கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளாதார, அரசியல் பிரச்சினைகள்

Page 1
அரசியல்
* சனநாயகமும்
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அரசியல் கட்சிகள்
தகவல் தொடர்பு சாதனம்
பொருளாதாரம்
: Gorgeous cold
Giurgerasgoi வளர்ச்சியும்
அரசாங்க வரவு செலவுத் திட்ட
Cresso
வெளிநாட்டுதவிய pasießGib
 

மார்கா நிறுவகம் 1998

Page 2
மார்கா நிறுவகத்தின் நூல்நிலைய வசதிகள்
மார்கா நூல்நிலையத்தில் விசேடமாக இலங்கை மற்றும்
ஆசியப் பிரதேசங்களில் சமூக விஞ்ஞானங்களுடன்
தொடர்பான பரந்தளவான நூல்கள், பருவகாலச் சஞ்சிகைகள்
மற்றும் அறிக்கைகள் உள்ளன. இவற்றில் பின்வரும்
விசேடமான திரட்டுக்களும் காணப்படுகின்றன.
இலங்கை பற்றிய நூல் திரட்டுக்கள் மார்கா வெளியீடுகள் மார்கா நிறுவகத்தின் ஆய்வு அறிக்கைகள் ஏனைய ஆய்வு அறிக்கைகளும் வெளியீடுகளும் ஹன்சாட்
இலங்கைப் படங்கள் உலக வங்கி மற்றும் ஐ.நா. வெளியீடுகள்
நூல்நிலையத்தைப் பயன்படுத்த விரும்புவர் களுக்கு
மிகக் குறைந்த கட்டணத்தில் பின்வரும் வசதிகள் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளன.
ck அறிக்கைகளை ஒளிப்பிரதி செய்தல்
ck நூல்கள், வெளியீடுகள் பற்றிய கணனி
மயப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெறல்
k
நூற்பட்டியல் தொகுப்பு
பொதுமக்கள் நாளாந்த, மாதாந்த, வருடாந்த
அடிப்படையில் அங்கத்தவராகச் சேர்ந்து கொள்ள முடியும்.
கிழமை நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம்
மாலை 400 மணிவரை நூல்நிலையம் திறந்திருக்கும்
6 - இடம் 93/10 துட்டகெமுனு வீதி, கிரிலப்பன, கொழும்பு -ܠ

பாருளாதார, elgéuss பிரச்சினைகள்
(கட்டுரை-தொஇப்பு
பதிப் திகதி. திலக் சந்திரசேகர டி.எச்.சதிஸ் சந்திர
வெளியீடு மார்கா நிறுவகம் 93/10 துடடகைமுனு வீதி
கிருலப்பன
கொழும்பு-6 தொலைபேசி: 828544, 829013 G35T GOGOL DLGid: 828597 gÀNGSTU GJ5L.: marga@sri.lanka.net
5கம்
12
21
31
40
A9 se
63
71
79
87

Page 3
முதலாவது பதிப்பு:
பதிப்புரிமை:
ஆலோசனைக் குழு :
அச்சு பதிப்பு :
1998
மார்கா நிறுவகம்
கலாநிதி கொட்பிரே குணதிலக கலாநிதி உஸ்வத்த ஆராச்சி திருதிலக் சந்திரசிறி
யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் 48, B புளுமெண்டால் றோட் கொழும்பு -13

பொருளடக்கம்
பக்கம்
&lusio
சனநாயகமும் அதிகாரத்தவவாதமும்
உரிமைகள் 12
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 21
அரசியல் கட்சிகள் 31 தகவல் தொடர்பு சாதனம் 40
பொருளாதாரம்
வேலையின்மை 49 பொதுநலனும் வளர்ச்சியும் 56
அரசாங்க வரவு செலவுத் திட்டம் 63
பணவீக்கம் 71
தனியார் மயமாக்கல் 79
வெளிநாட்டுதவியும், முதலீடும் 87

Page 4
நோர்வே அரசாங்கத்தினால் (NORAD) வழங்கப்பட்ட நிதி உதவியின் மூலம் 1995 செப்ரெம்பர் மாதம் இக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசியல் சமூக மற்றும் பொருளாதாரம் பற்றிய சில விடயங்கள் தொடர்பாக அடிநிலை மட்டத்தில் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதற்கான ஒரு முன்னிட்டுத் திட்டமாக இது அமைந்திருக்கின்றது.
சனநாயக அரசாங்கத்தின் பண்புகள், சிவில் சமூகத்தின் பொறுப்புக்கள் ஆகியவற்றினை விளங்கிக் கொள்வதற்கான திறனை அதிகரித்தல் சனநாயக செயன்முறைகளில், உள்ளூர் அரசாங்க விவகாரங்கள் மற்றும் கொள்கை அமுலாக்கல் செயன்முறைகள் ஆகியவற்றில் சமூகத்தின் அதிகளவான பங்களிப்பினை உருவாக்கல், அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் சமூக நலன் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புக்களுடன் தொடர்புபடும் அடிப்படை விடயங்களை வரையறை செய்யவும், அரசாங்க வரவு செலவுத்திட்டம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வேலையின்மை மற்றும் அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தகவல்களை வழங்குவதுமே இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்களாகும்.
இந்நிகழ்ச்சித்திட்டம் 16 கருத்தரங்குகளினூடாக 6 கிராமங்களில் செயற்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்குகளில் கலந்துரையாடப்பபட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்நூலின் கட்டுரைகள் எழுதப்பட்டன.
இந்நூல் "நோராட்” நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வெளியிடப்படுகின்றது.

(6Ju6o

Page 5

ஜனநாயகமும் அதிகாரத்துவவாதமும்
(Democracy and Authoritarianism)
(1) அறிமுகம்
ஜனநாயகமும் அதிகாரத்துவவாதமும் அரசாங்கத்தின் இரண்டு வடிவங்களாகும். அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளபடி ஜனநாயகம் என்பது " மக்கள் அரசாங்கமாகும். அதன்படி மீயுயர் அதிகாரமானது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; அது மக்களால் நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது அவர்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட முகவர்மூலம் பயன்படுத்தப்படுகின்றது.” எந்தவொரு ஜனநாயகத்தினதும் இரண்டு முக்கிய அம்சங்களாக அரசியல் சுதந்திரத்தையும் மக்கள் தன்னாட்சியுரிமையையும் குறிப்பிடலாம். அதிகாரவர்க்க ஆட்சியானது, ஒருவர் அல்லது பலரால் ஆளப்படுவதாகும். இவ் ஆட்சிக்கு மக்கள் எல்லோரதும் ஆதரவு இல்லை. அண்மைக்காலங்களில் பல அதிகாரவர்க்க ஆட்சிமுறை ஜனநாயக ஆட்சி முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஜனநாயகத்திலே ஓர் எழுச்சி காணப்பட்டதுடன், 75 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரவர்க்க ஆட்சிமுறைக்குட்பட்ட நாடுகள் பலவற்றிலும் ஜனநாயக ஆட்சி மேற்கொள்ளப்பட்டது.
(2) அரசியல் முறைமையின் இயல்புகளை ஒருவர் எவ்வாறு
தீர்மானிக்கலாம்.
ஏதாவதொரு அரசியல் முறைமையினது குறிக்கோள் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளலும் அவற்றை நடைமுறைப்படுத்தலுமாகும். அரசியல் முறைமையை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை ஜனநாயகம் சார்ந்தது; ஜனநாயகமல்லாதது. இந்தப் பாகுபாடு திட்டவட்டமாக அரசியல் சார்ந்தது. மற்றும் பொருளாதார முறைமையுடன் முதலாளித்துவ, மற்றும் சோஷலிச அல்லது கம்யூனிசம்- இதனை
இணைத்துப் பார்க்கக்கூடாது.

Page 6
அரசியல் முறைமையின் இயல்பானது ஜனநாயகம் சார்ந்ததாகவோ அல்லது ஜனநாயகம் சாராததாகவோ இருக்கலாம். அவை கொள்கைகளைக் கருத்திற்கொண்ட அரசியல் தீர்மானங்களின் மூலமாக மேற்கொள்ளப்படலாம். தீர்மானங்களின் இயல்பில் அவை தங்கியிருக்கவில்லை; அவை பதவிக்கு வந்த வழிமுறைகளில் தங்கியிருக்கின்றன. அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் பேணப்படுகின்ற. சூழ்நிலையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தால், சுதந்திரமான முறையில் கலந்துரையாடல் களுக்கும் கருத்துரைகளுக்கும் இடமளிக்கப்பட்டால், அதனை ஒர் ஜனநாயகம் என முக்கியமாகக் குறிப்பிடலாம்.
சில காலமாக, ஜனநாயகம் சார்ந்த மற்றும் ஜனநாயகம் சாராத அரசாங்கங்களை அரசியல் யாப்பு ரீதியானது, அரசியல் யாப்பு ரீதியற்றது எனப் பிரித்துப் பார்க்கும் நடைமுறைகள் தம்மைத்தாமே ஜனநாயகம் சார்ந்தவை என அழைக்கும் பல்வகை அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட மயக்கநிலையைத் தவிர்ப்பதற்காக உண்டானதாகும். அரசியல் யாப்பினடிப்படையிலான ஜனநாயகத்தின் பிரதான இயல்பாக, ஆட்சியிலுள்ளவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாகவும் பக்கச் சார்பான முறையில் செயற்படுவதைத் தடுப்பதையும் உறுதி செய்வதாகவும் அமைந்தது. அத்துடன் சட்டத்தின் ஆட்சியின் கீழும் செயற்படுகிறது. இவ்வாறான சமூகங்கள் பன்மைத் தன்மை வாய்ந்ததாக இருப்பதுடன், முன்னணி நிலை வகிக்கும்” எந்தவொரு தனிக்குழுவும் அங்கு இல்லை. கொள்கை வகுப்போர் மீது பல்வேறு குழுக்களும் கணிசமானளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் காணப்படும். ஜனநாயகக் கோட்பாடுகளில் ஈடுபாடும் இருக்கும். அரசியல் எதிரணியும் அவர்களுக்கான சுதந்திரமும் ஏற்படுகின்றன.
(3) ஜனநாயகத்தின் பண்புகள் எவை?
ஜனநாயக முறைமையின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு
- மக்களின் இறைமை - அடிப்படை மனித உரிமைக்கு உத்தரவாதம்

(4)
- பெரும்பான்மையாட்சி - சட்டத்தின் ஆட்சி - சுதந்திரமான, நடுவுநிலையான தேர்தல்.
ஏனைய முக்கிய அம்சங்களாக, அரசாங்கத்தின் மீதான அரசியல் யாப்பினடிப்படையான வரம்புகள், சட்டத்தின் உரிய செயற்பாடு, சகிப்புத்தன்மையென்னும், விழுமியத்துக்கான வலியுறுத்தல்கள், விட்டுக்கொடுத்தலும், ஒத்துழைப்பும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பன்மைத்துவம் என்பவற்றைக் கூறலாம்.
மக்களது இறைமை என்றால் என்ன?
இறைமை என்னுங் கோட்பாடு ஜனநாயகத்தின் சாரமாகக் கருதப்பட்டது. இந்த எண்ணக்கருவானது அரசியலதிகாரத்தை மக்கள் மீது சுமத்துகிறது. வேறுமுறையில் கூறுவதானால், இந்த மக்களின் வலு அல்லது அதிகாரமானது தனிப்பட்ட ஆட்சியாளர் ஒருவரது அல்லது குறிப்பிட்ட வகுப்பினரின் அதிகாரத்துக்கு எதிரானது. சகல ஜனநாயக நாடுகளிலும் மக்களே அதிகாரத்தினதும் மூலமாகவும் ஆட்சியின் பாதுகாவலனாகவும் விளங்குவர்.
ஆயினும், மக்கள்’ என்ற சொல் சமுதாயத்திலுள்ள மக்கள் சகலரையும் கருதும். இது முழுச் சனத்தொகையையும் கருதுமாயினும் நன்கு ஒழுங்குபடுத்தப்படாத மக்கள் கூட்டம் திட்டமிட்ட அரசியல் செயன்முறைகளை பெறுப்பேற்கா. மக்களுடைய இறைமையானது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைக் கருதுவதுடன் வளர்ந்தோர் வாக்குரிமையுடனும் ஈடுபடுகிறது.
மக்களது இறைமை என்னுங்கோட்பாடு பெறுமதிவாய்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு:
- அரசாங்கம் மக்களின் நன்மைக்காவேயன்றி அதன் நன்மைக்காக
இருக்காது. - மக்களுடைய விருப்பங்களை வேண்டுமென்று மீறுதல் எதிராகக்
கிளர்ந்தெள வழிகோலும்.

Page 7
- பொதுசன அபிப்பிராயத்தை வெளிப்படுத்தச் சட்டரீதியான
வாய்ப்புகள்.
- அரசாங்கம் மக்களுக்குப் பொறுப்புவாய்ந்ததாக விளங்க வேண்டும். அதன் வழிமுறைகளாகக் காலாகாலம் நிகழும் தேர்தல்களும்
குடியொப்பமும் (Referendium) பயன்படும்.
அதிக்ாரத்தைப் பிரயோகிப்பதில் அரசாங்கமானது சட்டப்
படியேயன்றிப் பக்கச்சார்பாகச் செயற்படாது.
5) மனித உரிமை என்பதன் பொருள் என்ன?
ஜனநாயக சமூகமொன்றில் மக்கள் இயல்பான உரிமைகளைப் பெற்றிருப்பர்; அவை மாற்றப்படமுடியாதவை. ஆகவே ஜனநாயக அரசாங்கங்கள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். (அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும்) உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறான உரிமைகளே பிரசை ஒருவருக்குச் சுதந்திரமாகவும், தனது ஆளுமையைப் பூரணப்படுத்தவும் அவசியமான நிபந்தனையாக இருக்கும்.
அடிப்படை மனித உரிமைகளாவன: கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மத சுதந்திரம், கூடும் சுதந்திரம், சட்டத்தின் முன் சமபாதுகாப்புச் சுதந்திரம், உரியமுறையில் செயற்படும் சுதந்திரம் என்பனவாகும். ஒரு சுதந்திரமான சமுதாயத்தில் பிரசையொருவர் அனுபவிக்கும் உரிமைகள் இவையாவுமல்ல. உரிமைகள் யாவும் குடியுரிமை, பொருளாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகத்தில் பெறப்படும் ஏனைய உரிமைகள் மத்தியில் தொழிலுரிமை, மனுச்செய்யும் உரிமை, நிரந்தரமாக ஓரிடத்தில்
வசிக்கும் உரிமை, சொத்துரிமை என்பவற்றைக் கூறலாம்.
ஜனநாயகம் தொழிற்பட வேண்டுமானால், பிரசைகள் எல்லோரும்
அடிப்படை உரிமைகளை அனுபவித்தல் வேண்டும். அவையின்றி மக்கள்

அரசியல் அதிகாரத்தில் பங்கு கொள்ளமுடியாது, சமுதாயத்தின் அரசியல் வாழ்க்கைக்குப் பங்களிப்புச் செய்யவும் முடியாது. மக்கள் அவற்றை
அனுபவிக்காவிட்டால், அரசாங்கம் பக்கச்சார்புடையதாக மாறும்.
(6) பெரும்பான்மையாட்சி ஜனநாயகமாகுமா?
ஜனநாயகத்தின் இன்னொரு அம்சம் பெரும்பான்மையால் ஆளப்படுதலாகும். அரசாங்கமொன்றிலே மக்கள் நேரடியாக அல்லது தமது பிரதிநிதிகள் மூலம் தம்மை ஆள்வதினால் இறைமை நிலைபெறுகிறது என்பதுடன் அரசாங்கத்தின் கொள்கையிலும் அவர்கள் செல்வாக்குச் செலுத்துவர். ஆயினும் பிரஜைகள் எல்லோரதும் அபிப்பிராயங்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சமமான முறையில் செல்வாக்குச் செலுத்தும் என்பதை உறுதிசெய்யும் அரசுகள் இல்லை. ஆகவே ஜனநாயக முறையில் உள்ள அரசாங்கமானது அரசியல் கட்சிகள் மூலம் அல்லது கூட்டுக் கட்சிகளின் மூலம் உருவாக்கப்படும் போது ஆட்சியை
அமைப்பதற்குத் தேர்தலில் பெரும்பான்மைப் பிரதிநிதிகளை பெறல் வேண்டும்.
ஆனால், பெரும்பான்மையினால் ஆளப்படுதல் ஜனநாயகமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆட்சி மன்றிலே ஓர் அரசாங்கம் பெரும்பான்மையைப் பெறுமாக இருந்தால், பெரும்பான்மையென்ற பெயரில் சிறுபான்மையை அடக்கலாம். இதனை ஜனநாயகம் என அழைக்க முடியாது. சிறுபான்மையினரின் கருத்துக்கள் அனுசரிக்கப்படுகின்றன. தாம் அடக்குமுறைக்கு ஆளாகவில்லையென உணரும் பட்சத்திலேயே ஜனநாயகம் வெற்றியளிக்கக் கூடும். அரசியல் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதுடன் பிரஜைகள் எல்லோரும் தமது தீர்ப்புகளைச் சுதந்திரமாகவும் அடிக்கடியும் தீர்மானம் மேற்கொள்வோரின் பணிகளிலே எடுத்துக் கூறும் சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும். பதிலாக அரசும் சுதந்திரமான கலந்துரையாடல்களுக்கு இடமளித்தல் வேண்டும் என்பதுடன் மக்களும்
தொடர்ந்தும் அரசாங்கத்தில் பங்குகொள்ள வேண்டும்.

Page 8
(7) சட்டவாட்சி என்பது என்ன?
ஜனநாயக ஆட்சியிலே சகல பிரஜைகளும் சட்டத்தின்முன் சமமானவர் அல்லது சட்டத்தின் பாதுகாப்பைச் சமமாகப் பெறுவர். இது சட்டத்தின் முன் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது. அரசியல், சமயம் அல்லது சமூக அந்தஸ்து, நிறம் அல்லது பால் அடிப்படையில் வேறுபாடுகள் எவையும் காட்டப்படக் கூடாது. தனியாட்கள், வகுப்பு அல்லது இனத்திற்கு எதிரான சட்டரீதியான வேறுபாடுகள் எவையும் இல்லை. ஜனநாயக அமைப்பிலுள்ள மக்கள் சட்டத்துக்குக் கீழ்படிகின்றனர். ஏனெனில் அது அவர்களுடைய படைப்பாகும். ஆயினும்
மறைமுகமாகவுள்ளது.
மக்கள் எல்லோரும் சட்டத்தின் முன் சமமானவர் என்னும் எண்ணக் கரு சட்டவாட்சி என்பதால் கூறப்படும் அம்சமாகும். இதனை ஒவ்வொரு சுதந்திர சமுதாயத்திலும் காணலாம். முதலாவதாக இது சட்டத்தின் மீயுயர் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பக்கச்சார்பான அதிகாரமின்மையை இது குறிப்பிடுகிறது என்பதுடன் அரசாங்கத்தின் சகல செயல்களும் சட்டப்படி அமைய வேண்டும் என்பதையும் தருகிறது. இரண்டாவதாக, சட்டத்தை மீறுவோரைத் தவிர ஏனையோர் தண்டனைக்குட்படக் கூடாது. அவ்வாறான மீறுதல்கள் நீதிமன்றின் முன் சரியாக நிரூபிக்கப்பட வேண்டும். இறுதியாக, சட்டத்தின்முன் சமத்துவத்தையும் குறிப்பிடுகிறது.
(8) தேர்தலின் இயல்புகள் என்னவாக இருத்தல் வேண்டும்
ஒர் ஜனநாயக அரசாங்கமானது அதன் அதிகாரத்தை ஆளப்படுவோரின் முழுமையான சம்மதத்துடன் பெற்றுக்கொள்கிறது. ஆயினும் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவ அரசாங்கம் முழுமையாகத் தேர்தலிலேயே தங்கியிருக்கின்றது. தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக அமைய அவற்றுக்குக் குறிப்பான சில பண்புகள் இருத்தல் வேண்டும். தனியாதிக்கமுடைய அரசொன்றில் நடைபெறும் பொதுத்தேர்தல், தனிக்கட்சி அல்லது தனி வேட்பாளர் எவ்வித மாற்றுத் தெரிவுமின்றிப் போட்டியிட்டால் அதனை ஜனநாயகமென அழைக்க முடியாது.

சுதந்திரமான, நடுநிலையான மற்றும் ஜனநாயக ரீதியான பொதுத்தேர்தல் போட்டிவாய்ந்ததாக இருத்தல் வேண்டும். எவரொருவரும் போட்டியிடக் கூடியவராயிருத்தல் வேண்டும் என்பதுடன் போட்டி யிடுபவர்கள் அரசாங்கம் பற்றிய தமது விமர்சனங்களை அல்லது ஏனைய எதிரணிகளுக்கு எதிரான விமர்சனங்களைக் கூறக்கூடியவராக இருத்தல் வேண்டும். அவர்கள் கூட்டங் கூடுவதற்கும் இடத்துக்கு இடம் செல்வதற்கும் சுதந்திரம் இருத்தல் வேண்டும். தேர்தலானது பெருமளவுக்கு வயது வந்தோர் சனத்தொகையைக் கொண்டிருத்தல் வேண்டும். இத்தகைய தன்மை, அரசாங்கமானது ஒரு சிறப்புரிமையுடைய குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமாக இருக்குமாயின் அதுவும் ஜனநாயகமாகாது. காலாகாலம் தேர்தல் நடைபெறவேண்டும். இதன்பொருள் என்னவெனில் ஜனநாயகத்தில் அரசாங்கம் அல்லது நிருவாகத் தலைவர்கள் வாழ்நாள் முழுவதும் அல்லது நீண்ட காலத்துக்கு அதிகாரத்தில் இருப்பதற்காக வாக்களிக்கப்படவில்லை. ஓர் ஆட்சியை அதிகாரத்தினின்றும் விலக்க மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பதுடன் நீண்டகாலம் நம்பிக்கையை அனுபவித்தலையும் தடுக்கிறது.
(9) அதிகாரத்துவ வாதம் என்பதன் பொருள் யாது?
அதிகாரத்துவம், சர்வாதிபத்தியம் (Totalitarian) என்ற சொற்கள் அதிகாரத்துக்கு அடிபணியும் அரசுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. தனியாள் சுதந்திரத்துக்கு எதிரானது. ஆயினும் இவ்விரு ஆட்சிமுறையும் அதிகாரத்துவ ஆட்சிமுறையினவாகவும் இருந்தாலும் தற்காலப் பயன்பாட்டில் வேறுபாடும், சில வழிகளில் ஒத்த தன்மையும் உண்டு.
சர்வாதிபத்திய வாதம், தாராளவாதத்துக்கு எதிரானது எனினும் அதிகாரத்துவ அரசாங்க முறையின் உச்சத்தன்மை கொண்டது. இதனுடைய நோக்கும் இன்றுள்ள சமூகத் தொடர்புகளில் முழுமையான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டு வருதலாகும். சமூக வாழ்க்கையின் பூரணத் தன்மையானது அரசியல் ரீதியான
கட்டுப்பாடாகவே கருதப்படுகிறது. இதுவும் பல கருத்துக்கள்,

Page 9
சித்தாந்தங்களைக் கொண்டுள்ளன. சமுதாயமும் மக்களும் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் விளக்குகின்றன. இச்சித்தாந்தம் வழக்கமாக முன்னைய சமுதாயத்தை விமர்சிப்பதாயும், கருதிய இலக்கை அடைவதற்குத் தடையாகவுள்ள சக்திகளை விபரிப்பதாகவும், எதிர்கால சமுதாயம் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதாகவும், அவற்றை அடைவதற்குரிய வழியைக் கூறுவதாகவும் உள்ளது. சமுதாயமானது இச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்றும், அதனைக் கட்டியெழுப்புவதில் பங்குகொள்ள வேண்டுமென்றும் அதனை அடைய வேண்டுமென்றும் எதிர்
பார்க்கப்படுகின்றது.
மறுபுறத்தில் தற்கால அதிகாரத்துவமுறை ஆட்சி எப்பொழுதும் சமூக உறுதிப்பாட்டை மேற்கொள்ள முற்படுகின்றது. தன்னாதிக்கமுள்ள அரசியல் நிறுவனங்களை முழுமையாக அடக்கி ஒடுக்குவது நோக்கமல்ல. அத்தகைய முறைமைகளுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் என்னவெனில், இராணுவ ரீதியான அல்லது பழைமை பேணுவதிலுள்ள நாட்டமாகும்.
(10) அதிகாரவர்க்க அரசாங்கம் உருவானது எவ்வாறு?
அதிகாரவர்க்க ஆட்சிமுறை பல காரணங்களின் நிமித்தம் உருவானது. ஆனால், வழக்கமாகப் பொருளாதாரச் சீர்கேடுகள், போரில் தோல்வி அல்லது பழைய மரபுகளில் ஸ்தம்பிதம் அல்லது மக்களின் அக்கறையற்றநிலை என்ற காரணங்களால் நம்பிக்கையிழந்த நிலையில் இது தோன்றுகிறது.
எடுத்துக்காட்டாக, பொருளாதாரக் குழுவின் உறுப்பினர்கள் அல்லது சில வகுப்பினர் அரசியல் ரீதியான மாற்றங்களில் கவனஞ் செலுத்தும்போது, அதன் விளைவாகத் துரித நகராக்கம், கைத்தொழிலாக்கம் என்பன ஏற்படும்போது நடைமுறையிலுள்ளதைப் பாதுகாக்க அதிகாரவர்க்க ஆட்சியை உருவாக்க முயற்சியெடுக்கலாம். இம்முயற்சி அவர்களுக்குச் சாதகமாக இருக்கும். அவ்வாறான ஆட்சியின் மூலம் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திய நாடுகளாக
போர்த்துக்கல், ஸ்பெயின், ஆஜென்ரீனா என்பவற்றைக் கூறலாம். ஆரம்பத்தில்,

(1))
இந்நாடுகளில் நிலவுடைமையாளர் ஜனநாயகம் சாரா அரசாங்கங்களைப் பேணி வந்தனர். நகரம்வாழ்கைத்தொழிலாளர் குழாம், நகர கைத்தொழிலாளர் எழுச்சி அரசியலடிப்படையில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியமையைத் தமக்கு அச்சுறுத்தலாகக் கருதினர். புதிய நகரக் கற்றோர் குழாமானது பழைமைபேணும் நிலவுரிமையாளர் வகுப்பினரையும் நகரத் தொழிலாளரையும் பயமுறுத்தியது. இறுதியில், நகரக் கற்றோர் குழாமும் நிலவுரிமையாளரும் இணைந்து நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள அரசியல் இயக்கங்களுக்கு எதிராக அதிகாரவர்க்கத் தேசியவாதிகளுக்கு ஆதரவளித்தனர்.
தற்கால அமைப்பிலுள்ள இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றவும் அதிகாரவர்க்க ஆட்சியை அமைக்கவும் முயலலாம். நடைமுறையிலுள்ள அமைப்பு மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யவில்லை அல்லது தமது சுயவிருப்பினை நிறைவேற்றுவதற்கு இவ்வாறு நடந்துகொள்ளலாம். அரசியல் கட்சிகளும் ஏனைய குழுக்களும் வினைத்திறன் குன்றியவையாக இருந்தால் அவ் அமைப்பைக் கவிழ்க்க முற்படலாம். 1958 இல் பிரான்சின் ஆட்சிக்குட்பட்டிருந்த அல்ஜீரியாவில் இராணுவத்தின் மேலாதிக்கமும், பிரான்சில் கட்சியை ஏற்க எடுத்த முயற்சியும் குறிப்பிடத்தக்கவை. அல்ஜி ரியாவின் சுதந்திரப் பிரச்சினையில் பிரான்சிலிருந்த அரசியல் ஆட்சிகள் செயலிழந்தபோது மேற்கூறிய விடயம் இடம்பெற்றமை முக்கிய விடயமாகும். உண்மையான ஜனநாயக அரசாங்கங்கள் தோல்வியடையும்போது இராணுவ
ஆட்சியுடன் கூடிய நிறுவனங்கள் அதிகார பூர்வ நிலையை ஏற்கின்றன.
அதிகாரவர்க்க ஆட்சியின் தீர்மானம் மேற்கொள்பவர் யார்?
அதிகாரவர்க்க ஆட்சியின் பிரதான பண்புகளுள் ஒன்றாக அரசாங்கத்தின் தீர்மானங்கள் சமுதாயத்தின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படுதில்லை. ஆட்சியின் உருவாக்கத்துக்கும் அதன் வெற்றிக்குக் காரணமாகவிருந்த ஒருவர் அல்லது பலரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆட்சியானது மக்களின் சம்மதத்தில் தங்கியிருக்கவில்லை என்றால் சுதந்திரமான,நீதியான முறையில் தேர்தல் நடைபெறாது. அவ்வாறு தேர்தல் நடைபெற்றாலும் தனி

Page 10
வேட்பாளர் அல்லது தனிக்கட்சியே போட்டியிடும்; அவர்கள் மக்கள் விருப்பத்தைப் பிரதிபலிக்கமாட்டார்கள். அரச இயந்திரமானது சட்டவாக்கத்தில் ஈடுபடல் அல்லது ஆட்சி இடம்பெறாது. ஆனால் அரசாங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடும்.
(12) அதிகாரத்துவவாத அமைப்பில் கருத்து வேறுபாடுகளுக்கு
இடமுண்டா?
அதிகாரத்துவவாத ஆட்சி கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிப்பதில்லை. ஆகவே ஜனநாயக அமைப்பைப் போலன்றி, தன்னாட்சிகொண்ட 9) LU அமைப்புகள் அங்கு இல்லை. நிறுவனங்களை உருவாக்கவும் அவற்றின் குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்லவும் கருத்துக்களைப் பரிமாறவும் மக்களுக்குச் சுதந்திரமில்லை. சமுதாயத்திலே அரசியல் நிறுவனங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பழைய அரசியல் கட்சிகள் போதியளவு பிரதிநிதித்துவமின்மையாலும் தேசிய ஐக்கியத்திற்கான தேவைகளை நிறைவு செய்யவில்லை என்பதாலும் தடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அமைப்புகளான விவசாயிகள் அங்கம் கட்டுபாட்டின் கீழ் உள்ளன. அவை அரசாங்கத்தின் அவதானத்துக்குட்படுகின்றன; அரசாங்கத்துக்குப் பொறுப்புக் கூறுவனவாக உள்ளன. சமயச்சார்பான அமைப்புகள் அல்லது உயர்தொழில்சார் அங்கங்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டாமையால் அவை
கட்டுப்படுத்தப்படுவதில்லை.
(13) தொடர்பு சாதனங்களின் நிலைமை என்ன?
எதிரான கருத்துக்களையும், எதிரணியின் வெளிப்பாடுகளையும் பிரசுரிப்பதைத் தடுக்கும் முகமாக தொடர்பு சாதனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே தொடர்பு சாதனங்கள் பொதுசன அபிப்பிராயத்தை அல்லது விவாதத்துக்கு இடமளிக்கக் கூடிய வாழ்வை எடுத்துக்காட்டும் முகவராகச் செயற்படமுடியாது.
10

