள்.
"6) ......... சத்தம். அவனுக பணியவா இறங்கி இங்கிட்டுத்தான் இப்பவா வந்துகிட்டிருக்காங்க."
"ஆ." - என்று அவள் சொல்லி வாயைத்திறக்க அவனது
கைகள் அவளது வாயில் கனத்த தாமரை போல் விழுந்தது. “சத்தம் போட்டுக்காத.? " . என்றான் அவன். கதைத்துக் கொண்டு வந்த பெண்களது பேச்சுச் சத்தம் வரவரக் குறைந்து மங்கியதாய் மறைந்தது.
്.dി.cിത്രസ്ത്രക്രി 123 eിക്രി

Page 71
அவர்கள் போனதற்குப் பிறகு மலை அருவியின் ஒசை, இடை முறியாமல் அவளது காதுகளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. நங்கையின் ரோஜாப் பூநிற உதடுகளில் தன் கை விழுந்ததில் கிடைத்த ஸ்பரிசத்தை நினைத்து உணர்ச்சி மேலீட்டில் காந்தரூபன் இருந்தான். அவளின் தோளோடு அவன் தன் மார்வை ஒட்ட வைத்துக் கொண்டிருந்தான். நங்கைக்கு காந்தரூபனின் மார்பு தன் மேல்பட்டது, உஷ்ணமாகக் தேகமெல்லாம் தகித்தது. தாபத்தில் மனசு அவளுக்கு அவிந்தது. என்றாலும் உடனே அவள் தேயிலைச் செடிகளுக்கு உள்ளாலிருந்து எழுந்து நின்றாள்.
காந்தரூபனும் அவள் எழுந்து நின்ற கையோடு தானும் எழுந்துவிட்டான். "எங்க கடிதம் கொண்ணாந்திருக்கியா..? ” - என்று அவளை அவன் கேட்டான்.
“இல்லே. கொண்டரல .! ” - என்று விட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவள் அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.
"ஏன் எழுதல. " மனசு விரும்பல அதால எழுதிக்கல. ’ அவள் விசும்புக்குச் சொல்லிவிட்டு இறுகி உறையும் மோனோலிசா புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.
“ஒ. ஒன் மனசில விரும்பிக்கலயா..? அப்புறமாயேன் நீ இந்நேரவாட்டி நானு சொல்லிக்கிட்ட மாதிரியா எங்கிட்டயா வந்தே.? “நான் யேன் பாட்டுக்கு அங்கிட்டுப் பக்கமா போவப் போனேன்..!
“அதுக்கேன் தேயிலைச் செடீங்களுக்கால நீ வரணும். கடிதத்தக் கொண்டா நங்கா..? " - என்று அவன் குழைந்தான்.
அவள் வேர்வை பட்டுக் கசங்கிய கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கூட அதிலே நிற்காமல் "நான் வர்றேன்.” - என்று காந்தரூபனைப் பார்த்து அவள் சொல்லி விட்டு, சிட்டுக் குருவி பறந்ததைப் போல வேகமாக அவள் தன் வீட்டை நோக்கிப் போய்விட்டாள்.
இதற்குப் பிறகு, காந்தரூபனுக்கும் நங்கைக்குமுள்ள காதலின் நெருக்கம் வர வர வலுத்துக் கொண்டே வந்தது. தன் தோழியான ராமாயி வீட்டுக்குப் போய்த் தொலைக்காட்சி நாடகம் பார்ப்பதாகத் தன் வீட்டிலே சொல்லிவிட்டு, கனத்த கரிய இருட்டு வேளையிலே காந்தரூபனை அதே முன்னைய இடத்தில் போய் சந்தித்து, அவனுடன் காதல் நாடகத்தைத் தொடர்ந்தாள் நங்கை, அவளது காதல் ரோஜாச் செடிவளர ராமாயி அவளுக்குத் துணையாய் இருந்தாள். காந்தரூபன் ஆரம்பத்தில் நங்கையுடன் காதல் கதை பேசுவதோடு நிறுத்தியிருந்தான். ஆனாலும் நாள் போகப் போக அவளைக் கட்டி அணைத்து முத்தமாரி பொழியவும் ஆரம்பித்திருந்தான். இரவின் அந்தரங்கத்தில் அவன்
.dി.മിത്രസ്ത്രക്രി 124 அத்தி

தொடுகிற விதம் கூட, ஒரு நேர்த்திதான் என்கிற மாதிரி, நங்கைக்கு இருந்தது. அவன் தன்னை அணைக்கும் போது அவனது ஆக்கிரமத்தின் இங்கிதத்தில், இதத்தில் சுகத்தில், அப்படியே லயித்துத் துவண்டு அவன் தோளோடு தன் மார்பை, அவள் ஒட்ட வைத்துக் கொண்டிருந்தாள். அவனது உடல் சூடு அவளை அசத்தி, உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருந்தது.
காந்தரூபன் இந்த விஷயத்தில் தனக்கே உரித்தான சகலகலா வல்லபத்தில், படிப்படியாக நங்கையை அதில் முன்னேற்றுவித்துக் கொண்டிருந்தான். காந்தரூபனின் உடலின் அனலும், பலமும், ஆச்சரியமான அவனது இன்பமும் சொல்லொணா சுகத்தை நங்கைக்குக் கொடுத்திருந்தது. உச்சி ஏறும் அமுதின் சுகம், அவளை மயக்கி அடித்திருந்தது.
அவளது ஆவியை உருக்கி மயக்குகிற - தன் உடம்புத்தீயைப் படரவிட்டு; அவன் கொளுத்தும் அனலிலே அவளுக்கொரு தனி மயக்கம்!, அந்த அனல் அடங்க வெகுநேரமாகும்.
அதுக்குப்பிறகு அவளுக்கு ஏதோ திகட்டல். புரியாமை! அவனை விட்டுப் பிரிந்து வீட்டுக்கு வந்தால், நினைவின் இருட்டில் கூட அவனது நினைவுகளுடன் தான் இருப்பாள். அந்த வசீகரிக்கும். நினைவுகளை எவ்வளவு ஆழத்தில் வைத்து அமுக்கப் பார்த்தாலும், இரட்டிப்பு சக்தியுடன் மேலெழும்பி அவளுக்கு அவைகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.
இதனால் அவனை நினைக்கும் வேளையெல்லாம் ‘தேன்’ குடித்த நரியாகி விட்டாள் அவள் ஒவ்வொரு நாளும் எப்போது மாலை நேரம் வரும்! தான் போய் காந்த ரூபனைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வரும்! என்று அவள் முழுவதும் அவனைப்பற்றியே உழண்டு கொண்டு, மனசில் பாரமாய் கவலையுடன் இருந்து கொண்டிருந்தாள். அவளுடைய ரகசிய ஆசை காந்த ரூபனிடத்தில் அவளை தள்ளிச் சென்று கொண்டேயிருந்தது.
崇
மாரிமுத்துவின் வீட்டுக்குக் கிழக்குப் பக்கமாக, சிற்றருவி கொட்டும் மலைப்பக்கம், கீழுள்ள லாயம் வீடொன்றில் குடியிருப்பவன் வேலு. மாரிமுத்து வுக்கு 'வேலு மச்சான் உறவு முறையானவன். இவனுக்கு பீடி, வெற்றிலை பாக்கு வாங்க பணம் கையில் தட்டுப்பாடாயிருந்தால் 'வேலு அத்தருணம் அவனுக்கு பணம் கடனாய்க் கொடுத்து உதவி செய்வான். வேலு ஒரு நாளாந்தக் கசிப்புப் பிரியன்! தான் குடிக்கப் போனால், மாரிமுத்துவையும் அவன் தன்னோடு சில வேளைகளில் கசிப்புச் சாராயம் குடிக்கக் கூட்டிக் கொண்டும் போய், அவனுக்கும் குடிக்க வாங்கிக் கொடுப்பான். இவர்கள் இருவரும் சேர்ந்து ്.dി.eിത്രസ്ത്രക്രി 125 eീഴ്കി

Page 72
சில நாளிலே இரவு வேளைகளில் கசிப்புப் போய்க் குடித்து, தங்கள் ஆகுருதிகளைக் கரைத்து விட்டு வருவார்கள். போதையேறும் நேரமெல்லாம் 'இரத்தினக்கல்’ தோண்டியெடுக்கும் கதையையே மாரிமுத்து வேலுவுக்குச் சொல்லிக் கொண்டிருப்பான். அவன் அந்தக் கதையையே மறுபடியும் மறுபடியும் பேசி, அதையே அலுக்காது பேசியவாறிருப்பான். இவற்றைக் கேட்டுக் கேட்டு, வேலுவுக்கும் இரத்தினக்கல் தோண்டியெடுக்கும் ஆசை, மனத்தில் ஆணி அடித்தாற் போல இறுதிக் கிடந்தது.
மாரிமுத்துவிற்கு இன்னும் அவன் பூண்டிருந்த விரதம் முற்றுப் பெறாதிருந்தது. இரத்தினக்கல் தன் கைக்குக் கிடைத்த பின்பு தான், தான் பூண்டுள்ள விரதத்தைத் துறப்பேன் என்று அவன் தன் மனத்தில் காளி தேவிக்குச் சத்தியம் கூறியிருந்தான்.
சில கிழமைக்கணக்காக அவன் விரதம் காத்திருந்ததால், கசிப்புச் சாராயம் குடிக்காததையிட்டு 'வேலு வீட்டுப் பக்கம் அவன் போகவில்லை. இருந்தாலும் தனக்கிருந்த யோசனையில் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டு, அந்த முடிவைப் போய் வேலுவுக்கும் தெரிவிப்போம் என்ற நினைப்பில், இருட்டுப்படவும் அவன் அந்த மலையிறக்கத்தால் இறங்கி கீழ் உள்ள வீதி வழியாக நடந்தான்.
கீழே மலை அருவியின் ஒசை 'ஓம், ஓம்’ என்பது போல் அவன் காதுகளில் ஒலியிட்டுக் கொண்டிருந்தது. மழைக்காக ஆகாசம் இறுகி மூடியிருந்தது. இருட்டில் நடந்து கொண்டிருந்த மாரிமுத்துவிற்கு கால் கல்லில் மோதியது. இருப்பினும் அவனுக்கு வலி தெரியவில்லை. பிறகும் நடக்கும் போது கல் காலில் தட்டியும், தடுக்கப்பட்டும் அவன் நடந்து கொண்டிருந்தான்.
"நாளை வாட்டி அங்கிட்டுப்போயி மண்ண நானு தோண்டக்கிளயா ரெத்தினக்கல்லு யேங்கிட்டக் கிடைச்சிட்டா.”
வேலுவின் வீட்டுப் பக்கம் தான் கிட்டவாக நெருங்கிக் கொண்டிருக்கும் போது 'மாரிமுத்து மனக் குரலாகப் பேசிக் கொண்டு போனான். அவன் வேலுவின் வீட்டுப் பக்கம் நெருங்கி வந்து விட்ட போது "இதோ வேலுவின் குரல் என் காதுகளில் விழுகிறது . என்பதாக உடனே நிச்சயித்துக் கொண்டான்.
அவன் வேலுவின் வீட்டு வாசலை நெருங்கும் போது, அந்த வீட்டு விளக்கின் வெளிச்சம் வாசல் வழியாக வெளி முற்றத்தில் விழுந்திருந்தது. வாசல் பக்கம் அவன் போகும் போது, கதவுக்கு அருகே கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு இருந்து, எட்டுத் திசையும் பூமியும் வானமும் அதிரும்படி திட்டிக் கொண்டிருந்தாள் வேலுவின் மனைவி
്.dി.eിത്രmരക്ര 126 அத்தி

“யந்தக் கோதாரியப் போயிக் குடிச்சுப்புட்டு வந்து இந்தக் குடியக் கெடுக்கிறியே நீ பாவி மனுசா.?” என்று அவள் பேசித்திட்ட பொறுமை இழந்து வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்கும் சிறுநடை போட்டுக் கொண்டிருந்தான் வேலு மாரிமுத்து வெளியில் நின்றபடி, வீட்டுக்குள்ளே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த வேலுவை மெளனமாக தன் பார்வையால் அளந்தான். குளுகுளுவென்று காற்று வீசியது. வேலுவின் குழந்தைகள் குறுகி முடங்கி, அந்த அறைக்குள் உறக்கத்தில் கிடந்தார்கள் லாந்தரின் வெளிச்சத்தில் வாசலில் வந்து நிற்கும் மாரிமுத்துவை, வேலுவின் மனைவி உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்தாள். அவன் கால் களை சில கணங்களாய் அவள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு:
“பொழுது சாய்ஞ்சா எங்கிட்டோ போயிருந்து குடிச்சுப்பிட்டு வந்து இந்த வீட்டயே ஒரு சுடுகாடா ஆக்கிப் புடுதண்ணே இந்த ஆளு. ஓங்க மச்சானு தானே இவரு. இவேர வெளில எங்காச்சும் நீங்க கூட்டிக்கிட்டுப் போயி ஏதோ நல்ல வாத்த நாலு சொல்லியாச்சும் திருத்துங்க. கும்பிட்டன் கூட்டிக் கிட்டுப் போங்க இவேர.” - என்று தன் கையைக் கீழே நிலத்தில் தளரப் போட்டுக் கொண்டு, மூச்செடுக்கக் கஷ்டப்பட்ட நிலையில் இதை மாரிமுத்துவிற்கு அவள் சொன்னாள். மாரிமுத்துவுக்கு அவள் அப்படிச் சொன்னது, தன் காரியத்துக்கு அதனால் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தாற் போல ஆகிவிட்டது.
அவன் வேலுவை: " நீங்க என்னுட வாங்க மச்சான். நாம ரெண்ணுபேரும் வெளிய போயி கொஞ்சம் பேசிக்கிவம்.? ” . என்று கூப்பிட்டாள்.
“எங்கிட்டுப் போகணுமுண்ணு இந்த நேரவாட்டி நீங்க என்னேக் கூப்புட்டுக்கிறீங்க மச்சான்.? ” - என்று கொஞ்சம் தன் சினம் ஆறிய நிலையில் மாரிமுத்துவைக் கேட்டான் வேலு.
“இண்ணிக்கி எங்க 'மாடா சாமி கோயிலில அமாவாச பூசையாகிது. அங்கிட்டுப் போனா பாக்கிறதுக்கு நமக்கு வினோதமாயிருந்துக்கும். நாம பேசிக்க இருக்கிறதுங்கள அங்கின போயி பேசிக்கலாம்” - என்றான் மாரிமுத்து.
பிறகு இருவரும் அந்த வீட்டிலிருந்து கிளம்பி மாடன்சாமி கோயிலடிக்கு வந்தார்கள். மாடன்சாமி கோயிலின் உள்ளே சாமிக்குப் பக்கத்தில் மூன்று சேவல்கள் கால்கட்டுக்களுடன் நிலத்தில் கிடந்தன. கோழி கிடந்த இடத்துக்குப் பக்கத்தில் சாராயப் போத்தல்கள் இரண்டு முன்னால் இருந்தன. மாடன் சாமிக்கு பட்டுச் சாத்தி சுருட்டு மாலை போட்டிருந்தார்கள். பழம், தேங்காய், அவல், கடலைவடை எல்லாம் முன்னாலே தட்டத்தில் வைத்துப் படைக்கப்பட்டிருந்தது.
கோயில் முழுக்க 'சாம்பிறானி ' வாசம் கும்மென்றிருந்தது.
മ.dി.മിത്രസ്ത്രക്രി 127
ിക്രി

Page 73
அடுப்பில் பால் பொங்கலும் ஆகிக் கொண்டிருந்தது (இந்தக் கோயிலுக்கு பெண்கள் வருவதில்லை)
கோயிலுக்கு வந்ததும் சாமியைப் பார்க்காமல், வெளியே உள்ள இருண்டு விட்ட மரங்களை உற்றுப் பார்த்துக் கொண்டு வேலு நின்றான். அவன் மனக் கவலையை முகம் காட்டியது. அவன் நிலையை உணர்ந்து கொண்டான் மாரிமுத்து.
“என்ன ஓங்க பாட்டுக்கு யோயிச்சுக் கிட்டே போய்க்கிறீங்க. - என்று அதனால் அவன் கேட்டான்.
"ஒண்ணுமில்லங்க மச்சான்! அந்த முண்டையோட நிம்மதியா வீட்ல இருந்துக்க முடியாம நானு கிடந்து செத்துக்கிட்டிருக்கேன்." - என்றான் அவன்.
“யெல்லா கஷ்டெத்துக்கும் நம்மூட கையிங்களில நாலு காசுயில்லாமக் கெடக்கிறதுதான் காரணமே வேலுமச்சான்! அதுக்குண்ணு நானு ஏலவே ஒரு ஜடியா எடுத்துருக்கேன்” - என்றான் இவன். அப்படி மாரிமுத்து சொல்ல வேலு அவனின் முகத்தை கேள்விக் குறியோடு உற்றுப் பார்த்தான்.
கோயிலில் ஒரு பக்கம் நட்டுக் கிடந்த வாய் பிளந்த சூலத்தின் உச்சியில், மஞ்சள்’ எலுமிச்சையை அழுத்தச் செருகி விட்டு உடுக்கு அடிக்க ஆரம்பித்தார்கள். அதனால் வேலுவுக்குத்தான் சொல்ல வெளிக்கிட்டதைக் கூறாமல் மெளனமாய் நின்றான் மாரிமுத்து.
உடுக்குச் சத்தம் கேட்கவும், கோயிலுக்குள்ளே நின்ற சாமியாடிகள் இருவருக்கு நரம்பு சிலிர்த்து சன்னதம் வந்து விட்டது. எதையோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு, திங்கு திங்கு' என்று குதித்து அவர்கள் ஆடத் தொடங்கி விட்டார்கள்.
கோயிலுக்குள்ளே நின்ற ஒருவர் ‘சாமி வந்திட்டுது சாமி வந்திட்டுது ” - என்று சொல்லிக் கொண்டு, எலுமிச்சை விபூதி குங்குமத்தை தட்டில் எடுத்து வைத்தபடி, சூடமும் கொளுத்திக் கொண்டு அவற்றை அவர்களின் அருகில் கொண்டு போனார்.
மாரிமுத்து வேலுவின் கையைப் பிடித்து “வாங்க நாங்க கோயிலுக்கு வெளிலயா போயி கதைச்சுக்குவோம் " - என்று சொல்லி அவனைக் கூட்டிக் கொண்டு போனான்.
“என்னதுங்க ஒரு பெரிய விசயேம் இருக்குதுண்ணு எனக்கு சொல்லிக்க வைச்சிருக்கிறீங்க.?”
வெளியாலே வந்த பிறகு வேலு கேட்டான். "நானு கதைச்சிக்கிறதுக்கு ஏன் ஏது எண்ணு ஒண்ணுமே என்னப் போயி நீங்க கேக்கவே வேணாம் மச்சான். நீங்க எனக்கு மச்சினன் மொற எண்ணுங்கிறதால நம்பிக்கயா உங்கள நானு இந்த வேலைக்கு கூட்டிக்கிட்டுப் போய்க்கிறன். உங்களுக்கு நானும் சொந்த மச்சான்
ി.dി.eിത്രmണ്ണക്രി 128 ീക്രി

மொறதானே. நீங்களும் அதால என்ன நம்பிக்கலாம் தானே. நாம ரெண்ணு பேரும் நாளக்கு விடியப் புறமா ரெத்தினக்கல்லு தோண்டி எடுத்துக்கிறதுக்கு ஆத்துக் கரைப்பக்கம் போக கிளம்பிக்குவோம். ஏற்பாடெல்லாம் நான் யேன் வீட்டில தயாரா வைச்சிருக்கேன். நாம விடியப்புறமா கருக்கலுக்குள்ளேயே ஆத்துக் கரைப் பக்கமாப் போவுறதுக்கு வெளிக்கிட்டிடணும்.”
"மச்சான் ஒரு வாரமாட்டி நானு தோட்டத்துக்கு வேலைக்குப் போவல. பதிவுக்கு நாளக்காச்சும் போய்க்கிருவம் எண்ணு யோசிச்சுக்கிட்டிருந்தேன்.”
“என்ன வேல வேல எண்ணுக்கிறீங்க..? இப்பிடியா வேல வேல எண்ணுகிட்டு இந்த தேயிலக்காட்டில போயி நாம வேல செய்து என்ன தான் வந்துக்கப் போவுது மச்சான். சீதேவி நம்மங்கள இப்பவா தேடியே வந்துக்கிட்டிருக்கு. அதால மறு பேச்சு நீங்க பேசிக்காம என்னூட கூடவா நீங்க வந்துக்குங்க.” - என்று கூறினான் மாரிமுத்து, வேலு மெளனமாக ஒரு நிமிடம் நின்றான். யோசித்தான்!
“என்னதான் சொல்லுங்க. போய்க்கிவம் மச்சான்! சரியெண்ணுங்க..? ” - என்று அவனை முடுக்கினான் மாரிமுத்து. “சரீங்க மச்சான். சரீ . நீங்க மச்சான் என்னேக் கேட்டுக்கிறீங்க. அதால நான் மறுப்பேனா. யேன் நல்லதுக்குத்தானே நீங்களும் இப்பிடியா கூப்பிட்டுக்கிறீங்க. சரீங்க . வந்துக்கிறேன் மச்சான்! " . என்றான் வேலு. "அப்பிடீண்ணா நானு விடியுங்காட்டி ஓங்க வீட்டுப்பக்கம் வந்திர்றேன். உங்க வீட்டுப்பக்கம் நிண்ணுகிட்டு அதில நானு மொதல்ல ஒரு குரலு குடுத்துக்கறேன். நீங்க கரெக்டா ஒடன கிளம்பி ஏன் கிட்டவா வந்துப்புடுங்க.? ” - என்றான் மாரிமுத்து.
அதற்குப் பிறகு இருவரும் அதிலே நின்றபடி அந்த விஷயத்தைப் பற்றிய பல கதைகளையும் கதைத்துவிட்டு தத்தமது வீடுகளை நோக்கிப் போக நடையைக் கட்டினார்கள்.
கோயிலிலே திருவிழாக் கும்மாளம் இன்னும் முடிவு பெறவில்லை. கோயிலுக்கு எதிர்ப்புறம் உள்ள வீதியில் நடக்கத் தொடங்கிய வேலு, தோட்டக் காட்டில் மின்மினிப் பூச்சிகளுடன் மறைந்தான்.
மாரிமுத்து நடந்து கொண்டிருந்த பாதையில் அருவியின் பக்கமாக "க்ராக். க்ராக்.க்ராக்” - கென்று தவளையின் சப்தங்கள் அவனுக்குக் கேட்டுக் கொண்டிருந்தன.
அவன் தன் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை அவனின் வீட்டுக்குப் பின்புறத் தேயிலைச் செடிகளுக்குள், இரண்டு நிழல்கள் இணைந்து அசைந்தன. மாரிமுத்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப்படுத்தான். பிறகுதான் நங்கை வந்து தாயைக் கூப்பிட்டுக் கதவைத் தட்டினாள். மகளின் குரல் கேட்ட போது செலுவம்மா எழுந்து லாந்தரின்
ീ.dി.മിത്രസ്ത്രക്രി 129 eീക്രി

Page 74
திரியை உயர்த்தினாள்.
அவள் கதவைத் திறந்ததும் "இம்புட்டு நேரவாட்டி அவளுக வீட்ட நீ யென்னடி செய்துக்கிட்டிருந்தே.?” - என்று கேட்டாள். "நோடகொம் டீ வீல முடிஞ்சி அவ வீட்டில படம் வேற போட்டுக் கிட் டாங்கம் மா. இருந்துகிட்டு நானும் அதேப் பாத்துக்கிட்டிருந்தேன் . நேரமும் போய்ச்சிது.” . என்று நங்கை தாயிடம் பொய் சொன்னாள்.
"என்னே தெரித்திரமோ படங்களும் கூறுகெட்ட நாடவங்களும் - - - - - நீ தணியவாதான் அப்புறமா இருட்டுக்குள்ளவா இங்க வந்துக்கிட்டியா..? ” - என்று அவள் திரும்பவும் மகளைக் கேட்டாள். "ராமாயி என்னியேக் கூட்டிக்கிட்டு வந்து இங்கினவாட்டி விட்டிட்டுத்தான் அவவுட்டுக்குப் போய்ச்சிம்மா." - என்று அவள் பிறகும் ஒரு பொய்யை தாய்க்குச் சொன்னாள். செலுவம்மா அவள் சொன்னதை நம்பி விட்டுப் பிறகு மெளனமானாள். "நீ போயி சாப்பிட்டிட்டு வந்து இங்கினயாப் படுத்துக்க” - என்று சொல்லிவிட்டு அவள் தன் பாயில் போய் படுத்து விட்டாள். நங்கையும் ராச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டுப் போய்ப் படுத்தாள். அவளுக்கு உடல் அயர்ச்சியாக இருந்தது. உடலும் கோழி இறகாகி சுகமான நித்திரை வந்தது. சற்று நேரத்தில் அவள் கண் சுழண்டு அயர்ந்து போனாள் தேயிலைக் கொழுந்துகள் இரவில் துளிர்த்துக் கொண்டிருந்தன. அவள் உறக்கத்தின் ஆழங்களில் ஆழ்ந்திருந்தாள்.
இரவு கதைக்கும் போது தான் சொன்னது மாதிரி விடியலிலே குழி வெட்டப் பொருத்தமான ஆயுதங்களுடனும், சல்லடைத்தட்டு கூடையுடனும், வீட்டாலே இருந்து வெளிக்கிட்டு வேலுவின் வீட்டடிக்கு மாரிமுத்து போனான். அவன் அதிலே போய் நின்று குரல் கொடுக்கவும், வேலுவும் உடனே தன் வீட்டிலிருந்து கிளம்பி அவனண்டையில் வந்து விட்டான். இருவரும் நடையாய் நடந்து தொலைவிலுள்ள ஆற்றங் கரைப்பக்கம் போனார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்த வேளையில் நன்றாகப் பொழுது விடிந்து வெயிலும் வந்துவிட்டது. அகலமான அந்த ஆற்றில் களைப்படைந்து வளைந்து நயித்த கணக்கில் தண்ணிர் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஆற்றங்கரையில் நின்ற கீனா மரத்தடியிலே போய் நின்றார்கள் சகதி மாதிரி மந்துகள் அந்த மரத்துக்குப் பக்கத்திலே இருந்தன. மரத்துக்குக் கீழே இலை மட்கிய மணம் அடித்தது. அடர்ந்து செறிந்த காட்டுச் செடிகள் மரத்தடியை மூடிக்கிடந்தன.
அந்த மரத்துக்கு முன்னால் வெளியான வெறுந்தரையாய்க் கிடந்தது. மாரிமுத்து சாப்பாட்டுச் சரைகளையும் ஆயுதங்களையும் மரத்துக்குக் கீழே ஒரு இடமாகப் பார்த்து வைத்துவிட்டு, வெளியான
நீ.பி.அருள%ந்தர் 130 eീക്രി

