கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடந்து போகுதல்

Page 1


Page 2


Page 3

கவிதைத் தொகுதி
கடந்து போகுதல்
நீ.பி.அருளானந்தம்

Page 4
தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் - பட்டியலாக்க வெளியீட்டுப் பிரிவு
அருளானந்தம். நீ.பி கடந்து போகுதல் : கவிதை / நீபி.அருளானந்தம் கொழும்பு : திருமகள் பதிப்பகம், 2010, ப.230 ச.மீ.21
ISBN 978-955-1055-09-7 6il6Ꮱ6Ꭰ 500.00
i 22டிவி 894,8111 ii தலைப்பு
iii. கவிதை iv. தமிழ்
ISBN 978-955-1055-09-7

நூற்குறிப்பு கடந்து போகுதல்
உரிமை:- முதற் பதிப்பு
d (5LIT
KADANTHUPOOKUTHAL SUBJECT:
POEM
AUTHOR: N.PARULANANTHAM
COPYRIGHT
AUTHOR
TYPESETTING: MSS.S.SHATHIYASOTHY (WELLAWATHA) FIRSTEDITION: DECEMBER - 2010 PUBLISHED BY: THIRUMAGAL PATHIPPAGAM NO:7, LILLIYANAVENUE MOUNTILAVINA. TP:- 4967027
2731887
நீ.பி.அருளானந்தம்
மார்கழி 2010
: 500/=
66)5: கவிதைத் தொகுதி ஆசிரியர்: நீ.பி.அருளானந்தம் கணனி தட்டச்சமைப்பு செல்வி.சி.சத்தியசோதி வெள்ளவத்தை ஒவியம் (கணனி) செல்வன்.அ-ஜெரிஷன் செல்வி.சி.சத்தியசோதி பதிப்பு: திருமகள் பதிப்பகம் இல.7, லில்லியன் அவென்யூ, கல்கிசை, • தொ.பே: 4967027 2731887

Page 5
என் இவ்வினிய கவிதை நூலை என் அம்மாவினது நினைவில் அவருக்குச் சமர்ப்பிதமாகச் செய்துள்ளேன்.
iv

கடந்து போகுதல் - கடந்து போக முடிகிறதா? -
அருளானந்தத்தின் இக்கவிதைத் தொகுப்பு கிளறிவிட்ட சிந்திப்புக்கள்.
தொடர்ந்தும் இவை புதுக் கவிதைதான் என்று மிதந்து கூற வேண்டாத அளவுக்கு புதுக் கவிதைகளின் பண்புகளே, இன்று தமிழின் கவித்துவ இயல்புகளாக நிலையூன்றி விட்டன.
இப்(புது) கவிதை மரபில் சொற்களின் பயன்பாடு மிக மிக அசாதாரணமானதாகும். சொல்லொடு பொருளிலும் பார்க்க அச்சொல்/பதம் கிளப்பி விடும் மன அதிர்வு அலைகளே முக்கியமாகின்றன.
சொல், பதம், கடந்த சோதி - தமிழ்ப் பாரம் பரியத்தில் இத்தொடர் கடவுளைக் குறிப்பதாகும். உள்ளத்தையே கடந்து நிற்பவனை சொற்களாலான பதங்கள் கொண்டு அளந்து விட முடியாதுதான். ஆனால் சொற்கள் மூலமாகவே சிந்திப்பை, சிந்திப்பின் மிகசிப்புக்களை அவற்றின் ஆரோகண அவரோகணங் களை அறிந்து கொள்வதற்கு - சொல்தான் ஒரேயொரு வழி!
வெறும் சொற்கள் கருத்துத் தருவதில்லை. அவை பதமாகும் பொழுதே கருத்துத் தருகின்றன. அப்படி பெறப்படும் கருத்துக்கள் அந்த சொற்களை, பதங்களை மீறிக் கொண்டுபோய் மேலே நிற்கும். உண்மையில் கவிதை ரசிப்பு என்பது கவிஞன் தருவதோடு மாத்திரம் தொடங்கி முடிந்து விடுவதில்லை, கவிஞனோடு தொடங்கி அது வாசிக்கும் என்னில் முடிகிறது.
கவித்துவ பண்பு நிறைந்த இத்தகைய கவிதைகளை வாசிக்கும் பொழுதுதான் பதங்கள் ஏற்படுத்தும் மன அதிர்வுகள் முக்கியமாகின்றன. புதுக் கவிதை, சந்தத்திற்கு அப்பாலான மன அதிர்வுகளையே நம்பி இருப்பதனால் இக்கவிதைகள்
V

Page 6
கோயில்களிலுள்ள பெரிய மணி போன்றவையாகும். அதாவது மணி அடிக்கப்படும் ஒசையிலும் பார்க்க மணி அடித்து முடிந்ததும் பரந்து செல்கின்ற அதிர்வலைகளே முக்கியமாகின்றன.
கவிதைகளும் அப்படித்தான் வரிகளும் பதங்களும் மனத்துக்குள் அதிர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய கவிதை சந்தத்தை நம்பி இராததால் இந்த உணர்வலையின் மிக சிப்பே முக்கியமானதாகும்.
கம்பன் பற்றி காலம் சென்ற தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய கவிதையின் வரி ஒன்று எனக்கு நினைவு வருகிறது (சொற்கள்) ‘ஏணி பிடித்தேறி எங்கோ திரிந்து விட்டேன் இன்றைய கவிதைகள் எமது உள்ளங்களின் அதிர்வுகளுக்கான ஏணிப்படிகளே! கவிதை பற்றிய இந்த முன் குறிப்புடன் அருளானந்தத்தின் ‘கடந்து போகுதல்' - எனும் இக்கவிதைத் தொகுதிக்கு வர விரும்புகிறேன்.
'கடந்து போகுதல்' - என்னும் தலைப்பு மிக ஆழமானது! - மிக மிக ஆழமானது! அந்த அனுபவங்களை கடந்து செல்வதென்பது மிகவும் சிரமமானது என்பதும், அதே வேளை அதற்குள் அமிழ்ந்தி விடுவதென்பது அதிலும் பார்க்க அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமாதலால் அவற்றைக் கடந்து போகுதல் அவசியமென்பதும் அந்தத் தலையங்கத்துள் இலைமறை காயான பொருள் இருக்கின்றன என்றே கருதுகிறேன்.
இன்று இலங்கைத் தமிழர்களாகிய எமக்கு இருக்க வேண்டிய மன நிலையினை குறிப்பதாகவே கடந்து போன முப்பது வருடங்களாக நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எனக்குப் படுகின்றன. இந்த அனுபவங்கள் மிக மிக ஆழமானவை. எங்கள் மன ஒருமைப்பாட்டைத் தகர்ப்பவை.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் நாங்கள் எத்தனையோ பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. நாம் பட்ட இந்த கஷடங்கள் சிங்கள மக்களுக்குத் தெரியாது. சிங்கள மக்களுக்கு எங்களைப் பற்றிச் சொன்ன அரசியல் வாதிகள்
vi

எங்களை பிரிவினை வாதிகளென்றே ஒதுக்க முனைந்தனர். ஆனால் அந்த பிரிவினை வாதத்துக்கு சிங்கள அரசியல் தலைவர் களாலேயே உந்தித் தள்ளப்பட்டோம். மொழி சம அந்தஸ்து மறுக்கப்பட்டது மாத்திரமல்லாது நியாய பூர்வமான தமிழின் பயன்பாடு என்பதைக் கூட ஏற்க மறுத்தனர். சிங்கள பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்கள் எங்களை நாங்கள் பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரே இடத்துக்குச் செல்ல வைத்தது. அங்கும் கூட செல்வீச்சு எங்களுடைய கஷ்டங் களை சிங்கள மக்களுக்கு எங்களால் சொல்ல முடியாது போய் விட்டது. சொல்ல வேண்டியவர் கள் திரித்துக் கூறினார்கள். சிங்கள மக்களிடையேயும் சில விக்கிரமபாகு கருணாரத்தினாக்கள் இருக்கின்றனர் என்பதை நாங்களும் ஏற்க மறுத்தோம். இந்த மன ஒதுக்கற்பாடு எங்களை எவ்வாறு கவ்வி இருந்ததென்பதை அருளானந்தம் சொல்கிறார்;
ஒரு மலைப் பாம்பாய் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக என்னை விழுங்கிய டிடியே இருக்கிறது.
அருளானந்தம் தனது கவித்துவ நிலையில் நின்று கொண்டு 'கடந்து போகுதல்' - என்று இந்த அனுபவங்களை தொகுத்துக் கூற முடியாமல் இருக்கிறது. அத்தனை இழப்புக்கள் - அத்தனை சோகங்கள் - அருளானந்தம் தன்னுள்தான் தீட்சண்யமான கவி ஞனானபடியால் இவற்றைக் கடந்து செல்ல வேண்டுமென்பதை அழுத்தியே கூறுகிறார். ஆனால் அருளானந்தம் சித்திரிக்கும் சம்பவங்கள் அவைகளை எடுத்துக் கூறும் முறைமை எங்கள் மனதுகளைச் சுற்றி வியூகமிட்டு விடுகின்றன.
இந்த இடத்திலேதான் அருளானந்தத்தின் பின்புலம் அவரையும் அறியாமல் முன்னுக்கு வருகிறது. அவரது கிறிஸ்துவ பின்புலம் காரணமாக நம்மை மீண்டும் உயிருடன் எழுமாறு சொல்கிறார்.
அருளானந்தத்தின் வலு அவரது படிமப்பிரயோகமே. படிமம்
என்பது இமேஜஸ் ஆகும். உவமைகள் உருவங்களாகி (SIMLIES METAPHORES) இந்த மெட்டபஸ் தான் கவிதைக்கான
vii

Page 7
மொழியாகின்றன. கவிதை மொழியின் பிரதான அம்சம் விவரணமல்ல. அந்த விவரணம் ஏற்படுத்தும் மனக்கோலங்களே. அருளானந்தத்தின் கவிதைகளில் படிமங்கள் எங்களை அதிரவைக்கின்றன. ஏனெனில் அவை அடிப்படையில் நமது அனுபவங்களே. இதனாலே தான் நாம் அருளானந்தத்துடன் ஒன்றி விடுகின்றோம்.
இந்த தொகுதியிலே வருகிற கவிதைகளை வாசிக்கும் பொழுது; நாம் நமக்கு பட்ட காயங்கள் மீண்டும் புண்களாகி நம்மை துன்புறுத்துவதை உணருகின்றோம். துக்கம் நிகழ்ந்த வீட்டுக்கு செல்பவர்கள் தங்களையும் அறியாமல் தங்கள் துக்கங்களையும் இழப்புகளையும் மீள நினைப்பது போன்று நாமும் எமது கடந்த காலத்து அனுபவங்களினுள்ளே அமிழ்ந்தி விடுகிறோம்.
என்னைப் பொறுத்த வரையில் அருளானந்தத்தின் இக்கவிதைத் தொகுதியின் பலம், அது அவருக்கேற்பட்ட துக்கங்களை சொல்வது மாத்திரமல்லாமல், நமது துக்கங்களுக்குமான ஆற்றுப்படை ஆகிவிடுகின்றமையே ஆகும். அருளானந்தம் இதனை எவ்வாறு சாதிக்கிறார் என்பதே இலக்கிய விமர்சகர்களுக்கான வினாவாகும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு 'அவிழ்" தான் பதம் என்பார்கள். அருளானந்தத்தின் கவித்துவ ஆழத்தின் பதச் சோறுகளாக நான் பின்வருவனவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.
கீதம் பாடிக் கொண்டிருந்த கிளி குருவி மைனாக்களே இனி இங்கே வராதா? எல்லாம் முடிந்து விட்டது என்ற நினைப்பு இருந்தாலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே முகப்பாய் நிமிருகிறது எனக்கு
viii

இன்னும் அந்த யுத்தத்தின்
நினைவு! இன்னமும் ஊர்ந்துார்ந்து விரிந்து விரிந்து கவலையில் என்னை தலை முழுகச் செய்து கொண்டிருக்கும்
{5}29ک ஒரு மலைப் பாம்பாய் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக
என்னை விழுங்கிய படியே இருக்கிறது.
(மனத்தீயின் ஆவேசம்)
அருளானந்தம் படிமங்கள் மூலம் பேசுகிறார். ஒருவர் கவிஞனாக இருப்பதற்கு இந்த படிம மொழி - அவசியம். நாமும் அறிந்த அனுபவங்களுக்குள்ளே சென்று விடுகிறோம்.
நான் திரும்பி
அவர்களை பார்த்தபோது
செத்த இடத்துப் புற்கள்தான்
முளைத்துக் கிடந்தன.
(கொல்லும் கருவிகள்)
அருளானந்தம் நிலைமையை வெளிப்படுத்தும் முறைமையை உன்னிப்பாக நோக்க வேண்டும்.
உன் குடும்ப உறவுகளை எப்படி இதற்குள் விடுவித்து அழைத்து வரப் போகிறாய் என்று என்னை வினவுகிறது பொழுது பட்டுப் போனதில் வந்திட்ட இருட்டு
(முற்பகலில் இப்போது)

Page 8
இவற்றையெல்லாம் உங்களுக்காக நீங்கள் வாசியுங்கள். அப்பொழுதுதான் நாம் நமது சோக அனுபவங்களினூடேயும் இதமான தடவுகைகளை விரும்புகிறோம் என்பது தெளிவாகும்.
கடந்த முப்பத வருட காலத்து இலங்கைத் தமிழர் அரசியல் அனுபவம், தமிழர் வரலாற்றில் என்றுமே காணப்படாத ஒன்றாகும். குறிப்பிட்ட ஒரு இலட்சிய தாகம் மாத்திரமல்லாது மனித வாழ்வில் ஏற்பட்ட உளைச்சல்களும் சாவுகளும், சாக முடியாமல் துன்பம் படுவதும் என இத்துயரப் பாதை நீண்டு கொண்டே செல்லும். (அந்த முப்பது வருட காலத்தில் ஒரு நாள் நண்பனொருவன் எனக்குச் கூறினான். “இந்த அனுபவங்கள் எத்துணை மானிட சிதைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை நீ உணர்கிறாயா?)
அவன் பக்கச் சார்பு இன்றியே இதைக் கூறினான்.
உண்மையில் யுத்தம், அதிலும் பார்க்க யுத்தம் ஏற்படுத்தும் தாக்கம் மானிட சிதைவுதான்! நண்பர் அருளானந்தத்தின் கவிதைகளை வாசிக்கும் பொழுது இந்த நினைவுகள் தான் சுற்றிச் சுற்றி வருகின்றன. நாம் மறந்து விட விரும்பும் அனுபவங்களை மனத்திலிருந்தே எடுத்துவிட வேண்டும் என்று கூறப்படும் அனுபவங்களை அருளானந்தம் இத் தொகுதியிலே சொல்கிறார். அருளானந்தத்தினுடைய ஆக்கங்களை ஒரளவேனும், ஓரளவேனும் நான் முன்னர் அறிந்திருக்கிறேன். ‘துயரம் சுமப்பவர்கள்' - என்ற அவருடைய நாவலுக்கு முன்னுரையும் எழுதியுள்ளேன். இக்கவிதை களை வாசிக்கும் போது தான் தெரிகிறது அருளானந்தத்தின் இலக்கிய விடயப்பொருள் (LITEREY THEME) uoss6öflL g96)J6old 66öLighl. (Sg5ffLiquussa, இருந்தாலென்ன, முதலாளியாக இருந்தா லென்ன, சாதாரண பிரஜையாக இருந்தாலென்ன, உயர்நிலைப்பட்ட வாழ்வினராக இருந்தாலென்ன, அருளானந்தத்தின் கண்ணில் மனித அவலமே (pdsguLDITS6 pg. (HUMANMISERY)
ஒரு நிலையில் பார்க்கப் போனால் உலக இலக்கியங்களின் ஆதார சுருதி இந்தப் பண்புதான். இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். கதைத் தொடர்ச்சியின் அடிப்படையில் காப்பியங்கள்

செய்தவர்களும் கூட, மனித மோதல்கள், முரண்பாடுகள், அவை ஏற்படுத்தும் அவலங்கள் பற்றியே, உள்ளமுருகக் கூறியிருக் கின்றனர். முதல்நாள் போருக்குப் பின் தலை நகருக்கு மீளும் ராவணனைப் பற்றி, கம்பன் சொல்லும் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
'வெறுங்கை, யோடிலங்கை புக்கான்' - ஆரம்பத்திலே கூறிய வாறு நல்ல கவிதையை வாசிக்கும் போது அந்தக் கவிதையிலே திணிந்து போயுள்ள கருத்திலும் பார்க்க அது அது நமது உள்ளத்திலே கிளறி விடும் எண்ணங்கள்தான் முக்கியமாகும். மாறி விட்டதாக நாம் கருதும் புண்கள் தம்மைத் தாமே கிறிக் கிழித்து ரத்தம் சொரிய நிற்பது போன்ற ஓர் உணர்வினை அருளானந்தத்தின் இக்கவிதைகள் தருகின்றன.
இவ்வாறு கூறும் பொழுது அருளானந்தம் நேரடியாக சொல்லாததொன்றை இங்கு உயர்வு நவிற்சியாக கூறுகிறேன் என்ற குற்றச் சாட்டுக் கூட முன்வைக்கப்படலாம். ஏற்கனவே கூறிய படி கவிதைகள், வாக்கியங்கள், பெரிய மணி ஒன்று அடிக்கப்படும் ஓசை போன்றது. மணியின் ஒசையிலும் பார்க்க அந்த ஒசையின் அதிர்வு ஏற்படுத்தும் தாக்கமே முக்கியமாகும்.
மணி அடித்து முடிந்ததன் பின்னர் பலநிமிடங்களுக்கு அந்த அதிர்வொலி நிற்கும். நல்ல கவிதைகளும் அப்படித்தான்!
என்றோ நடந்து முடிந்த என்றோ அனுபவித்த சுகதுக்கங்களின் அதிர்வலைகள் கவிதைகளிலே தொடர்ந்து ஒலிக்கின்றன. அருளானந்தத்தின் இக்கவிதைத் தொகுப்பில் நான் அதனையே காண்கின்றேன்.
கவிஞன் - அருளானந்தத்திற்குள் நல்லதொரு கிறிஸ்தவனும் உள்ளான் என்பதற்கு (ஏதேன் தோட்டத்திலே.) இக்கவிதை சாட்சி. ஏற்கனவே கூறியபடி தனது எண்ண துணிபுகள் சிலவற்றை ஆதாம் ஏவாளிடத்தே ஏற்றிச் சொல்கிறார். அவரே சொல்வது போன்று அந்த பழைய விவிலிய கதை இவருக்கு ஒரு சட்டகம் தான்!

Page 9
அந்த சட்டகத்துக்குள் தனது சிந்தனைகளை தனது மானசீக சிரத்தைகளை எடுத்துக் கூறுகிறார். விமர்சன முறையில் பார்க்கும் பொழுது அருளானந்தத்தின் எழுத்தின் பிழிவை அவரது உருவக ஆக்கத்திலேயே காணலாம்.
ஆதாம் ஏதேன் தோட்டத்துப் பாம்பாகவா தெரிகிறது? இல்லை! மனித இச்சைகளின் எடுத்துக்காட்டாக முதல் மனிதனே முதல் முதலில் மனித சோகத்தையும் தன் செயல்களால் ஏற்படுத்தி விடுகிறான் எனும் கருத்து; அது பாம்பின் வாலாக எவ்வாறு வரும் பரம்பரைகளைச் சுற்றி வளைக்கிறது என்பதை அருளானந்தம் சொல்ல முயலும் பாணி உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியது. மீண்டும் சொல்கிறேன் கவித்துவத்தைக் காட்டுவதும் மாத்திரமல்ல அதை தன்னுள்ளே பேணவும் வேண்டும். அப்படி பேணுகிற போதுதான் அக்கவிஞனின் கவிதைகள் மனித மன ஓட்டங் களுக்கான சாட்சிகளாக வெளிப்பாடாக அமைகின்றன.
அருளானந்தத்தின் துயரம் சுமப்பவர்கள்’ என்றாலும் சரி, ‘கடந்து போகுதல்' என்றாலும் சரி இந்த உண்மை பளிச்சிடுகிறது.
எமக்கு ஏற்பட்ட காயங்களின் ஆழத்தை அவைதரும் மாறாத வலியை அரசியற் சுலோகமாக்காமல் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டுவது எமது கடமை. இலங்கை பிரிந்து போவதை கனவிலும் கூட எண்ணாதவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் நாமும் உள்ளோம் என்பதை என்றும் மறவாதவர்கள் நாங்கள். நாட்டை விட்டு ஒட விரும் பவில் லை. நாங்கள் இலங்கையர்களாகவும் வாழவிரும் புகலிறோம் . இந் நாட்டின் சிங்கள மக்கள் சிங்களவர்களாகவும் இலங்கையர்களாகவும் இருப்பதுபோல நாங்களும் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் இருக்க விரும்புகிறோம். அந்த உணர்வின் மீது விழுந்த விழுகின்ற அடிகள்தான் அருளானந்தம் இங்கே கூறுபவை.
இக்கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு ஒன்று பொருத்தமான முன்னுரையுடன் சிங்களத்திலே கொண்டு வரப்பட வேண்டும்.
xii

தமிழ் மக்கள் இருபதாம் நூற்றாண்டு வரை அனுபவித்த துன்பங்களின் பட்டியலாக இவைகள் அமைகின்றன.
இலங்கையில் நாம் தமிழர்களாக இருப்பதற்கு கொடுக்கும் விலையினை இந்தியாவில் தமிழகத்தில் தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். மிகச் சொற்ப தொகை என்றாலும் தமிழகத்தில் ஒரு பதிப்பை வெளியிட வேண்டுவது அருளானந்தத்தின் கடமை.
பழங்கள் உள்ள மரத்துக்குத் தான் கல் எறியப்படும். அருளானந்தம் நம்மிடையே உள்ள ஒரு அற்புதமான பழமரம். தன்னுடைய இந்தத் திறமையின் இவைகளுக்கப்பாலான மானிட ஒலங்களாக உலகத்துக்கு - குறிப்பாக சிங்கள மக்களுக்கு - எடுத்துக் கூற வேண்டுவது அவர் கடன். குறைந்த பட்சம் கவிதைகள் சிலவற்றையாவது சிங்களத்தில் மொழிபெயர்க்குக. தமிழிலக்கிய ரசிகன் எனும் வகையில் எமது சோகங்களை மறக்க முடியாத இலக்கிய அனுபவங்களாகவும் ஆக்கியுள்ள அருளானந்தத்தை வாழ்த்த விரும்புகிறேன். இறுதியில் எச்சரிக்கை யொன்றும் அவசியம் என்று கருதுகிறேன். அனுபவங்களை பகிரும் போதுதான், அவற்றை நினைவூட்டும் போதுதான் கவிதைகள் உயிர் பெறுகின்றன. இந்த உண்மையை நாவலாசிரியராகவும் சிறுகதையாசிரியராகவும் விளங்கும் இவர் கவிதையின் இந்த உயிர்த்தடத்தை மறந்து போகக் கூடாது. அருளானந்தம் மேலும் வளர, தமிழ், மேலும் மேலும் செழிக்க, இளைப்பாறியுள்ள தமிழ்ப் பேராசிரியர் ஒருவன் விரும்புகிறான் - வேண்டுகிறான். மொழியின் உச்சப்பயன்பாடான கவிதைகளினுள் என்றென்றும் வாழ விரும்பும் - ஒரு மாணவன் - ஒரு ரசிகன்.
، ، ، } عمحص مسمي 23A, வெண்டவேட் பிளேஸ், 1{ & 4, 5<کم ہو தெஹிவளை. (இலங்கை) " தீ”
تحصہضتحصصصہ سمہ ہےسسمبر
~~*

Page 10
கலை இலக்கியத் துறையில் ஈடுபட்ட வர்கள் பெரும்பாலாக தம் கலை, இலக்கியப் பயணத்தை கவிதையுடன் தொடங்கி, பின்னர் கவிதை தமக்குச் சரி வராது என்ற முடிவுடன், அதுதனை கைவிட்டு, தமக்குத் தோதான ஒரு கலை இலக்கிய உருவத்தை தேர்ந்தெடுத்து தம்மை வளர்த்தெடுப்பார்கள் அல்லது -மேமன்கவி- கவிதைத் துறையில் முழுமையாக ஈடுபட்டு, தம்மை தக்க வைத்துக் கொள்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் சிலர் மட்டுமே பல்வேறு கலை இலக்கியத் துறையில் ஏக காலத்தில் தன்திறனை வெளிக்காட்டி வருவார்கள்.
நண்பர் அருளானந்தம் அவர்களைப் பொறுத்தவரையும், புனைகதையாளராக நமக்கு அடையாளமாகி இருந்தாலும், (ஆரம்பத்தில் அவரும் கவிதைதான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.) கவிதைத்துறை சார்ந்தப் பங்களிப்பும் அவரால் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை, 2008ஆம் ஆண்டு இவரால் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பான “வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து எனும் தொகுப்பும், இன்று நம் கையில் கிடைத்திருக்கும் ‘கடந்துபோகுதல்’ எனும் இத்தொகுப்பும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இவரது முதல் கவிதைத் தொகுப்பான "வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து' எனக்குப் படிக்கக் கிடைக்காவிடினும், அத்தொகுப்புக்கான கவிதைகளில் என்ன சொல் லி இருப் பார் என்பதை ஒரௗவுக்கு என்னால் அத்தொகுப்புக்கானத் தலைப்பான "வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து' எனும் தலைப்பின் மூலம் யூகிக்க முடிந்தாலும், ஒரு நூலை முழுமையாகப் படிக்காமல் அதைப் பற்றியக் கருத்துச் சொல்வது சரியாகாது என்ற நிலையில், அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான இத்தொகுப்பில் அமைந்துள்ள அவரது கவிதைகளில் முன் வைக்கப்படும் கருத்துகள் அவரது ஒட்டுமொத்தமான கவிதைகளைப் பற்றிய கருத்துக்களாக வாசிக்கப்படக்கூடாது என்பதையும் இங்கு நாம் நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது.
xiw
 

இத்தொகுப்பை படித்து முடிந்தவுடன் இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள், புனைகதையாளராக தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்ட ஒருவரின் கவிதை களாகவே எனக்குப் பட்டன. இவ்வாறான உணர்வு எழுவதற்குக் காரணம், இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகளின் கட்டமைப்பே ஆகும். அக்கட்டமைப்புடன் அக்கவிதைகளைப் பயிலும் பொழுது, அங்கு ஒரு விவரணத் தன்மை பெரும்பாலான எல்லா கவிதைகளிலும் பேணப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. இது இவர் ஒரு புனைகதையாளராக அதிலும் குறிப்பாக நாவலாசிரியராக இருப்பதன் தாக்கத்தின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும். நவீன கவிதையைப் பொறுத்த வரை விவரணத்தன்மை என்பது கவிதைகளில் கையாளும் உத்திகளில் ஒன்றாக கையாளப்பட்டு வருகிறதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் பழமலையின் கவிதைகளையும் ஈழத்தில் கவிஞர் சோ.பத்மநாதனின் சமகாலக் கவிதைகளையும் சொல்லாம். ஆனால் நண்பர் அருளானந்தம் இத்தகைய கவிதை உத்திகளைப் பற்றிய பிரக்ஞையுடன் அவரது கவிதைப் படைப்புக்களைப் படைக்காவிடினும், இத்தகைய விவரணத் தன்மை மேலோங்கிய நிலையிலும், நவீன கவிதைகளில் கையாளப்படும் படிமங்கள், குறியீடுகள் என்பனவற்றை ஆங்காங்கே பயன்படுத்தி, ஒரு வகையான கலவைத் தன்மையுடன் தன் கவிதைகளைத் தந்திருக்கிறார்.
இக்காலகட்ட ஈழத்து தமிழ் எழுத்து என்பது அதாவது போருக்குப் பின்னான எழுத்து என்பதின் உள்ளடக்கம் எத்த கையதாக இருக்கும், இருக்கவேண்டும் என்ற கேள்வி இன்று நம் முன் எழுந்து நிற்கிறது. போருக்குப் பின்னான ஈழத்து தமிழ் எழுத்து என்பது கடந்த கால வாழ்வை, அதன் அனுபவங்களை கலை இலக்கிய படைப்புகளினூடாக வரலாற்று ஆவணங்களாக மாற்ற வேண்டியத் தேவை ஒன்று நம் முன் இருக்கிறது. அப்பணியினை நண்பர் அருளானந்தம் தனது சிறுகதைகள், நாவல்கள் மூலம் செவ்வனே செய்து வருவதைப் போல் இக்கவிதைகளிலும் செய்து இருக்கிறார். இப்பண்பே இவரது கவிதைகளைப் பற்றி நாம் பேசத் தூண்டுதலாக அமைகிறது.
ጂኒ'

Page 11
நண்பர்அருளானந்தம் கடந்த கால வாழ்வின் அனுபவங்களாக தந்திருக்கும் இக்கவிதைகளின் உள்ளடக்கங்கள் பேசியிருக்கும் விடயங்கள் நம் இதயத்தில் ஆழமாக பதிவாகுவதற்கு அவர் கையாண்டிருக்கும் உத்திகளின் வழியாக வெளிப்படும் கவித்துவம் கலந்த, அதே நேரம் நம் இதயத்தை அதிர வைக்கும் வரிகள், சொல்லாடல்கள் இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் முழுதும் விரவிக் கிடக்கின்றன.உதாரணமாக "அந்த போர் காலத்தில் தம்மவர்கள் பிணமாகி மடிவதை கண் கூடாகப் பார்த்தவர்களின் கண்கள் ஆகும் நிலையினை விவரிக்கும் பொழுது
"பிணங்களின்
திறந்த கண்களாய்த்தான்
உயிர்ப் பலிகளை
கொடுத்துவிட்டு வரும்
அவர்களின் கண்கள்’
(கடந்து போகுதல்)
இன்னொரு கவிதையில் அந்த நிலையின் இன்னொரு வடிவத்தை இப்படி சித்திரிக்கிறார்
நான் திரும்பி
அவர்களை பார்த்தபோது
செத்த இடத்துப் புற்கள்தான்
அவர்களின் முகங்களிலே
முளைத்துக் கிடந்தன.
(கொல்லும் கருவிகள்)
அடுத்து முதுமையின் பொழுது மரணத்தால் பிரிந்து போன தன் தங்கமான அக்காவின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் தம்பியின் கவிதையாக அமைந்திருக்கும் கவிதையில்,
‘எண்ணெய் இல்லாக் கைவிளக்காய் இப்போ இருக்கின்ற நிலைபரத்தில் காற்றடிக்க உடனே அணைந்து விடும் என் ஆவி'
(தங்கம் (ஆன) அக்கா)

எனும் வரிகள் மூலம் தம்பியின் முதுமை காலத்தைப் பற்றி
பேசினாலும்
“இப்போ இருக்கின்ற நிலைபரத்தில்’ என்ற வரிகள்
இன்னொரு அர்த்தத்தை நமக்குக் கற்பிக்கிறது.
ஆனால், இப்படியெல்லாம் நிகழ்ந்து விட்ட மரணங்களைப் பற்றி தன் படைப்புக்களில் (இவரது புனைகதை ஆக்கங்கள் உட்பட்ட) அருளானந்தம் பேசும் பொழுதெலாம், அம்மரணங்களுடன் சம்பந் தபட்ட எந்தவொரு அரசியல் சக்திகளைப் பற்றியும் பிரஸ் தாபிக்காமல் இருப்பது (அவர் கொண்ட இறுகிய மெளனம் எனக் கொண்டாலும்) மரணமே வாழ்வாகிப் போன ஒரு சமூகத்தில் நடந்தேறிய அம்மரணங்களை அருளானந்தம் 'இடைவெளி இல்லாது எனும் கவிதையின் மூலம் ஏசுநாதரின் மரணத்தின் நீட்சியாகப் பார்ப்பது என்பது - அம்மரணங்களுக்குப் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்தமான அரசியலை நுண்ணியமாகப் பேசியிருப்பதாகவே எனக்குப் படுகிறது. ta
மேலும், போர் வாழ்வுச் சூழலில் சிறுவர்களும் பெண்களும்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நாம் கண்டறிந்த உண்மை.அந்த உண்மையை நேரில் கண்டவர் என்ற வகையில் அருளானந்தமும் தனது கவிதைகளில் குறிப்பாக பெண்கள் போர்ச்சூழலில் எதிர் கொண்ட நிலைகளை, போர் முடிந்த பின்னும் அந்த நிலைகளின் நீட்சியினை பெரும்பாலாக தனது கவிதைகளில் பேசி இருக்கிறார். அதிலும் குறிப்பாக பெண் தன் உடல் வெளி வழியாக எதிர் கொண்ட வதைமிக்க அனுபவங்களை உடல்மொழி சார்ந்த சொல்லாடல்களைக் கொண்டு பேசியிருப்பது, இக்கவிதை களின் சிறப்பு என்பதோடு, பெண்ணியச் சிந்தனையில் அடிப்படையில் இவ்வகைக் கவிதைகளை பற்றி மேலும் பேசும் சாத்தியத்தினையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன எனலாம்.
அடுத்து நண்பர் அருளானந்தத்தின் கவிதைகளின் இன்னொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் அவரது புனைகதைப் படைப்புக்களைப் போல், இவரது பெரும்பாலான கவிதைகளும் குறிப்பிட்ட, நிலப் பிரதேசத்தை பகைப்புலனாகக் கொண்டே ஆக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. குறிப்பாக வடபகுதி தமிழ்
xvii

Page 12
மக்களின் கடந்து வந்த வாழ்வுச் சூழலில் நந்திக்கடல்' என்பது மிக முக்கிய பங்கு வகித்தது என நாம் அறிவோம். அந்த நந்திக்கடல் சூழல் என்பது வெறுமனே தொழில்சார் அனுபவங் களுக்கு அப்பால், அந்த நந்திக்கடலின் இரு கரைகள் அவர்தம் வாழ்வும் சாவுமாக இருந்த கரைகள் என்ற வகையில், நண்பர் அருளானந்தம் அவ்வகைக் கவிதைகளில் ஒரு சமூக வாழ்வின், இருப்பின் வரைப்படத்தை வரைந்திருக்கிறார் என்பதும் ஒரு முக்கியமான ஓர் அம்சம்.
இனி இத் தொகுப்பில் இறுதியாக அமைந்துள்ள நெடுங்கவிதையான ஏதேன் தோட்டத்திலே ‘ஆதாம் ஏவாள் - ஒரு மறுவாசிப்பு' எனும் கவிதை பற்றி தனியாகப் பேச வேண்டும்.
இக் கவிதைக் கான தலைப்பை மனங்கொண் டு இக்கவிதைப்பிரதியை வாசித்துக் கொண்டிருக்கையில், பைபிள் எனும் சமயப் பிரதியில் பேசப்பட்டிருக்கும் 'ஆதாம் ஏவாள்' என்ற கருத்துருவத்தை மறுவாசிப்பு செய்து இருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மறுவாசிப்பு என்பதை பெரும்பாலாக நமது சூழலில், ஒரு பிரதி கொண்டிருக்கும் அது அதன் தோற்றத் துடன் கொண்டிருக்கும் ஆதிநிலை கருத்து நிலையிலிருந்து, அல்லது கருத்தியல் நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தை அல்லது கருத்தியலைக் கண்டு கொள்வதே ஆகும். அந்த அளவுகோலின் அடிப்படையில் பார்த்தால், அருளானந்தம் அக்கவிதையில் ஆதாம் ஏவாள் என்ற கருத்துவத்தையிட்டு பைபிள் முன் வைத்திருக்கும் கருத்தையோ, கருத்தியலையோ மறுவாசிப்பு செய்யாமல், பைபிளில் ஆதாம் ஏவாள் பகுதியை எடுத்துச் சொல்ல எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தை விட, அதிக அளவான காலத்தை எடுத்திருக்கிறார். அதாவது பைபிளில் ஆதாம் ஏவாள் என்ற கருத்துருவம் சித்திரிக்கப்பட்ட விவரணக் காலத்தை (Naration period) விட, அதிக அளவான விவரணக் காலத்தை (Naration period) யை எடுத்த தன் மூலம் அக்கருத்துவத்திற்கான விவரணக் காலத்தை(Naration period) யை மறுவாசிப்பு செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இவர் ஒரு புனைகதையாளராக
xviii

இருப்பதும் இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளத் துணை புரிந்திருக்கிறது. இந்தவகையில் இக்கவிதைப்பிரதி நமது விசேட கவனத்தைப் பெறுகிறது.
மொத்தத்தில் நண்பர் அருளானந்தத்தின் ‘கடந்துபோகுதல்” இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள், ஒரு நாவலாசிரியரின் கவிதைகள் என்பதை அக்கவிதைகளின் உருவ கட்டமைப்பு வழியாகவும், அக்கவிதைகள் இன்றையக் குரல்கள் என்பதை அக்கவிதைகளின் உள்ளடக்கங்கள் வழியாகவும் நிருபித்து நிற்கின்றன என்பது மறுப்பதற்கில்லை.
20.11.2010-memonkaviGyahoo.com

