கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவட்டெச்சம்

Page 1


Page 2


Page 3

GoΛ.oήoήγησή

Page 4
சுவட்வடச்சம் (கவிதை)
ஆசிரியர் - சோ.பத்மநாதன் / உரிமை - சிவசோதி பத்மநாதன் / முதற்பதிப்பு - 2010 ஆனி / வெளியீடு- சோ.பத்மநாதன், ஏரகம், பொற்பதி வீதி, கொக்குவில் / கணினி அச்சுக்கோப்பு - ப.பத்மபிறேமா/ அச்சுப் பதிப்பு - நோபிள் பிறிண்ரேர்ஸ் / ஓவியம் - ஆசை இராசையா, ச.அக்ஷயன்/வடிவமைப்பு-ச.கோபிதன்/பக்கங்கள் - iv +76/ விலை-18O/-ரூபா.
SUVATTECHAM (Poems)
Author - S.Pathmanathan / Copyright - Sivasothy Pathmanathan / First edition -June 2010 / PublisherS.Pathmanathan, Eraham', Potpathy Road, Kokuvil/PrintingNoble Printers, Point Pedro Road, Nallur, Sri Lanka/ Art- Asai Rasiah, S. Akshayan / Layout- S.Gobithan / Pages- iv +76/ Price - Rs 180/-
ISBN 978-955-52603-0-5

paീഴ്ക്
நினைவுச்சுவடுகளை வெளியிட்ட போது நினைத்தேன் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று என, ஆனால் அதன் பின், கடந்த ஐந்து அண்டுகளாக அவ்வப்போது, வேறு பலசுவடுகள் - முன்பு தென்படாதவை- துலக்கமாகத் தெரியலாயின. சிற்றேடுகளின் ஆசிரியர்கள் ஆக்கங்கள் கோரும் போதெல்லாம் அவற்றைக் கொடுத்து வந்தேன். இப்பொழுது இருப்பெடுக்கையில் ஒரு தொகுதி தேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இக்கவிதைகள் நினைவுச்சுவடுகளின் தொடர்ச்சி என்பதை வாசகள் கண்டு கொள்வர். எனவே இத்தொகுதி "சுவட்டெச்சம்' ஆகிறது. "சுவட்டெச்சத்துக்கென அணிந்துரை இல்லை. ஆனால் "சுவடுகளுக்கு வந்த விமர்சனங்களி லிருந்து சில பகுதிகளைப் பின்னிணைப் பாக்கியுள்ளேன்.
என் கவிதைகளுக்கு முகப்போவியம் வரைபவர் நண்பர் ஆசை இராசையா. தொகுப்பினுள்ள எல்லாக் கவிதைகளுக்கும் ஓவியம் வரைந்து பார்க்க ஆசை நம் இருவருக்கும். வண்ண ஒவியங்களாக அச்சேற்றுதல் கட்டுபடியாகவில்லை. வண்மைக் கவிஞன் கனவுக்கு வல்லவனாக்கிய சித்திரங்கள் இவை. இராசையாவுக்கு என் கடப்பாடு பெரிது.
நோபிள் அச்சக உரிம்ையாளர் முரீதர் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டுகிறேன்.
சோ.பத்மநாதன், ஏரகம், பொற்பதி வீதி, கொக்குவில், இலங்கை. e-mail: sopa 1404Gyahoo.co.uk, phone: 021222 7909, cell: 0779905304

Page 5

சோ.ப
ஒரு பட்டமும் சில பாளைக்காம்புகளும்
சோளகம் வீசத் தொடங்கினால் ஊரிலை பட்டம் ஏத்தும் சீஸன் சீனத்தான்
சானன் குஞ்சம் கட்டிய கொக்கு எட்டு மூலைக் கொடி
r
அவரவர் இயல்புக்குகேற்ப ஏத்துவர்!
விண் பூட்டிய ஆளுயர எட்டு மூலைக் கொடியை ஏத்தி பனைமரத்திலை கட்டி விட்டா இரவிரவா விண்சுவும்!

Page 6
சுவட்டெச்சம்
சின்னப்பொடியள் ஏத்த சீனத்தான் வசதி
எட்டு வயதில்
நான் பட்டம் கட்ட எடுத்த முயற்சி அவலமாய்ப் போன சோகத்தை இன்றும் சுமக்குது என் நெஞ்சு!
ஐயாத்துரை கடையிலை பத்துச் சதத்துக்கு இரண்டு நூற்பந்து வாங்கினன் தென்னம் ஈர்க்கு வார்ந்து அளவாய் வெட்டி நடு ஈர்க்கின் மேல் விகிதாசாரப்படி குறுக்கு ஈர்க்குகளை வைத்து இறுகக் கட்டியாச்சு!
அடுத்து
இரண்டு சிறகையும் முறியாமல் வளைக்கவேணும் ஆச்சு
வெற்றி! தாளையும் ஒட்டீற்றன் முச்சை அளவெடுத்து முடிச்சுப் போடேக்கை மாமா தரிசனம் தாறார்!

G3FT. Lu
"ஏதடா நூல்?” கடையிலை வாங்கின நான்” என்ன விலை?
பத்து சதம்
“ஏது காசு?” "றோட்டிலை கிடந்தது" "என் கவுட காலம் அன்று அத்தை வளவிலை தேங்காய் பிடுங்கிய நாள்! நிலத்தில் கிடந்த பாளைக்காம்புகள் அஸ்திரங்களாக ஒன்றன் பின் ஒன்றாக என்மீது பிரயோகிக்கப்பட கொஞ்சநேரம் தாக்குப் பிடிச்சன் ஏலேல்லை!
தொழிலாளருக்கு கணக்குத் தீர்க்க வைச்ச காசிலை பத்துச்சதம் எடுத்ததை ஒப்புக்கொண்டதும் அருச்சனை ஓய்ந்தது! தழும்புகள் மேல் மாமா நல்லெண்ணை தடவலானார். நாற்பது வருட அரசாங்க ஊழியத்தில் நான்
களவெடுத்ததுமில்லை பொய் சொன்னதுமில்லை!

Page 7
சுவட்ெடச்சம்
 

சோ.ப
மருந்துககும.
மனோன்மணி அக்கா சின்ன மனுஷி புருஷன் கார்த்தியேசு நல்ல உயரம் சின்னப் பெடியளாகிய எங்களுக்கு இவ் வேற்றுமை விசித்திரமாகப்பட்டது பிள்ளை குட்டி கிடையாது ஆனால் அவையைப் போல ஒற்றுமையான தம்பதியை கான ஏலாது! இந்தச் சின்ன மனமணி'அக்கா எபபடி
ஆறு நாளா அன்னந்தண்ணி இல்லாமல் கந்தசட்டி பிடிக்கிறா என்று நான் வியந்ததுண்டு.
சொல்ல வந்தது அதுவல்ல மனோன்மணி அக்காவுக்கு ஒரு நாள்
பூரான் கடிச்சுப் போட்டுது

Page 8
சுவட்டெச்சம்
Լյrհայmfհայrrfr ஒரு கைமருந்து சொன்னார் "பல்லு விழாத பாலகன்ரை சிறுநீர் பருகவேணும்" எனக்கு
அப்ப ஏழு வயது பல்லு விழேல்லை! கையில் ஒரு கிண்ணியோடை மனோன்மணி அக்கா பல்லைக் காட்டிய படி "இஞ்சை வாராசா கொஞ்சம், கொஞ்சம் நான் பாக்கேல்லை.
நான் வீட்டைச் சுற்றி ஒடித்திரியிறன் வெட்கத்திலை! அவ கேட்டதை நான் கொடுக்கேல்லையே என்ற மனவருத்தம் இன்னமும்
எனக்கிருக்கு! "மருந்துக்கும் மூத்திரம் பெய்யான்” என்ற பழமொழி என்னோடுதான் வழங்கலாயிற்று.

G3aFT. Lu
ஊற்றுக்கண் யாழ்ப்பாணப் பண்பாட்டிலே தைப்பொங்கல்
அதிமுக்கிய திருநாள் பொங்கலுக்கும் சீனவெடிக்கும் நல்ல கொண்டாட்டம்! பொங்கலுக்கு இரண்டு நாள் முந்தியே பொடியள் வெடி சுடத் தொடங்கி விடுவார்கள் வெடிகளில் எத்தனை வகை! நூறு கொண்ட வட்டப் பெட்டிகளில் ஆனைமார்க் வெடி, மான்மார்க் வெடி இருபது வெடி கொண்ட புத்தகம் இன்னொரு வகை இத்துனுரண்டு சின்ன கொச்சி வெடிகள் கந்தகம் நிரப்பி அடிக்கும் கோடாலி வெடி ஈர்க்கில் வாணம் இரவில் ஜாலம் காட்டும் பூந்திரிகள் எத்தனை கோடி இன்பம்! கண்டிப்புப் பேர்வழியான மாமா மனமிரங்கி தன்கெடுபிடிகளைத் தளர்த்துவதும் இப்பொங்கல் காலத்தில் தான் ஆக, எனக்கு ஆணைவெடி ஒருபெட்டி கிடைக்கும் மேகங்களிடையே உலாவி
O7

Page 9
8 சுவட்டெச்சம்
நட்டசத்திரங்களைப் பொறுக்கும் புளுகம் எனக்கு அத்தை கழித்து விட்ட ஒட்டைப் பானைக்குள் ஒரு வெடி தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு வெடி அடி வளவில் நிற்கும் நாவல் மரப் பொந்துக்குள் ஒரு வெடி கொளுத்தி வேகமாக உயர வீசி அந்தரத்தில் வெடிக்க வைக்கும் அற்புதம் மற்றொன்று !
இந்தப் பரிசோதனைகளை நான் செய்து கொண்டிருக்கையில் பெரியம்மா வந்தா (தன் தம்பியார் பணத்தை நான் கரியாக்குகிறேன் என்ற எரிச்சலோ
என்னவோ!) "மாபாவி தேடியதெல்லாம் ஆகாசமாப் போகுதடா!" எழுதப்படிக்கத் தெரியாத பெரியவ கவிதை சொல்லிப் போனா ஒருவேளை கவிதை எங்கள் மரபணுவில் தொடர்ந்து வருகுதோ
ஆரறிவார்!

