கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கறுப்பு ஞாயிறு

Page 1


Page 2

கறுப்பு ஞாயிறு
நீ.பி.அருளானந்தம்
சிறுகதைத்தொகுதி

Page 3
கறுப்பு ஞாயிறு நீ.பி.அருளானந்தம்
உரிமை : நீ.பி.அருளானந்தம் முதற்பதிப்பு : ஆவணி 2005
ரூபாய் 230
ISBN 955-1055-01-2
Karupu Gnairu Subject Collection of the Short Stories Author:
N.P. Arulamantham Copyright:
Author
FirSt Edition:
August 2005
Published by: Thirumagal Pathepagam No. 7, Liliyan Avenue, Mount Lawinia.
Prisltej: Ranya Graphics (S)Print) No. 401, Fussels Lane, Colombo 06. Telephone: O777734458
ենEllէE: சிறுகதைத்தொகுதி
ஆசிரியர்:
நீ.பி.அருளானந்தம் எலக்ரோனிக் ஓவியம்: கு.பிரதீபன், ரண்யா கிராஃபிக்ஸ் பின்புற அட்டை ஒளிப்படம்: கே.வி.மணி (ஒளிப்பதிவாளர், சென்னை) பதிப்பு:
திருமகள் பதிப்பகம் இல, 7, லில்லியன் சாலை, கல்கிசை
அச்சுப்பதிப்பு ரண்யா கிராஃபிக்ஸ் இல, 401 பசல்ஸ் லேன், வெள்ளவத்தை தொலைபேசி: 0777 73458

அணிந்துரை
நல்ல சிறுகதைகள் எழுதி, கவனிப்புக்கு உரிய சிறுகதைத் தொகுதிகள் பலவற்றை வெளியிட்டிருக்கிற எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் புதிய சிறுகதைத் தொகுப்பான இந்த நூல் அவருடைய வளர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் நன்கு புலப்படுத்துகின்றன. கதைக்கலையில் அவர் பெற்றுள்ள தேர்ச்சியையும் இக் கதைகள் வெளிப்படுத்துகின்றன.
வள்விக்கன்னன்
வாழ்க்கையின் துன்ப துயரங்களையும் , மணிதர்களது இயல்புகளையும் போராட்டங்களையும், சகிப்புத்தன்மையையும் உரியமுறையில் சிறுகதைகளில் பதிவு செய்கிற அருளானந்தம் மனிதமனம் குறித்தும், மனிதர்களது உணர்வுகள், எண்ணங்கள், சிந்தனைகள் பற்றியும் திறமையாக சித்திரித்திருக்கிறார். சூழ்நிலை விவரிப்பை தேவைக்குத் தக்கபடி, அளவாகவும் அழகாகவும் அமைத்து, அது கதைமாந்தரின் மனசில் ஏற்படுத்தும் உணர்வுச் சலனங்களைத் திறமையாக எடுத்துச் சொல்கிறார் அவர்,
பருவக்காற்று' என்ற கதையில், மரணம் நிகழ்ந்த ஒரு வீட்டின் சூழ்நிலை யதார்த்தமாக விவரிக்கப்பட்டுள்ளது. துயர வீட்டில், மனிதர்கள் நடந்து கொள்கிற முறைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது கதை. அச்சூழலில் மனம் கொள்ளாத குணம் என்பவனது எண்ண ஓட்டங்களையும், கடந்தகால இனிய அனுபவங்களின் நினைப்பையும் சுவாரசியமாகச் சித்திரிக்கிறது. பால்யகாலத்தின் இனிய உறவுக்கு உதவிய தேவியை சாவு வீட்டில் குணம் சந்திக்கிற நிகழ்வு உருக்கமாக அமைந்துள்ளது. குணம், தேவி இருவரது உணர்வுகளையும் உளப்பண்பையும் அருளானந்தம் சிறப்பான முறையில் கட்டியிருக்கிறார் கதையில்:

Page 4
வாழ்க்கையில் இன்பங்களை விட, துன்பதுயரங்களும் இழப்புகளும் ஏக்கங்களும்தான் அதிகமிருக்கின்றன. முதுமையில் அவை அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. கஷ்டப்படுகிற முதியோருக்கு இரக்கப்படுவதுபோல் செயலாற்ற முன்வந்து, சுயநலத்தோடு காரியங்கள் புரிகிற மனிதர்களும் இருக்கிறார்கள். இப்படியான இயல்புகளையும், பாதிக்கப்படுகிற முதிய தம்பதியரின் மன உணர்வுகளையும் விளைநிலம் உருக்கமாக எடுத்துக்காட்டுகிறது.
சிறுபராயத்து நினைவுகள் என்றுமே இனிமையானவை தான். தான் பிறந்து வளர்ந்த வீட்டையும், அங்கு அவன் அனுபவித்த வாழ்க்கை அனுபவங்களையும் எண்ணி எண்ணி மகிழும் இயல்பு உடைய ஒருவன் பல வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டைப் பார்த்து மகிழ்வதற்காகச் செல்கிறான். அவனுடைய நினைவோட்டத்தை “முதுசம்' என்ற கதை உணர்ச்சியோடு விவரிக்கிறது.
பழையனவற்றை சிந்திக்கும் இன்பம்பற்றி அந்த மனிதன் நினைப்பதை அருளானந்தம் அழகாகக் கூறுகிறார்.
‘இனிமை பயக்கும் பழைய சிந்தனைகள் எல்லாமே காட்டுப் பூக்களின் போதைமணமான ஓர் உணர்வுடன் கூடியதாய் என்னிடத்தில் எழுச்சி பெற்று, புதியதோர் உற்சாகத்தை எனக்கு ஊட்டியது. என்னளவில் காட்டுப்பூக்கள் புகழ்ந்து சொல்லத்தக்கதான அழகுள்ளவைதான். தன்னிச்சையாக வளரும் செடிக்கு, ஓர் தனித்துவம் இருக்கிறது. அதனால் அந்தச் செடியில் பூக்கும் பூக்களும் அலாதிதான். மனிதனின் கண்பார்வைக்குப் படாமல் அவைகள் காடுகளில்தானே அதிகம் இருக்கின்றன. அவைகளை யார்தான் பார்ப்பதற்குத் தேடிப் போகிறார்கள்?
இந்த மனநிலை உடையவன் அதிர்ச்சி அடைய நேர்ந்ததை கதை விவரிக்கிறது. அவனது உணர்வுகள் திறமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
*தீ’ படிப்பவர் உள்ளத்தை உலுக்கக்கூடிய உருக்கமான சோகக்கதை. வறுமையின் கொடுமையையும், தன்னலத்தோடு பிறரை வஞ்சிக்கிற கயமைத்தன மனிதரின் போக்குகளையும் யதார்த்தமாகச் சித்திரிக்கும் வாழ்க்கைச் சித்திரம்.
கணவனுடன் வாழ்ந்து சொற்பகாலத்தில் சந்தோஷமாக இருந்த செல்லாயி, அவன் திடீரென இறந்து விடவும் வாழ்க்கையில் அனுபவிக்க
iv

நேர்கிற சிறுமைகளையும் கொடுமைகளையும் உயிர்ப்புடன் கூறுகிற கதை இது.
செல்லாயியின் வளமான நிலையை அருளானந்தம் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
'கணவன் நாட்டாமை வேலை செய்து அதன் மூலம் மகிழ்ச்சியாக குடும்ப சீவியத்தை நடத்தியதும் பச்சை கட்டி அழகாய்த் தளிர்த்திருக்கும் முருங்கைக்கிளையின் தளிர் இலைகள் மாதிரி இன்றும் அவளுக்கு பசுமை காட்டுகிறது. அந்த மரம் பசேலென்று இலை தளிர்த்து வெளேரென்று பூப்பூப்பது போல் இருக்கும் அந்த வாழ்க்கைக்காலம்,
செல்லாயி உழைத்துப் பிழைக்கப் போன இடங்களில் கேவலப்படுகிறாள். சிதைக்கப்படுகிறாள். சீரழிந்து போகிறாள்.
‘நல்லது எதையும் மனிதன் நினைக்கலாம். நல்ல முறையில் உலகில் வாழவும் அவள் ஆசைப்படலாம். ஆனாலும், தன்னைச் சுற்றிலும் ஒழுக்கமற்ற சூழ்நிலையின் மத்தியில் இருந்து கொண்டு, அதற்கேற்ப வாழப்பழகிக் கொண்டு, தவறு செய்யாது இருத்தலென்பது ரொம்பக் கடினமானது தானே?’ என்று ஆசிரியர் வாழ்க்கை உண்மையைச் சுட்டியிருப்பது நன்று.
விபசாரப் பிழைப்பை ஏற்று இரவுத் தொழில் புரிய நேரிடும் பெண்ணின் அவல நிலையை ‘தீ உருக்கமாகக் கூறுகிறது. அந்நிலையிலும் அப்பாவிப் பெண்ணை வஞ்சிக்கிற கயவர்கள் இருப்பதையும், அதனால் பாதிக்கப்பட்டவளின் உள்ளக்குமுறலையும் கொதிப்பையும் கதை நன்கு விவரிக்கிறது.
பிச்சைக்காரர்களின் பிழைப்பையும், பிச்சை எடுப்பவர்கள் பற்றி எண்ணுகிற ஒருவனின் சிந்தனைகளையும் கூறுகிற சில்லறை, அன்பாக வீட்டில் வளர்க்கப்படும் ஒரு நாய்க்கு நோய் வந்து அது சிரமப்படுவதையும் இறுதியில் செத்துப் போவதையும் - இவற்றில் பெரிதும் பாதிக்கப்படுகிற கணவன் மனைவியின் துயரத்தையும் கூறுகிற தேடல் விவசாயப் பிழைப்பின் ஏற்ற இறக்கங்கள், அப்பா அம்மாவின் அன்பில் வளர்ந்த மகளின் வாழ்க்கை மாற்றங்கள், மருமகளாகி அவள் ஒரு வீட்டில் புகுந்ததும் மாமியாரின் குணக்கேடுகளால் அனுபவிக்க நேர்கிற துயரங்கள், அவளது உணர்வுகள் - பொதுவாக பெண்ணின் வாழ்க்கைச் சோகங்களை உரிய முறையில் கூறும் இருளே நீ இனிமேல் விலகாயோ? ஆகிய கதைகள் பாராட்டப்பட வேண்டியவை.

Page 5
‘வாழுமிடம் எங்கே? புறாமலை எனும் இடத்தைப் பற்றிச் சொல்கிறது. ஒரு காலத்தில் புறாக்கள் அங்கே மிகுதியாக இருந்தன. பிறகு இல்லாது போயின. ஆயினும் அவை இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் அமைதியாக வாழ்வதை, புறாக்களையும் புறாமலையையும் பார்க்கச் சென்ற ஒருவன் அறிகிறான். அவனது மன உணர்வுகளை, பொருத்தமான சூழ்நிலையில் சூழ்நிலை வர்ணிப்போடு, அருளானந்தம் பதிவு செய்திருக்கிறார். அந்த மனிதனின் நினைப்பு தற்கால வரலாற்று நிகழ்வுகளையொட்டி அமைக்கப்பட்டிருப்பது விசேஷமாகக் குறிபிடத்தகுந்தது.
“புறாமலை போனா அந்தப் புறாக்களுக்கு ஒண்டிக்கொள்ள இன்னொரு ஒதுக்கிடம் இருக்கு. அந்த இடம் இப்ப அதுகளுக்குப் பாதுகாப்பான இடமாயிருக்கு. அங்க போய்த்தங்கியிருக்க இந்த மனுசனுக்கு அங்கினையெல்லாம் இடவசதியில்லை. அதனாலை அந்த இடத்திலையாவது அதுகள் சுதந்திரமாய் இருந்து கொண்டிருக்கும். ஆனா, எங்களுக்கு சுதந்திரமாயிருந்து நிம்மதியாய்ச் சீவிக்க ஒரு இடமுமில்லை. நெடுகலும் சண்டையும் சச்சரவுமெண்டு சனிப்பிடிச்ச இடப்பெயர்வுதான் வந்துகொண்டிருக்கு.
படிப்பவரையும் சிந்திக்கத் தூண்டும் சூடான சிந்தனை.
’கறுப்பு ஞாயிறு சிறந்த சிறுகதை, கடல் தொழிலாளர்களான மீனவர்கள் - அவர்களில் பல விதமானவர்களின் வாழ்க்கைப் போக்குகள் - அவர்களது உழைப்பைப் பயன்படுத்தி வளமாக வாழும் ‘சம்மாட்டியார்’ ஒருவரது இயல்புகள் - விழாக்கொண்டாட்டம் - கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி மகிழ்ந்தவர்களின் வாழ்க்கையில் மறுநாள் ஏற்பட்ட கொடிய சோகம் - சீறிப்பொங்கிய ஆழிப் பேரலையால் ஏற்பட்ட பெரும்பாதிப்புகள் முதிலியவற்றை கதை வடிவத்தில் நன்கு சித்திரித்திருக்கிறார் அருளானந்தம்.
‘அமாவாசை தனித்தன்மையுடைய சிறப்பான கதை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்வதற்காக மனிதர்கள் மேற்கொள்கிற கடின முயற்சிகளையும், அந்நிலையிலும் அவர்களது அமைதியைக் குலைத்து அச்சத்தில் தள்ளுகிற நாட்டின் நிலையையும் இக்கதை நன்கு விவரிக்கிறது. அச்சூழ்நிலையிலும், கடினமாக உழைத்து, பெரிய மனசோடும் அன்பு உணர்வோடும் பிறருக்கு உதவி வாழ்கிற ஒருவரின் மனிதநேயத்தையும் மனமகிழ்ச்சியையும் அருமையாக எடுத்துச் சொல்கிறது.
vi

* யுத்தம் இல்லாத உலகத்தில் ஒரு சிறு குடிசையிலேனும் நிம்மதியாக வாழக்கிடைக்குமா என்று ஏங்கும் மனித உள்ளத்தின் ஆசையை வெளிப்படுத்துகிறான் கதையின் நாயகன், யுத்தச் சூழ்நிலையில் வாழ்க் கையின் இயங்குதலையும், சந்தை வியாபாரத்தையும், மனிதர்களின் வாழ்க்கை முறைகளையும் உரிய முறையில், ரசமான தன்மையில், கதை விவரிக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், அமாவாசை போன்ற மரபுரீதியான விரதங்கள் சடங்கு சம்பிரதாயங்களை விடாப்பிடியாகக் கடைப்பிடிக்கும் மனிதரது உணர்வுகளைச் சுட்டுகிறது.
வறுமையின் தாழ்மட்டத்திலும் வாழ்வோடு மல்லுக் கட்டுகிற பழகிப்போன வைராக்கியத்தோடு செய்ய வேண்டியதையெல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்றதான அவனது கடமையுணர்வு பற்றிக் கூறுகிற கதை, அமாவாசை விரதத்தை அனுஷ்டிப்பதற்காக அவர்கள் எதிர்கொள்கிற சிரமங்களையும் ஏழைஎளியவர்களின் திண்டாட்டங்களையும் நன்கு அறிமுகப்படுத்துகிறது.
இச்சூழலில் தனித்தன்மை கொண்டவனாக விளங்குகிறான் காய்கறிகள் வியாபாரம் செய்து சீவிக்கும் ஒருவன்.
‘இனிய பண்டங்களை விட கசப்புச்சுவையிலேதான் அவனுக்கு எப்பொழுதுமே ஒரு தனி விருப்பம் உண்டு.
அந்தக் கசப்பு சுவை போலவே இந்த யுத்தச் சூழலில் வாழ்வு கசந்து போகிற நிலைமை சில பொழுதுகளில் ஏற்பட்டாலும், அதை ருசித்தாக பிறகு மாற்றி அமைத்துக் கொள்கிற ஒழுங்கான சில வழி முறைகளையும் அவன் அறிந்து வைத்திருந்தான்.
கசப்பான நினைவுகளையும் நிகழ்ச்சிகளையும் மறந்து மற்றவர்களுடன் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கான செய்கையில்தான் அவன் எப்பொழுதுமே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவன். அதனால் ஆற்றோரங்களிலுள்ள மரங்களைப் போல் எந்நேரமும் அவன் செழிப்பாகவே இருப்பான்.
இப்படி அழகாக, அருமையாக, அந்த நல்ல மனிதனை அறிமுகம் செய்கிறார் அருளானந்தம். நல்ல செயல் புரியும் உயர் மனிதனின் கதையான ‘அமாவாசை வெகுவாக பாராட்டப்பட வேண்டிய படைப்பு.
எழுத்தாளன் ஒருவனின் மன உணர்வுகளை சுவையாகச் சொல்கிற உருமாறல்' படித்து ரசிக்கப்பட வேண்டிய வாழ்வுச் சித்திரம்.
yi

Page 6
அகலிகை பற்றி அநேகர் அவரவர் பார்வை, மனோதர்மம், கற்பனைக்கு ஏற்றவாறு கதை பண்ணியிருக்கிறார்கள். அருளானந்தமும் அவர் நோக்கிலும் கற்பனை ரீதியிலும் அகலிகை’ பற்றிய கதையை எழுதியிருக்கிறார். படித்து ரசிக்கலாம்.
நீ.பி.அருளானந்தம் இனிய நடையில் கதைகளை எழுதியிருக்கிறார். உரையாடல் களில வட்டாரவழக்குகளை திறமையாகக் கையாண்டிருக்கிறார். பாத்திர வர்ணனை, சூழ்நிலை விவரிப்பு, இயற்கை அழகுகளை வர்ணித்தல் முதலியவற்றை சிறப்பாகச் செய்திருக்கிறார். அங்கங்கே உவமைகளை எடுத்தாள்கிறபோது, கற்பனை நயமும் புதுமை அழகும் மிளிர அவற்றை அமைத்திருக்கிறார்.
சான்றாக இவை சில.
“பொன் போல சுட்டு பக்குவமாக சட்டியில் எடுத்த குத்துப் பச்சரிசிமா அப்பத்தின் நிறம் போலத்தான் அவள் மேனி.”
‘வானத்து நட்சத்திரங்கள் பூந்திக்கொட்டையும் சவுக்காரமும் போட்டு கழுவித் துடைத்த நகைகள் மாதிரி பளிச் சென்று துலங்கிக் கொண்டிருந்தன.
‘விரித்த தலைவாழை மாதிரி அவனுக்குள் கூத்தாடுகிற மகிழ்ச்சி உணர்வலைகள் அவன் முகத்தை வெளிச்சமாக்கிவிட்டது.”
இப்படியாகப் பல தன்மைகளிலும் பாராட்டுதலுக்குரிய கதைகளைப் படைத்துள்ள நீ.பி.அருளானந்தம் எழுத்தாற்றல் மேலும் வளர்ந்து ஒளிவீசும் என எதிர்பார்க்கலாம். வாழ்த்துக்கள்.
2/3 സ്ത്രിക കഞ്ഞ
N- -
10, வள்ளலார் குடியிருப்பு, புதுத்தெரு, லாயிட்ஸ் சாலை, சென்னை 600005.
viii

என்கூற்று
ஈழத்துத் தமிழ்க் கதைப் புலத்தில், நல்ல கதைகளை விளைவித்த சிறந்த கதாசிரியர்கள் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். சிறுகதை என்பதுதான் என்ன என்பதை, ஒரு வாழ்க்கை முறையை முன்னிறுத்தி அவர்கள் எழுதிய கதைகளில் சிலவற்றை இரசிப்புடன் படித்துத்தான் - இளவயதுக் காலத்தில் முதன்முதலாக நான் அறிந்து கொண்டேன்.
ஆனாலும் நான் பேனா பிடித்து எழுத ஆரம்பித்த காலம்தொட்டு அவர்களுக்குள்ளே நான் ஒரு சாதாரணமான மனிதன்தான்! என்ற நினைப்பு என்னிடத்திலே இருந்து வளர்ந்துவருகிறது.
என்னளவிற்குத் தெரிந்து கொண்டதை, என்போக்கில் ஏதோ தொடர்ந்தும் நான் எழுதிவருகிற போதிலும்; இலக்கியத்தில் மேதாவிலாசம் காட்டிவிட வேண்டும் - என்ற நோக்கம் மாத்திரம் என்னிடத்தில் இல்லவே இல்லை!
அதையெல்லாம் எட்டத்தள்ளி வைத்துவிட்டு மெளனியாக ஒரு நிலையிலிருந்து இச்சமூகத்தின் மேம்பாட்டுக்காய் என் இதயம் துடிக்கும் ஒலியை எழுத்தில் வடித்து வைத்துப் போக வேண்டும் என்பதே என் உள்ளத்திலுள்ள பேரவாவாகும்.
இந்த அழகிய அமைப்புள்ள உருண்டையான உலகம் என்றும் அதன் நிலையிலிருந்து உடையாது காக்கப்படல் வேண்டும்; அதிலே மனித நேயம் பேணப்படல் வேண்டும் - என்பதுதானே பேனா பிடித்து எழுதிவருபவர்களது விருப்பு?
அவ்வகையிலேயே நானும் இருந்துகொண்டு - எந்த அலைகளர்லும் அடித்துச் செல்லப்படாது காத்துக்கொண்டு; எழுதி
ix

Page 7
வருவதையே எனக்குக் கிடைக்கின்ற மனச்சுகமாக நான் நினைக்கிறேன். இந்நூலிலுள்ள சிறுகதைகள் சிலவற்றில் - அவற்றின் கதைப் பின்னலில்; முடியுமான ஆழம்வரை தொட்டுப் பார்க்கும் முயற்சியில் வெற்றி எனக்குக் கைகூடி வந்துள்ளதாகவே நான் உணர்கிறேன். அதற்கெல்லாம் காரணம் இயல்பானதும், உண்மையானதும், நடக்கக்கூடியதுமான சம்பவங்கள் அந்தக்கதைகளில் இருக்கின்றன என்பதுவே.
அக்கதைகளில் தசையும் இரத்தமுமாய்க் கருவும், உருவும் சேர்ந்து உயிரளித்திருக்கிறது.
முன்னர் நான் எழுதியிருந்த சிறுகதைகளை விடவும் இச்சிறுகதைத்
தொகுதியிலுள்ள கதைகளை நான் எழுதிவரும் போது; ஒரு
எழுத்தாளனுக்குரிய சுதந்திரத்தை முழுமையாக நான் இக்கதைகளில் அநுபவித்திருக்கிறேன் என்றும் கூறவேண்டும்.
இப்படியாக எழுதுவதைக்கொண்டு, வாசகர்களின் கவனத்தைப் பிடித்திழுத்து நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையும் நிறைவுற எனக்கு இருக்கிறது.
சமூகத்தில் உள்ள இரகசியங்களை இலக்கியத்தின்மூலம் அம்பலப்படுத்தும் விருப்பம் எனக்குண்டு; என்றும் இங்கே நான் கூற விழைகிறேன். அதற்காகவும் நான் எழுதிய - வாழ்க்கையின் இருண்ட பகுதிதான் அதிகம் காணப்படும் ஒரு கதை இக்கதைக் கொத்தில் உண்டு. அக்கதை சுயமாக மற்றவர்களை சிந்திக்கத் தூண்டுவதோடு, சமூகத்தில் ஏழ்மையில் வாடும் அப்பாவிகளான சில பெண்களின் இழிவுக்கான காரணத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
'உருமாறல்' கதை சற்று கொஞ்சம் வித்தியாசமாய் எழுதப்பட்டது. அந்தக்கதையை ரசிக்க கற்பனா சக்தியும் வேண்டும். அழகான அற்புதமான ஜீவனுள்ள ஒரு காதற்கதையும் இத்தொகுதியிலே உண்டு. அந்தக்கதையில் நளினமான இழையோடுவதைக் கவனிக்கலாம்.
இதையெல்லாம் படிக்கும்போது உங்களுக்கு மன நிறைவு ஏற்படும் என்பது நிச்சயம்.
ஒருவனுக்கு நான் எனது என்ற எண்ணங்களே இருக்கக்கூடாது என்பார்கள். என்றாலும் காக்கைக்கு தன்குஞ்சுதான் பொன்குஞ்சு என்ற

நிலையில் நானும் இருந்து; என் கதைகளைப் பற்றி பெரிதாக அளந்துவிட்டேன். எனக்குள்ள தன்நம்பிக்கையும், மன வலிமையும், தெளிவும் அப்படியாக என்னைக் கூறவைத்துவிட்டது போலும்.
எனது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் என் உள்ளிலிருந்தே உருவாகின்றன. அந்தக் கதாபாத்திரங்களின் நிலையிலிருந்து நான் வாழ்ந்து பார்க்கிறேன். இந்தப் பயிற்சியில் மிகப் பெரிய விளைவு என்னை அறிந்து கொள்வதுதான்.
அதற்கு எனது வாழ்வநுபவம் துணை புரிகிறது. இதன்மூலம் கதைகளில் - பிறர் முகமூடிகளைக் களையவும் அதுவே எனக்குப் பேருதவி புரிகிறது.
கதைக்கலையில் நான் தேர்ச்சி பெற்றுள்ளதாக வல்லிக்கண்ணன் ஐயா அவர்கள் கூறியிருக்கிறார்கள். நான் எழுதிய ‘பருவக்காற்று' - எனும் சிறுகதை, 'கணையாழி' - யில் (2004) வெளியானபோது அதைப்படித்துவிட்டு எனக்கு அவர் அங்கிருந்து எழுதியனுப்பிய கடிதத்தில்;
கதை எழுதுவதில் நல்ல தேர்ச்சி வளர்ந்திருப்பது தென்படுகிறது. பாராட்டுகிறேன். இன்னும் நிறைய எழுதுங்கள். - என்றும் என்னை உற்சாகப்படுத்தியிருந்தார்கள். தமிழ் நாட்டின் மூத்த கதைஞர் வல்லிக்கண்ணன் ஐயா அவர்கள் அப்படி என்னைப் பாராட்டியதை; வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறாக நினைக்கிறேன். இன்னும் அப்பெரியாரே இந்நூலிலுள்ள கதைகளை நேசித்து வாசித்து அணிந்துரை எழுதியிருக்கிறார். அதுவும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாயிருக்கிறது. அதற்காகவும் நான் என்னுரையின் முடிவிலே அவருக்கு நன்றியினைக் கூறிவிட்டு; நான் அடுத்தடுத்து வெளியிட்டுவரும் நூல்களை வாங்கி உதவிபுரிந்து வரும் தமிழபிமானிகளுக்கும் இருகரம்குவித்து நன்றிதனைக் கூறிக்கொள்கிறேன்.
வணக்கத்துடன் நீ.பி.அருளானந்தம் 15-06-2005 திருமகள் பதிப்பகம் இல, 7, லில்லியன் சாலை, கல்கிசை. கைபேசி: 0722784954

Page 8

கதைகள்
பருவக்காற்று
விளைநிலம்
முதுசம்
தீ
சில்லறை
வாழுமிடம் எங்கே
தேடல்
இருளே நீ இனிமேல் விலகாயோ
கறுப்பு ஞாயிறு
gd6T609F
உருமாறல்
அகலிகை
xiii
21
34
51
70
76
87
98
109
134
156
166

Page 9
அடுத்த தலைமுறையினருக்கு பயன் தருவதற்காக தம்வாழ்விடங்களிலே பனை வடலிகளை வளரவைத்து இயற்கையைக் கொண்டாடி வாழ்ந்து இவ்வுலகை நீத்தாருக்கு.
ஆற்றவேண்டிய கடனாய் இந்நூலை சமர்ப்பிதம் செய்கிறேன்.
-ܥܠ
-~~=
xiv

நீரிஅருளானந்தம்
பருவக் காந்று
கனகம் ஆச்சிக்கு நெஞ்சில் சளி பிடித்து இவ்வளவு நாட்களாய் படுக்கையில் கிடந்ததில், காலையில் தான் சீவனைவிட்டாள். இதனால் பக்கத்து வீடென்று அந்தக்கடமையை பெரிதாக நினைத்து, குணமும் ராக்கண் முழிப்புக்காய் அங்கு போக வேண்டியதாய் இருந்தது.
இரவு எட்டு மணிக்கு முன்னமே சாவீட்டுப் பந்தலில் அயலகத்து வீட்டிலுள்ள ஆண்களெல்லாம் வந்து ஒன்று கூடிவிட்டார்கள்.
இடையிடையே வர்ணம் பூசிய ஒலை இழைத்த, பனையோலைப் பாயிலே நான்கு ஐந்து பேர் அளவில் இருந்துகொண்டு சீட்டாட்டம் ஆடுகிறதற்கு பிறகு ஆயத்தமானார்கள்.
குணத்தையும் பந்தலடியில் பார்த்து 'வாருமன் குணம் ! ஒரு ஆட்டத்துக்கெண்டாலும் வந்திருந்து விளையாடுமன்” - என்றார் தபால்காரர் இரத்தினம்.
‘என்னடா இது. பெரிய தொந்தரவு - என்று நினைத்துக்கொண்டு.
‘நீங்க விளையாடுங்கோ அண்ணை! நான் இருந்து பாக்கிறன்!” - என்றான் குணம்.
அவர்களோடு சேர்ந்து அந்த விளையாட்டு விளையாடுவதிலிருந்து தான் தப்பினால் காணும் - என்றிருந்தது அவனுக்கு.
கடுதாசிக்கூட்டம் விளையாடுவதில் அவனுக்கு எப்போதுமே துளியளவும் விருப்பமில்லை.
‘ஏனப்பா ஒரு ஆட்டத்துக்கு வந்திருமன். எல்லாருமா சேர்ந்து ஒருக்கால்
என்று ஊர் விதானையாரும் இப்படி அவனை அழைத்தார்.
“எனக்கெண்டா உடம்புக்கு ஒரு மாதிரிக்கிடக்கு. வயித்துக் குள்ளையும் அவ்வளவு சரியாயில்லை. சாடையான ஒரு குத்து வலியாக்கிடக்கு” என்று அவரிடம் ஒரு பொய்யைச் சொன்னான் குணம்.
அவர் சிரித்துக் கொண்டு;

Page 10
பருவக் காற்று 'ஏன்ராப்பா செமியாக்குணமாய் வந்திட்டே உனக்கு!. அப்பிடி இல்லாட்டா வேற என்ன ஒரு குத்து வயித்திக்கையெண்டிறாய்...! எல்லாட்டியடாப்பா பிள்ளைப்பெறுகிறதுக்காக் குத்துதோ வயித்துக்கை?”
என்று நக்கலாகக் கேட்டார்.
‘எப்பவும் தன்ரை தொழிலுக்கேற்ற கதையும் பரிகாசமும் தான் இவரிட்டயிருந்து வெளிப்படும்
என்ற எரிச்சல் மிகுந்த எண்ணத்தை மனசுக்குள்ளே அடக்கிக்கொண்டு 'இல்லையுங்கோ. நீங்கள் எல்லாரும் சேர்ந்து விளையாடுங்கோ நான்
என்று மீண்டும் இவன் நல்லவிதமாக அவருக்குச் சொல்லி மழுப்பிவிட்டான். அதற்குப் பிறகு அவர்கள் தங்களுக்குள்ளாகவே பார்த்து ஆள் சேர்த்துக் கொண்டார்கள். சீட்டுக்கட்டிலுள்ள கடுதாசிகளில் சிலதை, உள்ளாலேயிருந்து எடுத்து மேலே வைத்துக் கலந்து விட்டுப் பிறிப்பதுவும் நடந்து முடிந்தது. கடுதாசி விளையாட்டுச்சமர், அவர்களிடம் ஆரம்பித்து வர வர சூடு பிடித்துக் கொண்டும் போனது.
சீட்டாட்டத்துக்கென்றே உரிய தனிப்பாஷையில் வைத்து அவர்களெல்லாம் ஒருவரோடொருவர் கதைத்தபடி - செத்தவீட்டை மறந்துவிட்ட அளவுக்குக் கொட்டமடித்தார்கள்.
குணம் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து சீட்டாட்டத்தைப் பார்ப்பது போல மற்றவர்களின் பார்வைக்குத் தெரிய இருந்தான். ஆனால் அந்த விளையாட்டில் அவனுக்கு மனம் படியவில்லை.
அவன் எண்ணம் முழுவதும் தன் இளம் பிராயத்துச் சிந்தனைகளிலும், பிள்ளைப் பிராயத்து வண்ணங்களிலுமாக நாட்டம் கொண்டது. அவற்றிலெல்லாம் தேவிதான் தேவதையாக அவனுக்கு முகதரிசனம் கொடுத்தவாறு இருந்தாள். அவளது அழகியமுகம் அவனுள்ளத்தில் நின்று நிலைத்திருக்க - தனித்ததாய் தேவியைப் பற்றிய பழைய சம்பவங்களையே, அவன் மனம் திரும்பத்திரும்ப மீட்டெடுக்கத் தொடங்கியது. அங்கே செத்தவீடென்று ஓரிருவர் அழுது கொண்டிருக்க, இவனது சிந்தனையோ அதிலே கவனம் போகாது காதல் வானிலே சிறகடித்துப் பறந்தது.
செத்தவீட்டில் இவர்கள் மட்டும்தானா இப்படி..?
சுடுகாட்டுக்கு பாடைகாவிக் கொண்டு போகின்றவனுக்கும்; “நாளை வீட்டுக்குக் கறி புளி வாங்குகிறதுக்கு என்ன செய்கிறது என்ற நினைப்பு இருக்கும். அதைப்பற்றிய கவலையும் இருக்கும்.

ඊඛ. മUശ്രണത്ര
சவம் எரிகிற போதும் கூட சுடலையில் நிற்கிற ஒரு சிலருக்கு, வேலி பாய்கின்ற யோசனைகளிலும் மனம் போகும். இறப்பைப்பற்றி அதிகம் எந்த மனிதன்தான் இந்த இடத்திலும் இருக்கும் போதும் கூட சிந்தித்துக் கொள்கின்றான். மனிதன் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டுமென்பதை ஆழமாக எவன்தான் உணருகிறான் - தன் நலத்தைத் துறக்கிறான் - இந்த உலகில் இருக்குமட்டும், தங்கள் வாழ்க்கைச் சுகத்தில் மட்டும்தானே அனைவரும் கவனமாய் இருந்து கொள்கிறார்கள்.?
தேவி இங்கே கட்டாயம் செத்த வீட்டுக்கு வந்து சேருவாளென்று குணத்துக்குத் தெரியும். இன்னுமாக அவள் கொழும்பிலிருந்து வந்து சேரவில்லை என்பதை, கனகம் ஆச்சியின் வீட்டிலிருக்கும் பொடிப்பயலிடமும் வேளைக்கே அவன் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தான். அந்தப் பையன் கனகம் ஆச்சியின் சகோதரியின் பூட்டன். அவன் கனகம் ஆச்சியை என்ன உறவு முறை சொல்லி அழைக்க உரித்துடையவன், என்கின்ற இவையாதொன்றும் குணம் அறியான்.
பந்தலுக்கு வெளியாலே அங்கும் இங்குமாய் அவன் ஒடித் திரியவும் 'தம்பி இங்கயொருக்கா வந்திட்டுப் போம் ராசா” என்று ஆதரவாக அவனைக் கூப்பிட்டு, தன் அருகில் நிற்கவைத்துக் கொண்டு கதையோடு கதையாய் அவனிடம்; ‘தேவி மாமி இன்னும் வந்து சேரல்லையோ தம்பி செத்த வீட்டுக்கு?” - என்று கேட்டதில்: ‘ராவைக்குத்தான் அங்கிள் தேவி அன்ரி வருவா. விடியப்புறம் ரெலிபோனிலை புனிதம் மாமியோடை கதைக்கேக்க அப்பிடித்தான் தேவி அன்ரி சொன்னவ’
என்று சொல்லியதோடு; “நான் வர்றன்” என்று சொல்லிக் கொண்டு அவன் முன்னாலே ஓடின பெடியனைத் துரத்திக் கொண்டு தானும் அவனுக்குப் பின்னாலே ஓடி விட்டான்.
‘‘கொழும்பிலையிருந்து இங்க வாறதெண்டால் நேரமாகுந்தான்’ என்று குணம் இப்பொழுதும் அங்கே இருந்து யோசித்தபடி இருக்க. திறந்து கிடந்த படலைக்காலே தேவி வருகிறாள் என்பது குணத்துக்குப் பிறகு தெரிந்தது.
‘ நடங்கடி கெதியாய் சுறுசுறுக்காய்.” என்று தனக்கு முன்னால் சென்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் உறுக்கிக் கொண்டு அவள் அவர்களுக்குப் பின்னாலே வந்தாள்.
sy
'பன்னிரெண்டு வருஷம் கழிந்தும் பருவச் செழிப்பு சிறிதும் சிதையாமல் முன்னைய இளமையின் பசுமை இன்னும் உடலில் பரிமளிக்க இருக்கிறாள் இவள்' - என்று குணம் நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்க; அவளும் முற்றத்தால் நடந்து வரும்போது விழி மலர்த்தி இவனையும் சில விநாடிகள்

Page 11
4 பருவக் காற்று வடிவாகப் பார்த்துக் கொண்டு வந்தாள்.
விரித்த கடுதாசியும் கையுமாக இருந்த விதானையார், தேவி வந்திருக்கிறாள் என்பதையும் கண்டு கொண்டு விட்டார்.
‘ஆச்சியின்ரை பேத்திமட்டும் தனியா வந்திருக்கிறா போலை கிடக்கு. புருஷன்காறன் வரேல்லையாக்கும்.”
என்று அருகில் இருந்த எல்லாருக்கும் அந்தச் செய்தியை விசிறி விரிப்பாய்ப் பிடித்திருந்த கடுதாசிகளில் கண்ணோட்டம் விட்டுக் கொண்டு மெல்ல குசுகுசுத்தார்.
பந்தலைக் கடந்துபோய் வாசற்படியேறி அவள் விறாந்தையில் கால் வைக்க பல குரலில் அழுகைக் குரல்கள் அவளை வரவேற்பதுபோல் இருந்தன. அவளும் அவர்களுடன் சேர்ந்து அழத்தான் செய்வாள் என்று நினைத்துக் கொண்டு, பெருங்கூட்டமாய் இரைச்சலிடுகிற சத்தங்களுக்குள்ளே அவளது குரலை மட்டும் தேடி காதுகளைக் கூர்மையாக்கினான் குணம்.
இன்னும் மாறாத அச்சுப்பிறழாத அவளது அந்தக் ‘குயில் குரலையும், அவர்களது குரல்களுக்குள்ளாக அவன் பிறகு கண்டு பிடித்துவிட்டான்.
தேவி, கனகம் ஆச்சிக்கு பேர்த்தி முறையானவள். அந்த நாளில் தறுதலை கெட்ட ஒருவனுக்கு கனகம் ஆச்சி தன் மகளை கலியாணம் செய்து கொடுத்துப் பட்ட பாடு போதும் போதும் என்று ஆகிவிட்டது. அவன் குடித்து வெறித்து உள்ள சொத்துக்கள் நகை நட்டையெல்லாம் விற்று அழித்து கனகம் ஆச்சியினுடைய மகள் கமலத்தையும் தீரா நோயாளி ஆக்கிப்போட்டுத்தான் ஊரை விட்டே ஓடிப்போனான். அதற்குப்பிறகு கமலம் சாகும் தருணத்திலும், இந்த ஊர்ப்பக்கம் கூட அவன் தலை காட்டவே இல்லை.
கமலத்தை தவிக்க விட்டு அவன் போகையில், தேவி அப்பொழுது கைக்குழந்தை. ‘பேத்தியையும், வருத்தக்கார மகளையும் இனி ஆர்தான் பாக்கப் போகினம்' - என்ற கவலையில், பிறகு கனகம் ஆச்சி தான் சீவியத்தை ஒட்ட ஒரு வழியும் தெரியாமல் வீட்டில் அப்பம் சுட்டு விற்க வெளிக்கிட்டாள். கனகம் ஆச்சி அப்பம் சுட்டு விற்று எல்லாருடைய சீவியத்தையும் ஒருமாதிரியாக தாக்குப் பிடித்துக் கொண்டு போக, தேவியின் அம்மாவும் ஒரு நாள் காலமாகிவிட்டாள்.
'இந்தக் கிழவீட்டையாய் ஒரு பெட்டைப் பிள்ளையை பொறுப்பாத்தந்திட்டு, பொசுக்கெண்டு இவள் போய்ச் சேந்திட்டாளே?”
என்று கிழவியும் கிடந்து கத்திக் கொண்டிருந்து விட்டு. ‘ என்ர சீவன் போய்ச் சேருகிறதுக்குள்ள இந்தச் சின்னதை வளர்த்தெடுத்து ஒரு கரை சேர்த்திட வேணும்'

ඊඛ. நீ/அருணானந்தம்
என்று திட சங்கல்பம் எடுத்துக் கொண்டு, அப்பம் சுட்டு தொடர்ந்தும் வியாபாரம் செய்தாள்.
அப்பம் சுட்டு விற்று வருகிற வியாபாரம் கனகம் ஆச்சிக்கு ஒகோவென்றதாய்த்தான் பெரிதாக நடந்தது. ஆனால் அதிலிருந்து கிடைக்கின்றலாபம்தான் மிகக்குறைவாயிருந்தது.
“நல்ல ருசியான பாலப்பம். கனகமாச்சி சுடுற அப்பம்” - என்று நாக்கை சுழட்டி சொண்டை நக்கிக் கொண்டு எல்லாரும் கனகமாச்சியிடம்தான் அப்பம் வாங்கிப் போக வந்தார்கள்.
அப்பக் கோப்பை மாதிரித்தான் கனகமாச்சியின் இதயம். வஞ்சகப் புத்தி சற்றும் இல்லாத பளிச்சென்றதாய் உள்ள மனம் உடையவள் அவள். இதனால் சொற் பலாபத்தை மட்டுமே தனக்கென வரும் படியாயப் வைத்துக்கொண்டு - அப்பத்துக்கு தடித்த தலைப்பாலும் விட்டு, மொத்தமாகவும் சுட்டுச் சுட்டு அயலட்டையெல்லாம் அவள் விற்றாள்.
சின்னப்பிள்ளைகள் வீட்டுக்குவந்தால், அவர்களிடம் செல்லக் கதை கேட்டு அப்பத்தையும் சும்மாகாசில்லாமலும் அவர்களுக்குச் சில வேளைகளில் அவள் தின்னக் கொடுப்பாள்.
பேர்த்தி தேவி வளர்ந்து கொண்டு வருவதை கனகம் ஆச்சியால் தடை போட முடியுமா?
பெண்ணின் வளர்த்தி பீர்க்குக் கொடிமாதிரி துரிதவளர்த்தி என்பார்களே - அது தேவியின் விஷயத்திலும் பொருத்தமாய்த்தான் இருந்தது. அவள் வளருகிற வளர்த்திக்கு போடுகிற அரைப்பாவாடை சட்டைகளெல்லாம் குட்டையாய்த்தான் வந்தன. அவள் வளருகின்ற சுறுக்குக்கு பாவாடை சட்டைகளென்று தேவையான ஆடைகளைத் தைத்துக் கொடுக்க துணியெல்லாம் வாங்க, கிழவியால் இயலவில்லை. இதனால் தங்களது நசிக்கிப் பிழியும் வறுமையை நினைத்து கிழவிக்கும் மனவருத்தமாகவே இருந்தது.
குணத்தின் வீடும், வாயுக்கும் கையுக்குமாக வாழுகின்ற கஷ்டப்பட்ட வீடுதான். நான்கு சகோதரிகளுக்கும் பிறகு, கடைக்குட்டியாகப் பிறந்தவன்தான் இவன். இந்த வீட்டில் தகப்பனில்லாத குடும்பத்தின் பொறுப்பு முழுவதும் மூத்தவள் தலையில் தான் சுமத்தப்பட்டிருந்தது. கச்சேரியிலே அவளுக்கு டைப்பிஸ்ட்வேலை. அவளது சம்பாத்தியத்திலேதான் குடும்பம் முழுவதும் கஞ்சி குடிப்பு.
அக்காமார்களைப் பார்த்துப்பார்த்து அவர்களுடனேயே பேசிப்பழகி சிரித்து விளையாடிக் கொண்டிருந்ததில்; குணத்திற்கு பெண்பிறவிகளிடத்தேதான் அன்பும் இரக்கமும் அதிகமாய் இருந்தது. அடுத்தவீட்டுத் தேவி என்பவளிலும்

Page 12
6 பருவக் காற்று அப்படித்தான் இவனுக்கு நேசமும் ஏற்பட்டது. இடையிடையே குணம் வீட்டுக்குத்தான் அவளும் தாயம் விளையாடவென்று வந்து போவாள். குணத்துடனும் அவனுடைய சகோதரிகளுடனும் தாயம் விளையாடுவது தேவிக்கும் பொழுது போக்காய் இருந்தது.
ஒவ்வொரு நாளும் பின்னேரவேளையில் இவர்களெல்லாம் தாயம் விளையாட குந்திவிடுவார்கள். இரண்டு பேர் ஆட்டத்தில் சேராது காத்திருக்க மற்றைய நான்கு பேரும் சேர்ந்து தாயம் விளையாடுவார்கள். பிறகு அடுத்த ஆட்டம் தொடங்குகையில், காத்திருந்த இரண்டுபேரும் இணைந்து கொள்வார்கள். இப்படியே ஆள்மாறி ஆட்டம் ஆடி, பொழுது படவே தாய விளையாட்டு (Լplգայլք.
தாயம் விளையாட குந்தி இருந்தால் அரைப்பாவாடையை கையால் இழுத்திழுத்து விட்டு, தொடையை நெடுகலும் மறைத்துக் கொண்டிருக்கும் செய்கையில் தான் தேவி கவனத்தோடு இருப்பாள்.
பொன் போல சுட்டு பக்குவமாக சட்டியால் எடுத்த குத்துப்பச்சரிசிமா அப்பத்தின் நிறம் போலத்தான் அவள் மேனி. அவள் தன் பாவாடையை இழுத்து விட்டு சரி செய்துகொள்ளும் விதம்; ஒரு பறவை தன் இறகுகளை சொண்டால் செவ்வையாய்க் கோதி, சரி செய்து விடும் செய்கையினைப் போலவே குணத்துக்கும் அது அழகாய்த் தெரியும். குணத்திற்கும் தேவிக்கும் நடுவே வயதிலே பெரிய இடைவெளியில்லை. தேவியை விடவும் குணம்; மூன்று வயதினாலேதான் மூத்தவன். சில நேரங்களில் குணத்தின் சகோதரிகள் தாயம் விளையாடாமல் விட்டு, தங்கள் வீட்டுச் சோலிகளில் மூழ்கிவிடும் போது; இவனும் தேவியும் தான் தனியே இருந்து கொண்டு அங்கே தாயவிளையாட்டை விளையாடுவார்கள். குணத்துடன் சேர்ந்து தாயம் விளையாடும்போது தேவி ஒரு நிலையில் நிலத்தில் இராள். கால்களை பக்கவாட்டில் மடித்து வைத்துக்கொண்டு, கையையும் ஒரு பக்கம் ஊன்றியபடி சரிந்திருந்தவாறு - மற்றக் கையால் கட்டைகளை இரண்டு தடவைக்குப் போட்டாளென்றால், அடுத்ததடவைக்கு காலைமடித்து நேராக இருந்து கொண்டுதான் கட்டைகளை உருட்டுவாள். காய்களுக்கு ஓட்டமில்லாமல் தடைப்பட்டுப்போய், தாயம் போடவேண்டிய நெருக்குவாரத்தில் இருக்கும் போது. 'சனிப்பிடிச்சதாயம் சரியான நேரத்துக்கு விழுந்து துலைக்குதில்லை. மட்டம்மட்டமா கப்பறை கப்பறையா விழுந்தெல்லே தரித்திரப்பாடாய் இருக்குதெனக்கு. s
என்று அந்தரப்பட்டுக்கொண்டு இருப்பாள்.
குணத்துக்கு சில வேளைகளில தாயக் கட்டைகள் வாய்ப்பாக

শুৈ১২ தீபஅேருளானந்தம்
விழுந்துகொண்டிருக்கும்.
'ஈரெட்டு, இருச்சோனாலு, மூவாறு, இருத்தாயம், ஒரஞ்சு என்று சொல்லிச் சொல்லி விடாமல் தாயக்கட்டைகளை உருட்டி - ‘பா’நாலு - என்று
சொல்லிமுடித்துத்தான் மூச்சை உள்ளுக்கு இழுக்கும் அளவுக்கு அவன் இருப்பான்.
ஆட்டம் இழக்காமல் இப்படி அவன் எண்ணிக் கொண்டிருக்க அவள் முகம் அழுவார் மாதிரிப் போய்விடும்.
ஆனால், குணத்துக்கு இப்படி விழுவது மாதிரி கட்டைகள் உருண்டு அவளுக்கு வாயப் தி து விட் டால் , மகிழி ச் சியில கணி களர் கலங்கிவரக்கூடியதாகவும் அவள் சிரித்திருப்பாள். படிக்கின்ற காலத்தில் இப்படியாகத்தான் அந்தத் தாயவிளையாட்டினாலே, தேவிக்கும் குணத்துக்குமிடையில் ஒரு நெருக்கமான அன்பு வளர்ந்தது.
ஒரு நாள் கூட குணத்தைப் பார்க்காமலும் கதைக்காமலும் இருக்க தேவியாலும் முடியவில்லை!
குணத்துக்கும் அதை விடப் பெரிய பாடுதான். அவனும் பள்ளிக்கூடத்தால் வந்ததும் ‘எப்போது அவள் வீட்டுக்கு வருவாள் வருவாள்' என்று அவளது முகதரிசனம் காணமட்டும் சாதகப்பட்சி போல் காத்துக்கிடப்பான்.
அவளைப் பக்கத்தில் வைத்திருந்து பார்த்து மகிழ தாயவிளையாட்டுத்தான் கைகொடுக்கும் என்பதால் அங்கு அவள் வந்தவுடனே. “தாயம் விளையாடுவமா தேவி' - என்று கேட்பான். குணத்தின் கண்களில் உள்ள ஏக்கத்தைப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே தேவியும்.
‘ஓம் விளையாடுவம்' - என்பாள். அப்போது அவளுள் பெளர்ணமி நிலாக்குளிர்ச்சி பாய்ந்து பரவும். பூப்பூவாய்ப் பூத்து மனசும் அவளுக்கு பூவனமாய்ச் சிலிர்க்கும். தேவி சிரித்தால் சொக்கையில் பல்லாங்குழிமாதிரி சிறு பள்ளமொன்று விழும். அதைவிட செவ்வந்திப்பூ சந்தண நிறத்தில் சிரிக்கின்ற அதன் அழகும் அவளிடம்.
‘அது இவளுக்குத்தான் எவ்வளவு முகவசீகரத்தைக் கொடுத்திருக்கு! என்கிறதாய் குணம் எண்ணிவியப்பான். “பூ மலர்வது போன்ற புன் சிரிப்பிலே அவள் முகம் மலர்வதை அவன் பார்த்துப் பார்த்து இரசிப்பான். இப்பொழுது குட்டைப் பாவாடைகளையெல்லாம் தேவி போடுகிறதில்லை. குணத்தின் சகோதரிகள் போட்டுக் கழித்த சட்டைகளையெல்லாம்

Page 13
8 பருவக் காற்று அவளுக்குக் கொடுப்பதால் மாறிமாறிப் போட பல சட்டைகள் அவளிடமாக இப்போது இருக்கின்றன.
‘'இப்ப எங்கடை வளத்திக்கு கிட்டத்தட்ட தேவியும் வந்திட்டாள். இப்ப நாங்கள் குடுக்கிற சட்டையெல்லாம் அவளுக்கெண்டே அளந்து தைச்சது மாதிரி கணக்காய் இருக்கு”
என்கிறதாய் சகோதரிகள் கூடிக் கதைக்கவும் குணமும் அதைத் தன் காதால் கேட்டு விட்டான்.
அப்படி அக்காமாரெல்லாம் சொன்னதற்குப்பிறகு. அவனுக்கும் இப்பொழுது அவளைப்பார்க்கையில் வியப்புத்தான்!
கொழுகொம்பைத் தேடும் கொடி போல செளந்தர்யப் பொலிவு காட்டும் அவளது முக்கிய அங்கங்கள் சட்டையை முட்டிக்கொண்டு உள்ளாடை மறைப்பை வேண்டி நிற்பதாக அவனும் காண்கிறான்.
துள்ளுகின்ற குழந்தைப்பருவமும் துளும்புகின்ற கன்னிப்பருவமும் சேர்ந்தது போன்றுள்ள அவளைப் பார்க்கும் போதெல்லாம் இப்போது இவனுக்கு ஒரு போதை மயக்கமாக இருக்கிறது.
இதற்குள்ளே அந்த மாதம் தீபாவளிப் பண்டிகையும் வந்தது.
பண்டிகைக்கு முதல் நாள் குணத்தின் வீட்டில் வந்து ஆடும் சுவையுமான புதிதான பலகாரங்களை சாப்பிட்டுப் போனவள்தான் தேவி - அதற்குப் பிறகு இரண்டு நாட்களாக குணத்தின் வீட்டுப்பக்கமாக தேவி வருகிற சிலமனைக் காணவில்லை!
தேவி அங்கு வராததால் இந்த இரண்டு நாட்களும் தவித்துப் போய்விட்டான் குணம்.
அவள் ஏன் வரவில்லை? ஏன் வரவில்லை? என்ற கேள்வி அவன் மனதை இடைவிடாமல் துளைத்துக் கொண்டேயிருந்தது.
‘இனிமேலையா அவள் இங்காலைப்பக்கம் வராம விட்டிடுவாளோ?
என்பதாய் நிைைனத்துப் பார்க்க அவனுக்கு அழுகையே வந்து விடுமாப்போலும் இருந்தது.
இந்த இரண்டு நாட்களும் பள்ளிக்கூடம் முடிந்து வந்து வீட்டில் இருக்க இருப்புக் கொள்ளாமல் அவன் தவித்தான். ஒரு மோப்ப நாயைப் போல அவன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்தான்.
இளங்கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெழுகப்பட்டிருந்த விறாந்தையில் வெள்ளை நிறச் சோக்கால் கீறி வைத்திருந்த தாயக் கோடுகளை புத்தகத்தை

୪କ୍ତ நீ/அருளானந்தம்
விரித்து வைத்திருந்தவாறு பின்னேர வேளையில் அவன் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வீட்டுக் கோடிப் புறத்திலுள்ள நாவல் மரம் நன்றாகப் பழங்கள் பழுத்ததால் நிலத்தில் சொரிந்து கிடந்தன. மரத்தின் இலைப்படுக்கையின் கீழ் நல்ல நிழல் குளிர்ந்திருந்தது. இவன் அந்தப்பக்கமாக போய்நின்று கொண்டு, விரல் நுனிகளிலே தன் உடற் பாரத்தை ஏற்றி குறுக்கு வேலியால் அங்காலே எட்டிப் பார்த்தான். பிறகு உதிர் கனிகள் பொறுக்குமாப்போல நின்று, குனிந்து நிமிர்ந்தபடி கனகம் ஆச்சி வீட்டுப்பக்கமாக, பார்த்துப் பார்த்து இவனும் சோர்ந்து போனான். அந்த நேரம் வீசிய கீழ்க்காற்று, அங்குள்ள நிலவடலி ஒலைகளை அசைத்து பேய் இரைச்சல் எழும்ப வைத்தது. அந்த இரைச்சல் சப்தம் அவன் மனதிலும் இனந்தெரியாத சோகத்தைக் கிளர்த்தியது. அவளைக் காணத ஏக்கத்தால் அவனது மனம் தவித்துத் தவித்து உழன்றது.
அமாவாசை கழிந்து அன்று இரண்டாவது நாள். ஆகாயத்தில் துளிர்த்திருந்த நட்சத்திரக் கொத்துக்களின் துல்லியமான வெளிச்சக் கீறல்கள் வாள் வீச்சுகளாக மின்னின. விளக்கிக் காட்டவோ விவரித்துக் கூறவோ ஒண்ணாத இயற்கையின் எண்ணற்ற ஒலிகள் இராவின் இன்னிசையாயப் ஒலித்துக்கொண்டிருந்தன. குளிர்ச்சியான அந்த ராப்பொழுதிலே - வெண் சங்கிலே உள்ள கதிர்காமத்து விபூதியைப் பூசி முருகனைக் கும்பிட்டு விட்டு வந்து;
'தம்பி தாயம் விளையாடுவம் வாருமன்” என்று பெரியக்கா குணத்தைக் கூப்பிட்டாள்’
“எனக்குப் படிக்கக் கணக்கக் கிடக்கக்கா” என்று சொல்லி குணம் சறுக்கப் பார்த்தான்.
‘என்ன புதுசாய் இப்ப கணிசமான திருத்தம் தம்பீயிலை வந்திருக்கு! ரெண்டு நாளா விளையாட்டேயில்லாம ஒரே புத்தகப் படிப்பாயிருக்கு. என்ன விசயம்?”
சொல்லிவிட்டு அவள் சொண்டுக்குள் சிரித்தாள்.
அக்கா சொல்லிவிட்டு எதை நினைத்துக் கொண்டு சிரிக்கிறாள்? ரகசியத்தைப் புரிந்து வைத்த பூடகமான சிரிப்பாயிருக்குமோ?
அந்தக் கள்ள மனம் ஒரு பக்கத்தில் ‘பக்குப்பக்கு' என்று அடிக்கத் தொடங்கியது குணத்திற்கு.
'இல்லக்கா ஒரு ஆட்டம் விளையாடுவம்'
குணம் சமாளித்தான்.

Page 14
I0 பருவக் காற்று குணத்துக்கு நேரே மூத்தவளாய் இருக்கும் சகோதரியை மட்டும்.
'நீர் இந்த ஆட்டத்துக்கு மட்டும் பொறுத்திரும். அடுத்த ஆட்டத்துக்கு நீர் சேரும்’ என்று பெரிய அக்காள் சொன்னாள்.
பிறகு மூன்று அக்காள்மாரும் தாயக் கோட்டின் மூன்று மனைகளுக்கும் நேராக இருந்து கொண்டனர்.
ஒரு மனைக்கு நேராக குணம் இருந்து கொண்டான்.
'அவளைக் காணவில்லையே' என்ற துயரம் அப்போது அவனை வாட்டியது. மனையிலுள்ள காய்களை தோய்வதற்கு தாயக்கட்டைகளை எல்லாரும் உருட்டிப் போடுகிறார்கள்.
“இந்தா ஒரு தாயம் விழு” - என்று கேட்டுக் கொண்டு கையைச் சுழற்றி தாயக்கட்டைகள் நிலத்தில் ‘புரண்டெழப் போடுகிறாள் பெரிய அக்காள்.
கட்டைகள் புரண்டு நிலைத்துக் கிடந்து மூன்று எண்களைக் காட்டுகின்றன. அதற்குப்பிறகு நடுவில் அக்கா கட்டைகளை உருட்டிப்பார்க்க ‘இரண்டுதான் அவளுக்கும் வந்தது.
'தெண்டு தெண்டு. இப்பிடியே தோயாம இருந்து கொண்டு தெண்டு’ - என்கிறாள் எரிச்சலாக,
மூன்றாமவள் முதல் தரமே உருட்ட 'தாயம் விழுகிறது. இரண்டு கட்டைகளையும் இருவிரல்களிடையே இணைத்தெடுத்துத் தூக்கி எல்லாருக்குமாகக் காட்டி ‘பாருங்கோ வடிவாப்பாருங்கோ. தாயம். தாயம் விழுந்திருக்கு”
என்று சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு.
மீண்டும் தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறாள். அவளுக்கு லக்' 'நாலும் எட்டும் விழுந்தாற் பிறகு ‘இரண்டு எண் கடைசியாக விழுகிறது. ‘மூண்டு காயும் தோய்ந்தாச்சு’
என்று பெரிதாகச் சொல்லிக் கொண்டு, முக்கோணவடிவுள்ள மனையை விட்டு காய்களை கீழே உள்ள சதுரத்துக்குள் நகர்த்தி அவள் வைக்கிறாள். பிறகும் ஓட வேண்டிய இரண்டு எண்களுக்காகவும், காயை அதிலிருந்து கணக்குப் பண்ணி எடுத்து அவள் வைத்தாள்.
'தோயிறது. தோயிறது. எண்டத்தான் எங்கடை தேவிப்பெட்டை சமஞ்சது ஞாபகம் வருகுது. தேவிக்கு நேற்றைக்கு குப்பைத் தண்ணி வார்த்தாச்சாம்1. எடி அவள். அப்பக்காற ஆச்சியின்ரை சீலையைப்
பிடிச்சுக்கொண்டு தொங்கிக் கொண்டு திரிஞ்சவள் - இப்ப பெரிய

শুৈ১২ நீ/அருளானந்தம் மனிசியாயிட்டாள். ம். நல்லதுதான். அந்த ஆச்சியும் அவளின்ரை உடம்புவாகுவைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டுதான் திரிஞ்சவ. இவளென்ன நாளைத் தள்ளிக் கொண்டு போறாள் பிள்ளையெண்டு. இப்ப - இப்ப கிழவிக்குப் பெரிசா சந்தோஷமாயிருக்கும்.!
பெரிய அக்கா முகம் முழுக்க பூரிப்புடன் சொல்லி விட்டுச் சிரிக்க மற்ற அக்காமாரும் அவளுடன் சேர்ந்து நன்றாகச் சிரிக்கிறார்கள். தம்பியை அவர்கள் இந்தக் கதைக்குள்ளே கணக்கெடுக்கவில்லை. மகளிர் மட்டும் என்ற அளவில் தங்களுக்குள்ளே நடக்கும் கதையில் தம்பியை சேர்த்துக் கொள்ளாதது போல் இருந்து அவர்கள் மட்டும் இந்த விஷயத்தைக் கதைத்தார்கள்.
ம்.! பெட்டை பெரிசாயிட்டாள். பாவம் ஒருவருமில்லாம தனியாளா ஒருபக்கம் மூலையில இருக்கப் போகுது...!
என்று பெருமூச்சு விட்டபடி சொன்னாள் பெரியக்கா.
இந்தக் குடும்பத்தின் பொறுப்பு முழுவதையும் தன் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு சுமக்கின்றவள் அவள். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அதனால் அனுபவித்துப் பக்குவம் அடைந்தவள் அவள். இதன் காரணமாக தேவியையும் அவள் நினைத்துப்பரிதாபப்பட்டாள்.
அவள் அப்படியெல்லாம் கதைக்கும் போது தாயம் விளையாடுவதும் அவர்களிடத்தில் தடைப்பட்டது. குணத்தின் முறைதான் இந்த முறை கட்டைகள் உருட்டுவது என்பதால் அவர்களின் கதையைக் குழப்பாமல் தாயக்கட்டைகளை கையில் வைத்துக்கொண்டு அவற்றை நிலத்தில் தட்டி தாளம் போட்டவாறு அவனும் தலையைக் குனிந்திருந்தபடி யோசித்துக் கொண்டிருந்தான். அவர்களின் இந்தப் பேச்சுகளெல்லாம் அவன் இதய நிலத்தில் தூவிய விதைகள் போல் வீழ்ந்தன.
‘இனி இந்த வீட்டுப்பக்கமாய் அவள் வருவாளா..? வந்தாலும் என்னோடை முந்தியது மாதிரிக் கதைப்பாளா..?” என்கின்ற மனவருத்தத்தில் அவன் இருந்தான். இதற்குப் பிறகு தாயம் விளையாடுவதில் மனம் ஒண்ணாததால் ஏதோ கடமைக்கு அவ்விடத்தில் இருந்து அவர்களுடன் அந்த ஆட்டத்தை அவன் ஆடி முடித்தான்.
அடுத்த நாள் விடியலில். உதயத்தின் ஒளி படர்வதற்கு இனி ஒரு நிமிஷமோ இரண்டு நிமிஷமோ என்றிருக்கும். அந்த நேரம் நித்திரை விட்டெழுந்து:
‘இன்றையோடு அவள் இந்த வீட்டுப்பக்கம் வராமல் விட்டு ஒரு மாசம்

Page 15
I2 பருவக் காற்று முடியுது - என்று அவள் வராத நாட்களை நினைத்து கணக்குப் பார்த்து கவலைப்பட்டுக் கொண்டு, பிறகு நேரம் செல்லவும் பள்ளிக்கூடம் போனான் குணம். w இந்த வருடம் ஏ.எல் பரீட்சையும் நடைபெறுவதற்கு, நாள் கிட்டியதாகிவிட்டது - என்ற கவலையும் அவனிடம் இல்லாமலில்லை!
பள்ளிக்கூடத்தால் பின்னேரம் வந்து அக்கா எழுதிக் கொடுத்த சாமான் பட்டியலையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு அவன் சயிக்கிளிலே கடைத்தெருவுக்குப் போனான். அங்கே கடை ஒன்றில் எல்லாப் பொருட்களையும் வாங்கி கரியலில் கட்டிக்கொண்டு, வேளைக்கு அவன் வீட்டுக்குத் திரும்பினான். சயிக்கிளை ஸ்ரான்டில் நிறுத்தி விட்டு கயிற்றை அவிழ்த்து கரியரிலிருந்து பையைத் தூக்கி எடுத்துக்கொண்டு தலைவாசலுக்குள்ளாலே போக.
விறாந்தையில் தேவி இடையை துவள விட்டவாறு ஒயிலாக நின்றாள். எப்பூவினையும்விட அந்த மெலிவுக்கும் மெலிவான ரோஜா இதழாய் அவள் இருந்தாள். பனிச்சுமை தாங்காத பூவாக அவள் குலுங்கினாள். மலர்ச்செடி அசைகிறமாதிரி ஒரு மென்மை நளினம் அவளிடம் தெரிந்தது.
குணம் அவளை முழு விழியாய் அழுந்திப் பார்த்தான். அந்தப் பார்வை துளைக்கவும் அவள் திணறினாள். திணறல் இன்பமானதிணறல். மூச்சுமுட்டியதிணறல். மயக்கமூட்டிய திணறல். உடனே - பாளை விரித்தது போல் பளிச்சென்று சிரித்தாள் தேவி. அவளது மனதுக்குள் புகுந்த சந்தோஷம் இமைச் சிறகை படபடக்க வைத்தன.
பழைய தேவியா இவள்? என்று எண்ணி வியந்தவாறு தலையிலிருந்து கால்வரை அழகு மிளிரும் அவளது கவர்ச்சிகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும் என்று நினைத்தான் குணம். அவனது கலைக் கண்கள் அவளது அழகின் பலவிதத் தோற்றங்களையும் கண்டு கழிக்கத் துடித்தன. இந்த முப்பது நாளுக்குள்ளே அவளிடத்தேதான் எத்தனை எத்தனை அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன?
முன்பு இருந்த மஞ்சள் முகம் ரோஜா மலர்போல் சிவத்தது எப்படி? கண்களில் அந்தச் சந்திர ஒளி எப்படி வந்து புகுந்தது? கன்ன உச்சிப்பக்கமாக கூந்தலிலே ஒரு வளைவு - இதழ்களிலே ஒரு விரிவு - புருவத்திலே ஒரு ஏற்றம் - இந்த அங்கங்களின் வளைவு நெளிவுகளையெல்லாம் கச் சிதமாய் மாற்றி அமைத்திருக்கும்; பெண்மைக்களித்திருக்கும் அந்தப் பெருங்கொடையை என்னென்று வியப்பது என்று அவன் கவி மனம் உள்ளே மெளனமாகக் கவிதை பாடியது.

リ人。 27% > நீரிஅருளானந்தம் 13
குணத்தைப் புதிய சொந்தத்துடன் பார்த்து உணர்வுகளைச் சீண்டுகிற சலங்கைச் சிரிப்புச் சிரிக்கிறாள் அவள்.
அது மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த மோகச் சிரிப்பு. இவன் அவள் சிரிப்பதைப் பார்த்து கற்சிலை போல செயலற்று நிற்க; அவள் அவ்விடம் நின்று தலைப்பின்னலை வளைத்து கையில் பிடித்தபடி சிட்டாகப் பறந்து விட்டாள். செல்லும்போது அவளிடமிருந்து செவ்வந்திப்பூ - மணம் மிகுந்த காற்று வீசியது மாதிரியானதொரு உணர்வு எழுந்தது குணத்திற்கு.
நாளை அவள் வருவாளா, வருவாளா? என்ற நெஞ்சைச் சுடும் நினைவுகளோடு அன்று இரவு படுக்கைக்குப் போனான் குணம். குழந்தைகள் பால் புட்டியை இறுகப் பற்றிக் கொள்வதுபோல, படுக்கும்போதும் அவள் நினைவாக அந்தத் தாயக் கட்டைகளை அவன் கைக்குள்ளே இறுகப்பற்றி வைத்துக்கொண்டு படுத்தான். ஆனாலும் அன்று இரவு அவனுக்கு தூக்கம் தூரமாயிற்று.
அடுத்த நாள் மாலை மயங்குகிற வேளையில் குணத்தின் வீட்டுக்குத் தேவி வந்தாள்.
மூத்த அக்கா கைக்குள் ஒரு பொருளை பொத்திப்பிடித்தபடி அவளிடம் வந்து
‘இந்தாரும் பொம்பிளை உமக்கொரு பிறசண்ட்’ என்றதும். விழிமலர. ‘என்னக்கா. என்னத்துக்கு அக்கா பிரசண்ட் தாறியள்?”
என்று குழந்தைக்குரிய ஆர்வத்தைக் காட்டியபடி மகிழ்ச்சியுடன் அவள் (335'LT6i.
'இது உமக்கெண்டால் போட நல்ல வடிவாயிருக்கும். ஒண்டுமில்லாத முண்டச்சியாயிராம இதையெண்டாலும் போட்டிரும். ம் என்னட்டக் காசிருந்தா ஒரு கூட்டம் காப்பே செய்தருவன். என்ன செய்யிறது.” சொல்லிவிட்டு அக்கா அதைக்கொடுத்தாள்.
அதைக் கையில் வாங்கிப்பார்த்த வேளை இவள் ‘அக்கா. என்று ஆழமாகவும் பாசமாகவும் அழைத்த தொனியிலேயே தேவி நன்றியைச் சொல்வது போல குணத்துக்கு இருந்தது.
அவள் மெட்டியை அதிலேயே வைத்து காலில் போடும் போது இவன் அவளது மருதாணியிட்ட காலைப் பார்த்தான். பூக்களை எடுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளும் சுகத்தைவிட அவளது கால் பாதங்களை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டது அவன் மனம். இருவருக்கும் இடையில் இருந்த இந்த ஆசைகள் வளர்ந்து கிளைவிட்டுப் பூத்துக் காய்த்து பழமானதுமான பருவத்துக்கும் பிறகு வந்துவிட்டன.

Page 16
14 பருவக் காற்று இருவரும் தமது உள்ளத்திலிருப்பதை வெளிப்படையாகச் சொல்லமுடியாத தவிப்பிலே இருந்தார்கள். வருடங்கள் அலைகளைப் போல ஓடின. ஓடிக்கொண்டுமிருந்தன. குணம் அளவான படிப்போடு வேலை தேடித் திரிந்தான். சகோதரிகளின் திருமணக் கவலை அவனது நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது.
குணத் தையே நினைத்து நினைத்து தேவி மனக் கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள். காதல் மயக்கத்தில் கண்களை மூடும் போதெல்லாம் குணத்தையும் தன்னையும் மணவறையில் இருக்கவைத்து கனவுகளைக் கண்டுகொண்டிருந்தாள். நாச்சியாரின் கண்ணன் மீதான கைத்தலம் பற்ற கனவு காணும் நிலைமையிலேயே இவளும் கனவு கண்டு கொண்டிருந்து, அந்தக் கனவுகளோடு பொங்கிச் சிரித்தாள். இந்த உலகில் உண்மைக் காதல் ஒன்றே இன்பம் இன்பம் என்று நினைத்து, இன் பத்தில் திளைத்திருந்தாள்.
கனகம் ஆச்சிக்கோ கை நடுக்கம் அதிகமாகிவிட்டது. கண்பார்வையும் கிட்டத்தில் ஏதோ நிழல் தட்டும் என்ற அளவுக்குப்போய்விட்டது. இதன்பிறகு சில நாட்களாய் அப்பமாவை சட்டியிலூற்றி சிலாவும் போது, சட்டியும் பலமுறை கைதவறி கீழேயும் சாம்பலில் விழுந்து விட்டன. இதற்குப் பிறகு அப்பம் சுட்டு விற்கிற வியாபாரம் சுகப்படும் என்ற நம்பிக்கை கணகம் ஆச்சியிடம் அறவே ஒழிந்தது. இதனால் - உறவுக்கூட்டம் வேப்பிலை அடித்த வார்த்தைகளைத்திணிக்க; தேவியைப் பேசி வந்த சம்பந்தங்களில் “இந்தச் சம்மந்தம் அதுக்குள்ளயெல்லாம் திறம்தான்” என்று தன் நிலைமையையும் பலமுறை யோசித்துப்பார்த்து, திடீரென ஒரு நாள் கனகம் ஆச்சியும் ஒரு முடிவெடுத்து விட்டாள்.
தேவியின் கலியாணத்துக்கு அடுக்குப்பண்ணி நாளும் குறித்தாகிவிட்டது. தேவி இந்த அடுக்குகளையெல்லாம் பார்த்து நடு நடுங்கிப் போனாள். இதனால் வாடிக்கருகிப்போன சோளப்பயிராய் அவள் லட்சணமும் குன்றினாள். தன்னை வேர்கள் பாதியாயிருக்க முறிய முறியப் பிடுங்கி, இடம் மாற்றுவதாக நினைத்து மிகவும் அவள் மனவேதனைப்பட்டாள்.
குணத்தின் சகோதரிகளெல்லாம். ‘உனக்கு நல்ல சுழியடி நீ நல்ல அதிஸ்டக்காரி. லக்குக்காரி.”
என்று சொல்லச் சொல்ல அவள் அம்புபட்ட பறவையாக மனசுதுடிக்க, மருகித்தவித்தாள். அவளுக்கு அழுகையே வந்து விடுமாப்போல் இருந்தது.
அவர்கள் சொல்வதைக் காதில் கேட்க விருப்பமில்லாமல், அந்த இடத்தை விட்டு விருட்டென ஓடி அவள் தன் வீட்டுக்குச் சென்றுவிட.
‘வெக்கப்பட்டுக் கொண்டு ஒடீட்டாள் பெட்டை”

ඊඛ. நீ/அருணானந்தம்
என்று குணத்தின் அக்காமாரெல்லாம் நினைத்துக் கொண்டார்கள்.
15
ஆனால், தேவி தன் விதியை நினைத்து, வெடித்துச்சிதறுகிற அழுகையோடு இடியேற்றுச்சாய்ந்த மரம் போல் கட்டிலிலே போய் விழுந்தாள். கண்ணிர் சரிந்த குடத்துத் தண்ணிராகச் சிந்தி தலையணையை நனைத்தது. ஏக்கப் பெருமூச்சு பாலைவனத்து உஷணக் காற்றைப்போல், வெப்பமாக அவளிடமிருந்து வெளியேறியது. தன் காதல் கைகூடாமற் போனதை நினைத்து நினைத்து, உயிரே இற்று விட்டதைப் போலானாள் அவள். கவலை என்பதே என்ன என்று அறியாத அவள் மனசை, கரையான் அரிப்பது போல் அவனுடைய நினைவு ஒரு பக்கம் இருந்து அரித்துக்கொண்டேயிருந்தது.
அந்த வருடமும் வழமை போல் அந்த நாவல் மரம், சிலிர்த்துக்காய்த்துப் பழங்கள் பழுத்து நிலத்தில் சொரிந்து கொண்டிருந்தன. உருண்டுதிரண்ட கரு நாவற்பழங்களும், செங்காய்களும் குறைவின்றி கிளைகளில் எங்கும் குலுங்க விளங்கின. மரத்துப்பழங்களையெல்லாம் பலவகைப்பறவைகள் வந்து தின்றுகொண்டு தமது மதுரவாத்திய இசையை கூட்டிக்கொண்டிருக்க, அந்தத்தனிக் குயில் மட்டும் தன் துணையைத்தேடிச் சோகமாகக் கூவிக்கொண்டிருந்தது. குயிலினது வாய்விட்டு அலறும் வருத்தம் எல்லா இடத்திலும் சூழ்ந்தது. குடைபோல கிளைகவிழ்ந்து நின்ற அந்த மரநிழலுக்குள்ளே, அவனும் தனியனாய் அதிலே நின்றுகொண்டிருந்தான்.
இன்றுமட்டும் துணிச்சலாக தனியே அவனைத்தேடி அங்கு போனாள் தேவி.
மரத்தடியை நோக்கி நடக்க நடக்க, கால்கள் பின்னி ஒரு தளர்ச்சி ஏற்பட்டது அவளுக்கு. பூமிக்கடியில் மூச்சை மறந்திருப்பதான நிலையில் இருக்குமாப்போல, உடல் உறுதியற்று கைகாலும் சோர்ந்து போனது மாதிரி அவளுக்கு இருந்தன. அந்தத் தரையில் முளைத்துக்கிடந்த ஒட்டுப்புற்கள் கால்களில் ஒட்டியதும், ஈக்குப்போல தண்டுகளை நீட்டி நின்ற நாயுருவி ஒட்டுக் காய்களை சட்டையில் சடைசடையாய்ப் பதித்ததையும் கவனியாது, இழப்பு என்கிற அந்த ஒரேயொரு வேதனை உணர்வைமட்டும் மனத்தில் தாங்கியபடி, உணர்ச்சியற்ற அளவிலே செதுக்கின மரப்பொம்மை போல் அவனிடத்தில் போய் அவள் நின்றாள்.
‘'தேவி..!” ஏக்கம் கலந்த பரிதவிப்புடன், அவன் அழைத்தான். அவளுக்கு அழுவதைத்தவிர வேறு ஒரு வழியுமே தெரிகின்றதாக இல்லை.
தண்ணிரில் வீழ்ந்த காகிதம் போன்று கண்ணிரால் நனைந்த அவளது கன்னங்களைக் கண்டுவிட்டு இவ்வளவு கண்ணீரையும் இவள் தன் கண்களுக்குள்ளே வைத்திருந்தாளா?
என்ற நினைப்பில், குணத்துக்கும் சதுரம் நடுங்கிவிட்டது.