Page 13
என்னுரை எழுத அமர்ந்தபோது என் நினைவில் வந்தவை
என் சித்தத்தில் தூண்டில் முள் குத்தியதுபோல் வலி ஏற்பட்ட காலம் - கடந்து போனதான அண்மைக் காலம்தான்!
இந்த யுத்த ஆழலிலான காலமதிலே என் மனதிலேற்பட்ட கவலைகளுக்கு எதிர்ப்புச் சக்தி காட்ட என்னால் முடியாது போய்விட்டது. மூச்சு ஓய்ந்தது மாதிரியான வாழ்க்கையை இந்நாளிலே நான் வாழ்ந்தேன். உயிர் எடுக்கும் யமனின, ஓயாததான இந்த மனிதர்களது சாவுகளின் காலத்தில் - நான் ஆசைப்பட்டு உண்ணும் மாதுளை முத்தும், மனித உடல்களின் நாடியிலிருந்து பாயும் உதிரம் போல் என் கண்களுக்குத் தெரிந்தது. எனவே அதையும் நான் உண்ணுதற்கண்றி வெறுத்தேன்.
அழகான தாமரைச் சிவப்பையும் கூட அதே முறையிலாகவே எனக்குத் தெரிந்தது. மின்னலின் அசைப்பைக் கூட நான் முன்பு ரசித்திருக்கிறேன். ஆனாலும் இவ்வேளைகளில் அது என்னை மிரட்டுவதாகவே இருந்து கொண்டிருந்தது. இப்படியெல்லாம் உள்ளத்தைக் கவ்விய கவலைகளை மாற்றிவிட எனக்கு எது வழியிலும் மருந்தே கிடைக்கவில்லை.
மாட்டின் வால் வீச்சு ஈயை விரட்டும். ஆனால் என் மனதில் மொய்த்துப் போய் உபத்திரவம் கொடுத்துக் கொண்டிருக்கும் கவலைகளை விரட்ட என்னுள் என்ன வகையானதோர் உதவியை நான் தேடுவேன். கருவேலமுள் காலில் குத்தினால் அதை, கெல்லி எடுத்தெறியலாம் - ஆனாலும், அதே முள்ளைப் போன்றதான கவலைகள் மனத்திலே கிடந்து தைக்கும் போது எந்தக் குறடு கொண்டு நான் அதைப் பிடுங்கி எடுத்து நோவில்லாமல் ஆக்குவது? என்றாலும் என் மூச்சினிலிருந்து மனக்குமுறல்கள் வரையிலாய் - அதையெல்லாம் பிறகு கவிதைகளிலாய்யென்னால் எழுதி எழுதி மனம் கொஞ்சம் இளைப்பாறிட முடிந்தது. என் மனதிலே விழுந்து மிதந்ததான இக்கவிதைகளெல்லாம் என் மனப்புகை ஆறுமட்டுமாக தொடர்ந்து
X

நான் எழுதியிருக்கிறேன். எண் திசையும் சிறகடிக்கும் குருவிகளின் சத்தம், ஏன் பிற்பாடு செல் சத்தமாக மாறிய ஆழ் நிலையாய் உருவாகியது?
இதுவும் கூட நான் எழுதிய கவிதைகளின் மூலமாய் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியே!
இந்த யுத்த ஆழல் அடங்கிப்போனாலும் ஏதோ மரத்தலையாய் என்னை நான் வைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டு கவிதைகள் எழுதுவதற்கு என்னால் முடியாது. அதனால்தான் நீதியைக் கேட்கின்ற கவிதைகளாய் இதற்குள்ளே சில நீண்ட கவிதைகளையும் நான் எழுதியிருக்கிறேன்.
எனக்கு மரபோ மமதையோ தேவையில்லை. ஆனாலும் எனக்கு மனித நேயம் தேவை! அதையே நான் இக்கவிதைகளில் கூறியிருக்கிறேன்.
இக்கவிதை நூலிலே ஆதாம் ஏவாள் - ஒரு மறுவாசிப்பு என்கிற கவிதை நான் எழுதுவதற்கான கதை மூலத்தை பைபிளில் இருந்தே நான் பெற்றுக் கொண்டேன். பைபிளிலே ஆதாம் ஏவாள் கதையானது - ஒரு மெல்லிய அறுதல், நார் போல - சிறு பகுதியாகவே எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கதையை ஒரு அளவோடு நான் அதிலிருந்து பெற்றுக்கொண்டாலும், செழிப்பான வளத்தோடே அந்தக் கதை வாழும் அளவிற்கு என் கவிதை மூலம் நான் குரல் கொடுத்து நீட்டியதாய் வளர்த்தெடுத்துள்ளேன். பைபிளின் ஆரம்ப அடித்தளமான இக்கதை படிப்பவர்களுக்கு ஏதும் உணர்த்துகிறதா? யூகிக்க முடிகிறதா என்ற கேள்விகளின் சந்தேகத்துக்கு இடமின்றி, அதன் கவிதை உருவம், கருத்து வமைகள், யாவரும் இலகுவில் விளக்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்குமென்றே நான் நம்புகிறேன். எந்த ஒரு சமய நூல்களும் சரி - அது தனக்கு மேல், போர்வையை போர்த்திக் கொண்டு ஊமையாக உறங்கிக் கொண்டிருப்பதைப் போல இருக்கிறது. எழுதப்பட்டவைகள் அனைத்தும் மீண்டும் மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது இன்னும் அவை துலக்கம்பெற்று விளக்கம்

Page 14
கொடுக்கும் என்பது என்கருத்து. குருவிக்கு தக்க சமுத்திரம் என்று சொல்வதுண்டு. அதுபோல அவனவனது சக்தியைப் பொறுத்தது அவனவன் சாதனை.
என்பொருட்டு கவிதையில் ஒரு சாதனை முயற்சியாக ஆதாம் ஏவாள் - ஒரு மறுவாசிப்பு - எனும் நீண்ட கவிதையை எடுத்துக் கூறுதற்கு விரும்புகிறேன். இந்த நீண்ட கவிதையை மிகவும் அமைதியாக, எதற்கும் கட்டுப்படுத்தப்படுவதாய் இல்லாமல்தான் நான் எழுதியிருக்கிறேன். பைபிள் புத்தகத்தை ஆழமாக படித்து உணர்ந்ததில் அந்தக் கதை எனக்கு கவிதையில் கற்பனையுடன் விரித்துச் சொல்ல முடிந்திருக்கிறது. என்றாலும் நான் ஆதாம், ஏவாள் கதையிலே உள்ள அடிப்படையான கருத்துக்களையும் உண்மையையும் வேறு விதமாக மாற்றி என் சொந்த ஞானத்திலே, கற்பனையிலே தனிப்பட்டதாய் எழுதுவதற்கு முயற்சிக்கவில்லை. பைபிளிலுள்ள ஆதாம் ஏவாள் கதையை வைத்து என் கைவல்ய பிரஸ்தாபத்தை மட்டும் நான் கவிதைகளின் மூலமாய்ப் பேச வில்லை. இந்தக் கவிதை மூலம் பைபிள் கூறும் உண்மை ஒன்றை நான் குறிக்கிற்ேன். முதல் மனிதனை மனுவழியை கடவுள் படைத்தது; அவர்கள் இறப்பு அடைய செய்வதற்காக அல்ல - அதைவிடுத்து அவர்கள் என்றும் இப்பூவுலகில் நித்திய சீவனாய்ச் சாவில்லாமல் வாழ்வதற்கே, என்று கூறும் இந்த மண் வாழ்வு நிலையை கவிதை மூலம் நான் விரிவாக சொல்லியிருக்கிறேன். பரிகாசமாக கடவுளை பழிக்கும் சாத்தானின் போக்கையும் அவன் செயல்களையும் இந்தக் கவிதைகளிலெல்லாம், குச்சுக்குள் ஊமையாக உறங்கிக் கொண்டு இருக்கும் படியாக இல்லாமல் - உரசி நெருப்பேற்றினாற் போல நான் வெளிச் சமும் காட்டியிருக்கிறேன்.
எனக்கு ஆன்மீக இலட்சியம் ஒரு அளவுக்கு இருக்கிறது. அதைப்பற்றியும் சுவைத்தொனியோடு கவிதை சொல்லியுள்ளேன். அடுத்து இயற்கையோடு ஒன்றிய வாழ்வாய் இல்லாமல் அவை முழுவதையும் இழந்து வரும் இன்றைய மனிதன் செயல்பாடுகளையும் கவிதை மூலம் நான் உறுத்தியதாய்ச் சொல்லியிருக்கிறேன்.

கவிதை நீ எழுது என்ற ஒரு உள்ளுணர்வில் என்னால் பிறப்பிக்கப்பட்ட இக்கவிதைகளெல்லாம் பாரதி ஒரு இடத்தே சொல்லும் ‘கற்பூரக் கட்டிகள் கொண்டு கட்டிய அரண்மனை போன்றே ஒருவித அதிசய கற்பனையாயும் சில வேளைகளில் (சில கவிதைகள்) எனக்கும் நினைத்திடத் தோன்றுகிறது.
இக்கவிதைகளெல்லாவற்றையும் நான் எழுதி, இம்முயற்சி ஆற்றில் எதிர் நீச்சல் போடும் முயற்சி எனக்கு இப்போ முடி வடைந்து விட்டது. இனி கரையிலே உட்கார்ந்து கொண்டு நான் செய்யக் கூடிய காரியமென்ன? இக்கவிதை நூலிற்கு கணிப்பு மதிப்பீடான ஒரு மதிப்புரை எழுதித் தரக் கூடிய ஒருவர் பேராசிரியர் - கார்த்திகேசு சிவத்தம்பிதான் என்கிற ஒரு நினைவு அவ்வேளையில் எனக்கு நினைவு வந்தது. இலக்கியத்தில் தூரதிருஷ்டிப் பார்வையுள்ள அவரிடம் நான் எழுதிய கவிதை களை கொண்டு சென்று கொடுத்தேன். அவர் படித்து விட்டு கவிதையில் எனக்கு உரிய அந்த ஸ்தானத்தை ஊர்ஜிதப்படுத்து கிறதுபோல மதிப்புரை தந்தார். நான் விட்டிருக்கக் கூடிய நயங்களையும் அவர் உணர்ந்து சொன்னது போல அவரது மதிப்புரையைப் படிக்கவும் எனக்கு மகிழ்வாக இருக்கிறது.
இன்னும் என் கவிதை நூலை மதிப்பட்டு எழுதியிருப்பவர் - மேமன் கவி எனப்படும் கவித்துவமுள்ள ஒப்பற்ற ஒரு கவிஞராக இருக்கின்றவராவார். இவருக்கு நன்றி கூற வாக்கியம் எப்படி அமையவேண்டும், என்று எனக்கு எழுதத் தெரியாது இருக்கிறது. என்றாலும் எமது நாட்டிலுள்ள முதன்மைக் கவிஞர்களுள் ஒருவரான இவருக்கு என் மனப் பூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றைச் சொல்லிவிட்டு மேலும் நான் நன்றி சொல்ல சேர்க்கவேண்டியவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். விஷய சத்து நிறைந்த கவித்துவ பார்வையில் கவிதைக்கு பொருந்தும் படியான சித்திரங்களை கணனி வலையமைப்பினுாடாக இருந்து எடுத்துப் போட்டுத் தந்த செல்வன் ஜெரிசன் அருமைநாயகத்திற்கும் கணனி மூலம் எழுத்துப் பதிவு செய்து தந்த செல்வி சி.சத்தியசோதி அவர்களுக்கம் நான் நன்றி கூறுகிறேன்.

Page 15
இனி கடைசியாகவுள்ள நிறைவேற்றத்திலே ஒரு சிலவார்த்தைகள்! நான் கவிதை எழுதுகிற அந்த வழியிலே ஒரு முதிர்ச்சியடையா கிளிக்குஞ்சு. எனவே மற்றும்படியாய் இக்கவிதை களின் வெற்றி தோல்விகளைப் பற்றி முடிவு செய்வது வாசகர்களான உங்கள் வேலைதான்!
இல.7, லில்லியன் அவனியூ, அன்புடன் கல்கிசை, நீ.பி.அருளானந்தம் தொ.பே. 4967027
2731887

தியானத் திறவு
நாசியே காற்று நூற்கும் கருவி அதை நாணேற்றி விட
முகத்திலIர்தம் வரும்!
ஒன்றடுத்து ஒன்றாய் நீளச் செய்ய வேண்டும் சுவாச உறவை
அதிர்ந்து கொண்டுவரும் குண்டலியினை பிறகு நிதானிக்கவே முடியாது
அதைக் குலைக்க விரும்பாது கவனம் செலுத்த ஆத்மா நேராகும்
சுவாச. அசைவுகளை உச்சியின் மேலே கூட்டிச் செல்ல - மேல் கட்டில் போய் விழுகிறது சுகமான யோக நெருப்பு வேர்கள்
நித்தியமும் சுவாசம் இதே போல் நிற்படு கணத்தில் நரம்புகள் நிஜமானதோர் வடிவாகின்றன
யோகத்தீ பரவியெழயெழ சுவாச விரிப்பு மிதமாகிறது! உருப்படுகிறது மனம்
நீபி.அருளானந்தம் 1. கடந்து போகுதல்

Page 16
உச்ச இன்பம் விளங்க ராக தாளங்களும் காதுகளில் விழும்! விஸ்வரூபம் காண்பதுபோல ஒளிவிரிப்புத் தென்படும்!
யோக ஒளியை காட்டிச் சொன்னவர் என்பொருட்டு எவருமில்லை
உன்திறவு கோல் கொண்டு உன் வேளை கூடிவர நீயே சுவாச உலையை நடப்பித்துப் போவாய் மேலே
நீபி.அருளானந்தம் 2 கடந்து போகுதல்
 

சாம்பல் பூசிய மனம்
அவன் பேசிய அஸ்தமனப் பேச்சை நாவால் நானும் எட்டித் தொட்டேன்! சொற்கள் எல்லாம் இரு மடங்கு கசந்தன.
நா அடங்க ஒடுங்க பின்பு மெளனம் பிரசன்னமானது. அறுத்து அவனைக் கொத்தி அழிக்கும் ஆசையை நிறைவேற்ற வெறும் வெங்காயம் ஒன்றைத் தேடினேன். வெட்ட வெட்ட இழைக்கப்பட்ட அநீதிக்கு அது திருப்பித் தந்ததோ இரு மடங்கு துன்பம்
உடையும் இதயத்தில் இப்போ என்றுமில்லா கண்ணிர்! ஏன் இன்னும் நான் வெட்டிக் கொண்டிருக்கிறேன் இந்த வெங்காயத்தை
நீபி.அருளானந்தம் 3
கடந்து போகுதல்

Page 17
கீறல் வழி
வாழ்வை நீடிக்க காற்றை அழைக்கிறேன்
அதுவோ உள்ளே சென்று மந்த கதி அடைகிறது
உடலின் தொலைவுகளுக்குள் செல்வதற்கு முடியாதென்கிறது
மலர்களெல்லாம் என்னிடம் இருந்தகாலம் ஒன்றுண்டு ஆனாலும் அதன் பின்பு கனிகளுக்குள் புழு புகுந்தது எப்போது?
பெரிய இருப்பாக இப்போது அறுபது வயதாய் விடிந்தது
நம்பிக்கையில்லா காட்சியுடன் டிக் டிக் என்கிறது முள்ளாய் நகரும் கடிகார இதயம்
வாழ்வு நீர்க் குமிழியின் இயல்பு! எனினும் மோட்சத்தில் ஏடு திறக்க ..
, له په
எனக்கோ விருப்பமில்லை! ༣,་
݂
வெறுக்கத்தக்க முதுமையிலும் í இப்-பூ விலேயே வாழ்ந்து கொண்டு நான் தேன் உண்பேன்.
நீபி.அருளானந்தம் 4. கடந்து போகுதல்
 
 
 

நடுக் காட்டுப் பாதை
கலவரமான இந்த உலகை விட்டு எதையும் மறக்கப் போக வேணும்! இந்தக் காட்டுப் பாதை நடையிலே நடந்து உயரழுத்தம் குறைக்க நிம்மதி கொடுக்கும் பயிற்சி எனக்கு நல்லதே!
கிராமத்து மந்தைகள் கழிவுகள் மட்டுமன்றி மாற்றம் வேறு ஒன்றுமில்லா ஒற்றையடிப் பாதை இது! இந்த வழி நடக்கையிலே நடுமுதுகில் மறையும் தோன்றும் யுத்த பயமே எனக்கு இல்லை!
நான் வெள்ளெனவாய் வேளைக்கு எழுந்து இன்னொரு திருநீறு நெற்றியில் பூசி வெளிக்கிட்ட ஒரு பயணம்தான்!
மரக்கிளையில் இருந்த பச்சைக் கிளியெல்லாம் கட்டுடைத்துப் பாய்ந்த தண்ணிர் வேகத்திலே கிளைகளினின்று பிரிந்து பறந்தன வானில்!
நீபி.அருளானந்தம் 5 கடந்து போகுதல்

Page 18
இந்த இடத்தில் நான் நடையோட்டத்தைக் குறைக்கத்தான் வேண்டும்!
என் படப்பெட்டி
மனதுக்குள்ளே இப்போ ஒருவெளிச்சமான
நினைவு! இந்தப் பூவிலும் அந்தப்பூவிலும் வட்டமடித்து அமர்ந்து நாளைய தேனையும் உறிஞ்சிக் கொண்டிருந்தன வண்டுகள்!
காட்டு முறையில் வளர்ந்த கருவண்டுகள் பச்சைக்கொடி படரும் இடத்துள்ளும் எரிந்த மூங்கிலிலும்தான் காணக் கிடைக்கிறது! கார்த்திகைக் காலத்தால் ஒரு பூ பூத்து சீராக ஆடுகிறது.
ஒரு துணித் தொட்டில் போல உள்ள மரக் கிளையிலிருந்த கூட்டில் உரக்கப் பேசும் வார்த்தை குருவிகள் மொழியிலே எனக்குக் கேட்கிறது
மனம் திறந்து பேசும்
கவிதை படித்தாற்போல அமைதியாய் இருக்கிறது இப்போது
நிபி.அருளானந்தம் 6 கடந்து போகுதல்

இந்தப் பாதையாலே நடந்து போகப்போக எல்லையற்ற மனநம்பிக்கை திரும்பவும் என்னிடம் வந்து சேரும் போலத்தான் இருக்கிறது.
புதுத்திசை பாதையிலே வாழ்க்கையை தொடங்கும்போது முட்டி மோதியவை எல்லாம் மனதில் சத்தமில்லா தோடிவிடும்
கால்கள் வலித்தாலும் பசுமையான இடம் தேடி இந்த நடுக்காட்டுப் பாதையாலேதான் எப்போதுமே என்நடை
தீயிஅருளனந்தம் 7 கடந்து போகுதல்

Page 19
கனவுக்குள் செலுத்தப்பட்டது
என்கனவில் படர்ந்த தாமரைக் கொடிச் சிக்கல்களை விலக்கி விலக்கி - நான் பழைய காலத்துச் சம்பவங்களை என் மூளைக்குள் திருப்புகிறேன்
நீர்த் தாவரங்களில்லா தண்ணிர் பகுதிக்குச் சென்று நான் இப்போது நீச்சலடிக்கிறேன்
நண்பன் ஜீவாவுடன் போட்டிக்குப் போய் நான் நீந்தித் தோற்றேன் போலிருக்கிறது
என்பழங்கால இளம் முகத்தில் தோற்ற களைப்புத் தெரிகிறது
மெல்லத் தலை அசைத்து மேலும் நீந்துவோம் போட்டிக்கு நாம் மறுபடியும் என்கிறேன் நான்!
தூண்டிற் புழு மீந்திருக்கும் தடயத்தை வைத்துக் கொண்டு மீண்டும் மீனுக்கு கொழுக்கி போட்டாற்போல ஜீவாவை மறுபடியும் நான் நீந்த இழுக்கின்றேன்
ஜீவாவும் என்னுடன் வாதிட்டு விலகாமல் நீருக்குள் பாய்கிறான் நீந்த
கனவிலமர்ந்த கண்களுடன்
மயங்கித் தீரா ஆசையோடு
குளத்தலைகளின் குளிர்மையை
அனுபவித்தபடி
நீபி.அருளானந்தம் 8 கடந்து போகுதல்

நித்திரையும் நிஷடையுமான
ஒரு நிலையில் அவாவுறும் மனத்தோடு
நான் காணும் கனவை மேலும் தொடர்கிறேன்
மகிழ்ச்சியின் நெடியோடு
கண்களில் கடமையாற்றும் இமைகளையும் மூடாது உழலலோடு கை கால்களை நீச்சலிலே நான் செலுத்துகிறேன்
இப்பிறவியில் இப்போது வென்றாக வேண்டுமென்றே வீரியங் கொள்ளுது என்மனம்
பரம்பரைக் கீர்த்தி வட்டமும் என் மனதுக்குள்ளே ര് நின்றும் என்னை i fyw i
தவிக்கவும் வைக்குது
அனைத்தையும் ஒன்றாய் /, சேர்த்து முயன்று நீச்சலில் வென்றிட
நானும் தவிக்கிறேன்
என் நீச்சலிலே விதியைச் சாக்கிட்டு தருணம் பார்த்து காரியம் கெடுக்குது குளத்துக் கொடி இழைகள்

Page 20
எங்கோ ஒரு இடுக்கிலிருந்து உணவுக் குழாயினைப் போல என் உயிர் குடிக்க தேடிவந்ததா அந்தச் சிக்கல் கொடிகள்?
நான் பார்த்துப் பயந்து திறந்த இரு கண்களோடு உதவி செய்
எனக்கு நீ ஜீவா ஜீவா என்று குரலவன் அறிந்திட ஒலி செய்தேன்
ஆனாலும் இனி என்செய்வேன் நான்! என் சொற்களை கொன்றிட்டது கொடிப் பின்னல்
என்னை தண்ணிர் ஆழத்துள் இழுத்து உயிரை எங்கோ அது கொண்டு செல்கின்றது
குளித்து முழுகிய அந்தக் குளத்துக் கனவிலிருந்து நான் கண் விழித்து விட்டேன்
வருடங்கள் சுமந்து பிரிந்தும் இன்னமும் அதேதான் என் நினைவோ
நீபி.அருளானந்தம் 10 கடந்து போகுதல்

இவைதான் இன்பம்
அந்த வான வில்லிலும் நான் எழுதுகிற கவிதை வெளிச்சம் காட்டும்! வெளுப்படையா எந்தப் புதுமலரிலும் என் கவிதை அழகே தெரியும்! குயில் கூவும் பொழுதெல்லாம் என் கவிதையினிமை நன்கு விளங்கும்! அதைப் படித்தால் ஞானம் வந்து ஆன்மாவில் கலந்து நிற்கும்! என் கவிதைதனில் உள்ள சுகம் ஆற்றினில் குளித்தது போன்ற தோர் குளிர்மை! காய்த்துக் கனிந்த என் அனுபவம் கவிதையில் வெளிப்படும் மந்திரமாய்! புலம்பிடும் பாடலல்ல என் கவிதை - அது உண்மைக்கு வழிகாட்டும் ஒரு திறந்த வாசல்! மெளனத்தின் குரலினாலே இயற்கையோடும் நான் பேசுவேன்! இயற்கையின் இலைக் குடைகள் தான் நான் எழுதும் கவிதைகளுக்கு நிழல் என் கவிதை வரிகளிலே தேனீக்களின் சங்கீதம் இனிமையாகக் கேட்கும்! நாம் பிறந்த உயிர் மண்ணின் சோகச் சங்கீதமும் அதில் கேட்கும்!
நீஅருளானந்தம் 11 கடந்து போகுதல்

Page 21
உங்கள் கவிஞன் நான்! நான் இறக்கும் வரையிலும் கவிதை புனைவேன்!
கல்லறை முட்கள் என்னை உறுத்திடினும் உலகறிந்த அன்பை என் நெஞ்சில் வைத்து நான் நூறாயிரம் கவிதை படைப்பேன்.
நீபி.அருளானந்தம் 12 கடந்து போகுதல்
 

தங்கம் (ஆன) அக்கா இளைச்சு நான் வந்தேன் - குடிக்க இளநீர் தந்தாய் நீ தவிச்சு நான் வருகையிலே - இங்கே தங்கியாறிப் போ என்றும் சொன்னாய் நீ கல கலவென்று நீ சிரிப்பாய் - நன்றாய் ஊர்க் கதைகளும் எனக்குச் சொல்வாய் இக்கட்டில் எனக்கு எழும் பணக் கஷடத்தையும் நீ தீர்ப்பாய் பனையோலைக் குருத்து வெட்டி பெட்டி கடகம் நீ இழைத்த காசில் மொறுங்க வறுத்த கடலை எல்லாம் வாங்கித் தந்தாயெல்லே எனக்கு
எப்போதும் போல நீ எனக்கு இல்லையெனாது எதுவுமே தந்தாய்! அந்தப் பெரிய குணமெல்லாம் என் குடும்பத்தில் உனக்கு மட்டும் தான்! என்மூச்சுக் குறைந்த போதும் உன் நினைவாலே நான் இதைச் சொல்வேன்! ஒஞ்சோஞ்சு நான் போனாலும் விறைப்பாக இருந்து நான் ஆருக்கும் சொல்வேன்! பேச்சுக் குறைந்த என் முதுமையிலும் உன் ஆதரிப்பை நெடுகலும் சொல்வேன் நான்!
எண்ணொய் இல்லாக் கைவிளக்காய் இப்போ இருக்கின்ற நிலவரத்தில் காற்றடிக்க உடனே அணைந்தும் விடும் என் ஆவி
நீ போய் புகுந்த அந்த இடத்திற்கும் என் நித்திரைப் பாதையிலே நானும் ஓர் நாள் வந்து சேர்வேன் சோதி வடிவாகி விட்ட உன்னையங்கு வணங்கி நிற்க.
நீபி.அருளானந்தம் 13 கடந்து போகுதல்

Page 22
பின் வாங்கல்
என் துயரங்களை ஆற்றும் கடவுள்களென்று வெறும் கற்சிலைகளை நம்பினேன் தூசி பட்டதுவோ என்று வருந்தி அவைகளுக்குக் கண்ணுாதி விட்டேன்
படைப்பு மனம் கொண்ட நான் வீதியிலே மெல்ல நடக்கும்போது பண் இசைத்துக் குளிர்ச்சியடைந்தேன்
போகும் இடமெல்லாம் பூனைபோல கவ்விச் சென்று கொண்டிருந்தேன் கடவுள் வடிவெடுத்த கற்சிலைகளை
உருவங்கள் உருவாகி நெஞ்சுக்குள் நிலைக்க இடையில் எத்தனையோ வணக்கங்கள் என்னிடத்தில் உருவாகியும் வந்தன
கொடி வணக்கமும் என் பழக்கத்தில் வெளிச்சம் காட்டியது
நாலுபேருடன் நானும் சேர்ந்ததாய் அவ்விடங்களில் எழுந்து நின்றேன்
எத்தனை கம்பங்களில் பறக்கும் கொடிகள்! அவை எல்லாவற்றுக்கும் தான் வணக்கம்! தலையை நானும் சரிந்தேன்!
எங்கேயோ பிறந்து வளர்ந்து என் வாழ்வில் புகுந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வணக்கங்கள் வழிபாடுகள் சுலபத்தில் என்னைவிட்டு போகாது என்கைகள்ை கும்பிடவும் வைக்கிறது
மெல்லமெல்ல இன்னும் பல உருவமாக மாறி மாறி என்னைக் கூழாக்கிப் பாழாக்கிக்
கொண்டிருக்கிறது
என்பரம்பரைக் குள்ளாலே வந்த வழிபாடுகளும் வணக்கங்களும்.
நீபி.அருளானந்தம் 14 கடந்து போகுதல்

சிந்து பொந்துகளை அடைத்தல்
எனக்கு விழுந்த தாயத்தில் மேலும் விளையாட மகிழ்ச்சி உண்டானது
ஆனாலும் சில யோசனை வந்து காய்களை தாயக்கோடுகளிலிருந்து கீழே நகர்த்த முடியவில்லை
மிக்க அவதானத்துடன் நெருப்பைப் போல கோடுகளில் பாய்ந்து சென்றும் தண்ணிர் ஊற்றி கசக்கப்படுவது போல பிறகு வேகம் குன்றிவிட்டது
bID LITIDL56ii
சேர்ந்த மாதிரியாய் என் காய்களின் பின்னே வேறு காய்களின் வேகங்கள் வெட்டத்துரத்த வலு விழந்து
சதுரத்தை தாண்டி
நகர முடியாது
அவை தவிக்கின்றன.
BLJ60)L தெரிந்து கொண்டு
நான் மேல் சட்டையைக் கழற்றி
தியிஅருளானந்தம் 15 கடந்து போகுதல்

Page 23
தோல்வி வேர்வை
பிழிகிறேன்!
நாலு - ஆறு
எட்டு
என்று
எதிர்த்தரப்பெல்லாம் சின்ன இலக்கங்களை விட்டு பெரிது பெரிதாகப் போடுகிறார்கள்
எனக்கு வழியே இல்லை! என் கை நிதானத்திலிருந்து தவறி - தாயக் கட்டைகள் வீசும் கையாலிருந்து கோட்டுக்குள்ளும் போய் விழுகிறது.
தாயக் கட்டை உருண்டது தான்! ஆனாலும், கப்பறை
கோடுகள்
அதிலொன்றும் இல்லாமலாய்ப் பார்க்க எனக்கும் வந்தது ஆத்திரம்!
கோட்டோவியம்
36)6OIT
வெறும் கப்பறை
கட்டை
நீபி.அருளானந்தம் 16 கடந்து போகுதல்

என்னை பார்த்து சிரிக்கிறது!
தொலைக்காட்சி பெட்டியிலிருந்து கேட்டும் யுத்த பூமியினது அழுகை என் காதுக் குழாயாலே வெளியே ஒழுகுகிறது சுவரில் பல்லியாக நான் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேன்
சிரித்துக் கொண்டு என் தோல்விகள் என்னைப் பிளந்து கொண்டிருக்கின்றன.
நீdஅருளானந்தம் 17 கடந்து போகுதல்

Page 24
தோலுரித்துக் காட்டும் சித்திரங்கள்
ஒரு பெண் குறியை கிறிக்கியிருந்த சுவரைக் கண்ணால் பார்த்தபோது பாலியல் மொழி குறித்து அதிகம் ஒன்றும் தெரியாத அந்தச் சின்னப் பயல் யோசித்தான்!
அவனுக்கும் ஒரு வாய்ப்புண்டு தானே பொது மலசல கூடத்துச் சுவரில் சித்திரம் வரைய?
அவன் கையில் வைத்திருந்த கரித் துண்டாலே ஒரு நான்கு கால் ஜீவனையும் கீறி தன் நினைவில் வந்த அவசியமானதொரு சித்திரமாய் ஒரு குட்டி நாயையும் கரியால் உரசி முழுமை செய்வித்தான்!
அச்சிறுவன் அவ்விடம் விட்டகல இரவு வாழ்க்கை வாழும் ஒரு விபச்சாரி இடம்மாறி அதற்குள் துணிச்சலாய் நுழைந்தாள்
ജൂഖണ്
எதைக் குறித்து
இச்சித்திரங்கள் நீபி.அருளானந்தம் 18
கடந்து போகுதல்

புரியப்படுத்துகிறது - என தன் ஆளுமையுடன் அந்தச் சித்திரத்தை ரசித்துப் பருகினாள்
இன்னும் இச்சித்திரத்தை நான் முழுமையாக ஆக்கி முடிக்கிறேன்! எல்லா மொழிக்காரரும் இச்சித்திரத்தை இன்னொரு முறையும் பார்க்க வைக்கிறேன்!
என நினைத்துக் கொண்டு கீழே கிடந்த கரித்துண்டை கையிலெடுத்தாள்
அவள் வரிசையாக கருங் குருவிகளைக் கீறினாள்! செருப்புகளை வரைந்தாள்! ஆடை விலக்கிய ஒரு பைத்தியக்காரனையும் கீறினாள்
அந்தச் சித்திரங்களின் கீழ் இன்றையத் தினம் இவர்கள்தான் எங்கள் நாட்டு அரசியல் வாதிகளென பெயர்களும் இட்டாள்
இந்நேரம் மலக் குடலில் உள்ளதை வெளியே அனுப்ப வந்தவர்
sig67Taibstb 19 கடந்து போகுதல்

Page 25
குனிந்து மேய்வது போல சுவரையே பார்த்துக்கொண்டிருந்த அவளை உள்ளே கண்டார்
அவருக்கு அவளைக் காணவும் கோழி பிடிக்கும் எண்ணம் வந்தது. ஆயினும் மலக் கூரை முழுவதிலும் அவருக்கு முடியாதபடி அந்தரமாயிருந்தது.
கூழாங் கற்களை வெளியேற்றும் எண்ணத்திலே அவர் பாடுகள் குவிந்திருந்தது.
அவர்
அவளுக்கு - உடனே இது ஆண்
D6D8L D
என்று ஒரு காகம் பாடியதைப்போல சொன்னார்.
அவள் உடனே அவர் சொன்னதை கேட்டுவிட்டு படியிறங்கினாள்
அவருக்கு சுவர் எழுப்பிலே வரைந்துள்ள சித்திரங்கள் கண்ணுக்குத் தெரிந்தது.
நீபி.அருளானந்தம் 20 கடந்து போகுதல்

அதை அப்படியே கண்ணில் படம்பிடித்துக் கொண்டதாய்ச் சென்று படியில்காலை அகல வைத்தபடி குந்தினார்
எங்கும் கேட்காத பறவைக் கூவல்கள் மாதிரி அவரிடமிருந்து பிறகு சத்தங்கள் வெளிப்பட்டன.
கூழாங்கற்களை நனைக்கிற அளவிற்கு சிறுநீரும் அவருக்கு வெளியேறிக் கொண்டிருந்தது.
உடம்பு சாந்தப்படும் அந்த நேரத்தில் அவருக்கு சுவரில் கீறியிருந்த அரசியல் வாதிகளின் நிரந்தரப் பொய்கள் நினைவில் வந்து நின்றன
கடந்து போகுதல்

Page 26
நெஞ்சில் சிறைப்பட்ட காட்சிகள்
இன்னும் எவ்வளவோ நீண்டிருக்க வேண்டிய ஒரு கனவு அது
சின்னப்பு வீட்டு வளவு நாவல் மரத்தில் - அவள் கள்ளமாய் ஏறி உட்கார்ந்து நிறைய பழம் பறித்துத் தின்று கொண்டிருக்கிறாள்
இருகைகளையும் பக்கவாட்டில் இறக்கை போல் விரித்து பறப்பது போன்றதோர் இன்பம்! கிளைகளும் இலைகளும் அசைந்திடாதவாறு கெட்டில் நகரும் போது அவளுக்கு ஏற்பட்டது
நினைத்தால் இறக்கைகளுடன் பறப்பது எத்துணை ஆனந்தம்!
அதைப்போன்றோர் இன்பம் நாவல் பழகாலம் வந்தால் சின்னப்பு வீட்டு மரமேறும் போதும் அவளுக்கு வரும்
ஊரெங்கும்
நிறையவே நாவல்மரம் உண்டாயிருப்பினும் சின்னப்பு வீட்டு நாவல்பழம்தான் அவளுக்கு லட்டுச் சாப்பிட்டது மாதிரி!
நீபி.அருளானந்தம் 22 கடந்து போகுதல்

அந்த மரத்தில் பழுத்துக் குலுங்கியிருக்கும்
பழங்களெல்லாம் கொட்டை பெரிதாயில்லாத சதைப் பற்றுள்ள இனியவை!
காசு கொடுத்தும் சின்னப்பு வீட்டு நாவல் பழம்போல எங்கேயாவது வாங்கித் தின்ன முடியுமா அவளுக்கு?
திருட்டுப் பழம் பறித்து தின்பதிலும் அவளுக்கு ஒரு தனி ருசி உண்டுதான்!
ஒரு ஈ காக்காய் கூட [560Dypu (plọULT அவர் வளவினுக்குள் கம்பிவேலியால் நுழைந்து சரசரவென்று அந்த மரம் ஏறி மடிநிறைய பழம் பறித்து தின்று வந்தவள்
g|ഖണ്!
ஒருக்கால் அவளுக்கு நடந்ததோர் சம்பவமிது! சின்னப்பு தலைதெறிக்க அந்த மரத்தடிக்கு ஓடிவந்து என்ன ஏதுவென்று - அவ்விடத்தில் புரிந்து கொள்ள முடியாது நிற்பதற்குள் அவர் விரட்டினும் தன்னை பயமில்லை யென்றென
நீபி.அருளானந்தம் 23 கடந்து போகுதல்

Page 27
தொடீரென கீழே குதித்து அவர் பிடிக்கும் அகப்படாதோடிய வலு துணிச்சல் காரிதான் அவள்!
இன்றும் அவளுக்கு சுப்பையரைப் பற்றிய பயமொன்றுமே மனத்திலில்லை! அவர் விரட்டினும் சத்தம் போட்டுவந்தும்
அவள் ஒடுகிற அந்த வேளை - பயத்தில் குரலெடுத்து சத்தமாயும் அவள் அழுததில்லை!
ஆனாலும் - இப்போ இந்த யுத்தத்துக்குள் அகப்பட்டு இரு கைகளும் இழந்த அவளுக்கு குரலெடுத்து அழுதால்
தேவலாம் போலவே நிலைமை இருக்கிறது
அழுகை நின்றும் கூட
இவளுக்கு தேம்பல் இன்னமும் நிற்கவில்லை! இவள் கண்ணிரை துடைத்துவிட பெற்றவர்களும் இப்போ உயிருடன் இல்லை
நீபி.அருளானந்தம் 24 கடந்து போகுதல்
 

புரிதல் பின்னலிடுகிறது
அதிகாலை வேளை ஆதியாகம அத்தியாயம் போல் நீண்டதொரு பெரு மழை வானத்தின் வாய் திறந்ததாய் நிலத்தில் கொட்டிற்று
துஞ்சிப் போயிருந்த கொம்பில் படர்ந்த கொடிகளெல்லாம் மழைத் துளியினை ஊன்றிப் பருகிடவே தனிச் சிலிர்ப்புப் பெற்றதாயின
நடை ஊன்றி நடந்து உடுத்த துணி ந்னைய ஒதுக்கிடம் தேடிப் போகிறது வீதியிலே சனக் கூட்டம்
தவளையை தண்ணிருக்கு இழுக்குமாப் போல வெயில் எறிந்து சுடும் வேளை மண்ணைக் கீறி விளையாடிய மழலைகளை மழைநீர் வா வா என அழைக்கிறது காகித ஒடம்விட
இன்னும் பிறகு முழங்குதாம் பெய்யுதாம் குளுகுளுவென்று அந்த மழை
மே மாதத்து இடி வாத்தியங்களுடன் முழு நாளெல்லாம் பெய்த மழை
ரயில் வண்டியேறியதாய் இன்னும் போகவே போகவில்லை
நேரமாயும் மழை நன்றாய்ப் பெய்யுது பெய்யுது
நீபி.அருளானந்தம் 25 கடந்து போகுதல்

