கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கபளீகரம்

Page 1


Page 2

ᏧᎦuofflgᎦᏪᏑ
(சிறுகதைத் தொகுதி)
நீ.பி.அருளானந்தம்
திருமகள் பதிப்பகம் இல.144 2ஆம் குறுக்குத் தெரு வவுனியா.

Page 3
ÉE ஆசிரியர் உரிமை முதற் பதிப்பு GHL fil L LILLவடிவமைப்பு ஓவியம் பின்புற அட்டை புகைப் படம்
பதிப்பு
அச்சுப் பதிப்பு :
விலை
SUBJECT EDITOR COPYRIGHT FIRST EDITION PUEBLISHED BY
PRINTED
PRICE
கபளிகரம்
சிறுகதைத்தொகுப்பு நீ.பி.அருளானந்தம் ஆக்கியோனுக்கே சித்திரை 2003
கெளசிக் TEL; 738658
கெளதமன்
கே.வி.மணி (ஒளிப்பதிவாளர் சென்னை) திருமகள் பதிப்பகம் இல, 144, 2ம் குறுக்குத் தெரு வவுனியா ஏ.ஜே.பிறின்ஸ்(தெஹிவலை) 19Ս.Ս0
KABALEEKARAM
COLLECTION OF SHORTSRTORIES N.P.ARULANANTHAM
EDITOR
APRIL 2003 THIRUMAGAL PATIPPAGAM NO.144, 2nd CROSS STREET WAWUNIYA
A.J.PRINTS 44, STATION ROAD, DEHWALA. TEL:739765,723205,723209.
190.OO
O2

வள்விக்க சீனச்ாைன்
அணிந்துரை
அமைதியும் வளங்களும் நிறைந்து ஆனந்தமutaாக மனித வாழ்க்கை விளங்கவேண்டும். இது உயர்ந்த குறிக்கோள். ஆயினும் அனைத்து நாடுகளிலும் பொதுவாக மனித வாழ்க்கை அப்படி அமைந்திருக்கவில்லை. சண்டைகள், கலவரங்கள், பல்றுே காரணங்களால் எண்ணற்ற பிணக்குகள் எங்கும் நிலவுகின்றன. இவற்றால் மனிதர்கள் பலவகைகளிலும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை பலவித பிரச்சனைகளினாலும், சிரமங்களாலும், குழப்பங்களாலும் அலைக்கழிக்கப்படுகிறது. அன்பும், அமைதியும், சுகவாழ்வும் சித்திக்காதா என்ற ஏக்கம் அவர்களது நித்திய மன உளைச்சலாக வளர்கிறது.
வாழ்க்கையை பிரதிபலிப்பது இலக்கியம், வாழ்க்கையின் சமகாலச் சிக்கல்களையும், சிதைவுகளையும், அவற்றால் தாக்குணர் டு தவித்துத் திணி டாடும் மக்களின் துணி ப துயரங்களையும், உணர்ச்சிச் சுழிப்புகளையும் எழுத்தில் பதிவு செய்ய வேணர் டியது மனித நேயமும் சமூக உணர்வும்
O3

Page 4
அணிந்துரை
கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் கடமையாகும்.
அத்தகைய கடமை உணர்வோடு செயலாற்றும் எழுத்தாளர்களுள் நீ.பி.அருளானந்தம் ஒருவராவார். இதற்கு அவருடைய சிறுகதைகளே சான்றுகளாகின்றன.
பலப்பல வருடங்களாக இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழர்கள் உள்நாட்டு யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, வளமான வாழ்க்கையை இழந்து, வீடு சொத்து சுகம் சொந்த ஊர் வசதிகளை இழந்து மிகவும் சிரமப்படடுக் கொணர்டிருக்கிறார்கள், சாதாரண மக்களின் வாழ்க்கை அவதிகளையும் , துயரங்களையும் , ஏக்கங்களையும் , ஆசைகளையும், ஏமாற்றங்களையும் அருளானந்தம் அவரது கதைகளில் சித்திரித்துக் காட்டுகிறார்.
அவ்விதமான வாழ்க்கைச் சித்திரங்கள் சிலவற்றை அவருடைய முதலாவது சிறுகதைத் தொகுப்பான 'மாற்றங்களை மறுப்பதற்கில்லை’ என்ற நூல் வெளிப்படுத்தியது ‘கபளfகரம் என்ற இந்த நுால் அவரது இரணி டாவது சிறுகதைத் தொகுப்பாகும்.
காலத்தின் உதவியால் நாட்டில் சமாதானம் ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்சூழலில; யுத்தக் கொடுமையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு சொந்த ஊர் வீடு வள வாழ்வு முதலியவற்றைப் பிரிந்து எங்கெங்கோ, எப்படி எப்படி எல்லாமோ பிழைப்பு நடத்த நேர்ந்துள்ள சாதாரண மக்களின் உணர்வுகளை, மகிழ்ச்சியை, அவரவரது முந்தைய ஊர் வீடு தோட்டம் நிலம் முதலியவற்றை மீண்டும் சென்றடைந்து, அவர்கள் விட்டுச்சென்ற வாழ்வை புதுப்பிக்க வேண்டும் என்ற ஆசையை, அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அருளானந்தம் அவரது கதைகளில் நன்கு படம் பிடித்திருக்கிறார்.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள அனேக கதைகள்
04

- - - - - - - அணிந்துரை தற்கால வாழ்க்கைச் சித்திரங்களாக அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பில் வசிக்க வந்தவர்கள் 5thias (em, 60t-ul பழைய இருப்பிடங்களை நாடிச் செல்லத் தவிப்பதையும், சிரமப்பட்டு சொந்தக் கிராமங்களை சேர்கிறவர்கள் அங்கே காணப்படுகிற சிதைவுகளையும் பாழ்மைகளையும் கண்டு மனம் குமைந்து உளம் கொதித்து வெதும்புகிற நிலையையும் இக் கதைகளில் அவர் திறமையாக எடுத்துக் காட்டுகிறார்.
'ஆறாத புண்கள் கதையில், கிராமத்துக்குத் திரும்பிய ஒருவர் சேதமடைந்த வீடுகளையும், சுயம் இழந்த அண்டை வீட்டுக் காரர்களையும் கண்டு கொதிப்புறுகிறார். அவருடைய மனநிலையை கதை அழுத்தமாகச் சுட்டுகிறது
‘தமிழர்களின் சமூக அந்தஸ்து, செல்வம், வள ஆதாரங்களை கெடுத்தவர்களை நினைத்து இவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது. அவர்களை யெல்லாம் நினைத்து மனதுக்குள் சபித்தபடி கால் போன போக்கில் அவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். மேலே அத்துவானம் போல் அவன் மனமும் ஒன்றுமே இல்லாத வெறுமை நிலைக்குப் போய்விட்டது. எங்கோ ஒரு சூனியப் பிரதேசத்தில் புகுந்து சீக்குண்டவனைப் போல் இப்போது அவன் தன்னிலை மாறியிருந்தான். “ஊரும் உறவும் என்ற கதையில் கொழும்பிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ஒருவன், அங்குள்ள நிலைமையைக் கண்டு வருத்தம் கொள்வதையும், பழங்காலம் பற்றிய நினைப்புகளில் தெருவோடு திரிந்து, சிதைந்து உருமாறிநிற்கும் வீடுகளையும் அங்குள்ளவர்களையும் பற்றி சிந்திப்பதையும் பாழ்பட்டுக் கிடக்கும் தன் வீட்டை அடைந்து அங்கேயே தங்க மனம் கொள்வதையும் அருளானந்தம் சொற் சித்திரங்களாகக் காட்சிப் படுத்துகிறார். அவனுடைய மன நிலையை ‘மசியாத மரவள்ளிக் கிழங்குடன் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பது போன்ற யோசனையில்
05

Page 5
அரிைந்துரை ஆழ்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டிருப்பது நயமாக இருக்கிறது. குடும்பத் தலைவன் கொழும்பு வாழ்க்கையை விடுத்து மீண்டும் யாழ்ப்பாணம் கிராமம் சென்று வசிக்க ஆசைப்படுகிறான். அவன் மனைவியும் மகளும் முதலில் மறுப்புத் தெரிவித்த போதிலும் பின்னர் மனம் மாறி அவரை ஆதரிக்கிறார்கள். அம் மூவரின் மனப் போக்கை ‘மண்வாசனை கதை அழகாக விவரிக்கிறது.
கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாணத்தவரது பிள்ளைகள் இன்று வெளிநாடுகளுக்குப் போய் வாழ்க்கை நடத்துகிறார்கள். எனினும் ஊரிலே பழைய சீவியம் எவ்வளவு மகிழ்சியாக இருந்தது என்று இவர்கள் எண்ணி, பழைய நினைவுகளில் இனிய சுகம் காண்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் உள்ளத்தின் உணர்வுகளை ‘கற்பகதரு’ என்ற கதை வர்ணிக்கிறது.
ஊரில் இருந்த போது, செல் வீச்சுக்குத் தப்பி ஓடிப் பதுங்குவதற்காக பங்கர் வெட்ட நேர்ந்ததையும், அதற்காக பனை மரங்களை வெட்ட நேரிட்டதையும், ஒரு பங்கர் சிதைந்து விட வேறொரு பங்கர் வெட்ட மேலும் சில பனைகளை வெட்டிச் சாய்க்க மகன் முற்படவும், அவர் தடுத்ததையும் குடும்பத் தலைவர் எண்ணிப் பார்க்கிறார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் யாழ்ப்பாணத்தவரின் உள்ளத் துடிப்பாகும். அவர் சொன்னது: 'நூற்றுக் கணக்கான எல்லா மரமும் நல்ல பிரயோசனம் தருகுது, பரம்பரையா இதை அனுபவிச்சா பேர் சொல்லும், பேர் சொல்ல பிள்ளை இருக்கிற மாதிரி பனையும் இருக்குமடா தம்பி. அதை நாம் பாதுகாக்க வேணும். அதை விட்டு விட்டு இந்த தேசத்துக்கே பிரயோசனமானதை அழிச்சால் இனி வாற பிள்ளை குட்டியளுக்கும் நாங்கள் துரோகம் செய்த மாதிரி ஆகும்.
கனடா செல்லமுடியாத ஒரு மனைவியின் பிரச்சனைகளை உணர்ச்சிகரமாக சித்தரிக்கிற கதையும் இங்கே இப்படியும்
ஒருத்தி.
O6

--------- அணிந்துரை சூழல் மாறி நிம்மதியான நிலையில் நாடு உள்ளதால் சொந்த ஊரின் சுற்றுப்புற இனிமைகளை ரசிக்க வந்த ஒருவன், வவுனியா குளக்கட்டு முதலியவற்றை, வயல்களின் பசுமை மற்றும் இயற்கை வனப்புகளைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு அண்ணனிடம் விவரிக்கிறான். அந்த ஊரிலேயே தங்கி இரும்பு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தும் அண்ணனின் ரசனை வேறு விதமாக இருக்கிறது. இந்த முரண்பாட்டை ரசனை’ என்ற கதையில் அருளானந்தம் சுவாரசியமாகச் சுட்டுகிறார்.
இதர ரகமான, மன உணர்வுகளைச் சித்தரீக்கும், நல்ல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறுவயதில் வறுமை காரணமாக படிப்பை நிறுத்தி விட்டு பிழைப்புக்காக வேலையில் ஈடுபட்டுவிட்ட ஒருவர் முதுமைக் காலத்தில் தனது பெரும் இழப்பை நினைத்து ஏங்குவதைக் கூறும் இழப்பு'. 'நம்பிக்கை தான் விவசாயத் தொழில் எனக் கருதும் விவசாயி, தன்னுடைய காணியை விற்கவோ, இருக்கிற வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கும் போகவோ மனம் கொள்ளாது, செய்துகொண்டிருக்கிற உழவுத்தொழிலில் ஒரு ஆத்ம திருப்தி அடைவதைக் கூறும் இலட்சியவாதி’, யுத்தக் கொடுமையினால் குடியழிந்து பாழடைந்து கொண்டிருந்த ஊருக்குள் கிறிஸ்துமஸ் சந்தோஷம் மலர்ந்து ஒளி வீசுவதையும், ஒரு குடும்பத்தார் அதை உற்சாகமாகக் கொண்டாடுவதையும், ஆயினும் மழை பெரிதாகப் பெய்து அவர்களது மகிழ்ச்சியைக் கெடுத்து விடுவதையும் சோகமாக வர்ணிக்கும் கதை ‘நத்தார் மழை, ஒரு பென்ஷனரின் பார்வை முரண்பாட்டை சுவையாகச் சொல்லுகிற "சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள் - இவ்விதமான பல்வேறு வாழ்க்கை நாடகங்களை அருளானந்தம் தமது கதைகளில் திறமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
O7

Page 6
- அரிைந்துரை விழிப்புற்ற பெண்களின் சுதந்திர உணர்வையுயர், உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கும் அவர்களது தன்னம்பிக்கையையும் அருளானந்தம் ஜீவனுள்ள கதையாக்கியிருக்கிறார். எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை, காலத்தின் குரலை நன்கு ஒலி செய்கிறது - பெண்பிள்ளை uெண்டாலும் அவளுக்கு சுதந்திரமிருக்கு, உரிமையிருக்கு. இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமையில்லை என்கிறதான சித்தாந்தம் வளர்ந்து வரும் போது பெண்கள் ஆனர்களுக்கு அடிமையாக வாழ்வதென்பது முட்டாள் தனமில்லையா?. நான் கூண்டுப் பறவையல்ல, சுதந்திரப் பறவை. எண் வாழ்வில் எதிலும் எனர் விருப்பப்படி நடப்பதற்கு ஆண்களைப் போன்று எனக்கும் சுதந்திரம் வேண்டும் என்பதே என் கொள்கை, இந்தக் கொள்கைப் பிடிப்பிலிருந்து இம்மியளவும் என் வாழ்க்கையில் பிறளப் போவதில்லை' என முழக்கமிடுகிறாள் வசந்தி. இப் புதுமைப் பெண்ணின் செயலை ரசமாகச் சொல்கிறது கதை
இந்த விதமாக சமகால வாழ்க்கையின் பணி முகத் தோற்றங்களையும் அருளானந்தம், மனிதநேய உணர்வோடும், முற்போக்குச் சிந்தனையோடும், சமூகப் பார்வையோடும் தனது கதைகளில் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவை படித்து ரசிக்கப்பட வேண்டியவை. அவருக்கு என் வாழ்த்துக்கள்
-வல்லிக்கண்ணன்.
10, வள்ளலார் குடியிருப்பு
புதுத்தெரு, லாயிட்ஸ் ரோடு GF666 - 600005.
8

தம்பையா கயிலாயர்
இந் நூலின் நீபி.அ' வின் சில சிறுகதைகள் பற்றி.
திரு. நீ.பி.அ' சமூகப்பிரக்ஞை உடைய எழுத்தாளர். சில பிரச்சினைகளில் ஆவேசமும் கொண்டவர், அவரின் கவனிப்புக் குள்ளாகியவர்கள் சாதாரண மனிதர்கள் விவசாயி. விறகு வெட்டி, வலது குறைந்தோர். பாட்டி குடும்பப்பெண் புதுமைப்பெண் - இன்னும் பலர். அவர்களின் கஷ்டங்கள். ஆசாபாசங்கள். உரிய காரணங்கள், நிவர்த்தி செய்யாமல் அசமந்தப்போக்குக் காட்டும் சமூகம் - ஆகியவற்றைக் கலைநயத்துடன் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்
இடர்களைத் திடத்துடன் எதிர் கொள்ளும் விவசாயி தியாகு. சாதிமாறி மணம் முடித்ததால் உறவினரால் ஒதுக்கப்பட்டவன், சமாளிக்கிறான்.
போர் அனர்த்தங்களினால் அகதியாகிறான், கலங்கவில்லை. குடும்பத்துடன் வவுனியா சென்று காடு வெட்டி கிணறு தோண்டி நிலத்தைப் பண்படுத்தி உணவுக்கு வழி காண்கிறான். அலைந்து கச்சேரியில் உறுதியும் பெறுகிறான்.
துன்பத்துக்கு மேல் துன்பம், ஆமியின் கள விஸ்தரிப்பில் காணி
O9

Page 7
பறிபோகிறது. நிலம் திரும்பப் பெறுவது துர்லபம். ஏக்கத்தினால் இளைத்து இடையிடையே அவனுக்கு நெஞ்சுவலி, மாற்ற அக்கறையில்லை. வேறு வழியில்லை. குறித்த தினத்தில் நட்டஈடாக பணம் பெற்றுத் தூர வழி நடந்து செல்கையில் களைத்து வீதியில் சாய்கிறான்.
கூட்டம் சேர்கிறது. 'தண்ணி சோடா” எனக் குரல்கள். அவன் மரணித்ததை பின்னர் அறிகின்றனர்.
பிணத்துக்குத் தெரியாது. அவனது பணம் எங்கே? கணவனை இழந்து பெருந்துயரில் தவிக்கும் அவன் மனைவி தன் பிள்ளைகளுடன் பணத்துக்கு எங்கே போவாள்? இடிக்கு மேல் இடி
ஒரு விவசாயின் நெஞ்சை உருக்கும், நெருடும் சோகத்தை “கபளிகரம்”,
பெண்களின் அடிமை வாழ்வுக்கு ஆண்களே காரணம் என்பது பொது அபிப்பிராயம். ஆனால் பெண்களே ஓரளவுக்கு தங்கள் நிலைமைக்குப் பொறுப்பானவர் என்பதைப் பலர் அறிந்திலர் முக்கியமாகப் பெண்சமூகம். கண்மணி எல்லாவீட்டு வேலைகளையும் தனியாகச்சுமந்து மாய்கிறாள். அத்துடன் கணவன் மகன் இருவரின் அடுபாடுகளையும் கவனிக்கிறாள்.
தம் தம் வேலைகளுக்குச் செல்வதுடன் கணவன் நேசனுக்கும் மகன் சிவகுமாருக்கும் பொழுதுசரி வீட்டில் சோம்பேறித்தனம் தான்.
குமாருக்கும் வேலை பார்க்கும் தாமரைக்கும் திருமணம். புதுக்குடித்தனம் நடத்தும் மகன் மருமகளைச் சந்திக்க இருமாதம் கழித்துச் செல்கின்றனர் பெற்றோர்.
தாமரை வரவேற்கிறாள். பூச்செடிகளுக்கு நீர் வார்க்கின்றான் குமார். சிறிது நேரம் கழித்து அவனே பெற்றோருக்கு பானகம் பரிமாறுகிறான்.
வீட்டுவேலைகளெல்லாம் மகனா? - தாயின் மனக்குமுறல். அவளின் முகத்தில் பிரதிபலிப்பு.
தாமரை விளக்குகிறாள் தன் வேலைப்பளுவை குமாருக்கு விளக்கிப் பகிர்ந்து, முறைவகுத்துப் புரிந்துணர்வுடன் வாழ்கிறோம் என்றாள்.
கண்மணி தன் வேலைச்சுமையைக் கணவனுக்கோ மகனுக்கோ விளக்கியவள் அல்ல. பகிரும் உதவியை நாடியவளும் அல்ல மருமகளுக்கும் தனக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கே தனது நிலைமைக்குத் தானே காரணம், காலம் கடந்த ஞானம்.
இரவு சாப்பாட்டு மேசையில் எதிர்பாராத நிகழ்வு, மனைவியின்
10

கோப்பையில் இட்டலி வைத்து சட்னியும் இடுகிறார் நேசன் அன்பு கனிந்த கண்மணியின் பார்வை கணவன் கண்களுடன் சங்கமமாகின்றன. பெண்குமத்துவம், பெண்நிலைவாதம் என்பவற்றை பிரசாரம், அமர்க்களம் இன்றிக் கலைநயத்துடன் சொல்கிறது. குடும்பப்பாங்கான "வசந்தம் வந்தது” என்ற கதை. ஆசிரியரின் ஆற்றலுக்குச் சான்றிதழாக அமைகிறது.
வெளிநாட்டு மாப்பிள்ளையை மணந்த சிவதாசன் - தவமணி தம்பதியினரின் புதல்வி கோமளா, நோர்வே சென்றதும் கணவனுக்கு வெள்ளைக்காரியும் பிள்ளையும் இருப்பதை அறிகிறாள். 'பிள்ளையை வளர்ப்போம் அவளை விடுங்கள்’ என்ற கோரிக்கையை அவன் உதாசீனப்படுத்த, விலகி உதவும் தமிழ்க்குடும்பத்துடன் வாழ்கிறாள் கோமளா,
ஏமாற்றப்பட்ட மகளின் வாழ்க்கை, பெற்றோருக்கு “சோக முள்ளாக” இதயத்தை நெருடுகிறது.
வதிவிட உரிமை கிடைத்ததும், விவாகரத்துப் பெற்று, சொந்தக் காலில் நின்று, எதிர்காலச் சவால்களைச் சந்திக்கத் தயாராகும் கோமளாவின் திட்டம், தம் இதய நெருடலை நீக்க உதவும் என நம்புகிறார்கள் பெற்றோர்கள். திண்மை உள்ளம் படைத்த வீராங்கனையாக கோமளா, அவள் பெற்றோருக்குத்தெரிகிறாள்.
'காடு வா என்கிறது என்ன சொந்த பாசம்!” முதியோரின் சாதாரண பேச்சுக்கான வார்த்தைகள். ஆனால் உண்மையில்
ஷெல்லடியில் பெற்றோரை இழந்த விமலனுக்கு பாட்டிதான் எல்லாம். இளைஞன், நல்ல விவசாயி.
விசாரணைக்கென்று கொண்டுபோய் ஐந்து வருசம் பாட்டி பேரனைக் கண்டது ஒரே ஒரு முறைதான், வெலிக்கடை சிறையில் பொங்கலுக்கு வருவானா? பாட்டியின் முடிவிலா ஏக்கம்.
அயலவள் திலகத்தின் அன்பான ஆறுதல் வார்த்தைகள்: “ஆச்சி, சொல்றதை நம்பணை விமலன் வருவான் தம்புவின் மகனுக்கு விடுதலை ஊருக்கு வந்துவிட்டானெணை. பேரனும் கட்டாயம் வருவானெணை’
“மோனெ, அதுக்கிடயில போய் விடுவேனோ?”ஆச்சி கணி கலங்குகிறாள்’
11

Page 8
“திரும்பச் சொல்றன். ஆச்சி, பேரனுக்குக் கல்யாணம் செய்விச்சு, பூட்டனைக் கண்டு, நூறு வயசுக்கு மேலே இருப்பியெணை. முகிட்டில் பல்லி சொல்லுது. நல்ல நிமித்தம்”
திலகத்தின் உறுதியான நம்பிக்கையூட்டும் வார்த்தைகளில் உந்தப்பெற்று, வேகமாக மூலையில் இருந்த குத்துவிளக்கைத் துடைத்துத் துலக்கித் தீபம் ஏற்றுகிறாள் பாட்டி
கொட்டிலில் ஒளிபரவ, அவள் உள்ளத்தை நம்பிக்கை ஒளி வியாபிக்கிறது.
பேரனின் வருகைக்கு ஏங்கும் மூதாட்டியின் உள்ளக்குமுறல்களை நயந்தகு கிராமிய வார்த்தைகளில் தரும் ஒரு நல்ல விவரணச் சித்திரம் “காத்திருத்தல்”
வவுனியாக் கிராமத்தில் ஒரு இலுப்பை மரம். அதில் பேயோ, முனியாம். வளவில் வாழ்ந்தவருக்குக் கேடு. வீதி வாகனங்களுக்கு விபத்து உடைவு அயலவருக்கு பிராந்தி மரம் வெட்டுவோர் வீழ்த்த முன்வருவதில்லை
அந்த மரத்தை வெட்டப் பஸ் நடத்துநர் ஜீவா ஆயத்தம் செய்துவிட்டான்.
அவன் மனைவி ரேணுகா மாமி தங்கம்மா மகனின் ஒத்துழைப்புடன் செய்யும் கொடுமைகளைத் தாங்கமுடியாமல், பெற்றோர் வாழும் நெல்லியடிக்குச் சென்று விட்டாள்.
கணவன் ஜீவா ஒற்றுமைக்கு வராது, விவாகரத்துக்கு ஏற்பாடு செய்ய தெல்லிப்பழை துர்க்கா கோவில் சென்று அம்மன் முன்னிலையில் கண்ணிருடன் கட்டிய தாலியை ரேணுகா கழற்றி , பெற்றோரின் நடுங்கும் கைகளில் கொடுக்கும் அவ்வேளை.
வவுனியாவில் வெட்டிவீழும் இலுப்பையின் கீழ் அகப்பட்டு ஜீவா மரணமாகின்றான்.
கிராமிய நம்பிக்கைகள், அதன் விளைவுகள் இவற்றால் பின்னப்பட்ட கதை “பழி முடிச்சு’
கல்வி ஏற்றம் ஏற்படுகையில், மக்கள் உணர்வில் மாற்றம் ஏற்படலாம். பகுத்தறிவோர் தற்செயலாக அமைந்த நிகழ்வுகள் என்பர். பிறநாட்டிலிருந்து வந்த செல்வம் நடையை விரும்பி வீட்டுக்கு நடந்து செல்கிறான். பாரம் தூக்கி ஒருவன் உதவவர, பார்த்த முகம் ஆனால் அடையாளம் காண்பதற்காகக் கதை கொடுத்து அறிந்து கொள்கிறான்.
12

அன்றய சிறுவன் கூனல், திக்குவாய் , அறிவுகுறைந்த ராசன், இன்று இளந்தாரி, பேச்சுத்திருந்தியவன். ஒருவரை ஒருவர் அறிந்ததில் மகிழ்ச்சி. பாக்கள் தூக்கியதற்கு ரூபா இருபது பெற்று, தான் தங்கும் கடைக்குச் செல்கிறான் ராசன்.
தங்கையின் பிள்ளைகளுடன் அளவளாவி, பொருட்களைப் பகிர்ந்து ஆறி சந்தை செல்கிறான் செல்வம்.
மீதி நானூறுக்குப் பதிலாக, எண்ணுறு ரூபா கிடைக்க, மீன் சந்தை நெருக்கடியைச் சாதகமாக்கி, குற்ற உணர்வுடன் திரும்புகையில் வீதியில் கூட்டம். தொலைத்த மோதிரத்தைத் தேடுகிறார்கள். செல்வமும் பங்கு கொள்கிறான்.
“இங்கே மோதிரம்’ என்று கையை உயர்த்திக் கொண்டு உரியவனிடம் கொடுக்கச் செல்கின்றான் ராசன்.
படிப்பற்ற நிலையிலும் பண்பும் நேர்மையும் கொண்ட ராசனின் செயல், செல்வத்தை வெட்கித் தலைகுனியச் செய்கிறது. தீர்மானத்துடன் மீன் சந்தையை நோக்கிச் செல்கிறான் செல்வம்.
சாதாரணரின் நேர்மைக்கும், கவைக்குதவாத கல்வி பெற்றவரின் சின்னத்தனத்துக்கும் ஒப்பீடு செய்கிறது. “நாணயம்”
தமிழக கல்லூரிக் காதலியின் தற்கொலைச் செய்தியை அடுத்து, இன்றுவரை பிரம்மச்சாரியாக இருக்கும் வில்லியம், பல தசாப்தங்களாக அமெரிக்கா வாழும் பால்ய நண்பன், சாதனையாளன் அல்பொன் சோவின் அழைப்பிற் கிணங்க கொழும்பு ஹோட்டலில் சந்திக்கிறார்.
பழைய சம்பவங்களைப் பரிமாறிய பின், தன் தங்கை முதலில் அமெரிக்கரை முடித்து இரத்துப் பெற்று. பின் கறுப்பின அமெரிக்கருடன் வாழ்வதையும், வயது முதிர்ந்தோர் துணைக்காக அங்கே மணப்பதைத் தெரிவித்தும் நண்பனை திருமணம் செய்யும்படி வற்புறுத்துகிறார், அல்பொன்சோ வில்லியம் அசையவில்லை.
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் பழைய ஊர்திப்பவனிக்காக பழைய "றெட் இந்தியன்’ மோட்டார் சைக்கிளை விலைக்கு கண்டியில் வாங்க வந்ததாக அல்பொன்சோ சொல்ல, ஆச்சரியப்படுகிறார் வில்லியம்.
விடைபெறும் நண்பனுக்கு ரூபா இருபத்தையாயிரத்தைப் 'பொக்கெற்றில் திணிக்கிறார் அல்பொன்சோ.
யாழிலிருந்து தான் அகதியாக வர, வவுனியாவில் தன் கொட்டிலில்
13

Page 9
இடம் உணவு கொடுத்து ஆதரித்த பெருமகனுக்கு அப்பணத்தை அனுப்பத் தீர்மானிக்கிறார் வில்லியம்.
படாடோபத்துடன் வாழும் அமெரிக்க வாழ்க்கையைவிட செல்நெறியுடன் எளிமையாக வாழும் எம்மக்களின் பாரம்பரிய வாழ்க்கை. விரும்பத்தக்கதாக இருப்பதைக் காட்டுகிறது. "அன்பளிப்பு'
சூசையப்பர் தேவாலயக்குரு வித்தியாசம் காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் செபம் சொல்லிக் கொடுப்பதுடன், மேலும் இம்முறை 'மே'தினத்துடன் இணைந்த சூசையப்பர் தின திருப்பெருவிழாவில் சற்பிரசாதத்தையும் ஒருமித்து வழங்க ஆயத்தம் செய்கிறார்.
சாதிப் பிரச்சினையைக் கிளப் பி எதிர்க்கும் நிக்கலஸினால் தாக்கப்படுவதற்கு முன் குரு காப்பற்றப்படுகிறார்.
உபதேசியர் கேள்விப்பட்டு, செபம் முடித்த பிள்ளைகளை தனி இடத்துக்கு அழைத்துச் சென்று போதிக்கிறார் " ஒருமித்துச் சற்பிரசாதம் பெறுங்கள். மறுத்தால் பகிஸ்கரியுங்கள்’ என்று சொன்னதை அறிந்த நிக்கலஸ் உபதேசித்தவரை கொல்லத்தேடிச் செல்கிறான்.
சிலுவைமேடையில் நின்ற உபதேசியார் கொலையை வரவேற்க, கலவரத்தினால் மக்கள் கூட, நின்ற பெரியோர்களின் வலியுறுத்திய புத்திமதிகளுக் கிணங்கி, மறுநாள் திருப்பெருவிழாவில் சகல பிள்ளைகளுக்கும் ஒருமித்து சற்பிரசாதம் வழங்கப்படுகிறது. அவர்களில் மனந்திருந்திய நிக்கலஸின் பிள்ளையும் அடங்கும். கிராமத்தில் “புதுயுகம்” மலர்கிறது. சாதி என்ற விஷ விதையை பிள்ளைகள் இதயத்தில் விதைக்கக்கூடாது என்பதை கதைசுட்டுகிறது. பத்திரிகையில் திருமண விளம்பரங்கள் 'சாதி மாளவில்லை’ என்பதை த்ெரிவிப்பதால், இதுபோன்ற கதைகள் இன்னும் அவசியமாகிறது.
கண்ணன் ஒரு விறகு வெட்டி கொலனிப்பக்கம் போகாதே’ என்று பலர்சொல்லியும், கேளாது மாமனுடன் செல்கிறான். நிறைய விறகுகளும் கிடைக்கும் தேடுவாற்ற மரவள்ளிக் கிழங்குகளும் பிடுங்கலாம் அவனது எண்ணம், பேராசை,
சென்ற முதல்நாளே அமுக்கவெடியில் அகப்பட்டு ஒரு காலை இழந்து ஜெய்ப்பூர் காலில் உலாவுகிறான். காலை இழந்த துன்பத்திலும் பார்க்க, "சொத்தி, சொத்தி’ என்று சிலர் விளிப்பதால், அவன் இதயம் காயப்படுகிறது. உற்றார் உறவினர் “விழுதுகளி’ போல் உறுதியாக நின்று அவனுக்கும்,
14

அவன் குடும்பத்துக்கும் உதவி வருகிறார்கள்.
கடல் கடந்து உறவுகள் தேய்ந்து வரும் நிலையில், கிராமிய உறவுகள் இறுக்கமாக வளர்ந்து வருவது ஆறுதலைத் தென்பைத் தருகிறது.
இராசியான கடிதம் ஒரு காதல் கதைகுளத்தூர் சித்திரிப்பு ஈர்க்கிறது. விதவை புஸ்பராணிக்குக் கணவன் விட்டுச் சென்றவை ஒரே பிள்ளை காந்தன், பென்சன், பெரியவீடு சொத்துக்கள்.
தாமரையின் மாமன் குடும்பம், புஸ்பாவின் பெரியவீட்டில் வாடகைக்கு இருக்கும் குடும்பங்களில் ஒன்று.
ஒரு தினம் நீராடிய தாமரையின் "சோப் தவற. குளத்தில் தாழ்ந்திருந்த காந்தன் சுழியோடி எடுத்துக் கொடுத்து நன்றியைப் பெறுவதுடன் அவளிடம் ஆழ்ந்த காதலும் கொள்கிறான். . ح -
காதலின் உச்சக்கட்டத்தில் இரவு விழித்து, கடிதம் எழுதி விடியுமுன் வழக்கமாக அவள் கூட்டும் இடத்தில் ஒருவருக்கும் தெரியாமல் போடுகிறான். மாமனின் கணிகளில் தென்படுகிறது. அநாமதேயக் கடிதம். வாடகைக்குடும்பங்களில் சில இளைஞர்கள் இருக்கிறார்கள். யாரைக் கேட்பது? தாமரையை ஊருக்கு அனுப்ப தீர்மானிக்கிறார் மாமன்.
குளத்தடியில் காத்திருந்த காந்தன் அந்தக் கடிதம் என. “யார் எழுதியதோ தெரியாது. அந்தக் கடிதத்தால் நன்மை. நீர் நல்ல நண்பன். சொல்றன் ஊரிலே எனக்கு ஒரு காதலர். எதிர்த்த என் பெற்றோர் என்னை இங்க அனுப்பிச்சினம். நாளை போறன். இனிக்காதலரைச் சந்திக்கலாம். எனக்கு அது “இராசியான கடிதம்” சொல்லி மறைகிறாள் தாமரை. எதிர்பாராத திருப்பம், வசீகரிக்கும் உத்தி, சுவையான காதல் கதை. பொதுவாக சமகாலச் சம்பவங்களை கலைநயத்துடன் விபரித்து, சிந்திக்கவும் செயலாற்றவும் உந்துகின்றன. நீ பி அவின் கதைகள்.
வர்சகர்களின் ஆதரவு அவரின் ஆக்க இலக்கியத்துக்கு உறுதுணையாக நின்று வளர்ச்சியை நீடிக்கச் செய்யும் என நிச்சயமாக நம்பலாம்.
தம்பையா கயிலாயர் “செல்வம்’ கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், இலங்கை,

Page 10
ஒரு வருட காலத்தினுள்ளே பல சிறு கதைகளை வார மாத பத்திரிகைகளுக்கு என்னால் எழுதமுடிந்திருக்கிறது. அவை பிரசுரிக்கப் பட்டதும் பெரும்பாலும் அவைகளில் பலதை இச்சிறுகதைத் தொகுதி யிலே சேர்த்துவிட்டு மேலோட்டமாக இவைகளை வாசித்துப் பார்த்தேன்.
யுத்தம் முடிவுற்ற பின்பு, சமாதானத்தின் சாயை படர்ந்துள்ள இவ்வேளையில் நான் எழுதியுள்ள இக் கதைகளிலெல்லாம் தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சியென்று ஏற்படாது இழப்புக்களும் ஏமாற்றங்களுமே தூக்கலாகி நிற்கிறதை என்னால் காணமுடிந்தது.
இக் கதைகளையெல்லாம் வலிந்து வெறும் கற்பனையில் மாத்திரம் நான் படைக்கவில்லை. குமுறிக் கொதித்துக் கொண்டிருக்கும் இதயங்களை இனங்கண்டு அவர்களையே நான் எழுதிய கதைகளில் வரும் கதா பாத்திரங்களாக நடமாடவிட்டேன். இங்கே சில கதைகளில் ஸ்தூல உருவங்களில் இருக்கிற சூட்சும உருவம் நான்தான். அதையும் வாசகருக்கு வெளிப்படையாகக் கூறுகிறேன்.
“உங்கள் கதைகளைப் படிக்கும் போது அவையெல்லாம் சோக மயமாகவே இருக்கிறது” என்று பல நண்பர்கள் என்னிடத்தில் சொன்னார்கள் "துன்பத்திலிருந்து தான் நல்ல இலக்கியங்கள் பிறக்கும். அந்த இலக்கியங்களே மக்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும்.” என்று எங்கோ ஒரு புத்தத்தில் நான்
16

என்னுரை
படித்திருந்ததை இங்கே அவர்கள்தம் கேள்விக்குப் பதிலாகக் கூறிவிட விரும்புகிறேன்.
வருந்திச் சுமை சுமப்பவர்களுக்கே என் இலக்கியப் படைப்புகள் போய்ச் சேரவேணி டும் என்று விரும்புகிறவன் நான் உடலை வருத்தி உழைப்பவர்களிடம் பொய்யான ரசனைகளும், போலித் தனமான ஆடம் பரங்களும் இல்லை. இதனாலேயே அவர்களுக்கு நான் இப்படியான சிறு கதைகளை எழுதிக்கொண்டிருக்க ஆவலுறுகிறேன். அந்த இதயங்கள் நான் எழுதும் கதைகளை விரும்பி வரவேற்பார்களேயானால், அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் பாமர மக்களுடனும், ஏழைத் தொழிலாளர், விவசாயிகளுடனும் கூடவே இருந்து பழகியவன். அவர்களோடு உண்டு குடித்து ஒன்றாக வாழ்ந்தவன். அவர்களை விடுத்து மூட்டைப்பூச்சிகள் போல் செயல்படும் அதிகார பீடத்திலுள்ளவர்களினதும், பணக்காரர்களினதும் கொள்கைகளை நியாயப்படுத்தி எழுதுவதில் எனக்கென்ன ஆத்ம திருப்தி வந்து விடப்போகிறது?
என்னிடம் பொது நோக்கு இருக்கிறது. சுதந்திரமாகவும், நீதியாகவும் நான் எழுதவேண்டுமென்பதுதான் எனது விருப்பமாகும். பேனா பிடிப்பதில் எனக்குள்ள கொள்கை அதுதான். அநேக வாசகர்கள் எனத்குத் தந்த உற்சாகத்தால் ‘கபளfகரம்’ எனும் இச் சிறுகதைத் தொகுதி நூலை என் இரண்டாவது சிறுகதை நூலாக அச்சிட்டு வெளிக்கொணர முடிந்திருக்கிறது. இவையெல்லாவற்றிற்குமாக நான் எழுதுகின்ற சிறுகதைகளைப் பிரசுரித்து என் இலக்கிய முயற்சிக்கு ஆதரவு நல்கிவரும் பத்திரிகை நிறுவனங்களுக்கும், அதன் ஆசிரியர் குழாமிற்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் செய்த உதவிகள் என்றென்றும் என் நினைவில் வைத்துப் போற்றுதற்குரியதாகும்.
அடுத்ததாக - முக்கியமாக நன்றி கூறவேண்டிய ஒரு எழுத்தாளரை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. சிறிதுநாள் பழகினாலும், நெருங்கிய நண்பர் போன்று என்னோடு அன்புடன் பழகி, தனது பண்பினால் என்னைக் கவர்ந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள். நான் கொடுத்த கதைகள் சிலவற்றைப் படித்து அவற்றிற்கு அணிந்துரை எழுதிக் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் யாருக்கும் தலை வணங்காதவரும், உள்ளதை உள்ளபடி கூறுபவரென பல இலக்கிய வாதிகளால் கெளரவிக்கப் படுபவருமான அவருக்கு என் இதயம் கனிந்த நன்றியைக் கூறுகிறேன்.
17

Page 11
என்னுரை இன்னும் வல்லிக்கண்ணன் அவர்களை அடுத்து ஒர் எழுத்தாள அன்பருக்கு நான் இங்கே நன்றி கூறக் கடமையுண்டு. டாக்டர் திரு த.கயிலாயர் (R.M.O) அவர்கள். வல்லிக்கண்ணன் அவர்களின் அணிந்துரையினைத் தொடர்ந்து சில கதைகளை இங்கே ஆழத்தொட்டு அதன் சாரத்தை ருசிபார்த்துக் கூறியிருக்கிறார். அவருக்கும் என் நன்றிகள்.
அடுத்து இந்நூல் வெளிவர சரீர உதவிகளை நல்கிய எழுத்தாள நண்பர் வல்வையூரானுக்கும், இக்கதைகளையெல்லாம் பேசும் உயிருள்ள சித்திரங்களாய் புத்தகத்துக்கு வரைந்து தந்த நண்பர் கௌதமனுக்கும் என் நன்றி என்றுமுரியது.
அன்புடன்
நீபி.அருளானந்தம்.
18

உள்ளே.
ஆறாத புண்கள்
பக்கம்
1.
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை 9
கற்பக தரு
இங்கே இப்படியும் ஒருத்தி
ஊரும் உறவும் மணிவாசனை இழப்பு
ரசனை லட்சியவாதி
சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள்
நத்தார் மழை ராசியான கடிதம் சோக முள் அன்பளிப்பு கபளிகரம் நாணயம் விழுதுகள் வசந்தம் வந்தது புது யுகம் காத்திருத்தல் பழி முடிச்சு அவர்களுக்குள்ளும்.
:
19
19
25
31
37
43 48
54
60
67 73
79
86
93
102
108
117
127
137
142
152

Page 12
சமர்ப்பணம் எண் ஆச்சி றோசமுத்துவுக்கும் அப்பு சுவாம்பிள்ளைக்கும்
20

வொன்புகழ் கொண்ட யாழ்நகருக்கு வந்து சேர்ந்திட்டதை நினைக்கும்
போதே இவன் மகிழ்ச்சிக்காளாகினான்.கொழும்பிலிருந்து பேருந்தில் இங்கு வந்து சேர நீண்ட ஒரு பொழுதைக்கழித்து கஷ்டப்பட்டிருந்தாலும் மணிக்கூண்டு வீதியைக்கண்டதுமே இவனுக்கு உள்ள உடலலுப்பெல்லாமே வெளியே காற்றாய்ப் பறந்துவிட்டது மாதிரித் தெரிந்தது.
மணிக்கூண்டு வீதியை பேருந்து தாண்டிச் செல்கையில் உள்ளே இருந்த இவன் உடனே அவ்விடம் நோக்கி நேரம் பார்த்தான் பன்னிரெண்டு மணியென்று பளிச் சென்று கடிகாரத்தில் தெரிகிறது. இப்போது புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுக் கிடக்கும் கோபுரம் பிரித்தானியரின் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறதாக இவன் எண்ணியதை விட அதற்கும் மேலாக நடந்த கொடூர யுத்தத்திலும் அது காப்பாற்றப்பட்டதாயுள்ளதே,என்பதுதான் அவனுக்கு மிகவும்

Page 13
ஆறாத புண்கள் ஆச்சரியத்தையளித்தது.
இதையும் அவன் எண்ணி முடிப்பதற்குள் யாழ் மத்திய பேருந்து நிலையத் தரிப்பிடத்துக்கு அந்த வாகனம் வந்தடைந்துவிட்டது. அது அங்கே நின்றதும் மணிக்கணக்கில் அதற்குள் அடைபட்டுக்கிடந்த பிரயாணிகள் கூழாங்கற்கள் சரிந்ததுபோல இறங்கிக் கொண்டார்கள். அப்படியே அவர்களில் ஒருவனாக இவனும் இறங்கிக் கொண்டான். அந்த இடம் இவனுக்கு இப்போது புதுப்பொலிவு பெற்றதைப் போலத்தான் பார்ப்பதற்குத் தெரிகிறது. அங்குமிங்கும் புதினம் பார்த்ததோடு அச்சுவேலிக்குப்போகவென்று பெயரெழுதிப் போட்டுக் கிடந்த வாகனத்தைப் பார்த்து ஏறிக்கொண்டான். அங்கே இருக்குமிடத்தில் இவனுக்கு தினப்பத்திரிகையை கொண்டுவந்து ஒருவன் விற்றான்.
66666LT “ஐந்து ரூபாய்” கொடுத்து வாங்கி மேலோட்டமாக தலைப்புச் செய்தியை மாத்திரம் படித்து பத்திரிகையை மடித்துக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டான். வெளியே ஒலிபெருக்கியில் சினிமாப்பாட்டு பாடிக் கொண்டிருந்தது. அது முடிந்ததும் ஏதேதோ கடை விளம்பரங்களை அடுத்தாற்போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சத்தம் இவனது காதையும் குடைந்தது.
அலைந்து அலைந்து அங்கம் உலைந்து போனாலும் சுறுசுறு எறும்புகளைப்போல் அங்கே நடந்து திரிந்து கொண்டிருப்பவர்களை இவன் பேருந்துக்குள் இருந்தவாறே பார்த்தான். அவர்களின் ஓர்மத்தை மனதுக்குள் பாராட்டிக் கொண்டு தன் இனத்தைப் பார்த்து இவன் பெருமை கொண்டவனாய் அங்கிருந்தான்.
இந்தநேரம் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு சாரதி உள்ளே ஏறி இருக்கையில் அமர்ந்தார். பிறகு இயந்திரத்தை இயக்கி பேருந்தை அவர் நகர வைத்தார். ஆரிய குளம் தாண்டி பருத்தித்துறை வீதி வழியாக இப்போது அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இவன் யன்னல் வழியாக வெளியே பலதையும் பார்க்கிறான்.
ஆனால் அவன் மனமோ குதிரைப்பந்தயம் செய்து வன்னியில் இருந்து வரும்போது பார்த்த காட்சிகளையே ஞாபகத்தில் கொண்டு வந்தது.
இந்த நாட்டுக்குள் வந்து உருப்படியாக ஒன்றையும் பார்த்து அவன்
O2

நீ.பி.அருளானந்தம்
திருப்தியடைந்தவனாயில்லை. ஷெல் விழுந்து சிதறியதால் சிதிலமடைந்த வீடுகளும், கட்டடங்களும் நிலப்பரப்புக்குக் கிட்டவாக வந்து வெடித்துச்சிதறும் எரிகுண்டுகளால் கருகிப்போய்க் கிடக்கும் பனைகளும் தென்னை மரங்களும் இப்போதும் இவன் மனதை விட்டகலாமலேயே இருந்து கொண்டிருந்தன. பச்சைப்புண் மாதிரித்தான் அதுவெல்லாம் உடலையும் வலித்தது அவனுக்கு.
நல்லூர் கடந்து இருபாலையும் வரக்கிட்டவாக தன்வீட்டு நினைவுகள் தான் முழுவதுமாக இவனுக்கு வருகிறது. வீடு எப்படி இருக்குமோ? என்று இந்த நேரம் ஏங்கத் தொடங்கினான்.
“வீட்டுக்கு கனக்கச் செலவழித்துத்தான் உருப்படுத்த வேணும். வல்லுசாய் பார்த்தால் ரெண்டு லட்சம் செலவு செய்ய வரும் போல கிடக்கு.'
என்று உறவினர் ஒருவர் தபால் அட்டையில் எழுதி இவன் கொழும்பில் இருந்தபோது போட்டிருந்தார்.
“நகை நட்டுக்களை வித்துத் துலைச் செண்டாலும் அதுகளை வடிவாய்ச் செய்து ஒப்பேற்றிப் போட்டு எங்கட சொந்த வீடு வழிய போய் இருப்பமப்பா. இங்கின கூலிக்கெண்டு வீடெடுத்திருந்து சீயெண்டு போச்சு இந்த இடங்களிலயிருந்து இவ்வளவு நாளும் நாங்கள் பட்டதுகளெல்லாம் காணும்.”
என்று இவண் மனைவியும் ஒருநாள் கணி களில் ஈரம்பனிக்கச்சொன்னாள்.
பிள்ளைகளும் “எங்கட வீட்ட போவமப்பா” என்று விளையாட்டு விளையாட்டாக இவனிடம் வந்து சொல்கிறார்கள். சின்னப்பிள்ளைகள் அவர்கள். ஒருவனுக்கு ஒன்பது மற்றவனுக்கு எட்டு என்றுதான் வயது இருக்கும். அங்கே இந்த அருமந்த செல்வங்கள் பிறந்து ஒன்று இரண்டு வயதாவதற்குள்ளேயே இடம் பெயர வேண்டியதாய் வந்து தொலைத்து விட்டது. கொழும்புக்கு வந்து ஏழு வருடங்கள் அவர்களுக்கு இப்போது முடிந்துவிட்டது. பிள்ளைகளுக்கென்றால் பிறந்த ஊரும் தெரியாது. வீடும் தெரியாது. என்றாலும் மண்வாசனை இருக்கிறதே. எங்கே இருந்தாலும் பரம்பரைக்கும் அது இருக்கும் போலும். ஏனென்றால் இவனும் மனைவியும் ஊரைப்பற்றியும் தங்கள் வீட்டைப்பற்றியும் கதைக்க அவர்களும் ஊதுபத்தி மணம் பிடித்தது மாதிரி அந்த மண்வாசனையைறிந்திருக்கிறார்கள் கொஞ்சநாட்களாக அதையே கேட்டுக் கதைத்துக்கொண்டு தகப்பனையும்
O3

Page 14
- ჯ3:ჯXXXXXXXX-XX ა:::::::::::::::::::::x.s“-”.:xx ஆறாத புனிகள் அங்கே இருக்க விடுகிறார்களில்லை. அதனாலேயே ஒருகால் போவோம். போய்ப் பார்ப்போம். வீட்டைத் திருத்துவோம், என்று திட சிந்தனையோடு இவன் இங்கே வர வெளிக்கிட்டான்.
நீர்வேலி கடந்து போயிற்றா?. என்று மனதில் எழுந்த கேள்வியோடு அவன் தன்னை அந்த நினைவில் இருந்து சுதாகரித்துக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இருபக்கத்துக் கண்ணாடி வழியாகவும் கண்ணோட்டினான். வலதுபக்கமாக உள்ள தோட்டத்துக் காணிகளில் புது வாழைமரங்கள் வளர்ந்து நன்றாய் இலைகள் கொண்டிருந்தன. கன்னி வாழைகளின் இலைகளெல்லாம் அவனை வரவேற்பது போல் காற்றுக்கு ஆடியும் அசைந்தன. இந்த இடத்தில் வெம்மை தணிந்து குளிர்ச்சியைப் பெற்றது அவன் உடல்.
இன்னும் அந்தப் பேருந்து வேகமாய் விரைகிறது. அவன் ஆசைகளும் அதிகமாயின. ஊரில் பலரையும் போய்ப்பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்பதோடு அங்கே எவ்வெவ் வகையான சாப்பாடுவகைகளுண்டோ அவ்வவ் வகையெல்லாம் ஒன்றும் விடாமல் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றிவன் நினைக்கிறான். அந்த நினைவே முடிவுபெறமுன் ஆவரங்கால் சிவன் கோவிலடிக்கும் பேருந்து வந்துவிட்டது. கோயிற் கோபுரத்தைப் பார்த்தவுடனே சகல உலக விசாரங்களும் அகன்று ஒருமித்த மனதுடன் தியான உணர்வு அவனுக்கு மேலெழுந்ததாகிவிட்டது. கண்களை மூடிக்கொண்டு பக்தியோடு “சிவ சிவ’ என்றான். மனமும் உடலும் சுகம் பெற்றதைப் போல் கொஞ்சநேரம் இருந்தது.
அதற்குள்ளாக “அச்சுவேலி இறங்குங்கோ’. என்று சொல்கிறார் நடத்துநர். அச்சுவேலியாம். என்று இவனுக்குள்ளே ஒருவர் சத்தம் போட்டு உசுப்பிவிட்டதைப் போல் இருந்தது. இமை மடல்களைத் திறந்து அங்கே கடைகளைத் தான் இவன் முதலில் பார்த்தான் இறங்கி அந்த இடத்திலிருந்து பிறகு அவன் நடக்கத் தொடங்கினான். வீடு எட்டவல்ல கிட்டத்தான் என்பதால் உடம்பும் வேர்க்காது தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
ஐயையோ என் வீடா இது? வீட்டருகில் நிற்கிற மாமரத்திலிருந்து ஒரு மாங்காயேனும் ஒட்டின் மேல் விழுந்து உடைந்தால் உடனே அதைப்புதிதாய் வாங்கிப் போட்டிடுவேனே ஆனால் இப்போ வீட்டிலிருக்கும் அரைவாசி ஒடுகளையே எங்கே போனதென்று காணேல்லயே. போகட்டும்
O4

:X ܪ ல நீ.பி.அருளானந்தப் அதுதான் இல்லையென்றால் வீட்டுக் கதவுகள் எங்கே போயிற்று? ஜன்னல் அதுகூட இல்லையே? ஒருபக்கச் சுவர் எப்படி உடைந்தது? என்ன நடந்தது? அந்தச்சுவருக்கு? இப்படி இடிந்து விழுந்து கிடக்கிறதே.? “இதில மாத்திரம் நிண்டு கொண்டு இப்பிடியெல்லாம் குழம்பிடாத இன்னும் இருக்கும் போய்ப்பார்’ என்கிறது இவன் மனம், இவன் சகலத்தையும் ஒவ்வொன்றாகப் போய்ப் பார்க்கிறான். இதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றுதானே நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பிரயாணம் பண்ணி ஒவ்வொரு வாகனமாக ஏறி இறங்கி நடந்து களைத்து கஷ்டப்பட்டு இவ்விடமாக அவன் வந்தான்.
இவன் கிணற்றைப் போய்ப் பார்க்கிறானாக்கும். இந்தக் கிணறு இருக்கிறதே அதிலே உள்ள தண்ணீர் முன்னம் குடிக்க இளநீர் மாதிரி இருக்கும். இப்போது பாசிப்படைகள் அடைந்து கிணறே இருண்டு கிடக்கிறது. கிணற்றடியில் துலாவுக் கென்று நட்ட பூவரசுகள் கிளைகளை நீட்டி குழைகளையும் கிணற்றுக்குள் குப்பை போட்டிருக்கிறது.
அதைப்பார்த்து விட்டு வீட்டுக்குள்ளே திரும்பவும் வருகிறான். ஏதாவது வீட்டுச் சாமான்கள் கிடைக்குமா? என்கிற நப்பாசையை மனதில் தேக்கிவைத்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடித்திரிகிறான். உமியைப் பிடைத்து அரிசியைத்தேடுவது மாதிரி அவன் செய்கை இருக்கிறது.
இதுவீடா காடா என்ற ஐமிச்சமும் அவனுக்கு வருகிறது. இதையெல்லாம் யாராவது ஒருவருடன் கதைத் துப் பகிர்ந்து கொண்டால்தான் தனது மனப்பாரம் குறையும் என்பதாக நினைத்துக் கொள்கிறான்.
உடனே வெளியில் வர வெளிக்கிடுகிறான். வரும்போது வாசலில் நின்ற தன் வீட்டு மாமரத்தையும் ஒரு கணம் அதிலே நின்றபடி பார்க்கிறான். கடைசிமுறை அது காய்த்ததை நினைவில் வரவழைத்து ஒருபொழுது நிறுத்தினான். இடம் பெயரும்போது அப்படியாக அந்த மரம் மூச்சாய்க் காய்த் திருந்தது. கெட்டுக்களை தரையில் இழுத்துக் கிடத்தி விடும்போலிருந்தது. இவன் இடம்பெயர்ந்த காலத்தில் இந்த மரம் காய்த்த கடைசிக் காய்ப்பு. ஒரு பழம் அதில நாங்கள் சாப்பிடவும் கிடைக்கேல்லயே என்றதாய் விசனப்பட்டுக்கொண்டு அடுத்த வீட்டுக்காரரைப் பார்க்கவென்று அவன் போகிறான்.
05

Page 15
ஆறாத புண்கள்
சிப்பர் தன்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. வீட்டுக்குள் இருந்து பல குரல்கள் வெளியேயும் கேட்கின்றன. கயிற்று வட்டத்தை மேலே தூக்கிவிட்டு படலையை இவன் திறக்கிறான். திறந்ததும் ஒரு பக்கம் கீழே சரிந்துபடலை விழுந்துவிட்டது. அதைத்தூக்கி நிமிர்த்தி மீண்டும் வளையத்தை மாட்டிவிட்டு அவன் உள்ளே போனான்.
மண்ணடைந்து கிடக்கும் மணிவெட்டியைத் தட்டிக்கொண்டு ஆட்டுக்கொட்டிலின் பக்கமாக நின்று சுப்பையர் இவனைப் பார்க்கிறார். அந்தத் தொழுவத்தின் ஓர் அந்தத்தில் பலாக்குழையும் மறு அந்தத்தில் வேப்பிலையும் கட்டப்பட்டிருக்கிறது அளவான இரண்டு குட்டி ஆடுகள் அவைகளிலே இருந்து குழைகளைத் தின்கின்றன. அதையெல்லாம் இவன் பார்க்கிறான்.
பழைய வாழ்க்கை மீண்டும் இப்படியே எல்லோருக்கும் துளிர் விட்டு வருமா? என்ற கேள்விக்குறியோடு அதிலே நின்றபடி “சுப்பையாண்ணை!” என்று அவரை அவன் கூப்பிட்டான். காந்தம் போல் அந்தக்குரலில் இழுபட்டுக்கொண்டு அவன் நின்ற இடத்துக்கு சுப்பையா வருகிறார். குடங்கிப் படுத்திருந்த நாய் எழும்பி அவனைப்பார்த்துக்குரைக்கிறது. “சீ.போ.”அவர் வெருட்ட நாயும் அவனை நன்றாகப் பார்க்கிறது. .
நல்ல உடைகளை அணிந்து அசத்தலாக இருந்த அவனைப் பார்த்து யோசித்துக்கொண்டு அவனுக்குக் கிட்டக்கிட்டவாய் அவர் வந்துவிட்டார். நெற்றியிலே கையை வைத்து கண்ணாடிக்கு நிழல் விழுத்திக்கொண்டு நீறுபூத்த கண்களால் அவனைப்பார்க்கிறார் அவர்.
“சுதாதம்பியே வாருமடி”
என்று இப்போது அழைக்கிறார்.
அவரது குரல் தழைந்து போய் இருக்கிறதையும் துயரபாரம் கண்களில் தெரிவதையும் இவன் அவதானிக்கிறான்.
எப்படி இருக்கிறியள்? எப்ப வீட்டுக்கு வந்தியள்? “மூண்டு மாதமாகுதடி ராசன்” இதை எவ்வளவோ அன்பாகச் சொல்கிறார். “வாரும் உள்ள வாரும்” என்று மீணடும் அவனை அவர் அழைக்கிறார் “ஓம்’,
O6

8,83 S. நீ.பி.அருளானந்தம் போட்டுக்கொண்டு இவனும் அவர் வீட்டு வாசலுக்குக் கிட்டவாய்ப் போக நடக்கிறான். அவரது பிள்ளைகளெல்லாம் அந்தக் காலத்து வேடர்கள் மாதிரி மண் விறாந்தையில் குந்திக்கொண்டிருக்கிறார்கள். “தம்பிக்குகோப்பி போட்டுக் கொண்டாருங்கோ” என்று சொல்லியபடி ஒரு பக்கீசுப் பெட்டியை அவர் கொண்டுவந்து வெளியில் வைக்கிறார்.
“ஒரு சாமானும் இந்த வீட்டில இருக்கேல்ல” என்று சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவர் சொல்கிறார். சுப்பையரின் கடைசி மகன் தேங்காய்ச் சில்லையும் வைத்து புழுக்கொடியல் தின்றுகொண்டிருக்கிறான். இவனைக் கண்டுவிட்டு நன்றாக இவனை அறிந்தவன் போல் தேங்காய்ப்பால் கடவாயிலிருந்து ஒழுகச் சிரிக்கிறான். இப்போது அந்தக் குடும்பம் முழுவதுமே அவனைச்சுற்றி வட்டம் போட்டு நிற்கின்றனர். ஒரு வாண்டுப் பயலும் அதற்குள்ளே நிற்கின்றான்.
“ஆர் இந்தப் பிள்ளை?” இவன் கேட்டவுடன் "பேரன்” என்கிறாள் சுப்பையாவின் மனைவி. சொல்லிவிட்டு அவள் மூக்கைச் சிந்துகிறாள். “அவளுக்கு ஏன் இப்படியெல்லாம் தலையில வந்து விழுந்துதோ தெரியேல்லப்பு” என்று சொல்வதைத் தொடர்ந்து பொல பொலவென்று மீண்டும் அவள் கண்ணிரைச் சிந்துகிறாள்.
அதைப் பார்க்கச் சகிக்காமல் உடன் இவன் எங்கேயோ பார்க்கின்றான். புழு அரித்தது மாதிரி பழைய நினைவுகள் அவனைக் குடைய ஆரம்பிக்கின்றன. சுப்பையாவின் மருமகன் கிளிநொச்சியில் இடம் பெயர்ந்து இருக்கும் போது ஷெல் விழுந்து இறந்ததை கொழும்பிலிருந்தவாறே முன்பு இவன் அறிந்திருந்தான்.
“இந்த முட்டுப்பட்ட குடும்பத்தில் அவளும் பிள்ளையும் இனி எப்படிச் சீவிக்கப் போகிறார்கள்? அவளுக்கொரு கலியாணமென்றாலும் இனிமேல ஆகுமா? இங்கு கன்னிப் பெண்களே மாப்பிள்ளை கிடைக்காது உரிய திருமண வயதைக் கடந்து நிற்கும்போது விதவைக்கு மறுவாழ்வு கிடைப்பது இலகுவில் எப்படிச் சாத்தியமாகும்.?”
என்று கவலையோடே நினைத்துக் கொண்டு அவன் இருக்க. அவள் தான் கோப்பியைக் கொண்டுவந்து இவனுக்குக் கொடுக்கும் படி தாயிடம் கொடுத்தாளாக்கும்.
07

Page 16
ஆறாத புண்கள் தாய்தான் இவனுக்கு முன்னால் நின்று கோப்பியை நீட்டுகிறார், மரியாதையாக இவனும் அதைக் கையில் வாங்கி கோப்பித் தண்ணியை வாயில் ஊற்றினான். கோப்பி நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அவனால் அதை ஒழுங்காகத்தான் குடிக்க முடியவில்லை. மனம் மிகவும் அவனுக்கு வேதனைப்பட்டது.
"நான் போயிற்று நாளைக்கு வாறனம்மா". என்று அவன் சுப்பையாவின் மனைவியைப் பார்த்துச் சொன்னான். அவள் கையைக் கட்டிக்கொண்டு நின்றபடி “சரியப்பு” என்கிறாள்.
கொஞ்சம் தொலைவில் நின்றுகொண்டு மகளும் இவனைப் பார்த்தபடி சோகமாய் நின்று கொண்டிருக்கிறாள். அவளுக்கும் இவன் விடை பெற்றுக்கொள்வது போல் தலையை ஆட்டுகிறான். அவளும் அதற்கொத்ததாய் வெறுமைப் பட்ட ஒரு சிரிப்புச் சிரிக்கிறாள்.
இவன் கடைசியாக சுப்பையாவின் கையை பற்றித் தடவி விட்டு விடைபெறுகிறான்
அவன் போகவென்று வெளிக்கிடும் போது. “இங்க தங்கலாம் தானே தம்பி". என்கிறார் சுப்பையா. "உங்களுக்துெக்குச் சிரமம். நான் நாளைக்கு வாறன்’ என்கிறான் இவன்.
இப்படிச் சொல்லிவிட்டு வெளியே போய் அந்த வீட்டு ஒழுங்கை வழியாக இவன் நடந்துகொண்டிருக்கிறான். இனி எங்கே போவது என்று ஒன்றுமாக அவனுக்குத் தெரியவில்லை. ஒரு விட்டேற்றியான மனோநிலையில் அவ் வீதி வழியாக அவன் நடந்து கொண்டிருக்கிறான்.
தமிழர்களின் சமூக அந்த எப்து, செல்வம், வள ஆதாரங்களை கெடுத்தவர்களை நினைத்து இவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது. அவர்களையெல்லாம் நினைத்து மனதுக்குள் சபித்தபடி கால் போன போக்கில் அவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். மேலே அத்துவானம் போல் அவன் மனமும் ஒன்றுமே இல்லாத வெறுமை நிலைக்கும் போய்விட்டது. எங்கோ ஒரு சூனியப் பிரதேசத்தில் புகுந்து சிக்குண்டவனைப் போல் இப்போது அவன் தன்நிலை மாறியிருந்தான்.
ஒலை-9 கொழும்பு தமிழ்ச் சங்க மாதாந்த மடல் (ஒக் டோபர்-2002)
().

