கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்க்கையின் நிறங்கள்

Page 1


Page 2


Page 3

வாழ்க்கையின் நிறங்கள்
நீ பி. அருளானந்தம்
நாவல்

Page 4
நூற்குறிப்பு வாழ்க்கையின் நிறங்கள்
நீபி.அரு எானந்தம்
உரிமை, நீபி.அருளானந்தம்
முதற்பதிப்பு: ஐப்பசி 2006
உருபா 440
ISBN 955-1055-02-0
Wazh kaiyin Nirangal
Subject:
M Ապ ըI
Author: N.P. Arulamantham
CopyRight: Author
First Editio: October OO
Published by:
Thiru magal Pathippagam No. 07, Lilliyan Avenue,
Mt.Lavilia Telephone: 012732400
Printed:
Ranya Graphics 253G, Galle Road, Colombo ÜĞ, O153O873
EllճյիEE: நாவல்
ஆசிரியர்: நீ.பி.அருளானந்தம்
கெளதமன் கணினி தட்டச்சமைப்பு கு.பிரதிபன் (பளை) பின்புற அட்டை ஒளிப்படம்: கே.வி.மணி (ஒளிப்பதிவாளர், சென்னை) பதிப்பு திருமகள் பதிப்பகம் இல, 7 லில்லியன் சாலை, கல்கிசை
அச்சுப்பதிப்பு: ரண்யா கிராபிக்ஸ் இல, 253-ஜீ, காலி வீதி, கொழும்பு 06.

அணிந்துரை
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களையும், வாழ்வுச் சுழலில் சிக்கி அல்லாடுகிற பல விதமான மனிதர்களின் இயல்புகளையும், இவற்றில் காலம் செய்கிற மாறுபாடுகளையும், அடிப்படையாகக் கொண்டு கலைத்தரமான சிறுகதைகள் எழுதி கவனிப்புப் பெற்றிருக்கிற நீபி.அருளானந்தம் எழுதிய முதல் நாவல் இது
"நாற்பது வருடங்ளுக்கு முன்னம் இருந்த வவுனியா நகரின் சூழ்நிலையையும் அவ்விடத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் எடுத்துக் காட்டுவதாக நாவலின் கதை அமைந்திருக்கிறது" என்று அருளானந்தம் தெரிவிக்கிறார். வவுனியாப் பிரதேசத்தின் ஊர்கள், அவற்றின் சுற்றுப்புறங்கள் இயற்கைச் சூழ்நிலைகள், பருவ மாறுதல்களி, அவற்றிடையே வாழ்க்கை நடத்துகிற மனிதர்கள், அவர்களுடைய குணங்கள் குணக்கேடுகள் செயல்பாடுகள் முதலியவற்றை எல்லாம் இந்த நாவல் நன்கு சித்திரிக்கிறது. பொன்னுத்துரை மற்றும் அவருடைய குடும்பத்தினரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நாவல் சுவாரசியமான, உணர்ச்சிகள் நிறைந்த, மனித நாடகத்தை, முக்கியமாக அதன் சோகத்தன்மையை, திறமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பெரிய குடும்பம் ஒன்றின் தலைவரான பொன்னுத்துரை, மாடுகள் வளர்ப்பதிலும் வண்டில் போட்டி விளையாட்டில்("றேஸ்) மும்முரமாக ஈடுபட்டு வெற்றிகள் ஈட்டுவதிலும் பேரார்வமும், மிக்க திறமையும் அனுபவத் தேர்ச்சியும் உடையவராகக் காட்டப்பட்டிருக்கிறார் நாவலின் முற்பகுதியில். அவருக்குத் துணையாக வந்து சேர்கிற அன்ரன் வாழ்க்கைப் பாதையில் அடிஎடுத்து வைக்கிற இளைஞன் நல்ல உழைப்பாளி. எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றல் உடையவன். நேர்மைக்குணமும் நியாயபுத்தியும் கொண்டவன்.
பொன்னுத்துரையின் அனுபவ ஞானம், மாடுகளைப் பற்றி அவர் அறிந்து வைத்திருக்கிற ஆழ்ந்த உண்மைகள் முதலியன, அவர் அன்ரனுக்கு எடுத்துச் சொல்கிற ரீதியில் விவரமாகவும் தெளிவாகவும் திறமையோடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வணிடில் போட்டிப்பந்தயம், அதற்கான முன்பயிற்சிகள், போட்டி நிகழ்கிற

Page 5
முறை, குறுக்கு வழியில், ஆழ்ச்சி செய்தும், போட்டியில் வெற்றி பெற ஆசைப்படுகிற ஆதுமதியினரின் செயல்பாடுகள் முதலியவை கதைச்சுவையோடு விவரிக்கப்பட்டிருக்கின்றன. 'வண்டில் சவாரி இங்குள்ள ஈழத்தமிழர்களிடமுள்ள ஒரு வீர விளையாட்டு ஆக விளங்கியது. வண்டில் சவாரியை வைத்து எழுதப்பட்ட நாவலொன்றும் இதுவரை வெளிவரவில்லை. பல சவாரிக்காரர்களை நேரில் கண்டு, அவர்களுடன் அளவளாவி சகல விபரங்களும் பெற்ற பிறகே இந்நாவலை நான் எழுதினேன். ஏலவே இதைப்பற்றிய விபரங்கள் எனக்கும் தெரிந்திருந்தன. அவைகளும் நாவல் எழுதும் போது எனக்கு உதவின. இங்குள்ள தமிழர்கள் எல்லோருக்கும் வண்டில் சவாரியிலே மிகவும் ஆர்வம் உண்டு. சவாரி பார்க்காதவர்கள், அதிலே ஆர்வமில்லாதவர்கள் ஆரும் இவ்விடம் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிலே இங்கே அது ஒரு பிரபலமான விளையாட்டாகத்தான் இருந்து வந்தது' என்று அருளானந்தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மக்களின் இந்தப் பண்பு நாவலின் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. வண்டில் றேஸ்சும் அதில் பொன்னுத்துரையின் ஈடுபாடும் தேர்ச்சியும் வெற்றியும் நாவலின் கணிசமான பகுதியாக அமைந்துள்ளது. உண்மையில், பொன்னுத்துரை என்ற மனிதனின் பலங்கள் பலவீனங்கள், வெற்றிகள் தோல்விகள், ஆசைகள் ஆசைமுறிவுகள் முதலியவற்றை விவரிப்பதோடு, அவரது கட்டுப்பாட்டினுள் அடங்கியிருக்கும் குடும்பத்தலைவரின், பலவிதமான ஆண்கள் பெண்களின் வாழ்க்கைப்போக்கையும் இயல்புகளையும் நுட்பமாகச் சொல்லும் பெரும் கதையாக உருவாகியிருக்கிறது இந்த நாவல்.
பிற்காலத்தில் காளைமாடுகள் வளர்ப்பதில் ஈடுபாடும், வண்டில் சவாரியில் ஆர்வமும், போட்டிப் பந்தயத்தில் வெற்றிபெறும் முனைப்பும் கொண்டு விட்ட பொன்னுத்துரை, வாழ்வின் ஒரு கட்டத்தில் நாடகக் கூத்துகள் நடத்துவதில் தீவிர மோகம் கொண்டிருந்தார். அப்போது ஒரு நடிகையோடு அவருக்கு ஏற்பட்ட மோக உறவும், அதனால் ஏற்பட்ட பெரும் பண நஷ்டமும், மனைவி ராசம்மாள் அனுபவிக்க நேரிட்ட மன உளைச்சலும் அவமானமும் கதைஓட்டத்தில் இயல்பாக வெளிப்படுகின்றன. பணஇழப்பை சரிப்படுத்தி அவர் வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். குடும்பத்தினரை அடக்கி ஆட்டுவித்தார்.
அவர் மனைவி ராசம்மாள் ஆச்சி அவருடைய வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றாள். அவர்களுடைய ஒரு மகன் இறந்து விட

மருமகள் தங்கம்மா, தன் பிள்ளைகளுடன் அவர்களை அண்டி வாழ வேண்டியிருக்கிறது. சொத்து மிகுதியாக இருந்தும் பொன்னுத்துரை தாராளமாக உதவுவதில்லை. அவரிடமிருந்து பெறும் சிறு உதவிகளினால் மருமகளின் வறுமை தீரவில்லை. அவள் ஆப்பம் சுட்டு விற்றுப் பிழைக்கிறாள். இரண்டாவது மகன் சேனாதி குடிகாரன் ஆகி, தகப்பனை மதிக்காத காரணத்தால், புறக்கணிக்கப்படுகிறான். குடும்பப் பொறுப்பு இல்லாமல் அவன் வீணனாக வாழ்க்கை நடத்துகிறான். அவன் குடும்பம் மிகுந்த வறுமைநிலையில், பசியும் பட்டினியுமாக காலம் கழிக்க நேர்கிறது. அவர்களுடைய மகள் விசயாவும் மகன் சரவணனும் பொன்னுத்துரை வீட்டில், அடிமைகள் போல் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சீவிக்கிறார்கள்.
சரவணன் பொன்னுத்துரையின் மாடுகளை மேய்த்துப் பாதுகாக்கும் பணியையும், அவனுடைய அக்காள் விசயா வீட்டின் சகல அலுவல்களையும் ஓய்வு ஒழிவு இன்றிச் செய்தும் வாழ்க்கையை ஒட்டுகிறார்கள். அவர்களுடைய செயல்களையும் எண்ணங்களையும் ஆசைகளையும் நாவல் நுணுக்கமாக விவரிக்கிறது.
ராசம்மா ஆச்சி விசயாவிடம் பரிவும் பிரியமும் காட்டிய போதிலும், அவளுடைய உண்மையான அன்பும் பாசமும் மகளிடமும் அவள் வயிற்றுப் பேத்திகளிடமுமே வெகுவாக செலுத்தப்படுகின்றன. வறுமைநிலையில் உள்ள பேத்தியிடமும், செல்வச் செழிப்புடன் வாழும் மகள் மற்றும் பேத்திகளிடமும் ஆச்சி காட்டுகிற பரிவு மனித உறவுகளில் நிலவுகிற முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
நுண்உணர்வும் சிந்திக்கும் திறனும் பெற்றுள்ள விசயா இவை பற்றி எல்லாம் எண்ணுவதை அருளானந்தம் உரிய இடங்களில் திறமையோடு எழுதியிருக்கிறார். விசயா இந்த நாவலின் மிக முக்கியமான பாத்திரமாகத் திகழ்கிறாள். அவளுடைய வெவ்வேறு கட்டத்திய மனநிலையை ஆசிரியர் விவரிக்கும் நயமான முறைகள் படித்து ரசிக்கப்பட வேண்டியவையாகும்.
ஆரம்ப நிலையில் அவள் மன இயல்பு ‘வாழ்க்கை என்பது ஒரு பாலாறு என்று நினைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பருவத்தில் கனவுகளுக்கு ஏது குறை? அவளாலும் அப்போது அந்தக் கற்பனையிலே ஒரு அழகிய உலகத்தைப் படைக்கக் கூடுமானதா கவே இருந்தது. அது காதலை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிற ஒரு தனி உலகம். சிகப்பு மலர்கள் பூத்துக் குலுங்கும் சிருங்காரப் பூந்தோட்டம். மலர்கள் எல்லாம் அவள் மனம் போல் அங்கே

