கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றங்களை மறுப்பதற்கில்லை

Page 1


Page 2

மாற்றங்களை மறுப்பதற்கில்லை
(சிறுகதைத்தொகுதி)
நீ பி. அருளானந்தம்
திருமகள் பதிப்பகம் இல, 144,
2ம் குறுக்குத்தெரு வவுனியா.

Page 3
முதற்பதிப்பு: வைகாசி மாதம் 2002
உரிமை ஆக்கியோனுக்கே
அட்டைபபட வடிவமைப்பு
கெளசிக் (Graffixx Solution) Tel: 738658
Mobile : 077 342324
விலை : ரூபா 140.00
“Martrangallaí Marupa thatkillaí~ (A Collection of Short-Stories)
By N. P. Arulanantham
First Edition: May 2002
Printed by A J Prints, 44, Station Road, Dehiwala. Tel: 739765, 723205, 723209
Published by Thirumagal Pathippagam, No. 144, 2nd Cross Street, Vavuniya.

அருளானந்தத்தின் உலகம்
நீ பி. அருளானந்தத்தின் பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய “மாற்றங்களை மறுப்பதற்கில்லை” என்ற இந்தத் தொகுதி ஈழத்தத் தமிழ் இலக்கியத்திற்குப் புதியதொரு வரவு அடித்தட்டு மக்களதும், உதிரித்தொழிலாளரதம் வாழ்வனுப வங்களை அவரது பேனாவினால் ஆசிரியர் தொட்டு எழுதியுள்ளார். தன்னெதிரே விரிந்த சம்பவங்களை அந்த உறுத்தலின் விளைவாக அவர் படைப்பாக்கி இருக்கிறார். அவர் சொல்லுகின்ற கதைகளில் வருகின்ற பாத்திரங்கள் யாவருமே நமக்குத் தெரிந்தவர்களாகவும் அவர் சுட்டும் பிரச்சினைகள் நம்மால் அறியப்பட்டனவாகவும் உள்ளன. இத்தகைய படைப்பு நோக்குடைய அருளானந்தம் இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். தனக்குத் தெரிந்த உலகை, மனிதரை, பிரச்சினைகளை அதனோடமைவான சூழலில் வைத்து படைப்பாக்கம் செய்துள்ள அருளானந்தம் தனது கால ஆளுமைகளை பதிவு செய்ய எண்ணியமை அவரது தனி elsoLurretsLo.
ஆனால் சம்பவங்களை பதிவு செய்வது மட்டுந்தான் நல்ல எழுத்தின் அடையாளமாகி விடுமா? ஒரு படைப்பாளி சமுதாய விமர்சகனும் ஆவான். சம்பவம் ஒன்றிற்கூடாக, அதற்கான சரியான காரணத்தையும் நணுக்கமாகக் காட்ட வேண்டியதும் படைப்பாளியின் முக்கிய கடமை. எழுத்தாளன் நடுநிலையில் நின்று எழுத வேண்டுமென்ற கருதுகோள் அபத்தமானது. எழுத்தாளன் சரியான கருத்தின் பக்கம் நிற்பவன். அந்தக் கருத்தையே ஆதரித்த எழுதபவன், எனவே அவன் பக்கம் ബഖങ്ങി.
சரியான பக்கம் என்றால் என்ன?
iii

Page 4
வெளிநாட்டுக்குச் சென்ற در ۷ م . . . .. அதே உள்ளில் மீன் விற்கும் சின்னாயியின் மகனைத் திருமணம்
به همه، تمام زنانی: باه)" : : - ; : * శో ,}{ : *.* .* .* * ب : ؛ به نام از... م : ::i பொன்னம்மா என்ற பாத்திரங்களை இயல்பாக வெளிப்படுத்தி மனிதன் ܕ. ::0ا خلا؟۔. गैं। கரு リベ ۲ . . . . . :نیز
ຫິ່ຫ້ເຫັnt)
அவர் சார்ந்த பக்கம்; சரியான நிலைப்பாடும் காலமாற்ற
இன்றைய தமிழர் வாழ்வின் அவ்லங்கள்ை அவர் தொட
தென்படவில்லை. இவர் எழுதகின்ற காலத்து ஊட்க்ச் சூழ்நிலையும் அதற்கு ஒரு க தோன்றுகிறத் இன்னொருக்தை அவலத்தை ஆசிரியர்
خازن تخمشکن خانات
єт வைக்கும் கதை."
ཉ
கொண்டிருக்கிறார். சிலர் ஒரு ஒழக்கம் தவறிய பெண்ண்ை
ίν
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அங்கே கூட்டிவருகின்றனர். முறைப்பாடு செய்து, தண்டனை வழங்கச் சொல்கின்றனர். இயேசு நாதர் குனிந்த தலை நிமிராமலே, “உங்களில் யார் குற்றம் செய்யாதவரோ, அவள் இவள் மீது முதற்கல்லை எறிவீராக.” என்கிறார். கொஞ்ச நேரத்தில் தலையை நிமிர்கிறார். இப்போது அந்தப் பெண்ணைத்தவிர வேறு யாருமே இல்லை. அந்தப் பெண் பின்னாளிலே மேன்மைக்கு உரியவள் ஆகிறாள்.
உலகின் பழைய தொழிலுக்கு பெண்ணை நிர்ப்பந்தித்தது யார்? நித்ய கல்யாணிகளை உருவாக்குவது யார்? வாசகனுக்கு ஒரு படைப்பாளி. இதற்கான பதிலையே அழுத்திச் சொல்ல வேண்டும்.
அருளானந்தம் சாதாரண மனிதரின் கதையை எவ்வித பாசாங் குமின்றி சொல்ல முனையும் கலைஞராக இக்கதைகளில் தெரிகிறார். அவரது கற்பனை வானத்தில் பறக்காமல் மண்ணினைத் தளமாகக் கொண்டு விசாலிக்கிறது.
சிக்கலில்லாத அவரத உரைநடை இன்னும் வீச்சுப் பெற வேண்டும். பாடப் பாடத்தான் ராகம் என்பார்கள். எழுத எழுத அது சித்திக்கும். நீ பி. அருளானந்தம் என்ற படைப்பாளி தனது வாழ்வின் அனுபவங்களை அச்சமும் அமுங்குதலுமின்றி மேலும் சிறப்பாக எழுதி, எமது இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பணியாற்ற வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
செ. யோகநாதன் 22.05.2002

Page 5
என்னுரையை.
கடுகளவு சிறியதான நேரத்தில் சுருக்கமாக எழுதி நிறைவு செய்து விட வேண்டும் என்பதே என் விருப்பம்.
கடந்த குறுகிய காலத்தில் என்னால் எழுதப்பட்டு பல பத்திரிகைகளிலும் பிரசுரமான சிறு கதைகளில் சில இச் சிறுகதைத் தொகுப்பினில் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் என் மன ஆழத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி விட்ட சம்பவங்களை அப்படியே மனதில் பத்திரப்படுத்தி வைத்திருந்து எழுதுவதற்குரிய கால நேரம் அமைந்த இப்போது அதை ஒரு
அதில் என் கற்பனையையும், கலவை செய்து இச்சிறு கதைகளை நான் சிருஷ்டித்துள்ளேன்.
யுத்தத்தின் கொடுமையினால் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள், கீழ் சாதிகள் என்று பிரித்து வைத்து ஒரு சமூகத்தவர், இன்னுமோர் சமூகத்தவர் மேல் ஆதிக்கம் செலுத்தி, அவர்களை நசுக்கி அடக்கி ஒடுக்கி வைத்தப் புரிந்து வந்த കെന്ദ്രങ്ങഥക്ക് அறிவுக் கண்களை இறுக மூடிக் கொண்டு ஒரு சிலர் பின்பற்றிக் கொண்டிருக்கும் மூடப்பழக்க வழக்கங்கள், இவற்றைப் பிரதிபலித்துவரும் கதைகளிலுள்ள சம்பவங்களில் அநேகமானவை நான் நேரில் கண்டதம், கேள்விப்பட்டதம், அனுபவித்ததமான உண்மை நிகழ்வுகளாக இருக்கின்றன. இந்த நாட்டில் யுத்த சூழ்நிலையினால் அண்மையில் எனக்கு ஏற்பட்ட இடப்பெயர்வே சோர்ந்து போயிருந்த என் இலக்கிய உணர்வுகளுக்கு புதிய இரத்தம் பாய்ச்சி புத்தயிர் அளித்து இந்த அளவுக்கு என்னை எழுதத் தாண்டியிருக்கிறது.
vi

இக்கதைகள் சிலவற்றில் கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களும், இக்கால நிகழ்வுகளுடன் சேர்ந்ததாய் மலர்ந்திருக்கின்றன. ரோஜாச் செடியில் முள்ளும் இருக்கிறது. அழகிய பூவும் மலருகிறது. அதைப் போலவே இக்கதைகளில் மனித வாழ்வில் ஏற்படும் இன்பமும் தன்பமும் சேர்ந்து பரிணமிக்கின்றன. இக்கதைகளிலெல்லாம் என் கற்பனையை விட யதார்த்தத்திற்கே நான் முக்கியமளித்துள்ளேன்.
நிறைவாக ஒன்றை இங்கே கூறுவதற்குண்டு. இச்சிறுகதைகளை பத்திரிகைகளில் பிரசுரித்த எல்லாப் பத்திரிகைகளின் ஸ்தாபனத்தாருக்கும் அதன் ஆசிரியர் குழாமிற்கும் இங்கே நான் நன்றிகூறக் கடமைப் பட்டவனாகவுள்ளேன்.
அடுத்து இதற்கோர் முன்னுரையை திறந்த மனதோடு எழுதித்தந்த நாடறிந்த எழுத்தாளரும் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றவருமான திரு. செ. யோகநாதன் அவர்கட்கும், இந்நால் வெளிவருவதற்கு என்னுடன் சேர்ந்து சகலவிதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய யாவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன், நீ பி. அருளானந்தம்.
vii

Page 6

உள்ளே.
O.
II.
2.
அம்மாவுக்குத் தாலி
அமெரிக்காவில் ஒரு மாங்கன்று
தாகம்
எங்கத் தேசத்தின் சங்கதி
வீட்டுத் தோட்டம்
ஓய்வூதியம்
நித்திய கல்யாணி
கண்ணிர் கலந்த கடல்
சாமியார்ப் பைத்தியம்
மாற்றங்களை மறுப்பதற்கில்லை
உறவு. உறவு. என்றாலும்
சக்கரம் சுழலும்
ix
பக்கம்
34
4.
49
64
7.
85
95
O4.

Page 7
ബൈ
07ീഴ്ത്താമ്മ
பி. லூர்தம்மா ஆவர்களுக்கு.
-நீ.பி. அருளானந்தம்

മráീബ് മഗ്ഗീzഷ്ടക്റ്റീരാമ)
XXXX. يJØE2/24/لا
அம்மாவுக்குத் தாலி
ழகான சிறிய பெட்டிக்குள் ஒரு தாலிக்கொடி. அதை வெளியில் எடுத்து கையில் பிடித்தபடி "என்ரை பிள்ளை எனக் கெண்டு அனுப்பியிருக்கு’ என்று சொல்லியவாறு மகிழ்ச்சியில் பூரித்துவிட்டாள் ம்னைவி.
அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் கூடத்தான் பூரிப்பு.
‘நல்ல தங்கப் பவுணப்பா என்ன மாதிரி இது மினுங்குதென்று பாருங்கோ’. தாலிக்கொடி என் கைக்கு மாறியது. “22 கரட்” என்று சொன்னதோடு எனது வியாபார தொழில் புத்தி உடனே தலைதூக்கவே அதை கையில் தூக்கிப்பிடித்தபடி கொடியின் நீளம் பார்த்தேன். அடுத்து அப்படியே அந்த மின்னல் கொடியைக் கைக்குள் அடக்க அது சுருண்டுவிட்டது. இரண்டு மூன்று முறை கொஞ்சம் உயர்த் தூக்கிப்போட்டுப் பார்த்து எடையும் பார்த்தேன்.

Page 8
1ť) ka
മ്7 ഋഗ്രാം/മി.മി
‘எட்டு ஒன்பது பவுண் நிறையிருக்கும் போல” என்றேன்.
'இல்லை! கூட ஒன்பதரைப் பவுண் என்றுதான் கொண்டந்த தம்பி சொன்னவன்’ மனைவி கூறினாள்.
பின்பு நகையை நான் அவளிடம் கொடுக்க அதை டிரெசிங்டேபிள் லாச்சியில் வைத்து பூட்டினாள். பிற்பாடு இருவரும் முன் அறைக்குப் போய் இருந்துகொண்டோம். அங்கே எங்கள் மகனின் நோர்வே நிலைவரம் குறித்துக் கதைக்க ஆரம்பித்தோம்.
நோர்வேயில், எனது மகனுடன் ஒரே அறையில் குடியிருக்கும் அந்த இளைஞன் இங்கே எனது வீட்டிற்கு வந்திருந்தபோது நான் ஒரு அலுவலாக வெளியே போயிருந்தேன். மனைவியுடன் கதைத்த பின் நகைப் பெட்டியைக் கொடுத்துவிட்டு அவன் போய்விட்டானாம்.
மகன் என்ன மாதிரி இருக்கிறான் என்று அறிய எனக்கு ஆவல் மேலிட்டது. ‘தங்கம்” என்று மனைவியைப் பெயர் சொல்லி அழைத்தவாறே ‘என்ன மாதிரி இருக்கிறானாம் ஜெகன்?’ என்று மகனுடைய நிலைவரத்தைக் கேட்டேன்.
மகனுடைய பேச்சை ஆரம்பித்ததும் தாயினுடைய தவிப்போடு அவளும் சொன்னாள்:
‘எல்லாருக்கும் அங்க ஒரு மாதிரித்தானாம். சீவியம். இயந்திரம் போலத்தானாம் வாழ்க்கை. எங்கள் மகன் நோர்வேக்குப் போய் கொஞ்சக் காலம்தான் என்றபடியால் "சீசன் மாறேக்க உடம்புக்குத் தாக்குப்பிடிக்க ஏலாம வருத்தம் வந்து கஷ்டப்பட்டவனாம். இப்ப சுகமாய் இருக்கிறானாம்.”

മറ്റ്രക്രിക്കാം zg//ഴ്ചദ്ധo)
இதைச் சொல்லும்போது நன்றாக கண்கலங்கி விட்டது தங்கத்துக்கு. குரல் தழுதழுக்க மேலும் அவள் சொன்னாள்: −
‘’ என்னுடைய செல்வத்துக்கு சுகமில்லாம வந்திட்டுதாம். இங்க எங்களோட பிள்ளை இருந்திருந்தா இப்படியெல்லாம் வந்திருக்குமே. நான் பெத்த ஒரே பிள்ளை கூட என்ரை பக்கத்தில் இல்லையே சன்னிதி முருகா என்ரை பிள்ளை சுகமாயிருக்க வேணும்'.
எனக்கும் கண்களில் கண்ணிர் முட்டிவிட்டது. எங்களுக்கு ஒரே ஒரு பிள்ளை ஜெகன். வருத்தம் என்று கடிதம் போட்டால் நாங்கள் இருவரும் பதறித் துடித்துப்போய் விடுவோமென்றுதான் அதுபற்றி அவன் எங்களுக்கு அறிவிக்கவில்லை. இப்படித்தான் எனக்கு விளங்கியது.
அவனைப் படிப்பித்து ஆளாக்கி நல்லதொரு உத்தியோகத்தில் இருத்திவிட வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நடந்தது வேறொன்றாகி விட்டது. குடும்பமாக யாழ்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்த பிறகு எல்லாக் குடும்பங்களிலும் அநேகமாக நடப்பதுபோல பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவே நானும் முயன்றேன்.
யாழ்ப்பாணத்தில் நான் செய்த தொழில் பலசரக்கு கடை வியாபாரம். ஏதோ சூழ்நிலைக்கேற்ப வியாபாரம் பண்ணிக்கொண்டு பணம் முழுவதையும் வியாபாரத்தில் முடக்கிவிடாது கைகளிலும் கவனமாக கொஞ்சம் வைத்திருந்ததால் கொழும்புக்கு வந்ததும் மனைவியின் நகைகளையும் விற்று ஜெகனையும் வெளிநாட்டுக்கு அனுப்பினேன். என்றாலும் எங்களுக்கு சொந்த இடத்தில்
3

Page 9
s $° 酸 0, // cyശ്ര///0002:Z
இருந்தது போல் வாழ்க்கை இப்போ சீராக இல்லை. பிள்ளை எங்களோடு இல்லாத ஏக்கத்தோடு வருமானமும் இல்லாததால் சீவியம் கஷ்டமாகவே இருக்கிறது.
சிந்தனை இப்படி எங்கெல்லாமோ அலைந்து போய் திரும்பவும் உணர்வு வந்ததுமே மேலும் மனைவியிடம் தொடர்ந்து விளக்கம் கேட்டேன்.
“இப்போது மகனுடைய நிலைவரம் எப்படியாம்? எங்காவது நல்ல வேலையில் சேர்ந்திட்டானா?”
எல்லாத் தகப்பன்மாரும் கேட்கிற கேள்வியை ஆர்வத்தோடு நானும் கேட்டேன்.
‘'இப்போதைக்கு அவ்வளவு பெரிய வேலையாக ஜெகனுக்குக் கிடைக்கவில்லையாம். நோர்வே பாஷையை ஒரு வருஷம் மட்டும்தானாம் படிச்சவன். அதனால சரளமாகக் கதைக்கிறதுக்கு இன்னமும் இரண்டு வருடங்களாவது போகுமாம். தாங்கள் போன புதிதில் கண்ட வேலையும் செய்துதான் கஷ்டப்பட்டனாங்கள் என்று அந்தத் தம்பியும் சொன்னான்’ இவ்வாறு வாடிய முகத்துடன் தங்கம் சொன்னாள். எனக்கு மனதுக்குள் வலித்தது. தாயினுடைய காலைச் சுற்றியபடி திரிந்த பிள்ளை துன்பங்களை அனுபவிக்கிறான் என்று கேள்விப்பட உள்ளமும் உடலும் எனக்கு சோர்ந்துவிட்டது. தளர்ந்துபோய் அப்படியே காலை நீட்டி சாய்ந்த என்னை மனைவி மேற்கோண்டு சொன்ன சொற்கள் மீண்டும் நிமிர்ந்து இருக்குமாறு செய்தது.
‘அம்மாவை வெறுங்கழுத்தோடு திரிய வேண்டாம், நாலு இடம் போய் வரேக்க இதையும் மறக்காமல் போட்டுக்கொண்டு போகச் சொல்லு என்று வந்த தம்பியிட்ட
4.

മഴക്രമിക്കാr Zഗ്ഗZഴ്ച)
தாலிக்கொடியையும் கொடுத்துச் சொல்லி அனுப்பியிருக்கிறான் மகன்” என்றும் உற்சாகமாகக் கூறினாள் தங்கம்.
எனக்கும் அது மகிழ்ச்சிதான். சபை சந்திக்குப்போய் வருகிறபோது கல்யாணமான பெண்கள் தாலிக்கொடி போட்டிருக்க வேண்டும் என்ற சாஸ்திரத்தைக் கடைப்பிடித்து நடப்பவர்கள் நாங்கள். அந்த இடங்களில் இருக்கும்போது தாலிக் கொடி கழுத்தில் இல்லையானால் அது பெண்களுக்கு பெரிய குறை மாதிரித்தான்.
என்ன செய்யிறது? கொஞ்சக்காலம் அது எனக்கும் பெரிய குறைபோலத்தான் இருந்தது. ஆனால் இனி நான் நாலு பேருக்கு முன் தலை நிமிர்ந்து இருக்கலாம். அந்த நிம்மதியும் ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் விட மகனுக்குப் பொறுப்பு வந்துவிட்டது அவன் இனி சிறுபிள்ளையல்ல என்ற எண்ணமும் மனதுக்கு சுகம் கொடுத்தது. ஆனால் இப்போதைக்கு மனைவி தாலிக்கொடியோடு எங்காவது போய்வருவது நடக்காது என்று என் மனதுக்குப்பட்டது.
ஜெகனை வெளியில் அனுப்புவதற்கு கொழும்பில் என்னுடைய நெருங்கிய உறவினர்களிடம் இரண்டு லட்சம் ரூபா பணம் வட்டிக்கு வாங்கியிருந்தேன். மாதாமாதம் வட்டிப் பணத்தைக் கூட காலம் தாழ்த்திக் கொடுத்துவரும் நிலை. x
வெறும் கழுத்துடன் திரிந்த மனைவி தங்கப்பவுண் தாலிக்கொடியுடன் திடீரென தோன்றினால் கடன் தந்தவ ரெல்லாம் அதையிட்டு முணுமுணுக்கவே செய்வார்கள்.
‘தங்கம்! ஒன்று சொல்ல வேணும். உமக்கு மகன் கொடி வாங்கித் தந்தது எனக்கும் பெரிய குறை தீர்ந்தது
5

Page 10
Y AV த் a. egy(02/7/20/A2272
போலத்தான் இருக்கு. ஆனால் இப்போதைக்கு நீர் அந்த தாலிக்கொடியை கழுத்தில போட வேணாம்” என்றேன்.
‘‘முதல் முதல் உழைச்சுப் பிள்ளை வாங்கி அனுப்பியதை போட வேண்டாம் எண்ணுறியள். கட்டிய தாலியைக் கொடியோடு சேர்த்து வித்தியள். வெறும் கழுத்தோடு இருக்கிறன் என்று பிள்ளை கஷ்டப்பட்டு செய்து அனுப்பிய தாலியைப் போட வேண்டாமென்று தடுக்கிறியளே’ என்று இரைந்து கத்தினாள் தங்கம்.
“கொஞ்சம் ஆறும், தங்கம்!. நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளும். இங்கே எனக்கிருக்கிற பிரச்சினை உமக்குத் தெரியேல்ல. அதை உமக்கு நான் ஒன்றும் இத்தனை காலமும் சொல்லேல்லை. எனக்கு கொஞ்சம் கடன் இருக்குதப்பா’ என்றேன்.
நான் சொன்னது தங்கத்துக்கு இப்போ கலக்க மூட்டியது. இத்தனை காலமும் இதை அவளிடம் கூறவில்லை.
(s
‘என்ன கடன் இருக்கோ? எவ்வளவப்பா கடன் பட்டனிங்கள்?”
இரண்டு லட்சம் ரூபா கடன் பட்டிருக்கும் விடயத்தைக் கூறினேன்.
' செலவுக்கு அனுப்பிற காசில கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடிச்சு வட்டிப்பணம் ஓரளவு கொடுத் திருக்கிறன். ஆனால் முதலோடு மொத்தமாக வட்டியையும் சேர்த்து தாறதாகத்தான் பணத்தை வாங்கேக்க சொல்லியி ருக்கிறன். ஜெகனுக்கு இப்ப இருக்கிற சூழ்நிலையில் இதைச் சொல்ல விருப்பமில்லை. சொன்னாலும் மனவருத் தப்படுவான் என்றதால் தான் நல்ல வேலை கிடைச்ச பிறகு சொல்லலாமென்று இருக்கிறன்.”
6

Zuddlിമാ/ z%/()))
தங்கத்துக்கு இதைக் கேட்க தலை சுற்றியது. இரண்டு லட்சம் கடன் இருப்பதைக் கேள்விப்பட்டதுமே அவளுக்கு மூச்சு முட்டியது.
`இதை ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் எனக்கு சொல்லேல்ல? கடன் வட்டியோட கூடிப்போனா குடி முழுகிப்போகுமே. தாலிக்கொடி இப்ப எனக்கு வேணாம். அதை விற்று வட்டியையாவது கட்டிவிடுங்கோ’
முகமெல்லாம் வியர்த்துப்போக பயத்தோடு சொன்னாள் தங்கம்.
‘'வேண்டாமப்பா. தாலிக்கொடியை விற்க வேண்டாம். அது பிள்ளை உனக்குச் செய்து தந்தது. மகனின் உழைப்பு. அதை வைத்துக்கொள். நாங்கள் இப்போ எங்களுடைய யாழ்ப்பாணத்துக் காணியை விற்று கடன் முழுவதையும் அடைப்போம். ஆனால் ஒன்று கடனைக் கொடுக்குமட்டும் நீர் அந்த தாலியைக் கழுத்தில போட வேணி டாம் . கடனை க் கொடுத் ததும் பிறகு போட்டுக்கொள்ளும்.”
இதைச் சொல்ல எனக்கும் வேதனையாக இருந்தது. கேட்க அவளுக்கும் துன்பமாக இருந்திருக்கும்.
நான் கட்டின தாலியை அன்றைக்கு வாங்கி விற்றுவிட்டேன். அந்த உரிமை எனக்கு இருந்தபடியால். ஆனால் வெறும் கழுத்துடன் தாய் இருக்கக்கூடாது என்று மகன் வாங்கி அனுப்பியிருக்கிறான் ஒரு புதுத் தாலியை. அதை விற்கிற உரிமை எனக்கில்லை.
சுடர்ஒளி - 2000
O O

Page 11
Sn3a Ay Aj, z7, 3(4pa///62a52:Z)
அமெரிக்காவில் ஒரு LDTIB156öO
மைதியையும், உடல் நலத்தையும் வேண்டி அலையும் மக்களிலே ஒரு கூட்டத்தினர் அந்தக் கல்கிசை கடற்கரையிலும் நிறைந்திருந்தனர். இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் கூச்சலும், கும்மாளமுமாய் அங்கு ஒரே கலகலப்பாகவுமிருந்தது.
அவ்விடத்தில் ஓயாது வீசுகின்ற அலைகளைப் பார்த்த வண்ணம் ஓய்ந்து போன கிழவர்கள் மூவர் ஒதுக்குப் புறமாக இருந்து கொண்டிருந்தனர். நாள் ஒன்று போவது வருடம் ஒன்று நகர்வது போல் சுமையாக இருக்கும் அவர்களுக்கு கடற்கரைக் காற்று மட்டும்தான் சிறிது கவலை தீர்க்கும் மருந்தாக இருந்தது. இதற்காக அந்த முதியவர்களும் நாள் தவறாமல் நேரத்தை
 

മറ്റ്രക്രിക്കാ മക്രീz/ഴ്ച)
பிழைக்கவிடாமல் சொல்லி வைத்தவாறு வெயில் தாழவும் அங்கு சமூகமளித்து விடுவார்கள். ஆனால், அன்று கடற் கரையிலும் அவர்களுக்கு மனநிம் மதி கிடைக்கவில்லை. அந்த மூவரையும் விட மேலும் அவர்களுடன் உறவாடும் நண்பர் ஒருவர் அவ்விடம் வரமுடியாமல் போனதையிட்டு ஏற்பட்ட ஆதங்கம் அவர்கள் முகங்களிலெல்லாம் வாட்டம் கொடுத்திருந்தது.
வருகை தந்த் அவர்களிலே வயதில் மூப்பர் என்று சொல்லக் கூடிய தொண்ணுTறு வயதைக் கடந்த உறுதியான உடலுடையவர் கடற்கரைக்காற்றை ஊன்றி உள்ளுக்குள் இழுத்து வெளியில் விட்டவாறு ‘என்ன மாதிரி அவருக்கு இருக்கு? பிள்ளைகளுக்கு அறிவிச் சாச்சே?’ என்று கேட்டார். அருகிலிருந்த எண்பத்தொரு வயதைத் தாண்டியவர். செவிட்டு மெசின் மூலமாக அவர் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டு நிதானித்துப் பின் பதில் சொன்னார்.
‘’ எல்லாம் அங்க ஆஸ் பத்திரியில பாரங் குடுத்திட்டன். அவரை அங்கே சேர்த்த கையோட அமொக்காவில இருக்கிற மகன்ரை ரெலிபோன் நம்பர் விலாசம் எல்லாத்தையும் குடுத்திருக்கிறன்’
‘மெய்யே அப்ப இப்போதைக்கு மகன் உடன வருவாரே? 'இருவருக்கும் அருகில் நின்ற எழுபத்தொரு வயதைக் கடந்த மூன்றாவது மண்தர் ஆர்வத்துடன் (85 LITff.
"வருவாரெண்டுதான் நினைக்கிறன். ஒரேயொரு பிள்ளை மனம் துடிக்காதா என்ன. வந்து பார்க்கத்தானே வேணும். எல்லாம் இந்த மனுசனிலும் குற்றம்தான். மகன் அங்க வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
9

Page 12
தீ2 அரு/Mந்தம்
போகவேண்டியதுதானே இங்க தனியக் கிடந்து சாகவேணுமே”
"அதுதானே மகனும் மருமகளும் நல்ல வேலை வசதியாயிருக்கினம். கடைசிக் காலத்தில அந்தப் பிள்ளைகளோட போய் இருக்காம தனிய ஒருவருமில்லாம இங்க கிடந்து ஏன் சாகவேனும்” ஒத்துப் பாடினார்.
வயசுபோனா பிள்ளைகளோட போய் இருந்து கொள்ள வேணும். தனிய இருந்தாக் கரைச்சல் ஏதோ தாறதை வாங்கிச் சாப்பிட்டுப் போட்டு சந்தோஷமா இருக்கலாம்’ தொண்ணுாறு வயதைத் தாண்டியவர் மற்றைய இருவருக்கும் தனது வயதுக்கேற்ப அனுபவ அறிவுரையை வழங்கினார்.
இந்த மாதிரியான உருப்படியான ஆலோசனை களையும் அறிவுரைகளையும் முன்பு இதே கடற்கரையில் இதே இடத்திலிருந்தவாறே மூவரும் அந்த நான்காவது நபரான நோயாளிக் கிழவருக்கு பல தடவைகள் கூறியிருந்தார்கள். 'கிழவன் கேட்டால்தானே’ என்று இந்தக் கிழங்களெல்லாம் இப்போது எரிச்சல் படக் கூறுமளவிற்கு தான் பிடித்த முயலுக்கு வாலும் இல்லை மூன்று கால்கள் தான் என்று வாதிடும் அவரோடு, சிலநேரம் இவர்களும் கதையை நிற்பாட்டிக் கொண்டால் நன்மை யென்றுணர்ந்து முகங்களையும் உம்மென்று வைத்தவாறே மெளனித்து விடுவார்கள். என்றாலும் இவர்கள் போக்கு அவருக்குப் பரிச்சயமாகவும், சர்வ சாதாரணமாகவும் போனதால் ஒன்றையும் கண்டு கொள்ளாது மறுபடியும் சரளமாக சந்தோஷமாகக் கதைப்பதில் மற்றவர்களுக்கு ஒருவித இரக்க சுபாவமே அவரிடம் மேலிடுவதாக இருந்தது.
10

മdപ്രിബദ്ധ മഠുീd()
நோயாளியான அந்த முதியவர் முன்பு புகையிரத நிலைய அதிகாரியாக வேலை பார்த்தவர். இன்று அவருக்கு நல்ல ஓய்வூதியம் கிடைக்கிறது. ஆனாலும், மனைவி இறந்த பின்பு மகன், மருமகள் என்ற உறவுகள் இருந்தும் அனாதை போலவே இப்போது ஆதங்கப்பட்டு அல்லலுறுகிறார்.
முன்பு ஒருமுறை மூன்று மாதங்கள் தங்கும் அனுமதியோடு அமெரிக்காவுக்குச் சென்று மகனையும், மருமகளையும் அங்கே பிறந்து வளர்ந்து துள்ளித் திரியும் துடிப்பான பேரனையும் பார்த்ததன் பின்பு மீண்டும் இங்கு திரும்பி வந்தவர்தான் அதற்குப் பின்பு நிரந்தரமாக அங்கு இருப்பதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்து மகன் அங்கு கூப்பிட்டாலும் ஏதோ விதம் விதமாக சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு இங்கிருந்து காலம் கடத்துபவராகவே இருந்து விட்டார்.
மனதில் எதையாவது அதிகம் போட்டு அலட்டிக் கொண்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை கூடிவிடுவது போன்று அநேக வருத்தங்கள் இவருக்கு. இதனால் சிலவேளை, நோய்கள் கட்டுப்பாடில்லாது கைமீறியும் போய் இடையிடையே வைத்தியசாலையென்றும் சென்று பணமும் அதிகம் செலவாகிக் கொணி டும் இருந்தது. ஓய்வூதியத்துக்கு மேலாக மகன் ஒருபுறம் அக்கறையுடன் அப்பாவிற்குப் பணம் அனுப்பினாலும் எங்கே அவையெல்லாம் என்று பார்த்தால் மருந்தும், அதுவும் இதுவுமென்று எல்லாமே மாயமாய் மாதம் ஒன்றுக்கு செலவாகித் தொலைந்து போகிறது. இப்படியெல்லாம் இருக்கும் பொழுது திரும்பவும் அமெரிக்கா சென்று மகன், மருமகளுடன் கூட இருந்து வாழ்வதற்கு நல்ல சந்தர்ப்பம்
11