நீ.பி.அருளானந்தம்
ன்ெ அக்கா ஒரு பயங்கொள்ளி. அவளுக்கு அக்ன்ற பெரிய விழிகள்
சிலவேளை எதையாவது நினைத்து பயத்தில் முழுசிக் கொண்டிருப்பாள் அந்த நிலையில் அவளைப் பார்க்க எனக்கும் பரிதாபமாக இருக்கும். அவளுக்கு ஏன் இந்தப் பயந்த சுபாவம்?
"அக்கா பயப்பட்டுச் சாகாதேயும் கம்மா றிஸ்ாக்ஸாக இரும்" இப்படி எவ்வளவு விதமாய் நான் எடுத்துச் சொன்னாலும் அவள் கேட்கவே கேட்க
(յց

Page 17
A எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை TT6,
“எடியே இப்படியிருக்குமோடி! அப்பிடியாய்ப் போய் விடுமோடி’ இதுமாதிரி எந்த வித சம்பந்தமும் இல்லாத கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்து என்னையும் நிம்மதியாக இருக்கவிடாமல் குடைந்து கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் விசர் பிடியாத குறைதான் எனக்கு.
அவள் பெடியன்கள் ஆரோடையும் முகம் கொடுத்துக் கதைத்ததாய் நான் எப்பவுமே காணேல்லை.
ஆனாலும் அவள் தங்கச்சியாய் இருக்கிற எனக்கு எத்தனை தோழர்மார் இருக்கினம். அவவுக்கு பெடியன்களைக் கண்டாலே கிடு நடுக்கம் என்கிறா. அக்கா சின்ன வயசாய் இருக்கையில் இருந்து இப்படியே தானாம். அந்தநேரம் அப்பா கத்தி மாதிரி நீட்டமாய் மீசை வைத்திருந்தாராம்.
அம்மா இங்க வாம்மா ஆஞ்சலா என்று அப்பா கூப்பிட்டுக் கொண்டு கிட்டப்போனால் அவள் பெரிசாய் கத்தி அழுவாளாம். அந்த மீசையை பார்த்து மட்டும் அவ்வளவு கிடு நடுக்கமாம்.
மற்ற எல்லா விஷயத்திலையும் அக்காவை நான் பெருமையாகத்தான் சொல்லவேணும். கனக்கவும் நல்ல குணங்கள் என்னைவிட அவளிட்டத்தான் இருக்கு இரக்கப்பட்ட நல்ல ஜென்மம் அவள்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பெட்டை ஒருத்தி இளம்பிள்ளைவாத நோய் கண்டு கால் ஊனமடைந்திருந்தாள். அவளுக்கு ரஞ்சனி என்று பெயர். அவளுக்கு எங்கேயும் மெது மெதுவாய்த்தான் நடந்து போக ஏலும். அவள் அக்காவுடைய வயதை ஒத்தவள். பள்ளிக்கூடத்திலும் அக்காவோடு ஒரே வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தாள்.
ரஞ்சனி பள்ளிக்கூடம் முடிந்து வரேக்க அக்கா தான் பொறுமையாய் இருந்து அவளோடு கதைத்துக் கொண்டு வருவாள். முன்னம் ஒருநாள் நாங்கள் இருக்கிற இடத்துப் பக்கமாகப் பார்த்து அறம் புறமாய் ஷெல்லடி நடந்து கொண்டிருக்க அக்கா தான் அவளை பத்திரமாக வீட்டை கூட்டிக் கொண்டிந்திருக்கிறா.
இதனாலே தான் எல்லாரிலும் பார்க்க நல்ல குணமான பிள்ளை என்கிறதாய் ஊருக்குள்ளேயும் அவளுக்குப் பெயர் வந்து விட்டது. அந்தக் காரணத்தாலேயோ என்னவோ தெரியாது. அக்கா படித்து முடிந்த கையோட விவாக சம்பந்தம் பேசி பிறத்தி இடங்களில் இருந்தெல்லாம் அவவை பெண் பார்க்கவென்று வந்திருந்தினம். 10

நீ.பி.அருளானந்தம் கடைசியாய் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடித்தாற்போல ஒரு இடம் வந்து சேர அக்காவும் ஒம்பட்டு அந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டாள்.
அந்தக் கல்யாணம் நடந்து முடிந்தாற் பிறகு மாப்பிள்ளையுடன் அக்காவும் வெளிநாட்டிற்கு போய் விடவேண்டி வந்ததால் அதற்குப் பிற்பாடுதான் என்னளவில் பெரியதாய் ஒரு மாற்றமும் வந்தது.
நம்பிக்கைத் துரோகத்தை நுாற்றுக்கு நுாறு வீதம் பெண்களுக்குச் செய்து விடுபவர்கள் ஆண்கள்தான். இதை நான் ஆருக்கு முன்னேயும் சொல்லத் தயார்.
இதற்கெல்லாமாக என்ரை அக்காவின் குடும்ப வாழ்க்கையே சாட்சியாக இருந்தது.
அக்காவை ஏமாற்றியது அவளின்ரை புருஷன் மட்டுமில்லை அவனது குடும்ப அங்கத்தவர்கள் எல்லாருமே சேர்ந்து தான் பொறி வைச்சினம். கபடநாடகம், பொய் என்கிற எல்லாவற்றையும் நன்றாகக் கையாண்டு எங்கள் எல்லாரையுமே மாப்பிள்ளை வீட்டார்கள் ஏமாற்றிவிட்டினம்.
அக்கா அவளது கணவனால் வஞ்சிக்கப்பட்டு பல மாதங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு தனியே கண்ணிர் வடித்திருக்கிறாள். அப்படி இருந்து கொண்டு எத்தனை காலம் இதை அவள் எங்களுக்கு மூடிமறைப்பாள்? அவள் நிலை, எங்களுக்கு இங்கே பிறகு தெட்டத் தெளிவாய்த் தெரிந்து விட்டது.
“இங்கே வாம்மா எங்களோட வந்திரு” என்று அப்பாவும் அம்மாவும் இங்கே வரும்படி கூப்பிட்டும் அவள் வரவில்லை.
"இப்பவெல்லாம் நான் நல்லாய் உலகத்தைப் படிச்சிட்டன். எனக்கென்று ஒரு தொழிலாய்ப் பார்த்து இங்கயிருந்தே நான் சீவிப்பன்." இப்படி மன உறுதியோடு எங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாள்.
அதைப் படித்துவிட்டு எனக்கும் மகிழ்ச்சிதான் நொய்தான பூ மாதிரியானவள் திடமுள்ள இரும்புப் பெண்ணாக மாறி விட்டாள். மனஉறுதி அவளுக்கு வந்து விட்டது என்பதால் இப்போதுதான் அவளை எனக்கு முன்னதிலும் விட அதிகம் பிடித்திருக்கிறது.
அவளுடைய மென் மைக்குப் பிணி னால் இரும் பின் உரம் மறைந்திருப்பதை நான் கண்டு கொண்டேன். அவள் பயத்தைத் தொலைத்து விட்டாள். அநீதியை நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் துணிந்து விட்டாளி.
11

Page 18
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை என்னைப்போல் அவளும் மனத்திடத்தினளாக ஆகிவிட்டாள் என்பதை நினைக்க என் உள்ளத்தில் மிகையாக உவகை உண்டாகிறது.
அக்காவுடைய இல்லற வாழ்க்கை இப்படியாகக் கருகிவிட்டது. அதோடு எல்லாமே முடிவடைந்துவிடவில்லை. அப்பாவும் அம்மாவும் அதையே நினைத்துக் கொண்டிராமல் எனக்கும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். என்னிடம் அழகு இருக்கிறது படிப்பும் இருக்கிறது. அத்துடன் எதையும் செய்யக்கூடிய ஆற்றலும் இருக்கிறது பிறகு. சீதனம் என்ன சீதனம்? இதை நினைக்கவே எனக்கு இந்த ஆண்வர்க்கம் மீது ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.
இந்த ஆண்கள் சீதனம் கேட்பது போல நாங்களும் இனி சீதனம் கேட்கத் தொடங்க வேண்டும். ஆண்கள் என்றால் அவர்களுக்கு பிரமாதமாக ஒரு கொம்பு முளைத்திருக்கிறதா?
பார்க்கப்போனால் ஒரு பெண் கல்யாணமாகி புகுந்த வீட்டிலே இருபத்திநான்கு மணித்தியாலங்களில் முக்கால்வாசி நேரம் இயந்திரம் போல் வேலை செய்து கொண்டு கஷ்டப்படுகிறாள். வெளியிலும் போய் உத்தியோகம் பார்க்கிறாள். இந்தப் படிப்பும் எங்களிடம் தான் அவர்களைவிட இப்பொழுது கூடுதலாக இருக்கிறது.
இப்படி எல்லாவற்றையும் நாங்களே பெரும் சொத்தாக வைத்திருக்க எங்களிடம் அவர்கள் சீதனம் கேட்பானேன்? முறைப்படி கட்டாயமாக அவர்கள் தான் எங்களுக்கு சீதனம் தரவேண்டும். சில சமூகத்தவரிடம் அப்படியும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அது எமக்கும் வேண்டும்.
எனக்கு இப்படியெல்லாம் புரட்சிகரமான சிந்தனை ஒடிற்று.
அன்று காலையில் எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது. அதிலே வந்து இறங்கியவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கவேண்டும்.
அவர்கள் எனது பெயரை திடுமென கூப்பிட்டுக் கொண்டு வீட்டு வாசலண்டையில் வந்து நின்றார்கள்.
நான் திகைத்துப் போனாலும் வாங்கோ’ என்று வரவேற்றேன். அவர்கள் பழகிய ஆட்கள் போல.
“எப்படி வசந்தி அம்மா அப்பா வீட்டில இருக்கினமே?” என்று
12

நீ.பி.அருளானந்தம் கேட்டார்கள்.
"இருக்கினம் நீங்க வந்து இருங்கோ வருவினம்’ நான் யோசித்துக் கொண்டே இதைச் சொன்னேன்.
அவர்களும் வந்து இருந்த உடனே அப்பாவும் வந்து விட்டார். “வணக்கம்” என்றார்கள். “வணக்கம் நீங்கள் இருங்கோ” என்று அப்பா சொன்னார். "வசந்தியை நாங்க கன தடவை பார்த்திருக்கிறோமுங்கோ கல்யாண வீட்டில, கோயிலிலையென்று’ சிரித்தபடி அந்த அன்ரி சொன்னா.
அவவுடைய பேச்சுக்கு ‘ஓ’ என்கிறதாய் மட்டும் வியப்புக்குறியை வைத்துவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார் அப்பா,
"எங்கட குடும்பத்துக்குள்ள வசந்தியை எடுத்துப் போடுவம் என்று பார்க்கிறம்” மெல்ல தாங்கள் சொல்லவந்த விஷயத்தை நாசூக்காக அந்த அங்கிள் வெளியிடுவது மாதிரி இருந்தது.
இதை அவர்கள் பேசும் போது நான் எங்கேயாவது போய் ஒளிந்து கொள்ள வேணுமா? இல்லை நான் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அம்மா என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறா. அந்தப் பார்வையே சரியில்லை. ஆனாலும் நான் கிறுங்கவில்லை. அவவையும் அலட்சியமாகப் பார்க்கிறேன். அப்பாவுக்குத் தெரியும் நான் ஒரு துணிஞ்ச பெட்டையென்று. அக்காவின் விஷயத்துக்குப் பிறகு நான் இப்படியாகவெல்லாம் இருக்க வேண்டும் என்பதாய்த்தான் அவர் விருப்பம். என் விருப்பமும் அதுதானே? அங்கே சற்று நேரம் நிலவிய மெளனத்தைக் கலைத்து விட்டது போல் அந்த அங்கிள் பேசுகிறார்.
"பெடியன் என்ர கூடப்பிறந்த அக்காவுடைய மகன் அடுத்த மாசம் முடியவும் தாய் தேப்பனோட சிறிலங்காவுக்கு வரப்போறார். இதுக்கு முன்னவும் நான் உங்களுக்கு ஒண்டைச் சொல்லி விடவேணும். பாருங்கோ. சீதனத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் யோசியாதேயுங்கோ. அதெல்லாம் அவயளுக்கு வேணாமாம். பெடியனுக்கு எல்லாத்திலையும் தோதான பொம்பிளையாத் தான் பார்க்கினம். அதுதான் உங்களிட்டவென்று வந்திருக்கிறம்.” அத்துடன் நிறுத்தினார்.
"அவர் என்ன படிச்சிருக்கிறார், என்ன வேலை செய்யிறார்?” அப்பாவுடைய விசாரிப்பு.
"தம்பி எஞ்ஜினியர்” அவருடையபதில்
13

Page 19
எழுதுகிறாள் ஒரு புதுக் கவிதை "நாங்கள் முதல் வேலையா எல்லாம் நல்லா விசாரிச்சு அறிஞ்சு பார்க்க வேணும்.” நீங்கள் இப்போதைக்கு போட்டோ, விலாசத்தைத் தந்தியளெண்டால்.” அப்பா குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டார்.
“ரெலிபோன் நம்பரையும் வாங்குங்களன் அப்பா” அப்பாவுக்கு நான் ஞாபகமுட்ட
"இருக்கு தரலாம்” என்று அப்பாவைப் பார்த்துச் சொல்லி விட்டு எல்லாவற்றையும் சேர்த்து கைகளில் வைத்து அவரிடம் கொடுக்க நீட்டினார். முழுவதையுமே வாங்கி அப்பா நேராக என்னிடம் தந்தார். அடுத்தாற் போல் என்னுடைய போட்டோ சகலதையும் கொண்டு வந்து அம்மா அவர்களிடம் கொடுத்தார்.அவைகளை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அந்த நிமிஷம் முதல் இந்தக் கல்யாண விஷயத்தில் எல்லாவற்றையும் ஆய்ந்து அறியும் பெரியதொரு வேலை எங்களுடையதாகி விட்டது.
கொஞ்ச நேரத்தில் அம்மா கொடுத்த குளிர்பானத்தோடு அவர்கள் வெளிக்கிட்டு விட்டார்கள. காரில் போய் ஏறுவதற்கு முன் அந்த அன்ரி என்னைப் பார்த்து வாஞ்சையுடன் "நாங்கள் போயிற்று வாறம் பிள்ளை” என்றார்.
நான் தலையை ஆட்டிக் கொண்டு சிரித்தேன். கார் போகமட்டும் கொஞ்ச நேரம் கையசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தேன் அவர்கள் போய் விட்டார்கள்.
நான் பெடியனின் புகைப்படத்தைப் பார்த்தேன். சுமார் தான். பரவாயில்லை என்கிறதாய் ஒரு நினைப்பு பிறகு அம்மாவும் அப்பாவும் புகைப்படத்தைப் பார்க்கவேண்டுமே . கொடுத்தேன். அவர்களும் புகைப்படத்தை கிட்டவும் துாரவுமாக பிடித்துப் பார்க்கிறார்கள் சரிதான்’ அவர்கள் முகங்களிலும் திருப்தி இருப்பதை அறிந்து விட்டேன்
அடுத்ததாக ஜெர்மனியிலுள்ள மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்துதான் முதன் முதலில் எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது என் அப்பா அவர் அப்பாவோடு பேசுகிறார். இது விஷயத்தில் என்ன தான் கதைப்பார்கள்? சாதி, சனம், ஊர் பெயர் என்று அவர்களுக்கு முதலில் வேண்டியது அதுதானே. எனக்கோ அவைகளில் அதிக அக்கறையில்லை. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். இவைகளைத்தான் இவர்கள் முதன்மையாக வைத்துப் பேசி கல்யாணம் முடித்து வைத்தார்கள்.
14

நீ.பி.அருளானந்தம் ஒழுக்கம் கெட்ட அந்த உயர் சாதிக்காரன் அவளை வஞ்சித்து சாகடித்தது போல் செய்து விட்டானே?
பெடியனின் தகப்பனிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு கடைசியாக அப்பா சொன்னார்.
"என்ர மகளும் உங்கட மகனோட இப்ப கதைக்க விரும்புகிறா.” "அப்பிடியே! அது எல்லாவிதத்திலும் நல்லமி. எங்களுக்கு இப்பிடியான முறை நல்ல விருப்பம். ஆனாலும் பாருங்கோ எங்கட ஊர்வழிய இருக்கிறவயள் பிழையா நினைச்சுப் போடுவினமெண்டுதான் இதுகளை முதலில் நாங்களாகக் கதைக்கத்துவங்கேல்ல. இதுதான் இண்டைய காலத்துக்குத் தகுந்த வழிமுறையென்ன.”
தொலைபேசியில் அவர் அப்படிச் சொன்னது எல்லாம் அப்பாவிற்குப் பக்கத்தில் நின்ற எனக்கு இரைச்சல் சத்தத்தோடு கேட்டது. அதற்குப்பிறகு என்கையில் தொலைபேசி ரீசிவரைத் தந்துவிட்டு அறைக்கு வெளியா அப்பாவும் போய்விட்டார்.
இப்போது அந்தப் பெடியன் தான் கதைக்கிறார். பெயர் தீபனாம்! அவர் என்னுடன் நன்றாக கதையை வளர்க்கிறார். நான் அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவர் எப்படியான குணநலம் உள்ளவர் என்றும் யோசிக்கிறேன். அவற்றைக் கண்டு பிடிக்கவும் முயற்சித்துப் பார்க்கின்றேன்.
இப்படியே முன்று கிழமைகள் சென்று விட்டன அதற்குள்ளே தொடர்ந்து தொலைபேசியில் பல அழைப்புக்கள் வந்து கதைத்துக் கதைத்து நான் களைத்து விட்டேன். என் மனமும் நிலையான ஒரு கணிப்பை எடுக்க முடியாமல் தடுமாறுகிறது.
"யேர்மனுக்கு வந்தால் இங்கே முதல் வேலை இங்கத்தைய பாஷை படிக்கவேணும்’ என்கிறார் அவர்
"பாஷை படிக்கிறதை பூரீ லங்காவிலேயே ஆரம்பியும் முன் ரெண்டொரு சொற்கள் படிச்சாலும் அதுவும் உமக்கு இங்க வந்தால் உதவியாக இருக்கும்.”
அப்படி அவர் சொன்னது போல் யேர்மன் பாஷையில் சில உரையாடல்களை இங்கேயே ஒரு ரியூட்டரியில் போய்ப் படித்து மனப்பாடம் செய்யத் தொடங்கினேன்
இடையே என் சிநேகிதர்களிடத்தும் தாரளமாக என் கல்யாண
*15

Page 20
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை விஷயத்தை பேசிப் பகிர்ந்து கொண்டு அவர்கள் ஆலோசனைகளையும் கேட்டேன்.
எல்லாவற்றையும் முடிவெடுத்து ஆம் அல்லது இல்லை என்ற எனது கடைசி முடிவை சொல்ல வேண்டிய சந்தர்ப்பம். இந்த நேரம்.
"என்னதான் உன் முடிவு?” என்று அப்பாவும் கேட்டார். "அப்பா எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்ல பெடியனை எனக்குப் பிடிக்கேல்லை' வெள்ளரிப்பழம் கொடிக் காம்பில் இருந்து விலகிக் கொள்வது போல் கழன்று கொண்டேன்.
“ஏன்? ஏன்? ஏன்?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகளை அம்மா அடுக்கிக் கொண்டே போனா.
ஆனால் அப்பா அமைதியாகத்தான் கேட்டுக்கொண்டு நின்றார். ஏனக்குப் பிடிக்கேல்லை என்று சொல்லுமளவிற்கு எதாவதொரு முக்கிய காரணம் இருக்கும். என்ன? ஏது? ஏன்று துருவித்துருவிக் கேட்பது நாகரிகமில்லை என்று அப்பா நினைத்திருப்பார். அப்பாவின் குணம் எனக்குத்தெரியும் என்பதால் நம்பிக்கையோடு அவர் முகத்தை நான் பார்த்தேன் “அவையஞம் வெளிநாட்டில இருந்து வருகிறதுக்குக் கிட்டவாகிது. ம் . அதுக்குள்ளால ரெலிபோனில அந்த அங்கிள் அன்ரி ஆக்களுக்கு உன்ரை முடிவைச் சொல்லிப்போடுவம் பிரச்சனையில்லை" அப்பா இப்படிச் சொன்னார்.
ஒரு முணுமுணுப்பும் அப்பாவிடமிருந்து வெளிவரவில்லை. அம்மா அப்படி இருந்தாலும் அப்பா இப்படியாய்த் தான் இருக்கவேணும் என்பதாய் நினைத்து என் மனம் குளிர்ச்சியடைந்தது.
தொலைபேசியில் எண்முடிவை அப்பா சொன்னதும் அடுத்த நாளே அந்த அங்கிள் அன்ரி இருவரும் எங்கள் வீட்டுக்கு விழுந்தடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
"இவ்வளவு நாட்கழிச்சு நாக்குப்புரண்டு பேசறியளப்பா சீச்சீ. என்ன மனுஷர் நீங்கள்? இந்த முடிவை இப்ப நீங்கள் சொல்லுறியளே. அவங்களுக்கு இதை நாங்கள் சொல்லப் போனால் எவ்வளவு மனத்தாக்கமாயிருக்கும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோவன்.” ஆத்திரத்துடன் அங்கிள் சொல்ல இதை நான் உள்ளறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
என்ன சொல்லுகிறார் இவர். மனத் தாக்கமாமோ. எனக்கு
6

நீ.பி.அருளானந்தம் இஷ்டமில்லை என்று சொல்லுறதிலை என்ன தாக்கம் வரும் "நான் அவரைக் காதலிக்கிறேன் என்று சொன்னேனா..? இல்லையே..! உங்களையே நான் கலியாணம் பண்ணிக் கொள்ளுறன் என்கிறதாய் வாக்குக் குடுத்தேனா..? இல்லையே..! பின்ன எதைக்கொண்டு எங்களை அவர் அப்படிக் குறை கூறுகிறார்?
என் ரை அக்காவினுடைய விஷயத்திலை மணி விழுத்திப் போட்டுப்போன மாப்பிள்ளை குடும்பத்தினர் ஆராவது வந்து இப்படி இடியேறு நடந்து போச்சுதெண்டு கவலப்பட்டவயளே இல்லையே.
அக்காவை கலியாணம் முடிச்சாப்பிறகு அவளை ஏமாத்தி நடு வழிய விட்டுட்டும் போனவனே ஒரு கவலையுமில்லாம சீவிக்கிறான். அவன் ஆண்பிள்ளை யெண்டதால அவன்ர பிழையைத் தட்டிக்கேட்க ஆருக்கும் துணிவு வரேல்ல. இங்க நான் பொம்புளை எண்டிறதால நியாயமா என்ரை விருப்பப்படி நடக்குறத்துக்கும் சுதந்திரமில்லையா..? ஆண் ஆதிக்கம் இங்கயும் என்னட்டை ஆட்சி செலுத்தப் பாக்குதோ கதைச்சுப்போட்டன் எண்டுறதுக்காக கலியாணம் முடிக்க வேணுமாமோ?!
மனதுக்குள் கறுவிக் கொண்டு ஆத்திரத்துடன் நான் இருக்கையில் “இங்க பாருங்கோ பெண் பிள்ளையெண் டாலும் அவளுக்கும் சுதந்திரமிருக்கு, உரிமையிருக்கு அவள் ஆருக்கும் அடிமையில்லை கண்டியளோ..! என்ர பிள்ளைக்கு இந்தக் கல்யாணத்திலை இப்ப துண்டாய் விருப்பமில்லை. உதுக்கெல்லாம் நாங்களொண்டும் செய்யேலாது.”
முறையான பதில் அவர்களுக்கு அப்பா சொன்னார். “முன்னமே நேரத்துக்கு இதுகளை நீங்க இழுத்தடிச்சுக் கொண்டிராம சொல்லியிருக்கலாம் தானே! நாங்களும் வேற இடங்களில பார்த்திருப்பம். எண்டாலும் இது உங்களுக்கு நல்ல இடமி, எங்க தேடினாலும் இந்த மாதிரி ஒரு இடம் கடைசிவரைக்கும் உங்களுக்குக் கிடைக்காது.”
பிறகும் அவர் அப்பாவை தனது பழைய கதைக்கு இழுத்தார். "இதெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாங்கள் தான் அதுகளைத் தீர்மானிக்க வேணும்.”
அப்பாவின் பதில் நல்ல அழுத்தத்தோடு கேட்கிறது. அதைக் கேட்கும்பொழுது மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு
“இது பெடியனுக்கு பெரிய வெட்காளமாகவும. ஏமாற்றமாகவும் வந்திடப்போகுது. இந்தாங்கோ உங்களுடைய மகளின்ர ப்ோட்டோவைப்
7

Page 21
எழுதுகிறாள் ஒரு புதுக் கவிதை பிடியுங்கோ எங்கடை பெடியன்ர போட்டோவைத் தாங்கோ."
அவர் உற்சாகம் குன்றியிருக்கிறார் என்று குரலைக்கொண்டு எனக்குப்புரிகிறது.
சிறிது நேரத்தில் காரின் இயந்திரச் சத்தம் எனது காதுகளில் இரைந்ததாய்க் கேட்டு, மெல்ல மெல்லக் குறைந்து பின்பு முற்றாய் நிசப்தமடைகிறது.
என் வீட்டில் சில நாட்களாக நடந்து முடிந்த சம்பவங்களை நினைக்க எனக்கு ஆக்ரோஷம் வந்துவிட்டது.
"கல்யாணமென்பது கடைச்சரக்கா? நினைத்தவுடனே நாம் போய் கடையில் வாங்குவதற்கு இன்னமும் இந்த சமூகம் திருந்தவில்லையே. பெண்ணை போகப்பொருளாகவும். இயந்திரமாகவும் அடிமையாகவும் ஆண்வர்க்கம் நினைத்து தங்கள் அடக்கு முறைக் கலாச்சாரத்தை இந்தப் புதுயுகம் பிறந்து விட்டும் இன்னமும் நீடிக்கப் பார்க்கிறதே."
அந்த நாளில் அவர்களின் அதிகார வட்டத்துக்குள் பெண்கள் அடங்கி ஒடுங்கி இருந்தனர். அந்தக்காலம் இன்று மலையேறிவிட்டது. இப்போது அந்த விலங்கை உடைத்து ஆண்களைப்போல் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்.
இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமையில்லை என்கிறதான சித்தாந்தம் வளர்ந்து வரும்போது பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக வாழ்வதென்பது முட்டாள் தனமல்லவா?
நான் எப்போதுமே நினைவில் கொண்டிருக்கும் இவைகளை இப்போதும் ஒருமுறை திருப்பவும் நினைத்தேன். இனியாவது எனது கல்யாண விஷயத்தில் வருகிறவர்கள் முன்னே கடைவிரிப்பது, கடைகட்டுவதுமான கேவலத்தை முற்றாக நிறுத்தி விடவேண்டும் என்றே எனக்குத் தோன்றியது.
இனிமேல்பட்டு யார் தலையீடுமின்றி எனக்குப்பிடித்த ஒருவனை நானே தேடிக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தேன். நான் கூண்டுப்பறவையல்ல சுதந்திரப்பறவை. என் வாழ்வில் எதிலும் என்விருப்பப்படி நடப்பதற்கு ஆண்களைப் போன்று எனக்கும் சுதந்திரம் வேண்டும் என்பதே எனது கொள்கை, இந்தக் கொள்கைப் பிடிப்பிலிருந்து இம்மியளவும் என் வாழ்க்கையில் நான் பிறழப் போவதில்லை
வீரகேசரி (24.11.2002)
8

நீ.பி.அருளானந்தம்
兖下
ബg முற்றத்தில் வெயில் விழ வழியில்லை. இரண்டொரு
தென்னைகள் நின்று ஒலைகளாலே தடுக்கின்றன. சாம்பல் நிறக்குருவி தென்னம் மட்டையிலே இருந்து தும்பைக்கொத்தி எடுத்து அலகுக்குள்ளே அடைத்துக் கொண்டிருந்தது.
கொழும்பிலும் எத்தனை ஜாதிப்பறவைகள் வண்ணத்துப்பூச்சிகள். தும்பிகள், உலாவருகின்றன. அழகிய கடற்கரை அலங்காரக் கடைகள் இங்கு வசதி உள்ளவர்க்கே வாழ்வு மற்றவர்க்கோ நோவு அப்படியாக அவர் நினைத்து முடிப்பதற்குள்.
அதோ! “குருவி பறந்துவிட்டது. குருவிக்கூடு கட்டுறதாக்கும்." போனதிசையைப் பார்த்தபடி அவர் மனதிற்குள் கனக்குப்போட்டார்.
மேலும் நடந்ததாய் முற்றத்தைக் கடந்து தகர கேற்றைத் திறந்ததும் ஒழுங்கையில் நேற்றையவர்களே இன்றைக்கும் வேலை செய்பவர்களாகத் தெரிகின்றனர். அவரைப் பார்த்துக்கொண்டு ஒருவன் வெள்ளைக் காகிதத்தைக்
9

Page 22
V, கற்பகதரு கையில் வைத்துச் சுருட்டுகிறான். பிறகு நுனியிலும் அடியிலும் அதைக்கடித்துத் துப்பி உதட்டில் பொருத்தி நெருப்பேற்றுகிறான். புகை எதிர்க்காற்றுடன் இவர் பக்கமாய் வீச “ம்.கூம்” இயல்பாகவே சுவாசம் வெளித்தள்ளுகிறது.
நேற்றைய வேலைதான். தண்ணிர்க்குழாய் பொருத்துவதற்கு கிடங்கு வெட்டுகிறார்கள். ஒழுங்கையில் அது வீட்டின் நேர்ப்பக்கம் வருகிறது. இவரும் ஒருகால்போய் கிடங்கைப் பார்த்தார். புகைத்தவனும் பிறகு வேலை செய்கிறான். நாலுதரம் நிலத்தைக் கொத்தினான். அதற்குள் களைத்துப்போக கல்லிலே போய் இருந்துகொண்டு மீண்டும் புகை.என்னஆகுமோ உடம்புஆனால் கூட நின்றவர்கள் வேலையைத் தொடருகின்றனர்.
இவற்றைப் பார்த்துத் திரும்பி நடக்க நேற்றைய நேரத்துக்கு வந்து இன்றைக்கும் வானில் விமானங்கள் வீரசாகசம் புரிகின்றன. அவை கோலம் போட்டுக்கொண்டே ஊரைச் சுற்றின. மூன்று விமானங்களும் எங்கு பறக்கிறது? ஒன்றுமாய்த் தெரியவில்லை. ஓயாத இரைச்சல் செவிப்பறையை டமாராக்கிவிடுமோ..?
உறுமலும் இரைச்சலும் கிட்ட கேட்ட போது அவர் பயப்படுகிறார். குருத்துப் போன்ற சின்னதுகள் பக்கத்து வீட்டுமுற்றத்தில் துள்ளுகிறார்கள். விமானங்களைத்தேடி வானம்பார்த்து ஓடி கால் தடுக்கி ஒரு பிள்ளையாண்டான் விழுந்தான். தாய் வந்து நிமிர்த்தி கால் மண்ணைத் தட்டி ஆற்றுகிறாள். -
விமானமி, குண்டு, கிடங்கு அவர் சிந்தையில் திரும்பத் திரும்ப வந்து இவைகள் ஒரே ரோதனைதான்.
அற்றை நாள் நினைவுகளை அவர் மனம் அசை போடுகிறது. சுற்றத்துடனிருந்த நினைவுகள் தேன்மணம் வீசுகிறது. மூச்சிருக்கும்வரை மண்வாசனை எவர்க்குமிருக்கும். இவராலும் மறக்கமுடியவில்லை.
பிள்ளைகள் இன்று வெளிநாடுகளுக்குப்போய் விட்டாலும் ஊரிலே பழைய சீவியம் எவ்வளவு மகிழ்ச்சியானது மகன் மூத்த பெண் பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்தாலும் விருட்சங்களில் தலை விருட்சம்போல எல்லாரையும்விட வயதுக்கு மீறிய வளர்த்தி வளர்ந்துவிட்டான். அப்போது பதினைந்து வயது அவனுக்கு மெல்லிய கைகளானாலும் கல்மூங்கில் போல் அவ்னுக்குப் பலம் இருந்தது. பாதுகாப்புக்கு வீட்டுக்கொரு பங்கள் தேவை என்பதால் இவரும் பலரிடம் போய் கூலி பேசிப்பார்த்தார்.
2O

நீ.பி.அருளானந்தம்
"ஆயிரம் ரூபாய் தாருங்கோய்யா" “அந்தளவு கூலியே.வேணாம். அவ்வளவுக்கு கையிலே காசுகளஞ்சில்லை.”
"கிடங்கு கிண்டுறதோட வேலைமுடியுமே. அருமந்த அந்தப் பனையையும் தறிக்கவேணும். அதோட வாற செலவு சித்தாயத்துக்கு வீடு கட்டிப்போடலாம். இப்போதைக்கிருக்கட்டும். பிறகு பார்ப்போம்." அந்த எண்ணத்தை வெளியாலே காற்றோடு போக்கிவிட்டார்.
"கண்டறியாதவொரு பயம். என்ன பயம்?” இது அவர் தனக்குத்தானே பேசிக்கொண்டது.
ஆனால் மூத்த இரு பெண்பிள்ளைகளான தற்பராவுக்கும் ஷாமினிக்கும் சரியான பயம் ஒரு நாள் மேலே பறந்து சென்ற ஹெலியிலிருந்து துப்பாக்கியால் சுடக்கேட்டதும் விறாந்தைச்சுவரில் இரண்டு இஞ்சி ஆழத்தில் உடைவு தெரிந்தது. அம்மாவையும் அப்பாவையும் இழுத்து வராத குறையாகக் கூட்டி வந்து காட்டினார்கள் பிள்ளைகள்.
"மாமரத்துக்குப் பின்னால இந்த நேரங்களில போய் மறைஞ்சிருந்து பிரயோசனமில்லை. எங்களுக்குப் பங்கள்தான் பாதுகாப்பு” அழாக் குறையாக சொன்னார்கள்.
"உதை அப்பாட்டச் சொல்லுங்கோ’ அம்மாவுக்கு அதுதான் தெரியும். போய்விட்டா.
"இவர் வாசலுக்கு முன்நின்ற மாமரத்தைப் பார்த்தார். "மறைவுள்ள நல்ல
இடமதுதான். வெட்டிமுடிப்பம்” முடிவெடுத்தார்.
கிணற்றுக்குப் பின்புறம் காடுமாதிரி வளர்ந்து கிடந்த மஞ்சவுண்ணா தடிகளை வெட்டி மகன் தயா வெயில் எறிந்த பக்கமாய் விறகுக்கென்று காயப்போட்டுக் கொண்டிருந்தான். இப்படி ஏதாவது வேலை செய்தே ஆக வேணும். இல்லாவிட்டால் சைக்கிள் சுற்றி பாட்டுக் கேட்க முடியாதே?
தற்பரா கிணற்றடியில் நாயைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். அது அறிவுடைய நல்ல நாய், விமானம் வானில் வட்டமிட்டால் அவளுடைய சட்டையை வாயால் கவ்வி மாமரத்தடிப் பக்கமாக அவளை அந்த நாய் இழுத்துச் செல்லும். பின்பு அவள் கீழே குப்புறப் படுத்ததும் தானும் படுத்துவிடும். இதனால் அந்த நாயிலே அவளுக்கு அதீதமாய் அன்பு
“தயா.அப்பா பங்கள் வெட்டித்தாற யோசனைலையிருக்கிறார் போலவிருக்கு
2

Page 23
கற்பகதரு அப்படித்தான் நான் நினைக்கிறன்.
"கூலிக்குப் பிடிச்சு வெட்டப் போறாரோ' வேலையை நிறுத்திவிட்டுக் கேட்டான்.
“பின்னே. ஆர் வந்து சும்மா வெட்டித்தரப் போயினம். ஏன் என்னாலை முடியாதோ?”
“இல்லையடா அது பெரிய வேலை” “என்ன பெரிய வேலை. செய்து காட்டுகிறன் பாரும். ஆனா சம்பளம் என்னட்டத்தான் தரோணும்”
"அப்பாவிட்டப் போய்ச் சொல்” ஈரம் போகத் துண்டால் நாயை இப்போது அவள் துடைக்கத் தொடங்கினாள்.
அப்பா சைக் கிளை உருட்டியபடி தலை வாசலைக் கடக்க முற்படுகிறார். a
“அப்பா கூலிக்கு ஆள்பிடிக்க வேணாம். நான்வெட்டுறனப்பா" “சின்னப் பிள்ளை நீ எங்க செய்யப் போறாய்?” “இல்லை என்னால முடியும். நான் செய்வன்”
“அவன் சிறுபிள்ளையானாலும் சொனி னானே சொல். அது சீரியதாகவிருந்தது இவருக்கு என்றாலும் வளரும் வயதில் நோப்படுத்தக் கூடாது என்று யோசிக்கும்போது.
“யோசிக்கவென்ன இருக்கப்பா. இப்பவே துவங்கிறன். நல்ல படியாய் பாருங்களன். செய்து முடிச்சுக் காட்டிறன்”
அவன் வேலையைத் தொடங்கினான். அம்மா தேநீர் போட்டுக் கொடுத்தாள். சகோதரிகள், வாளியில் நிரப்பிக் கொடுத்த மண்ணை வெளியில் கொட்டி உதவினார்கள். இரண்டு நாள் வேலையிலே கிடங்கு வெட்டல் பூர்த்தியாயிற்று. அடுத்ததாய் பனை தறித்து துணி டு போட்டுக் கிடத்தி மேலே மண்மூடைகளடுக்கி மண்போட்டு எல்லாம் செய்தாயிற்று. ஆரும் இதைக் கண்டால் பிள்ளைக்கு ஆகாதென்று மகனின் கால் அடிமண் எடுத்து கண்ணுறு கழித்து விட்டாள் தாய்.
இவருக்கு மளிகைக் கடையில் கணக்கெழுதும் வேலை. பங்கர் உள்ளதால் வீட்டைப் பற்றி இப்போது கவலை இல்லை. ஆனால் யுத்தம் மோசமாகி ஷெல்கள் கடூரமாய் விழ குடும்பமே பங்கருக்குள் நெடுக இருக்க
வேண்டியதாய்விட்டது. போதாததுக்கு எந்தவொரு சத்தத்துக்கும் அடுத்த
22

X&ჯ·:·:·x:ჯჯჯჯXX: நீ.பி.அருளானந்தம் வளவுக்காரரும் இங்கேதான் தஞ்சம்,
“அந்த மனுஷியும், பிள்ளைகளும் குளிப்பதில்லையாக்கும். மணம் எட்டுதிக்கும் வீசுது” அம்மா திட்டுகின்றாள்.
காற்று ஊசலாட்டம் இல்லாத இந்த பங்கருக்குள் பல மணிநேரம் இருந்தால் மரண அவஸ்தைதான். எப்போ காற்றுப்படும் என்று இதற்காக சர்ழ் ஏங்குமாப் போலிருக்கும். மழை பெய்து வீடு ஒழுகியும் கவலை இல்லை. பங்கள் ஈரமாகி விடுமோ என்ற கவலைதான் அதீதமாயிருக்கும் இவர்களுக்கு
w ஒருநீள் தயா அதற்குள்ளே குட்டிப் பாம்பொன்றைக் கண்டு சாக அடித்து தடியில் தூக்கி எல்லோருக்கும் காட்டினான். இந்த ஞாபகத்தில் சாமினிக்கு சரியான பயம் எழுந்தது. சமையல் நேரம் குசினிக்கும் பங்கருக்கும் அலைந்ததால் பாதி வெந்த பருக்கைதான் எல்லோருக்கும்.
ஷெல் சத்தத்தில் அம்மாவின் நாவில் கந்தசஷ்டிக் கவசம் வந்து உட்கார்ந்து கொள்ளும். “காக்க காக்க கனகவேல் காக்க. ” அம்மா பயத்தில் உரக்கச் சொல்வார்.
இப்படி யுத்தம் சத்தமென்று காலம் தொலைய ஒரு நாள் இரவு ஊசித்தூறலாகத் தொடங்கிய மழை விடிந்தும் விடவில்லை. இவரும் தயாவும் குடைபிடித்துப் போய்ப் பார்த்தார்கள் பங்கருக்கு மேல் தண்ணிர் மேவிநிற்கின்றது. இதனால் எல்லோருக்கும் மனதிலே கவலைப் புண்கள். “அப்பா அந்த இடத்தை விட்டு புதுசாய் வெட்டுவோமப்பா” “வேண்டாம் தயாபரா. பங்கள் இனிமேல் வேண்டாம்” சொன்னார். “ஏனப்பா அப்படிச் சொல்லுறியள். அதை விட இன்னமும் நல்லதாய் செய்திடுவோமே”
“வேண்டாம் மகன். கிடங்கு வெட்டிறதோடே இது முடிகிற காரியமாயில்லை. அருமந்த அந்தப்பனைகளையும் வீணாய் வெட்ட வேண்டிவரும். அதெனக்கு இஷ்டமில்லை”
“அதுக்கென்னப்பா செய்ய? எல்லோரும் தங்கட தங்கடை வீடு வழிய இருக்கிற பனையளைத்தானே வெட்டுவிச்சு பங்கருக்குப் போடுகினம். உசிரைவிட பனை பெரிசா அப்பா?”
“உனக்கு தெரியாதடா.அது என்ர அப்பு பனம்விதையள் போட்டு முளைப்பிச்சு வைச்சுப் போன வடலிக்காணி. இருபது வருஷத்துக்குள்ள
23

Page 24
கந் பகதரு
அந்த நூற்றுக் கணக்கான எல்லா மரமும் நல்ல பிரயோசனம் தருகுது. அப்பு நல்லதைச் செய்து போட்டுப் போசு அதில வருமானமெடுத்து இப்ப நாங்க சீவிக்கிறம் பரம்பரையா இதை அனுபவிச்சா பேர் சொல்லும் பேர் சொல்ல பிள்ளை இருக்கிற மாதிரி பனையும் இருக்குமடா தம்பி அதை நாங்க பாதுகாக்க வேணும்.
அதைவிட்டுவிட்டு இந்த தேசத்துக்கே பிரயோசனமானதை அழிச்சால் இனிவாற பிள்ளை குட்டியளுக்கும் நாங்கள் துரோகம் செய்த மாதிரி ஆகும். பனை இல்லையெண்டால் எங்கட கலாச்சாரமுமில்லையப்பு வேண்டாம் மோனை இந்த வேலை."
உணர்ச்சி வசப்பட்டுப் போய் உள்ளத்திலிருப்பதையெல்லாம் அவர் சொன்னார். பனையின் அருமை அவருக்கு நன்றாகத் தெரியும். அப்பாவின் அறிவுரை தயாவின் போக்கை மாற்றிவிட்டது. மெளனித்திருந்து பின் எழுந்து போய்விட்டான்.
இதற்குப் பிறகு ஊரைவிட்டு அலைந்து திரிந்து இவரும் தனது குடும்பத்தோடு கொழும்புக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.
இன்று பிள்ளைகளும் அருகில் இல்லாததால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாதது போல் ஆகிவிட்டதை உணருகின்றார். பணமிருந்தாலும் அவரிடத்தே ஒரு தணியாத தாகம் உண்டாகி அது மனதைப் போட்டு வாட்டுகிறது. அந்த தென்னை மரத்தை திரும்பவும் ஒரு முறை பார்க்கிறார். சோடியாக இப்போது அந்தச் சாம்பல்நிறப் பறவைகள் அங்கே வந்து உட்காருகின்றன. மீண்டும் அவைகள் தும்பைக் கொத்தி எடுத்துக் கொண்டு பறக்கின்றன. அவருக்கு யாழ்ப்பாணம் போய் வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.
கேற்றடியில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. தினசரிப் பத்திரிகை வந்து விட்டது. பெட்டியில் போட்டுவிட்டு அவன் போகிறான். எடுத்துப் பார்க்கிறார் தலைப்புச் செய்தி. யாழ்ப்பாணம் கண்டி வீதி ஏ-9 பாதை இன்று திறப்பு. அவருடைய மனம் பூரிக்கிறது. பல நாள் ஆசை நிறைவேறப் போகிறது என்ற திருப்தி இப்போது அவருக்கு
இடி ம்ே. 12-14,2012)
24

நீ.பி.அருளானந்தம் 巒魨1
ዝኾ;
SS
இந்தே" O
9CC/C24G 43393
உள்ளத்தைக் கருவண்டு போல் துனைத்துக்கொண்டிருக்கும்
பிரச்சினைகளையெல்லாம் எடுத்தவுடனே அம்மாவுக்கு எப்படிச்சொல்வது? எனவே ஒன்றுமில்லை என்கிறதாய் ஒரு பதிலை மட்டும் விஜி தன் அம்மாவிடம் சொன்னாள்,
"விஜி திரும்பவும் அழைத்தாள்.அம்மா”
"என்னம்மா”
"கவலைப்படாத பிள்ளை. நல்லபடியா எல்லாம் சரிவரும்" குளிர்ச்சியாக இப்படிச்சொல்லிவிட்டால் மனம் ஆறும் என்ற அளவில் தாயினுடைய அந்த ஆறுதல் வார்த்தை இருந்தது. சாதாரணமாகக் கவலை
25

Page 25
X?...”, Š:'8:, X, XXXX &X::::::XXXXXXX38Xპჯ-XX-XXა:'2. ----- இங்கே இப்படியும் ஒருத்தி இருந்தால் அதுவே நல்ல மருந்துதான். ஆனால் மனதில் ஏற்பட்டுள்ள ஆறாத புண்ணுக்கு எந்த அளவுக்கு அந்த மருந்து வேலை செய்யும்?
“என்னம்மா இது!’ நான் சொல்லிக்கொண்டிருக்கிறன் பேந்தும் அதையே நீ நினைச் சுப் பிடிச் சுக் கொணி டு கவலைப் பட்டுக் ’கொண்டிருக்கிறாய். தைரியமாயிரன் பிள்ளை.!”
“எப்படியம்மா இருக்கேலும்? எத்தினை வருஷம் இப்படியே காலம் போகப் போகுதோவெண்டு எனக்குத் தெரியேல்ல. என்னோட கனடியன் எம்பசிக்கு வந்து திரிஞ்சதுகளெல்லாம் சுறுக்காய் விசா கிடைச்சு எப்பவோ வேளைக்கு வெளியால போயிற்றுதுகள். நான் தான் அங்காலையும் இங்காலையுமா அலைக்கழிஞ்சு கொண்டிருக்கிறன்.”
“அதுக்கென்ன செய்யிறது பிள்ளை? உனக்கெண்டு இப்ப காலநேரமும் சரியில்லைப்போலகிடக்கு உதெல்லாம் ஒரு பக்கத்தில கிடக்க எப்படியோ அவங்கள் உனக்கு ஒரு நாள்விசா தரத்தானே போறாங்கள்.”
“தருவாங்கள் தருவாங்கள் நான் கிழவியாப் போனபிறகு பாத்துத்தான் அவரிட்டப்போய்ச் சேர விசா தருவாங்கள். அதில என்ன பிரயோசனம் வரும்? பிள்ளைகளும் வளர்ந்து கொண்டு வருதுகள். இனிமேலைக்குத் தகப்பனும் இவயளோட பக்கத்தில இருக்கவேணுமே.”
சொல்லிய பிறகு மீண்டும் பழைய விஜியாக அம்மாவின் கண்களுக்குத் தன்னைக் காட்டிக்கொள்ளவேண்டுமென்று அவள் நினைத்தாள்.தன் வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.
திவாகரனுக்கும் விஜிக்கும் கல்யாணமாகி பன்னிரண் டு வருடங்களாகிவிட்டது. திருமணமாகியதும் கணவர் வேலை பார்க்கின்ற கொழும்பு நகரத்திற்கே விஜியும் வந்தாள். இருவருக்கும் தாம்பத்திய வாழ்வு ரோஜாப் பூப்படுக்கை மாதிரி இனிமையாக இருந்தது. இந்த இன்ப சுகத்துக்குள்ளே கடந்து சென்ற வருடங்களில் விஜிக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். மூத்த பிள்ளை பெண்பிள்ளை. அடுத்ததாக இருவரும் குண்டு மாதிரி இருக்கும் பெடிப்பயல்கள். அதுவும் பெருமீகிழ்ச்சியாக அவர்களுக்கு இருக்கும்போது கலகமாய்க் கிடக்கிற இந்தத் திேச்த்துக்குப் பயந்துபோய் திவாகரனும் வெளிக்கிட்டுக் கனடா போய்ச்சேர்ந்தான், &
கொழும்பு வாழ்க்கையிலே தனக்கும் பாதுகர்ப்புக்கு ஒரு கைத்துணை வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்த அம்மாவை
26

---.S.-...--...-- XXჯxxxzk;WX-XXX, XX :’X: ბარა;კა: «... ,,’’..." . კ.: ’’ჯ ::::'''.', 32.: ჯ’, ,,’’, ,,’’...x நீ.பி.அருளானந்த வரவழைத்துத் தன்னுடன் வைத்துக்கொண்டு இன்று இவள் கனடா போக விசா பெறுவதற்கென்று தூதுவராலயப்படியேறி இறங்கி வருகிறாள். இன்றளவும் அவளுக்கு இதுதான் வேலை என்றாலும் விசா கிடைக்கவில்லை!.
களவு பொய் என்று பலதும் நடப்பதால் விசா விஷயத்தில் கண்டிப்பான நடத்தைகளை தூதுவராலயத்தில் கைக் கொள்ளுகிறார்களாம். ஒரு சிலர் அவளுக்கும் இதைத் தெளிவு படுத்தினார்கள்.
“அப்படி என்ன பிழையை நாங்கள் விட்டோம்' என்று நினைத்து அவள் தன்னைத் தானே நொந்து நூலாகிப் போனாள். தூதுவராலயத் துக்கு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது விபரங்கள் எல்லாமே சிறு தவறுகளுமின்றி சரியானதாகக் காண்பிக்கப்பட வேண்டும். ஆர்ந்து அமர்ந்து செய்யவேண்டிய காரியமிது. ஆனால் திவாகரன் தனது இளைய மகனின் பிறந்த திகதியை அன்று வேலையால் வந்த பின்பு அசதி மறதியான நிலையில் பிழையாக படிவத்தில் எழுதி சமர்ப்பித்துவிட்டான்.
அதனால் வந்தது தொல்லை. அதை வைத்துக்கொண்டே அவர்கள் அவளுக்கும் பிள்ளைக்கும் கனடாவுக்குப் போகவென்று விசா தராது இன்றையில் வரைக்கும் இழுத் தடிக்கின்றார்கள்.
ஒருகால் மனைவிக்கும் மூத்த இரண்டு பிள்ளைகளுக்கும் கனடா போக விசா தரலாம் என்று அறிக்கை தந்தார்கள். இது என்ன ஞாயம் . கடைசிப்பிள்ளையை இங்கே தனியே விட்டுவிட்டு எப்படி நாங்கள் மாத்திரம் போவது? அது இயலாது என்று இவள் அவர்களிடம் சொன்னாள். அதற்குப் பிற்பாடு பிள்ளையைத் தங்களுடையது என்று நிரூபிக்க மரபணுப்பரிசோதனை என்று ஆரம்பித்து இவைகள் எல்லாவற்றிலுமாக நாள்கள் இழுபட்டுப்போய் ஆக வேண்டிய விசா வழங்கும் காரியம் ஒவ்வொரு விசாரணைகளிலும் கத்தரித்துப் போகின்றன.
இவள் விஜி. முந்திய காலத்தில் ஒல்லியாக இருந்தவள். இப்போது கொழும்பு வாழ்க்கையிலே கொஞ்சம் பருத்த உடம்போடு இருந்தாலும் சின்ன முகத்துடன் உடன் முளைக்கீரைக்கட்டுப் போல் உடல்முழுவதும் பார்ப்பதற்குக் குளிர்ச்சியாகத் தெரிந்தாள்.
பார்வைக்கு அவள் அப்படி இருந்துதானென்ன? விஜிக்கு ஒரு பெரிய
27

Page 26
ჯXXXXXXXXXXXXXXXXXXXXX இங்கே இப்படியும் ஒருத்தி ހ. _ குறை மனதில் இருந்து ஆளைத் தெரியாமலேயே வாட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு இராமபிரான் போல நல்ல கணவனாக ஒருவன் வாய்த்திருந்தும் பிரிவால் இன்று அசோக வனத்துச் சீதை போல கணவனை
நினைத்துக்கொண்டு வாடுபவளாக அவள் ஆகிவிட்டாள்.
சீதைக்கு இராவணன் ஒருவன்தான் வில்லனாக இருந்தான். ஆனால் விTக்கு. எத்தனை இராவணனி கள் வில் லணிகளாக அவள் கண்களில்படுகிறார்கள்.
காய்கறி வாங்கவென்று வெளியே வெளிக்கிட்டுப் போகும் போதும் அடுத்த வீட்டுப் படலையில் காத்திருப்பது போல் விறுமதடியனாட்டம் நிற்கிறானே அவனைக் கால்களால் உதைக்க வேண்டும் போலத்தான் அவளுக்குத் தோன்றுகிறது.
அவன் பார்க்கின்ற பார்வையிலே வக்கிரச்சுவையுண்டு என்பதை அறிந்தும் அவள் தன் வாயாலே ஒன்றையும் சொல்லிவிட முடியாத நிலையில், துடைப்பமும் முறமும் வீட்டுக் கோடியில் இருக்கு என்பதைக் கண்சாட்டையால் விளாசிவிட்டுத்தான் செல்கிறாள்.
இவைகளால் ஆண்களில் எவன்தான் யோக்கியன் என்பதை அவளால் கண்டுகொள்ளவே முடியவில்லை. எல்லாருமே ஒரே மாதிரியாகத்தான் அவளுக்குத் தெரிகிறார்கள். போகப் போக இதுவே தனக்கு ஒருவித மனோவியாதியாகவும் மாறிவிடுமோ? என்கிற பயமும் இப்போதைக்கு அவளின் மனதை வாட்டத்தொடங்க ஆரம்பித்துவிட்டது.
நெற்றியிலே குங்குமப்பொட்டு வைத்து தாலிக்கொடியையும் போட்டு மரியாதையாகச் சீலை உடுத்தியிருந்தாலும் அவையெல்லாம் புறக்கணித்துவிட்டு பார்வையால் கெடுக்கின்ற வக்கிரச் சுவைகளில் திழைக்கும் சில ஆண்களுக்குச் சட்டம் போடமுடியுமா?
பள்ளிக்கூடம் போகின்ற காலத்திலே பெண்ணுக்குப் பெருமைதரும் முதல் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை விஜி பல தடவை படித்துப் பார்த்திருக்கிறாள். அதிலே வஞ்சின மாலையில் மறக்கற்புடையாள் கண்ணகி கூறுகின்ற ஏழு பத்தினிப் பெண்களின் கதைகளில், ஆறாவது கதையில் வரும் சம்பவம் எப்படியாவது தனக்கும் நடவாதா என்கிறதாக இப்போது அவள் நினைக்கிறாள். இந்த கதையில் வருகின்ற பத்தினிப் பெண் தன்
28

நீ.பி.அருளானந்தம் கணவன் வேற்று நாட்டுக்குச் சென்றபோது அயலான் ஒருவன் தன்னைத்தொடர்ந்து வந்து காமுற்று நோக்கும் பார்வையைக் கண்டு முழுமதிபோன்ற ஒளி முகத்தைத் தானே ஒரு குரங்கு முகம் ஆகுக. என்று கூறவும் உடன் தன் கற்பின் திறத்தால் அவ்வாறே குரங்கு முகம் பெற்றிருந்து வேற்று நாடு சென்ற கணவன் திரும்பி வரவும் தன் குரங்கு முகத்தைப் போக்கிக் கொண்டாளாம்.
அப்படியே தனக்கும் குரங்கு முகம் வந்து இவர்கள் பார்வையிலிருந்தெல்லாம் தப்பிப்போய் கணவன் முகத்தைக்கண்ட பிறகு தன் முகம் மாறினால் என்ன?. என்பதாய் வரும் கற்பனைக் கனவுகளுக்கும் இவள் ஆட்பட்டுப் போனாள்.
அன்றாட சீவியத்தில் செய்யவேண்டிய கருமங்களை என்ன இடையூறு இருந்தாலும் விலத்திக்கொண்டு சென்று செய்து முடிக்க வேண்டிய நிலையிலேயே கொழும்பிலுள்ளவர்களின் வாழ்க்கை உள்ளது. கையிலே ஒரு பெரிய சாமான் பையுடன் கடைத்தெருவிலிருந்து ஒட்டோ ஒன்றைப்பிடித்து வந்து தன் வீட்டு கதவருகில் இறங்கிக்கொண்டாள்
வெளியே நின்றபடி பொத்தானை அழுத்த கிணிங் என்று வீட்டுக்குள்ளே அழைப்பு மணி எதிரொலித்தது.
சத்தம் கேட்டதும் அங்கு அவுக்கவுக்கென்று வந்து சில்லுக் கதவைத் தள்ளித் திறந்த அம்மாவின் செய்கையில் பரபரப்பு ஒட்டியிருந்ததை விஜி கவனித்தாள்.
“என்னம்மா இணி டைக்கெண்டு எதுக்கு அந்தரப்படுறீங்க?” “கேளன்பிள்ளை. கேற்றடியில நிண்டு கொண்டு வெட்ட வெளியில இதெல்லாம்கதைக்கக் கூடாது. நல்ல விஷயந்தான் உள்ளவாவன் சொல்ல” அவளுடைய அம்மா முன்னே சென்றாள்.
கேற்றுக்கும் வீட்டு வாசல் படிக்கும் இடையே உள்ள முற்றத்தைக்கடக்க நடக்கும்போது அம்மாவின் பதற்றத்தைப்பற்றி கற்பனை செய்தாள் விஜி.
“எம்பசியில் இருந்து ஏதாவது கடிதம் வந்திருக்குமோ.” அப்படி இருக்காது. போனமாதம் தானே கடிதம் வந்தது அதுக் கிடையில் என்னத்தை அனுப்பப் போறாங்கள். என்பதாகவும்
29

Page 27
இங்கே இப்படியும் ஒருத்தி யோசித்தாள். என்றாலும் படியேறும்போது முன்பு தனக்குள் நினைத்ததையே அவளுடைய வாய் கேட்டு வைத்தது.
"என்னம்மா எம்பசியிலேயிருந்து கடிதம் ஏதாச்சும் வந்ததே?” "அப் பிடி ஒனிடும் இங்க வரேல் லப் பிள்ளை. ஆனாலும் நல்லாகாரியமொண்டு நல்ல நிமித்தத்தில எங்கட வீட்டில நடந்திருக்கு. இவள் பெட்டை சாமர்த்தியப்பட்டிட்டாளம்மா. எனக்குத் தெரியும். இவள் வளருற அளவுக்குக் கிட்டடியில செலவு வைப்பாள் எண்டு நினைச்சனான் ரெண்டுநாளைக்குமுன்னம் தாச்சி சிரிக்கக் கிளயும் ஐமிச்சப்பட்டன் முதன்முதலா அது என்ன மாதிரியெண்டு ஒன்றும் எனக்கு விளங்காமப் போச்சு. எங்கட சொந்தத்துக்க ஆரும் பிள்ளையஸ் இருக்கினமோவெண்டும் யோசிச்சன். ஆனா இங்க பார் பிள்ள இவள் பெரிசாயிட்டாள்."
மலையளவு சந்தோஷத்தில் அம்மா கலகலவென்று சிரிப்பதை விஜி கண்டு விறைத்துப் போய் நின்றாள். அம்மாவிற்கு இருக்கும் மகிழ்ச்சி பிள்ளைக்குத் தாயான விஜிக்கு இருக்காதா..? இருந்தது.
மகள் சாமர்த்தியப்பட்டது அவளுக்கும் சந்தோஷம்தான். ஆனாலம். தனக்கென்று பல போராட்டங்களை அவள்நடத்திக் கொண்டிருக்கும் போது மகளையும் இனிமேல் பாதுகாத்து வழிநடத்தவேண்டிய கடமையும் தனக்கு வந்து சேர்ந்து விட்டதே என்ற கவலைதான் இப்போது அவளை வாட்டத் தொடங்கி விட்டது. ஒருபுறம் மகள் பூப்படைந்துள்ள சேதி மனதுக்கு மகிழ்ச்சியாயும் மறுபுறம் வரப் போகிற மகளுடைய சாமர்த்தியச்சடங்கில் பிள்ளையின் தந்தை அருகிலில்லையே என்கிற துக்கமும் கலந்து இச்சந்தர்ப்பத்தில் அழுவதா. இல்லை சிரிப்பதா. என்று ஒன்றுமே புரியாமல் அவள் குழம்பிப் போய் அவ்விடத்தில் நின்று கொண்டு தவித்தாள்.
இடி(ஆக.25-312002)
3)

நீ.பி.அருளானந்தம் ܕ ܝ ܒ ܐ ܕ ܐ ܒ ܒ ܒܒ ܒܸܬܐ
፶ፍmግጵድኑ: ጳ)
s ፰m8$
இ து நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த கிராமம். யுத்தம் வந்து இடம் பெயர்ந்த பின் பல வருடங்களைக் கடந்து மீண்டும் இங்கே வரக்கிடைத்திருக்கிறது. "என் அப்பப்பா கட்டிய வீட்டைப் போய்ப் பார்க்க இப்போதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே" இந்த என் ஆனந்தம் அடிவயிற்றிலிருந்து சிரசுக்குப் பாய்ந்தது. இப்போ பழைய இடம் மாதிரி "பத்தமேனி" இருக்காது என்று நன்றாகவே எனக்குத் தெரியும்.
அதே வட்டாரத்தில் உள்ள இராமன் வளவுப்பக்கம் ஒவ்வொருவர் வீட்டுக்காணிக்குள்ளும் முன்பு பசுக்களின் கொட்டில்களைக் காணலாம். அவ்விடத்தில் நல்ல கறவை மாடுகளுக்கும் அப்போது குறைச்சலில்லை. அந்தக் காலம் மாதிரி தோப்பும் துரவுமாய் வெளியெங்கும் மரக்கறித்தோட்டங்களாய் இப்போதும் அவ்விடம் இருக்குமா?. இருக்காது
3.