Page 28
இலை மேலேயும் மண் மேலேயும் பெய்யும் கன மழையுடன் கொடிய இடி வாத்தியமும் தொடருது காற்றும் சுழன்று சுழன்று மரங்களைக் கசக்கியடிக்குது
வேலி விழுகிது ஏழை வீட்டுக் குடிசைக் கூரை எங்கோ ஒரு இடம் தெரியாது காற்றில் பறக்குது
போச்சு போச்சு எல்லாமே போச்சு நிலத்தடி நெடியோடு பெய்த மழைநீர் பாறை உடைத்ததாய் வேகங் கொண்டோடுது ஊரை நாசம் செய்யுது
இருட்ட முக்கில் நீருக்குள் பதுங்கிய
மழையின் குரூரம் கண்டு உள்ளதெல்லாம் இழந்தவர்கள் ஆரியனைக் காண வென்று //
இப்போ வானத்தைப் பார்க்கிறார்கள்
நீர்ச் சலவை பெற்றதில் உடல் சோர் வோடு V வீசிச் சென்ற வெயிலை டி
மீண்டும் காண
சீதளச் ஆரிய வரவை அவர்கள் வேண்டுகிறார்கள் வணங்குகிறார்கள்
நீபி.அருளானந்தம் 26 கடந்து போகுதல்
 

வரலாறு
ம்ெ கடல் வளத்தை அள்ளவென வருகிறது பிறநாட்டுத் திருடர் குலம்
மீன் பெருகும் இறால் பெருகும் அந்த நந்திக் கடல் வளத்தை பூனைக் கண்ணர் வந்து அங்கே முற்றுகையிட்டு கொள்ளையிடப் போகின்றனராம்
தொகை தொகையாய் உள்ள நோய் நொடிகளுடன் வயிற்றுக்குச் சோறுண்ண வழியேது மில்லாது உயிர் வாழும் நடைப்பிணமாய் அகதி முகாமில் வாடுகின்றனர் தொட்டில் பருவத் தேயிருந்து அந்த நந்திக் கடலுக்குச் சொந்தமானவர்கள்
வேற்று நாட்டவன்
எம்மண்ணின் கடலிலுள்ள வளத்தைப்பெற என்ன உரிமை அவனுக்கிருக்கிறது? எங்கள் கடல் வளங்களில் அவர்கள் சிபாங் மீன் விதைகள் விதைக்கப் போகிறார்களாம்
எம்கடல முதத்தில் விஷமிறக்கிய பின் ஏரியை முழுக்கத் தோலுரித்து செல்வமெல்லாம் அள்ளிப் போவார்களாம்
நீபி.அருளானந்தம் 27 கடந்து போகுதல்

Page 29
அங்கே கடல் தொழில் செய்து வாழ்ந்த உரிமையானவர்க்கு இனிமேல் கைவிலங்கு
ஏ நீதி தேவனே இந்தக் கொடுரச் செய்கைகளெல்லாம் usT(560)Luj60)6)
பனைமுளைத்த தேசமே நாள் தோறும் எம்மை புல்லறுவடை செய்தவண்ணம் இருக்கும் இவர்களை உன் பச்சை வண்ண ஒலையிலிருந்து காற்றோடு கலந்து வரும் பேரோசையால் இந்நாட்டை விட்டு இவர்களை நீ விரட்டி விடமாட்டாயா?
இந்த மண் அநாதையல்ல நினைத்த இடமெல்லாம் நீங்கள் கட்டில் போட்டுப் படுப்பதற்கு
மழலையில் உப்பு ருசி பார்த்து வளர்ந்த இந்த மண் எமக்குச் சொந்தமண் 2 foodLD G35/160öTLITL உறங்கிட வெல்லாம் உரிமை என்பது எமக்குத் தான்!
எம் உயிரும் கண்ணுமாயிருக்கிற
நாம் பிறந்த நாட்டிலே பிறன் எமன்
நீபி.அருளானந்தம் 28 கடந்து போகுதல்

எவன் வந்தாலும் ஆக்கிரமிக்க வரினும் அவனை நாம் எதிர்ப்போம்
நித்திரையிலும் நாம் விழித்திருப்போம் செத்தாலும் கூட நாம் விழித்திருப்போம்
சுடுகாட்டைக் கூட மற்றவர்க்கு தாரை வார்க்காது சித்தனாயிருந்து அவாகளை நாம விரட்டுவோம்
நீபி.அருளானந்தம் 29
கடந்து போகுதல்

Page 30
கடந்து போகுதல்
ராத்திரிப் பொழுதில் நந்திக் கடலைக் கடந்து மீள அவர்களெல்லாம் கூட்டுக் கூட்டாக வந்து சேருகின்றனர்
கடலின் கீழ்ப் பகுதியில் சேற்றுப் பக்கம் வாழும் மீன்கள் நெடுமுட்டியாக முட்களை மேலே நிமிர்த்திக் கொண்டு திரட்சி கொள்கின்றன
நந்திக் கடல் நீரின் மேல்மட்டம் வாருங்கள் நீங்கள் துன்பப்பட்ட உங்களை நான் கரை சேர்க்கிறேன் என்றதாய் அவர்களுக்கு சொல்வது போல் இருக்கிறது.
ஆழிக் கடலில்லை இது, ஆனாலும்
ஆழப் பகுதியில் நந்திக் கடலிலே
சேறுமுண்டு.
ஆழிப் பாறை இல்லை - என்று நன்குணர்ந்த அனைவரும் வாய்க் கடலில் இறங்குகின்றனர்
வாயில் அதிகம் பேசாது
வாழ்தலின் வழி இந்தச் சமுத்திரம்
நீபி.அருளானந்தம் 30 கடந்து போகுதல்

தாண்டிப் போய்த்தான் தங்கட்கு கிடைக்கும் என்றதாய் அவர்களுக்கோர் நம்பிக்கை
தொண்டைக்குள் குத்தும் முள்ளுமீன் தின்று பழகியவர்கள் எச்சில் விழுங்கப் பயத்திலே திண்டாடித் தவிக்கிறார்கள்
பூச்சி மீனும் பேத்தை மீனும் மொரல் பண்ணா முட்டிமீன் மட்டுமல்ல நந்திக் கடலிலுள்ள மீன்!
e|LLDL– CypáböíB அழுங்கு வாவல் பரவா
மீனோடு
மணலை விளைகெழுத்தி வாளையும் இக்கடலில் உண்டுதான்!
கடல் வெளியில் தொழிலுக்குப் போய் கூட்ட வெள்ளி கண்டு குருசு வெள்ளியைக் கும்பிட்டு கப்பல் வெள்ளி
விடிவெள்ளி பார்த்து மீனோடு படகைக் கொண்டுவந்து கரைசேர்ந்த மீனவர் கூட்டம் போர்எனும் திமிங்கலத்துக்குப் பயந்து கண்கள் மலைவெள்ளிபோல 'விழித்தபடி பிறமனிதருடன் சேர்ந்து கடலுக்குள்ளால் நடக்கிறது தாமும் ஒரு இடத்துக் கரை போய்ச் சேர
தீபி.அருளானந்தம் 31 கடந்து போகுதல்

Page 31
இப்போரின் காலத்திலும் சில சினைகளைப் பீச்சி இனம் பெருக்கும் மீன்களும் முட்டையிடும் கணவாய் கெழுதும் குட்டிபோடும் திருக்கை உழுக்கு மீன்களும் தம் உற்பத்தியை பொத்திக் கொண்டதாய் பயத்திலு ழலவில்லை
மனம் களைத்துப் போன அங்குள்ள மனித கூட்டம் கூட பிரசவங்களின் பரவச அழுகை கேட்டு இன்புற்ற போது முதுகைத் திருப்பிக் கொண்டு இவ்வுயிர்கள் ஏன் இருக்க வேண்டியதாய் வாழ்ந்திருக்கும்
அடிவைக்கும் மனிதர்கள் அகலக் காலிலிருந்து அடி வயிற்றை கூட கொத்தும் நிலையில்தான் அவை நந்திக் கடல் நீரேரியிலே பெருகியவாறாய் பொதிந்திருக்கும்
தாங்கள் பெற்ற மழலை குஞ்சுகள் உயிர்தப்பி உண்டு உயிர்த்திருத்தலே போதும் என்றதோர் எண்ணத்தோடு
நீபி.அருளானந்தம் 32 கடந்து போகுதல்
 

உழவு இயந்திரத்தின் சக்கரத்துச் சதையான ரியூப்புகளுக்குக் காற்றேற்றி காற்றேற்றிய ரியூப்புகளின் மேலே பலகைதனை போட்டு ஏதுமறியா சிறுகுழந்தைகளை அதின் மேலேயாய் இருக்க வைத்து உருவத் திரட்சி கொண்ட ரியூப்பை கடலின் மேல் கயிறு கட்டி இழுத்துப் போகின்றனர் பிள்ளைகளைப் பெற்ற அப்பாமார்கள்
கடலின் மேலே மிதந்து வருகிறது அவர்கள் பிள்ளைகளை வைத்து இழுத்துப் போகின்ற காற்றுற் ரியூப் குரலெழுப்ப முடியா சாபத்துடன் துயரத்தின் அடிவைத்து கடலுக்கால் நடக்கையிலே பசிபுகை மூட்டமாய் வயிற்றினுள் இருந்து மேலெழ மடிப்பில் கட்டிக் கொண்டுபோன பருப்பைக் கொஞ்சம் எடுத்து வாயினிலே போடுகிறார்கள் தொலைவு நடந்த களைப்பில்!
அவர்கள் தின்ற பருப்புகளிலே ஒன்று இரண்டு தெறித்து அந்தத் தண்ணின் மேலே விழுந்துவிட தெரிய வந்ததொரு இரகசியமாய்க் கண்டு மேலெழும்பி வருகின்றன சேற்றில் புதைந்திருந்த மீன்கள்!
கிடைத்த இரைதனை உடனே அகோரப் பசியுடன் மேலே வந்து
நீபி.அருளானந்தம் 33 கடந்து போகுதல்

Page 32
குதித்துச் சென்றதாய்ப் போய் அவையும் அவைகளை விழுங்குகின்றன. பிள்ளைகள் இருந்து வந்த அந்த றப்பர் ரியூப் பக்கமும் மீன்கள் வந்து மிகையாய் குதித்துமே பின் கலைகின்றன
முள்ளும் சிறகுமுள்ள மீன்கள் குத்தி அறுத்துச் சிதைக்கும் ஓர்விபத்து அதனாலும் அந்த ரியூப்பினிலே உடன் வந்தும் விடுகிறது
மீன் முள் குத்தியெடுக்க பீறிட்டு வெளிவருகிறது ரியூப் சுவர்களுக்குள்ளாலே பொத்தி வைத்திருந்த காற்று
கச இருட்டுதனில் திடுக்கிட்ட மனத்துடன் விபத்தின் இரைச்சலுக்கிடையே தொடையறுத்துப் பாய்கிற
காற்று ரத்தத்தை நிறுத்திட முதுகும் கழுத்துமாய் ததும்புகிற அத்தண்ணிலே நின்று பிள்ளை பெற்ற அவர்களெல்லாம் அவர்களின் உயிர் காக்கின்றதற்காய்ப் போராடுகின்றனர்
எதையும் கண்களால் காண முடியாக் கச இருட்டில் நீங்களும் இதிலேயாய் இறந்துபோக நாங்களும் இனிமேல் உயிருடனிரோம் என்று கூக்கிரலிட்டுக் குளறியபடி தங்களது பிள்ளைகளெல்லாம்
நீபி.அருளானந்தம் 34 கடந்து போகுதல்

தண்ணிருக்குள்ளே அமிழ்ந்துபோன சுவடுகள் ஒன்றும் தெரியாது பித்தம் பிடித்துக் கலங்கியதாய் அவர்களெல்லாம் பரிதவிக்கிறார்கள் O
பிள்ளைகளின் உடல்களை நீருக்குள் செலுத்தி கொல்லும் அக்கொடியதான ஒரு வித்தையினை நந்திக்கடல் இவ்வேளை பயின்று கொண்டிருக்கிறது.
பெற்றவர்க்கு அது ஒரு விஷத்தின் துளியை கொடுத்து விட்டு அமைதி அடைந்து விட்டது
பிள்ளைகள்தம் உயிர் கேட்டு இவர்கள் யாரிடம் போய் மன்றாடு வார்கள்
துடிதுடித்து அழுதுகொண்டு மூழ்கடித்துப்போன உடல்களைத் தேடி தண்ணிரைக் கலக்கியடித்து அலையெழும்பச் செய்த வண்ணம் சரிந்த ஒலக்குரலோடும் பீறிட்டெழுந்த அழுகையோடும் கடலுக்குள்ளே அவர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளைத் தேடுகின்றார்கள்
இருளின் ஓய்ந்து நிற்கும் நிசப்தத்திலே
நீபி.அருளானந்தம் 35 கடந்து போகுதல்

Page 33
நந்திக் கடல் மனித உயிர்கள் தின்ற விடாய் தீர்த்து தன்வேலையை முடித்துவிட்டது.
சோகத்தின் ரீங்காரம்தான் பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்க்கு எஞ்சியதாய் நின்றது! தண்ணிருக்குள்ளாலே அமுங்கிப்போன சிறுபிள்ளைகளை அவ்விடத்தில் யாரேனும் கடைசிவரை கண்டடையவே இல்லை
இனி செய்வதற்கு ஒன்றுமில்லையென அவிழ்த்த உடையைப்போல அதிலே நடந்த சம்பவத்தை எண்ணியெண்ணி அழுது கொண்டு செத்த பிணங்களின் நிலையைப் போன்று தாமும் பிறகாய் மாறி செல்ல வேண்டிய திசை நோக்கி கடலுக்குள்ளால் நடந்து போக தொடங்குகிறார்கள் அவர்கள்.
பிணங்களின் திறந்த கண்கள்ாய்த்தான் உயிர்ப் பலிகளை கொடுத்துவிட்டுவரும் அவர்களினது கண்கள்!
உணர்ச்சி இல்லாது போய் துடித்த பாடெல்லாம் இப்போ அவர்களுக்கு அடங்கி விட்டது.
நீபி.அருளானந்தம் 36 கடந்து போகுதல்

பிள்ளைகளினது தீராவேதனை சங்குகளைப் போல அவர்களது மனங்களிலே இரைகின்றன.
வேறு வேறு கவலை நினைவுகளெல்லாம் அவர்களைப்போட்டு இன்னும் உறிஞ்சுகின்றன
தண்ணீரின் குளிரில் உடல்கள் அவர்களுக்கு விறைக்கின்றன. ஏக்கங்ளோடு துயரங்களும் வானளாவாய் அவர்கட்கு விரிகின்றன.
பொலபொலவென விடிகிற காலைவேளை - இருள் மன அச்சத்தினை அவர்கட்குக் கூட்டுகிறது.
பாய் விரித்த படகு காற்றுதவி கொண்டு வந்ததைப் போல கடல் தண்ணிர் வழியே நடைசோர்ந்து வந்தவர்கள் வழுக்கும் பகுதியானதோர் 醬 தரையினிலே கால்பதித்தார்கள்
அவர்களுக்கு உடனே பீறி வருகிறது தம் பிள்ளைகளினதும் இரத்த சொந்தங்களினதும் இழப்புக்களின் அழுகைகள்
நீபி.அருளானந்தம் 37 கடந்து போகுதல்

Page 34
ஒரு சுக்கும் இல்லை
எனக்குப் பிடித்த அந்தப் புத்தகத்தை திறந்த போது - காண்பதற்கு உள்ளே ஒரு கறுப்பு நிறத்துச் சிறிய பூச்சி இருந்தது
உள்ளே சொகுசாக அது உட்கார்ந்திருந்தும் சற்றும் திருப்தியடையாமல் வெளிவந்தவேளை அதைக்கொல்ல நான் எத்தனித்தேன்
ஆனாலும் அப்போது அது எழுப்பிய பூச்சிக்குரிய கர்க் என்ற குரல் என்னை உடனே தடுத்தது
புத்தகத்துக்குள்ளே தூக்கத்திலிருந்து இப்போதுதான் அது விழித்து எழுந்து இருந்ததென்பது இப்போது எனக்கு விளங்கியது
இந்தச் சிறு பூச்சியும் புத்தகத்திற்குள் புகுந்து கற்றார் உலகிற்கு இப்போ வந்து விட்டதாக எனக்குத் தெரிந்தது.
நீபி.அருளானந்தம் 38 கடந்து போகுதல்

என்றாலும் இந்த அற்பப் பூச்சிக்கு ஏது புத்தகம் படித்த அறிவுத் தன்மை என்று ஒரு வித்தியாசமும் இல்லாமல் நான் சிந்தித்தேன்
பூச்சி நிதானமாக என்னை தலைதூக்கிப் பார்த்தது! திச்சொறியும் என் விரல்களை நான் மற்ற விரல்களால் கசக்கிக் கசக்கி யோசித்துக்கொண்டு அதைநான் பிறகு சுட்டு விரல் பதிந்து நசுக்கி விடப்பார்த்தேன்.
ஒரு கண நேரம்தான் என் ஒற்றை விரல் அதன் மேல் பட்டது
அதற்குள்ளாலே அந்தப் பூச்சி முட்டிமோதி இடறி இறக்கை ஊசலின் இயக்கத்தோடு பறந்து விட்டது
அது பறந்த உடனே என் யோசனையிலும் ஒரு பெரிய மாற்றம்! வலது புறம் திரும்பி நடந்து என் உள்அறைக்குள் போனேன்!
அருளானந்தம் 39 கடந்து போகுதல்

Page 35
உள்ளே நான் போக நானறியாமல் மேசைமீது அமர்ந்திருந்த அணில் ஜன்னல் வழியாய் வெளியே ஓடியது.
என்சொத்து பலவற்றையும் கட்டிக் காக்கும் ரகசியமுள்ள மேசை இழுப்பறையை முழுக்கத் தெரிந்த அளவுக்குப் பார்க்க வெளியே இழுத்தேன்.
லாச்சிக்குள் ஒன்றும் எனக்கு அடையாளம் தெரியாததைப் போல இருந்தது.
நான் இழந்தது என்னதென முழுசாய்ப் புரியாமல் பூச்சிக் கும்பல்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீபி.அருளானந்தம் 40 கடந்து போகுதல்
 

வலி - கவலை!
ஒரு நினைவு மட்டும் வராமல் தடுப்பதற்கு என் மனமோ விரும்புவதில்லை
என் கதையினை கேட்பவரை விட என் கண்களை உற்றுப் பார்ப்பவர்க்கு அது வேதனையும் கூட
நான் துக்க வெறியில் கிடந்து அழாது வாழ்நாள் முழுக்க உறக்கத்திலேயே ஆயுளை கடத்திவிட விரும்புகிறேன்
கவலைத் தொனிகளில் ബ6 5ഖങ്ങബടങ്ങണ நான் எடுத்துரைக்க வில்லை
சோகம் படிந்த கண்களுடன் ஒருதாய் தன் கதையை சொல்லச் சொல்ல அனைத்தையும் நான் மறந்து அவள் கதையில் பிணைக்கப்பட்டேன்
இரத்தம் தோய்ந்து அந்த மண் துடித்த காலத்தில்
Aasg6Tarjääb
41
கடந்து போகுதல்

Page 36
தாய்ப் பாலுக்கு அழுத குழந்தைகளின் கதைகளை 966it 6). Tusso) கேட்க எனக்கு மார்பிலிருந்து இதயத்தை பிய்த்ததுபோல இருந்தது.
என் நெஞ்சில் செல் விழுந்தாலும் நான் தயாராகவுள்ளேன் உயிர்விட ஆனால் அந்தப் பிள்ளை பசியில் பட்ட துன்பத்தை அவள் மூலம் நான் கேட்க
நீபி.அருளானந்தம் 42 கடந்து போகுதல்
 

என் தேவனே என் கர்த்தாவே என் கடவுளே என்னை ஏன் இப்பூவுலகில் உயிருடன் வாழ 605 6 lost என்பதாய்த் தான் எனக்கு அப்போது மிக துன்பம் வந்தது
என் உயிரைப் பாதி கொன்று விட்ட அந்தக் கதை இதுதான்! பல்லாயிரவர் அங்கே சாகின்றனர் என்ற கதையோ வேறு அது சகலர்க்கும் தெரிந்ததுதான்! போர் முறையின் கேடமைப்பில் அவி பசியாலும் அங்கே பல பேர் மாண்டதுதான்! செல்வர்களும் கூட ஏழைகளாயும் பிறகு போனதுதான்!
இவ்வாறு சொல்கின்ற பல கதைகள் பேய்க் கதைகள் போலவே சுத்தப் பொய் என்றல்ல - நேர் நேரே பலர் பார்த்த துயர் மிகுந்த சம்பவம்தான்!
அந்தப் பிள்ளையோ தன் தாயின் முலையைப் போட்டு பாலுக்காக உறிஞ்சியபடி பாடுபடுகிறது!
நீபி.அருளானந்தம் 43 கடந்து போகுதல்

Page 37
வலியெடுக்கும் இதயத்துடன் தாயும் கிடந்து பாடுபடுகிறாள்!
தன் பிள்ளைக்காக மனம் துடித்துத் துடித்து மார்பில் பால் இயங்க அவள் பாடுபடுகிறாள்! புதைந்து போனதை தேடல்களுடன் பசி வெறியோடு பிள்ளை முரசால்
கடித்ததாய்ப் பிடிக்கிறது -
தாய் ஒவ்வொரு பாகமாய் தன்னைச் சிதைத்தும் தவித்துத் தவித்து பசியுடன் இருக்கும் பிள்ளைக்குப் பால் கொடுக்க முடியவில்லை
வனாந்தரமாய் அவள் வெறுமையில் விக்கித்து மூன்று நாள் கிடந்த பட்டினி வாதையோடு பிள்ளையுடன் சேர்ந்து தானும் அழுகிறாள்
இடம் பெயர்ந்து ஒடுகிறவரை
§F6)6)6)LUTUL துளைக்கிறது அவ்விடத்தில் விழுந்த செல் - பனம் பழம் விழ வெடித்து வரும் சாறுபோல
நீபி.அருளானந்தம் 44 கடந்து போகுதல்

பாய்கிறது அவர்களினது இரத்தம்
முதல் செல் விழும்வரை Dọ ổg5) பிள்ளையை சுமந்தபடி இருந்த அவள் மரிக்கும் அந்த சோகங்களோடு தானும் சேர்ந்து மரணத்திலே சேர்ந்துவிட்டாள்.
தாய் மாரில்
முகம் புதைத்து கிடக்கின்ற பிள்ளைக்கு - தாய் - மரக் கட்டை போல் ஆனதொரு கொடுரம் இன்னமும்தான் விளங்கவில்லை
தாய் போன பயணத் திசையறியா குழந்தையது பாய்ந்து நிறைக்கிற தாயின் ரத்த பாய்ச்சலுக்குள்ளும் முலையின் நாள முடிச்சவிழ்க்கும் முயற்சியிலே இன்னும் இன்னும் அதில் வாயை வைத்து உறிஞ்சிய படிதான் பசியோடு கிடக்கிறது
நிபி.அருளானந்தம் 45 கடந்து போகுதல்

Page 38
கருவேலமுள் குத்தும் வலி
அதோ விடியுது விடியுது பொழுது இந்த ஊர் வழியெல்லாம் சிதறியே விழுகுது விழுகுது செல்கள்
பகலவன் துதியினை பாடாது பறவைகள்
பறக்குது பறக்குது வானில்
செல் வெடித்த ஓசை ஒயுமுன்னே புகையாய்ப் பொங்குதே ஊரெல்லாம் மிக்க சிவப்பேற அந்த மண்ணெல்லாம் ரத்தத்தால் நனைகிறதே ஐயகோ
சித்தம் குழம்பி ஓடுபவர் பலர் மேலே வானத்தைப் பார்த்தும் அஞ்சுகிறார் காற்றுமில்லா வெளியுமில்லா பங்கர் நோக்கி ஒட்டப் போக்கோட வரெல்லாம் ஓடுகின்றார்
பிள்ளைக்கு பால் கொடுத்த மார்பை முந்தானையால் மூடுகிறாள் தாய் அவளுக்கும் - பயத்தின் இறுக்கம் உள்ளே இழுத்திட்டத்தில் சொட்டும் மார்பில் சேர வில்லை முலைப்பால் தன் பிள்ளை தூக்கி இடுப்புடன் சேர்த்து அவளும் தான் ஓடுகிறாள் பதுங்கு குழிக்கு
பால் ஈரம் காயாத வாயோடு குழந்தை பசியோடு கிடந்து அழுகிறது தாயின் மார்பை தேடித் தேடியே தேம்பிக் கொண்டே பிள்ளை துடிக்கிறது
வயல் பார்க்கப் போன மணவாளனைத் தேடித் தேடி
புது மணப் பெண் கிடந்திங்கே வாடுகிறாள்
நீபி.அருளானந்தம் 46 கடந்து போகுதல்

காலை வேளை இறுகத் தன்னோட ணைத்து அவன் போன இதமின்னும் இடைவெளியற்றதாவே - அவளுள் இன்னமும் இருக்கிறது
அள்ளி எறிந்தது போலவே வந்து விழுங்தோங்கி வெடிக்குது செல்கள் பனையைத் துண்டாக வெட்டிப்போய் அவளது தலை மகனையும் அதிலேயே அது கொல்கிறது
வல் விரைவில் செல் விழச் செல்விழ ஊரெல்லாம் கிடந்து மாய்கிது வாழ்பவரெல்லாம் சாவை எண்ணி யெண்ணி உளத்திலெழும் மிகப் பயத்துடனே செத்ததாயும் நினைத்துப் பின்பு பிழைக்கின்றார்.
யுத்தத்தோடு தொடர்ந்தோடுகிறது மனித செவ்விரத்தத்தின் நெடிய ஆறு உள்ளம் துடிக்கிது துடிக்கிது இதிலே பிழைத்திருப்பவர் தம் நெஞ்சு
செல்வம் படைத்தவரும் வறுமையில் தலை தாழ்த்திட வைத்ததே கொடிய இந்த யுத்தம்
என்னே கொடுமையிது என்று பலர் சொல்லும் - அந்தக் கொல்லும் கொடுமையினை செய்தது இந்த யுத்தம்
நீபி.அருளானந்தம் 47 கடந்து போகுதல்

Page 39
எழில் வண்ணப் பொழுதை இளையோரிட மாயிருந்து பறித்தது இந்த யுத்தம் மண்ணின் பச்சைப் பூண்டு புதுத் தளிரினையும்
பொசுங்கிப் போனதாக்கி அழித்ததும் தான் இந்த யுத்தம் தமிழ் கதைத்து வெல்லும் தாத்தாக்களைப் பிசைந்து கோரமாய்க் கொன்றதும் இந்த யுத்தம் தான்!
எழில் இயற்கை தந்த அரணையெல்லாம் சிதைத்துச் சீர்கெட வைத்ததும் இந்த யுத்தம் தான்!
இப்படியெல்லாம் நடந்த கேட்டை மனதிலெண்ணச் சகிக்கவில்லை - நாடு சுடுகாடான கேட்டை இவ்வுலகும் நியாயம் கேட்கவில்லை
எண்ணச் சகிக்கவில்லை இந்த யுத்தத்தாலே வந்த நிஷடுரத்தை
இவற்றை ஏக்கமுடன் நினைத்து நினைத்து என்வாழ்விலும் இன்று வரை நிம்மதியேயில்லை
நீபி.அருளானந்தம் 48 கடந்து போகுதல்

உனக்கு ஒன்று சொல்கிறேன்
உன் இசையுச்சம் பெற கூவி எழுப்பு - என்று குயிலை நான் யாசித்தேன்
துயரம் துன்பம் நூறு பங்கிருந்தாலும் அதைத் துடைத்துச் சுத்தமாக்கும் தீட்சையளிக்க - நீபாடும் ராகத்தால் என்னை இன்பப் படிக்கட்டில் ஏற்றி விடு என்றேன்
நான் உபசரித்த வார்த்தைகளொன்றையும் ஒப்பவில்லை அந்தக் குயில் நீ என்னை விசையுறச் செய்வதாலே நான் பாடும் அந்த வசந்த காலம் வருமா? என்று தன் பறவை இன மொழியிலே முதிர மொழிந்தது அது
வேகத்தில் விடை பெற்று பறந்து விடாதே - என் அன்புக் குயிலே - நீ என்னைப் புரிந்தும் ஏன் கை விடுகிறாய்?
இந்தச் செல்லடிச் சத்தத்திற்குள் என்மனம் கொஞ்சம் திடம் வருவதற்கு உன் தெளிவான குரலால் கூவிப் பாடு
தண்ணிர் தாகத்துக்கு கிடைக்காதிருந்தாலும் இந்தத் தாகத்தைத் தாங்கிக் கொண்டு உன் இசையை - நான் பருகுகிறேன் என்றேன்
நீபி.அருளானந்தம் 49 கடந்து போகுதல்

Page 40
ஆனால் அந்தக் குயில் என்னைப் பிரிகின்ற பாங்கையே காட்டியது
இந்தக் காடெல்லாம் வஞ்சகர்க்குக் காட்டித் தரும் ஒற்றர்களும் இங்கேயுண்டு
அவர்களின் கண்களுக்கு இமைகளே யில்லை
எங்களைக் கூட சிறையெடுக்க இரத்த வாடையுடன் - அவர்கள் திரிகிறார்கள்
இவ்வாறு நான் சொல்வதை உன்னை விட − பல்லாயிரம் செவிகள் இங்கு கேட்டாலும் கேட்கும்
இவ்வேளை என் குரலோசையில் எந்த இனிமைதான் உன் செவிகளில் வந்து சேரும்?
அங்கே படுகொலை சித்திரவதைகளில்
அவலக் குரல் ஒழுகுவதை நீ போய்க் கேள்?
அந்த அதி அநியாயத்தை
ஒரு வார்த்தையேனும் நீ தட்டிக் கேள்?
நீபி.அருளானந்தம் 50 கடந்து போகுதல்

உன் விருப்புக் கேள்விக்கு என் மறுப்பு இதனால் தான் - என்று சுடச்சுடச் சொன்னது குயில்!
நான் உடனே ஒரு சவப் பெட்டி போலாகி விட்டேன். உணர்ச்சியில் என்கை மேய்ந்து பக்க மிருந்த வேப்பிலையை உடனே பிடுங்கிற்று
கையில் பிடுங்கிய இலையை உடனே நான் வாயில் போட்டு மென்றேன்! என் வாய் கசந்தது!
உடல் வியர்வைச் சதுப்பினுாடே பிற்பாடு அந்தக் குயிலை நான் உற்றுப் பார்த்தேன்.
என் நெற்றியிலிருந்து பறந்ததுபோல அந்தக் கிளையை விட்டு
வானில் பறந்தது سمي سمير 宾一 அந்தக் குயில்! \ ދާދިނޒި,ހދި श्रृं
\\ ޗެހިދަ-ތ
சுருங்கியதாய் s حسمہ ஒரு பொட்டுத்தான் - பிறகு N { அந்தத் திசையிலெனக்கு \ ܓܰܠ பார்க்கவும் தெரிந்தது. సాx
|
நீபி.அருளானந்தம் 51 கடந்து போகுதல்

Page 41
ஏதோவொரு எதிரொலி
நாளைய காலையில் உதயமாகப் போகிற
மரணங்களே உங்களை சந்திக்கப் போகிறவர்கள் யார் யாரோ
ஓ! மரண தேவதையே! நீ மிகக் காலம் வாழ்ந்து கிழவனாகி விட்டும் மிகச் சின்ன வயதிலேயே ஏன் அவர்களை யுத்தத்தில் சாகடித்தாய்
எம் மண்ணிலே சாவுப் பந்தலமைத்து கொசுக்களின் சபித்தல் சத்தம் இருக்கச் செய்தாய்
அங்கே வசந்தத்தில் கூவுகிற குயில்களும் இறந்தது உன்னாலேதான்
சந்திக்க வருகிற யுத்தத்தின் முன்னாலே முந்திக் கொண்டு நீ சொன்னாய் மரணம் உங்களை சந்திக்க வருகிற தென்று! பறைகளை நீயே முழக்கி இனிய புல்லாங் குழல்களை யெல்லாம் நீ உடைத்தாய்! உலகில் உள்ள இடங்களை யெல்லாம் விட்டு விட்டு
நீபி.அருளானந்தம் 52 கடந்து போகுதல்

எமது மண்ணுக்கு வந்து நீ சவக் கல்லறைக்கு அருகிலே
குந்திக் கொண்டிருந்தாய்!
எங்கள் இடத்தையெல்லாம் சுடுகாடாக்கி எம்மிடம் ஒப்படைத்தாய்
இப்போ நீ நியாயத்தை எங்களுக்குச் சொல்!
நீ நேசிப்பதற்கு நாங்கள் மட்டும் தானா இவ்வுலகில் பிறந்தோம்?
எங்கள் மரண ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டா நீ கல்யாண விருந்துக்குப் புறப்படுகிறாய்?
எங்கள் முகங்களில் கரிபூசிய மரணமே இனிமேல் நீ எம் இனத்தை விட்டு சுவடழித்துச் செல்! இறந்தவர்களை
திரும்பவும் முளைத்தவர்களாய் எமக்கு மூலதனப்படுத்தித் தா
நீபி.அருளானந்தம் 53 கடந்து போகுதல்

Page 42
விதை துவும் பாடல்
பனங்காடுகளிலெல்லாம் ஒலிக்கிறது உன் தன்மானம் இழந்து விடாதே மனிதா - என்று அவன் பாடிய அந்தப் பாடல்
அவன் வீரக்குரலின் ராக வழிப்பாடல் கேட்டு கல்லறை நிழலின் கீழ் நித்திரையாகி விட்ட செத்த பிணங்கள் கூட உயிர்பெறும்
அப்பாடலை எழுதியவன் எம்மண்ணின் பெருமைதனை உலகெங்கும் துலங்கச் செய்தான்
கல்லறையை மட்டும் நினைத்து நீங்கள் அழுதிடாமல் நாளை உதயமாகப் போகும் விடியலை நினைத்து இன்றே நீங்கள் வீரங் கொள்வீர் - என்று ஒரு ஞானியைப்போல அவன் கூறினான்
முன் முன்னேயே இனிமேல் இதுதான் நடக்கும் என்று சொல்பவன்தான் உண்மையில் ஓர் கவிஞன்! சுதந்திரத்துக்கு விலங்கிட்டு ராஜ முடி ஆடியவர் செய்யும் அநியாயத்தை மக்களுக்கு / எடுத்துச் சொல்பவன் சிறந்த கவிஞன்!
நிபி.அருளானந்தம் 54 கடந்து போகுதல்
 

கருக்கரிவாளால் கழுத்தை வெட்டினாலும் கழுத்தறுபட்டு விழுமட்டும் அடக்கல் அதிகாரம் எதிர்த்து பாடுபவன் உண்மைக் கவிஞன்
சாகாவரம் பெற்ற கவிஞன் பாரதி மக்கள் அடிமை விலங்கறுக்கக் கவிதைகள் புனைந்தான்! எங்கள் சபதம் இது என்று சொல்லி ஒன்று சேர்த்தான்.
அவன் எழுதிய கவிதைகள் யாவுமே வெறும் சாம்பல் மண்ணாய் போய் விடவில்லை
அவன் கவிதையால் எழுந்த சுவாசத்தை மக்களெல்லாம் உள்வாங்கினார்
அவன் பயணப் பாதையில் எல்லாருமே யாத்திரிகராக அவன் பின் சென்றனர்
எங்கள் இதழ் அமுதம் அரக்கர்களின் சரித்திரத்தைப் படிப்பதற்கு கடவுள் அருளவில்லை
எம்நாட்டுக் கவிஞர்களின் கவிதை அமுதம்
நாம் உண்டால் விசுவரூபமாக நாம் மாறி எம் அடிமை விலங்குகளைக் கூட நாம் உடைப்போம்
நீபி.அருளானந்தம் 55 கடந்து போகுதல்

Page 43
ஒற்றுமையுடைய எங்கள் கண்களுக்கு இனி எந்த மரணமுமே சம்பவிக்காது
ஓ! அந்தப் பாடல்கள் இப்போது எமக்கு பாவ மன்னிப்புக் கொடுக்கின்றன. எம் அடிமைத் தனத்தை நீக்குகின்றன.
எம் மண்ணில்
அஸ்தமிக்காக
ஆரிய ஒளி படர எம்மையெல்லாம் ஒன்றுபட சேர்க்கின்றன.
நீபி.அருளானந்தம் 56 கடந்து போகுதல்
 

கொல்லும் கருவிகள்
எனக்காகக் காத்திருக்கும் இரவின் அந்த அழுகைச் சத்தம் இன்னும் புதைபடாமலிருக்கிறது
பூச்சிகளின் சத்தம் இரவில் எனக்கு இப்போது கேட்பதில்லை
என் கையையும் காலையும் நிலத்திலே சிராய்த்து V ரணம் வர தேய்த்துக் கொள்ளும் வலிதான் மெய் யென்றதாய் அந்தக் குரலிலும் தெரிகிறது
நாலு வீடுகள் தள்ளி இருக்கிறது அந்த முகாம் இருக்கும் இடம்
அந்த அவல ஒலி கேட்டு நான் திடுமென கண் விழித்தால் மிதக்கும் இருட்டுக்குள் கருங்குருவியின் கண்போல ஏதோ உடனே தெரிகிறது
உடனே என் முதுகிலெல்லாம் பயச் சிலிர்ப்பு பம்பரம் விடுகிறது
அளவான ஒரு மழை வெளிப்பட்டு அந்த ஒலம் என் காதில் கேளாது அடைபடுமோ - என்ற எதிர் பார்ப்பின்நடுவில் புகைதவழும் அந்த வான் நிலாவும்
தீபி.அருளானந்தம் 57 கடந்து போகுதல்