Page 13
3 ca, ۔۔۔ ர். 2/. ஆமுர்/0ரத2
கிடைத் தும் ஏதோ சூடுபட்டது போல முன் பு நடந்ததொன்றை நினைத்ததுமே அவருக்கு வெறுப்புத் தட்டி விடுகிறது.
நாடு நகரங்களைப் போய்ப் பார்ப்பதென்றால் இந்தக் கிழவருக்குக் கொள்ளை ஆசை. முன்பு அமெரிக்கா போயிருந்த வேளை மகன் இருக்கும் கலிபோர்னியாவில் அவனுடைய சொந்த வீட்டில் வளம் மிக்க மண்ணையும் சீரான சுவாத்தியத்தையும் கண்டவர் அப்படியே சொக்கிப் போனார். ‘அட நம் நாட்டில் இருந்து ஒரு பழ மரக்கன்றா கிலும் வரும்போது இங்கு கொண்டு வந்திருக்கலாம் தானே” யென்று அவர் மனம் அப்பொழுது தாகம் கொண்டது.
சோளம், கோதுமை, பருத்தி, புகையிலை, பழவகை என்றெல்லாம் அளவுக்கதிகமாக விளையும் நாடு அமெரிக்கா. அங்கு இந்த மாமரம் வளருமோ பூக்குமோ, காய்க்குமோ அதைப் பற்றியெல்லாம் அவர் சிந்திக்க வில்லை. தன்னுடைய நாட்டிலிருந்து ஒரு மரக்கன்று மறுமுறை வரும்போது கொண்டு வந்து இங்கே இருக்கும் மகனுடைய சொந்தக் காணியில் ஞாபகமாக வைக்க வேண்டுமென்றுதான் தீர்மானித்திருந்தார். ஆனால் அதற்குள் தொட்டால் சுருங்கி விடும் செடி போல் அவருடைய மனம் ஒரு சிறு விடயத்தில் ஆடிப் போய் சுருங்கி விட்டதால் மீண்டும் அது விரிவடைந்து மகிழ்வடைவதுதான் இனி இல்லையென்பது போலவும் ஆகி விட்டது.
அப்படியானதாக அங்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லவும் வேண்டும். அமெரிக்காவில் இருந்த வேளை
12

മറ്റ്രക്രിക്കും മഴzzáഴ്ചാമ
ஒரு மாதம் கழிந்ததன் பின்பு ஒருநாள் அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைக்க மகனும் தயாரானார்.
'அப்பா புறப்படுங்கோ நியூயோர்க் போய் ஒருக்கா
சுற்றிப் பார்க்க வேணுமெண்டு ஆசைப்பட்டியளெல்லே வாருங்கோ உங்களை காரில கூட்டிக் கொண்டு போறன்’ என்று மகிழ்ச்சியுடன் கூப்பிட்டார்.
உடனே கிழவருக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அமெரிக்காவின் மிகப் பெரிய நகரம் நியூயோர்க். அந்த அழகான நகரத்தையும், உலகின் மிகப்பொரிய கப்பல்துறை முகத்தையும் பார்க்கப் போகின்றேன் என்ற நினைப்பில் அவருடைய மனம் மகிழ்ச்சியில் பூப்போல் விரிந்தது.
ஆனால்.
'கல்யாணமாகி பத்து வருடங்கள் போயும் நான் இன்னும் நியூயோர்க் போய்ப் பார்க்கேல்ல. உங்கள் அப்பாவுக்கு மட்டும் ஏன் இத்தனை அவசரம் வேண்டிக்கிடக்கு” மருமகளின் வார்த்தைகள்.
கணவருக்குச் சொன்னாளா அல்லது மாமனாருக்கு உறைக்கட்டுமென்று சூடு போட்டாளா மருமகள் கூறிய அத்தனை சொற்களும் கிழவர் நெஞ்சில் நெருஞ்சி முள் குத்தியது போல் வலித்தது. ‘வேண்டாம் மகன் நான் வரேல்ல” என்று கண்டிப்பாக அவர் கூறிவிட்டார். அதற்குப் பின்பு இருந்த நாட்களையெல்லாம் எண்ணிக்கழித்து விட்டு இங்கு வந்தவர் தான் மீண்டும் போவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தும் மனம் ஏவாமல் இருந்துவிட்டார்.
என்றாலும் அவருக்கு மனதில் ஒரு உறுதி
13

Page 14
മ്മ് ഋഗ്രാഡ്വൈ
எப்படியாவது தான் தண்ணிர் ஊற்றி வளர்த்துவரும் அந்தச் சிறிய மாங்கன்றுகளை மகன் இருக்கும் இடத்தில் தனது ஞாபகமாக இருக்க, அங்கு கொண்டு சென்று நட வேண்டும். இந்த ஆசையை அடக்க முடியாமல்தான் பல தடவைகள் இதைப்பற்றி அறிந்த பலரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். இவரின் கதைப்போக்கு சிலருக்கு எரிச்சலையும் கொடுத்தது. தலையில் தட்டிவிட்டது கிழவருக்கு என்ற கதை பேச்சும் அடிபடத. தொடங்கியது. இவை ஒன்றுக்கும் அசைந்திடாத கிழவர் தன் காரியத்தில் தான் கவனமானார்.
தொற்றுநோய் அது இது என்று சொல்லி அதிகாரிகள் அமெரிக்கா கொண்டு செல்வதற்குத் தடை விதித்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அவரிடம் இருந்தது. என்றாலும் இந்த நிரந்தர ஆசை எல்லாவற்றையும் மூடி மறைத்து அந்த மரக்கன்று போல் நாளொரு வண்ணம் வளர்ந்து துளிர் விட்டுக் கொண்டே இருக்கவும் செய்தது. இந்த விடயத்திலெல்லாம் அவருடைய கடற்கரை நண்பர்கள் பின் நிற்கவில்லை முன் நின்று அவருக்கு உற்சாகமாக உந்துதலளித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனாலும் அவருக்கு திடீரென்று இப்படி ஆகி விட்டதால் உண்மையில் அவர்களும் துடித்துப் போனார்கள்.
அடுத்த நாள் காலையில் வைத்தியசாலையில் அக் கறையுடன் அந்த மூவரும் நோயாளியைப் பார்ப்பதற்கென்று சென்று அவர் இருந்த அந்த சிகிச்சை அறையின் முன்பு நின்றனர். மிகவும் கவலைக்கிடமான கடைசி நேரம் என்று வைத்தியர் அவர்களிடம் கைவிரித்து விட்டு அப்பால் சென்றார். விரைவாக அந்த மூவரும் சிகிச்சை அறைக்குள்ளே நுளைந்தனர். இழுத்துக் கொண்டிருந்தாலும்
14

(ി
'/gീzáno)
கிழவருக்கு நல்ல அறிவு இருந்தது. சிரமப்பட்டு கைகளை உயர்த்திக் காட்ட வாயை அடைத்துக் கொண்டிருந்த சிகிச்சைக் கருவி அகற்றப்பட்டது. அவருடைய கண்கள் பஞ்சடைந்த நிலையிலும் அவர்களைப் பார்த்துக் கெஞ்சின. கோணலாக வாய் ஒருபுறத்தே இழுத்து விட்டிருந்தாலும் சிரமப்பட்டு விளங்கக்கூடியதாக ஓரிரண்டு வார்த்தைகளை உருப்படியாகச் சொன்னார்.
‘’மகன். வந்தா.ம்..ம்..ம். அப்பா தந்ததெண்டு
१ १
LDTLDJ.......
அதற்கு மேல் வார்த்தைகள் வெளிவரவில்லை. வாய் பழையபடி கோணலாகிக் கிட்டுக்கொண்டது. கிழவரின் தாகமெல்லாம் நெஞ்சுக்குள்ளேயே பனி போல் உறைந்தது. உறுப்புகள் செயலற்றுப் போய்க் கொண்டிருந்தாலும் அவர்கள்ைப்போர்த்தபடி இருந்த, நிறுத்திய ப்ோர்வ்ை ஏக்கதுயரங்களிை விேபரித்துக் கொண்டிேஇருந்தது:அருகிலிருந்த மூன்றுேேபீரில் மூத்தவ்ரான் வியேfதிபர்பரிவோடும் கடம்ை உண்ர்வேர்டும் கைகளை நீட்டிஇமைக்காது நின்று போனஅவருடைய TT SgSSttLSgu TTtLlllLSS0S iTlL TuLEESKriS LTLlll YS நம்பிக்கைகளுட்ன்:. ***
OO
15.

Page 15
മ്മ്യ്രമിക്രമ
பதினான்காம் ஆண்டு என எழுதப்பட்டிருக்கிறது. கட்டிட வேலை எல்லாமே பூர்த்தியான பின் இந்தக் கிணற்றைக் கட்டி முடித்த கொத்தனார் தனது வலது கை அடையாளத்தையும் அந்த இடத்திலே ஞாபகத்துக்காகப் பதிய வைத்து எனது பாட்டனாரின் கட்டளைப் பிரகாரம் கிணறு. கட்டிமுடித்த ஆண்டையும் எழுதி விட்டதாக அப்பா சொல்லி எனக்கும் தெரியும்.
காலையில் எழுந்தவுடன் கிணற்றடிக்குப் போனால் முகம் கழுவும் போது எதேச்சையாக சில நாட்களில் கிணற்றுக் கட்டில் எழுதி இருப்பவையும் எனது கண்ணில் பட்டுவிடுகிறது. அந்த வேளையில் தண்ணிர்பட்ட குளிர்ச்சியோடு கிணற்று வட்டத்தையும் ஒரு முறை விழிகளால் சுழற்றிப் பார்க்கையில் உள்ளத்திலும் ஒரு
16
 

മറ്റ്രക്രിബദ്ധ മഠുzá)
வித மகிழ்ச்சி எழுந்து அதனால், இதமாக பல கடந்த கால சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்துக்கு வருகின்றன.
“முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பமான அந்தக் காலகட்டத்திலே எனது அப்பா கட்டிய கிணறு”
என்று இதை என் தந்தை பெருமையாக அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லும்போது அந்த நேரம் சிறு பிள்ளையாகவிருந்த காலத்தில் ஒரு சில வேளைகளிலே நானும் கூட அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இதையெல்லாம் மிக அவதானமாகக் கேட்டிருக்கிறேன்.
இப்படி அவர் சொல்லுமளவுக்கு இந்தக் கிணறு அத்தனை பெருமைகளையும் எவ்வாறு சேர்த்துக் கொண்டது என்பதையும் கூறுவது தான் நல்லது.
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் எங்கள் வீட்டு வளவுடன் சேர்ந்து அயலில் உள்ள பத்து வீட்டு வளவுகளில் மட்டுமே கோடையிலும் தண்ணீர் வற்றிவிடாத நல்ல ஊற்றுள்ள கிணறுகள் இருந்தன. அந்தக் காலத்தில் குழாய் நீர் வசதியோ, குழாய்க் கிணறு வசதிகளோ எங்கள் இடத்தில் இருக்கவில்லை. நகர சபை பொதுக் கிணறுகளை குறிப்பிட்ட இந்த இடங்களில் அமைத்திருந்தும் கோடையில் அதுவும் வற்றி வறண்டு விடுவதால் வாளிகளுடனும், குடங்களுடனும் அங்கே குடியிருக்கும் மக்கள் வேறு வீடுகளுக்குத் தண்ணிருக்கென்று படையெடுத்தது போல் வீதிகளில் செல்வது இந்த நாட்களி லெல்லாம் அவர்களுக்கு அன்றாட வழக்கமாயிருந்தது.
17

Page 16
0് ീ ഋഗ്രാഡ്വൈജ്ഞ
அந்தக் காலத்தில சாதி வெறியரில் அசுரர்களாகவிருந்த ஒரு பகுதியினர் தங்களைப் போன்ற மனிதர்களையே கீழ்சாதிகள் என்று ஒதுக்கி வைத்துக் கொண்டாட்டம் போட்டு வாழ்ந்த நேரம். அந்த வேளையில் நாங்கள் வசித்த இடத்திலே எங்கள் வீட்டை விட்டுச் சற்றுத் தூரம் மேற்குப் பக்கமாக உள்ள வீதி வழியே நடந்து போனால் ஒரு பெரிய சேரிப் பகுதியும் காணக்கூடியதாக இருந்தது. அங்கே வறுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களது ஒலைக் குடிசைக் காணிக்குள் கிணறுகள் இருக்கவில்லை. இவர்கள் அனைவரும் அங்கிருந்த இரண்டு பொதுக் கிணறுகளை நம்பியே தங்களது தண்ணிர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தனர்.
ஆனாலும், கோடைக் காலத்து நெருப்பு வெயிலில் அந்த அதல பாதாளக் கிணறுகளிரண்டும் ஒரு சொட்டுத் . தண்ணிருமின்றி வற்றி நிலத்தடி ஈரமில்லாமல் காய்ந்து விடுவதால் குளிப்பு இல்லாவிட்டாலும் குடிக்கவென்ற தேவையை வேண்டித் தண்ணீர்தேடி இவர்களெல்லாம் எமது பகுதிக்குள்தான் வரவேண்டிய நெருக்கடியான நிலை இருந்தது.
எங்கள் இடத்தில் கேட்டுக் கேள்வி இல்லாமல் படலையைத் திறந்துகொண்டு உள்ளே வந்து கிணற்றில் தண்ணிர் அள்ளிப் போகிறவர்கள் பல பேர் உண்டு. அவர்களை இங்கெல்லாம் வீட்டிலிருப்பவர்கள் ஏன் எதற்கு என்று கேட்பதில்லை. அவர்கள் எங்களுடைய சாதியாம். அதற்காக அவர்கள் தங்கள் வீட்டுக் கிணறு போலத்தான் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் கிணற்றிலே தண்ணிரை அள்ளிக் குளிப்பார்கள். உடுப்புகளைக் கல்லில் அடித்துத்
18

മറ്റ്രക്രമിക്കുംr zgzá)
துவைப்பார்கள். இவை அன்ைத்தையும் சுதந்திரமாகச் செய்துவிட்டுப் பெண்களாக இருந்தால் ஒரு மணி நேரம் என் அம்மாவுடன் சேர்ந்து அரட்டை அடித்துவிட்டுத்தான் வெளிக்கிளம்புவார்கள்.
இவர்களெல்லாம் தண்ணிருக்கென்று எங்கள் வீடுதேடி வருவதை அந்தச் சின்ன வயதிலே பார்த்தபோது எனக்குள்ளே நான் ஒரு தற்பெருமையை வளர்த்துக் கொண்டாலும் காலப்போக்கில் ஒழுங்கான புத்தி வளர்ந்த பிறகு நல்ல நூல்களை வாசிக்க ஆரம்பித்ததும் கீழ் சாதியென்று சொல்லி ஒரு சாராருக்கு மாத்திரம் தண்ணிருக்கென்று வரும் போது பல வஞ்சகங்கள் செய்து விடுவது பெரும் அநீதி என்பது போலவே எனது உள்மனதையும் அறுக்க ஆரம்பித்தது.
விடிந்தும், விடியாததுமான காலைப் பொழுதினில் எழும் பிக் குடத் தோடு படலைக் கு வெளியே தண்ணிருக்கென்று வந்து நின்று,
‘அம்மா.ஐயா’
என்று கூப்பிடும் பொழுது கூட சத்தம் வெளியில் வரக்கூடாது என்று நினைத்து தொண்டையைத் திறக்கப் பயப்படும் பெண்களை ஒரு கணம் எண்ணி எனக்கும் கவலையாகத்தான் இருந்தது.
வீட்டிலே உள்ளவர்கள் படுக்கையிலிருந்து எழும்பி காலைக் கடன்களையெல்லாம் முடித்த பிறகுதான் வெளியே தணிணிருக்கென்று காத்துக் கிடக் கும் சேரியிலிருந்து வரும் அவர்களை உள்ளே வருவதற்குப் ப்டலையை திறப்பார்கள். வேளைக்கு உள்ளே விட்டால் கிணற்றடியில் தங்கள் வேலைகளைச் செய்ய
19

Page 17
ரீ2 அருவந்தம்
இடைஞ்சலாகப் போய்விடும் என்ற அளவிலே இப்படியான நடவடிக்கைகள் அங்கு நாளாந்தம் வழக்கமாயிருந்தது. அதேபோல்,
'பொழுதுபட்டால் இங்கே தண்ணீருக்கென்று எவருமே வரக்கூடாது'
என றும் அவர் களுக்கு கட்டளையும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால், எத்தனை நாள் இவர்கள் நேரம் தப்பி வந்து வெறுங்குடத்துடன் போயிருப்பார்கள். அவர்கள் படலைக்கு வெளியே காத்துக் கொண்டு நிற்கும் போது அந்த நேரத்தில் வீறு காட்டிக் கொண்டு உள்ளே தண்ணிருக்கென்று படலையை திறந்து கொண்டுவரும் எங்கள் சாதியை சேர்ந்தவர்களை வெளியே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் அந்தக் கவலை தோய்ந்த முகத்தை யார்தான் பார்த்திருப்பார்கள்.
மாலை வேளையில் கூலி வேலை விட்டு வந்த பின் சமைத்துச் சாப்பிடும் ஒருவேளை உணவைத் தயாரிப்பதற்கே அவர்களுக்குத் தண்ணிர் கிடைக்க வில்லையென்றால் இவ்வுலகில் எல்லோரையும் வாழ்விக்கும் மழை என்று பொதுவாகச் சொல்லுவதும் பொய்யாகவல்லவோ இருக்கிறது.
இந்த விடயத்தில் அம்மா அப்பாவை எதிர்த்துக் கொண்டு அவர்களுக்கெல்லாம் உதவி செய்கிற அளவிலே எனக்குத் துணிவில்லை. என்றாலும், அந்த வாலிப வயதினில் ஒரு நாள் ஏதோ ஒரு மாதிரியான அசட்டுத் துணிவை வரவழைத்துக் கொண்டு அப்பா இல்லாத நேரத்தில் எனது அக்காவை அருகில் வைத்துக் கொண்டு அம்மாவிடம் இதை நான் கேட்டுவிட்டேன்.
20

ബഗ്ഗിക്കാr Zഗ്ഗീ/ഴ്ച)))
‘’ அம்மா! பாவமம் மா அந்தப் பெண்கள். பொழுதுபடுகிற நேரம் வந்து தண்ணிருக்கென்று தவித்துப் போய் நிற்கிறதைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கு நாங்கள் வீட்டிலே வேலை ஒன்றும் இல்லாம சும்மாதானேயம்மா இருக்கிறோம். கொஞ்சம் பொழுதுபட்டு வந்தாலும் தண்ணிரை அள்ளிக் குடங்களுக்கு ஊற்றிவிடலாம் தானேயம்மா.”
அக்காவும், என்னைப் போலத்தான் இரக்க சுபாவம் உள்ளவள். நான் கேட்பதையே தானும் கேட்பது போல் அம்மா முகத்தைப் பார்த்தபடி பதிலை எதிர்ப்பார்த்தாள்.
’சொல்லுகிறதென்றால் மிகவும் இலகு மகன் ஆனால், அதைச் செய்கின்றபோது தான் கஷடம் விளங்கும். எந்த நேரமும் நீர் வீட்டிலே இருக்கின்றீரே? ரியுசன் அதுஇது என்று இப்ப உமக்கு நேரமுமில்லை. அப்படி என்று இல்லாமல் நீர் வீட்டிலே இருக்கிற நேரத்திலை மாத்திரம் சில நேரம் தண்ணிர் அள்ளி ஊற்றிவிடுகின்றீர் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், எல்லா நாளிலேயும் இது உம்மால் முடியுமே. இதை ஒருநாள் மட்டும் பழக்கிவிட்டுப் போனால் பிறகு எனக்கெல்லவோ கரைச்சல் இதையே சாக்காக வைத்து பொழுதுபட்ட பின்னாலும் வந்து தண்ணிருக்கென்று நின்று கத்திக் கொண்டிருக்க எனக் கெல் லே தலையிடி. பொழுதுபட்டால் இங்கே இரவுச் சாப்பாட்டுக்கு பலகாரம் ஏதாவது ஆயத்தம் பண்ணவேணும். அந்தநேரம் தணி னிரை அள்ளி அவர்களுக்கு ஊற்றிக் கொண்டிருந்தால் வீட்டுக் கருமம் எப்படிச் சரியாக நடக்கும். அதோட எனக்கும் நாரிப்பிடிப்பு வேற. எந்தநேரமும் அவர்களுக்குத் தண்ணிர் அள்ளி ஊற்ற பாரமான உந்துத்
21

Page 18
S. ...' Azj. 27 c3%ł77/ód/AG2:zZ)
துலாவை இழுத்து மாய என்னால ஏலாது”.
அம்மா சொல்லி முடித்தாள். ஆனால், இதைக் கேட்டுக் கொண்டிருந்த அக்காவோ எனக்கு சார்பான முறையில் தானும் மனிதாபிமானத்துடன் பேசுவதற்கு தலைப்பட்டாள்.
‘’ தம்பி சொல்லுகிறதும் சரிதானேயம் மா. காலையிலும், மாலையிலும் அவர்களுக்குத் தண்ணிரை அள்ளி ஊற்றிவிட்டு எங்கள் அலுவல்களைப் பார்க்கலாம் தானே. அதிலே எங்களுக்கு என்னதான் கஷடம் வரப்போகிது. தம்பி இல்லாத நேரத்தில் நானும் தண்ணீரை ஊற்றிவிடுவேன்தானே. எங்களைப் போல அவர்களும் மனிதர்கள்தானேயம்மா. காசு பணத்தை அவர்கள் கேட்கவில்லையே. இயற்கையிலே எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் கடவுள் அளித்த தண்ணிரைத்தானே தேடிவருகிறார்கள். அதை எப்போது கேட்டாலும் கொடுக்காமல் மறுப்பது பெரியபாவமெல்லேயம்மா’. இரக்கத்தின் ஊற்றாக அக்கா வாயிலிருந்து இந்த வார்த்தைகள் கனிவாக வெளிவந்தன. மனித நேயப் பண்புகள் நிறைந்த அவள் எனக்கு சகோதரியாக வாய்த்ததை நினைத்து மனம் பூரித்துப் போனதினால் சில நொடிகள் நான் அவ்விடத்தில் இருந்தவாறே மெய்மறந்து போனேன். ஆனால், திடீரென்று அம்மாவின் குரல் மீண்டும் என்னை சுயநிலைக்கு தட்டிவிட்டது.
'நீர் சொல்லுவீர் பிள்ளை. பொழுதுபட்டால் நீர் வீட்டைக் கூட்டவேணும். சாமியறைக்கு விளக்குப்போட வேணும். உமக்கும் சோதினைக்கு வேற படிக்கக் கிடக்கு. அதினாலேதான் காலையிலேயும், பொழுதுபட்ட
22

(محرر رxر زخم زختم نبوھریری/z/ AfZZZ / فرورردوقوموڈور مچھ بلوچی///z
நேரத்திலும் இந்த வேலை உங்களுக்குச் சரிப்பட்டு வராது என்று சொல்லுகிறேன். எங்களுடைய சனம் வந்து தண்ணிர் அள்ளிக்கொண்டு போறது ஒரு பிரச்சினை யுமில்லை. ஆனால், இந்தச் சேரிச்சனத்துக்குத்தான் எந்த நேரமும் தண்ணிரை அள்ளி ஊற்றிக் கொண்டிருக்க இங்க ஒரு வேலையாளையும் பிடிச்சு வைத்திருக்க வேண்டியிருக்கு” எரிச்சல்பட்டுக் கொண்டு வார்த்தைகளை அம்மா கொட்டித் தீர்த்தாள். என்றாலும், அதற்குள் ஒரு புதிய உத்தியொன்று மின்னல்போல் என் எண்ணத்தில் தோன்றி விடவே உடனேயே துடிப்பாக எழுந்து நின்று அம்மாவிடம் நான் இந்த விஷயத்தைச் சொன்னேன்;
'அம்மா! இப்படிச் செய்தால் என்ன? கிணற்றோடு தான் எங்களுக்கு பெரிய வக்குக் கடடிக்கிடக்கிறதே அதிலே தண் ணிரை அள்ளி ஊற்றி வைத்தால் வருபவரெல்லாம் வாளிகள் குடங்களை அதற்குள் வைத்துத் தண்ணிரைமொண்டு கொண்டு போக வசதியாக இருக்குமே”
இதை முழுதாகவும் நாணி சொல் லி முடித்துவிடவில்லை. ஆனால், அம்மாவுக்கோ இப்படிச் சொன்னது மிகவும் ஆத்திரத்தைக் கிளப்பியிருக்க வேண்டும்.
’சொல்லுவீர் தம்பி நீர் சொல்ல நாங்களும் எல்லோரும் சேர்ந்து கேட்டு அப்படியெல்லாம் செய்துவிட அப்பா கமத்திலேயிருந்து வந்தால் எங்களையெல்லாம் என்ன செய்வார் என்று தெரியுமே. அதைவிட நாங்கள் குளிக்கின்ற வக்கு அல்லவோ அது. அதிலே கண்ட சாதிகளும் வந்து குடத்தை வைச்சு தண்ணிர் அள்ளுகிற
23

Page 19
தீ2ஆகுமணத்தம்
தெண்டா சீச்சீ. பொறுக்க ஏலாத அருவருப்பு போங்கோ போங்கோ உங்களுடைய வேலைகளைப் போய்ப் பாருங்கோ’.
அம்மா இப் படிச் சொல் லிய கையோடு சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள். இதற்கு ஒன்றுமே முடிவு எடுக்க முடியாத நிலையில் உடலும், மனமும் சோர, விறாந்தையில் நின்று கொண்டு கிணற்றடிப் பக்கம் பார்த்தபடி இதற்கொரு வழி தெரியாமல் நான் விழித்தேன்.
அக்கா இருந்த அந்த இடத்திலிருந்து எழுந்து போயிருக்க வேண்டும். நின்ற இடத்தில் நின்று நான் ஆவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவள் விட்ட பெருமூச்சுச் சத்தம் மட்டும் எனக்குக் கேட்டது. நான் வைத்த கண்வாங்காது கிணற்றுப் பக்கத்தில் கட்டப் பட்டிருந்த வக்குவைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
அந்த வக்குக்குள் பெரிய வாளியால் தண்ணிரை அள்ளி நூற்றைம்பது தடவைகள் இறைத்தால்தான் வக்கு நிரம்பும். ஒவ்வொரு காலமும் பொங்கல், வருஷம், தீபாவளி வரும்போது தான் அந்த வக்கிலே மேலே தளம்ப மட்டும் தண்ணிரை இறைத்து நாங்களெல்லாரும் முழுகுவது வழக்கம். அக்காவும், நானும் அதற்குள்ளே கையைக் காலை அடித்துக் கொண்டு நீச்சல் போடுவோம். முழு உடம்பினையும் தண்ணிருக்குள் முக்கி எழுவோம். நூறு எண்ணும் வரை தண்ணிருக்குள் அமுங்கி இருக்க வேண்டும். இப்படியாக எங்களுக்குள் போட்டிகளும் வேறு வைத்துக் குளித்து முடியும் வரை தண்ணிருக்குள் உல்லாசமாகத்தான் அப்போது இருக்கும்.
அக்கா எதிலும் கெட்டிக்காரி. இந்த வீட்டுக்
24

മറ്റ്രക്രിബ് ബഴ്ച)
காணியிலேயே பத்துப் பாத்திகளில் மாத்திரம் வெங்காயம் நட்டு கைவாளியால் தண்ணிர் அள்ளி சென்று ஊற்றி பக்குவமாகப் பார்த்து எடுத்து விற்றுக் காசாக்கி அழகானதோர் முத்து வைத்துக் கட்டிய தூக்கணம் செய்து அவள் போட்டிருந்தாள்.
என்ன சொன்னாலும் அம்மாவுக்கு நல்ல மனதுதான். நாங்கள் பள்ளிக்கூடம் போய்விட்டால் வீட்டிலே தனியே இருக்கிற அம்மாதான் இப்படி வருபவர்களுக்கு சமயலையும் பார்த்துக் கொண்டு தண்ணிரையும் அள்ளி ஊற்றி விடுவா. ஏதோ இந்தச் சாதிப்பாகுபாடு அவவுக்கும் பழக்கத்தில் ஊறிப் போனதால் எங்களுக்கும் வேலி போட்டுத் தடுக்கப் பார்க்கின்றா.
வீணே கண்மூடித்தனமாக கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் அம்மாவை சில வேளைகளில் பார்க்கையிலே உண்மையிலேயே எனக்கும் சிரிப்பு வந்துவிடும். பஸ்ஸில் எங்காவது பிரயாணம் பண்ணிப் போய்விட்டு வந்தால் வீட்டுக்குள் வர முதல் கிணற்றடிக்குச் சென்று அம்மா நன்றாக முழுகிவிட்டுத்தான் உள்ளே
வருவா.
‘’ கண்ட கண்ட சாதிகளெல்லாம் பிராயணம் பணி னுகிற பஸ் சில போய் விட்டு குளிக்காமல் வீட்டுக்குள்ளே வரலாமே” என்று அதற்குக் காரணம் அவர்கள் சொல்வார்கள்.
எங்கே பிரயாணம் போனாலும் எங்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணிரை போத்தலில் ஊற்றி எடுத்துக் கொண்டு தான் அம்மா வெளிக்கிளம்புவா. பிரயாணத்தில் கொணி டு போன தணிணிர் குடித்துத் தீர்ந்து
25

Page 20
அர்'2 அருவ//வர்தம்
போய்விட்டாலும் வெளியிடங்களில் ஒரு மிடறு தண்ணிர் கூடக்குடிக்காமல் வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த பிறகு தான் தாகசாந்தி செய்து கொள்வார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு வீட்டுக்கு வற்றாத ஊற்றுடைய கிணறு எவ்வளவு முக்கியம் என்பது தான் இன்றைக்கெனக்கு விளங்குகிறது. எங்கள் கிணற்றிலே எக்காலமும் தண்ணிர் வற்றாது இருப்பதால் தான் குளித்து முழுகி ஆடைகளையும் துவைத்து உடுத்தி சுத்தமாக இருக்கிறோம்.
அக்கம் பக்கத்திலே இருந்து வயதுக்கு வந்த எத்தனை பெண்களை இந்தக் கிணற்றிலே கொண்டு வந்து தலைக்குத் தண்ணீர் வார்த்திருப்பார்கள். நான் கிராப்பு வெட்டி விட்டு வந்தாலும் முதலிலே கிணற்றடிக்குச் சென்று முழுகிவிட்டுத்தானே வீட்டுக்குள் போவேன். இப்படி எத்தனை அலுவல கள் இந்தக் கிணற்றில் நடந்தேறியிருக்கின்றன.
இதைக் கொண்டு நாங்களும் கிணற்றடியை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோம். வருடம் ஒருமுறையென்றாலும் கிணற்றினுள்ளே இறங்கி, நன்றாகக் கழுவி, இறைத்துச் சுத்தமாக்கிப் பின்பு சாம்பிராணிப் புகை காட்டி, கற்பூரம் கொழுத்தி, புதிய ஊற்றுடன் மீண்டும் எல்லாமே வழமை போல் தொடர்ந்து நடக்க அது எங்களுக்கெல்லாம் ஆனந்தம் தானே, என்று எனது நினைவுகளெல்லாம் கிணற்றைப் பற்றிய சம்பவங்களையே ஆராய்ந்து கொண்டிருக்க,
& 6
‘அம்மா ஐயா’
26

