கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மாவுக்குத் தாலி

Page 1

ప్తి ప్తి ప్తి
జ్ఞప్తి
அருளானந்தம்
19. 5fiday, FğifEDörtifli ரசுரிக்கப்பட்ட சிறுகதைகள்

Page 2

O O மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண்: 1447 7, (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. GgrapotoGuaf : 2434.2926,2434GO82 uólsár elsesc : manimekalai1Cdataone.in SSGroesooru g5smrb: www.tamilvanan.com

Page 3
II
CR
நூல் தலைப்பு ஆசிரியர் மொழி
பதிப்பு ஆண்டு பதிப்பு விவரம்
D-flsmin
தாளின் தன்மை
நூலின் அளவு அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
நூல் வீவறக்
அம்மாவுக்குத் தாலி
தி)
நீ.பி.அருளானந்தம்
தமிழ்
: 2OOB
முதற்பதிப்பு
ஆசிரியருக்கு
11.6 A.f.
கிரெளன் சைஸ் (12%x18% செ.மீ)
10 புள்ளி
: 10 + 230 = 240
நூலின் விலை
இலங்கை விலை
খচ.400
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம் வெளியிட்டோர்
CD3
ஓவியர் மகேஷ்
பான்ராஜா ஜிராவிக்ண்
all first) (T-24 Ph: 99627 82.62
ஸ்கிரிப்ட் பிரிண்டர்ஸ்
சென்னை.
தையல்
மணிமேகலைப் பிரசுரம்
(FGTO)6OT-600 017.
S.)

e. FO(7ZVOLVØØØVO V v -

Page 4
LESSI.
ക്രിസ്ത്ര്ജ്ര ജ്ഞി ஆமைக் குணம்
ക്രിസ്ത്രയെഴ്സ
பருவக் கற்று சங்கரம் சுழுலும் கண்ணுக்குள் நூறு விதம் ୩୪୩g&&
evócora?¿Y cerásó இருணே நீ இனிமேன் விகைாயோ ஆற்பித்தன்
ஒரு கானை நேரச் சம்பவம்
தேடல்
സ്ത്രീ உணவின் முதன் எதிரி
35
65
77
9W
I/7
135
W72
1962
2/6
 
 
 
 
 

என்னுரை
இலக்கிய ஞானி வல்லிக்கண்ணன் ஐயா அவர்களே இன்று நான் ஒரு சிறுகதை நாவல் எழுத்தாளனாக வளருகிற அளவுக்கு ஊக்கம் அளித்தவர். அவர்தான் என் முதல் சிறுகதைத் தொகுதியான ‘மாற்றங்கள் மறுப்பதற்கில்லை’ என்ற நூலைப் படித்துவிட்டு “உங்களுக்கு கதை சொல்வதில் திறமையும் எழுத்தாற்றலும் றிறையவே இருக்கிறது. தொடர்ந்து எழுதி வாருங்கள்' - என்று கூறினார்.
“உங்களிடம் இருக்கிற வாழ்க்கை அனுபவங்களினால் நாவல் எழுதுவதற்குரிய தெறிப்பும் காணப்படுகிறது, அதையும் எழுதினால் இன்னும் எழுத்தில் நீங்கள் வளர்வீர்கள்' - என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார்.
அவர் சொல்லிய அறிவுரைகள் அனைத்தையும் என் மனதிலே பதிய வைத்திருந்தவாறு, பிறகு நானும் எழுதி வந்தேன். அந்த ஞானி சொல்லியவையாவும் நான் எழுதி வருகின்ற காலத்திலே ஒன்றுமே வீண் போகவில்லை, இன்று இலங்கையில் வெளிவந்து கொண்டிருக்கும் அனேகமான இலக்கிய சஞ்சிகைகளிலும், வெகுஜனப் பத்திரிகைகளிலும் நான் தொடர்ந்து எழுதக் கூடிய சூழ்நிலை எனக்கு வாய்த்திருக்கிறது. இவற்றைவிட கணையாழி, தாமரை போன்ற தமிழ்நாட்டு இலக்கிய சஞ்சிகைகளிலும் என் சிறுகதைகள் பல அவற்றில் வெளிவந்திருக்கின்றன. இதன் பொருட்டு ஒருவித மன நிறைவு இன்று எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

Page 5
Vi
C
எனினும் இந்த மன நிறைவானது பூரணமான தொன்றில்லை என்ற ஒரு குறைபாடும் என் மனதில் தோன்றுகிறது. '
காரணம், ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் கைகளுக்கு சென்றடைவதில்லை, வியாபார ரீதியில் உலகம் முழுவதுக்குமான அதற்குரிய ஒழுங்கான வலைப் பின்னல் இன்னமும் இவ்விடத்திலே ஏற்படவில்லை. இதைவிட இங்குள்ள போர்க்கால சூழலும் உள்நாட்டிலே உள்ள விற்பனை நிலையத்தை கெடுத்து விரட்டியிருக் கிறது.
இந்த இக்கட்டான ஒரு சூழலில் இருந்து இலங்கை எழுத்தாளர்களுக்கு கை கொடுத்து உதவி அவர்களின் ஆக்கங்களை நூலுருவாக்கும் அளப்பரிய பணியை செய்து வருகிறவர் திரு. ரவி தமிழ்வாணன் என்பது சகலரும் அறிந்ததொன்றுதான்.
இவ்விதத்தில் தாமரை, கணையாழி சஞ்சிகைகளில் நான் எழுதிய சிறுகதைகளை ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலாக மணிமேகலைப் பிரசுரம் மூலமாக அவர் வெளியிட விரும்புவது எனக்கும் மன மகிழ்ச்சியைத் தருகிறது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சங்க காலத்தில் உயர்ந்த மனித நேயத்தை பிரேரித்தான் தமிழன் தமிழ் இனத்துக்கென்றே தனித்துவமான பெருமையுள்ளி ஒரு தொழில் அவனுக்கிருந்தது. அது தான் வணிகத் தொழில். ‘பணி’, ‘பணியர், “வணிகர்’ என்ற அந்தச் சொற்களின் மூலமாக அவன் செய்த தொழில் காரணமாய் அறியப் பட்டவன் தமிழன்,

vli
O பழம்பெரும் தமிழ் இலக்கியமான தொல்காப்பியம் எனும்
ག
7
நூலும் அவன் செய்தொழிலான வணிகத்தை தகுதிகாண எடுத்தியம்புகிறது.
பழம் காலமிருந்து இவ்வாறு பெருந்திறன் பெற்றிருந்த தமிழன் இன்று பல நாடுகளிலும் பரந்த அளவில் அங்கு வாழ்கிறான். தன் இனத்தின் கலை, கலாசாரத்தையும் பேணி வளர்த்து அவ்விடங்களிலே சிறப்பாகவும் வாழ்ந்து வருகிறான். அவனுக்கும் இலக்கியப்பசிஇருக்கிறது.தமிழ் நூல்களை வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்க்கெல்லாம் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களையும் தன் தோள் மேல் சுமையாக அவைகளை தூக்கிச் செல்வதுபோல் சென்று ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு வழங்குகிறார். அந்த அவரது சேவை மனப்பான்மையில் கணையாழி, தாமரையில் வெளியாகிய என் சிறுகதைகளையும் ஒரு தொகுப்பு நூலாக வெளி யிடுகிறார். அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இன்னும் இக்கதைகளுக்கு சிறந்த அணிந்துரை எழுதித்தந்த கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களுக்கும் இச் சிறுகதை களைபிரசுரித்து உதவிய 'கணையாழி தாமறை சஞ்சிகை யின் ஆசிரியர்குழுவிற்கும் என் இதயம் கனிந்த நன்றி.
இல7, லில்லியன் சாலை, கல்கிசைழரீலங்கா தொபே,4967027/கைபேசி0722784954
அன்புடன், நீபி. அருளானந்தம்

Page 6
vll!
அணிந்துரை
நடப்பியல் நிலவரங்களைப் புனைதல் முடிவுக்கு வந்துவிட்டது என்ற ஒரு பக்க முனைவுப்பாடும் மறுபுறம் நடப்பியல் எழுச்சி முனைவுப்பாடும் மீள் விசைகளைப் பெற்றுவருகின்றன. நேர்விசையும் எதிர் வினையும் புனைகதையாக்கத்தின் எழுவிசையாக நிற்கும் கருத்தியலுடன் தொடர்பு கொண்டுள்ளன. சமூகத்தை விளங்கிக் கொள்ளும் அழகியல் வழி எழும் தருக்கமாக அமையும் புனைகதைகள் தமக்குரிய வளர்ச்சி நிலையின் கூர்ப்பினை நோக்கிப் பெயர்ச்சி கொள்ளத் தொடங்கியுள்ளன. பண்டங்களின் நுகர்ச்சியை நோக்கி நகரவைக்கும் உலகு சூழ்ந்த பெரும் பொருண்மிய விசைகள் கலையாக்கங்களையும் நுகர்ச்சிப் பண்டங்கள் என்ற நெடுந்தொடருக்குள் கொண்டுவரும் நிலையில் புனைகதைகள் நுகர்ச்சிப் படிமங்களின்
மேடையாகி வருகின்றன.
உலக அறிவுப் பரப்பின் மீப்பெருக்கமும் அதன் வழி எழுகின்ற புனைகதை சாரா எழுத்தாக்கங்களும் அவற்றின் தரமேம்பாட்டையும் பண்புநிலையான உயர்ச்சியையும் முன்நோக்கிப் பெயர்ச்சி கொள்ளச் செய்து வருகின்றன. தரத்தை எட்டாதவை இயல்பாகவே வெளி வீசப்படும் அறிகை எழுவிசை (Congnitive force) (SLD606) BirGa56f(a) Gigiriuli தொடங்கி விட்டது. அந்த எழுவிசை எமது கலைச் சூழலுக்கு வருவதற்கு நெடுங்காலம் செல்லமாட்டாது.
 

புனைகதைகளை வாசிப்பவர்கள் தமது மனத்திரையில் உருவாக்கும் படிமங்களை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் நிலையையும், கட்டுமானக் குலைப்பைச் செய்யும் நிலையையும் நவீன அறிகை வளர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. இங்கே சுட்டிக் கூறப்படும் கட்டுமானக் குலைப்பு என்ற எண்ணக்கரு பின்னவீனைத்துவவாதிகள் குறிப்பிடும் தகர்ப்பிலும் (Deconstruction) வேறுபட்ட ஓர் எண்ணக் கருவாகும். சமூக நடப்பியலின் இயல்பையும் புனைகதைகள் வழியாக அது அழகியல் நிலை மாற்றம் செய்யப்படும் தொழில் நுட்பத்தையும் மதிப்பீடு செய்யக் கூடிய அளவுக்கு வாசகரின் அறிகைத் தளத்தை நவீன கல்விச் செயற்பாடுகள் உயர்த்தி வருகின்றன. அதாவது, வாசகரின் செயலூக்கம் குன்றிய (Passive) கலை நுகர்ச்சியை நவீன கல்விச் செயற்பாடுகள் சிதறலுக்கு உள்ளாக்கி வருகின்றன என்ற புலக்காட்சியைத் தெளிவுபடுத்திப் புனைகதையாக்கங் களை மேற்கொள்ளும் எழுத்தாளர் வரிசையில் திருநீபி. அருளானந்தம் அவர்களுக்குத் தனித்துவமான இடமுண்டு.
*தாமரை', 'கணையாழி’ முதலாம் சஞ்சிகைகளில் வெளிவந்த இவரது கதைகள் சமூக அதிர்வுகளுக்கும் அழகியல் வினைப்பாடுகளுக்குமிடையேயுள்ள இடைவெளிகளைச் சுருக்கிவிடுகின்றன. சமூகம் தொடர்பான அகக்காட்சிகளை ஏற்படுத்தும் கலப்புச் செழுமையை (Blend) ஏற்படுத்துகின்றன. சமூகத்தை

Page 7
மீளக் கொலிப்பிக்கும் பொழுது தமக்குரிய விரிந்த ஆக்க மலர்ச்சியைக் கட்டவிழ்த்து விடுகின்றார்.
மத்தியதர வகுப்பினரின் “இருமை இயல்புகள்’’ இவரது சிறுகதைகளிலே, ஆங்காங்கு துளாவல் கொள்கின்றன. அந்தத் துளாவலுக்குரிய மொழித் தளத்தில் உராய்வின்றிநடந்துநூலாசிரியர் வருகின்றார்.
இவரது கதையாக்கங்களின் பிறிதொரு பரிமாணம் சமகாலத்தைய வாழ்வை கதை எண்ணக்கருவுக்குள் கொண்டு வருகையில் எதிர்கொள்ளும் “மீண்டும் நடப்பியலுக்குத் திரும்பும்’ நேர்விசைகளையும் எதிர்விசைகளையும் சந்தித்தலாகும். இவ்வாறான விசை மோதல்களின் இருப்பில் மானிட நேயத்தை மீள் வலுவூட்டும் செயற்பாடுகளை இவர் முன்னெடுத் துள்ளார்.
ஒரு நீண்ட கலையாத்திரையை மேற்கொள்ளும் இந்நூலாசிரியர் தமது அனுபவங்களைச் செப்பனிட்டு வெளிப்படுத்தும் முயற்சியில் மானிட நேயத்தின் பதிவுகளே மேலோங்கியுள்ளன.
பேராசிரியர் சபா.ஜெயராசா
கொழும்புத்தமிழ்ச்சங்கம் 04-03-2008

அழகான சிறிய பெட்டிக்குள் ஒரு தாலிக்கொடி அதை வெளியில் எடுத்து கையில் பிடித்தபடி “என்ரை பிள்ளை எனக்கெண்டு அனுப்பியிருக்கு’ என்று சொல்லியவாறு மகிழ்ச்சியில் பூரித்துவிட்டாள் மனைவி.

Page 8
2 அம்மாவுக்குத் தாலி
அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் கூடத்தான் பூரிப்பு.
“நல்ல தங்கப் பவுணப்பா என்ன மாதிரி இது மினுங்குதென்று பாருங்கோ’ தாலிக்கொடி என் கைக்கு மாறியது. “22 காரட்’ என்று சொன்னதோடு எனது வியாபார தொழில் புத்தி உடனே தலைதூக்கவே அதை கையில் தூக்கிப்பிடித்தபடி கொடியின் நீளம் பார்த்தேன். அடுத்து அப்படியே அந்த மின்னல் கொடியைக் கைக்குள் அடக்க அது சுருண்டுவிட்டது. இரண்டு மூன்று முறை கொஞ்சம் உயரத் தூக்கிப் போட்டுப் பார்த்து எடையும் பார்த்தேன்.
“எட்டு ஒன்பது பவுண் நிறையிருக்கும் போல’ என்றேன்.
, “இல்லை, கூட ஒன்பதரைப் பவுண் என்றுதான் கொண்டந்த தம்பி சொன்னவன்’ மனைவி கூறினாள்.
பின்பு நகையை நான் அவளிடம் கொடுக்க அதை "டிரெசிங் டேபிள்' லாச்சியில் வைத்து பூட்டினாள். பிற்பாடு இருவரும் முன் அறைக்குப் போய் இருந்து கொண்டோம். அங்கே எங்கள் மகனின் நோர்வே நிலவரம் குறித்துக் கதைக்க ஆரம்பித்தோம்.
நோர்வேயில், எனது மகனுடன் ஒரே அறையில் குடியிருக்கும் அந்த இளைஞன் இங்கே எனது வீட்டிற்கு வந்திருந்தபோது நான் ஒரு அலுவலாக வெளியே போயிருந்தேன். மனைவியுடன் கதைத்த பின் நகைப் பெட்டியைக் கொத்துவிட்டு அவன் போய்விட்டானாம்.
மகன் என்ன மாதிரி இருக்கிறான் என்று அறிய எனக்கு ஆவல் மேலிட்டது. “தங்கம்’ என்று மனைவியைப் பெயர் சொல்லி அழைத்தவாறே “என்ன மாதிரி இருக்கிறானாம் ஜெகன்?’ என்று மகனுடைய நிலைவரத்தைக் கேட்டேன்.

நீ.பி.அருளானந்தம் 3
மகனுடைய பேச்சை ஆரம்பித்ததும் தாயினுடைய தவிப்போடு அவளும் சொன்னாள்.
“எல்லாருக்கும் அங்க ஒரு மாதிரித்தானாம் சீவியம். இயந்திரம் போலத்தானாம் வாழ்க்கை, எங்கள் மகன் நோர் வேக்குப் போய், கொஞ்சக் காலம்தான் என்றபடியால் "சீசன்’ மாறேக்க உடம்புக்குத் தாக்குப்பிடிக்க ஏலாம வருத்தம் வந்து கஷ்டப்பட்டவனாம். இப்ப சுகமாய் இருக்கிறானாம்.”
இதைச் சொல்லும்போது நன்றாக கண்கலங்கி விட்டது தங்கத்துக்கு குரல் தழுதழுக்க மேலும் அவள் சொன்னாள்.
“என்னுடைய செல்வத்துக்கு சுகமில்லாம வந்திட்டுதாம். இங்க எங்களோட பிள்ளை இருந்திருந்தா இப்படியெல்லாம் வந்திருக்குமா?. நான் பெத்த ஒரே பிள்ளை கூட என்ரை பக்கத்தில் இல்லையே சன்னிதி முருகா என்ரை பிள்ளை சுகமாயிருக்க வேணும்.”
எனக்கும் கண்களில் கண்ணிர் முட்டிவிட்டது. எங்களுக்கு ஒரே ஒரு பிள்ளை ஜெகன். வருத்தம் என்று கடிதம் போட்டால் நாங்கள் இருவரும் பதறித் துடித்துப் போய்விடுவோமென்றுதான் அதுபற்றி அவன் எங்களுக்கு அறிவிக்கவில்லை. இப்படித்தான் எனக்கு விளங்கியது.
அவனைப் படிப்பித்து ஆளாக்கி நல்லதொரு உத்தியோகத்தில் இருத்திவிட வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் நடந்தது வேறொன்றாகி விட்டது. குடும்பமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்த பிறகு எல்லாக் குடும்பங்களிலும் அநேகமாக நடப்பதுபோல பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவே நானும் முயன்றேன்.

Page 9
4 அம்மாவுக்குத் தாலி
யாழ்ப்பாணத்தில் நான் செய்த தொழில் பலசரக்கு கடை வியாபாரம். ஏதோ சூழ்நிலைக்கேற்ப வியாபாரம் பண்ணிக் கொண்டு பணம் முழுவதையும் வியாபாரத்தில் முடக்கி விடாது கைகளிலும் கவனமாக கொஞ்சம் வைத்திருந்ததால் கொழும்புக்கு வந்ததும் மனைவியின் நகைகளையும் விற்று ஜெகனையும் வெளிநாட்டுக்கு அனுப்பினேன். என்றாலும் எங்களுக்கு சொந்த இடத்தில் இருந்தது போல் வாழ்க்கை இப்போ சீராக இல்லை. பிள்ளை எங்களோடு இல்லாத ஏக்கத்தோடு வருமானமும் இல்லாததால் சீவியம் கஷ்டமாகவே இருக்கிறது.
சிந்தனை இப்படி எங்கெல்லாமோ அலைந்து போய் திரும்பவும் உணர்வு வந்ததுமே மேலும் மனைவியிடம் தொடர்ந்து விளக்கம் கேட்டேன்.
“இப்போ மகனுடைய நிலைவரம் எப்படியாம்? எங்கா வது நல்ல வேலையில் சேர்ந்திட்டானா?’ எல்லாத் தகப்பன்மாரும் கேட்கிற கேள்வியை ஆர்வத்தோடு நானும் கேட்டேன்.
“இப்போதைக்கு அவ்வளவு பெரிய வேலையாக ஜெகனுக்குக் கிடைக்கவில்லையாம். நோர்வே பாஷையை ஒரு வருஷம் மட்டும்தானாம் படிச்சவன். அதனால சரள மாகக் கதைக்கிறதுக்கு இன்னமும் இரண்டு வருடங்களாவது போகுமாம். தாங்கள் போன புதிதில் கண்ட வேலையும் செய்துதான் கஷ்டப்பட்டனாங்கள் என்று அந்தத் தம்பியும் சொன்னான்’ இவ்வாறு வாடிய முகத்துடன் தங்கம் சொன்னாள்.
எனக்கு மனதுக்குள் வலித்தது. தாயினுடைய காலைச் சுற்றியபடி திரிந்த பிள்ளை துன்பங்களை அனுபவிக்கிறான் என்று கேள்விப்பட உள்ளமும் உடலும் எனக்கு

நீ.பி.அருளானந்தம் 5
சோர்ந்துவிட்டது. தளர்ந்து போய் அப்படியே காலை நீட்டி சாய்ந்த என்னை மனைவி மேற்கொண்டு சொன்ன சொற்கள் மீண்டும் நிமிர்ந்து இருக்குமாறு செய்தது.
"அம்மாவை வெறுங்கழுத்தோடு திரிய வேண்டாம். நாலு இடம் போய் வரேக்க இதையும் மறக்காமல் போட்டுக் கொண்டு போகச் சொல்லு என்று வந்த தம்பியிட்ட தாலிக்கொடியையும் கொடுத்துச் சொல்லி அனுப்பியிருக் கிறான் மகன்’ என்றும் உற்சாகமாகக் கூறினாள் தங்கம்.
எனக்கு அது மகிழ்ச்சிதான். சபை சந்திக்குப்போய் வருகிறபோது கல்யாணமான பெண்கள் தாலிக்கொடி போட்டிருக்க வேண்டும் என்ற சாஸ்திரத்தைக் கடைப் பிடித்து நடப்பவர்கள் நாங்கள். அந்த இடங்களில் இருக்கும்போது தாலிக்கொடி கழுத்தில் இல்லையானால் அது பெண்களுக்கு பெரிய குறை மாதிரித்தான்.
என்ன செய்யிறது? கொஞ்சக்காலம் அது எனக்கும் பெரிய குறைபோலத்தான் இருந்தது. ஆனால் இனி நான் நாலு பேருக்கு முன் தலை நிமிர்ந்து இருக்கலாம். அந்த நிம் மதியும் ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் விட மகனுக்குப் பொறுப்பு வந்துவிட்டது அவன் இனி சிறு பிள்ளையல்ல என்ற எண்ணமும் மனதுக்கு சுகம் கொடுத்தது. ஆனால் இப்போதைக்கு மனைவி தாலிக்கொடியோடு எங்காவது போய்வருவது நடக்காது என்று என் மனதுக்குப்பட்டது. ஜெகனை வெளியில் அனுப்புவதற்கு கொழும்பில் என்னு டைய நெருங்கிய உறவினர்களிடம் இரண்டு லட்சம் ரூபா பணம் வட்டிக்கு வாங்கியிருந்தேன். மாதா மாதம் வட்டிப் பணத்தைக் கூட காலம் தாழ்த்திக் கொடுத்துவரும் நிலை.
வெறும் கழுத்துடன் திரிந்த மனைவி தங்கப்பவுண் தாலிக்கொடியுடன் திடீரென தோன்றினால் கடன் தந்தவ ரெல்லாம் அதையிட்டு முணுமுணுக்கவே செய்வார்கள்.

Page 10
6 அம்மாவுக்குத் தாலி
“தங்கம், ஒன்று சொல்ல வேணும். உமக்கு மகன் கொடி வாங்கித் தந்தது எனக்கும் பெரிய குறை தீர்ந்தது போலத்தான் இருக்கு. ஆனால் இப்போதைக்கு நீர் அந்த தாலிக்கொடியை கழுத்தில போட வேணாம்’ என்றேன்.
“முதல் முதல் உழைச்சுப் பிள்ளை வாங்கி அனுப்பியதை போட வேண்டாம் என்ணுறியள். கட்டிய தாலியைக் கொடியோடு சேர்த்து வித்தியள். வெறும் கழுத்தோடு இருக்கிறன் என்று பிள்ளை கஷ்டப்பட்டு செய்து அனுப்பிய தாலியைப் போட வேண்டாமென்று தடுக்கிறியளே’ என்று இரைந்து கத்தினாள் தங்கம்.
“கொஞ்சம் ஆறும், தங்கம்! நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளும். இங்கே எனக்கிருக்கிற பிரச்சினை உமக்குத் தெரியேல்ல. அதை உமக்கு நான் ஒன்றும் இத்தனை காலமும் சொல்லேல்லை. எனக்கு கொஞ்சம் கடன் இருக்குதப்பா” என்றேன்.
நான் சொன்னதும் தங்கத்துக்கு இப்போ கலக்கமூட் டியது. இத்தனை காலமும் இதை அவளிடம் கூறவில்லை.
“என்ன கடன் இருக்கோ? எவ்வளவப்பா கடன் பட்டனிங்கள்?’’
இரண்டு லட்சம் ரூபா கடன் பட்டிருக்கும் விடயத்தைக் கூறினேன்.
“செலவுக்கு அனுப்பிற காசில கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடிச்சு வட்டிப்பணம் ஓரளவு கொடுத்திருக்கிறன். ஆனால் முதலோடு மொத்தமாக வட்டியையும் சேர்த்து தாறதாகத்தான் பணத்தை வாங்கேக்க சொல்லியிருக்கிறன். ஜெகனுக்கு இப்ப இருக்கிற சூழ்நிலையில இதைச் சொல்ல விருப்பமில்ல. சொன்னாலும் மனவருத்தப்படுவான்

நீ.பி.அருளானந்தம் 7
என்றதால்தான் நல்ல வேலை கிடைச்சபிறகு சொல்லலா மென்று இருக்கிறன்.”
தங்கத்துக்கு இதைக் கேட்க தலை சுற்றியது. இரண்டு லட்சம் கடன் இருப்பதைக் கேள்விப்பட்டதுமே அவளுக்கு மூச்சு முட்டியது.
“இதை ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் எனக்கு சொல்லேல்ல? கடன் வட்டியோட கூடிப்போனா குடி முழுகிப்போகுமே. தாலிக்கொடி இப்ப எனக்கு வேணாம். அதை விற்று வட்டியையாவது கட்டிவிடுங்கோ’
முகமெல்லாம் வியர்த்துப்போக பயத்தோடு சொன்னாள் தங்கம்
“வேண்டாமப்பா. தாலிக்கொடியை விற்க வேண்டாம். அது பிள்ளை உனக்குச் செய்து தந்தது. மகனின் உழைப்பு. அதை வைத்துக்கொள். நாங்கள் இப்போ எங்களுடைய யாழ்ப்பாண்த்துக் காணியை விற்று கடன் முழுவதையும் அடைப்போம். ஆனால் ஒன்று கடனைக் கொடுக்குமட்டும் நீர் அந்த தாலியைக் கழுத்தில போட வேண்டாம். கடனைக் கொடுத்ததும் பிறகு போட்டுக் கொள்ளும்’
இதைச் சொல்ல எனக்கு வேதனையாக இருந்தது. கேட்க அவளுக்கும் துன்பமாக இருந்திருக்கும்.
நான் கட்டின தாலியை அன்றைக்கு வாங்கி விற்று விட்டேன். அந்த உரிமை எனக்கு இருந்தபடியால். ஆனால் வெறும் கழுத்துடன் தாய் இருக்கக்கூட்ாது என்று மகன் வாங்கி அனுப்பியிருக்கிறான் ஒரு புதுத் தாலியை. அதை விற்கிற உரிமை எனக்கில்லை.
-தாமரை (ger 20O8)

Page 11
இந்த இரவு, எரித்துக் கொண்டிருக்கும் பால் நிலவு, எல்லாமே எனக்காகத்தான் என்ற கற்பனையில் திளைத்தபடி மாதங்கியின் வரவுக்காக அந்த அறையில் காத்துக் கிடந்தான் ரமணன்.
அதிகப்படியாக தமிழ்ச் சினிமாக்களைப் பார்த்து அதிலேயே தன் சிந்தையைச் செலுத்தி மயங்கிக் கிடந்தவன் ரமணன். அந்தப் புளுகுக்கதைகளில் வருகிற சம்பவங்கள் யதார்த்தத்தில் தன் வாழ்விலும் நடக்கும் என்பதை நம்பி
 

நீ.பி.அருளானந்தம் 9
அவன் அநேககாலமாக கற்பனைத் தேர் ஒட்டிக் கொண்டிருந்தான். அதைக் கொண்டு கல்யாணமாகிய இன்றைய தன் முதல் இரவில் கணவன் மனைவி உறவெல்லாம் சினிமா போல் இருக்க வேண்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பு.
இங்கே உள்ள தமிழர்களின் பழக்கவழக்கத்தில் இந்திய தேசத்து தமிழர்களின் பழக்க வழக்கங்கள் அநேகம் பின்பற்றப்படுவதில்லை என்பது ரமணன் அறிந்து கொண்ட விஷயம்.
A பள்ளியறையை அலங்கரிக்கும் பூச்சரங்களும் பூ உதிர்த்துப் போட்டு வைத்திருக்கும் மெத்தையும், பாலும் பழமும், மணப்பெண் கணவன் காலடியில் வீழ்ந்து வணங்குவதும் இங்கே ஒன்றும் முதலிரவில் நடப்பதில்லை, அந்த ஆயத்தங்களும் செய்கைகளும் இங்கில்லையென்பது ஒரு பெருங்குறையாக அவன் மனதை சஞ்சலப்படுத்தி னாலும் மிகுதியெல்லாமே சினிமா போல் இன்று தனக்கு இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவன் அவைகளுக் காகத் தன்னை தயார்படுத்தினான்.
இரவில் அவன் எப்போதும் பல்துலக்கிவிட்டுப் படுக்கும் வழக்கம் இல்லை. இன்றென்று பத்து நிமிடம் வரையிலாய் அவன் பல் துலக்கிக் கொண்டுவிட்டு வாய் கொப்புளித்தான். அன்றிரவு அறையை விட்டு வெளியில் போய் யாருக்குமே முகத்தைக் காட்டக் கூடாது என்ற சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் நிறைவேற்றி விட்டு உடலெங்கும் நறுமணவாசனையிட்டுக் கொண்டு அந்த அறைக்குள்ளாக அவன் இருந்தான்.
கல்யாண வீட்டுப்பந்தலடியில் இன்னும் இளைஞர்களது கொட்டம் அடங்கிப்போனதாக இல்லை. ரமணனின்

Page 12
10 அம்மாவுக்குத் தாலி நெருங்கிய நண்பர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்தும் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
"நாங்கள் கப்பல்காரர். இந்த உலகத்தில் எங்கட காலடி படாத இடமேயில்ல’’ என்று தமிழில் தங்கள் பேச்சை தொடங்கி கொச்சையாக ஆங்கிலத்தில் அவர்களில் ஒரிரு பேர் அந்த ஊர்க்காரரில் சிலரை அதிலே இருத்திவைத்துக் கொண்டு அலட்டிக் கொண்டிருந்தனர்.
“நாங்கள் கனடா சிற்றிசன்.” என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்குப் போட்டியாக நளினமாக ஆங்கிலம் பேசிக்கொண்டிருந்த மற்றைய இரண்டு இளைஞர்கள் கதையை இடை நடுவில் நிறுத்திக்கொண்டு "எங்கட அந்த குறைப்போத்தல் விஸ்கியை எங்ககாணேல்ல’’ என்று அவ்விடமெங்கும் தேடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்துக்குள் அங்கிருந்த ஒருவன் சினிமாப்பாட லொன்றை பாட ஆரம்பித்தான். பக்கவாத்தியமில்லாததால் அவன் பாடிய அந்தப் புதிய பாடல் சுரம் கெட்டு சோடைகண்டது.
நல்ல கனத்த வெறியில் இருந்தவன் “உது வேண்டாம் செளந்தர ராஜன் பாடின பழைய பாட்டொண்டைப் படியும் கேப்பம்’ என்று அவனிடம் நேயர்விருப்பம் கேட்டான்.
வெளி விறாந்தையில் பனையோலைப் பாய்களை விரித்து இரண்டு கிழவர்கள் படுத்துக் கிடந்தார்கள். ஒருவர் பாயில் கிடந்தவாறே அந்த இளைஞர்கள் செய்கிற அடடகாசத்தை யெல்லாம் பார்த்துவிட்டு “இவங்கள் எங்களையும் ஒருகண் நித்திரைகொள்ள விடாம தாங்களும் நித்திரை கொள்ளாம ராவுமுழுக்க உதில இருந்து கொண்டு கூத்தடிப்பாங்க போலக் கிடக்கு' என்று தனக்குப் பக்கத்தில் பாயில்

நீ.பி.அருளானந்தம் 11 படுத்துக்கிடந்தவரைப் பார்த்து அரற்றினார். அவருக்கு அந்த இளைஞர்கள் போட்ட கும்மாளத்தில் நித்திரை குழம்பி விட்டது. எழுந்து பாயில் இருந்து கொண்டு கல்யாணவீட்டில் தான் ஏற்கனவே எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த சிகரெட்டில் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகைவிட்டுக் கொண்டார்.
வயது போன அம்மாமாரும் கொஞ்சம்பேர் சேர்ந்து அடுத்த அறையில் இருந்து அரட்டையடித்தனர். தங்கள் வீட்டு வரவு செலவு பற்றியெல்லாம் அவர்களது கதை நீண்டது. இந்தக்காலத்துப் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் அம்மாமாரின் கைக்குத்தான் பிள்ளைகளிடமிருந்து பணம் வந்து சேரும். அவர்கள் கைகளிலிருந்துதான் அளவு கணக்குப்போட்டு அப்பாமார்களுக்கு பின்பு பணம் பட்டுவாடாவாகும். எனவே அதற்குள்ளும் இன்னும் புதிய திட்டங்களைத் தீட்டி அவர்களின் கொடுப்பனவுகளை மேலும் குறைக்கின்ற திட்டத்தில் அவர்களெல்லாம் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்கள்.
இளம்பெண்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குள்ளே இருந்து அவர்கள் பலகதைகளையும் கதைத்தனர். வெளிநாட்டு இளைஞர்களை விசாரிக்க விருப்பமுள்ளவர்களாகவே அவர்களது கதைப்போக்கு இருந்தது. ஒரு சிலருக்கு அந்த வாலிபர்களது விவரங்கள் தெரியும். அப்படித் தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் தெரியாதவர்களுக்கு அவர்கள் பிட்டு வைத்துக் கொண் டிருந்தனர்.
இந்தக் கதையெல்லாம் ஒழிந்ததும் சினிமாவில் தொடங்கி உடுத்து அழகு பார்ப்பது வரை வாயுளையாமல் கதைத்தனர்.

Page 13
12 அம்மாவுக்குத் தாலி
அடுத்து அன்றைய திருமணத்தில் மாப்பிளை பெண்பிள்ளை பொருத்தம் பற்றியும் அவர்களுக்குள்ளே தர்க்கம் எழுந்தது. நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவராக தங்கள் கல்யாணக் கனவுகளிலே சஞ்சரித்துக் கொண்டு அவர்கள் நித்திரை யாகினர்.
கடிகாரத்தில் எழுந்த மணியோசை நேரம் பத்தரை என்பதாக சுட்டுகிறது. அப்போதுதான் மாதங்கி பள்ளியறைக்குள் ஒரு புள்ளி மானைப்போல் நுழைந்தாள். கதவை சத்தமின்றி தாழ்ப்பாளிட்டுவிட்டு.
“ஏன் இவ்வளவு நேரம்?” என்று ரமணன் மாதங்கியிடம் வினவ,
“ம்.’’ என்ற ஸ்தம்பித்தலோடு கடைக்கண்களால் அவனைப் பார்த்துக்கொண்டு அவள் சிரித்தாள்.
“ஃபிளாஸ்க்கில் என்ன இருக்கு?”
“இது ரீ. நீங்க அடிக்கடி ரீ குடிக்கிறனிங்களாம்.”
"அப்பிடியெல்லாம் இரவில ஒண்டும் பழக்கமில்ல பகலிலதான் வேணும்.”
“af”
*orair607 gFrfi?''
“குடிக்காட்டி இருக்கட்டும்!”
“இல்லையில்லை குடிப்பன்! நீர் கொண்டந்ததால இண்டைக்கு இதையெல்லாம் நான் குடிப்பன். நீர் உம்மட கையால ஊத்தித்தர அதை நான் குடிக்கவெண்டு எனக்குக் கொள்ளை ஆசையாயிருக்கு”
“GourTu””

நீ.பி.அருளானந்தம் 13
“இல்லை இது நிசம் எதுக்கு நான் உம்மட்ட பொய் சொல்ல வேணும்? இது மட்டுமல்ல, வாழ்க்கையில எனக்கு முன்னம் நடந்ததுநிஎதையும் நான் உம்மட்ட மறைக்கமாட்டன் என்னட்டையுள்ள எல்லா விஷயத்தையும் உமக்கு நான் சொல்லுவன் நீர் என்ரை மனுஷியெல்லே’
அதைக்கேட்டு அவள் சிரிக்கிறாள். தனது இன்ப உணர்ச்சிகளையும் மன மகிழ்ச்சியையும் சிரிப்பாலே கணவனுக்குப் புரியவைக்கும் ஒரு பெண்ணாக மாதங்கி அங்கே தன்னை வெளிக்காட்டுகிறாள்.
"ஏன் சிரிக்கிறீர்?"
அவனுக்கு அவள் வாயாலே சொல்ல, எதையும் கேட்க வேண்டுமென்கிற ஆசை
“இல்லை அப்பிடி என்னதான் நீங்க சொல்லப்போறியள் எண்டு நினைச்சன்?"
“இருக்கு கணக்க விஷயங்கள் இருக்கு எனக்கும் உமக்கும் இது பேசிச் செய்த கலியாணமெண்ட்தால இப்பதானே அதெல்லாத்தையும் ஒழுங்காய் உம்மோட கதைக்க ஏலுமாய்க் கிடக்கு. இப்பிடியிருமன்’
அவளது கையை அவன் பற்றினான். அவனது ஸ்பரிசம் அறிந்ததும் அவளுக்கு உடலெல்லாம் மதாளித்து ஸ்தனங்கள் இறுகுவதுபோல் இருந்தது. தனக்குப் பக்கத்தில் ஒட்டினாற்போல் அவளை அமரச் செய்தான் அவன். உடனே அந்த உணர்ச்சியில் ஆலிலைபோலிருந்த அவளது வயிற்றுப் பகுதி உள்ளடங்கியது. சுவாசத்தை ஆழவெளியே விட்டுக் கொண்டு நாணத்துடன் அவள் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் தாக்குண்டு உணர்ச்சி மேலிட்டு அவனும் அவளைப் போல் கிறங்கினாலும்

Page 14
14 அம்மாவுக்குத் தாலி
அதையெல்லாம் அவன் மேவிவிட்டு தான் சொல்ல வேண்டிய கதையிலேதான் கவனம் கொண்டு உஷாராகி னான்.
"நான் முன்னம் ஒருத்தியை காதலிச்சன். அவளும் என்னை காதலிச்சாள் அதைத்தான் உமக்கு நான் முக்கியமாச் சொல்ல வேணும்.”
“பிறகு என்ன நடந்தது?’
“என்ன நடந்தது. அப்பிடி நீர் நினைக்கிற மாதிரி ஒண்டுமே நடக்கேல்ல. ரெண்டுபேரும் ஆளையாள் விரும்பி யிருந்தம் ஆனா அவவின்ரை வீட்டில தாய் தேப்பன் இதுக்கு ஒத்துக்கொள்ளேல்ல. அதால தாய்தேப்பன்ரை சொல் வழியைக் கேட்டு அவவும் அவயள் பேசின கலியாணத்தைச் செய்திட்டா.”
"அவ அப்பிடிச் செய்திருக்கக்கூடாது.”
“இல்லை. நீர் நினைக்கிறமாதிரியில்ல அவளில பிழை யொண்டும் நான் சொல்லமாட்டன். அதையொண்டையும் நான் பெரிசாயெடுக்கேல்ல. எங்கடையதை பெரிசா காத லெண்டும் சொல்லுறதுக்கில்ல. எங்கள் ரெண்டு பேருக் கும் சாதுவா ஒரு விருப்பம் மாத்திரம் இருந்தது ஆனா அது பிறகு சரிவரேல்ல எனக்கும் அதால பாதிப்பெண்டு ஒண்டுமில்ல அவளுக்கும் அப்பிடித்தான் இருக்குமெண்டு நெக்கிறன்’
"அப்ப என்னை எப்பிடி விரும்பி இந்த கலியாணத்துக்கு ஒம்பட்டீங்க?”
“உம்முடைய போட்டோவைப் பாத்தன் அந்தப் போட்டோவைப் பாத்தவுடனேயே பொம்பிளையை எனக்கு பிடிச்சுப்போச்சு ஒமெண்டு சொல்லீட்டன்’

நீ.பி.அருளானந்தம் 15
இந்த நேரம் அவளை தன்பக்கம் மெல்ல இழுத்து வைத்து ரமணன் அனைத்துக் கொண்டான். அந்த இதமான சுகத்தில் அவளது உடம்பில் 'ஜிவ்ஜிவ்’வென்று சூடேறும் உணர்ச்சி ஏற்பட்டது. முதல் இரவில் பள்ளியறையில் பலவித ஆசைகள் புதுத் தம்பதிகளிடையே கொழுந்து விட்டெரியும் என்பது இயற்கைதானே, அவனும் அவளைப் போலவே உச்ச உணர்ச்சிவசப்பட்டான். இருந்தாலும் அவன் தன்னையடக்கி நேரத்தை கடத்திக் கொண்டு, , \
“உமக்கும் சுதந்திரமிருக்கு மாதங்கி. உம்மட்டையும் அப்பிடி ஏதுமிருந்தால் சொல்லுமன்’ என்றான்.
“என்னத்தைச் சொல்ல?’ அவள் தடுமாறாது அவனைக் கேட்டாள்.
“உமக்கும் முந்திய காலத்தில என்னைப்போல சம்பவம் ஏதாவது நடந்திருக்கும். விரும்பினா அதை நீர் சொல்லலாம். எனக்கெண்டாபழைய சீவியத்தைப் பற்றி எந்தமாதிரியும் அக்கறையில்ல. அதுக்குள்ளயெல்லாம் குற்றம் கண்டுபிடிச்சு வாழ்க்கையை சீரழிக்கிற மடையன் நானில்ல. இனிமேல் நாங்கள் வாழுற உண்மையான வாழ்க்கையைப்பற்றித்தான் எனக்குக் கருசனை. என்னைப்பற்றிச் சொன்னதிலயிருந்து உமக்கும் என்ர கொள்கை விளங்கியிருக்கு மெண்டு நெக்கிறன் இப்ப என்னட்ட எந்த மூடு மந்திரமும் இல்லை நான் ஒப்பின்காட்”
“அதேமாதிரித்தான் நானும். உங்களின்ரை கொள்கை தான் நானும். உண்மையாய் உங்களை எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு”
அவனது அணைப்பில் இருந்து விலகி அவனது முகத்தைத் துணிந்து பார்த்துக் கொண்டு மேலும் அவள்

Page 15
16 அம்மாவுக்குத் தாலி
சொன்னாள். “எனக்கு நாலுவருஷமா வீட்டில உள்ளவயள் கலியாணம் பேசத்துவங்கீட்டினம். என்ர அப்பா அம்மா என்ரை கலியாணத்தில அக்கறைப்பட்டு அதுக்காக பிரயா சைப்பட்டுக்கொண்டிருக்க வேற ஒண்டையுமே நினைக்க எனக்குத் தேவையில்லாததெண்ட மாதிரியிருந்தது. இப்ப நல்ல இடத்திலையும் எனக்குக் கல்யாணமாயிட்டுது எனக்கென்ன குறை?’
இப்படிச் சொல்லுமளவிற்கு தனது இளமைக்கால காதல் விஷயத்தில் மாதங்கி அப்போது மிகவும் ஜாக்கிரதையாக இருந்தாள். உஷார்மடைச்சியாகி தானும் ரமணன் மாதிரி இங்கே உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது ஏடாகூடமாக வெளியே உளறிக்கொட்டிவிடக் கூடாது என்று அவளுக்கு விழிப்பு இருந்தது. அதனாலே அவள் தன்னை கட்டுப் படுத்தினாள்.
ஆண்கள் இப்படி எதையும் சொல்லுவார்கள், செய்வார்கள், குற்றப்பட்டுக் கறைபடிந்தாலும் எப்படியோ அதைக் கழுவி ஒருகாலம் சுத்தவாளியாக மாறிவிடுவார்கள் பெண்களுக்கென்றால் அப்படியா? இப்படிக் கணவன் சொன்னாரே அதுபோல் அவளும் சொல்ல வெளி கிட்டால் அது பிறகு அவளுக்குப் பாதகமாகிவிடுமே?
உண்மையில் அவள் தனக்கு முன்பு ஏற்பட்ட காதலை இப்படியான பிரச்சினைகள் இருக்கும்போது மனம் துணிந்து எப்படிச் சொல்லுவாள்? ஆண்களில் யாரைத்தான் நம்பமுடியும்? கட்டிய புருஷனென்றாலும் அவனும் ஆண் தானே? ஆண்பிள்ளைக்குணம் அவனுக்கும் இருக்கும்தானே? அவனைப்போல அவளும் தனது காதல் கதையை உளறினால் இந்த இரவு முடியமட்டும் அவன் பல் இளிப்பான். இன்னும்

நீ.பி.அருளானந்தம் 17
பல இரவுகள் இப்படியே பிரச்சினையின்றிக் கடக்கலாம். ஆனால், உறுதியற்ற இந்த முப்பது நாள் இருக்கும் மோகம் குறைந்த பிறகு தனது சுயரூபத்தை இவர் காட்டிவிடாமலா விடப்போகிறார்?
அவள் உண்மையில் சாமர்த்தியசாலி, இதையெல்லாம் நினைத்து அவள் தன்மனதை திறந்த பெட்டகமாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை. மாறாக சோதனை செய்து அவைகளை மனத்தில் மூடிவைத்துக்கொண்டாள். ஆமை முட்டைகளை புதைப்பது போல் அவளும் அந்தச் சம்பவத்தை வெளிக்கொணராது மனத்தில் குழி பறித்து புதைத்துவிட்டாள்.
இருவரினதும் மெளனம் அந்த அறையின் நிசப்தத்தை நீடித்துக் கொண்டிருந்தது. இன்னும் அந்த இரவு கழிந்துகொண்டு வீணாவதை அவனும் சகித்துப் பார்த்துக்கொண்டிருப்பதாக இல்லை. அந்த அறையில் ஒளிரும் எல்லா மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு அவளை அணைத்தான் அவன். அந்த அணைப்பில் கிடந்து அவள் நெளிந்து கொண்டிருந்தாள்.
நிலவும் சரிந்துபோய்க்கொண்டிருந்தது. போதையிலே கண்ணை மூடிக்கொண்டு பந்தலடியில் இருந்த இளைஞன் ஒருவன் மட்டும் இன்னும் உறங்கவில்லை.
‘தூங்காத கண் என்று ஒன்று துடிக்கின்ற மனம் என்று ஒன்று. இந்த சினிமாப் பாடலைத் தொடங்கி அந்த இரவு வெப்பம் கடந்து தொடங்கிய இதமான குளிரில் அவன் பாடிக்கொண்டிருந்தான். இரவுநேரத்து தெளிந்த தூய

Page 16
18 ܖ அம்மாவுக்குத் தாலி
காற்று இவனுடைய இனிப்பான பாட்டின் இன்னிசையை நாலாபக்கமும் சுமந்து சென்றது. அந்த நேரம் அவனுக்குத் தொண்டை திறந்திருந்தது. பாட்டும் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதைக் கேட்டு இரசிக்கும் நிலையில் யாருமே நித்திரை முழிப்பாய் இல்லை.
கல்யாண வீட்டில் எல்லாருமே அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். அவன் யாரை நினைத்துக் கொண்டு பாட்டுப்பாடுகிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. அவன் கதிரையில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு உள்ளே விழித்துக்கொண்டிருந்தான். திரும்பவும் அதே பாட்டை பாடிப்பாடி தனிமையிலே அவன் இனிமை கண்டான்.
-தாமரை &ණයීuff acරණ)

மூதாளர் கந்தையாவுக்கு வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த வயதுக்குள்ளே தன் ஒரேயொரு மகனின் மரணத்தையும், அதையடுத்து சில மாதங்களில் தன் மருமகளின் சாவையும் ஒன்றன் பின் ஒன்றாக அவர் பார்த்து விட்டார். இதனால் இதயத்துள் ஒரு சோகம் திரண்டு வந்து அவரிடம் நிரந்தரமாக நின்று கொண்டது.

Page 17
20 அம்மாவுக்குத் தாலி
அதனால் அவரிடம் இதுநாள் வரையில் இருந்த பழைய உற்சாகமெல்லாம், இன்று எங்கு போனது என்று தெரியாத அளவுக்கு அவரிடமிருந்து தொலைந்தது போல் போய்விட்டது. இப்பொழுது அவர் நன்றாகக் கூனிப்போய் விட்டார். தளர்ந்து நடக்கிறார். பல்லெல்லாம் அடுத்தடுத்து விழுந்து போனது. அதிகமாகப் பேசுவதே இல்லை. சிரிப்பதும் இல்லை. அப்படிச் சிரித்தாலும் அவரைப் பார்க்கும்போது அழுகிறது மாதிரி இருக்கிறது. கொஞ்சம் செலிடு, கொஞ்சம் குருடு, எண்ணெய்யற்ற பொக்கு தானியம் போல் இன்றைய நிலையில் அவர் ஆகிவிட்டார். செக்கில் பூட்டிய மாடு போலத்தான் இன்று அவரது வாழ்க்கை உயிரற்றதாகி விட்டது.
அவருடைய குடும்பத்தில் இப்பொழுது நெருங்கிய இரத்த உறவென்று இருப்பவர்கள், மகனுடைய இரண்டு பெண்பிள்ளைகளான அந்த அவருடைய பேர்த்திகள் இருவர் மட்டும்தான். அவர்களிலே ஒருத்தி வவுனியாவில் இருக்கிறாள். மற்றவள் திருகோண மலையில் சீவியம். இந்த இருவருக்கும் பிள்ளை குட்டிகள் நிறைய இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்திலேயும் கீழ் மட்டத்தில் என்று கணிக்கக் கூடிய, ஏழ்மையின் நிலைமையில் கிடந்து சீவிப்பவர்கள் அவர்கள். ,
"அந்த நிலைமையிலுள்ள அவர்களுடைய குடும்பத்துக் குள்ளே நானும் போய் சேர்ந்துகொண்டு’ என்று இதையெல்லாம் நினைத்துப்பார்த்துதான் அவர்களோடு சென்று தானும் இருந்து கொள்ள அவர் விரும்பவில்லை. அதைவிட, அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள அச்சுவேலி' என்கிற கிராமத்தில். அங்கே சின்னதொரு வீடு என்றாலும் அவருக்குள்ள சொந்த வீடு அது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்

தீபி.அருளானந்தம் 21
அந்தச் சுற்று வட்டாரத்திலே ‘செல்’ அடியிலிருந்து தப்பித்துக் கொண்டது இவருடைய வீடு ஒன்றுதான். சுவரில் செல்தெறிந்த காயம் பட்டதொன்றுதான்.அந்த வீட்டுக்கு வந்த ஒரேயொரு குறை. அத்தோடு தாள்வாரப்பக்கமாக உடைந்து உதிர்ந்த நான்கு ஒடுகளிடையே பனங்கம்புகளும் தெரிந்தன. அதையெல்லாம் யுத்தநிறுத்தம் வந்த வேளை அதில் வந்திருந்து கொண்டு மேசன் பிடித்து வைத்துச் "சிமிண்டு’ பூசித்திருத்தி, கையோடு அவனைக் கொண்டு, நான்கு புது ஒடுகளையும் அதில் போட்டு சரி செய்து விட்டார் அவர்.
அந்த வளவுக்குள்ளே ‘செல்’ விழுந்து போய், உலக்கைகளைப் போல் மொட்டையாகிப்போன பனை களைப் பார்த்து, முதன் முதலில் அங்கே வீட்டைப் பார்க்க வந்த போது அவர் அழுதார். பக்கத்து வீட்டுச் செல்லையா அவர் அழுவதை மெளனமாகப் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்து விட்டு, ஒன்றைப் பற்றியுமே அவரோடு வாய்பேசாது இருந்து விட்டு, தன் வீட்டுக் காணிக்குப் பிறகு போய் விட்டார். செல்லையாவுக்குதன் வீடே எறிகணை விழுந்து அது அங்கு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டதே என்கிற பெருங்கவலை மனத்தில்! ஆனாலும், மகன் ஒருவன் கனட்ாவில் இருக்கிறான். என்ற மனத்திடம் அவருக்கு.
அச்சுவேலியிலிருந்து யுத்தகாலத்தில் வெளியேறிய வசதி படைத்தவரெல்லாம் “சமாதானம் வந்திட்டு இனிப் போய்க் காணி பூமி வீட்டைப் பாத்திட்டு வருவோம்’ என்று நினைத்துக் கொண்டு, ஆவலும் அசரமுமாகப் புறப்பட்டு கொழும்பிலிருந்து இங்கே வந்தார்கள். அப்படி வந்தவர்களில் சிலர் வீடே தங்களுக்கு இல்லாமலாகிப் போன கொடுமையை தங்கள் கண்களாலே நேரே பார்த்துவிட்டு

Page 18
22 அம்மாவுக்குத் தாலி
பிறகும், கொழும்பில் இருந்து சீவிக்கத் திரும்பிப் போய்விட்டார்கள். அவர்களுடைய வளவுகளில் செல் அடி விழாமல் தப்பிய தென்னைகளில் உள்ள தேங்காய்களை, ஆர்யாரோ கிரமமாக வந்து அதற்குள்ளே சுற்றிப் பார்த்துவிட்டு மரத்திலே ஏறிப்பிடுங்குகிறார்கள். அதனுடன் இளநீரையும் பிடுங்கி, அங்கே ஆறுதலாக மரங்களுக்குக் கீழே நிழலில் இருந்துகொண்டு, கத்தியால் வெட்டிப் போட்டுக் குடிக்கிறார்கள். தாகம் தீர்த்த வாய்க்கு பிறகு அதிலே சற்றைக்கு இருந்து அவர்களுக்குக் கொஞ்சம் கதைக்கவும் தானே வேண்டும். “ஓ, இந்த வேலிச் சண்டைகள் பிடித்தவயளெல்லாம் இப்ப கொழும்பில’ சொல்லிவிட்டுச் சிரிக்கிறான் மரத்திலேறி தேங்காய், இளநீர் பிடிங்கியவன்.
“இனி இங்க வாறத்துக்கு அவயஞக்கு என்ன கிடக்கு? அவயளுக்குக் கட்டின வீடே இங்க இல்லை." இன்னொரு வன் சொல்லும் போது ஏளனம் அவன் உதடுகளில். "எண்டாலும் வெளிநாட்டிலிருந்து அவேயஞக்குக் காசுகள் வருது. பிளேயன் அங்கயிருந்து அனுப்புதுகள் அவேயளுக்கு, அத்தில்ல வெள்ளவேத்தேயிலை வீடு வாசல் வாங்கிட்டினம். இங்க வீடு வாயிலை விட்டிட்டுப் போனாலும் செளக்கியமாத்தான் அங்க கொழும்புப் பக்கம் இருந்து சீவிக்கினம்,” இதைச் சொன்னவன் பொறாமையில் முகத்தை வாடப் போட்டக் கொண்டான். கேட்டவர்களும் தலையைத் தொங்கப் போட்டபடி யோசித்தவாறு இருந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அங்கு நின்ற தென்னை மரங்கள் எங்கே கேட்கப் போகின்றன? ஆனாலும், பக்கத்து வீட்டுக் கந்தையா இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வேலியிலுள்ள பூவரசுக் கொவ்வைச் சடைத்தலுக்குப் பக்கத்திலே மறைவாக நின்று ஒட்டுக்கேட்டுவிட்டார். அவர்கள் சொன்னதெல்லாம் நெஞ்சுப் பைக்குள்

நீ.பி.அருளானந்தம் 23
கொள்முதல் ஆகிவிட்டது அவருக்கு. தங்கிய இடம் பிறகு அரித்துக் கொண்டிருந்தது. அதையிட்டு அவர் அங்கே போய் அவர்களிடம் “நீங்கள் ஆர் எவர்?’ என்று விசாரிக்கப் போனால் அந்த காணி உரிமையாளர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களைச் சொந்தம் கொண்டாடுவார்கள் இவர்கள்! இப்படி உரிமை பாராட்ட இவர்களைப் போல பலரும் வெளிக்கிட்டகாலம் தானே இது? ஆதலினாலே அவருக்கு மனத்தில் பயம் சூழ்ந்து விட்டது. அந்தப் பக்கம் தலையைக்காட்டாமல் பேசாமல் போய் வீட்டுக்குள்ளே பிறகு இருந்து விட்டார். அந்த வீடுதான் அவரது வளை! அவரது அரண் எத்தனை வெளிச்சமானாலும் அங்கு மாத்திரம் தொங்கும் இருள்தான் அவருக்குத் தஞ்சம். க கூ, க க் கூ, கூ கூ, எங்கோ மரப் பொந்திலிருந்து ஏதோ ஒரு பறவை,
சிங்களப் பேரினவாத அரசாங்கம் தன் பெரிய இராணுவத்தைக் குவித்து வைத்திருந்த இடம் அந்தப் பலாலி அச்சுவேலி அதற்குக் கிட்டிய கிராமம். யுத்த காலத்தில் இராணுவம் செலுத்திவிட்ட செல்கள் பரவி விழுந்து கொண்டிருந்த இடங்களில் இந்த அச்சுவேலிக் கிராமமும் சேர்ந்ததுதான். இங்கே தோட்டம் செய்து செம்மையாக வாழ்ந்தவரெல்லாம் யுத்தத்தின் தாக்கத்தால் அந்த தொழிலைச் செய்ய முடியாமல் போக, சயிக்கிளிலே கூலிக்குப் பாரம்கட்டி இழுக்கிற பிழைப்புக்கு பிறகு ஆளாகி விட்டார்கள். முகங்களைச் சுழித்துக் கொண்டு, வெயர்த்து வெந்து போய் கடும் வெயிலிலே அந்தச் சயிக்கிள் ஓட்டம் அவர்களுக்கு. அதனால், பூசணிக்காய் மாதிரி பார்க்கப் பொசிப்பாக இருந்தவரெல்லாம் வறுமையில் முருங்கைக் காய் மாதிரி உடல் மெலிந்து கெட்டுப் போய் ஆளே மாறிப் போய் விட்டார்கள். பனங்கள்ளுக்குடித்து அடிவயிறு முட்டிக் கலையம் போல திரண்டு மினுமினுப்பாயிருந்த

Page 19
24 அம்மாவுக்குத் தாலி
தொந்திகளெல்லாம், அவர்களுக்கு எப்படி வற்றிப் போனது? என்பது ஏதோ புரியாத மாயம் போலத்தான் இருந்தது. இவர்களிடம் அதைப் பற்றி கேட்கின்ற காலம் இதுவல்ல என்று நினைத்து, யாருமே தங்கள் வாயை இதன் காரணமாகத் திறப்பதில்லை.
எந்த வருசத்திலும், நல்லூர்க் கோயில் திருவிழா நல்ல மாதிரியாகத்தான் நடந்து முடிகிறது. இடம் பெயர்ந்து சுற்றிச் சுற்றி அந்தக் குடாநாட்டுக்குள்ளே இருந்து சீவித்தவர்க ளெல்லாம் தங்கள் கஷ்டங்களையெல்லாம் மறந்துவிட்டு திருவிழாக் காலங்களிலே அந்தக் கோயிலுக்கு வந்தார்கள். நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். காவடிதூக்கி ‘கந்தனை’ மகிழ்வித்தார்கள். அந்தக் கோயிலிலே இருக்கும் வரை, கவலைகள் மறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியுமாயிருந்தது அவர்களுக்கு. ஆனாலும் கோயிலை விட்டு தங்கள் தங்களது இருக்கும் இடத்தே திரும்பிப் போகும் போது, துன்பச்சுமை தலைமீதேறிக் கொண்டது அவர்களுக்கு.
கந்தையா எல்லோரும் எடுத்தவுடன் சொல்வது போல நல்லூர்க் கந்தனை, செல்வக் கந்தனென்று புகழ்வார். "சன்னிதி முருகனை “அன்னதானக் கந்தன்’ என்று ஒரு பக்தி உணர்வோடு கூறுவார். செல்வச் சன்னிதி முருகனிடம் போகும் போதெல்லாம், ஆர்த்மார்த்திக சுகத்தை அவர் கண்டவர். அங்கே போய் கும்பிட்டு வருவது கூட அவருக்கு நிலைத்தா என்றால், அதுவும் இல்லை. இலங்கை இராணுவம் போய், இந்திய இராணுவம் அங்கு வந்தும், கோயில்பக்கம் ஒருவரையும் போகவிடவில்லை. இந்தியாவிலிருந்து வந்தார்கள், அமைதிப்படை நாங்கள் என்று சொல்லிக் கொண்டு. இங்கே வந்த பின்புதான் தெரிந்தது அவர்கள் சத்தியத்தைக் காக்க வரவில்லை சண்டைக்காகவே வந்தார்களென்று. ஒருநாள் பத்துப்பேர் இருக்கும். அந்த

நீ.பி.அருளானந்தம் 25
இந்திய இராணுவ சிப்பாய்கள் இவரின் வீட்டுக்கு வந்து “முருக்கா. முருக்கா.’’என்றார்கள். “முருகா முருகா’ என்றார் இவரும் சேர்ந்து அவர்களைப் பார்த்துப் பயபக்தியோடு. “முருக்கா முருக்கா’ என்று பின்பும் அவர்கள் சொல்ல, அப்பொழுதுதான் இவர் நன்றாக சிந்தித்துப் பார்த்தார். முருகா என்ற அந்தச் சொல்லிடையே இந்த இக்கன்னாவை உள்ளே நுழைத்து, வேறு எதையோ ஒன்றை அவர்கள் கூறுகிறார்களென்று. அவருக்குப் பிற்பாடு ஒருவாறு இது மூளைக்குப் பிடிபட்டுவிட்டது.
இப்பொழுது “முருக்கா முருக்கா’ என்று உடல் பாஷையையும் உக்கிரமாக அவர்கள் வெளிப்படுத்து கிறார்கள். அவர்களில் தலைப்பாகை கட்டியிருந்தவன் ஒருவன் சீக்கியன் என்று பார்க்கும்போது இருவருக்குத் தெரிந்தது. அவன் கை விரல்களைக் குவித்து வைத்துக் கொண்டு, தன் தலைப்பாகைக்கு மேலே அந்தக் குவித்த கை விரல்களைக் கொண்டு போய் மேலும் கீழுமாக அசைத்துக் காட்டுகிறான் அவன் காட்டிய சாடை ரோமானிய போர் வீரனின் தலைக் கவசம்தான் உடனே இவருக்கு ஞாபகம் வந்தது. ஆனாலும் அதைச் சொன்னால், உதைதான் தனக்கு விழுமென்று எச்சிலை உள்ளே விழுங்கி விழித்துக்கொண்டு “நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு விளங்கவில்லை’ என்றார் தன் கைப்பாஷையாலும் அவர்களுக்கு விளக்கப்படுத்தி இவர்
இந்த நேரம் பக்கத்து வேலிப்பொட்டுக்காலே புகுந்து, தனிச்சேவலொன்று இவரது வீட்டுமுற்றத்தடிப் பக்கமாக ராஜ நடை நடந்து கொண்டு வந்தது. அதைப் பார்த்ததும் அந்தச் சிப்பாய்களினது கண்களெல்லாம் விழியாலே சுடும் அளவுக்கு துவக்குகளைப் போல் மாறியதாகிவிட்டன. உடனே “முருக்கா முருக்கா’’ என்று எல்லோரும் ஒரே