G3sFIT.u
5T60T (p55IILD
உத்தரதேவி
1.20 அளவில் கோட்டை வந்து சேர்ந்தது
ஸ்டேஷனிலிருந்து வெளியேறிய வன்னியசிங்கம் றோட்டைக் கடந்து
ஆனந்தபவனுக்குள் நுழைந்தான்
பயணக்களை, பசி
"சாப்பாடு முடிந்திருக்குமோ?"
நல்ல வேளை, இருந்தது
ஒடர் கொடுத்த பிறகே முகம் கழுவினான் ஒதுக்குப் புறமான இருக்கை தேடி அமர்ந்தான் பரிசாரகன் அமர்க்களமாக வரவேற்றான் மல்லிகைப் பூப் போல சம்பாச் சோறு மோர், ரசம், ஊறுகாய், அப்பளம், வடை, பாயாசம்! (கொழும்பு, கொழும்புதான்) இலையில் அடுத்து விழுந்தது மரவள்ளிக்கிழங்குக் கறி! வன்னியசிங்கம் விவசாயி சொந்தக் காணி நாலு பரப்பில் மரவள்ளி பயிரிட்டிருக்கிறான்! தினமும் வீட்டில் கிழங்குக் கறி!
சொன்னான்:
"நான்தான் கடுகதியிலை வந்து சேர்ந்திட்டன் என்று நினைச்சன் எனக்கு முன்னாலை நீ வந்திட்டாய்!”

Page 10
ETT GJILLGILEFEFLÈ)
 

GEFIT, LI
Dugi
எட்டாம் வகுப்பில் செவ்வாயும் வியாழனும் கடைசிப் பாடம் எங்களுக்கு உடற்பயிற்சி மயிலர் எங்களை மைதானத்திலை பாட்டு வெயிலிலை நிறுத்துவார் விசில் ஊதியே எங்களை
குனிய
நிமிர
էիIելիք]] || |
துள்ள
T
ஒடப்பண்ணுவார்
மனிசனை
மனசுக்குள்
திட்டித்திட்டி உடற்பயிற்சி செய்தோம் ஐம்பது வருஷத்துக்கு முந்தி

Page 11
2 சுவட்டெச்சம்
மயிலர் தீர்க்கதரிசி செத்துத் தெய்வமாப் போனார் இப்ப
ஒவ்வொரு நாளும் அவரை நினைக்கிறன் விசில் சத்தம் காதில் விழும் போதெல்லாம் நிக்கிறன்
நடக்கிறன்
ஒடுறன்
கடக்கிறன்
குனியிறன்
சகிக்கிறன்!
"அறுபது தாண்டியும் எப்பிடி உங்களாலை குனிஞ்சு
வளைஞ்சு
நெளிஞ்சு
நுழைஞ்சு போக வர முடியுது?"
என்னை விட பத்து வயது குறைந்த சூரி கேட்கிறான்
பாவம்
அவனுக்கு மயிலரைப் போல ஒரு மாஸ்ரர் வாய்க்கேல்லை!

(3.afri.
ஆசாடபூதி
கதிர்காம வேலன் தேசியக் கடவுள் வடக்கே வாழும் தமிழர்களும் தெற்கே வாழும் சிங்களவர்களும் பக்தி சிரத்தையோடு வழிபடும் தெய்வம் அவனே மாதக்கணக்கில் கால்நடையாக யாத்திரை செய்து ஆடிமாதத் திருவிழாவுக்கு கதிர்காமம் போய்ச்சேர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி மலை ஏறியும் மாவிளக்கேற்றியும் காவடி எடுத்தும் விரதம் முடிப்போர்
ஊரார் மதிப்பில் உயர்வர்!
இப்படித்தான் ஒரு நாள் எங்கள் முற்றத்தில் 'அரோகரா கோஷத்துடன் ராசு நின்றான் மொட்டைத்தலை நெற்றியிலும் உடம்பிலும் பட்டைபட்டையாக நீறு கழுத்தில் உருத்திராக்கம்

Page 12
14 சுவட்டெச்சம்
இடையிடை
"கதிர்காமத்தையனுக்கு
அரோகரா!"
"வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா" நீறு பூசியவர்களும் பொட்டிட்டவர்களும் காணிக்கை போட்டவர்களும் வீடு வீடாக ராசு போகும் பொழுது கூடப்போகும் பொடியள் கூட்டமுமாக ஒரே கலகலப்பு!
தீர்த்தம் முடிந்த மறுவாரம் ராசு மீண்டான்
திருநீறு
மாவிளக்கு தீர்த்தத்துடன்! ஊர்மக்கள்
பக்திசிரத்தையோடு பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து கணேசன் வந்து சேர்ந்தான் "எட,எப்ப ஊராலை வந்தனி?" ஊர் என்று கணேசன் சொன்னது மண்டைதீவு மூன்றுமைல் தொலைவில் புறம்போக்காய் இருக்கும் அச் சிறு தீவுதான் ராசுவின் சொந்த ஊர் அங்கு தான் யாத்திரை போய் வந்திருக்கிறான்
அவன்!.

G3FiT. Lu
புலனடக்கம்
"சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறில்லை காண்!"
-Lunug
அன்னந்தண்ணி இல்லாமல் நாள் முழுதும் அலைஞ்ச களைப்பு செல்லப்பருக்கு வழக்கமாகத் தங்கும் புறந்திண்ணைக்கு வந்து சேர்ந்தார் முதல் நாள் கழுவிக் கவிழ்த்திருந்த பானையில் நீரூற்றி அடுப்பேற்றினார் முடிச்சை அவிழ்த்து தண்டிவந்த அரிசியில் மூன்று பிடியை உலையில் இட்டார் தூணில் முதுகைச் சாய்த்து சிந்தனையில் மூழ்கினார்.

Page 13

சோ.,ப
ենIT EեETT էիքի ենIT - வெந்து கொண்டிருக்கும் அரிசி குமிழியிடுகிறது
his சோற்றாவியின் மணம் புலனைத் தாக்க செல்லப்பருடைய நிஷ்டை கலைகிறது "அரிசிவேக நேரம் ஆகும் ஒருவாய் தெளிவு குடிச்சா நல்லா இருக்கும்!" நாக்கு கெஞ்சத் தொடங்கியது "சொல்லுக்கேள் சும்மா இரு!" வயிறு காந்துகிறது செல்லப்பர் தவத்தின் மீது பன்முனைத் தாக்குதல் ாரென்னால் கேட்கமாட்டாய
கேட்க மாட்டாய்?."
செல்லப்பர் கைத்தடி சண்டேசுரன் வீசிய கோலாயிற்று சோற்றுப்பானை உடைந்து அடுப்பை நூர்த்தது
மீண்டும் நிவர்டை கூடியது செல்லப்பருக்கு

Page 14
சுவட்டெச்சம்
அடிமேல் அடி அடித்தால்
ராமநாதன் ஒரு நல்லாசிரியர் அநுபவசாலி அதுதான் அவருக்கு வினையாய் முடிந்தது பின்தங்கிய மாணவரைக் கொண்ட அந்த வகுப்பு அவருக்குக் கிடைத்தது எப்படிப்பின்தங்கினார்கள் என்று சொல்ல வேணும் ஏழைப்பிள்ளைகள் பெற்றோருக்கு தொழிலில் உதவி செய்வதற்காக அரைவாசிநாள் பள்ளிக்கு வரமாட்டார்கள் இதனால் தேவையான புள்ளிகள் பெறாது வருட முடிவில் வகுப்பேற்றத்தைத் தவற விடுவர் இப்படித் தேங்கி நிற்போர் "எமக்குப் படிப்பே வராது" என தன்னம்பிக்கை இழந்து குறும்புகளில் பொழுதைக் கழிப்பர்
இப்படிப்பட்ட மாணவரை முன்னேற்றியே தீருவது என்ற முனைப்போடு ஒரு தனிப்பிரிவை அமைத்தார்
தலைமையாசிரியர் அதுதான் ராமநாதன் மாஸ்ரருக்கு வாய்த்தது ராமநாதனுடைய குரல்
உச்சஸ்தாயிக்குப் போகும்
கே.பி.எஸ் குரல் மாதிரி

Garn.
அந்தக் குரலால் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும் இந்த வகுப்பு வாய்த்ததற்கு அதுவும ஒரு காரணம. அரசமரத்தைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்த மாதிரி என் வகுப்புக்குப் பக்கத்தில் இந்தச் சிறப்பு வகுப்பு வந்ததால் என் செயலாவது யாதொன்றுமில்லை என ராமநாதன் மாஸ்ரரின் கற்பித்தலை
ரசிக்க வேண்டியதாயிற்று
அன்று இலக்கண பாடம் பதவியல் கற்பிக்கிறார் மலர்மாலை, வாழைப்பழம், மரவேர், பலாவிலை, பாற்குடம் தேங்காய், மீன்கண், வளர்பிறை,
6T6 சகல அஸ்திரங்களையும் பிரயோகித்த பின் பயிற்சி கொடுக்கிறார் பையன்கள் அசைவதாய் இல்லை தரப்பட்ட சொற்களுள் ஒன்று புளியம்பழம் புளியம் + பழம் என்று மாணவர்கள் பிரிக்க
கதறுகிறார் ஆசிரியர் "டேய், இந்தப் புளியம் பழம் காய்க்கிற மரம் ஒன்று இருக்கோ இல்லையோ?”