2/த்துங்கலம் மறுப்பதற்கில்ல0
என்று படலைக்கு வெளியே நின்று கூப்பிடுபவர்களது பரிச்சயமான குரல்கள் எனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திரும்பியது. அங்கே தண்ணிருக்காக வந்து நின்று கொண்டிருந்த அவர்களைப் பார்த்ததும் தாமதிக்காது சைகை மூலமாக அவர்களை உள்ளே வருமாறு அழைத்தேன். அப்போது படலைக்கருகில் நின்ற செவ்வரத்தையின் ஒரு கிளை கீழே நன்றாகப் பணிந்து எழுந்தது தெரிந்தது. அவ்விடத்தில் நின்றிருந்த இளம் பெண் அதிலே பறித்த செவ்வரத்தைப் பூவை வாயில் போட்டுக் கொண்டு வயதான மற்றப் பெண்ணுக்குப் பின்னால் மறைந்தவாறு குடத்துடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
கிணற்றுப்பக்கம் வந்து சேர்ந்த பெண்கள் நால்வரும் குடத்தை இறக்கி கீழே வைத்துவிட்டு வக்குக்கட்டுக்கு வெளியாலே நின்றனர். அவர்களில் வயதான பெண்ணாகத் தோன்றியவள் என்னைப் பார்த்தபடி 'ஐயா’ என்ற வார்த்தையை மாத்திரம் கூறிவிட்டு தண்ணிருக்காக வேண்டி ஒரு சிரிப்புச் சிரித்தாள். நெடுந்துாரம் தலையில் குடத்தை வைத்து நோக்காடில்லாமல் சுமந்து செல்வதற்காகத் தலைக்கு வைத்துக் கொள்ளும் சீலை முறுக்கு வட்டமும் அவள் கையில் இருந்தது. அந்த முதிர் வயதில் அவள்படும் பாட்டை நினைத்து மனம் நொந்து கொண்டு தண்ணிரை அள்ளி ஒவ்வொரு குடமாக நிரப் புவதற்கு தொடங்குகையில் வாய் சரிந்து போன குடத்தைப் பிடித்து நிறுத்தக் கை வைத்த அந்தக் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்த பெண்ணிலேயே எனது பார்வை சரியாகப் பதிந்தது.
செவ்வரத்தம் பூவைத் தின்று கொண்டு வந்தவள்
27

Page 21
そ సి .گمہ میر 够 த. / அருவாரதம
இவள் தான் என்று எனக்கு விளங்கிவிட்டது. இறைவன் படைத்த அழகெல்லாம் அவள் உடலிலே நிறைந்து கிடப்பது போலத்தான் நான் அவளைப் பார்க்கையில் பிரமித்தேன். மாந்தளிர் போல அவளின் வண்ண மேனிக்கு நிகராக எங்கள் சாதியென்று சொல்லுகிறார்களே. அந்தப் பெண்களில் யாராவது இவளின் அழகிற்கு நிகராக நிற்பார்களா என்று தான் என் மனதில் வினா எழும்பியது.
இப்படியாக அவளின் மொட்டுப்போல் குலையாத கட்டான உடல அழகை யெ ல லாம் ஒரு நொடிக்குள்ளாகவே பார்த்து வியந்துபோன நான் அவள் அழகையெல்லாம் பிடுங்கித் தின்னும் வறுமை என்ற வடிவு காட்டும் கிழிந்த உடையையும் கண்டு மனமும் நெகிழ்ந்தேன். இவ்வாறு கற்பனையை வளர்த்துக் கொண்டு என்னையே மறந்த நிலையில் நிரம்பிவிட்டிருந்த ஒரு குடத்திற்குள்ளும் மேலும் ஒரு வாளித் தண்ணிரை அள்ளி ஊற்றி வழிய விட்டுவிட்டேன். இதைக் கண்டு அவர்களும் சொண்டுக்குள் சிரித்து விட்டார்கள். செய்துவிட்ட முட்டாள் தனத்தை நினைத்துக் கூடவே அவர்களோடு நானும் சேர்ந்து சிரித்துவிட்டு உடனேயே நான் வீட்டுப் பக்கம் போய் விட்டேன்.
அன்றிரவு புத்தகத்தைத் திறந்துகொண்டு படிப்பதற்கு இருந்தால் மூளையில் ஒன்றுமே ஏறுகின்ற நிலையில் இருக்கவில்லை. புத்தகத்தைத் தான் சாட்டுக்கு விரித்து வைத்துக் கொண்டிருந்தேன். நினைவுகளெல்லாம் நிழலாக அவளையே ஒட்டிக்கொண்டு சென்றன. சேற்றிலே தான் செந்தாமரையும் முளைக்கிறது என்ற வசனம் அப்போது எனக்குப் பிடித்துப் போனதொன்றாக கரும்பாக இனித்தது. இந்த வாசகத்தையே அன்றைய வீட்டுப் பாடமாக எடுத்துக்
28

Z/fid/ിമാ// zഗ്ഗ/ഴ്സ്))))))
கொண்டதுடன் மனமும் வேறு அவளை மறக்காமல் திரும்பத் திரும்ப ஓவியம் தீட்டிக் கொண்டிருந்ததால் இரவு படுக்கைக்குப் போயும் நித்திரையின்றி கிடந்து உழன்றேன். காலங்கள் செலவழிவதை யாருமே கணக்குப் பார்ப்பதில்லை. ஒரு தரம் கண்ணை மூடித்திறப்பதற்குள் உலகில் எத்தனையோ சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றன. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த நான் படிப்பை முடித்துவிட்டு இப்போது நிஜவாழ்க்கையை படிப்பதற்கு ஏடு திறந்தேன்.
இந்தக் காலத்திலே சேரியிலுள்ள மக்களது வாழ்விலும் வசந்தம் வந்தது. நகரசபை அந்த இடங்களிலே குழாய்நீரைப் பெற அவர்களுக்கு வசதி செய்து கொடுத்தது. மேலுமாக, எத்தனையோ வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு குழாய்க்கிணறு வசதிகளைச் செய்து கொடுத்தது. அத்தோடு தண்ணிருக்காக அலைந்து கொண்டு திரிந்த அவர்கள் துயரம் நீக்கினார்கள்.
எங்களுக்கு முப்பது ஏக்கர் நெல்வயல் பெரிய குளத்தையண்டி இருந்தது. அதிலே ஒழுங்காக ஒரு போகம் விளைந்தாலே போதும் வருடம் பூராகவும் ராஜவாழ்க்கை வாழலாம். படிப்பு முடிந்ததும் அப்பாவை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு நானே விவசாயத்தைக் கவனித்தேன். அடுத்து அக்காவுக்கு எங்கள்குடும்பத்துக்குத் தோதான இடத்தில் கல்யாணம் பேசி வந்தது. வேண்டியதெல்லாம் விமரிசையாக கொடுத்து திருமணத்தை நடத்தி முடித்தோம். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றபடியால் அக்காவும் அவருடனேயே போய்விட்டார்கள். பிற்பாடு: எனக்கும் திருமணம் நடந்தது. எல்லாமே அடுக்கடுக்காய் இப்படி
29

Page 22
മ്7, 9ദ്രഗമമ്ന
நல்லவைகளே நடந்து கொண்டிருக்கையில் தான் போர் என்ற அரக்கன் இந்த நாட்டிலே கையை வைத்தான். எல்லோரையும் போல நானும் சமாதானப் புறாவைப் பார்ப்பதற்கு ஆண்டுகளைக் கடத்திக் கொண்டிருந்தேன்.
காலம் தான் கடந்தது. ஏமாற்றம் தான் மிஞ்சியது. போர்ச் சூழலில் எங்களால் வயலில் சென்று ஒழுங்காக விதைக்க முடியவில்லை. விதைத்தால் பயிரைப் பிள்ளைபோல் நாங்கள் பார்த்து வளர்க்க வேண்டும். இதற்கெல்லாம் சூழ்நிலை நன்றாக இருக்கவில்லை. இதனால் கையிலுள்ள பணமெல்லாம் சும்மா இருந்து சாப்பிடச் செலவழிந்தது. பொன் விளையும் பூமியான எங்கள் வயல் நிலம் எங்கள் கால்படாததால் தரிசு நிலமாகியது.
மேலை நாட்டுக்குப் போக என்னிடத்தில் பணம் இல்லாமல் போய்விட்டது. யாரிடமும் உதவி கோரத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதனால், பல பேர் கனடா என்று பறக்க நானோ மாலைதீவை நாடி பிழைக்க ஒடினேன்.
மாலைதீவில் ஒழுங்கான சம்பளத்தில் எனக்கு நினைத்தது போல வேலை கிடைக்கவில்லை. என்றாலும், எனக்குப் பணத்தை மிச்சம் பிடிப்பதே நோக்கமாயிருந்தது. என்னுடைய மூன்று பிள்ளைகள், மனைவி, அப்பா, அம்மா என்று முழுக் குடும்பத்துக்கும் ஆகின்ற செலவு எவ்வளவு என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது.
அந்த அழகிய மாலை தீவில் நல்ல தண்ணிருக்குத் தான் பஞ்சம். இதனால் விலைக்கு வாங்கியே ஒரு மிடறாயினும் தண்ணிர் குடிக்கலாம். இதற்காக காசைக்
30

മffക്രിബ്വാ Zffz/ഴ്ച)
கணக்குப் பார்த்து வீட்டுக்கும் அனுப்ப வேண்டுமே என்ற உணர்வில் நானும் தண்ணிரை ஒறுத்தேன். அது சில நாட்களில் விபரீதமாகி விட்டது. நாரிப் பிடிப்புடன் ஆரம்பித்த வருத்தம் மூத்திர எரிவு, கொதிப்பு என்பவற்றுடன் வளர்ந்து காய்ச்சல், தலைவலி வரை ஆளைப் போட்டு வாட்டியது. இதனால் வேலையை விட்டு விட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பி வருத்தத்துடன் வந்தேன்.
` ஆரம்பத்திலேயே இங்கு வந்த படியால் தப்பினிர்கள். நன்றாக தண்ணீர் குடியுங்கள்” என்று வைத்தியர் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அறிவுரை சொன்னார். எனக்கு வருத்தம் வந்ததால் வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்கும் நிம்மதியில்லை, நித்திரையுமில்லை.
ரிக்கெட் வெட்டிய அன்று மனைவி கைத்தாங்கலாக என்னைப் பிடித்து நடத்தி வந்து ஒட்டோவில் இருத்தி வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தாள். வாசலிலே தாய் தந்தை பிள்ளைகளின் முகத்தைப் பார்த்த கையோடு எனக்கு வீட்டுக் கிணற்றைத் தான் முதலிலே சென்று எட்டிப் பார்க்க ஆவலாக இருந்தது. மெதுவாக மனைவியையும் கிணற்றடிக்கு அழைத்துச் சென்று துலாக்கயிற்றை ஒரு கையால் பிடித்தேன்.
‘'வேண்டாம் நான் அள்ளித்தாறன்’
மனைவி சொன்னாள்.
‘பயப்படாதேயுமப்பா எனக்கு ஒன்றும் இல்லை என் பாட்டுக்கு கொஞ்சம் விட்டு விடும்.”
சொல்லி விட்டு வாளியை கயிற்றுடன் கிணற்றுக்குள் விட்டேன். நிரம்பத் தண்ணிர் வாளியில் கோலிக் கொண்டது.
31

Page 23
മ്7 ഋഗ്രാഗ്മജ്ഞി
வெளியே துலாக் கயிறை விட்டு வாளியை கைகளால் பிடித்தேன்.
‘நான் ஊற்றுகிறேன்’ மனைவி உதவி செய்தாள். கைகள் இரண்டாலும் ஏந்திய படி தண்ணிரிலே வாயை வைத்து மடக்கு மடக்கென்று குடித்தேன். எத்தனையோ நாள் இருந்த தாகம் தீர்ந்தது போல் இருந்தது. உடல் வேதனையிலும் அது மனதுக்கு திருப்தியாக இருந்தது.
‘எங்களுடைய கிணற்று நீர் நல்ல உருசை”
இப்படி அம்மா முன்பு சொல்வது ஏனோ எனக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது. தண்ணிருக்கு எப்படி உருசை வரும் என்று முன்பு நினைத்திருந்தேன். ஆனால், இன்று ஏதோ நல்ல ருசி இருப்பது போலத்தான் சுவை மொட்டுக்கள் உணர்த்தியது. வீட்டுக்குள்ளே எனக்காகக் கட்டில் போட்டியிருந்தார்கள். மெல்ல உடல் பாரத்தை கைகளுக்குக் கொடுத்து கட்டிலைப் பிடித்தபடி மெதுவாக உட்கார்ந்தேன்.
என் சின்ன மகள் சிட்டாகப் பறந்து வந்து ஆசையுடன் ஒட்டிக் கொண்டாள். பூப் போன்ற அவள் பிஞ்சுக் கைகளை எனது இரு கன்னங்களிலும் வைத்து கைகளால் அழுத்திப் பிடித்தேன். அந்தச் சுகத்தில் உலகமே எனக்கு இப்போது இனிப்பாக இருந்தது. அப்பா உங்களுக்கு சுகம் வந்திடுமப்பா. நன்றாக தண்ணீர் குடிக்க வேணுமென்று டாக்டர் சொன்னவராமப்பா. அம்மா சொல்லுகிறா. எங்களுடைய கிணற்றுத் தண்ணிர் நல்ல தண்ணிர் தானே அதைக் குடிச்சால் எல்லா வருத்தமும் அப்பாவுக்கு மாறிவிடும் என்னப்பா'
32

മറ്റ്രിക്രമീബാr zázá
பாசத்துடன் எனது குழந்தை அப்படிச் சொன்னாள். எனக்கும் கண்களில் கண்ணிர் கசிந்துவிட்டது. அப்படியே அவளை அணைத்தவாறே எங்கள் குல விளக்காகிய அவளின் கன்னத்தில் மாறி மாறி முத்தமாரி பொழிந்தேன். என்ன துன்பம் வந்தாலும் எனது வீடு, குடும்பம், இந்த நாடு என்ற உரிமையுள்ள இந்தச் சொந்தங்களை விட்டு எங்குமே இனிமேல் போவதில்லை என்றே அப்போது நான் முடிவு எடுத்தேன். அந்த முடிவை எடுத்த உடனேயே எனக்கு எல்லா வருத்தமும் குணமாகி விட்டதைப் போல உடலில் தெம்பு ஏற்பட்டது. மெதுவாக என் அன்பு மகளை நெஞ்சுக்கு மேலே வைத்து அணைத்தபடி அப்படியே கட்டிலில் சாய்ந்தேன். பல நாட்களின் பின் இன்று தான் எனக்கு நிம்மதி கிடைத்ததைப் போல் இருந்தது. அநேக நாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து களைப்புத் தீர கிணற்றுத் தண்ணிரை அள்ளி குடித்த ஆறுதலில் அப்படியே கட்டில் மேலே கண்ணயர்ந்தேன்.
ஆதவன் - 2001 OO
33

Page 24
ரீ2 ஆகும்/ார்த்தம்
எங்கள் தேசத்தின் சங்கதி
தோகரன்! கண்டபடி வெளியால போய்த் திரியாதை ராசா. இங்க இருக்குமட்டும் கவனமாய் நீ வீட்டிலேயே இரப்பு. அதுதான் நல்லம்’
எழுபத்தெட்டு வயதின் உடல் சுருக்கங்களைக் கொண்ட அவனது அம்மம்மா இப்படியாக சொன்னார். அவவுடைய சொல்லில் அர்த்தம் இருந்தது. அம்மாவும் முன்பு இப்படியாக சொல்லி விட்டிருந்தாலும் பாட்டியின் அறிவுரைதான் இப்போது அவனது காலை இழுத்து நிறுத்தி அவனை வெளியே எங்கும் போக விடாது தடுத்தன.
எனது ஊர். எனது நீர். எனது காற்று. என்று சுதந்திரமாக யாழ்ப்பாணத்தில் எங்கும் சஞ்சரித்துப் போக வந்த அவனுக்கு இதுபோல எவ்வளவு தடைகள்.
34
 

മറ്റ്രക്രിബദ്ധ മഠുz/ഴ്ച)
உறவினர்கள் நண்பர்கள் என்று எத்தனை முகங்களை அவன் போய்ப் பார்க்க எண்ணி இருந்தான்.
அதுவும், இங்கே முடியாது போல் இருக்கிறது. ஒழுங்காக தங்கள் வீடுகளிலும் இப்போது அவர்களும் இல்லையாம். இடப்பெயர்வுகள் அவர்களை சிதறிப் போக வைத்திருக்கிறது. அவனது தாய்மாமன் கூட இதை அனுபவிப்பவர் தான். அவரும் இதிலிருந்து தப்பி விடவில்லை.
கனடாவிலே இருந்து கொண்டு இங்காலேயுள்ள தேசத்து சங்கதிகளையெல்லாம் அறிந்து விட்டிருந்தும் இங்கே வந்து நேரே அவற்றை இவர்கள் வாயிலாக கேட்கத்தான் அவனுக்கு இப்போது திடும் - என்று பயமாய் இருக்கிறது.
'தம்பி! உனக்குத் தெரியுமோ இல்லையோ கேளன்’. என்று அம்மா ஒரு செய்தியைச் சொன்னார். இருபாலைப் பகுதியில் அந்தக் கொடுரம் நிகழ்ந்ததாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆறுபேரும் ஆட்டோவில் ஏறி ஒழுங்கை வழியாக பயணம் போகும்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அமுக்க வெடி வெடித்ததில் எல்லாருமே இறந்து விட்டார்களாம். பத்திரிகையில் போட்டிருந்த புகைப் படத்தையும் அம்மா காட்டிவிட அதை பார்க்கும்போது அவனது மனதில் கவலை அடையாய் அப்பிக் கொண்டது. ‘குருத்து மாதிரி பச்சைக் குழந்தையுமடா தம்பி’. படத்தில் குழந்தையை மட்டும் சுட்டிக் காட்டி கண்கலங்கி நிற்க அம்மா சொன்னா’.
இருந்த சந்தோஷமும் அவனுக்குப் போய்விட்டது. என்ன வாழ்க்கை இது?. எல்லா நாடுளிலும்தான் குண்டுகள் வெடிக்கின்றன. கட்டடங்கள் சாய்கின்றன.
35

Page 25
ناشنيزه:نهنرمoرI //همزوس)ږي :له نامه
மனிதர்கள் சாகிறார்கள் என்றாலும் இங்கு போலவா அங்கே இவையெல்லாம் ஊறிப்போனதாக தொடர்கின்றன. இந்த யுத்தம் எப்போதுதான் இந்த நாட்டை விட்டு தொலையப் போகிறதோ.
‘அம்மா! வந்ததுக்கு மாமாவை முதலில் அவரிண்ட வீட்ட போய் பார்த்திட்டு வாறனம்மா அங்கிருந்து நடையைக் கட்ட ஆயத்தமானான்.
’ஏன் அவசரப்படுகிறாய்? தம்பி! மாமாவை நான் போய்க் கூட்டிக் கொண்டு வாறன்’ அப்பா வெளிக்கிட்டார்.
‘’ நான் போய் நேரில் அவரை வீட்டபோய் பார்க்கிறனப்பா’
“இரு, சுதாகரா! அங்க எல்லாம் போக உனக்கு கஷ்டமாயிருக்கும் கனதுாரம் ஒழுங்கேக்கிளால நல்லாய் உள்ளுக்க போக வேணும். அப்பா சொல்லுறதைக் கேள்” அம்மா சொன்னார்.
ஒழுங்கை என்றதும் அவனுக்கும் யோசனை. மிதிவெடி, அமுக்கவெடி இப்படியெல்லாம் இன்னமும் இருக்கிறதாமே. சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு இருந்து விட்டான். இங்கே தமிழர்கள் மத்தியிலே ஒவ்வொரு குடும்பத்திலும் யுத்தத்தால் ஏற்பட்ட தாக்கம் இருக்கிறது. விதவைகள் இருக்கிறார்கள். அங்கவீனர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அநியாயமாக எத்தனை மனித உயிர் இழப்புகள். அவைகளை நினைத்தவாறு அவனிருக்க மாமாவை கூட்டிவர அப்பா வெளியே போய்விட்டார்.
‘அம்மா! மாமா எப்படி சுகமாக இருக்கிறாரே?” “அவன் தம்பி உன்னாலதான் ஏதோ அனுப்புற
36

z/4d/ിലാ/ zff://lി.)),
காசை வைச்சு கஞ்சி குடிக்கிறான். பிள்ளைகளும் படிக்குதுகள். கால் ஏலாத்தால பொறுப்பான வேலை ஒண்டையும் அவனுக்கு செய்ய ஏலாமல் கிடக்குது. தோட்டம் கொத்துறதுக்கெல்லாம் இப்ப கூலி வைச்சுத்தான் கொத்துறான். பாவம் என்ர தம்பி.”
மாமா மிதிவெடியில் காலை இழந்ததிற்குப் பிறகு அந்தக் குடும்பத்தையும் இவன்தான் கொண்டிழுக்க வேண்டியதாகி விட்டது. நல்ல உழைப்பாளி அவர். இன்று முடங்கிவிட்டார். பழைய தெம்பு அவரிடமில்லை.
‘அண்ணா! இங்கயெல்லாம் கனபேர் காணாமலும் போயிட்டினம். மனிதப் புதைகுழிகளின் கதை உனக்குத் தெரியுமோ இல்லையோ. தங்கை சுமதி நூற்றுக்கிழவி போல பல நியூசும் சொன்னாள். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியான கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்க மனப்பாதிப்பு அவனுக்கு அதிகரித்தது. இங்கே வந்து பொறிக்குள் ஒரு எலியைப் போல மாட்டிக் கொண்டு விட்டேனா என்று கூட சிந்தித்தான்.
கொஞ்ச நேரத்திற்குள் அப்பாவோடு மாமாவும் வீட்டுக்கு வந்தார். முன்பு எல்லாம் மாமா சாரத்தை சண்டிக்கட்டு கட்டியிருப்பார். இப்போது கீழே தொள தொளக்க அவிட்டு விட்டு கால்களின் கீழே வரமட்டும் மூடியதாக உடுத்தியிருந்தார். பொய்க்கால் பொருத்தி இடுப்பில் குதிரைப் பொம்மையுடன் ஆடும் நடனம் ஏனோ அவரைக் கண்டதும் இவனுக்கு ஞாபகம் வந்தது. இந்த நினைவு ஒரு கணம் அவனது மனதைப் பிழிந்து எடுத்தது.
மாமா அவனுக்குக் கிட்டவாக வந்ததும் ‘மருமோனே. மருமோனே’ என்று சொல்லி அவனது கண்களில் கண்ணிர் வருமட்டும் கட்டிப்பிடித்து இரு
37

Page 26
தீ2ஆகுமார்த்தம்
கன்னங்களிலும் முத்தமிட்டார்.
‘மருமோன் சுகமாயிருக்கிறியேடா’
“எனக்கென்ன மாமா! அங்கயெல்லாம் நாங்கள் நல்லாத்தான் இருக்கிறம். ஆனா. இங்க நீங்க இப்படி. சீ.படுகிறதை யோசிக்கயிலதான் எங்களைப்போல இருக்கிறவயளுக்கு கவலையாக்கிடக்கு”
'' இந் தாடா, சுதாகரா! உனக் குப் பிடிச்ச பாணிப்பினாட்டு கொண்டந்தனானடா. கணக்காய் இனிப்புப் புளிப்புறைப்பிருக்கு சாப்பிட்டுப் பாரடா’
மாமா பார்த்திருக்க ஒரு துண்டு எடுத்து சுதாகரன் வாயில் போட்டான். கண்ணை மூடிச்சுவைக்கும் அளவுக்கு
பனாட்டு நல்ல ருசியாக இருந்தது.
'எனக்கும் தா அண்ணா”
தங்கச்சிக்கும் கொடுத்தான். சுற்றம் சூழ்ந்து இருக்க சொந்த மண்ணில் இருக்கும் போது என்ன இனிமையானதொரு வாழ்க்கை. தானும் மாமாவும் விடிய விடிய தூங்காது கண்கள் எரிய கண்டு கழித்த கூத்துக்களையெல்லாம் அவன் கணக்குப் போட்டு எண்ணினான்.
'' சுதாகரா! கொழும்பில் எத்தினை நாட்கள் தங்கியிருந்தாய்? அங்க சித்தப்பா எல்லாரும் வீட்டில எப்பிடி சுகமாயிருக்கினமே?”
" ஓம், மாமா!. அவர்கள் நல்லாயிருக்கினம் ஆனாலும் கொழும்பு வாழ்க்கையில் இப்போ குறையிருக்கு. கறண்ட் இல்லாம எங்கட இந்த இடத்தில இருக்கலாம். இருட்டிலும் இங்க இருக்கலாம். ஆனால் என்னமோ
38

z/ിക്രമീമാ മഗ്ഗz//ഴ്ച))))))
அங்கின இட்டு முட்டாகத்தான் இருக்கு. கொழும்பு நகரம் எண்ட பேர்தான் அங்கயும் சுருக்கெண்டு தேள்கொட்டுற மாதிரி நுளம்பு கடிக்கிது. மனிதனுக்குரிய அத்தியாவசிய தேவைகள் இந்த நாட் டி ல எங்கேயும் நிறைவேற்றப்படேல்ல. ஆனா. தேவையில்லாததுக் கெல்லாம் இங்க காசைக் கொட்டி சில வழிக்கிறாங்கள்” அவன் எரிந்தான்.
’அதை விடு, சுதாகரா! ஏதோ அவங்களும் நாங்கள் பட்டதுகளை கொஞ்சம். அனுபவிச்சுப் பார்க்கட்டும் அப்பதான் அதிலயுள்ள கஷ்ட நஷ்டம் விளங்கும். இப்ப நான் சொல்லுறதைக் கேளன். இன்னும் இங்க ஒன்றுமே திருந்தேல்ல வெளியமட்டும் நீ போய்த்திரியாத, நாளைக்கு நான் உசிர் மீன் வாங்கிக்கொண்டு வாறன். நல்ல கூழ் காய்ச்சிக் குடிப்பம். மாமி பிள்ளைகளும் நாளைக்கு இங்க வருவினம். இங்க சாப்பிட உனக்கு என்னென்ன ஆசையோ என்னட்டச் சொல்லு, எப்பிடியாவது எல்லாமே கொண்டந்து தாறன்’
இப்படியாக மாமா பாசமும் அக்கறையுமாகக் கதைத்தார். அதனால் அன்று முழுக்க நேரம் போனதே அவனுக்குத் தெரியவில்லை. இரவு பத்து மணியாகியும் மாமா சொல்லிக் கொண்டிருக்கும் கதை கேட்டு முடியவில்லை. அம்மா தான் கடைசியாக வந்து அதற்குக் குறுக்குக் கட்டை போட்டார்.
‘வீட்டில எல்லாரும் தனிச்சுப் போய் இருப்பினம். கெதியாய் போடா தம்பி” அம்மா தனது சகோதரனுக்கு இதைச் சொல்ல வேண்டியதாக இருந்தது.
‘போறன் அக்கா!. காலையில வாறன், சுதாகர்!’ அவனைப் பார்த்து மாமா கூறினார்.
39

Page 27
ரீவி அருவனந்தம்
வழியனுப்பி விட்டு முற்றத்திலே குறுக்கும் நெடுக்குமாக சுதாகரன் உலாத்தினான். இருந்தாற்போல் நல்ல காற்று அடித்து வீட்டின் முன்னே இருந்த பனையும் வேம்பும் ஆவேச ஆட்டமாய் ஆடின. பனை ஓலைகள் விஸ். விஸ். என்று ஒசை எழுப்பின. அந்த நேரம் ஒரு மூச்சு நன்றாகவே காற்றை அவன் உள்ளுக்குள் இழுத்து வெளியே விட்டான். மனம் அப்போது கொஞ்சம் பாரம் குறைந்து விட்டதாய் இருந்தது.
அவனைப் பாதுகாப் பதிலேயே அவனது குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் அக்கறை காட்டுவதன் அர்த்தம் இப்போது அவனுக்கு விளங்கியது.
எல்லோரும் இன்று அவனை நம்பித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவன் வெளியே இருந்து பணம் அனுப்பாவிட்டால் இங்கே அடுப்பு எரியாது. படிப்பு நடவாது. இவர்கள் எல்லாம் வாழ அவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அது நியாயமானதொன்று. அவனும் அதை உணர்ந்து நடக்க வேணும். கவனமாக இருக்க வேண்டும். இதை அவனது அறிவு அறிவுறுத்தியது. உடனே முடிவு எடுத்தான்.
“சீக்கிரமாக நான் வெளியால போய் விடவேண்டும். இப்போதைக்கு இதுவே விவேகமான செயல்’.
சுடர்ஒளி - 2001
40

മffക്രമിക്കും മഴz'()))
வீட்டுத் தோட்டம்
ம்ே ணபதிப்பிள்ளை கொழும்பில் வந்திருந்து கொண்டு வீடு வளவு சொந்தமாக வாங்கும் நிலைமைக்கு உயர்வார் என்று உறவினர்கள் யாருமே கனவிலும் நினைக்கவில்லை.
இது விடயத்தில் இப்போது அவர்கள் எல்லோருமே ஆச்சரியத்தில் மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள். “குருச் சந்திரயோகம் அடித்துவிட்டது மனுஷனுக்கு” என்று ஜோஸ்யமும் சொல்கிறார்கள்.
‘ஒரு பெடியன் மாத்திரம் வெளிநாட்டில் போய் இருந்து கொண்டு இந்தளவுக்குப் பணம் அனுப்ப அவன் என்ன வேலை அங்க செய்கிறான்?’ என்றுதான் கணபதியரின் உறவினர்கள் சிலர் இப்போது ஆளுக்காள் கிசுகிசுக்கிறார்கள். வியாபாரிக்கு துறைமுகத்தைக் காட்டக்கூடாது என்ற தந்திரத்தில் எவராவது இதைப்பற்றிக்
41

Page 28
ב־4
On · M2. Z/. c.9%A6J///ØðMAZ2ZZo
கேட்டால் அப்படியே இந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து கதையை வெட்டி விடுகிறார் கணபதி.
கொழும்பு நகருக்குப் புறம்பே அண்மித்துள்ள இடங்களையும் எங்களுடைய ஆட்கள் பொதுவாக கொழும்பு என்று தான் சொல்லிக் கொள்வார்கள். கணபதியும் வீடு வாங்கிய இடம் கொழும்பை அண்டிய பகுதியில்தான் இருந்தது. பல இடங்களையும் சென்று பார்த்துக் கழித்துவிட்டு கடைசியாக இந்த இடம்தான் அவருடைய மனதுக்குப் பிடித்துப்போனது.
பின்பு இருபது இலட்சம் ரூபா நோட்டுக்களைச் சுளையாக எண்ணிக்கொடுத்து முறையாக அவர் காணி உறுதியையும் எழுதி வாங்கிக் கொண்டார்.
இனிமேல், அவருக்கு வீட்டு வாடகை என்ற சோலி இல்லை! அட்வான்ஸ் என்ற தலையிடி இல்லை! வீட்டு முதலாளி என்று யாரும் இவருக்கு இனிச்சட்டம் போட இயலாது! வீடு மாறிப் போகவேண்டிய தேவை இல்லை! இந்த நன்மை எல்லாம் வீடு சொந்தமாக இருப்பவருக்கே உண்டு. கணபதி குடும்பத்தினருக்கும் இந்த நன்மைகள் இனிமேல் இருக்கும். தங்கள் வீட்டுப் பழைய கதைகளை எல்லாம் பேசி ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு கொழும்பில் இப்போது இருப்பவர்கள் அநேகருக்குப் பிடிப்பதில்லை. கணபதியைத் தவிர்த்து அவர் மனைவி பரிமளமும் அவர்களது பெண் பிள்ளைகளான சுபா, ஷாமினி இருவருக்கும் முன்பு அங்கு ஊரிலே இருந்தது போல் குணங்கள், நடத்தைகள் இங்கு இல்லை. அரைப்பாகம் இங்கு வந்தபின் அவர்கள் மாறியுள்ளார்கள்.
‘மாறத்தான் வேண்டும் அப்படியான நிலை தானே
42

Z/ക്രിമാ മഗ്ഗZ:/ഴ്ച)
இங்கே” என்கிறார்கள்.
பரம்பரைக் குணம் இருக்கும். அதுபோல பரம்பரை வருத்தமும் இருக்கும் என்று நன்றாகப் படித்தவர்கள் இன்றும் சொல்வார்கள்.
கணபதி அங்கே தோட்டம் கொத்தியவர். சிறுவயதில் அப்பாவோடு சேர்ந்து துலா மிதித்தவர். உடலை இப்படி வேலைகளிளெல்லாம் கசக்கிப் பிழிந்த மனிதர் சும்மா இருந்து தின்னும் போது அதனால் அவருக்கு உலகமே வெறுத்துவிடும் நிலைக்குப் போய்விடுமே.
இதற்காகத்தான் வீடு வளவு வாங்கும் போது அந்த அலைச்சல் அலைந்தார். வீட்டோடு சேர்ந்து ஒரு பரப்புக் காணியாவது மரம், செடி, கொடி உடையதாக இருக்க வேண்டும். கிணறும் அவசியம் இருக்க வேண்டும். இவையே அவரின் தேவை.
எங்கு போனாலும் அதிர் ஷடம் அவரைத் தேடிவருகிறது. வாங்கிய வீடு வளவு அந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்ததாகவே இருந்தது.
கிணற்றுக்கு அருகே காய்க்கும் பருவத்தில் வளர்ந்து நிற்கும் ஒட்டுமாமரம், வீட்டுக்கு முன்னே மூலையில் ஒரு பெரிய பலா, நடுப்பகுதியிலே ஜம்பு மரம், அப்பிள் கொய்யா, றம்புட்டான், கராம்பு மரம், மிளகுக்கொடி, வெற்றிலைக்கொடி, றம்பை இலைச்செடி, கருவேப்பிலை மரம், அது இது என்று இந்தச் சிறிய இடத்தில் எல்லாமே பச்சைப் பசேல் என்று கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரிந்தன. இப்படி வரும்படியும் உள்ள காணி அவருக்கு வாய்த்தது அதிர்ஷ்டம்தான்.
43