Page 17
6 பருவக் காற்று அவனுக்கும் கண்கள் கலங்கி, கண்ணிர் இமை விழிம்புக்குள் கரை கட்டி நின்றன. அவள் உருவம், அவன் கண்பார்வைக்குக் கலங்கியதாகத் தெரிந்தது.
“எனக்குக் கலியாணம் முற்றாயிட்டு கலியாணத்துக்கு தியதியும் வைச்சிட்டினம்!”
அவளது கண்ணிமைகளில் நீர்க்கனம்.
9y
elgs. . . . . . . 29کH35[..... நல்லது தானே. எச்சிலோடு வேதனையையும் சேர்த்து விழுங்கினான் அவன்.
‘'எது நல்லம். எனக் கெண் டால் இதெல்லாம் துண் டாயப் விருப்பமில்லை. என்ரை விருப்பமெல்லாம் சாம்பலாப் போச்சு’
சொல்லும்போது தொண்டை அடைத்தது மாதிரி வந்தது அவளுக்கு. விசும்பினாள் அவள்.
‘என்ரை நாலு அக்காமாரும் என்னை நம்பித்தான் இருக்கினம் தேவி. நான் ஒரு ஆளாய் வர எவ்வளவு காலம் போகுமோ தெரியேல்ல. y
குணம் வேதனைகளின் விழிம்பில் நின்றபடி சொன்னான்.
கனவுகள் கற்பனைகள் காற்றாய்ப் போக, தூளாகிப் போன மாதிரி அவன் இருந்தான்.
'உங்கடை நிலைமையைப் பற்றியும் எனக்குத் தெரியும். உலகம் ஒண்டும் தெரியாதவளா நான் இல்ல. எண்டாலும் என்ன செய்யிறதெண்டு எனக்கு ஒணி டுமாதி தெரியேல் ல குணம் . எனக் கொணி டுமே விருப்பமில்லாமக்கிடக்கு. எப்பிடிச் சீவிக்கிறதெண்டெல்லாம் எனக்குக் குழப்பமாயிருக்கு. ஆனா சத்தியமாச் சொல்லுறன். குணம் உங்களை என்னால மறக்கேலாது. மறக்கவும்மாட்டன் குணம்.
சொல்லி விட்டு உதடுகளை இறுகக் கடித்தபடி அவள் நின்றாள். உதடுகள் பற்களில் அழுந்த, கண்ணிர்பணித்து இமைகளில் திரண்டது. இமைமடிப்பில் தேங்கிய கண்ணிர் கட்டுடைந்தாற்போல் கன்னங்களில் பிறகு வழிந்தது. ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள் அடர்ந்து நிலத்தின் மீது விழுந்தன. உலர்ந்துபோன அந்த மண் அதைக்குடித்தது. மேலும் அதிலே நிற்கிறதுக்கு நிலைகொள்ளாது, அந்தக் கல்லும் முள்ளுமானதரையில் அவள் நோவு தெரியாத அளவில் நடந்து போனாள். அவள் போகும் போது இழப்பு என்ற துயரம் உடல் முழுவதும் தின்றுவிட்டது மாதிரியான ஒரு சோகம், அவளது உடல் சோர்விலே தெரிகின்றதை குணம் பார்த்துக் கொண்டு நின்றான்.

リ人。 ৯ৈ২ நீ/அருணானந்தம் 17
அதற்குப்பிறகு தேவிக்கு திருமணம் நடந்ததும், அது முடிந்து அவள் தன் கணவனுடன் கொழும்புக்குப் போனதும் நடந்து முடிந்த கதை.
அதையெல் லாம் அங் கிருந்து நெடு நேரமாய் நினைவில் மீட்டுக்கொண்டிருந்தான் குணம். இந்த நேரம் அவனது தோளிலே யாரோ தட்டுவதைப் போலிருந்தது.
'யார் தட்டுகிறார்கள். என்று நினைத்து அவன் திரும்பிப் பார்த்தான். 'உந்தப் பெற்றோல்மாக்ஸ்சுக்கு ஒருக்கா காத்தடிச்சு விடும் குணம்.
பக் பக்கெண்டுது நூரப்போகுது போலை”
விதானையார்தான். ! குறள் சுருட்டைக் கூட கீழே துப்பாமல் பற்களாலே நசித்துப்பிடித்தபடி, சுருட்டின் 'சுடு நாற்றம் அதிலே சூழவும் நாறுகிற அளவில் நின்றுகொண்டு சொன்னார்.
‘எங்கேயும் வந்து நிம்மதியைக் கெடுக்கிற பெருத்தசனியன்’
என்றதாய் மனசுக்குள் அவரைத் திட்டித் தீர்த்து விட்டு. பிறகு பெற்றோல் மாக்சுக்கு காற்றடித்து நிரப்பி கொழுக்கியில் அவன் தூக்கிவிட்டான்.
செத்த வீடு ஒரு பாடாய் முடிந்தது.
செலவுக்கு வீட்ட வாருங்கோ என்று உரித்துடையவரெல்லாம் அங்கு நின்றுகொண்டு சொன்னார்கள்.
மூன்றாம் நாள் - நாலு சனம் போய் வாறமாதிரி இவனும் அங்கே போனான்.
படலையைத் திறந்ததும் அவனது மனத்தில் பழைய நினைவுகள் வந்து சூழ்ந்தன.
தனியனாக இருக்கும் அவனுக்கு மரகதப் பசுமையை இழக்காத இனிமையான பழையநினைவுகளே மீண்டும் மீண்டும் மனத்தில் குதியாட்டமிடுகின்றன.
படலைக்கப்பின் அருகே நின்ற முது பூவரசு மரம் மஞ்சள் பூப் பூத்துக்கொழித்திருந்தது. பூக்களின் மையத்திலுள்ள பொன்னுறுப்புகள் நாக்குகளை நீட்டிக்கொண்டிருப்பதான மாதிரியாக அழகாய்த் தெரிந்தன. மரத்துக்கு அருகில் நின்று அந்தப் பூக்களின் உட்காம்பின் அழகை இரசித்துக் கொண்டு அவன் நின்றான்.
இத்தருணம் எதேச்சையாக வாசல் பக்கமாக வந்த தேவி அவனைக் கண்டுவிட்டாள். உடனே அவன் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு அவளும்போனாள். அவனைப் பலவருடங்கள் கழித்துக் கண்டுகொண்டதில் அவளுக்கு அளப்பரிய மகிழ்ச்சியாயிருந்தது.
* குணமண்ணை சுகமாயிருக்கிறியளா?”

Page 18
18 பருவக் காற்று “ஓம் சுகம்தான்!” அவன் சொல்லி விட்டு அவளின் முகத்தைப்பார்த்தான். அவளைக் கிட்டவாய் இப்பொழுது பார்க்கையில் முன்பு பார்த்த தேவியின் முகம் இப்பொழுது அவளிடம் இல்லை என்றே அவனுக்கு எண்ணத்தோன்றியது. நிழலடித்த செடியாய் - அவள் நிறம் மாறிப்போய் இருப்பதும், அவனுக்குத் தெரிந்தது.
என்றாலும் ஒரு தாய்மையின் பூரணப்பொலிவு முகமெல்லாம் பூத்துக்கிடப்பதை இப்போது அவன் கண்டான்.
‘'தேவி. நீங்கள் எல்லாரும் சுகமாயிருக்கிறியளா?”
எல்லாரும் என்பதை அவளுடைய புருஷனும் அடங்கலான, ஒரு அருத்தத்தில் வைத்துக் கேட்டான்.
‘ஓமண்ணா. எல்லாரும் சுகம். கடையாவாரம் முழுக்க பொறுப்பாத்தானே இருந்து பாக்கவேணுமெண்டு சொல்லிட்டு அவர் செத்தவீட்டுக்கு வராமல் விட்டிட்டார்”
சாதுவாகமுகம் வாடிவிட்டது அவளுக்கு, இதைச் சொல்லும் போது.
“அது சரி. உன்ரை பிள்ளையளெல்லாம் எங்க அவயள்? ”
y
‘நீங்கள் வடிவா அவயளை காணேல்லை என்ன. சுகிர்தா, பாமா. அவள் கூப்பிட்ட கையோடு குழந்தைகள் இருவரும் அவ்விடத்திற்கு வந்து விட்டனர்.
y
‘இவர் தான் குணம் மாமா.
‘இவ்வளவு நாளும் இந்த மாமாவைப் பற்றி நீங்கள் எங்களுக்குச் சொல்லேல்லையே அம்மா..?”
பிள்ளைகள் குணத்தைப் பார்த்துக் கொண்டு வியப்புடன் இப்படித் தாயைக் கேட்டார்கள்.
தேவிக்கு திணறலாக இருந்தது.
‘இவர் எனக்கு கூடப்பிறக்காத அண்ணன் மாதிரி. உங்களுக்கு மாமா
சொல்லும் போது அவளது கண்களெல்லாம் கலங்கிவிட்டன. அவள் அப்படிக் கண்கலங்கவும் . நாவல் மரத்தடிக்குக் கீழ் கடைசியாக தன்னைப் பார்க்க அவள் வந்து, கதைத்து விட்டு கண்கலங்கிச் சென்றதெல்லாம் அவனுக்கு நினைவில் வந்தன;
அவளுடைய இரண்டு பிள்ளைகளும் ‘மாமா மாமா வென்று பிறகு அவனுடைய இருகைகளையும் ஒரு பக்கம் ஒருவராக நின்று

ඊම. நீரிஅருளானந்தம்
பிடித்துக்கொண்டார்கள்.
19
தேவியின் மூத்த மகள் அச்சு அசலாக தேவியின் உருவமாகவே குணத்தின் கண்களுக்குத் தெரிந்தாள். இதனால் பழைய ரோஜாப்பூ மாதிரி சம்பவங்கள் இப்போது முள்மாதிரி இதயத்துக்குள் கிடந்து குத்தியது அவனுக்கு.
‘நீங்கள் சந்தோஷமாயிருந்தா எனக்கதுவே காணும்”
என்று அவளைப் பார்த்து தணிந்த குரலில் சொன்னான் குணம். பழைய சம்பவங்களெல்லாம் இப்போது அவனது மனத்தில் நிழல்களாகி மங்குகின்றன.
“உங்கடை அக்காமார் ரெண்டு பேரும் கலியாணம் முடிச்சிட்டின மெண்டு சொல்லிச்சினம். இனி நீங்களும் முடிக்கலாம்தானே?”
ஆவலுடன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் தேவி. ஆனாலும் வார்த்தைகள் பலவீனப்பட தொண்டை அடைத்தது அவளுக்கு.
‘முடிக்கலாம் தான் ஆனா தாய விளையாட்டில கப்பறை விழுகிற மாதிரி எனக்கு வாழ்க்கையிலையும் ஒண்டுமே இல்லாத கப்பறை விழுந்ததா ஆகிப் போச்சு. இலக்கமே ஒண்டுமில்லாத சூனிம் தானே கப்பறை. என்ரை வாழ்க்கையும் அந்தக் கப்பறை மாதிரித்தான் ஒண்டுமே இல்லாததாய்ப் போச்சு. என்ரை வாழ்க்கையை சோபிக்கச் செய்யவிருந்த விளக்கு அணைஞ்சு போச்சு. என்னத்துக்குப் பழைய கதைகளைக் கதைப்பான். நான் வாறன் தேவி.”
வேதனை நிறைந்த பெருமூச்சோடு அப்படிச் சொல்லி விட்டு குணம் படலையைத் திறந்து கொண்டு நடையை எட்டிப்போட்டு வெளியேறினான். அவன் சொன்ன சொற்கள் எல்லாமே தளர்ச்சியுடன் தொய்ந்து தொங்குகிறது மாதிரி தேவிக்கு இருந்தது.
இதனால் தன் கண்களில் கசிந்த கண்ணிருடன் அவன் போவதை வெறிக்கப்பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி. குணத்தினது சோகத்தை நினைக்க அவளது மனம் கனத்தது. அதன் மூலம் குணத்தைப் பற்றிய பழைய நினைவு அவளிடம் ஒரு கணம் ‘மயல் காட்டி மறையாமல் நிலைத்து நின்றது.
“கப்பறை கப்பறை. கப்பறை எண்டா என்னம்மா..?” தேவியின் அருகில் நின்ற மூத்த மகள், அதைப்பற்றித் தாயிடம் கேட்டாள். தாயம் விளையாடுகிறதைப் பற்றி யாதொன்றும் இற்றை வரை அறியாதிருந்ததால், அதன் அருத்தம் ஒன்றும் விளங்காமல், அதைப் பற்றிய விபரத்தை அறிய விரும்பி அப்படியாக அவள் கேட்டாள்.
அவளுக்கு முன் தன் முகத்தைக் காட்டாமல் திருப்பி வைத்துக்கொண்டு, கையால் கன்னத்தில் வழிந்த கண்ணிரை ஜாக்கிரதையாக முதலில் துடைத்து

Page 19
20 பருவக் காற்று விட்டு;
மகளுக்குத் தேவி இப்படி விளக்கம் சொன்னாள்:
''
'கப்பறை எண்டால் ஒன்றுமே இல்லாததொரு மரக்கட்டையம்மா..!
சொல்லும்போது கூடவே அவளுக்கு விம்மலும் வந்துவிட்டது. விழி நீரும் கன்னங்களில் சரசரவென பின்பும் வழிந்தன.
எதையும் மறைக்கக் கூடிய தெம்பு என் மனதுக்கில்லையே. என்று
பிற்பாடு அவள் கவலையுற்றாள். உணர்ச்சிகளை கசியவிட்டு விடக்கூடாதே என்கிற ஜாக்கிரதை உணர்வில் கண்களைத் துடைத்துவிட்டு, வெளியே வரமுயன்ற தேம்பலை அப்படியே விழுங்கினாள்.
என்ன குழப்பம் இது? நான் இப்பொழுது இந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயல்லவா? ஏன் நான் இப்படியெல்லாம் தேவையற்ற விஷயங்களை நினைத்து உணர்ச்சிவசப்படுகிறேன்? என்ற தவிப்புடன், கொந்தளிக்கும் தன் மனத்தின் மின்னலிட்ட எண்ணங்களை வேக வேகமாக பிற்பாடு தேவி உதறினாள். சட்டென தன்னை முறி மனத்தில் நுழைத்துவிட்ட காட்சிகளை மனத்திலிருந்து தள்ளிவிட்டு, பக்கத்தில் நின்ற இளைய மகளை தன் கிட்டவாய் இழுத்து வைத்து அவளை நெஞ்சோடு தேவி அணைத்துக் கொண்டாள்.
கணையாழி
(நவம்பர், 2004) OOO

ඊඛ. நீரிஅருளானந்தம்
விளைநிலம்
வீசிக் கொண்டிருந்த காற்றினால் அசைந்த பனையோலைகளின் சலசலப்புச் சத்தத்தைக் கேட்டபடி, முருகனின் படத்தைப் பார்த்துக் கொண்டு பசுபதி கட்டிலின் மீது படுத்துக்கிடந்தார். பூஜையறையென்று மட்டுமில்லாது படுக்கையறையிலும் வேல் பிடித்து நிற்கின்ற இந்த வேலவனின் படத்தை, இப்பொழுது அவர் தன் கண் பார்வையில் எந்நேரமும் படும்படி இருக்கின்றதாயிருக்க நடுச்சுவரில் மாட்டிவைத்துக் கொண்டு விட்டார்.
இலைகள் உதிர்ந்து முட்கள் மட்டுமே எஞ்சியதைப்போலிருக்கும் முதிர்ந்த இந்த வயதில், முருகனின் திருவுருவைக் காணும் போதெல்லாம் அவரது இதயம் பண்ணிசைத்து மகிழ்கிறது.
இரவில் படுக்கையிலும் படத்தினடியில் இருந்து வரும் அந்த அகல் வெளிச்சத்தில் முருகனைப்பார்த்துக்கொண்டே, ஒவ்வோரிரவும் கண்மூடித் துயில்வதுதான் இப்போதெல்லாம் அவரது வாழ்வின் வழமையான செயல்.
பசுபதி கட்டிலின் மேல் ஒருக்களித்துப் படுத்தவாறு, கீழே நிலத்தில் பாயை விரித்துப் படுத்துக்கிடந்த தன் மனைவியையும் பார்த்தார். தன் இதயக் குரலைத் தானே உற்றுக் கேட்பவள் போல், இடது தோள் பட்டையை நோக்கித்தான் தலையைச் சாய்த்துக் கொண்டு அவள் நித்திரை கொள்வாள். இது எப்பொழுதும் அவளுக்குப் பழக்கந் தான்! அப்படி அவள் படுத்துக்கொள்வதால் அவருக்கு இரவில் விழிப்பு வரும்போதெல்லாம், அவளது முகத்தைப் பார்த்து ஆறுதலடைய இயலுமானதாக இருந்தது. இந்த முதிர் வயதில், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சேர்த்து ஒருங்கே பிணைத்து நெய்துவிட்டது போன்ற தன் மனைவியினுடைய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம்; அவருடைய மனம் சாந்தியடைகிறது.
மனைவியின் முகத்தில் பதிந்திருந்த தன் பார்வையை விலக்கி, மீண்டும் முருகனின் திருவுருவில் பதியவைத்தார் பசுபதி. ஒருகாலம் இன்பமாக இலங்கிய தன் வாழ்க்கை, இன்று துன்பச் சுழிப்புக்குள் அகப்பட்டு வேதனைப் படுகிறதே, என்று அவர் மனம் அப்போது வெம்பியது. உடனே பற்களற்ற வாய்க்குள் புதைந்து விட்ட அவரது உதடுகள், இதனால் சோகத்தில் துடிதுடித்தன. சன்னலின் ஊடே வீசிய மென் காற்று, முருகனின் படத்துக்குக்

Page 20
മിണമി,മ)
22 கீழே அகலிலிருந்து வந்த வெளிச்ச வட்டத்தை அங்குமிங்கும் ஆட வைத்தது. ஒரு பக்கம் ஒளி காட்டி - இன்னொரு பக்கம் இருள் காட்டிக் கொண்டிருந்தது அந்த அகல்.
அவரும் உறங்குதற்கு இமை பொருந்தாததால், படுக்கையில் படுத்திருக்க விருப்புக் கொள்ளாமல் எழுந்து சம்மணமிட்டவாறு உட்கார்ந்து கொண்டார்.
படத்தினடியில் இருந்து அலைபாயும் அந்த வெளிச்சத்தில் கட்டிலிலிருந்தவாறு குனிந்து தன் மனைவியின் முகத்தைப் பார்த்தபோது; கண்களை மூடியபடி நைந்து தளர்ந்த விழிக்குழிகளிலிருந்து மெளனமாக அவள் கண்ணிர் விடுவது தெரிந்தது. உடனே திடுக்கிட்டுப் போய்ப் பொட்டணம் போல் அசையாமல் கிடக்கும், அவளது மேனியிலே அவர் கைவைத்து அவளை உலுப்பினார்.
6 6.
என்ன. என்ன?”
கேட்கும் பொழுதே - மனைவியின் தோள் மீது பதிந்திருந்த அவரது கையும் இலேசாக நடுங்கியது. அவளைக் கண்ணிர் சிந்த வைத்திருக்கும் காரணம், அவருக்கும் தெரியாமலா இருக்கும்? அனிச்சையாக அவரின் வாய்தான் ‘என்ன ஏது' என்று அவள் அழுதற்குரிய காரணத்தை கேட்டு வைத்ததேயொழிய; மனத்திலே அவருக்கு அவள் அழுவதற்கான முழுக்காரணமும் இதுதானென்று நிச்சயமாகத் தெரிந்தது.
‘என்ன நடந்ததுனக்கு. இந்த ஏமம் சாமத்திலை ஏன் அழுகிறாய்?”
எல்லாம் தெரிந்திருந்தும் திரும்பவும் அவரால் இப்படி மாத்திரம் கேட்காதிருக்க முடியவில்லை! அழுத கண்களாக இருக்கும் அவளை கொஞ்சம் ஆற்றித் தேற்றுவதற்கு, ஆறுதல்வார்த்தைகள் உதவும் என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.
‘நீங்கள் படுத்து நித்திரை கொள்ளுங்கோ. சாமப் பொழுதாகவெல்லே ஆகுது! இப்பவும் ஏன் முழிச்சிருக்கிறியள்?” 'நீயிப்பிடி அழுது கொண்டிருக்கிறதைப் பாத்தாப்பிறகு எனக்கெப்பிடியினி நித்திரை வரும். இப்பிடியே நீ உதுகளையெல்லாம் நெச்சுக் கவலைப்பட்டுத்தான் என்ன புண்ணியம்?” ‘'நீங்க இப்பிடிச் சொல்லுறியள்! ஆனா, என்னாலை அதுகளை நெக்காமலிருக்க முடியேல்லையே? இந்தப் பிள்ளையளைப் பெத்து ஆமானதாய் வர வளத்து விடுறத்துக்கு நான் எவ்வளவு பாடுபட்டன்?. அதையெல்லாம் இப்ப அதுகள் மறந்து போன மாதிரியெல்லே கதைக்குதுகள்’
'பிள்ளையஸ் உப்பிடித்தான்!. என்னிலும் பிழைகனக்கவாய் இருக்கு. பிற்காலத்திலை கையிலை மடியிலை இருக்க வேணுமெண்டுற நினைப்பு காசு பணத்தை உழைக்கேக்கிள்ளை எனக்கு அப்ப இல்லாமப் போச்சுது.

x நீரிசுருளானந்தம் 2.ጶ அந்த நேரம் ஆவ் ஆவெண்டு பறந்து பறந்து உழைச்சும் அதுகளை நான் கண்விண் தெரியாம சிலவழிச்சதாலதான் இப்ப எங்களுக்கு படு இடைஞ்சல்பாடு வந்திருக்கு. இனி என்னதான் செய்யிறது. கைகாலிலையும் எனக்குப் பெலனில்லாமப் போச்சுது. நெஞ்சும் பறமேளமடிச்சதுமாதிரி படபடவெண்டுமடிக்குது. உப்புடியெல்லாமே இருக்கிற வருத்தத்தையெல்லாம் வைச்சுக் கொண்டு இனிமேல உழைப்புப் பிழைப்புக்கெண்டு என்ன வேலையைத்தான் என்னால செய்யேலும்”
சொல்லிவிட்டு பசுபதி ஒரு ஏக்கப் பெருமூச்சை வெளியேற்றினார்.
“சீச்சீ ஏன் உப்பிடியெல்லாம் கதைக்கிறியள். இதுதான் நான் ஒண்டும் உங்களுக்குச் சொல்றேல்லை. இப்பிடியிப்பிடிக் கதைச்சு நீங்க இனி உங்களுக்குள்ள வருத்தத்தையும் பெருப்பிக்கப்போறியள்’
G
b...... இந்தச் சீவனைப்பிடிச்சு வைச்சுக் கொண்டு இப்பிடியே கிடந்து
அவஸ்தைப்பட்டுத்தான் என்ன இனிவரப்போகுது எனக்கு. படுக்கையே பாடையாப் போகிற கடைசி நேரமாகவும் வந்திட்டுது. என்ன இந்தப் பிள்ளையஸ் எங்களை யோயிச்சுப் பாக்குதுகளில்லை. நாங்கள்
அதுகளுக்குச் செய்ததுகளையெல்லாம் மறந்திட்டு எங்களுக்குத் தாங்கள் செய்யவேண்டியதுகளையெல்லாம் அதுகளிப்ப கணக்குப் போட்டுப் பாக்குதுகள். சீவிக்க ஒரு வழியும் எங்களுக்கு இல்லையெண்டு நல்லாத் தெரிஞ்சும் அனுப்புற காசுகளுக்கு கணக்கும் கட்டுப்பாடும் வைச்சுக் கொண்டு எல்லாருமா. ஏன். எப்பிடியெண்டெல்லாம் மாதச் செலவுக்கணக்குக் கேக்குதுகள்’
இப்படிச் சொல்லிவிட்டு கண்களைக் கசக்கிக் கொண்டு, கொட்டாவி விட்டபடி படுக்கையில் உட்கார்ந்து கொண்டார் பசுபதி. இதற்குப்பிறகு சிறிது நேரம் முன்னம் இருந்த அளவல் அவர்கள் இருவருக்கும் இடையே இல்லாது போனது. இதுவிதமாக தங்கள் மனக்குறைகளை இருவரும் வெளியே கொட்டித்தீர்த்துக் கொண்டதால், மனத்தில் சிறிது நேரம் வீசிய புயல் ஓய்ந்து அமைதி வாய்த்ததைப் போல் இருந்தது அவர்களுக்கு. அந்த நிம்மதியில் வாரம், மாதம், வருடம் என வழிநடந்த காலத்தில் தங்களதுவாழ்வில் அநுபவித்த பலசம்பவங்களைத் திரும்பவும் ஒரு முறை மனத்தில் மீட்டெடுத்துக்கொண்டு, ஒருவாறு இருவரும் படுத்துக்கொண்டு கண்களை மூடினார்கள். இந்நேரம் அகல் விளக்கின் எண்ணெய்யும் தீர்ந்து கொண்டிருந்தது. வெளிச்சம் நூரும் தருவாய்க்கு வந்துவிட்டது. சிறிது நேரத்தின் பின்பு எல்லாமே மங்கிக் கொண்டு போய் அசைவிழக்க தாளசுரத்துடன் குறட்டை விட்டுக் கொண்டு பசுபதி தூங்கிவிட - அடுத்து அன்னலட்சுமியும் நன்றாகநித்திரையாகிவிட்டாள்.
காலையில் எழுந்ததும் இரவு முழுக்கவும் இருந்த மன வேதனைகள் தீர்ந்துவிட்டது போல் அவர்களுக்கு இருந்தது. நேற்று வெளிநாட்டிலிருந்து

Page 21
24 42/672/2
பிள்ளைகள் அனுப்பிவைத்தபணத்தில் மூன்று மாதங்களுக்குள்ளான கறிப்புளிச் ச்ெலவையும், இதரமருந்துச் செலவையும் எப்படிச்சமாளிப்பது என்று பசுபதி மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அன்னலட்சுமி குஞ்சும்கம்புமாய் பரட்டை பற்றித்தெரிகிற அடிவளவில் உள்ள வேலியடியில் நின்று கொண்டிருந்தாள். ஒரு குஞ்சுக் கடகத்தை கையில் வைத்துக் கொண்டு; அங்கே உள்ள அந்த வடலியில் ஒலைகள் பற்றியேறிச் சூழ்ந்து கிடக்கும் முசுட்டைக் கொடிகளிலிருந்து, இலைகளை அவள் பறித்தெடுத்துக் கொண்டிருந்தாள். ‘செல்' அடிபட்டு மொட்டையாய் முனை இழந்து காணப்பட்ட மிகவுயர்ந்த பல பெண் பனைகளுக்குள்ளே, அந்தச் சாவட்டையான சிறு வடலி ஒன்றுதான் இப்பொழுது அங்கே உயிர்ப்புடன் நிற்கிறது. அந்த வடலியைச்சுற்றி கூடையாகக் குவிந்து கிடக்கின்ற அந்தக்கொழுத்த கொடியின் இலைப்படுகையிலிருந்து, இலைகளை ஆய்ந்து போட்டு கடகத்தில் பாதியை நிரப்பிக் கொண்டாள் அவள். இலைக்கறிக்கு ஆய்ந்த இலைக் கணக்குச் சரியானதும் அதைக் கொண்டு குசினிப்பக்கம் அவள் போனாள். அந்த இலைக்கறியோடு வீட்டிலிருந்து கொண்டே கறிக்கு மீன் வாங்கி சமைக்கக் கூடிய வசதி அந்த ஊரிலே இருந்தது. 'செம்பி’ என்பவள் வீடு வீடாகப் போய் அவ்விடமெல்லாம் பலசாதி மீன்களையும் சிறு குவியலாக வைத்து விலை சொல்லி விற்பாள்.
அவளிடமே வாடிக்கையாக அன்னலட்சுமியும் வீட்டிலிருந்தபடியே மீன்வாங்குவாள். காலை வெயில் நீட்டிப்போக மீனைக் கொண்டு செம்பி வீட்டுக்கு வருவாள் என்பதால் இலையரியும் வேலையை விறாந்தையில் இருந்தவாறு செய்யும் நோக்கில், பலகையையும் சுளகையும் எடுத்துக் கொண்டு அவள் அவ்விடமாகப் போனாள். இந்நேரம் விறாந்தையில் கிடந்த தனிக் கதிரையில் முதுகு சரித்து இருந்து கொண்டு, பசுபதி காலைப் பத்திரிகையில் தலையை மறைத்துக்கொண்டிருந்தார். பணக்கஷடமென்றாலும் தினப் பத்திரிகைக்கு மாதாந்தம் அவர் ரொக்கப் பணம் கட்டி விடுவார். அவர் பால் கோப்பி குடித்து முடிக்க, பத்திரிகையும் அந்த நேரம் தலைவாசல் பக்கமாக நடை பாதையில் வந்து விழும். பத்திரிகையைப்போட்டு - சயிக்கிள் மணியை கிலுக்கி விட்டு, பேப்பர் போடுபவன் போய்விடுவான். அதே முறையில் இனி றைய பொழுதும் அவர் பத் திரிகையைப் படித்துக்கொண்டிருக்க, அன்னலட்சுமியும் இலை பறித்துக் கொண்டுவந்த குஞ்சுக் கடகத்துடன் சுளகு சகிதமாக வந்து விறாந்தை நிலத்திலே எல்லாவற்றையும் பரப்பி வைத்துவிட்டு, சுவரில் முதுகைச் சார்த்தியபடி கீழே நிலத்தில் குந்தினாள். பின்பு பலகை மேலே இலைகளைக் குவித்து வைத்து, நடுங்குகின்ற தன் கையால் இலைச் சுருளை பிடித்துக்கொண்டு, மயிர் மயிராக கத்தியால் அவைகளை அரிந்தெடுக்கத் தொடங்கினாள்
966.T.

நீ/அருளானந்தம் 2.
பசுபதி பத்திரிகை படிப்பதிலேயே தன் கவனத்தையெல்லாம் வைத்திருந்தார். அன்றைய தலைப்புச் செய்தியை படித்துக்கொண்டு போகும்போது, அவர் மனம் மிகவும் குழம்பி விட்டது. கிறிஸ்தவ கோயில் சொரூபங்களை உடைத்தார்கள், அங்கேயுள்ள தளபாடங்களை சேதப்படுத்தி ஆலயத்துள் நின்று வெறியாட்ட மாடினார்கள், என்ற செய்தி மிகவும் அவர் மனத்தை மனம் நோகும்படி செய்தது. ‘எச்சமயமானாலுமென்ன இச்செய்கை ஒரு நீதியோ?” என்று அவர்வாய் முணுமுணுத்தது. அந்த அவரது திட்டலுடன் கூடவானதாய் மேலும் கீழே கட்டமிடப்பட்ட சிறிய செய்தியை உன்னித்துப் பார்த்துப் படிக்கும்போது அவருக்குச் சிரிப்பும் இதழ்களில் சுழித்தது. ‘கோயிலுக்குப் பொலிஸ் பாதுகாப்பு' என்கின்ற அந்தச் செய்தியைப் படித்த பின்பு அவர் வெகுவாகச் சிந்தித்தார். 'கடவுளுக்கும் இந்த மனிதன் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய காலமாகிவிட்டதே' என்று இந்த கலியுகத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்தார்.
இவர் பத்திரிகை படிப்பதையும் அன்னலட்சுமி கீரை அரிவதையும் நிறுத்தும்படியாகிவிட்டது அவர்கள் வீட்டு வாசலில் கேட்ட குரல் 'செம்பி வந்திருக்கிறன்!...” என்கிற அவளது குரலைக் கேட்டவுடன்,
“செம்பி வந்துட்டுது கறியை வாங்குவம்!” - என்று சொல்லிக்கொண்டு இலையரியும் வேலையைவிட்டு எழுந்தாள் அன்னலட்சுமி.
பசுபதியும் படித்துக்கொண்டிருந்த பத்திரிகையை இரண்டு மடிப்பாக மடித்து அதைக் கீழே நிலத்தில் வைத்தார். அவருக்கும் இன்றைய கறிப்பாட்டில் ஆர்வம் மிகுந்தது. பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து அனுப்பி, கைக்குக் காசு வந்தால், நான்கு நாளைக்கு இவர்கள் வீட்டுச் சமையலில் ஆனமான முன்னேற்றம் இருக்கும். இந்த ஓரிரு நாட்களுக்கு அவரும்தான் செம்பியிடம் மீன் பார்த்து வாங்குவார். வழமையாக வாங்கும் 'சூடை மீனையும், காரல்’ மீனையும் போன்ற பொடி மீன்களை தள்ளுபடி செய்து விட்டு - கட்டிக் குழம்புவைக்க சுறாவும், இலுப்பெண்ணெய்யில் பொரித்தெடுக்க வென்று ‘பால் முரலும் சொதிக்கும் கீரைக்குமாகச் சேர்த்து இறால்’ பங்கும் மற்றைய நாளிலே போல் அரும் பொட்டாயிராமல் தங்கள் இருவருக்கும் திருப்தியான முறையில் காணுமளவிற்கு நிறையவும் அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இறால் மூஞ்சிகளைப்போட்டு மணங்குணமாக அன்னலட்சுமி வைக்கின்ற ‘இறால் சொதியில் பசுபதிக்கு மிகவும் விருப்பம். இதனால் செம்பிவைக்கும் இறால் கூறிலே அன்றும் பசுபதி குறியாக இருந்தார்.
‘என்ன ஒல்லுப்போல வைச்சுக்கொண்டு கணக்கடிக்கிறாய் இன்னும் கொஞ்சம் வையன்!’ என்று அதட்டல் சத்தம் வைத்தார். அவரோடு இணையாக அன்னலட்சுமியும் ‘காணாது உது படு நட்டம் இன்னும் கொஞ்சம் வடிவா வை!” - என்று அவருக்குப் பலமாய் ஒத்துதினாள். செம்பிக்கும் இதனால் தலையிடிதான்! என்னவானாலும் தன்கையை

Page 22
26 മ്മിണമി,ീ
ஒறுக்கும்படியாக வைத்துக் கொண்டு சாட்டுக்கு இரண்டு இறால்களை குவியலில் சேர்த்துவிட்டு “உங்களுக்கெல்லாம் மருதிதான் மீன்விக்கச் சரி! அவளிட்டயெண்டா ஒண்டுங்கதைக்காம வாயப் பொத்திக்கொண்டு கறிவாங்குவியள். அவள் வைச்சதை அப்பிடியே சட்டிக்குள்ளை அள்ளிப் போட்டுக்கொண்டு காசை நீட்டுவியள்’ என்று தனக்குப் போட்டியாக அவ்விடத்தில் மீன் வியாபாரம் செய்யும் மருதியையும் ஒருமுறை திட்டித் தீர்த்து வாய்ச்சாலமாகப் பேசி வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவள் வெளிக்கிட்டாள். அன்னலட்சுமி கறிச் சட்டியுடன் வீட்டைச் சுற்றி கோடிப்பக்கமாக நடந்து குசினிப் பக்கம் போய்க்கொண்டிருக்க, அவர்களது வீட்டுப் பூனையும் அவளுக்குப் பின்னாலே மீன்வாசனை பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தது.
G
'உந்தா பார் உந்தக் கள்ளப் பூனையும் உனக்குப் பிறகாலை வருகுது கறியை குசினிக்கை மூடிவை. இல்லாட்டி ஆசை அருமையாய் வாங்கித் தின்ன வைச்சதை அது பேந்து தட்டி விழுத்திச்சாப்பிட்டுப் போடும்” என்று விறாந்தையில் இருந்தவாறே, மனைவிக்குக் கேட்கும்படியாக குரல் கொடுத்தார் பசுபதி. பிறகு மடித்து வைத்த பத்திரிகையை திரும்பவும் கையிலெடுத்து, கதிரையில் இருந்தவாறு மொத்தையான ஒரு செய்தியைப் படிப்பதில் மூழ்கினார் அவர் என்றாலும் பத்திரிகையை கவனம் வைத்து படிக்க முடியாதபடி, முற்றத்தில் நின்ற சேவல்கள் இரண்டும் சண்டை போட்டுக் குழப்படி செய்தன. அந்த இரண்டு சேவல்களிலே ஒன்றான செங் கொணி டைச் சேவல் எதிர் ச் சேவலை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இறக்கை படபடக்க எகிறி செட்டையோடு ஒரு வெட்டு வெட்டியது. அடிவாங்கிய கறுப்புச் சேவலின் இறகுகள் இதனால் பிய்ந்து காற்றில் பறந்தன. அதற்குப்பின் அந்தக் கறுப்புச் சேவல் தலையைத் தொங்கப் போட்டபடி பின் வாங்க, அதைத் துரத்திக் கொண்டு அந்த விறாந்தையில் ஏறியது செங்கொண்டைச் சேவல், களைத்து ஓடிவந்த கறுப்புச் சேவல், முசுட்டை இலையிருந்த சுளகில் மிதித்துப் போனது.
‘இலைநாசம். சனிக்கோழி. ஊருக்க உள்ள கோழியள் எல்லாத்துக்கும் என்ரை வீட்டு முற்றந்தான் வாய்ப்பு” என்று திட்டியபடி. கையிலிருந்த பத்திரிகையால் சாமரம் விசிறி "சூய். ஹாய்’ என்றார் அவர். அவரது விரட்டலுக்குப் பயந்து இரண்டு கோழிகளும் ‘குடு குடு பாய்ச்சலாக ஓடி திண்ணையிலிருந்து குதித்து கால் மடித்துப் பதுங்கியபடி விரைந்தன. அவர் கீழே சிதறிக்கிடந்த இலைகளை சேர்த்தெடுத்து, சுளகில் வைத்து விட்டு நிமிர்ந்தார். அவரது நிமிர்ந்த பார்வை ஒரு முறை படலைப்பக்கமாகவும் நீண்டு பதிந்தது. அங்கே தகரக் கேற்றுக்கு அப்பால் கண்ட தலைக் கறுப்போடு கூப்பிடு குரலும் அவருக்குக் கேட்டது. அந்தக் குரலுக்குரியவர் கந்தவனம் தான் என்று அடையாளம் பிடித்தார் பசுபதி. அவருக்குத்தெரியும் இன்று கந்தவனம் கட்டாயம் வருவாரென்று. எனவே விரைவாகப் போய்ப் படலையைத்திறந்தார்.

শুৈ১২ நீபஅேருளானந்தம் לל அதைத் திறந்த கையோடு அவ்வமயம் அவரை இவர் காணவும் “பசுபதியண்ணை’ என்று இவரது பெயரைச் சொல்லிக்கொண்டு மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டு கால்பாதம் வரை தழைய விட்டாப் கந்தவனம்.
‘வாங்கோ. உள்ளவாருங்கோ.!” பசுபதியின் அகம் அலர்ந்தது. குரலில் அதிக ஆர்வமும் பெரிய எதிர்பார்ப்பும் அப்போது அவருக்கு இருந்தது.
இதையெல்லாம் அக்கறையாகக் கவனித்துக் கொண்டு கந்தவனமும் பண்பாக பதிலுக்குச் சிரித்தபடி,
‘எப்பிடி உங்கட பாடு பறப்பெல்லாம் போகுது” என்று கேட்டவாறு உள்நுழைந்தார்.
மாவடிக்குக் கீழே தனிச்சேவல் ஒன்று நின்று கொண்டு, கழுத்தை வளைத்து நிமிர்த்தி பெரிய சத்தமாகக் கூவியது. பக்கத்தில் பேடு ஒன்றும் இல்லாததால் வேறு பராக்கில்லாமல் மீண்டும் கூவவேண்டும் என்கிற நினைப்பில், அதற்குப்பிறகும் ஒரு முறை கொக்கரக்கோ - வென கூவிவைத்தது.
அந்தச் சேவல் கூவுவதைப் பார்த்தபடி நின்றவாறு கந்தவனமும் ‘நேரம் போகுது. நேரம் போகுது. ஊரிப்பட்ட வேலையள் கிடக்கு’ என்று பாச்சலும் பறவையுமான நிலையில் அவசரப்பட்டார். ‘என்ன வந்தவுடனை ஆத்துப் பறக்கவா நிக்கிறீர். இருந்து வடிவாய் எல்லாத்தையும் கதைச்சுப்போட்டு ஆத்திகேட்டுக்கு தேத்தண்ணியும் குடிச்சிட்டு ஆறுதலாய்ப் போகலாந்தானே?’ என்று விட்டு.
‘அன்னம் வாருங்கோ இங்காலைப்பக்கமா விறாந்தைக் கொருக்கா’ என்று அழைத்தார் பசுபதி!
அவரின் குரல் கேட்டு அன்னம் வரும்போதே வாசல் கதவு வழியாக கந்தவனத்தைக் கண்டு கொண்டாள். எனவே கையோடு வரும்போது, ஒரு கதிரையையும் உள்ளேயிருந்து தூக்கிக்கொண்டு வந்து விறாந்தையில் வைத்தாள். “இந்த வயசுவழிய ஏன் இங்கினையா தனியக் கிடந்து கயிற்ற படுகிறியள்?. உங்கடை பெடியளுக்கு இருக்கிற காணியளை சமமா புறிச்சுக் குடுத்திருக்கிறியள். பெம்புளப்பிள்ளையளையும் சீதனபாதனத்தோட கலியாணம் முடிச்சுக் குடுத்துமிருக்கிறியள். மருமகள்மார்தான் உங்களுக்கு ஒத்து வருகுதில்லையெண்டாலும் மகள் மாரிலயாவது ஆரோடையும் சரி ஒருவரோட நீங்கள் போய் இருந்துகொள்ளலாம்தானே?” 'வந்ததிற்கு இப்படியாகவேனும் அவர்களிலே அக்கறை இருக்கின்றதாகக் காட்டிக்கொண்டு ஒரு கதையைத் தொடங்குவம்.” என்கிற யோசனையில் இப்படியாக அவர்களை குசலம் விசாரித்தார் கந்தவனம், இப்படி ஒரு

Page 23
28 മ്മിന്നമിമ
கதையைப் போட்டதாலே, எவ்வளவு விருத்தாந்தம் அவர்களிடமிருந்து வாய்வழியாக வெளியே வரும், என்கிற எதிர்பார்ப்பும் அவாவும் கூடுதலாக அவரிடம் இருந்தது.
அவர் இப்படிக் கேட்டு விட்டதற்கு பதில் சொல்ல பசுபதி வாயைத் திறக்கவில்லை! அன்னலட்சுமிதான் அவருக்குப்பதிலாக தங்கள் குறையை அவரிடம் சொல்லி அழுது வைத்தாள். பொருந்தாத சட்டங்கள் மாதிரி
இருக்கும் தன்பிள்ளைகளின் போக்கையும் சொல்லிச் சலித்தாள்.
‘தங்களோடை வந்திருக்கச் சொல்லித்தான், பிள்ளையளெல்லாம் எங்களைக் கூப்பிட்டுக்கொண்டு இருக்குதுகள் தம்பி! அதுகள் அப்பிடிக் கூப்பிடுறது மாதிரி - எனக்கெண்டா அந்தக் குளிருக்குப் பறவாயில்லை; சமாளிச்சுக் கொண்டு போவனெண்டு சொல்லலாம். ஆனா வாதம் வந்து கிடந்த இவருக்கேலுமே தம்பி. சொல்லுங்கோ பாப்பம்?. இனியும் என்னப்பு அங்க வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை பிள்ளையஞக்கை ஒரு பிள்ளை மட்டுந்தான் அங்கினை கொஞ்சம் வசதியாயிருக்கிறா. அவதான் தம்பி முழுக்காசையும் போட்டு அங்க நாங்கள் போறத்துக்கு ரிக்கற்றுக்கு காசு அனுப்புறாவாம். இப்பிடி அவதன்ரை காசை அனுப்புறதாலை வேறு ஒரு பிள்ளையளின் ரை வீட்டையும் நாங்கள் போக வரக்கூடாதாம். தன்னோடதான் சாகுமட்டிலும் இருக்க வேணுமெண்டு அவ சொல்லுறா. இது எங்களுக்குச் சரிவருமே?. எல்லாருமே எங்கடை பிள்ளையஸ்தானே. உப்புடி ஒரவஞ்சம் காட்டி நாங்கள் நடக்கேலுமே சொல்லுங்கோ பாப்பம்?. அதுதான் அங்கினையா ஒரு இடமும் போக வேண்டா மெண்டு நினைச்சு இங்கினையே கடைசிகாலத்திலை கிடந்து சாவம் எண்டு நாங்கள் இருந்திட்டம். ஆனா, அதுகள் எங்களை விறாய்ப்புப் பிடிச்சதுகள் வீம்பு காட்டிக் கொண்டு கிடக்குதுகள் - எண்டு பேசிக்கொண்டு படட்டும் பாடெண்டு எங்களை இப்பிடியே விட்டிட்டுதுகள். இப்பிடிப் பிள்ளையளைப் பெத்து வளத்து என்ன சுகம் எங்களுக்கு வந்தது? இண்டைக்கு இப்பிடிக்கிடந்து உலைஞ்சல்படுறம்’
என்று ஆதங்க உலுக்கலுடன் சொன்னாள் அன்னலட்சுமி
'நீங்க சொல்லுறதும் சரிதான்!. உங்களுக்கு இங்கினையா ஊரோடை இருந்து கொள்ளுறதும் பறவாயில்லைத்தானே. சைய். அந்த நாடுவழிய அம்மாடி அந்தமாதிரிக்குளிர்வழிய. ஆறக்கிறவெளிக்கிட்டு வெளியாலை போய்வரவுமேலாது கொள்ளேலாது அது உங்களுக்கெல்லாம் எவ்வளவு பெரிய கயிற்றம். ஆனா, இங்கினையிருந்தா நீங்க ஒரு மன ஆறுதலுக்கு சந்நிதியானிட்டையும் நல்லூரானிட்டையும் போய்வரக் கொள்ளலாம் அது உங்களுக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும். இப்பிடி உங்களுக்கெல்லாம் இங்கினை வசதி கிடக்கேக்கிள்ளை அதுகளை சும்மா நினைச்சேன் கவலைப்பட்டு இந்தவயசிலையும் கயிற்றபடுறியள்! சும்மா ஏன் அந்தக்

শুৈ১২ நீபஅேருளானந்தம் 9
கதையளையெல்லாம் இப்ப எடுக்கிறியள் அதுகளை விடுங்கே 1. விடுங்கோ.”
‘அது சரிதான் ராசா! நீர் சொல்லுறதும் நியாயந்தான்!. எண்டாலும் தம்பி எங்களுக்கு இந்தக் காசுப்பிரச்சினையெல்லே இருக்கையா. இதுகளையெல்லாம் ஆருக்கும் தெரியுமே?. மாதம் முடிய பிள்ளையளிட்ட விருந்து பொத்தியடிச்சாப்போல காசுவந்து கொண்டிருக்கு எண்டதாத்தான் ஊருக்குள்ள இங்க கனபேரிண்டை கதையள் சலசலப்புகள் இருக்குது. ஆனா நாங்கள் படுகிறபாடு அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்”
அன்னலட்சுமி தன் அகக்கிடக்கையில் உள்ளதை கந்தவனத்திடம் வெளிப்படையாகச் சொன்னாள். அதைக்கேட்டுவிட்டு அவரும். ‘ஒமோம். எல்லாத்தையும் உப்பிடி எல்லாரிட்டையும் சொல்லேலுமே நானெண்டா ஆரிட்டையும் உதுகளையெல்லாம் வாய்திறவன். ஆற்றையும் கதையளைக் கதைச்சு எனக்கென்னலாபம்!. அது வடிவே சொல்லுங்கோ. அசிங்க மென்ன!. முதல் இப்பிடி ஆற்றையும் கதையளை கதைச்சுக்கொண்டு திரிஞ்சால் என்னை என்ன மாதிரி இங்க சனங்கள் கணக்கெடுப்பினம். சரி உதுகளை விடுவம். விசயத்துக்கு வாங்கோ பசுபதியண்ணை. இந்த உங்கடை காணியளை எனக்குக் குத்தகைக்குத்தாற விசயம் என்னமாதிரி. அந்த விசயத்துக்கு நீங்க வாங்கோ.” ヘ
‘நான் என்ன சொல்லுறது கந்தப்பு நீர்தான் அதைப்பற்றிச் சொல்லவேணும். உமக்குத்தெரியும் என்ரை தோட்டக்காணியளைப் பற்றி. அந்தத் தறையெல்லாம் அருமையான செம்பாட்டு மண்ணெல்லே. அந்தக் காணிவழிய முந்தியெல்லாம் நான் எவ்வளவு பயிரை வைச்செடுத்தனான். எதையந்தத் தறையில வைச்சாலும் விளைச்சல் குறைச்சலில்லாமல் வந்து கையிலை அப்பத்தைக்கு அதுகளை வித்தெடுத்து எவ்வளவு காசு புழங்கிச்சுது. என்ன செய்யிறது. பேந்து உந்தக் கிரகம் பிடிச்சதுமாதிரி அந்த அள்ளுப்பட்டு நாசமாப்போவார் கொண்டாந்து உந்த மிதிவெடியளைத் தாட்டத்தோடதான் எல்லாம் அநியாயமாப்போய் தோட்டம் செய்யிறதும் துலைஞ்சுது. பிறகு ஏதோ கடவுள் கண்பார்த்ததில அவங்களும் அதுகளைக் கிண்டியெடுத்து காணியிலை இப்ப என்னவும் வைச்செடுக்கக் கூடியதாய் வந்திருக்கு. ஆனாலும் என்ன செய்யிறது தம்பி. இப்ப எனக்கும் வயசு போட்டுது. இனியெங்க நான் காணி துப்பரவாக்கிறதும் செய்யிறதும். அதெல்லாம் என்னால இனி நடவாது. அதுதான் என்ரை காணியளை உம்மைக் குத்தகைக்கெடுத்துச் செய்யுமெண்டனான்’
அவர் இப்படிச் சொன்ன கையோடு மனைவி அன்னலட்சுமியும் தயவாக அவரிடம் சில கதைகளைக் கூறினாள்.
“உம்மைத்தான் தம்பி இவர் நல்லபடியாச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நாளையிலை இருந்து உம்மோடதானே தம்பி இவர் நல்ல வாரப்பாடு

Page 24
30 മിന്നുമിമ
இங்க ஊருக்க இருக்கிறவயளிலை ஊரிப்பட்ட பேர் இவரிட்ட வந்து காணியளைக் குத்தகைக்குத் தாருங்கோவெண்டுதான் கேட்டவயள். ஆனா இவருக்கு அவயள் ஒருத்தரிட்டையும் தறையளைக் குடுக்கவிருப்பமில்லை. உவயள் கதைக்கேக்கை பெரிசாய் வாயடிப்பினம் பேந்து நாங்கள் நம்பி காணியளைச் செய்யக் குடுத்தாப்பிறகு குத்தகைக் காசுக்குப் போகேக்கை ரெக்கிலாசும் பேசிக் கொண்டு இழுத்தடிப்பினம். பிறகும் அப்பிடித்தானும் அதுகள் தாற காசை நெஞ்சு கரிஞ்சு கொண்டுதான் தருங்கள். அதாலதான் எங்களுக்கு அவேயளிட்டக் குடுக்கப் பயம். வயசுபோன இவர் பேந்து அவயளோட இழுபறிப்படேலுமே அது இவருக்கும் சங்கை குறைவெல்லே. உங்க உதுகளுக்கு வாயுஞ் சரியில்லை. இவர் வயசாளியாச்சேயெண்டு ஒரு மட்டு மரியாதையுமில்லாமக் கதைக் குங்கள். அதேனந்தக் கரைச்சல்களை. அது தான் தம்பீட்டத் தரவேணுமெண்ட நோக்கத்திலை இவர் பார்க்கிறார்.”
அன்னலட்சுமி இப்படிச் சொல்லவும் கந்தவனத்திற்கு இதுவே செப்பமான பிடியாயிற்று. இதனால் அவரது முகம் மகிழ்ச்சியில் சாதுவாய்ச் சிவத்தது. இப்படி தன்னைப் பற்றியெல்லாம் உயர்வாக இவர்கள் மதிப்பு வைத்திருக்கிறார்களே - என்று நினைக்க தருக்கும் செருக்கும் அவருள் ததும்பி வழிந்தன.
இதனால் ஒரு வகைச்சுதியில், உல்லாசமாய்த் தன் பித்தவெடிப்பு மிகுந்த கால்களையும் ஆட்டிக்கொண்டு, கதிரையில் கொஞ்சம் நிமிர்ந்தும் உட்கார்ந்தார். இதுவிதமாக அவருக்கு வந்த உஷாரில் உதட்டில் சிரிப்போடு ஒரு கதையையும் வெளிவிட்டார்.
‘'நீங்கள் அச் சொட்டாய் எல்லாரையும் கணக்குப் பண்ணித்தான் வைச்சிருக்கிறியள். அல்லாட்டி ஊருக்க உந்தச் சனத்தோடை சீவிக்கேலுமே. அப்பிடியெல்லாம் தெரிஞ்சுபோட்டு அதுகளின்ரை கைவழிய காணியைக் குடுத்தா கூழ்ப்பானேக்கை போய் விழுந்த ஞாயமாத்தான் போகும். நான் சாதிமரபில கொஞ்சங்கூட வழுவில்லாத ஆளெண்டு தெரியுந்தானே உங்களுக்கு. அப்பிடியான நான் எப்பவும் சொன்னா சொன்னமாதிரி நடப்பன். மற்றவயள் மாதிரி ' சப்பளா சளபுளா’ வெண்டெல்லாம் நான் நடக்கன். காணியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு குத்தகைக் காசை மாத்திரம் தாறதோடை நான் விட்டிடுவனே. அதோட அதில வாற விளைச்சலிலை நாலுபிடி வெங்காயமெண்டாலும் உங்கடை வீட்டுக்கு நான் அனுப்பமாட்டனே. அதோடை நாலு கட்டை மரவள்ளிக் கிழங்கும் இழுத்துக் குடுத்துவிடுவன். ராசவள்ளிக் கிழங்கும் அனுப்பி வைப்பன்! இப்பிடி இப்பிடி உங்களுக்கு எவ்வளவு சலுகையெல்லாம் என்னாலை இருக்குதெண்டு பாருங்கோ!’ என்று இப்படியாகவெல்லாம் கந்தவனம் தன்னைப் பற்றி பெரிதாக அளக்கும் போது அவரது மனத்திலே சில எண்ண அரவங்கள் நெளிகின்றதைப் பற்றி பசுபதி அறியவில்லை.

്യ മUഗ്രസീമ 31 எப்படியும் கந்தவனம் தன்காணியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு தவணைதவறாமல் பணத்தை எண்ணி நீட்டுவார் - இன்னும் பல சலுகைகளையும் அவர் தனக்குச் செய்வார், என்ற எண்ணத்தில் 'உச்ச பட்ச மகிழ்ச்சியில் அவர் இருந்தார். இந்த வேளையில் கதைப்பராக்கில் கோப்பி போட்டுக் கொண்டு வர மறந்து விட்டதை நினைத்து அன்னலட்சுமி பரபரப்படைந்தாள். தனக்கு முன்னால் விறாந்தையில் கிடந்த இலைக் கடகத்தையும், சுளகு கத்தியையும் எடுத்துக் கொண்டு ‘ஐய்யய்யோ. கோப்பிபோட்டர' மறந்திட்டன் இந்தா வாறன்’ என்று சொல்லிக் கொண்டு குசினிக்கட்டுக்கு அரக்கப்பரக்கப் போய்ச் சேர்ந்தாள். அங்கே தனலடுப்பில் நாலு விறகுச் சுள்ளிகளை உடைத்துப்போட்டு, ஊமலையும், கருக்கு மட்டையையும் வைத்து ஊதாங்குழலால் ஊதி எரித்துவிட்டு, தண்ணிருடன் கேற்றிலை அடுப்பேற்றினாள். சுள்ளி விறகெரித்ததால் தண்ணிர் சிறிது நேரத்தில் மல மலத்துக் கொதித்தது. உடனே அளவான கோப்பி சீனியை கோப்பையில் போட்டு ‘சுர்சுர்’ எனக் கேற்றிலிலிருந்து துடிக்கும் நீரை ஊற்றி கோப்பி போட்டுக் கொண்டுவந்து கணவருக்கும் கந்தவனத்துக்குமாகக் கொடுத்துவிட்டு ஒதுங்கி ஒரு பக்கமாக அவள்நின்றாள்.
‘என்ன கதை விட்டுப்போச்சு முடிவைச் சொல்லுங்களன்!” என்று பசுபதியைப் பார்த்துக் கேட்டார் கந்தவனம்.
தான் கோப்பி போட்டுக் கொண்டுவர குசினிக்குப் போயிருந்த நேரத்தில், கந்தவனம் என்ன முடிவு சொல்லியிருப்பார் என்று அன்னலட்சுமிக்குத் தெரியவில்லை!. அவள் கணவனின் முகத்தைப்பார்த்தாள். அவருடைய முகம் சற்று முன் இருந்த செழுமையற்று வாடிச் சுருங்கியிருந்தது. அதைக் கண்டதும் ஆட்டம் கண்ட நம்பிக்கை அவளிடம் அறவே சாய்ந்தது.
‘என்ன மாதிரித் தம்பி ஏதேனும் பிரச்சினையே?’ என்று குரலைத் தாழ்த்திக் கேட்டுக் கொண்டு, கந்தவனத்தின் காலிலிருந்து முகம் வரையாக பரிதாபமாக அவரைப் பார்த்தாள் அவள்.
இந்த நேரம் தன் மனைவியைப்பார்க்க பரிதாபமாக இருந்தது பசுபதிக்கு. நல்ல எதிர்பார்ப்புடன் இருந்தவளுக்கு கந்தவனத்தின் கதைபேச்சு ஏமாற்றம் கொடுக்கப் போகின்றதே என்ற நினைப்பில், அவருக்கும் தொண்டையில் சளி அடைத்ததைப் போல் இருந்தது. அதைப்போக்கிட அவர் பெரிதாய்ச் செருமியபோது முற்றத்தில் பலாச் சருகுகளுடன் சேர்த்து குவிந்த குவியல் களை கிளறிக் கொணி டிருநீத கோழி பயநீ து கொக்கொக்கொக்குறுாக்' என்றவாறு கத்திக் கொண்டு வேலிப் பொட்டுக்காலே புகுந்து மற்றக் காணிப்பக்கமாக ஓடியது.
‘நான் கேட்டமாதிரிக்கு ஓம் பட்டா நீங்க தறையை எனக்குக் குத்தகைக்குத் தாங்கோ!. நானும் ஒரு ஞாயத்தை வைச்சுக் கொண்டு தான் உங்களோடை

Page 25
32 മിഡ്വൈിമ
கதைக் கிறன் . வேறமாதிரி உங்களை நான் அமடுதுமடு பண்ணிறதாயில்லை!” என்றார் கந்தவனம்!
அவருடையபேச்சைக் கேட்டுவிட்டு ‘சாச்சாய் அப்பிடியெல்லாம் நான் நெக்கேல்லை. உங்களை நான் அப்பிடி நெப்பனே. நான் எனக்குள்ள இருக்கிற இந்த கஸ்டத்தை வைச்சுக் கொண்டுதான் இப்பவாய் பலதையும் பத்தையும் யோசிச்சுப் பாக்கிறன். சும்மா கிடக்கிற அந்தக் காணியளிலை நாலு பயிராவது விளைஞ்சிட்டுப் போகட்டும். அது எத்தினை பேருக்கு சாப்பிடக் கீப்பிடப் பிரயோசனமாவெண்டாலும் போகும். சொல்லுங்கோ பாப்பம். முருகா. ம். சரி சரி உங்கடை விருப்பப்படியே செய்யிங்கோ. ஆறப்போகுது கோப்பியைக் குடியுங்கோ..!” என்றார் பசுபதி.
இதமான சூடோடு கோப்பி இருந்ததால் கோப்பையை கையிலெடுத்து கோப்பியை நாலு முரடில் குடித்து முடித்தார் கந்தவனம். அதற்குப்பிறகு அப்படி இருந்தபடியே நாற்காலியின் இருபக்கத்துச் சட்டத்தின் மேலும் கொடிகளை முறுக்கிச் செய்தது போன்றிருந்த தன் கைகளை வைத்துக்கொண்டு இரண்டு நீண்ட விரல் நகங்களால் அதில் தாளம் போட்டார். வந்த அலுவல் முடிந்ததால் இனிக் கிளம்ப வேண்டும் என்ற அவசரம் அவருக்கு இருந்தது. கீழே நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பின்பு சற்று நிமிர்ந்து ‘அப்ப நான் வெளிக்கிடப்போறன் வெளியால ஊரிப்பட்ட வேலையள் கிடக்கு அதையெல்லாம் நான் போய்த்தான் பாக்க வேணும் அண்ணை’ என்றார்.
பசுபதி தனக்குவந்த பெருமூச்சை வெளியே வராமல் அடக்கிக் கொண்டு சோகமாகத் தன் கைகளைக்கூப்பி ‘போயிற்று வாருங்கோ’ என்றார். அன்னலட்சுமிக்கு இதுவரையில் அவர்களுக்கிடையே நடந்த கதை பேச்சுகளொன்றும் ஒன்றுமாக விளங்கவில்லை. கந்தவனம் போனகையோடு இதைப்பற்றி கணவரிடம் கேட்டறிய வேண்டுமென்கின்ற அவசரத்தில் அவள் இருந்தாள். கந்தவனம் வெளிக்கிடும் போது அன்னலட்சுமியைப் பார்த்து.
‘அப்ப நான் போயிற்று வாறனக்கா” என்று விடை பெற்றுக் கொண்டு தான் வெளிக்கிட்டார். அப்படிப் போகும் போது ஒரு மகிழ்ச்சிச் சுமையைச் சுமந்து கொண்டு போகிற ஒரு உணர்வோடு அவர் சென்றார். அவர் வேலிப்படலையைத் திறந்து கொண்டு வெளியே வீதியினுடாகப் போகையில் வேலிப் பூவரசுச் சடைச்சலுக்கு மறைவில், அவரது வெள்ளை வேட்டிமட்டும் கொஞ்சம் பசுபதியின் கண்களுக்குத் தெரிந்தது. அப்படியாக அவர் தன் பார்வையை அங்குமிங்கும் படர வைத்தபடி திரும்பிய போது.
அன்னலட்சுமி நெட்டுக் குத்தலாக கணவரைப் பார்த்துக் கொண்டு விக்கித்தக்கியபடி.

ඊඛ. நீ/அருணானந்தம் . ‘என்ன முடிவு சொல்லிட்டுப் போறாருங்கோ அவர்.?” என்று கேட்டாள்.
‘எல்லாப்பக்கமும் எங்களுக்கு நெருக்கு வாரமாய்த்தான் வருகுது அன்னம். அவர் எங்கடை காணியளை குத்தகைக்கெடுத்துச் செய்யிறாராம். ஆனாலும் தருகிற காணிக்குத்தகைக் காசை ரெண்டுவருசத்துக்குத் தராராம். இந்த ரெண்டுவருசத்துக்கு காடு பத்திப் போய்க் கிடந்த அந்தக் காணிக்கிள்ளை கணக்க வேலையிருக்கு கணிசமாய் காண்யை செம்மையாய் திருத்தியெடுக்க வேணுமெண்டுறார். இப்ப காணிக்கையிருந்து மிதி வெடியளை எடுத்திருந்தாலும். அந்த மிதிவெடியள் கிடந்த காணிக்கிள்ளை முதல் முதலாப் போய் காலை வைச்சு தோட்டம் செய்யிறதெல்லாம் LJUJLDTub. தானெண்டபடியா இதைத்துணிஞ்சு செய்யிறாராம். அப்பிடி இப்பிடியெல்லாம் சொல்லி இடுக்கெட்டுப் பூட்டுப் போட்டிட்டுப் போறார் மனுசன். என்ன செய்யிறது கயிற்றத்தோட கயிற்றமா இந்த ரெண்டு வருசத்தையும் தள்ள வேண்டியதுதான். வேற என்ன செய்யிறது” என்று விவேகானந்தர்மாதிரி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றபடி மனம் சலித்தார் பசுபதி.
அவருடைய நிலைதானே இதைக் கேட்டதும் அன்னலட்சுமிக்கும் இருக்கும்.
அவளும் தன் சூம்பிய கை விரல்களை சொக்கையில் வைத்து அழுத்திக் கொண்டு,
é é
ம். என்னதான் செய்யிறது.!” என்று பெரு மூச்சு விட்டவாறு கூறியபடி, முதுமையின் தளர்ச்சி முழுவதையும் திடீரென அனுபவித்த உணர்வுடன் நின்ற இடத்திலேயே அசையாத ஆணியானாள். -
தாயகம்
தேசியகலை இலக்கிய பேரவை
(ஒக்டோபர், 2004)
OOO

Page 26
34 ثلاعتلاوة
முதுசம்
கொடி பின்னிக் கிடக்கிறமாதிரியுள்ள என் உறவுக்காரர்களையெல்லாம், ஒருகால் ஊரில் போய்ப் பார்த்து வரவேண்டும் என்பது என் நெடு நாள் ஆசை. அதற்காகவென்று ஒரு கிழமை வரையில் நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சென்று விடுப்புப் பெற்றுக்கொண்டேன்.
நான் வசிக்கும் கொழும்பு நகரிலிருந்து வவுனியாவுக்குச் செல்வதற்கு, எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. ஆறு மணித்தியால பஸ் பிரயாணமென்றாலும், சோர்வில்லாமல் நான் வவுனியாவில் போய் இறங்கினேன்.
வவுனியா மண்ணில் நான் கால் வைத்தபோது இருபது வருடங்களைக் கடந்த பிறகு, பிறந்த மண்ணில் கால் வைத்ததான அந்த நினைவு ஒருமுறை எனக்கு வந்தது. இன்னுமாக, பெருமளவில் மாற்ற மடைந்திருக்கும் அந்த நகரத்தைப் பார்த்ததில் ஏற்பட்ட வியப்பு அதைவிட மேவி நிற்க, நின்ற இடத்திலேயே சற்று நேரம் நின்றபடி என்னைச் சூழவும் அங்கு புதிதாய்த் தெரிந்தவற்றையெல்லாம் வியப்புடன் நோக்கினேன்.
என்றாலும் நான் எதிர்பார்த்து வந்ததெல்லாம், அங்கு இப்போது இல்லையென்றே எண்ணும்படியாகச்செய்துவிட்டது நான் கண்டு விட்ட ஒரு காட்சி. என் ஏமாற்றத்துக்கெல்லாம் காரணம் இதுதான்!
அந்த இடத்தில் முன்னம் நின்ற அந்த வாகை மரத்தை இப்போது என் கண்களால் காணக்கிடைக்கவில்லை!
அதன் காரணமாக அந்தக் க்ாலத்தில் அதிலே வானத்துக்கும் மண்ணுக்குமாகப் பூத்து நின்றது போலிருந்த, அந்த வாகை மரத்தை நினைவில் வைத்து நிலை நிறுத்திக் கொண்டு சற்றே சிந்தித்தேன். அந்த முது பெரும் வாகை மரத்தில் நிறைய அணில்களும் காகங்களும் கத்திக் கொண்டிருக்கும். காகங்கள் கொட்டமடித்துக் கொறித்துப்போட்ட வாகைக் காய்கள், அந்த இடமெங்கும் மண்ணிலே பரப்பிக் கிடக்கும்.
அந்த மரம் பூப்பூக்கும் காலத்திலும் பூக்களும் அப்படியாகவே நிலத்தில் சொரிந்து, நிலத்தையே பூக்கம்பளமாக மாற்றிவிடும்.

దస్త్ర മUിശ്രണുന്നത്രമ s
அந்த மரத்துக்குக் கீழேதான் தினமும் தப்பவிடாமல், காலையிலும் மாலையிலுமாக சோளப்பொத்தி அவித்து வைத்துச் சுடச்சுடவாய் விற்பார்கள்.
அதிலே சோளத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்துக் கடைக்குள் போய் தேநீர் குடித்த காலமெல்லாம். எங்கே? எங்கே? என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டு, அதற்குச் சிறிது தூரம் தள்ளியதாய் உள்ள அந்த இடத்துக்குப் பிற்பாடு பார்வையைத் திருப்பினேன்.
என்னதாய் மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம் எனக்கு
அந்தப் பெரிய பாலை மரத்தையும் எங்கே இதிலே காணவே இல்லையே?
செவாலியே சேர் சிற்றம்பலம் கார்டினரின் படமாளிகைக்கு முன்னால் நின்ற அந்த மரமும் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டதா? என்ற மனவேதனையை மனதில் சுமந்து கொண்டு, நடக்கிறேன் இப்போது இரண்டாம் குறுக்குத் தெரு வழியாக என் வீட்டுக்கு.
என் வீடு என்று உரிமையோடு நினைக்கின்றேனே. இப்போது அது என் வீடா? இது என்ன மடைத்தனம்! அது இப்போது என் வீடு அல்லவே? - என் அக்காவினுடைய வீடல்லவா அது? அவருக்கு அதைச் சீதனமாகக் கொடுத்து விட்டு என் வீடென்றும், எங்கள் வீடென்றும் இனிமேல் எங்கள் குடும்பத்திலுள்ள எவரும் உரிமை பாராட்ட முடியுமா?
‘நான் இப்போ நினைத்ததுதானே ஞாயமானது' - என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு. மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டேன்.
‘இந்த இடத்தில் உன்னுடைய இளமைக் காலத்தின் மண்வாசனை இருக்கிறதா? - என்று என்மனம் உடனே கேள்வி கேட்பது போல் இருந்தது. நான் எதிர்பார்த்து நினைத்துக்கொண்டு வந்ததெல்லாம் இவ்விடங்களில் இல்லாது ஏமாற்றமுற்றதாய், என்னிடத்தில் அந்தக் கேள்விக்குரிய பதில் இல்லாமல் நான் மெளனமாய் நடந்து கொண்டிருந்தேன்.
விரைவான நடையினால் பண்டைய நாகரிகத்தின் ஒரு சின்னமாக காட்சியளிக்கும் நான் பிறந்து வளர்ந்த வீடும், அருகே கண்பார்வையில் படும்படியாய் வந்து விட்டது. s
(என் எண்ணத்தில் ஒரு திருத்தம்: என் வீடு என்றதாய் நினைப்பதை விடுத்து இப்போது அதை நான் பிறந்து வளர்ந்த வீடு என்கின்றதாய்த் திருத்தியமைத்துக் கொண்டுவிட்டேன்.)
அந்த வீட்டைக் கண்டதும் எனக்கு, ஏதோ ஒரு காயகல்பத்தை உண்டது போல் இளமை உணர்ச்சி உண்டானது.
அங்கே வேலியில் இப்போது பாரம் கட்டிய படலை இல்லை. அதற்குப்

Page 27
മ്രീ) 36 பதிலாக அகலமான இரும்புக்கேற் ஒன்று, ஈட்டி முனைகளுடன் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு; ஒரு காவல் காரன்மாதிரி எனக்குக் காணத் தெரிந்தது.
அந்த கேற்றுக்குப் பக்கத்திலே வரிசையாகக் கடைகள். புதுக்கட்டடங்கள் எல்லாம் காணிக்குள்ளால் எழும்பியிருக்கிறதே. ? என்று வியப்புற்றவாறு இன்னும் எங்கெங்கே என்னென்ன உண்டு என்றும் அக்கறையாகப் பார்த்துக் கொண்டு; படலைத்தூணில் பதித்துக் கிடந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினேன். மணியொலி கேட்டதில் அக்கா கேற்றடிக்கு வந்தார்.
கேற்றைத் திறக்காமல் உள்ளுக்குள் நின்று கொண்டு, சிறு ஊடு வழியாக என்னைக் கண்டு விட்டு. ‘தம்பி தம்பி. என்ன கனகாலத்துக்குப் பிறகாய் இங்காலைப் பக்கம். வாரும் வாரும்!”
என்று சொல்லியபடி மனசெல்லாம் சந்தோஷமாக கேற்றைத் திறந்து கொண்டு, பாசத்துடன் உற்சாகமாக என்னை வரவேற்றார்.
“எத்தினை வரியத்துக்குப் பிறகால இங்காலிப் பக்கம் நீர் வாறிர். வீட்டிலை உள்ளவையள் எல்லாரையும் ஒருக்கா நீர் வரேக்க கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம்தானே?”
என்று சொல்லி விட்டு என்னை வீட்டிற்கு அழைத்துப் போனார் அக்கா!
அந்த வீட்டின் வாசற்படியேறும் போதே எனக்குப் பழைய சம்பவங்களெல்லாம் மனத்தில் பளிரடித்ததாய் காட்சிக்கு வர ஆரம்பித்துவிட்டன. இதனால் அக்கா கேட்ட சில கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதில் சொல்லாது வெறும் ‘ஆமா’ மாத்திரம் போட்டுக் கொண்டே நான் கற்பனைச் சவாரி விட்டுக் கொண்டிருந்தேன்.
'தம்பி தண்ணி வென்னி குடிக்கிறீரே. ? ஒரு நல்ல பால் கோப்பி போட்டுக்கொண்டரட்டே தம்பி.?” இப்படி இதங்குழைத்துக் கேட்டவாறு அக்கா என் முகத்துக்கு நேராக குனிந்து பார்த்தபோதுதான் அக்காவினுடைய கதையில் திரும்பவும் அக்கறை வந்தது எனக்கு!
'இப்ப அதொண்டும் வேண்டாமக்கா. பஸ்ஸாலை இறங்கினதோடை அதிலை இருந்த கடைக்க உள்ளட்டு சும்மா சோட்டைப் பண்டம் திண்டிட்டு

യ്പ മUഗ്രസ്ഥീമ ዘ7 வாறன். அது வயித்துக்கை இப்ப உரப்புடியாக் கிடக்கு. நாவறட்டிக்கொண்டு போறதால தண்ணியைத்தான் இப்ப குடிக்க நல்லம் போலைக் கிடக்கு. எங்கடை கிணத்துத் தண்ணியைக் கொண்டாங்கோ கோப்பி குடிக்க முதல் அதை ஒருக்காக் குடிச்சுப்பார்ப்பம்!”
ஆவலோடு நான் சொன்னேன்.
அக்கா குசினிக்குப்போய் பெரிய குண்டான் செம்பிலே நிறையத் தண்ணிரைக் கொண்டு வந்து தந்தார். செம்புத் தண்ணிரை ஒரு பாட்டம் மிண்டு விட்டு நான் அதைக் கீழே வைத்தேன்.
‘இந்த மனுசன் சின்ன மீன்களைப்போய் மினக்கெட்டு சந்தை வழியயிருந்து வாங்கிக் கொண்டந்திருக்கு. இனி அந்த விளைப்பொடியளை வைச்சுச் செதிளைக் கிள்ளி நூண்டி, துண்டு துருத்தியா வெட்டிக் கொண்டு பெரிய வேலையெனக்கு!. நேரம் போகுது இனி விட்டால் பதங் கெட்டு மீனில புழுக்கெந்திப் போடும்!...”
இந்தக் கதையோடு அக்கா குசினிக்குள் போவதற்கு ஆலாய்ப் பறக்கிற நிலையில் நிற்கிறார், என்று தெரிந்து விட்டது எனக்கு.
‘’ எண் னக் கா இப் பவும் அத்தார் மாட் டுச் சவாரியோ டதான் மினக்கெடுறாரோ. அல்லாட்டி வேறவேலை ஏதாவது செய்யிறாரோ?”
‘வேற என்ன வேலையை அவர் பெரிசா பாத்துக் கிழிக்கிறார். முந்திய மாதிரித்தான் இப்பவும் அவர் எந்த நேரமும் சவாரி யெண்டுதான் பறப்பார். நாள் முழுக்க மாடுகளை வைச்சுச் சவாரி கலைக்கிறது தான் அந்த மனுசனுக்கு வேலை. இந்த மாட்டு வண்டில் சவாரிப் பைத்தியத்தால வீட்டில உள்ள காசுபணத்தையுமெல்லே அந்த ஆள் கொண்டுபோய்க் கரியாக்கிப்போடுது. அதான் எனக்குப் பெரிய உத்தரிப்புத் தம்பி!. இதிலையெல்லாம் அவருக்கு நான் சரி பிழையைச் சொன்னாலும் செவியில சொட்டும் ஏத்துறாரில்லை. ரெண்டு மாதத்துக்கு முதல் எங்கயோ சவாரியிலை வெண் டதாம் அந்த மாடெண்டு போட்டு அதுக்கு அள்ளுகொள்ளைக் காசைக் கொட்டி வாங்கியந்து உங்கினை கட்டினார். அவற்றை கூடாதகாலமோ என்னவோ தெரியாது நல்லவிடை பருவத்து மாடாயிருந்த அந்த மாடு ஒரு மாசத்தாலை வாத நோய் வந்து செத்துப் போட்டுது. இதிலை சரியோ பிழையோ ஒண்டும் யோசியாமல் இப்பிடித்தான் அவற்றை காலம் நெடுகலும் போகுது. சவாரிதான் தனக்கு சாகுமட்டும் வேலையெண்டு அனுமார் பிடியிலை அவர் சீவிக்கிறார்.”
“அது சரி. அவர் மாட்டு வண்டிச் சவாரியிலதான் மினக்கெடுறார் எண்டுறியள் ஆனா வளவுக்க இங்கே மாட்டுக் கொட்டிலையும் காணேல்ல மாடுகளையும் காணேல்ல. அப்பிடியெண் டால் இப்ப எங்க அதுகளெல்லாம் போயிற்றுது?”