இடத்திலே போய் நின்றான். அங்கே நின்று சூரியனைப் பார்த்துக் கும்பிட்டான். பிறகு மேற்குத் திசையைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டு “காளியாத்தா. ஈஸ்வரனும் ஈஸ்வரியுமா இருக்கிற அந்த ஆண்கல்லும் பெண்கல்லும், சொலபமா நம்ம ரெண்ணு பேருக்கும் கிடைச்சுக்கிட நீ வழி செய்யிதாயி..” - என்று காளியையும் வணங்கி வேண்டுதல் செய்து கொண்டான்.
பிற்பாடு வேலுவை அதிலே அவன் தன்னிடமாகக் கூப்பிட்டு “இதிலயா நாம குழிதோண்டுக்குவம்” - என்று அவனுக்குச் சொன்னான். இருவரும் மண்ணை வெட்டி குழிதோண்டுகிற வேலையில் முனைப்பாக ஈடுபட்டார்கள். தங்கள் வேலையில் கவனம் வைத்துக் கொண்டு, மெளனமாக இருந்தபடி இருவரும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். குழி வெட்டிப் போகும் போது பெறுமதி மிக்க கற்கள் இல்லம் நாடிப் போகும்' - என்பது மாரிமுத்துவுக்குத் தெரியும் ஈஸ்வரனும் ஈஸ்வரியுமாய் இணைந்திருக்கும் அந்தக் கற்கள், மண்ணை யாரும் தோண்டுகிற போது உடனே பிரிந்து விடும். ஆனாலும் ஆண் கல்லை ஒருவர் எடுத்து விட்டால், பெண் கல் அவர்களுக்குச் சுலபமாகப் பிறகு கிடைத்து விடும். இதே போல் பெண் கல் ஒருவருக்கு முன்னம் கிடைத்தால் ஆண்கல்லும் அதன் பிறகு அவ்விடத்தருகே ஒரு இடத்திலிருந்து நிச்சயம் அவருக்குக் கிடைத்துவிடும். இந்தத் தொழிலில் இதுவெல்லாமே ஓர் ஜதிகம் தான்! இதிலே மாரிமுத்துவுக்கு முழுநம்பிக்கை மனத்திலிருந்தது. அந்த நம்பிக்கையுடன் சுறுசுறுப்பாக அவன் குழி தோண்டியபடி இருந்தான். அவனுக்குச் சளைக்காது வேலுவும் வேலை செய்தபடி இருந்தான். அவர்கள் இருவரும் முதல் வெட்டித் தோண்டி அள்ளியெடுத்து வெளியே போட்ட வெள்ளை நிற மண்ணுக்குப் பிறகு, வெட்டிய அடிமண் சாம்பல் நிற மண்ணாகத் தெரிந்தது. அதைத் தோண்டிக்கொண்டு ஆழமாய்ப்போக கறுப்பு மண்ணாய்ப் பிறகு தெரிந்தது. அதை வெட்டும் போது இருவரும் கிடங்குக்குள்ளே திசைமாறி மண்ணைக் குடைந்து வெட்டிக் கொண்டு போனார்கள். குழி நன்றாய் ஆழமாய் உள்ளே போனவுடனே." இனிக் குழி வெட்டிக்கிட்டது காணும் வேலு மச்சான் இதுக்கு மேல தோண்டப்புனா மண்ணு நம்மள மூடிக்கிட்டு மேல சரிஞ்சிப்பிடும் . அதால இம்மட்டிலயா இதே நிறுத்திப்புட்டு மண்ணயெல்லாம் இனி வாட்டி தண்ணியில அலசிக்கவம்.” - என்று இனிமேல் செய்ய வேண்டியிருக்கும் வேலையை அவனுக்குச் சொன்னான் மாரிமுத்து. இருவரும் வட்டிலிலே மண் அலசுகிற வேலையைத் தொடர்ந்தார்கள். மண்ணை ஐந்தாறு தடவைகள் அலசிக் கொட்டும் போது - குழந்தைக் கண்னமாய் மொழு மொழுத்த கூழாங்கற்களுக்கிடையே ஒரு கல்! - அதற்குள்ளே வெளித்தது. அதைக் கண்டதும் மாரிமுத்து அதைத் தன் கையில் எடுத்தான். அந்தக் கல்லைப்
ഴ്ച.dി.മിത്രസ്ത്രക്രി 13 eീക്രി

Page 75
பார்த்ததும் அவன் கண்களில் கலங்கரை வெளிச்சத்தைப் போல் கூரொளி பிறந்தது. அடக்க முடியாத ஆனந்தம் முகத்தில் ஸ்பஷ்டமாக வெளிப்பட "கருவாகி உருவாகி பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி வெளஞ்ச பெறுமதியான கல்லுங்க இது மச்சான். ரெத்னம்! ரெத்தினொம்! " . என்று சொல்லிக் கொண்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். அவன் இவ்விதம் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க; மாரிமுத்துவைப் பார்த்து விட்டு சில அடிகள் பின்னகர்ந்து பலமாக மூச்சு வாங்கினான் வேலு. மாரிமுத்துவின் கையிலிருந்த கல்லை பிறகு தானும் அவனிடமிருந்து வாங்கிப் பார்த்தான் வேலு. அவனுக்கு அந்தக் கல்லைப் பற்றிய விவரம் ஒன்றும் சீரியதாய்த் தெரியாததால், சாதராணமாக அவன் அதைப் பார்த்தான். என்றாலும் அவன் அந்தக் கல்லில் அதிக கவனம் வைக்காது, மாரிமுத்துவின் முகத்தை உற்றுப் பார்த்த போது, முன்பு சாதாரணமாக இருந்த அவன் முகம் இப்போ சூரிய ஒளி அடிக்கிற பிரகாசத்தில் இருப்பதைக் காண, அவனுக்கும் அதன் மூலம் அந்தக் கல்லின் மதிப்பு விளங்கியது. வேலுவின் மனம் குழம்பித் தவிப்பதை மாரிமுத்து அவனின் முகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டான்.
"மச்சான் இந்த கல்ல ஆசாரிமாரு வெட்டினாப் பொறவுதான் இதினிண்ட ஜொலிப்ப எல்லாருக்கும் கண்டுக்கிறதுக்காத் தெரிஞ்சிக்கும். இந்தக் கல்ல அவனுக 12 துண்ணாவும் வெட்டிக்கு வாங்க, இல்லண்ணா 4 துண்ணாவும் வெட்டிக்கு வாங்க” - என்று அவனுக்கு அதைப்பற்றிய விபரத்தைச் சொன்னான். வேலுவுக்கு வயிற்றுக்குள் பிறாண்டியது.
"மச்சான்! பசிச்சிக்கிது. கொஞ்சமாவா நாம சாப்பிட்டிட்டு மறுவாட்டி உள்ள வேலய துவங்கிக்குவமா..? " - என்று அவன் மாரிமுத்துவைக் கேட்டான்.
ஆனால் மாரிமுத்துவுக்கு இருந்த பசியெல்லாம், கல்லை அவன் எடுத்த தருணத்திலிருந்து எங்கோ தொலைந்தது போல் ஆகி விட்டிருந்தது. அவன்! “இப்பவா நாம சாப்பிட குந்திக்கிணமுண்ணா. இனிமேலா ஆக வேண்டிய காரியமெல்லாமே கெட்டுப்புடும்.” - என்றான்.
வேலுவுக்கு அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று விளங்கவில்லை. மாரிமுத்து அவனுக்கு அந்த விஷயத்தை பிறகு சொன்னாள்.
"மச்சான் அம்மி மாதிரி கல்லு நமகிட்ட இப்ப கிடைச்சிக்கிட்டுது. இனிமேல அடுத்த கல்லு எங்கிட்டும் போயிக்கிடாது. நாம அலசிக்காத அங்கிட்டுள்ள மண்கும்பியில அந்தக் குழவி மாதிரியான இணைக் கல்லு கட்டாயமா நமக்குண்ணு கிடைக்கும். வேலயோடே வேலயா அதயும் நாம செஞ்சிக்குவம். அந்தக் கல்லும் நம்ம கைக்கு கிடைச்சப்புறமா ஆறுதலா நாம சாப்பிட்டுக்குவம். . என்றான். வேலு பசியைப் பொறுத்துக் கொண்டு தன் மச்சான் சொன்னதுக்குத் தலையாட்டினான்.
தி.சி.அருளானந்தச் 132
ീക്രി

பிறகும் மண்ணை அவர்கள் வட்டிலில் போட்டு அலசினார்கள். பெரிய கல் ஒன்று வட்டிலில் உருண்டது. "ஈஸ்வரி என்று சொல்லி மாரிமுத்து கத்தினான். முன்னம் எடுத்த கல் இடுப்பு பெல்டுக்குள் துணியில் சுற்றியபடி அவனிடத்தில் இருந்தது. இதையும் எடுத்ததும், துண்டைப் பிரித்து இரண்டையும் ஒன்று சேர்த்தான் அவன். மடியில் திரும்பவும் துணி உருண்டையை செருகிவிட்டு "காளியாத்தா.” - என்று சொல்லி அவன் தன் கண்களை மூடி கும்பிட்டான். இருவரும் பிறகு கீனா மரத்தடியிலே போய் இருந்து, கொண்டு வந்த சாப்பாட்டுச் சரையை விரித்து ரொட்டி சம்பலை எடுத்துச் சாப்பிட்டார்கள். சாப்பிட்டான பிறகு “எடுத்துக்கிட்ட கல்லுங்களில உங்களுக்கு எந்தக்கல்லு வேணுமெண்ணு சொல்லுங்க மச்சான்!” - என்று கேட்டான் மாரிமுத்து.
"நீங்க விரும்பிக்கிறத இதிலயா எடுத்துக்குங்க.” . என்று அந்தக் கல்லுகளைக் காட்டி அவன் தன் மச்சானிடம் கேட்டான்.
“ரெண்ணு கல்லுங்களையும் ஒங்க கூடவே நீங்க வைச்சுக்குங்க கல்லுங்கள வித்தப்புறமா பணத்த எனக்கு சரிபாதியா பிரிச்சுக் கொடுத்துப்புடுங்க.” . என்று தன் மச்சான் கேட்டதற்கு வேலு பதிலைச் சொன்னான்.
"எல்லாமே ஒரு நம்பிக்கதான். அந்த நம்பிக்கை எண்ணுறது மனுசனுக்கு இல்லாட்டி அப்புறம் இந்த உலகத்தில எப்புடீத்தான் வாழ்ந்துக்கிறது. நீங்க யேன் மச்சான் மொற தானே? அதால நானு உங்கள நம்புறேன். எல்லாத்தையுமே நீங்களா பாத்து எனக்கும். செய்துக்குங்க.” - என்று சொல்லி விட்டான் திரும்பவும் அவன். அந்த வேளையில் வெயில் இறங்கிக் கொண்டு வந்தது. இருவரும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை சுமந்து கொண்டு வீட்டுக்குப் போக நடந்து கொண்டிருந்தார்கள். மாரிமுத்துவின் இடுப்புப் பட்டிக்குள், ஆற்றங்கரையிலிருந்து எடுத்த இரத்தினக் கற்கள் இரண்டும் துணித்துண்டுக்குள் இணைந்து கிடந்தன.
"இந்தக் கல்லுங்கள பெரிய மொதலாளியெண்ணு யாரையாச்சும் நாம நெனெச்சு அவனுகட்ட தெரியாத்தனமா நாம போய் கல்லக் குடுத்துப்பிட்டமுண்ணா அவனுக பெறுமதி இல்லாத கல்லுண்ணு எச்சிப் பணிக்கத்திலயும் வீசிப்புட்டு நம்மள ஒய்ச்சுப்புடுவாங்க மச்சான்.” . என்று இந்தக் கல் வியாபாரத்தைப்பற்றி நடந்து கொண்டிருக்கும் போது மாரிமுத்து வேலுவுக்குச் சொன்னான். வேலுவுக்கு அதைக் கேட்கவும் மனம் சலிப்பாக இருந்தது
"அப்படீண்ணா ஆர நம்பி நீங்க உங்கிட்டவுள்ள கல்லுங்களை அவங்கிட்டயா குடுத்து உதுங்கள வித்திக்கிறது மச்சான்? " - என்று முகம் வாடிப்போய் அவன் கேட்டான்.
"எல்லாத்துக்குமே இப்பவா நாம ஒண்ணுமே அவசரப்பட்டுக்காம
தி.சி.அருள%ந்தசி 133
ീക്രി

Page 76
ஆறுதலாயிருந்துக்கிட்டு ஆகவேண்டியத பெறவு கவனிச்சுக்குவம். அது மட்டுமா கல்லுங்க கொஞ்ச நாளுவாட்டி வீட்டிலேயே வைச்சிக்குவம் என்ன மச்சான்? ”. என்று அவன் வேலுவைக் கேட்டான்.
‘அப்பரிடீண்ணு ஒண்ணுமே இப் பதி தைக் கெல்லாம் அவசரமில்லிங்க மச்சான்! நீங்க சொல்லிக்கிற மாதிரியே செஞ்சிக்கிங்க..! ஆனா பொருள மாத்திரம் பத்திரமா நீங்க வைச்சிக்கிங்க. நாக்கு ஒண்ணெண்ணா அதால சொல்லிக்கிற வாக்கும் ஒண்ணாத்தான் இருந்துக்கணும். அதில்லாம ரெண்ணா இருக்கவே கூடாது.” - என்று தான் நடந்து கொண்டிருக்கும் போது மாரிமுத்துவின் முகத்தைப் பார்த்தவாறு உறுதியாக இதை வேலு அவனுக்குச் சொன்னான்.
"நீங்க ஒண்ணுக்குமே கவலப்பட்டுக்காதீங்க மச்சான் .? என்ன நீங்க நம்பீட்டீங்களில்லே . அந்த நம்பிக்கைய நீங்க வைச்சுக்குங்க. இனி இந்தத் தோட்டக்காட்டு வேலயே நமக்கு வாணாம். இந்தக் கல்லுங்கள வித்தப் புறமாரெண்ணு பேருமே ஒரு பிசினச நாம பெறவு ஆரம்பிச்சுக்குவம்.”
என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தபடி மாரிமுத்து சொன்னான். இருவரும் பிறகு நெஞ்சமெல்லாம் கனவு சுமந்தபடி தங்கள் தங்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள். வேலுவுக்கு கசிப்புக் குடிக்க வேண்டும் என்பதாக நாக்குப் பரபரத்தது. அவன் நேராகக் கசிப்பு விற்கும் இடத்துக்குச் சென்றான். இன்றென்று நன்றாக கொஞ்சம் கசிப்பைக் கூடுதலாக அங்கே அவன் குடித்தான். போதையேறவும் அங்கே கசிப்புக் குடிக்க வந்தவரிடமெல்லாம் தனக்கும் மாரிமுத்துவுக்கும் இரத்தினக்கற்கள் கிடைத்த விஷயத்தை - எத்தனையோ விதமாகச் சிரித்து, முகத்தை அசைத்து, குரலில் ஏற்றத்தாழ்வு கொடுத்து, வளவளவென்று அவன் அலட்டினான். அவனது ரெத்தினக்கல் கதை அந்தி சாய்ந்து இருட்டி விடுவதற்குள், அந்தத் தோட்டப் பகுதியெல்லாம் காட்டுத்தீ பரவியதைப் போல் பரவிவிட்டது. இந்தச் செய்தி காந்தரூபனுக்கும் காதுகளில் எட்டியது. செய்தி கேள்விப்பட்டதும் தான் தாமதம், புழுக்கள் இலைகளுக்கு நெளிந்து நெளிந்து தாண்டுவது போல அவனுக்கு நினைவுகள் போய்க் கொண்டிருந்தன. காந்த ரூபன் கள்ள மூளையில் நரி அவன் இந்த விஷயத்தை நினைத்துக் கொண்டு, யோசனையுடன் சிகரெட் புகைத்தபடி நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தான். புகையிலையின் நஞ்சு, ஒரு சதித்திட்டத்தை அவன் மூளையில் நாக்கை நீட்டிப்படர வைத்தது. தனது திட்டத்தை நடைமுறைப்படுத்தவென்று அவன் வலை நெய்து கண்ணிகளை உருவாக்கிக் கொண்டிருந்தான்.
崇
மாரிமுத்து இரத்தினக் கல்லோடு வீட்டுக்கு வந்த பிறகு, பற்பல பொற்கனவுகள் நங்கையின் உள்ளத்தில் குழுமியிருந்தன. அன்று இரவு
தி.சி.அருாரனந்தர் 134 அததி

வேளை காந்த ரூபனைச் சந்திக்கும் போது, நங்கை வழமையை விட குதுரகலமாக இருந்தாள். இருட்டு வெறுமைக்குள் அவள் சிரித்த போது, அவள் வாயில் ஒரு முத்தம் கொடுத்தான் காந்தரூபன். தணல் தீய்ந்தது! வலைவீசிப்பிடிக்கிற விதமாக அவன் அவளோடு கதை பேச வெளிக்கிட்டான். இரவின் ஈரம் மண்ணில் கலந்திருந்தது. அவனின் மூளைக்குள் கொதிப்பாயிருந்தது.
உங்கப்பா இனிவாட்டி லட்சப்பிரவு ஆயிடு வாரு. அப்புறம் நீயும் என்னிய மறந்துதான் போயிடுவே" - என்று அவன் முதலில் ஒரு கதை சொன்னான்.
“இப்டீயெல்லாமே ஏன் நீங்க சொல்றீங்க? ” என்று நங்கை அவனுக்குச் சொல்லி மனம் நொந்தாள்.
“இல்ல. நான் பார்பர் எண்ணு எல்லாங்கிருக்குமே தெரியுந்தானே. இதில ஜாதி எண்ணு வேற ஒரு பிரச்சினியும் நம்ம ரெண்ணு பேருக்குளயுமா இருக்குத்தானே.? ”
“சாதி பாத்துக்கிட்டா நான் ஓங்களோட பழகிக்கிட்டன்.? ” அவள் உடம்பு நெகிழ்ந்து கரைகிற மனசோடு அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
"நீ இப்ப இதயேன் கிட்டவா சொல்லிக்குவே ஆனர் நாளைக்கு உங்கப்பா நீ சொல்லிக்கிறதுக்கெல்லாம் ஆமா எண்ணுப்புடுவாரா..? ” நங்கை அவன் அப்படிச் சொல்ல உடம்பைச் சுருக்கிக் கொண்டாள். மெளனமாக இருந்தாள்.
"நங்கா எப்பிடீன்னாலும் உங்கப்பா எனக்கு உன்னே எப்பவுமே கணிணாலம் பண்ணித் தந்துக்கவே மாட்டாரு. இனிமே அவருக்குண்ணுவாற அந்தஸ்தில எனக்கு நீ கெடக்கவே கெடைக்க மாட்டா. நங்கா நீ அப்பிடியா கெடைக்காட்டி நானு செத்துப்புடுவேன் நங்கா.”
கணிர் என்று ஒலிக்கும் அவன் குரல் பட்டுப் போல் சன்னமாக இழைந்து வந்தது. அவள் காந்தரூபன் சொன்ன கதையைக் கேட்டு விட்டு விசும்பி விக்கித்து அழுதாள். அவள் அழுதிடவும் அவளின் கையை தான் பிடித்து விரல்களை தன்கைக்குள் பொத்தினான் காந்தரூபன். "நீங்க இல்லாம என்னாலியும் சீவிச்சுக்கவே முடியாது! நானும் உங்களோடயே செத்துப்புடுறன்.” - என்று விட்டு அவள் சிணுங்கிச் சிணுங்கி அழத் தொடங்கி விட்டாள். கொஞ்சம் இவளை அழவிட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று கடைசி நாகாசு வேலையை மனசுக்குள் செய்து கொண்டிருந்தான் காந்தரூபன்.
“எனக்கு நீ உனக்கு நான் எண்ணு எழுதி, அந்தக் கடவுளே வைச்சிருக்காரு தானே? அப்பிடியா நிச்சயம் ஆயின பிறவு, நாம ஏன் வீணா சாகணும்? நாம ரெண்ணு பேருமே வாழவம் நங்கா? அதுக்கு
.dി.മിത്രസ്ത്രക്രി 135 அததி

Page 77
நான் சொல்லிக்கிறது மாதிரி நீ செஞ்சிக்கிறியா? ”
"இவளவு நாளுவாட்டி நானு ஒங்களோட சேந்துகிட்டு நல்லா பழகிப்புட்டன். என்னியே நான் உங்களுக்கிட்ட முழுசா தந்துகிட்டன்..!
இனிமேலயா எல்லாமே நீங்கதான் எனக்கு . நீங்க சொல்லிக்கிறதெல்லாமே நானு செஞ்சிக்கிறன். நானு என்ன செய்யணும்? சொல்லுங்க? ”
"நங்கா நான் சொல்றது நானும் நீயும் நல்லபடியா வாழுறத்துக்கு ஒரு வழிதான்! நாம நல்லபடியா வாழனுமுண்ணா நசிஞ்சு போன மாதிரி கெடக்கிற இந்தத் தோட்டக்காட்ட விட்டுப்புட்டு எங்காச்சும் நாம ஓடிப் போயிடணும்”
“ஓடிப் போய்க்கிறதா..? போல் சிலையாய் விட்டாள்.
"ஆமா நாம எங்கிட்டாவது ஆருக்குமே தெரியாத கண்காணாத இடத்துக்கு ஓடிப்போயிடுவம். நாம போற இடத்தில ரெண்ணு பேரும் ஆரிகிட்டேயும் ஒரு கரெச்சலுமில்லாம சந்தோஷமா வாழுவம். இதுக்கு நீ ஆமாங்கிறியா? " அவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு “இம்” . என்றாள். “இந்த இம்மெல்லாம் வேணாம் உன் வாயத்திறந்து வெவரமா சொல்லு.? ” - என்றான் அவன்.
“சரி உங்க கூட நானும் வர்றேன்.” “சரி அப்பிடியா வந்திட்டியா. இன்னுமொண்ணு நானு சொல்லிக்கிறத நீ கேக்க வேண்டியிருக்கு. அதயும் நீ செய்யணும்.? “செல்லுங்க.” என்று விட்டு எல்லாவற்றிற்கும் தயாரான மாதிரி அவள் நின்றாள்.
“இப்பவா நானு சொல்லிக்கிறத நீ நல்லா கேட்டுக்கணும். இதில தான் எங்கயாச்சும் நாமபோயி வாழ்க்கய துவங்கிக்கிறதுக்கு வக இருக்கு. நானு பார்பர் ஷாப்பில சம்பளத்துக்குத்தான் வேல செஞ்சேன் . இனியுமா இந்த பார்பர் வேல எனக்குப் பிடிக்கல. உனக்கு அது பிடிக்குமா..?”
“எனக்கும் பிடிக்கலதான். "இப்பவா உனக்கு இது எல்லாமே புரியுது. இந்தத் தொழிலு உனக்கும் பிடிக்கல எனக்கும் பிடிக்கல. ஆனா இந்தத் தொழில நானு விட்டுப்புட்டா எங்காச்சும் போயி நானு என்னதான் செய்யிற.? ம்.”
y y
. அவள் சித்தம் குலைவுற்றவள்
“எனக்கு வெளங்கல.? ”
“அத விளக்கமா நானு இப்ப சொல்லிக்கிறனே..! உங்கப்பா கொண்ணந்தாரில்ல ரெத்தினக்கல்லு! அது இப்ப எங்கிட்டு இருக்கு? ” “வீட்-டில-தான். ” - அவள் பதிலை அவனுக்குச் சொல்லும்
போது கொஞ்சம் குழம்பினாள்.
.dി.മിത്രസ്ത്രക്രി 136 ീക്രി

“அந்த ரெத்தினக் கல்லுங்க உனக்குத்தானே சொந்தமா வேண்டியது. ? நீ உங்கப்பன் ஆத்தாளுக்கு ஒரேயொரு பிள்ளதானே..? அதால அத உனக்கு சீர்வரிசயா எடுத்துக்கவும் உரிம இருக்கு..! அந்த ரெத்தினக்கல்ல ஆருக்கும் தெரிஞ்சிக்காம நீ எடுத்துகிட்டு என்னோடயா ஒடிப் போகிக்க நீ வந்துர்றியா? ”
அவனது கேள்வியில் கிலி அடித்தாற் போல அவள் ஆகிவிட்டாள். அந்த யோசனைகளுக்கு நடுவில் அகப்பட்டுத் தத்தளிக்கிறவளாக அவள் இருந்தாள். இதனால் என்ன வெள்ளிடி வந்து சம்பவிக்குமோ, என்று அவளுக்கு ஒரு மனப் பயம்.
காந்த ரூபன் விடவில்லை. அவன் அவளுக்கு குழையடித்தாற் போல கதைகள் சொல்லி பயத்தை இறக்கினான். அது அவளிடம் அகலுவதைத் தெரிந்துவிட்டு, ஆசைவார்த்தைகளையும் அவள் மனதில் கோர்த்து மாலை ஆக்கிவிட்டான்.
"இந்தத் தோட்டக் காட்டில கெடந்து என்னத்தத்தான் நீநல்லபடியா உடுத்திக்கிட்டே.? இங்க நீ இருந்தீண்ணா வேர்வ மணந்துக்கிற பழய ரவிக்கக் கந்தலுதான் போகப் போக உனக்கு உடுத்திக் கக் கிடைச்சிக்கும். ஆனா நீ என்னோட கொழும்புக்கு வந்தீண்ணா பளபளக்கும் சுடிதாரு வாங்கி போட்டுக்கலாம்! நெகங்களுக்கு வர்ணம் பாலிஸ் போட்டுக்கலாம்! கலாரு கலரா செருப்புங்க அங்க வாங்கலாம்! கோல்பேசில சிலு சிலு’ - ண்ணு காத்து வீசிக்கும் சாயங்காலவாட்டி தக தக' - ண்ணு வெய்யில்படும்! அதிலயெல்லாம் போயி நாம ஆசிக்கா உலாத்திக்கலாம்! இப்புடியா எவ்வளவோ வசதீங்க! அத அனுபவிக்கவும் கொடுத்து வைக்கணுமே..? " காந்த ரூபன் சொல்ல அவள் தன் இன்பங்களையெல்லாம் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அவளுக்கு உல்லாசக் கனல் ஊறியது. அவன் சொல்லும் சொகுசுப் பூவிதழ் அடுக்குளில் புரண்டு திளைக்க அவளது மன வண்டு பறந்தது. வேர்வை வாடை வீசும் தேயிலைத் தோட்டத்திலிருந்து அவளுக்கு விடுதலை வேண்டும் போல ஆசை பிறந்தது.
“என்ன தோட்டம்.!” - என்று அவள் மனதுக்குள் வெறுப்புடன் நினைத்தாள். உதடுகள் அவளுக்கு ஒரமாய்க் கோணியது. எங்காவது சுதந்திரமாக தான் இருக்கக் கூடிய இடத்துக்குச் சென்று, காந்த ரூபன் கொடுக்கும் முத்தங்களில் ஆழ்ந்து, விரிந்த அவனது மார்பில் பல மணிநேரம் புதைந்து கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆசை அவளுக்கு வலுத்தது.
“என்ன ஜாஸ்தியா உனக்கு யோசனை போய்க் கிட்டிருக்கு.? நானு சொல்லுறது உனக்கு விரும்பலைன்னா எல்லாத்தயுமே இதோட
விட்டிப்புடு.! இண்ணேல இருந்து நாமரெண்ணு பேருமே பிரிஞ்சுக்குவம்.”
தி.சி.அருாரணத்தச் 137
eീക്രി