Page 15
சுவட்டெச்சம்
சாது மிரண்டால்
பாடசாலை தொடங்கி முதலாம் பாடவேளை குணரத்தின வாத்தியார் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது வாத்தியார் சாதுவான மனுஷன் மாணவர்களைத் தண்டிப்பதில்லை அன்பான பேச்சு
இனிய புன்னகை
சுறுசுறுப்பு மாணவர்களைக் கட்டியாளும் அவர் திறமை கண்ட தலைமையாசிரியர் அவரை
விவசாய பாடத்துக்கு பொறுப்பாசிரியராக்கினார் விவசாயம் செய்யுமளவுக்கு பாடசாலையில் நிலமில்லை கிணற்றையண்டி நாலு நிலையத்தில் வாழை செழித்து நிற்கிறது.
ஆனால் உரிய காலத்தில் குட்டிகளைக் கிளப்பாததால் நெருக்கம் அதிகம் இதனால் தான் வந்தது வினை!

(3σπ. L.
அன்று காலை
குணரத்தினத்தார்
தாமதமாக களைத்து விழுந்து பாடசாலை வந்த போது விவசாயக் குழுத்தலைவன் விஜயன் ஓடிவந்து சொன்னான். "ஒரு குலை இடைப்பழம் பழுத்திருக்கு"
பாண்டியன் நெடுஞ்செழியன் செய்த பிழையைக் குணத்தாரும் செய்தார். வாழைக்குலை அவர் மேர்பார்வையில் தான் வெட்டப்படுவது வழமை இன்று காலை சாப்பிடாமல் ஓடி வந்த களை "சரி வெட்டடா" என்றார் அவர் ஆணையைச் சிரமேற்கொண்ட சிஷ்யன் வெட்டினான்!
ஐந்தே நிமிஷத்தில் அருணன் ஓடி வந்தான் "குலை போட்ட வாழைக்கு பக்கத்து வாழையை விஜயன் வெட்டிவிட்டான்!” குணத்தார் கோபாவேசத்துக்குக் காரணம் அதுதான்!

Page 16

{{II, Lu
ஆண்டியானதென்ன?
மனியத்தார் தோட்டக்காரன் புகையிலைச் செய்கையில் நிபுணர் தாவடிப் பொயிலைக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல சிங்களநாட்டிலும்
தனிமவுசு
இப்படித்தான் அவருடைய பொயிலை வடகோடியிலிருந்து தென்கோடியிலிருக்கும் பாத்தறைக்குப் போய்க் கொண்டிருந்தது!
அங்கே புங்குடுதீவுக் கணபதி கடை போட்டிருந்தார்.
T; GINT Lf5 ஆறேழு மாதமாக கட்டிய பொயிலைக்குக் காசு அனுப்பவில்லை எழுதிய கடிதங்களுக்கும் பதில் போடவில்லை! நேரே போய் வருமதியை அறவிட முடிவெடுத்தார் மணியம்

Page 17
24 சுவட்டெச்சம்
கோண்டாவிலில் றயிலேறி கொழும்பு போய் அங்கிருந்து மாத்தறை சென்றார்.
கணபதி மசிவதாயில்லை மணியமும் விடுவதாயில்லை "கதிர்காமம் போய் வாறன் பணத்தை ஒழுங்கு செய்!” எண்பது மைல் பஸ் பயணம் கதிர்காமம் போய் இறங்கினார் மாணிக்க கங்கையில் நீராடி கரையேறி வந்து பார்த்தார்.
வேட்டியைக் காணோம்! பணப்பையும் களவு போயிருந்தது அரையில் சுற்றியிருந்த ஈரத்துணியோடு முருகன் சந்நிதி சென்றார் கவலையால் கசிந்துருகினார்
முன்னே
முருகனும்
கோவணாண்டியாக!
"அப்பனே புங்குடுதீவானுக்குப் பொயிலை விற்றுத்தான் நீயும் ஒட்டாண்டியாயினையா?" மறுகினார் மணியம்.

G8aFT. Lu
உறா, உறா!
ஆசிரிய பயிற்சி முடிந்ததும் அவன் நியமிக்கப்பட்டது மூதூர்த் தொகுதியிலுள்ள பின்தங்கிய கிராமத்துப் பாடசாலைக்கு முதல்வரைத் தவிர ஆசிரியர் மூவர்
இவன்
நாலாம் ஆளாக அங்கு போய்ச் சேர்ந்தான்
இளவயது உற்சாகமாகப் பணிபுரிந்த அவனை
எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது முதல்வரோ
எடுத்தற்கெல்லாம் ஏரம்பமூர்த்தி, ஏரம்பமூர்த்தி என உயிரை விட்டார்!
அப்படித்தான் தமிழ்த்திறன் போட்டிக்கு மாணவரை அழைத்துச் செல்லும் பணி அவனுக்கு வாய்த்தது
பஸ் ஏறி

Page 18
சுவட்டெச்சம்
லோஞ்ச் ஏறி
திருமலை போனான்
பிள்ளைகளுடன் சொல்வதெழுதுதல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியே மரநிழலில் இருந்தான் அவன் அவன் மாணவன் ஒருவன் உள்ளே இருக்கிறான் பரீட்சகர் குரல் தெளிவாகக் கேட்டது!
"உறா உறா என்ற ஒலி கேட்டது” இவனுக்கு ஒன்றும் புரியவில்லை திரும்பி வரும் போது இதே சிந்தனை இதன்ற உறா? நிலவு நிலா ஆகலாம் சுறவு சுறா ஆகலாம் உணவு உணா ஆகலாம் ஆனால் இது? ஒலிக்குறிப்பாய் இருக்குமோ? ஆனால்
உறா உறா என்ற ஒலி கேட்டதில்லையே!

G3FiT. Lu
அடுத்த வாரம் பாடசாலையில் இருந்த பழைய ரைப்றைட்டரில் கோணாமலை ஏதோ அடித்துக் கொண்டிருந்தார் "தம்பி
இதைச்சரிபார்க்கிறாயா?" வாசிக்கத்தொடங்கினான் "அண்ணை
இதென்ன புதுச்சொல்
உறாஸ்யம்? விழுந்து விழுந்து சிரித்தார் கோணாமலை “ரைப்றைட்டரிலை 'உ'வை முதலில் அடித்து 'ற'வைச் சேர்த்தால்
வருவது "உற" நாங்கள் அவசரத்தில் இரண்டையும் சேர்க்காது விட்டால் இப்படித்தான்! இவனுக்கு மூளையில் ஒரு பொறி தட்டியது
“ஹ ஹ"
"உறா உறா"
யுறேக்கா!
27

Page 19
சுவட்டெச்சம்
 

சோ.ப
ஆரோ பரதன்
கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என அறியப்பட்ட
குருநாதர் தான் விசுவசித்த கொள்கையை எந்த நிலையிலும்
கை விடாதவர் இன முரண்பாட்டுக்கு அடிப்படை மொழியல்ல
பொருளாதாரமே என அடித்துச் சொல்லுவார். 1977 இல் இனக்கலவரம் மூண்ட போது கார்த்திகேசன்
கொழும்பிலிருந்து

Page 20
30 சுவட்டெச்சம்
யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தார் இரவு மெயில் வண்டியில் அநுராதபுரத்தில் அவ்வண்டியில் வந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர்
கொல்லப்பட்டனர் உடைமைகள் கொள்ளை போயின.
யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த 'கார்த்தாரை சந்தித்தேன் “சேர், உங்களுக்கு ஒன்றுமில்லையே?” “ஒன்றுமில்லை!" "உங்கள் உடைமைகள்?" "உனக்குத் தெரியும் பொதுவுடைமை வாதியிடம் தனி உடைமை
பெரிசா இராது! சப்பாத்தைக் கழற்றி விட்டு காலை நீட்டிச் சாய்ந்து கண்ணயர்ந்திட்டன் முதல் நாள் கொழும்பிலை வாங்கிய சப்பாத்து!"
"போயிட்டுதோ?” "ஒம், ஆரோ பரதன்!”