14)
மேற்கூறிய காரணங்களின் விளைவாக, அதிகாரத்துவ சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள் இந்தமுறையில் இருக்க முடியாது. எனவே சுதந்திரம் மற்றும் நீதியான முறையில் தேர்தல்கள் நடைபெறமாட்டா. பொதுசன அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இடமில்லை. இதன் விளைவு என்னவெனில், ஆட்சியாளர் ஒழுங்கான முறையின் பின்தொடரவோ அமைதியான மாற்றத்துக்கோ சந்தர்ப்பம் இல்லை. ஆட்சியைப் பின்தொடரும் சந்தர்ப்பங்களில் கிளர்ச்சிகள் ஏற்படும்போது சமூகங்கள் அவற்றை
எதிர்நோக்க வேண்டியுள்ளது.
11

Page 11
g) fig) LD56 (Rights)
(1) அறிமுகம்
அரசாங்கத்துக்கும் மற்றும் ஏனைய பிரசைக்கும் எதிராக உரிமைகளானது சட்டத்தினால் வலிந்து நிறைவேற்றமுடியும். ஒரு சுதந்திரமான மற்றும் சனநாயக சமூகத்தில் எல்லாப் பிரசைகளும் குறிப்பிட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனர். இவ் உரிமைகளின் முக்கியத்துவம் என்னவெனில் மக்கள் மனித ஆளுமையின் விருத்தி மற்றும் பொதுவான நலன் உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதே. சமூகத்தில் உள்ள ஏனைய பிரசைகள் தொடர்பான ஒன்றிணைந்த கடமைகளையும் இவ்வுரிமைகள் உறுதி செய்கின்றன. பிரசைகளுக்கு உரிமைகள் மறுக்கப்படும் பொழுது அது அவர்களைத் தாங்களாகவே விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களை மறுப்பதுடன் பின்தங்கியும்
விடுகின்றார்கள்.
(2) உரிமைகள் என்றால் என்ன?
வாழ்வில் ஒருவரின் நோக்கம் இன்னொருவரின் சிறந்த நிலையைக் குறிப்பதுடன் அந்த ஒருவருக்குச் சிறந்த நிலையை அளிப்பதுமாகும். இந்நோக்கங்களை அடைவதற்கு மிக அத்தியாவசியமான சமூக வாழ்வின் நிபந்தனைகளே உரிமைகள் எனப்படும். ஒருவரின் ஆளுமையைப் பூர்த்தி
செய்வதற்கு இவை மிக அவசியமானவை.
ஒரு நிறுவனத்தின் அல்லது இன்னொருவரின் பூரணத்துவமான ஆதிக்கத்தின் கீழ் ஒரு நபர் வாழ்ந்தால், அவர் எந்த விதமான
12

உரிமைகளையும் கொண்டிருக்கமாட்டார். இதனால் சுதந்திரமின்றி
உரிமைகளை அனுபவிக்க முடியாது.
ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இனத்துவ ரீதியான வாழ்வில் மாத்திரமே உரிமைகளின் முக்கியத்துவம் பிரதானமாகக் கருதப்படுகின்றது. இதற்கு மாறான ஒரு சூழ்நிலையில், சமூகம் என்பதே இல்லாத நிலையில், ஒரு தனிநபர் மாத்திரம் வாழ்ந்தால் அவருக்கு எல்லையில்லாத சுதந்திரம் இருக்கும். முன்னேற்றம் பெரிதாக ஏற்படா விட்டாலும் உரிமைகளுக்கான கேள்விக்கு இடமில்லை. ஆனால் ஒரு சமூகத்தில், தனிநபரொருவர் தனது வாழ்க்கையை விருத்தி செய்ய முயற்சிக்கும் பொழுது தன்னைப் போன்று ஏனையவர்களும் தான் கொண்டிருக்கும் அதே நோக்கினைக் கொண்டுள்ளவர்களாக உள்ளனர் என்ற உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் தமது உரிமைகளைத் தனியான முறையில் அனுபவிக்க முடியாது. ஒருவர் தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் பொழுது ஏனையவர்களின் சுதந்திரத்தினையும் மதித்து நடக்க வேண்டும். எனவே, உரிமைகள் சில பொதுவான நல்ல
விடயங்களுடன் தொடர்புபடுகின்றது.
சில உரிமைகள் சில தனிப்பட்டவர்களுக்கே இயல்பாக உரியது எனச் சிலர் உரிமை கோருகின்றனர். வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், சொத்து மற்றும் தொழில் ரீதியான சந்தோசம் என்பவற்றை இது உள்ளடக்குகின்றது. தனிநபர் மற்றும் சமூகத்தின் நலன் கருதி வேறு சில உரிமையாலும் அரசினால் நிரந்தர விதிகளாகக் கருதிப் பேணப்பட்டு வருகின்றது. உதாரணமாக, குறிப்பிட்ட வயதுக்குக் கீழான சிறுவர்களை வேலைக்கமர்த்துவதனைத் தடைசெய்யும் சிறுவர்கள் தொடர்பான
சட்டங்களைக் குறிப்பிடலாம்.
(3) உரிமைகளின் பல்வேறுபட்ட வடிவங்கள் எவை?
உரிமைகள் என்பது முதலில் சட்டரீதியான உரிமைகள், ஒழுக்கமுறை
உரிமைகள் என இரு பரந்த வகையாகப் பிரிக்கப்படுகின்றது.
13

Page 12
சட்டரீதியான உரிமைகள் சிவில் உரிமைகள், அரசியல் ரீதியான உரிமைகள் என மேலும் இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றது. இருப்பினும், சில உரிமைகள், உதாரணமாக ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் (Freedom of Assembly) என்பது இவ்விரு வகைகளுக்குள்ளும் அடங்குகின்றது. அரசியல் ரீதியான உரிமைகள் இல்லாத ஒரு ஆட்சி முறையில் சிவில் உரிமைகள் காணப்படுவதினால் இவ்வகைப்படுத்தல்
முக்கியமானது.
ஒழுக்கமுறை உரிமைகள் (Moral rights): சமூகத்தினால் பின்பற்றப்படும் அறவியலை (ethics) அடிப்படையாகக் கொண்டதே ஒழுக்கமுறை உரிமைகள், இவற்றினைச் சட்ட ரீதியான செயன்முறை மூலம் நடைமுறைப்படுத்த முடியாது. ஏனெனில் அவை சட்டரீதியான
பின்னணியைக் கொண்டிருக்கவில்லை.
சிவில் உரிமைகள்: மனிதனுக்கு ஒரு முன்னேற்றகரமான சிறந்த வாழ்வை வழங்குவதற்கு சிவில் உரிமைகள் மிக மிக அத்தியாவசியமானவை. மனிதனின் சொத்து மற்று வாழ்க்கை என்பவற்றினை மகிழ்ச்சியாகக் கழித்தல் மற்றும் பாதுகாத்தல் என்பதுடன் இவ் உரிமைகள் தொடர்படுகின்றன. இவ்வுரிமைகளைத் தனி நபர்களும், அரசாங்கமும் தானாகவும் மீறுவதற்கு எதிராக அரசினால் இவ்வுரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். சனநாயக அரசுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட
சில பிரதான சிவில் உரிமைகள் பின்வருமாறு:
* வாழ்வதற்கான உரிமை.
* தன்னாட்சி உரிமை.
* சுதந்திரமான நடமாடலுக்கான உரிமை * சமய மற்றும் மனச்சாட்சிச் சுதந்திரத்துக்கான உரிமை * பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமை * ஒன்றிணைந்தியங்கும் சுதந்திரத்திற்கான உரிமை
14

* சட்டத்தின் முன் சமனான உரிமை * சொத்தினைக் கொண்டிருப்பதற்கான உரிமை * வேலைக்கான உரிமை
* ஒப்பந்தம் செய்வதற்கான உரிமை.
அரசியல் ரீதியான உரிமைகள்: ஒரு சனநாயக சமூகத்தின் அரசாங்கத்தில் மக்கள் பங்கு கொள்கிறார்கள் என்பது அரசியல் உரிமைகளின் சிறந்த வெளிப்பாடாக உள்ளது. ஒரு சனநாயகம் செயற்படுவதற்கு, அங்குள்ள பிரசைகளினால் அரசியல் உரிமைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சில முக்கியமான அரசியல்
உரிமைகள் பின்வருமாறு :
* வாக்களிப்பதற்கான உரிமை
* தெரிவு செய்யப்படுவதற்கான உரிமை * பொது அலுவலகத்தை வைத்திருப்பதற்கான உரிமை
*அதிகார சபையின் நடைமுறைக் கெதிராக மனுசெய்வதற்கான உரிமை.
* அரசாங்கத்தினைக் குறை கூறுவதற்கான உரிமை.
(4) அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?
மனிதனினதும், சமூகத்தினதும் இருப்பிற்கான அடிப்படையாகக் கருதப்படும் உரிமைகளே அடிப்படை உரிமைகள் எனப்படும். சனநாயக அரசுகள் இவ்வுரிமைகள் முழுச் சமூகத்தினாலும் அனுபவிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் திட்டத்தில் உள்ளடக்கி வைத்துள்ளன. சனநாயக அரசாங்கம் பெரும்பான்மையின் அரசாங்கம் என்பதினால் சிறுபான்மைப் பிரிவினருக்கு எதிராகப் பாரபட்சம் இடம் பெறலாம் என்பதினால் இது மிகவும் அவசியமாகின்றது. அடிப்படை உரிமைகளானது அரசியல் சட்டத்தில் ஒருமுறை உள்ளடக்கப்பட்டு, நீதி
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அவை மீற முடியாதவையாகவும்
15

Page 13
நீதிமன்றச் சட்டங்களின் ஊடாகப் பாதிக்கப்பட்ட பிரசைகள் பரிகாரம் தேட முடியும். அடிப்படை உரிமைகளானது வாழ்வதற்கான உரிமை, பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சமய மற்றம் மனச்சாட்சிச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், சட்டத்தினால் சமமாகப்
பாதுகாக்கப்படும் உரிமை என்பவற்றை உள்ளடக்குகின்றது.
(5) சனநாயக சமூகத்தில் எத்தகைய இடத்தினை உரிமைகள்
கொண்டிருக்கின்றன?
ஒரு சனநாயக சமூகத்தில் உரிமைகளானது அரசுக்கு எதிராகச் செயற்படுத்தப்படுகின்றது. ஏனெனில் உரிமைகளில் சமூக வாழ்வு தங்கியிருக்கின்றது. ஒரு சனநாயக அரசு, சமூகம் மற்றும் மனித ஆளுமைகளில் இவ்வுரிமைகள் இரண்டறக் கலந்தது எனக் கருதுகின்றது. இதன் கருத்து என்னவெனில் அவ்வுரிமைகளை அரசு உருவாக்கவில்லை என்பதே. அவற்றினை ஒதுக்கிவிடமுடியாது. ஒரு சனநாயக அரசு அவற்றினைப் பாதுகாத்து அவற்றுக்கு உத்தரவாதம் வழங்கவேண்டும். இவ்வுரிமைகளை ஒரு சிலர் மாத்திரம் அனுபவிப்பதற்கான சந்தர்ப்ப்ம் கிடைத்தால் அவர்கள் தனிச்சலுகை பெற்றவர்களாகி விடுவர் என்பதினால் எல்லாப் பிரசைகளும் இவ்வுரிமைகளை அனுபவிப்பதற்குத்
தேவையான சூழ் நிலையை உருவாக்கவேண்டும்.
(6) இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள
அடிப்படை உரிமைகள் எவை?
இலங்கைப் பிரசைகளின் அடிப்படை உரிமைகள் அரசியல் யாப்பின்
அத்தியாயம் II இல் விபரிக்கப்பட்டுள்ளது. அவற்றினைப் பின்வருமாறு
சுருக்கமாகக் கூற முடியும்:
* ஒவ்வொரு நபரும் சுதந்திரமாகச் சிந்திக்க, மனச்சாட்சியின்படி நடக்க
விரும்பிய, சமயத்தைப் பின்பற்ற அருகதையுடையவர்.
16

* எந்த நபரையும் சித்திரவதைக்கோ அல்லது மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற மற்றும் தரக்குறைவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தவோ முடியாது.
* சட்டத்தின் முன் எல்லா நபர்களும் சமமானவர்கள். அத்துடன்
சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்.
* தனது சொந்த மதத்துக்குரிய பொது வழிபாட்டு இடங்கள், பொதுசனப் பொழுது போக்கிடங்கள், உணவுச்சாலைகள், பொதுசன சிற்றுண்டிச் சாலைகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றுக்கு செல்வதற்கு இனம், மதம், மொழி, சாதி அல்லது பால் என்ற காரணத்தினைக் காட்டி எந்த நபரையும் தடுக்கவோ அல்லது நிபந்தனை விதிக்கவோ முடியாது. Y
* சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட நடைமுறைகளுக்கு எதிராக எந்த
நபரையும் கைது செய்ய முடியாது.
* ஒரு செயலுக்கு அல்லது இழைக்கப்பட்ட தவறின் அடிப்படையில் குற்றம் புரிந்ததாக எந்த நபண்ரயும் குற்றவாளியாகக் கருத முடியாது. குற்றம் இழைத்தாகக் கருதப்பட்ட அதே காலத்தில் நடைமுறையிலுள்ள தண்டத்துக்கு மேலாக மிகக் கடுமையான
தண்டம் எந்தக் குற்றத்துக்கும் விதிக்கப்படலாகாது.
ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றுக்கு அருகதையுடையவர்:
- பேச்சுச் சுதந்திரம் - அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம்
- சங்கத்தில் ஒன்றிணைவதற்கான சுதந்திரம். - தொழிற்சங்கங்களில் இணைவதற்கும், அமைப்பதற்குமான சுதந்திரம்.
17

Page 14
- சமயம் அல்லது வழிபடுதலில் நம்பிக்கை, பின்பற்றல், நடைமுறை
மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம். - இலங்கைக்குள்ளே சுதந்திரமாக நடமாடுவதற்கும், வசிப்பதற்குமான
சுதந்திரம் - இலங்கைக்குத் திரும்பி வருவதற்கான சுதந்திரம்
(7) அடிப்படை உரிமைகளை மீறுவதற்கெதிரான எத்தகைய
தீர்வுகள் இலங்கையில் காணப்படுகின்றன.
இலங்கையில் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு எதிரான பிரதான பாதுகாப்பு அரசியல் யாப்பின் 17வது உறுப்புரையில் உள்ள ஏற்பாடுகளே. இவ் ஏற்பாடுகளில் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளின் கீழ் அறுகதையுடைய ஒரு நபர் நிறைவேற்று அல்லது நிர்வாக ரீதியா- நடவடிக்கைகளினால் அவரது உரிமைகள் மீறப்பட்டால் அல்லது அடிக்கடி பாதிக்கப்பட்டால் அது தொடர்பாக உயர் நீதி மன்றத்துக்கு விண்ணப்பிப்பதற்கு ஒவ்வொரு
நபரும் உரித்துடையவர்.
இன்னுமொரு பாதுகாப்பு, 1996 யூலையில் பாராளுமன்றச் சட்டத்தினால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலம் வழங்கப்படுகின்றது. இச்சட்டமானது சனாதிபதியினால் ஐந்து அங்கத்தவர்கள் கொண்ட ஆணைக்குழுவை நியமிப்பதற்கு ஏற்பாட்டினைக் கொண்டுள்ளது. மனித உரிமை மீறல் நிகழ்வுகளை இவ் ஆணைக்குழுவுக்கு தனது சொந்த விருப்புக்கேற்ப விசாரணை செய்வதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதுடன் மேலே கூறப்பட்ட அரசியல் யாப்பின் 17 ஆவது உறுப்புரை ஏற்பாடுகளுக்கு மாறாக, பிரசைகளினால் கொண்டுவரப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களையும் கவனத்திற் கொள்ளும், அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய மனித உரிமைகள் தொடர்பாக, அவற்றினைத் தடுப்பதற்கான பொருத்தமான முன் நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்வதற்கும் இவ் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது.
18

8. இவ்வுரிமைகள்
இவ் எல்லா உரிமைகளும் பரந்த பொறுப்புக்களையும், கடமைகளையும் இன்றியமையாததாக்குகின்றது. உதாரணமாக, வாக்களிப்பதற்கான ஒரு பிரசையின் உரிமையானது தமது சார்பாக யார் ஆட்சி செய்ய வேண்டுமென்பதை ஆறிவுபூர்வமாகத் தீர்மானிப்பதற்கான பொறுப்புடைமையுடன் தொடர்பைக் கொண்டுள்ளது. பிரசைகள் தமது சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய விடயங்களைப் பற்றி அவர்கள் அறிவூட்டப்படுவதற்கான முக்கிய தேவையை வேண்டி நிற்கின்றது. அரசாங்கக் கொள்கையுடன் தொடர்பான விடயங்களைக் கலந்துரையாடலும், ஒன்று கூடவும் அவர்களின் குரல்கள் உரத்து ஒலிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட சலுகை பெற்றவர்களையே பேண முற்படும். இதனால் அதிகாரம் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதுடன் பிரசைகளினால் அனுபவிக்கப்பட்ட
சுதந்திரமும் உரிமைகளும் இழக்கப்பட நேரிடும்.
பிரசைகள் தமக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட சலுகைகளாக உரிமைகளைக் கருதக்கூடாது. இவ்வுரிமைகள் ஒரு சமூகத்தில் வாழும் மக்களுடன் தொடர்பானது. சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களினால் அங்கீகரிக்கப்படும் வரைதான் இம் மக்களின் இருப்பு நீடிக்கும். ஒரு சனநாயகத்தில் பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மிக முக்கியமான உரிமையாகும். அத்துடன் விவாதிப்பதற்கான மற்றும் கலந்துரையாடுவதற்கான உரிமை ஒன்று கூடுதல் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை என்பனவும் உரிமைகளை அனுபவிக்கும் ஒருவருக்கு மிக முக்கியமானது. ஒரு சமூகத்தில் பல்வேறு நம்பிக்கைகளும், சிந்தனை நோக்கும் காணப்படுவதுடன் எல்லாப் பிரசைகளும் இவற்றினை வெளிப்படுத்துவதற்கான சமமான உரிமைகளைக் கொண்டுள்ளனர். தம்மிலும் வேறுபாடான
கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களுடன் சகிப்புத் தன்மையைக்
19

Page 15
கடைப்பிடிப்பது பிரசைகளின் பொறுப்புடைமையாக இருப்பதுடன் அவ்விடயம் தொடர்பான உடன்படிக்கையை அடைவதற்கான தேவை
ஏற்படும் பொழுது இணக்கத்துக்கு வருதலும் முக்கியம்.
பிரசைகள் தமது உரிமைகளை அனுபவிக்கும் பொழுது அது மற்றவர்களினைப் பாதிக்காது இருக்கவேண்டும். ஒருவர் தனது சொந்த வீட்டில் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் அவருடைய அயலார்களை இடையூறு செய்தலாகாது. இக் கடமைகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் சட்டத்தினைப் பொருட்படுத்தாமலேயே செய்யமுடியும். ஏனெனில் அயலவர்களை இடையூறு செய்தல் பொதுசன அமைதியின்மைச்
சட்டத்திற்கு எதிரானதாகும்.
எனது பிரசைகளின் உரிமையானது அவர்கள் வாழ்கின்ற சமூகத்தின் நலனுடன் இறுக்கமாக இணைந்துள்ளது. ஒரு பிரசை தனது சமூகத்தில் தனது உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவாக ஏனையவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பது போன்று தனது ஏனையவர்கள் அவர்களது உரிமைகளை அனுப்பவிப்பதற்கு ஏதுவாகத் தனது சொந்தக் கடமைகளையும், பொறுப்புக்களையும் மேற்கொள்ளவேண்டும். சமூகத்துக்கு இடைஞ்சலாக இல்லாது இருக்கும் வரை பிரசைகள் தமது தன்னாட்சியுரிமையை அனுப்பவிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
20

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்
(Proportional Representation)
(1) அறிமுகம்:
தற்காலப் பிரதிநிதித்துவ சனநாயக ஆட்சியில் நடுநாயகமாக விளங்குவது பொதுத்தேர்தலாகும். அவ்வாறான அரசாங்கம் தனது அதிகாரத்தை மக்களிடமிருந்தே பெறுகின்றது, காலத்துக்குக் காலம் நடைபெறும் தேர்தலின் மூலம் அந்த அதிகாரம் மக்களால் கொடுக்கப்படுகிறது. பொதுத் தேர்தல் நடைபெறும் முறை வெகுவாக விமர்சிக்கப்படுகின்றது. ஏனெனில் ஏதாவதொரு பிரதிநிதித்துவ ஆட்சியும் சமுதாயத்தின் கருத்துக்களைப் பிரதிபலித்தல் வேண்டும். எடுத் துக்காட்டாக, சாதாரண பெரும்பான்மையுடன் தெரிவான பிரதிநிதியொருவர் யாருடைய வாக்குகள் மூலம் வந்தாரோ அவர்களுடைய கருத்துகளைப் பிரதிபலிக்கவேண்டும். இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதி நிதித்துவமானது ஆட்சிமன்றத்திலே முறையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துகின்றது எனக் கூறப்படுகின்றது.
(2) விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்பது என்ன?
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்பது, பொதுசன அபிப்பிராயத்தில் சகல பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதுடன் ஆட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதில் அவர்களுடைய வாக்குபல விகிதத்திற்கும் உத்தரவாதமளிக்கிறது. இந்த முறையின் கீழ் பொதுத்தேர்தலில் கட்சியொன்றினால் வெல்லப்பட்ட ஆசனங்களின்
வீதாசாரம் வாக்குகளின் விகிதாரத்துக்கேற்ப அமையும். இங்கு
21

Page 16
பெறப்படும் ஒவ்வொரு வாக்கும் கணக்கிற்கொள்ளப்படுகின்றன. அவை அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை ஏற்றுக்கொள்வதுடன் பல அங்கத்தவர் தொகுதிகளிலேயே அவை இடம்பெறலாம்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவதற்குக்கும் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்திற்குமிடையே வேறுபாடுகளைக் காணலாம். சிறுபான்மைப் பிரதிநிதித்துவமானது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதாகும். இது வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படைப் பலத்தினால் அமைவதன்று. விகிதாசாரப் பிரதிநிதித்துவமாயின், சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படும் பிரதிநிதித்துவமாகும்.
(3) விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் பல்வேறு வடிவங்கள்
உள்ளனவா?
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் பல முறைகள் உள்ளன. இவை தனி மாற்றுவாக்கு, இரண்டாவது -வாக்குச்சீட்டுடன் கூடிய மாற்று வாக்கு, தேசம் முழுவதற்குமான பட்டியல் முறை அல்லது வரையறுக்கப்பட்ட நிருவாகப் பிரதேசத்துக்கான பட்டியல் முறை. தனிமாற்றுவாக்கு முறையும் பட்டியல் முறையும் டென்மார்க், நோர்வே, சுவிற்சலாந்து, பெல்ஜியம்,
போர்த்துக்கல் போன்ற நாடுகளில் உள்ளன.
(4) தனிமாற்று வாக்கு முறை எப்படி நடைமுறைப்
படுத்தப்படுகிறது.
தன்ரிமாற்று வாக்கு முறை பட்டியல் முறையிலும் பார்க்கக் கூடுதலாகப் பயன்படுகிறது. 1857 இல் தோமஸ் ஹெயர் (Thomas Hare) என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஹெயர் (ypsop (Hare System) என்றும் இதனை அழைக்கின்றனர். ஆயினும் இத்தகைய கருத்தை முதன்முதலாக முன்வைத்தவர் ஹெயர் என்பவரல்லர். 18 ஆம்
22

நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இந்த முறையைப் பற்றிப் பிரான்ஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலும் கலந்துரையாடப்பட்டன. இதனை விருப்பத்துக்குரிய முறையெனவும்
அழைக்கலாம்.
இந்த முறையின்படி, ஒரு தேர்தல் மாவட்டத்திலுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இடம்பெறும், வாக்காளருக்கு தனிவாக் கொன்றை அளிக்க உரிமையுண்டு. வாக்குச்சீட்டிலே தாம் விரும்பிய வேட்பாளருக்கு விருப்பின் அடிப்படையில் 1, 2, 3 என
அடையாளமிடவேண்டும்.
ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதற்குக் குறிப்பிட்ட எண்ணிகையான வாக்குகளைப் பெறவேண்டும். இவ்வாறான வாக்கு எண்ணிக்கைப் பங்கீட்டைத் தீர்மானிப்பதற்கும் பல முறைகள் உள்ளன. பொதுவாக, இப்பங்கீடானது, மொத்தமாகக் கிடைத்த வாக்குகள் நிரப்பப்பட வேண்டிய ஆசனங்களின் தொகையால் வகுக்கப்படுகின்றன. ஆயினும், இந்த முறையின் மூலம் சில சமயங்களில் சரியான முடிவுகள் பெறப்படுவதில்லை. பின்வரும் முறை வழமையில் பயன்படுகிறது.
பங்கீடு மொத்தவாத்த்களின் எண்ணிக்கை
ஆசன எண்ணிக்கை +1
ஒரு தொகுதியில் ஜந்து ஆசனங்கள் உள்ளன எனவும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 600 எனவும் கொண்டால் பங்கீடு 101 ஆக
இருக்கும்.
வாக்குகளை எண்ணும்பொழுது முதலில் முதலாவது விருப்பு எண்ணப்பட்டு, வேட்பாளர் பங்கீட்டுக்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றால் அவர் தெரிவு செய்யப்படுவார். அவருக்குக் கிடைக்கும் மேலதிக
வாக்குகள், வாக்காளரால் காட்டப்பட்ட இரண்டாவது விருப்பாக
23

Page 17
மாற்றப்பட்டு எண்ணப்படும். அவ்வாறே மூன்றாவது விருப்பாகவும், அதனைத் தொடர்ந்து மாற்றப்பட்டு தெரிவுசெய்யப்பட வேண்டிய வேட்பாளர்வரையில் எண்ணப்படும். வெற்றிபெறும் வேட்பாளரின் மேலதிக வாக்குகள் விருப்பின்படி ஏனைய வேட்பாளருக்கு மாற்றப்பட்டு, மிகச்சிறு தொகை வாக்கைப் பெறுவோருக்கும் வெற்றிபெறுவதற்குச் சந்தர்ப்பம் இழந்தோருக்கும் அவை மாற்றப்படும். இந்த முறையில் சகல வாக்குகளும் பயன்படுகின்றமை உறுதிசெய்யப்படும்.
மேற்கூறிய முறை சற்று விரிவான முறையாக இருந்த போதிலும் முன்னர் குறிப்பிட்ட நாடுகளில் பல மாற்றங்களுடன் கூடியதாகப்
பயன்படுகின்றது.
(5) பட்டியல் முறை எவ்வாறு இடம்பெறுகிறது?
பட்டியல் முறையின்படி, வேட்பாளர்கள் இடம் பெறும் கட்சியொழுங்கில் குழுக்களாகப் பிரிக்கப்படுவர். வேறு வகையால் கூறுவதானால், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் உள்ள ஆசனங்களுக்கு ஏற்ப கட்சிகள் பட்டியலைச் சமர்ப்பிக்கும் வாக்காளர் தமது விருப்பின்பேரில்
வாக்களிக்கலாம்.
தனிமாற்றுவாக்கு முறையிலுள்ளது போல வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய இங்கும் பங்கீடு அவசியமானது. குறிப்பிட்ட தேர்தல் தொகுதியிலே ஒவ்வொரு கட்சியும் வென்ற ஆசனங்களைத் தீர்மானிக்கும் பொருட்டு, மொத்த வாக்குகள் பங்கீட்டினால் பிரிக்கப்படும்.
இந்த முறைமை தனிமாற்று வாக்கு முறைமையிலும் பார்க்க
V இலகுவானது. இங்கு வாக்காளர் ஒருவர் தாம் வாக்களிக்கும் கட்சியையே தெரிவு செய்ய வேண்டும். ஏனைய விடய்ங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. ஆயினும், இந்த முறைமை பல்வேறு விமர்சனங்களுக்கு
உட்பட்டுள்ளது.
24

(6) இலங்கை கடைப்பிடித்த முறைமையில் காணப்பட்ட
அச்சங்கள் எவை?
இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பின் மூலம் அறிமுகமானது. அன்று வரையில் நிலவிய தனியங்கத்தவர் தொகுதிகளுக்கு மாற்றாக இது அமைந்துகொண்டது. அந்த முறையின்படி 1972 இன் அரசியல் யாப்பு 75,000 பேருக்கு ஒரு அங்கத்தவர் என்றமுறையில் ஆட்சிமன்றத்தில் உறுப்பினர்களைத் தீர்மானித்தது. ஓர் அங்கத்தவர் பிரதிநிதித்துவம் செய்தவற்குக் கணிசமான தொகையாக இது கருதப்படலாயிற்று. இதனடிப்படையில் நாடு பல தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பொதுத்தேர்தலில் கூடுதலான வாக்குகளைப்பெற்ற வேட்பாளர் குறிப்பிட்ட தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டார். இவற்றுடன் பல அங்கத்தவர் தேர்தல் தொகுதிகளும் முக்கியமாகச் சிறுபான்மை யினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இருந்தது. இவர்கள்
பெரும்பான்மையினர் மத்தியில் பரவலாக வாழ்ந்து வந்தனர்.
(7) இதனுடைய குறைகள் எவை?
இங்கு பல்வேறு குறைபாடுகள் எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றிலொன்று, இந்த முறைமையானது தேர்தல் தொகுதிகளின் அரசியல் சார்ந்த அபிப்பிராயங்களை வெளிக்கொணரவில்லை என்பதாகும். உதாரணமாக, வெல்லப்பட்ட வாக்குகள் வேட்பாளர் பலரிடையே பிரிக்கப்படும்போது, ஒரு வேட்பாளர் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50+1% குறைவாகப்பெற்றும் தேர்தல் தொகுதியில் அவருக்கு இடமுண்டு. உதாரணமாக 1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் இடம்பெற்ற தெல்தெனிய, கொத்மலை ஆகிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் இங்கே தரப்படுகின்றன:
25