Page 78
“இப்பிடீயெல்லாமே இவளவு காலமா என்னோட நீங்க பழகிப்புட்டு எனக்கு இப்பவா என்ன கத சொல்றீங்க? உங்கள விட பெரிசா இந்த உலகத்தில எனக்கு ஒண்ணுமே வேணாம் . அவள் சொல்லி விட்டு அழுதாள்.
"அழாத நங்கா! அப்ப நானு சொல்லுறபடியா நீ செய்திக்கிறியா? அவன் தன்னிடமாக, அவளை தன் மார்போடு நெருங்க அணைத்தபடி, அவளின் கண்ணிரைத் துடைத்தான்.
நங்கா நாளாயிச்சிண்ணா எல்லாமே காரியம் பிறகு கெட்டுப்புடும். அதினால நாளைக்கு ராத்திரி சாமம் ரெண்ணு மணிக்கு அந்தக் கல்லுங்களயும் நீ எடுத்துக்கிட்டு, இதே இடத்துக்கு நீ சரியா வந்துப்புடு. நானும் நீயும் அப்புறமா, நானு ஒழுங்குபண்ணி கொண்ணாந்திருக்கிற ஆட்டோவில ஏறிக்கிட்டு போயிக்கலாம். என்ன..? ”
“எனக்கு எல்லாமே நெனச்சிக்கப் பயமாயிருக்குங்க. ? " - அவள் சொல்லிக் கொண்டு அவன் மார்பில் தன் தலையைச் சாய்த்தாள். அவன் அவளது முகவாயை தன் விரல்களால் நிமிர்த்தினான்.
“என்ன பயம்.? ” . சொல்லிவிட்டு அவள் கன்னங்களில் முத்தினான் அவன். "நங்கா நீ ஒண்ணுக்குமே பயப்பட்டுக்காத உன்ன நானு இந்த உலகத்தில பிரியிறதுண்ணா என் உயிரு பிரியணும். t என் உயிரு பிரியுங்காட்டி உன்ன நானு பிரியவேமாட்டான். இது சத்தியோம்! என்ன நம்பு நங்கா..?”
அவன் தன் வார்த்தைச் சாதுரியத்தால் அவளை மயக்கி அவளைத் தன்வழிக்கு பணியும்படி செய்தான். நங்கைக்கும் காந்த ரூபனைப் பிரிந்தால் வேறு வாழ்க்கையே தனக்கு இல்லை என்கிற மாதிரியாக மனம் கிடந்து துடித்தது. அவள் அவன் சொன்ன சொல்லுக்குப் பிறகு மனம் இசைந்தாள். இருவரும் தாங்கள் இருவரும் அவ்விடமிருந்து வெளிக்கிட்டுப் போகும் நேரகாலம் குறித்து தமக்குள் பேசி தீர்மானித்துக் கொண்டார்கள். அந்தக் கதையின் முடிவிலே பூங்கொடி மாதிரி இருக்கும் அவளை தன் நீண்டு நிமிர்ந்த உடம்போடு சேர்த்து அணைத்தான் காந்த ரூபன். சுகம் தொடக்கமானது. அவளது உணர்வின் முகிழ்ப்புகள் மென்மையாய் பூவின் இதழ்களாய் விரிந்து கொண்டிருந்தன. தன் உடல் பூப்பூவாய் வேர்த்து நிற்க, அவளின் செவ்வாயில் அவன் விடாது முத்தமாரி பொழிந்து கொண்டிருந்தான். அந்த முத்தத்தின் குளுமையில் சுவைக் கலசம் ஊற்றாகி, அல்லி போல அவள் அடுக்கடுக்காய் விரிந்தாள்.
崇
அன்று விடிந்த அரவத்தில், முகடு கறுத்து மலையிலணைந்த முகில்கள் விம்மின. கடித்தது குளிர்! பிடித்தது மழை “பொழுது விடிந்து
தி.சி.அருள%னந்தர் 138 அத்தி

பொழுது போனால் இது தானே நடக்கும் மழைதானே இங்கே நெடுகலும் பெய்யும்! " - என்று தோட்டத்துத் தொழிலாளர்கள் எல்லாருமே மழைபெய்வதைப் பரவாய் பண்ணாமல் விட்டு விட்டார்கள். ஆனால் மழையோவென்றால் அன்று முழுவதும் நிற்காத மழையாகப் பெய்தது. ஒரு இடி முழக்கம்! வானத்தையே வில்லாக வளைத்தது போல மின்னல்கள் பளபளத்தன. அந்த இடைவிடாத மழையாலே வீடுகளிலே ஜலதோஷம், காய்ச்சல் பிடித்துக் கிடந்த தோட்டத் தொழிலாளர்கள் மழையைச் சபித்தனர். தோட்டக்காடு முழுவதும் தண்ணீர் ஈரம். ஆகாயத்திலும் தண்ணிர் போன்ற முகிற் கூட்டங்களைத் தவிர வேறொன்றுமில்லை. மழையினால் மலைகளெல்லாம் குளிர்ந்திருந்தன. சூரியனையே அன்று பகலெல்லாம் காணவில்லை.
ஆனாலும் பொழுது படவும் மழை ஒருவாறு ஓய்ந்தது. தூறலும் நின்றது. காற்றுக் குளிர்ந்தடித்தது. நங்கை இருட்டுப்படவும் - முகம் கழுவிப் பொட்டு வைத்து, வகிடெடுத்துச் சடைபோட்டு, கடிதாரையும் உடுத்திக் கொண்டு, அந்தச் சின்ன பெல்ஜியம் கல் கண்ணாடியிலே தன் அழகைப் பார்த்துக் கொண்டாள். உள்ளத்தில் அவளுக்கத் தளிர்த்து நின்ற சீதளமான எண்ணங்களாலே, முகம் அவளுக்குச் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது. th
'செலுவம்மா’ அந்த அறைக்குள் ஒரு பக்கம் இருந்து வெற்றிலைக்காம்பைக் கிள்ளிக் கொண்டு மெளனமாகத் தன் பார்வையால் மகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
“என்னடி இண்ணிக்கிண்ணு பெரிசா சிங்காரிச்சுக் கிட்டிருக்கே. வெளியில இந்த மழை ஈரத்துக்க எங்கடி போப்புறே நீ.? " - என்று அவள் மகளை அதட்டிக் கேட்டாள். “கோவிச்சுக்கிறியாம்மா..? நானு படம் பாத்துக்க அங்கின போவப்புறனும்மா." - என்று தாயின் நாடியைத் தடவிக் கொண்டு செல்லச் சிணுங்கலில் சொன்னாள் நங்கை. "இந்த மழைக் குளயும் உனக்கு இந்தப் படத்து ஆசையாடி..? " - என்று கேட்டுவிட்டு, அத்தி பூத்தாற் போல் இன்று நல்ல மனோநிலையில் இருந்து மகளைப் பார்த்துச் சிரித்தாள் செலுவம்மா. தன் மகளின் அதிஸ்டத்தால்தான் தங்களைத் தேடி இப்போது செல்வம் வந்திருக்கிறது என்று நினைக்க தன் மகளிலே அவளுக்கு அளப்பரிய தாய்ப்பாசம்
பொங்கியது.
“சரி சரி போறதுதான் போறே சாமம் வாட்டி, அங்கினயே கெடக்காம சீக்கிரமா வந்துடடி.” - என்று மகளுக்கு அவள்
சொல்லிவிட்டு கிழித்துக் கையில் வைத்திருந்த வெற்றிலைக்கு சுண்ணாம்பு
தடவத் தொடங்கினாள் அவள்.
தாய் தாம்பூலத்தோடு கிடந்த மினக்கெடுவதைப் பார்த்துக்
கொண்டு ஒரு கணம் அதிலே நின்று விட்டு, அறைக்குள்ளே போனாள்
நீ.பி.அருாரத்தச் 139
ീക്രി

Page 79
நங்கை, இந்த வீட்டிலே காசு பணம் தொடங்கி வேறு ஏதாவது பெறுமதியானதுமான ஒரு பொருள் இருந்தால், அது அந்த மேசைலாச்சியில்தான் இருக்கும் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். லாச்சியின் திறப்பு மேலே உள்ள ‘சாமி’ படத்துக்குக் கீழ் உள்ள தட்டில் இருப்பதும் அவள் அறிவாள். அந்தத்தட்டை நோக்கியதாய் அவள் கை அவ்வேளை நீண்டது. திரும்பி வாசலை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். திறப்பை எடுத்தாள். லாச்சியைத் திறந்தாள். லாச்சி அறைக்குள் இருந்து, வாலை விடுவித்துக் கொண்டு ஒரு வெள்ளைப் பல்லி ஓடியது. லாச்சி உள்தட்டில் பல்லி வால் இருந்து துடித்துக் கொண்டிருந்தது. அவளும் பயத் துடிப்புடன், லாச்சியின் உள்ளே கைவிட்டாள். உள்ளே சிறிய சீலைப் பொட்டலமாக அவள் கையில் ஒன்று அகப்பட்டது. வெளியே எடுத்தாள். கைக்குள்ளே அதைப் பொத்தினாள். கல் இரண்டும் துணிக்குள் கிடந்தபடி ஒன்றுடன் ஒன்று உராயும் ஸ்பரிசம் அவளுக்குப் புரிந்தது. சீக்கிரமாக அதைத் தனது சுடிதாரின் இடைக்ககுள்ளே அவள் சொருகிக் கொண்டாள். வாசலை அவள் அணுக, குந்தியவாறு இருந்து நீட்டிப் போட்டிருந்த தன் கால்களை மடித்து, மகளுக்கு வழி விட்டாள் செலுவம்மா.
“போயிற்று வர்றம்மா." என்றாள் நங்கை, குரல் கொஞ்சம் அவளுக்கு கவலையில் தளதளத்தது.
“சீக்கிரம் வூட்டுக்கு வந்துடடியம்மா." - என்று செலுவம்மா அவளை வழியனுப்புவது மாதிரி சொல்லிவிட்டு இருந்தாள்.
நல்ல தோழி ஒருத்தி தனக்கு வாய்த்திருந்ததில் நங்கைக்குத்தான் ஏது பயம், அவள் எல்லா வழிகளிலும் அன்றிரவு நங்கை காந்த ரூபனுடன் ஒடிப் போக துணையாய் நின்று கொண்டு அவளுக்கு உதவினாள். காந்தரூபன் வழமையாக தான் நங்கைக்காகக் காத்து நிற்கும் இடத்தில், இப்போதும் நின்று கொண்டிருந்தான். சரியான நேரத்திற்கு நங்கை அதிலே வந்தாள். அவள் தன்னிடமாக வந்ததும் மகிழ்ச்சியில் காந்த ரூபன் அவளை முதலில் தன் மார்போடு கட்டி அணைத்தான்.
“ரெத்தினக் கல்லுங்களையும் எடுத்துக்கிட்டு வந்திருக்கியா நங்கா..? " . என்று ஆசையோடு அவன் அவளைக் கேட்டான்.
“கொண்டாந்திருக்கேன். ” - என்றாள் அவளும். அவனுக்கு சடபடவென்று ஒரே உலுப்பில் ஆயிரம் நாவல் பழங்கள் உதிர்கிறாப் போல இருந்தது.
"வா.” - என்று அவன் அவளை ஆட்டோ நின்ற இடத்துக்கு அழைத்துப் போனான். அவள் தன் காலை நீட்டி ஆட்டோவுக்குள் வைத்தாள். அவள் உள்ளே ஏறவும் அவனும் ஏறிக் கொண்டான். ஆட்டோ உடனே வேகமாக ஓடத் தொடங்கியது. எங்கோ ஒரு நாற்றங்காலில் பிறந்து வளர்ந்த ஒரு பயிரை எங்கோ ஒரு இடத்துக்கு நடுகிறதுக்கு
தி.சி.அருாரணத்தச் 140
Mai

கொண்டு போவது மாதிரி அவளைத் தோட்டக் காட்டிலிருந்த அன்றிரவு கூட்டிக் கொண்டு போய் விட்டான் காந்த ரூபன்.
崇
இரவு வீட்டுக்கு மகள் வராததைக் கண்டு விட்டு மாரிமுத்துவும் செலுவம்மாவும், நெஞ்சு பதைக்கப் பதைக்க அந்த இடமெல்லாம் திரிந்து அவளைத் தேடினார்கள். நங்கை காந்த ரூபனுடன் ஓடிவிட்டாள் என்று பிறகு அவர்கள் அங்கு வசிக்கின்ற ஒரு சிலரிடமிருந்து அறிய வேண்டியும் வநதது.
இருந்தாற் போல ஒரு யோசனை வர, மாரிமுத்து வீட்டுக்கு வந்து மேசைலாச்சியைத் திறந்தான். உள்ளே ஒதோ சத்தம் முட்டி மோதி ஒரு எலி வெளியே ஓடியது. தான் வைத்திருந்த இரத்தினக் கற்களை அவன் அதற்குள்ளே தேடினான். அங்கே கல்லையும் காணாததால் அவனுக்கு எல்லாமே பேரிடியாய் இருந்தது. அவன் தடுமாறினான். அந்தக் கற்களைக் காணாததில் அவனுக்கு எழுந்த குற்ற உணர்ச்சி, ஒரு கம்பளிப் பூச்சி போல உடம்பு முழுதும் அவனுக்குப் படர்ந்து கொண்டிருந்தது.
மாரிமுத்து தன் வாழ்வில் ஆருக்கும் கொடுத்த வாக்குத் தப்பியதாய் எப்போதுமே நடந்ததில்லை. அதனால் அந்த இரத்தினக் கற்கள் விஷயத்தில், தன் மச்சான் வேலுவை அவன் நினைத்துப் பார்க்கவும், அதன் மூலம் குடலில் குத்தி எழுந்த பீதி அவனுக்கு உடலெல்லாம் பரவியது. தன் மகள் சாதி கெட்டவனோடு ஓடிவிட்டாள் என்ற நினைப்பும், அவனின் மனத்தை வாள் கொண்டு அரிந்தது போல அரிந்து கொண்டிருந்தது. இந்த நினைவுகளெல்லாம் ஒரு சுருள் பூச்சியாய் அவனிடத்தில் ஆயிரம் காலோடு நகர்ந்து கொண்டிருக்கிறது மாதிரி இருக்க, அவன் அந்த இரவு முழுவதும் தேயிலைக் காட்டில் நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.
“கல் இங்கிருக்குமோ..? அதோ அங்கிருக்குமோ..? " - என்று தனக்குள் சொல்லிக் கொண்டு ஒரு பயித்தியக்காரன் போலவும் அங்குமிங்குமாக பிறகு அவன் ஒடித் திரியவும் தொடங்கினான்.
புல்லும் கல்லும் குழைந்திருந்த இடத்திலெல்லாம் இருட்டுக்குள்ளே அவன் கைவிரல்களாலும் பிறாண்டிப் பார்த்தான். சிராய்த்த நகம் முள்ளாய் அவனுக்குக் குத்தி வேதனையளித்தது. அந்த வலியோடு கைகள் இரண்டையும் தூக்கிப் பிடித்தபடி அவன் திரிந்தான். அந்த இரவில் இவன் அவ்விடமெல்லாம் அலைந்து திரிவதை அங்குள்ள யாருமே காணவில்லை. அவர்களெல்லாம் அந்த இரவில் தங்கள் வீடுகளில் கூதலுக்கு மெய்முடங்கிக் கிடந்தார்கள்.
ഴ്ച.dി.മിത്രസ്ത്ര് 141 அததி

Page 80
செலுவம்மா தன் வீட்டில் ஒற்றை மனுசியாகக் கிடந்து சத்தம் வெளியே வராமல் விசும்பிக் கொண்டிருந்தாள். இவளிண்ட கொழுப்புக்கு இப்பிடியாத்தான் வேணும்' - என்று அக்கம் பக்கத்தார் கூட நினைத்துக் கொண்டு, அவளை வந்து என்ன ஏது என்று கேட்காமல் கூட இருந்து விட்டார்கள். நச்சுப் பாம்பாய் காத்துக் கிடந்த அவர்களுக்கெல்லாம், செலுவம்மாவிற்கு இப்படி நடந்தது மனதுக்கு அவர்களுக்கு திருப்தியாயிருந்தது.
பொழுது விடிந்து கொண்டு வந்தது. காலைப் பணித் துளிகளை வாரியெடுத்துக் கொண்டிருந்தன. தேயிலைச் செடிகள். மாரிமுத்து விடியலைப் பார்த்ததும் உள்ளம் விறைத்துப் போனான். தன் வீட்டுச் சேதியெல்லாம் அறிந்து கொண்டு வேலு வந்து "எங்கே ரத்தினக்கல்லுங்க” - என்ற கிட்டி போட்டது மாதிரி கேட்கப் போகின்றானே என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பிலேயே பயத்தில் அவனுக்கு இரத்தம் தலைக்குள்ளும் இருதயத்துக்குள்ளும் பொங்கிப்பாய்ந்தது. தன் மகள் தனக்குச் செய்த துரோகத்தை நினைக்கவும் அவனுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் அந்தத் தோட்டக் காட்டை விட்டு எங்காவது ஒடிப் போய்விட வேண்டுமென்று நினைத்து, மலை அடர்த்தியின் கீழே பதுங்கிப் பதுங்கிப் போகும் பாதையில் கால்போன போக்கிலே நடந்து கொண்டிருந்தான்.நான்இப்பொழுது எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்.? ' - என்கிற ஒரு விபரமும் அவனுக்குத் தெரியவில்லை. என்றாலும் அவன் ஒரு இடத்தில் போய் நின்று திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையில் தேயிலைத் தோட்டம் அவனை விட்டுப்பிரிந்து தூரம் தூரமான ஒரு தொலைவிலே போய்விட்டது போல அவனது கண்களில் தெரிந்தது. திடீரென கண்ணிர் பெருக்கெடுத்து அந்தத் தோட்டப் பகுதியை அதிலே நின்று பார்த்துக் கொண்டு அவன் ஓலமிட்டு அழுதான். கவலையால் அவனுக்கு உடல் தளர்ந்தது. ஆனாலும் அவனது காதுகளுக்கு கேட்கும் புலன் கூர்மையாகின.
தண்ணீரின் கள கள " - ஒலி அருகே இருந்து வருவது போல கேட்க . அந்த இடத்தை நோக்கி அவன் விறுவிறுவென்று நடந்தான். ஏறுமாறான கல் தடுக்கிக் காலிலே காயம்பட்டும் அவன் நடையின் வேகம் குறையவில்லை. மழைக்குப் பின், தேக்கத்தின் தூக்கத்திலிருந்து விடுபட்டு, ஆழிப் பெருக்காய் ஆற்றுத்தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. கங்கைத் தண்ணீரைக் கண்களால் கண்டதும், மனதில் துன்ப அலைகள் அவனுக்கு அதிரச் சுழன்றன. அழுகை ஊற்றென விம்மிக் கொண்டு வந்தது.
அவன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, தண்ணிரை முத்தமிடக் குனிவது போல் சாய்ந்திருந்த மரத்தடியில் போய்க், காலை வைத்து ஆற்றுக்குள் இறங்கினான். கரைப்பக்கமே ஆற்று நீர், கழுத்து
്.dി.ആസ്ത്രി 142
ിമീ

முங்குமளவிற்கு ஓடிக் கொண்டிருந்தது. அவன், கழுத்தில் அசையும் மூச்சுக் குழியடிக்கு தண்ணீர் வரமட்டும் தண்ணிருக்குள் இறங்கி விட்டான். அடுத்த அடி வைக்கும் போது, தண்ணீர் தலையை மேவி அவனை உள்ளே இழுத்தது. பீதி எழுதிய அவன் கண்கள், தண்ணிருக்குள் அமிழ்ந்தது. அவனது கைகளையும் மறைய மூடியது தண்ணீர், கங்கை அவனை விழுங்கிக் கொண்டிருந்தது மூச்சுக் காற்றுக்காக அவன் திணறிக் கொண்டிருந்தான். நிகழவிருக்கும் ஆபத்தை அவனது உள்ளுணர்வு எச்சரித்தது. அவனது நெஞ்சு படபடத்தது. சாவுடன் அவன் போராடுகிற வேளை - தண்ணிருக்குள்ளே இருந்து ஒரு கேள்வி?
“யாரது.? " - என்று யாரோ ஒருவரின் குரல் அவனுக்குக் கேட்பது போல பிரமையாக இருந்தது மூச்சுத் திணறலிலும் "நான்தான். மாரிமுத்து ” - என்று பெரிதாகக் கத்துகிற மாதிரி அவன் சொன்னான். வாய்க்குள்ளிருந்து காற்றுக் குமிழிகள் அவனுக்கு வெளிப்பட்டது. ஈஸ்வரா ஈஸ்வரி ' - என்று உடனே அவனுக்கு வாய்திறந்து சொல்ல ஒரு உந்துதல் மனத்தில் ஏற்பட்டது. ஆனாலும் அவைகளை தன் வாயால் சொல்லும் அளவிற்கு பிறகு அவனால் முடியவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஆற்றுத்தண்ணீர் அவனை ஆழத்தில் அமிழ்த்தி, மரங்களின் நீட்டிய வேர்களில் அறைந்து, பிறகு, நீர் வழி ஒடும் பூவாய் அவனை இழுத்துக் கொண்டு போன வண்ணமாக இருந்தது.
(2007)
நீ.பி.அருாரணத்தச் 143

Page 81
இத்தரி திரித்துயிர4ற
யுத்த பூமியாக நாங்கள் பிறந்து வளர்ந்த
இந்த மண் மாறிவிட்டதே என்ற கவலையோடு, அந்த மண்ணை விட்டு எங்களைப் பிரித்துக் கொண்டு வெளிக்கிட்ட நாங்கள் இப்போது இரவில் இருட்டே தெரியாத மின்சார ஒளியுள்ள நகரத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம்.
இங்கே எங்கேயாவது ஒரு இடத்தில் இருந்து இந்தச் சீவனைக் காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்தால் போதுமென்ற கொள்கையில் , எனர் குடும்பத்தவரெல்லாம் இப்போது தங்களை இங்குள்ள இடத்தில் வாழ்வதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் இங்கு வந்ததன் பிறகு, இப்போது அங்கு நடந்த சம்பவங்கள் பல மறக்கப்பட்ட நிலைக்கு வந்து விட்டன.
ஆனால் எனக் கோ அந்த - இழவு நினைவுகள், சில வேளைகளில் இன்னும் என் ஞாபகத்தில் இருந்தவாறு திரும்பத் திரும்ப வந்தபடியே இருந்து கொண்டு இருக்கின்றன. அந்தச் சம்பவங்கள் உவாதை முள்ளாய் என்னைக் குத்திக் கொண்டிருக்கின்றன. அந்தச் சம்பவங்கள் ஞாபகத்தில் வரும் பொழுது, நிலவொளியற்றிருக்கும் அந்த இருட்டு நாட்களில் கூர்ச்சுக் கூர்ச்சாக இருள்பொதி போல் தெரியும் அந்த மரங்கள்தான் முதன்முதலில் என் நினைவில் - ஒரு நிழலாய் - தி ஓமன்’ என்கிற, ஆங்கிலச் சினிமாப்படம் பார்த்தது போல வந்து
ീ.dി.eിത്രസ്ത്രക്രി ീകൃി
 

என்னைப் பயமுறுத்துகிறது.
நான் உடனே அதை மறந்து விட வேண்டுமென்று என்னாலான பிரயாசையெல்லாம் எடுக்கிறேன். அதையெல்லாம் மறந்து விடுவதற்கு ஏதுவாக இருக்கண்களையும் இறுகவே மூடியபடி, மூச்சையும் உள்ளே பிடித்து வைத்துச் சில வினாடி நேரம் இருந்து பார்க்கிறேன்.
ஆனால் எதுவுமே எனக்குப் பிரயோசனம் அளிப்பாதாயில்லை! என்னால் முடியவில்லை அந்த நினைவுகளைக் களைவதற்கு, அந்த நினைவுகள் என்னிடத்தில் நெளிந்து நெளிந்து நிழலாடிய வண்ணமே இருக்கின்றன. அந்த நினைப்பின் நெகிழ்வில் இப்போது என் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது.
"துஷ்ட நிக்கிரக சிஷ்ட ரட்சகனே எங்கிருக்கிறாயப்பு.? " - என்று அப்போது என்வாய் சொல்லாது விடினும் - என் மனம் தான் இதை மனவேதனை படரச் சொல்லிக் கொள்கிறது. என் மன உணர்வுகளின் முயற்சியெல்லாம் அன்று நடந்த சம்பவங்களை என் ஞாபகத்தில் புதுப்பித்துக்கொள்ளவே செயல்பட்டுக் கொள்ளும் அளவுக்கு இருந்த வண்ணம் இருக்கின்றன. அநேகம் பொழுதுகளில் அந்தக் கவலை நினைவுகளுக்கு நானும் அடிமையாகி விடுகிறேன்.
சுவர்க்காரத்தின், டாக், டாக்" = சத்தம் அந்த அறைக்குள் எனக்குத் துலக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. சூழவுள்ள எல்லாவற்றிலுமிருந்து இப்போது நான் தனிமைப் பட்டுப் போய் விடவேண்டுமென்பதுதான் என் ஆசை
நிம்மதியைத் தேடும் என் மன விருப்பிற்கு இசைவாக அந்தக் கதிரையிலிருந்து எழுந்து போய், நான் இருக்கும் அந்த அறையில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மின்சார விளக்கை அணைத்தேன். அந்த இருள் குளிர்மையாக எனக்கு இருந்தது. என்றாலும், அந்த இருளைப் பார்க்கவும் அந்த நினைவுகள் மீள வந்து என் மனம் எரிந்தது. திரும்பவும் நான் வந்து அந்தக் கதிரையில் உட்கார்ந்தபடி, பழைய நினைவில் ஊறினேன்.
இங்கே இருந்து கொண்டிருக்கும் இந்த நான் மாதிரித்தானா அந்த நான்? - இல்லை! - நான் ஞாபகத்தோடு கூறுவதென்றால், அன்றைக் கிரவு நானும் மனைவி பிள்ளைகளும் நன்றாகவே பயந்து விட்டிருந்தோம் . அந்த நேரம் நாங்கள் வெயர்த்து வெந்து போய் நடுங்கிக் கொண்டிருந்தோம். உண்மையிலேயே அந்த இரவு எனக்கும் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு கொடுமையான இரவென்றுதான் கூறவேண்டும் - அதற்குப் பிறகு, எங்கள் வாழ்க்கைக் காலத்தில் அப்படியான இரவை நாங்கள் ஒரு போதுமே பார்க்கவேயில்லை.
இந்திய இராணுவம் அங்கிருந்த நாட்களிலே, ஒரு நாள் இரவு நடந்த சம்பவம்தான் அது அன்றிரவு கிட்டத்தட்ட எட்டு மணி இருக்கும்
ഴ്ച.dി.eിത്രസ്ത്രക്രി 145
ീക്രി

Page 82
. நானும் மனைவியும் பிள்ளைகளுமாக இரவுச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் வீட்டின் உள் விறாந்தையிலிருந்து எல்லோரும் சேர்ந்து கதைத்துவிட்டு, நித்திரை கொள்வதற்காக படுக்கை அறைக்குப் போனோம். அறைக்குள்ளே போனதும் என் மனைவி, லாந்தர் விளக்கின் - திரிவழிய விட்ட ஒளியை அணைத்தாள். நாங்கள் இருவரும் அந்த ஒரு கட்டிலின் மீது பிறகு படுத்துக் கொண்டோம்.
நான் கட்டிலில் படுத்திருந்தபடி, அந்த அறையில் எனக்கு முன்னால் தெரியும் ஜன்னல் வழியாக, இருள் கலையாதவானத்தைப் பார்த்தபடி படுத்துக்கிடந்தேன். கோடை இரவு என்பதால் சுவாத்தியம் வெதுவெதுப்பாயிருந்தது. இருந்திருந்தாற் போல இருட்டுப் பூச்சிகள் நாராசமாய்க் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. நிசப்தமாயிருந்தது. அதற்கும் பிறகு எங்கோ மாடு கத்தியது. உரக்கக் கத்தியது. காற்று அடித்தபடி இருந்தது. என் வீட்டுக்கருகில் நின்ற அந்த மாமரத்தின் இலைகள் அந்தக் காற்றுக்குச் சலசலத்துக் கொண்டிருந்தன. அந்த மாவிலைகளின் இசை நயமுள்ள ஓசைகளினூடே, யாரோ என்வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் ஓடி வருவது போன்ற காலடி ஓசைகள் , தொலைவிலிருந்து கேட்பது போலும் அப்போது எனக்குக் கேட்டது. சில வேளைகளில் அந்தக் காலடிச்சத்தங்கள் முற்றிலும் அடங்கி ஓய்ந்து விடுபவையாக மந்தமாகவும், அடிக்கடி எனக்குக் கேட்கத் தொடங்கின. அந்தக் காலடி ஓசைகள் கேட்கவும் எனக்கு அது - என் மார்பின் மீது மாடுகள் குளம்படிகளைப் பதிப்பது போல இருந்தது.
இவ் வேளை எண் வீட்டு நாயும், என் வீட்டுக்குப் பக்கத்திலுள்ளவர்களது வளர்ப்பு நாய்களும், தங்கள் அதிகாரத்தை ஸ்தாபிக்க விரும்பியது போல உரக்கக் குரைத்துக் கொண்டிருந்தன. அந்த நாய்கள் குரைப்பது கருதி, தூரத்திலுள்ள நாய்களும் குரைத்தன. இப்போது என் மனத்திலுள்ள பீதியைப் போல் என் வீட்டுக்குப் பக்கத்தில் நிற்கும் அந்த மாமரம் காற்றுக்கு அசைந்தாடிக் கொண்டிருப்பதாக எனக்கு நினைக்கவும் தோன்றியது. என் மனத்திலுண்டான கலவரம் போல, அந்த மாமரமும் இரைந்து கொண்டிருப்பதாக எனக்குத் தெரிந்தது. முனகிக் கீச்சிடுவதாகவும், என் காதுகளில் கேட்குமாறு இருந்தது. இவ்வேளை வெளியே சரசரக்கும் இருளை நான் நினைத்துக் கொண்டேன். அந்த இரவு இருளின் பயம், கறுத்தத் தகரம் போல நினைவில் நின்றது. அங்கே கேட்கும் காலடிச் சத்தங்களில் நான் கவனம் ஊன்றியபடி இருந்தேன். என் உயிர் அணுக்கள் முழுவதையும் என் செவியில் குவித்து, அந்தக் காலடி ஓசை வரும் திசைவாயைக் கிரகிக்க முயன்றேன். அந்தக் கும்மென்ற இருளுக்குள் கட்டிலில் படுத்துக்கிடந்த எனக்கு, அந்த முயற்சி பயனளிக்கவில்லை. என் அருகில் படுத்துக் கிடந்த மனைவியும் முழிப்பு என்று எனக்கு இப்போது விளங்கியது. அவளும் என்னுடன் ஒரு கதையும்
நீ.பி.அருாரணத்தச் 146
ീകൃി