GaFT. Lu
சுயம்வரம்
வில்லை முறிப்பது மச்சயந்திரத்தை எய்து வீழ்த்துவது இப்படி ஏதாவது பரீட்சை வைத்துத்தான் ஒரு பெண்ணை மணப்பது காலங் காலமாக வந்த மரபு மணமகளே பரீட்சை வைப்பதுமுண்டு உடல்வலி படைத்தவனை புத்திசாலி தோற்கடித்த கதைகளும் உண்டு கெளதமன் இந்திரனை வென்று அகலிகையை மணந்தது போல!
மன்னர்கள் மட்டுமன்றி சாதாரண மக்கள் கூட பெண் கேட்டு வருபவனுக்கு தேர்வு நடத்தியிருக்கிறார்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாணத் தமிழரிடையே வழங்கிய

Page 21
சுவட்டெச்சம்
தேர்வுமுறை பற்றி பெரியப்பு சொல்லக் கேட்டிருக்கிறன். மாப்பிள்ளை பெண்வீட்டு ஆண்களுடன் பந்தியில் அமர்ந்து விருந்துண்ண வேண்டும். (அட, உண்டால் போச்சு!) அங்கைதான் சோதனை அன்னம் பரிமாறிய இலையின் மூலையில்
ஒரு பிடி எள் பக்கத்தில் ஒரு தேங்காய்! தேங்காயைக் கையால் அடித்து உடைத்து எள்ளை விரல்களால் பிசைந்து எண்ணெயைச் சோற்றில் ஊற்றி தேங்காய்ச்சொட்டோடு சாப்பிட வேண்டும். பெரியப்பு இதைச் சொன்ன போது நான் நம்பேல்லை!
இன்று கராட்டே வீரர்கள் கையாலும் சில சாமிமார் தலையாலும் தேங்காய் உடைப்பதைப் பார்த்த பிறகு பெரியப்பு சொன்ன சுயம்வரம் நடந்திருக்கலாம் போல!.

G8aFT. Lu
பிரிந்தவர் கூடினால்.
"அங்கை
அண்ணை வாறார்!" அப்படியொரு உற்சாகத்தை அம்மா முகத்திலை ஒரு நாளும் நாங்கள் கண்டதில்லை படலையடியிலை
பொல்லூன்றியபடி வாதத்தால் வழங்காதிருந்த வலக்காலை இழுத்து இழுத்து நடந்து வருகிறார்
լ DITLDITI
அப்போ
மாமாவுக்கு ஐம்பத்தெட்டு வயது அம்மாவுக்கு ஐம்பத்திரண்டு பதினைஞ்சு வருஷம் இருவருக்கும் கதை பேச்சு இல்லை! GTG)G)TTO அம்மாவின் மறுமணத்தால் வந்த முரண்பாடு இருவருக்கும் இடையே மாமா வீட்டுப்பிள்ளையாக வளரும் நான்!
ஆனால் எல்லோருக்கும் தெரியும் ஐந்து சகோதரிகளுள்

Page 22
34 சுவட்டெச்சம்
மாமாவின் அதிகபட்ச அன்பு அம்மாவுக்குத்தான்!
மாமா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில்! வந்து பார்க்க அம்மாவுக்கு அனுமதியில்லை! இப்படி ஆண்டுகள் உருளும் போது தான் அந்தச் சம்பவம் கடனாலும் வைத்தியச் செலவாலும் ஈட்டிலும் பாட்டிலும் கிடந்த அத்தையின் காணி பூமிகள் விலைபோய்க் கொண்டிருந்தன ஒரு நாள்
அதிதை கவலையில் சொன்ன சொல் நெஞ்சில் தைக்க மாமா தைத்தடியோடு
காலை இழுத்து இழுத்து அம்மா வீடு போனார் !
"அங்கை அண்ணை வாறார்!” அம்மாவின் உற்சாகத்துக்குக் காரணம் இருந்தது அடைபட்டுக் கிடந்த அன்பு கரைபுரண்டோடலாயிற்று.
இரண்டு நாளில் அன்னம் மச்சாள் போய்க்கூப்பிட மாமா வீடு திரும்பியது
வேறு கதை!

G3FT. Lu
தனிநடிப்பு
தியாகுவுக்கு அச்சுக்கூடத்தில் வேலை மாலை ஆறு மணியாகும் வீடு வர குளித்து உடைமாற்றி வாகையடியிலிருந்து கொண்டலடிக்கு உலாப்போவார். வாயில் சுருட்டுப் புகையும் வீண்பேச்சுக் கிடையாது புன்சிரிப்பு சிலவேளை தலையசைப்பு
கொண்டலடியிலை ஒரு மணித்தியாலம் கழியும் எட்டு மணிக்கு மேலை தியாகு திரும்பும் வாகையடிக்கு இருட்டில் சுருட்டின் ஒளியில்! ஆனால்
இப்போ பேசிக்கொண்டு! பாடிக்கொண்டு ஒரே கல கலப்பு
ஒருநாள
அல்ல, ஒர் இரவு என் படலையில் தியாகு "தம்பி சுருட்டு நூர்ந்து போச்சு
35

Page 23
36 &re 6LifeFLD
நெருப்புக் கொண்டுவா" தீப்பெட்டியோடு போனன் தியாகு தனியேதான் நிண்டுது என் சேவை முடிந்த பின் கேட்டேன் "அண்ணை, உங்களோடு வந்ததார்?" “ஒருத்தருமில்லை!" "காதிலை தெளிவா விழுந்தது இன்னொரு குரல்!” "இல்லை, அது நான் தான்!”
நம்பமுடியவில்லை தியாகு விளக்கினார்
"நான் அரையைக்காலை போடுவன் குடிச்சிட்டு மற்றவையோடை பேசப்போனா சோலி எல்லா ஞாயத்தையும் எனக்குள்ளேயே பேசுவன் வாதாடுவன்"
எனக்குள்
ஒரே பிரமிப்பு: வெவ்வேறு குரலில் வாதாடி வந்தது இந்த ஒரு மனிதனா? திறமை எங்தெங்கெல்லாம் ஒளிந்து கிடக்கிறது! அதை வெளிக் கொணரவும் ஒரு பொருள் உளதே!

G3FT. Lu
இரண்டும் ஒன்று தான்
“இவன் இருப்பதும்
ல்லாதிருப்பதும் ஒன்றுதான்”
என்று தன் மனை
எண்ணாமல் பார்த்துக் கொள்வது தான்
குறைந்த பட்சம்
ஒரு கணவன் செய்யக்கூடியது
சந்திரன்
அதைக் கூடச் செய்யவில்லை!
அதுதான்
அவளுககு
வாழ்க்கையே வெறுத்துப் போகக் காரணம்
அவள்
சிறு வயதிலேயே
தாயை இழந்தவள் கஷ்டப்பட்டு வளர்த்த தகப்பன் சந்திரன் கையில் அவளைப் பிடித்துக் கொடுத்影 விட்டு அதற்காகவே காத்திருந்தவர் போல் மறுமணம் செய்து கொண்டார்!
சந்திரன் நல்ல உழைப்பாளி உழவு அறுவடைக்காலங்களில் கையில் காசு புழங்கும்
டிப்பான் வலையில்லாத காலங்களில் அரிசிப்பானைகளில் தகரப்பேணிகளில் துணி மடிப்புகளுள் கமலா ஒளித்து விைத்த காசை ‘மணந்து பிடித்து' சாராயக் கடைக்குப் போய்விடுவான்!

Page 24

(SEFIT, LI
தலைவிதியை நொந்து அழுது தீர்ப்பாள் இது ஒன்றும் புதிதல்ல!
ஆனால் அவளுக்கு இப்போ பேறு காலம் மூன்றாவது பிள்ளை
தாய் இருந்தால்"
பழைய ஏக்கம் மீண்டும் தலை தூக்குகிறது.
பேறு காலத்தில் பெண்களைப் பராமரிப்பதில் சில பத்திய பாகங்கள் உண்டு சரக்குகளை இடித்து சாராயத்தில் ஊறப்போட்டு ஒவ்வொரு நாளும் உளறலில் கொஞ்சம் பருகக் கொடுப்பார்கள் 'வயிற்றுப்புன்ைனை ஆற்ற அற்கஹோல் உதவும்" இது வாகடம் இந்தத் தேவைக்கு கடன்பட்டு வாங்கி வைத்த முதல்தர சாராயத்தைத்தான் சந்திரன் குடித்துவிட்டான்
"இவன் இருப்பதும் ஒன்றுதான் இல்லாதிருப்பதும் ஒன்றுதான்" கமலா சலித்துக் கொள்கிறாள்.