Page 29
മ്? 9മ്രാഗർമ്മി
நிலத்திலுள்ள ஈரம் காய்ந்து போகாத அளவுக்குக் கொழும்பில் இடையிடையே மழைபெய்து கொண்டிருக்கும். ஆனால் மழை பெய்யாத நாட்களிலே கணபதிக்குத்தான் சந்தோஷம். மரங்களுக்குத் தண்ணிர் ஊற்றும் வேலை இருக்கிறது என்பதில் அவருக்கு பரமதிருப்தி.
மனைவி, பிள்ளைகளும் சும்மா இருக்காது வேலை செய்ய வேண்டும் என்பதே அவரின் கொள்கை. சும்மா இருந்தால் உடம்பு கெட்டுப்போய் நோய்வந்து விடும் என்று அவர்களிலும் அக்கறை.
‘பரிமளம்! வாருமன் என்னோடு சேர்ந்து கொஞ்சம் இந்தக் கன்று கால்களுக்குத் தண்ணிர் ஊற்றுமன் பார்ப்போம்” என்று மனைவியைக் கூப்பிட்டார்.
‘சும்மா போங்கோ கொழும்பில வந்திருந்து கொண்டும் தோட்டம் வைக்கப் பார்க்கிறியள்? எனக்கும் கனக்கவேலை கிடக்கு. இப்படி சொல்லிவிட்டு குசினிக்குள் போய் விட்டாள் பரிமளம். ' சுபா, ஷாமினி அங்க அறையைப் பூட் டிக் கொணி டு என்ன செய்து கொண்டிருக்கிறியள். நீங்கள் எண்டாலும் வந்து கொஞ்சம் இந்தப் பூச்செடிகளுக்கு தண்ணிர் ஊத்துங்களன்” என்று பிள்ளைகளைக் கூப்பிட்டுப் பார்த்தார்.
‘அப்பா! ஏன் கத்துறியள் கொழும்பில நீங்கள்தான் இப்பிடி சத்தம் போடுற ஆள். எங்களுக்கு கொம்பியூட்டர் சோதனை வருகிது. எங்களைப் படிக்க விடுங்கோ’ என்று மூத்த மகள் வீட்டு வாசலடியில் வந்து நின்று சத்தமில்லாமல் மெதுவாக சொல்லிவிட்டுப் போனாள்.
எவருடைய உதவியையும் கணபதி எதிர்ப்பார்க்கவில்லை. என்றாலும் தனது அறிவுரையை அவர்களுக்குக் கொடுத்தார்.
44

Zffക്രമീബാff Zഗ്ഗീ/ഴ്ചാക്ത
“காலைக் கையை ஆட்டாட்டி உங்களுக்கெல்லாம் வருத்தம் வந்து துலைக்கப்போகுது. கிடவுங்கோ நான் என்ரை அலுவலைப் பார்க்கிறன்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய கருமத்தில் கண்ணாகிவிட்டார்.
பதினைந்து பரப்புக் காணியிலே தோட்டம் செய்து அந்த இடம் முழுக்க வரம்பு வழியாக நடந்து திரிந்தவருக்கு இந்த இடம் ஒரு பரப்புக் காணிக்குள்ளே ஒரே இடத்தில் சுற்றுவது போலத்தான் அலுப்புத் தட்டியது. என்றாலும் வேலையைப் பெருப்பித்து பெருமரக் கன்றுகளுக்கெல்லாம் பெருவாரியாகத் தண்ணிரை அள்ளி ஊற்றினார். உடலுக்குக் களைப்பைக் கொடுக்கையில் இரவு நல்ல நித்திரை வரும் என்பதாக அவர் நினைக்கும் போது நல்ல சந்தோஷமாகவும் இருந்தது.
தைமாசியில் கொழும்பிலும் நல்ல பனி பெய்யும். சிறிய மரமெல்லாம் பனிக்குள் நனைந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர்களது சின்ன மகள் ஷாமினி காலையிலே டியூசனுக்கென்று வீட்டைவிட்டு வெளிக்கிட்டுப் போவாள். அந்த நேரம் வீட்டுவாசலை விட்டு வெளியே கால் வைத்தால் நெருக்கமாக வளர்ந்திருக்கும் அந்த மரங்களிலிருந்தெல்லாம் சொட்டச் சொட்ட வடியும் பனித் துளிகள் காலைக் குளிரோடு அவளை குளிப்பாட்டிவிடும்.
“சீச்.சீ. மண்ணாங்கட்டி மரங்கள் பனித்துளி படாமல் இதுக்குள்ளால எப்படி நான் வெளியால போறது” என்று உடம்பை ஆயிரம் தடவை வளைத்து நெளித்துக்கொண்டு வெளியேறுவாள்.
மரங்கள் வளர்ந்து வந்து குகைபோல மூடியதால்
45

Page 30
IN SY گے ۔ 罐 AZ. Z/, c%zo////ožAZ2,Z)
அயல் வீடுகளில் வசிப்பவர்களினாலும் கணபதிக்கு தொல்லைகள் வர ஆரம்பித்தன. அநேக நாட்கள் ‘மதுறு மதுறு” என்று பக்கத்து வீட்டார்கள் கணபதியை நோக்கி ஏதோ சொன்னார்கள்.
அவை ஒன்றும் அதிகம் விளங்காவிடினும் மரம் செடி கொடியால் நுளம்பு வருகிறது என்று அவர்கள் சொன்ன முறைப்பாடு மட்டும் இவருக்கு நன்றாக விளங்கியது. மனைவிக்கு இதைச் சொன்னால் அவளும் இந்தக் கதையைத் தூக்கிப் பிடிப்பாள் என்று அவர் அப்படியே அதை அமுக்கிவிட்டு சும்மா இருந்துவிட்டார்.
அன்று காலையில் கிணற்றடியில் நின்று பல் தேய்த்துக் கொண்டபடி மரங்களையெல்லாம் ஒரு நோட்டம் விட்டார் கணபதி. அவர் பார்வை மரத்தில் விழுந்ததுமே மகிழ்ச்சி தாங்காமல் எகிறிக் குதித்தார்.
மதிலை ஒட்டி மேலே வளர்ந்து கிடந்த அந்தக் கிளைகளின் நுனிகளில் மஞ்சள் நிறம் கொண்ட மெல்லிய காம்புகளில் பூமொட்டுக்கள் புதிதாகக் காட்சிகொடுத்தன.
‘ஆய்ங். மாமரம் பூக்கப்போகுது” என்று தன்னை
மீறிக்கூவியபடி அவர் வாயைப் பிளந்தார்.
மனைவி மக்களுக்கெல்லாம் இந்தச் செய்தியை உற்சாகமாகச் சொன்னார். ஆனால் அவர்கள் ஒருவரும் இதைப்பற்றி கவனம் எடுக்கவில்லை.
என்றாலும் மனைவி பரிமளம் ஒருமுறை சமையல் அறையிலிருந்து வெளியே வந்து தொலைவில் நின்றவாறே பார்த்தாள்.
”மதிலுக்குப் பக்கமாகத்தான் மாபூத்திருக்கு. இந்த
46

z/ഗ്ഗക്രമീമാ// zഗ്ഗ//ഴ്ചാ
மரம் இனியும் வளர வளர அவங்களின்ரை வளவுக்க போய் குப்பை கொட்டப்போகுது” என்று தீர்க்கதரிசன விளக்கம் சொன்னாள்.
* உனக்கெப்பவுமே நல்லவார்த்தை வாயில வராது போ போ” என்ற துரத்திவிட்டு அவள் போனதும் கணபதியும் பரிமளம் சொல்லிவிட்டுப் போனதை கொஞ்ச நேரம் ஆராய்ந்து பார்த்தபடியே மூளையைக் குழப்பிக் கொண்டார்.
சிலநாளில் அந்த மரத்தின் ஒரு பகுதியில் மட்டுமே பொன் நிறத்தில் பூக்கள் கொத்தாகப் பூத்துச் சரிந்தன. அடுத்த வீட்டுக் காணியைப் பார்த்தே தலையை நீட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூக்கொத்திலும் எண்ண முடியாத அளவிலே மிளகளவு காய்கள். நாளடைவில் அவை பருத்துவர ஒருநாள் கணபதி எண்ணிப்பார்க்க ஒரு கிளையில் முப்பதுக்கு மேல் இருந்தன.
மாமரம் என்ன இனம் என்று அவருக்குத் தெரியவில்லை. மாங்காய் பெருக்கவும் கிளைகள் பாரம் தாங்காமல் ஒவ்வொரு கெட்டும் அடுத்த வீட்டு மதிலுக்கு மேலாகச் சென்றன.
உடனே மரக் கிளைகளைத் தனது காணிக்குள் வளைத்துக் கட்டினால் அடுத்த வீட்டார்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் அப்போதே அவர் அந்தத் திட்டத்தை கைவிட்டார். போகட்டும் வருவதில் இருவரும் பாதி பாதி எடுக்கலாம் என்று மனதை ஆற்றினார்.
ஆனால், அவர் எண்ணியது போல் நடக்கவில்லை. அடுத்த வீட்டார் காய்ப்பருவத்திலேயே பிய்த்துப் பிடுங்கிவிட
47

Page 31
ரீவி அருவார்த்தம்
இவருக்குக் கால் பாகமே மிச்சமாகக் கிடைத்தது.
காய்த்து முடிய இனியும் அந்தக் கிளைகளை விட்டு வைப்பதில்லை என்று ரோஷத்தோடு அந்தப்பக்கம் போய் விட்ட எல்லாக் கிளைகளையும் வெட்டினார். வெட்டிய கிளைகள் இனிமேல் பூக்காது என்பது அவர் நம்பிக்கை.
ஆனால், வெட்டிய அதே பக்கங்களில் இருந்து மீண்டும் பூப்பூக்க கணபதிக்கு அது அதிசயமாய்ப் போய்விட்டது. மரத்துக்கும் நல்ல குணம் இருப்பது போல் அப்போதைக்கு பெரிய தத்துவம் ஒன்று ப்லப்பட்டது. தீமை செய்தாலும் அதைப் பொறுத்து நன்மை செய்ய விளைகிறதே இந்த மரம்!
படிப்பினையை உணர்ந்து கொண்டவர் போல் மரத்தருகில் அவர் மலைத்து நின்றார்.
சுடர்ஒளி - 2001
48

zár Zgzáo)
ஓய்வூதியம்
னித யாகப்பர் கோயிலிலே காலைப் பூசையைக் கண்டுவிட்டு முடிவாக கிறிஸ்தவ சமாதானத்தை அனைவரோடும் பகிர்ந்து கொண்டபடி கோயிலில் இருந்து வந்தாள் கத்தரின்.
மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் வரும் வியாழக்கிழமை நாட்களிலே, இங்கு வந்து பூசை முடிந்ததன் பிறகு வியாகுல அன்னையின் திருச் சொரூபத்துக்கு முன்பாகச் சென்று மன்றாடுவது அவளின் வழக்கம். கோயில் வளவுக்குள்ளே பிறிதாகக் கட்டப்பட்டிருக்கும் கல்வாரி அமைப்பில் திருக்குமாரனது திருவுடலை திருக்கரங்களில் ஏந்தி அதைக் கட்டி அணைத்துக் கொண்டு மிகுந்த வியாகுலத்துடன் காட்சியளிக்கும் அன்னைக்கு முன்பாக மண்டியிட்டு ஏழு மன்றாட்டுச் செபங்களையும் சொல்லி விட்டுத்தான் இந்த நாட்களிலே அவள் வீட்டுக்குத் திரும்பிப் போவாள்.
49

Page 32
ர்'2 அருவர்தம்
நடுச்சாமத்தில் பெய்த மழையினாலே அன்று காலையிலே பூசைக் குப் போக வென்று அவள் எழும்பும் போது நன்றாக கூதல் காற்று வீசிக் கொண்டிருந்தது. போர்வைக்குள் சுருண்டு கிடந்த போது இருந்த சோம்பல் குணம் திருந்தாதி மணிஓசை கேட்டதும் கலைந்து போனதால்தான் மளமளவென வெளிக்கிட்டு அவள் கோயிலுக்கு வந்திருந்தாள்.
வீட்டை விட்டு வெளிக்கிளம்பும்போது பிள்ளைகள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை அவளது மூன்று பெண் பிள்ளைகளும் உடம்பு முழுக்க இழுத்துப் போர்த்திக் கொண்டு குளிருக்குச் சொகுசாகப் படுத்துக் கிடந்தார்கள். ஞாயிற்றுக்கிமைகளிலும் கடன் திருநாட்களிலும்தான் பூசைக்கென்று அவர்கள் செல்வதால் நாள் பூசைக்கு செல்லும் போது பிள்ளைகளை எழுப்பிவிடுவதற்கு கத்தரின் தெண்டிப்பதில்லை. அங்கிளுக்கும் வயது போய்விட்டது. அவரும் அடுத்த அறையில்தான் நித்திரையில் இருப்பார். ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் மட்டுமே அவரும் கோயிலுக்குச் செல்வதற்கு செளகரியம் என்பதாகச் சொல்லிக் கொள்வார். V−
அன்னையின் இடம் தேடி வந்து விட்டால் மனதிலேயுள்ள துன்பமெல்லாம் எங்கேயோ மறைந்து விடுவதைப்போலத்தான் கத்தரின் உணருகிறாள். தேவமாதாவின் வாழ்வு போல் தன்னுடைய வாழ்வும் வியாகுலம் நிறைந்து இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாக் கவலைகளையும் தாயின் பாதங்களிலே ஒப்புக் கொடுத்து மேலும் வாழ்க்கையில் வரவிருக்கும் துன்பச் சுமைகளையும் குமாரனின் சிலுவையோடு சேர்ந்து சுமக்கவும் வேண்டிய மனத்திடத்தை அவள் மாதாவிடம்
50

z/lിക്രമിക്ഷാ മff://ഴ്ചാക്ത
மன்றாடிக் கேட்கிறாள்.
வருகின்ற துன்பங்களையெல்லாம் மனதிலே தாங்கிக் கொள்வதற்கு அன்னையிடமிருந்தே சக்தியைப் பெற வேண்டும். இதயத்தில் ஒரு அம்பு தைத்ததைப் போல் நடந்த ஒரு வேதனை மிக்க சம்பவத்தையே இன்னமும் மறக்க முடியாது துடிக்கிறேனே இந்த ஏழு அம்புகளும் இதயத்தைக் கிழித்ததால் அடைந்த துன்பங்களை யெல்லாம் அன்னை எப்படித் தாங்கிக் கொண்டாள்?”
கத்தரினுடைய சிந்தனையினிலே அன்னையினுடைய வாழ்க்கை வரலாறும் இடையிடையே இப்படியாக ஞாபகத்துக்கு வந்து போவதுண்டு. அதற்குள்ளே தனது வாழ்க்கையையும் பொருத்திக் கொண்டு ‘அம்மா தாயே’ என்று சொல்லி ஆறுதலடைவது சிறந்த ஒரு வழியாகவே அவளுக்கும் தென்பட்டது. இதன் நிமித்தமாக அவள் அதிலே இருந்து மன்றாடிக் கொண்டிருக்கும் போது இன்னமும் வேறு பலர் அந்த இடத்திலே வந்து அன்னையின் திருச் சொரூபத்துக்கு முன்னால் முழந்தாள் படியிட்டு மன்றாடினார்கள். ஒரு சிலர் காணிக்கை செலுத்தி விட்டுப் போனார்கள். இன்னும் பலர் மெழுகுதிரிகளைக் கொழுத்தி வைத்தும் நறுமணமுள்ள ஊதுபத்திகளை பற்றவைத்து விட்டும் அன்னையின் பாதத்தைத் தொட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.
செபம் சொல்லி முடிந்த பிறகு கத்தரினும் எழுந்தாள். வியாகுல அன்னையின் பாதத்தை பக்தியுடன் முத்தி செய்து விட்டு, கொண்டு வந்த சில்லறைக் காசுகளை உண்டியலில் போட்டு விட்டு கோயில் பெருவாசலைக் கடந்து வீதிக்கு வந்து இப்போது வீட்டுக்குப் போவதற்கு நடையைக் கட்டினாள்.
51

Page 33
ரீசி அருவந்தம்
இரவு பெயப் த மழையினாலேயே அந்த வீதியோரங்களில் நின்ற வாகை மரத்துப் பஞ்சுப்பூக்கள் தார் வீதியிலே நிறைய விழுந்து கிடந்து நிலத்துடன் ஒட்டிப் போயிருந்தன. இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி அதே இன மரங்களிலிருந்தும் காய்கள் கீழே சொரிந்து கிடந்து அவ்விடமாக செல்லும் போது அவளது கால் செருப்புக்களில் மிதிபட்டு நசிந்தன.
‘’ இரவு வீசிய சிறிய காற்றுக்கும் நிலத்தை நனைத்துப் போன மழைக்கும் இத்தனை சேதமா? மரத்திலே பூவுமில்லாமல் காயுமில்லாமல் செய்து விடுவதற்கு மெல்ல வீசிய காற்றுக்கே இவ்வளவு பலமிருக் கிறதே!” என்று அவள் மனம் நினைத்துப் பார்த்தது.
‘இயற்கையின் சீற்றத்தால் வரும் பாதிப்பபுக்களை விட இந்த நாட்டில் அநேக மனிதர்களது உயிரைக்காவு கொண்டதும் உடமைகள் சேதமாகியதும் போரினால் தான் நடந்தது என்பதை யாராலுமே மறுத்து விட முடியாது” இதையும் மறுகணம் அவள் நினைப்பதற்கு இந்தப் போரினாலே கணவனை அவள் இழந்ததும் ஒரு காரணம்
தான.
இந்த யாகப்பர் கோயிலை குண்டு வீச்சு விமானம் குண்டு போட்டுத் தாக்கி சேதமாக்கிய போதுதானே அவளுடைய கணவனும் அன்று கிளாலிப் பகுதியில் ஏவப்பட்டு விழுந்து வெடித்த ஷெல்லில் தாக்குண்டு மரணமானான். இங்கே இந்தக் கோயில் கட்டடம் மட்டுமா சேதமாகியது. அதிலே புகலிடம் கோரியிருந்த அகதிகள் பலருமல்லவா அதே இடத்தில் துடிதுடித்துப் பரிதாபமாகச் செத்தார்கள்.
52

മറ്റ്രക്രമിക്കാr Zff'(x)))
அந்தக் கொடுர சம்பவம் நிகழ்ந்ததற்குப் பிறகு இந்த இளவயதில் அவளும் ஒரு விதவை. எவர்கள் மூலம் இவள் விதவையாக்கப்பட்டாள்? கொடிய இந்தப் போரை ஆரம்பித்தவர்களால்தானே அவளது LDIT (B&56Öu J(Lpub பறிபோய் விதவைக் கோலமும் வந்தது.
கத்தரினுடைய கணவர் எவ்வளவு இளமைத் துடிப்பான மனிதர். சாகின்ற வயசா அவருக்கு. அன்று இரவு வவுனியாவிற்கு வியாபாரத்துக்காக வென்று வெளிக்கிட்டு கிளாலிப் பக்கம் போக ஆயத்தமாக இருக்கையில் என்னவெல்லமாக அவர் வேடிக்கையாகவும் அன்பாகவும் பிள்ளைகளோடு கதைத்தார்.
‘மூன்றும் பெண் பிள்ளைகளாக வைத்துக் கொண்டு கொஞ்சமாவது பணத்தை மிச்சம் பிடிக்கப் பார்க்காமல் வருகிறதையெல்லாம் தண்ணிர் போல செலவழித்து விடுகிறீர்களே”? என்று இவள் சொன்னதுக்கு அவர் என்ன பதில் சொன்னார்.
‘’ இங்கே பாரும் கத்தரின். என்னுடைய பிள்ளைகளுக்கு என்ன குறை இருக்கு. மூன்று பிள்ளைகளுமே உம்மைப் போல கிளி மாதிரி வடிவாக இருக்கினம். காலம் வரேக்க பாருமன் எல்லாரும் வந்து கலியாணம் முடிச்சுத் தரச் சொல்லிக் கேட்டு கியூவிலை நிற்பினம். அவங்களெல்லாம் சீதனமில்லாமலேயே ஒவ்வொருவளாக முடிச்சுக் கொண்டு போய் விடுவாங்கள்’
இப்படிச் சொன்னது கத்தரினுக்கு நியாயமாகப் படவில்லை என்பதால் பிறகு அவள் சொன்னாள்.
‘’ அப்படிச் சொல் லாதேயுங் கோ. மூன்று பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளாகப் பெற்று வைத்துக்
53

Page 34
தீ2ஆகுணாத்தம்
கொண்டு பொறுப்பில்லாத மாதிரி நடக்கிறது எங்களுக்கு நன்றாக இல்லை. ஒருவனுடைய கையிலை பிள்ளையைப் பிடிச்சுக் கொடுககிறப்போ பணத்தைக் கொடுக்காது போனாலும் கை கழுத்திலையெண்டாலும் நிறைய நகை செய்து போட்டு விட வேண்டும்தானே?”
பயணப் படுகிற நேரத்திலை இப்படியாக நான் சொல்லி இருக்கக் கூடாது என்று தான் பின்பு கத்தரினும் தன்னுடைய பிழையை உணர்ந்தாள். அவருடைய முகம் இப்படிச் சொல்லக் கேட்டதும் வாடிப் போய் விட்டது. என்றாலும் இப்படியே நாளும் நேரமும் போய்க் கொண்டிருந்தால்? பெண் வளர்த்தி முருங்கை மரம் போல துரித வளர்த்தியென்பார்கள். இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் நாளை குமரிகளாகி விடுவார்கள். மூன்று குமர்களையும் வைத்துக் கொண்டு பிறகு எவ்வளவு பாடாகி விடும். இதை நினைத்துக் கொண்டு தான் அவள் அப்படியாக சொன்ன போது.
‘கவலைப்படாதேயும், கத்தரின் எனக்கு மட்டும் கருசனை இல்லையென்று நினைச்சீரே? நான் ஏதோ சும்மா வேடிக்கையாக இதை சொன்னேன். இப்போது இருக்கிற சூழ்நிலையிலே நானும் என்னதான் செய்கிறது? மூத்த மகளுக்கு இப்போது பன்னிரண்டு வயசுதானே. இன்னும் நாலைஞ்சு வருசத்துக்குள்ள எப்படியாவது பெரிய வியாபாரமா ஒன்றைத் தொடங்கி வருமானத்திலே கொஞ்சம் மிச்சம் பிடிச்சுப் பார்ப்போம். மற்றைய இரண்டு பிள்ளைகளும் ஏழு எட்டு வயசுப் பிள்ளைகள்தானே. ஆறுதலாக அதற்குள்ளால எல்லாமே சரியாகி வரும்”. என்பதாக என் மனம் ஆறுதல்பட அப்படியாக அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது இளைய பிள்ளைகள்
54

മശ്നീബാർ മg//ഴ്ചo)
இரண்டு பேருமே பள்ளிக் கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தகையோடு அவருக்குப் பக்கத்தில் வந்து அப்பாவின் செல்லத்தில் அங்கு துள்ளி விளையாட ஆரம்பித்து விட்டார்கள். `அப்பா எங்களுக்கு என்ன வாங்கிக் கொண்டு வருவீர்கள்?”
’கொண்டு வருகிறதெல்லாம் உங்களுக்குத் தான்” பிள்ளைகளை இருபக்கமும் கைகளால் அணைத்துக் கொண்டு வேடிக்கையாக அவர் சொன்னார்.
‘அப்பா! நான் மியூசிக் படிக்கப் போறன்’
கடைசி மகள் இப்படிக் கேட்டாள். “மியூசிக் வேணாம் மகள். அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து தான் ஒன்றைப் படிக்க வேணும். கொஞ்சம் பொறுங்கோ. அம்மாவிட்டேயும் இதைப் பற்றிக் கேட்டுப் பார்ப்போம். ஏனப்பா? இப்படிச் செய்தால் என்ன? அக்காவும் தங்கச்சியும் ஒரே மாதிரித்தானே வடிவும் வளர்த்தியுமாய் இருக்கினம். இரண்டு பேர்களையும் ஒன்றாகச் சேர்த்து சோடிப் பரத நாட்டியம் பழக்கி ஆட விட்டால் என்ன”?
இதைக் கேட்டு அவளும் சிரிப்பை அடக்க முடியாது ‘களுக்” என்று சிரித்து விட்டாள். பிள்ளகைளும் அது போல சிரித்துக் கொண்டு அப்பாவைக் கட்டியணைத்துக் கொண்டார்கள்.
அப்போதைக்கு அது தான் அவர்கள் குடும்பத்தில் கடைசியாக நடந்த மகிழ்ச்சியாக சம்பவம். அதற்குப் பிற்பாடு நடந்து முடிந்தவைகளை நினைத்துப் பார்ப்பதற்கே அவளுக்கு விருப்பம் இல்லாதிருந்தது. எனவே நடையைத் துரிதப்படுத்தி கல்லூரிப் பகுதியைக் கடந்து வந்து பெரிய கோயிலுக்கு அருகேயுள்ள திட்டிக் குளத்துப் பக்கமாக
55

Page 35
தீவி ஆகுமார்த்தம்
வரும் சந்தியை நெருங்கினாள். அந்த இடத்தில் இரண்டு கிழமைக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஏனோ அதிலே மீண்டும் அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது.
‘போருக்குப் பின்பு ஒழுக்கமுமல்லவா இந்த நாட்டில் சீரழிந்து கொண்டு வருகிறது. இந்த இடத்திலே அன்று இருவர் நின்று கொண்டு அவர்கள் வயதென்ன? அவர்கள் கதைக்கின்ற கதையென்ன?’ எப்படியோ அந்த இரு இளைஞர்களினதும் இரகசிய உரையாடல் அவள் காதிலும் மெல்ல விழுந்து விட்டதால் நடந்து கொண்டிருந்தவள் அதற்குப் பிறகு மேலும் ஒரு அடி எடுத்து வைக்க மனம் ஏவாமல் போக திடுமென திரும்பி அவர்களிருவருக்கு முன்பாக வந்து நின்று விட்டாள்.
‘என்ன தம்பி? சொன்னனிங்கள்? அக்காவுக்கு பின்பக்கம் இடுப்புக்குக் கீழே அசைகிற அழகைப்பார். அந்த மாதிரி இருக்கு என்றா சொல்லுறீங்க? இந்தச் சின்ன வயதில் ஏன் இப்படிக் கெட்டுப் போறிங்க? நீங்கள் எனக்கு தம்பிகள் மாதிரி, நான் உங்களுக்கு அக்கா மாதரி. இப்படியெல்லாம் கதைக்கிறதுக்கு உங்களுக்கு வெட்கமில்லையா?”
அவர்கள் எதிர்பார்த்திராத நிலையில் அவள் அதிலே போய் நின்று இவ்வாறு சொன்னதும் இருவரும் அப்படியே வெலவெலத்துப் போய் விட்டார்கள். ‘அக்கா எங்களை மன்னிச்சிடுங்கோ’ என்று யேறைந்தது போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்கள். அடுத்த நிமிடம் அதிலே நிற்காத அளவுக்கு ஓணான் போல தலையை முன்னாலே நீட்டிக் கொண்டு ஓடி மறைந்து விட்டார்கள்.
விதவையாக இருந்து விட்டால் பெண்ணுக்கு
56

മറ്റ്രക്രമീബദ്ധം Zക്രzáo)
வாழ்க்கையிலே எத்தனை விதமான வில்லங்கங்கள். எத்தனை சங்கடங்களிலிருந்து அவள் தன்னை தப்புவித்துக் கொள்ள போராட வேண்டியதாக இருக்கிறது. இதயத்தில் உள்ள குரூரமான குணங்களை பசுத்தோலால் போர்த்திக் கிொண்டு கருணை முகம் காட்டி வேடம் போடும் சூத்திரதாரிகளான மனிதர்களை எப்படித் தான் சமூகத்தில் இனம் காண்பது?
இந்தத் தபசு காலத்தில் இப்படியெல்லாம் சிந்திப்பது பாவங்களை மென்மேலும் கட்டிச் சேர்ப்பது போல ஆகிவிடும் என்பதாகவே கத்தரினுக்குத் தென்பட்டது. பெரிய கோயிலை தாண்டும் போது கோயில் முகப்பிலுள்ள சிலுவையைப் பார்த்து ஒரு திரித்துவதோத்திரம் சொன்னாள். w
கோயிலுக்குப் போய் கும்பிட்டு விட்டு வந்தால் அமைதி கிடைக்கிறது. ஆனால் அங்கு கூட ஒரு சிலர் நான் நீ என்று போட்டி போட்டு வழமையாக நடக்கிற சுற்றுப் பிரகார ஆராதனைகளையும் நடத்த விடாத அளவுக்கு செய்து விடுகிறார்களே? சென்ற வருடம் பெரிய வெள்ளிக் கிழமையன்று பெரிய மாதா கோயிலில் நடந்த ஒரு சம்பவம் இப்போது அவள் நினைவுக்கு வந்தது.
பெரிய வெள்ளியன்று சிலுவை முத்தி செய்யும் முக்கிய வழிபாடு முடிவடைந்து கடைசியாக ஆசந்தி தூக்கும் போது அதற்குள்ளும் சாதிப் பிரச்சினை வந்து விட்டதே. ‘நீங்கள் தூக்கப்படாது” என்று சொலலிக் கொண்டு நின்றபடி ஒரு பகுதியினர், 'ஏன் நாங்களும் தூக்கினால் என்னவாம்?” என்று கேள்வி கேட்டுக் கொண்டு இன்னுமொரு பகுதியினர். இந்த இழுபறியினாலே அன்று
57

Page 36
3. .IDلي
് ഋഗ്രാമമ
நடக்க வேண்டிய சுற்றுப் பிரகாரமும் நிறுத்தப்பட்டு விட்டதே. இவ்வளவு பட்டு நொந்து விட்டும் அநேகம் பேர்களிடையே இன்னமும் சாதிவெறி தணிந்ததாக இல்லையே அடக் கடவுளே! என்று இறுதியாக இறைவனை நினைத்தக் கொண்டு எல்லாவற்றையுமே கடவுளிடம் பாரத்தைக் கொடுத்து விட்டது போல் மனதைத் தேற்றிக் கொண்டவள் குருசேவ் வீதியிலுள்ள தனது வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
வீட்டிலே மூத்த மகள், தேனிர் தயாரித்து எல்லாருக்கும் கொடுத்திருந்தாள். வீட்டு நிலைவரத்தில் அவளும் ஏ. எல் வரை படித்து விட்டு இப்போது மருந்துக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். இளைய பிள்ளகைள் இருவரும் பள்ளிக் கூடம் போகிறார்கள். அவர்களெல்லாருக்கும் காலைச் சாப்பாட்டை தயாரித்துக் கொடுத்து அனுப்பி விட்டு பிற்பாடு அங்கிளுக்கும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து அவள் மேசை மீது வைத்தாள்.
அங்கிள் அவளுக்கு தூரத்து உறவினர். அவருடைய மனைவி இறந்து விட்டதினாலே அவரது ஒரே மகனான ஜெறோம் வெளிநாடு போகும் போது ஆதரவு இல்லாத அவரை அவர்களிடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தார். அரசாங்கத்தில் நல்ல உத்தியோகம் என்பதினாலே மாதாமாதம் அவருக்குச் சம்பளம் வருகிறது. பணக்கஷ்டம் என்பது இதன் நிமித்தம் அவருக்கு இல்லை. கத்தரீனோடு தான் அவருக்கு சாப்பாடும் குடியிருப்பும் என்பதாலே அதற்கென்று அவர் மாதா மாதம் தருகிற பணம் அவளுடைய குடும்பத்துக்கும் எவ்வளவோ உதவுகிறது.
58

