கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் அமிர்தம்

Page 1


Page 2

TF TT 7) | .. ாவலர் அ. அமிர்தலிங்கம் அவர்கள்
வரலாறு கூறிடும்
தமிழ் அமிர்தம்
No (முதற் பாகம்) 2. R.
L L L S S S S S S SSSTSSLLL SL SLSLSLSLS S S S S S
ஆசிரியர்" தமிழ் மகன் “ಅಣ್ಣ சிற ပ္းနီ္တား 。づ 戸リé。 திரு. இ. பேரினிப்நிர்ய்கம்
1952ppb.
S SS SS SSLSLSL LL LSLSLLLSLSLLLSLSLSSLSLSSLSLMSSSLSLS
துணை ஆ திரு. மு. பாஸ்கரன்
வெளியீடு: அறிவாலயம்
அளிப்பவர் :
தமிழர் கூட்டணிச் செயலாளர் உயர்திரு. வி. தர்மலிங்கம், எம். பி. அவர்கள்
1)
3798?

Page 3
முதற் பதிப்பு = 18:12-1974
விற்பனே உரிமை ! அறிவாலயம்
கந்தரோடை சுன்னு கீம், இலங்கை
=2 insi விலே ரூபா
அச்சுப்பதிவு : திருமகள் அழுத்தகம், சுன்னுகம், இலங்கை,

அறிவாலயம் பேசுகிறது.
வாசக அன்பர்களே!
இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் இன்றைய நிலையில், அவர்கள் தங்கள் மொழி, பிரதேசம், கலே, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைத் தமது கண் போல் பேணிக் காத்திடவேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது. அவர்களே இவ்வவசியத்தை உணர்ந்திடாது துரங்கிக்கிடிக்கின்றனர். அத்துடன் அவர்களது மேம் பாட்டிற்காக உழைத்திடும் அரசியல், சமூக இயக்கங் களினதும், அவற்றின் உழைப்பாளிகளினதும் அளப் பரிய சேவைகளை, அவர்கள் செய்திடும் தியாகங்களே அறிந்தோ அறியாமலோ பேசாதிருக்கின்றனர்.
இக் குறைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கஅவர்களுக்காகப் பாடுபடுபவர்களேப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல-அவர்கள் ஆற்ற வேண்டிய பணி களைச் சுட்டிக் காட்ட-தோற்றுவிக்கப்பட்டதே இவ் வறிவாலயம்.
இவ்வறிவாலயம் தனது முதற் பணியாக, முத்தமி முக்கும், முத்தனேய தமிழுக்கும் கடந்த பல ஆண்டுக ளாகத் தனிப்பட்ட முறையிலும், தமிழரசுக் கட்சிதமிழர் கூட்டணி போன்ற அரசியல் இயக்கங்கள் மூலமும் அளப்பரிய பணியாற்றி வரும் அன்பர் அமிர்த லிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் 'தமிழ் அமிர்தம்' என்னும் இந் நூலினேப் பெருமையுடனும், பெரு மகிழ்ச்சி யுடனும் வெளியிடுகின்றது.
இந் நூலினைப் படிப்பவர்கள் பயன் பெறும் விதத மாக இதனை வரைந்திருக்கிருர் இதன் ஆசிரியரான் தமிழ் மகன் அவர்கள். இவர் திட்டியுள்ள இந் நூல், படிக்கும் உள்ளங்களுக்கு உணர்ன்வ்பும், உ ற்சாகத்

Page 4
iw
தையும், உத்வேகத்தையும் உண்டாக்கும் என்பது திண்ணம். அந்தளவுக்கு ஆழ்ந்த கருத்தை முடிந்த வரை அழகுதமிழில்-அடுக்கு மொழியில் – அஸ்ளி வீசி யிருக்கின்ருர்,
மேலும், நூல்கள் பல அச்சிடுவதில் தன்னிகரற்று விளங்கும் சுன்னுகம் திருமகள் அழுத்தகத்தில் இந் நூல் அச்சிடப்பட்டமை இதன் தரத்தை இன்னும் ஒரு மடங்கு மேலே உயர்த்தியிருக்கிறது. அந்த அளவில் நமது நன்றிக்குரியவர்கள் திருமகள் அழுத்தக ஊழியர் JK, GB GT IEA I Tenuri.
தமிழ் அமிர்தத்தை முழுமையாக நீவிர் சுவைக்கச் செய்ய நாம் விரும்பினுலும், சூழ்நிலை அதற்கு இடங் கொடுக்கவில்லை. அதனுல் இவ் வமிர்தத்தின் ஒரு பகுதியை முதற்பாகமாகத் தந்துள்ளோம். இதன் மீதிப் பகுதியை விரைவில் தந்து, அமிர்தம் முழுவதையும் அன்பர்களாகிய நீங்கள் சுவைத்து மகிழ்ந்திட-பயன் அடைந்திட-ஆவன செய்வோம் என உறுதி கூறு கின்றுேம்,
இதோ. , தமிழ் மகன் மூலம் நாம் தரும் அமிர்தத்தைப் படித்துப் பாருங்கள் ரசித்துச் சுவை புங்கள் !!.
அறிவால்பம் சுந்தரோடை,
சுன்னு கம், இலங்கை,
I8-12-74

மூதறிஞர் செல்வா
தரும் முத்தான செய்தி
தமிழரசுக் கட்சி தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு ' தமிழ் அமிர்தம் ? என்ற நூல் ஒன்றை வெளியிடுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
* தமிழ் அமிர்தம்' தமிழரசுக் கட்சியின், அமிர்தலிங்கத்தின் வாழ்வின் சுவை நிறைந்து விளங்க வாழ்த்துகிறேன்.
சா. ஜே. வே செல்வநாயகம்
கொழும்பு 芷一罩墨一罩叠

Page 5
தில்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் உயர்திரு. டாக்டர் சாலே இளந்திரையன், எம். ஏ.
அவர்களின்
கவி வாழ்த்து
உங்கள் தமிழ் நெஞ்சத்தே ஊறிவரும் எண்ணங்கள்,
ஈழநாட்டுச் சிங்கங்கள் இதயத்தைத் திறந்தங்கே ஒலிக்கட்டும் ! விழித்துக் காண்போர் தங்கள் தமிழ்ச்சீர் கண்டு,
தலே நிமிர்ந்து நடக்கட்டும்! உங்கள் சீர்கள் எங்கெங்கும் நிமிர்ந்தேற
எந்தமிழ்த்தாய் பெற்றபுகழ் பெறுக நீவீர்!
டாக்டர் சாலே இளந்திரையன் புதுடெல்கி, ag -7-74 . "

தமிழ்நாடு கல்வி அமைச்சர் மண்புமிகு நாவலர், டாக்டர் இரா. நெடுஞ்செழியன், எம். ஏ. அவர்கள் அளித்த
ஆசிச் செய்தி
இரா. நெடுஞ்செழியன் தலேமைச் செயலகம்,
கல்வி அமைச்சர் File:T-9.
曼昂一富一直粤置卓
இலங்கைத் தமிழரசுக் கட்சித்தஃலவரும், தமிழர்கூட்டணியின் செயலானர் நாயகமுமான நண்பர் அமிர்தலிங்கம் (சட்டத்தரணி) இலங்கைத் தமிழர்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழ்மொழி சிறக்கவும் பாடுபடுபவர். அவரின் வாழ்க்கை வரலாற்று நூலினே (தமிழ் அமிர்தம்) அனேவரும் பெற்றுப் பயனடைய வேண்டுகிறேன். இந் நூலினே ஆக்கும் அறிவாலயம் குழுவி னர்க்கும், அதன் ஆரம்ப வெளியீடான் இத் தமிழ் அமிர்தம் நூல் சிறப்புடன் அமைப்வும் என் வாழ்த்துக்கள்,
பொதுச் செயலாளர்,
தி. மு. க.

Page 6
தந்தையவர்கள் நயம்படிக் கூறுகிருர்
தமிழ் அமிர்தம் நாயகனைப் பற்றி
அமிர்தலிங்கத்திடம் நான் காணும் முக்கிய சிறப் பியல்பு அவருடைய அஞ்சாமையாகும்.
மிகப் பலம் வாய்ந்த எமது எதிரியாகிய இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நாம் போராடுவதற்கு அஞ்சாநெஞ்சம் படைத்தவர்களே வேண்டும்.
அமிர்தலிங்கத்திடம் பல சிறந்த இயல்புகள் இருக்கின்றன. தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் திறமையாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். தலுைவின் ஒருவனுக்கு வேண்டிய குணங்கள் அவரிடம் உண்டு. ஈழத் தமிழ் மக்களின் விடுதலேக்குப் போராடுவதற்கு அவருக்குப் போதிய காலம் இருக்கின்றது. ஆயதைப் பொறுத்தவரையில் அவரை ஓர் இளைஞர் என்று தான் சொல்லவேண்டும்.
எனது காலத்திலேயே தமிழ் மக்களின் விடுதலை கிடைத்துவிடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி அது கிடைக்காமல் போனுலும் அமிர்த லிங்கத்தின் வாழ்நாளிலே அது கிடைத்துவிடும் என்று நான் நம்புகின்றேன்.
சா, ஜே. வே. செல்வநாயகம் கொழும்பு 3-12-7

νέο ξύβά ஈழத்து நாவலரைப் பற்றி தமிழகத்துச் சிலம்புச்செல்வர் இப்படிக் கூறுகிருர்!
போ, சிவஞானம் புனித ஜார்ஜ் (?ais fTr".Gail துணேத் தலேவர் ਤੇதமிழ்நாடு சட்ட மன்றம்
நாவலர் அ. அமிர்தலிங்கம் அவர்களே தான் நன்கறிவேன். ஈழத்தமிழரின் உரிமை இயக்கத்தில் அவருக்குள்ள பங்கு சரித்திர முக்கியத்துவமானது. அந்த இயக்கத்தோடு இஜனந்து அவர்கள் கடத்த காலத்தில் செய்துள்ள தியாகங்களே ஈழத்துத் தமிழர்களேயன்றி, இந்தியத் தமிழர்களும் போற்றக் கடமைப் பட்டவர்களாவர். அன்பர் அமிர்தலிங்கம் சென்னேக்கு வரும் போதெல்லாம் என்னேக் கண்டு உரையாடத் தவறியதேயில்லே. அவரேWடு உரையாடிய ஒவ்வொரு நேரத்திலும் அவர் பண்பு மிக்க உயர் மனிதர் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டுள்ளது. அவருடைய நீர்வன்மை ஈழத் தமிழர்கள் அடைந்த பெரும் சொத்து ஆகும். தாவலர் அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு நூற் குண்டுக்கு மேலும் வாழ்ந்து, தமிழினத்தாருக்குத் தொண்டு புரிய இறையருஃப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.

Page 7
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலவர்
உயர்திரு. செள தொண்டமான் அவர்கள் வழங்கும் வாழ்த்துச் செய்தி
தமிழரசுக் கழகத் தஃலவர் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கழக வெள்ளி விழாவில் வெளியிடுதல் மிகப் பொருத்தமுடையதே.
காத்தி மகாத்மாவுக்கு ஜவஹர்லால் நேரு வாரிசர்க வாய்த் ததுபோல ஈழத்துத் தமிழர் தஃபவர் திரு. செல்வநாயகம் அவர்களின் சித்தனேயைச் சிலோப் வடிக்க முன்னின்றுழைக்கும் மகா சிற்பி இவர் என்ருல் மிகையாகாது.
தன் நாயகனின் "காவியம் பரவிலும் கைகொடுத்து', ' * மாதர் அறங்கள் பழைமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்யும்’ புதுமைப் பெண்ணும் திருமதி மங்கைபர்க்கரவிரேடு இவர் நீடூழி வாழ்ந்து நிறை பல சேவைகள் செப்ட் வாழ்த்து கின்றேன். இவரது வரலாறு கூறும் "தமிழ் அமிர்தம்' நூலுக்குத் தமிழர்கள் ஆதரவளிப்பர் என நம்புகின்றேன்.
செள தொண்டமான்
கொழும்பு, தஃலவர், இ.தொ. கா.
E-3-

தமிழர் கூட்டணித் துனேத்தலேவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளர் உயர்திரு மு. சிவசிதம்பரம், நியாயவாதி அவர்கள் நல்கும் ஆசியுரை
'செ'லல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனே
இகல்வெல்லல் யார்க்கும் அரிது: என்ற குறளுக்கு ஒப்ப, தனது அரசியல் வாழ்க்கையை A-த்தியவர், நடத்துபவர் நண்பர் அமிர்தலிங்கம் அவர்கள். இந்த நூற்ருண்டின் தலேவிறந்த தமிழ்த் தலவர்கள் வரிசையில் தனக்கென்ருேர் சிறப்பிடத்தை, தனது நேர்மையால், கொள் கைப் பிடிப்பால், செயலால், சொல் வன்மையால் ஆக்கிக் கொண்டார் நண்பர் அமிர்தலிங்கம் அவர்கள் அவரது வாழ்க்கை வரலாறு கூறும் 'தமிழ் அமிர்தம்' என்னும் இந் நூலிஜனத் தமிழ் மக்கள் வாங்கி ஆதரவளிப்பதோடு, படித்துப் பயன் பெற வேண்டுமென்றும் விரும்புகிறேன்.
நண்பன் அமிர்தலிங்கம் அவர்கள் வாழ்க! அவர் பணி வாழ்க!,
மு. சிவசிதம்பரம் கொழும்பு, -- 7.
器
முத்தமிழ்க் காவலர் பண்டிதர் க.பொ. இரத்தினம், எம். ஏ. எம். டி. அவர்கள் தந்த செய்தி தமிழினத்தின் உரிமைக்காக - ஈழத் தமிழகத்தை அமைப்பு தற்காக-அல்லும், பகலும் அயராமலும், அஞ்சாலுைம் உழைத்து வரும் தியாகச் செம்மல் தமிழரசுக் கட்சித் தலைவர் நாவலர் அமிர்தலிங்கம் தற்ருெண்டாற்றிப் பல்லாண்டு வாழ்க வேனே க. பொ. இரத்தினம்
--d

Page 8
ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணித் தல்வர், பரிஸ்டர் உயர்திரு. செ. சுந்தரலிங்கம்
எம். ஏ (ஒக்ளின்), பி. எஸ்ளி. (லண்டன்) அவர்கள் தரும் ஆங்கில வாழ்த்து
CCHTTDD S TTTT TT HCHC LCCS tCCS LLLLLLLLGGDmDHH SSS CCC LL kLLCL LLLS CCGGT GGLGTL L LLLLSCCS LLLLS LLLLCT LLLHCG THS LTT LGaaTL GGGLGLLaL S LHLHHLCS LLLLLLLLY LLLLLL LLLL LLLHH LLLLLL LTLLLLL Face Green on the Very day the Officiai Language Bill Was ήηrrorηρετή ήττα Parlia rriment, to break up the F. P. Sathyagraha. CCCH LLLT TLT THLHH HHHS YTTS LCLLLLL LLLGLSLLL LLLH LLLGLDLDLLLHSrS LLLL LLGTT TLH CTTCCLTS S SS LLLLLSL LSLLL HLCCCaTL aGGLS SLLLLLLLS
ir garri ’’’, afid I drove the Jeep at tur usual speed. At my
CCLLCSSS LL LLLLHHHaa LHCCL LLLS SCYS LLLCLLLS LLL LLLGLCLLLS HGLLLT tL LLLLLLLLSLLLLLLLS LCCLLS S LLLL SSJSSS LLLLLL LLLLLLLT SJS SLHH LLLTLTLTTS TLT LCCLGLLH S LtLLLLLLL SS LCLGGGGLLGuCuLHS S LCTS LTTGTLLLLSSS Prime Minister S. W. R. D. Bandaranaike exclaired in his LLLLT LLLLTS TTCCHL LL LLLLL SC LLLCLLL L CCLLLL SS S S CLLLLLL TL LTT uTTL SCGGL TT S CCLSCLLSSS LLLLS SLLLLLCLLLLLLL HLLS SLLL Har las legir". That was in 1956,
Two or three years back, unknown friends wanted a lif YS LLLT kLuHHHH S LLLL LSLLHLGTLLT S LLCCCCS S SLLTCLLLB HH GLG LCCLLCCCCCL GGTTLTS SSLLLTTT LLLLLLLH LLLLSLS S CCLLL LLL LLLLL LGLLLLLLLS SL LCCS LHHLSLLHCHCCCLLLLS SSSYLr S S LLLL S LL S LLLLS SLLLL S S LLLL S S LLGLCHTSCTuCTC Y LLGLLL SLS LS S S LLLEYLGLGLLLTS LCLLSL LLEELLLLL S KCLLLLLCTLGGTLLL SSS S LHHLHS LLGL CLTLTYS CHLGL S S S TTLLGLGLLS
I reed Say na Priore, or the occasior of the F. P. Silver free,
செ. சுந்தரலிங்கம்
2 -Si
W5-2.7f

உன்னத்தான் அழைக்கின்றேன் !
உடன் பிறப்பே
உனக்கு முதற்கண் எனது அன்பு வணக்கத்தைச் செலுத்துகின்றேன். உனக்காகவும், எனக்காகவும், எம்மைப்போல் இந்நாட்டில் வாழும் முப்பத்தைந்து லட்சம் எமது உடன் பிறப்புக்களுக்காகவும் உண்மை யோடு-உணர்ச்சியோடு-உற்சாகத்தோடு-விசுவாசத் தோடு உழைத்துவரும் ஒர் உண்மை ஊழியன், எமது உயிரினுமினியவன் உயர்திரு. நாவலர் அ. அமிர்த விங்கம் தான் என்பதை நான் கூருமலே உனக்கு விளங்குமல்லவா?
அந்தி நல்லவனேப்பற்றி, அவன் வாழ்ந்த வாழ்வைப் பற்றி நான் நூல் வடிவாக எழுதி நாடறியச் செய்ய வேண்டுமென்ற தனியாத ஆசை என்னுள் பல நாட்க ளாகவே எழுந்து-இருந்து வந்துள்ளது என்ற இரகசி யத்தை இன்று நான் உனக்கு வெளியிடுகிறேன். நான் எழுத வேண்டும் எழுத வேண்டும் நாடும் ஏடும் போற்ற வேண்டிய நல்ல எழுத்தாளனுக வேண்டும் என்பதனுல் நிச்சயமாக அல்ல நமக்காக, நமது மொழிக்காக, நமது நாட்டுக்காக நாளும் பொழுதும் உழைத்துவரும் அந்த நன்றியுள்ள நாவலனே நானும் நீயும் அறிந்தாற் போதாது நாடே அறிய வேண்டு மென்பதற்காக எழுத வேண்டும் எழுதியே தீர வேண்டும் என்று நினைத்தேன். எழுத முற்பட்டேன்; எழுதி விட்டேன்.
எனது இந்த எழுத்திலே எமது தலைவன் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வை எழுதுகின்ற நேரத்தில், அந்த வாழ்வின் வழிகாட்டியான தமிழரசுக் கட்சியின் வீர வரலாற்றையும் என்னையறியாமலே எழுதவேண்டி ஏற்பட்டு விட்டது. அப்படி ஏற்பட்ட மைக்குக் காரணம் திரு. அமிர்தலிங்கத்தின் வாழ்வே அந்தத் தமிழரசு இயக்கத்தோடு பின்னிப் பிணேந்து

Page 9
xi.
கிடப்பதுதான். இதனுல் ஒரு நன்மையும் கிடைத்து விட்டது. ஆம், தமிழரசுக்கட்சி என்ருல் என்ன ? அது எப்படி வந்தது? எதற்காக வந்தது ? அதனுல் என்ன பயன்? அவ்வியக்கம் ஆற்றிய பணி என்ன ? என்பதற் கான விளக்கமும், அது தோன்றிய விபரமும், அதன் வீர வரலாறும் வளர்ந்துவரும் இளந் தலேமுறைக்குப் பெரும்பாலும் தெரியாததால் அவர்கள் தெரிந்து, தெளிந்து கொள்வதற்கு இது வழிகாட்டியாக அமைந்து விட்டது. அந்த வகையில் நீயும், நானும், எம்மைப் போற் பலரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
நான் மேற்கொண்ட இப்பணியைப் பாராட்டி ஆதரவளிக்க முன்வந்தது- மக்கள் மனதில் அறிவை, ஆற்றலே வளர்ப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தோற்றப்பட்ட அறிவாலயம் நிறுவனம்.
நான் எழுதிய “ தமிழ் அமிர்தம்' என்ற இந்த நூலிஃனத் தனது கன்னி வெளியீடாக வெளியிடவும் விரும்பியது அறிவாலயம், அதைப்போலவே அடியே னும் விரும்பினேன். இருதரப்பினரதும் விருப்பமும் ஒன்ருக அமையவே, இதோ உனது சுரங்களிற் தவழும் இத் தமிழ் அமிர்தம்' அதன் வெளியீடாக மலர்ந்து விட்டது. இன்று நான் அந்த அறிவாலயத்தின் ஓர் இயங்கும் உறுப்பின்னுகவும் ஆகிவிட்டேன்.
* தமிழ் அமிர்தம் ' உருவாகுதற்குத் தூண்டுகோ லாக இருந்த யாவர்க்கும் நன்றிக்கடனேச் செலுத்தும் பொறுப்பை அறிவாலயம் ஏனுே எனக்களித்துவிட்டது.
அதனுல், அவ்வாலயத்தின் வேண்டுகோளுக் கிணங்க, தமிழ் அமிர்தம் உருவாகுதற்குத் தமது உழைப்பையும், பொருளையும், அறிவுரை-ஆலோசனை களேயும், ஆசிகளேயும் அள்ளி அள்ளி வழங்கிய அன் புள்ளங்கள் அனேவர்க்கும் அறிவாலயத்தின் சார்பில் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.

真冒
இன்னும், இதனை அழகாக உருவாக்கிய சுன்னுகம் திருமகள் அழுத்தகத்து அதிபர், ஊழியர்கள் அனைவ ருக்கும் அன்பு கனிந்த நன்றியை அறிவாலயம் சார் பாகத் தெரிவிப்போம். அத்துடன் இதன் முகப்பை அழகாகத் தீட்டி அலங்கரித்த ஒவியர் திரு. மணியம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்போம்.
மேலும் தமிழ் அமிர்தத்தைத் தமிழர்கள் சுவைக்க எனத் தனது பெயரில் அதனே வெளியிட அனுமதித்த தோடு, அப்படியே அதனைச் செய்த "தமிழர் காவலர்' உயர்திரு. வி. தர்மலிங்கம் அவர்களுக்கும்; சம்பிர தாயபூர்வமாக விழாவின்போது இந்நூலினை வெளி யிட்ட பெரியாருக்கும் அறிவாலயம் சார்பாக நன்றி யைத் தெரிவிப்போம்.
இறுதியாக, தமிழ் அமிர்தம் முழுவதையும் உனக்கு ஒரேயடியாகச் சுவைக்கத் தரச் சூழ்நிலை சரிவராத தாலும், ஒரேயடியாகச் சுவைப்பதில் சுவையின் மகத் துவம் தெரியாது உடன் மறைந்துவிடும் என்பதாலும் இப்பொழுது அறிவாலயத்தின் அன்புப் பரிசாக அமிர் தத்தின் ஒரு பகுதியை உனக்குத் தந்துள்ளேன். மீதிப் பகுதி உனக்காக - உன்னைப்போல் பலருக்காகஇப்பவே தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது; அச்சில் இருக்கிறது. அது உன் கரங்கட்கு வரும்வரை அமைதி யாக இரு ஆவல் கொள்ளாதே!
இனி, இதோ தமிழின் அமிர்தத்தைச் சுவைத்துப் பார் 1 மீதியைச் சுவைக்க ஆவல் கொள்வாய்! என்பது எனக்குத் தெரியும்,
அறிவாலயம் உன் ஆவலே அறிந்து விரைவில் ஆவன செய்யும்.
நன்றி
அன்புள்ள, I-I-7 தமிழ் மகன்

Page 10
18
EI.
墨岛。
墨雷。
墨星。
出岳。
盟齿。
F.
,
.
உள்ளிடு
ஆற்றல் அரசு பண்ணுகம் தந்த பண்புடை அண்றை அப்பாவின் பிள்ளே பல்கலைக்கழகத்திற் பைந்தமிழ்த் தொண்டு - தந்தையைச் சந்தித்தார் இந்தி அரக்கி எதிர்ப்பும் இளைஞர் அமிரும் பட்டம் பெற்ருர் சட்டம் படித்தார்!
பக்கம்
தனிப்பெருந் தவேவருடன் வாதிட்ட தமிழ் இளவல் 8
மாவிட்டபுரத்தில் மறத் தமிழர் கூட்டம் கற்களே வென்றன சொற்கள் காங்கிரஸ் பிளந்தது கட்சி பிறந்தது
தியாகிகளின் திருக்கூட்டம் - - - தந்தை சொல் மிக்க மந்திரமில்வே சிங்கத்துக்கு எதிராகச் சங்கநாதம் மரணம் கொடுத்த மனக்கலக்கம் முன்னணியின் முதல் தலேவர் துரினி விவேயும் அரசியல் நிலேயும் வீட்டுக்கு வந்த வீராங்கனே காதலா? கடமையா? ஐம்பத்தாறில் அமோகவெற்றி! - செந்தமிழ் மொழிகாக்கச் சிந்திஞர் @*屿虚f திருமலேயில் எரிமலை இறங்கிவந்தார் இலங்கைப் பிரதமர்
குறுநில மன்னரா? சோழர் வழித்தோன்றலா?
பண்பு குலேந்தது; பதவி நிவேத்தது
சிறியை அழித்தார் : சிறையை அஃணத்தார் வவுனியா மகாநாடும் வகுப்புக் கலவரமும் கடலேக் கடந்த கடமையாளன் அநீதி கண்டார் ஆவேசங் கொண்டார்
正当
直置。
I
墨上
晶母
書盟
壘冒
岳品
岳置
齿齿

ஆற்றல் அரசு !
அஞ்சா நெஞ்சன் - அறப்போர் வீரன் ! ஆண்மையின் உருவம் - ஆற்றல் அரசு | இளைஞர்களின் இலட்சியத் திருவுரு - இன, மொழிக் எழில்தமிழ் ஏந்தல் - எழுச்சித் தலைவன் (காவலன் உண்மைத் தொண்டன் - ஊருக்கு நல்லவன் 1 உறுதியின் உறைவிடம் - ஊக்கத்தின் பிறப்பிடம் | எண்ணத் துயர்ந்தோன் - எளிமையின் சின்னம் ! ஏற்றம் மிக்கவன் - ஏறு போன்றவன் 1
என்றே - இந்நாட்டுத் தமிழரும் - எந்நாட்டுத் தமிழரும் இன ஒழிப்பையும் - மொழித் திணிப்பையும்
எதிர்த்தே - அகிலமெங்கணும்போராடும் அத்தனை பேரும் ஏற்றிப் போற்றுகின்ற எம்மவன் 1தமிழ்ப்படைத் தளபதி - தமிரசுக்கட்சித் தலைவர் தமிழர் கூட்டணிச் செயலாளர் நாயகம் 1 - தமிழ் ஈழத்து நாவலர்!

Page 11
نص = 2 -
திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களே நினைத்துப் பார்க் கின்றேன். நாற்பத்தொன்பதாம் ஆண்டிற் பிறந்த ஒரு கட்சியின் தலைவர், தன் நாற்பத்தெட்டாம் ஆண் டிலே மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், உயர்ந்த பணி வுடன், நிறைந்த அடக்கத்துடன், தெளிந்த பார்வை யுடன், கனிந்த உறுதியுடன் மெல்ல அடியெடுத்து, ஆணுல் மிடுக்காக நடக்கின்ற அந்தக் காட்சியை - அழகுத் திருக்கோலத்தைக் காண்கின்றேன்.
நடக்க இருக்கும் பாதையை அவர் நோக்குகின்ருர், அவர் நடந்துவந்த பாதையை நான் பார்க்கின்றேன்.
அவர் பட்ட கல்லடியையும் பொல்லடியையும் நின்ேக்க என் கண்கள் குளமாகின்றன; அவருக்கு எதிராகச் செய்யப்பட்ட துரோகங்களையும் வஞ்சனே களையும் சூழ்ச்சிகளையும் நினைக்க என் நெஞ்சு குமுறு கின்றது; அவர் இழந்த சுகங்களேயும் அடைந்த சோகங்களேயும் நினைக்க என் இதயம் துடிக்கின்றது.
ஆணுல், அவரோ இந்தத் துன்பங்களைக் கண்டு துவளாமல், சூழ்ச்சிகளையும் எதிர்ப்புக்களையும் கண்டு துடைநடுங்காமல், என்ன இடுக்கண் நேரினும் அவற்றை என் பொறுமையாலும் உறுதியாலும் பொடிப்பொடி யாக்குவேன் என்று சொல்வதைப் போல், அமைதியுடன், அடக்கத்துடன், எதிர்காலத் தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கருமமே கண்ணுக, கடமையே மூச்சாகக் காட்சி தருகின்ருர்,
இந்தப் பொறுமை - இந்தச் சகிப்புத்தன்மை - இந்த உறுதி - இந்த நம்பிக்கை - அவரிடம் எப்படி வந்தது?
நான் சிந்தித்துப் பார்க்கின்றேன்
அவருடைய வாழ்க்கை என் கண்முன்னுல் விரி கின்றது; விரிந்து நறுமணம் பரப்புகின்றது !

- 3 -
பண்ணுகம் தந்த பண்புடை அண்ணு!
பண்ணுகம் என்ருல் என்ன? அது எங்கே உள்? எனக் கேட்டால், பதில் கூற முடியாமல் பரக்க விழிக்கும் பலர் வாழ்ந்த காலம் ஒன்றிருந்தது. அது யாழ்ப்பாணத்து வளிகாமம் மேற்கைச் சேர்ந்த ஒரு சிற்றுார் என்பதோ, சங்கானேக்கும் சுழிபுரத்துக்கும் இடையில் இருக்கின்றதென்பதோ பலருக்குத் தெரியாமலிருந்தகாலம் ஒன்றிருந்தது. ஆனுங் இன்ருே பண்ணுகம் பண்புடைய ஈழத்தமிழரின் கண்ணுக ஆகிவிட்டது! ஏனெனில், அதுதான் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் பிறந்த மண்ணுகும். அவர் தவழ்ந்து விளேயாடிய மண், பண்ணுகத்து மண் அவ ருடைய மழலை ஒலித்த மண், பண்ணுகத்து மண் புகழின் சிகரத் திற்கு அத்திவாரமான அறிவின் அகரத்தை அவருக்குப் போதித் தது பண்ணுகத்து மண்ணிலுள்ள மெய்கண்டான் பாடசாலேபண்ணும் பண்பும் நிறைந்தோர் வாழும் பண்ணுகம், இந்தப் பண்புடைய அண்ணுவைப் பாருக்களித்த பெருமையுடன் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது.
அப்பாவின் பிள்ளே!
1927ஆம் ஆண்டு ஆம், அதுதான் அவர் பிறந்த ஆண்டு அதே ஆண்டு ஆவணித் திங்கள் இருபத்தாரும் நாள் அவர் பிறந்தார். அவரைத் தம் குழந்தையாகப் பெறும் பேறு பெற்ற வர்கள் அப்பாப்பிள்ளே-வள்ளியம்மை தம்பதியர்
மானிக்கத்தமிழ் மண்க்கும் மலாயாவிலே புகைவண்டி நிகயைப் பொறுப்பதிகாரியாக (Station Master) இருந்து கடும் பணியாற்றியவர் திரு. அப்பாப்பிள்ளே அவர்கள். தமது தாயக Lmir Th இராவணன் ஆண்ட இலங்கை திரும்பியதும் தானுண்டு தன் ஒய்வுச் சம்பளமுண்டு என ஒதுங்கி இருந்துவிடவில்லே அவர் உத்லாச வாழ்க்கையை உவந்து ஒதுக்கிஞர் அவர் பொதுப் பr என்ற புனிதப் பணியுடன் தன்னைப் பிணேத்துக் கொண் டார். சங்காஐக் கிராமசபையின் உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டார்; பண்ணுகம் மெய்கண்டான் பாடசாலைப் பரி பாலன சபையில் அவர் உறுப்பினரானுர் கூட்டுறவில் நாட்ட முற்று நாட்டுயர்விற்காக நன்கு உழைத்தார் பொதுநலத் தொண்டர் அப்பாப்பிள்ளையின் அருந்தவப் புதல்வர் அமிர்த விங்கம், அப்பாவின் பிள்ளேயாக, அயலவர்க்கும் அடுத்தவர்க் கும் அன்ன்ேமொழி பேசுவோர்க்குமாக அல்லும் பகலும் அநவரத மும் அயராதுழைப்பதில் விந்தையேது ? வியப்பேது?

Page 12
- 4 -
பல்கலைக்கழகத்திற் பைந்தமிழ்த் தொண்டு!
ஆரம்பக் கல்வியை மெய்கண்டான் பாடசாலேயில் முடித்துக் கொண்டு, 1936ஆம் ஆண்டில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி யிற் சேர்ந்தார். விவேகத்துடன் கல்வி பயின்றதன் விளேவாக அங்கிருந்து 1945 ஆம் ஆண்டிலே பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையிற் சித்தியடைந்து பல்கலைக்கழக மாணவனுஞர்.
பல்கலைக்கழகத் தமிழ்ப் பீடத்தை அணிசெய்தவர் " யாழ் நூல்' தந்த விபுலானந்தர், ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சித் திறனும் நிறைந்த அருட்டிரு விபுலானந்த அடிகளின் அடக்க மான் தமிழ்ப் பணியும் விளக்கமான தமிழ்ப் போதனையும் அமிர்தலிங்கத்தைக் காந்தம்போற் கவர்ந்தன. ஆராக் காத லுடன் தமிழைப் பயின்ருர் முத்தமிழ் வித்தகரின் முத்தனைய மானவஞஞர்.
தமிழின் ஏற்றத்திற்குத் தன்னுலான பணிகளேச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த அமிர்தலிங்கத்தைத் தமது அமைச்சராகத் தெரிவு செய்தனர் பல்கலேக் கழகத் தமிழ்ச் சங்கத்தினர். 1948ஆம் ஆண்டில் அமைச்சராக விருத்த அமிர்த விங்கம் அடுத்த ஆண்டில் அதன் முதல்வராகத் தெரிவு செய்யப் பட்டார். அவரிடமிருந்த மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப் பற்று எல்லாம் முற்றி, "வேங்கடத்தை வடக்கெல்லேயாகவும், அநுராதபுரத்தையும் மட்டக்களப்பையும் தெற்கெல்ஃவயாகவும் கொண்ட சுதந்திரத் தவித்தமிழ்நாடு நிறுவப்பட வேண்டும்; சேதுவை மேடுறுத்தி விதி சமைக்க வேண்டும் என்ற வயோத நெஞ்சப் பாரதி யின் கனவை நனவாக்க வேண்டும்" என்ற தீர்மானமாகக் கனிந்தன.
ஆங்கிலமே பல்சுலேக் கழகப் போதனுமொழியாக இருந்த காலம் அந்தக் காலம் ஆங்கிலத்திலே சிந்தித்துச் சில சந்தர்ப் பங்களில் மட்டும் தமிழிற் பேசிய மொழிப் பற்றற்ற மேல் தட்டுத் தமிழர்களின் பிள்ளேகளே தமிழ் மாணவர்களுட் பெரும் பான்மையினராக விளங்கிய காலம் அந்தக் காலம் அதிகார வர்க்கத்தினருக்கு அடங்கி நடந்து, "ஆமாம் சாமிகளாகி" பட்டத்தைப் பெற்றவுடன் டாக்டர்களாகவும் என்ஜினியர் களாகவும் சிவில் சேவையாளர்களாகவும் கெளரவமான பதவி வகிப்பதைத் தம் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்ட வர்கள் நிறைந்த காலம் அந்தக்காலம்.
அத்தகைய மாணவர்கள் நிறைந்த தமிழ்ச் சங்கத்தில் இத் தகைய ஒரு தீர்மானம் இலகுவிலே நிறைவேறுமா என்ன ?