Page 25

சோ.ப
வைடூரியம்
அசாதாரணமான பேர் அவருக்கு ஐம்பது வருஷமாகிறது அவரைக் கண்டு
இந்த 畿து வருஷ காலத்தில் வைடூரியம் என்ற பேருடைய இன்னொருவரை நான் சந்தித்ததில்லை!
வெள்ளை அன்றி வேறெந்த நிறமும் அணிவதில்லை அவர் நினைவில் நிற்க
து அடுத்த காரணம் தொலைத்தொடர்புப் பணியில் நாம் எல்லோரும் இளைஞர்கள் அவர் நடுத்தர வயதினர் தி"தீனே தேகம் ஆனால் வாயில் பல்லொன்றும் இல்லாத விசித்திரம் இது மூன்றாவது காரணம்!
ရွှိုးနှီဒိနီ மேலே
ளைஞர்கள் நானும் பட |யலபாக
சரளமாக
வைடூரியம் வாயில் பயிலும் தூஷணச் சொற்கள்! இச்சிறப்பியல்புகளால் பெரும்பான்மை சிங்களவரைக் கொண்ட

Page 26
சுவட்டெச்சம்
எங்கள் தொழிற்சங்கத்துக்கு வைடூரியம் தலைவர் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் அவர் ஆற்றும் தலைமையுரை அனலைக்கக்கும்!
ஆரம்பத்தில்
எட்ட நின்று கூச்சப்பட்டு ரசித்த வைடூரியத்தை அணுகத்தொடங்கிய காலத்தில் ஒரு நாள் கேட்டேன். "அண்ணை, உங்களுக்கு எப்படி எல்லாப் பல்லும் போச்சு?" இரண்டு மந்திரச் சொற்கள் கட்டியம் கூற வந்தது மறுமொழி
“எட, தம்பி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தோடு பர்மாவில் இருந்து கால்நடையா வந்தன் பல்லுப் போச்சு!"
நவமணிகளை விட உயர்ந்த ஒப்பிலாமணியாய் என் நெஞ்சில் ஒளிவீசுகிறார் வைடூரியம்.

G3FT. Lu
இரண்டும் ஒன்றல்ல
கரவெட்டியில்
ஒரு கலைவிழா
பட்டிமன்றத்தில் பங்கு பற்ற
ஓர் அணி போதிேருேந்து வந்திருந்தது உரையரங்கு
இசையரங்கு
பட்டிமன்றம் என
ஒரே அமர்க்களம் வீரகத்தி நடுவர்களில் ஒருவர் கலைஞர்கள் எல்லோரும் தேநீர்பருகிக் கொண்டிருந்தனர் நிகழ்ச்சி தொடங்க நேரமிருந்தது அன்றைய முதன்மை விருந்தினரும் பாராளுமன்ற உறுப்பினரும் சேர்ந்து கொண்டனர் நகைச்சுவைத்துணுக்குகள் உதிர்ந்து கொண்டிருந்தன
பா.உ. கேட்டார் “பண்டிதர், உங்களுக்கும் பல்லு விழுந்திட்டுது போல!" 'இதுதான்ா விழுந்தது!"
பபலை ஒய சிறிது நேரமாயிற்று வேறொன்றுமில்லை சில மாதங்களுக்கு முன் இந்தப் பா.உ பயணஞ்செய்த றயில் 556) LL356 TFG) தாக்கப்பட்பட்டது. பா.உ. ஒரு பல்லை இழந்தார் வீரகத்தி மகாவிவே ஒரு சொல்லினால் அச்சம்பவத்தை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

Page 27

சோ.ப
உபாலி
மாலை வேளை
பனிக்குளிர் காதை மூடிக் கட்டிக்கொண்டு நடக்கிறன் எதிர்ப்பக்கத்து நடைபாதையிலிருந்து அவன் சுவினான். "Are you froTTi. Sri Lanka?" "ஆம்" எனும் முன்னே வீதியைக் கடந்து வந்தான். என் கையைக் குலுக்கி தன்னை அறிமுகப்படுத்தினான் "நான் உபாலி"
முதற் சந்திப்பிலேயே அவன் காட்டிய சுமுக பாவத்தில் சிலிர்த்துப் போனேன்.
எங்கள் விடுதிகளுக்கிடையில் ஒரு மைல் தூரம் உபாலிக்கு அது பொருட்டல்ல நடந்தே வந்து விடுவான் என் அறைக்குள் புகுந்தால் ஒரே சுயாதீனம்! மேசையிலிருக்கும் பிள்கெற்றையோ அப்பிளையோ எடுத்துக் கடித்துக் கொண்டு "நீ எனக்கு ரீதரப் போவதில்லையா?" என அட்டகாசமாகக் கேட்க உபாவி ஒருவனால் மட்டுமே முடியும்
4岳

Page 28
46 சுவட்டெச்சம்
பல நாட்டு மாணவர்களும் தங்கியிருக்கும் அவ்விடுதிக்கு உபாலி வருவது
ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக மாறிக் கொண்டிருந்தது உபாலிக்கு எல்லோரும் நண்பர்களாயினர். எங்கள் கற்கை முடிந்து தாயகம் திரும்பும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது அன்று உபாலி வந்த போது விடுதியிலிருந்த மூன்று பெண்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்! மூவரும் பெண்ணியவாதிகள் "உபாலி ஊருக்குப் போறிங்களாமே?” “ஒவ் ஒவ்" "மனைவிக்கு என்ன வாங்கிப் போவீர்கள்?" "ஒரு கிறைன்டர் வாங்குங்கள்" "ஒரு ஹலிவர் வாங்குங்கள் "வாஷிங் மெஷின் வாங்குங்கள்"
அர்த்தமுள்ள சிரிப்போடு மூவரையும் நோக்கிய
உபாலி சொன்னான்
"எங்கள் நாட்டில் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யும் போது நாங்கள் ஒரு க்றைன்டரை மணந்து கொள்கிறோம் ஒரு ஹரலிவரை மணந்து கொள்கிறோம் ஒரு வாஷிங் மெஷினை மணந்து கொள்கிறோம்" வாயடைத்துப் போனார்கள் விடுதலை விரும்பிகள்!

C3afm.
பழக்க தோஷம்
"மேனாட்டாரிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கு!” சொன்ன சூரியைக் கேட்டன்: "இருந்தாப் போலை இதென்னஞானம்?"
"அங்கை பார்!" அவன் சுட்டிய திசையில் ஓர் இளம் பெண் வெள்ளைக்காரி தன் பொதியை முதுகில் சுமந்தபடி நடைபாதையில் விரைகிறாள்.
17

Page 29

சோ.ப
"எங்கடை பெண்டுகளின் சூட்கேஸ் தூக்கியே வானாள் கழியுது"
சலித்துக் கொண்டான் சூரி
முதுகில் கட்டிய ஏனையில் பிள்ளை தூங்க அன்றாட வேலைகள் செய்யும் ஆபிரிக்கப் பெண்ணை சூரி கண்டிருக்க மாட்டான்! ஆனால்
தலையில் கனக்கும் மரவள்ளிக் கிழங்கோடு இருகையும் வீசி நடக்கும் கண்மணியுமா
இவன் கண்ணில் படவில்லை!
"எல்லாவற்றுக்கும்
மேற்கு நோக்கிய
கும்பிட்ட பழக்கம்!"

Page 30

(3aFIT, LI
சும்மா கிடந்ததை.
பல போராளி இயக்கங்கள் தொழிற்பட்ட காலம் அது! தில்லையர் கையில் காசு புழங்கிய காலமும் அது தான்! வஞ்சகம் இல்லாமல் எல்லாக் குழுக்களுக்கும் வாரிக் கொடுத்தார் அவர் "நம்ம பிள்ளையவள் எடுக்கும் முயற்சி கைகூட வேணும். அவங்கள் எங்களைக் கேளாமல் வேறை ஆரைக் கேட்கிறது?"
பவுண் என்றும் பணம் என்றும் உணவு என்றும்
வீடு என்றும் தாராளமாகக் கொடுத்தார் பொடியளும்
அவரை
"ஐயா" என்று மரியாதையாக அழைத்தனர்
நான் அன்று தில்லையரைக் காணப் போன போது உலகமே வெறுத்துப் போய் இருந்தார். பேசமாட்டாராம்
குடும்பம் பற்றி.

Page 31
சுவட்டெச்சம்
தொழில் பற்றி. நாடு பற்றி.
ஊர் பற்றி. எந்தப் பேச்சை எடுத்தாலும் "ஹற்ம்" கொட்டினார்
என்ன நடந்தது இந்த மனுஷனுக்கு?
ஈற்றில் ஒரு பெருமூச்சு "சும்மா கிடந்த இரும்பைக்காய்ச்சி தட்டி வளைச்சு சூலமாக்கி நட்டன்
அது
இப்ப
கோழி கொண்டா ஆடு கொண்டா எண்டெல்லே கேக்குது!”
வேறொன்றுமில்லை முதல் நாள் இரவு ஜீவாதாரமான அவருடைய கடைச்சல் யந்திரத்தை ஒரு போராளிக்குழு எடுத்துச் சென்றுவிட்டது!