Page 6
மலர்ந்திருக்கின்றன. கனவுகளைப் பேணி வளர்த்து வாழ்வதிலும் ஒரு உள்ளக் களிப்பு. அன்ரனுக்கும் அவளுக்குமிடையே தோன்றி வளரும் காதல் உணர்வும், அதன் வெளிப்படுதல்களும் ரசமான காட்சிகளாக நாவலில் இடம் பெற்றுள்ளன. விசயாவின் வாழ்வில் இனிய ஒளி அன்ரனுடன் அவள் பேசிப்பழக நேரிட்ட சில சந்தர்ப்பங்களில் தான் மின்னியது. இதர போதுகளில் இருண்ட நிலைதான். அவளுடைய தாயும் தங்கையும் அனுபவிக்கிற வறுமைக்கொடுமையை எண்ணி அவள் வேதனைப்படாத நேரம் இல்லை. அந்த நிலைபற்றிய ஒரு சித்திரிப்பு - 'பெருக்கிக் கொண்டிருக்கும் போது தன் வீட்டிலுள்ள பட்டினியும் பாடும் அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. அந்த நினைப்பில் பிறகு எல்லா இயக்கங்களும் அவளுக்கு சோகை பிடித்து மந்தம் தட்டிக் கொண்டு போனது போல் இருந்தது. இதனால் சற்று முன் இருந்த மகிழ்ச்சியான நினைவுகளெல்லாம் அவளுக்கு நீர் அலையில் கலையும் நிழல் போல் மெல்ல மெல்ல மறைந்து கொண்டு போயின. அந்த அவளது வீட்டின் கஷ்டமான சூழ்நிலையிலுள்ள நினைவுகள் மட்டும் ஆழநீருக்குள் இருந்து கிளுகிளுவென குமிழிகள் மேலெழுந்து உடைவது போல் மனத்தினுள் அவளுக்கு எழுந்த வண்ணமாக இருந்தன. விசயாவின் அம்மா புனிதம் சின்ன மகளுடன் ராசம்மா ஆச்சி வீட்டுக்கு வருகிறாள். அவளது மோசமான நிலைமை மகள் விசயாவின் மனசை வெகுவாக பாதிக்கிறது. அந்த நேரத்திய அவளது மனநிலை இப்படி சுட்டிக் காட்டப்படுகிறது. அவளது உள்ளத்திலிருந்த ஆசைகள் வெளியே பறந்து சுவர்களில் முட்டி மோதி சிறகு உதிர்ந்து கொட்டுப்பட்டதைப் போல் அப்போது அவளுக்கு இருந்தது. இப்படியே தன் வாழ்க்கை முழுவதும் தான் நினைத்தது ஒன்றும் நடக்காமல் தோல்விகளாகவே எல்லாம் முடிந்து விடுமோ என்று அவள் ஒரு கணம் தனக்குள் நினைத்துப் பார்த்தாள். உடனே அவளது உள்ளம் படபடத்தது. தான் ஒரு மரமாகவுமில்லை. அதையும் விட உணர்ச்சியில்லாத வெறும் கல் என்கிற மாதிரியாக தன்னிலே அவளுக்கு மனதில் விரக்தி ஏற்பட்டு வெறுப்பு ஏற்பட்டது. அவளுடைய விரக்தியும் வேதனையும் ஓங்கி வளரும் விதத்தில் தான் வாழ்க்கை நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு நாள் அவளைப் பார்க்க அவள் தந்தை சேனாதி குடிபோதையுடன் வருகிறார். தனது
νι

தந்தை பொன்னுத்துரையையும் அமமாவையும் வாய்க்கு வந்தபடி ஏசுகிறார். ஆத்திரம் அடைந்த பொன்னுத்துரை சாட்டையினால், மாட்டை அடிப்பதை விட மோசமாக, முரட்டுத்தனமாக மகனை அடித்துத் துரத்துகிறார். அதனால் விசயா மிகுதியும் பாதிக்கப் படுகிறாள். அந்த மனநிலை இவ்வாறு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. தன்னைச் சுற்றி எல்லாமே சுயநலமெழுதிய முகங்களாய் சூழ்ந்திருக்கின்றன என்றதில் தன்னிலும் அவளுக்கு ஒரு வெறுப்பு. தன்னுடைய எதிர்பார்ப்புகளெல்லாம் சருகுகளாக உதிர்ந்து கொண்டிருப்பதான ஒரு விரக்தி எதுவும் எப்படியாவது போகட்டும் என்ற நிலையிலே உணர்ச்சியில்லாத ஒரு சக்கை உடலாய் நின்றாள். இந்த உலக சீவியத்தில் என்னதான் ஒரு நன்மை எனக்கு வாழுங்காலத்தில் கிடைத்தது? இந்தக் கேள்வியைத் தன் மனதுக்குள் அவள் கேட்டுக் கொண்ட போது பதில் பூஜியமாகவே எல்லாம் தோன்றி அவளது நம்பிக்கையை உடைத்துச் சிதறிடச் செய்தது. அவளுக்கு இந்த உலகம் வெறுத்தது. இந்த உலகில் உயிர்வாழ்வதும் வெறுத்தது. இதற்கு வழி ஒரு ஈசலின் வாழ்வைப் போல இறந்து விடுவதுதான், பொன்னுத்துரை, அவன் மகன் சேனாதி வாக்குவாதம், சண்டை, அதனால் வெகுவாக பாதிக்கப்பட்ட விசயாவின் மனவேதனை, அவளது தற்கொலை முயற்சியும் நிகழ்வும் ஆகிய பலவும், வாசகரின் உள்ளத்தைத் தொடும் விதத்தில், உணர்ச்சிச் சித்திரிப்புகளாக அமைந்துள்ளன. உருக்கமான காட்சிகள். அதன் பிறகான ராசம்மா ஆச்சியின் மனநிலையையும் உணர்ச்சிச் செயல்பாடுகளும் சோக நாடகக் காட்சிகளாக விளங்குகின்றன. ஆச்சியும் இறந்துவிட, பொன்னுத்துரை அதிகம் பாதிக்கப்படுவதையும் நாவல் உரியமுறையில் விவரிக்கிறது. மீண்டும் வண்டில் றேசில் ஈடுபட்ட அவர், சூழ்ச்சிக்கார தர்மரின் தந்திர உத்திகளால் தோற்கடிக்கப்படுகிறார். பொன்னுத்துரையின் வெற்றிவழி மிடுக்கான வாழ்க்கை ஓய்ந்து போகிறது. அருளானந்தம் கதையை இத்துடன் நிறுத்திவிடவில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்களையும் பொன்னுத்துரை, அன்ரன் முதலியோரின் நிலைமைகளையும், சூழ்நிலை மற்றும் வாழ்வின் புதுமைகளையும் சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், காலத்துக்கும் சூழ்நிலைக்கு மேற்ப வெளிச்சம் பரப்புகிற நிறங்களைக் கொண்டதாக
yi

Page 7
இருக்கிறது. மனிதரின் இயல்புகளும் பொதுவான போக்குகளும் வாழ்க்கையை நிறம் இழக்கச் செய்கின்றன. என்றாலும் மனிதர்கள் நம்பிக்கையோடு ஒளிமயமான எதிர்காலம் வரும் என்ற மன உறுதியோடு வாழ்ந்து செயல்புரிந்து கொண்டிருக் கிறார்கள். இதை இந்த நாவல் நன்றாக உணர்த்துகிறது. இதில் வருகிற விசயா, பொன்னுத்துரை, இராசம்மா ஆச்சி, அன்ரன், சேனாதி, விசயாவின் அம்மா புனிதம், விதவை தங்கம்மா, அன்ரன் அம்மா அமுதம், மற்றும் சந்தியாப்பிள்ளை உபதேசியார், இராயப்பு முதலானோரும் வாழ்க்கைக்கு ஒளி சேர்க்கும் பல்வேறு நிறங்களோடு இயங்குகிறார்கள். கதைக்கு உயிர்ப்பும் உணர்வும் தருகிறார்கள். w பல ரக மனிதர்களின் உணர்ச்சி நாடகங்களைத் திறமையாக எழுத்தில் வர்ணித்திருக்கும் அருளானந்தம் மனித வாழ்க்கை யில் விசேஷ நிறங்கள் பூசுகிற கோயில் விழாக்கள் (அந்தோனியார் கோயில் விழா நிகழ்ச்சிகள் கந்தசாமி கோயில் சூரசம்காரத் திருவிழா), கிராமங்களில் காவல் தெய்வவழிபாடு (வைரவர் வழிபாடு), வண்டில் றேஸ் முதலியவற்றையும் உரிய முறையில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
எழுத்தாளர் நீபி.அருளானந்தத்தின் எழுத்தாற்றலை சிறப்பாக எடுத்துக் காட்டுகிற இந்த நாவல் மனித வாழ்க்கையின் விதம் விதமான போக்குகளையும், மனிதர்களின் உணர்ச்சிகர மான செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் யதார்த்தமாகவும் அழகாகவும் பிரதிபலிக்கும் படைப்பாக விளங்குகிறது. அருளானந்தம் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் உரியன.
ضلع روبہ (تعہ (9 ذیت (آہ (کہ }2
ひっ一
10, வள்ளலார் குடியிருப்பு புதுத்தெரு, லாயிட்ஸ் சாலை, சென்னை 600005
viii