Page 28
ஊரும் உறவும் என்றே நடந்து கொண்டிருக்கையில் என் நினைவலைகள் கிளர்ந்து இவைகளைத் தெரிவித்தன.
எதிரே வருகின்ற வீதியின் வளைவில் முதன் முதல் நான் இப்போ காண்கின்ற வீடு விஷக்கடி வைத்தியருடையது. அது பழங்காலத்து வீடுதான். ஆனால் எங்கள் கல்வீடு மாதிரி ஆகப்பழங்காலத்து வீடாய் அது இல்லை. வெளியே தொங்கும் அவர் விலாசம் எழுதிய தகரம் வர்ணம் இழந்து கறள் ஏறிப் போயிருந்தது. இப்போது எங்கே அவர்? வெளிநாட்டிலா? ஐமிச்சம் எனக்கு வந்தது.
முன்பு நடந்த S?(Ub சம்பவம் இது. ஒருவனுக்குப் பாம்பு கடித்து விஷம் நன்றாகப் பரவிவிட்டது. எல்லா விஷக்கடி வைத்தியர்களும் கைவிரித்துவிட அழுகையை அடக்கிக்கொண்டு இவரிடம் அவனைக்கொண்டோடி வந்தார்கள். அரவம் தீண்டிய அவனுக்குக் கடைசிச் சிகிச்சையளித்து யாவரும் பிரமிக்கத்தக்க முறையில் அவனை அந்த உயிராபத்திலிருந்து காப்பாற்றி விட்டார் அவர். இப்படிப்பட்ட கெட்டித்தனமுள்ள ஆளுக்கு எப்படியெல்லாம் ஊருக்குள் மதிப்பு இருந்திருக்கும். அதைச்சொல்ல எனக்கு வெகுநேரம் போதாது.
தான் செய்து வரும் அந்த வைத்தியத்தை ஒரு பிள்ளைக்காயினும் படிப்பித்துக் கொடுத்து அதை அழியவிடாமல் செய்து விட அவருக் கென்றால் பெருவிருப்பம். அவருக்கு மூன்றும் பெண்பிள்ளைகள். அந்த வைத்தியத்தைப் படிப்பதில் அவர்களும் அக்கறை கொள்ளவில்லை. என்னிடத்திலும் ஒருநாள் வந்தார்.
“நீர் சிகரெட்டுக் குடிக்கிறதில்லை. குடிக்கிறதையும் நானென்டால்
காணேல்லை. இந்த வைத்தியத்தைப் படிக்கிறதுக்கு முதலில் நல்ல ஒழுக்கம் வேணும். நீர் என்ர சொந்தக்காரப் பெடியன், நீர் இதை வந்து பழகுமன்” என்றார்.
"இதையெல்லம் பழகிச் செய்ய நல்ல பொறுமை இருக்க வேணுமுங்கோ. நீங்கள் நினைக்கிற மாதிரி அதுகளெல்லாமி. என்னட்டக் கிடையாது. அதால எனக்கு சரிப்பட்டு வராது.” என்று என் நிலைப்பாடுதனை அவருக்குச் சூசகமாகத் தெரிவித்தேன்.
அவருக்கு இதைக்கேட்டதும் பெருங்கவலையாயிற்று. பிறகும்அவர் வேறு தனது உறவுக்காரப் பிள்ளைகளையும் என்னைப்போலவே அப்படியாகக்கேட்டு
32

WM 8::8:8:'.....:.:8:.X::::::::::.:.::: . . . . " '' S நீ.பி.அருளானந்தம் விசாரித்துத் திரிந்ததாகத்தான் எனக்கும் கேள்வி.
வைத்தியர் வீட்டுப் பூஞ்செடிகளை இப்போதும் நான் ஞாபகத்தில் வைத்துள்ளேன். இரவு வேளை அவர் வீட்டுப்பக்கமாகப் போக வாசமிகு மல்லிகையின் மணம் சொர்க்கத்துக்குத் தூக்கிச்செல்லும். அவர் வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கும் செவ்வந்திப்பூக்கள் ஒட்டு மொத்தமாகத் தரும் வாசம் இருக்கிறதே. அது தரும் அற்புத உணர்ச்சி பெரதெனியா பூந்தோட்டத்தில் மணிக்கணக்கில் குந்தி இருந்தாலும் கிடைக்காது.
இனி வருகின்ற வீடுதான் தாமோதரம் பிள்ளையினுடையது. வீடா அது? அந்த வீட்டிலே அறம் தோற்று மறம் சிரிக்கிறது. தாமோதரரிடமுள்ள குரூர குணங்கள் பிள்ளைகளிடத்திலும் பேரன்களிடத்திலும் அச்சொட்டாகப் பதிந்திருக்கின்றன. யாரோடேயும் சண்டை எடுத்ததற்கெல்லாம் வாள்வெட்டு என்ன மனுஷர்கள் இவர்கள்?
அந்த வீட்டில் அந்த நாளில் நடந்துவிட்ட ஒரு சம்பவத்தை இன்னமும் ஊரில் சில வேளைகளில் கதைக்கிறார்கள். அது உண்மையாகத்தான் இருக்கும். இப்போதிருக்கும் வாரிசுகளுக்கும் அதே குணங்கள் வெளிவரும்போது தாமோதரம் பிள்ளை இவர்களை விட அந்த நாளில் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்.
அந்த விறாந்தையின் மேல் தாமோதரரின் பேரன்கள் நின்றுகொண்டு என்னையே பார்த்தபடி நிற்கிறார்கள். என்னைக் காண்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட ஆர்வத்தைவிட அசூயையும் அருவருப்பும் மிதமிஞ்சி இருப்பதாய் எனக்குப் புலப்படுகிறது. என்றாலும் ஒருமுறை கையை அந்தப்பக்கம் உயர்த்தி லேசாக அசைத்துவிட்டு என் நடையிலே கவனம் கொள்கிறேன். அந்த வீட்டில் முன்பு ஒரு சம்பவம் நடந்ததென்றேனே அந்தக்கதை ஒரு பழங்கதை. தாமோதரம்பிள்ளைக்கு கூடப்பிறந்த ஒரேயொரு சகோதரி இருந்தாராம். பெயரும் ஏதோ அன்னலட்சுமியம்மாள் என்கிறார்கள். உயர்சாதிக் காரரெல்லாம் அந்த நாளில் தங்கள் பெயருடன் ஐயா அம்மா பிள்ளையென்று சேர்த்து வைத்து தங்களை கெளரவப் படுத்திக் கொண்டார்கள். வெள்ளாளரின் பட்டப் பெயர்களாக அவைகள் இருந்து அவர்களை பெருமைப்படுத்தின. மற்றவர்களுக் கெல்லாம் கறுப்பி, வெள்ளி, செம்பி, சுடலை என்று வைத்து ஒரம் கட்டிவிடுவார்கள். பெயர் பதிய வந்த அவர்களுக்கு உயர்சாதிக்கார
33

Page 29
V, ४४ ஊரும் உறவும் உத்தியோகத்தர்கள் வைத்த பெயர்கள் தான் இவை. இதனால் கீழ்சாதியென்று புறக் கணிக்கப் பட்டவரெல்லாம் தங்களுக்கென்றொரு பெயரை வைத்துக் கொள்ளவே சுதந்திரமற்றிருந்தார்கள். அவர்களெல்லாம் சங்கிலி பூட்டப் பட்ட அடிமைகள் போல் கிடந்து வாழ்ந்த காலமது.
அக்காலத்துச் சுழலிலேதான் இந்த அன்னலட்சுமியம்மாள் காதலும் களவொழுக்கமும் நடந்து முடிந்திருக்கின்றன. உறவினரும் ஊராரும் அறியாத அவளின் அமசடக்கமான காதல் உறவு யாரோடு என்பதே அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கிய காரணம்.
அவன் சீவல் தொழிலாளி. அவர்கள் காணிக்குப் பக்கத்தில் மரமேற ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்தான். அவன் இளைஞன். குறையேதும் இல்லாத அழகன். காதலுக்குக் கணி இல்லை என்பது அன்னலட்சுமியம்மாள் வாழ்க்கையிலும் பொருந்திவிட்டது. அவனும் பயத்தைத் தொலைத்தான். இவளும் பின்பு வயிற்றில் சுமந்தாள். இதை அறிய வந்ததும் தாமோதரர் சும்மா இருப்பாரா?
தனது அடியாட்களை அனுப்பி அவனை நையப்புடைத்துவிட்டார் ஊமையடி வாங்கிய அவன் ஆறுமாதமாய் போய்ப் புக்கைகட்டினானாம். அதற்குப் பிறகு இந்தப் பக்கம் அவன் தலை காட்டவே இல்லையாம்.
இப்படி ஏதாவது ஏடாகூடமாக தனது இனசனத்துக்குள் நடந்து விட்டால் அவப்பெயர் வராமல் காக்கவென்றே ஒரு மனுஷி இங்கே இருந்தார். அவளும் ஒரு அம்மாப் பெயர்க்காரிதான். இதற்கெல்லாம் அவள் முன்னுக்கு நிற்பாள். தாமோதரருக்கு அவள் கிட்டிய உறவுக்காரி. அவள் லட்சுமியம்மாளின் கருவைச்சிதைத்தாள். அதன் பின்பு தமையன் கொடுத்த நெருக்குதலில் அன்னலட்சுமியம்மாவும் விருப்பமில்லாமல் வேறொருவருக்குக் கழுத்தை நீட்டினாளாம். இது எல்லாம் வசதியுள்ள பெரிய இடத்தில் நடந்ததால் அந்த நேரம் யாருமே அவ்விஷயத்தைப் பற்றி வெளியரங்கமாய் வாய்திறக்கவில்லை. இன்று அது பழங்கதை. கொஞ்சம் கொஞ்சமாக அது பலராலும் மறக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தக்கதையைச் சொல்லும் வீட்டைக் கடந்துவிட்டேன்.
நேரே தெரிகிறதுதான் என் வீடு. இல்லை. அது என் அப்பாவின் வீடு
அதுவும் சரியாக இல்லை. மூன்றாவதாக நான் இப்போது சொல்ல வருவதுதான் சரி. என் அப்பாவின் அப்பா கட்டிய கல்வீடு. அப்படியாக
34

x',’.xxx»კასჯ ჯჯ<<ჯ×2.:Šš.:,:::xჯოა „ა:·:·:·:·:·:·:·: X..:ss... .:·:·:·:·:·:·:·:·:·:·:·. .Xჯ:::::::::x நீ.பி.அருளானந்தம் இருந்தால் இவ்வளவு காலம் சென்ற அந்த வீடு எப்படி இருக்கும்.
இப்போது நான் வீட்டு முற்றத்திற்கு வந்துவிட்டதால் அவைகளைச் சொல்ல சாத்தியமாக இருக்கும். இங்கே வேப்பமரத்திலிருந்து பூக்கள் அடையாய்ச் சொரிந்து கிடக்கின்றன. முற்றத்தில் நிற்கின்ற இந்த வேம்பு முதலைத்தோல் மாதிரி பட்டைகள் உடைய நெடுங்காலத்து மரம். அதைத் தாண்டி வீட்டு முகப்பு வாசலில் போய் நிற்கின்றேன். விறாந்தையில் உள்ள பெரிய தூண் ஒன்றைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டேன்.
வீட்டின் கதவுகள் எல்லாமே பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடக்கிறது. உள்ளே இருந்த ஒரு பொருளையும் காணவில்லை. மோகனப் புன்னகையோடு இருக்கும் முருகனின் படம்தான் சுவரில் தொங்குகிறது. வீட்டுக்குள் இருக்கும் சிறு முற்றத்தில் காட்டுப் பூக்கள் புதிதாய்ப் பூத்திருக்கின்றன. உளுத்து விழுந்து கிடந்த பனஞ்சிலாகையை எடுத்து ஒரமாகப் போட்டேன். சிராய்ப்பொடி விரலில் தைத்து விட்டது. நான் படுக்கும் அறையில் வெளவால்கள் இறக்கைகளை அடித்துக்கொண்டு பறக்கும் சத்தம் கேட்கிறது. ஒன்று பறந்து வந்து என் முகத்திலும் அடிபட்டு சிக். என்ன நாற்றம். அந்த அறை வெளவால்களின் அறையாகிவிட்டது. அந்த இடத்திலிருந்து வந்த துர்வாசனையையும் சகிக்க முடியவில்லை:
உடனே வெளியே வந்துவிட்டேன். முற்றத்தில் நின்ற வேப்பமரத்தின் வேர்க்குழியில் அமர்ந்து முதுகை வேப்பமரத்தில் சாய்த்துக்கொண்டேன்.
தென்னம் செத்தல் ஒலை பொறுக்க காணிக்குள் ஒருத்தர் வருகிறார். எனக்கு அவரைத் தெரியும். எங்கள் வம்சவரிசையைச் சேர்ந்தவர் அவர் பண்டாரம் பரதேசி மாதிரி தாடி மீசையோடு முகமும் சுருங்கி அவர் வாடிப் போயிருந்தார்.
"ராசையாண்ணை எப்பிடி?” "துரையே? என்ரை ராசன் எப்ப வந்தீர்?" "இப்பத்தான் வந்து வீட்டில கால்வைச்சணி” "ஐயோ ராசா வீட்டைப் பாத்தீரே? அந்த நாளையில இதுதான் ஊருக்கு முதன்முதல் கட்டின கல்வீடு. இப்ப இப்படிப்போச்சு. நீங்களெல்லாம் சண்டை துவங்கிறாங்கள் எண்டு எங்கேயோவெல்லாம் போயிருந்திட்டியள். இப்ப சமாதானம் வந்ததால தலையைக் காட்டிறியள். அதை விடுவம். ஆனாலும் நான் ஒண்டைச் சொல்லுவன். அந்த நாளில உங்கட பாட்டன்
35

Page 30
ஊரும் உநம்ை ஏகமாய் காணியெல்லாம் வைச்சு ஆண்டவர். நீங்களும் அந்த முதுசங்களை வீணா வித்துப் போடாம பவுத்திரமாய் வைச்சிருக்கப் பாருங்கோ தம்பி.”
வழமையில் என்னைக்கண்டால் இப்படித்தாண் எப்பொழுதும் அவர் என்னிடத்தில் சொல்லுவார். நான் பர்சைத்திறந்து ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை எடுத்து விரித்தேன். பெற்றுக்கொண்டு பலமுறை கும்பிடு போட்டுக்கொண்டு அவர் போய்விட்டார்.
என் பாட்டன் எப்படி இருப்பார் என்று மானசீகமாகக் கற்பனை பண்ணிப் பார்த்தேன். அந்த முகம் தெரியாத என் பாட்டனை சங்கிலி மன்னனாகவும் பண்டார வன்னியனாகவும் அதிலே இருந்தபடியே யோசித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன். இப்படியே மசியாத மரவள்ளிக் கிழங்குடன் மல்லுக்கட்டிக் கொணடிருப்பதைப் போன்ற யோசனை. அதனாலே நேரம் சென்றுகொண்டிருந்ததும் தெரியவில்லை. பொழுதுபட்டுவிட்டது. வேம்பிலும், பனங்கூடல்களிலும் உறைந்த காகங்கள் கரைந்து கொண்டன. யாரோ கேற்றுப் பக்கம் இருந்து எட்டிப் பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. சற்று முன் கண்ட முகம்தானே உடனே. "ராசையா அண்ணை" என்று கூப்பிட்டேன். "என்ன தம்பி இப்படியே இருந்து கொண்டிருந்து என்ன செய்யப் போரீர்? வாருமன் என்ரவிட்டை போவம்" என்று கேட்டார். "இல்லை யண்ணை. நான் இந்த விறாந்தையிலேயே ராவைக்குப் படுக்கப்போறன், நாளைக்கு ஆக்களைப்போட்டு வீட்டைத் துப்பரவாக்க வேணும்' என்றேன்.
"அதெல்லாம் ஆற அமர கொஞ்சம் கொஞ்சமாய் செய்யும் இப்ப என்ரை வீட்டில வந்து ரவைக்குத் தங்குமன்."
"குறை நினையாதயுங்கோ நான் வரேல்ல. இந்த விறாந்தையில நான் கூட்டிப் படுக்கப்போறன். அதுதான் எனக்குப் பெரிய நிம்மதி"
"ம். பரம்பரைக்குனம் தம்பியிலயும் இருக்குது. இரும் நான் விறாந் தையைக் கூட்டித் துப்பரவாக்கித் தாறன்.”
அவர் ஓலையைக் கிழித்து கட்டாய்க்கட்டி விறாந்தையைக் கூட்டத் தொடங்கிவிட்டார். நான் கொண்டுவந்த பையை விரித்து தண்ணிர்ப் போத்தலை எடுத்தேன். பிளப்கட்டையும் எடுத்து வெளியில் வைத்தேன். பிஸ்கட்டை மெல்ல மெல்ல எடுத்து சாப்பிடுவதோடு என் கவனமெல்லாம் வீட்டைப் பழையபடி புதுப்பிக்கும் திட்டத்தில் அடங்கிப்போயிருந்தது.
இடி(04-102002) 3.

நீ.பி.அருளானந்தம்

Page 31
x ::.::.::.::.::.::.:: «:: .::.::.::.::.::.::.:: .::.::. :: மணி வாசனை "Tெங்களுக்கு வழி பிறந்திட்டுது, ராசாத்தி! இனி நாங்கள் பஸ்சில ஏறி, கொழும்பில் இருந்து நேராய் யாழ்ப்பாணம் போய்ச் சேரலாம். ஒரு கஷ்ரமுமில்லை. எப்பிடி. இதை நினைக்கவே சந்தோஷமாயிருக்கு பார்த்தீரே?.”
அவருக்குத் தான் இந்த மனோற்சாகம். ஆனால், மனவியின் கவனமோ பத்திரிகை படிப்பதிலேயே கருத்துான்றி இருந்தது. மகள் தாயினருகில் இருந்து அன்றைய தன் நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அப்பாவின் கதையிலே எதுவித அக்கறையும் ஏற்படவில்லை.
"இனி நாங்களும் ஊர்வழிய போய் சேர்ந்திடலாம். சீச்சீ. கொழும்பில இருந்து கொண்டு என்ன தான் ஒரு சுகத்தைக் கண்டம். இங்கயிருந்து வெறுத்துப் போயிற்றுது வாழ்க்கை. சுணங்காமல் கெதியாக இனி அங்கால போயிட வேணும்.”
அவர் தன் மனைவியை பார்த்தவாறு இப்படிச் சொல்லிக் கொள்ளவும் படித்துக் கொண்டிருந்த பத்திரிகையை மடித்துப் பக்கத்தில் வைத்துவிட்டு மனைவி அவரைப் பார்த்தாள். "நினைச்சவுடன் சரிவர்ர அலுவலேயிது. உந்தக் கதையை விட்டுப்போட்டுச் சும்மாயிருங்கோ” என்று சொன்னாள்.
"ஏன்? ஏன்?. இஞ்சேரும் இங்க திரும்பி ஒருக்கா என்னைப் பார்த்துச் சொல்லும் பார்ப்பம், ஆது முடியாதென்கிறீரோ?”
“முடியாதென்று ஆர் சொன்னது. ஆனா, இப்போதைக்குத் தான் உது நடவா தெண்டிறன். இங்கினையா எத்தனை பேர் கொழும்பில இருக்கினம். நீங்கள் சொல்றாப்போல சுறுக்காய் வெளிக்கிட்டுக் கொண்டு போக அடுக்காயிருக்கினமே?. சொல்லுங்கோவன்?. ஏதோ கொஞ்சப் பேர் இங்கயிருந்து போய் அங்கின இருக்கிற தங்கடை தங்கடை வீட்டைப் பார்த்திட்டு திரும்பி வருகினம் தான். அதை நான் இல்லையெண்டல்ல. ஆனா, சாமான் சக்கட்டுக்களை அள்ளிக் கட்டிக்கொண்டு போய் அங்கினையா இருக்க போயிற்றினமே?.”
"ஆரும் இங்கினையா கிடக்கட்டும் போகட்டும். அவயின்ரை கதை எங்களுக்கெதுக்கு. நாங்கள் வெளிக்கிடலாம் தானே! வெளிக்கிட்டு போய் அங்கயிருப்பம். எங்களின்ரை இடத்தில போயிருக்க ஆரையும் ஏன் நாங்கள் வாய்பார்த்துக் கொண்டிருப்பான்'
38

நீ.பி.அருளானந்தம் "கொஞ்சம் பொறுங்கோ. நானும் அதைப்பற்றி உங்களுக்கு கொஞ்சம் சொல்லுகிறனே. பிள்ளையள் வெளியால இருந்து சொல்லுதுகள் அங்க போகவேணாமெண்டு. நீங்கள் என்ன இப்படி நாண்டு கொண்டு நிக்கிறியள்”
இது அவர் மனைவி கொல்லுகிற காரணம்.
“Tெங்கட ஊரிலிருக்கிற மாதிரி எங்கேயும் வருமே சத்தியமாக சொல்லுறன். வராது கண்டியோ. அங்க எல்லாமே இருக்கு என்ன. அங்க உயிர்ப்பா இருக்கிற எல்லாச் சாமானையும் பார்த்து வாங்கிச் சாப்பிடலாம். வேண்டிய நேரம் கோயில், குளமெண்டு நாலு இடத்துக்குப் போகலாம் வரலாம். தெரிஞ்ச அறிஞ்ச சனத்தோட பேசலாம் பழகலாம். நிம்மதியாய், சந்தோஷமாய் இருக்கலாம். இஞ்ச அப்படி இருக்கே.? பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல விடிய இருந்து பொழுது படுமட்டும் நான் வீட்டுக்குள்ளேயே ஒரு மூலையில இருக்க வேண்டியிருக்கு எத்தனை நாளுக்கெண்டு இப்பிடியே இருந்துகொண்டு வில்லங்கப்படேலும்.”
இது அவர் சொல்லும் ஞாயம். "அப்பிடி உங்கட அலுவல மாத்திரம் பார்த்தால் காணுமெண்டு தான் நீங்கள் நினைக்கிறியள்போல. இருக்கிற பொம்பிளைப் பிள்ளையைப் பற்றி கொஞ்சமேனும் நீங்க யோசிக்கேல்லையே இந்த இடத்தில இருந்தாத்தானே பிள்ளைக்கொரு மாப்பிள்ளை பார்த்து கலியாணம் கட்டி வைக்க வழி பார்க்கேலும். இப்படியொரு காரியத்தோடதானே இங்க இருக்கிறவையளும் கனக்காவாயிருக்கினம். உது மட்டுமே குடுத்த வீட்டு அட்வான்சும் ஒழுங்காய் கழிபடேல்ல, அதுக்குள்ளவா என்ன அவசரம் உங்களுக்கு?”
சிறிது நேரம் அங்கே நிசப்தம். அதற்குப் பிறகு அவரே பேச்சை தொடர்ந்தார்.
“முந்தித்தான் போக்குவரத்துக்குக் கஷ்டமி. பிளேனில கப்பலில எண்டு ஒழுங்கு பண்ணிக் கொள்கிறதும் பெரிய தலையிடி பிடிச்ச வேலை, ஆனால் இப்பவெண்டால் பாதை திறந்திருக்கு. பாஸ் கெடுபிடியும் மில்லை. கரைச்சலுமில்லாமல் கொழும்புக்கு வரலாம் தானே இதுக்குப் போய்.”
"ஒமோம் வரலாம் தான், ஆனா உங்களுக்கு இருதய நோய் இருக்கு உங்கட வருத்தத்திற்கு கொழும்பிலேயே இருக்கிறது தான் நல்லம். நல்ல வைத்திய வசதி இங்க தான் இருக்கு இதுவும் முக்கியம் தானே.”
39

Page 32
மணி வாசனை
“நீர் அப்படி என்ர காரியத்தை தான் முக்கியமாக வைச் சு சொல்லுகிறீரோ?.”
கொஞ்சம் இப்போது கடுப்புடன் கேட்டார்.
"இல்லை! பிள்ளையின்ரை காரியமும் முக்கியமாயிருக்கு.
இவவும் வெளியால எங்கையும் போகவேணுமே.”
மனைவியின் வாயிலிருந்து உண்மை வெளிவந்ததைக் கண்டு பிடித்துவிட்டார்.
"சரி அதுக்குப் பிறகு இவர் கேட்டார்.
"நாங்களும் இங்கயிருந்து என்ன செய்கிறது. அங்கின அதுகளிட்ட போக வேண்டியது தான்.”
“எங்க போகவெண்டிறீர்?" குழம்பிப் போய்க் கேட்டார்.
“வெளிநாட்டுக்கு தான். அங்கதானே இப்ப எங்கட எல்லாப் பிள்ளையஞம் இருக்கினம். அங்க போய் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்காமல், பேரப்பிள்ளைகளை துாக்கி வைத்துக் கொஞ்சாமல் யாழ்ப்பாணத்தில போய் தனிய இரண்டு பேருமாய் இருந்து கொண்டு என்ன செய்யிறது. வயது போன இந்தக் காலத்தில யாழ்ப்பாணம் போய் அங்க நோயும் பாயுமாக கிடந்திட்டால் எங்களைப் பார்க்க எடுக்கவெண்டு அங்க ஆர் இருக்கினம். சொல்லுங்கோ பார்ப்பம்?.”
மனைவியின் பேச்சிலே இப்படியெல்லாப் பிரச்சனைகளும் நிரையில் வர அவருடைய திட்டம் நிறைவேறாததாகி சாண் சாணாய் சறுக்கியது. அவர் ஆசைப்பட்ட காரியம் ஊசிப் போயிற்று. இந்த விடயம் மனைவி மாத்திரம் சொன்னதோடு நின்றுவிட்டால் பரவாயில்லை என்று அவருக்கும் இருந்திருக்கும். ஆனால் இப்போது மகளும் அதே புராணத்தை தொடர்ந்து ஆரம்பித்தாள்.
"அப்பா வன்னியில ஐம்பது அறுபது மைல் பிரயாணம் செய்ய ஆறு மணித்தியாலத்துக்கு மேல நேரம் போகுதாம். இப்போதைக்கு அந்தப் பாதையால் பிரயாணம் செய்தால் அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டுதான் இருந்து வேதனைப்பட வேண்டி வரும். முன்னமே உங்களுக்கு ரெண்டு தரம் ஹாட் அற்றாக் வந்திருக்கு அதையும் மறந்திடாதேயுங்கோ.”
“உங்கள் இரண்டு பேருக்குமே சொந்த இடத்தில போய் இருக்க விருப்பம் இல்லைப் போல இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்கோ.
40

-------- நீ.பி.அருளானந்தம் நான் ஊருக்குப் போகப் போறன்
"பொறுங்கோ அப்பா அம்மா சொல்லுறதையும் கேளுங்கோ. இவ்வளவு காலமாக கொழும்பில நீங்கள் இருக்கிறியள்தானே இப்பவெண்டு ஏன் இப்படிக் கிடந்து அவசரப்படுகிறியள் வெளி நாட்டில பிள்ளையஸ் இருந்திட்டால் தாய், தேப்பன் அங்கதான் போய்ச் சேருறதிற்கு தெண்டிப்பினம். உங்கடை விருப்பம் என்ன வேற மாதிரிக் கிடக்கு”
" சொல்லுறது சரி தான் பிள்ளை நானும் அதை ஏற்றுக் கொள்ளுறணம்மா! ஆனா, நான் சாகிற வயசில ஊரோட போய்ச் சேர்ந்திடத் தான் ஆசை. இதைத் தான் நான் கனகாலமாக எதிர்பார்த்திருந்தனான். சோமாலியாவில் பிறந்தவன் எந்த வசதியான பணக்கார நாட்டில் போய் வாழ்ந்தாலும் தன்ரை நாடு தான் பொன் நாடு என்றதாயிருக்கும். பிள்ளை. எனக்கும் நான் பிறந்த ஊர் மண் தான் பெரிசம்மா. கடவுளிற்கு அடுத்து பிறந்த மண்ணைத்தான் ஒருவன் வணங்க வேணும் கண்டியோ. ஒருவன் தன்ரை உயிர் வாழும் மட்டும் பெற்ற தாயை மறக்க மாட்டான். அது மாதிரியே பிறந்த ஊரையும் மறக்கேலாது. நான் சீவிச்ச காலம் அநேகமாய் அங்க தான். அங்க போய் இந்தக் கட்டை சரியட்டும். என்ரை மண்ணிலேயே எரிந்து சாம்பலாகட்டும். அது தான் என்ரை ஆசை. அதுக்குத் தான் நான் துடிக்கிறன்.” கண் கலங்கி விட்டது அவருக்கு.
அவர் தனது உள்ளத்து உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தைகளிலே வடித்து அவர்களுக்கு விளங்கும்படி இந்த விதமாகக் கூறினார். அவருடைய பேச்சிலே பிறந்த இடத்து மண்பற்று, தன் இனத்தின் மேல் கொண்டிருந்த பற்று துலாம்பரமாக வெளியே பிரதிபலித்தது.
அவரது மனைவியும் மகளும் அவர் இப்படியாகச் சொல்வதைக் கேட்டு உண்மையாகவே மனம் நெகிழ்ந்து போனார்கள்.
மகளுக்கு அப்பாவின் கதையோடு இணையக் கூடியதாய் பாரதி பாடிய பாட்டு ஒன்று சட்டென்று அவ்விடத்தில் ஞாபகம் வந்தது. "எந்தையும் தாயும் மகிழ்ந்து, குலாவி இருந்ததும் இந்நாடே” என்ற அந்தப்பாட்டில் வரும் ஒவ்வொரு அடியும் பிறந்த இடத்து மண்வாசனை நினைவுகளை அவளிடத்தில் கிளறி விட்டதைப் போல இருந்தது. அத்தோடு அந்த இடத்தில் தன் தகப்பனையும் நினைத்துப் பார்க்க வேண்டியும் வந்தது. ஓய்வூதியம்
41

Page 33
மண் வாசனை
பெற்ற பின்பு அவளுடைய தகப்பன் எவ்வளவோ நல்ல காரியங்களை ஊரிலே இருக்கும்போது செய்து கொண்டிருந்தார்.
6}(Ib சிலர் மரங்களை வெட்டி அழித்துக் கொண்டிருக்க, அந்த யுத்த சூழ்நிலையிலும் அவர் பெருவாரியாய் பனம் விதைகளை நாட்டி பல இடங்களிலும் அவைகளை வளர்த்து விட வேண்டும் என்ற கொள்கையுடன் பாடுபட்டார். அவருக்கு சொந்தமான பல காணிகளிலும், பல இடங்களிலும் சென்று தேடி எடுத்துக் கொண்டு வந்த பல மூலிகைச் செடிகளை நட்டு வளர்த்து அவற்றை அழியவிடாமல் பாதுகாத்தார்.
சிாப்பாட்டு விஷயத்தில் அப்பா அப்படியெல்லாம் சொன்னாரே. அது எல்லாமே உண்மை தான். சயிக்கிளில் போய் ஊர் ஊராகச் சுற்றி என்னென்ன விதமான ருசியான உணவுகளை அவர் எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்திருப்பார்.
செம்பாட்டு மண்ணுடைய அச்சுவேலிப் பக்கம் போய் மரவள்ளிக்கிழங்கு. இராசவள்ளிக்கிழங்கு. கருணைக்கிழங்கு. முந்திரிகைப்பழம் என்று வாங்கி வருவார். பனங்கிழங்கு ஒடியல், பனாட்டு வாங்க பளைப்பக்கம் போய் வருவார். பருத்தித்துறை போய் தட்டைவடை, எள்ளுப்பாகு நல்லெண்ணெய் என்று கொண்டு வருவார். அதெல்லாம் அங்கே எங்கள் நாட்டுச்சாப்பாடு.
அவர் சொல் கிற மாதிரி அவைகள் தானி எவ்வளவு ருசி. இவற்றையெல்லாம் பார்த்தது எங்கே சொர்க்கம் இருக்கிறதென்றால் அங்கே என்று தான் நாங்கள் சொல்வோம். அப்படி இருக்கும் போது வெளிநாடுகளில் போய் இன்னமும் நாங்கள் முகம் தெரியாதவர்கள் போல ஏன் வாழவேண்டும்.
இந்த நினைவுகளோடே அவளுக்கு சொந்த ஊர்ப் பற்று மேவி. அங்கே சென்றடைய வேண்டும் என்ற தாகம் வந்து விட்டது. எப்போது சென்று அந்த மணி னில் கால் வைப்போம் என்ற அவசரமும் வலுத்துவிட்டது.
"அப்பா நானும் உங்களோடு யாழ்ப்பாணத்துக்கு வருகிறனப்பா. அங்க போய் நாங்கள் இருப்பம்." என்று தனது தந்தையைப் பார்த்து அவள் சொன்னாள் மகள் அப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவர் மனம் புளகாங்கிதம் அடைந்தது. பக்கத்தில் நின்ற மனைவியைப் பாாத்தார். அவள் கண்களிலும் மகிழ்ச்சிப்பூ பூத்திருந்தது.
தினமுரசு (ஜூலை 07-132002) 42 முரசு (

நீ.பி.அருளானந்தம்
மின்சார ஒளிவிளக்குகள் வழக்கம் போல இரவு கணிகளை மூடிவிட்டன. மின்வெட்டின் பின் நரக வாசல் படியில் கால் வைக்கிறேன் அந்த இருளிலும் நுளம்புகள் வேகம் கொண்டு என்னையே நோக்கி வருவது போல் இருக்கிறது. காலுக்கடியில் நுளம்புச் சுருள் குருட்டுப் புகையை ஊதிவிட்டுக் கொண்டிருந்தாலும், அதையும் பழக்கப்பட்டுப் போன நுளம்புகள்
43

Page 34
இழப்பு காதோரம் பறந்து கொண்டு கிண்ணாரம் இசைக்கின்றன.
முழங்கையில் ஒரு நுளம்பு கடித்ததும் வேதனையால் துடித்துவிட்டேன். மறு கையால் அதற்கு நல்ல சாத்து விட்டேன். உடல் நோ அடிவிழவும் குறைந்தது. ஆனால், நுளம்பு. செத்துட்டுதோ?. தப்பிப் பறந்து போயிற்றோ?. அந்த இருட்டிற்குள் ஒன்றுமே சரியாகத் தெரியவில்லை. சிமினி விளக்கு விறாந்தையில் மினுக் மினுக்’ என்று எரிந்த படியிருக்கிறது. அதையும் எடுத்து வந்து காலுக்கருகில் வைத்துக்கொண்டேன்.
ஓரிரண்டு ஒளி கொட்டும் மின்மினிப் பூச்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு என் பக்கமாக பறந்து வருகின்றன. கையிலுள்ள மட்டையால் அடித்தேன். வாசல் பக்கமாகப் போய் அவைகள் விழுந்தன. பின்பு நிலத்தோடு ஒட்டிய இடைவெளி விட்டு வெளியே பறந்து போயின. எனக்குக் காற்று படும் படியாக விசிறுகின்றேன். ஏதோ உடம்பில் கொஞ்சம் காற்றுப்படுகின்றது. ஆனால் புழுக்கம் உடம்பை விட்டுப் போகவில்லை. காற்றை எனக்கு விசிறுதலோடு இந்த நுளம்புகளையும் என்னிடம் வரவிடாமல் விலத்திவிட இந்தக் காகிதமட்டை ஒன்றுதான் பெரிய அஸ்திரமாக என்னிடம் இருக்கிறது.
இப்படியே எத்தனை வருடங்கள் இருட்டுக்குள் கடத்தினேன். எனக் கணக்கிட்டுப் பார்க்கிறேன். யாழ்ப்பாணம், வன்னி என்று இடம்பெயர்ந்து இருந்து இப்போது கொழும்பிலும் வந்து இப்படியா?. என்று எழுந்த கேள்வியுடன் மனம் சோர்ந்து போகிறது. இந்த வெறுப்பிற்குள் சடுதியாய் எங்கிருந்தோ நறுமணம் ஒன்று காற்றுடன் கலந்து என் பக்கமாக வீசியது.
அது என் வீட்டுப் பவளமல்லிகை மரத்துப் பூக்களிருந்துதான் அந்த நறுமணம் என்று என் ஞாபகத்திற்கு வருகின்றது. அந்த இரவுப் பூக்களுக்குள் இருந்துதான் எவ்வளவு வாசம். நான் படுக்கின்ற அறைக்கு பக்கத்தில் மதிலோடு அந்த மரம் நிற்கிறது. பகலிலே அந்த மரம் பூப்பூத்தால் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும் எனக் காலையில் கீழே பரவிக்கிடக்கும் உதிரிப் பூக்களைப் பார்த்து சிந்தித்திருக்கிறேன்.
தலைக்கு மேலாக மீண்டும் ஒரு மின்மினிப் பூச்சி பறக்கிறது. காதுக்குள் புகுந்து விடுமோ என்று எனக்குப் பயம். உடனே விசுக்கலில் மட்டையில் அடிபட்டுப்போய் அது வெளியே நிலத்தில் விழுந்து விட்டது. நான் வளர்க்கும் மூன்று மாதக் குட்டி நாய் வந்து அதை நுகரவும் "அடிக். அடிக்” என்று
44

SDDD0S0SKSKSeSeSK நீ.பி.அருளானந்தம் கலைத்துவிட்டேன். சுற்றி வந்த அந்த நாய்க் குட்டி என் கதிரைக்குக் கீழ் குழப்படி செய்யாமல் படுத்துவட்டது.
நானும், நாயும் தனியாய் இந்த வீட்டில். இதை ஏன் அடிக்கடி நினைத்து வருந்தவேண்டும். விரும்பினால் போய் பிள்ளை குட்டிகளோடு குசாலாக வெளிநாட்டில் இருக்கலாம் தானே?
"அங்க எல்லாம் போய் இனிமேல எனக்கு என்னதான் வரப்போகுது?
இங்க ஒரு பக்கத்தில இருந்து சமைச்சுச் சாப்பிட்டாலும் இது தான் நல்லம்..” என்கிறதாக மனதில் ஒரு பிடிவாதம். இதை நினைத்தவுடன் என் பரிமளம் தான் உடனே ஞாபகத்தில் வருகிறாள். அவளை நினைத்து நினைத்து ஒவ்வொரு போழ்தும் வேதனைப்படவேண்டியிருக்கிறதே..? கணவனும் மனைவியும் ஒன்றாக செத்துப் போகமுடியுமென்றால் அது எவ்வளவு அருங்கொடை அது கிடைக்கிறதா இந்த உலக வாழ்க்கையில, இல்லையே? என் மனைவி இறந்ததிற்குப் பிறகு தான் தனிமை எவ்வளவு கொடியது என்பதைக் கண்டறிந்தேன்.
Ch புறமிருக்கட்டும். இப்போது எனக்கு வேண்டிய வசதி எல்லாமே از9lgگ வந்துவிட்டது. பின்னும் ஏன் அந்த வறுமையில் பதிந்துவிட்ட வடுக்கள் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வந்து நிம்மதியைக் கெடுக்கின்றன?. துள்ளித் திரிகின்ற பருவத்தில் மனதில் சில பாதிப்புகள் பதிந்து விட்டதால் வந்த வினையோ?.
யாழ்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் இருந்தபொழுது அந்தச் சிறுவனைக் கண்டேன். அன்று பள்ளிக்கூடநாள் என்பது எனக்கு நல்ல ஞாபகம். அவனைக் கணிடதும் இதையெல்லாம் கேட்க வேண்டுமென்று வாய் துறு துறுத்தது. "நீ ஏன் பள்ளிக்கூடம் போகேல்லத் தம்பி?” அவன் நான் கேட்டதை அசட்டை பண்ணிப் பேசாதிருந்தான். சின்னச் சாக்கை நிலத்தில் விரித்து வைத்துக்கொண்டு தேக்கு மரத்து விதைகளைப் பொறுக்கி அதற்குள் போட்டுக் கொண்டிருந்தான்.
"அது தான் நான் கேக்கிறனெல்ல சொல்லுமன்?.”
"அது.ம்.."முனகுவது போல் ஆரம்பித்துப் பின்பு நிறுத்திக் கொண்டான். தன் வேலையை விட்டுவிட்டு கீழே தலையைக் குனிந்து நிலத்தை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். எனக்கோ பார்க்கவேண்டிய
45

Page 35
- Dr000rGSrS0SSrBrSBM0Br0rEEBSBDBSBSBgDBD0S00000000BDBD00D0DBSKSDSASDSSS0SS0SS0SS000S00SEES00S00KSKKSS00SE E Šა:Xჯx:X இழப்பு அலுவல்களுக்குப் போக இயலாமல் நேரம் கசிவதாகத் தெரிந்தது.
"என்ன தேவைக்கென்று உதை பொறுக்கி எடுக்கிறீர்?.” நானும் விட்டு விடவில்லை. மறுபடியும் கேட்டேன்.
"இது விக்க. விக்கத்தான் பொறுக்கிறன்.” "என்ன விலைக்கு எடுப்பினம்?.” "கொத்து பத்து ரூவா" சொல்லிவிட்டு இப்போதுதான் என்னை நிமிர்ந்து பார்க்கிறான். அவன் கண்களிலே கவலை தெரிகிறது. வறுமை அந்த பிஞ்சு உடலை நன்றாகவே வறுத்தெடுத்திருக்கிறது.
"அப்பா என்ன வேலை செய்கிறார்?. ”
"அப்பா இல்லை ஷெல்லடிபட்டுச் செத்திட்டார்!” வெறுமை படச் சொல்லிவிட்டு மீண்டும் அவன் விதைகளைப் பொறுக்கி சேர்க்கத் தொடங்கினான்.
அதன் பின் எனக்கும் அங்கு நின்று அவனுடன் கதைக்கத் தைரியம் வரவில்லை. என் மனதுக்குள்ளும் புயல் வீசுகின்ற மாதிரி சரியான போராட்டம். அந்த மனவருத்தத்தோடு சைக்கிள் பெடலில் காலை வைத்து அழுத்தினேன். போள்ஸ் சத்தத்தோடு சைக்கிள் உருளத் தொடங்கியது. போகும் போது நான் போவதை அவன் பார்க்கின்றானா?. என்பதை ஓரக் கண்ணால் கவனித்தேன். நான் இங்கிருப்பதை அவன் விரும்பமாட்டான் என்பதை நன்றாக உணர்ந்துகொண்டேன்.
இவ்வளவுக்கும் எனக்கென்ன நடந்தது என்கிறீர்கள்?. சிறுவயதில் அவன் நிலைதான் எனதும். என் அப்பா இறந்துபோகவும வருத்தக் காற அம்மாவுக்கும் எனக்குமாய் சாப்பாட்டுக்காகவென்று மீன்வாடியில் போய் நான் வேலை செய்யத்தொடங்கினேன். பாணும் மீன்சினைக் கறியும் அங்கே எனக்கு சாப்பிடத் தருவார்கள். உள்ளங் கையில் ஐஸ் கட்டிகளை வைத்து தடியால் அடித்து நொருக்கி மீன் உள்ள பெட்டிகளுக்குள் போடும் போது கொஞ்ச நேரத்தில் கை முழுதும் விறைத்துவிட சம்மாட்டியார் அவசரப்படுத்துவார்.
"கெதிகெதியாய் உடைச்சுப் போடுங்கோப்பா லொறியெல்லே வரப்போகுது, நேரத்துக்கு லொறியை அனுப்பினாத்தான் விடிய கொழும்பு மார்க்கட் பிடிக்கலாம்.”
அவர் அப்படிச் சொல்லிக் கத்திக் கொண்டு நிற்க, குளிரேறி கையிரண்டும்
46

'%-32% நீ.பி.அருளானந்தம் கல்லாய்ப் போகுமட்டும் நான் அங்கே வேலை செய்வேன். அந்த நேரம் என் கண்களில் கண்ணிர் கசிந்துவரும். பின் வேலை முடிந்ததும்தான் கைகளுக்கு உணர்ச்சியே வரும். அந்த நேரம் இரண்டு ரூபாய் சம்பளத்துக்காகத் தான் அந்தப் பாடெல்லாம் நான் பட்டேன்.
வறுமையைப் பற்றி எந்தளவுக்கும் எனக்குக் கவலை வரவில்லை. எனது படிப்பு, அது தொலைந்ததாய் விட்டது அதுதான் என் ஏக்கம். படிக்க வேண்டுமென்று அந்த வயதில் எவ்வளவோ நான் ஆசைப்பட்டேன்.
எங்கள் வீட்டு குடும்ப பாரத்தில் என் ஆசைகளும் எரிந்து கருகிவிட்டன. என்றாலும் நான் வலுவாகக் கஷ்டப்பட்டதன் பலன் பணம் கைக்கு வரத்தொடங்கியது. இதை வைத்துக்கொண்டு மாத்திரம் என்னால் வாழ்வில் மனநிறைவடைய முடியவில்லை. படிக்காதது ஒரு பெரும் இழப்பு. அதுவே வயது சென்றும் இன்னும் எனக்குக் கவலையாய் இருக்கிறது.
கேற்றடியில் நின்று கொண்டு இப்போதெல்லாம் காலையும் மாலையும் அந்த வீதியால் பள்ளிக்கூடம் போய் வரும் பிள்ளைகளைப் பார்க்கிறேன். இந்த வயதிலும் பள்ளிக்கூடம் போக வேண்டும் படிக்க வேண்டும் என்பதே மானசீகமாய் எனக்கிருக்கும் ஆசை.
அந்த ஆசையை நான் ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே அவ்விடத்தில் நிற்கிறேன். என் வாழ்வில் கடந்துபோன பள்ளிப் பருவம் திரும்பி வரப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும்,
நான் வாழ்வில் இழந்த பெரும் செல்வத்தை நினைத்து இப்போதும் ஒவ்வொரு கணமும் வருந்திக்கொண்டேயிருக்கிறேன்.
தினமுரசு (மே.19-25-2002)

Page 36
நீ.பி.அருளானந்தம்
ཁོ་ན་དོན་མ་
ஒரு தேக்க வாழ்விலிருந்து விடுபட்டு வெளியே வந்துவிட்ட மகிழ்ச்சி வவுனியாக் குளக்கட்டில் நடந்துகொண்டி ருக்கையில் எனக்கு வந்தது.
முன்பு இளைஞனாக இருந்த காலத்தில் இந்தக் குளத்ததைப் பார்த்து உவந்து இந்தக் கட்டில் நடப்பது எனக்குப் பொழுது போக்காக இருந்தது. அதற்குப் பிறகு இந்த சச்சரவுகள் நாட்டில் எழுந்து ஆமி, பொலிஸ் என்ற திகிலோடு அலைந்ததால் இந்தப் பக்கமே கால் வைக்கப் பயமாக இருந்தது. இப்போது இந்தச் சூழல் மாறி நிம்மதியான நிலைமையில் நாடு உள்ளதால் இந்த இடத்திற்கு நான் உலாவ வந்தேன். இங்கே எனக்கு முன்னே ஒரு சப்பைமாடு குளக்கட்டில் போய்க் கொண்டிருக்கிறது அந்த மாட்டைப் போலவே குளத்தின் சூழலும் எனது பார்வைக்கு கேவலமான நிலையில் தெரிகிறது.
4
 

Ј ЈТЬлтат வாரியடிக்கிற ஆடிமாதக் காற்றிற்கு முன்பெல்லாம் இந்தக் குளக்கட்டில் நடந்து ஒழுங்காகப் போகமுடியாது சிலவேளை பலத்த காற்றில் தள்ளப்பட்டு குளக்கட்டிலிருந்து பள்ளத்திற்கு இறங்கி ஓடி, கிழே இருக்கிற அந்த இலுப்பை மரத்தைக் கூட நான் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றிருக்கிறேன்.
அது என் சின்ன வயதுக் காலம் "காத்து என்னைத் தள்ளி விழுத்துதம்மா” உரக்கக் கித்திக்கொண்டு என் அம்மாவிற்கு இவ்வாறாகச் சொல்லியிருக்கிறேன். சோனாவாரியடித்துக் குளம் நிரம்பி வான் பாயவும். இந்தக் குளத்துக்கு அம்மா என்னை கூட்டிக்கொணர்டு அடிக்கடி குளிக்கவெண்டு வருவா. உடுப்புகளைச் சவர்க்காரம் போட்டுத் துணி துவைக்கும் கல்லில் சட்டையைக் கும்மித் துவைத்துத்தர அவைகளை வாங்கிக் கொண்டு போய் குளக்கட்டுக்குக் கிழே புற்தரையில் நான் வெயிலில் காயவைப்பேன். பட்டம் விடுமாப்போல் அம்மா கழுவிக் கொடுக்கும் துணிகளைக் கட்டின் மேல் நின்றபடி காற்றில் அலையடிக்க விடுவதுமுண்டு. அங்கு குளிக்க வரும் ஆடைப் பஞ்சமுள்ளவர்கள் அந்த விதமாகப் பிடித்து உடைகளை உடன் காயவிட்டு உடுத்துவதையும் நான் கண்டிருக்கிறேன்.
இந்தக் குளத்தில் துண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள் நடுக் குளத்திற்கு வள்ளத்தில் சென்று மீன் பிடிக்கும் வலைஞர்களையும் நான் காணிபதுண்டு.
எனக்கு நன்னீர் மீனில் 'விரால் கறி மிகப் பிடிக்கும். அந்த மீனில் நடுக்கண்டமாக வெட்டிய துண்டாகப் பார்த்தெடுத்துப் போடவேண்டும் இல்லாவிட்டால் “சோறு சாப்பிடமாட்டேன்” என்று அம்மாவோடு அடம்பிடிப்பேன். இந்தக் குளத்தில் ஜப்பான் மீன் தான் அதிகம். அதனாலே குளம் வான் பாய்ந்தாலும், மற்றவரைப் போல மீன் வேட்டைக்கு நான் இங்கு வருவதில்லை. இருந்தாலும் குளத்தில் தண்ணி நிரம்பி வான்பாய அதைப் பார்க்க நான் வருவேன். பலபேர் இரும்புப் பட்டம் கையில் கொண்டு மீன் பாயவும் குறிப்புப் பார்த்து வெட்டுவார்கள். அதைப் பார்ப்பதில் எனக்கொரு பொழுது போக்கு அங்கே கிடைக்கும். இவைகளெல்லாம் நடந்தது எப்போது?. குளத்தில் தண்ணீர் இருப்பதே தெரியாத வண்ணம் தாமரை இலைகளும், மலர்களும். மொட்டுக்களும் நிறைந்திருந்த அக் காலத்தில் ஆனால் இப்போது:
4)