മേരിക്കും മഴീബ്ജക്ഷ്മ
கத்தரினுக்கு ஒரு சகோதரர். வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பி உதவுவதால் தான் கணவன் இல்லாது போயும் இந்த அளவுக்கு அவள் பணப்பிரச்சினையின்றி சீவியத்தைக் கொண்டு செலுத்துகிறாள். ஏதோ மாதா மாதம் அவர் அனுப்புகிற சிறுதொகையில் எப்படியோ சமாளித்துக் கொண்டு கொஞ்சப் பணத்தை அதற்குள்ளும் மிச்சம் பிடித்துக் கொள்கிறாள். மூத்த மகளோ தனது சம்பாத்தியம் முழுமையையும் வங்கியிலிட்டு இருப்புச் செய்து விடுகிறாள். இதுவே கத்தரீனுடைய குடும்பத்தின் இன்றைய வாழ்க்கை நிலை.
"அங்கிள்! சாப்பிட வாங்கோ என்ன பத்திரிகை யோடேயே இருந்தீட்டீங்க?’ வேலைக்குப் போக நேரமாகேல்லையா?” அன்றைய தினசரிப் பத்திரிகையைப் பார்த்தபடி அதிலேயே கவனத்தில் மூழ்கியிருந்தவர் பத்திரிகையை மடித்து கதிரையில் வைத்து விட்டு சாப்பாட்டு மேசைக்கு வந்தார்.
‘கத்தரின் இன்றைக்கு நான் லீவு போட்டிட்டன்’
"ஏன் அங்கிள் உங்களுக்கு சுகம் இல்லையா?” அவள் கேட்டாள். “இல்லை! இன்றைக்கு எனக்கு சில அலுவல்கள் கிடக்கு. அத்தோட உம்முடனும் ஒரு விஷயத்தைப் பற்றி ஆற அமர கதைக்க வேண்டியதா யிருக்குது”.
அங்கிள் இப்படிச் சொல்லி விட்டு அவளைப் பார்த்தார். கத்தரீனுக்கோ அவர் என்னத்தைப் பற்றி தன்னோடு பேசுவதற்கு அக் கறைப்படுகின்றார் என்பதிலேயே சிந்தனை ஒட்டம் சென்றது.
59

Page 37
t 4. A. Aர். 2/, அருேம4//0ர்ர2
தேவையற்ற விதமாக ஒரு போதும் அங்கிள் ஒருவரிடம் கதைப்பதில்லை. அவளிடத்திலும் கூட அப்படித்தான். அப்படிப்பட்டவர் ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல முற்படுகிறார் என்றால் அது ஏதோ முக்கியமான காரியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் எனவே ‘என்ன அங்கிள் அப்படி முக்கியமான விஷயம் நீங்க இருந்து சாப்பிடுங்கோ பிறகு மெல்ல விஷயத்தைச் சொல்லுங்கோ’ அன்பாக இப்படி கூறியதும், அங்கிளும் அப்படியே சாப்பாட்டு மேசைக்கருகில் கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தார். இடியப்பத்தையும் சம்பலையும் சாப்பாட்டுத் தட்டில் போட்டு அவருக்கு முன்னாலே அவள் வைத்தாள். கோப்பையிலுள்ள தண்ணிரிலே கையை அலம்பிக் கொண்டு அவரும் சாப்பிடுவதற்கு ஆரம்பித்தார். எதிரே கத்தரீன் நின்று கொண்டு பக்கத்தில் கிடந்த கதிரையில் கையை வைத்தபடி ஜன்னலைப் பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தாள். ‘என்ன கத்தரீன் யோசிக்கிறீர்? ”
“ஒன்றுமில்லை அங்கிள்” மீண்டும் அவரே பேச்சைத் தொடர்ந்தார்.
6 &
V கத்தரின் ! இப்ப நான் சொல்லுறகிறது முக்கியமானதொரு விஷயம். உம்முடைய பிற்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய நல்லதொரு உதவி. இதனாலே கிடைக்குமென்று இந்த முடிவெடுத்தன். எனக்கு பென்சனாகிற வயசாகிது. மனைவி இறந்து விட்டதாலே என்னுடைய சீவியத்துக்குப் பிறகு இந்த ஓய்வூதியத்தை இன்னொருவருக்கு பிரயோசனப்படுத்தி விடலாம் என்று யோசிக்கிறன். அதிலும் அதை உமக்குச் செய்து தருகிறது நல்லதெல்லே”
60

2رږx2ازdöøې2/or IDilifدرdelieExaياdيسIه
அவளுக்கு அவர் சொன்ன குறிப்பு அவ்வளவு துலக்கமாக மூளைக்குப் பிடிபடவில்லை.
`` என்ன அங்கிள் சொல்லுறிங்க? நீங்கள் சொல்லுகிறது விளக்கம் இல்லாத விதமாக இருக்கிது” கொஞ்சம் மனம் குழம்பிப் போய் நெற்றியை சுருக்கிக் கொண்டு அவள் இவ்விதம் சொன்ன போது 'கத்தரின் உமக்கு மூன்றும் பெண் பிள்ளைகளாகத்தான் இருக்கினம். நாளைக்கு அவர்களெல்லாம் கலியாணம் முடிச்சுப் போனதன் பிறகு புருஷன் இல்லாத நீர் பிற்காலத்திலை கஷடப்பட்டுப் போய் விடுவீர். அதனாலே நாங்கள் இருவரும் சேர்ந்து திருமணத்துக்கான பதிவை மாத்திரம் எழுதிக் கொண்டு விட்டால் பென்சனுக்கு விண்ணப்பம் போடும் போது அந்த அத்தாட்சிகளையும் அனுப்பி விடலாம். பிற்பாடு எனக்குப் பிறகு உம்முடைய காலத்திலே இந்தப் பென்சன் சுகம் உமக்கும் கிடைக்கும்”.
சுகம் வருமா?. கத்தரினுக்கு எரிச்சலாக வந்தது. இந்த அருவருப்பான கதைகளை அங்கிள் சொல்லுகிறாரே? என்ற ஆத்திரம் தான் அவளுக்கு அதிகமாகியது.
‘அங்கிள் இந்தக் கிறுக்குப் புத்தி உங்களுக்கு ஏன் வந்தது?. கையெழுத்துப் போட்டால் சட்டப்படி அது கல்யாணம் தானே. அதனாலே கணவன் மனைவி என்ற உறவு வந்து விடும். எனக்கு இப்போது இருக்கிற பெயரும் மாறிவிடும். எங்களுக்குள்ளே அந்த உறவு இல்லாமலிருக்கலாம். ஆனால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? யாராவது என்னை நம்புவார்களா? என்னுடைய பிள்ளைகள் தான் மதிப்பார்களா? வேத முறைக்கும் இது பிழையெல்லே? அந்தப் பெண் சன் என்னுடைய
61

Page 38
தீவி அஞானத்தம்
குடும்பமானத்தை விற்று வாங்குகிற பணம். வேண்டாம் அங்கிள். இந்தக் கதையை இத்தோட விட்டு விடுங்கோ.”
அங்கிள் ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கூறியிருப்பார் என்று அவளுக்கும் விளங்கியிருந்தது என்றாலும் பென்சன் விஷயத்துடன் தன்னையும் அவர் ஆழமாக அறிந்து வைத்திருக்கட்டும் என்ற நோக்கில்தான் அவள் இதை ஆணி அடித்தது போல் அவர் மனதில் பதிய வைத்தாள். அங்கிள் தலையைக் குனிந்தபடி கைகளைக் கூட அலம்பிக் கொள்ளாமல் யோசித்துக் கொண்டிருந்தார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாது, மேலும் இரண்டொரு வார்த்தைகள் அவரிடம் சொல்லி வைத்து விட வேண்டும் " என்றே அவளுடைய மனம் தூண்டியது.
‘அங்கிள்! இதிலே நீங்கள் யோசிப்பதற்கு ஒன்றுமே நடந்து விடவில்லை. நான் நீங்கள் கூறியதை வைத்துக் குறை நினைக்கவில்லை. என்றாலும் இதை இத்தோடு மறந்து விடுங்கள். எப்போதும் நீங்கள் எங்களுக்கு ஒரு அங்கிளாகவே இருங்கள். நானும் உங்களுக்கு எப்போதும் ஒரு பெற்ற பிள்ளைபோல இருப்பேன். இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருந்தால் எப்போதும் நீங்கள் எங்களுடனேயே இருக்கலாம்”.
சொல்லி விட்டு அவள் சமையலறைக்குள் சென்றாள். ‘’ எனக் கும் அங்கிளுக்கும் இடையில் நடந்த உரையாடலை இத்தோடு மறந்து விட வேண்டும். திரும்பவும் அவருடன் முன்பு போல சாதாரணமாகவும் மகிழ்ச்சியாவும் கதைக்க வேண்டும்” என்பதே பின்பு கத்தரினுடைய யோசனை.
62

മറ്റ്രക്രിക്കാr zA-Z/ഴ്ച)
‘பாவம்! அங்கிள்! அவர் எனக்கு ஒரு தகப்பன் மாதிரி. எப்போதும் இந்த அன்பை மாறாமல் காப்பாற்றி வரவேண்டும்” இப்படி யோசித்துக் கொண்டே மதியவேளை சமையலுக்கு அடுக்குகளை செய்யத் தொடங்கியவள் மனதையும் ஒருவாறு அமைதிப்படுத்திக் கொண்டு செய்து கொண்டிருந்த வேலைகளில் முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்கினாள்.
ஆதவன் 2001
63

Page 39
S.
2/
ഋഗ്രാഡ്വൈ
தி
நித்திய கல்யாணி
ல்யாண வீட்டுக்குப் போகாவிட்டாலும் கூட ஒருவரின் சாவு வீட்டுக்குக் கட்டாயம் போக வேண்டும்.
அநேகமாக நாலு பேராய் சேர்ந்து கூடித்தான் பெண்கள் அந்த இழவு வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்தார்கள். அவளோ அங்கே தனியாகத்தான் வந்துகொண்டிருந்தாள். பூவும் பொட்டுமாக இப்போ உடையில் முன்னையதை விட திருத்தம். நடையும் அப்படித்தான். கற்றைத்தலை முடியை முன்போல் காணக்கிடைக்கவில்லை.
இவளை எங்கே கண்டாலும் பயம்தான் அவனுக்கு. பலருக்கு முன்னே அவள் கதைத்தாளென்றால் பரிசு கெட்டதாய் போய்விடும் என்ற பயம்.
விளம்பரம் இல்லாமலே பிரபலமாகிற தொழில் விபசாரம். இன்று திருந்தி நடக்கிறவளாக இருக்கிறாளாம்.
64
 
 

മffക്രിക്രമീബദ്ധ മഠുീ/()
இப்படித்தான் ஊருக்குள் அவளைப் பற்றி கதைக்கிறார்கள். இவள் பெயர் மல்லிதா. மணமுள்ளதான மல்லிகை போல் அழகும் குணமும் கொண்டவளாக இளமையில் இவள் எப்படி இருந்தாள் என்று நினைக்கையில் பழைய சம்பவங்களை நாடி அவனது சிந்தனை சிறகடித்துப் பறந்தது.
米 米 米 米 米 米 米 米 米 米 米 米
பொன்னம்பலவாணர் என்றால் ஊருக்குள்ளே பெரிய விலாசமாகவிருந்தது.
அந்தளவுக்கு முதன் முதலில் கல்வீடு கட்டிக் கொண்டவரும் பணக்காரரும் அவர்தான்.
பூபாலன், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகளுக்குப் பின்பு பிறந்த ஆண்பிள்ளை. சிறுவயதிலே பக்கத்துத் தெருவிலே ஓடி விளையாடும் பிள்ளைகளோடு இவனும் சேர்ந்து கொள்வதுண்டு. அந்த இடத்திலேதான் மல்லிகாவின் வீடும் இருந்தது. சிறுவயதில் அவளும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாடுவாள்.
இலுப்பையும், நாவல் மரங்களும் நின்றதால் விளையாடும் அந்த இடம் நல்ல நிழல். மூன்று பெரிய ஆட்கள் சுற்றி நின்று கட்டிப் பிடிக்குமளவு பெருப்பம் கொண்ட ஒரு நாவல் மரத்தைத் தறித்து விழுத்தி துண்டு போட்டிருந்தார்கள். அதற்கு மேல் பிள்ளைகளொல்லாம் ஏறி இருந்து கீழே குதித்து விளையாடுவார்கள்.
மல்லிகா பெடியன்களோடு சமமாக நின்று சண்டை போடுவாள். ஒட்டத்தில் எல்லா நண்டு சிண்டுகளையும் முந்திவிடுவாள். படுசுட்டியான பெண்பிள்ளை அவள்.
65

Page 40
sa 豪 0, // cyA/////
தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு பண்டிகைகள் வந்தால் இலுப்பை மரத்திலே பெரிய ஊஞ்சல் கட்டி பிள்ளைகளை நடுவிலே இருக்கவைத்து பெரியவர்கள் இருவர் எதிரும் புதிருமாக நின்று கொண்டு உந்தி மிதித்து ஊஞ்சலை ஆட்டுவார்கள்.
காற்றைக் கிழித்துக் கொண்டு மேலும் கீழும் ஆடி வருகையிலே பூபாலனுக்கும் அவனைப் போல் வயதுப் பிள்ளைகளுக்கும் பெருமகிழ்ச்சி. அதிலே மல்லிகா எப்போதும் பூபாலன் பக்கத்திலேயே இடம்பிடித்து இருப்பாள். அவளது பிஞ்சுக்கை அவனை விழவிடாது வளைத்தபடி ஜாக்கிரதையாக இருக்கும். எதிலும் அன்புள்ள அக்கறை அவனிடத்தில் அவளுக்கு இருந்தது.
மல்லிகா கொஞ்சக் காலத்தில் பூத்த மல்லிகை போல் புதுமெருகு கொண்டாள். கருநாகம் போல் சுருட்டையான கூந்தல் முகத்தில் அலைபாய கண்டவர் மயங்கும் கவர்ச்சிக் கண்களைக் கொண்டவளாக மாறிவிட்டாள்.
பூபாலனுக்கும் இப்போ காளை வயசு, மீசை யெல்லாம் அரும்பத் தொடங்குகிறது. “மீசை முளைக்குது உங்களுக்கு” சொல்லிவிட்டு ‘களுக்” என்று அவள் சிரித்தாள். ‘சும்மா சொல்லக் கூடாது, பூபாலன்! நீங்கள் வடிவா இருக்கிறீங்க” மீண்டும் சொன்னாள். எதையும் அவள் மனதில் மறைத்து வைப்பது இல்லை.
\ “நீரும் கூடத்தான் இப்ப வடிவா இருக்கிறீர்” பூபாலன் புகழ்ந்தான். உண்மையைத்தான் சொன்னான்.
“போம் பூபாலன் பொய் சொல்லுறீர்” அவளுக்கு உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பு என்றாலும் இவற்றை அவள்
66

മffക്രമീബദ്ധ മഠുz/ഴ്ചo)
பெரிதாக வேறு விதமாக எண்ணவில்லை. அழகான ஒரு நல்ல நட்புக்குரிய உரையாடலாகத்தான் இருவருக்கும் இடையில் இவைகள் இருந்தன.
பக்கத்து ஊர்களிலே ஆண்டு தோறும் நடக்கும் கோயில் திருவிழாக்கெல்லாம் பூபாலன் போவதுண்டு. இங்கேயெல்லாம் தனது தாயுடன் மல்லிகாவும் வருவாள். அங்கு அவனைக் கண்டால் நன்றாகவே நின்று கதைப்பாள்.
காவடி ஆட்டம் கண்டால் மல்லிகாவின் தாய் உரு ஏறி ஆடுவாள். வீட்டில் இருந்தாலும் வெள்ளிக் கிழமைகளில் அவளுக்கு உரு வந்துவிடும். இப்படி ஆடும்போது கீழேயும் விழுந்து புரள்வாள். பக்கத்து வீட்டு ஆண்கள் இப்படியான நேரம் இவளுக்கு உதவி செய்வதாகவென்று வந்து சுயநினைவு அவளுக்கு வருமளவு மட்டும் அமர்த்திப் பிடித்து அணைத்து விட்டுப் போவார்கள். இப்படியெல்லாம் இவர்கள் குடும்பத்தில் இருக்கு.
மந்திரம், மாயம் என்று இவர்கள் எந்த நேரம் பார்த்தாலும் கதைத்துக் கொண்டிருப்பார்கள். இதை யெல்லாம் பூபாலனும் பார்த்திருக்கிறான். என்றாலும் சரி பிழை இதைப்பற்றி அவன் அவர்களுடன் கதைப்பதில்லை.
மல்லிகா அரைப்படிப்போடு பாடசாலையை விட்டு விலகிவிட்டாள். பூபாலன் படித்துமுடித்து விட்டு வெளிநாடு போனான். திரும்பி அவன் ஊருக்கு வருகையிலே அங்கு எல்லாமே மாற்றம்.
மல்லிகா ஒரு குழந்தைக்குத் தாயாகி இருந்தாள்.
67

Page 41
物 ரீமி அமு//wந்தம்
"மல்லிகா இது உன் குழந்தையா? உனக்கு கல்யாணம் ஆகிற்றா?” என்று ஆவலோடு கேட்டான்.
’அதை ஏன் கேட்கிறீங்க பூபாலன். ஒரு நய வஞ்சகன் என்னை நல்லா ஏமாத்திட்டான்’ அழுதாள்.
அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. பெண் குழந்தையோடு அவளின் கோலத்தைப் பார்க்க மனதை வாட்டியது.
‘அப்ப இப்ப என்ன மாதிரி? சீவியத்துக்கு என்ன செய்கிறாய்”?
6
‘என்னைப் போல ஏற்ாத்திக் கைவிடப்பட்ட பெண்கள் என்னத்தையெல்லாம் செய்யத் துணியிறாங்களோ அதைத்தான் வழியொண்டும் கிடைக்காமல் நானும் பார்த்துச் செய்யிறன். உடம்பை வித்துக் காசு வாங்கிறன். இதுவுமொரு வியாபாரம்தானே’ வெறுமை கலந்த சிரிப்புடன் அவள் சொன்னாள்.
அவனுக்கு அனலுக்குள் தள்ளிவிட்டாற் போல் இருந்தது. முன்னைய பால்ய சினேக அன்பு கண்களை நீர்க்குளமாக்கியது.
'மல்லிகா இப்படி உனக்கு வருமெண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை, உனக்கு உதவி செய்ய சொந்தக்காரர் ஒருவருமில்லையா?” அக்கறையுடன் கேட்டான்.
G G 99
ம்.” என்று பெருமூச்செறிந்தபடி 'பூபாலன் எங்கட சொந்தக் காரரைத்தான் உங்களுக்குத் தெரியுமே எல்லோரும் பரம்பரை ஆண்டிகள், அவையஞக்கு மனமிருந்தாலும் கையில பணமில்லை. அதனால
68

z/പ്രീമാr Zഗ്ഗ7:/ഴ്ചാക്ത
அவங்களையும் குற்றம் சொல்லி பிரயோசனமில்லை” என்று சோர்ந்தபடி சொல்லி முடித்தாள்.
‘சரி உன்ரை அம்மா இப்ப என்ன செய்யிறா?” ஆர்வமாகக் கேட்டான்.
கீழே நிலத்தைப் பார்த்தபடி அவள் சொன்னாள்!.
`அம்மா புண்ணியம் செய்தவ. வேளைக்குப் போய் சேர்ந்திட்டா”
இவையெல்லாவற்றையும் கேட்க நெஞ்சுக்கு மேல் பாறாங்கல்லை வைத்தது போல் அந்தரமாக இருந்தது அவனுக்கு.
’பூபாலன்! கதைச்சது காணும். ஆராவது கண்டால் உங்கட நல்லபேரும் என்னால கெட்டுப் போயிடும், நான் வாறன் பூபாலன்”
சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அவள் போய்விட்டாள்.
அன்று இரவு படுக்கையில் பூபாலனுக்கு நித்திரையே வரவில்லை. பால்ய வயதுப் பழைய நினைவுகள் நீங்கிப் போவதற்கு இரவு நடுசாமமாகியது. ஒருவாறு மனதை நிம்மதிப்படுத்தி பின்பு கண் அயர்ந்தான்.
சில மாதங்களின் பின் பழையபடி மீண்டும் வெளிநாட்டு வாழ்க்கையைத்தான் பூபாலன் தேடிக் கொண்டான். இருண்ட தேசங்களிலே பல காலம் கழித்துவிட்டு மீண்டும் தாய் மண்ணிலே காலடி எடுத்து வைத்ததும் வீட்டிலுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும்படி அவனுக்கு நெருக்குதல் கொடுத்தனர்.
69

Page 42
தி2 அருவத்தம்
ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. கலியாணம் எட்டிக்காய்போல் அவனுக்குக் கசந்தது. நாற்பத்தைந்து வயதில் உடலும் அசதியாக வருகிறதை உணர்ந்து காலம் போன பின் கலியாணம் எதற்கு என்று இருந்துவிட்டான்.
வீட்டிலே செய்கின்ற கிரியை எல்லாம் முடிந்து பிரேதம் பாடையில் வைக்கப்பட்டுவிட்டது. நினைவு கலைந்து பூபாலன் வெளியே வீதிக்கு வந்தான்.
வெட்டப்பட்ட வேலியைக் கடக்கும் போது மல்லிகா அவன் கண்ணில் பட்டாள். அந்த நேரம் இருவர் பார்வையும் பழைய நினைவுகளை ஒரு முறை பகிர்ந்து கொண்டன.
மல்லிகா தனிமரம் போல் ஒரு மூலையில் நின்றாள். அவளுடன் அங்கு நின்ற எவருமே கதைக்கவில்லை. சமூகம் அவளை தள்ளி வைத்துவிட்டதில் எவருமே அவளை ஒரு மனுசியாகக் கணக்கெடுக்கவில்லை.
அவள் நெற்றியில் இட்டிருந்த அந்தக் குங்குமப் பொட்டுக்கும் அர்த்தமில்லை. அவளுக்குத்தான் கணவன் இல்லையே?
என்றாலும், அவள் இறக்கும் வரை அதை வைத்துக் கொள்வாள். ஏனென்றால், அந்த ஊரிலுள்ள திருமணமான ஆண்கள் பலர் அவளது ரகசியக் கணவன்மார்கள். அவர்க ளெல்லாம் இறப்பதற்கு முன் சுமங்கலியாக அவள் இறந்துவிடுவாள். இதனால், அவள் என்றுமே நித்திய கல்யாணி தான்.
சுடர்ஒளி - 2001
70

മറ്റ്രക്രമിക്കാr Zഴ7:/ഴ്ചo)
கண்ணிர் கலந்த கடல்
நீல நிறம்தான் கடல். அந்த வானமும் நீல நிறம்தான், உலகம் உண்டாகிய காலம் முதல் அவை நிறம் மாறியதாக எப்பொழுதிலும் இல்லை. இயற்கை மாறவில்லை. மனிதன் தான் மாறுகிறான். ஜாதி, மதம், மொழி என்று சொல்லி தங்களுக்குள்ளே அடித்துக் கொள்கிறான்.
இந்த யுத்தம் தொடங்கி இதுநாள் வரைக்குள் செத்துப் போய் விட்டது சந்திரனது மனம். கடலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டு பிரமை பிடித்தது போல் அந்த வள்ளத்தில் இருந்தார். அதிலே ஏற்றி விட்டிருந்த தென்னோலைக் கற்றைகளுக்கு மேல் அவருடைய மகன் சுதாகரன் படுத்திருந்தான்.
இந்த வள்ளத் தையும் அதைப் போல பொருட்களையும், ஆட்களையும் ஏற்றியிருந்த வேறு
71

Page 43
മ്7 ഋഗ്ഗംഗമമ
நான்கு வள்ளங்களையும் சேர்த்து இடைவெளிவிட்டு கயிறுகள் போட்டுக் கட்டி முன்னே ஒரு இயந்திரப் படகில் பிணைத்திருந்தார்கள். எல்லா வள்ளங்களையும் இழுத்துக் கொணி டு முன் னாலே அது கடலில் சென்று கொண்டிருந்தது.
பலாலி இராணுவ முகாமிலிருந்து இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறியதற்குப் பின்பு பிரச்சினையில் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் செல்லும் மக்கள், அந்த வள்ளங்களில் இருந்தார்கள். எல்லாருடைய முகத்திலும் ஆழமான கவலைகள். பொன் விளையும் பிறந்த பூமியைவிட்டுப் பிரிகிறோமே என்ற துக்கம் பணம் பண்டங்களை உடுதுணிகளை எடுத்துவர முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கம். ஆலம் விழுதுகள் போலிருந்த உறவுகளை இழந்து தனிமரமாய் ஆகி விட்டோமே என்ற தாங்க முடியாத வேதனை. தவிப்பு. இப்படியான கவலைகளுக்கெல்லாம் ஆழ்ப்பட்டுப் போய் நடைப்பிணங்களாக உட்கார்ந்திருக்கிறார்கள்.
கிளாலி பூநகரி கடற்பரப்பு வழியாக படகில் இந்தப் பயணம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இயந்திரப் படகு போல், முன்னாலும் பல விசைப் படகுகள் செல்கின்றன. அவைகளிலேயும் பொருட்களோடு ஆட்களும் இருக்கின்றனர். அதிலே வீட்டில் இருந்த முக்கியமான பொருட்கள் ஒன்றைக்கூட தவறவிடாமல் எடுத்துக் கொண்டு போகிற ஒரு சிலர் இருக்கிறார்கள். ஒழுங்காகக் கட்டிக் கொள்ள துணிமணி கூட எடுத்துவர முடியாது வெறுங்கையுடன் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படியாக இந்தக் கடற்பரப்பில் எட்டு முதல் பன்னிரண்டு கிலோ மீட்டர் பிரயாணம் செய்துதான் பூநகரி கரையை 960)Luj6)Tib.
72

Zffക്രമീബദ്ധ മഠുീക്ഷ്മം)
சந்திரனுக்கு வீட்டுப் பொருட்களை அதுபோல், கொஞ்சம் கொண்டு வரக் கிடைத்தது. ஆனால் பணமெல்லாம் ஊருக்குள்ளே கொடுத்து முடங்கி விட்டது. அன்னம் ஆகாரத்தைக் குறைத்துக் கொண்டு அவர் பணத்தைச் சேர்க்கவில்லை. வியாபார தொழிலிலே வருமானத்தில் தின்று குடித்து எஞ்சியதை சிறிய வட்டிக்கு நம்பிக்கையின் பேரில் பழகியவரிடம் கொடுத்திருந்தார். இனி அவை எங்கே வரப்போகிறது. இந்த வேளையிலே சில ஆயிரம் ரூபாவைத்தான் செலவுக்காக வைத்திருந்தார்.
முன்னாலே போகும் வள்ளத்தில் அவரது மனைவி சாந்தியும் மகள் சுமதியும் பிரயாணம் பண்ணுகிறார்கள். மனைவி கழுத்தில் திருமணத்தின் போது கட்டிய பத்துப் பவுண் தாலிக் கொடி பல கஷ்டங்களிலும் தப்பித்துக் கொண்டு இருக்கிறது. மகள் கழுத்தில் மெல்லிய நூல் மொத்தத்தில் சங்கிலி, கையில் வாழைநார் பருமனில் காப்பு. மோதிரமென்று மேலும் சொல்லும் படியாக இருக்க ஒன்றும் இல்லை. இனி நகைகள் தான் போகுமிடத்தில் செலவுக்குக் கரையப் போகின்றன.
நடுக்கடலில் அலைதாழப்போய் மேலெழுகிறது. இயந்திரப் படகை சாதுரியமாக ஒட்டுநர் செலுத்தினாலும், சமஅளவு வேகத்தோடு செல்லாது விரைவையும் ஏற்படுத்துவதால், மூக்கணாங்கயிற்றைப் பிடிக்காத மாடு தலையை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவது மாதிரி பின்னாலே வள்ளங்கள் ஒவ்வொன்றும் கோணல் மாணலாக போகின்றன.
இதன் காரணமாகத்தான். கயிறு இழுபட்டு திடீரென அறுந்து விட்டது. அங்கேயே விழித்துப் பார்த்துக்
73

Page 44
بدیہہ گئے ۔ ܚܬܼ Y) Ал. 27. сy(драли одлу?уд
கொண்டிருந்த சந்திரன் பதறிக்கொண்டு குரல் கொடுத்தார்.
‘ஓ.ஒ. கயிறு அறுந்திட்டுது. வாயைப் பிளந்து கத்துவதாக நினைப்பு. ஆனால் சத்தம். அவரது காதுகளுக்குக் கூட கேட்கவில்லை. இப்படி கவலைகளிலும் பயத்திலும் நடுத்தர வயது தாண்டிய உடல் அவசரத்துக்கு இயங்கவில்லை.
‘சுதாகரன்!.சுதாகரன்!. எங்கட போட் கயிறு அறுந்திட்டுது”. மகனை தட்டி விட்டு மீண்டும் கத்தினார் ஒவ்.ஓகோவ். கயிறு அறுந்திட்டுது நிற்பாட்டுங்கோ’ அப்பா சொன்னத்தைப் போல சுதாகரனும் சத்தம் போட்டான். எப்படிக் கத்தியும் இயந்திர இரைச்சல் அந்த ஒலியை விழுங்கியது.
ஆனால் சாந்தியும் சுமதியும் அவர்கள் சத்தத்தைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு விட்டார்கள். ‘அங்க கயிறு அறுந்திட்டுதாம் நிற்பாட்டுங்கோ நிற்பாட்டுங்கோ’ எஞ்ஜின் போட்டில் இருந்தவர்களை நோக்கி சாந்தி கத்தினாள்.
இதைக் கேட்டு எஞ்ஜினை நியூட்டலாக்கி விட்டு வள்ளங்களைத் தாண்டி சந்திரன் இருந்த வள்ளத்துக்கு அவர்கள் வந்தனர். பின்பு கயிற்றை முடிச்சுப் போட்டுக்கட்டி மீண்டும் பிரயாணம் ஆரம்பமாகி விட்டது. புதிதாகப் பிரயாணம் பண்ணுகிறவர்க்கு கிளாலிப் பயணம் ஒரு பயங்கர அனுபவமாகத்தான் இருக்கும். இடம் பெயர்ந்து முதன் முதல் இந்தக் கடல்ப் பயணத்தை அனுபவிப்ப வர்களாக இதற்குள் சிலபேர் இருக்கிறார்கள்.
‘அங்க பாருங்கோ அந்த வெளிச்சம் வருகிற இடம்தான் ஆனையிறவு” தனக்குப் பக்கத்தில் இருந்த
74

ബഗ്ഗക്രമിക്കാr Zഗ്ഗZ/ഴ്ച)
பிள்ளைகளுக்கு அந்த இடத்தைக் காண்பித்தவாறு வயதுபோன கிழவர் சொன்னார். வெளிச்சம் வந்த இடம் தூரமாக இருந்தாலும், கடல் வெளியில் பார்வைக்கு கிட்டப்போல் தெரிந்தது. இந்தக் கடலைத்தாண்டிப் போகுமட்டும் ஆபத்து வரக்கூடாது என்றுதான் எல்லோரும் கடவுளை நேர்ந்து கொண்டிருந்தார்கள். அப்படி இந்தக் கடலில் கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் மோதல்கள் நடந்திருக்கின்றன. புலிகளின் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு கடற்படையினர் கடல் வழிவந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்ற பயம் இவர்களுக்கு அடிவயிற்றைக் கவ்வுகிறது.
கயிறு அறுந்ததோடு சுமதி மனம் குழம்பி விட்டாள். திரும்பத் திரும்ப தாயிடம் இதையே சொல்லிக் கொண்டிருந்தாள். ‘அப்பாவும் அண்ணாவும் எங்களோட இதிலே ஏறியிருந்திருக்கலாம்தானே. ஏன் கடைசி வள்ளத்திலே போய் ஏறினவயள். அந்த வள்ளம் கயிறு அறுந்ததோட காணாமல் போயிருந்தா அப் பாவுடையவும் அண்ணாவின்ரையும் பாடு என்னவாய் ஆகியிருக்கும். “அவள் பயந்ததுக்கும் காரணம் உண்டு. இப்படியாக அலைக்கழிந்து ஆனையிறவு முகாமில் ஒதுங்கிய படகுகளில் இருந்தவர்களுக்கு இராணுவத்தினர் புரிந்த சித்திரவதைகள் பற்றி பத்திரிகையிலே படித்திருந்தாள். அதனாலேயே இதைத் திரும்பத்திரும்பக் கூறி தாயை அதிலே நிம்மதியாக இருக்க விடாது குடைந்து கொண்டிருந்தாள்.
மகளுடைய தொணதொணப்பை மேலும் சாந்தியால் பொறுக்க முடியவில்லை. எனவே அவளை அதட்டி அடக்கினாள். "சும்மா இரு அவயஞக்கு ஒன்றுமில்லை. இப்போ நல்லா கயிற்றைக் கட்டியிருப்பினம். என்னைக்
75