Page 28
38 ഗ്ഗീ '' இந்த வளவுக்கை இப்ப எங்க இடம் கிடக் குது தம் பி. அதுகளையெல்லாம் இங்க கட்டி வைச்சு வளக்கிறதுக்கு. է 160)ւքս / அந்த நாளைய இடம் மாதிரியே இப்ப வவுனியா இருக்கு?. நான் அவருக்குச் சொல்லிப் போட்டன் முந்திய மாதிரி இனி இதுக்குள்ள மாடு கண்டு இனி நீங்க வளக்கேலாதெண்டு.!
‘அப்ப அந்த மாடுகளை எங்க கட்டி அவிழ்த்து பராமரிக்கிறார்?”
G
‘அங்க அந்தக் கொல்லன் கம்மாலைக் காணியிலை வைச்சுத்தான் தண்ணியைத் தீனியை வைச்சு மாடுகளை அவிழ்த்துக் கட்டுறார். மாடுகளைப்பாக்க எடுக்கவெண்டும் சாணிசகதி அள்ளவெண்டும் ஒரு சிண் பிடிச்சு வேலைக்கும் வைச்சிருக்கிறார். அங்கதான் எப்பவும் இருந்துகொண்டு ஊருலக ஞாயங்களையும் அவயளோடவாப் பேசிக்கொண்டு அடுகிடை படுகிடையாவும் கிடக்கிறார்.”
‘அப்ப அப்பிடித்தான் அவற்றை பொழுது போகுதெண்டிறியள்!. அது சரி உங்கடை கடைசி மோன். என்ரை மருமோனை எங்க இங்க காணேல்லை?”
அவர் தன்ரை சித்தப்பரிட்டப் போயிருக்கார் தம்பி! அவரைப் பாத்திட்டொருக்கால் வாறனெண்டு போட்டு. நேற்றுத்தான் யாழ்ப்பாணம்
போனவர் அவர். இங்கதம்பியார் நானொருக்கா குசினி அலுவல்களை பாத்து முடிக்கட்டே. நீர் உந்த உடுப்புகளை மாத்தி சாறத்தை உடுத்துமன்.”
‘உடுப்பைப் பேந்து கொஞ்சம் செல்ல மாத்திறன் அக்கா. நீங்க போய் உங்கடை அலுவல்களைக் கவனியுங்கோ. நான் இங்க சும்மா ஒருக்கா உதுக்குள்ளாலை இந்த வீட்டைச்சுத்திப் பாக்கிறனே?”
G
‘ம். வீடென்ன வீடு இது அந்த நாளைய சுண்ணாம்புக் கல்லுப் பழைய கட்டிடம். இப்ப என்ன என்ன மாதிரியெல்லாம் புது டிசைனிலை இங்கினை வீடுகள் கட்டுகினம். இந்தப் பழைய வீட்டை இன்னும் வைச்சுக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு என்ன செய்யிறது? மழைபெஞ்சால் இதுக்க உள்ள நிலமெல்லாம் ஈரம் ஊறுது. கூரையில உள்ள மரந்தடியெல்லாம் அப்பிடியே உளுத்துக் கீழை கொட்டுது. எல்லாப்பக்கமும் படலம் படலமா தூசு பிடிக்குது. அந்த நாளைய ஓடுகள்தானே இப்பவும் கூரையில கிடக்கிறதுகள். அதுகளும் படிமானமில்லாமப் போய் நெடுக மழை பெய்யக்காட்டி வீடு முழுக்கவும் ஒழுகிக் கொண்டேயிருக்குது. அதால உந்தச் சுவர்களும் நனைஞ்சு வெய்யிலடிக்க பொருக்குக் கொட்டுது. உதுகளையெல்லாம் கூட்டுற துடைக்கிற மணியமாயிருக்கிறதுதான் இப்ப என்ரை வேலையாக் கிடக்கு. கையிலை பிடிச்ச தும்புத்தடியோட உதுகளையெல்லாம் தட்டிக் கொட்டித்

> മUഗ്രസീമ துடைச்சுக் கொண்டு முழுக்க இதுக்கெண்டு நான் நிக்க வேணும் உந்த அள்ளுகொள்ளை வேலையெல்லாம் செய்ய குனிஞ்சு வளைய, கிளுவந்தடியாட்டம் நாரிப்பூட்டும் நொறுங்குது எனக்கு. அதாலதான் இப்ப பாக்கிறன் இதை இடிச்சிட்டு இந்த இடத்திலை புது மோடியிலை ஒரு வீட்டைக் கட்டுவமெண்டு. 99
எனக்கு நெஞ்சு பகீர் என்று இருந்தது.
'அக்கா இது அம்மாவின்ரை அப்பு கட்டினதெல்லே! பரம்பரையா கனபேர் இருந்து சீவிச்ச வீடெல்லே இது. அவயளின்ரை ஞாபகத்துக்கெண்டாலும் கொஞ்சவரியத்துக்கு இப்பிடியே இது இருக்கட்டுமே அக்கா?”
‘உமக்கென்ன தம்பி விசரே. என்ன கிழட்டுக் கதையெல்லாம் நீர் கதைக்கிறீர்? அப்பு வீட்டைக் கட்டிப்போட்டாரெண்டு இதை வைச்சுக் கொண்டிருந்தா நிறையவிரிசல்களோட கிடக்கிற உதுகளெல்லாம் எங்கடை தலையிலுமெல்லே ஒரு நேரம் பொறிஞ்சு கொட்டுப்பட்டிடும். என்ரை மூத்தவளும் இப்ப வெளியாலை இருந்து நெடுக ரெலிபோனிலை கதைக்கேக்க சொல்லுறாள் வீட்டைக் கட்டுங்கோம்மா. வீட்டைக் கட்டுங்கோம்மா எண்டு. இங்க அதுக்கெண்டும் அவ பாங்கிலை போட்டுவிட்ட காசு மாசக்கணக்கா கிடையில கிடக்கு. இன்னும் கொஞ்ச நாளையிலை இதை உடைச்சுப்போட்டு வீட்டு வேலை துவங்கிறதுக்குத்தான் நான் யோசிச்சுக் கொண்டிருக்கிறன்!. y
எனக்கு ஒன்றும் சொல்ல முடியாது தொண்டை அடைத்தது மாதிரிப் போய் விட்டது. அக்கா சொல்வதில் ஞாயம் உண்டெனத் தெரிந்தாலும் ஒரு ஞாபகச் சின்னமாக நான் கருதிக் கொண்டிருக்கும் இந்த வீடு அழியப்போகிறதே என்ற சோகம் மனதை வாட்ட, எப்படியோ அதைத் தாங்கிக் கொண்டு நான் இருந்தேன். என்றாலும் அக்காவுக்குத் தெரியும்படி எனக்கிருந்த கவலையை முகத்தளவில் தெரியும்படி வெளிக்காட்டாமல் மறைத்திருந்தேன்.
‘என்ன தம்பியர் வீட்டைப் பாக்கப் போறனெண்டீர். அங்க இருந்து இவ்வளவு காலம் பிறகு இந்த அக்காவிலை கரிசனையில்லாம, வீட்டை முக்கியமாப் பாக்கவெண்டுதான் வந்தனிரோ?”
அக்கா அப்படிச் சொல்லவும் மீண்டும் எனக்கு, மனசுக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது.
‘என்னக்கா அப்பிடி நீங்கள் சொல்றியள்? அங்க கொழும்புக்கு நீங்க வந்து போறதாலை நான் இங்க உங்களைப் பாக்க வரவேணுமெண்ட அவசியமில்லாமக் கிடந்துது. இப்ப கனகாலமாய் நீங்க அங்கனேக்க வராம இங்க இருந்திட்டியள். அதாலதான் நான் இங்கினை வந்து உங்களையும் ஒருக்காப் பார்த்துப் போவமெண்டு வெளிக்கிட்டு வந்தன்.

Page 29
40 A அப்பிடி வந்ததோட இந்த வீட்டையும் பாக்க ஒரு ஆசை அதுதானொழிய வேறொண்டுமில்லையக்கா...!
‘சரி சரி உமக்கு எங்கடை அப்பற்றை குணம்தானே முழுக்கவும் இருக்குது. எல்லாத்திலையும் கரடியின்ரை பிடிமாதிரி அப்பிடியொரு பிடிவாதமும் உம்மட்டை இருக்கு. y y
என்னைப்பற்றி இப்படி அவர் சொல்லிவிட அக்காவின் கதையைக் கேட்டு நான் சிரித்தேன்
'தம்பி அறைக் கதவுகளெல்லாம் அப்பிடியே திறந்தது திறந்தபடிதான் கிடக்கு. ஏதோ உம்மடை ஆசைக்குப் போய்ப்பாக்கிற தெல்லாத்தையும் பாரும். இவ்வளவு வயசு செண்டும் குழந்தைத் தனம் இன்னும் மாறேல்லை 9 LDis(5....... நான் இனி குசினி அலுவல்களைப் பாக்கப்போறன்!. அங்க இருந்து அலைக்கழிஞ்சு களையோட நீர் வந்திருக்கிறீர். நேரத்துக்கு நான் கறி சோறை அடுப்பிலை வைச்சு இறக்கவேணுமெல்லே உமக்குத் தர?. அதால நீர் ஆறுதலா உதுகள் எல்லாத்தையும் பாத்து முடிச்சிட்டு வாரும் குசினிப்பக்கம். தம்பியோட கணக்கக் கதையிருக்கு பிறகு!. 9) அக்கா சிரிப்போடு இதையெல்லாம் சொல்லிவிட்டு குசினிப் பக்கமாய்ப் போக, அவரின்மேலுள்ள பாசத்தின் தூண்டுதலால் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு. அவர் போகும் வழியைப் பார்த்தபடி சிறிது நேரமாய் நான் அதிலே நின்றேன்.
y
‘என்ரை ஒரேயொரு அக்கா. என்ரை ஒரேயொரு அக்கா.
என்று எண்ணியவாறு என் மனத்தை அன்பினாலே நிரப்பிக் கொண்டு அந்தப் பாசத்தின் கதிரை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நான் வீட்டு அறைகளைப் பிறகு பார்க்கப் போனேன்.
அந்த அறைகளையெல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து நடந்து அளந்து வரும்போது, அவ்விடத்திலெல்லாம் என் சின்ன வயதுக் கால வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தேன்.
எனது சிந்தையில் வசந்த புஷ்பங்களாய் அவைகள் மலர்ந்திந்தன.
இந்த நாற்சார் வீட்டின் உள்ளே உள்ள விறாந்தையில் நடக்கின்றேனே என்று நினைக்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.
இந்த வீட்டிலிருந்தால் வெளியே போய் காற்று வாங்க நடந்து போய்வரத் தேவையில்லை. அந்தளவுக்கு இடம் சுருக்கமில்லாத இந்தப் பெரிய வீட்டின் உட்பக்கத்து முற்றத்துக்கு அருகே குபுகுபு வென்று திறமாகக் காற்று வரும்.

ඊඛ. நீரிஅருணானந்தம் ቆ ዘ 'அக்காவின் சாமர்த்திய சடங்கிற்கும் கலியாண வீட்டிற்கும் இந்த விறாந்தையில்தானே நூற்றுக்கும் மேற்பட்ட சனங்களை ஒரே நேரத்தில் சாப்பாட்டுக்கென்று பந்தியிருத்தினோம்!
அந்த விறாந்தையில் இடவலமாய் நிதான நடை நடந்து கொண்டிருந்தபோது எனக்கு இப்படியாக பழைய நாள் சிந்தனைகள் கிளிக்கூட்டமாய்ப் பறந்தது. அந்தச் சிந்தனையின்பால் பிறகு இன்னும் நான் அடைந்த இன்பம் எனக்கு ஆவலைக் கொடுத்து வீட்டின் பின் பக்கச் சாளரத்தடிக்குப் போவதற்கு வீறு கொடுத்தது.
அங்கே போய் அதிலே நின்று கொண்டு சாளரம் வழியாக கோடிப்புறத்தைப் பார்த்தேன்.
இரண்டு பரப்புக் காணிக்கப்பால் குறுக்காலே ஒரு சுவர் பின்புறத்தையெல்லாம் மறைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நான் உடனே துணுக்குற்றேன். என் உற்சாகம் அடியோடு அவிந்து விட்டது. மிகப் பெரிய மனச் சூன்யம் என்னை ஆட்கொண்டது,
உடனே 'அக்கா’. என்று நான் வாயைத் திறந்து அவரைக் கூப்பிட நினைத்தேன்.
ஆனால் சத்தம் வெளிவரவில்லை!
அப்படியே தொண்டைக்குள் வந்து நின்று, பிறகு அது அடங்கிவிட்டது. இந்த வீட்டின் உரிமை எனக்கு இல்லை!
உரிமை இல்லாத இடத்தில் எங்கேயாவது, ஏன் என்ற கேள்வி கேட்க (Մ)ւգեւյԼDT?
என்று அந்த எண்ணத்தை உடனே நசுக்கிவிட்டேன்.
'பிறகு இதைப்பற்றியெல்லாம் அக்காவுடன் ஆறுதலாகக் கதைக்கலாம். என்று நினைத்துக் கொண்டு, என் கண்பார்வைக்குத் தெரிந்த அந்தச் சுவரை ஊடறுத்துப் பார்ப்பதுபோல் எண்ணிக் கொண்டு, முன்பு அதற்குப் பின்னால் இருந்த அந்தப் பத்துப் பரப்புக் காணியையும் மனத்திரையில் படம் போட்டுப் பார்த்தேன். அந்தப் படம் மனத்தில் விரிவாக ஓடியது. பழங்காலத்து சினிமாபோல கறுப்பு வெள்ளையாக.
நல்ல சாரமுள்ள அந்த மண் கண்டத்திலே ஒரு பக்கம் அம்மா வைத்த மரவள்ளித் தோட்டமும் பலா, பப்பாளி, பழைய வேப்பமரம் ஆகியவையும் இன்னும் அதற்குள்ளே ஒரு சிறிய இடத்தில் வைத்த கத்தரிச் செடிகள் - பொசு பொசுவென்று முரட்டு இலைகளை நீட்டி நின்றதும் முதல் காட்சியாக

Page 30
42 A്ഗ மிகவும் துல்லியமாக வந்தது.
அந்தத் தோட்டத்துக்குள்ளே அயலட்டைப் பையன்களுடன் நான் ஒடிப்பிடித்து விளையாடிய நாட்கள் - அந்தப் பெடியன்களை சேர்த்துக் கொண்டு கிழங்கிழுத்துச் சுட்டு, அதை வாழை இலையில் வைத்துப் பிளந்து, ஆவிபறந்து ஆறவும் சாப்பிட்டது.
மரவள்ளி இழுத்து ஒய்ந்த காலத்தில், அந்த நிலத்திலே தழைத்துப் படர்ந்திருந்த காட்டுச் செடிகள் - அவைகளில் பூத்த வண்ண வண்ணப்பூக்கள் - அந்தச் செடிப்பற்றைக்குள் வளைந்த முள் கீறி தோல் அறுபட்டாலும், அந்த முள்ளின் கீறலினால் ஏற்படுகிற காந்தலை பொருட்படுத்தாமல் சகித்துக்கொண்டு, பூக்களைப்பார்த்து நான் இரசித்த நாட்கள் - எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாய் என் ஞாபகத்தில் வந்தன.
இளம் வாழ்க்கையின் இந்த மாதிரிச் சின்னச் சின்ன சம்பவங்களைத் தவிர, ஞாபகம் வைத்துக் கொள்ள என்னதான் இருக்கின்றன.
அந்த இனிமை பயக்கும் பழைய சிந்தனைகள் எல்லாமே காட்டுப் பூக்களின் போதை மணமான ஓர் உணர்வுடன் கூடியதாய் என்னிடத்தில் எழுச்சி பெற்று, புதியதோர் உற்சாகத்தை எனக்கு அதிலே ஊட்டியது.
என்றாலும் என்னளவில் காட்டுப் பூக்கள் மற்றவர்களுக்குப் புகழ்ந்து சொல்லத்தக்கதான அழகுள்ளவைதான்! எங்கினும் தன்னிச்சையாக வளரும் செடிக்கு, ஓர் தனித்துவம் இருக்கிறது. அதனால் அந்தச் செடியில் பூக்கும் பூக்களும் அலாதிதான். மனிதனின் கண் பார்வைக்குப் படாமல் அவைகள் காடுகளில் தானே அநேகம் இருக்கின்றன. அவைகளை யார்தான் பார்ப்பதற்குத் தேடிப் போகிறார்கள்?
அப்படி நினைத்தபோது என் கவனமெல்லாம், மனத்தில் விரித்துக்கொண்ட பைபிள் புத்தகத்தின் சில அதிகாரங்களை தட்டிப் பார்த்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் நின்றது. அந்த வசனத்தைப் படித்து முடித்த மன நிறைவோடு, மனத்தில் விரித்துப் படித்த பைபிள் புத்தகத்தை மூடினேன்.
அந்த வசனத்தை மட்டும் திரும்பத்திரும்ப நினைத்தேன்.
'காட்டுப் பூக்களின் இயற்கையான அந்த வர்ணத்தில் - ஞானமுள்ள அரசன் சாலொமோன் முதலாய்த் தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை!’
என்று இயேசு வசனித்திருந்தது, அந்த இடத்தில் நின்று, நெடு நேரம் வரை எனக்கு நினைத்துப்பார்த்து இரசிக்கும் படியாய் இருந்தது.
திரும்பவும் அந்தப் பூக்களிலும் அதற்கேயுரிய தனித்துவமான போதை

Q நீ/அருளானந்தம் f
மணத்திலும், தேனில் விழுந்த எறும்பு போல் மனம் லயப்பட்டிருக்க. குசினிப் பக்கமாய் எழுந்த கறிகொதித்த வாசனை என்னைக் குழப்பிவிட்டது.
''
‘தம்பி வாரும். வாரும் தம்பி.!
அக்கா தொடர்ந்து என்னைக் கூப்பிடுகிறாரென்று நான் குசினிப் பக்கம் போகவேண்டியிருந்தது.
‘முகம் கைகால்களைக் கழுவிக் கொண்டு வாருமன் தம்பி சாப்பிட?” நான் குசினிப்பக்கம் போன போது அக்கா என்னிடத்தில் அப்படிச் சொன்னார். சமையல் செய்தே அக்கா களைத்துப் போனவள் போல் இருந்தார்.
அனல் சூட்டினால் அவரது முகம் கன்றிச் சிவந்து கொவ்வைக்கனி போலும் ஆகியிருந்தது. அடுப்புப் புகையில் அவரது கண்கள் எரிந்து கலங்கி வழிந்திருப்பதாயும் எனக்குத் தெரிந்தது.
விரைந்து பழுத்து நரையும் திரையும் தோன்றி மூதாட்டியாக அவர் வந்துவிட்டாரே. ? காலத்தை அவர் கடக்குமுன்பே காலம் அவரைக் கடந்து விட்டதே. ? பாவம் என்ரை அக்கா..! என்னைக் கண்டதோட அவசரப்பட்டெல்லாம் குசினிக்கை கிடந்து மாஞ்சிருப்பா.” - என்று நான் அக்காவின் முகத்தைப் பார்த்து அவர்மீது இரக்கப்பட்டேன். பிறகு கிணற்றடிப் பக்கமாகப்போய் அண்டாப் பானையில் நிறைத்து வைத்திருந்த தண்ணிரை சருவச் சட்டியால் அள்ளி எடுத்து கைகால் முகம் கழுவிக் கொண்டு வந்து சாப்பாடு மேசைக்கருகில் கதிரையை இழுத்து வைத்துக் கொண்டு அதிலே இருந்தேன். அரைச்ச கூட்டிலை மணமும் குணமுமாக அக்கா வைச்சிருந்த மீன் குழம்பு சாப்பிடும்போது உறைப்பும் புளிப்பும் உப்பும் கலந்த அபூர்வமான ருசியாயிருந்தது எனக்கு. நெய்ப்பிடிப்பான அந்த மீன் குழம்புடன், முருங்கைக்காய்ப்பால் கறியும், கத்தரிக்காய் வதக்கலும், மாப்போல மசிந்த மரவள்ளிக் கிழங்குக் கறியும், புழுங்கலரிசிச் சோறும் - பசித்த பசிக்கு வயிற்றுக்கு, தின்னத்தின்ன நன்றாகக் கொண்டுவா கொண்டுவா என்றதாய் இழுத்துக்கொண்டிருந்தது.
நான் சாப்பிடும் வேளையிலும், அந்தக் காணியைப் பற்றிய சம்பவம் என் நினைவில் சுழன்று கொண்டுதானிருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் அக்காவுடன் அதைப்பற்றிப் பேசலாம், என்று நான் அதைப் பொறுத்துக் கொண்டிருந்தேன்.
சாப்பிட்டு முடித்து பூண்டு மணத்தோடு ஒரு கிளாஸ் ரசத்தையும் குடித்து பிறகு நான் கை கழுவிக் கொண்டதும்.

Page 31
44 A அக்காவே காணிக் கதையைத் தொடங்கினார் - எனக்கு அது உடனே வாய்ப்பாகிவிட்டது.
'அக்கா பின்னாலே கிடந்துதே பத்துப்பரப்புக்காணி . ייף
y
‘ஓமோம்!.
‘அந்தப் பக்கமாய் இப்ப இடையிலை சுவர் எழுப்பியிருக்கே?”
y
'அது நாங்கள்தான் கட்டினம். ‘ஏன் காணியைப் பிறிச்சுக் கட்டினியள்?”
‘அந்தக் காணிக்கு நல்ல விலை வந்திச்சுத் தம்பி. அதை வித்திட்டு மிச்சத்தை வைச்சிருக்கிறம்.”
‘அப்பிடியெண்டா வித்த காணி எத்தினை பரப்பு?”
‘முழுக்கப் பத்துப் பரப்பு.!
'பத்துப் பரப்பா. ?” - நான் அதிர்ந்து விட்டேன். பூமியிலிருந்து நரகத்துக்கு என்னை யாரோ தூக்கி எறிந்து விட்டது போல அப்போது எனக்கு இருந்தது.
'பத்துப் பரப்புக் காணியெண்டால் கொஞ்ச நஞ்சக் காணியே அக்கா..? அவ்வளவையும் வித்திட்டியளே. ? ஏன் வித்தியள்?”
நான் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன். ஆனால் அக்காவோ நான் கேட்ட கேள்விக்கு உடனே தனது கோபத்தை எனக்கு வெளிக் காட்டினார்.
“எனக்குச் சீதனமாய்த் தந்த காணிதானே. நான் இதை விப்பன் விடுவன்; அதைக் கேக்க ஒருவருக்கும் உரிமையில்லை. எனக்கு அப்பரும் ஆத்தையும் ஆனை சேனையையே சீதனமாக் குடுத்தவயள்? இந்த வீட்டையும் காணியையும் தானே தந்தவயள். அதைவிட பெரிசா எனக்கெண்டு என்னத்தைத் தந்து கிழிச்சவயள்.?” - என்று அக்கா இப்படி எடுத்தெறியிற மணியமாக் கதைத்தார். அவர் சொல்லிய விறுத்தம் யாரோ செகிட்டைப் பொத்தி அடித்தது மாதிரி எனக்கு இருந்தது. ஆவணிமாதத்து வெயிலும் மழையும் போல நிமிஷத்துக்கு நிமிஷம் குணம் மாறுகிறவர் அக்கா - என்று எனக்குத் தெரியும், அதனால், 'ஏன் எனக்குத் தேவையில்லாத கதைகளை அவவுடன் கதைப்பான்’ என்று நினைத்து - இனி இதைப்பற்றி தலைக் கெறுக்குப் பிடிச்ச அவவோட மேலே கதைக்கக் கூடாது, என்று அதனால் நான் மனத்துக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
ஆனால், அந்தக் காணிக்கு அதிபதியான அக்கா, அதைப்பற்றிய கதைகளை அதற்குப் பிறகும் விடாமல் அடுக்கிக் கொண்டே போனார்.

A நீ/அருணானந்தம் 45 “எனக்கு அப்பா அம்மா சீதனமாகத்தந்த காணிதானே தம்பி இது..? காணி வீட்டில எனக்கு உரிமை இருக்கிறமாதிரித்தான் என்ரை அவருக்கும் உரிமை இருக்குக் கண்டியோ..!!”
இதைச் சொல்லும்போது அக்காவின் கண்கள் அகல விரிந்து கொண்டே இருந்தன. எனக்கோ அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
6 é
அதையெல்லாம் நான் இல்லையெண்டேல்லை. ஆனா இந்தக் காணியை விக்காமல் அதை நீங்கள் மகளுக்குக் குடுத்திருக்கலாம். அல்லாட்டி மகனுக்காவது குடுத்திருக்கலாம் பரம்பரையா அப்பிடி அப்பிடியே அது பாதுகாப்பாய் அவயளிட்டையே இந்தச் சொத்து அழியாமக் கிடந்திருக்குந்தானே அக்கா?.”
‘' ஓம் நீர் சொல்லுறது சரிதான். ! ஆனா மகள் அங்க கனடாவிலையெல்லே வீடு வளவெல்லாம் வாங்கீட்டாள். பிள்ளை குட்டியளும் அங்கினைதானே பிறந்ததும் இருக்கிறதும். அங்க அதுகளையெல்லாம் விட்டுப்போட்டு இனி இங்கயெங்க அவயள் வரப்போகினம்.? இனி அவயள் இங்க வாற அசுகிடை இல்லை.! நான் இந்தக் காணியை வித்ததிலை வந்த காசுகளிலை அரைவாசியை மகள் கனடாவிலை வாங்கின காணி வீட்டுக்கு அவவுக்கு காசு தட்டுப்பட்டதாலை அனுப்பிப்போட்டன். இங்க வித்து அங்க அதுகளுக்குச் சீவியத்துக்குத் தேவையானதை வாங்கட்டுமே. காலம் மாறிக் கொண்டு வருகுது! நாங்கள் மாத்திரம் உந்தப் பழைய கொள்கையளை கட்டிப்பிடிச்சுக் கொண்டிராம புத்தியாயிப்ப சீவிக்க வேணும் தம்பி!”
அக்கா எனக்கு இப்படிச் சொல்ல, அந்தக் கதிரையில் இருந்தபடி நான் அண்ணாந்து மேலே முகட்டைப் பார்த்தேன். நான் அப்படி நிமிரும் தருணம் முகட்டு வளையிலிருந்து உளுத்துப் போன துகள் கள் அந்த மரத்துளைகளிலிருந்து ஊதிவிட்டாற்போல் வெளியே காற்றில் அலைக்கழிக்கப்பட்டு வந்து என் கண்களில் விழுந்தன.
99.
'கண்ணுக்குள்ள. சிச்சிச். தூசு விழுந்திட்டக்கா. ‘அடட சவம். உடன கண்ணைத் தண்ணியாலை கழுவிவிடும் தம்பி!”
என்று சொல்லிவிட்டு செம்புத் தண்ணிரோடு வந்து என் கையைப் பிடித்து வாசலடிக்குக் கூட்டிப் போனார் அக்கா.
நான் முகத்தில் தண்ணிரை அடித்து மூசி மூசிக் கழுவுவதைப் பார்த்து விட்டு:
G
'பார்த்தீரே தம்பி! உமக்கு நான் சொன்னன் இந்த வீட்டைப்பற்றி. நான் இந்த வீட்டைப்பற்றி சொன்ன குறையெல்லாம் இப்ப வாய் உமக்குத்

Page 32
46 ബ്ര தெரியுதே? கண்ண வடிவா கழுவிவிடும்.!
sy
நான் கண்களை விழித்து வைத்து தண்ணிரால் கழுவிக் கொண்டிருக்கும் வேளையில் அக்கா இவ்விதம் சொன்னார். எனக்கு இப்படி நடந்தது அவருக்கு செப்பமான பிடியாயிற்று.
முகத்தை நன்றாக கழுவிவிட்டு கண்களின் உறுத்தலோடு அக்காவின் முகத்தை நான் விழித்துப்பார்த்தேன். ••••
'சைச் சைச்சேய். கண்ணெல் லே உமக்கு நல்லா ரெத்தச் சிவப்பாயிட்டுது”
என்று சொல்லிவிட்டுப் போய்த் துவாயைக் கொண்டு வந்தார்.
நான் முகத்தைத் துடைக்கும்போது மிகுதிக் கதையை எடுத்தார்.
‘தம்பி வித்த அந்தக் காணியை விட இப்ப மிச்சம் இருக்கிற இந்த வீட்டுப் பக்கம் என்ரை மகளுக்குத்தான் குடுப்பன் கண்டீரோ. அவ இந்த வீட்டை இடிச்சுப் போட்டு புது வீடு கட்டப்போறா. இந்தக் காணிக்கிள்ளை ஒரு பக்கம் புதுசாக் கடையளைக் கட்டி அங்காலை வாடைக்குக் குடுத்திருக்கிறனே அதுகளெல்லாம் முழுக்கப் பங்கு பாகம்பிரிச்சு மகனுக்குத்தான் எழுதுவன். என்ரை ரெண்டு பிள்ளையஞக்கும் உந்தப் பின் காணியை வித்ததாலைதான் ஒரு முன்னேற்றமான நல்ல வழியளை நான் காட்டினன். அதைவிட எனக்கும் அவருக்குமெண்டு பிற்காலத்துச் சீவியத்துக்கும் தேவையான காசு நான் பாங்கில போட்டிருக்கிறன். அவருக்கும் ஒழுங்கான ஒரு வேலையில்லை. செப்புச்சல்லியும் அவர் எனக்குத்தாறதுமில்லை. ஏதோ பாங்கிலை இருந்து வாற வட்டிக் காசிலைதான் எங்கடை சீவியம் இப்ப ஓடுது.”
அக்கா இப்படிச் சொல்லிக் கொண்டு போக அந்தக் காணியை அவர் விற்று விட்ட ஆத்திரத்தில் மட்டும் இருந்த நான்; அவரை ஒரு கதையிலென்றாலும் விழுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில்:
“உங்கடை மகனும் வெளிநாடு போகத்தானே விருப்பப்பட்டுக் கொண்டு இருப்பார். அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிற யோசனை ஒண்டும் உங்களுக்கு இல்லையோ. ?’ என்று இப்படியாக முதலில் ஒரு போடு போட்டேன்.
“இங்க அவர் இருந்து என்ன செய்யிறது. இங்க அயலட்டையிலை இருக்கிறவயள் எல்லாரும்தான் இப்ப பிள்ளையளை வெளி நாடுகளுக்கு அனுப் பிப் போட்டு மினு மினுக்கிற வயஞம் கிணுகினுக் கிறவயஞமாயிருக்கினம். நாலு திக்கிலும் நாலு சாதியும் அப்பிடி இருக்கேக்கை நாங்கள் அதுகளுக்குக் குறைச்சலே. வெளிநாடுவழிய நாங்களும் பிள்ளையளை அனுப்பத்தானே வேணும். ? நாலுபேரும்

நீ/அருளானந்தம் Ꮑ7 இப்ப போகிற இடத்துக்கு அவரும் போய்ப் பிழைக்கத்தானே வேலும். '? அங்க அக்கா இருக்கிற இடத்துக்குத் தம்பியும் போய்ச்சேந்திட்டாரெனன் 1 கரைச்சலில்லைத்தானே. ? இப்பவெல்லாம் அங்க வெளியாலை போகத்தான் அவர் அடுக்குப் பண்ணுறார். s
‘நீங்க சொல்லுற மாதிரிக்கு அப்ப அவரும்தான் வெளிநாட்டுக்குப் போகப்போறார்.?”
sy
‘ஓமோம் அவரும் கெதியாப் போயிருவார்.
'அக்கா கேக்கிறதெண்டு கோவியாதையுங்கோ. அவரும் வெளியாலை போய் அங்கையே இருந்திட்டா அவற்றை கடை கண்ணி இருக்கிற காணியையும் விக்கிறதுக்குத்தானே பிறகு நினைப்பார்.?”
“ஓம் அப்பிடியும் செய்வினம்தான். அங்க இருக்க சிற்றிசன் கிடைச்சாப் பிறகு இங்க என்னத்துக்குச் சொத்துப்பத்தை. ? இதை யார் பேந்து இருந்து காபாந்து பண்ணுறது? நாங்களும் வயது போய் செத்துப்போவம். அதுக்குப்பிறகேன் இங்க இதுகளையெல்லாம் அவயஞக்கு. ? அங்க காணி பூமியளை வாங்கி இருக்கிறதுக்கு வசதி இருக்கேக்க இதுகளை வைச்சுக் கொண்டிருக்கத் தேவையில்லைத்தானே. இதுகளை வித்து அங்க அவயள் உழைக்கிற காசுகளையும் சேத்து நல்ல வீடு வளவு வாங்கட்டுமே. ၇၈
தன் கழுத்துச் சங்கிலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு அதிலே விரல்கள் விளையாட பதில் சொன்னார் அக்கா. அவர் இதையெல்லாம் சொல்லி முடிக்க கொத்திப் பிடுங்குகிற அவமானம் எனக்கு வந்தது. எதுவோ வலி உண்டாக்கும்படி கடித்து விட்டது போலும் இருந்தது எனக்கு. அந்த வலியின் உணர்வுடன் ஏமாற்றமும் கனத்த சுமை போல உடல் முழுக்கப்பரவ : “அக்கா நான் வெளிக்கிடப்போறன். ” - என்று சொல்லிக் கொண்டு எனது பிரயாணப் பையை தூக்கினேன்.
‘என்ரை அந்தோனியாரே என்ன தம்பி உமக்கு வந்தது? வந்ததும் வராததுமா வெளிக்கிடுறனெண்டு நிற்கிறீர். ஏன்?”
G
(. . . . . . . . நான் போயிற்று இன்னொரு நாளைக்கு ஆறுதலா வந்திங்க நிக்கிறனே அக்கா!’
'ஏன் அப்பிடித் தம்பி. p"
‘ஒரு நாள் லீவிலதான் நான் வந்தனான் அக்கா!” ‘என்ன பிள்ளை நீர். ? அங்கயிருந்து வாறிர் நாலுநாள் லீவோட வந்திருக்கலாமே? இந்த ஆனியில வாற அந்தோனியார் பெருநாளோட
நீர் இங்காலை வந்து இருவது வரியமாகுது. அப்பிடி கனகாலம் செண்டுவாறிர். அதுக்குள்ளவாய் ஏன் திரும்பி ஓடிப்போக நிக்கிறீர்..?"

Page 33
48 முதுசம் ‘நான் போயிற்று கிட்டடியிலை கட்டாயம் ஒருக்கா இங்கினை வருவனக்கா. அப்பிடி வரேக்கை நாலு நாள் லீவோட தான் வருவன்’
நான் சொல்லவும்: ‘'இரும் வாறன். ' - என்று என்னிடத்தில் சொல்லிவிட்டு அக்கா வீட்டினுள்ளே போனார். அறையிலிருந்து அவர் வெளிவரும்போது கையில் ஒரு ‘தேன்’ போத்தலோடுவந்தார்.
‘அப்பிடியே வதையாக் கொண்டு வந்து என்ரை கண்ணுக்கு முன்னால வைச்சுப் பிழிஞ்சு தந்திரி மலையிலை இருந்து வந்தவனொருவன் தந்தவன்” அக்கா அந்தத் தேனைப்பற்றி திறமாகச் சொல்லிவிட்டு என்னிடத்தில்தந்தார். அவவுக்கு நன்றி சொல்லிவிட்டு அதை வாங்கி நான் பையில் வைத்துக்கொண்டு புறப்பட எழுந்து நின்றேன். இப்போது வீட்டு விறாந்தைச் சுவரிலே என் கண்பார்வை போனது.
அப்பு, ஆச்சி, அம்மா, அப்பா - என்று தலைமுறை வரிசையாக அங்கே அவர்களின் படங்கள் சுவற்றில் ஆணியடித்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த நாள் காலத்து தலைப்பாக் கட்டோடு அறிவுகளையெல்லாம் ஏந்தியிருக்கும் பிரகாசமான விசாலமான கண்களுடன் கம்பீரமாகவுள்ள அப்புவின் படத்தைப்பார்க்க எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமாகவும் இருந்தது. அவருடைய மகத்துவங்களை என் சிறிய மனத்தைக் கொண்டு அள்ள முடியவில்லை. ‘பாத்திரே அப்புவின்ரை அந்தப் பழைய படங்களை. அவரிண்ட படத்துக்குப் பக்கத்திலை அந்தநாள் அவர் வைச்சுப்பாவிச்ச லத்தீன் சுவர் மணிக்கூடும் இருக்கு”
நான் சிரித்தேன். “இதையெல்லாம் புது வீடு கட்டி அதிலை இன்னும் பவறாய் நான் வைப்பன்” அக்கா இப்படிச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
நான் உடனே உம் - மென்றதாகிவிட்டேன். இனிமேல் அக்காவை எதிர்த்து வெல்ல முடியாததுதான் என் பேச்சு - என்று எனக்கு விளங்கிவிட்டது. சுவர்க்கடிகாரத்தைப்பார்த்தேன். கடிகாரம் மூன்றடித்து இரண்டு நிமிஷம் ஆனதைக் காட்டிற்று. நான் பிரயாணப்பையை தூக்கிக் கொண்டு வெளிக்கிடவும், அக்கா என்னுடன் கூட வந்து படலையைத் திறந்தார். 'தம்பி! ஒருக்கா போகேக்கை அதிலையும் போய் அத்தானைப் பாத்துக் கதைச்சிட்டு அவரிட்டயுமாச் சொல்லிப்போட்டு வெளிக்கிடும்.”
'ஓமக்கா. போகேக்கை அப்பிடியே சொல்லீட்டுப்போறன்..!

শুৈ১২ நீபஅேருணானந்தம் ‘அப்பவடிவாய்ப் போயிற்று வாரும் தம்பி
''
நான் அவரைப்பார்த்து தலையை ஆட்டிவிட்டு விடைபெற்றுக்கொண்டு விதியில் நடக்கத் தொடங்கினேன். சிறிது தூரம் நான் நடந்து போய்க்கொண்டிருக்க அக்கா வேலிப்படலையை இழுத்துப் பூட்டிக் கொள்ளும் சத்தம் கேட்டது.
‘அத்தானிடம் போவோமா. 6îGG36 JITLDT?”
மனத்தில் இந்த இரட்டைக் கேள்விகளை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று நான் குழம்பினேன். அத்தான் இருக்கிற கொல்லன் கம்மாலையடிக்கு அந்த நாற்சந்தியின் இடதுபக்க வீதியில்தான் திரும்பிப் போக வேண்டும். ஆனால், சந்திப்பக்கம் போனபோது அவரிடம் போகவேண்டும் என்று எடுத்த தீர்மானம் எனக்கு மாறிவிட்டது.
அத்தானை நினைக்க: அவர் மாட்டை அடிக்கப் பாவிக்கும் சாட்டைக் கம்புதான் ஞாபகத்துக்கு வந்தது. அவர் சவாரியின் போது "புர்ர்ர் - ரென்று மூச்சு விட்டுக் கொண்டு ஹேய் ஹேய் என்ற சத்தமான கோபத்தோடு மாடுகளைச் சாட்டையால் அடித்துக் கலைப்பதும், அவைகள் அடி வேதனையில் 'உம்ம் - காரமிட்டுத் தறி கெட்டுப்பாய்வதும் நினைக்க வேதனையாக இருந்தது. அந்தச் சாட்டைக் கம்புக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்! எதுவித வித்தியாசமும் இல்லை என்றே அதிலே வைத்து நான் நினைத்தேன். மாட்டை அடிச்சு வருத்திக்கொண்டு அது ஒரு பிழைப்பு? - மாட்டுக்குத் தொல்லை குடுக்கிற ஈயை மாதிரித்தான் அந்த மனுசன்!
இப்படியெல்லாம் அவரிலே வெறுப்பு எனக்கு வந்தது. உறவினால் என் அருகிலே; ஆனால் மனத்தினால் தொலைவில்தான் அவர் இருந்தார். அதனால் அவரைப்பார்க்கப் போக மனம் ஏவவில்லை!
‘இரவிலே நேரம் சென்ற பின்பு கொழும்பு நகருக்குப் போய் அங்கிருந்து வீட்டிற்குப் போவதற்கும் சிரமமாகிவிடும் - அதனால் வேளைக்கே போய் பஸ் ஏறுவோம்’
என்று நினைத்துக்கொண்டு கந்தசாமி கோயில் வீதிவழியாக விரைவாக நான் நடக்க ஆரம்பித்தேன். அந்த வீதியின் அருகே உள்ள நாலைந்து வீடுகளைக் கடந்துபோனபின்பு, செந்தில்நாதனின் வீட்டுக்கு முன்னாலுள்ள மாமரம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதன் கனத்துக் கிளைந்த கெட்டுகளில், ஒருபக்கம் பட்டுப்போய் இருந்தன. அவற்றிலெல்லாம் கதிரவனின் சாய்ந்த ஒளிக் கிரணங்கள் வீசிக்கொண்டிருந்தது. அதையும் நான் அக்கறையுடன் பார்த்த போது, ஒரு காக்கை அதிலே பட்டுப்போய்விட்ட வலுவான ஒரு மரக்கெட்டில் இரும்புச் சிலை போல் ஆடாது உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

Page 34
50 ഗ്ഗീ
அது நோய்வாய்ப்பட்டதான காகமோ..?” - என்று நான் நினைத்த கணத்தில், அதிலே இருந்த வாக்கிலே சடக்கென்று அடித்துப்பறந்து அந்தக் காணிக்குள்ளாக அம்பெனப் பறந்து அது போனது.
( 6.
(b. . . . . . . கொள்ளையில போவான்ரை காகம் வந்து கோழிக் குஞ்சை அள்ளிக்கொண்டு போகுதே. ’ அந்த வீட்டுக்காரி சத்தம் போட்டுக் கத்தினாள்.
நான் காகத்தைத் தேடி ஆகாயமெல்லாம் விழித்தேன்.
'கஷ்டப்பட்டு அதுகள் வளக்கிற கோழிக்குஞ்சை ஒரு நிமிஷத்திலை இந்தக் காகம் அடிச்சுக்கொண்டு போயிற்றுதே?
என்கிற ஆத்திரத்தில், என் நெற்றிக் கண்ணைத் திறந்தது போல ஒருவித ஆவேசத்துடன் அங்கு பறந்து மறையும் பறவைகளில் அந்தக்காகம் உண்டா என்றும் தேடினேன்.
அப்படித் தேடியும் அது என் கண்களுக்குத் தட்டுப்படாததால், எங்கோ தொலைவில் பறந்து போய் விட்டது என்பதாய்த்தான் பிறகு நான் உணர்ந்தேன். அந்தக் கோழிக்குஞ்சையும் காகத்தையும் வைத்து - வீட்டுப் பிரச்சினையையும் நான் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன்.
அதனால் மனத்தில் உளைந்து வலித்துக் கனத்தது எனக்கு. அந்த நேரம் நெஞ்சதிருக்கிற சாடை இடி முழக்கம் ஒன்று வானத்தில் கேட்டது.
மேகத்திலிருந்து பிறகு மழை கம்பியாக விழத் தொடங்கிவிட்டது. நேரத்துக்குப் போய் பஸ்ஸில் ஏறிவிட வேண்டும் என்ற அவசரத்தில், மழைக்குப் பயந்துகொண்டு அந்த வீதியில் போய்க் கொண்டிருந்த அவசர நடை மனிதர்களோடு நானும் சேர்ந்து நடந்தேன். ஒருவாறு கொழும்பு பஸ்ஸைப் பிடித்து அதற்குள் ஏறி உட்கார்ந்தேன். நான் அதற்குள் ஏறியதும்தான் தாமதம், சொல்லி வைத்ததுமாதிரி அந்த பஸ் மிரட்டலான எகத்தாளத்துடன் இரைச்சலோடு நகர்ந்தது.
தினகரன் வாரமஞ்சரி
(ஜனவரி, 2005)
OOO

නාම, நீரிஅருளானந்தம் ፶ |
தீ
காய்ந்த தென்னம் மட்டையாக அந்தப் பாயிலே படுத்துக்கிடந்தாள் செல்லாயி இரண்டு நாட்களாக உடலில் கொதித்துக் கொண்டிருந்த காய்ச்சல், இளகி விட்டிருக்கின்றது மாதிரித் தெரிந்தது அவளுக்கு.
அதனால் உடலில் இருந்த சிறிது பலத்தோடு, படுத்திருந்த பாயிலிருந்து எழுந்து அவள் உட்கார்ந்தாள். பிறகு அடுப்புப் பக்கமாக தன் பார்வையை அப்படியே அவள் திருப்பினாள். அவளது ஒரேமகள் கறுப்பாயி அங்குதான் இருந்தாள்.
அந்தப் பக்கம் மூலையில் கிடந்த மண்பானையை, ஊனமுள்ள தன்கையை வைத்துச் சரித்துப்பிடித்தவாறு தண்ணிரைக் கோப்பையில் அவள் ஊற்றிக் கொண்டிருந்தாள். அவள் பானையைப் பிடித்துச்சரித்திருந்த தினுசு தண்ணிரும் அதிலே காலியாகி வருவதை செல்லாயிக்குக் காண்பித்தது. தன் எட்டு வயதுப் பிள்ளை பட்டினியில் தண்ணிரைக் குடித்துக் குடித்து வயிற்றை நிரப்புகிறாளே, என்று அதன்மூலமாக செல்லாயி மனம் வருந்தினாள். “ஊனப்பட்டுப் பிறந்த பிள்ளை சாப்பாடுமில்லாமல் காயுதே” என்று நினைக்க, நினைக்க இரத்தம் வற்றிப்போய் சாம்பல் பூத்த அவள் முகத்தில், வேதனையின் கருநிழல் படிந்தது.
“கருத்தம்மா..! இங்கிட்டு ஒரு வாட்டி வந்துக்கிறியா தாயி..!” அவள் கூப்பிட்டதும்தான் தாமதம், உடனே தாயின் முகத்தை கறுப்பாயி பாாததாள.
“எழுந்திருச்சிட்டியாம்மா! ஒனக்கு காச்சலு விட்டுடிச்சாம்மா..? ” குழந்தையவள் தாயைப்பார்த்தபடி ஆவலுடன் கேட்டாள்.
“இப்ப தேவலைப்போல உடம்புக்கிருக்குக் கண்ணு. தண்ணியை கொஞ்சமூண்டு எனக் கும் கொண் டாந்து தந்துக் கிறியாம் மா. தாகமாயிருக்கு.?’ அவள் கேட்டதும் தான் தாமதம், அடுப்படியின் பக்கத்திலிருந்த அந்தக் குடத்தை நிமிர்த்திவைத்துவிட்டு, தண்ணிர்க் கோப்பையுடன் கறுப்பாயி தாயின் அருகிலே வந்து விட்டாள்.

Page 35
52 தி “இந்தாம்மா குடீம்மா..!’
“ஒனக்குத் தவிக்கலியா?”
''
“இல்லம்மா நீ குடிச்சிக்க.
“நீ சாப்புட்டியா கண்ணு.? தவசி ஐயாவோட கடையில கடனுக்கு ஏதாச்சும் திங்கிறத்துக்குண்ணு கேட்டு வாங்கியிருக்கலாமே..?”
"அவரு இனி கடனேயில்ல ஒண்ணுமே தரமாட்டேனெண்ணுட் டாரும்மா..! இருக்கிற கடனு பாக்கி எல்லாமே காசைக் கொண்டாந்து குடுத்து தீத்துப்புட்டு அப்புறமா இங்கிட்டுப்பக்கம் கடைக்கு நீவந்துக்க. உங்க ஆத்தாகிட்ட போயி சொல்லு. எண்ணுகிட்டு என்னே ஏசி விரட்டிப்புட்டாரும்மா..!”
தன் குழந்தை அப்படியே அதையெல்லாம் கண்கலங்கியபடி சொல்ல, அதைப்பார்த்ததும் அவளுக்கு அழுகைவந்து தொண்டையை இறுக்கியது.
என்றாலும் அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு விட்டாள். தன் கணவன் இறந்ததிலிருந்து, வெந்து புழுங்கிமனம் சலித்து வாழ்க்கைப் போராட்டத்தில் காயங்கள் ஆறாமல் இருக்கிறமாதிரி மனத்தில் கீறிக் கொண்டே அவள் வந்திருக்கிறாள். எல்லாக் கஷ்டங்களும் வந்து பட்டுக்கழித்த பின்பு, புதிதாய் என்னதான் ஒரு துன்பம் முளைத்து அவளை ஆட்டி வைக்க இனிமேல் வல்லமையாய் வரப்போகிறது.
பிள்ளை கொண்டுவந்து கொடுத்த தண்ணிரை வாங்கிக்குடித்துவிட்டு.
“நீ வுட்டீல இருந்துக்கிறியாம்மா. நான் வெளியில போயிட்டு வந்துக்கிறேன்’ என்றதாய் அவள், ஒரு முடிவு எடுத்துக் கொண்டதுபோல முகத்தை வைத்துக் கொண்டு மகளைப் பார்த்துச் சொன்னாள்.
“காச்சலோட வெளிய எங்கிட்டம்மா போறே.?”
“எனக்கிப்ப காச்சலு இல்லம்மா! நீ ஒண்ணுக்கும் பயப்பிட்டுக்காம தைரியமாயிருந்துக்க. நான் போயி ராத்திரிக்கி ஏதாச்சும் ஒனக்கும் எனிக்கும் திங்கிறதுக்கு கடேல வாங்கிக்கிண்ணு வர்றேன். நீ பக்கத்து வீட்டு அங்கம்மாவுட்டயாப்போயி லாந்தருக்கு கொண்சமூண்டு எண்ணையை வாங்கிக்கிட்டுவந்து விளக்கை ஏத்தி வைச்சிக்கம்மா..!” சொல்லிவிட்டு ஓலைத்த்ட்டியில் செருகிவைத்திருந்த சீப்பை எடுத்து, சிடுக்கு விழுந்த தன் தலை மயிரை ஒரு வாறு அதனால் வாரி அவள் பின்னல் போட்டுக் கொண்டாள்.
இப்போ முகம் கழுவிக்கொள்ளவும், அவளுக்கு தண்ணிர் அங்கில்லை!
பானையில் இருந்த தண்ணீரும் காலியாகிவிட்டது. அந்த இடத்திலிருந்து பொதுக்கிணற்றுக்கு, அதற்காகவென்று குடத்தைக் கொண்டு அவள் இனிமேல்

நீரிஅருளானந்தம் போக வேண்டும். அதற்கெல்லாம் அவளுக்கு இப்போது நேரமில்லாத மாதிரியே இருந்தது.
பொழுது பட்டுக் கொண்டு வருவதால், நேரத்துக்கு அதிலே போய் இருட்டும் தருணத்திலிருந்து அவள் அங்கே நின்றாக வேண்டும். அதை நினைத்துக் கொண்டு.
“நானு கிளம்பிப் போயிட்டு அப்புறம் வந்தப்புறமா கிணத்திலை போயி தண்ணிய அள்ளிக்கிறம்மா. நீயுமட்டும் அதுக்காக கிணத்துப்பக்கமா போயிடாத தாயி!. நான் போயிட்டு எப்பிடியாச்சும் சீக்கிரமா வுட்டுக்கு வந்துக்கிறேம்மா..!” அவள் தன்னுடைய மகளைப் பார்த்து இதையும் விளங்கச் சொல்லிவைத்து விட்டு, அவசரம் அவசரமாக அந்தக் குடிசையை விட்டு வெளியே கிளம்பினாள்.
கறுப்பாயி தாய் வெளியே கிளம்பிப் போவதை சோகத்துடன் பார்த்தவாறு குடிசையின் வாசலடியில் நின்றாள். அன்னை சோர்வாக நடந்து போவதைப் பார்க்கையில், அந்தப் பிஞ்சு மனமும் கிடந்து வேதனையில் துடித்தது.
“இந்த நேரம் அம்மா எங்கே போகிறாள்?’ - என்பது அவளுக்கு ஒன்றும் விளங்காமல்தான் இருந்தது. அவளுக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதலாய், இது போலத்தான் அவள் பொழுது சாயவும் குடிசையிலிருந்து வெளியே கிளம்புகிறாள். நடு ராத்திரியானதும் வீடுதிரும்புகிறாள். இரவு வீட்டுக்குத் திரும்பும்போது அவளுக்கும் நிறைய கடையிலிருந்து, சுவையான தீம்பண்டங்களைக் கொண்டுவருகிறாள்.
“இதுவெல்லாம் எப்படிக் கிடைக்கின்றது?” - என்று அவள் வியப்புடன் சிலவேளைகளில் தாயைக் கேட்பாள்.
இரவுவேளையில் அரிசி ஆலைக்கு, வேலைக்குப் போய் வருகிறதாகத்தான் செல்லாயிதன் மகளுக்கு அப்பொழுதெல்லாம் கூறுவாள்.
“அந்த மில்லு வேலையில - குமியலில கெடக்கிற நெல்லுங்களையெல்லாம் வாளிங்களால அள்ளிக்கிட்டுப்போயி நெல்லு குத்திக்கிற அந்த மிசினுக்குப் போடணுமும்மா. அப்புறம் அப்பிடியேதான் அரிசிங்களையும் குமியலில இருந்துக்கிட்டுஅள்ளி அதுவ தீட்டிக்கிறதுக்கு அலர் வாயிக்குப் போட்டுக்கிட்டிருக்கணும். இப்படியேகப்பட்ட வேலைங்க அங்கிட்டு இருந்துக்கிட்டேயிருக்கும்’ தாய் அப்படியெல்லாம் தன் கஷ்டத்தைச் சொல்ல. கறுப்பாயி உள்ளம் நெகிழ்ந்து விடுவாள். அந்த நேரம் தன் ஊனக்கையையும் அவள் ஒரு முறை மன வேதனையுடன் பார்த்துக் கொள்வாள்.
“இந்தக் கையை எனக்குச் சாமி இப்பிடி செய்துப்புட்டாரேம்மா..! யேன்கையி
இப்புடீன்னு ஆகலேன்னா நானுமா ஒன்னோட கூடநாடவா வந்துகிட்டு வேலை செயிஞ்சு ஒனக்கு உழைச்சுத் தருவனே.!’
(u

Page 36
54 தி மகள் இப்படிச் சொல்லும் போது செல்லாயிக்கு, உடல் முழுக்கப் புல்லரித்ததாய்ப் போய்விடும். அப்படியே அவளைக்கட்டி அணைத்துக் கொண்டு கண்ணிர் மழை பொழிவாள்.
“என் செல்லத்துக்கு கடவுளுயிப்பிடிச் செய்துப்புட்டாரே.”என்று கூறிக் கதறுவாள்.
அந்தநேரம் அவளுடைய மகள் தன்கையால் தாயினுடைய கண்ணிரை கன்னத்தில் இருந்து துடைத்துவிடுவாள் "ஏம்மா அழுறே. ’ என்று சொல்லி அவளும் துயரத்தில் விம்முவாள். தன் செல்ல மகள் அப்படித் துயரப்படவும் செல்லாயி அவளைத் திரும்பவும் நெஞ்சோடு அணைத்துக் கொள்வாள். மகளின் கன்னங்களில் முத்தமழை பொழிவாள். அவளது சூம்பிய முடமான கையிலும் ஒரு முறை கொஞ்சுவாள்.
அந்தச் சிறு குடிலில் வாழும் இந்த இரு ஜீவன்களுக்கும் வேறு யார்தான் தேற்றரவு கூறவருவார்கள். அவர்களிருவரும் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுதலேயல்லாமல் வேறு எவரிடமிருந்தும் எந்த ஆதரவைத்தான் அவர்களால் எதிர்பார்க்க முடியும்.
செல்லாயி தன் மகளுடன் வாழும் இந்தச் சிறு குடிசையைப் போன்றே இன்னும் எத்தனையோ குடிசைகள் அந்தக் காலனியில் காட்சியளிக்கின்றன. நகரின் ஒதுக்குப்புறமான ‘கல்லுக்குழி’ என்று அழைக்கப்படும் இந்த இடம் பெரிய சேரிபோலத்தான் பலருக்கும் காண்பதற்குத் தெரியும். நொந்து நொடித்துப்போய் நகரிலிருந்து ஒதுக்கப்பட்டவரெல்லாம் வாழும் இந்தச் சேரி, ஏழமைப்பட்டவர்க்கென்றே வாழப்படைக்கப்பட்டது மாதிரியும் காணப்படும்.
இங்கே உள்ளவர்களெல்லாம் துன்பம், துர்நாற்றம், குப்பை கூளங்கள். அசுத்தம், மலம் முதலியவைகளின் மத்தியிலேதான் வாழ்ந்து வருகிறவர்கள். அதனால், அவற்றுடன் வாழப் பழகி விட்டவர்களாகவும் அவர்கள் யாவரும் இன்றளவில் ஆகியும் விட்டார்கள்.
செல்லாயிக்கும் இந்த வாழ்க்கை முறை பழக்கப்பட்டதுதான். என்றாலும், காய்ச்சலும் பட்டினியுமாகக் கிடந்ததில் அவளுக்கு அப்பொழுது ஏனோ அந்த இடத்தால் நடந்து வரும்போது, சுவாசத்தை வதைக்கிற ஒரு வித கவிச்சை நாற்றம் அடிக்கின்றது மாதிரி இருந்தது. காய்ச்சல் விட்டதன் பின்பு இருக்கும் உடல் அசதிக்கு, அந்த நாற்றம் விளக்கெண்ணெய்யை விழுங்கத் திணறுவது போல சித்திரைவதையாகவும் அவளுக்கு இருந்தது.
"நேற்று ஒரு செத்த மாட்டைக் கொண்டு வந்து அங்குள்ள சில பேர் சதைப்பங்கு போட்டுக் கொண்டார்களாம்”

> മUഗ്രസീമ 44
இதையெல்லாம் கறுப்பாயிதான் கண்டு விட்டு வந்து இவளுக்குச் சொன்னாள். அந்தக் குடிசையிலிருந்து தூரவாய் உள்ள வெளியில் நாய்கள் ஒரு பொருளை வைத்து, அதைக்கடித்து அங்குமிங்குமாக இழுத்துப் போட்டுக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப்பார்த்ததும் அந்த நாற்றம் எங்கே இருந்து வருகிறதென்று, அவளுக்கு உடனே விளங்கிவிட்டது.
அந்தப்பக்கம் வெளியிலிருந்து வீசிய காற்று, மீண்டும் அந்த நாற்றத்தை அள்ளிக் கொண்டு வந்து அவளுக்கு வேதனையைக் கொடுக்க,
é 9. १ १
தூ.” என்று பெரிதாக எச்சிலை அவள் தூரவாய்த் துப்பினாள்.
அதைத் தின்றவர்களுடைய முகங்களிலே துப்புவதாகவே, அருவருப்புடன் நினைத்து எச்சிலை அவள் உமிழ் ந் தாள். ஆனால் அவள் நினைத்தமாதிரியில்லாமல், மண்ணின் மீது தான் அது தூவானமாய்த் தெறித்தது.
அந்த நாற்றக் கலவை வரும் இடத்தைக் கடந்து போகவும், மனச்சாட்சி அவளை உறுத்தத் தொடங்கியது. தன் குற்றத்தை உணராது பிறர் குற்றங்களை மட்டும் பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு; என்பதாய்ப் பிற்பாடு அவள் உணர்ந்தாள்.
“பெரிய பாவத்தைச் செய்து. அந்தப் பாவத்திற்கு சம்பளம் பெற்றுக் கொண்டு அதைக்கொண்டு நான் சீவிக்கிறேனே. நான்மட்டும் சுற்றவாளியா?” என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டு, தொடர்ந்தும் அந்த வழியாக அவள் நடந்தாள்.
நல்லது எதையும் மனிதன் நினைக்கலாம். நல்லமுறையில் உலகில் வாழவும் அவன் ஆசைப்படலாம். ஆனாலும், தன்னைச் சுற்றியுள்ள ஒழுக்கமற்ற சூழ் நிலையின் மத்தியில் இருந்து கொண்டு, அதற்கேற்ப வாழப்பழகிக் கொண்டு, தவறு செய்யாது இருத்தலென்பது ரொம்பக் கடினமானதுதானே.
இதைத்தவிர ஒரு மனிதனிடம் இருக்கின்ற தீய குணங்கள், அவனது மனத்தின் இருண்ட மூலையில் ஒரு புறம் ஒளிந்து கொண்டுதானே எப்பொழுதும் இருக்கும். அதையெல்லாம் மனத்திலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடுவதென்பது, அநேகமான மனிதர்களால இலகுவில முடியாததொன்றாகத்தானே இருக்கிறது.
அநேகமான நேரங்களில் செல்லாயி இப்படித்தான், நல்ல வழிகளில் இனிமேல் நடக்க வேண்டுமென்று நினைப்பாள். தானும் நல்லமுறையில் வாழவேண்டும் என்றும் ஆசைப்படுவாள். ஆனால், அவளையுமறியாமல் பல தவறுகள் நடந்து இன்று அதிலேயே உழன்று கொண்டிருக்கும்படியான ஒரு சூழ்நிலையும், வரவர அப்படியாக அவளுக்கு ஆகிவிட்டது.

Page 37
56 தி 窗 இயலாத இந்த வேளையிலும் அந்தப் பாவகாரியத்தைச் செய்து பணம் சம் பாதிக்கும் நோக்கத்திலேயே, அவள் இப்போதும் அங்கு போய்க்கொண்டிருந்தாள். உடல் சோர்வுற்றிருந்ததால் நடையின் வேகத்தில், உழிழ்வதுபோல் வியர்வையும் அவளுக்கு வழிந்தோடியது. என்றாலும் உள்ளபலத்தைக் கொண்டு நடந்து இந்திரா தியேட்டருக்கு முன்பாக அவள் வந்து விட்டாள்.
தட்டுவாணி கொண்டையிலே தப்பாமல் பூவிருக்கும் என்பதற்கு பூவம்மா பொருத்தமானவளாகத்தான் இருப்பாள். அந்த அளவுக்கு அவளுடைய கொண்டையை அழகு செய்வது, அக்கினிக் கொழுந்து போல் ஒளியுடைய செவ்வரத்தம் பூக்களாக இருக்கும். எப்பவும் பார்த்தால் சீவிச் சிங்காரித்து அச்சுக்கலையாத மாதிரி இருக்கின்றவள் அவள்.
தியேட்டர் முன் வாசலில் இருந்து கடலை வியாபாரம் செய்வதுதான் பூவம்மாவின் தொழிலென்று பலர்நினைக்கலாம். ஆனால், சிலருக்கு அவள் விபசாரத்துக்கு ஆள் சேர்ப்பவளென்று நன்றாக தெரிந்தவொரு இரகசியமாயிருந்தது.
பூவம்மா இருக்கின்ற இடத்துக்கு செல்லாயியும் போனாள். இப்பொழுதெல்லாம் செல்லாயி தன்னிடத்துக்கு வருவதை பூவம்மா அதிகம் விரும்புவதில்லை. எலும்புக் கூட்டில் வெறும் தோலைப் போர்த்தது போல் இருக்கும் அவள் இந்த வியாபாரத்துக்குத் தோதில்லை என்றே செல்லாயியைப் பார்த்து, முகத்துக்கு நேராகவும் பூவம்மா சொல்லத் தொடங்கி விட்டாள்.
“என்னடீம்மா. தோட்டக்காட்டில இருந்து புதுசு புதுசா யெத்தினை இளங் குடும்பங்க இங்கிட்டு வவுனியாவில வந்து கூலி வேலையின்னு செஞ்சுக்கிட்டுத்திரியுதுக. நெடுகவாட்டி அப்படீன்னு அதுங்களுக்கெல்லாம் நெரந்தரமா வவுனியாவில வேலைங்க கிடைச்சுக்குமா. மழை பெஞ்சுக்கிட்டிருந்தா மில்லிலயும் வேலைங்க இல்லாமப்பூடும் வெங்காய தழலு அறுக்கிறதெங்கிறதும் இல்ல. வுட்டு ஆம்பளைங்களுக்கும் நாட்டாம வேல பசாரிலதுங்கிப்புடும். இப்பிடியாச்சுப் போய்க்கிட்டிருந்தா பட்டினி கிடந்துப்புட்டு அதுங்களெல்லாம் யேன் கிட்டத்தான் வருதுக. அதுங்களைப் பாக்கவே எனக்குப்பாவமாயிருக்கும். என்ன செஞ்சிக்கிறது - நானும் பாவமுண்ணு இப்பிடியா ஒரு வழிய அதுங்களும் பிழைக்கட்டுமுண்ணு காட்டுறேன். அவளைங்கெல்லாம் கொமரிகணக்கா நல்ல எளசுக. பாக்கிறதுக்கு குளிச்சியா இருக்காளுங்க. வர்ற ஆம்புளைங்க எல்லாமே அதுங்களைத்தானே பாக்கிறாங்க. அவளைங்களுக்கு முன்னாடி தரையில ஊருறானுங்க. ஒடனயே வாரிக்கிட்டுப்போறமாதிரி காருங்களில கொண்டு போய்க்கிறாங்க. ஆனா ஒன்ன ஆருதான் கண்டுக்கிறாங்க..?”
தன்னைப்பற்றி இப்படியெல்லாம் பூவம்மா சொல்வதைக் கேட்க செல்லாயிக்கும் மனவேதனைதான்: என்றாலும், மீள முடியாத அளவு தன்

නඛ. நீபஅேருளானந்தம் 7 உடம்பு மேலும் மேலும் கெட்டுவருவதை அவளும் உணராமலில்லை, தேரையை வைத்துக் கொண்டிருக்கும் கல் மாதிரி, அந்த நோய்களையெல்லாம் தான் வைத்துக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியாதென்றில்லை! இந்த நிலைமை விபசாரத்தால்தான் தனக்கு வந்ததென்றும், விபசார வாழ்க்கையே தன்னை இன்று மென்று எறிந்த சக்கையாக ஆக்கிவிட்டதென்றும் இப்பொழுதுதான் அதையெல்லாம் பாடம் படித்ததாய்க் கொண்டாள்.
ஆனாலும், இதிலிருந்து ஏது தனக்கு இனி மீட்சி! இனிவருமா பழைய வசந்தத்தின் காட்சி! என்று எண்ணியெண்ணி வாடுவதை விட வேறேதும் அவளால் செய்யக் கூடுமானதாக இல்லை.
அவளது வாழ்க்கையிலே வசந்த காலம் என்று இருந்தது அவள் முன்பு கணவனுடன் வாழ்ந்த அந்த மூன்று மாதங்கள்தான். வாழ்க்கையில் அவளுக்கு சொக்கழகாகவிருந்த அந்தச் சிறிய காலத்தை, அவளும் நினைவிலிருந்து தொலைத்து விடவில்லை. அந்த மூன்று மாதம் மட்டும் இல்லறவாழ்வின் விளிம்பை நுகர்ந்து விட்டு தான் விதவையாகியதை எப்படி அவளால் மறக்க முடியும்.
திருமணமான மறு வாரமே தேயிலைத் தோட்டத்திலிருந்து கணவனும் தானும் வவுனியாவுக்கு பிழைக்கவென்று வந்து சேர்ந்ததும், வவுனியாவுக்கு வந்து சேர்ந்த பிறகு கணவன்நாட்டாமை வேலைசெய்து அதன் மூலம் மகிழ்ச்சியாக குடும்பசீவியத்தை நடத்தியதும் பச்சை கட்டி அழகாய்த் தளிர்த்திருக்கும் முருங்கைக் கிளையின் தளிர்இலைகள் மாதிரி இன்றும் அவளுக்குப் பசுமைகாட்டுகிறது. அந்த மரம் பசேலென்று இலைதளிர்த்து வெளேரென்று பூப் பூப்பது போல் இருக்கும் அந்த வாழ்க்கைக் காலம் கடந்து, அதற்குப்பிறகு தனக்கு நடந்த இழப்பை அவள் யாரிடமாவது சொன்னால்;
“ஓ! என்னபாவம் பரிதாபம்! நீ பிறந்ததே பரிதாபத்துக்குரிய விஷயம்தான்.”
என்று வேதனையுடந்தான் கூறுவார்கள். அந்தளவுக்கு அவர்களது மனதையும் புண்படுத்தும் செய்திதானே இது.
“நாலுநாளு காச்சலில கெடந்து ஒரு மனுசனு செத்துப்புடுவானா. இது என்ன புதுசா ஒரு நோயி..?” இப்படித்தான் அந்தச் சேரியில் வாழ்பவரெல்லாம் செல்லாயியின் கணவன் இறந்ததுபற்றி கேள்விக்கணைகளை அவளிடம் தொடுக்கிறார்கள். தங்களது அறிவுக்கேற்றாப் போல அதைப் பற்றி அவர்கள் பல விதமான கருத்துக்களையும் அவள் முன் வைக்கிறார்கள்.

Page 38
58 2f “அது ஏதோ சனியனு மூளைக் காச்சலாண்டி. என்ன யெழவு பிடிச்ச நோயோ அதெல்லாமே நமக்கு என்னாத்தான் தெரியுது.” |
என்றதாய் அந்தச் சேரியிலுள்ள பெண்களெல்லாம் அதைப்பற்றி பலதும் பத்துமாய் தமக் குத் தெரிந்தவற்றை வைத்து கதைக் கத் தொடங்கியிருந்தாலும்; சேரியிலே இந்தக் கதை மட்டும் தனியே எத்தனை நாளைக்குத்தான் அவர்களிடையே நிலைநிற்கும்.
சுகாதாரக்கேடும் வறுமையும் உள்ள அவர்களது இடத்தில், சாவு என்பது அங்கு சர்வசாதாரணமாக உள்ளநிகழ்வுதானே. அதனால், செல்லாயியது கணவனின் கதையும் இப்படியாகவே சில நாட்களில் பழங்கதையாய் அவர்களிடமிருந்து மறக்கடிக்கப்பட்டுப் போய்விட்டது.
என்றாலும் செல்லாயிக்கோ கணவன் இறந்த நாள் முதற் கொண்டு: வாழ்க்கையில் சமாளிக்க முடியாத அளவு போராட்டம் ஆரம்பமாகிவிட்டது.
வெளியுலகம் பார்க்காத இருட்டு உலகில் தன்னை சிலநாட்களாக விதைத்துக் கொண்டவள்-மரவட்டையைப்போல் அந்தக் குடிசையின் உள்ளே சுருண்டு படுத்துக்கிடந்தாள். பசியில் வயிறு சுருங்கிச் சிறுத்துப்போய் உள்வாங்கத் தொடங்கியதும், வேறு வழியில்லாது கூலி வேலைக்கென்று வெளிக்கிட்டாள்.
கூலி வேலை தேடித்திரியும் அநேகமான பெண் தொழிலாளர்களை உள்வாங்கக்கூடிய இடங்களாக அரிசி ஆலைகள் வவுனியாவில் கதவுகளைத் திறந்துவைத்துக் கொண்டிருந்தன. அங்கே ஒரு அரிசி ஆலையில் கூலிவேலைக்கென்று சேர்ந்து அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையையும் மிகவும் சிக்கலாக்கிக் கொண்டாள் செல்லாயி. ஒளவை மாதிரி மூப்பெய்திய பாட்டியாகிவிட்டால்தான் ஒரு பெண்ணால் ஆண் துணையில்லாமல் தனித்து வாழ முடியும் - என்கிற இந்த நடை முறைக்குச் சாத்தியமான ஓர் உணி மை யை அங்கு வேலைக் குப் போய் ச் சேர் நீ த ஒரிரு நாட்களுக்குள்ளாகவே அவள் நன்கு உணர்ந்து விட்டாள்.
அங்கே இரவு வேலைக்குப்போய்ச் சேர்ந்த நாளிலிருந்து அங்கு வேலை செய்யும் ஆண்களெல்லாம் அவளை, மரத்தில் நன்றாகப் பழுத்துத் தொங்கும் கனிகளைப் பார்ப்பதுபோல் காமப்பசியோடு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். எல்லோருக்கும் இராவண ஆசை அவர்களுக்குள்ளே சீதையாக இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எத்தனை நாட்களுக்குத்தான் அவளால் முடியும்? முதன் முதலில் இந்த முறையில் பலாத்காரம் தான் அவளை விழுங்கியது. இதற்காக பொலிஸ்கோடு என்று ஏறுவதற்கு அவளுக்குத் துணிவு
வரவில்லை! முதலில் அவளை. திருப்தியாக இரையெடுத்த பன்றிபோல "கொழுகொழு’எனறு இருந்த அந்த மில்லின் மனேச்சர்தான் தன் காமத்தீக்கு

Iනඛ. മUഷത്രണുന്നത്ര s அவளை இரையாக்கினான். காஞ்சொறியின் சுணை அடர்ந்த இலைகள் மீது தன் உடல் பட்டு விட்டது மாதிரி அந்தநேரம் செல்லாயிக்கு இருந்தது.
அன்றுடன் அந்த மில் வேலையை தலை முழுக்குப் போட்டுவிட்டு வேறு ஒரு மில்லுக்கு அவள் இடம் மாறிச் சென்றாள். ஆனாலும், அவள் விரும்பியபடி எங்குமே அவளால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த மில்களிலே விப(ச்)சாரம் தழைத்தோங்கியிருந்தது.
வியர்வை வழிய வழிய அவள் வேலை செய்யும் போது கூட யோனியும் முலைகளும் உள்ள சதைப்பிண்டமாக அவளைப் பார்த்து விடவே அங்குள்ள ஆண்களில் அநேகம் பேர் முயற்சித்தார்கள். அவளது உடலை மென்று சுவைத்து சப்பி உறுஞ்சி நக்கி விட்டுப் போவதற்கு இரைக்காக ஒற்றைக் காலில் காத்து நிற்கிற கொக்கின் தாகத்துடன் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
இதிலே இருந்து விடுபட்டு தன்னைக் காத்துக் கொள்ள அந்த வேலைத்தலங்களுக்கு முழுக்குப் போட்டுக் கொண்டு திரிந்ததுதான் கடைசியாக அவளுக்கு மிச்சம்.
ஆனாலும், முன்பு அவளுக்கு நடந்த அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்னும் ஏற்பட்டு விட்ட சில தவறுகளின் நிலையால் பிறகு முழுகாமல் இருக்கும் படியான உடல் மாற்றமடைந்த ஒரு நிலைமையும் வந்து சேர்ந்து விட்டது அவளுக்கு.
‘வ்வோஓ!” என்று ஒரே சத்தி..!
அது எதனால் தனக்கு வந்தது என்று உடனே தெரிந்து விட்டது அவளுக்கு..!
கணவன் இல்லாதவளுக்கு வயிற்றிலே கருவா..? அவள் மனத்தைக் கருவறுத்தது இந்தக் கேள்வி!
‘என்னை இந்தச் சமூகம் என்ன பாடெல்லாம் அதனால் படுத்தி வைத்துக் கொடுமைப்படுத்தும்’ என்று பயந்துபோய், உடனே அவள் அழித்தல் கடவுளைப் போல செயல்பட்டாள்.
அவளுக்குத் தெரிந்த பெண்கள் சொல்லிக் கொடுத்த மருந்துகள் கண்டதையும் விழுங்கி, கருவைக் கலைக்கப் பார்த்தாள். - பலன் இல்லை!
அவைகளால் பலம் கொண்டிருந்த அந்தக் கருவைச் சிதைக்க முடியவில்லை! மருந்துகளின் தாக்கத்தால் மரத்தில் கல்லடி வாங்கியும் விழுந்து விடாமல் கண்டலுடன் தப்பித்துக்கொண்ட ஒரு காயைப்போல; ஒரு குறையை தன்னிடத்தில் கொண்டதாய் அந்தப் பிள்ளையும் பத்தாம் மாதத்தில் அவளுக்குப் பிறந்தது.

Page 39
60 தி தப்பிதமாகப் பிறந்தாலும் செல்லாயி தன்பிள்ளை கறுப்பாயியை எப்படி வெறுப்பாள்? அவள் பிள்ளையின் மேல் தன் உயிரையே வைத்தது போல் பாசம் வைத்தாள். இப்போது அந்தப் பச்சைக் கொழுந்து வளர்வதற்காகவும் அவள்பாடுபட வேண்டும். எங்காவது சென்று வேலை வெட்டி பார்த்தால்தானே இவையெல்லாம் ஒழுங்காக நடக்கும். 'நீ புள்ள பெத்துக்கிட்ட பச்சே ஒடம்புக்காரி. கொஞ்ச நாளு வுட்டில இருந்துப்பிட்டு அப்புறமாப்பாத்து வேலை வெட்டிக்குப் போம்மா..” என்று பக்கத்துவீட்டு அங்கம்மா அவளுக்கு அறிவுரை கூறுகிறாள்.
‘இல் லக்கா கையில மடியிலயெண்ணு இருந்திக்கிட்டதெல்லாம் இத்துணுாண்டு நாளில வீட்டில இருந்தவாட்டி காலியாச்சு. இனிமேலயா எங்கிட்டாச்சும் போயி வேலை செஞ்சேயாகணும். நீங்க எனக்கொரு உதவி பண்ணனும். யேன் பிள்ளையை ராத்திரிக்கு மட்டும் ஒங்க கூடவா வைச்சிக்கிட்டுப் பாத்துக்கிடணும். காலேல நானு வந்து புள்ளய திரும்பியும் வாங்கிப்புடுறேன். நீங்க புள்ளய பாத்துக்கிறதுக்கு ஏதாச்சும் தந்துக்கிறன்.”
இப்படி செல்லாயி சொல்ல அங்கம்மாவிற்கும் அவள்மேல் இரக்கம் வந்து விட்டது. உடனே அவளது வேண்டுகோளுக்கு. “சரிம்மா. நானு ஒன் பிள்ளைய பாத்துக்கிறன். நீ ஒன் பிழைப்பைப் போயிப் பாத்துக்க.” என்று ஒப்புதலளித்து விட்டாள். ஒரு பக்கம் செல்லாயி தனக்கு உதவியும் செய்யவிருக்கிறாள். அந்த நன்மையும் கிடைப்பதால் பிள்ளையைப் பார்த்துக் கொள்வதில் தனக்கு ஒரு லாபம் உண்டென்று அவள் உணர்ந்தாள்.
இதற்குப் பிறகு செல்லாயி திரும்பவும் வழமை போல மில் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். ஆலையில் வேலை செய்யத் தொடங்கிய அநுபவத்திலிருந்து வரவர பிறகு இப்போது அவள் ஆளே மாறி விட்டிருந்தாள். முழுக்க முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு என்று நினைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்ளுமளவுக்கு வாழவும் பழகிவிட்டாள்.
என்றாலும் தான் பெற்ற செல்வத்தின் மேல் அவள் முழு அக்கறையும் வைத்திருந்தாள். எப்பாடுபட்டாகிலும் நல்ல முறையில் பிள்ளையை வளர்த்து ஆளாக்கி விட வேண்டும், என்று பொழுதெல்லாம் அவள் தன் வியர்வை நிலத்தில் சிந்த வேலை செய்தாள்.
மாரிகாலம் வந்தால் அரிசி ஆலைகளிலே வேலைகள் குறைந்த அளவுக்கு மட்டப்படுத்தப்பட்டுவிடும். மில் வேலையை நம்பிச் சீவிக்கும் தொழிலாளர்களது மனசெல்லாம், அப்போது மாரி மேகங்கள் போல் கறுத்து விடும். ஏழமையின் தாழ் மட்டத்திலிருந்து சீவிப்பவருக்கு சேமித்து வைப்பதற்கெல்லாம் சந்தர்ப்பமேது? வயிற்றுக்கு ஒழுங்காக உணவில்லாத நிலையோடு, குடிசைக்குள்ளே வரும் மழைத் தண்ணிருடனும் கிடந்து போராடிக் கொண்டு, அவர்கள் படுகின்ற பாட்டை போக்குவதற்கு யார்தான்

නමු. நீபஅேருளானந்தம் உதவுவதற்கு முன் வருகிறார்கள்?
ሰ 1
தொழிலில்லாமல் தெருவழியே திரியும் போதுதான் குற்றச் செயல்களிலும் இவர்கள் இறங்கி விடுகிறார்கள். சமூகம் வெறுத்து ஒதுக்கும் கீழ்த்தரமான நடவடிக்கைகளிலும் ஒழுக்கமற்ற செயல்களிலும் வறுமைதான் தங்களைத் தள்ளி விடுகிற அளவில் செயல்படுகிறது - என்று அவர்கள் சொல்வதை நியாயமென்று நீதி மன்றங்கள் ஏற்கிறதா?
மழை வந்து சோனாவாரியாகப் பெய்ததில் அந்தக் குடிசைகளில் எல்லாம் தண்ணிர் புகுந்து விட்டது. குடிசைக்குள் வெள்ளம் புகுந்து நின்றதால் அவ்விடமுள்ள குடிசையிலெங்கும் அடுப்பு மூட்ட வழியில்லை. அதனால் வயிற்றிலே அவர்களுக்குப் பசி என்கிற நெருப்பு 'பகார்’ பற்றி ‘ஓ’வென்று அகோரித்து எரிந்து கொண்டிருந்தது.
செல்லாயி தனக்குப் பிறந்த அந்தப் பச்சை மண்ணை கையிலே தூக்கி வைத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தபடி, பிள்ளைக்குத் தன் உடல் சூட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
குழந்தைக்குப்பால் கொடுக்க, அவள் தன் வயிற்றுப்பசியாற்ற வேண்டுமே? அவள் இவ்விதமாக தனக்கு வந்த கஷ்டத்திலே, சண்டமாருதப் புயலில் அகப்பட்ட சிட்டுக்குருவி போல் பரிதவித்து அலைந்த போதுதான், பூவம்மாவின் வலைக்குள் சிக்கினாள்.
முதலில் செல்லாயியின் உடலைத் தலை முதல் தாள் வரை பார்வையிட்டாள் பூவம்மா. அவள் எதிர்பார்ப்பெல்லாம் செல்லாயி மீது ஒருங்கிணைந் திருப்பதாய்த் தெரிந்தது அவளுக்கு.
அவளது தோலின் பொன்நிற ஒளிர்வு பூவம்மாவைக் கூட சுண்டி இழுத்தது. இன்னும் அவளது இடையின் அசாதாரண துவட்சி - அடிவைப்பு
நீண்டகூந்தல் - சிறப்பான செவ்விய மூக்கு - எல்லாவற்றுக்கும் மேலாக, சதை கூட்டிக் கொழுத்தவாக்கில் இருக்கும் அவளது தனக்கட்டுக்கள்; என்று எல்லாமே அவளது புருவங்களை காவடியாய் வளைய வைத்தன.
தன் தொழிலுக்கு ஒரு கொழுத்தாடு பிடிபட்டாற் போன்றுதான் அவளைக் கண்டதும் பூவம்மா திருப்திப்பட்டாள். அவள் உடல் மீது இனி விழப் போகின்ற நெருப்புப் போன்ற முத்தங்களுக்கெல்லாம் எப்படி எப்படியெல்லாம் பேரம் பேசி கறாராக பணம் கறக்கலாம் என்றெல்லாம் நினைத்து அவள் திட்டம் போட்டுக் கொண்டாள். பூவம்மா வாயில் வைத்திருந்த தாம்பூலத்தை கொத்தாய்த் துப்பிவிட்டு, புகையிலையின் சிறு கீறு ஒன்றை எடுத்து வாயில் அதக்கினாள். புகையிலையின் சாறு காரமாய் தொண்டைக்குள் இறங்கிவிட அந்த லாகிரியின் சுகத்திலே செல்லாயியோடு பேச்சை ஆரம்பித்தாள்.