Page 37
நீ.பி.அருளானந்தம் தண்ணீரில் ஊறியபடி பிளாஸ்டிக் பொருட்கள் ஷொப்பிங் பை, குப்பைகளே அங்கும் இங்குமாக குவிந்து கிடக்கின்றன. அதற்குள் ஒரு காகிதத் துண்டையும் நான் கண்களால் காணவில்லை.
குளம் தூர்ந்து போகிறதோ?. என்று எனக்குள் ஒரு ஐமிச்சம். மடுவங்கரைப்பக்கம் பார்வையை சுழல விடுகிறேன். அந்த நிலங்களிலெல்லாம் புதிதாக வீடுகள், கட்டிடங்கள் எழும்பியிருக்கின்றன. முன்பு அந்த இடம் விளாத்திக் காடாய்க் கிடந்தது. இப்போது மருந்துக்கென்றாலும் ஒரு மரம் அங்கிருப்பதாய்த் தெரியவில்லை.
என் விழிகள் ஏமாற்றத்தில் சோர்ந்து போய்விட்டன. தாழ்ந்துவிட்ட பார்வையில் அந்தச் சாம்பல் குளத்தில் மலர்ந்திருந்த கமல மலர்கள் என்னை மீண்டும் உற்சாகப்படுத்தின. நான் மகிழும் பூவாகினேன்.
கொஞ்சத் துாரம் இன்னும் நடக்கிறேன். எதிரே குளத்துக் கட்டில் குளித்து முடித்துவிட்டு ஒரு பெண் நடந்து வருகின்றாள். சீலையை முறுக்கி இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு முடிக் கற்றையை உதறினாள். தூவானம் போல் என் பக்கமும் தண்ணீர் தெறித்தது.
நான் மறுபக்க ஒரம் நடக்கிறேன். ஆண்கள் குளிக்கும் பக்கம். கல்லின் மேல் ஒரு கிழவர் இருந்து கொண்டு குளிக்கு முன் உடலை உஷ்ணம் ஏற்றிக்கொள்வதற்காக்கும். சுருட்டுப் பிடிக்கிறார். குபு குபு' என்று வெளியே புகையை விடுகிறார். பொச்சுச் சுருட்டை முன் பற்களால் நன்னிவிட்டு அதைத் துப்பினார். பின்பு பத்திரமாக குறைச் சுருட்டை கல்லின் மேல் வைத்து விட்டு, கோவணத்துடன் தண்ணிரிலே இறங்கினார். இப்போது கனைத்துக் காறித்துப்பிக்கொண்டு நீரினுள் உடலை அமுக்கி எழுந்தவாறு முழுகத் தொடங்கினார்.
கொஞ்ச துாரம் போய் நின்று இதையெல்லாம் பார்த்துக் கழித்து விட்டு இன்னும் சிறு நடைநடக்க. கலங்கலில்லாத தண்ணிர்க் கரையில் நின்று கொண்டு ஒரு சிறுவன் தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறான். அப்படி மீன் பிடிப்பதிலே எனக்குக் கொள்ளை ஆசையுண்டு. அந்தக் கட்டிலிருந்து கீழிறங்கி அவனிடம் போகப் படிகள் இல்லை.
'சப்பாத்துக் கால் சறுக்குமோ?’. சிறுவயதிலிருந்தே இதெல்லாம் எனக்குப் பழக்கம். என்றாலும் என் இப்போதைய வயதுக்கு?.
அதையும் நான் பெரிதாக எடுக்க வில்லை. கட்டிலிருந்து கீழே
50

U & B (30) (biol இறங்கிவிட்டேன்.
"தம்பி! நான் பிடித்துத் தரவா?.” தூண்டிலும் கையுமாக நின்ற சிறுவன் என்னை கீழும் மேலுமாக பார்க்கிறான். என் உடை, நடை, பேச்சு அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்றுமே பேசாது தூண்டில் கோலை என்னிடம் கொடுத்து விட்டான். குட்டையான அந்தத் தடி அவன் வயதுக்குச் சரி. எனக்குப் பொருந்தவில்லை. என்றாலும் நான் அதைக் கொண்டு வீசினேன். மிதப்புக் கட்டை கணக்கான துாரத்தில் தண்ணீரின் மேல் விழுந்தது. விட்டு விட்டு மிதப்புக் கட்டை தண்ணீரில் தாழ கண்டி வெளியே ஒரு இழுவை.
"அப்பிடியில்லை. மேல சுண்டி இழுங்கோ.” அவன் சொன்னான். அது மாதிரியே அடுத்த முறை இழுத்துப் போட்டதில் மீனும் துடிதுடித்தபடி வந்து தரையில் விழுந்தது. மீன் வாயில் கொழுவியிருந்த கொக்கியைக் கழற்றி மீனை ஒரு ஷொப்பிங் பையில் அவன் போட்டான். தகர டப்பாவில் இருந்து ஒரு புழுவை எடுத்துக் கொக்கியில் பிடித்து தகுந்த வகையில் செருகிவிட்டான். தண்ணீரில் மீண்டும் அதை வீசி விட்டு மிதப்புக் கட்டையை ஐாக்கிரதையாய் பார்த்துக் கொண்டு அவனுடன் பேச்சுக் கொடுத்தேன்.
“மீனைச் சொதி வைப்பீங்களா?.” "குழம்புதான் வைப்பம்." இதற்குள் தூண்டிலை இழுத்தேன். மீண்டும் ஒரு சிறுமீன். அதையும் பையில் போட்டு விட்டு அவன் புழுவை எடுத்துக் கொக்கியில் செருகினான்.
“ஊசியைக் கண்டா மண் புழு முகத்தைத் திருப்புது.” அவன் அந்தக் கொக்கியின் மேல் கண்ணாய் இருந்து கொண்டு எனக்கு இதைச் சொன்னான். நான் தூண்டிலை வீசிய தடவை யெல்லாம் வீண் போகவில்லை. பொட்டும் பொடியுமாக மீன் அகப்பட்டாலும் என் கைராசியாக்கும், அவனுக்கு மீன் கிடைத்தது. வெயில் சுரீர் என்று உறைத்தது. மண்டை வெடிப்பது போலிருந்தது. என் காற்சட்டைப் பையிலிருந்து இருபது ருபாய்த் தாளை எடுத்து அவன் கையில் கொடுத்தேன். அவன் வாங்கிக் கொண்டு சிரித்தான்.
மீண்டும் குளக்கட்டில் ஏறி நடக்கயிலே. அங்கே முன்பு குளித்துக் கொண்டிருந்த கிழவர் போய்க்கொண்டிருந்தார். அவரும் என்னைப் பார்த்தார்
5

Page 38
3. நீ.பி.அருளானந்தம்
என்னுடன் கதைக்க விரும்புபவர் மாதிரி எனக்குத் தெரிந்தார்.
“இந்தக் குளம் தூர்ந்து போகிற மாதிரி தெரியுது. உள்ளேயும் துப்புரவாக்கி கட்டையும் கொஞ்சம் மண்போட்டு உயர்த்தினால் எப்படி?’ நான் சொல்ல ஒரிருமுறை காறிப் பாதையின் ஒரமாக எச்சிலை துப்பிவிட்டு அவர் சொன்னார்.
"அப்பிடிச் செய்யேலாது. கட்டை உயர்த்தினால் அங்காலைப் பக்க வீடெல்லாம் தண்ணீரில தாழும்.”
அவர் சொல்ல ஒரு முறை அந்தப் பக்கம் பார்த்தேன். அது உண்மைதானென்று நானும் உணர்ந்து கொண்டேன். மீண்டும் அவர் தொடர்ந்தார்.
"சிறுபோகத்துக்குத் தண்ணிர் திறந்து விட்டதால குளத்திலயும் தணிணிர் வத்துது எங்கள மாதிரி வசதியில்லாத ஆட்களுக்குக் குளிக்கிறதுக்கும் கஷ்டம்.” அவர் மெதுவாக நடந்து வந்தார். அவரை விட்டுவிட்டு நான் விரைவாக நடக்கத் தொடங்கினேன். குளத்துத் தொங்கலில் தண்ணிருக்குள் தலைகாட்டுகிற மருத மரத்தடிப் பக்கமாக கொஞ்சம் போலப் பெடிப்பயல்கள் நின்று கொண்டு கும்மாளமிட்டு நீச்சலடிக்கிறார்கள். ஒவ்வொருவரும் இவ்விரண்டு பிளாஸ்டிக் போத்தல்களைச் சிறிய கயிற்றுத் துண்டில் இரு பக்கங்களிலும் கட்டி இடையில் பிடித்துக் கொண்டு கையைக் காலை அடித்துக் தண்ணிரில் நீச்சல் பழகுகிறார்கள்.
அவர்களை தண்ணீருக்குள் தாழ விடாமல் அந்தப் பிளாஸ்ரிக் போத்தலிலுள்ள காற்று மிதக்கவைத்துக் கொண்டிருந்தது.
“எல்லாமே பிளாஸ்டிக் உலகம்.” நான் இதை வேதனையுடன் நினைவுபடுத்திக்கொண்டே குளக்கட்டில் இருந்து இறங்கி, வலப்பக்கமாக போகும் வீதியில் நடக்கத் தொடங்கினேன். நெற்பயிரெல்லாம் அழகாகத் தெரிந்தன. அந்த அழகெல்லாம் சேர்ந்து அவ்விடத்தில் குளிர்வாசனை அடித்தது. இதனால் அந்த நெற்களனிகளைத் தாண்டி வீட்டிற்கு வந்து சேர கணநேரமாகியது.
இரவுச் சாப்பாடு முடிந்ததும் நான் அண்ணாவுக்கு உலாவப் போனது பற்றி ஒன்றும் விடாமல் சொன்னேன். நான் ரசித்த காட்சி என்ற புத்தகம் படித்தது போல் அனைத்தையும் சுவைபடச் சொன்னேன். அசுவாரசியமாக
52

:ణా8x8:: DSK000SS00000SSS0BSKKBDES0DSeS0S000S ரசனை அவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் அண்ணா. குளத்தடி வீடுகளைப் பற்றி கதை வந்ததும் "அங்கிருக்கும் யாராவது தங்கள் காணி வீட்டை விற்றால் வாங்கிவிட வேண்டும்.” என்றார்.
நான் நினைப்பது ஒன்று அவர் நினைப்பது வேறொன்றாக இருந்தது. நான் பேசாது இருந்து விட்டேன் அதற்கு பிறகு கதையை அவர் தான்
ஆரம்பித்தார்.
தனது இரும்புக்கடை வியாபாரம், பழைய இரும்புகளை கொள்வனவு செய்து விற்பதில் கிடைக்கின்ற இலாபம் என இரும்புக் கதைகளாகவே விரிந்தது அவரது கதை. அவருடைய ரசனையில் அவர் உருகிக்கொண்டிருந்தார். அவருடைய இரும்பு உலகத்தில் நுளையமுடியாத ஒருவனாக நான் நின்று தவித்துக் கொண்டிருந்தேன். என் நிலையை அவர் அறியார் என்று எனக்கு நிறையவே விளங்கிற்று. என்றாலும் அவர் சொல்வதையெல்லாம் கேட்பது போல் பாசாங்கு செய்து கோழித் தூக்கம் போட்டேன்.
தினமுரசு (செப்15-212002)
53

Page 39
விளைச்சலைக் கொடுப்பதில்லை ஒரு போகத்துக்கு கதிர் நிறைய நெல் மணிகள் வந்து பொலிந்தால் இன்னொரு போகத்துக்கு விளைச்சல் சோர்ந்து தான் இருக்கும். பள்ளத்திலிருந்து மேட்டிலேறி மேட்டிலிருந்து பள்ளத்திலிறங்கும் பாதை மாதிரித்தான் ஏற்ற இறக்கம் உழுதுண்டு வாழும் இந்தத் தொழிலிலும் இருக்கு
 

-ா லட்சியவாதி இந்தப் போகம் ஐந்து ஏக்கரில் நெல் விதைத்து ஒரு குறுணியும் சண்முகத்துக்கு விளைச்சல் வரவில்லை. அதனாலே ஏமாற்றமடைந்தார்.
"என்ரை நகையும் போச்சு. எல்லாம் போச்சு வயல் விதைக்கிறதெனண்டு சொல்லி வீட்டில கிடக்கிற குண்டுமனியையும் விடாம வழிச்சுத் துடைச்சுக் கொண்டு போயிட்டியள். எல்லாத்தையும் அந்த மண்ணை நம்பிப் போட்டுப் பரிநாசமாக்கிப் பேரட்டியள்."
அன்று காலையில் நித்திரை விட்டெழுந்ததும் பாயில் இருந்து கொண்டு இப்படி அரற்றினாள் அவருடைய மனைவி கமலம்.
"உப்பிடியேன் சொல்லுறாய். ஞாயமே இது மண்ணைத் திட்டாத. இந்த முறையில்லாட்டி அடுத்த முறையெண்டாலும் கட்டாயம் விளையும்." அவர் விசுவாசித்தார்.
"உது ஒரு கதையெண்டு எப்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறியள். பிள்ளை மாலதிக்கு மளமளவெண்டு வயசு போய்க் கொண்டிருக்கு. அது எப்பனும் தெரியுதே உங்களுக்கு சனம் இடம் பெயர்ந்து இங்கின வந்திருந்தாப் பிறகு உப்பிடி நிலங்களையெல்லாம் வீடு கட்டக் கேட்கிறதுகளுக்குக் குடுத்துக் காசாக்கிக் கொண்டிருக்குதுகள். நீங்கள் இதையெல்லாம் கட்டிப் பிடிச்சுக் கொண்டு ஏன் வைச்சுக் கொண்டிருக்கிறியள். அவையள் மாதிரி நீங்களும் வித்துப் போட்டு இங்க வீட்டில ஆக வேண்டிய அலுவல்களைப் பார்க்கலாம்தானே?"
மனைவி இப்படிச் சொல்லவும் அவர் எரிச்சலடைந்தார். "என்ன சொல்லுகிறாய் நீ? கமத்தை விட்டால் எனக்கென்ன வேலை தெரியும்? அருமந்த வயல் காணியளை வித்துப் போட்டு இந்தத் தொழிலை விட்டுப்போய் பலசரக்குக் கடையில பொட்டலம் மடிக்கச் சொல்லுறியோ?” ".அப்படியேன் நீங்க போக வேணும்? இழவு பிடிச்ச உந்த ஒரு வேலையும் வேணாமம், பாங்கில காசைப் போட்டா வட்டி விழும் மாசா மாசம் அந்த வட்டிக் காசையெடுத்து ராசா மாதிரி கதிரையில இருந்து காலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம்.” அதுதான் அவளுக்கு இப்போது விருப்பம. எனவே அவருக்கும் ஆலோசனை சொன்னாள்
"வாயை மூடு கமலம் இந்த விஷயத்தில நீ சொல்லுறதை நான் கேட்கத் தயாரில்லை. ஆர் இதுக்கெண்டு கச்சை கட்டிக்கொண்டு வந்து நின்றாலும், நான் காணியளை விக்கமாட்டன். நான் சாகுமட்டும் உதுகள்
55

Page 40
2-m...>(‹‹‹ዲ நீ.பி.அருளானந்தம்
நடவாது கண்டியோ.” உறைப்பாகச் சொல்லிவிட்டு இருந்து விட்டார், என்றாலும் அவரது மனதுக்குள் பூகம்பம் வெடித்துக் கொண்டிருந்தது. பூப்பெய்திய பூவொன்றை, வீட்டில் வைத்துக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறாய். என்ற அவருடைய இயலாத் தன்மையை மனச்சாட்சியும் படம் பிடித்துக் காட்டி நெஞ்சை வருத்தியது.
மகளுடைய தாமரை முகத்தில் இதையொட்டிய வேதனை மறைந்து கிடப்பதையும் அவர் கணிடுகொள்ளாமல் இல்லை. அதனாலே, இவற்றுக்கெல் லாமாக ஒரு நல்ல வழியை எங்கும் அவர் தேடிக்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாளும் மாலையில் இந்து இளைஞர் சங்கத்தாலே சமய கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதுவதற்கென அமைந்திருந்த மண்டபத்துக்குப் போய் அங்கே வருகின்ற சிறுவர்களுக்கு யோகாசன அப்பியாசங்களை இலவசமாகச் சொல்லிக் கொடுத்து வருவது அவரது பொழுதுபோக்கு என்றும் போல் அன்றும் அந்த நற்காரியத்தைச் செய்து விட்டு வரும் வழியில் வாசிகசாலைக்குள் புகுந்து பத்திரிகைகளின் பக்கங்களைப் புரட்டினார்.
தேவை. என்று போடப்பட்டிருந்த விளம்பரப் பகுதியிலே அவரது பார்வை நிலைத்தது. மாற்று சிறுநீரக சிகிச்சைக்காக சிறுநீரகம் கொடுத்து உதவக்கூடிய மனிதாபிமானிகளின் உதவியை நாடுகின்ற நோயாளி ஒருவர் தனது இரத்த இனத்தையும் தெரிவித்துத் தகுந்த சன்மானம் கொடுப்பதாகவும் தொலைபேசி எண்ணுடன் அந்த விளம்பரத்தில் அறிவித்திருந்தார்.
அதைப் பார்த்ததும் அப்படியே பத்திரிகையை ஒழுங்குபட நிரைப்படுத்தி வைத்து விட்டு அவர் கடை வீதியில் உள்ள புத்தகக் கடைக்குப் போனார். அங்கே அதே பத்திரிகையை காசைக் கொடுத்து வாங்கினார். பின்பு வீட்டுக்குச் சென்று இரவுச் சாப்பாடு சாப்பிடும் நேரம் வரும் மட்டும் அந்த விளம்பரத்திலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். கன நேரமாக அதையே ஆறஅமர யோசித்துக் கொண்டிருந்துவிட்டு ஒருவாறாக தீர்க்கமான அந்த முடிவை அவர் மனதில் எடுத்தார்.
*கமலம்! நான் கொழும்புக்கொருக்கால் போய் வரவேணும்.”
"கொழும்பில உங்களுக்கு என்ன வேலையிருக்கு அங்க போய் என்ன
56

:
:&: லட்சியவாதி செய்யப் போறியள்?” கமலம் விளக்கம் கேட்டாள். "சம்பந்த அலுவலாய்ப் போறன். நல்ல ஒரு இடம் இருக்கு. அவையளை வெளியால கொஞ்சம் விசாரிச்சுப் பார்ப்பமெண்டு பார்க்கிறன், சரி வந்துதெண்டால் மாலதிக்கு செய்யலாம் கண்டியோ.”
கமலத்திற்கு இந்தச் செய்தி நல்ல மகிழ்ச்சிதான். அங்கே கதைப்புத்தகமும் கையுமாக இருந்த மாலதிக்கும் கல்யாணம் என்ற அந்த அறிவிப்பு புல்லாங்குழலில் கேட்ட இனிய நாதமாக இருந்தது. என்றாலும் கமலம் சும்மா இருக்காது அவரிடம் கேள்விக் கணை தொடுத்தாள்.
"கலியாணம் எண்டு வெளிக்கிட்டிட்டியளி. அதை நடத்துறதுக்கு நகை நட்டுக்கள் தொகையள் எண் டெல்லாம் குடுக்கிறத்துக்கு வைச்சிருக்கிறியளே?." அவள் அப்படிக் கேட்டதுக் கெல்லாம் உரிய காரணம் இருந்தது. பின்னே என்ன? இங்கே வீட்டுச் செலவுக்குக் கூடத் திண்டாட்டம், அப்படியெல்லாம் கிடக்க இந்தப் பெரிய காரியம் எப்படி ஆகும்.?
அதை நினைத்தே ஐமிச்சப்பட்டாள். “எனக்குத் தெரியும். எப்பவும் நான் எதைச் சொன்னாலும் நீ ஒரு நோவா நொட்டைதான் சொல்லிக் கொண்டிருப்பாய் இப்ப நான் போறது காசையும் தேடிக் கொண்டு எல்லா அலுவல்களையும் முடிச்சிட்டு வரத்தான். விளங்குதே.?" கதையை அத்தோடு அவர் நிறுத்தினார். அவளும் சும்மா கண்டபடி கதைக்காது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டாள்.
இவரைப் பார்த்தால் நாற்பத்தைந்து வயதென்று யாருமே சொல்ல மாட்டார்கள். யோகாசனப் பயிற்சிகள் அந்தளவுக்கு அவரது வயதின் அரைவாசியைக் குறைத்து இளமை அழகை வாரிக் கொடுத்திருந்தது.
ஒரு நோயும் இன்றி வைரம் பாய்ந்த தேகக்கட்டுடனும் மலர்ந்த முகத்துடனும் நின்ற இவரை சிறுநீரக நோயாளி நிமிர்ந்து பார்த்தார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குச் சம்மதம் என்றவரின் கைக்கு உடற் பரிசோதனைகள் முடிந்ததும் பண நோட்டுகள் கட்டுக் கணக்கில் கொடுக்கப்பட்டன. தன் ஒரு பக்க சிறுநீரகத்தை வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மூலமாக அளித்து விட்டு மூன்று மாதம் கழித்து அந்தத் துயரத்தை யெல்லாம் தூசிபோல் உதறிவிட்டு வீட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார்
பெண்களுக்கு பணம், நகை, காணி, வீடு இருந்தால்தான்.திருமண
57

Page 41
நீ.பி.அருளானந்தம்
வாழ்க்கை என்ற ஊழ், தமிழ்ச் சமுகத்தில் இன்றும் இருந்து வருகிறது. ஏனவே முதலில் நகைகளை வாங்கி அவர் மகளைச் சோடித்தார். பிறகு மீதியை வங்கியில் போட்டார்.
"இந்தளவுக் கெல்லாம் செய்ய ஏதுங்கோ காசு? ம்ம்ம்ம்.” மலைத்துப் போய் நின்றாள் கமலம்
“எல்லாம் வரவேண்டிய காலத்தில் வரும். போக வேண்டிய நேரம் போக வேண்டியது போயிடும்.”
அவருடைய கதையின் தத்துவப் பொருளைக் கமலத்தால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படியே சில நாட்கள் நகர்ந்தன. கையில் அவரிடம் இருப்பு இருந்ததால் மகளுக்கு நல்ல இடத்துச் சம்மந்தம் ஒன்று தேடி வந்தது. அது முற்றாகி விட, தடல் புடலாக மகளுக்குக் கல்யாணத்தை அவர் நடத்தி முடித்தார். தான் செய்ய வேண்டிய ஒரு பெரிய கடமையை நிறைவேற்றினார்.
இப்போதெல்லாம். மொத்தமான மட்டை போட்ட அந்தப் புத்தகத்தை
விரித்துப் படித்துக் கொண்டிருந்தவாறே அவர் பொழுது போகிறது. அது பகவத் கீதை என்ற புத்தகம். பூரீ கிருஷ்ண பகவான் பாரத யுத்தத்தில் திருத்தேர் தட்டிலிருந்து அர்ச்சுனனுக்கு உபதேசித்த ஞான நூல் அது. கடமையைச் செய்’ என்ற உயரிய தத்துவத்தை பகவத் கீதை கூறுகிறது. தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து. அவளுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுத்ததில் பெரிய தொரு கடமை நிறை வேறிவிட்டதாக அவர் நினைக்கிறார்.
அன்று இரவு தொலைக்காட்சியில் இந்த மாரியிலே நல்ல மழை பெய்யும் என்ற செய்தியைக் கேட்டு அவருடைய உள்ளம் உவகையடைந்தது. மாலில் அடுக்கியிருந்த விதை நெல் மூடைகளைப் பார்த்தார். இந்தப் போகமாவது நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும். என்று கடவுளை நினைத்துக் கை கூப்பினார்.
நம்பிக்கைதான் விவசாயத் தொழில் மண்ணை நம்பித் தான் அவருடைய வாழ்வு இருக்கிறது. தன்னுடைய காணியை விற்கவோ இருக்கின்ற வீட்டை விட்டு எங்கேயும் வெளிக்கிட்டுப் போகவோ என்றும் இடமளிப்பதில்லை. என்ற இந்த லட்சியத்தை மனதிலே வேரூன்ற வைத்துக்
S8

லட்சியவாதி கொண்டுதான் அவர் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
ைெத இழந்தாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் சோறு போடும் அந்த வயற் காணிகளை அவர் விற்க விரும்பவில்லை தொடர்ந்து அந்த வயற் காணியையே நம்பிப் பயிர் செய்து வருகிறார். இப்படி லட்சியமுடைய வறிய விவசாயியான அவரை யார் தான் கண்டு கொண்டு பெருமைப்படுத்தப் போகின்றார்கள்?
இவைகளையெல்லாம் அவர் எதிர்பார்த்து வாழவில்லை. தான் செய்கின்ற அந்த உழவுத் தொழிலிலே ஒரு ஆத்ம திருப்தி அவருக்கு இருக்கிறது. மன நிம்மதியாக வாழ்நாளைக் கழித்திட அது போதும் என்பதே அவரது எண்ணம்.
தினமுரசு (ஆக.04-10.2002)
59

Page 42
ர்ெந்தத்தில்.) Vsyp'ş292,6?6o1 VJô2995825°
சிவக்காலை வாசலில் நீள நெடுக நிழல் பரப்பி நின்ற அந்த வாகை
மரத்தின் கீழ் இருக்கும் கல்லிலே அவன் குந்திக்கொண்டிருக்கிறான். நிலத்தின் அடியில் இருந்து வெளியே தலைகாட்டிக்கொண்டிருக்கும் கல் அது. யாராலும் இலகுவில் பெயர்த்தெடுக்க முடியாததால் அதிலேயே அந்தக்கல் இருக்கிறது.அவனும் அதன் மேலேதான் சதா குந்திக்கொண்டிருக்கிறான். அந்த இடத்தை விட்டு எங்குமே செல்லாது அங்கேயே நிரந்தரமாக வாழ்பவன் போல இப்போது அவ்விடத்தில் அவன் சீவிக்கிறான்.
இந்த உலக வாழ்க்கையில் ஏதோ ஒரு வேடத்தை தனக்குத் தனக்கென்று பிழைப்புக்காகத் தரித்துக் கொண்டே தான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவனிடமுள்ளது பிச்சைக்கார வேடம்.
அழுக்குப் படிந்துள்ள அவனது உடல் மை இருட்டால் மெழுகி விட்டாற்போல் தெரிகிறது. அவனது குழிந்தாழ்ந்த கண்களில் பீளை காய்ந்து இமைகள் ஒட்டிப்போயுள்ளன. இடுப்பில் அவன் உடுத்தியிருக்கும் சாரம்
f:Ո
 
 
 

சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள எண்ணெய்ப் பிசானுமாய் அசிங்கமாகக் கிடக்கிறது.
பக்கத்தில் போனால் அந்தக் கழுவாத உடம்பின் கவிச்சை எப்படி மூக்கிலடிக்கும் என்கிறதாய் அவனைப் பார்ப்பவர்களுக்குப்புரியும். இது எல்லாம். அவன் தனக்குத்தானே வலிந்து வரவழைத்துக்கொண்ட வேடம். எவ்வளவு அருவரும் புடையவனாக அவன் இருந்தாலும் அவளொருத்தி அவனுக்குப்பக்கத்திலேயே ஒணடிக்கொண்டிருக்கிறாள். புண் பிசுக்குடனான அவனோடு ஒனன்டிக்கொண்டிருக்கும் அவள் எவ்வித வெறுப்பையும் முகத்தில் வெளிக்காட்டுவதில்லை.
"அவள் இவன்ரை பெண்சாதியாக்கும் என்ன?” "என்ன கேள்வியிது? உதுகளைப்பற்றி எனக்கென்ன தெரியும்?" அந்த நடை பாதை வழியாக கால்நடையாக வந்து கொண்டிருந்தவர்கள் அவ்விடத்திற்கு வந்ததும் தமக்குள் கதைத்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் நண்பர்கள். நிறைய வயதை விழுங்கிவிட்டு இளமைக் கலகலப்புடன் தோற்றம் தருகிறவர்கள். நாளாந்தம் பிற்பகல் நாலு மணிக்கு ஒரு நடை இந்த வழியாக நடந்து போய்த்திரும்பி வீட்டிலே போய் அடைந்து விடுபவர்கள்.
அவர்களில் ஒருவருக்கு பிச்சைக்காரர்கள் மீது ஒரு கண் என்னதான் அப்படி ஒரு புதினமுண்டு?
"என்ன சுதந்திரமப்பா என்ன மாதிரி சந்தோஷமான வாழ்க்கையப்பா எனக்கு இப்படியாயில்லையே. ஒரு சதத்துக்கும் என்னை என்ர வீட்டில கணக்கெடுக்குதுகளேயில்லை. வீட்டிலேயிருக்கிற எல்லாரினிட முகத்திலயும் வெறுப்பு. நானெடுக்கிற பென்சன் காசுக்குத்தான் வீட்டில மதிப்பு"
அவர் சொல்லி முடிய, "நடந்து கொண்டு கதைப்பமே" என்று அந்த இடத்திலிருந்து அவரை கிளப்பப் பார்த்தார் மற்றவர்.
இல்லை. இங்கினையும் கொஞ்சநேரத்துக்கு நிற்பம் என்று சொல்லி அவரை நிறுத்தினார். மற்றவர்.
இன்னமும் ஆய்வு. அங்கேயே பார்த்துக்கொண்டு மை ஒற்றும் காகிதம் போல் அவர் உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்.
இந்த வேளை நீளப் போக்கான வெள்ளை நிறக் கார் ஒன்று நடைபாதையின் அருகே காற்றைக்கிழித்துக்கொண்டு வந்து சத்தமில்லாமல் நின்றது.
f

Page 43
XXxxxxxxxXXXXXXXXXXXXXXXXჯXXXXXXXXXXXXX நீ.பி.அருளானந்தம் முன் இருக்கையில் இருந்து கதவைத்திறந்து கொண்டு வெளியே இறங்கியவர் காரின் பின்பக்கக் கதவைப் போய்த் திறந்தார். உள்ளே இருந்து குட்டி யானை மாதிரி ஒரு பெடியன் வெளியே இறங்கினான். ஒரு கையிலே சிறிய கூடை மறு கையிலே ஒரு அளவான பார்சல்.
கபறக்கொயா மாதிரி உடலை அசைத்து நடந்து கொண்டு கையில் உள்ளதைக் கொண்டு போய் அந்தக் கல்லின் மேல் கல்லைப்போல் அசையாதிருக்கும் அந்த மனிதனிடம் கொடுத்தான்.
மிகவும் பவ்வியமான முறையில் அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் சிரிக்கவேயில்லை. நிச்சயம் இப்படியான வேளையிலே அவன் சிரிக்கவே மாட்டான். இந்த இடத்தில் அப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது என்று அவனுக்கு நன்றாகத்தெரியும். இது சவக்காலை. இறந்த மனிதனின் ஆவி தீன் ஆசைகொண்டு அலைவுறும்போது அது சாந்தி பெறவென்று சோறு கறி ஆக்கிக்கொண்டு வந்து பிச்சையிட வருபவர்களே இவ்விடத்திற்க்கு வருவார்கள்.
செத்த ஆவி வந்து இவனைப்போல் பிச்சைக்காரரிலும் புகுந்து அவனின் வடிவத்தில் இருந்து கொண்டு கொடுப்பதையெல்லாம் உண்ணும் என்கிற நம்பிக்கையும் வந்தவர்களிடம் இருக்கலாம்.
சின்னப்பெடியனும் அந்தப் பெரிய மனிதரும் அப்படியானவர்களாகவே அவனது பார்வையில் தெரிந்தனர். அதற்காக அவர்களுக்கு முன்னால் இரண்டு கவளம் சோற்றைக் குழைத்து அவன் சாப்பிட வேண்டும். இதற்காக அப்படி ஒரு ஆவலாக அவர்களுக்குக் காட்டிக்கொண்டு அவன் சாப்பிட்டான். அவர்கள் இருவரும் அதைப்பார்த்துக்கொண்டு நிம்மதியாகப்பெருமூச்சு விட்டார்கள். திரும்பி வந்து காரில் ஏறினார்கள், போய்விட்டார்கள். அவர்கள் போனதும் மிகுதிச் சோற்றுப் பார்சலைத் தூக்கி அவன் அவளிடம் கொடுத்தான். அவள் அதை முன்பு இருந்ததுமாதிரி காகிதத்தால் சுற்றி எடுத்து அந்தக் கல்லுக் கருகில் ராத் திரிச் சாப்பாட்டிற்காக வைத்துக்கொண்டாள். மற்றப்பார்சலை அவன் கையிலெடுத்தான். சுற்றிக்கிடந்த கடதாசிகளை ஒவ்வொன்றாக விரித்து விலத்தினான். அழகிய மூடியுடன் கூடிய போத்தலின் உள்ளே இரத்தச் சிகப்பு வர்ணத்தில் பிற நாட்டுக்குடிவகை தெரிந்தது. அத்துடன் போத்தலின் அணைப்பில் கிடந்த சிகரெட் பெட்டியும் விலகிக் கீழே நிலத்தில் விழுந்தது. ஆசாமியின் வாயினிலே இப்போது புகை புகையாகப் போய்க் கொண்டிருந்தது. போத்தலில் 62

ல: 20 சொர்க்கத்தில் முடிவான பந்தங்களி இருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாக வாயிலும் ஊற்றத்தொடங்கிவிட்டான். "நான் சொல்லுகிறதெல்லாமே சரியா செய்யணுாண்டி” மகாராசன் இப்போது தான் அந்த மனுஷியுடன் உஷாராய்ப் பேச வாய் திறந்தான்.
"நீங்க செல்லிப்புட்டா மறுவாத்தே ஏதாச்சும் சொல்லுறவளா நானு. ஒடனே எல்லாத்தியும் செய்யிறவ தானே நானு.”
“எல்லாத்தியும் நீ சொல்லுவேடி ஆனா செய்யமாட்டேடி. தெரித்திரம்.தெரித்திரம்.எங்கிட்டிருந்துதான் இங்கினையாயேன் கூடயா வந்து சேந்தியோ யெழுவு யெழுவு ஏன்டி அங்க பாருடி பாக்கலியோடி அங்கனயா நீ.தோ. ஓம் புள்ள றோட்டுக்குப் போயிடப்புறனா. வெரசா போயி தூக்குடி” அவன் அவளை விரட்டினான்.
அவன் அப்படிச் சத்தம் போட அவர்களும் அக்கறையுடன் அங்கே பார்க்கிறார்கள் எல்லாத் துTசிகளையும் உள்வாங்கிக் கொணி டு துணித் தொட்டில் ஒன்று அந்தப் பக்கமாக காற்றுக்கு அசைந் தாடிக்கொண்டிருந்தது. கீழே நடைபாதையில் எச்சில் துப்பிக்கிடந்த இடத்தில் முட்டிதேய அந்தப் பிள்ளை தவழ்ந்து கொணி டிருந்தது. பிள்ளைக்குக்கிட்டவாய்ப்போய் குனிந்து குனிந்து குழந்தையை அவள் கொஞ்சிக்கொண்டிருந்தாள். பின்பு இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு அவனிடமாகப் போனாள்.
“இப்படியெல்லாம் சீவிக்க கொடுப்பினை வேணும். உலைக்கு அரிசியில்லை எண்ட பஞ்சமா? என்ன மாதிரி இருந்து கொண்டு செல்லச் சோறு சாப்பிடுறான். சீச்சீ. எங்கட வாழ்க்கை என்ன வாழ்க்கை? எல்லாம் தங்க முலாப் பூச்சு. அந்தப் பக்கம் பார்த்தபடியே அங்குள்ள நடவடிக்கையெல்லாம் பார்வையால் மாந்திக்கொண்டு அவர் ஏக்கத்தோடு சொன்னார்.
"இங்கபாரும். இதுவும் தெரியுதுதானே உமக்கும். அங்க அவன் நல்லாப் போட்டுக்கொண்டு இருக்கிறான் காணும். இப்படியே நாங்க அவனையும் மனுஷியையும் பார்த்துக்கொண்டிருந்தா வேற விதமா யோசிச்சு வெறியில எங்களையும் பேசி சந்தி சிரிக்க வைச்சிடுவான். வாரும் காணும் போவம்.” , -
இருவருமாக அந்த இடத்தில் இருந்து நடையைக்கட்டினார்கள். இதையெல்லாம் அந்தப் பிச்சைக்காரன் கவனிக்கவே இல்லை. இதிலெல்லாம் அவனுக்கு அக்கறை இல்லை. சவக்காலை முன் பிச்சைக்கென்று இருப்பதில்
63

Page 44
b., * .8:'•“**ፉፉጳ..::.❖.‹:Xረ:: ,❖‹‹❖mm - • • 8 -- ܀ - -܆::४:.’8 நீ.பி.அருளானந்தம் அவனுக்கு ஒரு தொந்தரவுமேயில்லை. எவராவது வந்து நீ குறளா, முடமா, கூனா, குருடா எங்கேயாவது போய் வேலை செய் என்று இங்கே அவனைக்
கூறமாட்டார்கள். அப்படியாகச் சொல்ல யாரும் அஞ்சுவார்கள்.
ஆவிகள் எச்சில் படுத்தியதை அவன் சாப்பிடுகிறான். இவன்தான் அப்படி இங்கே இருக்கிறான். அநேகமான பிச்சைக்காரர்கள் பிச்சைக்கென்று இங்கே வருவதில்லை.செத்தவர்களின் ஆவி எச்சில்படுத்தியதைத்தின்றால் தங்களின் உடம்பில் ஒட்டாது வருத்தமும் வரும் என்கிற பயம் அவர்களுக்கு எனவே அவனுக்கு இங்கே தொழிலில் எதுவித போட்டியும் இல்லை. பொறாமை இல்லை. தனிக்காட்டு ராஜாவாய் அந்த இடத்தை அரசோச்சிக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு அவன் அதிலே இருக்கிறான்.
பொழுதுபட்டது.கடைகளெல்லாம் கதவுகள் சாத்து மட்டும் அவன் காத்துக் கிடந்தான்.வழமையாகப் போய்ப்படுக்கின்ற அந்த தாழ்வாரத்துக்குக் கீழே இருக்கும் சிமிண்டு நிலத்தில் அவள் படுக்கையை விரித்தாள். போத்தலில் கிடந்த மிச்சத்தையெல்லாம் கொஞ்சமும் வைக்காது அவன் வாயில் ஊற்றினான். அவள் பின்னேரமாய்க் கிடைத்த தித்திப்பு பணியார வகைகளையெல்லாம் ஒன்றும் விடாமல் தின்று தீர்த்தாள். பின்பு பிள்ளைக்குப்பால் கொடுத்தாள். பாலைக் குடித்துக்கொண்டே பிள்ளை அசதியில் தூங்கிவிட்டது. பக்கத்திலே பிள்ளையை படுக்க வைத்து நுளம்பு கடிக்காமலிருக்க போர்வையால் போர்த்தினாள். இயற்கையளித்த இருள் மட்டுமே இந்த ஏழைகளின் தாம்பத்திய வாழ்வுக்கு வாய்ப்பு என்பதாக எடுத்துக்கொண்டு உடலுக்கு உடலை அவர்கள் தீனியாக்கினர்.
பொழுது விடிந்தது. எல்லோருமே தமது கடமைகளைச் செய்யத் தொடங்கும்போது அவனும் தான் செய்வேண்டிய அலுவல்களை செய்வதற்குத் தொடங்கினான். சரியான நேரம் வர அந்தக்கல்லிலே போய் மீண்டும் உட்கார்ந்து கொண்டான். கூடவே அவளும் தான் போய் நின்றுகொண்டு குழந்தைக்குப் பராக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். இது எல்லாம் பல நாட்களாக இவர்களுக்கு ஒரு நாளாந்த நடவடிக்கை. இங்கே இவர்களை நின்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சென்றவர்களுக்கும் இதாலே நடந்து போய் வருவதும் நாளாந்த நடவடிக்கையாக இருந்தது.
நடப்பவர்கள் அன்றும் அந்த இடத்தாலே வழமைபோல நடந்து வரும்போது தூர திருஷ்டியுடைய கழுகின் கண்போல பார்வையுடைய அவர் அருகில் நடந்துகொண்டு வருகின்ற தனது நண்பனின் வயிற்றில்
64

சொர்க்கத்தில் முடிவான பந்தங்களt முழங்கையால் லேசாக இடித்துவிட்டு, அங்கே பார்த்தீரே புதினத்தை என்று ஆரம்பித்தார். -
“என்ன புதினம்’ என்று கேட்டவாறு மற்றவர் விழிகளை அகலத்திறந்தார்.
"முன்னம் இருந்த அந்தப் பழைய பொம்பிளையை இப்ப காணேல்ல. சவக் காலைப் பிச்சைக்காரனுக்குப் பக்கத்த புதுசா வேற ஒருத்தி இருக்கிறாளப்பா.”
அரக்கப்பரக்க இப்போது இருவரும் அவ்விடத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்கள். துணித்தொட்டிலுமில்லை. அந்தப் பிள்ளையுமில்லை. புதிதாக அங்கு வந்திருப்பவள். யாரவள்.? இருவரும் புருவத்தை நன்றாக வளைத்துக்கொண்டார்கள். அவளுக்கு அங்கே பேச்சு விழுகிறது. அந்தப்பிச்சைக்காரன் அவளுக்குச் சொல்லுகிறான்.
“நான் சொல்றன்ல. அதை நீகேக்கணும். அதையெல்லாமே புரிஞ்சுக்கிட்டு நீ நடக்கணும். இல்லேண்ணா எனக்கிங்கினையா சரிப்படாது. இதையெல்லாம் நீ தெரிஞ்சுக் க. கவனிச்சு நடந்துக்க. எனக்கு ஒத்துவரலேண்ணா ஒன்னையும் அவமாதிரியே விரட்டிப்புடுவேன். ஜாக்கிரத்ை.”
“போச்சுடா” என்றார் இவர்.
"நாங்கள் பத்துப் பொருத்தமும் பார்த்து மந்திரம் ஓதி அக்கினி வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, எவ்வளவோ கஷ்டப்பட்டு கட்டுப்பாடுகளுக்கு அமைச்சலாய் நடந்து கலியாணத்தைச் செய்யிறம். விவாகரத்துப் பெறுகிறதெண்டாலும் கிட்டத்தட்ட ரெண்டுவருசம் மூண்டு வருஷமெணிடு பிடிக்குது. இவனுக்கு நினைச் சவுடன கலியாணம் நினைச்சவுடன விவாகரத்து. என்ன இழவோ இந்தச் சீவியம்” என்று இப்போது அலுத்துக்கொள்ளத் தொடங்கினார் பென்சன்காரர்.
“முன்னமெல்லாம் ஆகா! ஓகோ வெண்டு புளுகியடிச்சீர். அவனை மாதிரி எனக்கில்லையெண்டு கவலைப்பட்டீர். இப்ப ஏன் காணும் உமக்கு அவனில அலுப்புத்தட்டுது” என்றார் மற்றவர்.
"பிச்சைக்காரனெண்டாலும் அவன்ர குடும்ப வாழ்க்கையைத்தான் நான் பார்த்தன். இப்படியாய் ஒரு அரியண்டமான சீவியம் அவனுக்கு இருக்கெண்டு எனக்குத் தெரியாது. இப்படித்தான் வெளியால இருக்கிற எங்கடதுகளில
65

Page 45
  

Page 46
<:":"",":": : : : * ܸ ܸ܀ - நத்தார் மழை விவேகத்தில் இனிமேலும் ஆற்ற வேண்டிய காரியங்களில் முனைப்புடன் பிரான்சிஸ் இப்போது செயல்பட ஆரம்பித்திருந்தார்.
அவருக்கு ரெண்டு பெடிப்பிள்ளைகள், ரெண்டும் ரெட்டைப் பிள்ளைகள் பத்து வயதாய் இருக்கும். அவர்களை இங்கு வந்ததும் உடனடியாக பள்ளியில் ஒழுங்குடன் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்.
இடம் பெயர்ந்திருந்த வேளையில் ஊண் உறக்கமில்லாமல் பல நாட்கள் வீட்டையும் தோட்டக் காணியையும் நினைந்து, நினைந்து உருகியவர் அவர். இப்போது வீடுவாசலில் குடும்பமாக வந்திருந்ததும் மனோற்சாகம் பெற்று ஒரு இளங்காளை போல மாறி துடிப்புடன் அவர் செயல் படத் தொடங்கினார்.
வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு தோட்டக்காணியும் அவருக்கு சொந்தமாக இருந்தது. “இப்போதைக்கு இந்தக் காணியை கொத்திப் பண்படுத்தி பயிர்செய்வம்” என்று மனதுக்குள்ளாக கணக்குப்போட்டு நம்பிக்கையுடன் அன்று காலையில் அந்தக் காணியில் முதன் முதலாக அவர் கால்வைத்தார்.
S S S S S S S S S S S S SS SS SS புசுபுசுவென்று என்னவாய் இந்த மண்.
தன் பிறந்த இடத்து மண்ணின் குணத்தை நினைக்கவும் அவருக்குப் பெருமையாய் இருந்தது. மண்தரை ஈரச் சதசதப்புடன் இருந்தால் நாளையோ அல்லது அடுத்த நாளிலோ வேலையாட்களை அழைப்பித்து தரையை கொத்திவிட வேண்டும். இந்தக் காணியிலே தோட்டம் செய்து இழந்த பொருட்களையெல்லாம் திரும்பவும் வாங்கிவிட வேண்டும்.
பிரான்சிசுக்கு தன் காணிகள் எல்லாவற்றிலுமே பரவலாக பயிர் செய்ய பேரவா. ஆனாலும், அதிலெல்லாம் போய் இப்போது நம்பிக்கையுடன் கால்வைக்க சாத்தியமில்லை என்பதால் இந்த அளவோடு காணும் என்பதாய் அவர் நிறுத்திவிட்டிருந்தார். என்றாலும் அந்தக் காணிகளில் முன்பு எடுத்த வருப்படியை கிஞ்சித்தும் அவரால் மறக்க முடியவில்லை. அந்தக் காணியிலென்றால் அப்படியொரு விளைச்சல் அந்தக் காலத்திலெல்லாம் இருந்தது. முதன் முதலில் இந்த ஊரிலே கொண்டுவந்து திராட்சை நாட்டியவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். இந்த ஊரில் திராட்சை பயிரிடுவதற்கு அவர்தான் முன்னோடி அவர் தனக்கு மட்டும் என்று வைத்து திராட்சை
68

8883 Şr::::::::::::::8:; ·:·:·:· · ·.:), 38., 83.xx:::::::::::::::x::: ::: ❖.~ ̇.... • ̇ X°........... “ .• •ፉ: ' , நீ.பி.அருளானந்தம் சாகுபடி செய்யும் முறையை மற்றவர்களுக்கு முன்பாக மூடிமறைத்து விடவில்லை. மாறாக திராட்சை பயிரிடும் சூட்சுமம் முழுதையுமே வெளிப்படையாய் அறிய பல விவசாயிகளிடத்தும் கூறினார்.
அதன் பிறகு இந்த இடத்தில் தரிசாய்க் கிடந்த நிலமெல்லாம் கொடிமுந்திரிகைச் சோலையாக மாறிக் காட்சியளித்தன. பிரான்சிஸ்சும் முந்திரிகையை பயிரிட்டார். அவருடைய தோட்டத்தில் கொத்துக் கொத்தாய்க் கிடக்கும் திராட்சைப் பழங்களை வந்து பார்வையிட்டவர்கள் நீ "ஆள் விவசாயத்தில் மன்னனப்பா”
என்று புகழாரம் சூட்டிவிட்டார்கள். அந்தப் பழைய நினைவுகளினூடே மட்டும் கருத்தாயிராது பிரான்சிஸ் பற்றைகளையும் ஒழுங்காய் வெட்டிக் குவித்துவிட்டார். பற்றைகளை வெட்டியானதும் பளிச்சென்று நிலம் வெளித்துவிட்டது. இந்த நேரம் கணவருக்கு கோப்பியை கொண்டுவந்து றோசலின் கொடுத்தாள். அந்த முக்கால் கிளாஸ் கோப்பியை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்ததும் பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிந்து வந்து விட்டார்கள் என்று றோசலின் கூறினாள்.
“இனிப்போய்ப் பிள்ளைகளின்ரை வேலையைப் பார்ப்பம்” என்று தோட்டத்துக்காலே இருந்து அவர் வெளிக்கிட சொன்னாற்போல அவருடைய இரு பிள்ளைகளுமே அங்கு வந்து அவருக்குப் பக்கத்தில் நின்று விட்டார்கள்.
"அப்பா கிறிஸ்மஸ் வருது. பாலன் கொட்டில் செய்தாங்கப்பா" “எங்கட வீடே இப்ப கொட்டில்தானே அதுக்குள்ள ஒரு பாலனை வைச்சாச் சரி”
நகைச்சுவையாக அப்பா சொன்ன கதையில் உள்ள யதார்த்தத்தில் பிள்ளைகள் ஈடுபாடு கொள்ளவில்லை. “என்னப்பா. அப்பா.” மீண்டும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக நின்றபடி கெஞ்சுகிறார்கள் “அப்பா தோட்டத்துக்காலவிருந்து இப்பதான் வெளிக்கிடறார். வேலை செய்து இப்ப களைச்சுப் போனார். இன்னும் ரெண்டு மூண்டு நாள் கிடக்குத்தானே நத்தாருக்கு. எப்படியோ ஆற அமர உங்களுக்கு அதெல்லாம் செய்தருவார்தானே. இப்போதைக்கு அப்பாவுக்கு கரைச்சல் 69

Page 47
நத்தார் மழை
குடுக்காதேங்கோ”
"இல்லம்மா எங்களுக்கு இப்ப பாலன் கொட்டில் செய்தரோணும்” விடாப்பிடியாக பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதால் பிரான்சிசும் இப்போது அவர்களுடன் ஒத்துப்போகிறார். பிள்ளைகளின் சின்னச் சின்ன ஆசையை நிறைவேற்ற அவர் மனம் கொண்டுவிட்டார்.
"வாளி எங்க.மண்வெட்டியெங்க”
அவர் கேட்டதும் சுறுக்காக ஒடிப்போய் அவற்றையெல்லாம் எடுத்துவந்து அவர் முன்பாக அவைகளை வைத்துவிட்டு ஆவலுடன் அவர்கள் நின்றனர்.
பிரான்சிஸ் அவ்விடமிருந்து சென்று வளவு மூலையில் பனையடியில் வளர்ந்திருந்த புற்றுக்குக் கீழே உள்ள களிமண்ணை வெட்டிவந்து மளமளவென்று காரியத்தில் இறங்கினார். ஒவ்வொரு உருவமும் தண்ணீரிட்டுப் பிசைந்த அந்த மண்ணில் உருவாகத் தொடங்கியது.
முதலில் தேவிமாதா அடுத்து பாலன் அதற்கடுத்து சூசை இப்படியே தொடர்ந்து சம்மனசு இடையர்கள் மூன்று சாஸ்திரிகள் ஆடு மாடு என்று அச்சொட்டார் கோவிலில் உள்ள சுரூபங்கள் போல் இருக்க அவர் வடிவமைத்து விட்ட்ார்.
இரட்டைப்
அவன் இயேசுவின் சரித்திரத்திலே தனக்கு விளங்காதவைகளைக் கேட்கிறான்.
ள்ளையானாலும் முதற் பிறந்தவன் மூத்தவன் தானே.
யேசுவின் பிறப்பைப் பற்றி தான் படித்ததையெல்லாம் தந்தையிடம் ஒப்புவித்துவிட்டு அதற்குள்ளே சில கேள்விகளையும் அவரிடம் வினவுகிறான். அவர் களிமண் சுரூபங்களை விரல்களால் அழுத்தி சில இடங்களை நுணுக்கமாக செப்பனிட்டுக் கொண்டு மகனுக்கும் பதில் சொல்கிறார்.
“இயேசு சமாதானப் பிரபு என்றும் அழைக்க்ப்பட்டார்” அவர் இயேசுபிரானின் மகத்துவத்தைப் பற்றி தன் செல்வக் குமாரனுக்குச் சொல்கிறார். 響
அவனோ சிறு பிள்ளிைஅவ்வளவாக அவனுக்கு அவர் சொன்னவைகள் விளங்கவில்லை. ॐ
ஆனாலும் இந்த கிறிஸ்மஸ் சில் பாலன் பிறப்பதோடு இனிமேல் எல்லோருக்கும் நல்லகாலம் வரும் என்று நினைக்கக்கூடிய அறிவு அவனுக்கு
வளாந்திருந்தது. O
7
 
 
 

நீ.பி.அருளானந்தம்
அன்றைய பொழுது அழிந்து கழிந்தது. அடுத்த நாள் முழு வெயிலிலும் அந்த உருவங்களை முற்றத்தில் பிள்ளைகள் காயச் செய்துவிட்டார்கள். பிரான்சிஸ் அதற்கெல்லாம் ஏற்ற பொருத்தமான வர்ணங்களைப் பூசிக்கொடுத்தார்.
வர்ணம் பூசியாகியதும் றோசலினும் அவ்விடம் வந்து அவைகளைப் பார்த்தபடி உதட்டில் “மோனாலீஸா’ புன்னகையோடு ரசித்தபடி நின்றாள்.
“பாலன் கொட்டில் வேலையெல்லாம் இனிமே உங்களோடதுதான்” என்று பிள்ளைகளிடம் பிரான்சிஸ் கூறிவிட்டார்.
அவர்களுக்கு அது எல்லாமே இனிமேல் சிறிய வேலைதான் என்று நினைக்கும்படியாய் இருந்தது. உடனே கூவிக் கும்மாளமிட்டபடி தங்கள் கைத்திறனை அவர்களும் காட்டத்தொடங்கினர்.
றோசலின் குசினியில் இருந்து கொண்டு “மாக்கு மாக்" கென்று மாவிடித்தாள். அந்தவேலை ஒருவாறு முடிவடைய பாணியைக் காயவைத்து நூல் பார்த்துவிட்டு விதம் விதமான தித்திப்பு பணியார வகைகளை அவள் செய்தாள். நேரம் கடந்துகொண்டிருக்க கோயிலில் இருந்து நத்தார் நடுநிசி பூசைக்கு ஆயத்தமணி அடித்தது. இந்த முறைதான் புது உடுப்புக்களை அவர்களெல்லாம் உடுத்திக் கொண்டார்கள்.
நடைபாதை வியாபாரிகளிடமிருந்து சிறிய விலை கொடுத்து அதையெல்லாம் பார்த்து பிரான்சிஸ் வீட்டுக்கு வாங்கி வந்திருந்தார். றோசலின் புதுப் புடவையைக் கட்டிக் கொள்ளும்போது அது சருகாய் சரசரத்தது.
சின்னப்பையன் ஆசையோடு அம்மாவைக் கட்டிப்பிடித்து புடவையில் மூக்கைவைத்து ஆழ்ந்து சுவாசித்தான். அம்மாவின் செல்லம் அவன், புதுப்புடவையை அம்மா கட்டிக்கொண்டதில் அவனுக்கும் பூரிப்பு இருக்கிறது.
எல்லோருமாக கோயிலுக்குப்போய் நடுப்பூசை வேளையிலே பாலனை தரிசித்தார்கள். மின்சார ஒளிவிளக்கில் பாலன் இயேசுவின் முகம் பளிச்சென்று தெரிகிறது.
பாலன் முகத்தில் என்ன சாந்தி என்ன சாந்தி! பிராணி சிசும் றோசலினும் தாங்கள் இவ்வளவு நாள் பட்ட துன்பங்களையும் கவலைகளையும் அந்தக்கணத்திலே தொலைத்து
71

Page 48
- நத்தார் மழை விட்டதைப்போல இருந்தார்கள்
ರೌತಿ முடிவிலே சகலருடனும் சமாதானத்தைப் பகிர்ந்து கொண்டு
கோயிலிலிருந்து அவர்கள் வெளிக்கிளம்ப காற்று ஒன்று சண்டமாருதம் போல் அடித்துக்கொண்டது.
தயங்கி அவர்கள் கோயிலுக்குள் நிற்க "பொச பொச" வென்று முதலில் தூறல் விழத்தொடங்கியது.
பிரான் சிளப் வானத்தை நிமிர்ந்து பார்த்தார், கரிக் கரியாய் மேகச்சுருணைகள் இருந்தாற்போல் வானில் வந்து கவிழ்ந்ததைக் கண்டார். சற்று நேரத்தில் நல்ல மழை சடசடத்துப் பெய்தது. றோசலினும் பிரான்சிசும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பிள்ளைகளுக்கு எதுவும் புரியாத வயது. அவர்கள் மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து சிரித்து விளையாடினர்.
பெய்த மழை போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு பெய்து விட்டுத்தான் நிறுத்தியது. மழை ஒழிய பிரான்சிஸ் குடும்பம் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே. வீட்டின் முகட்டுப்பகுதி முழுவதுமே காற்றில் அள்ளுண்டதால் நாலாபுறமும் சிதறி வீசப்பட்டுக் கிடக்கிறது. சின்னவர்கள் இருவரும் போய்ப் பாலன் கொட்டிலைப் பார்த்தார்கள். தண்ணீரில் ஊறி வர்ணமிழந்து உருமாறிய சொரூபங்கள் பிள்ளைகளின் கண்களில் கண்ணிரை வரவழைக்கிறது.
பானை போல முகத்தை வைத்துக்கொண்டு பலகாரப்பெட்டியைப் பார்த்தபடி றோசலின் நிற்கிறாள்.
இவைகள் எல்லாவற்றையும் பார்த்தபடி திகைப்பில் பிரான்சிளப் சிலையாகியதைப் போல் நிற்கிறார்.
மழை நின்றுவிட்டது.ஆனால் அவர்களோ தங்கள் சுண்ணிர் மழையில் நனைகிறார்கள்.
தினகரன் வாரமஞ்சரி (டிசம். 22-2002)
2ל

நி.பி.அருளானந்தம்
ଖ୍ରୀଷ୍ଟୀ gy938
க் திரவன் வருகைக்குப் பின் பார்வைக்குக் குறைவில்லாமல்
வெண்தாமரை மலர்கள் அழகாக அந்தக் குளத்துள் (cliTiiiS STILLITH விரிந்து கிடந்தன.
ஆனால் அவன் மனதைக் கொள்ளை கொண்டு விட்ட தாமரையோ குளிப்பதற்கென்று குளத்துப் பக்கமாக இன்னமும் வந்து சேர்ந்த பாடாக இல்லை! அவள் வருவாளா?. குளத்துக் கட்டில் நின்று கொண்டு பார்த்துப் பார்த்து கண்கள் பூத்த காந்தன் குளிக்காமல் நின்று ஏங்கிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் தாமரை குளிப்பதற்கென்று குளத்துக்கு வரத் தொடங்கி அவளை அங்கே அவனும் பார்த்துப் பழகியதோடுதான் சனி நீராடு. என்று ஒளவை சொல்லிய சொல்லை ஒழுங்கு முறையாக அவனும் கடைப்பிடிக்க ஆரம்பித்தான்.
இந்தக் குளத்தூர் பட்டிக் காட்டுக் கிராமமுமல்ல, பெரிதாக சொல்வதற்கு பட்டணமுமல்ல. இரண்டுக்கும் சமமான வசதியும் இயற்கை வனப்பும் கொண்ட நல்ல சுவாத்தியமான இடம் என்றே கூறுவது பொருந்தும்
73