Page 18
தெல்தெனியா - 1977
வேட்பாளர் பெற்ற வாக்குகள் வீதசாரம்
ஐ.தே.க. 8, 404 37.18 பூநீல.சு.க. 7,267 32.15
சுயேட்சை 6,634 29.35 கொ.க 179 0.79
சுயேட்சை 122 0.53
22,606 100.00
கொத்மலை 1977 வேட்பாளர் பெற்ற வாக்குகள் வீதாசாரம் பூநீல.சு.க. 11, 505 42.58 ஐ.தே.க. 7,640 28.27 சுயேச்சை 7,536 27.84
சுயேச்சை 297 1.06
LD.g.U... 59 0.25 27,019 oooo
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஆசனங்களின் தொகை, அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதாசாரத்துக்கு ஏற்ப
அமையவில்லை.
நாடளாவிய முடிவுகள் -1977 கட்சி அளிக்கப்பட்ட வீதாசாரம் பெற்ற ஆசனங்கள்
வாக்குகள்
ஐ.தே.க 3,179,221 50.92 140 த.வி.கூ. 421, 488 6.75 18 ழநீல.சு.க. 1,855,331 29.72 8 இ.தொ.கா. 62,707 1.00 1 ஜ.வி.மு. 225,317 3.61
26

மேற்கூறிய முறைமையின்கீழ் வேட்பாளர் தெரிவின் விருப்பங்களின் பாதிப்புப் பற்றி எடுத்துக் காட்டப்பட்டது. இன்னொரு குறைபாடு என்னவெனில் பிரதிநிதிகள், தமது தெரிவை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தேசியரீதியான விடயங்களிலும் பார்க்கக் குறுகிய விவகாரங்களிலேயே கூடிய கவனஞ் செலுத்த வேண்டியிருந்தது.
(8) அதனுடைய சிறப்புகள் என்ன?
தனியங்கத்தவர் தேர்தல் தொகுதிமுறையில் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் ஒன்று, பிரதிநிதிக்கும் வாக்காளருக்குமிடையே நெருங்கிய தொடர்பு பேணப்படுதலாகும். ஒரு வேட்பாளர் எப்பொழுது தான் போட்டியிடும் பிரதேசத்துக்குரியவர் என்பதால் வாக்காளர் சிறந்த ஒருவரைத் தெரிவுசெய்வர். வேட்பாளரும் தொகுதியில் நன்கு தெரிந்த ஒருவராக இருப்பார். பொதுசன அபிப்பிராயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நன்கு தெரிந்தவராக இருப்பதால் தொடர்ந்து தேர்தல் தொகுதியின் ஆதரவைப் பெறமுடியும். இது இலகுவானதொரு முறையுமாகும். தேர்தல் தொகுதி ஒப்பீட்டளவில் சிறிதாக இருப்பதால் வேட்பாளருக்குத் தேர்தல் செலவும் குறைவு.
(9) விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இலங்கையில் எவ்வாறு
செயற்படுகிறது.
இலங்கை விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் செயற்பாட்டுக்காக 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் அடிப்படையில் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் நிர்வாக மாவட்டத்துடன் ஒத்துச்செல்கின்றன. வன்னியென்பது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களையும் யாழ்ப்பாணமானது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களையும் கொண்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல எனப்
பெயரிடப்பட்டுள்ளது.
27

Page 19
பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களுள் 196 பேர் மேலே கூறிய தேர்தல் தொகுதி அடிப்படையிலும் 29பேர் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் கிடைத்த வாக்குகளினடிப்படையிலும் நியமிக்கப்படுவர். 196 உறுப்பினர்களுள் 160 பேர் தேர்தல் தொகுதியடிப்படையில் மாவட்டங்களின் வாக்காளர் தொகைக்கு ஏற்ப விகித அடிப்படையில் நியமிக்கப்படுவர். எஞ்சிய 36 பேர் முதலில் ஒன்பது மாகாணங்களுக்கும் மாகாணத்துக்கு 4 பேர் வீதம்
சமமாக வழங்கப்படுகின்றனர்.
தேர்தல் செயல் முறைகள் சம்பந்தமாக, அரசியல் யாப்பு எடுத்துக்காட்டுவது என்னவென்றால், அங்கீகாரம் பெற்ற ஏதாவது அரசியல் கட்சி அல்லது சுயேச்சையாகப் போட்டியிடும் குழுவினர் ஒரு வேட்புமனுவை முதன்மையொழுங்கினடிப்படையில் பெயர்களை வரிசைப்படுத்தி, தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் தொகைக்கு ஏற்ப சமர்ப்பிக்கவேண்டும். இது மூன்றிலொரு பங்கினால் அதிகரிக்கப் பட்டுள்ளது.
வாக்காளர் ஒருவர் ஒரு வாக்கை அளிக்கலாம். எனினும்
விருப்பினடிப்படையில் 3 வேட்பாளருக்கு அடையாளமிடலாம்.
ஏதாவதொரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு மொத்தவாக்குகளில் இருபதிலொரு பங்குக்குக் குறைவாகக் கிடைக்குமானால், வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு அவை தகுதியற்றவை.
வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்குப் பெற்றுக் கொள்ளவேண்டிய வாக்குப் பங்கீட்டினைத் தீர்மானித்தல் வெற்றிபெறும் வேட்பாளரைத் தீர்மானிக்கும் முறையும் அரசியல் யாப்பில் எடுத்துக்
கூறப்பட்டுள்ளன.
இலங்கையில் பின்பற்றப்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துக்கும் அரசியல் யாப்பிலுள்ள குறிப்பிட்ட விரிவான ஏற்பாடுகளுக்கும்,
28

பிரதிநிதிகளின் ஸ்ரீவு குறித்த சட்ட இணைப்புகளுக்கும் சார்பாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
(10) விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் சிறப்புகள் என்ன?
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்குச் சாதகமாக முன்வைக்கப்படும் முக்கியமான வாதம் என்னவெனில், அது தனிப்பெரும்பான்மையிலும் பார்க்கக் கூடுதலான சனநாயகப் பண்புடையது. அத்துடன் சமுதாயத்தில் காணப்படும் வேறுபட்ட அரசியல் அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துவதுடன், சிறு குழுக்கள், சிறு அரசியல் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்கும்.
இந்த முறைமையின் கீழ் சிறுபான்மையினரும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதால், பல இனச் சிறுபான்மையினர் வாழும் நாட்டுக்குப்
பொருத்தமானது.
சாத்ாரண பெரும்பான்மை முறைமையின்கீழ் வேட்பாளர் பலருக்கிடையில் வாக்குகள் பகிரப்படும் போது, சிறுபான்மை வாக்குகள் பெறும் வேட்பாளரின் பிரதிநிதித்துவத்தைத் தவிர்க்கிறது.
சனத்தொகையின் பருமனில் மாற்றம் உண்டாகும்போது, தேர்தல் மாவட்டங்களின் எல்லைகளைக் காலத்துக்குக் காலம் மாற்றவேண்டிய தேவையை இது தவிர்த்துக்கொள்கிறது.
பிரதிநிதிகள் தேசிய நலன் சார்ந்த விடயங்களில் சுதந்திரமான முறையில் ஈடுபாடுகாட்டும் சாத்தியக் கூறுகளை ஏற்படுத்துகின்றது. அவர் வாக்காளரிலிருந்தும் தேசிய விவகாரங்களிலிருந்தும் விலகியிருக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு.
அரசியல் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெறக்கூடிய
வாய்ப்பையும் இது குறைத்துக்கொள்கிறது. எனவே மூடத்தனமான நிருவாகத்தைத் தவிர்க்க உதவும்.
29

Page 20
அரசியலில் கூடுதலான தனியாட்கள் பங்கேற்க உதவுவதால், ஒரு சில அரசியல் கட்சிகளின் செல்வாக்கினைக் குறைத்துக்கொள்கிறது.
(1) விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் சிறப்பின்மைகள்
விகிதாசாரப் பிரதிநிதித்துவமானது ஒரு சிக்கல் வாய்ந்த முறையெனவும், அரசியல் செயல்முறைகளில் சமுதாயம் ஆர்வத்தை இழக்கும் எனவும் கூறப்படுகின்றது. இந்த முறைமையின் சிக்கல்வாய்ந்த தன்மைகள் சாதாரண வாக்காளரைப் புத்திசாதுர்யமற்றவராக்குகின்றது.
இந்த முறையின் கீழ் பல கட்சிகள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதால் சிறு பெரும்பான்மையுடன் அல்லது கூட்டரசாங்கமாக அரசாங்கத்தை நிறுவும்போது அரசாங்கத்தில் உறுதியின்மை ஏற்படுகின்றது. கூட்டரசாங்கமும், மந்திரி சபையும் ஆரோக்கியமற்ற உடன்பாடுகளிலேயே கட்டியெழுப்படுகின்றன. உறுதியற்ற ஒர் அரசாங்கம் உறுதியான கொள்கையைக் கடைப்பிடிக்கவும்
தொடரவும் முடியாது.
இன்னொரு முக்கிய வாதமாக, கட்சிக் கட்டமைப்பில், முக்கியமான இடங்களை வகிப்பவர்கள் கூடுதலான அதிகாரத்தைப் பெறுவதால், வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றனர். கீழ்மட்டங்களிலிருக்கும் கட்சி அமைப்பாளரும், கட்சிப் பணியாளரும் வேட்பாளரின் கவனத்திற்குட்படுவது குறைவு என்பதால், இவர்களுடைய அபிப்பிராயங்களின் நன்மைகளைப் பெறமுடிவதில்லை.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழுள்ள தேர்தல் மாவட்டங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் ஏனைய முறைகளிலும் பார்க்க வேட்பாளருக்குக் கூடுதலான செலவினங்களை உண்டாக்கும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி இடைத்தேர்தலை நடத்தும் முறை இதுவரை வகுக்கப்படவில்லை என்பதால், பொதுத்தேர்தலுக்கு இடையே பொதுசன அபிப்பிராயத்தை அளவிடும் முறை இங்கு
காணப்படவில்லை.
30

அரசியல் கட்சிகள்
(1) அறிமுகம்
பாராளுமன்ற அரசாங்கம் எனப்படுவது முக்கியமாக மக்களின் பிரதிநிதிகளால் ஆளப்படுகின்றது. கூடுதலான சனத்தொகையைக் கொண்ட சிக்கலான சமூகங்களில் ஏதென்சில் நிலவியது போன்ற நேரடி சனநாயகத்தைப்பற்றி நாம் சிந்திக்க முடியாது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் ஆட்சி மன்றங்களில் மக்களது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இத்தகைய பிரதிநிதிகளுக்குச் சில நிகழ்ச்சித் திட்டங்கள் அவசியமென்பதுடன், அடிப்படைக் கோட்பாடுகளில் உடன்பாடுடையோரை ஒன்றுசேர்ப்பதும் அத்தியாவசியமானது. அரசியல் கட்சிய்ொன்றின் பிரதான தொழிற்பாடு இதுவாகும்.
(2) அரசியல் கட்சி என்பது என்ன?
ஓர் அரசியல் கட்சி என்பது என்ன என அறிந்து கொள்வதற்கு அரசியல் விஞ்ஞானிகளால் கொடுக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணங்கள் பயனுடையனவாக விளங்கும்:
* மனிதர் குழுவொன்று இணைந்து, தாம் எல்லோரும் உடன்பாடு கொண்ட சில குறிப்பிட்ட கோட்பாடுகள் மீதான தேசிய நலனைக்
கூட்டு முயற்சியின் மூலம் மேம்படுத்துதல்.
பிரசைகள் குழுவொன்று நன்கு அல்லது ஓரளவு
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். அவர்கள் ஓர் அரசியல் அலகாகச் செயற்படுவர். மற்றும் அரசியல் அதிகாரத்தைப்பயன்படுத்தி
31

Page 21
அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடையவராகவும் அதனுடைய
பொதுக் கொள்கையை மேற்கொள்ளுபவராகவும் இருப்பர்.
* சுயவிருப்பின் பேரிலான உறுப்பினரைக் கொண்ட ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு அரசியல் அதிகாரத்தை நோக்கமாகக்
கொண்டு தனது சக்தியை ஈடுபடுத்தும்.
* சில கோட்பாடுகள் அல்லது கொள்கைக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட அமைப்பு அரசியல் யாப்பின் துணையுடன்
அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு உதவியாக இருக்கும்.
சனநாயக அமைப்பொன்றில் அரசியல் கட்சிகள் என்பன நன்கு அல்லது ஓரளவு ஒழுங்கமைக்கப்பட்ட பிரசைகள் குழுக்கள் என விபரிக்கப்படுவதுடன், அவை தேசியக் கொள்கை பற்றிய பரந்த கோட்பாடுகளில் உடன்பாடு கொண்டிருக்கும். அத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றவும் முயலும். இவை தொண்டர் நிறுவனங்களாகவும் இருக்கும்.
3. அரசியல் கட்சிகளுக்கான தேவை என்ன?
பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் சிறந்த தொழிற்பாட்டுக்கு உறுதியான நிறுவன அமைப்புகள் இருத்தல் வேண்டும். அவை சமுதாய நோக்கில் பல குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறான நிறுவனங்கள் இல்லையெனில் அதன் பொருள் அங்கு ஒலிக்கும் வெறும் குரல்கள் தமது தனிப்பட்ட மனக்குறைவுகளுக்குத் தீர்வுகாண முற்படுகின்றன எனக் கூறலாம். ஒரு பிரிவினரின் விருப்பங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தன்னலக்குழுவே அங்கு இடம் பெறக்கூடும். ஆனால் அவர்கள் தமது நோக்கங்களை அடையும்வரை தொழிற் படுவார்கள். அதன் பின்னர் பிரிந்து விடுவர்ர்கள். அரசியல் கட்சிகள் உறுதியான நிறுவனமாக இருந்து இத்தேவையைப் பூர்த்தி செய்யும். தமது கொள்கைகளைப் பகிரங்கப்படுத்திப் பிரசைகளைத் தம்பால் ஈர்ப்பர்.
32

மக்களை நிரந்தர அமைப்புகளின் இசைவுக் குழுக்களாக ஒழுங்குபடுத்துவர். நன்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப - கட்சி யாப்பு- ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமைத்துவத்தின் கீழ் தொழிற்படுவர். தேர்தல் காலங்களிலே தொட்ர்ந்து தீவிரமாகச் செயற்பட்டு தமது செயல்திட்டங்களுக்கு ஆதரவு தேடும் வகையில் மக்களிடம் சென்று தாம் தேர்தலில் வெற்றியடைவதை உறுதிப்படுத்தும்
வகையில் வாக்காளரைத் தூண்டுவர்.
அரசியல் கட்சிகள், ஒருபுறத்தில் மக்களும் மறுபுரத்தில் அரசாங்கத்தில் தமது பிரதிநிதிகளுடனும் எதிர்க்கட்சியினருடனும் பொதுசன அபிப்பிராயத்தை வெளிப்படுத்தக் கூடியவிதத்தில் தொடர்பைப் பேணுவர். அரசாங்கம் தான் வகுத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான கோட்பாடுகளையும், மேற்கொண்ட் தீர்மானங்களுக்கான நியாயங்களையும் அரசியல் கட்சிகளின் மூலமே விளக்குகிறது. பதிலாக அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் தீர்மான்ங்களையும் செயற்பாடுகளையும் விமர்சிப்பதுடன், அவற்றை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பிரசாரங்களையும் மேற்கொள்கின்றன. மற்றும் பொதுக்கொள்கை மீதான முக்கிய பிரச்சினைகள் பற்றிய தமது கருத்தை வெளிப்படுத்தவும் மக்களைத் தூண்டுகின்றன, பொது விருப்பினை வெளிப்படுத்துதல் சனநாயகத்தின் மையமாகும். இவ்விருப்பினை உருவாக்கும் பிரதான முகவர்கள் அரசியல் கட்சிகளாகும். இவ்வாறான தொழிற்பாடுகளை நிறைவேற்றுதலின் மூலம் அரசியல் கட்சிகள் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் மக்களுக்கு
விடை கூற வேண்டியவர்களாக உருவாக்கியுள்ளன.
நவீன சனநாயகத்திலே அரசியல் கட்சிகள் இன்றியமையாதவை. ஏதேனியக் காலத்தில் நிலவிய நேரடி சனநாயக அமைப்புக்குப் பதிலாக இன்று தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அரசாங்கம் உருவாகின்றது. இவ்வாறான பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்கள் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் கட்சிகள்
33

Page 22
உடன்படுவது சாத்தியமாகாது. சட்டமன்றங்களில் பிரதிநிதிகள் யாவரும் தனிப்பட்ட முறையில் இயங்குவதைக் கட்சி முறைக்கான மாற்றுவழியாகக் கூறலாம். அவ்வாறான சூழலில் அரசாங்கத்தில் பிளவுகள் உண்டாகும். உறுதியான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் சிறந்த சிந்தனைகள் தோன்றா. அரசியல் கட்சிகளே தமது அமைப்பின் மூலம் தமது உறுப்பினர்களைப் பொதுக் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களின் மூலமாக ஒன்றுபடுத்துகின்றது. தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்சிக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றனர். பெரும்பான்மையைக் கொண்ட ஒரு கட்சி அரசாங்கத்தை அமைக்கக் கூடியதாகவுள்ளது என்பது மட்டுமன்றி அரசாங்கத்தை வலுவுள்ளதாகவும் ஆக்குகின்றது. அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் அமைப்பினுள்ளேயே மக்கள் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் மாற்று
அரசாங்கத்தையும் உருவாக்குகின்றனர்.
கட்சி முறையானது அதிகாரத்திலுள்ள கட்சியொன்றைத் தூக்கியெறிவதன் மூலம் மாற்று அரசாங்கமொன்றுக்குச் சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நீண்டகாலம் அதிகாரத்திலுள்ள ஓர் அரசாங்கம் ஊன்றிய நலன்களிலும் ஊழல்களிலும் ஈடுபடலாம். எதிர்க்கட்சியிலுள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்தைக் கைப்பற்றும் நோக்குடன் தொகுதிகளில் பல முறையீடுகளை மேற்கொள்ளலாம். இது மாற்றுக் குழுக்கள் சமுதாயத்திலுள்ளனவென்றும், மற்றும் புதிதாக அதிகாரத்தைப் பெறும் பொருட்டு பிரசைகளிடம் செல்லவேண்டும் என்பதையும் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு உணர்த்துகிறது. ஆகவே மக்கள் மாற்றங்களை விரும்பும் போது அரசாங்கத்தை மாற்றவும் அரசியல் கட்சிகள் சந்தர்ப்பத்தை வழங்குகின்றன.
மக்கள் பொது விடயங்களில் பங்கேற்கவும் அரசியல் கட்சிகள் சந்தர்ப்பத்தைக் கொடுக்கின்றன. சனநாயகம் வெற்றி பெறவேண்டுமாயின் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில்
புத்திசாதுர்யமான முறையில் பங்கேற்க வேண்டும். இவற்றைச்
34

செய்வதற்குத் தம்மைச் சூழவுள்ள அபிவிருத்திப் பணிகள் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான தேவைகளை நிறைவு செய்ய அவை செய்தித்தாள்களையும் சஞ்சிகைகளையும் பிரசுரிக்கும், பிரசாரப் பணிகளில் ஈடுபடும் மற்றும் செய்தித்தாள்கள் மூலமாகவும் கூட்டங்கள் வாயிலாகவும் தமது பிரச்சினைகளைக் கலந்துரையாடுகின்றன. அவை பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்கின்றன. அவ்வாறான நடவடிக்கைகள் தேர்தல் தொகுதி பற்றிய பார்வையை விரிவாக்குகிறது என்பது மட்டுமன்றிப் பிரசைகளின் ஆர்வத்தையும் தூண்டுகின்றது. இவ்வாறான பணியொன்றைத் தொடர்ந்தும் திருப்திகரமாகவும் மாற்றுவழியின் மூலமாகவும் நிறைவேற்ற முடியுமா எனச் சிந்தித்துப்
பார்த்தல் கடினமானது.
சனநாயக சமூகமொன்றில் அரசியல் கட்சிகளுடன் எல்லோரும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பர் எனக் கூறமுடியாது. அடிப்படையில் ஒவ்வொரு கட்சியிலும் ஈடுபாடுள்ள கட்சிப் பணியாளரும் ஈடுபாடு குறைந்த உறுப்பினர்களும் இருப்பர். பெரும்பாலான பிரசைகள் முறைசார்ந்த உறுப்புரிமையை எக்கட்சியிலும் பெறுவதில்லை. ஆயினும் குறிப்பிட்ட கட்சிகளில் பரிவுணர்வுடையவர்களாக இருப்பர். கட்சியில் காட்டப்படும் ஈடுபாட்டினளவு எப்படியாயிருந்தாலும் விருப்பின் பேரிலேயே ஒருவர் கட்சியைத் தெரிவு செய்து கொள்கிறார்.
இத்தகைய விருப்புகள் பொருளாதார மற்றும் சமூக இயல்புடையனவாக இருக்கக் கூடும். மக்களது கட்சி சார்பான ஈடுபாடு அவர்களுடைய பொருளாதாரச் செயற்பாடுகளில் தங்கியுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கையைப் பொருட்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். வேலை வழங்குநராக அல்லது வேலை செய்பராக இருக்கலாம், விவசாயம் அல்லது கைத்தொழிலில் ஈடுபடலாம். இவை யாவும் அவனுடைய தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தலாம். ஒருவருடைய பொருளாதார நிலைமையும் அது பற்றிய
நோக்கும் சொத்துக்கு உரிமை கொள்ளல் வாழ்க்கைத்தரம், வாழ்க்கைச்
35

Page 23
சூழல் ஒன்றில் நகர வாசியாக அல்லது கிராம வாசியாக இருந்தால் அவருடைய தெரிவைத் தீர்மானிக்கலாம். ஒருவர் சார்ந்துள்ள சமூக அமைப்பாகவும் அது விளங்கலாம். இன்னொரு காரணியாக நாட்டில் பெருமளவில் விரும்பப்படுகின்றது என அவர் கருதும் பொருளாதாரக்
கொள்கையாகவும் இருக்கலாம்.
சமய மற்றும் இன உணர்வுகளும் சில சமயங்களில் ஒரு கட்சிபற்றிய தெரிவைத் தீர்மானிக்கலாம். உண்மையிலேயே சில அரசியல் கட்சிகள் அத்தகைய அடிப்படையிலமைந்துள்ளன. ஆயினும், அரசியல் பிரசார நடவடிக்கைகளிலே சமய மற்றும் இனத் தகராறுகளைக் கொண்டுவருதல் தேசிய ஐக்கியத்தைச் சீர்குலைத்துவிடும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மத சார்பற்ற அரசியல் பாராளுமன்ற சனநாயகத்தை வலுப்படுத்துகின்றது என்பதுடன் மக்களது பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மாற்றியமைக்கும் தீவிர நிகழ்ச்சித்திட்டங்களை
அமுல்செய்யவும் உதவுகிறது.
கட்சிப் பற்றுதி என்பது சில சமயங்களில் மரபுரிமையானது என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய தொன்றாகும். இலகுவான முறையில் கூறுவதானால் தந்தை இருந்த அதே கட்சியியை மகனும் ஆதரிப்பதைக் கூறலாம். குடும்ப ரீதியான அழுத்தங்களும் ஒருவருடைய தீர்மானத்தில் செல்வாக்கை ஏற்படுத்தலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒருவருடைய பற்றுக்கோளிலும் பார்க்க தீர்மானத்தின் பங்கு குறைவாகவேயிருக்கும்.
இன்னொரு இலகுவான பகுப்பாய்வாக மாற்றங்கள் அல்லது நிலைமாற்றம் சார்பாகத் தனியாட்கள் கொண்டிருக்கும் கருத்துகளினடிப்படையில் பிரிக்கப்படுவதைக் கூறலாம். முதலாவதாக, சிலருடைய நோக்குகள். பழமை வாய்ந்தனவாக இருக்கும். அவர்கள் நிலைமைகளை உள்ளவாறே பேண விரும்புவர். சிலர் படிப்படியான மாற்றங்களை விரும்புவர். இன்னுஞ் சிலர் தீவிர மாற்றங்களில் நம்பிக்கை கொள்வர். பூரணமான மற்றும் புரட்சிகர
மாற்றங்களைக் கூட விரும்புவார்கள்.
36

(5) அரசியல் கட்சியொன்றின் விசேட இயல்புகள் எவை?
ஓர் அரசியல் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் பொதுக் கொள்கைகளை gip t'ju 60 Luj T 85ë கொண்ட பரந்த கோட்பாடுகளில் உடன்பாடுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இவ் உடன்பாடுகள் விரிவானதாக இல்லாவிட்டாலும் பிரதான குறிக்கோள்களிலும்
கோட்பாட்டளவிலும் உடன்பாடு காணப்பட வேண்டும்.
ஒர் அரசியல் கட்சி ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இந்நிபந்தனை முன்னைய நிபந்தனையான கோட்பாடுகளில் உடன்பாடு இருத்தல் வேண்டும் என்பதைத் தொடர்கிறது ஆயினும் பொதுக்கொள்கைகளில் உடன்பாடு காணல் கடினமானதாக இருக்கும். மக்கள் கட்சிகளின் பணிகள் பற்றியும் கருத்துகள் பற்றியும் அறிவதற்கு இவ்வாறான ஒழுங்கமைப்பு அவசியமானது. அரசியல் கட்சிகள் குறிப்பான செயல் திட்டங்க்ளைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆதரவைப் பெறும் பொருட்டு
அவை பிரசைகள் முன்வைக்கப்பட வேண்டும்.
உட்கட்சிப் பிரிவினரின் விருப்பங்களுக்கேற்ப நடந்துகொள்ளக் கூடாது; பிளவுபடக் கூடாது. உட்கட்சிப் பிரிவினர் பொதுக் கொள்கையினடிப்படையிலமைந்த கோட்பாடுகளால் ஊக்குவிக்கப் படக்கூடாது. அக்குழுவினர் ஒன்றுசேர்ந்து தமது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற உருவானதே அத்தகைய குழுவாகும்.
(6) அரசியல் கட்சி முறைமையினால் பாதிப்புகள் எவையும்
இல்லையா?
கட்சி முறைமை பல்வேறு அடிப்படைகளில் விமர்சனத்துக்குள்ளாகிறது.
அவை பற்றிய சில முக்கியமான வாதங்கள் பின்வருமாறு:
37

Page 24
கட்சிகள் மக்களை ஒவ்வொரு மட்டத்திலும் பிரித்து வைக்கிறது.
தேசிய விருப்பங்களை எடுத்துக் கூறுவதற்குப் பதிலாக குறுகிய கட்சி விருப்பங்களை விதைக்க முற்படுகின்றன. ஆட்சிசெலுத்தும் கட்சியானது நாட்டின் நன்மை கருதிய ஆட்சியிலும் பார்க்க வாக்குகளைப் பெறவே
முற்படுகின்றன.
எதிரணியிலுள்ள கட்சிகள் அரசாங்கம் என்னும் எண்ணக்கருவை மறந்து அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலையும் விமர்சிப்பதிலேயே ஈடுபடுகின்றன. அவை ஒவ்வொரு கொள்கையிலுமுள்ள சிறப்பை அறியாது எதிர்க்கின்றன.
ஆட்சியிலிருக்கும் போது ஒரு கட்சி அதனுடைய ஆதரவாளருக்கு உதவ விரும்புகிறது. நல்ல அம்சங்களைக் கவனிப்பதில்லை என்பதால் சந்தர்ப்பங்கள் ஏனையவற்றை விஞ்சுகின்றன. இவ்வகையான கட்சிகள்
பேராவலுடையவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குகின்றன.
இவ்வாறான விமர்சனங்களுக்கு வேறாக பிரசைகள் தமது சார்பில் நாட்டை ஆளப்போகின்றவர் யார் என்பதைத் தீர்மானிக்கவும் உள்ள ஒரேயொரு வழிமுறை அரசியல் கட்சியாகும். கட்சிகளின்றி வினைத்திறன் குறைந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றவும் இன்னொரு குழுவுக்கு ஆட்சியை வழங்கவும் தீர்மானிக்கப்பட்ட கால எல்லையுள் உறுதிப்பாட்டைப் பேணி அவற்றின் நிகழ்ச்சித்திட்டங்களைச் சிறந்த முறையில் அமுல் செய்வதையும் நினைக்க முடியாது.
இதற்கான பரிகாரம் என்னவெனில் கட்சிமுறை சீர்திருத்தியமைக்கப்படவேண்டும் என்பதாகும். இந்தப் பொறுப்பு பிரசைகளையும் சாரும். உட்கட்சியாளரின் விருப்பங்களை ஊக்குவிக்கும்
கட்சிகள் வாக்காளரின் அனுதாபத்தைப் பெறுவதில்லை. பிரசைகள்
38

அரசியல் செயற்பாடுகளில் உற்சாகத்துடனும், நேர்மையுடனும் பங்கேற்க வேண்டும். பத்திரிகைகள் பக்கச் சார்பின்றிக் கருத்துரைகளையும் அறிவையும் வழங்குவதன் மூலம் குறைகளைப் பெருமளவில் தீர்க்கலாம். கட்சிச் செயற்பாடுகளில் பங்குதாரராக விளங்கும் கட்சிப் பணியாளர்கள் கட்சியில் ஊழல் இடம்பெறும்போது தமது அதிருப்தியைத் தெரிவிக்க வேண்டும்.
39