கதைக்கு முன்னே.
நான் எழுதிய சிறுகதைகளை வாசித்து அறிந்துவிட்டு, நீங்கள் பெற்ற பல்வேறு தள அனுபவங்களின் நிமித்தம் உங்களிடம் நாவல் செய்வதற்கான தெறிப்பு இருக்கிறது என்று வல்லிக்கண்ணன் ஐயா என்னிடத்தில் ஒரு வேளையில் கூறினார். இந்த ஆலோசனையை என்னிடத்தில் இதற்கு முன்பும் எழுத்தாளர் செ.யோகநாதனும் கூறியிருந்ததன் காரணத்தால், இந்த நாவல் எழுதும் முயற்சியை நான் தொடங்கினேன். என்றாலும் இந் நாவலை நான் எழுத ஆரம்பித்த நேரம், என் மனத்தில் சில விஷயங்களை எண்ணிக் குழப்பமும் சிக்கலும் தோன்றியிருந்தன. இன்று தமிழ் நாவல் எழுதுவதில் புதிய புதிய வடிவச் சோதனைகள் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி, நான் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தப்புதிய முயற்சிகளின் போக்கைப் புரிந்து கொள்வது தமிழ் வாசகர்களுக்குக் கஷ்டமென்றாலும்,இப்போது புகுந்துள்ள இந்தச் சோதனை முயற்சிக்கு வரவேற்பும் பெருகிவருகிறது என்பதும் நான் அறிந்துகொண்ட விஷயம் தான். ஆயினும் அதை எதையும் நினைவில் வைத்து என்னை நான் அலட்டிக் கொள்ளாமல், சுகிர்தமுடன் இருந்து என்பாணியில் சுதந்திரமாக இதை எழுதி முடிப்போம் என்றநோக்கிலேயே நான் இந்த “வாழ்க்கையின் நிறங்கள்” எனும் நாவலை எழுதத் தலைப்பட்டேன்.
நான் பிறந்து வாழ்ந்து நாற்பது வருடங்களைக் கழித்த இடம் வவுனியா நகரம்தான். ஆகவே, அந்தச் செழிப்புள்ள இயற்கை அழகு கொண்ட மண்ணின் வாசனையை,அதன் வளத்தை,என்னால் என்றுமே மறக்கவே முடியாது. எங்கு தான் இடம்மாறிச் சென்று என் வாழ்க்கையை நான் நடத்தினாலும்,அந்த வவுனியா மண்ணின் நினைப்பும்,மக்களின் நினைப்பும்,கிளைவிட்டு கிளைதாவித் திரியும் அணில் போல, என்மனத்திரையில் தாவித்திரிந்து கொண்டே இருக்கின்றன.கருப்பையில் வளரும் ஒரு குழந்தை நாபிக் கொடி வழியாகத் தாயுடன் கொண்டிருக்கும் பிணைப்புப் போல,அந்தக் காலத்தில் நடந்த பல சம்பவங்களில் இன்றும் நான் பிணைக்கப் பட்டிருக்கின்றேன்.
அன்றையக் காலம் வவுனியாவிலே உள்ள குளுமை நிறைந்த தண்ணீருள்ள குளங்களில், விரால் மீன்போல அதற்குள்ளே விழுந்து நான் குதிபோட்டதையும், கருத்த மேல் செதில்களைக் கொண்ட
ix

Page 8
ஜப்பான் மீனைப்போல அதிலே நீந்தியதையும், கெளுத்தி மீனைப் போல மூச்சைப்பிடித்துக் கொண்டு தண்ணீரின் அடியில் நெடுநேரம் வரை அமுங்கியிருந்ததையும், இன்றும் நினைக்கையில் அவை எனக்குத் தரும் சுகானுபவம், சொல்லிமுடியாது. அக்குளத்தின் பக்கத்தேயுள்ள விளாத் திக் காடெல் லாம் அலைந்து திரிந்ததும்,சுண்டுவில் அடித்ததும் பற்றிய ஞாபகங்கள் இன்றும் என் நினைவைவிட்டு அகலவில்லை. சிறுவயதில் என் அன்னையின் துணையுடன் ஆரம்பித்த குளத்துக் குளிப்பு, நான் வாலிபனாகியதும் நண்பர்களுடன் சேர்ந்து குதிபோடும் குளிப்பாகவும் மாறியது. குளத்தின் அக்கரையிலிருந்து இக்கரை வரையுமாக எத்தனை தடவைகள் களைக்கக் களைக்க அந்த நீச்சலடிப்பு! அந்தக் குளத்துக்குப் பக்கத்தேயுள்ள விமான ஒடு பாதையில், விடியல் பொழுதில் நித்திரை விட்டெழுந்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து ஒடிய காலமெல்லாம் ஓர் சுகமான நினைவு தான். ஆனால் அந்த இடங்களையெல்லாம் அன்று நாம் அனுபவித்தது போல இன்று அனுபவிக்க இயலாமலாகிப் போனதை நினைக்கை யில் அந்த மண்ணை நேசித்த என் நெஞ்சம் குருதி வடிக்கிறது.அது என்னால் மறக்கமுடியாதிருந்து, என் எழுத்திலும் இதோ அவைகள் இப்பொழுது முகங்காட்டி நிற்கவே செய்கின்றன. என்வாழ்வில் சந்தித்த பலர் என் நினைவில் இடங்கொண்டிருக் கிறார்கள். அவர்களுள் வேராகவும், வித்தாகவும் என்மனத்துட் புகுந்து நீங்கா நினைவாக இருப்பவர்கள் சிலர். இவர்களையெல்லாம் இந்த வாழ்க்கையின் நிறங்கள் என்ற நாவலுாடாக நான் இன்று சந்திக்கிறேன். அவர்களுடன் உரையாடுகிறேன். கூடிக்குலாவுகின் றேன். அவர்களை இந்த நாவல் வாசிக்கும் உங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றேன். நீங்களும் அவர்களைச் சந்திப்பதில் ஆனந்தம் அடைவீர்கள் என்பதையும் அறிவேன். இந்தக் கதையின் காலம் நாற்பது வருட நீட்சியின் பின்னால், அன்று வவுனியா இருந்த சூழ்நிலையை வைத்து எழுதப்பட்டது. அக்காலத்தில் மாட்டுச் சவாரிப் போட்டிகள் வருடாவருடம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்தச் சவாரிப் போட்டிகளில் பங்குபற்றி எண்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட ஒரு முதியவர் தங்கப் பதக்கங்களை தனதாக்கினார். என் பார்வையில் அவர் ஒரு முதியவராகக் காணப்பட்டாலும் அவரது செயல்முறைகளில் அவர் பெற்ற அந்த வெற்றிகளை நினைத்து வியந்து, அவரையே ஒரு நாயகனாக ஆக்கிக்கொண்டு, இந்த "வாழ்க்கையின் நிறங்கள்” நாவலை நான் எழுதி முடித்தேன். இந்தக் கதையைப் படிப்பவர்கள்

தொடக்கப் புள்ளியாக இருந்த "வாழ்க்கையின் நிறங்கள்” நாவலின் சவாரிக்காரரை மட்டுமல்லாது, அதற்குள்ளே வரும் பலரையும் சந்திக்க முடியும். வித்தியாசப்பட்ட எத்தனையோ மனிதர்களுடன், எத்தனையோ சம்பவங்கள் பொன்னுத்துரையின் குடும்பத்தில் நிகழ்கின்றன. நடைமுறை வாழ்க்கையில் இழப்புடன் வருந்தும் நடுத்தர குடும்பமாக சவாரிக்கார பொன்னுத்துரையின் குடும்பத்தை நான் இக்கதை மூலம் அறிமுகப்படுத்துகிறேன். இக்கதையை நீங்கள் வாசிக்கும் போது குற்றம் குறைகள், பாவங்களை விலக்கிவிட முடியாத மனிதர்களை நீங்கள் சந்திப்பீர்கள். இடிந்த குடிசையில் நொறுங்கிப் போய்க் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையைக் கண்டு நீங்கள் மனம் எரிந்து அடங்குவீர்கள். உரையாடுகையில் வெளிச்சத்தைக் கண்டுவிட்ட பின்பு, நடைமுறை வாழ்க்கையில் இழப்புடன் வருந்தும் ஓரிருவரையும் இதிலே நீங்கள் காண்பீர்கள். தம் வாழ்வை நகர்த்த அல்பமான காரியங்களில் ஈடுபடுகிறவர்களையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எல்லாவற்றை யும் விட கிடைத்திருக்கும் வாழ்வைவிட்டு தொலைந்து போகிறாள் ஒருத்தி இடிந்து கொண்டே இருக்கப்பழகிப்போன அப்படியான அவள் வாழ்கிற காலத்திலே காதலும் ஸ்பரிசிக்கிறது. என்றாலும் அந்த அபாயம் மெலிதான அவளைச் சூழ்கிறது. பூத்த மரமாய்க் குலுங்கி நின்ற அவளைத் தெரியத் தொடங்குகிற நேரத்திலே, மனத்தில் அவளைப் பற்றிய துக்கம் கவியத் தொடங்குவதைப் பற்றி என்னால் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. அதற்காக நான் யாருடனும் சேர்ந்து அழவும் வரவில்லை.என்றாலும் இந்நாவலின் ஆதார சுருதி அவளைச் சுற்றிச்சுற்றியே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையும் என்னால் விலக்க முடியவில்லை. இந்நாவல் என் நீண்ட பயணத்திற்கான தொடக்கமென்றாலும் இக்கதையில் கறுப்பு, கசப்பு, இனிப்பு என்று எல்லாஅம்சங்களும் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். இந்நாவலில் உள்ளதில் வாசகர்களான உங்களுக்கு எது பிடிக்குமோ அது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இதிலே நீங்கள் விருப்பப்படுவதை உங்களுடையதாக ஆக்கிவிடலாம். வெறுப்பவற்றையும் நீங்கள் விட்டு விடலாம். அது எல்லாமே உங்கள் சுதந்திரம். இக்கதையிலுள்ள குற்றங் குறைகளை எழுதிய என்னைவிட இதைப் படிக்கின்ற உங்களுக்கே அதிகம் தெரியவரும். எனவே நீங்களே எனக்கு நீதிபதிகள். நீங்கள் கூறும் குறை குற்றங்களை அதன் நிமித்தம் நான் முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றேன்.
xi