Page 49
*::::::::::::::::::s. 8:8:8: "..& -◊''( · · ̇‹‹· ·.``.· X· .‹‹‹ጎ Şა- ...2 -x-xX ராசியான கடிதம் இந்தக் குளம் ஊருக்கே ஒரு பிரமாதமான தனி அழகைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. குளத்துக் கட்டுக்குக் கிழே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தோப்பும் துரவுமாய் வயலும் வாய்க்காலுமாய் அந்தப் பகுதி முழுவதுமே பசுமை அப்பிக்கிடப்பதை புதிதாகப் பார்ப்பவர்கள் மனதிலே படம் பிடித்துக் கொள்வார்கள்.
குளத்துத் தண்ணிருக்குள்ளும் குளிர்ச்சியாக மருத மரங்கள் பல நின்று அடி மரத்தளவிலிருந்தே கிளை விட்டு குடை விரித்திருந்தன. அது பார்வைக்கு ஒரு கன்னிப் பெண் தலையை விரித்துக் கொண்டு மார்பளவு தண்ணீரிலே நிற்பது போல் காட்சி தரும்.
இவை எல்லாவற்றையும் பார்த்து ரசித்திருக்க அவள் அங்கிருந்தால் அவனால் முடிந்திருக்கும். ஆனால் அன்று அவளும் வரவில்லை.அவளோடு வரும் அந்தச் சிறுவனையும் காணவில்லை!
நேரம் போகு மட்டும் நின்று விட்டு விருப்பம் இல்லாதது போல் ஒரு காகக் குளிப்புக் குளித்துவிட்டு அவன் வீடு திரும்பி விட்டான்.
காந்தன் புஸ்பராணிக்கு ஒரேயொரு மகன். விதவையாகத் தான் இருந்தாலும் மகனுக்கு எந்தக் குறையும் வரவிடக்கூடாது என்று அவனைச் செல்லமாக அவள் வளர்த்தாள். தகப்பன் இல்லாத பிள்ளை என்று கேட்கும் போதெல்லாம் காசை அள்ளிக் கொடுத்தாள். காசருமை தெரியாத மகனும் சகட்டு மேனிக்கு அவற்றை உல்லாசமாகச் செலவழித்தான்.
கணவர் அரசாங்கத்தில் உத்தியோகம் பார்த்ததால் புஸ்பராணிக்கு ஓய்வூதியம் வருகின்றது. அதைவிட கணவர் விட்டுப் போன சொத்தாக அரண்மனை மாதிரி ஒரு பெரிய வீடும் இருக்கிறது. அடுத்தது நன்றாக நெல் விளையக்கூடிய களித்தரையான நெல்வயலும் உண்டு.
வயலில் விவசாயம் செய்வதற்கு ஆள் வசதி இல்லாததினாலே ஒரு போகத்துக்குக் குத்தகை இவ்வளவு தரவேண்டுமென்று ஒருவரிடம் பொருந்திக் கொடுத்து அதனாலே கழனியிலிருந்து நெல் மூடைகள் வீட்டுக்கு வந்து சேருகின்றன.
ஒரு அறையை மாத்திரம் தங்களிற்கென்று பிடித்துக் கொண்டு மற்ற அறைகளெல்லாவற்றையும் வாடகைக்குக் குடியிருக்கக் கொடுத்ததில் அதிலும் ஒரு வரவு அவளுக்கு வருகிறது. இந்த வரும்படி களையெல்லாம்
74

நீ.பி.அருளானந்தம்
சேர்த்து மகனுக்கு மட்டும் செலவழித்து அவனை படிப்பித்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதே புஸ்பராணியினது இலட்சியம். ஆனால் மகனின் நோக்கம் படிப்பதிலேயா இருக்கிறது?.
புஸ்பராணியின் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவரது உறவினப் பெண்தான் தாமரை அந்த வீட்டில் இருப்பவர் தனது தாய்மாமன் என்று குளத்தடியில் வைத்துத்தான் காந்தனுக்கு அவள் சொன்னாள். மாமா குடும்பத்தோடு கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போக ஊரிலிருந்து வந்தேன் என்றாள். அதற்கு மேல் அங்கு வந்ததைப் பற்றிய விபரம் அவனுக்கு அவள் சொல்லவில்லை.
அவள் வீட்டுக்கு வந்து கண்களில் அவனுக்கு தட்டுப்பட தொடங்கிய நாள் முதலாய் இவனுக்குக் காதல்காய்ச்சல் தொடங்கிவிட்டது. படிப்பதிலும் அக்கறையில்லாமல் சதா ஜன்ன லடியிலேயே நின்று கொண்டு தவம் கிடந்தான். அங்கேயிருந்து பார்க்கும் போது ஒரு பொழுது அவள் கால்கள் மாத்திரம் கண்ணில் பட்டாலும் மானசீகமாக பாத பூஜையும் செய்தான். அவள் குளத்துக்கு வரத் தொடங்கியதும் தான் அவனுக்கு அவள் மீதுள்ள ஆசையில் இன்னும் இறுக்கம் வந்தது. துணைக்கு வீட்டில் இருக்கும் சிறுவனையும் கூட்டிக் கொண்டு ஒரு சனிக்கிழமை அவள் குளிக்க வந்திருந்தாள். அப்போது இவனும் தண்ணிருக்குள்ளே நின்று கொண்டு தலை மட்டும் வெளியே தெரிய இருந்தான ஆடை மாற்றி வந்தவள் குளத்துக்குள் இறங்கி கொஞ்ச நேரம் இருந்து தலையை நனைக்காமல் குளித்து விட்டு வெளியே போய் சவர்க்காரம் போட நின்றாள்.
அந்த நேரம் உயிருள்ள கிரேக்க சிற்பம் போல அவள் அவனுக்குத் தெரிந்தாள். சூரிய கோளங்களை நேரில் கண்டது போலவும் அப்போது அவனுக்கு இருந்தது. இந்த வேளையிலே கையிலுள்ள அவளது சவர்க்காரம் நழுவித் தணிணீருக்குள்ளே விழுந்து விட்டது. கையை விட்டு அங்குமிங்குமாக துழாவித் தேடிக் கொண்டிருந்தாள்.
“என்னத்தைப் போட்டுட்டீங்க தங்கச்சி” தரையில் நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணி கேட்டாள்.
"சவுக்கார்த்தை தண்ணிக்க விழுத்திட்டனக்கா”
“எந்த பக்கமாய் விழுந்திச்சு” அவளோடு வந்த சிறுவனும் உரத்த சத்தமாக கேட்டான்.
75

Page 50
ராசியான கடிதம் காந்தன் அந்த நேரம் ஆபத்பாந்தவனாக சுறாப் பாய்ச்சலில் நீந்தி வந்தான். தளம்பலாக இருந்த தண்ணீரிலே சவர்க்காரக்கட்டி வழுக்கி, வழுக்கி உள்ளாலே எங்கேயோ போய் விட்டது. அதனால் மதகுப் பக்கம் வரை தண்ணிருக்குள் சுழியோடிப் பார்த்தான். பிறகு மறுகரைப் பக்கம் சேற்றிலும் கெளுத்தி மீன் போல் உள்ளே புரண்டெழுந்தான். ஒருவாறு அங்கேயே அகப்பட்டது சவர்க்காரக்கட்டி அதைக் கொடுக்கும் போது.
"நன்றி " அவள் கண்களாலும் பேசினாள். "மாமா அந்தப் பூ வேணும்” அந்த வாண்டு கேட்டான். சும்மா இருடா தம்பி. அது ஆழத்தில் இருக்கு” அவள் சொன்னாள்.
அவளுக்காக பாரிஜாத ம்லரையே பறித்துக் கொடுக்க ஆயத்தமாக இருப்பவன். தாமரைப் பூவைப் பறிக்க மட்டும் தயங்கி நிற்பானா?. நாலாபக்கமும் நீந்திப் பூப் பறித்தான் குளத்திலே குளித்துக் கொண்டிருப்பவர்கள் திட்டினார்கள். "இந்தப் பாவி தண்ணியைக் கலக்கி சேறாக்கிறான். ஆக்களை குளிக்க ஏலாமல்; பண்ணுகிறான் விசும்பன்."
அவன் இதையெல்லாம் அக்கறைப்படுத்தவில்லை. நீண்ட தண்டோடு மொட்டும் பூவுமாய் கட்டாகக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.
இப்பொழுதும் அவள் வாயில் இருந்து "நன்றி” என்ற வார்த்தை மட்டும் வந்தது. அவள் தன்னோடு பேச வேண்டும். அது தானே அவனுக்கு வேண்டும். அது மட்டுமா ஒரு மலரை கையில் வைத்துக் கொண்டு தண்டை ஒடித்து நாளிழுத்து மாலையாக்கி சிறுவனின் கழுத்தில் போட்டான். மரகதமணி மாலை எனநினைத்து சிறுவனும் கையை விரித்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் சிரித்தான்.
இப்படியே தொடர்ந்தது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் குளத்துக் குளிப்பு அந்தச் சிறுவனும் விடுவதாக இல்லை. ஒருநாள் மீன்குஞ்சு கேட்டான். மாட்டேன் என்று கூறாமல் அவனும் பிடித்துக் கொடுத்தான். "இது பெரிய மீன் குட்டியா மாமா?”
"இல்லையில்லை சின்ன மீன் குஞ்சு” அவன் சொல்லவும் கடற் சோகிகளைக் கீழே கொட்டினாற் போல் அவள் கொல்லென்று சிரித்தாள்.
"கடலில் தான் பெரிய மீன் குட்டி இருக்கும். குளத்தில் சின்ன மீன் குஞ்சு தான் இருக்கும்.”
அவன் சிறுவனுக்கு விளக்கம் சொன்னான். இதற்குப் பின்பு பயமில்லாமல்
76

ჯ::xx xxxxx xxx:::::::::::::::::::xxxx:::::::x:38:3.:::::::::::::::::::::::::8ა:ჯჯჯ:ჯ::::::::::::::::::::::::x::::::::::x x^აჯ நீ.பி.அருளானந்தம் அவனுக்கும் அவளுக்குமிடையே உரையாடல் தொடர்ந்து வந்தது.
அன்று இரவு முதன் முதலாக அவளுக்கு ஒரு கடிதம் எழுதி தனது காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் பேனாவையும் தாளையும் வைத்துக் கொண்டு அவன் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான். கடதாசிகள் ஒவ்வொன்றாக கிழிக்கப்பட்டு குப்பைக் கூடைக்குள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த தாய் மகன் படித்துத் கிழிக்கிறான் என்று நம்பிக் கொண்டிருந்தாள்.
விடியும் வரை அதே வேலையாயிருந்து. ஒரு கடிதத்தை எழுதி முடித்து காலையில் அவள் எழுந்து முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது வெளியே போவதாக போக்குக் காட்டி அக் கடிதத்தைக் குப்பை பெருக்கிக் கொண்டிருந்த அவ்விடத்தில் எடுக்குமாறு எறிந்துவிட்டுப் போனான் அவன்.
தன் வேலையிலே கருமமாயிருந்த அவள் கடிதத்தைக் காணவில்லை. ஆனால் பருந்தின் பார்வைத் திறன் கொண்ட மாமாவிற்கு நிலத்தில் கசங்கிய படி இருந்த காகிதம் கண்ணில் பட்டு விட்டது. எடுத்து விரித்துப் படித்ததோடு மாமாவும் மாமியும் சேர்ந்துகொண்டு அமர்க்களப்பட்டார்கள். இருவருக்கும் அதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. கடிதத்தின் அடியிலே பெயர் ஒன்றும் இல்லாததாலே அவர்கள் முழித்தார்கள். பாவம் தாமரையும் . தான் விழித்தாள்.
அந்த இடத்திலே தாமரையின் மாமாவின் குடும்பத்தை விட வாடகைக் குடியிருப்பாளர்களாக மேலும் மூன்று குடும்பத்தினர் மற்றைய பிரிவுகளிலும் குடியிருந்தனர். அதனால் அங்கிருந்த இளைஞர்களிலெல்லாம் சந்தேகம் வந்து அவர் கண்கொழுக்கி போட்டார். சூழ்நிலையால் எல்லாரிடமும் அவருக்கு சந்தேகம் வலுத்துவிட்டது. A
0ெ த்ெத குறி தவறிப் போய் விட்டதைக் காந்தன் தெரிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. தாமரை ஒரு ஏமிலாந்தி என நினைத்து அவனுக்கு எரிச்சல் வந்தது. என்றாலும் கடித விஷயத்தை சனிக்கிழமை நேரிலேயே குளத்தடியில் வைத்து சொல்லி விட வேண்டும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான்.
அவன் எதிர்பார்த்தது போல் சனிக்கிழமையன்று தாமரை குளத்துக்குக்
77

Page 51
ராசியான கடிதம் ܠܐܚܒܡܨܥܬܐ ܒ குளிக்க வந்தாள். ஆனால் அவன் கற்பனை பண்ணியிருந்தது போல அவள் முகம் வாடியிருக்கவில்லை. தாமரையாய் விரிந்து பொலிவுடன் இருந்தது. *தாமரை அந்தக் கடிதம்" என அவன் ஆரம்பித்ததோடு சரி. அவள் தான் மிகுதியை சொல்விவிடுவதற்கு அவசரப்பட்டாள்.
“அதைத்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று அந்தரப் பட்டுக் கொண்டு கிடந்தன், யார் போட்டார்களோ தெரியவில்லை காந்தன். ஆனால் அதுவே எனக்கு நன்மையாகப் போயிட்டுது."
அவள் இப்படிச் சொன்னதும் அவன் மனதை ஒரு வித துக்கம் பிடித்துக்கொண்டது. முதலில் தான் சொல்ல வந்தவைகளை விழுங்கி விட்டு "ஏன்? “ என்று ஒரு கேள்வியை மாத்திரம் கேட்டு வைத்தான்.
“காந்தன் நீர் எனக்கு ஒரு நல்ல சிநேகிதன் போல. உம்மட்ட நான் ஏன் அந்த இரகசியத்தை மறைக்க வேணும் என்ரை ஊரில நான் ஒருவரை காதலிச்சன். அது வீட்டாருக்குப் பிடிக்காமல் அவர்கள் இங்கே என்னை அனுப்பி இருவரிற்குமிடையே இருந்த உறவை பிரிக்கப் பாத்தினம். ஆனால் இந்தக் கடிதப் பிரச்சனையோட மாமாவும் என்னை இங்க வைச்சு காவல் பண்ண ஏலாது என்டு திரும்பவும் ஊருக்கே அனுப்பப் போறார். திரும்பவும் நான் அங்க போறதால என்ர லவ்வரையும் சந்திக்கலாம். இப்படி ஒரு கடிதம் எனக்கு நல்லதைத் தான் செய்திருக்கு நாளைக்கு நான் ஊருக்குப் போகப்போறன். அதால்தான் உங்களுக்கு இதையெல்லாம் சொல்லுறன். நான் போய்வாறன் காந்தன்"
எதையோ பறிகொடுத்தது போல் குளத்துக்கட்டில் நின்று கொண்டு அவள் போவதை வெறித்துப் பார்த்துக் கொண்டு அவன் நின்றான்.
அவன் மனதில் கட்டிவைத்த காதல் கோட்டை அப்பளம் போல நொறுங்கிப் போனது அவளுக்கு எப்படித் தெரியும் ஒன்றும் அறியாதவளாக, தாமரை குளத்துக்கட்டில் அன்ன நடை நடந்து சென்று கொண்டிருந்தாள்
சுடர்ஒளி (செப்.23-2001)
78

यः ======== ॥ = ॥ நீ.பி.அருளானந்தம்
(SéstabiUocÝe
"வாழ்க்கை”தொலைக்காட்சி நாடகம் தொடங்கி அரைவாசிக்கு
மேலே போய்க்கொண்டிருந்தது. இந்த நேரம் அங்கே படுக்கை அறையில் இருந்த தொலைபேசி மணியும் கிணுகினுத்தபடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. 町
79

Page 52
ኃሩ•‹• ኛ X•. Š•ሯ·‹ጎ 03ు சோகமுள் அரைமனதோடு கதிரையில் இருந்து எழுந்து,விட்டு அந்த அறையை நோக்கிச் செல்லும் மனைவியை அங்கிருந்து தொலைக்காட்சி நாடகம்
பார்த்துக் கொண்டிருந்த சிவநாதன் பார்த்தார்.
இப்ப்ொழுதென்றால் வெளிநாட்டு அழைப்புத்தான் வரும் பிள்ளைகள் எடுத்திருப்பார்கள். இப்படி நினைத்தார்.
நாடகத்தில் நல்ல கட்டம் போய்க்கொண்டிருந்தாலும் அவர்களது சின்னமகளான ராஜியும் இருக்கையை விட்டு எழுந்துவிட்டாள். அவளுக்கும் யார் கதைக்கிறார்கள் என்ற ஆர்வம், அம்மாவிற்குப் பின்னாலே தொடர்ந்து போவதற்கு வைத்தது. e போனவர்கள் இருவரும் ஐந்து நிமிடங்கள் கழிந்தும் அறையை விட்டு வெளியே வரவில்லை. நிச்சயம் அது வெளிநாட்டு அழைப்புத் தான். இப்போது இவர் உறுதிப் படுத்திக்கொண்டார்.
மகனா.அல்லது மகளா.யார் கதைக்கிறார்கள்? அதுதான் தெரியவில்லை.என்றாலும் மீண்டும் அவர் நாடகத்திலேயே லயித்துவிட்டார்.
நாடகம் தொடர்ந்து விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது. பானு ஒரு ጳ፦ தடித்த பொல்லை எடுத்து தனது தகப்பனை முன்பு வீதியிலே வைத்து நையப்புடைத்து விட்ட ரிஷிக்கு செம்மையாக நாலு போடு போடுகிறாள். சாந்தமான அவளது முகம் பத்திரகாளிபோல் சிவநாதனுக்குத்தெரிகிறது. இந்தப் பொறுப்பான கட்டத்திலே வந்து அன்றய அங்கம் முடிவடைகிறது. இனி ஆங்கில நிகழ்ச்சிகள் தொடரும். அவர் எழுந்து விட்டார்.
இரத்த அழுத்தத்தினால் இரவில் கொஞ்சம் தலைச் சுற்று வந்துவிடுவதால் அதிகம் நித்திரை முழித்து இருப்பது சிவநாதனுக்கு இயலுவதொன்றாக இல்லை. இதனால் ஒன்பது மணிக்கு குளிசை போட்டுக்கொண்டால் சுகமாக நித்திரையும் வலியவந்துவிடும். இல்லாவிட்டால் ஆயிரம் யோசனைகள் வந்து நித்திரையும் வராது. காலையில் இரத்த அழுத்தம் கூடி உடல் அசதியாகவும் இருக்கும்.
நடு அறையைத்தாண்டி எதிர்ப்புறம் தனது தனி அறையை நோக்கி அவர் எழுந்துநடந்தார். மனைவியும் சின்ன மகளும் படுக்கின்ற அறையைத் தாண்டிப்போகும்போது கதவு திறந்து கிடந்தது.
"என்ன தவமணி, யார் கதைக்கினம்? என்ன விஷயம்?” மனத்தை அடக்க
இயலாமல் போக அடுக்கடுக்காக இந்தக் கேள்விகளை அவசரத்தோடு அவர்
80

நீ.பி.அருளானந்தம் கேட்டார்.
“ஒன்றுமில்லை. நோர்வேயிலிருந்து கோமளா கதைக்கிறா. நேரமாயிட்டுது போய்ப்படுங்கோ." ரிசீவரை கையால் பொத்திக் கொண்டவாறு தவமணி சொன்னாள்.
குடும்பத்தில் அநேகமாக நடக்கும் காரியங்களை மனைவி அவருக்குத் தெரிவிப்பதில்லை. அதிர்ச்சிகளைத் தாங்க இயலாது. அவர் உடலும் நலிவுற்ற நிலையில் இருப்பதால் பொதுவாக எல்லாமே மழுங்கடிப்புத்தான். சாடையாக தலைசுற்றுவது போல ஐயம் இவருக்கு வந்தது.
ஏன் என்னைக் கலைக்கிறாள்? மகள் கோமளாவிற்கு ஏதாவது விபரீதம் நடந்து விட்டுதோ..? இருக்கும்.இவள் தடுமாறிக் கொண்டு கதைக்கிறதிலேயே சந்தேகம் வருகுதே? சின்ன மகளும் பக்கத்தில தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருக்கிறாள். என்ன காரணமோ..?
காலையில் எல்லாமே வெளிச்சத்துக்கு வரும். அப்பிடித்தானே இந்த வீட்டில எனக்கு இப்ப நடந்து கொண்டு வருகிது. என்பதாக மனதை சாந்தப் படுத்திக் கொண்டு பொறுமையோடு போய்க் குளிசையைப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டார். w
கிகிகிக்.கிகிகிக்.கிகிகிக்.
இந்தக் காலத்து மணிக்கூடு அலாரம் இப்படி ஒருவிதச் சத்தத்தில் காதைக் குடைந்தது.
சீற்போட்ட சின்னக் குசினிக்குள் நின்றுகொண்டு வெயிலேறிப் போனால் சமைக்க இயலாது என்று ஒவ்வொரு நாளும் காலை நான்கு மணிக்கு (எழுந்து) தவமணி சமையலைத் தொடங்கி விடுவாள். மகள் ராஜியும் நித்திரை விட்டெழுந்து அந்த நேரம் முதல் படிக்கத் தொடங்கிவிடுவாள்.
வழமையாக ஏழு மணிக்குத்தான் படுக்கையை விட்டு சிவநாதன் எழுந்திருப்பார். ஆனால் இன்று மனைவி இருக்கும் அறையில் அலாரம் அடிக்கக் கேட்ட கையோடு எழுந்து விட்டார். பல்லைத் தேய்த்து முகத்தைக் கழுவியதோடு மனைவி வேலையாயிருந்த குசினிப்பக்கம் போனார்.
ஆவி பறக்க ஒரு கோப்பி அங்கே குடித்தாகியதும் ஆற அமர இருந்து எல்லாவற்றையும் கேட்டுவிட வேண்டுமென்ற நோக்கத்தில் முதல் கேள்வியாக "கோமளாதானே இரவு கதைச்சவ” என்று கேட்டார்.
"ஓம்.”
81

Page 53
சோகமுள்
"இரவு நேரம் கண்டதுமாதிரி இப்பவும் உம்முடைய முகம் வாடிப்போய் இருக்குதே. பிள்ளை என்ன சொன்னவ ஏதாச்சும் வில்லங்கம் வந்திட்டுதோ?” அவர் கேட்டதோடு இனிமேலாவது மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் என்ற நிலையில் தவமணி சொன்னாள்.
“எங்களையெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் சேர்ந்து நல்லா ஏமாத்திப்போட்டினம். கோமளம் அங்கேயிருந்து அழுதழுது இதை யெல்லாத்தையும் ரெலிபோனில சொன்னாள். என்ர கடவுளே எங்களுக்கு ஏன்தான் இப்படியெல்லாம் வந்ததோ தெரியேல்ல.” மனைவி இப்படிச் சொல்லச் சொல்ல அந்த சொற்கள் ஒவ்வொன்றும் வரிவரியாக வாள்போல் மாறி சிவநாதனின் உடலை அரிந்து விழுத்துவது போல் இருந்தது.
"ஏன்.?ஏன்.? கோமளாவிற்கு என்ன நடந்தது. போன மாசம் ரெலிபோனிலை கதைக்கேக்க சந்தோக்ஷமாயிருக்கிறதாத்தானே சொன்னா.”
“அப்படித்தான் இருந்தாள். ஆனால் இப்ப எல்லாமே பொறிஞ்சு கொட்டுப்பட்டதைப்போல குடும்பம் சீர்கெட்டதாய்ப் போச்சாம். மாப்பிள்ளை அங்க ஒரு வெள்ளைக்காரியோட முன்னமே சிநேகிதமாம். அவளோட இவருக்குப் பிறந்த பிள்ளையும் வேற இருக்குதாம். அவரை கனநாளாய் காணேல்லயென்று இவையள் இரண்டுபேரும் இருந்த வீட்டுக்கு அவளும் தேடிப்பிடிச்சு வந்து நிண்டு கொண்டாளாம்.”
சொல்லும்போது இரவு முழுக்க நெஞ்சில் வைத்து வேதனைப்பட்ட துன்பத்தையெல்லாம் விழிகளிலிருந்து விட்ட கண்ணிரால் கரைத்துக் கொட்டினாள் அவள்.
"நாசமாப்போன அவற்றை வீட்டு ஆட்களெல்லாம் கலியாணம் பேசவரேக்க திறமான பெடியன் எண்டு புளுகினாங்களே. என்டாலும் எனக்குத்தெரியும். அவங்களின்ரை கதையிலெல்லாம் கள்ளம் இருந்தது. அதையெல்லாம் நான் சொல்ல நீங்க கேக்கேல்லயே. நல்லா விசாரிச்சுப் பாக்காததால எல்லாம் நாசமாப்போச்சே.” இவர் அரற்றினார்.
“என்ன செய்யிறது? சில ஆம்பிள்ளைகளுக்கு இப்படியொரு சனிப்பழக்கம். அது எல்லாம் வெளியால தெரியுதே. நாங்க பார்க்கேக்க எதுக்கும் சங்கோஜப்பட்டுக்கொண்டு நல்ல பெடியன் மாதிரித்தான் தெரிஞ்சான். இப்படி கழுத்தறுப்பான் எண்டு ஆருக்குத் தெரியும், எல்லாமே இந்தக் கல்யாணம் பேசி வந்த ஆட்களால வந்தவினை சொந்தக்காரர் சொல்லுகினமென்டு அவையளை நம்பினம். ஆனா அவையஞம் சேர்ந்து
82

४-2: ० ----- - - --- நீ.பி.அருளானந்தமி கொண்டு எங்களை படுகுழியில விழுத்திப் போட்டினம்.”
இந்தக் கொதிப்பில் உறவினர்கள் எல்லாரிலுமே தவமணிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. எல்லாரையுமே கொஞ்ச நேரம் நிரையாக அவர்கள் பேரைச்சொல்லி கரித்துக்கொட்டினாள்.
"அதற்குப் பிற்பாடு என்ரை பிள்ளை என்ன செய்கிறாள். பிறகு அவளுக்கு என்ன நடந்தது” என்று அவர் கேட்கவும். s
"நடக்கக்கூடாததெல்லாமே நடந்து போச்சு. அவரோடு அவள் கதை வெளிப்பட்டதில இப்ப அவர் வீட்டுக்கு வாறதில்லையாம். ஒரு கிழமையா இவள் ஒண்டுமே சாப்பிடாம தனிய அந்த அறையில குப்புறப்படுத்தபடி கிடந்திருக்கிறாள்.”
"அதுதான் நான் சொன்னன். விசாரிப்பம் விசாரிப்பம் எண்டு நீங்கள் நான் சொன்னதைக் கொஞ்சமெண்டாலும் கேட்டியளே. விட்டால் பிடிக்கேலாத மாப்பிள்ளை என்டியள். அவர் ஒரு விடுகாலியென்று இப்ப உங்களுக்கு விளங்குதே? சரி.இப்ப பிள்ளைக்கு என்ன வழிசெய்யேலும்.?”
"இந்தப் பழக்கம் வைச்சிருக்கிற புருஷனோட அவள் தன்னால சீவிக்க ஏலாது என்டுறாள்.எண்டாலும் அவருக்கு அவள் நல்ல விதமாகவும் முதலில சொல்லியிருக்கிறாள். நடந்ததெல்லாம் நடந்து போச்சு. இனியாவது அவளின்ரை சவகாசத்தை விட்டுப்போட்டு ஒழுங்காய் இருங்கோ. பிள்ளையை வேணுமெண்டால் நாங்கள் இங்க கொண்டுவந்து வைச்சிருந்து வளர்ப்பம் எண்டு நீதியாகச் சொல்லியிருக்கிறாள். ஆனா இதுக்கெல்லாம் அவர் ஒத்து வாறாரில்லையாம். அதால விவாகரத்துத்தான் தனக்கு வேண்டுமென்று சொல்லுறாள். இப்போதைக்கு விவாகரத்து வழக்கைப் போட்டால் அங்கேயிருந்து திருப்பி அனுப்பிப் போடுவாங்களாம். இங்க திரும்பி வந்தால் கனபேர் விடுப்புக்கதை கதைப்பினம். அதால அங்க இருந்து தனக்கு அந்த நாட்டிலை இருக்க உரிமை கிடைச்சதும் வழக்குப் போட்டு பிரிஞ்சிட்டு அவருடைய கண்ணுக்கு முன்னாலயே தானும் நல்லபடியாக வாழ்ந்து காட்டுறன் எண்டுறாள்.”
மனைவி இப்படியெல்லாம் விலாவாரியாக சொல்லி முடிக்க
அவருக்கும் ரோஷம் பிறந்தது. எதையும் தாங்கும் இதயமும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலும் மகளுக்கு இருக்கிறது என்பதை அறிந்து
83

Page 54
W சோகமுள் அவருக்குச் சிறிது மன ஆறுதலாக இருந்தது.
“ஏதோ நல்லூரானைக் கும்பிட்டு விரதமிருந்து வந்த புண்ணியம் பிள்ளைக்கு அங்கின ஒரு தமிழ்க் குடும்பம் நல்ல உதவி செய்து கொடுக்கிறவயளாய் இருக்கினமாம். கோமளாவின் கதையை அறிஞ்சபிறகு அந்தக் குடும்பந்தான் தங்கட வீட்டிலை அவளை அணைச்சுவைச்சு ஆறுதல் கூறிப் பார்க்கினமாம்”
இதைச் சொல்லிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தைப் பார்க்கையிலே சிவநாதனுக்கு பாவமாக இருந்தது. இந்தத் தாய் வயிறு பற்றி எரிய அவன் நன்றாக இருப்பானா?
துரோகத்திலெல்லாம் பெரிய துரோகமான இந்த நாச வேலையை சாதாரணமான ஒன்றாக நினைத்து செய்த அவனும் இதற்கு துணை போன அவனது உறவினர்களும் கடவுள் நீதியிலே கிடைக்கின்ற தண்டனையை நன்றாக அனுபவிப்பார்கள் என்று நினைத்து தனது மனதையும் போட்டு வருத்திக் கொண்டிருந்தார்.
“மகள் கூட சொன்னவ. அப்பாவுக்கு இப்போதைக்கு இதை ஒன்றும் சொல்லிப் போடாதேயுங்கோவென்டு. ஆனா நான்தான் மனம் கேக்காமல் எல்லாத்தையும் உங்களிட்ட சொல்லிப்போட்டன்” இப்படி மினைவி சொல்ல. சிதிலமடைந்து சீரழிந்து போய்விட்ட மகளின் வாழ்வை நினைத்து நெட்டுயிர்த்துக் கொண்டு குசின்ரியை விட்டு அவர் தனது அறைக்கு வந்தார். அங்கே அறையினுள் இருந்த மேசை மீது நான்கு நாட்களுக்கு முன்பு அவர் புத்தகக் கடைக்குச் சென்று வாங்கி வந்த “கர்ப்பிணி காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை” என்ற புத்தகம் கண்ணில்பட்டது. வெளிநாட்டில் இருக்கும் மகளுக்கு இப்படியான புத்தகம் அவசியம் உதவும் என்ற நோக்கில் அக்கறையாக நினைத்து இதைப் போய் அவர் வாங்கி வந்திருந்தார்.
பிள்ளைத்தாச்சிக்கு அருகிலே தாய் இருந்தால் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பாள். அந்த வசதி இல்லாததாலே புத்தகமென்றாலும் கலியாணம் முடித்த பிள்ளைக்கு இப்போது பேருதவியாக இருக்கும் என்றும், யாராவது அங்கிருந்து வருபவர்களிடம் போகும் போது கேட்டு அதை கொடுத்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்.
84

BSeeSDDSBBBSBBBBDBBDSDDSSBBBSeSSSDD நீ.பி.அருளானந்த
ஆனால், மனதில் வைத்திருந்த அந்த ஆசைகளெல்லாம் வெயிலைச் கண்ட பனிபோல் மறைந்து போனது மாதிரி அவருக்கு இருந்தது.
மகளின் வாழ்வு பசுஞ்சோலையாக இருக்கும் என்று அவர் இங்கிருந்து கொண்டு நாளெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவள் வாழ்வு முள்ளடர்ந்த காடாய் மாறிவிட்ட ஏமாற்றத்தைக் கேட்க உலகமே அவருக்கு சூனியமாகி விட்டதைப்போல வாழ்க்கையிலும் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் ஏதும் ஒரு உதவியைக் கூட செய்ய முடியாத ஒரு தகப்பனாக தான் இருக்கின்றேனே என்ற ஆதங்கம் மனதைப்போட்டு வாட்ட கீழே பாயில் உட்கார்ந்து கொண்டு தனது அறையில் தனியே கிடந்து அவர் கண்ணிர் விட்டு அழ ஆரம்பித்தார்.
இடி(டிசம்23-292001)
85

Page 55
நீண்ட காலத்துக்குப்பிறகு எனக்கு நெருங்கிய இரத்த உரித்துடைய சொந்தத்திலுள்ள ஒருவனை சந்திக்கப் போகிறேன். இதையே திரும்பத் திரும்ப நினைத்து புனகாங்கிதமடைந்து கொண்டிருந்தார் வில்லியம்.
கொழும்பிலேயுள்ள அந்த பிரபல ஹோட்டலில் இருந்து இரவு விருந்துக்கு வா. என்ற அழைப்பை தொலைபேசியில் விடுத்திருந்தார் அல்போன்ஸ், அமெரிக்காவிலிருந்து முப்பது வருடங்களுக்குப் பிறகு தாயக மண்ணில் காலடி எடுத்து வைப்பவர் தனது பால்ய சினேகிதனும் உறவினனுமான வில்லியத்தை ஒருமுறை பார்த்துவிடவேண்டுமென்று ஆவல் பட்டிருக்கிறார்.
சொல்லப்பட்ட சரியானநேரத்துக்கு ஹோட்டலுக்குச் சென்ற வில்லியம் வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் விபரம் சொல்லியதும் பணியாள் ஒருவன் வந்து அவரை அழைத்துக்கொண்டு மூன்றாவது மாடியிலுள்ள பன்னிரெண்டாவது இலக்கஅறைக்கு கூட்டிக்கொண்டு சென்றான்.
அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தியதும் அல்போன்ஸ்
86
 

- - - - அன்பளிப்பு கதவைத்திறந்தார். துடிப்பான இளமைப்பருவத்தில் பிரிந்து சென்றவர்கள் இப்போது அன் போடும் ஆர்வத்தோடும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அல்போன்ஸ் செல்வச் சீமையில் இருந்து காலம் தள்ளியதால் முழுதாகவே உருவம் மாறியிருந்தார். அந்த உருளையான கருவிழிகளை அவர் சுழற்றிப் பார்க்கையிலேதான் பழைய அல்போன்ஸைக் கண்டுபிடித்துக் கொண்டார் வில்லியம்
அல்போன்ஸ் வில்லியத்தின் உடம்பு முழுக்க தனது பார்வையால் அளந்து கணக்கெடுத்தார். வில்லியத்துக்கு இருக்கும் கூரான நாசி இப்போதும் அவர் மிடுக்கான முக அழகை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றி வைத்திருந்தது.
சேர்ந்தனர் நண்பர்கள். சிரித்தார்கள். மகிழ்ந்தார்கள். நல்ல நட்பு , அந்த இருவரையும் பலமணி நேரங்கள் பேச வைத்தது.
"வில்லியம் எப்படி இருக்கிறீர்?.அன்று இருந்தது போல இன்றும் கட்டைப் பிரமச்சாரிய விரதம் தானா?”. நண்பனைப் பார்த்து வினவினார் அல்போன்ஸ்.
அவர் சொல்வதைக் கேட்டு மெல்லியதாக ஒரு சிரிப்புச் சிரித்தார் வில்லியம்.
அதைப்பார்த்துவிட்டு. "வயதைப்பற்றிக் கவலைப்படாதேயும். இந்த வயசிலேதான் அநேகர் அமெரிக்காவில் விவாகம் செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையை வீணடிக்காதேயும். இப்போதும் சந்தர்ப்பம் இருக்கு” அல்போன்ஸ் சொன்னார்.
எத்தனை பேர் வில்லியத்தைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்லியிருப் பார்கள்! என்றாலும் இதிலே அவருடைய அடி அத்திபாரமெல்லாம் முழுதாகத் தெரிந்து வைத்திருப்பவர் இந்த நண்பர்தான். எனவேதான் மீண்டும் அந்தப் பழையகதையை அவருக்குச் சொல்லி ஞாபகப்படுத்த வேண்டியதான தேவை இப்போது அவருக்கு எழுந்தது.
"அல்போன்ஸ் . ஏதோ காலம் செல்லச் செல்ல அவள் நினைவுகளையும் எட்டவைத்துக்கொணர்டு வருகிறேன் மீணடும் அதையெல்லாம் கிளப்பிவிட்டு கூத்துப்பார்க்காதேயும். உம்மப் பார்க்க வந்ததில் இன்றுதான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இந்த வேளையிலும் அதைக் கெடுக்க
87

Page 56
நீ.பி.அருண்ானந்தம் வேண்டாம்'. விசன்ப்பட்டுக் கூறினார் இவர்,
இந்திய நாட்டிலே தமிழகத்திலிருக்கும் அணி னாமலைப் பல்கலைக்கழகத்தில் தன்னோடு படித்துக்கொண்டிருந்த இந்தியத் தமிழ் பெண்ணை முன்பு வில்லியம் காதலித்திருந்தார். விடுமுறையில் தனது நாட்டுக்கு வந்திருந்தபோது இங்கே காதல் விவகாரத்தையும் பெற்றோரின் காதில் போட்டார். வேண்டாமென்று அவர்கள் தடுத்தனர். மீறிச் செயற்படவும் துணிவில்லை இவருக்கு. அதனால் வேண்டுமென்று இருந்த ஆத்திரத்தையெல்லாம் படிப்பிலே கொண்டுபோய்த் தாக்கினார். கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதைக் கேள்விப்பட்டு அங்கே காதலி அதிர்ந்தார். இவர் வரவைக் காணாத அவள் தனது வாழ்வை தற்கொலை செய்து முடித்துக்கொண்டாள். அயல் நாட்டிலிருந்து சேதி கல்லூரி நண்பர்கள் மூலமாக இவருக்கு அறியக் கிடைத்தது.
வில்லியம் பித்துக்குளியைப்போல் ஆகிவிட்டார். சில நாட்கள் தெருவழியே திரிந்தார். பிறகு திருந்தினார். இதற்குப்பிறகு திருமணம் அவருக்கு எட்டிக்காயாகக் கசந்து விட்டது. எனவேதான் படுத்துப்போகிற வயது வருமட்டும் தனிக்கட்டையாகவே இருந்து விட்டார். இது அல்போன்சுக்கும் அறவே தெரியும். என்றாலும் அக்கறையோடு கதைக்க வேண்டுமே அதற்காகத்தான் இப்படி.இது இருவரினதும் கதைதானே. அல்போன்ஸ் அந்தநாளில் எப்படி அமெரிக்காவுக்குப்போனார்?
அதுவும் ஒரு சாகசம் போன்றுதான் சொல்லத் தோன்றும் அவர் அதை சொல்லும்போது கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் படிக்கும் காலத்திலெல்லாம் துடியாட்டமும் துணிச்சலுமாயிருந்தவர் அல்போன்ஸ், கையிலே கொஞ்சம் பணத்துடனே வைத்திருந்த பி.எஸ்.ஏ. பெண்டம் மோட்டார் சைக்கிளுடன் கப்பலில் பயணித்து விட்டார் லண்டனுக்கு கடலைக் கடந்து செல்வதற்கு மாத்திரம் கப்பல். தரையிலெல்லாம் மோட்டார் சைக்கிள் ஓட்டம் இப்படியாக முதலில் லண்டன் மாநகரத்தைப் போய்ச் சேர்ந்தவர் அடுத்து அமெரிக்கா போய் அங்கேயே தங்கிவிட்டார். மற்றவரைத் தன்பால் கவர வேண்டும்ென்று இப்படியான ஆசைகளெல்லாம் இவரிடம் மண்டிக்கிடந்தது.
SS

அன்பளிப்பு “ஜொலிலைவ்.” என்று எடுத்ததுக்கெல்லாம் இவர் சொல்லுமளவிற்கு அல்போன்ஸின் குடும்பம் மிகவும் வசதியுள்ளது. தந்தை பீற்றர் உழைக்கும் வழிதெரிந்த ஒரு ஒவசியர். ஆட்களை வைத்து வேலை வாங்குவதிலும் கெட்டிக்காரர். ஒன்றரை வருடத்தில் கட்ட வேண்டிய பெரிய பாலத்தை ஒப்பந்தத்தில் எடுத்து ஆறு மாதத்தில் அதை உறுதியாகக் கட்டி முடித்து அந்த நாளில் ஒரு வெள்ளைக்கார பொறியியலாளருக்கே இதனால் சவால்விட்டவர் இவர்.
இவருடைய வேலைத் தலத்தில் தேயிலைத் தோட்டத்து வேலையை விட்டுவிட்டு வந்த பெண்கள்தான் கூலியாட்களில் அதிகப்படியாக இருந்தனர். இவர்கள் எல்லோருக்கும் ஆண்களைப் போலல்லாது அரைச் சம்பளம்தான். இப்படியெல்லாம் வருமானம் வந்து அள்ளிச்சேர்த்த காசிலே பின்பு அவர் நிலத்தை வாங்கிப் போட்டார்.அப்படியே ஒன்று இரண்டு என்று ஆயிரம் பரப்பு காணிவரை வாங்கியதும் உறுதிப் பத்திரங்களை கட்டி வைத்து தான் நினைத்ததை சாதித்துக் கொண்டதாக மனம் மகிழ்ந்தார். இந்த வேளையிலேதான் இவருடைய மனைவி கடைக் குட்டியாக ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தாள். ஆயிரம் பரப்புக் காணிகள் வந்து சேரவும் பிறந்த குழந்தை என்பதால் தனது மழலைக்கு இவர் ஆயிரம் காணி என்று பெயரும் வைத்தார்.
"இவள்.ஆயிரம் காணி அங்கே எப்படி இருக்கிறாள்?" அறிய வேண்டும் என்ற அவாவில் வில்லியம் இப்போது அல்போன்ஸின் தங்கையை விசாரித்தார்.
"அவளுக்கென்ன சுதந்திரப் பறவை, நல்ல வேலையில் இருக்கிறாள். ப்ோதிய சம்பளம் கிடைக்கிறது. முதலில் அமெரிக்க வெள்ளையர் ஒருவரை திருமணம் முடித்தாள். ஆனால் வாழ்க்கையில் ஒத்துவரவில்லை என்பதற்காக விவாகரத்துப் பெற்றுவிட்டு இப்போது அமெரிக்க கறுப்பு இனத்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துகிறாள்."
சொல்லிவிட்டு எதையோ நினைத்துக்கொண்டு அவர் சிரித்தார். அல்போன் ஸப் எங்களுடைய தமிழ் ஆட்களுக்கும் அவர்களுக்கும் தாம்பத்தியத்தினுள் எல்லாமே ஒத்துப்போகுமா?”
வியப்போடு நண்பர் கேட்டார். "மனம் இடம் கொடுக்கையில் உடலும் இடம் கொடுக்கும்தானே
89

Page 57
  

Page 58
நீ.பி.அருளானந்தம் ܚܒܸܚܒܝܒܚܕ ܒܒܤ- ܒܬܐܒܝܠ ܕܒܚܬܐ ܠܐ ܥܬܐ
விடைபெற்றார்.
வில்லியம் திரும்பும் வேளை சிறிய ஒரு காசிந உறையை தன் சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்து அவரது சட்டைப்பையிற்குள் வைத்துவிட்டார்.
“என்ன இது?" "வைத்துக்கொள்ளும், இங்கு வந்ததில் நான் உமக்குத் தந்த அன்பளிப்பாக இருக்கட்டும். மகிழ்ச்சியோடு இதை நீர் பெற வேண்டும்."
நண்பனுடைய அன்பு வில்லியத்தின் கண்களைக் கலங்க வைத்தது. விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்த அவர் ஆறுதலாகக் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அல்போன்ஸ் கொடுத்த அந்த உறையை வெளியில் எடுத்துத் திறந்து பார்த்தார்.
மட.மட.வென்று கசங்கிடாத புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அதில் இருந்தன. விரல்களால் தாள்களை மடக்கிப் பிடித்து ஒவ்வொன்றாகத் தட்ட மொத்தம் இருபத்து ஐயாயிரம் ரூபா அதில் கணக்காக இருந்தது. வில்லியம் காசைக் கணக்கெடுத்து முடித்ததும் வன்னியிலிருக்கும் அந்த ஏழைக் குடும்பத்தைத்தான் நினைத்துப் பார்த்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த வேளை தனக்கு இருக்சு இடம் தந்து அன்பாகத் தன்னைப் பார்த்துவிட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது உபகாரம் செய்துவிட வேண்டுமென்பதே அவரது பலநாள் ஆசை, வில்லியம் கொழும்புக்கு வந்த பின் தனியார் ஸ்தாபனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். மாதம் அதிலிருந்து கிடைக்கும் ஊதியம் தனிக்கட்டையாக இருந்த அவருக்கு திருப்தியாகப் போதுமானதாக இருந்தது.
இந்தப் பணத்தை அவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் குடும்பம் வாழும். சில சிக்கல்கள் அவர்களுக்குத்தீரும். இப்படி நினைத்து பணத்தை மீண்டும் உறையில் போட்டு மேசை லாச்சிக்குள் வைத்தார். நாளை இதை வவுனியாவிற்கு அனுப்பிவிட்டால் அங்கு இதை அவர்கள் வந்து பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் செய்த உதவிக்கு உபகாரமாக இந்த உதவியையாவது தன்னால் செய்ய முடிந்ததே என்று நினைத்ததில் அவரது மனம் தெளிவு பெற்று நிம்மதியடைந்தது. இதையிட்டு மானசீகமாக நண்பருக்கு அவள் நன்றியைக் கூறிக்கொண்டார்.
இடி (மே27-ஜூன், 02 2001) 92

தம்பிராசா தன் சந்தேகத்தை நிவர்த்திக்க வீட்டு வாசல் படியின் மேல் இருந்து கீழே இறங்கி வந்தார்.
"தம்பிராயண்ணை" பிறகும் கூப்பிட்டான் தியாகு. அவனை இன்னார் என்று சரியாக அடையாளம் கண்டதும்.
"தம்பி தியாகு . வாடாப்பா வர் " என்று சொல்லிக்கொண்டு அவனுக்கு அருகில் தம்பிராசா போய் விட்டார். "என்ன கோலமிதப்பா? நல்லாய்காய்ஞ்சு ஆள்வறண்டு அடையாளமே
93

Page 59
S.------ »........", o கபளிகரம் தெரியாத மாதிரிப் போயிட்டாய். அங்கினை எப்பிடி உன்ரை மனுஷி பிள்ளையள் சுகமாயிருக்கினமே?” பாசத்துடன் தியாகுவை குசலம்விசாரித்தார்.
“எப்படியண்ணை சுகமாயிருக்கேலும். இங்க எங்கட காணியில வீட்டில எண்டு நாங்கள் இருக்கேக்க தேரில இருந்தது மாதிரி இருந்தம் இப்ப தெரிவில நிற்கிறம். அருமந்த எங்கட காணியை விட்டு விட்டுப் போனதோட எங்களுக்கெல்லாம் சனிப்பிடிச்சமாதிரிப் போயிட்டுது”
சொன் ன கையோடு தியாகுவின் கணிகளில் கணிணிர் பொடுக்கிட்டுச்சிதறி வழிந்தது.
“சீச்சீ. என்னடா தம்பி இது . சின்னக்குழந்தையள் மாதிரி அழுது பிடிச்சுக்கொண்டு”
"வா வீட்டுக்குள்ள போய் இருந்து கதைப்பம்” என்று பாசத்தோடு கூறி கூட்டிக்கொண்டு போனார்.
“தணிணிர் தாங்கோவணிணை வெய்யிலில அலைக் கழிஞ்சு திரிஞ்சதிலை சரியாய் விடாய்க்கிது.”
"கொஞ்சமிருக்கிறியே வீட்டு மரத்திலயிருக்கிற தோடம்பழம் பிடுங்கிக் கரைச்சுதாறன்.”
“வேணாமண்ணை.உஸ். சரியாய் உடம்பு நெருப்பாய்க் கொதிக்குது. இப்பத்தைக்கு பச்சைத் தண்ணியைத்தான் தாருங்கோ அதைத்தான் குடிக்கத் தாகமாயிருக்கு” -
அவன் சொன்னதோடு கையில் செம்பை துரக்கிக் கொண்டு கிணற்றடிக்கு அவர் விரைந்தார். கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் அள்ளி முதலில் செம்பை தண்ணீர் விட்டுக் கழுவி கீழே ஊற்றியதோடு குளு குளு' என்றிருந்த தண்ணீரை அதில் நிறைத்துக் கொண்டோடி வந்து அவனிடத்தில் கொடுத்தார்.
அதைக் கையில் வாங்கி தண்ணீரை முதலில் ஒரு மிடறு விழுங்கவே தியாகு திக்கு முக்காடினான்.
“என்ன? என்ன நடந்தது உனக்கு?”
“இல்லை . ஒண்டுமில்லையணிணை. காலேலயிருந்து பச்சைத்தண்ணியும் பல்லில படேல்ல அதுதான் இப்ப தொண்டையும் காய்ஞ்சு உள்ள இறங்கமாட்டனெங்.ங்.கிது”
"என்ன மனுஷசனப்பா நீ. யோயிச்சு யோசிச்சு உனக்கு என்னத்தான்
94

--- நீ.பி.அருளானந்தம் திரும்பியும் வரப்போகுது. நடந்து முடிஞ்சதை இப்படியே திரும்பத் திரும்ப யோசிச்சுப்பிடிச்சுக் கொண்டிருந்து பிறகு உனக்கென்னவும் நடந்துதெண்டா உன்ர மனுஷி பிள்ளையளை ஆரப்பா பாக்கிறது சொல்லு பாப்பம்”
அவர் சொல்லிக்கொண்டிருக்க தியாகு அந்தச் செம்பிலிருந்த தண்ணிரையெல்லாம் மடக்கு மடக்கென்று குடித்து முடித்துவிட்டு வெறும்செம்பை அருகே மேசையின் மேல் வைத்தான். அன்று முழுக்க வெயிலில் அலைக்கழிந்து திரிந்ததால் அவனது கண்கள் கொவ்வைப்பழம் போல் சிவத்து நிறத்திருந்தன.
"உங்களுக்குத் தெரியும்தானே அந்தக் காணியில நான் தனியக்கிடந்து எவ்வளவு பாடுபட்டன். எல்லாரும் கூலிபிடிச்சு கிணறு வெட்ட தனிய நானும் மனுஷியும் சேர்ந்துதானே அந்தக் கிணத்த வெட்டி முடிச்சம் . கொதுக்குக் கொதுக்கெணிடு ஊத்துள்ள என்னமாதிரிக்கிணறது. எல்லாப்பாடுகளும் அதுக்குள்ள இருந்து நாங்கள் பட்டு ஆளாய்ப் பேராய் பிறகு வந்து கொண்டிருக்க இந்த நாசமறுவார் கரையான் புற்றெடுக்க கருநீாகம் குடிகொண்டதுபோல வந்து பூந்தாங்களே.” −
இவன் தியாகு சொன்ன அத்தனையும் நூற்றுக்கு நுாறு உண்மையென்று தம்பிராசாவுக்கும் தெரியும். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னம் அந்த இடத்தில் சன்னல் பின்னலாகக் கிடந்த காட்டை வெட்டி தியாகுவும் இவரும் ஆளுக்காள் குடிசை போட்டு குடியேறி இருந்தார்கள்.
பிறகு, இந்தக் காணிக்காக கச்சேரிக்கு மனுப்போட்டு இரண்டுவருடம் கடந்து பல விசாரணைகள் வைத்து காணிக்காக முதன்முதல் கொடுக்கும் உத்தரவுச்சீட்டு இருவருக்கும் கிடைத்தது.
இதற்குப் பிறகு பல குடிகளும் அருகருகே அதிலே வந்து குடியேறிவிட செடிக்காடுமண்டி மறைவாய் இருந்த அந்த இடம் செழித்ததான குட்டிக்கிராமமாய் மாறி பிரபல்யமாகியது.
என்றாலும் யுத்தம் தொடங்கியதற்குப் பிறகு அந்த இடத்திற்கு தொலைவாயிருந்த இராணுவத் தளத்திற்கு மேலும் இடம்தேவையென்று விஸ்தரிப்புச்செய்த இடத்தில் எத்தனையோ மக்கள் குடியிருப்பு இடங்களை அவர்கள் தங்களுக்கென்று பிடித்துக்கொண்டு ஏப்பம்விட்டார்கள்.
95

Page 60
8:88-88*88888888888888:8888888888888888888888X:8::8888:8888888XXX க்பளிகரம்
அந்த எல்லைக்குள் அகப்பட்ட காணிகளிலே தியாகுவின் காணியும் சேர்ந்து பறிபோனது. ஆனால், தம்பிராசாவின் காணிவீடு தெய்வேத்தனமாய் அதற்குள் அகப்படாததால் தப்பியது.
தாங்கள் சுவீகரித்த காணிகளுக்கெல்லாம் நட்டஈடு வழங்குவதாகவே அவர்கள் சொன்னார்கள். அவர்களிடம் காணியைப் பறிகொடுத்தவர்கள் கச்சேரிக்கும் அங்கும் இங்கும் என்று அலைந்துகொண்டிருக்க எப்படியோ ஒருவழிக்கு வந்து நாளை இவர்களுக்கு அந்த நஷ்ட ஈட்டுக்கான கொடுப்பனவு நடக்க இருப்பதாக எல்லோருக்கும் அறிக்கைபோயிருந்தது. தியாகுவும் அப்படியானவர்களிலே ஒருவன் என்பதால் மற்றவர்களைப் போல் அவனும் இதற்காக வந்திருந்தான்.
தியாகுவிற்கோ காசு, பணம் பெரிதாகத் தெரியவில்லை. அவன் பாடுபட்டு வளப்படுத்தி எடுத்த காணிநிலம் தான் எல்லாவற்றையும் விட பெறுமதிமிக்கதாகத் தெரிந்தது. இருந்தாலும் காணி பறிபோனதாய் ஆகியதன் பின்பு இன்றைய நிலையில் யாரிடம் போய் இதற்காக வாய்திறக்க ஏலும்? பேசாமல் எல்லோரையும் போல் அந்தக் கொடுப்பனவை வாங்கிப்போகவே அவனும் வந்திருந்தான். இந்த ஊரில் அவன் நெருங்கிப்பழகியது தம்பிராசாவுடன் மட்டும்தான். அதைக்கொண்டே அவனும் அவரைத்தேடி இந்தவீட்டுக்கு வந்திருந்தான்.
இந்தக்கதைகளோடு அவர்கள் இருவரும் அதிலே இருந்து சிறிது நேரம் கடந்துபோனதன் பிறகு தம்பிராசா அண்ணர் வீட்டில் வேறு ஒருவரும் இல்லாதிருப்பது தியாகுவிற்கு ஞாபகம் வந்தது.
"சொன்னாப்போல. ஒண்டைக்கேட்க மறந்திட்டன்.அக்கா எங்க அணிணை?. நான் வந்ததுக்கு அவவைக் காணக் கிடைக்கேல்லயே?”
அவன் அக்கா என்று குறிப்பிட்டது தம் பிராசாவினுடைய மனைவியைத்தான்.
தனது மனைவி விெளிநாட்டில இருக்கிற மகளின்ரை பிள்ளைப்பேறு பார்க்கப் போயிருக்கிறா. என்று அவர் அதற்குப் பதில் சொன்னார்.
அப்படியே இருவரும் கதையோடு இருந்து கொண்டிருக்கப் பொழுதுபட்டுப்போயிற்று
தம் பிராசா, தியாகுவை வீட்டில் இருக்கச் சொல் லிவிட்டு
96

----------------------- *ሩ நீ.பி.அருளானந்தம் கடைத்தெருவுக்கென்று சென்றார். திரும்பி வரும்போது தங்கள் இருவருக்குமாகச் சேர்த்து சாப்பாட்டுக்கடையில் இரவுச் சாப்பாட்டை கட்டி வாங்கிக் கொண்டுவந்தார்.
“பட்டினி கிடைக்காம சாப்பிடு” அவர் வலிந்து சொல்லி நிற்க ஒன்றும் பேசாதிருந்து தியாகுவும் சாப்பிட்டு களையாறினான்.
அன்று பெளர்ணமி என்றபடியால் நல்ல நிலவு வெளிச்சம் பட்டப்பகல்போல் துலக்கமாக இருந்தது. முற்றத்தில் பிரம்புக் கதிரைகளைப் போட்டுக்கொண்டு அவர்கள் இருவரும் ஆறுதலாய் இருந்தார்கள். நிலவின் பொன்னொளியில் அங்கே பகட்டாய்த் தெரியும் இளம் பழமரங்களைப் பார்த்துவிட்டு தியாகு, மீணடும் தனது காணிக் கதையை ஆரம்பித்துவிட்டான். −
“என்ர காணியிலை எத்தனைமாமரம் பலாமரம் எப்படியெல்லாம் காய்காய்க்கும் பாத்தியள்தானே?. அந்த ஜம்புமரம் காய்ச்சால் பார்க்கச் சிலுசிலுவெண்டு எவ்வளவு ஆயிரம் காய் இருக்கும். உங்களுக்கும் அதில பிடுங்கிக்கொண்டந்து நிறையத் தந்தனானல்லே.
தம்பிராசாவுக்கு திரும்பத்திரும்ப இப்படி அலட்டுவதைக்கேட்க அலுப்பாகவிருந்தது. அந்த நேரம் அவனிடம் பிரதானமான இன்னொரு கேள்வியைக்கேட்டு அதற்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் ஆர்வமுற்றார்.
“தியாகு உன்னட்ட ஒண்டைக் கேக்க வேணுமெண்டு அப்பவே நினைச்சன் ஆனா, நினைச்சவுடன அந்த நேரமே அதை மறந்தும் விட்டன்” அவர் இப்படிச் சொல்லவும் வெறுமையிலும் புதிதாக ஒரு புன்சிரிப்பு தியாகுவிடம் மலர்ந்தது. ܀
“உங்கட கதையைக் கேட்கவே பகிடியாயிருக்கு விஷயத்தைக் கேளுங்களன் சொல்லுறன்.”
அவன் இப்போது உற்சாகமாக இதைச் சொன்னான். “இங்கயிருந்து பெண் சாதி பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு வெளிக் கிட்டுப் போன நீ, நேராய் நீ பிறந்த ஊருக்குப் போய் ச் சேர்ந்திருக்கலாம்தானே?. உன்ரை ஆட்கள் அங்க நல்ல வசதிவாய்ப்பா இருக்கினம் எண்டு முன்னமும் ஒருக்கால் என்னட்டை நீ சொல்லியிருந்தாய்,
97

Page 61
கபளிகரம் பேந்தேன் கஷ்டப்பட்டுக்கொண்டு கிடக்கிற உன்ரை மனுஷியின்ரை தாய் தேப்பன் இக்கிற ஊர்வழிய போய்ச் சேர்ந்தாய்.?”
“அதுதான் அண்ணை. அதுதான் சாதியெண்டிற பெரிய நோய் எண்டுறது. எங்கட ஆட்களில இப்பவும் அப்படியே இந்தவியாதி ரெத்தத்தில இருக்கு. இந்தச் சாதிப் பாகுபாட்டால சகோதரம் எண்டுற பாசம் இல்லாமல் போகும், தாய்பிள்ளை எண்டுற உறவு இல்லாமல் போகும். எனக்கும் அப்படித்தான் நடந்தது.நான் பொம்பிளை ஒருத்தியை விரும்பி எளிய சாதிக்கைபோய் விழுந்ததெண்டு சொல்லி துள்ளியடிச்சு வீடுவழிய அண்டாமல் எங்கட ஆட்கள் என்னை விலத்தி வைச்சிட்டாங்கள். போற இடங்களிலயும் அந்த வியாதி தொற்றிக்கொண்டு வந்து என்னைச் சீவிக்கேலாமல் செய்திடுமோவெண்டு பயந்துதான் இவ்வளவு காலமா இந்த உண்மையை உங்களுக்கூட நான் சொல்லேல்ல. வீட்டில பாரதி படத்தை பெரிசா பிறேம் போட்டு சுவரில கொழுவி வைச்சிருப்பாங்கள். பெரியாரிண்டை படத்த பவறுக்கு வைச் சிருப்பாங்கள். காந்தியின்ரை படத்தைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டு கதைப்பாங்கள் ஆனா, உண்மையில எல்லாமனுசனையும் மனுசரா மதிக்கிற தன்மை, மனச்சுத்தம் எங்கடை ஆட்கள் ஒருவரிட்டயுமேயில்ல. எல்லாம் வேஷம். பொய்தான். நல்ல நோக்கம் ஒண்டுமே ஒருவரிட்டையும் இல்லை!" அவன் ஆவேசப் பட்டு இப் படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க.
“நேரம் போயிற்றென்ன?.வேளைக்குப் போய்ப்படுப்பமே?” என்று, தம்பிராசா கதையை வேறுவழிக்கு மாற்றிவிட்டு நிலவைநிமிர்ந்து பார்த்தார். இந்த மாற்றத்தின்பின்பு சற்றுநேரம் இருவருக்கிடையிலும் ஒருபேச்சுமில்லாது அமைதி நிலவியது.
“பாயைப்போய் நான் விரிக்கவே” என்று முதலில் தம்பிராசா அந்த அமைதியை விரட்டினார். அவர் அப்படிச்சொல்லியதோடு கதிரையைவிட்டு எழ, அங்கே கிடந்த இரு கதிரைகளையும் இருகைகளிலும் தூக்கி எடுத்துக்கொண்டு தியாகு, தம்பிராசாவின் பின்னாலே போனான்.
இரவு தியாகுவிற்கு ஒழுங்காக நிதி திரை வரவில்லை எண்ணத்துப்பூச்சிகள் நெஞ்சைப்போட்டு அரிக்க பாயில் கிடந்து புரண்டு
98