Page 44
சன்னலுக் குள்ளாலே - என் கண்ணுக்குத் தெரிகிறது
நீல வானில் கூடவா இவ்வேளை புகைப் பரப்பு?
காற்றுக் கூட இலைகளை அசைத்துக் காட்டவில்லையே?
அந்த வேதனை ஒலம் திறக்கின்ற மாதிரி திரும்பவும் வருகிறது
பின் மூடுகிற மாதிரியும் போய் விடுகிறது
இங்கும் அங்கும் இதனாலே நான் பாயில் நித்திரையின்றி நெளிந்து கொண்டே கிடக்கின்றேன்
எனக்குப் பிடித்தும் பிடிக்காமலும்
நேரத்தை இழுத்துப் போகிறது அந்தக் காலம்
ஒலம் கேட்கக் கேட்க இருட்டுச் சுவரில் அந்த முகங்களை நெருப்புக் கட்டைகள் என்னைச் சுடச்சுட கற்பனை பண்ணிய வாறாய் இருக்கிறேன்
நிபி.அருளானந்தம் 58 கடந்து போகுதல்

காலைப் பொழுது விழிக்கவும் அலுத்த உடம்புடன் நடக்கிறேன் கிழக்கே
என்னை நோக்கி காற்றில் தலையசைக்கிறது ஒரு கறுப்பு முக மூடி
நாலு விடும் கடந்து நான் முன்னே போகையில் என் நினைவில் இரவு தலை இடி கொடுத்த அந்த ராட்சத முகாம் தெரிகிறது
அழுது சிவந்த முகத்தோடு 6T60T 9|LDLPT60)6) up அப்பாவையும் போல அதிலே அனேகம் பேர் நிற்கிறார்கள்.
நான் திரும்பி அவர்களை பார்த்தபோது செத்த இடத்துப் புற்கள்தான் அவர்களின் முகங்களிலே முளைத்துக் கிடந்தன
நீபி.அருளானந்தம் 59 கடந்து போகுதல்

Page 45
முற்பகலில் இப்போது
வழியில் காணப்பட்டவர்கள் அங்கேயெல்லாம் ஐயோ வென்றார்கள். நீ எங்கே செல்கிறாய் - என்று என்னைக் கேட்டார்கள். இடறி விழுந்தபடி அவர்களெல்லாம் ஓடுகிறார்கள். தொடர்ந்து விழும் செல்களின் ஒரேயொலி இந்த நொடியில் எதிரொலிக்கிறது.
இமைப்பொழுதுக்குக் கூட மெளனமாயில்லை எனக்கிருக்கும் அந்தத் துன்பம்.
வீடு முழுக்க ஒன்றாய் - அங்கே ஆமி வரும் போது அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்களோ என்னவோ - என்றதுதான் இந்த நேரமதில் எனக்குச் சிந்தனை
காத்திருந்து பொறுமையோடு அவ்விடம் நோக்கிச் சென்று பிறகு பார்க்க இந்த யுத்தச் சூழல் எனக்குக் கற்றுத் தரவில்லை.
இன்றளவும் என் கண்முன்னே மக்கள் சாகச் சாகச் செய்கிறதைக் காட்டியே எனக்கு அது காட்சிப் படுத்தியிருக்கிறது.
நீபி.அருளானந்தம் 60 கடந்து போகுதல்

என் வீட்டை நோக்கிப் போகும் போது எதிர்ப்படும் பனைக் கூடலில்லாப் பெருவெளியை நான் கடக்கிறேன்.
செல்துண்டு என்னுடலில் ஆழப்படுமோ? நெஞ்சில் பட்டு என் சுவாசத் தோடே இந்த உயிர் பிரிந்திடுமோ?
செல் என் முள்ளந் தண்டை முறிந்த வில்லாக முறித்துப் போடுமோ?
மீண்டும் மீண்டும் புதிதாய்ப் புதியதாய் பயப்பட்டுக் கொண்டே அந்தப் பெரு வெளியால் நான் நடக்கிறேன்
இந்த அதிகாலை - ஆயுதங்களோடு அணிவகுக்க ஆயத்த மாகிறதோ அவர்களது வெளிப்பாடு?
நினைக்க சுதந்திரமாக சுவாசமே எனக்கு ஓடவில்லை.
அந்த வெளியில் காற்றுக்கூட என்னோடு பேசமுடியா அளவிற்கு செல்லடிச் சத்தம்!
நிபி.அருளானந்தம் 61 கடந்து போகுதல்

Page 46
காலை நீட்டி நீட்டி நடையில் வைத்தும் அந்த வெளியை என்னால் இன்னும் கடக்கவே முடிய வில்லை
உன்குடும்ப உறவுகளை எப்படி இதற்குள் விடுவித்து அழைத்து வரப் போகிறாய் என்று என்னை வினவுகிறது பொழுதுபட்டுப் போனதில் வந்திட்ட இருட்டு
நீபி.அருளானந்தம் 62 கடந்து போகுதல்
 

மனம் எரிந்த கவிதை
தீயின் சுடர் என் வயிற்றடியில் சவுக்குப் போல் அசைந்தாட
தவம் செய் கண்களுடன் அத்திசையையே நான் பார்க்கிறேன்
என் விழிகள் நிலை குத்தி நிற்கவும் ஏதும் கதியின்றி அழுகிறவர் அதனுள் நகர்ந்து மறைகின்றனர்.
அவர்களை நான் நினைத்து மன கவலை அலை ஒய ஊருக்குழைப்பதே யோகம் எனும் பாரதி பாடலை நினைக்கிறேன்! அந்தத் தவத்தைத் தொடர முனைகிறேன்!
ஆனாலும் அதனால் ஏதுபயன் எனக்கு?
அக்கவலைகள் எனக்குள்ளே திரண்டு சுருண்டு ஆயிரமாய் வீசி கள்ளி முள் பதித்து
தயிைலும் அதை அலங்கரித்து இயேசுவின் முகம் போலாக்கி சிலுவையில் வைத்தும் என்னை நிமிர்த்தி விட்டது
நிபி.அருளானந்தம் 63 கடந்து போகுதல்

Page 47
வேடதாரிகள்
வழக்கம் போலத்தான் அவிழ்த்து விட்டார் அகதிகள் கதையை வருத்தத்துடன் பேசினார்!
‘எப்படிச் சொல்வேன் மிகுதியை - என்று எல்லாம் சொல்லிக் கழித்தார்
அவர் கதை கேட்டு ஓசையோடு அலையடிக்கும் கடல்கூட சிரிப்பது போல மாறியதாய் என்நினைவில் தெரிந்தது
உதிர்ந்து கிடக்கும் மணல்கூட சகிக்க முடியாமல் கல்லாய் இறுக்கியது போலவும் எனக்கு காணப்பட்டது
இங்கே அவர் கதையை பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்தவர் பக்கமிருந்து விசும்பல் ஒலி எழுந்தது
கண்ணிர் முளைத்தது இன்னொருவருக்கு
இருதய நோயாளி ஒருவருக்கு பிராணன் இழுத்தது போலிருந்தது
ஈக்களும் அவர் கதை கேட்டு கை தட்டி கோவழித்தன
நீபி.அருளானந்தம் 64 கடந்து போகுதல்

"బ
a Indian , Marxiness
翌排露籍 <
*x 'سمجم
*్యూ , w: كمية
*****Ya...«... ...».. . ×ಣ್ಣxಳ್ಳಿ リー房 Karakarar .
தழுதழுத்ததைப் போல கவலையில் கிடந்து பலர்
துடித்தார்கள்
பேசியவர் தன் பேச்சிலிருந்து இனி பிரிய வருகிறது என்றார் அவர் முடிவுரையைக் கேட்டு ஒரு குரல் மட்டும் - தன் உண்மைச் சிரிப்பை கெக்கலித்துச் சிரித்தது
நீபி.அருளானந்தம் 65 கடந்து போகுதல்

Page 48
இடைவெளி இல்லாது
பின் கதவுகள் வழியாக தொலைதுாரம் இருந்துவருகிறதாய் ஒலக்குரல் எனக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது
வேர்த்து வெளி விடும் மூச்சுடன் நிலைப் படியருகில் நின்ற படி என்னிலிருந்து பிரித்தேன் இதயத்து அறையை எனக்கும் இல்லாததாய் போய் விடட்டும் என்றதோர் விரக்தியில்!
ஆணியடிக்கும் சுத்தியிலும் மனிதச் சித்திரவதையாலே இன்னும் இரத்தமே காயாது இருக்கிறது அங்கே
உதிரத்துளி அதிலிருந்து தெறிக்கிறது. திறக்கவும் மூடவும் முடியாமல் கண்பூட்டியபடி அவர்கள் கிடக்க ஜெருசலேம் தேவாலயத்துத் திரைச் சீலை இன்னமும் கிழிந்து கொண்டே இருக்கிறது யேசுவுக்குப் பின் வந்த அவர்களது மரணங்களில்
நீபி.அருளானந்தம் 66 கடந்து போகுதல்
 
 

நாளை நாளையென பின்னகர்வது
இளைத்துப் போன எங்கள் இனம் சாகும் பிணக் கணக்கை அங்கே பார்த்துப் பார்த்து மூச்சை நிறுத்திக் கலங்குகிறது
நெற்றிக்கு நூற்றுக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு வெப்பச் சூடு
ஈக்கள் மறுபடியும் மேலே எழாமல் இருந்து சபித்து விட்ட ரொட்டிதான் தினமும் அவர்களுக்குச் சாப்பாடு
பசியிலிருந்து எதையும் தள்ளி வைத்திட முடியாததாய்த்தான் அவர்களினது சாப்பாடு
செத்த பிணத்திற்கும் திரும்பிக் கொண்டதாயிருந்து அதற்குள் வாழும் பிணம் போன்றதாகவே இவர்கள்!
ஒரே துர்நாற்றத்தில் உடலும் கூடக் கறுத்து புண் ஒட்டைகளும் விழுந்து விட்டன உடலில்!
நீபி.அருளானந்தம் 67 கடந்து போகுதல்

Page 49
சுவாசிப்பது எங்கோ சேற்றில் நடந்து சென்று நாற்று நடுவது போன்ற கஷடமாக இருக்கிறது அவர்களுக்கு விடியவும் கண் விழித்தால் துன்பத்தை நெஞ்சில் வைத்தபடி கை பிசைகிறார்கள் அவர்கள்
அவர்களின் அஸ்தமிக்காத முதல் வார்த்தை -
சுதந்திரமாக தங்கள் மண்ணில் போய் இருந்து சீவிப்பது பற்றித்தான்
நீபி.அருளானந்தம் 68 கடந்து போகுதல்
 

நான் கானும் - நெளியும் பின்னல்கள்
என் நாவு ருசியான எந்த பழங்களைத் தின்றாலும் வண்டுகளின் ஊர்தலோடு வறள்கிறது
உயிருள்ள என் ஆன்மா உங்களை நினைத்துக் கதறி துயருடன் இடுகாடு நடந்து போய் அங்கே படுத்து விட்டது
புழுக்கள் என்னுள் அங்கே இடம் பிடித்தமர - என்னைச் சுள்ளென்று துளைத்துக் கொண்டு உள் இறங்குகின்றன
உங்களின் நேற்றைய இறப்புச் செய்தி இன்னும் என் நெஞ்சில் துன்பத்தில் கசிவதை ஆற்றும் வழியொன்றும் தெரியாமல் நான் ஆகிவிட்டேன்
என்னிலேயும் இப்போது நாளைய நம்பிக்கை இல்லாததாகவே ஒழிந்து விட்டது
இருட்டுக்குள்ளும் கால்விரலால் ஏறி உச்சியில் உதைத்துப் பார்க்கிறது
என்னை நசுக்கிக் கொல்லத்திரியும் அந்தப் பயம்!
நீபி.அருளானந்தம் 69 கடந்து போகுதல்

Page 50
நான் நிம்மதியற்றேன்! கவிதை செய்ய மணமற்றேன்! கவலைப்பரப்பிய எல்லா நோய்களும் என்னை இப்போ உயிரற்றது போலாக்கியது
படிந்த கவலைகளை அகற்றிட ஒரு ஒதுக்கிடம் நான் தேடுகிறேன் எனினும் கவலைகள் என்னை கடித்துத்தின்ன என்னை துரத்திக் கொண்டேயிருக்கிறது
நீபி.அருளானந்தம் 70 கடந்து போகுதல்
 

உலோகத்தில் ஒலித்தே வரும்
வெப்பமுறும் உபரிச் சூட்டினை உறிந்து திருப்பு உள் விடும் கூடாரத்துள் பச்சையாகக் கிடந்தவர் வெந்தனர் உடல் முழுதும் உள்ள இரத்தம் தொலைத்ததாய் தாங்க முடியா உஷ்ணச் சூழலில் அவர்கள் பலமிழந்து வாடிச் சோர்ந்து போயினர் பயத்தில் இரவிலும் விழித்து பகலிலும் இது தவிர்த்து
கேவலப் பிராணிகளாய் அதற்குள்ளே குடியிருந்தனர்
நாசியில் நுகரக்கிடைக்கவில்லை நல்ல காற்று! கண்கள் அறிந்ததில்லை அதற்குள்ளே ஒரு நற்காட்சி! நித்தம் சோகம்
மாசுறுத்தும் ஆழல் நோய் பரப்பும் நுளம்பின் குத்தல் மழைபெய்தாலும் அவலம் விரிந்த இந்த உலகிலே
அவர்கட்கு மட்டும் எங்கும் போக முடியாத ஒரு சிறைவைப்பு வெளியெங்கும் உலகக் கூட்டம் சுதந்திரமாய் இருந்து வாழ சுற்றும் இந்த சுதந்திர பூமிக்குள் இவர்கள் மட்டும் அடிமைகளா? இவர்கள் உயிர்த்திறனிழந்து மெலிந்து உயிர்த் தொகை வற்றிப் போக விரைவுத்தறியில் பிரித்துவிட்ட இழைகளா? சாலை காக்கும் மரங்கள் கூட சேர்ந்து பாழானதாக இவர்களைச் செய்ததா?
நீபி.அருளானந்தம் 71 கடந்து போகுதல்

Page 51
". கொருக்கும் க்கம் திறக்கிறேன்
செல் தெறிக்க தீ வீசும் நிலம் அசையும்
ஆகாயத்திலும் சத்தம் கேட்கும்
மனம் கிடந்து வலிபடும்
ஒய்வு நாளிலும் ஒய்ச் சலில்லை இச் செல்லடிக்கு
அரனுக்கு அப்பால் முகம் மறந்தவர் விடும் செல் நகர்வழியுள்ளோரை சாவில் கண்மூட வைக்கும்
செல் நினைவு கனவுறவிலும் வந்து பயமுறுத்தும்
காம உணர்வை காட்டுக்கனுப்பும்
நீபி.அருளானந்தம் 72 கடந்து போகுதல்

பசிய வயல் முள்ளடர்ந்த காடாகும்
மோசம் செய்யும் இன்ன பிறவும் அதனாலுண்டு
பதற்றமுறும் இக்காலம் பெண்டுலத்துக்கும் தீமை! புல்லுக்கும் கூட அழிவு!
நஞ்சாகிறது மனித வாழ்வு! மரணத்து ஏக்கமே
அது தருகின்ற ஒரு நிஜம்!
நீபி.அருளானந்தம் 73 கடந்து போகுதல்

Page 52
கண்ணாடியில் படியும்
மூச்சுக் காற்று
கதவுகள் இல்லா வீடுகளிலே வெளிப்படுத்தலிருந்து வெளிப்பட்ட இந்தச் சாத்தான்கள் நுழைந்து உள்ளேயாய் வந்து விட்டன
காற்றையும் தோண்டி அதற்குள்ளாய் குதித்து வரும் இந்தக் கள்வரிடமிருந்து தம்மைத் தப்புவிக்க ரொம்பச் சின்ன மூளைக்குள்ளே இவர்கட்குச் சிந்தனையேது
திறந்து கிடக்கின்ற அறைகட்கு உள்ளாயிருந்து அவன் பிடித்துப் போவதற்கு பலபேர் உண்டுதான்! அவர்கட்குத் தப்பிக்க வேறு வழியில்லைத் தான்! சிக்கிக் கொண்ட சிலரை பலங்கொண்டதாய் அவன் குத்துவான்! பின்பு கடலுக்குள் கொண்டு சென்றும் அவர்களைப் புதைப்பான்! அவர்கள் கைவிலங்குகளோடிருந்து நாறிப்போனதாய்ப் போய்விடுவர்.
அவன் வேலை என்னவெனில்
இறந்தவர்களை விழுங்கி வயிற்றுக்குள் நிறுத்துவது!
நீபி.அருளானந்தம் 74 கடந்து போகுதல்

அந்தத் திரவமும் சருமமும் அவன் வயிற்றிலே கிடந்து பிறகு இரைச்சல் போடும் எனினும் அவன் மகிழ்ச்சியாய்த் தன்நாற்காலியிலே இருப்பான். இந்தப்பூவுலகமும் இந்த அநியாயத்தைப் பார்த்தபடி என்ன செய்யும்?
அதுவும் பூக்காதிருப்பது போல சிரித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்கும்.
நீபி.அருளானந்தம் 75 கடந்து போகுதல்

Page 53
வாழ்வைத் துர்க்கும் கவலை
துருவேறிய துப்பாக்கிகள் பார்வை பெற்று விட்டன. எம்மண்ணில் உள்ள செல்வமெல்லாம் தூள்பட பொசுங்கிட வெடிக்கின்றன.
கற் சுவர்கள் சுக்கலாகின்றன. மனிதர்களைக் கவனிக்கும் பார்வைதான் துவக்குகளுக்கும் சதாநேரம்.
அவர்கள் ஏந்தும் துப்பாக்கிகளின் வேட்டுச் சத்தங்கள் இரவிலும் பகலிலுமாக முடிவானதாகவேயில்லை.
கல் சுவர்களையும் ஒட்டைச் சல்லடையாய் ஆக்கிவிடும் குண்டுகள் மனித இரைப்பையை திறந்து செல்ல - ஏன் ஒரு குழப்பம் கொள்ளும்
அந்த அரக்கப் போருக்குள்ளே நானும் செருகிக் கொண்டு விட்டதால் மிதவையாய் வெளியேற ஒரு வழியும் தெரியாது மரண பீதி மனத்திலுழ நிம்மதித்த நிலை பிரண்டு சாராய முறுக்கத்துடன் ஒரு எருமைபோல திரிகிறேன் நாளும்
நீபி.அருளானந்தம் 76 கடந்து போகுதல்

வெறியேற திறக்கப்படும் கதவுகளும் இப்போ அடைக்கப்பட்டுவிட்டன. மனிதக் குருதிகள்
ஒழுக்குப் போடுகின்றன பனை வடலித் தோப்புக்குள்!
கடவுள் கூட இங்கே வந்தால் தன்னைக் காப்பாற்ற ஒரு வழியில்லை!
நேற்றின் நிகழ்வுகளிலே எண்ணிக் கணக்கு வைக்காத மனிதச் சாவுகள்தான் இங்கே நிகழ்ந்தன.
இதையெல்லாம் என் சொந்தங்கள் சொல்லி அழ - அந்தத் துக்கத்தில் என் மூச்சு சொட்டு விஷம் கேட்டு எனக்கு நஞ்சைப் பின்ன தயாராகிறது.
நீபி.அருளானந்தம் 77 கடந்து போகுதல்

Page 54
விஷப்பல் முளைத்தவர்கள்
இதையெல்லாம் எழுதுமளவிற்கு துக்கம் எனக்குக் கூடியிருக்கிறது என் ஆன்மா தேறமுடியாதளவிற்கு உள்ள என் ஆயுளையும் என்னுள் அறியாத அளவிற்கு அழிக்கிறது
என்னை உசிரழித்துச் சிதறிவிட சாக் குழலின் ஒசை ஊற்று காதினுள்ளே ஓடிப் புகுந்து மனதைக் கதற அடிக்கிறது
ரோமத் துளைகளில் வெளியேறுகிறது உப்பூற்று அறவே மனங் கருகி - என் உடல்புறச் சுவரிலும் காரை உதிர்கிறது
யுத்த முனையில் எம் இனம் சொட்டுகிற இரத்தம் நினைக்க எவ்வளவு ஆக்ரோசம் பொங்குகிறது எனக்கு!
துக்கம் பொங்கி
கண்ணிர் வழிய கொதிக்கின்ற இரத்தத்தை வெட்டி வெளியேற்றி யுத்தத்தை நிறுத்தி - அதையே முற்றுப் புள்ளியாய் இட்டு விடவும் நான் முயற்சிக்கிறேன்
நீபி.அருளானந்தம் 78 கடந்து போகுதல்

சமாதானம் தயாராகும் உலகம் போட்ட அந்த மேசையை நான் நோக்கினேன்
ஆழ அமர்கிற நாற்காலிகளில் வதை முகாம் விரும்பும் தலைவர்களே ஆழ்ந்திருக்கையில் அதன் பொருட்டு வழி காட்டும் அமைதி எவ்விதம்தான் ஏற்படும்?
கருணையே இல்லாத இமைகளற்ற அவர்கள் கண்களிலே அழும் அவல முகங்கள் ஒரு அருகதையும் பெறவே இல்லை!
அங்கே நடக்கும் படுகொலைகளில் மக்களின் குரல் ஒழுகுவதை அறியாது இன்னும் அவர்களுக்கு மமதை யேறுகிறது. அவர்கள் யாரையும் அங்கே விட்டு வைக்கப்போவதில்லையாம்! அழித்து விடப் போகிறார்களாம்! அவர்களுடன் கூடவே என்னையும் தான்
நீபி.அருளானந்தம் 79 கடந்து போகுதல்

Page 55
தித் தொடல்
சழி மூஞ்சியோடு ஒரு கிழத்தாய் - தன் கழுத்துத் தாலியைக் கழற்றி கையிலெடுக்கிறாள்
தாலியைத் தன் கையில் பார்த்த தருணத்தில் தலை உச்சியில் அவளுக்கு ரத்தம் பீறிட்டு குதித்துத் தெறிக்கிறது
இதுநாள் வரையில் கல்யாண வயது கோலங்கள் அவளுக்கு ஆழமுள்ளவை
பொம்மைக் கல்யாணம் கட்டி விளையாடிய காலத்திலிருந்து ராஜா வாட்டம் துரையாக இருந்த அவளின் மாமன் மகன் கைப்பிடித்த போது இவளுக்குக் கட்டிய தாலிக் கொடிதான் இது!
சிறுவயதில்
குருத்தோலையில் அவன் இழைத்துப் போட்டதாலி பின்னர் பருவம் வந்ததும் உறவு முறை நிலைநாட்ட திருமணத் திகதியிலே பத்துப் பவுண் நிறை இருக்க பவுண் தாலியாய் இவள் கழுத்தில் அவன் கட்டி விட்டான்.
எங்கேயும் வெளிப்போக நல்ல நகையெல்லாம்
நீபி.அருளானந்தம் 80 கடந்து போகுதல்

அவள்தன் கழுத்தில் கைகளில் போட்டாலும் அந்தத் தாலிக் கொடி ஒன்றுதான் அவளுக்குப் போட்டுள்ள நகைகள் எல்லாவற்றிலும்
பெரிய ஜோதி
இதுவரை மசிக்கும் பஞ்சம் வாழ்க்கையில் அவளுக்கு வந்ததுதான் ஆயினும் அப்பஞ்சத்திலும் பச்சைப் பாளை வட்டுடன் ஒட்டியதுபோல அவள் கழுத்தில் கிடந்த இந்தத் தாலி கிடந்த வறுமைக்கும் அவள் கழுத்தைப் பிரிந்து செல்ல வில்லை.
ஆனால் இன்றோ. பெருங்காயம் வீசும் நெடியுள்ள உடல் வேர்வையோடு அவள் இந்த யுத்தப் பூமிக்குள் பசிக்கிரகத் தோடு நின்று கொண்டிருக்கிறாள்.
போரின் இயக்கத்திலே அவளும் அலைகிறாள்! கட்டிய புருஷனும் அவளுக்கு செல்பட்டு செத்துவிட்டான்!
இப்போ - ஆர் மோனியப் பெட்டியின் பல்லை இருவிரல் அமுக்கிக் கொண்டிருக்க ஏற்படும் ஒலிபோல
மனத்திலொரு வலி!
பசியெடுத்தால் என்னதான் ஒரு உறவுமுறை சம்பிரதாயம் - பழக்கவழக்கம் பண்பாடு!
நீபி.அருளானந்தம் 81 கடந்து போகுதல்

Page 56
எந்த ஒழுக்கத்தையும் உடைத்தெறிந்து புதுக் கணக்கு மனதில்போட்டு நுழைய நீக்கல் வழி கொடுப்பதுதானே வறுமை?
அதுவும் கொடிய இந்த போர்ச் சூழலில்!
பஞ்சத்தில் அடிபடும் மாடுகளுக்கு தின்னக் கடதாசியாவது கிடைக்கும் ஆனால், வன்னிச் சனங்களின் அடிவயிற்றுப் பசிக்கு சாப்பிட அங்கு என்னதான் கிடைக்கும்?
திருமணமாகி - இவள் பிறந்த மேனியாக புருஷனுடன் படுக்கைக் கட்டிலில் கிடந்த போதும் கூட அவள் தன் கழுத்திலிருந்து இதுவரை கழற்றாத தாலிக் கொடி!
இப்போ அவளுக்குத் தொலைவில் மின்னிமுழங்கி ஓய்ந்த செல் சத்தத்தோடு தன் கழுத்துத் தாலியை அன்னிய னொருவனுக்கு - அவள் கழற்றிக் கொடுக்கிறாள்
ஒரு சோற்றுப் பார்சல் சாப்பாடு அவள் தாலிக் கொடியை இப்போ விழுங்குகிறது
நீபி.அருளானந்தம் 82 கடந்து போகுதல்
 

இன்றே இது வெளியாக வேண்டும்
கிளை நீட்டி வந்த அந்த வேப்ப மரத்தின் கிளை முறித்த குற்றத்திற்கு காற்றையும் நான் விசாரிக்க எழுந்தேன்
உயிர்களின் மேல் எனக்குள்ள பாசம் கொண்டு பாம்புத் தலையசைப்புடன் ஓடும் காற்றை உழைக்கின்ற தொழிலாளி நான் கண்களில் சிவப்புடன் நியாயம் கேட்டேன்
இந்த மரத்தின் வாழ்வுதனை நீ சிந்தித்துப் பார்! இக் கிளைகளின் துள்ளலை வெட்டினாற் போல செய்து ஏன் இதன் வளர்வை நீயும் சேர்ந்ததாய்க் கெடுத்தாய்?
இச்சின்னமரம் இம்மண்ணில் பரவி வளர்வது அந்தப் படைப்புக் கடவுள் கொடுத்த கொடை
சூழல் காத்தலென்று சொல்லி கையில் ஒரு புத்தகத்தோடு பிரமாபோல் வீற்றிருக்கும் அவன் தன் சுற்றம் மட்டும் காத்துக்கொண்டு எம் வசிப்பிடத் தூய்மை மண்ணை குப்பை மூலையாக்கி சுவாசமடைக்கச் செய்ததென்ன நீதி
நீபி.அருளானந்தம் 83 கடந்து போகுதல்

Page 57
தர்மமில்லை இது அநீதி! கண்திறவா சிட்டுக் குருவியையும், கொன்றது அதர்மமே! நிலாவிலெல்லாம் மொட்ட விழும் அமுதப் பூக்கள் பூப்பது எங்கள் தேசம்!
அந்த மொட்டுக்களையெல்லாம் கொல்ல அடிப்பதற்கு நீ செல்லுடன் சேர்ந்து கொண்டா வந்தாய்
எல்லாம் அழிந்தும் அழுது கொண்டே சிரிப்பது போல இன்றும் இருக்கிறது எம் மண்ணின்
குழந்தை முகம்
இனியாவது
முளைக்கும் பூக்களை பழஞ் சேலைத் தூணியிலென்றாலும் வாழ நீ அனுமதி
6TLD LD603T 6T6)6)IT D அழகாய் இனியாவது வாழட்டும் - என்று நான் அதனிடம் சொன்னேன்
என்றாலும் எதுதான் சொன்னதற்கு எனக்கு ஒரு பிரயோசனம்
அந்தக் காற்றோ நான் சொல்லியதை அந்தக் காற்றுக் குள்ளேயாய் குறிப்பெழுதி வைத்துவிட்டு பின் கைகழுவிக் கொண்டு அப்பாலே போயே விட்டது
நீபி.அருளானந்தம் 84 கடந்து போகுதல்

இக்கவிகைக்குள் முள் வசனங்கள்
வெப்பமான ஓர் வியூகம் குடா நாட்டிலுள்ள மக்களை கழுவேற்றுகிற கணக்கில் பாடு படுத்திக் கொண்டிருந்தது
பட்டினியிலே அழுகையும் சாவும் கொடிய அவலமும் 6)16Dtfb 6)JJJ
மக்களும் சொல்வதற்கில்லா பசி வலிகளை தாங்கிக் கொண்டு அட்டையாக சுருண்டு கிடந்தார்கள்
போருக்குதவியாக அங்கே காற்றும் இயங்கியது. அடுக்குச் செல் தாக்குதல்களில் அங்கே அவர்களுக்கென்றால் துப்பாக்கிக் குழலைக் கூட சுத்தம் செய்ய நேரமில்லை
விடுதலையை உனக்குத் தருகிறேன் என்று சொல்லி சாவுகளை மக்களுக்காய் கொடுத்துக் கொண்டிருந்தது விதி
செல்லடிச் சத்தத்தில் அறைக் கதவு நிலை பதற சன்னல் கம்பிகளும் மனித மனங்களோடு கிடந்தாய் நடுங்குகின்றன
நீபி.அருளானந்தம் 85 கடந்து போகுதல்

Page 58
கலையுமா இக்கணம் வானில் சுழன்று வரும் விமானத்தின் செயல்பாடு - என்று மணிசருக்குக் கிடந்து பதறுகிறது மனம்!
காடு மேடு மீறி ஊர்ப்பனை வடலிகளையும் தாண்டி வீட்டுக்குள்ளும் உள்ளிட்டாய் Ꭵ IL_60Ꭷ6ᎠᏧᏏ6iᎢ L ll _60Ꭰ6ᎠᏰᏏ6ITIIᏓᎥ] வீழ்கிறது கோர்த்தமைந்ததாய் எல்லா செல்களும்!
அதற்கு எவ்வளவாய் மனிதர் மேல் ஒரு ஆவேசம்!
மனித உடல்களை அது துண்டாடுகிறது துணுக்குகளாக்குகிறது தூசுகளாகவும் பறத்தி அழித்தும் விடுகிறது
முற்று முழுதாக இந்த யுத்தம் போய் தொலையட்டும் என்று அம்புப் படுக்கையில் படுத்ததுபோன்ற வலியில் என் குறியும் கூடத்தான் அடங்குகிறது
இரத்தம் என் உடலில் தண்ணிராகப் போய்த் தீர்ந்தது. வெறும் கட்டாரிக் கட்டையாகத் தான் இப்போ உடல்! அவயவங்களும் செயல்படவில்லை.
நீபி.அருளானந்தம் 86 கடந்து போகுதல்

எலும்புகளின் உட்புறங்களும் காய்ந்ததாகின. சுவாசக் குழலிலும் காற்றுத் துலக்கமில்லை.
இந்த ஓரிரவு முடிகிறது. எல்லாக் கொடுரமும் மெல்ல மெல்ல மறைந்து நாளையேனும் சமாதானம் வருமா என்றதாய் நினைத்து விறைத்துக் கிடக்கும் என்மனம் நிம்மதிப் பழம் வேண்டி பசியோடு வாய் திறக்கிறது.
நீபி.அருளானந்தம் 87 கடந்து போகுதல்

Page 59
சித்திரவதை
சித்திரை வதை பட்டுப்பட்டு அழுத்தச் சிவப்பாகியது அவளது உடல்
நாளும் நிற்பதில்லை 96).j6fi (p60)6)60)ul அவன் வளைவு ஊசியால் கிழித்துப் பிரித்து இரத்தம் சிந்த வைப்பது
இரத்தச் சாறு சிந்தும் இடத்தை சீமை நாயின் விழிகொண்டு அக்கொடியோன்
பார்க்கிறான்
அணை உடைக்கும் இன்பத்தில் அவன் மூச்சு சீறுகிறது
தன் பெண்மையின் உடல் வழியெல்லாம் புண்ணாகும் திருகுதலில் பாஞ்சாலியவள் அபயம் கேட்டு அழுததைப்போல தன்தசை துடிக்கும் வேதனையில் ஊளை நாய் போல அவள் ஓலமிட்டுக் கதறுகிறாள்
ജൂഖണിങ്ങ് (8ഥൺ ஒவ்வொரு கேள்விக்கும் ஊசி பிடித்த அவன்கை அவளின் மார்புக் கூரில் விடாது திருகி நீபி.அருளானந்தம் 88 கடந்து போகுதல்

தையல் ஏற்றிக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு ஊசிக் குத்தலின்
மரித்தலிலும்
"நான் பிழைக்கவேண்டும்
கடவுளே’ என்று
தனக்குள் நம்பிக்கைச் சுவரையும்
அவள் எழுப்புகிறாள்
அவனுக்கோ குற்ற உணர்வான தாய்த் தன் கைகளுக்குத் தெரியவில்லை
தீ வீசும் திமிர் வாடையோடு அவள்மேல் படும் - தன் விரல்களையும் அன்னிய விரல்களாய் அவன் உணர வில்லை
அவளின் குருதி வழியும் துரிதம் குறைவுபடு மட்டும் அந்த ஊசிக் கூர்மைக்கு அவள் உடலிலிருந்து இன்னும் சுரக்குமா இரத்தப் பழம்
என்று ஒரு வேடனுக்குரிய வேட்டுவக் குணத்தை தனக்குள் தான்கொண்டு அவள் உயிரையும் வடித்து விடவே இன்னும் அவன் - முயன்று கொண்டிருக்கிறான்
அவளுக்கு தன்யோனி மேடுகளுடேயும்
நீபி.அருளானந்தம் 89 கடந்து போகுதல்

Page 60
கொடியதான நஞ்சின் வலி
நோ உட்புகுந்து “வீறிட்டு அலற அந்த உண்மை ஒன்றை மாத்திரம் சொல்! இந்தத் துாண்டில் ஊசி வேதனையிலிருந்து உன்னை விடுவித்துச் செல்ல வைக்கின்றோம்
நீ புரிய வை எங்களுக்கு
அதை.”
என்று விகிதம் குறையாத கேள்விகளால்
கேட்டு அவளைக் கடைசிக் கேள்வியும்
கேட்டு அந்த மனிதப் பூச்சிகள் அவளை அரித்துக் கொண்டே
w இருக்கின்றன
அவளை பிண எரிப்புச் செய்வதற்கான மின்சார நெருப்போடு அவள் உடலத்தைச்
FL6)LDTib.d53 FITLDU6)(Tdb35 இடுகாட்டுப் பேய்களாய் அவர்கள் கொலையுருக் கொண்டதாய்க் குரூரமாகின்றனர்
நீபி.அருளானந்தம் 90 கடந்து போகுதல்

சோகத்தின் திவலைகள்
"தீபன் இப்போ எங்கே?” என்றேன்! செவ்விரத்தக் குளியலுக்குள்ளே அவரும் மறு நாளிலேயே இறந்து விட்டார் - எனும் அந்தக் கதையிலிருந்து தான் அவள் தன் துன்ப வாழ்க்கையை என்னிடம் சொல்லத் தொடங்கினாள்
"அவர் இறந்த மறுநாளே நானும் கூட இறந்ததானேன்! ஆலமரம் போன்ற அவர் சரிந்த பின்பு என்ன இது ஒரு வாழ்க்கை?”
"குழம்பும் என் மனது இதைச் சொல்லச் சொல்ல கிடந்து அழுகிறது அண்ணா” - என்றாள் அவள்!
“என்னில் நேசத்தோடு வாழ்ந்தவர் நினைவு இன்றும் நெஞ்சிலே எனக்கு மலைபோல் நிற்கிறது அண்ணா!”
"அவர்தான் எனக்கு இனிமை! என் ஒரேயொரு ஆரியனவர்!
அவர் என் மனக் கொடிகளுக்குள்ளே பூத்த தொரு மறையா நட்சத்திரம்!
என் வாழ்வின் ஆரம்பமே அவர்தான்!
நீபி.அருளானந்தம் 91 கடந்து போகுதல்

Page 61
ஒ மண்ணா - இப்ப எனக்கு ஒன்றுமே உலகில் இல்லை! இனி எப்பவும் எனக்கு அவரில்லாமல் ஒன்றுமேயில்லை!” என்று -
அந்த ஒன்றாய்
அழிந்த
ஒவ்வொன்றுகளையும் அவள் சொல்லிச் சொல்லி அழலாகினாள்
நீபி.அருளானந்தம் 92 கடந்து போகுதல்
 
 
 
 
 
 
 

நான் காண்கிறேன்
ஒ. என் இனத்து மனிதக் குரல்களே யார் யாரது பெயர்கள் சொல்லிக் கூவி நீங்கள் ஓலமிட்டு அழுதீர்கள்?
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப் பிய்த்ததுபோல் எதுவும் தெரியாமல் உங்கள் தோள்களில் தூங்கியவாறிருந்த பிள்ளைகளின் கைகால்கள் செல்லடிபட்டுத் துண்டாகி ரத்தம் ஒழுகுவதைப் பார்த்தா நீங்கள் கொடுரமாய் அழுதீர்கள்?
நல்ல யெளவன முகம்பார்த்து பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற செல்லப் பிள்ளை செல்லின் கொட்டியதிர்கிற ஓசையோடு உயிர்ச்சீவன் அறுபட்டதைக் கண்டா துடித்தெழுந்து நீங்கள் ஓலமிடுகிறீர்கள்
வேகத்தில் விடைபெறும்
உங்களது சாவுகள்
இங்கேதான்
உலகிலேயே முதன் முதலில்
இடம் பெற்றதா?
நீபி.அருளானந்தம் 93 கடந்து போகுதல்