Page 45
அர்மி அமு//wத்தம்
கரைச்சல் கொடுத்துக் கொண்டிருக்காம நீ இரு”
கிழவரும் கூட சேர்ந்து கொண்டார்.
‘'நீ பயப்படாத பிள்ளை. அப்படியெல்லாம் இந்த இடத்தில நடவாது. அவங்களுக்கும் எல்லாத்திலையும் கவனமிருக்கு நீ கவலைப்படாதை’ பிறகுதான் சுமதியால் நிம்மதியாக இருக்க முடிந்தது. இருந்தாலும் பார்வை பின்பக்கமாகவே கவனத்துடன் இருந்தது.
இரவு நடுச் சாமம் தாண்டியதால் கடற்காற்று குளிர்த்தன்மையாக இருந்தது. ஒலைக்கட்டுகளுக்கு இடையில் காலை நுளைத்துக் கொண்டு சந்திரன் ஒடுங்கிப் போய் இருந்தார். எப்பொழுது கரைவரும் அங்கே போய் சுடச்சுட தேநீர் வாங்கிக் குடிக்கலாம் என்று நடுக்கத்துடன் காத்துக் கிடந்தார். மகனைப் பார்க்கையிலும் அவருக்குப் பரிதாபமாக இருந்தது. ஒலைக் கட்டுக்களையும் பொருட்களையும் தூக்கி அங்கும் இங்கும் வாகனங்களில் ஏற்றி பெரிதாக உடலைக் கசக்கிக் கஷ்டப்பட்டுப் போனான். பிள்ளை. என்று மகனைப் பார்த்துக் கவலைப்பட்டார்.
யாழி நகரிலிருந்து கிளா லியில் வநது அல்லற்பட்டதை சந்திரனால் என்றுமே மறக்க முடியாது. யுத்தம் தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்களை இந்த நாட்டில் அகதிகளாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆளும் அதிகாரம் பிடித்த எல்லா அரசாங்கங்களுக்கும் ஆசைபோலும். பண்டைய காலத்திலிருந்தே திராவிட இனத்தவர்களாகிய தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். சேமிப்பு என்பது நாகரிகத்தில் முன்னேற்றம் பெற்றிருந்த இந்த இனத்தவரின் அறிவுடைய செயலாகவிருந்தது. இப்படி இவர்கள் சேர்த்து வைத்த
76

Zffക്രമിക്കാr Zഗ്ഗീ/ഴ്ച)
சொத்துக்களை அந்நாளில் மந்தைகளை மேய்த்துத் திரிந்த ஆரியர் கொள்ளையிட்டார்களாம். இது சரித்திர உண்மை. திராவிடரிடம் கொள்ளையிட்டு ஆரியர் வாழ்ந் திருக்கிறார்கள். இங்கே யுத்தத்திற்கு முன்பும் இலங்கையில் பரந்து வாழ்ந்த தமிழர்களின் சொத்துக்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காடையர்களால் கொள்ளை யிடப்பட்டிருக்கின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று ஒன்றும் விடாமல் எல்லாமே நடந்திருக்கிறன.
இதுதான் பெளத்தம் கற்பித்த பாடமா?. இன்று இவர்கள் சிறுபான்மை இனத்தை வெறுத்து ஒதுக்கு கிறார்கள். தாங்கள் வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளைத்தான் மனிதர்களாக நினைத்து அன்பு செலுத்துகிறார்கள். புத்தரின் போதனை இந்த விதமாக தலைகீழாக அவர்களுக்குத் தெரிகிறது.
இதையெல்லாம் சந்திரனால் நினைக்காதிருக்க முடியவில்லை. அலைந்து பட்ட அனுபவங்கள் வெறுப்பான வெளிப்பாடாகவே அவரிடமிருந்து வருகிறது. இந்த அக்கிரமங்களை நிறுத்தாமல், தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டு சமாதானப் புறாவை பறக்க விடுகிறார்கள். தவறாமல் வெள்ளைப் புறாவே என்ற பாட்டு வானொலியில் ஒலிபரப்பப்படுகிறதே. அதைக் கேட்கும் போது அவரால் சகிக்கவே முடியவில்லை. யாருக்கு இந்த ஒப்பாரி. மக்களை மடையராக்கி திசை திருப்பி தங்கள் நலன்களை பூர்த்தி செய்வதில் அரசியல்காரர்களும். அவர்களது அடிவருடிகளும் பலே பேர்வழிகள் தான்.
நினைவுகள் இப்படியே நிற்கவில்லை. தொடர்ந்தன. இந்த வாழ்க்கையின் முடிவெங்கே? அவருக்குத்
77

Page 46
ரீவி அருணானந்தம்
தெரியவில்லை.கொஞ்சக் காலமாக எத்தனை இடப் பெயர்வுகள். கடலைத் தாண்டி, வனத்தைத் தாண்டி இந்த அகதி வாழ்வில் எல்லா அவலங்களையும் எப்படித்தான் பொறுத்துக் கொள்வது. சில நேரங்களில் கஞ்சிக்கும் வழியில்லை. இருக்க இடமில்லை. வேண்டிய மருந்தில்லை.
வறுமையில் என்ன எல்லாமோ கண்டதையும் இந்தச் சனங்கள் சாப்பிடவும் பழகிவிட்டார்கள். ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தல் நின்று போனதால் எங்கு பார்த்தாலும் இறைச்சிக்கடைகளே திறந்து கிடக்கின்றன. பச்சை இரத்தம் ஒழுகும் மாட்டுத் தொடைகளைப் பார்க்கவே சந்திரனுக்கு வாந்தி வருகிறது. அநேகமாக இப்போது சைவர்களும் மாடு தின்னப் பழகி விட்டார்கள். ஒரு காலம் வெறுக்கப்பட்டவை வேண்டப்படுகின்றன தவிர்க்கப்பட்டவை சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
மரக்கறி உணவை அதிகம் விரும்புவர் சந்திரன். பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு இலைக்கறியுடனாவது சோறு தின்னலாம் என்றால் கிளாலியில் அதுவும் தட்டுப்பாடு. உடல் நலிந்து போனதால் அவரது கைகால்கள் கூட பலமிழந்து விட்டன. இதற்கெல்லாமாக சேர்த்து ஊழ்வினைதான் வந்து சூழ்ந்த விட்டதோ என்று நினைக்கக் கூடியதாக ஞானம் கூட பிறந்து விட்டது அவருக்கு.
கிளாலியில் எங்கு சுற்றிப் பார்த்தாலும் கத்தோலிக்கர் ஆலயங்கள்தான் காண இருக்கின்றன. அந்த இடத்துக்கு சந்திரன் குடும்பத்துடன் வந்தபோது கத்தோலிக்க கோயிலில்தான் போய்த்தங்கியிருந்தார். அங்கே திரேசம்மா
78

zരക്രിക്രമീബദ്ധ മഠുീzá)
காலையில் வீட்டிலிருந்து கோயிலுக்குப் பூசை காண வந்திருந்தாள். சாந்தியைக் கண்டவுடனே திரேசம்மா அவளை உடனே அடையளம் கண்டு கொண்டு விட்டாள். இருவரும் பாடசாலைச் சிநேகிதிகள். சுண்டுக் குளி மகளிர் கல்லாரியில் படித்திருக்கிறார்ககள்.
‘சாந்தி. சாந்தி." என்று குழைவுடன் கதைக்கத் தொடங்கி விட்டாள் திரேசா.
“திரேசா எவ்வளவு நாளாயிட்டுது உம்மைப் பாத்து” சாந்தி பரிவுடன் சொன்னாள். பின்பு தன்னுடைய பிள்ளைகளையும், கணவரையும் அவளுக்கு அறிமுகம் செய்தாள்.
‘’ வந்து கோயிலில் இருந்திட்டாய். வீட்டுக்கு வந்திருக்கலாம் தானே’
'எனக்கு உடன ஞாபகம் வரேல்ல. மன்னிச்சிடு”
‘என்ன அப்படிச் சொல்லிட்டாய் இங்க சூசைதான் ஜே.பி. என்றால் எல்லாரும் காட்டுவினம். சரி போகட்டும் வாங்கோ எங்களின்ரை வீட்டுக்குப் போவம்” கதையோடு பெருமையாக தன்னுடைய விலாசத்தையும் முத்திரை குத்திவிட்டு சாந்தியை திரேசா அழைத்தாள். அங்கே இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு சாந்தி தன் குடும்பத்தாருடன் திரேசா வீட்டுக்குப் போனாள்.
அந்த ஊரிலே பெரிய தென்னந் தோட்டம் திரேசாவின் கணவருக்கிருந்தது. ' தோட்டத்திலே வசதியான ஒரு வீடு இருக்கிறது. சும்மா அதை பூட்டி வைத்திருக்கிறோம்’ என்று திரேசம்மா நண்பியிடம் கூறினாள். ‘அங்கே இருந்தால் எல்லாத்துக்கும் நல்லது”
79

Page 47
മ്മീഷപ്രാഗമമ്ന
என்று சந்திரன் தனது மனைவியிடம் கூறினார். அதிலே எல்லாருக்கும் முழு விருப்பம் என்பதால் திரேசம்மாவும் கணவரும் வீட்டை அவர்கள் தங்கி இருப்பதற்குக் கொடுக்க முன் வந்தார்கள். தனது ‘லாண்ட் மாண்டர் வாகனத்தில் அவர்களது பொருட்களை ஏற்றிக் கொண்டு போய்த் தோட்டத்து வீட்டிலே இறக்கி விட்டார் சூசைதாசன். உடனே வாகனக் கூலியை சந்திரன் கொடுக்க அவரும் மறுக்காது வாங்கினார்.
அதுமிக அமைதியான இடம். தென்னமரச் சோலை நடுவே வீடு குளிர்ச்சியாக இருந்தது. காலையும், மாலையும் கேட்கும் பறவைகளின் சத்தம் அனைவரது கவலைகளையும் மறந்திடச் செய்தன.
அந்த வீட்டை விட்டு கொஞ்சத் தூரம் போனால் கிளாலித் துறைக்குச் செல்லும் வீதிக்கு வரலாம். அங்கே ஒவ்வொரு நாளும் சந்திரன் வந்து நிற்பார். அந்த வீதி வழியே போகின்ற வாகனங்களிலெல்லாம் பொருட்களும் ஆட்களும் இருக்கக் கண்டு மனதில் இவருக்கும் அவதியாக இருந்தது.
கொஞ்ச நாட்களில், யாழ் நகரிலிருந்து இராணு வத்தினர் சாவகச்சேரிக்கு முன்னேறினர். மக்களெல்லாம் மனம் குழம்பிய நிலையில் அல்லாடிப்போய் ஆதங்கப் பட்டனர். இந்தளவு சனத்தையும் வன்னி கொள்ளுமா? அங்கே வீடு வாசல்களில் உறவினர்களைத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றையோர் தாங்களாகவே குடிசை போட்டுத்தான் இருக்க வேண்டும். இந்தக் கதை எல்லா இடத்திலும் அடிபட்டது.
சந்திரனுக்கு இதுதான் பிரச்சினை. சொந்தமென்று
80

മffക്രിക്രമിക്കുമാ മഗ്ഗീ/ഴ്ച)
அவருக்கும், மனைவிக்கும் வன்னிப் பகுதியிலே ஒருவரும் இல்லை. ஆதலால் `அங்கே போய் எங்கே இருப்பது?” என ற கேள்வியில குடும் பமாக அவர் கள் குழம்பியடித்தார்கள். 'போதிய இடவசதி இருக்கிறது. ஒரு இடம் பார்த்து கொட்டில் போட்டு இருக்கலாம் தானே. ஆனால் அங்கே கிடுகு தட்டுப்பாடு அதையும் கொண்டு போனால் மரம் தடியை பார்த்து எடுக்கலாம்.” என்று பலர் அவருக்கு ஆலோசனை கூறினார்கள்.
இதற்காக சூசைதாசனின் தோட்டத்திலே கிடுகை வாங்கலாம் என்று சந்திரன் நினைத்தார்.
இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை திரேசா தென்னந்தோட்டத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். வேலையாள் ஒருவனையும் கூட்டி வந்து, தோட்டத்து வேலைகளை செய்து முடித்து வியாபாரிகளுக்கு தேங்காயை, ஒலையை விற்று காசாக்கியதும் புறப்பட்டு விடுவார். அன்றைய தினமும் அவர் அப்படியாக வந்திருந்தபோது சந்திரன் கேட்டார்.
‘எங்களுக்கு கிடுகு வேணும். ஒரு விலையைப் போட்டுத்தாங்கோ?”
"ஏன் கிடுகு உங்களுக்கு?”
"நாங்கள் வன்னிக்கு வெளிக்கிடப் பார்க்கிறோம்’ 'இதை சாந்தி எனக்கு சொல்லேல்லையே’ ஆச்சரியத்துடன் திரேசா கேட்டபோது.
’’ இரவு தான் முடிவெடுத்தனாங்கள். இங்க சனங்கள் எல்லாரும் போய்க்கொண்டிருக்கினம். நாங்களும்
81

Page 48
മ്7, 9ശ്രഠ/ർമ്മി
நேரத்துக்கு வெளிக்கிட்டால் அங்கே போய் ஒரு நல்ல இடம்பிடிக்கலாம்”
‘* அது உங்கடை விருப்பம் . நாங்களும் வெளிக்கிடத்தான் பார்க்கிறம். ஆனா. இப்போதைக் கெண்டு அவசரமாயில்லை’ திரேசா சொல்லும் போது, சந்திரனுக்கு அவளுடைய குறிக்கோள் விளங்கியது. இந்தப் பெரிய வருமானத்தை விட்டுப் போவதற்கு யாருக்கு மனம் வரும் என்று நினைத்து ‘அப்ப கிடுகு விஷயம் என்ன மாதிரி?” தொடர்ந்தார்.
‘அதுதான் எவ்வளவு உங்களுக்குத் தேவை என்று சொல்லுங்கோ? அதுக்குள்ள உங்களுக்கு ஒன்று சொல்ல வேணும் பாருங்கோ. கிடுகு பின்னிக் கொடுக்க எங்களுக்கு ஏலாது. அதுக்கெண்டு இங்க இப்ப வேலையாட்கள் பிடிச்சுக் கொள்ளுறதும் கஷ்டம். ஏதோ எல்லோருக்கும் கொடுக்கிற மாதிரி ஒலையாகத்தாறம். நீங்க வேண்டியதை எடுங்கோ’
‘சரி விலை’ அதையும் கேட்டார்.
‘விலை என்ன எல்லாருக்கும் எட்டு ரூபாய் ஐம்பது சதமாக விக்கிறம். உங்களுக்கெண்டாப்போல, ஒரு ஐம்பது சதத்தைக் குறைச்சும் விடலாம்’ இதை பெரிய பரோபகாரமாக சொல்லி விட்டு சிரித்தார். திரேசாவைப் போல் வசதி படைத்த பலர் அகதி மக்களிடமும் உழைப்பை விடவில்லை.
தங்களுக்கும் இதே நிலைதான் வரப்போகிறது என்பதை, அப்படியானவர்கள் உணரவில்லை. ஆனாலும், வீடு, வாசல், பணம், பண்டம் என்பவைகளை வைத்துக் கொண்டு மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தியவர்கள்.
82

മറ്റ്രക്രിബ് മക്രീജില്ക്ക)
இடம் பெயர்ந்து அகதிகளாக வந்து தங்கள் வீடுகளில் இருந்த உறவினர் களுக்கு சட்டம் போட்டு மனவேதனையளித்தவர்கள் கொஞ்ச நாளிலே தங்கள் வீடுகளை விட்டு அவர்களும் அலையத் தொடங்கி விட்டார்கள். இவர்களுக்கெல்லாம் இந்த யுத்தச் சூழல் நல்லபாடமும் கற்பித்துக் கொடுத்திருக்கிறது.
அந்த வீட்டிலே தணிணிர் குடிப்பதில் லை என்கிறவர்கள் அதே வீட்டில் போய் இரு கைகளாலும் தண்ணிரை வாங்கிக் குடித்தார்கள். படுத்து எழும்பினார்கள். இந்த ஜாதி என்ற பேச்சு இத்தோடு அவர்களிடமிருந்து பறத்திக் கொண்டு போய்விட்டது.
இதை சந்திரன் நேரில் கண்டறிந்திருந்தார். திருந்துவதற்கு இப்படி ஒரு காலம் வரவேண்டுமே. திரேசாவுக்கும் அதுபோல் ஒரு நாள்வரும் என்று அவர் நினைத்தார். எப்படியோ ஒலைகளை திரேசாவிடமே வாங்க வேண்டும் என்ற நிலை அவருக்கு இருந்தது. ஒன்றும்பேசாது பணத்தைக் கொடுத்து ஒலைகளை வாங்கினார். புறப்படும்போது எல்லோருமே மகிழ்ச்சியாக அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். அடுத்தாற்போல் உடலை விட்டு உயிர் பிரிவது போல் இந்தக் கடல் பயணத்தில் பெரிதோர் இழப்பை இவர்களெல்லாம் அனுபவிக்கிறார்கள். கண்பார்வை யிலிருந்து கிளாலிக் கரை மறையும் மட்டும் தங்களுடைய வாழும் நாட்டை நினைத்துக் கண்ணிர் சிந்துகிறார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் பூநகரி இறங்கு துறையை வள்ளங்கள் தரை தட்டும் என்பதற்கு நம்பிக்கையாக பெற்றோல் மாக்ஸ் விளக்கு ஒளி கடற்கரையை பகலாக்கிக்
83

Page 49
മ്7 ഋഗ്രാഗമ്മി
கொண்டிருப்பது, துலாம்பரமாக தெரிகிறது. அதைக்காண சந்திரன் மனதுக்கு தெம்பு வந்தாலும் உடல் மனதைப் போல் உற்சாகப்படவில்லை. ‘மகன் எழும்பு கரை வந்திட்டுது’ அப்பா தட்டி விட்டதோடு சுதாகரன் கண்விழித்து விட்டான். அந்த ஒலைக்கட்டுக்கு மேலே இருந்து உற்சாகத் தோடு கரையை பார்த்துக் கொண்டிருந்தான். யுத்த காலத்தில் பிறந்து வளர்ந்து அந்தச் சூழ்நிலைகளிலேயே வாழப் பழகியிருந்தவன் அவன். இப்போதும் நிலை தடுமாறாது மாற்றங்களுக் கெல்லாம் முகம் கொடுத்து நிற்க தயாராவதைப்போல் அவன் உறுதியோடு இருந்தான். அறிஞர் அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம் அவனுக்கு இருந்தது.
ஆதவன் - 2001
84

z/lിക്രമിക്കാ, മഗ്ഗഴ്ച))
சாமியார்ப் பைத்தியம்
1ல நாள்களாக என் கனவில் புளியம்பழங்களே வந்து பிரத்தியட்சமாயின. அவை அந்தச் சாமியார் என்னிடம் நெடுங்காலம் கூறிவரும் புளியம் பழங்கள். ”கோதும் பழமும் ஒட்டாது. பார் அது இயல்பாக இருக்கிறது. அது விதமே நீயும் இரு. சிற்றின்ப வாழ்வுடன் ஒட்டிக் கொள்ளாது உன்னையும் பிரித்துக் கொண்டிரு” என்று உபதேசித்தபோது அவரே என்குரு என்று எண்ணி முழுமனதோடு ஏற்றுக் கொண்டேன்.
காலை வெயில் நீட்டிக் கொண்டிருக்கையில் சாமியார் அந்தப் பிள்ளையார் கோயில் புளியடியில் போய் உட்காருவார். உழைப்பென்று ஒன்றுமில்லாது விட்டாலும் வேளா வேளைக்கு எழுந்து போய் வீட்டில் சாப்பிட்டு விட்டு வருவார். புளியம் காற்று உடலுக்குத் தீமை என்றாலும் நாள் முழுக்க அதனடியில் குந்தி இருப்பதே அவருக்கு பொழுதுபோக்கு.
85

Page 50
മ്മ് ഋഗ്രാംഗീർമജ്ജമ
அரை குறைப்படிப்புடன் நின்ற எனக்கு வேலை என்று ஒன்றும் இல்லை. சின்ன அளவு வயதில் நான் இருந்தாலும் பெரியவரான அவரையே நாளாந்தம் சுற்றிக் கொண்டு திரிவேன். இன்றைக்கென்று அதுவே எனக்கு வேலையாகிவிட்டது.
எங்களுக்கென்றால் அப்பனால் உழைத்துப்போட வயிறு குளிரச் சாப்பிடுகின்றோம். ஆனால், ஒருவருமானமு மில்லாமல் சாமியார் வீடடுச் சீவியம் எப்படி நடக்கிறது? இதைத் தீவிரமாய் பல தடவைகள் நானும் சிந்தித்துப் பார்த்திருக்கின்றேன்.
என் நண்பன். ‘சாமியார் கள்ள மாடு பிடிச்சுக் குறிபோட்டு விக்கிறாரடா” என்று தான் கேள்விப்பட்டதைச் சொன்னான். நானென்றால் நம்பவில்லை. சாமியார் எந்த நேரமும் நீதி ஞாயம் என்று கதைக்கின்றார். அப்படியான ஆளிடம் களவு பொய் இருக்குமா? என்று எண்ணி, ‘’ போடாப் பா அவர் அப்படியான ஆளில் லை. எத்தினபேருக்கு அந்தக் கோயிலிலே அவர் திருநீறு எடுத்து மந்திரிச்சுக் குடுத்திருக்கிறார். அதில கனக்க ஆக்கள் வருத்தம் குணமானதெண்டும் பிறகு என்னட்டைச் சொல்லி இருக்கினம்’ என்று அவனுக்கு நான் பதில் சொன்னேன்.
‘இந்த நவீன காலத்திலேயும் இப்படியான மூடப்பழக்கவழக்கங்களுக்கு ஆள்ப்பட்டு போறியளே’ என்று அவன் என்னைக் கடித்துக் கொண்டான்.
‘ஓ! கடவுளில நாங்கள் நம்பிக்கை வைக்கிறது பிழையோ?” என்று சமயோசிதமாக நான் கேட்டேன்.
‘' இல்லை. கடவுளைச் சொல்லி வயிறு வளக்கிறவங்களைத்தான் நம்பாதயுங்கோ என்கிறன்'
86

മറ്റ്രക്രിബ്വാ Zഗ്ഗzá)))
‘கடவுளும் இந்த உலகத்தில மனித உருவில இருந்தாங்களே’ நான் அவனை விடாது கேள்வி கேட்டு மடக்க நினைத்தேன்.
‘ஆனா அவர்கள் மனிதர்கள் வாழ நல்ல வழியைக் காட்டினாங்க. . இவங்களை மாதிரி மக்களை ஏமாத்தி வயிறு வளக்கேல் லயே?’ அப்படியென்றான் அவன். எனக் கென்றால் இப் படி அவனோடு கதைப் பதே வெறுத்துப்போக கதையை ஒரு வழிக்கு கொண்டு வருவதற்காக `சரி. 8. அதையெல்லாம் விட்டுத்தள்ளு. நீ பெரியார் எழுதின புத்தகங்களையும், சோக்கிரட்டீசைப் பற்றியும் படிச்சுப் போட்டு வந்து அவயளின்றை கொள்கையே சரி என்ட மாதிரித்தான் வாதாடுகின்றாய். உன்னோட கதைக்கேலாதப்பா. நான் போறன்’ என்று சொல்லிவிட்டு கழன்று கொண்டேன்.
காலநேரம் வரும்போது சாமியாரை நம்பும்படி அவனையும் செய்ய வேண்டும் என்ற எனது திட்டத்தையும் மனதில் வைத்துக் கொண்டுதான் நடந்தேன்.
நாங்கள் கடைப் பிடித்து ஒழுகும் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாமே சரி என்று தான் எனக்குப் பட்டது. பரம்பரை வழியாக நாங்கள் அவற்றை நம்பி வரும்போது என் நண்பனும் அவனைப் போன்ற வேறு சிலரும் கூட இப்படி கதைக்கையிலே ஒரு சில புத்திமதிகள் சரியென்று பட்டாலும் எங்களுடைய கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, இருக்கும் நிலைமையிலிருந்து மாற்றம் பெறவோ துளியளவும் நாங்கள் விரும்புகிற தில்லை. அவையாவுமே எங்களுக்கிருக்கும் பரம்பரைச் சொத்து என்பதிலேயே எங்கள் நினைப்புகள் இருந்தன.
87

Page 51
മ്7, 9ദ്രം്രിമജ്ജമ
என்னுடைய மூத்த அக்கா 'வீட்டுக்கொருக்கால் வந்திட்டுப் போடா தம்பியா’ என்று போய்க் கொண்டிருக்கும்போது அங்கே என்னை வீதியில் நிறுத்தி வைத்துச் சொல்லிவிட்டுப் போனா. அக்காவுக்கு கலியாணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அத்தானுக்கு கச்சேரியில் வேலை. கொஞ்சநேரம் சென்று என்னவென்று ஒருக்கால் கேட்டு வருவோம் என்று நான் அக்கா வீட்டிற்குப் போனேன். படலையைத் திறந்தேன். முற்றத்திலிருந்து மாட்டு மூத்திர நாற்றம் வந்து “குப்பென்று’ மூக்கில் அப்பியது. மாட்டுத் தொழுவம் சுத்தம் செய்யப்படவில்லை. சாணி கரைந்து தரையெல்லாம் பரவி ஊறியிருந்தது. ‘நச நச” என்று கிடந்த இடத்திலிருந்து நுனிப்பாதத்தை ஊன்றி நடந்துபோக அங்கே வெளிவாசல் படியில் அக்கா சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள்.
‘என்னக்கா நடந்தது? இப்படி சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறியள்?’ என்று விசாரித்தேன்.
'உடம்பெல்லாம் எனக்கு முறிச்சுப் போட்ட மாதிரி இருக்கடா தம்பி. ஒண்டும் ஒடியாடி வேலை செய்ய முடியேல்ல சனி பிடிச்ச மாதிரிக் கிடக்கு’ ஆயாசத்துடன் அக்கா சொல்வதைப் பார்த்தேன். மனவருத்தமாக இருந்தது.
“ஏன் அக்கா என்ன நடந்தது? என்று வினவினேன்.
“ஒண்டுமே தெரியேல்லயப்பு. ஆரோ என்னவோ செய்து விட்டிட்டுதுகள் போலக்கிடக்கு” என்று அழுவதைப் போலச் சொன்னாள்.
‘‘அப்படியெண் டா..?’ ‘‘ என்னவோ ஒண்டு
88

Zddക്രമീബാr Zഗ്ഗീ/()
வித்தியாசமா இந்த வீட்டில நடந்திருக்குது தம்பி. இல்லாட்டி இப்பிடி வருமோ? இங்கே ஒரேயடியா விடாம பல்லியும் சொல்லிக் கொண்டிருக்கு. அவள் பிள்ளையும் காலத்தால பீங்கானைக் கீழே போட்டு உடைச்சிட்டாள். அதுவும் ஒரு அபசகுனம் மாதிரிக்கிடக்கு. இரவு முழுக்க எனக்கு ஒரே கனவு கனவாய் வந்து அதுவும் மனக்குழப்பம். நெஞ்சைப்பிடிச்சடா ஆரோ அமுக்கிற மாதிரியும் கிடக்குது. என்ன இழவோ இதுகள் ஒண்டையும் என்னால கண்டு பிடிக்கேலாமக் கிடக்கு’ அக்கா பிரலாபித்தாள்.
அக்கா சொன்ன விஷயங்களை என்னாலும் கண்டு பிடிக்கத் திறமையில்லை. அது மந்திரவாதிகளால் தான் முடியும். செய்வினை சூனியங்களை வெட்டி விலக்குவது நிலத்தில் தாழப் புதைத்த தகட்டைத் தேடி எடுப்பதெல்லாம் மந்திரங்களை உச்சாடனம் பண்ணி தேவர் தேவதைகளை வசியம் செய்து வைத்திருக்கின்ற அவர்களாலேதான் இயலும். இதனால் மீண்டும் என் சாமியாரே நினைவுக்கு வந்தார்.
'அக்கா! ஒண்டுக்கும் கவலைப்படாதேயுங்கோ. நல்ல சோக்கான ஆள் ஒருவர் இதுக்கெண்டிருக்கிறார். அவரைக் கூட்டியாந்தால் சட்டுப்பிட்டென்று செய்து எல்லாத்தையும் நிவர்த்திப் பண்ணிடுவார்’ என்றேன் நம்பிக்கையுடன்.
‘யார் தம்பியவர்?’ கேட்கும் போது அக்காவின் கண்களிலும் மின்னலாக பிரகாசம். ‘சாமியாரக்கா!. புளியடிக் கோயிலில் குந்திக் கொண்டிருப்பார். கண்டியோ அந்தச் சாமியார்தான். ‘சூ.” பெரிய மந்திரவாதி. யோகியுமக்கா.’ எனக்கும் சொல்லிக் கொண்டிருக்க
89

Page 52
() 3. ● Gy (AZ2Z/2///۸ ریزy(Aنگح ,/Z . ازAZی
ரோமக்கால்கள் குத்திட்டு ஈட்டிபோல் நிமிர்ந்து நின்றன.
‘அப்படியெல்லாம் தெரிஞ்சும் நீ. இப்பிடி நிக் கிறியேடா போடா தம்பி கெதியாயப் போய் கூட்டியாவன்ரா’ அவசரப்பட்டு அன்றைக்கே 6T6)6)TD செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் அக்கா ஆலாய்ப்பறக்க நின்றாள். "அக்கா! அவசரப்படா தேயுங்கோ. இண்டைய நாள் போகட்டும் விடுங்கோ. நாளைக்கு நான் ஆளோட வாறன். என்ன தேவை எண்டு கேட்டு சாமான்களையும் வாங்குவம் என்ன?”
‘’ பேந்து பிற கென் று அதுக் குமே லேயும் நாளைக்கடத்திப் போடாதயடா தம்பி. இந்தா கையோடு காசையும் கொண்டு போ. பால் கறந்து வித்த காசு. பெட்டிக்கைக்கிடக்கு, எடுத்துத் தாறன். நீ பயப்படாம செலவழி. தேவைக்கில்லாத காசு இருந்து என்னத்துக்குத் தான்றா!” சில கணங்கள் கடக்க மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அக்கா விருப்புடன் தந்தாள். கையிலே காசைக் கொண்டு சாமியாரிடம் போக நான் விரைந்தேன்.
6
*காசு என்னடா காசு. உன்ர வீட்டுப் பிரச்சினை என்ர வீட்டுப் பிரச்சினை மாதிரித்தான்.
ஏதோ பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம். நீயும் எனக்கு சீடனாக வந்து சேர்ந்தாய் : இராமகிருஷ்ணருக்கு நரேந்திரன் கிடைச்ச மாதிரி எனக்கும் நீ வாய்ச்சாய்” என்று சொல்லி கோயிலில் வைத்து சாமியார் என் முதுகைத் தடவினார். நானும் மெய் மறந்தேன். பரவசமானேன். நான் அப்படியே நின்றேன். ஆனால் காசுக்கதையை சாமியார் மறக்கவில்லை.
90

Zuപ്രിബദ്ധ മഴ:/ഴ്ച)
`காசைக் கவனமா வச்சிரு; மடையில தட்சணை வைக்க வேணும்” என்றார்.
‘சரி சாமான்கள் என்ன என்ன வாங்க வேணும்?” சாமியாரைக் கேட்டேன்.
‘முதன் முதலா சாராயப் போத்தல் வேணும் அது மாடனுக்கு வைக்க” என்றார் ‘வேற என்ன?’ ‘பழம் பாக்கு வெத்தில.” ம். பிறகு?’ ‘குங்குமம் சூடம் சாம்பிராணி’ ‘இன்னும் என்ன?’ ‘ஆ. தேசிக்காய். ஒரு ஐம்பது அறுபது. அது எல்லாம் இனி சரியே; பிறகொண்டு முக்கியமாய் தேவை. வீட்டில நல்ல சாவலாப் பாத்து பிடிச்சுக் கூடேக்க மூடு. கடைசியா சுடலையில கொண்டு போய் கழுத்தறுத்து உயிர்ப்பலி குடுக்க வேணும்’
சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே கீழே இருந்து தனது வலது காலைத் தூக்கி தொடை மேல் போட்டபடி 'சிவம் சிவம்” என்று சொல்ல ஆரம்பித்தார் சாமியார். சாமான்கள் வாங்கி முடிந்து அடுத்த நாள் பொழுது படவும் அக்கா வீட்டுக்குச் சாமியார் வந்தார். நான் தலைவாழை இலை வெட்டி வந்து சாமி அறையின் முன்னால் நிலத்தில் வைத்தேன். பொருட்களை அதன் மேலே அவர் வைக்க வேலியில் கிடந்த செம்பரத்தை மரத்துப் பூவெல்லாம் பிடுங்கி வந்து இலையில் நிறைத்தேன். கால் கட்டுடன் கிடந்த சாவல் வெறும் சிமெந்து நிலத்தில் குளிர் பிடித்துப் போய் சத்தமில்லாமல் கிடந்தது. சாம்பிராணிப்புகை குசினிப்புகையை விடக் கடுமையாக அங்கு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
மந்திரங்களை சாமியார் வாய்ப்பாடு மாதிரிச்
91