Page 20
26 அம்மாவுக்குத் தாலி
நேரத்தில் அதைப் பார்த்து மகிழ்ச்சியூடே சேவல் போல் குரலெடுத்துச் சத்தம் போட்டனர். அந்த நேரம் சேவலோ வென்றால் அவர்களின் குரல் கேட்டு “கொக் கொக்” என்று கழுத்தை முன்னால் நீட்டி நீட்டிச் சத்தம் போட்டது. பின்பு பயத்தில் “கொடேர் கொடேர்” என்று வேறு ஒரு விதமான சத்தம்போட்டுக் கொண்டு வேலிப் பொட்டுக்காலே புகுந்து செட்டை அடித்தபடி விரைந்தது. முருக்கா என்றால் கோழியா? அவன் இவ்வளவு நேரம் கோழியைத்தான் கேட்டுக் கொண்டு நின்றிருக்கிறான் என்று அவருக்கு தெட்டத் தெளிவாக இப்போதுதான் விளங்கியது.
கோழியே வளர்க்காத அவரிடம் கோழி எப்படி இருக்கும் அவர்களுக்குப் பிடித்துக் கொடுப்பதற்கு? அந்தக் கோழி பக்கத்து விட்டுக்காரரினது என்று சொன்னாலும் அவருடைய மனசாட்சிக்கு அது பிழைதானே? அவர்களது கைகளிலிருக்கும் துவக்குகளையும் நெஞ்சில் பட்டி போட்ட படி அந்தப் பைகளிலிருக்கும் குண்டுகளையும் நினைத்துப் பார்க்கப் பயமாகத்தான் இருக்கிறது இவருக்கு. ஆனாலும் உண்மை என்று ஒன்று எப்பொழுதும் அழியாததென ஒரு நம்பிக்கை இருக்கிறதே, அதைச் சொல்வதற்கு என்ன பயம்? என்று நினைத்து விட்டு, அவர்களுக்கு விளங்கக் கூடிய அளவிலே கைப்பாஷையையும் காட்டி வடிவாக வாயாலும் தன்னுடைய நிலையை இவர் விளங்கச் சொன்னார். அவர்களுக்கு “என்னட்ட கோழி ஒண்டும் இல்ல நான் அதுகளை வளக்குறேல்ல’’ என்று. இதையெல்லாம் விளங்கிக் கொள்ள இயலாத அளவிலா அங்கு வந்த அவர்கள் இருக்கிறார்கள். அவர் சொன்னதெல்லாமே பிறகு நன்றாக அவர்களுக்கு விளங்கிவிட்டது. ஆனாலும், தாங்கள் இராணுவத்தினர் என்ற மமதையான நினைப்பில் அவர் சொன்னதை அவர்கள் நம்பமறுத்தார்கள். இதன் காரண

நீ.பி.அருளானந்தம் 27
மாக, இவரோடு முதலில் கதை கொடுத்தவன், தான் வைத்திருந்த துவக்கைத் தூக்கி இவரின் நெஞ்சின் மேலே சூழல் முனையை வைத்து அழுத்தினான். அவனது பார்வை “உன்னை ஒருவகை பார்க்கிறேன்?’ என்ற மாதிரி அவரது முகத்தில் முத்திரை குத்தியது. "எல்.ரி.ரி.?’
அவன் சொல்ல இவர் கலங்கிவிட்டார். தூக்குக் கயிற்றை கழுத்தில் சுருக்கிட்டு விட்டாற் போல அப்பொழுது அவருக்கு இருந்தது. இந்த “எல்.ரி.ரி.’ என்கிற சொற் பிரயோகத்தை தமிழ் மக்கள் மேல் பாவித்து இம்சைக் குள்ளாக்கலாம் என்பதை, இலங்கை இராணுவம் மாத்திரம் செய்யவில்லை, இந்திய இராணுவம் வந்தும் அதையேதான் செய்கிறது என்று, அவர் தன் அனுபவத்தில் அதை இப்பொழுது நேருக்கு நேராக கண்டு கொண்டார். “எங்கோ இளைஞர்கள் துவக்கைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்களென்றால் அதையிட்டு நானும் எல்.ரி.யா..? இந்தக் கிழவனும்?’ அவர் இதை நினைத்தபடி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்க, அவர்கள் பேசாத பேச்செல்லாம் அவரைப் பார்த்துப் பேசிவிட்டு வேலிக் கடவுக்குள்ளாலே நுழைந்து வெளியேறி விட்டார்கள்.
“வேலிகளையே அடைச்சு அறிக்கை பண்ண வேணாம் எண்டு ஒரு புதுச்சட்டம் தாங்கள் வளவுகள் வழியதிரியப் போட்டிருக்கிறாங்கள். எங்கயோ கிடந்து வந்த பரதேசி நாயன்’ அவர்களைப் போக விட்டு பின்புறமாக அவர்களை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு இவ் வாறெல்லாம் அவர் நினைத்தார். அவரது மனம் திரும்பத் திரும்ப அவர்களை “நாயன், பேயன், மூதேசியள்’ என்று வைதபடியே இருந்தது. தன்னாலே ஒன்றும் ஆகா விட்டாலும் கோபம் மாத்திரம் மூக்கைப் பொத்துக் கொண்டு இப்படியான நேரங்களிலே வந்து விடுகிறது

Page 21
28 அம்மாவுக்குத் தாலி
அவருக்கு. என்னதான் செய்கிறது? என்று நினைத்துக் கொண்டு வீட்டுச் சுவரிலே சாய்ந்து கொண்டார். ஒரு நிமிஷம் ஒரு இடத்தில் நின்றால் பக்கத்திலிருக்கிற ஏதாவது சுவர், வேலி, அல்லது மரத்தின் மீது வலதுதோளைச் சாய்த்து நிற்பது அவர் வழக்கம்.
அவர் இப்பொழுது கோபப்பட்டபடி இருக்கிறாரா? அல்லது யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாரா? அப்படி என்ன ஒரு யோசனையோ? பின்னே யோசனை இருக்காதா? அந்த ஞாபகமெல்லாம் வருகிறதே இப்பொழுது அவருக்கு. இந்திய அமைதிப்படை இங்கு வந்ததன் பின்பு முதன்முதல் பேருந்திலே ஏறி, புடலங்காய் மாதிரி கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றபடி அவர் பயணித்த அந்தப் பிரயாணம், பேர்த்தியை ஒருக்கால்போய் பார்த்துக் கொண்டு வருவோமென்று வவுனியாவுக்குப் போன அன்றைத்தினம்தானே இந்தச் சம்பவமும் நடந்தது.
இடம் ஆனையிறவு, இராணுவப் பரிசோதனை முகாம்எத்தனை இளம் பெண்கள் என்னோடு சேர்ந்து அந்த பஸ்ஸிலே பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்? கைக்குழந்தையோடு இளம் தாய்மார்கள் அவர்களிற் சிலர்! இளம் பெண்களெல்லாம் குட்டைப் பாவாடை அணிந்தால் அது இந்திய இராணுவத்துக்கு வெறுப்பாம், என்று சேலையை அழகாக உடுத்தி நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டுவந்திருந்தார்கள். அந்த இடத்திலே பஸ்ஸாலே இறங்க வேண்டுமாம் என்பது அவர்களது சட்டம் நானும் எல்லோரும் இறங்கியாகிவிட்டது, கொஞ்சதூரம் அதிலேயிருந்து நடக்கவும் வேண்டுமாம்! நானும் அவர்களும் அவ்விடத்துக்கு நடத்தாகிவிட்டது. இனி முற்றுஞ் சோதித்தல் என்றார்கள்! ஆண்களுக்கும் பெண்களுக்கும்

பி.அருளானந்தம் 29
தான்! முதலில் எல்லோருக்கும் அடையாள அட்டை பார்த்தார்கள். பிறகு பெண்பொலிசார் இன்னும் இந்தியாவி லிருந்து இங்கு வரவில்லை அதனால் நாங்களே பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது என்று சொல்லி, வந்த பெண்களை ஒருவர் பின் ஒருவராக சீலை மறைப்புக்குள்ளே வாருங்கள் என்று கூப்பிட்டார்கள். என்ன அநியாயம்?
அந்தப் பெண்களை, காந்தி மகான் உடுத்திய அந்த இடுப்புத்துண்டு அளவு உயரத்துக்கு, மேலே சேலையைத் தூக்கிப் பிடித்துக் காட்டச் சொன்னார்கள். தமிழ்ப் பெண்களெல்லாம் தொடைப் பக்கத்திலே வெடிகுண்டைக் கட்டிவைத்து மறைத்துக் கொண்டு போகிறார்களாம், என்ன அநியாயமிது? இன்னுமொரு அக்கிரமத்தையும் அவர்கள் செய்தார்கள். போட்டிருக்கும் ரவிக்கைக்குள்ளும் குண்டு இருக்குமென்று சட்டைப் பின்னெல்லாம் அவிழ்த்து, பெண்களின் மார்பகங்களை தங்கள் கண்ணுக்குப் பார்க்கக் காட்டச் சொன்னார்கள். நாங்கள் தாய்நாடு என்று பெரிதாக மதிப்பளித்தோம்’ அந்தத் தாய் நாட்டிலிருந்து இங்கே வந்தவர்கள் எம் தாய்க்குலத்தையே இம்சைப்படுத்துகிறார் களே? இப்படி இங்கே சோதனைச் சாவடிகளை வைத்து, தமிழ்ப் பெண்களை காமத்தால் உற்று நோக்கிக் கழிக்கின்றார்களே?
அந்த நினைவுகள் அவருக்கு அத்துடன் தடைப்பட்டு நின்று விட்டன. தூரத்தில் எங்கோ கருங்குயில் கூவிக் கொண்டிருந்தது. அதன் சோகமான குரலைக் கேட்க அவர் மனது வலித்தது. வழமையாக பலாலிப்பக்கம் விட்டு விட்டுக் கேட்கும் மெஷின்தூக்கிள் பொடபொடப்பு இப்பொழுது அவருக்குப் பசிக்கின்றது மாதிரி இருந்தது. நேற்றுப் போய் சாப்பாட்டுக் கடையிலே கணவாய்க் கறியோடு நண்டுக் காலும் சேர்த்து சோறு சாப்பிட்டதில், அது வயிற்றுக்

Page 22
30 அம்மாவுக்குத் தாலி
குள்ளே போய் வார்களாகவும் சவ்வுகளாவும் பிரிந்து சீரணிக்க முடியாமற் போனதோடு வயிற்று வலியையும் உண்டாக்கி விட்டதே? என்று கலங்கினார். “இன்று இரவு நாலு இடியப்பம் சாப்பிட்டால் காணும்’ -என்று எண்ணிக் கொண்டு கடைப்பக்கம் போக பிறகு வெளிக்கிட்டார்.
புழுக்கவாடையுள்ள பளுப்புநிற வேட்டிதான் உடுத்தியிருந்தது. அதைத்தழைய விட்டுக் கொண்டு அவர் நடந்தார். கடைவீதியால் அவர்போகும் போது, அவரை அறிந்து கொண்டதாகப் பாவிப்பவர்களின் முகத்தில் கூட பழக்கமின்மையின் திரைதான் இருக்கிறது. வீதியில் காண்கின்ற உறவினர்களுடன் ஒரிரு வார்த்தைகள் பேசி வேர்களை ஊன்றப் பார்ப்பது கூட அபத்தம்தான் என்று அவருக்கு இப்பொழுது புரிகிறது. நான் கிழவன், தாங்கள் வந்து என்னுடன் கதை கொடுத்தால் தங்கள் மேல் என் பாரம் பிறகு விழுந்துவிடும் என்ற பயமா அவர்களுக்கு? “யாருக்கு யாரோடுதான் நிரந்தரமான உறவு உள்ளது? தக்க தருணத்தில் எடுத்து அணியும் முகமூடிதான் உள்ளது’ என்று நினைத்து அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
“பட்டினியில பிள்ளையளெல்லாம் அங்க வீட்டுக்குள்ள வதங்கிப் போய்க் கிடக்குதுகள். கெதியா வீட்ட போய்ச் சேர வேணும்’ ~அவருக்குப் பக்கத்தாலே எலும்புதெரியும் ஏழ்மையுடன் ஒரு பெண் விரைவாக நடந்து போகிறாள். தளர்வடைந்த அவளுடைய கையிலே இருப்பது ஒரேயொரு மரவள்ளிக் கிழங்கு மட்டும்தான்! எத்தனை பேருக்கென்று அதைப் பிரித்துக் கொடுத்து பசியாற்றப் போகிறாளோ? அதை நினைத்தபடி அவருடைய பார்வை முன்னால் தெரிந்த வைரவர் கோயில் கோபுரத்தைத் தொட்டு சறுக்கிக் கீழே வந்தது.

தி.பி.அருளானந்தம் 31
அவர் அந்த இலுப்பை மரத்துக்குக் கீழே இருந்த சாப்பாட்டுக் கடையில் போய் கதிரையில் குந்தினார். “தம்பி ம். ம்..ம். நாலு இடியப்பம் தாங்கோ.’ என்று தெளிவில்லாத தோய்ந்த குரலில் கேட்டார். நாலு இடியப்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கால்மரத்துப் போனது. மரத்துப் போகப் போக காலை மாற்றி மாற்றி முழங்காலுக்கு மேலே மடித்துப் போட்டுக் கொண்டார். “என்ன இடியப்பம் இது? பாதி இளகிபாதி இறுகிக்கிடக்கு’ புறுபுறுத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இளந்தாரி வயதில் தட்டிலே வேணமட்டும் இறைய இறையச் சாப்பிட்ட தெல்லாம் ஞாபகம் வருகிறது அவருக்கு. சாப்பாட்டுக்கான காசைக் கொடுத்ததும், தளதளப்பான தனது அகன்ற கையை நீட்டி மிகுதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் நடந்து முடிந்தாகி விட்டது அவருக்கு.
வீதியால் வரும் போது பார்த்துக் கொண்டுவந்த அந்தக் கோயிலுக்கு, சாப்பிட்டாகியதும் போனார். “வைரவா அப்பனே,’’ கண்களில் நீர் 'கழகழ’ வென்று ஒழுகியது. உடனே கண்களை மூடிக்கொண்டார். கண்ணிர் விட்டதில் கொதிப்பேறியிருந்த அவருடைய நரம்புகள் சாந்தி பெற்றன. மூடிய கண்களைத் திறப்பதற்கு அவர் செய்த முயற்சியில் புருவங்கள் துடித்தன. ஒருவாறு கண்களைத் திறந்து கொண்டு கோயில் வாசலில் போய் இருந்தார்.
அதிலே இருந்தவாறு வானத்தைப் பார்த்துக் கொண்டு, பறந்து மறையும் பறவைகளையும் தவழ்ந்து செல்லும் மேகங்களையும் மங்கலான தன் கண்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தார். கதிரவனின் சாய்ந்த ஒளிக்கிரணங்கள் அங்கிருந்த மரங்களின் இலைகளின் மீது வீசிக்கொண்டிருந் தது. பகலை இரவுக்கு இட்டுச் செல்லும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. “இதிலே

Page 23
32 அம்மாவுக்குத் தாலி
இருந்ததில் எவ்வளவு நேரத்தைப் போக்கடித்து விட்டேன்’ என்ற நினைப்புடன் வீட்டுக்குப்போக அந்த வீதியாலே பிறகு நடக்க ஆரம்பித்தார். நடை அவரைக் குடிபோல் தள்ளுகிறது. அந்த இருட்டுக்குள் ஒன்றையும் அவரால் வள்ளிசாகப் பார்க்கவே முடியவில்லை. கண்களை முரட்டுத்தனமாக கசக்கிக் கொண்டு பார்த்தார். ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. இருள் தோற்றுவிக்கும் தோற்றங்கள் மட்டும் கண்ணுக்குள் விழுந்து கொண்டிருந்தன.
காலடியில் ஏதோ தடுக்க,
"ஐயோ’ காலில் உராய்ந்து விட்ட அந்தக் கல். நோவைத் தாங்கிக் கொண்டு முன்னால் நடந்தார்.
எப்பவோ செத்துப்போன மின்சார விளக்குகளுக்கு இன்னும் கூட உயிர் வரவில்லையே? என்று நினைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தார். மின்சாரம் இல்லாத இடத்திலே வாழ்கிறவன் வானத்து நட்சத்திரங்களையும் நிலவின் ஒளியையும் நம்பித்தானே இரவு வேளைகளில் வெளியே நடமாட வேண்டும். அந்த நினைப்பில் அவர் தலையை நிமிர்த்தி மேலே பார்த்தபோது மின்னல் வானத் தில் கிளை பிரிந்து மறைந்தது. அதுவும் அவரது கண்களுக்கு பெரிதாகத் துலங்கிடவில்லை. அவருக்கு முன்னே அந்த வீதியால் ஒரு இராணுவ வாகனம் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தின் முகப்பு விளக்குகள் உமிழும் கண்களைக் குருடாக்கும் ஒளி வெள்ள வீச்சுகளில், வீதியில் நின்றபடியே அவர் தடுமாறினார். கண் இமைதட்டுகிற நேரம்தான், வாகனம் அவரைத்தாண்டும் வேளையில் பின்பக்கத்தால் அவரை ஒரு தட்டுத்தட்டி விட்டுப் போய்விட்டது. அப்படியே கழன்று போய் பொத்தைக் கள்ளிப் பற்றைக்குள் விழுந்தார். அதில் விழுந்த கையோடு மொத்தக் கள்ளிகள்

த.பி.அருளானந்தம் 33
முள்கைகளால் அவருடைய உடம்பில் உரசி ரத்தக் கோடுகளை உண்டு பண்ணின. நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் ஊசிகள் குத்தின மாதிரி வலி. அவர் ஒரு மாதிரி வாயை வெட்டி வெட்டி வலித்தார். இந்த நிமிடமோ. அடுத்த நிமிடமோ என்றவாறு தெரியும்படி வெட்டி வெட்டி இழுத்துக் கிடந்தார்.
புறாக்குஞ்சின் முனகல் போல் சத்தம் மட்டும் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பற்றைக்குள் கிடந்த அவரை அந்த வீதியால் போன ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. அவர் அந்த இரவு முழுக்க அதிலே கிடந்து வேதனைப்பட்டு பணியால் உறைந்தார். உதடுகள், கைகால்களில் அவருக்கு உணர்வுமரக்க ஆரம்பித்தது. விரைவில் மூளை மோசமாகப் பாதிக்கப்பட, நிறுத்த முடியாமல் அவருக்கு உடல் நடுங்கியது. விறைத்துக் கொண்டு வந்த உடம்பு, நிரந்தரமான கடைசி விறைப்பிலே அவருக்கு பிற்பாடு கட்டையாகிவிட்டது.
அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் காலையில் இழவுச் செய்தி பறந்தது பேர்த்திமார்களுக்கு. வவுனியாவில் இருப்பவள் பின்னேர வேளை பஸ்ஸில் வந்து சேர்ந்தாள். பொழுது படவும் திருகோண மலையிலிருந்து மூத்தவள் வந்தாள். இளையவளுக்கு நெஞ்சுவருத்தம், அவள் ஓங்கி அழுகிறாள்.
அவளது குரலில் எருமைக் கன்றின் தீனம். அவளது அந்த நோயின் குரல் கேட்டுக் கொண்டிருப்பவர்களை அஞ்ச வைக்கிறது. மூத்த பேத்தியின் அடிவயிற்றிலிருந்து கக்கலும் கரைசலுமாக, பீறிட்டு வருகிறது பிரளய ஒலி. அவள் ஏங்கி ஏங்கி அழுகிறாள். அந்த இழவு வீட்டுக்கு வந்திருந்தவ ரெல்லாம் நேரமாகிவிட்டது என்று சொல்லி அவசரப் படுத்தினார்கள்.

Page 24
34 அம்மாவுக்குத் தாலி
பந்தலில் நின்ற ஆண்கள், அதுவாகிவிட்ட அவரைச் சுமந்து கொண்டு சுடலைக்குக் கொண்டு போனார்கள். மயானத்துச் சடங்கெல்லாம் நிறைவேறி விடவும் ஈமத்தீ எரிகிறது.
கட்டையில் நெருப்புப் பற்றி எரிவதைப் பார்த்துவிட்டு, வந்தவர்களெல்லாம் சுடலையை விட்டு வெளியேறு கிறார்கள் இழவு வீட்டுக்கு வந்ததினால் தலையில் தண்ணிர் அள்ளி ஊற்றி தோய்ந்து விட வேண்டுமென்று அவசரநடை நடந்தார்கள். ஆனாலும் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திட அவர்களால் முடியவில்லை.
அந்தக் கிராமத்துப் பக்கம் கேட்ட கண்ணிவெடிச்சத்தம் அவர்களைத் திடுக்கிட வைத்தது. அதன் காரணமாய் நேரே கிறிஸ்தவ தேவாலயத்தில் போய் அவர்களெல்லாம் தஞ்சமடைந்தார்கள். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங் களையும் பற்றி இவர்களெல்லாம் இப்பொழுது கவலைப் படாத நிலை. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே இவர்கள் இப்போது ஓடி எங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
-தாமரை (ஆகஸ்ட் 2006)

35
A
h: ר SY f དི་ JŽN28), */: 2. Y, M 2(/
* (\ כב
o p Ye4O16
கனகம் ஆச்சிக்கு நெஞ்சில் சளி பிடித்து இவ்வளவு நாட்களாய் படுக்கையில் கிடந்ததில், காலையில்தான் சீவனைவிட்டாள். இதனால் பக்கத்து வீடென்று அந்தக்கடமையை பெரிதாக நினைத்து, குணமும் ராக்கண் முழிப்புக்காய் அங்கு போக வேண்டியதாய் இருந்தது.

Page 25
36 அம்மாவுக்குத் தாலி
இரவு எட்டு மணிக்கு முன்னமே சாவீட்டுப் பந்தலில் அயலகத்து வீட்டிலுள்ள ஆண்களெல் லாம் வந்து ஒன்று கூடிவிட்டார்கள்.
இடையிடையே வர்ணம் பூசிய ஒலை இழைத்த, பனையோலைப் பாயிலே நான்கு ஐந்து பேர் அளவில் இருந்துகொண்டு சீட்டாட்டம் ஆடுகிறதற்கு பிறகு ஆயத்தமானார்கள்.
குணத்தையும் பந்தலடியில் பார்த்து “வாருமன் குணம் ஒரு ஆட்டத்துக்கெண்டாலும் வந்திருந்து விளையாடுமன்’ என்றார் தபால்காரர் இரத்தினம்.
‘என்னடா இது. பெரிய தொந்தரவு’ என்று நினைத்துக் கொண்டு.
“நீங்க விளையாடுங்கோ அண்ணை! நான் இருந்து பாக்கிறன்’ என்றான் குணம்.
அவர்களோடு சேர்ந்து அந்த விளையாட்டு விளையாடுவதிலிருந்து தான் தப்பினால் காணும் - என்றிருந்தது அவனுக்கு கடுதாசிக்கூட்டம் விளையாடுவதில் அவனுக்கு எப்போதுமே துளியளவும் விருப்பமில்லை.
“ஏனப்பா ஒரு ஆட்டத்துக்கு வந்திருமன். எல்லாருமா சேர்ந்து ஒருக்கால் விளையாடிப்பாப்பம் வாருமன்?.’ என்று ஊர் விதானையாரும் இப்படி அவனை அழைத்தார்.
“எனக்கெண்டா உடம்புக்கு ஒரு மாதிரிக்கிடக்கு. வயித்துக்குள்ளையும் அவ்வளவு சரியாயில்லை. சாடையான ஒரு குத்து வலியாக்கிடக்கு’ என்று அவரிடம் ஒரு பொய்யைச் சொன்னான் குணம். - - -
அவர் சிரித்துக் கொண்டு,

நீ.பி.அருளானந்தம் 37
“ஏன்ராப்பா செமியாக்குணமாய் வந்திட்டே உனக்கு. அப்பிடி இல்லாட்டா வேற என்ன ஒரு குத்து வயித் திக்கையெண்டிறாய். எல்லாட்டியடாப்பா பிள்ளைப்பெறு கிறதுக்காகக் குத்துதோ வயித்துக்கை?’ என்று நக்கலாகக் கேட்டார்.
“எப்பவும் தன்ரை தொழிலுக்கேற்ற கதையும் பரிகாசமும் தான் இவரிட்டயிருந்து வெளிப்படும்"
என்ற எரிச்சல் மிகுந்த எண்ணத்தை மனசுக்குள்ளே அடக்கிக் கொண்டு “இல்லையுங்கோ. நீங்கள் எல்லாரும் சேர்ந்து விளையாடுங்கோ நான் வரேல்லை.”
என்று மீண்டும் இவன் நல்லவிதமாக அவருக்குச் சொல்லி மழுப்பிவிட்டான். அதற்குப் பிறகு அவர்கள் சீட்டுக்கட்டி லுள்ள கடுதாசிகளில் சிலதை, உள்ளாலேயிருந்து எடுத்து மேலே வைத்துக் கலந்து விட்டுப் பிறிப்பதுவும் நடந்து முடிந்தது. கடுதாசி விளையாட்டுச்சமர், அவர்களிடம் ஆரம்பித்து வர வர சூடு பிடித்துக் கொண்டும் போனது.
சீட்டாட்டத்துக்கென்றே உரிய தனிப்பாஷையில் வைத்து அவர்களெல்லாம் ஒருவரோடொருவர் கதைத்தபடி செத்தவீட்டை மறந்துவிட்ட அளவுக்குக் கொட்டமடித் தார்கள்.
குணம் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து சீட்டாட்டத் தைப் பார்ப்பது போல மற்றவர்களின் பார்வைக்குத் தெரிய இருந்தான். ஆனால் அந்த விளையாட்டில் அவனுக்கு மனம் படியவில்லை.
அவன் எண்ணம் முழுவதும் தன் இளம் பிராயத்துச் சிந்தனைகளிலும், பிள்ளைப் பிராயத்து வண்ணங்களிலுமாக

Page 26
38 அம்மாவுக்குத் தாலி
நாட்டம் கொண்டது. அவற்றிலெல்லாம் தேவிதான் தேவதையாக அவனுக்கு முகதரிசனம் கொடுத்தவாறு இருந் தாள். அவளது அழகிய முகம் அவனுள்ளத்தில் நின்று நிலைத்திருக்க, தனித்ததாய் தேவியைப் பற்றிய பழைய சம்பவங்களையே, அவன் மனம் திரும்பத்திரும்ப மீட் டெடுக்கத் தொடங்கியது. அங்கே செத்தவீடென்று ஓரிருவர் அழுது கொண்டிருக்க, இவனது சிந்தனையோ அதிலே கவனம் போகாது காதல் வானிலே சிறகடித்துப் பறந்தது. செத்தவீட்டில் இவர்கள் மட்டும்தானா இப்படி..?
சுடுகாட்டுக்கு பாடைகாவிக் கொண்டு போகின்ற வனுக்கும், “நாளை வீட்டுக்குக் கறி புளி வாங்குகிறதுக்கு என்ன செய்கிறது’ என்ற நினைப்பு இருக்கும். அதைப்பற்றிய கவலையும் இருக்கும்.
சவம் எரிகிறபோதும் கூட சுடலையில் நிற்கிற ஒரு சிலருக்கு, வேலி பாய்கின்ற யோசனைகளிலும் மனம் போகும். இறப்பைப்பற்றி அதிகம் எந்த மனிதன்தான் இந்த இடத்திலும் இருக்கும் போதும் கூட சிந்தித்துக் கொள்கின்றான். மனிதன் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டுமென்பதை ஆழமாக எவன்தான் உணருகிறான். தன் நலத்தைத் துறக்கிறான். இந்த உலகில் இருக்குமட்டும், தங்கள் வாழ்க்கைச் சுகத்தில் மட்டும் தானே அனைவரும் கவனமாய் இருந்து கொள்கிறார்கள்.?
தேவி இங்கே கட்டாயம் செத்த வீட்டுக்கு வந்து சேருவா ளென்று குணத்துக்குத் தெரியும். இன்னுமாக அவள் கொழும்பிலிருந்து வந்து சேரவில்லை என்பதை, கனகம் ஆச்சியின் வீட்டிலிருக்கும் பொடிப்பயலிடமும் வேளைக்கே அவன் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தான்.

நீ.பி.அருளானந்தம் 39
அந்தப் பையன் கனகம் ஆச்சியின் சகோதரியின் பூட்டன். அவன் கனகம் ஆச்சியை என்ன உறவு முறை சொல்லி அழைக்க உரித்துடையவன், என்கின்ற இவையாதொன்றும் குணம் அறியான்.
பந்தலுக்கு வெளியாலே அங்கும் இங்குமாய் அவன் ஒடித் திரியவும் “தம்பி இங்கயொருக்கா வந்திட்டுப் போம் ராசா” என்று ஆதரவாக அவனைக் கூப்பிட்டு, தன் அருகில் நிற்கவைத்துக் கொண்டு கதையோடு கதையாய் அவனிடம், “தேவி மாமி இன்னும் வந்து சேரல்லையோ தம்பி செத்த வீட்டுக்கு” என்று கேட்டதில்,
“ராவைக்குத்தான் அங்கிள் தேவி அன்ரி வருவா. விடியப்புறம் ரெலிப்ோனிலை புனிதம் மாமியோடை கதைக்கேக்க அப்பிடித்தான் தேவி அன்ரி சொன்னவ’ என்று சொல்லியதோடு, “நான் வர்றன்" என்று சொல்லிக் கொண்டு அவன் முன்னாலே ஓடின. பொடியனைத் துரத்திக் கொண்டு தானும் அவனுக்குப் பின்னாலே ஓடி விட்டான்.
“கொழும்பிலையிருந்து இங்க வாறதெண்டால் நேரமாகுந்தான்’ என்று குணம் இப்பொழுதும் அங்கே இருந்து யோசித்தபடி இருக்க, திறந்து கிடந்த படலைக்காலே தேவி வருகிறாள் என்பது குணத்துக்குப் பிறகு தெரிந்தது.
“நடங்கடி கெதியாய் சுறுசுறுக்காய்.” என்று தனக்கு முன்னால் சென்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் உறுக் கிக் கொண்டு அவள் அவர்களுக்குப் பின்னாலே வந்தாள்.
‘பன்னிரெண்டு வருஷம் கழித்தும் பருவச் செழிப்பு சிறிதும் சிதையாமல் முன்னைய இளமையின் பசுமை இன்னும் உடலில் பரிமளிக்க இருக்கிறாள் இவள்’ என்று குணம் நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்க, அவளும்

Page 27
40 அம்மாவுக்குத் தாலி
முற்றத்தால் நடந்து வரும்போது விழி மலர்த்தி இவனையும் சில விநாடிகள் வடிவாகப் பார்த்துக் கொண்டு வந்தாள்.
விரித்த கடுதாசியும் கையுமாக இருந்த விதானையார், தேவி வந்திருக்கிறாள் என்பதையும் கண்டு கொண்டு விட்டார்.
“ஆச்சியின்ரை பேத்திமட்டும் தனியா வந்திருக்கிறா போலை கிடக்கு. புருஷன்காறன் வரேல்லையாக்கும்.’’ என்று அருகில் இருந்த எல்லாருக்கும் அந்தச் செய்தியை விசிறி விரிப்பாய்ப் பிடித்திருந்த கடுதாசிகளில் கண்ணோட்டம் விட்டுக் கொண்டு மெல்ல குசுகுசுத்தார்.
பந்தலைக் கடந்துபோய் வாசற்படியேறி அவள் விறாந்தையில் கால் வைக்க பல குரலில் அழுகைக் குரல்கள் அவளை வரவேற்பதுபோல் இருந்தன. அவளும் அவர்களுடன் சேர்து அழத்தான் செய்வாள் என்று நினைத்துக் கொண்டு, பெருங்கூட்டமாய் இரைச்சலிடுகிற சத்தங்களுக்குள்ளே அவளது குரலை மட்டும் தேடி காதுகளைக் கூர்மையாக்கினான் குணம்.
இன்னும் மாறாத அச்சுப்பிறழாத அவளது அந்தக் ‘குயில் குரலையும், அவர்களது குரல்களுக்குள்ளாக அவன் பிறகு கண்டு பிடித்துவிட்டான்.
தேவி, கனகம் ஆச்சிக்கு பேர்த்தி முறையானவள். அந்த நாளில் தறுதலை கெட்ட ஒருவனுக்கு கனகம் ஆச்சி தன் மகளை கலியாணம் செய்து கொடுத்துப் பட்ட பாடு போதும் போதும் என்று ஆகிவிட்டது. அவன் குடித்து வெறித்து, உள்ள சொத்துக்கள் நகை நட்டையெல்லாம் விற்று அழித்து கனகம் ஆச்சியினுடைய மகள் கமலத்தையும் தீரா நோயாளி ஆக்கிப்போட்டுத்தான் ஊரை விட்டே ஓடிப்போனான்.

பி.அருளானந்தம் 41
அதற்குப் பிறகு கமலம் சாகும் தருணத்திலும், இந்த வளர்ப்பக்கம் கூட அவன் தலை காட்டவே இல்லை.
கமலத்தை தவிக்க விட்டு அவன் போகையில், தேவி அப்பொழுது கைக்குழந்தை. ‘பேத்தியையும், வருத்தக்கார மகளையும் இனி ஆர்தான் பார்க்கப் போகினம்’ என்ற கவலையில், பிறகு கனகம் ஆச்சி தான் சீவியத்தை ஒட்ட ஒரு வழியும் தெரியாமல் வீட்டில் அப்பம் சுட்டு விற்க வெளிக்கிட்டாள். கனகம் ஆச்சி அப்பம் சுட்டு விற்று எல்லாருடைய சீவியத்தையும் ஒரு மாதிரியாக தாக்குப் பிடித்துக் கொண்டு போக, தேவியின் அம்மாவும் ஒரு நாள் காலமாகிவிட்டாள்.
இந்தக் கிழவீட்டையாய் ஒரு பெட்டைப் பிள்ளையை பொறுப்பாத்தந்திட்டு, பொசுக்கெண்டு இவள் போய்ச் சேந்திட்டாளே?’ என்று கிழவியும் கிடந்து கத்திக் கொண் டிருந்து விட்டு. ‘என்ர சீவன்போய்ச் சேருகிறதுக்குள்ள இந்தச் சின்னதை வளர்த்தெடுத்து ஒரு கரை சேர்த்திட வேணும்" என்று திட சங்கல்பம் எடுத்துக் கொண்டு, அப்பம் சுட்டு தொடர்ந்தும் வியாபாரம் செய்தாள்.
அப்பம் சுட்டு விற்று வருகிற வியாபாரம் கனகம் ஆச்சிக்கு ஒகோவென்றதாய்த்தான் பெரிதாக நடந்தது. ஆனால் அதி லிருந்து கிடைக்கின்ற லாபம்தான் மிகக்குறைவாயிருந்தது.
“நல்ல ருசியான பாலப்பம். கனகமாச்சி சுடுற அப்பம்’ என்று நாக்கை கழட்டி சொண்டை நக்கிக் கொண்டு எல்லாரும் கனமாச்சியிடம்தான் அப்பம் வாங்கிப் போக வந்தார்கள்.
அப்பக் கோப்பை மாதிரித்தான் கனகமாச்சியின் இதயம். வஞ்சகப் புத்தி சற்றும் இல்லாத பளிச்சென்றதாய் உள்ள

Page 28
42 அம்மாவுக்குத் தாலி
மனம் உடையவள் அவள். இதனால் சொற்ப லாபத்தை மட்டுமே தனக்கென வரும்படியாய் வைத்துக் கொண்டு, அப்பத்துக்கு தடித்த தலைப்பாலும் விட்டு, மொத்தமாகவும் சுட்டுச் சுட்டு அயலட்டையெல்லாம் அவள் விற்றாள்.
சின்னப்பிள்ளைகள் வீட்டுக்குவந்தால், அவர்களிடம் செல்லக் கதை கேட்டு அப்பத்தையும் சும்மா காசில்லாமலும் அவர்களுக்குச் சில வேளைகளில் அவள் தின்னக் கொடுப்பாள்.
பேர்த்தி தேவி வளர்ந்து கொண்டு வருவதை கனகம் ஆச்சியால் தடைபோட முடியுமா?
பெண்ணின் வளர்த்தி பீர்க்குக் கொடிமாதிரி துரிதவளர்த்தி என்பார்களே அது தேவியின் விஷயத்திலும் பொருத்தமாய்த்தான் இருந்தது. அவள் வளருகிற வளர்த்திக்கு போடுகிற அரைப்பாவாடை சட்டைகளெல் லாம் குட்டையாய்த்தான் வந்தன. அவள் வளருகின்ற சுறுக்குக்கு பாவாடை சட்டைகளென்று தேவையான ஆடைகளைத் தைத்துக் கொடுக்க துணியெல்லாம் வாங்க, கிழவியால் இயலவில்லை. இதனால் தங்களது நசிக்கிப் பிழியும் வறுமையை நினைத்து கிழவிக்கு மனவருத்தமாகவே இருந்தது.
குணத்தின் வீடும் வாயுக்கும் கையுக்குமாக வாழுகின்ற கஷ்டப்பட்ட வீடுதான். நான்கு சகோதரிகளுக்கும் பிறகு, கடைக்குட்டியாகப் பிறந்தவன்தான் இவன். இந்த வீட்டில் தகப்பனில்லாத குடும்பத்தின் பொறுப்பு முழுவதும் மூத்தவள். தலையில்தான் சுமத்தப்பட்டிருந்தது. கச்சேரியிலே அவளுக்கு டைப்பிஸ்ட்வேலை. அவளது சம்பாத்தியத்திலே தான் குடும்பம் முழுவதும் கஞ்சி குடிப்பு.

நீ.பி.அருளானந்தம் 43
அக்காமார்களைப் பார்த்துப் பார்த்து அவர்களுட னேயே பேசிப்பழகி சிரித்து விளையாடிக்க கொண்டிருந் ததில், குணத்திற்கு பெண்பிறவிகளிடத்தேதான் அன்பும் இரக்கமும் அதிகமாய் இருந்தது. அடுத்த வீட்டுத் தேவி என்பவளிலும் அப்படித்தான் இவனுக்கு நேசமும் ஏற்பட்டது. இடையிடையே குணம் வீட்டுக்குத்தான் அவளும் தாயம் விளையாடவென்று வந்து போவாள். குணத்துடனும் அவனுடைய சகோதரிகளுடனும் தாயம் விளையாடுவது தேவிக்குப் பொழுது போக்காய் இருந்தது.
ஒவ்வொரு நாளும் பின்னேரவேளையில் இவர்களெல் லாம் தாயம் விளையாட குந்திவிடுவார்கள். இரண்டு பேர் ஆட்டத்தில் சேராது காத்திருக்க மற்றைய நான்கு பேரும் சேர்ந்து தாயம் விளையாடுவார்கள். பிறகு அடுத்த ஆட்டம் தொடங்குகையில், காத்திருந்த இரண்டுபேரும் இணைந்து கொள்வார்கள். இப்படியே ஆள்மாறி ஆட்டம் ஆடி, பொழுது படவே தாய விளையாட்டு முடியும்.
தாயம் விளையாட குந்தி இருந்தால் அரைப்பா வாடையை கையால் இழுத்திழுத்து விட்டு, தொடையை நெடுகலும் மறைத்துக் கொண்டிருக்கும் செய்கையில்தான் தேவி கவனத்தோடு இருப்பாள்.
பொன் போல சுட்டு பக்குவமாக சட்டியால் எடுத்த குத்துப்பச்சரிசிமா அப்பத்தின் நிறம் போலத்தான் அவள் மேனி அவள் தன் பாவாடையை இழுத்து விட்டு சரி செய்து கொள்ளும் விதம், ஒரு பறவை தன் இறகுகளை சொண்டால் செவ்வையாய்க் கோதி, சரி செய்து விடும் செய்கையினைப் போலவே குணத்துக்கும் அது அழகாய்த் தெரியும்.
குணத்திற்கும் தேவிக்கும் நடுவே வயதிலே பெரிய இடைவெளியில்லை. தேவியை விடவும் குணம், மூன்று

Page 29
44 அம்மாவுக்குத் தாலி
வயதினாலேதான் மூத்தவன். சில நேரங்களில் குணத்தின் சகோதரிகள் தாயம் விளையாடாமல் விட்டு, தங்கள் வீட்டுச் சோலிகளில் மூழ்கிவிடும்போது, இவனும் தேவியும்தான் தனியே இருந்து கொண்டு அங்கே தாயவிளையாட்டை விளையாடுவார்கள்.
குணத்துடன் சேர்ந்து தாயம் விளையாடும்போது தேவி ஒரு நிலையில் நிலத்தில் இராள். கால்களை பக்கவாட்டில், மடித்து வைத்துக்கொண்டு, கையையும் ஒரு பக்கம் ஊன்றியபடி சரிந்திருந்தவாறு, மற்றக் கையால் கட்டைகளை இரண்டு தடவைக்குப் போட்டாளென்றால், அடுத்த தடவைக்கு காலைமடித்து நேராக இருந்து கொண்டுதான் கட்டைகளை உருட்டுவாள்.
காய்களுக்கு ஓட்டமில்லாமல் தடைபட்டுப்ப்ோய், தாயம் போடவேண்டிய நெருக்குவாரத்தில் இருக்கும்போது.
“சனிப்பிடிச்ச தாயம் சரியான நேரத்துக்கு விழுந்து துலைக்குதில்லை. மட்டம்மட்டமா கப்பறை கப்பறையா விழுந்தெல்லே தரித்திரப்பாடாய் இருக்குதெனக்கு.’ என்று அந்தரப்பட்டுக் கொண்டு இருப்பாள்.
குணத்துக்கு சில வேளைகளில் தாயக்கட்டைகள் வாய்ப்பாக விழுந்துகொண்டிருக்கும்.
“ஈரெட்டு, இருச்சோனாலு, மூவாறு, இருத்தாயம், ஒரஞ்சு என்று சொல்லிச் சொல்லி விடாமல் தாயக்கட்டை களை உருட்டி ‘பா’நாலு என்று சொல்லி முடித்துத்தான் மூச்சை உள்ளுக்கு இழுக்கும் அளவுக்கு அவன் இருப்பான்.
ஆட்டம் இழக்காமல் இப்படி அவன் எண்ணிக் கொண்டிருக்க அவள் முகம் அழுவார் மாதிரிப் போய் விடும்.

நீ.பி.அருளானந்தம் 45
ஆனால், குணத்துக்கு இப்படி விழுவது மாதிரி கட்டை கள் உருண்டு அவளுக்கு வாய்த்து விட்டால், மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவரக்கூடியதாகவும் அவள் சிரித்திருப்பாள்.
படிக்கின்ற காலத்தில் இப்படியாகத்தான் அந்தத் தாயவிளையாட்டினாலே, தேவிக்கும் குணத்துக்குமிடையில் ஒரு நெருக்கமான அன்பு வளர்ந்தது. ஒரு நாள் கூட குணத் தைப் பார்க்காமலும் கதைக்காமலும் இருக்க தேவியாலும் முடியவில்லை, குணத்துக்கும் அதைவிடப் பெரிய பாடுதான். அவனும் பள்ளிக்கூடத்தால் வந்ததும் ‘எப்போது அவள் வீட்டுக்கு வருவாள் வருவாள்’ என்று அவளது முகதரிசனம் காணமட்டும் சாதகப்பட்சி போல் காத்துக்கிடப்பான்.
அவளைப் பக்கத்தில் வைத்திருந்து பார்த்து மகிழ தாயவிளையாட்டுத்தான் கைகொடுக்கும் என்பதால் அங்கு அவள் வந்தவுடனே.
“தாயம் விளையாடுவமா தேவி’ என்று கேட்பான். ಟ್ವಿಟ್ಲ್ಲೆ: கண்களில் உள்ள ஏக்கத்தைப் பார்த்துவிட்டு
ரித்துக் கொண்டே தேவியும்.
“ஓம் விளையாடுவம்’ என்பாள். அப்போது அவளுள் பெளர்ணமி நிலாக்குளிர்ச்சி பாய்ந்து பரவும். பூப்பூவாய்ப் பூத்து மனசும்அவளுக்கு பூவனமாய்ச் சிலிர்க்கும். தேவி சிரித்தால் சொக்கையில் பல்லாங்குழிமாதிரி சிறு பள்ளமொன்று விழும். அதைவிட செவ்வந்திப்பூ சந்தன நிறத்தில் சிரிக்கின்ற அதன் அழகும் அவளிடம்.
‘அது இவளுக்குத்தான் எவ்வளவு முகவசீகரத்தைக் கொடுத்திருக்கு’ என்கிறதாய் குணம் எண்ணி வியப்பான்.
“பூ மலர்வது போன்ற புன் சிரிப்பிலே அவள் முகம் மலர்வதை அவன் பார்த்து இரசிப்பான்.

Page 30
46 eiharajit Tas
இப்பொழுது குட்டைப் பாவாடைகளையெல்லாம் தேவி போடுகிறதில்லை. குணத்தின் சகோதரிகள் போட்டுக் கழித்த சட்டைகளையெல்லாம் அவளுக்குக் கொடுப்பதால் மாறிமாறிப் போட பல சட்டைகள் அவளிடமாக இப்போது இருக்கின்றன.
༽ “இப்ப எங்கடை வளத்திக்கு கிட்டத்தட்ட தேவியும் வந்திட்டாள். இப்ப நாங்கள் குடுக்கிற சட்டையெல்லாம் அவளுக்கெண்டே அளந்து தைச்சது மாதிரி கணக்காய் இருக்கு’ என்கிறதாய் சகோதரிகள் கூடிக் கதைக்கவும் குணமும் அதைத் தன் காதால் கேட்டு விட்டான்.
அப்படி அக்காமாரெல்லாம் சொன்னதற்குப்பிறகு. அவனுக்கும் இப்பொழுது அவளைப்பார்க்கையில் வியப்புத்தான்.
கொழுகொம்பைத் தேடும் கொடி போல செளந்தர்யப் பொலிவு காட்டும் அவளது முக்கிய அங்கங்கள் சட்டையை முட்டிக்கொண்டு உள்ளாடை மறைப்பை வேண்டி நிற்பதாக அவனும் காண்கிறான்.
துள்ளுகின்ற குழந்தைப் பருவமும் துளும்புகின்ற கன்னிப் பருவமும் சேர்ந்தது போன்றுள்ள அவளைப் பார்க்கும் போதெல்லாம் இப்போது இவனுக்கு ஒரு போதை மயக்கமாக இருக்கிறது.
இதற்குள்ளே அந்த மாதம் தீபாவளிப் பண்டிகையும் வந்தது.
பண்டிகைக்கு முதல் நாள் குணத்தின் வீட்டில் வந்து குடும் சுவையுமான புதிதான பலகாரங்களை சாப்பிட்டுப் போனவள்தான் தேவி. அதற்குப் பிறகு இரண்டு நாட்களாக குணத்தின் வீட்டுப்பக்கமாக தேவி வருகிற சிலமனைக்

நீே.பி.அருளானந்தம் 47
காணவில்லை. தேவி அங்கு வராததால் இந்த இரண்டு நாட்களும் தவித்துப் போய்விட்டான் குணம்.
“அவள் ஏன் வரவில்லை? ஏன் வரவில்லை?” என்ற கேள்வி அவன் மனதை இடைவிடாமல் துளைத்துக் கொண்டே யிருந்தது. V
‘இனிமேலையா அவள் இங்காலைப்பக்கம் வராம விட்டிடுவாளோ?’ என்பதாய் நினைத்துப்பார்க்க அவனுக்கு அழுகையே வந்து விடுமாப்போலும் இருந்தது.
இந்த இரண்டு நாட்களும் பள்ளிக்கூடம் முடிந்து வந்து வீட்டில் இருக்க இருப்புக் கொள்ளாமல் அவன் தவித்தான். ஒரு மோப்ப நாயைப் போல அவன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்தான்.
இளங்கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெழுகப் பட்டிருந்த விறாந்தையில் வெள்ளை நிறச் சோக்கால் கீறி வைத்திருந்த தாயக் கோடுகளை புத்தகத்தை விரித்து வைத்திருந்தவாறு பின்னேர வேளையில் அவன் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். - r
வீட்டுக் கோடிப் புறத்திலுள்ள நாவல் மரம் நன்றாகப் பழங்கள் பழுத்ததால் நிலத்தில் சொரிந்து கிடந்தன. மரத்தின் இலைப்படுக்கையின் கீழ் நல்ல நிழல் குளிர்ந்திருந்தது. இவன் அந்தப்பக்கமாக போய்நின்று கொண்டு, விரல் நுனிகளிலே தன் உடற் பாரத்தை ஏற்றி குறுக்கு வேலியால் அங்காலே எட்டிப் பார்த்தான். பிறகு உதிர் கனிகள் பொறுக்குமாப் போல நின்று, குனிந்து நிமிர்ந்தபடி கனகம் ஆச்சி வீட்டுப் பக்கமாக, பார்த்துப் பார்த்து இவனும் சோர்ந்து போனான். அந்த நேரம் வீசிய கீழ்க்காற்று, அங்குள்ள நிலவடலி ஒலைகளை அசைத்து பேய் இரைச்சல் எழும்ப வைத்தது. அந்த இரைச்சல் சப்தம் அவன் மனதில் இனந்தெரியாத

Page 31
48 அம்மாவுக்குத் தாலி
சோகத்தைக் கிளர்த்தியது. அவளைக் காணாத ஏக்கத்தால் அவனது மனம் தவித்துத் தவித்து உழன்றது.
அமாவாசை கழிந்து அன்று இரண்டாவது நாள். ஆகா யத்தில் துளிர்த்திருந்த நட்சத்திரக் கொத்துக்களின் துல்லிய மான வெளிச்சக் கீறல்கள் வாள் வீச்சுகளாக மின்னின.
விளக்கிக் காட்டவோ விவரித்துகி கூறவோ ஒண்ணாத இயற்கையின் எண்ணற்ற ஒலிகள் இராவின் இன்னிசையாய் ஒலித்துக்கொண்டிருந்தன. குளிர்ச்சியான அந்த ராப்பொழுதிலே வெண் சங்கிலே உள்ள கதிர்காமத்து விபூதியைப் பூசி முருகனைக் கும்பிட்டு விட்டு வந்து,
“தம்பி தாயம் விளையாடுவம் வாருமன்’ என்று பெரியக்கா குணத்தைக் கூப்பிட்டாள்.
“எனக்குப் படிக்கக் கணக்கக் கிடக்கக்கா’ என்று சொல்லி குணம் சறுக்கப் பார்த்தான்.
“என்ன புதுசாய் இப்ப கணிசமான திருத்தம் தம்பீயிலை வந்திருக்கு ரெண்டு நாளா விளையாட்டேயில்லாம ஒரே புத்தகப் படிப்பாயிருக்கு. என்ன விசயம்?’
சொல்லிவிட்டு அவள் சொண்டுக்குள் சிரித்தாள். அக்கா சொல்லிவிட்டு எதை நினைத்துக் கொண்டு சிரிக்கிறாள்? ரகசியத்தைப் புரிந்து வைத்த பூடகமான சிரிப்பாயிருக்குமோ?
அந்தக் கள்ள மனம் ஒரு பக்கத்தில் ‘பக்குப்பக்கு’ என்று அடிக்கத் தொடங்கியது குணத்திற்கு.
"இல்லக்கா ஒரு ஆட்டம் விளையாடுவம்’ குணம் சமாளித்தான். குணத்துக்கு நேரே மூத்தவளாய் இருக்கும் சகோதரியை மட்டும்.

நீ.பி.அருளானந்தம் 49
“நீர் இந்த ஆட்டத்துக்கு மட்டும் பொறுத்திரும். அடுத்த ஆட்டத்துக்கு நீர் சேரும்’ என்று பெரிய அக்காள் சொன்னாள்.
பிறகு மூன்று அக்காள்மாரும் தாயக் கோட்டின் மூன்று மனைகளுக்கும் நேராக இருந்து கொண்டனர்.
ஒரு மனைக்கு நேராக குணம் இருந்து கொண்டான்.
‘அவளைக் காணவில்லையே' என்ற துயரம் அப்போது அவனை வாட்டியது. மனையிலுள்ள காய்களை தோய் வதற்கு தாயக்கட்டைகளை எல்லாரும் உருட்டிப் போடுகிறார்கள்.
“இந்தா ஒரு தாயம் விழு” என்று கேட்டுக் கொண்டு கையைச் சுழற்றி தாயக்கட்டைகள் நிலத்தில் ‘புரண்டெழப்’ போடுகிறாள் பெரிய அக்காள்.
கட்டைகள் புரண்டு நிலைத்துக் கிடந்து மூன்று எண்களைக் காட்டுகின்றன.
அதற்குப் பிறகு நடுவில் அக்கா கட்டைகளை உருட்டிப்பார்க்க ‘இரண்டுதான்’ அவளுக்கும் வந்தது.
“தெண்டு தெண்டு. இப்பிடியே தோயாம இருந்து கொண்டு தெண்டு’ என்கிறாள் எரிச்சலாக
மூன்றாமவள் முதல் தரமே உருட்ட "தாயம் விழுகிறது. இரண்டு கட்டைகளையும் இருவிரல்களிடையே இணைத்தெடுத்துத் தூக்கி எல்லாருக்குமாகக் காட்டி “பாருங்கோ வடிவாப்பாருங்கோ. தாயம். தாயம் விழுந்திருக்கு’ என்று சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு.
மீண்டும் தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறாள். “அவளுக்கு லக்'

Page 32
50 அம்மாவுக்குத் தாலி
நாலும் எட்டும் விழுந்தாற் பிறகு “இரண்டு’ எண் கடைசியாக விழுகிறது.”
“மூண்டு காயும் தோய்ந்தாச்சு’’ என்று பெரிதாகச் சொல்லிக் கொண்டு, முக்கோண வடிவுள்ள மனையை விட்டு காய்களை கீழே உள்ள சதுரத்துக்குள் நகர்த்தி அவள் வைக்கிறாள். பிறகும் ஓட வேண்டிய இரண்டு எண்களுக்காகவும், காயை அதிலிருந்து கணக்குப் பண்ணி எடுத்து அவள் வைத்தாள்.
“தோயிறது. தோயிறது. எண்டத்தான் எங்கடை தேவிப்பெட்டை சமஞ்சது ஞாபகம் வருகுது. தேவிக்கு நேற்றைக்கு குப்பைத் தண்ணி வார்த்தாச்சாம், எடி அவள். அப்பக்காற ஆச்சியின்ரை சீலையைப் பிடிச்சுக் கொண்டு தொங்கிக் கொண்டு திரிஞ்சவள் இப்ப பெரிய மனிசியாயிட் டாள். ம். நல்லதுதான். அந்த ஆச்சியும் அவளின்ரை உடம்புவாகுவைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டுதான் திரிஞ்சவ. இவளென்ன நாளைத் தள்ளிக் கொண்டு போறாள் பிள்ளையெண்டு. இப்ப - இப்ப கிழவிக்குப் பெரிசா சந்தோஷமாயிருக்கும்.”
பெரிய அக்கா முகம் முழுக்கபூரிப்புடன் சொல்லிவிட்டுச் சிரிக்க மற்ற அக்காமாரும் அவளுடன் சேர்ந்து நன்றாகச் சிரிக்கிறார்கள். தம்பியை அவர்கள் இந்தக் கதைக்குள்ளே கணக்கெடுக்கவில்லை. மகளிர் மட்டும் என்ற அளவில் தங்களுக்குள்ளே நடக்கும் கதையில் தம்பியை சேர்த்துக் கொள்ளாதது போல் இருந்து அவர்கள் மட்டும் இந்த விஷயத்தைக் கதைத்தார்கள்.
“ம். பெட்டை பெரிசாயிட்டாள். பாவம் ஒருவரு மில் லாம தனியாளா ஒரு பக்கம் மூலையில இருக்கப் போகுது.” என்று பெரூமூச்சு விட்டபடி சொன்னாள் பெரியக்கா.

நீ.பி.அருளானந்தம் 51
இந்தக் குடும்பத்தின் பொறுப்பு முழுவதையும் தன் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு சுமக்கின்றவள் அவள். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அதனால் அனுபவித்துப் பக்குவம் அடைந்தவள் அவள். இதன் காரணமாக தேவியையும் அவள் நினைத்துப்பரிதாபப்பட்டாள்.
அவள் அப்படியெல்லாம் கதைக்கும் போது தாயம் விளையாடுவதும் அவர்களிடத்தில் தடைப்பட்டது. குணத்தின் முறைதான் இந்த முறை கட்டைகள் உருட்டுவது என்பதால் அவர்களின் கதையைக் குழப்பாமல் தாயக் கட்டைகளை கையில் வைத்துக்கொண்டு அவற்றை நிலத்தில் தட்டி தாளம் போட்டவாறு அவனும் தலையைக் குனிந்திருந்தபடி யோசித்துக் கொண்டிருந்தான். அவர்களின் இந்தப் பேச்சுகளெல்லாம் அவன் இதய நிலத்தில் தூவிய விதைகள் போல் வீழ்ந்தன.
“இனி இந்த வீட்டுப்பக்கமாய் அவள் வருவாளா..? வந்தாலும் என்னோடை முந்தியது மாதிரிக் கதைப்பாளா..?” என்கின்ற மனவருத்தத்தில் அவன் இருந்தான்.
இதற்குப் பிறகு தாயம் விளையாடுவதில் மனம் ஒண்ணாததால் ஏதோ கடமைக்கு அவ்விடத்தில் இருந்து அவர்களுடன் அந்த ஆட்டத்தை அவன் ஆடி முடித்தான்.
அடுத்த நாள் விடியலில். உதயத்தின் ஒளி படர்வதற்கு இனி ஒரு நிமிஷமோ இரண்டு நிமிஷமோ என்றிருக்கும். அந்த நேரம் நித்திரை விட்டெழுந்து, ‘இன்றையோடு அவள் இந்த வீட்டுப் பக்கம் வராமல் விட்டு ஒரு மாசம் முடியுது
என்று அவள் வராத நாட்களை நினைத்து கணக்குப் பார்த்து கவலைப்பட்டுக் கொண்டு, பிறகு நேரம் செல்லவும் பள்ளிக்கூடம் போனான் குணம். இந்த வருடம் ஏ.எல்.

Page 33
52 அம்மாவுக்குத் தாலி
பரீட்சையும் நடைபெறுவதற்கு, நாள் கிட்டியதாகிவிட்டது என்ற கவலையும் அவனிடம் இல்லாமலில்லை.
பள்ளிக்கூடத்தால் பின்னேரம் வந்து அக்கா எழுதிக் கொடுத்த சாமான் பட்டியலையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு அவன் சயிக்கிளிலே கடைத்தெருவுக்குப் போனான். அங்கே கடை ஒன்றில் எல்லாப் பொருட் களையும் வாங்கி கரியரில் கட்டிக் கொண்டு, வேளைக்கு அவன் வீட்டுக்குத் திரும்பினான். சயிக்கிளை “ஸ்ரான்டில்’ நிறுத்திவிட்டு கயிற்றை அவிழ்த்து கரியரிலிருந்து பையைத் தூக்கி எடுத்துக்கொண்டு தலைவாசலுக்குள்ளாலே போக. விறாந்தையில் தேவி இடையை துவள விட்டவாறு ஒயிலாக நின்றாள். எப்பூவினையும்விட அந்த மெலிவுக்கும் மெலிவான ரோஜா இதழாய் அவள் இருந்தாள். பனிச்சுமை தாங்காத பூவாக அவள் குலுங்கினாள். மலர்ச்செடி அசைகிறமாதிரி ஒரு மென்மை நளினம் அவளிடம் தெரிந்தது.
குணம் அவளை முழு விழியாய் அழுந்திப் பார்த்தான். அந்தப் பார்வை துளைக்கவும் அவள் திணறினாள். திணறல் இன்பமான திணறல். மூச்சுமுட்டியதிணறல். மயக்கமூட்டிய திணறல். உடனே பாளை விரித்தது போல் பளிச்சென்று சிரித்தாள் தேவி. அவளது மனதுக்குள் புகுந்த சந்தோஷம் இமைச் சிறகை படபடக்க வைத்தன.
பழைய தேவியா இவள்? என்று எண்ணி வியந்தவாறு தலையிலிருந்து கால்வரை அழகு மிளிரும் அவளது கவர்ச்சிகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும் என்று நினைத்தான் குணம். அவனது கலைக் கண்கள் அவளது அழகின் பலவிதத் தோற்றங்களையும் கண்டு களிக்கத் துடித்தன.

நீபி.அருளானந்தம் 53
y இந்த முப்பது நாளுக்குள்ளே அவளிடத்தேதான் எத்தனை எத்தனை அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன?
முன்பு இருந்த மஞ்சள் முகம் ரோஜா மலர்போல் சிவத்தது எப்படி?
கண்களில் அந்தச் சந்திர ஒளி எப்படி வந்து புகுந்தது?
கன்ன உச்சிப்பக்கமாக கூந்தலிலே ஒரு வளைவுஇதழ்களிலே ஒரு விரிவு-புருவத்திலே ஒரு ஏற்றம் இந்த அங்கங்களின் வளைவு நெளிவுகளையெல்லாம் கச்சிதமாய் மாற்றி அமைத்திருக்கும், பெண்மைக்களித்திருக்கும் அந்தப் பெருங்கொடையை என்னென்று வியப்பது என்று அவன் கவி மனம் உள்ளே மெளனமாகக் கவிதை பாடியது. குணத்தைப் புதிய சொந்தத்துடன் பார்த்து உணர்வுகளைச் சீண்டுகிற சலங்கைச் சிரிப்புச் சிரிக்கிறாள் அவள். .
அது மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த மோகச் சிரிப்பு. இவன் அவள் சிரிப்பதைப் பார்த்து கற்சிலை போல செயலற்று நிற்க, அவள் அவ்விடம் நின்று தலைப்பின்னலை வைத்து கையில் பிடித்தபடி சிட்டாகப் பறந்து விட்டாள். செல்லும்போது அவளிடமிருந்து செவ்வந்திப்பூ மணம் மிகுந்த காற்று வீசியது மாதிரியானதொரு உணர்வு எழுந்தது குணத்திற்கு, W.
நாளை அவள் வருவாளா, வருவாளா? என்ற நெஞ்சைச் சுடும் நினைவுகளோடு அன்று இரவுபடுக்கைக்குப் போனான் குணம். குழந்தைகள் பால் புட்டியை இறுகப் பற்றிக் கொள்வதுபோல, படுக்கும்போதும் அவள் நினைவாக அந்தத் தாயக் கட்டைகளை அவன் கைக்குள்ளே இறுகப்பற்றி வைத்துக் கொண்டு படுத்தான். ஆனாலும் அன்று இரவு அவனுக்கு தூக்கம் தூரமாயிற்று.

Page 34
54 Oriharajig Ts)
அடுத்த நாள் மாலை மயங்குகிற வேளையில் குணத்தின் வீட்டுக்குத் தேவி வந்தாள்.
மூத்த அக்கா கைக்குள் ஒரு பொருளை பொத்திப் பிடித்தபடி அவளிடம் வந்து
“இந்தாரும் பொம்பிளை உமக்கொரு பிறசண்ட்’ என்றதும். விழிமலர.
“என்னக்கா. என்னத்துக்கு அக்கா பிரசண்ட் தாறியள்?” என்று குழந்தைக்குரிய ஆர்வத்தைக் காட்டியபடி மகிழ்ச்சியுடன் அவள் கேட்டாள்.
“இது உமக்கெண்டால் போட நல்ல வடிவாயிருக்கும். ஒண்டுமில்லாத முண்டச்சியாயிராம இதையெண்டாலும் போட்டிரும்.ம் என்னட்டக் காசிருந்தா ஒரு கூட்டம் காப்பே செய்தருவன். என்ன செய்யிறது." சொல்லிவிட்டு அக்கா அதைக் கொடுத்தாள்.
அதைக் கையில் வாங்கிப்பார்த்த வேளை இவள் "அக்கா.’’ என்று ஆழமாகவும் பாசமாகவும் அழைத்த தொனியிலேயே தேவி நன்றியைச் சொல்வது போல குணத்துக்கு இருந்தது.
அவள் மெட்டியை அதிலேயே வைத்து காலில் போடும் போது இவள் அவளது மருதாணியிட்ட காலைப் பார்த்தான். பூக்களை எடுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளும் சுகத்தைவிட அவளது கால் பாதங்களை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டது அவன் மனம். இருவருக்கும் இடை யில் இருந்த இந்த ஆசைகள் வளர்ந்து கிளைவிட்டுப் பூத்துக் காய்த்து பழமானதுமான பருவத்துக்கும் பிறகு வந்துவிட்டன. இருவரும் தமது உள்ளத்திலிருப்பதை வெளிப்படை யாகச் சொல்லமுடியாத தவிப்பிலே இருந்தார்கள்.