Page 62
இனி உங்கள் வாழ் நாளில்
எஞ்சியதாய்த் துயரத்தின்
வார்த்தைகள்
ஏதுமுண்டா தாய்க்குலமே?
தூண்களெல்லாம்
வீழ்ந்த வரிசையில் கண்களை இமைக்காமல் இப்போதும் தான் நான் பார்க்கிறேன்கு தூரத்தில் எனக்குத் தெரிபவை இன்றும் விலகி என் கண்களுக்கு மறையவே மறையவில்லை
நீபி.அருளானந்தம் 94 கடந்து போகுதல்

6) Idf6)
பலபேர் துடிதுடித்து அவலமாய் உயிர் விட்ட
அந்த வெளியிலே நின்றவாறு இக்கவிதையை நான் எழுதுகிறேன்
அலங்கார வாழ்வின் கனவோடு வாழ்பவர்க்கு உளறல் புணர்ந்த அழுக்காகத் தான் இக்கவிதைகள் படிப்பதற்கு இருக்கும்
யுத்த அநியாயத்தை சட்டை யுரித்துக் காட்டி நெருப்புக் கக்கும் சொற் பொழிவோடு கவிதை புனையும் போது இனிமையெடுக்காமல் கவிதை கசப்பதுபோலத்தான்
அவர்கள் புலன்களில் தென்படும்
அழகைக் கவிதைகளில் உணர முடிகின்ற அனுபவத்தினர் இரத்தம் உதிர்த்து உயிரைக் கருக்கிக் கொண்ட மனிதர் துயரங்களையும் தம் நினைவினில் நோக்க வேண்டும்
போரில் பூவுதிர்ந்து காயுதிர்ந்து - பழமுதிர்ந்து போனகதை சொல்லவும் வாய்திறவாத் துயரம்தான் என்னை மூழ்கடிக்கும்!
நீபி.அருளானந்தம் 95 கடந்து போகுதல்

Page 63
அலுப்பென்றிதை யெல்லாம் அலட்சியமாக கொப்பளித்தால் சாக்கடையில் நாய்படுத்த வாழ்வாகவே - எம் வாழ்வும் வந்து விடும்
போரிலே அவர்கள்பட்ட வேதனையை உணர்ந்தவர்க்கு வாழ்வெல்லாம் துயர நெடியே பங்காய் இருந்தவாறிருக்கும்
கொழித்துக் கிடக்கும் நிலம் எங்கள் தேசம்! இந்தப் போர் என்று வந்து அங்கே நிலத்தடிப் புல் கிழங்குகூட
நஞ்சாகிவிட்டது.
அங்குள்ள சனமெல்லாம் செத்துப் போன பாவம் கண்டு எஞ்சித் தப்பியவர் சித்தம் புரண்டு போனதாயும் போனது
இக்கவிதைகளை நான் எழுதும் வேளை கடக்கும் பொழுதுகளில் அனேகம் துயரத்தாலான தூக்கத்து மறைப்பிலே மான் தோலின் மீது நான் கிடக்கிறேன்
கடைசிப் போரிலே அதீத நெரிசலில் நின்று செல்லடியில் மாண்ட மக்களது பாவம் காண நித்திரையிலும் நான் நிஷடையிலிருக்கிறேன்
நீபி.அருளானந்தம் 96 கடந்து போகுதல்

அப்படி விளைவித்து
விடியல் பொழுதில் காதில் விழும் கரிச்சான் பறவைகளின் அறிந்த குரல்கள் கேட்டு நித்திரை கலைந்தெழுந்த காலமது மடிந்து போய் விட்டது
இக்காலம்
இருட்டு வேளையிலே முற்றத்தில் போய் நின்று அழகு மாலை போல் துலங்கிடும் வானத்து நட்சத்திரங்களை பார்ப்பதற்கும் எனக்குப் பயம்!
செல்லடிச் சத்தம் கேட்டு படுத்த படுக்கையில் உடல் சுருக்கி நான் கிடக்கும் போது ஒரு மிடறு எச்சிலையும் உடனே நான் விழுங்கி விடுகிறேன் சிறு நீர் விட அவசியமில்லை
என்றதாக குறியும் அப்போது சுருங்கியதாய் வந்து விடும்! தூரத்திலிருந்து வந்து கேட்கும் துப்பாக்கிச் சத்தங்களோடுதான் நான் காணுகிற கனவுகளும் இருக்கும்
அழுக்கடைந்த
என் ஆடைகளது மணம்
உச்சி மட்டும் சுவாசத்தோடே போய்
மேலே குளித்து விட்டு
பிற்பாடு திரும்புகிறது
நீபி.அருளானந்தம் 97 கடந்து போகுதல்

Page 64
சிவப்பு நிற செம்பரத்தைப் பூப்போல எப்பேர்ப்பட்டதோர் அழகாய் வாழ்ந்தனர் என் பிள்ளைகள்!
இப்போ, பிள்ளைகள் முகத்திலும் பிஞ்சுச் சிரிப்பில்லை! என் குடும்பத்தில் எல்லாருக்குமாய் நிம்மதி விடைபெற
இன்று காலை என் வீட்டின் ஒரு சுவர் கூட செல்லடிபட்டு சிதறின பகுதியானது
நீபி.அருளானந்தம் 98 கடந்து போகுதல்
 

சிறகிலிருந்து பிரிந்தது ஒரு இறகு
காற்றைக் கரைத்துக் கொண்டுவரும் செல்புகை அவளின் மூக்குத் துளை திறந்து மனத்தின் நம்பிக்கை மிச்சங்களையும் மயானமாக்கி விட்டது
வெற்றி நமக்கென்று அவள் எழுதிய கவிதைகளிலெல்லாம் தேங்கும் மெளனம் வந்து குடி கொண்டுவிட்டன
கவலை உப்பிய அவள் முகத்தின் முன்னாலே கடிகாரத்தின் கடைசி நிமிடங்கள் அவளுக்காகக் காத்திருந்தன
போரைச் சந்தித்து வந்த அவள் செவிகள் ஆணியைக் காதில் இறுக்கியது போன்ற சத்தம் கேட்டுக் கேட்டு கூன் முதுகையும் கைத்தடியையும் அவளுக்குப் பரிசாக கொடுத்து விட்டன
அலை அலையாக வந்து மனித உயிர் விழுங்கும்
போரிலே வெதுவெதுத்து நிலத்துட்புல் கூடச் செத்தும் விட்டது
நீபி.அருளானந்தம் 99
கடந்து போகுதல்

Page 65
ஒரு தடவையில் வெகு நேரம் வந்து விழுந்து செல்களொவ்வொன்றும் வெடிக்க
'சின்னாச்சி.
சின்னாச்சி’ என கத்தியபடி இருட்டைப் பார்த்துக் கொண்டு வீறிட அவள் ஓடினாள்
கூரான கற்கள் அவள் காலில் குத்தின.
“செல் உன்னை புல்அறுக்கப் போவுது என்று மனம் அவளை தட்டி எழுப்பியது.
அவள் கண்ணிலே கண்ணாடித் துண்டுகளாய் மின்னிற்று சில செல் துண்டுகள்!
நெருப்பைப் பற்ற வைத்ததுபோல் கண்ணிலும் வந்து புகைவிழுத்தும் செல் ருசியாய் அவளின் காலையும் உறிஞ்சி முடமாக்கின!
சுரீலென்று ஒரு செல் துண்டு காலில் பட்டதாய் உணர என்ன நடந்ததென்று அவள் கீழே உற்றுப் பார்த்தாள்
நீபி.அருளானந்தம் 100 கடந்து போகுதல்

ஒரு கால் துண்டாய்ப் போன அனர்த்தம் கண்டு எருதை விரட்டும் ஒலமாய் பிறகு அவள் கத்தினாள்
கால் சப்பையான வேளையோடு பார்வையை ஒரு முறை முன்னால் கீறிவிட்டு கல்லெறி வாங்கி விழுந்தவள்போல அவள் கீழே நிலத்தில் விழுந்தாள்
ஓ! வன்னிலே உன்மடியிலே இப்போது இவள்! இவளை தூக்கிச் செல்ல வேண்டுமே ஒரு வைத்திய சாலைக்கு? கிளைகளோடு கிடந்து கொண்டிருக்கும்
இவளை காப்பற்ற வேண்டி நீ யாரையாவது உதவிக்குக் கூப்பிட வேண்டுமே?
நீபி.அருளானந்தம் 101
கடந்து போகுதல்

Page 66
மனத்தியின் ஆவேசம்
கண்ணும் மூக்கும் முகமில்லாததுமான முண்டங்களாயுள்ள
பிணங்கள் தான் அங்கே ஏது அந்தயமன் வந்து இவர்கள் உயிர்களைக் கொத்திக்கொண்டு போய் விட்டானா? இவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்படாத மனிதர்களா? கீதம்பாடிக் கொண்டிருந்த கிளி குருவி மைனாக்களே இனி இங்கே வராதா? எல்லாம் முடிந்து விட்டது என்ற நினைப்பு இருந்தாலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே முகப்பாய் நிமிருகிறது எனக்கு இன்னும் அந்த யுத்தத்தின்
நினைவு
இன்னமும் ஊர்ந்துர்ந்து விரிந்து விரிந்து கவலையில் என்னை தலை முழுகச் செய்து கொண்டிருக்கும்
ஒருமலைப்பாம்பாய் இறங்கி
கொஞ்சம் கொஞ்சமாக என்னை
விழுங்கியபடியே இருக்கிறது.
நீபி.அருளானந்தம் 102 கடந்து போகுதல்
 

தாம் ஏவாள்
- ஒரு மறுவாசிப்பு
நீபி.அருளானந்தம் 103 கடந்து போகுதல்

Page 67
ஏதேன் தோட்டத்திலே. - ஆதாம் ஏவாள் ஒரு மறுவாசிப்பு -
ஏதேனெனும் தோட்டத்து நடுவில் தேவனானவர் நட்டுவைத்த விதை வெடித்து விலகாமல் நேரே வளர்ந்தது அந்த மரம் பிறகு ஒளிக் கிளைகள் விட்டு விழியுணர்வை கொள்ளை கொண்டதாய் வளர்ந்து பழைய பாம்பு பிணையும் சந்தன நிற அப்பிள் மரமாய் மாறியது
ஏதேன் தோட்ட மென்னும் கருப்பையிலே ஆல்கொண்டு உடல்விரித்த - இந்த ஆனந்த மரத்திற்கு கீழ்க்கிளை தொங்கும் இடத்திலெல்லாம் நிலவுபோன்ற உருவில் பழக்காய்கள் காய்த்தன
காய்களின் நிறங்கள் மரநிழல்களை யெல்லாம் வெளிச்சங்களாக்கி விட்டன. கடவுளின் கணக்கில் ஒரு நாளென்பது ஆயிரம் வருடமாகும்! அந்த யுகம் கழிய தன் நினைவைக் குவித்து கடவுள் சிந்தித்தார்
நமது சாயலாகவும் * நமது ரூபத்தின் படியேயும் நீபி.அருளானந்தம் 104 கடந்து போகுதல்
 

இனி ஒரு மனிதனை புவியில் படைப்போமென்று
உடன் ஒரு பிடி மண் எடுத்து அதிலொரு மனித உடலின் உருச் செய்து உயிர் கொள்ளும் ஜீவ சுவாசக் காற்றை நாசியில் ஊதி கண் திறந்து அந்த மனிதனை அவர் எழச் செய்தார்
எதற்கும்
ஆனந்திக்கும் கவலையில்லா தொரு பூரண மனிதன் கடவுள் கொடுத்த பிராண உயிர் பெற்று ஏதேன் தோட்டத்திலே மண்ணில் பிறந்த முதல் மனிதனாயானான்
நெடுநாளொன்றின் பின் மகா உன்னத படைப்பை செய்து முடித்தேன் எனும் நினைவில் அந்த மனிதனுக்கு ஆதாம் எனும் பெயரை கடவுள் ஆட்டினார்
ஆதாம் என்பவன் அந்த ஏதேன் தோட்டத்தை கைகளால் சுற்றிப் பற்றிக் கொண்டு
நீபி.அருளானந்தம் 105
கடந்து போகுதல்

Page 68
ஆனந்தமாய்த் தொங்குகிறவன்போல அவ்விடமெங்கும் சுற்றித் திரிந்தான்
அவன் நாவின் சுவை நரம்புகளெல்லாம் முனைவரை கூராகிவிட விதம் விதமான மரத்துப் பழங்களையெல்லாம் பறித்து ருசிகள் பல தெரிய சுவைத்தவன் தின்றான்
O
ஆரியன் பகலைக் கண்டடைந்து இரவின் நிலவிலே உட்புகுந்து
LD6l)f(b5g)
இவற்றையெல்லாம் மாறிமாறிப் பார்த்தபடி உடலை வருடிச் செல்லும் காற்றில் மரநிழலில் படுத்துக் கொண்டு அடிவானத்துக்கு அப்பால் செல்லும் நினைவுடன் காலம் கழித்தான் ஆதாம்
தோட்டத்தில் ஒலி செய்யும் பறவைகள் இருக்கும் மரங்களில் பசியின் சத்தத்தை அவன்காதுகள் கேட்கவில்லை
இரைபோதும் போதுமென்று இருக்கும் அந்த மரங்களில் குஞ்சுகளுக்கான இரையை அவைகள் சேகரிக்க ஏன்தான் கிடந்து கலக்கமுறும்
நீபி.அருளானந்தம் 106 கடந்து போகுதல்
 

ஏதேன் தோட்டத்தில்
படைக்கப்பட்ட சிங்கம்புலி சிறுத்தையெல்லாம் எருமைக் கன்றுடன் சேர்ந்து பசிய புல்லை பசிக்கு மேய்கின்றன
ஒருபறவை விளையாட்டாகத் துரத்துகிறது சிங்கத்தை! அருகம் புற்கள் கிளைத்திருக்கும் தரைவெளியெல்லாம் சிறு தலையசைப்போடு சிங்கமும் கோபம் கொள்ளாது விளையாட்டுத் தனத்துடன் ஒடுகிறது
ஏதேன் தோட்டத்து சந்தன நிற அப்பிள் மரம் பார்வைக்கு மிக அழகும் புசிப்புக்கு நலனுமான தன் அருகிலுள்ள மரங்களைப் போல தங்கள் தங்கள் ஜாதியின் படியே விதைகளுடைய கனிகளை கொடுத்தும் மரங்களை முளைப்பிக்கச் செய்யும் தொழிலையும் செய்யவில்லை
ஆனாலும் அதுமட்டும் அப்படியே தான் ஒரு தனிமரமாகவே இருக்கின்ற
கர்வம்மிக்க நிலையிலேதான் நெடுகவமே
ஆயிற்று!
நீபி.அருளானந்தம் 107 கடந்து போகுதல்

Page 69
அங்கே
புற்களும் பூண்டுகளும்கூட தங்கள் தங்கள் ஜாதிப்படியே தங்கள் தங்கள் கனிகளைக் கொடுத்து விருட்சங்களை முளைப்பித்துக் கொண்டிருந்தும்
அந்த ஒரு மரம் மாத்திரம் தான் தனியே மட்டும்தான் தேவர்களைப் போல கண்திறந்த படி இருக்கச் செய்யும் புசிப்புக்கு நல்லதான கனியை கொடுப்பதற்குக் காய்த்திருக்கிறேன் என்கிறதான ஒரு இறுமாப்பில் - தன் இலைகளை குளிர்ச்சித்தபடி தீமைகளைத் திறந்து கொண்டு நின்றதாய் இருந்தது
ஆதாம் இம்மரத்தைப் பார்த்தான் இது இலை உதிர்ப்பதை இல்லாது நிறுத்தி விட்டு சைகைகள பாஷைகளை சொல்வதான ஒரு விருப்பு நிலையில் பார்த்தால் - என்னைப் போன்றே இதுவுமொரு கடவுளின் படைப்புத்தான்! என்றிதை தன் மனதுக்குள் வஞ்சகமின்றி அவன் நினைத்துக் கொண்டான்
என்னை உயிராய் நேசிக்கும் தேவன் இலைகளின் அழகோடு இருக்கின்ற
நீபி.அருளானந்தம் 108 கடந்து போகுதல்

இக்கனியை மட்டும் துக்கத்தின் மணம் நிறைந்தது எனறு ஏன சபித்ததாக எனக்குச் சொன்னார்? அதிஷ்டமிழந்த பழமரமாக அதை ஏன் அவர் குறை கூறினார்?
இது மெளனித்துக் கிடப்பதைப் பார்க்க எனக்கும் துக்கமளிக்கிறது ஆனாலும் கடவுள் தன் வார்த்தையிலே இதை நீ தின்றால் சாகவே சாவாய் என்றாரே? நன்மை தீமை அறியத்தரும் பழம் கொடுக்கும் இந்த விருட்சத்துக்கு இந்த ஒரு கேடான நிலைமை எப்படியாய் வந்தது?
என்றெல்லாம் அவன் நினைத்துக் கொண்டு தன்ன்ைப் படைத்த கடவுளுக்குக் கீழ்ப்படிந்தபடி அந்த மரத்தை கண்ணால் பார்க்கின்றதையும் விலக்கி விட்டு அப்பாலே போனான்
ஆதாமை பரிபூரணமான
ஒரு மனிதனாகவே கடவுள் தன் படைப்பில் உருவாக்கினார். அவன் மனதுக்குள் சுவராக நின்று துன்பம் அடைத்ததேயில்லை ஆயினும் அவன் மதிக்குள்
நீபி.அருளானந்தம் 109 கடந்து போகுதல்

Page 70
ஒரு அழகுணர்ச்சி புன்னகைத்து இறங்கத்தான் செய்தது
சுழன்று சுழன்று சிறகுகளை ஒன்று கூட்டி பின் சிறகைப் போர்த்தி முத்தமிட்டு இதழ்களைக் கவ்வும் ஜாதி ஜாதியான பல பறவை ஜோடிகள் இன்ப உலகத்து வாசலை அவன் கண்களில் திறக்கச் செய்தன
ஆண் பெண்ணென்ற மாயை பற்றிய வாசனை அவன் மனத்துள் சிறகசைத்து அவனின் தனிமை வெற்றிடத்தை உணரச் செய்து விட்டது
O
கடவுளும் அவன் மன ஆழத்தில் ஜொலிக்கும் உண்மையென்கிற வைரங்களை உடனே தன்னில் அள்ளிக் கொண்டதாய் எடுத்துக் கொண்டார்
அவனை மன அமைதியில் உறைய வைக்க தன்நேர்மையான ஞானத்தை ஆடாக்கினார்
அவன் கதகதப்புக்கு வேறே உள்ள தன் படைப்புகளைப் போலவும் நீபி.அருளானந்தம் 110 கடந்து போகுதல்

செயல்பட்டு -
இவனுக்கும் ஒரு துணை சேர்ப்பதே இனிமேல் நன்று என்று மேலானதோர் நோக்கம் தழுவி ஒரு பெண்ணை அவனுக்காய்ப் படைப்பதற்கு நல்லதோர் வடிவ அமைப்பொன்றை தன் ஞானத்தால் தேடினார்
ஒரு பெண்ணின் படைப்புக் குறித்த விவாதங்கள் கடவுள் உள்ளத்திலும் சில ஆண்டுகள் காலமாக நிகழ்ந்த படியேதான் இருந்தது.
அவர் அதை
தெளிவாக அடையாளம் கண்டு கொண்ட அன்று ஆதாமை அயர்ந்த நித்திரையின்போது கிட்டவாக நெருங்கினார்
ஆதாமின் உடல்கூறு அவன் ஆடை அணியாத தோற்றத்தில் அப்போது அவரை வசீகரித்தது
ஒரு சித்திரக்காரனுக்கு உருவத் தோற்றக் கவர்ச்சியானது முழுநிர்வாணத்தில் தான் தெரியும் என்ற உண்மை கடவுளரான அவரிலும் அப்போ தெரிந்தது
மனிதன் தனியே இருப்பது நல்லதல்ல ஏற்றொரு துணையை
நீபி.அருளானந்தம் 111
கடந்து போகுதல்

Page 71
அவனுக்காய் உண்டாக்குவோம் - என்று ஒரு பெண்ணை அவனுக்காய்ப் படைப்பதற்கு அவனிலிருந்து ஒரு விலா எலும்பைப்பெற வேண்டிய - மிக்க அவசியத்தை அவர் உடனே உணர்ந்தார்
அவனின் உடற்கூற்றை தெரிந்தவருக்கு அறுவை சிகிச்சை செய்வதென்பது சிக்கலாக இருக்கவில்லை
“உன் மீதான வெறுமை வேதனையை தீர்ப்பதற்கு இவள்வரவை நான் இப்போ உனக்குச் செய்கிறேன் உன் நேசத்துடன் சேர்த்து அவள் சதைகளையும் நீ சூடேற்றி உடல் உறவின் விருந்திலும் நீ வாழ்ந்து இனம் பெருக்கு”
- என்று
அவர்கூறி விட்டு . இருள் வெளியான அப்பொழுதில் 17 அவர் ஒரு பெண்ணை ஆதாமுக்காகப் படைத்தார்
கடவுளின் இந்தப் படைப்புத்திறன் எல்லாவற்றையும் பார்த்து சந்தன நிற அப்பிள் மரவேரடியில் அமர்ந்தவாறு தன்னை வெம்மைப் படுத்திக் கொண்டிருந்தது
நீபி.அருளானந்தம் 112 கடந்து போகுதல்
 

பொறாமை பிடித்த அந்தப் பேய்ப் பிசாசு
மனித உடல்கள் உயிர் பெற்றெழுவதெல்லாம் கண்ணால் கண்டு அதற்கு மனத் துயரமாயிருந்தது. என்றும் நிலைக்கும் கடவுள் படைத்த நித்தியமான மனித உலக வாழ்வை சாக்காட்டி விடச் செய்யவே வேணும் என மனத்தில் அதற்கு வஞ்சகம் கொதித்திடவும்
கடவுளுக்கு எதிரான தன் கலகத்தை ஏற்படுத்தி அந்த கடவுளுக்கும் ஒரு சவாலாக தான் இருக்க வேண்டுமென்ற ஓர் வஞ்சனையையும் அது அப்போது ஏற்படுத்திக் கொண்டது
மனம் நோய்க்கு உட்பட்ட அந்தச் சாத்தானின் நினைவுகளை எரிந்த ஒரு கரித்துண்டை கைகழுவாமல் எடுத்துத்தான் அதால் விரிவாய் எழுதவேண்டும்
அந்த அளவுக்கு
அரவத்தின் உயிருக்குள்ளால்
இருந்து பேசும்
அவனுக்கு
அழியாததோர் கெட்ட
நீபி.அருளானந்தம் 113
கடந்து போகுதல்

Page 72
கொலைகார ஆசை மனத்துள் இருந்தது
பரலோகத்தில் கூட இந்தப் பிசாசுகளின் தலைவனானவன் சிரித்துக் கொண்டு ஆனந்தமாக தேவனை ஆராதித்துக் கொண்டு இருந்த 9FLD D60 55560)6T 66D6DIFLAD பொறாமை எனும் பேராசையை மனதிலே தீயாய் மூளச் செய்து முன்னம் கெடுத்தும் குட்டிச் சுவராக்கினவன் தான்!
பரலோகத்தில் ஒருபாதி இருட்டுப் பரவிச் செல்லும் இடமாய்ப் பிறகு ஆகியதும் இவனாலேதான்!
தேவனுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு நொடியில் பிசாசுகளை அழிக்க முடியுமான
சர்வ வல்லமை
நிறையவே இருந்தது
ஆனாலும் அவர் தான் படைத்த அவனை அப்படியாக ஒன்றும் செய்யாது சர்ப்பத்தின் நீண்டிருக்கும் அவன் நாவால் தன் மேல் - சாட்டையைச் சொடுக்கும் அளவுக்குப் பழிப்பதை பொறுத்துக் கொண்டு சுதந்திரமாக அவனை
நீபி.அருளானந்தம் 114 கடந்து போகுதல்

உயிர் வாழ விட்டு வைத்திருந்தார்
படைத்தவனையே பட்டை உரித்து பட்ட மரமாக்கும் அவன் சித்த நீட்சியை அவன் இனிமேல் தன்னால் காணவிருக்கின்ற தோல்வியின் கடைசியிலே கொண்டு சென்று அவனுடைய சவாலுக்கு திருப்திகரமான பதிலளிப்பதற்கும் வெற்றிடத்தில் வைத்து ஒரே வெட்டாய் வெட்டி வேரறுத்து மாளச் செய்வதற்கும் தீர்க்கமானதோர் சித்தத்தை அவர் தன்னிலே பூண்டிருந்தார்
யாரும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத மனித வாழ்வுப் புனைவானது - இந்தச் சாத்தானானவனால்தான் பிறகு சாவு என்பது ஏற்பட்டு உயிர் வாழ முடியாதவாறு மனிதர்க்கு கதவுகளாக அறையப்பட்டது
O
பிசாசைக் குறித்த அவனது பிரதி இவ்வாறு வாசிக்கப்பட்டுப் போகிற நடுவிலேதான் சிற்பம் போன்ற அழகான அந்தப் பெண் கடவுளால் இப்போது உற்பத்தி யாகிறாள்
நிபி.அருளானந்தம் 115 கடந்து போகுதல்

Page 73
மனுஷனில் இருந்து எடுத்த விலா எலும்புதனில் உருவாகிய மனுவழியானவள் தோற்றம்தனை ஆதாம் கண்திறந்து விழித்த போழ்தினிலே பார்த்தான்.
மனத்தில் கசியும் மகிழ்வின் ருசியோடு அவள் உடல் கட்டத்தில் கொழித்துக் கிடக்கும் அழகைக் கண்டு தீராக் காதல் அவள் மேல் கொண்டான்.
ஆதாமின் கைகள் அவளை அழுந்தத் தடவி தனனுடனாக அனைத்துச் சேர்த்தது! அவன் அவளுடன் இன்பத்தின் உச்சிக் கிளைகளிலே ஏறத் தொடங்கினான்!
அவ்வேளை அவளதும் கொடியுடல் முலை உச்சி முட்டும் மட்டும் அவன் மார்போடு უ சேர்ந்து கொண்டது அவர்கள் இருவர்க்கும் இளைப்பாறிக் கரைந்த அன்றிரவு இனிமையாயிற்று.
ஆனால் கெடுபுத்தி கொண்ட பிசாசானவனுக்கோ இதையெல்லாம்
நீபி.அருளானந்தம் 116 கடந்து போகுதல்
 

கவனித்துப் பார்க்க பொறாமை உச்சம் பெற்றது. எதிர்ப்பது போல் எப்போதும் இருக்கின்ற அவனுக்கு மூச்சுக்கள் அதிர்ந்தது - வியர்வைத் தோல் தளத்தில் இரத்தம் கூடக் கசிந்தது!
பெண்ணாகி வந்த ஏவாளுடன் ஆதாம் புணர்ச்சிப் பித்தாகி கயிறாக அவளுடன் பிணைந்து முதல் முதல் பூமியில் அழத்தொடங்கும் குழந்தைச் செல்வங்களைப் பெற்று பூமி முழுவதையும் சந்ததிகளால் நிரப்பும்படி கடவுள் சொன்னதை செய்து விடப் போகிறார்களே என்று அவன் மனம் குமைந்தான்
அவனிடமுள்ள கெட்ட ஆசைகள் இப்போது அவனிடம் வேர் விடத் தொடங்கியது
916)j6öT LDuUT6ÖTöF 3FTLİDL1606) 616ü6)TLD தன்னில் பூசியவாறாய் ஒரு உருவெடுத்த 26).585 85L6)6ft Tul தன்னை ஒரு கணம் நினைத்துக் கொண்டு விசையுறச் செய்யும் (3uTF60)607(3uJITG தன்னை அடங்கா ஆசைக்கு உட்படுத்தி இதைத் தனக்குள்ளே சிந்தித்தான். நீபி.அருளானந்தம் 117 கடந்து போகுதல்

Page 74
தகதகத்துக் கொண்டிருந்த அவனது மூளையில் சுவாசமாய் உள்வந்து கொண்டிருந்த திட்டங்கள் எல்லாம் அவன் நாசி வாசல் துளைகள் ஊடாக வெளி போகா அளவிலே அவனுள் சதா காலமும் மெழுகு வலை விரித்தாற்போல கிடந்தது
அவன் அவ்வேளை ஏதேன் வளவில் ஒளிர்ந்திருக்கும் மனித வயிறு நிறைய தின்னக் கூடிய அந்த மரம் பழுத்த இடத்தருகில் வந்தான்
அந்த இடத்தருகே அவ்வேளை பளபளப்போடு தகடு வெள்ளி இலங்கும் உறுப்புள்ள பாம்பொன்று அவனைப் பார்த்து உள்ளிலும் வெளியிலும் சதைப் பளபளப்பான தன் உடலைக் கொண்டு மண்ணில் அது ஊர்ந்து கொண்டிருந்தது. பாம்பு பதிந்த நிலப்பரப்பெங்கும் அதன் அழுக்கு உடலின் ஸ்பரிசம் காணப்பட்டன.
நீபி.அருளானந்தம் 118 கடந்து போகுதல்

அந்தப் பாம்பைக் கண்டு ஏதேன் தோட்டத்துச் சிட்டுக் குருவியொன்று பயமில்லாத ஒரு நிலையிலும் ஏனோ தனக்குத் தெரியாத அளவிற்குக் கீச்சிட்டது
சந்தன ஆப்பிள் மரத்தின் இலைகளினது வெளிச்சம் சற்றும் பிசகாமல் அப்படியே இருந்தன! உதிர்ந்த பூக்கள் மரத்துக்குக் கீழே காணப்படவில்லை அந்தமரம் -
உன் வருகையை நான் எப்பொழுதேனும் வரவேற்கக் காத்திருக்கிறேன்
விளக்கணைக்கும் உன் செயல்களுக் கெல்லாம் நானும் உன் கூடச் சேர்ந்து சாய்கிறேன்! இருட்டு நிசப்தத்தை இந்த உலகிற்கு ஏற்படுத்தும் உன் ஒழுங்கற்ற செயலுக்கு நீ முகம் பார்த்து திட்டம் தீட்டும் கண்ணாடியின் பின்புறம் நின்று நான் உனக்கு துணைபுரிகிறேன்! இப்போதும் எப்போதும் நீ யாருக்கும் தோற்காமல் மேதமையதயம் பெறச் செய்வேன்! என்ற வாறாய் தன் தலைமேல் பந்தலான இலைகளை கிளைகளுடன் அசைத்துக் காட்டி
நீபி.அருளானந்தம் 119 கடந்து போகுதல்

Page 75
அவனின்மேல் தனக்குள்ள மனப்பூரணத்தை தெரிவிக்கிற சாயலாக மரக்கண்ணால் அது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது
தன் கீழே மனிதச் சடலங்களை நிரம்பும் கொலைகார ஆசையுடைய அந்தமரம் வெள்ளிநிற இலை காட்டி சந்தன நிறத்தின் முகம்காட்டி தன் மீதாகவுள்ள ஆசையில் நம்பிக்கைப் பார்வைகளை பிசாசின்மேல் வீசிவிட
பாம்பின் நாக்கில் பட்ட தித்திப்பான ஊன் சுவைத்திளைப்பில் தன் கரிய உதடுகளை அகட்டி - பார்வையில் உட்பொங்கின மகிழ்ச்சியுடன் சிரித்தான் அலையும் சூனிய முகம் கொண்ட அந்தப் பிசாசு
அக்கணமே அவன்
தொலைந்து தூரம் கடந்து மறைந்தாய்ப் போகின்ற அந்தப் பாம்பை - தான் சொல்லப்போகும் பிரதி அதனுடாக வாசிக்கப்படுவதற்காக கண்திறந்து
நேசத்துடன்
தன்னண்டையில் வருமாறு கூவி அழைத்தான்
அவ்விடமெங்கும் எட்டிப் பார்த்து நீபி.அருளானந்தம் 120 கடந்து போகுதல்

தனக்கேதும் ஓர் இரை உண்ணக் கிடைக்கும் என பசியோடு சென்ற வலுசர்ப்பத்திற்கு தன்னை பார்த்துப் பிசாசு அன்பாய் அழைத்தது சாபத்தின் ஒலம் சுமந்தலைந்தாற் போல நிலைத்த அரவமாக திரிகின்ற தனக்கு இனி விமோசனம் கிடைத்துவிடும், உடலசைத்து ஊர்ந்து திரிகிற அலைவுக் காலம் இனி எனக்கு மறையும், என்றாற் போல இருந்தது.
உடனே நின்ற பதிந்த தன் இடத்தில் நின்று பிசாசு நின்ற பக்கம் முகர்ந்து வருகிறதாய்ப்போல மண்ணில் உடலமாக மிதந்தவாறு அது வந்தது
பாம்பு தனக்குக் கிட்டேயாய் வரவும் சுற்றத்துடனான அன்பை அதன்மேல் கொண்டு பாசம் மிகு பார்வை பார்த்தான் பிசாசு "நீ குற்றம் கனக்கச் சுமந்து இருப்பதால்தான் கெட்ட பூச்சிகளையும் உணவாகக் கொள்கிறாய்! உன் உடல் வெற்றிடத்தில் வியர்ப்பதைக் கூட நான்காணவும் முடியவில்லை.
யாரும் விளங்கிக் கொள்ள முடியாத இரத்தப் பார்வையையும்
நீபி.அருளானந்தம் 121
கடந்து போகுதல்

Page 76
உன் கண்கள் வெளிப்படுத்தி குரூரமாய்க் காட்டுகிறது உன்பற்களான நாற்காலியிலும் கொடிதான நஞ்சு அமர்ந்து உன்சுவாசத்தில் கூட அதுவே வெளிப்படுகிறது. நீ புக நினைத்த இடமெல்லாம் கேடென்று தானே இனிமேல் இந்த உலகம் நினைக்கப் போகிறது? நீ ஒரு மரத்தின் புற்றுக்குள் இருந்து கொண்டுதான் சுவாசம் வாசிக்கிறாய் இந்த வித கேடெல்லாம் உன்னை வெம்மைப்படுத்திக் கொண்டிருக்குமென்பது
எனக்கும் நன்றாகத் தெரியும்! அதனால்தான் உன்கரும் வரிகளை உன்னிலிருந்து அகற்றிவிட நான் உதவ வந்திருக்கிறேன்! உன் வேதனையை நொடியில் கரைத்து வண்ணத்துப் பூச்சியாய் உன்னைப் பறக்கவிட என்னாலும் தான் நிச்சயம் (Մ)Iջեւյլք: என் வெற்றிக்கு நீதுணை சேர்ந்து ஒத்துழைத்தால், நீயும் நானும் ஒரே இருக்கைகளின் மீதாய் அமர்ந்து இந்த உலகையே பிறகு ஆழலாம்.”
என்று அந்தப் பிசாசுப் பாம்பை மார்போடு நீபி.அருளானந்தம் 122 கடந்து போகுதல்

அணைத்த பாசத்தோடு தன் வார்த்தைகளை வரிவரியாகச் சொன்னான் அவன்!
கள்ளிப் பாலாய்த் திரண்டிருக்கும் பிசாசின் வார்த்தைகளை பாம்பு கேட்ட பொழுது அதன் பிளந்துள்ள நாவினது உட்சுவரில் அவையெல்லாம் காட்டுப் பழங்கள் தின்றதைப் போல சுவை கொட்டின. தன் சாபப் பிறப்பு மாறி ஒரு புனிதப் பிறப்பிலே தான் போய்ப் பிணைய இப்போ இரும்புச் சங்கிலிப் பாலம் போட்டுத்தரும் பிசாசின் உதவிக்கு ஊரும் கரத்தையான அது அவன்மேல் நாய் போல நன்றி பாராட்டியது
"துரோகச் செயல்களையெல்லாம் அற்புதங்களாகக் காட்டி, பொல்லாங்கு எண்ணங்களோடு தூங்கி, பொய் புரட்டுக்களோடேயே நெடுகவம் எழுந்து, மோசம் போக்குகிற செயல்களிலே மீண்டும் மீண்டும் குளித்து, அழிக்கின்ற ஒரு செயலை மட்டுமே தேடித் தேடிப் போய்ச் செய்கிற விரோத மனம் கொண்ட கொடிய பிசாசே!
நீபி.அருளானந்தம் 123
கடந்து போகுதல்

Page 77
உன் மனதில் தான் எனக்கும் கொஞ்சம் இப்போதைக்காய் ஒரு நட்பு வேண்டும்! சில பரிசுகளை நீ சொன்னவாறு எனக்குத் தந்து என் பிறவி அவமானங்களை நீ துடைப்பாய் என நான் இப்போ நம்புகிறேன்! என் பெரு மூச்சுக்கள் நீங்கி, எனக்கு வேண்டிய அத்தனை அமைதிகளும் கூடி, பூமிக்குமேலேயும் ஆகாயத்துக்குக் கீழேயுமாய் கடவுளாய் இனி ஆகிவிடுவதற்கு பாடுபடும் உன்னால் முடியுமென்றும் நான் இப்போ நம்புகிறேன்! நீ தைரியமாக உன் ரகசியங்களை என்னிடத்தில் சொல்! சந்தேகமின்றி நான் அதையெல்லாம் பசிதூக்கம் கூட மறந்து உனக்குச் செய்திடுவேன்!” என்று, இணைப்புச் சங்கிலியை பிசாசுடன் பூட்டிக் கொண்ட வாறாய்ப் பதில் சொன்னது LITLD .
O
பாம்பின் பதில் பிசாசின் மன மூலைகள் எல்லா இடங்களிலும் மகிழ்வைக் கொண்டு வந்தது. “இனிநான் மனித உயிர்தனை
நிபி.அருளானந்தம் 124 கடந்து போகுதல்