Page 40
62 சி
அவளிடம் தன் தொழிலுக்குப் பெண்களை வலைவிரித்துப் பிடிக்கத்தக்கதான கவர்ச்சியுள்ள ஏராளமான வார்த்தைகள் இருந்தன. அவற்றையெல்லாம் மயிலிறகு போல் இவளிடமும் பாவித்தாள்.
‘' இங்கிட்டு பாருடீம்மா கண்ணு. இதுக்கெல்லாம் போயி நீ பயப்பிட்டுக்கலாமா சொல்லு. எத்தினுண்டு பேரு இந்த ஒலகத்தில இப்பிடியா நடந்துகிட்டு சீவிச்சிக்கிறாங்க. அதால நீயும் ஒன்னோட கஸ்டமெலாமே தீந்துக்க-ஆமாண்ணு இப்ப சொல்லு.1. அடுத்த நிமிசம் பாரேன்! நீ ராசாத்தீடீ!”
பூவம்மா தன் கதையில் அவளுக்கு நன்றாக ஆசை வார்த்தை காட்டினாள்.
ஆனால், செல்லாயிக்கோ ஒரு வித பயம். தன் மனதைக் திறந்ததாய் வைத்துக் கொண்டு; அந்த விஷயத்தைப் பற்றியெல்லாம் பூவம்மாவிடம் விளக்கம் கேட்டாள்.
‘யக்கோய்...! அப்புடீல்லம் கண்டபடியா நடந்துக்கிட்டா அதில ஏதோ ஒரு பெரிய நோயி தொத்திக்கிட்டுடுமாமே...! நாலு பொண்ணுங்க சேர்ந்துப்பிட்டு அப்புடீல்லாம் கதைக்கிறப்ப கேட்டுக்கிறதுக்கு பயம்மாவில்ல இருக்கு..!”
6.
‘அடி போடி இவளே..! என்னிய விட பெரிசா இதெல்லாம் தெரிஞ்சுப்புட்டா அந்தப் பொம்மணாட்டிங்கல்லாம் இருக்காளுக.?”
'இல்லக்கா அந்த நோயி. டப்பிண்ணுகிட்டு ஒடன தொத்திக்கிருமாமே. அப்பிடீல்ல அவளுங்கல்லாம் சொல்லுறாளுங்க..!”
‘என்னடீ நோயி நோயி எண்ணுகிட்டு சும்மா நொண நொண எண்ணுக்கிட்டிருக்கே..?. அது என்னடி நோயி புதுசா ஒரு நோயி..? தென்ன மரத்துல தேளு கொட்டுடிச்சின்னா பனே மரத்துல நேறி கட்டிக்கிறது மாதிரில்ல ஒன்னோட கதையிருக்கு.?”
இப்படியாக சர்க்கரையாகப்பேசி செல்லாயிக்கிருக்கும் பயத்தை முதலில் பூவம்மா போக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகும் அவள் விபசாரத்தை ஓர் புண்ணிய கைங்கரியமாக அவளிடம் எடுத்துரைத்தாள்.
“இங்கபாருடீம்மா. நீ நெனெச்சுக்கிற மாதி இதெல்லாமே பாவமுண்ணில்ல. ஆமாடீம்மா - இதை நீ நல்லாக் கண்டுக்க. இப்பிடீல்லாம் நாலு பேருங்களுக்கு நாமளும் நன்மையைத் தாண்டி செஞ்சிக்கறோம். மிருக சாதிங்களுக்கு வர்ற தெனவை தீத்துக்கிறதுக்கு சொறி கல்லுங்களை நட்டு வைச்சிருப்பாங்களே. அதையில்லாம் பாத்திருக்கேதானே நீ. அப்புடித்தாண்டி இதுவும். அறமுண்ணு சொல்லிக்கிற முப்பத்திரெண்ணு தருமத்தில இதுவும் ஒண்ணாமுண்ணு யாழ்ப்பாணத்து மனுசனு அந்தப் பென்சனு ஐயா. அவருகூட முந்தி பொலிஸ் சார்ஜனுவா இருந்தவருடி.

শুৈ১২ நீ/அருளானந்தம் 6.ጳ.
அந்த ஐயா கூட யேன்கிட்ட இதெல்லாம் அழகா சொன்னாரு. அவரும் நம்மளோட கஸ்டமருதான். பாத்துக்கிட்டியாடி-அந்த நாளுங்களில கூட. எந்தாப் பெரிய மகானு கூட இதெல்லாத்தையுமா நல்ல மாதிரியாத்தானே சொல்லி வைச்சிருந்திருக்காங்க. அதுங்கமட்டுமா இன்னும் நெறைய இருக்கு கேட்டுக் க. பெண் போகம் வேணுமுண்ணுறவங்களுக்கு போகப் பொண்ணுங்க உதவிக்கிறது கூட புண்ணியமாம்டி. இப்ப தெரிஞ்சிக்கிட்டியா இதெல்லாம்.?”
இந்தக் கதைகளோடு பூவம்மாவிடம் சரணடைந்து விட்டாள் செல்லாயி. அன்றைய அரங்கேற்றத்துடன் ஆரம்பமானதுதான் செல்லாயியுடைய இந்தச் சீர் கெட்ட வாழ்க்கை. அன்றிலிருந்து இன்று வரையாக விபசாரத்தை நம்பி வாழும் வாழ்க்கைதான் அவளுக்கு லபித்து விட்டது. இந்த வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து எது கூடாதோ அதிலெல்லாம் பூரணர்களாக இருந்தவர்களைத்தான் அவள் சந்திக்க வேண்டியதாய் இருந்தது. அவர்களுடைய விருப்பங்களுக்கு பச்சை மூங்கில் மாதிரி இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் வளைந்தாள்.
ஒரு பிணத்துக்கு அதைக் கொத்தி இழுக்கிற பறவைகளிடமோ, அரித்துத் தின்கின்ற புழுக்களிடமோ வெறுப்புத் தோன்றுவதுண்டா?
நாளடைவில் உடலும் மனமும் அப்படியாகி விட்டது போலத்தான், அவளுக்கு மாறி விட்டதைப் போல இருந்தது.
இதன் தாக்கத்தால் முன்னம் செக்கச் செவேர் என்று செப்புச்சிலை மாதிரி இருந்தவள், கரி பிடித்த லாந்தர் மாதிரி உடல் மங்கினாள். அவள் முகம், கழுத்து, கைகள் எல்லாவற்றிலும் தோல் மீது வலைகளாக சுருக்கமும் விழுந்து விட்டன. கமல மலர் போல் விரிந்திருந்த அவளது அழகான கண்கள் எருக்க மலர் போல் ஒடுங்கியும் விட்டது.
இன்று ஒரு சீக்காளியாக அவள் போய் விட்டாலும் வயிற்றுக் கொடுமைக்காக அநேகமான பொழுதுகளில் பூவம்மாவின் தயவைத்தான் அவள் நாடவேண்டியதாய் இருந்தாள். பழைய நாட்களைப் போலல்லாது இப்பொழுதெல்லாம் தன் வயிற்றுக் கொடுமையை பூவம்மாவிடம் கூறி கெஞ்சியபடி நிற்கின்ற நிலையிலும் அவளது நிலைமை வந்து விட்டது.
இந்தத் தொழிலுக்கு கிராக்கியில்லாதிருக்கும் அவளை தன்னிடம் வரவழைத்து வைத்துக்கொள்ள, பூவம்மாவுக்கு இப்போதெல்லாம் துண்டாக விருப்பமில்லை. தன் தொழில் அவளால் பாதிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தில் அவளை இதனால் வெறுக்கவும் ஆரம்பித்தாள்.
என்றாலும் அவள் இதயத்தில் செல்லாயி மீது இரங்கத்தக்கதான சிறிது ஈரக்கசிவும் இருந்தது.

Page 41
64 தி ‘சரி சரி ஒரு டீயை வாங்கிக் குடிச்சிப்பிட்டு நிண்ணுக்கிறியா. அதுக்கு பணம் வேணுமிண்ணா தர்றேன்.?”
‘'வேணாமுக்கா. யேன் பிள்ளையும் வுட்டில பட்டினி. பிள்ளையை விட்டுப்புட்டு நான் மட்டுமா எப்புடி..?”
‘‘அடி யெழவே; இப்பிடிப்போயிடிச்சாடி ஒண்ட நிலை.! ம் இருந்துக்க எவனாச்சும் வந்திடுவான். அதான் காத்திய மாசத்து நாயுங்க மாதிரி இதுக்குண்ணு அலையுறவனுங்க இருக்காங்கதானே. எப்புடியாச்சும் முதலாட்டம் சினிமா முடியுறதுக்கு முன்னாடி கொத்திப்புடும் ஒனக்கு..!”
பூவம்மா அவளுக்கு நம்பிக்கை வர சொல்லி விட்டு சிறு உரலில் தாம்பூலம் துவைக்கின்ற வேலையில் இறங்கிவிட்டாள். அவளது கடலைப் பெட்டிக்கருகில் லொக்கு லொக்கென்ற ஓசை எழத் தொடங்கிவிட்டது.
அந்த ஒசைக்கு எதிரோசையாக பக்கத்து சாப்பாட்டுக் கடையிலிருந்து ரொட்டி கொத்தும் ‘டக, டக, டக வென்ற ஒலியும் கேட்கத் தொடங்கியது.
கொத்து ரொட்டியின் எண்ணெய் வாசத்துடன் கருகிச் சுருண்ட கருவேப்பிலையின் மணமும் சேர்ந்து செல்லாயிக்கு பசியைக் கிளர்த்தியது.
‘அந்த ருசியே. தனி’.!! என்று வாயூற இருந்து நினைத்துக்கொண்டு பசியுடன் இருக்கும் தன் மகளையும் நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு அவள் இருந்தாள்.
பூவம்மா உரல் வாயை உள்ளங்கையில் கவிழ்த்து வைத்து அதிலுள்ள தாம்பூலத்தைக் கொட்டி எடுத்து அதை வாயில் போட்டுக் கொண்டு ‘ஒன் காலத்துக்கு ஒரு பயலையும் இண்ணிக்கு இதில காணல்லையேடி.” என்று சொல்லி விட்டு இருந்தபோது தான்; அவளுக்கு முன்னால் ஒருவன் வந்து நின்றான்.
மிடாக் கணக்கில் சாராயத்தைக் குடித்து விட்டு வந்து அதிலே நின்றபடி கண்களில் காமச் சிவப்புடன் செல்லாயியை அவன் பார்த்த பார்வையிலேயே பூவம்மாவுக்கு அவனது தேவை இன்னதென்று விளங்கிவிட்டது.
இவற்றிலெல்லாம் பூவம்மாவுக்கு எக்ஸ்ரே பார்வை உண்டு. பூந்தோட்டத்தை விட்டு பூக்கடையில் போய் மொய்த்துக் கொண்டிருக்கும் தேனிக்களைப் போல தங்கள் மனைவியரை விட்டு விட்டு பரத்தையரை நாடி வரும் அநேக ஆண்களுக்கு விபசாரத்துக்கு ஆள் சேர்த்துக் கொடுத்ததில் வந்த அநுபவம் அவளுக்கு இல்லாமலா போகும்.
வந்தவன் பூவம்மாவின் கடலைப் பெட்டிக்கருகில் இருந்து, தாம்பூலம் வாங்கிப்போட்டுக் கொண்டான்.

නඛ മUഗ്രന്നെത്ര 65 செமித்த சாராய நாற்றத்துடன் சுருட்டின் சுடுநாற்றமும் சேர்ந்து மேலும் நாற, அருகில் இருந்து கொண்டு பூவம்மாவிடம் தன் தேவையை வார்த்தைகளில் அவிழ்த்து விட்டான். “என்னம்மா. ஏதாச்சும் உண்டா?.”
‘ஆமா ராசா. ஒங்களுக்கு தேவையானதுங்க எல்லாமே இருங்குங்க ராசா,...! வெத்தில இருக்கு, பாக்கிருக்கு, சுண்ணாம்பிருக்கு. அதெல்லாத்தையும் நீங்க இப்ப போட்டுக்கிட்டீங்கதானே. இனிமேல பாத்துக்குங்க ஓங்க வாயி சிவக்க பத்தினிப் பொண்ணுங்களெல்லாம் உங்களை சுத்திக்கிட்டு நிண்ணுக்கும்.!”
பூடகமாக இந்த முறையில் கதையைக் கொடுத்து வந்தவருக்கு தன் தொழிலை தெரியப்படுத்தி விடுவதில் பூவம்மா சமர்த்து.
தனக்குரிய தேவையை பூவம்மா தெரிந்து கொண்டாள் என்று வந்தவனுக்கு உடனே விளங்கிவிட்டது.
அதனால் வெட்ட வெளிச்சமாக அதை நேரே அவளிடம் கேட்டான்.
4.
வயசுக்காரியா இளசுக்காரியா..?”
‘எல்லாம் உனக்கு ஏத்தாப்புல இருக்குமய்யா. நீ விரும்புக்கிற மாதியெல்லாமே குட்டி பக்குவமா நடந்துக்கும்.”
‘சரி பெண்ணு எங்க..?”
‘'நீ பாத்துக்கிட்டிருந்தியே அதாம்பா அந்தப் பொண்ணு. உரியைப் பாக்கிற கள்ளப் பூனை மாதிரி பாத்திக்கிட்டிருந்தியே ஒரு பார்வை.”
பூவம்மா இவ்விதம் சொல்லி கதையில் அவனை மடக்கினாள். இந்தத் தொழிலில் அப்படியெல்லாம் சொல்லித்தான் ஆளை மடக்கி வைத்து தன் காசை வாங்கிவிட வேண்டுமென்ற தந்திர புத்தி அவளுக்கு இருந்தது.
6
ம். நேரமாயிட்டுதப்பா யேன் புறோக்கரு பணத்தை கொடுத்திடுங்க. இந்த ஆட்டம் சினிமா முடியுங்கிறதுக்கு முன்னாடி அவளை எங்கிட்டாச்சும் சாய்ச்சிக்கிட்டுப் போயிடு.”
அவள் அவசரப்பட்டுக் கொண்டு அவனிடத்தில் இதை சொன்னாள்.
‘எங்கிட்டுப் போறது.?”
‘எங்கனையாச்சும்.!”
‘அப்படீன்னா..?”
கொளத்துக்கட்டுப் பக்கமா கூட்டிக் கொண்ணு போயி தொலைஞ்சுக்கப்பா..!"

Page 42
66 گی” அவள் ஆத்திரத்துடன் சொன்னாள்.
அவன் காசைக் கையில் கசக்கி வைத்துக் கொண்டிருந்துவிட்டு; பின்பு அவளிடம் அதைக் கொடுத்தான்.
செல்லாயி இதெல்லாவற்றையும் பார்த்துவிட்டு எழுந்து நின்று கொண்டாள். அவன் சமிக்கை காட்டிவிட்டு முன்னால் நடந்து செல்ல, அவனைப் பின் தொடர்ந்து செல்ல அவளும் தயாரானாள்.
‘கவனம்டியம்மா. கொளத்துப் பக்கமிப்ப பொலிசுங்களெல்லாம் ராவழிய திரிஞ்சிக்கிட்டிருக்கு.”
பூவம்மாவின் அந்த எச்சரிக்கையை தன் காதில் போட்டுக் கொண்டு விட்டு; அவனுக்குப் பின்னாலே சிறிது இடை வெளிவிட்டு அவளும் பின்தொடர்ந்து சென்றாள்.
குளக்கட்டில் காலை வைப்பவர்களுக்கு; பொன் கொன்றை மரத்தின் கீழ் இருக்கின்ற பிள்ளையார் சிலையின் ஆனை முக தரிசனம்தான், முதன் முதலில் காணக்கிடைக்கும். இரவிலும் பிள்ளையாரின் உருவைக் காண்பதற்கு, அழுது வடிந்து கொண்டிருக்கும் அந்தத் தெருவிளக்கு அதற் உதவி செய்யும்.
பிள்ளையார் சிலையின் பக்கம் நிற்கும் அந்தக் கொன்றை மரம் திருகி வளைந்து விகார வடிவமாய் நின்றாலும், கொத்தாய்ப் பூக்கள் பூத்துச் சிரித்து அழகால் அதையெல்லாம் மறைத்ததாய்த்தான் இருக்கும். அவர்கள் இருவரும் அவ்விடம் சென்று பிள்ளையார் சிலை இருக்கும் அந்தப் பொன் கொன்றை மரத்தைத் தாண்டி, குளக்கட்டில் ஏறி காற்றுப்பட நடக்கத் தொடங்கினார்கள்.
குளக்கட்டில் பார்வை புகமுடியாத அடர் இருள் அவர்களைச் சுற்றி நெருக்கமாகக் கவிந்திருந்தது. அந்த இருட்டு உள்ளில் பெரும் பொழுதைச் செலவழித்து அநுபவப்பட்டவர்களைப் போன்று, சற்றும் கிலேசமின்றி அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவன் வெறியில் எதை எதையோவெல்லாம் அவளிடம் கேட்டு ஆபாசமாய் உளறியபடி இருந்தான். அவளுக்கு அது எல்லாம் முன்பு நெடுகிலும் பலரிடம் கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகள் தான்! அவன்
கேட்டதுக்கெல்லாம் ‘க்கும்.” போட்டுக் கொண்டு அவளும் நடந்து கொண்டிருந்தாள்.
“எனக்கு தொடை விரிச்சிக்கிட்டது மாதிரில்ல அந்தத் தும்பறுந்த தேவடியாளு காசைப் புடுங்கிக்கிட்டா.”

x தீயசகுணானந்தம் 67
இன்னும் அவன் பூவம்மாவுக்குக் கொடுத்த பணத்தை நினைவில் வைத்துக் கொண்டு அவளைத் திட்டியபடி பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்.
செல்லாயிக்கோ அவனது உளறலில் கவனம் செல்லவில்லை. தன் குழந்தையை நினைத்துக்கொண்டு அந்த நேரம் அவள் இருந்தாள். கறுப்பாயி பசியுடன் குடிசை வாசலில் நின்றபடி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பது போல அவளுக்குச் சடுதியாக ஒரு நினைவு எழுந்தது.
அவன் வெறியில் தள்ளாடியபடி அவளுக்கு முன்னாலே போய்க் கொண்டிருந்தான்.
அவர்கள் நடக்கும் போது மண் நெறு நெறுப்பதை தவளைகள் கேட்டன. குளக்கட்டுச் சரிவில் இருந்த அந்தத் தவளைகள் எல்லாம்ே சட், சட்’ டென்று தாவி நீரில் குதித்தன.
குளத்துக்குள் முழுகிய நிலையில் இருக்கும் மருத மரங்கள் நிற்கின்ற இடத்துக்கு வந்ததும், அவர்கள் இருவரும் நடையைத் தரித்தனர். அவர்கள் நின்ற இடத்துக்குப் பக்கத்திலே மதகிலிருந்து வெளியேறும் தண்ணிரின் ‘கள, கள ஒலி இடைமுறியாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
அங்கே மொத்த இலைப்பரப்பும் கருமை கொண்டிருந்தது போலத் தெரிந்த அந்த மருத மரத்துக்குக் கீழே நின்று கொண்டு அவளை அழைத்தான் அவன்.
அவள் விபசாரி என்ற இளப்பமான எண்ணத்தில், தூஷண வார்த்தைகளை வண்டை வண்டையாக அவள் முன் கொட்டினான். அவள் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவன் அருகில் போனாள். மரத்துக்குக் கீழே அவள் போன தருணம்; அவளது உச்சி மீது சளாரென்னு காகப்பீ விழுந்து சிதறியது. அந்த நரகலை அவள் தன் முந்தானையால் துடைத்த வேளையில்; அவன் அவளுக்குக் கிட்டவாக நெருங்கினான். (519 வெறியுடனும், மோகத்தின் வலிமை அனைத்துடனும் அவன் அவளைக் கட்டியணைத்து இறுக்கினான். அவள் புலியின் காட்டுப் பசிக்கு தன்னை தீன் கொடுத்து திருப்தி செய்து விட்டு; அந்தப் புற்செடிகளிடையில் இருந்தவாறே தன் உடைகளை சரி செய்து கொண்டாள்.
இருவரும் சில நிமிடங்கள் கடந்த பிறகு வந்த வழியே திரும்பியும் நடக்கத் தொடங்கினார்கள்.
அவளுக்கு நடக்கும்போது இப்பொழுது களைப்புக் கனத்தது. அவன் அவளைப் பார்த்துப் பார்த்து, அந்த வழி நெடுகிலும் நடந்து வரும் போது வாய் ஓயாமல் குறைகூறிக் கொண்டே இருந்தான். ‘திருப்தியில்லை திருப்தியில்லை’ என்று சொல்லிச் சொல்லி எச்சிலை கீழே 'தூ' என்று துப்பினான்.

Page 43
68 தி 'ஒன்னோட ஒடம்பு பூரா. சீ. மொச்சை நாத்தோம். என்று இகழ்ந்தான்.
'ஒன்னில நானு ஒரு சுகத்தையும் காணேல்லடி” என்றும் சொல்லி அவளை மேலும் மேலும் திட்டித் தீர்த்தான்.
இதையெல்லாம் கேட்டு மனம் சகித்தபடி வந்தவளுக்கு பிள்ளையார் சிலை
இருந்த பக்கமாய் வந்ததும் அழுகை வந்து விட்டது. ஒருவாறு வந்த அழுகையை சகித்து அடக்கிக் கொண்டு.
‘யேன் காசை எங்கிட்ட தந்துப்புடையா நானுயேன் வழியிலயாப் போய்க்கிறேன்.” என்றாள்.
‘என்னடி காசு ஒனக்கு. எதுக்கடி ஒனக்கு நானு காசு தந்துக்கணும். எம்முட்டுப்பேருங்க இதில யேன் காசைப் புடுங்கிக்கிறதுக்குண்ணு திரியுறீங்க..?”
அப்படியென்று அவன் எரிந்ததாய் விழ அவளுக்குத் திகைப்பெடுத்து நெஞ்சு கலங்கி விட்டது.
‘யேன் காசைமுட்டும் யேன் கிட்டக் குடுத்துப்புடய்யா. ஒன்னை கெஞ்சிக்கிண்ணு கேட்டுக்கிறேன். இந்தப்பட்டினியிலயுங் கூட ஒன்னோட படுக்கவுண்ணு வந்தவநானு. குடுத்துப்புடய்யா..?” அவள் கெஞ்சினாள்.
‘கருவாடு மாதிரி ஒண்ணும்ே இல்லாதமாதிரி தரையில கிடந்துப்புட்டு காசாடி கேக்கிறே. செத்து நாறின நாயே..”
‘அப்புடீன்னு சொல்லிப்புடாதேய்யா. யேன் புள்ளயும் வுட்டில பட்டினியாக் கிடந்துக் கிட்டிருக்கையா.”
‘'நீ கெட்ட கேட்டுக்கு புள்ளயுண்ணு வேற ஒண்ணா. நாத்தொம் புடிச்சவளே.”
அவன் ஏசியதோடு நிற்காமல் தன் பக்கத்தில் வந்து கொண்டிருந்த அவளைப் பிடித்துத் தள்ளினான். அதனால் நிலை தடுமாறி விட்டாள் அவள். நிற்க இயலாத நிலையில் இருந்தவள் அப்படியே சரிந்து கீழே விழுந்தாள். கீழே விழுந்து போனதன் பின்பு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் மண்புழுதியைக் கையிலெடுத்து “நீ நாசமாப் போவியடா பாவி..” என்று அந்த மண்ணை காற்றில் விரிந்து பரவ மேலே வீசித்திட்டினாள். அவனோ அந்த வேளையில் அந்த இடத்தைத் தாண்டி தூரவாய் நடந்து போய்விட்டான். அந்தப் புழுதியெல்லாம் காற்றில் பரவிப்போய் பிள்ளையார் சிலை மீதும் செம்பாட்டு நிறத்தில் படிந்தது.
‘'நீ மண்ணாப் போவியடா..”
அப்படி அவள் ஏசுவதைக் கேட்காத மாதிரி போய்க் கொண்டிருந்தான் அவன்.

> நீரிஅருளானந்தம் ‘'நீ அழிஞ்சு போவீடா பாவி’
69
அவன் இப்போது இன்னும் விரைவாக நடந்து கொண்டிருந்தான்.
‘ஊறுகாயில பூஞ்சைக் காளான் பிடிச்சமாதிரி அந்த நோயிங்கெல்லாம் உனக்கும் பிடிக்கும்டா.”
அவன் தொலைவாய்ப் போய் இருளிலும் மறைந்துவிட்டான். அவள் ஆத்தாக் கொடுமைக்கு பிறகு அதிலே நின்று கொண்டு அவனுக்குச் சாபமிட்டாள்.
ஆனாலும், அவன் அவ்விடத்தில் இல்லாததால் அவளால் வெறும் காற்றைத்தான் பயமுறுத்த முடிந்தது.
அவள் பிற்பாடு பசியோடு இருக்கும் தன் மகளை நினைத்து விக்கி விக்கி அழத் தொடங்கினாள். அவள் அழுகை நிற்கவில்லை, மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சும் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டே வந்தது. அந்தக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டால் அத்துடன் தன் துயரமெல்லாம் முடிந்து விடும் என்று கூட அப்பொழுது சிந்தித்தாள்.
ஆனாலும் அந்தப் பக்கமாகப் போவதற்கு அவளது மனம் பிறகு ஏவவில்லை.
கறுப்பாயி அந்தக் குடிசையில் கரி பிடித்த லாந்தருக்குக் கீழே இருந்து கொண்டு அழுது கொண்டிருப்பது மாதிரி ஒரு நினைவு வந்து அவளது அந்த எண்ணத்தை அப்போது தடுத்தது. அதனால் அவள் அதிலே பிறகும் நின்று கொண்டிராமல் மெது மெதுவாக அந்த வீதி வழியாக நடக்க ஆரம்பித்தாள்.
பசியில் தலை சுற்றுவது போலவும் மயக்கம் வருவது போலவும் அவளுக்கு இருந்தது.
அந்த வேதனைகளுக்குள்ளே உடல்தசைகளெல்லாம் காந்தலுடன் கூடிய வலியாயிருக்க எரிந்து காந்த; இடுப்புக்குக் கீழே மட்டும் குளிர்ந்து கொண்டு ‘நச நச வென்று இருக்கிறது மாதிரி ஓர் உணர்ச்சி. -
அந்த அருவருப்பை உணர்கையிலே - தன் வாழ்க்கையை நினைத்து மனவேதனைப்பட்டதில் கண்கள் கண்ணிர்க் குளமாகி விட்டது அவளுக்கு.
ஞானம்
(பெப்ரவரி, 2005)
OOO

Page 44
70 சல்வறை
சில்லறை
pa
நிழலுக்கு மரங்கள் ஒன்றும் மருந்துக்கும் கூட காண இயலாத இடம்தான் அது. இளவேனிற்காலமானதால் வானத்தில் மேகக் கறை இல்லை. அதனால் சூரியனின் அனல்கக்கும் வெயில் பூமியைச் சுட்டெரிப்பது போல் இருந்தது. அவன் அந்தத் தார் வீதியின் வழியாக வெயிலின் கொடுமையைத் தாங்கொணாது, உச்சித்தலையைக் கையால் பொத்திப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தான். -
äsä நடக்கும் போது வலக்காலின் ஒவ்வொரு அடிவைப்புக்கும், அவன்
போட்டிருந்த நீளக்காற்சட்டைப் பைக்குள் கிடந்த சில்லறை குலுங்கி ஒலி எழுப்பின.
அவன் போகும் போதும் வரும் போதும், பஸ்ரிக்கற் எடுத்ததில் கிடைத்த மிச்சச் சில்லறை - தேநீர்க் கடையில் தேநீர் குடித்து விட்டு அதற்குக் கொடுத்தபணத்தில் கிடைத்த சொச்சம் - மிச்சம் மீதியென்று நேற்றிலிருந்து பையில் கிடந்த சில்லறைகள் சில - என்று அவை எல்லாமே அவனது காற்சட்டைப் பைக்குள் கலந்து கிடந்து அவன் நடக்கும் போது, ஒரு பக்கம் கனத்துக் கொண்டும் இருந்தது. 'சில்லறைக் காசுகளுக்கு இப்பவெல்லாம் மதிப்பேது. இதுவெல்லாம் காற்சட்டைப் பையிக்கை கிடந்து. சத்தம் போடச் சத்தம் போட. றோட்டு வழிய போறவாற சனங்களெல்லாம் என்னைப் பாத்திட்டெல்லே சிரிக்கப்போகுதுகள். இதுகளைப் போட்டு பேணிவழிய, வைச்சிருந்து குலுக்கிக் குலுக்கி மற்றவயளுக்குக் காட்டித்தானே, பிச்சைக்காரரும் பிச்சையெடுக்கினம்.! என்று நினைத்துவிட்டு மற்றப் பைக்குள் வைத்திருந்த அந்த ஒரேயொரு கைக்குட்டையை வெளியே எடுத்து, சில்லறை கிடந்த பைக்குள் மாற்றி வைத்துக் கொண்டான் அவன். கைக்குட்டையின் அணைப்புக் கிடைத்த சில்லறைகள் இப்போது சப்தத்தை அடக்கி வாசிப்பதாய்த் தெரிந்தது அவனுக்கு
தெருமுடுக்கில் திரும்பிப் போகும் போது வழமையாக அதிலே குந்திக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் இருந்து கொண்டிருப்பான். பையில் கிடக்கின்ற சில்லறையில் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அவனுக்குத் தர்மம் போட்டாற்

> நீரிசுருளானந்தம் ול பிறகுதான், அவனைத் தாண்டிப்போக வேணும்' என்று முன்னேற்பா ய் அப்பொழுதிருந்தே அவன் நினைத்துக் கொண்டு வழமையாக அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்து வருகின்ற பிச்சைக் காசைக் கூடச் செலவுக்கணக்குப் பார்க்கப் பிறகு வெளிக்கிட்டான்.
‘ஒரு கிழமைக் கொருக்கால் ஒரு ரூபா வீதம் கொடுத்தால் மாதத்துக்கு அது மொத்தமாக நாலு ரூபாயாகக் கணக்கு வரும்!. இந்த நாலு ரூபாய்க்காசையும் நான் அவனுக்குத் தவறாமக் குடுத்து வாறன்தானே. ஓ!. கணக்குப் பாத்தால் அது எவ்வளவு பெரிய தருமம்!’ என்று அந்தத் திணையளவு சிறிய தொகைப் பணத்தைக் கொடுத்து வருவதைப் பனையளவு பெரிதாய் அவன் நினைத்தான்.
இதனால் தன்னையும் ஒரு பெரிய தர்மப் பிரபுவாக அவன் அப்பொழுது நினைத்துக் கொண்டான்.
அவனால் ஒரு சிறிய பொருளை வாங்குவதற்குக் கூட இந்த ஒரு ரூபாய்ப் பணத்தால் இப்போது முடிவதில்லை. தான் செய்கின்ற எந்தவொரு ஊதாரித்தனமான செலவுகளையும் இன்று அவன் கணக்குப்பார்த்துக் கொள்வதுமில்லை!
என்றாலும், பிச்சைக்காரனுக்குக் கொடுக்கின்ற அந்த ஒரு ரூபாய்க் காசை மாத்திரம் அவன் வைத்திருக்கும் அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் போடும் போது; ஏதோ ஒரு இழப்பின் வேதனை உணர்வு அவன் மனத்தில் வந்து சூழ்ந்துவிடத்தான் செய்கிறது. ‘நான் கஷ்டப்பட்டு உழைச்ச பணத்தை சும்மாவேன் ஆருக்கும் கொடுப்பான்? என்று தன் மனக்கிடக்கையிலிருந்து எழுகின்ற ஒரு கேள்வியாலே, சிலவேளைகளில் அவன் திணறிவிடுபவனாகவும் இருப்பான்.
கண்பொட்டை, கூன், செவிடு, நொண்டி - என்றிருப்பவர்களுக்குக் கொடுக்கலாம்தான். அவர்களெல்லாம் பாவம் பரிதாபம்! அவர்களுக்குக் கொடுக்கவும்தான் வேணும்! அதிலே கணக்கப் புண்ணியமும் உண்டு. தொட்டுத்தொடரும் தீவினையெல்லாம் தீர்ந்து போக தருமம் செய்யவேணும்
என்கிறதாய் நினத்துக் கொண்டு பச்சாதாபத்தோடு சிந்தை புழுங்கி சிலவேளைகளில் பலருடைய கைகளுக்கும் முந்திக் கொண்டு பிச்சை போடுகின்றவனும் இவன்தான்!
அந்த வகையில் அவன் விசேடன்! என்றாலும், இப்படியான மனோபாவத்தில் அவன் எப்பொழுதும் இருக்கின்றதாயில்லை! சிலவேளைகளில், அவன் தன் கொள்கையை மாற்றிக் கொள்கின்ற தருணங்களும் உண்டு.

Page 45
72 சல்வறை 'மாட்டேன் மாட்டேன்! இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் நான் இனிமேல் பிச்சை போடவே மாட்டேன். இதுகளுக்கெல்லாம் இப்ப பிச்சை யெடுக்கிறதே பிழைப்பாய்ப்போட்டுது - பொசுக்கிற வெய்யிலுக்கையிருந்து கொண்டு பச்சைக் குழந்தையைக் காட்டிக்காட்டி இவளவயளெல்லாம் காசைச் சேத்துச் சேத்து அப்படியே உடம்பைக் கள்ளப் படுத்தி வைச் சிருந்து சொகுசு கண்டிட்டாளயள். இவளவயஞக்கெல்லாம் உடம்பிலை என்ன குறையிருக்கு?. போய் ஒடியாடி வேலை வில்லட்டியளைச் செய்து பிழைக் கிறதுதானே? எனி ன கணி டறியாத பிச் சையெடுப் பு இவளவயஞக்கெல்லாம்? என்று இப்படி நினைத்து முகத்தில் எரிச்சல் குறியைக் காட்டிக் கொள்பவனாகவும் சில வேளைகளில் இவன் மாறிவிடுவதுண்டு. இந்தப் பிரச்சினைகளின் நிமித்தம்;
இப்படியே மாறிமாறி விடும் குணங்களால், மனத்துள்ளே போராடிக் கொண்டிருக்கும் இவனுக்கு; என்றென்றும் பிடிக்காதவர்களாகத் தெரிபவர்கள் - பிச்சைக்கார சிறுவர்களாகத்தான் இருந்தார்கள், அவர்கள் கிட்டவாய் வந்து உள்ளாடையும் வெளியாடையும் நாற்றமுறவாய் நின்று கொண்டு அவனின் உடலை தொட்ட அளவில் விரலைவைத்து சுரண்டுவதால்;
கெட்ட ஆத்திரப்பட்டுக் கொண்டு நிற்பான்.
‘ஐய்யா. ஐய்யா. ஐய்ய ஐய்ய ஐய்ய ஐய்ய!”
என்று அப்படி முடிவுறாத அவர்களது கெஞ்சலிலும் சுரண்டலிலும் கோபமிகுதியால் அவன் முகம், உப்பிக் கனத்து இறுகிச் சிவந்துவிடும் ஐயோ..! இதுக்கு என்ன நான் செய்து துலைக்க..! என்று ஒன்றுமே வழி தெரியாமல் அந்த இடத்தில் நின்று கொண்டு அப்போது அவன் தடுமாறுவான். நாலு பேர் தனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கையில் சீறி அவர்கள் மேல் பாய்ந்து விழுவது நாகரிகமில்லையென்று வலிமையாகத் தன்னை அடக்கிக் கொண்டு இவன் அந்த நேரமாகப் பிறகு பொறுமையும் காப்பான்.
வாழ்க்கையில் எல்லாப் பக்கத்திலிருந்தும், இடியும் உதையும் வாங்குகின்றதைப் போன்ற நிலைமையில் இருந்து சீவித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த நடுத்தர வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினர்தான் - என்று தன்னையும் அதிலே இணைத்துக்கொண்டு இவன் சில வேளைகளிலே, அந்த சமூகத்திலுள்ள எல்லோரையும் பொதுவாக நினைத்து கவலைப்பட்டுக் கொள்வதுமுண்டு.
'கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வர்த்தக வித்தகரெல்லாம் குளிர்சாதனம்
பொருத்திய வாகனத்திலே ஆடாமல் அசங்காமல் இருந்து பிரயாணம் செய்கிறார்கள் - வாகனத்தில்போய் இறங்கியதும், தங்கள் வியாபார

শুৈ১২ நீபஅேருளானந்தம் 7. நிலையங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். காரின் கறுப்புக் கண்ணாடிகளுக்குள்ளே பிச்சைக்காரக் கூட்டம் அவர்களிடம் கைகளை நீட்டமாட்டார்கள்.
ஆனால், பஸ்ஸிற்குள் இருந்து அனல்கக்கும் காற்றுக்கும் வாகனப் புகைக்கும் மூக்கைக் கொடுத்துக் கொண்டு, வாழ் நாள் முழுக்கப் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற நிலையில் இருந்து சீவிப்பவர்களுக்கு சங்கடங்கள் எத்தனை சேர்ந்து சங்கிலித் தொடராக நீளுகின்றன? '
என்றும் அவன் நினைத்துக் கவலைப்படுவதுண்டு.
நாளாந்தம் பஸ்ஸில் ஏறி இருந்து சில கிலோமீட்டர்களை கடந்து பிரயாணம் பண்ணி முடிப்பதற்குள்ளே, எத்தனை பிச்சைக்காரர்களை இவன் சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது.
பஸ் ரிக்கற்றுக்கென்று மட்டும் காசை பையில் வைத்திருக்கும் நாளிலே இப்படி ஒருவர் மாறி ஒருவர் வந்து பஸ்ஸிற்குள் நின்று ‘பிச்சை. பிச்சை” என்று அழுது வடித்தால் எவ்வளவு எரிச்சல் பாடு வரும்.
இதற்குள்ளே நாகரீக பிச்சைக் கூட்டம் வேறு, பஸ்ஸிலே ஏறிக் கொண்டு அச்சடித்த துண்டுகள் விநியோகம் - பிச்சையென்று வாயால் கேட்காமல் இப்படி ஒரு பிச்சையெடுப்பு.
எந்த வியாபாரமும், விளம்பரமும் இந்தமாதிரியான ஒரு தந்திரத்தோடு இல்லை. என்று வியக்குமளவிற்கு அப்படிப்பட்டதொரு பிச்சையெடுப்பு - என்று இதைப் பற்றியெல்லாம் அவன் பிரயாணம் செய்யும் வேளையில் ஆராய்வான்.
அவன் பிரயாணம் பண்ணுகிற பஸ்ஸில் நாளாந்தம் இடையில் ஏறிவிட்டு பாட்டுப்பாடுவானே. அவனையும் ஞாபகத்திலிருந்து இவனால் தொலைத்துவிட முடியவில்லை!
அவனது ஒரேயொரு பாட்டை நாளாந்தம் கேட்டுக் கேட்டு, காது சலித்துப் போய் விட்டது இவனுக்கு.
தான் ஒரு பாட்டுப் பாடப் போவதாகச் சொல்லி - பெரிய பாகவதர் மாதிரி தன்னை விளம்பரப் படுத்திவிட்டுத்தான் அவன் பாட்டுப் பாட ஆரம்பிப்பான்.
அவன் பாடும்போது சில சொற்களுக்கு தொண்டையிலிருந்து சத்தமே சிறிதும் வெளிவராது;
O ‘கஞ்சா கருக்கிவிட்டிருக்கும் அவனது தொண்டையை' - என்று தான் இவன் நினைப்பான்.
அங்கே தான் பாட்டுப்பாடியதற்காக அவன் எல்லாரிடமும் காசு கேட்கிறான்.

Page 46
74 சல்வறை இதுவும் பிச்சைதானே?
இந்தப் பிச்சைத் தொழிலை விட்டு விட்டு இவர்களெல்லாம் மீளவே மாட்டார்களா? என்கின்ற புரட்சிகரமான சிந்தனையை சிந்தையிலிருத்திக் கொண்டு வேகம் கூட்டி நடந்து கொண்டிருந்தவன் தெருமுடுக்கில் வந்து சேர்ந்ததும் மனம் சாந்தியானான்.
ஏற்கனவே தான் கொடுக்க நினைத்துக் கொண்டு வந்த தர்மத்தை கொடுக்காமல் மீறி அந்த விடத்தைவிட்டு தாண்டிச் செல்வதற்கு அவனுக்கு இப்போது மனசுவரவில்லை! பிச்சைக்காரர்களின் பிரச்சினைகளை மாத்திரம் மனத்தில் வைத்துக் கொண்டு, யோசித்துக் கொண்டு வந்தவனுக்கு, பிச்சை போடுகின்ற செயலிலும் இன்று தாராளமனப்பான்மை வந்து விட்டது.
அவனிடமாகக் கிட்டவாய்ச் சென்றதும் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து தாராளமனத்தோடு மனமுவந்து அதை கையில் பிடித்தபடி நீட்டினான். அவன் கொடுத்ததை பிச்சைக்காரன் வாங்கிக் கொண்டு அதை உள்ளங்கையில் வைத்தபடி எதையோ சிந்திப்பது போல் இருந்தான்.
பிச்சைக்காரனிடத்தும் மனசுக்குள்ளே பலதிட்டங்கள் இருக்கும்! இன்றைக்கு இதுதானென்று கிடைக்கின்ற அவனது வருமானத்திற்கேற்ப, அன்றாட வாழ்வில் அவனிடம் மாற்றங்களும் வரும் - என்று அவன் சிந்திப்பதைப் பார்த்து நினைத்துக்கொண்டு, அந்தக் கணத்தில் அவன் அருகே பார்த்தான் இவன்.
அங்கே, அவனது அசுத்தமான பெரிய கால்களுக்குக் கிட்டினதாய், ஒரு ரூபாய்க்கு விற்கும் தரம் குறைந்த சிகரெட் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது இவனுக்கு.
ஓ..! வாழ்வு எவ்வளவு அற்புதமானது இவனுக்கு - என்று அதைக்கொண்டு இவன் நினைத்துப் பார்த்தான்.
பிச்சைக்காரர்கள் இப்பொழுது, பிச்சைபோடுகின்றவர்களுக்குப் பயந்து கொண்டு, எதையுமே தங்களிடத்தில் மறைத்து வைத்துக் கொள்வதாயில்லை!
அவர்கள் வெளிப்படையாக மற்றவர்களுக்குமுன் மதுவை வைத்துக் குடிப்பதற்கும் இப்போது சுதந்திரமிருக்கிறது.
அவர்களைப் பார்த்து குடிப்பதற்காகவா நீ பிச்சை எடுக்கிறாய்?’ என்று ஏசுவதற்கு இன்று யாருக்கும் துணிவில்லை!
இப்படியாக இன்று அவர்களை யாரும், கேட்பதுமில்லை!
குடிப்பதைப் போல் அவர்களுக்கு சிகரெட் கூட வாங்கி புகைப்பதற்கும் சுதந்திரமிருக்கிறது.

x நீயசுருளானந்தம் 75 ‘'நீ புகைக்கிறாய். நீ புகைப்பதற்கென்று நான் பிச்சை போட வேணுமா?” என்றும் - யாரும் அவர்களைக் கேட்பதில்லை!
பிச்சையெடுக்கும் இவர்களுக் கெல்லாம் குடும்பம் என்கின்ற அமைப்பும் இருக்கும். தகப்பன் தாய் என்றும், அவர்களது பிள்ளைகள் - மகன், மகள், பேரன்கள், பேர்த்திகளென்றும் - மருமகன் மருமகள் என்றும்; எல்லாருமே நீட்டு வரிசையாய் ஒரு இடத்திலிருந்து பிச்சை கேட்டு வாங்கிப் பிழைப்பார்கள்,
இதையும் பிச்சைபோடுகின்ற எவரும் கண்டு கொள்வதில்லை!
இளப்பமாக இவர்களை இப்பொழுது யாரும் எண்ணுவதுமில்லை! இன்று பிச்சைக்காரர்களின் உலகம் இப்படித்தான் இருக்கிறது. இப்படி அவர்களுக்கென்றொரு தனி உலகம் உண்டு.
அப்படியான, சிடுக்காக்கிடக்கிற அவர்கள் வாழும் உலகத்துக்குள்ளே, நான் ஏன் நுழைந்து அதை அவிழ்விக்கின்றது மாதிரி தேவையற்றதானதொரு ஆராய்ச்சியை நடத்த வேண்டும்.? - என்று அவன் அந்த சிகரெட்டைப் பார்த்துக் கொண்டே யோசித்தான். பிற்பாடு அந்தச் சில்லறை நினைவுகளை மனத்திலிருந்து பிடுங்கி வெளியே எறிந்து விட்டு அந்த வெயிலுக்காலே திரும்பவும் அந்த வழியே அவன் நடையைக் கட்டினான்.
அவனது மனம் சித்திரை மாதத்து ஆகாயம் போல இப்போது தெளிந்திருந்தது. பிச்சைக்காரர்களின் சித்திரத்தை அழித்துவிட்டதால் அவன் மனக்கண் மலர்ந்தது. என்றாலும், அந்தப் பிச்சைக்காரன் இருந்து கொண்டிருந்த - மலக் குப்பைகளால் வரிசைகட்டிய அந்தத் தெருவைக் கடக்க, மூக்குப் பிடித்தே அங்காலே அவன் மீள வேண்டியதாய் இருந்தது.
தினமுரசு வாரமலர்
(நவம்பர், 11-17, 2004) OOO

Page 47
76 676് شمستقلاله
வாழுமிடம் எங்கே
“புறா எங்கே? புறா எங்கே?.
என்று அந்தப் புறாக்களைப் புறாமலை’ என்கின்ற அந்த இடத்தில் காணவில்லையே என்ற ஏமாற்றத்தில், கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு என் நண்பனை நான் துளைத்தெடுத்தேன்.
‘அந்தாமேலை பாரும்.! பாறைக்கு மேலாலை பறக்கிறதைப்பாரும்.! இப்பவாய் வடிவாய்ப்பார்த்திரோ. ၇း
என்று அவைகளைத் தான் மட்டும் கண்டு கொண்ட உற்சாகத்தில் உடலை ஒரு தரம் உலுக்கிக் கொண்டு அந்தப் பக்கம் உயரக் கை நீட்டி சுட்டு விரலால் எனக்குச் சுட்டிக் காட்டினான் நண்பன். -
புறாவல்ல அவைகள். ! ஏதோ வேறு பறவைகளாகத்தான் அவைகள் இருக்கும் என்கின்ற ஐமிச்சத்தில்.
“அதுகளா..! அதுகள் புறாக்களா..?” என்று குரலைத் தாழ்த்திக் கூறியபடி உற்சாகமிழந்து நின்றேன் நான்!
“புறாக்களில்லாம அதுகளையெல்லாம் வேற என்னவாக நீர் நினைக்கிறீர்..! திரும்பவும் நான் காட்டின இடத்திலை வடிவாய்ப்பாரும். அதுகள் புறாக்கள்தான். அந்தாபாரும். அந்தா அது மேலாலை பறக்குது. அங்கை அங்காலைப்பக்கமா அந்தப்பாறைக்கு மேலாலையொருக்கா
''
வடிவாய்ப்பாரும்.!
இப்பொழுது முன்னதையும் விட மிகவும் உற்சாகமாக, கால் நுனிவிரலில் நிற்கும் அளவுக்குக் கொஞ்சம் உயரம் எழும்பி நின்று அந்தப் பாறைப் பக்கம் குவிந்து கூர்ந்த உச்சியை அவன் மீண்டும் கையால் காட்டினான்.
G
ஆக். கண்டிட்டன் கண்டிட்டன்..! என்றேன் நான்! என்றாலும் அவைகளைக் கண்டதில் எனக்கு மனம் திருப்தியாயில்லை. அங்கே பாறைக்கு மேலாகப் பறந்து கொண்டு திரியும் அப் பறவைகள் புறாக்கள்தானோ? அல்லது வேறு இனப்பறவைகளாக அவைகள் இருக்குமோ? என்கின்றதான என் ஐமிச்சம் இன்னமும் என் மனத்தை விட்டு அகலவில்லை - தொலைவிலே பறக்கின்ற பறவைகளை ஓவியமாக

f 27്മ്മ শুৈ১২ நீரிஅருளானந்தம் 77
வரைந்தால் பார்ப்பதற்கு எப்படியாக இருக்குமோ, அப்படியாகவே நண்பன் காட்டியப் பறக்கும் புறாக்கள் என் கண் பார்வைக்குத்தெரிந்தன.
மெல்லிய கோடாக அரை வளையங்களாகத் தெரிந்த அந்தவடிவத்தில் புறாவின் முழு உருவையுங் காணாததான ஏக்கத்தில்தான் நான் இருந்தேன். இதனால், புறாக்களை அந்தப் புறாமலை என்கிற இடத்தில் கிட்டவாய்ப் பார்த்திடலாம் - என்றிருந்த என் உள்ளத்திலிருந்த ஆசை மந்தித்ததாய் LD60),D555.
புறா மலைக்குப் போய்ப் புறாக்கூட்டங்களைக் காண்பேன்' - என்கிற கற்பனை வடிவம் அங்குப் போனதன் பின்பு மனத்திலிருந்து கலைந்து போக. அங்கேயுள்ள வேறுவேறான இயற்கைச் செழிப்புக்கள், என்கண்களுக்கு விருந்தளித்தன. இதனால் உற்சாகம் எனக்குள் சரசரவென சுரக்கத் தொடங்கியிருந்தது. கற்பாறைகளை ஒன்றுடன் ஒன்று மேலாக வைத்து பொருந்தி விட்டாற் போன்ற குன்றுகளும், அதைச் சுற்றிவரவும் கடலும், அந்த மலைகளுக்கு இடைநடுவே உள்ள சிறிய வெளியில் கடல் தண்ணிர் உள்ளிட்டதான பகுதியும், அதைச் சுற்றிலுமுள்ள தாராளமான விசாலித்ததான நடை பாதையையும் ஒன்று சேரவாய் என் மனத்திலிருத்திவைத்துப் பார்க்கும் போது அந்த இடம்; இப்போது இருப்பது தான் பிரத்தியட்சமான உலகம், இது தான் யதார்த்தமானது, மனிதன் வாழ்வதற்கு சுதந்திரமானது என்பதாய் எனக்குத் தோன்றியது. மனதை ஈர்க்கின்ற எதையாவது ஒன்றைப் பார்த்து இரசிக்கும் போது, எங்கேயும் இந்த விதமான சுதந்திர உணர்வுதான் என்னிடம் மேலிட்டு நிற்கும் பழக்கமாகி வருகிறது. அந்த உணர்வு என்னிடத்தில் எப்படி எழுகிறது?
இடத்தைப் பொருத்தும், என்னைச்சூழவுள்ள சூழ்நிலையைப் பொருத்தும், அந்த உணர்வு என்மனத்தில் ஆனந்தப்பாட்டுப் பாடிக்கொண்டேயிருக்கிறது. அதைத் தொடர் நீ தும் எண் ஆனி மாவில் இசைக் க ைவக்க வேண்டுமென்பதற்காகவே நான் இப் படியெல்லாம் மனத்தைக் கொள்ளையிடத்தக்க பல இடங்களையும் தேடிச் செல்கின்றேன். அந்த உணர்ச்சிகள் தருகின்ற இனிமையிலே சுகம் கண்டு பழகிவிட்டது என்மனமும் உடலும்.
நான் பள்ளியில் படிக்கின்ற காலமதிலேயே இந்த உணர்வு முகிழ்ந்தெழுந்திருந்தது. அந்த வயதிலே படிப்பதிலேயா நான் கவனம் வைத்திருந்தேன்? என் எண்ணம் முழுவதும் அப்போது பாடசாலைப் பக்கமிருந்த முதிரை மரத்திலிருந்து வரும் 'சில் வண்டின் ஓங்கித்தேயும் * B' என்கிற ஒசையில் ஒன்றியிருந்ததே! ‘என்ன சிலையாயிட்டீர். ஒரு பேச்சையுமே காணம்?” என்றான் நண்பன்! அவன் அப்படிக் கேட்டதற்கு;

Page 48
78 42%7ی ض- ٪ی.%عzzیکی از
'இல்லை. இது பாக்க நல்ல வடிவானதொரு இடமாய்த் தெரியுது” என்று சொல்லிவிட்டு தலையை ஆட்டிக்கொண்டு சிரித்தேன் நான்.
புறாமலையின் அழகை கடற்கரையின் அந்தப் பக்கமிருந்து முன்பு நான்பார்த்தபோது; பெரிதாக அதைப்பற்றி ஒன்றும் நண்பன் என்னிடத்தில் கூறவில்லை! நிலாவெளி என்கிற பெயருடைய அவன் இருக்கும் இந்த இடத்திற்கு நான் வந்தபோது சாதாரணமானதொரு பொழுது போக்குக்குரிய இடமென்றே அவன் இந்த இடத்தை வர்ணித்துச் சொன்னான். அவன் பிறந்த இடத்திலே உள்ள இந்த இடத்தை பெரிது படுத்திச் சொல்ல அவனுக்குச் சிலவேளை முடியாமலும் இருந்திருக்கலாம்.
கடற்கரையிலிருந்து நாலு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கடல்நீரின் நடுவே சிறிது மலைப்பாங்கான ஒரு இடமாக் காணப்படுவதுதான் இந்தப் புறாமலை என்கின்ற இடம். இந்த இடத்தைக் கடற்கரையிலிருந்து பார்க்கும் போது மலையும் மரங்களும் அடர்ந்த சூனியப் பிரதேசமாகவே எவருக்கும் பார்க்கையில் தோன்றும்.
இதனால், மினக்கெட்டுப் போய் அங்கினை என்னத்தைத்தான் பார்க்கிறது?” என்று மற்றவர்கள் சிலரைப் போல் நானும்தான் நினைத்தேன்.
ஆனால், இயந்திரப்படகில் ஏறி சிறிது தூரமுள்ள இந்தக் கடலைத் தாண்டிவந்து இந்த நிலப்பகுதியில் காலை வைத்ததும்தான் - அப்படி முன்பு நினைத்தது எல்லாமே தப்பு என்று எண்ணக் கூடியதாக எனக்கு வந்தது.
நிலத்தில் வளரும் செடிகளில் பூக்கும் பூக்களென்னப்பூக்கள்!. அதைவிட, ஆயிரம்மடங்கு அழகானவைகளே கடற்பூக்களென; அவற்றைப் பார்க்கும் போது தான் வியப்பு மேலிடுகிறது. இந்தக் கடற்பூக்கள் புறாமலையைச் சுற்றியுள்ள கடலில் கரைப்பக்கமாகவும் தண்ணிரின் உள்ளே சிறிது தூரம் காலைவைத்து நடந்து செல்கையில் பார்வைக்குத் தென்படுகின்றன. அங்குவந்துள்ள எத்தனை பேர் அவற்றைக் கடலடியிலிருந்து உடைத்தெடுத்துக் கொண்டு வருகிறார்கள். எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. இந்த இடத்தைவிட்டுப் போகும் போது கொண்டு போக முடியுமென்றால் நானும் அந்தப் பூக்களை பிடுங்கி எடுத்துக் கொள்ளலாம்தான்.
ஆனால், கடும் சட்டம் ஒன்று சில காலமாக அங்கு இருந்து வருகிறது. ‘ஒரு விரல் பூ அளவும் எடுத்துச் செல்ல அதன் காரணமாய் முடியாதென்ற நிலை இருக்கிறது.
அங்கு சட்டத்தை நடை முறைப்படுத்த கடற்படையினர் இரண்டு பேர் காவலுக்கும் நிற்கின்றனர்.

୪କ୍ତ நீ/அருளானந்தம் 79 என்றாலும், அங்கு நிற்கின்ற பலர் கடற்பூக்களைக் கண்டு மனதைப்பறி கொடுத்ததால்; "வருவது வந்து தொலையட்டும்’ என்கிற அளவுக்கு பேராசையால் உந்தப்பட்டு அவற்றை உடைத்தெடுத்து விடத்தான் செய்கிறார்கள். எப்படியோ ஒருவாறாக அவற்றை அங்கே நிற்கின்ற கடற்படை வீரர்களின் கண்களுக்கு மறைத்து களவாக கொண்டு போகவும்தான் செய்கிறார்கள்.
அவர்களைப்போல் எனக்கும் இப்படி கொண்டு போகத்தான் ஆசை வளர்ந்து மனத்தில் பேயாய் நின்று ஆடுகிறது. ஆனால், சட்டத்திற்குப் பயந்து சிறு வயதிலிருந்தே கீழ்ப்படிந்து வாழ்ந்து பழகிப்போன எனக்கு இப்படியெல்லாம் எதிராக நடக்க எப்பொழுதும் பயமாகவே வருகிறது. நண்பனும் என்னைவிட மேலான குணங்கள் வாய்த்தவன். எந்தக் கெட்டபழக்கங்களும் ஒட்டிக்கொள்ளாத தாமரை இலைமனப்போக்கு அவனுக்கு. இதனால் பார்ப்பதோடு மட்டுமாக அவனும் தன் மனத்தை அடக்கிவைத்துக் கொண்டு நிற்கின்றான்.
என் வாழ்நாளில் எங்கெங்கேயோவுள்ள எல்லா கடற்கரைகளிலும் சென்று நான் சுற்றிச் சுற்றி அலைந்து திரிந்திருக்கிறேன். ஆனாலும், இந்தக் கடற்ரையின் வினோதம்தான் ஒவ்வொருவிதத்தில் மனசிலே எனக்கு மிகவும் வியப்பைத் தருகிறது. கொத்துக் கொத்தாய்க் கடல் தண்ணிருக்குள் பூத்துக் கிடக்கின்ற கடற்பூக்களிலிருந்து உடைந்து கரையொதுங்கிய விரலளவு உருளைத் துண்டுகள் வெயிலில் காயவும் வெண்மையாகி, இந்த மணல் தரையெல்லாம் எங்கு பார்த்தாலும் - வலது புறம், இடது புறம், முன்னால், பின்னால், சுற்றிலும், நெடுகிலும் நீக்கமற நிறைந்ததாய்ப் பரந்து கிடக்கின்றன. அந்தத் துண்டுக்கற்படையில் வெறும் காலை வைத்து நடந்தால் ரணமாக்கி விடுமளவிற்கு கிழித்துக் குத் திவிடும் என்பதற்காக காலில் செருப்புகளுடனேயே இவ்விடமெல்லாம் நடமாட வேண்டியதாய் இருக்கிறது. பால் போன்ற இந்தக் கற்களை பார்க்கும் போதெல்லாம் பரவசம்தான் - கற்கடகங்களையும் கூட்டமாக பளிச் பளிச்சென்று மின்னியபடி வால் செதில்களை அசைத்து அசைத்து வளைய வந்துகொண்டிருக்கும் சிறியதும் பெரியதுமான மீன் குஞ்சுகளையும் பாறையின் இடைவழியே தண்ணிரில் இருக்கப் பார்க்கவும் ஆனந்தம்தான். ‘லாத்தினது இனிக்காணும் சோக்காய் இனி ஒரு குளிப்பொண்டு குளிப்போமா?”
‘குபு குபு வென்று திவ்வியமான காற்றடித்துக் கொண்டிருந்த அந்தப் பாறைகளின் இடையே நிற்கும் போது என்னைக் கேட்டான் நண்பன்.
"ஒமோம். குளிப்போம். இனிக்குளிப்போம்” என்று சொல்லி நானும்

Page 49
80 676് ضم لألعالمه
உடன்பட்டேன்.
இருவருமே அந்த மலைகளிடையே உள்ள அலைகள் அதிகமற்ற அமைதித் தண்ணிர் உள்ள இடம் நாடிச் சென்றோம்.
மண்ணைக் கோலி எடுத்து விட்டாற் போன்ற வடிவில் குளத்துப் பாங்காயமைந்த, அந்தக் கடல் நீர் உள்ளிட்ட பகுதியின் அருகே நாங்கள் போய்நின்றோம். நல்ல உச்சிப் பொழுது நேரமாயிந்ததால் கடல் வெயிலிலே தவித்துக் கொண்டிருந்தது.
ஆனாலும், அந்த வெயிலுக்குள்ளே வெள்ளைப் புறாக்களை ஞாபகப்படுத்தும் அழகான சில வெளிநாட்டுப் பெண்கள் தரையில் இருந்தவாறு இந்தக் கடும் வசந்த கால சுள்ளென்று எரிக்கும் வெயிலில் காய்கிறார்கள்.
அவர்கள் எல்லாரையுமே பார்க்க; அத்தினி, சங்கினி, சித்தினி, பதுமினியாக - லட்சணமான இளவயதுக்காரிகளாகத்தான் தெரிகிறது. சத்தான உணவை உண்டு வளர்ந்த பெருமை அராபிக் குதிரை போன்ற அவர்களது உடல் வளர்ச்சியிலும் மினு மினுப்பிலும் தெரிந்தது.
மார்புக்கச்சையும் இடைக்கச்சையும் மாத்திரம் அணிந்து கொண்டிருக்கும் அவர்களிற் சிலர் ஒய்யாரமாகக் கால்களை மடித்து ‘சிக்காராக இருக்கும் அழகைக்கான எனக்கும் மனத்துக்குள் கிளர்ச்சியேற் படுத்தியது.
மல்லாந்து படுத்துக்கிடக்கின்ற பெண்களது ஆலிலை போன்ற வயிற்றுப் பாகம் அடித்தொப்புள்வரை பூவிதழின் மென்மையான வழுவழுப்பைப் பிரதிபலிக்கின்றன. செவ்விளநீர்க்காய்களின் நிறத்தில் சற்றேனும் சுருக்கமில்லாத பளபளவென்ற பழவர்ணமான மேனிகள். காற்றடைக்கப்பட்ட பலூனைப்போல பருத்தும் வாழைப்பூக்கூம்புபோல் கூம்பியதுமாகத் தெரியும் மார் பகங்கள் - குமரிகளுக்குரிய யெளவனமான தோற்றத்தை வெளிக்காட்டுகின்றன. திரும்பவும் கண்களால் அவர்களது மார்புகள், அடிவயிறு, தொடை முழங்கால் என்று பார்த்து கால்களையும் அடைந்தேன்.
இப்படி உடல் அழகை வெளிக்காட்டுவதிலே என்னதான் அவமானகரமான காரியம் உண்டு. பூக்கள் அழகானவை. என்றாற்போல் அவைகளுக்கு இறைவன் ஆடையணிவித்தானா?. இல்லையே..? பிறக்கும் போது எந்த மனிதனாவது ஆடையுடன் பிறக்கின்றானா..? ஆதாமும் ஏவாளும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டுமென்று ஆண்டவன் முதலில் கட்டளையளிக்கவில்லையே? அவர்கள் ஏதேன் தோட்டத்தில் நிர்வாணமாகத்தான் சுற்றித்திரிந்தார்கள். ஆணுக்குப் பெண் தேவையென்று கடவுள்தான் தீர்மானித்தார். ஆணான ஆதாமைப் படைத்துப் பின்பு பல வருடங்கள் கழித்துத்தான் பெண்ணான ஏவாளைப் படைத்தார் என்று பரிசுத்த விவிலியம் நூல் கூறுகிறது. இருவரும் சேர்ந்து இணைந்து சந்ததியை

ඊඛ. நீரிஅருளானந்தம் A I
விருத்தி செய்யுங்கள்' - என்று கடவுள் ஆசீர்வதித்ததாகவும் ல ள்ள உண்மையும் தெரியவருகிறது.
இதனால் அவர்கள் எந்த இடையூறுகளுமின்றி ஒருவரை ஒருவர் பார்த்து அந்தநிலையை சுதந்திரமாக தடைகளேதுமின்றி நன்கு இரசித்திருப்பார்கள். வெட்கத்தை அறியாத நிலையில் வெட்ட வெளிச்சமாக இருவரும் ஒருவரது உடலழகை ஒருவர் மாறி மாறிப் பார்த்துப் பார்த்து இன்பத்தில் திழைத்திருப்பார்கள்.
பிறகு என்ன நடந்தது அவர்களுக்கு? பூவுலகில் முதல் மனிதர்களாக கடவுளால் உண்டாக்கப்பட்டு ஆடைகளேதுமின்றி ஏதேன் தோட்டம் முழுவதும் நிர்வாணிகளாகத் திரிந்து கொண்டிருந்த அவர்கள்; ஆடையைப் போர்த்திக் கொள்ளவேண்டியதாய் நடந்துவிட்ட சம்பவம்தான் என்ன? அப்பாவிகளாய் ஒன்றுமே அறியாதிருந்த அவர்களை வஞ்சம் தீர்க்க வந்த பிசாசானவன் பொய் சொல்லி ஏமாற்றினான். உலகிலேயே முதன்முதலாக பொய்கூறிய அந்தச் சாத்தானின் சொல்லைக் கேட்டு ஏமாந்துபோய் அவனுக்குக் கீழ்ப்படிந்து கடவுளுடைய சட்டத்தை மீறி பாவம் செய்தார்களாம் அவர்கள்...!
அவர்களைப் பார்த்து; "பாவத்தின் சம்பளம் மரணமென்று தண்டனையளித்து விட்டார் நீதியுள்ள 'தேவன்..!
அதற்குப்பிறகு தான்; ‘கடவுளுக்கு முன்பாகப் பாவம் செய்தோம். சீ. வெட்கம் வெட்கம்’ என்று எல்லாவற்றையும் அவர்கள் நினைத்தார்களாம்.!
இந்தமேனியை ஆடையால் மறைப்பதை - அன்றைய நாளில்தான் அந்த மனிதர்கள் ஆரம்பித்தார்களாம். அங்குள்ள அத்தியிலைகளைப் பறித்து அதைக் கொடிகளிலே இழைத்து உடனே உடலை மறைத்து உடுத்திக் கொண்டார்களாம்!
‘எவ்வளவு நீளமான கதை விவிலியநூலிலுள்ள ஆதியாகமத்திலுள்ள கதை. கூச்சநாச்சமெல்லாம் தொடர்ந்து மனிதனுக்கு அவர்களிடமிருந்து கடத்தப்பட்டு இப்படியாகத்தான் மரபணு பிரகாரம் வந்திருக்குமோ..? இதையெல்லாம் ஆராயப் புகுந்தால் வாழைப்பூவின் மடல் உரித்த கதைதான்’ என்றுபட்டது எனக்கு. ‘இதற்கெல்லாம் விளக்கம் தேடினால் குழப்பமே மிஞ்சும்' - என்றும் தெரிந்தது.

Page 50
82 4p/7بھنگ/مجھ677 لڑکپڑ
என் மனத்தில் இந்த நினைவுகள் சிற்றலையிட்டுக் கொண்டு நிற்கும் நேரத்தில், என் நண்பன் தன் ஆடைகள் களைந்து ‘ஜட்டியுடன் நான் காணநின்றான்'
'ஏன் சுணக்கம். ரெடியாகுமன் குளிக்க..?’வென்றான்
‘யெஸ். யெஸ்!” என்று கூறியபடி நானும் அவனைப் பின்பற்றியதாய் ஆடைகளைக் களைந்து போட்டுவிட்டு. அவன் மாதிரியே நானுமாகி நின்றேன்.
‘ரெடி.’ இருவரும் வெகு தெளிவாயிருந்த அந்தக் கடல் தண்ணிருக்குள் இறங்கினோம்.
கழுத்தளவு தண்ணிரில் சென்று நிற்கையில் தரைப்பக்கமாகவெல்லாம் நன்றாகப் பார்க்க எது வித தடைகளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. யாருமே என்னை தண்ணீருக்குள் நிற்கையில் நோட்டமிடவில்லை என்கின்ற மனத்தெம்பு தண்ணிருக்குள் இறங்கி நிற்கையில் எனக்கு வந்துவிட்டது. என்மனம் முன்பு நான் பார்த்த அவளுடைய நினைவுகளைக் கிளர்த்துகிறது. அவளைக் கண்டதிலிருந்து என் மன ஆழம் அவளையே நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு கணம் கூட நினைவு அறுபடவில்லை. திடமாக நின்றுகொண்டிருந்தது அந்த நினைவு.
இதனால், எது வித கூச்சமுமில்லாமல். வெட்கமும் படாமல் இப்போது கழுத்தளவு தாழ்ப்பமுள்ள தண்ணிருக்குள் நின்றவாறே. வேஷம் போடுகிற ‘அத்திப்பழமாய் இருந்துகொண்டு. மனம் ஏவிக் கொண்டிருந்த
அந்தண்டைப்பக்கமாக என் பார்வையைக் குவித்தேன்.
முழங்கால்களின் மேல்பதித்த மோவாயுடன் இருக்கும் . ஒரு வித மோகன வசீகரத் தோற்றத்துடன் விளங்கிய அந்தச் சொகுசுக்காரியின் பொலிவு பெற்ற அங்கங்களின் வளைவுகளையெல்லாம் அகண்ட விழி மூடாமல் பார்த்து இரசித்தேன்.
சாமானிய முகம்தான் என்றாலும் அந்த ரோமானிய மூக்கு அவளுக்கு அழகாயிருந்தது. என்நேரான பார்வையில் படும்படி குந்தி இருக்கின்ற அவளை, அந்தத்தினுசில் வைத்துப் பார்க்கவும் எனக்கு - சரித்து நிலத்தில் விட்டிருக்கும் 'உரல் - ஞாபகம் தான் வந்து தொலைத்தது.
எனவே அந்தக் காட்சியை நான் விரிவாக நினைவில் மீட்டேன்.
இதனால், காமம் தன் செந்நாக்குகளை சுழற்றி நக்கிக்கொண்டு என் மனத்தில் சீறியெழுந்தது. என் இளமைக்கு அது ஒரு இயல்பான ஏக்கந்தான்..! என்றாலும், என் நெஞ்சில் மோதிய மகிழ்ச்சிப்பெருக்கில் ஒருவித நச்சுத்தன்மை இருப்பதை உணர்ந்தேன். நானல்ல எனக்குள் வாசமாயிருக்கும் அந்தப்பாவ இச்சையே இப்படியெல்லாம் என்னைப் போட்டு

x நீAருளானந்தம் படாத பாடு படுத்துகிறது என்ற உணர்வும் எனக்கு ஏற்பட்டது.
83
உடனே அங்கே பார்க்க விரும்பாத நிலையில் மனத்தை மன அடக்கத்தில் கொண்டு வந்து; உணர்ச்சித்தீயின் சூடு அடக்கத் தண்ணிருக்குள் உடல் முழுவதையும் அமிழ்த்திக் கொண்டேன். பிறகு பிரம்மப் பிரயத்தனம் செய்து மூச்சைச் சில விநாடிகள் நிறுத்தி வைத்திருந்தேன். காற்றை உள்ளே இழுத்து வைத்து அடக்கிக் கொள்ளும் போது உணர்ச்சிகள் எல்லாமே அடங்கி ஒடுங்கிவிடும். விக்கலை அடக்கிப் பழகிய அநுபவத்திலிருந்து முன்னேறியபழக்கம்தான் சுவாசத்தை ‘கும்பம்’ செய்து வரும் என்னிடிமுள்ள இந்த யோகப் பயிற்சி.
முழுக்குப் போடும் போது எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு உச்சிவரை ஏறி உட்கார்ந்து கொண்டது. என்றாலும், கடல் தண்ணிர் ஒன்றும் உடலுக்கு குளிரும்படியாக இல்லாததாகவே இருந்தது. மற்றும்படி உடலுக்கு சூடாகவும் தெரியவில்லை. வாயிலெடுத்தால் ‘உப்பு அதிகம் இல்லாததாய்ச் சுவைத்த அந்த நீரில் குளிப்பது புதியதோர் இன்பக் குளிப்பாக எனக்கு இருந்தது. இதனால் நீந்தலும், சுழியோடுவதுமாக சிறிது பொழுது எங்களுக்கு அதிலேகழிந்தது.
இருவரும் நன்றாக நீராடியபின், கண்களின் ‘சிவசிவப்புடன் கரையேறினோம். உடலைத் துணியால் துவட்டாமலேயே சில விநாடிகளில் வெயிலின் காங்கையில் காய்ந்து விட்டது மேலில் ஈரமாயிருந்த கடல் தண்ணிர்.
சிறிது நேரம், அந்தப்பகுதியெங்கினும் அம்பாரமாய் வளர்ந்து நிற்கும் ‘கடல்லெச்சக்கடை மரத்து அடர் நிழலில் போய் நின்றோம். உடை மாற்றி உடுத்துக் கொண்டோம். கொண்டு வந்திருந்த இரு உணவுப் பொட்டலங்களையும் விரித்து கையில் வைத்துக் கொண்டு - கோணலும் மாணலுமாகச் சரிந்து கிடந்த மரக்கிளையில் குந்தியிருந்து சாப்பிடத் தொடங்கினோம்
நான் சாப்பிடும் வேளையில் தண்ணிருக்குள் நின்றபோது பார்த்த அவளை மீண்டும் நோக்கினேன். அவள் தன் விரலை வாயில் வைத்து உமிதலில் கவனமாக இருந்தாள்.
அவள் அப்படியாக ஏன் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறாள்? - என்று எனக்கு எளிதாக விளங்கிவிட்டது. கவனக்குறைவாக இருந்து கைகளை நிலத்தில் அவள் ஊன்றி விட்டிருப்பாள். அங்கே கிடக்கும் கத்திபோன்ற சில சல்லிக்கற்கள் அவளது விரலை கிழித்துப் பதம் பார்த்திருக்கும் என்று நான் நினைத்தேன். அவள் விடாமல் விரலை சூப்பிக் கொண்டேயிருந்தாள். அது எனக்கு என்னவோபோல் இருந்தது. வேறு பல வேண்டாத நினைவுகளையும்
Հ.

Page 51
84 42/7 67 ضمنے2مئیaa2,
என்னிடத்தில் கொண்டுவந்தது.
நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும், அவள் இரத்தம் வழிவதை சூப்பிக் கொண்டிருப்பதும், இரண்டுக்கும் ஒத்து வராத மன வெறுப்பாய் எனக்கிருக்க அரைவாசிச் சாப்பாடுடன் உண்ணுகிறதை நான் நிறுத்தி விட்டேன்.
“என்ன நீர். சாபிட்டு அரைவாசியோட நிப்பாட்டிட்டீர்” நண்பன் கேட்டான்.
'அவ்வளவாய்ப் பசிக்கேல்லை. வயிறு நிறைஞ்சமாதிரிப் போட்டுது” என்று ‘சமத்காரமாக சொல்லி மழுப்பினேன்.
அவளுடைய செயலையும், அதைக் கண்டுவிட்டு நான் அருசிப் படைந்ததையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற நண்பனுக்குச் சொல்லி, அவன் சாப்பிடுகிறதையும் குழப்பக்கூடாது என்ற நோக்கத்தில்;
'நீர் ஆறுதலாச் சாப்பிட்டு முடியும். என்னாலை நீர் குழம்பாதேயும்
என்று சொல்லிவிட்டு தண்ணிர்ப் போத்தலைக் கையிலெடுத்து தண்ணிரை நான் குடித்தேன். அண்ணாத்தலாய்த் தண்ணிரைக் குடிக்கும் போது "கடல்லெச்சக்கட்டை மரத்தில் ‘குலுகுலுத்திருந்த கிளிப்பச்சை நிறத்து இலைகளை உன்னித்துப் பார்த்தேன். சண்டி இலை மாதிரித்தான் சரியாக இதன் இலையும் தெரிந்தது. ‘போட்டில்’ வந்து இவ்விடத்தில் இறங்கும் போது முதன் முதலாக உரம் போட்ட செடி போல மதாளித்து நிற்கின்ற இங்குள்ள இந்த மரங்களின் பெயரைத்தான் படகோட்டுநரிடம் நான் கேட்டேன்
அவன் 'கடல்லெச்சக்கட்டை' - என்றுதான் இதற்குப் பெயர் சொன்னான். “லெச்சக்கட்டையா. எச்சக்கட்டையா?”
விளங்காத அளவில் திரும்பவும் நான் அவனிடம் கேட்டிருந்தேன். திரும்பவும் அவன்; ‘கடல்லெச்சக்கட்டை” என்ற சொல்லை அட்சர சுத்தமாக உச்சரித்தான். ‘இதை வறை வறுத்தும் சாப்பிடலாம் ருசியாயிருக்கும்” . என்றும் சொன்னான். கடல் லெச்சக்கட்டை' என்பதும் சரியாக இருக்கும். லட்சக்கணக்கில் இது இங்கே காடாய் வளர்ந்து நிற்குதே? என்று அப்போது நினைத்தேன்.
புறாமலைக்கு வந்திருப்பவர்களெல்லாம் திரும்பிப் போகின்ற அவசரத்தில் இருந்தார்கள், படகோட்டுநர்கள் தங்கள் இயந்திரப் படகுகளில் அவர்களை ஏற்றிச் செல்லுகின்ற வேலையில் துரிதமாக செயல்பட்ட வண்ணம் இருக்கின்றனர். புறாமலையில் சனப்புழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. வந்திருந்தவர்களின் ஒட்ட சாட்டமெல்லாம் ஒய்வதைப்போல் இருந்தது.