Page 9
என்றாலும் என்னால் கதை சொல்லாமலும் கற்பனை பண்ணாமலும் வாழவே முடியாது. நான் உண்மையின் பாரத்தைச் சுமந்து செல்பவன். துக்கத்தையும் நெருக்கடிகளையும் அதிக அளவில் வாழ்க்கையில் அநுபவித்தவன். எதையும் கூர்ந்து பார்க்கும் இயற்கையான குணத்துடனும்,எந்தவொரு இரகசியங்களை உறிஞ்சிக் கொள்ளும் தீட்சண்யத்துடனும், மனிதத்துவத்தின் உன்னத உதாரணங்களைப் படைக்க வேண்டும் என்ற விருப்புடன் என் எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றேன். என் நினைவில் யாருக்குமே அடிமைப்படாத சுதந்திரமானதோர் மனித வாழ்க்கையே என்றும் நிலைத்து நிற்கிறது. என் விழிப்பு நிலையுடன் அந்த சந்தோஷத் தையே நான் அனுபவித்து வருகிறேன்.அதைச் சொல்லாமல் அடைத்துக் கொண்டு என்னால் ஆரோக்கியமாக இருக்கமுடியாது. ஆகவே நான் கூறவேண்டியதை ஒழிக்காது சொல் லியே ஆகவேண்டும். நிஜங்களைச் சொல்லும் போது சிலவேளைகளில் அதன் கோரம் புலப்படவே செய்யும்.இதற்காகக் இக்கதையில் வரும் சம்பவம் ஒன்றை நான் உதாரணத்திற்குக் கூற வேண்டும்.என் இளமைக்கால வாழ்விலே நான் பார்த்த அளவுக்குத் தற்கொலை எனும் பயங்கரம் அப்பொழுது எவ்விடத்திலும் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது. இக்கதையிலும் வாழ்வின் அந்த அபாயத் தன்மையைச் சொல்ல வேண்டும் என்று அதனால் நான் நினைத்தேன். அதை இக்கதை மூலம் நான் வெளிப்படுத்தியும் இருக்கிறேன். இப்படியாக வாழ்வின் சிக்கல் சிடுக்குகளைச் சொல்லும் போது அதைப்படிப்பவர்களும் சிரமப்பட வேண்டித்தான் இருக்கிறது. இதனுடன் இக்கதையில் யாவர் இரவிலும் நடமாடி அலையும் கனவுகளும், படிப்பவர்களுக்கு அது மிகப் புதிதாகவே இருந்து அதுவும் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன். இந்நாவல் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஏழ்மையானதோர் குடும்பத்தவர் வாழ்வைக் கூறிவிட்ட மனத்திருப்தி எனக்கு இருக்கிறது. மாட்டுவண்டிச் சவாரியையும், மாடுகளுக்கான சுழி சுத்தம் பார்ப்பதையும், அதைப் பற்றிய இன்னும் பல விபரங்களையும், அதிகம் ஒருவர் தெரிந்து கொள்ள இந்நாவல் பேருதவியாக இருக்கும் என்பது என்கருத்து. நான் அறிந்தவரை ஈழத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, மாட்டுச் சவாரியை கதைக்கான கருவாக வைத்து எழுதப்பட்ட நாவல் எதுவும் இற்றைவரையிலும் வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். இங்கேயுள்ள எம் தமிழர்களின் வீரவிளையாட்டாக உள்ள இந்த மாட்டுச்சவாரியைப் பற்றிச் சொல்லக்கூடிய நாவலாக, இந்நாவல்
xiii

வெளிவருவதில் அக்குறை ஓரளவேனும் நிவர்த்திக்கப்பட்டு விடும் என்றே நான் இப்பொழுது எண்ணுகிறேன். கதைகளின் வழியே தான் மனிதர்கள் தம்வாழ்வின் அநுபவங்களை அடுத்துவரும் தலைமுறைக்குத் தருகிறார்கள். இவ்"வாழ்க்கையின் நிறங்கள்” நாவலும், இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கு ஒருவரலாற்றுப் பதிவாக இருக்கும் என்பது என் கருத்து. இந்நாவலை நான் எழுதுவதற்கு நான் அறியாதிருந்த இன்னும் பல விஷயங்களைச் சொல்லித் தந்து உதவிபுரிந்தவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.முக்கியமாக அவர்களிலே திரு.யோசவ் தேவநாயகம் என்பவரையும் திரு.பேதுருப்பிள்ளை சிங்கராசா என்பவரையும், என் நினைவில் வைத்துக்கொண்டு அவர்கள் செய்த, உதவிகளுக்காக என் நன்றியை அவர்களுக்கு நான் தெரிவிக்கிறேன். இன்னும் இந்நூலுக்கு நான் கேட்டதும் அதற்கு இசைந்து அணிந்துரை எழுதித்தந்த வல்லிக்கண்ணன் ஐயா அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன். வல்லிக்கண்ணன் ஐயா அவர்கள் என் எழுத்தின் தழைப்பில் உள்ள ஒவ்வோர் இலைத்துளிர்ப்பையும் இதுவரையில் நன்றாய் அறிந்தவர். அப்படியாக உள்ள அவரிடம் இருந்து பெற்ற அணிந்துரை இந்த என்நாவலுக்கு மகுடம் சேர்த்ததாய் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இந்நூலைவிரைவில் அச்சிட்டு வெளியிடுவதற்கு என் மூத்தமகன் சுரேஸ் ஜோக்கின்(2006 வரையில், 36 அகில உலக கின்னஸ் சாதனைகளைப் புரிந்திருப்பவர்)ஓரளவு பண உதவியளித்துள்ளார். அவருடன் என் இளையபிள்ளைகள் ரமேஷ்பிலிப்பும், சத்தியசீலனும் பணஉதவியளித்து உதவியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் என்நன்றியைத் தெரிவிக்கிறேன். இதைவிட என்றுால்களை வாங்கி உதவிசெய்து என் நெஞ்சில் இன்றும் நிறைந்திருப்பவர்கள் எத்தனையோ பேர் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை மனநிறைவுடன் கூறிக்கொள்கிறேன்.
அன்பான உள்ளத்துடன் நீ.பி.அருளானந்தம் 27/10, ஏ, குலுதாகொட வீதி கல்கிசை, தொ.பே. 2732400
O722784954
xiii

Page 10
Xiy
கருவிற் சுமந்து கலைகள் பயிற்றி காசினியைக் காட்டிய அன்புத் தெய்வம் அம்மாவின் பாதத்திற்கு இந்நூல் சமர்ப்பணம்.

ஒன்று
வானத்தின் ஒளி மேலே மேலே ஏறிக் கொண்டிருந்தது. கதிரவனின் ஒளி அகலமாகப் பரவியது. அடிப்பக்கம் வெளித்தெரிய வேர்கள் பரப்பி வானத்தை முட்டப்பாயும் காஞ்சிரை மரத்தின் இலைச்சடைவுகளில் கதிரவனின் வெயில் மிகவும் உறைப்பாக விழத் தொடங்கிவிட்டது.
அந்த மரத்தின் மீது விழுந்த வெயிலொளியை வீட்டு முற்றத்தில் நின்று பார்த்தபடி நேரத்தைச் சிந்தித்தாள் விசயா. காலையில் எழுந்து தான் செய்துமுடித்துவிட்ட வேலையைத் திரும்பவும் அவள் நினைத்துப் பார்த்தாள். இன்னும் தான் செய்ய வேண்டியிருக்கும் வேலைகளையும் மனத்திலே அவள் எண்ணினாள் கையை மூக்கருகில் வைத்து விடியும் வேளையில் பசுமாட்டில் பால் கறந்த அந்த வாசனையை முகர்ந்து பார்த்துக்கொண்டு, மாலின் முன்வாசலருகில் நின்ற ஆந்த நந்தியாவட்டைச் செடிகளிலுள்ள பூக்களையும் பார்த்தாள். பளிச்சென்ற அதனுடைய வெள்ளை நிறம் கண்களைப் பறிப்பது போல் அவளுக்கு அழகுகாட்டியது. ஒரு பூவைப்பறித்துக் கண்ணிலொற்றினால், கண்ணும் மனமும் குளிரும் போல அவளுக்கு ஆசை வந்தது. உடனே அந்தச் செடியிலிருந்து ஒரு பூவைக்கிள்ளி கண்களை மூடிக்கொண்டு, ஒரு கண்ணில் அதை குளுமைபட ஒற்றி வைத்துக் கொண்டாள். கண்களை மூடிக்கொண்டு, எதையும் பார்க்காமல், எதையும் கேட்காமல்; இந்த சுகத்தையே மட்டும் அனுபவித்தால் போதுமென்று அவளுக்கு அப்போது தோன்றியது. இந்த இன்ப சுகத்துக்குள்ளே ஒரு நறுமணமும் அவளுக்கு வந்து சேர்ந்தது. அது பசுவின் பால் மணம், பசுவின்பால் அடுப்புப் பானையில் சூடாகிக் கொதித்துவரும் புதிய மணம், பூவின் சுகமும், கொதித்து எழும் பால் மணமும், அவளுக்குக் கொள்ளை இன்பம் கொடுத்தன. குசினியில் இருந்து அப்பம்மா குரல் கொடுத்தாள். “பிள்ள எங்கயம்மா நீ நிக்கிறாய்?” “இங்கயுள்ள முற்றத்தில நிக்கிறன் அப்பம்மா!” - அவள் கண்ணில் ஒற்றி வைத்திருந்த பூவை விலக்கினாள். விழிகளைத் திறந்து பார்த்தாள். "ஐயா வருகிற நேரமாச்சுதணை கவனம் பிள்ள. பாத்துப் படலையை உடன திறந்துவிடு.” அப்பம்மா அவளுக்குச் சொல்லிவிட "அதுக்குத்தானே இதில நான் நிக்கிறன் அப்பம்மா!” - என்று அவருக்குப் பதில் சொன்னாள் விசயா, "அடுப்பாலயிருந்து நான் பாலை றக்கீட்டன் பிள்ள. வாறன் ஆத்திப் போட்டுனக்கு கொண்டந்தாறன் குடிக்க.” அப்பம்மா அங்கிருந்து சொல்ல அதைக் காதில் வாங்கிக் கொண்டு ஐயாவின் வண்டில் வருகிறதா ώ0ώδου) διόδων υμνώδρή O 1 O