வேட்டையாட உன்னைப் பாவித்துக் கொள்கிறேன்! நீ எப்படி வந்து என்னை நெருங்கினாயோ அவ்வாறே நீ போய் அந்த மரத்தில் ஏறிக்கொள்! என் உடல் - ஆவி உடலுடைய தெய்வ உறவாயிருப்பதனால் மனித உயிர்களது கண்களுக்கு நான் காணப்படேன்! ஆகையால் என்னை நீ உன்னுள்ளே சுமந்து சுருண்டு கிடக்காமல் அந்த மரக்கிளையில் உன்னை நீட்டிக் கொண்டபடி இருந்து நான் சொல்வதை யெல்லாம் நீ சொல்வதைப்போல உன் ஆழக் குழி வாய்க்குள்ளாலருந்து அந்த மனிதர்களுக்குக் கேட்கச் சொல்லு! நான் அவர்களுக்கு சொல்லும் ஆசை அலையான வார்த்தைகளை காம ஆசை ஓசையுடன் பள்ளம் விழாமல் நிமிர்த்திக் கூறு!” என்றுதன் கண்ணொளி ஆயிரமாய்க் கதிர்வீசிட உருண்ட திரண்ட உருவங்கொண்ட பாம்புக்கு தன் சிரம் மீது இருந்திறங்கும் கட்டளையை வேகம் கூட்டிச் சொன்னான் பிசாசு
O
அவனின் இணைப்புக் கட்டுக்குள் சினேகமாகி விட்ட பாம்பு வழுக்கிக் கொண்டோடிப் போய் உடனே மரத்திலேறிற்று!
நீபி.அருளானந்தம் 125
கடந்து போகுதல்

Page 78
கதவு தட்டிச் சொல்லும் புதியதோர் தொழிலுக்கு தயாராய் இருப்பதுபோல அப்பாம்பும் மரத்தினில் அமைதி ஆசிரமம் அமைத்துக் கொண்டு அமைதியாயிருந்தது
மொட்டைக் கொம்புகளிலும் வேர்கள் உள்ள
புற்றுகளிலும் வாழ்ந்து பழகிய பாம்புக்கு தேர் போன்ற அந்த மரத்தின் நெஞ்சுக் கூட்டிலே ஏறி இருக்கக் கிடைத்தது மதிப்பாகத் தனக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே பட்டது
அது மரத்திலேறிய பின் ஊரமறந்து
உடலை இழுத்துக் கெட்டில் கிடத்திக் கொண்டு பறவைச் சங்கீதம் கேட்டு இரசித்துக் கொண்டிருந்தது!
பனி பெய்து
மண் குளிரும் நேரம் - அதுவாய்த்தானிருக்கும்! பலழவும் விரிந்து பரடைஸ் ஒளிர்ந்திருந்த போது மெத்தப் பிடித்த கணக்கில் தென்றல் காற்றும் சேர்ந்து வீசிற்று
சில தூரம் தள்ளியுள்ள பயிர் உள்ள நிலம் விட்டு பக்கத்துத் தோப்பின் நீபி.அருளானந்தம் 126 கடந்து போகுதல்

அழகையெல்லாம் கண்டுவர எல்லை மீறியதாக சில எட்டுவைத்து நடந்து பூவின் மென்மை கொண்ட பேதை ஏவாள் அப்போ அவ்விடமாய் வந்தாள். தன் வாழ்வே முள்ளாக சுமையாக போவதற்கு இங்கே கேடுண்டாக்க நேரம் தனக்கு மொட்டுக்கட்டும் என்றதைத் தொட்டுக் கூடத் தெரியாத அப்பாவி மனத்துடன் விஷநீரை அனுப்புகிற அந்த மரத்தினது வேரடியில் அவள் வந்தாள்
தன்மேல் சட்டையை வெளியே கழற்றிப் போட்டு நகராதவன் போல் கிடந்த 9ђgБLJ LITLDL - ஏவாளைக் கண்டதும் - கூடக் கறுப்பாகி விட்டது. பிசாசு தன்னில் இறக்கி வைக்கும் சொல்லின் சுமைதாங்க அவன் வாசல் பார்த்து அது கண்ணால் தேடியது
பாம்பின் கால் மாட்டிலிருந்து காவல் காத்த பசாசு தன் சொற்களை பாம்பின் நெஞ்சில் தாய்ப்பாலாக உள்ளே செலுத்தத் தொடங்கிற்று
“ஏவாள்! ஏவாள்!” என்று -
நீபி.அருளானந்தம் 127
கடந்து போகுதல்

Page 79
பாம்பு அழைக்க, குரல் அப்போது தொடுவானமாகப் போய் ஏவாளின் மனத்தரையைத் தொட்டு உடல் ஆட்டை யேற்றிற்று
“ஒருவர் பாசமாய் அழைக்கும் குரல் என்பது இதுதானோ! இல்லை யெனில் இதில் எனக்கும் அக்குரலுக்கும் உள்ளதாய் வேறு ஏதேனுமொரு உறவும் உளதோ! பூமேனியைத் தொட்டும் குளிர் விட்டதாயும் வரும் இவ்வினிய குரல் யாருடையதோ?” என்றும் அவள் அந்த மங்கலைத் திறப்பிக்க தன் கண்களையும் திறந்தாள்.
மனித உயிரையே
பிரிக்கும்
பாம்பு உறுப்பாகிவிட்ட
3 Taji மீண்டும் அவள் உடம்போடு ஒட்டுவதற்கு ஒரு உறவுக்குரல்
வைத்து அழைத்தது
மரத்தின் ஒரு மூலையிலிருந்து தன்னைக் கூப்பிடும் அக்குரலைக்கேட்டு இந்த இன்பம் இதம் பதமான குரல் எங்கிருந்து என்னை
நீபி.அருளானந்தம் 128 கடந்து போகுதல்
 

அழைக்கிறதென்று ஏவாள் பலதிசையும் கண் பார்த்தாள் பார்க்கும் நேரமெல்லாம் தன் அடிமனது ஆசை ஊற்றை ஊறச் செய்து காயப்படுத்திக் கொண்டிருந்த அந்தமரம் நிஜமாகவே இப்பொழுதுதான் தன்னை நேசிக்கத் தொடங்கிக் கூப்பிடுகிறது என்று பாவம் அறியா அவள் அம்மரத்தைக் கண்டு போகச் சம்மதமாக கிட்டவாய்ப் போய்ச் சேர்ந்து பின்னால்தன் பார்வையை ஏற்றி மேலே மரத்தையும் பார்த்தாள்
அவள் கிட்ட வாய்க் கிடைத்தவுடனே பிசாசின் நேச உறவுப் பாம்பு மரக்கிளையிலிருந்தபடி படமெடுக்க ஆரம்பித்தது. “என்றாலும் என்மனம் சொல்லும் ஏவாளே - நீ இத்தோட்டத்தில் உள்ள ஒன்றும் இதமாயில்லை! நீ உண்ண சுவை உறைந்து காய்ந்து போன பழங்கள் லட்சம் கணக்கில் இங்கே தோட்டத்தில் உனக்கிருக்கலாம் - ஆனாலும்,
நீபி.அருளானந்தம்
129 கடந்த போகுதல்

Page 80
ரத்த புஷ்டியை
தன்காய்களில் அள்ளிப்
போட்டுத்தந்து உன் மனதுக்கும் உடலுக்கும் புத்துயிர் ஊட்டக்கூடிய ஆரிய ஒளிச்சத்து நிரம்பிய
இந்தப் பழம் நீ உண்ணும் உணவெல்லாவற்றையும் விட சிறந்ததோர் உணவுதானே?
இக்கிளையில் உள்ள பழங்களை முக்கி முதுகு நிமிர்த்தி கவடிடப்பட்டு நீ பிடுங்கத் தேவையேயில்லை! சரிந்து கிடக்கும் இக்கிளைகளை வளைத்து உன்னால் பட்டென பிடுங்குவதற்கும் உனக்கு உள்ள வேலை மிக இலகு!” என்று நக்கித்தின்னும் பேராசை யொன்றை பாம்பு அவளுக்கு தன் அடி வாலை மேலே நிமிர்த்திக் கொண்டு பளுக்கெனக் கக்கியதாய் இனிப்பாகச் சொன்னது
ஒரு மெல்லிய அமைதியில் ஆசைத் துளிர்களை தீவிரமாய்க் கிளைக்கச் செய்யும் பாம்பின் சொல் கேட்டதும் விடாய்த்துப் பெருகுகிற பார்வை வேட்கையோடு - சந்தன நிற மரத்தின்
நிபி.அருளானந்தம் 130 கடந்த போகுதல்
 

ஆப்பிள் கனிகளைப் பார்த்தாள் ஏவள்
பூமணத்தைப்
போர்த்திக் கொண்டு ஒவ்வொரு வரியாய்த் தன்மேல் வர்ணம் பதித்து சுண்டித் தெறிக்கும்
செழுமையுடன்
கிளைகளில் தொங்கிய
அக்கனிகள் - அவள் பார்த்த முதல் பார்வையிலேயே
அவளது மனத்தை ஆசைச் சலனம் கொள்ள வைத்தது! எல்லாப் பழமும் அங்கே தின்று பழகிக் கொண்டவளுக்கு இந்தப் பழம் அப்போது அவளின் நாக்கூரைக்கு அடியிலே ஒரு சுவைப் புணர்ச்சி ஆசை தனை 'உருவாக்கியது
நல்லதான உணவு ஒன்றை தின்பதற்குத் தவறவிட்டு புன்சிரிப்புகளுடன் இத்தோட்டத்தில் நான் ஆதாமுடன் சேர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்! என்று தனக்குள் ஒரு குறையாகவும் அவள் அவ்வேளை நினைத்தாள் ஏவாள் - மரத்தின்
நீபி.அருளானந்தம் 131 கடந்து போகுதல்

Page 81
பருத்து உருண்ட செம்பழங்களைக் கிளையினில் பார்த்தாள்
"ஓ! இந்தப் பழம்
தேன்தான்! உண்டு அனுபவிப்பதற்கு நல்ல சுவை ஊற்றுடைய செம்பழமாய்த் தான் இவை இருக்கும்! இதை யெல்லாம்
ஓர் வகையில் தின்னாமல் இங்கே குந்தியிருந்து மரத்தோரங்களில் படுத்து என் வாழ் நாளினை க்ழிக்க வேண்டியுளதே!
இன்பச் சுளைகளெல்லாம் இப்பழத்தின் உள்இருக்க இதைத் தின்று பழகாமல் நான் ஏன் இருக்கிறேன்! இந்த அறியாமை என்னிடத்தில் ஏன்தான் வந்தது? இன்னும் இதைத்தின்ன நான் காத்துக்கிடப்பது எவ்வளவு காலம்? இன்னும் எவ்வளவு நேரம்? காய்க்கும் போது தின்னக் கூடாமல் காலங் கடத்தல் நற்காலம் வீணாக்கலல்லோ? ஆதலினால்
என்மனமே - உன்மனதில் ஆசை ஒட்டியை く வீணாய்யேன் கிழிக்கிறாய்? இனித்திடும் இப்பால்ப்பழம் உன் வாழ்வுவரையிலும்
நீபி.அருளானந்தம் 132 கடந்து போகுதல்
 

இனித் தின்னாமல் போனாலும் ஒருவேளை போகலாம்! உன்கையிலே இப்போ உனக்குக் கிடைக்கும் கனியை நீயேன் தின்னாமல் கசக்கி குப்பைக்குள் எறிகிறாய்? நீ இப்போ
ருசியாய் இருக்கும்
பழங்களில் ஒன்று - இரண்டு - மூன்று பறித்து - ஒருக்கால் தின்று பார்? நீண்டு முற்றிய காய்களையும் உன் விருப்பப்படி முறித்து சாப்பிடுப்பார்!
அந்தோ - உனக்கு அதனால் பிறகு இன்பம் வரும்! கொழுத்த இந்தப்பழத்தை தின்றவுடனே
நீ இன்புறுவாய்! நித்திரையில் நீ உன்னை மூடிக்கொள்ள எங்கெங்கெல்லாமோ நீ பறப்பாய்! ஆனந்தம் உன்னிலிருந்து வழியும்! உன் வாய் தின்ற பின்பும் உற்பவிக்கும் எச்சில் ஊற்றை அளைந்து
இன்னும் தா - என்று ஓர் வார்த்தை நாவும் கூட உன்னைக் கேட்கும்?”
- என்று அவளை ஆசை என்னும் நோயுள்ளவளாக ஆக்க
மனதுக்குள்ளே சல்லடை போட்டவாறு
நீபி.அருளானந்தம் 133
கடந்து போகுதல்

Page 82
இரைந்தது மாயை என்று சொல்லப்படுகிற ஒரு மாயப் பிசாசு
தோற்றோடும் வதனத்தோடு தொடர்ந்தோடுகிற எண்ணங்களோடு ஏவாள் அதனால் மனங் குழம்பினாள் அநியாயம் ஒருவர் செய்யுமுன்பு அறிவிலும் அது தோன்றுமென்பது ஏவாளிலும் கூட அது அறிய முடிந்தது அவள் பாசியாய் தன் மனதில் நினைத்ததை துடைத்தெறியச் செய்தற்குக் கடவுள் சொன்ன
ஒரு வார்த்தை
அப்போது அவளின் ஞாபகத்தில் வந்து சேர்ந்தது
அந்த ஞாபகம் வந்த உடனே “இந்தப் பழம் தின்ன எனக்கு வேண்டாம்” - என்று பாம்புக்கு பலத்துச் சொல்லி - முற்றிய ஆசை முறிந்து சரிந்து வற்றியவாறாய்ப் பிறகு காய்ந்தாள் அவள்
O
“சுவை இன்பம் தருவதில்லை இந்தப்பழம்! கடவுள் சொன்ன உண்மைபோல் இதைத் தின்றால் நான் சாகவே சாவேன்! இந்த ஆத்துமாவை நான் இழந்து புவிமீது என்ன பலன் எனக்குண்டு?
நீபி.அருளானந்தம் 134 கடந்து போகுதல்

நான் தின்னுதற்கா இவ்விடத்தில் பழமில்லை? திரும்பிப் பார்த்தால் மரக்கூட்டத்திலெல்லாம் இனிய பழம் பொல்லென்றதாய் எங்குமிருக்க தொல்லையென்று துயர் கொடுக்கும் இந்தப் பழத்தை பட்டுமேனிப் பழமாய்க் கண்டு
ஏன் வீண் ஆசை நான் கொள்ள வேண்டும்?” - என்று கலகத்தில்
El (660öT600TTLD6) கனிகள் வாசனையையும் நுகராமல் ஒரு கணம் தூரத் தள்ளிப்போய் நின்றவாறு ஏவாள் தன் நிலையை மாற்றினாள்.
“ஒருமுறை புதிதாய்த்திருந்தி என் காரியம் ஆற்றுவோம் என்று இவளைப் பார்க்கையில் எதற்குமோர் அவசரமாக
இப்படி இவள் இப்போ மாறுகிறாளே?”
- என்று - பிசாசுக்கு ஏவாளது செய்கையால் மனம் சிறிது அப்போது தளர்ந்தது
என்றாலும் அண்டையில் நின்ற அவளில் கனிகளின் வாசனையை மேலும் திருத்தி அவள் நாசிக்குள்ளே போக வாய் அது பரப்பியது
நீபி.அருளானந்தம் 135
கடந்து போகுதல்

Page 83
"நுகர்ந்து
முதன்முதல் இக்கனியைக் கொள்!
அப்போ
மூழ்கித் தொலையும் உன்மூட யோசனை! எட்டுத்திசையும் சுற்றிச் சுற்றி நீ வந்தாலும் உருகும் உன் மனதுக்கு மருந்து இக்கனி ஒன்றுதான்!
இதைப்போய் ஏன் உன் கடவுள் உயிர் போக்குமென்றார்? அது ஏனோ என்று தான் நான் உன்னைக் கேட்கிறேன்? மடமையே உடையவர் தான் அடைவார்கள் கொடும் சாவு - ஏவாளே நீ உன்னுள் ஊறிய அந்தக் கடவுளின் வார்த்தைகளை வெளியே போக விட்டத் தள்ளு! நீ செத்தாலும் சாவாய் என்று உன் மனதில் பத்தியமாய்ப் பதிந்திருக்கும் கடவுள் வார்த்தைகளை . நான் சொல்லும் நம்பிக்கைக் - களைக் கொத்தி கொண்டு, அதைக் கொத்திப் பரவி அள்ளி நெருப் பெரிக்க, குப்பைக் குவியலாய் ஒருபக்கம் போடு! நீ ஒரு அவசரக்காரி இல்லை என்பதெனக்கு விளங்கும்! வீண் சோலிகளில் நீ மாட்டாதவள் என்பதும் நீபி.அருளானந்தம் 136 கடந்து போகுதல்

எனக்குத் தெரியும்! என்றாலும் ஏவாளே, எனக்குள் ஒரு அக்கறை உன்னிடத்தில் இப்போ எதற்கென்று ஒருமுறைகேள்?
உன்வாழ்வை அறுத்துப் பிடுங்கி உயிர் அகற்றி கெடுத்து விடவா நான் முயல்கிறேன்?
நீ ஒருமுறை - என்னையோசி! ஒரு வெள்ளை மணல் போல்தான் என்மனம்! யாருக்கும் தொல்லைதரும் ஒரு செயலை
எப்பொழுதும் நான் செய்ததேயில்லை! யாரையும் கண்டித்து இதுவரை பேசியதும் இல்லை! எனக்கு
உயர்ந்திருக்கும் இந்த ஏதேன் தோட்டத்திலே ஆதாம் மேலும் பெரிதான ஒரு அக்கறையுண்டு! இப்படிநான் சொல்லும் போது -
நீ வாசித்துக் கேட்ட மாதிரி அம்மட்டும் தானா! என்று அவசரமாக சிலவேளை என்னைக் கேட்பாய் -
நான் யாரையும்
இப்பூவுலகில் நிலவேர் பிடுங்கி அகற்றி நிம்மதியைக் கெடுத்ததில்லை -
நீபி.அருளானந்தம் 137
கடந்து போகுதல்

Page 84
என்பதை நீ முதலில் நினைத்துக் கொள்!
இவ்வுலகில் இனிவரும் காலத்திலே நான்புதுப்புதுச் செய்கைகளை செய்ய விருக்கிறேன். எதை எதையோ இங்கே படைத்துத் தந்து தன் வீட்டுக்கு விரைந்து விட்டார்தான் அந்தக் கடவுள்!
ஆனால் நான் இனிவரும் காலயுகத்திலே அந்த விண்ணுலக அமைப்பையும் வெல்லுதற்கு வியக்கின்ற செயல்களை இங்கே செய்திட விருக்கிறேன். அந்த வான் வெளியே வியக்கிற இன்னும் பல விந்தைகளை
நான் இங்கே விரைந்து படைப்பேன்!
நீ துருவப்பனி முகட்டுச் சிகரங்களை - இங்கிருப்பதால் பார்த்ததில்லை! அந்த எல்லையற்ற பணி மலைகளின் எழும்புதல்களைப் போலத்தான் மயக்குகின்ற ஒரு வெள்ளை அழகாக நான் இவ்வுலகை மாற்றுவேன்! உலகில் நான் செய்யும்
நீபி.அருளானந்தம் 138 கடந்து போகுதல்

புதுச் செயல்களின் பலனை யெல்லாம் நீ புசிப்பற்கு வழி செய்வேன்!
என்னிடத்தில் ஞானமான ஒரு தீர்க்கதரிசனமுமுண்டு இனி உலகில் நடக்கப் போகிறதைத் துழாவி மூலஸ்தானத்தின் கதவு ஓட்டை வழியே என் விழியை வைத்துத்தான் நாளை நடக்கப்போவதை நான் உனக்கு இப்போ கூறுகிறேன்! உன் சாங்கத்தில் நீ பெறுகிற பிள்ளைகள் சங்கிலியும் மோதிரமும் பட்டுச் சட்டைகளும் போட்டு ஏதும் உனக்கு இப்போ தெரியாத நல்வாழ்வொன்றை - ஒருகாலம் போய் இனிமேல் வாழத்தான் இருக்கிறார்கள் மாபெரிய சனத்துள் விஞ்ஞானம் வாழ்வுக்கு நல்லதோர் கூடுகட்டும்
பூவும் தளிருமாய்த் தோன்றும் இவ்வுலகில் அந்தப் படைத்தவர் இல்லை இனி ராஜா
இப்பூவுலகைப் படைத்தாலும் அமைந்தடங்கி அவர் ஒரு மூலையிலிருக்க கனகாலமெல்லாம்
நீபி.அருளானந்தம் 139
கடந்து போகுதல்

Page 85
சூழல்கிற இவ்வுலகில் நான் ஒருவனே சர்வ அதிகாரியாய் ஒடி நடைபோடுவேன்! எந்நாளும் என்றென்றும் நானே இப்பூவுலகிற்கு அதிகாரி! இப்போ என் அருகிலே வரத்தயங்கும் நீ இதையெல்லாம் உன் மனத்தில் நம்பு நம்பு! இனி என்றென்றும் ஒலித்திடும் என் சொல்லை மிகச் சுத்தம் என்பதாய் நீ எண்ணி நல்ல சுகத்தை நோக்கி நீ மீள்”
- என்று ஏவாளுக்கு ஒவ்வொரு பிரசங்கமாய் அது சொல்லி தன் கதையையும் அறிவித்தலையும் முடித்தது.
வளைத்து இடையை வைத்துக் கொண்டு நின்று ஏவாள் பிசாசு சொன்னதையெல்லாம் சுத்தமாகக் கேட்டாள் - நீபி.அருளானந்தம் 140 கடந்து போகுதல்

பிசாசின் புதுப்புது விளம்பரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயாய் அவளைப் பற்றி அவள் ஆசைகளைக் கலக்கி விடுகிற கடலலை வீசுகையோடு மனக்கரையில் மோதத் தொடங்கியது. அவள் தூசாய் நினைத்ததெல்லாம் இப்போ தோள்களில் சுமையாய் அவளுக்குப் பாரமேற்றின! மூக்கில் காற்றை அடைத்துக் கொண்டு வருத்தும் துன்பம் - அவளுக்குக் கண்களிலும் இரத்தப் பாய்ச்சல் முடிச்சுக்களை செங்காடாய்ப் போட்டது. கனியைச் சுவைக்கும் காமம் - ஆசைக்காற்றில்
வேகிக் கனிந்து
மார்புக்குள் அவளுக்கு தொங்கத் தொடங்கின. அந்தத் திரண்ட கனிகளுக்குள் குடைந்து கொண்டிருந்த
பேராசை யென்னும்
பெருத்த வண்டுகள் பிசாசு சொன்ன சொற்களை அவளுக்குத் திரும்பிப் பார்த்தவாறு இருக்கவும் ஒருகணம் செய்து விட்டன.
ஆனாலும் அந்த ஆசை அவளிலே துளிர்க்கத் துவங்கி பூப்பெய்தத் தயாரான பரவசத்திலே
மழைக்குக்
கீழ் இறங்கும்
நீபி.அருளானந்தம் 141 கடந்து போகுதல்

Page 86
கனதியானமேகமாய் ஒரு கணம் உடனே கீழேயும்
இறங்கியது
உடனே அவள் தன் நெஞ்சில் வந்து முத்தமிட்ட அந்த ஆசையை சேலையெடுத்து மார்பை மூடியது போல மூடினாள். இதோ!
வழியத் தொடங்கிவிட்டது மனத்தில் அவளுக்குக் கடவுளது சிந்தனை!
“இப்பூங்காவில் என்னைப் படைத்த அந்தக் கடவுள் நிற ஒளியும் Na உருவ அமைப்பும் இல்லாதவர்! அதோ. தூரத்தில் இருந்தவாறு என்ன அவர் எனக்குச் சொன்னார்? மெளனத்தைச் சுமந்து கொண்டு எச்சலனமுமின்றித் தானே ஆதாமுடன் சேர்ந்த நானும் அவர் சொன்னதைக் கேட்டேன். அவர் சாவென்று சொன்னதை இந்தப் பிசாசு வாழ்வென்று சொல்வது பொய்தான்!
இப்படி இந்த இருவரில் யார் சொன்ன சொல்லு என் நெஞ்சிலே அமர்ந்திருக்கிறது? இந்த இருவரின்
எவர் சொல்லும்
என் நெஞ்சில் நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறதே! நீபி.அருளானந்தம் 142 கடந்து போகுதல்

பிசையும் பிசாசின் கதைகள் என் நிலையையும் மாற்றிக் கொண்டிருக்கிறதே? விழித்த கண்ணுள்ள இந்தப் புதர்ப் பாம்பு இப்படி யெல்லாம் சொல் வாசனையாய் ஒருஇன்பப் பாட்டுப் பாடுகிறது.
தாமரைப் பூப் போல உள்ள என்மனதில்
தெறிந்து விழும் இருவர்கள் பேச்சில் எந்தத் தண்ணிரைத் தான் என் மன அல்லிக் குள்ளால் ஏந்தி நான் சுமக்க விரும்புகிறேன்?” என்ற அந்த அமைதியின்மையில் தூயதோர் வெளிச்ச (3u MyF60)60T
புத்தியில் கண்டதும் அவளுக்கு உடனே
மனம் கூசின
“இன்றுள்ள சுகத்தோடு பூமிக்குள் விளைந்த 6T606)FID
உங்களுக்கே என்று ஒன்றிரண்டில்லா எத்தனையோ நன்மை எமக்குச் செய்து தந்தவர் அந்தக் கடவுள்! அப்படியானவர் நீங்கள் சாகிறதை சம்மதிக்கவே முடியாது என்று தன்னுள் நினைத்து எமக்குச் சொன்ன அந்தக்
நீபி.அருளானந்தம் 143
கடந்து போகுதல்

Page 87
35L L60)61T60)u நாங்கள் உண்டுறுஞ்சிச் சம்மதித்ததைப் போல கேட்டு' வாழாது அவரைச் சங்கை செய் அநீதியாய்ப் பல்லுடைக்கப் போவதோ?”
என்று அந்தமோகப் பித்தம் மாறி அதைத் தன்னில் அறுத்துவிட நினைத்தாலும் முழுமூச்சாய் நின்ற அந்தப் பேராசைப் பேய்ப் பிசாசு அவளைத் தன்னிலிருந்து விட்டுப் போக ஒரு கணமும் விட்டு வைக்கவில்லை
"ஓ! ஏவாளே! ஏவாளே! நீதான் இப்பூவுலகின் முதல் அழகி!
நீ பரிபூரணி வலியின் சொட்டு கூட இல்லாமலே மழலைகளை நீ பெற அந்தக் கடவுளும் உன்னைப் படைத்துள்ளார். என்றாலும் நீ கடவுள் உனக்கு மறைத்ததை காண வேண்டுமென நான் மனமேங்கிப் பாடு அடைகிறேன்
நீ இப்போ
உன்னை முறுக்கி இறுக்காமல்
நீபி.அருளானந்தம் 144 கடந்து போகுதல்

இதைச் செவியிலே கேள்! நான் சொல்வது வாழ்வின் மீதான இனிமை ரகசியம்! வீறிடும் குரலில் நான் இதை உனக்குச் சொல்லவில்லை!
நான் சொல்வது சங்கீதமாகப் பொங்கி உன் மனதில் இப்போ
மலரும்பார்.
கடவுள் உனக்கு மறைத்ததை நான் இப்போ உனக்கு ரகசியமாகத் தான் வாசல் திறந்து காண்பிக்கிறேன்
உன் கடவுள்
தடை செய்து
புசிக்க வேண்டாம் என்று உங்கள் இருவருக்கும் சொன்ன இந்தக் கனியைப் பற்றி மெளனம் நிறைந்த அழகான இந்தப் பூந்தோட்டத்திலிருந்து நான் உனக்குச் சொல்கிறேன்! நெற் குதிரைப் போல நீ நிமிர்ந்திருந்து என்னைப் பார்த்து புதிதாய் நீ காணப் போகும் உலகம் பற்றிய கதையை கவனமாய்க் கேள்! அதை இனி ஒரு கணநேரம் மட்டும் தான் நான் உனக்குச் சொல்வேன்!
நான் சொல்வது உண்மையாக உனக்குப் பசிதீர்க்கும்!
நீபி.அருளானந்தம் 145 கடந்து போகுதல்

Page 88
சுகம் சேர்க்கும்! உன் சந்ததிக்கு வழிகாட்டும்!
இந்த இளம் சிவந்த கனி இவையெல்லாம் உனக்குக் கொடுக்கவென்று இலவசமாகத் தான் மரத்தில் காய்த்து இருக்கிறது - இதில் ஒன்றை மரத்திலிருந்து பிரித்து உனக்குச் சொந்தமாக்கு விதையில்லா கனியிலே ஒரு சிறிது நீ முதன்முதல் சாப்பிட்டுப் பார்! உன் பல் தாக்கப்படாத கடித்தலுக்கு மென்மையான கனி இது ஏவாள்! எனவே உனக்குச்
சொந்தமான
அந்தக் கனி அனைத்தையும் மொத்தமாகவும் நீ வேண்டுமானால் பிடுங்கிச் சாப்பிடு!
நீ தனிப்பட இருந்து இதனை இப்போ சாப்பிடும்போது உனக்குள்ள துன்பம் அனைத்தும் உடனே விற்கப்பட்டு விடும்! இந்த இருட்டுக்குள் இருந்து கண்திறந்து நீ வெளிப்படுவாய்! சூரியன் மாதிரி ஒரு வெளிச்சத்துக்குள் நீ வந்து
மகிழ்ச்சியான ஒரு மனுசியாக நீ மாறிவிடுவாய்! முதல் முதலாக உன் வாழ்வில் நன்மை தீமை எதென நீயறிவாய்!
நீபி.அருளானந்தம் 146 கடந்து போகுதல்

எல்லாம் அறிந்ததில் யாரையும் கேள்வியும் கேட்க அறிவு உன்னிடத்தில் வந்து விடும்! இவ்வளவு பரப்பு
வந்ததன் பிறகு நீ தேவலோகத்து
மனிஷிதான்! சும்மாவுக்காக ஒருபோதும் நான் இதைச் சொல்லவில்லை! இவ்வளவிலும் நான் சொன்னது எல்லாமே உண்மைதான்! இதைத் தின்று உனக்கு ஒன்றுக்கும் ஒன்றும் ஆகிவிடாது! எனவே அற்புதத்திலும் அப்பாற்பட்ட அந்த நன்மைகளை நீ கண்டடைய இவ் வற்புதற் காய்களில் திட மாயுள்ள காய் ஒன்றெனின் ஒன்றோ இல்லை ஒரே கிளைப் பக்கமாய் உள்ள அனைத்துக் காயையுமோ
உன் பார்வை சந்தித்து அவைகளில் எதுதான் வேண்டு மென்று கூறில் அவற்றை தப்பித் தவறி தரையில் தவறிப் போனதாக விட்டு விடாமல் கவனமாக கையால் பிடுங்கி கசபிசவென்ற கடி ஒலியோடு உன் ஆசை சங்கமமாக பசி தீரச் சாப்பிடு!
ஏவாளே நான் இவ்வளவும் சொல்லி நீந்திக் கிடைத்த
நீபி.அருளானந்தம் 147 கடந்து போகுதல்

Page 89
சுத்த மனத்தை மீண்டும் தவிக்க விட்டு உன் ஆறறிவைக் கெடுக்காதே
கடவுள் என்ன கடவுள்! உனக்கொரு கட்டளை போட? உன் தலை மேலே அவர் கை வைக்கலாமா? உன் சுதந்திரத்தை அவர் கெடுக்கலாமா? இனி என்னிடம்
உனக்குத் தர ஒருவிளக்கமுமில்லை! தனிக் கல்லாய் நான் இனி ஒன்றுமே பேசாதிருக்கப் போகிறேன்!” - என்று பேச்சுக்கு ஒரு கோடு போட்டது
மாதிரி - “நன்றி” என்று சொல்லி விட்டு
தன் பிரசங்கத்தை முடித்தது
ஏவாளோ உள்ளெங்கும் பிசாசின் கள் குடித்த வெறியில் புத்தி கெட்டுவிட்டாள். அவள் மனதுக்குள் உறுதியான பூட்டுப்போட்டுப் ԱւtԳ
பிசாசானவன் அமர்ந்து விட்டான். சுருக்கிட்டு இழுக்கிறதுபோல பழத்தின் மோக அழகு அவளைப் போட்டு
நீபி.அருளானந்தம் 148 கடந்து போகுதல்
 

அதன் கிட்டவாய் இழுத்துக் கொண்டிருந்தது.
அவள் தன்னை அடக்க முடியாத அவாப்பட்டுக் கொண்டு . சாவின் ஒலோலம் அவள் காதில் கேட்டும் - மரத்தில் தொங்கும் பழத்தை இச்சித்த படியே அதற்குக் கிட்டவாகப் போனாள்.
அந்த உயிர்
கொல்லும்
LDJb
அவள் கைக்கருகே கிளையை அவ்வேளை இறக்குகிறது. ஒரு முறை
தன் கிளையை உலுக்கி இலை அதிர்வுகளிலே
கனி அழகை
அவளுக்கு ஒருமுறை வெளித் தள்ளி அது காட்டியது.
பழத்தின் வர்ணப் uilfi Lზifiel(8ნა ஒளி தெரிய - தன்னை அழைப்பதுபோல ஏவாள் அதனுடன் சேர விரும்பினாற் போல போகிறாள்.
ஆசையில்
அவளுக்கு
மூச்சுக்காற்று
விரிசல் பட உறிஞ்சப்பட்டு
நீபிஅருளானந்தம் 149
கடந்து போகுதல்

Page 90
960)6) sei60b6h)u uTuoj சுவாசப் பைக்குள் சென்று புதைகிறது.
பழத்தில் - இறுக்கும்
966. 60)85 - அதைப் பிடுங்குகிறதா என்று
பிசாசும் கவனிக்கிறான்
ஏவாள் பிடுங்கியது அதிலே ஒரு பழம்தான்! என்றாலும் அந்த ஒரு பழமே அவள் கையால் பிடுங்க கைக்குள் கனமாகிவிட்டது! அடக்கிக் கொண்டிருந்த ஆசை அவளது வாயை அகன்று கொள்வதற்குச் செய்து விட்டது. அது வெளிறிய நிறமான காயாக இருந்தாலும் மோகம் நுழைத்த அந்தக்கா அவள் கடித்துக் கொஞ்சம் தின்னும்போது தித்திப்பின் இனிப்புப் போல 9ങ്ങഖ ഖT9Fേ நாவின் மொட்டுக்களில் திறந்து விடச் செய்து விட்டன. அவள் தனக்குப் பழகாத ஒரு சுவை ஆசை அதனால் பெருக குருட்டுப் பறவைபோல சுவைத்து அப்பழத்தை நீபி.அருளானந்தம் 150 கடந்து போகுதல்
 

மீண்டுமோர் கடிகடித்துத் தின்றாள்.
பழச்சாறு வயிற்றுக்குள் போய் அடைய மனம்மேல் அவளுக்கு அமர்கிறது பெரிய தொருபாரம்! அவள் நெஞ்சில் பிசாசு பின்னிவிட்ட
இருளிழை இறுகத் தொடங்கிவிட்டது. “இது என்ன அறிகுறி? என் கண் திறக்க ஆரம்ப வழியா இது? எங்கே என்னுடன் இது வரை பேசிய அதுவும் அதன் குரலும்? சிக்கலான பாதை வழியே இரண்டும் சிக்கிக் கொள்ளாமல் எங்கேனும் போய் விட்டதோ? புதுமைக்குப் புறப்பட்டுச் செல்லும் போது இப்படித்தான் மாயைகள் செய்யுமோ?
இது நீண்டால் என் கண்பார்வைக்கு புதிய உலகின் தோற்றம் தென்படுமா? நான் சரிந்து சரிந்திறங்கிப் போகிற மாதிரி தெரிந்தாலும் ஏறும் வெறி ஒன்று என்னில் வந்து புகுந்து கலவி பெருக்கி மெழுகி வாசம் மூட்டி முன்னையப்போல
நீபி.அருளானந்தம் 151
கடந்து போகுதல்

Page 91
மெய்யான ஊன்றலில்லாவிட்டாலும் என்னையொரு அழகு செய்கிறதே!! இந்தக் காயைத் தின்னவும் எங்கிருந்தோ காட்டாற்று வெள்ளம்போல பல சிந்தனையும் ஓடி எனக்குள் வந்து முழு உண்மையும் எனக்கிப்போ விளங்குகிறதே! என்னில் எண்ணிலடங்கா உணர்வு வேர்வை இப்போ எனக்கு வேர்க்கிறது. ஆசை மினுக்கி மினுக்கி எனக்கு ஆவல் காட்டி பின்னால் எட்டிப் போகிறது. முழுதும் முற்றிலும் காம உணர்வு தொடர் சங்கிலியாய் எனக்கு நீள்கிறது. நான் பார்க்கும் எண் திசையும் அதுவே என்னைக் கண்டு சிரிக்கிறது. சிறகடிக்கிறது.
என் உதிரத்தில் பிறகு ஒன்றியதாய்ப் புகுந்து
தன் சக்தியினை என் தலைமயிர் வரை விரிக்கிறது. என் உதடுகளுக்குள் துளைத்துப்போய்த் துயிலாமல் துடிக்கிறது.
என்றாலும்
இது பேர் போன நல்ல பழம்தான்! இது தட்டி எழுப்புகிறதே இன்ப வாழ் வீதியிலே நான் நடக்க? கள்ளன்போல் இது எனக்கு முன்னால் வந்து இன்பக் கண் சிமிட்டுகிறதே? மீளழகு எனக்கு வந்து என்தொடையும் மார்பும் கூட இப்போ பட்டாகி விட்டது. சிறு மூச்சுச் செல்லாமல் - ஆசை கொண்ட பெரு மூச்சாய் இப்போ மாறிவிட்டது எனக்கு
நீபி.அருளானந்தம் 152 கடந்து போகுதல்