শুৈ৯২ മU്ത്രണുന്നത്ര 85 நானும் நண்பனும் போகவர வாடகை பேசிவந்த இயந்திரப் படகில் ஏறினோம். சிறிது தூரம் சமுத்திரத்துத் தண்ணிரில் ‘படகு விரைந்து போய்க் கொண்டிருக்க, திரும்பி ஒருமுறை அந்தப் பக்கமாக உள்ள புறாமலைப்பகுதியை நான் பார்த்தேன்.
அப்படியே தொலைவாய்ப் போகும்போது பார்த்துக் கொண்டிருக்கையில் அது என் கண்களுக்கு ஒரு சூனியப்பிரதேசமாகவே காட்சியளித்தது.
‘புறாவில்லாத ஒரு புறாமலை’ என்றேன் நான்!
‘புறாக்கள் இப்பையும் இங்கினையாய் ஏராளமாய் இருக்குது ஆனா, இந்தப் புறாமலையை விட்டுப்போட்டு இடம் பெயர்ந்ததாய் அதுகளெல்லாம் இப்ப அங்காலைப்பக்கமாகத் தெரியிற அந்தக் கற்குன்று வழிய போய் இருந்துட்டுதுகள். இந்த மலையிலை வந்து ஆள் கூட்டம் சேர்ந்து புழக்கம் வைக்கவும் அதுகளெல்லாம் கணக்கக் கலைஞ்சதாய்ப் போய் அங்கினேக்கிள்ளை இருந்துட்டுதுகள்’ என்றான் நண்பன்.
புறாப்பறவைகள் இடம் பெயர்ந்து போன கதையை நண்பனின் வாயால் கேட்க எனக்கும் மன விசாரமாய் இருந்தது. இந்த உலகில் அழிந்து வரும் ஜீவராசிகளின் பரிதாபமான நிலைக்குக் காரணம் மனிதன்தான்! சுதந்திரமாகக் காடுகளில் திரிகின்ற பறவைகளையும் மிருகங்களையும் இந்த மனிதன்தான் தேடித் திரிந்து கொல்கின்றான். இந்தப்பூமியின் வளத்தைக் கெடுக்காமல் தங்கள் சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாத்து வைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதர்களினதும் தலையான கடமை. அப்படியான மனிதாபிமானமுள்ள கடமையைச் செய்யவேண்டியவன் எல்லாவற்றையும் அழித்துச் சீர்கெட வைக்கின்றானே என்று நான் நினைத்தேன்.
நான் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போது நண்பன் வேறு கோணத்தில் ஒரு விஷயத்தைச் சொன்னான்.
‘புறாமலை போனா அந்தப் புறாக்களுக்கு ஒண்டிக்கொள்ள இன்னொரு ஒதுக்கிடம் இருக்கு. அந்த இடம் இப்ப அதுகளுக்குப் பாதுகாப்பான இடமாயிருக்கு. அங்க போய்த் தங்கியிருக்க இந்த மனுசனுக்கு அங்கினையெல்லாம் இடவசதியில்லை. அதாலை அந்த இடத்திலையாவது அதுகள் சுதந்திரமாய் இருந்து கொண்டிருக்கும். ஆனா, எங்களுக்கு சுதந்திரமாயிருந்து நிம்மதியாய்ச் சீவிக்க ஒரு இடமுமில்லை. நெடுகலும் சண்டையும் சச்சரவுமெண்டு சனிப்பிடிச்ச இடப்பெயர்வுதான் வந்துகொண்டிருக்கு”
தனக்குள்ளே தத்தளித்துக் கொண்டிருந்த வார்த்தைகளை பிடுங்கி வெளியே வீசிவிட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிந்தான் அவன்.
இவ்வளவுநேரம் தாமரை பூத்தமாதிரி இனிமையாகப் பேசிக்

Page 52
86 676് ضم للتلفعاله
கொண்டிருந்தவனின் இதயத்துள் துன்பப் பிரவாகம் சூழ்ந்து விட்டதாய் எனக்குத் தெரிந்தது. அவன் சொன்னவைகளைக் கேட்டதும் கணத்துக்குக் கணம் சிந்தனைகள் என்னிடத்திலும் சூடேறிக் கொண்டிருந்தன.
எந்தநேரமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்று நினைக்கும் எனக்கு இந்தமாதிரி காரியங்கள்தான் மனத்தில் கசப்பைத் தடவிவிடுகின்றன.
இப்போது மார்புக்குள் கனமான மனம் இருப்பது போல கஷடமாக இருந்தது எனக்கு. எத்தனை பெருமூச்சு விட்டும் அதைக்கரைக்க என்னால் முடியவில்லை!
(2004) OOO

නS. മU%ണുന്നത്രം) S7
65ulsis
அப்போதுதான் பொழுது விடிகிறது. அந்த நேரமாய் விடியல் சத்தம் கேட்டு நான் எழுந்துவிட்டேன். என் நோய்க்குரியதாய் கசகசக்கத் தேநீர் மாத்திரம் குடித்தேன். பிற்பாடு பாண் வாங்கி வரவென்று கடைப்பக்கம் எனக்குப் போய்வர வேண்டியதாயிருந்தது. அங்கு போன வேளையில் தான் இந்தச் செய்தியும் எனக்குத் தெரியவேண்டியதாய் வந்தது. எம் வட்டாரத்திலுள்ள நாய்களுக்கெல்லாம் கழிச்சல் நோய் கண்டு விட்டதாக எனக்குத் தெரிந்தவர்கள் அங்கே என்னைக் கண்டதும் சொன்னார்கள். உடனே நான் அதைக்கேட்டு திகைத்துப் போய்விட்டேன். விரைவாக வீட்டுக்கு வந்து அதே யோசனையோடு இருந்து அந்த நாயைப் பார்த்தபோது அந்த நோயின் அறிகுறிகளெல்லாம் முழுதாக அதனிலே தென்பட்டது. உடனே திரும்பவும் நான் மருந்துக் கடைக்கு ஒட்டமாகவும் - நடந்தும் போனேன். அங்கே அந்த நாயின் நோய்க்குத் தேவையான மருந்தை வாங்கிவந்து அந்தக் காலை வேளையிலேயே அதற்கு இரண்டுதரம் அடுத்தடுத்துக் கொடுத்துப் பார்த்தும் விட்டேன்.
இப்பொழுது எனக்கிருக்கும் மனக்கவலை நாய்க்குக் கொடுத்த அந்த மருந்துக்கு நோய் குணமாகிவிடுமா. ஆகாதா என்பதுதான்!
இதையிட்டுச் சிந்திக்கையில் முடிவெதுவும் தெரியாமல், என் மனம் கலங்கவும் தெளிவடையவும் செய்தது. என் வீட்டுக்குப் பக்கத்திலே நாட்டு வைத்தியம் பார்ப்பவர் ஒருவர் இருந்தார். அவர் கண்ணால் பார்த்தே வியாதிகளை கண்டு பிடிக்கக்கூடிய வல்லவர். அவர் ஒரு நோயாளியைப் பார்க்கும்போது, பஞ்ச பிராணன்களும் கண்ணுக்கு ஓடி வந்தாற்போல தீவிரமாகப் பார்ப்பார். அவர் மிருகங்களுக்கும் வருகிற நோய்க்கு, தனக்குத் தெரிந்த பரிகாரம் சிலவற்றையும் சொல்லிக் கொடுப்பார்.
எங்கள் வீட்டுக்கு அவர் அன்று வெயில் ஏறிய நேரமாய் வந்த போது நாயின் நிலையையும் கண்டுவிட்டு:
‘ஓ! கடவுளே! இந்த நாய்க்கு என்ன நடந்தது?” - என்று என்னை அக்கறையோடு விசாரித்தார்.
அவர் கேட்டதற்கு நான் சொன்னேன்:

Page 53
88 தேடல்
‘நேற்றைக்கிருந்து உப்புடித்தான் உது வருத்தம் வந்தாப்போல படுத்துக்கிடக்கு. அடிக்கொருதரம் இப்ப வயித்தாலையடிக்கிது உதுக்கு. அதால காலேலை மருந்துக்கடைக்குப்போய் நான் மருந்தும் வாங்கியந்து குடுத்திருக்கிறன். ஆனாலும் நயம் ஒண்டையும் காணக்கிடைக்கேல்ல.!”
அவர் சொன்னார்:
‘ஓ! இந்த வயித்தாலையடிதான் இப்ப உங்கினையா உள்ள அம்பட்டு நாயஞக்கெல்லாம் இப்ப வருத்தம்! எங்கடை கை மருந்தொண்டும். ஊகூம். உந்த நோய்க்கு வேலை செய்யுதில்லை. உதால உங்க ஊர் வழிய கனக்க நாயஸ் செத்தும் போட்டுது. எண்டாலும் உந்த உங்கடநாய் செழிப்பும் லட்சணமுமானநாய். ம். ஐயோ பாவம்!”
அவரும் பரிதாபப்பட்டார்.
என் மனைவி பக்கத்தில் நின்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முகம் அப்போது அவர் சொன்னவைகளைக் கேட்டதும் வெளிறிட்டது. நாய் இறந்து போமா என்ற அச்சத்தில், சர்வாங்கமும் அவள் குலுங்கிப் போனாள். இதனால் அவளின் மனதை ஆற்றித் தேற்றுவதற்காக நானும்:
'உதுக்கெல்லாம் போய் சும்மா பயப்பிடாதயும். இப்பதானே மருந்தும் குடுத்துக் கிடக்கு; இன்னும் ரெண்டு வேளைக்கு அடுத்தடுத்துக்குடுக்க மருந்தும் சுவறி வேலை செய்யத் துடங்கீரும்; வயித்தாலை போறதும் டப்பெண்டு கட்டுப்பட்டிடும்.” என்று நான் சொல்லி முடிய; அதற்குத் தகுந்த மாதிரி வைத்தியரும் அவளுக்கு தைரியம் வரச் சொன்னார்.
“கவலைப்படாதயும் பிள்ளை. உந்த வியாதிக்கு இப்ப உந்த மருந்தைத்தான் வாங்கியந்து உங்கினை எல்லாரும் குடுக்கினம். உதைக் குடுத்தும் சில நாயஸ் ஏதோ லக்கிலை தப்பிப் பிழைச்சும் விட்டுது. உந்த நாயும் சரி அதுகளைப்போல தப்பீடும் எண்டுதான் எனக்கும் மனம் அடிச்சுச் சொல்லுது. எதுக்கும் குடுக்கிற மருந்தைக் கவனமா வேளா வேளைக்குப் பிடிச்சுப் பருக்கி விடுங்கோ.” - சொல்லிவிட்டு:
‘அப்ப நான் வாறனம்மா!” - என்றுவிட்டு 'தம்பி.!” - என்று என்னைப் பார்த்தும் தலையாட்டிவிட்டு அவர் திரும்பிப்போக வெளிக்கிட்டார்.
படலை வரைபோய் அவரை வழியனுப்பிவிட்டு நான் திரும்பவும் வீட்டு விறாந்தையடிக்கு வந்தேன். என் மனைவி அங்கு ஒரு கதிரையில் கவலையோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டு நானும் அங்கு

2/。 ന്നമ്മ শুৈ১২ நீரிஅருணானந்தம் 89
அவளுக்குப் பக்கத்திலே இருந்த கதிரையில் போய் உட்கார்ந்தேன்.
“காலேலையிருந்து பாவம் தண்ணியை மாத்திரம் குடிச்சிட்டிருக்கு!” நாயைப்பார்த்தபடி இப்படி அவள் என்னிடம் சொன்னாள்.
'சுகம் வந்திடும் என்னப்பா..?”
திரும்பி என்னைப் பார்த்தும் அவள் கேட்டாள். அப்பொழுது அவளது முகம் சுருங்கிச் சிணுங்கியது.
6.
அவள் என்னிடம் கேட்ட கேள்விக்குப் பதிலாக முதலில் ‘சுகம்.” . என்று அந்தச் சொல்லை மாத்திரம் சொல்லிவிட்டு “வரும்.” என்ற சொல்லை அவளுக்கு விளங்கவைத்திட அதற்காகவென்று ஒருமுறை நான் அவளைப் பார்த்தபடி தலையை மேலும் கீழும் ஆட்டிக் காண்பித்தேன். அவள் தன் வலக்கையை மடித்து கதிரைச் சட்டத்தில் ஊன்ற வைத்துக் கொண்டு முகவாயை ஒரு விரலால் தாங்கி வைத்திருந்தவாறு சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
நானும் அதிலே இருந்து கொண்டு நாயைப் பார்த்தேன். அப்படியே சில நிமிடங்கள் வரை தொடர்ந்து நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு கண்கள் நொந்து போக களைத்துப் பெருமூச்சு விட்டேன்.
எனக்கு அதிகம் வயது கடந்து விட்டதாகச் சொல்ல முடியாதுதான்! என்றாலும் வயதுக்கு மீறிய மூப்பின் தளர்ச்சி எனக்கு வந்து விட்டது. என் நிலையில் தான் என் மனைவியும் வந்து விட்டாள். ஆக எங்கள் இருவருக்கும் இருக்கும் மனக்கவலை ‘எங்களுக்கொரு பிள்ளையும் இல்லை’ என்பது தான்! நாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்கிற கசப்பான நிஜம் இந்தக் காரணத்தினாலேதான் எங்கள் மனசைச் சுட்டுவிட்டது.
அந்தக் கவலைதான் மனத்தில் கிடந்து அரித்துக் கொண்டு எங்கள் வாழ்க்கையை விகாசமற்றதாக்கி இந்த வயதுக்குள்ளாக வாட்டி வதைத்து நோயாளிகள் ஆக்கி விட்டிருக்கிறது - என்றுதான் நான் நினைக்கிறேன். என்றாலும் “ஏதோ கடவுள் எங்கள இந்த மட்டுமாவது வைச்சிருக்கிறாரே' - என்றும் நான் ஆறுதலடைய வேண்டியுமிருக்கிறது.
நாய் படுத்திருந்த இடத்திலிருந்து எழுந்து தள்ளாடிக் கொண்டு நிற்க இயலாத நிலையில் நிற்கிறது. பலகீனமான நிலை அதற்கு. இது வரைக்குள் பல தடவைகள், நீர்த்தன்மையோடு அது மலம் கழித்து விட்டது. எழுந்து நின்ற நாய் சோகமாக என்னைப் பார்க்கிறது. நான் “ஜோஜோ." என்று அதனுடைய பெயரைச் சொல்லி, அன்பு இழையக் கூப்பிட்டேன். அதுதான் அந்த நாயினது பெயர். நான் கூப்பிடவும் தளர்ந்து கிடந்த வாலை அது மெதுவாக ஆட்டியது. அதற்குப்பிறகு இயக்கமில்லாத மாதிரி மெது மெதுவாக

Page 54
90 தேடல்
தள்ளாடியபடி நடந்து, வீட்டுக்கு வெளியாலே முற்றத்தடிக்கு அது போனது.
'ஜோஜோ”வுக்கு வந்த வருத்தம் முற்றிப்போய் பலகீனமான நிலைமையில் அது இருந்தது என்றாலும் வீட்டுக்குள்ளும் வெளியே வீட்டின் அருகாமையிலுள்ள இடங்களிலும், அசுத்தம் ஏதும் செய்யாமல்தான் அது இருந்தது. தன்னால் இயலாத நிலையிலும் அது அதற்குரிய நல்ல அறிவுடன் செயல்படுவதைப்பார்க்க ஐந்து அறிவுடைய அந்த மிருகத்தைக்கூட மனிதனோடு சில விஷயங்களில் ஒப்பிட்டுப்பார்க்கும் நிலமைக்கும் ஒரு கணம் நான் வந்துவிட்டேன்.
'ஜோஜோ” - வளவின் மூலையில் போய் நின்று மலம் கழித்து விட்டு வந்தது. நான் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு சென்று திறானியடித்துப் பீச்சிய இடத்தருகில் சிறு குழி வெட்டி அதையெல்லாம் போட்டு மூடினேன். நான் கை கால்களைக் கழுவிவிட்டு வர, வாசலில் நின்று கொண்டு 'ஜோஜோ” என்னை சோர்வுடன் சோகமாகப் பார்த்தது. இந்நேரம் என் மனைவியும் நாயினருகில் வந்து நின்றாள். அவளைப் பார்த்தும் “ஜோஜோ” வாலைக் குழைந்தது.
அவள் அதன் தலையில் மெல்லத் தடவினாள். 'ஜோஜோ’ திரும்பவும் அந்த மெத்தைத் துணியின் மீது உடலைக் கிடத்திவிட்டுப் படுத்துக்கொண்டது: நாய்க்கு நன்றாக வருத்தம் முற்றிவிட்டதை நான் உடனே உணர்ந்தேன்.
‘நான் வெளியால போய் ஆரையாவது கண்டுபேசி உதவிக்குக் கூட்டியரவே. நாயைக் கொண்டுபோய் ஒரு மிருக வைத்தியரிட்ட காட்டினால் நல்லம் போல கிடக்கு.”
நான் மனைவிக்குச் சொல்ல
‘அந்தக் குணம் தம்பியைப் போய்க் கேளுங்கோ. அந்தப் பெடி ஆருக்கும் முன்னிண்ைடு உதவி செய்யக் கூடியவர் போய்க் கூப்பிடுங்கோ.” - என்று உடனே அவள் சொன்னாள்.
'ஆட்டோவில கொண்டு போகலாம்.!” - என்றேன் நான். ‘அதுதான் நல்லம் கரைச்சலில்லை.” - என்றாள் அவள். நான் உடனே வெளியே போனேன். குணத்தின் வீட்டுப் பக்கம் போய் கேற்றடியில் நின்று கொண்டு,
'தம்பி குணம்.!” - என்று கூப்பிட்டேன்.
நான் கூப்பிட்ட குரலுக்கு 'யார்.” - என்று அந்த வீட்டினுள் இருந்து மெல்லிய கோடு கிழித்தது மாதிரி ஒரு குரல், வெளியே நின்ற எனக்குக் கேட்டது.

Sৈ৯২ நீ/அருளானந்தம் அதன் பிறகு குணம் வீட்டினுள் இருந்து வெளியாலே என்னைப் ப்க்க
வநதாா.
‘என்ன அங்கிள்.!” - அவர் கேட்டார்.
'தம்பி ஒரு உதவி எனக்குச் செய்யவேணும்.?”
‘என்ன அங்கிள் சொல்லுங்கோ..?”
‘எங்கடை நாய்க்குமெல்லே வருத்தம் வந்திட்டு.!”
‘அப்பிடியென்ன வருத்தம்?”
“அதுக்கு வயித்தாலையடிக்குது. நிக்குதில்ல! பாக்கப் பாவமாக் கிடக்கு..! கொண்டுபோய் மிருக வைத்தியரிட்டக் காட்டினா நல்லம் போல கிடக்குத்தம்பி!”
நான் சொன்னதும் குணம் அதிலே நின்றபடி ஒரு கணம் யோசித்தார்.
‘அங்கிள் நாய்க்கொரு மருந்தும் நீங்க குடுக்கேல்லயோ?”
'மருந்துக் கடையில இருந்து கேட்டு வாங்கிக் கொண்டந்து குடுத்தனான்!”
‘அப்ப அதுக்கும் வயித்தாலையடி நிக்கேல்ல.?”
‘ஓமோம்! நிக்கேல்லத்தம்பி!”
‘சரி நடங்கோ போய்ப்பாாப்போம்.”
குணம்தம்பி சொல்ல நான் அவருக்கு முன்னாலே விறுக்கு விறுக்கென்று நடந்து போய் எங்கள் வீட்டுக் கேற்றைத் திறந்தேன். நாங்கள் இருவரும் வீட்டு வாசல் பக்கமாக வந்து சேர, அந்த விறாந்தை நிலத்தின் மீது காலைச் சூரியனின் கதிர்கள் பட்டுப் பளிட்ட பிரகாசம் தெரிந்தது. அந்த ஒளியில் பெயர் சொல்ல முடியாத நிறங்கள் அனந்தம். ஆனாலும் அங்கே நாய்படுத்திருந்த பக்கம் மட்டும் சிறிது நிழல் படிந்திருந்தது. குணம் அங்குவந்ததும் நாயைப் பார்த்தபடி அதிலே சற்று நேரம் நின்று விட்டார். என் மனைவி இப்பொழுது அந்த நாயைப் பற்றி அவருக்கு சொல்லத் தொடங்கிவிட்டாள். 'கழுக்கு மொழுக்கெண்டிருந்த நாய். இந்த வயித்தாலையடி வந்து அதை எலும்பும் தோலுமாக்கிப் போட்டுது..!”
‘ என்ன வடிவான அறிவான நாய் தம்பி. இது உமக்குத் தெரியும் தானே.?’ அவளைத் தொடர்ந்து நான் சொன்னேன்.
1 ነ”
‘ஓமோம் வடிவான நாய்தான்!” - என்று குணமும் நான் சொன்னதுக்கு ஒப்புதலாக தானும் இப்படிக்கூறினார்.

Page 55
92 தேடல்
என்றாலும் அவர் நாயைப்பார்த்துப் பரிதாபப்படுகிறாரா? அல்லது; எங்கள் இருவரையும் பார்த்து நாங்கள் இந்த நாயின் மேல் இவ்வளவு அக்கறைப்படுகின்றோமே என்று எங்கள் மேல் பரிதாபப்படுகிறாரா? என்று எனக்கும் ஒரு சந்தேகம் மனத்தில் எழுந்தது.
என்றாலும் அவருக்காக என்னை நான் மாற்றிக் கொள்ள முடியாத நிலையில்தான் இருந்தேன். நாய் மீது உள்ள கவலையில் இருந்து நான் மீளவில்லை. இன்னொருவருக்கு எங்கள் கவலையைச் சொல்வதில் மன ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மேலும் நான் குணத்துக்குச் சொன்னேன்:
‘இதின்ரை மயிர்ச்சடை பார்க்கப்பட்டுமாதிரி. அதில வெளிச்சம் பட்டா மினுமினுக்கும். கறுப்பில ஒரு சாம்பல் நிறம் பாரும் உதுக்கு..!”
நான் சொன்னதைத் தொடர்ந்து மனைவியும் சொன்னாள்:
“பாரும் அதின்ரை கண்ணுக்குமேல பொய்க்கண் திரட்சியுமிருக்கு. அதுகும் என்னமாதிரியா ஒரு வடிவு உதுக்கு. உது படுத்துக் கிடந்தாலும் சின்னச்சத்தத்தையும் கேட்டு உடனஎழும்பீடும். அப்பிடி செவிப்புலனும் அதிகம். எதையும் கண்டு பிடிச்சும்போடும். அப்பிடிச்சிறப்பான நாய்.”
அவள் சொல்லி முடிய நான் விஷயத்துக்கு வந்தேன்.
‘தம்பி. நாய்க்கு வருத்தம் கடுமையாக்கிப் போட்டுது போலக் கிடக்கு. என்னோட சேந்து உதவிக்கு வந்தீரெண்டா ஆட்டோவில இதைக் கொண்டுபோய் வைத்தியரிட்டக்காட்டலாம். அது தான் நான் உம்மை.”
மிகுதியை நான் அவரிடம் கூறாமல் இருந்தேன். நான் அவரிடம் கேட்டதற்கு என்ன பதிலைக் கூறப்போகின்றாரோ என்கிற ஆவலில் அதிலே மெளனமாக அவரைப் பார்த்த வண்ணம் நின்றேன்.
ஆனால் அவர் சொன்னார்:
‘நாய் இனிமேல் தப்புமெண்டு நான் நினைக்கேல்லை அங்கிள். உதையெல்லாம் தூக்கித் திரியிற அளவுக்கு எனக்கும் இண்டைக்கு ஏலாது. இண்டைக்கு நான் எங்கயும் அசைய ஏலாது. வெளியால எனக்கும் வேலையள் கனக்கக்கிடக்கு அதைப்பார்கப் போகவும் வேணும். பொய்யில்லை நான் சொல்லுறது.!’ என்று அவர் நொடித்துவிட்டு முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு நிற்கையில் எப்படித்தான் நான் அவரை வற்புறுத்துவது.
என் மனைவியின் முகத்தில் கத்தியால் வெட்டினாலும் ஒரு சொட்டு இரத்தம் வராது அப்படி இருந்தது.

x தீயசகுணானந்தம் 93 என்றாலும் நான் கூப்பிட்டதும் மதித்து வந்ததுக்காக 'நன்றி” - என்று அவருக்குச் சொல்லி படலை வரை சென்று அவரை அனுப்பி விட்டுவந்து, மீளவும் நான் வீட்டு வாசல் படியில் கால் வைத்தேன்.
‘இனி என்ன செய்யப் போறிங்க..?’ அதிலே நின்று கொண்டிருந்த அவள் என்னைக் கேட்டாள்.
'ஒண்டுமாத்தெரியேல்ல.”
பெருமூச்சைவிட்டு நாய்க்குப் பக்கத்திலே கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டு நான் இருந்தேன். என் மனைவியும் முன்புதான் இருந்த இடத்திலே போய் சிந்தனைவயத்தவளாய்க் கதிரையில் உட்கார்ந்து விட்டாள். இந்தத்தடவை என் மனைவி மூஞ்சியை முழு நீளம் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். எம் இருவரிடையேயும் அச்சம் இழையோடும் சோகம் புரண்ட அமைதியைத்தவிர வேறோன்றுமேயில்லை!
நான் “ஜோஜோ’-வைப் பற்றிய நினைவுகளில் சில கணங்கள் என் சிந்தனையை சுழல விட்டேன். இந்த நாயின் மேல் எங்களுக்கு என்ன அவ்வளவு பிரியமாய் இருக்கிறது? - என்று அதை சிறிதே நான் ஆராய்ந்து பார்த்தேன். கதைகளிலோ சினிமாக்களிலோ வருகின்ற சாதனை செய்கின்ற நாயைப் போல இந்த நாய் அப்படி ஒன்றும் பிரமாதமாக ஒரு செயலைச் செய்து விடவில்லை. எது விதமான ஆபத்துக் காலத்திலும் ஆபத்சகாயனாக வந்து அது எங்களைக் காப்பாற்றவுமில்லை. இருந்தும் ஏன் நாங்கள் அதற்காக உருகுகிறோம்? இன்னும் அதன்பால் இப்படியெல்லாம் நாங்கள் அன்பு வைக்க வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று - இறுதியாக மீந்து போய் இருந்த அந்தக்கேள்வியை என் மனம் மெல்ல மெல்ல எழ வைத்துக் கொண்டே இருந்தது. அதன் பொருட்டு அந்தக் காரணத்தை தெட்டத்தெளிவாய் அறிந்து கொள்ள மேலும் தூண்டித்துருவி என் மனசுக்குள்ளே தேடிப்பார்த்தேன். ஒன்றும் ஒழுங்காக எனக்குப் புலப்படவில்லை!
ஆனாலும், மேலோட்டமாக இது மனத்தில் அலையடித்தவாறு இருந்தது. “நிச்சயம் அது இந்தக் காரணமாகத்தான் இருக்கும்!”
எம் இருவரையும் தவிர சொந்தமென்று எமக்கு வேறு யாருமே கிடையாது. இந்த மூன்றாவது உயிர்தான் எங்களுக்கு உறவுபோல இருந்தது. அதனால்தான் இதனிலே நாங்கள் நேசம் முழுதும் வைத்திருந்தோம். அதுவும் எங்களை விட்டுப் போகப் போகிறதா?
அந்த எண்ணம் என் நெஞ்சை வலிக்கச் செய்யவும் பரிதாபமான முறையிலே 'ஜோஜோ’வை நான் உற்றுப்பார்த்தேன்.
என் பார்வைக்கு நேர்ப்பார்வையாக 'ஜோஜோ” என்னைப் பார்த்தது. 'ஜோஜோ”வின் அந்த ஆழமான துயரம் கலந்த பார்வை என் மனசை

Page 56
கேடல் 94 Ø/ -፴ሥ
அப்படியே கரைந்து நிற்கும் படியாகச் செய்து விட்டது. அதனுடைய பார்வையின் தாக்கத்தால் என் மனம் நிலை கொள்ளாது பாதரசம் போல் சிதறித் தொல்லை கொடுத்தது. முற்பிறவியிலேயுள்ள ஏதோ சில அடையாளம் தெரியாத உருவங்களில் கொண்டு சென்று பிணைத்து விடுகிறது மாதிரி அந்தப் பார்வையின் சக்தி என்னை இழுத்துக் கொண்டு போவது போல் இருக்கிறது. அந்த என் நினைவுகளில் எதையோ நான் இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். வடிவமிழக்கப்படும் கற்பனைகள் அலையும் நினைவுகளை எங்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதில்லை. அதனால் மிகவும் கஷ்டப்பட்டு நான் என் கற்பனைகளுக்கு வடிவத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கண்கள் சொல்லும் மொழி என்ன? அந்த ஆராய்ச்சியைத்தான் எனக்குள்ளாக நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
அதையிட்டு காணக்கூடிய விதானங்களைத்தாண்டி நினைவுபறந்து போகும்போது என் ஆச்சியினது முகம் காட்சிக்கு வருகிறது கலங்கிக் கொண்டு.
இதே பார்வைதான் அந்தப்பார்வையும்!
ஆச்சி சாகும் வேளையில் அவரது கட்டிலுக்கு அருகே இருந்தவன் நான் ஒருவன்தான். ஆச்சிக்குப் பக்கத்திலிருந்து அப்பொழுது சிவபுராணம் வாசித்துக் கொண்டிருந்தேன். ஆச்சிக்கு இன்றையத்தினம் பேச்சே வரவில்லை. ஏதோ அவர் சொல்ல நினைக்கின்றார். ஆனால் அது வெளியே வராமல் அந்தராத்மாவிற்குள் அடங்கிக் கொண்டது. நான் சிவபுராணம் வாசித்துக் கொண்டு போகும் போது ஆச்சி என்னைப் பார்த்தவாறே இருக்கிறார். ஆச்சியின் அந்தக் கண்களில் உள்ள மொழி தெரியவில்லை எனக்கு. அவரது கண்களிலிருந்து கண்ணிரும் வழிகிறது. அந்தக் கண்ணின் மொழியும் எனக்குத் தெரியவில்லை! சிவபுராண வாசிப்பில் ஆச்சியை நினைத்து நான் நெக்குருகி விட்டேன். அதைப்படித்துக் கொண்டிருந்த போது 'பொல, பொல” வென்று என் கண்களிலிருந்து கண்ணிர்த் துளிகள் புத்தகத்தில் விழுந்து கொண்டே இருந்தன. ‘இன்று நான் இறந்து விடுவேன்.” என்று மூன்று நாளைக்கு முன்னம் ஆச்சி எனக்கு வாக்குச் சொன்னதும் அதற்கு ஒரு காரணம்!
மூன்று நாட்களுக்கு முன் ஆச்சி சொன்னார்: “மோனே வருகிற புதன்கிழமை ஏகதாசி நாளாயிருக்கப்பு. அண்டைக்கு நான் செத்தா சுவர்க்கத்திலயுள்ள கதவுகள் திறந்து கிடக்கும். புஷ்பக விமானத்தில வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போவினம்.!”
ஆச்சிக்கு அப்படியான நாளிலைதான் சாக வேண்டுமென்று ஆசை. அதை நினைத்து நினைத்து அல்லும் பகலும் அனவரதமும் அவர் கனவு கண்டுகொண்டுவந்தார். இதையே அவர் சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்தும் சில நாட்களாக என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதனால் அன்றைய

x நீரிஅருளானந்தம் 95 நாளை நினைத்துப் பார்க்கவும் என் மனத்தில் திக்கென்று ஒரு தவிப்பாய் இருந்தது.
சிறுவயதிலே அன்னையை இழந்து விட்டதால் என்னை ஆச்சிதான் பாசத்துடன் வளர்த்தார். எனக்கிருந்த ஒரேயொரு உறவு ஆச்சிமட்டும்தான்! அவரையும் இழக்கப்போகிறேனா?
பெற்றுத்தாலாட்டி, சீராட்டி, ஆராட்டி வளர்த்த அன்னையை இழந்தேன் அதையடுத்து என் தந்தையையும் இழந்தேன் இன்று ஆச்சியையும் இழக்கப்போகின்றேனா?
சிவபுராணம் படிப்பதை நிறுத்திவிட்டு ஆச்சியின் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்கள் என் பக்கமாகத்தான் நிலை குத்தியிருந்தன. அதிலே ஒரு இனம் தெரியாத மகா சக்தி இருந்தது: ஆச்சியின் இதயம் மட்டும் கண்களில் தெரிந்தது. அவரது கவனமிக்க புதிரான பார்வை என் உள்ளத்திலே புரியாதபயத்தை எழுப்பியது. அந்தப் பார்வையில் உள்ள மெளனங்களின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. அந்தக் கண்களில் தெரிந்த விசித்திர எண்ணங்களை சிக்கல் பிரித்து எடுக்க என்னால் முடியவில்லை. ஆச்சியின் கண்களில் உள்ள ஒளிக்கத்தி மங்கிக் கொண்டு வருகிறது. அந்தி மரணத்தில் சிறகு விரித்து அமுங்கிக் கொண்டு வருகிற இருள் அவரது கண்களின் பார்வையில் படர்ந்து விட்டது. ஆச்சியின் கால முள் நின்று விட்டது. ஆச்சி இறக்கும் சமயத்தில் என்ன பாவனை அவர் முகத்தில் ஊசலாடி விட்டனவோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை! என் நெஞ்சைக் கவ்விய துக்கம் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டு நிற்கிறது. அந்தத் துக்கம் காரணமாக கண்களில் பொங்கி வழிந்த சுடுநீர் பார்வைக்குத்திரையிட்டது. என் நெஞ்சுக்கூடு முழுதும் பட படத்தன. மார்பில் மூச்சு சுருட்டிச் சுருட்டி அடைக்க ஆரம்பித்தது. முன்னைய அந்தச் சம்பவங்களின் நினைவுகளிலிருந்து இப்பொழுது நான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டு வருகிறேன். என்றாலும் அந்த இழப்பின் கன பரிமாணம் நொந்து போன இந்த நேரத்தில் என்னை முழுதாகத் தாக்குகிறது.
‘பாவம் ஆச்சி. பாவம் நாய்..!”
என்று நான் நினைக்கிறேன். எதையும் எதையும் கொண்டுபோய் இணை போடுகிறேன்? என்றும் நான் நினைக்கிறேன்.
நான் திரும்பவும் “ஜோஜோ” - வின் கண்களைப் பார்க்கின்றேன். ஆச்சியின்
இரண்டு கண்களும் இப்போது இதனுடைய கண்களிலே தெளிந்து தெரிகின்றதாக எனக்குள் ஒரு பிரமை.

Page 57
96 தேடல்
அது ஒரு தோற்ற மயக்கம்தான்!
ஏதோ உலகியல் கடந்த துன்பம் இதனால் எனக்கு உண்டாகிறது. என் மனம் கேவிக் கேவி துக்கக் கண்ணிர் வடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நேரம் வெளியேயும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அது லேசான மழையில்லை பேய் மழை! தாறு மாறான மழை!
சில நிமிடங்கள் உயர்ந்து, தாழ்ந்து, உரத்து, இளைத்துப் பொங்கும் மழையாய்ப் பெய்தது அந்த மழை.
அதனால் முற்றத்தில் திடீர்ப்பழுப்பு வெள்ளம் கொப்பளித்து ஓடியது. அந்தவேளை மழைக்குத்தோதாக எங்கிருந்தோ படையெடுத்து வந்த கடல் பிசாசின் சுவாசமாய் வந்து மோதியது குபீர்காற்று. அந்தக் காற்றுக்கு தாவர இனங்கள் தலைவிரித்தாடின. சிறிது நேரத்தில் அந்தக் காற்று பெய்து கொண்டிருந்த மழையையும் போக்கிவிட்டது. ஊதாங்குழல் வழியே இழைபோன்று தொடர்ச்சியான காற்று உட்புகுந்ததால் ஜன்னல்களும் கதவுகளும் தடார் தடாரென அடித்துக் கொண்டன. அவற்றை எழுந்து சென்று பூட்டி வைத்திடாமல் என் மனைவி அதிலே அப்படியே இருந்து கொண்டிருகின்றாள். ஒரு வேலையும் ஓடாமல் அந்த இடத்திலே அவள் உட்கார்ந்திருக்கிறாள். நான் திரும்பவும் “ஜோஜோ” - வைப் பார்த்தேன். நாயின் இரைப்பு ஒலி சன்னமாகக் கேட்டது. அதைப் பார்க்கவும் எனக்கு நாய் பிழைக்கும் என்ற நம்பிக்கை, பஸ்பமாகிப் போய்விட்டது.
நாய் சேட மூச்சையும் விட்டுவிட்டது. அதனால் “ஜோஜோ’ வின் உயிர் அணைந்து விட்டது என்று நான் தெரிந்து கொண்டேன்.
அந்தச் சேதியை உடனே சொல்லும் நோக்கில் நான் மனைவியை, பதற்றத்துடன் உற்றுப்பார்க்கிறேன். அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அவளும் "ஜோஜோ’ வின் இறந்த உடலருகே வருகிறாள்.
அவளது அன்பு கெழுமிய கண்களின் மீது ஆழ்ந்த சோகம் கரு நிழலெனப் படர்ந்து விட்டது.
வீடு மழையிருட்டால் இருண்டு போய்விட்டது அதற்காக அந்த இடத்தில் கண்ணாடிக்கூண்டு மின்சார விளக்கைப் போட்டேன். அந்த வெளிச்சத்தில் 'ஜோஜோ” மீது ஈக்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டுவது போல் சத்தமிட்டுவந்து மொய்த்தன. அதைக் கண்டுவிட்டு என் மனைவி தொங்கு சீலைக்கு அருகே உள்ள தூண் சமைக்கும் நிழல் மறைப்பில் போய் நின்று கொண்டு அழுகிறாள்.
காற்றும் ஓய்ந்து விட்டது. நான் வீட்டுக்கு வெளியே வந்து மண் வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த முற்றத்தில் இடப்பக்கமூலைக்குப் போகின்றேன். மழைவிட்டதன் பின்பு குளிரின் முதல் அலை வீசத் தொடங்கிவிட்டது. அந்தச் சீதளக் காற்றின் குளிர்ச்சி என் உடலை ஸ்பரிசித்தது. ஒரு பருக்கை

> நீரிஅருணானந்தம் 97
உணவு கூட இன்று காலையிலிருந்து தொண்டைக்குள் இறங்காமல் விட்டதால் உடல் பலவீனமாயிருக்கிறது எனக்கு. அதனால் சோம்பல் மதர்த்தது. கையினால் மணி வெட்டி பிடித்து வேலை செய்ய சக்தியில்லாதிருந்தாலும் அந்த மழைபெய்ததில் உண்டாயுள்ள மண்ணிரம் என்னிடத்தில் மன உறுதியை அளிக்கிறது.
நான் அங்கே பிணக்குழி தோண்டும் வெட்டியானைப் போல நின்று கொண்டு வேலையை ஆரம்பித்துவிட்டேன். என்றாலும் மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும் அதனால் விளையும் இளைப்பும் மண்ணைவெட்டும் போது என்னைப்போட்டு வருத்துகிறது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு மண்ணை வெட்டி 'ஜோஜோ' வை அடக்கம் செய்ய அளவான ஒரு குழி பறித்து விட்டேன். மண்வெட்டியிலுள்ள மண்ணை பக்கத்தில் கிடந்த கருங்கல்லில் தட்டி அகற்றிவிட்டு மண்குவியலிலே ஒரு கொத்துப் போட்டு சரிவாக அதை நிறுத்தினேன். “ஜோஜோ'வை தூக்கி குழியண்டைக்கு அதைக் கொண்டு வரவேண்டும் அதற்காக விறாந்தைப்பக்கம் போனேன். “ஜோஜோ” மீது புதுத்துவாய்த்துண்டு போர்த்தப்பட்டிருந்தது.
அவள் அதைப் போர்த்து விட்டிருப்பாள்!
விறைத்துக்கிடந்த நாயைத்துக்கிக் கொண்டு குழி வெட்டியிருந்த பக்கமாக நான் வந்தேன். என் மனைவியும் பின்னாலே தொடர்ந்து வந்தாள். மெளனமாக நாம் இருவரும் இருந்து கொண்டு 'ஜோஜோ’வை அந்தக் குழியிலே அடக்கம் செய்தோம். அந்த நேரம் எங்கும் அமைதி, அமைதி, ஒரே சவ அமைதி என்கிற மாதிரி எங்களுக்கு இருந்தது. ஆனாலும் அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு அந்த ஒழுங்கை வழியே உள்ள ஒரு சில நாய்கள் தங்கள் வாழ்க்கை நிலையைக் குறித்து அழுவது போலவும் தேம்புவது போலவும் தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டிருந்தன. நான் குழியின் மேல் மண்ணை நன்றாகக் குவித்து மண்வெட்டியால் அடித்து இறுக்கிவிட்டு மனைவியின் முகத்தை ஏறெடுத்துப்பார்த்தேன். அவளது கண்களிலிருந்து வைரக் கற்கள் போல் இரண்டு சொட்டுகள் கன்னங்களின் வழியே வழிந்து கொண்டிருந்தன. அது சோக அழுகையல்ல கோப அழுகை என்கிற மாதிரித்தான் தெரிந்தது எனக்கு.
அவளுடையதுக்கம் அகலுவதற்கு எத்தனை பகலும் எத்தனை இரவும் பிடிக்குமோவென்று எனக்கு யோசனையாக இருந்தது. ஆனால் “ஜோஜோ” வை அடக்கம் செய்து விட்டதன்பிறகு நான் இப்போது கவலைப்படவில்லை. இந்த உலகத்திலே, மூடிய கண்கள் இன்னொரு உலகத்திலே திறக்கத்தானே வேண்டும் என்று நினைத்து நான் என் மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டேன். இந்தலகுவான தத்துவத்தை மனைவிக்கும் சொல்லி அவளின் விழிஈரத்தை உலர்த்தி ஆறுதல் படுத்தினால் என்ன என்று நான் அப்போது நினைத்தேன். ஆனால் - ஆனால், அவளுக்கிருக்கும் விரக்தியில் இதையெல்லாம் சொல்லப்போனால் என்ன சொல்லுவாளோ என்று நினைத்து என்வாய்க்கு நான் பூட்டுப் போட்டுக் கொண்டேன். (2005)

Page 58
இருளே ரீஇனமேவ் வங்காசியா
இருளே நீ இனிமேல் விலகாயோ
இந்தச் செடியில் இன்று காலையில், ஆவலோடு அவள் பார்க்கவென்று வந்தgஅந்த ஒற்றைப் 'பூ' இருக்கவில்லை. பூவிருந்த அந்தக் கிளையில் முட்கள் இருக்கின்றன. அதனுடன் இலைகளும் பசுமையாய் இருக்கின்றன. ஆனாலும் அழகிய அந்த ரோஜாதான், இருந்த இடம் தெரியாமல் அதிலிருந்து மறைந்ததாய் விட்டது. அந்த அழகிய ரோஸ் வர்ண ரோஜாப்பூ காலையில் வீசிய கூதிற் காற்றிலே, தன் மெல்லிய இதழ்களை உதிர்த்து கீழே பரப்பி விட்டிருப்பதை, பின்பு நிலத்தைக் குனிந்து பார்த்தபோதுதான் அவள் கண்டாள். ‘இது போன்று தானே - என் மன மகிழ்ச்சியும் எங்கு போய்ச் சேர்ந்ததென்று தெரியாமல் தொலைந்து விட்டது!’ - என்று நினைத்துக் கொண்டு, தன் மென்மையான புருவங்களை கூட்டிச் சுழித்தாள். அந்தச் சிந்தனையில் அவளது மூச்சின் கனம் அதிகரித்தது. இதனால் ஒசிந்த இடுப்புக்கு மேல், அவளது மார்பகங்கள் நன்றாகப் புடைத்து நின்றன. அவளது ஏக்கப் பெருமூச்சுக்கேற்ப மார்பும் ஒரு முறை எழுந்தமர்ந்தது. காலையில் நித்திரை விட்டு எழும்பியவுடன், முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி குப்பை கொட்டிச் சுத்தம் செய்து வைப்பதுதான் மாமியார் வீட்டில் அவளுக்கு முதல் வேலை. அடுத்ததாக உள்ளது சமையல் வேலைதான்! சமையல் கட்டுப்பக்கமாக நின்று கொண்டு அதையெல்லாம் ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கும்போது, இன்னும் அந்த வீட்டிலே உள்ள வேறு பல வேலைகளையும் உடல் நோவு பாராது அவள் தன் தலையிலே போட்டுக் கொண்டு செய்து முடிக்க வேண்டியதாகத்தான் இருக்கும். இப்படியாக அவள் புகுந்த இந்த வீட்டிலே, காலையிலிருந்து மாலை வரையிலும் கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு வேலைகள் இருந்தன.
இப்படியெல்லாம் இந்த வீட்டிலே கிடந்து மாடாகக் கிடந்து கஷ்டப்பட்டு நாள் முழுக்க உழைத்தாலும், மாமியின் நச்சரிப்பு எப்பொழுதும் அங்கு அவளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.
அவரிடமிருந்து வரும் அந்தப் பேச்சுக்களெல்லாம் சுமாரானதொன்றா..?
முள்முள்ளாக குத்துகிற கரம்பை

x நீயசுருளானந்தம் 99 அந்தப் பேச்சையெல்லாம் மெளனமாய் இருந்து செவியில் வாங்கிக் கொண்டு, கட்டாரி எறும்பு கடித்தாற்போல “விண், விண்ட் ணென்று நெஞ்சிலெழும் வலியோடு தான் அவள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள்.
“நாளைக்கு இட்டலி.’ என்று ‘மாமி’ கட்டளை கொடுத்த உடனே, உளுந்தைக் காலையில் ஊற வைத்து பிற்பகலில் அதை ஆட்டுரலில் ஆட்டி, மாவாய் அரைத்துப் பானையிலே அவள் போட்டு வைத்தாள்.
அடுத்தநாட் காலை அடுப்பருகே நின்று கொண்டு, இட்டலித்தட்டின் குழிகளிலிருந்து அதை அவள் சூட்டுடன் எடுக்கும் பொழுது, அங்கே குசினி வாசலில் வந்து அவளது மாமியார் கதவோடு கதவாய் நின்றார். இந்தக்கதை பிறகு அவர் வாயிலிருந்தும் வெளிவந்தது.
"நேற்றைக்கு நீ சுட்டாய் ஒரு இட்டலி. அது ஒன்றும் நன்றாய் அவியவேயில்லை. அது சாப்பிடவும் ஒன்றும் ருசியாவேயில்லை.! உளுந்துப்பச்சை மணம் அதில கப்பெண்டு அடிச்சுது...! அது இட்டலியா இல்லாட்டிக்கல்லா..?”
அந்த விஷமுள் நறுக், நறுக் கென்று குத்துகிறது அவளுக்கு! இட்டலியின் சூடுபட்ட கையை உடனே தண்ணீரில் நனைத்தால் விரலின் சூடு தணிந்து ஆறிவிடுகிறது. ஆனாலும் மாமியின் நாச்சூடு படவும், இட்டலிச் சட்டியில் கொதி நிலையில் இருக்கும் தண்ணிர் போல, மனசு அவளுக்கு நிலை கொள்ளாமல் தவிக்கிறது.
இட்டலியின் மிருதுச் சூட்டை நுனிவிரல் நுகர்கிற அளவிலே கொண்டுபோய், மேசை மீது வைத்து மாமனாருக்கும், மாமிக்கும் சாப்பிடக் கொடுத்தும்; இப்படியெல்லாம் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டியதாய் வருகிறதே...?
இதன்மூலமாக அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் எப்பொழுதும் ஆகாயத்தில் வல்லூறைக் கண்ட புறாப்போலத்தான், அவளது மாமியார் குசினிப்பக்கமாய் வருகிற தருணங்களில் இவளின் இதயம் ‘பட, பட வென அடித்துக் கொள்கிறது. சில பல வேலைகளை இப்படியாகத்தான் அவள் செய்ய வேண்டுமென்று மாமியார் சொல்லிக்கொண்டிருக்கும் போது; அவருடைய கண்களிலே ஒரு தீ எரிந்து கொண்டே இருக்கும். ஆனால், உதடுகளில் ஒரு சிரிப்பு. அதற்கு மாறாகப் படமெடுத்து ஆடுகிறதே! அதற்கான காரணம்தான் என்ன..?
அவளுக்கு இதெல்லாம் எளிதில் விளங்கிக் கொள்ளாத ஒன்றாகத்தான், இற்றை நாள் வரையிலும் இருந்து கொண்டே இருக்கின்றன. அவள் "பம்பைமடு என்கிற செழித்த கிராமத்தில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவள் - யாழ் குடா நாட்டிலுள்ள புத்தூர் கிராமத்தில், இவர்களது குடும்பத்தில் வந்து வாழ்க்கைப்பட்டதற்கான காரணம்.? அதையெல்லாம்

Page 59
100 இருளே ரீஇனமேவ் வங்காயோ
சில நேரங்களில் மட்டுமல்ல பலவாறான பொழுதுகளிலும், திரும்பத்திரும்ப அவள் நினைத்துப்பார்க்கத்தான் செய்கிறாள்.
முக்கியமாக, சவப்பெட்டிக்குள் தன் அப்பாவை வைத்து ஆணி அறைந்த அந்த சம்மட்டி அடியை, அவளால் இற்றை வரையிலும் மறக்கவே முடியாதிருக்கிறது.
அப்பா இறந்த பொழுது சுமாராக உள்ளதொரு சவப்பெட்டியைக்கூட வாங்க முடியாதபடி, அவளுடைய குடும்பத்துக்கு வந்து விட்ட ஏழ்மைதான் எவ்வளவு கொடுமை!
‘ஒரு நல்ல கமக்காரனுக்கு இப்படியெல்லாம் கஷ்டங்கள் வரவேண்டுமா..?
இப்படித்தான் சொல்லி கவலைப்பட்டுக்கொண்டு, ஒரு மாத காலத்துக்கு அந்த ஊரில் உள்ளவர்களெல்லாம் அவர்களுக்கு; செத்தவீடு நடந்துமுடிந்த பிறகு உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார்கள்.
‘அந்த ஊரில் உள்ளவர்கள் மனசார நல்ல சனங்கள். கசவாரம் இல்லாததுகள்’.
இத்தனைக்கும் அவளுடைய அப்பாவுக்கு, மரபணு பிரகாரம் ஆயுசு கெட்டிதான். அவரின் வழியில் ஆயிரம் பிறை பார்த்தவர்கள், இன்னும் இரண்டு மூன்று பேர் பம்பை மடு கிராமத்தில் பல் கெட்டியாகவும் கூட இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இந்த நடுவயதில் ஏன் அவருக்கு வந்தது இந்தத் திடீர்ச் சாவு?
ஒரு முறை தோட்டத்தில் மிளகாயும் வெங்காயமும் வைத்ததோடு, பணப்பயிரான புகையிலையையும் அவர் பயிரிட்டார். அந்த முறை மிளகாய்ச் செடியில் சிவப்புச் சிவப்பாய்ப் பூத்த பழங்கள், புஷ்டியுடன் விதைகள் நன்றாய் அடைத்துப்போய்க் கொழுத்திருந்தன. அந்தச் செடிகளின் உயரப்பாடு முழுக்கவும் காய்கள் நிறைத்திருந்தன. அதற்கு அருகில் பனைமரங்களால் புருவமிட்ட அந்த வெங்காயத் தோட்டமும், அந்த முறை அவருக்கு நல்ல விளைச்சல். இரண்டாங்களையெடுப்பு நடந்த காலத்தில், பூத்துச் சிரித்தது வெங்காயப் 'பூ'. அந்த வெங்காயத்தாள்களை கொழும்புக்கு லொறியில் போட்டு, சந்தையில் விற்றே அவர்நல்ல லாபம் தேடினார்.
வேலிகட்டி, எருப்போட்டு, நீர் பாய்ச்சி கண்ணுக்குள் வைத்து அவர் வளர்த்திட்ட அந்தச் செடிகளெல்லாம், அந்த முறை அவரைக் கைவிடவில்லை. நன்றாக அம்முறை அவையெல்லாம், அவருக்குப் பணம் கொட்டியது.
அந்தமுறை அவர் தோட்டம் செய்து வளம் செய்த வாழ்க்கை வசதிகளைக் கேட்கவா வேண்டும். மகளுடைய கழுத்தும் கைகளும், மனைவியுடைய கழுத்தும் தங்க நகைகளால் நிறைந்ததோடு, சின்ன மகனின் அரைஞாண்

sৈ நீபஅேருளானந்தம் கயிற்றையும் பவுணிலல்லவா செய்து கொடுத்தார்.
101
ஊருக்கு உதவுவதற்கும் அவரைக் கேட்டுத்தான்! அவருக்கு பனையோலை போல விரிந்த மனசு. அந்த முறை தோட்டம் செய்து நொடித்துப் போய்விட்ட சிலருக்கு, கேட்ட பணத்தைக் கொடுத்து உதவுவதற்கும் அவர் பின்வாங்கவில்லை,
அந்தவிதமாக அவர்களுக்கு நடந்த அவ்வருடம், இப்படியாக மகிழ்ச்சியினுடே கழிந்துபோய், அடுத்த புதுவருடம் பிறக்க;
அவருக்கென்றிருந்த எல்லா நிலத்திலேயும் பயிர் விளைவித்தெடுக்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். எல்லாக் கமக்காரனுக்கும் வருகின்ற ஞாயமானதொரு ஆசைதானே இது! அது அவருக்கும் வந்ததில் ஏதும் வியப்பில்லையே! வியர்வை சிந்தி உழைக்க ஆசைப்படுவதில் ஏதும் தவறு உண்டா? அது பேராசையென்றும் சொல்வதற்கில்லையே? உணவை விளைவித்தால் உயிர்கள் வாழுமே! அது நன்மைதானே!
அவ்வருடம் ப்யிர்செய்யும் காலம் வர: நகைகளை அடகு வைத்ததுடன், கையில் உள்ள பணத்தையெல்லாம் வயலிலும் மரக்கறித் தோட்டத்திலும் போட்டு விட்டு, அவர் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆனால் அவருடைய செல்ல மகளுக்கு, இந்தக் கஷடங்களெல்லாம் என்னதான் விளங்கும்! அப்படியெல்லாம் கஷ்டத்தை உணர்ந்து அவள் வளர்ந்திருந்தால்தானே அது எல்லாம் தெரியும்!
அவள் தன் ஒரேயொரு குட்டித் தம்பியுடன் சேர்ந்து கொண்டு, அந்தத் தோட்டத்துப் பக்கம் சுதந்திரமாக சுற்றித்திரிந்தாள். அந்த இடத்திலேதான் அவளது பொழுது கரையும். மனசு நிறையும், ததும்பி வழியும், ஆகாயத்தில் ஜிவ்வென்று பறக்கும்.
வெங்காயத் தோட்டத்திலே போய் நின்று கொண்டு, பனையோலைகளின் இசை நயமுள்ள ஓசையை அவள் இரசிப்பாள். அவளுடைய அப்பா நொங்கு வெட்ட அங்கே ஆள் பிடித்து விடுவார். பிறகு கேட்கவாவேண்டும். இளம் நொங்கை பெருவிரலால் துருவி விட்டுக்குடித்து, ஒரு குலைக் காய்களை அப்படியே தம்பியும் அவளும் ஒருகை பார்த்து விடுவார்கள்.
அது அவ்வாறிருக்க;
வீட்டிலிருந்து கதைப் புத்தகங்கள் படித்தபோது இருந்த சுகம், அவளுக்கு எங்கேனும் இனிவருமா?
வீட்டுக்காணியில் அவளுடைய அப்பாவுக்கு தென்னையும் மாவும் போட்டு, ஆளாக்கி அண்ணாந்து பார்க்கத்தான் ஆசை. அந்த அவருடைய ஆசையை மனத்தில் மாத்திரம் வைத்திராமல் செயலிலும் காட்டியதால், வளவு முழுக்கவும் பழ மரங்களாய் நின்றன.

Page 60
II (92 இருளே ரீஇனமேவ் விவகாசியா
அடிவாரத்தைக் காட்டாமல் குடை விரித்து நிற்கும் அந்த மரங்களிலிருந்து மரங்கொத்தியின் அலகொலியும், மரக்கிளைகளினூடே சிவ்வெனப் பறக்கும் மஞ்சட் சிட்டுக்குருவிகளின் கீச் சொலியும், அம்பு இறகு போன்ற வாலை விரித்து கரிச்சான் கத்திக் கூவுவதும்; புத்தகத்தைப் படித்தவாறு கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு எத்துணை ஆனந்தமாயிருக்கும்!
சகுந்தலைக்கு மரம் செடி கொடிகளிடமிருந்த பற்றும் பாசமும் போலத்தான், இவளுக்குத் தன் வீட்டிலே வளர்ந்து நின்ற மாமரங்களிலெல்லாம் அவளையும் அறியாததாய் ஒரு பரிவு இருந்து வந்தது. அந்த மாமரங்களிலெல்லாம் மாங்காய்க் குலைகள் முத்து மாலைகளைத் தொங்க விட்ட மாதிரி, கெட்டுகளைத் தாழ்த்தி கீழ் இறங்கி நிற்கும் அழகை அவள் பார்த்துக் கொண்டே நிற்பாள்.
அப்படியாக அவளுக்கு அந்தப் பருவவயது எல்லாவற்றையும் பார்த்து இரசிக்கும் அளவுக்கு தித்திப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவளுடைய அப்பா, அன்று இரவு சாய்வு நாற்காலியில் படுத்திருந்தவாறு மனம் வருந்தியதாய்ச் சில வார்த்தைகளை அவளுடைய அம்மாவுக்குக் கூறிக்கொண்டிருந்த பொழுதுதான்; தன் வீட்டுக் கஷ்டம் பற்றி அவளுக்கும் பெரிதாய்த் தெரிய வந்தது. -
அவர் சொன்னார்:
“மழையில்ல கிணத்தில தண்ணிரில்ல. பாயிறதும் காயிறதுமாயிருந்தா பயிர் என்னத்துக்காகும்!”
அப்பொழுதுதான் இவ்வளவு காலம் - அவள் இருந்த நிலையில் இருந்து, விலுக்கென்று விழித்துக் கொண்டாள். அவள் மனதை துக்கம் அள்ளிப்பிடுங்கிற்று. ஒரு உருவில்லாத சஞ்சலம் அவள் மனதை வாட்டிற்று.
அந்த வேளையில் தோட்டத்துப்பக்கம் அலறிக் கொண்டு ஒரு ராக்குருவி பறக்கிறது. எங்கோ ஒரு நாய் நீட்டி ஆலாபனை செய்யும் ஊளை வேறு கேட்டது அவளுக்கு. அவள் அதையெல்லாம் கேட்டபடி இருந்து விட்டு, எழுந்து படுக்கை அறைக்குப் போனாள். அங்கே இருள் சூழ்ந்த கல்லறைபோல் அந்தப் படுக்கைஅறை அவளுக்குத் தெரிந்தது. இருட்டுக்குள் பறக்கின்ற குருட்டு ஈயாக முட்டி மோதிக்கொண்டு போய், ஒரு மூலையில் பாயை விரித்துப் போட்டுவிட்டு அவள் படுத்தாள். அவளுடைய தேகச்சூடு விலகிப் போயிருந்தது. அப்பாவின் கஷடத்தை நினைக்க நினைக்க, அவளுக்கு அழுகை வருமாப்போல இருந்தது. அப்பாவின் உடலிலிருந்து வரும் வெண்காயப் பயிர் மணம் கமழும் வாசனையை நுகர்ந்தபடி, சிறுவயதில் அவர் வயிற்றில் சாய்ந்து கொண்டு நித்திரை கொண்டது அவளுக்கு அப்போது ஞாபகம்

മUിഗണുന്നത്രീ Its வருகிறது. அப்படியே அந்தச் சுகத்தை திரும்பவும் நினைவில் வைத்து அநுபவித்துக்கொண்டே அவள் கண்மூடி கண்ணயர்ந்து விட்டாள். இப்பொழுது அவளுக்கு ஒர் கனவு. தான் காண்பது நிஜமென்று இருக்குமாப்போலத்தான் அவள் கண்பார்க்க அவைகள் எல்லாம் நடக்கின்றது மாதிரி இருக்கின்றன.
அறுவடை முடிந்துவிட்ட வறண்ட வயல் நிலங்கள் - அந்த வழியிலே தட்டத்தனியே அவள் போய்க்கொண்டிருக்கிறாள். வெண்மை மேகம் ஒன்று சூரியனை மெதுவாகக் கடக்கும் போது, வயல் வழியாக நிழல் பாய்ந்தோடுகிறது. வயலிலிருந்த கெட்டியான கட்டைத் தாள்கள் இவள் போகும் போது கால்களில் குத்துகின்றன. உடனே காய்ந்து இருக்கும் வரப்பில் ஏறி அவள் நடக்கிறாள். ஆனாலும் அவளுக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் காய்ந்த வரப்பு மண்ணில் சிற்சில இடங்களில், இவளது குதிக்கால்கள் உள்ளே அமுங்குகின்றன.
அந்த வயல் வெளியிலே உள்ள ஒரு இடத்தில், தன் அம்மாவையும் நின்று கொண்டிருக்க அவள் காண்கிறாள். சேலையை ஏறத்திரைத்துக் கட்டிக் கொண்டு, இடுப்பு மட்டத்துக்கு வளர்ந்திருந்த புல்லை குனிந்தபடி நின்று அரிவாள் வீசி அவள் அறுக்கிறாள்.
நெல்லுக்குப்பதிலாகப் புல்லா..?
திடுக்கிட்டுப்போய் அவள் கண் விழித்து விட்டாள். உடனே பாயிலிருந்து எழுந்துபோய், மண் கூசாவிலிருந்த தண்ணிரை குவளையில் வார்த்தெடுத்துக் குடித்துவிட்டு, சன்னல் பக்கமாகப் போய் நின்று கொண்டு அதனுாடே வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.
மழை மேகம் இல்லை!
வானத்து நட்சத்திரங்கள் பூந்திக் கொட்டையும் சவுக்காரமும் போட்டு கழுவித்துடைத்த நகைகள் மாதிரி, பளிச்சென்று ஆகாயத்தில் துலங்கிக் கொண்டிருந்தன. *
ஏமாற்றத்துடன் திரும்பிப்போய் அவள் அந்தப் பாயில் திரும்பவும் படுத்துக் கொண்டாள். அதன் பிறகு தூக்கம் வராமல் பாயில் கிடந்து புரண்டுகொண்டிருந்தாள் அவள்.
() () ()
ஒவ்வொரு நாளும் 'மழையில்லை! மழையில்லை!' - என்கிற கதை பேச்சுத்தான் அந்த ஊரிலுள்ள விவசாயிகளுக்கு முக்கியமானதாக இருந்தது.
“ஒரு மழை பெஞ்சுதெண்டா தரையோடு தறையா பம்பிக் கிடக்கிற நெல்லு விருட்டெண்டு மேல வந்திடும்.”
என்கிறதாய் பயிர் காய்ந்து போக அவர்கள் சொல்லிச் சொல்லி மனம் வருந்தினார்கள்.

Page 61
104 இருளே ரீஇனமேவ் வங்காசியா
அவர்களது துயர் கண்டு வானம் வடிக்கும் கண்ணிர்த்துளிகள் போல், சில தூறல்கள் மட்டுமே ஒருநாள் காலையில் முகம் காட்டி விட்டு மறைந்தன.
மழையைக் காணோமே என்று அவரும் ஒவ்வொருநாளும் வயல் வெளியிலே போய்நின்று கொண்டு, வானத்தைப் பார்த்துப்பார்த்து மனம் வருந்தினார். அவர் ஏங்கி விட்ட பெருமூச்சுக்கள், அவரது மார்புப் பிரதேசத்தையே உலுக்கியது. சில நாட்களுக்குள்ளாக அவரது முகத்தை தாடியும் சிகையும் மறைத்து வேறு ஆளாகக் காட்டியது.
வெயில் எரித்துக் கொண்டு வர அவருடைய தோட்டமும் கருகிக் கொண்டே வந்தது. கரையான்கள் அங்கே புற்றெடுத்தன. அதனால் பாகல்களும், புடோல்களும் பந்தல்களோடு ‘பொல,பொல' வென பொடிந்தன.
நெற்பயிர்கள் பாசனமேதுமற்று சருவோடிப்போக; வெட்டுக்கிளி கைகளை உரசிக்கொள்வது போல் தன் கைகளை உரசியபடி யோசித்திருந்து விட்டு - ஒரு கிடை மாடுகளை விரட்டிக் கொண்டுவந்து வேலிபிரித்து அவைகளை அவர் வயலுக்குள்ளே விட்டார்.
ஈப்பூச்சி விழுந்த அந்த வயல்களிலே, மாடுகள் புகுந்து கொத்துக் கொத்தாய் மேய்ந்தன.
அதைப்பார்த்து மனம் குமுறி அழுதபடி வீட்டுக்கு வந்தவர்தான் - அதோடு நெஞ்சுக்குத்துவந்து சட்டடியாகப் படுத்துவிட்டார். இரவு முழுக்கவும் கொக்குக் கொக்கென்று இருமிக் கொண்டு, அவர் மிகவும் அவஸ்தைப்பட்டார். அடுத்தநாள் காலையில் சுட்ட செம்மண்போல் கரடு முரடாக அவரது முகம் மாறிவிட்டது. உடல்குளிர்ந்து கொண்டு வர, போர்வையை இழுத்து தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு படுத்தவர்தான் - அதன்பிறகு உடலசைவு இல்லாமல் அப்படியே விறைத்ததாய் விட்டார். அவர் படுக்கையிலேயே அப்படியே சீவனை விட்டுவிட்டார் என்று பிறகுதான் எல்லோருக்கும் தெரியவந்தது.
அப்பா செத்த கவலை அவளை முற்றிலும் விழுங்கிவிட்டது. கண்களை அகல விரித்தபடி, இறந்து போனவளைப் போன்ற கண்களால் தன் அப்பாவினது உடலைப் பார்த்துக் கொண்டு அவள் நின்றாள். அந்த நேரம் வாழ்க்கைச் சகடமானது; பத்து நிமிடத்துக்கு அசைவற்று விட்டது போலத் தோன்றியது அவளுக்கு.
ஒருபக்கம் இருந்து அவளது தம்பியும் அழுது கொண்டிருந்தான். மறுபக்கத்தில் இருந்து அவளது அம்மாவும் சோகத்தில் பொதும்பிப்போய் இருந்தாள். ஒப்பாரி வைப்பவர்கள் முறை கட்டிக்கட்டி அழுது கொண்டிருந்தார்கள். ஒருபுறம் பறைமேளமும், மற்றொருபுறம் சங்கின் ஒலமும், சேகண்டின் நாதமும் அதிர; அவளது அப்பாவின் உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்றார்கள்.

/? · - at ඊඛ. நீரிஅருளானந்தம் 105
அவளது அப்பா இறந்த பிறகு தானிய அறை சூனியமாகி விட்டது. வாழ்க்கை எனும் வண்டி அவர்களுக்கு நொண்டி நொண்டி ஒடத்தொடங்கி விட்டது. வீடே வறுமையில் கிடந்து உழன்றது. அப்பொழுதுதான் இவளுக்கு இந்தச் சம்மந்தமே பேசிவந்தது.
இங்கிலண்டில் மாப்பிள்ளை யென்றார்கள்.!
சீதனமென்று சதக்காசும் வேண்டா மென்றார்கள்.!
குழந்தை வரையும் சித்திரம் மாதிரி பிள்ளையில எளியதொரு கவர்ச்சியுமிருக்கு. மாதுளம்பழநிறம்! மாதுளம் கோதுவாளிப்பு எல்லாம் அளவெடுத்து வைச்சது மாதிரி அத்தனை லட்சணம்; என்று புகழ்ந்ததோடு கல்யாணத்தையும் முற்றாக்கி, தின்பன குடிப்பனவையும் செய்து கொண்டார்கள்.
அந்த மகிழ்ச்சியில் அவளது மனக்குருவி சந்தோஷமாகப் படபடத்தது. அவளது விழிகள் மீனின் கண்களைப் போல் பளபளத்தன. மாப்பிள்ளை வீட்டார்கள் பெண் வீட்டாரை அழைத்துக் கொண்டுபோய், இந்தியாவிலே தமிழ் நாட்டிலே வைத்து திருமணத்தை நடத்தி முடித்தார்கள்.
'மாப்பிளைக்கு லண்டனில் இன்னும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கவில்லையாம். அது அவருக்குக் கிடைத்த பிற்பாடுதான் பெண்ணை அவருடன் அங்கு வந்திருக்க அழைக்கலாமாம்.!’
இதனால் இல்லற வாழ்வின் விளிம்பை நுகர்ந்து விட்டு திரும்பவும் அவள் இங்கே திரும்பி வரவேண்டியதாயிற்று. அதற்குப்பிறகுதான் இந்தச் சிறைவாசம். திருமணமாகி இன்பமான தொரு வாழ்க்கையை வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டவள், அந்த ஆசை நிறைவேறாது போய்; மாட்டுக் கொம்பில் புல்லைக் கட்டிவிடுகிற இந்த அவதியை அநுபவிக்கத் தொடங்கிவிட்டாள்.
“என் அம்மா வீட்டிலே நீ இரு.!” என்று கணவன் சொன்னதை அவள்
கேட்கத்தானே வேண்டும்.
பிறந்தவீட்டிலே இருந்த சுதந்திரமெல்லாம் இப்பொழுது அவளுக்கு இங்கே தொலைந்துவிட்டது.
இவர்களது மகனுக்கு மனைவியாக வந்தவள்; இன்று மலிவான வேலைக்காரியாகிவிட்டாள். மனத்திலும் அவளுக்கு சிறிதேனும் இங்கு மகிழ்ச்சியென்றதில்லை. ‘தன்னைப் பற்றி கவலைப்படவென்று ஒருத்தருமில்லை' - என்ற நினைப்பு அவளுக்கு வரவர மனத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது.
நாளாந்த வீட்டு வேலைகள் போல இன்றும் அந்த வீட்டில், அவள் செய்ய வேண்டியதாய் இருந்த வேலைகளனைத்தையும் செய்து முடித்துவிட்டாள்.