Page 11
என்று வீதிப்பக்கம் கண்களால் ஆராய்ந்து கொண்டு அவள் நின்றாள். சவாரி வண்டில் கண்ணில் தெரிய முன்பு, வீதியிலுள்ள சிறு சிறு கற்களின் மீது வண்டில் சில்லுகள் ஏறிவிழும்போது வரும் ஒசை சாமானியமாகவே வெகு தூரமளவிற்கு 'கட கட கட" வென்று பேரிரைச்சல் எழுப்பும்; அதனாலே அந்தச் சத்தம் வருமளவிற்கு அவ்விடத்திலே அவள் அதிக அக்கறைப்படாமல் நின்றாள். அவளது கவனம் இப்போது மாட்டுக் கொட்டிலின் பக்கம் திரும்பியது. "அப்பம்மா! செங்காரிக்கண்டக் காணேல்லக்கொட்டிலில அதையும் தம்பி அவிட்டுக் குளத்தடிப்பக்கம் மேச்சலுக்குக் கொண்டுபோட்டான் போலக் கிடக்கு?” "என்னடி பிள்ளையவன் ஐயாவெல்லே அதுக்கினிப்போய் இங்கவந்து சத்தம் போடப் போறார்?” "அதுதானே அப்பம்மா! அதுக்கு இண்டைக்கு குறிபோட வேணுமெண்டு அப்பப்பா அதக்கட்டிலை கட்டிப் போடச் சொன்னவர். இதை நான் அவனுக்கு நேற்றுப் பொழுதுபட படிச்சுப் படிச்சுச் சொல்லி வைச்சும் அந்தக் கழுதை அத மறந்து போச்சு.” “நல்லா மாடுகண்டை அங்க நிண்டு மேச்சுப் புடிச்சு முடிச்சுப்போட்டு சிமிக்கிணாம இங்க வரட்டுமவர்! தம்பிப்பிள்ளை வீட்டுக்கு வரட்டும்! வந்தப்பிறகு அவரிட்டப் பின்னேரம் அடியும் வாங்கட்டும்! நீ ஐயா வந்து ஏதும் கேட்டா, அவனுக்குச் சொன்னன் செய்யேல்லயெண்டு போட்டுச் சும்மாயிரு.” “அதுதானே அப்பம்மா! எனக்கேன் இந்த வில்லங்கத்தை ஒண்டும் சொல்வழி கேக்காம தன்ர யோசனைக்குத் திரியிறவன் வாங்கட்டும் அவரிட்ட நல்லாய் அடி.” வாயாலே அப்படிச் சொல்லிவிட்டாலும் மனசுக்குள்ளே தம்பியில் அவளுக்குப் பாசம் இருந்தது. பிறந்த வீட்டில் இருக்கும் வறுமையைத் தாங்காது தானும் தம்பியும் வந்து அப்பாவின் தாய்தந்தையரது வீட்டில் தஞ்சமடைந்து வாழ்கின்றோமே என்ற மன உளைச்சலில் சற்றுநேரம் அவள் உழன்றாள். "இந்தா பிள்ள பாலைக்குடி.” அவர்பக்கத்தில் நின்று சொல்லவும், திரும்பிநின்று அந்தத் தகரக் கோப்பையின் வளைந்த பிடிக்குள் தானும் இரண்டு விரல்களை நுழைத்து, அவள் அந்தக் கோப்பையைப் பிடித்து வாங்கிக் கொண்டாள். "குடிச்சிட்டு கொஞ்சம் குறுணல அள்ளிப்போடு பிள்ள கோழிக்கு. காலையில கோழியள் பாவம் தீன் தேடி அங்கயிங்க அலையிதுகள். முட்டைக் கோழியளையெல்லாம் கூட்டுக்கவிட்டு அடைச்சுக்கொண்டு மற்றதுகள வெளியால கலைச்சு விட்டனியே பிள்ள?”
”ஓம் அப்பம்மா..! அதெல்லாம் உள்ளவிட்டு அடைச்சுப்போட்டு மற்றதெல்லாத்தையும் வெளியாலை கலைச்சிட்டன். அந்தக் காப்பிரிக்கோழி
ருக்கப்பம்மா, அதை மாத்திரம் பிறிம்பா வெளியால உள்ள கடகப் பெட்டிக்க வைச்சுக் கவிழ்த்து மூடிவிட்டுட்டன் அதை அதுகளோட சேத்துக் கூட்டுக்க விட்டுட்டா கொத்தித் துலைச்சுப் போடுங்கள்.” பேர்த்தி அப்படிச் சொல்ல ஆச்சி கோழிக்கூட்டுப் பக்கமாகப் பார்த்தாள். அங்கு
jෂ්. ඊ. ෆණ්vගvෂීහගී O 2 O

பார்த்துக்கொண்டு புளியேப்பம் விட்டாள். பிறகு வாயிலெழும் ஒரு வகையான கசப்புணர்ச்சிக்கு, ஒரு வாய் வெற்றிலை பாக்குரலில் போட்டு இடித்து எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும் போல அவளுக்கு இருந்தது. "வெத்திலை ஒரு வாய்க்குப் போடோணும். ஏதோ வாய்க்க புளிச்சுப் பிரட்டுது எனக்கு” - சொல்லிக்கொண்டு ஆச்சி திரும்பி குசினிப்பக்கம் போனாள். விசயா பால் கோப்பையில் வாயை வைத்து பாலைச் சுவைத்தபடி, ஒரு மிடறு சூடாக உள்ளே விழுங்கினாள். அவள் மீண்டும் மீண்டும் சுவைத்துப் பாலைக் குடிக்கக் குடிக்க, பால் வெறு வயிற்றில் நிரம்பிச் சாந்தியளித்தது. மனமும் சாந்தமடைந்தது. அந்த வீட்டுக்கு இரண்டு வளவுகள் தள்ளியுள்ள மீசைப் பண்டாரத்தின் தோட்டத்திலிருந்து ஏத்துச்சாலில் தண்ணீர் இறைக்கின்ற சத்தம் கேட்டது. கயிறிழுக்குங் கருவி சுழன்றெழுப்பும் 'கிர்ரிச் கிரீச் சென்ற அந்தச் சத்தம் காலையிலும், பங்குனி வெக்கையினால் காற்று விரிவடைந்து அந்த மிகச் சிறிய ஒலிகூட தெளிவாகக் கேட்டது. அதனுடன் பண்டாரத்தின் தன்னானே ராகமும் கேட்டது. நாளாந்தம் ஏத்துச்சாலில் தண்ணீர் இறைக்கையில் அவன் பாடுகின்ற பாட்டைக் கேட்கும்போது அவளுக்கும் அதில் விருப்புத்தான். அந்த ஒரேயொரு பாடலின் அடியைமாத்திரம் அவன் திரும்பத் திரும்பப் படித்தாலும் அதைக் கேட்கக் கேட்கத் திகட்டாத மாதிரித்தான் எப்பொழுதுமே அந்தப் பாடல் அவளுக்கு இருக்கும். அமுதும் தேனும் கலந்த ராகத்தில் அவன் பாடுகிற அந்தப்பாட்டு: "கறி புளியாயெட்டு எங்க மாயா நாலு” தண்ணீரை மொண்டு சால்மேலேறி வாய்க்காலில் நீரை வெளியேற்றும் போது அதைப் பாடி முடித்துவிட்டு, அடுத்தமுறை மாடுகள் பின்னகர்ந்து சென்று தண்ணீரைக் கோலிவர மீண்டும் அதேவரியை இறைப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு அவன் பாடுவான்.
“கறி புளியாயெட்டு எங்க மாயா அஞ்சு” அந்தப் பாடலிலே அவளுக்கு கவனம் சென்று கொண்டிருக்க, முற்சந்தியிலுள்ள பாலத்தின் மீது சவாரி வண்டில் வந்துகொண்டிருக்கும் பழக்கமான சத்தம் அவளுக்குக் கேட்டது. உடனே பால் கோப்பையை மாலுக்குள்ளே வைத்துவிட்டு, தன் வலது கையிலுள்ள றப்பர் காப்புகளை ஏற்றி இறக்கிக்கொண்டு நடந்து அவள் படலைப் பக்கமாகப் போனாள். ஒடி வந்துகொண்டிருந்த மாடுகளின் நாணயக் கயிற்றை இழுத்து, வண்டிலின் சக்கரத் தடைகள் கிரீச்சிட அவைகளைப் படலைப்பக்கம் திரும்பி நிற்க சட்டென்று நிறுத்தினார் பொன்னுத்துரை. பிடி கயிற்றை இழுத்ததும் சட்டென்று தடையேற்பட்டு நின்றுவிட்ட மாடுகளிலிருந்து, பாய்ந்துவந்த பெருமூச்சுகள் வேலிப் பக்கத்துக் கிளுசிறியா இலைகளை ஊசலாட வைத்தது. பிடி கயிற்றின் சுண்டி இழுப்பில், மாடுகள் தலையை நிமிர்த்திக் கொண்டவாறு விறைப்பாக நின்றன. மாட்டுவண்டில் அந்தக் கானால் இறங்கி வந்து நின்று கொண்டபொழுது, அடர்த்தியான தூசியை அதிலே கிளப்பியது. அதைக் காற்று அடித்துக்கொண்டு போகவில்லை - அது தரையில்
வரழ்க்கையின் ரிறங்கஸ் O 3 O