& X& நீ.பி.அருளானந்தம் கொண்டிருந்தான். விடிவெள்ளி பூத்த வேளையில் மட்டும் குட்டித்தூக்கம் போக அதிலும் தட்டி எழுப்பிவிட்டதுபோல நினைவுவந்து திடுக்கிட்டுக் கண்விழித்தான்.
உடனே வெளியே போய் வேம்பு மரக்குச்சியை உடைத்து பல்லை இடித்து தீட்டினான். கைகால், முகம்கழுவி வேட்டியால் துடைத்துவிட்டு அறைக்குத்திரும்பி வந்து தம்பிராசாவைப்பார்த்தான். அவர் அப்போதுதான் கண்விழித்து பஞ்சியில் கிடந்து பாயில் உழன்று கொண்டிருந்தார்.
“நான் போயிற்று வாறணண்ணை’ தியாகு சொன்னான். ‘ம்.என்ன வேளைக்கே எழும்பி வெளிக்கிட்டாய்?” “கோயில்களுக்கெல்லாம் போயிற்றுத்தான் பிறகு காசு வாங்கப்போக வேணும் எண்டு பார்க்கிறன்.”
“நல்லாய்க் கும்பிட்டுக்கொண்டு போ. எல்லாம் நல்லபடியா நடக்கும்.
நடை நடையாய் நாள் முழுக்க நடந்து திரிவதில் இப்போ தெல்லாம் தியாகுவிற்கு குறைச்சலில்லை. வெள்ளனவே நடந்து திரியும் வேலை அவனுக்கு ஆரம்பமாகிவிட்டது. முதலில் மூத்தவிநாயகர் கோயிலுக்குப் போனான்.அடுத்து, கந்தசுவாமி கோயிலுக்குப் போய்க்கும்பிட்டான். பிறகு, அம்பாள் ஆச்சியிடம் போனான். எல்லா இடத்திலும் திருநீற்றை அள்ளி நெஞ்சில் தடவினான். கொஞ்சநாளாக நெஞ்சுப்பக்கம் ஒருகுத்து வாதைநோய் அவனுக்கு இருந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் இப்போது பரவாயில்லை என்கிறமாதிரி அசட்டை செய்து அங்கே கோயில் கோயிலாய்த் திரிந்து அலைந்து விட்டு.
சரியான நேரம் நெருங்க பணக் கொடுப்பனவு நடக்கும் இடத்துக்குப்போனான். r
அங்கே அவனை மாதிரியே இருக்கும் வறண்ட முகங்களோடு சேர்ந்து தானும்போய் நிரையில் நின்றான்.
பணத்துக்காக தன் முகத்தை காசாளரிடம் காட்டினான். அங்கே எல்லோருக்கும் கற்றைகற்றையாக ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தன.
ஆனால், காணி பெறுமதியா? பணம் பெறுமதியா?
99

Page 62
& 8 w கபளிகரம் இரண்டையும் தராசில் போட்டு நிறுத்தமாதிரி காணியைப்பறி கொடுத்த எல்லாருமே பெறுமதியைப் பார்த்தார்கள்.
அவர்கள் முகங்களெல்லாம் வாடின. பெறுமதி இல்லாத அந்தப்பணத்தை கையில் வாங்கியபோது அவர்கள் கண்களெல்லாம் கலங்கின.
என்றாலும் அங்கே நின்ற எல்லோரையும் போல தியாகுவும் பணத்தைப்பெற்றுக்கொண்டான். r
ஒரு காகிதத்துண்டில் அதைச்சுற்றி ஆப்பு இறுக்கியதுபோல இடுப்பு வேட்டிக்கட்டுக்குள் இறுகச் செருகினான்.
வீதியில் நடக்க நடக்க சிலசெலவுக் கணக்குகளை அவன்
மனக்கணக்காகப்போட்டான். VK. பிள்ளைகளுக்கு சப்பாத்து உடுப்பு. மனுஷிக்கு சீலை சட்டைத் துண்டு.
னெக்கொரு செருப்பெண்டாலும் வாங்க வேணும். வேணாம்,
வேணாம். செருப்பும் வேணாம். எனக்கெண்டு ஒணிடும் வேணாம். அந்தக் காணியில வெய்யிலுக்க கிடந்து காஞ்சு வேலை செய்த எனக்கு இந்தச்சூடெல்லாம் ஒரு தூசெல்லே முதலில மனுஷியின்ரை ஊரில வெறுங் காணியெண்டாலும் பரவாயில்ல நல்ல இடம்பாத்து கிணறுவெட்ட வேணும் அதுக்குள்ள சோக்கானதொருவீடும் போடவேணும். பொம்பிளைப் பிள்ளையும் குமராகிற வயசாகிது அதுக்குள்ள இதுகளெல்லாத்தையும் சட்டுப்புட்டெண்டு செய்து முடிச்சுப்போட்டு மனுஷிபிள்ளையளை அதில கொணி டுபோய் இருத்திப் போட வேணும். இம்மட்டாய் எத்தினை பொறுப்புக்கள் தலைச்சுமையாய் இருக்கெனக்கு.
தியாகு. கடை வீதிவழியே இப்படியாக நினைத்துக்கொண்டு நடந்தான். அவன் இப்போது போட்டுக்கொண்டு வந்த திட்டங்களை யெல்லாம் புறம்போக்கிவிட்டு ஒரேயொரு பெரிய கேள்வியொன்று அவனது மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து அதுபின்பு அவனையே போட்டு உலுக்கி எடுத்தது.
உன்னால் இனிமேலும் இவைகளைச் செய்திட முடியுமா? ஏன் முடியாது? நிச்சயமர முடியும். நான் செய்வன் என்னை றோட்டில
100

ჯx:ჯჯაჯა:ჯჯ'sჯ நீ.பி.அருளானந்தம் விட்டவங்களெல்லாம் ஆ வெண்டு வாய்திறக்கக்கூடியதாய் இருக்கச் செய்து காட்டுவன்.
மன தைரியத்தில் தியாகு, தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஆனால், உடல் பலத்தோடு உறுதியாய் அந்த வீதியில் அவனால் நடக்கக்கூட முடியாதிருந்தது. w அந்த நட்ட நடு வெயிலில் கொதித்துக் கொண்டிருக்கும் சுடுமணலில் அப்படியே கிறுதிபோட்டு அவன் விழுந்தான். '
எறும்புக்கடிவாங்கிய மண்புழுப்போல நிலத்தில் கிடந்து கொஞ்சநேரம் துடித்தான்.
காகம் போல் குணமுள்ள மனிதர்கள் அவன் விழுந்ததைக் கண்டு கொண்டு அவனருகே ஓடோடி வந்தார்கள். •
“ஆ.ஐயோ” என்று கத்திக்கொண்டு அவனருகில் சேர்ந்தார்கள். “சோடா சோடா” என்றும் “தண்ணீர் தண்ணிர்” என்றும் அங்கு சுற்றி நின்ற பலரது குரல்கள் ஏகமாக ஒரே நேரத்தில் ஒலித்தன.
ஆனால், அவனால் இனிமேல் சோடாவும் குடிக்க முடியாது, தண்ணீரும் குடிக்க இயலாது என்பதையும் அவன் இப்போது உயிரற்ற ஓர் மரக்கட்டை என்கிறதையும் அங்குள்ள ஒருவராலுமே இந்தளவு நேரமாக இனங்கண்டு பிடித்துக்கொள்ளமுடியவில்லை.
இப்போது அவன் ஒரு பிணம். என்று அறிய இவர்களுக் கெல்லாம் இன்னமும் கொஞ்சநேரம் ஆகலாம்.
ஆனால், அவன் இடுப்பில் செருகி வைத்திருந்த அந்தப் பணம். அந்தச் சனக்கூட்டத்தில் அதை கபளிகரம் செய்த கள்வன் யார்? எடுத்தவரிடம் அந்தப்பணத்தைக்கேட்டு இந்தப்பிணமும் இனிமேல் வாய்திறக்காதே.
(2003)
101

Page 63
நீ.பி.அருளானந்தம்
ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்தவனை காலை இளந்
தென்றல் தழுவி வரவேற்றது.
பத்து வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் தனது சொந்த ஊரில் அவன் காலடி பதித்திருக்கிறான். கையில் பாரமாக பிரயானப் பை இருந்தாலும் அருகில் நின்ற ஆட்டோவில் ஏறாது நடந்து செல்வதற்கே அவன் மனது துரு துருத்தது. இளவெயில் உடலைச் சூடாக்க நடையைத் தொடங்கினான்.
அப்பப்பா என்ன மாற்றம்? அவன் இந்த ஊரில் இருந்த காலத்தைப் போலவா இப்போது இருக்கிறது. அகலமான வீதிகள், நெருக்கமான வீடுகள், அடுக்கு மாடி கொண்ட கடைகள், எங்கு பார்த்தாலும் விளம்பரப் பலகைகள், ஓயாத இரைச்சல்கள் எல்லாமே அவனுக்கு வியப்பாக இருக்கின்றன. ஆனாலும், வீதியின் இருமருங்கும் இருந்த பெரிய மரங்களைத்தான் காணவில்லை. அந்த வாகை மரங்களும், தேக்கு மரங்களும் எத்தனை அழகு? வீதியிலே போனாலும் வெயில் தெரியாமல் எவ்வளவு குளிர்ச்சி,
அந்த மரங்களனைத்தும் எங்கே?
O2
 

நானயம் பிரயாணப் பையின் பட்டி தோள் மூட்டை அழுத்தியது. மறு தோளுக்கு மாற்றிப் போடலாம் என்று பட்டியைப் பிடித்துத் தூக்கும்போது அருகேயிருந்து ஒரு குரல் உதவுவதற்கு முன்வந்தது. அவன் பாரம் தூக்கும் கூலித் தொளிலாளி என்பது தெரிந்து விட்டது. இளம் வயது, கூனல் முதுகு, சிரித்த வாய் மூடாது நின்றான்.
இந்த முகத்தை எங்கேயோ கண்டிருக்கிறேன். எங்கே எப்போது? ஞாபகம் வருவதற்காக மூளையைக் கசக்கினான். "உன்ர பேரென்ன?” ஹி..ஹி.."ராசன் ஏன் கேக்கிறியள்?" “அடடே ராசனே. நீயென்ன இப்படி வளந்திட்டாய் என்னைத் தெரியுதே உனக்கு?"
தலையைச் சரிந்தபடி அவனையும் கையில் உள்ள பையையும் பார்த்தவாறு ராசன் மீண்டும் சிரிக்கிறான்.
"தெரியேல்ல. என்கிறான்” “என்னடா தம்பி மறந்திட்டாய். நான் தான் செல்வம். அண்ணை. அண்ணை எண்டு கொன்னையடிச்சுக் கொண்டு கூப்பிடுவாயெல்ல?"
தலையைச் சொறிந்துகொண்டு ராசன் மீண்டும் சிரித்தான். ”தெரியும் இப்ப தெரியும் பையைத் தாங்கோ"
உரிமையோடு வாங்கிக் கொண்டான் ராசன். இவன் தோளிலே அந்தச் சுமை ஏறியதும் பாரம் இறங்கின ஆறுதலிலே அவனுக்கும் மனம் உற்சாகமடைந்தது. ராசனைப் பற்றிய பழைய நினைவுகள் துளிர்விட்டு எழும்பின.
அப்போதெல்லாம் என்ன மாதிரி இருந்தான் ராசன்? பதின்நான்கு வயது என்று சொல்லுமளவிற்கு உருவத்திலோ மூளை வளர்ச்சியிலோ ஒருவித ஒற்றுமையுமில்லாது குறைபாடுடைய சிறுவனாக இவன் இருந்தான். சுரைக்காய் வயிறும் பூனைக் கண்ணும் எச்சில் வழிய மூடாத வாயும் வெளிறிய தோற்றமுமாக பார்ப்பவர்களுக்கு அருவருப்பான ஒரு விதத்தில். சிந்தனைக்கு குறுக்குக்கட்டை போட்டுவிட்டு பார்வையை அவன் மேல் ஓடவிட்டான். மேலும் அவனுடன் பேசவேண்டும் என்றுதான் ஆவல் மேலிட்டது.முன்பு அவன் சரியாகக்கூட கதைக்கமாட்டான். எதுக்கும் அச்சா
1)

Page 64
ነ• ;. ፥:&:ጇxx:.m >K ́SR நீ.பி.அருளானந்தம் புச்சா என்று தான் வார்த்தைகள் ஆனாலும் சைகை காட்டுவான். உயர்த்திய 6),866 கீழே விட பல நிமிடங்கள் பிடிக்கும். இப்படித்தான் இருந்தான் ராசன் அப்போது.
“ஏன் ராசன் இப்ப எங்க இருக்கிறாய்? எங்க சாப்பிடுறாய்? மாாமா வோடதான் இருக்கிறியோ?”
முன்பு தனது மாமன் வீட்டிலிருந்துதான் ராசன் வளர்ந்தான். இன்று மாற்றமுண்டா என்று பார்க்கவே அவன் இப்படிக் கேட்டான்.
‘மாமாவோட இப்ப இல்ல, கடையிலதான் இருக்கிறன். கடையில சாப்பிடுகிறன்.”
அச்சாக ஒவ்வொரு சொல்லையும் இவன் மிக அழகாகச் சொல்வதைக் கேட்டு அவனுக்கு இனித்தது. ராசு இப்போது பெரிய இளந்தாரி என்று நினைக்க அவனுக்குப் பூரிப்பாக இருந்தது.
தங்கையின் வீட்டை விட்டுப்போய் பல வருடங்கள் சென்றாலும் அங்கு இருக்கும் போது ராசனைப் பற்றிய சில சம்பவங்களும் அவனின் ஞாபகத்துக்கு வந்தன.
சகோதரியின் வீட்டுக்கு தள்ளியுள்ள அந்த நாற்சந்தி அருகில் இருந்த கடைக்கு செல்வம் எப்போதும் வருவான். வீட்டிலே புகை பிடிக்கப்படாது என்ற கட்டுப்பாட்டில் இந்தக் கடைக்குச் சென்றுதான் மாலை வேளைகளில் புகை பிடித்துவிட்டு வருவது செல்வத்தின் வழக்கம். இந்த நேரத்தில் இந்த ஊரிலுள்ள சிறுவர்கள் கூட்டமும் அங்கு குறைவில்லாதிருக்கும். கடைக்கு முன்னால் ராசனும் வந்து விடுவான். அவனைக் கண்டுவிட்டால் அவர்களெல்லோரும் வித்தை காட்டும் கழைக் கூத்தாடியைக் கண்டதுபோல இவனைச் சூழ்ந்து விடுவார்கள்.
“டேய் ராசன் இந்த உப்புக்கல்லை சாப்பிடுவியா?” என்று பெரியதொரு உப்புக்கல்லை கடையில் வாங்கி இவனிடம் நீட்டுவார்கள். மறுப்புச் சொல்லாமல் வாங்கி அதைக் கற்கண்டு போல் கடித்து ருசித்து மொறு மொறுவென்று இவன் சப்பிச் சாப்பிடுவான்.
இன்னுமொருவன் பழுத்துச் சிவந்த காரமிளகாயை நீட்டி "சாப்பிடடா"
6T66.
அதையும் வாங்கி இவன் மென்றும் மெல்லாமலும் அரைகுறையாய் வைத்து “களுக்" கென்று விழுங்கிவிட்டு கண்ணிர்வழிய ஆவ்.ஆவ்.என்று கதறிக்கத்தி கைகளை உதறிக் கொண்டு வேதனைகளைத் தாங்க முடியாமல்
104

:X:3XX:32X:%, நாணயம் துள்ளுவான். இவற்றை எல்லாம் சூழ நின்று பார்க்கும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி. சில பெரியவர்களும் அவர்களுடன் சேர்ந்து இதை சுவாரசியமாகப் பார்ப்பார்கள். ஆனால் செல்வத்திற்கு எல்லாவற்றையும் பார்க்க அசுவாரசியமாகவே இருக்கும். அதனால் ஆத்திரமடைந்து
“வாய் பேசாத புத்திக் குறைவானவனிடம் போய் இப்பிடியே அநியாயம் செய்யிறது?”
என்று சொல்லி எல்லோரையும் அதட்டி அந்த இடத்தைவிட்டுக் கலைத்துவிடுவான். இவையெல்லாம் நடந்ததின் பின்பு அவனுக்குத்தான் தலையிடி, உறைப்பும், கரிப்பும் தொண்டையை வறட்ட கடையிலுள்ள றாக்கையில் அடுக்கியுள்ள சோடாவை சைகை மூலம் காட்டி அதைவாங்கித் தரும்படி ராசன் அவனைத் தொல்லைப் படுத்துவான். அதனால் கடைக்கு வந்ததில் சிறு தொகை துண்டு விழுந்துவிடும் நிலையும் இருந்தது. அப்படியாக இருந்தன அந்த நாட்கள்.
பழைய சம்பவங்கள் நிகழ்ந்த கடையைத் தாண்டி சந்தியையும் கடந்து செல்ல சகோதரியின் வீடும் வந்துவிட்டது. தோளிலிருந்த சுமையை இறக்கி பட்டியைப் பிடித்து அவன் கையில் கொடுத்தான் ராசன். சட்டைப்பையில் கையைவிட்டு இருபது ரூபா காசை எடுத்து அவன் கையில் திணிக்கையிலே ராசனும் பழையபடி சிரித்தான்.
"நான் வர்றேன் அண்ணா” “எட ராசன் கொஞ்சம் நில்.சரி. இப்ப என்ன தொழில் செய்யிறாய்?" மேலும் அறிய ஆசைப்பட்டான் செல்வம்.
“இப்படித்தான்.பசாரில கைவண்டில் தள்ளுவன், மூட்டையும் தூக்குவன்’ மேலும் தனது தொழிலைப்பற்றி பெருமிதமாகப் பேசினான் ராசன். -
“கெட்டிக்காரன் அப்பிடித்தானிருக்கோணும். சரி சந்தோஷம் போயிட்டு வா” என்று சொல்லவும்
“சரியண்ணா வாறன்" என்று அன்புடன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ராசன். .
வீட்டு முற்றத்திலே ஒடியாடி விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தங்கையின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று தான் செல்வம்
105

Page 65
XX:33:38v83:33 நீ.பி.அருளானந்தம் ஊகித்தான். அவன் நினைத்ததும் பின்பு சரியாகத்தான் இருந்தது. விடுதலை நாள் என்றபடியால் வீட்டிலே எல்லோரும் இருந்தார்கள். மச்சானும் கூட இருந்தார். எல்லோருக்கும் இவனைக் கண்டதிலே அளவிலா மகிழ்ச்சி எட்ட நின்று அவனைப் பார்த்த பிள்ளைகள் உறவு சொன்னதும் கிட்ட வந்து அவனுடன் ஒட்டிக் கொண்டார்கள். அதன் பின்பு கொண்டுவந்த பாரமான பை காலியானது. அவனது உடுப்புகள் மட்டும் இருக்க இப்போது பிரயாணப் பையின் செயினை இழுத்து மூடினான். பல கதைகளெல்லாம் சொல்லி களைத்துப் போனதும் புகை ஒன்று விடவேண்டும் போலிருந்தது. மேலும் கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது கறி புளி வாங்கி வந்தால் சந்தோஷமாகவும் இருக்கும் என்று வீட்டை விட்டு அவன் புறப்பட்டான். கடைவீதிகளை கட்டும் கணக்கான நேரம். அங்கே அவனைத் தெரிந்த முகங்களோ சில தெரியாத முகங்களோ பல தெரிந்தவர்கள் ஒரு சிலருக்கு கதைகள் கூறி அலுத்துவிட்டது. என்றாலும், அதுவே நல்ல புத்துணர்ச்சியாய் முகமெல்லாம் பரவியிருக்க, முதலில் கறிகாய் கடைக்குள் நுழைந்தான். ஒரு சொப்பிங் பை நிறைய அங்கேயே தேவையான மரக்கறிகளை வாங்கிக் கொண்டவன் அடுத்ததாக மீன் கடைக்குள் நிதானமாக கீழே பார்த்து நடந்து சென்றான். அவனுக்குப் பிடித்தது சுறா மீன். அது தங்கையின் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்குமென்று நன்றாய்த் தெரியும்.
“இரண்டு கிலோ” என்று சொல்லி அவசரப்பட்டான். மறுகைக்கு இன்னுமொரு சொப்பிங் பை வந்து விட்டது. ஒரு கைக்கு அதை மாற்றிக்கொண்டு ஆயிரம் ரூபாவை எடுத்து நீட்டினான்.
மீன் கணக்கு நாநூறு ரூபாய், ஆனால் அவன் கையில் கொடுக்கப்பட்ட மிகுதியோ எண்ணுறு ரூபாய்.
பணத்தைக் கணக்குப் பார்த்ததும் மனம் இலேசாக கள்ளத்தனத்தில் பதுங்கிக் கொண்டது. கைவிரல்கள் பணத்தைக் கசக்கி பொத்தி மூடிக்கொண்டன. எல்லாவற்றிற்கும் சாதகமாக அங்கே முண்டியடித்துக் கொண்டிருந்தது சனக்கூட்டம். எவருக்கும் ஒன்றுமே தெரிவதற்கில்லை. நிம்மதியாக இருந்தாலும் ஒரு குற்ற உணர்வோடு நடந்து பிரதான வீதிக்கு வநதான.
அவன் நடைபாதையில் நின்ற இடத்தில் சிறு கூட்டமொன்று ஆளையாள் இடித்துக்கொண்டு பரபரப்புடன் எதையோ தேடுவது போல்
106

❖~ሩ•......° ̇-÷-2 நாணயம் இருந்தது. அதிலொருவர் விஷயத்தை இவன் காதிலும் போட்டார். ஒன்றரைப் பவுண் மோதிரமாம். சைக்கிளில் அவசரமாக ஓடிவந்தவர் வீதியின் குறுக்குத் தடையின் மேல் சைக்கிளை ஏறவிட்டபோது, கை விரலிலிருந்து நழுவி விழுந்த மோதிரம் நிலத்தில் உருணி டு போய் எங்கேயோ தொலைந்துவிட்டதாம்.
அதிலே எத்தனை பேருக்கு இதனால் அக்கறை வந்திருக்கிறது? எந்தெந்த நோக்கில் தேடுகிறார்களோ?. அவனும் தேடும் படலத்தில் விழுந்தான்.
எங்கே விழுந்தது. எதாலே உருண்டு போனது? இப்படிப் பலப் பல கேள்விகளை கேட்டுத் துளைப்போருக்கு பதில் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது. மோதிரத்தைத் தொலைத் தவருக்கு. கூட்டம் அதிகமானது, யாராவது எடுத்திருப்பார்களா? என்ற குழப்பந்தான் எல்லோருக்கும். இந்த நேரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ஒரு குரல்.
“இங்கே இருக்கு மோதிரம் கிடைச்சுட்டுது.” தேடிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் ஆசைக் கண்களை அந்தப்பக்கம் திருப்பிப்பார்க்க அந்த சனத்திரளுள்ளே ஒரு கதாநாயகன் போல வந்து கொண்டிருந்தான் ராசன். மோதிரத்தை கையில் உயர்த்திப் பிடித்தபடி வந்த இவனை இன்னாரென அவனும் அறிந்து கொண்டான். பொருளை உரியவரிடம் ராசன் கொடுக்க, ராசனைப்பற்றி அந்த இடத்தில் எத்தனையோ பேர் நற்சான்றிதழ் வாசித்தனர். முதுகைத் தட்டிக் கொடுத்தனர்.
அவனுக்கோ. ராசனின் பண்பு உள்ளத்தைச் சுட்டது. மழைக்குக்கூட பாடசாலைத் தாழ்வாரத்தில் ஒதுங்கியிராதவனிடத்தில், பெற்றோரின் அன்பு, அறிவுரை என்பன கிடைக்காது வளர்ந்த ஒருவனிடத்தில் இருக்கின்ற நல்ல நடத்தை, களவு பொய் இல்லாத வாழ்க்கை தன்னிடத்தில் இல்லாதிருப்பதை நினைத்து அவன் தலைகுனிந்து நின்றான். ராசன் வெறும் மனிதனாக அல்ல கீதையிலே வருகின்ற கண்ணனாய், ஒரு நல்லாசிரியனாய் அவன் கண்முன் தோன்றினான். சற்றுமுன், தான் செய்தது களவு என்று மனம் உறுத்தியது. மீண்டும் கறிக்கடையை நோக்கி, அவன் திரும்பி நடந்தான். அந்த இருநூறு ரூபாயைப் பிறிம்பாக எடுத்துக் கொண்டு.
சுடர்ஒளி (ஜன21-27,2003) 107

Page 66
நீ.பி.அருளானந்தம்
"வென் கெதியா . சொத்தி சொத்தி!"
அவன் கூப்பிட்ட மாத்திரத்திலேயே சுரு கரு வென்று இவனுக்கு கோபம் ஏறியது. அப்படிக்கூப்பிட்டால் இவன் கவலைப் படுவான் என்று கிஞ்சித்தும் அவனுக்கு அக்கறையில்லைப் போலும். மீண்டும் அதே சொல்லம்புகளை அவன் இதயத்திலே தைத்துச் செல்லப் பாய்ச்சி விட்டான்.
"சொத்தி கெதியாவாவன் மினக்கெட்டு உன்னைக் கூப்பிட்டுக்கொண்டு இங்கினை நான் நிக்கிறனெல்லே"
"இங்கபார்! என்னைப்பாத்து என்னெண்டாலும் சொல்லு சொத்தி எண்டு
08
 

- iளிழுதுகள் மட்டும் கூப்பிடாத பேந்தெனக்கு இனியில்லையெண்டளவு ஆத்திர மேறும்" "ஓகோ உமக்கப்பிடியே. கோவம் வந்து எண்னை என்னப்பா பண்ணிடுவாய். நீ சொத்திதானே. உண்மைதானேயது" "உண்மைதான்ராப்பா. உண்மைதான்; ஆனா. உன்னைமாதிரித்தான் எனக்கும் அம்மா அப்பா வைச்ச பேர் ஒண்டு இருக்கு நீ அதைச் சொல்லி என்னைக் கூப்பிடன்’
"சைய் அந்த உன் ரை பேர் எனக்கு எடுத்த உடன வாயில கெதியா வருகுதில்ல என்னடாப்பா இதுக்கெல்லாம் போய் நீ பெரிசா எடுத்துக்கொண்டு" "அவனவன்ரை நிலையில மற்றவனும் ஒருக்கா இருந்து பாத்தாத்தான் தாக்கம் தெரியும் . எனிரை நிலையில நீயொருக்கா இருந்து பாத்தியெண்டாத்தான் வேதனை தெரியும். உப்பிடிச்சொல்ல எப்பிடி நெஞ்சு வலிக்குமெண்டு”
"எடடேய் உதையெல்லாம் போய் நீ பெரிசாயெடுத்துக்கொண்டு கம்மா விட்டிட்டிரு”
"அப்பிடி உனக்கெண்டால் பாக்க இது சின்ன விஷயம் ஆனா எனக்கிது பெரிய விஷயம் கண்டியோ அதாலதான் உந்தமாதிரிக் கேக்கேக்க எனக்கு ஆத்திரம் வருகுது."
"எடச்.சீ.என்னயிது தெருவழியில நிண்டுகொண்டு பேந்தும் பேந்தும் இதுகளையே விடாமல் கதைச் சுக் கொண்டு. அதெல்லாத்தையும் விட்டிட்டிரு. வா.வா அந்தக் கடையில போயிற்று ஒரு தேத் தண்ணியாச்சும் குடிப்பம்"
"ஹும், நான் வரேல்லப்போ.விருப்பமெண்டால் நீ போய்க்குடி. நான் வீட்ட போப்போறன்."
"இஞ்சைபார்1.கறிவாங்க சந்தைப்பக்கம் போவேணுமெண்டாய். ஏன் நீ போகேல்லயே”
“இல்லை! மனம் எனக்குச் சரியில்லாத மாதிரியிருக்குநாண் வீட்ட போப்போறன்"
"சும்மா என்னோட கோவப்பட்டுக் கொண்டு போகாத.இங்க என்னை ஒருக்கா பாத்து நான் சொல்லுறதையும் கேளன்.காலத்தால தான் என்ர தோட்டத்துக்க கோவா வெட்டினயாவாரியள் வாங்கின அந்தப் பொருளுக்குத் தரவேண்டிய காசைக் கொண்டுவந்து தந்தாங்கள். இனிடைக்கெண்டு என்ரை சிலவில நான் உனக்கு கறியைப் புளியை வாங்கித்தாறன் வீட்டை போசுேக்க
19

Page 67
நீ.பி.அருளானந்தம் கொண்டுபோ. பிள்ளை குட்டிகளோட நல்லவிதமா இண்டைக்குச் சமைச்சுச் சாப்பிடு”
”வேண்டாம் வேண்டாம். உன்ர கறியும் வேணாம் புளியும் வேணாம். அதொண்டும் இப்ப எனக்குத் தேவையெண்ட நிலையில்ல. நான் போறன்"
"என்ன இப்பிடிப்பிடிவாதம் பிடிக்கிறாய்? நான் ஆர்ரா?.உன்ர மச்சான்ரா, சொந்தரத்தமென்ன? ஏதோ தெரியாத்தனமாய் வாய்க்கு வந்தபடி சொல்லித் துலைச்சிட்டன். என்னை மன்னிச்சிர்ரா’
அப்பிடியெல்லாம் சொல்லுகிறானே, இனி என்னதான் செய்கிறது என்று நினைத்து அழவாய் நின்றவன் நிழலாய் குளிர்ந்து விட்டான்.
“வா மச்சான் தேத்தண்ணி குடிப்பம்” பிறகும் அவனை ஆதரவோடு கூப்பிட்டான் அவன். “சரி வா”. சொல்லி விட்டு சயிக்கிளைச் சிமெந்து நிலத்தில் இவன் நிறுத்தினான். இருவரும் கடைக்கு உள்ளே போய் தேநீருக்குச் சொல்லி பரிமாறுகிறவன் கொண்டு வந்ததும் வாங்கிக் குடித்தார்கள்.
எங்கேயும் கொஞ்சநேரம் இருந்து ஆறமுடியாது. விசர் பிடித்த மாதிரி சில வேளைகளில் ஆகிவிடுகிறது அவனுக்கு இனிய நினைவுகளே இல்லாமல் எட்டிக்காய்க் கசப்பே எங்கினும் அவனுக்குத் தூக்கலாகி நிற்கிறது.
“நான் போகப் போறன்” அதற்குள்ளாக அந்தரப்பட்டான்.
“நீ சந்தைக்கிப்ப வரேல்லயே”
“இல்லை ஒண்டும் வேணாம். இப்ப நான் வீட்ட போறன்.” கதிரையில் இருந்து உடனே அவன் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டான். அவன் காலிழுத்து நடப்பதை இவன் பார்த்துக்கொண்டு அவனைப்பற்றியே கொஞ்சநேரம் யோசித்துக் கொண்டிருந்தான். உணர்ச்சியில்லாத அந்த பிளாஸ்டிக் காலுடன் அவன் சைக்கிள் ஓடிப்போவது இன்றைய வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வாக அவனது கண்களுக்குத் தெரிந்தது. ஆனால் கணிணனுக்கு:
இதுதான் அவனது பெயர் என்று இருந்தாலும், இன்று காலில்லாத கண்ணன் சொத்திக் கண்ணன் என்கிறதாய் பல பட்டப் பெயர்கள் அவனுக்கு வந்துவிட்டன.
அவனுக்குத் தெரிந்தவர்களிலே வஜ்ரம்போல் வன்குணமுள்ள குரூர நெஞ்சுபடைத்தவர்கள் ஒரு சிலர், இந்த வார்த்தைப் பிரயோகத்தால் நெருஞ்சி முட்களால் குத்துவது போல் அவன் மனதை ரணப்படுத்தி விடுகின்றனர்.
110

S 0LSL0LSL00000LGL0LSLrLLSL0SLSLSLSLSLSL0LL0LrALALLLLLLL விழுதுகள்::88*:م&3 &&228 *22.8-عت ۰۰۶",:م، ... * "சொத்தி’ என்கின்ற சொல்லைப் பிரயோகித்து யார்மீது கொண்ட கோபத்தையும் இவன்மீது அவர்கள் இறக்கித் தணித்துக் கொள்ளலாம். அந்தளவுக்குக் கண்ணன் இந்த நிலைக்கு அவர்கள் மூலம் ஆளாகி இவ்வாறெல்லாம் இம்சைப்படுகிறான்.
வடகிழக்குப் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மிதிவெடிகளை விட, இன்னமும் பல லட்சக்கணக்கான மிதிவெடிகள் நிலத்துக்குள் கிடக்கிறது. இந்தச் செய்தியை அன்று காலைப் பத்திரிகையில் படித்தவுடன் எரிச்சலில் தூர அதை விட்டெறிந்தான் கண்ணன்.
“இத்தனை தொகை ஒவ்வொரு தமிழ் மகனினதும் கால்களைக் கழற்றுவதற்காகவா?”
ஆவேசமாக அந்த இடத்திலிருந்தவாறு அவன் இதை உரக்கக் கத்திவிட்டாற்போல் சொன்னான். பாதிப்புக்கு ஆளாகியவனுக்குத் தான் இந்தமாதிரி விஷயங்களைக் கேட்க, படிக்க, உடனே ஆத்திரமி, ஆவேசம் வரும். இப்படிப்பட்ட நிலையிலிருக்கும் இவனுக்கும் அப்படிக் கோபம் வராது விட்டுவிடுமா? தனக்கு நடந்துவிட்ட கொடுமையை நினைக்க நினைக்க இப்போது அவனுக்கு ஈரற்குலை எரிவது போல் இருக்கிறது.
வன்னிக் காட்டிலிருந்து ஒருகாலம், குடாநாட்டு விறகுத் தேவைக்கென்று வைரித்த வீரமரத்துக் கொத்து விறகுக் கட்டைகள் லொறிக் கூரைத் தகட்டின் மேல் அடுக்கிக் கட்டியபடி பெருவாரியாக அங்கு வந்து கொண்டிருந்தன. யுத்தம் வந்ததும் தரைப்பாதை மூடப்பட்டுப் போனதால் விறகுத் தட்டுப்பாடு தலைதுாக்கி எழ குடாநாட்டில் விறகின் விலை மலைபோல் உயர்ந்தது. அந்தச் சூழலில் கையிலே காசில்லாத கண்ணனுக்கு விறகு வியாபாரமே அவன் குடும்பம் முழுவதுக்கும் சோறுபோட்டது. அங்கே இருக்கும் வறியவருக்கெல்லாம் விறகு வியாபாரமே பண முதலில்லாமல் செய்யத் தக்க தொழில் என்றதாயிருக்க கண்ணனுக்கும் சில நாளில் அதுவே நிரந்தரத் தொழிலுமாய் உறுதியாகிவிட்டது.
“மொக்குத்தனமாய் கொலனிப் பக்கம் மாத்திரம் போயிடாதயப்பா, மிதிவெடியளை விதைச்சுவிட்டமாதிரி தாட்டு வைச்சிருக்கிறாங்களாம். அப்படியுமாய் ஒரு கதைபேச்சு காதிலையும் அடிபடுது.” கண்ணனின் தொழில் சிநேகிதனான அந்த விறகுவெட்டி சொன்னான். “சைச்சே.அதுபொய் கொலனிப்பக்கம் தறைவழிய அப்புடி யொண்டுமாயில்ல. ஒரு வியளம் சொல்லுறன் கேளன். சும்மா கதைகட்டிவிட்டிட்டு, உப்பிடியெல்லாம்
111

Page 68
------------------ நீ.பி.அருளானந்தம் சொனி ன வ யளே அங்கினையாப் போய் ஊரிப்பட்ட விறகுவெட்டி யெடுக்கிறாங்கள். எங்களுக்கெல்லாம் இப்பிடிச்சொல்லிக் கதையளைப் பரப்பிப் பேக்காட்டிறாங்கள்.” என்று கண்ணன் சொன்னான்.
“இந்தா பார் உனக்கு நாணிதை நல்லதுக்குத்தான் சொல்லுறன் விஷயமில்லாமல் அப்பிடியெல்லாம் கதைபரவாது கண்டியோ. எதுக்கும் எல்லாத்தையும் மெதுவா ஆற அமர இருந்து யோசிச்சுச் செய். நான் உன்னைப்போக விடாம இடைஞ்சற் பணி னுறன் எண் டு நினையாத எனக்கெண்டால் அங்காலிப் பக்கத்த நினைச்சுப் பார்க்கவே திடுக்காட்டமாய்க் கிடக்கு.’ இவ்விதமாக சொல்லியதோடு கண்ணனை விட்டு அவன் கழன்று போக முயற்சித்தான்.
“சடாரெண்டெங்க ஒடப்பாக்கிறாய்?. இங்க நில்லு. நீ அப்பிடியெல்லாம் பயப்படாத அங்கபோய் வந்து கொண்டிருந்தா நல்ல காசு உழைக்கலாம். தொடர்ந்து ஒரு மாசத்துக்கு என்னோட துணிஞ்சுவா. சயிக்கிலில நல்லா இழுத்துப் பறிக்க அங்க கணக்க விறகிருக்கு. அதுமட்டுமே! அங்கத்தைப் பக்கம் பயத்தில சனம் போகாததால தோட்டத்துக்க போட்ட மரவள்ளிக் கட்டையும் புடுங்காம அதுகளும் நிலத்துக்க கிடக்கு. ரெண்டு பக்கமும் எங்களுக்கு லாபம் வரும் கண்டியோ.அநியாயமாப் போறதை நாங்கள் எடுத்துச் சாப்பிட்டா என்னவாம்.”
கண்ணன் சொல்ல இருமனப்பட்டுக் கொண்டு அந்த விறகு வெட்டி நின்றான். அவனுக்கும் அவன் சொன்னவைகளிலே ஆசைதான். ஆனால் மறுபடியும் அவனுக்கு மனதில் பயம் கவ்விவிட முற்றாக மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.
கண்ணனுக்கு யோசனை! தான்தனியே அந்த இடத்துக்கு எப்படிப்போவது?. சற்று நேரமாய் அவ்விடத்தில் நின்று சிந்தித்தான். வீட்டில் தன்னுடன் கூடவே இருந்துகொண்டிருக்கும் உறவோரில் ஒவ்வொருத்தரும் அவனது ஞாபகத்தில் வந்தனர்.
"மாமா கொலனிப் பக்கமாய்ப் போய் விறகு வெட்டிக் கட்டிக்கொண்டர துணைக்கு மட்டும் என்னோட நீங்களும் வாறியளே?” வீட்டிலே அவன் போய் முதன்முதலாக இப்படிக் கேட்டது மாமனாரிடம் தான்.
அப்படியாக மருமகன் தன்னில் முழு நம்பிக்கையையும் வைத்துக் கொண்டு கூப்பிட இந்தச்சின்ன விஷயத்தில்உதவிபுரிய அவர் மாட்டேனென்பாரா? இந்த யுத்த காலத்திலே அவரும் வேலை வெட்டியென்று எங்கினும் ஒன்றும் செய்யக்
112

00S0S0S0S0S SSKSeSS0S0S0S0SBSBSMSeS0S0rS0eSeeeS0SerSreSMSeSeSeSKS விழுதுகள் கிடைக்காது மருமகனின் தயவில் வாழ்கின்றவராக இருக்கிறாரே!
“ஓம் நான் வாறன் மருமோன். எனக்கெண்டா காடு வாவாவெண்டுது, வீடு போபோவெண்டுது. அப்பிடி வயசு போயிட்டுது. அப்பிடியிப்பிடியெண்டு எனக்கெது நடந்தாலும் பறவாயில்லை. ஆனா நீர். கவனமாயிருக்க வேணும்தம்பி. ஆ. அதைவிடுவம், ரெண்டுபேரும் பவுத்திரமாப் போயிட்டு வருவமென்ன?” அவர் இப்படிச் சொல்லி விட்டிருந்தாலும் மனதிலுள்ள பயத்தை கணிகளோ கணக்காய் வெளியே காட்டியது. அதையும் வெளியே மருமகனுக்குத் தெரியாமல் அமுக்கிவிட அவர் வெகுவாகக் கஷ்டப்பட்டுப் போனார்.
அடுத்த நாள் கண்ணன் வீட்டில் ஆடிப்பிறப்புக் கென்று எல்லாரும் வெள்ளெண எழும்பிவிட்டார்கள். சமையல் அறையில் சிரிப்பும் கொழிப்புமாக பெண் டுபிள்ளைகள் அடுப் பங்கரையைச் சுற்றி இருந்துகொண்டு கொழுக்கட்டை அவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து ரசித்தபடி சற்றுநேரம் அதிலே இருந்துவிட்டு பின்பு கண்ணனும் மாமனாரும் சயிக்கிளில் ஏறி ஓடிப்போய் காலனிப் பக்கமாக இறங்கிக் கொண்டார்கள்.
சயிக்கிளை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு மேடும் பள்ளமும் பொக்கையும் போழையுமான ஒற்றையடிப் பாதையூ டாகப் போய் தோட்டத்துப் பக்கம் சேர்ந்தார்கள்.
விறகென்றாலோ வெட்டி லொறியளவுக்கு ஏற்றலாம். அந்தளவுக்கு மஞ்சவுண்ணா மரங்கள் ஆட்கள் இல்லாத அந்த இடத்தில் மதமதவென்று வளர்ந்து தடித்துப் பருத்திருந்தன.
தோட்டத்துக் கிணற்றைக் காட்டி “அந்தக் கட்டில வடிவாய் நீங்கள் போய் இருந்துகொள்ளுங்கோ மாமா. தோட்டத்துக்கால அங்கினையா நான்போய் தடியள வெட்டிக் கொண்டந்து இங்கினையா போடுறன்” கண்ணன் சொல்லிவிட்டு மரவள்ளித் தோட்டத்து வரப்பினுாடே கையில் கத்தியோடு நடக்கத் தொடங்கினான். அந்தத் தோட்டத்தின் எல்லையை அண்டித்தான் மஞ்சவுண்ணா மரங்கள் நின்றன. நடந்துகொண்டிருக்கும் வரப்பில் மாட்டுத் தீனிக்கு அறுத் தெடுக்காததால் புற்கள் மதாளித்து வளர்ந்து இருந்தன. காலைப் பனித்துளி பட்டு புற்கள் நனைந்திருந்ததால் ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கும்போதும் அவனது கால்பாதங்கள் வரப்பிலிருந்து கீழே சறுக்கத்தொடங்கின.
113

Page 69
நீ.பி.அருளானந்தம்
அங்கே நிற்கமுடியாது நிலைதடுமாறிய ஒரு இடத்தில் எட்டி ஒரு கையால் மரவள்ளித் தடியொன்றை அவன் கெட்டியாகப் பிடித்தான். அதனால் அந்த இடத்தில் சற்று சமாளித்துக் கொண்டு நின்று மேலும் அவனால் முன்னோக்கிச் செல்ல முடிந்தது. அத்தனை மரவள்ளித் தடிகளும் காலம் கடந்து போனதால் இலைகொட்டி மேலேமட்டும் ஒரிரு இலைகளோடு காஞ்சு கறுவிப்போய் கிடந்ததைப் பார்த்த மாத்திரத்தில் அவனது மனதையும் கவலை கருக்கி எடுத்தது.
அவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் எழுந்த மனவேதனை இன்னும் தீரவில்லை. மேலும் அந்த இடத்தில் இருந்து எட்டிஇன்னும் நாலு அடிஎடுத்து வைத்து முன்னே நடந்து போகவுமில்லை. வரப்பிலிருந்து முன்னைய மாதிரியே வைத்த காலடி மீண்டும் பிறழ, பாத்திக்குள்ளே சறுக்குப்பட்டுப் போன காலுடன் காது செவிடு படும்படியாக, பெருமுழக்கமாக நிலத்தடியிலிருந்து ஏகோபித்து எழுந்தது, டும்மார் என்ற சத்தம்.
“ஐயோ’.
மாமா கத்துகிறாரா? இல்லை அப்படி நான் தான் கத்தினேனா? என்று ஒன்றுமே புகைமூட்டத்தின் மத்தியில் கண்ணனுக்கு ஒழுங்காக விளங்கவில்லை. உடல் முழுவதும் அவனுக்கு இறுகுவதுபோல் இருந்தது. வானமும் பூமியும் சுழல அப்படியே வரப்பில் சாய்ந்த ஒன்றே அவனுக்குக் கடைசி நினைவு.
மீண்டும் மயக்கம் தெளிந்து அவனுக்கு பிரக்ஞை வரும்போது மின்சார ஒளிவிளக்குகள் கண்களை கூசச்செய்தன. மளமளவென்று இமைமடல்கள்ை வெட்டி விழித்து வெருண்டபடி பார்த்தான். மண்டை கனத்துக் கொண்டு விண்விண்ணென்று வலித்தது. உறக்கச் சடைவு தீரவில்லை. அடித்துப் போட்ட மாதிரி உடம்பு முழுக்க நோவு கால்கள் இரண்டும் அசைக்கமுடியாத அளவு தூணைப்போல் கனத்தன.
ஏதோ கெடுதல் நடந்து முடிந்தது மாதிரி அவனுக்குள் பிரமை எழுந்தது. அதையண்டி 'ஐஸ் தண்ணீரில் விழுந்து விட்டது போல் அவனது உடம்பு முழுவதும் நடுநடுங்கி விறைத்தது. முன்பு அங்கு தனக்கு நடந்தது என்ன? என்ற கேள்வியிலே அவனுக்கு இப்போ பெரும் மனக்குழப்பம். மெதுவாக நடுக்கத்துடன் கையை நீட்டி வலப் பக்கமாக தொடைப் பக்கமிருந்து மெல்ல மெல்ல காலை முன்னே தடவிக்கொண்டு போனான்.
“ஐயோ.என்ரை. அம்மாச்சி என்ரகாலெங்க? ஐயையோ என்ரகால் ஆ ஆ க் கா ஆ. வ் ஆ க் கா.?”
114

ஓய்வில்லாமல் இந்த அழுகையும் அலறலும் தான் அவனிடமிருந்து அன்று முழுக்க அந்த ஆஸ் பத்திரி வாட்டில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அவனது அழுகுரல் அங்கிருந்த அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கிஎடுத்துக் கொண்டிருந்தது.
இந்தப்பெரு இழப்பிலிருந்து மனதை கொஞ்சம்கூட அவனால் தேற்றிக்
கொள்ள முடியவில்லை. அந்த விபத்து நடந்து முடிந்ததன் பின்பு ஆறுமாதகாலமாய் அவன்பட்ட அவஸ்தைகள், அந்தக்கூழைக் காலுடன் பொய்க்கால்போட்டு முதன்முதல் நடக்கப்பழகும்போது உடலில் ஏற்ப்பட்ட வேதனைகள். அப்பப்பா.எல்லா நிகழ்வுகளும் அவனது அடிமனதில் ஆணிபோல் இறங்கி இன்னும் மறக்கமுடியாதிருக்கிறது. அனுபவித்ததையெல்லாம் நினைத்துப் பார்க்க உடல் சில்லிடுகிறது. ரோமமெல்லாம் ஈட்டிபோல் குத்திட்டு அவனுக்கு நிற்கின்றன.
இப்போது போட்டுக் கொண்ட ஜெய்ப்பூர் கால்தான் நடப்பதுக்கு அவனுக்கு தஞ்சம் என்றவாறு இருக்கிறது. அதனால் வாழ்வே அவனுக்கு நரக வேதனையாகத் தெரிகிறது. ر
அந்த ஒரு பொய்க்காலோடு அவனுக்கு. இரவு எப்படி? .பகல் எப்படி கழிகிறது?. என்று யாருக்காவது அவன் கஷ்ட நஷ்டம் தெரியுமா?. அப்படி ஏளனம் பண்ணுகிறவர்களுக்கு புரியுமா அவன் வேதனை" ஒவ்வொரு செயலிலும் தனது மனதையும் சரீரத்தையும் பழக்குவதற்கு அவன் எவ்வளவு ஆதங்கப்படுகிறான்.
சரி.இவ்வளவெல்லாம் பட்டுக் கழித்துவிட்டானே எதுவிதத்திலாவது அவனுக்கு மனநிம்மதி உண்டா என்று பார்க்கையில், இருக்கிறது. என்றே சொல்லத் தோன்றுகிறது. வீட்டில் அவனது மனைவி பிள்ளைகளால் மன ஆறுதல் அவனுக்குக் கிடைக்கிறது. அவனைப் பெற்ற தாய்தந்தை, உடன் பிறப்புக்களுடன் மாமன், மாமி, மச்சான் என்று எத்தனை சொந்தங்கள் அவனுக்கு இருக்கிறார்கள். இவர்களெல்லாம் வீதியில் அவனை விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? இல்லவே இல்லை. தங்களுக்கு வறுமை என்றாலும் அவர்கள் அவனையும் சேர்த்து தாங்கிக் கொண்டுதான் இன்றளவும் இருக்கிறார்கள்.
இரண்டு நல்ல கறவைமாடுகளை அவனுக்கென்று வாங்கிக் கொடுத்தார்கள். சிறிய கடையொன்றை வீட்டுவளவுக்குள் போட்டுக் கொடுத்தார்கள். கண்ணன் அதிலே இருந்து கொண்டு கண்ணிலே எண்ணெய் ஊற்றிக் கொண்டாற்போல்
115

Page 70
= -- - ட நீ.பி.அருளானந்தம் விழிப்பாக இருந்து வியாபாரம் செய்கிறான். செய்கின்ற வேலை எல்லாவற்றையும் கருசனையோடு செய்கின்றான்
அன்று வெள்ளிக்கிழமை நாள். கண்ணனின் மனைவி கோயிலுக்குப்போய்வர வெளிக் கிட்டுக் கொணர் டு குழந்தையும் கையுமாக நிற்கிறாள். "இருங்கோப்பா.ஒருக்கா கோயிலடிப் பக்கமாய்ப் போய் பிள்ளைக்கும் உங்களுக்குமாய் ஒரு அரிச்சனை பண்ணிப்போட்டு வாறன்" அப்படியாக அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் கேட்டுக்கொண்டதற்கு இசைந்து கொண்டது மாதிரி அவன் தலையாட்டினான். சயிக்கிளிலே அவளையும் பிள்ளையையும் வடிவாக இருக்கவைத்து அவளது தந்தை கவனமாக சயிக்கிளை ஒட்டிச்செல்கிறார். இப்படியெல்லாம் மனைவி பிள்ளைகளை சயிக்கிளில் இருக்கவைத்து எங்கேயாவது தூரம் தொலைவுக்கு கூட்டிப்போக அவனால் இன்று முடியாது. அப்படி பெரிய வேலைகள் ஒன்றும் செய்யமுடியாத ஏலாவாளியாக இன்று அவன் ஆகிவிட்டான்.
என்றாலும் அவனைச் சுற்றியுள்ள சொந்தங்கள் - விழுதுகள் போல் இருந்துகொண்டு அவன் குடும்ப பாரத்தையும் தாங்கியே நிற்கின்றனர். அவன் குடும்பத்துக்கு தங்களால் ஆன எந்த உதவியையும் செய்வதற்கு அவர்கள் என்றுமே பின் நிற்காதிருக்கிறார்கள். அவனையும் அவன் குடும்பத்தையும் போஷிப்பதற்கு அவர்கள் என்றுமே உதவி செய்வார்கள். இந்தப் பண்புகளெல்லாம் அந்த மண்ணில் வாழும் மக்களுக்குரியதொரு தனிச்சிறப்பு எந்த நிலைவரினும் அது அவர்களிடம் ஜீவிதமாகவே இருக்கும்.
ஈழத்து எழுத்தாளர்களின் இருபத்திஏழு சிறுகதைகள்
சிறுகதைத் தொகுப்பு நூல் (2003)

நீ.பி.அருளானந்தம்
ዕ_
2f2 ДЭСд 2 (, 纵 அழுக்குப்பிடித்திருந்த ஆடைகளைக் கொண்டுபோய் கிணற்றடியில் வைத்துத் துவைக்கும் வேலையில் இருந்தாள் கண்மணி, உடுப்புகளை சவர்க்காரத்தூள் போட்ட தண்ணிரில் வைத்துக் கசக்கும்போது பொங்கி எழுந்து வந்த நுரை அவள் முழங்கை வரையும் பட்டுப் படிந்துகொண்டிருந்தது.
"ஒரு தேநீர் போட்டுக்கொண்டு வந்து தாருமன் கண்மணி" கேட்டுக்கொண்டே அவளது கணவர் அருகில் வந்து நின்றார். "வேலையாயிருக்கிறன், குறை நினைக்காம இப்போதைக்கு மட்டும் நீங்கள் போட்டுக் குடியுங்கோ. அங்க எல்லாம் அடுக்காக குசினிக்க கிடக்கு." நெற்றியில் பனித்திருந்த வியர்வையை அப்படியே தலையைச் சரித்து ரவிக்கைப் பகுதியில் துடைத்துக் கொண்டு பரிதாபமாக அவரைப் பார்த்தாள்
அவள்,
17

Page 71
S வசந்தம் வந்தது "பாவம் அவளும்தான். என்ன செய்வாள் ஒரு தேநீர் போட்டுத் தருவதற்கு அழுக்குக் கைகளை அலம்பிச் சுத்தம் செய்துகொண்டு வர்முடியாதுதான்.” இப்படியாக நினைத்துக்கொண்டு மனசாட்சிக்கும் கொஞ்சம் இடமளித்து
"சரி.சரி.நானே போட்டுக்குடிக்கிறன். நீர் வேலையைப்பாரும்” சொல்லிவிட்டு நேசன் நேராக சமையலறைக்குள் சென்றார். அலுவலகத்திலிருந்து இன்று அவருக்கு விடுமுறைநாள் பத்திரிகையில் படித்தது பாதி படியாதது பாதியாகவிருக்கையில் அதை மடித்து மேசையில் வைத்துவிட்டு மனைவியின் கையால் தேநீர்போட்டுக் குடிக்க வந்தவருக்கு இப்போது தர்மசங்கடமாகிவிட்டது.
சமையல் கட்டுப்பக்கம் தேயிலை, சீனி எங்கே இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. கணிடு பிடிக்க இலகுவானதாக அதற்குள்ளே சுடுதண்ணீர் போத்தல் மாத்திரம் இருந்தது. அதை எடுத்தார் அடுத்து பொருட்களுடன் அருகே கிடந்த ஐந்தாறு ரின்களை குலுக்கிப் பார்த்து ஊகத்தில் ஒன்றை திறக்கும்போது வேண்டியதான தேயிலைத் தூளும் கிடைத்தவிட்டது. இந்தச் சீனி. அடடே. இரண்டு போத்தல்களிலும் நிரம்பக் கிடக்கிறதே. ஒன்றை எடுத்துக் கொள்வோம். இப்போது ஒரு கரண்டி தேயிலை ஒரு மேசைக்கரண்டி சீனி அதற்குள் வெந்நீரை ஊற்றி கரண்டியால் கலக்கியபிறகு இரண்டு நிமிடம் தேயிலைச் சாயம் ஊறும்வரை காத்திருந்து விட்டு வடித்துத் தம்ளரில் ஊற்றியதும் தான் .தேநீர் தயார். இதற்குப் போய் கண்மணிக்கு கரைச்சல் குடுத்தேனே சிரிப்போடு கிணற்றடிப் பக்கமாக வந்து கொண்டிருப்பவரை கொஞ்சம் ஆச்சரியமாகவும் அவள் பார்த்தாள்.
"கெட்டித்தனமாய்ப் போட்டு எடுத்திட்டியள் போல” மகிழ்ச்சியாக அவளுக்கும் இருந்தது.
“சிம்பிள்” தேத்தண்ணீர் போடத் தெரியாதெண்டு நினைச் சீரே a ஆச்.சுட்டுகுது..கொஞ்சம் ஆறவைத்துக்குடிப்பம். விரல்களை நீட்டி டம்ளர் விளிம்பிலே பிடித்துக் கொண்டு வரவேற்பு அறைக்கு அவர் விரைந்தார். வேலை.வேலை அது எப்போதுதான் அவளுக்குத் தொலையப் போகிறது. பின்பும் அவள் வேலையிலேயே மூழ்கிக்கிடந்தாள். கொஞ்சநேரத்தின் பின்பு அவள் பார்க்கும்படி திரும்பவும் அவர் வீட்டுக்குள்ளேயிருந்து வந்து வாசல் பக்கமாக ஓங்காளித்தபடி வாந்தி எடுக்கும் நிலையில் அந்தரப்பட்டார்.
118