Page 62
இருளே ரீஇனமேல் வ%காயோ
106 நேரம் இரவு பத்து மணியாகிவிட்டது.
அவளுடைய அசைவுகள் எல்லாம் நின்று விட்டிருந்தன. கடின வேலைகளிலிருந்து அந்த யந்திரம் இனி இளைப்பாற வேண்டும். இந்த அலுப்பு நீங்குவதற்கு உடம்பிலே அவளுக்குத் தெம்பில்லை; சக்தியுமில்லை. சக்தியெல்லாம் அன்று செய்த வேலைகளிலே பயன்பட்டுவிட்டது. அவள் சோர்வுடன் கட்டிலிலே படுத்துக் கொண்டு விட்டாள். மார்கழி மாதத்து வாடைக்காற்று சில்லென்று அடித்தது. உடனே அவள் போர்வைக்குள் புகுந்து கொண்டாள். போர்வைக்குள் அவளுடைய காதுகள் விரிந்தே இருந்தன. மனலயத்தில் இருந்த உணர்வு திடீரென்று அவளுக்குக் காதுக்கு மாறிவிட்டது.
அடுத்த அறையில் இருந்து மாமனாரும், மாமியாரும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிக்கிறார்கள்.
கொஞ்சலும் சிணுங்கலுமாய்!
புதிதாக இப்பொழுதுதான் தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்கிறவர்கள் போல.
உள்ளுக்குள் எங்கோ உறங்கிக்கிடந்த உணர்வுகள், சூடுபட்டது போல் அவளுக்கு விழித்துக்கொண்டது. உடல் வெப்ப அனலைப்பாய்ச்சியது. உறக்கத்தைத் துரத்தியடிக்கின்ற அந்த எண்ணங்கள், அவளைப் போட்டு சிப்பிலியிாட்டம் ஆட்டுகின்றன. எதிர்த்து வெல்ல முடியாத இந்த எண்ணச் சூழல்களிலிருந்து அவளால் மீளமுடியவில்லை. நன்றாக போர்வையை தலைமுதல் கால் வரையாக இழுத்துப் போர்த்திக் கொண்டு, தன்கணவனை நினைத்து புழுங்கி புழுங்கி அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். அவளது விம்மல்களுக்கேற்ப மார்பு எழுந்தமர்ந்தது.
தனிமையில் இப்படியே இந்த இருட்டுக்குள்ளே கிடந்து அழுது கொண்டிருந்ததால், மனசு சுகப்படும் போல் அவளுக்கு இருந்தது. ஆனாலும் அவளது விருப்பத்தை மீறி பொழுது புலர்ந்து விட்டது. காலையில் திரும்பவும் வழமைபோல் அவளுக்கு அந்த வீட்டு வேலைகள்.
திரும்பவும் வழமைபோல் அந்த வீட்டு வேலைகளில் அவள் ஐக்கியமாகிறாள். ஒரு ஊத்தைக் கூடை நிறைய குவிந்திருந்த அழுக்குத் துணிகளை எடுத்துக் கழுவிக் கொண்டு வந்து, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் துணிக்கொடிகளில் அவைகளை அவள் வெயில் காயப் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் அந்த வேலையாய் நிற்கும் போது எதிர் வீட்டுப்பக்கம் அந்த ஜன்னலின் கம்பியில், உடல் அழுந்த நின்றபடி அவனின் பார்வை நங்கூரம்! அவன் ஆயிரம் கண்களால் தன்னைப் பார்ப்பது மாதிரி அவளுக்கு இருந்தது.
அந்தப்பார்வை:

乾人。 27്മ്മ x நீரிஅருணானந்தம் 107
மூடிய இதழ்களை முயன்று திறந்து தேனுண்ணும் வண்டைப் போன்றதாய்த் தெரிகிறது அவளுக்கு! அவளது பார்வையை பலமுறை பணிய வைத்து விட்டவன்தான் அவன். இன்றும் வழமைபோல் தாழ்த்த இயலாத நிலையில் தானாக அவள் பார்வை மீண்டும் அவன் பக்கம் சென்றது.
அப்பப்பா அந்தக் கண்கள். அதன் ஒளி. அதில் ததும்பிய கனிவு. அந்தக் கண்கள் அழகானவை. அழகானவை என்று சொன்னால் மட்டும் போதாது. கூரியவை. துளைக்கும் தன்மை படைத்தவை. கேள்விகள் நிறைந்த கண்கள் அவை அந்த ஜன்னலின் கம்பிகள் உலோகத்தன்மையற்று தாமரைத்தண்டுகளின் தண்மையாய் மாறிவிட்டது மாதிரித் தெரிகிறது அவளுக்கு.
உடனே அந்தத் தாக்கத்தை அவள் தன் மனத்திலிருந்து சமாளித்துக் கொண்டுவிட்டாள். தன்னைச் சுற்றிலும் காணமுடியாதவலை ஒன்றை தனக்குப்பாதுகாப்பாய் அவள் விரித்தாள். தன்னை உணர்ச்சிக் குவியலாக்கும் அந்தப் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ள; அந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டுமென்று அவளுக்கு அவசரம்தான். ஆனாலும் இன்னும் இரண்டு கழுவிய சேலைகள் வாளியின் அடிப்பாகத்தில் அடங்கிக்கிடக்கின்றன. அவற்றை எடுத்து இரண்டு தரம் உதறிவிட்டு கொடியில் விரிக்கும் போது, மாமியாரும் முற்றத்திலே வந்து நின்று கொண்டார். இயல்பாகவே மாமியாரைக்காணும்போது வருகின்ற பயப்பிரீதி இப்போதும் அவளைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விட்டது. அவர் பிண அறுவைப் பகுப்பாய்வு நடத்தாமல் போகமாட்டார் என்பதால்; காரணம் இல்லாமல் அவள் மேல் முழி கீழ் முழி முழிக்கிறாள். உடம்பெல்லாம் உஷ்ணத்தின் பரவல். காய்ச்சல் கண்டதைப் போல ஒரு தகிப்பு.
அப்படி இப்படியென்று எதையாவது ஒரு தேவையற்ற கதையை தோசைப் புரட்டாக புரட்டி, பின்பு அதையெல்லாவற்றையும் சேர்த்து சரடுதிரித்து விடுகிறதுதானே மாமியாரது வேலை. ‘இன்று என்ன கதையைத் தொடங்கி அடைக்கோழி மாதிரி ‘வெடுக், வெடுக்' என்று கொத்திப் பிடுங்கப் போகிறாரோ. கொடியிலே சேலையை விரிக்கும் போது இந்த நினைவுகளில் அவளை அறியாமலே அவள் அழிந்து கொண்டிருந்தாள். அதிலே நிற்கின்ற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய் வதைத்துவிட்டு நகர்கிறது மாதிரி அவளுக்கு இருக்கிறது. ஜன்னல் பக்கத்தில் நின்றவன், களவெடுத்தவன் மாதிரி ஒரு பம்பல் பதுங்கலோடு அந்த இடத்தைவிட்டு மெல்ல நழுவிப் போய்விட்டான். மாமி சொல்கிறார்: “நாலு துணியைக் கொண்டுவந்து உந்தக் கொடியில

Page 63
108 இருளே ரீஇனமேவ் வங்காசியா
விரிக்க நாலு மணித்தியாலம் வேணுமே. என்ன அலுவலுக்கெண்டு உதில நசிந்திக் கொண்டு நிண்டு மிலாந்தவேணும். உலையுமெல்லே அடுப்பில. அதெல்லாம் மறந்துபோச்சோ..?”
எளிமையிலும் எளிமையான ஆனால் கல்லாய்க் கணக்கும் சொற்கள். காச்சிய கரிப்பு வார்த்தைகள். செவிடன் யார் காதிலோ விழவேண்டுமென்று சொல்வது போல் அதை உரக்கச் சொல்லிக் கொண்டு மாமிநிற்கிறார்.
அதைக்கேட்க அவளுக்கு கருவேலம் முள் குத்திவிட்டதைப் போல் இருக்கிறது. கருக்கு வெட்டாத பச்சைப் பனை மட்டையால் அடி வாங்கியது போலவும் அவளுக்கு வலிக்கிறது.
உடம்பு நெகிழ்ந்து வருந்துகிற மனசோடு, கடைசியாகக் கையிலெடுத்த சேலையையும் கொடியில் விரித்துப் போட்டாள். அந்த வெறும் வாளியைக் கொண்டு போய் கிணற்றடியில் வைத்துவிட்டு, விறு விறு வென்று நடந்து குசினிக்குள்ளே போய், அடுப்பிலிருந்த சோற்றுப் பானையின் உலை மூடியைத் திறந்தாள்.
சோறு ‘டிப், டிப், டிப் பென்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அனலை அடுப்பில் பரத்தித்தட்டி விறகை வெளியில் எடுத்து ஒதுக்கி வைத்தபோது, அடுத்த அறையில் இருந்து மாமியாரின் குரல் அவளுக்குத் தெளிவாய்க் கேட்டது. XK. ۔۔۔۔
மாமியின் கதைக் கெல்லாம் 'மாமா ஆமா போடுகின்ற ஒருத்தர்தானே...!
மாமி சொல்கின்றார்: “இந்த வேலியை இனிமேல்பட்டு செப்பமா அடைச்சு அறிக்கை பண்ணிப் போட வேணும். ஏதாச்சும் சங்கையீனம் வந்தா அது ஆருக்கு வரும். இந்தக் குடும்பத்துக்குத்தானே..?”
மாமியின் இந்தக்கதை முடிவுறவே இல்லை மேலும் மேலும் பெரிதாய் வளர்ந்து கொண்டே போகின்றது. ‘மொடுக், மொடுக் கென்று எருமைகள் புல்லுகளை மேய்வது போல் ‘வெடுக், வெடுக் கென்று அவர் தொடர்ந்து ஏசிக்கொண்டே இருக்கிறார். கிடுகு வேலியில் தொடங்கி மதில் கட்டி விடவேண்டுமென்கிறதாய் அவர்களுடைய கதை பேச்சு முடிவுக்கு வந்துவிட்டது.
அவளுக்காக ஒரு மதில் சுவர் கட்டப்படப் போகிறது.
அதை நினைக்க அவளுக்கு வெட்கமும் அசிங்கமுமாயிருக்கிறது. தன்முன்னே பயங்கரமான பிசாசுத்தனமான மதில் எழும்பி நிற்கின்றதை அவள் ஒருமுறை தன் மனக்கண்களால் காண்கிறாள்.
அவளது மண்டைக்குள் தேய்ந்த பழைய திரிகை சுழல்வது போன்று கனத்த ஓசை நிறைந்திருந்தது. (தினமுரசு வாரமலர் 07-07-2005)

> മUഗ്രന്ധീമ 109
கறுப்பு ஞாயிறு
அந்த ஒரு சில நாட்களாக கடற்தொழில் மூலம் கைக்கு வந்த பணம் செபமாலைச் சம்மாட்டியாரின் மனதுக்கு மிகவும் திருப்தியாயிருந்தது. நேற்றைக்கு பொழுதுபடவும் கெந்தா தொழிலுக்கென்று கடலுக்குப்போன அவருக்குச் சொந்தமான ஐந்து இயந்திரப் படகுகளும்; சூரைக்குடும்ப மீன்களை படகில் குவித்துக்கொண்டு காலையில் கரைக்கு வந்ததைக் கண்டு, இன்னும் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திழைத்திருந்தார். அவரது ஐந்து படகுகளில் நான்கு படகுகளில் தொழிலுக்குப் போய்வருகின்ற தொழிலாளர்கள், அவரின் வீட்டுக்கு வந்து தங்களுக்கு வரவேண்டிய பணத்தை கணக்கு வழக்குப் பார்த்துப் பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள். ‘இனி ஒரேயொரு கணக்குத்தான் பாக்கி இருக்கிறது. வரட்டும் அதையும் பார்த்துக் கொடுத்துவிட்டால் கணக்குத் தீர்ந்தது. - என்று சம்மாட்டியார் நினைத்துக்கொண்டார்.
சாறனை உதறிக் கட்டிக் கொண்டு, தாம்பாளத்தில் கிடந்த பாக்குச் சீவலில் இரண்டு பாக்குப் பிளவை எடுத்து அவர் அப்போது வாயில் போட்டுக்கொண்டார். பிறகு அங்கேயிருந்து போய் விறாந்தையில் உள்ள நாற்காலியில் அவர் உட் கார்ந்தார். அங்கே சீதோஷ்ணமி அற்புதமாகவிருந்தது. கடல் மணம் கனக்கும் காற்று அவருக்கு இதமாக இருந்தது.
தனக்கு இந்த முறை ‘நத்தார்’ பெருநாள் கொண்டாட்டம் வழமையை விட வலு சிறப்புத்தான்; என்று அங்கே இருந்து கொண்டு அவர் நினைத்தார். இன்னும் பார்த்துக் கொடுக்கவேண்டிய இந்தக் கணக்கையும் முடித்துவிட்டு; நாளை பெருநாளுக்கென்று வீட்டுக்கு வருபவர்களுக்கு மதுப்புட்டிகளும், தேவையான உணவுப் பொருட்களும், கடையில் சென்று வாங்கி வரவேண்டும். இதெல்லாம் வெகு பணம் இழுத்தாலும், வழமையாக எல்லா சம்மாட்டியார்கள் வீட்டிலும் நடக்கின்ற பெருநாள் சம்பிரதாயம்தானே...! இதையெல்லாம் வேலையாட்களுக்குச் செய்யாது போனால் சம்மாட்டி என்கிற தகுதிக்கு உள்ள மதிப்பே தனக்கு இல்லாது போகும்.! எனவே அந்த ஒழுங்குகளை சரிவர இனிமேல் செய்யத்தொடங்கிவிட வேண்டுமென்று அவரும் கருசனையோடு இருந்தார். 'திரேசா இங்காலயா கொஞ்சம் நீ

Page 64
I 10 கறுப்பு ஞாயறு ஒருக்கா வெளியில வர்றயா..?’ அந்த இடத்திலிருந்தவாறே பெருநாளுக்குச் செய்ய வேண்டிய ஒழுங்குகளை; செபமாலை தன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள அவளை அங்கே அழைத்தார்.
திரேசா இருந்த அடுக்களைப் பக்கம் ‘கலா முலா-மென்று ஒரே சப்தமாக இருந்தது. அயல்வீடுகளிலிருந்து பெருநாள் கொண்டாட்டத்திற்காக இவரது வீட்டில் உதவி ஒத்தாசைக்கென்று வந்திருந்த பெண்களின் பேச்சுக் குரல்கள்; அவரது ஆறு சின்னஞ்சிறு குழந்தைகளின் கூச்சல்கள் - எல்லாமே அவரது கூப்பிடு குரலை திரேசாவின் காதுகளுக்குக் கேட்காமல் குழப்பி விட்டிருந்தது. இருந்தாலும் சம்மாட்டியார், மறுபடியும் இருமுறை அவளது பெயரை உரக்கச் சப்தம் போட்டுக் கூப்பிட்டு வைத்தார்.
“ஒரே கறிக்கடை மாதிரி இந்த வீட்டில எந்த நேரமும் சத்தமாத்தானிருக்கு..!” - என்று அவர் எரிச்சல்பட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும்போது:
‘யென்னா நீங்க என்ன கூப்பிட்டளா..?” என்றவாறு தன் புருஷன் முன்னே திரேசா வந்து நின்றாள்.
‘என்னங்கா உள்ளவா ஒரே சத்தம் கறிக்கடைமாதிரி.?”
‘தொதல் கிண்டத்தான் (ஒருவித இனிப்புத்தின்பண்டம்) வந்த சனங்கள் அங்க தேங்கா திருகுதுக. யிந்தச் சனியஞம் அங்க நிண்டுகொண்டு பேய் மாதிரிக் கத்துதுகள்.!”
‘எங்கட புள்ளவளயளையா நீ சொல்ற..?”
‘புள்ளயளா அதுகள் லூசிப்பிசாசுகள். சொல்வழி கேக்கிறதுகளா அதுகளும்.!”
‘அது கிடக்கட்டு விடு! இந்தா. பெருநாளில்லயா நாளைக்கி..! அவுக யெல்லாம் இங்க வருவாக வில்லயா. சாப்பிடுறத்துக்கு குடிக்கிறதுக்கு! அதுக்கு என்னவாகும் இங்க நாங்க அடுக்குப் பண்றதில்லையா..?” 'என்னெக் கேட்டா! நீங்களெல்லாமில்ல இதெல்லாம் பாக்கிறது.?”
‘உண்ட குசினி வேலையும் நானா செய்யிறதெண்டு நீ சொல்லுற.?”
‘ஆரு அப்பிடியா சொன்ன..? நாளைக்கு ‘ ஆமயிறைச் சிக்கு சொல்லியிருக்கல்லா..? அந்த 'ஆமை'யிறச்சி வீட்ட வரும்தானே..? அதை நீங்க சொல்லியிருக்கியள்தானே..! பேந்தென்ன..?”
‘அப்ப வேற என்ன பிறகு இங்க வாங்கிற வீட்டுக்கு.? அங்க திருகோணமலைப்பக்கம் ரவுணுக்குப் போறனல்லா. வேணுமெண்டுறது
களை சொன்னா வாங்கி வருவனல்லா..?”
' உங்கடையத மட்டும் நீங்க வாங்குங்க...! வேறது.க வீட்ட

> മUഗ്രസ്ഥീമ
தேவையானதெல்லாம் கிடக்கெல்லா..?
III
திரேசா அந்த மதுப்புட்டிகளைத்தான் குறிப்பிட்டுச் சொன்னாள். ‘இங்க வர்ற ஆம்பிளையஞக்கு முதலில என்ன தேவையாம்.!”
அவள் அதையும் ஒருகால் அவருக்கு சொல்லிவைத்துவிட்டு, தன் காரியத்தைப் பார்க்க சமையலறைக்குப் போய்விட்டாள்.
அவள் போன பிற்பாடு செபமாலை வீட்டுக்கு வெளியாலே வந்தார். அந்த மணல் தரையிலே நின்றுகொண்டு, அந்தக் காலை வேளையில் தூரத்தில் தெரிந்த கடலைப்பார்த்தார். இருந்த இருக்கையிலேயே தன்னை இருத்திவைத்து சகல செளபாக்கியங்களையும் அள்ளித்தந்து கொண்டிருக்கும் அந்தக்கடலை, சுந்தரப்பரவசத்துடன் நெடுநேரம் அதிலே நின்றுகொண்டு அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பார்வைக்குத் தெரிந்த அந்தக்கடல், சூரியனின் ஒளி வெள்ளத்தைப் பிரதிபலித்தது. அலைகளில் சூரிய கிரணம் பட்டு ஜோதிப் பிரகாசமாய் மினுக்கியது. உடனே கடலை ஒரு தடவை சாஷடாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டுமென, மனத்தில் ஒரு பக்தி உணர்வு அவருக்கு எழுந்தது. அப்படியே அதிலே நின்று கொண்டு கரையைச் சார உடைந்து போகின்ற அலைகளை அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய படகில் தொழிலுக்குப்போகும் உயித்தீனும், ஏசுவும், அந்தோனியும் கடற்கரைப் பக்கமாய் அங்கே வேகத்துடனும், திடமாகவும், மடமடவென்றும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் செபமாலை - தன் வீட்டுப் பக்கமாகத்தான் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று உடனே எண்ணினார். அதிலே இன்னமும் நின்று கொண்டிருக்க அவரால் முடியாதிருந்தது. அந்த இடத்தில் சூரிய ஒளி நன்றாகப் படர்ந்ததால் கண்ணைச் சுருக்கி சுழித்துக் கொண்டு, மீணி டும் தனி வீட்டுக் குள் போய் கணக் குப் புத் தக தி தை எடுத்துக்கொண்டுவந்து, திரும்பவும் அந்த நாற்காலியில் அவர் அட்டணைக்காலிட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். உயித்தீனும் மற்றும் அவனோடு தொழிலுக்குப் போகும் இருவரும், சில நிமிடங்களின் பின்பு சம்மாட்டியாரின் வீட்டுப்பக்கமாய் வந்து விட்டார்கள். சம்மாட்டியாரின் வீட்டுப்படலை எந் நேரமும் ‘ஓ’ வென்று திறந்தபடி கிடப்பதால், கேட்டுக்கேள்வி இல்லாமல் அவர்களெல்லாம் அவரது வீட்டு வாசற்படியில் வந்து நின்றார்கள்.
சம்மாட்டியார் ஒரு பெரிய ஏப்ப சப்தம் வைத்துவிட்டு:
‘வாங்க புள்ளயளா..! உள்ள வந்திருங்கப்பு.!”-என்று அழைத்தார்.

Page 65
அவர்களும் அவரது அழைப்போடு உள்ளே வந்து, நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள்.
‘சம்மாட்டியார் நாளைக்குப் பெருநாள்.!”
என்று சிரித்தாற்போல் சொல்லி, அப்பொழுது அந்த விஷயத்தை சம்மாட்டியாருக்கு ஞாபக மூட்டினான் அந்தோனி. “சம்மாட்டியார் வீட்டில என்ன குறையடா. அதெல்லாம் வழமயா நடக்கிற விருந்தில இருக்காதா..?” என்று யேசு அவனுக்கு, நாளைக்குச் சம்மாட்டியார் வீட்டில் நடக்கப்போகும் தண்ணிப்பாட்டியை ஞாபகப்படுத்திச் சொன்னான். சம்மாட்டியார் கணக்குப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவாறே சொண்டுக்குள் சிரித்தார். ‘போனமுறையை விட இந்த வருசம் பெருநாளுக்குக் கிட்டவா மீன்பாடு பறவாயில்லயெல்லா..?” -என்று கிடைக்கும் அவருடைய வருமானத்தை, ஒருமுறை சம்மாட்டியாருக்கு ஞாபகமூட்டினான் அந்தோனி.
‘ஆனா நீங்க வாங்கின காசுக்கணக்கு கொப்பியில கணக்க இருக்கடா அந்தோனி.!”
சம்மாட்டியார் மிகச் சுருக்காக இதைச் சொல்லிவிட்டு அந்தோனியின் முகத்தைப்பார்த்தார்.
“அது இருந்திட்டுப் போகுது சம்மாட்டியார்! பிறகும் நாங்க தொழில் செய்யேக்க அந்தக் கணக்கக் கழிக்கலாம்தானே..? இப்ப பெருநாளிலயா நீங்க அதைக் கழிக்கக் கணக்குப்பார்க்கவேணும்.? எங்களுக்கு பெருநாளுக்கெண்டும் கையில மடியிலயெண்டு காசு இருக்கவேணுமே.!”
‘என்னடா நீ சொல்லுற.? கணக்கில நீங்க கடன் வாங்கின காசை உள்ள நேரம் பாத்துக் கழிக்காம கடத்தொழில நான் எப்புடீடா சமாளிக்கிற. ஆ. முதலெல்லாம் நான் கொட்டிப்போட்டு தொழிலைச் செய்ய வரும்படிய நீங்க எல்லாருமா நிண்டு கொண்டுபோனா. நான் என்னடா மண்ணையா தின்னுற.?” சம்மட்டியாருக்கு எரிச்சல் வந்துவிட்டது. மண்டை புழுத்த யோசனையோடு கணக்குக் கொப்பியிலே, ஒற்றைகளை மளமளவென்று தட்டினார். இவ்வளவு நேரமாய் வாய் மூடி மெளனம் சாதித்துக் கொண்டிருந்த உயித்தீன், இத்தருணம்தான் வாயைத்திறந்தான். ‘சம்மாட்டியார். நீங்க உங்கடகாசை அந்தோனிக்குக் குடுக்க வேணாம் எண்ட கணக்கில வர்ற பங்குக் காசை கணக்குப்பாத்து அந்தோனியிட்ட அதைக் குடுங்க..!’
உயித்தீன் அந்தோனியிலே இரக்கப்பட்டு தன் பணத்தையும் அவனுக்குக்

ඊඛ. நீ/அருணானந்தம் 113 கொடுக்கத் தயாராயிருந்தான். உயித்தீனோடு அந்தோனியும், ஏசுவும்தான் சேர்ந்து கடற்தொழில் செய்பவர்கள். எத்தனையோ தருணங்களில் இது மாதிரியாக உயித்தீன் அந்தோனிக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறான். சில வேளைகளில் ஏசுவும் உயித்தீனிடமிருந்து உதவி பெற்றிருக்கிறான். உயித்தீனிடமிருந்து இப்படித் தேவையான போது அவர்கள் வாங்கிய பணம், இன்னமும் இவனுக்குத் திருப்பிக் கொடுபடவில்லையென்றாலும்; அவர்களுக்கு உதவுவதற்கு எப்பொழுதும் அவன் பின்நிற்பதில்லை.
‘'நீயும்தாண்டா இப்படி குடுத்து அவனை பழுதாக்கிறாயடா உயித்தீன்! இவன் வாங்கிறகாசை வீட்ட கொண்டு போறானாடா எல்லாம் அவன் சாராயம் போடத்தாண்டா கொண்டோய்த் துலைக்கிறான்.”
உயித்தீனையும் இந்த முறையில் சம்மாட்டியார் சற்றே கடிந்து கொண்டார். இவனைப்போலவே அந்த இருவரும் ஒழுங்குடன் இருந்தால், தனக்கும் சங்கடமில்லை என்பதாய்ச் சம்மாட்டியாரின் நிலைப்பாடு இருந்தது.
அதனால் அந்தோனியிடமும் அவர்:
“இந்தா இது உனக்கடுக்காது பாருடா அந்தோனி. ஒவ்வொரு கதைக்கும் நீ மாத்துக்கதைகதைக்காத. ஆற்றையும் சொல்லுப்பறைச்சல நீ கேட்டாத்தானே..? ஆரும் சொல்றதையும் எப்பன் நீகேளன். கடலில உனக்கு வருகுதெண்டிட்டு கண்டபடி நீ செலவழிச்சா குடும்ப சீவியம் எப்புடீடா ஒழுங்கா நடக்கும்.? மூண்டு நாலு புள்ளயளையும் நீ பெத்து வச்சிருக்கிறா. அதுகளுக்கும் ஒழுங்காத் தின்னக்குடுக்காம. குடி குடீ. யெண்டு சாகிறியேடா..?”
அவருக்கு இப்படி ஒரு அறிவுரை சொல்லிவிட்டேன் என்கிற திருப்தி! ஆனால் அந்தோனி அவர் சொன்னதையிட்டு, தானும் ஒரு நியாயத்தை சொல்லத் தொடங்கினான்.
‘அப்புடியென்ன சம்மாட்டியாரு நான் பெரிசா குடிச்சுத் தள்ளுறன்..! தொழிலுக்குப்போனா உடம்பு அலுப்பெண்டு காப்போத்தலுக்குக் கொஞ்சம் கூடவாக் குடிக்கிறன். அதால வீட்டப் பட்டினி போடுறனா..? எண்ட வீட்டுக்கு என்ன குறை சம்மாட்டியார்? இப்ப எண்ட மகனுமெல்லா தொழிலுக்குப் போவத் துடங்கீட்டான். மீன்குட்டிக்கு நீச்சல் பழக்கத் தேவையில்ல சம்மாட்டியார். அவன் தொழிலில இப்ப ஆள் வலு சுழியன்!” அந்தோனி தன் குடும்ப நிலைபரத்தை மூடி மறைத்து விலாசமெழுப்பிச் சொல்லிவிட - உயித்தீனுக்கு அதைக் கேட்கவும் சினமாயிருந்தது. "படிக்கிற இந்த வயதில அந்தப் புள்ளய கெடுத்திட்டியேடா அந்தோனி.!” என்று உடனே அவனுக்கு நன்றாய்ச் சுர்ர்'ரென்று சுடட்டுமென்று உயித்தீன் சொன்னான்.

Page 66
114 கறுப்பு ஞாயிறு ‘கடத்தொழில விட படிச்சென்னடா அவங்கெல்லாம் கிழிக்கப் போறாங்க..? கடலில போய்ப்பாடுபட்டா அது பொன்னா எங்களுக்கு அளித்தருமடா. இந்த ஆமானமான தொழிலை விட்டுப்போட்டு பிச்சைக்காரங்க மாதிரி ஆரிட்டயுமேண்டா வேலை வேலையெண்டு கேட்டுப் போவேணும்.?”
‘நாங்க தான் கடலில ராப்பவலா திரிஞ்சு காலமெல்லாம் போவுது. ஒண்டுமே முன்னேற்றமில்லை. எங்கள கடலுக்கு அனுப்பீட்டு வீட்டயுள்ள பெண்டு பிள்ளயளெல்லாம் பரிதவிக்குது. அப்பிடியான சீவியத்தில பிள்ளயளையும் பிடிச்சு விடுறதா..? அதுகளும் படிச்சுக் கிடிச்சு மதிப்பா இருக்கவேணாமா..?”
சம்மாட்டியாருக்கு முன்னே உயித்தீனும், அந்தோனியும் இருந்துகொண்டு இப்படி தங்கள் இருவருக்கிடையிலும் கதையை வளர்த்துக்கொண்டிருக்க, இவர்கள் இருவரினதும் கதையை காதில் வாங்கிக் கொண்டு தன் பாட்டுக்கு அவர் யோசித்துக்கொண்டிருந்தார்.
இவர்களே இப்படியெல்லாம் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள யோசிக்கும்போது, தன் நிலைமையை அவர்களுடையதிலும் மேலாய் எப்படி ஆக்கிக் கொள்ளலாம்?
பட்டணத்திலேதான் தன் பிள்ளைகளை அனுப்பி மேல்படிப்புப் படிப்பிக்க வைக்கவேணும்!
என்றும் அவர் தன் மனத்தில் ஒரு திட்டம் போட்டுக்கொண்டார். 'உண்மையைத்தான் நான் சொல்லுவன். கடல் தொழிலுக்கு
புள்ளயளவிட்டா சின்னதிலயே அதுகள் எல்லா கெட்ட பழக்கமும் பழகி கெட்டுப்போகும்’
இருந்தாற்போல உயித்தீன், இடையிலே இந்தக் கதையை அந்தோனிக்குச் சொன்னான்.
‘ என்னடா உயித்தீன் நீ சொல்லுற.? தொழில் போய்ப்பழகுற கெட்டுப்போறத்துக்காடா..?”
அந்தோனி இந்தக் கேள்வியை உயித்தீனிடம் கேட்டான்.
‘அப்படி நீ சொல்லுற மாதிரி என்னடா தொழில அவங்க அங்க கடலில போய்ப் பழகுறாங்க..? குடியையும் பீடி சிகரட்டையும் பத்தத்தான் அவங்கள் அங்கின பழகுறாங்க. நாங்கதான் இதையெல்லாம் பரம்பரையா செய்து பாழாப்போறமெண்டு படிக்கிற பிள்ளையளையுமாடா அதில போட்டுக் கெடுக்கவேணும்? சாகுமட்டும் எங்கட தலையில இந்தத் தொழிலை வைச்சிட்டு எங்கட அப்பன்மார் செத்துப் போட்டினம். நாங்களும் அவயள் செய்ததுகளையே புள்ளயஞக்குச் செய்யிறதா..?”

x தீபரிசுருளானந்தம் II 5 ‘இவன் பெரிசா எல்லாத்தையும் கண்டுட்டான்! உனக்குப் பிறக்கிற புள்ளயளை நீ படிப்பிச்சுப் பெரிசாக்கிடா ராசா. நான் இப்பிடித்தான் இருப்பன். எண்ட புள்ளயளெல்லாமே கடல் தொழில்தான் பார்க்கும்.! எப்பவும் நான் கரையான்தான்! அதில இருந்து நான் மாறமாட்டன்! எண்ட வம்சவரிசேல புள்ளயஞம் வரும் அவங்களும் சுத்தக் கரையான்கள்தான்! அதைத் தெரிஞ்சு கொள்ளுங்க! எங்களைப்போல இருக்கிறவங்களாலதான் எங்கட சாதியே பிழைச்சிருக்கு..!” மார்தட்டிக்கொண்டு இதையெல்லாம் அந்தோனி உயித்தீனுக்குச் சொன்னான். அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டதில் உள்ள சரி பிழை என்ன என்று பகுத்துப்பார்க்க முடியாத நிலையில் ஏசு அங்கே இருந்து கொண்டிருந்தான்.
சம்மாட்டியாரின் கவனம் கொப்பியில் உள்ள கணக்கைச் சரி பார்ப்பதில் இத்தருணம் இருந்தது.
‘உயித்தீன் உன்ர பங்குக்கு நான் தரவேண்டிய காசு - ஆயிரத்திஐநூறு வருது. அந்தோனியும் ஏசுவும் மீன்பாடு இல்லாத நாளிலயெல்லாம் என்னட்டக்கடனா வாங்கின காசைக் கழிச்சும் இன்னும் எனக்கு அவங்க தரவேண்டிய காசுதான் கணக்கில கூடக்காட்டுது.”
சம்மாட்டியார் அங்ங்ணம் சொல்ல அந்தோனியும் ஏசுவும் தாங்கள் சம்மாட்டியாருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை நியாயமான முறையில் மனத்திலெண்ணிக்கொண்டு ஒன்றும் பேசாது பிறகு பொறுமை காத்தார்கள். தங்கள் தொழிலிலும் வாழ்க்கையிலும் சூதுவாது இல்லாமல் நியாயமாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்கள் செம்படவர்கள்; இந்த முறையில் சம்மாட்டியாரிடம் விசுவாசமான முறையில் நடந்துகொள்ளவே அவர்களும் விருப்பத்துடனிருந்தார்கள்.
‘உயித்தீன் இந்தா உனக்குத்தரவேண்டிய காசு.! உன்ரை இஸ்டத்துக்கு எதெண்டாலும் நீ செய்.!”
சம்மாட்டியார் உயித்தீனிடம் காசை நீட்டினார். அந்தக் காசை கையில் வாங்கினபிறகு தன் சக தொழிலாளர் இருவரையும் உயித்தீன் பார்த்தான். ‘எங்க எல்லாருக்கும்தானே பெருநாள் யேசுவுக்கும் இதில அரைவாசியைப் புறிச் சுக் குடுக் கிறண் டா அந் தோனி..! அவனும் பாவம் ! பிள்ளைகுட்டிக்காறன்..!”
உயித்தீன் அந்தோனியைப்பார்த்து இங்ங்ணம் சொன்னான். அந்தோனி அவன் சொன்னதுக்கு ஒன்றுமே மறுப்புச் சொல்லவில்லை! உடனே இருவருக்கும் அந்தப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்தான் உயித்தீன்.
சம்மாட்டியார் ‘அந்தக் கணக்குத் தனக்குத் தீர்ந்தது!' - என்ற நிம்மதியோடு கொப்பியை மூடி வைத்தார். எந்தக் காசுக் கணக்கையும் பிசகு இல்லாமல்

Page 67
116 கறுப்பு ஞாயறு ஒழுங்காகப் பார்த்து - கொடுக்கவேண்டியதைக் கொடுத்து - பற்று வரவு என்று எழுத வேண்டி இருப்பதையும் எழுதி, தொழிலாளர்களுடன் நேர்மையாக நடக்க வேண்டுமென்றுதான் அவரும் விரும்புபவர். ‘எல்லாவற்றையும் பிறகு கடவுளுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்! . என்ற தெய்வபயமும் அவருக்குண்டு. கடற்தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த சமூகத்தவர்களிடம் இதுவே ஓர் தனிச்சிறப்பு. அந்த நல்ல குணத்தை அவர்களால் தங்களுக்குள் கண்டுகொள்ள முடியாவிட்டாலும்; வேறு சமூகத்தவர்கள் இப்படி நல்ல முறையில் தங்களை கணித்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை, அவர்களும் தங்கள் காதுகளில் கேள்விப்படத்தான் செய்கிறார்கள். சம்மாட்டியாருக்கு இருந்த இருக்கையில் கால் விறைத்துப் போய்விட்டது. உடனே நாற்காலியை விட்டு மெல்ல எழுந்து நின்று, சற்று குனிந்தவாறே விறைத்த காலில் கையை வைத்துக்கொண்டு ‘அந்தோனியாரே..! என்றார்.
விறைப்பு அடங் கமட்டும் கண்களை மூடி, முகத்துத் தசைகளை இறுக்கிப்பிடித்தபடி சற்றுநேரம் அவர் நின்றார். பிறகு விறைப்புச் சாந்தியானதும் நீண்டு மார்பில் தொங்கிய கழுத்துச் சங்கிலியை, இடது கையால் பிடித்துத் தூக்கித் தோளில் மடித்துப் போட்டுக்கொண்டார். அவரின் கைவிரலில் கிடந்த ‘புலிக்கண்கல் மோதிரத்தில், ஒளி அலை புரண்டெழுவதை உடனே கவனித்தான் உயித்தீன்.
சம்மாட்டி மாதிரி சங்கிலி மோதிரம் நானும் ஒரு காலம் வாங்கிப் போடத்தான் வேணும்!' - என்று அவன் மனசு அத்தருணத்தில் அவாப்பட்டது.
“திரேசா கொஞ்சம் இங்கலியா வர்றியா.!” சம்மாட்டியார் இப்போது குசினிப் பக்கம் பார்த்தபடி மனைவியைக் கூப்பிட்டார்.
இங்கே இவர்கள் தங்கள் தொழிலைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருக்க, அதையெல்லாம் ஒட்டுக் கேட்குமளவில் அங்கே அடுப்பங்கரையில் இருந்த பெண்களும் தங்கள் கதைகளை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆதலினால் சம்மாட்டியாரின் குரல் கேட்டவுடன், திரேசா உடனே அங்கு வந்து நின்றாள்.
“தேத்தண்ணி கொண்டாறத்தில்லையா வந்த புள்ளயஞக்கு.?” ‘இந்தா உடன கொண்டு வாறனே.”
அவள் உடுத்திருந்த தன் சேலைத் தலைப்பில் கைகளைத் துடைத்துக்கொண்டு, உடனே சமையலறைக்குப் போகத் திரும்பினாள். அவள் போட்டிருந்த இரட்டைவடச்சங்கிலியையும், மாங்காய் மாலையையும், கைமுழுக்கக்கிடந்த வளையல்களையும், ஏழு புஸ்பராகக்கல் இழைத்த தோடுகளையும் - பார்க்கவே பயத்தை உண்டாக்குமளவுக்கு தடையங்கள் உள்ள அந்தப் பெருத்த தாலிக்கொடியையும்; இந்த ஆறு கண்களும்

শুৈ১২ நீ/அருளானந்தம் II 7 ஒரே நேரத்தில் அதற்குள்ளாக ஒருகணம் பார்த்துவிட்டுத்தான் இருந்தன. ‘எதிலும் எள்ளத்தனை கூடக் குறையவில்லை.!’ என்பதாய் அவர்களது கண்கள் கண்ட காட்சிதனை பிறகு அவர்களது மனசெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டது.
அதைக் கண்ணுற்ற பிற்பாடு; மழையில் நனைந்து சாய்ந்த தாமரை மலர்கள்போல் அவர்களது தலைகள் தாழ்ந்தன.
என்றாலும் உயித்தீன் மட்டும் தலையைக் கீழே குனிந்திருந்தபடி தன் மனைவியை நினைத்தான். அவனது சிந்தனையில் அப்போது திரேசாவின் உருவம் மறைந்து, அவனது மனைவி றோசலீனின் உருவம் தெரிந்தது. இந்த நகைகளையெல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் போது, தன் மனைவி இன்னும் எவ்வளவு அழகாக மாறிவிட்டாள் என்று அவனுக்குப் பூரிப்பாக இருந்தது.
இவன் யோசனையில் ஆழ்ந்திருக்க, எல்லோருக்கும் அங்கே தேநீர் கொண்டுவந்துவிட்டாள் திரேசா!
'குடியுங்க பிள்ளையளா..!”
சம்மாட்டியார் சொல்லிவிட்டு, தனக்கு வந்த பெரிய கோப்பையிலுள்ள தேநீரை எடுத்து மடக்கு, மடக்கென்று குடிக்கத் தொடங்கினார்.
சூடாயிருந்தாலென்ன, குளிராயிருந்தாலென்ன, காரமாயிருந்தாலென்ன - எல்லாமே ஒன்றுதான்! - என்ற நிலையில்; அவர்கள் மூவரும் சூடாகவிருந்த தேநீரை "மடக்கு,மடக்கென்று குடித்துத் தீர்த்தார்கள்.
‘இந்தா எல்லாருமா நாளைக்கு இங்க எண்டவீட்ட வந்திருங்கடா..! மறந்தாலும் அலுத்தாலும் வராம மாத்திரம் இருந்திடாதயுங்கடா என்ன..? குடும்பத்தோடதான். ஆ. உங்களோடதாண்டா நானும் சாப்பிடுவன்.” சம்மாட்டியார் அவர்களுக்கு அன்புடன் இதைக் கூறினார்.
‘இங்க வராம நாங்க எங்க போறது.? நாளைக்கு சம்மாட்டியார் வீட்டிலதான் எங்களுக்குநத்தார்.! என்னடா உயித்தீன்.?”
என்று உயித்தீனைப் பார்த்துச் சொன்னான் அந்தோனி.
உயித்தீன் அவன் சொன்னதைக் கேட்டு "கிளு கிளென்று சிரித்தான். ஏசுவும் அவனோடு சேர்ந்து சிரித்துக்கொண்டு நின்றான். இவர்களது சிரிப்போடு ஒரு சந்தோஷத்தையும் செய்துவிட வேண்டுமென்ற நோக்கில்; மூடிக்கிடந்த கணக்குக் கொப்பியைத்திறந்து, அதன் அடி ஒற்றையில் வைத்திருந்த மூவாயிரம் ரூபாய்த் தாள்களை கையிலே எடுத்தார் சம்மாட்டியார்.

Page 68
118 கறுப்பு குரயறு ‘இந்தா உனக்கு. இது உனக்கு..! ம் இது உனக்கு..!” - என்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாயாக அவர் அவற்றைக் கொடுத்தார்.
'இது பெருநாளைக்கெண்டு நான் உங்களுக்குத்தாற சந்தோஷம்.! அந் தோனி வாங்கின காசுகளில எதையாவதொணி ட வீட்ட கொண்டோய்க்குடுடா..!"
இதையும் கடைசியாக அவர் அந்தோனிக்குச் சொல்லிமுடித்தார். அவர் சொன்னதற்குப் பதிலாக:
'ஓம் சம்மாட்டியார். வீட்டகுடுக்காம - நான் ஆரிட்டக் கொண்டோய்க் குடுக்கப்போறன் சம்மாட்டியார்.?” என்று கூறியபடி, அந்தோணி அங்கிருந்து கிளம்புவதற்கு ஆயத்தமாகினான். அவனோடு சேர்ந்து உயித்தீனும், ஏசுவும் கூடவே போக வெளிக்கிட்டார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியே புறப்படும்போது சம்மாட்டியாரது வீட்டில்; அவர்கள் அன்று கடலுக்குச் சென்று பிடித்து வந்த, அந்தச் சூரை மீனின் குழம்பு வாடை அறிமுகமாகியது.
அவர்கள் மூவரும் சம்மாட்டியாரின் வீட்டிலிருந்து வெளியேறி, கடற்கரையின் நுண்ணிய வெள்ளை மணலிலே நடக்கலுற்றார்கள். அந்த மணல் - அலை அலையாக நெளிநெளியாக நீணி டு படிநீ திருப்பது நல ல நெறிப்புடையதாயிருந்தது. அந்தப்'பூ' மணல் வெளியில் மீன் வலைகள் சிலந்தி வலைகள் போல் கிடந்தன. கடலோர மெங்கும் வஞ்சனையில்லாமல் தாழைமரங்கள். தக்க பலத்துடன் தளிர் இலைகளுடன் திடமாக உறுதியுடன் 'கொழுகொழு' - வென்று அவைகள் நின்றன. சில தாழையிலே செவ்விள நிறத்தில், அன்னாசியைப்போன்ற வடிவில், காய்கள் தண்டுடன் முத்தம் வைத்தாற்போல ஒட்டிக்கிடந்தன.
அந்தக் காய்களை தன் கையால் காட்டிவிட்டு: “இந்தக்காயை குரங்கும் தின்னாதடா அந்தோனி.!” - என்று சொன்னான் ஏசு.
அவன் சொன்னதை உடைத்துவிட்டு, புதிதாய் ஒரு செய்தியை நிலைநாட்டினான் அந்தோனி!
‘உனக்குத் தெரியுமா? சண்டை நேரம் ஊருக்கயிருந்தக் குரங்கெல்லாம் துவக்குச்சத்தம் கேட்டு, பயத்தில கடற்கரைப்பக்கமாவந்திட்டுது. பேந்து சாப்பிட அதுகளுக்கு ஒண்டுங்கிடைக்காம இந்தத்தாழங்காயத்தான் குரங்குகள் திண்டுது.”
'ம்." என்றவாறு அவன் சொன்னதை நினைத்தபடி அதை அங்கே அதிசயமாகப் பார்த்தான் உயித்தீன்!

്യ മUഗ്രസീമ 119 "நாங்களும் கடக்கரைத் தாழங்காய் மாதிரித்தான்! இது வழிய வீடுகளைப் போட்டுக்கொண்டு கடலில நாளாந்தம் அலையிறம்.1 இன்னொரு சனம் என்னமாதிரியெல்லாம் வேற நல்ல இடங்களில இருந்து சீவிக்குது..!” அங்ங்ணம் அந்தோனி கூற, நீல வான ஒளிப்பரப்பின் கீழே நிர்மலமாய் விரிந்து பரந்துள்ள கடலை நோக்கியவாறு உயித்தீன் அவனுக்குச் சொன்னான்.
“கடத்தொழில விட எங்களுக்கு வேற என்ன வேலயத்தான் செய்யத்தெரியும்? எங்கட அம்மா அப்பாவை விட இந்தக் கடலைத்தான் நாங்க நம்பி இருக்கிறம். எங்கட தொழிலுக்கு ஏற்ற மாதிரி கடலுக்குப் பக்கத்தில தானேயடா நாங்க இருக்கவேண்டியிருக்கு.?”
உயித்தீன் சொல்லி முடிக்க ஏசு சொன்னான்:
‘' எண் டாலும் சம் மாட்டியாரிணி ட வசதி ஆருக்குமிருக்கே...? கடற்கரையிலயெண்டாலும் பெரியவீடெல்லா அது. ம். முந்தி அவரும், சாதாரணமான ஆள்தான்! இப்ப சம்மாட்டியாரா வீங்கியிருக்கிறார்.!’
'அவற்றை மனுசியைக்கண்டியா? ஆறு பிள்ளப்பெத்தவளெண்டு ஆரும் சொல்லேலுமா? அவளைப்பாத்தா இப்பதான் சமஞ்ச பெடிச்சியாட்டமிருக்கா..!" அந்தோனி இப்படி ஒரு கதையைத் தொடங்கினான். அவன் சொன்னதுக்கு நல்லதோர் உவமையும் சேர்த்து, விளக்கம் சொல்ல வெளிக்கிட்டான் ஏசு.
‘வெட்டிக்கெட்டது வேம்பு மரமடா! வெட்டாமக் கெட்டது பூவரசு.! வேம்புபட்டை வெட்டினா கெட்டிடும்! ஆனா பூவரசுமரத்தை வெட்டவேணும்! அதை வெட்டாட்டா கோறை விழுந்திடும்! பொம்பிளை ஒரு பிள்ளைப் பெத்துப்போட்டு கதிரையில இருந்து கொண்டிருந்தா உடம்பு பழுதாகிடும்.! வேலை செய்யாம விட்டவுடன இடையில சதைவிழும்! .ஆனா சம்மாட்டியாற்றை மனுசியைப்பாத்தியே வருசம் ஒண்டு பெத்தாலும் குமரி மாதிரி பாக்க என்ன வடிவா இருக்கா..!!
இவன் சொன்னகையோடு அந்தோனி கடகடத்துச்சிரித்தான். உயித்தீனும் கெக்கட்டமிட்டுச் சிரிக்கத்தான் செய்தான். அந்தோனிக்கு நாளை சம்மாட்டியார் வீட்டிலே நடக்கப்போகும் விருந்துபசாரம் ஞாபகம் வந்துவிட்டது.
‘சம்மாட்டியாற்றை மனுசி ‘ஆமை'யிறச்சிக்கறி திறமாக் காய்ச்சுவா..!” சொல் லிவிட்டு அந்தக் கறிச் சுவையை மானசீகமாக அவன் அநுபவித்துப்பார்த்தான். அப்பொழுது அவனுடைய நாக்கில், கடல் ஆமை' இறைச்சியின் சுவை ஊர்ந்தது.
“அது என்ன பெரிசு.? என்ரை மனுசி தேறைக் கருவாட்டுப் பொரியலும் புட்டும் சமைச்செடுத்தாளெண்டா அதைவிட வலு திறமாயிருக்கும்!”

Page 69
120 கறுப்பு குரயறு உயித்தீன் அவனுக்குச் சொன்னான்.
‘'நீ கலியாணம் முடிச்ச புதுசு...! இப்பவெல்லாம் மனுசிபோடுற ஒரேப்பைச்சோறும் வெறும் சொதியும் கூட உனக்குத் திறமாத்தானிருக்கும்!”
ஏசு இதைக்கேட்டு, முகத்தை வேறுபக்கம் திருப்பி வைத்துக்கொண்டு சத்தமில்லாமல் சிரித்தான். அவர்கள் மூவரும் மணலெங்கும் மலக்கழிவுகள் உள்ள இடத்தாலே இப்போது நடந்து கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் விடியற்புறத்திலும், சிறுவர்கள் பகல் வேளையில் எந்த நேரத்திலும் மலம்கழிக்கும் இடம் அது. ஆனாலும், இவர்களுக்கு அதுவெல்லாம் அசிங்கமாயில்லை! அருவருப்பு வரவில்லை! இது எல்லாமே அவ்விடங்களில் நடந்துதிரியும்போது அவர்களுக்குப் பழகிப்போனதுதான்!
அதனால் இவை எல்லாவற்றையும்விட அவர்களுக்கு கவனமெல்லாம், சுவாசிகரமான தங்கள் கதையிலேதான் அப்போது இருந்தது.
கடல் அலைகள் இரைச்சலோடு மோதிக்கொண்டிருந்தன. காற்றில் கடலின் வாசனை ரம்மியமாகவும், திவ்வியமாகவும் அவர்களுக்கு இருந்தது. தாழைமரத்தில் இருந்த காகம் ஒன்று வரட்சியோடு அங்கே கத்தியது. இன்னொருகாகம். ஏன் அது ஓரிடத்திலே சுற்றிச்சுற்றிப்பறக்கிறது? கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் போது அந்தோனி அந்தக்காகத்தைப் பார்த்துவிட்டு, கடல் தண்ணிரின்மேல் தன்பார்வையைச் செலுத்தினான். புள்ளியாய்த் தொடுவானத்தை நோக்கி ஓரிரு கட்டுமரங்களை அப்போது அவன் அங்கே கண்டான். ஒரு விசைப்படகு மின்னிக் கொண்டிருந்த நீர்ப்பரப்பின் மேல், கவலையற்றுச் சென்று கொண்டிருந்தது. அத்துடன் அவ்வலைவரியின் மேல், ஊர்ந்து வரும் படகுகளும் அவனுக்குத் தெரிந்தது.
உடனே அவனுக்கு உயித்தீன், இரவும் பகலும் கடல் தொழிலுக்குப்போவது ஞாபகம் வந்துவிட்டது. அதைப்பற்றி பல முறைகள் அவனுக்கு இதை அவன் சொல்லி இருந்தவன்தான்! இப்போதும் அதைப்பற்றி அவன் கதைத்தான்.
'இல்லடா உயித்தீன் நான் கேக்கிறனெண்டு என்னில கோவிக்காத.? கலியாணம் முடிச்ச புதிசுதானே நீ.? எண்டாலும் ஊனும் உறக்கமும் உனக்குக் கடலுக்கதான் போலக்கிடக்கு.? ராத்திரிப்பாத்தா எங்களோட கடலுக்கு தொழிலுக்கெண்டுவாறாய்! பகலைக்கு திரும்பவும் வேற ஆக்களோட தொழிலுக்கு வள்ளத்தில போறாய்! இப்பிடிக் கடலே கடலெண்டு சீவனைக்குடுத்து நடந்தா என்னவாகும் சீவியம்.? நீ வீட்டில கிடந்து எத்தினை நாளாச்சு.? ராப்பகலா இப்பிடிப்பாடுபட்டு மாஞ்சு மாஞ்சு உடம்பைப் போட்டடிச்சு, ஏதேனும் நோய் பிடிச்சு விழுந்தா என்னடா செய்வாய்..? ஓரிடத்தையும் உன்னமாதிரி ஆளாய் ஒருவருமில்லப் போ..!”
தனக்காக உண்மையில் அந்தோனி பரிதாபப்படுகிறான்; என்று இதனால் உயித்தீனுக்குத் தெரிந்தது.

9 நீரிஅருளானந்தம் 121
‘அந்தோனி நான் அப்பிடி பாடுபடாட்டி உனக்கு இப்ப நான் வாங்கின அந்தக்காசத் தந்திருக்கேலுமா..? உடம்பில பலமிருக்கேக்க வீட்டில நெளிவு எடுத்துக் கொணி டு கிடக் காம பாடுபட்டு தொழிலைச் செய்து முன்னேறிடவேணும்.! பேந்து சம்மாட்டியார் மாதிரி கால்மேலகால் போட்டுக்கொண்டு சும்மா இருக்கலாம். நானும் வழியில்லாதவன்! மனுசியும் ஒண்டும் கொண்டரேல்ல! எப்புடியோ பாடுபடத்தானேவேணும்? எப்பவும் இந்தத் தொழிலில சோம்பல்படாத சுறுசுறுப்பான ஆளாத்தான் நாங்க இருக்கவேணும் அந்தோனி! நல்லா மீனும் சாப்பிட்டு, உடம்பில பெலனும் குறைஞ்சிடாம பாத்துக்கொள்ளவேணும்!”
உயித்தீனின் அந்த விளக்கத்திற்குப் பிறகு, மேலும் கதையை வளர்த்திடாமல் தரிப்பிட்டுக்கொண்டான் அந்தோனி என்றாலும், ஏசுவுக்கும் உயித்தீனுக்கும் புரியாத விதத்தில் ஏதோ வாய்க்குள் அவன் முனகினான்.
டிசம்பர் வெய்யிலும் இல்லை பனியும் இல்லை; கோடையும் குளிரும் சமாதானம் ஆகிவிட்டது போல் அந்தப்பொழுது அவர்களுக்கு நன்றாய் இருந்தது.
அந்தோனிக்கு அதாலே நடந்து போய்க்கொண்டிருக்க, நாவறட்டிக் கொண்டுவந்தது. இந்த நேரத்துக்கு தேவை என்ன என்பதை தன் உடல்சோர்வின் நிமித்தம் அவன் தெரிந்துகொண்டான்.
யேசுவின் கையைப்பிடித்து அழுத்தியபடி, உயித்தீனிடம்:
‘நான் முச்சந்திக் கொருக்கப் போட்டு வரட்டுக்கே..?” - என்று அந்தோனி கேட்டான்.
‘வீடும் உனக்குக் கிட்டீட்டுதுதானே உயித்தீன்..? நீ வீட்ட போய்ச்சேர்.! நாங்க போறதும் வாறதுமா வந்திடுறம்..!” - என்று மீண்டும் உயித்தீனிடம் அவன் சொன்னான்.
‘உங்களத் திருத்தவேயேலாது..!’ என்று சொல்லி - கையாலும் சைகைகாட்டிவிட்டு, உயித்தீன் தனியே நடந்து போனான். அவர்களும் திரும்பி வந்தவழியாக தாங்கள் போக எண்ணியிருந்த இடத்துக்கு, நடையைத் தொடங்கினார்கள்.
சூரியச்சுடரொளி நன்றாகப் பரவிவிட்டது. ஒளியில் மணலில் தெரிந்த கிளிஞ்சல்கள் பளிச், பளிச் - சென்று மின்னின. அணிந்திருந்த ஆடைக்குள்ளே உடையின்றி முழுமேனியுடன், பல வெளிநாட்டுப் பெண்கள் கடற்கரையில் உலாவிக்கொண்டிருந்தார்கள். நோய்தரும் புழுதியை அள்ளி வீசாத அந்தக் கடல்காற்றை, அவர்களெல்லாம் நன்றாக அநுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
கடல் அலைகள் இரைச்சலோடு மோதிக் கொண்டிருந்தது. காற்றில் கடலின்

Page 70
122 கறுப்பு ரூாயறு வாசனை ரம்மியமாக இருந்தது. அந்தக்காற்று, புத்துணர்வூட்டும் வெம்மையைக் குழைத்து வீசிக்கொண்டிருந்தது - நடக்கச்சுகமான சூழல் - உயித்தீன் அந்தக் காற்றின் சுகத்தை அநுபவித்தவாறே தன் வீட்டைச் சென்றடைந்தான்.
றோசலின் வீட்டு முற்றத்தில்; பெரிய அரிவாள் மனையில் இருந்து கொண்டு மீனை வெட்டிக் கொண்டிருந்தாள். மீன்களின் குடலை நீக்கி, முட்களை வெட்டி, தோலை உரித்து, சதையை அகல் அகலாக அறுத்து சட்டியிலிட்டுக் கொண்டிருந்தவள் - கணவனைக் கண்டதும் தண்ணிரில் கையலம்பிவிட்டு எழுந்தாள்.
“வந்திட்டியளா..! தேத்தண்ணி போட்டுத்தரவா?” அவன் வீட்டுக்குள்போக அவனுக்குக் கிட்டவாய்ப் போனாள் அவள்.
‘தேத்தண்ணி வேணாம் றோசலின் சம்மாட்டியார் வீட்டில குடிச்சிட்டன்!” என்று சொல்லிவிட்டு; சிறு தேவதை மாதிரி இருந்த அவளின் இடையிலே கைகளைவைத்து, தனக்குக்கிட்டவாய் இழுத்துவைத்துப் பின் அவளை தன் மார்போடு அணைத்தான் அவன்.
‘ஐய்யோ..! விட்டுங்க..!
அவன் அணைக்கவும் அவள்; கண்களை மலர மலர விழித்தவாறே சிரித்துக்கொண்டு சொன்னாள்.
“சீய்.1 மீன் கையோட.!”
"
அதுதானே என்ரை தொழில்! மீன் வாசமும் எனக்குப்பிடிக்கும் றோசலின்
‘பட்டாம் பகலில என்ன இது. பக்கத்து வீட்டு மரியா சில நேரம் இங்க வந்தாலும் வருவா..!”
செவியில் விழாத மெல்லிய குரலில் அப்படி அவள் சொல்லிவிட்டாலும், தன்னை விடுவித்துக்கொள்ள மனவிருப்பின்றி, கணவனின் அணைப்பில் இருக்கவே விருப்புற்றாள். இப்போது முறுக்கேறிய இசைக்கருவி போல அவள் இருந்தாள்.
அவன் ஒழுங்கின்றி சுவாசித்தபடியே, அவளை இறுக்கிக் கட்டிப்பிடித்து முத்தம்வைத்து - சுவாசம் முட்டவைத்துவிட்டான்! அந்த சுகத்தினால் அவிழ்முகைபோல், அவள் விழிகள் பாதியாக இருந்தன. அவளுடைய பாதிமூடிய விழிகளில், மென்மையாகக் காமம் கனிந்திருந்தது. அவள் கண்களில் இன்பம் அரைக்கிறக்கத்தில் இருப்பது கண்டு, அவனுக்கும் உவகையாய் இருந்தது.
வெளிமுற்றத்தில் காகங்கள் கறிச்சட்டியைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டன.

නඛ. நீரிஅருணானந்தம் 123 ஒரு காகம் இறகுகளை அடித்துக்கொண்டு, அந்தரத்தில் பறந்தவாறு கால்களால் கறி மூடியைக் கீழே தள்ளியது. கறிமூடி சரிந்து விழ, மீன் துண்டங்களைக் கொண்டு வெவ்வேறான திசைகளில் காகங்கள் பறக்கத்தொடங்கின.
‘ஐயோ கறிச்சட்டி வெளியால.”
என்று இருந்த நிலையிலிருந்து குலைந்து பதறித் துடித்துக் கொண்டு றோசலின் வெளியேவந்து கறிச்சட்டியைப்பார்த்தாள். ‘ஐயோ சனிக்காகம். முழுத்தையும் கொண்டு போயிட்டுது..! இது தான் நான் சொன்னனான்..!”
அவள் கணவனைப் பார்த்துச் சிணுங்கினாள்.
‘போகட்டும். தேறைக் கருவாட்டப் பொரிச்சுவிடு றோசலின்..!’
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்!
‘என்னை இனி நிம்மதியாச் சமைக்க விட்டிடுங்க..!”
அவள் காகத்திற்கு மீனைப் பறிகொடுத்த சோகத்தோடு, அரியுங்கருவி செறிக்கப்பட்ட பலகையைத் தூக்கிக்கொண்டு குசினிக்குள்ளே போனாள். குசினியில் அடுப்பங்கரைப் பக்கம் உமலில் கட்டிக்கிடந்த கருவாட்டைப் பொரித்தெடுப்பதற்கு வெளியே எடுத்து; அதற்காகவென்று வேண்டிய சமையலடுக்குகளை அவள் செய்யத் தொடங்கினாள்.
உயித்தீனுடைய இந்த வீடு சிறியதாயிருந்தாலும்; கடற்கரையில் இருந்த காரணத்தால் செளக்கியமாக அதிலிருந்து சீவிக்கக்கூடியதாய் அவர்களுக்கு இருந்தது. அவள் சமையலில் மும்முரமாய் அங்கு ஈடுபட்டிருக்க, அவன் அறையினுள் சரித்துப்போட்டுவிட்டுக்கிடந்த கயிற்றுக்கட்டிலை நிமிர்த்திவிட்டு - அதன்மேல் பாயை விரித்துப் போட்டுவிட்டுப் படுத்தான்.
நல்ல தூக்கம் வருமாப்போல அவனுக்கிருந்தது. என்றாலும் வந்த அந்த நித்திரைக்குக் குழப்பம்தான் போலிருந்தது அவனுக்கு பக்கத்து வீட்டு அந்தோனி குடித்துவிட்டு வந்து பெண்சாதியுடன் சப்தம் போட்டுக்கொண்டிருந்தான்.
'வீட்டில் நான் இருப்பதே இந்த ஓரிரு நாட்கள்தான்! அதிலும் எனக்கு நிம்மதியில்லை' - என்று அவனுக்குச் சலிப்பாயிருந்தது. எவ்வளவு நேரம்தான் காதை கைகளால் பொத்திவைத்திருக்க முடியும்? அவன் தொடங்கினால் பொழுது சாயமட்டும் அதை நிறுத்துவானா?

Page 71
124 கறுப்பு குரயறு அவன் கடலிலே தொழிலுக்கென்று வரும்போது தொழிலைப் பற்றித்தான் கதைப் பாண் ! அது தொழிலுக்குரிய பேச்சு! ஏதோ அதைக் கேட்டுக்கொண்டிருக்கலாம்!
ஆனால், இப்படி வெறிபோட்டுக்கொண்டுவந்து பேசுவதெல்லாம் காதால் கேட்கும்போது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது? எவ்வளவு எரிச்சல் வருகிறது?
யாரையெல்லாம் அவன் இழுத் துவைத்து இப் படி இப்போது பேசிக்கொண்டிருக்கிறான்?
ஊரிலுள்ளவர்களது குடும்பப் பிரச்சினையெல்லாவற்றையும், தன் வீட்டிலிருந்துகொண்டுதானே இவன் விளம்பரப்படுத்துகிற ஆள்!
காட்டம் மிகுந்த அவனது சொல் வீச்சுக்களை, அவனால் கேட்க முடியாதிருந்தது. வசைச் சொற்கள் விரவியிருக்கும் அந்தப் பேச்சுக்களையெல்லாம் சகிக்கமுடியாத பட்சத்தில், சரிந்து கிடந்து ஒரு காதை தலையணையில் பொத்திவைத்துக்கொண்டு கிடந்தான் அவன்
என்றாலும், அவன் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் அவனுக்கு மற்றக் காதிலே நாராசமாய்ப் பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
'உங்க உள்ள எல்லார்ற புறப்புவளப்பும் எனக்குத்தெரியும்! இங்க இருக்கிறவயள் ஆர்தான் யோக்கியம்? ஆர் ஆரோட உங்க உள்ளவயள் தொடுப்பெண்டு எனக்குத் தெரியாமலிருக்கே? இந்த ஒடுகாலிப்பரப்பரையள் - துப்புக் கெட்ட நாயஸ். எல்லார்ற காரியமும் என்னவிடக்கேவலந்தானே? (ஆ.காகாகா. என்றவாறு ஒரு சிரிப்பு) அதுக்குள்ள என்னப்பற்றி ஒருகதையள்.? நான் பிசிநாறியில்ல. நல்லா செலவழிப்பன் குடிப்பன்..! நான் தொழிலுக்குப்போறது வீட்டுக்குத்தின்னத்தான்! ஆனா பெரிய எடுப்புக்காட்டிற அவயளிண்ட மனிசிமாரை எனக்குத்தெரியாதே...? இந்தத்திரிகணிக் கொண்டைக்காறியள் மாப்புளமார் கடலில போனப்புறவு இங்க வேசையாடுறதும் எனக்குத்தெரியும் உவயளுக்கெல்லாம் காசுமெத்தி தொழில் பிடிபட்டு கெப்பர் மெத்திப்போச்சு. அதால ஆருக்கும் விடுறமாதிரி எனக்கும் இங்கவந்து புழுத்திப் பாக்கினம்..!”
அந்தோனி இப்படியெல்லாம் அங்கே இருந்து கொண்டு, அங்கு உள்ளவரையெல்லாம் வார்த்தைகளால் வைதுகொண்டிருக்க,
றோசலினும் குசினியிலிருந்துகொண்டு, தன் கணவனுக்குமட்டும் கேட்கக்கூடியவிதத்தில் அவனை ஏசத்தொடங்கினாள்.
‘இந்தாள் வாயத்திறந்தா புடையன்பாம்பு வாயத்திறந்தாப்போலத்தான்! என்ன மனிசன் இவர்? ஏனிந்தாள் இப்புடி ஊரெடுக்கக்கத்துது? குடிச்சால் இப்பிடியே நிதானம் போகும்! எங்கேயோ கெட்ட ரெத்தமும் கெட்ட செய்கையும் வந்து கலந்திருக்குப்போல கிடக்கு உந்த ஆளில...! அதாலதான்

শৈ৯২ நீரிஅருளானந்தம் 125 எல்லாரோடையும் இறாட்டுப் பிறாட்டு வைச்சுக்கொள்ளுறமாதிரிக் கத்துறார்! உப்புடி உலகமெல்லாத்தையும் வசைபாடுற ஆளோடதான் இவரும் போறார் தொழிலுக்கு உவரோட சிக்கல் முக்கல் வைச்சுக்கொண்டா எவ்வளவு கரைச்சல் வருமெண்டு, இன்னும் இவருக்குத்தெரியேல்ல!”
அவள் பேசிமுடிய உயித்தீன் சொன்னான்:
‘சும்மா இரு றோசலின்! அவன் கத்திப்போட்டுக் கிடப்பான். அவன் வெறிஅடிச்சா இப்பிடித்தான் ஆரோடையும் சொறிவான். வெறிமுறிய பேந்து வந்து தன்ரை திருவலைப்பல்லைக் காட்டுவான்! உதையெல்லாம் கண்டுங்காணாமல் ஒத்து மேவிச் சமாளிச்சு நடக்கிறதுதான் புத்தி.!” என்றுவிட்டு, கைகளை மடித்து பின்னால் பிரடிப்பக்கமாக விரல்களைக் கோர்த்து வைத்துக்கொண்டு, நிமிர்ந்து கிடந்தவாறே அவன் முகட்டு வளையைப்பார்த்தவண்ணம் நித்திரையாகிவிட்டான்.
நித்திரைச் சுகத்தை பல நாட்களாக அறியாத அவனுக்கு பின்னேரம் மட்டும் பிசிறில்லாத நல்ல தூக்கம் போனது. அதனால் பின்னேரமாய் எழுந்துதான் மதியச்சாப்பாட்டை அவனுக்குச்சாப்பிடக் கூடியதாயிருந்தது.
இரவும் அதே சோறுகறிதான்! சாப்பிட்டுவிட்டு சற்றுநேரம் முற்றத்தடியில் போய் நின்றதன்பிறகு வந்து அவன் பாயிலே படுத்துக்கொண்டான்.
கடலலையின் சப்தம் கேட்கிறது!
சமையலறையிலிருந்து அவள் அங்குவந்து சேரமட்டும், அவன் தவிப்போடு காத்திருந்தான். றோசலின் சமையலறையிலிருந்து வெளிக்கிட்டு, ஆடை திருத்திக்கொண்டு வந்து தளதளப்போடு அவனருகிலே போய் அந்தக் கோரைப்பாயில் உட்கார்ந்தாள். அவளது கரிய கூந்தல், தொடைக்குக் கீழே இருப்பது போதுமே அவனுக்குப் போதும் போதும் என்றதாய் உணர்ச்சிகளைத் தூண்டிவிட,
குளிர், வலி, பசி இவையனைத்தையும் அநுபவித்து - வலிய காற்றோடும் அலையோடும் போராடி - கடலே கதியென்று பல நாள் கிடந்தவன்; அவள் அருகில்வரவும் நெருக்கமாய் அவளை தன்னருகில் இழுத்துவைத்து, கட்டி அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பில் எழுந்த உஷ்ணமான உடல் உணர்ச்சியில், அலையைப்போல அவள் நெளிந்தாள்.
அவளுக்கும் அலைபாயும் பலவாறான ஆசைகள்!
அவளது அந்த சம்மத அசைவுடன், அவளை அவன்; ஒரு கைதேர்ந்த குயவன் ஒருவன் ஈரம் கலந்த பதமான மண்ணை கைகளினால் வனைவதுபோல, அவளது அங்கங்களை தன் கைகளினால் வனைய

Page 72
126 கறுப்பு குரயறு ஆரம்பித்தான். அவனது கைகள் பட்ட உணர்ச்சியில், அவளது மென்மை வாய்ந்த மார்பகங்கள் கற்றாழையின் கூர் போல ஆகிவிட்டன. அவளது நெஞ்சம் பசுமையாகி அடுத்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியது. இதனால் தனது சுவாசத்தை நுரையீரலிலே ஒரு கணம் அவள் நிறுத்திவைத்துக் கொண்டாள்.
அவனது குளிக்காத மேனியில் சுவாசித்த சுகந்த லயம் அவளுக்கு அலுக்கவேயில்லை! அவனது மேனியில் வீசும் கடல் மணம் இச்சிக்கத்தக்க இனிய வாசமாகத்தான் அவளுக்கு இருந்தது.
அவனது கைகளில், மார்பில், நாபியில் - அவனது நாசிக்கு எட்டிய இடமெங்கும் அதேவாசம்!
அது அவளது ஆழ்மனத்தின் அடுக்குகள் அனைத்திலும் புகுந்து குடியேறி வியாபித்து ஏதோ அசுரலாகிரியாய் அவளை ஆட்கொண்டது. அவனுக்கும் அவளுடைய வாடை உட்பட எல்லாம் இனிமையாகவே தோன்றின. இந்த மணம்தான் ஒருவர்க்கு ஒருவர் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. இருவரையும் சில நிமிடங்கள் வரை கட்டிப்போட்டு அது வைத்திருந்தது.
அவர்கள் இருவரிடையேயும் தொடர்ந்துவரும் உடல்உறவில் இந்த வாசனையும் சிரஞ்சீவியானதோ..? M
ஒரு பரமானந்தம் வாழ்க்கையின் சிகரமாக, ஏதோ ஒரு வேளையில் எற்படுகிறது. அதற்குமேல் வாழ்க்கை உயர்வடைய முடியாது. துடிதுடித்து தன்னை மறந்திருக்கும் நிலையிலேயே அந்தப்பரவசம் பிறக்கிறது.
இதை அன்று இரவினில்தான் அவர்கள் முதன்முதலாய் அநுபவித்தார்கள்.
காலையில் எழுந்ததும் அவர்கள் "நத்தார்’ பூசைக்கு ஆலயத்துக்குச் செல்லவேண்டியதாய் இருந்தது. அங்கே போய் கோயிலுக்குள் எல்லோருடனும் சேர்ந்து, மெதுவாக இவ்விருவரும் தோத்திரங்களை முணுமுணுத்தார்கள். மதியவேளையானதும் சம்மாட்டியாரின் வீட்டிற்கு, றோசலீனையும் அழைத்துக்கொண்டு போனான் உயித்தீன்.
அங்கே சம்மாட்டியார் வீட்டில் அவரிடம் வேலை செய்பவருக்கெல்லாம் விருந்தோம்பல் விமர்சையாக நடந்தது. அந்தோணி அங்கும் வந்து சம்மாட்டியார் வீட்டிலே குடித்தான். இரண்டாவது 'கிளாஸ்’ பருக ஆரம்பித்ததுமே அவனுக்கு மது வெறி தலைக்கேறிவிட்டது. அவன் வாய்ப்பூட்டுக் கழன்று விட்டது. அத்துடன் ஏதேதோ அங்கு வெறியில் அவன் அலட்டத் தொடங்கிவிட்டான். கவிழ்த்துப்போட்ட மொடாப்பானை போல பெரிய வயிறு அவனுக்கு. அந்த வயிறு நிரம்பவும் மட்டும் அவன் அடக்கமில்லாமல் குடித்தபடியே இருந்தான். பிறகு குரலை விரித்துப்

නම நீரிஅருளானந்தம்
பாட்டும் பாடினான்.
127
நத்தார் என்று எத்தனையோ பேர் சம்மாட்டியார் வீட்டில் வந்து, என்ன என்னவோவெல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். அவரது வீட்டிலே ‘சள,சள’வென்று பேச்சரவம் கேட்டபடியே இருந்தது.
அவரது வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் அதிகமாகவே அலை மோதத்தொடங்கின.
கொண்டை அவிழ்ந்து பாதியில் நிற்கிற தருவாயிலும், அதை சீராக முடிந்துகொள்ள முடியாத அளவில் நின்று; அவ்விடமெல்லாம் ஒடியாடித்திரிந்தபடி வந்தவரையெல்லாம் சம்மாட்டியாரின் மனைவி உபசரித்துக்கொண்டிருந்தாள்.
வெற்றிலையைப் போட்டுக்கொண்டு; தாம்பூலம் சிவந்த உதடுகளில் பிரகாசம்போல ஒரு புன்னகையை அவள் எந்நேரமும் வைத்திருந்தாள். அங்கு வந்திருந்த ஆண்களில் சிலருக்கு, அவளின் மேல் ஒரு கண்ணாகவுமிருந்தது. அவளது குதிரைத் தசையிலே அவர்களது கண்களின் கவனம் படர்ந்தது.
சம்மாட்டியாரும் வெற்றுடம்புடன் ஒரு சாரனைக் கட்டிக்கொண்டு, அங்கு உள்ள அலுவல்களைப்பார்க்க ஒடித்திரிந்தார். குடி என்று அப்படி ஒன்றும் இல்லாமைக்குள்ளும் அவரது கண் சிவப்பாயிருந்தது.
அன்று பின்னேரம் வரை அவரின் வீட்டிலேயே பொழுதைக் கழித்துவிட்டு, உயித்தீனும் மனைவியும் தங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
இரவு வந்தது!
விளக்கு ஒளிர்ந்தது!
அன்று இரவும் அவர்களுக்கு மகிழ்ச்சியான பொழுதுதான்!
நன்றாக இந்த இருநாளிரவிலும் - கண்கள் நித்திரைக்குக் கயர் கட்டியபொழுது நீட்டி நிமிர்ந்து படுத்து நித்திரை இன்பத்தையும் உயித்தீன் அநுபவித்து ஆறுதலடைந்தான்.
米米米
ஞாயிற்றுக்காலை ஒரு நல்ல நாளாகவிருந்து, அதற்குப் பிறகும் வருகின்ற நாள்களனைத்தையும் பிரகாசமாய் ஆக்கிவைக்கும் - என்று விடிந்தவுடன் உயித்தீனுக்கு ஒரு தெம்பு மனத்தில் ஏற்பட்டது.
விடியலின் செந்நிறத்தில் மனைவியிடம் தேநீரை வாங்கிக் குடித்துவிட்டு, உயித்தீன் கடற்கரைப்பக்கம் போனான்.
உற்சாகமுள்ள கடற்தொழிலில் நிலாவெளி கிராமம் துடித்துக்கொண்டிருக்கும்

Page 73
128 கறுப்பு குாயறு
காலம்தான் அது!
இந்தக் கடலை நம்பி அங்கு எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன. அனைவருக்கும் ஒரேபரபரப்பு!
எங்கும் வேலையோடு வேலைதான்!
கடல் அலைகள் இரைச்சலோடு மோதிக்கொண்டிருந்தது. அவன் மீன்வலைச் சுருணையையும் கயிற்றுப் புரியையும் சுமந்து கொண்டுவந்து படகில் போட அவனுடன் கூடவே படகில் போகின்றவனும் அவ்விடம் வந்து சேர்ந்துவிட்டான். இவர்கள் இருவரையும் போலவே மீன் பிடிக்கப்போவதற்காகச் சிலர் தங்கள் படகுகளில் பாய் விரித்து; துடுப்புகள் கொண்டுவந்து போட்டுத் தயார்செய்துகொண்டிருந்தார்கள்.
கடல் கண்ணாடி போல தெளிவாக அதி அற்புதமாக நீல வர்ணம் காட்டிற்று. அதிலே அலைகள் ஜோதிச் சரிகைகள் இழைத்துக் கொண்டிருந்தன. சூரியனின் பொன்னிறமான இளங்கிரணங்கள் கடலில் வீழ்ந்து தகதகத்துக்கொண்டிருந்தன.
ஆனாலும் வானமும் கடலும் இப்பொழுது காட்டிய வர்ணம் ஏனோ திருப்திகரமாக அவனுக்குப்படவில்லை! நீரோட்ட நிலைகளையும், அலைவரியின் ஆழத்தையும், பருவக்காற்றின் தன்மையையும் அறிந்து அவதானித்து தொழில் செய்கின்ற பழுத்த அநுபவம் வாய்ந்த தொழிலாளி அவன்.
சில நாட்களாக கடல் நீரும் வழமையாய் அலையடிக்கும் கரையிலிருந்து உள்ளிழுத்து விட்டிருந்தது; அதுவும் மூளைக்குள் தீச் சிதறலாயிருந்தது! ஆழ் கடலின் அடிப்பகுதிபோல அசையாதமனம் இவனுக்கிருந்தது. ஆனாலும், இன்று ஏனோ வெண்மணற்பரப்பிலிருந்து படகை தண்ணிருக்குள் தள்ளிச் செல்லும்போது.
அந்தக்கேள்வி - ஏன்? ஏன்? என்று அவனை மிகவும் ஆட்டி உலுக்கிற்று.
அலைவடிந்த கடலோரத்து நண்டுகள்போல அவனின் மனவெளியில் இந்த நினைவுகளெல்லாம் தலை நீட்டிக்கொண்டே இருந்தன. என்றாலும், தொழிலுக்குப் புறப்படும் போது இதையெல்லாம் அவன் தன் சக தொழிலாளியிடம் சொல்லி சரி பிழைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. கடல் தண்ணிரிலே படகு புறப்பட்டதும் கரையோரத்து நினைவுகளெல்லாம் இப் போது அவனிடமிருநீது விலகிவிட்டன. கை துடுப் பை

ప్త தீபஅேருளானந்தம் 129 வலித்துக்கொண்டிருக்க ஆரம்பித்ததும் மீன் பிடித்தலிலேயே கவனமெல்லாம் அவனுக்குத்திரும்பியிருந்தது.
அவர்கள் இருவரும் வெகு தொலைவுக்கப்பால்; நில வாசனை நீங்கிய கடல் நீரின்வாசம் மட்டுமான இடத்துக்குப் போய்விட்டார்கள். கடற்பரப்பில் கதிரொளி, பற்பல வர்ணமான கண்ணாடித் துண்டுகளைப்போல் பிரகாசித்தது. அங்கே கடற்பரப்பு தட்டையாய் சலனமற்று மிருந்தது. அந்த இடத்தில் நீரோட்டத்துக்கேற்ப படகு இலகுவாக மிதந்து சென்றது. காற்றில்லாத நேரத்தில் கடல்கூடத் தூங்குகிறது! இப்போது இந்தக்கடல் எவ்வளவு அழகாக கருணையுடன் இருக்கின்றது! என்று எண்ணிக்கொண்டு - மீன்கள் மின்னும் சாயை தண்ணீரில் பளபளப்பதையும் உயித்தீன் பார்த்தான். ஒரு மீன்! - அது ஒரு சுறா நிழல் போல படகைத்தாண்டியது. சாயாமல் சலிக்காமல் வாள்போன்றதன் செதிற் சிறகுகளால் கடலைக் கிழித்துக்கொண்டு மின்வேகத்தில் அது பாய்ந்தது. கடல் மீன்கள் யாவற்றையும் தின்னப்பழகிய முத்து வெள்ளை நிறமான அந்தச் சுறாமீனைப்பார்த்துவிட்டு, நீரோட்டத்தை கடையாலில் இருந்து கவனித்தான் உயித்தீன், பிறகு அணியத்திலிருந்த தன் நண்பனுடன் சேர்ந்து வலையை அவன் கடலில்விட்டான்.
அந்தநேரம் தான் பூமி அசைந்து கொடுப்பது போல் பெரியதொரு சப்தம் கேட்டது. அந்த இடிபோன்ற வெடிச் சப்தத்தில் கடல் பிராந்தியமே அதிர்ந்தது. அந்தச் சத்தத்தோடு கடல் எழும்பியது. அலை அடித்தது. எழும்பி விழும் கடலின் ஏற்றத்தில் அலைகளின் ஆட்டத்தில் அவர்கள் இருந்த படகே அலைக்கழிந்தது.
அவன் கடற்கரைப்பக்கமாக வெருகி நோக்கினான்! அங்கே அலை வெடித்தாற்போல தாறுமாறாக மோதிக்கொண்டு, மலைகளைப்போல எழும்பிக் கொண்டிருந்தது. அந்த அலை தன் ராட்சஷ நாக்கை வெளியே நீட்டி தலைதெறிக்க அட்டகாசம் செய்வதைக் கண்டதும் அவனது இதயம் ஒருகணம் துடிக்காமல் நின்றது.
‘ஐயோ. றோசலீன். றோசலீன்..!” அவனுக் கிருந்த ஒரேயொரு உறவை நினைத்துக் கொணி டு அந்தக்கடற்பரப்பிலே அவன் கத்தினான்.
கடற்கரையிலிருந்து வெடித்து அடித்த அலைகள் - எல்லாவற்றையும் பெயர்த்தடித்துக்கொண்டு, அந்தப் பக்கம் அதிகரித்துக்கொண்டே தூரம்

Page 74
130 கறுப்பு குாய2 தூரமாய்ப் போவது போல் அவனுக்குத்தெரிந்தது. கரை நெடுந்துரத்துக்கு நெடுந்துாரமாய் அங்கிருந்து பார்க்கையிலே தென்பட்டது. அதனால் அவனது சர்வாங்கமும் கடந்து ஆன்மாவும் நடுங்கியது.
உயித்தீனுடன் சேர்ந்து படகில் வந்தவனும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டான். உதடுகள் பிரிந்தபோதும் பேச்சு அவனிடம் எழவில்லை. அவனது மூச்சையே பறித்துவிட்டது போன்ற தோற்றத்தில் அவன் இருந்தான். அவர்கள் இருவரும் படகில் இருந்தவாறே அந்தரப்பட்டுக்கொண்டு, கரைக்குவந்து சேர வலுவாகப் பிரயத்தனப்பட்டார்கள்.
கைகள் வலிக்க வலிக்க இருவரும் துடுப்புகளை வலித்தார்கள். இன்னும் அலை தாறுமாறாக மோதிக்கொண்டே, கடற்கரையில் எழுவது அவர்களுக்குத்தெரிந்தது.
‘'வேணாம் இப்ப கரைக்குப் போவேணாம்.!’ என்று அவனோடு வந்தவன் பதறி உதறிக் கலக்கமுற சப்தம் போடுவதை, உயித்தீன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
y
துடுப்புவலிப்பதை அவன் நிறுத்தவில்லை! கரை காணாத ஒரு நிலையில் அவர்களது படகு கடலிலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இதுவேளை கடல்எது? கரைஎது? என்கிற வித்தியாசமே மறைந்து விட்டதுபோல் அவர்களுக்கு இருந்தது. கரையின் பக்கமாய் அரைத்தென்னை உயரத்திலே கடல்தண்ணிர் பரந்துபோய் நிற்கிறது.
அவனது இருப்பிடத்தையெல்லாம் அந்தப்படகு தாண்டிவிட்டதாக அவனது மனசுக்குள்ளே ஒரு கணிப்பு.
அதனால் எல்லாமே மாகடல் போல் அவனுக்குத்தெரிகிறது. அவன் றோசலின் என்று கத்திக்கொண்டு, இடையிலே கடல் தண்ணிரில் குதித்தான். அத்தருணம் பேரலை ஒன்று வந்து அவனை அடித்துக்கொண்டுபோய் ஒரு மரத்திலே மோதித்தள்ளியது. அந்த மகா அலைச் சுழற்சியின் தாக்கத்தினால், உடனே நினைவிழந்து விட்டான் அவன்.
திரும்பவும் அவனுக்கு நினைவு திரும்பியபோது எங்கே இருக்கின்றேன் என்றதொரு விளக்கமும் அவனுக்கில்லை. அவனது தேகத்தை மறைக்க உதவாதபடி ஆடைகள் நூலிழையாக மாறியிருந்தன.
அவனருகே - வாய் அருகே வழிந்த இரத்த வழியலுடன் தலை சாய்த்தபடி ஒரு பிரேதம் கிடந்தது. அருகில் ஒரு கல்லின் மேல் சிந்திக்கிடந்த இரத்தம், தரையில் இரத்த ரேகை வரைந்துகொண்டு வழிந்தது. அது இன்னார்

শ্ৰৈ৯২ நீ/அருளானந்தம் 131 என்று சரியாக அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்த நிலப்பரப்பெங்கும் கறுப்பு நிறத்தில் கடல் தண்ணீர் அள்ளிவீசிய உப்புச்சேறு. இவைகளைக் கண்டதும் அவன் இரத்தம் தலைக்குள்ளும், இதயத்துள்ளும் பொங்கிப்பாய்ந்தது. அவனது மனத்திலும் முகத்திலும் மரணபயம் வழிந்தது. அனல்வாரி இட்டது போல அவன் தலையை உதறிக்கொண்டான்.
‘றோசலின். றோசலின்..!” என்று பெரிதாகக் கத்திக்கொண்டு வெறிபிடித்தது மாதிரியான நிலையில், அவன் தன் வீட்டுப்பக்கமாய் ஓடினான்.
அங்கு அவனால் தன் வீட்டைக்கண்டுகொள்ள முடியவில்லை. அண்டை அயலிலுள்ள வீடுகளையும் அவனால் அங்கு காணமுடியவில்லை. அங்குள்ள யாவற்றையும் கடலலை இடித்துப் பாழாக்கிவிட்டதைப் போல் அவனுக்குத் தெரிந்தது. கடலலையால் சகலதும் அங்கே நசிப்பிக்கப்பட்டிருப்பதை அவன் பார்த்துத் திகைத்துவிட்டான்.
அந்த இடிபாடுகளிடையே இறந்துபோன மனிதரின் சடலங்கள்! அவன் ஒலம் வைத்தழுதுகொண்டு றோசலினை அவ்விடமெங்கும் ஒடியோடித் தேடினான்.
உலுங்கி நடுங்கி ஓய்ந்த மீன்கள் அந்தக் கடற்கரையிலெங்கும் அவன் ஒடியலையும் போது கால்களில் தட்டுப்பட்டன.
கடல் இப்போது தன்நிலை கொண்டுவிட்டது. பேரலை அடங்கிவிட்டது. நிதானமாக அது இருக்கிறது. மனிதர்களை வாரிச் சுருட்டிக்கொண்டு போய்ச் சுவைத்துவிட்டு இப்போது மருகுகிறது கடல்.
அலை வீசிக் களைத்த கடலில் உறவுகளைத்தேடி கடற்கரையில் கால்கள் நனைத்தபடி ஒலமிட்டுக்கொண்டு மக்கள் திரிகின்றனர். அவர்களிடமிருந்து அங்கிங்காக எழுந்த மரண ஒலங்கள் நூறாயிரம் சிதறல்களாய் உருக்குலைந்தன.
கடலின் ஒலத்தோடு இவர்களின் ஒலமும் சேர்ந்து அந்தக் கடற்கரையே மரண பூமியாய் இப்போது மாறிவிட்டது.
வானத்தில் முகில்கள் திரள் திரளாக கிளர்ந்து கொண்டிருந்தன. சோகை பீடித்த அந்த மேகங்கள் திசைமாறிச் செல்கின்றன.
அங்கு உயிர்தப்பிய ஒரு சிலர் தங்களுக்கும் அந்த நரகத்துக்கும் இடையே, கூடுமான இடைவெளியை உண்டாக்க விரும்பி அந்த இடத்தைவிட்டு தொலைவுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் அங்கே எடுத்த ஓட்டம் ‘அடம்போடை மலையின் அருகேதான் வந்தோய்ந்தது.
கடற்கரையில் இப்பொழுது மனித நடமாட்டமே இல்லை என்ற அளவுக்கு நிலைமை இப்போது வந்துவிட்டது. வாழும் தலைமுறை இல்லாமலாகிப்போன இடமாக, அந்த இடம் ஆகிவிட்டது. இங்கு அப்படி ஒருவர் வாழவே