Page 12
விழுந்து படியவுமில்லை - அது வேலியில் நின்ற கிளுவை மரங்களின் இலைகளின் இடையே தணிவாக மிதந்து கொண்டிருந்தது. அந்தப் புழுதிப் படலத்தில் முகத்தை ஒரு பக்கம் திருப்பி மூச்சை உள்ளுக்குள் பிடித்து வைத்துக்கொண்டு, விசயா படலைக் கயிற்றை அவிழ்த்தாள். கட்டவிழ்ந்ததும் அந்த மூங்கில் படலை, ஒரு பக்கம் சரிந்து சவட்டிக்கொண்டு கோணலாக நின்றது. அதைப் பிடித்து அவள் உள்பக்கமாய் இழுக்கும்போது, அதன் கீழ்க்கால் நிலத்தில் கோடுவரைந்து கொண்டுவந்தது. அப்படியே படலையை இழுத்த இழுப்பில் இப்பொழுதுதான் அவள் வண்டில் பக்கமாகப் பார்த்தாள். அப்பப்பாவின் வண்டிலிலிருந்து பின்பக்கமாக கீழே நிலத்தில் குதித்து, வண்டில் ஒரமாக அன்ரன் முன்னால் நடந்து வருவதைக் கண்டதும், அவளுக்கு உற்சாகம் மனத்தில் ஊற்றெடுத்தது. அவனைக் கண்டு விட்டால் எழும் மகிழ்ச்சியில் அன்றைய பொழுது பூராகவுமே அவளுக்கு இன்பமாகத்தான் கழியும். அவள் படலையை நன்றாய் ஓரத்துக்கு இழுத்து வைத்துக்கொண்டு, அதற்குப் பின்னால் ஒதுங்கி நின்றவாறு கீழெறியும் ஒரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அவனும் ஒரமாய் ஒளிந்தாற்போல் நிற்கும் அவளைப் பார்க்காமலில்லை. அவள் பார்த்த அந்தப் பார்வை, அவன் நெஞ்சில் பாய்ந்து உடலெங்கும் பரவி அவனைச் சூறையாடியது.
இருவர் பார்வைக்கும் நடுவிலே, அந்த மாட்டு வண்டில் இப்போது உள்ளே வந்து கொண்டிருந்தது. அவள் வண்டில் உள்ளே போனாற் பிறகு அந்தப் படலைய்ை திரும்பவும் இழுத்து வைத்து மரக்கப்போடு சேர்த்துக் கயிற்றாலே கட்டினாள். வண்டிலை வளவுக்குள்ளே சிறிது தூரம் போக விட்டு "ஹோவ் ஹோவ்” - என சத்தத்துடன் மாடுகளை குழப்பமற்ற நிலையில் நிறுத்தினார் பொன்னுத்துரை. “இந்த இடவன் மாடு இன்னும் படிமானத்துக்கு வரேல்லயடா தம்பி. வலவன் நல்லா சொல்வழி கேக்கும் - ரெண்டு பக்கத்துக்குப் பூட்டினாலும் அது ஒழுங்காப்பாயும் - ஆனா, இது இன்னம் பிரளி பண்ணிக்கொண்டு இருக்குதுபார்?” “அதுக்கென்னவோ இன்னும் கொஞ்சநாள் கிடக்கு! பழகப்பழக பேந்து அதுவும் மற்றதுமாதிரி சொல்வழி கேக்கத்து வங்கீடுமய்யா!” - அன்ரன் சொன்னான். விசயா படலையைக் கட்டிவிட்டு அந்தவிடத்தாலே குசினிப்பக்கமாகப் போக நடந்து கொண்டிருக்கும்போது அவன் சொன்னதைக் கேட்டு சொண்டுக்குள் சிரித்துக்கொண்டு போனாள். "நீர் அயலில உள்ள பெடி எண்டதால எனக்கெவ்வளவு தம்பி நீர் உதவியாயிருக்கிறீர்! ஆனா இந்த என்ரை பிள்ளையளைப்பாரும் - பேரப்பிள்ளையளையும்தான் சேர்த்து நான் சொல்லுறது - ஒண்டுமே பாரும், எல்லாம் உதவாக்கரையள். அதுகளுக்கு கெட்டித்தனமெண்டு அப்பிடி ஒண்டும் இல்ல. அதுதான் அதுகளை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கிறேல்ல. சும்மா எல்லாம் சோத்து மாடுகள்!” பொன்னுத்துரை அவனைப் பார்த்துச் சொல்லிக்கொண்டு பிடிகயிற்றுடன் வண்டிலின் ஆசனத்தட்டிலிருந்து கீழே இறங்கினார். அவர் வண்டிலின் ஒரு பக்கம் நின்று மாட்டினது கழுத்துக்குக் கீழ் உள்ள தாழக்கயிற்றை அவிழ்க்க;
ff. 49. ථNගvගvජ්හෆ් O 4 O

அவனும் நுகத்தடியில் மறுபக்கமுள்ள மாட்டை அவிழ்த்தான். அந்த மாடுகளுக்குக் கடைக்கிட்டி பிடித்துப் பழக்கிய காரணத்தால் அது அவனுக்குக் கொஞ்சம் அமைவுடன் நின்றது. பிறகு அவன் “ஏ-ஹோய்ய்.” என்று ஒரு வித சத்தம் வைத்தபடி முதுகுப்பக்கம் பிடி கயிற்றை தூக்கிப்போட நிமிர்ந்த நடையில் அது முன்னே நடக்கத் தொடங்கியது. நன்றாய் ஒடுகின்றதும் வேகமாய் நடக்கக்கூடியதுமான ஒரு மாடு - அது நடந்து செல்கின்ற வேளையில் முன்னங்கால் வைக்கிற அடிக்குப் பின்னங்காலை - அதைவிடக் கூடியதாய் முன்னுக்கு அரை அடி கூட வைக்கும்' - என்று ஐயா முன்னம் ஒருமுறை தனக்குச் சொன்னதை வைத்துப் பரீட்சிக்க, அவனது கண்ணோட்டம் இவ்வேளை அதன் நடையின் மீதிலே சென்றது. “நல்ல சவாரி மாடு இது!” - என்று அந்த மாட்டைப் பார்த்து திரும்பவும் தன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டு பொன்னுத்துரை ஐயாவுக்குப் பின்னாலே அவனும் மாட்டைச் சாய்த்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலடிக்குப் போனான்.
குசினிக்குப் பக்கத்தால் போய்க்கொண்டிருக்கும் போது மாடு அவரை இழுத்துக்கொண்டு போகிற போக்கில் 'தம்பிக்கும் சேர்த்து பால் கொண்டாணை அங்க நாங்க மாலுக்க இருக்கிறம்.” - பொன்னுத்துரை தன் மனைவிக்குக் கேட்கக் கூடிய அளவில் வலிதாக அதை அவ்விடத்தில் சொல்லிவிட்டுப்போனார். அவர் சொல்லி வாய் ஒய முதலே குசினிக்குள் நின்று கொண்டிருந்த இராசம்மா ஆச்சி "ஆக் கொண்டாறன் நான் உடன” - அவள் பதில் கொடுத்தும் விட்டாள். வயது போனாலும் புருஷனிலே அவ்வளவு மரியாதை அவளுக்கு எதிலும் அவர் எள்ளென்றால் அவள் உடனே எண்ணெயாகி விடுகிறவள். பொன்னுத்துரை தான் கலைத்துக்கொண்டு போன காளை மாட்டை அந்தக் கொட்டில் கப்பிலே கொண்டுபோய்க் கட்டினார். 'தம்பி என்ரை இந்த ரெண்டு மாடுகளையும் ஆரும் நம்பி றேகக்கு ஒடுறத்துக்கு வாங்கலாம்! அது ஏனெண்டொருக்கா நீர் என்னைக் கேள்வி கேக்கேல்ல?” - அவர் அவனைக் கேட்க, அவர் மாட்டைக் கட்டியிருந்த இடத்துக்கு எதிர்ப்பக்கம் அந்தக் கொட்டில் நிறுதிட்டமாய் நிற்கும் காலிலே தான் கொண்டுபோன மாட்டின் கயிற்றை இணைத்துவிட்டு அவரைப் பார்த்து அவன் சிரித்தான். அவன் பொன்னுத்துரை ஐயாவுக்கு முன்னும் பின்னுமாகத் திரிகிறதே இந்த மாட்டுச் சவாரிப் பைத்தியத் தால்தான்! “அவனுக்கும் சவாரி மாடு ஒரு சோடி வாங்கி வளர்க்க வேணும்! அந்த மாடுகளைச் சவாரி ஒடுற அளவுக்குப் பழக்கி றேசில விட வேணும் றேசில முதல் பரிசான தங்கப் பதக்கமும் பணமும் பெறவேணும் சவாரிக்காறன் எண்டுற பெயர் எடுக்கவேணும் - புகழ் பெறவேணும்! என்றெல்லாம் மனத்தில் கொள்ளையான பல ஆசைகள்தான்! ஆனாலும் இதற்கெல்லாமாக முதன்முதலில் அவன் இந்த மாடுகளைப் பற்றிய பூர்வாங்க விஷயங்களை, நன்றாக அவரிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இருந்தது. இதனால் ஐயாவின் முகத்தைப் பார்த்தபடி "எல்லாம் நல்லாய் அறிஞ்சு வைச்சிருக்கிற நீங்க சொன்னாத்தானே அதுகளெல்லாம் எனக்குப் பிறகு
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 5 O

Page 13
தெரியவரும் ஐயா” - என்றான் அவன். "அன்ரன் றேஸ்மாடுகள் பாத்து வாங்கேக்கிள்ள நிறத்திலையும் பார்த்துத்தான் அதைப் பிடிக்க வேணுமடா தம்பி! இந்த மாட்டை நீரொருக்கால் பாரும். இது கறு வெள்ளை நிறமாயிருக்கு. இந்த மாட்டை நம்பி ஆரும் றேகக்கு வாங்கலாம். அதே மாதிரித்தான் நீர் அங்க கட்டிவிட்ட அந்த மாடும் தம்பி! கறுப்பில கீரைக் கொட்டைக் கறுப்பாயுள்ள மாடுதான் சோக்கான மாடு. உதின்ரை அந்த நிறத்தையும் பாத்திரே? அந்தமாதிரி இருக்கு! பாக்க என்னமாதிரி இதுகள் ரெண்டும் நல்லெண்ணை மாதிரி மினுக்கமாயிருக்கு இதுகள்தான் றேகக்குத் தோது!” அன்ரன் அவர் சொன்னதைக் கேட்டு அந்த மாடுகளையும் ஒருமுறை ஊன்றிக் கவனித்துப் பார்த்துக்கொண்டு; அவர் அதிலே கட்டுப்போட்டு விட்டிருந்த அந்தக் கறுவெள்ளை மாட்டுக்குப் பக்கத்தாலே வந்தான். அந்த மாடு திற்மையுள்ள குத்துச்சண்டை வீரனைப்போன்று அதிலே நின்று கொண்டிருந்தது. “கை காலைக் கிணத்தில போய்க் கழுவீட்டுப் பேந்து மாலுக்க போயிருப்பம் தம்பி!” - அவனைக் கிணற்றடிக்குப்போக அழைத்தார் பொன்னுத்துரை. அப்படிச் சொல்லிக் கொண்டு 'பெருவிலிம்பிலி - மரத்துக்குப்பக்கத்தாலே அந்தப் புளிப்பழங்கள் கால்களில் நசுங்கி சாறு பீறிட, அவர் அந்தக் கிணற்றடிப் பாதையிலே நடந்தார். அவனும் அவர்போன அடிகளையொற்றி தன் கால்களை வைத்து நடந்தான். ஈரக்காலைப் பிறகு மண்புழுதியில் கொண்டு சென்று வைக்கும்போது, புழுதியெல்லாம் பாதத்தில் அவனுக்கு அப்பிப் பிடித்துக்கொண்டது. கிணற்றடிக்குப் போகும் அந்தப் பாதையின் அருகே உள்ள ஒலை வீடுதான் தங்கம்மாவின் வீடு. இவர்கள் இருவரினதும் காலடியோசை கேட்டு, அவள் இப்போது தன்வீட்டு வாசல் பக்கமாக வந்து நின்றாள். ஆனாலும் மாமனாரை அதிலே கண்டு விட்டு, அவள் திரும்பவும் வீட்டின் உள்ளே போய்விட்டாள். அவரின் இளைய மகனை திருமணம் முடித்து இன்று அவரை இழந்து தான் விதவையாகப் போய்விட்டாலும், பத்து வருடங்கள் இந்தக் காணியிலே ஒரு மூலையில் இருந்து பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு வருகின்றேனே என்ற நன்றி உணர்வு மட்டும் மனத்தில் குன்றாது அவளுக்கு அவரிடம் இருந்து கொண்டிருந்தது. பணம், காசு, பொருள் - என்று பெரிதாக அவர் ஒன்றும் மருமகளான தனக்குக் கொடுத்து உதவி செய்யாது போனாலும், அவள் அவரிலே இந்த மரியாதை ஒன்றை தொடர்ந்து வைத்திருந்தாள். கடையப்பம் செய்து சாப்பாட்டுக் கடைகளுக்குக் கொடுத்துத்தான் அவளுக்கு சீவியப்பாடே நாளாந்தம் போய்க் கொண்டிருந்தது. அவளுக்கு உள்ள இரண்டு பிள்ளைகளுமே ஆண் பிள்ளைகள். கொஞ்சக் காலத்தில் அவர்களும் கிசு கிசென்று வளர்ந்து ஆளாகி வந்துவிட்டால், தான் பிறகு இருந்து கஷ்டப்படுவதற்குத் தேவை இல்லை; “ என்று அவள் மனத்தில் ஒரு நம்பிக்கையோடு காலம் கழித்துக் கொண்டிருந்தாள்.
成。血。 அருணர்தம் O 6 O