Page 25
தகவல் தொடர்புசாதனம்
(1) அறிமுகம்
பாராளுமன்ற சனநாயகத்திலே தொடர்பு சாதனங்கள் பல முக்கிய செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்ற முறையிலமைந்த அரசாங்கம் என்பது மக்களுடைய விருப்பங்களை அது கொண்டிருக்கிறது என்பதையே வலியுறுத்துகின்றது. பொதுசன அப்பிப்பிராயம் அரசு ஒன்றிலே முக்கிய இடத்தைப் பெறும்போது அங்கு மக்களின் விருப்பே மேன்மை பெறும். அவற்றையே ஆட்சியாளர் தொடர்பாடல் செய்ய வேண்டுமெனவும் எடுத்துக் கூறப்படுகிறது. மேலும் தொடர்பு சாதனங்கள் அரசினையும் ஏனைய சக்திவாய்ந்த நிறுவனங்களையும் எப்பொழுதும் அவதானிக்கின்ற முக்கிய பணியையும் ஏற்றுவருகின்றன. அரசாங்கத்தின் கோரிக்கைகளின் போது தொடர்பு சாதனங்கள் தமது செயலைப் புறவயமாகவும் உண்மையைக் கடைப்பிடிப்பவையாகவும், செயற்படவேண்டியதுடன் மக்களுக்குப் பொறுப்புக் கூறும் தன்மையுடையனவாகவும் விளங்க வேண்டும். தகவல் பரிமாற்றங்களில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றங்களுடன், தொடர்பு சாதனங்கள் ஒவ்வொரு
சமுதாயத்திலும் முக்கியம் வாய்ந்தனவாக மாறியுள்ளன.
(2) தொடர்புசாதனம் என்பதன் பொருள்
தொடர்புசாதனம் என்பது தொலைத் தூரங்களிலுள்ளவர்களுக்குத் தகவல்களை அல்லது செய்திகளைத் தொடர்பாடல் செய்யும் ஒர் ஊடகம் அல்லது முறைமையாகும். அத்துடன் மக்கள் மத்தியில் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் சாதனமாகவும் அது விளங்குகின்றது. செய்திப்
பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்பன அத்தகையவை
40

என்பதுடன் பெருந்தொகையான மக்களுக்குச் செய்திகளை வழங்குவதால் அவை வெகுசனத் தொடர்புசாதனங்கள் எனவும்
அழைக்கப்படுகின்றன.
இன்று பல செய்திப் பத்திரிகைகளும் இலத்திரன் தொடர்பு சாதனங்களும், தொடர்ந்தும் பரந்தளவான புவியியற் பிரதேசங்களுக்கும் செய்தியை விரைவாகத் தந்துவிடுகின்றன. எவ்வாறாயினும், பல நாடுகளிலே செய்திப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவை நாடளாவிய ரீதியில் செயற்படுவதுடன் உள்ளூர் மக்களின்
தேவையையும் நிறைவுசெய்கின்றன.
(3) தகவல்கள் ஏன் அவசியமானவை ?
மக்களுக்குத் தகவல்களை அளிக்கின்ற செயற்பாடு, ஒரு சனநாயக சமூகத்தில் மிக முக்கியமானது. அரசாங்கச் செயன்முறையில் மக்கள் பங்கு கொள்வதாக இருந்தால், ஒரு சனநாயக சமூகத்தின் பொறுப்புக்களில் அவர்களும் தமது பங்கினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள், பல்வேறு நிறுவனங்கள் தொடர்பாக புத்திசாதுரியமான தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு சனநாயக சமூகத்தில் பல்வேறு விதமான கருத்துக்களும், நோக்குகளும் காணப்படுமாதலால் மக்கள் பரந்த வீச்சுக் கொண்ட பல்வேறு கருத்துக்களை மதிப்பிடவேண்டிய நிலைமை உள்ளது. எனவே அவ்வேளைகளில் சரியான தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். இத்தகைய பல்வேறு கருத்துக்களைக் கொண்ட இன்றைய நிலையில் தொடர்பு சாதனங்களின் பங்கு மிக முக்கியமானது. மக்களின் முன்பு மிக முக்கியமான ஒரு பிரச்சினை எழும் பொழுது, பாரிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான
41

Page 26
(4)
நிலையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் பொழுது தனிப்பட்ட முறையில் வேட்பாளருடன் கொள்கை ரீதியான விடயங்களையும் முக்கிய பிரச்சினைகளையும் பற்றிக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் மிக அரிதாக இருக்கின்றதினால் தொடர்பு சாதனங்களின் பங்கு மிக முக்கியமாகின்றது.
மக்களின் சிந்தனையில் தொடர்பு சாதனம் தனது செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லையா?
தொடர்பு சாதனம் ஒரு முகவராகச் செயற்படுவதுடன் பொதுசன அபிப்பிராயத்தின் வடிவமாக அல்லது பங்காகப் பிரதிபலிக்கின்றது. பொதுசன அபிப்பிராயத்தின் மூலம் சனநாயகமானது அரசாங்கமாகவே விபரணப்படுத்தப்படுகின்றது. சமூகத்தின் முன்னுள்ள விசேட பிரச்சினைகளைப் பற்றி ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் மனோபாவங்களையே பொதுசன அபிப்பிராயம் உள்ளடக்குகின்றது. மக்கள் தமது நலன்களைத் தெளிவாக முன்வைத்துப் பேசுவதற்கு அவர்கள் தமது நலன்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்கவேண்டும். சிக்கலான நவீன சமூகங்களின் விருத்தியினைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்கவேண்டும். தொடர்பு சாதனங்களினூடாகவே இவற்றைப் பெறமுடியும். மக்களுடன் தொடர்பு சாதனம் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளதுடன் பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதிலும் பாரிய செல்வாக்கைக் கொண்டிருக்கிறது. எந்தவொரு நாட்டிலும், வானொலி, பத்திரிகைகள் என்பவற்றைவிட பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமை ஆய்வுகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சோமாலியாவில் 1991 இல் பஞ்சத்தினாலும் பட்டினியாலும் நிகழ்ந்த பேரழிவுகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது அமெரிக்க மக்களிடையே ஏற்பட்ட மனப்பதிவுகளின் விளைவாக, ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 20,000 படைவீரர்களை அந்நாட்டுக்கு அனுப்பி, அவர்களுக்கு உணவு கிடைப்பதை
உறுதிசெய்யுமாறு பார்த்துக் கொண்டார்.
42

பருவகால சஞ்சிகைகளும் மிகமுக்கியமான சாதனமாகும். அவற்றுள் மிகமுக்கியமானது (நாளாந்த) தினசரிச் செய்தித்தாள்களாகும். ஏனெனில், பொதுக் கல்வி காரணமாக, மக்கள் பரந்தளவில் எழுத்தறிவைப் பெற்றுள்ளமை, அச்சுக் கலையில் உண்டான முன்னேற்றங்கள், போக்குவரத்தின் விருத்தி என்பன யாவும் தினசரிக் செய்தித்தாள்களின் விற்பனையின் அதிகரிப்புக்குப் பாரிய பங்களிப்புச்
செய்துள்ளன.
வெகுசனதொடர்பு சாதனங்கள் பொதுசன அபிப்பிராயத்தைத் தமது விருப்புக்கேற்ற முறையில் மாற்றியமைக்க முடியாது என்பதை ஒருவர் மனங்கொள்ள வேண்டும். விடயமறிந்த வாசிப்பாளன் ஒருவன் தனக்கு முன்வைக்கப்படும் சாதனங்களின் தரத்தைக் கவனிப்பான். ஆகவே உதாரணமாக, மக்களின் ஆதரவு, பெற்ற ஓர் அரசாங்கத்தைத் தோல்வியடையச் செய்யும் முயற்சியில் தொடர்பு சாதனங்கள் அல்லது தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும் பத்திரிகைகள் ஈடுபட்டு மக்களின் ஆதரவற்ற ஓர் அரசாங்கத்தைத் தேர்தலில் கொண்டுவர முடியும் என்பதற்கான சந்தர்ப்ப்ங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன.
(5) ஆனால், தொடர்பு சாதனங்கள் நடுநிலைமை தவறா
தவையா?
செய்திப்பத்திரிகைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் யாவும் இலாபமீட்டும் நோக்கிலேயே இயங்குகின்றன. அவை பெருந்தொகையான வாசகர்களைக் கூடுதலான வருமானந்தரும் விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கவர முற்படுகின்றன. ஆயினும் விடயங்களை முன்வைக்கும் நாளாந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க, பிரசித்திவாய்ந்த குதூகலமூட்டும் நிகழ்ச்சிகளிலேயே கவனஞ் செலுத்துகின்றன. தனியார் தொடர்புசாதனங்கள், பொதுமக்களின் உடனடிக்கவனத்தை ஈர்க்கும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது செய்திகளை வெளியிடுவதிலுள்ள பிரதான
முறைப்பாடாகும்.
43

Page 27
தொடர்புசாதன முயற்சியினைக் கொண்டிருக்கின்ற உரிமையாளரின் விருப்புகளினால் பாதிக்கப்படும் தகவல்கள், அவர்களுக்காகப் பணியாற்றுவோரிடத்திலும் பக்கச்சார்பினை ஏற்படுத்தும். அதனால் இச்செய்திகள் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் எண்ணங்களுக்கும்
ஏற்பவே வெளிவரும்.
தகவல் தொடர்புசாதனங்கள் குறிப்பாகச் செய்திப்பத்திரிகைகள் செய்திகளை மீளக் சொல்வனவாக மட்டுமன்றி அவற்றைப் பகுப்பாய்வுசெய்து விளக்கமும் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தமது முகாமைத்துவக் கொள்கைக்கு அமைவாக, சிலவகை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. செய்திகளில் சிதைவு ஏற்படுவதும் அதன் மீதான கருத்துரைகளும் செய்தியின்மீது கருத்துச்சார்புகளை உண்டாக்கும். தொடர்புசாதனங்களில் பணியாற்றுவோரின் அறிவு மட்டம் பத்திரிகை எழுத்தாளர் சாதனத்தின் தரத்தையும் பாதிக்கும். மேலும் கல்வி மட்டத்திற்கு மேலாக நடைமுறை விடயங்கள் மற்றும் உலக நிகழ்வுகள் பற்றிய அறிவைக் கொண்டிருந்தாலும்,சிறந்த இதழியலுக்கான ஓர் அம்சமாகும்.
பல நாடுகளில், பத்திரிகைத் தொழிலுக்குப் பயிற்றுவிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன.
(6) தொடர்பு சாதனங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?
ஒரு சுதந்திரமான சமூகத்தில் பொதுசன தொடர்பு சாதனங்கள் விவாதத்துக்குரிய ஓர் அரங்காகச் செயற்படுவதுடன் பொதுவான பிரச்சினைகள், அரசாங்கக் கொள்கைகள், பொதுநலனுடன் தொடர்பான விடயங்கள், மற்றும் மக்கள் தமது குறைபாடுகள் தொடர்பான தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது. பிரசைகள் தமது பங்குகொள்ளத்தக்க நிலையைப் பூர்த்தி செய்தவற்கு பொதுசன ஊடகங்கள் உதவுகின்றதுடன் இதன்மூலம் நிறுவனங்களும் தனி நபர்களும் தமது அபிப்பிராயங்களை வெளிப் படுத்தவும் முடிகின்றது. ஆசிரியருக்கு எழுதப்பட்ட கடிதங்களைச் செய்திப்
44

பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. அத்துடன் அவற்றில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளும் பல்வேறு நோக்கினைக் கொண்டதாகவும் உள்ளன. சனநாயகத் தன்மை கொண்ட ஒர் அரசாங்கம் இத்தகைய வெளிப்படுத்தல்களை தவிர்க்கக் கூடாது. அவ்வாறு அசமந்தமாக இருப்பின் அதற்கு ஆபத்தாகவும் முடியும்.
(7) தொடர்புசாதனங்களின் ஏனைய தொழிற்பாடுகள் எவை?
கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரசாரகர் தொடர்பு சாதனங்கள் பொதுமக்கள் தொடர்பான விவாதங்கள் முக்கியபங்கினை ஏற்கமுடியும். ஆசிரியர் தலையங்கம், விஷேட கட்டுரைகள், மற்றும் செய்திகள் மூலமாக, கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனக் கருதப்படும் விஷேட கொள்கைகள். அல்லது சீர்திருத்தங்களைப் அல்லது சீர்திருத்தங்கள் நாளாந்த நிருவாகம், சுகாதாரம் அல்லது கல்வி, குற்றத்தடுப்பு, முதியோர் ஓய்வூதியம், தொழில் நடைமுறைகள் அல்லது சுற்றாடல் அல்லது ஏனைய பொது வாழ்வைப் பாதிக்கும் விடயங்கள்
என்பவற்ற்ைப் பற்றியதாக இருக்கலாம்.
அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் காவற்காரன்
தொடர்புசாதனத்தின் இன்னொரு முக்கிய தொழிற்பாடு, சமூகத்திலுள்ள ஏனைய சக்திவாய்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் காவல்காரனாக உள்ளமையாகும். இக்குறிக் கோளின்படி, செய்திச் சாதனமானது அரசாங்கம் பொதுமக்கள் முன்வைப்பதின் பின்னாலுள்ள உண்மையை வெளிப்படுத்த முடியும். மற்றும் அரச உத்தியோகத்தர் உட்பட அதிகாரத்திலுள்ள எல்லோரும் தமது செயலுக்குப் பொறுப்புடையவர் எனவும் எடுத்துக் கூறுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் நிருவாகமானது பொதுமக்களின் மனநிலைக்கு முரண்பாடாகச் செயற்பட்டமையை 9 (5 செய்திப்பத்திரிகை அவதானித்து வந்த விடயமொன்றுள்ளது. 1971 இல் “நியூயோர்க் டைம்ஸ்” மற்றும் “வாஷிங்டன் போஸ்ட்” சில தாஸ்தாவேஜு
45

Page 28
வேகளைப் பெற்றுக் கொண்டன. பின்னர் அவை ‘பென்டகன் பத்திரிகைகள்’ (Pentagon Papers) என அழைக்கப்பட்டன. வியட்நாம் பற்றிய அமெரிக்காவின் கொள்கை ஐக்கிய அமெரிக்காவில் பொதுமக்களுக்குத் தெரிவிக் கப்பட்டிருந்தவையல்ல என்பதை இவை வெளிப்படுத்தின. இத்தகவலைச் செய்திப்பத்திரிகை பிரசுரிக்கத் தொடங்கிய வேளையில், அப்பிரசுரங்களைத் தடைசெய்யும் ஆணையை அரசாங்கம் விதித்தது. ஆயினும், உயர்நீதி மன்றம் அத்தடை ஆணையைக் கவிழ்த்து, செய்திப்பத்திரிகையை வெளியிட உதவியது. அரசாங்கம் வியட்நாம் மீதான அதனுடைய கொள்கையை மறுசீரமைக்க வேண்டியதாயிற்று.
இன்னொரு உதாரணமாக 1972இல் சனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது இடம்பெற்ற “வோட்டர்கேட்” விவகாரத்தைக் குறிப்பிடலாம். நிர்வாகமானது சில சட்டமுரணான செயல்களில் ஈடுபட்டமையைப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக சட்டரீதியான போராட்டங்களை முன்வைத்தமை, காரணமாக இறுதியில் சனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்யவேண்டியதாயிற்று. பல அரச அலுவலர்களும் பதவி விலகவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டனர். சிலர்
குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.
கல்வியூட்டுபவர்
வெகுசனத் தொடர்பு சாதனங்களின் பிரசித்தி வாய்ந்த சாதனமான செய்திப்பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன பல்வேறு விடயங்களிலே அறிவை வழங்கும் பணியையும் நிறைவேற்றமுடியும். விஷேட கட்டுரைகள் மற்றும் சிறப்புப் பகுதிகள் ஊடாகத் தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி ஆய்வுகள், விவசாயம் மற்றும் விலங்கு வளர்ப்பு மற்றும் ஏனைய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மக்கள் அறியச்செய்யலாம். வெளிநாட்டுக் கலாசாரங்களை அறிமுகம் செய்கிறது. மேலும் மக்களின் குடிசார் கடமைகளையும் பொறுப்புகளையும் கற்பித்தல்
மூலம் சமூகத்தையும் வளம்படுத்தலாம்.
46.

(8) இவ்வாறான பணிகளை நிறைவேற்றுவதில் தொடர்பு
சாதனங்களுக்குச் சுதந்திரம் உண்டா?
அரசாங்கமானது பல்வேறு வழிகளிலே பொதுமக்களுக்கு முன்வைக்கப்படும் தகவல்களை ஒழுங்குபடுத்த அல்லது அதன்மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது. அவற்றுள் தொடர்பு சாதனம் மீதான் உரிமையும் அல்லது அவர்களின் நேரடிக் கட்டுப்பாடும் முக்கியமானவை. இச்சந்தர்ப்பத்தில், சுதந்திரமான ஊடகங்கள் எனக் கூறிக்கொண்டு, அரசாங்கமானது தனது அலுவலர்கள் மூலமாக, தமக்குச் சார்பான தகவல்களை வழங்குகின்றன அல்லது முற்றாக வழங்காமல் விட்டுவிடுகின்றன. இவ்வாறான நடத்தைக்கு மிகமோசமான உதாரணமாகச் செய்தித் தணிக்கையை எடுத்துக்காட்டலாம். மற்றும் தகவல்களை வழங்கும் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியென நிரூபிக்கும் வகையிலும் இடம்பெறுகின்றன. நிலைத்து நிற்கக் கூடிய சக்திவாய்ந்த ஊடகம் மட்டுமே பொதுமக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்தமுடியும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் தன்மையை உருவாக்கமுடியும்.
இன்று சமுதாயத்தின் பருமனும் அதன் சிக்கல்வாய்ந்த தன்மையும் காரணமாக, ஒர் உண்மையான சனநாயக அரசு, பொதுமக்களுடன் தொடர்புகொள்ளக் கூடிய பல்வேறு வடிவிலான வழிமுறைகளின்றி நிலைபெறமுடியாது. அரசாங்கம் இவ் ஊடகங்களைப் பயன்படுத்தித் தனது கொள்கைகளை விளக்கவேண்டும். பதிலாக மக்களும் அத்தகைய கொள்கையையிட்டு என்ன கருதுகின்றனர் என்பதை அரசாங்கமும் அறிந்து கொள்ள வேண்டும். எனினும் சனநாயக சமூகமொன்றிலே தொடர்புசாதனங்களைக் கட்டுப்படுத்தலானது சனநாயக அமைப்பையே
அழித்தொழித்து விடுகின்றது.
அதிகாரவர்க்க ஆட்சியொன்றிலே தொடர்பு சாதனமானது இருவழித்
தொடர்பாடல் என்பதற்குப் பதிலாக, பிரசாரத்துக்கான பிரதான கருவியாக விளங்கும். எனினும், அரசாங்கம் தொடர்பு சாதனங்களைக் கட்டுப்படுத்த
47

Page 29
அல்லது சீர்குலைக்க முற்படுகையில், மக்கள் அரசாங்கத்தின் கைகளிலுள்ள தொடர்பாடல் சாதனங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர். அத்துடன் வேறு மூலகங்களினூடான தகவல்களை அதாவது, கடத்தல்மூலம் கொண்டுவரப்படும் செய்திப்பத்திரிகைகள், சஞ்சிகைகளை அல்லது சட்டத்துக்கு முரணாக அச்சிட்டு வெளியிடப்படும் பத்திரிகைகள், கள்ளத்தனமான மற்றும் வெளிநாட்டு செய்தி ஒலிபரப்பு என்பவற்றை நாடுவர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துக்குச் சாதகமற்ற நிலைமைகள் தோன்றும் என்பதுடன் வேற மூலகங்களுடாகப் பெறும் தகவல்களை மறுதலிப்பதில் இடர்களும் உண்டாகும். இது தொடர்பாக, சோவியத் ஒன்றியத்தில் உத்தியோக பூர்வ பத்திரிகைகளும் இலத்திரன் பொதுசன தொடர்பு சாதனங்களும் பக்கச்சார்பாக நடந்துகொண்டபோது, உளவுவேலைகளில் ஈடுபட்டோர் தமக்குள் தொடர்பாடல்களை மேற்கொள்ள செய்திபத்திரிகைகளை வெளியிட்டனர். செய்திப்பரிமாற்றம் செய்மதி மற்றும் “பாக்ஸ்’ (Fax) இயந்திரங்கள் மூலமாக அனுப்பப்பட்டமையால், நாட்டின் எல்லையைக் கடந்து செய்திகள்
பரிமாறப்படுவதைத் தடுப்பதில் பெருஞ் சிரமங்கள் உண்டாயின.
சுதந்திரமான சமுதாயமொன்றின் தொழிற்பாட்டுக்கு சுதந்திரமான மற்றும் நடுநிலையான தொடர்பு சாதனங்கள் இன்றியமையாதவை. இவை மக்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் பாதுகாவலனாகவும் மற்றும் மக்களின் பொறுப்புக் கூறும் பிரதிநிதியாகவும் விளங்கும்.
48

பொருளாதாரம்

Page 30

வேலையின்மை
கோளfதியான பரிமாணங்களில் வேலையின்மை ஒரு பிரச்சினையாக விளங்குகின்றது. பொருளாதார, சமூக, அரசியற்றுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகள் வேலையின்மைப் பிரச்சினையை முக்கியமாகக் கவனத்திலெடுத்துள்ளன. சமூகமொன்றினது அரசியல் ஸ்திரத்தன்மை, வருமானநிலை, பொருளாதாரத்திற்கான வளப்பயன்பாடு என்பனவற்றை அறிவதற்கு வேலையின்மை வீதமானது முக்கிய குறிகாட்டியாகவுள்ளது. சமூகத்தில் ஒரு நபரின் சொந்த புலக்காட்சிக்கான அவனது பெறுமானத்தை இது வழங்குவதுடன் நட்புணர்வு மற்றும் மதிப்புக்கான ஒரு பொதுவான மூலாதாரமான வருமானத்தையும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. சமூக, பொருளாதார ஸ்திரத்தன்மையானது வேலையின்மையின் காலநீட்சி, விரிவாக்கம் என்பனவற்றினால் பாதிப்பு ஏற்படுகின்றது. மிக வளர்ச்சியடைந்த நாடுகளின் வேலையின்மையானது குறுகிய கால அளவைக் கொண்டுள்ள அதேவேளை வளர்ந்து வருகின்ற நாடுகளின் சூழல் தன்மையைக் பெற்றுள்ளதோடு, நீண்ட காலத் தோற்றப்பாடாகவும், வித்தியாசமான உபாயங்கள், கொள்கைகளையும் வேண்டி நிற்பதாகவும் காணப்படுகின்றது. நீண்ட கால ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியானது இப்பிரச்சினைக்கான தீர்வாகும். அரசாங்கங்கள் உடனடியாகத் தமது செயற்றிட்டங்களில் வேலைவாய்ப்பிற்கான சந்தர்ப்பங்களைக் குறுங்காலத்தில் உருவாக்க வேண்டும். உதாரணமாக உட்கட்டுமானத்தைக் கட்டியெழுப்பலும், பொது நிறுவனங்களை உருவாக்கலும் குறிப்பிடத்தக்கவை. வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்குத் தனியார் துறைக்கு ஆதரவளித்தல் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இன்னொரு அணுகு முறையாக உள்ளது.
49

Page 31
(1) இலங்கையின் வேலையின்மைப் பிரச்சினையின் அளவு
என்ன?
தொழிலாளர் படையில் வேலையற்றோர் எண்ணிக்கையின்
விகிதாசாரமாக எமது வேலையின்மைப் பிரச்சினையளவை எண்சார் முறையிற் குறிப்பிடலாம். இலங்கையின் மொத்த தொழிற்படையில்
வேலையின்மை வீதமானது 14 வீதமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் தொழிற்படையில் மீதி 86% வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளது. அட்டவணையில் காட்டப்பட்டுள்ள
நாடுகளைவிட இலங்கையின் வேலையின்மை வீதம் அதிகமாகவுள்ளது.
தெரிந்தெடுத்த நாடுகள் சிலவற்றின் வேலையின்மை வீதம்
பிலிப்பைன்ஸ், 8.1 பாகிஸ்தான் 31
இலங்கை 4.4 சிங்கப்பூர் 1.7
ஹொங்கொங் 13 LoGoudfurt 6.3 கொரியா 24 சீனா 2.5
(2) யார் வேலையற்றவர்கள் ?
* வேலையற்றவர்களின் முழுத்தொகையின் 52% பெண்கள்
ஏறக்குறைய 80% வீதமான வேலையற்றவர்கள் கிராமங்களிலேயேயுள்ளனர்.
Ke வேலையற்றவர்களில் 40 வீதத்தினர் 15-24 வயதிற்குட்பட்ட இளவயதினர்.
அவர்களில் O/L மற்றும் உயர்தரக் கல்வியறிவு கொண்டவர்கள் 40
வீதத்தினராவர்.
* கலைப்பட்டங்களுடன் கூடிய21,000 பல்கலைக்கழக பட்டதாரிகள் 1996 ஆம்
ஆண்டு நடுப்பகுதியில் வேலையற்றிருந்தனர்.
50

(3) அலுவலகத் தரவுகள் வேலையின்மையின் உண்மையான
அளவைப் பிரதிபலிக்கின்றதா?
அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களில் தரப்பட்டுள்ள 14 வீதமான வேலையின்மை விகிதமானது பிரச்சினைக்கான சரியான அளவினை வெளிக்காட்டவில்லை. சனத்தொகைக் கணிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள மாதிரிக் கணிப்பீட்டின் மூலம் வேலை செய்பவர்களைக் கணித்தே இத்தரவு பெறப்பட்டுள்ளது. இவ்வரைவிலக்கணத்தின்படி அதிகளவு எண்ணிக்கையுள்ள நபர்கள் வாரத்தில் 20 மணித்தியாலத்திற்குக் குறைவாக வேலை செய்பவர்களும் இவ்வகைக்குள் உள்ளடகுகின்றனர். எனினும் உண்மையில் மேற்படி வகையானது உண்மையாகவே கீழுழைப்பு வகையாகும். அவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் வழங்கப்படின் வாரத்தில் 5 நாட்களும் வேலை செய்யமுடியும். மேலும் பல வகையான வரையறைகள் 14% கூடவான வேலையின்மை வீதத்தையே உணர்த்துகின்றன. ஒருவகையில் மக்கள் வேலையும் வருமானமும் இன்றியுள்ளனர். இன்னோர் நோக்கில் உற்பத்தித் திறன்மிக்க வளம் வீணாகின்றது. அத்துடன் மக்களில் பெருந்தொகையானோர் வேலை செய்யக்கூடியவர்களாகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருந்தும் அவர்கள் தேசிய வெளியீட்டுக்கான
பங்களிப்பிற்கு வாய்ப்புகள் இல்லாதவர்களாகவுள்ளனர்.
(4) இப்பிரச்சினை எப்படிப் பெரிதாக மாறியது.
தற்போதைய உயர் வளர்ச்சி வீதத்திலான வேலையின்மைக்கு, உயர் வீத அளவான தொழிலாளர் படையின் வளர்ச்சிக்கேற்ப சமனான முறையில் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் வளர்ச்சியடையாமையே காரணம். உயர் வீத சனத்தொகை அதிகரிப்பு 1960,70 களில் தொழிற்படையையும் அதிகரித்தது. வருடாந்த சராசரி தொழிற்படை அதிகரிப்பு வீதம் 3.3%. 1970களில் இது குறைவடைந்து 1980களில் 1.7% ஆக மாறியுள்ளது. எனினும் வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் பொதுவான வேகத்தையே கொண்டிருந்தன. வேலைவாய்ப்பிற்கான சந்தர்ப்பங்கள் மெதுவான வளர்ச்சியைக் கொண்டிருந்தமைக்கு மெதுவான பொருளாதார வளர்ச்சியே
காரணமாகும்.
51

Page 32
(5) வேலையின்மையின் கடுமையான தன்மையைக் குறைப்பதற்குப் பொருளாதாரம் எத்தகைய விரைவாக வளர்ச்சியடைய வேண்டும் ?
வேலையின்மைக்காக இன்றைய நிலையில் வருடாந்தம் 1,50,000 வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டுகளில் வேலையின்மையானது 5% குறைக்கப்பட வேண்டுமாயின் 220,000 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வாய்ப்புகளை உருவாக்குவதாக இது அமையும். GDP யானது வருடாந்தம் 8% வளர்ச்சியைக் கொண்டிருந்தாலே 150,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். 1990 களின் முதலரைப்பகுதிகளில் GDPயின்
வளர்ச்சியானது இந்த நிலையினை எட்டவில்லை.
எப்படியாயினும் அண்மைய 10 ஆண்டுகளில் அநேகமான கிழக்காசிய நாடுகளிலும் மொறிசியஸ் பொட்ஸ்வானா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது அசாதாரண வளர்ச்சியல்ல. இதற்கு திறன்மிக்க அபிவிருத்திக் கொள்கைகள் வரையப்படவேண்டியது அவசியம்.
(6) பொதுத்துறை வேலை வாய்ப்பு-வரையறைகள் எவை?
பொதுத்துறை வேலை வாய்ப்பில் இரண்டு பிரதான பகுதிகள் காணப்படுகின்றன.
(1) நிதிக்குரிய வரவு- செலவுத் திட்டத்தினால் நிதிப்படுத்தப்படுகின்ற
அரசாங்க அமைப்புகள், திணைக்களங்கள் மற்றும் ஏனையவை.
(2) அரச உதவியுடன் கூடிய பொதுத்துறை நிறுவனங்கள்.
இத்துறைகள் இரண்டும் வரிசெலுத்துவோரின் பணத்துடன்
தொடர்புபட்டவை. அரசாங்க அமைச்சுக்களிலும் திணைக்களங்களிலும்
மேலதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது பொதுச் செலவீட்டுக்கான
52