(3ап. ш
நாணம்
படையினர் யாழ்ப்பாணத்தில் காலூன்றிய காலம் ஊருக்குள் நுழைவதற்கு ஒரு வழி வெளியேறுவதற்கு ஒரு வழி நீக்கமற நிறைந்த முட்கம்பி வேலிகள் எதிர்பாரா இடங்களில் வெடித்து காலைக் கொண்டு போகும் மிதிவெடிகள் தலைவன் வேலைக்குப் போய் மீண்டும் வரும் வரை தழலின்மேல் நிற்கும்
தலைவி!
அன்றும் இப்படித்தான் நல்ல வெய்யில் பாதை மூடப்படுமுன் வீடு திரும்பும் அவசரம் முட்கம்பி முடுக்கினூடு நடக்கிறேன்

Page 32

சோ.ப
ஈரூருளியைத் தள்ளிக்கொண்டு சிப்பாய் மறிக்கிறான் "செக் பன்னியாச்சு!"
இது நான்.
"அது இல்லே" "பின்னை எது?" "இந்த ஆளைப் பாருங்க" அவன் அருகே கண்பார்வையற்ற ஒரு மனிதன் கையில் தடியுடன் "டபிள்' போக ஏலும்?" அவன் கேட்பது புரிகிறது. அந்த மனிதனை சைக்கிளில் ஏற்றுகிறேன்.
என் கடமையை
இவன் நினைவூட்ட நான் கேட்க நேர்ந்ததே! நானத்தால்
என் தலை கவிழ
சைக்கிள்
டபிள்' போகிறது.

Page 33
பட சுவட்டெச்சம்
 

C3EFIT.LI
சூழும், சூழும்!
தாய் வாழ்ந்த வீட்டை தவழ்ந்து புரண்ட மண்ணை ஊரை உறவை உதறிப் புறப்பட்டீர்! ஆராரோ அக்கரையில் ஆதரிப்பார் என்று நம்பி காரிருளில் ஆழக் கடல் கடக்க ஏன் துணிந்தீர்? "சாகத் துணிந்தால் சமுத்திரமும் காலளவே ஆகும்" எனும் பழஞ்சொல் ஆராயப் போனீரா?
‘நெகிழப் படகு நிறையச் சனத்தோடு கவிழ முழுகிக் கடலோடு போனீரே! குஞ்சுக் குழந்தை கொடுங்கடலில் போகையிலே நெஞ்சு பதறுது - இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? வெட்டியவன், குத்தியவன், வீடுடைத்தோன், தீவைத்தோன் சுட்டவன் - எல்லோரும் சுகமாய் இருக்கையிலே
வாழும் வயதில், இந்து மாகடலில் மாண்ட பழி
சூழுவது யாரை தொடருவது யாரையையா? பையவே பாண்டியனைச் சூழ்ந்த நெருப்பாக
ஐயகோ, இப்பழிதான் ஆள்வோரைச் சூழாதோ
"Gisciplin-Plastic
மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கையில் சுடபிள் மூழ்கிய அகதிகள் நினைவா8

Page 34

:ಶ್ಯ .
g LITTä
ר
ஆறரை மணிக்கு
* *
வீட்டை புறப்படுவார்.
தோட்டத்தைக் கடக்க

Page 35
சுவட்டெச்சம்
போர் தொடங்கிச்சுது தண்டவாளம் பதுங்குகுழிக்குப் போச்சுது தில்லையர் ஈடாடிப் போனார். உற்சாகம் இல்லை வேலையிலை ஒழுங்குமில்லை! அமைதிப்படை திரும்பப் பாதை போட்டதும் தில்லையருக்கு ஒரே புளுகம்! திரும்பவும் மெயில் போகும் வரை தோட்டத்துக்கை நிற்பார் வயது அறுபதாகியும் சுறுசுறுப்புக் குறையேல்லை.
திரும்பவும் போர் தொடங்கிச்சுது இந்த முறை
தண்டவாளத்தோடை சிலிப்பர் கட்டையும் போச்சுது! தில்லையர் இடிந்து போனார். பிரமை பிடித்துப் போய் இருப்பார் எண்டாலும்
ஒருநாள் றயில் ஒடுமென்ற நம்பிக்கை! அதையும் சிதறடித்தது நல்லையர் சொன்ன செய்தி "றயில் பாதையில கள்ளுக் கொட்டில் போட்டிருக்கு” "கொட்டில் தானே

GSF.T.u
பாதை போடேக்கை பிடுங்குவாங்கள்' மனம் ஆறுதலடைந்தது. அடுத்த வாரம் நல்லையருக்கு நெஞ்சுவலி ஆள் ஆஸ்பத்திரியிலை கேள்விப்பட்டதும் தில்லையர் பட்டணம் போனார். நண்பரைப் பார்க்க திரும்ப வர பஸ் இல்லை றயில் பாதை இருந்த தடத்தில் நடக்கத் தொடங்கினார் ஒருமைல் நடந்திருப்பார். நம்ப முடியேல்லை றயில் பாதையிலை பிள்ளையார்! மணிச்சத்தம்
கர்ப்பூர ஒளி
சிதறு தேங்காய் கையெடுத்துக்கும்பிட்டார் அன்றையோடை
தில்லையர் றயில் கனவை விட்டார் றயில் கதையையும் விட்டார் சொன்னார்: "பிள்ளையாரோடை
போட்டிபோட முடியாது!"

Page 36

சோ.ப
மிச்சம் கரச்சல்
I ggն கெடுபிடிகள் மிகுந்த காலகட்டம் F, l_307allohair சாவடிகள் எல்லாம் இறங்கி ஏறி
மக்கள் இடர்பட்ட நாள்கள்
آi/ائے۔
நகரத்துக்கு முக்கிய நுழைவாயில் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும்! க்யூ மெல்ல நகருகிறது. என்முன்
ஒரு மூதாட்டி எதையும் பொருட்படுத்தாத முகபாவம்! "அம்மா ஐ.சீ" "இதென்னடா கரச்சல்" முணுமுணுத்தபடி கையில் இருந்த கூடையைத் துனாவுகிறார் அவர் முணுமுணுப்பு சிப்பாய்க்குக் கேட்டுவிட்டது "அம்மே ஒங்களுக்கு கரச்சல், நமக்கு மிச்சம் கரச்சல்"

Page 37

சோ.ப
குண்டுமணி
பாரதியின் வீட்டில் கண்ணன் குடிபுகுந்த வாறு எனக்கு வந்து வாய்த்தவனே குண்டுமணி மாலை படலையிலே கண்டதுமே தாவி வந்து காவின் செருப்பெடுத்துக் காற்றாய்ப்பறப்பாயே வெள்ளத்தில் போன உன்னை மீட்டெடுத்தான் என் மைந்தன் பல்துலக்கி உன்னைக் குளிப்பாட்டுவாள் என் மகள் தறுகுறும்பு யாவும் பொறுத்துத் தனது கையால் ஒரு பிடிதந்தன்றி உறங்காளே என் மனைவி உண்டகளையில் உடல் சாய்த்தால் உன் முதுகை அண்டக் கொடுத்தென் அருகில் படுப்பாயே ஊர் நீங்கும் நாளில் உனைப்பேன முன் வந்து வேர்விட்ட உறவெல்லாம் விக்கித்து நின்று விட ஊன் துறந்து வாடி உருகி உயிர்துறந்தாய். நான் உடைந்து போகும் படி கன்ைனால் விடைபெற்றாய்
மாதுளையின் கீழ் உன்னை மண்ணுக்குள்மூடிய என் பாதகத்துக்கோ இப்பரிதவிப்பைத்தந்து சென்றாய் முற்றம் வெளிக்க முழிவியளம் இழக்க வெட்ட வெளியில் எனை ஏன் விட்டாய் குண்டுமனி? பற்றுக்களெல்லாம் அறுத்தல் ஈடேற்றம் என கற்றதமிழ் எனக்கு கைகொடுக்கவில்லையடா மண்ணுக்குள் போய்விட்டாய் என்று மனம் ஒப்பவில்லை கண்ணுக்குள் நிற்கின்றாய் காலை முகர்ந்தபடி

Page 38
சுவட்டெச்சம்
 

சோ.ப
என் பேதை செல்லத் துணிந்தனளே!
நள்ளிரவு
பிறக்கப்போகும் புத்தாண்டை வரவேற்க அயற்பொடியள் தீர்மானித்ததால் காது செவிடுபட
வெடியோசை
இரவின் அமைதி குலைய!
காலை கண்விழித்து
வெளியே வந்தால் வரவேற்க பூலான் இல்லை! பக்கத்து வளவுகளும் பற்றைகளும் பாழ்ங்கினறும் தடவிச் சலித்தோம் பூலான் இலாது பொலிவிழந்து போயிற்று
எம் வீடு
முன்னொரு நாள் கள்ளர் புகுந்து கதவுடைக்கும் சத்தத்துக்கு ஆற்றாது ஓடிப்போய்
ஆமி முகாம் புகுந்தாள் மீட்டு வந்த அந்நாள் நீராட்டு, விழாக்கோலம்
மீண்டும் அதுநேர விதியில்லை மினு மினுக்கும் கட்டைக் கறுப்புகளை காணும் தொறும் எங்கள் பூலானைக் காண்பது போன்ற புளசிப்பு பாழும் மனசு இழப்பை ஏற்குதில்லை இவ்வீதி நீளம் அளக்கும் கண் நெஞ்சு வலியெடுக்கும்!