அன்ரன் கிணற்றடிக்குப் போனதும் கிணற்று வக்கிலே போய் இருந்து கொண்டு; அங்கே துலாவின் வாளிக் கயிற்றை உள்ளே கிணற்றுக்குள் விட்டுக்கொண்டிருக்கும் ஐயாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவருடைய சட்டையில்லா மேனியைப் பார்க்கத் திண்ணென்றிருந்தது. எண்பது வயதாகியும் வயதை மீறிய இளந்தாரிக் கலகலப்பு உள்ள அவரிடம் வேரோடிக் கிடக்கின்ற அந்த மேனி வளப்பத்தையும், உடல் வலிமையையும் நினைத்து அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. "இந்த வயசிலையும் அந்த மாதிரிக் கெட்டித்தனமாய் இவர் வண்டில் சவாரிவிடுகிறாரே..? இந்த ரகசியத்தை அவரிட்ட ஒருக்காக் கேட்டாலென்ன. கேட்போமா?” - என்று அப்பொழுது அதை அவன் நினைத்துக் கொண்டாலும்; “சீ. ஏன் இதை அவரிட்டை நேர கேட்கப்போவான் - அவர் பெரிய வயசு போன மனுசன் - என்ரை வயசுக்கு அப்பிடி அதையெல்லாம் கதைச்சா அது மரியாதையாயில்ல' - என்று நினைத்துப் பிறகு பேசாமல் இருந்து விட்டான். கிணற்றுக்குள்ளே தண்ணீர் கோலி நிரம்பி விட்ட வாளியை மெதுவாக அவர் ஒரு இழுவையில் மேலே தூக்கிவிட்டார். பாரம் கட்டியிருந்த துலாக்கயிறு அந்தப் பெருவாளியை 'சர்' - ரென்று உடனே இழுத்துக்கொண்டு மேலே வந்தது. கயிற்றுச் சுருக்கிலே கிடந்த வாளி சுழன்று மேலே வரும்போது சிந்திய தண்ணீர் உள்ளே கிணற்றுக்குள் மீண்டும் சிந்தி தண்ணீர் தண்ணிருடன் மோதும் சத்தம் வெளியே கேட்டது. பாரப்பக்கம் துலா தாழ கைக்கு வந்துவிட்ட வாளித் தண்ணீரை கிணற்றுப் படிக்குப் பக்கத்தில் இருந்த பெருங்கைப்பிடி வாளிக்குள் அவர் வார்த்துவிட்டார். "தம்பி நல்லாக் கழுவும் தம்பி கைகால.” "ஐயா நான் நிண்டு அள்ளித்தாறதை விட்டுட்டு நீங்கள் அள்றியள்? என்ன வேல ஐயா நீங்க பாக்கிறியள்?” - அவனுக்கு அப்படிச் சொல்ல வேண்டும்போல தோன்றியது.
"நீரென்ன அள்ளுறது, கழுவும் தம்பி நீர்..?” "நீங்களயப்யா..?”
“எனக்கு தண்ணிக்கு இனி வாளிய விடப்போறன் கிணத்துக்க.." சொல்லிக் கொண்டு கிணற்றுப்படியிலே திரும்பவும் ஏறிநின்று துலாக்கயிற்றை வலக்கையால் அவர் உரமாக உள்ளே ஒரு இழுவை இழுத்தார். அந்தக் கயிறு கிணற்றுள் போய்க்கொண்டிருக்க கைக்குள்ளே கயிற்றை அவர் உருவ விட்டார். அடுத்து இன்னும் உள்ளே செல்ல ஒரு கயிற்றிழுவை வாளி தண்ணீர்ப் பரப்பில் சென்று வாயைச் சரித்துத் தண்ணீர் கோலியானதும் மேலே வர ஒரு இழுவை, இன்னும் ஒரு கடைசி இழுவையோடு வாளி கைக்கு வந்திட, தண்ணிரை அவனுக்குக் கழுவிக்கொள்ள வார்த்து விடுவதற்காகத் திரும்பினார்.
“எனக்குக் காணுமையா நான் வடிவாக் கழுவிட்டன்!” அவன் சொன்னதை அவர் கேட்கவில்லை. அவனது காலுக்குக் குளிர்ச்சிபட அந்தத் தண்ணிரை
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 7 O

Page 14
ஊற்றினார். அவன் சாரத்தை கையால் கால்கவட்டுக்குள் ஒதுக்கிக்கொண்டு சிரித்தான். அவர் திரும்பவும் அந்த வாளியை கிணற்றுக்குள் விட அவன் அந்த வக்கின் மேல் இருந்து கொண்டான். "ஐயா வாற மாதத்துக்கு அடுத்தமாதம் போல இங்க வண்டில் றேஸ் நடக்கப் போகுதெண்டு ஒருக்காச் சொன்னியள். அதுக்கு அங்க யாழ்ப்பாணத்தில இருந்தும் வண்டில் மாடுகள் இங்க வவுனியாவுக்கு வருதே றேஸ் ஒடுறதுக்கு?” அவன் கேட்க அவர் தண்ணீர் கோலிய வாளியை பாரத்துடன் அப்படியே தாழ நிற்க நிறுத்திவிட்டு, திரும்பி அவனைப் பார்த்தார். இடக்கையால் வலப்புறத்துத் தோளைத்தடவி பிறகு முசுமுசுவென்று முண்டிய மயிர்த்திரளோடு உள்ள நெஞ்சைத் தடவி விட்டுக்கொண்டு அவனுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார். "தம்பி அவ்விடத்த மாதனையில இருந்தும் கம்மாலைக்காரங்கள் இங்க ரெண்டு சோடி மாடுகள் கொண்டரப் போறாங்களெண்டும் எனக்குக் கேள்வி அடுத்து மானிப்பாயிலயிருந்தும் அங்க யாழ்ப்பாணமெல்லாம் றேககளில நல்லாக் கலக்கியடிச்சுத்திரியிற பெரிய புள்ளியொண்டும் இங்க வரப்போறார் போலக்கிடக்கு உங்க வவுனியாவில குடியிருப்புப் பக்கம் அவர் துரையற்றை மாடும்
பண்டாரிகுளத்தில இருக்கிற அவர் மணியற்றை அந்த மாடுகளும் - உங்காலிக் கோயில் குளத்தில இருக்கிற அவர், அவர்தான் அவற்றை பேரும் உடன ஞாபகம் வரேல்ல? - அந்த ஆளுக்கு என்ன பெயரெண்டா. ஆ. அவர் செல்லையா! - அவற்றைமாடும், உவர் இருக்கிறார் எங்கட வீட்டுக்குப் பக்கத்து வளவு தள்ளி இருக்கிற - அவர் தான் லொறிக்காரச்சிங்கராயர் - சில்லாலை ஆள். இப்பிடி எல்லாரும் கட்டாயம் றேசுக்கு வந்து அண்டைக்கு இங்க சேருவினம் தான் போலக்கிடக்கு. பாப்பம் உதுக்க நானும் சவாரியோடி ஒருக்கா..!! சூசைப்பிள்ளையார் குளத்தில இந்தப்பழைய றேஸ்கார ஆள் பொன்னுத்துரையற்றை மாடுகளும் இதிலை அண்டைக்கு ஒடி ஒருக்காப் பாக்கத்தானே போகப்போகுது .ம்..ம்..ம்.” சொல்லிவிட்டு அவர் மீசைக்குள் தெரியாத ஒரு ராஜ முறுவலோடு அமைதியாக அவனைப் பார்த்தார். அவரின் மூக்கு நீளத்துக்கு அந்த மீசையும் ஒரு எடுப்புத்தான். அவரது உருட்டுத்தூண் மாதிரியான தேகவாகும், வளர்த்தியும், மாட்டு வண்டில் சவாரிக்கென்றே சிருஷ்டித்தாற் போல அவனுக்குத் தெரிந்தது. அங்குள்ள வேற்று மனிதரைப் போலல்லாது அவர் வைத்துக்கொண்டுள்ள தலைக்குடுமியும் அவரின் மேல் அவனுக்கு ஒரு மரியாதையை மனத்தில் ஊன்றச் செய்தது. ஒரு பழம் பண்பாட்டுச் செறிவுடன் இருக்கும் அவரிடம் அன்பும் அவனுக்கு மனத்தில் மிகுந்தது. "நீங்கள்தான் இந்த றேசில சுவறா வெல்லுவியளையா.” - அவன் எடுத்தவாக்கில் இதை உடனே மன நம்பிக்கையுடன் அவருக்குச் சொன்னான். அப்படி அவன் சொன்னபோது அவருடைய முகத்தில் கிழவர்களுக்கே இருக்கும் ஒருவித முகக் களைத்தோற்றத்திலிருந்து இளைஞர்களுக்குரிய ஒரு மாறுதல் தோன்றுவது போல் இருந்தது. "நான் வெல்லாம விடுவனே ஆரையும் இந்த றேசில வெல்ல.? நல்ல பகிடி! நான்தான் வெல்லுவன்! என்ரை
fl. 60. ෆGövගvහීහර් O 8 O