ஒரு கடப்பாடு. இது போலவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கின. மிக முக்கிய மூலமான paid employment ல் அரசாங்கமானது 1981ல் 49% இல் இருந்து 1994ல் 30% ஆகக் குறைந்துள்ளது.
பொதுத் துறையில் வருடாந்த வேலைவாய்ப்பானது குறைவாக இருப்பதற்குரிய காரணிகள் பலவாகவுள்ளன. அரசாங்கம் பொதுத்துறையிலுள்ளவர்களுக்குச் சம்பளம், மேலதிக கொடுப்பனவுகளை வழங்குகின்றது. தனியார் துறையின் பொது முதலீடுகள், பொது நிர்வாகத்தின் மீள் உருவாக்கம் போன்றன விரைவாக ஒய்வு பெறுவதைத் தூண்டுவதுடன்
பொதுத் துறையளவைக் குறைத்தும் வருகின்றது.
மேலதிகமான வேலைகளை உருவாக்குவதில் எரிபொருள் விலையேற்றம் வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் குறைத்தன. அரச துறையில் ஒரு நிறுவனம் 100 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்களைக் கொண்டுள்ளது. அத்தோடு காரணமின்றி குறைந்தளவான பகுதிக்கு, அரச துறையின் வேலையின்றியே சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான செயற்பாடு இயலக்கூடிய வளப்பயன்பாட்டின் பயன்தரத்தக்க தன்மையை
உலகில் குறைத்து விடுகின்றது.
(7) வெளிநாட்டு வேலை வாய்ப்பு
வெளிநாட்டுச் சம்பாத்தியத்தை அதிகரிக்கச் செய்யவும், உள்நாட்டிலே காணப்படுகின்ற மேலதிக தொழிற்படையையின் அனுப்பவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உதவுகின்றது. வெளிநாட்டில் வசிப்பவர்களின் மொத்தச் சம்பாத்தியமானது 1977 ல் 1.3% தில் இருந்து 1994ல் 22.5% ஆக அதிகரித்துள்ளது. 1994ம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தித் துறையில் ஈடுபட்டவர்களைவிட வெளிநாட்டுத் தொழிலாளர்களாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். இலங்கையின் பெண்களிடையேயான தொழிலாளர் இடப்பெயர்வு1979-473% ஆக இருந்து 1994-83-5% ஆகமாறியுள்ளது. இலங்கையில் இருந்து மேற்காசிய
53

Page 33
(8)
(9)
நாடுகளுக்கு விரும்பப்பட்ட முறையிற் தொடர்ச்சியாகப் பெண் தொழிலாளர் இடப்பெயர்வு காணப்பட்டு வருகின்றது. ஏனைய தொழிலாளர்களை வழங்கும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்றவற்றில் இந்நிலை
காணப்படுவதோடு தடைசெய்யப்பட்டும் காணப்படுகின்றது.
தனியார் துறை வேலை வாய்ப்பு
தொழிலாளர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் தனியார்துறையில் காணப்படுவதோடு வளர்ச்சியடைந்தும் காணப்படுகின்றன. பேரளவினதான, இடைத்தர, சிற்றளவினதான முதலீடுகளை உள்ளடக்கியதாக தனியார் துறை விரிவாக்கம் காணப்படுகின்றது. தனியார்துறை விரிவாக்க காரணிகளுள் அரசியல் ஸ்திரத்தன்மை, நீண்டகாலக்கொள்கைகள், உயரளவிலான பணவீக்கம், வட்டிவீதம், கைத்தொழில் அமைதியின்மை, வலிவற்ற உட்கட்டுமானம், திறமையின்மை, பாதுகாப்பின்மை என்னும் காரணிகள் உள்ளடங்குகின்றன. பொருளாதாரத்தில் விரும்பத்தகாத முறையில் தனியார் துறை விரிவாக்கமின்மை குறைந்த கால வாய்ப்புக்களையே உருவாக்குகின்றது. தற்போது வளர்ச்சிக்கான நல்ல சூழ்நிலை காணப்படுகின்றது.
சுய வேலை வாய்ப்பு
பொது மற்றும் தனியார் துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுயவேலை வாய்ப்பு என்பன தொழிலாளர்களை உள்ளிழுக்கின்ற துறைகளாகக் காணப்படுகின்றன. 1994ம் ஆண்டு மக்கள் ஐக்கிய முன்னணி 1ஆம் வருடத்தில் 300,000 மக்களுக்குச் சுயவேலை வாய்ப்பின் மூலம் வருமானம்
கிடைக்கக்கூடிய வழிய்ைக் கண்டிருந்தது.
சுய வேலை வாய்ப்பு, உபாயம் பல நன்மைகளைக் கொண்டது. இது வரவு செலவுத்திட்டத்தில் கேள்வியை எழுப்புவதில்லை. சுய வேலை வாய்ப்பு பல வகையான நிறுவனங்களை ஊக்குவிக்கின்றது. மாகாண சபை, வர்த்தக
வங்கிகள் அரச சார்ப்பற்ற நிறுவனங்களே இவை. சுயவேலை வாய்ப்பானது
RA

பொதுவாக கல்வி கற்ற வேலையற்றவர்களால் விரும்பப்படுவதோடு, பொருளாதாரத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கில் கிராமப்புறங்களில் குறைந்தளவிலான கேள்வியையே உருவாக்குகின்றது. சுயவேலை வாய்ப்பு
பொருளாதார வளர்ச்சியில் தங்கியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியானது வருடாந்தம் 8% குறைவாக
இருக்குமாயின் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளின் நீண்ட கால
வேலையின்மையில் நாம் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகும்.
55

Page 34
பொதுநலனும் வளர்ச்சியும்
(1) அறிமுகம்
உலகில் உள்ள கொள்கை வகுப்போர் சமூக நோக்கங்களை அடைந்து கொள்வதில் பொதுநலனையும் பொருளாதார வளர்ச்சியையும் சமமான முக்கியத்துவமுடையதாகக் கருதுகின்றனர். பொருளாதார வளர்ச்சியற்ற பொதுநலன் என்பது பொதுநலனின் பேண்தகு தன்மையை மட்டுமன்றி அரசியல் ஒழுங்கு, பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் பெரும்பாலான மக்களின் பொதுநலனில் போதுமான கவனம் எடுக்கத்தவறின் அது மிகவும் அபாயகரமானதாகவும் இருக்கும். பொதுநலன் மீதான பொதுச் செலவீனத்தின் அவசியத்தன்மை வளர்முக நாடுகளில் வரையறைக்கு உட்பட்டதாக உள்ளது. செல்வந்த நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, பிரான்சில் நடைமுறையிலுள்ள நல நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்காத எந்த அரசியல் கட்சியும் அதிகாரத்துக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. “பொது நல அரசு” என்பது விருத்தியடைந்த நாடுகளின் மூளையில் உதித்த ஒரு குழந்தை.
வளர்முக நாடுகளிலும், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பொதுநல சேவைகளுக்கு வழங்குவதற்கான நிதி வருமானங்களைத் திரட்டுவதில் பாரிய தடைகள் காணப்படுகின்றன. இச்செலவீடுகள் வடமேற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்கனவே மிக உயர்வாகக் காணப்படுவதுடன் இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளில் வரி சேகரிப்பு முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன. எனவே அரசாங்கத்தின் தலையீட்டுப் பொறிமுறை தொடர்பாகச் சீர்செய்தல் அவசியமானது. தற்பொழுது இரு அணுகுமுறைகள் பிரேரிக்கப்பட்டு வருகின்றன. (1) உண்மையான தேவையின் அடிப்படையில்
56

இந் நிகழ்ச்சித்திட்டங்களை இலக்காகக் கொள்ளுவதுடன் ஏனையவற்றைப் பின்பு கவனித்தல். (2) பொறிமுறையை மிகத் திறனுடன் பயன்படுத்தல்.
(2) இலங்கையில் பொது நலக் கொள்கைகள் புதியனவா?
இலங்கையில் பொதுநலக் கொள்கைகள் அண்மைக் காலத் தோற்றப்பாடல்ல. இலங்கை அரசியல் சுதந்திரத்தை அடைவதற்கு முன்னரும் கூட பொதுநலக் கொள்கைகளானது கொள்கை வகுப்பாளரின் கவனத்திற்குரிய தொன்றாகவே இருந்தது. இக்காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. 1943 இல் இலவசக் கல்விக் கட்டளைச் சட்டம், அப்போது கல்வியமைச்சராக இருந்த திரு. சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்பவரினால் அரசுப் பேரவையில் சட்டமாக்கப்பட்டதுடன் “ஒரு நாட்டின் சிறந்த முதலீடு அதன் மக்களைக் கல்வியூட்டுவதே’ என்ற கருத்தினையும் வெளியிட்டார். அரசியல் சுதந்திரத்தை இலங்கை அடைந்த பொழுது (1948) இலங்கை ஒரு பொதுநல அரசாகக் காணப்பட்டிருந்ததுடன் நடைமுறை வருமானம் மற்றும் கடன் நிதிகளிலிருந்து 270.6 மில்லியன் ரூபாவ்ை அல்லது மொத்த அரசாங்கச் செலவீட்டில் 40 வீதத்தினைச் சமூக சேவைகளுக்கு எனச் செலவிட்டது. அதன் பின்பு வந்த அரசாங்கங்களும் பொதுநலக் கொள்கைகளினைப் பெரிதும் கடைப்பிடித்தன.
(3) இலங்கையின் பொதுநலக் கொள்கைகளின் பிரதான
அம்சங்கள் யாவை?
இலங்கையின் தற்போதைய பொதுநல நிகழ்சித்திட்டங்கள் பின்வரும் வடிவங்களில் காணப்படுகின்றன:
* வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு நுகர்வுக்கான உதவியாக நேரடி வருமானப்பரிமாற்றங்கள் (வறுமை நிவாரணம், சனசவிய, சமூர்த்தி) இடம் பெறுகின்றன.
* உணவு மானியங்கள் (கோதுமை மா) முழுச் சனத்தொகையும் நன்மை
பெறுகின்றது.
57

Page 35
* மண்ணெண்ணெய், டீசல், போன்றவற்றுக்கு மானியம்
* இலவசக் கல்வியும் சுகாதாரமும்
* அரசாங்க உதவித் திட்டத்தின் மூலம் வீடமைப்பு
* புகையிரத மற்றும் தபால் சேவைகளைப் பயன்படுத்துவோரிடம் அறவிடும்
கட்டணங்களுக்கான மானியம்
* விசேடமான செயற்றிட்டங்கள் (உதாரணமாக, இலவச பாடசாலைச் சீருடைகள்,
இலவசமான நண்பகல் உணவு)
* சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்
(ஏழைகளுக்கும் வயது சென்ற மற்றும் ஊனமுற்றவர்களுக்கான
நிவாரணங்கள்).
(4) பொது நலனினால் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்வடையும்?
மானியமுறையிலான உணவு, வருமான உதவிகள், இலவசமான சுகாதார, கல்வி வசதிகள் ஆகியன இலங்கையின் வாழ்க்கைத் தரத்தினை அதிகரித்ததுடன் வாழ்க்கைத் தரத்தினை அளவிடுவதற்கான குறி காட்டிகளாகவும் அவை கருதப்படுகின்றன. உதாரணமாக, 1990 இல் இலங்கையில் வாழ்வு எதிர்ப்பார்ப்புக்காலம் 71 வருடங்களாக இருந்தபோது தலாவருமானம் 400 அமெரிக்க டொலர்களுக்குக் குறைவாக இருந்தது. அதேவேளை சவூதி அரேபியாவில் வாழ்வு எதிர்பார்ப்புக்காலம் 64 வருடங்களாகவும் அந்நாட்டின் தலா வருமானம் 6,200 அமெரிக்க டொலர்களாவும் காணப்பட்டது. பொதுத் துறைச் செலவீட்டுக் கொள்கைகள் மூலம் மனித விருத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இலங்கை அடைந்துள்ளது என அப்பொழுதும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. இலங்கையிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்திலும் “உதவி மூலமான”
58

(Support Led) பாதுகாப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாறான முறையில் கொரிய குடியரசு மற்றும் தாய்லாந்தில் வளர்ச்சி மூலமான
( Growth led) உபாயங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
(5) பொதுநலனில் மேற்கொள்ளப்படும் வெட்டு வறியவர்களை
எவ்வாறு பாதிக்கும்?
எமது சொந்த அனுபவம் இதனைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. உணவு மானியங்கள் வழங்கப்பட்ட 1942 இல் இருந்து முழுச் சனத் தொகைக்கும் பங்கீட்டு முறையின் அடிப்படையில் மானிய முறையில் அரிசியும் ஏனைய சில அத்தியாவசிய உணவு வகைகளும் வழங்கப்பட்டு வந்துள்ளன. இச் செலவீடானது கடந்த 50 வருடங்களில் வரவு -செலவுத் திட்ட நிதியில் ஏற்படுத்திய பாரிய தாக்கம் காரணமாக குறைக்கவோ அல்லது முற்றாக அகற்றுவதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1977இன் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னரே உணவு மானியங்களைக் குறைக்கவேண்டுமென்ற அண்மைக் கால முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.1979 இல் உணவு முத்திரைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பணத்தினைச் சேமிப்பதனை இலக்காகக் கொண்டதாக இம் முயற்சி காணப்பட்டாலும் வறிய மக்களின் குறிப்பிட்ட பகுதியினரைப் பாதிப்பதாக இருந்தது. சனத்தொகையின் வறுமையான வீட்டுரிமையாளர்களில் ஏறக்குறைய 30 வீதமானோர் உணவு முத்திரையைப் பெற்றுக் கொள்ளவில்லை. சில வருடங்களில் முத்திரைகளின் மெய் பெறுமானத்தைப் பணவீக்கமானது பாதியாகக் குறைத்துவிட்டது. 1979இல் வறுமையான சனத்தொகையின் 20 வீதத்தினரில் தலா ஒருவருக்கான கலோரி உள்ளெடுப்பு 1490 கலோரியாக இருந்தது. இது 1982 இல் 1368 ஆக வீழ்ச்சியடைந்தது. 1978 இல் வறுமையான சனத் தொகையின் சதவீதமானது 23 வீதமாக இருந்ததுடன் 1987 இல் வீதமாக உயர்வடைந்தது. பொதுநலனுக்கான செலவீட்டில் மேற்கொள்ளப்படும் வெட்டுக்கள் சமூக மற்றும் கலாசார அமைதியின்மையை அதிகரிக்கும் தன்மை கொண்டாக இருப்பதுடன் சேதத்தை விளை விப்பதொன்றாகவும் அமையக் கூடும். இலங்கையில் 1952 ஆவணியில் இடம் பெற்ற “ஹர்த்தாலையும்” ஜோர்டானில் இடம்பெற்ற பாண் கலகத்தினையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
59

Page 36
(6)
(6)
வளர்ச்சியின் செலவில் பொதுநலனா?
இதற்கு விடைதகுவது மிகவும் கடினமானது. செயற்றிறன் மிக்க பொதுநலக் கொள்கைகள் நோய்களைக் குறைக்கும். சிறந்தமுறையில் மக்களுக்கு உணவூட்டும், சிறந்த கல்வியை வழங்குவதுடன் தொழிலாளரின் உற்பத்தித் திறனையும் உயர்த்தும். இத்தகைய“பொதுநலக் கொடுப்பனவுகள்" அரசியல் அமைதியையும் ஏற்படுத்தக் கூடியதுடன் முதலீடு மற்றும் வளர்ச்சி இடம் பெறக் கூடிய ஒரு நிலையான சமூகத்தையும் உருவாக்கும். ஆனால் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் உற்பத்தி ரீதியான தொழிலாளர் படைக்கு மேலதிகமாக, பெளதீக மூலதன உருவாக்கம் என்பது வளர்ச்சிக்கு அவசியமானதொன்றாக உள்ளது. இல்லாவிட்டால் மேற்கு ஆசியா போன்று வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் படையை இப்பொதுநலக் கொள்கைகள் உருவாக்கிவிடும். இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும், அனுபவ ரீதியாக இதனை விளங்கிக் கொள்ளமுடியும். நல்ல சுகாதாரமும், எழுத்தறிவும் நன்மை தருபவை என்ற ஒரு வலிமையான வாதம் இருந்து வந்தாலும் அவற்றை ஏனைய நன்மைகளை அடைந்து கொள்வதற்கான ஊக்கிகளாக நியாயப்படுத்த முடியாது. இருப்பினும் பொதுநல நிகழ்ச்சித் திட்டங்களின் மீதான செலவீட்டுக்கான வளங்கள் அவ்வப் பொருளாதாரத்திற்கு உள்ளேயே உருவாக்கப்பட வேண்டும். ஆகவே நீண்ட காலத்தில் பொதுநல நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் முதலீடு இரண்டிற்குமிடையில் எதனைத் தெரிவு செய்தல் வேண்டும் என்ற நிலை ஏற்படும்.
வளர்ச்சியுடன் எவ்வாறு பொதுநலன் தொடர்பு படுத்தப்படுகின்றது?
அபிவிருத்தியை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் முதலீட்டுக்குச்
செல்லக் கூடிய வளங்களை பொதுநலச் செலவீடுகள் குறைத்துவிடுகின்றன.
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் மெதுவான வளர்ச்சிக்கான விளக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. 1983-1992 காலத்தில் இலங்கையின் வருடச்சராசரி வளர்ச்சி வீதமானது மலேசியா, தாய்லாந்தில்
உள்ளதிலும் பார்க்கக் குறைவாகக் காணப்பட்டது.
60

மிக உயர்ந்த வீதத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாக இருந்தால் அதற்கு உயர் வீதமான முதலீடும் தேவை. இலங்கையில் முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 24 வீதமாகவே உள்ளது. ஆனால் இதற்கு மாறாகத் தாய்லாந்து, சீனாவில் ஏறக்குறைய 40 வீதமாக இருக்கின்றது. 1989 இல் இருந்து இலங்கையில் அரசாங்கமானது ஒரு சேமிப்பாளனாகக் காணப்படாது உள்நாட்டுத் தனியார் துறை தனது முதலீட்டுக்கு நிதியீட்டம் செய்வதற்கு வெளிநாடுகளிலேயே கடன் வாங்கியது. இன முரண்பாடுகள், பொதுநலன் ஆகியவற்றில் கடுமையான செலவீடுகளை அரசாங்கம் மேற்கொண்டதினால் அரசாங்கத்தினால் சேமிக்க முடியாமல்
போய்விட்டது.
(8) செலவீட்டில் வெட்டுகளை மேற்கொள்வது சாத்தியமா?
சமூகப் பொதுநலனில் மிக உயர்ந்த அளவில் பொதுச் செலவீட்டினை மேற்கொள்வது வரவு-செலவுத் திட்டத்தில் அதிக பற்றாக் குறையை எப்பொழுதும் ஏற்படுத்துகின்றது. பொதுச் செலவீட்டினைக் குறைப்பது, வருமானத்தை அதிகரிப்பது ஆகிய இரட்டை நடவடிக்கைகள் மூலம் குறைக்க வேண்டிய தேவை உள்ளது. உயர்ந்த வரிகள் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகள் ஊக்குவிப்பினைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியியைத் தடைசெய்து விடும்,இலங்கையின் வரியின் தள அமைப்பானது ஒடுங்கியதாகக் காணப்படுவதால் பொது வரிகளினூடாக வருமானத்தை உயர்த்தும் பொழுது எல்லை மட்டத்தை அடைந்துவிடுகின்றது. பொதுநலச் செலவீடுகளில் வெட்டினை மேற்கொண்டால் சமூக அமைதியின்மையையும் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான மக்களாதரவுக் குறைவும் ஏற்படுகின்றது. பாதுகாப்புச் செலவில் வெட்டினை மேற்கொண்டால் அது தேசிய பாதுகாப்பில்
பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு வசதியளிக்கக் கூடிய வீதத்தில் குறிப்பிட்ட ஒரு மட்டத்தில் பொதுமுதலீட்டினை வைத்திருந்தால் ஏனைய விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உண்மையாகவே வறிய
நிலையிலுள்ள மக்களுக்கான பொதுநலனை இலக்காகக் கொள்ளுவதன்
61

Page 37
மூலம் செலவீடு குறைக்கப்பட்டும் உதாரணமாக, நன்கு ஆராய்ந்து பார்த்தால் சமூர்த்தி பெறுபவர்களின் எண்ணிக்கையை ஏறக்குறைய அரைவாசியாகக் குறைக்க முடியும். அரசாங்கத்தினால் நிதியிடப்படும் சுகாதாரம், கல்விதுறைகள் குறிப்பாக உயர் கல்வி, கட்டண அமைப்பு என்பன விபரமாக ஆராயப்படமுடியும். சுகாதாரத்தில் நோய் தடுப்பு செலவீட்டிலும் பார்க்க நோயைக் குணமாக்கும் செலவீட்டுக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். அத்துடன் நகரப்பகுதிகளில் காணப்படும் சுகாதார வசதிகளுக்கான சலுகைகள் பெரும்பாலும் தனியார். துறையினரிடம் விட்டு விடவேண்டும். விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குத் தேவையான முதலீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு இத்தகைய சேமிப்புக்கள் மாத்திரம் போதுமானவை அன்று. வெளிநாட்டு மூலவளங்களைக் கவர்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இத்தகைய மேலதிக மூலவளங்கள் விரைவான பொருளாதார வளர்ச்சிக் காலங்களில் மிகக் குறைந்த
அளவிலாவது சமாதானத்தையும் உறுதித் தன்மையையும் வழங்கக் கூடும்.
62

அரசாங்க வரவு செலவுத் திட்டம்
(1) அறிமுகம்
எமது சமூகத்தில் அரசாங்கமே மிக முக்கியமான சமூக, பொருளாதார முகவராக விளங்குகின்றது. ஏனைய நிறுவனங்களைப் போன்று அரசாங்கமும் பணத்தைப் பெற்று, பணத்தைச் செலவு செய்கின்றது. ஏனைய முகவரகங்களைப் போலன்றி, அரசாங்கம் மிகக் குறைந்தளவான வருமானத்தையே பெறுகின்றதுடன் சமூகத்திலுள்ள ஏனைய முகவரகங்களின் மீது வரியை விதிப்பதன் மூலமும், கடன் பெறுதல் மூலமும் தனது பெருமளவான செலவீடுகளைச் சமாளிக்கின்றது. ஏனைய எல்லா முகவரகங்களிலும் பார்க்கச் சிறப்பான அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது. சமூகங்களில் இருந்து வளங்களைப் பெற்று அவ்வளங்களுக்காக புதிய அச்சடித்த பணத்தினை வழங்குகின்றது. எமது அரசாங்க முறையில் அரசாங்கம் தனது திட்டமிடப்பட்ட செலவீட்டினைப் பற்றிய அறிக்கையை வருடாந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை உள்ளதுடன் இச்செலவீடு சட்டசபையினால் அங்கீகரிக்கப்படவும்வேண்டும். இவ்வறிக்கையே சுருக்கமாக 6) Մ6ւկசெலவுத்திட்டம் எனப்படும். அரசாங்கத்தின் இத்தகைய பெறுகைகளும் கொடுப்பனவுகளும் எமது வாழ்வில் பாரிய தாக்கத்தினைக் கொண்டுள்ளது. இத்தகைய பெறுகைகளை அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் செயன்முறைகளையும் அரசாங்கத்தின் செலவீட்டின் மூலம் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றது என்பதனைச் சுருக்கமாகவும் இங்கு குறிப்பிடப்படுகின்றது. முதலில் அரசாங்கச் செலவீட்டினையும், பின் செலவீட்டினை எவ்வாறு நிதியீட்டம் செய்கின்றதென்ற வழி வகைகளையும் இறுதியாகக் இச்செயன்முறைகள் எத்தகைய பொறிமுறையினூடாக நடாத்தப்படுகின்றதென்பதையும் நோக்கமுடியும்.
63

Page 38
(2) அரசாங்கச் செலவீடு
1996இல் அரசாங்கத்தின் மொத்தச் செலவீடு ரூ.273,000 மில்லியனாக இருந்தது. இது 1995இல் ரூ. 242,500 மில்லியனாகவும், 1994 இல் ரூ.200,000 மில்லியனாகவும் காணப்பட்டது. இம் மொத்தத்தில் 59.6 வீதம் நடைமுறைச் செலவீடாகும். இது எமது பாடசாலைகள், வைத்தியசாலைகளை நடாத்தவும், பொதுக்கடனுக்கான வட்டியைச் செலுத்தவும், இளைப்பாற்றுச் சம்பளம். பொதுத்துறை நிறுவனங்களினை மேம்படுத்த இழப்புகளுக்கு வழங்கப்படும் நிதிகளையும் உள்ளடக்குகின்றது. மிகுதியானது முதல் செலவீட்டினைக் கொண்டிருப்பதுடன் நீர்ப்பாசன அணைகள், வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகளுக்கான கட்டிடங்கள் என்பவற்றை அமைக்கவும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முதல் வழங்கவும் பயன்படுகின்றது. நாட்டின் மொத்த முதல் செலவீட்டில் அரசாங்கத்தின் பங்கானது 1995ல் 12.6 வீதமாகக் காணப்படுகின்றது.
(3) அரசாங்கம் இச்செலவீடுகளை எவ்வாறு சமாளிக்கின்றது?
அரசாங்கத்துக்கு மிகக் குறைந்தளவான வருமானமே உள்ளது. 1995 இல் அரசாங்க வருமானமானது அதன் மொத்த வருமானத்தில் 13% ஆகவே இருந்ததுடன் அவை வரி வருமானங்களின் வடிவில் சேகரிக்கப்பட்டது. நாம் யாவரும் வரி செலுத்துகின்றோம். வறியவர்களிலும் பார்க்கச் செல்வந்தர்கள் பொதுவாகத் தமது வருமானத்திற்கேற்ப அதிக விகிதாசாரமான வரியைச் செலுத்துகின்றனர்.
நாம் பல்வேறு முறைகளில் வரிகளைச் செலுத்துகின்றோம். எமது வருமானத்துக்குரிய வரியாக நாம் வாங்கும் பொருட்கள், சேவைகளுக்குரிய வரி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி, அனுமதிப் பத்திரக் கட்டணத்திற்கு வரி குறிப்பாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள்,
போன்றவற்றினைப் பதிவு செய்யும் போது இதனைச் செலுத்துகின்றோம்.
64

வரி வருமானம். 1995
1. சொத்துக்கள் வருமானம் மீதான வரிகள் - 14.48% 2. உள்நாட்டுப் பொருட்கள், சேவைகளுக்கான வரிகள்- 59.7% 3. சர்வதேச வர்த்தகத்தின் மீதான வரிகள் - 20.56%
வரவு செலவுதிட்டப் பற்றாக்குறை: இது எவ்வாறு நிரப்பப்படுகின்றது?
வழக்கமாக, அரசாங்கத்தின் மொத்தச் செலவீடு அதன் வருமானம் மற்றும் நன்கொடைகளையும் விட அதிகமாகவே இருக்கும்.இத்தகைய இடைவெளியை வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை (Budget deficit) என அழைப்பர்.
வரவு செலவுத் திட்ட வருமான செலவிடும் பற்றாக் குறையும் -1996
மொத்தவருமானமும் நன்கொடைகளும் 185,950 பில்லியன் ரூபா மொத்தச் செலவீடு 273, 439 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்ட முழுப் பற்றாக்குறை | 87,489 பில்லியன் ரூபா
இப்பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதமாகவும் எடுத்துக்காட்டப்படும். இலங்கையில் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 வீதமாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், முதல் வரவுசெலவானது பெரும்பாலும் உள்நாட்டுக் கடன்படுகை மற்றும் வெளிநாட்டு உதவிகள் மூலம் நிதியீட்டம் செய்யப்படுகின்றது. உள்நாட்டு கடன் வாங்கலானது குடியிருப்பாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலதனத்துக்குக் கிடைக்கக் கூடிய வளங்களை இல்லாமற் செய்துவிடுகின்றது. மேலும் பொதுக் கடன்படுதலையும், வட்டிக்கான கொடுப்பனவுகளையும் இது அதிகரித்து விடும் போக்குடையது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதே இப்பற்றாக்குறையை நிரப்புவதற்கான ஒரே வழியாகும். ஆனால், இதில் பல வரையறைகள் உள்ளன. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வரிவிதிப்புக் காணப்பட்டால், அது தனியார்
முயற்சிகளின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடுவதுடன் எதிர் விளைவுகளையும்
65

Page 39
ஏற்படுத்திவிடும். அடுத்த மாற்றுவழியாக, முதல் செலவீட்டில் குறைப்பினை மேற்கொள்ளலாம். ஆனால் (1) உட்கட்டுமானத்தை விருத்தி செய்வதற்கும், (2) வழமையாக முதல் செலவீட்டுக்குக் கிடைக்கக்கூடிய வெளிநாட்டு உதவியைப் பயன்படுத்துவதற்குமான அவசியத் தேவை காணப்படுவதினால்
இம்மாற்று வழி கைக்கொள்ளப்படுவதில்லை.
தனியார்மயப்படுத்தல் செயற்பாடு எவ்வாறுள்ளது?
அண்மைக் காலங்களில் நிதித்தேவையை உயர்த்துவதற்கு ஒர் உபாயம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதாவது தனியார் கம்பனிகளுக்கு பொதுத் துறை நிறுவனங்களை உரிமையாக்கும் அல்லது விற்கும் வழிகள் பின்பற்றப்படுகின்றன. இந்நிகழ்ச்சித் திட்டமானது பொதுத்துறைச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் என விபரிக்கப்படுகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 1995 இல் 3 பில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றதுடன், எதிர்பார்க்கப்பட்ட 13 பில்லியன் ரூபாவைவிடக் குறைவாகவே இருந்தது.1966 இல் 21 பில்லியன் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தனியார் மயமாக்கல் என்பது பொதுத் துறை நிறுவனங்களை விற்பதன் ஊடாக நிதிகளை உருவாக்குகின்றது மாத்திரமன்றி, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு வருடாந்தம் வளங்களை வழங்குவதற்கான தேவையினின்றும் திறைசேரிக்கு விடுப்பு அளிக்கின்றது. அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவீடு, முதலீட்டுச் செலவு மற்றும் வருமானத்தில் மேற்கொள்ளப்படும் வெட்டுக்களுக்கான வரையறைகள், நடைமுறை வரவு செலவுத்திட்டத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பிணைகள் என்பன வள ஒதுக்கீடுகளில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்துவதற்கான அவசியத்தை அதிகரிக்கின்றது. அரசாங்கத்திடம் நல்லி நோக்கங்கள் இருந்தாலும் குறைந்தளவான விருப்பத்தினையே கொண்டுள்ளது. இவ்விருப்பமானது ஏறக்குறைய 10 வீதமாகவே அடுத்தடுத்து வரும் வரவு செலவுத்திட்டத்தில் காணப்படுகின்றது.
பாதுகாப்புச் செலவீடு : இது எவ்வாறு உயர்ந்தது?
வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும்பிரச்சினைகளில் ஒன்று அண்மைக் காலங்களில் பாதுகாப்பு
66

மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவீடுகளில் ஏற்பட்டு வரும் விரைவான
உயர்ச்சியே.
அரசாங்கத்தின் செலவீடுகளை அதற்குக் கிடைக்கும் வருமானம் மற்றும் உழைப்பு என்பவற்றிலிருந்து சமாளிக்க முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் இருந்து அரசாங்கத்தினால் கடனாக வாங்கப்படும் நிதிகளிலிருந்தே இச்செலவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. உள்நாட்டுச் சந்தையில் அரசாங்கம் கடன் பெறும் பொழுது தனியார் துறையின் பயன்பாட்டுக்கு உள்ள தனியார் சேமிப்புக்களைத் தனது சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கின்றது. அரசாங்கம் வீதிகள், தொலைபேசித் தொடர்புகள், அணைகள் மற்றும் துறைமுகங்களின் விருத்தியில் முதலீடுகளை மேற்கொள்ளும் பொழுது தனியார் முதலீட்டாளர்களின் இலாபத் தன்மையினையே மேம்படுத்துகின்றது. மத்திய வங்கியிடமிருந்தும், வங்கி முறைமைகளிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறுகின்றது. இச் செயன்முறையில் ஈடுபடுவதன் மூலம் பொருளாதாரத்துக்கான கொள்வனவுச் சக்தியை மேலும்
அதிகரிப்பதுடன் வீக்க அமுக்கங்களைத் தோற்றுவிப்பதாகவும் உள்ளது.
அரசாங்கத்தின் கடன் வாங்கல் பொதுப்படு கடனையும் உள்ளடக்குகின்றது. பொதுப்படுகடன் விகிதம் (Public debt) 1986 இல் மொத்த தேசிய உற்பத்தி 43.89 வீதத்திலிருந்து 1995இல் 43.6 வீதமாகக் காணப்பட்டது. பொதுப்படுகடன் அதிகரிப்பினால் உயர்வடைந்த வட்டிக் கொடுப்பனவுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட தொகை 1986இல் 8, 762 மில்லியன் ரூபாவாகவும், 1995இல் 38,226மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டது. 1986இல் இது 14.8 % ஆக இருந்து 1995 இல் 19.3 % ஆக அதிகரித்தது. பொதுப்படுகடனுக்கான வட்டியைத் தீர்ப்பதற்கே பிரசைகளாகிய நாம் அரசாங்கத்துக்கு வரிகளைச் செலுத்துகின்றோம்.
அரசாங்க வரிவிதிப்பும் மீள்பரம்பலுக்கான வருமானச் செலவீடும்
உறுதியான கொள்கைகள் அல்லது தற்செயலாகவோ அரசாங்கத்தின் வரிவிதிப்பு மற்றும் செலவீட்டுக் கொள்கைகள் நாட்டின் பல்வேறு
67

Page 40
பிரதேசங்களுக்கிடையிலும், குடியிருப்பாளர்களுக்கிடையிலும் வருமானத்தை மீள்பரம்பல் செய்கின்றது. அரசாங்கமானது வரண்ட வலயங்களில் பயிர் செய்யமுடியாத பகுதிகளை விருத்தி செய்வதற்கு
நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வருமானத்தைச் சேகரித்து வருவதுடன் பிரதேசரீதியாக வருமானம் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை மீள்பரம்பல் செய்கின்றது. அதேபோன்று அரசாங்கமானது தென் மாகாணத்தினை விருத்தி செய்வதற்கு முதலீடுகளை மேற்கொள்ளும்பொழுது செல்வத்தை மீண்டும் மீள்பரம்பல் செய்யும். இது ஒரு சிறிய அளவில் காணப்பட்டாலும்,
அம்மாகாணத்தில் வாழும் மக்களினாலேயே வரிகளும் ச்ெலுத்தப்படுகின்றன. வருமானமும் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. குடியிருப்பாளர்களுக்கிடையிலான மீள்பரம்பல் மாறுபாடான கருத்துக்களைக் கொண்டவை. அரசாங்கம் வரிகளைச் சேகரிக்கும் பொழுது, பிரசைகள் தமது வருமானத்திலிருந்து அதனைச் செலுத்துகின்றனர். இதனால் தமது உழைப்புக்களிலிருந்து சேமிக்கும் வருமானத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். அதே நேரத்தில்
அரசாங்கத்திடமிருந்து பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இந் நன்மைகள் பணவடிவிலும் (பொதுநலன் கொடுப்பனவு) அல்லது பொருட்களாகவோ (பாடசாலைச் சீருடைகள், வைத்திய சேவை, மானிய முறையிலான கடன் வசதிகள்) இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பாளனும் பெறுகின்ற தேறிய நன்மைகளை மாதிரி அளவீட்டின் மூலம் அளவீடு செய்வது
மிகவும் கடினமானது. இதன் விளைவான மீள்பரம்பல் பாங்கினைக் கண்டறிய முடியாது. ஆனால் நடுத்தர வருமானப் பிரிவினர் தாம் செலுத்துவதற்கு அதிகமாகப் பெற்றுக் கொள்கின்றனர் என்பது ஒரு பொதுவாக ஊகமாகும். ஆனால் குறைந்த வருமானப் பிரிவினர் மோசமான நிலையில் உள்ளனர். பொதுப்படுகடன் மீதான வட்டிக்குச் செலுத்தப்படும் மிக உயர்வான கொடுப்பனவுகளுக்குச் சொந்தமானவர்களாக, உள்ள பொருளாதார
ரீதியாக நல்ல நிலையில் உள்ள பிரிவினர் வருமானத்தை வரி செலுத்து
வோரிடமிருந்து உயர்வருமானப் பிரிவுகளுக்கு மாற்றம் செய்கின்றனர்.
68

வரவு செலவுத் திட்டம் எவ்வாறு வரைபு செய்யப்படுகின்றது?
வரவு செலவுத் திட்டத்தினை ஒழுங்கு முறைப்படுத்தல், அமுலாக்குதல், மீள்பார்வை செய்தலும் நிகழ்ச்சிகளின் ஒரு வருடாந்த வட்டமாகும்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரலில் நிதி அமைச்சிலுள்ள திறைசேரியானது
அடுத்துவரும் ஆண்டுக்கான செலவீடுகளின் நகல் மதிப்பீடுகளை
அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து
கோருகின்றது. ஒவ்வொரு அரசாங்க அமைச்சும் முன்னுரிமைகளின்
அடிப்படையில் தீர்மானித்த பின்பு நகல் மதிப்பீடுகளைத் திறைசேரிக்குச்
சமர்ப்பிக்கப்பட்டபின் ஒவ்வொரு அமைச்சுடனும் இது பற்றிப் பேசித்
தீர்க்கப்படும். பேச்சுவார்த்தைகள் மற்றும் மீள் பார்வையின் பின்பு
திறைசேரியானது அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக
திருத்தியமைக்கப்பட்ட பெறுமதிகளை ஏற்றுக் கொள்ளும், செலவீடுகள்
மற்றும் வருமானம் பற்றிய நகல் மதிப்பீடுகள் பின்னர் பாராளுமன்றத்துக்கு
ஒதுக்கீட்டு மசோதா மூலம் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் இம்
மசோதா மீதான விவாதம் வரவு செலவுத் திட்ட விவாதம் என
அழைக்கப்படும். அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் மசோதாவானது
ஒதுக்கீட்டுச் சட்டமாக (Appropriation Act) மாற்றமடைவதுடன்
கணக்கீட்டு அலுவலர் நாயகத்தைக் கொண்ட சட்ட அதிகார சபைக்கு வரவு
செலவுத் திட்ட வரையறைக்குள் நிதியியல் ஒழுங்கு விதிகளுக்கு அமையச்
செலவீடுகளை மேற்கொள்ளவும் வசதியளிக்கும்.
நிதியியல் ஒழுங்கு விதிகளின்படி வரவு-செலவுத் திட்ட வட்டத்தில்
பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குமுறைகள் உள்ளன.
ஒவ்வொரு அமைச்சும் திணைக்களமும் செலவீடுகள் பற்றிய கணக்குகளை
நிர்வகித்துவருகின்றன. அரசாங்கக் கணக்குளை கணக்காய்வாளர் தலைமை
95.5 (Auditor General) பரிசோதனை செய்வதுடன்
பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கீட்டுக் குழுவுக்கு (PAC) அறிக்கை சமர்ப்பிப்பார். பாராளுமன்ற பொதுக் கணக்கீட்டுக் குழு (Public Accounts
69

Page 41
Committee) ஆல் வழங்கப்பட்ட அறிக்கையை மேலும் பரிசோதனை செய்து கணக்கீட்டு அலுவலர்களிடமிருந்து விளக்கங்களைப் பெற்று தனது அவதானிப்புக்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பும். எனவே பாராளுமன்ற சாதனத்தின் ஊடாக, பொது நிதியின் மீது பிரசைகள் தமது கட்டுப்பாடுகளைப் பரீட்சிக்கின்றனர். இது ஒரு கருத்தியல் ரீதியான வடிவமாகும். நடைமுறையில் இவ்வட்டம் இலகுவாக அமையமாட்டாது. முதலாவது, அமைச்சுக்களும் திணைக்களங்களும் பாராளுமன்றத்தினால் தமக்கு ஒதுக்கப்பட்ட எல்லா நிதிகளையும் செலவு செய்யமாட்டாது அல்லது சிலவேளைகளில் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டவற்றுக்கு மேலாகவும் செலவு செய்திருக்கலாம். உதாரணமாக, 1995 இல் 187, 549 மில்லியன் ரூபாவுக்கான செலவீட்டினைப் பாராளுமன்றம் அங்கீகரித்துடன் மொத்தச் செலவீட்டின் தற்காலிக ஏற்பாட்டுக் கணக்கு 191,566 மில்லியன் ரூபாவாக இருந்தது. இரண்டாவது, அரசாங்க செலவீட்டுக் கணக்குகள் பூர்த்தி செய்யபட்டவுடன் பொதுக் கணக்குக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும். கணக்குகள் மூடப்பட்ட 3 அல்லது 4 ஆண்டுகளின் பின்பே இது இடம் பெறும். இவ்விடைக் காலப் பகுதியில் கணக்கீட்டு அலுவலர் நாயகம் மற்றும் அவர்களது உதவியாட்கள் இளைப்பாறி விடுவர். ஆவணங்கள் இடம்மாறிவிடும் அல்லது தொலைந்துவிடும். ஞாபகமின்மையினால் பொறுப்புடைமை இல்லாமற் போய் விடும். எனவே இச்செயன்முறையைச் சரிசெய்ய வேண்டியது மிகவும் அவசியமானது. பல வருடங்களுக்கு முன்பு ஏமாற்றுப் பேர் வழிகள் வெளிநாடுகளில் வசதியான வாழ்வைப் பெற்றுக் கொண்டமைக்கு இத்தகைய ஒழுங்கின்மைகளே வழிசமைத்துக் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
70

பணவீக்கம் (Inflation)
அரசாங்கம் மட்டுமன்றிப் பொதுமக்களும் பணவீக்கத்தில் அக்கறை கொண்டுள்ளனர். அரசாங்கங்கள் பொதுவாகப் பணவீக்கத்தினை தாழ்நிலையில் வைத்திருக்கவே விரும்புகின்றன. மக்கள் இப்பணவீக்கத்தினால் தமது கொள்வனவுச் சக்தியில் மறைமுக பாதிப்பு ஏற்படுமோ எனப் பீதிகொள்கின்றனர். பணத்தின் பெறுமானம் பணவீக்கத்தினால் குறைவடையும் நிலை காணப்படுவதினால் பணத்தினைக் கொண்டிருக்கும் எவரும் இச் செயன்முறையின் மூலம் இழப்பினையே அடைவர். சேமிப்புக்கள் பணத்தில் வைத்திருக்கப்படுவதினால் அல்லது வங்கி வைப்புக்களாகப் பணம் இருப்பதினால் பணவீக்கம் பணச் சொந்தக்காரர்களின் பெறுமானங்களைக் குறைத்துவிடுகின்றது. மாறாக, ஏனைய வழிகளில் சொத்துக்களைக் கொண்டிருப்போர் உதாரணமாக, நிலம், கட்டிடங்கள் மற்றும் பொருட்களின் இருப்புக்கள் என்பன இப்பணவீக்கச் செயன்முறையில் நன்மை தருவனவாக இருக்கும். வறுமையில் வாழும் மக்கள் இத்தகைய சொத்துக்கள் எதனையும் கொண்டிராவிட்டாலும் பணவீக்கம் அவர்களின் மறைமுக எதிரியாக விளங்குகின்றது. சந்தை வட்டி வீதங்கள் வழக்கமாக உண்மையான மூலதனச் செலவு மற்றும் ஒழுங்கிடர்களுக்கு மேலாக ஒரு பணவீக்கம் கொண்ட ஊக்கப் UGorišálso got (Premium) கொண்டிருக்கும். எனவே பணவீக்கமானது வட்டி வீதங்களை உயர்த்தும், நீண்டகால முதலீடுகளை குறைவிடையச் செய்யும். வெளிநாடுகளிலிருந்து குறுங்கால முதல்களையே கவரும் தன்மை கொண்டதாக விளங்கும். இதனால் உள்நாட்டு நாணயத்தின் பெறுமானம் உயர்வடையும் அதேவேளை வெளிநாட்டு நாணயத்தின் சார்பான வர்த்தக ரீதியான இலாபங்களைக் குறைத்துவிடும். பொருளாதார வளர்ச்சிக்கு, மிக உயர்ந்த வீதத்தினைக் கொண்டிருக்கும். பணவீக்கம் தீங்கு விளைவிக்கக் கூடியது. விருத்தியடைந்த நாடுகளில் பணவீக்கத்தினைப் பூச்சிய மட்டத்துக்குக்
71

Page 42
கொண்டு வருவதற்கான முயற்சிகள் எப்பொழுதும் காணப்படும். கனடாவும் நியூசிலாந்தும் இது தொடர்பான கொள்கைகளைச் சிறப்பாகக்
கொண்டிருக்கின்றன.
பணவீக்க மட்டங்களும் நடவடிக்கைகளும்
விலைகளில் ஏற்படும் பொதுவான உயர்வினைக் கட்டுப்படுத்துவது இலகுவானதன்று. கோட்பாட்டு ரீதியாக, இரு வேறுபட்ட காலங்களுக்குரிய சராசரி விலை மட்டத்தினைப் பெறுவது அவசியமானதாக இருந்தாலும் எல்லா விலைகளையும், ஒப்பீட்டு ரீதியான நோக்கத்திற்காகச் சேகரிப்பது முடியாத விடயமாகும். பொருளியலாளர்களும், புள்ளிவிபரவியலாளர்களும் என்ன செய்கிறார்கள் என்றால் மக்களினால் வாங்கப்படுகின்ற பொதுவாக உள்ள ஒரு குறிப்பிட்ட தொகைப் பொருட்களை அடையாளம் செய்து, அத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு பொருளின் முக்கியத்துவத்தினைப் பதிவுசெய்து அடுத்து வருகின்ற காலத்துக்கும் இதே முக்கியத்துவத்தினையே கொண்டிருக்கின்றது என எடுகோளாகக் கொண்டு இரு விலை மட்டங்களையும் ஒப்பீடு செய்கிறார்கள்.கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மாதிரி அளவீடுகளில் இருந்து கணிப்பீடு செய்யப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் கொழும்பு நகரில் வாழும் மக்களின் நுகர்வுச் செலவீடுகளின் பங்குகளையும் அடிப்படையாண்டில் நடைமுறை விலையில் உள்ள விலைகளையும் ஒப்பீடு செய்யப்படுகின்றது.
நாடுகளிடையே பணவீக்க வீதங்களில் வேறுபாடு காணப்படுவதுடன் ஒரு நாட்டிலேயே வெவ்வேறு காலப்பகுதிகளிலும் இவ்வீதங்கள் வேறுபடுகின்றன. இந்தியா போன்று வருடாந்தம் 10 வீதத்துக்கும் குறைவான மெதுவான பணவீக்கத்தினை நகரும் பணவீக்கம் (Creeping inflation) எனக் குறிப்பிடுவர். இதற்கும் மேலாக, உதாரணமாக வருடாந்தம் பணவீக்கம் 50% ஆக இருந்தால் அது பாச்சல் பணவீக்கம் (galloping inflation) எனப்படும். ஆஜென்ரீ னா, பொலீவியா, பிறேசில், ஜேர்மனி, இந்தோனேசியா, ருஷியா போன்ற சில நாடுகள் வருடாந்தம் 200 வீதத்திற்கு மேற்பட்ட பணவீக்க நிலைமைகளை அனுபவித்துள்ளன. பணத்தின் பெறுமானம் வெளிப்படையாகவே வீழ்ச்சியடைவதினால் இத்தகைய நிலைமைகளில் எவரும்
72

பணத்தினை வைத்திருக்க விரும்புவதில்லை. வயதான காலங்களில் ஏற்படும் செலவுகளுக்காக பண வடிவில் வைத்திருக்கப்படும் சேமிப்புக்களின் பெறுமானம் ஒரு நாட்பொழுதில் மறைந்துவிடும் தன்மை கொண்டதாக இருப்பதினால் பாரிய சமூக அமைதியின்மைகளை உருவாக்கும்.
பணவீக்கத்துக்கான காரணங்கள் எவை?
உற்பத்தி ரீதியான நடவடிக்கைகளில் இருந்து பெறப்படும் வருமானத்திலும் பார்க்க அதிகமான பணத்தினை ஒரு சமூகம் தனிநபர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கம் செலவு செய்யும் பொழுது பொதுவான விலைமட்டத்தில் உயர்ச்சி காணப்படும். அரசாங்கங்கள் மேலதிகமாகப் புதிய பணத்தினை அச்சடித்து வெளியிடும் பொழுதும் அப்பணத்தின் மூலம் பொருட்கள், சேவைகளை வாங்கும் பொழுதும் வங்கிகள் கடன் வசதிகளை விரிவாக்கும் பொழுதும் மேலதிகமான கடன் வசதிகளைப் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்குப் பயன்படுத்தும் பொழுதும், எல்லா பொருளாதார முகவர்களும் முன்னரிலும் பார்க்க தம்மிடமிருக்கும் பணத்தினை அதிவிரைவாகச் செலவு செய்யும் பொழுதும் இது சாத்தியப்படும்.
சிலவேளைகளில் சக்தி, உணவுத் தானியங்கள் போன்ற பிரதான பண்டப் பொருட்களின் நிரம்பலானது சர்வதேச சந்தையில் ஏற்படும் திடீர் இடையூறுகளினால் பாதிக்கப்படும் பொழுது அவற்றின் விலை உயர்வடைகின்றன. இத்தகைய விலை அதிகரிப்புக்களை அரசாங்கமானது பண உருவாக்கத்தின் மூலம் சரிசெய்கின்றது. வேதனங்களில் ஏற்படும் அதிகரிப்பு உற்பத்தித்திறனின் உயர்வுடன் இணைந்திருப்பதில்லை. எனினும் பொதுவாக பொது விலைமட்டத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் வேதனங்கள், எல்லா உற்பத்திச் செலவின் 60 வீதத்துக்கு மேல் கொண்டிருக்கின்றன. ஆயினும் பணவியல் தொடர்பான அதிகார சபைகள், இவ்வதிகரிப்பைச் சரி செய்வதற்கு பண நிரம்பலை உயர்த்துகின்றன. பொதுவான விலை மட்டத்தில் பணநிரம்பல் மிக முக்கியமான தீர்மானக்
காரணியாக விளங்குகின்றது.
விலை உறுதியும் விலை அதிகரிப்பும் கொண்ட பருவகாலங்கள் இருந்திருக்கின்றன. இலங்கையில் 1970 வரையும் விலை அதிகரிப்பு வீதம் மிகக்
73

Page 43
குறைவாக இருந்தது. 1970-77 காலப்பகுதியிலும் கூட வருடாந்த பணவீக்க வீதம் 5.7% ஆகக் காணப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் பாண் மற்றும் ஏனைய பண்டங்களின் விலைகள் 50 வருட காலங்களாக நிலையாகக் காணப்பட்டிருந்தது. இவ் உறுதித் தன்மைக்கு அரசாங்கத்தின் விலைக் கட்டுப்பாடுகளே பின்னணியாக இருந்தன. ஆயினும், சோவியத் வகையான பொருளாதாரத்தில் எல்லா விலைகளையும் கட்டுப்படுத்த முடியாததினால் மேலதிக கொள்வனவுச் சக்தி பண்டப் பொருட்களின் விலைகளை உயர்த்தலாம். ஏனெனில் அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாததுடன், கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதிலும் பார்க்க அதிக கொள்வனவுச் சக்தியை இப் பொருட்கள் கொண்டிருப்பதினால் பங்கீட்டு முறையும், "கியூ”முறைகளும் காணப்படலாம். நீண்ட காலத்துக்கு உறுதியான முறையில் காணப்பட்ட நிலையான விலைகளினால் பொருளாதாரங்கள் தேக்க நிலையை அடைந்ததுடன் வளர்ச்சி ஸ்தம்பித நிலையை அடைந்தமையே 1989 இல் சோவியத் பொருளாதாரம் உடைவுபடுவதற்கான காரணமாக இருந்தது.
இதனின்றும் வேறுபட்ட முறையில் இலங்கையில் 1977 இன் பின் பணவீக்கமானது வருடாந்தம் 10 வீதத்துக்கு மேலாக உறுதியான நிலையில் காணப்பட்டதுடன் 1990 இல் 21 வீதமாக உயர்வடைந்தது. 1977 இன் பின்பு விலைக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டவுடன் நாணய மாற்றுவீதம் சந்தையில் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது. ரூபாய் பெறுமானம் வெளிநாட்டு நாணய மாற்றுவீதத்தில் வீழ்ச்சி கண்டாலும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க கொள்வனவுச் சக்தியை அரசாங்கம் வழங்கியிருந்தது. பொதுமக்களின் பணநிரம்பல் (நாணயம், கேள்வி, காலம் மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) 1977 மார்கழியில் இருந்து 1995 மார்கழிக்கு 228, 536 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்தது. இது 15 மடங்கான அதிகரிப்பைக் காட்டியதுடன், பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மெய் வெளியீடு 15 மடங்காக அதிகரித்தன.
1977 தொடக்கம் 1975 வரைப்பட்ட எல்லா வருடங்களிலும் அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளில் தேறியபணப்பற்றாக்குறை
74

காணப்பட்டதுடன் அப்பற்றாக்குறை வெளிநாட்டுக் கடன்களினாலும் நன்கொடைகளினாலும் உள்நாட்டுக் கடன்படுகையினாலும் நிதிப் படுத்தப்பட்டது. மத்திய வங்கி உட்பட வங்கி முறைமைகளில் இருந்து பெறப்பட்ட எல்லா மூலாதாரங்களும் பணவீக்கத்தினைத் தூண்டுகின்ற பாரிய சக்திகளாகக் காணப்பட்டன. வங்கிமுறைமைகளிலிருந்து கடன் பெறுதலானது 1977 இல் இருந்து, குறிப்பாக 1989, 1992, 1993 தவிர்ந்த ஏனைய எல்லா ஆண்டுகளிலும் நேர்கணியமாகவும் மிகப் பாரியதாகவும்
இருந்தது.
பணவீக்கத்துக்கு எதிரான முறையீடு ஏன்?
பணவீக்கத்துக்கு எதிரான முறையீட்டுக்கு (Complain) இரு பரந்த காரணங்கள் உள்ளன. (1) பொதுவாக நீண்டதொரு காலப்பகுதியில் பணப்பெறுமானம் உறுதியடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இன்று ஒரு ரூபாயின் மதிப்பு, இன்றிலிருந்து ஏறக்குறைய 10 வருடங்களின் பின்பும் ஒரே மாதிரியர்க இருக்கும் என்ற விளக்கத்தின் அடிப்படையிலேயே பணத்தில் உடன்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. பணத்தின் பெறுமானம் பாரிய அளவில் மாற்றமடைந்தால் பணவீக்க நிகழ்வில் வீழ்ச்சி ஏற்படும். பெறுமானத்தின் உறுதித்தன்மை பற்றிய எடுகோளும் இழக்கப்படுவதுடன் பணமாற்றுப்பற்றிய உடன்பாடும் பிரச்சினைக்குரியதாக மாறும் சேமித்து வைக்கும் பெறுமானமாக பணத்தினை கொண்டிருக்க மக்கள் விரும்பாவிட்டால் பரிமாற்ற ஊடகமான இதன் பயன்பாடு கேள்விக்குரியதாக மாறிவிடும். மிக உயர்வான பணவீக்கம் தொடர்ச்சியாக நிலைத்திருக்குமானால் பரிமாற்ற ஊடகமாகப் பணத்துடன்
இணைந்த எமது பொருளாதாரங்களின் செயற்பாடு உடைவுபடும்.
பொதுவான விலைமட்டமென்பது ஒரு சராசரி விலையைக் குறிக்கும். எல்லா விலைகளும் ஒரேமாதிரி உயர்வடைவதில்லை. சில விலைகள் ஏனையவற்றிலும் அதிகமாக அதிகரிக்கும். பணரீதியாக நிலையான வருமானங்களைக் கொண்டிருப்போர் குறிப்பாக இளைப்பாற்றுச் சம்பளம்
பெறுவோர் பணத்தின் பெறுமானம் வீழ்ச்சியடையும் பொழுது பாதிக்கப்படுவர்.
75

Page 44
தொழிலாளர் செலவு மாற்றமடைவதினால் வேதனம் பெறுவோர் நட்டமடைவர். நிறுவனரீதியான தொழிலாளர் தமது வேதனங்களின் மெய் பெறுமானத்தினைப் பாதுகாப்பதற்கு கைத்தொழில் நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது உற்பத்தியில் இழப்பு ஏற்படும். விலைகள் உயர்வதினால் சேமிப்பாளருக்கு இழப்பு ஏற்படும். பணவீக்கம் செயன்முறையில் சேமிப்பதிலும் பார்க்க கடன்வாங்குவது நன்மை, அனுகூலமானது. இவ்வாறு கடன் பெறுபவர் எதிர்காலத்தில் அந்த நிலையான அளவு பணத்தினைக் குறைந்த பெறுமானம் கொண்ட நாணயத்தில் திரும்பச் செலுத்தலாம். பணவீக்கத்தினைக் கொண்டிருக்கும் வட்டிவீதங்கள் நடைமுறை வட்டிவீதங்களை உயர்த்தும். அதனால் நீண்டகால முதலீடுகளில் இருந்து முதலீட்டாளர்களை அது தடுத்துவிடும். பொதுவாகப் பணவீக்கமானது பொருளாதாரங்களில் மேலும்
நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கும்.
அபிவிருத்தியுடன் பணவீக்கம் எவ்வாறு தொடர்புபடுகின்றது?
ஒரு நாடு விரைவான வீதத்தில் அபிவிருத்தியடைய விரும்பினால் பணவீக்கம் தவிர்க்க முடியாததாக இருக்குமா? உதாரணமாக, வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பின்ை வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்க விரும்பினால் அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் பாரிய முதலீடுகள் அவசியத் தேவையாக இருக்கும். இதன் விளைவாக, மேலும் மேலும் பணம் சுழற்சிக்குட்படும். இப்பணத்தினைப் பெறுபவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதில் போட்டியாளர்களாக மாறுவர். இதனால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்படும் கேள்வித்தூண்டலினால் விலைகள்
உயிர்வடையும்.
பணவீக்கம் மேலும் பணவீக்கத்தினைத் தூண்டும் தன்மை கொண்டதினால் அது உண்மையில் ஆபத்தானது. உதாரணமாக, வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் பொழுது தொழிலாளர் உயர்வான வேதனங்களைக் கோரி நிற்பர். இவ் உயர்வான வேதனங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உயர்ந்த விலைகளை உடனடியாக அதிகரிக்கும்.
விலைகள் உயர்வடைகின்றது என பொதுமக்கள் எதிர்பார்க்கும் பொழுது
76

பணத்தின் பெறுமானம் வீழ்ச்சியடைகின்றது. அவர்கள் எவ்வளவு விரைவாகப் பணத்தினைப் பெறுகின்றார்களோ அவ்வளவு விரைவாக அதனைச் செலவு செய்கின்றனர். இதுவே பாச்சல் பணவீக்கம் எனப்படுவதுடன் இப்புயலிருந்து
அனேகமான சமூகங்கள் மீளமுடியாமல் உள்ளது.
1980களில் இருந்து செல்வந்த நாடுகளின் கொள்கை வகுப்போர் பணவீக்கத்தினைப் பொருளாதார வளர்ச்சியின் பிரதான எதிரி எனக் கருதி அதனை மிகக் குறைவாக நிலைக்கச் செய்ததுடன் வருடாந்தம் 5 வீதத்துக்கும் குறைவாக நிர்வகித்து வந்தனர். மேற்கு, வடமேற்கு ஐரோப்பா, கனடா போன்ற தொழிலாளர் சந்தைகள் உறுதியானதாக விளங்கும் பொருளாதாரங்களில் இக்கொள்கை ரீதியான நிலைப்பாட்டினால் பொருளாதாரங்கள் வளர்ச்சியடைந்தாலும் உயர்வான வேலையின்மை உருவாகியது. அனுபவ ரீதியான தரவுகளின்படி வருடாந்தம் 5 வீதத்துக்குக் குறைவான பணவீக்கம் வளர்முக நாடுகளில் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து விடும் என்பது
கண்டறியப்பட்டுள்ளது.
பணவீக்கத்தினை ஒருவர் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.
அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் உறுதியாகத் தீர்மானித்தால் மாத்திரமே ப்ணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தமுடியும். செல்வந்த நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, நியூசிலாந்து, ஜேர்மனி, கனடர் ஆகியன இத்தகைய அனுபவத்தைக் கொண்டுள்ளன. ஆஜென்ரீனா, பிறேசில், இந்தோனேசியா, கொரியாக் குடியரசு, பேரு ஆகிய நாடுகள் மிகவும் உயர்வான நிலையிலிருந்த பணவீக்கத்தினைச் சாதாரண மட்டத்துக்கு குறைத்துள்ளன. பணவீக்கம் தொடர்ச்சியாக இடம் பெறும் போது அதனால் நன்மைகளைப் பெறும் பிரிவினரும் பொருளாதாரத்தில் உள்ளனர். அவர்கள் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக நிற்பார்கள். வெளியீட்டிலும் தொழில் வாய்ப்பிலும் குறுங்கால இழப்புக்களாக இச்செலவீடு இருந்தாலும் நீண்டகால நன்மைகளை நோக்கும் பொழுது இவ்விழப்புக்கள் மிகச் சிறியவையே.
77