நீ.பி.அருளானந்தம் 55
வருடங்கள் அலைகளைப் போல ஓடின. ஒடிக்கொண்டு மிருந்தன. குணம் அளவான படிப்போடு வேலை தேடித் திரிந்தான். சகோதரிகளின் திருமணக் கவலை அவனது நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது
குணத்தையே நினைத்து நினைத்து தேவி மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தாள். காதல் மயக்கத்தில் கண்களை மூடும் போதெல்லாம் குணத்தையும் தன்னையும் மன வறையில் இருக்கவைத்து கனவுகளைக் கண்டுகொண்டிருந் தாள். நாச்சியாரின் கண்ணன் மீதான கைத்தலம் பற்ற கனவு காணும் நிலைமையிலேயே இவளும் கனவு கண்டு கொண்டிருந்து, அந்தக் கனவுகளோடு பொங்கிச் சிரித்தாள். இந்த உலகில் உண்மைக் காதல் ஒன்றே இன்பம் இன்பம் என்று நினைத்து, இன்பத்தில் திளைத்திருந்தாள்.
கனகம் ஆச்சிக்கோ கை நடுக்கம் அதிகமாகிவிட்டது. கண்பார்வையும் கிட்டத்தில் ஏதோ நிழல் தட்டும் என்ற அளவுக்குப் போய்விட்டது. இதன்பிறகு சில நாட்களாய் அப்பமாவை சட்டியிலூற்றி சிலாவும் போது, சட்டியும் பல முறை கைதவறி கீழேயும் சாம்பலில் விழுந்து விட்டன.இதற் குப் பிறகு அப்பம் சுட்டு விற்கிற வியாபாரம் சுகப்படும் என்ற நம்பிக்கை கனகம் ஆச்சியிடம் அறவே ஒழிந்தது. இதனால் உறவுக்கூட்டம் வேப்பிலை அடித்த வார்த்தை களைத் திணிக்க, தேவியைப் பேசி வந்த சம்பந்தங்களில் “இந்தச் சம்மந்தம் அதுக்குள்ளயெல்லாம் திறம்தான்’ என்று தன் நிலைமையையும் பலமுறை யோசித்துப் பார்த்து, திடீரென ஒரு நாள் கனகம் ஆச்சியும் ஒரு முடிவெடுத்து விட்டாள்.
தேவியின் கலியாணத்துக்கு அடுக்குப்பண்ணி நாளும் குறித்தாகிவிட்டது. தேவி இந்த அடுக்குகளையெல்லாம்

Page 35
56 அம்மாவுக்குத் தாலி
பார்த்து நடுநடுங்கிப் போனாள். இதனால் வாடிக்கருகிப் போன சோளப்பயிராய் அவள் லட்சணமும் குன்றினாள். தன்னை வேர்கள் பாதியாயிருக்க முறிய முறியப் பிடுங்கி, இடம் மாற்றுவதாக நினைத்து மிகவும் அவள் மனவேதனைப்பட்டாள்.
குணத்தின் சகோதரிகளெல்லாம். “உனக்கு நல்ல சுழியடி நீ நல்ல அதிஸ்டக்காரி. லக்குக்காரி.’’ என்று சொல்லச் சொல்ல அவள் அம்புபட்ட பறவையாக மனசுதுடிக்க, மருகித்தவித்தாள். அவளுக்கு அழுகையே வந்து விடுமாப்போல் இருந்தது. அவர்கள் சொல்வதைக் காதில் கேட்க விருப்பமில்லாமல், அந்த இடத்தை விட்டு விருட்டென ஓடி அவள் தன் வீட்டுக்குச் சென்றுவிட
“வெக்கப்பட்டுக் கொண்டு ஓடிட்டாள் பெட்டை’’ என்று குணத்தின் அக்காமாரெல்லாம் நினைத்துக் கொண்டார்கள். ஆனால், தேவி தன் விதியை நினைத்து, வெடித்துச் சிதறுகிற அழுகையோடு இடியேற்றுச்சாய்ந்த மரம் போல் கட்டிலிலே போய் விழுந்தாள். கண்ணிர் சரிந்த குடத்துத் தண்ணிராகச் சிந்தி தலையணையை நனைத்தது. ஏக்கப் பெருரூமூச்சு பாலைவனத்து உஷ்ணக் காற்றைப் போல், வெப்பமாக அவளிடமிருந்து வெளியேறியது.
தன் காதல் கைகூடாமற் போனதை நினைத்து நினைத்து, உயிரே இற்று விட்டதைப் போலானாள் அவள். கவலை என்பதே என்ன என்று அறியாத அவள் மனசை, கரையான் அரிப்பது போல் அவனுடைய நினைவு ஒரு பக்கம் இருந்து அரித்துக் கொண்டேயிருந்தது.
அந்த வருடமும் வழமை போல் அந்த நாவல் மரம், சிலிர்த்துக்காய்த்துப் பழங்கள் பழுத்து நிலத்தில் சொரிந்து கொண்டிருந்தன. உருண்டுதிரண்ட கரு நாவற்பழங்களும்,

நீ.பி.அருளானந்தம் 57
செங்காய்களும் குறைவின்றி கிளைகளில் எங்கும் குலுங்க விளங்கின.
மரத்துப்பழங்களையெல்லாம் பலவகைப் பறவைகள் வந்து தின்றுகொண்டு தமது மதுரவாத்திய இசையை கூட்டிக்கொண்டிருக்க, அந்தத்தனிக் குயில் மட்டும் தன் துணையைத்தேடிச் சோகமாகக் கூவிக் கொண்டிருந்தது. குயிலினது வாய்விட்டு அலறும் வருத்தம் எல்லா இடத்திலும் சூழ்ந்தது. குடைபோல கிளைகவிழ்ந்து நின்ற அந்த மரநிழலுக்குள்ளே, அவனும் தனியனாய் அதிலே நின்றுகொண்டிருந்தான். இன்றுமட்டும் துணிச்சலாக தனியே அவனைத்தேடி அங்கு போனாள் தேவி.
மரத்தடியை நோக்கி நடக்க நடக்க, கால்கள் பின்னி ஒரு தளர்ச்சி ஏற்பட்டது அவளுக்கு. பூமிக்கடியில் மூச்சை மறந் திருப்பதான நிலையில் இருக்குமாப்போல, உடல் உறுதியற்று கைகாலும் சோர்ந்து போனது மாதிரி அவளுக்கு இருந்தன.
அந்தத் தரையில் முளைத்துக்கிடந்த ஒட்டுப்புற்கள் கால்களில் ஒட்டியதும், ஈக்குப்போல தண்டுகளை நீட்டி நின்ற நாயுருவி ஒட்டுக் காய்களை சட்டையில் சடைசடை யாய்ப் பதித்ததையும் கவனியாது, இழப்பு என்கிற அந்த ஒரேயொரு வேதனை உணர்வைமட்டும் மனத்தில் தாங் கியபடி, உணர்ச்சியற்ற அளவிலே செதுக்கின மரப் பொம்மை போல் அவனிடத்தில் போய் அவள் நின்றாள்.
“தேவி.” ஏக்கம் கலந்த பரிதவிப்புடன், அவன் அழைத்தான்.
அவளுக்கு அழுவதைத்தவிர வேறு ஒரு வழியுமே தெரிகின்றதாக இல்லை.

Page 36
58 அம்மாவுக்குத் தாலி
தண்ணீரில் வீழ்ந்த காகிதம் போன்று கண்ணீரால் நனைந்த அவளது கன்னங்களைக் கண்டுவிட்டு இவ்வளவு கண்ணிரையும் இவள் தன் கண்களுக்குள்ளே வைத்திருந் தாளா?’ என்ற நினைப்பில், குணத்துக்கும் சதுரம் நடுங்கிவிட்டது.
அவனுக்கும் கண்கள் கலங்கி, கண்ணிர் இமை விளிம்புக்குள் கரை கட்டி நின்றது. அவள் உருவம், அவன் கண்பார்வைக்குக் கலங்கியதாகத் தெரிந்தது.
“எனக்குக் கலியாணம் முற்றாயிட்டு கலியாணத்துக்கு தியதியும் வைச்சிட்டினம்’
அவளது கண்ணிமைகளில் நீர்க்கனம்.
“அது. அது. நல்லதுதானே.” எச்சிலோடு வேதனையும் சேர்த்து விழுங்கினான் அவன். “எது நல்லம். எனக்கெண்டால் இதெல்லாம் துண்டாய் விருப்பமில்லை. என்ரை விருப்பமெல்லாம் சாம்பலாப் போச்சு” சொல்லும்போது தொண்டை அடைத்தது மாதிரி வந்தது அவளுக்கு. விசும்பினாள் அவள்.
“என்ரை நாலு அக்காமாரும் என்னை நம்பித்தான் இருக்கினம் தேவி. நான் ஒரு ஆளாய் வர எவ்வளவு காலம் போகுமோ தெரியேல்ல.”
குணம் வேதனைகளின் விளிம்பில் நின்றபடி சொன்னான். கனவுகள் கற்பனைகள் காற்றாய்ப் போக, தூளாகிப் போன மாதிரி அவன் இருந்தான்.
“உங்கடை நிலைமையைப் பற்றியும் எனக்குத் தெரியும். உலகம் ஒண்டும் தெரியாதவளா நான் இல்ல. எண்டாலும்

நீ.பி.அருளானந்தம் 59
என்ன செய்யிறதெண்டு எனக்கு ஒண்டுமாத் தெரியேல்ல குணம். எனக்கொண்டுமே விருப்பமில்லாமக்கிடக்கு. எப்படிச் சீவிக்கிறதெண்டெல்லாம் எனக்குக் குழப்பமா யிருக்கு. ஆனா சத்தியமாச் சொல்லுறன்.குணம் உங்களை என்னால மறக்கேலாது. மறக்கவும்மாட்டன் குணம்.” சொல்லிவிட்டு உதடுகளை இறுக்க கடித்தபடி அவள் நின்றாள். உதடுகள் பற்களில் அழுந்த, கண்ணிர் பனித்து இமைகளில் திரண்டது. இமைமடிப்பில் தேங்கிய கண்ணிர் கட்டுடைந்தாற்போல் கன்னங்களில் பிறகு வழிந்தது. ஒன்றிரண்டு கண்ணிர்த்துளிகள் அடர்ந்து நிலத்தின் மீது விழுந்தன, உலர்ந்துபோன அந்த மண் அதைக்குடித்தது.
மேலும் அதிலே நிற்கிறதுக்கு நிலைகொள்ளாது, அந்தக் கல்லும் முள்ளுமான தரையில் அவள் நோவு தெரியாத அளவில் நடந்து போனாள். அவள் போகும் போது இழப்பு என்ற துயரம் உடல் முழுவதும் தின்றுவிட்டது மாதிரியான ஒரு சோகம், அவளது உடல் சோர்விலே தெரிகின்றதை குணம் பார்த்துக் கொண்டு நின்றான்.
அதற்குப்பிறகு தேவிக்கு திருமணம் நடந்ததும், அது முடிந்து அவள் தன் கணவனுடன் கொழும்புக்குப் போனதும் நடந்து முடிந்த கதை,
அதையெல்லாம் அங்கிருந்து நெடுநேரமாய் நினைவில் மீட்டுக்கொண்டிருந்தான் குணம். இந்த நேரம் அவனது தோளிலே யாரோ தட்டுவதைப் போலிருந்தது.
‘யார் தட்டுகிறார்கள்.” என்று நினைத்து அவன் திரும்பிப் பார்த்தான்.
“உந்தப் பெற்றோமாக்ஸ்சுக்கு ஒருக்கா காத்தடிச்சு விடும் குணம். பக் பக்கெண்டுது நூரப்போகுது போலை”

Page 37
60 அம்மாவுக்குத் தாலி
விதானையார்தான். குறள் சுருட்டைக் கூட கீழே துப்பா மல் பற்களாலே நசித்துப்பிடித்தபடி, சுருட்டின் 'சுடு’ நாற்றம் அதிலே சூழவும் நாறுகிற அளவில் நின்றுகொண்டு சொன்னார்.
“எங்கேயும் வந்து நிம்மதியைக் கெடுக்கிற பெருத்த சனியன்’ என்றதாய் மனசுக்குள் அவரைத் திட்டித் தீர்த்து விட்டு. பிறகு பெற்றோல் மாக்சுக்கு காற்றடித்து நிரப்பி கொழுக்கியில் அவன் தூக்கிவிட்டான்.
செத்த வீடு ஒரு பாடாய் முடிந்தது.
செலவுக்கு வீட்ட வாருங்கோ என்று உரித்துடையவ ரெல்லாம் அங்கு நின்றுகொண்டு சொன்னார்கள்.
மூன்றாம் நாள் நாலு சனம் போய் வர்றமாதிரி இவனும் அங்கே போனான். படலையைத்திறந்ததும் அவனது மனத்தில் பழைய நினைவுகள் வந்து சூழ்ந்தன.
தனியனாக இருக்கும் அவனுக்கு மரகதப் பசுமையை இழக்காத இனிமையான பழையநினைவுகளே மீண்டும் மீண்டும் மனத்தில் குதியாட்டமிடுகின்றன.
படலைக்கப்பின் அருகே நின்ற முது பூவரசு மரம் மஞ்சள் பூப் பூத்துக்கொழித்திருந்தது. பூக்களின் மையத்திலுள்ள பொன்னுறுப்புகள் நாக்குகளை நீட்டிக்கொண்டிருப்பதான மாதிரியாக அழகாய்த் தெரிந்தன. மரத்துக்கு அருகில் நின்று அந்தப் பூக்களின் உட்காம்பின் அழகை இரசித்துக் கொண்டு அவன் நின்றான். இத்தருணம் எதேச்சையாக வாசல் பக்க மாக வந்த தேவி அவனைக் கண்டுவிட்டாள். உடனே அவன் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு அவளும் போனாள். அவனைப் பல வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டதில் அவளுக்கு அளப்பரிய மகிழ்ச்சியாயிருந்தது.

நீ.பி.அருளானந்தம் 61
“குணமண்ணை சுகமாயிருக்கிறியளா?’ “ஓம் சுகம்தான்’ அவன் சொல்லிவிட்டு அவளின் முகத்தைப்பார்த்தான். அவளைக் கிட்டவாய் இப்பொழுது பார்க்கையில் முன்பு பார்த்த தேவியின் முகம் இப்பொழுது அவளிடம் இல்லை என்றே அவனுக்கு எண்ணத்தோன்றியது. நிழலடித்த செடியாய், அவள் நிறம் மாறிப்போய் இருப்பதும், அவனுக்குத் தெரிந்தது.
என்றாலும் ஒரு தாய்மையின் பூரணப் பொலிவு முகமெல் லாம் பூத்துக்கிடப்பதை இப்போது அவன் கண்டான். “தேவி. நீங்கள் எல்லாரும் சுகமாயிருக்கிறியளா?”
எல்லாரும் என்பதை அவளுடைய புருஷனும் அடங்கலான, ஒரு அருத்தத்தில் வைத்துக் கேட்டான்.
“ஒமண்ணா. எல்லாரும் சுகம். கடையாவாரம் முழுக்க பொறுப்பாத்தானே இருந்து பாக்கவேணுமெண்டு சொல் லீட்டு அவர் செத்தவீட்டுக்கு வராமல் விட்டிட்டார்.’
சாதுவாக முகம் வாடிவிட்டது அவளுக்கு, இதைச் சொல்லும்போது.
“அது சரி. உன்ரை பிள்ளையளெல்லாம் எங்க அவயள்?’
“நீங்கள் வடிவா அவயளை காணேல்லை என்ன. சுகிர்தா, LumTLDT...”
அவள் கூப்பிட்ட கையோடு குழந்தைகள் இருவரும் அவ்விடத்திற்கு வந்து விட்டனர். “இவர்தான் குணம் மாமா.”
“இவ்வளவு நாளும் இந்த மாமாவைப் பற்றி நீங்கள் எங்களுக்குச் சொல்லேல்லையே அம்மா..?”

Page 38
62 அம்மாவுக்குத் தாலி
பிள்ளைகள் குணத்தைப் பார்த்துக் கொண்டு வியப்புடன் இப்படித் தாயைக் கேட்டார்கள்.
தேவிக்கு திணறலாக இருந்தது.
“இவர் எனக்கு கூடப்பிறக்காத அண்ணன் மாதிரி. உங்களுக்கு மாமா முறைதான்.’
சொல்லும் போது அவளது கண்களெல்லாம் கலங்கி விட்டன. அவள் அப்படிக் கண்கலங்கவும். நாவல் மரத்தடிக்குக் கீழ் கடைசியாக தன்னைப் பார்க்க அவள் வந்து, கதைத்துவிட்டு கண்கலங்கிச் சென்றதெல்லாம் அவனுக்கு நினைவில் வந்தன.
அவளுடைய இரண்டு பிள்ளைகளும் ‘மாமா மாமா வென்று பிறகு அவனுடைய இருகைகளையும் ஒரு பக்கம் ஒருவராக நின்று பிடித்துக்கொண்டார்கள். தேவியின் மூத்த மகள் அச்சு அசலாக தேவியின் உருவமாகவே குணத்தின் கண்களுக்குத் தெரிந்தாள். இதனால் பழைய ரோஜாப் பூ மாதிரி சம்பவங்கள் இப்போது முள்மாதிரி இதயத்துக்குள் கிடந்து குத்தியது அவனுக்கு
“நீங்கள் சந்தோஷமாயிருந்தா எனக்கதுவே காணும்’ என்று அவளைப் பார்த்து தணிந்த குரலில் சொன்னான் குணம். பழைய சம்பவங்களெல்லாம் இப்போது அவனது மனத்தில் நிழல்களாகி மங்குகின்றன.
“உங்கடை அக்காமார் ரெண்டு பேரும் கலியாணம் முடிச்சிட்டினமெண்டு சொல்லிச்சினம். இனி நீங்களும் முடிக்கலாம்தானே?’ ஆவலுடன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் தேவி.
ஆனாலும் வார்த்தைகள் பலவீனப்பட தொண்டை அடைத்தது அவளுக்கு.

நீ.பி.அருளானந்தம் 63
“முடிக்கலாம்தான். ஆனா தாய விளையாட்டில கப்பறை விழுகிற மாதிரி எனக்கு வாழ்க்கையிலையும் ஒண்டுமே இல்லாத கப்பறை விழுந்ததா ஆகிப் போச்சு. இலக்கமே ஒண்டுமில்லாத சூனிம்தானே கப்பறை.? என்ரை வாழ்க்கையும் அந்தக் கப்பறை மாதிரித்தான் ஒண்டுமே இல்லாததாய்ப் போச்சு. என்ரை வாழ்க்கையை சோபிக்கச் செய்யவிருந்த விளக்கு அணைஞ்சு போச்சு. என்னத்துக்குப் பழைய கதைகளைக் கதைப்பான். நான் வாறன் தேவி.’
வேதனை நிறைந்த பெருமூச்சோடு அப்படிச் சொல்லிவிட்டு குணம் படலையைத் திறந்து கொண்டு நடையை எட்டிப்போட்டு வெளியேறினான். அவன் சொன்ன சொற்கள் எல்லாமே தளர்ச்சியுடன் தொய்ந்து தொங்குகிறது மாதிரி தேவிக்கு இருந்தது. இதனால் தன் கண்களில் கசிந்த கண்ணிருடன் அவன் போவதை வெறிக்கப்பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி. குணத்தைப் பற்றிய பழைய நினைவு அவளிடம் ஒரு கணம் ‘மயல் காட்டி மறையாமல் நிலைத்து நின்றது.
“கப்பறை கப்பறை. கப்பறை எண்டா என்னம்மா..?’’ தேவியின் அருகில் நின்ற மூத்த மகள், அதைப்பற்றித்தாயிடம் கேட்டாள். தாயம் விளையாடுகிறதைப் பற்றி யாதொன்றும் இற்றை வரை அறியாதிருந்ததால், அதன் அருத்தம் ஒன்றும் விளங்காமல், அதைப் பற்றிய விபரத்தை அறிய விரும்பி அப்படியாக அவள் கேட்டாள்.
அவளுக்கு முன் தன் முகத்தைக் காட்டாமல் திரும்பி வைத்துக்கொண்டு, கையால் கன்னத்தில் வழிந்த கண்ணிரை ஜாக்கிரதையாக முதலில் துடைத்து விட்டு, மகளுக்குத் தேவி இப்படி விளக்கம் சொன்னாள்.

Page 39
64 அம்மாவுக்குத் தாலி
“கப்பறை என்டால் ஒன்றுமே இல்லாததொரு மரக்கட்டையம்மா.’ சொல்லும்போது கூடவே அவளுக்கு விம்மலும் வந்துவிட்டது, விழி நீரும் கன்னங்களில் சரசரவென பின்பும் வழிந்தது.
எதையும் மறைக்கக் கூடிய தெம்பு என் மனதுக்கில்லையே. என்று பிற்பாடு அவள் கவலையுற்றாள். உணர்ச்சிகளை கசியவிட்டுவிடக்கூடாதே என்கிற ஜாக்கிரதை உணர்வில் கண்களைத் துடைத்துவிட்டு, வெளியே வரமுயன்ற தேம்பலை அப்படியே விழுங்கினாள்.
என்ன குழப்பம் இது? நான் இப்பொழுது இந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயல்லவா? ஏன் நான் இப்படியெல்லாம் தேவையற்ற விஷயங்களை நினைத்து உணர்ச்சிவசப்படுகிறேன்? என்ற தவிப்புடன், கொந்தளிக்கும் தன் மனத்தின் மின்னலிட்ட எண்ணங்களை வேகவேகமாக பிற்பாடு தேவி உதறினாள்.
சட்டென தன்னை முறி மனத்தில் நுழைத்துவிட்ட காட்சிகளை மனத்திலிருந்து தள்ளிவிட்டு, பக்கத்தில் நின்ற இளைய மகளை தன் கிட்டவாய் இழுத்து வைத்து அவளை நெஞ்சோடு தேவி அணைத்துக் கொண்டாள்.
- கணையாழிநவம்பர் 2004)

*營 S^ 参画
啞
A | Νό
-S ܐܗܡܔܠ
އަކީەت>
马
muassage
முன்னையைப்போல அக்கா இப்போது ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. கோயில்களுக்குப் போவதில்லை. நல்லநாள் பெருநாட்களில் கூட ருசியானதொரு கறி சமைப்ப

Page 40
66 அம்மாவுக்குத் தாலி
தில்லை. இதற்கெல்லாமாக ஏனோ இன்னமும் மறக்க முடியாத அந்த வியாகுலம் அவளுக்குள் வியாபித்து வதைக்கிறது.
இதனால். அக்காவின் மனம் புண்படும்படி எந்த வகையிலும் நான் நடப்பதில்லை. இந்த வீட்டில் சொந்த மென்று அவளுக்குக் கூடப்பிறந்த தம்பி நான் ஒருவன் மட்டும்தானே இருக்கிறேன் வேறு யார் இருக்கினம் அவளுக்கு ஆறுதலுக்கு?
“சாப்பிட வாடா தம்பி. வந்து வேளைக்குச் சாப்பிடு ராசா’ தோட்டத்தில் நடுகையிட்டிருந்த வெங்காயத்துக்கு மடைகட்டித் தண்ணீர் பாய்ச்சி விட்டு அந்த வேலை யெல்லாம் முடிந்து இப்போதுதான் நான் வீட்டுக்கு வந்தனான். அக்கா கூப்பிட்ட கையோடு கை, கால் முகம் கழுவிக் கொண்டு சாப்பிடப் போய் உட்கார்ந்தேன். சட்டி மூடியைத் திறந்ததோடு கறிவாசம் மூக்கைத் துளைத்தது. உண்ணாவில் உமிழ் நீர் சுரக்க பசி வயிற்றை விறாண்டியது. கனகாலத்துக்குப் பிறகு அக்கா ஆட்டிறைச்சிக்கறி சமைத்திருக்கிறா. அவவுடைய முகத்தைப் பார்த்தேன்.
"சங்கரப்பிள்ளையண்ணை கிடாயடிச்சவராம் ஒழுங்கேக் கிளால போகேக்கை என்னையும் கூப்பிட்டு பங்கு வேணு மோண்டு கேட்டார். கனகாலம் நீயும் ஆட்டிறைச்சிக்கறி சாப்பிட்டெண்டு நினைச்சு கொண்டரச் சொல்லி வாங்கினனான்.”
“சாப்பாட்டுத் தட்டில் பொலபொலவென்றிருக்கும் புழுங்கலரிசிச் சோற்றைப் போட்டு ஆட்டிறைச்சிக் கறியை யும் போட்டாள் அக்கா. கத்தரிக்காயிலும், ஒரு பாற்கறி வைத்து எலும்பைக் கொத்திப் போட்டு ஒரு மிளகுச் சொதி யும் வைத்திருந்தா. எல்லாமே மிக இதமாக இறங்கியது.

நீ.பி.அருளானந்தம் 67
“அக்கா நீங்களும் சாப்பிடுங்கோவன்?’ நான் கேட்டேன்.
“பொறுத்துச் சாப்பிடுகிறன் தம்பி. இப்ப எனக்குப் பசிக்கேல்லயப்பு. நீ தோட்டத்துக்க நின்று கொண்டு கஷ்டப்படுகிறவன். நல்லாய்ச் சாப்பிடவேணும். இந்த வெங்காய நடுகையோட நீயும் நல்லாய் மெலிஞ்சு போனாயப்பு. என்னோடை ஒட்டிக் கொண்டு எனக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கிற உன்னை இந்த நாலு வருஷமும் கவனிக்காமல் இருந்திட்டன்ரா.’’ அக்காவின் விழிகளில் கண்ணிர் முத்துக் கோர்த்தது.
“இதுக்குப் போய் ஏனக்கா அழுகிறியள்? எனக்கு நீங்க என்ன குறை விட்டனியள்? நீங்கள் அழுதால் எனக்கும் கவலையாகத்தான் வரும். கண்ணைத் துடைச்சிட்டு வேளா வேளைக்குச் சாப்பிடுங்கோ’ ஆதரவோடு நான் கூறினேன்.
“தம்பி மரத்திலிருந்து நீ பிடுங்கி வைக்கோல் பெட்டிக் குள்ள வைச்ச கறுத்தக் கொழும்பான் மாங்காய் நல்லாப் பழுத்திட்டுதடா. வெட்டிப் பீங்கானில போட்டு அங்க வெளி மேசைக்கு மேல மூடி வைச்சுக்கிடக்கு. எடுத்துச் சாப்பிடு’ நாலு வருஷத்தை அக்காவால் இப்பத்தான் உணர முடிந் திருக்கிறது. அத்தான் போன நாளுடனே அக்காவின் வாழ்வும் தங்கி விட்டது. இப்பத்தான் வெளியில் பார்க்கி றாள். நானும் கையை அலம்பிவிட்டு பழத்துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு ருசித்துப் பார்த்து ரசித்துச் சாப்பிட்டு விட்டு வெளியே மாட்டுக் கொட்டிலடியில் காற்றுப்படும்படி போய் இருந்தேன்.
என் அத்தான் செத்தப் பிறகு இந்த வீட்டிலே எல்லாமே வெறுமையாகி விட்டது. எத்தனை மாடுகள் இந்தக் கொட்டிலிலே நின்று கொண்டிருக்கும்.

Page 41
68 அம்மாவுக்குத் தாலி
அத்தானை யாருக்கும் அவருடைய பெயரைச் சொல்லி தெரியவைக்க வேண்டும் என்ற நிலையில்லை "ஆவரங்கால் சவாரிக்காரன்’ என்று சொன்னால் போதும் கேட்பவர்கள் உடனே அவரது பெயரைச் சொல்லி விடுவார்கள்.
சின்ன வயசிலேயே அப்பாவையும், அம்மாவையும் இழந்த நான் அண்ணி வீட்டாரோடு போய் இருந்து கொண்ட ஒரேயொரு அண்ணாவோடேயும் போயிருக்க விரும்பாமல் என்ரை அக்கா வீட்டிலதான் இருக்க விருப்பப்பட்டு இங்க வந்திருந்தன். என்ன காரணமோ அக்காவுக்குப் பிள்ளை இல்லை என்கிறதால அத்தானும் பிள்ளையாக என்னை நினைத்துச் செல்லம் கொடுத்தார்.
எங்கே போனாலும் அத்தானுக்குப் பின்னாலேயே நானும் போவேன். பத்துவரை படித்ததற்குப் பிறகு அவருக்கு உதவியாய் எல்லா வேலைகளிலும் நானும் கூடமாட சேர்ந்து கொள்வேன்.
அத்தான் ஒரு சவாரிப்பைத்தியம். அவரோடு திரிந்து மாடுகலைச்சு எனக்கும் சவாரியென்றால் சாப்பாடும் தேவையில்லை என்று ஆகிற்று. இதற்குப் பின் சவாரி நடக்கும் இடங்களுக்கு நானும் பறப்பெடுத்துக் கொண்டு அலையத் தொடங்கிவிட்டேன்.
வன்னிப் பகுதிக்குப் போய் மாடுகள் பார்த்து வாங்கி வந்து, வண்டியில் பூட்டிப் பழக்கி நல்ல விலைக்கு அவைகளை அத்தான் விற்றுப் போவேன், அங்கே போகும் போது துணைக்கு நானும் போடுவார். முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பிலிருந்து தண்ணிர் ஊற்றுக்குச் செல்லும் பாதை வழியாக ஏழு மைல் பிரயாணம் செய்தால் கேப்பாப்புலம் என்ற கிராமம் வரும். இங்கேதான் நாங்கள்

நீ.பி.அருளானந்தம் 69
மாடுகள் பார்த்து விலை பேசி முடித்து அவைகளை அவிழ்த்துக்கட்டுவோம்.
எந்த வியாபாரமானாலும் நட்டம் போகாது இலாபமடைய அதிலேயுள்ள சூட்சுமம் தெரிய வேண்டும். மாட்டு வியாபாரம் என்றால் அத்தானுக்கு அத்துப்படி
“தம்பி செல்வம் இங்கவாடா" என்று குரலில் தேன் தடவியிருக்குமாப்போல் கூப்பிட்டு எனக்கு மட்டும் கேட்க பல விஷயங்களை அவர் சொல்லித்தருவார்.
“அந்த மாட்டுக்கு முதுகிலை விலங்குச் சுழி இருக்கடா. வீட்டில கொண்டு போய் கட்டினா மறியலுக்குப் போக வேண்டிவரும்’ என்று சாத்திரம் சொல்வார்.
“அந்த மா வெள்ளைக்கு ஏரியோட சுழி இருக்கே. அதுவும் வீட்டுக்கு நல்லதில்லையோ?’ என்று என் சந்தேகத்தைக் கேட்பேன்.
“ஏரியோட சுழி இருந்தால் அது ராஜசுழி தம்பி, வீட்டுக்கு நல்லதடா’ என்பார்.
பசுமாடுகளை நாங்கள் வாங்குவதில்லை. நாம்பன் மாடுகளைத்தான் வாங்கிக் கொண்டு போவோம். எப்போதும் நிறத்தை வைத்துத்தான் நாங்களும் வளர்க்கும் சொந்தக்காரர்களும் மாடுகளை குறிகாட்டிப் பேசுவோம். நொச்சிப்பூ நரையன், சந்தனக் கழுத்து மாவெள்ளை, கருங்கழுத்து வெள்ளை, கழுகு இப்படியெல்லாம் நிறத்தை வைத்துப் பெயரிட்டு எங்களுக்குள் வியாபாரம் பேசப்படும்.
மாட்டு வியாபாரம் லேசுப்பட்டதில்லை, ஆயிரக்கணக் கில் வந்து குவியும். ஆனால், புதுக்குடியிருப்பிலிருந்து மாடுகளை ஆவரங்கால் மட்டும் நடத்திக் கூட்டிக் கொண்டு

Page 42
70 அம்மாவுக்குத் தாலி
வருவதுதான் பெரிய அலுப்பு. உடலெங்கும் வியர்வைத் துளிகள் பூத்து வழிய மூன்று நான்கு நாட்கள் நடைப் பயணத்தில் எனக்கு மூட்டு வலியும் முதுகு வலியும் வந்து விடும். ஆனால், அத்தானோ எதையும் தாங்கும் பாலை வனத்து ஒட்டகம் போல களைப்பில்லாமல் இருந்து கொண்டு “இந்தா. ஜிட். ஜிட். இந்தா.’’ என்று சத்தம் வைத்து மாடுகளை விரட்டிக் கொண்டு வருவார்.
ஊரிலே உள்ளவர்கள் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு குத்துவதென்றால் அத்தானிடம்தான் வருவார்கள். மற்றவர்கள் தனக்குப் போட்டியாக மாடு வளர்க்கிறார்கள் என்று இவர் நகக் கண் அளவு கூட எரிச்சல் படமாட்டார். நல்ல நாள் பார்த்துப்போய் அவர்கள் வளர்க்கும் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு குத்தி விடுவார். அந்தப் புண்ணும் மூன்று நாளுக்குள் மாறும்.
வன்னியிலிருந்து மாடு கொண்டு வந்ததன் பின்பு தனித்தனியாக மாடுகளைப் பிரித்து நானும் அத்தானும் அவைகளை வெருட்டி நடத்திப் பழக்குவோம். அதற்குப் பிறகு வண்டியில் பூட்டி இரண்டு பேர் நுகத்தில் பிடித்து ஒடச் செய்து படினத்துக்குக் கொண்டு வருவோம். “இந்த மாட்டைக் கலைச்சுக் கொண்டுபோய் நடத்திக் கொண் டாடா பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு அவர் தரை வெளியில் போய் நிற்பார்.
நானும் கலைத்துக் கொண்டு போய் நடத்திக் கொண்டு வருவேன். இப்போதுதான் தனக்கென்று வண்டில் சவாரிக்குத் தகுந்த மாட்டை அவர் தெரிவு செய்வார். மாடு நடக்கும்போது முன்னங்காலை விட பின்னங்காலை அகலமாய் வைக்க வேண்டும். அதனுடைய நடையை வைத்துத்தான் ஒடக்கூடியதா? என்ற குறிப்புத் தெரியுமாம்.

நீ.பி.அருளானந்தம் 71
இவைகளை அத்தான்தான் சொல்லித்தந்தார். இன் னொன்று. “சைக்கிள் ஓடும் வேகத்துக்கு மாடு நடக்க வேணுமாம்' அப்படியும் சொன்னார்.
“அதிகமாய் மாடுகள் மேச்சல் குறட்டைவிடும். அது நல்லது. ஆனால், படுத்துக் கொண்டு குறட்டை விடக் கூடாதடா அது நல்லதல்ல" என்றும் சொல்வார். இந்த மாடுகளுக்கெல்லாம் அத்தான் சொல்கின்றபடி பச்சரிசியை ஊறவைத்து அதற்குள் தவிடு கலந்து தீனி வைப்பேன்.
கிழமைக்கு ஒரு தடவை வெந்தயத்தை தண்ணிரில் ஊற வைத்து தவிட்டுடன் கலந்து கொடுப்பேன். எந்த நேரமும் வைக்கோல் தொட்டியில் இருக்கும்படியாகப் போட்டு அளவு தண்ணிர் வைத்துக் குடிக்கவிட்டு ஒரு பிடி பச்சைப் புல்லையும் அவைகளுக்குப் போடுவேன்.
வண்டில் சவாரி நடக்கும் நாளுக்கு முதல்நாள் மாடுகளுக்கு நாங்கள் சாப்பாட்டைக் குறைவாகவே போடுவோம். சவாரி நாளன்று மாடுகளுக்குத் தண்ணீரோ, சாப்பாடோ ஒன்றும் கொடுப்பதில்லை. அன்று அத்தானுக்கு உதவி செய்யவென்று வந்து எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வீட்டிலே ஆட்டுக்கட்ா அடித்து பெரிய விருந்து நடக்கும்.
யாழ்ப்பாணத்தில் நடந்த வண்டில் சவாரிப் போட்டி களிலே அத்தானும் எத்தனையோ தங்கப் பதக்கங்களை வென்றார். நீர் வேலித் தரவை, பினாக்கைத் தரவை, மான் பாய்ந்தான் வெளி, மூளாய்த்தரவை இங்கெல்லாம் நடந்த சவாரிப் போட்டிகளில் அடுத்தடுத்து அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. எல்லாப் பதக்கங்களையும் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து காலையும், மாலையும் பார்த்து கண்ணுக்குள் வைத்துக் கொண்டிருந்தார்.

Page 43
72 அம்மாவுக்குத் தாலி
இன்னமும் நீர்வேலித் தரவையில் நடந்த வண்டில் சவாரிப் போட்டி என் நெஞ்சத்தைவிட்டு அகலாதிருக்கிறது. பொன்னுத்துரை என்பவர் யாழ்ப்பாணத்தில் பழைய சவாரிக்காரன் என்ற விலாசக்காரர். அங்கே போட்டியில் பங்குபற்ற அவரும் வண்டில் மாடுகளைக் கொண்டு வந்திருந்தார்.
எங்களுடைய மாடுகளைப் பார்த்துவிட்டு. “மரங்கட்டக் கொண்டு வந்தனியோ இந்த மாடுகளை?’ என்று நக்கலாகக் கேட்டார். “கலைச்சுப் போட்டு விட்டதுக்குப் பிறகுதான் தெரியும்’ என்று அத்தானும் அடக்கமாகச் சொன்னார். ஆனால் பொன்னுத்துரையோ தனது புசு புசு மீசையை முறுக்கிக் கொண்டு,
“ஆளானப்பட்ட ராசாக்களே என்னோட சவாரி ஒடித் தோற்றுட்டினம். இவர் வந்து என்னோடை மாடுகலைச்சு வெல்லப்போறாராம்’ என்று குத்தூசியால் குத்தியதைப் போல வலிக்கும்படி பேசினார். அவருடைய இந்த அர்ச்சனைகள் என் மனதை புண்பட்டுப் புரையோடச் செய்தது. என்றாலும் பொறுமையோடிருந்தேன்.
அந்த நேரம், அங்கே ஒலிபெருக்கியில் இருந்து வந்த சத்தம் காதைக் குடைந்தது. எந்தத் தூரமும், இலகுவில் கடக்கும் என்று பார்வையாளர்கள் நம்பும்படி எல்லாரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டு எங்களுடைய மாடுகள் உஷாராகி நின்றன.
சமிக்ஞையோடு அத்தான் மாடுகளைக் கலைத்தார். களைக்காமலேயே அந்தப் போட்டியில் எல்லா மாடுகளையும் முந்திக் கொண்டு போய் அவைகள் எல்லைக் கோட்டைத் தாண்டின. இதேபோல கடைசிச் சவாரியிலும்

நீ.பி.அருளானந்தம் 73
ஒடி எங்களுடைய மாடுகளே வென்றன. ஆனால், கடைசிப்போட்டியில் பொன்னுத்துரையின் மாடுகள் குறுக்க இழுத்துப் போய் அங்கு நின்ற ஒரு காரை வண்டிலால் இடித்து விட்டுப் போய்விட்டன.
அதிலே தங்கப்பதக்கமும், பணப்பரிசென்றும் அத்தானுக் குக் கிடைத்தன. பொன்னுத்துரையோ தோல்வியைத் தழுவியதால் குன்றிக் குறுகி கூனிப்போனார். அவரிடம் நான் போய். “எங்களுடைய வண்டில் சில்லுக்கம்பு ஒடேக்க உங்களுக்குத் தெரிஞ்சுதோ இல்லையோ’’ என்று பகிடி யாகக் கேட்டேன். விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வதைப் போல.
“அது உங்கடை றோதை சின்னனாக்கும்” என்று அவர் đFLDITGrfì395frử.
இப்படி எத்தனை சம்பவங்கள் விடியும்வரை சொல்லிக் கொண்டிருந்தாலும் கதை முடியாது. ஆனால் அத்தானு டைய வாழ்வு முடிந்து விட்டது. ஆவரங்கால் சிவன் கோயில் திருவிழா வந்தால் எங்கள் பக்கத்திலிருந்தும் அவர் பக்கத்திலிருந்தும் உறவுக்காரர்கள் எல்லாம் வந்து இந்த வீடே நிரம்பி வழியும்.
அவர்களெல்லாம் வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது வெங்காயம், மிளகாய் என்று எங்கள் தோட்டத்தில் விளைந்த உணவுப் பொருட்களையெல்லாம் கூடை கூடையாகப் போட்டும், மூடை மூடையாகவும் அவர் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
இப்படியெல்லாம் கர்ணனைப் போல் அள்ளிக் கொடுத்த அந்தப் புண்ணியவானுக்கு நடந்ததை நினைக்க இப்போதும் என் நெஞ்சு வலிக்கிறது.

Page 44
74 அம்மாவுக்குத் தாலி
சத்தம் படுக்கையிலிருந்து எல்லோரையும் எழுந்திடச் செய்தது. நாளாந்தம் இது நடப்பது சகஜம் தான் என்று நினைக்காது எல்லாச் சண்முமே அன்று பதற்றமடைந்தனர். பலமுறைகள் பலாலியிலுள்ள இராணுவத்தினர் இப்படியாக அச்சுவேலி வரை முன்னேறி வந்து திரும்பிப் போயிருக்கின்றனர்.
ஆனால் அன்று நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்தது. முன்பு நடப்பது போல இல்லாது இம்முறை மக்கள் குடியிருப்புப் பகுதியெல்லாம் கண்டபடி ஷெல்கள் விழுந்து வெடித்துச் சிதறின. வெள்ளென எழுந்து அத்தான் தோட்டம் பார்க்கப்போயிருந்தார். திடுமென நடக்கும் இந்தச் சம்பவத்தில் அவரை எங்கே போய் தேடிப் பிடிப்பதென்று எனக்கும் நடுங்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரம் பச்சைத் தண்ணீர் கூட என் பல்லில் படவில்லை.
அக்காவோ படலையடிக்கும், வீட்டு வாசல் படிக்குமாய் மாறி மாறி நடந்து திரிந்து கொண்டு “அவரைக் காணேல் லயே. கடவுளே. அவரைக் காணேல்லையே” என்று பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.
“அக்கா. அத்தான் எப்படியும் எங்களைத் தேடி வந்து சேர்ந்திடுவார். எல்லாச் சனமும் வீட்டை விட்டு ஓடுகினம் நாங்களும் இந்த இடத்தை விட்டுப் போவமக்கா’ அந்தரப் பட்டுக் கெண்டு நான் நின்றேன்.
தயாராக எப்போதும் இருக்கும் அந்த இரண்டு உடுப்புப் பைகளையும் தூக்கி சைக்கிளில் கொழுவிவிட்டு அக்காவைக் கூப்பிட்டேன். மனமில்லாமல் அறையைப் பூட்டி விட்டு அக்கா சயிக்கிள் கரியரில் ஏறியிருந்தாள். நான் விரைவாக பெடலை

நீ.பி.அருளானந்தம் 75
மிதித்து புத்தூரைக் கடந்தேன். அதற்குப் பிறகு ஆறுதலாக நீர்வேலிப் பிள்ளையார் கோயிலடி மட்டம் போய் அங்கே கோயிலில் இருந்து கொஞ்சம் நாங்கள் ஆறினோம்.
அங்கே அக்காவை என்னால் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆவரங்காலில் உள்ள்வர்களும் அங்கு எங்களைக் கண்டபோது பெரிய குண்டைத் தூக்கித் தலையில் போட்டது போல ஒவ்வொரு கதை சொல்லி விட்டுப் போனார்கள். ஒருவர்:
“உன்ர புருஷன் கேட்டால்தானே? நாங்கள் போகாத போகாத அங்க எல்லாம் மோசமாய் ஷெல் விழுகிது என்று தடுத்தும், மாடுகள் பாவம்! கட்டை அவிட்டு கலைச்சுப் போட்டு வாறன்! இல்லாட்ட கட்டில கிடந்து ஷெல்லடி பட்டுச் செத்திடுங்கள்! இப்பிடித்தான் சொல்லிப்போட்டு வீட்டுப்பக்கமாகப் போனார்’ என்று முறைப்பட்டார்.
“செத்தாலும் பரவாயில்லை நான் போய் அங்க அவரைத் தேடி வாறன்’ இப்படிச் சொல்லி அக்கா அழுதாள். நான் அக்காவைப் போக விடவில்லை. யாருமே அந்த இடத்துக்குப் போக முடியாத நிலையில் நானும் எப்படிப் போய் வருவேன்?
நாட்கள் கடந்தன. மாதங்கள் சென்றன. அத்தானைப் பற்றிய ஒரு தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்கு இருந்த நம்பிக்கையெல்லாம் நாளாக நாளாக அற்றுப் போய் விட்டன. இந்த வீட்டுக்குத் திரும்பி வந்த நாளிலிருந்து எங்களுக்கு எல்லாமே வெறுமையானதாகி விட்டன.
அத்தான் இறந்த பிறகு அக்காவைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துவிட்டது. இதனால்

Page 45
76 அம்மாவுக்குத் தாலி
எனக்கென்று எந்தவித சுயநல ஆசைகளுக்கும் எடுபட்டு அவைகளுக்கு நான் அடிமையாகுவதில்லை. அக்காவுக்குப் பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவவை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்போது நான் பாடுபட்டு உழைக்கின்றேன்.
இருந்தாலும் என்னையும் மீறி ஒரு ஆசை அது மனதில் அத்தானினால்தான் வளர்ந்தது. இந்த மாட்டுக் கொட்டிலில் சவாரி மாடுகள் நிற்க வேண்டும். தூசி பறக்கும் இடமாக விடாது இந்த இடத்தில் சாணி அள்ள வேண்டும். அத்தானைப் போல நானும் சவாரிக்காரன் என்ற பெயர் எடுக்க வேணும். இதையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கையிலே அந்தக் காலம் திரும்பவும் வரும் என்றே என் மனம் விரைவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. எல்லா சஞ்சலங்களிலும் இந்த நம்பிக்கை ஒன்றே இன்று எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. அக்கா இப்போ எனக்குப் பெண் பார்க்கவும் தொடங்கி விட்டாள். -
-தாமரை டிசம்பர் 2006)

O O கண்ணுக்குள் நூறு விதம் இன்று காலை மழையும் மந்தாரமுமாகத் துயரந் தோய்ந்
தது போல், நுவரேலியா நகரம் எனக்குத் தோன்றியது. எனக்கும் வெறுத்துப் போகும் “சீச்சீ” யென்றதாய் மனசு

Page 46
78 அம்மாவுக்குத் தாலி
கிடந்து சலித்தது. இன்றைய நாள் மட்டுமே இந்த விடியலை நான் பார்க்கக்கூடும், ஆனால் நாளைய விடியல் எனக்கு நிர்ணயமில்லை, என்று நினைத்துக் கொண்டு நான் தங்கி இருந்த அந்த ஹோட்டல் அருகாமையில் அந்த வீதியின் அருகே ஒரு பக்கம் வாடகைக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை நான் பிறகு நாடினேன். அங்கு நின்றிருந்த வாகனங்களில் மூன்று நான்கு மோட்டார் கார் வாகனங்களைக் கடந்தும் முன்னாலே நான் நடந்து கொண்டிருந்தேன். ஒட்டுநர் இருக்கைகளில் அமர்ந்திருந்த அந்தக் கார்ச் சாரதிகள் என்னைக் கண்டு சிரித்தார்கள். நான் பதிலுக்குச் சிரிக்கவில்லை. (சிரிக்கக்கூடிய நிலையிலேயா நான் இருக்கிறேன்?) என்றாலும் எனக்குப் பிடித்த ஒரு கார்ச் சாரதியின் முகத்தை அவர்களுக்குள்ளே நான் தேடினேன். என்னைப் போல் சிரிக்காமல் சாந்தமாயிருந்த ஒருமுகம் அவர்களுக்குள்ளேயிருந்து என்னைப் பார்ப்பது போல் தெரிய அவரண்டையில் போய் நான் நின்றேன். அந்தக் கார்க் கதவில் இறக்கிக்கிடந்த கண்ணாடிக்குள்ளாலே என்னைப் பார்த்து அவர் “எங்கே ஐயா போகவேனும்?’ என்று கேட்டார் பணிவாக, அவர் கேட்கவும் நான் அவரின் அருகில் சென்று அவரது கனிந்த கன்னத்துச் சதைகொண்ட முகத்தைப் பார்த்தேன்.
“இப்படி அளவான கதை பேச்சுத்தான் எனக்குத் தேவை’ என்று என் மனத்துள்ளே நான் நினைத்துக் கொண்டு, ‘அங்கே உள்ள அந்த உலக முடிவின் பக்கம்’ என்று என்நிலையை நினைத்துக் கொண்டு சோகமாக அவருக்குச் சொன்னேன்.
“வேல்ட் எண்ட் போகவா?’ என்று அவர் நான் சொன்னதை ஆங்கிலத்தில் கூறிவிட்டு என்னைப் பார்த்துச்

நீ.பி.அருளானந்தம் 79
சிரித்தார். கையில் ரூபாய் புரளப்போகிறதென்று நம்பிக்கையில் அவருக்கு இப்போது மகிழ்ச்சி. அவர் இப்போது சிரித்தது எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரை எனக்கு ஏலவே மனதுக்குப் பிடித்துக் கொண்டதால் “போவம் கெதியா அங்க?" என்று சொல்லிவிட்டு, காரின் கதவைத் திறந்து உள்ளே ஏறி பின் இருக்கையில் நான் அமர்ந்து கொண்டேன். “காரை எடும்” என்றேன் பிற்பாடு.
கார் அந்த மலைத்தொடருள்ள பாதைவழியே விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. அவர் கார் ஒட்டியபடி எனக்கும் பிறகு கதை சொல்ல வெளிக்கிட்டார். ‘பூரீலங்காவில் உள்ள எல்லா இடத்திலயும் பார்க்க, அந்த இடம்தான் பாக்க வடிவான இடம், எல்லா இடத்தி லிருந்தும் இந்த இடத்தைப் பார்க்க டூறிஸ்ட் வாராங்க. நீங்க என்ன யாழ்ப்பாணமா?’’ இப்போது அவர் தன் தலையைத் திருப்பி பின்னால் இருந்த என் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தன் பார்வையை நேரே பாதையின் பக்கமாகத் திருப்பிக் கொண்டார். என்றாலும் மேல் கண்ணாடிவழியாக பின்னால் இருந்த என்னை அவர் இடையிடையே பார்த்தார். நான் சாரதி ஆசனத்துக்குப் பின்னால் இருந்த என் இருக்கையை மாற்றி இடப்பக்கம் கதவோரமாய் தள்ளிப்போய் இருந்தேன். மேல்க் கண்ணாடியிலிருந்து அவர் என்னைப் பார்ப்பது எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. “என்ன நான் கேட்டன். தம்பி நீங்க யாழ்ப்பாணமா ஐயா?’ அவர் மீண்டும் சப்தசுத்தமாய் என்னைக் கேட்டார்.
என் நெஞ்சுக் குமுறலுக்கிடையே நான் “ஓம்’ என்று மெதுவாக அவருக்குப் பதிலளித்தேன். அவ்வேளை அசட்டுக் கண்ணிர் என்கண்களில் நிறைந்து விட்டது. அவருக்கு,

Page 47
80 y அம்மாவுக்குத் தாலி
கவனம் இப்போது வாகனம் ஒட்டுவதில் இருக்கவேண்டும், வீதியின் வளைவுகள் அதிகப்பட தெரியவும் அவர் கார் ஒட்டுவதில், கவனத்தை வைத்துக் கொண்டார். நான் இப்பொழுது யோசித்தேன், 'இவரை விட இறுகிய முகமனிதனாக உள்ள ஒருவரைப் பார்த்து நான் பிடித்திருக்கலாமே" என்று. எனது பார்வை கண்ணாடிக்கு வெளியே வெறித்தது.
அது ஒரு இலக்குமின்றியதான வெறும் வெறிப்பு, அனைத்தையும் வெறுக்கும் வெறிப்பு, மிக அதிக வன்முறையுடன் மொத்த உலகத்தையும் வெறிப்பதைப் போன்ற பார்வையில் அந்த மலைத் தொடர்களைப் பார்த்துக் கொண்டேன்,
என்மனதுக்குள் என்னைக் கொன்றுதீர்க்கும் பயங்கரப் பிசாசு ஒன்று வேட்டைப் பார்வை பார்த்துக் கொண்டிருப்ப தாகவும் ஒரு உறுத்தல். அந்த விஷமக்காரக் குட்டிச் சாத்தான் கிடந்து குதிபோடுவது போன்ற உணர்வு. மூக்கிலே எனக்கு இடுகாட்டின் நாற்றம் வந்து அடிக்கிறது. உடன் என் இருதயம் அப்படி அடித்துக் கொண்டது. கொஞ்சம் காய்ச்சல் அடிப்பது போலவும் ஒரு மாதிரியாக எனக்கு இருக்கிறது. மெல்லிய நடுக்கமும் பெருமூச்சும் என் உடலில் இருந்து வெளிப்பட, திரும்பவும் கதவுக் கண்ணாடிக்கு வெளியே தெரியும் இயற்கைக் காட்சிகளைப் பார்த்தேன்.
அந்த இடம் பூராகவும் என் கண்களில் ஒளியின் மினுமினுப்புச் சிறிதுமின்றி ஒரு முதுமைப்பருவம் எப்படி யிருக்குமோ அப்படியாகத் தெரிந்தது. அவைகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க என் மனம் ஈடுபாடில்லாது போக நான் என் கண்பார்வையைத் திருப்பி காருக்குள்ளே என் முன்னாலிருந்த அந்தச் சாரதியின்

நீ.பி.அருளானந்தம் 81
பிரடிப்பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தன் வாகன ஒட்டுதலுக்கேற்ப தலையாட்டிக் கொண்டிருக்க, வேறு ஒரு இடமும் என் பார்வையைத் திருப்பாது நான் அவரின் பிரடியையே தொடர்ந்தும் பார்த்துக் கொண் டிருந்தேன். இப்படியே வெறுப்புடன் நான் நேரத்தைப் போக்கடித்தேன். கார் விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. நான் இன்னும் அவர் பிரடிப்பக்கத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் தன்தலையில் வளைந்த கத்திகளை நட்டாற் போலிருந்த தலைமயிர்களை இடக்கையால் தடவிக் கொண்டு “அந்த இடத்துக்கு நாங்கள் வந்து சேந்திட்டமையா.”* என்று சொல்லியவண்ணம் "ஸ்டேரியங்கை" சுழற்றி வாகனத்தைத் திருப்பி, வேறு வாகனங்களும் நின்றுகொண்டிருந்த அந்த வாகனத்தரிப் பிடத்தில் தன் மோட்டார்காரை ஒட்டிவந்து நிறுத்தினார். இறுகிப்போன சக்கை மனத்தோடு நான் அந்தக் காரிலிருந்து இறங்கினேன். அழுக்கு பட்டன் வைத்த என் மணிபர்சை காற்சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்து, சிப்பைத் திறந்து, அவருக்கு நான் காரின் வாடகைப் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். “நீங்கள் உவ்விடமெல்லாம் போய் வந்தபிறவு உங்களைத் திரும்பவும் உங்களிடத்தில் கொண்டுபோய் விடும் போதல்லவே நான் பணத்தை வாங்கிக் கொள்ள வேணும்’ என்றார் அவர். குளிர் காற்று வீறிட்டு வீசியது, நான் அவரைப் பார்த்து துயராந்த முற்ைபில் புன்னகை புரிந்தேன்.
རྒྱ་
“வேண்டாம் நான் திரும்புவது.’ என்று சொற்களை றப்பர் போல் இழுத்தேன். “நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டு இனி இதில நிக்க அவசியமில்ல. போகலாம்! "

Page 48
82 அம்மாவுக்குத் தாலி
என்று நான் அவருக்குத் தலையை ஆட்டிக்கொண்டு பிற்பாடு சொன்னேன். “நான் இனிமேல் திரும்பிவராத வேறோர் உலகத்துக்கல்லவா இனிப்போகப் போகிறேன் இது தானே உண்மை’ என்று எனக்குத்தானே அவருக்குக் கேட்காத அளவுக்கு மெதுவான குரலில் சொல்லிக்கொண் டேன். உடனே அவரைப் பார்ப்பதை விட்டுத்தொலைத்து விட்டு, முன்னால் நடந்தேன். அந்த மோட்டார்கார் வந்தவழியே திரும்பிப் போவது போல் சத்தம் என் காதுகளில் பின்னாலிருந்து கேட்டது. குளிர் சுற்றிச் சூழ்ந்துள்ள அந்த இடத்திலே, கொஞ்சம் தூரவாய் நான் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த இடத்திலே என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்று பார்க்க என் பார்வையைச் சுழற்றினேன். மேடும், பள்ளமும், சமதரையு மான அந்த இடத்திலே, ஆங்காங்கே கலைந்த வாக்கில் பலபேர் நின்றுகொண்டிருந்தார்கள். நடுத்தர வயதுப் பெண்கள் தங்களுக்குள் ஏதாவது பேசிக் கொள்வதும், யாராவது பேசினால் கவனிப்பதுமாக நின்றார்கள்.
அந்த மேட்டு நிலப்பகுதியிலே நான்கு மரைக்குட்டிகள் நின்றுகொண்டிருந்தன. அவற்றுக்கு ஒரு பெண், தன் கையிலிருந்த வாழைச் சீப்புப் பழத்திலிருந்து, ஒவ்வொருபழம் பிய்த்து நீட்டி தின்னக் கொடுத்தவாறு இருந்தாள். அவள் போட்டிருந்த 'ஜீன்ஸ்’ முரட்டுப்பட்டுத் துணியில் இருந்தது. தசைப்பற்றான தன் தொடைகளை இறுக்கிப் பிடிக்கும் அளவுக்கு அதை அவள் அணிந்திருந்தாள்.
இவையெல்லாம் என்பார்வைச் சுழற்சியில் தானாய்ப் பதிந்தவைதான். எனினும் நானாக ஒன்றையும் அங்கே விருப்பத்தோடு பார்க்கவில்லை. புஷ்பம் அணிந்து சந்தனம் பூசி உல்லாசமாய் இருக்கிறதாக, எனக்குத் தெரிகின்ற அந்த

நீ.பி.அருளானந்தம் 83
நகரவாசிகளை நான் என் மனநிலையில் இவ்வேளை பார்க்க விரும்பவில்லை. என் முடிவைத் தேடுகின்ற வழியில் இவர்களை ஏன் நான் பார்க்க வேண்டும்? என்று நினைத்துக் கொண்டு அங்கே இருந்த அலுவலகத்தில் சென்று பணத்தைச் செலுத்தி பிரவேசச் சீட்டைப் பெற்றேன்.
நான் போக வேண்டிய வழிக்கு அந்த நேரம் கதவு திறக்கப்பட்டது. அதே நேரம் அந்த வழிக்கு அருகாமையில் உள்ள மற்றைய அந்தப்பாதையால் போவதற்கும் வழியைத் திறந்துவிட்டார்கள்.
அது இலங்கையின் இரண்டாவது பெரிய மலைப் பகுதியான “கிரிகாலப்பொத்தை மலைக்குப் போகின்ற வழியென அங்கே எழுதிப் போட்டிருந்த அந்த எழுத்துப் பலகையில் உள்ள குறிப்பைப் படித்து நான் தெரிந்து கொண்டேன். என் பிரவேசச் சீட்டை அந்தக்கேற்வாசலில் நின்ற உத்தியோகத்தரிடம் கொடுத்தேன். அதை அவர் வாங்கிப்பார்த்து விட்டு “பிளாஸ்டிக் பொருட்கள், சொப்பிங்பைகள் வைத்திருக்கிறீர்களா?' என்று என்னைக் கேட்டார்.
நான் “அப்படியொன்றும் என்னிடத்தில் இல்லை’ என்றேன். அவர் “நீங்கள் போகலாம்’ என்றார். நான் அவ்விடமிருந்து அந்தப் பாதைவழியே தனியே நடக்க ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் கொஞ்ச தூரம் தள்ளி போய்க் கொண்டிருந்தவர்கள் சிரிப்பும் கதையுமாகச் சென்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களின் சிரிப்பையும் கதையையும் பார்த்துக் கொண்டு நடந்தேன். என் மனதில் தனிமையும் சஞ்சலமும் கருக்கிருட்டாய் மூடியிருந்தது. அந்த இருள் அடர்ந்து பரந்து உச்சத்தை அடைந்து நிலைத்து விட்டதைப் போல் இருந்தது.

Page 49
84 அம்மாவுக்குத் தாலி
நடந்து கொண்டிருந்த எனக்குப் பின்னால் யாரோஒருவர் வருவதாக ஒரு அருக்கு. நான் தலையை இடப்பக்கம் திருப்பினேன். எனக்குப் பின்னால் வருபவள் ஒரு வெள்ளைக்காரியென்று எனக்குத் தெரிந்தது. அவள் தன் விரித்த பார்வையை என்மேல் விதைத்தாள். அவளது புருவவளைவில் கோரைப் புதர்கள் காடாய் அடர்ந்து சிரித்தன.
அவள் “ஹலோ’ என்று சன்னமான குரலில் உதடு பிரித்து விட்டு, விறுவிறுவென்று எனக்கு முன்னே நடந்தாள். நானும் அவளுக்குப் பின்னால் என் நடையின் வேகத்தைக் கூட்டினேன். இந்த நிம்மதியற்ற என் நடையை நீடித்துக் கொண்டிருக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றியது. அந்தக் குளிருக்குள்ளே நடைக்கு என்கால்கள் நன்றாகத்தான் செயல்பட்டன. “பலிகொடுக்கும் நேரம் எல்லாமே நிசப்தமாகிவிடும்’ என்று என் மனதுக்கு நான் இடையிடையே இப்போது சொல்லிக்கொண்டேன். எனக்குச் சொந்தமான அந்த நிம்மதியான உலகத்தில் நுழைந்துவிட வேண்டும்’ என்று அவசரம் எனக்கு வரவரக் கூடிக்கொண்டே வந்தது.
நான் நடந்துகொண்டிருந்த அந்தப் பாதையருகில், இருந்த புல்லுக்குள், ஒரு கறுத்தப் பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்ன என்று பார்த்து அதைப் படிக்கவும் தான் நான் வேண்டியிருந்தது. “காக்கையைப் பார்ப்பதற்கென்றா இங்கே இவ்விடம் நீங்கள் வந்தீர்கள்’ என்றிருந்த அந்த வாசகம் என்னில் சினத்தை மூட்டியது. இந்தக் குளிர்பொங்கும் மலைப்பகுதியான இடத்தில் காக்கையை யார்தான் பார்க்கவருவார்கள்? காக்கை வாழக்கூடிய இடமா இந்த இடம்? காகம் இல்லாத ஊரில்லை! என்று ஒரு கதைக்கு

நீ.பி.அருளானந்தம் 85
ஆரும் சொன்னாலும் இங்கே அந்தக் காக்கை சீவிக்கச் சூழல் ஏது இங்குண்டு? இந்த உலகமே ஏமாற்றுத்தானா? எனக்குவந்த ஆத்திரத்தோடு சட்டைக்கைகளைச் சுருட்டி மடித்துவிட்டுக் கொண்டு நடந்தேன்.
கனவொன்றின் நினைவு கூரல் போன்ற அந்த நிகழ்வு களின் காட்சியடுக்குகள், என் நினைவிலே முடிவில்லாத வரிசையில் வரத்தொடங்கின. சரியாக அந்நினைவு ஊசிபோல் ஏறியது. அவளுடன் நான் பழகிய அந்த நிகழ்வு வாழ்வெல்லாம் மங்காத ஒளி வீசிய இனிமையிலும் இனிமையான நினைவாய், என் மனத்தில் இப்போதும்தான் நிலைத்திருக்கிறது.
ஆனாலும் ஏன் அவள் என்னைப் பிறகு ஏமாற்றினாள்? கனடா மாப்பிள்ளை என்று அவளுக்கு ஒரு கலியாணம் பேசி வர என்னைப் பிறகு அவள் கைகழுவி விட்டாளே?ஆரம்பத்தில் அவள் என்னுடன் பழக்கமான நாட்களில் அருமையிலும் அருமையாக என்னைப் பார்த்து இன்முகம் காட்டி புன்னகை புரிந்து விட்டு, தனக்கு அக்கம் பக்கம் நிற்கும் இளைஞரில் கர்வமாகப் பார்வையைத் திருப்பும் காட்சி என் மனத்தைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவள் என்னுடன் நன்றாகத்தான் பழகினாள். எத்தனையோ இதயங்கள் அவள் நிழல் ஆவதற்குத் துடித்துக் கொண்டிருக்கும்போது அவள் என்மீதுதான் அன்பாய் இருந்தாள்.
நான் வேறு ஒன்றைப் பற்றியுமே சிந்திக்காது அவள்மேல் காதல் கொண்டிருந்தேன். "உனது பெயரை எத்தனை எத்தனை தரம் சொன்னாலும் வாய் அலுக்காது’ என்று நான் அவளிடத்தில் ஒருநாள் சொன்னேன்.

Page 50
86 அம்மாவுக்குத் தாலி
என் ஒவ்வொரு செய்கையிலும் எனக்கு அவள்மேல் உள்ள காதலை நான் அன்று வெளிப்படுத்திக் கொண் டிருந்தேன். அவளுடைய கண்கள் எவ்வளவு பெரிய கண்கள், எல்லாவற்றையும் கவனிக்கும் கண்கள், ஆனால் புரிந்து கொள்ளமுடியாத ஏதோ உணர்வுகள் அவள் கண்களில் தென்பட்டன. அவள் என் செய்கைகள் ஒன்றையும் கவனியாது அகம்பாவம் மிக்க மெளனத்தைக் கடைப் பிடித்தாள்.
ஒரு நாள் அவளிடம் நான் என் காதலை, என் மனதைத் திறந்து சொன்னேன். அவள் கதிரையில் உட்கார்ந்தபடி தன்னுடைய கொலுசு பூட்டிய பாதத்தினால் தரையில் தட்டியபடி என்னை ஏளனமாகப் பார்த்தாள். என்னை அவமதிக்கும் அற்புதமான ஒரு எள்ளல், அவளுடைய மேல் உதட்டில் பாவனையாக வெளிப்பட்டது. என் கைகளை மார்பில் கட்டிக் கொண்டு என் காதலைச் சொல்லி அவளிடம் நான் கெஞ்சும் போது, தன் கண்களைத் தணித்துக் கொண்டு அவள் என்பார்வையைத் தணித்துக் கொள்ள முயன்றாள்.
“அப்படியானால் நீ என்னில் அன்பே வைக்கவில்லையா? என்னை நீ விரும்பவில்லையா?’ (அவள் இன்னும் சந்தேகப்படுகிறாள் என்று நான் நினைத்தேன்) என் சித்தத்துக்குக் கட்டுப்படாது பேசுவதைப் போல எனக்கு இருந்தது.
என்குரல் கடுமையாக, காட்டுத்தனமாக கடிக்கிறாற் போல அவளுக்கு இருந்திருக்க வேண்டும். அவள் என் முகத்திலடித்தாற்போல சிரித்தாள். அவள் உதடுகள் இப்படிச் சிரித்துச் சிரித்துத்தான் இறுகியிருக்குமோ என்பது போல எனக்கிருந்தது. ஈரக் கருமுந்திரிகளெனக் கறு கறுத்துப்

நீ.பி.அருளானந்தம் 87
பளிச்சிட்ட தன் கரிய விழிகளால் என்னை அவள் பார்த்தாள்.
தலையை அசைவின்றி அசைத்துக் கொண்டாள். “நீங்கள் என்னை ஒரு நண்பியாக மாத்திரம் நினைத்தால் உங்களைப் பற்றிய என்நினைவு மேலும் உன்னதமாகிவிடும். இந்த நினைவை நான் எப்போதும் கண்ணின் கருமணியெனப் பாதுகாப்பேன்’ என்றாள் தீர்மானமாக. அவள் தன் வாதங்களின் விசேஷத் தெளிவை தனக்குத்தானே மெச்சிக் கொள்கிறாளா? இதைக் கேட்கவும் எவ்வளவு பாதிப்பு எனக்கு? என் ஆயுட்கால முழுமைக்கும் இது காணுமே எனக்கு?
எனக்கேற்பட்ட திகைப்பில் பேச நா எழவில்லை. நெஞ்சு நெருக்கென்றது மாதிரி ஆகிவிட்டது எனக்கு திடுமென நான் தொண்டு கிழமாகக் கூனிப்போய், கண்கள் ஒளியிழந்து, முகத்தில் சுருக்கங்கள் விழுந்துவிட்ட நிலைக்குப் போய்விட்டதாக உணர்ந்தேன். என்றாலும் என்னை ஆற்றிக் கொண்டு மீண்டும் பல முறை அவளிடம் கெஞ்சினேன். ஆனால் அவள் மேலும் மேலும் ஆர்வமடைந்து என்னுடன் வாதாடினாள். உன்னுடன் உள்ள நட்பு முடிந்து விட்டது என்றாள். “எல்லாம் முடிந்து விட்டதாம்’ எவ்வளவு கொடூரமான கத்தரிக்கப்பட்ட வார்த்தைகள்.
கடைசியாக நான் வார்த்தைகளை விழுங்கிட்டு ஒரு கட்டைமாதிரி அசையாமல் நின்றேன். அப்படி நின்று கொண்டு நான் அவளது கண்ணுக்குள் எட்டிப் பார்த்தேன். ஆம், நான் நினைத்தது சரிதான்! அவள் சிரித்துக் கொண் டிருந்தாள். எனக்கு ஆத்திரம் வந்தது. என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு நானும் அவளைப் போல் சிரிப்பதற்கு முயன்றேன். அது ஒரு மோசமான முயற்சியாயிருந்தது. சிரிப்பு

Page 51
88 அம்மாவுக்குத் தாலி
வரவில்லை எனக்கு, ஆனாலும் என்னுடைய முகவாய் அழுகைக்காக அதிர்ந்து கொண்டுதான் இருந்தது.
அவள் அள்ளியெறிந்தது போல என்னை அலட்சியமாகப் பேசிய பிறகு அவளுக்கு முன்னாலே நான் பிற்பாடு நின்றுகொண்டிருக்கவில்லை. ஏமாற்றுவது உனக்கு இரண்டாந் தோலாகிவிட்டது. “ஒரு ஆணை அவன் மனத்தின் அடி ஆழம்வரை போய் கெடுத்துக் குட்டிச்சு வராக்கி விடக்கூடிய பெண் நீ,” என்று அவளுக்கு சுடச்சுடப் பேசிவிட்டு என்வீட்டுக்கு நான் வந்தேன். அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்து, அந்த மனப்புயலால் காற்றில் அலையும் சருகுபோல் என் உடம்பு குலுங்கியது.
கானல் நீரைக் கண்டமான்கள், தாகத்தைத் தணித்துக் கொள்ள உயிரைக் கொடுத்து ஓடி, ஒடி, ஓடி, கடைசியில் துள்ளி விழுந்தே செத்துப்போய்விட்ட கதைதான் என்கதையும் என்று, என் வீட்டில் இருந்து கொண்டு என்காதல் தோல்வியையும் அவள் எனக்குச் செய்த துரோகத்தையும் நினைத்து உருகி உருகி நான் உளுத்தேன். ஓர் ஏழை அனாதை போல நான் அழுதேன். இருட்டு குகையில் ஒதுங்கி விட்ட நிலைபோல் அன்றிரவு என் படுக்கை அறையில் நான் நேரத்தைக் கழித்தேன்.
அடுத்த நாள் காலை, அந்த வீதியாலே நான் போகும்போது அவள் என் முன்னே எதிர்ப் பட்டாள். “நான் இங்கு தங்கியிருக்கப் போறவளல்ல இன்னும் கொஞ்ச நாளில் இந்த இடத்தைவிட்டு கனடா போகிறவள்’ என்று எதிரே நான் வரும்போது அறிவித்துச் சென்ற அந்த முகபாவம் அவளிடம் இருப்பதைக் கண்டேன். எனக்கு வேல் கம்பை வயிற்றுக்குள் செருகியது மாதிரி அப்போது இருந்தது. அந்த மனவேதனையுடன் இந்த வாழ்க்கையே இனி

நீ.பி.அருளானந்தம் 89
எனக்கு வாழ்வதற்கு வேண்டாம் என்றதைப் போல் உடனே எனக்கு ஆகிவிட்டது. அந்த அவமதிப்பும், அவமதிக்கப்பட்ட அகம்பாவமும் எனக்குள்ளாலேயே மேலோங்கினதால் நான் என்னைப் பழிவாங்கவிரும்பினேன்.
இங்கு வந்து நடந்த நடையில், நான் சேரவேண்டி நினைத்து வந்த கடைசி மலையின் அருகே நான் வந்துவிட்டேன். அந்த மலைப் பாறையெங்கும், அரளிப்பான காடு என் கண்களுக்குத் தெரிகிறது. மலையில் ஏறி உச்சியில் போய் நிற்க உடல் குளிர்ச்சியாக இருக்கிறது எனக்கு. சிகரத்திலிருந்து பாதாளம் என்னை இழுத்துக் கொண்டிருக் கிறது. இந்தச் சரிவில் ஒருவர் சறுக்காமல் இருக்கமுடியாது என்றதைப்போல் தெரிந்த இடத்துக்கு இன்னும் நான் நகர்ந்தேன்.
என் நெற்றிப்பொட்டிலே குளிர்ச்சியான உணர்ச்சி பரவியது. என் நெற்றி சில்லிட்டது. கடவுளுக்கு முன்னால் பேசுவதைப் போல “நான் இதிலே விழுந்து தற்கொலை செய்யப்போகிறேன், தற்கொலை செய்யப்போகிறேன்’ என்று அந்த உண்மையை நான் வெளியே சொல்லிக் கத்தினேன். வார்த்தைகள் அங்கே அவசியமில்லை என்பது மாதிரி எனக்கும் பிறகு அது விளங்கியது. அவள் நினைவை இத்தருணம் நான் வரவழைத்துக் கொண்டேன். சிலவிநாடிகள் நான் அசையவுமில்லை, மூச்சு விடவுமில்லை. என் உணர்ச்சிக்கும் மனதுக்கும் நான் முறுக்கேற்றிக் கொண்டு அவள் நினைவு என்னைக் கீழே தள்ளிவிடுவதை நான் எதிர்பார்த்தபோது,
மெளனம் தொடர்ந்து, என் காற்சட்டைப் பையிலிருந்து கைபேசி கெக்கட்டமிட்டுச் சிரித்தது. அந்தச் சிரிப்பை நான் நிறுத்தினேன். அதிலே கேட்டது அவள் குரல்தான்,

Page 52
90 அம்மாவுக்குத் தாலி
அழகாகக் கதைத்தாள், “பேசிவந்த அந்தக் கலியாண சம்பந்தம் தனக்கு வீட்டிலே குழம்பிவிட்டதாம், அதிலிருந்து அவளுக்கு சதா என் நினைப்பேதானாம்.’’ நான் இப்பொழுது சிரித்தேன்.
“இந்தப் பாதையில் இனிமேல் எனக்குப் போகமுடியாது உலகம் இங்கே முடிந்து விட்டது மாதிரித் தெரிகிறது எனக்கு. இந்த மலையில் அந்த உச்சியில் ஏறிப்போய் இப்போ நான் நிற்கிறேன்’ என்றேன் நான். அவசர அவசரமாக, “பிளிஸ் உங்கள் மனதை இனிக் குழப்பிக் கொள்ளாதீர்கள்’’ என்றாள் அவள். “இந்த மலை உச்சியிலிருந்து இதோ இப்பொழுதே நான் உன்னிடம் இறங்கிவருகிறேன்’ என்றேன் நான். “நானும் என் நிலையிலிருந்து நன்றாக இப்போ இறங்கியே நிற்கிறேன், என்னை உடனே வந்து சந்தியுங்கள்’ என்றாள் அவள் எனக்கு இப்பொழுது வாழ்க்கை அவசியம், வாழ்க்கை! என்கின்ற தைப் போல் மனம் மாறிவிட்டது. என் உயிரும் உணர்வும் மகிழ்ச்சியில், அளவிட்டுக்கூறமுடியாத மகிழ்ச்சியில் திழைத்திருக்க, மலையிலிருந்து கீழேவர இறங்கிக் கொண் டிருக்கிறேன்.
-தாமரை (පීo 2OO7)

தென்னை மரத்தில் உள்ள பாளை விரிப்பின்மேல் அமர்ந்தபடி ஒரு அணில், தண்டுகளில் நெருக்கடித்திருக்கும் மொக்குகளை ஒவ்வொன்றாக கொறித்துச் சுவைத்தபடி இருக்கிறது. அதற்கருகில் நிற்கும் மாமரத்தின் கீழ்க்கிளையில் பசுமையும் மஞ்சளும் கலந்த இரண்டு செங்காய்களும் இவரது கண்களில் தட்டுப்படுகிறது.
பழுக்க வைப்பதற்கு பறித்தெடுக்கப்பட வேண்டிய செங் காய்கள்தான் அவை. ஆனாலும், நினைவெல்லாம் அவருக்கு இடம்பெயர்ந்த அன்று நடந்த அந்தச் சம்பவங்களையே

Page 53
92 அம்மாவுக்குத் தாலி
அசை போட்டுப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. அதைவிட இந்தச் செங்காய்கள் என்ன அதிக அவசியம்? இவர் அந்தச் சிந்தனை மூட்டத்துக்குள்ளேயே தன் கவனம் முழுவதையும் உட்செலுத்தினார்.
இடம் பெயர்ந்த வேளை தன் குடும்பத்துடன் வன்னிக்கு வந்தபோது இவர் பட்டபாடு. அப்பப்பா.1
அதையெல்லாம் இலகுவில் சொல்லி விளக்க (Լpւգ-Այո5606)/.
வீட்டுக் குருவிகள் இந்த நாட்டில் அழிந்து வரும் நிலையில் இருக்கிறதென்று சொல்கிறார்கள். ஆனால், வன்னிக்கு வந்தபோதுதான் இவர் அங்கே அந்தப் பறவை யினத்தைக் கண்டார். அங்கே இக்குருவிகளுக்கும் அவர்களது வீடுகளில் புகலிடம் கிடைக்கின்றன. சுதந்திரமாக அந்த வீடுகளிலெல்லாம் அக்குருவிகள் கூடுகட்டி வாழ்கின்றன.
அந்தக் குருவிகளுக்கு மட்டுமா புகலிடம்? யாழ்க்குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்க்கெல்லாம் அவர்கள் தங்கள் வீடுகளில் இருக்க இடம் கொடுத்தார்கள். உண்ண உணவுமளித்து உபசரித்தார்கள்.
இவரது குடும்பத்தினருக்கும் ஒரு புண்ணியவாளர் தன் வீட்டில் இருக்க இடம் அளித்தார். இவரையும், மனைவி யையும், இரண்டு பெண்பிள்ளைகளையும் தன் வீட்டிலே வைத்திருக்க வீடு அவருக்கு அவ்வளவு செளகரிய மில்லைத் தான். என்றாலும் அந்தக் குடும்பத்து அங்கத்தவர்கள் எல்லாருக்கும் இளகிய மனசு. இயற்கையோடு ஒன்றி வாழ்பவருக்கு இரக்கமுள்ள மனசும் இருக்கும், அப்படித் தான் ஒரு அபிப்பிராயத்தை இவர் தன் மனசிலே வளர்த்தார்.

நீ.பி.அருளானந்தம் 93
விடியும் போதே சோகமான நாளாகத்தான் இடம் பெயர்ந்து வந்திருந்த வேளையில் இவர்களுக்கெல்லாம் இருந்தது. வவுனியா நகர்ப்பகுதிக்குள் எப்படியாவது உட்சென்றுவிட வேண்டுமென்கிற அவதி ஒருபுறம், இளம் பிள்ளைகளையும் தங்களுடன் பாதுகாப்பாய் கூட்டிப்போக வேண்டுமே? என்ற மனக்கவலை மறுபுறம். இப்படியாக இந்தப் பிரச்சினையில் கிடந்து தங்களைப் போலவே மற்றவர்களும் திண்டாடித் திரிவதை இவர்கள் கண் டார்கள். இவரது கைதனில் கொஞ்சம்போல பணம்தான் இடம்பெயர்ந்து வந்த வேளையில் செலவுக்கென்று இருந்தது. அது கரைவதற்குள் கொழும்புக்குச் சென்று விடவேண்டும் என்ற கவலை இவரை ஆட்கொண்டது.
கொழும்பிலிருக்கும் இவரது மகன் ஒரு தனியார் ஸ்தாபனத்தில் வேலை பார்க்கின்றார். இப்போது அந்தப் பிள்ளையை நம்பியே கொழும்புக்குப் போவது இவர்களது திட்டம்.
இவர் ஒரு தோட்டக்காரர். யுத்தம் வந்து சகலரினதும் வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கி வந்தபோது அதிலே அகப்பட்டு இவரும் பல வருடங்களாகத் திண்டாடித்தவித்தார். அச்சுவேலியில், செம்மண்பாடுடைய தரையில் ஒரு கால் செய்கை பண்ணப்பட்டு செழித்து விளைந்த பெரும் மரக்கறித் தோட்டங்களெல்லாம் இந்த யுத்தம் தொடர்ந்ததில், மருந்தில்லாமல் பசளையில்லாமல் ஒரு மனிதன் கைவிரிக்கும் அளவு நிலத்துக்குள் பிறகு செய்கை குறுகிப்போயும் விட்டது.
அதையும் சீராய் செய்ய முடியாமல் தவித்தவர் இவர். செய்த தோட்டத்தையும் ‘ஆமி வருகிறார்கள்’ என்று கேள் விப்பட்டால், விட்டு விட்டு எங்கேனும் ஓட வேண்டும். அது

Page 54
94 அம்மாவுக்குத் தாலி
தண்ணீரின்றி பல நாட்கள் கிடந்து வாடியபிறகு. மீண்டும் அதை உயிர்ப்பிக்கச் செய்த முயற்சிகள் பயனற்றே போயின. இப்படியும் ஒரு வாழ்வா..? என்று வயதுக்கு வந்துவிட்ட தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு இவர் ஏங்கினார்.
அந்த நேரம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கொழும்பி லிருந்து மகன் அனுப்புகிற பணத்தை வவுனியாவில் வந்து இவர் வாங்கிப் போக வேண்டும். மகனும் தன் சம்பளத்துக் கேற்றாப் போலத்தான் வீட்டுக்குப் பணம் அனுப்பி வைப்பார்.
அதை வாங்கிப் போக மாத்திரம் பிரயாணத்துக் கென்று இவருக்கு எவ்வளவு செலவு. போக வர கணக்குப்பார்த்தால் ரெட்டிப்புச் செலவு வரும். அதைவிட உடம்புக்கும் கிளாலிக் கடல் பயணத்தாலே அலுப்பும்வேறு. இப்படி எத்தனை இடியேறுகள். இந்த உத்தரிப்பெல்லாம் இனிமேல் வேண்டாம் என்பதாய்த்தான் பிறகு இருக்கும்.
‘ஓ! வாழ்வு எவ்வளவு கவலையானது' என்றதாய்த்தான் இவைகளையெல்லாம் பட்டுக்கழிக்கும் போது இவரது மனம் எண்ணும்.
முன்பு பலமுறை இப்படி வவுனியாவுக்குப்போய் வந்த அனுபவத்தில் அங்கே சென்ரியில் ஆமியின் கெடுபிடிகளை யெல்லாம் நன்றாய் அனுபவித்து துன்பப்பட்டவர் இவர்.
வவுனியாவிற்குள் நுழைவதற்கு முன் இராணுவத்தின் சென்ரிக்கு வெளியே கால் கடுக்கக் காத்திருந்து, காத்திருந்து காலைவேளை கடந்து மதியத்துக்குக்கிட்டவாய்த்தான் உள்ளே செல்வதற்கு அவர்கள் அனுமதிப்பார்கள். அதுவும், வேண்டாவெறுப்பாகத்தான் அங்கே காத்திருக்கின்ற சனத்தை ராணுவத்தினர் உள்ளே போக விடுவார்கள்.

நீ.பி.அருளானந்தம் 95
அப்போது இவர்களைப் பார்க்கின்ற விறைப்புமுழியிலிருந்து வெறுப்பு, கோபம், சந்தேகம், துவேஷம் என்பனவற்றை அவர்கள் அள்ளி வீசுவார்கள்.
உடலெல்லாம் தடவு தடவென்று தடவி, பையெல்லாம் உதறு உதறென்று உதறி தடுமாறி விழிக்கும் சிலரை கெட்ட புராதன வார்த்தைகளாலும் பேசி மனிதர்களைப்போல் எண்ணாது மந்தைகளைப் போலத்தான் இவர்களையெல் லாம் அந்த ராணுவத்தினர் நடத்துவார்கள்.
அப்படியாகவெல்லாம் கஷ்டப்பட்டு உள்ளே சென்ற பிறகுதான் இவருக்கு அதிக திடுக்காட்டமாய் இருக்கும். உள்ளே சொற்ப இடத்துக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்து ‘பாஸ்’ கொடுக்கும் இடத்தில் இறங்கியதும்தான் மனம் ‘திக்குத்திக்கு’ என்று இவருக்கு அடித்துக் கொள்ளும்.
“ஒய். ஐடி குடு.?” வளைத்து நின்று எல்லாரிடமும் அங்கே வாங்கி விடுவார்கள், அடையாள அட்டையை. இந்த அடையாள அட்டையைக் காட்டி பதிந்துதான் நகரின் உள்ளே போய் இருப்பதற்கு அங்கே பாஸ் பெற முடியும்.
“எல்லாமா அங்கினியா போப்போ.’’ எனும் புறங்கை அசைவால் அனைவரையும் விரட்டுகின்றார்கள் அவர்கள்.
இனிமேல் உள்ளே வந்தவர்கள் எல்லாரிலும் இவர்களது அதிகாரந்தான் கொடிகட்டிப் பறக்கும். அவர்களது சர்வாதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகத்தான் இவர்களெல்லாம் அடங்கி ஒடுங்கி இருந்து நடந்து கொள்ள வேண்டும். மீறி இங்கு யாரும் மூச்சு விட்டால் கூட ஆபத்துதான்! அப்படி மீறியதற்குத் தண்டனையாக நடு வெயிலுக்குள் நாள் முழுக்க நிற்க வேண்டிவரும். அடி

Page 55
96 அம்மாவுக்குத் தாலி
உதையும் அவர்களிடம் வாங்கிக்கட்ட வேண்டியும் வரும்சிலவேளை, வந்த இடத்திற்கே சென்ரியிலிருந்து துரத்தியும் விட்டு விடுவார்கள்.
அடையாள அட்டையை வாங்கினாற்பிறகு ஒவ்வொருவ ராய்க் கூப்பிட்டு அங்கே விசாரணை தொடங்கும் நகருக்குள்ளே போகின்ற மனிதருக்கெல்லாம் ஒவ்வொரு பிரச்சினைகள் தலைமேலே சுமையாக இருக்கும். அதைப் பற்றியெல்லாம் அந்தப் பொலிஸ்காரர்களுக்கு எதுவித அக்கறையுமில்லை. தங்கள் பிரச்சினைகளை இவர்கள் விவரமாகச் சொன்னாலும் அவர்கள் கேட்கும் நிலையிலில்லை.
அவர்களுக்கு வேண்டியதெல்லாம் புலிகள் எங்கே காம்ப் போட்டிருக்கிறார்கள்? எங்கே பதுங்கு குழி வெட்டு கிறார்கள்? எந்தவிதமான ஆயுதங்களையெல்லாம் அவர்கள் வைத்திருக்கிறார்கள்? என்பவைதான்.
எல்லாரையும் கூப்பிட்டு விசாரித்து முடித்து விட்டு கடைசி யாகத்தான் இவரை அங்கே வரும்படி கூப்பிட்டார்கள்.
அவர்களிடம்தான், இவரது அடையாள அட்டை இருக்கிறதே, பெயரைக் கூப்பிட்டதோடு அந்த அறைக்குள்ளே இவர் போனார். மரியாதையுடன் "ஐயா இப்புடி இருக்க’ என்றுதான் அங்கு இருந்து விசாரணை செய்கிற பொலிஸ்காரர் முதலில் இவருடன் கதைத்தார். அந்தப் பண்பான பேச்சைக் கேட்டு “அடடா பொலிஸ் காரர்களும் இப்படியாக மரியாதையாகக் கதைக்கின்றார் g;Gømr”” என்றதாய்த்தான் இவர் அப்பொழுது ஆச்சரியப்பட்டார். "ஐயா இங்கே பாருங்க. இந்த புலி அங்க இருக்கிறது நீங்க பாத்துருக்கீங்க தானே?”

நீ.பி.அருளானந்தம் 97
“ஓம். ஓம்.’’ என்கிறதாய் எச்சிலை விழுங்கிக் கொண்டு இவர் சொன்னார். இனியும் என்னென்னவெல்லாம் கேட்டு வைக்கப்போகின்றாரோ? என்கிற பயத்துடன் இவர் இருக்கும்போது,
“எங்கயெல்லாம் அவுங்களே அங்கின நீங்க பாத்திருக் கீங்க’ என்று பொலிஸ் பார்வையோடு அடுத்த கேள்விக் கணையைத் தொடுக்கின்றார் அவர். அப்படி அவர் கேட்ட கேள்வியினாலே, கால்களுக்குக் கீழே பூமி நகர்வது போல் இருந்தது இவருக்கு.
துவக்கைக் கண்டாலே கண்களை இறுக்கவும் மூடிக் கொள்கின்ற, அப்படியான பயந்த சுபாவம் இவருக்கு. ‘என்னிடம் போய் இதையெல்லாம் கேட்டு வைக்கின்றாரே? என்று அதனால் இவருக்கு மனம் குழம்பிவிட்டது.
வவுனியாவுக்குப் போனால் சென்ரியில் வைத்து இப்படியான விசாரணைகள் உண்டு என்பது அங்கு போய் வருபவர்களுக்கு நன்றாய்த் தெரியும். பலரும் அங்கு போய் வருபவர்களிடம் அவற்றைக் கேட்டு அங்கெல்லாம் போய் எப்படியாக பொலிஸ்காரர்களை சமாளிப்பது என்பது பற்றி முன்பே அதற்குரிய ஒத்திகை ஒன்றை தங்கள் மனசுக்குள்ளே நடத்திக் கொள்வார்கள்.
அதிகமாக அங்கே உள்ளே வருகின்ற எல்லாருடைய பதில்களும் ஒன்றாய் இருப்பதைக் கவனித்து அந்தப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆத்திரம் வரும். இவரும் மற்றவர்களைப் போலவே அவர் கேட்ட கேள்விக்கு முன்பு தான் ஒத்திகை பார்த்து வைத்திருந்த அந்தப் பல்லவியைப் பாடினார்.
“சேர். அவங்கள் எங்கயும் துவக்கோடதான் போவாங்கள். றோட்டாலதான் போவாங்கள். அதைவிட

Page 56
98 அம்மாவுக்குத் தாலி
வேறொண்டும் எனக்கெண்டாத் தெரியாது. நான் அவயளோட கதைக்கிறதுமில்லை.”
“பட்டுவா. என்னுடா நீ என்ன மட்டேயன் ஆக்குறுயா?. லீமா வுட்றியா நீ எனிக்கி?”
அப்பப்பா, எவ்வளவு கர்ண கடூரமான வார்த்தைகள்? சொற்ப வேளைக்கு முன் இவர் என்னை ஐயா என்று அழைத்தாரே அந்த மரியாதையெல்லாம் கண நேரத்துக்குள் எங்கே போயிற்று? என்று அவரது இன்னொரு முகத்தைக் கண்டு இவருக்கு ஏமாற்றம். காலையிலிருந்து இப்பொழுதைய நேரம் வரையிலும் தண்ணிர் வெந்நீர் என்று குடிக்க இல்லாமல் கிடந்து காய்ந்தவருக்கு நாவும் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது போல் இருந்தது. என்றாலும் வலுவாக கஷ்டப்பட்டு.
“நான் அவயளை றோட்டு வழிய கண்டதொழிய கதைக்கக் கிதைக்கேல்லை ஐயா. எங்க அவேயள் இருக்கினம் எண்டெல்லாம் உண்ணாணை எனக்கெண்டாத் தெரியாது நான் பிள்ளை குட்டிக்காரன். இதெல்லாத்தையும் நான் போய்ப் பார்த்ததுமில்லைக் கொண்டதுமில்லை.” அவர் வெருட்டிய வெருட்டில் நன்றாகப் பயந்த என்ன சொல்கின்றேன் என்று தெரியாத விதத்தில் இவர் அலட்டினார்.
"அடோ நிப்பாட்டுடா. அம்மட்ட பாடுவாறாஸ்கல். நீ. நீ. புலி என்னுடா?”
"ஐயோ நான் புலி இல்லை சேர்’ “ஒ. ஒ. அய்த்தான் சுவர். நீ ஒறிஜினல் புலிதான்.”
"ஐயோ ஐயா நான் கயிற்றப்பட்டவன். பிள்ளை குட்டிக்காரன் ஐயா நான்’

நீ.பி.அருளானந்தம் 99
“பொத்தடா வாய். நீ புலிதான். நீ இன்னிக்கு வவுனியா போறது சரிவாறதில்லை. திரும்பி ஒன்னே நான் அவுங்குட இடங் நான் அனுப்புறது. நீ புலிதான். சுவர் சுவர் நீ புலி சப்போட்!”
பொலிஸ்காரருக்கு கேந்தி கூடிவிட்டது. பல்லை நெருநெருத்துச் சினக்கொதிப்பால் பயங்கரமாயிருந்தார் அவர். அப்படியான கடுமையான சொற்கள் இவரது மூளையின் இரண்டு இடுக்குகளிலும் ஒவ்வொரு நரம்பிலும் ரம்பம் போல்’அறுக்கத் தொடங்கிவிட்டது. அதனால் உடல் குறாவிப்போய் உடுத்திருந்த வேட்டி இடையைவிட்டு கழரும் அளவுக்கு பயத்தால் உடல் மெலிந்ததைப் போலவும் இவர்
ஆகிவிட்டார். சலம்சலமாய் உடலும் வேர்த்தது.
“ஐயா சத்தியமாச் சொல்லுறன் நான் அவங்களுக்கு சப்போட்டுமில்லை ஒண்டுமில்லை நான் சொல்லுறது களையும் நம்புங்கோ. ஐயா, இவரது மனத்துயரம் முழுக்கவும் முகத்தின் மூலம் வெளிப்படையாகத் தெரிந்தது. இவரது முகத்தைப்போலவே விசாரணையின் போது பலரது முகங்களையும் கண்டு பழகிப்போய் மனம் கல்லாய்ப் போய்விட்ட அந்த பொலிஸ்காரர் எவ்வித சலனமுமின்றி கொஞ்ச நேரம் இருந்து யோசித்து விட்டு வெறுப்புடன் இவரது அடையாள அட்டையை தன்கையில் எடுத்து நீட்டினார்.
“இந்த வாட்டி நாண் உன்னே விட்றேன். இனி நீஅப்புறம் இங்கினேவா வந்தது எல்லாம் சர்றியா எனிக்கி நீ சொல்லோனும் சறியா’ மிருகத்தனமான அலட்சிய பாவத்துடன் அவர் சொன்னார். அவர் சொன்னதுக்கு உடனே தலையைத்தான் லேசாக இவர் ஆட்டினார். அடையாள அட்டையை கையில் வாங்கிக் கொண்டால்

Page 57
100 அம்மாவுக்குத் தாலி
போதுமென்று இவருக்கு அப்போது இருந்தது. வெளியே உள்ள அந்த மண்டபத்தில் வந்தவர்கள் முழுக்க நிரையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அங்கேதான் ஒருநாள் பாஸ் கொடுபடும் என்பதால் இவரும் போய் அவர்களுடன் ஒரு நிரையின் பின்னால் நின்று கொண்டார்.
“என்ன மாதிரி ஆணவம் பிடிச்சவங்கள். அக்கிரமக் காரன்கள்’ என்று பொலிஸ்காரர்களையும் ராணுவத்தின ரையும் ‘பாஸ்’ எடுக்கவென்று நிரையில் நின்றபோது இவரது உள்ளம் நினைத்துப் பார்த்தது. அதனால் சுரணையுள்ள இவரது உள்ளம் அடிபட்டு விழுந்த கருவண்டைப்போல் சுழன்று சுழன்று துடித்தது.
இவர் உள்ளே வரும்போது சென்ரியில் வைத்துக் கண்ட சம்பவமொன்று மீண்டும் இவரது கண்ணுக்கு முன் பளிரடித்தபடி காட்சிக்கு வந்தது.
அங்கேயிருந்து இவருடன் உள்ளே வந்தவன்தான் அவன்அவனுக்கு நடுத்தர வயதுதான் இருக்கும். சரியான நாட்டுக்கட்டை வாயில் ஒரு சுருட்டை வைத்துப் புகைத்துக் கொண்டிருந்தான், அவன் உல்லாசமாக, அதிலே நின்றபடி சுருட்டுப் புகைப்பதைக் கண்ட ஒரு ராணுவத்தினன்.
“சுருட்டு பத்துகறனுவாத ஏக்க கண்ட. காப்பாங் ஒய்” (அதை சாப்பிடு) என்று துவக்குப்பட்டியை தோளிலிருந்து கழற்றி துவக்குக் குழலை நேராய் அவன் முன் நீட்டினான். அவனது அதட்டலிலே பயத்திலும் பதட்டத்திலும் ஆட்பட்டுப்போய் நெருப்புடன் அந்தச் சுருட்டையே சப்பி விழுங்கிவிட்டான் அந்த அப்பாவி
அதை விழுங்கும் வேளையில் சுருட்டுக்காரத்தால் மார்புக்கூடு பிரிந்து விரிம்படியாக அவனை ஊடறுத்தது

நீ.பி.அருளானந்தம் 101
இருமல். அந்த விகாரக்காட்சியைக் காணவும் நீண்ட பெருமூச்சுகள் இவரிடத்தில் உண்டாகியது. அதனால் மனசுக்குள் இவருக்கு அக்கினிப்பந்து சுழன்றது.
‘நாங்களெல்லாம் இவர்களது கண்களுக்கு மனிதர்களல்ல. மிருகங்கள். காட்டிலிருந்து வழிமாறி நாட்டுக்கு வந்து விட்ட மிருகங்கள்’ என்கிறதாய் நினைத்து இவரது மனம் நரக வேதனைப்பட்டது. உலகம் புளித்தது.
எப்படியோ அந்த நிரையில் நீண்ட நேரமாய் நின்றிருந்து நிலத்தில் குழிபறித்து. நகர்ந்து நகர்ந்து சென்று ‘பாஸ்சுடன் சூரியன் மேற்கே கீழடிபோக ஆரம்பிக்க வவுனியாவிற்குள் சென்றார் இவர். நெடுகஷம் அதிலே நின்றிருந்ததில் கால்களும் ‘பூர் பூர்’ என்று அவருக்கு வீங்கிவிட்டது.
பட்ட இம்சைக்கெல்லாம் மன அமைதி தேடி காற்றில் மிதக்கும் பஞ்சுபோல் மதுக்கடைகளுக்கு அங்கே சிலர் பறந்தோடினர். உள்ளே வந்த வியாபாரிகள் கடை வழியேநின்று சந்திரிகா பையினுள் சாமான்களை வாங்கி திணித்துக்கட்டி காலையிலே மீண்டும் புறப்படும் நிலைக்கு தங்களை தயார்படுத்துகிறார்கள்.
இவர் கொழும்பிலுள்ள தன் மகனுடன் தெலைபேசியில் தொடர்பு கொண்டு கதைப்பதற்காக ஒரு கொமினி கேசனுக்குள் நுழைந்தார். தொலைபேசியில் கதைத்தபோது மகன் நாளைக்கு வருவதாகக் கூறினான்.
பிறகு கடையிலே சாப்பாடு லொட்ஜிலேபடுக்கை என்று அந்தப் பணத்தை மகனிடம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போகும்வரையும் ஏதோ அந்நிய நாடு ஒன்றிற்குள் ஒரு எதிரியைப் போல புகுந்து பயத்துடன் இருந்து விட்டு திரும்ப வேண்டியதான ஒரு துர்ப்பாக்கியநிலை இவருக்கு ஏற்பட்டது.

Page 58
102 அம்மாவுக்குத் தாலி
கோடை இடி இடித்தது மாதிரி நெஞ்சை அதிரவைக் கிறது இந்த நினைவுகள். அவைகளை நினைத்துத்தான் இவருக்கு இப்பொழுதும் கவலை. தான்பட்ட இம்சை களையெல்லாம் தன் பிள்ளைகளும் அவர்களிடம் படவேண்டியதாய் வருமோ? என்று தன்னை எரித்துக் கொண்டிருந்தார். பொழுது பட்டுப் போனால் இவரது குடும்பத்தவரும் அந்த வீட்டுச் சொந்தக்காரர்களும் வெளியே வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டு இந்தப் பிரச்சினையில் நாட்டு நடப்புகள் பற்றித்தான் கதைத்துக் கொள்வார்கள்.
“யாழ்ப்பாணத்தில இருந்து வந்த அந்தக் குடும்பம் நேற்று பெண்டு பிள்ளையளோட சென்ரியால உள்ளே போயிட்டுதுகளாம். இண்டைக்கு அடுத்தவீட்டில இருந்த ஆக்களும் பிள்ளையளோட உள்ள போயிட்டுதுகளாம்.”
இப்படியான செய்திகளை அந்த வீட்டுச் சொந்தக் காரரிடமிருந்து காதில் கேட்கக் கேட்கத்தான் இவர்களுக்கு உள்ளம் சோர்வடையும் ஒரு நிலை தோன்றும். இதெல்லா வற்றையும் கேள்விப்பட அன்று இரவு இவர்களுக்கு ஒழுங்கான நித்திரையுமில்லை நிம்மதியுமில்லை. விடியற்காலையில் குளிர்ந்த காற்று வீசிய பொழுதுங்கூட இவர்கள் கண்ணோடு கண்மூடவில்லை,
ஒவ்வொரு நாளும் காலையில் உடுப்புப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு இவர்களெல்லாம் வானில் ஏறிப்போய் இறங்கி அங்கு வந்திருக்கும் மற்ற சனங்களோடு வவுனியாவிற் குள் போக சென்ரிக்கு அருகில் நிற்பார்கள். கொக்குகள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு நீர்ப்பரப்பையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் இவர்களும் அந்த ஆமி சென்ரியை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

நீ.பி.அருளானந்தம் 103
தங்களையும் கூப்பிட்டு உள்ளே போக விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மதியம் வரை அதிலே கால் கடுக்க நின்று சோளம் போட்டால் பொரியாகி விடும் அப்படியானதொரு வெயிலில் கிடந்து காய்வார்கள். வெயிலுக்குள் நின்று கொண்டிருந்ததால் அவர்களின் முகங்களெல்லாம் தோல்சீவிய கருணைக்கிழங்கைப்போல் ஆகிவிடும்.
"அப்பா, தண்ணியத் தண்ணியக் குடிச்சும் அடங்காம நெஞ்சு எரியிறமாதிரிக் கிடக்கு. உங்கனைக்க ஒரு சோடா வாங்கி நானும். எல்லாரும் குடிப்பமே”
இவரது மூத்த மகள் தாகத்தைத் தாங்கமாட்டாள். கொண்டு வந்த தண்ணீரை கடக்குக் கடக்கென்று குடித்து முடித்து விட்டு அதிலே நிற்கும்போது சோடாவுக்கு ஏங்குவாள்.
அவள் கேட்டவுடனே “வாங்கிக் குடியனம்மா’ என்பார் இவர் விலையைக்கேட்டால் அந்த இடத்தில் “நூறு ரூபாய் தான் அதை விடக்குறைக்கேலாது” என்பார்கள் அவர்கள்.
“சரி சரி குடும்’ என்று அவரே சோடாவை வாங்கிக் கொடுப்பார். அதை கையில் வாங்கிக் கொண்டு மகள் இவரிடம் கேட்பாள் “ஏனப்பா ஜிஏ யின்ரை லிஸ்டில எங்கட பேரையும் குடுத்திருக்கிறியள்தானே. இந்த சென் ரியில இருந்து எங்கடை பேரையும் சொல்லி ஆமி கூப்பிடும்தானே?” “என்னவோ அம்மா. அப்பொருக்கால் உள்ள போகேக்கே அங்கின கஸ்டப்பட்டு நானும் ஜி.ஏ. யிட்டப் பதிஞ்சநான்தான். பிறகு அதுகளைப்பற்றி எனக்கு என்ன தான் விளங்கும் இவர்கள் தான் இனி எங்களைக் கூப்பிடோணும்.”
“என். னனப்பா நீங்கள் சொல்றியள். ஒண்டரை மாசமாய் வவுனியாவுக்கு போறதுக்கு ஒவ்வொரு நாளும்

Page 59
104 அம்மாவுக்குத் தாலி
நாங்களும் இங்கினை வந்த நிண்டு கொண்டு தூங்கிறம். ஏப்பை சாப்பையாத்தான் நாங்களும் இதில நிக்கிறம்போல. உங்க போறதுகளெல்லாம் பேர்கூப்பிடக் கூப்பிடப் போகுதுகள். ஆனா இவங்கள் எங்கட பேரைச் சொல்லி கூப்பிடேல்லயே அப்பா.’’ விரக்தியுள்ள அவளது பேச்சு காய்ந்துபோன இலைச்சருகுகளின் குவியலாக இருந்தது. இதைசொல்லும்போது கவலையினால் அவள் கண்கள் குளமாகின்றன. இவரது மனைவியும் நொந்து நூலாகிற மாதிரி வாடிவிட்டாள். இளைய மகள் எல்லா கவலைகளையும் பொறுத்துக் கொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள்.
லஞ்சம். லஞ்சம். எங்கேயும் இந்த லஞ்ச ஊழல்கள்தான் இந்தப் பிரச்சினையின் போது தலைவிரித்தாடுகின்றன.
ஆண்டபண்டம் முழுவதையும் விட்டு விட்டு உப்புக் கல்லுக்கும் துப்பில்லாத நிலையில் உடு துணிமணிகளை மட்டும் கொண்டு இடம் பெயர்ந்து வந்தவர்களிடமும் லஞ்சம் பெறாது கடமையாற்றுவதற்கு யாருமே அப்போது தயாராக இல்லை.
பொலிஸ், ஆமி, கிராம சேவகர்கள் என்கிற கூட்டமே லஞ்சப்பட்டாளங்களாக இருந்து மக்களின் பணத்திலே பசியாறினார்கள். ‘பாஸ்’ என்ற பேய் இவர்களுக்கு சாதகமாயிருந்து மக்களின் பணத்தை கொள்ளையிட்டுக் கொடுத்தது.
இப்படி அலையுண்டு வந்தவர்களின் பணத்திலே இந்த வேளைகளில் அவர்களெல்லாம் கொழுத்தார்கள். பெரும் வாழ்க்கை வசதிகளைக் கண்டார்கள்.
இவரும் இப்படி சில இடங்களில் திரிந்து நம்பிப் பணத்தை செலவழித்து கடைசியில் ஏமாந்தார்.

நீ.பி.அருளானந்தம் 105
வீட்டிலே அதையெல்லாம் சொல்ல முடியாததால் அவர்களுக்குத் தெரியாமல் எல்லாவற்றையும் மூடி மறைத்தார். இப்போது கையில் இருந்த சொற்பப் பணமும் இவருக்குக் கரைந்து கொண்டிருந்தது.
“எப்பவெண்டாலும் ஒரு நாளைக்கு எங்களை உள்ள போக விடத்தானே வேணும்?”
மனத்தில் மண்டிக் கிடக்கிறது இந்த நம்பிக்கை. இப்படியாக இவர் ஒவ்வொரு நாளும் அந்த ஆமி சென்ரியடியில் வைத்து தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொள்வது அன்று ஏனோ அது வெறும் பேச்சல்ல. நிஜம்தான், என்றதாய் ஆகிவிட்டது.
இவரது குடும்பமும்அந்த நன்நாளில் உள்ளே போவதற்குக் கிடைத்தது. பாதை திறந்தது என்ற மகிழ்வில்தான் இவரது குடும்பம் உள்ளே சென்றது. ஆனால், உள்ளே போய் பட்டுக்கழித்த வேதனையெல்லாம் இலகுவில் சொல்லி விளக்கிட முடியாதவை.
மாறி மாறி பல முகாம்களில் இருந்து வாடிய வாழ்க்கை ஒரு மனிதனின் ஆகக்குறைந்த எளிய வாழ்க்கையிலும் பார்க்க இழிவு வாழ்க்கையாக இவர்களுக்கு இருந்தது.
எஸ்கிமோக்களின் ‘இக்ளு வீடுகளைப் போன்ற இட விஸ்தாரமற்ற குறுகலான இடங்களில் (மாடுகளை விரட்டி மடக்கிக் கொண்டு போய் பட்டியில் அடைத்தது மாதிரி இவர்களை அடைத்து விட்டு) பன்றிக்குத் தீனி போட்டது போல் சாப்பாடு கொடுத்ததை எந்த ஜென்மத்திலும் மறக்க (Մ)ւգ-Ամո ֆ].
எங்கோ ஒரு நாளில் எவருக்கும் விடுதலை இருக்கும். அது இவர்களுக்கும் உண்டு என்பதாய் ஒரு நாள் விடிந்தது.

Page 60
106 அம்மாவுக்குத் தாலி
காடாந்தகாரமான சிறை போன்ற அந்த இடத்தில் இருந்து வெளியேற இவர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
கோழிக்கூடு முகாமிலிருந்த இவர்களுக்கு அன்று கொழும்புக்குப் போக பாஸ் கிடைத்தது. முறிந்து ஊசலாடிக் கொண்டிருந்த அவர்களது மனசெல்லாம் வெள்ளம் வடிந்த நாணலைப்போல தலைதூக்கின. அந்த முகாமிலிருந்து அவர்களுக்கு அன்று விடுதலை. இவர்களது மனங்களிலே அந்தப் பொழுதின் ஆனந்தம் குமிழிட்டுக் கொப்பளித்துப் பெருகிற்று.
இவர் மகிழ்ச்சியுடன் சிரித்தார். இவரது மனைவியும் அவரோடு சேர்ந்து சிரித்தாள். தாயையும் தகப்பனையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளும் சந்தோஷத்தில் சிரித்தார்கள். இவ்வளவு காலமும் சீரழிந்து போன வாழ்க்கையில் இப்போதுதான் அவர்களால் உண்மையில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது.
இருந்தும் என்ன பயன்? யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இவர்களால் பிற்பாடு முற்றிலும் ஈடு செய்து கொள்ள முடியவில்லை. பெண்பிள்ளைகளுக்கு வயது போய் விட்டதாலும் போதிய பணம் கையில் இல்லாததாலும் சீதனச் சந்தையில் பெண் பிள்ளைகளை கரை சேர்க்க ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க இவர் பல வழிகளிலும் எதிர் நீச்சல் போட்டார்.
ஒருவாறு பிள்ளைகளின் காரியம் முடிந்தது. என்றாலும் தன் சொந்த ஊரை விட்டு வந்து இன்று வாடகை வீட்டில் இருக்கும் இவருக்கு ஒழுங்காக இரவில் நித்திரையில்லை, நிம்மதியில்லை,
வீடு வாசல் இழந்த சோகம் இவரது முகத்தில் இருட்டாய் அப்பியிருக்கிறது. யாருடையதோ ஒரு இடம்,

நீ.பி.அருளானந்தம் 107
யாருடையதோ ஒரு வீடு எனதென்று சொல்ல இங்கு ஏதுண்டு என்ற ஏக்கம்.
இந்த நிலம் எனக்குச் சொந்தமில்லை, இந்தவீடு எனக்குச்
சொந்தமில்லை. இந்த மரம், நிழல், காற்று, தண்ணிர்
ஒன்றுமே எனக்குச் சொந்தமில்லை, என் தாயகம் பூமியில் மீண்டும் போய் வாழக்கிடைக்குமா?
ஒவ்வொரு கணமும் இதே ஏக்கம்தான் இவரது மனத்தை கொத்திக் கிளறிக் கொண்டிருக்கிறது. என்ன ஏது என்று தெரியாத திக்பிரமையிலேயே இவர் எந்நேரமும் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறார். அள்ளி அள்ளிப் பிடிக்கும்போதும் பிடிப்பை வழுக்கிக் கொண்டு தூர தூரப் போகும் வாழ்க்கை. இவர் விருப்பம்போல இயங்க முடியாமற்போகும் போதாமைதான் இது, இந்தச் சிந்தனைகளெல்லாம் மந்தித்து மறைவதற்குள்.
‘ஏதடா அந்தச் செங்காய் நிலத்தில் விழுந்துவிட்டதே' என்று அந்த மாமரத்தின் அடியில் போய்ப் பார்த்தார் இவர். அந்த மாங்காயை கீழே விழுத்திய அணில் மறு மரத்துக்குத் தாவிப் பாய்ந்து சென்றது. நிலத்தில் கிடந்த மாங்காயை காலால் தட்டிப் பார்த்தார்.
அது கொந்திக் கிடப்பது தெரிந்தது.
- ജ്ഞu് ©ഥ മഠം)

Page 61
அம்மாவின் இரக்கும்
என் அம்மா உடல் ஆரோக்கியம் உள்ளவர். அவர் நல்ல பொது அறிவும் படைத்தவர். அம்பாளைப் பார்த்தாற்போல தெய்வீக அழகும் உள்ளவர். இப்படியெல்லாம் சொல்ல முகத்தில் அப்படியொரு வாகு அவருக்கு எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல குணவதி என் தாயைப் போன்ற குணவதியான வேறு ஒருவரை அருமையாகத்தான் எங்கேயாவது பார்க்க முடியும்.
ஒரு சிறு எறும்புக்கும் அடைக்கலங்குருவிக்கும் கூட என் அம்மா மனம்இரங்குவார். அம்மா அரிசி புடைத்தால்
 

நீ.பி.அருளானந்தம் 109
காணும் அந்தச் சத்தத்திற்கு அடைக்கலங் குருவிகள் “ஜிவ்’வென்று பறந்து வந்து முற்றத்தடியில் நிறையும். அரிசிக் குறுணல்களை அம்மா சுளகிலிருந்து கொழித்துப்போட அவைகளும் தத்தித்தத்தி நின்று தீனி பொறுக்கும்.
அடைக்கலங் குருவி வந்து வீட்டு முகட்டில் கூடு கட்டினால் குடும்பம் செழிக்கும் என்று ஒரு சாஸ்திரம் அம்மா சொல்லுவார். •
அப்படி எங்கள் வீடுகளிலே அடைக்கலம் தேடும் அந்தக் குருவிகளை இம்சை பண்ணாது இரக்கம் காட்ட வேண்டும் என்றும் எனக்கெல்லாம் அந்த வயதில் அம்மா அறிவுரை சொல்லுவார்.
அதையெல்லாம் கேட்டுக் கொண்டு ‘திருதிரு” வென்று விழித்துக் கொண்டு பூனை போல ஒன்றுமே தெரியாத மாதிரி அமசடக்கமாக நான் இருப்பேன்.
சுண்டுவிரல் இருக்கும் அந்த இடத்தை நோக்கி இவ் வேளை என் கவனமெல்லாம் வீச்சாகப் போய்ப்பதியும்.
கோடிப்புறத்துத் தோட்டத்து மரவள்ளித்தடியில் அது தொங்கிக் கொண்டிருப்பதை நினைத்து அப்போது என் மனசில் கலவரமும் எழும். யார் கண்ணிலும் படாது அங்கு நான் ஒழித்து வைத்திருக்கும் அந்தச் ‘சுண்டுவில் எப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கவலையும் எனக்கு வரும்.
நான் ஒரு ‘சுண்டுவில்” “விண்ணன்’ என்பது ஊரிலுள்ள பெடியன்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பள்ளிக்கூடம் விட்டபின்பு அந்த லீவு நாளிலெல்லாம் வீட்டார்களுக்குத் தெரியாமல் வேலிக்குள் மறைந்து பதுங்கித்திரிந்து, நான் சுண்டுவில்லால் குருவிகளுக்குச் சாக அடிப்பேன்.

Page 62
110 அம்மாவுக்குத் தாலி
வேலிகளில் உள்ள மரங்கள் கொடிகளிலே சின்னப் பறவைகளெல்லாம் சிறகடித்துப் பறந்துவந்து நிற்கும். ஆள் அரவம் காட்டாது “கொவ்வைக் கொடிகள் மூடியுள்ள மரத்துக்குக் கீழே மூச்சையும் அடக்கினாற் போல நின்று கொண்டு சுண்டுவில்லின் கல்லை இழுத்து குருவிக்கு நான் அடிப்பேன். ‘சிளக் கென்ற “றபரின்’ சுருளல் சத்தத் தோடு ‘விர்’ ரென்று கல் விரைவாகச் சென்று குருவியைத் தாக்கும்.
‘அர்ச்சுனனின்’ குறிபோல் என்குறியும் என்றுமே தப்பியதென்றில்லை. அப்படிக் குறிபார்த்து அடித்து விழுத்தும் வில்லாண்மைத் திறமையைக் கண்டு என் ஊர்ப் பெடியன்களுக்கெல்லாம் வியப்புத்தான்.
எத்தனை குருவிகளை இத்தனை நாளைக்குள் நான் சாக அடித்திருக்கிறேன் என்று குருவிகள் கல்லடிபட்டு கீழே விழும்போது நான் கணக்கெடுத்து வைத்துக் கொள்வேன். அதை ஒரு சாதனையாக இரவில் படுக்கும் போதும் நான் நினைத்துப் பார்ப்பேன். நித்திரையிலெல்லாம் குருவிக் கனவுகளே அதிகமாய் எனக்கு வரும். அந்தக் கனவுகளில் குருவிகளெல்லாம் சேர்ந்து என்னை துன்புறுத்துவதுமாதிரி சில சம்பவங்களும் அந்தக் காட்சியில் வரும்.
குருவிகளை அடிக்கப் போய் வேலிக்கரையில் நான் பதுங்கி நின்றால் அப்போது சின்னஞ்சிறு குருவிகள்தான் என்பார்வையில் அகப்படும்.
கொட்டைப் பாக்குச் சிட்டு, தேன்சிட்டு, கரிக்குருவி, கொண்டலாத்தி, மாம்பழத்தி, குக்குறுப்பான், வெடிவால் குருவி, தச்சன் குருவி, நிறைய மஞ்சள் கழுத்துக் கொண்ட தூக்கணாங் குருவிகள் என்று எல்லாம் வேலியிலுள்ள பூவரசு, முள்முருங்கை, கிளுவை, ஆமணக்கு, அரலி மரங்களில் வந்து வெயிலுக்கு கொஞ்சம் இருந்து இளைப்

நீ.பி.அருளானந்தம் 111
பாறும். இந்த நேரம் அவைகளை நான் சுண்டு வில்லால் அடிக்கும் போது சிலவேளை கல் இலக்குத் தப்பி எகிறிப் போய் அடுத்த வீட்டுக் கூரையின் மேலும் தவறுதலாய் விழுந்து விடும்.
"அறுதலி பெத்ததுகள். வேசைபடையள். அங்காற்றா கெற்றப்போல் வைச்சு அடிக்கிறது?. ஒடுங்கடாங்காலை. அடிக்கிறவரை உண்ணாணக் கண்ணால நான் கண்ட னெண்டா அவற்ரை கையை முழுக்க முறிச்சு அடுப்புக்க நான் வைச்சிடுவன்.”
“ஒ.” அது பெரிதான ஒரு மிரட்டல் சத்தம்தான்.
அடுத்த வீட்டு அன்னம் ஆச்சியின் ஏச்சு அண்டங் காக்கையின் கத்தல் போலத்தான் இருக்கிறது. அவருக்குத் தோதாய், உடனே வீட்டுக்குள்ளாவிருந்து வெளியே முற்றத்தடிக்கு வந்து என் அம்மாவும் ஒருமுறை,
“ஆர் எவர் இங்கின வந்து நிண்டு கொண்டு உது வழிய குருவியடிக்கிறவர். எந்தப்பெடி அந்தப் பெடியெண்டு நானும் ஒருக்காக் கண்டுபிடிச்சனெண்டா பிறகுதான் இருக்கு எல்லாம் அவருக்குக் கண்டியோ. கறும இழவுகளை ஏன்தான் உந்தப் பெடியள் செய்து கொண்டு திரியிதுகளோ எனக்கெண்டாத் தெரியேல்ல. இந்தப் பாவத்தையெல்லாம் ஏன் உதுகள் செய்யிதுகள்.?”
எனக்கு அம்மா ஏசுவதைக் கேட்க “பக்பக்’கென்று நெஞ்சடிக்கும். உடனே கையிலுள்ள சுண்டு வில்லை. சுறுக்காக பூவரசு மரப்பொந்திற்குள் போட்டுவிட்டு வேலியருகாலே நடந்து வந்து ஒன்றுமே தெரியாத நல்ல பிள்ளை மாதிரி நான், வளவின் நடை வாசற்படியில் போய் உட்கார்ந்து விடுவேன்.

Page 63
112 அம்மாவுக்குத் தாலி
எங்கள் வீட்டுக்கு வெளியே மேற்குப் பக்கமாகச் செல் லும் வீதிவழியாகச் சென்றால் காட்டுப்பக்கமாக இருக்கும் காளி என்ற பெயருடைய கிழவியின் ஒலைக்குடிசை வரும்.
அதைத்தாண்டி வரும் வயிரவர் கோயிலைக் கடந்து சிறிது தூரம் அந்தப்பாதை வழியே நடந்தால் 'பளபள’ வென்று தளிர்த்த இரண்டு பெரிய ஆல மரங்களும் ஒரு கூழா மரமும் நிற்கின்ற அந்த இடம் வரும்.
மனிதச் சந்தடிகளற்ற அந்த இடத்திலேதான் பெரும் பறவைகள் கிளையாகப் பறந்து வந்து அந்த மரங்களில் தங்கும். பட்சிகள் அலைஅலையாகப் பாடிக் கொண் டிருக்கும் அந்த மரங்களில், பழம்தின்னு:ம் குருவிகளை வேட்டையாட நானும் என் நண்பர்களும் அங்கே படையெடுத்தாற் போல சில நாளிற் போவோம்.
ஆலம் பழத்தை முழுதாய் விழுங்கிவிடும் அண்டங்காக்கை முதல், கிளி, குயில், தவிட்டுப் புறா, காட்டுப் புறா, வெடிவால் குருவி இன்னும் எத்தனையோ பறவைகள் ஜாதியெல்லாம் வர்ணம், வர்ணமாக எங்களுக்குத் தெரிய கிளைகளில் இருந்து கொண்டு பழம் தின்னும். சில குருவிகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவி விளையாடிக் கொண்டிருக்கும்.
அவைகளைப் பார்த்து நாங்கள் சுண்டு வில்லால் அடிக்கும்போது விசிறிபோன்ற இறக்கையை விரித்தபடி அடிபட்ட குருவிகள் மரத்திலிருந்து கீழே பொத்தென்று நிலத்தில் விழும். இப்படியெல்லாம் பறவைகளை வருத்தி வதைத்துக்கொல்லும் தீயதொரு விளையாட்டுத் தனத்திலிருந்து எப்படி நான் பிறகு விடுபட்டேன்? என்று இப்போது நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது.

நீ.பி.அருளானந்தம் 113
அம்மாவின் முன்மாதிரியான செயல்களை கண்டுகொண்டதால்தான் அந்த வயதில் நான் திருந்தினேன் என்று நிச்சயமாக என்னால் இப்போது சொல்ல முடியும்.
அப்படி நான் மனம் மாறியதுக்குக் காரணமாய் அம்மா செய்த ஒரு காரியம் என் மனத்தில் ஆழப்பதிந்தது! அந்தச் சம்பவம் ஒன்றை நான் திருந்திவிடுவதற்கு பிறகு வழிகோலியது.
எங்கள் வீடு விசாலமானதொரு கல்வீடு. அந்த வீட்டுக்கு முன்னாலே இடப்பக்கமாக ஒரு மால்-எங்கள் வயல் களிலிருந்து அறுப்புக்கு அறுப்பு வரும் நெல்மூடைகளை அடுக்கி வைப்பதற்கென்றுதான் அது கட்டிவிடப் பட்டிருந்தது.
கிடுகோலையால் கூரை வேய்ந்திருந்த அந்த மாலில், வெயில் காலம் போகுமட்டும் குளிர்ச்சிக்காக அவ்விடத்தில் தான் நாங்கள் போய் பகலைக்கெல்லாம் இருந்து கொண்டு நேரத்தைக் கழிப்போம். அந்தக் கீற்றுக் கொட்டகை வெயிலுக்கு எங்களுக்கு இதமாக இருக்கும். அதற்குள்ளே சில காலங்களில் அடைக்கலங் குருவிகள் வந்து கூடுகளைக் கட்டிக் கொண்டிருக்கும்.
சோடி சோடியாக அவைகள் பறந்து வந்து மாலிலுள்ள முகடுகளில் கூடுகளைக் கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவைகள் வளர்ந்த பிறபாடுதான், கூட்டிக்கொண்டு பறந்து போகும்.
எப்போதும் என் அம்மாவுக்கு தன் வேலையோடு அந்தக் குருவிகளிலேயும் கவனம் இருந்து வந்தது.
அதன் நலனிலே அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை நாங்கள் கண்டு கொள்ள ஒரு சந்தர்ப்பமும்

Page 64
114 அம்மாவுக்குத் தாலி
எங்களுக்குக் கிடைத்தது. அந்த முறை சித்திரைக் குழப்பத்தில் இரைந்து கொட்டும் சோனாவாரி மழை பெய்தது. காற்றும் பேயென அடித்துச் சீறியது. அந்தக் காற்றைத் தாங்க முடியாமல் மாலில் வேய்ந்திருந்த கிடுகோலைகளின் கட்டுக்களும் நெகிழ்ந்தன.
கிடுகோலைகளை மேலும் கீழுமாக அடித்துச் சிதைத்து ஒட்டை போட்டதாய் ஆக்கிவிட்ட பின்புதான் காற்றும் அமர்ந்தது.
நெல் மூடைகளெல்லாம் அப்போது பெய்த மழைத் தண்ணிர் ஒழுக்குப்பட்டு நனைந்து கெட்டன. அதனால் மூடையிலுள்ள நெல் புழுங்கிய வாசனை அடித்தது.
அடுத்த நாள் புதிதாக கிடுகோலைக் கட்டுக்களை வாங்கி அந்தக் கொட்டிலை கூலியாட்களைப் போட்டு வேய வேண்டும் என்று என் தந்தை அவசரப்பட்டார்.
‘நெல்லெல்லாம் மழைத் தண்ணீரில் ஊறி காக்குடன்’ கிடந்து முழுவதும் கெட்டுத் தொலையப் போகின்றதே யென்று அவருக்குக் கவலை.
“நெல்லைக் காயப்போட்டு எடுக்க வசதியான களமும் இல்லை -படங்குகளும் ஈரம் இதோடு இன்னும் வந்து மழை பிடித்தால் மீந்து போய் உள்ள நெல்லெல்லாம் நனைந்து பயிராகிவிடுமே?-என்று மன்ம் துடிக்கின்ற நிலைமையில் அவர் இருந்தார். அம்மாவுக்கும் அப்பாவைப் போல் அதிலே அக்கறை உண்டுதான், என்றாலும், அதற்கும் மேலாக அந்த மாலுக்குள் கூடுகட்டியிருக்கும் அடைக்கலங் குருவி களிடத்தேதான் அவருக்கு மிகவும் அக்கறை எழுந்தது.
“பாவம் அந்தக் குருவியள், இப்ப நாங்கள் கூரை மேச் சலுக்கெண்டு கிடுகைப்பிரிச்சுப் போட்டால் அதுகளின்ரை

நீ.பி.அருளானந்தம் 115
கூடுகளும் சிதைஞ்சு குஞ்சுகளும் நிலத்தில் விழுந்து செத்துப்போகும் இதையெல்லாம் காபாந்து பண்ணி வருகிற மேய்ச்சல்காரர் அக்கறையா வேலை செய்ய மாட்டினம். அதால, இப்பத்தைக்கு கூரை மேய்ச்சலை கொஞ்ச நாளைக்கு நாங்க தள்ளிப் போடுவம். அந்தக் குருவியள் தங்கடை குஞ்சுகளெல்லாம் வளர கூட்டிக் கொண்டு பறந்தாப் பிறகு. பேந்து உந்த மேய்ச்சல் வேலையைப் பார்ப்பம். அது மட்டும் உந்தநெல்லு மூடையளையெல்லாம் தூக்கிக் கொண்டோய் எங்களை தாயறைக்கை அடுக்கி விடுங்கோப்பா. எங்களுக்கென்ன, இரவில் படுக்கைக்கு வெளி விறாந்தையை வடிவாக் கூட்டிப் போட்டு அதில பாய்களைப் போட்டுக் கொண்டு படுக்கலாந்தானே?”
அம்மா, அந்தக் குருவிகளுக்குப் பரிந்துகொண்டு அப்பாவிடம் இப்படிச்சொன்னார். அப்பாவுக்கு அம்மாவின் சொல்லே வேதம்.
அம்மாவின் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அவருடைய விருப்பத்தின்படியே எல்லாவற்றையும் அப்பா செய்து முடித்தார்.
இந்த நிகழ்வு என் மனசுக்குள்ளே பெரியதொரு தாக் கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்தக் குருவிக் கூட்டத்திற்காக, என் அம்மா வீட்டிலுள்ள தானிய மூடைகளைக் கூட இழப்பதற்குத் தயாராய் இருக்கின்றாரே, என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வருடம் முழுக்க வயலில் இருந்து வரும் அந்த நெல்லைக் கொண்டுதான் அதை அரிசியாக்கி நாங்கள் சோறு சமைப்போம். அப்படியான அந்த நெல்லை விட அந்தக் குருவிகளை என் அம்மா பெரிதாக மதிக்கின்றாரே? என்கிறதாய் நினைக்கையில், அந்தக் குருவிகளுக்கெல்லாம்

Page 65
116 அம்மாவுக்குத் தாலி
நான் செய்து வந்த வதைகள் நினைவில் வந்து அந்தக் குற்ற உணர்ச்சிகள் என் நெஞ்சில் நெருஞ்சி முட்களாய் உறுத்தின.
அந்த உறுத்தலின் வேதனையோடு போய் நான் உடனே, அந்த மரப் பொந்தில் ஒளித்து வைத்திருந்த சுண்டு வில்லை வெளியில் எடுத்தேன். அதை உடனடியாக எரித்துப் பொசுக்கி விடவேண்டுமென்று எனக்கு ஆவேசம் வந்தது. அதற்காக கீழே நிலத்தில் பரவிக் கிடந்த பூவரசம் இலைச்சருகுகளைக் கூட்டிக் குவியலாக்கினேன். பிறகு காய்ந்த சுள்ளிகளையும் அதில் பொறுக்கிப் போட்டு அதற்குத் தீ வைத்தேன்.
இத்தனை நாள் என் கையில் கொண்டு திரிந்த அந்தக் கொலைக் கருவியை அத்தீயினில் எறிந்தேன். சுண்டு வில் "தீ"க்குள் விழ தீக்கங்குகள் செவ்வொழிக் கண்கள் காட்டி பிரகாசித்தன. “றப்பர்’ நாற்றக்கலவையை வெளிவிட்டுக் கொண்டு அந்தச் சுண்டு வில் எரிந்து அதிலே சாம்பலானது. அந்தச் சாம்பலை என் கண்ணால் கண்ட பின்புதான் ஈரச்சாக்குமாதிரி கனத்துப் போன என் மனசு சாந்தியாகி நிம்மதியைப் பெற்றது.
un മത്സ് ( 2OO5)

回 117
இந்தச் செடியில் இன்று காலையில், ஆவலோடு அவள் பார்க்கவென்று வந்த அந்த ஒற்றைப் 'பூ' இருக்க வில்லை. பூவிலிருந்த அந்தக் கிளையில் முட்கள் இருக்கின் றன. அதனுடன் இலைகளும் பசுமையாய் இருக்கின்றன. ஆனாலும் அழகிய அந்த ரோஜாதான், இருந்த இடம் தெரியாமல் அதிலிருந்து மறைந்ததாய் விட்டது.
அந்த அழகிய ரோஸ் வர்ண ரோஜாப்பூ காலையில் வீசிய கூதிற் காற்றிலே, தன் மெல்லிய இதழ்களை உதிர்த்து கீழே

Page 66
118 அம்மாவுக்குத் தாலி
பரப்பி விட்டிருப்பதை, பின்பு நிலத்தைக் குனிந்து பார்த்த போதுதான் அவள் கண்டாள். இது போன்று தானே என் மன மகிழ்ச்சியும் எங்கு போய்ச் சேர்ந்ததென்று தெரியாமல் தொலைந்து விட்டது' என்று நினைத்துக் கொண்டு, தன் மென்மையான புருவங்களை கூட்டிச் சுழித்தாள்.
அந்தச் சிந்தனையில் அவளது மூச்சின் கனம் அதிகரித்தது. இதனால் ஒசிந்த இடுப்புக்கு மேல், அவளது மார்பகங்கள் நன்றாகப் புடைத்து நின்றன. அவளது ஏக்கப் பெருமூச்சுக்கேற்ப மார்பும் ஒருமுறை எழுந்தமர்ந்தது.
காலையில் நித்திரை விட்டு எழும்பியவுடன், முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி குப்பை கொட்டிச் சுத்தம் செய்து வைப்பதுதான் மாமியார் வீட்டில் அவளுக்கு முதல் வேலை. அடுத்ததாக உள்ளது சமையல் வேலைதான். சமையல் கட்டுப்பக்கமாக நின்று கொண்டு அதையெல்லாம் ஒவ் வொன்றாக செய்து கொண்டிருக்கும்போது, இன்னும் அந்த வீட்டிலே உள்ள வேறு பல வேலைகளையும் உடல் நோவு பாராது அவள் தன் தலையிலே போட்டுக் கொண்டு செய்து முடிக்க வேண்டியதாகத்தான் இருக்கும். இப்படியாக அவள் புகுந்த இந்த வீட்டிலே, காலையிலிருந்து மாலை வரையிலும் கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு வேலைகள் இருந்தன.
இப்படியெல்லாம் இந்த வீட்டிலே கிடந்து மாடாகக் கிடந்து கஷ்டப்பட்டுநாள் முழுக்க உழைத்தாலும், மாமியின் நச்சரிப்பு எப்பொழுதும் அங்கு அவளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.
அவரிடமிருந்து வரும் அந்த பேச்சுக்களெல்லாம் சுமாரானதொன்றா..?
முள்முள்ளாகக் குத்துகிற கரம்பை

நீ.பி.அருளானந்தம் 119
அந்தப் பேச்சையெல்லாம் மெளனமாய் இருந்து செவி யில் வாங்கிக் கொண்டு, கட்டாரி எறும்பு கடித்தாற் போல 'விண், விண்’ணென்று நெஞ்சிலெழும் வலியோடு தான் அவள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள்.
“நாளைக்கு இட்டலி.’’ என்று ‘மாமி’ கட்டளை கொடுத்த உடனே, உளுந்தைக் காலையில் ஊற வைத்து பிற்பகலில் அதை ஆட்டுரலில் ஆட்டி, மாவாய் அரைத்துப் பானையிலே அவள் போட்டு வைத்தாள்.
அடுத்தநாட் காலை அடுப்பருகே நின்று கொண்டு, இட்டலித்தட்டின் குழிகளிலிருந்து அதை அவள் சூட்டுடன் எடுக்கும் பொழுது, அங்கே குசினி வாசலில் வந்து அவளது மாமியார் கதவோடு கதவாய் நின்றார். இந்தக்கதை பிறகு அவர் வாயிலிருந்தும் வெளிவந்தது.
"நேற்றைக்கு நீ சுட்டாய் ஒரு இட்டலி., அது ஒன்றும் நன்றாய் அவியவேயில்லை. அது சாப்பிடவும் ஒன்றும் ருசியாவேயில்லை. உளுந்துப்பச்சை மணம் அதிலே கப்பெண்டு அடிச்சுது. அது இட்டலியா இல்லாட்டிக்
дефорт...”
அந்த விஷமுள் நறுக், நறுக் கென்று குத்துகிறது அவளுக்கு
இட்டலியின் சூடுபட்ட கையை உடனே தண்ணிரில் நனைத்தால் விரலின் சூடு தணிந்து ஆறிவிடுகிறது. ஆனாலும் மாமியின் நாச்சூடு படவும், இட்டலிச் சட்டியில் கொதி நிலையில் இருக்கும் தண்ணிர் போல, மனசு அவளுக்கு நிலை கொள்ளாமல் தவிக்கிறது.
இட்டலியின் மிருதுச் சூட்டை நுனிவிரல் நுகர்கிற அளவிலே கொண்டுபோய், மேசை மீது வைத்து மாமனாருக்

Page 67
120 8yiñhNATSAydieyği TGaß.
கும், மாமிக்கும் சாப்பிடக் கொடுத்தும், இப்படியெல்லாம் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டியதாய் வருகிறதே.?
இதன் மூலமாக அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் எப்பொழுதும் ஆகாயத்தில் வல்லூறைக் கண்ட புறாப் போலத்தான், அவளது மாமியார் குசினிப்பக்கமாய் வருகிற தருணங்களில் இவளின் இதயம் “பட படவென அடித்துக் கொள்கிறது. சில பல வேலைகளை இப்படியாகத் தான் அவள் செய்ய வேண்டுமென்று மாமியார் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவருடைய கண்களிலே ஒரு தீ’ எரிந்து கொண்டே இருக்கும். ஆனால், உதடுகளில் ஒரு சிரிப்பு. அதற்கு மாறாகப் படமெடுத்து ஆடுகிறதே! அதற்கான காரணம்தான் என்ன..?
அவளுக்கு இதெல்லாம் எளிதில் விளங்கிக் கொள்ளாத ஒன்றாகத்தான், இற்றை நாள் வரையிலும் இருந்து கொண்டே இருக்கின்றன. அவள் பம்பைமடு" என்கிற செழித்த கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள். யாழ் குடா நாட்டிலுள்ள புத்தூர் கிராமத்தில், இவர்களது குடும்பத்தில் வந்து வாழ்க்கைப்பட்டதற்கான காரணம்.? அதையெல்லாம் சில நேரங்களில் மட்டுமல்ல பலவாறான பொழுதுகளிலும், திரும்பத்திரும்ப அவள் நினைத்துப் பார்க்கத்தான் செய்கிறாள்.
முக்கியமாக, சவப்பெட்டிக்குள் தன் அப்பாவை வைத்து ஆணி அறைந்த அந்த சம்மட்டி அடியை அவளால் இற்றை வரையிலும் மறக்கவே முடியாதிருக்கிறது.
அப்பா இறந்த பொழுது சுமாராக உள்ளதொரு சவப்பெட்டியைக்கூட வாங்க முடியாதபடி, அவளுடைய குடும்பத்துக்கு வந்து விட்ட ஏழ்மைதான் எவ்வளவு கொடுமை!

நீ.பி.அருளானந்தம் 121
‘ஒரு நல்ல கமக்காரனுக்கு இப்படியெல்லாம் கஷ்டங்கள் வரவேண்டுமா..? இப்படித்தான் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டு, ஒரு மாத காலத்துக்கு அந்த ஊரில் உள்ளவர் களெல்லாம் அவர்களுக்கு செத்த வீடு நடந்து முடிந்த பிறகு உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து உபசரித் தார்கள்.
‘அந்த ஊரில் உள்ளவர்கள் மனசார நல்ல சனங்கள். கசவாரம் இல்லாததுகள்
இத்தனைக்கும் அவளுடைய அப்பாவுக்கு, மரபணு பிரகாரம் ஆயுசு கெட்டிதான். அவரின் வழியில் ஆயிரம் பிறை பார்த்தவர்கள், இன்னும் இரண்டு மூன்று பேர் பம்பை மடு கிராமத்தில் பல் கெட்டியாகவும் கூட இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, இந்த நடுவயதில் ஏன் அவருக்கு வந்தது இந்தத் திடீர்ச் சாவு? -
ஒரு முறை தோட்டத்தில் மிளகாயும் வெங்காயமும் வைத்ததோடு, பணப்பயிரான புகையிலையையும் அவர் பயிரிட்டார். அந்த முறை மிளகாய்ச் செடியில் சிவப்புச் சிவப்பாய் பூத்த பழங்கள். புஷ்டியுடன் விதைகள் நன்றாய் அடைத்துப்போய்க் கொழுத்திருந்தன.
அந்தச் செடிகளின் உயரப்பாடு முழுக்கவும் காய்கள் நிறைந்திருந்தன. அதற்கு அருகில் பனைமரங்களால் புருவமிட்ட அந்த வெங்காயத் தோட்டமும், அந்த முறை அவருக்கு நல்ல விளைச்சல், இரண்டாங்களையெடுப்பு நடந்த காலத்தில், பூத்துச் சிரித்தது வெங்காயப் 'பூ' அந்த வெங்காயத்தாள்களை கொழும்புக்கு லொறியில் போட்டு, சந்தையில் விற்றே அவர் நல்ல லாபம் தேடினார்.
வேலிகட்டி, எருப்போட்டு, நீர் பாய்ச்சி கண்ணுக்குள் வைத்து அவர் வளர்த்திட்ட அந்தச் செடிகளெல்லாம், அந்த

Page 68
122 அம்மாவுக்குத் தாலி
முறை அவரைக் கைவிடவில்லை. நன்றாக அம்முறை அவையெல்லாம், அவருக்குப் பணம் கொட்டியது.
அந்தமுறை அவர் தோட்டம் செய்து வளம் செய்த வாழ்க்கை வசதிகளைக் கேட்கவா வேண்டும்? மகளுடைய கழுத்தும் கைகளும், மனைவியுடைய கழுத்தும் தங்க நகை களால் நிறைந்திருந்ததோடு, சின்ன மகனின் அரைஞாண் கயிற்றையும் பவுணிலல்லவா செய்து கொடுத்தார்.
ஊருக்கு உதவுவதற்கும் அவரைக் கேட்டுத்தான்! அவருக்கு பனையோலை போல விரிந்த மனசு, அந்த முறை தோட்டம் செய்து நொடித்துப் போய்விட்ட சிலருக்கு, கேட்ட பணத்தைக் கொடுத்து உதவுவதற்கும் அவர் பின்வாங்கவில்லை, அந்தவிதமாக அவர்களுக்கு நடந்த அவ்வருடம், இப்படியாக மகிழ்ச்சியினூடே கழிந்துபோய், அடுத்த புதுவருடம் பிறக்க,
அவருக்கென்றிருந்த எல்லா நிலத்திலேயும் பயிர் விளைவித்தெடுக்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். எல்லாக் கமக்காரனுக்கும் வருகின்ற ஞாயமானதொரு ஆசைதானே இது! அது அவருக்கும் வந்ததில் ஏதும் வியப்பில்லையே! வியர்வை சிந்தி உழைக்க ஆசைப்படுவதில் ஏதும் தவறு உண்டா? அது பேராசையென்றும் சொல்வதற் கில்லையே? உணவை விளைவித்தால் உயிர்கள் வாழுமே! அது நன்மைதானே! அவ்வருடம் பயிர்செய்யும் காலம் வர, நகைகளை அடகு வைத்ததுடன், கையில் உள்ள பணத்தை யெல்லாம் வயலிலும் மரக்கறித் தோட்டத்திலும் போட்டு விட்டு, அவர் வானத்தை அண்ணாந்து பார்த் துக் கொண் டிருந்தார்.
ஆனால் அவருடைய செல்ல மகளுக்கு இந்தக் கஷ்டங்க ளெல்லாம் என்னதான் விளங்கும்! அப்படியெல்லாம்

நீ.பி.அருளானந்தம் 123
கஷ்டத்தை உணர்ந்து அவள் வளர்ந்திருந்தால்தானே அது எல்லாம் தெரியும்
அவள் தன் ஒரேயொரு குட்டித் தம்பியுடன் சேர்ந்து கொண்டு, அந்தத் தோட்டத்துப் பக்கம் சுதந்திரமாக சுற்றித்திரிந்தாள். அந்த இடத்திலேதான் அவளது பொழுது கரையும். மனசு நிறையும், ததும்பி வழியும், ஆகாயத்தில் ஜிவ்வென்று பறக்கும்.
வெங்காயத் தோட்டத்திலே போய் நின்று கொண்டு, பனையோலைகளின் இசை நயமுள்ள ஓசையை அவள் இரசிப்பாள். அவளுடைய அப்பா நொங்கு வெட்ட அங்கே ஆள் பிடித்து விடுவார். பிறகு கேட்கவாவேண்டும். இளம் நொங்கை பெருவிரலால் துருவி விட்டுக்குடித்து, ஒரு குலைக் காய்களை அப்படியே தம்பியும் அவளும் ஒருகை பார்த்து விடுவார்கள்.
அது அவ்வாறிருக்க,
வீட்டிலிருந்து கதைப் புத்தகங்கள் படித்தபோது இருந்த சுகம், அவளுக்கு எங்கேனும் இனிவருமா?
வீட்டுக்காணியில் அவளுடைய அப்பாவுக்கு தென்னையும் மாவும் போட்டு, ஆளாக்கி அண்ணாந்து பார்க்கத்தான் ஆசை. அந்த அவருடைய ஆசையை மனத்தில் மாத்திரம் வைத்திராமல் செயலிலும் காட்டியதால், வளவு முழுக்கவும் பழ மரங்களாய் நின்றன.
அடிவாரத்தைக் காட்டாமல் குடை விரித்து நிற்கும் அந்த மரங்களிலிருந்து மரங்கொத்தியின் அலகொலியும், மரக்கிளைகளினூடே சிவ்வெனப் பறக்கும் மஞ்சட் சிட்டுக்குருவிகளின் கீச்சொலியும், அம்பு இறகு போன்ற வாலை விரித்து கரிச்சான் கத்திக் கூவுவதும், புத்தகத்தைப்

Page 69
124 அம்மாவுக்குத் தாலி
படித்தவாறு கேட்டுக் கொண்டிருக்க அவளுக்கு எத்துணை ஆனந்தமாயிருக்கும் -
சகுந்தலைக்கு மரம் செடி கொடிகளிடமிருந்து பற்றும் பாசமும் போலத்தான், இவளுக்குத் தன் வீட்டிலே வளர்ந்து நின்ற மாமரங்களிலெல்லாம் அவளையும் அறியாததாய் ஒரு பரிவு இருந்து வந்தது. அந்த மாமரங்களிலெல்லாம் மாங்காய்க் குலைகள் முத்து மாலைகளைத் தொங்க விட்ட மாதிரி, கெட்டுகளைத் தாழ்த்திக் கீழ் இறக்கி நிற்கும் அழகை அவள் பார்த்துக் கொண்டே நிற்பாள்.
அப்படியாக அவளுக்கு அந்தப் பருவவயது எல்லா வற்றையும் பார்த்து இரசிக்கும் அளவுக்கு தித்திப்பாகத்தான் இருந்தது.
ஆனால் அவளுடைய அப்பா, அன்று இரவு சாய்வு நாற்காலியில் படுத்திருந்தவாறு மனம் வருந்தியதாய்ச் சில வார்த்தைகளை அவளுடைய அம்மாவுக்குக் கூறிக்கொண் டிருந்த பொழுதுதான், தன் வீட்டுக் கஷ்டம் பற்றி அவளுக்கும் பெரிதாய்த் தெரிய வந்தது.
அவர் சொன்னார்.
“மழையில்ல கிணத்தில தண்ணீரில்ல. பாயிறதும் காயிறதுமாயிருந்தா பயிர் என்னத்துக்காகும்’
அப்பொழுதுதான் இவ்வளவு காலம் அவள் இருந்த நிலையில் இருந்து, விலுக்கென்று விழித்துக்கொண்டாள். அவள் மனதை துக்கம் அள்ளிப்பிடுங்கிற்று ஒரு உருவில்லாத சஞ்ச்லம் அவள் மனதை வாட்டிற்று.
அந்த வேளையில் தோட்டத்துப்பக்கம் அலறிக் கொண்டு ஒரு ராக்குருவி பறக்கிறது. எங்கோ ஒரு நாய் நீட்டி ஆலாபனை செய்யும் ஊளை வேறு கேட்டது அவளுக்கு.

நீ.பி.அருளானந்தம் 125
அவள் அதையெல்லாம் கேட்டபடி இருந்து விட்டு, எழுந்து படுக்கை அறைக்குப் போனாள். அங்கே இருள் சூழ்ந்த கல்லறைபோல் அந்தப் படுக்கை அறை அவளுக்குத் தெரிந்தது. இருட்டுக்குள் பறக்கின்ற குருட்டு ஈயாக முட்டி மோதிக்கொண்டு போய், ஒரு மூலையில் பாயை விரித்துப் போட்டுவிட்டு அவள் படுத்தாள்.
அவளுடைய தேகச்சூடு விலகிப் போயிருந்தது.
அப்பாவின் கஷ்டத்தை நினைக்க நினைக்க, அவளுக்கு அழுகை வருமாப்போல இருந்தது. அப்பாவின் உடலிலிருந்து வரும் வெண்காயப் பயிர் மணம் கமழும் வாசனையை நுகர்ந்தபடி, சிறுவயதில் அவர் வயிற்றில் சாய்ந்து கொண்டு நித்திரை கொண்டது அவளுக்கு அப்போது ஞாபகம் வருகிறது. அப்படியே அந்தச் சுகத்தை திரும்பவும் நினைவில் வைத்து அனுபவித்துக்கொண்டே அவள் கண்மூடி கண்ணயர்ந்து விட்டாள். இப்பொழுது அவளுக்கு ஒர் கனவு. தான் காண்பது நிஜமென்று இருக்குமாப்போலத்தான் அவள் கண்பார்க்க அவைகள் எல்லாம் நடக்கின்றது மாதிரி இருக்கின்றது.
அறுவடை முடிந்துவிட்ட வறண்ட வயல் நிலங்கள்! அந்த வழியிலே தட்டத்தனியே அவள் போய்க்கொண்டிருக் கிறாள். வெண்மை மேகம் ஒன்று சூரியனை மெதுவாகக் கடக்கும் போது, வயல் வழியாக நிழல் பாய்ந்தோடுகிறது. வயலிலிருந்த கெட்டியான கட்டைத் தாள்கள் இவள் போகும் போது கால்களில் குத்துகின்றன. உடனே காய்ந்து இருக்கும் வரப்பில் ஏறி அவள் நடக்கிறாள். ஆனாலும் அவளுக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் காய்ந்த வரப்பு மண்ணில் சிற்சில இடங்களில், இவளது குதிக்கால்கள் உள்ளே அமுங்குகின்றன.

Page 70
126 அம்மாவுக்குத் தாலி
அந்த வயல் வெளியிலே உள்ள ஒரு இடத்தில், தன் அம்மாவையும் நின்று கொண்டிருக்க அவள் காண்கிறாள். சேலையை ஏற்த்திரைத்துக் கட்டிக் கொண்டு, இடுப்பு மட்டத்துக்கு வளர்ந்திருந்த புல்லை குனிந்தபடி நின்று அரிவாள் வீசி அவள் அறுக்கிறாள்.
நெல்லுக்குப் திலாகப் புல்லா?
திடுக்கிட்டுப்போய் அவள் கண் விழித்து விட்டாள். உடனே பாயிலிருந்து எழுந்துபோய், மண் கூசாவிலிருந்த தண்ணீரை குவளையில் வார்த்தெடுத்துக் குடித்துவிட்டு, சன்னல் புக்கமாகப் போய் நின்று கொண்டு அதனூடே வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.
மழை மேகம் இல்லை!
வானத்து நட்சத்திரங்கள் பூந்திக் கொட்டையும் சவுக்காரமும் போட்டு கழுவித்துடைத்த நகைகள் மாதிரி, பளிச்சென்று ஆகாயத்தில் துலங்கிக் கொண்டிருந்தன.
ஏமாற்றத்துடன் திரும்பிப்போய் அவள் அந்த பாயில் திரும்பவும் படுத்துக் கொண்டாள். அதன் பிறகு தூக்கம் வராமல் பாயில் கிடந்து புரண்டு கொண்டிருந்தாள் அவள்.
ஒவ்வொரு நாளும் ‘மழையில்லை! மழையில்லை!" என்கிற கதை பேச்சுத்தான் அந்த ஊரிலுள்ள விவசாயி களுக்கு முக்கியமானதாக இருந்தது.
"ஒரு மழை பெஞ்சுதெண்டா தரையோடு தரையா பம்பிக் கிடக்கிற நெல்லு விருட்டெண்டு மேல வந்திடும்.’’ என்கிறதாய் பயிர் காய்ந்து போக அவர்கள் சொல்லிச் சொல்லி மனம் வருந்தினார்கள்.

நீ.பி.அருளானந்தம் 127
அவர்களது துயர் : கண்டு வானம் வடிக்கும் கண்ணிர்த்துளிகள் போல், சில தூறல்கள் மட்டுமே ஒருநாள் காலையில் முகம் காட்டி விட்டு மறைந்தன.
மழையைக் காணோமே என்று அவரும் ஒவ்வொரு நாளும் வயல் வெளியிலே போய் நின்று கொண்டு, வானத் தைப் பார்த்துப் பார்த்து மனம் வருந்தினார். அவர் ஏங்கி விட்ட பெரூமூச்சுக்கள், அவரது மார்புப் பிரதேசத்தையே உலுக்கியது. சில நாட்களுக்குள்ளாக அவரது முகத்தை தாடியும் சிகையும் மறைத்து வேறு ஆளாகக் காட்டியது.
வெயில் எரித்துக் கொண்டு வர அவருடைய தோட்டமும் கருகிக் கொண்டே வந்தது. கரையான்கள் அங்கே புற்றெடுத்தன. அதனால் பாகல்களும், புடோல்களும் பந்தல்களோடு “பொல, பொல' வென பொடிந்தன.
நெற்பயிர்கள் பாசனமேதுமற்று சருவோடிப்போக, வெட்டுக்கிளி கைகளை உரசிக் கொள்வது போல் தன் கைகளை உரசியபடி யோசித்திருந்து விட்டு ஒரு கிடை மாடுகளை விரட்டிக் கொண்டுவந்து வேலிபிரித்து அவைகளை அவர் வயலுக்குள்ளே விட்டார்.
ஈப்பூச்சி விழுந்த அந்த வயல்களிலே மாடுகள் புகுந்து கொத்துக் கொத்தாய் மேய்ந்தன.
அதைப்பார்த்து மனம் குமுறி அழுதபடி வீட்டுக்கு வந்தவர்தான். அதோடு நெஞ்சுக்குத்துவந்து சட்டடியாகப் படுத்துவிட்டார். இரவு முழுக்கவும் கொக்குக் கொக்கென்று இருமிக் கொண்டு, அவர் மிகவும் அவஸ்தைப்பட்டார். அடுத்த நாள் காலையில் சுட்ட செம்மண்போல் கரடு முரடாக அவரது முகம் மாறிவிட்டது. உடல்குளிர்ந்து கொண்டு வர, போர்வையை இழுத்து தலைமுதல் கால்வரை போர்த்திக் கொண்டு படுத்தவர்தான், அதன்பிறகு

Page 71
128 அம்மாவுக்குத் தாலி
உடலசைவு இல்லாமல் அப்படியே விறைத்ததாய் விட்டார். அவர் படுக்கையிலேயே அப்படியே சீவனை விட்டுவிட்டார் என்று பிறகுதான் எல்லோருக்கும் தெரியவந்தது.
அப்பா செத்த கவலை அவளை முற்றிலும் விழுங்கி விட்டது. கண்களை அகல விரித்தபடி, இறந்து பேர்னவளைப் போன்ற கண்களால் தன் அப்பாவினது உடலைப் பார்த்துக் கொண்டு அவள் நின்றாள். அந்த நேரம் வாழ்க்கைச் சகடமானது, பத்து நிமிடத்துக்கு அசைவற்று விட்டது போலத் தோன்றியது அவளுக்கு.
ஒருபக்கம் இருந்து அவளது தம்பியும் அழுது கொண்டிருந்தான். மறுபக்கத்தில் இருந்து அவளது அம்மாவும் சோகத்தில் பொதும்பிப்போய் இருந்தாள். ஒப்பாரி வைப்பவர்கள் முறை கட்டிக்கட்டி அழுது கொண்டிருந்தார்கள்.
ஒருபுறம் பறைமேளமும், மற்றொருபுறம் சங்கின் ஒலமும், சேகண்டின் நாதமும் அதிர, அவளது அப்பாவின் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.
அவளது அப்பா இறந்த பிறகு தானிய அறை சூனியமாகி விட்டது. வாழ்க்கை எனும் வண்டி அவர்களுக்கு நொண்டி நொண்டி ஒடத்தொடங்கிவிட்டது. வீடே வறுமையில் கிடந்து உழன்றது. அப்பொழுதுதான் இவளுக்கு இந்தச் சம்மந்தமே பேசிவந்தது.
இங்கிலண்டில் மாப்பிள்ளையென்றார்கள். சீதன்மென்று சதக்காசும் வேண்டாமென்றார்கள். குழந்தை வரையும் சித்திரம் மாதிரி பிள்ளையில எளியதொரு கவர்ச்சியுமிருக்கு. மாதுளம்பழநிறம் மாதுளம் கோதுவாளிப்பு எல்லாம் அளவெடுத்து வைச்சது மாதிரி

நீ.பி.அருளானந்தம் 129
அத்தனை லட்சணம், என்று புகழ்ந்ததோடு கல்யாணத் தையும் முற்றாக்கி, தின்பன குடிப்பனவையும் செய்து கொண்டார்கள்.
அந்த மகிழ்ச்சியில் அவளது மனக்குருவி சந்தோஷமாகப் படபடத்தது. அவளது விழிகள் மீனின் கண்களைப் போல் பளபளத்தன. மாப்பிள்ளை வீட்டார்கள் பெண் வீட்டாரை அழைத்துக் கொண்டுபோய், இந்தியாவிலே தமிழ் நாட்டிலே வைத்து திருமணத்தை நடத்தி முடித்தார்கள்.
'மாப்பிள்ளைக்கு லண்டனில் இன்னும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கவில்லையாம். அது அவருக்குக் கிடைத்த பிற்பாடுதான் பெண்ணை அவருடன் அங்கு வந்திருக்க அழைக்கலாமாம்.'
இதனால் இல்லற வாழ்வின் விளிம்பை நுகர்ந்து விட்டு திரும்பவும் அவள் இங்கே திரும்பி வரவேண்டியதாயிற்று. அதற்குப் பிறகுதான் இந்தச் சிறைவாசம். திருமணமாகி இன்பமானதொரு வாழ்க்கையை வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டவள், அந்த ஆசை நிறைவேறாது போய், மாட்டுக் கொம்பில் புல்லைக் கட்டிவிடுகிற இந்த அவதியை அனுபவிக்கத் தொடங்கிவிட்டாள்.
“என் அம்மா வீட்டிலே நீ இரு.!’ என்று கணவன் சொன்னதை அவள் கேட்கத்தானே வேண்டும்.
பிறந்தவீட்டிலே இருந்த சுதந்திரமெல்லாம் இப்பொழுது அவளுக்கு இங்கே தொலைந்துவிட்டது.
இவர்களது மகனுக்கு மனைவியாக வந்தவள், இன்று மலிவான வேலைக்காரியாகிவிட்டாள். மனத்திலும் அவளுக்கு சிறிதேனும் இங்கு மகிழ்ச்சியென்றதில்லை.

Page 72
130 அம்மாவுக்குத் தாலி
தன்னைப் பற்றி கவலைப்படவென்று ஒருத்தருமில்லை’ என்ற நினைப்பு அவளுக்கு வரவர மனத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது. நாளாந்த வீட்டு வேலைகள் போல இன்னும் அந்த வீட்டில், அவள் செய்ய வேண்டியதாய் இருந்த வேலைகளனைத்தையும் செய்து முடித்துவிட்டாள். நேரம் இரவு பத்து மணியாகிவிட்டது.
அவளுடைய அசைவுகள் எல்லாம் நின்று விட்டிருந்தன. கடின வேலைகளிலிருந்து அந்த யந்திரம் இனி இளைப்பாற வேண்டும். இந்த அலுப்பு நீங்குவதற்கு உடம்பிலே அவளுக்குத் தெம்பில்லை, சக்தியுமில்லை, சக்தியெல்லாம் அன்று செய்த வேலைகளிலே பயன்பட்டுவிட்டது. அவள் சோர்வுடன் கட்டிலிலே படுத்துக் கொண்டு விட்டாள். மார்கழி மாதத்து வாடைக்காற்று சில்லென்று அடித்தது. உடனே அவள் போர்வைக்குள் புகுந்து கொண்டாள். போர்வைக்குள் அவளுடைய காதுகள் விரிந்தே இருந்தன. மனலயத்தில் இருந்த உணர்வு திடீரென்று அவளுக்குக் காதுக்கு மாறிவிட்டது.
அடுத்த அறையில் இருந்த மாமனாரும், மாமியாரும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சலும் சிணுங்கலுமாய்!
புதிதாக இப்பொழுதுதான் தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்கிறவர்கள் போல.
உள்ளுக்குள் எங்கோ உறங்கிக் கிடந்த உணர்வுகள், சூடு பட்டது போல் அவளுக்குள் விழித்துக்கொண்டன. உடல் வெப்ப அனலைப்பாய்ச்சியது. உறக்கத்தைத் துரத்தியடிக் கின்ற அந்த எண்ணங்கள், அவளைப் போட்டு சிப்பிலியாட் டம் ஆட்டுகின்றன. எதிர்த்து வெல்ல முடியாத இந்த எண்ணச் சூழல்களிலிருந்து அவளால் மீளமுடியவில்லை.

நீ.பி.அருளானந்தம் 131
நன்றாக போர்வையை தலைமுதல் கால் வரையாக இழுத்துப் போர்த்திக் கொண்டு, தன் கணவனை நினைத்து புழுங்கிப் புழுங்கி அவள் அழ ஆரம்பித்து விட்டாள். அவளது விம்மல்களுக்கேற்ப மார்பு எழுந்தமர்ந்தது.
தனிமையில் இப்படியே இந்த இருட்டுக்குள்ளே கிடந்து அழுது கொண்டிருந்ததால், மனசு சுகப்படும் போல் அவளுக்கு இருந்தது. ஆனாலும் அவளது விருப்பத்தை மீறி பொழுது புலர்ந்து விட்டது. காலையில் திரும்பவும் வழமைபோல் அவளுக்கு அந்த வீட்டு வேலைகள்.
திரும்பவும் வழமைபோல் அந்த வீட்டு வேலைகளில் அவள் ஐக்கியமாகிறாள். ஒரு ஊத்தைக் கூடை நிறைய குவிந்திருந்த அழுக்குத் துணிகளை எடுத்துக் கழுவிக் கொண்டு வந்து, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் துணிக் கொடிகளில் அவைகளை அவள் வெயிலில் காயப் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் அந்த வேலையாய் நிற்கும் போது எதிர்வீட்டுப்பக்கம் அந்த ஜன்னலின் கம்பியில், உடல் அழுந்த நின்றபடி அவனின் பார்வை நங்கூரம் அவன் ஆயிரம் கண்களால் தன்னைப் பார்ப்பது மாதிரி அவளுக்கு இருந்தது.
மூடிய இதழ்களை முயன்று திறந்து தேனுண்ணும் வண்டைப் போன்றதாய்த் தெரிகிறது அவளுக்கு அவளது பார்வையை பலமுறை பணிய வைத்து விட்டவன்தான் அவன். இன்றும் வழமைபோல் தாழ்த்த இயலாத நிலையில் தானாக அவள் பார்வை மீண்டும் அவன் பக்கம் சென்றது.
அப்பப்பா அந்தக் கண்கள். அவற்றின் ஒளி. ததும்பிய கனிவு. அந்தக் கண்கள் அழகானவை. அழகானவை என்று சொன்னால் மட்டும் போதாது. கூரியவை. துளைக்கும் தன்மை படைத்தவை. கேள்விகள் நிறைந்த கண்கள் அவை!

Page 73
132 அம்மாவுக்குத் தாலி
அந்த ஜன்னலின் கம்பிகள் உலோகத்தன்மையற்றுதாமரைத் தண்டுகளின் தண்மையாய் மாறிவிட்டது மாதிரித் தெரிகிறது அவளுக்கு. உடனே அந்தத் தாக்கத்தை அவள் தன் மனத்திலிருந்து சமாளித்துக் கொண்டுவிட்டாள். தன்னைச் சுற்றிலும் காணமுடியாத வலை ஒன்றை தனக்குப் பாதுகாப்பாய் அவள் விரித்தாள்.
தன்னை உணர்ச்சிக் குவியலாக்கும் அந்தப் பார்வை யிலிருந்து தப்பித்துக் கொள்ள, அந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டுமென்று அவளுக்கு அவசரம் தான். ஆனாலும் இன்னும் இரண்டு கழுவிய சேலைகள் வாளியின் அடிப்பாகத்தில் அடங்கிக்கிடக்கின்றன. அவற்றை எடுத்து இரண்டு தரம் உதறிவிட்டு கொடியில் விரிக்கும்போது, மாமியாரும் முற்றத்திலே வந்து நின்று கொண்டார்.
இயல்பாகவே மாமியாரைக் காணும்போது வருகின்ற பயப்பிரீதி இப்போதும் அவளைப் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. அவர் பிண அறுவைப் பகுப்பாய்வு நடத் தாமல் போகமாட்டார் என்பதால், காரணம் இல்லாமல் அவள் மேல் முழி கீழ் முழி முழிக்கிறாள். உடம்பெல்லாம் உஷ்ணத்தின் பரவல். காய்ச்சல் கண்டதைப் போல ஒரு தகிப்பு. அப்படி இப்படியென்று எதையாவது ஒரு தேவையற்ற கதையை தோசைப் புரட்டாகப் புரட்டி, பின்பு அதை யெல்லாவற்றையும் சேர்த்து சரடுதிரித்து விடுகிறதுதானே மாமியாரது வேலை.
‘இன்று என்ன கதையைத் தொடங்கி அடைக்கோழி மாதிரி ‘வெடுக், வெடுக்’ என்று கொத்திப் பிடுங்கப் போகிறாரோ. கொடியிலே சேலையை விரிக்கும் போது இந்த நினைவுகளில் அவளை அறியாமலே அவள் அழிந்து கொண்டிருந்தாள்.

நீ.பி.அருளானந்தம் 133
அதிலே நிற்கின்ற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய் வதைத்துவிட்டு நகர்கிறது மாதிரி அவளுக்கு இருக்கிறது.
ஜன்னல் பக்கத்தில் நின்றவன், களவெடுத்தவன் மாதிரி ஒரு பம்பல் பதுங்கலோடு அந்த இடத்தைவிட்டு மெல்ல நழுவிப் போய்விட்டான்.
மாமி சொல்கிறார், “நாலு துணியைக் கொண்டுவந்து உந்தக் கொடியில விரிக்க நாலு மணித்தியாலம் வேணுமே. என்ன அலுவலுக்கெண்டு உதில நசிந்திக் கொண்டு நிண்டு மிலாந்தவேணும். உலையுமெல்லே அடுப்பில. அதெல்லாம் மறந்துபோச்சோ.?’’
எளிமையிலும் எளிமையான ஆனால் கல்லாய்க் கணக்கும் சொற்கள். காச்சிய கரிப்பு வார்த்தைகள். செவிடன் யார் காதிலோ விழவேண்டுமென்று சொல்வது போல் அதை உரக்கச் சொல்லிக் கொண்டு மாமி நிற்கிறார்.
அதைக்கேட்க அவளுக்கு கருவேலம் முள் குத்தி விட்டதைப் போல் இருக்கிறது. கருக்கு வெட்டாத பச்சைப் பனை மட்டையால் அடி வாங்கியது போலவும் அவளுக்கு வலிக்கிறது. உடம்பு நெகிழ்ந்து வருந்துகிற மனசோடு, கடைசியாகக் கையிலெடுத்த சேலையையும் கொடியில் விரித்துப் போட்டாள். அந்த வெறும் வாளியைக் கொண்டு போய் கிணற்றடியில் வைத்துவிட்டு, விறுவிறு வென்று நடந்து குசினிக்குள்ளே போய், அடுப்பிலிருந்த சோற்றுப் பானையின் உலை மூடியைத் திறந்தாள்.
சோறு ‘டிப், டிப், டிப்’பென்று சத்தமிட்டுக் கொண் டிருந்தது. அனலை அடுப்பில் பரத்தித்தட்டி விறகை வெளி யில் எடுத்து ஒதுக்கி வைத்தபோது, அடுத்த அறையில் இருந்து மாமியாரின் குரல் அவளுக்குத் தெளிவாய்க் கேட்டது.

Page 74
134 அம்மாவுக்குத் தாலி
மாமியின் கதைக்கெல்லாம் ‘மாமா ஆமா போடுகின்ற ஒருத்தர்தானே. ޝަހ
மாமி சொல்கின்றார்: “இந்த வேலியை இனிமேல்பட்டு செப்பமா அடைச்சு அறிக்கை பண்ணிப் போட வேணும். ஏதாச்சும் சங்கையீனம் வந்தா அது ஆருக்கு வரும். இந்தக் குடும்பத்துக்குத்தரன்ே.?”
மாமியின் இந்தக்கதை முடிவுறவே இல்லை மேலும் -மேலும் பெரிதாய் வளர்ந்து கொண்டே போகின்றது. “மொடுக், மொடுக்கென்று எருமைகள் புல்லுகளை மேய்வது போல் ‘வெடுக், வெடுக் கென்று அவர் தொடர்ந்து ஏசிக்கொண்டே இருக்கிறார். கிடுகு வேலியில் தொடங்கி மதில் கட்டி விடவேண்டுமென்கிறதாய் அவர்களுடைய கதை பேச்சு முடிவுக்கு வந்துவிட்டது.
அவளுக்காக ஒரு மதில் சுவர் கட்டப்படப் போகிறது. அதை நினைக்க அவளுக்கு வெட்கமும் அசிங்கமுமா யிருக்கிறது. தன்முன்னே பயங்கரமான பிசாசுத்தனமான மதில் எழும்பி நிற்கின்றதை அவள் ஒருமுறை தன் மனக்கண்களால் காண்கிறாள்.
அவளது மண்டைக்குள் தேய்ந்த பழைய திரிகை சுழல்வது போன்று கனத்த ஓசை நிறைந்திருந்தது.
-தாமரை இனவிரி2OO6)

135
எழுதிப் பழகின கையை அவருக்கு வெறுமே சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. கை ‘ங்ம நம’ என்கவும் ஆமணக்கம் விதையின் பளபளப்போடு உள்ள வெறும் கடதாசித் தாள்களை, மேசைமேல் எடுத்துவைத்து விட்டு, எழுத்து வேலையில் தன் முழுக் கவனத்தையும் அவர் வைத்தபடி இருந்தார்.

Page 75
136 அம்மாவுக்குத் தாலி
ஆழமாக அவர் சிந்தித்துக் கொண்டதிலே, அருமையான தோர் கவிதை எழுத வந்தது. அதை எழுதப் புகுந்த வேளைதான் அந்த ஜன்னலுக்குள்ளால் பறந்து வந்த குருவியின் சிறகடிப்புச் சத்தம் அவருக்குக் கேட்டது. உடனே எழுந்து வேலையை நிறுத்தி விட்டு குருவியின் பறத்தலை அவர் பார்த்தார். அந்தக் குருவி மூன்று தடவைகள் அறைக்குள் சுற்றிப் பறந்து விட்டுப் போய், பிறகு அந்த ஜன்னல் கம்பியைக் காலால் பிடித்துக் கொண்டு சரிந்து அதிலே நின்றது.
அந்தக் குருவியை அவர் பார்த்தார்.
முதல் மூன்று தடவைகளாக அந்த அறைக்குள் வந்து அவர் வெளியே துரத்திவிட்ட அதே குருவிதான்!
அந்தக் கொண்டைக்கிளாறுதான்!
அவரைக்கண்டு அதற்கு அவ்வளவாக மிரட்சியுமில்லை, பயமுமில்லை, என்றவாறுதான் அதனது நிலை இருந்தது.
கொண்டைக் கிளாறு அந்த ஜன்னல் கம்பியில் இருந்து கொண்டு, அந்த அறைச் சுவரிலே மின்சார விளக்கின் மேல் பொருத்திக் கிடந்த கம்பி வளையத்தைப் பார்த்தது.
அந்த வளையத்திலே சுற்றியும் கீழே தொங்கிக் கொண்டிருந்த பளபளப்பான வெண்மை நிறக் கண்ணாடிச் சரங்கள் அசையாது அப்படியே நிலையாய் இருந்தன. குருவி அந்தண்டைக்குப் போய் நின்றது. மேலேறும் வரிசையிலும் கீழிறங்கும் வரிசையிலுமாய் வித்தியாசமான ஒரு ஸ்தாயியில் சத்தம் வைத்தது. தலையை அங்காலேயும் இங்காலேயுமாக வெட்டி வெட்டித் திருப்பியபடி வட்டக் கண்களால் அவரையும் பார்த்தது. அது ஏன் வீட்டுக்குள்ளே பறந்து வந்திருக்கிறது? எதற்காக அந்த மின் விளக்கு வளையத்திலே

பி.அருளானந்தம் w 137
போய் நிற்கிறது? என்கிற காரணமெல்லாம் அவர் நன்றாக அறிவார். அவருக்கு தற்சமயம் எழுதுவதை நிறுத்த வேண்டிய நிலைமை வந்து விட்டது. தான் எழுத வேண்டிய கவிதைக்கு "தீயே’ என்ற ஒரு தலைப்பை மாத்திரம் எழுதிவிட்டு, பேனாவை மேசை மீது அவர் உருள விட்டார். தான் இருந்து கொண்டிருந்த நாற்காலியைப் பின்னால் நகர்த்தினார். நாற்காலியில் இருந்து அவர் எழுந்து நின்ற போதும் குருவி அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அதுதான் அந்த இடத்தை விட்டுப் பறப்போமா, இல்லை இப்படியே இருக்கும் இந்த இடத்தில் நின்று கொள்வோமா, என்ற தன் செய்கையினை அவருக்குக் காண்பித்துக் கொண்டிருந்தது.
அவர் அதை வெளியே துரத்திவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். “சூ. ச்சூ.’’ என்றபடி அது நின்று கொண்டிருந்த சுவரின் அருகே போகப் போனார். அவர் அந்த இடத்தை நெருங்க முதல், இன்னொரு பறத்தல் சத்தம் ஜன்னல் உள்ள பக்கமிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தார். இதன் இணைதான் அது என்று அங்கே பார்த்ததும் உடனே அவர் ஊகித்துக் கொண்டார். அது அந்த அறை ஜன்னலுக்குப் பக்கத்திலே இன்னமும் சிறகடித்துக் கொண்டு சுற்றி வட்டமிட்டுப் பறந்தபடி நின்றது. ஒரே நேரத்தில் இரண்டு குருவிகளினது சத்தமும் அவரது அறையை நிறைத்தது போல இருந்தது. அந்தக் குருவிகளை விரட்டத் தன் கைக்குள் எதையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. மேசையில் கிடந்த அந்தக் காகிதக் கட்டுத்தான் அந்தரத்துக்கு உதவியது. அதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு “சூச்சூச்.சூ.’’ என்று விசிறி விரிப்பாய் அந்தக் காகிதக் கட்டை அசைத்து குருவிக்குப் பயம் காட்டினார். அதைக் கண்டு விட்டு இரண்டு

Page 76
138 அம்மாவுக்குத் தாலி
குருவிகளும் கலவரமாகக் கத்தல்களிட்டன. பிறகு எதையோ அவருக்குச் சொல்லிப் பேசி விட்டுப் பறப்பதுபோல அந்தக் குருவிகள் இரண்டும் தாங்கள் பறந்து உள்ளே வந்த அந்த ஜன்னலின் வழியாகவே மீண்டும் வெளியே பறந்து விட்டன. அந்தக் குருவிகள் வெளியே பறந்த பின்பு அவர் உடம்பும் திருப்தியால் மூச்சு விட்டுக் கொண்டது. ஓரளவு மினுங்கினார் அவர் தன் தலையைச் சொரிந்தார். கையில் வைத்திருந்த வெற்றுக் கடதாசிகளுடன் மேசையருகில் உள்ள நாற்காலியில் திரும்பவும் போய் இருந்தார்.
அவர் எழுத வேண்டுமென்று புனைந்து வைத்திருந்த கவிதை வரிகள், ஒரு நீரூற்றுப் போல அவர் நினைவில் மீண்டும் பிரசவித்தன. முன்னம் அந்தக் கதிரையில் இருந்த வேளை, அந்தக் கவிதைக்குத் தலைப்பிட்டிருந்த தாளிலே கவிதையை நிறைவு செய்ய அவர் எழுதவும் ஆயத்தமானார். அவரது சிந்தனையில் மூவுலகத்தொன்றான இப்பூவுலகத்துக் காடெல்லாம் வெயிலின் உஷ்ணம் மிகுந்து எரியத் தொடங்குவது போல தரிசனமானது. அந்த நாசகாரத்தீ காட்டு வளங்கள் அனைத்தையும் எரித்துச் சாம்பல் மேடாக்குகிறது. தீ நாக்குகளிலிருந்து தப்பி ஓட முயலும் மிருகங்கள் கூட்டமாக நிறைந்து விட்டன. பறவைகள் கூட்டம் கூட்டமாய் தப்ப வழி தெரியாமல் பறந்து தீய்ந்து மாய்கின்றன.
எங்கும் ஒரே புகை மண்டலம், மனிதனுக்கு வெறுப்பான புகை! மனிதனுக்கு விரோதமான புகை சற்று முன் அந்த அறையினுள் பறந்து வந்த அதே குருவி, அவர் முன் நின்று புலம்புவதைப் போல இருக்கிறது. அந்தக் குருவியின் புலம்பலை ஒரு கவிதையாக அவர் எழுத ஆரம்பித்த போது, எழுதுகின்ற தன்கையும் அந்தத் தீ நாக்குகளால் வேகுகின்ற

பி.அருளானந்தம் 139
in
ம்ாதிரி அவருக்குச் சூடானதோர் உணர்வு நெருப்புச் சட்டி ஒன்றை தன் தலை மீது யாரோ தூக்கி வைத்து விட்டது போல ஒரு கொதிப்பு.
அந்தக் காடெல்லாம் எரிந்தழிந்து போவதை நினைத்துக் கொண்டு, "தீயே.’’ என்று தான் எழுதி வைத்த தலைப்பை வாசித்து ஒருமுறை அவர் நெடுமூச்செறிந்தார். விட்ட பெருமூச்சும் அனலாகத் தகித்தபடி வந்தது அவருக்கு. அடுத்த கவிதை வரிகளை எழுதுகின்ற வேளை அதுவும் அவரது மனத்தினைச் சுட்டது.
உன் நெற்றிக் கண்ணால்
நீசரை எரிப்பதற்குப் பதில்
காட்டை எரித்தாயே. எழுதிய அந்த மூன்று வரிகளிலும் தன் மனக் குமுறலை அவர் வெளியிட்டார். எழுதி முடித்த அந்த மூன்று வரிகளையும் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார்.
அந்தக் குருவி எங்கோ இருந்து கொண்டு இன்னமும் அழுது புலம்புகிறது மாதிரி ஒருவித பிரமையாக அவருக்கு இருந்தது.
அடுத்து எழுதும் கவிதை வரிகள் அந்தக் குருவியின் புலம்பலாக இருந்தன.
எம் கூடும் குஞ்சும்
தணலில் எரிந்து கருகிட
யாருக்கு வஞ்சனை செய்தோம்.
இப்போது நாங்களும் அகதிகள் தானா.?

Page 77
140 அம்மாவுக்குத் தாலி
எழுதிய கவிதை நன்றாக, பொருத்தமாக அமைந்து விட்டது போல கவிதையைத் திரும்பவும் வாசித்த போது அது அவருக்கு மனத்திருப்தியாக இருந்தது. தன் மனக் கனம் சகலத்தையும் எழுதிய காகிதத்தின் மேல் வைப்பது போல நினைத்துக் கொண்டவாறு, மேசை மேல் கிடந்த அந்தக் கண்ணாடிக் கல்லை எடுத்து அதன் மேல் வைத்தார்.
பக்கத்து வீட்டிலிருந்து பல நாய்கள் குரைப்பது போல சத்தம் கேட்கத் தொடங்கியது. குடும்பச் சண்டைதான்! அவர்களுடைய குடும்பத்தில் சதா பணத்துக்காக நடக்கும் சச்சரவுகள் சொல்லி முடியாது “எல்லா சாமான் சட்டுக் களும் மலை போல பெரிசாய் இப்ப விலை விலை.” என்று அவள் சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வது வீதி முழுவதும் கேட்கும். தன் புருஷனிடம் பணத் தைக் கேட்டுக் கத்திக் கொண்டிருக்கும் அவள் சண்டைக் காரியல்ல, ஒ, இல்லவே இல்லை, அவள் நல்லவள். பாவம்! ஆறு பிள்ளைகள் அவளுக்கு. கணவர் காலையில் வேலைக் கென்று வெளியே வெளிக்கிட்டுப் போய் விடுவார். அதற்குப் பிறகு வீட்டிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் பின்னேரம் மட்டும் அவள்தானே முகம் கொடுக்க வேண்டும்?
அடுத்த வீட்டுப் பிரச்சினையை எழுது மேசையில் தன் கைகளை ஊன்றியபடி அவர் யோசித்துக் கொண்டிருக்க, இருந்தாற்போல அந்த இறக்கைகளினது விசிறல் சத்தம் மீண்டும் அந்த அறைக்குள்ளே அடர்ந்தது. பறந்து வந்த அந்த இரு குருவிகளில் ஒன்று முன்னம் தான் வந்து நின்ற அந்தக் கம்பி வளையத்தின் மேல் வந்து அமர்ந்தது. மற்றக் குருவி எங்கே என்ற தேடலோடு திரும்பிப் பார்த்தார். அது அங்கே இப்போது ஜன்னலுக்கு மேலே உள்ள சுவரில் காற்றுப் புக வைத்துக் கட்டியுள்ள சித்திரக்கல் வளைவுக்குள்ளே போய் நின்று கொண்டிருந்தது. அந்த வளைவுக்குள்ளே நின்று

நீ.பி.அருளானந்தம் 141
கொண்டிருப்பது ஆண் குருவிதான்! என்று இரண்டையும் பார்த்து, பின்பு அவர் அடையாளம் தெரிந்து கொண்டார். திரும்பவும் அந்தக் குருவிகளை விரட்ட வேண்டும் என்ற எரிச்சல் அவருக்கு வந்தது. சடுதியான, பயங்கரமான தூண்டும் ஒரு விசைச் சக்தியால் எழுந்தார். துப்பாக்கியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு குறிவைத்துச் சுட்டது மாதிரி, தன் கையால் குருவிக்குப் பயம் காட்டினார். கம்பி வளையத்தின் மேல் இருந்து கொண்டிருந்த குருவி "ஊஹிம்.’’ அதை விட்டு எங்கும் அது அசையவே இல்லை.
“அதில் உந்த ஜன்னலுக்குப் பக்கத்தில பெரியதொரு மாமரம் சோக்காய் வளந்து நிக்குது. அதுக்குக் கிட்டத்தில கூடையா வளந்து நிக்கிற அந்தச் செரிமரமும் உங்களுக்கு இன்னும் நல்ல வசதியாயிருக்கு. அதில போய் உங்கட குருவிக் கூட்டக் கட்டலாம்தானே.? இதில முதல் அப்ப நீங்க கூடுகட்டி பிறகு என்ன நடந்திச்செண்டு உங்களுக்கு மறந்து Gund-Garr...?' V
குருவிகளுக்குத் தான் சொல்வது விளங்காது என்று தெரிந்திருந்தும் தன்னை ஆற்றுவித்துக் கொள்ள தன் மன உளைச்சலை வெளியே வார்த்தைகளில் கொட்டித் தீர்த்தார் அவர், “என்ன உங்க சத்தம்.? நீங்களே உங்களுக்குள்ளா இருந்து நெடுக அப்பிடிக் கதைச்சுக் கொண்டிருக்குறீங்க.?’ என்று அவரது அறை வாசலில் வந்து நின்று கொண்டதும் கேட்டாள் செண்பகம். “பங்க பார்! திரும்பியும் அதே குருவி யள் இந்த அறையிக்கயா இப்ப வரத் துவங்கிட்டுது.’ என்று மனைவிக்குச் சொன்னார் அவர். அவள் குறிப்பாக அங்கே தான் பார்த்தாள். அந்த இடத்திலேதான் முன்பு ஒரு குருவி வந்து கூடு கட்டியிருந்தது என்பது தன் ஞாபகச் சேகரிப் பிலிருந்து அவளுக்கு நன்றாய் ஞாபகம் வந்தது. அந்தக் குருவி அதிலே நின்றவாறு சத்தமிட்டது.

Page 78
142 அம்மாவுக்குத் தாலி
அவள் நட்சத்திரக் கண்களுடன் அதைப் பார்த்தாள்.
“முன்னம் வந்து கூடு கட்டின அதே குருவிதான் இது போல.1’ அவளும் ஒருவித மன எரிச்சலுடன் கூறினாள். “என்ன இதுகளுக்கு நான் இனிச் செய்யிறது.? நான் வெளிய துரத்திவிடத் துரத்தி விட பேந்தும் பேந்தும் இதுக்குள்ளயா அதுகள் வந்து நிக்குது.” s
"நீங்கள் முதல் விட்ட பிழைதான் இதுக்கெல்லாம் காரணமெண்டு உங்களுக்கு இப்ப விளங்குதே.? அப்பவே அறையுக்க கூடு கட்ட விடாம வெளியால நீங்க துரத்தித் துரத்தி விட்டிருந்தா இப்பவெல்லாம் இதுகள் பேந்தும் இங்க அறையிக்க வந்திராது.”
"உனக்கு என்னை எதிலையும் வைச்சுப் பிழை கண்டு பிடிக்கிறதுதான் வேலை என்ன? முன்னம் உந்தக் குருவி என்ர அறையிக்க வரேக்க தஞ்சம் கோரி வருகுது. மிருதுவான தளம் எல்லாம் போட்டு அந்தக் குருவி கூடு கட்டுது பாவம்! அது முட்டை இட்டுக் குஞ்சு பொரிச்சப்பிறகு போகட்டும்! எண்டு விட்டு வைச்சன். ஆனா அதில இந்தக் குருவி கூடுகட்டி, முட்டை இட்டு அடை காக்கத் தொடங்கேக்க தான், பிறகு அப்பிடியெல்லாம் நடக்குமெண்டு எனக்கும் அது விளங்கிச்சு. இப்பயும் அதே வேலையைச் செய்யத்தானே இந்தக் குருவி எத்தனிக்குது. அந்தக் கம்பிக்குக் கீழ இருக்கிற பல்ப்பை நான் ரவயில போட, குருவியின்ரை முட்டையில அதின்ரை வெளிச்சச் சூடு பிடிக்கும். அதால பிறகு உந்தக் குருவியின்ர முட்டை கூழாயிடும்! பிறகு எங்க பேந்து அது குஞ்சு பொரிக்கிறது? முதல் அப்பிடியெல்லாம் நடந்தது உந்தக் குருவிக்கு எங்க விளங்கப் போகுது.? அது அப்பிடி பட்டுக் கழிச்சும் திரும்பவும் அதிலயாயே இப்ப கூடு கட்ட நிக்குது.”

(பி.அருளானந்தம் 143
"எல்லாத்துக்கும் முதல் உதில நீங்க குருவியைக் கூடுகட்ட விட்டா. முட்டையிட்டு உது அடைகாக்கிறதுக்கு அதில இருக்கைய்க்க, மேல இருந்து அது உங்கட படுக்கிற கட்டிலுக்குப் பக்கத்தில பீச்சித் தள்ளும். அதின்ரை அந்த வேலையால இந்த எங்கட இருக்கிற வீடெல்லாம் பேந்து கிடந்து நாறும். எனக்கு அதால எத்தினை போத்தல் டெட்ரோல் செலவு? இப்பிடித்தேவையில்லாத வேலயளத் தான் நீங்க இருந்து கொண்டு பாப்பீங்க..? நாங்க இப்ப இருக்கிற இந்த வீடே வாடகை வீடு. இந்த வீட்டு ஒணர் வந்து பாத்திட்டு நாங்கள் ஒரு குப்பைச் சனங்கள் எண்டும் பேசுவார். இதெல்லாம் தேவையா.?”
அவளது கேள்வியின் ஒவ்வொரு பக்கத்தையும் நிறுத்துப் பார்க்க முயற்சித்தார் அவர்.
நிதானமாகக் கழுத்தறுக்கிற கசாப்புக் கடைக்காரன் மாதிரி, வார்த்தைகளால் அவள் அறுத்துக் கொண்டு போவாள் என்பது அவருக்குத் தெரியும்.
“சரி, சரி, கதைய அப்பிடியே நிப்பாட்டு. ஆரெவரையும் இங்க இந்த வீட்டில நாங்கள் சேத்து வைச்சிருக்கவுமில்லை. இங்க அவற்றை வீட்டுச் சுவரில ஒரு ஆணி அடிக்கவுமில்ல. இதுக்க குருவி வந்து கூடு கட்டுறத்துக்கு வீட்டுக்காரன் எப்பிடி எங்களப் பேச ஏலும்.? நாங்களும் ஒரு நேரம் அகதியளா அங்கயும் இங்கயும் இருக்க இடம் இல்லாமல் அலைஞ்சு கொண்டு திரிஞ்சனாங்கள்தானே? நாங்களும் இடம் பெயர்ந்து அலைஞ்சு திரிஞ்ச காலத்தில, முகம் தெரியாத மனுசரிண்ட வீடுகள் வழிய போயும் அவயிண்ட வீடு வழிய தங்கி இருக்க இடம் தாங்கோ வெண்டு கேட்டிருக்கிறம். அந்த மணிசரும் எங்கடநிலையைப் பார்த்து மனசிரங்கி எங்களத் தங்கட அவயின்ர வீட்டில இருக்க விட்டதுகள்தானே? அந்த நினைப்பெல்லாம் இப்பவும்.

Page 79
144 அம்மாவுக்குத் தாலி
என்னட்ட நெடுக இருக்குகண்டியோ..? இப்ப இந்தக் குருவி வந்து கூடுகட்டயிக்கவும் அதை நினைச்சுத்தான் நானும் என்ரை அறைக்க, சரி கூடு கட்டட்டுமன் எண்டு விட்டன். அந்தப் ‘பீ’ நாத்தத்தையும் என்ன செய்யிறதெண்டு பொறுத்துக் கொண்டிருந்தன்.”
“சரி சரி! அப்பிடி நீங்க விட்டீங்க! அதால பிறகு உந்தக் குருவிகளுக்கு என்ன நன்மை நீங்க செய்தீங்க.? அதுகள் கூடு கட்டி இட்ட முட்டையும் பொரிச்சுக் குஞ்சு வராம கூழ் முட்டையாயிட்டுது. அந்த மடக்குருவி வந்து பேந்தும் அந்த பல்ப்பு வளையத்துக்கு மேலதானே இப்பவும் கூடு கட்ட வெண்டு நிக்கிது.? அந்தச் சுவர் பல்ப்பை ராவேல எரிய விடாம நூத்துப் போட்டு நீங்க இருட்டுக்க இருப்பீங்களே? சரி இருட்டுக்க அப்படி நீங்க இருப்பீங்க எண்டு வையுங்கோவன். ஆனா எங்கயும் படிக்கிறதுக்கு எழுதுறத்துக்கெண்டு வேற இடம் ராவேல உங்களுக்கு இங்க வீட்டுக்க தோதா இருக்கா..? அதைவிட இந்தக் குருவியள் என்ன அடைக்கலாங் குருவியள் மாதிரி பெரிசாச் சொல்லக் கூடியதா வீட்டுக்குருவியளே? வீட்டுக்கவந்து கூடு கட்டுறதுக்கெண்டு விட மனுசன் தான் இயற்கையை விட்டு வர வரத் தன்ரை சீவியத்தில விலகிப் போறா னெண்டா உதுகளும் அப்பிடிப்போக நாங்க காரண மாயிருக்கிறதா.?’’
செண்பகத்தின் கருத்து அவளது ஒவ்வொரு சொல்லிலும் கனத்தது. அவள் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும், அடைக்கலாங் குருவி கண்ணாடியின் மேல் கால்களால் தொற்றிக் கொண்டு, அதில் தெரியும் பிம்பத்தைக் கொத்திக் கொண்டிருப்பது போல, அவரின் மனத்திலே தட்டித் தெறித்த கணக்கில் இருந்து கொண்டிருந்தன.

நீ.பி.அருளானந்தம் 145
“ஓம் நீ சொல்றதுஞ் சரியாகத்தான் இருக்கு இந்த முறை கண்டிப்பா இதுகளை அந்த இடத்திலை கூடுகட்ட நான் விடுறேல்லத்தான். இதுகளை எப்பிடியும் வெளியே உள்ள மரத்தில கூடுகட்ட விடத்தான் செய்ய வேணும்! அதுக்காக இதுகள ரெண்டு மூண்டு நாளுக்கிருந்து வெளிய போகத் துரத்திவிடுறதான் இனி என்ரைவேல. இப்பவும் இதுகளைப் பாத்தியே நாங்கள் ரெண்டு பேரும் எங்கட கதையோட இருக்கிறம், அதுகள் இதுக்குள்ள தங்கடபாடு. அந்தக் கிறி லுக்குள்ள இருக்கிறவரைப்பார் அவர்தான் ஆண்குருவி”
"உவ்வைக்கு உடைஞ்சு கிடக்கிற அந்தத் தும்புத் தடியை எடுத்துத் தாறான்! கையில உதுகளைத் துரத்த நீங்க வைச்சிருங்கோ.!’ வீட்டு மூலைக்குள் கிடந்த தடியைக் கொண்டு வந்து அவள் கொடுத்தாள்.
“ஒய். சூக்.” என்று கம்பை அவர் குருவிக்குப் பக்கத்தில் உயர்த்தினார். அந்தக் கம்பைக் கண்டுதும் புயல் காற்றாய் வெளியே பறந்தது பெண் குருவி. ஆண் குருவியும் பெண் குருவிக்குப் பின்னாலே சுறுக்காய்ச் சேர்ந்து கொண்டு பறந்தது.
“எனக்கு என்ரை வேலயள் அங்க குசினிக்க நிறையக்கிடக்கு! நான் போவப் போறன்.’’ என்று சொல்லிவிட்டு செண்பகமும் போய் விட்டாள். அவர் கையில் கம்போடு காவல் அதிலே இருந்து கொண்டார். அந்தக் குருவிகளை வீட்டுக்குள் வரவர வெளியே கலைத்துக் கொண்டிருப்பதே அன்று முழுக்க அவரின் வேலையாக இருந்தது.
அடுத்த நாள் அந்த இரண்டு குருவிகளும் நண்பகலுக்குப் பின்னே முதலாந்தடவையாக அங்கே அந்த அறைக்குள் பறந்து வந்தன.

Page 80
146 exňEATayšeý groš)
“நான் நேற்றுக் கலைச்சுக் கலைச்சு உங்களை வெளியே போக விட்டது இப்ப மறந்து போச்சுதா.?பேந்தும் பேந்தும் உள்ளுக்கவா வாறியள்.?’ என்று அவர் குருவிகளைப் பார்த்துக் கொண்டு கேட்டார். அந்தப் பெண் குருவி மின்சார விளக்குப் பூட்டியிருந்த வளையத்தடிக்கு வரவில்லை. இரண்டு குருவிகளும் அந்தச் சித்திரக் கல் வளைவினுக்குள்ளே இருந்தபடி, அவரைச் சபிப்பது போல சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அவர் கம்பை எடுத்து நீட்டிக் காட்டினார். குருவிகள் கம்பைக் கண்டதும் அதாலே அப்படியே வெளியே பறந்துவிட்டன. அதற்குப் பிறகு பொழுதுபட்டவரை அந்தக் குருவிகள் திரும்பி அவருடைய அறைப்பக்கம் வரவே இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை வந்தது, அந்த நாளும் இரவாகி நடுநிசியாகி விடிந்து போய்விட்டது. ஆம் விடிந்து விட்டது சனிக்கிழமையும் பிறந்து விட்டது! அந்தக் குருவிகளை அவர் தன் கண்ணால் காணவில்லை. அதனால் மனத்தில் அவருக்கு ஒருவித உஷ்ணம், புழுங்கல். சங்கிலி சுற்றி இறுக்கியது போல மார்பில் வலி வருத்தத்தோடு யோசித்துக் கொண்டிருந்தார்.
அந்த நாளுக்கு அடுத்த நாள் போல காலை வெயில் அந்த வாசலில் விழுந்து கொண்டிருந்த நேரம் அவர் அந்த வாசல் படியில் இருந்து இறங்கிக் கீழே நின்று கொண்டிருந்தார். பக்கத்து வீடுகளிலே பெண்கள் பம்பரம் மாதிரி வீட்டைச் சுற்றிப் பெருக்கும், கழுவும், கூட்டும், துடைக்கும், துவைக்கும் சத்தங்கள் அவரின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. நேற்று இரவு எட்டு மணிக்குப் பின்பு, தூக்கலாய் வாசனை விழா நடத்திய ‘பவள மல்லிகைப் பூக்கள்’ மரத்திலிருந்து கீழே அந்த வாசலுக்குப் பக்கத்தில் கொட்டுப் பட்டுக் கிடந்தன. அந்தக் கசங்கல் மணக்கைகள் மூச்சில் பருத்துப் பருத்து சுவாசத்தில் ஏற அவர் முகர்ந்தார்.

3.பி.அருளானந்தம் 147.
அதோடு அந்தச் செரிமரத்தின் பூக்களையும் வெயில் வெளிச்சத்துடன் பார்த்துக் கொண்டு, காலை நேரத்தை இலகுவாகக் கழிக்கலாம் போல அவருக்கு இருந்த்து. அந்த அரியதான அழகான செர்ரிமரத்துப் பூக்கள் பார்க்க இனிமையாக அவருக்கு இருந்தன. செர்ரிமரம் பூவெடுக்கும் காலம்தான் இது. அதிலே உள்ள புதுமொட்டுக்கள் எல்லாம் ஏதும் அறியாத கன்னிப் பெண்கள் போல குவிந்தபடி கிடந்தன. சின்னச் சின்னதாய், நட்சத்திரமாய், கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் கன்னிப்பூக்கள் அவரின் கண்களுக்குள் நிறைந்ததாய் இருந்தன. ஆனாலும் நெடிதான நேரம் தனியே அந்தப் பூச் செழிப்பிலேயே தன் கவனம் முழுதும் வைத்தபடி இருக்க அவரால் முடியவில்லை."என்ன சத்தம் அநத்ச் செரிமரத்துக் கூடலுக்குள்ளே.?’ என்றவாறு புலன் அவ்விடத்தில் போனது அவருக்கு.
அந்தக் கிளைக் கூடலுக்குள்ளே "கீச்சுக் கீச்சென்று' முன்பு அவருக்குப் பழக்கப்பட்ட அதே குருவிச் சத்தங்கள் கேட்டன.
அந்தக் குருவிகள்தானா? அந்த ஐமிச்சத்தை தன் மனத்தில் வைத்துக் கொண்டு செர்ரி மரத்தின் அருகே போனார். இரண்டு கைகளாலும் மரத்தின் கொடி போன்ற நீண்ட வாதுகளைப் பிடித்து விரித்துக் கொண்டு அதற்குள்ளே பார்த்தார். விறுக்கென்று இரண்டு குருவிகள் அதற்குள்ளே இருந்து வெளிப்பறந்தன. அந்த மரக்கூடலிலிருந்து அவரது கண்களில் பட்டும் படாததுமாய்த் தெரிந்ததும் மறைந்து விட்ட அந்தக் குருவிகள் என்ன சாதிக் குருவிகள்.??
அவைகள் அந்தக் கொண்டைக் கிளறுகள்தான்! மனத்தில் அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார். அந்தக் குருவிகள் பறந்து

Page 81
148 அம்மாவுக்குத் தாலி
போனதன் பின்பும் தன் மனத்துக்குள்ளேயிருந்து எழுந்த ஒரு கேள்வியோடு அந்த மரத்தின் கிளைகளை விலக்கி விலக்கி பல பக்கங்களிலிருந்தும் உள்ளே அவர் பார்த்தார். அதற்குள்ளே ஒரு கெவட்டைக் கிளையில் பருமன் குறைந்த வளைந்த காய்ந்த நெட்டுகள் கூட்டுக்கு அத்திபாரமாய் வைக்கப்பட்டிருந்தன. அதைப்பார்த்ததும்.
“இதிலை அந்தக் குருவிகள் தான் இப்ப கூடுகட்டுது.” என்றதாய் மனச் சந்தோஷப்பட்டார் அவர் செண்பகத்திடம் உடனே போய் இதைச் சொல்லிவிட வேண்டும் போல தவிப்பாக இருந்தது. கிளைகளை விலக்கிப் பிடித்திருந்த கையை எடுத்து விட்டு, செண்பகம் வேலையாய் இருந்த குசினிக்குப் போனார். செர்ரிமரத்தின் தாழ்நிழல் குசினிப் பக்கம் வரை நீண்டிருந்தது.
“திரும்பியும் அந்த ரெண்டு குருவியளும் அதில இப்ப வந்திட்டுது..!’ என்று குசினிக்குப் போன கையோடு அவளுக்குச் சொன்னார். செண்பகத்துக்கு அவர் சொன்னது சரியாக விளங்கவில்லை. அவரின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவரிடத்தில் சந்தோஷக்களை தெரிந்தது. அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது! −
“வீட்டுக்கு திரும்பவும் அதுகள் வந்திட்டதா.?’ ஏதும் புரியாத அளவில் கேட்டாள். ...
"இல்ல் இல்ல வீட்டுக்குள்ள அதுகள் இப்ப வரல்ல." "அப்ப எங்கயெண்டு இப்ப நீங்க சொல்ல வந்தீங்க?"
“அந்தச் செர்ரி மரத்துக்குள்ள.” தன் வாய் முழுக்கவும் திறந்து சந்தோஷச் சிரிப்புச் சிரித்தார் அவர்
“அதிலேயா..? அதே குருவியள்தானா..?”

நீ.பி.அருளானந்தம் 149
"அதே குருவியள்தான்! இப்ப வாசல் பக்கத்து அந்த மரத்திலயாக் கூடு கட்டுறதுக்கு வெளிக்கிட்டிருக்கு..! இப்பதான் கூடு கட்டத் துவங்குகினம் ரெண்டு மூண்டு தும்பும் தூசியும் துப்பட்டையுமாய், அதிலே மரத்துக் கெவட்டைக்க இருக்க நான் கண்டன்.”
“அதைப் போய்ப் பாத்துப் பாத்து நீங்க பிறகு அதுகளுக்குப் பயங்காட்டி எங்கயும் பேந்து கலைச்சு விட்ராதேயுங்கோ.?”
“நானேன் கலைக்கிறன்.?”
“இல்ல நீங்க முதல் அதுகளை வீட்டுக்க கூடுகட்ட விடாமக் கலைச்சதில இப்ப உங்களைக் கண்டா அதுகளுக்கு பயமா இருக்கும்.”
“அப்ப அந்தக் குற்றம் என்னிலதான் எண்டு நீ சுமத்தி விடுறதுக்குத் தெண்டிக்கிறியோ..?”
“உங்களுக்கு ஒண்டுமே கதை சொல்லேலாது.*’ என்று சொல்லிக்கொண்டு எண்ணைத்தாச்சியிலே வெட்டி வைத்த கத்தரிக்காய்த் துண்டங்களை அவள் கொட்டினாள். “ஸ்.சூஸ்.” என்ற பொரி பொரியும் சத்தம் பெரிதாக எழுந்து தணிந்து கொண்டிருந்தது. கத்தரிக்காய் எண்ணெய்யில் வெந்து கறுத்துச் சுருங்கிக் கொண்டிருந்தது. இனி ஒரு கதையும் அவளுக்குச் சொல்ல இல்லை என்ற அளவிலே, திரும்பவும் தன் அறைக்கு அவர் வந்து சேர்ந்தார். பிறகு அந்த வாசற்படியிலே நின்று கொண்டு அந்தச் செர்ரி மரத்தை அவர் பார்த்தார். செர்ரிமரக் கூடலிலே மேலே உள்ள மென் கிளையில் கொம்பாடும் சலனம் அவருக்குத் தெரிந்தது.
அங்கே இனி என்ன நடக்கப் போகிறது? அந்தக் குருவிகள் கூடுகட்டவும் ஆரம்பித்து விட்டன.

Page 82
150 அம்மாவுக்குத் தாலி
அவைகள் இருந்து தங்கள் பாட்டிலே தங்களது வேலையைச் செய்யட்டும். நான் இருந்து என்பாட்டிலே என் வேலையைப் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு தன் எழுத்து வேலையைத் தொடர ஆரம்பித்தார் அவர்.
பூக்கள் நிறம் மாறுவது போல நாட்களும் சென்று கொண்டிருந்தன. அன்று காலை வெயிலேறவிட்டுக் குளித்தபின், ஈரம் உலரத்தலையைப் பிரித்து அடித்து உலர்த்தியபடியே அவரது அறை வாசற்படியில் வந்து நின்றாள் செண்பகம். அவளது நீண்ட சிலுப்பிக் கொண்டிருந்த கூந்தல் கற்றைகள் அவளைச் சுற்றி விழுந்து, அவளது அழகிய உருவத்துக்கொப்பான ஒளிவட்டத்தைப் பரப்பியது. "இந்த முடிய உலர விட்டுச் சிக்கெடுக்க எனக்கு நேரமில்லை.” என்று அவள் அதிலே நின்றபடி சொல்லிக் கொண்டிருக்க. அவர் அந்த அறைக்குள் மவ்னமாக இருந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிக் கொண்டிருந்தது ஒரு கவிதையாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கவிதையை அவர் எழுதப் புகுந்தது முதல் ‘உலகில் யுத்தமில்லை’ என்பது போல் நேரம் பரிசுத்தமாய் அவருக்குக் கடந்து சென்று கொண்டிருந்தது.
“இப்பவெல்லாம் அதுக்குள்ள கூட்டுக்க இருக்கிற தங்கட குஞ்சுகளுக்கு அந்தக் குருவியள் புழுபூச்சி வேட்டையாடி ஏராளமாக் கொண்டாந்து குடுக்குதுகள்.? அந்த ரெண்டு குருவிகளும் கூட்டுக்க போகேக்கிள, உள்ள கீச்சுச் சத்தங்கள் உரக்க அதிகமாக் கேக்கும். அத நீங்க எப்பவுமாவது பாத்திருக்கிறியளா? ஆனா நானெண்டா இதால குசினிக்குப் போகேக்க வரேக்க அதுகளை நெடுகலும் பாக்கிறனான்!” அவர் ஒரு பக்கம் தன் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்க, செண்பகம் செர்ரி மரத்தைப் பார்த்துக் கொண்டு அவருக்குக்

நீ.பி.அருளானந்தம் 151
கேட்கட்டும் என்றதாய் இதைச் சொன்னாள். அவர் தான் எழுதிக் கொண்டிருந்தாலும் அப்போது அவள் சொன்ன கதையிலே தன் புலனை விட்டார்.
“இங்க என்னப் பார் நீ செண்பகம்! இதுதான் கதை! இவ்வளவு நாள் செண்டு போச்சு நான் நீ சொன்ன மாதிரி பெரிசா அதைப் பார்த்துக் கொண்டிருக்கேல்ல. அது ஏன் எண்டொருக்கால் நீ சொல்லன் பாப்பம்?’
9
“ஏனாம்.’’ என்று தான் கேட்ட கேள்வியை இழுத்தாள் அவள். எனக்கெண்டா எந்தவித இடைஞ்சலுமில்லாம சுதந்திரமாயிருந்து சீவிக்கத்தான் விருப்பம். அதே மாதிரி இன்னொரு மனுசரிண்ட சுதந்திரத்திலயும் நான் தலையிட்டுக் கரைச்சல் குடுக்க எப்பவும் விரும்புறேல்ல. இந்த உலகத்தில இயற்கையா உள்ளதுகள் எல்லாத்தையும் நான் விரும்புறன். அதே போல இந்த இயற்கையை விட்டு விலகிப்போகிற வாழ்க்கையையும் நான் வெறுக்கிறன். அந்தக் குருவிகளின்ர கதையும் இதுதான்! அது முதல் இந்த வீட்டுக்க கூடு கட்டவரேக்க எனக்கு விருப்பமில்லயெண்டாலும், பிறகு என்ன செய்யிறதெண்டு நினைச்சு இரக்கப்பட்டு அதுகள வீட்டுக்க கூடுகட்டவிட்டன். ஆனா வீட்டுக்க கூடு கட்டி அதுகளுக்கு என்ன நடந்தது? தீமைதான் வந்தது! பிறகும் அதுகள் தங்களுக்கு நடந்ததை உணராமல் திரும்பவும் வீட்டுக்க வரையிக்க எனக்கு அது எரிச்சலாயிருந்தது. அதால அதுகளை நான் வெளிய துரத்திவிட்டன். இப்ப அதுகள் தங்கட இயல்பான வாழ்க்கைக்கு இயற்கையோட சேந்து கொண்டுதுகள்.
இதுக்குப்பிறகு அதுகள் கூடுகட்டுது, குஞ்சு பொரிக்குது என்டு பாத்துக் கொண்டிருக்கிறது எனக்கு வேலையில்ல.! அதுகளை அதுகளின்ர பாட்டுக்கு சுதந்திரமா நான்

Page 83
152 அம்மாவுக்குத் தாலி
விட்டிட வேணும்! அதுதான் என்ர விருப்பம்! இதெல்லாம் இன்னும் உனக்கு விளங்கேல்லப் போல.? என்னைப்பற்றி இன்னும் உனக்குத் தெரியேல்லப் போல.”
“நான் கேட்டதுக்கு இவ்வளவு பெரிய புராணமா தேவை?’
“இல்ல உனக்குச் சரியா விளங்கியிருக்க மாட்டுது எண்டு கொஞ்சம் விரிவா இதைச் சொன்னன்.”
“உங்களை மாதிரி எனக்கும் எல்லாம் விளங்கும்." அவர் அவள் சொன்னதைக் கேட்டு விட்டு மெல்லச் சிரித்தார். செர்ரிமரத்துக்குள் குருவிக் குஞ்சுகள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கூடலுக்குள்ளே இருந்து இலைப் பரப்பின் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு ஆண் கொண்டைக் கிளாறு வெளியே பறந்தது. பெண் குருவியும் ஆண் குருவிக்குப் பின்னால் விரைவாகப் பறந்தபடி மாமரத்தடியாலே போய் ஒரு கூரைக்குப் பின் மறைந்தது.
செர்ரிமரம் பூக்கள் மாறிக் காயை வளர்த்துக் கொண் டிருந்தது. அன்று பின்னரே வேளை - மேகம் ஈரக் கருத் துணியாய்க் கறுத்துக் கிடந்தது. மிகத் தாழ்வாக ஆகாசம் வந்து விட்டதோ? எனும் படியாக நெருக்கத்துடன் இருந்தது. வானில் வெட்டிச் சரிந்த ஒரு மின்னல் “பளி.ச்.பளி.ச்' சென்று நான்கு பக்கமும் கொடிவீசி மறைந்தது. மின்னல் வெட்டோடு இடியின் வெடிப்பு இருந்தாற் போல மழை “ஜோ வென பெரிய ஒலத்துடன் இரைந்து கொண்டு தொலைவிலிருந்து கடந்து வந்தது. காற்றும் சுழன்றடித்தது! மழை குறையவே இல்லை! மரங்கள் பேயாய் ஆடின! மண்குளிர்ந்து மரம் குளிர்ந்து போகுமளவிற்கு அந்த மழை நன்றாக அடித்து ஊற்றிவிட்டு இருட்டுப்படவும் விட்டுவிட்டது. அவர் இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு,

பி.அருளானந்தம் 153
இருந்து சிறிது நேரம் புத்தகம் படித்த பின்பு, படுக்கைக்குப் போனார். கட்டிலிலில் படுத்துக் கிடந்த போது, அவருக்கு அந்தக் குருவிகளின் ஞாபகம் வந்தது. பின்னேரம் பெய்த மழைக்கும், அடித்த காற்றும், அந்தக் குருவிகளுக்கு ஏதும் நடந்திருக்குமோ? என்ற ஏக்கம் அவரின் மனத்தைப் போட்டுப் பிய்த்தெடுத்தது. அந்த நினைப்பிலே நித்திரை யின்றி நடுநிசிவரை சோகக் கறுக் கடலில் கிடந்தார் அவர்
விடியல் பொழுது, மென் வெளிச்சத்தோடு குளிர்மையுடன் மலர்ந்தது- பட்சி ஜாலங்களின் "கீச் கீச்" சென்ற சத்தங்கள் அந்தக் குளிர்மைக்கு இனிமை சேர்த்ததாய் இருந்தன. சூரிய ஒளிக்கதிர்கள் மழையின் குளிர்ச்சிக்கு மருதாணி இட்டாற்போல எங்கும் தங்க நிறத்தில் 'தகதகவென ஜொலிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பிந்திப் படுத்ததிலே அவர் விடியல் முறிந்து, நேரம் சென்று தான் நித்திரைவிட்டு எழும்பினார். அவர் கட்டிலால் எழுந்தவுடன் வந்து கதவைத் திறந்து விட்டு முதன் முதல் பார்த்த இடம் அந்த செர்ரிமரமாகத்தான் இருந்தது. அந்த செர்ரிமரக் கூடலுக்கு மேலே இலைத்தழைப் பெங்கினும் மழை ஈரம் இன்னும் சிலிர்த்து இருந்தது. ஆனாலும், அந்த மரம் எதையுமே வெளிக்காட்டாத அமைதியுடன் இருக்க கண்டு அவர் ஒரு கணம் திகைத்து நின்றார்.
“அந்தக் குருவிகளுக்கு ஏதும் நடந்திருக்குமோ..?’’ மனதுக்குள் இந்தக் கேள்வி அவரைப் போட்டுப் பிசைந்தெடுத்தது. நெஞ்சில் உள்ள அந்த நெருடலோடு அந்தச் செர்ரி மரத்தருகில் நின்ற மாமரத்தைப் பார்த்தார். அந்த மரத்துக் கிளையில், தாவித் திரியாமல் சோம்பித்தயங்கி ஒரு அணில், சணலில் செய்தது போல உள்ள தன் சிறிய உடம்பைச் சுமந்து கொண்டு இருந்து கொண்டிருந்தது. அதே கிளையின் நுனியில்.

Page 84
154 அம்மாவுக்குத் தாலி
அவர் தன் கண்ணால் அங்கே காண்பதை அப்போது நம்பவே முடியாததாய்த்தான் இருந்தது! நன்றாக அந்த மாமரத்தின் கீழே வந்து நின்று இலைகளற்றுத் தெரிவும் ஒரு இடைவெளியூடாக துலக்கமாக அங்கே பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சியில், அவரது மனவெளிமுழுவதும் குப்பெனக் குதூகலம் கூத்தாடியது. ஒரு பரவசக் குளிர் உடலெல்லாம் பரந்து கிடக்க, அந்த மரக்கிளையில் மெளனமாய் இருந்து கொண்டிருக்கும் குருவிக் குஞ்சுகளைப் பார்த்தார். அந்தக் குருவிக்குஞ்சுகள் இரண்டும் மொட்டுக்ளைப் போல அந்தக் கிளையில் சமர்த்தாய் அமர்ந்திருந்தன.
“செண்பகம். செண்பகம்’ என்று மகிழ்ச்சி அலைகள் மனதிலே புரண்டெழ மனைவியைக் கூப்பிட்டார் அவர். செண்பகம் அவர் கூப்பிட்ட குரலுக்கு “ஓம் ஓம்! இந்தா வாறன்.’’ என்று சொல்லியபடி அறைக்குள் இருந்து வெளியே வெளிக்கிட்டாள். அவள் அந்த மரத்துக்குக் கிட்ட வாக வந்து சேர்ந்ததும் “என்ன. என்ன?’ என்று கேட்டபடி, அவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவர் பார்த்துக் கொண்டு நிற்கும் அந்த மரக்கிளையையும் பார்த்தாள்.
“இந்தக் கொண்டைக் கிளாறுக் குருவிகளிண்ட ரெண்டு குஞ்சுக் குருவியளும் அந்தா அந்தக் கிளையில நிக்குது பாரும்!’ என்று அவைகளை அவர் தன் மனைவிக்குக் காட்டினார். அவள் உடனே தன் கணவர் கையால் சுட்டிக் காட்டிய மரக்கிளையின் பக்கம் ஆவலோடு பார்த்தாள். கிளையில் அமர்ந்திருந்த அந்த இரு குருவிகளையும், உடனே அவள் கண்டாள்.
கூடுதலான மென்மையாயும், கூடுதலான அழகாயும், அந்தக் குருவிகளைப் பார்க்கும்போது அவளுக்கு இருந்தது.

நீ.பி.அருளானந்தம் 155
உடலில் அழகு ஏறிய அந்தக் குஞ்சுகளைப் பார்க்கும் போது, அவளது பிரகாசமான பெரும் தடங்கண்கள் மேலும் விரிந்தன. நுங்கின் குளிர்ச்சியாய்க் கண்களும் குளிர்ந்தது அவளுக்கு. அந்தக் குளிர்ச்சியில் உடல் உலுக்கிக் கொண்டபோது, ஒருவிதமான உடல் உச்ச பரவசமும் அவளுக்கு ஏற்பட்டது.
“எங்க அந்தக் தாய்க் குருவியயையும் தகப்பன் குருவியையும் இதுகளோட காணேல்ல.?’ என்று அவரைக் கேட்டபடி, மனது பூவனமாய்ச் சிரிக்க அங்கே அவள் இன்னும் ஆவலோடு பார்த்தபடி நின்றாள். அவள் அதைச் சொல்லி வாய் மூடவில்லை. அந்த இரு குருவிகளும் அந்தக் குருவிக் குஞ்சுகள் இருந்த மரக்கிளையை நோக்கி, சத்தமிட்டுக் கொண்டு விர்ரென்ற வேகத்துடன் அதிலே பறந்து வந்து நின்றன. அவைகளைக் கண்டதும், குஞ்சுக் குருவிகளும் இடைவெளிவிடாது கத்துக் கத்தத் தொடங் கின. தாய்ப்பறவையும் தகப்பன் பறவையும் சந்தோஷமாகக் கசபுசவென்று பேசி கொண்டன.
அந்தப் பறவைகளினது சத்தங்கள், ஒரு பெரும் ஆலமரத்துக்குக் கீழே கேட்கும் கீச்சிட்ட குருவிச் சத்தங்களாய்க் கேட்குமளவிற்கு, அவருக்கும் அவளுக்கும் அப்போது இருந்தன. அந்தக் கிளை மீது அமர்ந்திருந்த தாய்க் குருவியும் தகப்பன் குருவியும் அதிலே வந்த பின்பு, இப்படித்தான் பறக்க வேண்டுமென்று குஞ்சுகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தன. குஞ்சுகளுக்குப் பயம்! தாய்ப்பறவை பறந்து இவ்வளவு சுலபம் என்று செய்து காட்டியும், அவற்றிற்கு நம்பிக்கை வரவில்லை. என்றாலும், பிறகு அந்த இரண்டு குருவிக் குஞ்சுகளும், பயந்தபடியே சிறகை விரித்துப் பறக்க முயற்சிக்கும் விதம் அழகானதோர் கலையம்சம் போல அவர்களுக்குத் தெரிந்தன.

Page 85
156 அம்மாவுக்குத் தாலி
பயம், ஆவல், மகிழ்ச்சி, புதிய அனுபவத்தின் சுவடுகள், எல்லாம் அந்தக் குருவிகளின் செய்கையில் நின்று வெளிப்படுவதை அவர்கள் இருவரும் பார்த்துக் கொண் டிருந்தார்கள். அவர்களது கண்கள் விரிந்து கொண்டே இருந்தன.
அவர்கள் அங்கே பார்த்துக் கொண்டிருந்த நேரம், முதலில் அந்தத் தகப்பன் பறவை, நம்பிக்கையுடன் முன்னால் அவைகளுக்கு ஒரு வழிகாட்டலாய் பறந்து சென்றது. அப்படியே அந்த நேர்த்திசையில், எங்கோ பறந்து கொண்டே அது போய்க் கொண்டிருந்தது. அது பறந்து போன பின்பு, தாயப்பறவையும் அதே திசையில் அதிலிருந்து வெளிக்கிட்டுப் பறந்து போகத் தொடங்கிவிட்டது. குஞ்சுக் குருவிகளை தனியே அதில் விட்டுவிட்டு அவைகள் தங்கள் பாட்டுக்கு பறந்து போகிறதே. இவைகளுக்கு பறக்க முடியுமோ, முடியாதோ..? என்று சிந்தித்தபடியே அவர்களும், மஞ்சள் கருவாய் இருந்து, பின் குஞ்சான அந்தக் குருவிக் குஞ்சுகளைப் பரிதாபத்தோடு பார்த்தபடி இருந்தார்கள். ஆனாலும் அவர்களின் எதிர்பார்ப்பினைத் திருப்திப்படுத்துவது போல அதிலே இருந்த இரண்டு குருவிகளில் ஒரு குருவி தன் சிறகை அப்போது விரித்தது. அந்தச் சிறகு விரிப்போடு அந்தக் கிளையில் பக்கவாட்டுக்குக் கால்களை விலக்கி விலக்கி வைத்துக் கொண்டு, பறக்கும் அவாவுடன் அந்தக் குருவி அதிலே நின்றது.
“பறப்பற.’’ என்று அவர்களும் தத்துப்புத்தென ஒரு குழந்தையைப் போல நடக்கும் அந்தக் குருவியைப் பார்த்து தங்கள் மனதுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
அந்தக் குருவியும், அப்போது அவர்களின் மனவேகத் தைப் புரிந்து கொண்டது போல, அந்தக் கிளையை விட்டு

நீ.பி.அருளானந்தம் 157
உருட்டி அடித்துக் கொண்டு விழுந்து, சிறகு அடித்துத் தாழப் பறக்க ஆரம்பித்து, அப்படியே தொடர்ந்து பறத்தலுடன் மிதந்தபடி போய் அது பிற்பாடு மறைந்துவிட்டது.
'கடைசியாக இது இப்போ தனித்து விட்டதே?’ என்ற ஏக்கம் மற்ற குருவியைப் பார்த்தபோது அவர்களுக்கு ஏற்பட்டது.
“இது ஒரு பாவம் பாவம்' என்று அதைப் பார்த்து இப்போது பரிதாபப்பட்டார்கள் அவர்கள்.
ஆனாலும், தாங்கள் அதைப்பார்த்து அனுதாபப்படு வதிலே அர்த்தமில்லை என்பது போல அவர்களுக்குப் பிறகு அது விளங்கியது. அந்தக் கிளையில் தங்கித் தயங்கி நின்று கொண்டிருந்த தனித்த குருவியும் முன்னம் பறந்து போன அந்தக் குருவிக் குஞ்சு போலவே முதன் முதலான த்ன் பறத்தலுடன் அழகாகக் காற்றில் மிதந்தபடி, இயற்கையாக வுள்ள அறிவுடன் அந்த வழியாகவே பறந்து போனது.
அந்தச் சின்னக் குருவிகள் இரண்டும் சிறகடித்துப் பறந்து மறைந்ததன் பின்பு அவர்கள் இருவரது மனத்திலும் மகிழ்ச்சி ததும்பி வழிந்தது. மழைத்துளிகளை தன் சிறகிலிருந்து உதிர்க்கும் குருவியைப் போல மனத்தில் இருவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டு, அந்தக் குருவிகள் பறந்து சென்ற திசை வாயை ஒரு சில கணங்கள் அதிலே நின்றபடி அவர்கள் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்!
-தாமரை இலை 2oo7)

Page 86
ஒரு கானை நேரச் artizació
 

பி.அருளானந்தம் 159
ஏதேதோ முற்றுப் புள்ளியே இல்லாத எண்ண
ஓட்டங்கள், கொதிபானைச் சோறாக கொந்தளித்துத்
தளதளக்கிற நினைவுகளோடு அந்த பஸ்ஸில் அவர் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தார்.
பஸ்ஸிற்குள் ஒழுங்காக ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளக் கிடைத்திருந்தும், மனத்திலே அவருக்கு நிம்மதி என்பது சிறிது கூட இருக்கவில்லை. உடல் வருத்தம் தாங்க இயலாத அளவிற்கு, அவரைப் போட்டு வாட்டியபடி இருந்தது. சல உறுப்புப் பூராகவும் ஒரே கடும் எரிச்சல் எரிந்தது. "கொதி கொதி யென்று வெந்நீரை உள்ளே வைத்திருப்பது போல, உடலும் வேறு கொதித்துக் கொண் டிருந்தது. w
என்ன நேரம்?
கைக்கடிகாரத்தைப் பார்த்தார்!
ஒன்பதரை!
பத்து மணிக்கு வைத்திய பரிசோதனைக்காக, அந்தத் தனியார் மருத்துவமனைக்கு அவர் போக வேண்டும்.
பஸ் கிளட்ச் வேடிக்கையான ஒலிகளை எழுப்பியது. மூளை நரம்பெல்லாம் அவருக்கு நோகிறது போல இருந்தது.
இந்த பஸ்ஸை முந்திப் போக வேண்டுமென்ற அவதியில், பின்புறம் ஒரு பஸ் வேக வேகமாக கிட்ட, கிட்ட நெருங்கி வந்து கொண்டிருந்தது.
“ஹாங்க்.” என்று செவியை அதிர்த்தும் ஹாரன் சப்தம்! புகை ஒரே கடும் புகை! அதைத் தாராளமாய் புகைக் குழாயில் கக்கிக் கொண்டு, அந்த பஸ் முன்னால் தாண்டிப் போய் விட்டது. ‘உன்னை நான் விட்டேனா பார்.? இந்தா

Page 87
160 அம்மாவுக்குத் தாலி
நான் உன்னை முந்துகிறேன்.” என்கிற மாதிரியாய் இந்த பஸ்ஸின் சாரதியும் இயந்திரத்தின் விரைவு விசையைக் கூட்டினார். ‘பஸ்’ மிக ஆவேசத்தோடு, சீறிப்பாய்கிற மாதிரியாய் அந்த பஸ்ஸின் பிறகாலே விரைகிறது.
காலி வீதியில் ஒடுகிற குறும் ஒட்ட பேருந்துச்சேவை, சொல்லப் போனால் இப்படித்தான்! இதிலே ஏறி பயணம் செய்யும் பயணிகளெல்லாம் தங்கள் போக்குவரத்துக்களில், நாளாந்தம் இப்படியாகவெல்லாம் ரொம்பவும் அனுபவப் பட்டவர்கள்தான்! அதனால் இதைப்பற்றி ஒருவரும் பஸ்ஸிற்குள் இருந்து கொண்டு பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. இருக்கைக் கம்பிகளில் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பு வேண்டியவர்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு காற்றுடன் தூவானம், பஸ்ஸின் ஜன்னல் பக்கம் பன்னீர் போல வீசிப்பரந்தது. கண்ணாடி ஜன்னலை அவர் இழுத்து மூடிவிட்டார். இருக்கையின் ஒரமாய் அதிலே தூவானம் தெறித்திருந்தது. சிறிது தண்ணிர் ஈரமாய் அதிலே பரவியிருந்தது. ஜன்னல் பக்கம் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தவர் தள்ளி இருந்து கொண்டார்.
இவருக்கு முன்னால் உள்ள இருக்கை காலியாக இருந்தது அதற்கு முன்னால் உள்ள இருக்கையில், இரண்டு பெண்கள் இருந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் பிருஷ்டங்கள் இருக்கையில் பிதிங்கித் தொங்க இருந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந் தார்கள்.
அவர்களின் கதை பேச்சுக்களிடையே, ‘ஹாஹா' என்று இருகுரலும் மேலும் கீழுமாகப் பாட்டுப் போலச் சேர்ந்து ஒலித்தன.

நீ.பி.அருளானந்தம் 161
பஸ்கள் இரண்டும் ஒட்டப் போட்டிகளுக்கிடையே ஆட்களை ஏற்றிக் கொள்வதிலும் குறியாய் இருந்து செயல் பட்டுக் கொண்டிருந்தன. ஒரு தரிப்பிடத்திலிருந்து தோள் மேல் விழுந்த காக்கையின் எச்சத்தோடு ஒருவர் பஸ்ஸிற்குள் ஏறினார்.
உலுப்பலும் அதிரலுமாய் உடனேயே பஸ்சும்
வெளிக்கிட்டது. தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள
உள்ளே ஏறி நின்று கொண்டவர் தடுமாறினார். எப்படியும் இவருக்கு முன்னால் காலியாய்க் கிடக்கிற இருக்கையில் அவர் போய் இருந்திருக்கலாம்?
ஆனாலும், உடனே அவர் தன் வசதிகருதி, இவர் இருந்து கொண்டிருந்த இருக்கைக்கு முன்னால் உள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு அவருக்குப் பக்கத்தில் போய் இருக்க வழிகேட்டார். இவர் முழுங்காலை சரித்து வழிவிட்டவுடன் அதற்குள் நுழைந்து சென்று இவருக்குப் பக்கத்தில் அவர் இருந்து கொண்டார்.
‘அந்த இருக்கையிலிருந்து தான் எழுந்து சென்று முன்சீற்றில் இருந்து கொண்டாலென்ன?
என்று ஒரு கணம் இவர் நினைத்தார்!
என்றாலும், அப்படிச் செய்வதற்கு முயற்சியில்லாது பிறகு இருந்த இடத்திலேயே தான் இருந்து கொண்டுவிட்டார்.
பஸ் அடுத்த தரிப்பிடத்தில் நின்றது.
சட்டென்று ஜனக் கூட்டம் உள்ளே ஏறிற்று.
அவர்களிலிலிருந்து முன்னால் இந்த பஸ்ஸிற்குள் ஏறிக் கொண்டவர்கள், ஒரு இளம் வயதுப் பெண்ணும் அவள் பையனும்தான்! மூன்று வயது அவளது பையனுக்கு

Page 88
162 அம்மாவுக்குத் தாலி
இருக்கலாம் போல தோன்றியது. அவன், கொழுக் கொழுக்கென்ற உடம்பாய்ப் பார்க்க அழகாய் இருந்தான். கழுத்து நாடாவில் அவன் தாயத்துப் போட்டிருந்தான்.
பையனின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே ஏறிய
அவள், முதலில் அவனை இவர் இருந்த இருக்கைக்கு முன் னால் உள்ள ஆசனத்தில் இருக்க விட்டாள். பிறகு தானும் அவனுக்குப் பக்கத்திலே இருக்கப் போக, மகனும் உள்ளே அரக்கி இருந்து கொண்டு தாய்க்கு இடம் விட்டான்.
பஸ்ஸிற்குள் ஏறியிருந்தவர்கள் அங்கே முன்னால் உள்ள வெற்று இருக்கைகளில் இடம்பிடித்து இருந்து கொண்டார்கள்.
பஸ் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பையன் தாய்க்கு ஏதோ சொன்னான்.
“கொஞ்ச நேரம் சும்மா இரு. பஸ்ஸால் இறங்கவும் பாப்பம்.’’ என்று தாய் பாதிக்குரலில் மகனுக்குச் சொன் னது மாத்திரம் இவருக்குக் கேட்டது. இன்னும் முன்னாலே இருக்கைகளில் இருந்து கொண்டிருக்கும் பிரயாணிகள் ஏதேதோ ‘கசபுச‘வென்று கதைத்தபடி இருக்கிறார்கள். பஸ்ஸின் இயந்திரத்து இரைச்சலோடு, அவர்கள் கதைப்பதும் சேர்ந்து இரைச்சல் சத்தமாகவே இருக்கிறது.
“அம்மா அம்மா..?’’ ܫ “சும்மா இரு திலீப்” என்றாள் அவள்! பையனின் பெயரைச் சொல்லும்போது, தொண்டை அவளுக்கு ஒத்துழைப்புத்தரவில்லை. நடத்துநர், அவள் இருந்த பக்கமும் வந்தார். “கோட்டே." அவள் சொல்லவும்.
“ஒன்றா..?’ என்று ரிக்கட் எண்ணிக் கையைக் கேட்டார்
நடத்துநர். "ஆம்" என்ற தினுசில், தலையாட்டினாள் அவள்.

நீ.பி.அருளானந்தம் 163
அவர் ரிக்கட்டை எழுதிக் கொடுக்கவும், அவள் பணத்தை நீட்டினாள்!
ஒரு பத்து ரூபாய்த்தாள்! மிகுதி சில்லறை, ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ அவர் கொடுத்ததைப் போல இருந்தது. இவற்றையெல்லாம் அவர்களுக்கு அருகில் இருந்ததால் இவரும் கவனித்தார்.
“மழை தற்சமயம் வருமோ வராதோ..?’ அவருக்குப் பக்கத்தில் இருந்த ஆள் கேட்டார்! அவரோடு கதைக்கவே இவருக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் “வராது.’’ என்று தன் அபிப்பிராயத்தை வாயால் சொல்லாது இவர் தலையை ஆட்டிட் அவருக்கு விளங்க வைத்தார்.
அந்தப் பையனின் முகம் வரவரக் கோணலாகியது. அவன் தாயிடம் ஏதோ கேட்டுக் கேட்டு அவளைக் குடைந்தெடுத் துக் கொண்டிருந்தான்.
அவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டு, கவட்டுக்குள்ளே கையை வைத்து, மூத்திரம் கடுக்கிற மாதிரி முறிக்கிப் பிடித்துக் கொண்டு.நிற்க, இவருக்கும் பையன் விஷயம் பூராக விளங்கிவிட்டது.
அவன் ஒன்றுக்குப் போவதற்குத்தான்இப்படி அந்தரப் பட்டு கொண்டு நிற்கிறான் என்று தெரிந்து கொண்டதும், அந்தப் பையனின் மேல் அனுதாபம் இவருக்கு வந்தது.
முன் இருக்கையில் இருந்து கொண்டிருந்த அந்த இரண்டு பெண்களுக்கும், பின்னால் இருந்து கொண்டிருந்த பையனின் பிரச்சினை விளங்கிவிட்டது. அவர்கள் இந்தப் பக்கம் திரும்பித் தாங்கள் இருந்து கொண்டு, "பையனுக்கு என்ன.?’

Page 89
164 அம்மாவுக்குத் தாலி
என்று அவளது தாயைக் கேட்க அவளும் விஷயத்தை அவர்களுக்குச் சொன்னாள். -
“அப்போ இறங்கி நின்று பிறகு அடுத்த பஸ்ஸைப் பிடித்து நீங்கள் போகலாம்தானே? பையன் பாவம்! தவிக்கிறானே.?’ என்றார்கள் அவர்கள்.
அவர்களும் அப்படிச் சொல்ல, பையனும் தூண்டிலில் பட்ட விலாங்கு மீன் மாதிரி துள்ளியடித்துக் கொண்டு நின்றான். “உஸ் உஸ்’ சென்று வேதனைச் சீறலும் பையனுக்கு வந்தது. இவருக்கு அவர்களது பிரச்சினையில் போய் தலையிட விருப்பமில்லாதிருந்தது. அவர்களுடன் தானும் சேர்ந்து அதைப்பற்றி கதைப்பதோ. அல்லது அவர்களுக்கு அந்தப் பிரச்சினைக்கு ஏதும் ஒரு வழியைச் சொல்வதோ நாகரீகமாகப்படாததால் வெறுமே அவர்களைப் பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்தார்.
தாய்க்கு ஏதும் மகனுக்குச் சொல்லி அவனைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்கும் களையான முகம் வாடிப்போய் விட்டது அவளும் தன் இயலாத பட்சத்தில் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். இனித்தன் மகனை வைத்து தன்னால் தாக்காட்ட ஏலாது என்ற நிலைபரத்தில், அவள் நடத்துநரைக் கூப்பிடவும், அவரும் உடனே அவளின் அருகில் வந்தார்.
“நாங்கள் பஸ்ஸால் இனி இறங்கப் போகிறோம்” என்று முதலில் அவருக்கு சொல்லி பிறகு, தன் பையனின் பிரச் சினையையும் அவள் அவசரமாக அவருக்கு எடுத்துரைத் தாள்.
“அதற்கென்ன, அடுத்த பஸ் தரிப்பிடத்தில் நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள்.” என்றார் அவர்

கி.அருளானந்தம் 165
"நாங்கள் மேலும் தொடர்ந்து இந்த பஸ்ஸில் பிரயாணம் பண்ணாததற்காக மிகுதிப்பணத்தை எங்களுக்கு கணக்கு பார்த்துக் கொடுங்கள்?’ என்று அவள் கேட்டாள்.
தண்ணிர் வராத குழாய் ஒலித்தது போல அவள் குரல் இருந்தது.
அவள் அவ்விதம் கேட்டதற்கு,
“ரிக்கற் போட்டாகி விட்டது. அதாலே என்னால் ஒன்றும் செய்யவே முடியாது’ என்றார் அவர் கடுமையுடன்
அவளுக்கோ இன்னும் சொல்லப்பாஷையில்லை! அழு வார் போல ஆகிவிட்டாள்! அவளிடம் ரிக்கற்றுக்குக் கொடுத்த பணத்தைவிட வேறு ஏதும் இப்போ கையிலில் லைப் போலும் என்று நன்றாக இவருக்கு விளங்கிவிட்டது.
அவளுக்கு உதவுவதற்கு மனமிருந்தும், தான் கொடுப்பதை சில வேளை அவள் வாங்காது மறுத்து விட்டால் மரியாதை தனக்குக் கெட்டு விடும், என்று இவருக்கும் பயமாக இருந்தது.
அந்தப் பையன் தாங்க இயலாத அளவில் பஸ்ஸிற்கு உள்ளேயே ஒன்றுக்கு இருக்கப் போகும் ஆரம்ப நடவடிக்கை போல, ஜன்னல் பக்கம் ஒதுங்கினான். அதைப் பார்த்து விட்டு அவன் தாய் அவன் கையைப் பிடித்து வாசல் பக்கமாக பஸ்ஸால் இறங்கும் ஆயத்தத்தில், அவனைத் தன் பக்கம் இழுத்து கிட்டவாக வைத்துக் கொண்டாள்.
அந்த நேரம் பஸ்சும் தரிப்பிடத்தில் நின்றது. அது நின்ற கையோடு தாய் கீழே இறங்குவதற்கு முன்னால், அவன் உடனே மிதிபலகையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டு விட்டான். -
இரண்டு மூன்று அடிகள் தூரம் சுறுக்காக முன்னால் அதிலே அவன் நடந்தவுடனே, முன்பக்கம் தன் கால்

Page 90
166 அம்மாவுக்குத் தாலி
சட்டையை கீழே இறக்கிவிட்டு அவன் ஹ9ம். என்று ஒரு மூச்சுக் கலந்த அசட்டுச் சத்தத்தோடு சொக்கீயஸ்வரத்திலே நடைபாதையில் மூத்திரம் அடிக்கத் தொடங்கிவிட்டான்.
சலம் அவனுக்கு மின்னிக் கொண்டு வெளியேறியது!
பஸ்ஸின் பின்வாசல் வழியாக தன் இருக்கையிலிருந்து இடப்பக்கம் தலையைத் திருப்பி வைத்துக் கொண்டு, இதையெல்லாம் அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
இன்னும் ஒரு சொற்ப வேளைக்கு இதிலே பஸ் நின்றால், அந்தப் பையனும் தாயும் பஸ்ஸிற்குள் திரும்பவும் ஏறிக்கொள்வார்கள்! இதை நான் நடத்துநருக்கு சொல்லுவோமோ? அவர் நான் சொல்வதை கேட்பாரா? அப்படி நான் சொல்லவும், எல்லோருக்கும் கேட்க அவர் தன் பக்கமுள்ள ஒரு நியாயத்தை பெரிய சத்தம் போட்டு அங்கு உள்ள எல்லாருக்கும் சொல்ல ஆரம்பித்து விட்டால்?
இதையெல்லாம் அவர் தனக்குள் நினைத்துக் கொண்ட உடனேயே, தன் வாயைப் பொத்திக் கொண்டு மெளனமாகவே இருக்கும்படியாகி விட்டது. பையனின் அலுவல் இன்னமும்.முடிவுபெறவில்லை.
நடத்துநர் முன்னால் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸை பார்த்து விட்டு அவசரமாக மணியை இழுத்து அடித்தார்.
பஸ் உறுமிக் கொண்டு கடகடப்பாய் வெளிக்கிட்டது. பஸ் நகர்ந்து கொண்டிருந்த தருணம், கண்ணாடி வழியாக பையனது தாயின் முகத்தை இவர் பார்த்தார்.
அவளின் முகம் வாடிப் போன மாதிரி இருப்பதைப் பார்த்து இவருக்கும் மனக் கவலையாய் இருந்தது. பஸ் அவள் நின்ற இடத்தை விட்டு, தொலைதூரம் விலகிப் போகு

நீ.பி.அருளானந்தம் 167
மட்டும், மரக்காளான் முளைத்திருந்த மாதிரி விறைத்த தினுசில் அவள் தன்னை விட்டு விலகிப் போகும் பஸ்ஸை பார்த்துக் கொண்டிருப்பது, இவருக்கு இன்னமும் கண்பார்வையில் விழுந்து கொண்டிருந்தது.
சில வேளைகளில் ஒருவரிடமிருந்து அவர்களின் மனவேதனையின் தாக்கம் ஏதோ ஒரு வழியாக இன் னொருவரையும் தொற்றிக் கொள்வதென்பது இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் ஏற்பட்டு விடுகிறது போலும்! தனக்கிருக்கும் மன வேதனையைப் போலத்தான் மற்றவர் ஒருவரும், அதே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதும், ஏதோ ஒருவித அனுதாபம் அப்படிப்பட்டவர்கள் மீது ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறதல்லவா? அதே விதத்தில்தான், ஒரு கணம் தான் கண்ணால் கண்ட அந்தச் சிறியதொரு சம்பவத்தை அவரும் மனத்தில் நினைத்து துன்பப்பட்டுக் கொண்டார்.
வாழ்க்கையில் தன் முன் நடக்கும் ஒரு சிறிய துன்பமான சம்பவத்தைப் பார்க்கும்போது கூட, நோயாகிவிட்ட ஒருவருக்கு அது பெரிய மலையைப் போன்ற துன்பமாகத் தான் மனதை வாட்டுமெனப்து அவருக்கு அப்போது விளங்கியது.
என்றாலும் அந்த பஸ்ஸின் விரைவான ஓட்டத்தில் அந்தச் சம்பவத்தை நினைத்து அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது, மேகத்து நிழல் அது பாட்டுக்கு பூமியைத் தழுவிப் போவது போல அவர் மனத்திலிருந்ம சற்றை நேரத்துக்குள்ளாக விலகிப் போய்விட்டது. ஆனாலும் அவருக்கு நிம்மதியென்ற இடைவெளி அதிகம் இருக்க வில்லை. உடனே அவருக்கு வீட்டு நினைவு வந்து மனத்தில்

Page 91
168 அம்மாவுக்குத் தாலி
மொய்த்துக் கொண்டது. “எனக்குத் திருமணமாகி, மூன்று வருடம் கூட இன்னமும் நிறைவு பெறாத அளவிலே, இந்தச் சிறுநீரக வியாதி வந்த தொலைக்க வேண்டுமா? அதை இவ்வேளை நினைக்கவே, தன் வாழ்க்கை மீது அவருக்கு வெறுப்பும், கசப்பும் கலந்து வந்தது. தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள தற் போதைய தாம்பத்திய உறவை அவர் ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்!
அதை நினைக்கும் போதே மனமெல்லாம் இருண்டு பயங்கரமாக அவருக்கு வந்தது. இந்தத் திருமணம் என்ற உறவிலேயே நுழையாமல் வயது கொஞ்சம் போய் விட்டதோடு பேசாமல் தனியே இருந்திருக்கலாம்! இப்பொழுது எவ்வளவு சிக்கலாய், பெருங்குறையாய் இந்தத் தாம்பத்திய வாழ்வும் எனக்கு வந்துவிட்டது?
என் மனைவியின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து அவளுடன் கதைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது எனக்கு?
என் ஆண்மை அழிந்து போனதில் அதற்குப் பலியாக அவளது இளமையான ஆசைகளையும் நான் அழிக்க வேண்டுமா? இந்த வருத்தத்திற்கு மருத்துவ சிகிச்சையென்று மாதக் கணக்காய் ஆஸ்பத்திரி வழியே போய்த்திரிந்தும், எதுவித பயனும் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லையே?
எந்த ஒரு நயத்தையும், என்னிடத்தில் நான் இதுவரை இன்னமும் காணவே இல்லையே?
(ஒரு கிழமைக்கு முன்னால் தானும் மனைவியும் இரவு கட்டிலில் படுத்துக் கிடந்த போது நடுநிசிவேளை அவள் எழுந்து கட்டிலில் குந்திக் கொண்டிருந்ததை எதேச்சையாக தனக்கு விழிப்பு வந்தபோது கண்டு கொண்டது, இப்போதும் அவருக்கு அது நினைவில் வருகிறது)

நீ.பி.அருளானந்தம் 169
அதை நினைக்கவே நெஞ்சம் முழுதும், முள் முள்ளாய்க் குத்திக் கிழிக்கிறது போல வேதனை உணர்வாய் இருந்தது அவருக்கு. அவள் ஒரு கர்ப்பச் சிசுவைப் போல கைகாலை ஒடுக்கிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள்! உருண்டு காய்ந்த சருகின் மீது நிற்கும் பனித்திவலை போல் ஒரு வறண்ட புன்னகை, அவள் உதடுகளில் உருண்டது மாதிரி இவருக்கு அவளைப் பார்க்கும் போது அப்போது தெரிந்தது. உண்மையில், அவள் தன்னைத்தானே அடக்க முடியாமல்தான் அப்படிக் கிடந்து தன்னை ஒளித்து வைத்துக் கொண்டது மாதிரி தவிக்கிறாள் என்பதை உடனே அவர் உணர்ந்து கொண்டு விட்டார். அவருக்குத் தான் படுத்துக் கிடக்கின்ற அந்தக் கட்டிலே கீழே ஒரு அதல பாதாளத்தை நோக்கி சரிந்து விழுந்து கொண்டிருக்காது போல ஒரு நிலைமை வந்து விட்டது.
இது எவ்வளவு கொடுமை? எவ்வளவோ ஆசைக் கனவுகளை பிறந்த வீட்டிலிருந்து மனதில் சுமந்து கொண்டு, இந்த வீட்டில் என்னை நம்பி வாழ வந்த ஒருத்திக்கு நான் கொடுக்கின்ற தண்டனையா இது? எவ்வளவு வஞ்சகம் சுயநலம்! பழி தீர்க்கும் கொடூரம்! வேண்டாம் இன்னும் இந்த நிலை! இந்த ஒரு நிலைமை இன்னமும் அவளைத் தொடர வேண்டாம்! அவள் வாழட்டும்!
எங்கிருந்தாவது அவளுக்கு வாழ்வு கொடுக்கவென்று நல்ல உள்ளம் படைத்த ஒருவன் எப்படியாவது நிச்சயம் வருவான்! அவளிடமும் ஒருவனைக் கவர்ந்து விடக்கூடிய உடல் கட்டும், பணவசதியும், கல்வியும் குறைவில்லாமல் இருக்கிறது. அவள் எங்காவது சுதந்திரமாக இருக்கட்டும்!

Page 92
170 அம்மாவுக்குத் தாலி
சந்தோஷமாக வாழட்டும்!
இனியும் அவள் இந்த அர்த்தமில்லாத திருமண உறவு என்ற சிறையில், ஒரு கைதியைப் போல என்னுடன் கட்டுண்டு கிடந்து அவள் தன்னைத்தானே நாளாந்தம் உருக்குலைத்து அழிந்து போக வேண்டாம்! அவள் தன் ஆசைகளை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதைப் போல, என்னுடன் இருந்து காலங்காலமாய் வெந்து கொண்டிருக்காமல் இந்தச் சிறையிலிருந்து விடுபடட்டும்!
இதற்கெல்லாம் சிறந்த வழி.
அவளுடன் நான் கலந்து பேசி, இதிலே உள்ள நியாயத் தை அவளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி பிறகு இருவருக்கும் சம்மதமான ஒரு நிலையில் விவாகரத்துப் பெற்றுக் கொள்வதுதான்!
பார்க்கப் போனால் இந்த விவாகரத்து நியாயம் எல்லாம், அவள் பக்கத்தில்தான் இருக்கிறது! அவள்தான் இந்த விஷயத்தை என்னிடம் வாய்விட்டு சொல்ல வேண்டும். ஆனாலும் இந்த நாட்டுப் பெண்களின் கட்டுப் பெட்டித் தனத்திலே அவளும் வாய்மூடியபடி மெளனம் காக்கிறாள்!
ஆனாலும், இந்த மெளன நாடக வேடத்தை எத்தனை நாட்கள்தான் அவள் தன்னிடத்தில் அடக்கிக் கொண்டு அதைக் கட்டிக்காப்பாள்? அந்த எரிமலை எப்போதாவது ஒரு நாளில், இருந்தாற்போல குமுறிக் கொண்டு வெடித்து விடத்தானே செய்யும்?
அப்படியான ஒரு பொழுதில், நிச்சயம் அவள் தன்னையும் சூழ்நிலையையும் மறந்து விடுவாள்? அந்த வேளையில் அவளையறியாது எப்படியும் அவள் வாயி லிருந்து தொண்டைக் குழிக்கு உள்ளே அவள் தற்கொலை செய்து

நீ.பி.அருளானந்தம் 171
கொண்டிருந்த அந்த வார்த்தை, நெருப்பாகக் கக்கிக் கொண்டு வெளியே சீறி வரத்தான் செய்யும்?
அந்த நெருப்பு. என்னை முற்றாகப் பிறகு எரித்துப் பொசுக்கிவிடுமே! M r
அப்படியான ஒரு சூழ்நிலைக்கு நானும் அவளைக் கொண்டு போக வேண்டுமா?
அந்தக் கெடுதல் அவளுக்கு வேண்டாம்!
எனக்கும் வேண்டாம்!
இந்த நினைவுகளெல்லாம் எனக்கு ஒரு எச்சரிக்கைதான்! இந்த விஷயத்தை இனியும் ஆறப்போடாது இன்றைக்கே அவளுடன் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு நான் வந்துவிட வேண்டும்!
பஸ் அடுத்த தரிப்பிடத்திற்கு கிட்டவாக வந்ததும் தன் உருப்படியை அசைத்துக் கொண்டு "பிறேக்குடன் நின்றது
அவரும் ஒடிப்பரந்த நினைவுகளைக் கலைத்து விட்டு ஜன்னல் கண்ணடியால் வெளியே பார்த்தார்.
வைத்தியசாலையை அடையாளம் காட்டும் சிகப்புக் குறி’ அவர் பார்த்த இடத்தில் தெரிந்தது. நடத்துநரும் வைத்தியசாலையின் பெயரை திரும்பத்திரும்ப மிதி பலகையில் நின்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய இடமும்தான் அது! அவசரப்பட்டுக் கொண்டு வாசல் பக்கம் போய், மிதிபலகை வழியாக அவர் உடனே கீழே நடைபாதையில் இறங்கிக் கொண்டார்.
-தாமரை நவம்பர் 2007)

Page 93
N I ty
ത്ത یہ۔ بکثرتسر 劾 as ·Y *ames“
aanz f
அப்போதுதான் பொழுது விடிகிறது. அந்த நேரமாய் விடியல் சத்தம் கேட்டு நான் எழுந்துவிட்டேன். என் நோய்க்குரியதாய் கசகசக்கத் தேநீர் மாத்திரம் குடித்தேன். பிற்பாடு பாண் வாங்கி வரவென்று கடைப் பக்கம் எனக்குப் போய்வர வேண்டிய தாயிருந்தது.
 

நீ.பி.அருணானந்தம் 173
அங்கு போன வேளையில்தான் இந்தச் செய்தியும் எனக்குத் தெரியவேண்டியதாய் வந்தது. 6T Lh வட்டாரத்திலுள்ள நாய்களுக் கெல்லாம் கழிச்சல் நோய் கண்டு விட்டதாக எனக்குத் தெரிந்தவர்கள் அங்கே என்னைக் கண்டதும் சொன்னார்கள். உடனே நான் அதைக்கேட்டு திகைத்துப் போய்விட்டேன். விரைவாக வீட்டுக்கு வந்து அதே யோசனை யோடு இருந்து அந்த நாயைப் பார்த்தபோது அந்த நோயின் அறிகுறிகளெல்லாம் முழுதாக அதனிலே தென்பட்டன. உடனே திரும்பவும் நான் மருந்துக் கடைக்கு ஒட்டமாகவும் நடந்தும் போனேன். அங்கே அந்த நாயின் நோய்க்குத் தேவையான மருந்தை வாங்கிவந்து அந்தக் d'A51760) 6) வேளையிலேயே அதற்கு இரண்டுதரம் அடுத்தடுத்துக் கொடுத்துப் பார்த்தும் விட்டேன்.
இப்பொழுது எனக்கிருக்கும் மனக்கவலை நாய்க்குக் கொடுத்த அந்த மருந்துக்கு நோய் குணமாகிவிடுமா. ஆகாதா என்பதுதான்! இதையிட்டுச் சிந்திக்கையில் முடி வெதுவும் தெரியாமல், என் மனம் கலங்கவும் தெளிவடைய வும் செய்தது. என் வீட்டுக்குப் பக்கத்திலே நாட்டு வைத்தியம் பார்ப்பவர் ஒருவர் இருந்தார். அவர் கண்ணால் பார்த்தே வியாதிகளை கண்டுபிடிக்கக்கூடிய வல்லவர்.
அவர் ஒரு நோயாளியைப் பார்க்கும்போது, பஞ்ச பிராணன்களும் கண்ணுக்கு ஓடி வந்தாற்போல தீவிரமாகப் பார்ப்பார். அவர் மிருகங்களுக்கும் வருகிற நோய்க்கு, தனக்கு தெரிந்த பரிகாரம் சிலவற்றையும் சொல்லிக் கொடுப்பார்.
எங்கள் வீட்டுக்கு அவர் அன்று வெயில் ஏறிய நேரமாய் வந்த போது நாயின் நிலையையும் கண்டுவிட்டு,
“ஓ! கடவுளே! இந்த நாய்க்கு என்ன நடந்தது?’ என்று என்னை அக்கறையோடு விசாரித்தார்.