Page 39
68 சுவட்டெச்சம்
வெந்த மண்ணில் என்ன விடுப்பு?
பதுளை, வெலிமட, மஹாநுவர, தம்புல்ல, குருநாகல, வெயங்கொட, பொலன்னறுவ, கடவத்த, கெக்கிறாவ, குளியாப்பிட்டிய, கொஹரலிவல, றம்புக்கன
வழித்தடம் மாறிய வண்டிகள் எங்கும் பழிகிடக்கின்றன "யாப்பன பார்க்க! நகரத்துத் தெருக்களிலும் நாகவிகாரை முன்னும் நல்லூரான் வீதி தொட்டு நாவாந்துறை வரையும் வண்ண வண்ண வண்டி அணி வந்து நிக்குது கண்ணிரண்டும் கண்டு கண்டு வலி எடுக்குது!
கொய்த கணிகளொடு கொய்யாக கனிவகையும் வேர்க்கடலை, சோளம், விறகு, பலகை, முகம் -

G3FiT. Lu
பார்க்கும் கண்ணாடி, பற்றறி, மின் சாதனங்கள் பிளாஸ்ரிக்கில் பூவும், பிரமிக்கும் பாத்திரங்கள் கண்டகண் மற்றொன்றும் காண முடியாதுதிண்டாட, யாழ்ப்பாணத் தெரு நீளம் கடை விரித்தீர்! தாவாரம் மரநிழலில் தண்டிறங்கிச் சமைக்கின்றீர் வருவோரை வரவேற்று வரலாறு படைத்தவர் நாம்!
யாழ்ப்பாணத்தான் செல்வம் யார் யாரோ கொள்ளையிட்டார் நீர் வாரிப் போனாலும் நின்று பிடிக்க வல்லான்!
தலையைக் கவிழ்த்த படி தாம் தொலைத்த வாழ்க்கையினை தேடுகிறார் தமிழர்கள்! தென்னிலங்கைச் சோதரர்காள், இந்த மயானத்தில் என்னத்தைத் தேடுகிறீர்? வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

Page 40
70 சுவட்டெச்சம்
பிளாஸ்ரிக் உலகப் பிரம்மாக்கள்!
"ஐயா ஒரு நல்ல package" "தம்பி, என்னெட்டைphone இருக்கு!” "வீணாய் காசு செலவழிக்கிறியள் இந்த package ஐ எடுங்கோ ஆயிரம் நிமிஷம் free!”
"அம்மா, இந்த mop இயக்க எளிதானது
நின்று பிடிக்கும் ஒன்று எடுங்கோவன்!"
"இந்த tOrch ஐப் பாருங்கோ

G3FT. Lu
ஒருக்கா charge இலை போட்டா ஆறுமணித்தியாலயம் எரியும் ஐந்நூறு ரூபா தான்! உங்களுக்கு நூறு ரூபா கழிவு"
ரை கட்டிக் கொண்டு படலை திறந்து மல்லிகைப் பந்தற் கீழிருக்கும் என் அந்தரங்கத்துக்குள்ளும் அரும் பொழுதுக்குள்ளும் கேட்டுக்கேள்வி இல்லாமல் மணமில்லா மலரோடு அத்து மீறும் பிளாஸ்ரிக் உலகப் பிரம்ம தேவர்களே! போன் இல்லாமல் மின்சாரம் இல்லாமல் பற்றறி இல்லாமல் பத்துப் பதினைஞ்சு வருஷம் வாழ்ந்தது இந்தக் கட்டை!
ரைகட்டுவோரை வியத்தலும் இலமே வேட்டியை இகழ்தல் அதனிலும் இலமே!

Page 41
சுவட்டெச்சம்
நினைவுச்சுவடுகளில் துளிர்விடும் எண்ணங்கள்
புதுக்கவிதையில் பேச்சுமொழியை நேரடியாகவே தன்னுடைய கூற்றாகவும் மேற்கோளாகவும் சோ.ப பயன்படுத்தியுள்ளமை புதுக்கவிதைக்குப் புதிய சாத்தியப்பாடுகளைச் சுட்டிநிற்கிறது. மேற் குறிப்பிட்ட விதமான மொழி நடை கவிதைகளின் பாரு பொருளுக்கு மிக ஏற்றது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இக்கவிதைகள் யாவும் அவரது வாழ்வின் அனுபவங்கள் என்பதை விட, அவரு டைய மனித உறவுகளின் பதிவுகள். அவர் அறிந்திருந்த ஓர் உலகின் மனிதர்களை நம்முன்னாற் கொண்டு வந்து நிறுத்துவன. அவற்றில் அவருடைய மதிப் பீடுகளை விட அவர்களுடனான உறவே முதன்மை பெறுகிறது. எனவே அந்த உறவுகளின் மொழிவழிப் பரிமாறலான உரையாடல்கள் எந்த விதமாக அமைந்தனவோ அந்த விதமாகவே கவிதையில் வெளிப்படுவதும் பொருத்தமானது என்றே நினைக்கிறேன். அவை கூறும் அந்தரங்கமான சில உணர்வுகளை வேறு சொற்களிற் சொன்னால் கவிதையை மொழிபெயர்ப்பில் வாசிக்கிற மாதிரி, எதையோ பறிகொடுத்து நிற்கும்.
மரபுக் கவிதைக்குப் பழக்கப்பட்ட வர்கட்குப் பிடித்தமான சந்த ஒழுங்குகள் அவர்களையறியாமலே அவர்களது ஆக்கங்களில் நுழைந்து விடுகின்றன. இங்கு தான் மரபுக் கவிஞர்கள் வலிந்து சொற்களைத் திணிக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டின் வெறுமை புலனாகிறது.
-சிசிலசேகரல் (அனித்துரை) கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியையொட்டி யாழ்ப்பா னத்தில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கைச்சுவடுகளிவை, அதுவும் படித்து, பிறகு உத்தியோகம் பார்ப்பதற்காக வெவ் வேறிடங்கள் வரை பயணம் செய்யும் வாழ்வைக் கொண்ட மத்திய

G3F. Lu 7:B
தரவர்க்க மனிதரின்தடங்களிவை எனலாம்.
இந்த நினைவுச்சுவடுகள் மிகச் சுவாரஸ்யமானவை. எளிமையான வாசிப்பிலேயே சோ.ப. காட்டுகிற ஒரு கால கட்டத்தையும் அதன் மனிதர்களையும் நாம் காணமுடிகிறது. இதில் சோய அடைகிற முதல் வெற்றி ஒவ்வொரு சுவட்டிலும் அவர் வாசகமனதில் எழுப்புகிற காட்சிகளாகும். அப்படி ஒவ்வொரு சுவரும் காட்சிகளை அலாதியாக எழுப்புகின்றது.
மனிதர்களையும் அவர்கள் வாழுகின்ற காலச்சூழல், சமூகச்சூழல்களையும் அவர்கள் வாழும் முறை, பேசும் முறை என்பவற்றையும் காட்சியாக்கி விடுகிறார் சோ.ப. இதற்காக அவர் திட்டமிட்டுச் செயற்பட்டதாக உணர முடிய வில்லை. அவருக்கு இயல்பாக அத்தகையதன்மை வந்திருப்பதாகவே தோன்றுகிறது.
காலம் மற்றும் சூழல் சித்திரிப்பிலும் அவர் அதிகமாகக் கவனம் செலுத்தியதாகவும் இல்லை. வேண்டுமானால் அவர் தன்னுடைய மனிதர்களைத் தான் அழுத்தமாக அறிமுகப் பருத்துகிறார் என்று சொல்லலாம். பெரியம்மா, ஐயன்னா கானா, அருள் அண்ணா, மாமா, பெரியப்பு, சின்னமாமா, அம்மா குன்சியாச்சி என ஒரு பெரிய உறவுவட்டம், இதுதான் சோ.ப.வின் நினைவுச்சுவடுகளில் பதிந்துள்ள நினைவு வட்டம். இந்த வட்டத்திலுள்ள மனிதர்களை அறிமுகப் பருத்துவதனூடாக அவர் ஒரு காலகட்டத்தையும் ஒரு சமூகத்தையும் நமக்குக் காண்பிக்கிறார். அது கழிந்த காலம், ஆனால் மனதில் இன்னும் உயிர்ப்போருள்ள காலம்.
அதிகம் இயந்திரமயமாகியிராத அந்தக் காலத்தின் அமைதியும் அழகும் இயல்பும் உறவுகளின் நெருக்கமும் அன்பும் அவற்றுக்குள்ளிருக்கிற முரண்களும் வெளியும் இறுக்கமும் எனப்பல விசயங்களைச் சோய எளிமையாகச் சொல்கிறார்.
சோ.ப. கவிதைக்குக் கிட்டவான ஒரு வகை வடிவத்தில், பேச்சுமொழியில், சுவாரஸ்யம் ததும்ப தன்னுடைய மனிதர்களை