Page 45
பொதுவாக அரசாங்கங்கள் பாரிய வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைகளைத் தவிர்ப்பது அவசியமானது. வங்கிகள் கடன் கொடுத்தலைக் குறைக்க வேண்டும். நுகர்வோர் செலவீட்டினைக் குறைக்கவேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கும் மத்திய வங்கிக்கும்
விசேட பொறுப்புகள் உள்ளன.
செலவுமிக்க யுத்தத்துடன் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவது கடினம்
இலங்கையினால் எதிர்நோக்கப்படும் தற்போதைய நிலைமையானது மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பிரச்சினைகளால் ஏற்படும் பாதுகாப்புச் செலவீடு நாட்டுக்குப்பாரிய சுமையாக அமைந்துள்ளது. இப்பாதுகாப்புச்செலவு 1995இல் 27 பில்லியன் ரூபாவாகவும், 1996இல் 34 பில்லியன் ரூபாவாகவும், 1997இல் 42 பில்லியன் ரூபாவாகவும் உயர்வடைந்து சென்றுள்ளது. இத்தகைய பின்னணியில் பணவீக்க வீதத்தினை மிகக்குறைவான நிலையில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஏனெனில் இந்த வீதத்தில் வருமானத்தினை உயர்த்தமுடியாது. ஆயினும், ஏனைய பொது செலவீட்டு பிரிவுகளில் செலவீட்டினை குறைவாக வைத்திருப்பது சாத்தியமாக இருக்கின்றது. பொதுத்துறை வேலைவாய்ப்பின் அளவினை வெட்டிக் குறைப்பது கடினமானது. அவ்வாறு செய்யின் அது வளர்ச்சியின் அடுத்து வரும் நிலைகளைப் பெரிதும் பாதிக்கும். அரசாங்கத்துக்கு முன் சொற்ப தெரிவுகளே உள்ளன.
78

தனியார் மயமாக்கல்
1970 களின் நடுப்பகுதிவரை நிலம் உள்ளடங்கலாக, சொத்துக்களைத் தனியார் உரிமையிலிருந்து பொதுமக்களுக்கு மாற்றம் செய்யும் ஒர் அலை காணப்பட்டிருந்தாலும் இன்று அப்போக்கானது எதிர்த்திசையிலேயே மாறி நிகழ்கின்றதைக் காணலாம். இச்செயன்முறையானது உலகம் பூராவும் இடம் பெற்று வருகின்றது. 1980 க்கும் 1991 க்கும் இடையில் பல நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. முன்னைய கம்யூனிச பிரதேசங்களில் இம் மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. அவை
பின்வருமாறு:
பிரதேசம் தனியார் மயமாக்கப்பட்ட
நிறுவனங்கள்
கிழக்கு ஐரோப்பா 5305
முன்னைய ஜேர்மன் சனநாயகக்
Sigulys (GDR) w 4500
OECD STGlassir 170
லத்தீன் அமெரிக்கா, கரீபியன் 804
உப சகாரா ஆபிரிக்கா 373
அராபிய அரசுகள் 58
இத்தனியார் மயமாக்கல் செயன்முறையைத் தூண்டிய சக்திகள் பல்வகைப்பட்டவை. இதற்கு கருத்து நிலையும் ஒர் அடிப்படையாக அமைந்தது. கம்யூனிச நாடுகளில் இடம்பெற்றது போன்று, அரசுக்கு உரிமையுடையதாகக் காணப்பட்ட உற்பத்தி முறைகள் மிகவும் விட்டுக் கொடுக்காத ஒரு சர்வாதிகாரப் போக்குத் தன்மையைக் கொண்டிருந்தன. பிரசைகள் தமது
79

Page 46
சிவில் சுதந்திரங்களை இழந்து அரசாங்க சக்திகளின் பலிக்கடாவாக மாற்றப்பட்டனர். சனநாயக சுதந்திரத்தை விரும்பியவர்கள், சொத்துக்களின் தனியார் உரிமைக்குச் சாதகமாக இருந்தனர். கலப்புப் பொருளாதாரங்களில், வளப்பயன்பாட்டில் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் திறனற்ற முறையில் வளர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் கொண்டிருந்தன. நிறுவனங்கள் தமது செலவுகளில் ஆகக் குறைந்த அளவினையாவது மீளப்பெற முடியாமல் இருந்தால் அவை தம்மை மீளக் கட்டமைக்க வேண்டும் அல்லது பொருளாதாரத்திலிருந்து வெளியேற வேண்டும். ஏனெனில் இலாபங்களைப் பெறமுடியாத அவர்களின் இயலாத்தன்மை அவர்களின் திறனின்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். அரசாங்கங்கள் இவ் இழப்புக்களை வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து ஈடு செய்வதினால் அரசாங்க நிறுவனங்கள் சந்தைக்குரிய இவ்விடயம் தொடர்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் திறனின்மையை மேம்படுத்துவதற்காகத் தமது பணத்தைச் செலவழிக்கின்றனர். அரசியல் வாதிகளினாலும், அதிகாரவர்க்கத்தின்ாலும் நடத்தப்படும் அரசாங்கங்கள் தமது நலன்களுக்காக இத்தகைய திறனின்மைகள் தொடர்ந்து இடம் பெறுவதையே விரும்புகின்றனர். அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களில் தமது ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்கு ஆதரவு வழங்கமுடியும். இந்நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலம் அதிகாரத் தரப்பினர் உயர் வருமானங்களையும், சிறந்த கையூட்டுக்களையும் பெறமுடியும். சந்தைக் கேள்விக்கு ஏற்றதாக, இந் நிறுவனங்களை மிகத் திறன் கொண்டதாக நடத்திச் செல்வதற்கு அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரத்துவ பிரிவினரிடமிருந்து திட்டவட்டமான ஊக்குவிப்புக்கள் எதுவும் கிடைக்கமாட்டாது. இதற்கு மாறாக, அரசாங்க வரவு செலவுத்திட்டத்தில் ஏனைய நோக்கங்களுக்கு வளங்களை ஒதுக்குவதில் கடினமான் ஒருநிலை இருக்கும் பொழுது இந்நிறுவனங்களில் ஏற்படும் இழப்புக்களுக்கு பணத்தை வழங்குவது நடைமுறைப் பிரச்சினையாகவே காணப்படுகின்றது. 1995 இல் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றக் கொடுப்பனவுகள் 9002 மி. ரூபாவாக இருந்தது. அரசாங்கத்தின் மொத்தச் செலவீட்டில் இது 4% ஆகக் காணப்பட்டது. அரசுத்துறை நிறுவனங்கள் பலவிடயம் தொடர்பாகப் பணத்தை இழக்கின்றன. இலங்கையில் EDB, SPC என்ற இரு பெருந்தோட்டக்
80

கூட்டுத்தாபனங்களுக்கு அரசாங்கம் பெருமளவான நன்கொடைகளையும் அரச வங்கிமூலமான கடனுதவிகளையும் வழங்கி வருகின்றது. இன்றும் அரசாங்கத்தின் புகையிரதப் போக்குவரத்து பெரிதும் மானிய முறையிலேயே இயங்குகின்றது.
சீனாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் 1991 இன் பிற்பகுதியில் அரச நிறுவனங்களில் மூன்றிலொருபங்கு நட்டத்தில் இயங்கின. 1980களின் ஆரம்பத்தில் தன்சானியாவில் இத்தகைய இழப்புக்களின் விகிதாசாரம் மிக அதிகமாக இருந்தது. ஆயினும் அரச துறைகளில் சில பிரிவுகள் இலாபகரமானதாகவும், செயல்திறன்மிக்கதாகவும் இயங்கின. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மிகவும் இலாபகரமான ஒரு தேசிய முயற்சியாகக் காணப்படுகின்றது. தென் கொரியாவில் அரசினால் இய்க்கப்படும் உருக்குக் கைத்தொழில் மிகவும் திறன் வாய்ந்ததாக உள்ளது. கெனியாவில் கூட தனியார் துறை நிறுவனங்களிலும் பார்க்க சில குறிப்பிட்ட அரசுத் துறைக் கைத்தொழில்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
ஏனைய நாடுகளில் தனியார் மயமாக்கல் அனுபவம் எத்தகையது?
மலேசியா : அரச நிறுவனங்களின் விரைவான விரிவாக்கக் காலத்தினைத் தொடர்ந்து 1983 இல் மலேசிய அரசாங்கமானது தனியார் மயமாக்கலை ஆரம்பித்தது. போக்குவரத்துக்கட்டுமானம், தொலைத் தொடர்புகளில் ஆரம்பித்த இம் முயற்சிகள் இன்று தபால் சேவையைத் தனியார் மயமாக்கியுள்ளது. மலேசியாவில் உண்மையான குடியிருப்பாளர்களாக மலாயர்கள் கருதப்படுகின்றார்கள். இத்தகைய மண்ணின் மைந்தர்களுக்குச் சாதகமான ஒரு தீர்வுமுறையாக மலேசியாவின் தனியார் மயமாக்கல் அமைந்தது. 1980க்கும்.1995க்கும், இடைப்பட்ட காலத்தில்
1980 (%) 1995 (%)
வெளிநாட்டவர்கள் 62 25 மலேசியர்கள் 34 57
மண்ணின் மைந்தர்கள் 4. 18 (Bhumiputras)
81

Page 47
கூட்டுத்தாபனச் சொத்துக்களின் பரம்பல் (சதவீதத்தில்) எவ்வாறு மாற்றமடைந்தது என்பதைப் மேலே அட்டவணையில் உள்ள தரவுகள்
காட்டுகின்றன.
மலேசியாவில் இடம்பெற்ற தனியார் மயமாக்கல் மற்றும் தாராளக்கொள்கைகளினால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டை அடைந்ததுடன் வேலையின்மையும் வறுமையும் குறைவடைந்தது.
360TT : சீனாவில், அரசாங்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான பொருளாதாரச் சீர்திருத்தங்கள், தனியார் முயற்சிகளை மேம்படுத்தல் என்பவற்றினால் திறமையின்மை (Inefficiency) பெரிதும் குறைக்கப்பட்டது. 1979-1984 காலப்பகுதியில் விவசாயக் கூட்டுப்பண்ணை முறை உடைவுபட்டதுடன், திறந்த சந்தையில் தமது உற்பத்தியின் ஒருபகுதியை விற்பதற்கு விவசாயிகள் அனுமதிக்கப்பட்டனர். இதன் விளைவாக, விவசாய உற்பத்தியும், விவசாயிகளின் வருமானமும் அதிகரித்தன. 1984இல் இருந்து, விசேட கவனமானது நகர மற்றும் கைத்தொழில்துறைகளுக்குச் செலுத்தப்பட்டு வந்தது. பரந்தளவில் ஒழுங்குவிதிகள் தளர்த்தப்பட்டமை கைத்தொழில் உற்பத்தியை அதிகரித்தது. ஆயினும், சில பிரச்சினைகள் எழுந்தன. வருமான சமமின்மை மேலும் அதிகரித்தது. ஊழல் பொதுவான அம்சமாக மாறியதுடன் சூழல்மாசுபடுதலும் பரந்தளவில் அதிகரித்தது.
ரூஷியா: கொமியூனிச ஆட்சியின் கீழ் காணப்பட்ட ரூஷியா மத்திய திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. 1987இல் அதன் பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதற்கான முதல் முயற்சியில் அரச நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. சோவியத் சமவுடமைக் குடியரசு உடைவுபட்ட போது 1992 இல் ரூஷியா தனியான நாடாக மாற்றமடைந்ததுடன் நவீன மாற்றங்கள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1993-95 இல் ரூஷிய பொருளாதாரம் சீரழிவுநிலையை அடைந்ததுடன் 1996இல் ஸ்திரத்தன்மையை அடையும் என எதிர்பாக்கப்பட்டது. 'அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதற்காக அந்நிறுவனங்களின் பங்குகள் மக்களுக்குக் கட்டுப்பாடின்றி வழங்கப்பட்டது. எனினும், எதிர்பார்க்கப்பட்ட
82

நோக்கங்களை அடைய ரூஷியாவின் தனியார் மயப்படுத்தலினால்
முடியவில்லை.
தனியார்மயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களில் உள்ள பிரச்சினைகள்
கலப்புப் பொருளாதாரங்களில் பொதுத்துறை நிறுவனங்களை, விவசாயம் உட்பட தனியார்மயமாக்குவதென்பது கம்யூனிச நாடுகளிலும் பார்க்க மிகவும் இலகுவானது. முதலில், தனியார் துறையில் ஒரு நிறுவனத்தைச் சொந்தமாகவோ, அல்லது நிர்வகிப்பதிலோ அனுபவமிக்க பொருளியல் முகவரங்கள் கலப்புப் பொருளாதாரங்களில் காணப்படுகின்றன. கிடைக்கக் கூடிய இத்தகைய ஆளணியினர் நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றனர். மிகவும் அனுபவம் வாய்ந்த முயற்சியாளர்களும், முகாமையாளர்களும் இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றனர். ஆனால் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இத்தகைய திறன்கள் மிகக் குறைவாகவே உள்ளன. முன்னைய கம்யூனிச நாடுகளில், சில அரசாங்கங்கள் நிறுவனங்களைத் தமது முகாமையாளர்களுக்கும், ஏனைய தொழிலாளர்களும் விற்றன. சில வளர்முக நாடுகளில், நிறுவனங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்டதினால் அரசியல் ரீதியாகப் பல பிரச்சினைகள் எழுந்தன. இரண்டாவது, நிறுவனங்களை மதிப்பீடு செய்தல் என்பது மிக முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்டது. நிலத்துக்கான சந்தை எதுவும் காணப்படாத நிலையில் தனிப்பட்டவர்களுக்கு நிலத்தினை விற்பதற்காக நிலத்தின் பெறுமதியைத் தீர்மானிப்பதென்பது மிகவும் கடினமான நடைமுறையாக இருந்தது. ஒரு நிறுவனத்தின் பெறுமதியை பொதுவாக மதிப்பிடுவதற்குரிய நன்கு விருத்தி பெற்ற பங்குச் சந்தை இல்லாத காரணத்தினால் நிறுவனங்களை மதிப்பீடு செய்தல் ஓர் ஊகத்தின் அடிப்படையிலேயே இடம் பெற்றது.
இறுதியாக, இந்நிறுவனங்களைச் சொந்தமாகக் கொள்வதற்கு தனியார்துறையில் யார் இருக்கிறார்கள் என்பதனைத் தீர்மானிப்பது ஒரு பிரச்சினையாகக் காணப்பட்டது. தொழிலாளர்களே மிக இலகுவான தெரிவாக இருந்தனர். ஆனால், வரி செலுத்துபவர்களின் பணத்தினால் கட்டியெழுப்பப்பட்ட சொத்துக்களின் உரிமையைத் தொழிலாளர்கள் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும்? இவ் அணுகுமுறை செக் குடியரசிலும்
83

Page 48
ரூஷியாவிலும் பின்பற்றப்பட்டது. ஆயினும் உடைமையுரிமை (Ownership) மிகப் பரந்ததாகக் காணப்பட்டதுடன் பெரியளவான நிறுவனங்கள் பொதுவாக, சிறு எண்ணிக்கை கொண்ட பங்குதாரர்களினால் வழிநடத்தப்பட்டன. பெரிய வர்த்தக நிறுவனங்களை இயக்குவதற்கான தொழில்நுட்பத் திறன்களும் அவர்களிடம் காணப்பட்டன. மூன்றாவது தெரிவு, இந்நிறுவனங்களைத் திறந்த சந்தையில் விற்பனை செய்யவேண்டும். அங்கு பெறுமதியைக் கணிக்கும் பிரச்சினையும் காணப்படும். பொதுவாக, சிறிய அளவுத்திட்டச் செயற்பாடுகளில் பிரச்சினைகள் குறைவாகக் காணப்படும். நிறுவனங்கள்
அளவில் பெரியதாக இருந்தால் இப்பிரச்சினைகளும் பலமடங்கு அதிகரிக்கும்.
இலங்கையின் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டங்களின் நிலைமை எவ்வாறு உள்ளது?
இலங்கையில் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சி திட்டம் 1978இல் ஆரம்பிக்கப்பட்டது. 1995 முடிவு வரைக்கும், ஏறக் குறைய 40 கைத்தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் - மக்கள் பேரூந்து சேவைகள் மற்றும் 22 பெருந்தோட்ட முகாமைத்துவக் கம்பனிகள் தனியார் மயமாக்கப்பட்டன. 1996 இல், கொழும்பு வாயுக் கம்பனி ஷெல் கம்பனிக்கு விற்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான வங்கிகள், இலங்கை மின்சார சபை மற்றும் சிறிலங்கா ரெலிகொம் ஆகியவற்றினைத் தனியார் மயப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாகத் தடுக்கப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற பெருந்தோட்டங்களின் பாரிய பொதுத்துறைச் சொத்துக்களைத் தனியார்மயப்படுத்தியமையின் மூலம் பெற்ற அனுபவமானது விருத்திபெற்ற நுட்பமுறைகள், சிறந்த பயிர்முகாமைத்துவம், பன்முகப்படுத்தல் மற்றும் இலர்பங்கள் ஆகியவற்றினைப் பொறுத்தவரையில் நேர்கணிய, எதிர்கணிய அம்சங்களைக் கொண்டுள்ளதைக் காணலாம். ஆனால் உள்ளார்ந்தரீதியில் வேலைவாய்ப்புக்கள் இழக்கப்படலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான் அரசியல் கட்சிகள் இரண்டும் தனியார் மயப்படுத்தல் கொள்கையைப் பின்பற்றுகின்றன. கடந்த காலத்தில் இடம்பெற்ற பொதுத்துறைச் சொத்துக்களின் விற்பனையில் ஊழல் நடவடிக்கைகள் இடம் பெற்றதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டதினால் சனாதிபதி ஆணைக்குழுவினால்
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
84

தனியார் மயப்படுத்தல் பற்றிய அச்சம்
(1)
அரசாங்க சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடத்தில் அச்ச உணர்வு காணப்படுகின்றது. தொழிலாளர்கள் தமது வேலை இழக்கப்பட்டு விடுமோ என அஞ்சுகின்றனர். மக்களின் தொழில்வாய்ப்புக் குறைவாகக் காணப்படும் பொழுது பொதுத்துறை நிறுவனங்களை ஏன் இலாபத்தில் இயக்க முடியாது என்ற பிரதான காரணத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். உலகரீதியாக, தலா விமானத்துக்கான சராசரி தொழிலாளர்களின் எண்ணிக்கை 300 ஆக இருக்கும் பொழுது, தலா விமானத்துக்காக இலங்கை பணிக்கு அமர்த்தியிருக்கும் தொழிலாளர்கள் 500 ஆகும். இதனைப் போன்று, அரசுக்குச் சொந்தமான வங்கிகள் தனியார்துறைக்கு விற்கப்பட்டால் இயந்திரங்களின் அறிமுகம் காரணமாகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆயினும், வேறு தொழில்களுக்காகப் பயிற்சி அளித்தல், வேலையிழப்புக்கான நஷ்ட ஈடுவழங்கல் போன்ற செயன்முறைகள் மூலம்
தொழிலாளர்களின் குறைகள் ஓரளவு குறைக்கப்படுகின்றன.
இன்னுமொரு பிரதான அச்சம் என்னவெனில், காலனித்துவக் காலங்களைப் போன்று வெளிநாட்டவர்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி விடுவார்களோ என்ற நிலையும் உள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக இருந்தாலும், இவ்வெளிந்ாட்டவர்களின் ஆர்வமானது உள்நாட்டு முயற்சியாளர்களின் ஆர்வத்துடன் ஒப்பிடும் பொழுது ஏறக்குறைய சமனாகவே உள்ளது. வெளிநாட்டவர்கள் தமது வருமானத்தை எமது நாட்டுக்கு வெளியில் கொண்டு செல்லக் கூடும். ஆனால் இந்த இழப்பானது உற்பத்தியிலும், உற்பத்தித்திறனிலும் ஏற்படுகின்ற அதிகரிப்பினால் பெரிதும் ஈடுசெய்யப்படக் கூடியதே. தனியார்துறை தனியுரிமை நிலையில் ஆதிக்கம் செலுத்தும் பொழுது விலைகளை உயர்த்துவதன் மூலம் இலாபங்களை அதிகரிக்கலாம். இதனைத் தடுப்பதற்கான ஒரு தீர்வு நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்குவதாகும்.
இலங்கையின் தாராளமயப்படுத்தல் மற்றும் தனியார் மயப்படுத்தல் கொள்கைகளினால் ஏற்பட்ட சாதகமான விளைவுகள் எவை?
85

Page 49
(2)
(3)
(4)
(5)
தனியார் மய்ப்படுத்தலுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரதான கண்டனங்கள் எவை?
பெருந்தோட்ட நிலங்கள் ஏன் SPC, EDB ஆகிய இரு கூட்டுத் தாபனங்களின் கீழ் தனியார் மயமாக்கப்பட்டன?
தனியார் மயப்படுத்தல் தொடர்பாக யு.என்.பி. அரசாங்கத்தின் அணுகுமுறைக்கும், பொதுசன முன்னணி அரசாங்கத்தின் அணுகு முறைக்குமிடையில் எத்தகைய வேறுபாடுகள் அல்லது ஒற்றுமைத் தன்மை
காணப்படுகின்றது?
ரூஷியா, சீனா ஆகிய இரண்டும் தனியார் மயப்படுத்தலில்
அடியெடுத்துவைத்துள்ளன. அவர்களின் அனுபவத்தில் எத்தகைய ஒற்றுமைத்தன்மை அல்லது வேறுபாடு காணப்படுகின்றது?
86

வெளிநாட்டு உதவியும் முதலீடும் (Foreign Aid and Investment)
நாட்டின் நுகர்விற்கும், முதலீட்டுக்கும் கிடைக்கக் கூடிய வளங்களானது வெளிநாட்டு உதவிகளின் தேறிய உட்பாச்சல்களினாலும், மூலதனங்களினாலும் பெருக்கமடைகின்றது. சலுகைகளின் அடிப்படையில் அமைந்ததாகவே நன்கொடைகள், கடன்களைக் கொண்ட வெளிநாட்டு உதவி அமைந்துள்ளது. குறைவான வட்டி வீதத்தினைக் கொண்ட சலுகை முறையின் கீழ், வர்த்தக நோக்கில் வாங்கப்பட்ட கடனை, வாங்கிய நாடுகள் திருப்பிச் செலுத்தும், இக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலப் பகுதியிலும் வர்த்தக ரீதியில் நீண்டகாலமாகவே இருக்கும். வெளிநாட்டு மூலதனமானது, முதலீட்டாளர்கள் பங்குகளை அல்லது பங்குப் பத்திரங்களை வாங்குகின்ற முதலீட்டுப் பட்டியல் மற்றும் நேரடி மூலதனம் (முதலீடு செய்யும் பொருளாதாரத்தில் முதலீட்டாளர் ஒரு நிறுவனத்தைக் கொண்டு நடத்தல்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வெளிநாட்டு உதவியையும், கடன்களையும் பெற்றுக் கொள்பவர் எந்தவொரு பொருளாதார முகவராகவும் இருக்கலாம். உதவித் தொகைகள் வியாபார நிறுவனங்களல்லாத அரசாங்கங்கள், இலாபநோக்கற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கே வழங்கப்படும். சலுகை அடிப்படையிலான கடன்களும் பெரும்பாலும் அரசாங்கங்களுக்கே வழங்கப்படுகின்றன. எனவே வெளிநாட்டு உதவியானது பொதுவாக அரசாங்கங்களினாலேயே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அண்மைக் காலம் வரைக்கும், இலங்கையில் காணப்பட்ட தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து கடனுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குச் சட்டரீதியான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. பங்குச் சந்தையின் வளர்ச்சியின் காரணமாகவே வெளிநாட்டவர்களுக்கான புதிய மூலதனங்களுக்காக இவ்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன. கடந்த தசாப்தத்தில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தைக் கவர்வதற்கான உறுதியான
முயற்சிகளை நிர்வாகங்கள் மேற்கொண்டிருந்தன.
87

Page 50
ஒரு குறிப்பிட்ட செயற்திட்டத்துக்கான மூலதனமாக வெளிநாட்டு உதவி காட்டப்படவேண்டும். உதாரணமாக, துரிதப்படுத்தப்பட்ட மகாவலி நிகழ்ச்சித்திட்டம் அல்லது இடைநிலைப் பாடசாலைகளின் அபிவிருத்திச் செயற்றிட்டம் என்பவற்றைக் கூறலாம். இத்தகைய நிதிகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட துறையின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உதவுவதாக இருக்கும். உதாரணமாக விவசாய அபிவிருத்தி சில உதவிகள் துறைரீதியாக அல்லது குறிப்பிட்ட செயற்றிட்டத்துக்கு என்று ஒதுக்கப்படாமல் பொதுவாக வளங்களைப் பெருக்குவதற்காகவே அளிக்கப்படுகின்றது. இங்கு கூட, இவ்வுதவிகளை வழங்குவதற்கான ஏற்பாட்டில் சில நிபந்தனைகளும் காணப்படுகின்றன. உதாரணமாக, அரசாங்க வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையில் குறைப்பு மற்றும் நிலக் கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்களிலான சீர்திருத்தங்கள்.
உள்நாட்டு வளங்களில் ஏன் தங்கியிருப்பதில்லை?
ஒரு வளர்முகநாட்டில் வருடாந்தம் ஏறக்குறைய 8 வீதமான உயர்ந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையவும் தொடர்ந்து அதனைக் கொண்டிருக்கவும் வேண்டுமானால் உயர்ந்த வீதத்திலான மூலதனம் மிக அத்தியாவசியமானது. இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதன விகிதம் 24% ஆக இருக்கின்றது. மலேசியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் இவ்விகிதம் 35% ஆக உள்ளது. இவ் எல்லா நாடுகளிலும், உள்நாட்டுச் சேமிப்புவீதம் மிக உயர்வாக இருந்தமையே உயர்ந்த மட்டத்திலான மூலதனத்தைப் பெறக் காரணமாய் அமைந்தது. இலங்கையின் உள்நாட்டுச் சேமிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாக 14% ஆக இருப்பதுடன் வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது மிகக் குறைவாகவும் காணப்படுகின்றது. மலேசியா, தாய்லாந்து, சீனாவில் இது 30% வீதத்துக்கும்
அதிகமாக உள்ளது.
எமது உள்நாட்டுப் பொதுப் படுகடனின் (Public debt) அளவானது மெய் மற்றும் சார்பு ரீதியாக அதிகரித்து வருகின்றது.
88

மொத்த பொதுப்படுகடனும், மொத்த உள்நாட்டுக்கடனும் விரைவாக அதிகரித்து வருவதினால் சில அபாயங்களும் எழுக்கூடும். உள்நாட்டுச் சந்தையில் பாரிய அளவில் அரசாங்கம் கடன் பெற ஆரம்பிக்குமானால் வட்டிவீதங்கள் நகரத்தொடங்கும். உற்பத்திக்குரிய சொத்துக்களில் மூலதனத்துக்கான ஆர்வம் நம்பிக்கையை இழந்துவிடும். அதிகரித்துவரும் படுகடனினால் உருவாகும் உயர்வான வட்டி வீதங்கள் அரசாங்கத்தை மேலும் அதன் பெருமளவான வருமானத்தைப் படுகடனுக்கான வட்டியாகச் செலுத்த
வேண்டி ஏற்படுகின்றதுடன் ஏனைய செலவுகளையும் கட்டுபடுத்துகின்றது.
எமது வெளிநாட்டுக் கடன் எவ்வளவாக உள்ளது?
வெளிநாட்டுக்கடன்கள் 1990 -1994 (மி.ரூபாவில்)
1990 1991 1992 1993 1994
1. மொத்தப் பெறுகைகள் - 16,550 25,969 15,316 16,839 19,384 2. மீள்செலுத்தல்கள் - 4,451 4881 7955 6984 7606 3. தேறிய பெறுகைகள் 12099 21088 7361 98.55 1778 4. நாணயமாற்று வேறுபாடுகளினால்
உரிமங்களில் மாற்றம் 8486 16607 13599 24831 1872 5. காலத்தின் இறுதியில் ܦ݇ܰ݁
உள்ளபடி உரிமம் 176883 214578 235 538 270 224 300173
மூலம் : மத்திய வங்கி அறிக்கை, 1994
எமது வெளிநாட்டுக்கடனின் பொதுவான அம்சங்கள் எவை?
* 1994 இல் அரசாங்கம் செலுத்தவேண்டிய மொத்தக் கடனில் வெளிநாட்டுக்
கடன் 55 வீதமாகக் காணப்பட்டது.
* செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடனில் ஏறக்குறைய 97% சலுகை
முறையிலான கடன்களாகும். இக் கடன்களுக்கான சராசரி வட்டி ஏறக்குறைய
89