கதைக்கவில்லை. அவள் பயத்தில் எனக்குப் பக்கத்தில் நூல் உருண்டை சுருண்டது போல சுருண்டு கிடந்தாள். 'உடல் அவளுக்கு அக்கினி அலைகளாய்க் கொதித்தது.
அந்த இருட்டுக்குள்ளே அவளின் காதருகுக்குக் கிட்டவாக என் முகத்தை வைத்திருந்தபடி, அவளுடன் இரகசியமாகக் கதைப்போமென்று நான் பார்த்தேன். அந்த நேரத்திலேதான், என் நெஞ்சதிருக்கிற சாடை காது கிண்ணிடுறகிதான துவக்கு வெடிச்சத்தம், என் வீட்டு கேற்றடிக்குக் கொஞ்சம் தூரவாகக் கேட்டது. அந்த நிசப்தமான வேளையில் அந்தத் துவக்கு ஓசை, எங்கள் பிரதேசத்தையே ஆட்கொண்டது. சத்தம் கேட்ட வேளையில் அடிபட்டதாக என் இருதயம் ஒரு கணப்பொழுது ஸ்தம்பித்துப் போனது போல இருந்தது.
“என்ன. என்ன . ?? ’ . என்று என் மனைவியும் தன் தலையை என் கைக் கமக்கட்டுக்குள் உடனே செருகி வைத்துக் கொண்டபடி, பயத்துடன் நடுங்கியவாறு கேட்டாள். அதற்குப் பிறகு சில வினாடிகள் அவள் அசையவுமில்லை - மூச்சு விடவுமில்லை, அப்படியே அவள் என் கமக்கட்டுக்குள் தலையைப் புதைத்தபடி கிடந்தாள். எனக்கு எதையும் அப்போது அவளுக்குச் சொல்ல நாப்புரளவில்லை. என் நடுங்கிய உதடுகளை ஒரு முறை நான் நாக்கு ஈரத்தால் நனைத்துக் கொண்டேன். நான் உடனே யோசித்தேன். . "துவக்குச் சூடு யாரையாவது பலி கொண்டு வெறிதீர்த்ததா .?” . அந்தக் கேள்வி என் மூளையை உசுப்பிக் கொண்டிருந்தது. அப்படி ஒரு படிவம் என் மனக்கண்ணில் சட்டென்று விரிந்த போது - உடனே என் உடல் அச்சத்தால் உலப்புற்றுச் சிலிர்ந்தது. " தாரையோ துவக்கால சுட்டுட்டாங்கள் போல. ” - என்று நான் இப்போது வயிற்றை எக்கிக் கொண்டு பயம் ஏற்படுத்தும் மனக்கலவரத்தோடு சொன்னேன். நான் சொல்லும் போது வாய்வழியாக " உஸ்.” - என்று துருத்தி மாதிரி காற்றடித்தது. அப்படி அவளிடம் நான் கூறும் போது வெளியெ உள்ளவர்களை நிழலுருவில் ஒரு முறை நினைத்துப் பார்த்தேன். அந்த நிழல்கள், நள்ளிரவில் பதுங்கி நகரும் வனவிலங்குகளின் நிழலுருவங்கள் போல என் நினைவில் அசைந்தசைந்து என்னை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. அந்த அச்சத்தில் அடர்ந்த ரோமமுள்ள என் கம்பளி மார்பு வேர்த்துவிட்டது.
இப்பொழுது, கரைசலான குரல்களுடன் ஏழெட்டுப் பேர் என் வீட்டுக் கேற்றடியில் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். எட்ட இருந்து சீழ்க்கை ஒலியும் கேட்டது. அவர்கள் கதைத்துக் கொள்வதில் ஒரு சொல் கூட என் காதுகளுக்குத் துலக்கமாக கேட்கப் பிடிபடவில்லை. அவர்கள் கதைக்கும் கதையெல்லாம் எனக்கு விளங்காமல், வீசிக் கொண்டிருந்த காற்றோடு கலந்து போவது மாதிரி எனக்குத் தோன்றியது.
தி.சி.அருளரந்தச் 147 ീക്രി

Page 83
இந்தச் சந்தடியில், பல நாய்கள் ஒன்று சேர்ந்து நின்று ஆக்ரோஷமாகக் குரைத்துக் கொண்டிருப்பது மாதிரி எனக்குக் கேட்டது. குரைக்கச் சக்தியின்றி ஈனஸ்வரத்தில், வயதான நாய் ஒன்று வீதியில் நின்று ஊளையிட்டுக் கொண்டிருப்பதும், மற்ற நாய்க்குரைப்புகளுடன் சேர்ந்து அதுவும் என் காதில் விழுந்து கொண்டிருந்தது.
"அறையிக்க பிள்ளையஞம் பயந்து இப்ப முழிச்சிருக்குங்கள்.! அதுகளை அங்கயிருந்து மெதுவா இந்த அறைக்குள்ளயாக் கூட்டிக் கொண்டந்து படுக்க வைப்பமப்பா..? " . என்று பிள்ளைகளின் யோசனையோடு எனக்குச் சொன்னாள் மனைவி. "ஒமோம்! ஆனா நீர் உந்தக் கட்டிலில் இருந்து எழும்பாம உப்புடியே உதிலயாப் படுத்துக்கிடவும்! நான் அங்கபோய் மெதுவா அவயள இந்த அறைக்கைக் கூட்டியந்திடுறனென்ன..? " . என்று நான் அவளுக்குச் சொன்னேன். "
இல்லை நானும் உங்களோட சேர்ந்து அங்க போக வாறன். - என்றாள் அவள் " கட்டிலில் இருந்து அப்ப சத்தம் போடாமக் கவனமாகக் கீழ இறங்கும். ” - என்றேன் நான். அவளுக்கு இதைச் சொல்லி விட்டு கட்டிலை ஆட்டாது மெதுவாக அதைவிட்டு நான் முதலில் கீழே இறங்கினேன். என்றாலும் நான் பக்குவமாக இறங்கிக் கொண்டது போல அவளால் அப்போது இறங்க முடியவில்லை. அவளுக்குப் பயத்தில் கைப்பலம் குன்றியிருக்க வேண்டும். தன்கையை நடுங்குகிற நிலையில் மெத்தை மேல் வைத்துக் கொண்டு, குண்டியை அவள் அரக்க, உடனே கட்டில் பலகை மூட்டெல்லாம் கிரீச்” - சென்று சத்தம் போட்டது. அந்தக் கட்டில் போட்ட சத்தத்திற்கு அப்படியே தன் உடல் அசைவை பக்கென்று அவள் நிறுத்தி விட்டாள். நான் அவளின் இரண்டு கமக்கட்டுக்குள்ளும் என் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு - என் கால் பாதத்தை அவளின் கால் பாதத்தின் மேல் வைத்து சற்று அழுத்தி அவளுக்குப் பலம் கொடுத்தது போல செய்து கொண்டு - அதிலிருந்து எழுந்து நிற்க அவளுக்கு நான் உதவினேன். “ இந்த இருட்டுக்குள்ளால போகேக்க அந்த வாசல் கதவில நீர் இடிச்சுப் போடாதயும் . அதில தட்டுப்பட்டிட்டா வெளியில நிக்கிறவங்களுக்குப் பிறகு சத்தம் கேட்டிடும்.?” - என்றேன் நான் அவள் நான் சொன்னதற்கு சரியென்றதாய் எனக்குத் தெரிவிக்க மூச்சை மாத்திரம் "ம். ” - என்று சத்தமாக வெளிவிட்டுக் கொண்டு மெளனமாகிவிட்டாள்.
நான் அவளை எனக்குப் பின்னால் நிற்கவிட்டு, என் தோள் மேல் அவள் கையை எடுத்து வைத்துப் பிடித்துக் கொண்டேன். என் பின்னால் அவள் நடந்து வரக்கூடியதாகச் சரி செய்து கொண்டு, அவளுக்கு முன்னால் மெதுவாக இருட்டுக்குள் நான் நடக்க ஆரம்பித்தேன். நெடுகஷம் பழகிய இடமாயிருந்ததால், அந்த ருட்டிற்குள்ளும் நிதானம் பிடித்தபடி அந்த அறைவாசலின் வழியே
ps
്.dി.eിത്രസമ്നേ 148 அத்தி

கதவில் தட்டுப்படாமல் நான் நடந்தேன்.
என் மனைவியும் என் தோளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, நேராக எனக்குப் பின்னாலே நடந்து வந்தாள். அவள் என் தோளைப் பிடித்துக் கொண்டு நடக்கும் போது, அவளின் முலைகள் என் தோளோடு நன்கு நெருக்கமாயிருந்தன. நாங்கள் இருவரும் அப்படியே நடந்து பிள்ளைகளினது அறைக்குள்ளே போனோம். அங்கே எங்கள் பிள்ளைகள் இருவரும் படுத்துக்கிடந்த அந்தக் கட்டிலின் அருகில் நான் போய் நின்றேன். அந்தக் கட்டில் மெத்தையைத் தொட்டு, என் கையை அதில் படும்படி நீட்டிக் கொண்டு போய்ப் பிள்ளைகளது கால்களைப் பிடித்து நான் அவர்களைத் தட்டி எழுப்பினேன்.
“ பார்த்திபா. உஷா. - என்று அவர்களது பெயரைச் சொல்லி, என் பக்கத்தில் நின்ற மனைவியும், மெதுவாக அவர்களைக் கூப்பிட்டாள். சின்னப் பிள்ளைகளென்றாலும் வெடிச் சத்தத்தோடு அவர்களும் - திடுக்கிட்டு எழும்பி இப்போது முழிப்புத்தான் - என்ற மாதிரி எனக்குத் தெரிந்தது. அவர்களும் தாய் அவர்களைக் கூப்பிட்ட கையோடு” அம்மா. அப்பா.” - என்று மெதுவாகச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் தங்கள் கைகளால், அந்த இருட்டுக்குள்ளே துழாவியபடி எங்கள் கைகளைப் பிடிக்கத் தேடினார்கள். நான்அவர்களது தேடும் கைக்குள் அகப்பட என் கையைக் கொடுக்கத் துழாவினேன். இடையில் என் கை தட்டுப்படவும், உடனே கையைப் பிடித்தாள் மகள். அதே போல தாயின் கையைப் பிடித்ததும் - மகன் உடனே ಅರಿಯ್ಯ என்று மெதுவாக அவளைக் கூப்பிட்டான். “ எங்கட அறைக்கவா எல்லாரும் போய், சத்தம் போடாம அதுக்க இருப்பம் பிள்ளையஸ். ” - என்று அவர்களுக்கு என் மனைவி சொன்னாள். பிறகு நாங்கள் எல்லாருமாக முன்னம் என் மனைவி என்னுடன் நடந்து வந்த அதே விதமாய் - ஆனாலும் நிரை கூட்டியபடி . ஒழுங்காக, ஒரு ரயில் பெட்டிகள் போன்ற கணக்கில் எங்களது அடுத்த அந்தப் படுக்கை அறைக்குள் வந்து சேர்ந்தோம். அங்கே பிள்ளைகளை அந்தக் கட்டிலின் மேல் மெல்லத்தூக்கி இருக்க வைத்து விட்டு " ஒரு சத்தமும் வெளிக்காட்டாம - ஒண்டும் நீங்க ரெண்டு பேரும் கதைக்காமக் கொள்ளாம அப்பிடியே பேசாம உந்தக் கட்டிலில படுத்துக் கிடவுங்கோ. நானும் அம்மாவும் இதில உங்களுக்குக்கிட்ட இந்தக் கட்டிலுக்குக் கீழே குந்திக் கொண்டிருக்கிறம் நீங்க ஒண்டுக்கும் பயப்பிடாம அப்பிடியே படுத்து நித்திரை கொள்ளுங்கோ . ஏதும் அப்பிடிப் பிறகு இருந்தா மெல்ல உங்கள் ரெண்டு பேரையும் நான் எழுப்புறன் . " - என்று நான் அவர்களின் தலைக்குக் கிட்டவாக என் முகத்தை வைத்திருந்தபடி குரலைத்தாழ்த்தி மெதுவாகச் சொன்னேன்.
" ஓம் பிள்ளையஸ்! அப்பா சொன்ன மாதிரி ரெண்டு பேரும்
29
தி.சி.அருள%னந்தர் 149 அததி

Page 84
பயப்பிடாம அப்பிடியே இதில கட்டிலிலயாப் படுத்துக் கிடவுங்கோனண .! நானும் உங்களோட இதில பக்கத்திலேயே இருக்கிறன் பிள்ளையஸ்.! ” - என்று மனைவியும் என்னையடுத்து அவர்களுக்கு இவ்விதம் கூறினாள்.
நான் பிள்ளைகளை மெதுவாகக் கட்டிலிலே சரிந்து படுக்க உதவி செய்து விட்டு, அப்படியே கீழே நிலத்தில் கையை ஊன்றிக் கொண்டு குந்தி இருந்தேன். என் மனைவி கட்டில் சட்டத்தில் கையை வைத்து ஊன்றிக் கொண்டு, கீழே நிலத்தில் இருக்கக் குனிந்தாள். கட்டில் - கிரீச்” - சென்றது. உடனே நான் . " சத்தம் வர ஏன் அதில போய்க் கைவைக்கிறாய். ? கையூண்டாத அதுக்கு மேல. ? ” = என்று வெடுக்கென்று சொன்னேன். உடனே தன் கையை அதிலிருந்து எடுத்து விட்டு; அவள் நிலத்தில் கையூன்றிக் கீழே எனக்கருகில் இருந்தாள்.
" என்ன இதிலையா அந்தத் துவக்கு வெடி! ஆரையும் ஆரும் வெளியில அப்பிடித் துவக்கால சுட்டிருப்பாங்களோ .. ? ? - மனைவி இப்பொழுது இப்படி என்னைக் கேட்டாள்.
" எனக்கும் உது ஒண்டுமாத் தெரியேல்ல . ” - என்று நான் இருட்டைப் பார்த்து விழித்துக் கொண்டு அவளுக்குச் சொன்னேன். அப்படி நான் சொல்லிய பிறகு திரும்பவும் என் மனசுக்குள், வெளியே முன்னம் கேட்ட அந்தத் துவக்குச் சூட்டுச் சம்பவம் அடர்ந்தது. எனக்கு மண்டை பிளக்கும் யோசனையாயிருந்தது. " முருகா ..! முருகா . முருகா ..! எங்களுக்கு இப்பிடியும் ஒரு சோதனையோ .? " என்று அவள் தலையைக் குனிந்து என் முகத்தை முகர்ந்து பார்ப்பது போல் இருந்து இவற்றைச் சொன்னாள். அவள் சொல்வதெல்லாம் என் காதுகள் கேட்டுக் கொண்டிருந்தன. பிறகு என் மனம் கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தது.
நாங்கள் அதிலே குத்திக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, வெளியே கேட்டுக் கொண்டிருந்த குசு குசு வென்ற இரகசிய உரையாடல்களெல்லாம் அடங்கிப் போய் விட்டது. இடையிடையே எங்கள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்த, அந்தக் காலடிச் சத்தங்களும் இல்லாமல் மறைந்தவாறு போய்விட்டன. அந்தத் துவக்குச் சூட்டுச் சம்பவத்தை திரும்பத் திரும்ப நான் நினைத்துக் கொண்டதில், இடைக்கிடை நேரம் எனக்கு அறுவதும் பொருந்துவது மாப்போல இருந்து கொண்டிருந்தது. என் மனைவி கீழே நிலத்தில் இருந்தபடி, அந்தக் கட்டில் சட்டத்தில் கையை மடித்து வைத்திருந்தபடி, அதில் தன் தலையைச் சரித்து வைத்துக் கொண்டு அப்படியே தூங்கிவிட்டாள். அதற்குப் பிறகு, எந்தத் திசையிலிருந்தோ எனக்கு அது பிடிபடவில்லை’ ஒரு நாயின் தணிந்த குரைப்பு அங்கிருந்து எனக்குக் கேட்டுக்
99
ി.dി.eിത്രസ്ത്രക്രി 150 eീക്രി

கொண்டிருந்தது. இதன் பிறகு காலைக் குளிரின் காப்பில் பிள்ளைகளும் ஆர்வத்துடன் உறங்கி விட்டார்கள் போல் இருந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து நாளாந்தம் சில வேளைகளில் கேட்கும் அந்தத் துவக்கு வெடிகளின் சத்தங்கள் அந்தக் குளிருக்குள், பொதுக்குப்பொதுக்கென்று தூரத்திலிருந்து அப்போது எனக்குக் கேட்டது எனக்கும் கொட்டாவியுடன் தூக்கம் கிறுக்கிக் கொண்டு வந்தது. இவ்வளவு நேரம் இறுக்கி முறிக்கி அடக்கிக் கொண்டிருந்ததில் சிறுநீர் முட்டியிருப்பது இப்போது எனக்கு உபத்திரவமளித்தது. மெல்ல அறைக்குள்ளால் வெளிக்கிட்டுப் போய் வீட்டுக்குள்ளே இருக்கும் கழிப்பறையில் நான் ஒன்றுக்கிருந்து விட்டு, பழையபடி இருந்து கொண்டிருந்த அறைக்கு நான் திரும்பியும் வந்து இருந்த இடத்தில் இருந்தேன். இரண்டொரு காகங்களின் அனாதரவான கரைவு வெறுமையை அதிகரித்துக் கொண்டிருப்பது போல் பட்டது. எனக்கு நித்திரைக் களைப்பில், தலைசுற்றுகிறது மாதிரி இருந்து கொண்டிருக்கின்ற வேளையில் - எங்கள் வீட்டுக்குக் கொஞ்சம் தூரம் தள்ளியிருக்கும் அந்தக் கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து மணிச்சத்தம் கேட்கத் தொடங்கியது. அந்த மணிச்சத்தத்தோடு நான், “ கண்மணி. கண்மணி " . என்று மனைவியைத்தட்டி எழுப்பினேன். நான் தட்டவும் அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டு அசைந்தாள். “ வெளியாலு ஆமியோ ஆரோ நிண்டவங்கள் போயிருப்பாங்களோ.. ? - என்று அவள் என்னைக் கேட்டாள்.
" அப்போதயாயிருந்தே வெளியில சத்தம் ஒண்டுமே இல்யைாப் போச்சுது” - என்றேன் நான் அவளுக்கு. எனக்கு வெறுந்தேத்தண்ணி குடிக்க வேண்டும் போல் இருந்தது. அதனால் - “தேத்தண்ணிக்கு குசினிக்கவாப் போய் தண்ணி சுட வைக்க அடுப்பெரிப்பமா,” - என்று அவளிடம் நான் திரும்பவும் கேட்டேன்.
"விடியட்டும் கொஞ்சம் நேரம் பொறுத்திருங்கோ .” - என்று எனக்குப் பதில் சொல்லி விட்டு, கதையை நிறுத்திவிட்டாள் அவள். “வெளியே என்ன நடந்திருக்குமோ . ” - என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ள .
"ஆண்டவனே அதுதானே ஒருவருக்கும் ஒண்டுமாத் தெரியேல்ல என்று என்போல், அவளும் சொல்லிக் கொண்டாள்.
வீதியில் இவ்வேளை தண்ணீர் இறைக்கும் இயந்திரம் " கடக். கடக். " - என்று சப்தமெழுப்பியபடி போவது எனக்குக் கேட்டது.
"அன்னராசா அண்ணர் தோட்டத்துக்கு இறைக்க மிசின் கொண்டுபோகிறார். ” - என்று கொஞ்சம் பயம் தெளிந்த அளவில் சத்தம் சாதுவாய்க் கேட்க மனைவி எனக்குச் சொன்னாள்.
வெளியே கேட்ட அந்தக் கடக் கடச் சத்தம் என் கேற்றடியை அண்மித்ததும் நின்றது. ஐந்து நிமிடங்கள் கழிய, மீண்டும் கடக்கடவென்று
99
yy
தி.சி.அருாரந்தர் 151
ീഴ്കി

Page 85
சப்தம் போட்டபடி, தொடர்ந்து கேற்றைக் கடந்து முன்னால் வீதியில் பிறகு போய்க் கொண்டிருந்தது. இறைப்பு மிசின் உருளும் சத்தம் என்கேற்றடி வரையில் வந்ததும் ஏன் நின்றது? அன்னராசா ஏன் அதிலே வந்ததும் நின்றார்? - என்ற கேள்விகளின் மூலம் என் மனம் இப்போது குழம்பித் தவித்தது என் வீட்டுக் கேற்றடிக்கு முன்னால்தான் ஏதோ அசம்பாவிதம் நள்ளிரவில் நடந்திருக்கிறது! என்று நான் இதன் மூலம் எனக்குள் அந்த விஷயத்தை நிதானித்துக் கொண்டு, மனப்பயத்தில் நான் உடல் விறைத்தப் போன மாதிரியாய் இருந்தேன். ஒரு சண்ட மாருதம் சூறாவளி வீசிச் சக்தியற்ற நூலிழையில் நான் தொங்கிக் கொண்டிருப்பதான நிலைபரம் எனக்கு வந்து விட்ட மாதிரி இருந்தது. அதனால் கடவுளே என்று அதிலே இருந்தபடி, நான் கையெடுத்துக் கும்பிட்ட போது, என் கைகளில் மெலிதாய் ஒரு நடுக்கமும் வந்தது.
என் வீட்டுப் பின் கதவை யாரோ தட்டுகிறது மாதிரிச் சத்தம், நான் இருந்த அறைக்குள் துலக்கமாக எனக்குக் கேட்டது
" ஆரோ பின்னால கதவைத் தட்டுகினமப்பா .? ” - என்று நான் அவளுக்குச் சொல்ல, "அப்பிடி ஆரப்பா பின்னால வந்து கதவைத் தட்டினம்? " - என்று அவளும் என்னைக் கேட்டாள்.
“ ஆரும் பின்வளவுக்காரரோ. ?” " அப்பிடியும் இருக்கும் ஏதோ எங்களுக்குச் சொல்ல வந்திருக்குதுகள் போல. !”
" அப்ப போய்க் கதவைத் திறந்து பாக்கவோ. ? " நானும் நானும் அங்க உங்களோட வாறன் . ? " - என்று விட்டு அவளும் என் கூடவாய் எழுந்து நின்றாள்.
கதவைத் தட்டுகிறவர், “ தீபன் தீபன் ! " . என்று என்னுடைய பெயரைச் சொல்லி இப்போது கூப்பிட்டார்.
அந்தக் குரலை நானும் அடையாளம் பிடித்துவிட்டு " இவர் எங்கட அன்ராசாண்ணை . “ என்று மனைவியைப் பார்த்துச் சொன்னேன். * முன்னால அப்ப றோட்டில மிசினோட போனவர் பின்னால ஏன் இப்ப வந்து கதவடியில் நிற்கிறார் .? அப்ப என்னவோ நான் சொன்ன மாதிரி வெளியிலயாய் நடந்திருக்கு. ” என்றாள் உடனே அவள்.
" வாவா. ” - என்று அவளை என்னோடு வரக் கூட்டிக் கொண்டு நித்திரைத் தஞ்சைக் கேட்டோடு நான் வீட்டுக்குப் பின் புறமுள்ள கதவடிக்கு, அந்த விறாந்தையால் நடந்து போனேன். என்னோடு என் மனைவியும் என் பக்கத்தில் கூடவே வந்தாள். நான் போய்ப் பின்கதவைத் திறந்தேன். நான் கதவைத் திறந்த போது அங்கே அன்னராசா அண்ணர் கலவரம் சூழ்ந்த முகத்துடன் என் கண்களுக்குக் காணப்பட்டார்.
“ அடேயப்பா உன்ரை உங்கட வீட்டுப் படலை வழியில ஆரையோ ஒரு ஆளச் சுட்டுக் கொண்டிட்டுப் போட்டிருக்கிறாங்களாடாப்பா
s
മ,ി.ത്രസ്ത്രക്രി 152 eീമി

என்று என்னைக் கண்டவுடனே பதகளிப் போடு அவர் சொன்னார். எனக்கு அவர் சொல்ல, என் மூளையின் நிறமே நீலம் பாய்ந்து மாறுவது போல இருந்தது. நெஞ்சில் நெருப்பால் சுட்டது மாதிரி கருகிப் புகைந்தது. “ எங்கட வீட்டு வாசலடியிலயோ உப்பிடி நடந்து விட்டிருக்கு .? " . என்று சொல்லியபடி நடுங்கிக் கொண்டு நின்றாள் என் மனைவி
“ ஐயோ இனிநான் என்ன செய்யிறதண்ணை . ?” . என்று அழுவார் போல நான் நின்று கொண்டு அன்னராசா அண்ணரைப் பார்த்துக் கேட்டேன்.
" நீயென்ன அதுக்குச் செய்யிறது. ? எண்டாலும் நீ விடியவாப் போய் அங்க அவங்கட காம்பில இப்பிடி என்ரை வீட்டு வாசலில அது நடந்திருக்கு எண்டு அவங்கட்ட ஒருக்காச் சொல்லிப்போடு. ” என்றார்
96).
"நான் அங்க காம்புக்குப் போய் இதைச்சொல்ல வேணுமா..? ” " ஓம் பின்ன? எல்லாக் காரியத்தையும் ஆஞ்சோஞ்சு பார்க்க வேணும்! யோசிக்க வேணும் உன்ர வீட்டுக்கு முன்னாலதானே உது நடந்திருக்கு? "ஆர் . ஆரண்ணை அப்பிடிச் சுட்டிருப்பாங்கள் . ? ” " ஆர் சுட்டதெண்டு அப்பிடி ஆருக்குத் தெரியும். ? அதெல்லாம் எங்களுக்கு என்னத்துக்கு அப்பா. ? அதைத் தெரிஞ்சும் எங்களால
என்ன செய்யேலும் . ? ”
" எப்பிடியான ஆள் அண்ண அதில சுடுபட்டுச் செத்துக் கிடக்கிறவர்.?”
மனைவி அவதிப்பட்டுக் கொண்டு அவரைக் கேட்டாள்.
"இளந்தாரிப் பெடியனம்மா அவன் பிள்ள . அந்த மாதிரித்தான் தைரியமான ஆம்பிளமாதிரி ஆளப்பார்க்கக் கிடக்கம்மா . ஆளுக்குத் தலையிலதான் வெடி பாஞ்சிருக்கு”
* ஐயோ ஐயோ ஐயோ பண்டித்தலைச்சி அம்மாளே முருகா! ” மனைவி வாய்க்குள் சொன்னமாதிரி அப்பிடியாகச் சொல்லிக்கொள்ள
»»
நானும் " ஐயோ ஐயோ கடவுளே . ” என்று முனகி முனகிச் சொன்னேன்.
" அதடாப்பா அவனை அவங்கள், சயிக்கிளோட அவன முன்னால ஒட விட்டுப் போட்டுத்தான், பின்னாலயா நிண்டு கொண்டு வெடி வைச்சிருக்கிறாங்கள். அதில ஆள் சூடு வாங்கினதோட அப்பிடியே ஆள் சயிக்கிளோட பிரண்டு உன்ரை கேற்வாசலில விழுந்து போச்சு . கொஞ்சம் செல்ல நீ போய்ப்பாரன் அதில . நான் தம்பி இதால இப்ப வந்த மாதிரியே பின்னால அப்பிடியே திரும்பியும் போயிடப்போறன். ஆத்தே தோட்டத்தில இண்டைக்கு எனக்கு கண்டுகாலுக்கு தண்ணியிறைக்க வேண்டிக் கிடக்கு நான் போறன்ராப்பா. ” - அவர்
മ.dി.മിത്രmരക്രി 153 eീഴ്കി