- 5 -
இழித்தவர் பலர் ஏளனம் செய்தோர் பலர் எமக்கேன் இந்த வம்பு என ஒளித்தவர் பலர் ஆனுல் அமிர்தலிங்கம் தயங்கவில்ஃ தடுமாறவில்லை பயந்து பின்வாங்கவில்லே. ஆணித்தரமான வாதங்களே அவையினர் முன் வைத்தார்.
"ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே பண்பாட்டினேயுடைய மக்கள் வாழும் இடங்களே ஆறு பிரிக்கலாம் : அடர்ந்த காடு பிரிக்கலாம் : அலேகடல் பிரிக்கலாம்: பெருமலே பிரிக்கலாம். ஆணுல் அவர்கள் ஒரே அமைப்பின்கீழ் ஒற்றுமையாக வாழ்வோம் எனத் தீர்மானித்துச் செயற்பட் டால், எந்தச் சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது" என வாதிட்டார். தன் வாதத்துக்கு ஆதாரமாக அகில உலகிலிருந் தும் பல முன்னுதாரணங்களேக் காட்டிஞர் எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு ஏற்ற விளக்கங்கள் கொடுத்தார் ; விதண்டா வாதம் பேசி முரண்டு பிடித்தோரை, இதமாகப் பேசி இசைய வைத்தார், ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவருடைய வாதத்திறமைக்காகவல்ல இதைக் குறிப்பிடு வது, சுட்டிளங்காளேயாக இருந்து கல்வியைக் கற்ற அந்தக் காலத்திலும் தமிழைப்பற்றி, அதன் தரத்தைப்பற்றி, அதன் தனித்தன்மையைப்பற்றி எத்துனே கருத்தாழத்துடன் சிந்தித் திருக்கின்ருர் என்பதைக் காட்டவே இது குறிப்பிடப்படுகிறது.
தந்தையைச் சந்தித்தார் !
உண்மையை உணராதோர் வரலாற்றைப் புரட்டுவதும் ஒன்றும் தெரியாதோர் எதையும் நம்பிவிடுவதும் எக்காலத் திலும் புதுமையன்று தந்தை செல்வாவுக்கு மந்திரிப் பதவி கொடுக்கப்படாததாலேயே அவர் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை உருவாக்கினுர் என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பு உண்மையைச் சொல்ல விரும்பாதோரின் உளறல்,
தமிழ்க் காங்கிரசில் இருந்துகொண்டே அவர் சமஷ்டி அமைப்பை வற்புறுத்திஞர் என்பதைப் பலர் மறந்திருக்கலாம் சிலர் மறைத்திருக்கலாம்; ஆளுல் உண்மையை ஒரேயடியாக ஒளிக்க முடியாதல்லவா?
1947ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தமிழ்ப்பிரதேசங் களிற் பெருவெற்றி ஈட்டியது அகில இலங்கைத் தமிழ்க் காங் கிரஸ் கட்சி. வெற்றி ஈட்டிய அத்தனே பேருக்கும் யாழ்ப்பான முற்றவெளியில் ஒரு வீர வரவேற்பு அளிக்கப்பட்டது:

Page 13
- 6 -
வெற்றிப் போதையிலே வெற்றுமொழிகள் பலவும் பேசப் பட்டன. ஒற்றுமைப்பட்ட தமிழினம் இனி ஒருபோதும் யாருக் கும் குற்றேவல் செய்து வாழமாட்டாது மானமுள்ள தமிழினம் இனி ஒருபோதும் மண்டியிட்டு வாழாது மாற்றுக் கட்சியினர் இனி எங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லே என்ற பாணியிற் பலவாரு ய பேச்சுக்கள் வானேப் பிளந்தன. --
காங்கேசன்துறைப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட கண்ணியவான் திரு. செல்வநாயகம் பேச எழுந்தார் என்றும் மாரு அடக்கத்துடன், என்றும் குலேயா உறுதியுடன் என்றும் கலங்கா அமைதியுடன் தன் கருத்தைச் செப்பிட நாவசைத்தார்.
அவர் சொன்ஞர் :
"இரண்டு இனங்களும் தொடர்ந்து நண்பர்களாக இலங்கையில் வாழவேண்டுமானுல், ஒற்றையாட்சிக்குப் பதிலாகச் சமஷ்டி ஆட்சி ஏற்பட வேண்டும்; சமஷ்டியின் ஓர் அங்கமாகத் தமிழ் மக்களுக்குத் தமிழரசு இருக்கவேண்டும்."
சாதாரன ஒரு பார்வையாளஞக ஆயிரக்கணக்கான் மக்க ளுள் ஒர் அநாமதேயமாக நின்ற அமிர்தலிங்கத்தின் கருத்தைத் தந்தை செவ்வாவின் சுருக்கமான பேச்சுக் கவர்ந்தது ; அதன் ஆழம் அவருக்குத் தெரிந்தது ; அதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது.
அன்றே, அங்கே, அப்போதே அவர் மானசீகமாகச் செல்வா வின் சீடரானுர் தமிழ் அரசின் தொண்டராஞர்
சுட்டம் முடிந்தபின் தனிமையில் தந்தையைச் சந்தித்தார்: பல்கலேக்கழகத் தமிழ்ச் சங்கத்துக்கு வந்து தமிழரசைப் பற்றி விளக்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டார். தந்தை தலே பசைத்ததும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லே.
ஒப்புக்கொண்டபடி தந்தை செல்வா தன் கொள்கையை விளக்கிப் பேசிஞர் அதே அடக்கம் அதே அமைதி அதே ஆழம் கலாட்டாவுக்குப் பெயர்போன பல்கலைக்கழக மான வர்கள் அன்ேவரும் அவருடைய சொற்பொழிவாற் கவரப்பட் டனர் கட்டுப்பட்டனர். கேள்வி கேட்டுக் குழப்ப நிஜனத்தோ ரும் எதையும் கேளாமலே விளக்கம் பெற்றனர்.
பல்கலேக் கழகத்திற் பத்தோடு பதினுென்ருக இயங்கி வந்த தமிழ்ச்சங்கம், ஆக்கபூர்வமாகச் சித்திக்கத் தொடங்கியது

- T -
தமிழைப் பற்றியும் தமிழினத்தைப் பற்றியும் புதிய முறையிலே சித்திக்கத் தொடங்கியது.
அந்தச் சிந்தனைத் திருப்பத்துக்கு அடியெடுத்துக் கொடுத் தது தந்தை செல்வாவின் செந்தமிழ்ப் பேச்சென்ருல் அதற்கு வழி சமைத்துக் கொடுத்தவர் அமிர்தலிங்கம்.
இதற்குப் பின்னர், அவர் தந்தையின் நிழலில் நிறைந்தார் தந்தை அவருடைய நினேவில் நிறைந்தார்.
இந்தி அரக்கி எதிர்ப்பும் இளைஞர் அமிரும்!
தமிழ் மக்கள் இந்தியாவிலும் வாழ்கின்றனர் இலங்கை யிலும் வாழ்கின்றனர். கடலாற் பிரிக்கப்பட்டிருக்கும் அவர்கள் கருத்தாற் பி&ணக்கப்பட்டுள்ளனர். அங்கு நடைபெறும் நிகழ்ச்சி களில் இங்குள்ளோர் ஆர்வம் காட்டுவதும் இங்கு இடம் பெறும் நிகழ்ச்சிகளில் அங்குள்ளோர் அக்கறை எடுப்பதும் தொன்றுதொட்டு வரும் வழக்கம் இன்றும் நாம் காணும் நடை முறை எம்மைப் படைத்த ஆண்டவனுலும் பிரிக்கமுடியாத அன்புப் பிணேப்பு இது.
இந்தியத் தமிழர்மீது இந்தியைத் திணிப்பதற்கு 1987ஆம் ஆண்டிலே முதன் முதலாகத் திட்டம் திட்டப்பட்டது. ஆஎr வந்தார்க்கு ஆலவட்டம் வீசியோர் சிலர் இந்தி அரக்கிக்கு நிலபாவாடை விரித்தனர்.
ஆனூல், தன்மானம் மிக்க தமிழ்ப்பெருங்குடி மக்கள் பொங்கி எழுந்தனர். அன்றே ஆரம்பித்தது-அங்கே மொழிப்புரட்சி. இப் புரட்சிக்கு வித்திட்டனர் வெண்தாடி வேந்தர் ஈ. வே: ராமசாமி நாயக்கர், வனங்காமுடி பாரதிதாசன், பேரறிஞர் சி.என். அண்ணுத்துரை, இன்னும் பலர் இவர்கள் தவேமையில் மக்கள் ஒன்று திரண்டனர்: "இந்தி, தமிழர்தம் வாழ்வின் செந்தி தமிழ்ப் பூங்காட்டைச் சிதைக்க வந்த மந்தி' எனக் சுவிப் போர் தொடுத்தனர்.
அடிக்கடி, ஆளவந்தார் இந்தியைத் திணிப்பதும் அகிலம் ஆண்ட தமிழினத்தார் அதை எதிர்ப்பதுமாகப் போர் நடை பெற்று வந்தது. 1947ஆம் ஆண்டில் இப் போராட்டம் முன் பிருந்ததை விடச் சற்று வலுப்பெற்றது. தமிழகத்து மக்கள் தயங்காது போராடிஞர்கள். அவர்களுக்கு ஊக்கமும் உற்சாக மும் ஊட்டுவதற்குத் தமிழ் ஈழத்து மக்களும் தயாரானர்கள்

Page 14
--
கொழும்பிலுள்ள திராவிடர் கழகம் மிகப் பெரிய அளவில் இந்தி எதிர்ப்பு பகாநாட்டை நடத்தியது. அம் மகாநாட்டிற் கலந்துகொண்டார் அமிர்தலிங்கம் வெறும் பார்வையாளஞக அல்ல, விறல்மிகு பேச்சாளனுக! "ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முந்திய மொழி செந்தமிழ் மொழி: இன்னும் சொல்லப்போனுல் கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே வாளோடு முன்தோன்றிய முத்தனேய மூத்த மொழி; அதுவே எம் சொந்த மொழி : நேற்று வந்த மொழிதான் இந்த இந்தி மொழி; எங்களுக்குச் சொந்த மொழி போதும் வந்தமொழி வேண்டாம். இந்தியை மட்டுமல்ல, வேறு எந்த மொழியைத்தானும் எமது தொண்டைக்குள் திணிக்க யாராவது முயன்றல், முதலிலே கண்டிப்போம் : தொடர்ந்தால் நிச்சயம் தண்டிப்போம்' என வீரமுழக்கமிட்டார் அவர்,
பட்டம் பெற்ருர்; சட்டம் படித்தார்!
தமிழ்ச்சங்கப் பணிகள், இந்தி எதிர்ப்பு: தமிழ்மொழி உரிமை எனப் பல்வேறு முனே களில் தன் சக்தியைச் செலவிட்ட அமிர்தலிங்கம், தன் கல்வி விருத்தியிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனுல்தான், ஒழுங்காகப் படிப்பவர்களேயே சில சமயம் விழுத்தி உழக்கிவிடும் தன்மைவாய்ந்த பல்கலைக்கழகப் பரீட்சைகளால் அவரை ஒன்றுஞ் செய்ய முடியவில்லே. புத்திக் கூர்மையும் சுய ஆற்றலும் விடாமுயற்சியுமுடைய அவர் 1948ஆம் ஆண்டிலே மிகச் சிறப்பானமுறையிலே B, A, பரீட்சை யில் வெற்றிபெற்றுப் பட்டதாரியானுர்,
சிவில் சேவைத்துறை, வில்ேமாதைப்போற் பகட்டொளி வீசி அவரைத் தன்னிடம் இழுக்கப் பார்த்தது. ஆணுல் அவர் தன் பார்வையை வேறு திசையிற் பதித்தார், ஆளவந்தார்க்கு அடங்கி, அடிமை வாழ்வு வாழ அவருடைய விடுதலேயுள்ளம் விரும்பவில்லே. கைகட்டிச் சேவகம் செய்ய விரும்பாத அவர், கை காட்டிச் சேவை செய்யவே விரும்பினுர், ஆகவே அதே ஆண்டிலேயே சட்டக்கல்லூரியின் மாணவனுஞர்.
தனிப்பெருந் தலைவருடன் வாதிட்ட இளவல் :
மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்த மலேயக மக்களின் மாணிக்கத் தமிழ்பேசும் முப்பத்தைந்து இலட்சம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் வெடிப்பினே ஏற்படுத்த வந்தது 1949ஆம் ஆண்டிலே பிரசா உரிமைச் சட்டம். இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள தேயிலேக்கும் இறப்பருக்கும் தம் இரத்தத்தையும் வியர்வையையும் பசளே யாக ஈந்துவரும் இந்நாட்டுத் தோட்டத் தொழிலாளரின்,

- -
டொனமூர் அரசியற்றிட்டத்தின்மூலம் உருவாக்கப்பட்ட சர்வசன வாக்குரிமைக்கு வேட்டுவைத்தது அந்தச் சட்டம் அவர்களே நாடற்றவர்களாகவும் நாதியற்றவர்களாவும் ஆக்கி நடுத்தெருவில் விட்டதும் அந்தச் சட்டந்தான். அந்தக் கேடுகெட்ட சட்டத்தைத் திட்ட வட்டமாக, தீவிரமாக எதிர்த்திட அதனே வெட்டிப் புதைத்திட விரும்பினர் வீரத் தமிழர்கள். இவர்களின் இந்த உணர்ச்சியை நன்கு புரிந்து திருவாளர்கள் செல்வநாயகம், வன்னியசிங்கம், நாக நாதன் போன்ருேர் கட்சியின் மேலிடத்துக்கு நிலமையை எடுத்து விளக்கினர். " இன்று பத்துஇலட்சம் இந்தியத் தமிழருக்கு நடப்பது, நாளே இருபத்தைந்து இலட்சம் இலங்கைத் தமிழருக்கும் நடக்கலாம்" என்ருர் திரு. செல்வநாயகம், ஆணுல், மேலிடமோ, "சட்டத்தை ஆதரிப்பது' என்ற தன் நிலேயிலிருந்து கீழிறங்கிவிட மறுத்துவிட்டது.
இளேஞர்களின் சார்பில் தலைவர் திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களேச் சந்தித்தார் தொண்டர் அமிர்தலிங்கம். உலகப் புகழ் வாய்ந்த ஒரு வழக்கறிஞரின் முன்னுல்-இலங்கைத் தமிழர்களின் தEப்பெருந் தவேராக விளங்கிய திரு. பொன்னம்பலத்தின் முன்னுல் - இளந்தமிழ் இளவலாக நின்ருலும் தன் கருத்தைதமிழ் மக்களின் கருத்தைச் சரியாகவும் தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் எடுத்துச் சொன்னுர்,
யார் என்ன சொன்னுலும், தான் முன்னர் கொண்ட முடி பினத் திரு. பொன்னம்பலம் மாற்றவே மாட்டார் என்பது போகப்போகப் புரிந்தது. அவரை நம் வழிக்கு இழுக்கலாம்: தம் வழிக்குத் திருப்பலாம் என்ற நம்பிக்கை அற்றுவிட்டது. தமிழினத்தின் முடிசூடா மன்னணுக மதிப்புடன் நிகழ்ந்த திரு. பொன்னம்பலம், இன்று மாற்ருருக்குப் பணிந்து விட்டாரே! "தமிழன் என்று சொல்லடா, தலநிமிர்ந்து நில்லடா' என மேடைக்கு மேடை கூவித் தமிழனுக்கு எழுச்சியூட்டிய தஃலவர் சுதந்திர இலங்கையில் சுந்தரத் தமிழ் சுக்கு நூாரு காதிருக்க தங்கத் தமிழர் தரித்திரர்களாகாதிருக்க "ஐம்பதுக்கு ஐம்பது" என்ற தாரக மந்திரத்தை ஆக்கி, சோல்பரி அரசியற் றிட்டத் தைக் கொண்டுவந்த சோல்பரிப் பிரபு குழுவினரோடு ஆணித்தர மாக வாதாடிய தலேவணங்காத் தஃலவர், இன்று தானே தலே வணங்கித் தமிழ்பேசும் மக்களேத் தஃகுணிய வைத்துவிட்டாரே! சிறுபான்மை இன மக்களப் பொறுத்தவரை, "இந்தியாவில் ஒரு ஜின்ஞ, இலங்கையில் ஒரு பொன்ஞ" என்றிருந்த நிலேயைப் பொப் யாக்கி விட்டாரே! என்றெல்லாம் ಸೌಸ್ಟಿತ್ತು வருந்தினுள் அமிர்த விங்கம், 'ரிம்பு :
த - 2
-
"The

Page 15
"உங்களேப் போன்ற பொடிப்பயல்கள் செல்வநாயகத்துடன் சேர்ந்து புதுக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கவேண்டும்" எனத் திரு. பொன்னம்பலம் இதுதியாக - உறுதியாகக் கூறிவிட்டபின், அவருடன் தொடர்ந்தும் பேசுவதிற் பெறும் பவன் ஏதும் இல்லே என்பதைப் புரிந்துகொண்டு, தத்தை செவ்வாவைச். சந்தித்து நடத்ததெல்லாவற்றையும் விபரமாகச் சொன்ஞர்.
பொறுமையுடன் கேட்ட தந்தை புன்சிரிப்பு ஒன்றையே பதிலாக உதிர்த்தார்.
அதன் அர்த்தம் என்ன என்பது அமிர்தலிங்கத்திற்குத் தெரியவில்லே என்பது உண்மைதான். ஆனூல் நம்பிக்கை இழந்து, நாடி தளர்த்து நலிவடைந்த உள்ளத்துடன், தமிழினத்தின் எதிர் காலம் இருங்டுவிட்டதே என்ற ஏக்கத்துடன் இருந்த அமிர்த லிங்கத்துக்குப் பெரியவரின் அந்தப் புன்னகை, காரிருளில் ஒரு மின்னலாக, வழிகாட்டும் வைர ஒளியாக, நாடி நரம் பெல்லாம் நம்பிக்கை ஊற்றைப் பாயச்செய்தது. மாவிட்டபுரத்தில் மறத்தமிழர் கூட்டம்:
அன்று ஆட்சியில் இருந்தது ஐக்கிய தேசியக் கட்சி. அதற்கு முண்டு கொடுத்தது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். காங்கிரஸ் தஃவர் பொன்னம்பலம் முழு மந்திரியாகவும், கனகரத்தினம், குமாரசாமி ஆகியோர் அரை மத்திரிகளாகவும் இருந்தனர். ஆகவே, பொன்னம்பவம் அவர்களின் போக்கை விரும்பா தோர் கூட, அவரைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணி வின்றி எங்கெங்கோ சிதறிக் கிடந்தனர்.
இந்த நிலையிலேதான், 1949ஆம் ஆண்டு வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரத்திலே-மாவைக் கந்தன் ஆலயத்து வீதியிலே ஒரு சுட்டத்தைக் கூட்டினுர் தந்தை செல்வநாயகம். கூட்டத் தில், அன்றைய யாழ்ப்பான மேயர் திரு. சாம் சபாபதி, வழக் அறிஞர் எஸ். சிவகுருநாதர் கொன்ருக்றர் திரு. நடராசா முதலியோரும் பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டனர். கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம், இரும்பு மனிதன் நாகநாதன், சிங்கக் குரலோன் நடராசா போன்ற தலைவர்கள் தமிழ்க் காங்கிரசின் தவருண போக்கைக் கண்டித்துக் காரசார மாசுப் பேசினர். இத்தப் பெரியவர்களின் பேச்சுக்கள் முடிந்த பின் அமைதியாக எழுந்தார் தந்தையின் விசேட அழைப்பின் பேரில் வந்த ஓர் இளேஞர்.
அன்று அவர் பேசவில்லே புயல்ாகச் சிறிஞர் குருவளி பாகச் சுழன்றடித்தார் எரிமவேயாக வெடித்தார் அழகு தமிழில், அடுக்கு மொழியில், ஆவேச நடையில் ஆற்ருெழுக் காகப் பேசிஞர்.
ஆம் விடுதலே விரும்பிகளின் விர மறவனே-தமிழர் பாசறை யின் தானேத் தளபதியை - அன்னே தமிழை அரியனேயில்

- 11 -
அமர்த்தவந்த அமிர்தலிங்கத்தை அன்றுதான் தமிழ் மக்கள் அடையாளங் கண்டனர். அன் று மு த ல் அவர் முன்னணிப் பேச்சாளராஞர் இளேஞர்களின் இதயநாதமானுர்,
கற்களே வென்றன சொற்கள்!
இக் கூட்டத்தைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங் களின் மூலே முடுக்கெல்லாம் கூட்டங்கள் நடைபெற்றன. ஆரம் பத்தில், கூட்டங்களிற் குழுமியிருந்தோரைவிட மேடையை நோக்கி வீசப்பட்ட கற்களும், வெற்றுப்போத்தல் ஓடுகளும், கூழ்முட்டைகளும் ஏராளம். ஏராளம், ஆம், தமிழ்க் காங்கிர சுக்கு எதிராக யாரும் எதுவும் பேசவோ, செய்யவோ கூடாது என எண்ணியோரின் கையாட்கள் சிலர் கூட்டம் குழப்புவதைத் தம் முழுநேர வேலேயாகக் கொண்டு செயற்பட்டுக்கொண் டிருந்தனர். அவர்கள் வீசிய பெரும் கற்களே அமிர்தலிங்கத்தின் வெறும் சொற்கள் பொடிப்பொடியாக்கின. என்ருலும் அவர்கள் தம் கீழ்த்தரமான செயல்களேத் தொடர்ந்தும் செய்து வந்தனர்.
அவர்களது அட்டகாசமான காண்டத்தனத்தின் உச்சக் கட்டம் 1949ஆம் ஆண்டு செப்டம்பரில் நல்லூர்க் சுைவாச பிள்ளே யார் கோவில் வீதியில் இடம்பெற்றது. "செந்தமிழர் சிங்களர்க்கு அடிமையல்லர் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வோம். ஆளுல் சேவித்து வாழோம் கூடி வாழ்வோம். ஆணுல் யாருக்கும் குற்றவேல் செய்யோம் அடக்கி வாழோம் அடங்கியும் வாழோம்"; கன்னித் தமிழ்க் காவலன் கலேஞர் மு. கருணுநிதி கூறியவாறு, ' உறவுக்குக் கைகொடுப்போம், ஆணுல் உரிமைக்குக் குரல் கொடுப் போம்' என்ற உறுதியுடன், பறங்கியரை எதிர்த்துப் பார் வியக்கப் போராடிய யாழ்ப்பானத்துக் கடைசித் தமிழரசன் சங்கிலியன் கோட்டைகட்டி வாழ்ந்த சரித்திரப் பிரசித்திபெற்ற சங்கிலித்தோப்பிலிருந்து தன்மானத் தமிழர் படை ஒன்று தம் கரங்களிற் தமிழ் மன்னன் சங்கிலியனின் சுதந்திரத் தமிழ்க் கொடியாம் நந்திக்கொடி ஏந்தி, ஊர்வலமாகக் கைலாசபிள்ளே பார் கோவிலே நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஈழத்துக் காந்தி செல்வநாயகம், தியாக மாமலே வன்னியசிங்கம், இரும்பு மனிதன் நாகநாதன், சிங்கக் குரலோன் நடராசா, ஏ. கே; இராமலிங்கம், வி. மானிக்கவாசகர், எம். ஏ. போன்ற பெருந் தலைவர்கள் முன்னணியிற் சென்றனர். இளேஞர் கூட்டத்தின் இலட்சியத் தாரகையான அமிர்தலிங்கம் அதிற் சிறப்பிடம் பெற்ருர் ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் சென்ற அந்தத் தன்மானத் தமிழர் படையைக் கண்ட, நாங்கிரஸ் கட்சியினர் பொருமை உணர்ச்சியாற் பொங்கி எழுந்தனர். சுட்ட மேடை யைச் சுற்றிவஃாத்தனர். தலைவர்களே மேடை ஏறவிடாது தடுத் தனர். அமிர்தலிங்கமும் இளேஞர்களும் அஞ்சாமல் அவர்களே எதிர்த்துப் போராடித் தஃலவர்களே மேடை ஏற வழி செய்தனர். தலைவர்கள் மேடைஏறியதுதான் தாமதம், கற்கள், செருப்புகள்,

Page 16
- 12 -
போத்தங்ஓடுகள், கூழ் முட்டைகள் சரமாரியாக மேடையை நோக்கி வீசப்பட்டன. ஒலிபெருக்கிக் கருவிகள் அடித்து தொருக் சுப்பட்டன. மின் விளக்குகள் அனேக்கப்பட்டன. அருகே வைத்து மரணப் பறைமேளம் அடிக்கப்பட்டன. பலர் படுகாயம் அடைந் தனர். இதிலே, சிங்கக்குரலோன் நடராசா நாசகாரர்களால் நன்கு நையப்புண்டக்கப்பட்டு, ஆடைகள் கிழித்துக் கஃாயப்பட்டு நிர்வானக் கோலமாக்கப்பட்டார். செல்வா வின் அமைதி நீ விழும் முகத்தைக் கூழ்முட்டைகள் முத்தமிட்டன. கற்கள். கண்ணுடித் துண்டுகள் தாக்கி இரத்தம் வடிந்தபோதும் இரும்பு மனிதன் நாகநாதன் இரும்பாகவே நின்று மேடையேற வந்த மோ சக்காரர்களே எதிர்த்து மோதிஞர் வண்டமிழ்ச்சிங்கம் வன்னியசிங்கத்தின் நெற்றியோ, வஞ்சகர்கள் வீசிய கற்கள் பதம் பார்த்ததால் குருதியைக் கொப்பளித்தது. அஞ்சா நெஞ்சன் அமிர்தலிங்கமோ அஞ்சாத சிங்கங்களாம் வீர இளஞர்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களே அடித்து விரட்டுவதில் ஆவேச மாகப் போராடிஞர். மக்கள் பதறினர் பதட்டநில உரு வானது, இந்நிவேயில் அமைதியை நிநோட்டும் கடமையினுல் உந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, தொடர்ந்து சுட்டம் நடத்தி விடாது எம்மவர்களுக்குத் தடையுத்தரவு போட்டார். ஆயினும் முன்வைத்த காலப் பின் வைக்காமல் அருகிவிருந்த வி. முத்துக் குமாரு, M. A. வீட்டின் முன் கூட்டம் நட்த்தினர் தன்மானத் தமிழர் படையினர்.
இச்சம்பவத்தின்போது சதிகாரர்களால் வீசப்பட்ட கற்க ளுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் தலைவர்களும், தொண்டர் களும், தன்மானத் தமிழ்ப் பொதுமக்களும் அன்றுபட்ட பாட்டைக் கதைகதையாகச் சொல்லியிருக்கும்.
கயவர்களாற் கட்டவிழ்த்து விடப்பட்ட காலிகளின் காடைத்தனத்தைக் கண்டு கன்னித்தமிழர் கலங்கிவிடவில்லே. "எதிர்ப்பை எருவாக்கி என்றுமே வளர்வோம்" என உறுதி பெற்றனர். சற்றுச் சோர்வடைந்து பின்வாங்கிய சிலரும் அமிர்த லிங்கத்தின் உற்சாக வார்த்திைகளால் ஊக்கம் பெற்றனர்.
காங்கிரஸ் பிளந்தது; கட்சி பிறந்தது
பட்டி தொட்டியெங்கும் காங்கிர வின் போக்கைக் கண்டித் துக் கூட்டங்கள் நடைபெற்றன. பண்டிதர்க்கும் பாமரர்க்கும் விடயங்கள் தெளிவாக விளக்கப்பட்டன. ஆணுல், காங்கிரளின் த8லமைப் பீடமோ, தன் போக்கை மாற்றத் தயாராக இருக்க வில்லே. காங்கிரசைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி எதுவும் செல்வநாயகம் குழுவினர்க்குத் தெரியவில்லை. "காங் ரெசைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கவேண்டாம் புதிய தட்சி ஒன்றைக் கட்டியெழுப்புங்கள் " எனப் பொதுமக்கள்

பலரும் அவர்களே வற்புறுத்தினர். மக்களின் கருத்திற்கும் விருப்பத்திற்குமினங்க, எப்படிப் பெரியாரின் போக்கைக் கண்டித்து வெளியேறி முகில் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதி போலத் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தமிழகத்திலே அறிஞர் அண்ணு குழுவினர் 1949 ஆம் ஆண்டு தோற்றுவித்த னரோ - அதேபோல, பொன்னம்புவத்தின் போக்கைக் கண்டித்து வெளியேறி ஈழத்திலே அகிம்சாமூர்த்தி செல்வா குழுவினர் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆந் திகதி மருதானேயிலுள்ள அரசாங்க விகிதர் சங்கப் பணிமனேயில் இலங்கைத் தமிழரசுக்கட்சியைத் தோற்றுவித்தனர். தலவராகத் திரு. செல்வநாயகமும் பொதுச்செயலாளராகத் திரு. வன்னிய சிங்கமும் தெரிவுசெய்யப்பட்டனர். இருபத்திரண்டே வயது நிரம்பிய இளேஞன் அமிர்தலிங்கம் மத்திய செயற்குழுவில் முக்கிய இடம்பெற்ருர்
臀 தியாகிகளின் திருக்கூட்டம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி நியாசிகளின் திருக்கூட்டம் என்பது முற்றிலும் உண்மை, தன்மானத் தமிழர்களின் தஞ்ச மாக - விர மறவர்களின் பாரிய கோட்டையாக - உண்மைத் தொண்டர்களின் உறைவிடமாக அது விளங்குகின்றது. புக நீட்டுவதற்கும் பொருளிட்டுவதற்கும் உண்டு களித்து உல்லாச மாக வாழ்வதற்கும் எத்தனேயோ வசதிகளும் வாய்ப்புக்களு மிருந்தும் அவற்றைத் துச்சமெனக் கருதி ஒதுக்கியவர்கள் அக்கட்சி யினர். புனிதமான தம் இலட்சியங்களே வென்றெடுக்கும் முயற்சி களில் அவர்கள் இதயபூர்வமாகத் தம் நேரத்தை தம் சக்தியை, தம் பணத்தைத் தியாகம் செய்தவர்கள் செய்துவருபவர்கள் உரிமையை வென்றெடுக்கும் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதெல்லாம் பொலீசாரின் குண்டாந்தடிகளுக்கும் துப்பாக்கி களுக்கும் கண்ணீர்ப்புகைகளுக்கும் இலக்கானவர்கள் அவர்கள். உண்ணுவிரதத்தை உவந்து மேற்கொண்டவர்கள் தடுப்புக் காவலேத் தயங்காது ஏற்றுக்கொண்டவர்கள் சிறை வாழ்வைச் சிசிப்புடன் வரவேற்றவர்கள் கொளுத்தும் வெயிலிலும் பார்ப்போர் வியக்கப் பாதயாத்திரை சென்றவர்கள்
இத்தகைய தியாகிகளே இலங்கையிலுள்ள வேறு எந்த ஓர் அரசியற் கட்சியிலும் காண்பது அரிதினும் அரிது.
கட்சியிடம் பனப்பலம் இல்லே பிரசாரபலம் இல்லே. நாட்டின் ஆட்சிப்பிடத்தைக் கைப்பற்றும் கட்சியின்ர், தமிழரசுக் கட்சியைத் திட்டுவதையும் எதிர்ப்பதையும் தங்களது முக்கிய மான வேலே எனக் கருதிச் செயற்பட்டு வந்துள்ளனர் வரு கின்றனர்

Page 17
- 14 ܒܢܝ
இருந்தும், தமிழரசுக்கட்சி தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த செ'ல் வாக்கு ப் பெற்றிருக்கிறதென்ருல் - 1956ஆம் ஆண்டு , தொடக்கம் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களேயே மீண்டும் மீண்டும் மிகப் பெரும்பான்மையாகத் தெரிவு செய்து வருகின் ரூர்கள் என்ருல்-அதற்கெல்லாம் காரணம் தமிழரசுத் தலே வர்களின் தியாக உள்ளத்தைத் தமிழ்ப்பெருமக்கள் பூரணமாக உணர்ந்துள்ளமையே!
தமிழரசுக் கட்சியின் தியாக வரலாற்றில் அமிர்தலிங்கத் நிற்குத் தனியிடம் உண்டு சிறப்பிடம் உண்டு. இதன் உண் மையை அடுத்துவரும் பந்திகளிற் காணலாம்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லே
1951ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நியாயவாதி இறுதிப் பரீட்சையில் முதலாம் பிரிவிற் சித்தியடைந்தார் அமிர்தலிங்கம் அடுத்த ஆண்டு சித்திரை மாதத்தில் கொழும்பு உயர்நீதி மன்றத்தில் நியாயவாதியாகச் சத்தியப்பிரமாணம் செய்து @品厅富上r斤。
ாடுத்த எடுப்பிலேயே கெட்டித்தனத்தைக் காட்டாவிட் டாங் சட்டத்துறை ஒருவனேக் குட்டிச்சுவராக்கிவிடும். குறுகிய காலத்திற் பெரும் புகழ் ஈட்டினுற்ருன், இந்தத் துறையிலே நீடித்து நிலைக்க முடியும். இந்த உண்மைகளே அமிர்தலிங்கம் அறியாமவில்லே,
எந்த வழக்கை எடுத்துக்கொண்டாலும் அதில் தன் சக்தி முழுவதையும் செலவிட்டு வெற்றி ஈட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை அமிர்தலிங்கத்திடமிருந்தது; கட்சிக்காரருக்குத் துரோகஞ் செய்யாமல் நேர்மையுடன் நடக்க வேண்டும் என்ற தளரா உறுதி அவரிட்மிருந்தது. அவருடைய ஆற்றலேயும் திறமையையும் அசைக்க முடியா உறுதியையும் நம்பித் தம் விதியையே அவர் கையில் ஒப்படைக்க முன்வந்தனர் ஏராளமான வழக்காளிகள்.
ஆஞல், அமிர்தலிங்கமோ, தனிப்பட்ட சிலரின் விதியை பல்ல, தமிழ்ப்பேசும் சமுதாயம் முழுவதினதும் விதியைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவராஞர்.
ஆம், நியாயவாதியாக அவர் சத்தியப்பிரமானம் எடுத்த அதே நேரத்திலேயே, பாராளுமன்றம் கலேக்கப்பட்ட து வட்டுக்கோட்டைத் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு தந்தை செல்வா பணித்தார்

- 5 -
அமிர்தலிங்கத்திடம் பனப்பலம் இல்லே பிரபல நியாயவாதி என்ற புகழ் இல்லே. "இல்லே ' என்று சொல்வதற்கு இன்னும் எத்தனேயோ விஷயங்கள் இருந்தன. இருந்தும் தந்திை எதைச் சொன்னுலும் எவ்வித ஆட்சேபனேயுமின்றி அதற்குக் கட்டுப் படும் பண்பு வாய்ந்த அமிர்தலிங்கம், தந்தையின் பணிப்பை ஏற்ருர் : அன்றிரவே வட்டுக்கோட்டைத் தொகுதிக்குப் பயன மானுர் முதன்முதலாக 1953ஆம் ஆண்டுத் தேர்தற்களத்திற் குதிக் சுவாரூர், சிங்கத்துக்கு எதிராகச் சங்கநாதம் !
முன்னதாகவே வட்டுக்கோட்டைத் தேர்தற் களத்திற் குதித்துத் தன் வெற்றிக்காகத் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர் மதிப்புக்குரிய பெரியார் வீரசிங்கம் அவர்கள். மானிப்பாப் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பல்லாண்டுகள் பணியாற்றியவர் ஆவர். வட்டுக்கோட்டைத் தொகுதி வாக் காளருட் பவர், அவருடைய பழைய மாணவர்கள் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அவர் பாடுபட்டவர். பிற்காலத்தில் வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபையினர் பல இலட்ச ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் தாம் கட்டியெழுப்பிய கூட்டுறவுக் கட்டடத்திற்கு, ' வீரசிங்கம் மண்டபம்' எனப் பெயரிட்டதி லிருந்து, வீரசிங்கம் அவர்கள் கூட்டுறவுத் துறைக்கு எத்துனே சிறப்பான பணி செய்தார் என்பது புலணுகும். தன் சேவை யாற் பெற்ற செல்வாக்கைத் தேர்தலுக்குப் பயன்படுத்த முகனந்தார் வீரசிங்கம். வயது முதிர்ந்தவர். அனுபவசாலி என்பதை எண்ணியும் பலர் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்த வர். அவரே வெற்றியீட்டுவார் என்ற பேச்சும் பரவலாக அடி இத்தகைய ஒருவரை எதிர்த்து அமிர்தலிங்கம் ஏன் = القليوبات الL போட்டியிட்டார்?
அன்று நடைமுறையிலிருந்த சோல்பரி அரசமைப்பு ஒற்றை பாட்சிமுறை தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்று விரும்பினுர் சுயேச்சையாகப் போட்டியிட்ட திரு. வீரசிங்கம். இன ஐக்கியம் ஏற்படவேண்டுமானுல், ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்பட்டு இனப்பாட்சி முறை கொண்டு வரப்படவேண்டும் என்று தன் A "FLAGär கொள்கையை விளக்கிஞர் திரு அமிர்தலிங்கம்.
சோல்பரி அரசியல் திட்டத்தின் 89ஆவது பிரிவு சிறு பான்மை இனத்தினரைப் பாதுகாக்கின்றது எனச் சுட்டிக் காட்டிஞர் வீரசிங்கம்,
29ஆவது பிரிவு அரசியலமைப்பில் இருந்தபோதும் அதற்கு மாருன இந்தியர்-பாகிஸ்தானியர் பிரசா உரிமைச் சட்டம், பாராளு

Page 18
மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டி, 29ஆவது பிரிவு சிறுபான்மையினருக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருவனவல்ல, அற்ப சொற்ப சலுகைகளேத் தருகின்ற ஒரு பிரிவே அது; ஆதலாற்ருன் அப்பிரிவு இந்தியர்-பாகிஸ்தானியர் பிரசாஉரிமைச் சட்டத்தை நிறை வேற்ற உதவியதன்மூலம் சிறுபான்மை இனத்தினரைப் பாதுகாக்கத் தவறிவிட்டது எனப் பிட்டுக்காட்டிஞர் அமிர்தலிங்கம்.
ஆஞல், திரு. வீரசிங்கமோ, இதற்குப் பிறகும் அந்த 29ஆவது பிரிவையே கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார். இதனுற்ருன், தனிப்பட்ட முறையில் பெரியார் வீரசிங்கம் அவர்களிற் பெரு மதிப்பு வைத்திருந்த அமிர்தலிங்கம் கொள்கை ரீதியில், கட்சியின் பணிப்பை ஏற்று, அவரையும் இன்னும் நால்வரையும் எதிர்த் துப் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவு வீரசிங்கம் அவர்களுக்கே சாதகமாக அமைந்
தது. ஐந்து ஆண்டுகள் இடைவிடாது அவர் செய்த பிரசாரத் திற்கு 5400 வாக்குகளே கிடைத்தன. ஆனுல் அமிர்தலிங்கமோ நாற்பதுநாள் பட்டும் பிரசாரம் செய்து 4500 வாக்குகளேப் பெற்றுவிட்டார்.
அந்தத் தேர்தலில் கோப்பாயில் கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கமும், திருமலேயில் திருமலேச் செம்மல் இராஜ வரோதயமுமே வெற்றி பெற்றனர். தந்தை செல்வா உட்படத் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பலர் தோல்வியைத் தழுவினர். ஆஞல், யாருமே மக்களிடமிருந்து ஒதுங்கிவிடவில்லே ' எங்கள் கொள்கையை இன்னும் நல்ல முறையிலே மக்களுக்கு விளக்க வேண்டும்" என உறுதிபூண்டு செயலாற்றினர்;
மரணம் கொடுத்த மனக்கலக்கம்
தேர்தல் முடிவு அமிர்தலிங்கத்தை எவ்விதத்திலும் பாதிக்க வில்லே. ஆணுல் மற்றுெரு நிகழ்ச்சி அவரைப் பெரிதும் பாதித்து விட்டது. அவ்வாண்டு கார்த்திகை மாதத்தில் அவருடைய அருமைத் தந்தையார் மரணமடைந்தார். தன் மானம் மிக்க ஒரு தமிழ் இளைஞனுசுத் தன்னே வளர்த்து உருவாக்குவதற்கு அவர் பட்ட பாடுகளே-கருனேயும் கண்டிப்பும் கலந்த முயற்சி களே-அவ்வப்போது அவர் வழங்கிய ஆலோசனேகளே யெல்லாம் சிந்தித்துப் பார்த்து, அத்தகைய உத்தமத் தந்தையை இழந்ததை நினேந்து நினேந்து மனம் வருந்தினூர், துயரக் கடலில் மூழ்கி பிருந்த அவருக்குத் தந்தை செல்வாவின் ஆறுதல் வார்த்தைகள் தான் சாந்தியளித்தன.
எந்தன் தந்தையை இழந்துவிட்டேன். இனி இந்தத் தந்தையை - தமிழினத்தின் துயர் துடைக்க வந்த இந்தத்
 

= |1 =
தங்கத் தந்தையை-தள்ளாத வயதிலும் தமிழர்க்கு நல்வாழ்வு காண முயலும் இந்த விந்தைத் தந்தையையே என் சொந்தத் தந்தையாக மதிப்பேன் அவருடைய இலட்சியத்தை நிற வேற்றுவேன்' எனத் தெளிவு பெற்ருர், அவருடைய துயரம் தொலைந்தது மீண்டும் துடிப்பு மிகுந்தது. முன்னணியின் முதல் தலைவர் !
நாள் தவறிஞலும் அமிர்தலிங்கத்தின் நா அசைவது நீங்ற வில்லே, கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் இராப்பகலாகக் கலந்துகொண்டார். வடக்கே பகுத்தித்துறை தொடக்கம் தெற்கே திருக்கோவில் வரை அவர் பேசாத கட்சிக்கூட்டங்கள் இல்லை எனலாம். ஒவ்வொரு நாளும் பிரசாரக்கூட்டம் சில சமயம் ஒரே நாளிலேயே பல கூட்டங்கள் கொஞ்சமேனும் அதுப்போ சலிப்போ இன்றி அக்னத்திலும் பங்குபற்றினுர், தேர்தற்காலப் பிரசாரக் கூட்டங்கள் என்ருல் இவரது உற்சாகம் இன்னும் அதிகரிக்கும் அறிஞர் அண்ணுவுக்குக் கிடைத்த தேர்தற்புலி-கலேஞர் கருணுநிதி என்ருல், தந்தை செல்வாவுக்குக் கிடைத்த தேர்தறயுவி-நாவலர் அமிர்தலிங்கம் ஆகும். ஒவ் வொரு தேர்தலிலும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களது வெற்றி குரிய பல காரணங்களில் திரு. அமிர்தலிங்கத்தின் ஆணித்தர மான பேச்சாற்றலும் ஒரு முக்கிய காரனம் என்பதை எவரும மறுக்கமுடியாது. தன் தொகுதியில் மட்டும் கட்சி வெறறிபெதருல் போகாது கட்சி களத்திற் குதித்த அத்தஐ தொகுதிகளிலும் அது வெற்றி பெற்றிடவேண்டுமென உணர்ந்து உழைத்து வருவதில் சமர்த்தர் இவர், " கேட்டார், பிணிக்கும் தகைய வாய்க் கேளாரும் வேட்ப ம்ொழிவதாம் சொல்" என்ற தமிழ் முனிவனின் இலக்கணத்திறகு இலக்கியமாக அமைந்தன அமிர்த லிங்கததின் புள்ளிவிபரங்கள் செறிந்த சொற்பொழிவுகள். அவை வாலிப உள்ளங்களுக்கு விர உணர்வை பூட்டின ச்சார்வடைந்த உள்ளங்களுக்குச் சுறுசுறுப்பையூட்டின : விடுதலே விருமபி களுக்குக் கட்டிக்கரும்பாக இனித்தன காட்டிக் கொடுப்போ ருக்கும் கழுத்தறுப்போருக்கும் எட்டிக்காயாய்க் கசந்தன. அவ ருடைய சொல்லம்புகளாற் புண்பட்டோரும், அவற்றின் நேர்மை வியக் கண்டு மனத்தெளிந்து தமிழரசுக் கட்சிபிற சேர்ந்தனர். அவருடைய அயரா உழைப்பு தெளிவான பேச்சு, இஃஞர் மத்தியில் அவருக்கிருந்த அளவிலாச் செல்வாக்கு ஆகியவை 1953ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழரசு வாலிப முன் வரி மின் முதலாவது தலைவராக அவரை உயரச்செய்தன. முதலாவது தலவராக மட்டுமல்ல, முதற்தரமான் த பேராகவும் அவர் செயல்புரிந்து ஆயிரக்கணக்கான இளேஞர்களைத் தமிழரசுக் கொடியின் கீழ் அணிதிரளச் செய்தார்.
து = 3

Page 19
= |8 -
அரிசி விலேயும் அரசியல் நிலேயும் !
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிற்குப் பிறகு மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கும் ஐக்கிய முன்னணி அரசும் தேசிய அரசும் தமிழரசுக் கட்சியினரைத் தன்ஞலான மட்டும் தாக்கியும் தூற்றியும் வந்திருக்கின்றது. இன்னும் கூறப் போளுல் தமிழரசுக் கட்சியை அழித்துவிடவே அவை அரும் பாடுபட்டு வருகின்றன. இவ்விஷயத்தில், இன்று ஆட்சியி விருக்கும் மாண்புமிகு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா த3லமையிலான ஐக்கிய முன்னணி அரசு முக்கியபங்கு வகிக்கிறது. ஏழைத் தொழிலாளர்களின் எதிரிகள்-முதலாளித்துவத்திற்கு முண்டுகொடுப்போர் - ஏகாதிபத்திய தாசர்கள் - சமதர்ம விரோதிகள் - சாதிப்பித்தர்கள் என்றெல்லாம் தமிழரசுக் கட்சி யினரை வர்ணிப்பதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகின்றது. ஆனுல் ,இவையனைத்தும் உண்மைக் கலப்பற்ற அப்பட்டமான பொய்கள் என்பதைத் தமிழரசுக்கட்சியின் கொள்கைகளேயும் கடந்தகால நடவடிக்கைகளேயும் நன்கறிந்தோர் ஒப்புக் கொள்ளவே செய்வர்.
சாதிப்பாகுபாட்டிற்கெதிராகச் சட்டமியற்றச் செய்தவர்கள்; சமபந்தி போசனத்தையும் ஆலயப் பிரவேசத்தையும் தேநீர்க் கடைப் பிரவேசத்தையும் பகுத்தறிவற்ற சாதிப்பித்தர் களின் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையில் முன்னின்று நடாத்தி, அதில் வெற்றியுங் கண்டவர்கள் சொத்துக்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட வேண்டுமென முதன்முதலிற் கோரிக்கை விடுத்த வர்கள் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கப்படவேண்டுமென முதன்முதலிற் குரலெழுப்பியவர்கள் காணி உச்சவரம்புசொத்து உச்சவரம்பு கொண்டுவந்த நேரத்தில் களிப்புடனும் உற்சாசுத்துடனும் அதனே வரவேற்று ஆதரித்து வாக்களித்த வர்கள் தமிழரசுக்கட்சியினர் என்ருல், அதை யாரால் மறுக்க முடியும்? மறைக்க முடியும் தமிழரசுக்கட்சியினர் சமதர்ம வாதிகள் என்ற உண்மையைத் தமிழர்காவலர் தர்மலிங்கத்தினுல் தயாரிக்கப்பட்டு, அவரினுலேயே அரசியல் நிர்ண யசபையில், தமிழரசுக்கட்சி சார்பில் இலங்கை சமஷ்டிக் குடியரசின் மாதிரி அரசியலமைப்புத் திட்டமாகச் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப் பின் மீதான பொது நிலே அறிக்கையைப் புரட்டிப்பார்த்தால் நன்கு உணர்ந்துகொள்ள முடியும். இவ்வறிக்கை தயாரிப்ப தற்குத் திரு. அமிர்தலிங்கம் மிகுந்த ஒத்தா  ைச புரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சமதர்ம சிற்பிகளே, சாதிப்பித்தர்கள்-சமதர்ம விரோதிகள்- ஏகாதிபத்திய தாசர்கள்-ஏழைகளின் எதிரிகள்என்று சொன்னூல், அது 'சூரியனைப் பார்த்து, இருட்டாயிருக்

- 19 -
கின்றதே" எனச் சொல்கின்ற குருட்டுப் பைத்தியக்காரத் தனமேயன்றி வேறில்லே.
1953ஆம் ஆண்டில் ஆட்சிபுரிந்த ஐக்கிய தேசியக் கட்சி, எவ்வித காரணமுமின்றி அரிசியின் விலேயைத் திடீரென்று உயர்த்தியது. இதனுல், இந்நாட்டின் பெரும்பான்மையினரான ஏழைமக்களே பெருமளவிற் பாதிக்கப்பட்டனர். இன்றைய ஆளுங் கட்சிகளாகவும் அன்றைய எதிர்க் கட்சிகளாகவுமிருந்த சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி போ ன்ற இடதுசாரிக் கட்சிகள் அஃனத்தும் அரசுக்கெதிராக ஒன்று திரண்டன. ஏழைகளின் துயர் துடைக்க எந்நாளும் முன்நிற்கும் - ஏழையின் சிரிப்பில் இறைவனேக் காணத் துடிக்கும் தமிழரசுக்கட்சியும் அவர்க ளூடன் இணேந்துகொண்டது. தமிழ்ப்பிரதேச நடவடிக்கைக் குழு வின் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. வி. தர்மலிங்கத்துடன் சேர்ந்து, அசிசிவிலே உயர்வை எதிர்த்துப் பிரசாரம் செய்தார் அமிர்தலிங்கம், நாடு முழுவதும் வெற்றிகரமான முறையில் ஹர்த்தால் நடைபெற்றது. மக்கள் அனேவரும் தனது ஆட்சியை எதிர்த்ததைக்கண்ட திரு. டட்லி சேனநாயக்கா அவர்கள் மனச் சாட்சிக்குக் கட்டுப்பட்டு நாகரிகமான முறையில் தனது பிரதமர் பதவியைத் துறந்தார். ஆட்சிபுரித்தோரின் அநியாய நடவடிக்கை களே விளக்கி அமிர்தலிங்கம் பேசியிராவிட்டால், தமிழ்ப்பிரதேசத் தில் ஹர்த்தால் நிச்சயம் பிசுபிசுத்திருக்கும் என்பதை இடதுசாரித் தலைவர்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்; வீட்டுக்கு வந்த வீராங்கனே !
" வீடு வாழ நாடு வாழும் ' என்பர் பெரியோர் வீட்டுக்குப் பொறுப்பாக இருப்பவள் வீட்டரசி இல்லத்திற்கு உரியவள் இல்லாள். ஒருவனுடைய வாழ்க்கை சிறக்கவேண்டுமானுல், அவனுடைய இல்லாள் நல்லாளாக இருக்கவேண்டும். இந்த வகையிலும் அமிர்தலிங்கம் பெரும் பாக்கியசாலி என்றே கூற வேண்டும். ஆம், "மனேத்தக்க மாண்புடையாள் ஆசித் தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துனே " என்ற உலகப் பொதுமறைக்கு இலக்கணமாக இலங்குபவளேத் தமது இல்லா ளாக அடைந்துள்ளமை அவர் செய்த பாக்கியமே!
பொதுவாழ்வில் அவர் பேரும் புகழும் பெறுவதற்கு அவ ருடைய உழைப்பும் திறமையும் கொள்கைப்பிடிப்பும் நேர்ன்ம யும் மட்டுமே காரணம் எனச் சொல்லிவிடமுடியாது. அவருக்கு மனேவியாக வாய்த்த மங்கைநல்லாள் மங்கையர்க்கரசியின் உதவியும் ஒத்துழைப்பும் பூரணமாக அவருக்குக் கிடைத்திரா விட்டால், அவருடைய பொதுப்பணி பெரிதும் பாதிக்கப்பட் டிருக்கும் என நிச்சயமாகச் சொல்லலாம்.

Page 20
-|=20 س--
"யாழ்ப்பாணத்திலுள்ள ஒரேயொரு இரட்டை அங்கத்தவர் தொகுதி எங்கள் வட்டுக்கோட்டைத் தொகுதிதான் திரு. அமிர்தலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி ஆமிர்தலிங்கம் ஆகி யோர் எங்கள் பிரதிநிதிகள்" என வட்டுக்கோட்டைப் பிரதி நிதியாக அமிர்தலிங்கம் பணியாற்றியபோது அத்தொகுதி மக்கள் பெருமையுடன் சொல்விக்கொள்வார்கள். அந்த அள விக்குக் களவனுடன் கருத்தினேந்து, அவர் எடுத்த காரியம் பாவிலும் கைகொடுத்து, உதவி செய்து வருபவர் மங்கையர்க் கரசி. சத்தியாக்கிரகமா, உண்ணுவிரதமா, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமா, பாதயாத்திரையா, சட்டமறுப்பு இயக்கமாஎன்ன நடவடிக்கை பென்ருலும் முன்னணியிலே நின்று இன்னல் கள் பலவற்றை இன்முகத்துடன் ஏற்றுவருபவர் அவர் தடுப்புக் காவவே, சிறைவாசத்தைக்கூட தயக்கமின்றிச் சிரிப்புடன் ஏற்றவர் ஏற்கச் சித்தமாக இருப்பவர் அவர், புதிய புற "ேஆாறு படைக்கப் புறப்பட்டிருக்கும் புரட்சிப் பெண் அவர், அகிமஸ்ா மூர்த்தி காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரிபாப் போல. ஆசிய ஜோதி ஜவகர்லால் நேருவுக்கு ஒரு கமலா போல அமிர்தலிங்கத்திற்கு மனேவியாக வாய்த்திருப்பவர் மங்கையர்க் அரசியார்.
அவருடைய தந்தை திரு: வங்லிபுரம், குரும்பசிட்டியைச் சேர்ந்தவர் : இலங்கையிலுள்ள சிறந்த அச்சகங்களிற் குறிப்பிடத் தீக்கதான் சின்னுகம் திருமகள் அழுத்தகத்தின் ஸ்தாபகரும், ஈழகேசரிப்பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியவருமான காலஞ் சென்ற ஈழகேசரிப் பொன்னேயா அவர்களின் நெருங்கிய உற வினர் பண்டாரவ&ளயில் வியாபாரம் செய்து தானீட்டிய பண்த்திற் பெரும்பகுதியை மூளாயிலும், பொன்னுவேயிலுமுள்ள தேவஸ்தானங்களின் திருப்பணிக்காகச் செலவிட்ட தெய்வ பக்தர் அவர், மங்கையர்க்கரசியின் தாயாரான நாகம்மா, தங்கத்தமிழ்நாட்டிலுள்ள வேதாரண்யத்தைச் சேர்ந்த இராம Eårår i Li Leir & udså Leags st AirTri.
இளமையிலே இசையில் நாட்டமுற்றிருந்தார் மங்கையர்க் ਪਾਸੇ, இராமநாதன் கல்லூரியில் மாணவியாக இருந்தபோது " இராமாயணம்" என்ற இசை நாடகத்திற் குகனுகப் பாத்திர மேற்றுப் பாடி நடித்துப் பலரின் பாராட்டுக்களேப் பெற்றிருந் தார். அறிஞர் அண்ணுவின் தமிழ்நாட்டின் தலைநகராம் சிங்காரச் சென்ஃன்த் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினர், 1951ஆம் ஆண்டிவே பாழ்ப்பாணன் இசைமீட்ட தமிழ்ஈழத்தின் தநேசுராம் செத் தமிழ் மனம் பரப்பும் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி யிலே நடாத்திய மாபெரும் மாணிக்கத் தமிழ் விழாவிலே, தமிழ்வாழ்த்துப் பாடிய மங்கையர் குழுவிலே மங்கையர்க்கரசி

திருமணக் கோலத்தில் தலவனும் - தலவியும்

Page 21

- 21 - կմ&ծ5LD குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெற்றிருந்தார், மேடைகளி லும் ஊர்வலங்களிலும் தேனினுமினிய குரலிற் பாடியும் வீரத் தமிழ் முழக்கம் செய்தும் வருகின்ருர் அவர் தமிழ் ஈழத்து மங்கையர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கிவரும் மாதர் திலகம் மங்கையர்க்கரசியின் ஆற்றல்களே இதற்குமேலும் வர் ணிைக்கவேண்டிய அவசியமில்:
காதலா ? கடமையா?
அமிர்தலிங்கம்-மங்கையர்க்கரசி திருமணப் பதிவு 1954ஆம் ஆண்டு ஆவணித் திங்களில் நடைபெற்றது. இவர்களது திரு மனத்தைப் பெரியோர் நிச்சயித்த திருமணம் எனச் சொல்வி விட முடியாது. ஓரளவுக்குக் காதல் திருமணமே ஆதலாற் போலும் பொருத்தமான ஜோடி எனப் பாராட்டினர் பலர். வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. திரு. அமிர்த விங்கத்தின் நெருங்கிய நண்பர்களும் கட்சி உறுப்பினர்களும் தம் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களேயும் நேரிலே தெரிவிக்க வந்தவண்ணமிருந்தனர். ஆணுல் திடீரென்று திரு அமிர்தலிங்கம் மாயமாய் மறை ந்து விட்டார் . எங்கும் ஒரே பரபரப்பு: அமிர்தலிங்கம் எங்கே மா ப் பிள்ளே எங்கே என்ற ஒரே கேள்விதான் எல்லோருடைய நாவிலும் நர்த்தனமாடியது. ஏக்கத்துடன் அவரை எல்லோரும் எங்கும் தேடிக்கொண்டிருந் தனர். ஆணுல் மங்கையர்க்கரசியார் மட்டும் சிறிதும் பதற்றப் படாமல், புன்னகை பூத்தபடி மெளனமாக இருந்தார். சற்று முன்னுல், அமிர்தலிங்கம் அவர்களுக்குத் தன் கையால் வீரத் திலகமிட்டு வெளியே அனுப்பி வைத்தவர் அவர்தான் என்ற செய்தி பின்னர் தெரியவந்ததும் அனேவரும் ஆச்சரியத்தில் முழ்கினர்.
ஆம், தன் வாழ்விலும் தாழ்விலும் பங்கு கொள்ள வந்த அந்த மாதரசியுடன்-கண்ணுக்கிணியாளுடன் காதல் மொழி பேசிக் கருத்துப் பரிமாறிக்கொண்டிருக்க வேண்டிய அந்த இனிய நேரத்திலும், தன் கட்சிப் பணியையே கண்ணினுமினிய கடமை யாகக் கருதி கரவெட்டியில் நடைபெற்ற பொதுமேடைக் கருத்தரங்கிற் கலந்து கட்சிக் கொள்கையை விளக்கிக் கொண் டிருந்தார் கடமை வீரர் அமிர்தலிங்கம் !
கொடி தாங்கினும்; அடி வாங்கினுர்!
1954ஆம் ஆண்டு இவ்வாண்டு இங்கிலாந்து தேசத்தின் மாட்சிமை தங்கிய 3ஆவது எலிசபெத் மகாராணியார் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள். நாடு ஆங்கிலேயர் ஆட்சியி னின்றும் விடுபட்டபோதிலும், சொற்ப தொடர்பு இருக்கத்தான்

Page 22
- 22 -
செய்தது. இதனுலும், ஒரு மகாராணியாருக்குரிய கெளரவத் தையும் மதிப்பையும் அளிக்கவேண்டுமென்பதினுலும் இலங்கை அரசு மிகப் பிரமாண்டமான முறையில் மகாராணியார் அவர் களுக்குச் சிறப்பான ஒரு வரவேற்பளிக்க முன்வந்தது. இலங்கை வாழ் மக்களனைவரும் இன, மத பேதமின்றி மகாராணியாரை வரவேற்கத் தயாராயினர். இச்சமயத்தில் இலங்கையின் பிரதம ராகப் பதவி வகித்தவர் மாண்புமிகு சேர் ஜோன் கொத்தலா வலே அவர்கள். இவரது த&லமையில் மகாராணியாருக்குச் சிறப்பான பொது வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த நேரத்திற்ருன், சிங்கள மக்களோடு சேர்ந்து தமிழ்பேசும் மக் களும் மகாராணியாரை வரவேற்க எண்ணிய நேரத்திற்குன், அவர்களுடைய எண்ணத்தில் மண்னேவாரி இறைத்தார் இலங்கை பின் மாண்புமிகு பிரதமர் மகாராணியாருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் தமிழ்மொழி முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப் பட்டது.
ஆம், யாருக்கும் அஞ்சாதவர், பரந்த மனப்பான்மையாளர். உண்மையான தேசியவாதி"ான்றெல்லாம் எல்லாராலும் பர்ராட் டப்பட்டு வந்த சேர் ஜோன் கொத்தலாவலேயின் நிர்வாகத்தி லேயே தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது 1 பொது வரவேற் புக்குத் தயாரான தமிழ் பேசும் மக்கள் பொங்கி எழுந்தனர் 1 தமது ஆழ்ந்த எதிர்ப்பை ஆணித்தரமாகத் தெரிவித்தனர்.
தமிழைப் புறக்கணித்துத் தமிழரை அவமானப்படுத்திய இதே கொத்தலாவலே, இதன்பின்னர் தமிழர் தலைநகராம் யாழ்ப்பான நகருக்கு வருகை புரிந்தார் விடுவார்களா தன் மானத் தமிழர்? அஞ்சாத சிங்கமாக, கட்டிளங் காளேயாக, தமிழரசு வாலிப முன்னணியின் அருமைத் தஃலவராக விளங்கி வந்த அமிர்தலிங்கம் தனது தலைமையில் தொண்டர்களே அணி திரட்டிஞர் கொஞ்சுதமிழ்க் குலத்தோரை அவமானப்படுத்திய கொத்தலாவலேயின் வருகையை எதிர்த்துக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடாத்திஞர். கொத்தலாவலேயின் குண்டாந் தடிப் படையினர், தன் மான வீரப் படையினரை நோக்கி மிகக் கொடூரமான முறையில் குண்டாந் தடியடிப் பிரயோகம் செய் தனர். சுரங்களிலே கறுப்புக்கொடி தாங்கி முன்னணியிலே நின்ற குற்றத்திற்காக முதல் அடி வாங்கிஞர் அமிர்தலிங்கம், ஆஞல், அஞ்சிஞரில்லே! பொலீசார் அடிக்க அடிக்க, 'போ கொத்தலாவலேயே, திரும்பிப்போ!' எனக் கறுப்புக் கொடியைக் காட்டியே கோஷமெழுப்பினுர் : இவரது ரோசத்னசுக் கண்ட இளேஞர்களும் அவரைப் பின்பற்றிக் கறுப்புக்கொடி காட்டிக் கோஷமெழுப்பினுர்கள். இவர்களது அஞ்சாமையும், மொழி

- 23 -
அபிமானமும் கொத்தலாவலேயின் மனதை மிகவும் மாற்றி விட்டது என்றே சொல்லவேண்டும் .
கொக்குவிவில் இவருக்கு அளிக்கப்பட்ட ஊர்வல வர வேற்பில், "தமிழுக்கும் சிங்க ளத்திற்கும் சம அந்தஸ்து என்பதே தமது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை' எனப் பகிரங்கமாக அறிவித்தார். உடனே, உயர்திரு திறண்டி பேரின்ப நாயகம் அவர்கள் அரசமைப்பில் இதனே இடம்பெறச் செய்வீர்களா" எனக் கேட்டார். "ஆம், நிச்சயம் செய்வோம்" எனப் பதிலிறுத்தார் கொத்தலாவலே அவர்கள்.
சுறுப்புக்கொடி காட்டுவதினுல் உரிமை பெறமுடியுமா? எனக் கொக்கரிப்பவர்கள் இந்தப் பழைய நிகழ்ச்சியை நினேத்துப் பார்க்கவேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ அநீதி இழைக்கப் படும்பொழுது, அதனுல் பாதிக்கப்பட்டவர்கள் ஆமைபோல் ஊ மை போல் பதுங்கி, அடங்கி, ஒடுங்கி இருந்துவிடாமல், தங்களது அதிருப்தியையும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் நியாயபூர்வமான முறையில் வெளிக்காட்டத்தான் வேண்டும். அன்று அமிர்தலிங்கம் தலைமையில் கொத்தலாவலேக்குக் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடாத்தியிராவிட்டால், தான் முன்னர் தமிழுக்குச் செய்த தவறை மாண்புமிகு பிரதமர் கொத்தலாவ&ல் அவர்கள் உணர்ந்து கொள்வதற்கு இடமேற் பட்டிருக்காது. அந்த அளவுக்கு அவருடைய பாதம் தாங்கி களும் பந்தம் தூக்கிகளும், தம் புகழ்மொழியாலும் பொய் உபசாரங்களாலும் அவரை க் குளிப்பாட்டிக் கொண்டிருந் தார்கள். ஐம்பத்தாறில் அமோக வெற்றி !
1956ஆம் ஆண்டு இலங்கைச் சரித்திரத்தின் மிக முக்கிய
ஆண்டாகும். தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்க அத்திவாரமிட்டது இவ்வாண்டுதான். தமிழர் இந்நாட்டில் தொடர்ந்து அடிமைகளாக வாழ்வதா? அல்லது ஆள்வதா? என்ற கேள்விக்கு விடைகாண வித் திட்டதும் இவ்வாண்டுதான். சோல்பரித் திட்டத்தின் முடிவை பும் ஒற்றையாட்சித் தி ட் டத் தி ன் முடிவையும் உலகறியச் செய்ததும் இவ்வாண்டிலேதான்.
தமிழுக்கும் சிங் களத் து க்கு ம் சம அந்தஸ்து என்ற கொத்தலாவலே அவர்களின் கொக்குவில் பேச்சைப் பயன் படுத்தி ஏதுமறியாச் சிங்கள மக்கள் மத்தியில் அரசியற் சூதாட்டம் ஆடத் தொடங்கினர் சிங்களத் தீவிரவாதிகள் இவர்களில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆக்கிய காலஞ்

Page 23
- 24 -
சென்ற திரு. எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் முன்னணியில் நின்ஞர். தம்மை ஆட்சிக்கு அனுப்பினுல் தானே பிரதமராஞல், "எண்ணி இருபத்துநாலு மணி நேரத்திற்குள் சிங்க ளத்தை மட்டும் இந்நாட்டின் ஆட்சிமொழி யாக்குவேன்' என்று வகுப்புவாத தஞ்சைக் கக்கிஞர், இடைவிடாது சிங்கள மக்கள் மத்தியில் இதனேயே பிரசாரம் செய்யலாஞர். இதனுல் சிங்கள மக்கள் இவர் பின்னுல் அணிதிரளவாயினர்.
நாளிலும் பொழுதிலும் பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு பெருகி வருவதைக் கண்ட கொத்தலாவலே குத்துக்கரணமடிக்க முடிவு செய்தார் தமது மொழிக் கொள்கையை மாற்றினுர்,
களனியிலே ந  ைட பெற்ற தமது ஐ. தே. கட்சியின் மாநாட்டிவ் " சிங்களம் மட்டும்தான் இலங்கையின் ஒரே ஆட்சி மொழி" என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத் தீர் மானத்தை வழிமொழிந்த பேர்வழி தப்பித்தவறித் தமிழனுகப் பிறந்துவிட்ட திரு. எம். இராசேந்திரம். அன்றும் இ ன் றும் தமிழர்கள் மத்தியில் காட்டிக் கொடுக்கும் கயவர்கள் இருந்து கொண்டுதான் வருகிருர்கள்.
ஐ. தே. க. ஒருபுறமாகவும், பூதுவங்கா சு. க. திரு. தகநாயக்கா கட்சி, திரு. பிலிப் குணவர்த்தணு கட்சி ஆகி யவை சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருபுறமாகவும் சிங்களம் மட்டும் என்ற கோஷ்த்தை எழுப்பி வரலாயின. துரங்கிய தமிழரைத் தட்டி எழுப்பியது தமிழரசுக்கட்சி, தெற்கே சிங்களத் தலைவர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தை ஆக்கி, இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வரும் தமிழரை, இன்னும் கூறப்போனுல் இலங்கையில் ஆட்சி புரிந்துவந்த தமிழரை, அழித்தொழித்துவிட வழிகோ வி வருகின்றனர் என்றும், இந்தப் பேராபத்திலிருந்து தமிழர்கள் பிழைத்துக் கொள்ள நாம் வழிகோல வேண்டும் என்றும், வடக்கிலும் கிழக்கிலும் தீவிர பிரசாரம் செய்து வந்தனர் தமிழரசுக் கட்சியினர். இப் பிரசாரத்தில் முக்கிய பங்கெடுக்கலானுர் அமிர்தலிங்கம், இரவு பகலாக இதர தஃலவர்களுடன் சேர்ந்து பட்டி தொட்டி. மூவே முடுக்கெங்கும் குருவளிப் பிரசாரம் செய்துவந்தார். இளேஞராக இருந்தமையினுல் இவரது வேகத்தைக் கணக்கிட முடியவில்வே,
வடக்கிலும் தெற்கிலும் அரசியல் விழிப்படைந்த நேரத் தில், இதே 1956 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலும் வந்து சேர்ந்தது. பின் கேட்கவா வேண்டும்? தனிச் சிங்கள ஆட்சி என்ற பதத்தை உபயோகித்துச் சிங்களக் கட்சிகளும், சமஷ்டி

-- 25 -
ஆட்சித் திட்டத்தை முன்வைத்துத் தமிழரசுக் கட்சியும் இத் நாட்டு மக்கள் மத்தியிற் சென்று வாக்குக் கேட்கலாயின. அப்பொழுது இலங்சையில் 100 தொகுதிகளே இருந்தன. தமிழர் பெரும்பாலாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தொகுதிகளில் தமிழரசுக்கட்சி தன் வேட்பாளர்களே நிறுத்தியது. அமிர்தலிங்கம் மீண்டும் இத் தேர்தவில் வட்டுக்கோட்டைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனுல் இத் தேர் தவில் இவரை எதிர்த்துக் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் திரு வைத்தியலிங்கம் மட்டுமே தின் ருர், ஐம்பத்திரண்டில் ஐவரோடு மோதிய அமிர்தலிங்கம், ஐம்பத்தாறில் ஒருவரோடு மோதுவது மிகவும் சுலபமாயிருந்தது. அதுவும் தெற்கே சிங்களம் மட்டும் கோஷம் எழும்பிய இந்த நேரத்தில் மிகமிகச் சுலபமாகவே இருந் தது. தேர்தல் முடிபு வட இலங்கையிலும், தென்னிலங்கையிலும் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கிவிட்டது. 24 மணி நேரத்தில் சிங்களத்தை ஆட்சியில் அமர்த்துவோம் என்று சொல்வி வாக்குக் கேட்ட மக்கள் ஐக்கிய முண்னணியினரையே சிங்கள மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்து ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினர். "சமஷ்டி அமைப்பின்ற்ே தமிழரசு அமைக்க, எமது இறுதி மூச்சு வரை ஆட்சி மன்றத்தின் உள்ளும் புறமும் போராடுவோம்' என்று சொல்வி வாக்குக்கேட்ட தமிழரசுக்கட்சியின் ரையே தமிழ்மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்து ஆட்சிப்பீடம் அனுப்பினர்.
இதுநாள் வரையும் ஆட்சி மன்றத்தினுள் ஆணித்தரமாகப் போராடியவர்களிற் குறிப்பிடத்தக்கவரான அமரர் திரு. கு. வன்னியசிங்கம் அவர்களுக்குத் துனேயாக, ஆட்சி மன்றத்தினுள் ஆணித்தரமாகப் போராடவல்ல இளஞராகத் திரு. அ. அமிர்த விங்கம் அவர்கள் அமோக வெற்றியுடன் முதன்முதலாக ஆட்சி மன்றம் சென்ருர் இதுநாள்வரையும் பட்டி தொட்டி, முக் முடுக்கெங்கும் முழங்கிய முத்தமிழ்க்குரல், இனி ஆட்சிமன்றத்தி லுள்ளும் முழங்கி ஆட்சியாளரைத் திணறடிக்க வழி சமைததுக் கொடுத்துவிட்டனர் வட்டுக்கோட்டைத் தொகுதிவாழ் மக்கள்
செந்தமிழ் மொழி காக்கச் சிந்தினும் செந்நீர்!
இலங்கையின் சுதந்திரத்திற்காகப் போராடிய நேரத்தில் சமத்துவம் பேசிய சிங்களத் தஃலவர்கள், சுதந்திரம் கிடைத்து பின்னர் தங்கள் சுருதியை மாற்றிவிட்டார்கள். இந்த நாடு சிங்கள் மக்களுக்கு மட்டுமே சொந்த நாடு எனச் சொல்லத் தொடங்கிஞர்கள். தமிழ் மக்களுக்கு உரிமைகளைக் கொடுத்து விட்டால், சிங்கள இனம் இந்த நாட்டிலிருந்து அழிந்தொழிந்து விடும் எனது அலறத் தொடங்கிஞர்கள் "தேசியம், தேசியம்" என உதட்டளவிற் சொல்லிக்கொண்டு, சிங்கள மக்களின் ஏற்றத்
=

Page 24
திற்கும் எழுச்சிக்குமாக மட்டும் திட்டமிட்ட சில சட்டங் களேக் கொண்டு வந்தார்கள்.
ஒத்துழைப்புத் தமிழர் சிலர் ஒத்துரதிக்கொண்டே இருந்த பயால், தேசியத் திட்டங்களின் அந்தரங்க நோக்கங்களைப் பிட்டுக்காட்டிய தமிழ்த் தஃலவர்களின் உரத்த ஒலிகூட, ஒரு பயனேயும் விளேவிக்கவில்லே,
திட்டமிட்ட இந்தச் சதிகளின் உச்சக் கட்டத்தான் 1956ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் !
இந் நாட்டிலே இனப்பகைக்கு இரையூட்டி வளர்த்தது இந்தச் சட்டம் ਸੈ। ஆளும் இனமாகவும் தமிழரை ஆளப்படும் இனமாகவும் மாற்றியமைத்தது இந்தச் சட்டம் சிறுபான்மை இனத்தினரைப் பெரும்பான்மை இனத்தினர் அடக்கி ஒடுக்கி அடிமைகளாக்குவதற்கு வழி வகுத்தது இந்தச் சட்டம் 1958ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக்கலவரத்திற்குஇனப்படுகொலேக்கு- இரத்தக்களரிக்கு வித்திட்டது இந்தச் சட்டம் பிரிவிள வாதத்தைத் தூண்டி வளர்த்தது இந்தச் சட்டம்
ஆம், 1958ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் கூட இதனே முன் வைத்தே இலங்கை முழுவதும் நடைபெற்றது.
நியாயபுத்தி படைத்தவர்கள் - நிதானப் போக்கு உடைய வர்கள்-நேர்மை வழிச் செல்பவர்கள்-நீதி உனர்ந்தவர்கள்இந்த உண்மைகளே என்றுமே ஒப்புக்கொள்வர்.
இதற்கான மசோதாவைக் கொண்டுவந்தவர் அப்போது நாட்டின் பிரதமராகவிருத்த அமரர் பண்டாரநாயக்கா அவர்கள், சிங்களமொழி வெறியர்கள் அத்தனே பேரும் அவரின் பின்னுல் அன்ரி திரண்டு நின்றனர். பாராளுமன்றத்திலும், அவர் தஃவமையி வான மக்கள் ஐக்கிய முன்னணிக்குப் பெரும்பான்மை பலம் இருந்தது.
ஆகவே, சிங்களம் மட்டும் மசோதா சட்டமாக்கப்பட்டு விடும் என்பதில் எவருக்கும் எவ்வித சந்தேகமும் எழுந்திருக்க முடியTது.
ஆயினும் தமிழரசுக் கட்சியினர் சும்மா இருந்துவிடவில்லை : "கிட்டாதாயின் வெட்டென மற" எனச் சொல்வி நிலமையைச் சமாளித்துவிடவில்லே அதனேத் தடுத்து நிறுத்துவதற்குத் தம்மா வான முயற்சிகள் அனேத்தையும் மும்முரமாகச் செய்தார்கள். பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் அதனே எதிர்த்துப் பேசினுர்கள் புயல் வேகத்திற் பிரசாரம் செய்தார்கள் அதன் கொடுமையை விளக்கிப் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதி

நாடெங்கும் பரப்பிஞர்கள் : பொறுப்பு வாய்ந்த சிங்களத் தஃலவர்களே நேரிலே சந்தித்து அந்த மசோதாவின் கொடூரத் தன்மையை விளக்கிஞர்கள்.
இறுதியாக, பெரும்பான்மை மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பிடவும், உலகப் பொதுமக்களின் கவனத்தை ஈழத் தமிழர்கள் பால் திருப்பிடவும் காளிமுக மைதா னத்திற் சத்தியாக் கிரகம் செய்வதற்கு முடிவு செய்தார்கள்.
மாந்தருள் மாணிக்கமாம் மகாத்மா காந்தியடிகள் கையாண்ட மாசு மறுவற்ற ஆயுதந்தான் சத்தியாக்கிரகம் அணு வாயுது பலம் கொண்ட அமெரிக்காவிற்கூட மார்டின் லூதர் கிங் அவர் கள் சிறந்த ஆ45மாகத் தேர்ந்தெடுத்துக் கையாள் - தான் சத்தியாக்கிரகம் ஒருவன் தன்னேத்தானே வருத்துவதன் மூலம் மற்றவனின் மனத்திலே மாற்றத்தை ஏற்படுத்த உப யோகப்படுத்தும் உன்னதமான ஆயுதத்தான் சத்தியாக்கிரகம் : பாராண்ட பறங்கியஐயே பாரதத்தை விட்டு விரட்டியடித்த பலம் பொருந்திய ஆயுதந்தான் சத்தியாக்கிரகம் உடனடி பாகப் பலன் தராவிட்டாலும் உருப்படியான பலகீனத் தருவது சத்தியாக்கிரகம் இது கோழைகளின் ஆயுதமன்று வீரர்களின் ஆயுதமே!
இத்தகைய சிறப்புமிக்க-வலிமை நி: ஆயுதத்தைப் பயன் படுத்தத் தீர்மானித்தார்கள் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள்
இத் தீர்மானத்தை ஆட்சிமன்றத்திலேயே தெரிவித்தார் அமரர் வன்னியசிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியினர் தயங் கார்-சத்தியாக்கிரசும் செய்வார்-என்பதை உணர்ந்த அமரர் பண்டாரநாயக்காவின் அரசு அதனே முறியடிக்கப் பல்வேருரை ஏற்பாடுகளேயும் முன்கூட்டியே செடி, முற்பட்டது ஆயுதத் தாங்கிய பொலிசார் பாராளுமன்றத்தை சுற்றிலும் நிறுத்தப் பட்டார்கள் யாருமே உள்ளே நுழைய முடியாதவாறு இப் படையினர் நின்றுகொண்டனர். "யாருமே பாராளுமன்ற வளவி னுள் நுழைய முடியாது' என்ற கருத்தமைந்த கடிதம் ஒன்றினைப் பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் த லேவர் செல்வநாயகம் அவர்களுக்கு அனுப்பியிருந்தார். உடனிே தமிழரசுக்கட்சியின் முன்னணித்தல்ேவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தார். காவற் படைகளின் பாதுகாப்பையும் மீறி பாராளுமன்றத்தினுட் பிரவேசிக்க முயல்வது; முடிந்தாற் சரி, முடியாவிடில் அவ் விடத்திலேயே அமர்ந்து அறப்போர் புரிவது என்ற முடிவே அது 1956ஆம் ஆண்டு ஆளி மாதம் ஐந்தாம் திகதி அறப் போர் ஆரம்பமாகப் போகிறது.

Page 25
- 28 -
இப்போரிற் குதிக்கவிருக்கும் வீரர்களுக்குப் போர்முறை களேப் பற்றியும் ஆபத்து நேரத்திற் கையாளவேண்டிய தற்காப்பு முறைகளேப் பற்றியும் காலஞ்சென்ற டாக்டர் நாகநாதன் அவர்கள் ஏற்கெனவே விளக்கிவிட்டார். வீரர்களும் வீறு பெற்றவர்களாக - வேகம் மிக்கவர்களாக - விவேகமுடையவர் களாக - ஆயத்தமாஞர்கள் அறப்போரிற் குதிப்பதற்கு!
நாட்கள் உருண்டன் ஆனி ஐந்தாம் நாள் வந்து நின்றது. போராட்ட வீரர்கள் அனேவரும் அன்று காவே ஆறு மணிக்குப் பம்பலப்பிட்டி சைவாலயத்தில் ஒன்று கூடிஞர்கள் அனேவரும் ஆண்டவனேத் தரிசித்துக்கொண்டார்கள்; தமிழுக்காகத் தலே யைக் கொடுக்க இப்போது தயாராகி விட்டார்கள்:
திருவாளர்கள் செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், நடராசா இன்னும் பல தலைவர்களையும், ஐஞ்ஞாற்றுக்கு மேற் பட்ட தொண்டர்களேயும் சுமந்துகொண்டு அங்கு தயார் நிலேயி விருந்த ஒரு சில மோட்டார் இரதங்கள் போர்முரசு ஒலிப்ப தைப் போன்ற பேரிரைச்சலுடன் காலிமுசுத்திடவே நோக்கி விரைந்து சென்றன.
அங்குள்ள பசும் புற்றரையில் பைந்தமிழ் மொழி காக்கும் வீரர்கள் சுரங்களிற் பற்பல சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் பார்ப்போர் மெய்சிலிர்க்கும் வகையில் அமர்ந்து கொண்டனர். துலேவர்கள் முன் வரிசையிலும் தொண்டர்கள் பின் வரிசையிலுமாக அமர்ந்துகொண்டனர் சிங்கக் கொடி யேந்திய ஒரு கூட்டத்தினர் வந்தனர். வாய்க்கு வந்தபடி அருவருப்பான முறையிற் பேசினர் திட்டித் தீர்த்தனர்; தாமே காளிடயர் கூட்டம் என்பதைத் தெளிவு படுத்தினர். போராட்ட வீரர்களோ பதிலேதும் பேசாதவர்களாய்ப் புன்முறுவல் பூத்த வாறு அமைதியாக அறப்போர் புரிந்தனர். வந்த காடையர் கூட்டத்தினர் பாராளுமன்றத்தை நோக்கிச்சென்று சில நிமிடங் களிற் திரும்பி வந்தனர். முன்னர் வரும்போது இவர்களுக்கு இருந்த வேகத்தைவிட இப்போது இவ்வேகம் இருமடங்காக அதிகரித்தது. ஆயினும் அஞ்சவில்லே அறப்போர் வீரர்கள்! வேகமாக வந்த காடையர் கூட்டத்தினர் அதே வேகத்தி லேயே அமைதியாக இருந்த அறப்போர் வீரர்களேத் தாக்கும் முயற்சியை ஆரம்பித்தனர். மூங்கிற் சுழிகளாலும், கால்களா லும், விசுகளாலும் வேண்டியமட்டிற் தாக்கினர். அது போதா தென்று வீரர்களின் காதுக2ளக் கடித்தெறிந்தனர்; சுண்களைக் குத்திக் குருடாக்கினர் கை, சால்களே வெட்டி வீழ்த்தினர் கோப் பாய்க் கோமான் வன்னியசிங்கத்தை வேண்டியமட்டும் தாலேந்து பேராகச் சேர்ந்து தூக்கித் தூக்கி, உருட்டி உருட்டி உதைத் தனர்; அவரது சட்டைகளேக் கிழித்தனர்; சட்டத்தரணி

- 29
நடராசா, இரும்புமனிதன் நாகநாதன் போன்ற பல தஃலவர் களே நன்கு நையப்புடைத்து, மூக்கையும் மண்டையையும் உடைத்து, அதிலிருந்து பிறிட்டுப் பெருக்கெடுத்த இரத்தத் தைக் கண்டு இன் புற்றனர் தந்தை செல்வாவின் தலைமயிரைப் பிடித்து இழுத்தும், நெஞ்சை உதைத்தும் காலிற் போட்டு மிதித்தும் வருத்தினர்; அவரின் அருமைப் புதல்வனே அவரின் கண்முன்னுலேயே அடித்து நொருக்கினர் பற்பல வீரர்களேக் கடலிலே வீசியெறிந்தனர் : இன்னும் எவ்வளவோ கொடுமை கஃாச் செய்தனர். இத்தனேக்கும் இலக்கான போதிலும், இலட் சிய வீரர்கள் இவையனைத்தையும் பரிசாகப் பெற்றுக் கொண் டார்களே தவிர, பதிலுக்கு அவர்களுக்குக் கசையடி கொடுத்தா ரல்லர், காடையர்களாற் தாக்குண்ட வீரர்களே, இரும்பு மனிதன் நாகநாதன் சிகிச்சைக்கென வாகனங்களில் ஏற்றி வைத்திய சிாலேக்கு அனுப்பிவைத்தார்.
இத்தனே கொடுமைகளையும் கண்டு பொறுக்காதவளேப் போல், இரங்கிக் கண்ணீர் வடிப்பவளேப்போல் வானிலிருந்து மழையுருவில் கண்ணிர்தான் பொழிந்தாள் தமிழ்த்தாய்
ஆம், இவளின் கண்ணிர் மழையிற் குளித்த வண்ணமாகஇருந்த இடத்தை விட்டு விலகிச் செல்லாதவர்களாக-வீரர்கள் தமது போரைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தனர்.
பரபரப்பும் விநுவிறுப்பும் நெருக்கடியும் நிறைந்த இந்த நேரத் திலேதான் திருக்கோனமலேயிலிருந்து வீரர் படையுடன் புறப் படவிருந்த திரு, அமிர்தலிங்கத்திற்கு அவரது நெஞ்சை அசைக் கும் செய்தியொன்று கிடைத்தது. அவருடைய அன்பு மனேவி மங்கையர்க்கரசியார் அவசர அவசரமாக மூளாய் ஆள்பத்திரி பிற் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், முதற் பிரசவத்தை எதிர் நோக்கியிருந்த அவரது நிலேமை சிக்கல் நிறைந்ததாக இருப்ப தாகவும் வந்த செய்தியே அது அமிர்தலிங்கம் சற்றுத் திகைத்து விட்டார் மறுகணமே அதிலிருந்து தன்னே விடுவித் தும் கொண்டார் சற்று நேரம் சித்தித்தார்.
கட்டிய மனேவி அவருக்குக் கட்டிக் கரும்பு. அவளுடைய கண்களிலே நீர் வழிந்தால் அவருடைய நெஞ்சிலே இரத்தம் வடியும் ஆபத்துக் கட்டத்தில் அவளுடைய கட்டிலுக்குப் பக் கத்தில் அவர் இருந்தால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும்: அந்தத் தெம்பில் ஆபத்தையும் தாண்டி விடுவாள். முதற் குழந்தையின் முகம் பார்க்க வேண்டும் அதன் முத்து முகத்திலே முத்தம் பதிக்க வேண்டும் என்ற ஆசை அவருடைய நெஞ்சிலே முட்டி மோதிக்கொண்டிருந்தது.
அதே வேளேயில், ஆயிரமாயிரம் தமிழ்த்தாய்மார்கள் எதிர் காலத்தில் அடிமைகளாக - அநாதைகளாக-ஆக்கப்படுகின்ற

Page 26
காட்சி அவர் கண்முன்னே தோன்றியது; எதிர்காலத்தில் "எந்தை பும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே- அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மடிந்ததும் இந்நாடே' எனப் பாடமுடியாத நிலயில் எந்தனேயோ இளந்தமிழ்க் குழந்தைகள் இந்நாட்டில் இருந்து தவிக்கப் போகிருர்களே என்ற ஏக்கமும் நிறைந்தது.
தன் மனைவியைத் தற்காலிகமாக மறந்தார்; அவள் படும் வேதனேகளே மறந்தார் தன்னுடைய உணர்ச்சிகளே மறைத்துக் கொண்டார் குறைத்துக் கொண்டார் மிதித்துக் கொன்ருர், காலிமுகத்திற்குச் செல்பவர்கள் காலிகளின் கைப்பட்டுக் காலன் வாய்ப்படக்கூடிய சூழ்நிவே இருப்பதைத் தெரிந்து கொண்டும், கன்னித்தமிழ் காக்கத் தயாரான திருமலே வாழ் கண்ணியப்படைக்குத் தலைமை தாங்கித் திருமுக வண்டியிலேறிக் களிப்போடு காலிமுகத்துக் களம் நோக்கிச் சென் ருர் அமிர்த விங்கம் !
காலிமுகத் திடலிலே கன்னித்தமிழ் காக்கும் கடமை வீரர் கள் க்ளப்போர் புரிந்துகொண்டே இருக்கின்றனர். இந்த நேரத் தில் இவர்களுக்கு ஒர் இனிப்பான செய்தி வந்து சேர்ந்தது. அஞ்சா நெஞ்சன் அமிர்தலிங்கத்தின் தலமையில் திருமலேப் படை திருமுக வண்டியில் வந்து கோட்டைப் புகையிரத நிலை யத்திலிருந்து, கால்நடையாகக் காவிமுகத்துக் களம் நோக்கி வந்துகொண்டிருக்கும் செய்தியே அது, இதை அறிந்ததும் போர் புரிந்துகொண்டிருந்த வீரர்கள் இன்னும் உஷா ராஞர்கள்; அவர்க ளது உள்ளத்தில் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது:
கண்ணுக்கெட்டிய தூரத்தில் அமிரின் படை வருவதைக் கண்ட களத்துவீரர்கள் உணர்ச்சி மேவிட்டவர்களாய், "ஆணவம் பிடித்த ஆட்சியாளர்களே சூது செய்யினும் பாது செய்யினும் அஞ்சோம் அஞ்சா நெஞ்சன் அமிர்தளிங்கன் படையுடன் வருகின்ருன் பாரீர்! பாரீர் இனி அஞ்சவே மாட்டோம், இவ்விடத்தை விட்டு அகலவே மாட்டோம்" என வானதிரக் கோஷமிட்டனர்.
வந்து கொண்டிருந்த படையினரோ, "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு வருவது வரட்டும், பார்ப்போம் ஒரு கை" எனக், கையை மேலே உயர்த்தி உரக்கக் குரலெழுப்பியபடி அமிர்தலிங்கம் வர, அவர் பின்ஞல் இவ் வீரர்களும் அவ்வாறே கைகளே உயர்த்தி உரக்கக் குரலெழுப்பியபடியே வந்துகொண் டிருந்தனர்.
அரசின் காவற்படையினர் செய்வதறியாது திசுைத்து நின்றனர். இப்போது அமிர்தலிங்கத்தின் படை வந்துவிட்டது : களத்திற் குதிக்க ஆயத்தமாகிவிட்டது.

- 3 -
தந்தை செல்வாவின் கட்ட8ளப்படி தனயர்கள் அமிர்த விங்கமும், மன்னுர்ப் படையுடன் வந்து சேர்ந்து சொல்வின் செல்வர் இராசதுரையும் ஆகப் பின்வரிசையில் போராட்ட வீரர்களுக்குப் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டனர். காடையர் களிஞல் வீரர்கள் காலித்தனமாகத் தாக்கப்படாமல் அமிர்த விங்கமும், இராசதுரையும் பாதுகாக்கும் பொருட்டே தந்தை செல்வா இவ்வேற்பாட்டைச் செய்தார். அஞ்சாநெஞ்சன் அமிர்த விங்கம் வந்துவிட்டான், அங்கு சென் ருல் அவனும் அவனது படையும் எம்மைப் பந்தாடிவிடும் என்ற ஐயத்தினூலோ என் னவோ காடையர்கள் அவ்விடத்திற்குப் பின்னர் கால் எடுத்து ஒவக்கவில்ஃ.
ஆயிலும் அக் காடையர் தமது காடைத்தனத்தை மீண்டும் காட்டத் தவறவில்லே. கண்ணுடித்துண்டுச் சரை கஃாயும், கருங் கற்களேயும் காற் செருப்புக்களேயும், சேற்றையும், வேறு கழிவுப் பொருள்களேயும் எடுத்து அவர்களே நோக்கி வீசியெறிந்தனர். அவர்கள் வீசிய பெரும் கற்களில் ஒன்று அமிர்தலிங்கத்தின் நெற்றியைப் பதம் பார்க்க விரும்பிவிட்டது போலும் வேகமாக வந்த அந்தக் கருங்கல், விவேகமான அமிர்தலிங்கத்தின் நெற்றி யைத் தாக்கி அதனேப் பிளந்தெறிந்தது. நெற்றி பிளந்ததுதான் தாமதம், கட்டிய அனே உடைந்து நீர் பீறிட்டுப் பாய்வது போல், சுருங்கல் பிளந்த அயிரின் நெற்றியிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. இச் சம்பவத்திற்குச் சற்று முன்னுல் அங்கு வந்துவிட்டனர் திருவாளர்கள் பொன்னம்பலமும்,சுந்தரலிங்கமும்
அமிர்தலிங்கத்தின் நெற்றியிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்வதைத் தடுத்து நிறுத்த விரும்பியவராகப் பெரியார் சுந்தர விங்கம் அவர்கள் தமது கைக்குட்டையைச் சட்டென எடுத்துப் பட்டெனக் கட்டுப் போட்டார். இப்போது அமிர்தலிங்கத்தின் நெற்றியிலிருந்து இரத்தங் கசிவது சுந்தரலிங்கத்தின் கைக் குட்டைக் கட்டால் ஓரளவு கட்டுப்பட்டு விட்டது.
'உண்மையைக் கைக்கொள்' என்ற தத்துவப் பொரு எமைந்த சத்தியாக்கிரகம், காடையர்களின் கல்மழை பொழியப் பொழிய நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இவ்வளவு கொடுமைகளைக் காடையர்கள் செய்தும், சட்டத் விதயும் அமைதியையும் ஒழுங்கையும் திலே நிறுத்த வேண்டிய கடமையுள்ள அரசோ-அரசின் காவற் படைகளோடாள்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கையே பார்த்துக்கொண் டிருந்தன. இந்த அக்கிரமம்-இந்த அநீதி உலகத்தில் எந்த அரசாட்சியில் நடைபெற்றிருக்க முடியும் ?

Page 27
- 32
குருதி கொப்பளித்த நிவேயிலும் நிலே குவேயா நிமிர்ந்த நெஞ்சன் அமிர்தலிங்கம் களப்போர் புரிந்துகொண்டிருந்தார். இக் கடமை வீரஃனத் தன்னருகே அழைத்தார் தந்தை அவர்கள் : தயங்கா தே எனத் தட்டிக் கொடுத்தார்.
பாராளுமன்றத்திற்குச் சென்று யார் யார் மசோதாவை எதிர்த்துப் பேசுவது என்பது பற்றி அமிர்தலிங்கம் உட்பட அனேத்துத் தஃலவர்களும் ஒன்றுகூடி ஆலோசித்தனர்.
மற்றைய தஃபவர்களின் ஆடைகளும், உடல் நிவேகளும் படு மோசமாய் இருந்தமையிஞல், திருவாளர்கள் பொன்னம்பலம், சுந்தரவிங்கம் ஆகியோருடன் திரு. அமிர்தலிங்கமும் ஆட்சி மன்றத்தினுட் பிரவேசித்து, மசோதாவை ஆட்சேபித்துப் பேசு வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இம் மூவரும் அதனே ஏற்றுக் sa TETL:Tri .
அதிகாலே ஆறு மணியிலிருந்து நண்பகல் ஒரு மணிவரை கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் மூழ்கி, காடையர்களின் காவித்தனமான தாக்குதலுக்கும் ஆளாகி, அன்னேத் தமிழை அரியனே ஏற்றப் போராடிய விரத்தமிழர் படையினரை அவரவர் போய்ச் சேரவேண்டிய இடங்களுக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பும் பணியில் திருவாளர்கள் அமிர்த விங்கமும், சுந்தரலிங்கமும் பொன்னம்பலமும் ஈடுபட்டனர் எல்லோரையும் அனுப்பியானபின் அக் காலிமுக மைதானத்தில் இம் மூவருமே ஆட்சி மன்றத்தினுள் நுழைவற்காகத் தயாராக நின்றுகொண்டிருந்தனர்
ஆணுல் ஆட்சி மன்றத்தினுள் நுழைய முடியாதவாறு அதனேச் சுற்றிலும் காடையர்களும் பொதுமக்களுமாகப் பல்லாயிரம் பேர் குழுமி நின்றனர்" அவர்களிற் காடையர்கள் அருவருப் பான வார்த்தைகளே அள்ளி வீசினர் கூக்குரலிட்டனர் வெறி நாய்களாகக் காட்சியளித்தனர்.
இவர்களுக்கு மத்தியில் நடந்து செல்வது முடியாத காரியம் என்பதை உணர்ந்த "சுந்தரலிங்கம் அவர்கள் தமது மிகப் பெரிய-திறந்த ஜீப் வண்டியில் சாரதிக்குரிய ஆசனத்தில் ஆபிரகாம் லிங்கனப்போற் கம்பீரமாக அமர்ந்துகொண்டார். அமிர்தலிங்கத்தைத் தன் அருகில் அமரச் சொன்னுர். இதற்குள் திரு. பொன்னம்பலம் பொலிசாருடன் ஏதோ " காரைக் கான வில்லே' என்று கதைத்துக்கொண்டிருந்தவர் வேருெரு காரில் ஏறிச் சென்றுவிட்டார். ஆதலால் இவர்கள் இருவரும் ஆட்சி மன்றத்தினுட் செல்வத் தெற்குப்புறவாசல்ே நோக்கித் தமது ஜீப் வண்டியைச் செலுத்த ஆயத்தமானுர்கள். தமக்குத் துணேயாக எமது உடன்பிறப்புக்களாம் மலேயகத்துத் தமிழ்
வீரர்கள் இருவரைத் தமது வண்டியில் ஏற்றிக் கொண்டனர்.

அஞ்சாத சிங்கம் சுந்தரலிங்கம் ஜீப் வண்டியைச் செலுத்தஅஞ்சாத நெஞ்சன் அமிர்தலிங்கம் அவரருகே கம்பீரமாக அமர்ந்துகொள்ள-அவர்களின் மெய்க்காப்பாளர்களோப் போல் இரு இந்தியத் தமிழ் வீரர்கள் அவர்களுக்குத் துனேயாக விற் றிருக்க=இவர்களேச் சுமந்துகொண்டு ஜீப்வண்டி மிகுந்த பேரி ரைச்சலோடு ஆட்சிமன்றத்தின் தெற்குப்புற வாயிலே நோக்கி விரைந்தது.
இச்சமயம் நாலாபுறத்தினின்றும் இவர்களது வண்டியை நோக்கிக் காடையர்கள் பலர் கருங்கற்களே வீசினர். இக்கற்கள் எமது இனம் காக்கும் தலைவர்களேத் தாக்காதவாறு தம் கரங் களால் அவற்றைத் தட்டித் தடைசெய்து கொண்டிருந்தனர் துணிச்சல் மிக்க அந்த இரு இந்தியத் தமிழ் வீரர்கள்! ஆயினும் பாவிகள் வீசிய அக்கற்கள் முழுவதையும் தடுத்து, நம் தஃலவர் களேக் காப்பாற்ற இந்த இரு வீரர்களாலும் முடியவில்லே, காவியொருவன் வீசிய கருங்கல் ஒன்று இவ்விரு வீரர்களேயும் ஏமாற்றிவிட்டு அமிர்தலிங்கத்தின் தலை உச்சியிற் போய் விழுந்து தாக்கியது. உடனே அமிர்தலிங்கத்தின் உச்சியிலிருந்து இரத்தம் சீறிப் பாய்ந்தது. நெற்றியிலிருந்தும், உச்சியிலிருந்தும் பாய்ந்த இரத்தம் அவரது கன்னங்கள் தோட்பட்டைகள் வழியாகவந்து ஆடைகளே நனைத்தது. இதனுல் அவர் அணிந்திருந்த ஆடை கள் இரத்தச் சிவப்பு நிறமாக உருமாறியது. உச்சியிலிருந்து பீறிட்டுப் பாய்ந்த இரத்தத்தை உடனே சுட்டுப்படுத்திவிட்டுத் தான் நாம் பாராளுமன்றம் செல்லவேண்டும் எனத் திருவாளர் சுந்தரலிங்கத்திடம் தெரிவித்தார் திருவாளர் அமிர்தலிங்கம், உடனே சுந்தரலிங்கம் அவர்கள் தமது ஜிப்பை மிக விரைவாகத் தமது இல்லம் நோக்கித் திருப்பிச் செலுத்தினுர்,
அவரது இல்லத்தில் அமிர்தலிங்கத்தின் இரத்தப் பெருக்குக்கு அவசர அவசரமாக ஓர் துணியால் கட்டுப்போட்டு அதனேக் கட்டுப்படுத்திஞர் திருவாளர் சுந்தரலிங்கம்
அதன்பிறகு அங்கிருந்து தொலேபேசி மூலம், அன்று பிரதி நிதிகள் சபையின் சபாநாயகராகப் பதவிவகித்தவரும், முன்னுள் புத்தளம் வாழ் மக்கள் பிரதிநிதியும், கடந்த 3-7-74இல் கால மானவருமான மாண்புமிகு இஸ்மாயில் அவர்களுடன் தொடர்பு கொண்டனர். தொடர்பு கொண்டு, தாம் பாராளுமன்றம் வரவிருப்பதாகவும், ஆணுல் வரமுடியாதவாறு சனக்கூட்டம் தடையாக இருப்பதாகவும், உடனே தகுந்த பாதுகாப்புடன் நாம் பாராளுமன்றம் வர ஏற்பாடு செய்யவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர். இதனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர் இஸ்மாயில்
த 5

Page 28
- 34
அவர்கள், ஆயுதம் தாங்கிய சில பொரீஸ் அதிகாரிகளேயும், அவர்களால் புத்த காலங்களில் உபயோகிக்கப்படும் மிகப்பெரிய பாதுகாப்பான பொலீஸ் வண்டியையும் அனுப்பிவைத்தார்:
அவ்வண்டியிலேறிப் பொலீசாரின் பவத்த பாதுகாப்போடு திருவாளர்கள் அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் ஆட்சிமன்றம் சென்றனர்.
அமிர்தலிங்கம் நெற்றியிலும் உச்சியிலும் கட்டுப்போட்ட காயங்களுடன் இரத்தம் தோய்ந்ததால் சிவப்பு நிறமெடுத்த ஆடைசளுடன் ஆவேசங் கொண்டவராய், அஞ்சாத சிங்கமாய், வீறுபெற்றவராய், பீடுநடையுடன் ஆட்சிமன்றத்தினுள் அடி யெடுத்து நடந்து சென்று கம்பீரமாகக் காட்சியளித்து நின்ருர்,
இவரது வரவைக் கண்ட தோற்றத்தைக் கண்ட பிரதி நிதிகள் சபையிலிருந்த அத்தனே உறுப்பினர்களும் அப்படியே அசந்துபோய்விட்டனர். இரண்டு மூன்று நிமிடங்கள் வரை அங்கு ஒரே நிசப்தம் இந் நிசப்தத்தை நீக்க விரும்பியவராய், சபையி லுள்ளோரின் மனத்தை வேறு திசையிற் திருப்ப முயன்றவராய் அஞ்சா நெஞ்சன் அமிர்தலிங்கத்தின் அந்த வீரக்காட்சியைக் கண்டு பின்வருமாறு சொன்ஞர் பிரதமர் பண்டாரநாயக்கா,
** HODOLITabl c. Wound 5 of Wir?".
"யுத்த காலத்து வீரர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற வீரத் தழும்புகள்! " என நையாண்டியாகவே சொன்னுர்
இதை, தான் சொன்னதும் அவையிலிருந்தோர் தள் கருத்தை ஆதரித்து அமிர்தலிங்கத்தைப் பார்த்து ஏளனச் சிரிப்பை உதிர்த்திடுவர்; அதைப் பார்த்து அமிர்தலிங்கம் அவ மானம் தாளாது தவேயைச் சாய்த்திடுவான் நாமனேவருமே அவனே-அவனது செய-ேஅலட்சியப்படுத்தி அனுப்பிவிடலாம் என மனசுகோட்டை கட்டிஞர் பிரதமர் பண்டாரநாயக்கா
ஆணுல், அவரது மனக்கோட்டை மணற்கோட்டையாகவே மாறிவிட்டதனே. அவையிலிருந்தோர் ஏதும் பேசாமல்-ஏதும் சுருமள்- உண்மையான இரக்கத்தோடு அமிர்தலிங்கத்தைப் பார்த்துத் தமது ஆழ்ந்த அதுதாபத்தைத் தெரிவிப்பதுபோற் பார்த்த பார்வையும் அத்தோடு விட்டுவிடாமல் இந்தப் பாவம் எதிர்காலத்தில் உம்மையும் எம்மையும் "எம்மினத்தையும் எவ் வளவு கேவலப்படுத்தப்போகின்றது உலகம் எம்மைப் பார்த்து எவ்வாறு கணிக்கப்போகின்றது; இவர்களுக்கு நாம் செய்த பாவம் எங்களேயெல்லாம் சும்மா விட்டுவிடுமா தோழா என்ற

- 35 -
தோர8ாயிற் கேட்பதைப்போல் அவர்பால் விழுந்த அவர்களது கருத்தமைந்த பார்வையும் கண்டு அவரது முகத்தில்தான் அசடு வழிந்தது அவமானம் பிறந்தது.
அதன் பிறகு அமிர்தலிங்கம் அம் மசோதாவை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார்;
அவர் பேசிஞர் :
"நேற்றுவரை சிங்களத்தோடு தமிழுக்கும் இருந்து வந்த அற்ப சொற்ப உரிமையைத் தானும் இல்லாமற் செய்யவே இன்று சிங்களம் மட்டும்" மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். நேற்றுவரை இந்நாட்டில் இருந்துவந்த அமைதியை இன்ருேடு இல்லாமற் செய்யவே வழிவகுத்து விட்டிருக்கிறீர்கள். ஒரு நாட் டின் சட்டத்தையும், ஒழுங்கையும், அமைதியையும் கட்டிக் காக்க வேண்டிய அரசே, சட்டமின்மையையும் ஒழுங்கின்மையை யும், அமைதியின்மையையும் நாட்டிலே ஏற்படுத்திவிட்டது. உங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட-உங்கள் கண்முன்னுவேயே நடந்துவிட்ட-அமைதியின்மையும், சட்டமீறலும், ஒழுங்கீனமும் நீங்கள் இம்மசோதாவைச் சட்டமாக்காது நிறுத்தும்வரை ஒய மாட்டாது; காட்டாற்று வெள்ளம்போல் ஓடியே தீரும் இதனுல் விளேயப்போகின்ற விபரீதங்களுக்கு நீங்களே முழுப் பொறுப்பாளிகளுமாவீர்கள். ஆகவே, உடனே இக்கோடிய மசோதாவைச் சட்டமாகக் கொண்டுவராது நிறுத்துங்கள் இதற்கு நீங்கள் மறுத்தால் இந்த நாட்டில் தொடர்ந்து இனக்கலவரம் வெடிக்கும் இனப்பகை தழைக்கும் இரத்தக் களரி பிறக்கும் இந்நாடு முழுவதும் இரத்த ஆறு பெருக் கெடுத்து ஒடும் இது நிச்சயம்" என விராவேசமாக முழங் விஞர்
அன்றைய விவாதம் முடிந்து அன்ேவரும் வெளியேவர விழைந்தனர். ஆஞல் யாரும் வெளியே வரமுடியாதவாறு காடையர் கூட்டம் எதிர்க்கோவுமிட்டவாறு கூச்சல் போட் டதி
முக்கியமாக எமது தமிழ்த் தலைவர்களும் மசோதாவை எதிர்த்து வாதிட்ட சிங்களத் தலைவர்களான திருவாளர்கள்
டாக்டர் என். எம். பெரேரா, LL கொல்வின் ஆர். டி. சில்வா. டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா, பெர்ணுட் சொப்ரா, பீட்டர் கெனமன் போன்ற பலரும் வெளியே
வரமுடியவில்லே வந்தால் காடையர்களின் இரத்த வெறிக்கு இவர்கள் ஆளாக நேரிடும்.
இதை உணர்ந்த சபாநாயகர் இஸ்மாயில் அவர்கள் தமது அறையில் இவர்கள&னவரையும் அமரச்சொல்லிவிட்டு, ஆயுதந்

Page 29
-- 36 --
தாங்கிய பொனீஸ் அதிகாரிகளேப் பொலீஸ் வாகனங்களோடு வருமாறு சுட்டளேயிட்டார். அவரது பணிப்பிற்கினங்க மிகுந்த பாதுகாப்பான வண்டிகளுடன், பெருமளவு ஆயுதங்களேத் தாங்கியவாறு பொலீசாரும், உயர்தர பொலீஸ் அதிகாரிகளும் பாராளுமன்றக் கட்டிடத்தை வந்தடைந்தனர்:
இவர்கள் வந்த பின்னரே உள்ளே இருந்த நம் தவேவர்களும் சிங்களத்தலேவர்கள் சிலரும் வெளியே வர முடிந்தது. ஒவ்வொரு வரையும் அவரவர் போய்ச் சேரவேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்புடன் பொலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்த அமளிதுமனிகளுக்குப் பிறகு முன்னுள் காவலூர்த் தொகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதி காலஞ்சென்ற அல்பிரட் தம்பிஐயா அவர்களின் மிகுந்த வற்புறுத்தலின்பேரில் அவருட னேயே திரு அமிர்தலிங்கம் தமது காயங்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கென ஆஸ்பத்திரிக்குச் சென்ருர்,
அங்கு சிகிச்சைபெற்று முடிந்ததும் அடுத்தநாட் காலே யாழ்ப்பான நீதிமன்றத்தில் ஒரு கொலேவழக்குச் சம்பந்தமாகத் தான் ஆஜராகவேண்டுமென்ற ஞாபகம் அவருக்கு வந்தது: அத்துடன் தனது அருமை மனேவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருப்பதும் அவரது ஞாபகத்திற்கு வந்தது. அதுவரைக்கும் கன்னித் தமிழ்க் கன்னிக்காகவே போராடிக்கொண்டிருந்ததாற் சுட்டிய மனேவியைக்சுட மறந்துவிட்ட கடமைவீரன், உடன் விமானத்தில் யாழ்ப்பாணம் பறந்து சென்ருர்
யாழ்ப்பாணம் வந்திறங்கிய அமிர்தலிங்கம் நேரே ஆஸ்பத் திரிக்குச் சென்று தனது மனேவியை அணுகினூர், இரத்தக் காயங் களுடன் கணவனேக் கண்ட இவரது மனேவியார் பயந்துவிட்டார் மனம் வருந்திவிட்டார். இதனுல் இவருக்குக் காய்ச்சலே வந்து விட்டது. தனது மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு அடுத்த கடமையை நிறைவேற்றத் தயாரானுர்,
யாழ்ப்பான நீதிமன்றத்தில் தான் ஏற்றுக்கொண்ட ஒரு கொலேவழக்குச் சம்பந்தமாக வாதாடி மரணதேவியின் வாயில் அகப்படவிருந்த தன் கட்சிக்காரரை விடுதலே செய்வித்தார். இதற் கிடையில், இவரும்-இதர தலைவர்களும்-தமிழ்த் தொண்டர் களும்-காலிமுகத் திடலிலே காடையர்களினுல் தாக்கப்பட்ட செய்தி தமிழர் வாழும் பிரதேசங்களிலெல்லாம் காட்டுத் தீ போற் பரவிவிட்டது. உள்ளங் குமுறிக் கொதிப்படைந்த தன் மானத் தமிழர் கூட்டம் ஒன்று உணர்ச்சி மேலீட்டால், ஆத்திர மடைந்து-ஆவேசங்கொண்டு-பாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவில் அப்போது இருந்த தலேமைத் தபாற்கந்தோரைத்

- 37 -
தாக்கவென் முற்றுகையிட்டது. இதனேயறிந்த அமிர்தலிங்கம் உடன் அவ்விடத்தை அடைந்தார்.
அமிர்தலிங்கத்தைக் கண்ட அந்தத் தமிழர் கூட்டத்தின் உணர்ச்சி இன்னும் இருமடங்காக அதிகரித்தது தலைமைத் தபாற்கந்தோரைத் தாக்கவும் ஆரம்பித் தது. உடனே அமிர்தலிங்கம் அவர்கள் தான் சென்ற காரின்மேல் ஏறி நின்று கொண்டு, அவர்களேச் சமாதானப்படுத்தும் பணியை மேற் கொள்ளலானுர்,
"அருமை நண்பர்களே ஆண்மைச் சிங்கங்களே ! அமைதியைக் கடைப்பிடியுங்கள், பொறுமையைக் கைக் கொள்ளுங்கள் எங்கள் த&லவர்கள் சிங்களக் காடையர்களாற் காலித்தனமாகத் தாக்கப்பட்டபோதிலும் நாம் மேற்கொண்ட போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துதான் விட்டிருக் கிறது. தலைவர்கள், தொண்டர்கள் யாவரும் எதுவித ஆபத்து மின்றிச் சுகமாகவே இருக்கிருர்கள். ஆதலால் நீங்கள் ஆத்தி ரத்திற்கு அடிபணியாது அமைதியைக் காப்பாற்றுங்கள். நீங்கள் ஒரு நொடிப்பொழுதில் இந்தத் தபாற்கந்தோரைத் தாக்கித் தகர்த்து விடலாம் ஆணுல் அடுத் தகனம் உங்களுக்கம், இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் உங்கள் உடன் பிறப் புக்களுக்கும் நேரக்கூடிய பேராபத்துக்களேக் கொஞ்சம் சிந்தித் துப் பார்க்கவேண்டும் அரசாங்கமும், அதன் படைகளும் சிங்களக் காடையர்களும் எதையும் செய்யத் தயங்கமாட் டார்கள் எமது போராட்டம் நேற்றுடன் முடிந்துவிடவில்லே இனித்தான் எமது போராட்டம் தொடங்கப்போகிறது. அப் போராட்டத்தில் நாம் செய்யவேண்டிய தியாகங்களோ பற்பல எத்தனையோ இன்னல்களே நாம் அனுபவிக்க வேண்டி வரும்: ஆதலால் என் உயிரினுமினிய நண்பர்களே! எமது எதிர்காலப் போராட்டத்தின் நலனுக்காக-ஏனைய பாகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ்ச் சகோதரர்களுக்காக - இன்று நீங்கள் எடுத்த முயற்சியை நிறுத்துங்கள் அமைதியாகக் கலந்து உங்கள் இல்லங்களுக்குச் செல்லுங்கள் உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவைப்படும்போது தாமாகவே உங்களுக்கு அழைப்பு அனுப்புவோம். அதுவரைக்கும் அமைதி காத்துக் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளுங்கள் என்று உங்களேயெல்
லாம் இருகரங்கூப்பி இரந்து வேண்டுகிறேன்"
அமிர்தலிங்கத்தின் இவ்விவேக முழக்கத்தைக் கேட்ட தமிழர் கூட்டம், இசையில் மயங்கிய நாகம்போல் அடங்கி அமைதியாகக் துலேந்து செல்லவாரம்பித்தது. தமிழர் கூட்டம் கலேந்து சென்ற
பின்னரே, அமிர்தலிங்கம் தனது இல்லம் சென்ருர்,

Page 30
- 38 -
ஆட்சி மன்ற விவாதத்திற் கலந்துகொள்ளவேண்டியிருந்த திஞல், அடுத்த விமானத்தில் கொழும்பு புறப்படவிருந்த அமிர்தலிங்கம் தனது அன்பு மனேவியிடம் விடைபெறச் சென்ருர், "அத்தான், எமக்குப் பிறக்கப் போகின்ற மழகிலச் செல்வத் தைப்போல் இன்னும் எத்தனையோ மழ&லச் செல்வங்கள் இந்த மண்ணிற் பிறக்கப்போகின்றன. அத்தனே செல்வங்களுக்கும் எதிர்காலம் இருண்ட காலமாகாமல் ஒளிமயமான காலமாக மாற்றுகின்ற பணியிலிருந்து இம்மியேனும் விலகாதீர்கள்! இப் பொழுதே புறப்படுங்கள் மசோதாவை எதிர்த்து வாதாடி, எதிர்த்து வாக்களியுங்கள்' என உற்சாகமூட்டும் வார்த்தை களே உதிர்த்தது மனேவியார் மங்கையர்க்கரசியாரின் உதடுகள்
மனேவியின் உற்சாக வார்த்தைகளேக் கண்டு, புதிய உத்வேகம் பெற்றவராய், அந்த அன்புக்கினியாளிடம் விடைபெற்றுப் புறப்பட்டார் அமிர்தலிங்கம். கொழும்பு சென்டூர் கொஞ்சு தமிழைக் கொல்லவந்த கொடுஞ் சிங்கள் மசோதாவை எதிர்த் துப் பத்து நாட்கள் இரவு பகலாக, ஒய்வு ஒழிச்சவின்றி வாதிட் டார். 15ஆந் திகதி காவே 5 மணிக்கு அதனே எதிர்த்துத் தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு வீடு திரும்பினுர்,
இதற்கிடையில் விமானமார்க்கமாகத் தினமும் தம் மனே வியை வந்து பார்த்தபோதிலும், அவளோடு ஆறுதலாக அன் பொழுகப் பேசமுடியவில்லே அவரால் அந்தளவுக்கு அருந் தமிழ்க் கடமை அவரை ஆட்கொண்டுவிட்டது.
பதினேந்தாம் திகதி வாக்களிப்பு முடிந்து வீடு திரும்பிய பின்னர்தான் தனது மனேவிக்குச் சத்திர சிகிச்சை செய்வதற் கான அனுமதியை அளிக்க இவரால் முடிந்தது என்ருல் பார்த் துக்கொள்ளுங்களேன்!
கன்னித் தமிழ் காக்கவெனக் களம் புகுந்த இக் கடமை
வீரன் தான் பெற்ற அழகிய ஆண் மழவக்குக் காண்டீபன் எனப் பெயர் சூட்டிக் களிப்படைந்தார்,
திருமலேயில் IfID) !
தமிழ்த் தலைவர்கள் எதிர்த்தனர் தமிழ்ப் பிரதிநிதிகள் எதிர்த்தனர். தமிழ்ப் பிரமுகர்கள் எதிர்த்தனர் தமிழ்ப் பெரு மக்கள் எதிர்த்தனர்; நடுநில தவரு நல்வெண்ணங் கொண்ட சிங்களப் பிரமுகர்கள் சிவரும் எதிர்த்தனர். இத்தனே எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் இந்த நாட்டில் "சிங்களம் மட்டும்" மசோதா, சட்டமாக்கப்பட்டது செந்தமிழ் சாக்கடையில் தள்ளப்பட்டது

39
"எதிர்த்து வாக்களித்துவிட்டோம் எம் கடமை முடிந்து விட்டது" எனச் சொல்லித் திருப்திப்படவில்லேத் தமிழரசுக் கட்சியினர். எம் செயலாவது இனி யாதொன்றுமில்லே இறைவா சுச்சி ஏகம்பனே" என்று வெறும் வேதாந்தம் பேசிச் சோர்ந்து சும்மா இருந்துவிடவில் லேத் தமிழரசுக் கட்சியினர். எதிர் காலத்தில் தனிச்சிங்களச் சட்டம் இந்த நாட்டில் தமிழ் பேசும் பெருங்குடி மக்களே எவ்வளவு கொடுமையாக வாட்டி வதைக்கும், எவ்வளவு கடுமையாக மிரட்டி மிதிக்கும் என்பதை நன்குனர்ந்து, தமிழ் மொழியின் உரிமைகளேப் பெற்றுக் கொடுக்கும்வரை ஒயமாட்டோம், தலே சாயமாட்டோம் எனச் சூளுரைத்துச் சுறுசுறுப்புடன் இயங்கினர்.
புராண - இலக்கிய - வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோன மலேயிலே வரலாறு கண்டிராத மாபெரும் மாநாடொன்றை நடத்தினர் நம் தமிழரசுக் கட்சியினர் பருத்தித்துறையிலிருந்து திருக்கோவில் வரையுள்ள அத்தனே கிராமங்களிலிருந்தும் ஆயிர மாயிரம் உணர்ச்சிமிகு தமிழ் மக்கள், "திருமலேக்குச் செல்லு வோம், சிறுமை அடிமை வெல்லுவோம்" என்றும்,
கன்னி யான தமிழி லானே
கதிரி பங்கு காலமும் உன்னே பன்றி யொருமொ ழிக்கும்
உலகி வடிமை யாகமே. என்றனவும் போன்ற நவாலியூர், பண்டிதர் திரு. சோ. இளமுருகனுர் போன்ருேர் இயற்றியளித்த இன் எழுச்சிக் தேங்களே இசைத்துக்கொண்டு நூற்றுக் கணக்கான மைல்களே நடத்து - இடத்துக்கிடம் தஃலவர்கள் வைத்த சிறுசிறு கூட்டங்களிற் கலந்து - காடு மேடுகளேயும், ஆறு குளங்களேயும் கடந்து - கொட்டும் மழை யிலும் பணியிலும் நனே ந்து - கொளுத்தும் வெயிலிற் காய்ந்து = சுழன்றடிக்கும் குருவளியில் மிதந்து-சென்றனர்.
வீதியெல்லாம் மகர தோரணங்கள் வீடெல்லாம் பூரண கும்பங்கள் தெருவெல்லாம் - தெருவின் அருகெல்லாம் தெள்ளு தமிழ் முழக்கங்கள் உள்ள மெல்லாம் உயிர்த்தமிழ் உணர்ச்சி; உடம்பெல்லாம் உயர்தமிழ்க் கவர்ச்சி - இப்படியாக ஈழத் தமிழகம் எங்கணும் எழுச்சிக் கோலம் பூண்டிருந்தது.
தத்தை செல்வநாயகம், தமிழறிஞர் வன்னியசிங்கம், இரும்பு மனிதன் நாகநாதன், இலட்சியபுருடர் இராசமாணிக்கம், திருமலுேத்திரன் இராஜவரோதயம் போன்ருேர் முன்னEத் த லேவர்களாக மதிக்கப்பட்ட அவ்வேளேயில் அமிர்தலிங்கம் இரண்டாம் வரிசைக்கே உரியவராயிருந்தர்ரி:இருந்தும் குதுகிய
-- J蔷、。

Page 31
- {{) -
காலத்திற் பெரும்பணி ஆற்றிய அவரைத் தமிழினம் நன்கு தெரிந்துவைத்திருந்தது. தன்மானத் தொண்டர் பல்லாயிரவ ருடன் பொன்னுலேயிலிருந்து புறப்பட்டுத் திருக்கோணமலே வரை புள்ள நீண்ட தூரத்தை நடந்தே வரும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் அவரே என்பதை யும் தமிழினம் உணர்ந்திருந்தது. அதனுல் அவர் நடந்துசென்ற வழியெல்லாம் திரண்டுநின்ற மக்கள் சமுத்திரம் தளபதியவ்ர்களேக் கண்டதும் "தமிழே வருக! தமிழின் அமிர்தமே வருக அமிர்தரே வருக! அஞ்சாத சிங்கமே வருக! வருக!' எனப் பாசத்துடனும் உற்சாகத்துடனும் அவரை வரவேற்றது. அவரும்,
தேனும் பாலும் போல நாளும்
செவியில் நாவில் இனிப்பவள் மானங் காத்து வாணிக் சூட்ட
வருக தொண்டர் வருகவே,
என அழைத்தபடியே ஆர்வத்தோடு சென்ருர், கச்சாயூர் திரு சி. சின் னே யாப் புலவர், இவர் சென்ற காட்சி யி ஜின வர்ணிக்கையில்,
அளவறு தமிழர் தம்மை
யணிபடுத் தமிர்த லிங்கத் தளபதி நிமிர்ந்து சென்ற
தன்மையை யுரைக்கிற் பார்த்தன் துளணி யரிதேர் தூண்டத்
தொடுசரந் தணுகைக் கொண்டு களமிசை பணிகமேற் சென்ற
காட்சியொத் திருந்த தன்றே. எனப் பாடிஞர் என்ருல் இவர் சென்ற காட்சியின் மாட்சி தான் என்னே!
எல்லா இடங்களிலிருந்தும் வந்த எழுச்சிப் படையினர் திருக்கோணமலையிலே ஒன்ரு சுச் சங்கமித்தனர். கள்ளமற்ற தவவர்களின் பின்னுல், எள்ளளவும் வேற்றுமையின்றி உள்ளம் கலந்து வெள்ளமென நின்றது தன்மானத் தமிழர் கூட்டம். தலைவர்கள், 'வெட்டிக் கொண்டு வா" என்ருல் கட்டிக் கொண்டு வருவதற்குக் காத்திருந்தனர் கணக்கற்ருேர், "தமிழ் காக்கும் தலைவர்களே! தமிழரசு கேட்கும் சிங்கங்களே! உங்கள் சுட்டுவிரல் அசைவுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிருேம். ஆணுல் கட்டிய நாய்கள் அல்ல நாம் வடிகட்டிய கோழைகள் அல்ல நாம்; வேளே வந்துவிட்டது; எங்கள் தோள்களுக்கு வேலேயும் வந்துவிட்டது ஆணே இடுங்கள் அரை நொடியில் அனைத்தை யும் முடிப்போம்' எனத் துடிப்புடன் கேட்டனர் எண்ணற்ருேர்,
 

- !! -
பார்வைக்குப் பசுப்போலிருந்தவர்கள் பாய்வதிற் புலியா இறர்கள் ஆணவம் பிடித்த ஆட்சியை எதிர்த்து ஆவேசமாக ஆர்ப்பளித்து முழங்கிஞர்கள் அதியாய ஆட்சி அட்டூழிய ஆட்சி தமிழினத்துக்கு இழ்ைத்துவரும் அநீதிகளே-அக்கிரமங்:- அடுக்கடுக்காக எடுத்துரைத்தன்ர்.
உணர்ச்சிப் பிழம்பாக இருந்த உண்மைத் தொண்டன் அமிர்தலிங்கம் உருமாறிஞர்-குமுறும் எரிமலேயென வெடித் தார்
'சிங்களத்துக்கு மட்டும் சிம்மாசனம், செந்த பிழுக்கு மட்டும் மண்ணுசனமா? சிங்களத்துக்கு அரியாசனமெனில், Grafi të) முக்கும் அதேபோற் சரியாசனம் வேண்டும். வி. மொழி வாழவேண்டுமானுல், செந்தமிழ் மொழி இந்த நாட்டில் மானத் தான் வேண்டுமா? அரசுரிமை என்ன அவர் ேேதி டர்டரோப்பு அவர்கள் இந்த நாட்டிற் காலடி எடுத்து வைக்கு முன்பே, அதாவது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே-அகில இலங்கை யையும் ஆண்டவராயிற்றே அருந்தமிழர். ஆகவே, ௗாக அடங்கி வாழமுடியுமா? ஆண்ட இனமான நாம் மீண்டும் இந்தி நாட்டில் ஆளத்தான் வேண்டும். சிங்களத்துக்கு உள்ள அத்தனே உரிமைகளும் எம் செந்தமிழுக்கும் கிழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட சில: அவனே குரல் என்று இத&ன எண்ணவேண்டாம் : ஒன்றுபட்ட தமிழினத்தின் ஒரே குரல் என்றே இதனே எண்ண வேண்டும், எழுச்சியுற்ற தமிழினத்தை வீழ்சியாக்க முயல்வோர் தாமே தாழ்ச்சியடைவர். "அரசியல் பிழைத்தோர்க்கு அறமே சுற்றுகும்' என்ற செத்தமிழ் மனம் பரப்பும் சிவப்பதிகாரத்தின் இத்துவத்தைச் சிங்கள ஆட்சிய அறிந்துகொள்ள வேண்டும்" எனத் ಙ್ಘಿಘೀ-top ji கத்தை ஆரம்பித்த அமிர்தலிங்கம், தனிச் சிங்களச் சட்டத்தி குல் தமிழினம் அடையப்போகும் ஆபத்துக்காேப் பட்டியல் போட்டுக் காட்டினுர்,
அனேத்துத் தலவர்களும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்து போதிலும் எவருமே நிதானம் இழக்கவில்லே Jill 'FIFL. வில்லே. ஆழ்ந்து சிந்தித்து ஆண்டொன்று கொடுத்தனர்
Trish FLITA
ஆம், நன்ருக அலசி ஆராய்ந்து ஆக்கப்பட்ட நாலு அம்சக் அடுத்துவரும் 1957ஆம ஆண்டு ஆவணித திங்கள் 18ஆம் நாளுக்கு முன் பண்டாரநாயக்கா ஆட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஓராண்டு காலத்திற்குள் ஓங்குபுகழ் ஒப்பாரத் தமி முக்கு அரசுரிமை அளிக்கும், இந்த நாலு அம்சக் கோரிக்கையூை ஆட்சியினர் ஏற்க மறுத்தால், ளேபந்தமிழர் அனேத்துப்பேரும் அறப்போரிற் குதிப்பர் என அரசுக்கு அறிவிக்கும் "திருமத் தீர்மானத்தை" நிறைவேற்றி முடித்தனர்.
Ай — 6

Page 32
-- 42 ܤܡܩ
இறங்கி வந்தார் இலங்கைப் பிரதமர் !
தான் இட்டதே சட்டம் என்ற ரீதியில், தட்டிக் கேட்டாலும் விட்டுக்கொடேன் என்ற வீம்பிற் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதமர் பண்டாரநாயக்கா, தனிச் சிங்களத்தைத் தமிழர் மத்தியில் திணிப்பதற்கான முயற்சிகளே மெல்ல மெல்ல ஆரம் பித்தார். அதன் ஆரம்ப நடவடிக்கையாகப் புதிய மோட்டார் வாகனங்களிற் சிங்கள "சிறி" என்ற எழுத்தைப் பொறிக்கும்படி ஆனே பிறப்பித்தார்.
இவ்வானே கண்டு, ' கட்டுண்டோம் பொறுத்திருப்போம், காலம் மாறும்' என்றிராமல் பொங்கி யெழுந்தனர் பைந்தமிழர் " களத்திற் குதிக்கத் துடிக்கின்ருேம் எம் தோள்கள் தினவெடுக் கின்றன ஆணுல் கட்சித் தலைவர்கள் இன்னமும் கட்டளே பிறப் பிக்கவில்வேயே I " என்ற ஏக்சுத்துடன் களம் புகும் நன்குளே எண்ணிக் காத்திருந்தனர் எண்ணற்ற தமிழ் வீரர்கள். "இதய மற்ற இரக்கமற்ற இந்த ஆட்சியாளரை இறக்கியே தீருவோம். எங்களுக்கு விடிவு வேண்டும், இல்லேயேல் இந்த ஆட்சிக்கு முடிவு தேடுவோம்" என்றிருந்தனர் ஏராளமான தமிழ் மக்கள் இ. த. அ. க.வின் எல்லா இலட்சியங்களேயும் பூரணமாக ஏற்றுக்கொள்ள இடமிருந்தும் மனம் இடந்தராத சில தமிழ் மக்களுங்கூட, கட்சி விடுத்த சில கோரிக்கைகளின் நீதியையும் நியாயத்தையும் உணர்ந்து, அதனே ஆதரிக்க் ஆரம்பித்தனர்.
இவ்வாறு தமிழ்மக்களிற் பலசாரார் " போரிற் குதிக்கும் நாள் எந்நாள் என ஏங்கித் துடித்துக்கொண்டிருக்க, சில சாரார் அதற்கு ஆதரவளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்க நற் றமிழரின் நம்பிக்கையின் சின்னமாம் இ. த. அ. க. துரங்கிக் கொண்டிருக்கவில்லே. துரங்கவும் முடியாது. ஆகவே, அறப் போருக்கான ஏற்பாடுகளே அது செய்ய ஆரம்பித்தது. அன்பு வழியின் பெருமையை-அகிம்சை நெறியிள் தன்மையை-அறப் போரின் நன்மையை-அழகாக விளக்கித் துடிப்புடனிருந்த தமிழரின் சிந்தனேயை அந்தத் தூய வழியிலே திருப்பி விட்டது. " ஒரவஞ்சனே செய்யும் ஒற்றையாட்சியை ஒன்றுபட்டெதிர்ப் போம்" என்பது ஒவ்வொரு தமிழனதும் இதய நாதமானது;
1957ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் இ த. அ. க. வின் அடுத்த அறப்போர் ஆரம்பமானது. பண்டாரநாயக்காவின் ஆனேயை எதிர்த்துத் தமிழ்ஈழம் முழுவதும் பதில் ஆனே விடுத்தார் தந்தையவர்கள் மோட்டார் வாகனங்கள் அத்தனே யிலுமுள்ள ஆங்கில, சிங்கள எழுத்துக்களே அகற்றித் தமிழ் எழுத்துக்களைப் பொறிக்கும்படி தமிழ் மக்களே நோக்கி அன்புக்

- 43 -
கட்டளே விடுத்ததோடு நின்றுவிடாது. தானே முன்னின்று அப்பணியினே முதன் முதலாக யாழ்ப்பானத்திற் செய்தும் வழி காட்டியருளிஞர். தந்தையின் ஆனே கேட்ட தன்யர்கள் மோட் டார் வாகனங்களிற் தண்டமிழ் எழுத்துக்களேப் பொறித்துத் தமிழ்த்தாயைத் தமிழ் ஈழத்திற் பவனிவரச் செய்தனர்.
தந்தையின் பணிப்பின்படி மீன்பாடும் தேன் நாடாம் மட்டக் களப்பிற் சொல்லின் செல்வர் இராசதுரை தலைமையில் நடை பெற்ற இப் புனிதப்போர், வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோன மஃவயிலே திருமலேத் தீரன் இராசவரோதயத்திற்குத் துனேயாக அஞ்சா நெஞ்சன் அமிர்தலிங்கம் துணைநின்று-முன்னின்று நடத்த வெற்றிகரமாக நடந்தேறியது அமிர்தலிங்கம் தன் சொந்த உபயோகிப்பில் உள்ள வெள்ளே நிறக் கொன்சல்" காரில் உள்ள ஆங்கில எழுத்தை அகற்றி அருந்தமிழை அமர்த்தினர். இதனுல் இவர் மீதும், இப்போரிலீடுபட்ட அத்தனே பேர் மீதும் வழக்கு மட்டுந்தான் தாக்கல் செய்ய முடிந்ததே தவிர தமிழ் ஈழத்தில் பவனி வந்த பெரும்பாலான வாகனங்களிலுமுள்ள தமிழ் எழுத்துக்களேத் தடைசெய்ய முடியவில்லே இந்த அரசால்
இப் போராட்டத்தின் வெற்றி சுண்டு பொலீசும், இராணுவ மும் செய்வதறியாது திசுைத்தது. இது கண்டு பண்டாரநாயக்க ஆட்சி பதறியது.
இப் புனிதப் போரின் பின்னர் தமிழ் ஈழம் எங்கணும் ஒர் எழுச்சியே ஏற்பட்டதென்றே சொல்லவேண்டும். தமிழ்ப் பிரதேசத்தின் எந்தப் பகுதிக்கும் எந்த ஒரு அமைச்சரும் வர முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஆயினும், ஆணவம் பிடித்த ஆட்சியின் உதவி அமைச்சர்களில் ஒருவரான திரு எம் பி டி. சொய்சா என்பவர் அப்போது யாழ். நகர மண்டபத்தில் நடைபெற்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் மகாநாட்டிற் கலந்துகொள்ளவென வருகை தந்தார். இவரது வருகையை எதிர்க்க விரும்பிய அமிர்தலிங்கம், கட்சித்தவேமைப்பிடத்தின் உத் தரவு பெற்று உறுதியான இளேஞர் படை ஒன்றைத் திரட்டிப் புகையிரத மார்க்கமாக மந்திரி வருவதை அறிந்து யாழ். புகையிரத நிலையத்தைத் தனது படையுடன் முற்றுகையிட்டார்:
அங்கு வந்திறங்கிய அமைச்சருக்குக் கறுப்புக்கொடி காட்டிக் திரும்பிச் செல்லும்படி இப்படையினரால் எச்சரிக்கை விடப் பட்டது. பொலீஸ் பட்டாளம் பக்கபலமாக இருக்கிறதென்ற

Page 33
- 44
மமளிதியில் மத்திரியார் இவ்வெச்சரிக்கையைப் பொருட்படுத் தாதவராய்க் கார் ஒன்றில் ஏறிப் பவனி வர முற்பட்டார். கொதிப்படைந்த அமிரும் அவர்தம் படையினரும் மந்திரியின் கார் நகரமுடியாதவாறு மண் மாதாவின் மடியிலே படுத்தனர். பொலீஸ் படையின் கைவரிசை கட்டவிழ்த்து விடப்பட்டது. அமிரும் அவர்தம் படையினரும் பொலீசாரின் குண்டாந்தடிக்கு மிகுந்த இலக்காயினர். ஆயினும் அஞ்சிஞர்களில்லே. மந்திரி யாரே நோக்கி, "பைந்தமிழைப் புதைக்கப் படுகுழி அமைத்த பண்-ாரநாயக்கா ஆட்சியின் அரை மந்திரியாரே! உமது படையின் தாக்குதலுக்குப் பயந்து பணிந்து போகக்கூடிய கோழைப் படையல்ல என்படை போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத பகுவைரத் தோள்புடைப் படையே என் படை" என முழங்கிஞர் அமிர்தலிங்கம்
ஒருவாருக அவ்விடத்தை விட்டகன்ற அரை மந்திரியார், யாழ்-நகரமண்டபத்தில் நடைபெற்ற மகாநாட்டிற்கு வருகை திர ஏற்பாடாயிற்று. என்ன ஆச்சரியம் அங்கும் சென்று விட்டதே அமிர்தலிங்கத்தின் படை ஆம், மந்திரியார் மகா நாட்டு மண்டபத்திற்கு வரமுடியாதவாறு வழியைத் தடைசெய்த வாறு தரையில் அமர்ந்துவிட்டது அமிரது படை 'அருந்தமி முக்கு அநியாயம் விழைத்த ஆட்சியின் அரை மந்திரியை இங்கு பேச விடமாட்டோம்; அப்படி அவர் பேச விழைந்தால் ஆர்ப் பாட்டம் நடத்தியே நீருவோம்" என உறுதியாகக் கூறிவிட்டார் அமிர்தலிங்கம். இப்படி அவர் உறுதி கூறிவிட்ட பின் இங்கே அமைச்சனரப் பேசவைப்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்த மகாநாட்டு அமைப்பாளர்கள், "மத்திரியவர்கள் இங்கு பேசமாட்டார். இன்று நண்பகலே அவர் கொழும்பு திரும்பு கிருர்" என உறுதியாகத் திரு அமிர்தலிங்கத்திடம் தெரிவித் தனர். இதன் பின்னரே அமிரும் அவர்தம் படையினரும் அவ் விடத்தை விட்டு அகன்றனர். அரை மந்திரியாரும் எதற்குந் தயாராய் நின்று எதிர்த்த எழுச்சிப் படையின் ஏற்றமறிந்து ஏக்கம் பெற்றவராய்-எந்த மேடையிலும் பேச முடியாதவராய்'ஏமாற்றத்தை அரவஃனத்தவராய் அன்று நண்பகற் புகையிரதத்
திலேயே கொழும்பு திரும்பினுர்,
இந்நிகழ்ச்சிக்குப் பின்னரும் தமிழினத்தின் எதிர்ப்பை எள்ளி நளையாட முற்பட்டது அரசு, இதே 1957ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மமதைகொண்ட ஆட்சியின் ஆறு முழு மந்திரிகள் முத்துக்கொளிக்கும் கடல்சூழ் மன்னுர்ப் பிரதேச மண்ணிற்கு வருகைதந்தனர். இதை அறிந்தது தமிழர் படை திரண்டது அமிர் உட்படப் பல த வேர்கள் தலேமையில் விரைந்தது மன் ஞர் மாவட்டத்தை நோக்கி காட்டியது 'ஆறு மந்திரிசு

- 45 -
குளுக்கும் சுறுப்புச்கொடி முறியடித்தது அவர்கள் தம் உத்தியோக பூர்வ விஜயத்தை திருப்பியனுப்பியது கொழுப்புப் பிடித்த ஆறு மந்திரிகளேயும் கொழும்பு நோக்கி நிளேத்தது போராட்டத்தின் வெற்றிப் பூரிப்பில்
ஆணுல் அங்கு வந்த மந்திரிகளில் ஒருவரான திரு ஸ்ரான்லி டி. சொய்சா அவர்கள், தாம் ஊர்வலமாகச் செல்கையில் ஆர்ப் பாட்டக்காரர்கள் சிலர் தன்னேத் தடிகொண்டு தாக்கினர் என்று பரப்பிய பொய்ப்பிரசாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களினுல் மன்ஞர்ப்பகுதியிங் மட்டுமன்றித் தமிழ் ஈழம் முழுவதும் ஒர் கொத்தளிப்பு நிவேயேற்பட்டது. தனது ஆறு மந்திரிகளுக்கும் கிடைத்த பரிசை அறிந்து ஆச்சரியப்பட்டது மாத்திரமன்றி அச்சமும் அடைந்தார் அரசின் முதலமைச்சர்
இதுகாறும் பிடிவாதம் என்னும் படிகள் பற்றி அதிகாரம் என்னும் ஏணியின் உச்சியில் நின்றுகொண்டு ஒரு படிகூட இறங் கேன் என முரண்டுபிடித்த முதல்வர், திரண்டுவரும் தீந்தமிழர் எதிர்ப்பினுள் தான் நிற்கும் அதிகார ஏணி புரண்டு விடுமோ என மிரண்டார் தன் எதிர்காலமே இருண்டு விடுமோ என் அருண்டார்.
தமிழ்த் தல்ேவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது நல்லது எனக் கருதினுர், அவர்களது கோரிக்கைகள் சிலவற்றிற்கேனும் இணங்கினுல் நன்மை கிடைக்கும் என்பதை உணர்ந்தார். ஆந்த நேர்மைசால் தலேவர்களே நோக்கி, இந்த நேசக் சுரங்களே நீட்டிகுலென்ன என்றும் எண்ணிஞர்!
ஓர் முடிவுக்கு வந்தவராய்த் தனது அரசின் நிதியமைச்சர் திரு. ஸ்ரான்லி டி சொப்சாவையும் இன்னும் சிவரையும் அழைத் தார். அவர்களேக் கொழும்பிலுள்ள திரு செல்வநாயகத்தின் வாசஸ்தலத்திற்குத் துரது அனுப்பினுர், தான் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றியருள வரும்படி திரு செல்வநாயகம் அவர்க குளுக்குத் தூதுவர் மூலமாகப் ப:ைவான வொரு வேண்டுகோளேயும் விடுத்தார்
எப்போதுமே உறவுக்குக் கைகொடுக்கக் காத்திருக்கும் நம்மவர்களும் முதல்வர் நீட்டிய நேசக்கரத்தைப் பாசத்துடன் பற்றிய பண்பாளர்கள்ாயினர். அனேத்துப் பிரச்சினேகளேயும் அண்வரும் அலசி ஆராய்ந்தனர்
எள்ளளவும் விட்டுக்கொடேன். இம்மியேனும் இறங்கி
வரேன், ஒரு தம்பிடியும் தரேன் என அடம்பிடித்த முதலமைச்ச ரவர்கள் இப்போது இறங்கிவந்ததுமல்லாமல் அள்ளியள்ளிக்

Page 34
- 46 -
கொடுக்கவும் முன்வந்தார்; நமது தல்வர்களும் நமது உரிமைப் போருக்குக் கொஞ்சமேனும் பங்கமேற்படாத வகையிற் சிற்சில பிரச்சினேகளில் விட்டுக்கொடுத்தனர்;
இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் இனியதோர் ஒப்பந்தம் உருவாகியது. 1957ஆம் ஆண்டு ஆடி மாதம் 87ஆம் நாள் உருவான இவ்வொப்பந்தத்தான் வரலாற்றில் இடம்பெற்று விட்டட இதனே எதிர்த்துக் கண்டிநோக்கிப் பாதயாத்திரை மேற் கொண்டும், "முதல் அடி" (First Step) என்ற வகுப்புவாத நூலினே வெளியிட்டும் இந்நாட்டில் இனத்துவேஷத்தை வளர்த்த திரு. ஜே. ஆர். ஜயவர்த்தகு கும்பலின் இதயத்தை ஈட்டிபோற் பாய்ச்சிவிட்ட எந்த நேரத்திலும் இது அமுலாகி எங்கே தமது ஆட்சிக்கு நிரந்தர அழிவைத் தேடித்தந்திடுமோ என்ற திகிலில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஒர் சிம்மசொப்பனமாகக் காட்சி யளிக்கின்ற - இந்நாட்டின் நிரந்தர அமைதிக்கு நிறைந்த பரி காரம் இதுவே என்பதை இன்றளவும் பறைசாற்றுகின்றபண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகும்
ஆண்டாண்டு காலமாக இந்நாட்டின் வழக்கில் இருந்துவரும், அந்நியர் இந்நாட்டை ஆக்கிரமிக்குமுன் இங்கு அரசோச்சிய வரலாறு உடையதுமான தமிழர்களின் உயிராம் உயர்தமிழ்ச் செம்மொழியை, இந்நாட்டின் தேசிய சிறுபான்மையின மொழியாகச் சட்டபூர்வமாக அரசு அங்கீகரிப்பதெனவும் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலாக வாழ்ந்துவரும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பாரம் பரிபப் பிரதேசங்களே என்பதை உறுதிப்படுத்தும்வகையில்-ஒரளவு சுயாட்சி" எனச் சொல்லத்தக்கவகையில்-இவற்றின் ஆட்சிமொழி யாகத் தமிழைச் சட்டபூர்வமாக ஆக்குவதெனவும்; இப் பிரதேசங் களிலுள்ள முடிக்குரிய காணிகளில் தமிழ்பேசும் மக்களுக்கே எதிலும் முதலுரிமை வழங்குவதெனவும்; இலங்கையின் ஏனேய பாகங்களில் வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்கள் அரசுடனுன் தமது சகல தொடர்புகளேயும் தமிழிலேயே வைத்துக்கொள்ளலாமெனவும்: இவ்வொப்பந்தப்படி அதிமுக்கியமானவைகளாக ஏற்றுக்கொள் எப்பட்டது. அருந்தமிழர் அரசுக்கெதிராகத் தொடுத்த போராட் உங்களைக் கைவிடுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
இப் பேச்சுவார்த்தைகளின் போது திரு அமிர்தலிங்கமும் கலந்துகொண்டாராயினும் இந்த முடி அவருக்குப் போதிய திருப்தியைக் கொடுக்கவில்லே. தமிழ்பேசும் மக்களுக்கு இந்த உடன் படிக்கை மூலம் வழங்கப்பட்ட உரிமைகள் போதாது எனக் கட்சிக்குள் மிகப் பலமாக வாதாடிஞர்

- 47 -
" அமிர் இத்துடன் எங்கள் போராட்டம் முற்றுப்பெற வில்லே. இன்னமும் முயல்வோம் முழு உரிமைகளேயும் பெறு வோம் இது ஒரு தற்காலிக உடன்பாடுதான் ; ஆகவே அஞ்சாதே! அமைதியாக இரு ' எனத் தந்தை செல்வாவும் தஃலவர் வன்னியசிங்கமும் தலைவனங்காத் தமிழன் நாகநாதனும் கூறிய விளக்கத்தை ஏற்றதோடு, "இவ்வொப்பந்தத்தை ஏற்கும் தீர்மானத்தை நீயே எதிர்வரும் 29ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் எமது கட்சியின் மாநாட்டிற் பிரேரனே பாகக் கொண்டுவரவும் வேண்டும்" எனத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளேயும் ஏற்று, அதன்படியே மட்டக்களப்பு மாநாட் டிவ் இவ்வொப்பந்தத்தை ஏற்கும் தீர்மானத்தைப் பிரேரித்தார்;
" இழந்த உரிமைகளே ஈட்டுவதற்கு நாம் இரத்தம் சிந்திட வும் தயார் இரத்தம் சிந்துவது மட்டுமல்ல எங்கள் அனேவ ரதும் எலும்புகளே நொருக்கி-நரம்புகளே அறுத்து-கண்களேப் டுங்கித் தந்தால்தான்-தமிழர்களுக்குச் சுயமரியாதை வாழ்வு ஏற்படுமென்ருல் சுயநிர்ணய உரிமை தரப்படும் என்ருல் சுய ஆட்சி சாத்தியப்படும் என்ருல் அதற்கும் நாம் அன்றும் - இன்றும் - என்றும் தயார். இதில் எவர்க்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். ஆணுல் இத்தியாகங்களே அவசரப்பட்டு அநியாயமாகச் செய்யமாட்டோம்:
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்ற கவிமணி" தேசிகவிநாயகம்பிள்ளே அவர்களின் பாடலுக் கொப்ப, அன்பு வழியில்-அறநெறியில்-உறவு முறையில்-உரி மைகளே வென்றெடுக்க முடியுமெனில், அந்த வழியில் முயன்று பார்ப்போம்" என்ற தமிழரசுக் கட்சியினரின் சாத்வீகக் கொள் கையின் சரியான சின்னமே பண்டா-செல்வா ஒப்பந்தம்,
குறுநில மன்னரா? சோழர் வழித்தோன்றலா?
தமிழ் மக்களின் உரிமைகள் ஓரளவாவது உறுதியாகி விட்டன என்ற நினைவு அமிர்தலிங்கத்திற்கு உவகையளித்தது : உற்சாகமூட்டியது. ஏனேய உரிமைகளே எவ்வாறு பெறலாம் என்பதிற் தன் சிந்தனேன்யச் சுழல விட்டார். அந்தச் சமயத் திலே - அதாவது 1957ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திலேஇண்டர் பார்விமெண்டரி மாநாடு இலண்டன் மாநகரிலே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிற் கலந்து கொள் ளூம் இலங்கைக் குழுவில், இலங்கைப் பாராளுமன்ற எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளுள் ஒருவராக அமிர்தலிங்கமும் இடம் பெற்ருர்,

Page 35
- 48 -
ஒசியிற் கிடைத்த உல்லாசப் பயணமென்று அவர் கருத வில்லே. உலக நாடுகளிற் சிறுபான்மை இன மக்களின் பிரச்
சினேகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து
கொள்ள அரியதோர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவே கருதி ஞர். அதை நிவேந்து மனமிக மகிழ்ந்தார். மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளுடன் மனம் விட்டுப் பேசிஞர். இப்படியான சந்தர்ப்பங்கள்ே எம்மினத்தின் நலனுக்காகவே பயன்படுத்து வதிற் பெரும் சமர்த்தரான இவர், இலங்கைத் தமிழ் மக்க
ளின் இரண்டாத்தர" நிலேயையும் தெளிவாக அவர்களிடம்
எடுத்துரைத்தார். எல்லோருடனும் கலந்துரையாடியபின், " சிறுபான்மை இனத்தினரின் பிரச்சினேகள் அன்ேத்தும் சமஷ்டி ஆட்சியிலே தான் சரியாகத் தீரும்' என்ற நம்பிக்கை அவரிடம் மேலும் உறுதியானது.
/இலண்டன் மாநாட்டில் அமிர்தலிங்கம் சொற்பொழிவாற் றியபோது, உலகத்து அகதிகள் பிரச்சினேயோடு சாமர்த்திய மாகத் தொடர்புபடுத்தி இலங்கையில் நாடற்ற பிரஜைக ளாக்கப்படும் மல்ேநாட்டுத் தமிழர் பிரச்சினேயையும் சாங்கோ பாங்கமாக எடுத்துரைக்கத் தவறவில்லே.
அன்ருெருநாள் ஐக்கியநாடுகள் சபையிலே எமது பெரு மதிப்புக்குரிய தலவர் திருவாளர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு கேட்டு அங்கிருந்தோர் அனவருமே அசந்துவிட்டதஃனப்போல ஆண்டு அறுபத்தாறில் இந்திய மாநிலங்களவையிலே பார்போற்றும் பேரறிஞர் மாண்பு மிகு அண்ணு அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு கேட்டு ஆசிய ஜோதி மாண்புமிகு நேரு அவர்கள் உட்பட ஆங்கிருந்தோர் அனேவருமே அசத்துவிட்டதனே ப்போல இண்டர் பார்லிமெண்
டரி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய சொற்பொழிவு கேட்டு
அனேவரும் அசந்துவிட்டனர். அந்த அளவுக்கு அமிர்தலிங்கம் ஆற்றிய சொற்பொழிவு சிறப்பாக அமைந்தது.
மாநாட்டின் முடிவில் அதில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனேவருக்கும் இலண்டன் மாநகராட்சி சார்பில் அவ்வாட்சிக் கட்டடத்தில் அவ்வாட்சித்தலேவர் லோட் மேயர் அவர்கள் சிறப்பானதொரு விருந்தளித்துக் கெளரவித்தார். இவ்விருத்திற் குச் சென்ற அனேவரும் மேல்நாட்டுப்பாணிக்கேற்பக்கோட்டும், சூட்டும், டைபுமன்னிந்து செல்ல, திரு. அமிர்தலிங்கம் மட்டும் நம்நாட்டுப் பானரியிற் சேலம் பட்டு வேட்டி சால்வை அணிந்து ஜிப்பாவும் போட்டு அசல் தமிழராகவே கலந்துகொண்டார்; அங்கு கூடியிருந்தோர் அன்ேவரும் இவரையே பார்த்த வன்ன மிருந்தனர். விசேடமாகப் பெண்கள் இவரை " ஒரு இந்திய மகாராஜாவாகவே கருதிக் கண் வெட்டாமல் பார்த்துவிழுங்கிய வண்ணமிருந்தனர்.

இலண்டனில் நடந்த சர்வதேசப் பாராளுமன்றக் கருத்தரங்கில் கலந்துகொண்ட சர்வதேசப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நமது நாவலர் அவர்கள்

Page 36

- 49 -
பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் வோட் மேயர் பிரபுவுக்கு மாநாட்டுச் செயலாளரால் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டனர். பெண்கள் கருதியதைப்போலவே திரு. அமிர்தலிங்கம் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களிலொருவர்தான் எனக் கருதிய லோட் மேயர் பிரபு அவர்களும் திரு அமிர்தலிங்கத்தைப் பார்த்து, "நீங்கள் தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்தானே? நான் வரலாற்றிற் படித்த சோழ மன்னர் பரம்பரைதானே? " என் வினவிஞர்.
'இல்லே, இல்லே, நான் குறுநில மன்னன் அல்லன் புகழ் பூத்த சோழ மன்னர்கள் எங்கள் மூதாதையர்தான் ஆணுல் நான் மறத்தமிழன் இராவணன் ஆண்ட இலங்கையின், உங்கள் மூதாதையர் அங்கு வந்து எம்மை ஆளுமுன் எம்மை ஆண்ட மாமன்னங் சங்கிலியனின் ராச்சியமாக விளங்கிய-செந்தமிழ் பிறந்த-யாழ்ப்பாணத்தில் ஒரு சாதாரண தமிழ்க் குடியிற் பிறந் தவன். நான் ஒரு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதி. இது எமது தமிழ்த் தேசிய உடை" எனப் பதிலிறுத்தார் திரு. அமிர்தலிங்கம்,
இச் சமயத்தில்தான் அங்கிருந்த பத்திரிகைப் படப்பிடிப் பாளர்கள் எல்லோரும் இடித்து மோதிக்கொண்டு இவர்களைப் படம் பிடித்துக்கொண்டனர். இந்தப் படந்தான் இலண்டன் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முக்கிய இடம் பெற்றது.
இதிலிருந்தே திரு. அமிர்தலிங்கத்தின் தமிழ்ப்பற்றுப் பரி மனிக்கிறதல்லவா? ஆங்கிலம் பிறந்த அந்த நாட்டில், ஆங்கிலத் தில் நல்ல புலமைபெற்ற அமிர்தன்ங்கம், தன்ஃனத் தமிழனுகவே காட்டிக்கொண்டார். இதுவொன்றே போதுமல்லவா திரு அமிர்தலிங்கத்தின் தமிழ் நெஞ்சத்தைப் படம் பிடித்துக்காட்டதளபதியின் தமிழ்த் தொண்டின் தூய்மையை எடுத்துக்காட்ட
பண்பு குலேந்தது; பதவி நிலத்தது
"உலகிலுள்ள சிறுபான்மை இனத்தவரின் உரிமைப்போர் வரலாற்றில்ே, இவ்வளவு தெளிவாகவும் விபரமாகவும் உறுதி பாகவும் உரிமைகளே வரையறுக்கும் ஒப்பந்தம் வேறு எதுவுமே இல்லே' எனப் பொறுப்புணர்ச்சி வாய்ந்த இலங்கைத் தலவர்கள் மாத்திரமன்றி, உலகப் பத்திரிகைகளும் பண்டாரநாயக்காசெல்வநாயகம் ஒப்பந்தத்தைப் பாராட்டி வரவேற்றன. முழு இலங்கையின் நலனுக்காக எழுந்ததே அவ்வொப்பந்தம் என்ப தைப் பலர் ஒப்புக்கொண்டனர். ஆனுல் அரசியற் சந்தர்ப்ப வாதிகள் அவ்வொப்பந்தத்தைத் தமக்குச் சாதகமாகத் திரிக்கத் தொடங்கினர்; வகுப்புவாத வெறியை மீண்டும்த்ரபந்தி"
தொடங்கினர், 臀
高一7
リ。

Page 37
- 50 -
"சிங்கள இனத்தைத் தமிழருக்கு விற்றுவிட்டார் பண்டார நாயக்கா இனிச் சிங்கள இனம் அழிந்தொழிந்துவிடும் " என அபாயச் சங்கதியது அமெரிக்காவின் அடிவருடி-ஐக்கிய தேசியக் கட்சி, எந்த" மக்களே மயக்கிப் பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தாரோ, அந்த அப்பாவி மக்களின் மத்தியில் ஐ. தே. கட்சி தன்னுடைய வகுப்புவாத விஷத்தைக் கக்கியது. ஐ. தே. கட்சிக்கு என்றுமே ஆதரவளித்து வரும் ஏரிக்கரைப் பத்திரிகை கள் பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தத்தைப் பயன் படுத்திப் பண்டாரநாயக்கா ஆட்சியை வீழ்த்திவிட முயன்று கொண்டிருந்தன. அத்தோடு புத்தபிக்குகள் பலரும் பண்டாசெல்வா ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கத் தலேப்பட்டனர். இவ்வொப்பந்தத்தை உடனே இரத்துச்செய்யக்கோரிக் கொழும்பி லுள்ள ருெஸ்ட்மிற் பிளேசில் சத்தியாக்கிரக விரதத்தை மேற் கொண்டனர். போதிமரத்துப் புத்த பெருமானின் தாரக மந்திர மாண தர்மம் . சரணம் . கச்சாமி " . யைப் பாடவேண்டிய பிக்குமார், "அதர்மம் . சரணம் . கச்சாமி"யைப் பாடி ஒப் பாசி வைத்தனர். "தமிழர்களேச் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டார்; அவர்களேச் சிங்களவர்களின் நிரந்தர அடி மைகளாக்கிவிட்டார் தமிழரசமைக்கப் புறப்பட்ட தந்தை யாம்-தாத்தா செல்வநாயகம்" என மறுமுனேயில் நின்று. ஒல மிட்டு ஒப்பாரி வைத்தது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்3 பெற்ற சில உரிமைகளேப் பேணிக் காத்திடவேண்டும் என்ற பெருவிருப்பில், குதர்க்கம் பேசிய அரே வர்க்கும் தர்க்க ரீதியான பதிலளித்துப் பிரசாரம் செய்வதில் ஒய்வின்றி ஈடுபட்டார் அமிர்தலிங்கம், பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந் தத்தைப் பற்றிய அமிர்தலிங்கத்தின் நேர்மையான விளக்கங் களேத் தமிழ் மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
ஆனூல், குறுகிய புத்தி படைத்த சில சிங்கள வெறியர்கள் பிரதமர் பண்டாரநாயக்காவை மிரட்டினர், குறிப்பாகப் பிக்கு மார் பிரதமரை மிதமிஞ்சி மிரட்டினர். இம்மிரட்டலுக்கஞ்சிய பிரதமர், தன் நிதானத்தைத் " தானம்" செய்து, அவர்களுடன் சமாதானம் செய்துகொண்டார். பண்டா - செல்வா ஒப்பந் தத்தைப் பண்பற்ற முறையிற் பகிரங்கமாகப் பாராளுமன்றத்தில் இரத்து செய்துவிட்டுத் தன் பதவியைக் காப்பாற்றிக் கொண் ட்ார். அவரிடமிருந்த கொஞ்சநஞ்சத் தீர்க்கதரிசனமும் இப் போது முற்று முழுதாக விடைபெற்று விட்டது. "தனிச் சிங்களச் சட்டத்தை அதி தீவிரமாக அமுல் நடத்துவேன் அதன் ஆரம்ப நடவடிக்கையாகப் பேருந்து வண்டிகள் எல்லாவற்றிலும் சிங்கள ' சிறி எழுத்தைப் பொறிக்க ஆணே பிறப்பிப்பேன் இதனே எதிர்த்துப் போர் தொடுப்போர் எவரானுலும் அவர் ளே மிகக் கடுமையாகத் தண்டிப்பேன்" என ஆட்சிமன்றத் திற் கர்ச்சித்தார் பிரதமர் : " சிறீ எழுத்தை அழித்த செந். தமிழர் மேற் சீறிப் பாய்ந்தார்.

* சிறி'யை அழித்தார்; சிறையை அனத்தார்
வெறி நிறைந்த ஆட்சியினர், தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச உரிமைகளேக் கூட வழங்கமாட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. உடன்படிக்கையிலுள்ள உரிமை களே போதாதென்று வாதாடிய அமிர்தலிங்கத்திற்கு, அத்து சில உரிமைகள்கூடக் கிடைக்கமாட்டா என்ருல் எப்படி இருக்கும்? எழுத்து மூலம் உறுதி அளித்த பண்டாரநாயக்கா அதை எடுத்துக் கிழித்ததை அவராற் பொதுக்க முடியவில்ஃ: பொங்கி எழுந்தார்.
" நேரடி நடவடிக்கைக்கு தேரம் வந்துவிட்டது. உரிமைப் போரில் உடனே குதிப்போம். ஆணவம் பிடித்த அரசு எங்களே அடக்கத் துணியலாம் : இராணுவம் எம்மை அழிக்க முயலு வாம் இறுமாந்த பொலீஸ் படை எம்மேற் பாயலாம் : இரத்த ஆறு மண்மேற் பாயலாம் எனினும் காணுவோம் தமிழ் அரசு அதன் கீழ் வாழுவோம் நம் தமிழ் ஈழத்தில் " என வீராவேச மாக முழங்கினுர் முத்தரேய தஃவவர் அமிர்தலிங்கம்.
தொண்டர்கள் எழுதிய தமிழ் எழுத்து அழிக்கப்பட்டு மீண்டும் நண்டெழுத்துடன் நகர்ந்து வந்தன நவீன பேருந்து வண்டிகள்: தமிழ்மக்களின் நெஞ்சங்கஃனப் பண்டாரநாயக்கா வேண்டு மென்றே புண்படுத்துகின்றர் என்பதைப் புரிந்துகொண்டார் அமிர்தலிங்கம் கட்சிக் காஃனத் தொண்டர்களுடன் கலந்தாவோ சித்து தஃலவர் வன்னியசிங்கத்திடம் அனுமதிபெற்று, தந்தை செல்வநாயகத்தின் ஆசியைப் பெற்று, உதவிப் பொலீஸ் சுப் பிரின்டனுக்கு அறிவித்துவிட்டு உடனடி நடவடிக்கையில் உள்ள மொன்றி ஈடுபட்டார். ஆம், செனட்டர் நல்ஃபா, இஃாளுன் சிறிதரன் ஆகிய இருவருடன் சேர்ந்து, யாழ்ப்பானம் பேருத்து நிலேயத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிற் செருக்குடனிருந்த சிங்களத்தை அகற்றிவிட்டு, அது இருந்த இடத்திற் சிங்காரத் துக்குரிய செந்தமிழை அமர்த்தும் சீரிய பணியில் ஈடுபட்டார் அக்காட்சியினேக் கண்டு கணக்கற்ற தமிழர் கூட்டம் கூடிவிட்டது அங்கே. அதிகாரப்படை இவர்கள் மூவரையும் அவ்விடத்திலேயே கைது செய்து வண்டியிலேறும்படி பணித்தது.
அதற்கும் தயாராகவே நின்றிருந்த அமிர்தலிங்கமும் மற் நிருவரும் வண்டியிலேற வினேந்தனர். ஆளுல் அவர்களே அரசின் கைதிகளாக அனுப்ப அங்கு நின்ற தமிழர் கூட்டம் தயாரா பில்லே ' இவர்களேக் கைது செய்து கொண்டுபோக நாம் அனுமதிக்கமாட்டோம் : அப்படியென்ருல் எங்களேயும் இவர்க ளோடு அழைத்துச் செல்லுங்கள் " என அவர்கள் முழக்க மிட்டனர், செய்வதறியாது தினகத்த பொலீஸ் அதிகாரிகள்

Page 38
= 52 -
அமிர்தலிங்கத்தின் நயன்வநாடினர்: "உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் பேச்சைத்தான் கேட்பார்கள். ஆகவே எமது சுடமையை நிறைவேற்ற வழி செய்து தாருங்கள்" என வேண்டினர்
கடமை கண்போன்றது என்பதை நன்குண்ர்ந்த அமிர்த விங்கம் பொலீஸ் ஜீப் வண்டியின் போனற்றில் ஏறி நின்று கொண்டு பின்வருமாறு பேசிஞர்
"அன்புக்கினியவர்களே அருமை நண்பர்களே இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்து வண்டிகளில் அருந்தமிழை அமர்த் தியதற்காக எம்மைக் கைது செய்யும்படி அரசு கட்டளே பிறப் பித்ததின் பேரில்தான் இந்தப் பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை நிறைவேற்ற இங்கு வந்துள்ளார்கள். ஆகவே அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய வழி விடுங்கள் கண்ணியம் மிக்கவர்கள் - கட்டுப்பாடுடையவர்கள் - கன்னித்தமிழர் என்ற வரலாற்று உண்மையை இந்தச் சின்ன விஷயத்திற்காக உடைத்து விடாதீர்கள். எம் கடமையை நாம் செய்தோம் தம் கடமையை இவர்கள் செய்யட்டும்; உம் சுடமையை நீவிர் செய்வீராக! அக்கிரம ஆட்சியினர் தங்கள் விருந்தாளிகளாக எம்மை அழைத் துள்ளனர். ஆகவே, நாம் செல்கின்ருேம். நீங்களும் நாம் செய்த பணியை இன்றே-இப்பொழுதே-இந்த இடத்திலேயே-செய்ய விழையுங்கள். எம் மூவரையுந் தொடர்ந்து முந்நூருக-மூவா பிரமாக-நீங்கள் அரசு விருத்தானிகளாகச் சிறைகளே அலங் கரிக்க வழி செய்யுங்கள் அதுவே இப்பொழுது உங்களுக்குரிய முழுமுதற் கடமை. ஆட்சேபிக்காமல் நாம் செல்ல விடை தாருங்கள்" என்ருர்
அமிர்தலிங்கத்தின் அறிவுகலந்த அன்பு வேண்டுகோளே
அங்கு நின்ற அருந்தமிழர் கூட்டம் அங்கீகரித்தது, அவர்களே வாழ்த்தி வழியனுப்பி வைத்தது.
அருந்தமிழைப் பேருந்துகளில் அமர்த்தியது குற்றமெனக் கூறி அதிகார பீடம் அமிர்தலிங்கத்தின்மீது வழக்குப்போட்டது: அவரைக் குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம் இருபத்தைந்து ரூபா அபராதம் செலுத்தவேண்டும்; அல்லது இருவாரம் சிறையி விருக்கவேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
இத் தீர்ப்பைக்கண்டு கலங்கிவிடவில்லே அமிர்தலிங்கம் பதிலுக்கு அலட்சியப் புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு, நீதிபதியுட்பட அங்கிருத்தோர் அன்ேவரும் அதிரும் வண்ணம் நீதிமன்றமே அதிரும் வண்ணம் ஆவேசமாக முழங்கிஞர்,
"அரசியல், பொருளாதாரம், பண்பாடு, மொழி போன்ற விடயங்களிற் சிங்கள மக்களுக்குள்ள அத்தனே உரிமைகளும்

- 53 -
தமிழ் மக்களுக்கும் கிடைத்திட வேண்டும். சிங்கள மக்களுடன் சரிநிகர் சமானமாக, சமத்துவமாக வாழவே செந்தமிழராகிய நாம் விரும்புகின்ருேம் சுதந்திரத்திற்குப்பின், இந்நாட்டின் ஆட்சிப்பிடத்தில் அமர்ந்த சிங்கள அரசாங்கங்கள், தமது சட்ட, நிர்வாக நடவடிக்கைகளால், தமிழ் மக்களே இரண்டாந் தரக் குடி மக்களாக்கி விட்டனர். தனிச்சிங்களச் சட்டம், தமிழ் மக்களே ஒரேயடியாக அடிமைப் படுகுழியிற் தள்ளி விட்டது. இந்த அநியாயச் சட்டத்தை முற்ருக எதிர்ப்பது, தன்மானம் மிக்க தமிழனின் தவிர்க்க முடியாத கடமையாகிவிட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான வாகனங்களிற் கூடச் சிங்கள சிறி இடம்பெற வேண்டுமென்பது, தமிழ் மக்களே வேண்டுமென்றே இழிவு படுத்தும் செயல். இதஞல், தமிழ் மக்கள் தாம் விரும்பிய படி நடமாட முடியாத நிவேமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சிங்கள ஆட்சியிலே தமிழ் மக்கள் அனேவரும் சிறைக் கைதிக ளாகத்தான் இருக்கின்றனர். ஆகவே, " சிறைக்கூடம்" எனப் படும் ஒரு சிறிய கட்டடத்துள் நுழைவது, எங்களுக்குப் புதிய கஷ்டங்கள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லே, சிங்களத்தைத் தமிழ் மக்களின் தொண்டைக்குள்ள்ே திணிக்கும் சின்னத் தனத்தை நாம் என்றும் எதிர்த்தே தீருவோம். அதனுல் வரும் இத்தகைய விளைவுகளேப் பெருமையுடனும், பெரு மகிழ்ச்சி யுடனும் ஏற்றுக்கொள்வோம்" என ஒரு நீண்ட பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு, நீதிபதியைப் பார்த்துப் பின்வரும் வேண்டுகோள் ஒன்றினேயும் விடுத்தார்.
"கனம் நீதிபதி அவர்களே உயர்ந்த ஓர் இலட்சியத்திற்காக உழைத்துவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினன் நான் குற்றப்பணத்தைக் கட்டிவிட்டுத் தப்பிச்செல்ல விரும்ப வில்லே என் மேல் மாசு கற்பிப்பதற்காக என் பெயரில் வேறு பாராவது காசுகட்ட முன்வரலாம் எவரிடமிருந்தும் பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்."
இவரது இன் வேண்டுகோளின்ே நீதிபதி அவர்களும் ஏற்றுக் கொண்டார். யாழ், கோட்டைச் சிறைச்சாலேயிற் கைதி உடை அணியப் பெற்றுச் சுமார் பதினுன்கு நாட்கள் சிறி அளித்த பரிசாகச் சிறை வாழ்வை அனேத்துக்கொண்டார் அமிர்தலிங்கம்,
வவுனியா மகாநாடும், வகுப்புக் கலவரமும்
"சிறியை அழிப்போம்: சிறையை நிறைப்போம்" என்பது ஒவ்வொரு தமிழனதும் தாரக மந்திரமானது. சிறைச்சால்ேகள் "மளமள வென்று நிறைந்தன தளபதி அமிர் உட்படத் தமி ழரசுத் தலேவர்கள் அத்தனே பேரும் சிறிது ம் கலக்கமின்றிச்
. . . .

Page 39
- 54 -
சிறையில் இருந்தனர். தலைவர்களைப் பின்பற்றி நூற்றுக்கணக் கான தன்மானத் தொண்டர்கள் சிறை வாழ்வைச் சிரிப்புடன் ஏற்ருர்கள்.
சிறையிலிருந்து தண்டனே அநுபவித்த செந்தமிழ்ச் செல் வர்கள் விடுதலையாகி வெளியேவந்தபோது அவர்கட்குச் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது
சாதாரண மக்களும் மனச் சந்தோஷத்துடன் சிறை வாழ்வை ஏற்றமை, கரடு முரடான விடுதலேப் பாதையில், தலேவர் களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிக் கஷ்டங்களேயும், நஷ்டங் களேயும் தாங்கிக் கொள்வதற்கு அவர்கள் தயாராபுள்ளனர் என்பதைத் தெளிவாகக் காட்டியது.
தமிழர் தம் நெஞ்சிலெல்லாம் விடுதலையுணர்ச்சி வீறுடன் பொங்கிக்கொண்டிருந்த இந்த வேளேயிலேதான், அன்னியரை எதிர்த்த வன்னியர்கள் நிறைந்த வவுனியா நகரிலே- அடங்காத் தமிழ்ப்பற்று " என்ற சிறப்புப் பெயர் வாய்ந்த வன்னி நாட்டின் தலைப்பட்டினத்திவே-58 மேத் திங்களிலே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆருவது தேசிய மகாநாடு நடைபெற்றது.
இக் கட்சியின் புதிய தலைவராக முதன் முதலாகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து தமிழ் பேசும் இனத்தின் சுதந்திர இயக்கத்தில்-தமிழரசுக் கட்சியின்
மூவர்ணக் கொடியின் கீழ்-முன்னணியில் நின்று என்றென்றும்
போராடிவரும் கிழக்கு மாகாணத்து மாண்புடைத் தமிழ் மக்களேக் கெளரவித்த கைங்கரியம் இடம் பெற்றது இம் மாநாட்டின் மூலம், கட்சியின் புதிய தஃலவராக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தவர் உயர்திரு. என் ஆர். இராஜவரோதயம், பா உடு அவர்கள் ஆகும்
தலைவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகின்ருர்கள் என் பதை அறியும் ஆவலுடன், " முடிவு எதுவென்ருலும் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வோம்' என்ற திட சித்தத் துடன் ஆயிரம், பல்லாயிரமாக மக்கள் திரண்டனர்: "ஒற்றை ஆட்சியை' ஒழித்தே தீருவோம் உரிமை வாழ்க்கையை அடைந்தே தீருவோம் களத்திற் குதிப்போம் கடமையைச் செய்வோம்; விழியைக் கொடுத்தும் மொழியைக் காப்போம் உயிரைக் கொடுத்தும் உயர் மானத்தைக் காப்போம்' எனச் சங்கநாதமிட்டபடி தளபதி அமிர்தலிங்கம் தலைமையில் பெரி யோர்களும் வாலிப வேங்கைகளும், அமிரின் துனேவியார் மங்கையர்க்கரசியார் தலேமையில் தாய்மார்களும் வைர நெஞ் சுடைத் தோழியர்களும் சின்னஞ்சிறு சிருர்களுமாக அறப் போர்த் தொண்டர்கள் பல்லாயிரவர் அணிவகுத்து நின்ற காட்சி, பார்ப்போர் வியக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும்
37987

- 55 -
1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருமலே மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட பின்வரும் நான்கு தீர்மானங்களான
இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையேயுள்ள இனப் பிரச்சினே களுக்கு ஒரு நிரந்தரமான முடிவு காணுவதற்காக சமஷ்டி ஆட்சிக்குட்பட்ட இலங்கையுள் மொழிவாரி யாக ஒரு சுயாதீனத் தமிழ் ராஜ்யத்தை அல்லது ராஜ் யங்களே நிறுவுதல் வேண்டும்.
2. தமிழ் மொழி அதன் பழைய ஸ்தானத்திற்கு உயர்த் தப்பட்டு, நாடு முழுவதிலும் சிங் களத் துடன் சம அந்தஸ்துப் பெற்ற அரசகரும மொழியாக்கப்படல் வேண்டும்.
3 தற்போதைய பிரஜா உரிமைச் சட்டம் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டு மலைநாட்டுத் தமிழ் மக்களுக் சுெல்லாம் பிரஜா உரிமையும், வாக்குரிமையும் பழைய படி வழங்கப்படல் வேண்டும்:
4. பரம்பரை பரம்பரையாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள் மக்களேக் குடியேற்றுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
ஆகிய இத் தீர்மானங்களே மீண்டும் உறுதிப்படுத்தி "உரிமைப் போரில் விரைவிற்குதிப்போம்" என்றுதலேவர் இராஜவரோதயம் கட்சியின் முடிவை வெளியிட்டார். செயல்-செயல்-செயல்" எனத் துடித்துக்கொண்டிருந்த ஆயிரமாயிரம் இளேஞர்களுக்கும் இளம் யுவதிகளுக்கும்-அவர்களின் இலட்சியத் தாரகையான அமிர்தலிங்கத்திற்கும்-வவுனியாத் தீர்மானம் கரும் பாக இனித்தது. இராஜவரோதயத்தின் போராட்ட அறிவிப்பு அவர் களே இன்படிரி என்னும் இலட்சிய புரிக்கு அழைத்துச் சென்றது:
அறப் போரை எப்படி ஆரம்பிப்பது? எங்கே ஆரம்பிப்பது ? எப்போது ஆரம்பிப்பது? போன்ற விஷயங்கள் அலசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வவுனியா மகாநாடு பூரணமாக முற்றுப்பெருதிருந்த வேளேயில், திடீரென்று வெடித்துக் கிளம்பியது வகுப்புக் கலவரம் இதற்கு வித்திட்டனர் அசல் வகுப்பு வாதிகளான கே. எம்; பி. இராசரத்தினு பேராசிரியர் எல். ஆர். ஜெயசூரியா போன்றேர். இவர்களோடு சேர்ந்து தனக்கே உரித்தான, வழக்கமான பணியை இப்போதும் செய்ய வாரம்பித்தன ஏரிக்கரைப் பத்திரிகைகள்

Page 40
– 5ő –
மேலும், அனேத்துத் தமிழர்களும் அணிதிரண்டதைக் கண்டு வெகுண்டடித்த பண்டாரநாயக்கா, சிங்கள் இனத்துக்கே ஆபத்து வந்துவிட்டதென அலறத் தொடங்கிஞர். வானுெவிப் பேச் சிலும், பத்திரிகை அறிக்கையிலும் வகுப்புவாத விஷத் விதி வரை வின்றிக் கக்கினுர் சொந்தக் குரோதம் காரணமாகி மட்டக் களப்பிலே செனவிரத்கு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தமிழ் வெறியர்களின் செயல் எனத் திரித்துக் கூறிஞர் பொறுப்பு வாய்ந்த பிரதமரே இப்படிச் சொல்லும்போது அப்பாவிப் பொதுமக்கள் நம்பாமல் இருப்பார்களா?
வேண்டுமென்றே ஆத்திர மூட்டப்பட்ட அவர்கள். அக்கிரமச் செயல்களில் அணி அணியாக இறங்கினர். தமிழ் மக்கட் கெதி ராகத் திட்டமிடப்பட்ட வன் செயல்கள் கட்டவிழ்த்து விடப் பட்டன. காத்திருந்த காடையர்கள் காட்டினர் தம் விசு enu ifigଯaffric W.
கொழும்பிலே, பாணந்துறையிலே காலியிலே அனுராத புரத்திலே, பொலநறுவையிலே, மாத்தறையிலே, களுத்துறை யிலே ஏன்-தென்னிலங்கை முழுவதிலுமே குழப்பங்கள் குடி கொண்டன. தமிழர்களுக்கெதிரான சகல தீய செயல்களும் தீவிரமாயின. ஈழத்தமிழர்கள் ஈவிரக் க மின் றித் தாக்கப் பட்டனர். தமிழர் கடைகள் தீயிடப்பட்டன வீடுகள் தகர்க் கப்பட்டன : குடும்பங்கள் குடிபெயர்ந்தன உத்தியோகங்கள் கைவிடப்பட்டன் கொலே, கொள்ள்ே போன்ற கொடுமைகள் அளவின்றி நிகழ்ந்தன. துப்பாக்கி முனேயிலே அப்பாவிப் பெண் களின் கற்புச் சூறையாடப்பட்டது; உயிருடன் நெருப்பிற்கு இரை பாக்கப்பட்டனர் சிலர், அரசே வெளிவெளியாகத் தமிழர் களேத் தாக்கியது. தமிழர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர்.
காவிழந்தோர் பலர் காதிழந்தோர் பலர் கையிழந்தோர் பலர் கண்ணிழந்தோர் பலர். தமிழ்க் குடியிருப்புக்கள் இரத்த வெள்ளத்திலே தத்தளித்தன.
பொலீஸும், இராணுவமும் அளவிறந்த ஆதிக்கம் செலுத்தி வாரம்பித்தன. ஊரடங்கு உத்தரவு உருவாக்கப்பட்டது. அகதி கம் தொகை அளவிடற்கரிதாயிற்று.
விடுவாசல்களே இழந்தோர், உடைமைகளே இழந்தோர். பின்ன்களை இழந்தோர், கண்வனையிழந்தோர், கற்பை இழந் தோர், பெற்ருேரை இழந்தோர், மனேவியரை இழந்தோர். இன்னும் எதையெல்லாமோ இழந்தோர்-வடித்த இரத்திக் கண்ணீர் வெள்ளம் ஆருக ஓடியது
இல்வுலக மாதாவின் செவிகளே செவிடு படும்படி இவரேந் தடித்தது இக் கண்ணிர் ஆறு

... - 57 -
துன்பப் படுகுழியில் தென்னிலங்கைத் தமிழ் மக்கள் துடிதி துக்கொண்டிருந்த நேரத்தில் தமிழ்ப் பிரதேசங்களிலிருந்த சிங்கள மக்கள் எவ்வித இம்சைக்கும், இன்னலுக்கும் ஆளா காமல், தமிழ் மக்களின் அன்பரவணைப்பிலே நிம்மதியுடன் இருந்தனர் என்பதை நான் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும் தமிழ் மக்களின் பொறுமைக்கும், பண்புக்கும். தமிழ்த் தலைவர் களின் பொறுப்புணர்சிக்கும் இது சிறந்த எடுத்துக் காட்டு என்பதை யாரே மறுக்கவல் வார்?
கடலேக் கடந்த கடமையாளன்!
வெடித்தெழுந்த இனக் கலவரத்தின் விளைவாகத் தென் னிலங்கைத் தெள்ளு தமிழ்க் குலத்தோர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்பல இக் கொடுமைகள் பற்றிய செய்திகள் நாட்டின் ஏனேய பாகங்களுக்கு எட்டாதபடி இருட்டடிப்புச் செய்த போதிலும் வடஇலங்கை வாழ் வண்டமிழ்க் குலத் தார்க்கு இவை தெரியத்தான் செய்தது. தமது உடன் பிறப்புக்கள்பால் இடம் பெற்ற அட்டூழியங்களே அறிந்த இவர்களது இதயம் கொதித்தது : இரத்தம் துடித்தது; பொறுமையை இழந்தனர் பொங்கி எழுந்தனர். விளேவு? மே 27ஆம் நாள் அமைதி குலேந்தது அராஜகம் குடி கொண்டது:
ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி மக்கள் திரண் டனர் கலவரம் புரிந்த ன ர், வேள்வித் தீயிற் பற்பல பொருட்கள், சிற்சில கட்டடங்கள் வெந்து பொடி சாம்ப ராயின. கரை காண முடியாத கடுந்துயரினுற் கலவரம் புரிந்த கன்னித் தமிழரை நோக்கி அரசின் காவற்படைகள் குண்டாந் தடியடிப் பிரயோகம், துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம், கண் னிர்ப் புகையடிப் பிரயோகம் போன்றனவற்றை அளவின்றிச் செய்தன. இதன் விளேவாக இன்பத் தமிழர் சிலர் தமது இன்னுயிரைத் தமிழ் மண்ணிற்கு ஈந்தனர்; இன்னும் பலர் உயிருடன் போராடும் நிலக்குத் தள்ளப்பட்டனர் இளங் சாளேயர் சிலர் ஆபத்தான பேர்வழிகள் எனக் கருதி ஆங்காங் குள்ள காவற்துறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர்;
மகாநாடு முடிந்து மட்டுநகர் நண்பர்களுடன் வீடு திரும்பிய அமிர்தலிங்கத்திற்கு இங்கு நடந்த சம்பவங்கள் பேரதிர்ச்சி யையும், பெருந் துயரையும் ஏற்படுத்தியது. அவரது மனம் நிலே கொள்ள மறுத்தது வந்த கையுடனே நண்பர்கள் சில ருடன் புறப்பட்டார். இரவு பகல் என்ற வித்தியாசமின்றி எந்நேரமும் மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடங்களுக்கும்,
த = 8

Page 41
- 58 -
காயப்படுத்தப்பட்டோர் வைக்கப்பட்டிருந்த வைத்தியசாலே ஆளுக்கும், பிடிக்கப்பட்டோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த காவத் துறைகளுக்கும் மாறி மாறிச் சென்று நிலமையைக் ஆண்டு ஆவன கொள்ளும் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டார். உடன் பிறப்புக்களுக்காகப் போராடி உயிரைப் போக்கிய பிரேதங்களே அடையாளங்கண்டு உரியவர்களிடம் சேர்ப்பிப் பதற்கும் காயமுற்ருேர் நிலேமையைத் தெரிந்து அவர்களின் குடும்பத்தார்க்கு ஆறுதல் வார்த்தை கூறுவதற்கும் பிாரண மில்லாமற் காவலில் வைக்கப்பட்டோருக்காக வாதாடி அவர் களே விடுவித்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி விவப்பதற்கும் நேரம் போதாமற் திண்டாடி ஞர்.
இத்தனேக்கும் இடையில் கிளிநொச்சி போன்ற தூர இடங் ஆளுக்கும் சென்று எதுவித முகாந்திரமுமின்றி ஏது மறியா அப்பாவி மக்களுக்கு அரசபடைகள் இழைத்த இன்னல்களே அறிந்து, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்குப் புகார் செய்து ஆவன செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளானுர், வீட்டில் ஒரு நிமிடமேனும் தங்கிநிற்க முடியாமல் அங்கு மிங்குமாகப் பறந்து திரிந்தார் கடமையாளர் அமிர்தலிங்கம்
தமிழர் தலைநகரிலேயே இத்துனே இடுக்கள்கள் ஏற்பட்ட தென்ருல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் விளேவாகச் சிங்களவர் வசமாகிக் கொண்டிருக்கும் செந்தமிழ்ப் பூமியாம் மட்டக்களப்பைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லே. அரசின் ஏவலாளர்களிஞலும், அரசின் காவற் படைகளினுலும் தமிழர் களுக்கு எதிராக இலங்கை முழுவதிலும் இழைக்கப்பட்ட அட் டூழியங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போ லமைந் தது மீன் பாடும் தேன் நாட்டில் நடைபெற்ற அட்டூழியங்கள். மட்டக்களப்பு நண்பர் திரு. பத்மநாதனுக்குப் பரிபாஷை மூலம் எழுதப்பெற்றுக் கிடைக்கப்பெற்ற தந்தி இதனேத் தெளி வாகத் தெரியவைத்தது .
■ ஏற்கெனவே உள்ளங் குமுறிக் கொதிப் படைந்திருந்த அமிர்தலிங்கத்திற்கு மட்டக்களப்பைப் பற்றிக் கிடைத்த செய்திகள் அவரது உள்ளக் குமுறலே மேலும் அதிகமாக்கியது: மட்டக்களப்பு நண்பர்களோ, தவித்தபடி உடன் புறப்படத் துடித்தனர். இவர்களின் தவிப்பைத் தணிய வைப்பதற்கும் மட்டக்களப்பு வாழ் மக்களின் நி3லமையை நேரிற் கண்டறிந்து ஆவன செய்வதற்கும் அங்கு செல்வதே சாலச் சிறந்தது என் பதை உணர்ந்த அமிர்தலிங்கம், உடன் புறப்படத் தயாராஞர். இவரது இந்த முடிபு மட்டக்களப்பு நண்பர்களின் வயிற் நிற் பால் வார்த்ததுபோல் இருந்தது. ஆஞல் அடுத்த கணமே

- 59 -
இன்னெரு கலக்கம் அவர்களே அனைத்துக்கொண்டது. மோட் டார் சதங்களோ, புகையிரதமோ போக முடியாதவாறு நாட் டின் பாதைகளனைத்தும் நாசகாரர்களால் நாசமாக்கப்பட்டிருந் திதிால் எப்படிப் போவது என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற் படக் காரணம் உண்டல்லுவா ?
அஃனத்துப் பிரச்சினேகளேயும் அரை தொடியிற் தீர்க்கவங்ல மார்க்கங்களே மனதிலே வரவழைப்பதில் கீர்த்தி மிக்க தீரரான அமிர்தலிங்கம் இதற்கான மார்க்கத்தையும் கண்டுபிடித்தார்: " திரை மார்க்கமாகச் செல்வத்தான் தடையே தவிரக் கடல் மார்க்கமாகச் செல்ல ரது தடை தடுக்க வல்லார் யார்? அாடல் மார்க்கமாகவே கப்பலிற் செவ்வோம் கலங்காதீர்" என்ருர்: அண்வரும் களிப்படைந்தனர்.
இவர்களின் தீர்மானம் இப்படியிருக்க, மட்டக்களப்பி விருந்து அவசரத் தந்தி மூலம் இன்னுேர் அழைப்பும் தலைவர் வன்னியசிங்கம் அவர்களே வந்தடைந்தது:
மலே குலேந்தாலும் நிவே குவேயாத மறுத்தமிழன்-எதையுத் தாங்கும் இதயங் கொண்டோன்-எழிற் தமிழை ஆளும் எழுச்சி வேந்தன்-அர்த்தம் நிறைந்த-அழகு நிறைந்த-அலங் கார அடுக்குகள் நிறைந்த-அரும்பு உள்ளங்களேயும், இரும்பு நெஞ்சங்களேயும் நெகிழவைக்கும் கன்னித் தமிழ்ப் பேச்சால், ஈழம் வாழ் தமிழ் பேசும் மக்களே மட்டுமின்றி உலகம் வாழ் தமிழ் பேசும் மக்கள&னவரதும் உள்ளங்களேயெல்லாம் கொள்ள படித்த கொள்ளேக்காரன்-குறிப்பாகக் கிழக்கு மாகாணத்துத் தமிழ் பேசும் மக்களேத் தன் பேச்சாலும், எழுத்தாலும், நடிப் பாலும் செயலாலும் தமிழரசுக் கொடியின் கீழ் அணி திரளச் செய்து கிழக்கு மாகாணத்தைத் தமிழரசுக் கோட்டையாக்கிய கோமான்-சொல்வின் செல்வர்-மட்டு நகரின் முடிசூடா மன்னர்-செந்தமிழ்ச் செல்வர் செ. இராசதுரை தனக்கு உதவி யாக ஆற்றல் வாய்ந்த ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவரை உடனடியாக அனுப்பி உதவுமாறு அடித்த தந்தியே தலைவர் வன்னியசிங்கத்திற்கு வந்த அழைப்புத் தந்தி ஆகும்.
திரு இராசதுரையின் வேண்டுகோட்படி ஆற்றல் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கமே என்பதை அறிந் திருந்த தஃலவர் வன்னியசிங்கம் அவர்கள், அமிரை அழைத்துப் " போக முடியுமா?" எனக் கேட்டார் ஏற்கெனவே போவ தற்குத் தயாராகவிருந்த அமிர்தலிங்கம்,
"இதோ புறப்பட்டுவிட்டோம்" எனப் பதில் தந்தார். "புறப்பட்டுவிட்டோம் என்கிறீர்களே, வேறு யார்?" " என் நTேவி,"

Page 42
- 60 -
மகிழ்ச்சியைவிடக் கோபந்தான் வந்தது கோ ப் பா ப் க் கோமானுக்கு ஒரு தந்தையிடமுள்ள பிள்ளேப் பாசத்துடள் மங்கையர்க்கரசியை அழைத்தார். நாட்டின் நிலமையைச் சுருக்கமாக ஆணுல் தெளிவாக விளக்கிஞர். நீண்ட பயணத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளேயும், ஆபத்துக்களேயும் விளக்கிஞர்.
தலே வரின் வார்த்தையை என்றுமே த ட் டி யறி யாத மங்கையர்க்கரசியார், இவ்விஷயத்தில் மட்டும் அவரின் அறி வுரையையும், ஆலோசனேயையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக வில்லே "தவோ இருவருமே இணேந்து செயற்படுவோம்: அனேந்துவிட்டாலும் அப்படியே ஆகட்டும் இருவருக்கும் " என வன்னியரிடம் உறுதியாகக் கூறிவிட்டார்: இராமாயணச் சீதைக்கு, இராமனிருக்குமிடந்தானே அயோத்தி? புறப்பட்டார் கணவனுடன்
நாடு முழுவதும் அவசரகாலநிலே ஊரடங்கு உத்தரவு அாேத்தும் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தன. வீதிக்கு வீதி பட்டாளத்தினர் வெறிபாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். நாட்டின் ஒரு பகுதியில் நடப்பவை, ஏனேய பகுதிகளுக்குத் தெரியாதவாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தன வீட்டி விருந்து வெளியே புறப்பட்டால், மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை எவரிடமுமே இருக்கவில்லே.
இத்தகைய ஒரு பயங்கரமான சூழ்நிலையில் வீட்டை விட்டு-சொந்த மண்ணே விட்டு-பால் மனம் மாருப் பச்சிளங் குழந்தையை விட்டு - உற்ருர் உறவினரை விட்டு-கட்டிய களவனுடன் நூற்றுக் கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள ஒரு பிரதேசத்திற்கு-அதுவும் சிங்களவர் ஆக்கிரமித்துக் கொண் டிருக்கும் மண்ணிற்கு-கொலேயும் கொள்ளேயும் கற்பழிப்பும் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஒரு பிரதேசத்திற்கு-அதுவும் அந்த நேரத்தில் ஆபத்து நிறைந்திருந்த கிழக்குக் கரையோர மாகக் கப்பல் மூலம் போவதற்குப் பெண்ணுெருத்தி செல்கின்ரு ளென்ருல், அந்த மறக்குல மங்கையின் வீரத்தையும் துணிச் சலேயும், கடமை யுணர்ச்சியையும் போற்றுவதா? அல்லது அத் தகைய வீராங்கனேயைத் தன் வீட்டரசியாகப் பெற்ற பாக்கிய வாவ் அமிர்தலிங்கத்தின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டுவதா ?
யாரைப் பாராட்ட? அந்தப் பொறுப்பை அறிவுடையவர் களே. ! உங்களிடம் விட்டுவிடுகிறேன்"
அமிர்தலிங்கம் தம்பதியரைத் தனியாக அனுப்பமுடியாது துரோக்குத் தோழர்கள் நாம் வருகிருேம் என அடம் பிடித்த பலரில், கொக்குவில் அருணுசலம், அளவெட்டி நடராஜா, மல்வாகம் பாண்டித்துரை ஆகிய மூவரையும் தன்னுடன்

- 61 -
அழைத்துச் செல்லச் சம்மதித்த அமிர்தலிங்கம், மட்டக்களப்பு நண்பர்கள் பத்மநாதன் போன் ருே ரு டன் முன்னுள் செனட்டர் திரு மாணிக்கம், திருமதி மாணிக்கம், அன்று செல்வியாக விருந்த திருமதி கலா தம்பிழ்த்து, மாலுமிகள் அறுவர் உட்படப் பதினூறு பேர் கொண்ட-ஒரு சிறு படை என்று சொல்வத்தக்க அந்த அஞ்சாமை குடிகொண்ட குழு விற்கு-தலேமை தாங்கிப் புறப்பட்டார் தளபதி அமிர்தவிங்கம்
1958ஆம் ஆண்டளவில் ஒரு சிறிய மரக்கல மொன்றை அத்திலாந்திக் மகா சமுத்திரத்தையுந் தாண்டி அமெரிக்கா வுக்குக் கொண்டு சென்று சேர்த்ததன் மூலம், அப்பலோட்டுங் அவே தமிழனுக்குக் கைவந்த கலே அக்கலேயின் சொந்தக்காரனும் அவனே-என்பதை மாற்ருரும் ஏற்றுப் போற்றும்படி செய்த மாவீரர்கள் வாழும் வல்வெட்டித்துறையை அடுத்துள்ள பருத்தித்துறையில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பும்= வான் புகழும் மிக்க துறைமுகம் அது.
அந்தத் துறைமுகத்திலிருந்துதான் மேத் திங்கள் 31ஆம் நாள் நண்பகல் ஒரு மணிக்கு நூற்றுக்கணக்கான கட்சித் தோழர்கள் வாழ்த்தி வழியனுப்பிவைக்க அமிர்தலிங்கம் குழு வினர் தமது கிழக்கிலங்கைப் பயணத்தை ஆரம்பித்தனர் இவர்களது பிரயாணத்திற்குமுன் மதிய போசனம் அளித்த தோடு வழிப் பிரயாணத்தின்போது உண்டு பசியாறவென் அரிசி, காய்கறிகளேயும் துள்ளிஅள்ளி வழங்கினர் பிரபல வர்த்தகர் திரு. வீரகத்திப்பிள்ளே இராசசேகரமும் அவரது மனேவியும் அன்பு மகளும். இவர்கள் பிரயாணஞ் செய்வதற் கான மோட்டார்ப் படகைத் தந்துதவியவர் வல்வெட்டித்துறை வாசியான திருமதி கனகசுந்தரம் என்ற பெண்மணி ஆவர். அத்தோடு, திருவாளர்கள் நாகரத்தினம், மயில் வாகனம், விஜய விங்கம், சின்னராசா, வயிரமுத்து, ஆறுமுகம் ஆகிய ஆறு மாலுமிகளேயும் தந்துதவிய பெருமைக்குரியவரும் இவரே. ஆபத்துக்கள் பல சூழ்ந்த அந்த நேரத்திலும் தனது சின்னஞ் சிறிய படகை இவர்களது பிரயாணத்திற்கெனத் தந்துதவிஞர் என்ருல் அப் பெண்மணியின் நெஞ்சத்தே குடிகொண்ட அஞ்சாமையையும் - அருந்தமிழ் ஆர்வத்தையும் - போற்ரு திருக்க வழியுண்டோ ?
இவ் வீர மங்கையின் " மகாமாயி' என்ற மோட்டார்ப் படகு அமிர்தலிங்கம் குழுவினரைச் சுமந்துகொண்டு-கொந் தளிக்கும் கடல் நீரைக் கிழித்துக்கொண்டு-கிழக்குக் கோடியை நோக்கி விரைந்து சென்றது. கதிரவனின் கடுமையான வெப் பத்தினின்றும் மீள்வெனப் படகின்மேல் அமைக்கப்பட்டிருந்த கடாரத்தில் அமிர்தலிங்கம் குழுவினர் ஒதுங்கிக் கொண்டனர். வடஇலங்கையின் சிற்சில பகுதிகள் வெண்மணல் நிறைந்த

Page 43
தாகவும், சில இடங்கள் அழகிய காடுகளாகவும், தென்னநீ தோப்புகளாகவும், நுங்குகள் நிறைந்த உயர்ந்த பனங் கூடல்க ளோகவும் இயற்கை எழில் நிறைந்ததாக அமிர்தலிங்கம் குழுவினரது கண்களுக்கு இனிய விருந்தளிக்கும் வகையிற் காட்சி தந்துகொண்டிருந்தன. ஆயினும் மறுபக்கம் ஆழ்ந்த-பரந்தசமுத்திரத்திற்கப்பால் மானசீகமாகத் தெரிந்த-அறிஞர் அண்ணு கண்ட தாய்த்தமிழ் நாடு அமிர்தவிங்கத்தின் மனதிற்கு மிகுந்த வேதனேயைத் தருவதாக இருந்தது.
என்ன கொடுமை இருபதே மைலுக்கு மேற்படாத இந்து சமுத்திரம் பிரிக்கும் ஒரே காரணத்தால்-மொழியாலும், இனத் தாலும், மதத்தாலும், கலேயாலும், கலாசாரத்தாலும், பண் பாட்டாலும், உள்ளத்தாலும், உணர்ச்சியாலும், இன்னும் எல்லா வகையாலும் ஒன்ரு கவிருந்தும் தெற்கே சிங்களத் திற்கும்-வடக்கே இந்திக்கும் இடையில் நசுக்கப்பட்டு வரும் நற்றமிழர் இங்கிருப்போரும் அங்கிருப்போரும் அவரவர்க்கு அதிகாரவர்க்கத்தினரால் இழைக்கப்படும் துன் பங்களே க் கண்டு கண்பிசைந்துகொள்ளவும், கண்ணிர்வடிக்கவும், ஒரு வருக்கொருவர் ஆதரவாக அனுதாபம் தெரிவிக்கவும் மட்டுமே முடிகிறதே தவிர, ஆக்சு வழியில் எதுவுமே செய்ய முடியாத அவல நிலேக்குத் தள்ளப்பட்டு அடக்கப்பட்டவர்களாக வாழும் கேவல நிலையை நினைந்து மனம் வெம்பி வெதும் பிஞர் அமிர்த விங்கம்.
இப்படியான எமதினத்தைப் பற்றிய பற்பல எண்ன அலேகள் அமிர்தலிங்கத்தின் மனதிலே முட்டி மோத, அவர் பிரயானம் மேற்கொண்ட " மகாமாயி "ப் படகிலே கடல் அலேகள் முட்டி மோத, அவ்வலே களேப் பிரித்துக்கொண்டு பிர யானம் மிக வேகமாக இரவு பகலாகத் தொடர்ந்தது,
எவ்வளவுதான் வேகமாகச் சென்றபோதிலும் மறுநாள் முதல் தேதி மாலேயில்தான் மட்டக்களப்புத் துறைமுகத்தை அண்மிக்க முடிந்தது 'மகாமாயி'ப் படகினுல் ஆயினும் முகத்துவாரத்தைத் தாண்டமுடியாத நிலே, அதனுல் முகத்துவா ரத்திற்கு வெளியேயுள்ள ஓர் குடாவினுள் நங்கூரமிட்டு நிற்க வேண்டிய நிலேயேற்பட்டது. தெய்வம் விடை கொடுத்தும் பூசாரி விடை கொடுக்கவில்லேயே என்ற வாட்டம் அமிர்த விங்கத்திற்கு ஏற்பட்டது. என்னவோ. வேடம் போட்டாகி விட்டது. ஆட்டமும் போடத் தானே வேண்டும்? கடந்த இரவைப்போலவே இந்த இரவையும் இங்கே - இப்படகிலேயே அழிக்க வேண்டியதுதான் என்பதைத் தன் சகாக்களுக்கு அறிவித்தார் அமிர்தலிங்கம் உடன்வந்த பெண்மணிகளைப்

- 63 - நூலகம்
பார்த்து, "ஆக்கப் பொறுத்தீர்! ஆறவும் பொறுப்பீர்!" என்ருர் எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய இப்படிப்பட்ட கஷ்டங்களே அநுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து அதற்குத் துணிந்து வந்ததினுல் அவைகண்டு எவரும் மன்ச் சோர்வடையாதவர்களாக மகிழ்ச்சியுடன் அவற்றை ஏற்பவர்க ளாகக் குதூகலமாகவே காணப்பட்டனர். "தவேரே மகா பாரதத்துத் தருமரைக்கூடப் பொறுமையில் விஞ்சுமளவிற்குப் பக்குவமடைந்துவிட்டோம் பொறுமையே நிறைந்த செல்வம் ாமக்கு எதற்குத் தயார் நாம் ' எனப் பெண்மணிகளும் மற்றவர்களும் உற்சாகமாகக் கூறிய வார்த்தைகள் அமிர்த விங்கத்தின் மனதிற்குப் புள காங்கிதத்தை ஏற்படுத்தியது'
அமைதியாகப் படகிலமர்ந்தவாறு மீன்பாடும் தேள் நாட்டின் கரையோரங்களிற் தம் கண்களேச் சுழலவிட்டனர் அமிர்தலிங்கம் குழுவினர் அப்படிச் சுழலவிட்ட அவர்களது கண்களுக்குக் காட்சியளித்தவை இயற்கை அன்னேயின் எழுச்சி மிகுந்த அலங்காரக் காட்சிகள் அன் செயற்கை அரக்கர்க ளான சிங்களக் காடையர்களும், வேலியே பயிரை மேய்வது போன்று பட்டாளத்தினரும் ஈவு இரக்கமின்றித் தமிழர்களே பும், அவர்கள்தம் உடைமைகளேயும் நீக்கிரையாக்கிக் கொழுந்து விட்டெரிந்த நெருப்புச்சுவாலேகள் கொண்ட கோரக்காட்சிகள் அன்ருே என்னே கொடுமை ஒரு பாவமுமறியாத தமது உடன் பிறப்புக்கள் சிவரும், அவர்களது உடைமைகள் பலவும் இத்தனை கொடுமைகளுக்கும் இலக்காகியதை நினேந்து நினேந்து அவர்களது நெஞ்சங்கள் நெகிழ்ந்து எரிந்தன. கனக்கிலடங்கா இந்தக் கவலையைப் போக்கவல்ல கைகண்ட மருந்து கன்னித் தமிழ் இசையே எனக் கண்டார் கடமைவீரர். தமது மனேவி மங்கையர்க்கரசியாம் இசைக்குயிலே அழைத்து இசை பாடும் படியும், தமது நண்பர் பத்மநாதனே அழைத்துக் கல்லோயாவில் அரசாட்சியினரால் குடியமர்த்திய சிங்களக் காடையர்களினுற் கிழக்கு மாகாணத்துத் தமிழ் - முஸ்லிம் பாட்டாளிவர்க்கத்தின ருடைய வியர்வையில் விளேந்த நெல்மணிகள் தந்த குடுக எஃனத்தும் பொடிசாம்பலாக்கப்பட்ட வரலாற்றை விளக்கிக் கூறிடும் நெஞ்சையுருக்கும் 'சூடு சாம்பலாச்சுப் போடியாரே' என்ற நாடகத்தினே நடித்துக் காண்பிக்கும்படியும் பணித்தார்.
தகலவரது கட்டளேயையேற்று இவ்விரு சுலேஞர்களும் தமது கலே நிகழ்ச்சியெனும் வெள்ளத்தைக் கரைபுரண்டோட விட்டனர். இக்க: வெள்ளத்தில் மிதந்து மகிழ்ந்தார் அமிர்த லிங்கம். தமிழிசைதரும் இன்பத்துக்கு நிகராகத் தையலாள் தரும் இன்பங்கூட இணையாகமாட்டாதென்ற எண்ணம் இவ்

Page 44
- 64 -
விசையில் லயிக்கும்போது அமிர்தருக்கு ஏற்பட்டது. இரவு முழுவதும் இசையில் திளைத்திருக்க அனேவரும் விரும்பினுலும் நிந்திராதேவி அதற்கு இடமளிக்க மறுத்துவிட்டாள். அவளது அரவஐப்பில் கட்டுண்டு கிடக்க இருவர் மட்டும் இசைந்துவிட வில்லை. தமது தலைவனும், தலேவியும் நித்திராதேவியின் அர வனப்பில் லயித்துக்கிடக்கும்போது அவர்களுக்கு இடைே றேதும் ஏற்படாதிருக்கும் பொருட்டுப் பாதுகாப்பாக நின் நீட்வே அவர்கள் பிடிவாதமாக விரும்பினர். இவர்களது இச் செய்கை இராமனுக்கும், சீதைக்கும் காட்டின்கண் காவலாக நின்றிட்ட தம்பி இலக்குமணனே நினைவுகொள்ள வைக்கிற
।
காலேயிற் கதிரவன் வரவுகண்டு கமலமுகம் மலர்ந்திடு முன்பே அனேவரும் புறப்பட்டுச்சென்று, கைக்கடிகாரம் ஏழு பணியெனக் காட்டுமுன்பே மட்டக்களப்பு மாத்தமிழ் மண் ரிெலே கால் வைத்தனர். சுமார் நாற்பது மணி நேரமாகச் பின்னஞ்சிறிய மரக்க லத் தி ற் பட்ட கஷ்ட நஷ்டங்களே நினேத்துச் சுமாரான பெருமூச்சு விட்டனர். சொல்லின் செல் கிரைக் கண்டு சேமமறிந்திடத் துடித்தார் அமிர்தர். இச் சமயத்தில் புழுதிபறக்க இரைந்தடித்துக் கொண்டு வந்த இரண்டு பொலீஸ் ஜீப் வண்டிகளில் ஒன்றின் முன்பக்கச் சக் சரம் அமிர்தரின் பாதங்களே ஏறிமிதித்திடு மளவிற்கு மிக நெருக்கமாக வந்து கிறிச்" என்ற பேரிரைச்சலே எழுப்பியபடி , பிறேக் போட்டு உறுமி நிற்க, மறு ஜீப் மறு பக்கமரிசு (பின்புறம்) வந்து அதே பேரிரைச்சல் கொண்ட பிறேக் போட்டு உறுமி நின்றது. முன்னுல் நின்றிட்ட ஜீப்பிலிருந்து கைத்துப்பாக்கி புடன் பட்டென்று குதித்தார் இன்ஸ்பெக்டர் ஹுசேன். அவரைத் தொடர்ந்து துப்பாக்கிகள் சகிதம் தொப்.தொப் பென்று குதித்தனர் பொலீஸ்காரர்கள். அவர்கள&னவரும் ஆமிர்தர் குழுவினரையும் அவர்களேச் சுமந்து வந்த படகையும் சிற்றிவ3ளத்துக்கொண்டனர்.
எப்போதுமே அதியாயத்தைக் கண்டு ஆத்திரப்படும் வழக் கத்தைக் கொண்ட அமிர்தர், கோபரேகை முகத்தில் நர்த்தன மாட கைகளிரண்டுங் கம்பீரமாக இரு இடைகளேயும் பற்றிக் கொள்ள - இன்ஸ்பெக்டர் ஹாசேனேப் பார்த்துப் பின்வரு மாறு கேட்டார்: " என்ன இது?" இன் ஸ்பெக்டரும் இடிந்து விடவில்லை. தன் பதவிக்கேற்ற கம்பீரத்துடன், 'ம்ட் புறப் படுங்கள்" என்ருர், ' எங்கே புறப்பட" பதிலுக்கு அமிர்தர் கேட்டார். இச்சமயத்தில் மனேவியார் மங்கையர்க்கரசியார் ஒனவனின் தோள்களைப்பற்ற, மற்றைய பெண்மணிகளும் அவர்

- 65 -
அருகே வந்து நின்றுகொண்டனர். "பொலீஸ் ஸ்டேசனுக்கு" என்ருர் இன்ஸ்பெக்டர் பதிலுக்குப் பதில் தரும் அமிர்நரும் "எதற்கு?" என வினவிஞர். " சுப்பிரின் டென்டென்ட் ஜிவ்வா வின் உத்தரவு" என்று சொன்ஞர் இன்ஸ்பெக்டர், ஏன் இந்தத் திடீர் உத்தரவுரி" அமிர்தரின் உதடுகள் இவ்வார்ததை களே உதிர்த்தன. "அது அவரைக் கேட்கவேண்டிய கேள்வி" என அட்ைசியமாகப் பதில் தந்தார் இன்ஸ்பெக்டர் அமிர்தரின் முகம் சிவந்தது; கோபக்கவில் வீசியது. உறுமியபடி, "உமக்குத் தெரியாதோ?" உதிர்த்தார் அமிர்தர் வார்த்தகளே. இன்ஸ் பெக்டர் வெருண்டிடவில்லே சற்றுப் பயத்துடன், "தெ தெ தெரியாது' என்ருர், கோபம் சற்றுத் தன்னிந்தவராய் அமிர்தர் கேட்டார். "டிளேத்து நிற்கவும் அழைத்துப் போகவும் மட்டும் தெரியுமா?" "aறி-ஹி-ஹி-", இது இன்ஸ்பெக்டரின் குரல், இதைக் கேட்டதும் அமிர்தருக்கும் அவரது குழுவினருக்கும் பொத் தென்று சிரிப்பு வந்துவிட்டது; சிரித்துவிட்டனர். இன்ஸ் பெக்டரின் முகத்தில் அசடு வழிந்தது. அங்கு நின்ற இரண் டொரு தமிழ்ப் பொலீஸ்காரர்களுக்கும் சிரிப்புவந்த போதி லும் சட்டென்று அடக்கிவிட்டனர். இதனே மங்கையர்க் கரசியார் கண்டிடத் தவறிடவில்லே, சிங்களப் பொலீஸ்கரர் களோ தேன்தமிழ் மொழி புரியாததால் மரம்போலவே - கருமமே கண்ணுகவே-நின்றனர்.
அமிர்தர் சிரித்தவாறு "சரி வரலாம், ஆட்சேபனை இழ்வே. ஆனுஸ் காலேக்சுடனேதும் இன்னமும் முடிக்க்வில் லேயே இன்ஸ் பெக்டர் ' 'அதைப்பற்றி எனக்கு அக்கறையில்ஃப் உடன்ே அழைத்து வரும்படி உத்தரவு." என் இன்ஸ்பெக்டர் கூறினர். அமிர்தர் குழுவினரில் ஒருவ்ர். "பசி வயித்தைக் கிள்ளுது. சற்றுச் சாப்பிட்டுவிட்டு . " அவர் முடிப்பதற்குள் இகள் பெக்டர் கோபத்துடன் "வுட் அப்" என்ருர் அமிர்தர் சற்றுச் சினத்துடன் "ஆடைமாற்றவாவது அவகாசம் தருவீர் சுளா ?' என்ருர் இன்ஸ்பெக்டரைப் பார்த்து. "உடனே அழித்து வரும்படி உத்தரவு" எனப் பழைய பல்லவின்யயே பாடிஞர். அத்தோடு, சற்று முன்னம் பட்ட அவமானம் தாளாது அவருக்கு ரோசம் வந்துவிட்டது போலும். "இப்பொழுது புறப்படுகிறீர்களா இல்லேயா?" எனப் பொறுமை
விடைபெற-குர்ல் பேதவிக்கிக் கூவிஞர் இன்ஸ்பெக்டர்.
" ஆகட்டும்' என்பதைத் தவிர அமிர்தலிங்கத்திற்கு வேறு மார்க்கம் எதுவும் கிடைக்கவில்லே. சொந்த மண்ணிற் காவக்க மட்டுமல்ல, அன்ருடம் மனிதன் கழிக்கின்ற காலுேக் கடன்களைக் கூடக் கழிக்கச் சுதந்திரமில்லாத நிலைமை தமிழ
த - 9

Page 45
- 66 -
ராகிய தமக்கு ஏற்பட்டுவிட்டதே என்பதை எண்ணி ஒரு கணம் இடிந்து போஞர் அமிர்தலிங்கம். தன் மனேவியையும் கூடவந்த மறக்குடி மாதர்குல மாணிக்கங்கள் இருவரையும் நோக்கினுர் என்ன ஆச்சரியம். இந் நிலைமை கண்டு-நாற் பது மணிநேரக் கடற் பிரயானங்கொண்டு-அவர்களுக்கு ஏற் பட்ட களேப்பு, பசியினுலேற்பட்ட இனப்பு இவைகள் இழை யோடிட அவர்களது முகங்கள் இருண்டு காய்ந்து போயிருந் திடும், சோர்ந்து சுருண்டு போயிருந்திடுவர் என எதிர்பார்த்த அமிர்தலிங்கத்திற்கு, அவைகள் அனேத்தும் அரை நொடியிற் பறந்தோடிவிட்டனவாய் அவர்கள் அகமும், முகமும் மலரபுன்முறுவல் பூத்துக்குலுங்க-புளகாங்கிதம் தாண்டவமாடகாட்சியளித்தார்களென்ருல், அமிர்தலிங்கத்திற்கு ஆச்சரியம் ஏற்பட்டதில் விந்தையுண்டோ ?
அம் மங்கையர் இவ்வாறு நின்ருர்களென்ருல், பொலீஸா ரின் அநியாய ஆன அவர்களது மனதிற்கு எத்துனே திண்மை பைக் கொடுத்திருக்கவேண்டும்? தமிழ்த்தாய்மார்களுக்கு வழிவழி வந்த வீரம் இன்றளவும் நின்று நிலவிடும்போது நமக்கு மண்ணுரிமை, மதவுரிமை, மொழியுரிமை, அரசுரிமை, வாழ் வுரிமை அனேத்தும் மறுக்கும் மந்த புத்தி கொண்ட அரசாட்சி பினரின் ஆணவப்போக்கும், அடக்குமுறைத் தர்பாரும் இன்னும் எத்தனே நாாேக்கு நீடிக்கமுடியும்? அதையுந்தான் பார்த்திடு வோம் என்ற எண்ணங்கள் அமிர்தரின் உள்ளத்தில் அலேயோடி யது. இவரது இந்த எண்ண அலகளே இடிந்து விடுவதுபோல் இரைந்தது இன்ஸ்பெக்டரின் " புறப்படுங்கள்" என்ற இறுமாப்பான குரல். " சரி போகலாம்" என்ருர் அமிர்தர். அனேவரும் இரண்டு வண்டிகளிலும் ஏறிக்கொண்டனர். அந்த இரு பொலீஸ் வண்டிகளும் முன்பு வந்த அதே வேகத்துடனே இரைந்தடித்தபடி மட்டுநகர்ப் பொலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்து சென்றது.
அநீதி கண்டார்; ஆவேசங் கொண்டார்
மட்டுநகர்ப் பொலீஸ் ஸ்டேசனுக்கு மாவீரர்கள் கொண்டு வரப்பட்ட செய்தி அம் மாநகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது அல்லோவ கல்லோலப் படுத்தியது. அமிர்தர் குழுவினரைப் பார்க்கவெனப் பொலீஸ் ஸ்டேசன நோக்கி அமுதத் தமிழர் பலரும் படையெடுத்தனர். பொலீஸ் ஸ்டேசன் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. திரண்டு நின்ற மக்களில் எவரேனும் அமிர்தர் குழுவினரோடு யாதொரு வார்த்தையும் பேசக் கூடாதெனத் தடையுத்தரவும் பிறந்தது. ஆவலோடு தம்மைப் பார்த்துப்பேச விரும்பியவர்களுடன் ஆசையோடு ஆறுதலாக

I- 6 -
இரண்டொரு வார்த்தை கூடப் பேச முடியாதபடி பொலீஸ் பிறப்பித்த கடும் உத்தரவு கண்டு கட்டுமீறிய கோபம் அமிர் தருக்கு வந்தடையவே, பொலீஸ்ாரை நோக்கிக் காரமான கேள்விக் ஆஃண்களேச் சரமாரியாகத் தொடுக்கலானுர் அவர் " எம்மைப் பார்க்கவிரும்பிய பொலீஸ் சுப்பிரின் டென்டென்ட் ஜில்லா எங்கே? எதற்காக இத்தனே கட்டுக்காவல் இன்ஸ் பெக்டர்" என்ருர், "கொழும்பிலிருந்து கட்டளேயை எதிர் நோக்கியுள்ளார்; உடனே வருவார் வரும்வரை காத்திருங்கள்" என்ருர் இன்ஸ்பெக்டர் ஹூசேன்.
இச்சமயத்தில் இன் தமிழ் வேந்தன் இராசதுரை புயல் வேகத்தில் வந்தார், அமிர்தர் குழுவினரை ஆவலோடு பார்ப் பதற்கு, டெக்கின் தளபதியும் கிழக்கின் தளபதியும் கட்டித் தழுவிக் கொண்டனர். ஒரு சில வார்த்தைகள்தான் இருவரும் பரிமாறிக்கொண்டனர். அதற்குள் தடுத்துவிட்டனர் காவல் புரிந்த ஆயுதந் தாங்கிய பொலீஸார். இரு தளபதிகளும் ஒன்றுசேர்ந்து விட்டனர்; எங்கே தமது பொலீஸ் ஸ்டேசன் அல்ல மட்டக்களப்புக் கோட்டையே தரைமட்டமாகி விடுமோ என்ற ஏக்கம் பொலீஸ்ாருக்கு ஏற்பட்டுவிட்டது போலும், போடப்பட்ட காவல் இன்னும் இரு மடங்காசுப் பலப்படுத் தப்பட்டது. அளவுக்கு மீறிய அநியாயம் நடைபெறுவது கண்டு ஆத்திரம் மேலிட்டாலும் அதற்கு அடிபணிந்து விட வில்லே அமிர்தர் குழுவினர். "கட்டுண்டோம்; காத்திருப்போம்: காலம் மாறும், களத்திலே காண்போம்" என்று அனைவரும் பொதுமைப்பாடு ஜில்லாவின் வருகையை எதிர் நோக்கிக் காத்திருந்தனர். பல மணித்தியாவங்கள் உருண்டோடின
பொலீஸ் சுப்பிரின் டென்டென்ட் ஜில்லா வரவேயில்.ே இறுதியில் சுமார் 18 மணிக்கே அவர் வந்தார். உடுத்த உடைகளுக்கு மாற்றுடை தரக்கூட மார்க்கமின்றி வெப்பத்தில் வெந்து மிதந்துகொண்டிருந்த கண்ணின் மணிகளாம் பெண் மணிகஃாப் பார்த்துக் காட்டி " இதற்கெல்லாம் காரண மென்ன? " என்று ஜில்லாவைக் கேட்டார் அமிர்தர். ஆணுல் ஜில்லாவோ காரணங்காட்ட மார்க்கமின்றி மன்னிப்புக் கேட் டார். " கவர்னர் ஜெனரலின் கட்டசே கிடைக்கும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். இது எனது உத்தரவு அல்ல : மேவிடத்து உத்தரவு" என்றும் சொல்லிவைத்தார் அவர் என்ன மிஸ்டர் ஜில்லா இத்தனே மணித்தியாலங்கள் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கவேண்டி யேற்பட்டதென்குல் இனிக் கவர்னரின் கட்டளேக்காகக் காத்திருக்க வேண்டிய மணித்தியாலங்கள் எவ்வளவாகும் ? அவ்வளவுக்கும் இப்
高一10

Page 46
பெண்மணிகள் இக்ரோலத்தோடுதான் காட்சிதர வேண்டுமா? இவர்கள் செய்த குற்றத்தான் என்ன?" என்று காரமாகவே வார்த்தைகளேக் கொட்டிஞர் அமிர்தர்." இவ்லே, மிஸ்டர் அமிர்தலிங்கம்! பொலீஸ் காவலோடு இப் பெண்மணிகளே மட்டும் குளித்து மாற்றுடை தரிக்கும் பொருட்டு வாடி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்' என்று சொல்லி அதற்கான ஏற்பாட்டையுஞ் செய்து அனுப்பி வைத்தார் சுப்பிரின் டென் டெஸ்ட் ஜில்லா. " மற்று நீங்கள் அனைவரும் இங்கேதான்' காவலில் இருக்க வேண்டும்" எனக் கூறிவிட்டு ஜில்லா அங் கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் பிற்பவில் 4 மணிக்குமேல் இருக்கும் " மகா தேசாதிபதியின் கட்டளே இதோ கிடைத்துவிட்டது மிஸ்டர் அமிர்தலிங்கம் !" எனக் கூறிக்கொண்டு திரும்பவும் அவ்விடம் வந்தார் ஜில்லா அவர்கள் 'பெண்மணிகளுட்பட மோட் டார்ப்படகில் வந்தவர்கள் அனேவல்ரபும் கைதுசெய்து காவ வில் வைக்கும்படியும் அடுத்தநாள் வரும் ஆகாயப்படையின் விசேட விமானத்தில் உங்களையும், மிஸ்டர் இராசதுரையை யும் அனுப்பிவைக்கும்படியும் அதற்கு நீங்கள் மறுத்தால், உங்களிருவரையும் தனித்தனியே கைதுசெய்து காவலில் வைக்கும்படியும் கவர்னர் ஜெனரல் கட்டளே பிறப்பித்துள் எார் இதோ இருக்கிறது கட்டவே ' என அமிர்தருக்குத் தெரிவித்தார் ஜில்லா,
கவர்னரின் இக்கடுமையான உத்தரவுக்குக் காரணமென்ன என்பதைக் கவர்ன்ரிடமே கேட்க விரும்பிஞர் அமிர்தர். சேர் ஒலிவருடன் தாள் தொலைபேசியிற் தொடர்புகொள்ள விரும்புவதாகத் தனது விருப்பத்தை ஜில்லாவிடம் காடுத்துக் கூறிஞர் அவர் ஜில்லா மறுப்புத் தெரிவிக்கவில்லே, ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதற்கிடையில் இராசதுரையை அழைத்துக்கொண்டு உதவிச் சுப்பிரின் டென்டென்ட் சிம்ஸ் அவர்கள் அவ்விடம் வந்து சேர்ந்தார். அதிமுக்கிய அழைப் பாக ஐந்து நிமிடங்களின் இராணி மாளிகையுடன் தொலே பேசித் தொடர்பு அமிர்தருக்குக் கிடைத்தது.
ஆம், நாட்டின் நாணயக் கயிற்றையே தன் கையிற் கொட்டி யாகப் பிடித்துங்கியத்திருந்த நல்ல சூத்திரதாரியான கவர்னர் சேர் ஒலிவர் குணதிலகா அவர்கள் தொலேபேசியில் நயம்படப் பேசிஞர். " எம்மைக் கைதுசெய்யக் காரணமென்ன?" என்ருர் அமிர்தர். அத்துடன் தானும், தனது குழுவினரும் மட்டுநகர் வந்த காரணத்தையும் விளக்கிஞர். இவ்விளக்கத்தைக் கேட்டுக் கவர்னர் அளித்த பதில் அமிர்தரை ஆச்சரியத்திவாழ்த்தியது

== 69 يې:-
பலநாட் பழகிய பால்ய நண்பனப்போல் நாணயமாகப் பேச OTTT SSTT TTTtTS S LH lLSL SCCCCC LLLLLS LGLLLLLLLLmmLLTS I am E0 80ாry' என்று மன்னிப்பு வேண்டிநின்ருர் கவர்னர். அமிர்தருக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது தெரியவில்வே கவர்னருக்கு. அவர் தொடர்ந்து பேசிஞர் "மிஸ்டர் அமிர்து லிங்கம்,நீங்கள் 18 பேர் கொண்ட ஒரு படையுடன் வந்திறங்கி யிருப்பதாகவே பொலிசார் எமக்குச் செய்தி அறிவித்தனர். அவ்வமயம் உடனிருந்த பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் "அமிர்தலிங்கம் வந்திருப்பதனுல் அது நிச்சயம் சமஷ்டிக் கட்சிப் போர்ப்பட பின் முதல் அன்ரியாகத்தா னிருக்கும்" என்ருர் இச்செய்தியின் பங்கு நதுே உங்களேக் கைதுசெய்யும்படி சுட்டள்ே ॥ பெண்மணிகளுக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்காக எனது ஆழ்ந்த வருத்தத்தை அவர்களிடம் தெரிவியுங்கள் மிஸ்டர் அமிர்தலிங்கம் " என்று குழைந்து குழைந்து பேசினுர்,
பிரதமரதும், கவர்னரதும் திகிலே அறிந்த அமிர்திருக்குச் சிரிப்புத்தான் வந்தது, அதை அடக்கியவாறு, "சேர் மூன்று பெண்மணிகள்-உடலிழைத்த வயோதிபர்கள்-ஆயுதமற்ற விரர்கள்-இவர்களேக் கொண்ட ஒர் படைவிய உங்கள் வாழ்க்கையில் உலகத்தில் எங்கேயாவது பார்த்ததுண்டா? இல்லே, அறிந்ததுண்டா? What is this?" என்ருர் ஒலிவரைப் பார்த்து தந்திரமாகப் பேசத் தவேப்பட்டார் நாட்டின் தலைவர் ஒலிவர். 'நாலாந் திகதி நடைபெறவுள்ள நாடாளு மன்றக் கூட்டத்தில் நற்றமிழர் பிரதிநிதிகள&ன்வரும் சமுகந் தந்திட வேண்டுமென நான் விரும்புகிறேன். நஷ்டப்பட்டு, கவலேப்பட்டு, கலங்கி நிற்கும் தமிழினத்தின் நிலேயை நீங்கள் எடுத்துக் கூற வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். ஆகவே, ஆகாயப்படையின் விசேட விமானமொன்றிரே நாளேக் காங் யில் அனுப்பி வைக்கிறேன் அதில் நீங்களும், நண்பர் இராச துரையும் தவறுது இங்கு வாருங்கள் கூடவே நீங்கள் மனேவி வியபும் அஈழத்து வாருங்கள். அநேகருக்கு வந்ததும் என்னேச் சந்தித்தீர்களானுல் பொலீஸ்ார் அனுப்பிய செய்திகாேக்கான் பிக்கின்றேன்' என்று தேன் வடியப் பேசிஞர் அமிர்த ரோடு பேசியளிதப் போலவே, திரு. இராசதுரையோடும் மிக்க இராசதந்திரத்தோடு பேசினுர் சேர் ஒலிவர். இறுதியில் இவர்கள்ஃாவரையும் விடுதலே செய்யும் படி பொலீஸ் சுப்ரின் டென்டென்ட் ஜில்லாவுக்குக் கட்டளே பிறப்பித்தார்:
சேர் ஒலிவர் கூறியவிதமாகத்தான் மட்டக்களப்பு பொலிஸ் நியேத்திலிருந்து செய்தி ஏதும் அனுப்பப்பட்டதா

Page 47
-- 70 -
என்பதை அறிய விரும்பிஞர் அமிர்தர் தான் அனுப்பிய செய்தியின் விபரத்தை அமிர்தருக்குக் குறிப்பேட்டிலிருந்து படித்துக்காண்பித்தார் ஜில்வா. அதில் அமிர்தருடன் வந்தவர்க இருடைய பெயர் உட்பட முழு விபரங்களும் அடங்கியிருந்தன. ஆஞங் இன்னுெரு விஷயம் அமிர்தருக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது. 18 பேர்கொண்ட படை என்ற செய்தி ஒலிவரின் அற்பண்யா? பிரதமர் பண்டாரநாயக்காவின் கிலியின் சிருஷ் டியா? மட்டுநகர்ப் பொலீஸ் சுப்பிரின் டென்டனுக்கே தெரியாத படி விஷமிகள் அனுப்பிய செய்தியா? இவைதான் அவருக்குப் புதிராக விருந்தன. "எது எப்படியாயினும் நாவாந்தேதி நாடாளுமன்றத்தில் இந்தத் தகிடுதத் தங்கள் அனேத்தையும் அம்பத்திற்குக் கொண்டுவரப் போகிறேன்" என்று ஜில்லா வைப் பார்த்துக் கர்ஜித்தார் அமிர்தர். இதைக் கேட்டதும் கலங்கிய ஜில்லா, "மிஸ்டர் அமிர்தலிங்கம் இவை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது; என்னே ஒன்றும் ஆபத்தில் மாட்டி விடாதீர்கள் " என்று கலவரத்துடன் கூறிஞர் அமிர்தரிடம்
இதன்பின் தனது மனேவியை அழைத்துக்கொண்டு வாடி வீட்டுக்குச் சென்ருர் அமிர்தர். அங்கு என்ன மனேவியுடன் ஒய்யாரமாக ஓய்வா எடுத்தார்? இல்லவே இல்லே. மட்டுநகர் முழுவதும் மலிந்திட்ட மூர்க்கர்கள் இழைத்த கலுவர விபரங் களே முழுமையாக அறிந்திட ஆவல் கொண்டார் அன்ருே அவரது ஆவலுக்கு ஆதரவளிப்பதுபோல் அருந்தவேர் இராச மாணிக்களுர் சுளுவாஞ்சிக்குடியிலிருந்து அடுக்கடுக்காக விபரங் களேத் தந்தார், தொலேபேசி மூலமாக, அவை யனேத்தையும் அகத்தின் கண் பதியவைத்துக்கொண்டார் அமிர்தர். தொலேபேசி நிசீவரை எவத்துவிட்டுத் திரும்பிஞர் அமிர்தர். திரும்பிய வுடன் திடுக்கிட்டார் காரணம் காதைக் கிழித்துக்கொண்டு வந்த தொலைபேசி அழைப்பு மணியின் கிறிங். கிறிங்.ஓசை ஆகும். விரைந்து சென்று நிசீவரைக் கையிலெடுத்தார் : காதருகே கொண்டு சென்ருர், கதைத்தவர் வேறு யாருமல்ல, ஈழத்துக் காந்தி செல்வாவின் துனேவியார், அமிர்நரும், இராச துரையும் கொழும்பு வருவதே சாலச் சிறந்ததென்றும், கண்டிப்பாக வரவேண்டுமென்றும் செல்வா இட்ட கட்டளே யையே அவரது மனேவியார் அறிவித்தார் அமிர்தரிட்ம்: அதை ஏற்றுக்கொண்ட அமிர்தர், ஊரடங்கு உத்தரவிஞல் வெளியே செல்ல முடியாதிருந்தும் உள்ளிருந்துகொண்டே, வாழைச்சேனே தொட்டுப் பொத்துவில் ஈருக மட்டுநகர் மாவட்டம் முழுவதிலும் இடம்பெற்ற சம்பவங்களனைத்தையும், அரசபடைகளின் அட்டூழியங்களேயும் ஒன்றும் பாக்கியில்லாமல் அறிந்து வைத்துக்கொண்டார்.

- 71 -
சிவர் இருந்தால்தானே சித்திரம் வரை முடியும் சற்று நேரமாவது உடலுலுப்புத் தீர உறங்கலாமென்று படுக்கையிற் சாய்ந்தார் அமிர்தர். கண் முடவிங்லே : மதுபடியும் தொலே பேமெணி அலறியது. எழுந்துசென்று அதினே எடுத்தார்; காதில் அண்த்தார். இது நடைபெறும்போது நேரம் நள்ளிரவு 12 மணி. இலட்சியத்தலேவர் இராசமாணிக்கஞர்தான் தொலைபேசி யிற் பேசினூர்; பாவம் அவருக்கும் உறக்கமின்லே - சுழியின் செய ஐக்கேட்டு அறிந்தவரிலும்பார்க்க அதிற் சிக்கியவருக்குத்தானே அதன் சிக்கல் அதிகம் தெரியும்; சிரீன் ஆபத்து விளங்கும். அதஞல்தான் அமிர்தரிலும் பார்க்க அமரதலேவர் இராச மாணிக்கஞருக்கு ஆர்வமும், ஆவேசமும் அதிகம் பிறந்தன. அடுத்தநாள் நாடாளுமன்றத்தில் மட்டுநகரில் நடைபெற்ற அட்டூழியங்கள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் அம்பலமாக்க வேண்டுமெனத் துடித்தார் அவர் அருந்தலேவர் தனது இதயத் துடிப்பை அமிர்தரிடம் ஒளிபிட்டார். தவருமல் அனேத்து விடயங்களேயும் ஆட்சிமன்றத்தில் பிரஸ்தாபிப்பதாக வாக்க எரித்து, "நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள்" என்று இராச மாணிக்கனுளிர இரந்து வேண்டிக்கொண்டார் ஆமிர்தர்.
பொழுது புவர்ந்தது புறப்படத் தயாராஞர் அமிர்தர் அவருக்கு முன் அவரது மனேவி தயாராகிவிட்டார். அமிர்தர் அளித்த சமாதானத்தை அவரது மஜனவி கேட்பதாயில்லே. ஆழ்ந் தெரிந்தும் காலேவிடப்போகிறேன் என்று அடம் பிடிக்கும் தன் மனைவியைத் தடுத்து நிறுத்த மார்க்கமின்றித் திண்டாடிய ஆமிர்தருக்கு முன்ள்ை செனெட்டர் மாணிக்கமும் அவரது ரவியும் கைகொடுக்க முன்வந்தனர். அவர்கள் மங்கையர்க் கரசியாரை எக்காரன்த்தைக் கொண்டும் செல்லவிட முடியா தென்று அவரிடமே கண்டிப்புடன் கூறினர். மாணிக்கம் தம்பதி பரும், தனது மணுளலும் ஒருமித்துத் தினது வேண்டுகோளே நிராகரித்ததிகுல் வேறு எதுவுமே செய்யமுடியாது GL Tři திட்டது மங்கையர்க்கரசியாருக்கு. திரு மானிக்கனுருடைய இல்லத்திற் தங்கியிருப்பதற்கு ஒத்துக்கொண்டார். மகிழ்ச்சி புற்ற அமிர்தர் புறப்பட்டார். அவரது செலவுக்காகப் பலத்தை அள்ளிக்கொடுத்தார் திரு. மாணிக்கம் அவர்கள்.
அமிர்தரையும் அவரது அன்பு மனேவியையும் மீண்டும் யாழ்ப்பானம் கொண்டுசேர்க்கும்வரை இங்கிருந்து இம்மியும் நகரமாட்டோமென்று தைரியங் கூறினர் நன்றியுள்ள அந்த மோட்டார்ப்படகின் மாலுமிகள், கடமைவீரர்களும் இவர்க ளுக்குச் ஐத்தவர்களில்லே என் ப ைத க் amr "LIGAT IT? GUIT fif அமிர்தர் திரும்பும் வரை அங்கேயே தங்கிநிற்போம் எனக்

Page 48
- 72
நீர்மானித்தனர், கடமை வீரர்களாம் நடராசா, பாண்டித் நீரை அருணுசலம் ஆகியோர். இவர்கள்னேவரும் காட்டும் கடமை புன்னர்ச்சியையும், நன்றியுணர்ச்சியையுங் கண் டு ஆனந்தக்கண்ணிரை இவர்களுக்குப் பிரதிக் காரணிக்கை பாக்கினுர் கடமையாளர் அமிர்தர்.
இவர்களெதிரே இரைச்சலுடன் வந்து தயாரா? எனக் கேட்பதைப்போல் உறுமி நின்றது பொலீஸ் ஜீப் வண்டி நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வண்டியில் ஏறிஞர் கிழக் கின் தளபதி இராசதுரை கைகளிரண்டும் இனி ஏது தஞ்ச மென ஏந்தி-கிள்களிரண்டும் கன்னிரைத் தாரை தாகரயாக வழங்க-இதயத்துடிக்க-இரத்தங்கொதிக்க-நின்றிட்ட தனது இல்லாாேத் தேற்றி, அவளது கள்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை முடிந்தவரை தன்கரங்கள்ாற் துடைத்து, "வாடாதே .கிாடாமலரே வருகிறேன்" எனக் கூறிவிட்டு, அன்ேவருக் கும் கைகளே மேலேயர்த்திக்கும்பிட்டபடி புள்முறுவல் பூத்த படி வணக்கிங் கூறிவிட்டுத் தனக்கே உரிய கம்பீரத்துடன் ஜீப் வண்டியின் மீது ஏறிஞர் அமிர்தர்,
இக் காட்சி அங்கு காவல்புரிந்துகொண்டிருந்த தமிழ்ப் பொளிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடைய இதயத்தைத் தொட்டு விட்டது. அவரது பெயர் திரு. பொன்ன்ேபா அமிர்தரது வட்டுக்கோட்டைத்தொகுதி வாசி இப்போது பதவியிலிருந்து இள்ேப்பாறிவிட்டார். தானும் ஒரு தமிழன் என்ற உணர்வு அப்போது, அக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள்ே அணுகி, "அம்மா சுவஃப்படாதீர்கள் தாயே! நானும் தமிழன்தான் என் ஒனுடைய உடம்பில் ஒடுகின்ற இரத்தம் அசல் தமிழ் இரத்தம், தங்கள் கணவனே அழைத்துச்செல்கின்ற படையில் நான் ஒருவன்தான் தமிழன், ஆருதும், தங்கள் கணவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமென்ருல் அவ்வாபத்திவிருந்து எனது உயிரைக் கொடுந்தாவது அவரே நாள் காப்பேன். என் உயிர் போன பிறகு, என் உடல் தரையிற் சாய்ந்தபிறகு, அவ்வுடன் மிதித்துக்கொண்டுதான் எதிரி ஐயாவைத் தாக்க முடியுமே தவிர, வேறு எந்த வகையாலும் முடியாது கலங்காமல் களிப் போடு இருங்கள் அம்மா' என்ருர், இக் கான்ஸ்டபினது வார்த்தேகளேக் கேட்டு உண்மையின் மங்கேயர்க்கரசிபோரின் உள்ளம் மெய்சிவித்துவிட்டது.
நன்றியுணர்ச்சியுடன் அக் கான்ஸ்டபிளிடம் 'நன்றி. உங்கள் ஆறுதல் வார்த்தையை நம்பித்தான் என் மனதைத் தேற்ற முயற்சிக்கிறேன். என் கணவனே இப்பொழுதிலிருந்து

73
உங்கள் கையில் ஒப்படைத்திருக்கிறேன்: தயவுசெய்து அவருக்கு ஆபத்தேதும் நேராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்" என்று வேண்டிக்கொண்டு தன் கன்வன் தன் கண்களே விட்டு மறையும் மட்டும் தன் கையை உயர்த்திக் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார் மங்கையர்க்கரசியார்,
அமிர்தரின் வேண்டுகோட்படி, தலேவர் இராசமாணிக்கத் திடம் சில குறிப்புக்களே மேலும் பெற்றுக்கொள்வதற்காகக் சுளுவாஞ்சிக்குடியிற் சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட பொலிஸ் ஜீப் வண்டி, முன்னேயைவிடப் பன்மடங்கு வேகமாகப் பறந்தது அம்பாறை விமான் நிவேயத்தை நோக்கி, அம்பாறை சமீபித்ததும் நாசகாரர்களால் ஏதும் நடந்துவிடுமோவென்று ஐயுற்ற பொலீஸார் தமது துப்பாக்கிகளேக் கெட்டியாகப் பிடித்துக் (alos fro. Les 7. இன்ஸ்பெக்டர் ஹ"சேனும் மற்றைய இன்ஸ்பெக்டர்கள் சிலரும் தமது உறையிலிருந்து கைத் துப்பாக்கிகளே உருவித் தமது இரு கைகளிலும் சுெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். நாலாபுறமும் பொலீனார் ஆயுத பாணிகளாகக் காவல்புரிய நட்டநடுவே அமிகும், துரையும் ராஜநடைபோட்டு நடந்துசென்றனர்-புறப்படத் தயாராக நின்ற விமானத்தை நோக்கி, தலேவர்கள் விமானத்தை அண் மித்ததும், இன்றைய மாத்தளே எம். பி. யும், அன்றைய இராணுவத் தலைவருமான மேஜர் ஜெனரல் உடுகம அவர் களும், இதர இராணுவ வீரர்கள் பலரும் ஜகுராகக் காவல் புரிந்தன்ர். இத்தன்ே காவலுடன் ஆகாயப்படை விமானமான "புரு" (DOWe) விமானத்தின்மீது ஏறி அமர்ந்தன்ர் எமது வீரத் துலேவர்கள்,
நீல்கான வீதியிற் கிளம்பிப் பறந்தது விமானம் முகிற் சுட்டங்கள் அதனே முட்டி மோத, சிற்சில இடங்களிற் தத் தளித்துச் சென்றது அவ் விமானம். விமானம் தத்தளித்ததைப் போலவே தளபதி அமிரின் மனமும் தத்தளிக்க வாரம்பித்தது. வீட்டிலிருந்து புறப்பட்டபோது 'அம்மா..! அப்பா!" என அழைத்து அழுத அவரது முதற் செல்வ மகனே நினைத் தார் அவர். அவனே அழவிட்டுப் பிரிந்து தன்னுடன் வந்த மனேவி மட்டக்களப்பிற் தான் புறப்பட்டபோது நின்றிட்ட நிலேயை நினேத்தார். மனமிக வருந்திஞர். ஆயிரமிருந்தாலும் அமிர்தரும் ஒரு குடும்பஸ்தின் அல்லவா? பந்தபாசம் பறந் திடுமா என்ன? முதற் பிறந்து ஆசை தீர்த்த அன்பு மகன்அந்தச் சின்னஞ்சிறு குழந்தை-வடக்குக் கோடியில், மணுள ளூகத் தனக்கு மாஃபிட்டுத் தனது இன்ப துன்பங்கானேத் திலும் பங்குகொள்ளும் தனது அன்பு மனேவி கிழக்குக்கோடியில்,

Page 49
- 74
தான் மேற்குக் கோடிக்குச் செவ்ளி ஆகாயத்தில்-அந்தரத் தில்- பறக்கிறேன் என்பதும், எந்தநாளில் மீண்டும் தானும், தன் மனேவியும், மகனும் ஒன்றுசேரப் போகிருேம் என்ற ஏக்கமும் அவருக்கு ஏற்பட்டதில் என்னவியப்பு இருக்க முடியும்
அது மட்டுமல்ல, காடையர்களால் தாக்கப்பட்ட நிலேயில்
காடுகளே நாடியோடிச் சிந்திச்சிதறிச் சிதைந்திருந்த எண்ணற்ற தமிழ்க் குடும்பங்களின் நினைவு அமிர்தரது மனவருத்தத்தைப் பன்மடங்காக அதிகப்படுத்தியது. இத்தனே மக்களும் அல்லற் பட்டு ஆற்ருது அழுதகண்ணிர், அக்கிரமம் பிடித்து-அரக்கத் தினம் பிடித்த = ஆட்சியாளரின் செருக்கை நிச்சயம் தேய்க்கும் படையாக மாறியே தீரும் 'ஏழை அழுத கண்ணிர் கூரியவாளுக்கு நிகர்" என்பது உறுதியாகியே நீரும் என்ற நம்பிக்கை அமிர்தருக்கு எழுந்தது எத்தனே இடுக்கண்கள் ஏற்பட்டாலும், அத்தனேயையும் ஏற்கும் உள்ள உறுதியோடு சத்திய நெறியில் நாம் மேற் கொள்ளும் மகத்தான பணிக்கு மிக மகத்தான வெற்றி நிச்சயம் கிட்டும் என்ற திடநம்பிக்கை அவருக்கு இப்போது ஏற்பட்டுவிட்டது. பேரறிஞர் அண்ணு பண்படுத்தித்தந்த "எதையும் தாங்கும் இதயம்' எமக்கெல்லாம் இருக்கும்போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்? எவர்க்கு அடிபணிய வேண்டும்? என்ற வீர உணர்வுகள் அமிர்தரது மனதிற் தோன்றி அவரைச் சற்று நேரத்திற்குப் பிடித்திருந்த வேதனேப்புயலே ஓட ஓட அடித்து விரட்டிவிட்டது. அஞ்சாமை அமிர்தரது உள்ளத்தில் அமர்ந்தது ஆனந்தம் அவரது உள்ளத்தை ஆக்கிரமித்தது. விமானம் பறந்துகொண்டே இருந்தது. முகிற் கூட்டங்களும் அதனே எதிர்கொண்டு முத்தமிடுகின்றன. அவற்றின் அடுக்கடுக் கான முத்தங்களிற் கட்டுண்ட " புரு விமானம் அம்முகிற் கூட்டங்களின் அரவணைப்பிற் சிக்கிவிட்டது. ஆம் "புரு" விமானம் நம் கண்களுக்குத் தெரியாதபடி வெண்-சுரு முகிற் கூட்டங்களுக்குள் மறைகின்றது; மறைந்தே விட்டது.
37987

(':'േ'——
எமது தலைவர் உயர்திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் வரலாறு கூறும்
தமிழ் அமிர்தம்
சண்முகா பதிப்பகம்
(சகலவித அச்சுவேலையாளர்கள்)
ഷെ வாழ்த்துகிறேம்.
யாழ்ப்பாணம்
F_rflam Lf) : கே. சண்முகநாதன்
MASeLSSLSLSSLSLSeLSSSMSSSMSSSMLSSSMSSSMSSSMSAAAA LASLSSLSLSSLSSSMSSSLSSSMSSSLSSSSSASLSSASSqSSqqSSLqAASLLLLSLSSSSSSMLSSSMSSSMSSqSSLSLMSqSqqSLSMqSASLSSASSS
பருத்தித்துறை வீதி, நல்லூர்

Page 50
6TLDg
அன்ப3
செல்லப்பா இ
ಆ6T6ಠಾ]
: உரிமை : க. செ. வேலுப்பிள்
சுன்கைம் திருமகள் அழுத்தகத்தில், கு அவர்களால் அச்சிடப்பெற்று, கந்தரோடை, கூட்டணி இணைச் செயலாளர் உயர்திரு. வெளியிடப்பெற்றது,

இஸ்ரோர்ஸ்
நகர் -
ளே தொலைபேசி : 802
ரும்பசிட்டி திரு. முத்தையா சபாரத்தினம் அறிவாலயம் நிறுவனத்துக்காக தமிழர் வி. தர்மலிங்கம் பா. உ. அவர்களால் 188/74ے