Page 51
18% ஆக இருந்ததுடன் இவ்வீதம் வர்த்தகக்கடன்களுக்கான சந்தை
வீதத்திலும் பார்க்க குறைவாகவே காணப்பட்டது.
* 1994 இன் இறுதியில் செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடனின் அளவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 51.9% க்குச் சமனாக இருந்தது.
* 1990-1994 காலப்பகுதியில் வெளிநாட்டுக் கடனுக்கான வட்டிக் கொடுப்பனவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1% க்குச் சமனாக இருந்தது. உள்நாட்டுக் கடன்களைப் பொறுத்தவரையில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக இருந்தது.
* வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவுகள்
வருடம் மி.ரூபா
1990 3,678
1991 4, 113
1992 4,739
1993 5,102
1994 5,511
வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கு எதிரான வாதங்கள் எவை?
* கடன் வாங்கும் நாடு, “கடன் பொறி” (debt trap) என்பதினுள் விழவேண்டி ஏற்படலாம். எவ்வளவு அதிகமாக நீங்கள் கடன் பெறுகின்றீர்களோ, அவ்வளவு அதிகமாக மீண்டும் செலுத்த வேண்டி
வரும.
* சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதிகாரம் மிக்க நாடுகள் தனியார்
மயமாக்கல் மற்றும் சமூகநல மற்றும் அரசாங்க வேலைவாய்ப்புக்களில்
90

வெட்டு போன்ற நிபந்தனைகளை விதிக்க முயற்சிக்கும்- இவற்றினை அமுல்படுத்த முயற்சித்தால் சிலவேளைகளில் அது சமூகத்தில் ஒரு பதற்ற நிலையைக் குறுங்காலத்தில் ஏற்படுத்திவிடும்.
சிலவகையான உதவிகள் குறிப்பாக அவை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வழங்கப்படும் பொழுது உள்நாட்டு விவசாயத்தைப் பாதித்துவிடக் கூடும். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவின் பொதுசனச் சட்டம் 480 இன் கீழ்
வழங்கப்படும் உதவி.
வளர்முக நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்திக்காகக் கொடுக்கப்படும் வெளிநாட்டு உதவியின் பாச்சல் தவிர்க்கப்படக் கூடியது.
வல்லரசுகளுடன் அரசியல் ரீதியாக ஒத்துழைக்கும் தென் வியட்னாம், கியூபா போன்ற நாடுகளே பாரிய கடனுதவிகளைப் பெற்றுக் கொள்கின்றன. ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத்துடானன தொடர்புகள் காரணமாக 1960களிலும், 1970களிலும் கடனுதவிகளைப் பெற்றன. தற்பொழுது ஐ.அமெரிக்காவின் வெளிநர்ட்டுதவியில் ஏறக்குறைய 70% மான பகுதியை இஸ்ரவேலும், எகிப்தும் பெற்றுக் கொள்கின்றன.
வெளிநாட்டு உதவிக்கு மாற்றிடுகளாக மேற்கொள்ளக் கூடியவை எவை?
ஏற்றுமதிகள், உல்லாசப் பயணத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத்தினூடாக வெளிநாட்டு வருமானங்களை
அதிகரித்துக் கொள்ளலாம்.
பற்றாக்குறையைக் குறைப்பது தொடர்பான சிறந்த வரவு செலவுத்திட்டக் கொள்கைகளை மேற்கொள்ளல்.
உள்நாட்டுச் சேமிப்பை உயர்த்துதல்
வெளிநாட்டுத் தனியார் முதலீடுகளை மேம்படுத்தல்
91

Page 52
இலங்கையின் வெளிநாட்டு தனியார் முதலீட்டின் அளவும் இயல்புகளும் எவை?
வெளிநாட்டுத் தனியார் முதலீடு பின்வரும் வகையில் காணப்படலாம்.
1) வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) 2) முதலீட்டுப் பட்டியல்
(Porftfolio Investment)
வெளிநாட்டு நேரடி முதலீடுகளானது வெளிநாட்டு நிறுவனங்களினால் அல்லது ஏதாவது தொழிலை ஆரம்பித்துள்ள தனி நபர்களினால் மேற்கொள்ளப்படும் முதலீடுகளாகும். பட்டியல் முதலீடுகளானது வெளிநாட்டவர்களினால் (தனிப்பட்டோர் அல்லது நிறுவனம்) மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஆனால் பொதுவாக முதலிருப்புச் சந்தையில் வர்த்தகத்தைக் கொண்ட கம்பனிப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் 1990-1995 காலத்தில் இலங்கையில் காணப்பட்ட வெள்நாட்டு முதலீடுகள் பின்வருமாறு தரப்படுகின்றது.
வெளிநாட்டு நேரடி முதலீடு
1990 1991 1992 1993 1994
FDI (LS).eILJET) 1736 2822 5385 944 8223 PI (6.ecurr) 397 1763 2611 10773 14,473
1992 இல் இலங்கை பெற்ற வெளிநாட்டு நேரடி முதலீடு 145 மி.ஐக்கிய அமெரிக்க டொலர்களாக (5385 மில்லியன் ரூபா) இருந்தது. இக்காலத்தில் தாய்லாந்தும், மலேசியாவும் முறையே 2014, 3455 அமெரிக்க டொலர்களை நேரடி வெளிநாட்டு முதலீடுகளாகப் பெற்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரக் கூடியவை எவை?
* அரசியல் உறுதித்தன்மை
* திறன் மற்றும் குறைந்த தொழிலாளர் செலவுகள் ஆகிய இரண்டும் சேர்ந்த
தொழிலாளரின் உயர்வான உற்பத்தித்திறன்.
92

கைத்தொழில்ரீதியான அமைதிநிலை ( தொழிலாளர் அமைதியின்மை காணப்படக் கூடாது) சக்தி, வீதிகள், தொலைத்தொடர்புகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் கட்டுமான அமைப்புக்கள்.
முதலீட்டுக்கு உத்தரவாதமளித்தல்
வரிச்சலுகைகள்
தீர்வையற்ற இறக்குமதிகள்
தீர்வையற்ற ஏற்றுமதிகள்
அரசாங்கத்தின் தலையீடுகள் இருக்கக் கூடாது திறன்வாய்ந்த நிர்வாகமுறை சட்டரீதியான ஒப்பந்தங்களை அமுல்படுத்தும் நீதிமன்ற முறைமைகள்
பட்டியல் முதலீட்டிலும் பார்க்க வெளிநாட்டு நேரடி முதலீடு ஏன் அதிக நன்மைகளைக் கொண்டிருக்கின்றது.
வுெளிநாட்டு நேரடி முதலீடுகள் பொதுவாக அதிக நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. நன்கு விருத்தி தொழில் நுட்பங்களை எமது நாட்டுக்குக் கொண்டுவரும். நேரடிமுதலீட்டாளர்கள் நீண்டகால நலன்களை கொண்டிருப்பதினால் பட்டியல் முதலீட்டுடன் ஒப்பிடும் போது அதிக நன்மைகளை அளிப்பதாக உள்ளது. அத்துடன் நேரடி முதலீடுகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். இலங்கையின் முதலீட்டுச் சபை செயற்றிட்டங்களில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ திறன்களையும், தொழில்நுட்பத் திறன்களையும் எமது தொழிலாளர் படை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள்
உருவாக்கப்படுகின்றன.
வினாக்கள்
1.
எமது அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்துடன் வெளிநாட்டுக் கடன் பெறுதலை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்?
93

Page 53
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் கடன் வழங்கும் கொள்கைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் கண்டனங்கள் எவை?
அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்க.
1977 காலத்துக்கு பின்னர் இலங்கையின் அபிவிருத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீடு எத்தகைய பங்களிப்பைக் கொண்டிருந்தது.
கொழும்பு பங்குச்சந்தையில் 1995 -1996 காலத்தில் ஏற்பட்ட பரிமாற்றங்கள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டமைக்கான காரணங்கள்
எவை?
இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவியின் பிரதான மூலாதாரங்கள் எவை?
94

38 Mɔ!AəYI ‘ZA. MɔļAɔYI ‘686 Io z66L ‘966 I - SIJOdəYI [enuuv (IO : əɔunos
ZZ0 901 || 000 ls/68/6Z98ɛ ‘81190880]qi@$1]ơito) 6£ot;Z90į.982는Z0ļļZɛ6Zரடிெறுதிதீவிழி ரடிெழுேதி “று 999Z80||t7/19-988Z99GŻ1,99£IỆĝlloe) Jillflog19190) · ·6 -| 89ZƐ-/89/그909-TT극m널ürmo) 공國道9D&#Tu법Ugng8) g 9069000ț78LR2는/t7||ZZZG1,9€13-io m1090919 '/ -zzie19?8Z869€.GƐ|119osto 109TIQ@lio!) JUNI '9 6ZZț7-- o--|--nuou nsəAtųOŢIOJļJOẠI ‘G t7t?$/.99/|GĻ/Ɛ9/-–ரம95a9ரி சிம52 ) 90/1969Z£Z090Zļ.t7991£8||099는9949~19 :8 t7€ț7$Z99tỷ9||t7€889,ZZZ98886ZU영9的그의 자 9L98Zt?!/.8Z8ț7į82Z.tz99/1999 TQ911o01ņ95Ť | 9661066||S8610861S/61Ls6l
(ao seuri@olgomgoqogi)
19ff||1919 @-IIIGiųı9f90) motivo fo?--109,9 ps@ș1@$1]]$ıııı9@unto)
95

Page 54
* 196I“ Z66|| ‘966 I - S.IodəYI [enu uy qO : əɔunos
ZoZ69°969°089°//8"ᎭS9°/91ço-lo possillońs@ :puno Rosso igo yn ICIO 69880/ | 64/0180/808!99919Ꭽ9ᏕᎭlƐ/8/1ço-lo sporąjį púff* @ @ ugilo) t7t?!?Z9|| t7688|0/€0Æļf(g(09ňuņ90919 og 88ZG9£6ɛɛț7ƐZozZĻ6/ịįZZGZG861,991||9"Too șTlogon og Z88/9ÇİZGİ7ț719Ż19Z6t79||Z69Z986七99七塔그9 的uts&n그녀mügmas) :; 0/t7Ż08 | 888 Zɛļ.90ț79€.ț78198LO는| ZG노99仁信그9 %그너공원gmag) 8 Z98698 || 88892||€/9/9ZZZZZ90/£819||仁信그9 %GD니u법U9r98) 와 /006t7Ɛ ] · 1688€į.164€9ț79949寸99守LƐ/81仁治그9 %PGD너uGiu9~히 금 96610661S86108619/610/61 (apıyourī£à "gi)
(agungjísīổ -1@re) 1,9-lo porqueól@ qs@qi.gigereto)
96

‘swəỊAəH LL6L og/.6L (4861 og86L oz861 ‘Z86|| ‘966L
- sirodəYI [enu uy qO : əɔInos
Z'6ł8’91Ꮓ*Ꭽl0"#7](6°8Zo91|×megoso oligiosoɛɛ isɔun āCIO |
ZSSZyl s vz6ɛSS80ɛz1/Z6Zț71Z. 0/0Z119oofırılgı eş) rī£ € © $$uanto)
G8ț7688寸9守LZ1ZZ09ZZG.| 9quiĝisnuri yılmų29$ mụjos) 'e |
£6įļļ989900t/8 ZɛtɔLZ .ț78qılolu orto Jono (IIIo mỰ@@ ரடிெTமுழு நிர்விமுன்யிபூereகு 2
0926LL || |L609izƐ/,26||£ț7f7/99는z69ļZ노99%htmüna院) 學GD너usiug그의 1 ||
9661066ł98610861S/610/61ou orto
(aousourioào gı)
19??hraglog) #rnegoĚgƆ qıf@@ơn (3)-7.11gių9-æ
97

Page 55
*>[ueg pĻIOM ‘Z66I juɔudolɔAəCI pĻIOWA : əɔunos
įļ | -8ļļ.įį.Zɛ | v6Ɛį.hņŲlos) șÚ3) IIIȚių9190) og 守L,491ZZLļļ.ZZ || Z|8 - || Z.HņŲlog) ș@ȚIIẾ1973 ot; GZ || tyƐ6481o £Z8ļ. sz | iz/49는quae sofo 07ussig-z ‘c tz/ | 08€/.ɛ8 | 62z8 || 89 | €/8.1 || Z6foņos gimų so z Z|| || 6Z10į8ZOL || : OLtrị - || 9ftsysos gorĝulosi@ 1 S66|| 086|| $661 | 0861 || $661 | 086|| S661 | 086|| $661 | 0861 owosądesốடிeயகில9ஞயாqııı9ungig)1.Insoğąjổ |q]+??$Dıııı9șiqifte (agusouri@olgı)
19??IĘurı Hırigioș) șUJILGuiores) qisĜqui fırıgıę9£G) Julgių9-a‘quaesošaofo ‘ieņos@iqoỹ(įreaeg 1946)||simgs,199?ტ
98

'966 I - S) IodəYI [enu uy qO : əɔunos
6’9į
ļ’92
GoļZG'}./'96°9qĝņ9 qoșR91009r. ųsouse 10911@gi loĝặ-1@ris muustosugo(fi) AI‛i766l0"|Z0||tzotzŻG8"8626"| 6||ZoogļsR9(99TTII090919 8’60į8"60||8’60||8"60į8"604!”60||9o009.Tilurto 9"|69€.ሯ‛t786!į“ZƐƐ|6"899vzez1°98).ரவிஜழ99கு ரர்ேர ழபியாகுமுடி 8"|Z8Z"O는9ሪ‛t76ሪ6"69?Z, 80ZƐ"/91,Titq9"G 9°/0},6°060įᎭ"869;/°6ɛɛƐotz0Z9°99||f(91099"); Z'906||9’800||Zoļ99Z, 8L8Ɛ"86įZ"88||q1@gootporto 1109ņ919 (001-ŻG6!) 10ĝ9-TOȚIsoş0909Ļ9шгү93)чеГiіFiq sħijose)ኽ4 9661066||986||086||SZ6l0/61
trī£ #a90909 qi@-- I LoopIỆ$@ı9 10909ĝțoș golovori
99

Page 56
686I ‘966 I - suodə8 semuuy gO : əɔunos
t7f7€ZįZgoZļZ/| 04/.Rous-Tīriņũne)
டியம9த்திரையகியில் நிர்விழுeழ9ஐழrgy Z!9!/.098196/.../8įZ//tos.(In@ TJ.) Gİ09@ęIIỮųjn ņignon mỤĝşye /?"G990°0′7įț7"/Z00~8픈.(@ę@09IIIb) 1109$ IIII?) q1@go IĜųjųUımınası,5í z €0,289 z9ț79 0609809Atysztoz(91991 n@ TJ.) qoriquís Ignori 1991 R919ĝoj (in 1 966106619861086||
1ųoofiloșeri199Ų19?)]]Un a9eg qi@șụ19șiqırı sı@ops@sooofgolovori
100

Xueq ‘pĻIOM ‘Z66 I - SJosepipus nuəuudosəAəCI pĻIONA : əɔInos
Ꭽ*01Z'||0"|||!’0į9‛iንG6-06 8 O는Zo9!'}}0'89o606-08į9șųI1919 UJousso ș@sı Torto 199ųntoo@so qCIÐ ·s Ꭽ"010"|||0'||0^0}ZooG6-066°0ļƐ’9Z"O!9°8Go04.| 06-08 stsołę įılı919 gło uso
·șT@rto 19ų,990909199 yıftsg)ņos z /*/8T!!VN8 O4VN96-06 Z, 6Ɛ"/.VNZo9VN06-08முடிய99 முகியங்கி ஓ பிா9 1ņ9Ų990909Ļ9 1090sritįjį99ĝğı/Ulle) ! footslaosố| 1991 oặaļ93ırı|quourīgip | urnĝqisố |qī£®©ıııı9șigre! quabuso|-
qofsoissori qoỹ@noaș09 19:e@ugim sf, 1çosso)
101

Page 57
686L ‘966 I - SuodəYI [enuuv (IO : əɔunos
į0”6890°0686"889ƐƐ6q11091 01@rto įgifts
ollus@yogło 1,9,3}{#iosului@ro gorĝulosio 6/Z97||t796196t729€.ZZ08||qu091|01@rto sorgulos, gầgặuule) ZOZ0Ɛ|90Z19Zț7ț70€.8912||quaesum@ro uso &#ıme, Þ09||8든92|-|-199Ųrto 10911@gi Ipoqoméųoĝ9-, U1990ĵuss og 6/ZG0tz-L3667| 89Z ựng lusioji poșỆğı op to į9/10,Zɛɛ/98991980Zlygųns 1091€yı 19@grung@sqissinquusuń) to mýs) e 90} //.0/.../826938은8617919ĐỤrto 1091;$gi 1,9 grtstosos) ‘spojo) line) (8)Ilısıp-a z £9tzGZįtvo 618660||(9189URo 109]|$g1 – 1ĝosĝĝoĢĢųsto (3) Iloiųortsto) 1 966L| 0661 ~S861086||
qıłnocnoosog) ‘qıfı)ısølgı%)regjie 199Ųnowefąjąesố
102

686 I ‘966 I - SIJOdəYI [enuuy : əɔInos
8"/>8o/ ,9o6Az’81Gius@şısı olhoosee) foins ou sēņoảo ląsųnąCIO og t7€6 89/ -t78/, 12€GZ8 Z9||ZŁ999홍城n高「여 홍城umo GDTu田長子하; Z£669ƐG|GZ8,199||#23llzil:Gjtos@ęIIGjąjn ŋłodsote, hoffts og 04/t7}z守는i866tyɛZGg96.//Z(3)g(30990) șolțiliosło z 00982699/0£ €0,29Ż1999-itasuose)195Í //09į.89/9/1089/98quas Luī£)rto 1109ợtynųIto ZOZ08||90ZL9ሯtፖty06694$s.quosuus)f(systs tz//t79||į99ț7199968Zt799;!q11091;UI@rts orgulosilā 1 966106619861- 086||
(apsouri@-q2.g.)
· Giosos Laïqğrı rıhsoofC) końre qitŪqjøı Oseasolo) Ipoherceriņ—ıwseg igogț¢orqueólo
103

Page 58
686L ‘966 I - SnuodəYI [enuuyoso : əɔrnos
£980||G08ļ08||-19ootosiūno missuolo „ f7f7ɛZ1/92#!/t709991999091ūrio Nos@ŲI–Igootorgirls Quoių9-a „ Ɛsɛ9291762는6999880Z1999091Ůne)ouergmaeo GD니ugii용어의 역T니5mgig GD니u법Upngo : |160||t7f79||90119498qo@gặs@riņĝigi muotījus@ęıújųjn sisabee, hosts z 6€669£§! oz8/1991129는 ZLGjeo@ ș11ūjōrī ņhomsoe, stoffro 1 96610661S861 :086ł
>gingusốī)gioririosoriņģgIs@łą=qindusosuđạrır-raġġieeeehøúrto
–
104

SMƏỊAƏH ‘#16I ‘686I ‘966 I - SnuodəYI Țenuuy QIO : əɔunos
9°/]0'8||!"£į9°/0’6“8olsusēņ9ĝo 199órīņ90950) sorgusosio gặısı) /'9£'/.8°99'8Z 36°Zolimoss@e 199ųn åINO G”$0ļG”601ዜT161"82.寸990'9/(ų9Ų990909Ųs sy ouso șGĵus fil-1095ī) oluiĝoĝio igolyn ANSO Z8Z60669||Z0998Z8||899Ɛ9Zடுபவிபூ99கு 68/198/99016||84寸ļțy!€/டுபiழ 6 Z09寸8990ZZ/t78įț7ŻZ669988199ługlasniņ(o)uolo) șéızırls Insuloși@-lo(o)rīņsỆune) z 2006ț79 | 1688€!ļļ9Z90,106Z6980||£869டுபiழ 6 ZG8696 | 8889/}ƐƐty6918LG는90/8008!9யிழ99கு 69880/ | 08/04€.ț790Zɛ!19oᏃ8t7ț799;to!£818七塔그9GDn널홍urms) 1. 9661066!S8610861S/611/{0/61 (apujourno àrq2.g.)
19:eseisoriṇQuo© 1991 oști-Țire gif@@ơn 1,9-lo@rıņIỆurilo)

Page 59
XueqpHow-Z66I Suomeopus suɔuudosəAəCI pĻIoM : ɔɔunos
Go9 | 8"$į į Zot;寸8VN || Z"|!”90,9 || VN/'0g그니agm홍g GD니usiu9「히 0"Z | GotzZZ3:ZVN | '6'],v0 || GO | VNg"Zg그너D5m홍ig GD니uguar989 -UITZIȚnĝűj 199Ųnű09@ęIIGIỮn og (199그C9u98)長安國i 그녀IU949회 ) Go8- || 9"8|| — | 6'9–Z'G- || VN || 0'9– | G’9– | G'9– | VN | Goz*យ៍ឲប្រាgu៨n ņRoosae) hosto 1091;Us@@@rsssfi) z !“ZZ | €"sty s tzotz-Z9°/1_|_Zovi_|_{(t-1 || G.91 || Z'ɛį | VN0-01 || @590980) șorĝIII-osio ĝĢIJUTE) † t’66į | 086] | tv56||086|| | so661 | 0864 | t/66} | 086|| #7661 | 086|| ouesq'assố1991 oặcụolog uriquio urīgig)Limoĝqisố |qi fogyılıı9orąırı9 (9ருeயாபிர)
qrīzīs nổg Isoshấwo@41.0 (Nori silecerosesse qysos) qisaeg1çoiseumsgs, Igosto)
106

‘Z86I ‘Z66|| ‘686 I 966 I suodəN Ieruuv oo : əɔunos
6’926"828°8||6‛t7ሯoIITIŴRogặp lạ941 Roosole) ofņIII-osio ĝğı/UTC) Z'6G”8G”/6'8olluī£59$£ 1ņ9Ųn qGIÐ 6/170/89ț7/Z6t7ļZįț79910990990) șĢĢIJUTE) 109 loĝgi lịgostolgoog, ofiù o 698||09||80||08Iporto09493) ofiù o 909||84969 #7/84ļ.hņUICQ9-ış9 890||GZįļ.6ļ.1ņ9095Ī ofi) o 89/?6.ZZļ.818L寸亡qısıJoğuoso t789|tyZț70||086įZț7Ļoqgo G8ļļļ610€.9,28||86/10909eகு ஓடிnேgரி C ļ6ļļ.Z9ZGZļ.891,9±1,90993) ofiù o --Ɛ|/HņU109-ış9 t/?8ZɛƐ/6ļļ.688寸/ļļ91ņ9095Íofiù o 09Z6989€.€//ļ.6/8ரப்பதியடிடி 8109||6ZG8ƐZGƐ9694Ļ9Ợo t76Z696vwvzƐZ80||9919Ossassos) șűjtnsfil-1095 1 966 i066||S8611861
(opuso unoqogi) (g)sooloog) porquesto 1991 oặgi uportowo-ogo ofià o
107

Page 60
sɔŋspens puesnsuəO Jo nuəunưedəCI :əðinos
/'8t?6°/t7/'8t7ļo6t7Z 8:28'6t76"|9q1@so qș1191,911o0@1ğırı - -199Ųn-109rı Į191109 filiĝe) z ty’0t7’0ሯኽ!9"|tንዝ!ỜI!”Z+-09 6"|8′ZG“ZƐ"o9°89°80ኸ76寸十0寸 6°9寸Z9°/寸88°/!”6寸868-09 †7°ZZ0^t??GotyzZog?9°/129°/?Ɛ°086Z-02 8o989°/18/'0ț7寸88!”689°/8ļo0ț76L19는 ț7'įį8:ZLļ"8||8’8ļ9°ț7||Zot?!Zo9||q1$50 01091ņ9Ųndoqorto?) 1
96619661ț7661Ɛ66łZ66||16610661
(úlyos quovo uoliqi offico oo@ș-Tite) qī£go ongerçolynaeuertooapun-icerısıtılselssygı sıĪĢmre
108

sɔŋsņeņS pue SnsuəO JO quəUuquedəCI : əɔunos
8"Z!Zļ’8į.|o|z/T! Z8′ZZ0'82守8Z1999TIC) Z'g0”6Zo6/'6/°0||į’0||8"|ị1ņ9f@ 寸石Ɛ"Zļ는 8는8,8는9"tyļ./'t7||6"Gļq1@g9 J1091ņ9Ųndoqoftog) 9"|9ALȚ80"Zɛ!"£80"|9Ɛot;$Z 98IQდ9r lტ 6°G9t7"t/9寸99Ɛ'99Zo998ኸ79/*/9logsfē /'8ț76"/.tzZo8ț7!’6t7Z 8tz8"6t76'19 oqiĝņ9 qșÚÛTI@ņITI 1ņ9Ų1-109TI Į119||09Ųfilige) | 9661S66||ț7661Ɛ661Z66||16610661
Isoo@ırıīsītes) 1991 ing yapılrı ış9Ųn-ıçerı ựısılasifiu@to)
109

Page 61
sɔŋsņenS pure snsuəO Jo quòUunuedəCI : əɔunos
t7ኽ!
!"£ļ.
8’8||
8:ZL9’tzịZotz!.6°9||qī£5,9 TQ91||9||5||0909198) oğqğı/Ulle) og Z 6L991 | cezƐsɛZvozz | 9 vzvoz | qgui@@@@@ ȚIĜqjui (I/V) I O’9 og G”9||寸8L9"6||Ɛ"|ZZoZZ0'926’92(I/O) ȘI’O’s) († Z"Z!8:zL0'8||L'8||6’9į6 2는Zo/s.i OL-G qisi@ :$ 寸80'80'96"t?Zot?6"tyĻog守-094奴Z ZTZZTZ9°Z!oso0'86°9ƐƐ1,99||1(9$110,909 ole) ș@ș0909119-IIIII 'L 9661S66||ț766||Ɛ661Z66||166||0661
(ao[$$$$9 $£) qi@go 01091ņounaoworlog) ogųn-ıçerısıtıło 199ųng@@ țițeapo
110

OOSGHNÍO 966. I
‘886 I - Moog teos [eopspens sɔŋspens pue snsuoO JO Juauiu IodəG- sioensqy peoņspens : əɔrnos
000 0Z8 | 92/, 8£t;" | 00009ļļ89ZƐ | Gɛɛ017 | -|-o09?Ų009 loĝ919 -199Ųool? Joosę090911@le) 1191,9ĪĢóTILTugomrī ot; ZZ9ZZ9 | 000/98 || G69960į | 1289ZI | Z90968 || || 99/t7G | 1899çɛo094?ų20910ĝ919 199@#$1|$$IIIIẾUIĜi@) ș09ęụngoloņ919 (tzG64)199Ų9oŲ9II1090)||rto qi@riņĝĝ(o)nıųomn og VN |0000Gt | 000 OGG || 000 06ɛ | 000 OGť | VN000zı9 |©șo)isiZo09șŲ0091.g319 1ņogoooooogiĝệnŋuɖoɖhz }}9į.6Gį---qisqịII-1@rto レビ9Z9Z9]---qĝȚIIẾLUI }}ƐļƐZ---மே9ரிவிடு ஓெநிதிபர レレ8寸Zț7寸寸--|-டிெரngரிழ VN68į.0,212 ·-|-qiĝs lių9115Í o09șŲ009 loĝ919 199Ų9€1,911@ĝiĝņote) qi@TIŲ TŲnŲ19190) | S661Ɛ661 | 066198610861 || S/610/61
119ogicođī) 109 os@ırıo ışoğț¢-ıīsā los os@unto)
111

Page 62
TIS JO TuəuueĻrea qļOL “IS JO QuƏUueĻreas qu6 : əɔunos
SZZ97 Z.メAரகீதிபராகு -['0 |--„HTRIHGH so I -ĝ’0|--OTIĠIJL ‘ÇI I[‘I--- ){d[TIS "ZI g0 [6*8 #7|-|-VAI ‘II 0[9’09 IŹ#7o09ȚImg) o "OI ------['0OLOV (6 || l.8’I寸9°9*OWTHS (8
•|-/96” [9]d{RTIS ‘A, |-6°089’Id[HWN ’9 9Ź’0----20|HTHACI ’9 9A,’ I0IᎭ*9; HTIO JL 'f7 --96%VSO og ---Ź’ [ ,af II z †760*ᎭᎭ94 IL'09dĪNG ' [ o09ęŲ009 loĝ919o09ęŲ009 loĝ919“gogogų.00910ĝ919o09șŲ009 loĝ919
199ų991ğı.199 ostā 199ų99@şırts199Ų9ĐIỆ|1998's 199Ų99@sguisto
į76616861Ipots-IIae qym!? (ilgo
quitos@s@giloĝúƯı sıúLou@loguļo apuloseapoĒĻĶĒ9țIỆırılg)
112

943Ź’9/,9349°9989 IL’98IgIZ:98[9]8°9'E,960°69
-£°0--------|--6L |-ļos.--|----|----3는 G01 || 6"8t? I –-----|----/! Ɛ1°0|-Ɛ’0 | | --–-----9į ---ሯዝ--------94 --Ɛ6°Z|------|--守 Z8"|ty9°8--|--~---£! ----į.0"|------2L 9/”s.0į.t7ዃ8!.Ꭽ"9--|-– |--įį. -|-|----|--Z0ኽ!--0! --------Z „t7°0--6 --A 96"|8 || 8Z'6? || 1669ɛ ol GZ || || 9 cc | –-8 0!tz"O | 24ሯኽን!9°9Z07990-980"Zļ.4. ----|--Ɛį.6"t? || 940°/0į.tzog9 -----O'z || 9寸8 一叶0'8ƐGotz9 -|--!”0--Ɛ£"Zį.9"||-Ɛ’0tz -|----9"ESLZo8"ZL守Z#2는寸0Ɛ ty6 | , 0ኸ7t7 | 9ሯ1Z°09 || 0:7!6°09 I ZŁ6°418 || 0£9°/8 || 86°41?Z -6°0 || '$9"|-ty’0- | 6:0 | c9°8| 99o69į
f766||686 I . /.../6I0/6I096||996||
113

Page 63

AUDITORIUM FACILITIES AT
MARGA INSTITUTE
Marga, Institute has a fully- equipped air-conditioned auditorium with a seating capacity for 47. Its facilities are available any day of the week including weekends. It includes the following facilities.
* Table top microphones * Overhead projectors, slide projectors, film projector
and flip charts. * Simultaneous interpretation facilities, tape recording
and video filming facilities * Refreshments and meals on request * Parking facilities within the premises.
This auditorium is available for lectures, Seminars, Conferences, Workshops of an academic nature and not private functions, socials or political purposes.
Location: 93/10, Dutugemunu Street, Kirullapone, Colombo-6
Bookings: Tel: 828544, 829013, 829051 ܚܔ

Page 64
Printed by Unie ,

Arts (Pvt) Ltd. Sri Lanka