என் உடல் எழில் எங்கும் விரிந்ததாகி உப்பரிகையிலும் ஏறியதாக்கிவைத்து விட்டது.
ஓ! இதெல்லாமே இந்தக் காய்தின்ற கணத்தே பிறந்ததுதான்! உயிரிருக்கும் இந்தப் பழம் தின்றுதான் இவையெல்லாமே இணைந்தது என்னில்! இதற்கு வேறோர் பழம் நிச்சயம் நிகரில்லை! நிகரில்லை! - என இப்போ நானறிவேன்! எனக்கு ஆசையை முட்டிவிட்டது இந்தப்பழம்! அதனால் எதையும் உறிஞ்சிப் பிரித்தெடுத்து உண்டு உயிர் வாழ நான் கற்றுள்ளேன்! மெய்யச் சொன்னால் என் வயிற்றுக்குள் போய்ச் சேர்ந்த இந்தப் பழம் என் வளைவுகள் எல்லாவற்றையும் இப்போ என்னில் நிமிர்த்தித்தான் இருக்கிறது. இப்பழத்தை வெறுமனே நான் ஒருத்தி மாத்திரம்
தின்று கிடந்தால் வினை தீர்ந்து போகுமா? இதை என் பிராணநாதனுக்கும் கொடுக்க வேண்டும் தானே? ஓர் கணத்தே என்னுடன் நின்று பேசியாடி
நீபி.அருளானந்தம் 153
கடந்து போகுதல்

Page 92
என்காலைத் தொட்டுக்கும் பிட்டதுபோல் சொல்லி என் வாழ்வை கரையேற்றி விட்டுப் போன அந்தப்
பாம்புக்கு
என்நெஞ்சத்தில் நன்றிநிலைக்க எதெதோ உள்ள பல நல்ல வார்த்தையும் சொல்லிப் புகழ வேண்டும் தானே? ஆனாலும் அதைக் கண்ணால் நானாகப் பார்க்கத் தெரியவில்லை என் கண்காணாத அது என்னைப் பார்த்தாலும் எனக்கோ அதைப் பார்க்கத் தெரியவில்லை
அது இப்போ மலைச் சிகரத்தில் போய் வணக்கத்துக்குரிய ஒரு கல்லாகவும் இனிவழிபடப் போகிறவர்களுக்காய் சிலவேளை மாறியிருக்கும்! எங்கள் குடியிருப்பு ஏதேன் தோட்டத்துக்கு ஒரே ஒரு கதவுதான் உண்டு
அது எக்காலமும் அடைத்திருக்கும்! யார் வந்தாலும் அந்த நெடுங் கதவை ஒரு போதுமே திறக்கவே முடியாது!
சிறுதுரும்பு ஒடிசல் கூட உள்ளே நுழைய முடியாத அதன் மூலம் இந்தப் பிசாசு எப்படி வெளியே போனதோ..?
நீபி.அருளானந்தம் 154 கடந்து போகுதல்

ஆவி உடலான அதன் சக்தி நினைக்க மிகப் பயம் பயம் பயம்தான் எனக்கு!
நெருப்புப் பாம்பு கூட அதன் சொல்லைத் தட்டிக் கழித்து மீளவே முடியாதவாறு இருக்க மெத்தென உள்ள பெண்ணான நான் எப்படித்தான் அதனுடன் கோர்த்த கையை விடுவிப்பேன்?
மனத்தின் இயல்புதானே
6T6)6) Tib
வேறு ஒன்றும் இருப்பதில்லைத்தானே வாழ்வில்!”
கனவில் தெளிந்த தண்ணிரில் தன் பிம்பத்தைப் பார்த்து பேசுகிறதைப் போல பேசுகிறாள் ஏவாள். ஒளிரும் அந்த ஆப்பிள் மரம் 9Ü(3UT அவள் பார்வைக்கு இருண்டு விட்டது. கடித்த மிச்சப்பழம் கையில் நிலவாய் இருக்கிறது. ஆதாமை அப்போது அவள் நினைத்து விடுகிறாள். அவள் மூச்சை இழுக்கும் போதெல்லாம் நினைத்திடும் ஒரு ஜீவன் ஆதாம் என்பவன் தானே? ஆதாம் இல்லாமல்
இவளுக்கு
பிறப்புமில்லை!
நீபி.அருளானந்தம் 155 கடந்து போகுதல்

Page 93
இப்பூமியுமில்லை! யாருமில்லையே? - பின் யாரைத் தான் அவள் நினைப்பாள்? ஒலிக்கின்ற காற்றையும் ஒளிர்கின்ற பூக்களையும் காட்டி அவளுக்கு இது தான் இதுதான் இதன் பெயர்கள் - என்று கற்றுக்கொடுத்தவன் ஆதாம் தானே! இதை அவள் மறப்பாளா?
ஆதாமின் நினைவு அவளுக்கு வந்தவுடனே தின்று தொண்டைக்குள் தொலைந்த பழத்துண்டோடு கையில் எஞ்சியிருந்த மிச்சப் பழத்தை கைவிரல்களால் அவள் மூடிக்கொண்டாள். “சில தித்திப்பும் புளிப்பும் சேர்ந்த உயிர்ச் சத்து
நிரம்பிய ஜீவனளிக்கும் பழத்தை அந்த இலைகளுக்குள் இருந்து பறித்துநான் தனியே தின்னுவது கசப்பான ஒரே குற்றம்!” என்றுதானே இக்கனியைத் தின்ற பின்பு என்புத்தியும் முதுகில் அறைந்ததாய் தண்டனையளித்துச் சொல்கிறது.
சிறு விள்ளலைக் கூட ஆதாமின் மனைவியான நான்
நீபி.அருளானந்தம் 156 கடந்து போகுதல்

அவருக்கு கொடுத்துண்ண வேண்டுமென்றுதானே எனக்குள்ளேயாய் ஒரு சில புதுக்கட்டளையெல்லாமே இப்போ பிறந்திருக்கிறது. அக்கனி தின்ற
பிறகு அவளுக்கு
மெத்தெனும்
சுகத்தில் இளைப்பாறவே முடியவில்லை.
ஏதேதோ நினைவுகள் முடிச்ச விழ்க்கின்றன.
வாழ்க்கையெனும் ஒருவெளி விஸ்தீரணமாய் விரிந்து கரை தொடாத ஒரு தாகத்தில் அலைவது போல அவள் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது.
அடக்க முடியாத தாகம் அவளுக்குப் பெருகுகிறது. தன்னை அடக்கி மனக் கதவை அவளால் பூட்டிக்கொள்ளவே முடியவில்லை. ജൂഖണിങ്ങ് கழுகுக் கண்கள் பறந்ததுபோல திரிகிறது ஆதாமைத் தேடி.
அவள் அலைக்கழித்தலின் ஆழத்தோடு வெறுமை உணர்வில் இப்போ
நீபி.அருளானந்தம் 157
கடந்து போகுதல்

Page 94
மெளனித்தாய் நிற்கும் ஒளியற்ற மரத்தைச் சுற்றி பித்தம் பிடித்தது போல அலைகிறாள்.
விருப்பமான
தன் உறவுக்கு
தன் விருப்புள்ள இந்தத் திணிப்பைச் செய்து அவனை தாபத்தில் பொங்கச் செய்து தன்மடிக்குள்
வைக்கவேண்டும் என்று எல்லா நம்பிக்கையோடும் அவனுக்காக அவள் காத்திருந்தாள்
O
இன்றைய
ஏதேன் தோட்டத்து நிலைபரத்தில் வசந்த காலமாய்த் தான் அது இருக்க வேண்டும்! பெரிதாகிப் பெரிதாகி பூத்திருக்கிற தோட்டத்துப் பூக்களை விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இறங்கி வரும்பாதை
வழியே
நடந்து வந்தவாறு இருந்தான் ஆதாம் -
அந்த இறங்கியிருக்கும் வழிகளிலே எஞ்சியிருக்கும் அழகைத் தேடி.
அவன் அவ்விடம்
வருகைதந்த நேரம் யாரோ புதிய பழம் தின்ற வாசனையானது அவனை பரிச்சயம் கொள்ளச் செய்ய
நீபி.அருளானந்தம் 158 கடந்து போகுதல்

இந்த நாற்றம் மிகுந்த எச்சில் யாருடையது - என்று அவிழுகின்ற தன் நினைவில் செய்தவர் யாரென்ற கள்ளத் தனத்தைக் கிள்ளிப் பார்த்து நம் உறவுதான் அதுவென புணரும் யோசனையிலிருந்து அற்புதமாக அவன்
கண்டு
பிடித்து விட்டான்.
ஏதோ ஒரு வகையில் ஏவாள் அவனுக்கு என்றும் முக்கியமாவள்தான். தனக்கு மனைவி என்று கடவுள் படைத்துத்தந்த
96)60)6. T ரொம்ப சிரமப்பட்டதாகவே வாசித்து அறிய அவனும் முயன்றான்.
“என் அன்பென்று இருப்பவள் இந்தத் தோட்டத்துக்குள் குதித்துக் குதித்து ஓடி எங்கே போனாளோ? கதைகள் சொல்ல அவளிருந்தாலும் எனக்கும் பொழுது கழியுமே? அவளின் அடையாளம் காணத்தவறி
நானும்
பூக்காட்டுக் குள்ளும் பழத் தோட்டத்துக்குள்ளுமாய் அலைகிறேன் நீபி.அருளானந்தம்
159 கடந்து போகுதல்

Page 95
வேர்த்துச் செல்லும் காலும்
விடுமூச்சும் இப்போ தேடுதலில் மன அலுப்பைத் தான் எனக்குக் கொடுக்கிறது. என்னிலிருந்து இவள் பிரிந்து சென்றதிலே ஏதென்று கூறலாகாத படி பலயோசனைகளுமாய் எனக்கு வந்து விட்டதே?
ஒரு வேளை
புற்றுக்களை நீக்கிய ஒரு பாம்பு திரிகிற அந்த இடத்தில் அவள்
நிற்பாளோ? அது திரியும் அந்த இடத்திலேதானே எதுக்கும் தயாராய் நிற்பது போன்ற அந்த கொடிய மரமும் நிற்கிறது. புது வழிகள் போகிற அந்த இடத்தருகே உள்ள அந்த விசாலமான மரத்தின் பழம் சாவுக்கருப்பையிலிருந்து கரை யொதுங்கி எமைச் சாக்காட்டி விட காத்திருக்கிறது என்றுதானே மென்தொடுகை தொட்டு எம்மை செப்பனிட்டு
உண்டாக்கிய
அன்பான கடவுளும் சொல்லி எமக்குக் கொடுத்தார்?
தேவனானவர் இத்தோட்டத்தை படைக்கின்ற நேரம்
நீபி.அருளானந்தம் 160 கடந்து போகுதல்

அவர் தன்கையில் அள்ளி விதைத விதையெல்லாம் கதிர்களாகி
அறுவடையாகின. நானும் ஏவாளும் விளைந்ததையெல்லாம் அள்ளிப் புசித்தோம். ருசித்தோம்!
தழைத்தோம்! களியேறி உடல் எழிலானோம்! சுருங்குதல் இல்லாத அன்பினோடமைந்த ஒரு நல்ல வாழ்க்கை
கடவுள் தந்த
இந்த வாழ்க்கை! இதிலே கருகி நாம் நடைகட்டாமல் ஒருவழிவகுத்துத் தந்தார் அந்தத்தேவன்!
அவர் சட்டம்போட்டுக் கரை போட்டதாலே நாமும் கெட்டு ஆடாது அவர் சொல்லில் அடங்கி குறையென்று ஏதுமில்லா என்றும் இளமையாய் இச்சோலையிலே வாழுகிறோம்.
கடவுளின் படைப்பிலே அழியா இளமைதான் என்றும் காணுது
அதுதான் அவர் படைப்பில் நடைபோடுது!
நீபி.அருளானந்தம் 161
கடந்து போகுதல்

Page 96
சோலைதான் கண்ணுக்கு எங்கும் தோணுது!
மான் புள்ளி போன்றே எங்கும் அழகாய்க் காணுது!
வாசமாய் வழியுது எல்லமே விளைந்து வளருது! இதெல்லாமே நான் வாய்திறந்து சொல்ல ஒரு வகையுண்டல்லோ! என்னைப் போலவே ஏவாளுக்கும் ஒருமனமுண்டு! செயலுண்டு!
சிரித்தன்று உண்மை ஒன்றைச் சொல்லி வைத்த
கடவுள் - செய்த பாவத்தின் மாவிளைவு சாவு தானென்று எமக்குச் சொன்னார்!
அன்பாலே ஆட்சி செய்யும் அரும் கடவுள் வான் உலகத்தை மறந்து இங்கு வந்து நாம் வழிதப்பிச் சென்றாலும் என்று அதைக் கண்டு உயிர் அழிவை உண்டாக்கும் இது மிகக்கேடு தின்னலாகாது - என்று அந்த உண்மையை கடவுள் சொன்னபோது - சக்தி தரும் மேற்கெல்லைத் திசைநின்று ஏவாளும்தானே அதைக்கேட்டாள்?
நீபி.அருளானந்தம் 162 கடந்து போகுதல்

ஆனாலும் இப்போ
அவளுக்குப்
பேய்க் கரும்பாய்
நெஞ்சாச்சோ எங்கோ அவள் நின்று வாய்திறந்த அந்தக் கனியின் மனம் அவளின் எச்சில் மணத் தெளிவுடன் தானே என் சுவாசத்தில் ஒன்றியதாய் இருக்கிறது.
அதோ! முதலுக்கு மோசம்போன நிலையில் நாங்கள் அணுகாத அந்த மரத்தருகில் இவள் அரணாய் நிற்கிறாளே? முன்பு சிவப்பென்று கண்ட முகம் இப்போ கறுப்பென்று பார்த்து நான் கதற வேண்டி இருக்கிறதே? இதை உண்ணலாகா தென்ற கொள்கை அவளில் இப்போ பொய்த்ததை நானே காண்கிறேனே? அவள் தோல்வியை வாங்கிக் கொண்டாளா? நான் ஒராளென ஆகிவிட்டேனா? இந்தக் கணக்கில் எது பொய் எது உண்மை எப்படியென் றெல்லாம் ஒன்றுமாக எனக்குத் தெரியவில்லையே? என் மனத்தாமரையில் இப்படியெல்லாம் நான் நினைக்க
என்ன நரகல்
நீபி.அருளானந்தம் 163
கடந்து போகுதல்

Page 97
குத்துக் குத்தாக வந்து கொட்டியதோ
முன்பு நான் பார்த்த வானில் தேங்கிக் கிடக்கிற மழை நீர் மேகம் ஊதா மேகமாய்த் தெரிந்ததில்லையே? அது ஒதுக்குப் புறமாய்ப் போய்க் கொண்டிராமல் அந்த மரத்தின் மேலல்லவா அசையாமல் நிற்கிறது. நிலத்தில் நீரெடுத்துப் போன உக்கிரத்தில் வெளவவால்களின் நிறத்திலே
மரத்தின் மேல் ஆதார யோனியாக அது நிலைத்து விட்டதோ?
அந்த இடத்திலே
என் சந்திப்புக்காக
நிற்பது போல இருக்கிறது ஒருமனித நிழல்! அந்த நிழலுக்குக்
குரலில்லை!
தன்குரல் மடிந்த சேதியை அது எனக்கு இனி சொல்லப் போகிறதோ? அந்த நிழலிலுள்ள முகத்தையாவது ஒரு முறை பார்த்து நான் 360)LT6TD 85600T6)Ts)
ஆனால்
அதுவும் கூட முகம்புதைத்து விட்டதோ? கரிய முகில் மேட்டில் வெற்று ஆகாயத்தில் மிஞ்சிய இந்தக் கறுப்பு ኦ நீபி.அருளானந்தம் 164 கடந்து போகுதல்
 
 

எப்போதுமே என்னில் இணைய வரவில்லை - அது என்னை ஆட்டங் கொள்ள வந்தால் நான் அதை காலால் மிதித்திடுவேன்
யார் ஏவுகிறார்களோ இந்த இருட்டுக்கண்களை? பனியின்
அசைவிலே
இருளின்
புகைபோல வாழ்ந்து கொண்டிருக்கும் அது எம்மை நிம்மதியாய் இருந்து ஆசுவாசங் கொள்ளவிடாது தீமை செய்யத்தான் அவசரப்படுத்துகிறதா?
என்பாதம்
இவ்வேளை இருளைத் தொடவெண்ணாத சூரிய ஒளியிலேதான் பார்த்து நடக்கவேண்டும் தட்டுத்தடு மாறி நான் நடக்காமல் நடந்து குறிப்புக்காட்டும் அந்தக் குருவிகத்துமிடத்துக்கு நான் போகவேண்டும்.
அந்த மரத்திலிருந்து
வானுக்கும்
அந்த வானிலிருந்து மரத்துக்குமான இடைவெளியில் இப்போது வெய்யில் மின்னுகிறதே? என்னதோர் அதிசயம் இப்போ!
நீபி.அருளானந்தம் 165
கடந்து போகுதல்

Page 98
என் மென்மையான
966 TT நான் கண்ட அந்த நிழல்? துன்பத்தின் ஆழங்களை தொடாததோர் மகிழ்வில் என்னையும் ஒவ்வொரு மோகங்களாய்ப் பார்த்து நட்சத்திரம் தேங்கிய தன் மார்புக்கிளர்ச்சியையும் உருட்டி என் நெஞ்சில் பதிக்கும் வேராக இவள் இப்போ என் கண்களுக்குக் காண்கிறாளே?
LDIT60uJuJM 6095 இவள் மார்பிலே புகட்டப்படப்போகும் இன்பத்தை தீ மூச்சுக்கள் விட்டு
வரவேற்கும் நிலைக்கு மாற்றிவிட்டதோ? இவளைப் பார்த்ததில்
ஆடேறி
எனக்கு எந்த உண்மையை அவளிடம் கேட்கவும் புத்தி ஓடவில்லையே? இந்தத் தனிமைச் சிற்பத்தின் இன்ப நீரை நான் கொள்ளாது வேறு யாது ஒன்று அவளுடன் பேசிக்கொள்ள எனக்கிருக்கும்? இந்த மயானத்து மரத்துக்கிளை நிழல் என்னில் பட்டு நெருப்பிட்டுச் சாம்பலாய் என்னை உதிர்த்தாலென்ன,
தன் இரையாக என்னைக் கொன்று உறிஞ்சி உயிர் எடுத்தாலென்ன -
நீபி.அருளானந்தம் 166 கடந்து போகுதல்

பொய்யைத் திரையாக்கிய இந்த மரம்
என்னைக் கிளைகளால்
சுற்றி கழுத்து முறித்துக் கொன்றாலென்ன - அது என்னத்தைச் செய்து முடிக்கட்டு மென்றாலும்
எனக்கொரு ஆட்சேபணையும் இல்லவே இல்லை! அப்படியாக
எதிர்ப்படுவன எல்லாமே என்னை துண்டாடட்டும் - தூசுபோலாக்கி பிடைத்துத் தள்ளட்டும் கவலையில்லை எனக்கு!
ஆனாலும்
என் வாழ்வு இன்பத்துடன் அவளோடு சேர்ந்து துள்ளத் துடிக்கத்தான் கிடந்து வாழவேண்டும்.
அவளின் அழகுள்ள அம்மணத்தை என் மார்போடு சேர்த்து நான் புணர வேண்டும். அவள் தோளிலும் தொப்புளிலும் fங்கரிக்கும் வண்டுக் கால்களை நான் நகர்த்த வேண்டும். என் மோகப் பூவை அவளில் உதிர்த்து நீலப் பரவசம் காண வேண்டும்.
சுற்றிச் சுற்றி எறும்பு போல்
நீபி.அருளானந்தம் 167 கடந்து போகுதல்

Page 99
திரும்பி வந்து தின்பது போலத் தானே இந்த மோகம்!
இன்பத்தின் கடைசி உறக்கத்திலே அது - கை வைத்தால் மிதந்து வரும்
இன்பம் பூவை அப்போது பறிக்கலாம்! கழுவி வரும் கண்களிலிருந்து நறுமணத்திரவம் இறங்கி என் ஆசைப் போர்க் களத்தையும் ஒதுக்கி பிறகு நிசப்தமாக்குமே?”
இவ்வாறு
சுருதி கூட்டிய
இன்ப ஆசைகள் அவனை இழுத்துக் கொண்டு செல்கிறது.
இறக்கி விடுகிற இன்பத்திலே தன் நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டு இன்பப் பாதையின் வழியாய் உச்சப் பிரவாகத்துக்கு அவன் ஏறிக் கொண்டிருக்கிறான்.
இமைகளில் அமர்ந்து கொள்ளும் மோகத்தோடு எத்தனை எழிலாய் இருந்தது
ஏவாள ஆதாமைப் பார்த்த அந்தப் பார்வை!
இதுவரை அவள் சொல்லிலே வராத
நீபி.அருளானந்தம் 168 கடந்து போகுதல்

சொற்களெல்லாம் அந்தக் கனிதின்ற பார்வையின் சக்தித் தழுவலிலே போதையேறிப் பெரிதாகிப் பெரிதாகி திரண்டு வருகிறதே!
“இந்த மரத்து - நட்சத்திரம் போன்ற பழம் தின்று நம்பிக்கையோடுள்ள வெளிச்சம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்பழம் தின்றதும் உங்கள் ஸ்பரிசம் தேடி
நான் பறந்ததுபோல் திரிந்தேன்.
உங்கள் உறவுத் திணிப்புகளைச் செய்து என்னுடன் ஒய்வின்றிக் கழிப்பதற்கு உதிரத்தில் உத்வேகம் ஏற்றிவிடும் முற்று முழுதான சக்தி கொண்டபழம் இது!
இதைத் தின்ற
கணம் தோறும் என் நினைவில் சூரியனும் சந்திரனும் புதிய கோட்பாடுகளை எனக்குச் சொல்லிக் கொடுக்க உறவு கொண்டு வருகின்றன. வேறு வேறு முகங்களெல்லாம் கடவுளாய் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன.
இந்தக் கணி என்னுள் விதைத்ததெல்லாம்
நீபி.அருளானந்தம்
169
கடந்து போகுதல்

Page 100
ஊமையில்லாத வெளிப்படையான இன்பங்கள்தான்! எத்தனை எளிதாய் இவையெல்லாம் இப்போது என்னுடன் கலந்திருக்கிறது. எஞ்சியிருக்கிற என் கைப்பழத்தைக்கூட நீங்கள் பாருங்கள் - இதையும் தான் தின்ன எனக்கு ஆசை மிக ஏறிக்கொண்டிருக்கிறது. இதைத் தின்றதும் மெத்தென இருக்கும் என் மேனியெங்கும் உங்களைக் காணவேண்டுமென்றே ஒரு வித உடம்பு உளைவு. உங்கள் ஆசை
என்மனத்தை அகண்டு கிடத்தி - உள்தசைக்குள் அலையாய்க் கசிந்து வெளியேறி உடலையும் நனைத்து விட்டது.
இப்போ
பதுங்கிப் பதுங்கி அதையே நினைத்து ஒடுகிற என்மனம் மோக வலி ஊடுருவி தீக்கொழுந்தாய்த் துளிர்கிறது. கனத்துப் பாம்பென நெளிந்து பின் என் வியர்வையிலெல்லாம் அதுவெளியேற்றி மறைகிறது. நான் தின்றபழத்தோடு இந்தப் பூமியும் விழித்து நானும் நன்றாய் விழித்தேன். நகருகிற நத்தை வாழ்விலிருந்து புதிய உலகை நான் இப்போ பார்க்கிறேன். அதிலே
நீபி.அருளானந்தம் 170 கடந்து போகுதல்
 

காய்ந்து விழுந்த சருகுகள் கூட
நிலத்தில் கிடந்த பூத்த முல்லைபோல புதிதாய் எனக்குத் தென்படுகின்றன. சதையோடு சேர்ந்த
இன்பங்களெல்லாம்
என் உடலைக் கசக்கியதாய்
வெளிவருகின்றன. எனவே இந்த இன்பங்களுக்காக வெல்லாம் என்னை நான் தானம் செய்துவிட்டு இக்கனியை சாப்பிட்டு விட்டேன்.
என் புழுக்கம் நீங்க -
நான் பிடுங்கிச் சாப்பிட்ட பழம் - தன்னை எனக்குள் சுத்திகரித்து
என்னையும்
காற்றுப் போல சுத்திகரித்து விட்டது.
என் உடலில்
சுத்தமாய் நிறைந்து நிற்கிறது
அந்தப் பழத்தின்
ஒரு அவதாரம்
அது வரைந்த கோலம்தான்
என் உடலை
மோகத்தில் நெட்டி முறிக்கிறது. என்னை இதன் பொருட்டு šž. šх
சரிக்கடுத்த உங்களுக்கும் உக்கிரமாய் ஒரு வக்கிரம் வேண்டும். ஆண்பெண் சமச் சீரற்று இருந்தால் வாழவு
கிறுக்கலாகும்! சுரணை கெட்ட கீறல்களுடன் இரவு கழியும்! இன்பச் சவாரி செய்ய மரக்குதிரை தோதுப்படுமா? என்னில் சிணுங்கும் ஒலி வரச்செய்து நீங்கள் இன்பம் பகிர்ந்து கொள்ள உங்களுக்குத் தீரா வீரம் வேண்டுமல்லவா?
நீபி.அருளானந்தம் 171 கடந்து போகுதல்

Page 101
இந்தக் கனி
தின்பதற்கு
கடவுளின் சட்ட அளவீடுகள் ஏதும் எமக்குத் தேவையே தேவை இல்லை! உங்கள் திறந்திருக்கும் உள்ளங்கையில் உள் மனக் காயம் ஆற்றுகிற என் மிச்சச் சொட்டுப் பழத்தைப் பிடியுங்கள்! இந்த வசந்தத்தின் முதல்நாளிலே என் தாப உணர்வுகளுடன் சேர்த்து நான் இதை உங்களுக்குக் தின்னத் தருகிறேன்.
இந்தக் கனியிலே எங்கள் வாழ்க்கை முதுகெலும்பு நிமிர்ந்து நிற்க வேண்டிய உப்பான சத்து இருக்கிறது.
என்னைத் தனித்துப்
பொங்க விடாது மோகம் தணித்து வைக்க இப்பழத்தின் தோலிலிருந்து சதை வரை முழுக்கத் தின்றால் உங்களுக்குச் சக்தி இருக்கிறது
பாருங்கள்
இங்கே என்னை இந்த மலர்த்தோட்டங்களிலும் இப்போது விருப்பமில்லை எனக்கு!
இங்குவேறு பழங்களைத் தின்று கொண்டு ஒரு வேரைப் போல இறுகியதாய் எனக்கு இருக்க முடியுமா?
இந்தச் சூழல் என்னைச் சுற்றி
நீபி.அருளானந்தம் 172 கடந்து போகுதல்

ஊளையிட்டு அகல்வது போலவே இப்போ எனக்கு வெறுப்பாக இருக்கிறது
இங்கே திராட்சைத் தோட்டத்துக்குள் போனால் என்சருமமே சொறிகிறது! முரட்டுப் புல்படுக்கைகளில் நிர்வாணத்துடன் படுத்தால் இன்பமான ஒரு உமியை அது என்னிலிருந்து களைகிறது. குளிர்ச்சியோ வெம்மையோ எதுவாக இருந்தாலும் மோக அசைவுகளின் உச்சம் கிடையா வாழ்வு என்ன மனித வாழ்வு? மனிதனுக்குள் உள்ள இந்தச் சிறகை
வலுக் கூட்டும் சக்தி வெளிச்சமான இந்தப் பழத்திலேதான் வெளிவரும் என்ற உண்மை எனக்கு இப்போ உதயமாகி இருக்கிறது.
எங்கள் ஆசைகளை
தொட்டி லாட்டும்
காற்றாய் செயல்படும்
இந்தப் பழம்
ஆதி மண்லில் இருந்து
முளைத்தது.
முன்னம் இருந்த மென்மையான பனி மூட்டத்தின் ஸ்பரிசத்திலே வளர்ந்தது. இப்போ ஆயிரம் ஆண்டுகள் காற்றிலே போக -
தனிமையிலே
இளமையோடு நின்று தன் அழகிய முகத்தை அது காட்டுகிறது.
நீபி.அருளானந்தம் 173 கடந்து போகுதல்

Page 102
இதையெல்லாம் சொல்லி நான் தின்னப்பழம் உங்களுக்குத் தருகிறேன்! இதை நீங்கள் தின்று வரவிருக்கும் இரவிலே உங்கள் கைகளால் என்னைத் தொடுங்கள்.
கலவி மொழியிலே தாங்கி நிறுத்துவது என்பது உங்களுக்கு இனி நிரந்தரமாகும்.
ஏராளமான இரவுகளிலும் நீங்கள் இன்ப எல்லையை இதன்மூலம் தொடுவீர்கள்! என் உதடுகளை அடி ஆழம் காண மட்டும் நீங்கள் சுவைப்பீர்கள். இந்தப் பழத்தின் கொடுப்பனவான வாழ்வு எப்போதும் எங்களை விடியலிலும் இரவுகளிலும் கூட இன்பத்தில் நிறைத்து வைத்திருக்கும். இப்போது நீங்கள்
எல்லாவற்றையும்
மறந்து விடுங்கள். எங்களுக்குப் பொய்சொன்ன அந்தக் கடவுளையும் மன்னித்து விடுங்கள்.
இனி நாங்கள்
இப்பூமியின் மீது
சிரிப்புடனும்
முத்தங்களுடனும் ஆரோக்கியம் எனும் தேனை தொட்டுச் சுவைப்போம். திடீரென்று இனிமேல்தான் நாங்கள் நல்லவாழ்வு வாழப்போகிறோம்.
நீபி.அருளானந்தம் 174 கடந்து போகுதல்

இந்த நல்வாழ்வையெல்லாம் நாம் அடைந்து கொள்ள விதைகளைச் சிந்தாத இந்த மரத்துப் பழத்தை
மட்டுமே நாம் இருவரும் உண்ண வேண்டும் எவ்வளவோ காலமாக இந்த மரம் இப்போதும் பிழைத்திருக்கிறது என்றால் அது எங்களுக்காகத்தான்!
ஆகவே எனது வாழ்க்கைக்கு நீங்களும் வாருங்கள். என்னுடன் சேர்ந்து இருவரதும் விடியலுக்கு நீங்களும் ஒத்துழையுங்கள் இன்பத்தை விட விசாலமான ஒருவெளி உலகில் எங்குமே இல்லை. இன்பத்தை விட பரந்த பிரபஞ்சம் எதுவுமே இல்லை. இனிமேல் உங்கள் கேள்விகளும் பின்னடைதல்களும் எனக்கு எரிச்சலூட்டும்! குறுகுறுப்பு நதி என்னிடம் இப்போ ஓடிக்கொண்டிருக்கும் போது
எதுவும் தோன்றா
இறுக்கத்தில் நீங்கள் ஏன்குத்திட்டு நிற்கிறீர்கள்? எல்லா வருத்தங்களெல்லாம்
விலக்கி வைத்துவிட்டு
எமக்குத் தின்று
வாழக்கிடைத்த இந்தப் பழத்தை
இனி நீங்களும்
நீபி.அருளானந்தம் 175 கடந்து போகுதல்

Page 103
விலக்கவேண்டாம் உங்கள் தொண்டைக் குழியைத் தடவி இது சிக்கல் என்று ஏன் நினைப்பான்?
மரத்திலிருந்து தவறிவிழாமல் கைவைத்து கிளையில் நான்தான் இதை பிடுங்கினேன்! வட்டமாய் வெட்டி விட்டது போல ஒரு கடி கடித்தது நான் மாத்திரம்தான்! இந்தப் பழத்தைத் தின்றேன் - இதன் மிகுதியை உங்களிடம் நான் உவப்பாய்க் கொடுக்கிறேன். இது என் கட்டளை இல்லை - காதலர் பாதையில் வரும் பேச்சு இதைக் கேட்டுக் கொண்டு என்கையிலுள்ள பழத்தை வாங்குங்கள். என் வாயும் இப்போ வலிக்கிறது.
என்று கூறி ஆதாமிடம் அந்தப் பழத்தை தன் கையில் வைத்து நீட்டினாள் ஏவாள்
O
ஏவாளின்
நிர்வாணத்தில் சரிவுகளையும் வளைவுகளையும் கண்டு மலரையும் மலையையும் கண்ட இன்பத்தில்
கனிந்தான் ஆதாம்! ஏவாளில் கண்ட சுகம் அவனுக்குப் போதவில்லை. ஏவாளுடன் இப்பொழுதும்
நீபி.அருளானந்தம் 176 கடந்து போகுதல்

சேர இன்பச்சத்தை குறிகொண்டு பழத்தில் ஒரு துண்டைக்கடித்து அவன் தின்றான். அதைத் தின்ற நடுக்கத்தில் உற்பத்தியின் உலகு அவனுக்குத் தெரிந்தது. அவன் உள்ளத்தில் கன்னக் கோல் போடும் திருடன் ஒருவன் உத்தரவு அறியாமல் சட்டென நுழைந்ததைப்போல அவனுக்கு இருந்தது. அது உள் கடந்து போன விதம் ஒரு சுகமாய் திரள - வைத்திருந்த எச்சில் ஈரப் பழத்தை இது எனக்கு மட்டும் என்ற தனித்த நினைப்பில் மீண்டும் ஒரு கடிகடித்து வாய்க்குள் அவன் பிரித்தான்.
பழத்துண்டு தீண்டி குடல்களிலே செமித்துவிட பாம்பென அது நெளிந்து அவன் இரத்தத்துக்குள் நழுவியது. அவன் சிரசேறி பின் எண்ணற்ற திசைகளாய் அவன் நரம்புகளில் அது பிரிந்தது. அதன் தீண்டலில் அவன் ஒவ்வொரு நரம்பிற்குள்ளும் இன்னோர் இன்னோரானதொரு இன்பப் பிரபஞ்சம்
உருவாக்கியது
மோகம் அவனுள் ஓடிவந்து அரணைபோல அவனை நக்கியது.
நீபி.அருளானந்தம் 177 கடந்து போகுதல்

Page 104
அந்த விஷம் நீல வான நிலாவாய் அவனுக்குக் குளிர்ந்தது.
அவன் உடல் நுனிகளின் பிரயத்தனங்கள் - ஏவாளின் இன்ப ஊற்றுக்களை விரயமாக்கி - இது ஆரம்பமோ - இது முடிவோ - என்று பிடிபடாத இழுப்பிலே ஏவாளை நெடுகலும் மல்லாந்து நீந்திக் கொண்டே சுவாசம் விட செய்ததாய் ஆக்கிவிட்டது.
ஆதாம் மிகுதிப்பழத்தையும் பிறகு வாய்க்குள் தானம் செய்துவிட்டு முன்பு தின்ற பழவாசனையை மட்டும் சுவாசித்துக் கொண்டிருந்தான் இப்போது வேறு வேறு
சிடுக்குச் சிடுக்குச்
சிந்தனைகள் அவர்களை இளைப்பாறவே விடவில்லை. நெஞ்சின் காயத்திலே சப்தத்துடன் பெருமூச்சு இருவருக்கும் அழுது கொள்ள ஆரம்பித்துவிட்டது. நாணம் துறந்த ஆசைகள்
விடுபட்ட -
இன்னோர் நாணல்
ஏவாளின் நெஞ்சிலே பாதத்துடன் நடத்துவந்து அவள் மனத்து உள்ளே அமர்ந்து விட்டது. ஏதோபோய் விட்ட
நீபி.அருளானந்தம் 178 கடந்து போகுதல்

கவலையோடு இருவரும் போய் ஒரு மரத்துக்குக் கீழ் ஒதுங்கியிருந்தார்கள்.
அப்போது ஒரு வெளிறிப் போன குட்டித்தவளை வந்து
ஏவாளின் மார்புகளின் இடைவெளிக்குள் பாய்ந்தற்குள் ஒட்டிக்கிடந்து தன்னை மறைத்துக் கொண்டது. அது தன் அழுக்கெல்லாம் அவளில் அகற்றிக்கொள்ள தன்னில் புதைந்து கிடக்கும் சுகத்தோடு
அவள் அதனை காற்றுடன் வெளிப்போகத் தள்ளி விட்டாள். பசையெடுத்தபடி கிடக்கும் அவளின் உடலில் இப்போது நாணம் என்ற ஊற்றுக்கண் திறந்து ஊசியாய் அவளைத் தைக்க தன் நிர்வாண ஜொலிப்பின் இரு முலை ரகசியங்களை தானே தனக்குள் எண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு அருகே சருகுகள் கொட்டிக் கிடந்த பற்றைச் செடிகளுக்குள் அவள் நுழைந்து தன்னை மறைத்தாள்.
உடைந்த சிப்பியாய்
கீழே தெரியும்
தன் உடலைப் பார்த்ததும்
நாண ஊசி ஏறி
அவளின் மனத்தில் தைத்தது.
நீபி.அருளானந்தம் 179 கடந்து போகுதல்

Page 105
தன் முழுஉடல் நிர்வாணத்தை மறைக்க அளவாக பச்சையெடுத்த படி படர்ந்திருக்கும் எந்த இலையைத்தான் அவள் மரத்திலிருந்து உடைத் தெடுப்பாள்? இலைகளை மூடி தன்னை சுத்திகரித்துக் கொள்ள அவள் பட்ட பாடு அப்போ கொஞ்ச நஞ்சமில்லை. தன் உடலில்
இலைகளனிந்து உள்ள கசடுகள் அகற்றி நித்திய சுத்தம் நிறைந்து நிற்க அந்தப் பற்றைக்குள்ளால் வெளிவர அவள் பட்டபாடுகள் சிறிய அளவிலாக வாயாலே சொல்லமுடியாதவை
O
ஆதாம் திரும்பித் திரும்பிப் பார்க்கிறான் ஏவாள் சென்ற அவ்விடத்தை
அவளுக்காக அவன் காத்துக் கொண்டிருந்த நேரம்
ஒரு தட்டையான பூச்சி சத்தமிட்டு வந்து அவன் தொடைகளின் இடைநடுவில் போய் ஒதுங்கியிருந்தது. தன்னை இழுத்துப் போர்த்திக்கொண்டு நகர்ந்த படி இருக்கும் அந்தப் பூச்சி
தீபி.அருளானந்தம் 180 கடந்து போகுதல்

அவனது இதயத் துடிப்பொலியை கூடுதலாக உண்டாக்கிவிட்டது. மெல்லமாய் சிறிது நேரம் அமர்ந்திருந்த பூச்சி நுனிக் கொடுக்கை அவன் சதையிலே வைத்து ஒட்டக் கடித்துவிட்டது.
அது துப்பிய எச்சில் பிறகு விந்தென அவன் தொடை நடுவில் கசிந்தது
அது எதிர்த்தடித்து அவனை வெட்கம் வரவாய் வீழ்த்திற்று.
உடனே அவன் பூச்சிப் பிறப்பை தொடை நடுவில் தன் ஒரு கை வைத்து
அழுந்தப் பிடித்து அள்ளிச் சேர்த்து மூச்சுக்கள் அதிர்ந்து கிடந்த சேற்றுக்குள் போக வீசினான்.
அது துப்பிய எச்சிலுக்கு முகம் சுழித்துக்கொண்டு பட்டை கழன்று கிடந்த ஒரு மரத்தடிக்குச் சென்றான். மரம் விடுபட்ட பட்டை ஒன்றை உடைத்தெடுத்து கொடித் தண்டொன்றையும் நீளமாய் அவன் முறித்தெடுத்தான்.
அதிலே விலக்கி விலக்கி வெகு நேரம் நட்டுக் கொண்டிருந்த தன் வெட்கத்தை மறைத்து
நீபி.அருளானந்தம் 181
கடந்து போகுதல்

Page 106
பட்டை மறைப்போடே வேற்றுருவில் ஏவாளை அவன் சந்திக்க வந்தான்.
முன் தென்படாத புதுத்தோற்றம் இருவருக்கும்!
இலை மறைப்பில் மாறிய புத்தமைப்பில் அடைப்புக் குறிக்குள் அடங்கியதான அங்கங்கள் ஏவாளின் மார்பு வசீகரத்தை அதிகரிக்க
ஆதாமுக்கு பார்வையை அழுத்தி அவளைப் பார்க்கும் படியாக வைத்து விட்டது.
நீண்டு அகல விரித்த மறைப்பு இலைகளிலிருந்த அவள் உடல் மண்ம் காற்றின் கால்பற்றி அவன் நாசியை உரசுகிறது.
ஏவாளின் மார்பு முகடு கண்டு கொண்ட ஆடைமறைப்பைக் கண்டு ஆதாமுக்கு விசை மயக்கம் ஏற்பட்டு இறுகிப் போனது. தன்னை தாலாட்டி சமன் செய்ய முடியாமல் நிறுத்தியதாய் அவன் நின்றான்.
என் தோற்றமே தோற்றது
நீபி.அருளானந்தம் 182 கடந்து போகுதல்

ஆதாமினது அழகுத் தோற்றத்தில் என்றவாறு
தன்னகத்து நினைவில் படவும் ஆதாமின் ஈர்க்கும் அழகு விசையிலே 6J6)T6İT LDuJfilâ காமத்துவம் புரியும் வேட்டையிலே தன்னுடன் அவனையவள்
சேர்த்துக் கொள்ள முயன்றாள்.
அத்தோட்டத்தில் குலவும் குருவிகளே தங்களை குளிர் நிறுத்தம் செய்து கலவிக்கு அரண் போட்டு . இனி வசந்தம் வரும்வரையில் நோன்பு - என்று நிறுத்தியதாய் தமக்குள்
அமைதியாகிவிட
அவ்விருவர் மட்டும் கிடக்கும் தனிமையில் புதைந்த கதகதப்பின் உற்சாக வருகைக்கு அந்தப்பழம் கொடுத்த இதமான துணையோடு மனசெங்கும் ஆசைத்தணித்த லற்று அரவம்போல பிணைந்து புணர்ந்துகொண்டிருந்தார்கள்.
அன்றைய இரவின் நிசப்தமான நேரத்திலே
நீபி.அருளானந்தம்
183
கடந்து போகுதல்

Page 107
இவர்களுக்குக் கஷடமான கடைசி நேரக் காளானும் முளைத்துவிட்டது.
காலையில் காத்திருந்த பறவைகளின் சத்தத்தோடு அந்த ஓசைமட்டும் கேட்டது.
புணரும் கனவுகளிலே சிக்கித் தவித்து தங்களை இழந்த யோசனையோடு எதுவுந்தெரியாமல் தூரவாய் ஒளிபட்ட இடங்களை தங்கள் கண்களை
அடைத்த படி அவர்கள் பார்த்தார்கள்.
“ஏவாள்! ஏவாள்!”
என்று - மூலைகளில் அதிர்ந்தெழுகிற கூப்பிடுதல் இருவர் நெஞ்சிலும் வந்து அடைத்துப் படிகிறது. அவிழுகிற ஆடையை கையால் பிடித்து நிறுத்திக்கொண்டு தங்கள் கள்ளத் தனத்தை கிள்ளி எறிய முடியாமல் இலைகள் விரித்து மூடிய பற்றைக்குள் சென்று அவர்கள் மறைகிறார்கள்.
கீழ்ப் படிதல் எல்லாம் அந்த இருவரிடத்தும் நொறுக்குண்டு போய் அழிவிலே முடிந்த பின்பு தன் ஆள் காட்டி விரலை
நிபி.அருளானந்தம் 184 கடந்து போகுதல்

அவர்களைப் பார்த்தபடி நீட்டுகிறார் &ւ6)յ6it.
எல்லாம் அறிந்த சர்வ வல்லமையுள்ள அந்தக் கடவுள் - “இப்பொழுது நீசொல்லிக்கொள் உன்னைச் சுட்டும் என் கைவிரல்கள் கூட ஆடாகத் தான் இருக்கிறது” - என்று சொல்கிறார்.
"ஒழுங்கற்ற உன் தன்மைக்கு கிடைக்கின்ற தண்டனை மறுப்பே இல்லாத அளவுக்கு கடினமானதுதான்! முடிவற்ற துயரத்திலே உங்களுக்கு முடிந்துவிட்டது வாழ்வு!
நீங்கள் இனிமேல் சபிக்கப்பட்டதாய் நோய்களில் உழன்று அமுங்கிக் கிடப்பீர்கள். நேற்றைய உங்கள்
அடிச் சுவட்டில் அபூரண ரெத்தமும் ஒட்டிவிட்டது.
நீங்கள் செய்த பாவம்
Ubu60).just 85
சின்னஞ் சிறுசுகள் மட்டும்
கடத்தப்படும்.
இலைச் சட்டை யுடுத்த நீங்கள் இதோ இவ்வேளையில் வெயிலும் ஏறுகிறது . இந்தப் பற்றைக்குள்ளால்
நீபி.அருளானந்தம் 185 கடந்து போகுதல்

Page 108
வெளிப்பட்டு என் முன் படியிறங்கி நீங்கள் வாருங்கள்
நான் வந்த வழிநடையில் நீங்களும் முகத்தை மறைக்காமல் என் நேர் எதிரில் வந்து நான் காண
நில்லுங்கள்!
சளி ஏறியிருக்கும் உங்கள் நாசிகளின் நாற்றத்தை துடையுங்கள்! ஆதாம் நீ உன் மூச்சுக் காற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு என் முன்னேவா.
ஏதொரு மாற்று அபிப்பிராயமும் நீ கூறாமல் உன் நிர்வாணம் பற்றிய அருவருப்பின் பயம் வந்த அதிகரிப்பை என்னுடன் நீ பேசு.
பொய் சொல்ல இனிவேண்டாம் ஆதாம் - உண்மையை நீ அடித்து விட்டாய் நேற்று!
அதுமட்டுமே எனக்கு முக்கியமாயிற்று.
அந்த இருளைப் புசித்ததில் நீ எப்படி இனிமேல் பரந்து விரியப் போகிறாய்?
நிபி.அருளானந்தம் 186 கடந்து போகுதல்

உன் நரம்புத் துள்ளலால் வழி பிரண்ட நீ - நிர்ணயிக்கப்பட்ட என்சாபம் தரும் இறுக்கத் தோடேதான் இனிமேலேயாய் வாழப்போகிறாய்.
நீ உள்ளங்கையில் வைத்து சாப்பிட்ட இருள் - உன் நெஞ்சில் படிந்து வரும் சந்ததிகளின் வாழ்வு நீளத்தையும் அடைத்து விட்டது.
நான் படைத்த உனக்கான இந்தப் பூமியில் இப்போ பிசாசுகளின் ஆட்சியைத்தான் நீ கிளப்பி விட்டிருக்கிறாய்.
வசிக்கும் என் வளப்பமுடைய சக்தியை உதிர்த்து அழகிய இலைகளையே
ஒரு நாளில்
அழுக வைத்து
உதிர்த்து விடும் பொய்பேசுபவன் காலடியில் இப்போ உனக்கான ஓர் இடத்தை நீ தேடியிருக்கிறாய்.
இவ்வளவும் இவ்விடத்தில்
நடத்தி முடித்த நீ
தூங்கும் தென்னை ஓலை
போல ஏன் இப்போ
மெளனமாக நிற்கிறாய்?
நீபி.அருளானந்தம் 187 கடந்து போகுதல்

Page 109
என் கேள்விகளுக்கும் அழைப்பொலிகளுக்கும் எப்போதும் பதில் சொல்லும்
g
நடக்கக் கால்களின் செயலின்றி அந்தச் சாம்பல் கவிந்த இருளுக்குள் ஒழிவதென்ன?
நீ எங்கு உன்னை மறைப்பித்தாலும் சாளரம் வழியே உன்னை கண்டு கொள்ளக் கூடிய வல்லமை எனக்கு இருக்கிறது.
எனவே நீ உடனே என் முன்னால்வா? அங்கு என்ன நடந்ததென்று எனக்குப் புரியும் மொழியிலே நீகூறு? எனக்கு உன் மூக்குத் துளை வழியே வரும் காற்றே அங்கே என்ன நடந்ததென்பதை பிரித்துப் பிரித்துக்
கூறிவிடும்.” என்று கடவுள் அப்படிச் சொல்ல பறவைச் சாதிகளெல்லாம் அவர் குரல் வந்த திசைப் பக்கம் வழியோரப் புளியமரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன.
ஆரியனின் மஞ்சள் வெயில் பட்ட இடத்திலே அடித்தொண்டையிலிருந்து திருடியருசி இன்னும் ருசிக்கின்ற ஒரு நினைவில் கடவுளின் கட்டளைக்கு
நீபி.அருளானந்தம் 188 கடந்து போகுதல்

இப்போ
மரித்து விட்டதான ஒரு நிலையில் அடிபட்ட ஒரு பயத்தில் மிகவும் உடல் களைத்துப் போய் தனி மரமாய்த் தான்தனியே கடவுள் முன் வந்து நின்றான் ஆதாம்.
கர்வத்தை அறைகூவும் நிமிர்த்த நிறுத்திய மார்பு கூனி கறுக்கு மட்டை வாள்போல் வீசும் கடவுள் பேச்சுக்குப் பயந்து கட்டுப்பெட்டிப் பாம்பாய்ச் சுருண்டபடி கடவுள் முன் அவன் எல்லாமே இழந்தாய் நின்றான்.
நேற்றைய பகல் பொழுது நிகழ்வை மீண்டும் என் கண்திறந்து பார்த்ததில்
மூச்சுவிட்டு
நீ அப்பழத்தை மூக்கு நுனிப் பார்வையோடு ருசியாய் உறிஞ்சி முழுவதும் தின்றாய் என்பது எனக்குத் தெரியும்.
முன்பு ஒன்றுக்கு மூன்று தரம் உன் செவியில் பற்றிக்கொள்ள இச் செடிப்புதரின் அருகில் நின்று
நீபி.அருளானந்தம்
189 கடந்து போகுதல்

Page 110
நான் சொன்ன வார்த்தை என்ன? அதை நீ சொல்லு சொல்லு எனக்கு?
கடவுள் கேட்டபோது - ஆதாம் குப்புறத் தள்ளாடி விழுந்து பின் எழுந்து நின்றான்.
என் பிழை அதை வாயில் ஒரு கடிகடித்துத் தின்றது தான்
தேவனே அந்தப் பிழைக்காக நான் தின்ற இப்பல்லை வாயிலிருந்து பிடுங்கியும் தூரவாய் எறிந்திடுவேன்.
என் பாவம் தீர்க்க மூன்று கல் தூரம் அதற்காக முக்காமல் முனகாமல் முழங்காலாலும் நடந்திடுவேன்! இதற்கான உமது தண்டனையாய் என் வாழ்நாள் முழுக்க நான் எந்தப் பாரத்தையும் கட்டி இழுப்பேன்! அதனால் எங்கள் பாவத்தை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும் தேவனே! திடீரென எங்களை நீர் தீப்பிடித்து எரிய விடாதேயும் - கடவுளே! எம்மேல் விழுந்த இப்பாவத்துக்கு பூட்டைத்திறந்து
நீபி.அருளானந்தம் 190 . கடந்து போகுதல்

புகவிட்டவன் அந்தப் பிசாசு என்பவன்தான்! அவன்தான் நீர் எனக்குத்தந்த ஏவாள் என்பவளை பாபத்தில் விழவாய்
கட்டித்தழுவக் கைகளை அவள் மேலே நீட்டியவன்! அதனால்தான்
ஏவாள்
ஏமாற்றப்பட்டு பாபத்தில் கலங்கிய நீரை உன்னத நன்நீர் என்றெண்ணிக் குடித்தாள். பிசாசிடமிருந்து விடுபட முடியாமலேயே அவளும் அந்தப் பழத்தை தின்றிருக்கிறாள்
நான் என் செய்வேன் ஆண்டவரே? என்னைப் பாதுகாத்துக்கொள்ள அவள்தானே எனக்கிருக்கிறாள்! என்னைச் சாத்திக்கொண்டு இவ்வுலகில் நான் தனியே உறக்கம் கொள்ளல் ஆகாது என்று நினைத்துத்தானே நீர் எனக்கு ஏவாளனத் தந்தீர்
என் ஏவாளின் குணம் ஒவ்வொன்றுடனும் மொனமாய் பேசிப் பார்க்கிற ஒரு முகத்தைத் திருப்பாத அன்பான போக்கு
நீபி.அருளானந்தம் 191 கடந்து போகுதல்

Page 111
அவள் மிருகங்களுடன் தனக்குள்ள விளையாட்டை நிறுத்தலாம் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டாலும் கெட்ட பாம்புக்கு மட்டும்
bLqbG5 SÐọ60OLDU JITÉ தன் கொள்கையை கடந்து இருக்கிறாள்.
அவள் நான்கு ஐந்து நிறங்களுடன் திரிந்த அந்தப் பாம்புடன் தன் உறவை வளர்ப்பது அவசியமென்று நினைத்திருக்கிறாள்.
பாம்பு தன் மடியில் அவளை இருத்தியது. போல அன்பாக சொன்ன அச்சொல்லை
ஏவாள் நம்பி அந்தப் பழம் பிடுங்கவேண்டும் என்பது என்விருப்பம்
என்பதாக
தனக்குள்ளேயும் அவள் மனம் மாறிவிட்டாள்.
எமக்குச் சாபமாகவும் விலக்கி நிறுத்தியும்
விட்ட
அந்தப் பழத்தை கண்ணிகள் வைத்த அந்தப் பிசாசின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு பழம் பறித்து முதலில் தின்றவள் ஏவாள் தான்!
நீபி.அருளானந்தம் 192
கடந்து போகுதல்

கடவுளே உம்
கால்களை
என்கைகளால் நிதம் பிடித்திருப்பது போல வணக்கம் செய்திருந்த நான் இப்போ நாய் போல கண்டதையும் போய் நக்குகின்ற நரகலைச் செய்து உம் எதிரில் நிற்க வகையற்று நிற்கிறேன்.
ஏவாள் எனக்குத் தின்னத் தந்த பழத்தோடு துன்பமாகி விட்டது என் மனம்!
இதை உமக்குச் சொல்ல என் வாயிலும் ஒன்றும் வந்து அரும்பவில்லை
எதைச் சொல்வது உமக்கென்று
கடவுளே நான் ஒரு நிலையறியாது இப்போ தவிக்கிறேன் என் ஆயுளைக் குறைக்காது நிரப்பித் தந்துவிடும் ஆண்டவரே? என் மன்றாட்டைத் தயவாய்க் கேளும் தேவனே?
என்னை மயக்கிய ஏவாள் தன் இரக்கத்தின் நாற்றத்தை வேர்வையில் கசிய விட்டு மோகத்தில் என்னைப் பிறகு மயக்கி விட்டாள். தன் நெஞ்சை எனக்குள்ளே வைத்து
நீபி.அருளானந்தம் 193 கடந்து போகுதல்

Page 112
இனிப் பிரிவில்லை நமக்கென்று முகம் காட்டினாள். உடல் ஆடு இறக்கி நெடுக இன்பம் தரும் சுவையுள்ளது என அந்தப் பழத்தை உறுதிப்படுத்தினாள். எனவேதான் பரவும் அவளின் பிரியத்தால் மனம் அலைந்து நான் மோசம் போனேன். என்னை நீர் மன்னித்தருளும் தேவனே?
என்மனதில்
தரித்துள்ள பாவத்தை
பட்டுப் போனதாய்ச்
செய்தருளும்
மெய்க்கடவுளே?
O
நிலை குத்திய கண்களுடனும நீரில்லா ஆற்று மணல் போன்ற
மனவெறுமையுடனும் அலறிப் புரண்டு கடவுள் முன் அழுகையில் வடிந்தான் ஆதாம்!
முன்பு அவனுக்கு ருசிக்கென்று நீ இதைத் தின்றால் வாழ்வை இழப்பாய் செத்து மடிவாய் என்று கண்டிப்பாக கட்டளையிட்ட கடவுள் நீபி.அருளானந்தம் 194 கடந்து போகுதல்

அவன் கலங்கி அழுது இளைத்துப் போய் தன் முன் நின்றதைக்கண்டும் அதனால் அவர் மனமிரங்கவில்லை கறுத்த பின் உதிர்ந்த நெல் மணிகளைப் போல இப்போ அவன் வாழ்விழந்தது கண்டு அவர் துயரப்பட்டாலும் அவனுக்கு கொடுத்த தண்டனையை அவர் தன்கையில் மீளப் பெறவில்லை ஆனாலும் ஆதாமின் சந்ததியின் பாவம் தனைக் கழுவி சாகாத சீவனுள்ள வாழ்வுதனை மனித குலத்துக்களிக்க அப்போதே விடிவுக்கு ஒரு வேளை வரும் ஒரு
நாளாக
தன் நேச குமாரன் பூமியில் இனிமேல் பிறக்கவும் - தன் ரத்தம் பலபாடுகளும் பட்டுமரித்து முதல் மனிதன் செய்த சாபம் நீக்கி நித்திய சீவன் பெறவாய் வாழ்வளிக்கவும் நன்றோர் வழி செய்தார்.
O
பாபத்துக்குள்
பிரவேசம் செய்த
ஆதாமுக்கு இப்போ எந்த அளவுக்குத் துக்கம்! அதை வாயால் சொல்லவே முடியவில்லை! அவன் கருகிய வேராய் மீளவும் கடவுளிடமிருந்து இழந்ததன் நெடிய உயிர் வாழ்வை
நீபி.அருளானந்தம் 195 கடந்து போகுதல்

Page 113
மீட்க முடியாமல் கடவுள் முன் காய்ந்து போய்நின்றான்.
அவனை அள்ளி அணைத்து பாதுகாத்து வந்த கடவுள் சீவியத்தின் ஓர் எல்லையில் மூச்சடங்கி விடும் அவனைப் பார்த்து அவனால் காயப்பட்டுக் கிடந்த அந்த விடியல் பொழுதிலே அவனுக்கான தண்டனை உரையை வாசித்தார்
நீ என்னவாக இருக்கிறாய்? பாழில் அடங்கும் அவல வாழ்வைத்தான் நீ இனி வாழப் போகிறாய்! உன் நெஞ்சில் உற்பத்தியான பாவம்தான்
உன்ரெத்தத்திலும் உன் சந்ததியின் ரதத்திலும் இருக்கும்! உன் குணம் அந்த இரத்தத் தோடு கடத்தப்படும்! வியாதிகளும் அதுபோலவே! நீ கெடுத்த பூமியிலே நீயே இருந்து வாழப்போகிறாய் இந்தக் கதைக்குள்ளால் இருந்து தான் உன்வாழ்வு தொடங்கப் போகிறது.
இதுக்குள்ளே இருந்துதான் நீயும் யாவும் நீ வாழும் உலகிலே உண்மையான ஒரு தேவனான என் இருப்பும் - கால வேளை வரும் பொழுதுதான்
நீபி.அருளானந்தம் 196 கடந்து போகுதல்

யாவருக்கும் தெரியப்படும். இனி உன் வாழ்க்கை வெளியற்ற இடமான ஏதேன் தோட்டத்துக்கு வெளியேதான். இனி உச்சரிக்கவோ என்னிடத்தில் எதுவுமில்லை! நீ அப்படியாகப் போ அங்கே நில்! என்றார் தேவன்!
O
ஒருபுறம்
அந்த ஏதேன் தோட்டத்தின் தனிப் பாறை ஒன்றின் மேல் நீண்டு நிமிர்ந்து கிடந்த அந்தப் பாம்பு அந்நேரமாய் பாறை உச்சிக்கு ஏறிக் கொண்டிருக்கிறது. இக்குன்றிற்குக் கீழே
இவ்வுலகில்
நான் காண்பதெல்லாம்
இனி எனக்குத்தான்
என்று அது
நப்பாசை கொள்கிறது. ஓங்கி வளர்ந்த அதன் கற்பனை கடவுளின் மனக் கண்களுக்கும் தெரிகிறது.
அதுமலையல்ல! ஒரு குன்று! என்பதும் கடவுளுக்குத் தெரியும்! அதனுடைய ஆட்சி சில காலம் தான் என்பதும் அவருக்கும் அது புரியும்.
ஆனாலும்
அதிலே அவருக்கு
ஒரு அக்கறையுமில்லை.
பெற்ற மனத்திலே
புண் வளர்த்த இந்தக்
கசப்பு நோவு
கொடுரக் கொடுக்குகளால்
அவரை வருத்தும் போது メ
நீபி.அருளானந்தம் 197 கடந்து போகுதல்

Page 114
அதன் மீது என்ன விதம் அக்கறை மேவும் அவருக்கு.
தொலைவில் பச்சைக் கொடிகளுக்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டிருந்த ஏவாளை சிவந்த கோபத்துடன் - “என் நெற்றியிலே எரிகிறது நீ செய்த பாவத்தினது வலிக்கும் அந்த நினைவு! அடுத்தது நீதான் இரண்டாம் ஆளாக என் முன் உன்னை தெரியக் காட்டிவா?” என்றார் கடவுள். வாழ்வைக் குறைத்துக்கொண்ட ஏவாள் - தூரத்துத் தனிமையிலிருந்து இதயம் மரித்து வாழ்வு இல்லாமல் போன ஒரு நிலையிலே செயலிழந்த வாறு வந்து கடவுள் முன்நின்றாள்.
நீ அந்த நிழலிலே நின்று செய்த பாவம் உடன் நானும் தான் கண்டறிந்தேன். நீ அந்தப் பழம் தின்று அதற்கு அடிமையாய்க் கெட்ட பிறகுதான் உன்னிடம் பேசுகிறேன். இங்கே உணவு போதும் போதும் நீபி.அருளானந்தம் 198 கடந்து போகுதல்

என்றதாய் உனக்கு எல்லாம் இருக்க வாழ்வைக் கெடுத்து கசக்க வாய் வைக்கும் அதை
விரும்புடன் ஏன் நீ பிடுங்கித் தின்றாய்?
என் சொல்லை ஏன் மறந்தாய்? நேற்று அந்த மரம் சாய்ந்து கனி கொடுத்ததா உனக்கு இல்லையே?
பின் எப்படி இது நடந்தது? உண்மையை உன் வாயால் உள்ளபடி சொல்லு? என் குரலைச் சுமக்க உன்னால் முடியாவிட்டாலும் உங்களுக்கான நான் படைத்த சுழலுகின்ற இந்த உலகத்திலே உங்களுக்கான தீமையை விசாரிப்பதற்கும் எனக்குக் கடமை உண்டு
என்று அவளுக்குச் சொன்னார் கடவுள்.
என்மனமே கேடாகி விட்டது கடவுளே! நீர் மலர்களுக்கு நறு மணத்தைக் கொடுத்தீர்!
எங்கள் பார்வைக்கு ஒளியைக் கொடுத்தீர்!
நீர் படைத்த பூவுலகின் அழகை நான் பார்த்து மூழ்கி எழாமல் உமது படைப்பைப் பார்த்து வியக்காமல்
g|Ty T60T 96).j60)6OT
நீபி.அருளானந்தம் - 199
கடந்து போகுதல்

Page 115
அறியவே நான் முற்பட்டேன். அவன் என்னுடன் கதைத்த அந்த நிகழும் கணத்துள் நீர் படைத்து நிலைத்துள்ள இந்த அண்டத்தை மறந்து வாழவைச சாகடிககும அவன் வார்த்தைகளை நம்பினேன்.
காதுடன் உறவாடும்
அவன் உபதேசம் கேட்டு கடும் மோகம் கொண்டு நான் அப்பழம் பிடுங்கித்தின்றேன். இப்போ என் வாழ்வு அலங்கோலமாகி விட்டது. நெஞ்சின் நெடுமூச்சு நெடிய ஆசைகளை எனக்குள் ஆக்கி வைத்திருக்கிறது.
மனநோய் நெஞ்சிலிறங்கி வேதனையும் வேர்வையுமாகி விட்டது. என் வாழ்வு வேரைப் பிடுங்கி என் சீவிய காலத் தொடரை இல்லாமலாக்கியவன் அந்தப் பிசாசு என்பவன்தான்! பாம்பிலே உள்ள அவனது கொம்புத்தலை தூரத்தே இன்னமும் சீறி எழும்பிக் கொண்டிருக்கிறது.
எனவே
என்னை நீர் நோக்கி
பின் அவனிடமாய் நீர்
நியாயம் கேளும்.
ஆண்டவரே -
அப்பொழுதுதான்
என்மனம் நிம்மதியில் ஒயும்!
தேவனே!
நீபி.அருளானந்தம் 200 கடந்து போகுதல்

என்று நழுவவிட்டதன் வாழ்வின் நறுக்கைத் தேவனிடம் சொல்லிவிட்டு ஆறாததான சோகத்தேடே நின்றாள் ஏவாள்.
ஏவாள்
தன் தோல்விக்கான பாவத்தின் காரணங்களை மேலும் மேலும் விரிசல்களாய் விழிகளும் பிதுங்கி நிற்கச் சொல்ல
கடவுளுக்கு வெடிக்கிறது ஆட்டில் தீப்பொறி வார்த்தைகள்.
நீ கதைசொல்ல வேண்டாம்! நீ உன் உயிர் மூச்சை இழந்ததுடன் மனித குலத்தின் தொடரும் சாவு ஒலத்துக்கும் காரணமாகி விட்டாய். மெல்லிய குரலில் அந்தப் பிசாசானவன் பொய் சொல்ல எல்லாமே ஒரு புதிதான 92 _60ÖT6O) L Du Tulu உனக்குத் தெரிந்ததா? அதைத் தெளிவென்று
நீ நினைத்து உன்மனதில் எடுத்துக் கொண்டாயோ?
பிழைசெய்த உங்களுக்கு ஒரே உரிமையாக நான் தந்த இந்த இடம் இனி இல்லை! புழுதிப் புயல் கிளப்பும் காய்ந்த நிலம் நோக்கி சென்றுதான் நீங்கள் இனிமேல் வாழ வேண்டும்! ஏவாள் நீ கற்பவதியாய்
நீபி.அருளானந்தம் 201 கடந்து போகுதல்

Page 116
இருக்கும் போது வேர்வை உன்னைக் கலக்கும் - உள்ளெங்கும் உன் வேதனை பெருகும்! அந்த இடி வேதனைகளுக்கும் இறுமலுக்கும் இடையே மிகத் தவிப்புற்றுத் தான் கண்ணிர் விட்ட வேதனையோடு நீ பிள்ளைகளைப் பெறுவாய்! உன் கணவன் நெற்றி வியர்வை சிந்தி பாடுபட உன் ஆசை அவனைப் பற்றியிருக்கும் உன் தலைமேல் கைவைத்த படி உன் புருஷன் உன்னை ஆளுவான் விலக்கின அந்தப் பழத்தை நீங்கள் இருவரும் தின்றதால் வாழுகின்ற உங்கள் பூமியும்
சபிக்கப்பட்டிருக்கும்.
வாழும் நாளெல்லாம் ) (؟ آلہگل مہين - ܐ, வருத்தத் தோடே தான்
பாடுபட்டு உழைத்து "శ్న உன் கணவன் వr** '
”معلو۔“
அதன் பலனைப் புசிப்பான். ()
இன்னும் சில தண்டனை பளபளப்பான பாம்புக்கும் சொல்ல இருக்கிறது
நீ அமைதியாய் ề வெளியே சென்று متن۔۔ மகிழ்வாய் இருக்க இனி ஒரு வழியும் ':'w. உனக்கில்லை. புற்றுக்குள்ளேயே மூச்சுவிட்டு மனித விரோதியாகவே நீ காலம்
நீபி.அருளானந்தம் 202 கடந்து போகுதல்
 
 
 

கழிப்பாய். ஒளிர்ந்து கொண்டிருக்கும் இப்பூமியிலே உன் வாய்த் திறப்புக்கு தின்னக் கிடைப்பது மண்தான்! எல்லா உயிர்களிலும் சபிக்கப்பட்ட நீ அதையே இனிமேல் உண்டு வாழ்!
கடவுள் சொன்ன அந்தச் சின்ன விநாடியிலேயே பாபம் செய்து விட்ட எல்லோரையும் நோக்கி தண்டனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி எறும்பு போல் அந்த ஏதேன் தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த ஆதாமும் ஏவாளும் அந்தத் தோட்டத்து மரங்களின் கிளைகளிலிருந்து இலைகளோடு உதிர்ந்து கொண்டிருக்கும் பூக்களைக் கூட தங்கள் கைகளால் தொடமுடியாத ஒரு துர்பாக்கிய நிலையிலே அந்த ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்படுகிறார்கள்.
பற்றி எரிந்தபடி அவிழ்கிறதும் குவிகிறதுமாய் அவர்களை நோக்கி வந்த சுழல் நெருப்புச் சுவாலை வீசிக் கொண்டிருக்கிற சுட ரொளிப்பட்டயமாக மாறி மிரட்டுகிற மாதிரி அவர்களைத் துரத்தத் தொடங்கிவிட்டது.
நீபி.அருளானந்தம் 203 கடந்து போகுதல்

Page 117
அவர்கள் இருவரும் துரிதுரிதமாய் விரைய பயத்தில் தம்
முகநாடி வேறுபட விடு மூச்சும் வேர்த்துச் செல்ல நெருப் பெரிச்சலின் வெக்கையை தாங்க முடியாது ஏதேன் தோட்டத்துப் பாதை வழியே வாசலை நோக்கி கால் நீர்த்துப் போகுமளவுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள்.
பாறைமேல் இருந்து தன் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு கீழே நெடி அடரும் குப்பைத் தரையில் வழுக்கி விழுந்து ஏதேன் தோட்டத்து மண்ணைத் துளைத்துக் கொண்டு வெளி உலகிற்குச் சென்று விட்டது. அந்தப் பக்கம் அது மண்ணைத் தின்று கொண்டிருந்த போது ஒரு பேய்க்கை அதைத் தூக்கி அதிகார முடைய சிம்மாசனத்தில் வைத்து விட்டது.
ஆதாமும் ஏவாளும் ஒதுங்கிப் போய் நின்ற ஒரு இடத்திலே அசைந்து கொண்டு நின்றது இரு நெருப்பு வாள்கள். அவர்களுக்கு அங்கே இளைப்பாற வாவது இணங்கும்மணம் இருக்கவில்லை அவர்கள் இருவரும் நீபி.அருளானந்தம் 204 கடந்து போகுதல்

எங்கள் உயிர் கொள்ளுமோ இந்த நெருப்புவாள் என்றெண்ணி அச்சமும் இருளும் கொண்ட எண்ணிறைந்த பயத்துடன் ஏதேன் தோட்டத்து வாசலைக் கடந்து உலகாகத் தெரிந்த விசாலித்த மண்ணிலே தங்கள் கால்களை பதித்தார்கள்
ஏதேன் வாசல் அவர்கள் இருவரின் வெளியேற்றத்திற்குப் பிறகு பூட்டு வதற்குத் தயாராய் இருப்பது போல உடனே புதையுண்டது.
ஆளரவமற்ற அந்த ஏதேன் தோட்டத்து சந்தன நிற ஆப்பிள் மரம் அவ்வேளைதன் இலைகளைக் கீழே நிலத்தில் உதிர்த்து மரத்தின் பட்டைகளையும் வாய் அகட்டி விட்டு நில கரையான்களை உள்ளே வரவேற்றது. பழங்கள் கீழே விழுந்து காணாமல் போய் விட்ட அளவுக்கு
உடனே எறும்புகள் அவைகளைத் தின்றன.
பட்டும் போனதான மரத்தின் வழுவழுத்த கெட்டுக்களில்
நீபி.அருளானந்தம் 205
கடந்து போகுதல்

Page 118
பழம் தின்னும் வெளவவால்கள் தலைகீழாய்த் தொங்க ஆரம்பித்து விட்டன
மரத்தின் சாவிலே எல்லாம் அழிந்த பின் இப்போது புழுதிகிளம்பி அலைகிறது
ஏதேன் தோட்டத்துக்கு வெளியே மினுங்கும் கண்கள் கொண்ட பிசாசுகளினது வாரிசுகளின் ஆட் ஆரம்பமாகி விட்டது. பூமியிலே ஒழுங்கமைவுகள் சிதறிவிட்டன. மிருக சாதிகள் விரோதம் கொண்டு ஒன்றை ஒன்று கொன்று
புசிக்கின்றன. இறந்த காலம் கழுவப்பட்ட திரை விழாமல் ፳፭ጴ& ::m சாபத்தின் மின்னலாய் நெடுகவம் நெளிகிறது.
எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல அமுங்கிக் கிடக்கின்றது கடவுள் படைத்த இந்தப் பூமி. என்றைக்கு எந்நேரமாய் திரும்பவும் ஏதேன் தோட்டமாக இப்பூமி மாறுமோ? இதற்கெல்லாம் விடைபகர இன்னும் இருக்கிறது பைபிளிலே பல வசனங்கள் அந்த மிகப்பழைய புத்தகத்தில் மனிதனுக்கு இவையெல்லாம் அறியப்படக் கூடாததாக
ஒரு வசனம் கூட எழுதி வைக்கப்பட்டதேயில்லை.
நீபி.அருளானந்தம் 206 கடந்து போகுதல்
 

ஆசிரியரின் நால்கள் சிறுகதைத் தொகுதிகள். 9 மாற்றங்களை மறுப்பதற்கில்லை.
• கபஸ்ரீகரம். ஆமைக்குணம். கறுப்பு ஞாயிறு. (அரசின் சாஹித்திய விருது பெற்றது) 9 அகதி.
ஒரு பெண்ணென்று எழுது. G6)6séfeld.
நாவல்
• வாழ்க்கையின் நிறங்கள். (அரசின் சாஹித்திய விருது பெற்றது - வடமாகாண சாஹித்திய விருதும் பெற்றது) துயரம் சுமப்பவர்கள். (அரசின் சாஹித்திய விருதும் கொடகே தேசிய சாஹித்திய விருதும் பெற்றது)
கவிதை * வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து. (2008ஆம் ஆண்டு அரச இலக்கிய விருதுக்காக கருத்திற் கொள்ளப்பட்ட கவிதைத் துறையிலான நூல்களில், இறுதிச் சுற்றுக்காக விதந்து ரைக்கப்பட்ட இந்நூலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது) கடந்து போகுதல்.
ஆசிரியர் எழுதிய சிறுகதைக்குக் கிடைக்கப் பெற்ற பரிசு அன்பு பாலம் இதழ் நடத்திய வல்லிக்கண்ணன் சர்வதேச சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை - "இரத்தம் கிளர்த்தும் முள்முடி - முதல் பரிசு பெற்றது. (போட்டிக்காக அனுப்பப்பட்ட 900 கதைகளுக்குள் இருந்து முதல் பரிசுக்குத் தெரிவான சிறுகதை இது) இதற்கான பரிசை பாலம் மாத இதழின் சிறப்பாசிரியரான - ஞானபீட விருது பெற்ற த.ஜெயகாந்தன் அவர்கள் இவருக்கு வழங்கி கெளரவித்தார்.
திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிக்கான சிறப்புப் பரிசு (ரூபா 5000/- இந்திய பணம்) இவரது படைப்பிலக்கியத்துக்கு இவர் ஆற்றி வரும் பங்களிப்பை பாராட்டி வழங்கப்பட்டிருக்கிறது.
207

Page 119


Page 120
י סירב. கடந்து போகுதல் . என்னும் மிக மிக ஆழமானது
ஒருவர் கவிஞனாக இருப்பத /அருளானந்தத்தின் - கவிதைகளில் அதிரவைக்கின்றன.-ஏனெனில் ஆ كبير . இதனாலேதான் ந றிவிடுகிறோம். நாமும் அறிந்த அ
விமர்சன முறையில் பார்க்கும் எழுத்தின் பிழிவை அவரது உருவக கவிதைகள் வாக்கியங்கள் பெரிய ஓசை போன்றது. மணியின் ஒசையி அதிர்வு ஏற்படுத்தும் தாக்கமே மு முடிந்ததன் பின்னர் பல நிமிடங்களு கும் நல்ல கவிதைகளும் அப்படித்
...........88
ଛୁଞ୍ଚି :) ز" . ܕܼܛܠ ܐ ܠ ܐ ன்றோ நடந்து முடிந்த G
 
 
 
 
 
 
 

சுகதுக்கங் ல தொடர்ந்து ஒலிக்கின்றன. தாகுப்பில் நான் அதனையே
யர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களது மதிப்புரையிலிருந்து)
பொழுது அருளானந்தத்தின் 5 ஆக்கத்திலேயே காணலாம். மணி ஒன்று அடிக்கப்படும் லும் பார்க்க அந்த ஒசையின் முக்கியமாகும். மணி அடித்து நக்கு அந்த அதிர்வொலி நிற் ᎦᏏfᎢ6ᏡᎳ .