Page 86
சொல்லிவிட்டுப் போகவும் நான் அதிலே நின்றபடி அவரைப் பார்த்துக் கொண்டு என் வாயை ஆவென்று திறந்தபடி பலமாக யோசித்துக் கொண்டிருந்தேன். வேதனையுடன் கூடிய, நீண்ட எண்ணச் சிலுவையில் அறையப்பட்டுள்ளது போல, என் நிலைமை வந்துவிட்டது. இப்போது எனக்குக் களைப்பு மிகுந்தது. இரவெல்லாம் கண் விழித்ததில், உடற்சூடு கூடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய காரியமும் சரிவராது போல் எனக்கு ஆகியிருந்தது.
நிலம் சற்று தெளிந்த மாதிரி இருந்தது. காகங்கள் கரைந்து கொள்ளத் தொடங்கின. பறந்து செல்லும் குருவிகளின் சத்தங்களும் - கிட்டவும் தூரவுமாக என் காதுகளுக்குக் கேட்கத் தொடங்கின. நான் அதிலே நின்றபடி சில நிமிடங்கள் வீட்டுத் தூணைப் பார்த்தபடி - இனி நான் செய்ய வேண்டிய காரியங்களை நினைத்து எனக்குள் யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் வீட்டுப் படலையருகில் இரண்டொருவரேதோ கதைத்துக் கொண்டிருப்பது என் காதில் விழுந்தது. அவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள் தான் என்று, எனக்குக் கேட்ட அந்தக் குரல்களில் நின்று நான் அடையாளம் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது எனக்குக் கொஞ்சம் மனசுக்குத் தைரியமாயிருந்தது. “ எங்கட ஊர் ஆக்கள் தான் போலக் கிடக்கு . ! நீங்கள் எல்லாரும் வீட்டுக்க பூட்டிக் கொண்டு இருந்து கொள்ளுங்கோ . ஒருத்தரும் வெளியால வரவேணாம் . 1 நான் அதில போய் என்ன நடந்திருக்கெண்டு ஒருக்காப் பாக்கிறன்” - என்று மனைவிக்கு நான் சொல்லி விட்டு அந்தப் பின் வாசற் படியால் கீழே இறங்கினேன். அவள் அந்தக் கதவை உடனே நான் வெளியே போகவும் பூட்டிக் கொண்டாள். நான் அப்படியே கேற்றடிக்கு அதாலே நடந்து போனேன். விடியலின் மென்வெளிச்சத்தில், துலக்கமாக நிலம் இவ்வேளை வெளித்திருந்தது. அதனால் குசினிப் புறத்தாலே வெளியில் நடக்கும் போது - கேற்றடியில் கீழே விழுந்து கிடக்கும் அந்த மனிதனின் உடல் எனக்கு தெளிவாக அங்கிருந்து பார்க்கத் தெரிந்தது. என் வீட்டு கேற்றுக்கு வெளியாலே குணராசா, கண்ணன், பஸ் கொண்டைக்ரர் கந்தப்பு, பெற்றோலியம் கோப்புறேசன் பவுசர் றைவர் சரவணமுத்து ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கொஞ்ச தூரம் தள்ளி, கள்ளுச் சீவுகிற வெள்ளையன் கள்ளுக்கான் கட்டியிருக்கும் தன்னுடைய சயிக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிறுத்தியபடி, சீற்றிலே ஒரு கையை மடித்து தன் நாடியில் பொறுக்கக் கையூன்றிக் கொண்டு செத்த சடலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் இரவு கயிற்றால் கட்டிவிட்டுப் போயிருந்த படலை இப்போது அங்கே திறந்தமானேக்கேயாக் கிடந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு மனதுக்குள் சுருக்கென்று தைத்தாற் போலிருந்தது.
தி.சி.அருளானந்தச் 54 ീഴ്കി

நான் படலையருகில் போன போது, அங்கே வெளியே அவ்விடதில் நின்றவர்களெல்லாம் என் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தார்கள். எனக்குப் பேயறைந்த மாதிரியாய் முகம் இறுகிப் போய் விட்டது. அவர்களின் முகத்தையெல்லாம் துக்கமும் கவலையும் நிறைந்த கண்களுடன், நான் பரிதாபத்துக்குள்ளாகியநிலையில் நின்றபடி பார்த்துவிட்டு, இறந்து கிடந்தவனை சற்றுத்தள்ளி அதிலே நின்றபடி இப்போது தான் கிட்டவாகப் பார்த்தேன்.
அதிலே சூடு பட்டு இறந்து கிடந்தவனுக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்காது என்றதாய் - நான் அவனைப் பார்த்து மனசுக்குள் மதிப்பிட்டுக் கொண்டேன். அவன் ஆள் நல்ல பலசாலியாய் இருப்பானி என்றே அவன் உருவத்தைப் பார்க்கவும் எனக்கு எண்ணத் தோன்றியது. பிரடிப் பக்கமாகத்தான் அவனுக்குச் சூடு விழுந்திருக்க வேண்டும்? என்பதாய்த்தான் அவனைப்பார்த்த போது நான் நினைத்தேன். அப்படி நான் நினைக்கும் அளவுக்கு அவனுடைய தலை இரத்தத்தில் குளித்திருந்தது. அவன் அனுபவித்த சித்திரவதையை அவன் முகம் காட்டியது. அவனது முகத்திலே மரணம் தன் முத்திரையைப்பதித்திருந்தது. அதைக்கண்டதும் என்நெற்றியில் கொதிக்கும் வியர்வை குப்பென்று துளிர்த்தது. அந்த இரத்தததையும் சூடுபட்டுக் கிடக்கிற அவனின் பரிதாப நிலைைையயும் பார்க்க எனக்கு நாய்க்கு நடுங்குவது போல நடுங்கியது. ஏப்பம் வந்தது. வயிற்றைக்குமட்டியது. "ராவு அந்த இருட்டுக்கக் கேட்ட சத்தத்தோட இப்பிடி ஏதும் நடந்திருக்குமெண்டு நான் நெச்சன். " - என்று அதிலே நின்று கொண்டிருந்த பஸ்கொண்டக்டர் கந்தப்பு - வாலைச் சுழற்றித் தலையிலடிக்கும் பூனைபோல அங்கிருந்து கொண்டு என்னைப்பார்த்தபடி கதைவிட்டார். மற்றவர்கள் அதிலே நின்று ஆளுக்கொரு பேச்சுப் பேசிக் கொண்டார்கள். எனக்கு நெருப்பிலே நடப்பது போலத் தவிப்பாயிருந்தது.
“நான் எங்க போறதண்ணர் . ? " . என்று நான் அவர்களைப் பார்த்தபடி கேட்டேன். நித்திரை கொள்ளாத அயர்வு, என் கதையிலே குரல் மூலமாய் அப்போது வெளிப்பட்டது.
எனக்கு அழுகையாக வந்தது. "ஓடு தம்பி கெதியாய் போய் நீ காம்பில இதைச் சொல்லிப் போடு. ” என்று பஸ் கொண்டைக்டர் கந்தப்பு உடனே சொன்னார்.
“ இப்பிடியே நடந்து உடன அங்க நான் போகவோ. ? " . என்று காலும் கையும் எனக்கு ஒன்றும் ஓடாத அளவில் அவரைப் பார்த்துக் கொண்டு நான் கேட்டேன்.
* நீ ஒரு வாய்விடாச் சாதி என்னட்ட இதில நிக்குது தானேயடாப்பா சயிக்கிள்! இந்தா என்ர சயிக்கில் துறப்பு அங்க அதில புளிய மரத்துக்குக்கீழ சயிக்கிள நிப்பாட்டி விட்டிருக்கிறன் அத நீ
தி.சி.அருஈரத்தச் 155 eിക്രി

Page 87
எடுத்துக் கொண்டு போடா தம்பி. ” - என்று சொன்னார் அவர்.
"அங்க என்ர வீட்டுக்க என்ரை புதுச்சயிக்கில் கிடக்குதண்ணை.” "அதைப் போய் அங்க எடுத்துக் கொண்டர்ற நேரத்துக்கு இதை நீ உடன எடுத்துக் கொண்டு போடா தம்பி வேளைக்கு. ” - என்றார் அவர்.
வெள்ளையன் இப்போதும் தன் நாடியில் வைத்த கையை எடுக்காது என்னையே கண் இமைக்காத மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் கொண்டைக்ரர் கந்தப்புவின் அருகினில் போய் அவரிடம் சயிக்கிள் திறப்பை வாங்கினேன். அவரிடம் நான் சாவியை வாங்கும் போது கிட்டவாக நான் நின்றதால், அவரின் வாயிலிருந்து கள் எனக்கு மணத்தது. அந்த மணம் அவரிலிருந்து வர - பயத்தில் காலையிலேயே அவர் தென்னங்கள்ளைக் குடித்து அந்த நாற்றத்துடன் இருக்கிறார் என்று நான் உடனேஅறிந்து கொண்டேன்.
அந்தச் சயிக்கிள் பூட்டைச் சாவிபோட்டுத் திறந்து, பிறகு சயிக்கிளில் ஏறி பெடலை மிதித்ததோடு, காற்று வெளியேறும் பலூனைப் போல குலைந்து கொண்டு அந்தக் காம்புக்குப் போய்ச் சேர நான் சயிக்கிள் ஓடிப்போனேன். அங்கே காம்புக்குப் போய்ச் சேர்ந்ததும், அங்குள்ளவர்களோடு இப்படித்தான் நான் கதைக்க வேண்டுமென்று நானே சில வார்த்தைகளை எனக்காகச் சொல்லிக் கொண்டு என் துயரைப் பெரிது செய்து கொண்டேன். நான் அலையக் குலைய சயிக்கிள் ஒடிப்போய்க் காம்படிக்குப் பக்கத்திலே சயிக்கிளால் இறங்கியபோது, எனக்குச் சீத்துப் பூத்தென்று மூச்சு இறைத்தது. நான் அந்த இடத்தில் வந்ததும் சயிக்கிளால் இறங்கி, அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கிப் போனேன். அந்த அவர்களது இடத்தை நான் அணுக அணுக, என் மன வேகம் அதிகரித்தது.
" உலகத்தில் கடவுளே எத்தனை அசுரர்களுடன் பழக வேண்டி இருக்கிறது?” - என்று நினைத்துக் கொண்டு நான் அங்கே போனேன். அங்கே இருக்கின்றவர்களை நான் கண்டு கொண்டதும் - நேற்றைக்கிரவு என் செவியை அதிர்த்திய துவக்குச் சூட்டுச் சத்தத்தைச் சொல்லி = பிறகு காலையில் என் வீட்டுக்கு முன்னால் சுடுபட்டு இறந்து கிடக்கும் அந்த வாலிபனை நான் போய்ப் பார்ததுமான சம்பவங்களையும் கூறி . இது தான்ராத்திரிப்போல அதில நடந்தது . உண்மையெண்டா இதுதான் உண்மை - என்று மூச்சு விடாமல் தொடர்ந்து நான் இவற்றைச் சொன்னேன்.
நான் இவற்றைச் சொல்லச் சொல்ல அவர்களின் முகங்கள் பலகோணங்களில் இழுபட்டன.
அதற்குப் பிறகு - மிகப் பழமையான சத்தியங்களின் மீது தாங்கள் புதிய வெளிச்சத்தைக் காட்டுவது மாதிரி அதிகார உரிமையோடு
நீ.பி.அருாரதிதசி 156 eീകൃി

அவர்கள் என்னுடன் கதைத்தார்கள். நான் எதற்கும் பதிலே சொல்லவில்லை. வாயைத் திறக்கவில்லை. அவர்கள், " உங்களுக்குப் பிரச்சனையில்லை நீங்கள் உங்களுடைய வீட்டுக்குப் போகலாம் ” - என்று என்னைப் பார்த்துச் சொன்னார்கள். அவர்கள் அப்படிச் சொன்ன பிறகு! நான் அந்த இடத்தை விட்டுத் துவைத்துப் பிழிந்த சட்டை போல சுருங்கி வெளியே வந்தேன். ஷேக்ஸ்பியரின் கற்பனையிலேதான் மனச் சாட்சி இருக்கும் ஆனால் அதை நிஜத்தில் பார்த்தால் ஒரு மனிதனிடமும் காணமுடியாது என்கிற அந்த நினைப்பு எனக்குள் யாகக் குண்டலம் போல் எரிந்து கொண்டிருக்க, அப்படியே போய் அந்தச் சயிக்கிளை எடுத்து அதில் ஏறி ஓடிக் கொண்டு நான் ரவுணுக்குப் போனேன். நான் சயிக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் போது பின் சக்கரப்பிரீவீலிலிருந்து "ஒய் ஒய்” என்ற சத்தம் அடிக்கடி துரிதமாகிக் கொண்டிருந்தது. அந்த சத்தத்தை நான் கேட்டுக் கொண்டு, கொலையைக்கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்து முடிப்பவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் தானே என்று நினைத்து மனக்கிலேசமுற்றேன்.
எனக்கு உடல் நரம்பெல்லாம் இறுகிச் சிக்கலுற்று இருந்தால், மது அருந்த வேண்டும் போல ஒரு வெறி ஆசை இப்போ மனத்தில் எழுந்தது. வருடத்தில் ஒருநாள் அல்லது இரு நாள் என்று மட்டும் இந்தப் பழக்கத்தை என்னில் வைத்துக் கொண்டிருந்த எனக்கு, இன்று அந்தக் காலை வேளையிலேயே இப்படி ஒரு தவிப்பு வந்தது. அதை வாங்கிக் குடித்தால்தான் எனக்கு இனி மனம் கொஞ்சம் உஷாராய் வரும் என்று நினைத்துக் கொண்டு, கள்ளச் சாராயம் விற்கும் வாழைப்பழக் கடைச்செல்லையா அப்புவிடம் சென்றேன். செல்லையா அப்பு விற்கின்ற சாராயம் பெரிதாகப் போதை தருவதில்லை, ரத்தத்தை அதிகமாக உஷ்ணமூட்டுவதுமில்லை. பச்சைத்தண்ணீர் கலந்த சாராயம்தான் அது. என்றாலும் அங்கே அவரிடம் சாராயம் கேட்டு வாங்கி, ஒரு மொந்தை போட்டுவிட்டு அமைதியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் என் வீட்டுப் படலையடிக்கு சயிக்கிளில் வந்து சேர்ந்தேன். அங்கு நான் வந்த வேளை, சயிக்கிளை கொஞ்சம் தள்ளிய தூரத்தில் வேகம் குறைத்துக் கொண்டு, பெடலை பின்பக்கம் சுழற்றி ஒரு ஒலி எழுப்பியபடி அப்படியே உடனே கீழே இறங்கினேன். நான் இறங்கிய விதத்தில், அந்தச் சயிக்கிள் உருண்டு கொண்டிருந்ததால், பெடல் என் காலில் இடித்துவிட்டது. அது இடிந்த இடத்தில் எலும்பு சுள்ளென்று அந்த வலியை உடனே உடலெல்லாம் பரப்பி உச்சி வரை உதைத்தது.
அந்த வேதனையைப் பொறுக்கமுடியாது " ஆ. ” - என்று வருந்திக்கொண்டு, நான் என் வீட்டுப் படலைப்பக்கம் பார்த்தேன்.
காலை வெயில் நன்றாக அதிலே அலை வெளிச்சம் போட்டு
്.dി.മിത്രസ്ത്രക്രി 157 அததி

Page 88
அந்த இடப் பரப்பைப் பிரகாசமாக்கியிருந்தது. என் வீட்டுக்கு முன்னாலுள்ள வீதியிலெல்லாம் மிதிபட்ட எறும்புப் புற்றுப் போல பதற்றமும் பரபரப்பும் அடைந்த அளவில ஊர்ச்சனங்களெல்லாம் நின்று கொண்டிருந்தார்கள். அங்கே இறந்து கிடந்தவனின் நெஞ்சில் முகத்தைப் புதைத்தபடி கிடந்து ஒரு இளம்பெண், இழப்பின் கன பரிமாணம் நெஞ்சை உறுத்த அழுது கொண்டிருந்தாள். " அண்ணா என்ரை யண்ணா . " - என்று அவள் அதிலே இருந்து அழுது கதறுவது எனக்குக் கேட்டது.
“ பாவம் உவளுண்ட புருஷனும் செல்லடிபட்டுச் செத்துப் போனான் = அந்த அளவில இவளிண்ட சீவியத்தையும் இந்தப் பெடிதானப்பா பார்த்துக் கொண்டிருந்தவன். இவளுக்கெண்டு இவன் ஒரு சகோதரம் மட்டும் தானிருந்து அப்பிடியெல்லாம் உதவி செய்து கொண்டிருந்தவன். அப்பிடியான இந்தப் பெடிக்கு இப்பிடியொரு கெதி . பாவம் . என்னதான் செய்யிறது.? கொய்யிற அரிவாளுக்கு கதிர் வேறுகளை வேறெண்டில்லாமப்போச்சு . அப்பிடித்தான் இது ஒரு காலம் . ” அந்தச் சனக்கும்பலுக்குள்ளே நின்று கொண்டு வாழ்க்கையின் எல்லை வந்து விட்ட ஒரு கிழவர், மனவருத்தத்தோடு இதைச் சொல்லியபடி பெருமூச்சு விட்டார்.
நான் அப்படிச் சொன்ன அவரைக் கவனிக்காமல், அவர் சொன்ன இந்தக் கதையை மட்டும் காதால் கேட்டுவிட்டு, அங்கே அழுது கொண்டிருப்பவளையும் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன்.
அந்த நேர்ம் இந்த இடத்துக்கு ஒரு இளம் வாலிபன், ஐம்பது வயது மதிக்கத்தக்கதாக இருக்கிற ஒரு மனுஷியைச் சயிக்கிளில் கொண்டு வந்து இறக்கி விட்டான்.
சயிக்கிளால் இறங்கியதும், அவள் - ரவிக்கைக்குப் பழக்கமில்லாத் தன் வற்றிய மார்பு விம்மி உலைய கைகளால் நெஞ்சிலடித்துக் கொண்டு வந்து “ தேவன் . நான் பெத்த என்ரராசா . - என்று கதறியபடி செத்துக் கிடந்த அவனுக்குப் பக்கத்திலே நிலத்திலே விழுந்து புரண்டாள். அவள் மண்ணில் அப்படியே புரண்டு நிமிரும் போதெல்லாம், கால்களை நிலத்தில் உதைத்துக் கொண்டு நெஞ்சிலடித்தபடி கத்தினாள். பிறகு எழுந்து குந்தி இருந்தபடி அவள் தன் இறந்த மகனின் கால்களைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு, ஒரு அறுப்பு மாட்டைப் போல அதிலிருந்து தத்தளித்துக் கதறிக் கொண்டிருந்தாள்.
என்வீட்டுப் படலைப் பக்கம், இப்போது பெரிய செத்த வீடு போல ஆகி விட்டது. பல பெண்கள் அவ்விடத்திற்கு வந்து அதிலே அழுவார்களுடன் சேர்ந்து தாங்களும் அழுது கொண்டிருந்தார்கள். பல ஆண்கள் வந்து அங்கு அழுகின்ற பெண்களைச் சூழநின்று, மெளனமாகக் கண்ணீர் வடித்தபடி நின்றார்கள். எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களெல்லாம் அவர்களைப் பார்த்துக் கொண்டு, மனதை அழுத்தும் மெளனத்துடன்
മ..(ത്രസ്ത്ര 158
ീകൃി

நின்றார்கள். y
எனக்கு இதையெல்லாம் பார்க்க, இதயம் இரத்தத்தால் நிரம்பாது கவலைக் கண்ணிரால் நிரம்பியது போல ஆகியது. என் கண்களில் இவ்வேளை கண்ணிர் கசிந்து கொண்டிருந்தது. ஆனால் நான்கண்ணிர் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்ற நினைப்பில், இறுக்கிச் சொண்டைப் பற்களால் கடித்துக் கொண்டு அதில் என் மனவலியை மறப்பிக்க வலி ஏற்படுத்தியபடி இருந்தேன். அதிலே அழுது கொண்டிருந்த பெண்கள், தங்கள் அழுகையை வரவர இப்போது பெருப்பித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் அழுகையும் ஒலமுமாக அதிலே இருந்து கொண்டிருந்த பொழுது ஒரு சாம்பல் நிற ஒஸ்டீன் சோமர் செட் - கார் அதிலே வந்து நின்றது. கார் நின்றவுடனே, அதன்கதவைத் திறந்து கொண்டு வேட்டி கட்டின வயதான ஒருவர் வெறும் மேலுடன் கீழே இறங்கினார். அவர் இறங்கின கையோடு, கார்ச் சாரதியும் கீழே இறங்கி காரின் பின் கதவைத் திறந்தார். உடனே அதிலே நின்று கொண்டிருந்த ஆண்களெல்லாம், அந்தப் பிரேதத்தைத் தூக்கி காருக்குள்ளே ஏற்றினார்கள். அந்தக்காரின் பின்பக்கத்துக் கதவாலே இறந்து போனவனது தாயாரை அந்த வயது போனவர் உள்ளே ஏறச் சொன்னார். அந்த இளம் பெண்ணை காரின் முன் இருக்கையில், அவர் பிறகு அந்தக் கதவைத் திறந்து விட்டு உள்ளே ஏறி இருக்குமாறு கூறினார். காருக்குள்ளே ஏறிய அவர்களிருவரும், இப்போது மீண்டும் பெரிதாய் அதற்குள்ளே இருந்து அழுது கொண்டிருந்தார்கள். காரின் அடைப்புக்குள்ளே அவர்கள் கத்தியழுகிற சத்தம் என் காதுகளில் இப்போது அம்மலாகக் கேட்டுக்கொண்டிருந்தது. கார் இப்போது அதிலே நின்று புகை தள்ளிய வெடிச் சத்தத்துடன் புறப்பட்டுப் போனது. அந்தக் கார் நேர்வீதி கடந்து, வீதி முடக்கால் திரும்பு மட்டும் நான் அதிலே நின்றபடி அந்தக் காரையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பிரேதத்தைப் பார்க்க அவ்விடத்தில் வந்தவர்களெல்லாம் அவர்களுடன் சேர்ந்து கொண்டு வந்திருந்த பெண்களை சயிக்கிளிலே உட்காரவைத்துக் கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டு விட்டார்கள்.
" உவயள் எல்லாரும் அந்தப் பலாலிப் பக்கத்துத் தோட்டக்கார ஆக்கள் தான். " - என்று சொல்லியபடி, என்னருகில் வந்து நின்ற கொண்டக்டர் கந்தப்பு - தான் பற்ற வைக்க எடுத்த பீடியை பல்லிடுக்கிலேயே வைத்தபடி என்னிடத்தில் தன்கையை நீட்டினார். அப்பொழுதுதான் எனக்கு கொண்டக்டர் கந்தப்புவிடம் வாங்கிய சயிக்கிள் சாவியின் ஞாபகம் வந்தது. நான் உடனே பைக்கற்றுக்குள் கையை விட்டு, அவரது சயிக்கிள் சாவியை எடுத்து அவரது கையில் கொடுத்தேன். “உதுக்கெல்லாம் போய் ஏன் நீ இப்பிடி வலுவா யோசிக்கிறாய்
தி.சி.அருாரத்தச் 159 Møll?

Page 89
? இத்தை விட்டுப்போட்டுவேற அலுவல்களைப் பார்! நீ இனி யோசிக்காம வீட்ட போயிரு. ” - என்றார் அவர்.
நான் அவர் சொன்னதுக்கு " ஓம். ” என்று சொல்லும் கணக்கில் என் தலையை மட்டும் அவருக்கு ஆட்டிக் காண்பித்தேன்.
என் வீட்டுக்கு முன்னால் அந்த வீதியில் இவ்வளவு நேரம் நின்று நடந்தவற்றை யெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஊர்க்கார ஆள்களில் சிலர், அமைதியானதாக இப்போது இந்த இடம் வந்ததன் பிறகு, மேலே அண்ணாந்து வானத்தைத் தழுவியது போலப் பார்த்தபடி நின்றார்கள். பிறகு அங்கே உள்ள மரங்களையும் பார்த்துத் தமக்குள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்து விட்டுப்பிறகு, தங்கள் வீட்டுக்குப் போக நடந்தார்கள்.
அங்கே நின்று கொண்டிருந்த இன்னும் ஒரு சிலர் அதிலே கீழே தங்கள் தலையைக் குனிந்தபடி மண்ணைப்பார்த்துச் சிந்தித்திருந்து விட்டுப் புறப்பட்டார்கள். நான் எல்லோரும் அந்த வீதியில் நின்று போகுமட்டும் நின்று விட்டு, அந்தப்படலையடிக்குக் கிட்ட வந்தேன். அந்தப் படலையின் நீடுவழியிலே பிரேதம் கிடந்தவிடத்திலுள்ள மண்ணின் மீது இரத்தம் உறைந்து கிடப்பது எனக்குத் தெரிந்தது. நான் அதற்குப் பக்கத்தில் போனேன். அந்த இரத்தத்தின் ஈரமிக்கதான நெடி, என் நாசி துழைத்து மூச்சு முட்டியது. என் வீட்டுப் பக்கத்து வீட்டிலுள்ள மடி பெருத்த பறை நாய், நான் அதிலே நின்று அங்கே அதைப் பார்த்துக் கொண்டு நிற்க, அதுவும் எனக்குக் கொஞ்சம் தள்ளி நின்றபடி - கற்றாளை வாள்போல் தன் காதுகளை கொம்பாக நிமிர்த்திக் கொண்டு அதிலே காய்ந்து கிடந்த இரத்தத்தைப் பார்த்தபடி நின்றது. நான் உடனே அந்த நாயை அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டு, என் இருகைகளாலும் வீதிக்கருகில் கிடந்த குறுணல் மண்ணை அள்ளிக் கொண்டு, அங்கே அந்த இரத்தம் கிடந்த இடத்தடிக்குவந்தேன். ஏதோ சவக்குழியில் - பிரேதப் பெட்டி மேலே அமைதியுடன் நின்று மண்போடுவதாக நினைத்துக் கொண்டு, “முருகா . " - என்று சொல்லியபடி அந்த இரத்தம் வழிந்து கிடந்த மண்மேலே கையில் வைத்திருந்த மண்ணைப் போட்டேன். இப்படியாக இருபது முப்பது தடவைகள் மண்ணை அள்ளிக் கொண்டு வந்து அந்த இடத்தின் மேலே போட்டாற் பிறகு, அந்த இடத்தில் இரத்தக் களங்கம் மறைந்து மணல் மட்டும் இருப்பதாக எனக்கு அந்தக் காட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாத காலியான வயிற்றில் பச்சைச் சாராயத்தை மட்டும் குடித்ததால், எனக்கு இப்போது வயிற்றைப் புரட்டியது. அந்த இரத்தம் மொச்சை வாடையோடு இன்னும் என் நினைவில் இருந்து கொண்டிருந்ததினால் அதுவும் சேர்ந்து எனக்கு மூச்சுப் பிதுங்கும் குமட்டலுடன் வாந்தி கொள்ள வருமாப் போலிருந்தது. உடனே நெற்றியில் குப்பென்று வேர்த்தது எனக்கு.
ീ.dി.eിത്രസ്ത്രക്രി 160 eീകൃി

நரம்புகளில் ஒடிய இரத்தம் குப்பென்று எகிறிப் பாய்ந்து கண்கள் இருண்டு, எனக்குத் தடுமாறி விழுவது போலிருந்தது. உடனே நான் போய், கேற்றடிக்குப் பக்கத்தில் நின்ற முருங்கை மரத்தின் மேலே என் கையை உயர்த்தி வைத்து, அதில் கையை ஊன்றிக் கொண்டு நிலத்தை நோக்கி என் தலையைச் சரித்தவாறு குனிந்தேன். அந்த முருங்கை மரஅடியில் கரையான் பூச்சிகள் மின்னும் வெண்மையுடனும் சிவப்புத் தலையுமாக பிலுயிலுவென ஓடிக் கொண்டிருந்தன. கரையான் அடையாக அதிலே புற்று எழுப்பியிருந்தது. நான் அந்தக் கரையான்களைப் பார்த்துக் கொண்டு என் வாயை நடுக்கத்துடன் திறந்தேன். வீனிராய் உடனே ஒழுகியது. வயிற்றை எக்கி எக்கி சத்திவர உடனே எனக்கு வலித்தது. ஆனாலும் சத்தி வெளியே வரவில்லை. கொஞ்சம் சளி பீறிக்கொண்டு வெளியே வந்தது. அதை நான் துப்பினேன். உடல் வேதனையில் என் கண்களில் கண்ணிர் வழிந்து கொண்டிருந்தது. அந்த வேதனையோடு நான் நிமிர்ந்து நின்றேன். என் நிமிர்ந்த பார்வையில் என் வீட்டுக்குசினியின் புகைக் கூடுதான் அப்போது எனக்கு முதலில் தெரிந்தது. அந்தப் புகைக் கூட்டிலிருந்து புகைவெளியே வந்து கொண்டிருப்பதை நான் சிறிது நேரம் அதிலே நின்றபடி பார்த்துக் கொண்டேயிருந்தேன். இப்போது எனக்கு மனம் அதிசயமான அமைதியாகியது.
(2007)
ഴ്ച.dി.eത്രmങ്ങുക്രി 161

Page 90
62.2 as2OMy (222 MóJoó
ஏதேதோ முற்றுப் புள்ளியே இல்லாத எண்ண ஓட்டங்கள், கொதிபானைச் சோறாக கொந்தளித்துத் தளதளக்கிற நினைவுகளோடு அந்த பஸ்ஸில் அவர் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தார். பஸ்ஸிற்குள் ஒழுங்காக ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளக் கிடைத்திருந்தும், மனத்திலே அவருக்கு நிம்மதி என்பது சிறிது கூட இருக்கவில்லை. உடல் வருத்தம் தாங்க இயலாத அளவிற்கு, அவரைப் போட்டு வாட்டியபடி இருந்தது. சல உறுப்புப் பூரர்கவும் ஒரே தடும் எரிச்சல் எரிந்தது கொதி கொதியென்று வெந்நீரை உள்ளே வைத்திருப்பது போல, உடலும் வேறு கொதித்துக் கொண்டிருந்தது.
என்ன நேரம்? கைக்கடிகாரத்தைப் பார்த்தார்! ஒன்பதரை! பத்து மணிக்கு வைத்திய பரிசோதனைக்காக, அந்தத்தனியார் மருத்துவமனைக்கு அவர் போக வேண்டும்.
பஸ் கிளச் வேடிக்கையான ஒலிகளை எழுப்பியது மூளை நரம்பெல்லாம் அவருக்கு நோகிறது போல இருந்தது,
இந்த பஸ்ஸை முந்திப் போக வேண்டுமென்ற அவதியில், பின்புறம் ஒரு பஸ் வேக வேகமாக கிட்ட, கிட்ட நெருங்கி வந்து கொண்டிருந்தது.
"ஹாங்க். " . என்று செவியை அதிர்த்தும் ஹாரன் சப்தம் புகை! ஒரே கடும் புகை!, அதைத்
தி.பி.அருாரந்தச் Mab?
 