Page 53
മ് S ** V AW
وللاقته بهذا التايمزيه)g .1 . تم
சொல்லிக் கொண்டு வந்தார். 'இது மாடனுக்கு குடுக்கிறன். ‘சோமரசம்” என்று சொல்லிச் சொல்லி சாராயத்தையும் கிளாசில் வார்த்துக் குடித்தார். செம்பரத்தைப் பூவை கத்தியில் தேய்த்துவிட்டு தேசிக்காயை அக்காவின் தலைமேல் பிடித்தபடி வெட்டினார். இரு துண்டுகளாக விழுந்த தேசிக் காயப் ப் பாதிகளை எடுத்துக்காட்டி ‘எப்படி இருக்குதெண்டு பாத்தியேடா?” என்றார் ‘சிகப்பாயிருக்கு சாமியார்’ என்றேன்.
‘’ அதுதாண்டா செய்வினையெண்டுறது’ என்று அக்காவையும் என்னையும் வெருட்டினார்.
‘இனி வெட்ட வெட்ட தேசிக்காய் வெள்ளையாய் வரும் பார்” என்றார்.
அது உண்மைதான். பிறகு வெள்ளையாக மாறிக் கொண்டு வந்ததையே நானும் பார்த்தேன். அக்காவுக்கும் காட்டினார். அவருக்கும் நிம்மதியாய் இருந்தது. முகம் மலர்ந்தது.
“இப்ப முகத்தைப் பார்த்தியே. எல்லாம் கழிஞ்சு சாந்தமா வந்திட்டுது” என்றார்.
நானும் “ஓம்’ என்று சொல்லி தலையாட்டினேன். அக்காவும் அப்போது முட்டு நீங்கி நிம்மதியாய் மூச்சு விட்டார். அதற்குப் பிறகு மாவிலை போட்டுக்கிடந்த தண்ணிர்ச் செம்பை அக்காவிடம் கொடுத்து ‘முகம் கழுவிப் போட்டு நேரே அறைக்குள்ளே போயிருங்கோ’ என்று சாமியார் சொன்னார். பிறகு, ‘எல்லாம் முடிஞ்சுது வா. நாங்கள் சுடலைக்குப் போவம்” என்று சொல்லி அதனருகே கிடந்த சாமான்களை எல்லாம் எடுத்துக்கட்டி ஒரு பையில் போட்டுக் கொண்டு, காசையும் மடித்து மடித்து பர்சில்
92

z/lിക്രമിക്ഷം/ zA-Z/ഴ്ച))))))
வைத்தபடி, சாமியார் வெளிக்கிடும் வேளையில் என்னையும் கூப்பிட்டார். சாவலையும் கத்தியையும் தூக்கிக்கொண்டு சாமியாருக்குப் பிறகாலே நானும் போனேன்.
இரவு நேரம். சுடுகாடு அமைதியாகத் தெரிந்தது. அங்கேயும் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. எருக்கம் செடிகள் விறைப்பாக நிற்கிறதைப் போல் தெரிந்தன. பயத்தில் எனக்கு குப்பென்று உஷணம் பரவி வியர்த்தது.
அலவாங்கை விழுங்கியவன் மாதிரி நானும் சுடலை நடுவே நின்றேன். சுடுகாட்டின் நடு மையத்தில் சாமியார் சூடத்தைப் பற்ற வைத்தார்.
கோழியின் கழுத்தை என் கையில் வைத்திருந்த மடக்குக் கத்தியை வாங்கி நிமிர்த்திப்போட்டு வெட்டினார்.
தலை துண்டாய் போயும் இறக்கைகளை அடித்துக் கொண்டு அது நிலத்தில் கிடந்து துடித்தது. தலையை அந்த இடத்தில் விட்டுப் போட்டு கோழியின் மிகுதி உடலை அவர் பையில் போட்டுக் கொண்டார்.
‘எல்லாம் முடிஞ்சுது வாவன் போவம்’ சாமியார் வெளிக்கிட்டார். நான் சிந்தித்த வண்ணம் அவர் பின்னாலே போனேன்.
‘’ வந்த பாதையால போகக் கூடாது வேற பாதையால போவம்' என்றார். “சரி” என்றேன். இருவரும் நடந்தோம். தன்னுடைய வீடு கிட்டவும், ‘நான் வாறன்ரா தம்பி நாளைக்கு வா’ என்று சொல்லி விட்டு அந்த ஒழுங்கை வழியில் தள்ளாடியவாறு அவர் நடந்து போனார். அவருக்கு இப்போது நல்ல வெறி என்று பின்னாலே போகவிட்டு பார்க்கும் போது எனக்குத் தெரிந்தது.
93.

Page 54
മ്മ് ഋഗ്രാഗർമ്മി
எனக்கென்றால் மனவேதனை அதிகமாகியது. மூளையில் யோசனை மிகுதியாயப் வந்து குழப்பமடைந்தேன்.
சாமியார் கழிப்புக் கழிக்கவென்று கொண்டு போன அத்தனை பொருட்களையும் சுடலையை விட்டு வரும் போது போட்டு விட்டு வருவார் என்று நம்பியிருந்தேன். ஆனால் அத்தனையும் விடாமல் வீட்டுக்கெடுத்துப் போகிறாரே என்றதில் ஆத்திரம் அதிகமாகியது. அவரிடம் களவு இருக்கின்றது மாதிரித் தெரிந்தது. செம்பரத்தைப் பூவை கத்தியில் தடவியதும் அதன் பிறகாலே வெட்டும்போது தேசிக்காய் சிவப்பு நிறமாக தெரிந்ததும் மீண்டும் மீண்டும் எனக்கு ஞாபகத்தில் வந்து உறைத்தது. சாமியார் வீட்டைக் கடந்தவுடன் பல பேய்கள் அந்த இருட்டில் எனக்குப் பின்னால் வருவது போல உணர்வு எழுந்தது. அவையெல்லாம் என்னை நெருங்கி வந்து அக்காவுக்கு வெட்டிய தேசிக்காய்ப் பாதிகளை என் தலையில் வைத்துத் தேய்து விட வருவது போலவும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு கும்மியடித்தபடி ‘கலகல” வென்று சிரித்துக் கொண்டிருப்பதாகவும் பிரமை ஏற்பட்டது.
- அவை எல்லாம் உண்மையல்ல என்று நான் அறிந்தாலும், பயந்து கொண்டு ஒரு வேக ஓட்டம் ஒடிப்போய் என் வீட்டுப் படலையைத் திறந்தேன். அத்தோடு நான் அந்தச் சாமியாரின் மேல் வைத்திருந்த நம்பிக்கைகள்
யாவற்றையும் அறவே துறந்தேன்.
தினகரன் வாரமஞ்சரி, 2001
O O
94

മffപ്രില്ക്ക് മഗ്ഗ//ഴ്ചാക്ത
மாற்றங்களை மறுப்பதற்கில்லை
னடாவில் இருந்து வந்த கடிதத்தைக் கொஞ்சம் மட்டும் படித்து முடிப்பதற்குள்ளாலேயே பொன்னம்மா (Մ?(Լք விபரமும் கிரகித்துக் கொண்டு விட்ட நிலையில் அதிர்ந்து போனாள்.
கடிதத்தில் கால்வாசிக்கு மேல் வாசித்து விட்டவள் குறித்த சில வரிகளில் மாத்திரம் இடறுப்பட்டு நின்று கொண்டு திரும்பத் திரும்ப அந்த வரிகளையே மனதால் படிப்பதை விட்டு வெளியே வாயாலும் புலம்ப ஆரம்பித்தாள். ‘‘அம்மா! உங்களுடைய பேர்த்தி கமலினி எங்களுடைய ஊரில் சந்தையில் மீன் வியாாபரம் செய்கின்ற சின்னாயியுடைய மகனை இங்கு பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டார்’
95

Page 55
தீசி அருணானந்தம்
இந்தச் செய்தி பேரிடி விழுந்தது போலத்தான் அவள் நெஞ்சத்துக்குள்ளும் ஊடுருவிப் பாய்ந்தது. இதனாலே அவள் உடல் வியர்த்து நன்றாக வெடவெடத்தது.
கனடாவில் வசிக்கும் மகளுக்கு சீதனமாகக் கொடுத்திருந்த அந்த நாற் சதுர வீட்டுக்குள்ளே உள் விறாந்தையில் நின்று கொண்டு கோயில் தூண்கள் போல் பருமன் கொண்ட ஒரு தூணின் அருகே இவ்வாறு திகைத்துப் போய் நின்றவள் மேலும் தன்னைத் தாங்கி நிற்க சக்தி இல்லாது கால்கள் பலமிழந்து தள்ளாடிப்போக அப்படியே அருகிருந்த தூணோடு சாய்ந்து விட்டாள்.
இந்த அதிர்ச்சியில் மண்டை விறைத்தது போல் ஏதோ செய்ய, தலையையும் அதில் சாய்த்தவாறு நடு முற்றத்துக்கு மேலே தெரியும் வான் வெளியை பார்த்துக் கொண்டிருந்தவள் பார்வையை ஒருமுறை சற்று கீழே தாழ்த்த அங்கே பனைகளிலும் தென்னைகளிலும் காற்றுப்பட்டு அசைந்தாடிக் கொண்டிருந்த ஒலைகள் இன்றைக்கென்று அவளை பயமுறுத்துவது போலவும் தெரிந்தது.
முதலியார் வீட்டுக்காரர் என்று கதைத்தால் அந்த நாளில் ஊரில் இருக்கிற எல்லாருக்கும் ஒரு பயம் இருந்தது. இந்த முதலியார் பரம்பரையிலே பொன்னம்மாவும் வந்ததால் சரியான செருக்குப் பிடித்த வளாகத்தான் இன்று வரை சீவித்துக் கொண்டிருந்தாள்.
பொன்னம்மாவின் தந்தை அந்த நாளில் பகுதிப்பராபத்தியம், உடையார், விதானை, என்கிற மூன்று உத்தியோகங்களையும் பார்த்தவர்.
இளைஞனாக இருக்கும் போது தந்தையார்
96

മറ്റ്രക്രീബാർ മg:Zജമ്മ)
கூலியாட்களை வைத்துச் செய்த தோட்டத்தை ஒவ்வொரு நாளும் இவர் சென்று மேற்பார்வையிடுவாராம்.
ஒருநாள் தோட்டத்தில் அவர் நின்று கொண்டிருக்கும் போது புகையிலைக் கன்றுக்குள்ளாலே ஒருவன் நடந்து போக ‘’ கிறுக்குப் பிடிச்ச கீழ் சாதி நாய்ப்பயலே புகையிலைக் கன்றுக்குள்ளாலையோடா உனக்கு நெடுகலும் அடிப் பாடு’ என்று கோபத் தோடு பேசியிருக்கிறார்.
அதைக்கேட்டுக் கொண்டு அவனும் பின்னால் வரப் போவதை கொஞ்சமும் யோசிக்காமல், ‘என்ன ஒரு கதை கதைக்கிறீர் என்னைக் காலைத் தூக்கித் தோளுக்கு மேல் வைச்சுப் போகச் சொல்லுறீரோ” என்று சுடச்சுடப் பதில் சொல்லியபடி அப்படியே அந்த வழியால் கள்ளுக்கொட்டில் பக்கம் போயிருக்கிறான்.
` எளிய கீழ்சாதிக்காரனுக்கு இவ்வளவு தடிப்பும்” ஆங்காரமுமோ எதிர் மறுமொழி சொல்லிப் போகிறானே என்ற ஆத்திரத்தில் ஏவப்பட்டு கொல்லை வேலியில் ஒரு பெரிய கிளுவைத் தடியை கத்தியால் வெட்டி எடுத்துக் கொணி டு விரைவாக இவர் கொட்டிலடிக் குப் போயிருக்கிறார்.
அங்கே பிளாவும் கையுமாக குந்தி இருந்தபடி ஆறுதலாக கள்ளுக் குடித்துக் கொண்டிருந்தவனை அந்தத் தடி முறியுமளவும் விடாமல் தொடர்ந்து செம்மையாக அடித்திருக்கிறார். அடிபட்ட வேதனை தாங்காமல் அவனும் ஓடிப் போகையில் அவதிப்பட்டு நாகதாளிப் பற்றைக் குள்ளும் விழுந்து முள்ளுக்குத்தி உடலெல்லாம் இரத்த ஆறாகி விட்டதாம்.
97

Page 56
മ്7 ഋഗ്രാമമ്ര
இதற்குப் பிற்பாடு அவனுக்கு கிலி பிடித்தது போல் ஆகிவிடவே அவரின் தந்தையிடம் இதைப்பற்றிக் கட்டாயம் சொல்லி வைக்க வேணும் என்று நினைத்து நேராக வீட்டுககுப் போயிருக்கிறான். அங்கே வீதியில் தூங்கியபடி பல மணிநேரம் நின்று அவரைக் கண்டு தனக்கு நடந்த துன்பததைப் பற்றிச் சொல்லி இரத்தத்தைக் காட்டி அழுதிருக்கிறான்.
‘என்ன மகன் அப்படிச் செய்தானோ’ என்று அவர் அதிசயித்திருக்கிறார்.
“சுடலை நீ என்னடா செய்தாய்” என்று அவனை திருப்பிக் கேட்டிருக்கிறார்.
அதற்கு அவன் ‘தோட்டத்துக்காலை நடக்க வேண்டாமென்றார் நான் என்ன காலைத் தூக்கி தோளுக்கு மேல் வைத்து நடக்கவோ என்று பகிடியாக சொன்னேன். அவர் இப்படிச் செய்து விட்டார்” எனறானாம்.
அவரும் அதற்கு ‘ என்னடா சினியா அப்படி உன்னாலை நடக்க ஏலுமா? எனக்கும் ஒருக்கால் நடந்து காட்டு பாப்பம். நூதனமாய் அப்பிடி நீ நடக்கப் போறாய் என்றால் நாங்களும் அதை உனக்குப் படிப்பிச்சுக்காட்ட வேணும் தானே’ என்று சொல்லி அவனை பேசி அனுப்பி விட்டாராம்!
முதலியார் தனது மகனின் திருமணத்தை அந்த ஊரிலே யாரும் கண்டிராத அளவுக்கு தடல் புடலாகத்தான் நடத்தி முடித்தாராம். திருமண ஊர்வலத்திற்காக பல்லக்குடனே சிவன் கோயில் ஆனையும் கொண்டு வரப் பணி னி திருமணத் தம் பதிகளை நீணி ட கழி இணைக்கப்பட்ட பல்லக்கில் இருக்கச்செய்து கோவியர்
98

Z/lിക്രമീാr Zഗ്ഗZഷ്ട()
அதனை காவிச் செல்ல சிறப்பாக அந்தக் கல்யாண ஊர்வலமும் காண்பதற்கு இருந்ததாம்.
பொன்னம்மா கண்டு கொள்ளக் கூடியதாக அந்த நாளில் செத்த வீடு என்றால், வீட்டுக் கிரியைக்கு வரும்போது கோவியர் என்று செயல்படுபவர்கள் நிறையப் பூசிப்புணர்த்திக் கொண்டு தான் வருவார்கள். பிரேதத்தைத் தண்டிகையில் இருத்தி தலை மயிரையும் குலைத்து விட்டு ஆபரங்களைப் பூட்டி அதைக் காவிச் செல்லும் போது அந்தப் பெண்கள் எல்லாாரும் குஞ்சம் விசிற மேளதாளங்களுடன் வெடிகளும் கொழுத்தி குடமுதிக் கூத்தாடித்தான் மயானம் மட்டும் செல்லும் வரை முன்பு எல்லாம் மரியாதையென்று நடந்தது.
இந்த மாதிரியெல்லாம் மரியாதையோடிருந்து எல்லாரையும் அடக்கி ஒடுக்கி வாழ்ந்து வந்த கெளரவமான உயர் - குலத்தில் இப்படிப்பட்ட ஒருத்தி பிறந்து வந்து மண்ணைப் போட்டு விட்டுப் போய் விட்டாளே.
என்றுதான் பொன்னம்மா துடிதுடித்தாள். இன்றைய கால மாற்றத்திலும் பழைய பழக்க வழக்கங்களில் உடும்புப்பிடியாக இருந்து கொண்டு யாரோடும் அண்டிக் கொள்ளாது ஒதுங்கித் தன்னந்தனியாக இருந்து வாழ்ந்து வருபவளுக்கு இது தாங்கொணாத துன்பமாகத்தான் இருந்தது.
தோட்டம் செய்து சீவித்து வரும் தனது இனசனத்தையே துப்பரவில்லாதவர்கள் என்று சொல்லி வீட்டுக்குள்ளே எடுக்காது வெளிவிறாந்தையில் மாத்திரம் இருக்கவைத்து கதைத்துவிட்டு அனுப்பிவிடுபவள், வளவுக்குள்ளே இவ்வளவு காலமும் கால் வைக்காத
99

Page 57
AV
தி2.அரு.//த்தம்
வர்கள் சொந்தமென்று சொல்லிக் கொண்டு ஒருக்கால் வந்து விடுவார்களோ என்றும் வெகுவாகப் பயந்து விட்டாள்.
என்றாலும், அந்த நினைவுகளின் சுழற்சியிலிருந்து கொஞ்சம் விடுபட்டு இனியும் என்னதான் எழுதியிருக்கிறது என்பதை அறிவதற்கு ஆவலாக விட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்கத் தலைப்பட்டாள்.
‘நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியிருந்தும் கமலினி கேட்கவில்லையம்மா. சாதியெல்லாம் உங்களோடு அங்கே ஊரில் இருந்து கொள்ளட்டும். இது கனடா. எல்லோரையும் இந்த நாடு மனிதர்கள் என்று தான் மதிக்கிறது. அதையே நாங்களும் விரும்புகிறோம். வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் எண்ணம் எங்கள் இருவருக்கும் இல்லை. இனியாவது நீங்களும் உங்கள் மூடக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
மிகுதி இப்படி எழுதப்பட்டிருந்தது.
‘’ போகட்டும். போகட்டும் எங்களையெல்லாம் போக்கடித்து விட்டுப் போனவள் நன்றாகப் போய்த் தொலையட்டும்” என்று கடிதத்தைப் படித்த எரிச்சலோடு மனம் தாங்காது வாய்விட்டு திட்டித் தீர்த்தவள் பின்பும் ஏதோ புது வழி ஒன்றைக் கண்டு பிடித்தாற் போல, ‘போனதுதான் போனாள். ஒரு வெள்ளைக் காரனை யென்றாலும் பார்த்துக் காதலிச்சுக் கல்யாணம் முடிச்சுப் போயிருக்கலாம் தானே’
என்று மன ஆறுதலுக்காகலும் வேறு சொல்லிக் கொண்டாள்.
100

Zffക്രിബദ്ധ മff:/ഴ്ച)
வெள்ளைக் காரர்களுக்குள்ளே சாதிகள் இல்லையென்று இங்கே எல்லோரும் எண்ணுவதால் அது என்றாலும் பரவாயில்லையே என்பதாகவும் LD60T60).5 ஆறுதல்படுத்திக் கொள்ள இப்படியாகவும் நினைத்தாள். இந்த நினைவுகளோடேயெல்லாம் அவளுக்கு அன்றைய பொழுது நிம்மதியில்லாமல் தான் கழிந்தது.
கடிதத்தில் எழுதியிருந்த செய்தி அறிந்து ஒரு கிழமை கழிந்து விட்டது. பொன்னம்மா சாமான் சக்கட்டுகள் வாங்கவென்று வீட்டை விட்டு வெளியே கடைகண்ணிக் கென்று எங்குமே போகவில்லை. கிணற்றடிக்குப் பின்னால் நின்ற முருங்கை மரத்து இலையையும் வீட்டில் வைத்திருந்த பருப்பையும் கொண்டு ஒருவாறு சோறும் கறியும் ஆக்கி வயிற்றுப்பாட்டை சமாளித்தாள். ஆனாலும் மேலும் பொறுத்துக் கொண்டிருக்க அவளுக்கு இயலாது போகவே அன்றைக்கென்று சந்தைக்குப் போய்வரலாம் என்று வெளிக்கிட்டாள்.
காலை பத்து மணியளவில் பரபரப்பாக சந்தையிலே வியாபாரம் நடந்து கொணி டிருந்தது. உள்ளே பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த சனக் கும்பலுக் குள்ளே தானும் ஒருத்தியாக நுளைந்து, தேவையான மரக்கறிகளை பொன்னம்மா வாங்கிக் கொண்டாள். பின்பு மீன் சந்தைக்குள்ளும் ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு நுளைந்தவளை என்றுமே இல்லாதவாறு அங்கே பலகையில் இருந்து கொண்டு மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த சின்னாயி வஞ்சப்புகழ்ச்சி கூறினாப்போல் அவளைக் கண்டு வரவேற்றாள்.
101

Page 58
f3
'മ്', 'Aംഗമജ്ഞി
‘அம்மா! வாங்கோவணை ஏன் அங்க வெக்கப்டுகிற மாதிரி நிற்கிறியள். இப்ப நீங்களும் எங்களுக்கை சொந்தமா வந்திட்டியள். பேந்தேன் வெக்கப்படுறியள்’
அருகில் கிடந்த கிண்ணத்தில் வைத்திருந்த தண்ணிரை கையில் அள்ளி பெட்டிக்கு மேலிருந்த மீனை ஈரம் காயாது நனைத்துக் கொண்டு சாவகாசமாக அவள் சொன்னாள்.
இது பொன்னம்மாவுக்கு மானத்தையே வாங்கி விட்டதைப் போல இருந்தது. உடுக்கை இழந்தவள் கை போல இதனால் திடீரென அவள் நிலை தடுமாறி விட்டாள். அதோடு மீன் சந்தையில் நின்றவர்களெல்லாம் அவளைப் பார்க்க மேலும் மானம் கப்பலேறிப் போவது போல் இருக்கவே பிறகும் அங்கு ஒரு கணமேனும் நின்று கொண்டிராது திரும்பி அரக்கப் பரக்க வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
'முடியாது இனியும் இந்த ஊரில் இருக்கக் கூடாது.” இது தான் அங்கு வந்ததும் அவள் எடுத்த முடிவு.
米 米 米 米 米 米 米 米 米 米
‘முதலியார் வீடு பூட்டியபடி கிடக்கின்றதே
பொன்னம்மா ஆச்சி எங்கே போயிருப்பாள்?”
விபரம் ஒன்றும் தெரியாத நிலையில் அந்த ஊரில்
உள்ளவர்களெல்லாம் இதே கேள்வியைத்தான் ஆளுக்கு ஆள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இருந்தாலும் ஜோஸ் யம் சொன்னது போல் "அம்மையார் கொழும்பில் போய் இருந்து விட்டா” என்றும் சிலர் கூறுகிறார்கள்.
102

മറ്റ്രക്രിമാl Zഗ്ഗ7:/ഴ്ച)
ஒருசிலர், "கனடாவில் இருக்கின்ற மகளோட போய் இருந்து கொண்டாவாக்கும்” என்றும் தங்கள் கணிப்பை சொல்கின்றனர்.
எந்த விதமாகவோ சந்தையில் இருந்தபடியே சின்னாயி இதையெல்லாம் ஒன்றும் விடாமல் நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டாள்.
சந்தையில் மீன் விற்றுக் கொண்டிருக்கும் போது தனக்குப் பக்கத்திலே இருந்து வியாபாரம் செய்யும் மச்சாள் உறவு முறையானவளுக்கு இப்படி அவள் சொன்னாள். :
‘முதலியார் வீடு இனி என்னுடைய மகனுக்குத்தான் சீதனமாக வரப்போகுதடி கடைசிக் காலத்தில அந்த வீட்டில இருந்து தான் எனக்குச் சாக விருப்பம்” பழக்கம் விட்டுப் போகாததால் கதையோடு தண்ணீரையும் அள்ளி அவள் தெளித்துக் கொணி டாள். அவளுடைய இனிய நினைவுகளிலே அது பன்னிரைப் போலவும் அவளுக்கு
இருந்தது.
ஆதவன், 2001
103

Page 59
தீ2ஆகும்ாந்தம்
உறவு உறவு என்றாலும்,
இத்தலை வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் சோர்ந்தவாறே சாய்ந்தபடி கிடந்தார் கணபதிப்பிள்ளை. அருகிலிருந்த மாமரத்திலிருந்து பழுத்த இலைகள் நிலத்தில் விழுவதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் மனதில் துளிர்த்து வளர்ந்திருந்த ஆசைகளெல்லாம் காய்ந்து சருகாகி உதிர்ந்து கொண்டிருந்தன.
அவருக்கு மட்டுமா?
இரவு லண்டன் தமிழோசைச் செய்தியைக் கேட்டதிலிருந்து கணபதிப்பிள்ளை வீட்டுக் குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருக்குமே அடி வயிற்றைக் கலக்கிக் கொண்டுதானிருந்தது.
104
 

z/lിക്രമിക്കാr Zff(o)
இதனால் வழமையாக காலைக் கருக்கலுக்கு முன்பாக படுக்கையை விட்டு எழும்பி விடுபவர்கள் வெய்யில் வந்த பின்பே சோர்வுடன் எழுந்தார்கள்.
செய்திப்பத்திரிகையைப் படித்த பின்பு அன்னத்துக்கும் வீட்டு வேலைகளைச் செய்ய கைகால் ஓடவில்லை. வெளி முற்றத்தையும் கூட்டிப் பெருக்கி அள்ளிப் போடாது, காலைப் பலகாரத்தையும் செய்வதற்கு மனமுமின்றி இடிந்து போய் சமையலறையில் உட்கார்ந்து விட்டாள். அம்மாவைப் போலவே பெண் பிள்ளைகள் இருவரும்.
米米米 本米来
ஊரிலே கைராசி இல்லாத தோட்டக்காரன் என்று பெயர் வாங்கிய கணபதிப்பிள்ளை பதினைந்து வருடங்களாக பயிர் விளைவித்து சொற் ப பிரயோசனத்துடன் வாழ்ந்து வந்தவர். ஆனாலும், உழுது உண்டு வாழ்தலைத் தவிர வேறு எத்தொழிலையும் செய்வதற்கு விரும்பாதவர். செய்கின்ற தொழிலையே தெய்வமாக மதித்துச் செய்து சீவியத்தைத் தள்ளி விட்டார். ஆனாலும் எத்தனை காலம் தான் இப்படியே துன்பத்தில் உழன்று காலம் தள்ளுவது.
‘அம்மா இப்படியே வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படியம்மா..? ரெண்டு தங்கச்சிமாரும் வளர்ந்த பிறகு சீதனத்திற்கு என்ன செய்யிறது.? மூத்த மகன் பூர்தரன் கேட்டான்.
ஏக்கத்துடன் மகன் கேட்ட கேள்வியில் அன்னமும் ஒருமுறை நிலைகுலைந்து விட்டாள். என்றாலும், வீட்டுப் பொறுப்பை நினைத்துப் பார்க்குமளவில் மகன் வளர்ந்து விட்டதைக் காணவும் மறுபுறம் அவளுக்குப் பூரிப்பும்
105

Page 60
ரீ2:அருவந்தம்
ஏற்பட்டது. ஆனாலும் ’அதுக்கெல்லாம் இப்ப ஏன் மோனே மனசை அலட்டிக் கொள்ளுறாய்? நீ மேல் படிப்பைப் படி, எல்லாம் காலம் வரேக்க கடவுளாப் பார்த்து என்னவோ வழிவிடுவார்’ கூறினாள் அவள்.
‘என்னம்மா சொல்லுறீங்க, இவ்வளவு காலமா பிறக்காத வழி இனி மேலும் எங்க பிறக்கப் போகுது. அப்பா வேற கிடந்து திண்டாடிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி நிலைமையிலை கிடந்து கொண்டு நெடுகலும் எங்களால இப்படி சீவிக்க முடியுமோ?”
‘அதுக்கு என்ன மோனே செய்யிறது. அப்பாவும் இயலும் மட்டுமாய் தோட்டத்தில கிடந்து மாயுறார். மனுசன் படுற பாட்டுக்கு பலன் கிடைக்குதில்லையே.”
அடுப்பில் தண்ணிர் பானையைத் தூக்கி வைத்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்த அன்னம், கண்களில் வழிந்த கண்ணிரை மகன் பார்த்து விடக் கூடாதென்ற எச்சரிப்புடன் கண்ணிரை அடுப்பு நெருப்புப் பக்கம் வடித்து விட்டு யன்னலுக்குக் கீழே போடப்பட்டிருந்த பலகை மீது வந்து ஆயாசத்துடன் உட்கார்ந்தாள்.
மகனுக்குத் தெரியாதா என்ன.
'அம்மா நீங்கள் கவலைப்படாதேயுங்கோ, எல்லோரையும் போல நாங்களும் செய்தா என்ன? மேல் படிப்புப் படிச்சு இந்த நாட்டில நான் என்னத்தைச் செய்யப் போறன். நானும் மற்றப் பெடியள் போல வெளிநாட்டுக்குப் போறன்’
படிப்பைக் கெடுத்து விடப் போகிறான் மகன் என்பதை அறிந்ததும் தாய்க்கு மனவருத்தமாகத்தான் இருந்தது.
106

Zuക്രമിക്കും. മഗ്ഗ/ഴ്ച)))))
ஆனாலும், என்ன செய்ய. சரி போறதெண்டாலும் காசுக்கு என்ன வழி..?
அவள் யோசித்துக் கொண்டு மகனைப் பார்த்த வண்ணம் இருந்தாள்.
‘அம்மா எங்களிடந்தான் தோட்டக்காணி இருக்கே! மாமாவிட்ட அதின்ரை உறுதியை ஈடு வைச்சு காசு வாங்கித் தந்தீங்களெண்டா வெளியால போய் கொஞ்சக் காலத்துக்குள்ள உழைச்சு திரும்ப மீட்டிடலாம்" காணியை ஈடு வைப்பதென்று சொன்னதும் அன்னத்துக்கு நெஞ்சுக்குள் இட்டு முட்டு வந்தது போல் வந்து அது மேலே குமிழிவிட்டு வருவது போலவும் ஏதேதோ செய்தது. அந்தப் பதினைந்து பரப்புத் தோட்டக்காணி அவள் சீதனமாகக் கொண்டு வந்த சொத்து. தனது இரு பெண் பிள்ளைகளுக்கும் கல்யாணமாகும் போது அதையே பகிர்ந்து கொடுக்க வேண்டுமென்று இருந்தவளுக்கு காணிக்கதை குழப்பத்தைத் தான் கொடுத்தது. என்றாலும் என்ன செய்வது, யோசிப்பம் என்று மட்டும் கூறினாள்.
米米米米米米米米米米米
வெய்யில் தணிய விட்டு இறைப்புத் தொடங்கியதால் தோட்டத்து வாழைக்குத் தண்ணிர் விட்டுக்கட்டி எல்லா வேலையையும் முடிக்க நன்றாய் இருட்டத் தொடங்கி விட்டது. பொழுதுபட்டு நேரம் செல்லவே கணபதிப்பிள்ளை வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இரவு சாப்பாட்டின் பின் மகன் சொன்ன கதையை ஒப்புவித்தாள் மனைவி. இரு பெண்களும் தாயுடன் சேர்ந்து நன்றாகப் பிற்பாட்டுப் பாடினார்கள். அந்த விஷயத்தை எல்லோரும் ஆதரிக்கையில் தனித்து தான் மட்டும் வேறுபட்டு
107