Page 75
132 கறுப்பு குரயறு இல்லை என்பது போல, சுவடுதெரியாமல் எல்லாமே மறைந்தது போல இப்போது அந்த இடம் நாசப்பட்டுப்போய்க்கிடக்கிறது.
இங்குதான் என்ன ஆர்ப்பாட்டம் எத்தனை சனங்கள் சனஞ்சாதி இங்கு முன்பு இருந்தது! சிரிப்பும், கேலியும், பாட்டும், கூக்குரல்களும், அட்டகாசமும் என்று
எவ்வளவெல்லாம் இங்கு இருந்து கொண்டிருந்தன. அதுவெல்லாம் இல்லாமலாகிப்போய் தெளிவற்ற நாற்றக்காற்று வீசுகிறது.
எங்கும் ஒரே அமைதி!
இதனால் அந்த அமைதிக்குப் பயந்துபோய் அந்த இடத்தைவிட்டு அப்படி எங்கும் அவன் போய் விடவில்லை. அவனால் அந்த இடத்தைவிட்டு வேறு எங்குமே செல்ல முடியவில்லை.
அவனை உயிரிலும் மேலாய் நேசித்தவள் றோசலீன்! அவளை இழந்ததன் பிறகு தனக்கு வாழ்வே இனி இல்லை என்பது போலத்தான் அவன் ஆகிவிட்டான். அவளின் நினைவுகள் சீவனை வாட்ட அந்தக் கடற்கரையெங்கும் அவன் இரவும் பகலும் அலைந்துகொண்டே திரிகிறான். மீண்டும் அந்த இடம் பழையபடி மாறி வந்துவிடும் என்ற நினைப்பில் அங்கும் இங்கும் அவன் அலைந்தபடிதான் திரிகின்றான்.
நெருப்பில் வெந்து சூடுபட்டாலும் அதைத்தாங்கி இருந்து பின்பு பனை முளைக்கும். ஆனாலும் இந்தக் கடற்கரைப்பக்கமுள்ள பனைகளின் விசிறி ஒலைகள்கூட கடல் தண்ணிர்பட்டு வெந்துபோய்க் கிடக்கின்றன. அதனருகில் உள்ள செடிக்காடெல்லாம் அந்த நெருப்புத்தண்ணிரில் குளித்து கருகிச் செத்துப்போய்விட்டது.
பரிதாபமாய்க் காட்சியளிக்கும் அந்தப் பனைகளையும் உயித்தீன் பார்க்கிறான். அந்த இடத்திலே கடல் அலை தாக்கியும் பிழைத்துப்போய் செழிப்புடன் நின்று கொண்டிருக்கும் தாழை மரங்களையும் பார்த்து அவன் ஒரு காரணத்தோடு தன்பாட்டுக்குச் சிரிக்கிறான்.
வேலுTர்க் கிராமத்திலே கடற்கரைப் பக்கமாயுள்ள முருகன் கோயிலொன்றுதான்; அங்குள்ள இடிபாடுகளிடையே எஞ்சி நிற்கின்ற கட்டடமாக இப்போது இருக்கிறது. அந்த இடத்திலே தனிமையான கடற்கரையில் ஒதுங்கிய மரத்துண்டுபோல அவனும் ஒதுங்கிப்போய் இருக்கிறான். அந்தச் சிறிய கோயிலின் படியில் இருந்து முதுகைச் சுவரில் சாய்த்துக்கொண்டு எதையோ தேடுவது மாதிரி கூர்ந்த பார்வையுடன் அவன் அந்தக் கடலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். றோசலீனின் நினைவுகள்

> മ്യഗ്രസീമ 133 அவன் இதயத்தை கொதிக்கும் கூர்மையுடன் தாக்க வானத்தின் நீலத் தொலைவைப் பார்த்தபடி தன்னை அடக்கமாட்டாமல் அவன் விசும்புகிறான். அந்நேரம் உடைப்பெடுத்த மடைபோல கண்களில் அவனுக்கு வெள்ளமாய்க் கண்ணிர் வடிகிறது. நூலிழை திறந்திருக்கும் விழிகளில் தேங்கும் கண்ணிருடன் அவன் கடலலையைப் பார்க்கிறான். அந்த அலைகள் நீரில் மறைவதைப்பார்த்து நிலையில்லா மனித வாழ்வையும் அவன் சிந்திக்கிறான்.
அவ்விடங்களிலுள்ள எந்தவோரிடத்தும், சிறிது நேரமேனும் இருந்து ஆறுதலடைய அவனால் முடியாதிருக்கிறது. அந்தக் கடற்கரையின் எத்திசையிற் சென்றிருந்தாலும் அந்த ஒரு நினைவு மீண்டும் மனத்தில் எழ; அவன் தன் வீடு இருந்த பழைய இடத்தை குறிப்புப் பார்த்துக்கொண்டு நடக்கிறான். அங்கு றோசலீன் இருப்பாள்! அயலிலுள்ளவர்களெல்லாம் இனியும் அங்கு வாழ்வார்கள் என்ற நினைப்பில் அதைச் சுற்றிச் சுற்றியே அவன் அலைகிறான்.
உதிர்ந்த சருகு போல வறண்டு போயிருக்கும் அவனுக்குப்பலர் அங்கு ஆறுதல் கூறுவதற்கென்று வருகிறார்கள்.
அவன் அவைகளைக் கேட்க விருப்பின்றி ஆழ்ந்த துயரமான மெளனத்துடன் எட்டப்போய் விடுகின்றான்.
எவரும் தனக்கு ஆறுதல் கூறுவதை அவன் விரும்பவில்லை!
அவன் தனிமையிலே இருந்து கொண்டு யார் யாரிடமோவெல்லாம் கதைத்துக் கொண்டிருப்பதாகத்தான் அவ்விடங்களில் பலருக்கும் காணப்படுகின்றான். அதைப்பற்றிய விவரத்தை அறிந்துகொள்ள யாராவது அவனிடம் இதைப்பற்றி கேட்டால்;
‘அங்கே பிறந்து வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் தன்னைச் சூழ்ந்திருந்து ஏதவோ சொல்லிச் சொல்லி தன்னைத் தேற்றுகிறார்கள்' - என்று கூறிவிட்டு அவன் பொல பொலவென்று கண்ணிரைச் சிந்துகிறான். அவனது கண்களிலிருந்து வழிந்து நிலத்தில் சிந்துகிற கண்ணிர்த் துளிகளை அந்த இடத்து உவர்ப்புமணலும் தாகம் கொண்டதாயிருந்தது உடனுக்குடனே உறிஞ்சிக் குடித்தும் விடுகிறது.
(2005)
OOO

Page 76
ca/72/727 134 42
eldsay.so)c5
நல்லூர்க் கோயில் உதயகால மணியோசை, தெள்ளிய வானத்தினூடே ‘ங்.ங்.ங்ா” என்று கார்வையுடன் மிதந்து வந்தது. காலையில் அந்தக் காண்டா மணியின் சப்தம், ஊராரைத் துயிலினின்று எழுப்பி பூஜைக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தது.
ஆனாலும் இன்னும் விடியாத பொழுதுதான்! அவனுக்கும் அந்த நேரம் முழிப்புத் தட்டி விட்டது. படுத்திருந்த அகல வாங்கை விட்டு, எழுந்து உட்கார்ந்துவிட்டான். அங்கே ஆலயத்துக்குப் போவதற்கென்றல்ல. தன்வியாபாரத்தைப் பார்க்கப் போவதற்காக.
சந்தையில் மரக்கறி விற்கும் வியாபாரம்தான் இவனது தொழில், இப்போ. பத்து வருடமாகத்தான் இந்தத் தொழிலில் இவன் நுழைந்திருக்கின்றான். யுத்த சூழ்நிலையில் எத்தொழிலையாவது செய்து வயிற்றைக் கழுவவேண்டுமே. என்கிற நிலைப்பாட்டில்தான் இவனும் இங்குள்ள அநேகரைப்போல சீவியப்பாட்டைத் தள்ளுகிறவன்.
‘என்ன அப்பிடியே இருந்திட்டியள்..? எழும்பிப்போய் குளிச்சிட்டு வாங்கோ. நான் தேத்தண்ணியூத்த தண்ணியை அடுப்பிலை வைக்கிறன். y
அவனது மனைவியும் படுக்கையறையில் இருந்து வெளிக்கிட்டு, குசினிக்குப் போக கை விளக்குடன் நிற்கிறாள்.
'உந்த லாம்பையொருக்கா பத்தவையும் சுபா.!”
‘அந்த விளக்கு வேண்டாமுங்கோ. உது கணக்க எண்ணையைக் குடிக்கும். வால் டியூப் போத்தல் லாம்பைப் பத்தவைச்சு விடுறனே.”
“அதென்ன குருட்டுலாம்பு. அதின்ரை வெளிச்சம் எனக்குக் காணாது.” ‘என்ன செய்யிறது நேற்று மண்எண்ணை ஒரு போத்தல் முன்நூற்றைம்பது ரூவாயாம் விலை. அது தெரியுமோ உங்களுக்கு.?”
"அதென்னப்பா அப்பிடி. அதுக்குள்ளவாய் விலை ஏறிப்போன ஞாயம் என்ன..?”

pla 8 27്മീ ്യ മUഗ്രന്ധീ) 135
'கிளாலிப் பக்கம் பிரச்சனையாம். நாலு நாளா ‘போட்' ஓடாததிலதான் இங்க விலை கூடிப்போச்சு எண்டுகினம்..!”
சுபா பித்தளைக் கைவிளக்கை ஏற்றியபடி சொன்னாள். காற்று அறவே இல்லாததால் விளக்கின் சுடர் அசையாத பிம்பம் போல் நிமிர்ந்து நின்றது, அதன் உச்சியிலிருந்து நீண்ட புகைக் கோட்டின் நுனி மட்டும் சுருள் சுருளாகி உருண்டு கரைந்தது.
அந்த விளக்கு வெளிச்சத்தை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு.
6
அப்ப வேற சாமான்களுக்கும் இங்கினை விலை கூடியிருக்குமோ..?” என்று அவன் கேட்டான்.
‘விடுவாங்களே இங்கயுள்ள யாவாரியள். மாச் சீனியெல்லாம்தான் அதோட கூட விலையேறிப்போச்சு.”
‘ஒண்டு ரெண்டு நாளைக்குள்ளதானே உந்தப் பிரச்சினையெல்லாம் நடக்கும். அந்தப் பக்கம் புலிக்கும் ஆமிக்கும் நடக்கிற சண்டை ஓய கிளாலியால பழையபடி இங்க சாமான்கள் வரும்தானே..?”
“ஓம் வரும் வரும். ஆனா இவங்களெல்லாம் உடன விலையைக் குறைப்பாங்களெண்டோ. இங்கயுள்ள யாவாரியளெல்லாம் கிளாலிக் கடலில சமர் நடக் கிது போட் ஒணி டும் ஒடேல் லை சாமானிகள் வரேல்லையெண்டவுடன இங்கவாய் பொருளுகளுக்கு விலை ஏத்திப் போடுவாங்கள். ஆனாலும் கூட பேந்து வேணுமான சாமான்களெல்லாம் தாராளமாயிங்க வந்தாக்கூட விலையை உடன குறைக்காங்கள்.”
‘உதெல்லாம் தெரிஞ்ச விசயம் தானே அதைவிடும். எனக்கு நீர் பல்லுத்திட்ட வேப்பங்குச்சு முறிச்சு வைச்சனிரோ.?”
அவன் துவாயை எடுத்து கழுத்தில் சுற்றிப்போட்டுக்கொண்டான்.
‘அங்க அந்தத் திண்ணைச் சுவருக்கு மேல வைச்சிருக்கிறன் எடுங்கோ. வேப்ப மரத்தில அங்க என்ரை உயரத்துக்குக் கெட்டு வழிய கிடந்த குச்செல்லாம் முறிச்சுப்போட்டன். இனி கொக்கைதான் போட்டு கீழ கெட்டை வளைச்சு, இழுத்து முறிக்கவேணும். ச்சூ. நேரம் போகுது கதையோட நிண்டு கொண்டிருக்கிறியள் போய்க்குளியுங்கோவன். பேந்து கிடந்து அந்தரப் பட்டுக் கொண்டு என்னையும் கரைச்சல் பண்ணிக் கொண்டிராம, வேளைக்கு குளிச்சு முடிச்சிட்டு வெளிக்கிடுங்கோ. 穷》
அவள் சொல்லிவிட்டு குசினிப் பக்கம் போய் விட்டாள்.
வேப்பங்குச்சை கொடுப்புப் பற்களுக்கிடையில் வைத்து கடித்து நசித்தபடி அப்படியே வாய்க்குள்ளக வைத்துக்கொண்டு விரல்களால் குச்சை உருட்டி

Page 77
a/722/727 36
உருட்டி பற்களை இதமாகத் தீட்டக்கூடிய 'பிறஸ்’ அமைப்பாக அவன் அதை மாற்றி எடுத்தான்.
கசப்பைத் துப்பி விட்டு, பல்லைத் தீட்டிக் கொண்டு கக்கூசுக்குப் போனான். ஒரு வித அவஸ்தையோடு அசிங்கத்தைக் கழித்துவிட்டு வந்து, பிறகு குளித்து முடித்தான். துவாயால் உடலைத் துடைக்கும் பொழுது, தேகமே புடைத்தெடுத்த மாதிரி சுகமாக இருந்தது. கை கால் ஆட கொஞ்சம் சுவாசமும் நீளமாய் இழுபட, குளித்த ஈரக்குளிர்ச்சியோடு உடம்பில் எழுந்த வாசச் சவுக்கார வாசனையும் நுகரும்போது அவனுக்கு இதமாக இருந்தது. துவாயைக் கிணற்றுக் கொடியில் உதறி விரித்துப் போட்டுவிட்டு, சாரத்தை எடுத்து அவன் உடுத்திக்கொண்டான். வெளிவாசல் படியால் ஏறி காலைத் தட்டி உதறிவிட்டு விறாந்தையில் கால் வைக்க.
9.
‘டுமார். என்கிறதாய் பெரியதொரு ‘செல்’ சத்தம்.
அது குருநகர்ப் பக்கமாக விழுந்தது மாதிரித்தான் அவனுக்குக் கேட்டது. அவனுக்கு முன்னே சிறிது தூரம் தள்ளியதாய் சுபா தேநீருடன் நிற்கிறாள். கேட்ட சத்தத்திற்கு அவளுக்கு கைகாலொன்றும் நடுங்கவில்லை; குரல்தான் நடுங்குகிறது.
‘என்னங்கோ. காலேலையே துவங்கீட்டாங்கள். "
சொல்லி அவள் வாய் மூடவில்லை திரும்பவும் இவர்களது வீட்டுக்கு அருகில் விழுந்து வெடித்ததைப் போல இன்னமும் இரண்டு ‘செல்'களின் சத்தங்கள். செவிப்பறைகளை டமாரமாக்கி விடுமளவிற்கு அவர்களுக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணின.
இதனால் இருவர் மனமும் அச்சத்தில்; வலையில் சிக்கிய புறாவின் சிறகுகளாகப் படபடத்தன.
‘அப்பா இண்டைக்கு நீங்க யாவாரத்துக்குப் போறதை நிப்பாட்டி நிண்டு பாத்துப் போனா நல்லது போல கிடக்குங்கோ..?”
பயத்தால் மனம் பேதலித்துப்போய்ச் சொன்னாள் சுபா.
அப்படி அவள் சொல்லியதற்குப் பிறகு ஒரு சத்தமுமில்லாத அளவுக்கு அமைதி எங்கும் நிலவியது.
‘சுபா இண்டைக்கெப்பிடியும் கட்டாயமா நான் சந்தை யாவாரத்துக்குப் போயே ஆகவேணும்.”
சொல்லியபடி அவளிடம் தேநீர்க் கோப்பையை அவன் வாங்கிக் கொண்டான்.
‘விரத நாளிலதானே மரக்கறிச் சந்தையிலை நல்லாயாவாரம் போகும்.

শুৈ১২ நீ/அருணானந்தம் 137
அதுகும் ஆடி அமாவாசை விரதநாளெண்டா சனம் மரக்கறிக்கெண்டு சந்தைக்க வந்து அடிதடிப்பட்டுக் கொண்டு நிக்குங்கள். இந்த நாளிலையா வீட்ட நான் நிண்டா சரிப்படுமே..?”
தன்னுடைய வியாபாரத்தைப் பற்றி ஒரு விளக்கம் அவளுக்குக் கொடுத்து விட்டு, தேநீரை அவன் குடித்தான். பிறகு கோப்பையை அவளிடத்தில் கொடுக்கும் போது, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்திலிருந்து ஒரு குயில் கூவியது. இன்னொரு குயில், அதற்குப் பிரதி தொனித்தது.
குயில்களது குரல்களைக் கேட்க, மனத்துக்கும் கொஞ்சம் அவனுக்கு ஆறுதல். இதுபோன்ற நேரங்களில் மனதை ஆசுவாசப்படுத்துவதற்கு, இயற்கையும் சேர்ந்து மனிதனுக்கு ஒத்துழைப்பதாய்த்தான் இருக்கிறது, என்கிறதாய் அவன் எண்ணினான்.
அவன் வேட்டியை கலைத்து இடுப்பில் வரிந்தான். வேட்டியின் அந்தலை இடுப்பில் இழுத்துச் செருகிவிட்டு, சட்டையை எடுத்து மேலில் அணிந்து கொண்டான்.
‘ஆவரங்காலில போய் நிண்டு கொஞ்சம் வடிவாய் அங்காலிப்பக்கம் பாத்துப் போங்கோ. இண்டைக்கு அச்சுவேலிப்பக்கமாய் வருறதுக்கு ஆமி வெளிக்கிட்டாலும் வெளிக்கிடும். காலேலை இப்பிடி பலாலிப் பக்கம் காம்பிலயிருந்து செல்குத்துறாங்கள். அங்காலிப் பக்கமா வெளிக்கிடுகிறதுக்குப் போலத்தான் கிடக்கு. '' ‘உதையெல்லாம் பாத்துப் பயந்து கொண்டு வீட்டுக்கயிருந்தா சீவியம் எங்களுக்கு நடக்காது சுபா. நீர் இப்ப இந்த விடியப்புற நேர இருட்டுக்கை உவடத்திலை ஒருக்காப்போய் அங்க றோட்டிலையொருக்கால் நிண்டு பாரும். சனம் அது அதுகள் தங்கடை தங்கடை வேலையளைப் பாக்க இப்ப போய்க் கொண்டுதான் இருக்குங்கள். ஆனா ஒண்டு. நிலமை மோசமாப் போய் காலையிலை பொம்மர் வந்து இங்காலைப்பக்கம் சுத்திச்செண்டால் பிள்ளையளை நீர் பள்ளிக்கூடத்துக்கு விடாம மறிச்சுப் போடும். அதுகள் மூண்டும் சின்னக் குழந்தையள், பள்ளிக்கூடத்தில பேந்து பயப்பிட்டுக் கொண்டு தவிச்சுப் போகுங்கள். அதெல்லாம் பிறகு அங்காலிப் பக்கம் ஒடித்திரிய உமக்கும் கரைச்சல். விடாதயுமென்ன. ייף
‘ஓமோம். நான் எல்லாம் பாத்துத்தான் பிள்ளையளைப் பள்ளிக்கூடம் அனுப்புவன். இன்னுமொண்டு. நீங்களும் இங்க நேரத்துக்கு வந்திட வேணும். நான் இங்க விரதத்துக்கு ஆனவாவிலை சமைச்சு வைச்சு எல்லா அடுக்குகளையும் முடிச்சிடுவன். நீங்க வந்தாப்பிறகுதான் ஆக வேண்டியதையெல்லாம் செய்யவேணும். 99
‘‘அது தெரியாமலிருக்கே. இணி டைக்கு ஆடி அமாவாசை விரதமெண்டெல்லாம் எனக்கு ஞாபகமிருக்குது. வழமையாய் நாங்க

Page 78
a/72/7ay 138
செய்யிறதுகளையெல்லாம் பிசகாமல் செய்யத்தானே வேணும். 3606T60)Lu சமையலுக்கு ஆகவேண்டிய சாமானெல்லாம் நேற்றைக்கே நான் கொண்டு வந்து தந்தனானி தானே....... பாவக் காயப் , கத்தரிக் காயப் , பயித்தங்காயிலையிருந்து எல்லாமரக்கறிகளும் குசினிக்க கிடக்கு. பேந்தென்ன உந்தக் காத்தோட்டிக்காய்தான் இனிமேல வேணுமான தொண்டு. காலேலைதான் அங்க காத்தோட்டிக்காய் சந்தையிக்கை விற்க வரும். அதை நான் வாங்கி மத்தியானமளவில இங்க வரேக்கை உம் மட்ட வாயப் கொணி டந் தருவன் சரிதானே..... எதுக் கும் பங்கரையுமொருக்கால் உள்ளால இறங்கிப்போய்ப் பாத்து வையும். உள்ளுக்குப் போகேக்க கவனம்.! பாம்பு, பூச்சி கிடந்தாலும் கிடக்கும். அவதானமாவிளக்கோடை போம். நாலைஞ்சு நாளாகுது அதைப்பாத்துத் துப்பரவாக்கவுமில்லை.”
'இல்லேல்லை. நேற்றுத்தான் பின்னேரம் நான் உள்ள இறங்கி வடிவா கூட்டித் துப்பரவாக்கிவிட்டனான். அதுகும் நாங்கள் சீவிக்கிற வீடுமாதிரித்தானே இப்ப போட்டுது அதையும் இடைக்கிடை போய்ப் பாக்கத்தானே வேணும்.”
'&b....... அப்ப சரி. கவனம் சுபா!. பொம்பர் செல்லுகளுக்குக் கவனமாயிருங்கோ. 93
‘எங்களுக்கென்ன! ஏதுமெண்டால் போய் நாங்கள் பங்கருக்க இருப்பம். நீங்கள்தான் கவனமாய்ப் போய் வாங்கோ.”
"நானென்ன. நெடுகலும்தானே உதுக்கால போய் வாறனான். ஏதோ கடவுள் சித்தம்தான் எல்லாம். அதுகிடக்க. பக்கத்து வீட்டில இருக்கிற அவயள் ரெண்டு கிழமைக்கு முன்னாலை வாங்கிக் கொண்டு போன கை மாத்துக் காசைக் கொண்டு வந்து தந்திட்டினமோ. ၇••
'ஆர் சிவம் அண்ணையின்ரை பெஞ்சாதி பொம்மரையோ, அல்லாட்டி குரிசுமுத்துவின்ரை மனுசி சகடையையோ. ஆரைக் காசு தந்ததெண்டு நீங்க கேக்கிறியள்?”
சுபா இப்படிச் சொல்லவும் அவனுக்கு இந்தப் பிரச்சினையான வேளையிலும் புன்சிரிப்பு வந்து விட்டது.
ஒரு கணம் சிவம் அண்ணனின் பெண்சாதியை மனக்கண்ணின் முன்னால் நிறுத்திப் பார்த்தான்.
அவளுக்கு யார் அந்தப் பட்டப்பெயரைச் சூட்டி விட்டார்களோ தெரியவில்லை. அவள் நடக்கும் போது இரண்டு கைகளையும் அகலவிரித்துக்கொண்டு நெஞ்சை நேராக முன்னால் நிமிர்த்திக் கொண்டு தான் நடப்பாள். சும்மா இருக்கும் போதே முறைத்துக் கொண்டும் விறைத்துக்கொண்டும்தான் முகத்தை அவள் வைத்திருப்பாள்.

நீபஅேருணானந்தம் 139 மற்றதாக சகடையென்று சுபா ஒருத்தியைச் சொன்னாளே - அவள்தான் குரிசுமுத்துவின் மனைவி; அவளுக்குத் தாட்டிகமான உடம்பு - தனபாரங்களும் அப்படி!
இப்படி கதைபேச்சுகள், கற்பனைகள் எல்லாம் இங்கிருப்பவர்களிடம் எந்தவிதமாகவெல்லாம் மாறிப் போய் விட்டிருக்கின்றன. யுத்தகால சூழலிலேயே ஊறிவிட்டதானதொரு வாழ்க்கையாகிவிட்டதே எங்களது வாழ்க்கை' - என்று அவன் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டான்.
ஒரு கணம் இந்தக் கவலை அவன் மனத்தில் வளர்ந்து எழுந்து - ‘சகடை” என்கின்ற அந்தத் தாட்டிகமான சுருட்டு வடிவான அகன்ற யுத்த விமானத்தை பிறகு நினைத்துக் கொண்டது. யாழ் கோட்டைத் தாக்குதலில், அறம் புறமாகவெல்லாம் பீப்பாய்க்குண்டுகளை மக்களின் குடியிருப்புகளிடத்தில் வீசி எரித்தொழித்த சம்பவங்கள், அவனுக்குள் கவலைப் பின்னல்களாய் நினைவில் சுழன்றன. வான்பரப்பில் தட்டைப் பகுதிகள் வெயிலொளியில் பளிச்சிட எஞ்சினின் கடகடப்புச் சத்தத்தோடு ஒரு பக்கவளைவாய் வந்து அது போட்ட குண்டுகளை நினைக்க அவனது உள்ளம் . சுரமண்டல நரம்புகள் போல் துடிக்கிறது.
9
‘அநியாயம் பிடிச்ச வேலையெல்லாம் செய்யிறாங்கள். அந்த உணர்ச்சியில் உந்தப்பட்டு, தன் பாட்டுக்கு அவர்களை சுடு வார்த்தைகளால் வைதான்.
é é
என்ன. அநியாயமெண்டிறியள்.?”
'இல்லை. இந்த சண்டை வந்து சனம்படுறபாடுகளையும் இழப்புகளையும் நெச்சன்.?”
‘அதுதானே..! எப்பதான் இந்தச் சண்டையும் சச்சரவும் முடியுமோ..? முருகா. எவ்வளவு சனத்தின்ரை உயிர் அநியாயமாப் போச்சு. சொத்துப் பத்துக்களெண்டு எவ்வளவெல்லாம் நாசமாப் போச்சு. அதுக்குள்ள இங்கேரும் அப்பா. என்ன அந்தக் கதையை நீங்க இடையிலை விட்டிட்டியள். சகடையின்ரையும் பொம்மரிண்டையும் காசைப் பற்றிக் கேட்டியள் மறந்திட்டியளே..?”
is é
9. . . . . . . அதுதான். என்னவாம் சகடையும் பொம்பரும்.?”
‘ரெண்டு நாளைக்குள்ளவாய்த் தந்திடுவோம் எண்டுதான், கனகசபையின்ரை எங்கடை உந்தச் சந்திக்குப் பக்கத்துக் கடைக்கு சாமான் வாங்க வரேக்க என்ரை கண்ணில சந்திச்சாப்போல அவயள் சொன்னவயள். வேண்ட வக்கில்லாமலெண்டில்ல அதுகள் கொள்வனவு கொடுப்பனவுகளில கறாரானதுகள். சொன்ன மாதிரித் தந்திடுங்கள். பாவங்கள் கஸ்டம் கொஞ்சம் அதுகளுக்கு இத்தறிதிக்கு. அதுதான் காசுதரக் கொஞ்சம் பிந்துதுகள்.”

Page 79
ava/727 140
‘' சரிசரி. அப்பிடி அந்தக் காசுகள் உம்மடை கைக்கு வந்தா பிள்ளையளிண்டை அந்தப் பள்ளிக்கூடத்துக் காசு கட்ட வேணுமெல்லா அதைக்குடுத்திடுமென்ன. அது சரி உந்தச் செல்லடிக்கும் கூட படுக்கையால எழும்பேலைப் போலக் கிடக்கு பிள்ளையஸ். உள்ளறையில அசும்பாமலெல்லாம் படுத்துக்கிடக்குதுகள். ၇••
'பிறந்ததிலயிருந்து உந்தச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு அதுகளுக்கும் நல்லாயிப்பப் பழகிப் போச்சு. பூமி நடுங்கிற சத்தம் கேட்டாலும் முழிச்சுப் போட்டு பேந்து கால் கவட்டைக்குள்ள கையை விட்டுக் கொண்டு திரும்பிப் படுத்து நித்திரையாகிடுங்கள்.”
‘சரி சுபா.! நான் வெளிக்கிடப் போறன் நேரமாகுது.
y
அவன் வீட்டு வாசற்படியால் இறங்கி, வீட்டு முற்றத்தடிக்கு வந்தான். சயிக்கிள் ஸ்ராண்டை காலால் தட்டிவிட்டு, சிறிது தூரம் சயிக்கிளை உருட்டிவிட்டு பின்பு நிறுத்தியபடி ஒரு கையால் பின் சில்லு ரயரைப் பிடித்து, பெருவிரலால் அழுத்திக் கொண்டு காற்றின் அளவைக் கவனித்தான்.
‘சுபா. பம்மைக் கொண்டாரும். காத்துக்குறைவாயிருக்கு.?”
அவள் உடனே வீட்டின் உள்ளே போய், காற்றடிக்கும் பம்மை எடுத்துக்கொண்டு வந்தாள். கிளிப்பை "வால்வ்’ நுனியில் பொருத்தி விட்டு, ஒரு பக்கம் சரிந்து உடல்பாரத்தை வைத்துக்கொண்டு, அவன் காற்றுப்பம்மால் சயிக்கிள் டியூப்புக்குக் காற்றடித்தான்.
அவன் காற்றடிக்கும் போது தான், சுபாவுக்கு அந்த விஷயத்தைப் பற்றிய ஞாபகம் வந்தது.
“இங்கேருங்கோ உங்களுக்கொண்டு சொல்ல மறந்திட்டன்.
99.
’கிளிப்பை “வால்வ்விலிருந்து கழற்றிக் கொண்டு. ‘என்ன..?” என்று கேட்டான் அவன்!
‘பக்கத்து வீட்டு சதனா அக்கா குடும்பத்தோட கொழும்புக்குப் போயினமாம். அதால அவயள் வளக்கிற நாயை எங்களிட்டவா வளக்கத் தந்திட்டுப் போறாவாம். நல்ல சாதி நாய் அது. அதை நாங்கள் வாங்குவமே. ? எங்களுக்கெண்டு காசில்லாம சும்மாதான் அவதருறா.”
ஏற்கனவே அகலமாயிருக்கும் தன் கண்களை, மேலும் அகலமாக மலர்த்திக் கொண்டு அவள் கேட்டாள்.
é é
ம்.ஓம் ஓம். அது நல்ல நாய்தான் கணக்கான குட்டியாவுமிருக்கிறதிலை எங்களோட கெதியா அணைஞ்சு பழகீடும்தான். எண்டாலும் உங்க றோட்டுவழியயெல்லாம் விசர் நாய்கள்தான் ஒடித்திரிஞ்சு ஆக்களைக்

> நீரிஅருளானந்தம் 141 கடிச்சுக்கொண்டு திரியுது. விசர்நாய்கடிச்சா ஊசி போட்டுக் கொள்ளக்கூட பெரியாஸ்பத்திரியிலை மருந்தில்லையாம். அதால நாய் வளக்கிற விஷயத்திலை கவனமாயிருக்க வேணும். வீட்டை விட்டு வெளியால போகாம நாயை கவனமா வைச்சிருக்க வேணும் சுபா.!”
“அதான். நாயின்ரை அந்தப் பெரிய வலையடிச்ச கூட்டைத் தாறனெண்டுறா பேந்தென்ன கரைச்சல்?”
‘ஓ அப்ப அது நல்லதெல்லோ!. எப்பிடியும் நாயோட கூட கூட்டையும் சேர்த்து கட்டாயம் வாங்கும்.
என்னவும் காசுகீசு அதுக்காகவெண்டு குடுக்கவேணுமோ அவவுக்கு?”
''சாய் அப்படியில்லை!. இவ்வளவு நாளும் சகோதரங்கள் மாதிரி அன்பாப் பிழங்கீட்டு, முகத்துக்கு முகமாப்பாத்து அப்பிடியேதும் கதைச்சாலே அவ. (Gh. . . . . . பேந்து கொதிப்பா..! அவ ஒண்டும் வேண்டாமெண்டு முதலேயே சொல்லிட்டாவுங்கோ. அதுக்குப் பிறகு இப்பிடியெல்லாம் நாங்கள் எடுப்பாக் கதைச்சா. சீ அது சரியில்லைத்தானே?”
6
9. . . . . . . . . உதுகும் சரிதான். உண்ணாணைச் சொன்னாலென்ன, நல்ல மனம் அதுகளுக்கென்ன. பாவம்! அதுகள் எங்களை மாதிரி இங்க இருந்து கொண்டு கஸ்டப்படாம அதுகளாவது கொழும்பு வழிய போய்ச் சேந்து நிம்மதியாயிருக்கட்டும்.”
‘சும்மா போங்கோ. அங்கபோயும் என்னெண்டப்பா நிம்மதியாயிருக்கிறது சொல்லுங்கோ..? - கொழும்பிலை இருக்கிறதெண்டால் பொலீசில போய்ப் போனவுட பதிய வேணுமாம். போட்டோக்களோட உள்ள அந்தப் பதிவைக் கொண்டுதான் எங்கயும் திரிய வேணும். அதுமட்டுமே எந்த நேரமெண்டில்லை தமிழன்ரை வீடெண்டா அங்க வந்து பொலிஸ் செக்பண்ணுமாம். இரவெண்டாலும் விசாரணையெண்டு பொம்பிளையளையும் ஜீப்வழிய ஏத்திக்கொண்டு போயிடுவாங்களாம். அப்பிடியெண்டெல்லாம்தானே இங்க சனம் சொல்லுதுகள்.”
‘சரிதான்.! உந்தப் புதினமெல்லாம் நீர் நல்லாத்தான் தெரிஞ்சு வைச்சிருக்கிறீர்!. அவயஞக்கு அங்க போய்ச் சீவிக்க வழி இருக்கு போகினம். எங்களுக்கு ஆர் கொழும்பிலை இருக்கினம்.? ஆருண்ட உதவி எங்களுக்கிருக்கெண்டு கொழும்புக்கு நாங்க போறது. வெளிநாட்டில ஆரும் இருக்கினமே எங்களுக்கு உதவி செய்ய.? ஏதோ இருந்தாலும் செத்தாலும் நாங்கள் பிறந்த இந்த இடம் மட்டும்தானே எங்களுக்குச் சொந்தமாயிருக்கு.?”
‘அப்பிடியெண்டும் சொல்ல முடியாதுங்கோ. உங்களுக்குச் சொந்தக்காரர் கொழும்பிலை இல்லாட்டியும் எனக்கிருக்கினம்தானே..?”

Page 80
ta/72/727 142
‘ஆரைச் சொல்லுறீர்..?”
‘எங்கடை பெரியம்மாவின்ரை பிள்ளையஸ்.!”
‘ “ կffffffff....... உகுஉழுக்க்” வாளியில் அமிழும் போது குடகுடக்கும் செம்புபோல அழுத்தல் சிரிப்பு அவனுக்கு வந்துவிட்டது.
‘என்ன அப்பிடிச் சிரிக்கிறியள், அவயள் உதவி செய்வினம்தான்! எண்டாலும், ஏன் ஆரிண்ட காலையும் நாங்கள் போய்ப் பிடிப்பான். உந்தக் கொழும்பு யோசனை எனக் கொண்டும் வாறதில் ல. சதனா அக்கா போறாவெண்டத்தான் எனக்குக் கொஞ்சம் உள்ளுக்க மனவருத்தமா வந்திச்சு. நாங்களும் அவயளை மாதிரி அங்கின போய்ச் சேந்திட்டா என்ன எண்டமாதிரி யோசனையெல்லாம் போச்சுது. உங்க உந்தச் செல்லடிக்குப் பயந்து கொண்டுதான் அதுகளும் தங்கடை உந்தப் பெரிய வீடுகளையும் விட்டுட்டுப் போகுதுகள். சதனா அக்காவின்ரை தாய்க்கும் நெஞ்சுவருத்தம். செல்லடிச் சத்தம் கேட்டவுடனே படக்குப் படக்கெண்டு நெஞ்சடிக்குமாம் அவவுக்கு. அவவுக்காகத்தான் அவயளெல்லாம் இப்ப
அங்க முக்கியமாப் போகினம் போலக் கிடக்கு. அந்த மனுசிக்கு மற்றப்பிள்ளையளெல்லாம் வெளிநாடுகளில இருந்து கொண்டு காசனுப்புதுகள் தாயைக் கவனிக்கச் சொல்லி. அதால சதனா
அக்காவுக்கும் காசுப்பிரச்சனையெண்டு ஒரு கஸ்ரமுமில்லை. அவவுக்கென்ன இப்பிடி சகோதரங்களின்ரை உதவியள் இருக்கேக்கை கொழும்பிலை போய் வடிவாய் இருக்கலாம்தானே.”
é é
LD ......... போற ஆக்கள் போகட்டும். இருக்கிற நாங்கள் இருப்பம்!” - இருட்டுக்குள் அவன் சிரித்தான். அவள் நிலத்தில் கிடந்த காற்றடிக்கும் பம்மை கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.
“இங்கேருங்கோ இன்னுமொண்டுங்கோ.
99.
G. G.
என்ன..?”
‘எங்கடை அந்தத் தட்டார் கலட்டிக் காணிக்கையுள்ள பனையளை . ஒலை வெட்ட ஆரோ கேட்டதெண்டு சொன்னியள்.?”
‘ஓமோம். சின்னப்பு வாத்தியார் கேக்கிறார் எண்டு வடிவேலன் வந்து கேட்டவன்தான்..!”
‘அப்ப குடுங்களன். அம்பது பனையளையும் குடுத்தா அடிச்சமாதிரி
நல்ல காசு வருமெல்லே. ரெண்டு வருசமாகுதுதானே அந்தப் பனைவழிய ஒலையள் வெட்டி. இந்த முறைகுடுக்கலாம் தானே..?”
ଢ଼lb.• குடுக்கலாம்தான். பதினைஞ்சு ரூவாய்தான் பனையொண்டுக்கு சின்னப்பு வாத்தியார் தருவாரெண்டு இவன் சொல்லுறான்.

ඊඛ. நீபஅேருணானந்தம் 143 அவனிலயெண்டா அப்பிடிக்களவெண்டும் இல்ல. பொய் சொல்லான் அவன். எங்கடை பனை தென்னையளையும் அவன்தானே எடுத்துக் கள்ளுச் சீவிறவன். இண்டைக்கு அவன் சீவிற மரங்களுக்கு பாளை தட்டு முறை எண்டவன். அங்காலைப்பக்கம் சந்தைக்கு அவன் வாறானோ தெரியாது. அப்பிடி அவன் அங்கவந்தா. காசையும் நான் வாங்கினா. கொண்டந்து உம்மட்டத் தாறன்.”
y
‘இன்னொண்டுங்கோ.
‘என்ன நேரம் போகுதெல்லே. கெதியா சொல்லும்?”
‘யாவாரம் முடியவிட்டு வீட்டுப்பக்கமும் ஒருக்காப்போய் நீங்க பாத்திட்டு வாங்கோ. இப்ப அங்கின சரியான கள்ளராம் ஒட்டையும் கழட்டி எடுக்கிறாங்களாம். அதால வீட்டைச் சுத்தியும் ஒருக்காபாத்திட்டு வாங்கோ. நானும் அடுத்தகிழமை உங்களோட சயிக்கிலில வாறன். வீட்டையும் அப்பிடியே பாழடைய விடாம இடைக்கிடை துப்பரவாக்கி வைக்கவேணும். இன்னொண்டப்பா..?”
‘என்னப்பா நீர்..!
“இது மட்டும்தான் கேளுங்களன் பொறுமையாய். ! வீட்டு மாமரம் நல்லகாயோட கிடக்கெண்டியள். மரத்தோட அப்பிடியே அதை இப்ப தீர்த்துக் குடுத்திடுங்கோவென்ன.”
“அதை நான் பேந்து குடுப்பன். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். இப்பதானே காய்ப்புத்தொடக்கம், காய்முத்தட்டும் பிறகு அதைப் பாப்பம். அப்ப சுபா நான் வெளிக்கிடப் போறன். கேற்றைப் பூட்டிவிடும். கவனமாய் இருங்கோ. அப்ப நான் போயிற்று வாறன்.”
‘போயிற்று வாருங்கோ!’
அவள் இதைமட்டும் நல்ல அழுத்தம் திருத்தமாக அவனிடம் சொன்னாள் - நல்லூரானை நன்றாய் நெஞ்சில் நினைத்துக் கொண்டு.
அவன் படலையைத் திறந்து கொண்டு வெளியே சயிக்கிளை சிறிது தூரம் உருட்டிக் கொண்டு நடந்தான். பிறகு சயிக்கிளை நிறுத்தி, காலை பாரின் மேல் போட்டு, பெடலில் பாதத்தை வைத்தான். அப்படியே குண்டியை சீற்றில் வைத்தபடி சயிக்கிளை நகரவிடும்போது, அடுத்த வீட்டுச் சேவல் இறக்கைகளைத் தட்டி சடசடத்துக் கூவியது. அவன் ‘குருசேவ் வீதியால் திரும்பி ‘டெம்பிள் வீதி வழியாக சயிக்கிளைவிட்டான். காலையில் தூசி இல்லாத காற்று சுகமாக வீசியது. இருட்டு இன்னும் அடர்த்தி குறையாமலிருந்தது. போய்வரப்பழகிய பாதை என்பதால் பாதைக்குப் பரிச்சயப்பட்ட கண் பார்வை. அந்த வீதியில் உள்ள வேப்பமரங்கள் சிறகுவிரித்ததைப் போல கீழே இருட்டை இன்னும் அதிகரித்திருந்தன.

Page 81
af2/727
144 காலையிலே அந்த இடத்தைப் பார்த்தால் தளதளவென்று தளிர்களும் கிளைகளுமாய் கண்நிறைய வேப்பமரம். கண்ணுக்குக் குளிர்ச்சியாகத்
தெரிகின்ற கனிவான பசுமை மரம் - இப்போது கனத்த இருட்டு அப்பினாப் போல் இருட்டுப் பிழம்பாயிருந்தது.
ஆனாலும் தயக்கமில்லாமல் அவன் சயிக்கிளை ஒடிக்கொண்டிருந்தான். சற்பிரசாத நாதர் கோயில் வீதியின் நாற்சந்தியை அண்மிக்கவும், இருளில் மறைந்துகொண்டிருந்த ஒரு சில நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து குரைத்துக் கொண்டு அவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. நாய்களின் வழக்கப்படி, அந்த ஊரே அலறிப்போகிற மாதிரிக் குரைத்தன. உடனே தற்பாதுகாப்புக்கு கால்களிரண்டையும் தூக்கி சயிக்கிள் போக் கிலே வைத்துக்கொண்டு சிறிது தூரம் கடந்தான். நாய்கள் துரத்தி ஓய்ந்து போய் நிற்க, காலை இறக்கி பெடலில் திரும்பவும் வைத்துக் கொண்டான். அந்த வீதியால் சயிக்கிளில்போகும் அவனைப் பார்த்துக் கொண்டு வீட்டுப் படலையடியில், உறக்கச் சடைவோடு நின்ற பெரியவரொருவர், நாய்களைத் திட்டிக் கொண்டிருந்தார்.
‘சனிப்பிடிச்ச நாயஸ். ராவில கள்ளர் திரியிற நேரம் நல்லா நித்திரை கொண்டு போட்டு பகலில றோட்டில போறவாற மனுசரைத் துரத்திக்
99.
கொண்டு பிரளி பண்ணுதுகள். −
மூப்பினால் ஏற்பட்ட இளைப்பு அவர் குரலில்.
சயிக்கிள் எட்டப் போய் விட்டாலும், அவர் சொன்னது இவனது காதிலும் விழுந்தது. அவனது கால் பாதங்கள் பெடலை அழுந்த மிதித்து, சயிக்கிளின் ஒட்ட விசையை மேலும் அதிகரித்தது. அவனது நினைவு முழுக்கவும் இப்போது சந்தை வியாபாரத்தை ஒட்டிய நிகழ்வுகளிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இன்று சந்தையில் கொள்வனவு செய்ய வேண்டிய பொருட்களில், அவன் எண்ணம் முழுவதும் அக்கறையுடனிருந்தது.
சயிக்கிள் ஓடிக்கொண்டிருக்க - அவன் நினைவுகளெல்லாம் அப்படி கூடுகட்டியபடி இருக்க.
‘டுமார் டுமார்.” என்று இப்படியும் வான்பரப்பில், கொடுரமானதாகவிரு சப்தங்கள்.
நிலத்தையும், வீசிய காற்றையும் அதிரவைத்தாற்போல திடீரெனக் கேட்டன. சப்தங்கள் அத்துடன் நிற்கவில்லை! சங்கிலிப்பின்னலாக தொடர்ந்து கேட்டவாறேயிருந்தன.
வான் பரப்பினுடாக எகிறிப்போய் விழும் ஒவ்வொரு ஆட்லறி செல்லடிச் சத்தத்திற்கும், அவனது வயிற்றுக்குள் தீக்கோலைச் செருகுவது போலிருந்தது. மறுபக்கம் திடீரென்று ஒரு பீதி நெஞ்சையும் அவனுக்கு இறுக்கியது.

> தீபரிசுருளானந்தம் 145
"யாழ் கோட்டைப் பக்கமாகவா..? மணியன் தோட்டத்துப் பக்கமாகவா..? எங்கே போய் விழுகிறது இந்தச் செல்கள்.?
சயிக்கிள் ஓட்டத்திலிருந்து விலகி எங்கோ ஓடுகிற நினைவுகள்.
வேறு எதையும் நினைக்கமுடியாத அளவுக்கு, மனசில் இப்போது செல் Luulb.......
வீட்டுப் பக்கமாகவும் தானே இந்தக் கோதாரியள்போய் விழுகுது. சின்னக்கடைப் பக்கம் அந்த வீட்டிலையும் ஒரு நாள் விழுந்து. ஐயோ. கடவுளே அதுக்குள்ளவாய் எத்தினைபேர். அப்பிடியே துண்டு துண்டாய்ச் சிதறிச் செத் தவயள். என்ன உபத் திரவம் இது. விடியக்காலமையிலேயே இப்பிடிச் செல் குத்துறாங்கள்?. திரும்பி வீட்ட போவமோ. ஐயோ குழந்தையள் குட்டியளெல்லாம் பயப்பிடப்போகுதுகள், ஆண்டவனே சுபா அங்க வீட்ட தனியவெல்லே பாவம் அவள்!
இப்ப என்ன செய்வாளோ. எப்பிடியும் அவள் பயப்புட்டுப் போய் பிள்ளையளோட தனியக் கிடந்து தவிச்சுப்போவாள்.
இல்லை. அவள் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு பங்கருக்குப் போயிருப்பாள்.'
புண்ணைச் சுற்றுகிற 'ஈ' மாதிரி திரும்பத்திரும்ப அவனுள் இதே நினைப்பு!
அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை அவனுக்கு இதனால் அவனுக்குள் கற்றைச் சோகம் - துயரம்மிக்க மன இறுக்கம் - மீள முடியாத வருத்தம் - கலக்கம்.
‘இந்தச் சத்தம் கேட்டா உடன பங்கருக்குள்ள ஒடிப்போய்ப் பூந்திட வேணும்.” - என்று சுய விமர்சனமாக, பிறகு முனங்கினான்.
அவனது மனக்கண்களில் ஒரு காட்சி -
காடைக் குருவிகளாக அவர்களெல்லாம் விரைவாக ஒடிச்சென்று, பங்கருக்குள் புகுந்து கொண்டதாக நிறைவு பெற்றது. அதன் மூலம் கொஞ்சம் அவனுக்கு இப்போது மனசுக்கு நிம்மதி. சயிக்கிள் அதுவாக தன்பாட்டுக்கு ஓடிக் கொண்டு இருப்பது போலத்தான் அவனது உணர்வு. இத்தனைக்கும் அனிச்சையாக அவனது கால்கள், பெடலல் சுழன்று கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாய் இருக்கின்றன.
எங்கும் செறிந்து மண்டிய இருளுக்குள்ளே, வீதியிலே போகிறவர் வருகிறவர் எல்லாருமே, அவனுக்கு ஒரு நிழல். அவனுக்கு முன்னால் முகத்தில்

Page 82
ava/72 146
அறைய வருவது போல் வருகின்ற நிழல்கள், ஒருவாறு சமாளித்துக்கொண்டு அவனைத் தாண்டிப் போகின்றன. அவனுக்குப் பின்னாலே இருந்து அவனைக் கடந்து முன்நோக்கிச் செல்கின்ற நிழல்கள், தூரவாய்ப் போய் இருளில் கரைகின்றன.
அவனைப் போலவே விளக்கு வெளிச்சம் இல்லாத சயிக்கிள் சவாரிகளாகத்தான் அனைவரும் அந்த வீதியில்.
இழுத்துக்கொண்டு ஓடுகிற நினைவுகளை இழுத்துப் பிடித்துக் கொண்டு, இருட்டைக் கிழித்த பார்வையுடன் புலனாற்றல்களைக் கூராக்கிக்கொண்டு, சயிக்கிளை ஒடிக் கொண்டிருந்தான் அவன். நல்லூருக்குக் கிட்டவாயுள்ள தேநீர்க் கடைகளெல்லாம், விடியலுக்கு முன்பே திறந்திருக்கின்றன. அந்தக் கடைகளையொட்டியதாய்த்தான், பெற்றோல் மாக்ஸ்’ வெளிச்சம் பளிச்சிடுகின்றது. சீர்காளியின் பக்திப்பாடலும் அங்கேயிருந்து சப்தமாகக் கேக்கிறது.
‘செல்லடியோ, பொம்மரடியோ - அவரவர்கள் தங்கள் தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டுதான் இங்கே காலம் தள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் ஊவாவுக்கு எங்கே போவது. ၇'
அவனும் தனது தொழிலை நினைத்தான்.
தொழில் இல்லாமல், ஒரு நாள் சும்மா வீட்ட இருந்தாலும், எங்கடை சீவியம் ஓடாதே, முரட்டுப்பாடாய் பாடுபட்டாத்தானே வயிற்றுக்குப் போடக்கிடைக்கும். இருக்கிற இந்தத் தொழிலை ஒழுங்காச் செய்யாட்டா எங்கையும் போய் தொண்ணாந்து கொண்டெல்லோ நிக்க வேணும்'
என்கிறதாய் நினைத்துக் கொண்டு பெடலை மிதித்துக் கொண்டிருந்த கால்களை சமனப்பட வைத்துக்கொண்டு சிறிது ஓய்வு கொடுத்தான். நல்லூர்க் கோயிலடி வீதிக்கு, சயிக்கிள் ‘பிரிவீல் சத்தத்தோடு வந்துவிட்டது.
கோயிலுக்கு வெள்ளையடித்து சாயக் கோடுகள் போட்டுள்ளதை அவன் பார்த்தான்.
“முருகா, கந்தா, கடம்பா, இடும்பா. காத்திடு எங்களைக் கயிலைநாதன் மைந்தா.”
சயிக்கிளில் போய்க் கொண்டிருக்கும் போதேதான் இந்தக் கும்பிடு. இவ்வளவுக்கு மேல் அவனுக்கு அவ்வளவாகப் பெரிய பக்தி இல்லை! அவன் பழுத்த ஆத்திகனுமில்லை, பக்கா நாத்திகனுமில்லை, சராசரியான லெளகீக வாதி. கடவுள் நம்பிக்கை கூட ஓர் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்பது அவன் கொள்கை, அந்த அளவைத் தாண்டிப்போகிற அளவுக்கு அவனுக்கும் பெரிதாக ஈடுபாடில்லை.

୪ଳ୍ପ நீரிஅருளானந்தம் 147 நல்லூர்ப்பகுதி வேளைக்கே விழித்துவிடுமென்பது அவனுக்குத் தெரிந்த விஷயம். வழமைபோல் அவன் பார்த்துக்கொண்டு போகிற அந்த வீட்டுக்கு முன்னால் அவள்தான் நிற்கிறாள். கைப்பிடி அடக்கமான ஒல்லியான பெண். அந்தப் பெரிய வாளியில் உள்ளது தண்ணிரில் கரைத்த சாணமோ, மஞ்சளோ.
‘சளப் சளப்' - பென்று நிலத்தில் தெளிக்கிறாள். மண்ணின் ஈரவாசனையை நுகர்ந்து கொண்டு அந்த இடத்தையும் அவன் கடக்க - குதிரையிலே சங்கிலியன் மன்னன் வாளுடன். வாளைப் போன்ற விழிகளுடன் - தெறித்து விழுவது போல புடைத்த கண்கள்.
சிலைதான்! என்றாலும், அவனுக்குள் சிந்தனையை உருவாக்கிவிட்டான் அந்த மன்னன்.
கடவுளர்களது கைகளிலும் ஆயுதம், மன்னனது கையிலும் ஆயுதம். இப்பொழுது எல்லாருடைய கைகளிலும் எங்கு பார்த்தாலும் இந்த ஆயுதங்கள்தான்!
அன்பே சிவமென்றால் இந்தக் கடவுளர்களது கைகளில் ஆயுதங்களெல்லாம் எதற்கு? இந்த ஆயுதக் கலாச்சாரத்தைத்தானே பழம் பெரும் இலக்கியங்களும் பெரிதாய் எடுத்துக் கூறுகின்றன. கடவுளே என்று ஆகாயத்தை நோக்கி கையெடுத்தாலும், குண்டு போடுகிற யுத்த விமானங்கள்தானே இங்கு இப்போது கண்ணுக்குத் தெரிகின்றன. யுத்தம் இல்லாத உலகத்தில் ஒரு சிறு குடிசையிலேனும் நிம்மதியாக வாழக்கிடைக்குமா?
மனதில் சுரீரிடுகிற நினைவுகள் - ரோஷமாய் அக்கினி - நெஞ்சுக்குள் சப்பென்று அறைகிற வாழ்வின் அவலம். என்றாலும், யுத்தமில்லாத ஒரு உலகில் சீவிக்கும் அந்த உள்ளத்து ஆசையை, இன்றும் அவன் வழமைபோல புதுப்பித்துக் கொண்டான்.
கோப்பாயை அவன் அண்மிக்கத்தான் கீழ்த்திசையில் அடிவானம், முகம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. அந்த வானத்தின் வெளுப்பில் பிரகாசம் தெரிகிறது. துயரமும் பீதியும் நிறைந்து அழுத்தும் கொடிய நேரம், விடுபட்டுப் போனதானதொரு உணர்வு இப்போது அவனிடம். செல் சத்தங்கள் இல்லாததால் அச்சக் கறை கரைந்திருந்தது. அவன் முகத்தில் காலைச் சூரியனின் பிரகாசம் ஒளிர்ந்தது.
எந்த ராட்சஷ வாழ்க்கையுடனும் மல்லுக் கட்டத் தயாராகி விட்டானா இவன்? - என்று நினைக்குமாறு அவன் மாறிவிட்டான். இன்னும் வேகமாக அவன் சயிக்கிளை ஒட்டினான்.
கோப்பாயையும் கழித்துவிட்டான். சயிக்கிள் ஒட்டும் வேகத்தில் அவனது நெற்றியில், வாழைப்பூ மடல் மீது காலைப்பனிபோல வியர்வைத் துளிகள்.

Page 83
aረሪ2/72a2//7õxêም ̆ 148
அத்துடன் தலைமுடிக்குள்ளும், கட்கத்துக்குள்ளும் வியர்த்துக் கசகசத்தது. மூச்சு ‘உஸ், உஸ்' என்று நாகபாம்பின் சீறலாக ஒலித்தது. நாசிக்கடியிலும் வியர்வைமணிகள் ஆடி நழுவி விழுந்தன. ஆனாலும் இலேசான காற்று வேர்வையை உணத்தியது. அந்தப் பாதை மோசம் - கிடங்குகளும், நொடிகளுமாய்த் தான் கிடக்கும். சல்லிக் கற்களும், மொத்தை மொத்தையாகவும், திறானியடித்துப்பீச்சியபடியும் கிடக்கும் மாட்டுச் சாணிகளும் கூட அவ்விடமெங்கும் நிரம்ப உண்டு. சயிக்கிள் கான்டிலை வெட்டி வெட்டித்திருப்பி இவைகளினூடே அவதானமாக சயிக்கிளை ஒட்ட வேண்டும். அப்படியே அவன் சவாரி செய்து அவைகளையும் கடந்ததாகிவிட்டது.
நெடுக பூவரசு மர வேலிகள் வந்துவிட்டால் புத்தூரும், ஆவரங்காலும்தான்! கிட்டிவிட்டது அச்சுவேலி என்ற நிம்மதி!
ஆவரங்கால் சிவன் கோவிலில் திருவிழாவாமென்று அவர்கள் நேற்றைக்கு சந்தையில் கூடிநின்றபடி கதைத்ததெல்லாம் நிஜம்தான்!”
நல்ல அலங்காரத்துடன் காத்தான் கூத்துப் போடுவதற்குப் போட்ட மேடையும் காலியாகத்தான் இந்த வேளையில் இருக்கிறது. காலையில் செல்லடியோடு கூத்தையும் கெதி கெதியாக முடித்திருப்பார்கள். -
கூத்துப் பார்த்துவிட்டு சனங்கள் நித்திரைச் சோம்பலோடு வீதி வழியே போய்க் கொண்டிருக்கிறார்கள். தெருவை அடைத்துக் கொண்டு, நெருக்கியடித்து நகர்கிற செம்மறி ஆடுகள் மாதிரி.
G
‘அதெப்படி அதுக்குள்ளவாய்க் கழுக்காத்தான் கழுவேறி முடிச்சான்?” அவன் நினைத்தபோது வியர்த்த பாதம் பெடலல் வழுக்கியது. பெடல் கட்டை ‘ சுார்ர்ர்ர். ’ என்ற சத்தத்துடன் விசையாகச் சுழன்றது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, மீண்டும் பெடவில் காலைவைத்து மிதிமிதியென்று வேகமாக அவன் பெடலை மிதித்தான். கீழடிவானம் நன்றாக முகம் சிவக்கத்தொடங்கிவிட்டது. கூட்டம் கூட்டமாக மேகங்கள் அணிவகுத்து பயணப்பட்டது போல் தெரிந்தது. வானத்தில் போடப்பட்ட வெள்ளி வீதி போல அவைகள் தோற்றமளித்தன. மேகங்களிடையே ஊடுருவும் ஒளிச்சலனங்கள் சூரியன் வரப்போகிறான் என்பதை அறிவித்தது.
அவனுடன் கூட வாய் அநீத வீதியில் பலர் சயிக் கிளில் வந்துகொண்டிருக்கிறார்கள் . ஒவ்வொரு சயிக்கிளிலும் டபிள்’ ஏற்றிக்கொண்டு.
'நீங்க என்ன. ஒரு சயிக்கிள் டயினமோ வாங்கிப்பூட்டுங்களன். இருட்டு வழிய யாழ்ப்பாணமிருந்து இவ்வளவுதூரம் கடந்து வாறனியள் லைட்டில்லாம வாறியள். ၇ား

শুৈ১ நீரிஅருளானந்தம் 149 'யார் அது. பின்னாலே இருந்து ஒருவர் கதைக்கிறார்..? - சயிக்கிள் பெடலை பின்பக்கம் சுழற்றி ஒரு ஒலி எழுப்பியபிறகு, அவன் திரும்பி ஒருகால் பார்த்தான்.
“அடட. விமலன்!. என்னவும் டையினமோ போடட்டோ. ரயர் விலை ஒண்டு இப்ப என்ன விலை விக்குதெண்டு தெரியுந்தானே உமக்கு 1500 ரூவாயாம் விலை. அந்தவிலைக்கு ரயரை வாங்கி டயினமோ போட்டு
ஒட ரயரெல்லே கெதியா தேஞ்சு வெடிச்சிடும். 99
‘உழைக்கிறியள்தானே நீங்கள். ၇•
“ஓம் ஓம் கஸ்டப்பட்டுத்தான் உழைக்கிறன். 29
“உங்களுக்கென்ன. அச்சுவேலி காம்புக்குக் கிட்டவாயுள்ள இடம் - அங்க ஆமி சிலநேரம் வந்திடுமெண்டு போட்டு அச்சுவேலியிலயுள்ள உங்கடை வீட்ட விட்டிட்டுப்போய் யாழ்ப்பாணத்தில இருக்கிறியள். தோட்டம் செய்யிற தொழிலை விட்டிட்டு யாவாரத்தில துவங்கீட்டியள் உங்களுக்கெல்லாம் இப்ப எங்களை மாதிரிக் கஸ்ரமில்லைத்தானே. ייל
‘எதையும் புத்தியாய் யோயிச்சுச் செய்ய வேணும் விமலன் - சின்னப் பிள்ளையளை வைச் சுக் கொண்டு உங்க கிடந்துகொண்டு ஆமி வருகுதெண்டெல்லாம் என்னால ஒடித்திரியேலாது. அதுமாதிரித்தான் உந்தத் தோட்டம் செய்யிறதும் இப்ப எனக்குச்சரிப்படாது. மண்எண்ணை உரம் ஒழுங்கான பழைய விலைக்கு இருக்கே இப்ப தோட்டம் செய்ய. ၇••
சொல்லி விட்டு விமலனின் சயிக்கிள் பாரில் தாராளமாய் அவனுடன் கிட்ட முட்ட இருந்துகொண்டு செல்லும் மணிநிற அழகுடைய அந்தப் பெட்டையை இவன் பார்த்தான். அவன் மூச்சு விடுவது அவளது காதிலும் நல்ல உஷ்ணமாக விழும் - அவ்வளவு நெருக்கம்.
y y
'ஆர் உந்தப் பிள்ளை.
99
“இது என்ரை மச்சாள். மனுசியின்ரை தங்கச்சி.
‘அப்ப அவ உங்கடை மனுசி எங்க. יף
‘அவவின்ரை சயிக்கில் காத்துப் போச்சுதுங்கோ. நேரத்தோட வீட்ட போகவேணுமெண்டா, அவவின்ரை மச்சான்ரை சயிக்கிலில அவவையும் போகச் சொல்லி அனுப்பீட்டன். நெடுகலும் அவவின் ரை சயிக்கிலிலலைதான் இவள் மச்சாளும் காலேலை வீட்ட போறவ. இண்டைக்கு என்ன செய்யிறதெண்டுபோட்டு என்ரை சயிக்கிலில வாறா. உங்களுக்கென்ன. யாழ்ப்பாணத்தில இருக்கிறதால உந்தக் கஸ்டங்கள் இல்ல. நிம்மதியா ராவில படுத்து நித்திரை கொள்ளுவீங்க, அதுமாதிரி அச்சுவேலிப்பக்கம் எங்கடை வீடுவழிய இருந்து - ராவில படுத்துக் கிடக்கேலுமே எங்களுக்கு. அந்தநேரம் ஆமிக்காரங்கள் ஊர்வழிய

Page 84
cኋ}ሬሪ2/72L2//7ሯሯxሪም‛
150 வந்திட்டாங்களெண்டா என்ன செய்யிறது. உதாலதான் பின்னேரமாய் வீடுகளைப் பூட்டிப் போட்டு வெளிக்கிட்டு வந்து. இங்காலதள்ளி
புத்தூருக்கையும் அங்கையும் இங்கையுமா ஆற்றையும் திண்ணைவழிய படுத்தெழும்பிப்போட்டு காலேல அங்கின போறம். இது என்ன புதினமே உங்களுக்கு. இது எல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே. ၇%
அவன் அளப்பக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு இவன் சிரித்துக் கொண்டான்.
‘எதிலையோ வைச்சு கதையைத்துவங்கி எதிலையோ கொண்டுபோய்வைச்சு முடிக்கிறான்'
என்று அவனது கதையை உடனே இப்படிக் கணக்குப் போட்டான் இவன்.
விமலனது சயிக்கிள் ஓட்டம் இவனோடு ஈடுகொடுப்பதாக இல்லை. 'தன்னைக்காய் வெட்டிவிடத்தான் இந்தச் செயற்பாடு' என்று இவன் ஊகித்துக்கொண்டான். -
சமக்காரமாக அவனிடம்.
‘நான் அப்பவாறன் விமலன். நேரம் போகுதெனக்கு, வேளைக்குச் சந்தைக்குப் போகவேணும்.”
என்று சொல்லிவிட்டு - விரைவாக பெடலை மிதித்துச் செல்லும் போது ரத்தப்பிரகாசமாய் பொழுது தூக்கித் தகதகத்தது.
சந்தையடிக்கு சயிக்கிள் வந்துவிட்டது.
சயிக்கிளை வழமையாக நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு - சந்தைக்குத் தோட்டக்காரர் கொண்டுவரும் மரக்கறிகளை விலைபேசிவாங்கி, தூக்கில் நிறுப்போம் என்ற எண்ணத்தில் தராசுப்பக்கம் போனான். அங்கே சந்தை வியாபாரிகள் நின்று கொண்டு பொருட்களைத் தோட்டக்காரரிடமிருந்து வாங்குகிறதற்காக பகிரத யத்தனிப்புகளுடன் போராடுகிறார்கள்.
அந்த இடத்திலே ஆளுக்காள் ஏகத் தள்ளு முள்ளுகள், வசவுகள், சாபங்கள், காட்டுக்கூச்சல், மந்தைத்தனம், சந்தைக்கடைக் காரிகளிடமிருந்து அதிகப்பேச்சு. கறிக்கடையில் ‘காகா' காகங்கள் கரைகிறமாதிரி மரக்கறி நிறுக்கின்ற அந்த இடத்தில் ‘களபுள'வென்றதாய் ஒரேசத்தம்.
'இழவு விழுவார் நாசமாய்ப்போவார் எங்களுக்கெண்டொரு முடிச்சையும் எடுக்க விடுகுதுகளில்ல.” - என்கிறதாய் பெண்வியாபாரிகளிடமிருந்து நாறவசவுகள், நொருங்கிச்சிதைந்த நொசிந்த குரல்கள் - கோபமும் சோகமுமான சீறல்கள்,
சந்தையெல்லாம் இப்படியாக ஒரே சத்தக்காடு.

27്മ്മ x நீயசுருளானந்தம் ISI
கிட்டித்த புளிச்சிப்பமாக இறுக்கமாக அடைந்துகொண்டிருக்கும் அவர்களிடத்தே இவனும் போய் நின்றுகொண்டு மூச்சுத்திணறுகிறான்.
ஒருத்தர் செவியில் ஒருவர் விடும் மூச்சு - தணல் பெருமூச்சாக இருக்கிறது.
அத்தனையையும் சகித்துக் கொணி டு தள்ளுமுள் ளான நெருக்கடிகளுக்கிடையே போராடி, அவனும் பொருட்களை ஒருவாறு கொள்முதல் செய்து முடித்தான்.
திருவிழாக் கூட்டம் போல இன்றுதான் அந்தச் சந்தையில் மரக்கறி வாங்குவதற்கென்று சனக்கூட்டம்.
ஒவ்வொரு வியாபாரிகளிடத்தின் முன்னாலும் வெல்லக்கூடையை சுற்றிமொய்க்கும் ஈக்கள் போல சனங்கள் நிற்கிறார்கள். இதனால் நேரம் செல்லச்செல்ல எல்லாப் பொருட்களுமே அங்கு பிறகு விலை உச்சம்.
பாகற்காய் 140 ரூபா - கத்தரிக்காய் பயிற்றங்காயின் விலை கிலோ 120 ரூபா - என்று இப்படியானவிலையில் வியாபாரிகள் விலையை ஏற்றி - “இஸ்டமெண்டா எடு கஸ்டமெண்டாப்போ’ என்கிறதாய்ச் சொல்லி விற்றாலும் - வருகின்றவரெல்லாம் தேவையானவைகளை வாங்காமற்போகவில்லை!
வாங்கியாகவேணுமே. விரதநாளல்லவா. ?
அதுவும் ஆடி அமாவாசை விரதமாயிற்றே.
இவனுக்கும் அதனால் நல்ல வியாபாரம்தான். நேரம் சென்று விட சந்தையும் ஒய்ந்துவர லாச்சியில் கிடந்த காசையும் கடைசியாக எண்ணி முடித்துவிட்டான். அடுத்து வழமைபோல சந்தைச் சீட்டுக்காசும் கொடுத்தாகிவிட்டது.
ஓரிரண்டு பேர் வரைதான் இப்போது சந்தைக்குள் பொருட்கள் வாங்க நிற்கின்றனர். அங்கு நிற்கின்ற அவர்களெல்லாம் தத்தமக்குரிய மரக்கறிகளை வாங்கிக் கொண்டிருக்க - இவனது கவனத்துக்குள்ளான அந்த ஒருவன் மாத்திரம், சந்தைக்குள்ளே அந்தண்டையும் இந்தண்டையுமாக மரக்கறிகளின் விலைகளைக் கேட்டுக்கேட்டு அலைந்து கொண்டிருக்கிறான்.
ஒவ்வொரு வியாபாரிகளிடத்திலும் போய், மரக்கறி விலைகளைக் கேட்டுவிட்டு நோய் கண்ட கோழி மாதிரி, தலையைத் தொங்கப்போட்டுக் கொள்கிறான்.
இவனிடமும் வந்தான். பொருட்களின் விலையைக்கேட்டு விட்டு விழித்தான். அவனுக்குக் கண்கள் கூட கலங்கிவிட்டன.
அவன் அன்றாடக் கூலி, திண்டாடியபிழைப்பு, வசதியாயில்லை - வறுமையின் தொல்லை - என்று பார்க்கும் போதே இவன் ஊகித்தான்.

Page 85
c衆22722/72のゲ
152 இன்று பாகற்காய் - செய்யிற சமையலில் ஒரு பாகமாய் அமையாதுவிட்டால் விரதச் சாப்பாடு பூரணமாகாதே, - என்பதால் இவனிடம் பாகற்காயின்
விலையையே பத்துத்தரம் திரும்பவும் திரும்பவும் அவன் கேட்டான்.
அவனது முகமெல்லாம் உலர்ந்து போன வேர்வையின் உப்பு வரிக்கோடுகள், சோர்வு, கண்களில் தவிப்பு, காய்ந்து போன உதடுகள். காலெல்லாம் அச்சுவேலி செம்பாட்டுமண்புழுதி.
அதையெல்லாம் பார்த்துவிட்டு மனம் இரங்கிப்போய்.
‘உனக்கு என்னென்னவெல்லாம் இப்ப வேணுமெண்டு சொல்லு நான் தாறன்” - என்று சொன்னான் இவன். 'ஐயா தோட்டத்திலயிருந்து அரை நேரம் வேலை செய்த சம்பளம் மாத்திரம் வாங்கிக்கொண்டு நான் இண்டைய தறுவாய்க்கு விரதத்துக் குச் சமைக்க சந்தைக் குச் சாமான் வாங்கவந்தனான். ஆனா இங்கவந்தா விலையெல்லாம் இப்படி மோசமாயிருக்கு. ஒண்டையும் வாங்க ஏலாது போலக் கிடக்கு. தோட்டம்வழிய போய் முதுகு முறியிற அளவுக்கு வேலை செய்து போட்டு கூலியை வாங்கியும் அந்தக் காசைக் கொண்டு இங்க மரக்கறி கூடவாங்கேலாமக்கிடக்கே?”
அப்படி அவன் சொல்லும் போது கைத்துப்போய் கசந்துபோன மனசின் அழுகை, கண்ணுக்குள் வரத் துடித்துக்கொண்டிருந்ததாய் இருந்தது.
இந்த யுத்த சூழ்நிலையில் சந்தை வியாபாரத்துக்கென்று இவன் வந்ததிலிருந்து பசியுடனும் பட்டினியுடனும் போராடுகிறவர்களை; எண்ணிறந்த அளவிலே கண்டு மனம் நொந்துமிருக்கிறான். ஏதோ இதையாவது கொண்டுபோய் அவித்தாவது தின்று உயிரைப் பிடிக்கட்டும் என்று அப்படியான சிலருக்கு இவன் அள்ளியும் கிள்ளியும் கொடுத்துமிருக்கிறான்.
அந்த முறையில் அவனிலும் இரக்கம் இவனுக்கு ஏற்பட்டது.
ஏழ்மையின் தாழ் மட்டத்திலும் வாழ்வோடு மல்லுக்கட்டுகிற பழகிப்போன வைராக்கியத்தோடு - செய்ய வேண்டியதையெல்லாம் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்றதான அவனது கடமையுணர்வை சிந்தித்தபோது அவன்மேல் இவனுக்கு மதிப்பும் வந்தது.
உடனே ஒரு மாட்டுத்தாள் பையில் தன்னிடமிருந்த மரக்கறிகள் பலதையும் - பாகற்காயுடன் சேர்த்துப் போட்டு விட்டு; அவனிடம் அந்தப்பையை இவன் கொடுத்தான்.
'ஐயா இதுக்கெல்லாம் காசு தர என்ரை கைக்கிள்ளை கிடக்கிறது காணாதே...?’ ‘காசு ஒண்டும் வேணாம். நீ கொண்டுபோ. y

x நீரிஅருளானந்தம் 153
"அப்பிடியெண்டுறியள் ஐயா. என்ன ஐயா நீங்க சொல்லுறியள்? எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லையே..?”
*சும்மா காசில்லாமல்தான் இதை நான் உனக்குத்தாறன். இதை நீ கெதியாக் கொண்டோய் வீட்ட குடுத்து சமையல் அடுக்குகளைப் பார். என்று அவன் சொல்ல
நீங்கள் தானையா எனக்குச் சிவம். இதைவிட எதவோ எல்லாம் சொல்ல நெக்கிறன் ஐயா ஆனா, படிப்பறிவு எனக்குக்காணாதையா என்று சொல்லியூதோடு உடம்பு நெகிழ்ந்து கரைகிற மனசுடன் இவனை ஏறெடுத்துப் பாாததான அவன.
‘ஒண்டுனக்குச் சொல்லுறன். உங்க சந்தைக்கிள்ளவாய் இனி நீ மசுந்திக்கொண்டு நிக்காத. இங்க இருக்கிற யாவாரியள் என்ன ஏதெண்டெல்லாம் உன்னட்ட விடுப்புக் கதையும் கதைக்குங்கள் . மெல்லாவா இப்படியே உந்தப் படியால இறங்கி அசுங்கிடாமப் போ. கையில வைச்சிருக்கிற காசுக்கு அரிசி தேங்கிாயை வாங்கு. 2 3
இவன் இப்படிச் சொல்லச் சொல்ல.
விரித்த தலை வாழை இலைமாதிரி அவனுக்குள் கூத்தாடுகிற மகிழ்ச்சி உணர்வலைகள் அவன் முகத்தை வெளிச்சமாக்கிவிட்டது.
“பெருத்த நன்றி ஐயா உங்களுக்கு. அப்ப நான் வாறன் ஐயா. என்று மகிழ்ச்சி மின்னல் கண்களில் பளிச்சிட இவனுக்குச் சொல்லிவிட்டு சந்தைக்குள்ளாலே இருந்து அவன் வெளியே போய் விட்டான்.
அவன் போன கையோடு, இரண்டு ஆட்லறி செல்கள்
டும்மார்’ என்று காது 'கிண்ணிடுறதான பெரியசத்தத்துடன் வான்பரப்பில் வெடித்து, எங்கோ தொலைவில்போப் விழுந்து மீண்டும் வெடிக்கின்றன. அத்தோடு மெஷின் கண் குண்டுவரிசைகளின் சடசடப்பு L6υ π6ύ இராணுவத்தளத்திலிருந்து சட்டெனத் துலக்கமாக் கேட்கத் தொடங்கிவிட்டன.
அங்கே அந்தச்சப்தங்கள் கேட்டவுடன் சந்தைச்சலசலப்பு அடங்கிவிட்டது. சந்தையில் சாமான்கள் வாங்கவந்தவர்கள் அப்படியே நின்ற இடத்தில் அசையாதவாறு நிற்க. பொருட்கள் நிறுக்கின்ற வேலையை சட்டென்று நிறுத்திவிட்டு அங்குள்ள வியாபாரிகளெல்லாம் திகைத்துப் போயிருக்க, *வல்லை வெளிய எங்கினேயோ போய்த்தான் உந்தச் செல்விழுந்து வெடிச்சிருக்கும்” என்று அசல் அலிமாதிரி ஒரு பார்வையும் அபிநயமும் பிடித்துக் கொண்டு கதைக்கும் வெற்றிலை வியாபாரி தங்கராசு ஒரு கதை விடுகிறான். காலை அகட்டிப்போட்டபடி இருந்துகொண்டு; கண்பார்வையை சந்தையின் முகட்டுப் பக்கம் செருகினாற்போல் வைத்துக்கொண்டு; ஒரு

Page 86
ബ് 154
தினுசாக அவன் இருக்கிறான்.
“உது சந்தைக்கு மேலாலை சரியாய் போனதால அடுத்த றேஞ்சு அவங்கள் சந்தைக்குத்தான் சரியா அடிப்பாங்கள் போலக் கிடக்கு” என்று மரக்கறிவிற்கும் ராசம்மாவும் அந்தச் சத்தத்தை; தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு எல்லோரையும் பயப்படுத்திவிட்டாள். அவள் ஒரு மகாவிண்ணி. வியாபாரிகள் எல்லாருக்கும் அதிகமாக இப்படியாகச் சொல்லி பயம் காட்டிவித்து அல்லுச்சில்லுப்படவிட்டு, தான் மட்டும் தனியே சந்தையில் இருந்து வியாபாரம் செய்ய அவள் செய்யும் தந்திரம் இதுதான்! இன்றைய நாளில் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது, அவளுக்கும் வாய்ப்பாகிவிட்டது. அவள் உசுப்பல் கொடுத்தவுடனே, அந்த இடம் மிதிபட்ட எறும்புப் புற்றுப்போலப் பதற்றமும் பரபரப்பும் அடைந்தது. பயத்தில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு எஞ்சிய சாமான்களை சாக்குகளில் போட்டுக் கட்டி அங்கே அந்த அந்த இடங்களிலேயே அவைகளை வைத்துவிட்டு, வியாபாரிகளெல்லாம் அவர்கள் அவர்கள் பாட்டுக்கு வீட்டிற்குப் போவதற்காகப் பறக்கிறார்கள்.
‘தம்பி நீங்களும் வெளிக்கிடுங்கோவன் ஐயா. பிள்ளை குட்டிக்காரனெல்லே ஐயா நீங்களும், நடுவானமும் கறுக்குது ஆடித்தூறலும் தூறுது இதுக்குள்ளாலை அவ்வளவு தூரம் மட்டும் நீங்கள் சயிக்கிலுமெல்லே ஓடிப்போக வேணும்.!
இவனிலும் பரிதாபப்பட்டது மாதிரித்தான் அவளின் கதை காட்டான் மோட்டான் மாதிரி நெச்சுக் கொண்டு எனக்குமெல்லே இவள் கயிறு விடுறாள்' என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு அவளது தந்திரத்தை முற்றும் அறிந்து விட்டாலும், அவள் மேல் பச்சாத்தாபப் படுகிறான் இவன்!
'பாவம்! பெண்ஜென்மம். எத்தினை யாவாரியள் இந்தச் சண்டை காலத்திலை பொருட்களை பதுக் கிவைச்சு அநியாயம் பிடிச் ச விலைக் கெல் லாம் சனத்துக்கு வித்து - அள்ளி வறுக் கிச் சம்பாதித்துக்கொண்டிருக்க. அழுகிப் போற இந்த மரக்கறி யாவாரத்திலயிருந்து என்னதான் பெரிசா ஒரு லாபத்தை இவள் எடுக்கப் போறாள்? வழமையாவே வதங்கலும், சொத்தையும், புழுத்தலுமான காறல் கத்தரிக்காயைத்தான் வாங்கி ஏதோ முட்டுப்பட்ட சனத்துக்கு இவள் விற்கிறாள். இதில என்னதான் பெரிய ஒரு லாபம் இவளுக்கு வரும்?. இப்பிடி ஆக்களைக் கலைச்சுப்போட்டு தனிய உதில குந்தி இருந்தாலும். உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டுதானே இவள் இந்தச் சந்தையிக்கை கிடப்பாள்...? இந்த வயித்துப் பிழைப்புக்காகத்தானே இவளும் இந்தப்பாடெல்லாம் படுறாள்? என்று அவள் மேல் பரிதாபப்பட்டு நினைத்துக்கொண்டு தனக்கு வீட்டுக்குத் தேவையான மரக்கறி சாமான்களை பட்டடையில் இருந்து எடுத்து பையில் அவன் போட்டுக்கொண்டான்.