கொடுத்ததைப் போல இருந்தது. இவற்றையெல்லாம் அவர்களுக்கு அருகில் இருந்ததால் இவரும் கவனித்தார்.
“மழை தற்சமயம் வருமோ வராதோ..? ” அவருக்குப் பக்கத்தில் இருந்த ஆள் கேட்டார்! அவரோடு கதைக்கவே இவருக்குப் பிடிக்கவில்லை. என்றாலும், "வராது. ” - என்று தன் அபிப்பிராயத்தை வாயால் சொல்லாது இவர் தலையை ஆட்டி அவருக்கு விளங்க வைத்தார்.
அந்தப் பையனின் முகம் வரவரக் கோணலாகியது. அவன் தாயிடம் ஏதோ கேட்டுக் கேட்டு அவளைக் குடைந்தெடுத்துக் கொண்டிருந்தான்.
அவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டு, கவட்டுக்குள்ளே கையை வைத்து, மூத்திரம் கடுக்கிற மாதிரி முறிக்கிப் பிடித்துக்கொண்டு நிற்க, இவருக்கும் பையன் விஷயம் பூராக விளங்கி விட்டது.
அவன் ஒன்றுக்குப் போவதற்குத்தான் இப்படி அந்தரப் பட்டுக் கொண்டு நிற்கிறான்' என்று தெரிந்து கொண்டதும், அந்தப் பையனில் அனுதாபம் இவருக்கு வந்தது.
முன் இருக்கையில் இருந்து கொண்டிருந்த அந்த இரண்டு பெண்களுக்கும், பின்னால் இருந்து கொண்டிருந்த பையனின் பிரச்சினை விளங்கிவிட்டது.
அவர்கள் இந்தப் பக்கம் திரும்பித் தாங்கள் இருந்து கொண்டு, "பையனுக்கு என்ன..?” - என்று அவளது தாயைக் கேட்க அவளும் விஷயத்தை அவர்களுக்குச் சொன்னாள்.
"அப்போ இறங்கி நின்று பிறகு அடுத்த பஸ்ஸைப் பிடித்து நீங்கள் போகலாம் தானே? பையன் பாவம் தவிக்கிறானே.? " - என்றார்கள் அவர்கள்.
அவர்களும் அப்படிச் சொல்ல, பையனும் தூண்டிலில் பட்ட விலாங்கு மீன் மாதிரி துள்ளியடித்துக் கொண்டு நின்றான். உஸ் உஸ்’ - சென்று வேதனைச் சீறலும் பையனுக்கு வந்தது.
இவருக்கு அவர்களது பிரச்சினையில் போய் தலையிட விருப்பமில்லாதிருந்தது. அவர்களுடன் தானும் சேர்ந்து அதைப்பற்றி கதைப்பதோ . அல்லது அவர்களுக்கு அந்தப் பிரச்சினைக்கு ஏதும் ஒரு வழியைச் சொல்வதோ நாகரீகமாகப்படாததால் வெறுமே அவர்களைப் பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்தார்.
தாய்க்கு ஏதும் மகனுக்குச் சொல்லி அவனைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்கும் களையான முகம் வாடிப் போய் விட்டது. அவளும் தன் இயலாத பட்சத்தில் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். இனித்தன் மகனை வைத்து
தி.சி.அருாரத்தச் 165 eീഴ്കി

Page 91
தன்னால் தாக்காட்ட ஏலாது என்ற நிலைபரத்தில், அவள் நடத்துநரைக் கூப்பிடவும், அவரும் உடனே அவளின் அருகில் வந்தார்.
"நாங்கள் பஸ்ஸால் இனி இறங்கப் போகிறோம்” - என்று முதலில் அவருக்குச் சொல்லி பிறகு, தன் பையனின் பிரச்சினையையும் அவள் அவசரமாக அவருக்கு எடுத்துரைத்தாள்.
“அதற்கென்ன? அடுத்த பஸ் தரிப்பிடத்தில் நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். ” - என்றார் அவர்!
"நாங்கள் மேலும் தொடர்ந்து இந்த பஸ்ஸில் பிரயாணம் பண்ணாததற்காக மிகுதிப்பணத்தை எங்களுக்கு கணக்குப் பார்த்துக் கொடுங்கள்? ”
என்று அவள் கேட்டாள். தண்ணீர் வராத குழாய் ஒலித்தது போல அவள் குரல் இருந்தது. அவள் அவ்விதம் கேட்டதற்கு, “ரிக்கற் போட்டாகி விட்டது. அதாலே என்னால் ஒன்றும் செய்யவே முடியாது! ” - என்றார் அவர் கடுமையுடன்.
அவளுக்கோ இன்னும் சொல்லப்பாஷையில்லை! அழுவார் போல ஆகிவிட்டாள் - அவளிடம் ரிக்கற்றுக்குக் கொடுத்த பணத்தைவிட வேறு ஏதும் இப்போ கையிலில்லைப் போலும்' - என்று நன்றாக இவருக்கு விளங்கிவிட்டது.
அவளுக்கு உதவுவதற்கு மனமிருந்தும், தான் கொடுப்பதை சில வேளை அவள் வாங்காது மறுத்து விட்டால் மரியாதை தனக்குக் கெட்டு விடும், என்று இவருக்கும் பயமாக இருந்தது.
அந்தப் பையன் தாங்க இயலாத அளவில் பஸ்ஸிற்கு உள்ளேயே ஒன்றுக்கு இருக்கப் போகும் ஆரம்ப நடவடிக்கை போல, ஜன்னல் பக்கம் ஒதுங்கினான். அதைப் பார்த்து விட்டு அவன் தாய் அவன் கையைப் பிடித்து வாசல் பக்கமாக பஸ்ஸால் இறங்கும் ஆயத்தத்தில், அவனைத் தன் பக்கம் இழுத்து கிட்டவாக வைத்துக் கொண்டாள்.
அந்த நேரம் பஸ்சும் தரிப்பிடத்தில் நின்றது. அது நின்ற கையோடு தாய் கீழே இறங்குவதற்கு முன்னால், அவன் உடனே மிதிபலகையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டு விட்டான்.
இரண்டு மூன்று அடிகள் தூரம் சுறுக்காக முன்னால் அதிலே அவன் நடந்தவுடனே, முன்பக்கம் தன் கால் சட்டையை கீழே இறக்கிவிட்டு அவன் ’ ஹீம். - என்று ஒரு மூச்சுக் கலந்த அசட்டுச் சத்தத்தோடு சொக் கீயஸ் வரத்திலே நடைபாதையில் மூத்திரம் அடிக்கத் தொடங்கிவிட்டான்.
சலம் அவனுக்கு மின்னிக் கொண்டு வெளியேறியது! பஸ்ஸின் பின்வாசல் வழியாக தன் இருக்கையிலிருந்து இடப்பக்கம் தலையைத் திருப்பி வைத்துக்கொண்டு, இதையெல்லாம்
தி.சி.அருாதைச் 166
ീകൃി

தாராளமாய் புகைக் குழாயில் கக்கிக் கொண்டு, அந்த பஸ் முன்னால் தாண்டிப் போய் விட்டது. ‘உன்னை நான் விட்டேனா பார்.? இந்தா நான் உன்னை முந்துகிறேன். - என்கிற மாதிரியாய் இந்த பஸ்ஸின் சாரதியும், இயந்திரத்தின் விரைவு விசையைக் கூட்டினார். பஸ் மிக ஆவேசத்தோடு, சீறிப்பாய்கிற மாதிரியாய் அந்த பஸ்ஸின் பிறகாலே விரைகிறது.
காலி வீதியில் ஒடுகிற குறும் ஒட்ட பேருந்துச்சேவை, சொல்லப் போனால் இப்படித்தான்! இதிலே ஏறி பயணம் செய்யும் பயணிகளெல்லாம் தங்கள் போக்குவரத்துக்களில், நாளாந்தம் இப்படியாகவெல்லாம் ரொம்பவும் அனுபவப்பட்டவர்கள்தான்! அதனால் இதைப்பற்றி ஒருவரும் பஸ்ஸிற்குள் இருந்து கொண்டு பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. இருக்கைக் கம்பிகளில் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு, பாதுகாப்பு வேண்டியவர்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு காற்றுடன் தூவானம், பஸ்ஸின் ஜன்னல் பக்கம் பன்னீர் போல வீசிப்பரந்தது. கண்ணாடி ஜன்னலை அவர் இழுத்து மூடிவிட்டார். இருக்கையின் ஒரமாய் அதிலே தூவானம் தெறித்திருந்தது சிறிது தண்ணீர் ஈரமாய் அதிலே பரவியிருந்தது. ஜன்னல் பக்கம் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தவர் தள்ளி இருந்து கொண்டார்.
இவருக்கு முன்னால் உள்ள இருக்கை காலியாக இருந்தது. அதற்கு முன்னால் உள்ள இருக்கையில், இரண்டு பெண்கள் இருந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் பிருஷ்டங்கள் இருக்கையில் பிதிங்கித் தொங்க இருந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் கதை பேச்சுக்க்ளிடையே, ஹாஹா' - என்று இருகுரலும் மேலும் கீழுமாகப் பாட்டுப் போலச் சேர்ந்து ஒலித்தன.
பஸ்கள் இரண்டும் ஒட்டப் போட்டிகளுக்கிடையே ஆட்களை ஏற்றிக் கொள்வதிலும் குறியாய் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு தரிப்பிடத்திலிருந்து தோள் மேல் விழுந்த காக்கையின் எச்சத்தோடு ஒருவர் பஸ்ஸிற்குள் ஏறினார்.
உலுப்பலும் அதிரலுமாய் உடனேயே பஸ்சும் வெளிக்கிட்டது. தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள உள்ளே ஏறி நின்று கொண்டவர் தடுமாறினார். எப்படியும் இவருக்கு முன்னால் காலியாய்க் கிடக்கிற இருக்கையில் அவர் போய் இருந்திருக்கலாம்?
ஆனாலும், உடனே அவர் தன் வசதிகருதி, இவர் இருந்து கொண்டிருந்த இருக்கைக்கு முன்னால் உள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு அவருக்குப் பக்கத்தில் போய் இருக்க வழிகேட்டார். இவர் முழங்காலை சரித்து வழிவிட்டவுடன் அதற்குள் நுழைந்து சென்று இவருக்குப் பக்கத்தில் அவர் இருந்து கொண்டார்.
്.dി.eിത്രസ്ത്രക്രി 163 eീഴ്കി

Page 92
அந்த இருக்கையிலிருந்து தான் எழுந்து சென்று முன்சிற்றில் இருந்து கொண்டாலென்ன? '
என்று ஒரு கணம் இவர் நினைத்தார்! என்றாலும், அப்படிச் செய்வதற்கு முயற்சியில்லாது பிறகு இருந்த இடத்திலேயே தான் இருந்து கொண்டுவிட்டார்.
பஸ் அடுத்த தரிப்பிடத்தில் நின்றது. சட்டென்று ஜனக் கூட்டம் உள்ளே ஏறிற்று. அவர்களிலிலிருந்து முன்னால் இந்த பஸ்ஸிற்குள் ஏறிக் கொண்டவர்கள், ஒரு இளம் வயதுப் பெண்ணும் அவள் பையனும் தான்! மூன்று வயது அவளது பையனுக்கு இருக்கலாம் போல தோன்றியது. அவன், கொழுக் மொழுக்கென்ற உடம்பாய் பார்க்க அழகாய் இருந்தான். கழுத்து நாடாவில் அவன் தாயத்துப் போட்டிருந்தான்.
பையனின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே ஏறிய அவள், முதலில் அவனை இவர் இருந்த இருக்கைக்கு முன்னால் உள்ள ஆசனத்தில் இருக்க விட்டாள். பிறகுதானும் அவனுக்குப் பக்கத்திலே இருக்கப் போக, மகனும் உள்ளே அரக்கி இருந்து கொண்டு தாய்க்கு இடம்விட்டான்.
பஸ்ஸிற்குள் ஏறியிருந்தவர்கள் அங்கே முன்னால் உள்ள வெற்று இருக்கைகளில் இடம்பிடித்து இருந்து கொண்டார்கள்.
பஸ் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பையன் தாய்க்கு ஏதோ சொன்னாள்.
“கொஞ்ச நேரம் சும்மா இரு.பஸ்ஸால் இறங்கவும் பாப்பம்." என்று தாய் பாதிக்குரலில் மகனுக்குச் சொன்னது மாத்திரம் இவருக்குக் கேட்டது. இன்னும் முன்னாலே இருக்கைகளில் இருந்து கொண்டிருக்கும் பிரயாணிகள் ஏதேதோ கசபுச வென்று கதைத்தபடி இருக்கிறார்கள். பஸ்ஸின் இயந்திரத்து இரைச்சலோடு, அவர்கள் கதைப்பதும் சேர்ந்து இரைச்சல் சத்தமாகவே இருக்கிறது.
"அம்மா அம்மா..? ” * சும்மா இரு திலீப்! " - என்றாள் அவள்! பையனின் பெயரைச் சொல்லும் போது, தொண்டை அவளுக்கு ஒத்துழைப்புத்தரவில்லை. நடத்துநர், அவள் இருந்த பக்கமும் வந்தார். “கோட்டே. ” . அவள் சொல்லவும்,
“ஒன்றா..? "- என்று ரிக்கட் எண்ணிக் கையைக் கேட்டார் நடத்துநர்.
ஆம்' ' - என்ற தினுசில், தலையாட்டினாள் அவள். அவர் ரிக்கட்டை எழுதிக் கொடுக்கவும், அவள் பணத்தை நீட்டினாள்!
ஒரு பத்து ரூபாய்த்தாள்! மிகுதி சில்லறை, ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ’ அவர்
தி.சி.அருள%னந்தச் 164 ീമി

அவருக்குத் தான் படுத்துக் கிடக்கின்ற அந்ததக் கட்டிலே, கீழே ஒரு அதல பாதாளத்தை நோக்கி சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது போல ஒரு நிலைமை வந்து விட்டது.
இது எவ்வளவு கொடுமை? எவ்வளவோ ஆசைக் கனவுகளை பிறந்த வீட்டிலிருந்து மனதில் சுமந்து கொண்டு, இந்த வீட்டில் என்னை நம்பி வாழ வந்த ஒருத்திக்கு நான் கொடுக்கின்ற தண்டனையா இது?
எவ்வளவு வஞ்சகம்! சுயநலம்! பழி தீர்க்கும் கொடுரம்! வேண்டாம் இன்னும் இந்த நிலை! இந்த ஒரு நிலைமை இன்னமும் அவளைத் தொடரவேண்டாம்! அவள் வாழட்டும்!
எங்கிருந்தாவது அவளுக்கு வாழ்வு கொடுக்கவென்று நல்ல உள்ளம் படைத்த ஒருவன் எப்படியாவது நிச்சயம் வருவான்! அவளிடமும் ஒருவனைக் கவர்ந்து விடக்கூடிய உடல் கட்டும், பணவசதியும், கல்வியும், குறைவில்லாமல் இருக்கிறது. அவள் எங்காவது சுகந்திரமாமக இருக்கட்டும்!
சந்தோஷமாக வாழட்டும்! இனியும் அவள் இந்த அர்த்தமில்லாத திருமண உறவு என்ற சிறையில், ஒரு கைதியைப் போல என்னுடன் கட்டுண்டு கிடந்து அவள் தன்னைத்தானே நாளாந்தம் உருக்குலைந்து அழிந்து போக வேண்டாம்! அவள் தன் ஆசைகளை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதைப் போல, என்னுடன் இருந்து காலங்காலமாய் வெந்து கொண்டிருக்காமல் இந்தச் சிறையிலிருந்து விடுபடட்டும்!
இதற்கெல்லாம் சிறந்தவழி..? அவளுடன் நான் கலந்து பேசி, இதிலே உள்ள நியாயத்தை அவளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி . பிறகு இருவருக்கும் சம்மதமான ஒரு நிலையில் விவாகரத்துப் பெற்றுக் கொள்வதுதான்!
பார்க்கப் போனால் இந்த விவாகரத்துக்குரிய நியாயம் எல்லாம், அவள் பக்கத்தில்தான் இருக்கிறது! அவள் தான் இந்த விஷயத்தை என்னிடம் வாய்விட்டு சொல்ல வேண்டும்? ஆனாலும் இந்த நாட்டுப் பெண்களின் கட்டுப் பெட்டித்தனத்திலே அவளும் வாய்மூடியபடி மெளனம் காக்கிறாள்!
ஆனாலும், இந்த மெளன நாடக வேடத்தை எத்தனை நாட்கள் தான் அவள் தன்னிடத்தில் அடக்கிக் கொண்டு அதைக் கட்டிக்காப்பாள்? அந்த எரிமலை எப்போதாவது ஒரு நாளில், இருந்தாற் போல குமுறிக் கொண்டு வெடித்து விடத்தானே செய்யும்?
அப்படியான ஒரு பொழுதில், நிட்சயம் அவள் தன்னையும் சூழ்நிலையையும் மறந்து விடுவாள்? அந்த வேளையில் அவளையறியாது
ഴ്ച.dി.cിത്രസരക്രി 169 ീക്ഷി

Page 93
எப்படியும் அவள் வாயிலிருந்து . தொண்டைக் குழிக்கு உள்ளே அவள் தற்கொலை செய்து கொண்டிருந்த அந்த வார்த்தை, நெருப்பாகக் கக்கிக் கொண்டு வெளியே சீறி வரத்தான் செய்யும்?
அந்த நெருப்பு. என்னை முற்றாகப் பிறகு எரித்துப் பொதுக்கிவிடுமே!
அப்படியான ஒரு சூழ்நிலைக்கு நானும் அவளைக் கொண்டு போக வேண்டுமா?
அந்தக் கெடுதல் அவளுக்கும் வேண்டாம்! எனக்கும் வேண்டாம்! இந்த நினைகளெல்லாம் எனக்கு ஒரு எச்சரிக்கைதான்! இந்த விஷயத்தை இனியும் ஆறப்போடாது இன்றைக்கே அவளுடன் சேர்ந் பேசி ஒரு முடிவுக்கு நான் வந்து விட வேண்டும்!
பஸ் அடுத்த தரிப்பிடத்திற்கு கிட்டவாக வந்ததும் தன் உருப்படியை அசைத்துக் கொண்டு பிறேக்’ குடன் நின்றது.
அவரும் ஓடிப்பரந்த நினைவுகளைக் கலைத்து விட்டு ஜன்னல் கண்ணாடியால் வெளியே பார்த்தார்.
வைத்தியசாலையை அடையாளம் காட்டும் 'சிகப்புக்குறி = அவர் பார்த்த இடத்தில் தெரிந்தது. நடத்துநரும் வைத்தியசாலையின் பெயரை திரும்பத்திரும்ப மிதிபலகையில் நின்றவாறு சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய இடமும்தான் அது! அவசரப்பட்டுக் கொண்டு வாசல் பக்கம் போய, மிதிபலகை வழியாக அவர் உடனே கீழே நடைபாதையில் இறங்கிக் கொண்டார்.
மித்திரன் வாரமலர்
(01.07.2007)
ഴ്ച.dി.eിത്രസ്ത്രക്രി 170
ീകൃി

அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
இன்னும் ஒரு சொற்ப வேளைக்கு இதிலே பஸ் நின்றால், அந்தப் பையனும் தாயும் பஸ்ஸிற்குள் திரும்பவும் ஏறிக்கொள்வார்கள்! இதை நான் நடத்துநருக்கு சொல்லுவோமா? அவர் நான் சொல்வதை கேட்பாரா? அப்படி நான் சொல்லவும், எல்லோருக்கும் கேட்க அவர் தன் பக்கமுள்ள ஒரு நியாயத்தை பெரிய சத்தம் போட்டு அங்கு உள்ள எல்லாருக்கும் சொல்ல ஆரம்பித்து விட்டால்?
இதையெல்லாம் அவர் தனக்குள் நினைத்துக் கொண்ட உடனேயே, தன் வாயைப் பொத்திக் கொண்டு மெளனமாகவே இருக்கும் படியாகி விட்டது. பையனின் அலுவல் இன்னமும் முடிவுபெறவில்லை. நடத்துநர் முன்னால் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸை பார்த்து விட்டு, அவசரமாக மணியை இழுத்து அடித்தார்.
பஸ் உறுமிக் கொண்டு கடகடப்பாய் வெளிக்கிட்டது. பஸ் நகர்ந்து கொண்டிருந்த தருணம், கண்ணாடி வழியாக பையனது தாயின் முகத்தை இவர் பார்த்தார்.
அவளின் முகம் வாடிப் போன மாதிரி இருப்பதைப் பார்த்து இவருக்கும் மனக் கவலையாய் இருந்தது. பஸ் அவள் நின்ற இடத்தை விட்டு, தொலைதூரம் விலகிப் போகுமட்டும், மரக்காளான் முளைத்திருந்த மாதிரி, விறைத்த தினுசில் அவள் தன்னை விட்டு விலகிப் போகும் பஸ் ஸை பார்த்துக் கொண்டிருப்பது, இவருக்கு இன்னமும் கண்பார்வையில் விழுந்து கொண்டிருந்தது.
சில வேளைகளில் ஒருவரிடமிருந்து அவர் களின் மனவேதனையின் தாக்கம் ஏதோ ஒரு வழியாக இன்னொருவரையும் தொற்றிக் கொள்வதென்பது இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஏற்பட்டு விடுகிறது போலும் தனக்கிருக்கும் மன வேதனையைப் போலத்தான் மற்றவர் ஒருவரும், அதே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதும், ஏதோ ஒருவித அனுதாபம் அப்படிப்பட்டவர்கள் மீது ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறதல்லவா? அதே விதத்தில் தான், ஒரு கணம் தான் கண்ணால் கண்ட அந்தச் சிறியதொரு சம்பவத்தை அவரும் மனத்தில் நினைத்து துன்பப் பட்டுக் கொண்டார்.
வாழ்க்கையில் தன் முன் நடக்கும் ஒரு சிறிய துன்பமான சம்பவத்தைப் பார்க்கும் போது கூட, நோயாகிவிட்ட ஒருவருக்கு அது பெரிய மலையைப் போன்ற துன்பமாகத்தான் மனதை வாட்டு மென்பது அவருக்கு அப்போது விளங்கியது.
என்றாலும் அந்த பஸ்ஸின் விரைவான ஓட்டத்தில் அந்தச் சம்பவத்தை நினைத்து அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது, மேகத்து நிழல் அது பாட்டுக்கு பூமியைத் தழுவிப் போவது போல அவர்
ീ.dി.മിത്രസ്ത്രക്രി 167 ീഴ്കി

Page 94
மனத்திலிருந்தும் சற்றை நேரத்துக்குள்ளாக விலகிப் போய்விட்டது. ஆனாலும் அவருக்கு நிம்மதியென்ற இடைவெளி அதிகம் இருக்கவில்லை. உடனே அவருக்கு வீட்டு நினைவு வந்து மனத்தில் மொய்த்துக் கொண்டது. "எனக்குத் திருமணமாகி, மூன்று வருடம் கூட இன்னமும் நிறைவு பெறாத அளவிலே, இந்தச் சிறுநீரகவியாதி வந்து தொலைக்க வேண்டுமா? அதை இவ்வேளை நினைக்கவே, தன் வாழ்க்கை மீது அவருக்கு வெறுப்பும், கசப்பும் கலந்து வந்தது.
தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள தற்போதைய தாம்பத்திய உறவை அவர் ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்!
அதை நினைக்கும் போதே மனமெல்லாம் இருண்டு பயங்கரமாக அவருக்கு வந்தது. இந்தத் திருமணம் என்ற உறவிலேயே நுழையாமல் வயது கொஞ்சம் போய் விட்டதோடு பேசாமல் தனியே இருந்திருக்கலாம்! இப்பொழுது எவ்வளவு சிக்கலாய், பெருங்குறையாய் இந்தத் தாம்பத்திய வாழ்வும் எனக்கு வந்து விட்டது?
என் மனைவியின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து அவளுடன் கதைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது எனக்கு?
என் ஆண்மை அழிந்து போனதில் அதற்குப் பலியாக அவளது இளமையான ஆசைகளையும் நான் அழிக்க வேண்டுமா?
இந்த வருத்தத்திற்கு மருத்துவ சிகிச்சையென்று மாதக் கணக்காய் ஆஸ்பத்திரி வழியே போய்த்திரிந்தும், எதுவித பயனும் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லையே?
எந்த ஒரு நயத்தையும், என்னிடத்தில் நான் இதுவரை இன்னமும் காணவே இல்லையே?
(ஒரு கிழமைக்கு முன்னால் தானும் மனைவியும் இரவு கட்டிலில் படுத்துக் கிடந்த போது - நடுநிசிவேளை அவள் எழுந்து கட்டிலில் குந்திக் கொண்டிருந்ததை - ஏதேட்சையாக தனக்கு விழிப்பு வந்த போது கண்டு கொண்டது, இப்போதும் அவருக்கு அது நினைவில் வருகிறது.)
அதை நினைக்கவே நெஞ்சம் முழுதும், முள்முள்யாய்க் குத்திக் கிழிக்கிறது போல வேதனை உணர்வாய் இருந்தது அவருக்கு, அவள் ஒரு கர்ப்பச் சிசுவைப் போல கைகாலை ஒடுக்கிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள்! உருண்டு காய்ந்த சருகின் மீது நிற்கும் பனித்திவலை போல் ஒரு வறண்ட புன்னகை, அவள் உதடுகளில் உருண்டது மாதிரி இவருக்கு அவளைப் பார்க்கும் போது அப்போது தெரிந்தது.
உண்மையில், அவள் தன்னைத்தானே அடக்க முடியாமல் தான் அப்படிக் கிடந்து தன்னை ஒளித்து வைத்துக் கொண்டது மாதிரி தவிக்கிறாள் என்பதை உடனே அவர் உணர்ந்து கொண்டு விட்டார்.
.dിക്രൂസ്ത്രി 168 அத்தி