Page 61
1) On Aj. 27, cyezgouv//oduzigzn
நிற்பானேன். ரீதரனுக்கு இந்த விடயத்தில் வெற்றி கிடைத்தது.
மறுநாள் உற்சாகமாக எல்லோருக்கும் பொழுது விடிந்தது. கோப்பி குடித்த கையோடு காணி உறுதியைக் கையில் எடுத்துக் கொணி டு நம்பிக் கையுடன் கணபதிப்பிள்ளை அன்னத்துடன், செல்வராசா வீட்டுக்குச் சென்றார். காலை நேரம் உற்சாகமான பொழுதில் தங்கையுடன் அவள் புருஷனையும் கண்ட அண்ணனுக்கு யோசனையாகவிருந்தது.
செல்வராசாவும் தோட்டக்காரன் தான். இருந்தாலும் தோட்டத்து வரும்படியையே நம்பி வாழ்க்கையை ஒட்டுகின்றவராக இராது, தோட்டக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்குமிடையில் நின்று சமரசம் பேசி விளை பொருட்களை விற்றுக் கொடுக்கும் தரகர் வேலையையும் பார்த்து, சாதுரிய மாகப் பணம் பணி னும் திறமைசாலியாகவும் இருந்தார். இதனால், பணம் அவர் கையில் தாராளமாகப் புரண்டு கொண்டிருந்தது. இருக்கின்ற பணத்தை இரட்டிப்பாக்க வட்டிக்கு வேறு அவர் பணத்தைக் கொடுத்து வாங்கி முதலையும் பெருப்பித்துக் கொண்டிருந்தார்.
வாழ்க்கையில் உறவுக்காரர்களை கிட்ட அண்டாது தூர வைத்தே பழகிப் போனவர். காசு உதவி கேட்டால் எட்ட நின்றே பதில் சொல்லி நழுவி விடுகின்றவர்.
யோசனையுடன் நின்றாலும் வரவேற்றுக் கதைத்தார். தங்கையின் வேண்டுதலுக்கு மாத்திரம் கொஞ்சம் இளகிய மனதுடன் உதவுவதற்கு முன்வந்தார். இன்னும் ஒரு படி போய் காணி உறுதியை ஈட்டுக்கு எழுதி எடுக்காது
108

Zഗ്ലക്രമീമാr Zഗ്ഗZഴ്ചമ്മ)
நம்பிக்கையின் பேரில் பணத்தைச் சிறிது மாத வட்டி போட்டுக் கொடுப்பதற்கும் முன் வந்தார்.
பணம் கிடைத்ததும் பத்திரமாக அதையெடுத்துக் கொணி டு மகனுடன் கொழும் புக் கு வந்தார் கணபதிப்பிள்ளை. ஒன்றரை மாதம் வாடகை விடுதியில் இருந்து கொண்டு கொழும்பிலுள்ள அவரது நெருங்கிய உறவினரது உதவியுடன் தேவையான அலுவல்களைப் பார்த்து மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டுத் திரும்பினார்.
மகன் போய் மூன்று மாதங்களின் பின்பு அவன் ஜேர்மனுக்கு போய்ச் சேர்ந்து விட்டதான தகவல் குடும்பம் முழுவதையுமே குதூகலப்படுத்தியது.
இந்தக் குதூகலத்தின் பின் ஏற்பட்ட நிம்மதியுடன் சில மாதங்களும் உருண்டோடின. பின்னரே இச் செய்தி கிடைத்தது. அகதி அந்தஸ்து மறுக்கப்படடவர்கள் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள். இது இக் குடும்பத்திற்கு பேரிடியாக இருந்தது. இவர்களுக்கு LDL GLDT....?
பூரீதரன் ஜேர்மனியிலிருந்து திரும்பி வந்தால் பணமும் தொலைந்து போய்விட்டதாகத் தான் முடியும். இழந்த பணத்துக்கு இருக்கின்ற காணியை விற்றுத்தான் ஏற்பட்ட கடனை அடைக்க முடியும். அதன் பின்பு இரு பெண் பிள்ளைகளையும் எப்படிக் கரை சேர்ப்பது. நினைக்க நினைக்கத் தலை விறுவிறுத்தாலும் தாங்கிக் கொண்டு தோட்டத்துக்குப் போகப் புறப்பட்டு வெளி வாசலை அண்மித்தார் கணபதிப்பிள்ளை. அங்கே அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் செல்வராசா சிரிப்பின்றி
109

Page 62
മ് 27, 9ദ്രഗർഗ്ഗമ
உம் மென்று முகத்தை வைத் தவாறே நினி று கொண்டிருந்தார்.
சகலமும் அறிந்து விட்டுத்தான் அவர் பரபரப்புடன் கணபதிப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். கொடுத்த பணத்தை நினைக்க நினைக்க செல்வராசாவின் முகம் கடுப்பாகிக் கொண்டு வந்தது. பயப் பீதியில் வார்த்தைகளும் தடுமாறிக் கொண்டு தொண்டைக்குள் நின்றன. ஒழுங்காக மச்சானின் முகத்தைப் பார்ப்பதற்கும் விரும்பாதவராக பண விடயத்தை மாத்திரம் அழுத்தமாகக் கூற ஆரம்பித்தார்.
‘மச்சான் பேப்பரிலயும், றேடியோவிலையும் எல்லா விஷயத்தையும் அறிஞ்சன். எப்படியாகப் போகப் போகுதோ தெரியேல்லை; என்ன செய்யப் போறியளோ தெரியாது. எண்டாலும் மச்சான். உங்களுக்கும் எனக்கும் நல்லதான வழி ஒண்டை யோசிச்சுக் கொண்டு வந்திருக்கிறன்” என்று கூறி நிறுத்தினார்.
'சொல்லுங்கோ மச்சான்’ என்றார் கணபதிப்பிள்ளை.
'பெரிசா ஒன்றும் இல்ல. அண்ணன் தங்கச்சி எண்டாலும் எனக்கும் பெரிய குடும்பம் இருக்கு. பொறுப்பு இருக்கு. அதனால நீங்கள் மச்சான் அந்த உறுதியைக் கொண்டு வாங்கோ. அப்புக்காத்திட்டப் போய் எழுதிப்
போடுவம்.”
தினக்குரல், 2001
110

മ00ിക്രമീമാf Zഗ്ഗ7:/ഴ്ച))))
சக்கரம் சுழலும்
முன் னையைப் போல அக் கா இப் போது ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. கோயில்களுக்குப் போவதில்லை. நல்லநாள் பெருநாட்களில் கூட ருசியானதொரு கறி சமைப்பதில்லை. இதற்கெல்லாமாக ஏனோ இன்னமும் மறக்கமுடியாத அந்த வியாகுலம் அவளுக்குள் வியாபித்து வதைக்கிறது.
இதனால். அக்காவின் மனம் புண்படும்படி எந்த வகையிலும் நான் நடப்பதில்லை. இந்த வீட்டில் சொந்தமென்று அவளுக்குக் கூடப்பிறந்த தம்பி நான் ஒருவன் மட்டும்தானே இருக்கிறன் வேறுயார் இருக்கினம் அவளுக்கு ஆறுதலுக்கு.
‘’ சாப்பிட வாடா தம்பி. வந்து வேளைக்குச் சாப்பிடுராசா’ தோட்டத்தில் நடுகையிட்டிருந்த வெங்காயத்துக்கு மடைகட்டித் தண்ணிர் பாய்ச்சி விட்டு
111

Page 63
fX SS
മ്7, 9(ഗ്രാഗമ്മി
அந்த வேலையெல்லாம் முடிந்து இப்போதுதான் நான் வீட்டுக்கு வந்தனான். அக்கா கூப்பிட்ட கையோடு கை, கால் முகம் கழுவிக் கொண்டு சாப்பிடப் போய் உட்கார்ந்தேன். சட்டி மூடியைத் திறந்ததோடு கறிவாசம் மூக்கைத் துளைத்தது. உண்ணாவில் உமிழ் நீர் சுரக்க பசி வயிற்றை விறாண்டியது. கனகாலத்துக்குப் பிறகு அக்கா ஆட்டிறைச்சிக்கறி சமைத்திருக்கிறா. அவவுடைய முகத்தைப் பார்த்தேன்.
‘’ சங்கரப்பிள்ளையண்ணை கிடாயடிச்சவராம் ஒழுங்கேக்கிளால போகேக்கை என்னையும் கூப்பிட்டு பங்கு வேணுமோனி டு கேட் டார். கனகாலம் நீயும் ஆட்டிறைச்சிக்கறி சாப்பிட்டெண்டு நினைச்சு கொண்டரச் சொல்லி வாங்கினனாள்”
‘சாப்பாட்டுத் தட்டில் பொல பொல வென்றிருக்கும் புழுங்கலரிசிச் சோற்றைப் போட்டு ஆட்டிறைச்சிக் கறியையும் ப்ோட்டாள் அக்கா. கத்தரிக்காயிலும், ஒரு பாற்கறி வைத்து எலும்பைக் கொத்திப் போட்டு ஒரு மிளகுச் சொதியும் வைத்திருந்தா. எல்லாமே மிக இதமாக இறங்கியது.
'அக்கா நீங்களும் சாப்பிடுங்கோவன்?’ நான் கேட்டேன்.
“பொறுத்துச் சாப்பிடுகிறன் தம்பி. இப்ப எனக்குப் பசிக்கேல்லயப்பு. நீ தோட்டத்துக்க நின்று கொண்டு கஷ்டப்படுகிறவன். நல்லாய்ச் சாப்பிடவேணும். இந்த வெங்காய நடுகையோட நீயும் நல்லாய் மெலிஞ்சு போனாயப்பு. என்னோடை ஒட்டிக் கொண்டு எனக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கிற உன்னை இந்த நாலு வருஷமும்
112

മffക്രമിക്കാlr zg//ഴ്ച)))
கவனிக்காமல் இருந்திட்டன்ரா.” அக்காவின் விழிகளில் கண்ணிர் முத்துக் கோர்த்தது.
‘இதுக்குப் போய் ஏனக்கா அழுகிறியள்? எனக்கு நீங்க என்ன குறை விட்டனியள்? நீங்கள் அழுதால் எனக்கும் கவலையாகத்தான் வரும். கண்ணைத் துடைச் சிட்டு வேளாவேளைக் குச் சாப்பிடுங்கோ’ ஆதரவோடு நான் கூறினேன்.
‘தம்பி மரத்திலிருந்து நீ பிடுங்கி வைக்கோல் பெட்டிக்குள் வைச்ச கறுத்தக் கொழும்பான் மாங்காய் நல்லாய் பழுத்திட்டுதடா. வெட்டிப் பீங்கானில போட்டு அங்க வெளி மேசைக்கு மேல மூடி வைச்சுக்கிடக்கு எடுத்துச் சாப்பிடு’ நாலு வருஷத்தை அக்காவால் இப்பத்தான் உணர முடிந்திருக்கிறது. அத்தான் போன நாளுடனே அக்காவின் வாழ்வும் தங்கி விட்டது. இப்பத்தான் வெளியில் பாக்கிறாள்.
நானும் கையை அலம்பி விட்டு பழத்துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு ருசித்துப் பார்த்து ரசித்துச் சாப்பிட்டு விட்டு வெளியே மாட்டுக் கொட்டிலடியில் காற்றுப்படும்படி போய் இருந்தேன்.
என் அத்தான் செத்தாப் பிறகு இந்த வீட்டிலே எல்லாமே வெறுமையாகி விட்டது. எத்தனை மாடுகள் இந்தக் கொட்டிலிலே நின்று கொண்டிருக்கும்.
அத்தானை யாருக்கும் அவருடைய பெயரைக் சொல்லி தெரிய வைக்க வேண்டும் என்ற நிலையில்லை ஆவரங்கால் சவாரிக்காரன்’ என்று சொன்னால் போதும் கேட்பவர்கள் உடனே அவரது பெயரைச் சொல்லி விடுவார்கள்.
113

Page 64
0്. 7 പ്രശ്നംഗമഴ്ത്തി
சின்ன வயசிலேயே அப்பாவையும், அம்மாவையும் இழந்த நான் அண்ணி வீட்டாரோடு போய் இருந்து கொண்ட ஒரேயொரு அண்ணாவோடேயும் போயிருக்க விரும்பாமல் என்ரை அக்கா வீட்டில தான் இருக்க விருப்பப்பட்டு இங்க வந்திருந்தன். என்ன காரணமோ அக்காவுக்குப் பிள்ளை இல்லை என்கிறதால அத்தானும் பிள்ளையாக என்னை நினைத்துச் செல்லம் கொடுத்தார். எங்கே போனாலும் அத்தானுக்குப் பின்னாலேயே நானும் போவேன். பத்துவரை படித்ததற்குப் பிறகு அவருக்கு உதவியாய் எல்லா வேலைகளிலும் நானும் கூடமாட சேர்ந்து கொள்வேன்.
அத்தான் ஒரு சாவாரிப்பைத்தியம். அவரோடு திரிந்து மாடுகலைச்சு எனக்கும் சவாரியென்றால் சாப்பாடும் தேவையில்லை என்று ஆகிற்று. இதற்குப் பின் சவாரி நடக்கும் இடங்களுக்கு நானும் பறப்பெடுத்துக் கொண்டு அலையத் தொடங்கி விட்டேன். வன்னிப் பகுதிக்குப் போய் மாடுகள் பார்த்து வாங்கி வந்து, வண்டியில் பூட்டிப் பழக்கி நல்ல விலைக்கு அவைகளை அத்தான் விற்றுப் போடுவார். அங்கே போகும்போது துணைக்கு நானும் போவேன். முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பிலிருந்து தண்ணிர் ஊற்றுக்குச் செல்லும் பாதை வழியாக ஏழு மைல் பிரயாணம் செய்தால் கேப்பாப்புலம் என்ற கிராமம் வரும். இங்கே தான் நாங்கள் மாடுகள் பார்த்து விலை பேசி முடித்து அவைகளை அவிழ்த்துக்கட்டுவோம்.
எந்த வியாபாரமானாலும் நட்டம் போகாது இலாபமடைய அதிலேயுள்ள சூட்சுமம் தெரிய வேண்டும். மாட்டு வியாபாரம் என்றால் அத்தானுக்கு அத்துப்படி,
114

Zffക്രമിക്കാr Zഗ്ഗീ/ഴ്ചop
'தம்பி செல்வம் இங்கவாடா” என்று குரலில் தேன் தடவியிருக்குமாப்போல் கூப்பிட்டு எனக்கு மட்டும் கேட்க பல விஷயங்களை அவர் சொல்லித்தருவார்.
‘அந்த மாட்டுக்கு முதுகிலை விலங்குச் சுழி இருக்கடா. வீட்டில கொண்டு போய் கட்டினா மறியலுக்குப் போக வேண்டிவரும்” என்று சாத்திரம் சொல்வார்.
‘அந்த மா வெள்ளைக்கு ஏரியோட சுழி இருக்கே. அதுவும் வீட்டுக்கு நல்லதில்லையோ?” என்று என் சந்தேகத்தைக் கேட்பேன்.
’ஏரியோட சுழி இருந்தால் அது ராஜசுழி தம்பி, வீட்டுக்கு நல்லதடா’ என்பார்.
பசுமாடுகளை நாங்கள் வாங்குவதில்லை. நாம்பன் மாடுகளைத்தான் வாங்கிக் கொண்டு வோவோம். எப்போதும் நிறத்தை வைத்துத்தான் நாங்களும் வளர்க்கும் சொந்தக்காரர்களும் மாடுகளை குறிகாட்டிப் பேசுவோம். நொச்சிப்பூ நரையன், சந்தணக் கழுத்து மாவெள்ளை, கருங்கழுத்து வெள்ளை, கழுகு இப்படியெல்லாம் நிறத்தை வைத்துப் பெயரிட்டு எங்களுக்குள் வியாபாரம் பேசப்படும். மாட்டு வியாபாரம் லே சுப் பட்டதில் லை. ஆயிரக் கணக் கில வந்து குவியும் . ஆனால் , புதுக்குடியிருப்பிலிருந்து மாடுகளை ஆவரங்கால் மட்டும் நடத்திக் கூட்டிக் கொண்டு வருவது தான் பெரிய அலுப்பு. உடலெங்கும் வியர்வைத் துளிகள் பூத்து வழிய மூன்று நான்கு நாட்கள் நடைப்பயணத்தில் எனக்கு மூட்டு வலியும் முதுகு வலியும் வந்து விடும். ஆனால், அத்தானோ எதையும் தாங்கும் பாலைவனத்து ஒட்டகம் போல
115

Page 65
Σ
AO.
7 ഷഫ്രാ/nമ്മ
களைப்பில்லாமல் இருந்து கொண்டு ‘இந்தா . ஜிட். ஜிட் இந்தா..” என்று சத்தம் வைத்து மாடுகளை விரட்டிக் கொண்டு வருவார்.
ഉണ് ി (8 സെ உள் ள வர்கள் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு குத்துவதென்றால் அத்தானிடம் தான் வருவார்கள். மற்றவர்கள் தனக்குப் போட்டியாக மாடு வளர்க்கிறார்கள் என்று இவர் நகக் கண் அளவு கூட எரிச்சல் படமாட்டார். நல்லநாள் பார்த்துப்போய் அவர்கள் வளர்க்கும் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு குத்தி விடுவார் அந்தப் புண்ணும் மூன்று நாளுக்குள் மாறும்.
வன்னியிலிருந்து மாடு கொண்டு வந்ததன் பின்பு தனித்தனியாக மாடுகளைப் பிரித்து நானும் அத்தானும் அவைகளை வெருட்டி நடத்திப் பழக்குவோம். அதற்குப் பிறகு வண்டியில் பூட்டி இரண்டு பேர் நுகத்தில் பிடித்து ஒடச் செய்து படினத்துக்குக் கொண்டு வருவோம். 'இந்த மாட்டைக் கலைச்சுக் கொண்டுபோய் நடத்திக் கொண்டாடா பார்ப்போம்” என்று சொல்லி விட்டு அவர் தரை வெளியில் போய் நிற்பார். நானும் கலைத்துக் கொண்டு போய் நடத்திக் கொண்டு வருவேன். இப்போது தான் தனக்கென்று வண்டில் சவாரிக்குத் தகுந்த மாட்டை அவர் தெரிவு செய்வார். மாடு நடக்கும்போது முன்னங்காலை விட பின்னங்காலை அகலமாய் வைக்க வேண்டும். அதனுடைய நடையை வைத்துத்தான் ஓடக்கூடியதா? என்ற குறிப்புத் தெரியுமாம். இவைகளை அத்தான் தான் சொல்லித்தந்தார். இன்னொன்று ." சைக்கிள் ஓடும் வேகத்துக்கு மாடு நடக்க வேணுமாம்” அப்படியும் சொன்னார்.
'அதிகமாய் மாடுகள் மேச்சல் குறட்டைவிடும். அது
116

മേീബദ്ധം മറ്റ്രീ:/ഴ്ചദ്ധo)
நல்லது. ஆனால், படுத்துக் கொண்டு குறட்டை விடக்கூடாதடா அது நல்லதல்ல” என்றும் சொல்வார். இந்த மாடுகளுக்கெல்லாம் அத்தான் சொல்கின்றபடி பச்சரிசியை ஊறவைத்து அதற்குள் தவிடு கலந்து தீனி வைப்பேன். கிழமைக்கு ஒரு தடவை வெந்தயத்தை தண்ணிரில் ஊற வைத்து தவிட்டுடன் கலந்து கொடுப்பேன். எந்த நேரமும் வைக்கோல் தொட்டியில் இருக்கும் படியாகப் போட்டு அளவு தண்ணிர் வைத்துக் குடிக்கவிட்டு ஒரு பிடி பச்சைப் புல்லையும் அவைகளுக்குப் போடுவேன்.
வண்டில் சவாரி நடக்கும் நாளுக்கு முதல்நாள் மாடுகளுக்கு நாங்கள் சாப்பாட்டைக் குறைவாகவே போடுவோம். சவாரி நாளன்று மாடுகளுக்குத் தண்ணிரோ, சாப்பாடோ ஒன்றும் கொடுப்பதில்லை. அன்று அத்தானுக்கு உதவி செய்ய வென்று வந்து எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வீட்டிலே ஆட்டுக்கடா அடித்து பெரிய விருந்து நடக்கும்.
யாழ்ப்பாணத்தில் நடந்த வண்டில் சவாரிப் போட்டிகளிலே அத்தானும் எத்தனையோ தங்கப் பதக்கங்களை வென்றார். நீர்வேலித் தரவை, பினாக்கைத் தரவை, மான் பாய்ந்தான் வெளி, மூளாய்த்தரவை இங்கெல்லாம் நடந்த சவாரிப் போட்டிகளில் அடுத்தடுத்து அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. எல்லாப் பதக்கங்களையும் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து காலையும், மாலையும் பார்த்து கண்ணுக்குள் வைத்துக் கொண்டிருந்தார்.
இன்னமும் நீர்வேலித் தரவையில் நடந்த வண்டில் சவாரிப் போட்டி என் நெஞ்சத்தை விட்டு அகலாதி
117

Page 66
1) A.
Cn · (Zھڑڑھر02ZZZزZZ/ھرتخبر%کZ. c/
ருக்கிறது. பொன்னுத்துரை என்பவர் யாழ்ப்பாணத்தில் பழைய சவாரிக்காரன் என்ற விலாசக்காரர். அங்கே போட்டியில் பங்குபற்ற அவரும் வண்டில் மாடுகளைக் கொண்டு வந்திருந்தார். எங்களுடைய மாடுகளைப் பார்த்துவிட்டு. ‘மரங்கட்டக் கொண்டு வந்தனியோ இந்த மாடுகளை?’ என்று நக்கலாகக் கேட்டார். “கலைச்சுப் போட்டு விட்டதுக்குப் பிறகுதான் தெரியும்’ என்று அத்தானும் அடக்கமாகச் சொன்னார். ஆனால் பொன்னுத்துரையோ தனது புசு புசு மீசையை முறுக்கிக் கொண்டு,
‘ஆனானப்பட்ட ராசாக்களே என்னோடை சவாரி ஓடித்தோற்றுட்டினம். இவர் வந்து என்னோடை மாடுகலைச்சுவெல்லப்போறாராம்” என்று குத்தூசியால் குத்தியதைப் போல வலிக்கும் படி பேசினார். அவருடைய இந்த அர்ச்சனைகள் என் மனதையும் புண்பட்டுப் புரையோடச் செய்தது. என்றாலும் பொறுமை யோடிருந்தேன்.
அந்த நேரம், அங்கே ஒலிபெருக்கியில் இருந்து வந்த சத்தம் காதைக் குடைந்தது. எந்தத் தூரமும் இலகுவில் கடக்கும் என்று பார்வையாளர்கள் நம்பும்படி எல்லாரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டு எங்களுடைய மாடுகள் உஷாராகி நின்றன.
சமிக்ஞையோடு அத்தான் மாடுகளைக் கலைத்தார். களைக் காமலேயே அந்தப் போட்டியில் எல்லா மாடுகளையும் முந்திக் கொண்டு போய் அவைகள் எல்லைக் கோட்டைத் தாண்டின. இதேபோல கடைசிச் சவாரியிலும் ஓடி எங்களுடைய மாடுகளே வென்றன.
118

മറ്റ്രക്രിബ്വാ മഗ്ഗzá)
ஆனால், கடைசிப்போட்டியில் பொன்னுத்துரையின் மாடுகள் குறுக்க இழுத்துப் போய் அங்கு நின்ற ஒரு காரை, வண்டிலால் இடித்து விட்டுப் போய் விட்டன.
அதிலே தங்கப்பதக்கமும், பணப்பரிசென்றும் அத்தானுக்குக் கிடைத்தன. பொன்னுத்துரையோ தோல்வியைத் தழுவியதால் குன்றிக் குறுகி கூனிப் போனார். அவரிடம் நான் போய்."எங்களுடைய வண்டில் சில்லுக்கம்பு ஒடேக்க உங்களுக்கு தெரிஞ்சுதோ இல்லையோ’ என்று பகிடியாகக் கேட்டேன். விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வதைப் போல.
’அது உங்கடை றோதை சின்னனாக்கும்” என்று அவர் சமாளித்தார்.
இப்படி எத்தனை சம்பவங்கள் விடியும் வரை சொல்லிக் கொண்டிருந்தாலும் கதை முடியாது. ஆனால், அத்தானுடைய வாழ்வு முடிந்து விட்டது. ஆவரங்கால் சிவன் கோயில் திருவிழா வந்தால் எங்கள் பக்கத்திலிருந்தும் அவர் பக்கத்திலிருந்தும் உறவுக்காரர்கள் எல்லாம் வந்து இந்த வீடே நிரம்பி வழியும். அவர்களெல்லாம் வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது வெங்காயம், மிளகாய் என்று எங்கள் தோட்டத்தில் விளைந்த உணவுப் பொருட்களையெல்லாம் கூடை கூடையாகப் போட்டும், மூடை மூடையாகவும் அவர் கட்டிக் கொடுத்திருக்கிறார். இப்படியெல்லாம் கர்ணனைப் போல் அள்ளிக் கொடுத்த அந்தப் புண்ணியவானுக்கு நடந்ததை நினைக்க இப்போதும் என் நெஞ்சு வலிக்கிறது.
அந்தச் சம்பவம் நடந்த அன்று விடியவே ஷெல் வீச்சுச் சத்தம் படுக்கையிலிருந்து எல்லோரையும் எழுந்திடச்
119

Page 67
മ്7, 9Aംഗമജ്ജമ
செய்தது. நாளாந்தம் இது நடப்பது சகஜம் தான் என்று நினைக்காது எல்லாச் சனமுமே அன்று பதற்றமடைந்தனர். பலமுறைகள் பலாலியிலுள்ள இராணுவத்தினர் இப்படியாக அச்சுவேலி வரை முன்னேறி வந்து திரும் பிப் போயிருக்கின்றனர். ஆனால், அன்று நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்ததது. முன்பு நடப்பது போல இல்லாது இம்முறை மக்கள் குடியிருப்புப் பகுதியெல்லாம் கண்டபடி ஷெல்கள் விழுந்து வெடித்துச் சிதறின. வெள்ளென எழுந்து அத்தான் தோட்டம் பார்க்கப் போயிருந்தார். திடுமென நடக்கும் இந்தச் சம்பவத்தில் அவரை எங்கே போய் தேடிப் பிடிப்பதென்று எனக்கும் நடுங்கத் தொடங்கி விட்டது. இந்த நேரம்பச்சைத் தண்ணிர் கூட என் பல்லில் படவிலலை.
அக்காவோ படலையடிக்கும், வீட்டு வாசல் படிக்குமாய் மாறி மாறி நடந்து திரிந்து கொண்டு ‘அவரைக் காணேல்லயே. கடவுளே!. அவரைக் காணேல்லையே” என்று பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.
'அக்கா!. அத்தான் எப்படியும் எங்களைத் தேடிவந்து சேர்ந்திடுவார். எல்லாச் சனமும் வீட்டை விட்டு ஓடுகினம் நாங்களும் இந்த இடத்தை விட்டுப் போவமக்கா’ அந்தரப் பட்டுக் கொண்டு நான் நின்றேன்.
தயாராக எப்போதும் இருக்கும் அந்த இரண்டு உடுப்புப் பைகளையும் தூக்கி சைக்கிளில் கொழுவிவிட்டு அக்காவை கூப்பிட்டேன். மனமில்லாமல் அறையைப் பூட்டி விட்டு அக்கா சயிக்கிள் கரியரில் ஏறியிருந்தாள். நான் விரைவாக பெடலை மிதித்து புத்துரைக் கடந்தேன். அதற்குப் பிறகு ஆறுதலாக நீர்வேலிப் பிள்ளையார்
120

മറ്റ്രക്രിബദ്ധാr Zഗ്ഗ//ഴ്ച)
கோயிலடி மட்டும் போய் அங்கே கோயிலில் இருந்து கொஞ்சம் நாங்கள் ஆறினோம்.
அங்கே அக்காவை என்னால் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆவரங்காலில் உள்ளவர்களும் அங்கு எங்களைக் கண்டபோது பெரிய குண்டைத் தூக்கித் தலையில் போட்டது போல ஒவ்வொரு கதை சொல்லி விட்டுப் போனார்கள். ஒருவர்.
‘உன்ர புருஷன் கேட்டால் தானே நாங்கள் போகாத போகாத அங்க எல்லாம் மோசமாய் ஷெல் விழுகிது என்று தடுத்தும் மாடுகள் பாவம் கட்டை அவிட்டு கலைச்சுப் போட்டு வாறன் இல்லாட்டி கட்டில கிடந்து ஷெல்லடி பட்டுச் செத்திடுங்கள் இப்படித்தான் சொல்லிப்போட்டு வீட்டுப்பக்கமாகப் போனார்’ என்று முறைப்பட்டார். செத்தாலும் பரவாய் இல்லை நான் போய் அங்க அவரைத் தேடி வாறன்’ இப்படிச் சொல்லி அக்கா அழுதாள். நான் அக்காவைப் போக விடவில்லை. யாருமே அந்த இடத்துக்குப் போக முடியாத நிலையில் நானும் எப்படிப் போய் வருவேன்?
நாட்கள் கடந்தன. மாதங்கள் சென்றன. அத்தானைப் பற்றிய ஒரு தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்கு இருந்த நம்பிக்கையெல்லாம் நாளாக நாளாக அற்றுப் போய் விட்டன. இந்த வீட்டுக்குத் திரும்பி வந்த நாளிலிருந்து எங்களுக்கு எல்லாமே வெறுமையானதாகி விட்டன.
அத்தான் இறந்த பிறகு அக்காவைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு வந்து விட்டது. இதனால் எனக்கென்று எந்த வித சுயநல ஆசைகளுக்கும்
121

Page 68
Σ
ரீம் அரும்/மர்ந்தம்
எடுபட்டு அவைகளுக்கு நான் அடிமையாகுவதில்லை. அக்காவுக்குப் பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவவை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பதற்காகவே இப் போது நான் பாடுபட்டு உழைக்கின்றேன்.
இருந்தாலும் என்னையும் மீறி ஒரு ஆசை அது மனதில் அத்தானினால்தான் வளர்ந்தது. இந்த மாட்டுக் கொட்டிலில் சவாரி மாடுகள் நிற்க வேண்டும். தூசி பறக்கும் இடமாக விடாது இந்த இடத்தில் சாணி அள்ள வேண்டும். அத்தானைப் போல நானும் சவாரிக்காரன் என்ற பெயர் எடுக்க வேணும். இதையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கையிலே அந்தக் காலம் திரும்பவும் வரும் என்றே என் மனம் விரைவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. எல்லா சஞ்சலங்களிலும் இந்த நம்பிக்கை ஒன்றே இன்று எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. அக்கா இப்போ எனக்குப் பெண் பார்க்கவும் தொடங்கி விட்டாள்.
தினக்குரல், 2002
122


Page 69
அருணானந்தத்தினர் உ:ை
ரீ வி அருணானந்தத்தினர்
அடங்கி2 “மரத்தகர்கனை
இத்தத் தொகுதி ஈழத்துத் துதி2தொரு வரவு, அழுத்தட்கு னரதும் வாழ்வனுபவங்கனை தொட்கு எழுதி%ர்னார். தனர்ன்ெ அந்த உறுத்தலினர் வினை
| மாத்திரங்கள் அவருமே அது அவர் அட்ருசர் விரச்சினைக: வரகyதுர் உர்ைனன. இத்தன் அருணானந்தர் இதற்காகப்
தனக்குத் தெர்ந்த உைைக,
அதனோடமைவான குழலிலி செ2துர்ைண அருணாணத்தகம் த0 செ22 எணர்ணி2மை அவரது து
அருணானந்தம் சாதாரண 2/ரசாங்குவினர்தி செரண்ை இக்கதைகனின் தெரிகிறார். 2/2 க்காதவி உணர்ணினைத்
விசாலிக்கிறது.
ரீ வி அருணானந்ததும் என்ற ഴ്ത്ത്വബീജാണ് മേഴ്ത്ത് മ്ഗ്ഗ4 வணர்ச்சிக்கு அருகர் பணி2ாது கிர்ைறேனர்.

ή
リク
2/னர்னிரெண்கு சிறுகதைகர்ை உறுப்பதற்கிலி லை” எனர்த தமிழ் இலக்கி2த்திற்குப் அறக்கினதும், உதிர்த்தொழிரை அவரது பேனாவினாவி ஆசிர்2ர் எதிரே விர்ந்த சம்பவங்கனை D//rs egy»//7 L/ø94 37 L///å å கினர்2 கதைகனின் வருகினர்2 }க்குத் தெர்ந்தவர் ബ ஓர் தம் மாலி அறி2ப்பட்டன 9க2 படைப்து தேரக்குடை2 Izvory"Arz" z szýz/z Goodroøớigo 22a)//ý, மனிதரை விரச்சினைகனை வைத்து படைப் பாக்கம் ரது கால ஆளுமைகனை பதிவு
ணி அசைட2ானமே.
மனிதர்னர் கதை2ை எவ்வித
துணைவுசர் ಔ@@@7/7é அவரது கதர்பனை வானத்தில் 3772) sreč கொணர்கு
படைப் பரணி தனது வாழ்வினர் சமாக எழுதி எமது இலக்கி2 தேற வேணர்குமென்று வரதுர்த்து
சிெ, ஜோகநாதனர்