শুৈ১২ நீபஅேருணானந்தம் 155 காத்தோட்டிக் காய்களும் அவன் போட்டுக் கொண்ட மரக்கறிகளுக்குள் அடக்கம்தான்!
G
‘காத்தோட்டிக்காய் பொரிச்சுவைச்சு கறிசோத்தோட சாப்பிட புது ருசியாயிருக்கும். ’ என்கிற மன விருப்பத்தில் விற்காமல் பட்டடையில் கிடந்த எஞ்சியதையெல்லாம் அவன் வீட்டுக்குக் கொண்டு போவதற்கென்று எடுத்திருந்தான்.
இனியபண்டங்களைவிட கசப்புச் சுவையிலேதான் அவனுக்கு எப்பொழுதுமே ஒரு தனி விருப்பம் உண்டு. அது நரம்புகளுக்குப் பலமென்று அச்சுவை உணவை விரும்பி இவன் சாப்பிடுவதும் அதிகம்தான்.
அந்தக் கசப்புச் சுவைபோலவே இந்த யுத்தச் சூழலில் வாழ்வு கசந்து போகிற நிலைமை சில பொழுதுகளில் ஏற்பட்டாலும் அதை ருசித்ததாக பிறகு மாற்றி அமைத்துக் கொள்கின்ற ஒழுங்கான சில வழி முறைகளையும் அவன் அறிந்து வைத்திருந்தான்.
கசப்பான நினைவுகளையும் நிகழ்ச்சிகளையும் மறந்து மற்றவர்களுடன் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வதான செய்கையில்தான் அவன் எப்பொழுதுமே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவன். அதனால் ஆற்றோரங்களிலுள்ள மரங்களைப் போல் எந்நேரமும் அவன் செழிப்பாகவே இருப்பான். இள மத்தியானமாச்சு.
அவன் தனது வீட்டை நோக்கி - யாழ்ப்பாணம் போகும் வீதி வழியாக இப்போது சயிக்கிளைவிட்டுக் கொண்டிருந்தான்.
என்றாலும் இன்றைய ஆடி அமாவாசை நாள்; விடியற் காலைக்கு முன்னே உள்ள இருட்டில் தொடங்கி கனமானதாகத்தான் இவனுக்கு நகர்கிறது. இன்று முழுநாளும் அவனை மெளனச் சோகத்தில் அரைத்துக்கொண்டு, நத்தை போன்றேதான் ஊர்ந்துகொண்டிருக்கிறது.
(2004)
OOO

Page 87
ന്നീ 156 உருமாறவ
உருமாநல்
தன்வீட்டினுள் சுருண்டிறங்கிய மாடிப் படிகளுக்குக்கீழே ஒரு சுழல் நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு, தன் உடலுக்குச் சாந்தமளிக்க அவர் இருந்து கொண்டார்.
சிலவேளைகளில் இப்படித்தான் அதிலே உட்கார்ந்துகொண்டு; அறிவான கனமான பல விஷயங்களைக் கொண்ட தடிமனான நூல்களைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டேயிருப்பார்.
ஆனால் இன்றோ, அதிலே ஆற அமர இருந்துகொண்டு, ஒரு கதை எழுதுவதற்காக அவர் தன் யோசனைகளை எரித்துக் கொண்டிருந்தார். அதற்காக வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பற்றியும், இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்களுடைய பிரமைகளைப் பற்றியும், சிரித்துக்கொண்டே சிறிது நேரம் அவர் யோசனை செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் தன்னைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் நிலைமையும் அவருக்கு வந்தது. இதனால் தன் வயதுக்குள் அநுபவித்துவிட்ட வேதனைகள், ஆசைகள், நிராசைகள், சுகதுக்கங்கள், மகிழ்ச்சி, ஆர்வம், கண்ணிர் எல்லாமே நிழல்களாகி அவர் மனத்தில் நின்று அசைகின்றன. விழுதெறிந்து படரும் பேர் விருட்சமாக அவைகளெல்லாம் அவர் மனத்தில் நன்றாகப் படர்ந்தன. நேரம் நீண்டுகொண்டே சென்று கொண்டிருந்தது.
'இப்படியே அந்த இடத்தில் எவ்வளவு நேரமாய் நான் இருந்துவிட்டேன்? என்பது அவருக்கு ஒழுங்காக ஞாபகமில்லை. மாலைநேரம் வந்து இருட்டியும் விட்டது. தாயின் கருப்பைக்குள் மீண்டும் நுழைவதுபோல், அந்த இருட்டுக்குள் அவருக்குக் கற்பனை சென்றது. அவர் நினைவிலே நிலை பெற்றிருந்த பழைய உலகத்திலே கேட்கின்ற குழந்தைக்குரல், அவருக்குக் கேட்பது போல் தோன்றியது. இப்படியே ஒன்று மடிய ஒன்று, அதனிலிருந்து வெளித்தள்ளும் எச்சத்திலிருந்து சூல் கொள்ளும் இன்னொன்றாய் வரும் நினைவுகளில், அவர் திளைத்தபடி இருந்தார்.

ඊඛ. நீ/அருணானந்தம் 157 அவ்வாறிருந்ததில் அந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, அவர் சோர்ந்து போயும் விட்டார். இதனால் அவர் உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும், இனந்தெரியாத வெப்புக்கொதி கலந்த நோவின் புடைப்பு எழுந்தது.
அவர் நிதானித்து ஒரு கணம் தன்னை அவதானித்தார்.
“எனக்கேன் இந்த மனம்.?
இல்லாததை உள்ளதாய் உண்டுபண்ணும் மனம்!
சிலவேளைகளில் தன்னிலிருந்து கிளைக்கும் எண்ணங்களுக்கே தான் அஞ்சுவது பற்றி அவர் சிந்தித்தார்.
ஒன்றிலிருந்து ஒன்றாய் உருமாறிடும் அந்த நினைவுகள்; தனக்கு இடையிலே எழுவது பற்றிய கவலை அவரைக் கறை பிடித்தது.
கயிற்றைப் பாம்பாக எத்தனையோ பேர் பார்க்கிறார்கள். அது அவர்களின் பார்வைக் கோளாறு. அதனிலும் பார்க்க அவர்களை எந்நேரமும் தழுவிக் கொண்டிருக்கும் மனப்பயம்தான் அது;
என்று நினைத்து பிறகு தன்னை சுதாரித்துக் கொள்ள முயன்றார்.
திடுப்பென்று அவருக்குக் கொட்டாவி நீளமாய் வந்தது.
வயிற்றை முறுக்கியபடி பிறகு பசித்தது.
‘மேசையில எல்லாம் எடுத்து வைச்சாச்சு. ஆறமுதல் கெதியா சாப்பிடவாங்கோ.”
அவரது மனைவியின் குரல் நாலா திக்கிலிருந்தும் இழை பிரிந்து வந்தது.
அவர் இரவு எடுக்க வேண்டிய மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு, சாப்பிடுவதற்கென்று போய் இருந்தார்.
அவள் பதனமாக உணவை அவருக்குப் பரிமாறிக்கொண்டே
“இப்ப கொஞ்சத்தைக்கு முதல் கனடாவிலயிருந்து ரெலிபோன் கோல் வந்தது. மகள் என்ணோட கன நேரமாக் கதைச்சவ.” என்று சொன்னாள்.
ஆண்டவன் சந்நிதியிலே பரவசமுற்றுப் பெருமூச்சு விடுவதுபோல், அவள் பெருமூச்சு விட்டவாறு அதைச் சொன்னாள்.
அவருக்குத் தன் குடும்ப விஷயங்களிலே அவ்வளவாக இப்பொழுது அக்கறையில்லை. அவர் எவரிடத்தில் பேசினாலும், இலக்கியம் சம்மந்தமான விஷயங்களைப் பற்றித்தான், ஆர்வமும் உருக்கமும் உளமார்ந்த முனைப்பும் மிக்கவராகப் பேசிக் கொண்டிருப்பார்.
எனவே மனைவியின் கூற்றுக்கு தேவையற்ற எந்த அசைவுகளுமின்றி,

Page 88
al 777e 158 ருமாறவ
பதில் ஒன்றும் கூறாது மெளனமாக இருந்தார்.
அவளுக்கு அவரது சுபாவம் பார்த்துப் பார்த்துப் பழகிப் போனதுதான். என்றாலும் விழித்தகண் கொட்டாமல், சில வினாடிகள் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவளது பார்வை அந்த நேரத்தில், எக்ஸ் கதிர்கள் (X - RAY) மாதிரி இயங்கி அவரை அளந்து பார்க்கவும் செய்தது.
அவருக்கு உண்டியில் கூட அதிக அக்கறை இப்போது இல்லை. ‘அந்த உணவை விட எதிலும் உயர்வடைவதற்கு வேண்டிய முக்கியமான ஒரு தன்மை எனக்கு உண்டு. அதுதான் கற்பனைத் திறமை.!” - என்று தனக்குள் அவர் எடை போட்டுக்கொண்டிருந்தார். அதானால்தான் தேய்பிறை மரபை உணவில் புகுத்தவும் ஆரம்பித்திருந்தார்.
அதனடிப்படையிலே; அதிலிருந்ததுக்கு சாப்பிட்டாக வேண்டுமென்று நினைத்துவிட்டு கொஞ்சம்சாப்பிட்டார். பிறகு அதிலிருந்து போய் ஹாலில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி வைத்துவிட்டு, திரையைப் பார்த்தவாறு எதிர்த்தாற்போல் கிடந்த சோபாவில் உட்கார்ந்தார்.
பேருக்குத்தான் அங்கிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அந்த ஒளியுருவங்களை அவர் மனம் பதிவு செய்யவில்லை.
நினைவுகள் மீண்டும் எங்கெங்கோ சென்றலைந்து கொண்டிருக்கிறது. எதையோ பின் தொடர்ந்து செக்குமாடு போல் சுற்றிச் சுற்றி வருகிறது அந்தநினைவு. அதிலிருந்து எழுந்து சென்று ’கிளிக் - கென்ற சத்தத்துடன் தொலைக்காட்சித் தொடர்பை அணைத்து நிறுத்தினார் அவர்.
சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கை அறைக்குள் சென்று, மேசையில் கிடந்த குளிசைச் சரைகளில் ஒன்றை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டு, அதன்வாய் திறக்கக் காற்றுதினார்.
சாப்பிட முன் போட்ட மாத்திரைகள் பற்றி, இப்போது அவருக்குக் கொஞ்சம்கூட ஞாபகம் வரவில்லை.
‘போட்டேனோ இல்லையோ..?”
என்று அந்த முரண்பட்ட கேள்விகளால் மூளையைக் குடைந்து பார்த்தார்.
பதிவு ஒழுங்காக எடுக்காத மூளையும் அதனால் சிக்கல்பட்டுத் தவித்தது.
எங்கோ எதையோ தவறவிட்டது போல் அதுவும் பரிதவித்தது.
‘போடவில்லைத்தான்..!”
என்று அதனால் இறுதியாக அவர் தனக்குத்தானே ஒரு முடிவு எடுத்தார்.

නමු. நீரிஅருணானந்தம் 1.59 அந்த மன நம்பிக்கையோடு திரும்பவும் குளிசைகளை வாயில் போட்டு, தண்ணிருடன் சேர்த்து விழுங்கினார்.
மூடிப் போர்த்துக் கிடந்த நுளம்பு வலைக்குள் நுழைந்து, மெத்தைக் கட்டிலில் அவர் படுக்கும்போது இரவு பத்துமணி -
பெரிய சுவர்க்கடிகாரம் அந்த நேரத்தை இசைபாடி அறிவித்து விட்டு, பழையபடி ‘டிக் டிக்” என்று மெளனமாக சப்தம் போட்டுக் கொண்டிருந்தது. பத்து மணியிலிருந்து 15 நிமிடங்கள் கழிந்திருக்கும்;
எங்கோ அடிவிழுந்து வலிக்கின்றது மாதிரி, ஒரு மந்தமான உணர்ச்சி அவருக்கு முதலில் ஏற்பட்டது. இருதயம் தப்பும் தவறுமாய் அடித்தது. பிற்பாடு மார்புடன் தொடைச் சதைகள், குதிகால் தசைகள், முதுகெலும்புக் கொக்கிகள், தோள்பட்டைகள் எல்லாமே அவருக்கு வலித்தன. பாதம் வீங்கி அது மழுவாய்க் கொதித்தது. கணுக்கணுவாய் தெறிப்பது போலவும் வலித்தது. தொண்டை எரிந்தது. உடம்பு ஏதோ கட்டில் அடங்காதது போல் விடவிடத்தது.
இதனால் மனத்தில் இருந்த அந்தச் சந்தேசம், இப்போது தெளிவாயிற்று அவருக்கு. அது மின் வெட்டிச் சட்டென்று புரிந்தது.
‘அசதிமறதியாய் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் போட்டுக்கொண்ட, மாத்திரைகளின் வேகமான வேலைதான் இது அகஸ்தியர் வாதாபியை வயிற்றுக்குள்ளே ஜீரணித்ததுபோல் நானும் விழுங்கிய குளிசைகளை சீரணிப்பு அடையவிட்டுவிடலாம்; ஆனாலும் இனிவரப்போகும் விளைவுகள் என்னிடத்தில் எப்படியாயிருக்குமோ..?”
என்று இப்படியெல்லாம் நினைத்துக் கொள்ளத் தொடங்க.
முன்வழுக்கையிலும் நெற்றியிலும் அவசர வியர்வை கோர்த்துக் கொண்டுமின்னியது. ஒரே சமயத்தில் உப்பான நீரை உமிழ்வது போல், மற்றும் அவயவங்களிலிருந்தும் வியர்வை ஊற்றுகிறது.
மேலே மின்விசிறி ஓய்வற்றுச் சுழன்று காற்றை விசிறியடித்துக் கொண்டிருந்தும், உடல் வெப்பத்தை ஆற்றுவதற்குரிய பயனை அது கொடுக்கவில்லை.
அவர் உள்ளுக்குள் உதறலுடன் கண்களை இறுக மூடிக்கொண்டு, தூக்கம் வருவதற்காகப் பிரார்த்தித்தவாறு புரண்டு படுத்தார்.
என்றாலும் தன்னை படுக்கையில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாத நிலை. மனத்தின் எண்ணங்களுக்கு விரோதமாகப் போராடுகிற வேறொரு உணர்ச்சி, தன் அவயவங்களில் இருப்பதை அவரால் இப்போது உணர முடிகிறது.

Page 89
160 உருமாறவ
இவையெல்லாம் ஏற்படப்போகின்ற மாற்றங்களை அவருக்கு லேசாகக் கோடி காட்டிவிட்டது.
அவரது நினைவுதனில் மண்ணுளிப் புழுக் கூட்டங்கள் நெளிய ஆரம்பித்தன. 'குழ குழ' வென்று தான் இருப்பதும்; வளைந்து நெளிந்து கொண்டு இருப்பதாகவும் அவருக்கு இருக்கிறது. அந்த நிலைமை நினைவிலும் நெளிந்து நெளிந்து நிழலாடிற்று. உடனே சந்தேகத்தில் தன் உடலை தலையிலிருந்து முழங்கால் மட்டுமாக கைகளால் தடவிப் பார்த்தார்.
பணியாரங்களை நெருக்கமாக அடுக்கி வைத்தாற் போல உடல் முழுவதும் வளையம் போன்ற பகுதிகள் இருப்பதாகவும்; தன் தலையைச் சுற்றி சக்தி வாய்ந்த தசை வளையங்கள் இருப்பதாகவும், கை படும்போது அவருக்குத் தெரிகிறது. ஒரு மண் புழுவை நுழைத்தது போல் கவனத்தைக் கவரும்படி, நடு நெற்றி நரம்பு புடைத்துள்ளதையும் அவர் உணர்ந்தார். குனிந்து கொஞ்சம் மண்ணைத் தோண்டினால் - மக்கிய இலைகளை லேசாகக் கிளறினால் - ஒரு புதிய உலகத்தில் நுழைந்து விடலாம் என்று அவருக்கு மனம் ஏவியது.
'பூமியின் குடல்கள் போன்ற புழுவாய் நான் மாறிவிட்டேனா..?
அவரிடமிருந்து கணத்துக்குக்கணம் இது போன்ற ஆச்சரியங்கள் வெளிப்பட்டன. மண் புழுவின் உடற்கூறியல் தன்னிலும் இருப்பதான அந்த ஆச்சரியத்துடன், ஒரு சிறு மண் புழுவைப்போலொரு நினைவு நெளிந்து நெளிந்து மேலாடி தொண்டையில் வந்து பொறுப்பது போலொரு அசெளகரிகம்.
இப்பொழுது தான் ஒரு குளிர்ந்து உறைந்து போன புழுவாக மாறிவிட்டிருப்பதாகத்தான் அவருக்கு அழுத்தமான நினைப்பு. ‘நான் நீயாக, நீ நானாக, அது அவனாக, இது அவனாக மாறலாம்! மாறும்.! இது மறு பிறவித் தொடர்புடைய சிந்தனை அல்ல!' - என்று எங்கோ படித்தது அவருக்கு ஞாபகத்தில் வெளிப்படுகிறது.
அப்படியென்றால், நான் எலும்புக்கூடற்ற புழுவாக மாறிவிட்டேன் என்று நினைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கலாம்!
நான் எளிய மண் புழு அல்ல!
உலக சரித்திரத்தில் புழு ஒரு முக்கிய பங்கு வகித்ததாக சார்ல்ஸ் டார்வின் கருதினாரே?
புழு புனிதமானவை என்று எகிப்தின் இராணியான 'கிளியோபாட்ரா கூட அறிவித்தாரே..?

x நீரிசுருளானந்தம் 161 இப்பேர்ப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் எந்த உயிரினத்தை இந்தளவுக்குப் புகழ்ந்தார்கள்? என்கின்ற அவைகளின் நினைவால் மனித உருவிலிருந்து புழுவாகி விடுவதற்கு அவருக்கு எந்த வெறுப்பும் இப்போது ஏற்படவில்லை. ரிஷிகள் பலர் மனிதர்களுக்கே பிறக்காமல் மானுக்கும், நரிக்கும், மாட்டுக்கும், தவளைக்கும், நாய்க்கும், கிளிக்கும், கரடிக்கும், குதிரைக்கும் பிறந்தார்கள் என்றிருக்கும்போது நான் அவர்களைப் பிறப்பித்த அந்த உற்பத்திக்குள்ளே என்விருப்புடைய ஒரு புழுவாய் மாறிவிட விரும்புகிறதில் என்னதான் ஆச்சரியமுண்டு?
புழுவின் மேலிருந்த வெறுப்பூட்டும் தன்மை இப்போது மனத்தில் அழிந்து போனபின், அந்த மாற்றத்துக்கு அவரது மனமும் ஒத்துழைப்பது போலிருந்தது. இதன் பிறகு சதைக்கூட்டில் வெறும் தோலைப் போர்த்தது போல, உடல் முற்றாக மாற்றமடைந்து விட்டதாக அவருக்குத் தெரிந்தது. ஒன்றன் பின் ஒன்றாக, தன் உடலில் ஒவ்வொருபகுதியும் சுருங்கி விரிகையில் ஏற்படும் அசைவால், உடல் முழுவதும் நகர்வது போல் அவருக்கு இருக்கிறது. எதிரும் புதிருமாக தன் உடலிலுள்ள தசைத் தொகுதிகளை நீட்டிச் சுருக்குவதன் மூலம் கட்டிலின் மீதுதான் நகர்கிறதாக அவர் எண்ணினார். உடலின் ஒரு முனையை நங்கூரமிட்டு மற்றொரு முனையை வேகமாகச் சுருக்கிக் கொள்ள முனைவதும் அவருக்கு இலகுவாக இருக்கிறது.
புழுவாகிவிட்டால் அந்தப் புழுவிற்குரிய யோசனையும் இருக்கும்தானே? இப்படியே தான் ஒரு பென்னம் பெரிதான ராட்சதப்புழுவாக வளர்ந்துவிட வேண்டுமென்று அவருக்கு பேராசை எழுகிறது. ஒரு குப்பை நினைவும் அதற்குள் வருகிறது. தன் மனத்தின் அடித்தட்டிலுள்ள குப்பைக் கூடையில், அழுந்திக் கிடப்பது என்னவெல்லாம் என்பது அவருக்கே நல்லதொரு வடிவமில்லை. புழுப்போன்ற இந்த அசைவுக்கு முடிவு: ஓய்வு, மறைவு, உயிர்பிரிவு - இதுவே சாவு என்று அவருக்கு விளங்கியது.
அந்த அதிர்ச்சியில் கனத்த பாசிமூடிய புதர்க்காடுகள் நிறைந்த ஆழத்தையே காணமுடியாத ஒரு பெருங் கிணற்றுக்குள் விழுந்து கொண்டிருப்து போல திகைப்பு. இந் நிலையில் அரை உயிர்கூட தனக்கு இல்லை! கால் உயிரும் இல்லை! என்கிறதாய் ஒரு பயப்பிரமை.

Page 90
162 മൃ-ശ്രീഗമ
இந்த நிலையிலே உயிர்ப் பொறி மங்கி மறைந்து விடும்போல அவருக்கிருந்தது. ஒருதரம், இரண்டுதரம், மூன்றுதரமென்று காலனின் ஏலம் துவங்கி விட்டது மாதிரி இருந்தது.
இவைகளை நினைத்து அழுகையும் தொண்டை வரையில் அவருக்கு வந்திருந்தது. தொண்டை வறண்டிருந்தது.
கூசிப்போன விழிகளுடன் அவர் பயந்துபோய், கட்டிலுக்குப்பக்கத்துச் சுவரில் ஒரு பல்லினியப் போல ஒட்டிக்கிடந்தார்.
வாய்க்குளிருந்த எச்சில்களுக்கென்று சிதறி, சொக்கையில் ஒழுகி ஓடியது.
é é - 5 9
LD. • . . . 29 DD..... என்று தீனமான முனகல்.
அவர் இம்மாதிரி தீன சுரத்துடன் ஒரு நாளும் மானத்தை விட்டுக் கதறமாட்டாரோ - என்று எப்படியோ அதைக் காதில் கேட்டுவிட்டு, அந்த இரவு அகாலத்தில் அவள் அதறிப்பதறி படுக்கையை விட்டு எழுந்தாள். சாம முழிப்பின் கனம் இமைகளில் நெரிய, கண்களைக் கசக்கிக் கொண்டே அவ்விடம் அவள் வந்து விட்டாள். அவரது உடல் நிலை அவளை மிகவும் கலங்கச் செய்தது.
கட்டிலை மூடிய நுளம்பு வலையை உயர்த்திப் பார்த்த போது, அவரது கால் வீங்கியிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அது அவளைத் ‘திக் கென்று திகைக்குமாறு நிறுத்தியது. நீட்ட முடியாத நீட்டினால் மடக்க முடியாத அவரது முழங்காலைத் தடவியபடி, ‘பூச்சி பொட்டுகள் ஏதாவது கடிச்சுத் தடிச்சிட்டுதோ..?” - என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
ஒரு கணம் மூச்சை உள்ளே இழுத்து அடக்கிக் கொண்டு மேலும் அதை ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தாள்.
‘இல்ல. இல்லவே இல்ல.!” - என்று வறண்ட உதடுகளை எச்சிலால் நனைத்துக் கொண்டு அவர் சொன்னார். ஜன்னி கண்டவனின் பிதற்றலைப் போல், ஆவேசமாகவும் தொடர்பற்றதுமாய் இருக்கிறது என் பேச்சு என்று அவருக்குத் தெரியும்.
அவள் திணறிப் போன மூச்சோடு இருந்து கொண்டு, மின்சார விளக்கை ஏற்றினாள். படுத்த இருப்பிலிருந்தே அவர் அசையாமல் தலையைச் சாய்த்து, அவளை நோக்கினார். புருவங்கள் நெளிந்து கொடுத்தன. ஆனால் உண்மையில் அவரால் வடிவமாகத் தன் மனைவியின் உருவத்தைப் பார்க்க முடியவில்லை. மழுங்கிய கூழாங்கற்கள் போன்ற அவரது கண்களுக்கு கூர்ந்து நோக்கும் சக்தி ஏது?
குபிரென உலுக்குப் பயத்தால் பார்வை கூட பஞ்சடைத்துத் தெரிகிறது அவருக்கு. அவருக்கு வந்த அந்தப் பரிதாப நிலையைப் பார்த்ததும்,

of-9 27്രമ ്യ മUശ്രസീമ 163
86) (656) Luu திகைப் பு சொல் லத் தர மல ல! இவளுக்கு மயிர்க்கூச்சலெடுக்கிறது.
‘உங்களுக்கு என்ன நடந்ததுங்கோ..? உடல் முழுக்கப் பசை பூசின மாதிரி வந்திட்டே?” - இவள் பதறினாள்.
‘நான் புழுவாய்ப் போயிற்றனோ..?’ - பயத்தில் அவர் வார்த்தைத் தடுமாற்றங்களுடன் அவளிடம் கேட்டார். வேறு யாரோ பேசுவது மாதிரி, அவர் குரலே அவருக்குக் கேட்டது. தன் குரல் எவ்வளவு சோர்வுடன் தணிவாக ஒலிக்கிறது, என்பதைக் கேட்டு அவருக்கு வியப்பாயிருந்தது.
இதற்கெல்லாம் அந்த உணர்ச்சி அவரிடம் வலிமையோடிருந்தது. அதைப் பற்றிய சிந்தனை சுழல் நீராக அவரது மனசுக்குள் சுழன்று கொண்டிருந்தது. அதுவெல்லாமே இவளுக்குத் தெரியவில்லை. என்றாலும், அவருடைய முகம் அவரது ஆத்மாவுடைய பிம்பமாக இருக்கிறதை அவள் கண்டுகொண்டாள். அவரது உடலுக்கு இத்தனை தொடர் தொல்லைகள் ஏற்பட்டிருக்க ஏதாவது காரணம் உண்டு என்று அதனால் அவள் எண்ணினாள்.
yy
‘உடன ஆசுப்பத்திரிக்குப் போவமுங்கோ.” என்றாள் அவள். நெருப்பைக் கையிலெடுத்துக் கொண்டது மாதிரி பரபரப்போடு அவள் நின்றாள். அவர் எங்கோ உள்ளாழ்ந்து மெய்ம்மறந்தவர் போல் கண்களை மூடிக் கொண்டார். மீண்டும் மீள முடியாத இருள் கும்மியிருந்த சுரங்கத்துள்ளே, புகுவது போல் அவருக்குப் பட்டது. அந்தப் பாழ் இருள் கழிந்த பிறகு எங்கேயும் ஒரே ஒளி அந்த வெள்ளை ஒளிக் கீற்றுக்குள் தான் புகுந்து விட்டது போலவும் அவருக்கு இருந்தது. அந்த ஒளிக்குள்ளேயே கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக நினைவு மயங்குகிறது மாதிரி அவருக்கு இருக்கிறது. இருந்தாலும் அப்போதும் உள்விழிப்பு அவருக்கு நன்றாகவே இருந்தது. தன் உடல் முழுவதும் சுவாசிக்கிறது என்ற நினைப்போடு அவர் கண் விழிக்கும் போது; நிலப்பரப்பையே துடிதுடிக்க வைக்கும் அதிகமான சூரிய வெக்கை அடிக்கும் நடு மத்தியானப் பொழுதாக இருக்கிறதை அவர் அப்பொழுது உணர்ந்தார். இப்போது கண் நல்ல பார்வை; பார்க்கும் காட்சிகளெல்லாம் அவருக்கு அத்தனை துல்லியம்.
தொட்டு விடும் தூரம் போல அவருக்குப் பக்கத்தில், மருந்துப் புட்டிகள்

Page 91
164 உருமாறவ
தோற்றம் தந்தன. வாயெல்லாம் கசந்து அவருக்கு அழறியது.
9
‘ஹ?ம்.” என்று ஒரு மூச்சுக்கலந்த அசட்டுச் சத்தத்தை ஏற்படுத்தியதோடு, கட்டிலின் பக்கவாட்டில் அவர் திரும்பிப் பார்த்தார். “உங்களுக்கு உடம்புக்கு ஒரு நோயுமில்ல. இனிமேல் பயப்பிடாதயுங்கோ. அவள் சொல்லச் சொல்ல, அவருடைய கண்களில் கண்ணிர் முட்டிச் சிதைந்தது.
அப்பொழுது அந்த அறைக்குள் நுழைந்த நேர்ஸ் (NURSE) ‘டொக்ரர் (DOCTOR) வாறார்.” - என்று கடமை உணர்வு கலந்த வெளிப்பாடுடன் சொன்னாள்.
அவர் நன்றி கலந்த பார்வையுடன் டொக்ரரைப் பார்க்கக் காத்துக் கிடக்க; பூட்ஸ் சத்தத்துடன் அமைதி காக்கத் தொடங்கிய அந்த வார்டினுள் நுழைந்தார் டொக்ரர். -
‘'இப்ப உடல் நிலை உங்களுக்குத் தேறிட்டுது. இனிமேல் பயப்படத்தேவையில்ல. எண்டாலும் இந்த யோசனையிலையே நீங்கள் நெடுகலும் இருக்கிறது உடம்பைப் பாதிச்சிடும். அதை விடவேணும்.” “ஓம் டொக்ரர் இன்னும் இதை இவருக்கு கொஞ்சம் வடிவா சொல்லுங்கோ.” டொக்ரர் அவளைப் பார்த்து அர்த்த புஷ்டியான பார்வையுடன் சிரித்தார். “எழுத்தாளர்களே இப்படித்தான் அம்மா..! இதனாலதான் இவர்களுக்கென்று சிலநோய்கள் எழுதி வைச்சது மாதிரி இருக்கு. இதையெல்லாம் நாங்கள் சொன்னால் இவயள் ஏற்றுக் கொள்ளமாட்டினம்!” என்று ஒரு நிஜத்தையும் அவளுக்குச் சொன்னார். டொக்ரர் சொன்னதில் உதாசீனப்படுத்த முடியாத சுட்டல் இருப்பதாக அவளுக்குப்பட்டது.
‘இவருக்கு இன்ன சமயத்தில இன்ன மாதிரி மூளை வேலை செய்யுமெண்டு கண்டுபிடிக்கவே முடியாது டொக்ரர். துக்கம் வந்தால் இவர் அடிபாதாளத்துக்க விழுந்திடுவார். உற்சாகம் ஏற்பட்டிட்டால் ஆகாயத்தில் இவர் பறப்பார். எப்பவும் உள்ளத்து உணர்ச்சியை நடு நிலையிலை வைச்சு காக்கிற பயிற்சி இவருக்குக் கிடையாது.” அவள் அப்படிச் சொல்லச் சொல்ல மண்ணுக்குள் தன் உடல் புதைவதைப் போல் அவருக்கு இருக்கிறது. 'இனிமேல் எதிலும் நீங்கள் கவனமாயிருக்க வேணும். எதுக்கும் தீரயோசிக்கிற அவஸ்தையிலயிருந்து நீங்கள் விடுதலை பெறவேணும்.

শুৈ৯২ ரீடரிஅருணானந்தம் 165 இந்த அதிகப்படிப்பெல்லாம் உடம்புக்கு இளைப்பு மிஸ்டர்.!” - என்று சில வார்த்தைகளில் எல்லா அருத்தத்தையும் வைத்து அழுத்திச் சொன்னார் டொக்ரர்.
‘குறிப்பா இன்னுமொரு விஷயத்தையும் சொல்லவேணும்; மருந்து குடிக்கிற தருணங்களில இனி நீங்கள் தான் குளிசைகளை சரிபார்த்து அவக்கு எடுத்துக் குடுக்க வேணும். இதில நீங்க ரொம்பக் கவனமாயிருங்கோ.”
அந்த எச்சரிக்கையையும் சிரித்தபடி அவளைப் பார்த்து விடுத்து விட்டு அவர் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்.
மேல்மாடியில் அவர் படுத்துக்கிடந்த வார்டின் ஜன்னலிலிருந்து காற்று சுகமாக வீசிற்று. சோர்வை அகற்றி உயிரூட்டும் காற்று அது.
இவருக்கு மறைந்து போனவை போலக் கிடந்த இயல்பூக்கங்கள் மறுபடியும் உயிர் பெற்றதைப் போல் இருந்தன. இனிமேல் எந்தச் சிரமங்களையும் சகித்து திண்மையடைய வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனாலும் தன்னிடம், ஏதோ இனம் புரியாத ஒரு விதமான உணர்ச்சி வலிமையோடு இருப்பதாக அவருக்குப்பட்டது.
அந்தச் சந்தேகத்தோடு தன் மனத்தைக் கொஞ்சம் தேற வைத்துக் கொள்ள தன் மனைவியின் முகத்தை அவர் பார்த்தார்.
அவளோவென்றால் அந்நேரமாய் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு சகல துக்கங்களையும் நீக்கும் திருநீற்றைக் கொண்டு வந்து தன் விரல்களால் அவரது நெற்றியிலிட்டாள்.
கவலையில் இருந்து மீண்டு விட்டதனால் அப்பொழுதுதான் அவரைப் பார்த்து அவள் புன்னகைத்தாள்.
(2005)
OOO

Page 92
அகவிதை 166
அகலீதை
மிதிலைக்குக் கொஞ்ச தூரம் தள்ளி சில காலங்கள் வரை வறண்ட நிலமாய்க் கிடந்த அந்த இடம், மலட்டுத்தன்மை நீங்கி பசுமை பெற்றதாய் இப்போது மாறிவிட்டிருந்தது. கலப்பையின் பரிசம் படாமல் புதரும் பூண்டுமாய்க் காடாய்க் கிடந்த அந்த நிலத்தில் பிரயோசனம் தரும் - செடிகள், கொடிகள் வளமாக எழுந்து வளர்ந்திருந்தன. இது நாள் வரையில் யாரும் குடியிருக்காததாகக் காணப்பட்ட அந்தப் புராதன ஆசிரமத்தில் மீண்டும் மகரிஷி கெளதமர்; தன் தேவியாரான அகலிகையுடன் அந்தக் குடிசையில் வாழ ஆரம்பித்ததாலேயே அந்த இடம் மீளவும் ஒளி கொண்டதாய்விட்டது.
வறண்டு கிடந்த அந்த நிலத்தில் இராம மூர்த்தியின் பாதடித்துகள் பட்டதும், அகலிகையுடன் சேர்ந்து பாவம் நீங்கிய இடமாக அந்த இடம் இப்போது மாறிவிட்டிருந்தது. அதற்குப் பிறகு அந்த இடத்திலெல்லாம் மேகம் குளிர்ச்சி தரும் துளிகளைத் துளிர்க்கச் செய்து தூவிக்கொண்டிருந்தது. உலர்ந்து காய்ந்து சருகாகிப்போன அருகம் புல்களும், கோரைப்புல்களும் அவ்விடங்களில் முளைத்து விட்டன.
குடிசையின் முன்னுளள் முற்றத்தில் கொடி முல்லைப் பூக்களும், கொத்துக் கொத்தாய்ச் செவ்வரளிப் பூக்களும், செம்பருத்தம் பூக்களும் முகை இதழ் அவிழ்ந்து மலர்ந்திருந்தன. புஷ்பிக்கக் காத்திருக்கும் மொட்டுக்களும் அவைகளில் முளைவிட்டிருந்தன.
என்ன அற்புதமான புஷ்பங்கள்! என்ன அழகான வர்ணங்கள்! எவ்வளவு இன்பகரமான வர்ண விஸ்தாரங்கள்! அந்த ஆசிரமத்தைச் சுற்றிலும் இப்போது வசந்த ஆடை தரித்திருந்தது. சிவப்பும் நீலமும் மஞ்சளுமாக ஆங்காங்கே விதவிதமான காட்டுப்பூக்கள் மலர்ந்து மனசையும் கண்ணையும் ஒருங்கே
Duudbloo.
எல்லாவற்றிலும் புதியதொருபசுமை. பறவைகள் பாடின. குயில்களின் கூவோசை வானிலே மிதந்தது.
இலை மக்கிய இடமாக இதுநாள்வரை இருந்த அந்தப் பகுதியெல்லாம், பசுஞ்சோலையாகமாறி தெய்வ சாநித்தியம் தாண்டவமாடிற்று.

> நீரிஅருளானந்தம் 167 வசந்தத்தின் காற்று, மணம், ஒலி, ஒளி எல்லாமே அந்த ஆசிரமத்தின் நந்தவனத்தைச் சூழ்ந்திருந்தது.
拳兼兼
அகலிகையை கல்லாய்ச் சமைந்து போகும்படி சாபமளித்தபின்பு மேற்கொண்டிருந்த கடும் தவத்திலிருந்து கெளதமர் இப்போது மீண்டிருந்தார். சிவனையெண்ணித்தவமியற்றி அந்தத் தவத்தின் பலனாய்ச் - சினங் கொண்டு அகலிகைக்குச் சாபமளித்ததில் இழந்துபோன தன் அற்புத தபோபலத்தை மீண்டும் அவர் அடைந்து விட்டிருந்தார். நெருக்கிய தாடி வளர்த்து தன்னையும் தன்னுடைய வாழ்வையும் மறைத்து வைத்திருந்த தபோதனர் கெளதமர் - முன்போல செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்று சாஸ்திரப்படி யாகம் நடத்தவும் தொடங்கிவிட்டார். தன்னை வஞ்சகத்தால் நீங்கச்செய்து தன் உருக்கொண்டு தனது தேவியின் கற்பினைக் கெடுத்த தீயன் தேவேந்திரனின் துரோகத்தைக் கூட, தன் நினைவிலிருந்து அவர் எடுத்தெறிந்து விடத்தான் முயல்வு கொண்டிருந்தார்.
அந்தத் துரோகச் செயலை நீளித்தலாய் நினைவில் வைத்திருத்தல் - அகலிகை மேல் குரூரத்தை வளர்த்தி பெறச்செய்துவிடும் என்றதன் காரணத்தால், தபோவன சிந்தனைகளிலும் அநுஷ்டானாதிகளிலும் அவர் தன் மனத்தை ஈடுபடுத்தி அவைகளை மறந்து விட முயன்றாலும் - வடுக்கள் ஏற்படும் வண்ணம் அவையெல்லாம் திரும்பியும் வந்து, மனத்திலே அவருக்குத் தைய்க்கவும்தான் செய்கின்றன. மனித உடம்பிற்கே உரிய ஆசாபாசங்கள், துன்பதுயரங்கள் எல்லாவற்றையும் முற்றாக துறந்து விட முடியவில்லையே; என்று இதனால் அவர் நினைத்து வேதனையுற்றார்.
மகரிஷியாயிருந்தாலுமென்ன. அவருக்கும் இருப்பது மனித இதயம்தானே! அவரது மனவட்டத்தில் ஒரு சில கேள்விகள், திரும்பத்திரும்ப எழுந்தவண்ணம் இடையுறாது தொந்தரவு அளிப்பதாய் இருக்கின்றன. மனத்துளேயே எழும்பி வந்து தாக்கும் வேதனை தரும் கேள்விகள் அவை.
அகலிகையின் இடத்தில் அன்றுதான் இருந்திருந்தால், தன்னுடைய நிலை என்னவாக இருந்திருக்கும் என்று அந்த நியாய விசாரணையை, ஒருமுறை நினைவுகூர்ந்ததும் அவரது இதயம் சீழ் கூட்டி நிற்கிறது. ஆம் துர்க்கந்தம் மிக்க சீழ்.
அன்று தாமத குணத்தால் - உடனே அகலிகையைச் சிலையாய்ச் சபித்துவிட்ட பாவச் சுமையால், இதயம் அவருக்குச் சுக்கு நூறாவதைப் போல் இருக்கிறது.
அந்தப் பாபகம் தீர்க்க தர்ப்பையை வைத்து தருப்பணம் செய்தாலும் பாவம் தொலையாது என்று அவர் மனம் வருந்துகிறார். இதன் காரணமாய்

Page 93
அகவிகை 168
நாசியில் சூடான காற்று சுழி முனையில், அவருக்கு வீசிக்கொண்டிருந்தது. மூலாதாரத்திலிருந்து உச்சித்துவாரம் வரைக்குமாக நிற்கும் அந்த நடுநாடியில் - பிராணயாமத்துடன் மந்திரத்தை உருவிவிட்டவாறு கெளதமர் அந்த மனம் குழம்பிய நிலையிலிருந்து தன்னை மீட்டெடுக்க, தூய்மையான மான் தோல் விரிப்பில் சுகாசனமிட்டு அமர்ந்தவாறு - ஞான முத்திரையிட்டபடி தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். அப்படியே ஜெபத்தில் பிறகு அய்க்கியமாகிவிட்டார் அவர்.
灘聯灘
தண்ணிர்க்குடத்தை இடையில் வைத்துச் சுமந்துகொண்டு, கங்கைக் கரையைவிட்டு நடந்துவந்து கொண்டிருந்தாள் அகலிகை. புல்தரைமீது பனித்துளி கால்களை வருடும் சுகானுபத்தில் திளைத்தவளாய் நடந்து கொண்டிருந்த அவள் மனத்தில், கரிய சிந்தனைகள் தானாகவே எழுந்து வேதனை கொண்டு சுழல ஆரம்பித்தன.
பயமுறுத்தும் ஒருவித வேகமுடன், ஒரு மையப்புள்ளியைச் சுற்றியே அவை சுழல்கின்றன.
தொலைபட்டுப்போன கடந்த கால நிகழ்வுகளை நோக்கி அவளது நினைவுகள் பறந்து போயிற்று. அது ஒரு மோசமான நினைவூட்டல், அவளிடம் அந்தக் கொடிய சம்பவங்கள் நினைவுப் புற்றிலிருந்து வெளிக்கிட்டது. அதனால் அவளுக்கு மனசெல்லாம், எரிபந்தம் நூர்ந்து புகைவது போல Լյ60)&պւIգածl.
‘நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன். மோசம் போய்விட்டேன். வஞ்சமனத்தானால் வஞ்சிக்கப்பட்டு விட்டேன்.” என்று மந்திரம் உருவி விடுவது போல், அவளது உதடுகள் முணுமுணுத்தன. 'அந்த நிழல் வீசும் மரத்தின் கீழ், இறுகிய கல்லாகவே நான் இருந்திருக்கலாம் என்று நினைத்து அதற்காகவே அவள் தன்னை, மறுபடி மறுபடி தோலுரித்துக் கொண்டாள்.
காலை வேளைதனில் அவ்விடமிருந்து நடந்து வரும்போது பின்னிமுடையும் இந்தச் சிந்தனைகளிலிருந்து மனம் ஆற்றுதலடைய - ஜ்வலிக்கும் வசந்த சூரியினது ஒளிப்பரவலை முகமுயர்த்தி ஒருமுறை பார்த்திட அகலிகை விரும்பினாள். இருந்தாலும் சூரியனை, நேர்பட நிமிர்ந்து பார்த்திடவும் பயம் அவளுக்கு. குந்திதேவியாருக்கு நடந்தது தனக்கும் நடந்துவிடுமோ என்கின்ற பயம்! அதோடு அந்த வான் மேகங்களையும் பார்க்க வேண்டியதாய் வரும் என்ற அச்சம்!

නමු. நீ/அருளானந்தம் 169 'வாயு, சூரியன், அக்கினி முதலியன கற்புடையாளைத் தொடுங்காலத்து மனம் நடுங்குவராமே. இது உண்மையோ அன்றிப் பொய்யோ...' என்று ஒருமுறை அதனை நினைத்தும் - பிற்பாடு உடனே அந்த நினைவை ஒருபுறமாக தள்ளி வைத்துவிட்டு அந்தப் பாதையோரம் அவள் பார்த்துக்கொண்டு நடந்தாள்.
அங்கே ஒரு ஒளிப்பிடத்தில் - புதருக்குள் ஒளிந்திருக்கும் சருப்பத்தின் கண்கள் போல இந்திரனின் கண்கள்;
மீண்டும் அவளில் நெருப்பைப் பற்ற வைத்து விடுமளவிற்கு, உக்கிர பார்வையுடன் காணப்படுவது போல் ஒரு பிரமை உண்டாகியது அவளுக்கு. சிவந்த சூடான நெருப்புத் துண்டுகளைப்போல், அவனது கண்கள் மின்னுகின்றன. இந்திரன் ஆயிரம் கண்களால் தன்னைப் பார்ப்பது போல அவளுக்கு இருந்தது.
உடனே பதறிவிட்டாள்.
இவளுக்குள் பூரான் ஊர்கின்ற உணர்வு.
முள்ளில் உட்கார்ந்திருப்பவளைப் போலத்தவித்தாள். உடம்பு தலையிலிருந்து கால்வரை வெடவெடவென்று நடுங்கியது. வியர்வை வாங்கியது.
‘நான் தீண்டியதிலிருந்து நீ என்னுடையவள்
யாரோ அங்கிருந்து பேசுவது போல மீண்டும் பிரமை,
‘நான் விரும்பியதெதையும் என் கையகமாக்காமல் விடவேமாட்டேன். ஒன்றைச் செய்யத்துணிந்தால் அதை நான் நிறைவேற்றியே தீருவேன். அதற்கு எதிர்ப்புக் கூடக்கூட அதை நிறைவேற்றுவதும் உறுதிப்படும்.
உடனே அவளுக்கு திகில் கிளைத்தது, நீராடிய தேகத்திலிருந்து நீர்த்துளி உதிருவதுபோல், வேர்வைத் துளிகள் அவள் உடலை நனைத்துவிட்டது. இடுப்பில் தாங்கியிருந்த குடத்துத் தண்ணிர், உடல் நடுக்கமுற்றதால் தளும்பி வெளியே சிந்தி அவளது ஆடையையும் நனைத்துவிட்டது.
இதுவெல்லாம் வீண் மனப்பிரமையே என்று எண்ணி பின்பு அவள், தன்னை உடனே சுதாரித்துக் கொண்டாள். என்றாலும் சந்தேகங்களையே ஈன்றெடுக்கும் காட்டு மிருகம் போன்றதுதானே இதயம், என்று அவளுக்குள் ஓர் உண்மையின் வெளிச்சம் தோன்றியது.
எனவே மீண்டும் நிதானமாக அவ்வழியே அவள் நடந்துகொண்டிருந்தாள்.
அவளுக்குப் பின்புறமாகவிருந்து இப்பொழுது சிரிப்பொலி கேட்கிறது. அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!

Page 94
c፵aኝãkoxá 170
பின்னால் வருகின்ற அவர்கள் அந்த இடத்தில் வாழும் ரிஷிகளுடைய பத்தினிகள்தான் - என்று அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். அவர்களும் அங்கே குடத்தில் தண்ணிர் முகந்து கொண்டு - பேச்சும் சிரிப்புமாய் - கேலியும் கிண்டலுமாய் ஊர்ப்புறணி பேசிக்கொண்டு வருகிறார்கள்.
அவர்களின் அந்தக் கதைகளுக்கிடையே, ‘அகலிகை’ என்ற தன் நாமமும் இழுபடுகிறதை அவளது செவிகளும் கேட்டுவிடத்தான் செய்தன. அவர்களது வாயிலிருந்து புறப்பட்ட சொற்கள். அப்பப்பா..!! சொல் அகராதி புறமுதுகிட்டுத்தான் ஓடவேண்டும்.
இவளைக்காணும் போதெல்லாம் வார்த்தைச் சவுக்கால் சொடுக்குவது அவர்களது இயல்புதான்.
வந்தவர்களுக்குள்ளே ஒரு ரிஷிபத்தினி மற்றைய பெண்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்:
‘'இப்படியெல்லாம் இலச்சைகேடு நடந்தும் கூட நசிந்து இற்று விடாமல் மிச்சமிருக்கும் நம்பிக்கையடன் இவள் நிமிர்ந்து நடக்கிறாளே.!!”
அவள் சொல்லி முடிய அடுத்தவள் தொடருகிறாள்:
‘'இப்படியும் ஒரு வாழ்க்கையை இவள் வாழவேண்டுமா? இதைவிட கெட்டுப்போன பின் இவள் சபிக்கப்பட்டுப்போன அந்தக் கல்லாகவே நெடுகுதலும் இருந்திருக்கலாம். அந்தக் கெளதம மகரிஷிக்கும் மதியில்லை - உண்மையும் விசுவாசமுமுள்ள ஒரு பத்தினியாக இன்னும் அவளை அவர் நம்பி மோசம் போகிறார். இவர்களால் எங்களுக்கும் இருக்கின்ற மானம் காற்றிலே பறந்ததைப்போல் போகிறது. ரிஷிபத்தினிகள் விரகத்தை விரதமாக்கி - தாபத்தை தவமாக்கி - காமத்தை யோகமாக மாற்றிவிட வேண்டும். அதையெல்லாம் கடைப்பிடித்து நடக்காமல் இப்படியோ கேவலமாக நடப்பார்கள்? - இவளின் செய்கையால் ரிஷிகளையும், ரிஷிபத்தினிகளையும் மாட்சிமையான இடத்தில் வைத்துக்கணித்தவர்க ளெல்லாம், இனிமேல்பட்டு இகழ்ச்சிச் சொற்களால் வதை செய்யத்தான் போகிறார்கள்.”
அடுத்தவள் அதையடுத்து :
'ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் வாழும் இந்த ஆரண்ணியத்தில் இருந்த தூய்மையே இவளால் இன்று கெட்டுவிட்டது. இவளின் பாபகமான கை பட்டுவிட்ட அந்த அமிருதஆகாய கங்கையே இப்போது மாசடைந்துவிட்டது. அநீத நீரைத் தானி நாங்களும் கொணி டுசென்று தாகம் தீர்க்கவேண்டியிருக்கிறது. லோகத்தில் இதைவிடக் கொடுமை வேறு எங்களுக்கு என்னதான் இனிவரும்? மென்மையாக அலங்கலாகச் செல்லும் இந்த அழகிய கங்கையின் கரையிலுள்ள தபோவனத்தைவிட்டு; இந்த

x நீரிஅருளானந்தம் 171 ராட்ஷஷியால் நாங்களும் இங்கு இருக்க முடியாமல் வேறிடம் செல்ல வேண்டும் போலத்தான் இப்பொழுது எங்களுக்கு வந்துவிட்டது. இவள் இருக்கின்ற இந்த இடத்திலிருப்பதே மகா மகா கொடிய பாவம்.! எங்காவது வேறிடத்தில் சென்று - இனி நாங்கள் வாழ்ந்தால்தால் விமோசனம் எங்களுக்குக் கிடைக்கும்.”
அவர்களுக்கு இப் படி சந்தர்ப்பம் கிடைக் கும் போதெல்லாம் அகலிகையைத்திட்டித்தீர்த்து மனம் கசங்கும்படி செய்துவிட வேண்டுமென்பதே கொள்ளையான ஆசை. அதிலே வந்து கொண்டிருந்த அவர்களெல்லாம் இப்படியே தங்கள் குரூரமான ஆசைகளை அவளைக் கண்டுவிட்ட சந்தர்ப்பத்தில் வைத்து நிறைவேற்றிக் கொண்டிருக்க-அவர்களுடன் தண்ணிர்க் குடமேந்தி வந்து கொண்டிருந்த அந்தக்குள்ளமான உயரம் கொண்ட ரிஷிபத்தினியும், தன் பங்கையும் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அவாவில், தன் பொன்னான வாயைத்திறந்தாள்.
‘அப்பப்பா. இவளை நினைக்கவே என் உடல் கூசிக் குறுகுகிறது. இவளைப்போல் எந்தப் பெண்ணாவது சோரம் போவாளா? இப்படியும் ஒரு பெண் இப்புவிமீது எங்கேனும் உண்டா? அன்று கெளதம மகரிஷியின் உருவத்தில் இந்திரன் இவளிடம் வந்தானாம். இவள் கணவனென்று நினைத்து இந்திரனிடம் ஏமாந்தாளாம்! இனிமேல்பட்டு கட்டுப்பாட்டின் கடிவாளம் அறுந்துவிட்ட இவளிடம், எத்தனைக் கெத்தனை தேவர்களெல்லாம் சபலங்கொண்டு கெளதமர் உருவெடுத்து வரவிருக்கிறார்களோ. யாருக்குத்தெரியும்?”
என்ற அவளது கேள்விக்கு:
“அதுவெல்லாம் எங்களுக்கு என்னதெரியும் இவ்வளவும் நடந்து முடிந்தும் ஒன்றுமே தெரியாதவள் போல எங்கள் எல்லோருக்கு முன்பாகப் போய்க் கொண்டிருக்கிறாளே அந்த மாய் மாலக் காரி - அந்தப் புரட்டுக்காரிக்குத்தான் அதுவெல்லாம் தெரியும் கருணையற்ற இயல்புடன் பத்தாவுக்குத் துரோகமிழைத்தவள் லேசானவளா என்ன? இப்பொழுதெல்லாம் அவளைப்பாருங்கள்! அவளுக்கு முன்னெப்பொழுது மில்லாதவாறு ரொம்பவும் கர்வம் தலைக்கேறிவிட்டது. அரம்பை, ஊர்வசி, திலோத்துமையைவிட தானே அப்ஸரஸ்திரீ என்றும் அதனால், தனக்குச் சமதையானவர் யாருமே கிடையாது என்றும் இவள் இப்போது நினைக்கத் தொடங்கிவிட்டாள்.”
எள்ளி நகையாடிக்கொண்டிருந்த அவளது அவ்விறுதிக் கேள்விக்குறியும் மாய்ந்தது. ஒருசில ரிஷிபத்தினிகள் ‘கலகல' - வென்று பரிகாசமாகச் சிரிக்கிறார்கள்.

Page 95
அகவிதை 172
இன்னும் ஒரு சிலர் நமுட்டுச்சிரிப்பும்; ஓரிருவர் சூட்டுச்சிரிப்புடனும் நடந்து வருகிறார்கள்.
மனித மனத்தில் எத்தனையோ வக்கிரங்கள் உண்டு. என்றென்றும் சிரஞ்சீவியாய் இருக்கும் குணங்கள் அந்த ரிஷிபத்தினிகளிடத்தும் இருந்தன. அதன் வடிவு வெளியே உருவத்தில் அவர்களிடம் காணப்படாதிருந்தாலும், தன் இயல்பு உணராதவாறு அது அவர்களிடம் ஒளிந்தே நிற்கிறது. அதன்மூலம் அகலிகையின் மேல் உள்ள வஞ்சம் அவர்களுக்கு, வாழ்க்கையின் விரதமாகவே ஆகிவிட்டது.
எதுவெல்லாமோ தன்னை அபாண்டம் பரப்பிக்கொண்டுவரும் அவர்களைத், தன்நடையைத் தரித்துநின்று ஒருமுறை திரும்பிப் பார்த்தாள் அகலிகை. அவர்களது கோடை இடிபோன்ற வார்த்தைகளை, அவளால் தாங்கவே முடியவில்லை!
அதனால், மகத்தான ஒரு நிலைக்கு எழும்பி தன்னை வெறுப்போரை வெட்கித்தலைகுனியச் செய்ய வேண்டும் என்ற வேட்கை, அவள் மனத்தில் தீக் கொழுந்துகளாய்ச் சடபடத்துக் கொண்டு எரிந்தது.
தன் மனத்தை ஓயாமல் வார்த்தைகளால் குத்திக் குளம் பறிக்கின்ற அவர்களை, அழுத்திக் கொல்கிற மாதிரி அவள் பார்த்த அந்தப் பார்வையில்.
அந்த ரிஷி பத்தினிகளது உதடுகள், இறுக்கி அமர்ந்து விட்டன. கத்தியைப் போன்று அவளது உறைந்த பார்வை பட்டதும், தலையைக் கீழே தாழப்போட்டுக்கொண்டு - பயத்தில் குடத்துத்தண்ணிரும் கீழே நிலத்தில் சிந்தும் நிலையில், ஒருவாறு அவளைக்கடந்து தூர எட்டுவைத்து நடந்தபடி அவர்கள் விரைவாக்ச் சென்றுவிட்டார்கள்.
பலகீனம் என்று தெரிகிற ஒன்றே என் பலமாகவும் சிலவேளை மாறி விடுகிறது என்று, அவர்கள் போவதைப் பார்த்தபடி அவள் நினைத்துக் கொண்டாள்.
இவ்வளவு கணம் அங்கு காதுக்குப் பின்னாலிருந்த முணுமுணுப்புகள் இப்போது மறைந்துவிட்டாலும், அவர்கள் வைது விட்டுப் போனதில் ஏற்பட்ட அந்தத் தாக்கம் அகலிகையின் மனத்தை அரித்து குகைபோல் குடைந்ததாக்கியது. நெருப்புக் கொள்ளியைக்குத்தி அழுத்துவது போன்ற தாங்கமுடியாத அந்த வேதனையைச் சகித்தவாறு, மீண்டும் அவள் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் தன் இருப்பிடத்தருகில் வந்து சேரும்போது, முன்புதான் சபிக்கப்பட்டு சிலையாய்க் கிடந்த அந்த இடத்தில் நிற்கின்ற ஆலமர விருட்சத்தை நோக்கினாள். செழித்துக் கொழித்து அரணித்து நின்ற அந்த மரத்தில்,

නඛ. நீபஅேருளானந்தம் 173 பறவைகளின் இனிமைச் செறிவான ஒலிநயம் அவளது காதுகளுக்குக் கேட்டது. கனிந்த பழத்திலிருந்து வரும் கவர்ச்சி வாசமும் அவ்விடத்தில் அடித்தது. தளதளவென்றிருந்த அந்த விருட்சத்தின் பழங்கள், 'பொல, பொல'வென்று விழுந்துகொண்டிருந்தன. அவைகளைக் கவனித்ததில் கணப்பொழுது தன்னிலிருந்த அச்சங்களைத் தூரத்தனிமைப்படுத்திவிட்டு, அவ்விடத்தில் அவள் அமைதியாக நின்றாள்.
அந்த மிக இனிமையான அமுதமான தருணத்தில், இத சுகம்தரும் தன் பழயகால வாழ்க்கையை, அகலிகை ஒருமுறை நினைவில் மீட்டுப்பார்த்தாள். அவள் மனம் எனும் பசு அவைகளை மெல்ல மெல்ல அசைபோட்டது.
பாற்கடலில் பிறந்த தன்னில் தேவரும் மற்றும் யாவரும் விருப்பம் கொண்டிருக்க - அதன் மூலம் விஷ்ணுமூர்த்தி தன்னை அடையக்கூடிய தகுதிக்காய் வைத்த அந்தத் தேர்வில் - நெடுநாள்களாக பாற்கடலில் மூழ்கிப் பொறுத்திருந்தது . அதன் மூலமாகத்தன் யோக நிலையின் வலிமையைக் காட்டிவித்து - தன்னைக் கரம்பற்றிய கெளதம மகரிஷியின் மாட்சிமையை, ஒருகணம் அவள் நினைத்துப் பார்த்திாள். அதன்பிறகு அவருடைய தர்ம பத்தினியாக தான் வாழ்ந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும்; அவர் கால் கழுவிய நீரையே கங்கையாக நினைத்து வாழ்ந்த தன் கற்பு நிலையையும் நினைத்தாள். என்றாலும், மீண்டும் அந்தக் கல்லுருவம் மனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, இடையிட்டு வந்திருந்த அந்தச் சிறிய நேரத்து நிம்மதியினையும் அவளிடமிருந்து அழித்தது. அவளது உள்ளத்தில் சிறிது நேரம் தளிர்த்து நின்ற சீதளமான எண்ணங்கள், இதனால் ஏமாற்றத்தில் துகள் துகளாகிவிட்டன. தன் உள்ளத்துக்குள்ளே நொதித்துப் புளித்து இருக்கும் மோசமான அந்தக் கடந்தகால நிகழ்வுகளெல்லாம் மனத்தில் நிழலாட, அந்த எண்ணங்களில் குமைந்து கொண்டே அவள் தன் பர்ணசாலையை நோக்கிப்போனாள்.
癱雜獅
தியானத்திலிருந்து மீண்ட கெளதமர் தன் விழிகளைத் திறந்து பார்த்தார். தேஜோமயமான அவரது கண்களைக் கண்ட பின்பும், அவளுக்கு ஒருவித திகைப்புத்தான் ஏற்பட்டது.
உடனே அவள் மனசுக்குள் இந்திரன் அடர்கிறான்.
தான் அடைந்த ஏமாற்றத்துக்குக் காரணமாயிருந்தது தன் கணவனின்

Page 96
174 உருவமே என்று நினைக்க, அகலிகையின் கண்களில் கலக்கத்தின் தொடக்கம் கோடுபோடத் தொடங்கியது. ரிஷி பத்தினிகள் வீதி வழியே சகதிவாரி எறிந்தது போல் பழித்த சொல்லம்புகளையெல்லாம், ஒரு முறை அவள் மீண்டும் தழையிட்டுப் பார்த்தாள். அதனால் அவள் உள்ளத்தில் அந்தச் சந்தேகம், திடீரென தூமகேதுவைப்போல் முளைத்தது. அந்தச் சந்தேகங்களோவென்றால் காட்டுப்பன்றிபோல, வேக வேகமாக ஈன்று பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால், மனக் கஷ்டமான பாடம் ஒன்றில் மனத்தை நட்டு வைத்தது போல் கெளதமரை அவள் கண் இமைக்காமல் பார்த்தாள். தன்முன் இருக்கும் கணவரின் உருவம்தான் இப்பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கேள்வியாய் அவளுக்கு இருந்தது. அந்த மாபெரும் பிரச்சினையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தபோது,
இந்த உருவத்தில்தானே இந்திரன் தன்னிடம் வந்தான் நான் ஏமாற்றமடைந்தது கணவனின் உருவத்தை நம்பித்தானே இதிலே எனக்குக் கிடைத்த நீதி -
அது அநீதிதானே -
இந்திரனுக்குக் கிடைத்த சாபத்தை நீக்குமாறு எத்தனையோ தேவர்கள்வந்து கெளதமரிடம் இரந்தார்கள் - என்னைச் சீரழித்த காமம் மிக்க அந்த நீசனுக்காக எல்லோரும் அவரிடம் பரிந்து பேசினார்கள் - ஆனால், என்பக்கமுள்ள நியாயத்தை எடுத்துச் சொல்ல எந்த ஜீவனுக்கும் வாயில்லாமல் போய்விட்டதே.? அவளது மனத்துள் பல கேள்விகள் சீறியடித்து உயரலாயிற்று. அதனால், மகத்தானவளாகவும், குரூரமானவளாகவும் தன்னை அப்போதைக்கு அப்போது ஆட்டிப் படைக்கும் உணர்வுகளுக்கு ஏற்றபடி மாறிக் கொண்டிருந்தாள் அகலிகை. அகலிகை உலகத்திலுள்ள எல்லா ஸ்திரீகளுடைய அழகையும் ஒன்று சேர்த்து பிரம்மாவால் ஆக்கப்பட்ட தனி அழகுடைய பெண்தான்! - ஆனாலும் மென்மையின் ரேகைகள் இப்போது அவளிடம் மறைந்துவிட்டன. அவளின் முகம் பயத்தில் இறுகிப்போயிருந்தது. கோழி கூவும்போதெல்லாம் அகலிகைக்கு நடுக்கமாக இருக்கிறது.

ඊඛ. മUിഗ്രന്നെത്രീ 175 ஈயின் தலைச்சாறு உண்ணும் சிலந்தி, கரப்பான் கால் பெயர்க்கும் எறும்பு, பூச்சி விழுங்கும் பல்லி - எல்லாமே இந்திரனின் உருவில் அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தன.
இவை யாவும் அவளை அதிர்த்துகின்றன.
என்றாலும் கணவனுக்குச் சுசிரூஷை செய்வதில் எப்போதுமே அவள் மனம் வைத்திருந்தாள்.
ஒரு தட்டில் மஞ்சளாக விளைந்துப் பழுத்த பழங்களை கையிலேந்தி, ஆதரவுடன் அவர் முன் போய்நின்று - அதை அவருக்கு முன்பாக பணிவுடன் வைத்துவிட்டு நின்றாள் அகலிகை.
கடமையைச் செய்யும் போது, தூய நீரில் தாக சாந்தி செய்வது போல இதம் அவளுக்கு இருந்தது.
தன்னை எப்படியெல்லாம் போஷிக்கிறாள் என்ற நினைப்பில் கனிந்து போனார் கெளதமர். அகலிகையுடன் கதைப்பதை மனம் நள்ளுகிறது கெளதமருக்கு.
ஆழ்ந்த மெளனத்தின் தளையிலிருந்து விடுபடாமல் கேள்விக்குறியுடன் பார்வை செலுத்திய அகலிகையைப்பார்த்து :
yy
‘அகலிகே. என்று மெல்ல அவளை அழைத்தார்.
நிலவொளி மீண்டும் ஒளி கொண்டதைப் போல அவரது முகம் இப்பொழுது இருந்தது.
மென்மையும் கனிவுமுடைய குரலில் அவர் தொடர்ந்தும் அவளிடம் மதுரமாகப் பேசினார்.
‘அகலிகே.! உன் கவலை தோய்ந்த வதனம் என் உள்ளத்தையும் வெகுவாகத் துன்புறுத்துகிறது. நடந்துபோன அந்தத் துன்பவியலான நிகழ்வுகளை நீ மனத்திலிருந்து தொலைத்துவிடு. இனி நாம் மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஆரம்பிப்போம். என் வார்த்தையில் நீ நம்பிக்கை வைப்பாயென்று நான் எண்ணுகிறேன் அகலிகா.”
‘ஒரு பெரும் பிரச்சினைக்குரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமான
தொன்றாக இவர் சொல்கிறாரே..!! எந்த ஒரு செயலுக்கும் விளைவு
தொடர்ந்தேவரும் என்பது நித்தியமானதொரு நியதி, இதையெல்லாம் இவர்
''
அறியவில்லைப்போலும். - என்று அகலிகைக்கு அவர் சொல்வதைக் கேட்கவும் பெருவியப்பாக இருந்தது.
அவளது உயர்ந்த புருவம் வினாவைத் தொக்கி நின்றது.
‘என் கணவனின் உருவமே அன்று என்னை நம்ப வைத்து ஏமாற்றியது. அப்படியாயிருக்க - இந்த உலகவாழ்வில் எதனிடத்தும் நம்பிக்கையோ

Page 97
அகவிதை 176
விசுவாசமோ வைப்பதற்கு என் மனம் எப்படித்தான் இசையும் இதையெல்லாம் அவருக்கு வாய்விட்டுச் சொல்லவேண்டுமென்று, அவளுக்கு நா துருதுருத்தது. ஆனாலும் அதைச் சொல்ல முடியாமல் நாக்கின் சக்தி நசிந்து போய்விட்டிருந்தது அவளுக்கு.
சிறிது நேரம் மெளனமாக அவள் நின்றாள்.
அந்த மெளனத்தில் கருத்தரித்ததைச் சொல் வெளிக்கொணர்கிறது.
''
‘நான் உள்ளிடு இல்லாத தானியம்..!
‘அகலிகே. நான் அப்படி நினைக்கவில்லை.
கெளதமர் பதிலுரைக்கவும், நெஞ்சில் காந்தலாய் ஒரு தீ எரிந்தது அவளுக்கு. அவரது சொற்களைக் கேட்டதும் அவளின் மனசு, தீயில் விழுந்த பூச்சியாகத் துடித்தது. உடனே தன் உள்ளக் கொதிப்பை அவள் உளறிக் கழித்தாள்.
‘அப்படியெல்லாம் நடந்து கொண்ட நீங்களா - இன்று இப்படியெல்லாம் என்னைப் பார்த்துச் சொல்லுகிறீர்கள். அன்று நான் உங்கள் காலைப்பிடித்துக் கெஞ்சியும் என்னில் இரக்கம் காட்டாது கல்லாக என்னைச் சபித்தீர்கள். அந்தச் சம்பவத்தில் ஏமாற்றப்பட்டது நான் மட்டுமல்ல; துவாத சாந்த வெளியிலிருந்து இறங்கிவரும் அமுதத்தை உண்டு மரணமற்று வாழ தகுந்த யோக சக்தியைப்பெற்ற முக்காலமுமுணர்ந்த ஞானியான நீங்களும்தான் என்னைப் போலவே ஏமாந்தீர்கள் - அதை நீங்கள் ஒரு கணமாவது அந்த வேளையில் நினைத்துப்பார்த்தீர்களா..?”
வீணைக்கம்பி அறுந்ததைப் போன்று கவலை தோய்ந்த குரலில் அவள் சொன்னாள்.
கெளதமரின் இதயத்தில் இந்த வார்த்தைகள் ஆயிரம் ஈட்டிகளை உருவத்தைய்த்து விட்டது போல் வேதனையாக இருந்தது. அன்னபானம், பேச்சுமூச்சு எல்லாவற்றையும் அடக்கி பெருந்தவங்கள் மேற்கொண்ட அவர், அகலிகையை நேரே பார்க்கத் திராணியற்று உடனே தலையைத் தாழப் போட்டுவிட்டார்.
என்றாலும் அவரது வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன : ‘'நீ பாவ விமோசனம் பெற்று தூய்மை பெற அந்தச் சாபம் உனக்கு ஒரு காரணமாயிருந்ததை சற்றே நீ எண்ணிப்பார் அகலிகா.?” 'பாவ விமோசனம் அதுவும் அந்த இராமனால்..?” அலட்சியமாக அதைச் சொல்லிவிட்டு அவள் அவஸ்தையாய்ச் சிரித்தாள்.
"ஆமாம் அந்த ரகுகுல திலகன் இராமன் சாதாரணமானவனல்ல. அவன் கடவுள் அவதாரம் அகலிகா.1

ඊඛ. മUിഗ്രന്നെത്രീ 177 ‘கடவுளாம் கடவுள். அந்தக் கடவுள் அவதாரமே சீதையை அருங்கற்புடையவளாய் உலகுக்குக் காட்ட தீக்குளிக்கவிட்டு அக்கினிப் பரீட்சை நடத்தியிருக்கிறார். கடவுள் அவதாரமாயிருந்தும் அந்த ஆண் திமிர்த்தனத்தைக் காட்டுவதில் அவரும் பின் நிற்கவில்லையே..??”
அவள் மனசிலிருந்த வேக்காடு வார்த்தைகளின் கடுப்பில் தெரிந்தது. அடுப்பின் சாம்பலுக்கு அடியில் இருக்கும் கங்குபோல, அவள் மனத்துள்கிடந்து ஆறுதல் அடைய மறுத்த தீக்கங்கு எரிந்து கொண்டிருந்தது. தன் நெஞ்சுக்குள் வெக்கைதிரண்டு உஷணப்படுத்தியதை யெல்லாம் அவள் இப்போது வெளியே வார்த்தைகளில் கொட்டித்தீர்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது குரல் எவ்வளவு உறைப்பாக ஒலிக்கிறது என்று நினைத்து கெளதமரும் வியப்படைந்தார். அவளில் இருக்கும் பெண்மையின் மென்மையைக் காணாததால் அவர் திகைத்தார்.
கிரகணத்தின் போது ஒரு மூலையில் பூமியின் நிழல் படியத் தொடங்குவதுபோல, கறுமையான பூச்சு இருவர் மனத்திலும் படியத்தொடங்கியது.
என்றாலும் அந்த நிலையிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு அகலிகையை நோக்கி கெளதமர் கூறினார்:
‘அகலிகா! நீ நீயே அல்லாத நிலையில் பேசுகிறாய்...! இராமனின் மன நிலையை நீ அறியவில்லை. வைதேகியை தீக்குளிக்கச் சொன்னதில், சூழ்நிலைதான் அதற்கெல்லாம் காரணமாய்விட்டது.”
அவர் சொல்லவும் அகலிகை சொன்னாள் :
‘என் நிலையும் அதேதான்! அந்தச் சூழ்நிலைதான் என்னையும் வஞ்சனை செய்து பாவத்தைச் சுமத்திவிட்டது. அந்தச் சூழ்நிலை செய்துவிட்ட சதியினால் தான் நான் உண்மையிலேயே ஏமாற்றப்பட்டேன். அதைப்போலத்தான் நீங்களும் ஏமாற்றமடைந்தீர்கள். ஆனாலும் நான் ஏமாற்றமடைந்ததில்தான் குற்றத்தைக் கண்டுபிடித்தீர்கள் நீங்கள். அந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக என்னைக் கல்லாகவும் சபித்துவிட்டீர்கள். அந்தக் கணத்திலேயே நான் உங்களைவிட்டுப் பிரிந்துவிட்டேன். திரும்பவும் உங்களிடம் என்னால் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது. அது இனிமேல் அசாத்தியமான காரியம். இப்படியே நான் ஏமாறியது ஏமாறியதுதான். அந்த ஏமாற்றத்தைத்தான், என் முன்னே சொல்லிச் சொல்லி இந்த உலகமும் என்னை அசுசிப்படுத்துகிறது. இந்த உலகத்திலுள்ள எல்லோரது வாயிலும் இந்த அகலிகையின் கதைதான் அவலாக மெல்லக் கிடைத்திருக்கிறது. வேண்டாமிந்த வாழ்வு எனக்கு. இந்த வேதனைகளைச் சுமந்து கொண்டு உயிருள்ள இந்த உடலுடன் நான் ஊசலாடினாலும் உண்மையில் இந்த

Page 98
178 அகவிகை மனம் எனக்குக் கல்லாகவே இன்றும் இருக்கிறது. அது இனிமேல் உயிர்பெறுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த நிலையிலிருந்து என்னால் மீள முடியவில்லை. அது மாறுவதற்கு இந்தச் சூழ்நிலையில் இனிமேல் சாசுவதமில்லை. அது மாற முடியாத பட்சத்தில் நான் இந்தஉலகில் வாழ்ந்து எவ்வித பயனுமில்லை. அதனால் நான் இரந்து உங்களிடம் கேட்பது இது ஒன்றைத்தான்! அன்றைய சிலை வடிவிலேயே என்னை மீண்டும் நீங்கள் கல்லாகச் சபித்துவிடுங்கள்; இறந்ததுபோல பரிபூரணமான சாவையே நினைப்பூட்டும் அந்தக்கல்லாக திரும்பவும் என்னை ஆக்கிவிடுங்கள்.” சொல்லிவிட்டு அகலிகை இதயம் கசங்கி நசிய அழுதாள். கெளதமர் அகலிகைக்கு ஆறுதல் சொல்ல நினைத்தார். ஆனால் அவருக்கு வாக்குத் தழுதழுத்தது. அவருடைய முகம் வெளுத்து விட்டது. அவருடைய நடுக்கமே அவரைக் குற்றவாளியென்று விளக்கியது. அவர் குடிசை முகட்டைப் பார்த்தார். முகட்டிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த சிலந்தி வலைப்பின்னலில் சென்று சேர்ந்தது. கங்கைக் கரையில் ஆற்று வெளிச்சப்தம் ஓய்ந்து நிசப்தம் நிலவியது.
(2005)
OOO


Page 99


Page 100
நல்ல சிறுகதைகள் எழுதி, கவனிப்பு பலவற்றை வெளியிட்டிருக்கிற எழுத்த புதிய சிறுகதைத் தொகுப்பான இந்த அனுபவ முதிர்ச்சியையும் நன்கு புலப்ப பெற்றுள்ள தேர்ச்சியையும் இக்கதைகள்
நீ.பி.அருளானந்தம் இனிய நடையி உரையாடல்களில் வட்டாரவழக்குகளை பாத்திர வர்ணனை, சூழ்நிலை விவரிப் முதலியவற்றை சிறப்பாகச் செய்திருச் எடுத்தாள்கிறபோது, கற்பனை நயமும் அமைத்திருக்கிறார்.
வாழ்க்கையின் துன்ப துயரங்களை
போராட்டங்களையும், சகிப்புத்தன்மைை பதிவு செய்கிற அருளானந்தம் ம உணர்வுகள், எண்ணங்கள், சிந்தனைக கிறார். சூழ்நிலை விவரிப்பை தே அழகாகவும் அமைத்து, அது கதைமாந் சலனங்களைத் திறமையாக எடுத்துச் ெ
மாற்றங்களை மறுப்பதற்கில்லை கபனிகரம்
ஆமைக்குணம்
கறுப்பு ஞாயிறு
 

கு உரிய சிறுகதைத் தொகுதிகள்
ளர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் நூல் அவருடைய வளர்ச்சியையும்
நித்துகின்றன. கதைக்கலையில் அவர்
வெளிப்படுத்துகின்றன.
கதைகளை எழுதியிருக்கிறார். திறமையாகக் கையாண்டிருக்கிறார். இயற்கை அழகுகளை வர்ணித்தல் கிறார். அங்கங்கே உவமைகளை புதுமை அழகும் மிளிர அவற்றை
ம், மனிதர்களது இயல்புகளையும் யும் உரியமுறையில் சிறுகதைகளில் ரிதமனம் குறித்தும், மனிதர்களது பற்றியும் திறமையாக சித்திரித்திருக் வைக்குத் தக்கபடி, அளவாகவும் தரின் மனசில் ஏற்படுத்தும் உணர்வுச் சால்கிறார் அவர்
assassiss606016
Gay 6060601
தொகுதிகள்)
ஜ்
ISBN 955-1055-01-2