42MM7
அறிமுகம் - இவனது கதையை நீங்கள் யாரும்
சால்லக் கேட்டு அறிந்திருக்கிறீர்களா? ஒரு வேளை இவனை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்? ஆனால், இவனுடைய கதை கேட்கத்தகுந்தது. இவனை நெருப்பில் போட்டு புதிய கருவியாகச் செய்வதற்கு, இரும்பல்ல அவன் அவன் மனிதன்! நல்ல மணங்களினது இன்பங்களை நன்றாயப் அனுபவித்து அறிந்து கொண்ட ஒரு மனிதன்
தான் அவன)
இல்லாதது ஒன்றை இருப்பதாகத் தெரிவிக்கும் ஒரு பொய்த் தோற்றம் போன்றதுதான் நாம் நுகர்கிற இந்த நறுமணங்களும், என்று அவன் இப்போது அதைப்பற்றி எண்ணத் தொடங்கிவிட்டான். ஒரு மனிதனைத் தேடி அடையத் தூண்டுகிற வசீகரத்தன்மை உடையதாக, இந்த நறுமணங்களும் செயல்படுவதைப்பற்றி தன் அநுபவத்தில் நன்றாக இப்போது அவன் அறிந்து கொண்டுவிட்டான்.
இந்த உலகமானது ஒரு மாயை இல்லாததை இருப்பதாகத் தெரிவிக்கும் பொய்மை! மயக்கும் வசீகரம் ! என்கிற சில இந்தியத் தத்துவக் கொள்கைளிலே, அவன் மனம் வயது ஏறி வரவர நம்பிக்கை கொண்டுவிட்டது.
பார்க்கப் போனால் இந்த நறுமணங்களின்
ഴ്ച.dി.eത്രസ്ത്രക്രി
ീഴ്ത്തി

Page 95
மாயவலையில் எல்லா மனிதரும்தான் விழுந்து விடுகிறார்கள். அவர்கள் அதிலே தங்கள் மனத்தைப் பறிகொடுத்தும் விடுகிறார்கள். ஆனால் இவனுக்கோ அவர்களைப் போலல்லாது, யாகக்குண்டலம் போல அந்த நறுமணங்களைப் பற்றிய சிந்தனைதான் சிறுவயது காலம் தொட்டே மனத்தில் மிகவும் பற்றி மூண்டு எரியத்தொடங்கியதாய் விட்டது. அந்த அளவுக்கு இயற்கையில் கரைந்த இன்னொரு இயற்கையாய் அவன் தன்னை அப்பொழுதிருந்தே நினைக்கத் தொடங்கிவிட்டான்.
அவன் தன்னை அதிலே ஈடுபடுத்திக் கொள்ளும் அளவுக்கு, அவனிடம் ஓர்அதிசய - அபூர்வமான குணாதிசயம் இருந்தது. ஓர் அபூர்வமான சக்தி அவனிடம் விளங்கியது. அவனுக்கு இந்த சக்தியை கடவுள் ஏன் அளித்தார்? என்பதை யார் சொல்ல முடியும்? இயற்கை நறுமணங்களிலே அவனுக்கு எல்லையற்ற பிரியம்! அந்தப் பிரியம் ஒரு வியாதியாகவும் இருந்தது. அவனைப்பொறுத்த வரையில் அவன் விரும்பிய மணங்கள் முழுவதுமே பூக்களில் ஆழ்ந்திருந்தன. அதிலிருந்து கிளம்பிய மணங்கள், அவனுக்கு இனிமையாகப் பரிணமித்தன. நறுமணங்களெல்லாம் அவன் மனத்துக்குள்ளே முகாமிட்டு மணத்துக் கொண்டிருந்தன. மனோகரமான அந்த நறுமணங்களிலே அவன் மனசைப் பறிகொடுத்து ஸ்தம்பித்துப் போவான். அவன் நுகர்கிற நறுமணங்களின் அடியிலே வேறோர் ஆழமான மணங்களும் மறைந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. மற்றையவர்களது வாசனையறியும் கூர்மையைப்போலல்லாது, அவனது தன்மை வெகுதூரத்திலுள்ள மணத்தையும் மணந்து பிடித்து விடக்கூடியது போல இருந்தது. ஆம்! இவனுக்கு மற்றைய மனிதர்களைப் போலல்லாது = மறைந்து கிடக்கும் நறுமணங்களெல்லாம் நுட்பமாக நுகர்ந்து பிடித்து விடக்கூடிய அபாரமான சக்தி மூக்கிற்கு இருந்தது. அவன் முகரும் போது அந்த மணக்கைகள் நரம்புமுனைகளிலெல்லாம் மின்னலாக விசைகளை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன. அவன் ஊக்கங்கள் யாவற்றையும் பெருக்கக்கூடிய நறுமணங்களாக அவைகள் விளங்கின.
சிறுவயதில் அவன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியே சென்று அறியாதவன். அவன் தன் தாயுடன் யாழ்ப்பாணத்துக்குப் போய்த் திரும்பியதே தவிர வேறு ஊர்களைப் பார்த்ததில்லை. அதனால் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்ட மெளனத்தில்தான் அவன் எப்பொழுதும் தன் வீட்டில் இருந்து கொண்டிருப்பான். இந்த மெளனம் அவனிடம் குடிபுகுந்ததற்கு இன்னும் பல காரணங்கள் சொல்லக்கூடியதாக இருந்தன. அவற்றில் முக்கியமான ஒரு காரணமாயிருந்தது, அவனுக்குத் தகப்பன் இல்லாத குறைதான். அவன் சிறு குழந்தையாக இருக்கும் போதே தன் தகப்பனை இழந்தது, அவனுக்கு வளரவளர அது பெருங்குறை போலத்தான் மனத்தைத் தாக்கிக் கொண்டிருந்தது. அதோடு
தி.சி.அருளானந்தச் 172 eീകൃി

அவனே தாய்க்கு ஒரேயொரு பிள்ளையாகவும் இருந்துவிட்டதால் சகோதரங்களும் இன்றி பெரிதும் துன்பப்பட்டான். ஆனாலும் அந்தத் துன்பங்களிலே இருந்து அவனை விடுவிக்க, இந்த நறுமணங்களின் நுகர்வுதான் அவனுக்கு ஒரு மாற்றீடாக அமைந்தது.
யாருடைய உதவியுமின்றி தனித்திருந்து தன் வாழ்க்கையை நடத்தினாலும், செல்வத்திலே குறையில்லாமல் வாழந்து கொண்டிருந்தாள் அவன் தாய். விதவை என்கிற நிலையில் அவளுக்கு நிரந்தரமாய் ஒரு மனக்குறை இருந்து கொண்டாலும், அதையெல்லாம் மகனின் முகத்தைப் பார்த்து அவள் அவ்வப்போது மறந்து விட முயற்சித்து வந்தாள். அவளுக்கோ, நிலபுலம் வீடுகள் என்கிற சொத்துகளுக்குக் குறைவில்லாமல் இருந்தது. நில புலத்தால் கணிசமான வருமானம் வருடா வருடம் அவள் வீடுநோக்கி வந்து கொண்டிருந்தது. வீடுகள் பலவற்றை வாடகைக்கென்றும் பலருக்கு விட்டிருந்ததால், அதனாலும் ஒரு தொகைப்பணம் மாதம் தவறாது அவள் கைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.
ஒரேயொரு பிள்ளை தாய்க்கு என்பதால் செல்லப் பிள்ளையாக இருந்தான் அவன். பாட்டியும் அவனை செல்லமாகத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததால், பூவின் மென்மையுடன் அவன் வளர்ந்தான். நாளாக ஆக அவன் மனத்தில் அழகை ரசிக்கும் உணர்ச்சி பெருகியது. சாதாரண ஒரு மனிதனை விட ஒரு அமானுஷ்யமாக ஒரு சக்தி அவனிடத்தில் செயல்பட ஆரம்பித்தது. அவன் உடலிலுள்ள உறுப்புகள் எல்லாவற்றின் செயல்பாட்டிலும் பார்க்க, முகரும் சத்தியானது பலம் கொண்டு எழும்பவும் அவன் தன் மனத்தை அதிலே பதித்து மெய்மறக்கவும் தொடங்கினான. அவனுக்கு இனிப்பளிக்கும் ஒரு சம்பவம் இது! அன்றொரு நாள், அப்பொழுது அவன், தன் வீட்டிலுள்ள ஒரு அறையில் சிமெந்து நிலத்தில் படுத்துக் கிடந்தான். மதிய வெயில் உஷ்ணத்துக்கு, சிமெந்துத் தரையில் படுத்துக் கிடந்தது உடலுக்கு ஜில்- லென்று குளுமையாக அவனுக்கு இருந்தது. முதலில் ஏகமான ஒரு வாசனை, அவனின் மூக்கிலே நுழைந்தது. தேக்கு பூவெடுக்கும் காலம்தான் அது அந்த மணமாகத்தான் இருக்க வேண்டும்? என்று அவன் அதைத் தன் மனத்தில் குறித்துக் கொண்டான். இன்னும், தன் கண்களை இலேசாக மூடிக் கொண்டபடி ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்தான். வெள்ளைத் துணியில் சாயம் ஏறியது மாதிரி, மூக்கிலே அந்த வாசனை ஏறியது. வீட்டு வளவைக் கடந்து சற்றுத் தொலைவில் நிற்கும் நாவல் மரத்திலுள்ள நாவல் பழங்களது வாசம், என்று அவன் அதை சாதாரணமாக நினைத்துக் கொண்டான்.
அவனது வீட்டு வளவுக்குள்ளே நின்ற வாழைகளின் சலசலப்புச் சத்தம் அவன் காதுகளில் விழுந்தன. மென்மையாக உடைைல தளர
മ.dി.eിത്രmത്രക്രി 173
ീക്രി

Page 96
வைத்துக் கொண்டு, ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்தான். அந்த மூச்சுக் காற்றுடன் கலந்திருந்த பழங்களின் வாசனை மிகவும் ஒரு ஆச்சரியம் தான் ! எங்கோ தொலைக் காட்டியிருந்து வரும் . பாலப்பழங்களினதும். வீரப்பழங்களினதும் வாசனையல்லவா அது..? இவை அவன் மூக்குநுனியை முத்தமிடவும். இன்னும் கொஞ்சம் தூரமாய்ப்போய் அங்கிருந்து எழும் வாசனைகளையும் இப்படியே படுத்துக்கிடந்தவாறு, மணந்து பிடித்து விடலாம் என்கிறதொரு ஆர்வம் அவனுக்குப் பிறந்தது.
அந்த மணக்கைகள் இப்போது தனக்குக் கிடைக்குமிடம் ஒரு தொலைதூரத்துக் காடு' என்று அவன் அறிவான். இன்னும் நூலிழையாக மூக்கிலே சுவாசம் ஏற பன்னிரண்டு வினாடிகளளவில் காற்றை பூரகம்’ செய்தான்.
அவன் நினைவு ஒரு பக்கம் பின்னிக் கொண்டிருந்த செடி கொடிகளை விலக்குகிறது. மணத்தின் சக்திக்குத்தான் எல்லையேது? காட்டின் அடைப்பு விலகியவுடன் அங்குள்ள எல்லா மணங்களும் அவன் மூக்கில் வந்து உதைக்கின்றன. ஈச்சம்பழம், காரைப்பழம், சூரைப்பழம், காட்டுத்துவரங்காயென்றும் அவைகள் எல்லாவற்றையும் அதனதன் மணத்தைக் கொண்டு இனம் பிரித்து சரியாக அவன் அறிகிறான். அதோடு கற்றாளை வெயிலில் வெந்து காய்ந்த மணமுழ்த்ான் அவனுக்கு மணந்தவாறு இருக்கிறது. இவைகள் யாவற்றையும்அவன் தன் சுவாசப் பைகளுக்கு இரையாக்குகிறான். அந்த மணங்களில் தனக்குக் கிடைத்த பூர்ண இன்பத்தையம் அவன் அநுபவித்து மகிழ்கிறான்.
மணத்துக்கு உருவமில்லை என்பது அவனுக்குத் தெரிகிறது. அதே போல, அவன் ஆகாய வெளியையும் நினைத்துக் கொண்டு, உருவமற்றதான அந்த ஆகாயத்தையும் பார்க்கிறான். அதைப் போல ஜலத்தையும் பார்க்கிறான். எதற்கும் உருவமே இல்லை!' - என்பதாக அவன் தன் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான். இதன் பொருட்டு ஒரு உண்மை அவனுக்குப் புலப்படுகிறது. ஒரு மனிதன் தன் கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், உடம்பால் தீண்டியும் நுகரப்படும் ஐம்புல இன்பங்களுக்குள் சிறந்தது மூக்கால் நுகரப்படும் இன்பமே என்று அதனை சிறந்ததெனக் கொள்கிறான் அவன். அவன் சுவாசம் முழுவதும், மந்திர மலையின் தோள்கள்லுே கடைகயிறாகிக் கஷ்டப்படும் வாசுகிப் பாம்பு மாதிரி ஆழத்தில் கிடக்கும் அம்ருதமான நறுமணங்களை தேடியெடுக்கமுயன்றபடியே இருக்கிறது. புளிய மொட்டு பச்சை மாறி மஞ்சளித்த வடிவில் மாறுவது போல, அவன் வளரவளர மணத்தின் சுவை மாறுபாடான முன்னேற்றத்தில் பிரவேசித்தது. அந்த மணக்கைகளைப்பற்றிய நினைவு பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை எல்லாம் தாண்டிப் போவது போல அவனுக்குப்
.dി.eിത്രസ്ത്രക്രി 174 ിമി

போய்க் கொண்டிருந்தது. அவன் வெங்காய வாடை வீசிய அந்தக் கிராமத்து விவசாயிகளை நேசித்தான். அவர்களுடன் கதைத்துப் பழகினான். அவ்விதமே வலைச்சேரியில் உலவும் மீன் வியாபாரிகளுடனும், மற்றும் கூலி வேலை செய்கின்ற தொழிலாளருடனும் பாசத்துடன் பழகினான். அவர்களுடன் அவன் சுவாசம் கலந்தது.
இப்படியெல்லாம் அவன் இருந்தாலும் ஒரு பெண்ணின் புதிர் குறித்து சிந்திக்க, அவனுக்கு அப்போது வயதில்லை. அவன் விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தான்.
அந்தக் காலம் பங்குனி முடிந்து ‘சித்திரை தொடங்கியிருந்தது. அந்த வளவிலுள்ள பலா மரத்தின் காய்கள் கொத்துக் கொத்தாய்க் காய்த்து விளைந்து கிடந்தன. ஒரு பக்கம் 'மா' மரங்களிலிருந்து குருவிகள் கொந்திய பழத்தினூடாக கடும் வாசனை வீசிக்கொண்டிருந்தது. பூப்பூத்துச் சொரியும் ‘வைகாசி மாதகாலமானதால், வேலியைத் தோள் போல் தழுவிப் படர்ந்திருந்த கொத்துப் பூங்கொடி நிறையப் பூப்பூத்திருந்தது. தெள்ளத் தெளிந்த ரோஜாக் கூட்டத்திலிருந்து வீசும் வாசனையும் காற்றில் தவழ்ந்து கொண்டிருந்தது. வீட்டு முற்றத்தில் மல்லிகை பூத்திருந்ததால், தூக்கலாய் வெறிகொள்ள வைக்கும் மணமும் அடித்தபடி இருந்தது. அவன் தாய்க்குச் சொந்தமாயுள்ள வீடுகளிலே - ஒரு வீட்டில் அங்கு வாடகைக்கு இருந்தவர்கள், தாம் குடியிருந்த அந்த வீட்டை அந்த மாதம் காலி பண்ணி விட்டு வெளிக்கிட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் போன கையோடு, புதிய குடும்பம் அதிலே உடனே வந்திருந்தும் விட்டது. இப்பொழுது ராஜா' பெயர்கள் சொல்லிக் கொண்டு நிற்கும் நல்லூர்' முருகன்’ கோயிலுக்குப் பக்கத்தே உள்ள ஒரு வீட்டில் முன்னம் அவர்கள் குடியிருந்தவர்களாம்!
அவன் தாயாருக்கு தங்களைப்பற்றி அவர்கள் சொன்னார்கள். ஒரே ஒரு மகள் தங்களுக்கு இவள் மட்டும்தான்!” என்று சொல்லியபடி மகளையும் அவன் தாய்க்குக்காட்டி அவர்கள் மகிழ்ந்தார்கள் அவளது தாய்க்கு அம்மி மாதிரி நெஞ்சும் உடம்பும் - தன் தாய் அவர்களுக்கு தன்னைப்பற்றி அப்படியாகச் சொல்ல, அவள் இவர்களைப் பார்த்துச் சிரித்தாள்.
அவன் தன் தாய்க்குப் பக்கத்தில் நின்றவாறு சிரித்துக் கொண்டு நிற்கும் அவளைப்பார்த்தான்.
“பெயர் என்ன பிள்ள..?” அவன் அம்மா கேட்க “சாந்தி.!” என்று சொன்னாள் அவள். "சாந்தி. சாந்தி. ”- என்றதாய் அவன் மனம் சொன்னது. அவன் சாந்தியை உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஏற இறங்கப் பார்த்தான். அவள் கைகளும் கால்களும், கடைந்தெடுத்தாலும் கிடைக்காத வழுவழுப்பாயிருப்பதை அவன் கண்டான். அவள் மார்புகளும்,
ys
தி.சி.அருளானந்தச் 175
ീകൃി

Page 97
சின்னச்சின்னதாய் குமிழ்விட்டிருந்தது. சாட்டை போல் நீண்ட ரெட்டைப் பின்னல் அவள் போட்டிருந்தாள். லேசாக அலைவீசி நெளியும் தலைமுடி அவளுக்கு அழகாக இருந்தது. சாந்திக்கு தன்னைவிட இரண்டு வயது குறைவாகத்தான் இருக்குமென்று, அவளை மதிப்பிட்டான் அவன். இவன் சாந்தியை அவ்விதமாகப் பார்க்க, அவளது நிதானமான விழிகள், ஒரு குழந்தையின் விழிகளைப் போல இவனை உறுத்திப் பார்த்தன. அவள் கண்கள் ஏதோ மறு உலகின் ஒளி ’ பட்டாற் போல, தேஜோ மயமாகப் பிரகாசிப்பதை இவன் கண்டான். பெயர் தெரியா பூச்செடி போல - புள்புள்' ளென்று உடம்பாயிருக்கும் சாந்தியிலும் குறுகுறு வென்று ஒரு நறுவாடை வந்து கொண்டிருப்பதை அவன் சுவாசமும் அறிந்தது. சந்தன நிறத்துடன், மின்னும் காம்புடன், மயக்கம் தரும் மணத்தையும் பரப்பும், பவள மல்லிகைக்கு இணையாக இவளிலும் ஒரு வாசம் வருகிறது, ஓ! இது அந்தப் பூவில் வாசம் செய்யும் வாசந்தான் என்று அவன் உடனே நினைத்து அதிசயப்பட்டான்!
சாந்தியின் தந்தைக்கு தயிர், மோர் வீட்டிலே தயாரித்துக் கொண்டு போய், சந்தைக் கடையில் வைத்து வியாபாரம் பண்ணுகிறதுதான் தொழில். மூன்று வேளையும் சாப்பிடும் நெய்யும், பாலும், தயிரும் அவர்களின் உடம்மைப் பூசிவிட்டிருந்தன. தாய் அப்பம் சுட்டு விற்றாள். 'சாந்தி ' பள்ளிக்கூடம் போனாள். அந்தப் பாடசாலையில் தான் அவனும் படித்ததால், பள்ளிக் கூடத்திலும் அவனோடு எப்போதும் தயங்காமல் மல்லடிக்கத் தொடங்கினாள் அவள்.
இருவருக்குள்ளும் நாட்கள் போகப் போகச் சினேகிதம் வளர்ந்தது. ஒரு நாள் அவன் தன் கையில் ஒரு கத்தியோடு அந்த வளவுத் தொங்கலடிக்கு சாந்தியைக் கூட்டிக் கொண்டு போனான். அந்த வளவு மூலையிலே ஒரு பெரிய பலா நின்றது. மரத்தில் பழம் பழுத்து 'கம்’ = மென்ற மணமாயிருந்தது. அவன் மரத்து வேரடிக்கு மேல், உப்பிப் பழுத்துக் கிடந்த வெடித்த பலாப்பழத்தை வெட்டி, அதை வகிர்ந்து பிளந்து சடைகளைக் களைந்து, மஞ்சள் சுளைகளை சமர்த்தாகப் பிய்த்து எடுத்து, வாழையிலையில் வைத்து அவளுக்குச் சாப்பிடக் கொடுத்தான். இப்படித்தான் இன்னுமொருநாள், வளவுக்குள்ளே நின்ற மாமரத்திலேறி, ஒரு கிளையில் முற்றிப் பழுத்துக் கிடந்த மாம்பழங்களைப் பிடுங்கிக் கீழே போட்டு அவற்றையும் தோல் சீவி வெட்டி அவளுக்குத் திகட்டுமட்டும் தின்னக் கொடுத்தான்.
இவனது அன்பினாலே சாந்திக்கும் இவனென்றால் 'உயிர் = என்றாற் போல நேசம் வளர்ந்தது. இருவரும் பெரிய அறை வீட்டுக்குப் பின்னாலுள்ள வெறும் ஒலைக் கொட்டிலுக்குள் இருந்து, கதைக்கப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
ஒரு நாள், அவள் கொட்டிலுக்குள் அவனுடன் இருந்த வேளை:
.dി.മിത്രസ്ത്രി 176 ീക്രി

y
“ரெண்டுபேரும் கொக்கான் வெட்டி விளையாடுவோமா..? என்று இவனைக் கேட்டாள். அவன்: “உன்ர கை வளைஞ்சு வளைஞ்சு லாகவகமாக் காயளப் பிடிக்கிறது மாதிரி. என்ர கை பிடிச்சுக் கொள்ளாது. காயஸ் எப்பிடியும் என்ர கைவிட்டுத் தவறி விழுந்து போயிடும்” - என்று சொன்னான்.
அதற்கு அவள் : "அது பறவாயில்ல! கொஞ்சம் கொஞ்சமா நீயும் இதப் பழகிக் கொள்ளன். ” - என்றாள்.
“சீச்சீ. இது பெட்டயள் விளையாடுற, விளயாட்டு. உனக்குத்தான் உந்த விளையாட்டு விளையாடிக் கொள்ளச் சரி." - என்று உடனே அவன் சொல்லிவிட்டான்.
அவன் சொல்லவும் அவளுக்கு அவன் மேல் எரிச்சலாய் வந்துவிட்டது. "அப்ப நான் என்ர வீட்ட போறன். ஒண்டும் ஒரு விளையாட்டே இல்லாமல் இதில உன்னோட சும்மா இருந்து கொண்டு நான் என்ன செய்ய?” என்று அவள் சொல்லிவிட்டாள்.
“வேண்டாம் வேண்டாம்! நீ போயிராம இப்பிடி இதில இரு.! முதல்ல எட்டுப் பத்துத் தடவயாவது நீயே கொக்கான் வெட்டி அத எனக்கு விளையாடிக்காட்டு. அதுக்குப்பிறகு நானும் உன்னோட சேந்து பிறகு கொக்கான் ஆடுறன்!” - என்றான் அவன்.
இவன் எதற்காக இப்படிச் சொல்கிறான்?” என்று அவளுக்கு இவனது சூத்திரம் தெரியவில்லை. இவனின் 'கள்ளம் அவளுக்குப் புரியவில்லை. அவன் அவளைப் பார்த்து “இப்பிடி இதில எனக்குக் கொஞ்சம் முன்னாலயா நீ இருந்து கொள். ”. என்று சொன்னான். அவனது சிறிய கண்களில் சூழ்ச்சி பிரதிபலித்தது!
ஆனாலும் அவன் சொல்வதெல்லாம் அவளுக்குப் பிடிக்கும் என்பதால், தன் கால்களை சம்மணமிட்டுக் கொண்டு, பழையதாகி இற்றுப் போன அந்தக் கோரப்பாயில் அவனுக்கு முன்னால் அவள் இருந்து கொண்டாள். அப்படி இருக்கும் போது பூசணிக்காய்களை இலைகள் மறைப்பது போல, தன் சிகப்பு நிறமான நுண்மையான முன்னந் தொடைகளை அவள் தன் அரைப் பாவாடையை இழுத்து விட்டு மறைத்துக் கொண்டாள்.
"வடிவா இங்க நீ - நான் விளையாடுறதப் பார்த்துக் கொண்டிரு. - என்று விட்டு காய்களை மேலே எறிந்து கொக்கான் வெட்டியாடத் தொடங்கினாள் அவள்.
அவளின் கண்பார்வை எறிந்து விளையாடும் அந்தக் காய்களினூடே சென்றபடி விலகாமல் இருந்து கொண்டிருக்க - அவன்
99
தி.சி.அருளரதிைதசி 177 eിക്രി

Page 98
அவளது கொக்கான் ஆட்டத்தைப் பார்க்காமல், அவளையே வைத்த கண் வாங்காமல் - பாசமுள்ள விலங்கைப் போல அவளை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் இருக்கையில் நேரான ஒரு மெழுகுவர்த்தி போல் நிமிர்ந்து இருந்தான் அவன். அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வாக்கில், அவனையறியாத ஒரு விதமாக கண்களிரண்டும் அவனுக்கு மூடின.
குருவி ஏற கொம்பாடும் சலனம் போல தொப்பூளுக்கு அடியில் அவனுக்கு அவ்வேளை நடுங்கியது. அடிவயிற்றிலிருந்து 'பாம்பு' நெளிந்தது போல குடல் அசைந்து பிரண்டது. அது மேலே முள்ளந்தண்டு எலும்புக்குப் பக்கத்தால் நெளிந்து வருவது போல இருக்க வயிற்றை எக்கினான். மேலே எழுந்து வந்த அசைவு மின்சார அதிர்வைக் கொடுத்தது. உடல் சுகமாகி - அசையாத சிலையாகி நீண்டதொரு சுவாசத்தை உள்இழுத்தது.
அவள் தலையில் தேங்காய் எண்ணெய்யின் மணம் தண்ணென்று கனம் தரும்! அந்தமணம் பூராக நிலத்தில் பெய்த நறுமணமாரியாக அவனுக்கு சுவாசத்தில் கிடைத்தது. அதையடுத்து அவனுக்குப் பழக்கமான அவளது உடல், மணம்' - ஆனாலும், வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒரு மணம் சந்தன நதிபோல அவளிடம் நிறைந்திருப்பது முக்கில் மணத்தது. அந்த மதுர வாசம் இதுவரை அவன் முகர்ந்து அறியாத நறுமணத்தினைப் போன்ற ஒரு சுகந்தம்! அது அவனுக்கு ஆனந்தத்தை அடையப்போகும் போது ஏற்படும் மனப் படபடப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அவன் கண்களை மூடியபடியே இருந்தான். கதம்பமான அவளின் 'மணம்' அவனை மெய்மறக்கச் செய்தது. பக்கத்து வளவில் கத்தரித் தோட்டத்துக்கு தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். தண்ணிர்ப் பம்பின் அலுப்பூட்டும் அலறல் அவனுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது - இந்த வேளையிலா அவன் ஆச்சி அவ்விடத்துக்கு வரவேண்டும்? பேரன் அதிலே கண்ணைமூடிக் கொண்டு ஒரு 'புத்தன்’ மாதிரி இருப்பதையும், அவனுக்குப் பக்கத்திலே, அந்தப் பெடிச்சி இருந்து கொண்டு "கொக்கான்’ விளையாடுவதையும் பார்த்துவிட்டு, அவளுக்கு சுருசுரு' வென்று ஆத்திரம் வந்து விட்டது.
'இளந்தாரிப் பிள்ளையோட பெடிச்சி உனக்கு என்னடி சேந்து ஒரு விளையாட்டு விளையாட வேண்டிக்கிடக்கு.? ஒட்.றிய். உண்ட வீட்டுக்கு. ” - என்று சாந்தியை அவள் ஏசினாள். ஆச்சியின் குரல் உயர்ந்தும், கண்டிப்பாகவும் இருந்தது. சில வேளை ஆச்சியின் வாய் வார்த்தைகளுக்குப் பதிலாக காற்றுக் குமிழிகளைத்தான் உதிர்க்கும். அதற்குப் பிறகு, அவள் சாந்தியை ஏசிய ஏச்சொன்றும் ஒழுங்காக வாயிலிருந்து வரவில்லை. என்றாலும் 'சாந்தி பயந்தடித்துக் கொண்டு,
.dികിത്രസ്ത്രക്രി 178 ീകൃി