Page 42
&re 6L8F8FLD
அறிமுகமாக்கி ஒரு உலகத்தைக் காட்டுகிறார். அவர்களின் கதைகளைச்சொல்கிறார்.
-গুচণ্ডঞ্জস্যকেge ($U৫6@g)
Octowiopaz கேட்டார் ஒரு பொழுதில், கவிதையை வாழ்க்கையாக அமைக்காமல் நாம் வாழ்க்கையைக் கவிதையாக்க வேண்டாமா என்று. இத்தொகுதியில் அது இயல்பாய் நேர்ந்தி ருக்கிறது உங்கள் மூலமாய் உங்களுள் வசித்துவருகின்ற கவிதை சொல்லியின் வசீகரம் உலகறிந்தது. ஆயினும் கதை சொல்லியின் அற்புத அழகை உங்களிடம் கற்ற மாணவர்கள் நன்கு அறிந்திருப்பர். இங்கு கவிதைகளாய் வழிகின்றன அழகான கதைகள். "பாலிற் பரு நெய் போல மறைந்திருந்த கதை சொல்லி வெளிச்சத்துக்கு வருகின்ற இந்தப் பொழுது மிக அருமையானது. இந்தப்பொழுது வாழ்க!
-குணானினிகுலான்குன் (கடிகுல்)
இன்று நாம் எதிர்கொள்கிற வாழ்வு உள்ளும் புறத்துமாய் பல கசப்பான அனுபவங்களின் தொகுப்பாகவே பெரும்பாலும் அமைந்து கிடப்பது காலத்தின் சாபமாய்க்கவிந்து போய்விட்ட ஒரு துயரம்
பரஸ்பர நேசமும் ஆழ்ந்த பாசமும் எளிமையான அணுகு முறைகளும் அணிகளாய்ப்பூண்டதொரு வாழ்க்கை ஒரு காலத்தில் இருந்தது என்பதை நினைவு கூர்வனவாய் சோயவின் நினைவுச் சுவடுகள் அம்ைகின்றன. அவரது அனுபவ வெளிப்பாடுகள் எமது கடந்தகாலத்தை நோக்கிநம்மை நகர்த்திப்போகின்றன.
கவிஷர் வேர்களைத் தேடி மேற் கொள்ளும் பயணத்தில் நமது மனங்களும் நம்மையறியாமல் இணைந்து கொள்வது - கவிஞரின் வெற்றியாகிறது. நாம் கடந்து வந்த வாழ்வின் இழந்து போன இனிமைகள் பற்றிய கழிவிரக்கத்தைத் தவிர்க்கவே இயலவில்லை.
-്.orej

G3FT. Lu
நினைவுச்சுவடுகள் பேசும் விடயமென வெளியில் துருத்தி நிற்பதனை ஒரு சொல்லில் சொல்வதானால் 'வாழ்பனுபவம் என்று சொல்லலாம் வாழ்வனுபவம் ஒரு மனிதனை நல்ல பக்குவ நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியது. ஒருவனின் வாழ்பவனு பவத்தின் உறவுகள், சுற்றம், கூடிவாழ்ந்த மனிதர்கள், அனுபவித்த விடயம் என்பவை பேசும் அல்லது உயிர் பெறும். இவ்வாறு தான் சோ.ப இத்தொகுதியினூடாக தாம் வாழ்ந்த ஊர், உறவு, சுற்றம் போன்ற எல்லாவற்றினையும் மீளக் கொண்டு வந்து நிறுத்த முனைந்துள்ளார்.
இத்தொகுதி நல்ல அனுபவங்களைப் பேசியிருப்பது உண்மைதான். இந்த அனுபவம் வாசகண்பால் ஈர்ப்பினை உண்டுபண்ணுவதை மறுப்பதற்கு இல்லைத்தான். ஆனால் ஒரு கதை சொல்லும் மரபுக்கு கவிதையென்ற அடையாளம் அவசியமில்லை.
இவர் சொல்லும் ஒவ்வொரு அனுபவமும் வாசகனைச் சென்றடையும். அதேபோல் அவனிடமுள்ள அனுபவ ஊற்றினையும் கிளர்த்தும். ஒரு கவிதையாக அல்லாமல் சொல்லாடலாக அல்லது கதையாக சாத்தியப்படும் என்பது எனது கருத்து.
சோ.ப தனது அனுபவத்தினை இத்தொகு ப்பினூடாகத் தந்திருப்பதன் காரணமாக இதனை நுகரும் ஒவ்வொரு வாசகனும் தன்னை மீள ஒரு முறை திரும்பிப் பார்க்கவும் கூடும். அந்த வகையில் இவர் வெற்றி பெற்றிருக்க முடியும்.இதன் காரணமாகவே மீள மீள எனக்குப் புலப்படுவது அல்லது நான் சொல்லத் துணிவது நினைவுச் சுவடுகளை கவிதைத் தொகுதியாக அல்லாமல் ஒரு பிரதியாக வாசிப்பது எந்தவிதமான சங்கடங் களையும் வாசகனுக்குத்தரப்போவதில்லை.
-கித்திலசைகுன்லன்(வீரகேசரி. ககுஸ்ஸ்) சங்கக்கவிதை முதல் ஈழத்து சோ.பத்மநாதன் கவிதைகள் ஈறாக நாம் கண்டு கொள்ளக் கூடிய முக்கிய பண்பு மனித -தமிழ்மனித

Page 43
சுவட்டெச்சம்
இருப்பைப் பறைசாற்றும் அனுபவத் தடங்களாகும். இதில் கட்புலம், செவிப்புலம் என்று பாகுபடுத்தல் வெறும் வித்தைகாட்டும் எத் தனிப்புகளே. கவிதையின், பாருபொருளுடாக கவிஞன் கிளர்த்தும் அனுபவப்பகிர்வு கவிதையின் தளத்தை பல மட்டங்களுக்கு எடுத்துச் செல்லும். வாசகள் தம்தம் அனுபவங்களுடாக அதிலிருந்து பயணிப்பர்.
நினைவுச்சுவடுகளை புதுக்கவிதை நடையில் இலகு தன்மையில் எழுதப்புறப்பட்ட கவிஞரால் அவரது மரபு சார் ஆளுமை காரணமாக சந்தங்களிலிருந்துவிடுபட முடியவில்லை. எனினும் ஒசைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவிதை படைக்க முயலாது வெறுமனே படிமக் குவியல்களுக்குள் தம்மைப் புதைத்துக்கொள்ளும் பல சமகால புதுக்கவிஞர்களுக்கு சோ.ப.வின் இந்நூல் ஒருவழிகாட்டி
பேச்சோசைப் பண்பு மகாகவி உருத்திர மூர்த்தியுடன் ஈழத்துக் கவிதையுலகில் பாவனைக்கு வந்தது. சோ.ப. போன்றவர்கள் அதனை வெகு லாவகமாக, உயிர்த்துடிப்பாக, இயல்பாக தம் கவிதை ஆளுமைக்குள் ஏந்திக்கொண்டனர். தோண்டத் தோண்ட வற்றாத ஊற்றுப்போல் சீறிப்பாயும் நினைவுச் சுரப்புகளாக சோப. கவிதைகள் மிளிர்கின்றன. அவை ஒசையுடனும், பொருத்தமான சொற்பயன் பாட்டுடனும் படைக்கப்பட்டதால் வாசகனின் மனதைத் தெற்றெனப் பற்றிக்கொள்ளும். - கந்குைலா கேணேசன் (கலை முகல்)
நல்ல கவிஞன் ஒருவனுக்கு எதுவும் கவிதைக்குரிய பொருளாகலாம். கவிளுைர் சோ.ப.வின் நினைவுச் சுவடுகளின் முற்பகுதியிலுள்ள கவிதைகள் பலவற்றுக்கு அவரது சுயசரிதை பொருளாகிறது. சிறு பராயப் பதிவுகள், இளமை நினைவுகள் கவிதையாகும் போது ஓர் அற்புத உணர்வைத்தருகின்றன.
கவிதை என்ற கலைக்கு ஊடகம் மொழி. இன்னொரு வகையில் சொல்லப்போனால், கவிதையின் கதை என்பது, அதிற்பயிலும் சொற்களின் கதை நினைவுச் சுவடுகளின் பிற்பகுதியில் ஒசைநயம் வாய்ந்த சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன. படிப்போருக்கும் கேட்போருக்கும் இன்பம் தருவதே கவிதையின் பண்பும் பயனும் என்று கூறினால் சோயவின் கவிதையில் எப்போதுமே அது உள்ளது"
-8காகினை மகேந்திரன் (மல்லிகை, ஆன் 2006)


Page 44


Page 45
கே. என முதலெழுத்துக்களால் இலக்கிய
உலகில் நன்கு அறியப்பட்ட சோ.பத்மநாதன்
கவிஞர் விமர்சகர் மொழிபெயர்ப்பாளர்
சொற்பொழிவாளர் என்ற பன்முக ஆளுமை
படைத்தவர் வடக்கிருத்தல் 998)
நினைவுச் சுவடுகள் 2005) ஆகிய செந்தக்
கவிதைத் தொகுதிகள் இரண்டோடு ஆபிரிக்கக்
கவிதை (2000 தென்னிஸ்கைக்
56sloops (2003) 6gio GDIT 615
தொகுதிகள் இரண்டும் வெளியிட்டவர்.குழந்தை
சண்முகலிங்கத்தின் மூன்று நாடகங்களை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் 2007)
Journal of South Asian Literature 987)
Penguin New Writing in Srianka (1992)
utesang and Lament (2001). A ankan
Mosaic2002) ஆகிய தொகுதிகளில் இவர்
மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன
*s:6öFf pössi :fEllgäélög G986)
முத்துச்சிரிப்பு 2005) என்பன ஒலிப்
Gugg56rs 666f55.5 (3a 65
இசைத்தொகுதிகள்
SBN 97892828