Page 94
174 அம்மாவுக்குத் தாலி
அவர் கேட்டதற்கு நான் சொன்னேன்.
“நேற்றைக்கிருந்து உப்புடித்தான் உது வருத்தம் வந்தாப்
போல படுத்துக்கிடக்கு. அடிக்கொருதரம் இப்ப வயித்
தாலையடிக்கிது உதுக்கு. அதால காலேலை மருந்துக்கடைக்
குப் போய் நான் மருந்து வாங்கியந்து குடுத்திருக்கிறன்.
ஆனாலும் நயம் ஒண்டையும் காணக் கிடைக்கேல்ல.”
அவர் சொன்னார்.
“ஓ! இந்த வயித்தாலையடிதான் இப்ப உங்கினையா உள்ள அம்பட்டு நாயஞக்கெல்லாம் இப்ப வருத்தம்! எங்கடை கை மருந்தொண்டும். ஊகூம். உந்த நோய்க்கு வேலை செய்யுதில்லை. உதால உங்க ஊர் வழிய கனக்க நாயன் செத்தும் போட்டுது. எண்டாலும் உந்த உங்கடநாய் செழிப்பும் லட்சணமுமான நாய். ம் ஐயோ பாவம்’
அவரும் பரிதாபப்பட்டார்.
என் மனைவி பக்கத்தில் நின்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முகம் அப்போது அவர் சொன்னவைகளைக் கேட்டதும் வெளிறிவிட்டது. நாய் இறந்து போமா என்ற அச்சத்தில், சர்வாங்கமும் அவள் குலுங்கிப் போனாள். இதனால் அவளின் மனதை ஆற்றித் தேற்றுவதற்காக நானும்,
“உதுக்கெல்லாம் போய் சும்மா பயப்பிடாதயும். இப்பதானே மருந்தும் குடுத்துக் கிடக்கு, இன்னும் ரெண்டு வேளைக்கு அடுத்தடுத்துக்குடுக்க மருந்தும் சுவறி வேலை செய்யத் துடங்கீரும், வயித்தாலை போறதும் டப்பெண்டு கட்டுப்பட்டிடும்.’
என்று நான் சொல்லி முடிய, அதற்குத் தகுந்த மாதிரி வைத்தியரும் அவளுக்கு தைரியம் வரச் சொன்னார்.

நீ.பி.அருளானந்தம் 175
“கவலைப்படாதயும் பிள்ளை. உந்த வியாதிக்கு இப்ப உந்த மருந்தைத்தான் வாங்கியந்து உங்கினை எல்லாரும் குடுக்கினம். உதைக் குடுத்தும் சில நாயன் ஏதோ லக்கிலை தப்பிப் பிழைச்சும் விட்டுது.
• உந்த நாயும் சரி அதுகளைப் போல தப்பீடும் எண்டுதான் எனக்கும் மனம்அடிச்சுச் சொல்லுது. எதுக்கும் குடுக்கிற மருந்தைக் கவனமா வேளாவேளைக்குப் பிடிச்சுப் பருக்கி
விடுங்கோ.” சொல்லிவிட்டு,
"அப்ப நான் வாறனம்மா” என்றுவிட்டு
“தம்பி.1’ என்று என்னைப் பார்த்தும் தலையாட்டி விட்டு அவர் திரும்பிப்போக வெளிக்கிட்டார்.
படலை வரைபோய் அவரை வழியனுப்பிவிட்டு நான் திரும்பவும். வீட்டு விறாந்தையடிக்கு வந்தேன். என் மனைவி அங்கு ஒரு கதிரையில் கவலையோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டு நானும் அங்கு அவளுக்குப் பக்கத்திலே இருந்த கதிரையில் போய் உட்கார்ந்தேன்.
“காலேலையிருந்து பாவம் தண்ணியை மாத்திரம் குடிச்சிட்டிருக்கு!’ நாயைப்பார்த்தபடி இப்படி அவள் என்னிடம் சொன்னாள்.
“சுகம் வந்திடும் என்னப்பா.?’
திரும்பி என்னைப் பார்த்தும் அவள் கேட்டாள். அப்பொழுது அவளது முகம் சுருங்கிச் சிணுங்கியது.
அவள் என்னிடம் கேட்ட கேள்விக்குப் பதிலாக முதலில் சுகம்.’’ என்று அந்தச் சொல்லை மாத்திரம் சொல்லிவிட்டு “வரும்.’’ என்ற சொல்லை அவளுக்கு விளங்கவைத்திட அதற்காகவென்று ஒருமுறை நான் அவளைப் பார்த்தபடி

Page 95
176 அம்மாவுக்குத் தாலி
தலையை மேலும் கீழும் ஆட்டிக் காண்பித்தேன். அவள் தன் வலக்கையை மடித்து கதிரைச் சட்டத்தில் ஊன்ற வைத்துக் கொண்டு முகவாயை ஒரு விரலால் தாங்கி வைத்திருந்தவாறு சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
நானும் அதிலே இருந்து கொண்டு நாயைப் பார்த்தேன். அப்படியே சில நிமிடங்கள் வரை தொடர்ந்து நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு கண்கள் நொந்து போக களைத்துப் பெரூமூச்சு விட்டேன்.
எனக்கு அதிகம் வயது கடந்து விட்டதாகச் சொல்ல முடியாதுதான்! என்றாலும் வயதுக்கு மீறிய மூப்பின் தளர்ச்சி எனக்கு வந்து விட்டது. என் நிலையில்தான் என் மனைவியும் வந்து விட்டாள். ஆக எங்கள் இருவருக்கும் இருக்கும் மனக்கவலை “எங்களுக்கொரு பிள்ளையும் இல்லை” என்பதுதான்! நாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க் கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்கிற கசப்பான நிஜம் இந்தக் காரணத்தினாலேதான் எங்கள் மனசைச் சுட்டு
அந்தக் கவலைதான் மனத்தில் கிடந்து அரித்துக் கொண்டு எங்கள் வாழ்க்கையை விகாசமற்றதாக்கி இந்த வயதுக்குள்ளாக வாட்டி வதைத்து நோயாளிகள் ஆக்கி விட்டிருக்கிறது. என்றுதான் நான் நினைக்கிறேன். என்றாலும் “ஏதோ கடவுள் எங்கள இந்த மட்டுமாவது வைச்சிருக் கிறாரே' என்றும் நான் ஆறுதலடைய வேண்டியுமிருக் கிறது.
நாய் படுத்திருந்த இடத்திலிருந்து எழுந்து தள்ளாடிக் கொண்டு நிற்க இயலாத நிலையில் நிற்கிறது. பலகீனமான நிலை அதற்கு இது வரைக்குள் பல தடவைகள், நீர்த்தன்மை யோடு அது மலம் கழித்துவிட்டது. எழுந்து நின்ற நாய்

பிே.அருளானந்தம் 177
சோகமாக என்னைப் பார்க்கிறது. நான் “ஜோஜோ." என்று அதனுடைய பெயரைச் சொல்லி, அன்பு இழையக் கூப்பிட்டேன்.
அதுதான் அந்த நாயினது பெயர். நான் கூப்பிடவும் தளர்ந்து கிடந்த வாலை அது மெதுவாக ஆட்டியது. அதற்குப்பிறகு இயக்கமில்லாத மாதிரி மெதுமெதுவாக தள்ளாடியபடி நடந்து, வீட்டுக்கு வெளியாலே முற்றத் தடிக்கு அது போனது.
“ஜோஜோ”வுக்கு வந்த வருத்தம் முற்றிப்போய் பலகீனமான நிலைமையில் அது இருந்தது என்றாலும் வீட்டுக்குள்ளும் வெளியே வீட்டின் அருகாமையிலுள்ள இடங்களிலும், அசுத்தம் ஏதும் செய்யாமல்தான் அது இருந்தது. தன்னால் இயலாத நிலையிலும் அது அதற்குரிய நல்ல அறிவுடன் செயல்படுவதைப்பார்க்க ஐந்து அறிவுடைய அந்த மிருகத்தைக்கூட மனிதனோடு சில விஷயங்களில் ஒப்பிட்டுப்பார்க்கும் நிலைமைக்கும் ஒரு கணம் நான் வந்துவிட்டேன். n
“ஜோஜோ’ வளவின் மூலையில் போய் நின்று மலம் கழித்து விட்டு வந்தது. நான் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு சென்று திறானியடித்துப் பீச்சிய இடத்தருகில் சிறு குழி வெட்டி அதையெல்லாம் போட்டு மூடினேன். நான் கை கால்களைக் கழுவிவிட்டு வர, வாசலில் நின்று கொண்டு “ஜோஜோ’’ என்னை சோர்வுடன் சோகமாகப் பார்த்தது. இந்நேரம் என் மனைவியும் நாயினருகில் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் “ஜோஜோ’ வாலைக் குழைத்தது.
அவள் அதன் தலையில் மெல்லத் தடவினாள். “ஜோஜோ’’ திரும்பவும் அந்த மெத்தைத் துணியின் மீது

Page 96
178 அம்மாவுக்குத் தாலி உடலைக் கிடத்திவிட்டுப் படுத்துக்கொண்டது. நாய்க்கு நன்றாக வருத்தம் முற்றிவிட்டதை நான் உடனே உணர்ந் தேன்.
“நான் வெளியால போய் ஆரையாவது கண்டுபேசி உதவிக்குக் கூட்டியரவே. நாயைக் கொண்டுபோய் ஒரு மிருக வைத்தியரிட்ட காட்டினால் நல்லம் போல கிடக்கு.”
நான் மனைவிக்குச் சொல்ல “அந்தக் குணம் தம்பியைப் போய்க் கேளுங்கோ. அந்தப் பெடி ஆருக்கும் முன்னிண்டு உதவி செய்யக் கூடியவர் போய்க் கூப்பிடுங்கோ.” என்று உடனே அவள் சொன்னாள். “ஆட்டோவில கொண்டு போகலாம்.’’ என்றேன் நான்.
“அதுதான் நல்லம் கரைச்சலில்லை.” என்றாள் அவள்.
நான் உடனே வெளியே போனேன். குணத்தின் வீட்டுப் பக்கம் போய் கேற்றடியில் நின்று கொண்டு,
“தம்பி குணம்.” என்று கூப்பிட்டேன்.
நான் கூப்பிட்ட குரலுக்கு “யார்.’’ என்று அந்த வீட் டினுள் இருந்து மெல்லிய கோடு கிழித்தது மாதிரி ஒரு குரல், வெளியே நின்ற எனக்குக் கேட்டது. அதன் பிறகு குணம் வீட்டினுள் இருந்து வெளியாலே என்னைப்பார்க்க வந்தார்.
“என்ன அங்கிள்.’’ அவர் கேட்டார். “தம்பி ஒரு உதவி எனக்குச் செய்யவேணும்.?” “என்ன அங்கிள் சொல்லுங்கோ.?’’ “எங்கடை நாய்க்கு மெல்லே வருத்தம் வந்திட்டு.”
“அப்பிடியென்ன வருத்தம்?’

நீ.பி.அருளானந்தம் 179
“அதக்கு வயித்தாலையடிக்குது. நிக்குதில்ல! பாக்கப் பாவமாக் கிடக்கு. கொண்டுபோய் மிருக வைத்தியரிட்டக் காட்டினா நல்லம் போல கிடக்குத்தம்பி’ நான் சொன்ன தும் குணம் அதிலே நின்றபடி ஒரு கணம் யோசித்தார்.
“அங்கிள் நாய்க்கொரு மருந்தும் நீங்க குடுக்கேல்லயோ?”
“மருந்துக் கடையில இருந்து கேட்டு வாங்கிக் கொண்டந்து குடுத்தனான்!”
"அப்ப அதுக்கும் வயித்தாலையடி நிக்கேல்ல.?”
ዘ” ”
“ஒமோம்! நிக்கேல்லத்தம்பி “சரி நடங்கோ போய்ப்பாப்போம்.”
குணம்தம்பி சொல்ல நான் அவருக்கு முன்னாலே விறுக்கு விறுக்கென்று நடந்து போய் எங்கள் வீட்டுக் கேற் றைத் திறந்தேன். நாங்கள் இருவரும் வீட்டு வாசல் பக்கமாக வந்து சேர, அந்த விறாந்தை நிலத்தின் மீது காலைச் சூரியனின் கதிர்கள் பட்டுப் பளிரிட்ட பிரகாசம் தெரிந்தது. அந்த ஒளியில் பெயர் சொல்ல முடியாத நிறங்கள் அனந்தம். ஆனா லும் அங்கு நாய்படுத்திருந்த பக்கம் மட்டும் சிறிது நிழல் படிந்திருந்தது. குணம் அங்குவந்து நாயைப் பார்த்தபடி அதிலே சற்று நேரம் நின்று விட்டார். என் மனைவி இப் பொழுது அந்த நாயைப் பற்றி அவருக்கு சொல்லத் தொடங்கிவிட்டாள். “கழுக்கு மொழுக்கெண்டிருந்த நாய். இந்த வயித்தாலையடி வந்து அதை எலும்பும் தோலுமாக்கிப் போட்டுது.”
“என்ன வடிவான அறிவான நாய் தம்பி. இது உமக்குத் தெரியும்தானே?’ அவளைத் தொடர்ந்து நான் சொன்னேன்.
“ஒமோம் வடிவான நாய்தான்!” என்று குணமும் நான்

Page 97
18O அம்மாவுக்குத் தாலி
சென்னதுக்கு ஒப்புதலாக தானும் இப்படிக்கூறினார். என்றாலும் அவர் நாயைப்பார்த்துப் பரிதாபப்படுகிறாரா? அல்லது, எங்கள் இருவரையும் பார்த்து நாங்கள் இந்த நாயின் மேல் இவ்வளவு அக்கறைப்படுகின்றோமே என்று எங்கள் மேல் பரிதாபப்படுகிறாரா? என்று எனக்கு ஒரு சந்தேகம் மனத்தில் எழுந்தது.
என்றாலும் அவருக்காக என்னை நான் மாற்றிக் கொள்ள முடியாத நிலையில்தான் இருந்தேன். நாய் மீது உள்ள கவலையில் இருந்து நான் மீளவில்லை. இன்னொருவருக்கு எங்கள் கவலையைச் சொல்வதில் மன ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மேலும் நான் குணத்துக்குச் சொன்னேன்.
“இதின்ரை மயிர்ச்சடை பார்க்கப்பட்டு மாதிரி. அதில வெளிச்சம் பட்டா மினுமினுக்கும் கறுப்பில ஒரு சாம்பல் நிறம் பாரும் உதுக்கு”
நான் சொன்னதைத் தொடர்ந்து மனைவியும் சொன்னாள்.
“பாரும் அதின்ரை கண்ணுக்குமேல பொய்க்கண் திரட் சியுமிருக்கு. அதுகும் என்னமாதிரியா ஒரு வடிவு உதுக்கு. உது படுத்துக் கிடந்தாலும் சின்னச்சத்தத்தையும் கேட்டு உடனஎழும்பீடும். அப்படி செவிப்புலனும் அதிகம். எதை யும் கண்டு பிடிச்சும் போடும். அப்பிடிச்சிறப்பான நாய்.”
அவள் சொல்லி முடிய நான் விஷயத்துக்கு வந்தேன். “தம்பி. நாய்க்கு வருத்தம் கடுமையாக்கிப் போட்டுது போலக் கிடக்கு என்னோட சேத்து உதவிக்கு வந்தீரெண்டா ஆட்டோவில இதைக் கொண்டுபோய் வைத்தியரிட்டக் காட்டலாம். அதுதான் நான் உம்மை.” மிகுதியை நான்

நீ.பி.அருளானந்தம் 181
அவரிடம் கூறாமல் இருந்தேன். நான் அவரிடம் கேட்டதற்கு என்ன பதிலைக் கூறப்போகின்றாரோ என்கிற ஆவலில் அதிலே மெளனமாக அவரைப் பார்த்த வண்ணம் நின்றேன்.
ஆனால் அவர் சொன்னார்.
“நாய் இனிமேல் தப்புமெண்டு நான் நினைக்கேல்லை அங்கிள். உதையெல்லாம் தூக்கித் திரியிற அளவுக்கு எனக்கு இண்டைக்கு ஏலாது. இண்டைக்கு நான் எங்கயும் அசைய ஏலாது. வெளியால எனக்கும் வேலையள் கனக்கக்கிடக்கு அதைப்பார்க்க போகவும் வேணும். பொய்யில்லை நான் சொல்லுறது.’ என்று அவர் நொடித்துவிட்டு முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு நிற்கையில் எப்படித்தான் நான் அவரை வற்புறுத்துவது?
என் மனைவியின் முகத்தில் கத்தியால் வெட்டினாலும் ஒரு சொட்டு இரத்தம் வராது அப்படி இருந்தது. என்றாலும் நான் கூப்பிட்டதும் மதித்து வந்ததுக்காக “நன்றி” என்று அவருக்குச் சொல்லி படலை வரை சென்று அவரை அனுப்பி விட்டுவந்து, மீளவும் நான் வீட்டு வாசல் படியில் கால் வைத்தேன்.
“இனி என்ன செய்யப் போறிங்க.?’ அதிலே நின்று கொண்டிருந்த அவள் என்னைக் கேட்டாள்.
“ஒண்டுமாத்தெரியேல்ல."
- பெரூமூச்சைவிட்டு நாய்க்குப் பக்கத்திலே கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டு நான் இருந்தேன். என் மனைவியும் முன்புதான் இருந்த இடத்திலே போய் சிந்தனைவயத்தவளாய்க் கதிரையில் உட்கார்ந்து விட்டாள். இந்தத்தடவை என் மனைவி மூஞ்சியை முழ நீளம் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். எம் இருவரிடையேயும்

Page 98
182 அம்மாவுக்குத் தாலி
அச்சம் இழையோடும் சோகம் புரண்ட அமைதியைத்தவிர வேறொன்றுமேயில்லை!
நான் “ஜோஜோ' வைப் பற்றிய நினைவுகளில் சில கணங்கள் என் சிந்தனையை சுழல விட்டேன். இந்த நாயின் மேல் எங்களுக்கு என்ன அவ்வளவு பிரியமாய் இருக்கிறது? என்று அதை சிறிதே நான் ஆராய்ந்து பார்த்தேன். கதை களிலோ சினிமாக்களிலோ வருகின்ற சாதனை செய்கின்ற நாயைப் போல இந்த நாய் அப்படி ஒன்றும் பிரமாதமாக ஒரு செயலைச் செய்துவிடவில்லை.எது விதமான ஆபத்துக் காலத்திலும் ஆபத்சகாயனாக வந்து அது எங்களைக் காப்பாற்றவுமில்லை. இருந்தும் ஏன் நாங்கள் அதற்காக உருகுகிறோம்? இன்னும் அதன்பால் இப்படியெல்லாம் நாங்கள் அன்பு வைக்க வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று இறுதியாக மீந்து போய் இருந்த அந்தக் கேள்வியை என் மனம் மெல்ல மெல்ல எழ வைத்துக் கொண்டே இருந்தது.
அதன் பொருட்டு அந்தக் காரணத்தை தெட்டத் தெளிவாய் அறிந்து கொள்ள மேலும் தூண்டித்துருவி என் மனசுக்குள்ளே தேடிப்பார்த்தேன் ஒன்றும் ஒழுங்காக எனக்குப் புலப்படவில்லை!
ஆனாலும், மேலோட்டமாக இது மனத்தில் அலையடித்தவாறு இருந்தது. “நிச்சயம் அது இந்தக் காரணமாகத்தான் இருக்கும்!”
எம் இருவரையும் தவிர சொந்தமென்று எமக்கு வேறு யாருமே கிடையாது. இந்த மூன்றாவது உயிர்தான் எங்களுக்கு உறவுபோல இருந்தது. அதனால்தான் இதனிலே நாங்கள் நேசம் முழுதும் வைத்திருந்தோம். அதுவும் எங்களை விட்டுப் போகப் போகிறதா?

நீ.பி.அருளானந்தம் 183
அந்த எண்ணம் என் நெஞ்சை வலிக்கச் செய்யவும் பரிதாபமான முறையிலே “ஜோஜோ'வை நான் உற்றுப் பார்த்தேன். .
என் பார்வைக்கு நேர்ப்பார்வையாக “ஜோஜோ’ என்னைப் பார்த்தது. “ஜோஜோ'வின் அந்த ஆழமான துயரம் கலந்த பார்வை என் மனசை அப்படியே கரைந்து நிற்கும் படியாகச் செய்து விட்டது. அதனுடைய பார்வை யின் தாக்கத்தால் என் மனம் நிலை கொள்ளாது பாதரசம் போல் சிதறித் தொல்லை கொடுத்தது. முற்பிறவியிலேயுள்ள ஏதோ சில அடையாளம் தெரியாத உருவங்களில் கொண்டு சென்று பிணைத்து விடுகிறது மாதிரி அந்தப் பார்வையின் சக்தி என்னை இழுத்துக் கொண்டு போவது போல் இருக்கிறது. அந்த என் நினைவுகளில் எதையோ நான் இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். வடிவழிக்கப்படும் கற்பனைகள் அலையும் நினைவுகளை எங்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதில்லை. அதனால் மிகவும் கஷ்டப்பட்டு நான் என் கற்பனைகளுக்கு வடிவத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கண்கள் சொல்லும் மொழி என்ன? அந்த ஆராய்ச்சியைத்தான் எனக்குள்ளாக நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
அதையிட்டு காணக்கூடிய விதானங்களைத்தாண்டி நினைவுபறந்து போகும்போது என் ஆச்சியினது முகம் காட்சிக்கு வருகிறது கலங்கிக் கொண்டு.
இதே பார்வைதான் அந்தப் பார்வையும்
ஆச்சி சாகும் வேளையில் அவரது கட்டிலுக்கு அருகே இருந்தவன் நான் ஒருவன்தான். ஆச்சிக்குப் பக்கத்திலிருந்து அப்பொழுது சிவபுராணம் வாசித்துக் கொண்டிருந்தேன். ஆச்சிக்கு இன்றையத்தினம் பேச்சே வரவில்லை. ஏதோ அவர்

Page 99
184 அம்மாவுக்குத் தாலி
சொல்ல நினைக்கின்றார். அனால் அது வெளியே வராமல் அந்தராத்மாவிற்குள் அடங்கிக் கொண்டது. நான் சிவபுராணம் வாசித்துக் கொண்டு போகும் போது ஆச்சி என்னைப் பார்த்தவாறே இருக்கிறார். ஆச்சியின் அந்தக் கண்களில் உள்ள மொழி தெரியவில்லை எனக்கு அவரது கண்களிலிருந்து கண்ணீரும் வழிகிறது. அந்தக் கண்ணீரின் மொழியும் எனக்குத் தெரியவில்லை! சிவபுராண வாசிப்பில் ஆச்சியை நினைத்து நான் நெக்குருகி விட்டேன். அதைப்படித்துக் கொண்டிருந்த போது “பொல, பொல” வென்று என் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் புத்தகத்தில் விழுந்து கொண்டே இருந்தன. “இன்று நான் இறந்துவிடுவேன்.” என்று மூன்று நாளைக்கு முன்னம் ஆச்சி எனக்கு வாக்குச் சொன்னதும் அதற்கு ஒரு காரணம்!
மூன்று நாட்களுக்கு முன் ஆச்சி சொன்னார், “மோனே வருகிற புதன்கிழமை ஏகாதசி நாளாயிருக்கப்பு. அண்டைக்கு நான் செத்தா சுவர்க்கத்திலயுள்ள கதவுகள் திறந்து கிடக்கும் புஷ்பக விமானத்தில வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போவினம்.”
ஆச்சிக்கு அப்படியான நாளிலைதான் சாக வேண்டுமென்று ஆசை. அதை நினைத்து நினைத்து அல்லும் பகலும் அனவரதமும் அவர் கனவு கண்டுகொண்டுவந்தார். இதையே அவர் சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்தும் சில நாட்களாக என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதனால் அன்றைய நாளை நினைத்துப் பார்க்கவும் என் மனத்தில் திக்கென்று ஒரு தவிப்பாய் இருந்தது.
சிறுவயதிலே அன்னையை இழந்து விட்டதால் என்னை ஆச்சிதான் பாசத்துடன் வளர்த்தார். எனக்கிருந்த ஒரே யொரு உறவு ஆச்சிமட்டும்தான்! அவரையும் இழக்கப்

நீ.பி.அருளானந்தம் 185
போகிறேனா? பெற்றுத்தாலாட்டி, சீராட்டி, ஆராட்டி வளர்த்த அன்னையை இழந்தேன் அதையடுத்து என் தந்தையையும் இழந்தேன். இன்று ஆச்சியையும் இழக்கப்போகின்றேனா?
சிவபுராணம் படிப்பதை நிறுத்திவிட்டு ஆச்சியின் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்கள் என் பக்கமாகத்தான் நிலை குத்தியிருந்தன. அதிலே ஒரு இனம் தெரியாத மகா சக்தி இருந்தது. ஆச்சியின் இதயம் மட்டும் கண்களில் தெரிந்தது. அவரது கவனமிக்க புதிரான பார்வை என் உள்ளத்திலே புரியாத பயத்தை எழுப்பியது.
அந்தப் பார்வையில் உள்ள மெளனங்களின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. அந்தக் கண்களில் தெரிந்த விசித்திர எண்ணங்களை சிக்கல் பிரித்து எடுக்க என்னால் முடியவில்லை. ஆச்சியின் கண்களில் உள்ள ஒளிக்கத்தி மங்கிக் கொண்டு வருகிறது. அந்தி மரணத்தில் சிறகு விரித்து அமுங்கிக் கொண்டு வருகிற இருள் அவரது கண்களின் பார்வையில் படர்ந்து விட்டது. ஆச்சியின் கால முள் நின்று விட்டது. ஆச்சி இறக்கும் சமயத்தில் என்ன பாவனை அவர் முகத்தில் ஊசலாடி விட்டனவோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை!
என் நெஞ்சைக் கவ்விய துக்கம் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டு நிற்கிறது. அந்தத் துக்கம் காரணமாக கண்களில் பொங்கி வழிந்த சுடுநீர் பார்வைக்குத்திரை யிட்டது. என் நெஞ்சுக்கூடு முழுதும் படபடத்தது. மார்பில் மூச்சு சுருட்டிச் சுருட்டி அடைக்க ஆரம்பித்தது.
முன்னைய அந்தச் சம்பவங்களின் நினைவுகளிலிருந்து இப்பொழுது நான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டு வருகிறேன். என்றாலும் அந்த இழப்பின் கன

Page 100
188 அம்மாவுக்குத் தாலி
பரிமாணம் நொந்து போன இந்த நேரத்தில் என்னை முழுதாகத் தாக்குகிறது.
"பாவம் ஆச்சி. பாவம் நாய். என்று நான் நினைக்கிறேன். எதையும் எதையும் கொண்டுபோய் இணை போடுகிறேன்? என்றும் நான் நினைக்கிறேன்.
י ין
நான் திரும்பவும் “ஜோஜோ’ வின் கண்களைப் பார்க்கின்றேன். ஆச்சியின் இரண்டு கண்களும் இப்போது இதனுடைய கண்களிலே தெளிந்து தெரிகின்றதாக எனக்குள் ஒரு பிரமை.
அது ஒரு தோற்ற மயக்கம்தான்!
ஏதோ உலகியல் கடந்த துன்பம் இதனால் எனக்கு உண்டாகிறது. என் மனம் கேவிக் கேவி துக்கக் கண்ணிர் வடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நேரம் வெளியேயும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அது லேசான மழையில்லை; பேய் மழை தாறுமாறான மழை
சில நிமிடங்கள் உயர்ந்து, தாழ்ந்து, உரத்து, இளைத்துப் பொங்கும் மழையாய்ப் பெய்தது அந்த மழை.
அதனால் முற்றத்தில் திடீர் பழுப்பு வெள்ளம் கொப்பளித்து ஓடியது. அந்தவேளை மழைக்குத்தோதாக் எங்கிருந்தோ படையெடுத்து வந்த கடல் பிசாசின் சுவாசமாய் வந்து மோதியது குபிர் காற்று. அந்தக் காற்றுக்கு தாவர இனங்கள் தலைவிரித்தாடின. சிறிது நேரத்தில் அந்தக் காற்று பெய்து கொண்டிருந்த மழையையும் போக்கிவிட்டது. ஊதாங்குழல் வழியே இழைபோன்று தொடர்ச்சியான காற்று உட்புகுந்ததால் ஜன்னல்களும் கதவுகளும் தடார் தடாரென அடித்துக் கொண்டன. அவற்றை எழுந்து சென்று பூட்டி வைத்திடாமல் என் மனைவி அதிலே அப்படியே

நீ.பி.அருளானந்தம் 187
இருந்து கொண்டிருக்கின்றாள். ஒரு வேலையும் ஓடாமல் அந்த இடத்திலே அவள் உட்கார்ந்திருக்கிறாள். நான் திரும்பவும் “ஜோஜோ'வைப் பார்த்தேன். நாயின் இரைப்பு ஒலி சன்னமாகக் கேட்டது. அதைப் பார்க்கவும் எனக்கு நாய் பிழைக்கும் என்ற நம்பிக்கை பஸ்பமாகிப் போய்விட்டது.
நாய் சேட மூச்சையும் விட்டுவிட்டது. அதனால் “ஜோஜோ’’வின் உயிர் அணைந்து விட்டது என்று நான் தெரிந்து கொண்டேன்.
அந்தச் சேதியை உடனே சொல்லும் நோக்கில் நான் மனைவியை, பதற்றத்துடன் உற்றுப்பார்க்கிறேன். அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அவளும் “ஜோஜோ’வின் இறந்த உடலருகே வருகிறாள்.
அவளது அன்பு கெழுமிய கண்களின் மீது ஆழ்ந்த சோகம் கருநிழலெனப் படர்ந்து விட்டது.
வீடு மழையிருட்டால் இருண்டு போய்விட்டது. அதற்காக அந்த இடத்தில் கண்ணாடிக்கூண்டு மின்சார விளக்கைப் போட்டேன். அந்த வெளிச்சத்தில் “ஜோஜோ’ மீது ஈக்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டுவது போல் சத்தமிட்டுவந்து மொய்த்தன. அதைக் கண்டுவிட்டு என் மனைவி தொங்கு சீலைக்கு அருகே உள்ள தூண் சமைக்கும் நிழல் மறைப்பில் போய் நின்று கொண்டு அழுகிறாள்.
காற்றும் ஒய்ந்து விட்டது. நான் வீட்டுக்கு வெளியே வந்து மண் வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த முற்றத்தில் இடப்பக்கமூலைக்குப் போகின்றேன். மழைவிட்டதன் பின்பு குளிரின் முதல் அலை வீசத் தொடங்கிவிட்டது.
அந்தச் சீதளக் காற்றின் குளிர்ச்சி என் உடலை ஸ்பரிசித்தது. ஒரு பருக்கை உணவு கூட இன்று

Page 101
188 அம்மாவுக்குத் தாலி
காலையிலிருந்து தொண்டைக்குள் இறங்காமல் விட்டதால் உடல் பலவீனமாயிருக்கிறது எனக்கு. அதனால் சோம்பல் மதர்த்தது. கையினால் மண்வெட்டி பிடித்து வேலை செய்ய சக்தியில்லாதிருந்தாலும் அந்த மழை பெய்ததில் உண்டாயுள்ள மண்ணிரம் என்னிடத்தில் மன உறுதியை அளிக்கிறது.
நான் அங்கே பிணக்குழி தோண்டும் வெட்டியானைப் போல நின்று கொண்டு வேலையை ஆரம்பித்துவிட்டேன். என்றாலும் மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும் அதனால் விளையும் இளைப்பும் மண்ணை வெட்டும் போது என்னைப்போட்டு வருத்துகிறது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு மண்ணை வெட்டி "ஜோஜோ'வை அடக்கம் செய்ய அளவான ஒரு குழி பறித்து விட்டேன்.
மண்வெட்டியிலுள்ள மண்ணை பக்கத்தில் கிடந்த கருங் கல்லில் தட்டி அகற்றிவிட்டு மண்குவியலிலே ஒரு கொத்துப் போட்டு சரிவாக அதை நிறுத்தினேன். “ஜோஜோ'வை தூக்கி குழியண்டைக்கு அதைக் கொண்டு வரவேண்டும். அதற்காக விறாந்தைப்பக்கம் போனேன். “ஜோஜோ' மீது புதுத்துவாய்த்துண்டு போர்த்தப் பட்டிருந்தது.
அவள் அதை போர்த்து விட்டிருப்பாள்!
விறைத்துக்கிடந்த நாயைத் தூக்கிக் கொண்டு குழி வெட்டியிருந்த பக்கமாக நான் வந்தேன். என் மனைவியும் பின்னாலே தொடர்ந்து வந்தாள். மெளனமாக நாங்கள் இருவரும் இருந்து கொண்டு “ஜோஜோ’வை அந்தக் குழியிலே அடக்கம் செய்தோம்.
அந்த நேரம் எங்கும் அமைதி, அமைதி, ஒரே சவ அமைதி என்கிற மாதிரி எங்களுக்கு இருந்தது. ஆனாலும் அந்த

நீ.பி.அருளானந்தம் 189
அமைதியைக் குலைத்துக் கொண்டு அந்த ஒழுங்கை வழியே உள்ள ஒரு சில நாய்கள் தங்கள் வாழ்க்கை நிலையைக் குறித்து அழுவது போலவும் தேம்புவது போலவும் தொடர்ந்து ஊன்ளயிட்டுக் கொண்டிருந்தன.
நான் குழியின் மேல் மண்ணை நன்றாகக் குவித்து மண்வெட்டியால் அடித்து இறுக்கிவிட்டு மன்ைவியின் முகத்தை ஏறெடுத்துப்பார்த்தேன். அவளது கண்களிலிருந்து வைரக் கற்கள் போல் இரண்டு சொட்டுகள் கன்னங்களின் வழியே வழிந்து கொண்டிருந்தன. அது சோக அழுகையல்ல கோப அழுகை என்கிற மாதிரிதான் தெரிந்தது எனக்கு
அவளுடையதுக்கம் அகலுவதற்கு எத்தனை பகலும் எத்தனை இரவும் பிடிக்குமோவென்று எனக்கு யோசனை யாக இருந்தது. ஆனால் “ஜோஜோ'வை அடக்கம் செய்து விட்டதன்பிறகு நான் இப்போது கவலைப்படவில்லை.
இந்த உலகத்திலே மூடிய கண்கள் இன்னொரு உலகத்திலே திறக்கத்தானே வேண்டும் என்று நினைத்து நான் என் மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டேன். இந்த லகுவான தத்துவத்தை மனைவிக்கும் சொல்லி அவளின் விழி ஈரத்தை உலர்த்தி ஆறுதல்படுத்தினால் என்ன என்று நான் அப்போது நினைத்தேன்.
ஆனால் - ஆனால் அவளுக்கிருக்கும் விரக்தியில் இதை யெல்லாம் சொல்லப்போனால் என்ன சொல்லுவாளோ என்று நினைத்து என்வாய்க்கு நான் பூட்டுப் போட்டுக்கொண்டேன்.
- 6ഞ്ഞഡ് ( 2OOP)

Page 102
190 ܠܔ NNN ܓܠܠー一つー
v
முதுசம்
கொடி பின்னிக் கிடக்கிறமாதிரியுள்ள என் உறவுக்காரர்
களையெல்லாம், ஒருகால் ஊரில் போய்ப் பார்த்து வரவேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. அதற்காக
 

நீ.பி.அருளானந்தம் 191
வென்று ஒரு கிழமை வரையில் நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சென்று விடுப்புப் பெற்றுக்கொண்டேன்.
நான் வசிக்கும் கொழும்பு நகரிலிருந்து வவுனியாவுக்குச் செல்வதற்கு, எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. ஆறு மணித்தியால பஸ் பிரயாணமென்றாலும், சோர்வில்லாமல் நான் வவுனியாவில் போய் இறங்கினேன்.
வவுனியா மண்ணில் நான் கால் வைத்த போது இருபது வருடங்களைக் கடந்த பிறகு, பிறந்த மண்ணில் கால் வைத்ததான அந்த நினைவு ஒருமுறை எனக்கு வந்தது. இன்னுமாக, பெருமளவில் மாற்றமடைந்திருக்கும் அந்த நகரத்தைப் பார்த்ததில் ஏற்பட்ட வியப்பு அதைவிட மேவி நிற்க, நின்ற இடத்திலேயே சற்று நேரம் நின்றபடி என்னைச் சூழவும் அங்கு புதிதாய்த் தெரிந்தவற்றையெல்லாம் வியப்புடன் நோக்கினேன். என்றாலும் நான் எதிர்பார்த்து வந்ததெல்லாம், அங்கு இப்போது இல்லையென்றே எண்ணும்படியாகச் செய்துவிட்டது நான் கண்டு விட்ட ஒரு காட்சி. என் ஏமாற்றத்துக்கெல்லாம் காரணம் இதுதான்!
அந்த இடத்தில் முன்னம் நின்ற அந்த வாகை மரத்தை இப்போது என் கண்களால் காணக்கிடைக்கவில்லை!
அதன் காரணமாக அந்தக் காலத்தில் அதிலே வானத்துக்கும் மண்ணுக்குமாகப் பூத்து நின்றது போலிருந்த, அந்த வாகை மரத்தை நினைவில் வைத்து நிலைநிறுத்திக் கொண்டு சற்றே சிந்தித்தேன்.
அந்த முதுபெரும் வாகை மரத்தில் நிறைய அணில்களும் காகங்களும் கத்திக் கொண்டிருக்கும். காகங்கள் கொட்டமடித்துக் கொறித்துப்போட்ட வாகைக் காய்கள், அந்த இடமெங்கும் மண்ணிலே பரப்பிக் கிடக்கும்.

Page 103
192 அம்மாவுக்குத் தாலி
அந்த மரம் பூப்பூக்கும் காலத்திலும் பூக்களும் அப்படி யாகவே நிலத்தில் சொரிந்து, நிலத்தையே பூக்கம்பளமாக மாற்றிவிடும். அந்த மரத்துக்குக் கீழேதான் தினமும் தப்ப விடாமல், காலையிலும் மாலையிலுமாக சோளப்பொத்தி அவித்து வைத்துச் சுடச்சுடவாய் விற்பார்கள்.
அதிலே சோளத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்துக் கடைக்குள் போய் தேநீர் குடித்த காலமெல்லாம். எங்கே? எங்கே? என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டு, அதற்குச் சிறிது தூரம் தள்ளியதாய் உள்ள அந்த இடத்துக்குப் பிற்பாடு பார்வையைத் திருப்பினேன்.
என்னதாய் மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம் எனக்கு
அந்தப் பெரிய பாலை மரத்தையும் எங்கே இதிலே காணவே இல்லையே?
செவாலியே சேர் சிற்றம்பலம் கார்டினரின் பட மாளிகைக்கு முன்னால் நின்ற அந்த மரமும் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டதா? என்ற மனவேதனையை மனதில் சுமந்து கொண்டு, நடக்கிறேன் இப்போது இரண்டாம் குறுக்குத் தெரு வழியாக என் வீட்டுக்கு.
என் வீடு என்று உரிமையோடு நினைக்கின்றேனே. இப்போது அது என் வீடா? இது என்ன மடைத்தனம்! அது இப்போது என் வீடு அல்லவே? என் அக்காவினுடைய வீடல்லவா அது? அவருக்கு அதைச் சீதனமாகக் கொடுத்து விட்டு என் வீடென்றும், எங்கள் வீடென்றும் இனிமேல் எங்கள் குடும்பத்திலுள்ள எவரும் உரிமை பாராட்ட முடியுமா? நான் இப்போ நினைத்ததுதானே ஞாயமானது' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டேன்.

இ.பி.அருளானந்தம் 193
‘இந்த இடத்தில் உன்னுடைய இளமைக் காலத்தின் மண்வாசனை இருக்கிறதா?’ என்று என் மனம் உடனே கேள்வி கேட்பது போல் இருந்தது. நான் எதிர்பார்த்து நினைத்துக் கொண்டு வந்ததெல்லாம் இவ்விடங்களில் இல்லாது ஏமாற்றமுற்றதால், என்னிடத்தில் அந்தக் கேள்விக்குரிய பதில் இல்லாமல் நான் மெளனமாய் நடந்து கொண்டிருந்தேன்.
விரைவான நடையினால் பண்டைய நாகரீகத்தின் 3RCU சின்னமாகக் காட்சியளிக்கும் நான் பிறந்து வளர்ந்த வீடும், அருகே கண்பார்வையில் படும்படியாய் வந்து விட்டது.
(என் எண்ணத்தில் ஒரு திருத்தம்: என் விடு என்றதாய் நினைப்பதை விடுத்து இப்போது அதை நான் பிறந்த வளர்ந்த வீடு என்கின்றதாய்த் திருத்தியமைத்துக் கொண்டுவிட்டேன்)
அந்த வீட்டைக் கண்டதும் எனக்கு, ஏதோ ஒரு காயகல் பத்தை உண்டது போல் இளமை உணர்ச்சி உண்டானது.
அங்கே வேலியில் இப்போது பாரம் கட்டிய படலை இல்லை. அதற்குப் பதிலாக அகலமான இரும்புக்கேற் ஒன்று, ஈட்டி முனைகளுடன் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு, ஒரு காவல்காரன் மாதிரி எனக்குக் காணத் தெரிந்தது.
அந்த கேற்றுக்குப் பக்கத்திலே வரிசையாகக் கடைகள்.
புதுக்கட்டடங்கள் எல்லாம் காணிக்குள்ளால் எழும்பியிருக்கிறதே...? என்று வியப்புற்றவாறு இன்னும் எங்கெங்கே என்னென்ன உண்டு என்றும் அக்கறையாகப் பார்த்துக் கொண்டு, படலைத்தூணில் பதித்துக் கிடந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினேன்.
மணியொலி கேட்டதில் அக்கா கேற்றடிக்கு வந்தார்.

Page 104
194 அம்மாவுக்குத் தாலி
கேற்றைத் திறக்காமல் உள்ளுக்குள் நின்று கொண்டு, சிறு ஊடு வழியாக என்னைக் கண்டு விட்டு.
“தம்பி தம்பி. என்ன கனகாலத்துக்குப் பிறகாய் இங்காலைப் பக்கம். வாரும் வாரும்” என்று சொல்லியபடி மனசெல்லாம் சந்தோஷமாக கேற்றைத் திறந்து கொண்டு, பாசத்துடன் உற்சாகமாக என்னை வரவேற்றார்.
“கனகாலமாச்சு ஒருக்கா வந்தெல்லாரையும் பாத்துக் கொண்டு போவமெண்டு நெச்சன்.”
“எத்தினை வரியத்துக்குப் பிறகால இங்காலிப் பக்கம் நீர் வாறிர். வீட்டிலை உள்ளவையள் எல்லாரையும் ஒருக்கா நீர் வரேக்க கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம்தானே?’ என்று சொல்லி விட்டு என்னை வீட்டிற்கு அழைத்துப் போனார் அக்கா!
அந்த வீட்டின் வாசற்படியேறும்போதே எனக்குப் பழைய சம்பவங்களெல்லாம் மனத்தில் பளிரடித்ததாய் காட்சிக்கு வர ஆரம்பித்துவிட்டன. இதனால் அக்கா கேட்ட சில கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதில் சொல்லாது வெறும் "ஆமா' மாத்திரம் போட்டுக்கொண்டே நான் கற்பனைச் சவாரி விட்டுக் கொண்டிருந்தேன்.
“தம்பி தண்ணி வென்னி குடிக்கிறீரே. ஒரு நல்ல பால் கோப்பி போட்டுக்கொண்டரட்டே தம்பி.?”
இப்படி இதங்குழைத்துக் கேட்டவாறு அக்கா என் முகத்துக்கு நேராக குனிந்து பார்த்தபோதுதான் அக்கா வினுடைய கதையில் திரும்பவும் அக்கறை வந்தது எனக்கு
“இப்ப அதொண்டும் வேண்டாமக்கா. பஸ்ஸாலை இறங்கினதோடை அதிலை இருந்த கடைக்க உள்ளட்டு சும்மா சோட்டைப் பண்டம் திண்டிட்டு வாறன். அது

நீ.பி.அருளானந்தம் 195
வயித்துக்கை இப்ப உரப்புடியாக் கிடக்கு. நாவறட்டிக் கொண்டு போறதால தண்ணியைத்தான் இப்ப குடிக்க நல்லம் போலைக் கிடக்கு. எங்கடை கிணத்துத் தண்ணியைக் கொண்டாங்கோ கோப்பி குடிக்க முதல் அதை ஒருக்காக் குடிச்சுப்பார்ப்பம்!”
ஆவலோடு நான் சொன்னேன்.
அக்கா குசினிக்குப்போய் பெரிய குண்டான் செம்பிலே நிறையத் தண்ணிரைக் கொண்டு வந்து தந்தார். செம்புத் தண்ணிரை ஒரு பாட்டம் மிண்டு விட்டு நான் அதைக் கீழே வைத்தேன்.
“இந்த மனுசன் சின்ன மீன்களைப்போய் மினக்கெட்டு சந்தை வழியயிருந்து வாங்கிக் கொண்டந்திருக்கு. இனி அந்த விளைப்பொடியளை வைச்சுச் செதிளைக் கிள்ளி நூண்டி, துண்டு துருத்தியா வெட்டிக் கொண்டு பெரிய வேலையெனக்கு. நேரம் போகுது இனி விட்டால் பதங் கெட்டு மீனில் புழுக்கெந்திப் போடும்.”
இந்தக் கதையோடு அக்கா குசினிக்குள் போவதற்கு ஆலாய்ப் பறக்கிற நிலையில் நிற்கிறார் என்று தெரிந்து விட்டது எனக்கு.
“எனக்கா இப்பவும் அத்தார் மாட்டுச் சவாரியோடதான் மினக்கெடுறாரோ. அல்லாட்டி வேற வேலை ஏதாவது செய்யிறாரோ?”
“வேற என்ன வேலையை அவர் பெரிசா பாத்துக் கிழிக்கிறார்? முந்திய மாதிரித்தான் இப்பவும் அவர் எந்த நேரமும் சவாரியெண்டுதான் பறப்பார். நாள் முழுக்க மாடுகளை வைச்சுச் சவாரி கலைக்கிறதுதான் அந்த மனுசனுக்கு வேலை. இந்த மாட்டு வண்டில் சவாரிப்

Page 105
196 அம்மாவுக்குத் தாலி
பைத்தியத்தால் வீட்டில உள்ள காசுபணத்தையுமெல்லே அந்த ஆள் கொண்டுபோய்க் கரியாக்கிப்போடுது. அதான் எனக்குப் பெரிய உத்தரிப்புத் தம்பி!. இதிலையெல்லாம் அவருக்கு நான் சரி பிழையைச் சொன்னாலும் செவியில சொட்டும் ஏத்துறாரில்லை. ரெண்டு மாதத்துக்கு முதல் எங்கயோ சவாரியிலை வெண்டதாம் அந்த மாடெண்டு போட்டு அதுக்கு அள்ளுகொள்ளைக் காசைக் கொட்டி வாங்கியந்து உங்கினை கட்டினார்.
அவற்றை கூடாத காலமோ என்னவோ தெரியாது நல்லவிடை பருவத்து மாடாயிருந்து அந்த மாடு ஒரு மாசத்தாலை வாத நோய் வந்து செத்துப் போட்டுது. இதிலை சரியோ பிழையோ ஒண்டும் யோசியாமல் இப்பிடித்தான் அவற்றை காலம் நெடுகலும் போகுது. கவாரிதான் தனக்கு சாகுமட்டும் வேலையெண்டு அனுமார் பிடியிலை அவர் சீவிக்கிறார்.”
“அது சரி. அவர் மாட்டு வண்டிச் சவாரியிலதான் மினக்கெடுறார் எண்டுறியள் ஆனா வளவுக்க இங்கே மாட்டுக் கொட்டிலையும காணேல்ல மாடுகளையும் காணேல்ல. அப்பிடியெண்டால் இப்ப எங்க அதுகளெல் லாம் போயிற்றுது?”
“இந்த வளவுக்கை இப்ப எங்க இடம் கிடக்குது தம்பி.? அதுகளையெல்லாம் இங்க கட்டி வைச்சு வளக்கிறதுக்கு. பழைய அந்த நாளைய இடம் மாதிரியே இப்ப வவுனியா இருக்கு?. நான் அவருக்குச் சொல்லிப் போட்டன் முந்திய மாதிரி இனி இதுக்குள்ள மாடு கண்டு இனி நீங்க வளக் கேலாதெண்டு.”
" "அப்ப அந்த மாடுகளை எங்க கட்டி அவிழ்த்து பராமரிக்கிறார்?"

.பி.அருளானந்தம் 197
“அங்க அந்தக் கொல்லன் கம்மாலைக் காணியிலை வைச்சுத்தான் தண்ணியைத் தீனியை வைச்சு மாடுகளை அவிழ்த்துக் கட்டுறார். மாடுகளைப் பார்க்க எடுக்கவெண் டும் சாணிசகதி அள்ளவெண்டும் ஒரு சிண் பிடிச்சு வேலைக் கும் வைச்சிருக்கிறார். அங்கதான் எப்பவும் இருந்துகொண்டு ஊருலக ஞாயங்களையும் அவயளோடவாப் பேசிக் கொண்டு அடுகிடை படுகிடையாகவும் கிடக்கிறார்.’
"அப்ப அப்பிடித்தான் அவற்றை பொழுது போகு தெண்டிறியள். அது சரி உங்கடை கடைசி மோன். என்ரை மருமோனை எங்க இங்க காணேல்லை?”
“அவர் தன்ரை சித்தப்பரிட்டப் போயிருக்கார் தம்பி! அவரைப் பாத்திட்டொருக்கால் வாறனெண்டு போட்டு. நேற்றுத்தான் யாழ்ப்பாணம் போனவர் அவர். இங்க தம்பியார் நானொருக்கா குசினி அலுவல்களை பாத்து முடிக்கட்டே. நீர் உந்த உடுப்புகளை மாத்தி சாறத்தை உடுத்துமன்.'
“உடுப்பைப் பேந்து கொஞ்சம் செல்ல மாத்திறன் அக்கா. நீங்க போய் உங்கடை அலுவல்களைக் கவனியுங்கோ. நான் இங்க சும்மா ஒருக்கா உதுக்குள்ளாலை இந்த வீட்டைச் சுத்திப் பாக்கிறனே?”
“ம். வீடென்ன வீடு இது அந்த நாளைய சுண்ணாம்புக் கல்லுப் பழைய கட்டிடம். இப்ப என்ன என்ன மாதிரி யெல்லாம் புது டிசைனிலை இங்கினை வீடுகள் கட்டுகினம். இந்தப் பழைய வீட்டை இன்னும் வைச்சுக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு என்ன செய்யிறது? மழைபெஞ்சால் இதுக்க உள்ள நிலமெல்லாம் ஈரம் ஊறுது. கூரையில உள்ள மரந்தடி யெல்லாம் அப்பிடியே உளுத்துக் கீழை கொட்டுது. எல்லாப்பக்கமும் படலம் படலமா தூசு பிடிக்குது. அந்த

Page 106
198 , அம்மாவுக்குத் தாலி
நாளைய ஒடுகள்தானே இப்பவும் கூரையில கிடக்கிறதுகள். அதுகளும் படிமானமில்லாமப் போய் நெடுக மழை பெய்யக் காட்டி வீடு முழுக்கவும் ஒழுகிக் கொண்டேயிருக்குது. அதால உந்தச் சுவர்களும் நனைஞ்சு வெய்யிலடிக்க பொருக்குக் கொட்டுது. உதுகளையெல்லாம் கூட்டுற துடைக்கிற மணியமாயிருக்கிறதுதான் இப்ப `என்ரை வேலையாக் கிடக்கு. கையிலை பிடிச்ச தும்புத்தடியோட உதுகளையெல்லாம் தட்டிக் கொட்டித் துடைச்சுக் கொண்டு முழுக்க இதுக்கெண்டு நான் நிக்க வேணும் உந்த அள்ளுகொள்ளை வேலையெல்லாம் செய்ய குனிஞ்சு வளைய, கிளுவந்தடியாட்டம் நாரிப்பூட்டும் நொறுங்குது எனக்கு. அதாலதான் இப்ப பாக்கிறன் இதை இடிச்சிட்டு இந்த இடத்திலை புது மோடியிலை ஒரு வீட்டைக் கட்டுவமெண்டு.”
எனக்கு நெஞ்சு பகீர் என்று இருந்தது.
“அக்கா இது அம்மாவின்ரை அப்பு கட்டினதெல்லே! பரம்பரையா கனபேர் இருந்து சீவிச்ச வீடெல்லே இது. அவயளின்ரை ஞாபகத்துக்கெண்டாலும் கொஞ்சவரியத் துக்கு இப்பிடியே இது இருக்கட்டுமே அக்கா?”
“உமக்கென்ன தம்பி விசரே. என்ன கிழட்டுக் கதையெல் லாம் நீர் கதைக்கிறீர்? அப்பு வீட்டைக் கட்டிப்போட்டா ரெண்டு இதை வைச்சுக் கொண்டிருந்தா நிறைவிரிசல்க ளோட கிடக்கிற உதுகளெல்லாம் எங்கடை தலையிலு மெல்லே ஒரு நேரம் பொறிஞ்சு கொட்டுப்பட்டிடும். என்ரை மூத்தவளும் இப்ப வெளியாலை இருந்து நெடுக ரெலிபோனிலை கதைக்கேக்க சொல்லுறாள் வீட்டைக் கட்டுங்கோம்மா. வீட்டைக் கட்டுங்கோம்மா எண்டு. இங்க அதுக்கெண்டும் அவ பாங்கிலை போட்டுவிட்ட காசு

நீ.பி.அருளானந்தம் 199
மாசக்கணக்கா கிடையில கிடக்கு. இன்னும் கொஞ்ச நாளையிலை இதை உடைச்சுப்போட்டு வீட்டு வேலை துவங்கினறதுக்குத்தான் நான் யோசிச்சுக் கொண்டிருக் கிறன்.”
எனக்கு ஒன்றும் சொல்ல முடியாது தொண்டை அடைத்தது மாதிரிப் போய் விட்டது. அக்கா சொல்வதில் ஞாயம் உண்டெனத் தெரிந்தாலும் ஒரு ஞாபகச் சின்னமாக நான் கருதிக் கொண்டிருக்கும் இந்த வீடு அழியப்போகிறதே என்ற சோகம் மனதை வாட்ட, எப்படியோ அதைத் தாங்கிக் கொண்டு நான் இருந்தேன். என்றாலும் அக்காவுக்குத் தெரியும்படி எனக்கிருந்த கவலையை முகத்தளவில் தெரியும்படி வெளிக்காட்டாமல் மறைத்திருந்தேன்.
“என்ன தம்பியர் வீட்டைப் பாக்கப் போறனெண்டீர். அங்க இருந்து இவ்வளவு காலம் பிறகு இந்த அக்காவிலை கரிசனையில்லாம, வீட்டை முக்கியமாப் பாக்கவெண்டுதான் வந்தனிரோ?’’
அக்கா அப்படிச் சொல்லவும் மீண்டும் எனக்கு, மனசுக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது.
“என்னக்கா அப்பிடி நீங்கள் சொல்றீயள்? அங்க கொழும்புக்கு நீங்க வந்து போறதாலை நான் இங்க உங்களைப் பாக்க வரவேணுமெண்ட அவசியமில்லாமக் கிடந்தது.இப்ப கனகாலமாய் நீங்க அங்கனேக்க வராம இங்க இருந்திட்டியள். அதாலதான் நான் இங்கினை வந்து உங் களையும் ஒருக்காப் பார்த்துப் போவமெண்டு வெளிக்கிட்டு வந்தன். அப்பிடி வந்ததோட இந்த வீட்டையும் பாக்க ஒரு ஆசை. அதுதானொழிய வேறொண்டுமில்லையக்கா.”
“சரி சரி உமக்கு எங்கடை அப்பற்றை குணம்தானே முழுக்கவும் இருக்குது. எல்லாத்திலையும் கரடியின்ரை

Page 107
200 அம்மாவுக்குத் தாலி பிடிமாதிரி அப்பிடியொரு பிடிவாதமும் உம்மட்டை இருக்கு.”
என்னைப்பற்றி இப்படி அவர் சொல்லிவிட அக்காவின் கதையைக் கேட்டு நான் சிரித்தேன்.
“தம்பி அறைக் கதவுகளெல்லாம் அப்பிடியே திறந்தது திறந்தபடிதான் கிடக்கு. ஏதோ உம்மடை ஆசைக்குப் போய்ப்பாக்கிறதெல்லாத்தையும் பாரும். இவ்வளவு வயசு செண்டும் குழந்தைத்தனம் இன்னும் மாறேல்லை உமக்கு. நான் இனி குசினி அலுவல்களைப் பார்க்கப்போறன்!. அங்க இருந்து அலைக்கழிஞ்சு களையோட நீர் வந்திருக்கிறீர். நேரத்துக்கு நான் கறி சோறை அடுப்பிலை வைச்சு இறக்கவேணுமெல்லே உமக்குத் தர?. அதால நீர் ஆறுதலா உதுகள் எல்லாத்தையும் பாத்து முடிச்சிட்டு வாரும்
99
குசினிப்பக்கம். தம்பியோட கணக்கக் கதையிருக்குப் பிறகு.
அக்கா சிரிப்போடு இதையெல்லாம் சொல்லிவிட்டு குசினிப் பக்கமாய்ப் போக, அவரின் மேலுள்ள பாசத்தின் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு. அவர் போகும் வழியைப் பார்த்தபடி சிறிது நேரமாய் நான் அதிலே நின்றேன்.
“என்ரை ஒரேயொரு அக்கா. என்ரை ஒரேயொரு அக்கா.’ என்று எண்ணியவாறு என் மனத்தை அன்பினாலே நிரப்பிக் கொண்டு அந்தப் பாசத்தின் கதிரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, நான் வீட்டு அறைகளைப் பிறகு பார்க்கப் போனேன்.
அந்த அறைகளையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து நடந்து அளந்து வரும்போது, அவ்விடத்திலெல்லாம் என் சின்னவயதுக்கால வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தேன்.

நீ.பி.அருளானந்தம் 201
எனது சிந்தையில் வசந்த புஷ்பங்களாய் அவைகள் மலர்ந்திருந்தன.
இந்த நாற்சார் வீட்டின் உள்ளே உள்ள விறாந்தையில் நடக்கின்றேனே என்று நினைக்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.
இந்த வீட்டிலிருந்தால் வெளியே போய் காற்று வாங்க நடந்து போய்வரத் தேவையில்லை. அந்தளவுக்கு இடம் சுருக்கமில்லாத இந்தப் பெரிய வீட்டின் உட்பக்கத்து முற்றத் துக்கு அருகே குபுகுபு' வென்று திறமாகக் காற்று வரும்.
'அக்காவின் சாமர்த்திய சடங்கிற்கும் கலியான வீட்டிற்கும் இந்த விறாந்தையில்தானே நூற்றுக்கும் மேற்பட்ட சனங்களை ஒரே நேரத்தில் சாப்பாட்டுக்கென்று பந்தியிருத்தினோம்!”
அந்த விறாந்தையில் இடவலமாய் நிதான நடை நடந்து கொண்டிருந்தபோது எனக்கு இப்படியாக பழைய நாள் சிந்தனைகள் கிளிக்கூட்டமாய்ப் பறந்தன.
அந்தச் சிந்தனையின்பால் பிறகு இன்னும் நான் அடைந்த இன்பம் எனக்கு ஆவலைக் கொடுத்து வீட்டின் பின்பக்கச் சாளரத்தடிக்குப் போவதற்கு வீறு கொடுத்தது.
அங்கே போய் அதிலே நின்று கொண்டு சாளரம் வழியாக கோடிப்புறத்தைப் பார்த்தேன்.
இரண்டு பரப்புக் காணிக்கப்பால் குறுக்காலே ஒரு சுவர் பின்புறத்தையெல்லாம் மறைத்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் நான் உடனே துணுக்குற்றேன். என் உற்சாகம் அடியோடு அவிந்து விட்டது. மிகப் பெரிய மனச் சூன்யம் என்னை ஆட்கொண்டது. உடனே 'அக்கா’. என்று நான் வாயைத் திறந்து அவரைக் கூப்பிட நினைத்தேன்.