------ xXX ჯr:::::::::::::::::::::::::::::::::::::x, . ::xs! ***3×:.ჯა:x, &გ. நீ.பி.அருளானந்தம் கிணற்றடியில் நின்றவாறே திகைத்துப்போய் “என்ன நடந்தது” கேட்டாள் அவள். , : :
“ஒணி டுமில் லையப் பா சீனியெணி டு நினைச் சு உப்பைப் போட்டிட்டன்.காக்.து.கரிக்குது தொண்டை”. விளங்கிவிட்டது. அவளுக்கு இரண்டு போத்தல்களில் ஒன்றில் சீனியும், மற்றையதில் உப்புப் பொடியும் இருந்தது. சீனிக்குப்பதில் உப்பைப் போட்டுக் கலக்கி விட்டிருக்கிறார்.
“கொஞ்சம் பொறுத்திருக்கலாமே அவதிப்பட்டுப் போய் இப்பிடியெல்லாம். கஷ்டப்படவேணுமே. “சரி வாங்கோ வாயைக் கொப்பளியுங்கோ” செம்பிலே, தண்ணிரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
"கண்மணி உன்ரை கையாடாட்டி இந்த வீட்டில ஒண்டுமே நடவாது போல கிடக்கு"தன்னைத் தாழ்வாகவும் எண்ணி குறுக்கிக் கொண்டு விட்டார். "எல்லாமே உங்களின்ரையும் பிழைதான். ஒருநாளைக்கேனும் குசினிப்பக்கமாக வந்திருப்பியளே! அடுப்புப்பக்கம் வந்து ஒண்டுமே அறியாததால்தான் சின்ன ஒரு தேத்தண்ணி கூட உங்களுக்குப் போட்டுக்குடிக்கேலாமப் போச்சு. ஐம்பது வயசாகியும் இன்னும் இது ஒண்டும் தெரியாமலிருக்கிறியள்.” சொல்லும்போது தன்னிலும் கூட பிழை இருப்பதுபோல் அவளும் எண்ணிக் கொண்டாள்.
"கண்மணி கோவிச்சுக் கொள்ளாதேயும் என்ன சவ இழவோ தெரியேல்ல. என்னையும் மாத்திக் கொள்ளேலாமக் கிடக்கு இளந் தாரியா இருக்கக்கிள்ளேயும் என்ரை அம்மா கிணத்தில தண்ணியள்ள விடாம பலகையில இருத்தி வைச்சுத்தான் முழுகவார்த்துவிட்டவ. உதுமாதிரி வேற ஒரு வேலையும் என் னைக் கொணி டு செய் விக்காததால தான் இப்படியாயிட்டன்”
அவருடைய முகத்தில் சோகம் ததும்பியது. “ம்.உப்பிடியெல்லாம் வளர்த்து விட்டுட்டு உங்கட அம்மா சிவனேயெண்டு சொல்லி போய்ச் சேர்ந்திட்டா. இப்ப நானெல்லே உங்களைக் கொண்டிழுக்க வேண்டியிருக்கு.”மனச்சுமையை பெருமூச்சில் அவள் இறக்கிவிட்டாள்.
தங்கள் உடல் உழைப்பும் உடல்நலக்குறைவும் சகலருக்கும் தெரியவேண்டும் என்பதில் அநேகமான பெண்களுக்கு அலாதியான விருப்பம் இருக்கும். தங்கள் உடல்நலக்குறைவு உபாதைகள் பற்றி அடுத்தவர்களிடம்
19

Page 72
- : ..: : reKSMSr0SrS0SSSMSKrSMSSS0SSSSeeSeSeeSeeS0S0rSrrMeMeHeHSKSeeeeSS0S00SSSKSrSMrMMrKS rS வசந்தம் வந்தது கூறி ஆறுதலடைவதில் ஆண்களை விட பெண்கள் தான் முன்னணியில் நிற்கிறார்கள்.
நான் போனால் தான் தெரியும் உங்களுக் கெல்லாம் எவ்வளவு சீரழிவெண்டு என்று நாற்பது வயது சென்று புலம்பாத பெண்களைக் காண்பது குடும்பங்களில் அரிதுதான். ஆனால் கணிமணி அவள் குடும்பத்தில் இவற்றுக்கெல்லாம் எதிர்மாறாகவே தன்னுடைய வாழ்க்கையில் சீவித்துக் கொண்டிருந்தாள். நாள்முழுக்க வீட்டுவேலையும் சமையல் வேலையுமாக எல்லாவற்றையும் தனது தலையிலேயே போட்டுக்கொண்டு பொழுதெல்லாம் மாய்வது ஏனோ அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. இதனாலே யாரிடமாவது இதைப்பற்றி குற்றம் குறைகள் சொல்லி அழுது வடிவதும் அவளுக்கு விருப்பமில்லாதிருந்தது.
இன்று புருஷனுக்கு சேவகம் செய்து கொண்டிருப்பவள், மகன் சிவகுமார் திருமணம் முடிப்பதற்கு முதல் தன்னோடு வீட்டிலிருக்கும் போதும் கணவனுக்குச் செய்வதையே மகனுக்கும் செய்து கொடுத்து அவனையும் சோம்பேறியாய் ஆவதற்கு விட்டிருந்தாள். கணவனை இருந்த இடத்திலேயே இருத்திவைத்து அவருக்கு அடுக்கெடுத்து எல்லா அலுவல்களையும் செய்து கொடுத்துவிட்டு குடும்பத்துக்கென்று ஒரேயொரு செல்லப் பிள்ளையாகவிருக்கும் மகனிடத்தில் வேலைவாங்குவது பிடிக்காததால் பிள்ளையையும் கணவனைப் போலவே சோம்பேறியாய் ஆகிவிடுவதற்கு வழிகாட்டியாகவும் போய்விட்டாள்.
காலையிலே படுக்கைக்கு கோப்பிகொண்டு போய்த்தான் கண்மணி மகனை எழுப்புவாள். கோப்பி குடித்தபின் கோப்பையை அவன் அவ்விடத்திலே விட்டுப் போவதும் கண்ட கண்ட இடத்தில் உடமைகளைப் போட்டுவிட்டு தாயார் அதை ஒழுங்குபடுத்துவதும் ஆரோக்கியமான போக்காக இல்லாவிட்டாலும் கண்மணி இதனை வளர்த்துக் கொண்டுதான் வந்தாள். படிப்பை முடித்த கையோடு சிவகுமாருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. அவனும் குழந்தை குட்டிகளோடு குடித்தனம் நடத்துவதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் இன்றைய நாளில் எல்லாரும் விரும்புவதுபோல அவர்களும் படித்த பெண்ணாகவிருந்த தாமரையை விரும்பி அவளை மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மருமகள் தாமரை படித்ததோடு மட்டுமல்லாது நல்ல உத்தியோகமும் பார்ப்பவள். இன்றைய சூழலிலே இருவரும் உழைத்தால் பணப் பிரச்சினையில் சிக்கல்கள்
120

வரர்திருக்கும் என்பதும் தாய் தகப்பனின் கருத்தாக இருந்தது.
சிவகுமாருக்கும் தாமரைக்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள் சென்றுவிட்டன. தனிக் குடித்தனம் போய் இருக்கும் மகனையும் மருமகளையும் அவர்கள் இருக்கும் வீட்டிலே போய்ப் பார்க்க தாய்க்கும் ஆசை. இந்த நேரத்தில் அந்தக் கதையும் வந்தது.
“இங்கேருங்கோ இந்த முறை நாங்கள் மகனிண்ட வீட்டவாப் போவமே. பிள்ளை இங்கினயா வந்து எங்களை பார்த்திட்டுப் போகிறது மாதிரி ஒருக்கால் நீங்களும் நானுமா அங்கபோய் அவயளைப் பாாத்துக் கொண்டு வந்தாலென்ன" ஒன்றுமட்டும் உண்டு. மனைவியின் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டு விடுபவர் நேசன். “அதுக்கென்ன நீர் எதைக் கேட்டும் மாட்டனெண்டிருக்கிறனே. நாளைக்கு எல்லாருக்குமே லீவுநாள் இண்டைக்கே வெளிக்கிடுவம்.சரிதானே”
இருவருக்குமே இப்போது உற்சாகம்தான். அடுத்ததாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு சேதியும் சொல்லியாகிவிட்டது. சிவகுமார் அப்பாவையும் அம்மாவையும் எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிலே குதூகலமாயிருந்தான். தனிக்குடித்தனம் போன பிறகு மாமாவும் மாமியும் வீட்டுக்கு வருகிறார்கள். என்பதில் தாமரைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. பொழுதுபடுகிற நேரம்பார்த்து நேசனும் கண்மணியும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.
"வாருங்கோ மாமா. மாமி வாங்கோ.” பாசத்தோடு முன்னால் சென்று வரவேற்றாள் தாமரை, சிவகுமாரும் அவளுடன் கூடவே நின்றுகொண்டு அம்மா கொண்டுவந்த பொருட்களை வாங்கிக் கொண்டான். இவர்கள் வீட்டுக்கு முன்னால் சிறிய முற்றம். அங்கே நிறைய செடிகளில் பூக்களும் இருந்தன. “கன்றுகள் நல்லாக் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் நிற்குது. நீர்தான் தண்ணிர் ஊற்றுறிரோ?”
கண்மணி மருமகளிடம் கேட்டாள். "ஒரு நாளைக்கு நான் ஊத்துவன் இன்னொரு நாள் உங்கட மகன் ஊத்துவார்.” i.
சொல்லிவிட்டு மாமியின் முகத்தைப் பார்த்தாள் தாமரை. “குமார் தண்ணீரள்ளி ஊற்றுறானோ? ஆச்சரியப்பட்டவள். “அவர் இப் படியெல்லாம் செய்யிறதுக்கு குனிய நிமிர மாட்டாரே?.உண்மையைத்தான் செல்லுறீரோ?” A
121

Page 73
V - :: : வசந்தம் வந்தது சொல்லியபடி கண்மணி கணவனைப் பார்த்தாள். நேசன் ஆச்சரியத்தில் மகனுடைய முகத்தைப் பார்த்தார்.
"அம்மா அதெல்லாம் பிறகு கதைப்பம், களைச்சுப்போய் வந்திருப்பியள் முதலில உள்ள போய் இருந்து ஏதாவது குடிச்சிட்டு பிறகு பார்ப்பமே.”
வரவேற்று அறையில் எல்லாரும் வந்தமர்ந்தார்கள். கண்மணி அறையின் உள்ளே விழிகளை சுழற்றினாள். சுவரிலே எழிலான இயற்கை ஒவியங்கள் சட்டம்போட்டு மாட்டி வைக்கப்பட்டிருந்தன. கீழே நிலத்தில் போடப்பட்டிருந்த விரிப்பு மிகவும் சுத்தமாக இருந்தது. இருக்கைகளின் முன்னால் உள்ள சிறிய மேசையில் உயிர்ப்புடனுள்ள இயற்கைப் பூக்கள் கொத்தாகச் சேர்த்து குவளையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த அழகும் சுத்தமும் அவளின் மனதை ஈர்க்கும்படியாக இருந்தது.
"அம்மா அப்பா என்ன குடிக்கிறியள்.குளிர்ச்சியாய் ஏதாவது மகன் கேட்டபோது,
“வேண்டாம் குமார் எனக்கு நெஞ்சில சளி அப்பாவும் குடிக்கார்.” "அப்ப நல்லதாய் ஒரு f போட்டரட்டே” தாமரை கேட்டாள். "அதுக்கென்ன போட்டாரும் குடிப்பம்" கண்மணி சொன்னாள்.
"இருங்கோம்மா வாறன்” சிவகுமார் தான் அங்கிருந்து எழுந்து போனான்.
"குமார் எங்க போறார்?" தாமரையைப் பார்த்து கண்மணி கேட்டாள். "குசினிக்குப் போறார் மாமி” சாதாரணமாக இதை கதிரையில் இருந்தவாறே அவள் சொன்னதும்
"ஏன் குசினிக்கு?” தாய் கேட்டாள். "ரீ போட்டுக் கொண்டரப் போறார்" தாமரை பதில் சொன்னாள். கண்மணிக்கு ஒன்றுமே புரியவில்லை. கேள்விக்குறி அவள் முகத்தில் வெளிப்பட்டது.
நேசனும் விறைத்துவிட்டார். மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்து கைக்குட்டையால் துலக்கமாகத் துடைத்து சுத்தம் செய்துகொண்டு மீண்டும் மாட்டிக்கொண்டார். புதிதாக அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதில் இருவருக்குமே ஆவல் மேலோங்கியது. ஐந்து நிமிடங்கள் கழித்து தேநீரும் தட்டுமாக சிவகுமார் அவர்கள் முன்னால் நின்றான். முதலில் அப்பாவுக்கு அடுத்து அம்மாவுக் கென்று நீட்டும்போது முகம் மாறிப் போனாலும் தேநீரை அவர்கள் வாங்கிக்
122

நீ.பி.அருளானந்தம் கொண்டார்கள். .
"ஏன் தாமரை வீட்டு வேலையெல்லாம் இங்க குமாரே செய்யிறார்?" ஆத்திரத்தை வெளிக்காட்டாமல் குத்தலாக கண்மணி கேட்டாள்.
"இல்லையே நானும்தான் செய்யிறன்” அமைதியாக அதற்கு இவள் பதிலளித்தாள்.
"நீர் சொல்லுறமாதிரி அப்பிடி இங்க நடக்கிறதாத் தெரியேல்லயே எல்லா வேலையையும் குமார் செய்யிற மாதிரித்தானே தெரியிது?” குறிப்பாக இவ்வாறு வினவியவுடனே
"மாமி நீங்க நினைக்கிற மாதிரி நாங்கள் ஒண்டும் ஒருவரையொருவர் அதிகாரம் பண்ணி வாழ்க்கையைக் கொண்டுபோகேல்ல. ரெண்டுபேருமே ஒர்த்தருக்கொருத்தர் உதவியாயிருக்கிறம். சிலவேளை நான் செய்யவேண்டிய வேலையை அவர் செய்யிறார். அதேமாதிரி அவருக்குத் தேவையானதையெல்லாம் நான் செய்து கொடுக்கிறன். ரெண்டுபேருமே இப்பிடி ஆளை ஆள் புரிஞ்சு கொண்டு நடக்கிறம்.” அதிகப் பிரசங்கித்தனமாயிராது இரத்தினச் சுருக்கமாக நல்ல முறையில் கூறிவிட்டு அவர்கள் இருவரினதும் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தாள் அவள்.
கணி மணி மருமகளின் கருத்துக்கு நன்றாக இறங்கி வரவேண்டியிருந்தது. அவள் சொன்னவைகளெல்லாம் தனது குடும்ப வாழ்வில் இல்லாத நிலையில் பல துன்பங்களையும் அனுபவித்துப் பழகி இருந்தவளுக்கு தன்னைப்போல ஒருபெண்ணின் இந்தக் காலத்திற்கேற்ற நடைமுறை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதாகவே நினைத்து வரவேற்றுக் கொண்டாள். என்றாலும் மகனை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது. “சரி என்னோட இருக்கேக்க இதுமாதிரி சமாச்சாரம் ஒண்டும் தெரியாம இருந்தாரே அதுக்குள்ள இது எல்லாம் எப்பிடி?.” வெளிப்படையாகவே இதை மருகளிடம் கேட்டுவிட்டாள் அவள்.
“இதில என்ன மாமி புதினம் இருக்கு உங்களோட இருக்கேக்க இதொணி டும் செய்யிறதில்லையெண் டு தான் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தவர் ஆனா நான் விடுகிறதில்ல. வேலைக்கு நானும் தான் போறன் அதால வீட்டு வேலையிலையும் நீங்க பங்கு பற்ற வேண்டுமென்று சொல்லி அவராகவும் சிந்தித்து உணர்ந்து வழிக்கு வரச்செய்தன். இப்ப ரெண்டுபேருக்கையும் ஒரு பிரச்சினையும் வாக்குவாதமும் இல்லாதமாதிரி இருக்கும்படியாயிருக்கு.”
123

Page 74
. X"X, x3. வசந்தம் வந்தது
இதைக் கேட்டதும் கண்மணி முதலில் தனது கணவனைத்தான் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளானாள். அவருக்கு இப்படியெல்லாம் உதவிசெய்ய விரும்பும், ஏதாவதொரு நல்ல குணம் இருக்கிறதா? என்பதை மானசீகமாக தேடிப் பார்த்தவளுக்கு வெறும் ஏமாற்றம் தான் கிடைக்கும்படியாகியது.
நேசன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார். திரிகைக்கல்லை கயிற்றில் கோர்த்துக்கட்டி கழுத்தில் மாட்டிவிட்டதுபோல் பாரமாக இப்போது அவருக்கு இருந்தது. பாவம் தலையை உயர்த்திப் பார்க்க முடியாதவாறு ஆகிவிட்டதால் அப்படியே இருந்தவாறு தன்னை நினைத்து அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
பொழுது சாயும் வேளை. பொட்டுப் பொட்டென்று மழைத் துளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலத்தில் விழுந்து கொண்டிருந்தது. அவர்கள் வீட்டு முற்றத்தில் நின்ற பெரிய பலாமரத்தில் மைனா கிளையாக வந்து அடைந்து கொண்டிருந்தது. அவைகளினது தொடர்ச்சியான சத்தத்தோடு மாலையும் மயங்கிப்போய் இருளில் மூழ்கியது. பெரியவர்கள் இருவருக்கும் பொழுது போக்காக இருக்க தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி வைத்துவிட்டு தாமரையும் கணவரும் சமையலறைக்குள் நுளைந்து விட்டார்கள். குசினியிலே கொஞ்சநேரம் போய்இருந்து எல்லா விஷயங்களையும் கண்டுவரலாம் என்பதே கண்மணியின் அவா என்றாலும் கல்யாணமான சிறுசுகளுக்கு தொந்தரவு கொடுப்பது நாகரிகமல்ல என்ற எண்ணம் வலுத்ததும் அந்த விருப்பத்தைக் கைவிட்டாள்.
இரவு அவர்களின் சமையல் முடிந்து மேசையைச் சுற்றி எல்லாருமாக சேர்ந்திருந்து சாப்பிடும் நேரம் அவர்களது சம்பாஷணையும் இரசிக்கக் கூடியதாக இருந்தது. இட்லியும் காரச் சுவையுடைய தொடுகறியும் சுவையாக இருப்பதாக கண்மணி மருமகளைப் பாராட்டினாள். நேசனும் அதிலே தானும் கலந்து கொண்டார். பூப்போல இருக்கும் இட்லி வாயில் வைத்ததும் கரைந்து போவதாக சான்றிதழ் வேறு தாமரைக்குக் கொடுக்கப்பட்டது. பரிமாறும் வேலையை சிவகுமார் எடுத்துக்கொண்டான். மனைவிக்கும் இட்டலி சட்னியை எடுத்து அவள் அருகில் வைத்து தட்டில் போட்டுக் கொடுத்தான் மகனது இந்த உபசரிப்பை தாயார் சாப்பிட்டுக்கொண்டே கடைக்கண்ணால் ஆர்வமாகப் பார்த்தாள். சாப்பிடும்போது பழைய இலக்கியக் கதைகளும் அவர்கள் உரையாடலில் சேர்ந்தது. ஆண் இனம் அரக்க
124

ჯ:so::::::::::xxxx»: :::&:& • · · · · · · · · ·22-2.”-2-3-2.2.3.x,3-3, - ჯ, „ჯა's x- நீ.பி.அருளானந்தம் இனமாய் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலில் ஒரு போடு போட்டாள்
தாமரை. இதைப் புரியாது அவளைப் பார்த்தபடி கண்மணி விழித்தாள். தாமரை தொடர்ந்தாள்.
“பெண்ணுக்காக ஆணி இனம் எதையுமே தாங்கத் தயாராக இருக்கிறது. மிருகங்களில் கூட அதைக் காணக்கூடியதாய் இருக்கிறதாம் மாமி. சங்கப் பாடல்களில் இதற்குச் சான்று இருக்கிறது.” இப்போது சாப்பாட்டு மேசையிலே தாமரைக்கு நேராக சிவகுமார் இருந்து கொண்டான். தட்டிலே இட்லியை அடுக்கிக் கொண்டவன் சட்னியைப் போட்டுக் கொண்டு மனைவியின் முகத்தைப் பார்த்தவாறு அவள் கதையையும் ரசித்துக் கொண்டு மெல்ல சாப்பிட ஆரம்பித்தான்.
தாமரை பேச்சைத் தொடர்ந்தாள். “கொஞ்சம் இருக்கும் நீரினை முதலில் பெண்யானையைக் குடிக்கவிட்டு பின்புதான் குடிக்கிறதாம் ஆண்யானை. அதேபோல வெயிலில் வாடும் பெண்மானை தன்நிழலில் நிற்க வைக்கிறதாம் ஆண்மான். இப்படியெல்லாம் மிருகசாதிகளே இருக்க, மனித இனத்தில மட்டும் ஆண்இனம் அரக்க இனமாயிருக்க வாய்ப்பில்லையென்ன. பொம்பிளையள் தங்கட தேவையளையும் ஏலாத் தனத்தையும் சரிவர விளங்கத் தக்கதாய் அன்பாய் புருசனிட்டச் சொல்லவேணும். அப்பிடியில்லாம தங்களை ஆம்பிளையள் புரிஞ்சுகொண்டு நடக்கவேண்டுமெண்டு பார்த்தால் பேந்து தனியக் கிடந்து எல்லா வேலையளையும் செய்து மாஞ்சுபோற அளவுக்குத் தான் போயிடும்.”
தாமரை இப்படிச் சொன்னதும் நேசன் திகைத்துப் போனார். உடனே கண்மணியைத் திரும்பிப் பார்த்தார். களைத்துப் போயிருக்கும் அவள் முகம் அவருடைய மனதில் பலவித கவலைகளையும் ஏற்படுத்தி விட்டது. தான் துன்புற நேர்ந்தாலும் மற்றையவர்கள் நன்றாயிருக்க வேணும் என்றவாறான நற்குணமுடைய கண்மணியை இனியாவது கண்போல பாதுகாத்து இயலுமான எல்லா உதவிகளையும் அவளுக்கு செய்து கொடுத்து மகிழ்வாக அவளை வைத்திருக்க வேண்டும் என்று அந்தக்கணமே அவர் முடிவெடுத்தார். உடனே தன்னாலேயும் எல்லாவற்றையும் மனைவிக்கு செய்து கொடுக்க முடியும் என்பதைக் காட்ட அங்கே ஆரம்பமாக ஒரு அன்பான உதவியை கண்மணிக்கு செய்தார்.
தட்டிலே இரண்டு இட்லிகளை எடுத்து கண்மணி சாப்பிட்டுக்
125

Page 75
. வசந்தம் வந்தது ܒܒ ܝ ܠ ܥ ܒܕܒܚܐ ܡܨܠܐ ܕܒܬܐ ܒ ܒܥܬܐ ܥܒ. கொண்டிருந்த தட்டில் வைத்து சட்னியை சிறிது கரணி டியில் அள்ளிப்போட்டு "கண்மணி சாப்பிடம்மா" என்று அன்போடு கூறினார். கண்மணிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது முதன்முதலில் வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்பது போல் இருக்க நிமிர்ந்து கணவனைப் பார்த்து நன்றியோடு அவள் லேசாகச் சிரித்தாள். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகனும் மருமகளும் உள்ளம் பூரித்துப்போக அதிலே இருந்தவாறு வாய்விட்டுச் சிரித்தார்கள். அங்கே குடும்ப ஆரோக்கியத்துக்குரிய நல்ல ஒரு சூழ்நிலை அவர்களிடையே அப்போது உருவானது.
ஒலை-13 கொழும்பு தமிழ்ச் சங்க மாதாந்த மடல்
(ஒக்ரோபர்-2002)
126

நீ.பி.அருளானந்தம்
குயில்களைத்தான் கூடுதலாக இந்தக் கிராமத்தில் காணலாம். அடர்ந்த மரங்கள். அது தரும் நிழல் எல்லாமே வசந்த காலமும் தொடங்கினால் இன்னமும் அவ்விடத்தின் அழகு இரட்டிப்பாகிவிடுகிறது.
அவ்விடமாக அமைந்துள்ள சூசையப்பர் கோயிலிலே காலைப்பூசை முடிவுற்றதும், ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மாத்திரம் வீட்டுக்குப் போகாது நின்று கொண்டனர். கோயில் வளவுக்குள் ஒரு பெரிய மாமரத்தின் கீழ் கூட்டம் ஆரம்பமாவதற்குத் தயார் பண்ணப்பட்டது.
இந்தக் கிராமத்தில் அதிகமாய் எல்லோருமே கத்தோலிக்கர்கள் தோட்டக்காரர்கள். ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அர்சியசிட்டவரான
127

Page 76
புது யுகம் சூசையப்பரும் ஒரு தச்சுத் தொழிலாளியாகவே இருந்தார். கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையான அவர் தொழிலாளர்கள் சமூகத்துக்கு ஒரு முன் மாதிரியாக வாழ்ந்தவர். இதனால் மே முதல் திகதியில் வரும் தொழிலாளர் தினத்தை கோயில் பெருநாளாகவும் நிச்சயித்து வருடாவருடம் விமர்சையாக இங்கே பெருநாள் கொண்டாடி மகிழ்வார்கள்.
ஒன்பது நாள் நொவீனாவை நிறைவு செய்து பத்தாவது நாளிலே பெருநாள் பூசை நடக்கும். இதற்காகிய ஏற்பாடுகளைக் கவனிக்கவென்றே மரத்துக்குக் கீழ் குழுமியவர்கள் ஆர்வமாக இருந்தனர். ஊருக்குள்ளே பெரிய மனிதர்கள் என்றிருக்கும் இருவர் முன்பக்கமாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர். பெருநாளுக்கென்று பணம் சேகரிக்கும்போது அந்த இருவரும் ஆளுக்காள் விட்டுக் கொடுக்காது ஒருவரை விட மற்றவர் அதிகப்படியாய் பண நோட்டுக்களை நீட்டி ஊருக்குள் தமக்கென ஒரு பெயர் இருக்கும் படியாக பார்த்துக் கொள்வார்கள்.
சூசைப்பிள்ளை கிழவரும் வந்தார். அந்த இடத்திலே கடைசி நாற்காலியில் இருந்து கொண்டு யாரோடும் பேச்சுவார்த்தை இல்லாமல் உட்கார்ந்திருந்தார். முன்பு உபதேசியராக இந்த ஆலயத்திலே நாற்பது ஆண்டுகள் தொண்டு செய்தவர். இப்போது வயதாகிப் போய் உடல் ஒடுங்கியும் போகவே பொறுப்புகளை வேறொருவர் கையில் ஒப்படைத்துவிட்டுத் தன்னால் முடிந்த தொண்டுகளைச் செய்வதற்கு மாத்திரம் சகலரோடும் கலந்து கொள்கிறார். கூட்டத்தில் எல்லோரும் வருடா வருடம் நடந்துவரும் செயல் பாட்டையே இம்முறையும் நடைமுறைப் படுத்துவதென முடிவெடுத்தார்கள். கோயிலுக்கு வர்ணம் பூசுவதில் ஆரம்பித்து அனைத்து காரியங்களையும் கவனித்து மேற்பார்வை செய்து வரவென செயல்திறன் மிக்கவரும் எல்லாரோடும் ஒத்துப்போகக் கூடியவருமான செபஸ்ரியன் பிள்ளை நியமிக்கப்பட்டார்.
நல்லபடியாக கூட்டம் நிறைவு பெற்று வீட்டுக்குப் போகும் வேளை, சூசைப்பிள்ளை உபதேசியாரும் மெல்ல நடந்துகொண்டு அவர்களுக்குப் பின்னாலே போனார். முன்னால் சென்று கொண்டிருந்த நீக்கிலாஸ் தனது நடைவேகத்தைக் குறைத்து மூப்பருடன் ஒட்டிக்கொண்டு நடந்தவாறே பேச்சுக் கொடுத்தான். "சூசைப்பிள்ளையப்பா ஒவ்வொரு வருஷமும் நாங்கள் கோயில் பெருநாள் கொண்டாடிற மாதிரி வேறகோயில்களிலேயும் பெரிசா சொல்லக்கூடியதா பெருநாள் கொண்டாடிறவங்களே. அதிருக்கட்டும் இப்ப எங்கட பாதர் என்ன ஒருமாதிரி ஆளாயிருக்கிறார்?. செய்யிற வேலையெல்லாம்
128

நீ.பி.அருளானந்தம். ஊருக்குள்ளயிருக்கிற எங்கட்டயும் ஒரு வார்த்தை சொல்லாம தன்ரை இஷ்டத்துக்கு ஆடப்பாக்கிறார். இதுகளை ஒரு வாட்டியென்றாலும் நீங்கள் அறிஞ்சியளே!”
மூப்பருக்கு விளங்கும் இவன் ஊருக்குள்ளே குழப்படியான ஒரு ஆள். வம்பன் நீக்கிலாஸ் என்றுதான் இவனுக்குப் பட்டப் பெயர். அப்படிக்கொத்தவன் எக்கணம் என்ன குழப்பம் எடுக்கப் போகிறானோ?. நினைத்துக் கொண்டு இவரும் அவன் உள்ளிரகசியத்தைக் கேட்டுப் பிடுங்கிக் கொள்ள கதைவிட்டுப் பார்த்தார்.
"நீக்கிலாஸ், நீ என்ன சொல்லுறாய்? கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சகலதையும் செய்ய ஆன்மீக சம்பந்தமான விஷயங்களில் சனங்களையும் வழிநடத்திப்போக அவையள் குருப்பட்டம் பெற்று வருகினம். சுவாமியில் பிழையேதுமிருந்தா நாங்கள் பிஷப்பிட்டப் போய்ச் சொல்ல வேணும். அதுதான் முறை. எண்டாலும் நான் கேக்கிறன். அப்படி சுவாமி என்ன செய்தவரெண்டு சொல்லு பார்ப்பம்’ உபதேசியார் கேட்டார்.
"உபதேசியப்பு உங்களுக்கிது இவ்வளவு நாளும் தெரியேல் லைப்போல. சுவாமி லேசுப்பட்டவரில்லையப்பு, ஒரு காலம் கோயிலுக்குள்ள கோடு போட்டு பிரிச்சு வச்சு அதுக்குள்ள இருந்து கும்பிட்டுப் போங்கோ எண்டு மாத்திரம் விட்ட இழிசனத்தை, இப்ப அது ஒண்டுமே இல்லாமலாக்கிப் போட்டு, ஏதோவரட்டும் கும்பிட்டுட்டு தங்கடபாட்டுக்குப் போகட்டுமெண்டு சும்மாயிருந்தா அதை சாட்டாய் வைச்சுக்கொண்டு. இந்தச் சுவாமியல்லே அவங்கட பிள்ளையளோட எங்கட பிள்ளையருக்குமா சேர்த்து பெருநாள் பூசையில, வைச்சு ஒண்டா சற்பிரசாதம் கொடுக்கவெண்டு அடுக்குப் பண்ணுறார்.”
உபதேசியாருக்குத் தெரியும். இது இன்றைக்கென்று மட்டும் உருவாகியிருக்கிற சங்கதியில்லை. அவரது இளம் வயதுக் காலத்தில் கூட இதைவிட வலுத்திருந்த சாதித் துவேஷத்தையெல்லாம் அவர் பார்த்தவர். கோஷ்டி சண்டை, வெட்டு, குத்து என்று சாதிப் பேய் ஏறி ஆடித்திரிந்தவர்களை இன்னும் உரு ஏற்றி விடுவதற்கும் பூசாரிகள் ஒரு சிலர் ஊருக்குள்ளும் இருந்தார்கள்.
இது எல்லாம் எங்களுக்குள் வேண்டாம் என்று அறிவுரை சொல்லப் போன இவரையுமெல்லே கொஞ்சக் காலமாய் இந்த ஊரில இருக்க வேண்டாமென்று துரத்தி விட்டவங்கள். இத்தனைக்கும் இவர் என்னதான்
129

Page 77
புது யுகம் செய்து விட்டதாகக் குற்றம் கண்டு பிடிச்சினம்
அந்த நாளில் ஒரு அநியாயமான வழக்கம். கத்தோலிக்கர்கள் கூட தங்கள் கோயிலிலே சாதிப் பிரச்சனையை தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கோயிலிலேயும் தாழ்ந்த சாதியென்று அவர்களைச் சொல்லி துப்பட்டி போட விடமாட்டார்கள். அவர்களினது பிள்ளைகள் சிறுவயதில் முதல் நன்மை பெறும் போது கூட அந்த நாளில் தலையில் ஆசாரப் படிக்கும் ஒரு சிறு வெள்ளைத்துண்டு போட முடியாது. ஆனால் வெள்ளாம் பிள்ளைகள் துப்பட்டியுடன் பூ முடிகளும் தலையில் அழகாக வைத்துப் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்படி வருவார்கள். அப்படி வரும்போது அந்தப் பிள்ளைகளை இந்தப் பிள்ளைகளோடெல்லாம் ஒத்துப் பார்த்தால் நீதியை சினேகிப்பவர்களுக்கு ஒரு நெட்டுயிர்ப்பாவது வெளிவரும்.
சின்னப் பிள்ளைகளென்றாலும் அவர்களுக்குப் பெரிய சேலையை சுற்றி உடுத்து அதில் ஒருதலைப்பை எடுத்துத் தலையில் போட்டுக் கோயிலுக்குள் தடக்கித் தடக்கி வரும் போது அந்தப் பிள்ளைகளை பெத்துப்போட்ட தாய் தகப்பனுக்கெல்லாம் மனம் என்ன பாடுபடும்.
இப்படித்தான். சூசைப்பிள்ளை கோயிலிலே உபதேசியாராய் இருந்த போது ஒரு முறை முதற் சற்பிரசாதம் சின்னப் பிள்ளைகளுக்குக் கொடுத்த பொழுது அந்தப் பகுதியிலிருந்தும் பத்துச் சிறுமிகள் வரையில் உடுத்த சேலையால் தலையை மூடிக்கொண்டு கோயிலுக்குள் சற்பிரசாதம் எடுக்க வந்தார்கள். ஒரு பிள்ளையின் உடுத்த சேலை தலை மட்டும் போடாத காரணத்தினால் தலைக்குமேல் மூடாமல் வந்திருந்தாள். அதனால் அந்தப் பிள்ளை சற்பிரசாதம் பெறும்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த இவர் தனது கை லேஞ்சியை எடுத்து பாவம்பார்த்து அவள் தலையில் போட்டு மூடி விட்டிருக்கிறார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்குப் பெருத்த ஆத்திரமாகிவிட்டது "என்ன இவன் இப்பிடி புதுசா ஒரு துவக்கம் துவங்க ஆரம்பிச்சிட்டான்.” என்று தமக்குள்ளே சேர்ந்து கதைத்து விட்டு. இவர் முன்பும் வந்து பின்பு சீறியிருக்கிறார்கள் , பிற்பாடு தொடர்ந்து அவர்களிடமிருந்து வந்த எரிச்சலூட்டும் கதைகளால் இரண்டு மூன்று மாதங்களாக ஊரிலும் இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதனால் பக்கத்து ஊரிலே போய் ஓரிரண்டு மாதங்கள் இருந்துவிட்டு பின்பு அவர்கள் கொதிப்பெல்லாம் ஆறியடங்கிப் போகத்தான் திரும்பவும் ஊருக்குவந்து இவரால் இருக்க முடிந்தது.
130

w நீ.பி.அருளானந்தம் அது எல்லாம் நடந்து முடிந்து போன பழைய கதை. மீண்டும் திரும்ப அவைகளை இவன் புதுப்பிக்கப் போகின்றானா? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதுமே. இந்தச் சத்துராதி ஒருவனே ஊரிலுள்ளவர்களைக் கெடுத்துத் தூண்டி விடுவான் போல கிடக்கு. என்று எண்ணியபடி மீண்டும் அவனைப் பார்த்து, “ஏன் நீக்கலாஸ் உன்ரை பிள்ளையும் முதல் நன்மை பெற ஆயத்தமாகிறது போலக் கிடக்கு?” என்று கேட்டார்.
"ஒமப்பா. சின்ன மகள் அதுக்கெண்டுதான் எல்லாப் பிள்ளைகளோடையும் சேர்ந்து ஒரு மாதகாலமாகப் போய் சுவாமியிட்டச் செபம் படிக்கிறா”
"சரி சின்னப்பிள்ளைகள் செபம் படிக்குதுகள். கள்ளம்கபடம் அறியாத சம்மனசுகள் மாதிரி இருந்து சேர்ந்து ஒன்றாய்ப்போய் சற்பிரசாதம் எடுக்க இருக்குதுகள். நீயேன் அவயளின்ரை மனதில கீரைவிதை வீசிற மாதிரி சாதித்துவேஷத்தை விதைச்சு வளர்க்கிறாய்.? நீ கத்தோலிக்கனெல்லே.? எல்லாரோடேயும் பிறர் சினேகத்தை வளர்த்து அன்பாயிருக்கப்பார்.” உபதேசியார் என்ற முறையில் சிறிது ஞான உபதேசம் அவனுக்குச் செய்தார். "மூப்பரப்பு நீங்கள் நினைக்கிறது பிழையணை. இது எல்லாம் நான் மாத்திரம் கதைக் கிறன் எண் டு நினைக் காதேயுங் கோ. கனக் கப் பிள்ளையளின்ரை தகப்பன், தாய்மார் இப்பவும் முணுமுணுத்துக் கொண்டுதான் இருக்கினம். அவங்கட தொழில் என்ன? எங்களின்ரை தொழில் என்ன? இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குதெல்லே? அவங்களின்ரை பிள்ளைகள் சற்பிரசாதம் எடுக்கட்டும், நாங்கள் வேண்டாமெண்டு சொல்லேல்ல ஆனா. எங்களின்ரை பிள்ளைகளோடயிருந்து எடுக்க வேண்டாம். முதலிலயெல்லாம் எங்களின்ரை பிள்ளைகள் எடுத்து முடிஞ்சாப் பிறகு ரெண்டாவதாய் அந்தப் பகுதியாட்கள் தங்கள் பிள்ளைகளை எழுப்பிவிட்டு தனியவா எடுக்க விடட்டும். உதுகளைத்தான் நான் சொல்றன். ஆனா அப்பாவுக்கிது விளங்கிக் கொள்ளேல்லப் போல கிடக்கு.”
"நீக்கிலாஸ். நீ சொல்லுறது நல்லாய் விளங்குது. முன்னதாய் நீ சாதியெண்டு துவங்கினாய். பிறகு இப்ப தொழிலை குத்திக் காட்டுறாய். இங்க பார். இயேசு நாதரையும் அவர் வளர்ந்த ஊரில வைச்சு இவன் தச்சன் அல்லவா. அப்படியாக இருக்க இத்தனை ஞானமும் பலத்த செய்கைகளும் இவனுக்கு எப்படி வந்தது? என்றதாய் அந்த நாளிலும் தொழிலை சொல்லிக் காட்டி இயேசுவைப் பார்த்துக் கூட எரிச்சல் பட்டிருக்கிறாங்கள். நீக்கிலாஸ் எல்லாத் தொழிலுமே உயர்ந்ததுதான். பட்டறையில் மண்வெட்டி அடிச்சுத்தாறதால
131

Page 78
ჯ.-------X:::::::::::::::::::::::ჯ.·.:ჯ:3:ჯ::::::::::::::::::::ჯჯჯ«: ❖.....<÷÷÷÷÷2<<<<<<<<<<<‹‹> ** **ሩ ... g. Lof தான் நீ தோட்டத்தைக் கொத்துகிறாய். பங்க பார்! நீ காலில செருப்புப் போட்டிருக்கிறாய். இந்தச் செருப்பு இல்லாம எங்கயாச்சும் உன்னால நடக்கேலுமே? செருப்பு உனக்குத் தேவை. ஆனா செருப்புத் தைக்கிறவனை உனக்குக் காட்டேலாமக் கிடக்கு. இப்பிடி இனிமேல நீ கதைக்காத கண்டியோ. எப்பவும் நல்லதுகளை நினை. நல்லதானதுகளைச் செய். எல்லாரையும் சகோதரராய் நினை. அப்பதான் நீ கிறிஸ்தவன்.”
ஏற்ற இறக்கம் வைத்து, அவனைப் போன்ற குணம் உள்ளவர்க்கும் நன்றாய் உறைத்துப் போகட்டும் என்று உபதேசியார் சொல்லி முடித்ததோடு, அவரை விட்டு விட்டு கோபத்தோடு விறுக்கு விறுக்கென்று நாலு எட்டு வேகமாகக் காலை முன்னே வைத்து நடந்து செபஸ்ரியன் பக்கமாக நெருங்கினான் நீக்கலாஸ். ۔۔۔۔
"பாத்தியே செபஸ்ரியன், கிழவன்ர திமிரை. கிழட்டு மலடனுக்கு பிள்ளையளில்லை! அதாலை எல்லா புது ஞாயமும் சொல்லுவான். அவனுக்கு ரோஷம் எப்பனுக்கும் வராது. ஆனா . நானெண்டா விட்டுக்குடுக்க மாட்டன்.
இதுக்குப்போய் என்னத்துக்கு ஆரோடையும் வீண்கதை. நான் இந்த ஊர்ப்பிறந்தவன். இந்த ஊரிலதான் சொந்தத்துக்குள்ள கலியாணமும் முடிச் சவன் . கோயிலில எனக்கு எல்லாரையும் விட கூடுதலான உரிமையிருக்கு. சுவாமியோட இண்டைக்கு சகலதையும் கதைச்சு எல்லாத்தையும் ஒழுங்குக்குக் கொண்டு வாறன்.”
அவன் ஆத்திரப்பட்டுக் கொண்டு நின்றான். புத்தி கெட்டுப்போன அவன் எங்காவது அக்கினிக் குஞ்சை வைத்து ஊரை சுடுகாடாக்கி விடுவானோ என்று சூசைப்பிள்ளை மனக் கிலேசப்பட்டார். என்றாலும் தள்ளாத வயதில் அவனுக்குப் பின்னால் திரிய அவரால் முடியாததினால் மனதில் தீர்மானமான ஒரு முடிவுடன் வீட்டுக்குப் போய் விட்டார்.
பனை கொடியேறிவிட்டது என்று குடிகாரர் அமர்க்களப்படும் காலமது. தவறணைகளில் நல்ல கள்ளும் பீப்பாய்களில் நிறையக் கிடந்தது. வயிறுமுட்ட அங்கேயிருந்து நன்றாகக் குடித்துவிட்டுக் கால்போத்தல் சாராயத்தை வாங்கி மடிக்குள் செருகிக் கொண்டு நீக்கிலாஸ் கோவில் வளவுக்குள்ளே போனான். அப்பொழுது பின்னேரமாகி விட்டது. கோயில் சந்திக்க வருபவர்களையும் அங்கே காணவில்லை. அதுவும் அவனுக்கு வாய்ப்பாகியது. அக்கம் பக்கம்
132

நீ.பி.அருளானந்தம் . பார்த்துக்கொண்டு மடிக்குள் இருந்த போத்தலை வெளியே எடுத்து அண்ணார்ந்து ஒரேயடியாகச் சாராயம் முழுவதையும் வாய்க்குள் விட்டான். வயிற்றுக்குள் கிடந்த கள்ளுடன், சாராயமும் கலந்து இப்போ தலை கறணமான நல்ல வெறி.
"சுவாமி. சுவாமி.” கூப்பிட்டான்.
அறை வீட்டிலிருந்து சுவாமியார் வெளியில் வந்தார். அருவருப்பான நெடி நீக்கிலாசின் உடம்பெல்லாம் இருந்து, நிரம்பவும் அவருக்கு மணத்தது. என்றாலும் வெறுப்பைக் காட்டாது சுவாமி கேட்டார். "என்ன நீக்கலாஸ், என்ன விஷயம்?”
"ஒண்டுமில்லை பாதர். நீங்கள் எங்கட பிள்ளையளுக்குச் சற்பிரசாதம் பெற ஆயத்தப்படுத்திறியள். அவங்கட பிள்ளையஞக்கும் இந்தப் பிள்ளையளோட செபம் படிச்சுக் குடுக்கிறியள். எல்லாரும் சற்பிரசாதம் பெறவேணும். அது எங்களுக்குச் சந்தோஷம். ஆனா பிள்ளையளை ஒண்டாச் சேர்த்துவிட்டு எல்லாருக்கும் ஒரு புதினம் காட்டப்போறியளாம். எத்தினை பாதர்மார் இந்தக் கோயிலில வந்து இருந்து மீசாம்கள் பார்த்துப் போயிருக்கினம். நீங்கள் வந்து என்ன புதுசா ஒரு எடுப்பு எடுத்துக் காட்டிறியள்?”
நின்றுகொண்டே பின்பக்கமும் முன்பக்கமும் போதையில் ஆடிக்கொண்டு இப்படி அவன் கூறி முடிக்க, சுவாமி அதுக்குப் பதில் சொன்னார்.
"நீக்கிலஸ் , நீர் சொல்கிறமாதிரி உங்களிட்ட குழப்பமுண்டாக்க நான்வரேல்ல. சின்னப் பிள்ளைகளுக்கு சாதிபேதத்தைக் காட்டி ஒதுக்கினால் மனத்தாக்கம் அவர்களுக்கு வந்திடும். சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடைசெய்யாதீர்கள் என்று கடவுளின் குமாரனான இயேசு கிறிஸ்துவும் இந்தப்பூவுலகில் இருக்கும்போது சீடர்களுக்கு சொல்லியிருக்கிறார். பிள்ளைகளின் மனசு பூ மாதிரி. வஞ்சகம், கபடம் இல்லாத அவர்களின் மனதை வயது வந்த நல்ல அறிவு படைச்ச நாங்கள் வாடச்செய்யிறது நல்லதில்லை. கடவுளின் ஆலயத்திலயாவது சாதி பேதம் வேண்டாம். இதையெல்லாம் இனியாவது விட்டிடுங்கோ.” சுவாமியார் இதைச்சொல்ல நீக்கிலாசுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பாதம் முழுதையும் நிலத்தில் தரிக்காது கோபாவேசம் கொண்டு பெருவிரலில் நிற்பது போல சுழன்றாடினான். மூக்குமுட்டக் குடித்ததினால் வந்த வெறி அவனை குரங்குச் சேட்டைகளையும் செய்ய வைத்தது. சுவாமிக்கு
133

Page 79
X&x:xxx: ><<.....×2×2×. ་་་་.

Page 80
ւկֆl IIկ* If “இப்பிடிக் குழப்பம் இனியும் இந்த ஊருக்குள்ள வேண்டாம். உபதேசியார் அந்த நாளிலிருந்தே இந்தக் காரியங்களில் தலையைப் போட்டுக் கஷ்டப்பட்டவர். இந்த ஊருக்குள்ள வயசு போன பெரிய மனுஷன் அவர்தான். இவருக்கு நாங்களெல்லாரும் மரியாதை கொடுக்கவேணும். இந்தப் பிரச்சனைகளே வேண்டாம் எல்லாரும் ஒற்றுமையாக பெருநாளைக் கொண்டாடுவம்.”
பெரிசுகளே நின்று அப்படிச் சொன்னதால் அதை மறுத்துப் பேசுவதற்கு எவருக்குமே துணிவு வரவில்லை. நீக்கிலாசுடன் சேர்ந்தவர்கள் இனிமேல் சரிப்பட்டு வராது என்ற நோக்கில் மெல்ல அவனை விட்டு நழுவி விட்டனர். அதற்குப்பிறகு அவன் செல்லாக் காசு போல மதிப்பிழந்ததாய்ப் போய்விட்டான். துணை இல்லாததால் பலமிழந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான்.
பெருநாளன்று முதற்சற்பிரசாதம் பெறுகின்ற எல்லாப் பிள்ளைகளும் ஒரேமாதிரியான உடுப்புப் போட்டிருந்தனர். பூசையிலே எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒன்றாகச் சற்பிரசாதம் கொடுக்கப்பட்டது. தேவநற்கருணை பெறும்போது தங்கள் பிள்ளைகளுக்குப் பின்னால் அவர்களது பெற்றோர் மெழுகுதிரி தீபத்தைக் கைகளில் பிடித்தபடி பக்தியோடு நின்றனர். அங்கே தன் பிள்ளைக்குப் பின்னால் நிற்கும் நீக்கிலாசையும் காணிகையிலே எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.
என்ன செய்யிறது காலம் மாறிப்போச்சு என்பதாய் நினைத்துக் கொண்டு கோயிலுக்குள் இருந்து கொண்டிருந்த ஒரு சிலர் மன வேக்காடுடன் திருநாள் பூசை கண்டனர். முன்பு ஒரு காலம் நடுப் பூசை வேளையில், எழும்பிப்போய் கோடு போட்ட இடத்துக்குள் இருக்கும் பெண்களின் தலையில் உள்ள துப்பட்டியை இலந்தைக் கொப்பால் கொளுவி எடுத்து வெளியில் வீசிய விஷமிகளும் இவைகளைப் பார்த்து கறுவிக் கொண்டிருந்தனர்.
புதுயுகம் மலர்ந்துவிட்டது. யாரும் யாருக்கும் அடிமைகளல்ல. எல்லோரும் மனிதர்கள். எல்லோருக்குமே சம உரிமையுண்டு என்பது போராட்டத்தின் மூலம் நிச்சயிக்கப்பட்டு வரும்போது, இனிமேல் அந்தப் புல்லுருவிகளெல்லாம் எங்கே என்றால் ஒரு மூலையில் போய் சுருண்டு கிடப்பார்கள்
ஈழத்து எழுத்தாளர்களின் இருபத்தாறு சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நூல் (2003)
f

- நீ.பி.அருளானந்தம்
"ன்ெனணை ஆச்சி விமலனைப் பற்றி ஏதாவது தகவல்
கிடைச்சுதே?"
"இல்லப் பிள்ளை அதுதான் இருந்து நான் ஏங்கிக் கொண்டிருக்கிறன்." "விமலன் பொங்கலுக் கெண்டாலும் வீட்ட வந்திடுவான் என்னனை.? விட்டிடுவாங்கள் என்னனையாச்சி?
"அப்படியானாத்தான் என்ரை உசிரும் இனி இந்த உடம்பில நிக்குமம்மா..? அவனில்லாம இனி சீவிச்சு எனக்கென்னடியாத்த வரப்போகுது?"
"அழாதயணை எப்படியும் தம்பிய இனி விட்டிடுவாங்கள். சமாதானம் வந்திட்டுதெல்லே! அதால பயப்பிடத் தேவையில்லை! உனக்கும் வயக
137

Page 81
---...-- .x ''; გ.“,:·:·ა. காத் திருத்தல் போயிற்றுது, உதுகளைக் கணக்க யோசிச்சியெண்டா வருத்தம் வந்து பிடிச்சிடும்.”
"நான் ஆருக்காக பிள்ளை இந்த உசிரை வைச் சிருக்கிறன்? அவனுக்காகத் தானே! அவன் ரை தேப்பனும் தாயும் செல்லடிபட்டுச் செத்தாப்பிறகு நான் தானே எல்லாமெணி டு அந்தப் பிள்ளையும் நம்பிக்கொண்டிருக்கு. எண்டாலும் இந்தக் கிழவி என்னத்தைத் தானடியம்மா செய்ய ஏலுமாயிருக்கிறன். ஆரட்டப்போயும் எனக்கு ஒழுங்காக் கதைக்கவும் தெரியேல்ல. ஒண்டும் தெரியேல்ல. இந்தக் கண்ணே எனக்கு ஒழுங்காப் பார்க்கக்கூட முடியாமலிருக்கு. நான் எங்கதான் போவன்.? ஒரேயொருக்கா என்ரை பேரனைப்போய் வெலிக்கடேல பாத்தன். அத்தோட எல்லாஞ்சரி. இப்ப எங்க அங்க எனக்குப் போய்வர உடம்புக்கு ஏலுமாக்கிடக்கே.”
"ஆச்சி.1உனக்கொரு வியளம் தெரியுமோ இல்லையோ. தம்புன்ரை பொடியனை விட்டிட்டாங்களாமெணை, பங்க அவன் வீட்ட வந்திருக்கானாம் என்ர அவருமொருக்காப் போய்ப் பாத்திட்டு வந்திருக்கார்,
“ஆமோ. அப்பிடியே அந்தப்பிள்ளையும் பாவந்தான். என்ரை பிள்ளை மாதிரித்தானவனுமெனக்கு. அவன் சோமாயிருக்கானாமேயம்மா?
“எனக்குத் தெரியாதாச்சி. ஏதுமப்பிடி பிசகெண்டால் அவரெனக்குச் சொல்லியிருப்பார். நல்லாயிருக்கிறானென்டுதான் அவர் சொன்ன மாதிரியில தெரியுது.”
“நல்லூரான் ரை கிருபையில அப்பிடியே அந்தப் பிள்ளை இருந்திரோணும் . ஐயோ!. இந்தப்பிள்ளையள விசாரணையெண்டு அடிச்சு முறிச்சு விசராக்கிப்போட்டாங்களாம். உதுகளெல்லாத்தையும் கேள்விப்பட கேள்விப்பட எனக்குக் குலை நடுங்குது பிள்ளை. என்ரை பேரன் ஒரு குழப் படியுமில்லாத சாதுவான பிள்ளை. சும்மா றோட்டில போய்க்கொண்டிருந்தவனை விசாரணைக்கெண்டு கூட்டிக் கொண்டு போனாங்கள். அதோட போனவன்தான, என்ரை கண்ணில பல வருசம் வரைக்கும் அவனை என்னால காணவே கிடைக்கேல்ல. அதுக்குப்பிறகு எத்தினியோ இடங்களில போய் ஆள் தெரியாதவனையெல்லாம் காலில கூட விழுந்து மன்றாடிக் கேட்டுத்தான் கடைசியா என் ரை பிள்ளையை நான்கண்டன். எல்லாம் நடந்து இப்ப எத்தினை வருசம். இப்ப அஞ்சு வருசமாச்சு எத்தினை தீபாவளி. எத்தினை பொங்கல் வந்து போச்சு
138

XXXXXX:భ: 玄ミ:三※xx **xぶx நீ.பி.அருளானந்தம் ஒவ்வொண்டும் வாற காலமெல்லாம் வீட்ட வருவானெண்டுதான் அவனை நினைச்சு நான் ஏங்கலாச்சுக் கொண்டிருக்கிறன். எனக்கும் கனகாலமில்லப் பிள்ளை, போயிடுவன் போலக்கிடக்கு அவன் வீட்ட வந்தா நானும் காலைக்கையை நீட்டிக்கிடந்து நிம்மதியாச்சாவன்.
“சீ. என்ன சாகிற சாகிறதெண் டுறாய்? ஏன் அப்படியெல்லாம் பினாத்துறாய்? கனகாலம் நீ இருப்பாயாச்சி, பேரனுக்கு நீயொரு கலியாணமும் செய்து வைச்சு பூட்டப்பிள்ளையும் கண்டு முடிச்சுத்தான் நீ சாவாய்”
"உன்ரை வாய் பொன் வாயாயிருக்க வேணும் பிள்ளை. என்ரை பேரன் சீராய் வாழுறதையும் நான் பார்க்கவேணும்தான். இந்தக் கிழவி தானே அவனுக்கெல்லாம். வருவான். அவன் கட்டாயம் வந்திடுவான். அவன் வருகிறதோட நல்லாய் அவனைப் பாத்தெடுத்து உடம்பைத் தேற்றிவிட வேணுமெண்டு நான் உங்க என்ன எல்லாம் வாங்கி வைச்சிருக்கறன் தெரியுமே. நான் இப்ப வன்னியில இருந்து வரேக்க சுத்தமான தேன் ფა(Iხ கலன் வாங்கியந்திருக்கிறன். இங்கினையா வந்தும் கோடிப்பக்கம் இப்ப கிழங்குப்பாத்திபோட்டு எடுத்ததை ஒடியலாக்காயவைச்சுக் கூட உள் முகட்டில் கட்டித் தூக்கிவிட்டிருக்கிறன். அருமையான நல்லெண்ணையும் நாலு போத்தல் முட்டக் கிடக் கு.வெங் காயத்த வதக் கி சுடச் சுட நல்லெண்ணையோட சோத்தில ஊத்தினா விருப்பமா அவன் சாப்பிடுவான். அவன் வருவான். எப்பிடியும் அவன் கட்டாயம் கிட்டத்தையில வந்திடுவான். பிள்ளைக்கு என்ர கையால கொஞ்ச நாளைக்கு சமைச்சுப்போட அவன் ஆள் மளமளவெண்டு தேறிடுவான்.” உச்சத்திலே பல்லி ஒன்று சொல்லியது. "உந்தா அடிச்சமாதிரி முகட்டிலயிருந்து பல்லியும் சொல்லுதாச்சி. பொங்கலுக்கு முன்னவாய் தம்பி வந்திருவான் போலத்தான் சகுனம் கிடக்கு.” “அதுதானே நான் நம்பிக்கையா சொல்லிக் கொண்டிருக்கிறன் பிள்ளை. விமலன் வந்தவுடன அடுத்த வருசம் சன்னதிப் பெருநாள் வர அவனைக் காவடி தூக்கவைக்க வேணும் பிள்ளை. எத்தினை வருசமாச்சு நான் அந்த நேத்திவைச்சு. என்ரை பிள்ளைக்கு ஒண்டும் கெடுதல் வராம காப்பாற்றி வைச்சிருக்கிறானெல்லே அந்த அன்னதானக் கந்தன். முருகா!. முருகா!.இன்னும் பார் பிள்ளை! நீ என்னத்தைத்தான் சொல்லு அவன் இங்க தோட்டத்தில வெங்காயம் போட்டெடுத்த மாதிரி ஆருக்கும் விளைஞ்சதே? என்ரை ராசன் வந்து வீட்ட கால் வைக்கட்டும். பிறகு உந்தக் கொட்டில் நிறைய வெங்காயம் எப்பிடிக் கட்டுக்கட்டாத் தூக்கிக்
139

Page 82
காத்திருத்தல்
கிடக்குமெண்டு ஒருக்கால் உண்ணாண நீ வ்ந்து பார்! எல்லாம் உந்தச்சவம் பிடிப்பாரின்ரை நாவூறுதான். உங்கை அப்ப அவன் உப்பிடியெல்லாம் உழைச் சுத் தள்ளுறானெணி டு ஏங்கி ஏங்கிச் சனம் எவ்வளவாய் எரிச்சல் பட்டதுகள். இப்ப எல்லாம் அடங்கிப் போச் சு. அமத்தி வைச்சுக்கொண்டு இங்கினை ஒரு விண்ணாணம் பாக்கினம்.”
"ஆச்சி நேரம் போகுது. நான் வீட்ட போயிற்று ஆறுதலாகப் பிறகு வாறன் . பொங்கலுக்கு அவர் போய் ச் சாமானிகள் வாங்கியர வேணுமெண்டவர்.அந்த அடுக்கையும் இனிப்போய்ப் பாக்க வேணும்.”
"உண்ணாணை சின்னப்பிள்ளையஞமெல்லே உனக்கிருக்கு. இந்த வருசம் சொந்த வீடுவாசல் வழியவும் வந்திருந்திட்டியள். வேளைக்குப்போய் அதுகளையும் பாரம்மா."
கிழவி அப்படிச் சொல்ல அடுத்த வீட்டுத் திலகம் அங்கிருந்து அகன்றாள். அவள் போனதன் பின்பு ஆச்சி அவளின் ஆறுதல் வார்த்தைகளில் ஒருவாறு இப்போ தேறி உயிர்த்ததாய் விட்டாள். இன்று கட்டாயமாக ஒன்றைச்செய்ய வேண்டுமென்று வெகுவாக அந்தக் காரியத்தில் அவள் ஆரவாரப்பட்டாள். பொழுதிலங்கும் வேளையானதால் எங்கோ ஒரு மூலையில் போட்டுவைத்த பித்தளைக் குத்து விளக்கை எடுத்து வந்து தூசி தட்டித்துடைத்தாள். அதற்குப் புளி கரைத்துப்போட்டு நர நர வென்ற மண்ணுடன் சேர்த்துத் துலக்கி எடுத்து அதைப் பளபளவென்றிருக்க ஆக்கினாள். பழஞ் சீலையில் கரைப் பக்கமாகப் பார்த்து ஒரு துண்டைக் கிழித்து தன் ஊசிக்காலை நீட்டி வைத்து விளக்குக்கொரு புதுத் திரியை உருட்டிப்போட்டுத் தீபத்தை ஏற்றினாள். வீட்டுக்குள் வைத்த தீபம் அறையிருட்டைப் போக்கி விட்டிருந்தது. தீபத்தைப் பார்த்த புளகாங்கிதத்தில் அவளுக்கு மனதிலும் ஒரு புத்தொளி உண்டாகியிருந்தது. அவள் மனதில் இப்போ கவலைகள் இல்லை. இவ்வளவு காலம் பட்ட கஷ்டங்கள் ஒன்றும் அவள் முகத்தில் தெரியவில்லை. இன்று ஏற்பட்ட மனவுறுதியால் மலை போல் அவளுக்கிருந்த தடைகள் யாவும் நுண்துகள் போல சிதறிப் பறந்து விட்டதாய்த் தெரிந்தது. இந்த நம்பிக்கையெல்லாம் தும்பிக்கையானிடத்தே இருந்து வரம் பெற்றதைப் போன்று அவள் உணர்ந்தாள். வெளியே வெளிச்சம் மடிந்து காரிருள் பரவிவிட்டது. மாரிகாலத்துக் கூதல் காற்றும் வீசியது. கிழவியின் பூஞ்சை உடம்பால் குளிரெதையும் தாங்க முடியாது. என்றாலும்
140

நீ.பி.அருளானந்தம் படலையை உற்றுப் பார்த்துக்கொண்டே அவளின் பூ விழுந்த கண்கள் இமைப்பதை மறந்து இருக்கின்றன. பேரன் வருவான், பேரன் வருவானென்று அவளின் மனம் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அவளின் இந்தக் காத்திருப்பு அவள் வயதுக்கும் உடல் நிலைக்கும் கனகாலத்துக்கு இல்லை யென்பது உறுதி. என்றாலும் அவள் தன் பேரன் வரும் வரையில் காத்திருக்கத்தான் செய்வாள். தன் பேரன் வந்து சேருவதற்கிடையில் அந்தக் காலன் வந்து அவளை இடையிலே அழைத்தாலும் அவனுடன் அறப்போர் புரிந்து வெற்றி கொள்ளத் தயாராக இருப்பவளைப் போலத்தான் அவளைப் பார்க்கையில் தெரிந்தது.
தினமுரசு(பெப்.02-08-2002)
141

Page 83
நீ.பி.அருளானந்தம ܒ ܝܬܐ ܠܐ ܡܝܬܐ ܠܗ ܠܒܝܬܐ .
அந்த ஊரிலே மயானத்தின் அருகில் குடியிருக்கின்ற விறகுவெட்டி
வேலை செய்து சீவிக்கும் அத்தனை பேரும் அவன் குறிப்பிட்ட அந்த மரத்தை வெட்டி வீழ்த்துவதற்கு மாத்திரம் பின் வாங்கினார்கள். மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு நீங்கள் கேட்கும் பணத்தைத் தருகிறேன். கூலியோடு மரத்தில் கிடைக்கும் கிளைப் பாகங்களையும் மேலதிகமாக உங்களுக்கு விறகுக்காக எடுத்துக் கொள்ளுங்கள் என்று அதிகம் விட்டுக் கொடுப்பதுபோல் லாபத்தைக் காட்டியும் அவள்கள் முற்றாக மறுத்து மறு பேச்சுக்கே வழியில்லாது செய்துவிட்டார்கள்.
4.
 