கொக்கான் காய்களை அதிலே அப்படியே கீழே போட்டு விட்டு, விழுந்தடித்துக் கொண்டு ஓடிவிட்டாள்.
அவனுக்கு, தனக்கு முன்னாலே என்ன நடந்தது? என்று அது ஒன்றும் புரியவில்லை! மூடிய கண்கள் அவனுக்கு அப்படி மூடியபடியே இப்போதும் இருந்தன. அவளைச் சுவாசித்த சுகந்த லயத்திலேயே அவன், வேறு ஒன்றையும் அறியாமல் அதில் இருந்து கொண்டிருந்தான்.
ஆச்சிக்கு பேரன் ஏன் இப்படி இருந்து கொண்டிருக்கிறான்? கண்களை மூடியபடி ஒன்றும் பேசாமல் சிலை போல இருக்கிறான்? என்பது ஒன்றும் புரியவில்லை! அவள் தனக்குள் இப்பிடியும் நினைத்தாள்! தான் பேசிய பேச்சில் பேரன் பூனை மாதிரி கண்ணை மூடிக் கொண்டு நடிக்க வெளிக்கிட்டு விட்டானோ? ஏதோ விஷமம் தான் இவன் செய்கிறானாக்கும்? - என்று நினைத்துக் கொண்டு அவனுக்குக் கிட்டவாகப் போனாள். முதுகைக் குனிந்து கொண்டு பேரனின் முகத்தை கிட்டவாக அவள் பார்த்தாள். அவன் இன்னமும் அசையாத ஒரு கல்சிலை போல அமர்ந்திருந்தான். இதழ்களிலே அவனுக்கு மோகனமான புன்னகை தவழ்ந்தது. கண்களை அவன் அப்படியே முடிக்கொண்டிருந்தாலும, முகம் அப்படியே அவனுக்கு செந்தாமரையாக செந்தளிப்பாக இருந்தது. அந்தஅவன் நிலையை கிழவி பார்த்து விட்டு என்னவோ ஏதோ தன் பேரனுக்கு பிடித்துவிட்டதாக்கும்? ' - என்று வெகுவாகப் பயந்து போய் விட்டாள்.
"ஐயோ என்ர பேரனுக்கு என்ன கோளாறோ . ? அவள் என்னவோ காயள உருட்டி ஏவிவிட்டுட்டுப் போட்டாள் போல. ? அவளிண்ட தேப்பனும் தாயும் ஏதோ அவளிட்ட செய்வினை செய்து குடுத்திட்டாளவையள் போலக் கிடக்கு. ? ” - என்று தன் சதுரம் நடுங்கியபடி சொல்லிக் கத்திக் கொண்டு அவனைப் பிடித்துத் 'தம்பி.! தம்பி ராசா.!” - என்று உடம்பைப் பிடித்து ஆட்டி உலுப்பினாள். கிழவி அப்படிப் போட்டு தன்னை உலுப்ப, மாபெரும் பனிக்கட்டியின் ஒரு முனை உடைந்தது போல அவனுக்கு இருந்தது. கண்மூடி புலன் அனைத்தும் அவனுக்கு நெற்றிப் பொட்டுக்குள் குவிந்து இருந்ததால் தன்னைப்போட்டு உசுப்புகிற உருவத்தை ஒரு நிழல்' போல அவன் நினைத்தான். அவனுக்கு அமைதிப் பறவை சிறகடித்துப் பறந்தது.
அவன் மென்மையாக தன் உடலை வளைத்துக் கொண்டு, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப் பட்டவனைப் போல கண்களை விழித்துப்பார்த்தான். எங்கும் முன்பிருந்த அதே ஒளி அவனுக்கு முன்னால் கொக்கான் காய்கள் தான் நிலத்தில் கிடந்தன. சாந்தியைக் காணவில்லை! சுவாசித்த சுகந்தலயம், எங்கேயோ போய்த் தொலைந்தது மாதிரி இருந்தது. ஆச்சியைப் பார்த்ததும, அவன் பயந்து விட்டான். ஆச்சி அவனை உளவு அறிபவள் போலப் பார்த்தாள்.
്.dിമിത്രസ്ത്രക്രി 179
அதி

Page 99
9
“என்ராம்பி உனக்கு என்ன நடந்தது.?
"ஐயோ ஒண்ணுமில்லையாம்! எண்டு சொல்லுறான் இவன்! அப்ப என்ராம்பி கண்ணை மூடிக்கொண்டு நீ இருந்தனி.? ”
"ஐயோ ஒண்டுமில்லயாம் எண்டுறான் இவன்? அப்ப நான் கூப்பிட்டது ஏன்ராம்பி உனக்கு அப்ப கேக்கேல்லயே..? ”
“கூப்பிட்டனியளே நீங்க என்னய.? ” "ஐயோ கூப்பிட்டனியளெண்டும் இவன் என்னக் கேக்கிறான்? என்ராம்பி உனக்கு நடந்தது.? ”
“எனக்கொண்டுமில்ல சும்மா நான் இருந்தனான் எண்டுறன்.” "ஐயோ இவனுக்கென்னவோ உண்மையா இப்ப பிடிச்சுத்தான் விட்டுது போல . இந்தக் கொட்டில் பக்கம் தனியப் போய் எப்பவும் இருக்காத இதுக்க போய் விளையாடாத எண்டெல்லாம் படிச்சுப் படிச்சு நான் உனக்கு நெடுகச் சொன்னன். இவன் என்ர சொல்வழி எப்பவும் கேட்டாத்தானே. ? அடிபிள்ள..! இங்கவாடியம்மா. ஓடிவாவணையம்மா..? " என்று ஆச்சி கத்தினாள். தாய் இப்பிடியாய்ப் பெரிய சத்தம் போட்டுக் கூப்பிட, சமையல் வேலையோடு நின்று கொண்டிருந்த மகள் அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த கறியையும் பாராமல் விட்டு விட்டு, கொட்டிலடிக்கு ஓடிவந்தாள்.
அவள் என்ன ஏது? என்று தாயைக் கேட்க ஆச்சி எல்லா விஷயத்தையும் போட்டுடைத்த மாதிரியாகச் சொன்னாள். ஆச்சி சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு, ஒன்றும் விளங்காமல் கிடந்து அவன் முழிசிக் கொண்டிருந்தான்.
எல்லாவற்றையும் விட, அவன் அவர்களைப் பார்த்து முழிசியது ஒன்றெ அவனுக்குப் பெரிய பிரச்சினையாக வந்து விட்டது. அவனுக்கு உண்மையில், அப்படி ஏதோ ஒன்று பிடித்துக் கொண்டுதான் விட்டது என்று, அவன் தாயும் ஆச்சியும் அவன் முழிசிக் கொண்டிருப்பதைப் பார்த்து நம்பி விட்டார்கள்.
உடனே அவனை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய், பச்சைத் தண்ணிரை உடனே அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, மத்தியானச் சாப்பாட்டையும் சாப்பிட அவனுக்குக் கொடுத்து விட்டு, பின்னேரம் அவனை முருகன் கோயில் அர்ச்சகரிடம் அவர்கள் கூட்டிக் கொண்டு போனார்கள். அர்ச்சகர் அவனைப் பார்வை பார்த்து விட்டு:
“வித்தியாசமொண்டு இந்தப் பிள்ளையில இருக்குத்தான் என்று அவர்களுக்கு ஆசகமாக அதைச் சொன்னார். அவர்கள் இருவரும் அவர் சொல்வதைக் கேட்டு விட்டு ஆளையாள் பார்த்துக் கொண்டு “தாங்கள் அப்ப ரெண்டு பேரும் நெச்சது சரிதான்! " - என்பது போல
2
.dി.eിത്രസ്ത്രക്രി 180 eിക്രി

தலையை ஆட்டிக் கொண்டார்கள்.
அர்ச்சகர் 'சூடம் கொளுத்தி திருநீறு மந்திரித்து அவன் நெற்றியிட்டார். செம்பிலே உள்ள தண்ணிருக்குள் மாவிலை ஒன்றை நுழைத்து வைத்துக் கொண்டு, மந்திரம் ஓதி தண்ணிருக்குள் ஊதி அதற்குச் சக்தியேற்றினார். அந்தத் தண்ணீரால் அவர் இவனை முகம் கழுவிவித்ததன் பின்பு: இப்பத்தான் இந்தப் பெடியின்ர முகம் பழைய மாதிரி வெளிச்சு வந்திருக்கு. " - என்று ஆச்சி பேரனைப் பார்த்து விட்டு மகளுக்குச் சொன்னாள்.
பொழுது படவிட்டு அவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு வந்ததன் பின்பு, அவனின் தாய் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்த கையோடு சாந்தியின் வீட்டுக்குப் போனாள். அவர்கள் வீட்டு வாசலில் போய் அவள் நின்ற கையோடு . “ஒரு கதையும் இனி உங்களோட எனக்கு வேணாம். இந்த வீட்டால இருந்து மூண்டு நாளேக்க நீங்க உடனடியா வெளிக்கிட்டு வெளியில போயிட வேணும்.!” என்று குரலை ஏற்றித் தொண்டை கிழியக் கத்தினாள்.
சாந்தியின் தந்தை ஒரு பதுமையான ஆள் அவரின் மனைவியும் எதற்கும் வாய்மூடி மெளனம் காக்கும் ஒரு அப்புராணி அவர்களுக்கு அவனின் தாயார் ஏன் இப்படி வந்து இருந்தாற்போல இவ்விதமாயெல்லாம் தாட்டுப்பூட்டு - என்று தங்களுக்குச் சொல்லிப் பேசி சத்தம் போடுகிறாரென்பது ஒன்றுமாக விளங்கவில்லை. என்றாலும் அந்த மனுசிக்குப் பயந்து கொண்டு.
"இன்னும் ஒரு கிழமையால நாங்கள் வேற வீட்டப் பாத்துக் கொண்டு போறமம்மா..!" என்று மனவருத்தத்தோடு சொன்னார்கள். அவனின் தாய் அவர்கள் இவ்விதம் கூறியும், அவர்களை ஏசுவதை நிறுத்தாமல் வாய்க்குள் புறுபுறுத்தபடி தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள். ஒரு கிழமையின் பின் சாந்தியின் குடும்பம் அந்த வீட்டாலே வெளிக்கிட்டுப் போக, வேறு ஒரு குடும்பம் அந்த வீட்டிலே வாடகைக்கு வந்து இருந்தது. அவள் சாந்தி அந்த வீட்டால் இருந்து போன பிற்பாடு, பல நாட்களாக அவளின் நினைவு கண்ணில் விழுந்த துரும்புபோல அவனைப் போட்டு வதைத்துக் கொண்டே இருந்தது. பிறகு என்ன? அவளை மறந்து விட்டான் அவன. என்றாலும், அவனுக்குள் சுமக்கும் ரகசிய காயங்களை ஆற்றி விடக்கூடிய மணம் அவளிடம் இருந்ததையிட்டு அவளின் நினைவு சில வேளைகளில் வரும் போது அந்த மணமும் அவனின் நினைவில வந்து கொண்டே இருந்தது. காலங்கள் தேய்ந்து விட்டது போல் இப்போது அவனுக்குத் தோன்றுகிறது. அவன் பதினெட்டு வயது வாலிபப் பருவத்துக்கு வளர்ந்து விட்டான். எப்போதும் ஈமக்கடன்களைச் செய்பவர்களின் கறுப்பு உடைதான் அவனுக்கு உடுத்திக் கொள்ளப் பிடிக்கும். அதை அணிந்து கொண்டு அவன் ஊர் சுற்றுவான். அதுதான்
മ.dി.eിത്രmഴുക്രി 181 eീക്രി

Page 100
அவனுக்குப் பொழுது போக்கு. அவன் தன் உடலை வனப்பாகவும் வசீகரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி யோக அப்பியாசங்களையும் கிரமமாகச் செய்யத் தொடங்கினான். வாய்க்கு ருசியானதும் சத்துள்ளதுமான உணவுகளையும் சாப்பிட்டான்.
வீட்டிலே அவன் இருக்கும் வேளையில் தாய் வேலையாயிருக்கும் சமையல் கட்டுக்கு சிலவேளைகளில் அவன் போவான். அங்கே அடுப்பில் கொதிக்கும் கறியின் மணத்தை மூக்கை அகலமாக்கியபடி முகர்ந்துவிட்டு “இந்தக் கறிக்கு நீங்கள் உப்புக் கொஞ்சம் போட வேணுமம்மா. அதோட கொஞ்சம் பழப்புளியும் கறிக்குக் காணாது.?” - என்று அந்தக் கறிமணத்தை மணந்து, அதன் சுவைக் குறைவை உடனே தாய்க்குச் சொல்லி விடுவான்.
இவன் சொல்வதை தாய் கேட்டு விட்டு. “என்ன இவன் இப்பிடி ஒண்டும் கறிக் குழம்ப நாக்கில வைச்சுப் பாக்காம. உப்புப் புளி கூடினது குறைஞ்சதுகளைச் சொல்லுறானே?. என்று நினைப்பாள். "நீங்க ஒருக்காக் குழம்ப நாக்கில வைச்சுத் தான் பாத்திடுங்கோவன்.? ” - என்று பிறகும் அவன் சொல்லி விட.
“பிள்ள சொல்லுறதயும்தான் ஒருக்கா இப்ப பாத்திடுவோமே. ” - என்று அவள் நினைத்துக் கொண்டு குழம்பில் அகப்பையை வைத்து அள்ளியெடுத்து " ஊ. ஊ.” - என்று அதை ஆறிவர ஊதி குழம்பை உள்ளங்கையில் ஊற்றி அதை அவள் சுவை பார்ப்பாள். அதன் சுவை தெரிந்ததும் "உண்ணான உத அவன் சரியாத்தானே எனக்குச் சொல்லியிருக்கிறான்.? அவன் சொன்னது மாதிரி இதுக்கு உப்புப்புளி குறைவாகத்தானே இருக்கு.?” - என்று அறிந்து கொண்டு கறிக்குத் தேவையானதை உடனே அவள் சேர்ப்பாள். அதன் பின்புதான் அவளுக்கு, தன்பிள்ளை சொன்னதைப் பற்றிய விஷயத்தையிட்டு நீண்டதோர் ஆராய்ச்சி தொடங்கும்.
“வாயில உதுகள் ஒண்டையம் வைச்சுப் பாக்காம அடுப்பில கொதிச்சுக் கொண்டிருக்கிற கறிக்கு, உப்புப்புளி குறைவாயிருக்கு எண்ட விசயம் என்ர மேனுக்கு எப்பிடித் தெரிஞ்சுது..?”
என்பதைப்பற்றிய விஷயம் அவளுக்குப் பின்பு ஒரே ஆச்சரியம் தான்! "இதெல்லாம் எப்பிடித்தம்பி உனக்குச் சரியாத் தெரிஞ்சுது..?
வாயில ஒண்டையும் வைச்சுப் பாக்காம அதெல்லாம் எப்பிடித்தம்பி நீ கண்டு பிடிச்சனி.? " அவள் மகனைப் பார்த்து ஆர்வத்தோடு கேட்பாள். "அதெல்லாம் கறியின்ர அந்த மணத்திலேயே நான் கண்டு பிடிச்சன்’ - என்பான் அவன்.
“வாயில உதுகளை நீ வைச்சுப்பாக்காம அப்பிடி மணத்தில எப்பிடித்தம்பி உனக்குத் தெரியுதடா..? ” - என்று அவள் அதை
s
தி.பி.அருள%னந்தர் 82 அத்தி

பிறகும் கேட்பாள்.
"அம்மாக்கு நான் இதயெல்லாம் சொன்னா அவவுக்கு எப்பிடி இது விளங்கும்?” என்று தனக்குள் அவன் நினைத்துக் கொண்டு,
“அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா விளங்காதம்மா..?” என்று கூறிவிட்டு தாயைப்பார்த்துச் சிரித்தபடி அவன் குசினியாலே வெளியே போய் விடுவான்.
இந்த வருடம் ‘கார்த்திகை மாசம் 13ம் திகதி, அவனுக்கு இருபது வயது நிறைவடைந்து விட்டது. இருபத்தோராவது வயது அந்தச் செவ்வாய்க்கிழமையோடு அவனுக்குத் தொடக்கம். குருதிப் பூவாக நிறம் மாறும் கார்த்திகைப் பூப்போல, வயதுக்கேற்றதாய் குணமும் அவனுக்கு மாறிவிட்டது. தனக்குள்ள வலிகளையும் காயங்களையும் ஆற்றிவிடக்கூடிய மணங்களிலே அவனுக்கு விருப்பு அதிகரித்தது. அந்த மணங்களை அவன் முகரும் போது, கலவை முடித்த இன்பம் அவனுக்கு என்றாலும், அவ்வேளை, மிருகமே மிருகமே. அநுபவி. அநுபவி - என்று யாரோ முணுமுணுப்பது மாதிரி அவனுக்குப் பிரமையாக இருக்கும். அன்று நல்ல வெய்யில், வறண்ட நிலத்தில் மழை தூறியது. காற்று வாடையை சுவாசித்தான் அவன். மண்ணின் வாசனை அவன் மூக்கில் நுழைந்தது. அந்த வாசனை அவன் சுவாசத்திலே உள்ளூடி உறவி கொண்டு நெஞ்சில் நிறைந்தது. எல்லா வாசனைகளையும் விட இந்த மண்ணின் வாசனைதான் மகத்தானது என்று அப்போது அவன் நினைத்தான்.
எத்தனை அற்புதம் இந்த மூச்சு என்று அதையும் நினைத்து அவன் வியந்தான். அந்த வாசனையை அநுபவித்ததோடு அவனுக்கு தன்சொந்த பந்தங்களைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற நினைப்பும் வந்து விட்டது.
இதனால் அவன் ஊருக்குப் போக இருக்கிற கதையை தன் நெருங்கிய உறவினர் ஒருவருக்குச் சொன்னான். அவர் தினப்பத்திரிகை தவறாமல் படிக்கும் பொழுது போக்குக் கொண்டவர். இவன் யாழ்ப்பாணம் போக இருப்பதை அவருக்குச் சொல்லவும்.
“யாழ்ப்பாணம் அறுத்து போன யாழ்த் தந்திகள் போல் இப்போது வந்து விட்டது. அங்கெல்லாம் போய் இத்தருணத்தில் நீர் என்ன செய்யப் போகிறீர்..? " . என்று ஒரு கேள்வி கேட்டார்.
"அது பழைய காலத்து மணல் தரையாகப் போய்விட்டாலும் எனக்கு அதன் மேலுள்ள மதிப்புக் குறையாது. அப்படியாய் அது வந்து விட்டாலும் முன்னைய என்நினைவோடு அங்கே போய் அந்த மண்ணின் வாசனையை என் சுவாசத்தில் இருத்தி அனுபவித்து விட்டுத்தான் நான் திரும்பி வருவேன்” - என்றான் இவன் அவருக்குச் சுடச்சுட . இவனோடு ஏன் எனக்கு அல்லலும் அலம்பலும்? '
நீ.பி.அருளானந்தச் 183
Møé?

Page 101
என்று அவன் சொன்னதோடு தான் நினைத்துக் கொண்ட அவர், வாயைப் பொத்திக் கொண்டு மெளனமாகி விட்டார்.
எதையும் நினைத்தால் உடனே செய்து முடித்துவிட வேணடுமென்ற பிடிவாதம் உண்டு அவனிடம்
அன்று அவரிடம் கதைத்து விட்டு வந்த பிறகு, ஊருக்குப் போக வேண்டுமென்ற அந்த நினைவுடன், அன்று இரவு அவன் படுத்து நித்திரை கொண்டான். காலையில் எழும்பி அவன் வீட்டாலே வெளிக்கிட்டு பஸ்தரிப்பு நிலையத்துக்குச் செல்லும் போது, அவனை 'ஓம்' - என்று யாழ்ப்பாண மொழியில் ஒதிப்போனது மெல்விளங்காற்று.
பேருந்து நிலையத்துக்கு அவன் சென்றிருந்த தருணம், அங்கே பிரயாணிகள் பஸ்சுகளில் ஏறியவர்களாகவும் இறங்குபவர்களாகவும் நெருக்குதலில் இருந்து கொண்டிருந்தார்கள்.
அவன் தான் போக வேண்டிய இடத்து பஸ் ஸைக் கண்டுபிடித்துவிட்டு அதற்குள் ஏறினான். இரண்டு பொலிஸ்காரர்கள் அவன் ஏறிய பஸ்ஸிற்குள் சிறிது நேரத்தில் ஏறி, அனைவரின் அடையாள அட்டைகளையும் வாங்கிப்பார்த்து பரிசோதித்தார்கள். இவனது அடையாள அட்டையையும் ஒரு பொலிஸ்காரர் வாங்கினார். தன்னிடமிருந்து அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பொலிஸ்காரருக்கு முன்னால் இவன் நின்றுகொண்டிருந்தான். அவர் அவனது அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு, முன்னும் பின்னும் அதைத்திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். இவன் பொலிஸ்காரரின் முகத்தையும் அவரின் கையிலுள்ள தனது அடையாள அட்டையையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். இருந்தாற் போல அந்தப் பொலிஸ்காரர் இவனை கொஞ்சம் அவன் நின்ற இடத்திலிருந்து விலகி, ஒரு பக்கம் ஒரமாக நின்று கொள்ளுங்கள் என்று சொன்னார்.
"ஏன் என்னை இவர் விலகி நிற்கச் சொல்லுகிறார்? “ என்று நினைத்துக்கொண்டு பொலிஸ்காரர் இட்ட கட்டளைக்குப் பணிந்து கொண்டு ஒதுங்கினான் அவன். என்றாலும் பஸ்ஸின் உள்ளே இருக்கைகளின் பக்கமாக அவன் தான் ஒதுங்கி நின்று கொண்ட வேளை, அவன் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு முன்னால் அவனால் பார்க்க முடிந்தது.
அந்த இடைவெளியினூடாக ஒரு நாயும், அந்த நாயுடன் கூடவாக ஒரு பொலிஸ்காரரும், அவனுக்கு எதிராக வந்து கொண்டிருப்பதை அவ்வேளையில் அவன் பார்த்தான். நாய் அதாலே வரும் போது, பஸ்ஸிற்குளிருந்த பிரயாணிகளது பைகளை மணந்து மணந்து பார்த்துக் கொண்டுவந்தது. அந்தப் பொஸிஸ்காரர் ஒவ்வொரு பைகளாக தன் கையால் அதற்கு சுட்டிக் காட்டக்காட்ட, அதுவும் மணந்து மணந்து பார்த்துவிட்டு பஸ்ஸிற்குள் முன்னேறி வந்து கொண்டிருந்தது.
ഴ്ച.dി.cിത്രസ്ത്രക്രി 184 அத்தி

அந்த நாய் முகர்ந்து பார்த்து அந்தப் பைகளுக்குள்ளே எதைக் கண்டு பிடிக்க முனைகிறது என்பது அவனுக்குத் தெரியும்!
அவனைப் போலவே அந்தப் பஸ்ஸில் பிரயாணம் பண்ணுவதற்கு ஏறி இருக்கிற பிரயாணிகள் எல்லோருக்கும், அந்த விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்கள் எல்லோரும் அந்த நாய் தங்கள் பைகளை முகர்ந்து பார்க்கும் தருணத்தில், மனத்தில் இனம் புரியாத ஏதோ ஒரு வித திகிலுடன் இருந்தார்கள். என்றாலும், அதைத் தங்கள் முகத்தில் பிரதிபலிக்காது அடக்கிக் கொண்டு, சாதாரணமாய் இருப்பது போல இருந்து கொண்டிருந்தார்கள்.
இவனருகில் வந்து விட்ட நாய் இவனது பையை மணந்து பார்த்தது. பிற்பாடு அவனையும் பார்த்தது. நாயை அவனும் பார்த்தான். அதைப் பார்க்கும் போது நீண்ட சுவாசம் அவனுக்கு உள்நுழைந்தது. நாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையில் “யார் நீ. 9 * - எனக் கேட்கும் குரைப்புக் குரல் அவனை நோக்கி தீனமாகக் கீச்சியது மாதிரி பிரமையாக அவனுக்கு இருந்தது. உடனே அவன் தன் பார்வையில் ஒளியேற்றுவதைப் போல உடலிலுள்ள காந்தசக்தி எல்லாவற்றையும் ஒன்றாய்க் குவித்தான். உடன் கை அந்த நாய், பலம் குறைந்த சன்னியாசியைப் போல் அவனைப் பார்த்து விட்டு, தலிையைக் கீழே போட்டுக் கொண்டு அவனைத் தாண்டிப் போய்விட்டது. நாய் போக விட்டு அதனுடன் திரியும் பொலிஸ்காரரும் அதைப்பின் தொடர்ந்தார். பஸ்புறப்படுவதற்கான இயந்திரம் இயங்கும் சத்தம் அவன் காதுகளில் கேட்கத் தொடங்கியது.
(2007)
தி.சி.அருளானந்தச் 185 eീക്രി

Page 102


Page 103
2 at Da
(2 AMAVladi
ତ୍ୟ୍ଯ
SPRINT 3.5
 

9ருவனந்தத்தின் 6வது படைப்பு டர்கள் கைகளில்
து.
த்துக்கள் வலையக மற்றிவீசிபிடிக்கும் யதார்த்தர்களின்
ல் வாழ்வின் பெரும்பகுதியைத் தொலைத்து வடிவதகி க்களின் மனக்குமுறல்கள் ன் வwக்களில், முருக கலம் கிழித்த கயத்தின்
இழந்துவரும் அடையாளர்களின் மீள் பதிவுகள் ஆத்தல் பின்னக்கி விட்ட ம்ெ ஸ்டுகள் க்கள் மொழிவழக்குகளை முன்னிறுத்தும் முயற்சி
புகைச்சில்கள், கேனல் ைெனகள் கள், யுத்தத்தல் சரிந்து செல்லும் சமநில்ை கலந்து
நக்கி அலசல்கள் ல் கிடைத்த கித்தி மண்டல் Uன் இவரின் தக் கிடைத்த ஓர் அகீகமே. தைகளில் அல்சரும் வியர்கள் இன்றுள்ளவர்களில் முடியது கேலம், ஆனால் திெகலம் இதனை கும் என்பதில் ஐயமில்ல்ை
ஏ.எலிசற்குணராஜ SLEAs
978-955-1055-03-5