Page 108
202 அம்மாவுக்குத் தாலி
ஆனால் சத்தம் வெளிவரவில்லை!
அப்படியே தொண்டைக்குள் வந்து நின்று பிறகு அது அடங்கிவிட்டது. இந்த வீட்டின் உரிமை எனக்கு இல்லை!
உரிமை இல்லாத இடத்தில் எங்கேயாவது, ஏன் என்ற கேள்வி கேட்க முடியுமா?
என்று அந்த எண்ணத்தை உடனே நசுக்கிவிட்டேன்.
'பிறகு இதைப்பற்றியெல்லாம் அக்காவுடன் ஆறுதலாகக் கதைக்கலாம்.” என்று நினைத்துக் கொண்டு, என் கண் பார்வைக்குத் தெரிந்த அந்தச் சுவரை ஊடறுத்துப் பார்ப்பதுபோல் எண்ணிக் கொண்டு, முன்பு அதற்குப் பின்னால் இருந்த அந்தப் பத்துப் பரப்புக் காணியையும் மனத்திரையில் படம் போட்டுப் பார்த்தேன்.
அந்தப் படம் மனத்தில் விரிவாக ஓடியது. பழங்காலத்து சினிமாபோல கறுப்பு வெள்ளையாக,
நல்ல சாரமுள்ள அந்த மண் கண்டத்திலே ஒரு பக்கம் அம்மா வைத்த மரவள்ளித் தோட்டமும் பலா, பப்பாளி, பழைய வேப்பமரம் ஆகியவையும் இன்னும் அதற்குள்ளே ஒரு சிறிய இடத்தில் வைத்த கத்தரிச் செடிகள் பொசு. பொசுவென்று முரட்டு இலைகளை நீட்டி நின்றதும் முதல் காட்சியாக மிகவும் துல்லியமாக வந்தது. அந்தத் தோட்டத் துக்குள்ளே அயலட்டைப் பையன் களுடன் நான் ஓடிப் பிடித்து விளையாடிய நாட்கள்- அந்தப் பெடியன்களை சேர்த்துக் கொண்டு கிழங்கிழுத்துச் சுட்டு, அதை வாழை இலையில் வைத்துப் பிளந்து, ஆவிபறந்து ஆறவும் சாப் பிட்டது.
மரவள்ளி இழுத்து ஓய்ந்த காலத்தில், அந்த நிலத்திலே தழைத்துப் படர்ந்திருந்த காட்டுச் செடிகள்-அவைகளில்

நீ.பி.அருளானந்தம் 203
பூத்த வண்ண வண்ணப்பூக்கள் அந்தச் செடிப்பற்றைக்குள் வளைந்த முள் கீறி தோல் அறுபட்டாலும், அந்த முள்ளின் கீறலினால் ஏற்படுகிற காந்தலை பொருட்படுத்தால் சகித்துக் கொண்டு, பூக்களைப் பார்த்து நான் ரசித்த நாட்கள் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாய் என் ஞாபகத்தில் வந்தன.
இளம் வாழ்க்கையின் இந்த மாதிரிச் சின்னச் சின்ன சம்பவங்களைத் தவிர, ஞாபகம் வைத்துக் கொள்ள என்னதான் இருக்கின்றன?
அந்த இனிமை பயக்கும் பழைய சிந்தனைகள் எல்லாமே காட்டுப் பூக்களின் போதை மணமான ஓர் உணர்வுடன் கூடியதாய் என்னிடத்தில் எழுச்சி பெற்று, புதியதோர் உற்சாகத்தை எனக்கு அதிலே ஊட்டியது.
என்றாலும் என்னளவில் காட்டுப் பூக்கள் மற்றவர்களுக் குப் புகழ்ந்து சொல்லத்தக்கதான அழகுள்ளவைதான்! எங்கினும் தன்னிச்சையாக வளரும் செடிக்கு, ஓர் தனித்துவம் இருக்கிறது. அதனால் அந்தச் செடியில் பூக்கும் பூக்களும் அலாதிதான். மனிதனின் கண் பார்வைக்குப் படாமல் அவைகள் காடுகளில்தானே அநேகம் இருக்கின்றன. அவைகளை யார்தான் பார்ப்பதற்குத் தேடிப் போகிறார்கள்?
அப்படி நினைத்தபோது என் கவனமெல்லாம், மனத்தில் விரித்துக்கொண்ட பைபிள் புத்தகத்தின் சில அதிகாரங்களை தட்டிப் பார்த்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் நின்றது.
அந்த வசனத்தைப் படித்து முடித்த மன நிறைவோடு, மனத்தில் விரித்துப் படித்த பைபிள் புத்தகத்தை மூடினேன். அந்த வசனத்தை மட்டும் திரும்பத்திரும்ப நினைத்தேன். “காட்டுப் பூக்களின் இயற்கையான அந்த வர்ணத்தில் ஞானமுள்ள அரசன் சாலொமன் முதலாய்த் தன்

Page 109
204 அம்மாவுக்குத் தாலி சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை"
என்று இயேசு வசனித்திருந்தது, அந்த இடத்தில் நின்று, நெடுநேரம் வரை எனக்கு நினைத்துப் பார்த்து இரசிக்கும் படியாய் இருந்தது.
திரும்பவும் அந்தப் பூக்களிலும் அதற்கேயுரிய தனித்துவமான போதை மணத்திலும், தேனில் விழுந்த எறும்பு போல் மனம் லயப்பட்டிருக்க. குசினிப் பக்கமாய் எழுந்த கறிகொதித்த வாசனை என்னைக் குழப்பிவிட்டது.
“தம்பி வாரும். வாரும் தம்பி.”
அக்கா தொடர்ந்து என்னைக் கூப்பிடுகிறாரென்று நான் குசினிப் பக்கம் போகவேண்டியிருந்தது.
“முகம் கைகால்களைக் கழுவிக் கொண்டு வாருமன் தம்பி சாப்பிட?’’ நான் குசினிப்பக்கம் போனபோது அக்கா என்னிடத்தில் அப்படிச் சொன்னார். சமையல் செய்தே அக்கா களைத்துப் போனவள் போல் இருந்தார்.
அனல் சூட்டினால் அவரது முகம் கன்றிச் சிவந்து கொவ்வைக்கனி போலும் ஆகியிருந்தது. அடுப்புப் புகையில் அவரது கண்கள் எரிந்து கலங்கி வழிந்திருப்பதாயும் எனக்குத் தெரிந்தது. “விரைந்து பழுத்து நரையும் திரையும் தோன்றி மூதாட்டியாக அவர் வந்துவிட்டாரே.? காலத்தை அவர் கடக்குமுன்பே காலம் அவரைக் கடந்து விட்டதே.? பாவம் என்ரை அக்கா..! என்னைக் கண்டதோட அவசரப்பட் டெல்லாம் குசினிக்கை கிடந்து மாஞ்சிருப்பா.’’ என்று நான் அக்காவின் முகத்தைப் பார்த்து அவர்மீது இரக்கப்பட்டேன்.
பிறகு கிணற்றடிப் பக்கமாகப்போய் அண்டாப் பானையில் நிறைத்து வைத்திருந்த தண்ணிரை சருவச்

இ.பி.அருளானந்தம் 205
சட்டியால் அள்ளி எடுத்து கைகால் முகம் கழுவிக் கொண்டு வந்து சாப்பாடு மேசைக்கருகில் கதிரையை இழுத்து வைத்துக் கொண்டு அதிலே இருந்தேன்.
அரைச்ச கூட்டிலை மணமும் குணமுமாக அக்கா வைச்சிருந்த மீன் குழம்பு சாப்பிடும்போது உறைப்பும் புளிப்பும் உப்பும் கலந்த அபூர்வமான ருசியாயிருந்தது எனக்கு.
நெய்ப்பிடிப்பான அந்த மீன் குழம்புடன், முருங்கைக் காய்ப்பால் கறியும், கத்தரிக்காய் வதக்கலும், மாப்போல மசிந்த மரவள்ளிக் கிழங்குக் கறியும், புழுங்கலரிசிச் சோறும்பசித்த பசிக்கு வயிற்றுக்கு, தின்னத்தின்ன நன்றாகக் கொண்டுவா கொண்டுவா என்றதாய் இழுத்துக்கொண் டிருந்தது.
நான் சாப்பிடும் வேளையிலும், அந்தக் காணியைப் பற்றிய சம்பவம் என் நினைவில் சுழன்று கொண்டுதாணிருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும் அக்காவுடன் அதைப்பற்றிப் பேசலாம், என்று நான் அதைப் பொறுத்துக் கொண்டிருந்தேன்.
சாப்பிட்டு முடித்து பூண்டு மணத்தோடு ஒரு கிளாஸ் ரசத்தையும் குடித்து பிறகு நான் கை கழுவிக் கொண்டதும்.
அக்காவே காணிக் கதையைத் தொடங்கினார். எனக்கு அது உடனே வாய்ப்பாகிவிட்டது.
“அக்கா பின்னாலே கிடந்துதே பத்துப்பரப்புக்காணி.?’
"ஒமோம்!”
“அந்தப் பக்கமாய் இப்ப இடையிலை சுவர் எழுப்பியிருக்கே?"

Page 110
206 அம்மாவுக்குத் தாலி
“அது நாங்கள்தான் கட்டினம்.’ “ஏன் காணியைப் பிறிச்சுக் கட்டினியள்?”
“அந்தக் காணிக்கு நல்ல விலை வந்திச்சுத் தம்பி. அதை வித்திட்டு மிச்சத்தை வைச்சிருக்கிறம்’
“அப்பிடியெண்டா வித்த காணி எத்தினை பரப்பு?” “முழுக்கப் பத்துப் பரப்பு.’ "பத்துப் பரப்பா..?’ நான் அதிர்ந்து விட்டேன். பூமியிலிருந்து நரகத்துக்கு என்னை யாரோ தூக்கி எறிந்து விட்டது போல அப்போது எனக்கு இருந்தது.
“பத்துப் பரப்புக் காணியெண்டால் கொஞ்ச நஞ்சக் காணியே அக்கா..? அவ்வளவையும் வித்திட்டியளே..? ஏன் வித்தியள்?”
நான் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன். ஆனால் அக்காவோ நான் கேட்ட கேள்விக்கு உடனே தனது கோபத்தை எனக்கு வெளிக் காட்டினார்.
“எனக்குச் சீதனமாய்த் தந்த காணிதானே. நான் இதை விப்பன் விடுவன்; அதைக் கேக்க ஒருவருக்கும் உரிமையில்லை. எனக்கு அப்பரும் ஆத்தையும் ஆனை சேனையையே சீதனமாக் குடுத்தவயள்? இந்த வீட்டையும் காணியையும் தானே தந்தவயள். அதைவிட பெரிசா எனக்கெண்டு என்னத்தைத் தந்து கிழிச்சவயள்.’’ என்று அக்கா இப்படி எடுத்தெறியிற மணியமாக் கதைத்தார்.
அவர் சொல்லிய விறுத்தம் யாரோ செகிட்டைப் பொத்தி அடித்தது மாதிரி எனக்கு இருந்தது. ஆவணி மாதத்து வெயிலும் மழையும் போல நிமிஷத்துக்கு நிமிஷம் குணம் மாறுகிறவர் அக்கா என்று எனக்குத் தெரியும்.

நீ.பி.அருளானந்தம் 207
அதனால், “ஏன் எனக்குத் தேவையில்லாத கதைகளை அவவுடன் கதைப்பான்’ என்று நினைத்து இனி இதைப்பற்றி தலைக் கெறுக்குப் பிடிச்ச அவவோட மேலே கதைக்கக் கூடாது, என்று அதனால் நான் மனத்துக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
ஆனால், அந்தக் காணிக்கு அதிபதியான அக்கா, அதைப்பற்றிய கதைகளை அதற்குப் பிறகும் விடாமல் அடுக்கிக் கொண்டே போனார்.
“எனக்கு அப்பா அம்மா சீதனமாகத்தந்த காணிதானே தம்பி இது.? காணி வீட்டில எனக்கு உரிமை இருக்கிறமாதிரித்தான் என்ரை அவருக்கும் உரிமை இருக்குக் கண்டியோ..!"
இதைச் சொல்லும்போது அக்காவின் கண்கள் அகல விரிந்து கொண்டே இருந்தன. எனக்கோ அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
“அதையெல்லாம் நான் இல்லயெண்டேல்லை. ஆனா இந்தக் காணியை விக்காமல் அதை நீங்கள் மகளுக்குக் குடுத்திருக்கலாம். அல்லாட்டி மகனுக்காவது குடுத்திருக்க லாம் பரம்பரையா அப்பிடி அப்பிடியே அது பாதுகாப்பாய் அவயளிட்டையே இந்தச் சொத்து அழியாமக் கிடந்திருக்குந்தானே அக்கா?.’ ܖ
“ஓம் நீர் சொல்லுறது சரிதான். ஆனா மகள் அங்க கனடாவிலையெல்லே வீடு வளவெல்லாம் வாங்கீட்டாள். பிள்ளை குட்டியளும் அங்கினைதானே பிறந்ததும் இருக் கிறதும். அங்க அதுகளையெல்லாம் விட்டுப்போட்டு இனி இங்கயெங்க அவயள் வரப்போகினம்.? இனி அவயள் இங்க வாற அசுகிடை இல்லை. நான் இந்தக் காணியை வித்ததிலை வந்த காசுகளிலை அரைவாசியை மகள் கனடாவிலை

Page 111
208 அம்மாவுக்குத் தாலி
வாங்கின. "காணி வீட்டுக்கு அவவுக்கு காசு தட்டுப் பட்டதாலை அனுப்பிப்போட்டன்.
இங்க வித்து அங்க அதுகளுக்குச் சீவியத்துக்குத் தேவை யானதை வாங்கட்டுமே. காலம் மாறிக் கொண்டு வருகுது நாங்கள் மாத்திரம் உந்தப் பழைய கொள்கையளை கட்டிப்பிடிச்சுக் கொண்டிராம புத்தியாயிப்ப சீவிக்க வேணும் தம்பி’
அக்கா எனக்கு இப்படிச் சொல்ல, அந்தக் கதிரையில் இருந்தபடி நான் அண்ணாந்து மேலே முகட்டைப் பார்த்தேன். நான் அப்படி நிமிரும் தருணம் முகட்டு வளை யிலிருந்து உளுத்துப்போன துகள்கள் அந்த மரத்துளை களிலிருந்து ஊதிவிட்டாற்போல் வெளியே காற்றில் அலைக்கழிக்கப்பட்டு வந்து என் கண்களில் விழுந்தன.
“கண்ணுக்குள்ள. சிச்சிச். தூசு விழுந்திட்டக்கா.’
“அடட சவம். உடன கண்ணைத் தண்ணியாலை கழுவிவிடும் தம்பி’
என்று சொல்லிவிட்டு செம்புத் தண்ணிரோடு வந்து என் கையைப் பிடித்து வாசலடிக்குக் கூட்டிப் போனார் அக்கா.
. . . . .ا நான் முகத்தில் தண்ணிரை அடித்து மூசி மூசிக் கழுவுவதைப் பார்த்துவிட்டு.
“பார்த்தீரே தம்பி! உமக்கு நான் சொன்னன் இந்த வீட்டைப்பற்றி. நான் இந்த வீட்டைப்பற்றி சொன்ன குறையெல்லாம் இப்பவாய் உமக்குத் தெரியுதே? கண்ண வடிவா கழுவிவிடும்.”
நான் கண்களை விழித்து வைத்து தண்ணிரால் கழுவிக் கொண்டிருக்கும் வேளையில் அக்கா இவ்விதம் சொன்னார். எனக்கு இப்படி நடந்தது அவருக்கு செப்பமான பிடி

பி.அருளானந்தம் 209
யாயிற்று. முகத்தை நன்றாகக் கழுவிவிட்டு கண்களின் உறுத்தலோடு அக்காவின் முகத்தை நான் விழித்துப் பார்த்தேன்.
“சைச் சைச்சேய். கண்ணெல்லே உமக்கு நல்லா ரெத்தச் சிவப்பாயிட்டுது’’
என்று சொல்லிவிட்டுப் போய்த் துவாயைக் கொண்டு வந்தார்.
நான் முகத்தைத் துடைக்கும்போது மிகுதிக் கதையை எடுத்தார்.
“தம்பி வித்த அந்தக் காணியை விட இப்ப மிச்சம் இருக்கிற இந்த வீட்டுப் பக்கம் என்ரை மகளுக்குத்தான் குடுப்பன் கண்டீரோ. அவ இந்த வீட்டை இடிச்சுப் போட்டு புது வீடு கட்டப்போறா. இந்தக் காணிக்கிள்ளை ஒரு பக்கம் புதுசாக் கடையளைக் கட்டி அங்காலை வாடைக்குக் குடுத்திருக்கிறனே அதுகளெல்லாம் முழுக்கப் பங்கு பாகம் பிரிச்சு மகனுக்குத்தான் எழுதுவன். என்ரை ரெண்டு பிள்ளையஞக்கும் உந்தப் பின் காணியை வித்ததாலைதான் ஒரு முன்னேற்றமான நல்ல வழியளை நான் காட்டினன். அதைவிட எனக்கும் அவருக்குமெண்டு பிற்காலத்துச் சீவியத்துக்கும் தேவையான காசு நான் பாங்கில போட்டி யிருக்கிறன். அவருக்கும் ஒழுங்கான ஒரு வேலையில்லை. செப்புச்சல்லியும் அவர் எனக்குத்தர்றதுமில்லை. ஏதோ பாங்கிலை இருந்து வாற வட்டிக் காசிலைதான் எங்கடை சீவியம் இப்ப ஓடுது.” V
அக்கா இப்படிச் சொல்லிக் கொண்டு போக அந்தக் காணியை அவர் விற்று விட்ட ஆத்திரத்தில் மட்டும் இருந்த நான், அவரை ஒரு கதையிலென்றாலும் விழுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில்

Page 112
210 அம்மாவுக்குத் தாலி
“உங்கடை மகனும் வெளிநாடு போகத்தானே விருப்பப் பட்டுக் கொண்டு இருப்பார். அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிற யோசனை ஒண்டும் உங்களுக்கு இல்லையோ..?” என்று இப்படியாக முதலில் ஒரு போடு போட்டேன்.
“இங்க அவர் இருந்து என்ன செய்யிறது. இங்க அயலட்டையிலை இருக்கிறவயள் எல்லாரும்தான் இப்ப பிள்ளையளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப்போட்டு மினு மினுக்கிறவயளும் கிணுகினுக்கிறவயளுமாயிருக்கினம். நாலு திக்கிலும் நாலு சாதியும் அப்பிடி இருக்கேக்கை நாங்கள் அதுகளுக்குக் குறைச்சலே. வெளிநாடுவழிய நாங்களும் பிள்ளையளை அனுப்பத்தானே வேணும்.? நாலுபேரும் இப்ப போகிற இடத்துக்கு அவரும் போய்ப் பிழைக்கத்தானே வேணும்.? அங்க அக்கா இருக்கிற இடத்துக்குத் தம்பியும் போய்ச்சேந்திட்டாரெண்ட்டா கரைச்சலில்லைத்தானே..? இப்பவெல்லாம் அங்க வெளியாலை போகத்தான் அவர் அடுக்குப் பண்ணுறார்.”
“நீங்க சொல்லுற மாதிரிக்கு அப்ப அவரும்தான் வெளிநாட்டுக்குப் போகப்போறார்.?”
“ஒமோம். அவரும் கெதியாப் போயிருவார்.”
“அக்கா கேக்கிறதெண்டு கோவியாதையுங்கோ. அவரும் வெளியாலை போய் அங்கையே இருந்திட்டா அவற்றை கடை கண்ணி இருக்கிற காணியையும் விக்கிறதுக்குத்தானே பிறகு நினைப்பார்.?”
“ஓம். அப்பிடியும் செய்வினம்தான். அங்க இருக்க சிற்றிசன் கிடைச்சாப் பிறகு இங்க என்னத்துக்குச் சொத் துப்பத்தை.? இதை யார் பேந்து இருந்து காபாந்து பண்ணு றது? நாங்களும் வயது போய் செத்துப்போவம். அதுக்குப் பிறகேன் இங்க இதுகளையெல்லாம் அவயஞக்கு.? அங்க

வி.அருளானந்தம் 211
காணி பூமியளை வாங்கி இருக்கிறதுக்கு வசதி இருக்கேக்க இதுகளை வைச்சுக் கொண்டிருக்கத் தேவையில்லைத் தானே. இதுகளை வித்து அங்க அவயள் உழைக்கிற காசுகளையும் சேத்து நல்ல வீடு வளவு வாங்கட்டுமே.?”
தன் கழுத்துச் சங்கிலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு அதிலே விரல்கள் விளையாட பதில் சொன்னார் அக்கா. அவர் இதையெல்லாம் சொல்லி முடிக்க கொத்திப் பிடுங்குகிற அவமானம் எனக்கு வந்தது. எதுவோ வலி உண்டாக்கும்படி கடித்துவிட்டது போலும் இருந்தது எனக்கு. அந்த வலியின் உணர்வுடன் ஏமாற்றமும் கனத்த சுமை போல உடல் முழுக்கப்பரவ, "அக்கா நான் வெளிக்கிடப்போறன்.” என்று சொல்லிக் கொண்டு எனது பிரயாணப் பையை தூக்கினேன்.
“என்ரை அநதோனியாரே என்ன தம்பி உமக்கு வந்தது? வந்ததும் வராததுமா வெளிக்கிடுறனெண்டு நிற்கிறீர். ஏன்?’
“ஆ. நான் போயிற்று இன்னொரு நாளைக்கு ஆறுதலா வந்திங்க நிக்கிறனே அக்கா!”
“ஏன் அப்பிடித் தம்பி.?” “ஒரு நாள் லீவிலதான் நான் வந்தனான் அக்கா’
“என்ன பிள்ளை நீர்..? அங்கயிருந்து வாறிர் நாலுநாள் லீவோட வந்திருக்கலாமே? இந்த ஆனியில வாற அந்தோனியார் பெருநாளோட நீர் இங்காலை வந்து இருவது வரியமாகுது. அப்பிடி கனகாலம் செண்டுவாறிர் அதுக்குள்ளவாய் ஏன் திரும்பி ஓடிப்போக நிக்கிறீர்.?’
"நான் போயிற்று கிட்டடியிலை கட்டாயம் ஒருக்கா இங்கினை வருவனக்கா. அப்பிடி வரேக்கை நாலு நாள் லீவோடதான் வருவன்.”

Page 113
212 அம்மாவுக்குத் தாலி
நான் சொல்லவும் “இரும் வாறன்.” என்று என்னிடத்தில் சொல்லிவிட்டு அக்கா வீட்டினுள்ளே போனார். அறையிலிருந்து அவர் வெளிவரும்போதுகையில் ஒரு ‘தேன்’ போத்தலோடு வந்தார்.
"அப்பிடியே வதையாக் கொண்டு வந்து என்ரை கண்ணுக்கு முன்னால வைச்சுப் பிழிஞ்சு தந்திரி மலையிலை இருந்து வந்தவனொருவன் தந்தவன்.’’ அக்கா அந்தத் தேனைப்பற்றி திறமாகச் சொல்லிவிட்டு என்னிடத்தில் தந்தார். அவவுக்கு நன்றி சொல்லிவிட்டு அதை வாங்கி நான் பையில் வைத்துக்கொண்டு புறப்பட எழுந்து நின்றேன்.
இப்போது வீட்டு விறாந்தைச் சுவரிலே என் கண்பார்வை போனது.
அப்பு, ஆச்சி, அம்மா, அப்பா என்று தலைமுறை வரிசையாக அங்கே அவர்களின் படங்கள் சுவற்றில் ஆணி யடித்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த நாள் காலத்து தலைப்பாக் கட்டோடு அறிவுகளையெல்லாம் ஏந்தியிருக்கும் பிரகாசமான விசாலமான கண்களுடன் கம்பீரமாகவுள்ள அப்புவின் படத்தைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமாகவும் இருந்தது. அவருடைய மகத்துவங்களை என் சிறிய மனத்தைக் கொண்டு அள்ள முடியவில்லை.
"பாத்தீரே அப்புவின்ரை அந்தப் பழைய படங்களை. அவரிண்ட படத்துக்குப் பக்கத்திலை அந்தநாள் அவர் வைச்சுப்பாவிச்ச லத்தீன் சுவர் மணிக்கூடும் இருக்கு”
நான் சிரித்தேன்.
“இதையெல்லாம் புது வீடு கட்டி அதிலை இன்னும் பவறாய் நான் வைப்பன்’ அக்கா இப்படிச் சொல்லிவிட்டுச் சிரித்தார். நான் உடனே உம் மென்றதாகிவிட்டேன்.

இ.பி.அருளானந்தம் 213
இனிமேல் அக்காவை எதிர்த்து வெல்ல முடியாததுதான் என் பேச்சு-என்று எனக்கு விளங்கிவிட்டது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன். கடிகாரம் மூன்றடித்து இரண்டு நிமிஷம் ஆனதைக் காட்டிற்று.
நான் பிரயாணப்பையை தூக்கிக் கொண்டு வெளிக் கிடவும்,அக்கா என்னுடன் கூட வந்து படலையைத் திறந்தார்.
“தம்பி! ஒருக்கா போகேக்கை அதிலையும் போய் அத்தானைப் பாத்துக் கதைச்சிட்டு அவரிட்டயுமாச் சொல்லிப்போட்டு வெளிக்கிடும்.”
“ஓமக்கா. போகேக்கை அப்பிடியே சொல்லீட்டுப் போறன்.”
"அப்ப வடிவாப் போயிற்று வாநம் தம்பி!”
நான் அவரைப்பார்த்து தலையை ஆட்டிவிட்டு விடை பெற்றுக் கொண்டு வீதியில் நடக்கத் தொடங்கினேன். சிறிது தூரம் நான் நடந்து போய்க்கொண்டிருக்க அக்கா வேலிப் படலையை இழுத்துப் பூட்டிக் கொள்ளும் சத்தம் கேட்டது.
“அத்தானிடம் போவோமா. விடுவோமா?”
மனத்தில் இந்த இரட்டைக் கேள்விகளை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று நான் குழம்பினேன். அத்தான் இருக்கிற கொல்லன் கம்மாலையடிக்கு அந்த நாற்சந்தியின் இடதுபக்கம் வீதியில்தான் திரும்பிப் போக வேண்டும். ஆனால், சந்திப்பக்கம் போனபோது அவரிடம் போகவேண்டும் என்று எடுத்த தீர்மானம் எனக்கு மாறி விட்டது. அத்தானை நினைக்க, அவர் மாட்டை அடிக்கப் பாவிக்கும் சாட்டைக் கம்புதான் ஞாபகத்துக்கு வந்தது.
அவர் சவாரியின் போது "புர்ர்ர்’ ரென்று மூச்சு விட்டுக் கொண்டு ஹேய் ஹேய் என்ற சத்தமான கோபத்தோடு

Page 114
214 அம்மாவுக்குத் தாலி
மாடுகளைச் சாட்டையால் அடித்துக் கலைப்பதும், அவைகள் அடி வேதனையில் 'உம்ம் -காரமிட்டுத் தறி கெட்டுப்பாய்வதும் நினைக்க வேதனையாக இருந்தது. அந்தச் சாட்டைக் கம்புக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்! எதுவித வித்தியாசமும் இல்லை என்றே அதிலே வைத்துநான் நினைத்தேன். மாட்டை அடிச்சு வருத்திக் கொண்டு அது ஒரு பிழைப்பு? மாட்டுக்குத் தொல்லை குடுக்கிற ஈயை மாதிரித்தான் அந்த மனுசன்! இப்படியெல்லாம் அவரிலே வெறுப்பு எனக்கு வந்தது. உறவினால் என் அருகிலே, ஆனால் மனத்தினால் தொலைவில்தான் அவர் இருந்தார். அதனால் அவரைப்பார்க்கப் போக மனம் ஏவவில்லை!
“இரவிலே நேரம் சென்ற பின்பு கொழும்பு நகருக்குப்
போய் அங்கிருந்து வீட்டிற்குப் போவதற்கும் சிரமமாகி விடும்- அதனால் வேளைக்கே போய் பஸ் ஏறுவோம்’
என்று நினைத்துக் கொண்டு கந்தசாமி கோயில் வீதி வழியாக விரைவாக நான் நடக்க ஆரம்பித்தேன். அந்த வீதி யின் அருகே உள்ள நாலைந்து வீடுகளைக் கடந்து போன பின்பு, செந்தில்நாதனின் வீட்டுக்கு முன்னாலுள்ள மாமரம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதன் கனத்துக் கிளைந்த கெட்டுகளில், ஒருபக்கம் பட்டுப்போய் இருந்தன. அவற்றி லெல்லாம் கதிரவனின் சாய்ந்த ஒளிக் கிரணங்கள் வீசிக் கொண்டிருந்தன. அதையும் நான் அக்கறையுடன் பார்த்த போது, ஒரு காக்கை அதிலே பட்டுப் போய்விட்ட வலுவான ஒரு மரக் கெட்டில் இரும்புச் சிலை போல் ஆடாது உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
"அது நோய்வாய்ப்பட்டதான காகமோ..?’ என்று நான் நினைத்த கணத்தில், அதிலே இருந்த வாக்கிலே சடக்கென்று அடித்துப்பறந்து அந்தக் காணிக்குள்ளாக அம்பெனப் பறந்து அது போனது.

நீ.பி.அருளானந்தம் 215
“ஆ. கொள்ளையில போவான்ரை காகம் வந்து கோழிக் குஞ்சை அள்ளிக்கொண்டு போகுதே." அந்த வீட்டுக்காரி சத்தம் போட்டுக் கத்தினாள்.
நான் காகத்தைத் தேடி ஆகாயமெல்லாம் விழித்தேன்.
'கஷ்டப்பட்டு அதுகள் வளக்கிற கோழிக்குஞ்சை ஒரு நிமிஷத்திலை இந்தக் காகம் அடிச்சுக் கொண்டு போயிற் றுதே?’ என்கிற ஆத்திரத்தில், என் நெற்றிக் கண்ணைத் திறந் தது போல ஒருவித ஆவேசத்துடன் அங்கு பறந்து மறையும் பறவைகளில் அந்தக்காகம் உண்டா என்றும் தேடினேன்.
அப்படித் தேடியும் அது என் கண்களுக்குத் தட்டுப் படாததால், எங்கோ தொலைவில் பறந்து போய் விட்டது. என்பதாய்த்தான் பிறகு நான் உணர்ந்தேன். அந்தக் கோழிக்குஞ்சையும் காகத்தையும் வைத்து வீட்டுப் பிரசினையையும் நான் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்.
அதனால் மனத்தில் உளைந்து வலித்துக் கனத்தது எனக்கு அந்த நேரம் நெஞ்சதிருக்கிற சாடை இடி முழக்கம் ஒன்று வானத்தில் கேட்டது.
மேகத்திலிருந்து பிறகு மழை கம்பியாக விழத் தொடங்கி விட்டது. நேரத்துக்குப் போய் பஸ்ஸில் ஏறிவிட வேண்டும் என்ற அவசரத்தில், மழைக்குப் பயந்துகொண்டு அந்த வீதியில் போய்க் கொண்டிருந்த அவசர நடை மனிதர் களோடு நானும் சேர்ந்து நடந்தேன். ஒருவாறு கொழும்பு பஸ்ஸைப் பிடித்து அதற்குள் ஏறி உட்கார்ந்தேன். நான் அதற்குள் ஏறியதும்தான் தாமதம், சொல்லி வைத்ததுமாதிரி அந்த பஸ் மிரட்டலான எகத்தாளத்துடன் இரைச்சலோடு நகர்ந்தது. ܐ
-தாமரை ©(8urບທີ່ ຂOC9

Page 115
"ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும் என்று சொல்லக் கேட்டேன்”
(திவ்விய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின சுவிசேஷம் 12ம் அதிகாரம் 12ம் வசனம் புனிதவிவிலியம்)
இதோமஸ் என் வீட்டுக்கு வந்தார். அவரை நான் வரவேற்று புத்தகம் படிக்கும் அறைக்கு அழைத்துச்
 

நீ.பி.அருளானந்தம் 217
சென்றேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அங்கே பல விஷயங்களைப் பற்றியும் கதைக்கத் தொடங்கினோம். இந்தப் பூமியிலிருந்து விலகி இருக்கும் விஷயங்களாக அவைகள் இருந்தன.
தந்திரமான பல உருவங்களைத் தரித்துக் கொண்டு அடையாளம் தெரியாமல் உலாவும் பிசாசைப் பற்றி எங்கள் இருவரினதும் கதை தொடர்ந்தது.
பிசாசானவன் எவ்விதமாக தன்னை இவ்வுலகில் இப்போது புலப்படுத்திக் கொள்கிறான், பல வித்தியாசமான வேகங்களை சில மனிதர்கள் மீது இவ்வுலகில் வடிவமைக்கிறான், சில மனிதரிடம் அசாதாரணமான திறமைகளை உருவாக்குகிறான், அவர்களிடம் அளக்க முடியாத வேகங்களை நிலை நிறுத்துகிறான், என்று அவனைப்பற்றிய பல விபரங்களை பைபிளிலுள்ள சிறு சிறு கதைத் துண்டங்கள் மூலமாக தெரிவு செய்து எடுத்து எங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினோம்.
பிசாசின் இயல்பைப் பற்றி நாங்கள் சிந்தித்தபோது, அவன் மோட்சலோகத்தில் இருந்த தரம், அதற்குப் பிறகு அவன் மனத்தில் எழுந்த தீவிரம், அவன் ஏவாளை ஏமாற்ற பாம்பை தன் கருவியாக பாவித்து அதன் மூலமாய் அவளோடு பேசி அவளின் மன அடுக்கைப் பிரித்து, அவளின் இருதயத்தில் தன் படத்தை வரைந்து, அவளுடன் தன் அதிகாரத்தை நிலைநாட்டியது குறித்து கதைத்தோம்.
இதற்கெல்லாம் GSaufř எங்களுக்கு பைபிள் புத்தகமாயிருந்தது. இன்று பிசாசுதான் உலகின் படிமமாக இருந்து வருகிறான் என்று சொன்னார் இதோமஸ். ஆணவம் பிடித்து, தன் படைப்பாளரையே எதிர்த்த இந்தப் பிசாசானவனை (மோட்சலோகத்தில் கேரூபீன்கள்,

Page 116
218 அம்மாவுக்குத் தாலி
வானதூதர்கள் போன்ற ஆவியுடலையுடைய சம்மனசுகளை கடவுள் படைத்தார் என்றும், அவர்களிலே ஒரு தேவதூதன் தன் ஆணவத்தின் செயலால் பின்பு பிசா சானவனாக மாறினான் என்றும் பைபிள் குறிப்பிடுகிறது.) புரிந்து கொள்ளுகிற முறை சிந்திக்கும் போது ஒருவரை களைப் படையச் செய்வதற்காகவும் அந்தச் சிந்தனையில், ஆழமாகச் செல்லும் ஆணிவேர், கிளை பிரிந்து பின்தங்கி இரட்டை நிலை அடைந்து தடுமாறி விடுவதாகவும் அவர் சொன்னார்.
நான் மெளனமாக இருந்தேன். “ஏன் மெளனம்.?” w “ஒன்றுமில்லை! நீங்கள் என்னைவிட ஆன்மீகத் துறையில் முன்னேறியவர், பிசாசின் இயங்கு முறை குறித்தும், அவன் மோட்சத்திலிருந்தபோது கடவுளுக்கு எதிராகச் செய்த கலகங்கள் பற்றியும், ஆசை தீவிரமாகி அவன் தன்னைத்தானே பிசாசாக மாற்றிக்கொண்டது பற்றியும், நீங்கள் சொல்லும் விதம் எப்படி இருக்கிறது என்று எனக்கு கேட்கவும் ஆசையாக இருக்கிறது” என்றேன் நான். -
“அதைப்பற்றி நான் உங்களுக்கு கொஞ்சம் விபரமாகச் சொல்கிறேன்’ என்றார் அவர்.
“முதலில் மூடிக்கிடக்கின்ற இந்த அறை ஜன்னல்களை யெல்லாம் திறந்து வையுங்கள். சுழலுகின்ற இந்த மின் விசிறியை நிறுத்துங்கள்’ என்று அவர் என்னிடம் வேண்டு தல் விடுத்தார். நான் உடனே நாற்காலியிலிருந்து எழுந்து “உங்கள் விருப்பப்படி செய்து விடுகிறேன்’ எனக் கூறிவிட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துச் சுழலும் மின் விசிறியையும் நிறுத்தினேன்.
கறுத்த ஆனை, வண்டொன்று நான் ஜன்னல்களைத் திறந்த போது அறைக்குள்ளே பறந்து வந்தது. அது சுவர்களில்

நீ.பி.அருளானந்தம் 219
மோதி சுழன்றடித்தது. வெளியே போகும் வழி தெரியாமல் தவித்த வண்டை அவர் பார்த்தவாறு இருந்தார். அதை வெளியே விரட்டிவிட, அல்லது அறைக்குள்ளாக அதை அடித்துக் கொல்லச் சொல்லுவாரோ?-என்று நான் நினைத்தேன்.
ஆனால் நான் நினைத்தது போல் அவர் ஒன்றும் அதைப் பற்றி என்னிடம் சொல்ல முயலவில்லை, அவர் சிறிது நேரம் தன் பாட்டிற்கு யோசனையுடன் இருந்தார். நான் அதிலே இருந்தபடி ஜன்னலுக்கு ஊடாகத் தெரிந்த வான்வெளியைப் பார்த்தேன். என் பார்வையைச் சற்றுக்கீழே பதித்து தூரத்தில் தெரிந்த பெருவேம்பு மரத்தின் இலைச் சடைவையும் பார்த்தேன்.
அவ்வேளை உலகமே சிறைப்பட்டிருப்பது போன்றதான ஒரு காட்சி, ஜன்னல் கம்பிகள் ஊடாக எனக்குத் தெரிவது போலிருந்தது.
“பிசாசுதான் இந்த உலகத்தை ஆள்கிறான்’ என்று அந்தக் காட்சியின் மூலமாக நான் எனக்குள் சிந்தித்துப் பார்த்துக் கொண்டேன்.
இதோமஸ் தன் மெளனத்தைக் கலைத்துவிட்டு பேசத் தொடங்கினார்.
கடவுள் படைத்த ஏதேன் தோட்டத்தில் தோன்றிய ஓர் எதிரியைப் பற்றி நான் உங்களுக்கு இப்போது சொல்கிறேன்! அவன் தான் சர்ப்பம் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய், என்று பிறகு கடவுளாலே சபிக்கப் பட்டது அந்தப் பாம்பு அந்த அற்பப் பிராணியை ஒரு கருவி யாகப் பாவித்து ஏவாளுடன் பேசிய பசாசானவன்

Page 117
ZZ , eriharajšğ yra
ஒவியர்கள் சிலர் தங்கள் கற்பனையாலே தீட்டிவைத்திருப் பதுபோல அவன் வெறுமனே கறுத்த ஒரு உருவமல்ல! அவன் ஒரு அழகான சம்மனசு, அவன் உலகனைத்தையும் மோசம் போக்குகின்ற பிசாசாக பிறகு மனம் மாறினான். அவன் ஆவி உடலுடன் திரியும் சாத்தானாகவும், பழைய பாம்பு என்றும் பைபிள் எழுத்தாளர்களால் வர்ணிக்கப் பட்டான்.
அவன் தன் குரலை மாற்றிப் பேசுவது போல ஏவாளிடம் Gusf.goTITait.
“நீங்கள் தோட்டத்திலுள்ள சகலவிருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம். என்று தேவன் சொன்னது உண்டோ’ என்று அவன் அவளைக் கேட்டான்.
அதற்கு ஏவாள் என்ன பதில் சொல்கிறாள் பாருங்கள்? அவள் கடவுள் பக்கம்தான் அவ்வேளை இருந்தாள். கடவுள் கொடுத்த கட்டளையை அவள் மீற முதல் அவள் ஒரு பூரணமானவளாக இருந்தாள். அப்படிப்பட்டவள் கொடுத்த பதில்
“நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனியைப் புசிக்கலாம். ஆனாலும் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன் நீங்கள் செத்துப் போகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத்தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்று சொன்னாள்.
“ஏன் அவர்களுக்கு இப்படியான ஒரு சட்டம்.? அது எதற் காகவென்று எனக்குத் தெளிவாக விளங்கவில்லை?” என்று நான் இடையில் அவரிடம் ஒரு குறுக்குக் கேள்விகேட்டேன். "கீழ்ப்படிதல். அதுதான் மனிதனைப் படைத்த கடவுளுக்கு மதிப்பு கொடுத்தலாயிருக்கிறது" என்று அவர் எனக்கு விளக்கமளித்தார்.

நீ.பி.அருளானந்தம் 221
“ஒ. அதுசரி! அதற்குப் பிறகு அந்தப் பிசாசு ஏவாளைப் பார்த்து, நீங்கள் இதனால் சாவதே சாவதில்லை! நீங்கள் இதைப் புசிக்கின்ற நாளிலே உங்கள் மனக் கண்கள் நன்றாகத் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை எது, தீமை எது என்பதை அறிந்து, அந்தத் தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும், அந்தத்தேவன் அறிவார், என அவளுக்கு ஒரு பொய் யைச் சொல்லி ஏமாற்றினான் என்பது எனக்கும் பைபிளைப் படித்ததிலிருந்து, நினைவிருக்கிறது என்றேன் நான்.
“நீங்கள் சொல்லுகிற அப்படியாகத்தான். ஆனால் இதிலே அவன் கொண்டுள்ள அந்தத் தந்திரமென்பது என்ன? எப்படியாக இதை ஏவாளுக்கு விளங்கவைத்து அவளின் மன நம்பிக்கையை உடைக்கலாம் என்பதுதானே அவன் திட்டம். தடை செய்யப்பட்ட அந்தக் கனியை அவள் சாப்பிடுவதன் மூலம் தனக்கு நன்மை கிடைப்பதாக ஏவாள் நம்ப வேண்டும் அதைத்தான் சாத்தான் விரும்பினான். நீ ஏன் கடவுள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு எதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்? நல்லது எது, கெட்டது எது என்பதைத் தீர்மானிப்பதற்கும், இஷ்டப்படி நீ நடந்து கொள்வதற்கும் உனக்கு பூரண உரிமை இருக்கிறது தானே? என்று அவன் மறைமுகமாகத் தெரிவித்தான். அந்தக் கணியைச் சாப்பிடுவதால் வரும் விளைவுகளைப் பற்றிக் கடவுள் உனக்குப் பொய் சொல்லியிருக்கிறார். என்று அவன் கடவுள் மேல் குற்றமும் சாட்டினான்.
“அது எத்தகைய பெரிய பொய் உலகிலேயே முதன் முதல் பொய் கூறியவன் இந்தச் சாத்தான்தானே?”
“ஓ, நிச்சயமாக அதுதான் பெரிய உண்மை" “பாருங்கள் இந்தச் சாத்தான் எங்கள் மனித குலத்துக்குச் செய்த கொடுமையை.? அவனால் தானே மனிதர்களான

Page 118
2ᎭᏃ2 அம்மாவுக்குத் தாலி
எங்களுக்கு இந்த மரணமென்பதே வந்தது! இப்படியான அழிவுக்குக் காரணமான அந்தச் சாத்தானை அது ஒரு பெயர் சிக்கலான ஒரு இயக்கம் என்பதைத்தவிர, வேறு ஒன்றும் இல்லை என்று சிலர் கூறுகிறார்களே? அவர்களுக்கெல்லாம் தெரியவில்லை. இப்போது உலகில் நடக்கின்ற கெடுதல் களுக்கெல்லாம் இந்தச் சாத்தான் என்பவனே காரணமா யிருக்கிறானென்று.”
நான் சொல்லவும் இதோமஸ் அடக்கமாகவும், ஆனாலும் கொஞ்சம் அழுத்தமுடன் இருக்கின்ற வெளிப்பாட்டில் சிரித்தார். (அவரின் முகம் சிரிக்கும் தருணத்தில் சாதுவாய்ச் சிவக்கவும் செய்தது)
“நீங்கள் நான் சொல்லி முடிவு பெறாத பைபிளின தொடக்கம் பிறப்பு என்று சொல்லப்படுகிற ஆதியாகமம் அதிகாரத்தை விட்டு விட்டு இறுதி முடிவுகளைச் சொல்லும் தீர்க்கதரிசன வெளிப்படுத்தல் அதிகாரத்துக்கு போய்விட் டீர்கள்’ என்றார் அவர்
“சாரி. அது என் தவறுதான்! உணர்ச்சி வசப்பட்டதில் உங்கள் கதைச் சங்கலித் தொடரை இடையில் அறுத்து 6ճlւ* - டாற்போலச் செய்து விட்டேன். நீங்கள் சொன்ன் கதையில் பிசாசின் சொல் கேட்டு ஏவாள் நம்பினாள் என்கிறீர்கள்.” நான் சரியாக அதைக் கூறிவிடவும், அவருக்கு முகம் மலர்ந்தது.
“அதனாலே ஏவாள், முன்பு கடவுள் அவளுக்குச் சொன்ன வார்த்தையை விடவும், இப்போது இந்தப் பிசாசானவனின் வார்த்தைகளை உண்மையென்று நம்பினாள். அந்த விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பறித்து அதில் கொஞ்சத்தைச் சாப்பிட்டாள். பிறகு தன் கணவருக்கு (ஆதாமுக்கு) மிகுதியைச் சாப்பிடக் கொடுத்தாள். ஏவாள்

நீ.பி.அருளானந்தம் 223
கொடுத்ததை வாங்கி ஆதாமும் அவளின் மேலுள்ள விருப்பத்தோடே சாப்பிட்டான். அவர்கள் ஏதோ தெரியாத்தனமாக அதைச் செய்து விடவில்லை. செய்யக் கூடாது என்று அவர்களுக்கு கடவுள் சொல்லியதைதான், தெரிந்து கொண்டும் அவர்கள் பிறகு செய்தார்கள். அந்த கனியை அவர்கள் சாப்பிட்டதால் நியாயமான எளிதான ஒரு கட்டளைக்கு வேண்டுமென்றே அவர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள். கடவுளை அவர்கள் அதனால் அவமதித் தார்கள்! அது பெரிய மாபெரும் குற்றம்"
அவர் இவ்விதம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதைப் பார்க்க எனக்கும் பயமாக இருந்தது. நான் அவர் சொல்வதை கடவுள் எனக்குச் சொல்வதாக நினைத்து கீழ்ப்படிந்து நடப்பது போன்ற மன உணர்வுகளால் என் தலையையும் கண்களையும் தாழ்த்தி வ்ைத்துக் கொண்டிருந்தேன். பிறகு தலையை நிமிர்த்தி அவரைப் பயபக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
இதோமஸ் கதையைத் தொடர்ந்தார், நான் இனிமேல் அவர் சொல்லும் விஷயங்களை மிகவும் கரிசனையோடே கேட்கும் பாவனையில் இருந்து கொண்டிருந்தேன்.
“ஆதியாகமம் விசித்திர ரகசியமான அதிகாரமல்ல! ஏதோன் தோட்டத்தில் நடந்த பெருங்குழப்பத்தை சிலர் நம்பிக்கொள்வது கொஞ்சம் கடினம்தான்! எலிப்பொறிக் குள் தன்னை வழங்கினது மாதிரி மனிதனே தனக்குரிய சாவைத் தேடிக் கொண்டான். மனித மரணத்துக்கெல்லாம் கடவுள் காரணமல்ல. மனிதன்தான் காரணம்."
நான் குறுக்கிட்டு ஒழுங்காக நீங்கள் கதையைச் சொல்லுங்கள் என்றேன். என் குரலிலே எப்படி அந்தக் கடுமை வந்து சேர்ந்தது என்று எனக்கே புரியவில்லை. இதோமஸ்

Page 119
224 அம்மாவுக்குத் தாலி
இப்போது எனக்குக் கீழ்ப்படிந்தவராக தலையை ஆட்டிக் காண்பித்தார்.
“கீழ்ப்படியாமல் போன ஆதாமையும் ஏவாளையும் இனி நித்திய காலமாக வாழவைக்க கடவுளுக்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. அவர் சொல்லியிருந்தபடியே அவர்கள் கொஞ்சக் காலம் வாழ்ந்து பிறகு இறந்து போனார்கள். பாவத்துக்குத் தண்டனையாய் அவர்களைச் சாவு ஜீரணித்துவிட்டது.”
“அதனாலே அவர்கள் வழியில் எங்களுக்கும் இப்போ தொடர்ந்ததாய் சாவு என்பது வந்தது. ஆதித் தந்தை தாய் செய்த குற்றத்திற்காக நாங்களும் கடவுள் தந்த நித்திய ஜீவனாய் இந்த பூமியில் சிவிக்க முடியாமல் போய்ச் சாகிறோம்’ என்று நானும் அவர் சொல்லிக் கொண்டு வந்த கதையைத் தொடர்ந்து சொன்னேன்.
“ஆம் நாங்கள் எல்லோரும் சாவதற்குக் காரணமானவன் அந்தப் பிசாசானவன்தான். கீழ்ப்படியாமல் போன ஆதா மிடம் நேரடிக் கேள்வி கேட்ட பிறகு கடவுள் சொன்ன விஷயத்திலிருந்து இது எங்களுக்குத் தெரிகிறது. கடவுள் என்ன சொன்னார் என்று பாருங்கள்! அவர் இவ்வாறுதான் கூறினார். நீயூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால் நீயூமிக்குத் திரும்புவாய் (ஆதாம் என்பனை கடவுள் மண்ணால் உண் டாக்கினார்) நீ மண்ணாய் இருக்கிறாய் - மண்ணுக்குத்தான் திரும்புவாய்”
“அவனை உருவாக்குவதற்கு பயன்பட்ட மண் எப்படி உயிரற்றதாக இருக்கிறதோ, அப்படியே அவனும் உயிரற்ற தாக ஆகிவிடுவான் என்பதைத்தானே கடவுள் அர்த்தப் படுத்தினார்.’’ இதோமஸ் நான் சொன்ன விளக்கத்தைக் கேட்டு கொஞ்சம் பொறாமை வெளிப்பட என்னைப்

6.பி.அருளானந்தம் 225
பார்த்தார். எனக்குப் பெருமையாக இருந்தது. இதற்குப் பிறகு, "ஆதியாகமம் கதை முடிந்தது’ என்றார் இதோமஸ்.
இந்தப் பிசாசைப் பற்றி இன்னும் நீங்கள் எனக்கு நிறையச் சொல்ல வேண்டி இருக்கிறதே, இன்று இந்த உலகமும் பிரபஞ்சமும் பிசாசின் எல்லையற்ற அதிகார வரம்புக்குள் வந்திருக்கும் ஒரு பயங்கரமான ரகசியத்தைக் கூறுங்கள்’ என்று அவரைக் கேட்டேன் நான்.
"ஆமாம், பிசாசு இந்த உலகில் இப்போது மனிதனோடே நெருக்கமான உறவை வைத்திருக்கிறான். மோட்சத்திலிருந்து பூமிக்கு கடவுளின் குமாரனால் விரட்டப்பட்ட வலுசர்ப்ப மும் (பிசாசு) அவனது சகாக்களும் பூமியை இப்போது இருந்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களுக்கு நெருப்பு வைக்கும் கொடூரத் தனத்தில் இருக் கிறார்கள். சாத்தானும் அவனுடன் ஓரினப்பட்டுக் கொண்ட பேய்களும் மோட்சத்திலிருந்து தள்ளப் பட்டதால் கடவுளு டைய உண்மையான ஆவிகுமாரர்கள் மகிழ்ந்து களி கூர்கிறார்கள். ஆனால் அதே மகிழ்ச்சி இங்கே மனிதர்களுக்கு இல்லை. அந்தப் பிசாசானவன் கடவுள் தனக்குக் கொடுத்த தில் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது. அதற்குப் பிறகு தன்னைப் படைத்த யெகோவா தேவனாலேதான் அழிக்கப் பட்டுவிடுவேன் என்பதை அறிந்து மிகவும் கோபத் தோடு மனிதர்களான எங்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறான். இந்தப் பிசாசானவன் பூமியிலே ஜனத்துக்கு விரோதமாய் ஜனத்தையும், இராஜ்ஜியத்துக்கு 'விரோதமாக இராஜ்ஜியத்தையும் எழுப்புகிறான். பஞ்சம் கொள்ளை நோய் என்று எல்லாவற்றையும் பரவ விட்டிருக்கிறான்!" y
“இந்தக் காலத்தில் விருத்தியாகிக் கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படியெல்லாம் மாறி விட்டார்கள் பாருங்கள்,

Page 120
226 அம்மாவுக்குத் தாலி
பணப் பிரியர்களாகவும், தாய் தகப்பன் மார்களுக்குக் கீழ்ப் படியாதவர்களாகவும், நன்றியில்லாதவர்காளகவும், சுபாவ அன்பில்லாதவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர் களாகவும், கொடூரமுள்ளவர்களாகவும், தேவப் பிரியராக இல்லாமல் சுகபோகப் பிரியர்களாகவும், தேவபக்தியின் வேஷத்தைப் போட்டுக் கொண்டு ஏமாற்றுபவர்களாகவும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.?”
எனக்கு இவ்வளவற்றையும் கடகடவென்று சொல்லி முடிக்க, பெரிதாக மூச்சு இறைத்தது.
“நீங்கள் வெட்டி ஒட்டப்பட்டது போல் சொன்ன இவ்வளவு வசனமும் பைபிளிலே சொல்லப்பட்டது. உங்களது அல்ல.” என்று நான் சொன்னவைகளைக் கேட்டு விட்டு இதோமஸ் சொன்னார். நான் அவர் சொன்னதை ஒத்துக் கொண்டது போல தலையை ஆட்டினேன்.
அவர் பிறகு சொன்னார்.
“இந்த விதமாகவெல்லாம் மனிதர்களின் மனங்களும் குணங்களும் செய்கைகளும் மாறியதற்குக் காரணம் பிசாசுதான்! அந்தப் பிசாசானவன் துன்மார்க்கர்களை புல்லைப் போல் செழித்துத் தழைக்கச் செய்து கொண் டிருக்கிறான். சில பிரபலமான மனிதர்களுக்கும் பின்னா லிருந்து உலகிலுள்ள மனிதர்களை, கடவுளை விட்டுவிட்டு தன் பின்னாலே பின்பற்றி வரச் செய்கிறான். அந்தப் பிரபலங்களுக்குப் பின்னாலே இருந்து அவர்களை செயல்பட வைப்பவன் இந்த வலுசர்ப்பமான சாத்தான் என்பவன்தான்! அவர்களை இயக்கிக் கொண்டிருப்பவன் இந்தச் சாத்தான் என்பவன்தான்! இதை யாவரும் அறிந்து கொள்வதுதான் ஞானமான செயல்"

நீ.பி.அருளானந்தம் 227
“பிரபலமான மனிதர்கள் என்கிறீர்களே! அப்படி நீங்கள் பைபிளின் மூலம் இப்போது வாழும் எந்த விதமான மனிதர்களை குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள்?’’
“பிசாசுபோல மக்களை இன்று பொய்சொல்லி ஏமாற்று கிற எவராக இருந்தாலும், அவர்களின் பின்னாலிருந்து இந்தப் பொய்க்குப் பிதாவென்று சொல்லப்படுகிற பிசாசுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது உங்க ளுக்கு இவ்வளவு காலம் சென்றும் சரியாகத் தெரியவில்லையா? பைபிள் சொல்லுகிற அந்த சத்தியமும் முழுமையாக இன்னும் உங்களுக்குத் தெரியவில்லை யாக்கும்.?’ ----
இதோமஸ் என்னைப் பார்த்துக் குறைப்பட்டுக் கொண்ட அளவில் இதைச் சொன்னார். எனக்கு அதனால் கொஞ்சம் கவலையாகவும் மனக்கஷ்டமாகவும் இருந்தது. ஆனாலும் என்னை சுதாரித்துக் கொண்டு நான் இதோமஸ்ஸிற்குச் சொன்னேன்.
“எனக்கும் இவைகள் ஒரளவு தெரியும் என்றாலும், பிசாசைப்பற்றித் தெரிந்து கொள்ள அதிகமாக பயிற்சியை மேற்கொண்டு வரும் உங்களிடமும் இதைப்பற்றிக் கேட்டு அறிந்து கொள்வதற்கு என்னால் உங்களை இப்படியெல் லாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை’
கொஞ்சம் நான் இவ்வாறுசொல்லி மழுப்பினேன்.
“அது ஒன்றும் பரவாயில்லை! (அவரின் முகம் தெளிந்தது, பிறகு அவர் சொன்னார்!) பிரபலமான மனிதர்கள் என்று நான் முன்னம் உங்களுக்குச் சொல்லி வந்தேன். அந்தப் பிரபலங்களை யார் என்று நீங்கள் கணிக்கிறீர்கள்?’’

Page 121
228 அம்மாவுக்குத் தாலி
அவர் என்னைப்பார்த்துக் கேள்வி கேட்டார். அவரது கண்கள் சிரித்தது போல கூரான நட்சத்திர ஒளியையும் சேர்த்து வெளிவிட்டது. நான் அவரது கண்களைப் பார்த் தேன். என் மூளைக்குள் மின்சாரம் பாய்ந்தது போல அப் போது இருந்தது. நான் பிறகு மன உறுதியுடன் சொன்னேன்.
“பிரபலங்கள் என்றால் இன்று பெரிய ஒரு சினிமா நடிகன் நடிகைகளைச் சொல்லலாம்!”
“சரி” இதோமஸ் தலையை ஆட்டினார்.
“பொதுவாக இந்த அரசியலிலுள்ள அரசியல்வாதிக ளெல்லாம்!"
“அதுவும் ர்ொம்பச் சரி!"
“மியூசிக் பாட்டு என்று பேயாட்டம் போட வைக் கிறார்களே.” அவர் சிரித்துக் கொண்டு தலையாட்டினார்.
“நாடகங்கள், சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள். ஏன் சொல்லப் போனால் இந்த தொலைக் காட்சிப்பெட்டியே சாத்தான் உறங்கும் சவப்பெட்டிதான்!"
நான் சொல்லி முடிய அவர் வேகமாக தன் தலையை ஆட்டிக் காண்பித்தார். இதன் பிறகு அவரே மேலும் சொல்லத் தொடங்கினார்.
“இன்னும் மனிதனை மனிதன் கொல்லுகிற கொலைத் தொழிலை செய்து கொண்டிருக்கும் கொலைகாரர்கள், ஆவி உலகத்தைத் தொடர்புடைய பழக்கவழக்கங்கள் உடையவர்கள், குறிசொல்பவர்கள். மேலும் மூடப்பழக்க வழக்கங்கள், மூடச் சிந்தனைகளைப் பரப்புகிறார்களே அவர்களுக்குப் பின்னால் இருந்தெல்லாம் இந்த வலுசர்ப்பம் என்கிற அந்தச் சாத்தான் என்பவன்தான். நிழலாடியது

நீ.பி.அருளானந்தம் 229
மாதிரி இருந்து அவர்களை எல்லாவழியிலும் இயக்கிக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் பாருங்கள் முழுவதும் இப்போது பிசாசின் கையிலிருந்தபடிதான் சுழன்றபடி இருக்கிறது. அதனால்தான் எம்மைச் சாவிலிருந்து மீட்க இந்த உலகத்துக்கு வந்த இயேசுவைக்கூட அது ஏமாற்றி தன் வழிக்கு இழுக்க முனைந்தது.
இதற்கெல்லாம் முடிவு பிசாசின் கையிலிருந்து இயங்கும் இந்தப் பூமியை கடவுள் ஒரு நாள் பாரமெடுக்கும் போதுதான் தீர்வு வரும். மனிதனை மனிதன் ஆள வெளிக்கிட்டால் அதனால் எப்போதுமே பிரச்சினைகள் தீருவதில்லை! இந்த உலகத்தைப் படைத்த அந்தக் கடவுளின் ஆட்சியிலே தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதோர் நிம்மதி சமாதானம் வரும். இதுதான் பைபிள் கூறுகிற சத்தியம். இதுதான் உண்மை"
சொல்லிவிட்டு இ தோமஸ், தன் விழிகளை மெல்ல மூடியபடி மெளனமாய் இருந்தார். நானும் அவரைப்போல் கண்களை மூடிப்பார்த்தேன். நினைவெல்லாம் அவ்வேளை எனக்கு ஏதேன் பூ வனத்திலிருந்தது. ஏதேன் என்கிற தோட்டம் இப்பொழுது இல்லை. அந்த தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் கடவுளால் எப்போதோ விரட்டப்பட்டு விட்டார்கள் என்று பைபிள் புத்தகத்திலிருப்பதால், அந்தத் தோட்டத்தை இப்போது கற்பனை பண்ணிப்பார்க்கவும் ஆர்வம் எனக்கு இல்லாமல் மனம் சோர்ந்தது. ஆனாலும் இரு சம்மனசுகள் எரிவாளுடன் அந்த ஏதேன் தோட்டத்தில் காவல் நிற்கும் காட்சி சூரிய ஒளி போன்ற ஒளியுடன் என் சிந்தையில் நின்று சுழன்றது. அந்தச் சம்மனசுகள் வைத்திருந்த வாளின் பளிச்சிடுதலை மனக்கண்ணால் பார்த்ததோடு நான் கண்விழித்துப் பார்த்தேன்.

Page 122
230 அம்மாவுக்குத் தாலி
“இனி எங்கள் உலக அலுவல்களையும் போய்ப் பார்க்க வேண்டி இருக்கிறது; நேரமாகிறது” என்றார் அவர்.
நான் அவருக்கு நன்றியைக் கூறி என்வீட்டுப் படலையடி மட்டும் அவருடன் கூடவே சென்று அவரை வழி அனுப்பிவிட்டு திரும்பியும் என் அறைக்கு வந்தேன்.
நான் முன்னம் இருந்த கதிரையில் போய் இருந்தேன். எனக்கு முன்னால் இதோமஸ் இருந்த நாற்காலி காலியாய் இருப்பதைப் பார்க்க என்னவோ என் கூடவே இருந்த ஒரு பொருள் தொலைந்தது போல இழப்பாயிருந்தது. ஏதோ காற்றைப்போல என் உடல் இப்போது பாரம் குறைந்ததாய் வந்துவிட்டதாக நான் உணர்ந்தேன். 'പ' '
எனக்குப் பின்னாலிருந்து, "இர்ம்ம்ம்.’’ என்றதொரு சப்தம் உடனே நான் கொஞ்சம் கொஞ்சமாக என் தலையைத் திரும்பி சப்தம் வந்த பக்கம் பார்த்தேன் இதுவரையில் எங்கோ ஒரு மூலையில் சுவரில் அடிபட்டுப் போய், சவம் போல் கிடந்த கறுத்த வண்டு, சுறுக்கென்று மேலாலே பறந்து வந்தது. அந்த ஆனைவண்டை நான் எரிச்சலோடு பார்த்தேன்.
அது இம்முறை எந்த இடைஞ்சலையும் சந்திக்காது ஜன்னல்கம்பிக்குள்ளாலே வெளியே பறந்தது. நான் உடனே எழுந்து போய் ஜன்னல்களைச் சாத்தினேன். மின்சார விசிறியை சுழல விட்டேன். மின்சார விசிறி சூடான காற்றை என்மேலே கூவல் சத்தத்தோடு விசிறிக் கொள்ளத் தொடங்கியது.
தாமரை (ஏப்ரல 2008)


Page 123
பெயர் நீக்கிலாப்பிள்ளையில்
அருளானந்தம் பிறந்த இடம் :வவுனியா
சூசைப்பிள்ளையார்கு படைப்புஆக்கங்கள் 1. நூறு சிறுகதைகளுக்கு மேல் எழு றேன். (இதுவரை 6 சிறுகதைத் தொகுப் 2. நீண்ட நாவல் ஒன்றையும் எழு நிறங்கள்).
3. 150 கவிதைகளை எழுதியிருக் நூல்வடிவில் வெளிவரவிருக்கிறது)
4.6 சமூக சீர்திருத்த மேடை நாடகங் மணித்தியாயம் நடிக்கக் கூடிய நாடக பாத்திரமேற்று நானே நடித்தேன். - இயச் திறந்த வெளி அரங்கிலும் யாழ்வீரசிங்க புளியங்குளம், ஓமநதை, வவுனியா ஆகி பட்டுள்ளது.
5. இருநூறு கட்டுரைகளை வீரே பத்திரிகையில் எழுதியிருக்கிறேன்.
6. தொலைக்காட்சிநாடகத்திலும் நடி 7. யோகாசனம், தியானம் போன்ற பயி கற்பித்தும் கொடுக்கிறேன்.
பெற்ற விருதுகள்: 1. 2006ஆம் ஆண்டில் கறுப்பு ஞாயிறு பூரீலங்கா அரசு சாஹித்திய விருதுகிடை 2.2007ல் வாழ்க்கையின் நிறங்க சாஹித்திய விருதுகிடைத்தது.இந்நாவலு இலக்கியப் பரிசும் கிடைத்தது.
3. இலங்கையிலும், அகில உலக ரீதி கதைப் போட்டிகளிலே முதற் பரிசு ஈற பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.
எனது முதல் சிறுகதை இன்றைக்கு வீரகேசரி பத்திரிகையில் வெளியானது.

தி யிருக்கி கள் வெளியாயாகியிருக்கிறது). தியிருக்கிறேன் (வாழ்க்கையின்
கிறேன் (2008 இல் 7ம் மாதம்
களை எழுதியுள்ளேன். (இரண்டு ம்) இந்த நாடகங்களில் முக்கிய கினேன். இந்த நாடகங்கள் யாழ் ம்மண்டபத்திலும், முல்லைத்தீவு. ய இடங்களிலும் மேடையேற்றப்
கசரி, தினகரன், தினக்குரல்
த்திருக்கிறேன். ற்சிகளை இலவசமாக பிறருக்கு
சிறுகதைத் தொகுதி நூலுக்கு ததது.
நாவலுக்கு பூரீ லங்கா அரசு க்கு அதேயாண்டில் வடமாகாண
பாகவும் நடத்தப்பெற்ற பல சிறு ாக எனது சிறுகதைகளும் பல
நாற்பது வருடங்களின் முன்பு னுபவம் புதிது என்ற சிறுகதை).