I ILf?: Lgo Lqğ Jhi ܂ ܗ ܒ ܒܚܒܝܒ ܡܫܝܚܐ ܡܢ ܒܝܢܒܒ ܡ
எனவேதான் அந்த ஊரைவிட்டு வேறு எங்கெல்லாமோ அலைந்து திரிந்து இவர்களை வேலைக்கு அழைத்து வரவேண்டியதாகப் போய்விட்டது. வந்தவர்களோ நல்ல திடகாத்திரம் உள்ளவர்களாக இருந்தார்கள். கள்ள மரமும் வெட்டி விற்பவர்கள் என்பதாகவும் அவர்களைப்பற்றி சிலர் கூறவும் கேள்வி. எப்படி இருந்தாலும் காரியம் முடிந்தால் சரியென்ற அளவிலேயே ஜீவா அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அங்கு நிற்கும் மரத்தைக் காண்பித்தான்.
உயரிய மாபெரும் அந்த இலுப்பை மரத்தைப் பார்த்தவர்கள் ஆளுக்காள் சேர்ந்து ஒரு பக்கம் போய் நின்று மாறிமாறிக் கதைத்தனர். ஒருவாறு கூலியை மதிப்புப்போட்டு "ஆயிரத்து அறுநூறு ரூபா" என்று பிடிச்சிராவி போல் இளக்காரம் இல்லாமல் கேட்டனர். ஆளுக்கு 400 ரூபா கிடைக்குமாம். அதுவும் நியாயம்தான் என்று அதற்கு ஜீவா ஒப்புக்கொண்டான். அவர்கள் நாளைக் காலையில் வருவதாக வாக்குக் கொடுத்துப் போய்விட்டார்கள்.
விடியற்புறம் நான்கு மணிக்கு எழும்பி தேநீர் போட்டுக் கொடுக்கையிலே ஜீவாவின் தாய் "இன்று செவ்வாய்க் கிழமையாக இருக்கிறதே மரம் தறிப்பதற்கு நாள் இன்றைக்கு நல்லதோ கெட்டதோ” என்று பிரலாபித்தாள். "நல்ல நாள் பார்த்து எத்தனை காரியம் செய்தீர்கள்? இப்போது அவையெல்லாம் நிலைத்திருக்கிறதா? சந்தோஷமாக வாழுகிறோமா? " என்று எரிச்சலைக் கொட்டினான் மகன். உடனே தண்ணிர் தெளித்ததும் அடங்கி விட்ட புழுதிபோல மேலே பேச்சு எழ நிலையின்றி தங்கம்மா மெளனித்து அடங்கிக் கொண்டாள்.
சரியாக ஐந்து மணிக்கு முன் அவன் பஸ் டிப்போவிற்குப் போகவேண்டும். பஸ்ஸிலே அவனுக்கு நடத்துநர் வேலை. அங்கே கடமை முடிந்ததும் வீட்டுக்கு வந்து சேர பின்னேரம் நான்கு மணியாகும். மரம் தறித்து விழுத்த பொழுதுபடும் என்று முன்பவர்கள் சொல்லியிருந்தார்கள். எப்படியும் அந்த நேரம் அவனும் வேலைவிட்டு இங்கு வந்துவிடலாம்
வேலையாட்களுக்கு இடையிடையே ரீயைக் கொடுங்கோ வெற்றிலை
பாக்கு நிறைய தாம்பாளத்தில் வைச்சு அவையளிட்டையே வைச்சுக் கொள்ள குடுத்திடுங்கோ. நான் போய்ட்டு வாறனம்மா."
சொல்லிக் கொண்டே வெளிக்கேற்றைத் திறந்தவன் வீட்டுக்குப் பின்புறம் இருட்டைவிட கருமையாகத் தெரிந்த அந்த இலுப்பையை ஒருதரம் ஏறெடுத்துப் பார்த்துவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றான்.
43

Page 84
நீ.பி.அருளானந்தம் காலைக்கருக்கல் நீங்கி கண்ணுக்கு எல்லாம் புலப்படும் நேரம் பறவைகள் வானத்தில் வளையம் வளையமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தன. மரம் வெட்டுபவர்களும் அந்த விடியற் காலையிலே மாட்டு வண்டியில் வந்துவிட்டார்கள். பளபளக்கும் கூர்மையான கோடரிகள், கத்திகளோடு சுற்றிப் பெரிதாக கட்டிப் போடப்பட்டிருந்த பெரிய தேடாக்கயிற்றுச் சுருள்களும் வண்டியிலிருந்து இறக்கப்பட்டன.
எங்கேயும் மரம் வெட்டும்போது சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வேலையை ஆரம்பிப்பதுதான் அவர்கள் சம்பிரதாயம். வேலைக்கு முன் பக்தியோடு அதை நடத்தி முடித்தவர்கள் மரத்திலேறி வீட்டுப்பக்கமாக மேலே நீண்டு சென்றிருந்த மரக்கிளைகளுக்குக் கயிறு போட்டுக்கட்டி கிளைகளை வீட்டுக்கு மேலே விழவிடாது தறித்தெடுக்கும் பணியை கவனமாக செய்யத் தொடங்கினார்கள். தங்கம்மா வீட்டுமரம் தறிக்கப்படும் விஷயம் எல்லாவீடுகளிலும் அந்த மரத்தைப்பற்றிய பழங்கதைகளை எல்லாம் திரும்பவும் ஒருமுறை ஞாபகப்படுத்தி கதைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்தது.
ஒரு சிலர் அந்த மரத்தில் முனி இருக்கிறதென்று அடித்தமாதிரி சொன்னார்கள். வீட்டுக் காணிக்குள் அந்தமரம் இருந்ததால் தான் அந்தவிடே பாழ்பட்டுப் போனதாக சிலர் சாத்திரம் பார்த்தார்கள். அந்த மரத்தைக் கடந்துபோன மாட்டுவண்டிலுக்கு அச்சு உடைந்து போனது.
அநேகமாக ஆட்டோக்கள் அந்த வழியாகப் போகும்போது ரயர் பஞ்சராகி விடுவது. காரும் லொறியும் மோதியது. பாடசாலை விட்டு அந்த வழியாக வந்த பத்து வயதுப் பாலகன் அந்த வீதியைக் கடக்கும்போது வாகனத்திலே அடிபட்டு அதிலேயே உயிர் பிரிந்தது என்பன போன்றதெல்லாம் நடந்ததுக்குக் காரணமாய் அதிலே முனி இருக்கு, பிசாசு இருக்கு என்றெல்லாம் பல கதைகள் பலராலும் பேசப்பட்டன.
அந்த மரத்தை வெட்டுகிறார்கள் என்று அன்று காலை கேள்விப்பட்டதில் அந்த வழியாக வழக்கமாக போக்குவரத்து வைப்பவர்கள் பாதையை மாற்றி வேறு வழியாகச் சென்றனர். அவ்வழியால் பாடசாலை செல்லும் பிள்ளைகள் அநேகரை அவரவர் தாய் தந்தையர்கள் வேறு வழியினூடாகக் கூட்டிப் போனார்கள்.
பொருத்தமாகக் கொடுக்கும் இந்த மாதிரி வேலைகளுக்கு மேம்பார்வைக்கு ஆள் தேவையில்லை என்று சொல்லும்படி சுறுசுறுப்பாக தங்கள் வேலையில்
144

-------------- பழிமுடிச்சு பொருத்தமெடுத்து மரம் வெட்டும் அவர்கள் அக்கறையாயிருந்தார்கள். இடையிடையே வந்த தேநீரைக் குடித்து விட்டு களைக்காமல் சலிக்காமல் அவர்கள் தொடர்ந்து வேலை செய்தனர்.
சரியாக நடு மதிய வேளையுடன் கிளைகள் யாவும் முற்றாகத் தறித்து வீழ்த்தப்பட்டு நேரிய தூண்போல எஞ்சிய மரம் வெறுமையாகக் காணுமளவிற்கு இருக்கின்றது. அதற்கு கழுத்திலே சுருக்கிட்டது போல் நுனியில் கயிறு போட்டுக்கட்டி கீழே விழும்போது குறித்த இலக்கில் அதை விழுத்துவதற்கு நிலத்தில் நின்று ஆட்கள் பிடிக்கும்படியாக கயிற்றைப் போட்டுவிட்டு எதிர்ப்புறம் ஒரு மரத்திலும் பொறுப்பாக அதிலிருந்து கயிறொன்றைக் கட்டிவிட்டு அடிமரத்திலே இரண்டடி அகலம் வாய்போல் பிளக்க வெட்டி ம்ேலும் உள்ளே அவர்கள் வெட்டுவதற்கு ஆரம்பித்தார்கள்.
இப்படியான மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அடிமரத்தில் கோடரி போட்டால் அன்றே மரத்தைத் தறித்துக் கீழே விழுத்தி விடவேண்டும். இதன் பொருட்டு வேகமாக மேலும் வேலையை முடுக்கிவிட்டதுபோல் அவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பளை என்னும் ஊரிலிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் செவ்வாய்க்கிழமை நாளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். uN) இடங்களிலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் தட்டி வான்களிலும் மினிபஸ்களிலும் நெருக்கமாக மக்களை ஏற்றிக் கொண்டு வாகனத்துக்கு வாகனம் போட்டி போட்டபடி ஒட்டிச் செல்லும் காட்சியை அங்கு எல்லோரும் காணக்கூடியதாக இருக்கும்.
நெல்லியடியிலிருந்து வல்லை வீதி வழியாக வந்து அச்சுவேலியில் தரித்து நின்றுவிட்டு துர்க்கை அம்மன் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்லும் அந்தத் தட்டிவானின் பின்னால் உள்ள இருக்கைப் பலகையில் மூலை ஒரமாக ரேணுகா உட்கார்ந்திருந்தாள். அவள் தாயும் தந்தையும் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் ஆலயத்திற்குச் செல்பவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சியோ பரவசமோ துளியளவும் தெரியவில்லை. மாறாக கடுமையான சோகச் சாயலே முகம்முழுவதும் மண்டிக்கிடந்தது.
ரேணுகாவின் குடும்பத்தவர்க்கு துர்க்கை அம்மன் குலதெய்வம். எந்தக் காரியமும் அம்மன் ஆசி பெற்றுத்தான் தொடங்கி முடிப்பது அவர்கள் வாழ்வில் வழக்கமாயிருந்தது. அந்தக் குடும்பத்திலுள்ள நாலு பெண் பிள்ளைகளுக்கும் மூத்தவள் ரேணுகா. தந்தை சாதாரண
145

Page 85
------- நீ.பி.அருளானந்தம் தோட்டக்காரனாயிருந்ததால் ரேணுகாவிற்கு ஓ.எல் வரைதான் படிக்க முடிந்தது. அதற்குப் பிறகு வீட்டில் இருந்த படியே ஐந்து வருடங்கள் கழிய தந்தையும் மகளுக்கு வரன் தேடஆரம்பித்தார்.
எப்பாடு பட்டாகிலும் செவ்வாய்க் கிழமையில் ரேணுகா துர்க்கை அம்மன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். வீட்டில் பணமுடை இருந்தாலும் சில்லறைகளைச் சேர்த்து வைத்தாவது அந்த நாளைத் தவறவிடாது தொடர்ந்து அவள் ஆலயத்திற்குச் சென்றுவருவாள்.
மானம்பூ திருவிழாவிற்குப் பின்பு நெல்லியடியில் வசிக்கும் அவர்களுக்கு வவுனியாவிலிருந்து கல்யாண சம்பந்தமொன்று அவர்கள் தகுதிக்கும் அவள் சாதகக் குறிப்புக்கும் பொருந்தும் படியானதாக தேடிவந்தது. பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தபோது பெண்ணுக்கு மாப்பிள்ளையையும் மாப்பிள்ளைக்கு பெண்ணையும் பிடித்துப் போனதால் நாளைக்குறித்து நல்லவிதமாக இருவீட்டாரும் சேர்ந்து ஜீவாவிற்கும் ரேணுகாவிற்கும் கல்யாணத்தை நடத்தி முடித்தார்கள்.
ரேணுகா கணவன் வீட்டிற்கு குடிபுகுந்ததும் இல்வாழ்வின் இனிமையிலே புதிய இடத்தில் ஏற்பட்ட சில துன்பங்களை சகித்துக் கொண்டு அவைகளை மறந்தும் வாழ்ந்திருந்தாள். ஆனால் போகப் போக அன்றாடம் வந்த சோதனைகள் அவளைத் திகிலடைய வைத்து உடலையும் உள்ளத்தையும் சோர்வடைந்து போகச் செய்தன. பலப் பல ஆசைகளை மனதிலே கட்டிக்கொண்டு வாழவந்தவளுக்கு சில நாட்களில் ஏமாற்ற்ங்களே கிடைக்கக் கூடியதாக இருந்தது. கணவனினதும் மாமியாரினதும் ஒவ்வொரு செய்கைகளும் புட்டுப் பார்க்கையிலே அத்திப்பழம் போல் ஒரே சொத்தையாக இருப்பதைத்தான் அவளாலே காணமுடிந்தது.
தங்கம்மாவிற்கு ஜீவா ஒரேயொரு பிள்ளையாயிருந்ததால் அவன்மேல் பாசத்தையும் நேசத்தையும் கொட்டி வளர்த்து தனது உயிரையே வைத்திருந்தாள். இளவயதிலேயே விதவையாகிவிட்ட தங்கம்மா தனது உலக வாழ்வு முழுவதுமே ஜீவாவிற்குள்தான் அடங்கியுள்ளதாக நம்பி இருந்தாள். அதன் விளைவு மகனுக்கு துணைவி வந்ததும் தன்மீது அவனுக்குள்ள அன்பு விட்டுப் போய்விடுமோ என்ற பயத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் சந்தேகக் கண்ணோடு மருமகளுக்கு முன்பாக வெறுப்பைக் கொட்டினாள்.
தலை இடிக்கிறதென்று ரேணுகா ஒரு பனடோல் போட்டதை தங்கம்மா
146

------------ - - - - ^S"":::..." "::VS^− பழிமுடிச் சு தெரிந்து கொண்டால் அன்று பழைய சேலை கிழிந்ததுபோல தறபுறவென்று தன்பாட்டுக்கு பேசிக்கொண்டே இருப்பாள். "வருத்தக்காரியை எங்களிட்டத் தள்ளிவிட்டுப் போட்டாங்கள்” என்று இதையே ஆயிரம் தடவை திரும்பத் திரும்ப கூறித் திட்டிக் கொண்டிருப்பதில் அவளுக்குத் திருப்தியாகவும் இருந்தது. வீட்டிலே கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக கதைத்துச் சிரித்துக் கொண்டாலும் அவளுக்குப் பிடிப்பதில்லை. இதேவேளை அவள் வீட்டுக்குள்ளேயே விறுக்கு விறுக்கென்று அங்குமிங்கும் நடந்தவாறு அலைந்து கொண்டிருப்பாள். ஒரு நேரம் "மகன் மெலிஞ்சு போகிறான். அவனுக்கு ஒழுங்காக நீ சாப்பாடு கொடுப்பதில்லை.” என்று உருகிச் சாவாள். எப்போதாவது ஜீவாவைத் தேடி நண்பர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் அவர்களோடு ரேணுகா கதைத்துவிட்டால் "உனக்கெல்லாம் அவர்களோடு என்ன கதை” என்று வெடுக்கெனப் பாய்வாள். "வீட்டையும் உன்னையும் சுத்தமாக வைத்திருக்க உனக்குத் தெரியவில்லை” என்று தொடங்கி அவள் தாய் தந்தையரையும் வீணே தேவையற்று வம்புக்கு இழுத்துப் பேசுவாள். பிறந்த இடத்தை மட்டமாய்ப் பேசுகையில் கொஞ்சம் அப்படி இப்படி பொறுமை இழந்து ரேணுகா கதைத்துவிட்டால் "உனக்கு வாய்க் கொழுப்பு மிஞ்சி விட்டதடி கதைத்தாயோ சொண்டை சுவரில் வைத்துத் தேய்த்து விடுவேன்” என்பாள்.
கணவன் இல்லாத நேரத்தில் இதைவிட இந்த அவஸ்தையெல்ல்ாமி அதிகமாக, ரேணுகா மனம் நொந்துபோய் அவற்றையெல்லாம் தன் புருஷனிடத்தே எடுத்துக் கூறினாள். அதன் பலன் தாயின் பக்கமே மகனும் ஒட்டிக்கொண்டான். இவ்வாறு நடந்ததன் பின்பு நாளடைவில் இருவரது சொல்லம்புகளும் அவள் இதயத்தைத் துளைக்க ஆரம்பித்தன. மூச்சாக இந்த விடயத்தில் நின்ற மாமியார் எந்தக் காரியத்திலும் சண்டைக் கோழி மாதிரி தலையை சிலுப்பிக் கொண்டு அவளுக்கு முன் நிமிர்ந்து நிற்கத் தலைப்பட்டாள்.
இதையெல்லாம் கேட்கவும் பார்க்கவும் ரேணுகாவின் மனம் உலைக்களமாய் கனன்று கொணி டேயிருந்தது. கொஞ்ச நாளில் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் எரிந்த நெருப்பில் எண்ணெயை வார்த்து விட்டது போல வீட்டிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவள் வந்தது முதல் எல்லோருக்கும் ஒன்றாக வைக்கப்பட்டு வந்த உலை இரண்டு சமையல் அடுப்பு என்று வேறாகியும் விட்டது.
147

Page 86
நீ.பி.அருளானந்தம் இது வீட்டில் பெரும் கலவரமாகி சண்டை வலுக்க தனியே ஒதுக்கி விடப்பட்ட ரேணுகா நத்தையாய் ஒடுங்கிப் போனாள். இதற்கு அப்பால் மருமகள் வந்து தன்னையும் பிள்ளையையும் பிரித்து கொடுமை செய்வதாக அயலட்டையில் உள்ளவர்களிடம் குறை சொல்லவும் அழுது புலம்பவும் ஆரம்பித்தாள் தங்கம்மா. கடைசியாக "நீ உன் தாய் தகப்பனோடு போய் இரு எங்களுக்கும் உனக்கும் சரிப்பட்டு வராது" என்பதாக தாயும் மகனும் உறுதியாக சொல்லுமளவிற்கு இந்தப் பிரச்சினைகளின் முடிவு கடைசி எல்லையைத் தொட்டபடி நின்றது. உறவை வெட்டி முறித்துவிட அவர்கள் உருவேறி நிற்கும்போது தனியே விடப்பட்ட அபலையான ரேணுகா என்னதான் செய்வாள்? வாழ்க்கை வெறுத்துப்போய் சிறகொடிந்த பறவைபோல தாய் வீடு வந்து சேர்ந்தாள் அவள்.
ஒரு குடும்பத்தில் மூத்தபிள்ளை பெண்ணாகவிருந்து அவள் மணம் முடித்துச் சென்று சிறப்பாக வாழ்ந்தால் வீட்டுக்கு வந்த மருமகன் நல்லவராக இருந்தால் பெண்கொடுத்த குடும்பம் அந்த மருமகனால் உய்யும் என்பது உண்மை. ஆனால் ரேணுகாவின் தாய், தந்தையருக்கு மகளுக்கு நேர்ந்த கதி அவர்கள் குடும்பத்தையே ஆணிவேரோடு சேர்த்து ஆட்டிவிட்டதைப்போல் இருந்தது. இப்படி அவர்களெல்லாம் கலங்கிப் போயிருந்த வேளை மாப்பிள்ளை வீட்டார் விவாகரத்து வேண்டும் என்று , தகவல் அனுப்ப ஆரம்பித்தனர். வேண்டாம் என்ற இடத்தில் வாழ்வழியுங்கள் என்று பிச்சை கேட்க ரேணுகாவும் தயாராக இல்லை. அது பலனற்றது என்பதும் அவளுக்குத் தெரியும். ஆதலினாலே
குடும்ப நீதிமன்றத்தில் அவர்களும் வழக்குக்குப்போய் விவாகரத்துக்காகிய காரணங்களைச் சொல்லி உறவைப் பிரிக்கக் காவல் கிடந்தார்கள். வருகின்ற கடைசித் தவணையுடன் ஜீவாவிற்கும் ரேணுகாவிற்கும் சட்டப்படி விவாகரத்துக் கிடைத்துவிடும்.
ஒரு பக்கம் பள்ளத்தில் விழுந்ததால் உள்ளே இருந்த பிரயாணிகளை ஒருதரம் தூக்கிப் போட்டதுபோல் உலுப்பிவிட்டது அந்தத் தட்டிவான் அந்தவிசையாலே இருக்கையில் இருந்து அங்குமிங்கும் ஆடியதில் ரேணுகாவின் தலை பக்கத்திலிருந்த சட்டத்தில் நன்றாக இடித்துக்கொண்டது. அத்துடன் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு தன்னை சுதாகரித்துக் கொண்டவள். வான் கோவிலை அண்மித்து விட்டதையும் அறிந்து
148

பழிமுடிச்சு கொண்டாள்.
அன்று தைமாத அமாவாசை. அத்தோடு செவ்வாய்க்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கில் ஆலயத்தில் அன்பர்கள் கூடியிருந்தனர். அபிராமிப்பட்டரின் திருநாளாக தைமாத அமாவாசை அந்தத் துர்க்கை அம்மன் கோயிலிலும் கொணி டாடப்படுவதால் அங்கு அன்று சிறப்பு ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தன.
வானை விட்டு இறங்கி கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததும் ர்ேணுகாவிற்கு அழுகை பொத்துக்கொண்டு வெளிவந்தது. அவள் விழிகள் மாரிகால மழைபோல் கண்ணிர் சொரிந்தன. அவளின் அருகே இருபக்கமும் நின்று கொண்டிருந்த தாய், தந்தையரும் கோயிலுக்குள்ளே சிலைபோல நின்ற வண்ணம் தாரை தாரையாகக் கண்ணிர் வடித்தனர்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் மனம் குமுறிய கண்ணகிக்கு குளித்தி அபிஷேகம் நடத்தி மக்கள் அவளை அமைதிப்படுத்தினர் என்று ஒரு பாரம்பரிய கதை உண்டு. இங்கே ரேணுகாவிற்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்பதற்கு, நடுவே நின்று நீதி வழங்குவதற்கு அன்னை துர்க்கா தேவியினாலே தான் முடியும் என்ற நம்பிக் கையினாலேயே அவள் அன்னையின் காலடிக்கு வந்தாள்.
துர்க்கை அம்மனே தனக்கு அந்த வாழ்க்கைத் துணையை தந்ததாக அவள் முழுதும் நம்பி இருந்தாள். குடும்ப வாழ்வில் நல்லதோ கெட்டதோ எதையும் ஏற்று சீவிப்பது என்ற முடிவினாலேயே அவள் தனக்கு வந்த துன்பங்களையெல்லாம் மனதைத் திடப்படுத்தியபடி பொறுத்திருந்தாள். ஆனால் வீட்டைவிட்டு விரட்டி விடுமளவிற்கு மனம் கடுமையாகிவிட்ட அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்க்கு அவளால் பின்பு எப்படி முடியும்.
"தாயே இது நீ எனக்குத் தேடிக்கொடுத்த மாங்கல்ய பாக்கியம். இன்று என்னை வேண்டாம் என்று துரத்திவிட்டவர் அவர் கட்டிய தாலியையும் கழற்றி தன்னிடம் தந்துவிடும்படி கூறுகிறார். எனக்கு உன்னைத்தவிர வேறு ஒரு கதி இல்லையம்மா உனக்கு முன்னாலேயே என் வாழ்வும் தாழ்வும் கண் பார்க்க நடக்கவேணும். எனது தாலி இறங்குவதையும் நீயே பார்க்க வேண்டும். அதனாலேயே உனது சந்நிதிக்கு முன்பாக வந்து இந்த மங்கல நாணை கழற்றுகின்றேன். எல்லாமே இழந்து வெறுமையாகிப்போன இந்தத் தனி மரத்துக்கு நீ தானம்மா இனி ஆறுதல் தரவேண்டும்.”
இப்படி அழுதழுது கூறியபடி தாலியைக் கழற்றி தந்தையின் கையில் 149

Page 87
நீ.பி.அருளானந்தம் கொடுத்தாள் ரேணுகா. வயது போன தந்தை உடல் நடுங்க மகளின் நிலையை எண்ணி விதியை நொந்துகொண்டு மகள் கொடுத்த தாலிக்கொடியை கையில் வாங்கினார். ரேணுகாவின் இந்தக் கோலத்தைக் கண்டு பெற்றதாய் நெஞ்சு வெடித்துவிட்டதைப் போல் வேதனைப்பட்டாள். அம்மனின் ஆலயத்தில் இந்தத் துயரமான சம்பவம் நடந்த வேளை ஜீவாவினுடைய வீட்டில்.
பின்னேரம் வேலைவிட்டு வந்ததும் மரம் வெட்டும் இடத்துக்குப் போய் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தான் ஜீவா. கடைசியாக பொறுப்பான வேலை மரம் விழும் தருணம் குறிப்பான இடத்தில் சரிந்து விழ விடுவதற்கு கயிறுபிடிக்க வேண்டும். அதற்கு அவனுடன் வேலை செய்யும் நாலுபேரை உதவிக்குக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான்.
மரத்தின் அடிப்பாகம் நன்றாகத் தறிக்கப்பட்டு விழப்போகும் நிலைக்குக் கிட்டதட்ட வந்ததும் முன்னேற்பாடாக எல்லோரும் கயிற்றைப் பிடித்தபடி நின்றனர். அனைவருக்கும் முன்பாக ஜீவா கையிலே ஒரு வளையம் கயிற்றைச் சுற்றிப்பிடித்துக் கொண்டு தயார் நிலையில் நின்றான். கோடரி வெட்டுக்கள் கடைசி வெட்டுக்களாக முடிவில் ஒன்று இரண்டு என்று எண்ணுமளவிற்கு இருக்கையிலே மரம் மெல்ல தலையை ஆட்டியபடி ராட்சதனொருவன் பல்லைக் கடித்தால் வரும் நறநறவென்ற சத்தத்தை எழுப்பியவாறு சரியத் தொடங்கியது. மரத்திலிருந்து போடப்பட்டிருந்த கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொணி டிருந்தவர்கள் குறித்த இலக்கைநோக்கி பலம் கொண்டமட்டும் இழுத்தனர். ஆனால் மரமோ வெட்டுப்பாகம் திருகுப் பட்டுத் திரும்பியதால் வேறுதிசைக்கு மாறிச் சரிந்தது. கயிறு மெல்லமெல்ல வலிக்கப்பட்டு முன்னே இழுபட்டுப் போகையிலே அதைப்பிடித்து இழுத்தபடி நின்றவர்களுக்கு பயம் மேலிட்டுவிட்டது.
இதனால் திடீரென்று கயிற்றை கைவிட்டு எல்லோரும் விலகி விட்டனர். ஜீவாவோ உடும்புப்பிடியாக இருக்கும் தனது கைப்பிடியை விடவில்லை. ஒரு கையை கயிற்றில் சுற்றி பாம்பு பிணைந்தது போல் பிடித்திருந்ததால் உடனே கயிற்றிலிருந்து கையை எடுக்கவும் வாய்ப்பிருக்கவில்லை. இதனால் அந்தப் பாரமான மரம் சரிந்தபோது கயிற்றுடன் மேலே அவன் சுண்டி இழுக்கப்பட்டு தலைகரணமாக வீசப்பட்டு கீழே விழுத்தப்பட்டான்.
அந்தக்கணமே அவனுக்கு ஸ்மரணையற்றுப் போய்விட்டது. தங்கம்மா
150

ჯ««. ». பழிமுடிச்சு தனது மகனின் தலையை மடியில் துTக்கி வைத்துக் கொணி டு அலறியடித்தாள். அந்த மண்ணிலே புழுதியெல்லாம் படுத்துப்புரண்டு கூக்குரலிட்டாள். ரேணுகா வாழாவெட்டியா? விதவையா? ஊரார் அடைமொழி தேடினர். ஆனாலும் தங்கம்மாவின் வீட்டில் ஜீவாவின் குடும்பத்தகராறு சகலதையும் அறிந்திருந்த அவர்களது தொலைதுாரத்து உறவினரான வயோதிபர் ஒருவர் தனது பேரனுக்கு திரும்பத் திரும்ப ஒரு வாக்கியத்தைக்கூறிக்கொண்டிருந்தார். "பெண்பாவம் பொல்லாதது.”
ஞாயிறு தினக்குரல் (மார்ச்.09-2003)
1S1

Page 88
ஆகுஜம்
எங்களுக்கெல்லாம் அந்தக்கெடுதியான சம்பவம் நடந்த திகதி சரியாக
என்ஞாபகத்துக்கு வரவில்லை. அன்று என்னகிழமை என்பதும் என் நினைவில் இல்லை. நேரம் என்னவென்று மட்டும் நன்றாக ஞாபகமுண்டு. அந்த ஆண்டும் அச்சுப்போல் மனதில் பதிந்திருக்கிறது.
சரியாக அந்த ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்தாம் ஆண்டு. இதைச்சரியாக சொல்லிவிட்டேன். நேரம் காலை.கிட்டத்தட்ட ஐந்துமணி.இதுவும் ரொம்பச்சவி அன்று விடியற் பொழுதிலே வழமைபோல என் மனைவி நித்திரையால் எழும்பிவிட்டாள் நானும் அந்த வேளை
15.
 
 

அவர் களுக்குள்ளும் மனோற்சாகமாய் எழுந்துகொண்டுவிட்டேன்.
அதிகமாக வீட்டிலே உளுந்துத் தோசை தான் காலையிலே எங்கள் குடும்பத்தினருக்குச் சாப்பாடு அன்றும் முன்னைய இரவில் ஆட்டுக்கல்லில் ஆட்டி வைத்த உளுந்து மாவை, தோசைக்கல்லில் ஊற்றி அவள் தோசையைச் சுடஆரம்பித்தாள்.எங்கள் வீட்டுக் குசினிக்குப் பின்னால் உள்ள பெரிய நிலப்பரப்பில், ஒரு மூலையில் வேலியோரமாக உயரித்த பலாமரம் ஒன்று நன்றாக கிளைவிட்டுச் சடைத்துப்போய் நிற்கிறது. மரத்துக்குக்கீழே அந்தக் கருமிருட்டுக்குள் போய் சலவாதிக்குப்போக முழங்காலைமடித்துக் குந்தியபடி நான் இருந்தேன். பலாப்பூவின் வாசம் வழமையான மூத்திரநாற்றத்தை அமுக்கியிருந்தது.
ஒன்றுக் கிருந்த பிறகு நடந்து வீட்டுக்கு முன்னே உள்ள வேப்பமரத்தடிக்கு வந்தேன். வீட்டுமுற்றத்தில் பதியம்போட்டிருந்த மல்லிகை இப்போது பூத்திருக்கிறது. கர். என்று மனைவி தோசை ஊற்றும் சத்தம் படலையடியில் நிற்கும்போதும் எனக்குக் கேட்கிறது. தோசையின் வாசனை நல்லெண்ணெய்க் கமறலுடன் வீசிக் கொண்டிருக்கிறது என் கைக்கெட்டின மட்டும் கீழே கிளை நீட்டிக் கொண்டிருந்த வலுவல்ல வேப்பமரத்தின் மென்கெட்டில் பிடித்து நேரானதொரு குச்சி உடைத்தேன். அதை ஒருபக்கம் வாயில் வைத்து பற்களால் சுடித்து நுனியை மென்மையான பாகமாய், பல்லைத் தீட்டக்கூடியதாய் ஆக்கினேன். வேப்பம் கைப்புச்சாறு வாய்க்குள் புரண்டு கிடந்து உமிழ்நீரை ஆாற்றெடுக்கச் செய்தது. காலை வெறுவாய்க்கு அது ஒரு இதம் சாற்றை வாய்க்குள் சிறிது வைத்தபடி மல்லிகைப் பந்தலைப் பார்த்துக்கொண்டு ஒருவாறு பல்துலக்கி முடித்தேன்,
கிணற்றில் தண்ணிரள்ளி வாயைக் கொப்பளித்து நான் கை கால், முகம் கழுவிவர மூத்தமகனும் நித்திரைவிட்டு படுக்கையால் எழும்பிவிட்டான். அவனும் உமியை வாயில்போட்டுக்கொண்டு பற்களைத் தீட்டி முகம் கழுவி முடித்தான்.
வேப்பமரத்திலே காகங்களின் அட்டகாசம் நடந்து கொண்டிருக்கிறது. விடியலில் எல்லாக் காகங்களும் போடும் சா.கா. என்ற கூப்பாடில் காலைச் சோம்பலே எனக்குப் பறந்துவிட்டது. மகனொரு பக்கம். நானோரு பக்கமாய் தோசையைச் சாப்பிட குசினியிலுள்ள பலகைகளில் உட்கார்ந்து கொண்டோம் வேளைக்கே சட்னியையும் மனைவி தயார் செய்து விட்டிருந்தாள் தோசைச்சட்டியிலிருந்து சுடச்சுட தோசையை எடுத்து
53

Page 89
...s. நீ.பி.அருளானந்தம் எங்கள் தட்டுக்களில் போட முறுகல் பதமான அந்தத் தோசைகளை விள்ளல் விள்ளலாகப் பிட்டு எடுத்து சட்னியில் தொட்டு நானும் மகனும் சுவையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்."அம்மாவுக்கும் தோசையைக் குடுத்தனுப்பும்” நான் மனைவியிடம் சொன்னேன்.
“எட்டு மணிக்குத்தான் மாமி! நித்திரையால எழும்புவா பள்ளிக்கூடம் போக முதல் இவன் அங்க மாமிக்குக் கொண்டோய்க் குடுத்திட்டுத்தான் போவான்” எனக்குத்தெரியும்.மாமியில் அவளுக்குப் பாசமிருக்கு தென்று.என்றாலும், காலையிலேயே குடும்ப அக்கறை எனக்கும் இருக்கிறதென்று அவளுக்குக் காட்டவேணி டுமே அதற்காகத் தான் நானும் அவளுக்கு இதை ஞாபகமூட்டினேன். மகன் தோசையைச் சாப்பிடாமல் ஒரு விள்ளலை கையில் வைத்து உருண்டையாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“விளையாடாமல் வடிவாச் சாப்பிடன் மேன்."நான் மகனைப் பார்த்துச் சொன்னேன்.
“அம்மா சட்னி போடுங்கோ.” என்று அவன் தாயைக் கேட்டான் “சம்பலை மட்டும் தின்னாம தோசையை தின்னு. தேங்காய்தான் இப்ப விலை. "என்று அவள் பிள்ளையை அதட்டினாள்.
“鹰... உறைப்பைக் கணக்க தின்னாத வயிறெரியப்போவுது” இதை நான் அவனுக்குச் சொன்னேன்.
. காகங்கள் கூட்டமாக வேம்பிலிருந்து பறந்து விட்டது ஓரிரண்டு காகங்கள் மரத்தில் எஞ்சியதாய் இருந்தது கொண்டு கள். கர். என்று பனிக்குளிருக்காக்கும் சத்தம் போடுகின்றன கோபாலச்சியின் நாட்டுச் சாவல்கள் போட்டிக்கு உரத்துக் கூவிக்கொண்டு இப்போ இருக்கின்றன.
குசினிவாசலில் பானை சட்டி கழுவுகிற இடத்தில் நிற்கிற பப்பாசி குண்டு குண்டாய் நெருக்கியடித்துக் காய் காய்த்திருக்கிறது. அந்த மரத்துக்குக் கீழே நீலப்பூக்கள் கொத்தாய்ப் பூத்திருக்கும் தூதுவளைச் செடியொன்றும் பற்றையாய்ப் படர்ந்திருக்கிறது.
பலாக் கொட்டையளவு உருவம்கொண்ட ஒரு குருவி வீச். வீச். சென்று கத்தியபடி தத்திக்கொண்டு அந்தச் சிறு கெட்டுக்களிலே மாறி மாறி இருந்து கொண்டு தன் மதர்ப்பைக் காட்டுகிறது. சாப்பிட்டபடி இவைகளையும் பார்த்துக் கொண்டு நான் இருக்க. வீச்சென்று. அந்த 154

. அவர்களுக்குள்ளும் ஒரு கத்தலோடு. குருவி. விர்ரெனப் பறந்து விட்டது. அது பறந்து போன பின்பு அங்கேயிருந்து என் கண்பார்வையை வேறுபக்கத்துக்கு நான் விலத்த வில்லை. அதற்குள்ளேதான்.
“டமார். وو
என்ற அந்த வெடிச்சத்தம் . என் காதுகளை செவிடாக்கியது போல் இருந்தது. அந்தச் சத்தத்தில் எனக்கு அடிவயிற்றில் இடிவிழுந்தது போல் இருந்தது சதிரம் பதறியது. அந்தப் பயத்தால் நலுங்க நெஞ்சடிப்பு அதிகரித்தது.
"கேம்புக்கு முன்னால் இருந்துதான் அந்த வெடிச்சத்தம்” இதை ஊகித்து நான் மனைவிக்கு சொல்ல.
"ஐயோ!. ஐயோ!. ”என்று அவள் கையிலிருந்த சட்டுவத்தை கீழே நிலத்தில் போட்டு விட்டு வாய்குளறியபடி விதிர் விதிர்த்து நடுங்கிக் கொண்டிருந்தாள். கருமான் பட்டறைபோல் நாசியிலிருந்து அனல் மூச்சு அவளிடமிருந்து வெளிப்படுகிறது.
அவளை நடுங்காதே என்று தைரியம் சொன்னேன். ஆனால் எனக்கும் நடுங்குகிறது.
பிள்ளைகளெல்லாம் அந்த வெடிச்சத்தத்துடன் பாயிலிருந்து எழுந்து வந்து விட்டார்கள் கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியின் சிறகுகளுக்குள் தஞ்சமடைவதுபோல அம்மாவின் காலைக் கட்டிப்பிடித்தபடி நிற்கிறார்கள். புறா நடுங்குவதுபோல என் பிள்ளைகளெல்லாம் நடுங்குகிறார்கள்.
“என்ன செய்யிறது?. என்ன செய்யிறது.?’ மனைவி பதைபதைக்கிறாள். “என்ன செய்வம்?.என்ன செயிவம்.?’ நான் அவளைக் கேட்கிறேன்.
“இங்க இருக்கவேணாம். கெதியா இங்கயிருந்து வேற எங்கினையாவது போயிடுவம்” அவள் அந்தரப்படுகிறாள். பிள்ளைகள் திருதிருவென்று முழிக்கிறார்கள். அந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புக்கள் என்ன?.வழிமுறைகள் என்ன?.என்பதைத் தேடும்.உந்துதலில் நான் இருந்துகொண்டிருக்கிறேன்.
மூத்தவன் போய் வானொலிப் பெட்டியைத் துாக்குகிறான். இளையவன்போய் வீட்டுப்படியாலே துவிச்சக்கரவண்டியை முற்றத்தடிக்கு இறக்குகிறான். மனைவி ஒரு பையில் சீலைகளையும் பிள்ளைகளின் உடுப்புக் களில் சிலவற்றையும் வைத்துத் திணிக்கிறாள். நான்
15S

Page 90
நீ.பி.அருளானந்தம் "அம்மா. என்ரை அம்மா” என்று அவர்களைப் பார்த்து குளறியபடி நிற்கிறேன்.
“ஆறியமர்ந்து யோசிக்க நேரமில்லை. அவவைப் போய்க் கூட்டியாருங்கோ. ”என்கிறாள் மனைவி.
சரவெடிகள் வெடித்தாற்போல் துவக்கு வெடிச்சத்தங்கள் இன்னுமின்னும் கேட்கத் தொடங்கிவிட்டன. எங்கள் வீட்டுக்குக் கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் அம்மாவுடைய வீட்டிலே அவவைப் போய்ப்பார்த்து கூட்டிக் கொண்டுவர வேண்டும். இதற்காக நான் வீட்டிலிருந்து வெளியே வெளிக்கிடப் போனேன்.
ஆயினும். முதலைக் ஹெலி ஒன்று மேலே வானத்தில் வட்டம் போட்டு பறந்துகொண்டிருக்கிறது.
அங்கே இருந்து கொண்டே அவர்கள் கீழே நடமாடுகிறவர்களைப் பார்த்து சுடுவார்களாமே..?
அந்தப் பயங்களின் அலைகள் மெல்ல எழுந்து என்புலன்களில் வியாபித்தன.
அந்த வெளியால் நடந்து அம்மாவின் வீட்டுக்கு எப்படிப் போகிறது.?
நான் மனம் குழம்பியபடி வீட்டுப்படியில் நின்றேன். பெற்ற தாயல்லவா.செத்தாலும் பரவாயில்லை. என்று ஒரு முரட்டு தைரியம் வந்துவிட்டது. அதற்குப் பிற்பாடு நெஞ்சோர்மத்தோடு சாகிறதெல்லாருக்கும் பொது என்று நினைத்துக்கொண்டு பயத்தை சமாளித்தபடி வீட்டுக்கு வெளியே வெளிக்கிட்டேன்.
மேலே பார்க்காமல் சாக்கிரதையாக நிலத்தைப் பார்த்தபடி ஒட்டமும் நடையுமாய் அம்மாவின் வீட்டுக்குப்போய் அவவைக்கூப்பிட்டேன்.
S S S S S S SL S S S S S S S S S S S S S S S S SL S S S வயசுபோனதுகளெல்லாம் தாங்கள் சொல்லுறதுதான் சரியெண்டு அடம்பிடிக்குங்கள். 6 إلي ................ "நான் வீட்ட விட்டு வெளிக்கிடமாட்டன். ” என்றிருந்திட்டா.
அந்த இடத்திலிருந்து அவவை தப்பிக்க வைக்கவேண்டும் என்ற ஆக்ஞையுடன் அவவை கெஞ்சிக்கொண்டு நின்றுவிட்டு நான் ஆத்திரத்தோட வீட்டுக்குத்திரும்பிவிட்டேன். அம்மாவராத ஏமாற்றம் திராவகமாக என் இதயத்தில் இறங்கி எரித்தது.
"அம்மா ஏன் வரேல்ல.?” என்று வீட்டுக்கு வந்ததும் மனைவி
156

-- அவர்களுக்குள்ளும் கேட்கிறாள்.
“வரமாட்டுதாம், கிறுக்குப்பிடிச்சது வீட்டைக்கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருக்கப்போகுதாம். அவங்கள் வந்து சுட்டுத்தொலைக்கப்போறாங்கள்.” "ஐயோ இந்த மனுஷி இந்த நேரத்தில இப்படி மோட்டுத் தனமாய் நடக்குது.” என்று மனைவியும் ஏசிவிட்டாள்.
இதற்குள் மூத்த பெடியன்போய் கயிற்றை அவிழ்த்து வீட்டுவேலிக்கு வெளியாலே மாடுகளை விரட்டிவிடுகிறான். அந்த மாடுகள் காய்ந்த சாணியின் வாசனையுடன் ஒழுங்கை வழியாக விரைந்து ஒடுகின்றன.
இளைய மகன் மீன் தொட்டியிலுள்ள மீண் குஞ்சுகளுக்கு சாப்பாடுபோடவேண்டும் என்ற ஞாபகத்தில் வீட்டுக்குள்ளே ஒடுகிறான். சின்னமகள் சாமான் பையை முதுகுமுறிகிற அளவுக்குசுமந்தபடி முக்கித்தக்கிக்கொண்டு நிற்கிறாள். இந்த எல்லா வேலைகளையும் அவசரஅவசரமாய் முடித்துக்கொண்டு வீட்டைப்பூட்டிவிட்டு அந்த இடத்தால் நாங்கள் வெளிக்கிடுகிறோம். பக்கத்துவீட்டு ஆச்சி ஒருத்தியும் "புலக்காணியாலயிருந்து அப்பு இன்னும் வீட்டுக்கு வந்து சேரேல்ல.” என்று சொல்லிக் கொணி டு எங்களுடனே கூட வாய் சேர்ந்துகொண்டா. NA எல்லாருமாக முன்னால் உள்ள பிரதான வீதிப்பக்கம் போகாமல் பின் ஒழுங்கைவழியாக பதட்டத்துடன் நடந்து கொண்டிருக்கிறோம்.
எறும்புகள் போல் சாரி சாரியாக அந்த ஒழுங்கை வழியிலெல்லாம் சனங்கள் கைகளில் பைகளும் சயிக்கிள் கரியரில் சாமான்களுமாகக் காவிக்கொண்டு திபு திபு வென்று போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஒற்றைக்கண்ணைச் சரித்து கீழே பார்த்தாற்போல ஒருபக்கம் சரிந்துகொண்டு வானில் ரெண்டுஹெலி பறந்துகொண்டிருக்கிறது. .
இடையிடையே. - - - - - - - - - - - - - - - டி.டி. டிட்டிட்.டிர்ர்ர்ர்.டிட்.என்று சரமாரியாக " துவக்கு வெடிச் சத்தம் அதிலிருந்து விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறது. காலை வேளையில் வானின் அமைதியை அந்தச் சத்தம் இழக்கச்செய்கிறது. தன்னியக்கத் துப்பாக்கியின் அந்தச் சத்தத்திலே வெருண்டு போய் ஒரு குருவியும் கூட வானில் பறக்கவில்லை.
இடையிடையே வெடிக்கும் ஆட்லரியின் அதிர்வேட்டுச் சத்தம் நிலத்தையே நடுநடுங்க வைக்கிறது. கன்னத்தில் ரத்தமெல்லாம் எங்களுக்குச்
157

Page 91
நீ.பி.அருளானந்தம் சுண்டிவிட்டது. ஒருவர் முகத்திலும் இரத்தப்பிடிப்பில்லாது வெளுத்து இருக்கிறது. மிகப்பெரிய மனச்சூன்யம் எங்களை ஆட்கொண்டது போல் இருந்தது.
“நீங்கள் வளவுக்க அந்தப் பாம்பை அடிச்சிருக்கப்படாது பிரமசித்தி பிடிச்சது மாதிரி அதின்ரை சாபம்தான் எங்களை வீட்டால எழுப்பிப்போட்டுது”
இந்த நேரம் மனைவி மங்களம் பாடினாள். எனக்கு எரிச்சலாய் வருகிறது."எந்தப்பாம்பு” என்று உறுக்கிக் கேட்டேன். “.அதுதான் நாக பாம்பு. நான் சொனி னா கேட்டாத்தானே.சும்மா அதை தடியக் காட்டி கலைச்சிருக்கலாம்.” எனக்கு நன்றாய்க் கோபம் சுருசுருவென்று ஏறிவிட்டது.
“பாம்பைக் கணி டா அடிக் காம அதோட செல்லம் விளையாடுறதே.நான் அம்மாவை நினைச்சுக் கொண்டிருக்கிறன். அதுக்க நீ பேக்கிளாத்திக் கதை கதைக்கிறாய்.” இதுக்குப்பிறகு நானும் அவளும் மெளனம்தான். அண்டை அயலில் வீதி முழுக்க நின்று கொண்டு “அதையெடு இதைப் பிடியென்று சனங்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ எங்கள் பிரச்சினைக்குள் ஆச்சிவேறு தன் பாட்டைச்சொல்லி அழுத மணியமாயிருக்கிறாள்.
அவவையும் ஆற்றித்தேற்றி நான்தான் கூட்டிச் செல்லவேண்டியதாய் இருக்கிறது.
"தோசையை என்ன செய்தாய்?”- இருந்தாற்போல மனைவியிடம்
நான் கேட்டேன்.”
“பையிக்க சுட்டதுகள் கிடக்கு.மா அப்பிடியே அடுப்பங் கரையில பானேக்க கிடக்கு.”
a - - - - - - - - - - - ஆளுக்கு ரெண்டு தோசையென்றாலும் சாப்பிடலாம். பணமும் சட்டைப்பைக்குள் பத்திரமாய்க் கிடக்கு. இப்படி நினைத்துக் கொண்டே நான் நம்பிக்கையுடன் நடந்தேன். நான்கு கிலோ மீட்டர்களைக் கடந்து ஒரு பாடசாலையடிக்கு நாங்கள் இப்போது வந்து சேர்ந்து விட்டோம். வேளைக்கே அங்கே வந்து தஞ்சமடைந்த சனத்தால் பள்ளிக்கூடம் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூட மைதானத்தில் ஒருதுண்டை விரித்துக் கொணி டு நாங்கள் இருந்தோம் . நேரம் போய்க்கொண்டிருந்தது.அம்மாவுக்கு என்ன நடந்ததோ..? - என்று நினைத்தபடி நான் துக்க சாகரத்தில் அமிழ்ந்திப்போய்க்கிடந்தேன்.
158

அவர்களுக்குள்ளும் ஆறு மணித்தியாலத்திற்குப் பிறகு ஆச்சி தேடிய அப்பு வந்து சேர்ந்தார்.
அப்பு வந்ததும் அவரைப்பார்த்துவிட்டு ஆச்சி, ‘ஓ’.வென்று ஒலம்வைத்தழுதாள்.
அப்பு ஆச்சியை ஒரு அதட்டு அதட்டியபிறகு ஆதுரத்துடன் நான்தான் அப்புவோடு முதன் முதலாகக் கதைத்தேன்.
“அங்கயெல்லாம் எப்பிடி இருக்கப்பு.அம்மாவீட்டோட அதுக்க இருந்திட்டா அவவைப்பற்றியேதும் அறிஞ்சியளே?”. நான் துடித்துப்போய் கேட்டேன்.
நான் கேட்டவுடன் ஒரு செய்திப்படத்தைப் போட்டுக் காட்டினாற் போல எங்களுக்கு நன்றாய் விளங்க் அப்பு விபரங்கள் சொன்னார்.
“சுந்தரலிங்கம் பப்பா வளவுக்க நாலு பிரேதங்கள் கிடக்குத் தம்பி.பக்கத்து அரிசி மில்லில புழுங்கல் காயப்போடுற சிமெந்து நிலத்தில மூண்டு.அங்க ரயர்கடையிக்க கந்தசாமியைச் சுட்டுப்போட்டு நெருப்பு வைச்சிட்டாங்கள்.ராணுவத்தின்ரை அட்டகாசம் அப்பிடி. வலு அட்டகாசம்
- - - - - - - - - றோட்டு றோட்டாய்ப் பிரேதங்கள் அங்கினையாய்ப் பாக்கக் கிடக்கு.எல்லாவிடத்திலயும் சாவோலங்கள் தான். காம்புக்கு அங்கால..உங்கட சொந்தக்காரற்ர வீடுதான்.அந்தச் சனிக்ரறிய வீட்டுக்கபூந்து சுட்டிருக்கிறாங்கள். அவற்றை வீடு முழுக்க ரெத்தக் காடாய்க் கிடக்காம். என்ன கணி டியோ...ஒருபெடி அதுக் கால போனதோவெண்டு அவங்கள் அவரை விடுத்து விடுத்துக் கேக்க.அவர் தனக்குத் தெரியாதெண்டிருக்கிறார். அவர் கணக்கவும் ஞாயம் கதைச் சிருக்கிறார் போல. வாய்க்க குழலை வைச் சுச் சுட்டிருக்கிறாங்கள். மனுஷி அதைப் பார்த்திட்டு குளறித்திட்ட அவவுக்கும் வாய்க்க குழலை ஒட்டி சுட்டுவிட்டிட்டாங்களாம்.உவன் விசுவன்.அவன்தான் மேசன். அவன்ரை பெடியனையும் வளவுக்க சுட்டுப் போட்டுக்கிடக்கு. யூசியில வேலை செய்யிறான் சொத்தியன் அவனையும் சுட்டுப் போட்டாங்களாம் . கொலைகாறங்கள் கழிசடை நாயள்.”
அவருடைய பேச் சில உணர்ச்சி ஒலி செய்தது. இதை யெல்லாவற்றையும் கேட்க எனக்கு இருதயம், அரிசிமில் எஞ்சின் மாதிரி
159

Page 92
நீ.பி.அருளானந்தம் பலத்துப் படபடத்து அடிக்கத் தொடங்கிவிட்டது.
“எங்கடை அம்மா.எங்கட அம்மா."என்று நான் அவரைப்பார்த்துக் கேட்டேன். எனக்கு தொண்டைக்குவளை துருத்திக் கொண்டு விம்மல் விம்மலாக வந்தது. கண்களில் கண்ணிர் நிறைந்து பார்க்க முடியாமல் பார்வையை எனக்கு மறைந்துவிட்டது.
“அதையும் கேள்விப்பட்டேன்.தெய்வசகாயம் போல உன் ர அம்மாவுக்கு ஒரு கெடுதியும் இல்லையாம்.உண்ரை கொக்காவின்ரை வீட்ட போய் அவ பத்திரமாய்ச் சேர்ந்திட்டா”
அப்படிச் சொன்னார் அப்பு. அதைக் கேட்டதும் இரு கைகளாலும் என் கண்களில் கசிந்த கண்ணிரை வளித்துத் துடைத்துவிட்டு நான் நிம்மதியடைந்தேன்.
“எப்பிடி அதால போனவ?”- என்று அப்புவிடம் மெல்லிய குரலில் கேட்டேன்.
“உங்கட வீட்ட முந்தி வாடைக்கிருந்தினமே.சில்வாவெண்டு அதுதான் அந்த சிங்கள ஆக்கள் அவற்றை மகன் ராணுவம் அதால போனாப்பிறகு அந்தச்சவ அமைதியான இடத்துக்குப் போயிருக்கிறான். அங்க உங்கடை வீட்டில அம்மாவைக் கண்டு பேசிப்போட்டு பத்திரமாய் அங்கயிருந்து கூட்டிக் கொண்டோய் அங்க உங்களின்ரை கொக்காளின்ரை வீட்ட விட்டிருக்கிறான்.”
அப்பு அப்படிச் சொல்லவும். சில்வாவின் மகனை நினைத்து என் மனதில் ஏற்பட்ட நன்றிப் பெருக்கால் நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டேன். அந்த சிங்களச் சகோதரன் செய்த உதவிக்கு என்ன கைமாறு அவனுக்குத் திருப்பிச் செய்வதென்று தெரியாமல் நான் தவித்தேன். நல்ல குணங்களுடைய எந்த ஒரு மனிதனிடத்தும் மனிதத்தன்மை மரிப்பதில்லை என்று நான் சில்வாவின் மகன் மூலமாக உணர்ந்தேன். அகதியாய் அவ்வேளை நீரன் மனம் வருந்திக் கொண்டிருந்தாலும் என் அன்னைக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை என்பதைக் கேட்டதில் என் மனதுக்கு மிகவும் ஆறுதலாகவிருந்தது.
ஒலை-15 கொழும்பு தழிழ்ச் சங்க மாதாந்த மடல் (2003).
160


Page 93
62 IIT քa
/ வாழ்க்கையின் களையும், அவ டாடும் மக்களி சுழிப்புகளையும் மனித நேய எழுத்தாளர்களி
தி.பி.அருளானந்தம்
அத்தகைய கடமை உணர்வோடு
அருளானந்தம் ஒருவராவார். இதற்கு றுகளாகின்றன.
ಊಹಿಹಟ್ಟೆ வாழ்க்கை அவதி
ஆசைகளையும் ஏமாற்றங்களையும் அருளான கட்டுகிறார்.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள அநேக களாக அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தை களுடைய பழைய இருப்பிடங்களை நாடிச் ெ தக்கிராமங்களை சேர்கிறவர்கள் அங்கே களையும் கண்டு மனம்குமைந்து உளம் கதைகளில் அவர் திறமையாக எடுத்துக்க
திறமையாகப் பதிவு செய்திருக்கிறார். இந்த தோற்றங்களையும் அருளானந்தம், மனித நே
 

கையை பிரதிபலிப்பது இலக்கியம்
சமகாலச் சிக்கல்களையும் சிதைவு ற்றால் தாக்குண்டு தவித்துத் தின் துன்ப துயரங்களையும் உணர்ச்சிச் எழுத்தில் பதிவு செய்ய வேண்டியது சமூக உணர்வும் கொண்டிருக்கும் ன் கடமையாகும்.
செயலாற்றும் எழுத்தாளர்களுள் நிபி அவருடைய சிறுகதைகளே சான்
களையும் துயரங்களையும் ஏக்கங்களையும் நீதம் அவரது கதைகளில் சித்திரித்துக்
கதைகள் தற்கால வாழ்க்கைச் சித்திரங் டு கொழும்பில் வசிக்க வந்தவர்கள் தங் சல்லத் தவிப்பதையும், சிரமப்பட்டு சொந் காணப்படுகிற சிதைவுகளையும் பாழ்மை கதித்து வெம்புகிற நிலையையும் இக்
கங்களை அருளானந்தம் தமது கதைகளில் விதமான சமகால வாழ்க்கையின் பன்முகத் உணர்வோடும் முற்போக்குச் சிந்தனைதகளில் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவை