கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்னிலங்கைக் கவிதை

Page 1


Page 2

தென்னிலங்கைக் கவிதை
(ہر لانتردید۱gClصدیlکC)
சே9.பத்மநாதன்
துAண்டி, கேனிடிெ, திருநெலவேலி twAğŮVANGIOmè.

Page 3
துெர்ைனிலங்கைக் கவிதை
மொழிபெயர்ப்பு
ஆசிரியர் ; சோ. பத்மநாதன் உரிமை : ஆசிரியருக்கு. முதற்பதிப்பு 2003 மார்கழி. வெளியீடு ; தூண்டி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். வடிவமைப்பு ! ஹரிஹணன் பிறிண்டேர்ஸ், யாழ்ப்பாணம். அச்சுப்பதிப்பு : ஈ-குவாலிற்றி கிரபிக்ஸ், கொழும்பு. அட்டைப்படம் : நந்தா கந்தசாமி (கனடா)
பக்கங்கள் * XXXii+132
விலை 175/-
TENNILANKA KAWITA
A collection of poems from South Sri Lanka
(in translation)
Author : S. Pathmanathan.
Copyright : With author. Frist edition : December 2003. Publishers : Thoondi,Thirunelvely, Jaffna. Typesetting : Harikanan Printers, 424, K.K.S. Road, Jaffna. Printing : E-Kwality Graphics, Colombo.
Cover : Nantha Kandasamy.
Pages : xxxii + 132 Pages.
Price : RS. 175/-
ISBN : 955-98.559-0-5

සිහල-දමිළ සබදතාවයේ ආරමිභක පියවර ලෙස කලාකරුවන්ගේ එකතුවට උරදුන් හිරු කණඩායමට
தமிழ் - சிங்கள உறவுக்கு முதற்படியாக கலைஞர்களை ஒன்று கூட்டிய ஹிறு குழுவுக்கு

Page 4
பதிப்புரை
சமாதானத்தின் அவசியத்தை இந்நாட்டில் எல்லோரும் உணர்ந்துள்ள இக்காலகட்டத்தில், தென்னிலங்கைக்கவிதை என்னும் சோ. பஅவர்களின் இம்மொழிபெயர்ப்பு நூல் வெளிவருகின்றது. மனித உணர்வுகளையும், உறவுகளையும், இனத்தின் பெயரால் தமிழர்களுக்கு நடந்த கொடுரங்களையும் வெளிப்படுத்துவனவாக இக்கவிதைகள் அமைந்துள்ளன. பாலஸ்தீனக் கவிதை வெளிவந்தகாலத்தில் பெற்ற முக்கியத்துவத்தைப் போல இத்தொகுப்பும் இக்காலகட்டத்தில் முதன்மை பெறுகிறது. ஈழத்தின் இனவாதத்திற்கு சாவுமனி அடிப்பவர்களின் குரலாக இத்தொகுப்பு அமைகிறது எனலாம்.
சோ. ப. யாவரும் அறிந்த ஈழத்தின் கவிஞர்; அறிஞர். அவரு டைய இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. அவருடைய இரு மொழியறிவும் புலமையும், நாடறிந்த விடயம். தனது தொகுப்பை எமது வெளியீடாக வெளியிட அனுமதி அளித்த அவருக்கு நன்றி.
தி.செல்வமனோகரன் தூண்டி இலக்கியவட்டம்
iv

என்னுரை
தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்பட்ட பொழுது நான் கல்லூரி மாணவன். பிறகு நான் அரச சேவையில் நுழைந்த போது அது என் கழுத்தை நெரிப்பதை உணர்ந்தேன். தொடர்ந்த நாற்பது ஆண்டுக் காலம் இந்நாட்டில் இன ரீதியிலான ஒடுக்குமுறை தீவிரமடைந்து, தமிழ் மக்கள் மீது அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, சொத்தழிவு, கைது, சிறை வாசம் எல்லாம் தொடர்கதையாயின. கடந்த இருபது வருட காலமாக போர் உக்கிரமடைந்து, உயிரிழப்பு இடப்பெயர்ச்சி, புலப்பெயர்ச்சி என்று தமிழினம் அல்லாடலாயிற்று.
பாதிக்கப்பட்ட இனத்தவன் என்ற புழக்கத்திச் வேக்காட்டில்- நான் குமைகின்ற ேேதல்லாம், எல்லாவற்றையும் பின்தள்ளிக் கொண்டு ஒரு கேள்வி என்னுள் எழும். "நீதி - நியாயம்
V

Page 5
உணர்ந்த சிங்களவர்கள் ஏன் உரத்துப் பேசவில்லை? தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு பெரும்பான்மையானோர் மெளன அங்கீகாரம் தருகிறார்களா?” என்பதே அது. இருந்த கொஞ்ச நம்பிக்கையும் ஆட்டம் கண்டது 1983 ஜூலையில்.
ஆனால் அடுத்து வந்த சில மாதங்களில் ஆங்கிலத்தில் எழுதும் சில கவிஞர்கள் தமிழர்கள் பால் பரிவு காட்டி எழுதிய கவிதைகள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. Sunday Observer இல் மோறின் செனிவிரத்ந எழுதிய கவிதையைப் படித்த சிலிர்ப்பில் அதை மொழி பெயர்த்தேன். 'தினகரன்” உடனடியாகவே அதை வெளியிட்டது. (பக்.54) pg. 6), 656géliss.) Ossiesis Contemporary Sri Lankan Poctry in English (1988) இல் அத்தகைய பல கவிதைகள் இடம்பெற்றன.
அவற்றை ஆங்கில இலக்கியம், செயல்முறை விமர்சனம் கற்கும் மாணவர்க்குப் போதிக்க நேர்ந்தது; அக்கவிஞர்களுடைய உணர்வுகளோடு ஒன்ற முடிந்தது. என்னை உலுப்பிய கேள்விக்கு விடையும் கிடைத்தது.
என் பங்குக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே. என் நெஞ்சைத் தொட்ட சில கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். மெல்லவே ஓர் ஆமை குன்றேறல் போல் இம் முயற்சி நடைபெற்றது. 2002 இல் நடைபெற்ற அரச சாகித்திய விழாவில் உபாநந்த கருணதிலகவைச் சந்தித்தேன். அவரும் பரிசுபெற வந்திருந்தார். அவருடைய Kandy Revisited ஐ ஏற்கெனவே படித்திருந்தேன். என் முயற்சி பற்றிச் சொன்ன போது Kundasale Love Poems என்ற தமது முந்திய தொகுதியையும் தந்து ஆசீர்வதித்தார்.
இவ்வாண்டு ஒக்ரோபரில் ஹிறு குழுவினர் கொழும்பு நகர மண்டபத்தில் நடத்திய சிங்கள-தமிழ்க் கலைஞர் ஒன்றுகூடலில், எனக்குப் பக்கத்தே மேடையில் இருந்தவர் ஆரியவன்ஸ றனவீர.
vi

egglij63 - 6oug LDT35 Echoing Ethos 676op 976uit 565.6095; Ggsm655) (ஆங்கில மொழிபெயர்ப்பு) அவர் கைவசம் இருந்தது. அப்பிரதியை என்னிடம் தந்து “தாராளமாக மொழிபெயர்ப்புச் செய்யுங்கள்” என்றார்.
அந்த உற்சாகத்தில் ஊர் திரும்பியவன், முழுமூச்சுடன் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டேன். அந்த உழைப்பின் பெறுபேறுதான் ஐம்பத்து மூன்று கவிதைகள் கொண்ட இத்தொகுதி.
இன முரண்பாடு பற்றிய கவிதைகளையே தெரிவு செய்தேன் என்பதில்லை. சமூகப் பிரச்சினைகள், குடும்ப உறவுகள், உபாநந்த கருணதிலகவின் காதற் கவிதைகள், பார்வதி அரசநாயகத்தின் அடையாளந்தேடல் உள்ளிட்ட பல கவிதைகள் இத் தொகுதியில் உள.
சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவை ஆன் றணசிங்ஹவின் படைப்புக்கள். சிறுமியாய் இருக்கும் பொழுதே ஹிட்லருடைய இன சங்காரத்தில் தாய் தந்தையரை இழந்த அவருடைய சோகத்தை ஆறு கவிதைகள் கூறும். நெஞ்சு கணக்க, கண்ணிர் மல்காமல் இவற்றைப்
படிக்க முடிந்ததில்லை, என்னால்,
இது ஒரு முழுமையான தொகுதி என்று சொல்லமாட்டேன். தென்னிலங்கையோடு தொடர்புகள் அற்று இரு தசாப்தங்கள் வாழ்ந்த எனக்குக் கிடைத்தவற்றுக்குள்ளேயே என் தேடல் எல்லைப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த அளவுக்காவது இப்பணியைச் செய்ய உதவியவர்கள் என் மாணவர், விரிவுரையாளர் கந்தையா பூஜிகணேசனும் யாழ் தொழில்நுட்பக் கல்லூரி நூலகள் சிதயாநாதனும், யாழ் பல்கலைக்கழக உதவி நூலகர் மு. சின்னராசாவும் ஆவர். அவர்களுக்கு நன்றி.
இத்தொகுதி அச்சேறும் நிலையில் மதிப்புக்குரிய பேராசிரியர் கா.சிவத்தம்பியோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு முன்னுரை கேட்டேன். தம் உடல் நிலையையும் பொருட்படுத்தாது
vii

Page 6
தட்டச்சுப்பிரதியைப் படித்து அரியதொரு முன்னுரை வழங்கியுள்ளார் அவர். "சலியாத முயற்சி செம்மையை நோக்கித் தன் கரங்களை நீட்டுவதற்குப்" பேராசிரியர் ஓர் எடுத்துக்காட்டு. மூலக் கவிதைகளைத் தாமே தேடிப் பெற்று ஆழமான, விரிவான, ஆய்வுநெறிப்பட்ட முன்னுரையொன்றை வழங்கிய பேராசிரியருக்கு என் கடப்பாடு பெரிது.
அட்டைப்படம் கிடைத்தது ஒரு சுவாரஸ்யமான கதை. கணினியை வைத்துக் கொண்டு ஓவியம் தீட்டும் நந்தா கந்தசாமி நடத்திய ஓவியக் கண்காட்சி பற்றி ஈழநாடு எழுதியிருந்தது. கண்காட்சியைத் தவறவிட்ட நான், ஓவியருடைய வீட்டை விசாரித்துப் போனால் அவர் கொழும்பு போய்விட்டார் - அங்கிருந்து கனடா போவதற்காக. அவரோடு தொடைபேசியில் தொடர்பு கொண்டு என் விருப்பத்தைத் தெரிவித்தபோது, தமையன் தவமணிதாசன் மூலம் 905 தொகுதி கணினி ஒவியங்களை அனுப்பி ஒன்றைத் தெரிவு செய்து பயன்படுத்தும்படி சொன்னார் நந்தா. இதுதான் அடைப்படக்கதை. கலைஞருக்கு நன்றி.
தூண்டி அமைப்பு இலக்கியத்துக்குக் காத்திரமான பணி செய்து வருவதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பேச்சு வாக்கில் என் முயற்சி பற்றிக் குறிப்பிட்ட போது செல்வமனோகரன் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவ்விலக்குவனுக்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்?
கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சிற் பொறித்த
திருமதியிநிஷந்தி, கணினி அச்சுக் கோப்புச் செய்த ஹரிகணன், அச்சுப்பதிவையும், அட்டையையும் அழகுறச் செய்தளித்த e-qualityஎல்லோரும் என் நன்றிக்குரியவர்கள்.
ஏரகம்",  ைசோ, பத்மநாதன் பொற்பதி விதி
கொக்குவில்,
இலங்கை,
2001.0
viii

ടഞ്ഞ്ളങ്ങ
ஒரு பண்பாட்டின் சுருதியையும் லயத்தையும் இன்னொரு பண்பாடு அறிந்து கொள்ளல் - சிங்கள பண்பாட்டுச் சூழலிலிருந்து கிளம்பும் சில கவிதைகளுக்கான சோ. பவின் தமிழாக்கம் வழிவரும் ஒரு சிந்திப்பு.
நியாயப்படி பார்த்தால் தொல்காப்பியம் மொழிபெயர்ப்பின் உயிர்நாடியைப் பிடித்து "மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல் (அதர்ப்படநெறிமுறையின்படி) என்று கூறினாலும் அது வழிநூலுக்கான குறிப்பேயாகும். தொல்காப்பியருக்கு நூல் என்பது ஒரு விடயம் பற்றிய நுண்விளக்கமாகவே (treatise) இருந்திருத்தல் வேண்டும். காத்திரமான சமண, பெளத்த மத ஆக்க இலக்கியங்கள் எதுவும் வரமுன்னர் தமிழ்மொழியின் அமைப்பு, ஆக்க மரபு ஆதியனவற்றைப் பேசிய தொல்காப்பியர் ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புப் பற்றி பேசாதுவிட்டது ஆச்சரியமுமல்ல. ஏனெனில் அது சமணமாயினும் சரி பெளத்தமாயினும் சரி தமிழில் எடுத்துக் கூறப்படுகின்றபொழுது இந்தியப் பண்பாடொன்றின் அநுபவமாகவே வெளிவந்தது. அதனால் தான் கண்ணகியும், மணிமேகலையும் - ஏன் கம்பரின் சீதையும் கூட - இன்றுவரை எங்களுக்குத் தமிழ்ப்பெண்களாகவே தோன்றுகின்றனர். ஆக்க இலக்கியம் அல்லாத மதக்கருத்துநிலைப்பட்டவற்றை வழிநூல்களாக மொழி பெயர்த்திருக்கலாம். இதிகாசங்கள் தமிழுக்கு வருகின்றபோது அவை தம் இந்தியப் பொதுமை காரணமாக இந்த மண்ணுக்கூடாகவே வந்தன. இராமனும் கிருஷ்ணனும், சீதையும்
ix

Page 7
திரெளபதியும் இந்தியப் பொதுக் குறியீடுகளாக மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் வழிபடு தெய்வங்களாகவும் உள்ளவர்கள். இதன் காரணமாக அக்கதைகளைத் தமிழில் சொல்வது பெருஞ் சவால்களாக அமையவில்லை. கம்பரும், வில்லிபுத்தூரரும் தமிழ்ச் செவிகளுக்கு
அந்நியமானவற்றைக் கூறவில்லை.
இந்தியப் பண்பாட்டுக்கு வெளியே உள்ளனவற்றை இந்தியப் பண்பாட்டுக்கு அந்நியமில்லாத ஒன்றாய் - அதேவேளை அது இந்தியப் பண்பாட்டுக்குச் சொந்தமற்றவை என்பதையும் - அழுத்திக்கூறி நின்ற இலக்கியங்கள் தமிழுக்கு வரத்தொடங்குவது இலக்கிய வரலாற்று வட்டத்துள் பார்க்கும்போது இஸ்லாமும், கிறிஸ்தவமும் தமிழுக்குள் வந்தபொழுதேயாகும். இந்த நிலையில்கூட அவை, அவற்றை கொண்டவர்களிடத்தும் ஈமான் ஆக சுவிசேஷ - விசுவாசிகளிடத்தும் எடுத்துக்கூறப்படவேண்டிய தேவை இருந்ததால் ஏற்பட்ட சவால் மிகப்பெரிதாக இருக்கவில்லை.
ஆங்கிலக்கல்வியும் அது ஏற்படுத்திய கற்கை நெறி மாற்றங்கள், முறைமாற்றங்களும் அந்நிய பண்பாட்டு ஆக்க இலக்கியங்களை தமிழில் பெயர்க்க வேண்டிய தேவையை ஏற்படுத்தின.
தமிழில் சொல்ல வேண்டும் - ஆனால் இது தமிழுக்குரிய விடயமல்ல. இதுதான் ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பின் - கவிதை
மொழிபெயர்ப்பின் சவால்.
உண்மையில் இச்சவால் ஆங்கிலக் கல்வி வருகையுடனும் மேனாட்டு மயவாக்கத்துடனும் நவீன மயவாக்கத்துடனும் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக அமைந்ததே. நவீன வாழ்வியலின் தேவைக்காக அந்த வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளாக அமையும் விஞ்ஞான, ஊடக வருகைகளையும் சுவீகாரம் பண்ணிக் கொண்ட தமிழ், அவற்றிற்கு மேலே போய் ஷேக்ஸ்பியரையும் மில்டனையும், அடிசனையும்
Χ

மெக்கோலேயையும் கொண்டு வரவேண்டுமென்ற தேவையிலும் பார்க்க கொண்டு வரவேண்டுமென்ற உள்ளார்ந்த உந்துதல் ஏற்பட்ட பொழுது தமிழின் வளர்ச்சியில் ஒரு புதிய பரிமாணம் ஏற்படத் தொடங்கிற்று.
ஆக்கப் பெயர்ப்புகள் அத்தியாவசியமாயின.
தமிழுக்கு வந்த சமயம், அறிவியல் சாரா மேலைநாட்ட ஆக்க எழுத்துக்களின் வரன்முறையான மொழிபெயர்ப்பு வரலாறு திட்டவட்டமாக இன்னும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் புனைகதையில் இந்த வெளிப்பாடு தெரியவந்தபோது மூலக்கதை அல்லது நூலின் அடையாளம் தெரியாதபடி தமிழ்ப்படுத்தும் பண்பே காணப்பட்டது. விபுலானந்தர் கூட ஷேக்ஸ்பியரை மதங்க சூளாமணியாகவே கண்டார்; மக்பெத்தை மகபதியாக்கினார். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தனஞ்செயனின் தசரூபகத்தைத் தளமாகக் கொண்டு ஷேக்ஸ்பியரின் அவல நாடகங்களைத் தமிழ்ப்படுத்த முயன்றார். அந்த முயற்சியின் குறைபாட்டை அவர் உணர்ந்துமிருந்தார். ஆனால் படிப்படியாக மொழிபெயர்ப்புகள் - ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் - தமிழில் கால்பதிக்கத் தொடங்கின.
சரத்சந்திர சட்டர்ஜியையும் காண்டேகரையும் தமிழில் தருவது சிக்கலாக இருக்கவில்லை. தாகூரைத் தருவது கூட பெரிய பிரச்சினையாகவில்லை. ஆனால் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரிதும் அந்நியமான பிற பண்பாடுகளிலிருந்து ஆங்கில, பிரெஞ்சு, அமெரிக்கக் கூறுகளை படைப்பிலக்கியம் மூலம் - அதுவும் நாவலிலும் பார்க்க கவிதைகளின் மூலம் - கொண்டுவர முயன்ற போது நமது ஆக்க இலக்கியத்துக்கான மொழிக் கையாளுகை அகலப்பட, ஆழப்படத்தொடங்கிற்று. தேசிக விநாயகம்பிள்ளை சது.சு.யோகியார் போன்றோரது கவிதை மொழிபெயர்ப்புக்கள் இந்த மொழிபெயர்ப்புப் பயில்வின் பிரச்சினைகளை வெளிக்கொணரத் தொடங்கின. பாரசீகத்து உமர் கயாமின் ரூபயாத் ஃபிட்ஸ்ஜெரால்ட் மூலமாக ஆங்கிலத்திற்கு வந்தது. அதனைத் தமிழில் தரமுயன்ற தேசிக விநாயகம்பிள்ளை, சதுசு
xi

Page 8
யோகியின் மொழிபெயர்ப்புகள் கவிதைமொழி பெயர்ப்பில் உள்ள
பிரச்சினைகள் பற்றிய ஆய்வுக்கான நல்ல உதாரணங்களாகின.
உதாரணமாக ஃபிட்ஸ்ஜெரால்டின்
"A book of Verses underneath the Bough A Jug of Wine, a loaf of Bread-And Thou Beside me singing in the Wilderness Oh, Wilderness were Paradise enow!"
தேசிக விநாயகம் பிள்ளையோ
வெய்யிற்கேற்ற நிழலுண்டு விகம் தென்றற் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறையுமதுவுண்டு தெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு
என்று தமிழ்ப்படுத்தினார். ஆனால் சது.க. யோகியோ
மாதவிப்பூங்கொடி நிழலில்
மணிக் கவிதை நூலொன்றும்
தீதறு செந்தேன் மதுவும்
தீங்கனியும் - பக்கத்தில்
காதலி நீ பட்டிசைத்து
கணிவோடு கூடுவையேல்
ട്രൂിൽ ടഖങ്ങളിൽണ
இதுவன்றோ பரமபதம் என்றார். தேசியவிநாயகம் பிள்ளையிடத்து தமிழ்ப்படுத்தப்பட்டு நின்றது யோகியாரிடத்து ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. யோகியாரின் மொழிபெயர்ப்பில் அந்த ஆதர்ஸ் நிலை தமிழுக்குள் இருந்து வருகின்றது அல்ல என்பதும் தெரிகிறது. ஆனால் அதேவேளையில் அந்தக் கற்பனை தமிழினுள்ளேயும் தமிழிலிருந்து அந்நியப்படாது நிற்கின்றது. மணிக்கொடி காலத்தில் இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் நவீன தமிழின் ஆக்கவியல் பேரவிழ்ப்பாக நடந்தன. அசீநிவாசராகவன், புரசு பாலகிருஷ்ணன் போன்றோர் கவிதை மொழிபெயர்ப்புக்கள் தமிழில்
X1

ஏற்படுத்தக்கூடிய அகற்சிச்சாத்தியப்பாடுகள் பற்றி எழுதினர். சீநீவாச ராகவனின் மேல்காற்று என்ற கட்டுரைத் தொகுதி இவ்வகையில் முக்கியமானது. அ.சீரா போன்ற இரண்டொருவரைத் தவிர்ந்த ஆங்கில, பிரெஞ்சுப் பேராசிரியர்கள் தமிழ் ஆக்க இலக்கியத்தில் அதிகம் காலூன்றி நிற்கவில்லையாதலால் இவ்விடயம் சம்பந்தமாக கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடந்த ஆழமான வாதவிவாதங்கள் தமிழில் நடைபெறவில்லை.
மேலும் நாற்பதுகளிலிருந்து ஏறத்தாழ அறுபது, எழுபதுகளின் நடுக்கூறுவரை தமிழ்நாட்டில் நிலவிய மேலாண்மை மிக்க அரசியற் கருத்துநிலைகள் காரணமாக பொதுவுடைமைச் சார்புள்ள மயாக்கோவ்ஸ்கி போன்ற சிலரைத் தவிர ஐரோப்பிய கவிதை உலகு பற்றிய பரிச்சயம் குறைவாகவே இருந்தது. ஈழத்திலோ கே.கணேஷ் போன்ற மிக மிகச்சிலரைத் தவிர மொழிபெயர்ப்புப் பண்பாடு செழித்து வளருவதற்கான ஒரு சூழல் பெரிதும் இருக்கவில்லை. ஆனால் அறுபதுகளின் பின்னர் தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி ஏற்படத்தொடங்கிய ஆக்க இலக்கியம் பற்றிய சிருஷ்டிநிலை, புலமை நிலை ஈடுபாடுகள், ஐரோப்பிய ஆபிரிக்க அநுபவங்களினூடாகக் கிளம்பிய புதிய கருத்துநிலை அவாவுதல்கள் கலைத்துவ ஈர்ப்புக்கள் ஆகியன பற்றி குறிப்பாக சமகால இந்திய இலங்கை அனுபவங்களுக்கப்பாலான - ஆனால் அவற்றை விளக்க உதவும் - கவித்துவ வெளிப்பாடுகள் பற்றிய கரிசனையை ஏற்படுத்தத் தொடங்கின.
நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைமொழி பெயர்ப்பு 1980களில் தமிழ் இளைஞர் இயக்கங்களின் போராட்ட முறைமைகட்கும் இலக்கிய வேட்கைக்குமான சுருதியைச் சேர்த்தது. பாலஸ்தீனக் கவிதை வழி தெரியவந்த அப்போராட்டத்தின் தளைநீக்க உந்துதல்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு ஏறத்தாழ தாரக மந்திரங்களாயின.
இக்காலத்தில் பண்ணாமத்துக் கவிராயர் மத்திய கிழக்கை
மையமாகக் கொண்டு கிளம்பிய கவிதைகளைத் தமிழிலே தந்தார். தமிழிற் புதுக்கவிதையின் உண்மையான பிரசவ வேதனைக் காலமும் இதே
xiii

Page 9
காலகட்டம் தான். இவற்றிற்கூடாக தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் முக்கியமானதோர் இடத்தைப் பெறத் தொடங்கியுள்ளன. இந்தப் பின்புலத்திலேதான் இந்தத்துறையில் ஏற்கனவே ஈடுபாடுகாட்டி வரும் - ஆபிரிக்கக் கவிதை என்ற மொழிபெயர்ப்புத் தொகுதியொன்றினை வெளிக்கொணர்ந்த - சோ. ப என்னும் சோயத்மநாதனின் இந்தக் கவிதைத் தொகுதி வந்துள்ளது.
I
இந்தக் கவிதைத் தொகுதி வழியாகவரும் சிங்கள, தென்னிலங்கை மனக்கசிவுகள், ஆத்ம ஒலங்கள் பற்றி நோக்குவதன் முன் மிகமிகச் சிறியமுறையில் மொழிபெயர்ப்புக் கவிதையின் - அதாவது இன்னொரு கவிதையின் மொழிபெயர்ப்பாக அமையும் கவிதையின் - சில அம்சங்கள் பற்றி ஒரு மீள்பரிச்சயம் செய்து கொள்வது நல்லது.
ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புக்களை டிரான்ஸ்லேஷன்ஸ் (translations) 6Tsigotrigl LJ Toi Gridicus) si6) (trans - creations) என்று சொல்லும் மரபு உண்டு. இந்தச் சொல் மாற்ற நுட்பத்தை புரிந்து கொள்வதற்கு முன்னர் மொழிபெயர்ப்பு என்னும் பதத்தின் மூலம் என்று கொள்ளப்படும் translate எனும் சொல்லின் கருத்தாழத்தைச் சற்று நோக்கல் வேண்டும். இச்சொல்லில் வரும் trans என்னும் முன் அடை அப்பாலே (கொண்டு செல்லுதல்) எனும் கருத்தை உடையது. இது இலத்தீன் வடிவமான translatus, tans ferre என்பதன் வழியாக வந்த தென்றும் அதன் கருத்து தாங்கு, காவு என்பதாகும் என்றும் கூறப்படுகிறது (OED). எனவே உண்மையில் மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு மொழியினூடாக மூல மொழியின் அர்த்தங்களைத் தாங்கி வருதல் என்பதே மேலை நாட்டுக்கருத்தாகும்.
xiv.

தமிழில் வரும் மொழிபெயர்ப்பு எனும் சொல் மொழி + பெயர்(ப்பு) என வருவது. சங்க இலக்கியத்தில் ஒரு மொழி பேசுகின்ற இடத்திலிருந்து இன்னொரு மொழி பேசுகின்ற இடத்துக்குச் செல்வதை மொழி பெயர்தேயம் என்று குறிப்பிடுவதுண்டு. (அகம் 31-15) இங்கு பெயர்(தல்) என்பது மாறுதல் என்பதாகும். இந்நிலையில் மொழி பெயர்ப்பு என்பது ஒரு மொழியிலுள்ள கருத்தை இன்னொரு மொழிக்குப் பெயர்த்தலாகும். இச்சொற்களின் வரலாறு இன்று நாம் மொழிபெயர்ப்பு எனக் கொள்ளும் மொழிசார் முறைவழியின் (process) தன்மையை விளக்குவதாகும்.
இவ்வாறு அந்தச் சொல்லின் அர்த்த ஆழத்துக்குள் செல்லும் போதுதான் அது குறிக்கும் நடைமுறையின் ஆழ அகலம் நமக்குள்ளே நன்கு பதியும்.
ஆக்க இலக்கியம் (Creative literature) 6T6zălugăJ அடிப்படையில் ஒரு புதிய ஆக்கத்தை படைப்பை சிருஷ்டித்தலாகும். ஆக்கம் / படைப்பு / சிருஷ்டி என்பது முன்னர் இல்லாத புதிய ஒன்றினுடைய பிறப்பிப்பு ஆகும். அதன் தரம் எவ்வாறிருப்பினும் அந்த சிருஷ்டி அதுவரையில் இல்லாதது.
கவிதை ஆக்கப்படுவதற்கு, சிருஷ்டிக்கப்படுவதற்கான கருவிப் பொருள் சொல்லாகும். அந்தச் சொல் முக்கியம் பெறுவது அந்தச் சொல்லுக்காக அல்ல. அந்தச் சொல்லின் அர்த்தத்திற்காகவே. மேலும் இலக்கியத்தின் ஆக்குபொருள் சொல் என்றாலும் அந்த ஆக்கத்தில் உயிர் பெறுவது அல்லது அதற்கு உயிரைக் கொடுப்பது அந்தச் சொல்லின் அசைவுதான். அது பெறும் உருபு அது வரும் முறை, (வினை/பெயர்) அதற்கு முன்னும் பின்னும் வரும் சொற்கள் என, தனிச்சொல் அல்லாமல் சொல்லின் இயங்கு நிலைதான் இலக்கிய ஆக்கத்துக்குத் தளமாகிறது. வர்ணமும் அதுதான்; தூரிகையும் அதுதான்.
XV

Page 10
இந்தச் சொல்லின், சொற்களின், ஓட்டம் ஆக்குபவனுக்கும் கேட்பவன், பார்ப்பவனுக்கும் "பொது உடைமை யாதலால் ஆக்குபவன் அந்தச் சொல்லை அந்த முறையில் - அந்த ஓட்டத்தில் அமைக்க அது அல்லது அவை, வாசிப்பவர் கேட்பவர் மனதிலும் ஒன்றுக்கொன்று சரியாக இல்லாவிட்டாலும் ஏறத்தாழ அதே மனநிலையை ஏற்படுத்தும்.
சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா செல்வக் களஞ்சியமே.
சின்னஞ்சிறு, சின்னஞ்சிறு கிளி செல்வம், செல்வக் களஞ்சியம் (இரண்டின் இறுதியிலும் வரும் ஏகாரத்தை மறக்க வேண்டாம்) இங்கு நிகழ்வது என்னவென்றால் மனதிற் கிளம்புவது வெறுமனே சொல்லின் பொருளல்ல. அதாவது சின்னஞ்சிறு கிளி அல்ல. உண்மையில் கிளம்புவதுஅந்த மொழிப்பண்பாட்டில் சின்னஞ்சிறு கிளி என்ற படிமம் ஏற்படுத்தும் பண்பாட்டுச் சிலிர்ப்புகளே. எனவே ஆக்க இலக்கியம் என்பது, மொழிவழித் தொடர்பாடல் என்பது, ஓர் இரசாயன ரீதியான உண்மை என்றாலும், அது உண்மையில் சொல்வழி அல்லது சொற்களின் வழி, சொற்களினோட்டம் வழி கிளம்புவதாகும் (சிறுகிளி வேறு, சின்னஞ்சிறு கிளி வேறு). உண்மையில் இங்கு ஒரு பண்பாட்டு அளவளாவுகைதான் நடைபெறுகிறது.
இந்தக் கட்டத்திலேதான் மொழிபெயர்ப்பின் சவால் ஆரம்பிக்கிறது. ஒரு பண்பாட்டினுள் ஒரு குறிப்பிட்ட மனநிலையை, ஒரு குறிப்பிட்ட உணர்வெழுகையை, உளப்பாங்கைக் காட்டுவது, இன்னொரு மொழியில் வரும்போது வரும் மொழியின் நிலை நின்று கூறப்பட வேண்டுமென்றாலும் முந்திய மொழி அல்லது மொழி ஒழுங்குகள் தோற்றுவித்த உணர்வலைகளை மனநிலையை ஓரளவேனும் ஏற்படுத்த வேண்டும். இது ஒரு பெரிய சாதனை, ஆனால் இந்தச் சாதனை ஒரு வரலாற்றின் வெளிக்குள் (historical vacuum) நடைபெறுவதில்லை. ஏதோ ஒரு வகையில் பாலஸ்தீனத்து அநுபவங்கள் தேவைப்படுகின்ற போதுதான் பாலஸ்தீனக் கவிதையும்
xvi

மொழிபெயர்க்கப்படுகிறது. அல்லது லத்தீன் - அமெரிக்க அனுபவங்கள் பிரயோசனப்படலாம் என்ற ஐயுறவு ஏற்படுகின்றபொழுதே அந்த பரீட்சார்த்த மொழிபெயர்ப்பு தோன்றும்.
அனுபவம் ஏதோ ஒர் வகையில் பயன்தரும் என்கின்ற நிலைமை ஏற்படுகின்ற போதுதான் அந்தப் பண்பாட்டிலிருந்து இந்தப் பண்பாட்டிற்கு ஒரு எடுத்துக்கூறல் நிகழும். பைபிளின் மொழிபெயர்ப்பு வரலாறு இந்த உண்மையை நமக்குக் காட்டியுள்ளது. உண்மையில் யூஜின் ஏ. நீடா என்பவர் படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பிற்கான பல பண்பாட்டுச்சிக்கல்களை விவிலியத்தைக் கொண்டே விளக்குவார். 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட உலகத் தொடர்பிறுக்கம் அந்தத் தொடர்பிறுக்கத்தின் வழியாக ஏற்பட்ட பண்பாட்டுப் பரிச்சயங்கள் ஒவ்வொரு பண்பாட்டையும் அதனதன் உயிர்ப்பு நிலையில் வைத்து விளங்கிக் கொள்ளல் வேண்டுமென்கின்ற தேவை - அவா - கிளம்பத் தொடங்கவே, மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பண்பாட்டுத் தேவைகளாக மாறின. ஆங்கில, ஜேர்மானிய பிரெஞ்சு என்று தனித்தனி பேசப்பட்ட நிலை போய் ფა(სტ பொதுவான, ஐரோப்பியப் பார்வை என்ற பிரக்ஞை ஏற்பட்டது. பல்வேறு தேவைகளின் ஊடாக அந்தப் பொது ஐரோப்பியப் பகிர்வுக்கு மொழி பெயர்ப்புகள் பெரிதும் உதவின. பல்சாக், கத்தே போன்றவர்கள் ஐரோப்பிய பொதுச்சொத்தானார்கள். அந்த ஐரோப்பிய மேலாண்மை பரவத் தொடங்க அவர்கள் உலகப் பொதுச் சொத்தானார்கள். ஷேக்ஸ்பியரைக்கொண்டு ஆங்கில கொலனித்துவ
தாக்க ஆழங்களை கூறும் முறைமை ஒன்றுண்டு. ஆனால் இவற்றுக்கூடே இன்னொன்றும் நிகழ்ந்தது. அது இரண்டு நிலைப்பட்டது.
1) அனுபவங்களின் பொதுமை
2) அனுபவங்கள் பொதுவானாலும் அவை முகிழ்க்கின்ற முறைமை பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டது. இதனால் ஒரே அனுபவம் சொல்லப்படும் முறைமையால் வேறுபடும். இவ்வாறு
Xνii

Page 11
சிந்திக்கத் தொடங்கும் போது நாம் இலக்கிய ஒப்பியலுக்கு வந்து விடுவோம்.
இலக்கிய ஒப்பியல் என்பது இலக்கியங்களினிடையே காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகளின் பட்டியல் அல்ல. ஒவ்வொரு மொழிப் பண்பாட்டினுள்ளும் அவ்வவ்விலக்கியப் பண்பாடுகள் எவ்வாறு உருப்பெறுகின்றன - ஊடாட்டம் கொள்கின்றன என்பதைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுமாம். இவ்வாறு நோக்கும் போது உண்மையில் மனிதப் பொதுமை, பொது மானுடத்துவம் பற்றிய பெருங்கரிசனையுள்ள இன்றைய உலகில் அப்பொதுமையின் பண்பாட்டு முகிழ்ப்புக்கள் ஒவ்வொன்றையும் அறியவேண்டுவது அவசியமாகிறது. புனைகதையில் இப்பண்பாட்டு உருவாக்கம் துல்லியமாகத் தெரியும். பாத்திரங்களின் மணப்பெறுமானங்கள், உறவு - ஊடாட்டங்கள் என்பன மிகமுக்கிய மானவையாகும். இவையெல்லாமே அவ்வப் பண்பாட்டின் உணர்திறன் / உணர்முறை (sensitivity) என்பதும் உணர்ச்சிகளை எவ்வாறு உள்வாங்கி அர்த்தப்படுத்துகிறோம் என்பதுமாகிய இரண்டு நுண்ணிய விடயங்களை உள்ளடக்கியவையாகும். அதாவது உணரும் முறைவேறு, உணர்ச்சி நிலையில் தொழிற்படுவது வேறு.
இலக்கியத்தில் இந்த இரண்டும் எக்காலத்திலும் எச்சூழலிலும் கவிதைப்பரப்பிலேயே மிகத் துல்லியமாகவும் நுண்ணியதாகவும் தெரியவரும். இந்தக் குறிப்பு, சோ. ப எம்முன் திறந்துவிடும் சிங்களம் பேசும் தென்னிலங்கையின் கவிதைப் பண்பாட்டுக்கு நம்மை இட்டுச்
செல்கிறது.
III
எத்துணை அருகில், ஆனால், எவ்வளவு தொலைவில் என்ற ஆங்கில மரபுக்கூற்று (So near and yet so tar) இலங்கைக் கென்றே உருவாக்கப்பட்டது போன்றுள்ளது. இலங்கையின் தமிழ், சிங்களப்
xviii

பண்பாடுகள் மொழிநிலையில் அத்தியந்தமான ஊடாட்டங்களைக் கொண்டவையெனினும் இலங்கையின் உத்தியோக பூர்வ மதத்தினது நிறுவன நிலைப்பட்ட கருத்துநிலைகள் காரணமாக, குறிப்பாக கொலனித்துவ காலத்து இனக்குழும எழுச்சிகளின் தன்மை காரணமாக, இலங்கையின் தமிழ்ப்பண்பாட்டை விரோத நிலைகொண்டு பார்க்கும் மரபே மேலோங்கத் தொடங்கிற்று. சமூகவியல், மானுடவியல் நிலைகளிலும் மொழியியல் நிலைகளிலும் காணப்படும் ஒற்றுமைகளைப் புறக்கணிக்கும் ஒரு மனோபாவம் ஓர் அரசியல் சித்தாந்தமாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளிலிருந்து ஓர் அந்நியப்பாடே வளர்த்தெடுக்கப்பட்டது. எண்பதுகளின் பின்னர் அவை இருவேறு உலகங்களாகவே நிலைத்துவிட்டன.
ஆயினும் இலங்கையின் நவீன மயவாக்கத்துடனும் ஆங்கில நிர்வாக மயப்படுத்தலுடனும் தமிழர் சிங்களவரிடையே இரண்டு நிலைகளில் ஊடாட்டங்கள் ஏற்பட்டன. ஒன்று சிங்களப்பகுதிகளில் நிர்வாகக் கடமைகளிலிருந்தோர். மற்றது ஆங்கில அறிவு காரணமாக உத்தியோகத்தர், தொழின்மையாளரிடையே ஏற்பட்ட உறவு. இரண்டாவது நிலையில் படிப்படியாக குரோத உணர்வுகள் வளர்ந்தன வெனினும் முதல் நிலையில் பலமட்ட புரிந்துணர் ஊடாட்டங்கள் நிகழ்ந்தன. ஆசிரியர்கள், சிறு வியாபாரிகள், சுகாதார பரிசோதகர்கள், ஓவர்சியர்மார் எனப் பலர் சிங்களப் பகுதிகளில் கடமையாற்றியதால் செளஜன்ய ஊடாட்டமிருந்தது. அந்த ஊடாட்டம் அடிநிலை சிங்கள பெளத்த பண்பாட்டின் உயர்வான பெறுமானங்களைக் காட்டுவனவாக விருந்தன. பரிவு, பரஸ்பர கெளரவம் ஆதிய உறவுகள் மேலோங்கி நின்றன. இந்த உறவுகள் தெற்கிலிருந்த முறைமையில் வடக்கு கிழக்கிலுமிருந்தன. சில தொழிநுட்ப வேலைகள் (மரவேலைகள்) பேக்கரி போன்றவற்றினால் அடிநிலைப் பரிச்சயங்கள் இருந்து கொண்டேயிருந்தன. அந்த மட்டத்திலும் பரிவும் பரஸ்வர கெளரவமும் நிலவின. இவற்றினூடாக சிங்கள மக்களிடையே தமிழ்த்தன்மைகள்
xix

Page 12
பற்றிய படிமங்களும் தமிழ் மக்களிடையே சிங்கள மக்கள் பற்றிய படிமங்களும் உருவாகின. மேல்நிலை மட்டத்தில் படிம விகாரங்கள் காணப்பட்டன. எனினும் அடிநிலையில் ஒருவரையொருவர் புரிதலுடனும் பரிவுடனும் பார்க்கும் பண்பு விளங்கிற்று.
தமிழ்க் கிராமங்களிலும் சிங்கள மக்களின் ஊடாட்டம் நிலவிற்று. சிங்கள மக்களின் குணநலன்களை விதந்து போற்றும் ஒரு மரபு இருந்தது. இவற்றால் தமிழ் சிங்கள அடையாளங்கள் பற்றிய பரஸ்பர பிரக்ஞையும் அதே வேளையில் வெறுப்புணர்வற்ற ஒரு மதிப்பும் இருந்தது. ஆனால் சிங்கள மக்களிடையே இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்து மிக வேகமாக வளரத் தொடங்கிய பெளத்த சிங்கள எழுச்சிப் போக்கு முதலில் அந்நியர்கள் எல்லோரையும் பின்னர் படிப்படியாக இந்தியர்களையும் ஒரோவேளைகளில் முஸ்லீம்களையும் புறநிலைப்படுத்திப் பார்க்கும் பண்பை வளர்த்தெடுத்தது. இது பின்னர் இலங்கைத் தமிழ் விரோத மனப்பான்மையுடன் வளரத் தொடங்கிற்று. தேர்தல் முறையின் வருகையும் அத்தேர்தல் முறை, புவியியல் அடிப்படையிலான பிரதேச பிரதிநிதித்துவம் என்ற முறைமை பரவத் தொடங்கியதும் தமிழ் மக்களுக்கெதிரான நிலைபாடு அரசியல் மட்டத்திலே வளரத் தொடங்கிற்று. ஏறத்தாழ இந்தக் காலகட்டத்திலிருந்துதான் இலங்கைத் தமிழ் விரோத அரசியலும், அந்த அரசியல் கொள்கையை ஊக்கப்படுத்தும் சமய பண்பாட்டு நோக்கங்களும் வேகமாகப் பரவத்தொடங்கின. சுதந்திர காலத்திலிருந்து இது படிப்படியாக ஆழப்பட்டு தமிழ் மக்களிலும், ஒட்டு மொத்தமான தேசநிலையில் தமிழுக்கான ஒரு சமத்துவத்தைப் பெறமுடியாத அரசியற் சூழ்வு ஏற்பட்டதும் தமிழ்ப் பிரதேசங்களுக்கான தனித்துவம் பேணப்பட வேண்டும் எனும் அரசியல் கோஷம் முன்னிலைப்படத் தொடங்கியது (1949).
இக்காலம் முதல் இருவேறு இனங்கள் என்ற அடிப்படையிலேயே தமிழ் சிங்கள உறவு செல்லத்தொடங்கியது. இருப்பினும், அக்காலத்தில்
XX

இலங்கையில் தொழிலாளர், கீழ் நடுத்தர வர்க்க மட்டத்தினர் ஆகியோரிடத்து வேறுபாடுகளிடையேயும் ஒரு மாக்சிய பிடிப்பு இருந்த தால் இலங்கைத் தமிழின் தனித்துவத்தையும் (அதாவது சென்னை வாசகவட்டத்தின் விஸ்தரிப்பு அல்ல என்பதையும்) அதேவேளையில் இலங்கை மட்ட தேசிய இணைநிலைக்காகவும் ஒரு தேசிய நிலைப்பட்ட எழுத்து முறைமையை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஊக்கப்படுத்திற்று. அதன் காரணமாக இலங்கை என்ற அடிப்படையில் ஒரு தமிழ் சிங்களப் பொதுமையை வற்புறுத்த முனைந்து அந்தப் பண்பை யாதேனும் ஒருவகையில் சித்திரிக்கின்ற தமிழ் சிங்கள படைப்புகளை வற்புறுத்தி தமிழ் சிங்கள எழுத்தாளர் மட்டத்தில் ஒரு பொதுமை உணர்வை ஏற்படுத்த முனைந்தது. அந்த இலக்கிய முயற்சியின் பொழுது எழுத்தாளர் மட்ட சிந்தனை இணைவுகள் ஏற்பட்ட அளவுக்கு சிங்கள மக்களிடையே இந்தக் கருத்துக்கள் செல்லவில்லை.
இந்த விடயத்தைப் பேசும் போது ஏறத்தாழ சமகாலத்தில் (1956ற்குப் பின்) எழுத்தியக்கத்துக்குச் சற்று முன்னர் தொடங்கி பின்னர் சமாந்தரமாக வளர்ந்த சிங்கள - தமிழ் நாடக ஊடாட்டம் பற்றிக் குறிப்பிடு தல் வேண்டும். அந்த இயக்கம் தமிழ் சிங்கள அடையாளத்தேடுகை என்றோ தமிழ் சிங்கள இணைவுகளின் தேடுகை என்றோ கூறிக்கொள்ளாமல் உண்மையில் ஓரளவுக்கு ஒன்றுக்கொன்று பெருங் கொடுப்பனவுகளில்லாது வளர்ந்தாலும் அவை இலங்கையின் நாடகப்பாரம்பரியங்களின் உட்கருவில் - கருவுள்ளில் (core இல்) தங்கள் கையை வைத்தன. சரத்சந்திர, வித்தியானந்தன் வழியாகத் தொடர்ந்து நம் தலைமுறையினர் நா.சுந்தரலிங்கம், தாசீசியஸ், சங்கரசிகாமணி முதலியோர் ஏ.ஜே. குணவர்த்தன, ஹென்றி ஜயசேன, தயானந்த குணவர்த்தன, தம்ம ஜாகொடவுடனும் அதைத் தொடர்ந்து பட்டப்பின் நாடக டிப்ளோமா வகுப்பினர் சிங்களக் கலைஞர்களுடன் வைத்திருந்த தொடர்புகளும் தமிழ் அரங்கையும் சிங்கள அரங்கையும் ஆரவாரமின்றி உரமூட்டின. (அந்தத் தொட்டகுறை விட்டகுறையால்தான் இன்று தர்மசிறி பண்டாரநாயக்கா, மெளனகுரு இப்பொழுது நெறிப்படுத்திய
xxi

Page 13
இராவணேசனில் விடுபட்டுப் போன அந்தக் காலகட்டத்தின் தொடர்ச்சிகளைக் காண்கிறார்)
எண்பதுகளோடு தவிர்க்க முடியாத வகையில் பாலங்கள் உடைந்தன. தொடர்புகள் அற்றுப்போயின. வடக்கையும், கிழக்கையும் இந்த நாட்டின் பகுதிகளல்ல என்ற உணர்வுடன் தொழிற்பட அரசபடைகள் கற்பிக்கப்பட்டன. வடகிழக்கின் உரிமைக்கண்ணோட்டத் திலிருந்து நோக்கும் போது கொழும்பின் ஆட்சி சிங்கள ஆட்சியாக மாத்திரமே தோன்றியதிலும் தோற்றப்படுத்தப்பட்டதிலும் ஆச்சரியமில்லை யென்றே கூறலாம்.
இவற்றிற்கு மேலாக 1977 முதல் 1983 வரை தெற்கில் நிகழ்ந்த தமிழருக்கெதிரான வன்செயல்கள் தமிழர்கள் இந்தப் பகுதிகளை தம்முடையவையும்தான் என்று எண்ணுவதற்கே இடம் வைக்காத வகையில் அந்நியப்படுத்தி விட்டன. வடக்கு கிழக்கு யுத்தத்தின் உக்கிரம் கொழும்புக்கு பலமக்களை அனுப்பிற்றெனினும் 1983க்கு முன்னிருந்த பாத்தியதை உணர்வு எதுவுமே கொழும்பில் இல்லாது போய் கோயில்களுக்குச் சென்று வருகின்ற ஓர் உரிமையுடனேயே வாழும் நிலை ஏற்பட்டது. வன்செயல்கள் வன்செயல்களைப் பிரசவித்தன. இதனால் நாடு தழுவிய பீதி பரவியது. இந்த நிலைமை சிங்கள, தமிழ் இருப்புக்கள் பற்றி எவையேனும் சிந்தனைகளை ஊக்குவித்திருந்தால் அவை இணைநிலைகள் பற்றியன அல்லாது பிரிநிலைகளாகவே நின்றன.
இந்தப் பின்புலத்தில் தான் யுத்தம் தன் முனைப்பினால் ஒரு பாடத்தை இலங்கைக்குப் புகட்டியது. குறிப்பாக அரசு எனும் நிறுவனத்துக்குப் புகட்டியது. அது இந்த நாடு இவ்வாறு பிளவுபட்டு நின்று போரிடுவதனால் நாட்டுக்கே நஷ்டமென்ற உபதேசத்தை காதருகே கூறிற்று.
அந்த உபதேசத்தின் உணர்கை வழியாக வந்த போர்நிறுத்தம் அல்ல யுத்த நிறுத்தம் மீண்டும் விட்டகுறை தொட்டகுறைகளை
xxii

கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு புற வளர்ச்சிகளால் மறைக்கப்பட்டுப் போன அந்த அகவுண்மைகளை கைகளால் தடவி உணரும் ஒரு நிலையை ஏற்படுத்தின. அந்தத் தடவுகை முயற்சியாகவே சென்ற ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த - சிஹல உறுமயவினால் எதிர்க்கப்பட்ட - சிங்கள, தமிழ்க் கலைக்கூடலாகும். அந்த சிங்கள - தமிழ்க் கலைக்கூடல் இந்த இரு மொழிகளினதும் அந்தரங்க மனச்சாட்சிகளாக உணர் நேர்மையுள்ள ஆக்க எழுத்தாளர் ஒன்று கூடலாக நடந்தேறியது. தர்மசிறி பண்டாரநாயக்காவும் குழந்தை சண்முகலிங்கமும், வில்வரத்தினமும் லால் ஹயகொடவும் என ஆக்கவியல் கலைஞர்கள் ஒன்று சேர்ந்தனர். புதுவை இரத்தினதுரையை ஒரு யுத்த ஆவேசவாதி என்று கூறாது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் மனச்சாட்சி என்று சிங்களக் கவிஞர்கள் ஏற்கும் நிலை வந்தது. தமிழ்க்கலைஞர்களோ வடகிழக்குக்கு வெளியே நடந்த வன்செயல்கள் இந்தக் கலைஞர்களைப் பெரிதும் பாதித்திருக்குமோ என்று அடிமனது புரள முகத்தில் துக்கத்தைத் தேக்கினர்.
(அந்தப்பரஸ்பரத் தேடல் இப்பொழுது சிங்கள - தமிழ்க் கலைஞர்களின் இணைவாக நிறுவன மயப்படுத்தப்படுகின்றது)
யுத்த நிறுத்தம் தந்துள்ள இடைவெளி தமிழுணர்வுகளை அறிந்து கொள்ள சிங்களத்தின் படைப்பாளிகட்கு ஒரு சந்தர்ப்பம் தந்தது போல், சிங்கள மக்களினதும் சிங்களப் பகுதிகளினதும் உணர்முறை கருவுள்ளைத் (core) தேடி சோ. பவின் பேனாவின் தடவுகை முந்தியதின் அறுவடையை நமக்குத் தருகிறது.
IV
இந்த அறுவடையில் ஒரு சுவாரஸியம் என்னவென்றால் ஆங்கில இலக்கியத் தடத்தின் வழிநெறிகள் பற்றிய புலமைப் பரிச்சயம் கொண்ட சோய என்ற ஆங்கில விரிவுரையாளர், ஆங்கிலத்தின் மூலமாக சிங்கள உணர்முறையின் உளப்போக்குகளின் நெளிவு கழிவுகளை ஏற்ற
xxiii

Page 14
இறக்கங்களை, சலனங்களை, அதிர்வுகளைக் கண்டறிந்து தமிழ் வழியாகத் தருகிறார்.
இதற்குள் முப்பரிமாணமுள்ள ஒரு அறிவுத் தொழிற்பாடு கவித்துவத்துக்கு உதவுகிறது. தமிழ் மரபு தெரிந்த நிலை, ஆங்கிலத்தின் ஆழ அகலங்களை சுழற்சிகள் எகிறல்கள் ஆகியவற்றைத் தெரிந்த நிலை, குரோதப் படைகளால் (layers) மறைக்கப்படாத உண்மையான சிங்கள இதயத் துடிப்புக்களை அறியும் ஆர்வம் ஆகிய மூன்றும் இந்தக் கவிதை, தொகுதிக்கான தளமாக அமைகின்றன. இத்தொகுதியின் பலம் - பலவீனம் ஆகிய இரண்டுமே இந்த மூன்றின் இணைவின் இயைபு நிலைகளில் காணப்படுவதிலேயே உள்ளன.
சோ. பவின் தமிழ்வழிமூலம் தெரியவரும் சிங்கள மொழி நிலை உணர்வுகள் யாவை? அவை நமது சமூகங்களின் துடிப்புநிலைகளோடு ஒப்பிடப்படும்போது எப்படி இருக்கின்றன? என்பதும் அதற்கும் மேலாக நாம் எங்கே நிற்கின்றோம் என்பதும் முக்கியமாகும்.
V
சோ. பவின் இந்தத் தொகுப்பு அரசியலின் புகைச்சூழல் பாதிக்காத சிங்கள நெஞ்சங்களின் இயல்பான உணர்வுத் தேடல்களை நம் கண்முன்னே நிறுத்துகின்றது. உண்மையில் பலபாடல்களில் இனக்குழுமப் போர் பற்றிய நேரடியான குறிப்பு எதுவுமில்லை.
இத்தொகுதியில் வரும் பாடல்களை பெரும்படியாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று: சிங்கள மூலத்திலுள்ள ஆங்கில மொழி பெயர்ப்புகளின் தமிழாக்கம். இரண்டு; ஆங்கில மூலத்திலேயே எழுதப்பட்டவை. ஆஷ்லி ஹல்பே. றெஜி சிறிவர்த்தன, மானெல் அபயரட்ண, ஆன் ரணசிங்ஹ, உகருணதிலக, பஸில் பர்ணாண்டோ முதலியோர் கவிதைகள் ஆங்கில மூலத்தில் உள்ளவை.
xxiv

மஹகம் சேகா, பராக்கிரம கொடித்துவக்கு, மொனிக்கா றுவன்பத்திறன, ஆரியவன்ஸ் றணவீர ஆகியோருடைய கவிதைகள் சிங்கள மூலத்திலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன. இவை யாவுமே தமிழ் வாசகர்களின் உணர்முறைகளுக்கு வித்தியாசப் பட்டனவாக உள்ளனவென்பதில் சந்தேகமில்லை. கவிதைப் பதிவுகளுக்கு எல்லா வேளைகளிலும் வாசிப்பவர் பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை என்பது உண்மையெனினும், இக்கவிதைகள் அவற்றின் மூலநிலைகளில் ஒரே பண்பாட்டுப் பகிர்வுள்ள ஒரு தடத்தில் நின்று கொண்டே தம்மைத்தாம் தொடர்புறுத்துகின்றன. (communicate) எனலாம்.
அவ்வகையில் சிங்களப் பண்பாட்டின் மிகச்சிறந்த நவீன கவிதைக்குரல்களில் ஒன்றாக ஒலித்த மஹகமசேகரவின் படைப்புக்கள் எத்தகைய உணர்முறைகளை, உணர்வு அர்த்தப்படுத்தல்களை தொடர்புறுத்துகின்றன என்பதனை அறிவதன் மூலம் சிங்களப் பண்பாட்டில் நவீன கவிதைக்கு உள்ள இடத்தையும் நவீன சிங்களக் கவிதைப் பண்பாட்டையும் ஓரளவு உற்றுணர்ந்து கொள்ளலாம்.
தமிழர் இருப்புக்களுக்கெதிராக கிளப்பப்படும் மதயுத்தக் கோஷமொன்றின் வழியாக சமகால ஈழத்து தமிழ்வாசகர் பெற்றுக் கொள்ளும் புத்தர் பற்றிய படிமம் ஓர் இயல்பான சிங்கள பெளத்த நிலையில் எவ்வாறு தொழிற்படுகிறதென்பதைப் பார்த்தல் வேண்டும். பெளத்த சிங்களப் பண்பாட்டினுள் வேர் விட்டு நின்று அதன் சாதக ஆக்கபூர்வ உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து நிற்கின்ற ஒரு கவிஞன் நவீன காலத்து வாழ்க்கையின் சோகங்களை சித்தார்த்தரது வரலாற்றின் திருப்புமுனைக் கட்டத்தை (மனைவியைப் பிரியும் கட்டத்தை) முன்னிறுத்தி எழுதியுள்ளவை அந்தப் பண்பாட்டினுள் அடிநிலை மனிதர்களின் வாழ்வியல் வேதனைகளைப் பிட்டு வைக்கின்றது. மஹகம் சேகர இன்று நம்மிடையே இல்லை. அவர் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் சிங்களத்துறை விரிவுரையாளராக இருந்தவர். அப்பொழுது எனக்கு அவருடன் பரிச்சயம் உண்டு. அவருடைய கவிதைகள் பெரும்பாலும் நிஸந்தஸ் என்ற (சந்தமற்ற) புதுக்
XXV

Page 15
கவிதைகள். அவருடைய மரணத்தின் முன்னர் சிறிது நாள் மிகவும் நோய் வாய்ப்பட்டு மருத்துவசாலையில் தங்கியிருந்தபோது மரணத்தின் நிழலில் என்ற தலைப்பில் எழுதிய கவிதைகள் மிக்க பிரசித்தி பெற்றிருந்தன. அடிநிலையிலுள்ள அப்பழுக்கற்ற ஒரு சிங்கள விவசாயப் பண்பாட்டிலிருந்து வருபவர் நவீனத்துவம் தரும் பிற பண்பாட்டுத் தாக்கங்களால் எத்தகைய பாதிப்புக்குள்ளாகிறார் என்பதை சேகரவின் கவிதைகள் காட்டுகின்றன. இந்த மனநிலைக்கான படிமங்கள் சேகரவின் கவிதைக்கு ஒருவனப்பினைக் கொடுத்ததாகக் கூறுவர்.
சிங்கள இலக்கிய நண்பர்கள் பலர் சேகரவின் கவிதைமொழியின் கனதிபற்றி, அவை சிங்களப் பண்பாட்டினுள் தோய்ந்து கசிந்து நிற்கும் தன்மை பற்றி ரசித்துப் பேசுவார்கள். அவருடைய கவிதை வரிகளிலொன்று கிராமத்துப் பெண்ணொருத்தியின் நீண்ட கூந்தலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவளது கூந்தல் ஒரு நதியாக அவள் முதுகிலே துவண்டு நெளிகிறது என்று எழுதியுள்ளாராம். அந்த நண்பருக்கு நான் சிலப்பதிகாரத்துக் கானல்வரியைச் சொன்னேன். நதிகள் பாயும் சூழலில் வாழ்பவர்கள் அந்த அழகைக் காண்பதிலுள்ள லயிப்புக்கள் தாம் எத்தனை வகை
சிங்களக் கலை உலகில் மிக முக்கிய இடம் பெற்ற மஹகம் சேகர அடிமனதில் எவ்வாறு அப்பழுக்கற்ற பண்பாட்டுத் தெய்விகம் நிறைந்த ஒருவராக உலகைப் பார்த்தார் என்பதற்கு இத்தொகுதியில் வரும் நிலவும் நியூயோர்க் நகரும் என்ற கவிதை நல்ல உதாரணம்.
பராக்கிரம கொடித்துவக்கு பிரபலமான சிங்களக் கவிஞர்களிலொருவர். சிங்கள தமிழ் ஒற்றுமையைப் பற்றி மனங்கசியப் பாடியவர். குறிப்பாக மலையத்து இளைஞர் யுவதிகள் தமக்கென உரிய இடத்தைப் பெறவேண்டுமென்று பாடியவர். மலைநாட்டுச் சிங்கள கிராமப்புறத்திலுள்ள ஒரு சிங்களச் சிறுமியின் ஏழ்மையும் கல்வி அவாவும் இணையும் வகையில் அவர் போட்டுள்ள கவிதைக் கோலம் நம்மைச் சிலிர்க்க வைக்கும் முறையில் அமைந்துள்ளது. கிழிந்துபோன
XXνi

அழுக்குச் சட்டையென்பதை மறந்து பள்ளிக்கூடத்துக்குப் போடப்போதுமான சந்தோஷத்தில் துள்ளிப் பாய்ந்து ஓடோடிவரும் அச்சிறுமி குசுமாவதி எம்கண்முன்னே நிற்கின்றாள்.
ஆரியவன்ஸ ரணவீர ஒரு நிர்வாக சேவை உத்தியோகத்தர். நாடகத்துறை போகியவர். சிங்களப் பண்பாட்டின் உடனிலை அம்சங்களின் வனப்புமிக்க ஓர் எடுத்துக்காட்டு அந்தப் பண்பாட்டு ஈடாட்டம் ராகுலனுக்கு சித்தார்த்தர் கூறும் தனிமொழியில் (Solloquy) தெரிகிறது.
நம்மிடையேயும் நிறையப் பேசப்படுகின்ற விமர்சனக் கொடுங்கோன்மையின் சிங்கள நிலைத்தொழிற்பாடுகளை அந்தச் சிறிய கவிதை நன்கு காட்டுகிறது.
உபாநந்த கருணதிலக வாழ்நிலைச் சிங்களப்பண்பாட்டின் இன்னொரு முகத்தைக்காட்டுகிறார். காதலின் மென்மை அந்த நினைவுகளின் கனதி என்பவை உலகப் பொதுவான உணர்வெழுகைகள். அந்த உணர்வெழுகையின் ஒரு கீற்று சவுக்குமர காற்றோசையின் ஊடே காதலியின் அஸ்தியைச் சுமந்து செல்பவனின் துடிப்புக்களை ஈ.சி.ஜி போலப் பதிவு செய்கிறது. மனதின் ஏற்ற இறக்கங்கள் சொற்களைப் புகைப்படங்களாக்கியுள்ளன. இத்துணை நுண்ணுணர்வுடைய ஒருவர் மலைக்கிராமத்தில் வாழும் தனது தகப்பனாரின் மரம் நடுகைப் பண்பாடு முறியும் வாழ்க்கை முறைகளினூடே எத்தகையவொரு மெளனத் தொடர்ச்சியினை நிலைநாட்டுகின்றதென்பதை 'அப்பா என்ற அச்சிறிய கவிதை மூலம் காட்டுகிறார். ஆனால் தமிழ் வாசகர்களின் மனதை நெகிழச்செய்வது மாணவிகளைச் சுற்றுலாவுக்குக் கொண்டு சென்ற ஆசிரியர் அச்சுற்றுலாவின் இறுதி மனப்பதிவாக நமக்குக் காட்டும் காட்சி தான். மலையகத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை நடாத்தும் அவர்களின் பார்ட்டியை தேயிலைக் கொழுந்துகளைக் கிள்ளும் அந்த உழைப்பாளிப் பெண்கள் விழிகொட்டாது பார்ப்பதுதான். கவிதையின் தொடக்கத்திலேயே முரண்
XXvii

Page 16
அணி மிகுந்த அட்டகாசத்துடன் கட்டப்பெற்று விடுகிறது -
(மாணவியர்கள் கொண்டு வந்த கேக் பற்றிய குறிப்பு) 1958 ஆம்
ஆண்டுத் தேர்தலுக்கு மலையகத்துக்குச் சென்ற தேர்தல் அதிகாரியின்
பதிவு பிரஜாவுரிமையற்ற மலையகத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதியை மிகுந்த வன்மையுடன் எடுத்துக் கூறுகிறது. இடந்தெரியாத
சிங்கள உத்தியோகத்தருக்கு பாதையைத் தெரியப்படுத்துகின்ற தமிழ்த்
தொழிலாளி வாக்குப்பதிவில் அவன் இடம் பெறாமை பற்றிய குறிப்புக்கள்
இந்த ஒவியத்தின் மிகுந்த வனப்புள்ள தூரிகை அழுத்தங்களாக
விழுகின்றன. இந்தத்தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்ட இந்த உரிமைப் பறிப்பு மலையகத்துத் தமிழ் கவிதைகளினூடாக எவ்வாறு வந்துள்ளது
என்பது பற்றிய ஓர் ஒப்புமை முயற்சியை இந்தக் கவிதை தூண்டுகிறது. சி.வி வேலுப்பிள்ளையின் ஆங்கிலக் கவிதைகள் சில நிச்சயமாக foodsoro is 6 (bisaipoor. (In Ceylon's Tea Gardens)
கமலா விஜயரத்னவின் கவிதைகள் காட்டுகின்ற பெண்நிலை உணர்திறன்முறை தமிழிலே ஏறத்தாழ பேசப்படாத நமது பெண் கவிஞர்கள் பலர் சொல்லத் தயங்குகின்றவற்றை மிகுந்த கவித்துவ இலாவகத்துடன் எடுத்துக்கூறுகிறது. சொல்லாத சேதிகளில் ஆசங்கரி தமிழ்ப் பெண்கவிஞர்கள் இப்படிப் பாடமுடியாதுள்ள பண்பாட்டுத் தடைகள் பற்றி நன்கு ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
கமலா விஜயரத்னவின் ஒரு கவிதை பெதும்பைக் கால மனோரம்மிய காதல் நினைவுகள் எங்கள் ஒவ்வொருவரின் நெஞ்சுகளிலும் நினைவின் ஏணிப்படிகளை நிறுத்திவிட்டுப் போகின்றன எனக்காட்டும்.
பறக்கும் பஞ்சுமுகிள் போல
அவையெல்லாம்
அநித்தியமாய்ப் போயின
இதயங்கள் உறவை மறக்க
அரும்பிய முளையை
கருக விட்டோமே
பஞ்சு முகிள் போல
xxviii

நீயும் அவ்வுணர்ச்சியும்
பிடிமானமின்றி
பிடிக்க ஒனர்ணாது
bறில் மிதந்து போயி
இந்த உணர்வுத் திளைப்பினின்றும் பிடுங்கி சிங்களப் பண்பாட்டின் சோகப்படிமத்துக்குள் எம் மனங்கள் நனைய, எம்மை நிறுத்துகிறது 'வெள்ளைச் சேலை என்ற கவிதை. மரணவீட்டுக்கு அணிய வேண்டிய சேலையினை அடிக்கடி பயன்படுத்த வேண்டி வருகின்ற இன்றைய சிங்கள கிராமத்துச் சோகம், மிகுந்த சோகக் கவர்ச்சியுடன் எம்முன் நிறுத்தப்படுகிறது. கமலா விஜயரத்தினவின் கவிதைகளின் மொழிபெயர்ப்பை வாசிக்கின்ற பொழுது நான் அடிக்கடி வற்புறுத்தும் பால்நிலையும் கவித்துவ மொழியும் (gender and the poetic language) என்றவிடயம் பற்றிய குறிப்பு அவசியமாகிறது. பெண்களின் அனுபவப்பதிவுகளும் அந்தப் பதிவுமுறைகளும் - உண்மையில் பதிவுப் பாங்குகளும் அவை வெளிப்படுத்தப்படும் பாங்கும் மிக நுண்ணிதாக நோக்கப்பட வேண்டியவையாகும். நமது இலக்கிய விமரிசன ஆய்வில் இந்த மொழியாளுகை பற்றி இன்னும் பேசப்படவில்லை. கமலா விஜயரத்னவின் பிரியாவிடை என்ற கவிதை மிக முக்கியமானது.
இந்த முன்னுரையை மேற்கூறிய போக்கில் கவிஞர்கள் ஒவ்வொருவரது பண்புகள் பற்றிய குறிப்புரைகளாக ஆக்காது முன்னுரையின் ஆரம்பத்தில் எடுத்துக்கூறிய கவிதைமொழிபெயர்ப்பின் உண்மைப் பண்பிற்கு மீண்டும் வர விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னர் ஆன் ரணசிங்ஹவினுடைய கவிதைகள் பற்றிய குறிப்பு ஒன்று அவசியமாகிறது. அவை ஆங்கில மூலத்திலேயே எழுதப்பட்டுள்ளவை. ஆன் ஒரு ஜேர்மனிய யூதப் பெண். தன் இளம் பருவத்திலே ஹிட்லரின் இன ஒழிப்புக் கொள்கைக்குத் தன் பெற்றோர்களைப் பலிகொடுத்தவர். அந்தக் கொலைக் கொள்கைகளின் வெதுவெதுப்பிலிருந்தும்,
хxix

Page 17
சில்லிடுகைகளிலிருந்தும் அவர் என்றுமே விடுபடவில்லை. அந்த ஜேர்மானியப் பெண்ணுக்கு இலங்கையின் சூழல் தனது இளமைக்காலத்து சனவதைகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. 1983ஐ அனுபவித்த நமக்கு அந்தச் சோகம் - அவற்றின் முட்கீறல்கள் பிடிபடத் தொடங்குகின்றன. ஆன் ரணசிங்ஹவின் கவிதைகள் எணி பதுகளின் இலங்கை அனுபவங்களை சர்வதேசிய மயப்படுத்துகின்றன.
VIII
முந்திய நிலையில் ஒரு கொள்கை எடுகோளாக எடுத்துக்கூறிய பண்பாடுகளினூடாக தொடர்பாடல் இதுவரை கூறியவற்றால் ஓரளவுக்கேனும் புலனாகிறது என்பது தெரிகிறது.
ஆங்கில மொழிமூலம் வந்தாலும் சிங்களப் பண்பாட்டின் தனித்துவங்களும் மானுடப் பொதுமைகளும் நன்கு தெரிய வருகின்றன. மானுடப் பொதுமைகள் சிங்களப் பண்பாட்டினூடே வருகின்றபொழுது அவைபெறும் படிம முத்திரைகளும் தெரிகின்றன.
உண்மையில் சோ. பவின் இந்த முயற்சி ஒரு ருசி ஊக்கிதான். நமக்கருகேயுள்ள இன்னொரு வாழ்முறையின் அத்தியந்தங்களை அறிவது நமக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.
சோ. பவுக்கு எனது வாழ்த்துக்கள்.
கார்த்திகேசு சிவத்தம்பி (தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்) கொழும்பு - 6
(இவ்வாய்வுக் குறிப்பினை எழுதுவதற்கு பெரிதும் உதவிய செல்விமாகிறித்தா வேதநாயகத்துக்கு எனது நன்றி)
XXX

Gli Iuri ILI
பதிப்புரை
என்னுரை அணிந்துரை பிரபுத்தன் ராகுலனுடைய பிறப்பு ஞாபகம் குடிகாரன்பூ நினைவுச்சின்னம் அப்பா
தலைச்சன் உயிர்காப்பாய் வரலாற்றின் பரிமாணங்கள்
விழிப்பு . ஆயிரத்துத்தொளாயிரத்து ஐம்பத்தாறு . ஒரு சுற்றுலா
. அஞ்சலி
. சின்னமகள்
. குகமாவதி
. அஷாந்தியின் மரணம்
. விலைமாது . உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது . கொலனித்துவ சின்னம் . இது மற்றோர் ஏதேன் . நிலவும் நியுயோர்க் நகரும் . ஏப்றில் 1971
புத்துயிர்ப்பு . ஒரு புரட்சிவாதி மீது நீதி விசாரணை
ix
0.
06
08
10
2
14
8
20
2.
25
28
30
32
35
37
38
41
43
45
48
50
52

Page 18
25
26.
27.
28.
29. 30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
பூரீலங்கா, 83 யூலை கிறிக்கெற் ஆட்டம் 1983 1983 ஜூலையில் இன்னுமொரு சம்பவம் பிரியாவிடை நீதியான சமுதாயம் முன்னோர்
இன்றைய சிங்கம்
தொன்மம் ஒரு தாயின் புலம்பல் வெள்ளைச் சேலை நல்லூர் நினைவுள் - 1984 அடையாளம்
கவிஞன் கவிஞனின் மனைவி கவிதையும் விமர்சகனும் கோதமி விஹாரை ஓவியங்கள் மேலே வானம் கீழே பூமி கால் பதிக்காப் பாதை
96)60s) ஒலமிடும் வெளவால்கள் ஏற்றுக்கொள் பட்டினத்தில் பைத்தியம் என் அம்மாவுக்கு மன்னிக்க வேண்டும் யாருக்கு நினைவிருக்கிறது? அப்பா
ஜூலை 83
கைதி
என்னதான் மிஞ்சும்? Acknowledgments கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள்
0.
02
03
06
107
108
11
13
16
19
121
124
26
128
29

தென்னிலங்கைக் கவிதை O
பிரபுத்தன்
சித்தார்த்த,
உன்னைப் போல்
நான் அரச போகத்தில் பிறக்கவில்லை! கோடைக்கென்று குளிருக்கென்று எனக்கு மாளிகைகள் இல்லை
ଗମ୍ଫରା
உன்னைப் போல்
இல்வாழ்வைத் துறப்பது எளிதல்ல, எனக்கு.
நான் போனால்
என் மனைவி மக்கள்
ஆதரவின்றியோர்
வாடகை வீட்டில்! பிள்ளைகள் எடுத்தடி வைக்கமாட்டாத கைக்குழந்தைகள்

Page 19
02 சோய
அவர்களுக்கு பால் மா தேடுவது ஆர்? நான் இல்லாவிடின்
அவர்களை
மருத்துவரிடம் கொண்டு செல்வது ஆர்? எதிர் காலத்தை
தம் கைகளில் இறுகப் பொத்தியபடி தம் அகன்ற விழிகளில் நம்பிக்கையோடு என்னைப் பார்க்கும் பிள்ளைகள்
கந்தை உடையோடு எலும்புந்தோலுமாய் இரா முழுதும்
கணணுறங்காமல நிரஞ்ஜலா மா இடிக்கிறாள் பால் கரைக்கிறாள் கஞ்சி காய்ச்சுகிறாள் துணி துவைக்கிறாள் அவர்களுக்குத் தாயாய் சகோதரியாய்
என்னுள்

தென்னிலங்கைக் கவிதை O3
காதலின் ஊற்றுக் கண்களைத் திறந்தவள் அவள் என்னால் முடியாது ஒட்டைக் குடிசையில் பட்டினி கிடக்க இவர்களை விட்டுவிட்டு
துறவு பூண என்னால் முடியாது!
வாழ்க்கையின் துன்பங்களால் சலித்துப் போய் நான் நடந்த போது நிரஞ்ஜலா
குடிசையில் குந்தியிருந்தாள்
கைககுழநதையுடன, தன்னந்தனியே. அவள் கணவன்
பாரச்சுமைகள் தூக்கியே மாய்ந்து போனான்! அவன் சுமையை
நான் தூக்கிக் கொண்டேன், கருணையினால்,
காய்ந்த கைகளை முத்தமிடுவன காற்றிலே அசைந்தாடும் பச்சைப் பயிர்.

Page 20
04 I சோய
நீயிடிக்கும் அரிசி நனையவே நெற்றிவேர்வை மழைத்துளியாய் விழும் நிர்மல வானில் நிறைமதி பொழிதரும் பால் என் குழந்தையின் நெஞ்சில் பாயும் நாளை உலகில் நவநவக் கனவில் என் பாலன் இதழ்க்கடை பயிலும் குறுநகை வாவிகள் கட்டி வளம் பல பெருக்கிய பூதங்கள் மீள என் நாட்டில் பிறந்துள! பாலன் முறுவல் பதிந்த இரத்தினங்கள் ஆழச் சுரங்கத்திலிருந்து வந்துள்ளன அவன் கண்ணீரைத் துடைத்துப் பார்க்கிறேன் எவை எவை நாளை விடியல் கொணருமோ கடன் சுமையின்றி
அச்சமின்றி விலங்கெதுமில்லா புது யுகம் ஒன்றின் மீது என் மைந்தன் ஆட்சி செலுத்துவான்
பிஞ்சுக் குழந்தாய் அன்பின் ஊற்றை நீ தொடுந் தோறும் ஓய்ந்த உடல் புத்துணர்ச்சி எய்தும் மைந்த உன்னைக் காணுந்தோறும் என் களைப்புக் களிபேருவகையாய் மாறும்! ஓராயிரம் வருடம் உனக்காய் ஒரு கனவு ஆராத காதலொடு கண்டு கொண்டிருந்தேன் அந்த உலகை உனக்கென்றமைக் காமல்

தென்னிலங்கைக் கவிதை 05
மைந்த, துறக்க மனஞ் சற்றுமில்லையடா.
ஆகையால் சித்தார்த்த,
தெளிவாய்ப் பதில் சொல்லு:
கோவைகள் சூழ நான்
குந்தியிருந்தாலும்
மேழி பிடித்தாலும்
விசிறி விதைத்தாலும்
சக்கரங்களுக்கு நடுவே
8FLDJTg.
மெத்த உழைத்துக்
கோஷமிடும் வேளையிலும்
மனிதக் குவியல் பிதுங்க
தொடர்வண்டி
தினமும், போய் மீளும் - அதில்
நான் ஒருவன் ஆனாலும்
புத்தனாய் மாறும்
வழிபுரியச் சொல்லையா
நிச்சயமாய் தன்னந்
பல்லாயிரவரொடு கூடி
நான் பற்றறுக்க
ஒல்லும் வழியொன்றுரை
சிங்கள மூலம் : மஹகம் சேகர ஆங்கில வடிவம் : ரஞ்ஜினி ஒபயசேகர

Page 21
06 சோய
ராதனுைடைய பிறப்பு
இளங்குருத்தே கண்ணுறங்கு என்னைத் தேடாதே ஒளிமயமான உலகொன்றை உனக்களிக்கிறேன்
வெளியே காரிருள் ஆனால்
உன் பள்ளியறை

தென்னிலங்கைக் கவிதை 07
பளபளக்கிறது, மகனே உறக்கத்திலும் என்னை அழைக்கிறாய் இங்கே, வெளியே இருட்டென்பதறியாய், மகனே
ஒரு நாள்
உன் மெல்லடி பெயர்த்து
என்னைப் போலவே
நீயும் இருட்டில் நடப்பாய்
அந் நாள் நீ நடக்கும் பாதையில் விளக்கு வைக்க இந்நாள் நான் ஒளி தேடிச் செல்கின்றேன்
ஆதலால்
அழாதே, மகனே என்னைத் தேடாதே கண்ணுறங்கு ஆனந்த மயமான உலகொன்றை
உனக்களிக்கிறேன்
சிங்கள மூலம் : ஆரியவன்ஸ் றனவீர ஆங்கில வடிவம் : ஈ. எம். ஜி. எதிரிசிங்ஹ

Page 22
08 சோய
தாபகம்
நெடிய பருத்தி மரங்களில் பஞ்சு வெடித்துவிட்டது இந்த வெக்கையில் அதன் இறக்கைகள் புகார் போல மிதக்கின்றன
இக் காலத்தில் தான் நீயும் நானும் பட்டுப் போன்ற இறக்கைகளைத் துரத்திக் கொண்டு

தென்னிலங்கைக் கவிதை 09
ஒரு பஞ்சு முகிளை இருவர் விரல்களும் பொத்த ஒருவர் மீது ஒருவர் மோதி விழுவோம்
அந்த ஸ்பரிசத்தால் அதிர்ந்து உன் முகம் சிவக்கும் என் உடலெங்கும் வெப்பமின் அலைகள் பாயும் அப்போது உனக்கு வயது பன்னிரண்டு எனக்குப் பதின்மூன்று
பறக்கும் பஞ்சு முகில் போல அவையெல்லாம் அநித்தியமாய்ப் போயின இதயங்கள் உறவை மறக்க அரும்பிய முளையை கருக விட்டோமே
பஞ்சு முகிள் போல நீயும் அவ்வுணர்ச்சியும் பிடிமானமின்றி அடைய ஒண்ணாது பிடிக்க ஒண்ணாது காற்றில் மிதந்து போயின
ஆங்கில மூலம் : கமலா விஜயரத்ந

Page 23
O சோய
தடிகாரன் பூ
நிலவூட்டிய போதையால் ஊசலாடும் விளக்கையொத்த குடிகாரன் பூண்வ' இரவையும் சுழற்காற்றையும் சட்டை செய்யாது நீ உன் கூந்தலில் சொருகுவதைப் பார்த்தேன் பாம்பு போன்ற அக்காட்டுவாச மலர்க்கொடி ஒரு மனையாளின் முடியாத
கனவால் விரிந்து
மணம் பரப்பி
சுவரேறி
நிலா முற்றத்துள்ளும்
இதய அறைக்குள்ளும் சிறைபட்ட உலகுள் நுழைந்தது
நிலவெறிக்கும் வானத்து
வெண்முகில் மாளிகை போல இந்தக் கணம் உடைந்து போம் எனும் நினைவே இருந்ததில்லை, அப்போது மரணம் எம்மை ஏய்த்து இப்பற்றைக் காட்டுக்கு அழைத்து வந்து நாம் மூச்சு வாங்குவதையும் மூச்செறிவதையும் கேட்கும் என்ற நினைவே இருந்ததில்லை, அப்போது
ஆங்கில மூலம் : உபாநந்த கருணதிலக

நினைவுச் சின்னம்
சவுக்கு மரங்கள் பற்றி நான் முன்பு பாடிய துண்டு அப்பொழுதெல்லாம் நீ உயிர்ப்புடன் இருந்தாய் பொறுமையில்லாத என் கை அலைபாயும் உன் கூந்தலைச் சரிசெய்யும் பளிங்கு போன்ற - ஆனால் குளிராத உன் அழகிய கன்னத்தைத் தொடும்
அப்பொழுதெல்லாம் வானுற நிமிர்ந்த ஆனால் உள்ளே எச்சங்கள் அற்ற இன்றைய தலைமுறைக்குப்புரியாத இரு உலகப் போர்களின் பளிங்குச் சின்னங்கள் பற்றி LITLạGEGOTör
இப்பொழுதோ வெய்யில் குளித்து நிற்கும் சவுக்கு மரங்களை நெருங்குகையில் என் கால்கள் தடுக்குகின்றன உன் அஸ்தி ஏந்திய கலசத்தை நெஞ்சோடு அணைக்கையில் அதே பளிங்குக்கல் கீறுகிறது காயப்படுத்துகின்றது
ஆங்கில மூலம் :
தென்னிலங்கைக் கவிதை
உபாநந்த கருணதிலக

Page 24
12 GTu
sH IT
LD609 நகரத்தின் கன்னங்களிலும் ஒளி உமிழும் கண்ணாடிகளிலும் வழியும் போதும் தர்ச்சாலையின் மீது துப்பும் போதும் கடினமான கூரைகள் மீது முரசறையும் போதும்
நாம்
கண்களை மூடுவோம் அவரைக் காண்போம்
மலையில்
தனிமையில் தம் வாசற்படியில் இருப்பார்

தென்னிலங்கைக் கவிதை 13
தன் கைகளால் நட்டு இன்று ஓங்கி வளர்ந்து மாலைப் பொழுதின் நிசப்தத்தைப் போக்க தன்னோடு உரையாடும் ஆனைக் கொய்யா மரங்கள்மீது இதே மழை பொழிவதைப் பார்ப்பார்
அவர் தனித்துப் போனார் நாம் வளர்வதையும் இழுபறிப்படுவதையும் நினைவுகளுக்கே இடமில்லாதபடி உலகின் சுழற்சி எம்மை வாரிச் செல்வதையும் அவர் கண்டிருக்கிறார்
அவர் புத்திசாலி வேறு நாற்றுக்களும் நட்டிருக்கிறார்
9606
அவர் வாசலில்
கிளைகளை ஒச்சி நிழல்தருகின்றன
எம்மைப் போல்
அவை அவரைக் கைவிடா
ஆங்கில மூலம் : உபாநந்த கருணதிலக

Page 25
14 I சோய
தலைச்சன்
தவளை போல தொப்பூழ்க் கொடியில் தொங்குகின்றேன் கதகதப்பான வெள்ளத்தில் மீன் போல நீந்துகிறேன் அந்தக் கடூரமானவைகறைவரை என்தாயின் அலறலால் உந்தப்பட்டும்
அவள் வலியினால் நச்சரிக்கப்பட்டும் குருதிக் கால்வாய்வழியே இருண்ட குகை வாயில் நோக்கி ஊருகிறேன்

தென்னிலங்கைக் கவிதை 15
என்னை விட மறுக்கும் தசைகளிடமிருந்து என் தவழும் உடலை ஏந்தும் மருத்துவச்சியின் முடிச்சு விழுந்த கைவிரல்கள் அவள் பழகிய செவி
என் கீச்சுக்குரலுக்குக் காத்திருக்கிறது கரகரத்த குரலில் அவள் தீர்ப்பளிக்கிறாள் "ח6(mil6l60#"
தோல் சுருங்கி(ய)
நடுங்கும்
என்பாட்டி
தனக்குள் சிரித்தபடி கட்டிலருகே குனிகிறாள் அந்தக் காலத்து மனுஷியின் புத்தி தோல்வியை ஏற்காது என் முகத்தில் தட்டுகிறது உள்ளங்கால்களை அறைகிறது என்னிடமிருந்து அழுகையை வெளிக் கொணர்கிறது விழிப்பு பல மரணங்களுக்கு முன்னர்வரும் முதல் விழிப்பு
ஆங்கில மூலம் : அல்ஃ()றெடா த சில்வா

Page 26
16 சோய
E) uff silIIILITli
லொக்கு
நேற்றிரவு
எங்கள் வீட்டுமாமரம் காய்களோடு பாறி விழுந்துவிட்டது மழையில்லை
காற்றின் அசைவுகூட இல்லை தோமியா சேடமிழுத்துச் செத்த அன்று போல இன்றும்
இங்கு ஒரே வெறுமை
பொடி மாதம் ஒருமுறை வீட்டுக்கு வருகிறாள் கூந்தலில் நரைத்ததைப்பிடுங்க அவள் கண்கள் எங்களை ஈட்டிபோல் குத்தி எதையோ தேடுகின்றன “கெளரவ வேளாள பெளத்த பெற்றோர் படித்த, இளமைத் தோற்றமுள்ள மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்க்கின்றனர்”
வீட்டுக்கு சீலிங் அடிச்சாச்சு குழாய் நீர் வருகிறது
ஆனால், தொண்ணுற்றாறு தவணைகள்

தென்னிலங்கைக் கவிதை 17
கடன் செலுத்த வேண்டும் அப்பா சற்று நொண்டுகிறார் முந்திய முறை தம்பியைத் தேடி அலுத்தபோது ஏற்பட்டது போலல்ல
இன்றிரவு
இருபத்தோராவது நாள் போதிமரத்தடியில் தம்பிக்காக விளக்கேற்றுவேன் உனக்காகவும் உன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும் ஒவ்வொரு நாளும் விளக்கேற்றுவேன் பெரிய பிள்ளை இம்முறை வருடப்பிறப்புக்கு சுமனே ஐயும் சிறுசுகளையும் கூட்டி வராதே இருக்கிற பழைய உடுப்பு இன்னும் பன்னிரண்டுமாசம் தாங்கும் உனக்குச் சிரமமில்லாட்டி. அந்தக் காசுக்கு.
இன்னொரு தரம்
ஞாயிறு பத்திரிகைகளில்
பொடிக்கு
முந்தினதுமாதிரி
ஒரு விளம்பரம்.
சுமனேக்குத் தெரியாமல்
ஆங்கில மூலம் : கீதா பிரேமரத்ந
லொக்கு (துவ) - மூத்த பிள்ளை பொடி (துவ) - இளைய பிள்ளை

Page 27
18 சோய
வரலாற்றின் பரிமாணங்கள்
ஒரு தீவின் வலியால் வெடித்து வாய்பிளந்த தரையைப் பார்த்து வரலாற்றின் பரிமாணங்களை
அளந்தபடி நிற்கிறேன்
வெறிச்சோடிய தரைத்தோற்றக் காட்சிகளை வைத்தகண் வாங்காது பார்க்கும் போது
என் உயிர் வற்றிவிடுவதை உணர்கிறேன்

தென்னிலங்கைக் கவிதை 19 தெருவோரத்தே நிற்கும் பொன்வண்ண இலை சுமந்த மரங்கள் போல
எனக்கு வயசாவதை உணர்கிறேன்
தொலைந்து போன தொடுவானத்தை வெறித்துப் பார்க்கும் போது அரித்துப்போன உலகத்தின் மீது கருக்கல் பொழுது கவிவதைக் காண்கையில் நான் வழிதவறிப் போனதற்காக என் இழப்புக்காக துக்கிக்கிறேன்
பாதுகாப்புத் தேடுகிறேன்
ஆனால் உலகம் காலவெள்ளத்தில் அள்ளுண்டு போய்விட்டது சுழியோடிகள்
காலம் மறந்த
ஒல்லாந்தர் காலத்திலிருந்து அற்பப் பொருள்களோடு மேலே வருகிறார்கள்
காலம் என்னைக் கடந்து போவதைப் பார்த்தபடி நான்
புராதனமான கதிரையில் அமர்ந்திருக்கிறேன்
ஆங்கில மூலம் : பார்வதி அரசநாயகம்

Page 28
20 சோய
விழிப்பு
என் கனவுகளைப் புரிந்து கொள்ளத மனிதக் கூட்டங்களின் நடுவே புழுதித் தெருவழியே நடந்து கொண்டிருக்கும் ஓர் அநாமதேயம் நான் என்பதை உணர்கிறேன்
புதிதாகப் போடப்பட்ட தார் வீதியில் நான் நடக்கையில் நகரத்தின் மீது அமைதி இறங்கும் ஆனால்
நான் வழிதவறிப் போவதாக உணர்கிறேன்
விரைவில்
நான் இல் பொருளான கிணற்று நீருக்கு ஏங்கும் வெய்யில் வாட்டிய சருகாகி விடுவேன்
நான் யார் என்று எனக்கே தெரியவில்லை
ஆங்கில மூலம் :
பார்வதி அரசநாயகம்

தென்னிலங்கைக் கவிதை 21
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தாறு
தேர்தல் வாரத்தில்
எனக்கு இரண்டாம் சுற்றுக் கடமை தேயிலைத் தோட்டத்துப் பட்டினத்தில் செங்குத்தான வீதி கடைத்தெரு இரைச்சலை செவிடாக்கிய அருவி ஓசை
அன்பே
பழைய காரில் நமது பயணம் உன் மடியில் ஒரு கறுப்புப் பூனை தேர்தல் கடமையாதலால்

Page 29
22 சோய
பொலிஸ் பாதுகாப்பு
கண்ணியமாக
சிங்களத்தில் நான் விசாரித்த போது கம்பளிகளுக்குள் ஒளித்திருந்த அத்தோட்டத்து மக்களின் முகங்களில் எழுதியிருந்த எதிர்ப்புணர்வு சில்லிட்ட அக் கருக்கல் வேளையில்
எனக்குப் பிடிபடவில்லை
ஆங்கிலத்தில் விசாரித்தேன் கோடிட்ட ஸ்போர்ட்ஸ் சட்டை அணிந்திருந்த ஒருவன் சொன்னான். “கற்பாலத்தைத் தாண்டி ஹற்றன் நெடுஞ்சாலையில் நுழைந்தால் பொலிஸ் நிலையம் போகலாம்”
இன்ஸ்பெக்டர் குறுந்தடி, மின்சூழ் ஏந்திய ஒரு கொன்ஸ்டபிளை அனுப்பினார் எங்கள் இருப்பிடத்தைக் காட்ட
அன்பே
உன் நல்ல காலமோ பூனையின் அதிர்ஷ்டமோ அந்தத் தோட்ட பங்களவில்

தென்னிலங்கைக் கவிதை 23
யாருமில்லை இரவுணவு சமைக்க வந்தவன் கவலை தோய்ந்த முகத்தினன் தென்னிந்தியத் தமிழன் மறுநாள் நடக்கப் போகும் தேர்தல் பற்றி அவனைக் கேட்டோம் அவன் கவலைக்குக் காரணம் புரிந்தது அவன்
சுதந்திரத்தின் பின் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்திருக்கிறான் ஆனால் நாளை வாக்களிக்க முடியாது அவன் எதிர்காலம் திடீரென இருண்டுவிட்டது அவன் பிறந்த மலையகத்துக்கு அவன்அந்நியனாகி விட்டான்!
அடுத்த நாள் வாக்களிப்பு ஆரவாரமற்றிருந்தது
தேயிலைத் தோட்டத்து மலைவாசிகளுக்குப் பதில் தென்னிலங்கைக் கடைக்காரர் வாக்களித்தனர் கடைத்தெரு வழக்கறிஞர் ஒருவர் பழைய பிரபுத்துவ வாரிசையும்

Page 30
24 சோய
தோட்டத் தொழிலாளர் பிரதிநிதியையும் எதிர்த்துப் போட்டியிட்டார் தேர்தல் முடிந்ததும்
D60)
لG;if(L||[9ے
உன்னோடும் கறுப்புப் பூனையோடும் உயரப் பயணஞ் செய்து பொறலந்த போய் குன்றிடை வெளியைக் கடந்து நட்சத்திரங்கள் குடைபிடிக்க என் பெற்றோர் இல்லம் சேர்ந்தோம்
தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தாலும் எங்கள் காலடியோசை கேட்டு
அவர்கள் எழுந்தார்கள்
ஆச்சரியம், எங்கள் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன்
ஆம், முதல் நாள் இரவு
எங்களைப் பராமரித்தவனுக்கு
கவலை தரக்கூடிய முடிவு அது
கடைத்தெரு வழக்கறிஞர் வென்றிருந்தர்!
ஆங்கில மூலம் : உபாநந்த கருணதிலக

ஒரு சுற்றுலா
அன்பே
மடுல்கெல மலைத் தொடரிலுள்ள கோபேற்றின் மலையிடை வெளிக்கு
போகப் போவதாக
தென்னிலங்கைக் கவிதை 25

Page 31
26 சோய
முந்திய கடிதத்தில் எழுதியிருந்தேன் அல்லவா? போகத்தான் செய்தோம் மாணவியரோடு ஒரு சுற்றுலா
சிற்றுண்டிகள் கொண்டு வந்திருந்தார்கள் நாட்டுப்புற வழக்கப்படி, பயற்றம் பணிகாரம் அல்ல! ஒன்று மட்டும் நிச்சயம்: இவர்களுள் ஒருத்தியும் நாட்டுப்புறக் கணவனை நாடாள்!
ஆக, ஐசிங் கேக்கும் சொக்லேற்றும் ஆங்கில பாணியில் பரிமாறப்பட தேநீரும்,
தோட்டத்துரைமார் tennis விளையாடும் ஆடுகளத்துக் கருகேயுள்ள கொட்டில்களில் பிற்பகல்
மழை முகில்கள் இல்லை ஆனால் வானம் மப்பு மரங்கள் சோம்பிக் கிடந்தன
துரைமாருக்கு tennis பந்து பொறுக்கும் பையன் ஒருவனை
வழிகாட்டியாக அமர்த்தினோம்,

தென்னிலங்கைக் கவிதை 27
இவ் மலையிடை வெளியைக் காட்ட தேயிலை வளரும் ஒரு மலைச்சரிவு கூனல் விழுந்த மரங்களிலிருந்து தொங்கும் கொடிகளின் நிழல் கண்ணுக்குத் தென்படாத அருவி ஒன்றின் ஓசை
திடீரென
ஒற்றைப் பறவை வட்டமிட வானம் எம்முன் விரிந்தது பொடியன் சொன்னான் இதுதான் மலையிடை வெளி நாமோ கிடுகிடு பள்ளத்தை எதிர்பார்த்தோம் ஆனால் புகார், காட்சியை மறைத்தது இறங்கத் தொடங்கினோம். சோபையற்ற லயன் காம்பராக்களின் முன் கொழுந்து கொய்து களைத்த பெண்கள் மலைச்சரிவுக்கு அப்பால் நடக்கும் tennis ஆட்டத்தையும் ஆங்கில பாணித் தேநீர் விருந்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆங்கில மூலம் : உபாநந்த கருணதிலக

Page 32
28 சோப
அஞ்சவி
அவளைக் கந்தைகளாற் சுற்றி ஒரு பெட்டியில் கிடத்தியிருக்கிறார்கள் சடங்குகள் தொடர்கின்றன பொழுதுபடுமுன் அவளை அடக்கம் செய்து விடுவார்கள் அமைதியாகப் பார்க்கிறேன் ஏழைப்பெண்ணே என்ன நினைத்திருந்தாய்? உன் களைத்த பகற் பொழுதுகளிலும் ஓய்ந்த இரவுப் பொழுதுகளிலும் D 60T60607 6 TILLQUI தனிமைத் துயர்களால்
கட்டுண்ணாது நீ சுமந்து பெற்ற பிள்ளை வாழ்வானெனக் கனவு கண்டாயா?
எஞ்சிய பாண் துண்டுகளையும் கந்தைத் துணிகளையும் பழைய போத்தல்களையும் பொறுக்கிய வேளைகளில் உனக்கென்றொருவீடு காய்ச்சலால் நடுங்கும் உடலைச் சாய்க்க ஒரு கட்டில் என்றெல்லாம் ஆசைப்பட்டதுண்டா? இன்றைய பொழுது என்பது

தென்னிலங்கைக் கவிதை 29
உனக்கு விடியப் போவதில்லை என நேற்றிரவு
நீ உணர்ந்த போது
ஏழைப் பெண்ணே வானத்துத் தாரகை வரை போய் சிறிது காலம் நீ சிறகிலிட்டுச் சீராட்டிய பிள்ளையை காக்கும்படி கடவுளிடம் வரங்கேட்டாயா?
அந்தச் சிறு பையன் அழவில்லை அமைதியாகக் காத்திருக்கிறான் உன்சிரிப்பொலியைக் கேட்பதற்கு “இதோ வந்துவிட்டேன், குழந்தாய், சேகரித்த உணவுகளால் என் கைப்பை கனக்கிறது வா பாடுவோம்
நாம் உயிர்வாழும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்”
தெருக்களை அளந்த தாயே நீ எங்கிருந்தாலும் உன் பிள்ளையை அணுகி அவன் காதில் ஒரு ரகசியம் சொல்வாய் வாழ்வதற்கு
அவன்
அழுதாக வேண்டும் என்று.
ஆங்கில மூலம் : மானெல் அபயரத்ந

Page 33
30 சோய
FIII IDEhsis
அம்மா
நினைவிருக்கிறதா நான் வீட்டில் வாழ்ந்த காலத்தில் என்னை “சின்ன மகள்” என்று அழைப்பாய்
அது (குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக) நான் புறப்படுமுன்
கண்காணத் தொலைவில் அந்நியர்களிடை
என்னை “லிஸி” என்று அழைக்கிறார்கள்
தெருவில் இருகைகளிலும் தலையிலும் சுமைகளைத் தூக்கிச் செல்கையில் என்னை
பணிப்பெண்’ என்கிறார்கள்

தென்னிலங்கைக் கவிதை 31 சின்னப் பிள்ளையின் கையைப் பிடித்து அதை பள்ளிக்குக் கூட்டிச் செல்கையில் “அதோ போகிறாள் பிள்ளையின் செவிலி” என்கிறார்கள்
உணவு சமைக்கையில் பரிமாறுகையில் தண்ணி அள்ளுகையில் விறகு கொத்துகையில் என்னை
“சமையற்காரி” என்கிறார்கள்
ஆனால்
அம்மா அன்றாட வேலை முடித்து என்பாயில்
உடலை நீட்டுகையில் என் கனவுகளில்
நீ வந்து காதோடு அழைக்கிறாய், “சின்ன மகளே” என்று
சிங்கள மூலம் : மொனிக்கா றுவன்பத்திரன ஆங்கில வடிவம் : ரஞ்ஜினி ஒபயசேகர

Page 34
32 சோய
குசுமாவதி
"பாடசாலைச் சீருடை இரணி ழல் எதையுமே குசுமாவதியால் காயவிட முடியாததால், அவள் நேற்று பாடசாலைக்கு வரவில்லை. தயவு செய்து அவளைத் கண்டிக்காதீர்கள்"
ஒரு கையில் பிரம்போடும் மறுகையில் கடிதத்தோடும்
நான்
குசுமாவதி,
உன்னைத் தண்டிக்கும் உரிமை உலகில் யாருக்குண்டு? உன்னை இரண்டே உடைகளோடு விட்ட சமூகத்தையல்லவா சவுக்கால் அடிக்க வேண்டும்?
ஓம் சேர் நேற்றிரவு நெருப்பு வெக்கையில் காய்ந்த உடையை அணிந்து கொண்டு புத்தகங்களைச் சுமந்தபடி ஒரு கையில் ஒலைச் சூளைப்

தென்னிலங்கைக் கவிதை 33 பிடித்துக் கொண்டு குடாவ என்ற கிராமத்திலிருந்து அஞ்சு மைல் நடந்து வருகிறேன் கல்விச் செல்வத்தைத் தேடி கோடிடப்படாத வானப் புத்தகத்தில் சூரியனுடைய கதிர் சிவப்பால் எழுதுமுன் சூளைப் பிடித்துக்கொண்டு கல்லுக்குக் கல் தாவி வருவேன்
ஆறு பாயும் வழியில் சிவந்த வாய்க் குளவிகள் நீந்தும் மேலே அடர்ந்த மரக் கொப்புகளில் குரங்குக் குட்டிகள் சிரிப்பை உதிர்க்கும் கல்லுக்குக் கல் தாவி வருவேன் நான் காலில் பிடிப்பு ஏற்பட்டால் ஒழிய உட்கார மாட்டேன்
ஒருநாள் நடுக்காட்டில் பிரம்புப் பற்றைக்கு நடுவே ஒரு பாறை போல என்னைப் பார்த்தபடி நின்றது ஒரு காட்டு யானை
இல்லை சேர் என்னைப் பற்றிய கவலை எனக்கில்லை காடு முழுவதும் குருலு - ராஜப்பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன

Page 35
34 சோய
யார்பொருட்படுத்துகிறார்கள்?
நான் கல்லுக்கு கல் தாவிக்கொண்டு சிரித்தபடி வருவேன்
ஓர் உடுப்பு முதுகுக்கு நேரே கிழிந்துவிட்டது இரண்டு மூன்று முறை தைத்துவிட்டேன் மற்ற உடுப்பு
இந்தத் தவணை முடிவில் வியர்வையால் நைந்து போகும் ஆ, இன்னோர் உடுப்பு அதுதானே வீட்டில் எரியும் பிரச்சினை என் பிரார்த்தனையும் தான்
கனவில் என்றாலும் அது கிடைக்குமானால் அடுத்த தவணையும் வருவேன் மத்திய உயர்கல்லூரிக்கு கல்விச் செல்வம் பெற
ஓம் சேர் கல்லுக்குக் கல் தாவிக் கொண்டு கல்லுக்குக் கல் தாவிக் கொண்டு 8ીીઇંgL|g.
சிங்கள மூலம் : பராக்கிரம கொடித்துவக்கு ஆங்கில வடிவம் : றஞ்ஜினி ஒபயசேகர

தென்னிலங்கைக் கவிதை 35
அவராந்தியின் மரணம்
(நுவரவளவு, கோட்டே, செப்ரெம்பர் 1974)
சிறுமியாய் இருந்த போதே அவளை எனக்குத் தெரியும்
அவள் சாப்பிடுவதையும் சட்டி பானை கழுவுவதையும் கண்டிருக்கிறேன் ஹோலில் ஒரு சாக்குக் கட்டிலில் உறங்குவாள் படையில் சேர்ந்து பன்றி மேய்த்த என் மைத்துனன் அவளைப் பயன்படுத்தியிருக்கலாம் (இந்தக் குடும்பத்தில் அவன்தான் கடைசி ஆண் வாரிசு) இரத்த உறவுக்காக வலிப்பு நோய் பிடித்த அவன் தங்கையை நான் கல்யாணம் செய்ய இருந்தேன் (ஆம், அடிவளவில் இருந்த விறகுக் கொட்டிலுக்கு நெருப்பு வைத்தாளே, அவள்தான்)
அஷாந்தி வித்தியாசமானவள் உயிர் வாழ்வதற்காக எத்தனை பேருக்கு தன்னைத் தந்திருந்தாளே, அறியேன்

Page 36
36 I சோய
அவளுக்கு இரண்டு வயதுப் பிள்ளை ஒன்று நேற்று அஷாந்தி அஸிட்குடித்து விட்டாளம் அது குடல் வழியே எரிந்துகொண்டு இறங்க அவள் போட்ட கூக்குரல் வயிற்றில் ஏழுமாதப் பிள்ளையோடு செத்துப் போனாள் அவள் யார் தகப்பன் என்றறிய யாருக்கும் ஆர்வமில்லை பலர் இருந்திருக்கலாம் இத்தகைய நலிந்தோர் சாபங்களிலே உரத்தே ஒலிக்கும் பேரையுடைய என் மைத்துனனாக இருக்கலாம்
அவள் காதுச் சோணைகளைக் கவனித்தேன் பாரம் மிக்க பாம்படங்களைச் சுமந்ததுக்குச் சான்றாக அவை நீண்டு தொங்கின
பிறகு, அம் மண்டபத்தில் மீண்டும் கறுப்பு நாரை நடனமாடியது பல நூற்றாண்டு கால ஆண்கள்அணி ஒன்று பார்த்துக் களித்தது
என் மடியில்
வெண் வித்து நிரப்பப்பட்டு
அவள் கிடந்தபோது
ஆங்கில மூலம் : லக்தாஸ விக்கிரமசிங்ஹ

தென்னிலங்கைக் கவிதை 37
ിബാg
விழித்த கண்ணோடு தெருவிளக்கின் கீழ் நான் காத்திருக்கையில் மக்கள் சொல்கிறார்கள் என்னுடலிற் கனலும் ஆவேசத் தீக்கங்குகள் தினமும் பலரைக் கவர்ந்திழுக்கின்றனவாம்
ஆனால்
தெருவிளக்கின் கீழ் அதன் மங்கல் ஒளியில் நின்று இவ்வுலகைப் பார்க்கையில் நெருப்பைக் கிளறிவிட்டவர்களேயன்றி அனைத்தவர் ஒருவரையேனும் கண்டிலேன்
சிங்கள மூலம் : மொனிக்கா றுவன்பத்திரன ஆங்கில மூலம் : சுசில் சிறிவர்த்தன

Page 37
38 | 6şIu
உள்ளாசப் பயணிகள் வந்திறங்கிய போது
உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது.
நிதியமைச்சர் சொன்னார் “எங்கள் பொருளாதாரம் உத்வேகம் பெறும் டொலர்கள் குவியும்”
உள்நாட்டமைச்சர் சொன்னார்
“சுதேசிகளுக்கு பூரணமான, விதம்விதமான, வேலைவாய்ப்பு வழங்கப்படும்”
கலாசார அமைச்சர் சொன்னார்
“பிற கலாச்சாரங்களோடு ஏற்படும் தொடர்புகளால் எங்கள் வாழ்வு வளம்பெறும் வாழ்க்கை முறை நிச்சயம் மேம்படும்”
ஹில்டனிலிருந்து வந்தவன் சொன்னான்
“உங்களுக்காக இரண்டாவது சொர்க்கத்தை அமைப்போம் இது புதிய ஆரம்பம் உன்னத விடியல்”

தென்னிலங்கைக் கவிதை 39
உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது
இத்தீவின் மக்கள் விகாரமானதொரு வேடம்பூண்டனர் இருவாரம் களியாட்டவிழாஅயர்ந்தனர்.
உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது
எங்கள் ஆண்கள் வலைகளைத்தூர வைத்துவிட்டு நட்சத்திர ஹோட்டல்களில் பரிசாரகர்கள் ஆயினர்1 எங்கள் பெண்கள் விலைமாதர் ஆயினர்
உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது
எமது கலாச்சாரம் விடைபெற்றுப்போனது எங்கள் நடைமுறைகளை விற்று சன்கிளாஸம்பொப் இசையும் வாங்கிக் கொண்டோம் எங்கள் புனித சடங்குகள் பத்துச் சதத்தை வீசிவிட்டு எட்டிப்பார்க்கும் தெருக்காட்சிகள் ஆயின
உல்லாசப் பயணிகள் வந்திறங்கியபோது. உள்ளூர் உணவுக்குத்தட்டுப்பாடு விலை அதிகரித்தது எங்கள் சம்பளம் மட்டும் உயரமறுத்தது

Page 38
40 I சோய
உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது
எம்மால் கடற்கரைகளில் உலாவமுடியவில்லை ஹோட்டல் மனேஜர் சொன்னாள் “சுதேசிகள் கடற்கரைகளை மாசுபடுத்துகிறார்கள்”
உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது
பசியும் அலங்கோலமும் பேணப்பட்டு பவனி விடப்பட்டன “கிளிக்” கிடும் கமராக்களுக்காக
உல்லாசப்பயணிகள் வந்திறங்கியபோது
நாங்கள் கண்ணியமாகப் புன்னகை புரியக் கற்றுக் கொண்டோம். பாதை தவறிய விருந்தினர்க்கு வழிகாட்டி ởn-L- Đ_6ùĩ6ìl{bịô நல்லெண்ணத் தூதுவரானோம்.
எங்கள் இதயத்திலுள்ள
நாசமாய்ப்போக என்ற வார்த்தைகளை முகத்திலடித்ததுபோல எம்மால் மட்டும் சொல்ல முடிந்தால்.
ஆங்கில மூலம் : சிசில் ராஜேந்திரா (1983)

தென்னிலங்கைக் கவிதை 41
கொலனித்துவ சின்னம்
மாலை வேளைகளில்
split III,
மக்கோலே ஐ அல்லது அபொற் எழுதிய நெப்போலியனை உரத்து வாசிக்கும் படி என்னைப் பணிப்பர் நெப்போலியன் அப்பாவுடைய 'ஹிறோ (அவனைப் போலவே அப்பாவும் கட்டை) நான் அப்பாவின் நம்பிக்கைக் கீற்று
கிராமத்தில் பிறந்த அம்மாவுக்கு அந்த மேன்மையான மொழி கற்பிக்கப்படவில்லை அப்பொழுது எனக்கு ஆறு வயது நாங்கள் வீடு மாறும் வேளை பாடசாலையிலிருந்து

Page 39
42 சோய
என்னை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தா ஆசிரியையோடு சிங்களத்தில் பேசினாள் ஏவளாளர்கள் மொழியில் என் அன்னை பேசுவதைக் கேட்டு வகுப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி “போயிட்டு வாறன்” என்று சொன்னவளை பின்தொடர்ந்தேன் நான்
அந்தப் பாடசாலையில் என் கடைசிநாள் அது என்ற
நிம்மதியுடன்
அந்த நேரம் பார்த்து மணி அடித்தது ஒரு பொடியள் குழு வெளியே வந்தது எனக்குப் பிரியாவிடை சொல்லுமாப்போல் கூவியது கேலியாக
‘போயிட்டுவாறன்” தலைக்கணம் பிடித்த வம்புப் பிறவியள் அவர்களைக் குறை சொல்வானேன்? அன்று அம்மாவை நினைத்து வெட்கப்பட்டேன் இன்று அந்நினைவு வரும்போதெல்லாம் என்னை நினைத்து நாணுகிறேன்!
ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன

தென்னிலங்கைக் கவிதை 43
இது மற்றோர் ஏதேன்
உக்கல் மேசை மீது போட்ட பற்றிக் விரிப்பில் முழங்கையை ஊன்றியபடி பதப்படுத்திய இறாலைக் கொறித்தபடி கையில் உள்ள முள்ளுக்கறண்டி
உன் குடியேற்றவாத மேலாதிக்கத்தைப் பறைசாற்ற வீற்றிருக்கும் கொழுத்த வெள்ளையனே
வளம்மிக்க கிழக்கத்திய மண்ணை உழும் நத்தையே கம்பி வளையமிட்ட கண்ணாடியூடாக என்னைத் துளைக்கும் உன் பார்வை ஏகாதிபத்திய வெற்றியைச் சொல்லும் என் ஆத்மாவை ஊடுருவும்
ஒரு தெருவுக்கப்பால் என் காதலன் எனக்காகக் காத்திருக்கிறான்

Page 40
44 I சோய
என் விளக்கு மங்கி எரிகிறது எண்ணெய் தேவை அதற்கு மனிதன் மீது கொண்ட அன்பால் கல்வாரியில் மரித்த கிறிஸ்துகூட நான் இப்பொழுது போவது போல மனமாரப் போயிருக்க மாட்டார் தங்கள் தொடைகளில் வாளும் கேடயமும் தரித்த ரோமானியர்கள் வானமுகடுவரை அம்மீழாய் நிமிர்ந்து பரந்த நாடுகளை சிலுவையில் அறைந்து ஈட்டிகளால்
விலாவில் அல்ல
வலியெடுத்த பூமியின் மையத்தில் குத்தும் போது வெள்ளைப் பிணத்தில் நெளியும் குடம்பியாகிய வலியை நான் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்கிறேன் டொலர்களின் தாயோடு போராடுவதற்காக நாளைய விளக்காவது tിjsIDI, ബിub.
ஆங்கில மூலம் றிச்சாட் த சொய்ஸா

தென்னிலங்கைக் கவிதை 45
நிலவும் நியுயோர்க் நகரும்
ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு 2 ULIJ 6īgib கறுப்பு, கொங்கிறீட் சுவர்கள் மட்டுமே வர்ணஜாலம் செய்யும் வானமில்லை இலையில்லை
மரமில்லை
கண்குளிர ஏதுமில்லை! இந்த நியூயோர்க் நகரின் நூறாவது மாடியில் கதவுகள் ஜன்னல்கள் அடைத்த சிறையில் ஒரு படுக்கை

Page 41
46 சோய
ஒரு கதிரை ஒரு மேசை நான்
இந்தப் பாரிய பூமியில் மறுபுறத்தில் என் மன அரங்கில் வரும் அன்புக்குரிய பெற்றோர், உறவினர்; நண்பர்கள், மனைவி, மக்கள் இந்தப் பாழும் வெறுமையைப் போக்க ஒரு கவியை உரத்துப் பாடுகிறேன் அந்தச் சத்தம்
என் காதில்
மீள வந்து மோதுகிறது
போகும் வழி அறியேன்
ஜன்னலைத் திறந்து அதல பாதாளத்தை ஊடுருவிப் பார்க்கிறேன் கூரிய குளிர் முட்கள்
விரைந்து
முகத்தைக் கிழிக்கின்றன மின்விளக்கின் ஒளிவெள்ளத்தில் அகப்பட்டு திசையெல்லாம் வாகனங்கள் குளறிக்கொண்டு விரைகின்றன எறும்பளவு

தென்னிலங்கைக் கவிதை 47 தறுக்கணித்த மனித யந்திரங்கள் பொறுமையிழந்தனவாய் இங்கும் அங்கும் ஓடுகின்றன ஒருகணம் தரித்து என்னை அன்போடு நோக்கி நலம் விசாரிக்க பரிச்சயமுள்ள ஒரு ஜீவன் இல்லை, இங்கில்லை! மறந்துவிட்டேன் அவர்கள் இப்பூமியின் மறுபுறத்தில்
ஆற்றாது மேலே பார்க்கிறேன் வட்டப் பொற்தட்டாய் வானில் ஒளி வீசும் எனக்கு நன்கு பரிச்சயமான
நிலவு
எங்கள் கிராமத்து நெல் வயல்கள் மேல் காயும் நிலவு எங்கள் தேவாலய முன்றிலின் அரச மரத்தில் ஒவ்வொரு பூரணையும் ஒளியேற்றும்
நிலவு
சிங்கள மூலம் : மஹகம் சேகர
ஆங்கில வடிவம் : ரஞ்ஜினி ஒபயசேகர

Page 42
48 சோய
gTinsib IE7
மெல்லிய இரத்தவெடில் பற்றியோ தசை பொசுங்கும் மணம் பற்றியோ நொறுங்கிய எலும்பு பற்றியோ நான் அறியேன்
ஆனால்
நெஞ்சின் நெகிழ்ச்சியையும் சுய வெறுப்பின் கூரிய முனையையும் சம்பளமும் பாதுகாப்பும் வசதிகளும் முதுமையும் தரும் குற்ற உணர்வையும் நான் அறிவேன்
அவர்களுடைய கனலும் குரோதம்
அவர்களுடைய பயங்கர விசுவாசம்

தென்னிலங்கைக் கவிதை 49 அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் எல்லாம் நான் அறிய வேண்டியவை ஆனால் தம் சாவின் மூலம் அவர்கள் அனைத்தையும் சொல்லிவிட்டார்கள்
எம் வாய்ப் பேச்சைவிட வலுவாக
இரவெல்லாம் கண்விழித்தபடி பரிச்சயமான வேலையைச் செய்ய முயற்சி பண்ணுகிறேன்
LD60pulc)
பொட்டல் வெளியில்
ஆற்றில் மீனுக்காகக் காத்திருக்கும் இளம் உடல்களின் படிமங்களும் விறைத்த,
முகம கணடிய அல்லலாலும் தோல்வியாலும் துவண்ட சாகாத ஆத்மாக்களின் படிமங்களும் என்னை உலுப்ப
மனம் குவியா வெறுமை
ஆங்கில மூலம் : ஆஷ்லி ஹல்பே

Page 43
50 சோய
புத்துயிர்ப்பு
இன்று மரண முகாமிலிருந்து தப்பி வந்த ஒரு மனிதனோடு பேசினேன் புத்துயிர்ப்பா? - அல்ல

தென்னிலங்கைக் கவிதை 51 அவன் செத்துக் கொண்டிருக்கிறான். உடல் மெலிவு மருண்ட பார்வை முகவாட்டம் எங்கோ சஞ்சரிக்கும் மனம் “இத்தகைய அநுபவங்களுக்குள்ளாகும் ஒருவருக்கு உண்டாகும் குணங்குறிகள் இவை” மனநல மருத்துவர் சொல்கிறார் இவனைச் சித்திரவதை செய்தோர் அநுபவிப்பனவற்றை வெளிக்காட்டும் குணங்குறிகள் உண்டா? இனிய கனவுகள், அருமையான பிள்ளைகள், பெரிய நம்பிக்கைகள்? இந்தப் பயங்கர முகாமிலிருந்து இந்த மனிதன் தப்பிச் செல்ல நான் உதவியிருக்க முடியும் இப்போ மெல்ல மெல்ல அவன் சாவதை தடுத்து நிறுத்தும் வல்லமை எனக்கில்லையே
ஆங்கில மூலம் பஸில் பெர்னான்டோ

Page 44
52 சோய
ஒரு புரட்சிவாதி மீது நீதி விசாரணை
பாடசாலை அறிக்கை
எல்லாப் போதனைகளையும் ஐயுறல் தொடர்ச்சியர்க்கேள்வி கேட்டல் தனித்துவமாக சிந்தித்தல் ஒழுங்கைப் பொருட்படுத்தாமை விரும்பியவாறு வேலை செய்தல் நடத்தை அதிருப்தி
சமய போதகர் அறிக்கை
விசுவாசமின்மை - பாவப்பட்ட மனத்தின் அறிகுறி புண்ணியம் செய்ததில்லை என்பதை சாதகம் காட்டுகிறது சிடுசிடுப்பு அதிகரித்து படபடப்பாகிறது சமய தத்துவங்கள் பற்றிய ஞானம் இல்லை நான் புத்தரைச் சரணடைகிறேன் இவனும் அதையே செய்ய வேண்டும்
நீதிமன்றின் அறிக்கை
அ. சட்டத்தை மீற முயன்றமை ஆ. அமைதியைக் குலைத்தமை இ. சவுக்கடி தரவேண்டும் ஈ. நல்ல குடிமகனாக ஆற்றுப்படுத்த வேண்டும்

தென்னிலங்கைக் கவிதை 53 மருத்துவர் அறிக்கை நோயுற்றுள்ளர் உளச்சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது அச்சநோய்,பித்து, சந்தேகநோய், இசிவு உணர்ச்சிக்கோளாறு,உளமாய நோய் அசாதாரண. குற்றச் செயல் இயல்புக்கு மாறான நடத்தை மூளை அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம் பூதம் பற்றிய கற்பனைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் படுக்கைக்குப் போகுமுன் phenobarbitone வில்லைகளை விழுங்குக
குற்றஞ்சாட்டப்பட்டவன் வாக்குமூலம் உணர்கொம்புகள் வெட்டப்பட்ட நத்தையாக்காதீர் என்னை கடவுள் பற்றிப் போதித்து என்னைக் கோழையாக்கிவிடாதீர் பொய்யான விழுமியங்களைச் சுமக்கும் எருமையாக்காதீர் என்னை கையும் வாயும் கட்டப்பட்ட நல்ல பிள்ளை' யாக்காதீர் என்னை
சோக்கிரதீஸ் போல கேள்வி கேட்கவும்
டேகாட்டே போல ஐயப்படவும்
காட்டாறு போலப் பாயவும்
கத்திபோல துப்புரவாக வெட்டவும்
என்னை அனுமதியுங்கள்
ஆண்குறிபோல
சிங்கள மூலம் பராக்கிரம கொடித்துவக்கு ஆங்கில வடிவம் றஞ்ஜினி ஒபயசேகர

Page 45
54 சோய
Lsĩ GDIšleissT-83 ul,GDGD
நின் சாவின் சுமையினையென் நெஞ்சம் சுமக்கிறது என்னை அது நசிக்க, எனை முழுதாய் அது விழுங்க இன்னல் உறுகின்றேன் - எனினுமுனை நானறியேன் உன்னை அறிந்திடுதல் எனக்கு அவசியமோ? நின்வடிவும் என்வடிவே நின்னுருவும் என்னுருவே! நீ வலியால் துடித்தாய் நீவேதனைப் பட்டாய் நீ முறுவல் செய்தாய் நெஞ்சாரவே சிரித்தாய் வானுறவே நாங்கள் வளர்ந்தோம் - நிமிர்ந்து நின்றோம்
இந்த ஞாயிறே இருவர் மீதிலும் முன்பு காய்ந்தது, மூச்செடுத்து, நாம் சொந்தம் என்று கொண்டாடி வந்ததும் இந்தக் காற்றையே - எண்ணிப் பார்க்கிறேன்.
நீயில்லை இன்றுன் நினைவே இருக்கிறது இங்கே - என்னுள்ளே சாவுபோலே யிருண்டு விறைத்ததொரு பாழ்வெளியை உணர்கிறேன் நின் முகத்தைக் காண நேர்ந்ததிலை ஆனாலும், நின் குரலைக் கேட்ட நினைவில்லை ஆனாலும் சாவின் முகத்தைத் தரிசித்து விட்டதனால் உன்னை நினைத்தே அழுகின்றேன்; ஆமாம் நான் நம்மை நினைத்தே அழுகின்றேன், அழுகின்றேன்!
ஆங்கில மூலம் : மொறின் செனிவிரத்ந Sunday Observer, 28.08.83

தென்னிலங்கைக் கவிதை 55
கிறிக்கெற் ஆட்டம் 1983
பத்திரிகைகளின் செய்திகளைப் பார்த்த உல்லாசப் பயணிகள் பதுங்குகிறார்கள் புனித மலையைப் பார்க்கவும் பெரஹர பவனி பார்க்கவும்
வசதியாக
தாம் செய்த ஹோட்டல் அறைப் பதிவுகளை ரத்துச் செய்கிறார்கள் "சொர்க்க புரியில் பெருந்தீ” “இனவாதப் பானை பொங்குகிறது” ஓடிப்போன பையன் இழந்த காதலையும் இழந்த திறன்களையும் பனந்தோப்பில் தேட திரும்பி வந்தவன் “ஆளைவிடு” என்று ஓடுகிறான் ரொறென்ரோவுக்கு
இம்முறை
poig JGGIT

Page 46
56 சோய
பங்கு கொள்ளவோ
சத்தியற்று
இவ்வேள்வித் தீயை மூட்டிய முதற்குச்சி எதுவென இவ்வழிவுக்கு எம்மை இட்டுவந்த படிகள் எவையென
ஆராய்கிறோம். ஆயிரத்து தொளாயிரத்துநாற்பத்தெட்டு ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தாறு சுதந்திரமும்
மொழியின் பேரால் அரங்கேறிய துரோக அரசியலும் இக்குரோதத்தின் முதற் பொறிகளை ஓங்கி எரியச் செய்த ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தெட்டு இவ்வாய்வு தீர்வு தரவில்லை அமைதி தரவில்லை
விளையாட்டின் போக்கு
எம் கைகளில் இல்லை தீ மாளிகையையும் ஒலைக்குடிலையும் தின்கிறது. கிறிக்கெற் ஆட்ட ஆவேசம் "ஸ்கோர் அறியும் பரபரப்பு இரு சாராரையும் பற்றியுள்ளது.
பெரிய வீடு பழைய புத்தகங்கள், படங்களால் மங்கிய ஒளி அலறும் ரெலிபோனை அடக்கும் கைகள்

தென்னிலங்கைக் கவிதை 57
“இங்கே வாழ்க்கை இப்படித்தான் பரபரப்புக்குக் குறைவில்லை அலுப்படிக்கிறதென்று ஆரும் குறைப்பட இடமில்லை இரவு முழுதும் காவல் காப்பேன் பிறகு ஊரடங்கு முடிய உங்கடைவீரர்கள் வெளியே வருவார்கள் இன்னொரு நாள் விளையாட்டு, குதூகலம், ஆரவாரம் பத்மினியையும் பிள்ளைகளையும் அயல் வீட்டுக்கு அனுப்பி விடுவேன்
ஆர், நானோ?
எனக்கொன்றுமில்லை உனக்குத் தெரியாதா, நான் தண்ணி போடுறவன் இப்ப கொஞ்சம் கூட, அவ்வளவுதான்
6(QTIT?
ஆள்கள் ஐம்பதடிக்குள் வந்தால் என் பொத்தகங்களுக்கு முந்தி நான்”
நிசப்தம்
பிறகு
ஐம்பத்தெட்டில் எவ்வாறு அயலவர்களாய் உரையாடினோமோ அவ்வளவு தெளிவாக “அழைத்ததற்கு நன்றி நீ செய்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் சில லைன்கள்

Page 47
58 சோய
இன்னும் வெட்டுப்படவில்லை என அறியும் போது எவ்வளவு ஆறுதல்”
யாழ்ப்பாணத்தின் பனையோலை வேலிகளுக்குப் பின்னால் நூறு துப்பாக்கிகள் உயருகின்றன எங்கள் பிள்ளைப்பருவ நினைவுகளான புறக்கோட்டைக் கடை முகப்புக்கள் நிழற்படங்களாக நெருப்பில் சுருள்கின்றன சீருடைகளில் குருதிதோய மூன்று பையன்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர் வேறுபக்கம் பார்த்தபடி ஒரு கூட்டம் டுப்ளிகேஷன் றோட் மூலையில் தன் நொறுங்கிய பைசிக்கிளருகே ஒரு பையன் செத்துக் கிடக்கிறான் அரச மரத்தின் கீழ்
பயத்தால் நடுங்கியபடி விழுந்த மனிதனை தடிகளாலும் கற்களாலும் அயலவர்கள் தாக்க இரண்டு பொலிஸ்காரர் மறுபக்கம் பார்க்கிறார்கள்
பிள்ளைப்பருவ மகிழ்ச்சிகளும் இளமைப் பருவ நட்புகளும் மதத்தாலும் அரசியலாலும் சூறையாடப்பட இறுதியில் தன் வேதனையை இவ்வுலகெலாம் காண இலங்கை அன்னை உயிரோடு எரிகிறாள்
ஆங்கில மூலம் : யஸ்மின் குணரத்ந

தென்னிலங்கைக் கவிதை 59
1983 "GUDGDLuftsib GBGirgognGlLDT FLbLIGIIb
இறந்தோரைப் புதைப்பது
எங்கள் காலத்தில் ஒரு கலையாக விருத்தியடைந்துள்ளது (எங்கள் மனங்கள் சமநிலையைப் பேண உளப்பகுப்பாய்வாளர் பெரிதும் உதவியுள்ளனர்)
ਮੁb, அவ்விஷயம் ஏதோ அபூர்வமான ஒன்றாக நினைவில் நிற்கக் காரணமில்லை

Page 48
60 சோய
உறுதியாய்ச் சொல்வேன் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல நான் நரம்புத் தளர்ச்சி வந்ததில்லை எனக்கு உங்களைப் போலத்தான் என் அன்றாடக் கடமைகளைச் செய்பவன் யதார்த்தவாதி ஆதலால் அரசாங்கம் "மறந்துவிடு” என்றால் அதற்கமைய நடப்பேன் என் மறக்கும் ஆற்றலை ஆரும் சந்தேகித்தது கிடையாது எனக்கெதிராக பாதகமான குறிப்புரைகள் இல
என்றாலும்
அந்தக் காரை அக்கும்பல் மறித்த விதம் நினைவிருக்கிறது காருள்ளே நால்வர்
ஒரு பையன் ஒரு சிறுமி (வயது நாலோ ஐந்தோ இருக்கலாம்) அவர்கள் பெற்றோர் - ஆணும் பெண்ணும்மற்றைக் கார்களை நிறுத்தியது போலத்தான் இதையும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை உற்சாகமாக சில கேள்விகள்
(தவறு நேராமல் இருக்கப் போலும்)

தென்னிலங்கைக் கவிதை 61 பிறகு செயலில் இறங்கினார்கள்
மாமூலாக பெற்றோல் முழுக்காட்டல் பிறகு சமுசயம் ஏற்பட்டிருக்க வேண்டும் காரின் இடதுபக்கக் கதவுகளை யாரோ திறந்தார்கள் இரண்டு பிள்ளைகளையும் தூக்கினார்கள் பிள்ளைகளே பெற்றோரைப் பிரிய மறுத்து அழுதன; அடம்பிடித்தன.
சில வேளைகளில்
பிள்ளைகளுடைய உணர்வுகளைப் பொருட்படுத்தாது விடுவது அவர்களுக்கு நல்லது - என அவன் நினைத்திருக்க வேண்டும் யாரோ ஒரு காரியவாதி விரைவாக தீக்குச்சியை உரசினான் திடீரென தீ, பெருந்தி தீயைச் சுற்றி அவர்களுடைய வாய்வீச்சு,
வேறொரு சாகஸத்துக்கு ஆயத்தம்
உள்ளே இருந்தவர்கள் பற்றிய கவலை யாருக்கும் இல்லை
அமைதி விரும்பும் மனிதர்கள்

Page 49
62 சோய
தத்தம் வீடுகளுக்குப் போய்க் கொண்டிருந்தர்கள் திடீரென
உள்ளேயிருந்த மனிதன் வெளியே பாய்ந்தான் அவன் ஷேர்ட்டில்
ஏலவே நெருப்பு
குனிந்தான் தன் இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு தீர்மானமாக
எரியும் காருள் ஏறினான் கார்க்கதவை அடித்துச் சாத்தினான் எனக்குச் சத்தம் கேட்டது. இன்னமும்
எரிந்து கருகிய அக்கார் தெருவோரத்தில் கிடக்கிறது ஏனைய பொருள்களுடன்
மாநகரசபை
அதை அகற்றிப்போய் குப்பை மேட்டில் போடக்கூடும் ஆம்,
தலைநகரின் சுத்தம் முன்னுரிமை பெறும் - நிச்சயமாய்
ஆங்கில மூலம் : பஸில் பெர்னான்டோ

தென்னிலங்கைக் கவிதை 63
FrfuTGlfsoL
முன்னொரு காலத்தில் உன் வீடாக இருந்த புகையும் இடிபாடுகள் சாம்பற் குவியலருகே நீயும் நானும் கடைசி முறையாக சந்தித்தது நினைவிருக்கிறதா?
JITGBULG6 சிறுகச்சிறுக உன் வருவாய்க்கேற்ப ஆண்டாண்டு காலமாக அதை நீ கட்டினாய் உன் பிரசன்னத்தால் அதற்கு
இல்லம் என்ற உணர்வையூட்டினாய்
&ljó சோகமாக அடிக்கும் அந்நாளில் நான் பற்றியஉன் கைகளின் பிசுபிசுப்பை உணர்ந்தேன்

Page 50
முத்தமிட்ட போது உன் நெற்றி சில்லிட்டது என் கண்ணில் ஊற்றெழும் கண்ணீருக்கு உன் கண்ணில் ஈரப்பதில் இல்லை உன்னிடம் ஒப்பாரியுமில்லை, எதிர்ப்புமில்லை
அவலத்தாலும் அவமானத்தாலும் நான் தலை குனிந்தேன் போரால் பிளவுண்ட எங்கள் இனங்களின் கதை வரலாற்றின் பக்கங்களில் சுமையாக அது என் தோள்களை அழுத்தியது நீர்வரி, குடியிருப்பாளனின் வாடகைப்பாக்கி என மனிதனை மிருகமாக்கும் அனைத்திலுமிருந்து
உன் இழப்பு உனக்கு விடுதலை தந்ததால் நீ சோரவில்லை
உன் தலை நிமிர்ந்தே இருந்தது உன் தோரணையில் ஒரு கம்பீரம் ஒரு கையை மகளுக்கும் ஒரு கையை வயோதிபத் தாய்க்கும் நீட்டினாய் இருவரையும் ஆதரவாய் அணைத்தபடி மேற்கைப் பார்த்தபடி புறப்பட்டாய் மீள, பழையபடி எல்லாம் தொடங்குவாயோ எங்கிருந்து தொடங்குவாய்

தென்னிலங்கைக் கவிதை | 65
எப்படித் தொடங்குவாய் என்றெல்லாம் நீ சொல்லவில்லை
புகையால் மூச்சுத் திணற நான் அங்கே நின்றேன் அந்த வரவேற்பறையின் மேற்குப்புற யன்னலூடாக மங்கும் மாலை வெயில்
யன்னற் கண்ணாடியில் வானவில் எம்மைச் சூழ நிழல்கள் கவிய நீ பேச நான் கேட்டிருந்த நாள்கள் ஏதும் பேசாமல் அருகருகே இரவு எங்கள் மீது இறங்க நட்புறவோடு நாம் இருந்த கணங்கள்
எந்த நோக்கமுமின்றி
விறைத்துப் போய்
மணிக்கணக்காக
நான் அங்கு நின்றேன் என் இயலாமையை உதறிவிட்டு கரிந்த எலும்புக் கூடுபோன்ற கட்டிடத்தையும் மலைப்பக்கமாக நீளும் நிழலையும் நோக்கினேன்
இடுகாடு பற்றிய பயம் என்னைப் பிடித்துக்கொண்டது
ஆங்கில மூலம் : கமலா விஜயரத்ந

Page 51
66 சோய
நீதியான சமுதாயம்
நீ கட்டிடங்களை எரித்தாய் ஆனால் என்னைச் சிறையுள் தள்ளினாய் நீ அவர்களுடைய குழந்தைகளை நெருப்புக்குள் வீசினாய் ஆனால் என்னை மனிதத் தன்மை அற்றவன் என்றாய் நீ பட்டப் பகலில் கொலைபுரிந்தாய்
ஆனால் என்னை இரத்த வெறியன் என்றாய்

தென்னிலங்கைக் கவிதை 67
நீ அயலவனை அகதியாக்கினாய் ஆனால் அதற்கு நான் பொறுப்பு என்றாய் நீ அவன் பாடுபட்டுச் சேர்த்த சொத்தைச் சூறையாடினாய் ஆனால் என்னைக் கள்ளன் என்றாய் நீ அவனைச் சிறையிட்டுக் கொன்றாய் ஆனால் எனக்கு மிருகம் என்ற பட்டம் சூட்டினாய் நீ காடையர்களுடன் உறவாடினாய் நானோ பாதிக்கப்பட்டவர்களுடன் நட்புப் பூண்டேன் ஆனால் நீ என்னைக் குற்றவாளி ஆக்கினாய்
என் பள்ளித் தோழனும் என் நண்பனும் அயலானும் என் குருவும் என் சகபாடியும் செத்த போதோ
ஒளித்த போதோ துரத்தும் கும்பலுக்குத் தப்பி ஓடியபோதோ வெறுங்கையோடு நாட்டைவிட்டு ஓடிய போதோ நானே துக்கித்தேன் துறைமுகத்தில் அவர்கள் கையைப் பற்றியபடி நானே அழுதேன்
அப்பாவிகளின் மீது பழியைப் போட்டுக்கொண்டு
சமாதானம் என்கிறாய்

Page 52
68 சோய
குற்றவாளிகளைப் பாதுகாத்துக்கொண்டு ஸ்திரத்தன்மை என்கிறாய் அறிக்கைகளை மறைத்துவிட்டு நேர்மை என்கிறாய் விசாரணைகளை மூடுமந்திரமாக்கிக் கொண்டு வெளிநாடுகளிடையே பொய்ப்பிரசாரம் செய்தபடி பிளவுண்டு காயப்பட்ட நாட்டை
நீ எள்ளி நகையாடுகிறாய்
நீ அயர்ந்து தூங்குகின்றாய் எனக்கு உறக்கம் வருகுதில்லை நீ வயிறார உண்ணுகிறாய் எனக்கு உணவு பிடிக்கவில்லை உனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் நான் நண்பர்களை இழந்துவிட்டேன் நீ வென்றுவிட்டதாகக் கருதுகிறாய் ஆனால் தோல்வியின் வடுக்களோடும் அவமதிப்பின் ஞாபகங்களோடும் நான் வாழவேண்டியவன் என்பது
எனக்குத் தெரியும்
ஆங்கில மூலம் : பஸில் பெர்னான்டோ

தென்னிலங்கைக் கவிதை 69
முன்னோர்
எங்கள் வரலாற்று ஏடுகளை எழுதியோர் இனவாத பெளத்த துறவிகள் என ஆய்வாளர் சொல்வர் நீங்கள் உடன்பட்டாலும் சரி மறுத்தாலும் சரி துறவிகள் பொய் சொல்வதில்லை

Page 53
70 சோய
உங்கள் முன்னோர் விலங்கின் பிள்ளைகளாய் இருந்திருக்க முடியாது கிறங்கடிக்கும் வங்கத்து இளவரசி ஒரு சிங்கத்தோடு வாழ்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருப்பாளா? சினங்கொண்ட குமாரன் சிங்கபாகு தந்தையாகிய சிங்கத்தைக் கொன்றான் அவன் பிறகு
தன் தங்கையைப் பெண்டாண்டான்
தன் தாயகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்த வெட்கங் கெட்டவன் இலங்கையில் இறங்கினான் இயக்க இளவரசி குவேனியை
ஏமாற்றி தன் மக்களைக் காட்டிக் கொடுக்கச் செய்தான் அந்தத்துரோகத்துக்குப் பரிசாக அவள் நன்றி மறந்த காதலனால் கைவிடப்பட்டாள்
பட்டினி கிடக்கும் இரண்டு பிள்ளைகளையும் அணைத்தபடி சபித்துக் கொண்டும் அழுது கொண்டும் மலையேறிப் போன இயக்க இளவரசி குவேனி தன் மக்களாலும் கைவிடப்பட்டாள்

தென்னிலங்கைக் கவிதை 71 அவள் சாபம் தான் இன்னும் இலங்கையைப் பிடித்துள்ளது பாருங்கள் இடையீடின்றி வரும் மிண்டர்கள், லோலர்கள், பாவிகள், முறையற்ற உறவு பூண்டவர்கள், தந்தையைக் கொன்றோர், பொய்யர், ஆசாடபூதிகள், கொலைகாரர் பாருங்கள் இனவாதத் துறவிகள் பிரகாசமாகத் தீட்டிய சித்திரங்களை
வரலாறு என்ற பெயரில் அவர்களால் புனைகதை எழுதவே முடிந்தது புதிய அமெரிக்கக் குருமாரும் அவர்களுடைய இலங்கை மாணவரும் சொல்வது போல எல்லாப் பொய்களையும் புனைவுகளையும் அவ்வேடுகளிலிருந்து வெளியேற்றும் காலம் வந்துள்ளது உண்மையான விஞ்ஞான முறைப்படி வரலாற்றைத் திருப்பி எழுதுக
ஆங்கில மூலம் : உதய பிரசாந்த மெத்தகம

Page 54
  

Page 55
74 I சோய
தொண்மம்
ஒரு புறம் ஊமைக் கடல் மறுபுறம் ஆரவாரிக்கும் தமிழர் இரு ஒலிகளாலும் அச்சுறுத்தப்படும் குழந்தை கெமுனு
எழுந்து வந்து தன் பிறந்த நாட்டிலிருந்து புரியாத மொழிபேசும் அந்நியனை ஒட்டும்படி ஆணையிடும் குரல்களைக் கேட்கிறான் அவன் படுக்கையில் சுருண்டபடி
ஒரு பிள்ளையின் அச்சமாகிய அந்தகாரத்தில் பளபளக்கும் வாள்கள் தந்த அழிவு எவ்வளவு ஆறாய் ஓடிய குருதி எவ்வளவு
ஆங்கில மூலம் : டெறிக் த சில்வா

தென்னிலங்கைக் கவிதை 75
ஒரு தாயின் பும்ைபள்
அக்கிலீஸின் தாய்க்கோ மாவீரன் அர்ச்சுனனின் தாய்க்கோ ஷோறப்பின் தாய்க்கோ சமானமானள் என்றெண்ணி வீராங்கனையின் கிரீடத்தை சூடவிரும்பியவளல்ல நான்
இரத்த தாகம் கொண்ட செவ்வாயின் பலிபீடத்தில் குருதி சொரிவதற்காக எஃகு போன்ற புதல்வர்களை ஈன்ற திண்ணிய ரோமானிய பெண்ணாகவோ நெஞ்சுறுதி கொண்ட லுக்றீஷியாவாகவோ என்னை என்றும் கருதியவளுமல்ல தொலைந்துபோன தன் மண்ணுக்காக

Page 56
76 சோய
தன்னையே அழித்துக்கொள்ளும் பாலஸ்தீனியன் ஆவதற்கா மானத்துக்காக வயிற்றைக் கிழித்து குடல் சிந்தும் கிறுக்குப் பிடித்த சமுராய் ஆவதற்கா வயிறு நொந்தேன், பிள்ளை பெற்றேன்?
தாய்ப்பால் குடித்து காத்திரமான ஆண்பிள்ளையாய் வளர்ந்து மூதாதையர் பேரைக் காத்து முதுமையில் ஆதரவுதரும் வாரிசுகளைத் தருவாய் என்றல்லவா உன்னைப் பெற்றேன்?
பதிலாக
வரலாற்றாசிரியனுக்குத் தீனியாகவும் வசப்படாது ஓடியொளிந்த நீதியைத்தேடவும் கொடுமையின்தலைகளைக் கொய்யவும் சமத்துவமற்ற ஓர் உலகைக் கிழித்துப் போடவும் வீணே என் உதிரத்தைச் சிந்தி என்னை முந்திக் கொண்டு மண்ணுக்குள் நுழையவும் துணிந்து விட்டாயடா, மகனே
ஆங்கில மூலம் : கமலா விஜயரத்ந

தென்னிலங்கைக் கவிதை 77
blblubsts]]blIäF HF.IIsD
கசங்கிய, மடிப்புக் கலைந்த சேலையை கட்டிலின் தலைமாட்டுக்கு மேலே வீசுகிறேன் மார்போடு அணைத்தபடி மடிக்கத் தொடங்குகிறேன் முதலில் இரட்டைப்பட்டாக (உட்பட்டு பல தடவை நழுவிவிடுகிறது) ஒருவாறு நாலு மடிப்பு
கடைசியாக இரண்டு பிறகு ஒரு பகுதியை மற்றதின் மீது வைத்து ஒரு பெரிய சதுரம் ஆக்கி திரும்ப அலுமாரிக்குள் வைக்கிறேன்
ஏதோ நினைத்தவளாய் அதை எடுத்து கொடியில் போடுகிறேன் எப்பொழுது தேவை வருமோ தெரியாது ஒரு வாரத்தில் மூன்று முறை
அதை அலுமாரியில் இருந்து எடுக்கவேண்டி வந்து விட்டது

Page 57
78 சோய
(ஸ்திரிக்கை போட நேரமில்லை) மார்பில் வைத்து மடித்து அணிந்து கொண்டேன் முதலில் ஜகத் பிறகு ஹிரான் இன்று அஜித் அடுத்து யாரோ அறியேன்
(ஐகத், வீட்டிலேயே கொல்லப்பட்டான் இரவுச் சாப்பாட்டுக்கு அமரும் முன் ஹிரான் வேலைக்குப் போகும் பொழுது அஜித் அணைக்கட்டுக் கட்டிக் கொண்டிருக்கையில் அவர்கள் எல்லோரும் முப்பது வயதுகூட ஆகாத இளைஞர்கள் எதிர்காலம் இருந்தது அவர்களுக்கு
நான் சிறுமியாய் இருந்த போது சாவுக்கு எவ்வாறு நடுங்கினேன்
என்று நினைவிருக்கிறது
ஒப்பாரி காதில் விழாதவாறு கைவிரல்களால் காதுகளை அடைத்துக் கொள்வேன் ஆராவது இறந்தால் அம்மா எங்களுக்குச் சொல்வதில்லை
அம்மாவும் அப்பாவும் வெள்ளை உடுத்து வெளியே போவார்கள் வாடிய முகத்தோடு வீடு திரும்புவார்கள் தலையில் பாதி எலுமிச்சம்பழம் தேய்க்காமல்

தென்னிலங்கைக் கவிதை 79 அம்மா வீட்டுக்குள்நுழைவதில்லை அப்பா கிணற்றடிக்குப் போய் முழுகுவார் ஆம், சாவு தீட்டு, அமங்கலம்
ஆனால், இப்பொழுதோ நான் ஒரே சேலையை வாரத்தில் மூன்றுமுறை அணிந்து கொண்டு தம் வாழ்வை மறுத்த
தம்மை ஏமாற்றிய
வயதானவர்களை நெடுநாள் வாழ்பவர்களை குற்றஞ்சாட்டும் அவ்விளம் முகங்களை வைத்தகண் வாங்காது பார்க்கிறேன்
சேலைத்தலைப்பால் கண்களை ஒற்றுகிறேன் நா வறள்கிறது, மூச்சடைக்கிறது அத்தாயின் பார்வையை சந்திக்காது தவிர்க்கிறேன் எதிர்பார்த்த சொற்களைச் சொல்லுகிறேன் கைகளைக் கூப்பித் தந்தையை வணங்குகிறேன் சாவிட்டிலிருந்து திரும்பி வருகிறேன்
இல்லை, இல்லை அலுமாரித் தட்டில் சேலையை வைக்கமாட்டேன் அதைக் கொடியில் தான் போடுவேன் எப்போ தேவைப்படுமென்று எனக்கே தெரியாது
ஆங்கில மூலம் : கமலா விஜயரத்ந

Page 58
80 சோய
நல்லூர் நினைவுகள் - 1984
“அமளியாய்ப் போர்புரிகின்ற வீரருடைய பாத அணிகளும் இரத்தம் தோய்ந்த அங்கிகளும் அக்கினிக்கு இரையாகி எரிக்கப்படும்”.
- 6jamun X-5
இரத்த உறவுகளின் நினைவு துடக்குக் கழிவு, சாந்தி, பிராயச்சித்தம் என சடங்குகள் என் மனசை ஆக்கிரமித்துள்ளன மயில்தோகை வண்ணப் பட்டுடுத்த பெண்களின் கூந்தலை விட்டிழிந்த மாலைகள் கடவுளர்க்குச் சாத்திய மாலைகள்
கைவிடப்பட்ட கர்ப்பூரச்சட்டிகள்

தென்னிலங்கைக் கவிதை 81 துளசி, பூக்கள், பழங்கள் கசந்த தீர்த்தத்தின் மண்டியைப் பருக எஞ்சி இருக்கும் முதியோர் அவர்கள் நெற்றிகளில் பிள்ளைகளுடைய எரியும் ஈமங்கள் தந்த புனித நீறு
இப்பொழுது திருவிழாக் காலம் விரதம் தொடங்கி விட்டது சாகும் வரை உண்ணாவிரதம் தேர் ஊருகிறது ஈமங்களை நோக்கி ஒமாக்கினியைச் சுற்றி சடங்குகள், பூசைகள் கனலும் தானியத்தின் மீது கும்பம் அது தாங்கும் கபாலம் மாவிலை கருகிப் பறக்கும் சாம்பல் நல்லூர் வீதியெங்கும் சங்கொலி பக்தர்களை அழைக்கிறது, பலிகோரி யாரும் வரக்காணோம்
துப்பாக்கி வேலிதாண்டி யார்தான் வரமுடியும்?
பித்தளைத் தகழிகளின் எண்ணெயில் ஊறிய திரிகள் உமிழும் ஒளி தீ உண்ட நாட்டின் கோலத்தைக் காட்டவில்லை இப்பொழுது

Page 59
82 சோய
ஒரு புதிய தபசுக்குத் தோண்டிய அகழிகளில் பக்தர் உலாவுகின்றனர் நிணம் எரிந்த தணல் மீது நடக்கும் அவர் பாதங்கள் மரணம் நிச்சய மென்னறிந்தும்
பின்னிடவில்லை
ஓயாத துவக்குகள் கக்கும்
சன்னங்கள் பட்டு அகழியுள் மீளவிழும் உடல்கள் உருவேறிய பக்திப் பாடகள்கள் எங்கே போய் மறைந்தனர்? (56AITIJb LITIQUILIọ.
சல்லரிகளால் தாளமிட்டு காற்றிலே அள்ளுப்பட்டவர் போல் உடம்பு பின்னோக்கி வளைய
நடனமாடிக்கொண்டு நெடுந் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து இந்தக் குருட்டு உலகம் காணாத கடவுளரைக் கண்டு
கூத்தாடும் அப்பக்தர்கள் எங்கே, எங்கே?
எங்கே அந்தப் பாடகர்கள்? கொலை அணியை எதிர்கொண்டார்களா? அல்லது புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டார்களா?
துவக்குச் சூட்டால்

தென்னிலங்கைக் கவிதை 83 ஆடைகள் குருதிதோயக் கிடக்கும் இளைஞர் உடல்களைக் கண்டார்களா?
எங்கே பாடகர்கள்?
குருதிச் சுவடுகளைப் பார்த்து இன்னும் கழுவாய் தேடியபடி பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் உரிமை கோரப்படாத பிணங்களைத் தாண்டி தெருக்களில், ஒழுங்கைகளில், கடற்கரையில், வயல்களில், சந்தைகளில் - நாடெங்கும் நடந்துள்ள பேரழிவுக்கூடாக அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்! சன்னங்கள் சீறிப்பாய ஒவ்வொரு பக்தனும் விழ, விழுந்தவன் காட்டுக்குக் காவிச் செல்லப்பட குருதி தோய்ந்த தசைக்குவியலாய் மார்பு பிளந்த பச்சைப் புண்களோடு அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் அபயம் கோருபவர்களை ஆண்டவன் தள்ளிவிடுவதில்லை சந்திரன் ஒளியால் ஈர்க்கப்பட்டு ஆவேசமாகப் பொங்கும் கடலலைகள் மணற் கரைக்கு வருவது போல்
புதிய அவதாரம் எடுத்து

Page 60
84 சோய
பலியிடும் சடங்கை நிறைவேற்ற அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்! அணிவகுத்துச் செல்லும் படையினருடைய சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்படும் மண்ணின் இதயத்துடிப்புக் கேட்கத்தக்கதாக கீழே விழுந்து கும்பிடுகிறார்கள்! மகா ஈஸ்வரன் சந்தியில் உருவேறியவர்கள் மீள விழிக்காதது போல் இவர்கள் தம்முயிரைக் கொடுக்கிறார்கள்
வேறும் பலர் வருகிறார்கள்
தமது பூந்தேர்களை தம் உடலில் கட்டிய வடங்களால் இழுத்தபடி, வெடிக்கும் இதயத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட நாளத்திலிருந்தும் ஓயாது பொங்கும் குருதியால் எற்றுண்டு ஒவ்வொருவராக விழ விழ
அவர்கள் வருகிறார்கள்!
இப்பொழுது அவர்கள் ஆயுதம் ஏந்தி வருகிறார்கள் மரண விழாவுக்கு
முருகனின் வேல் துப்பாக்கிகளாக கைக்குண்டுகளாக
கடவுளரின் தேர்கள்

தென்னிலங்கைக் கவிதை 85
புதிதாக பிணங்கள் சுமந்தபடி கோயில் வீதி மணலைத்தாண்டி போர்க்களத்தில் எரியும் ஈமங்களை நோக்கி ஓய்வின்றித் தேர்ச்சில்லுகள் சுழல்கின்றன கொதிக்கும் கூளங்கற்களை உரசியபடி தசை கருகிப் புகைக்கும் நெடியை ஏந்திவரும் காற்றில் காய்ந்த எலும்புகள் நொறுங்கும் ஒலி பக்தர்களுக்குக் கடவுளரைத்தான் தெரியும் அலைமோதும் கூட்டத்தின் மீதிருந்த கண்கள் தெய்வங்களை நோக்கி நிமிர்கின்றன குருதிக் கறை படிந்த வானவில் வர்ணப் பட்டுடைகள் கிழிந்த காதுகளில் தொங்கும் குண்டலங்கள் வெட்டுண்ட தொண்டைகள் பிய்ந்த மார்புகள் மயில் தோகை உதிர்க்கும் ஈட்டிகளை ஏவும் ஆறுமுகசாமியின் கண்கள் துளைக்க குருதி பெருக்கெடுத்து ஓடி காற்றுக் கறுக்கிறது பக்தர்கள் கடவுளரை எதிர்நோக்குகிறார்கள் புதிய நேர்த்திக்கடன் வைக்கிறார்கள் மண்டை ஒடுகளை ஒத்த வெண்மொட்டுக்களல்தொடுத்த மணங்கமழும் மாலைகளைக் கழற்றி ஈமத்தீயில் எறிகிறார்கள்

Page 61
86 I சோய
தீக்கொழுந்து சிவந்து மேலெழ பக்தர்கள் ஒவ்வொருவராய் அதிற் பாய்கிறார்கள் துப்பாக்கிச் சூட்டிலும் சாவிலும் புத்துயிர்ப்பைத் தேடுகிறார்களா?
அல்லது
சில்லுகள் கழன்று
தேர் எரிந்து தீய்கிறதா?
வேட்டி வியர்வையில் ஊறி
புழுதி படிய கண்கள் வேறொன்றும் காணாது கோயில் வீதியில் உருண்டு உருண்டு கடவுளைக் கண்டாய் பேராயிரம் சொல்லி ஓயாது அழைத்தாய் உன் இருதயத்தைக் கைகளில் ஏந்தி அவன் காலடியில் வைத்தாய் மீண்டும் உயிர்த்தாய் சுயநினைவு வரப்பெற்று மீண்டும் மரணித்தாய் இம்முறை உன் உடலைச் சூழ்ந்திருந்தது வியர்வையல்ல, செம்பாட்டுப் புழுதியுமல்ல குருதிக் கறை அதை ஒற்ற ஒருவருமில்லை
அது பெருக

தென்னிலங்கைக் கவிதை 87
தாகமுற்ற மண் உன் உயிர்குடித்து விடாய் தீர்ந்தது கசந்த தீர்த்தம் புத்துயிர் தந்தது வேறும் பலர் விரதம் இருந்தனர் நேர்த்தி வைத்தனர், பலிதந்தனர் இப்பொழுது நீ எழவில்லை உன் உடல் நெளியவில்லை உன் இறுதி மூச்சு வலியோடு வர உன் விரதம் முடிகிறது உன் முறுகிய உடலைச் சுற்றி பறை ஒலி, ஒப்பாரி, மரணவிழாவைக் கொண்டாட சமவெளிகள் தாண்டி வேறுபலர் வருகிறார்கள்
கடவுளரைக் கூவுங்கள்
அழையுங்கள், பேர்பரவுங்கள் கருவறை முன்னுள்ள திரையைக் கிழியுங்கள் கதவுகளை உடையுங்கள் மினுங்கும் குத்துவிளக்குகளின் ஒளியை உமிழும் ஓராயிரம் திரிகளை சடங்குகள் செய்யப்படும்
ஒமகுண்டத்துக்குள்
கொட்டுங்கள்

Page 62
88 சோய
பூக்களும் குருதியுமாய்ப் புழுங்கி
அலையெறிந்து
தருப்பை சுற்றிய விரல்கள் தீப்பற்றி என்புவரை எரிய தொடர்ந்து அவிசொரியுங்கள் எனப் பேய்களை அழைக்க வானத்தெழும் குயிலோசை விழாக்காலத்துக்கு வரவுகூற மரணத்தையும் பலியையும் அவாவி இம்முறை விலங்குகளையல்ல
மனிதர்களை
பிடத்துக்கழைக்கும்
போர்க்களத்தின் இடிமுழக்கம் இரத்த வெடில் எழுகிறது
எரியத் தயாராகும் பினக்குவியலின் சாம்பிராணி மணம் ஸ்மசான சாம்பலை நெற்றியில் பூசி பலிச்சடங்கில் உகுத்த குருதியின் அடையாளமாக சிவந்த குங்குமம் தரித்தவர்களாய் மரணத்தை அவாவும் புதிய பக்தர்கள்
இத்தனை காலமாய் பலிகொடுத்தது எதற்காக? நெடுந்தேரிலிருந்து சொரிந்த மலர்கள் கைலாசத்திலிருந்து கொட்டிய பூங்கொத்துக்கள் கடவுளின் தேர்களை இழுத்துப் பொங்கிவரும்

தென்னிலங்கைக் கவிதை 89
மனிதக் கடலில் அகப்பட்டு நசிந்த பூவிதழ்கள் காலங்காலமாக புனிதத் தீ வளர்த்தும் படைப்புக்கு மூலமாகிய சூரியனை வழிபட்டும் என்ன கண்டீர்கள்?
இப்பொழுது தீச்சுவாலை புத்துயிர்ப்பைத் தரவில்லை பழிவாங்குகிறது கொலையுண்டவர்களின் தசை கருகுகையில் ஆத்மாமட்டும் விடுதலை மூச்சு விடுகிறது இத்தனை நாளாய் என்ன பலிகொடுத்தீர்கள்? எந்தப் பலிபீடத்தின் முன் விழுந்து கும்பிட்டீர்கள்? கும்பம் வைக்கப்பட்ட தானியத்தில் தீப்பற்ற ஒரு காலத்தில்
ஆயிரந் தெங்கின் இளநீரில் முழுகிய உடல்கள் இப்பொழுது அவயவங்களிலிருந்து குருதிவடிய முடங்கிச் சரியும் ஆயிரந் துவக்குகள் தீர்க்கும் சன்னங்கள் உயிரைப் பொருட்படுத்தாத புதிய பக்தர்களின் உடல்களுள் பாயும் செந்நிறத்தை சூரியக்கதிர் மழுங்கடிக்கும்.
தூரத்துக் கிராமங்களிலிருந்து தம் நேர்கடன்களை நிறைவேற்ற

Page 63
90 I சோய
தேவாரம் பாடிக்கொண்டு பக்தர்கள் வந்தபோது தெய்வங்கள் என்ன கண்டன? வேட்டிகளைக் கைவிட்டு சீருடையணிந்து மார்பிலும் கழுத்திலும் Lygasörös LD55 (CUFTIJITGíslass6O6ITUUT?
ஆம், யாரிந்தப் பல்லாயிரவர், பல முகங்கள் கொண்ட யாரென்றறியா ஆயிரவர்?
இப்போ
ஒருமுகமும் அழித்தற் கடவுளாம் மகேஸ்வரனின் ஒரு பெயரும் சூடிவந்தோர் படைப்புத் தெய்வமாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும் எங்கே போய்விட்டார்கள்?
ஆர் இந்த ஆயிரவர்? அறியப்படாத
பல்லாயிரம் முகங்கள் ஆனாலும் எண்ணப்படாத ஆயிரம் பிணங்கள் தூரத்துக் கிராமங்களிலிருந்து தம் நேர்கடன்களை நிறைவேற்ற

தென்னிலங்கைக் கவிதை 91 பக்தர்கள் வந்த போது தெய்வங்கள் கண்டது யாரை? புரட்சியாளர்கள் முகாம்களில் இருந்துவரும் GLITUTGss606ITUIT? போர்க்களத்தில் விழும்போது அவர்கள்
கடவுள் பெயரை உச்சரித்தார்களா? ஈற்றில் அவர்கள் மெளனத்தை
துப்பாக்கிகள் உடைத்தனவா?
இம்முறை பூவும் துளசியும் கள்ப்பூரமும் பாலும் பழமும் நீரும் கொண்டு பூசை நடக்கவில்லை தூரத்துக் கிராமங்களிலிருந்து வரும் பல்லாயிரம் உடல்களால் ஒரு பூசை நல்லூரே போர்க்களம் உயர்ந்துள்ள கைகள் வானைத் தகர்க்கின்றன
எல்லாக் கைகளிலும் ஆயுதங்கள்
ஆங்கில மூலம் : ஜீன் அரசநாயகம்

Page 64
92 சோய
SHGODLLITTLb
என்னை உனக்குத் தெரியாது ஆனாலும் என்மீது முத்திரை குத்தினாய் உன் முன்னேற்றத்துக்காக
இளமை வனப்போடு

தென்னிலங்கைக் கவிதை 93
நான் மலர்ந்த போது நீ சந்தேகப்பட்டாய் நான் கசப்புணர்வை முண்டி விழுங்கிக் கொண்டேன் நான் சுதந்திரத்துக்காக அழுதபோது நீ என்னை அடித்தாய் வலியால் நான் அலறியபோது என் கூக்குரல் லயத்துக்கு நீ தாளமிட்டாய் நான் கெஞ்சினேன் நீ கேட்கவில்லை நான் எச்சரித்தேன் நீ பரிகசித்தாய் இவ்வாறுதான் வளர்ந்தது - குரோதம்
நான் வாதிட்டால் என்னைப் புரட்சிக்காரன் என்கிறாய் ஆனால் மக்களுக்குப் பொய்யுரைக்கும் நீ? தலைவன்! தூங்கும் மக்களை நான் விழித்தெழச் செய்தால் என்னைச் சந்தர்ப்பவாதி என்கிறாய் நீ மக்களைக் கொல்லும் போது நீ நீதிமானாகிறாய் எப்போதும் உன் முன்னேற்றத்துக்காக கொள்கைக்காக நான் போராடினால் வடக்கிலும் தெற்கிலும் இருந்து கூக்குரலிடுகிறாய்

Page 65
94 சோய
நான் தீவிரவாதி என்று நீ ஆயுதம் தூக்கினால்
நீ தேசபக்தன் தற்பாதுகாப்புக்காக நான் ஆயுதம் தரித்தால் நான் பயங்கரவாதி எப்போதும் உன் முன்னேற்றத்துக்காக சிறுபான்மையினருக்குக் குரல் கொடுத்தால் நான் ஈழவாதி
பிரிவினையை எதிர்த்தால்
நான் இனவாதி எப்போதும் உன் முன்னேற்றத்துக்காக வெறிச்சோடிய தெருமுனையில் நாய்க்கும் காகத்துக்கும் இரையாக அரைகுறையாக எரிந்த என் உடல் ஒரு ரயருள் கிடக்கும் போது நான் பயங்கரவாதி
என்னை உனக்குத் தெரியாது என் அடையாளத்தை நீ அறிய முயன்றதுமில்லை ஆயின் உன் அடையாளம் என்னவோ?
ஆங்கில மூலம் : நிமல் சோமரத்ந

தென்னிலங்கைக் கவிதை 95
this bloor
அவன்
கூட்டத்துக்குள் ஒரு குண்டை வீசிவிட்டு குறிப்பெழுதுபவன் கண்ணுக்கெட்டாத் தூரத்திலிருந்தபடி முக்காலிமேல், கறுப்புத் துப்பாக்கியை நிறுத்தி ஆத்மாவரை
ஊடுருவிப் பார்ப்பவன்

Page 66
96 சோய
மேடையில் நிற்கும் பேச்சாளரைக் குறிவைத்து தெளிவாகக் கண்மட்டம் பார்ப்பவன் எதிரியைச் சுமந்து செல்லும் காரின் பின்னிருக்கையையும் கடிகார முள்ளைப் பார்த்தபடி
காத்திருப்பவன்
பதுங்கியிருந்து தாக்குவதற்கு எப்போதும் ஆயத்தம் செய்பவன்
கவிஞன்
ஈட்டிகள் நட்ட குழியை மண்ணாலும் புல்லாலும் களையாலும் மூடிவிட்டு தொலைவைப் பார்த்துக் கொண்டிருப்பவன்
தன் நெஞ்சின் விநாடிமுள் சுற்றுவதை தாங்கமுடியாது
நகரத்தில்
வெடிக்கக் காத்திருக்கும் குண்டுதான் கவிஞன்
ஆங்கில மூலம் : லக்தாஸ விக்கிரமசிங்ஹ

தென்னிலங்கைக் கவிதை 97
ബിളഞ്ഞി IDബ്
கனவு காண்பவன் ஒருவனை
கல்யாணம் செய்து வைத்தார்கள்.
அவன் கனவுகளோ
முடிவதாய் இல்லை
'கனவுகளுள்ளே
நாம் முடிந்துவிடலாம், அன்பே
முணுமுணுக்கிறான் அவன்.
சிங்கள மூலம்; ஆரியவன்ஸ றனவீற ஆங்கில மூலம்: ஈ எம். ஜீ எதிரிசிங்ஹ

Page 67
98 சோய
கவிதையும் விமர்சகனும்
உன் பிடியில் நசுங்கி விடுவோம் என்ற பயம் அவளுக்கு
காலையில் முகிழ்த்த குருத்துப் போல மென்மையானவள், அவள்
கிராமப் புறத்திலிருந்து வந்த மணமகள் போல நாணுகிறாள், அவள்
என்றாலும் உன் ஸ்பரிசத்துக்காக உள்ளூா ஏங்குகிறாள், அவள்
ஆனாலும் அஞ்சுகிறாள் அவள், உன் பிடியில் நசுங்கி விடுவோமோ என்று
சிங்கள மூலம் : ஆரியவன்ஸ றனவீர ஆங்கில வடிவம் : ஈ. எம். ஜி.எதிரிசிங்ஹ

தென்னிலங்கைக் கவிதை 99
கோதமி விஹாரை ஓவியங்கள்
லும்பினி நந்தவனத்தில் தூரிகையில் பிறந்த சித்தார்த்தன் பொன்வண்ண மங்கையரை வெறுத்து உலக இன்பங்களைத் துறக்கிறான் குதிரையேறிப் போகிறான் எல்லா மயக்குகளையும் அறுத்து
ஞானம் பெறுகிறான்.

Page 68
100 சோய
எல்லாம் நீண்ட சுவர்களில் பதியப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள
இடைகழிகளில்
சிறுவர்
கவலையற்று, கடலை கொறிக்கின்றனர்.
உள்ளே
சிறுவர்கள்
ஒளித்துப்பிடித்து
விளையாடுகிறார்கள்
பக்தர்கள் நெற்றி நிலத்தில் பட
வணங்குகிறார்கள்
தம் பின்புறங்களை
சுவரோவியங்கள் பக்கம் வைத்து
மேலே
வானத்தில்
வேதனை தாளாத சந்திரன்
முகிலுக்குள் முகம் புதைக்கிறான்.
சிங்கள மூலம்: ஆரியவன்ஸ் றனவிர ஆங்கில மூலம்: ஈ எம். ஜி எதிரிசிங்ஹ

தென்னிலங்கைக் கவிதை 101
மேலே வானம் கீழே பூமி
மிகுந்த அலுப்புடன்
நீண்டதொரு கொட்டாவி விட்ட
வானம்
பூமிக்கு வாழ்த்துக் கூறியது.
“காலை வந்தனம், தோழா
ஒரு மாற்றத்துக்காக
நாம் இருவரும்
சில நாள்கள்
எங்கள் அன்றாடக் கடமைகளை
ஒத்து மாறிக்கொள்வோமா?
சிங்கள மூலம்: ஆரியவன்ஸ் றனவீர ஆங்கில மூலம்: ஈ எம். ஜி எதிரிசிங்ஹ

Page 69
102 சோய
கால்பதிக்காப் பாதை
முறுவலிக்காத முகங்கள் மலிந்த
இந்தக் காட்டில்
புன்னகைத்தபடி பிரிந்து போகும் ஒருவரை நோக்கி
ஒரு பாதை வெட்ட முயல்கிறேன்
புரியாத மொழிகளின் சங்கம இரைச்சலில்
ஒரு பரிச்சயமான ஒலிக்குப் பொருள்காண முயல்கிறேன்
பல மணங்களின் கலவைக்குள்
பழக்கமான மணம் ஒன்றை முகர முயல்கிறேன்
பல்லாயிரம் பாதங்களின் ஓசைகளை
நான் உற்றுக் கேட்கிறேன்
அவை காலடிகள் - அறிவேன்
அவை என்னைக் கடந்து போகின்றன
ஆங்கில மூலம் : கமலா விஜயரத்ந

தென்னிலங்கைக் கவிதை 103
உருவுக்கு மென்மைக்கு பறக்கும் லாகவத்துக்கு உதாரணம் கேட்டீர்களானால் சொல்லுவேன் :- “பொறுமை, தாள், நம்பிக்கை, நூல் கொண்டு புனைந்த என் பட்டம்” என்று
முதலில் குச்சிகளாலான ஒடியக்கூடிய சட்டம் குறுக்கும் மறுக்குமாக சமநிலையைச் செம்மையாகப் பேணி முறட்டு வெள்ளை நூலால் கட்டுக்கள்
சட்டங்கள் திடசித்தம் போன்ற வில் பூட்டு அதுதான் அடையாளம் மென்மையான, லேசான தாள் உள்ளங்கையால் தடவி ஏற்ற அளவில் கத்தரித்தல் இவ் வடிவங்களும் வண்ணங்களும் உன்னுடையவை பட்டத்தைப் போல கெட்டியான பசை

Page 70
104 I சோய
உன் தேவையை அறிந்து இறுகப் பற்றிக் கொள்ளும் பட்டம் கட்டுவது என்றால் சும்மாவா? குஞ்சங்களோடு சேர்ந்து இரு பக்கமும் ஒத்திருக்க வேண்டும் ஆம், பட்டம் பறக்க ஆயத்தம்
அதைக் கொண்டு போகும் பொழுதே அதன் ஓரங்கள் ரகசியம் பேசும் சுற்றியுள்ள வெளிகளை உணர்ந்து கொள்ளும் பந்தில் சுற்றிய நூல் பலமானது நாண் போல ஒலிக்கும், அறாது நல்ல நூல் அது
காற்று வரட்டும் காத்திரு
பிறகு
ஒடு, திரும்பு பட்டத்தை விடு, ஆனால் நூலைப் பிடித்துக் கொள் காற்றில் ஏறி, மேலே மேலே விற்கோலங்கள் போடட்டும்
விழக்கூடாது
நூல் அதைப் பிடித்திருக்கும்வரை பட்டம் காற்றில் உயிர்ப்புடன் இழுக்கும் அது உன்னி இழுக்கும்
விடுதலைக்காக அல்ல

தென்னிலங்கைக் கவிதை 105
உயர எழுவதற்காக உன் விரல் நுனிகளுக்குத் தெரியும் பட்டம் உன்னுடையதென்று அதன் கனவு உன் கனவு என்று
அதன் பாடலை நீ தெரிந்தெடுக்கிறாய் பறவைகளின் கீதத்தினும் இனியது அது பட்டத்துக்கு தற்பெருமையில்லை வஞ்சகமில்லை தகாதனவற்றுக்கு அது ஆசைப்படுவதில்லை பட்டத்தை நேசிப்பதுபோல் கூண்டுப் பறவையை நீ நேசிக்க மாட்டாய் உனக்கு மேலே நீலவானில் வெண்முகிலிடையில் வளருகையில்
வாழுகையில்
சுவாசிக்கையில் பட்டம் பணிவைக் கற்றுக் கொள்கிறது!
உருவுக்கு மென்மைக்கு பறக்கும் லாகவத்துக்கு உதாரணம் கேட்டீர்களானால் சொல்லுவேன்: “பொறுமை, தாள், நம்பிக்கை, நூல் கொண்டு புனைந்த என்பட்டம்” என்று.
ஆங்கில மூலம் : புத்தக தசநாயக்க

Page 71
106 சோய
ஒலமிடும் வெளவால்கள்
பகலில்
உலகைக் காண முடியாது இரவில் உலகைத் தரிசித்து இடையிடை ஓலமிடுகின்றன
வெளவால்கள்
விடாப்பிடியாக
சிங்கள மூலம் ஆரியவன்ஸ றனவீர ஆங்கில வடிவம் ஈ. எம். ஜி. எதிரிசிங்ஹ

ஏற்றுக்கொள்
நீ விரும்பிவாறே ஏற்றுக்கொள், என்னை முற்று முழுதாக உன் பக்கத்தில் கிடப்பேன் பழகிய நாய்க்குட்டி போல உன் காலடியில் சுருண்டு கிடப்பேன்
என்றாலும் இடையிடையே வெளியே போக
குரலெடுத்துக் குரைக்க
என்னுள் அடங்கிக் கிடப்பதை சந்திரனை நோக்கி கொட்டித் தீர்க்க
GSGSGITUITeS
சிங்கள மூலம் ஆங்கில வடிவம்
தென்னிலங்கைக் கவிதை 107
; ஆரியவன்ஸ றனவீர : ஈ. எம். ஜி. எதிரிசிங்ஹ

Page 72
108 || @gmu
பட்டினத்தில் பைத்தியம்
இரவில் நீங்கள் கண்டு சொல்லாது ஒளிக்கும் கெட்ட கனவுகளை பட்டப்பகலில்
பகிரங்கமாகச் சொல்லும்
வீரன் நான்
நகரத்தில் சாப்பிட்டு வீசிய மிச்சங்களை

தென்னிலங்கைக் கவிதை 109
தேடியுண்ணும் நாய்களும் காகங்களும் என் சகாக்கள்
வானில் வரையப்பட்டுள்ள வானவில்லைப்பார்த்து பளிடும் மின்னற் கீற்றுக்களை எண்ணும் கவிஞன் நான்!
கனத்த காலடிகளுடனும் மிகக் கனத்த தலைகளுடனும் நீங்கள் நடக்கையில் வெறுங்கைகளை வீசிக்கொண்டு உங்களிடையே தாவும்
ஆண்டி நான்
நீங்கள் எல்லோரும் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் சுருண்டு கிடக்கையில் கண்ணுறங்காது நகரத்தை வலம் வரும் பைத்தியம் நான்!
சிங்கள மூலம் ஆரியவன்ஸ றனவீர ஆங்கில வடிவம் : ஈ. எம். ஜி. எதிரிசிங்ஹ

Page 73
110 சோய
ஆண் றணசிங்ஹ - ஒர் அறிமுகம்
என் அம்மாவுக்கு: 1938 நவம்பர் 9 ஆனுடைய வீட்டை ஹிட்லரின் ரகசிய பொலிஸ் தாக்கியது. தமது எதிர்கலம் சோதனைமிக்கதாவதை உணர்ந்த பெற்றோர், ஆனை வெளியே அனுப்ப முடிவு செய்தனர். தாயும் மகளும் முத்தமிட்டுப் பிரியாவிடை பெற்றனர். தந்தை எல்லை வரை சென்றார். அது நிரந்தர பிரிவாயிற்று.
பெற்றோர் 1941 இல் போலந்திலுள்ள லொட்ஸ் முகாமுக்கும், 1944இல் ஒஷ்விற்ஜுக்கும் மாற்றப்பட்டனர். இருவரும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் ஆனுடைய கற்பனையில் தன் தாயின் இறுதி பொழுது.
மன்னிக்கவேண்டும்; ஒஷிவிற்ஜ், ட்றெப்லின்கா இரண்டும் ஹிட்லரின் இனக் கொலை முகாம்களில், பிரசித்தி பெற்றவை. லட்சக்கணக்கில் மனிதர்களைக் கொல்வதைஅவர்கள் உடைமைகளை ஒழுங்காகச் சேகரிப்பதை, அவர்கள் உடல்களை பாரிய உலோக உலை முகங்களில் எரிப்பதை ஒரு கலையாகச் செய்த கொடுமை வரும் இரு கவிதைகளில் சித்தரிக்கப்படுகிறது.
அப்பா தன் தந்தையின் நினைவாக ஆனிடம் மிஞ்சியிருப்பது ஒரு பழைய நிழற்படம். அதுவும் சிறுமி ஆன் எடுத்த நிழற்படம். தந்தைக்கும் தனக்கும் இடையில் தன் நிழல் விழுந்தது பற்றியது இக்கவிதை.
ஜூலை 83; 1983 ஜூலையில் இடம் பெற்ற இனக்கலவரங்களைக் காணநேர்ந்த ஆனுக்கு கொலை, கொள்ளை, தீ வைப்பு எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட விதத்தைப் பார்க்க ஹிட்லருடைய ஜேர்மனியின் ஞாபகம், உள்ளுர ஒரு நடுக்கம்: அவமானம்.

தென்னிலங்கைக் கவிதை 111
எண் அம்மாவுக்கு
எந்தக் கண்காணாத் தூரத்தில் உன்னைப் புதைத்தார்களோ எந்த சுள்ளென்ற வாடைக்காற்று கோதுமை ஒட்டின் மீது உன் புதைகுழி மீதுள்ள காய்ந்த கோதுமை ஒட்டின் மீது வீசுகிறதோ அறியேன், அம்மா ஈயமாய்க் கவிந்த வானத்தின் கீழே மார்கழி மாதத்துக் காலைப் பொழுதில் பனியால் நனைந்து, நடுங்கியபடி, அம்மணமாய்,
அன்னாய்
நீ நடந்த அவ்விறுதிப் பொழுதில் என்ன நினைத்தாயோ!

Page 74
112 சோய
அம்மா, என்னை நினைத்தாயோ!
ஓ, உன்னை
எனக்கு நினைவிருக்கு தென்னுயிரே மெழுகுதிரிக்கு மேலே மெலிந்த கைகளை விரித்தபடி, கண்கள் ஒளி வீச, என்னை ஆசீர்வதித்தாய் ஆண்டவர்க்கு மங்களங்கள்
அங்கே தான், அம்மா வேதனை - வெப்பியாரம் உன் மரணம் தியாகமாய் இல்லாது விழலாய் - வியர்த்தமாய் எதன்முடிவாகவுமில்லாது, எதன் தொடக்கமாகவுமில்லாது, விழலாய் - வியர்த்தமாய்
இரத்தக்கண்ணி வடிக்கின்றேன் தாயே! ஆம், உன்
இரத்தக் கண்ணி வடிக்கின்றேன் அம்மா
ஆங்கில மூலம் : ஆன் றணசிங்ஹ

தென்னிலங்கைக் கவிதை 113
மண்ணிக்க வேண்டும்
மன்னிக்க வேண்டும் உன் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை அநீதியும், வெறுப்பும் போரும் கோலோச்ச,
சமத்துவம் வெறும் கோஷமாகிவிட்டது
ஹிரோஷிமாவின்
காளான் முகிலும் “ஒஷ்விற்ஜ்” புகைபோக்கிகளில் இருந்து மிதந்து வரும்

Page 75
114 I சோய
புகை மண்டலமும்,
என் பார்வையை
மறைக்கின்றன
இறந்தகாலம் என ஒன்றில்லை வெடித்த கண்ணாடிகளில் தெரியும் பால் வடியும் முகங்கள் கண்ணீரால் கலங்கலான உருவங்கள் எதிர்காலம்?
வண்டிகள் ஒவ்வொன்றாக புறப்படுகையில் ரயில் நிலையத்தில் நான் நிரந்தரமாகவே கையசைத்தபடி
பாதுகாப்பில்லை, புகலிடமில்லை
அறிவேன்,
பொன்
விலை ஏறும், இறங்கும், வைரமும் வீடும் அப்படியே

நூல்கள் எரிக்கப்படலாம்
உறவுகள் பிரிக்கப்படலாம் சித்திரவதை,
சூறை
தண்டம்
யாவும் கடவுள் பேரால் புனிதமாகி விட்டன 'இஸம்கள் உலகைப் பங்கு போடுகின்றன அவர்களுடைய சின்னங்களின்
கூரிய முட்களிலிருந்து இரத்தம் சொட்டுகிறது ஆராய்ச்சிக்கு அப்பால் சமாதி ஒன்றே சாசுவதமாகிறது முன்பு கேளாத,
அண்டங்காக்கை
கரையும் ஒலி அதிகமாய்,
9U5jLDITij
கதவு மூடும் சத்தம்.
தென்னிலங்கைக் கவிதை 15
ஆங்கில மூலம் : ஆன் றணசிங்ஹ

Page 76
116 I சோய
யாருக்கு நினைவிருக்கிறது?
உழாத நிலத்தை வருடும் காற்றை, புல்லை வளரத் தூண்டும் வெயிலை, யாருக்கு நினைவிருக்கிறது?
ஒவ்வொரு வசந்தத்திலும் குளிர்ந்த கண்ணிர் பொசியும் ଊରାର୍ଜୀuଘfiର0)W, மறந்துபோன எட்டுலட்சம் பேரின் மரணங்களை, யாருக்கு நினைவிருக்கிறது?
ஏற்பாடுகள் செய்வதில் வல்லவர்கள் ஜேர்மானியர்கள்
இறக்கம்,
LypüUTCB, இடையில் நாற்பத்தைந்து நிமிடம் மட்டுமே தங்கப்பல் மீட்கப்பட,
மயிர் களையப்பட, உடைகள் தரம்பிரிக்கப்பட,

தென்னிலங்கைக் கவிதை 117
நீண்ட அகழிகளில் உடல்கள் புதைக்கப்பட, நாற்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே! அகழிகளைத் தோண்டும் நீண்ட உருக்குக் கரங்களை, ஆழப்போய் நிணம் சோரும் பிணங்களை வாரிவரும்
முள் இடுக்கிகள், உருக்குலைந்த உடல்களை அங்காந்த உருக்கு வாய்களுள் போட
HO)6), வான் நோக்கி எழுந்து, தயங்கி,
நடுங்கிய பின் தமது சுமையை
ഫ്ലേ ബിub ஜூவாலையுள் வீச - யாருக்கு நினைவிருக்கிறது?
மிரண்ட கண்களுடைய பையன்கள், குழந்தையைத் தாலாட்டும் தாய், பிரார்த்தனை செய்வதற்கு நடுங்கும் கைகளால் தன் மேலங்கியைத் தேடும் நிர்வாணமான கிழவன், மெல்லிடையும்

Page 77
118 சோய
நிமிர்ந்த முலைகளுமாய் காதலுக்குத் தயாரான அவ்வழகிய கன்னி - யாருக்கு நினைவிருக்கிறது?
அகழிகளை, சாம்பல் கொண்டு தூருங்கள் உழவு சால்களை மட்டந்தட்டி
புல்லை,
மரங்களை,
பூக்களை
நடுங்கள்
வெண்மையான நடைபாதைகள் அமையுங்கள் வாங்குகள் போடுங்கள் பொதுப் பூங்கா
பூக்கள் மலரும், நினைவுகள் இரா சுவடே இராது சாவு மட்டுமல்ல, சர்வ சங்காரம். சூன்யம்.
ஈற்றில்
பாதாளம்
ஆங்கில மூலம் : ஆன் றணசிங்ஹ

BILIT
அப்பா,
கனத்த கறுப்புக் 'கோற்’அணிந்தபடி,
மரத்தில் சாய்ந்தபடி, நீங்கள். பனிக்கட்டி மிதக்கும் குளம். குளிரில் சிக்கி விறைத்துச் செத்து மிதக்கும் சிறிய வாத்துக்கள் இரண்டு
தென்னிலங்கைக் கவிதை 119

Page 78
120 சோய
இந்தப் படத்தை
எடுக்கும் போது சூரியன் என் பின்னே. நான் அறிந்திருக்க நியாயமில்லை,
அது
ფ)(სხ கடைசிச்சோக ஆவணம் என்று!
இந்தப் படத்தை எடுக்கும் போது பின்னால் இருந்த குளிர்ந்த சூரியன் என் நிழலை
நீளப் பாய்ச்சுகிறது நிழலோ நம் இருவருக்கும் இடையில் மெல்லிய,
களங்கமற்ற
வெண்பனியில், அப்பா புன்னகைப்பதாயில்லை சூரிய ஒளியில்
கண் கூசுகிறதா
அல்லது - இப்போது நினைத்துப் பார்க்கிறேன் - உங்கள் உள்ளுணர்வு சொல்லிற்றோ
ஆங்கில மூலம் : ஆன் றணசிங்ஹ

sgi)GD B3
படுகொலைகளைப் பார்த்துக் களித்த நாஜிகள் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு அத்தனை கெஞ்சும் கண்களும் அவர்கள் நாட்களுடும்
தென்னிலங்கைக் கவிதை 121

Page 79
122 சோய
வருடங்களுடும் மின்னலாய்க் குத்துவதில்லையா?
சாகுமுன்
ஆதரவற்று அழுது குழறும் அநாதைக் குழந்தைகளின் குரல்கள் அவர்கள் இரவுகளைக் கொள்ளையிடுவதில்லையா?
வேதனையும் ஆற்றாமையும் குருதியும் வலியும் JUUNISIJpb அவர்கள் மூளைகளில் தடங்கள் பதிக்க, தூக்கம் இழந்து “நான் பாவி, பாவி"
என அவர்கள்
அலறுவதில்லையா?
நாற்பது வருடங்களின் பின் மீண்டும் தீச்சுவாலை அந்தி வானம் வன்முறையால் இரத்தமயமாகிறது

திருமண உறவால் மட்டும்
தொடர்புடையவள் ஆயினும்,
நான,
குற்றவாளியாயும் பாதிக்கப்பட்டவளாயும் இருப்பதை உணர்கிறேன்
(கருகிய மரமும் சலாகைகளும்
ஓடும் காற்றில் பறக்கின்றன, ஏதும் மிஞ்சவில்லை)
புகைச்சுருளைக் கண்டு முகம் சுழிக்கிறேன் தீயை நினைத்துக் குறுகிப் போகிறேன் ஆனால்,
ઈીo($jII எரியும் நெருப்பில் குளிர் காய்கிறார்கள்
தென்னிலங்கைக் கவிதை 123
ஆங்கில மூலம் : ஆன் றணசிங்ஹ

Page 80
24 GFITL
୩୪୪
துருப்பிடித்த தாழ்ப்பாள்களுடு என் சுதந்திரத்தை, அஸ்தமிக்கும் சூரியனை, அளக்கும் முள்ளுக்கம்பிகள் என் தனிமையை ஏந்த முடியாது சிறிதாகிவிட்ட,

தீப்பிடித்த, பரந்த வானம்!
இன்றைய சோகம் இரத்தத்தின், வலியின், பயங்கரத்தின் ஆற்றாமையாய் முடிச்சிடுகிறது
ଗଯାଁ வேதனையைப் பகிர்ந்து கொள்ள யாருமில்லாதவாறு
கன்னங்கரிய
விதானமாக
இருள் கவிகிறது.
இவ்வந்தகாரத்தில், எனக்காக,
urit, விளக்கேற்றுவார்கள்!
தென்னிலங்கைக் கவிதை 125
ஆங்கில மூலம் : ஆன் றணசிங்ஹ

Page 81
126 சோய
என்னதான் பயிருந்கம்?
நான் போன பிறகு என்ன தான் மிஞ்சும்? புல்லின் வெள்ளி முடிகளில் வெண்பனி தேயும் சந்திரனின் மெல்லிய கீற்று ஊற்று நீர், இலையுதிர் காலத்து மயக்கம் கொன்வென்வியூலஸ் மலர்கள் உதிர்ந்த கம்பளம்

தென்னிலங்கைக் கவிதை 127
அந்தி வானில் மிதக்கும் பறவைகள் அமைதி கொலுவிருக்கும் இடங்கள் மரங்களின் மீது மழை பொழியும் ஒலி தொலைவில் கடலின் விளிம்பில் குவியும் பொங்கும் முகிற்குவியல்
கோடை காலத்து செம்மஞ்சள் ஒளியைப் பிரதிபலிக்கும் மெழுகுவர்த்தி போன்ற பூக்கள் ஒளியைப் பொதிந்திருக்கும் பணி இரவு வேளை நெருப்பின் ஒளி வீசும் ஊசிமுனை போன்ற உடுக்கள் நான் போன பிறகு என்னதான் மிஞ்சும்? கைவிடப்பட்ட வீடு
திறந்த கதவு உடைந்து விழும் சுவரில் விழும் கறுப்பு நிழல்கள் வெறிச்சோடிய மண்டபத்தின் ஊடே வீசிய காற்றில் அடிபட்டு நிலத்தில் கிடக்கும் முற்றுப்பெறாத கவிதை ஒன்று.
ஆங்கில மூலம் : ஆன் றணசிங்ஹ

Page 82
128 I சோய
ACKNOWLEDGMENTS
For permission to publish Tamil versions of the poems in this anthology grateful acknowledgementis made to the following:
heirs of Mahagam Sekera for "Prabuddha' and "The moon and New York City; Ariyawansa Ranaweera for "Rahula is born', 'Take over me', 'The poem and the Critic', 'The Lunatic in Town', 'Bats Bewail', "The Poet's wife' and Today's Lion' from (C) Echoing Ethos Kamala Wijeratne for "Memory", "Unbeaten Track', 'Farewell', 'A mother's lament, "The white saree', U.Karunatilake for 'Corbett's Gap', "Father', 'Memorial', from C. Kandy Revisited, and "Drunken sailor "Nineteen fifty six' from (C) Kundasale Love Poems, heirs of Alfreda de silva for "The first - born', Geeta Premaratne for "SOS', Parvathi Arasanayagam for "History's Dimensions' and "Realization', from Navasilu 17, Manel Abeyratne for "Tribute' from CDN; Monica Ruwanpatirana for "Podiduwa' "Streetwalker"; Navasilu 3 Parakrama Kodituwakku for 'Kusumawathi', 'Court Inquiry of a Revolutionary' From Navasilu 2x4; the heirs of Lakdasa Wikkramasinha for "The Death of Ashanti from Navasilu 2 and "The poet' from CSLPE Cecil Rajendra for "When the tourists came'; Regi Siriwardena for 'Colonial Cameo'; heirs of Richard de Zoysa for "This other Eden'; Ashley Halpe for "April 1971'-all from CSLPE; Basil Fernando for Resurrection' from (C) Channels 3-1, 'Just Society' Yet another incident in July 1983" from CSLPE Maureen Seneviratne for "Sri Lanka, July 83' Derrick de Silva for "Legend" Udaya Prasantha Meddegama for 'Ancestors'; Jean Arasanayagam for "Remembering Nallur'; Nimal Somaratne for "Identification all from CSLPE; Buddhika Dassanayake for "Possession' from Ch 3-1; Anne Ranasinghe for "To my mother', 'Well I'm Sorry', 'Who remembers Treblinka?", "You father', 'July '83", "Prisoner, (C) From Against Eternity ce: Darkness and "What will remain?" from (C) Ch 3-1

தென்னிலங்கைக் கவிதை 29
கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள்
அரசநாயகம், ஜீன்: பேராதனை ஆசிரிய கலாசாலையில் ஆங்கில விரிவுரையாளர். ஆங்கிலத்தில் எழுதும் கவிஞர்களுள் முக்கியமானவர். இலங்கைக் கலைக்கழகத்தின் விருதுகள் பெற்றவர். நவாலியைப் பூர்வீகமாகக் கொண்ட அரச நாயகம் என்ற தமிழரை மணந்தவர்.
அரசநாயகம், பார்வதி
அரசநாயகம் தம்பதியின் மகள். கவிதை புனைகதை இரண்டும் வெளியிட்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதானாசிரியர்.
ஆன் றணசிங்ஹ
ஜேர்மனியில் பிறந்த யூதப்பெண்ணான ஆன் 13 வயதில் ஹிட்லரின் இன ஒழிப்புக்குத் தப்பி இங்கிலாந்து போய்ச்சேர்ந்தார். அங்கு படித்து தாதியாகப் பணிபுரிந்து கொண்டிருக்கையில் சந்தித்த சிங்களப்பேராசிரியர் றணசிங்ஹவை மணந்து இலங்கையில் வாழ்கின்றார். பல சர்வதேசப் போட்டிகளில் பரிசுபெற்றுள்ள ஆன் ஏழு நூல்கள் வெளியிட்டுள்ளார்
ஒபயசேகர, ரஞ்ஜினி
சிங்கள ஆக்க இலக்கியமும் புதிய விமர்சகர்களும் என்ற grossil gélissoul. Journal of South Asian Literature 6Tsip அமெரிக்க சஞ்சிகைக்கு ஆசிரியராய் இருந்தவர். மொழிபெயர்ப்பாளர். சன் டியா கோவில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் இலக்கியம் கற்பித்தவர்.
கருணாதிலக, உபாநந்த
மூத்த கவிஞர். ஐம்பதுகள் தொடக்கம் எழுதிவருகின்றார். தம் காதல் மனைவி குசுமலஷ்மியே அவர் கவிதை முழுவதும் வியாபித்திருக்கும் பொருள். நாற்பது வருஷ மணவாழ்கை மனைவியின் மரணத்தோடு முடிய கருணதிலகவின் கவிதைவேகமாகப் பிரவகிக்கிறது.

Page 83
130 I சோய
குணரத்ந, யஸ்மின்
அவுஸ்திரேலிய மக்குவாறி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இணைப் பேராசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அப்பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப்பட்டமளித்தது. ஜேன்ஒஸ்ரின், அலெக்சாண்டர் போப் ஆகியோர் பற்றிய (இவர்) நூல்களை கேம்ப்ரிட்ஜ் வெளியிட்டது. கொமன் வெல்த் இலக்கியத்துக்கு அரும்பங்காற்றியவர்.
கொடித்துவக்கு, பராக்கிரம
பிரபலமான சிங்களக் கவிஞர். மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார்
சிறிவர்த்தன. றெஜி
புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர். மாக்ஸியவாதி. களனிப்
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவர். தற்போது இனங்கள்
பற்றிய ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்
செனிவிரத்ந, மொறின்
17 வயதில் பத்திரிகையாளர் ஆகியவர். இவருடைய சிறுகதைகள்
கட்டுரைகள் இலங்கையிலும், இங்கிலாந்திலும் சிங்கப்பூர், ஜேர்மனி,
அவுஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் வெளியாகியுள்ளன. சமூக நீதி மனித
உரிமைகள் பெண்கள் /சிறுவர் உரிமைகள் ஆகிய ஈடுபாடுகள் உடையவர்.
சேகர, மஹகம்
ஒவியராக வாழ்க்கையை ஆரம்பித்து அரசினர் நுண்கலைக் கல்லூரி அதிபராக உயர்ந்தவர். நவீன சிங்கள இசைப்பாவின் உருவாக்கத்திற்கு சேகரவின் பங்களிப்பு கணிசமானது. நாட்டார் மரபிலிருந்து மட்டுமன்றி சமகால நகர்ப்புற வழக்கிலுமிருந்து தம் கவிதை மொழியை சேகர உருவாக்கிக் கொண்டார். மறைந்து 28 ஆண்டான பின்னும் நினைவுகூரப்படுகின்றார்.
சோமரத்ந நிமல் : ஓர் ஆங்கில ஆசிரியர்
தசநாயக்க, புத்திக
இவர் எழுதிய பட்டம் என்ற கவிதைமட்டுமே கிடைத்தது.
Channels இல்வெளியான அக்கவிதை வரிகள் தம் மன அரங்கில்
நடனமிடுவதாக ஆன் றணசிங்ஹ சிலாகித்துப் பேசுகிறார்

தென்னிலங்கைக் கவிதை 13
த சில்வா, அல்ஃப்றெடா
ஆசிரியர், பத்திரிகையாளர். ஒலிபரப்பாளர். பல கவிதைத் தொகுதிகள் வெளியிட்டவர். அமெரிக்க Triton College நடத்திய சர்வதேசக் கவிதைப்போட்டியில் நாலு முறை பரிசுபெற்றவர். இவ்வாண்டு காலமானார்.
த சில்வா, டெறிகி
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தவர். கேம்றிட்ஜ் இல் கலாநிதிப்பட்டம் பெற்றபின் ஐரோப்பிய பல்கலைக்கழங்களில் கற்பித்துள்ளார்.
த சொய்ஸா, றிச்சாட்
தொலைக்காட்சி, நாடக அரங்கு, திரைப்படம் ஆகிய சகல துறைகளிலும் ஜொலித்த இளைஞர். தமது முப்பத்திரண்டாம் வயதில் படுகொலைசெய்யப்படும் போது ஆங்கிலத்தில் எழுதும் இலங்கையருள் தம்மை முன்னணி நட்சத்திரமாக நிலைநாட்டிய இவர் தமிழ்த்தாய்க்கும் சிங்களத் தந்தைக்கும் மகன்.
பிரேமரத்ந, கீதா
யூரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராய் இருந்தவர். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார்.
பெர்னாண்டோ, பஸில்
இலங்கைப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். நாலு கவிதைத்தொகுதிகள் வெளியிட்டுள்ளார். சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். நீதியான சமுதாயம் 1984 இன் சிறந்த கவிதையாகப் பரிசுபெற்றது.
மெத்தகம, உதய பிரசாந்த
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள விரிவுரையாளர். போடலெயருடைய உரைக்கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுதி வெளியிட்டவர்.
விக்கிரமசிங்ஹ, லக்தாஸ
கோட்டேயில் ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தும் ஏழை எளியவர்பால் மிகுந்த பரிவு காட்டியவர். கலையில் பெரிதும்

Page 84
132 | GT
ஈடுபாடுடையவர். ஆங்கிலக் கவிதையில் சுதேசிகள் அடையக்கூடிய கொடுமுடிகளைத் தொட்டவர். இவர் அற்ப வயசில் நீரில் மூழ்கி இறந்தது கவிதை உலகுக்குப் பேரிழப்பாயிற்று.
விஜயரத்நகமலா
பேராதனை ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகப்
பணியாற்றிய கமலா நான்கு கவிதைத்தொகுதிகள் வெளியிட்டுள்ளார்.
சிறுகதை, நாடகங்களும் எழுதியுள்ளார்.
றனவீர ஆரியவன்ஸ்
நவீன சிங்கள இலக்கியத்தில் தடம் பதித்தவர் 'கவி கிஹிபயக் (சில கவிதைகள்) என்ற தொகுதி ஒரு புதுவரவாகக் கொண்டாடப்பட்டது. றன் றோசா (பொன் றோசா) என்ற மொழிபெயர்ப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேனாட்டு இலக்கியச் செல்வாக்கும் ஹைக்கூவின் தாக்கமும் இவர் கவிதையில் காணப்படுகின்றன.
றுவன்பத்திறன, மொனிக்கா
சிங்களத்தில் எழுதும் கவிஞர்களில் பிரபல மாணவர். சமூகப்பிரச்சனைகளில் அதிக அக்கறை செலுத்துபவர். சிறுவர் இலக்கியம் சிறுகதை, விமர்சனம், இளம்பருவத்தினருக்கான ஆக்கங்கள் உள்ளிட்ட 25 நூல்கள் வெளியிட்டுள்ளார்.
ஹல்பே, ஆஷ்லி
பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் கலைப்பீடாதிபதியாகவும் கடமையாற்றியவர். ஆங்கில இலக்கிய சங்கம் வெளியிட்ட நவசிலு ஏட்டின் நிறுவுநர் /ஆசிரியர். 'Silent Arbiters (1976) என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்


Page 85


Page 86
Gen, என்ற ug: 鹰
அறியப்பட்சேபத்மநாதன் அதிபராகக் கடமை கவிஞர் சொற்பொழிவாளர் 蠶護籲 பன்முக S: 3:
நல்லுர்முருகன்காவடிச்சிந்து
குரலில் ஒலிப்பேை Litigo G998 eliässä seisos (2oo) .
ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்களின்
உலகறியச் செய்யும் பணியி ഭൂഖണ്ഡ്ര 612 Journal of South Asian
Penguin New with
Lutesong and Lam
A Lankam M. ஆகிய தொகுதிகளில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலு
கவிஞர்கள் எழுதிய ஐம்ப
தமிழாக்கித்த
 

3 பென் சந்தரலிங்கதின்
யாக உலவியது  ః
மாகாணப் பரிசையும்
றுபரிசுகளையும் பெற்றன.
ஆக்கங்களை ஆங்கிலம் மூலம்
ழிபெயர்ப்புக்கள் ప్తస్రి
rature, Michigan (1987), in Sri Lanka (1992). nt, Toronto (2001). osaic (2002) இடம்பெற்றுள்ளன. தென்னிலங்கையைச் சேர்ந்த து மூன்று கவிதைகளைத்
கிறார் சோப