மாடுகள் கட்டாயம் வெல்லும் தம்பி! என்ரை மாடுகள் நல்லா ஒடிக் குடுக்கும். அதை அப்ப நீரும் பாப்பீர்! அப்பிடியாயுள்ள ஓரிணை மாடுகளத்தான் நான் றேகக்கெண்டு வளக்கிறன்." சொல்லிவிட்டுத் திரும்பி நின்று உள்ளே தண்ணீர் கோலி நின்ற வாளியை அவர் கிணற்றுக்குள் இருந்து வெளியே வர கயிற்றைப் பிடித்து இழுத்தெடுத்தார். அவர் வாளித்தண்ணிரையெடுத்து கை கால் முகத்தைக் கழுவிக் கொண்டிருக்கும் போது, அவன் அந்தக் கிணற்றடி வளவைப் பார்த்தான். அந்தக் கிணற்றுக்குப் பக்கத்தேயெல்லாம் அரணிப்பாக வாழைகள் நின்று கிளைத்துக் குலைகளெறிந்திருந்தன. அவற்றுக்குக் கொஞ்சம் தள்ளி நின்ற இளம் வாழைகளின் தளிர் இலைகள், பச்சை நிறத்தில் வெயிலில் சுடர்ந்தன. கிணற்றுத் தண்ணீர் பாய்கின்ற அந்தக் குளிர்ந்த நிலத்தில் கிணற்றைச் சுற்றிப் புருவமிட்டவாறு நின்ற கமுக மரங்களும் நல்ல புஷ்டியாக வளர்ந்திருந்தன. அந்தக் கமுக மரங்களெல்லாம் பாளை விட்டு மலர்ந்து, குலைகளினிறையக் காய் கொண்டு பழுத்திருந்தன. ஒவ்வொரு கமுகிலும் நான்கு, ஐந்து, ஆறு குலைகளுக்குக் குறைவில்லை. அவன் அந்தக் குலைகளைப் பார்த்து வியந்து கொண்டிருக்க, ஒரு கமுகமரத்திலிருந்து பாக்கு ஒன்று கீழே விழுந்தது. அந்தப் பழப்பாக்கு கிணற்றுக் கட்டில் விழுந்து சறுக்குப் பட்டுப்போய், ஜயா முகம்கழுவிக் கொண்டிருந்த வாளித் தண்ணிருக்குள் விழுந்தது. ப்ாக்குப் பழத்தைக் கையிலெடுத்துக்கொண்டு மிஞ்சிய தண்ணீரைக் காலுக்குப் பிறகு ஊற்றி காலை ஒன்றின்மேல் ஒன்று வைத்தபடி தேய்த்துக் கழுவி முடித்து, வாளியைக் கவிழ்த்து நிறுத்தி விட்டு "ம். வாரும் தம்பி மாலுக்க இனிப்போய் இருப்பம்!” - என்றார் அவர். அவர் சொல்லிவிட்டு முன்னால் நடந்துபோக, அவருக்குப் பிறகாலே அவன்போனான். அந்தப் பெரு வளவில் புதுவழி ஒன்றைப் பிடித்து அவர் போவது போல் அவனுக்குத் தெரிந்தது. அவர் போகும் அந்த வழியில் பலாவும், தென்னையும், மாமரங்களும் நின்றதால் அந்த இடமெல்லாம் குளுகுளு' - என்றிருந்தது அவனுக்கு ஐயா போகும்போது அங்குமிங்குமாகப் பார்த்தபடி அங்குதன் பார்வையில் படுகின்ற தென்னைகளில் தேங்காய் முற்றியுள்ளதா? என்று கணிப்பிட்டுக் கொண்டு போனார். வளவின் வெட்ட வெளியான சிறிய இடம் காணவும் மாடுகளைக் கட்டுவதற்காக குறுந்தடிகள் நிலத்தில் நடப்பட்டிருக்கிற இடத்தைக் குறிப்பாகப் பார்த்தார். “பிள்ளை விசயா! எங்க செங்காரிக் கண்டைக் காணேல்ல? எங்கையும் அதைக் கொண்டோய் வேற இடமா அவிட்டுக் கட்டிட்டியளே?” அவர் உரத்து ஒரு சத்தம் போட்டுவிட்டு அருகேயுள்ள குசினிப்பக்கமாகப் பார்த்தார். கோழிக்கு குறுணல் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த விசயா - ஐயா சத்தம் போடுவதைக் கேட்டுப் பயந்து பெருவிழியாய் அதிலே நின்றபடி விழித்தாள். அரிசிக் குறுணல் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த அவளது கைவிரல்களெல்லாம் குஞ்சுக் கடகப் பெட்டிக்குள் இருந்த குறுணல் களுக்குள் புதைந்து விட்டன. ஐயா கேட்ட கேள்விக்குப் பயந்து போய்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 9 O

Page 15
எங்காவது இப்போது தானும் போய் ஒளிந்து கொண்டுவிட்டால் தேறலாம் என்று அவள் அந்தரித்தாள். அவள் குறுணல் எடுத்து நிலத்தில் வீசாது நேரம் தாழ்த்தியதால் இரண்டு கோழிகள் அவள் கால் பாதத்தடிக்கு வந்து விரல்களையும் கொத்திவிட்டன. காலை உதறிக் கோழிகளை "சூ. சனியன்கள்” என்று திட்டிக் கலைத்தாள் அவள். அவளுக்கு அழுகை வருமாப்போல் இருந்தது. அப்பப்பாவின் அருகில் அன்ரன் நிற்பதைப் பார்த்து அவளுக்கு வெப்பியாரமாகவும் இருந்தது. "ஐயா நான் தம்பிக்கு வேளைக்கே சொல்லிவைச்சனான். ஆனா அவன் அதைக்காலேல மறந்து போட்டான் போல. அந்தக் கண்டையும் அவிழ்த்து மற்ற மாடுகளோட குளத்தடிக்கு அங்க புல் மேய விடுறத்துக்குக் கொண்டு போட்டான் போலக் கிடக்கு." ஐயாவோடு பேசும்போது குரலுயர்த்தி அவள் பேசுவதில்லை. மெதுவான குரலில் இதைச் சொன்னாள் "மொக்கன் படு மொக்கன் சொல்றதொண்டும் விளங்காத மொக்கன்.”
“என்ன செய்யிறதினி பொழுது படவர அதைப் பேந்தும் பிடிச்சுக் கட்டிவிடலாம்தானே ஐயா? என்னத்துக்கு ஐயா மாட்டைக் கட்டிவிடச் சொன்னியள்?” இந்தச்சூழ்நிலையில் அவளுக்குப் பாதகமில்லாமல் அவரைச் சமாளித்துவிடவேண்டுமென்று அன்ரன் நினைத்தான். "அந்த மாட்டைக் கட்டில விடச்சொன்னது தம்பி.” - என்று அவ்வளவையும் அவனுக்குச் சத்தமாய்க் கேட்கச் சொல்லி வந்தவர், பேர்த்தி அதிலே நிற்பதைக் கவனத்திலெடுத்ததும் மிகுதியை அவனுக்கு இரகசியமாகச் சொன்னார். “அதுக்கு நலம்போடயடா தம்பி இண்டைக்கு நல்ல நாள் கண்டீரோ - அதுதான் அதைக் கட்டில கட்டி விடச் சொன்னனான். மாட்டுக்கு நலம் போடுறது நாலுபல்லு அல்லாட்டி ஆறு பல்லு இருக்கைய்க்க போட்டிட வேணும் - அல்லாட்டி நரம்பு முத்தி முறுகி பேந்து அதுகளுக்கு நரம்பப் பாத்துத் தடவி எடுத்து ஒவ்வொருவிதயா கசக்கிக்கரைச்சுவிடுற அதெல்லாம் கரைச்சல் தம்பி ஒரு நல்ல சாதி மாட்ட இப்பிடி பாய்ச்சல் காட்டுற வேகம் குறையாம வளக்கிறதும் பெரிய வேலயடா தம்பி! ஏனெண்டா ஒரு பசுமாட்டப்பாத்தா அது பின்னால போயிடும். பேந்து அதோட கூடிட்டெண்டா வீரியம் போயிடும், அதால பாயிற வேகம் மட்டுப்பட்டு பேந்து அதுகளுக்கு பசுமாட்டில கவனம் போயிடும். இதால அதுகளுக்கு வேகம், வெறி ஒண்டுமே இல்லாமப்போய் மாடு உழண்டிரும் தம்பி!” - தேர்ச்சி நிபுணத்துவத்துடன் அவர் சொல்வதைக் கேட்டபடி அன்ரன் அங்கே அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த விசயாவையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். தன்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க அன்ரன் எதையாவது ஐயாவுக்குச் சொல்லி சமாளித்திருப்பார் என்று அன்ரனைப் பார்த்தவண்ணம் விசயா தன் மனத்தில் நினைத்தாள். அதனாலே பிறகு ஒரு அன்புப்பார்வையை அவன்மேலே வீசிவிட்டு மீந்திருந்த அரிசிக் குறுணலை .பப் பப் பப். என்று கோழிகளை ஒன்று சேரக் கூப்பிட்டு அதிலே நிலத்தடியில் உள்ளதெல்லாவற்றையும் கொட்டிவிட்டு - ஐயாவைப் பார்ப்பதுபோல் பாசாங்கு காட்டி அவனைக் குறிப்பாக மீண்டும்
jෂ්, ෆි, ෆයි‍ෙගvග්vණිගඨ O 10 O

ஆசையோடு ஒரு கனவுப் பார்வை பார்த்துவிட்டு - அவள் குசினி வாசல் பக்கம் போனாள். அவளது பார்வையின் மின்னல் தாக்குப்பட்ட ஒரு இன்ப அதிர்வுடன் அவன் ஐயாவுடன் சேர்ந்து அங்கேயிருந்து மாலுக்குள்ளே பிறகு வந்து சேர்ந்தான். ஐயா அங்கிருந்த மடக்குச் சாய்வு நாற்காலியில் போய் இருந்து ஆயாசமாய் உடலைச் சாய்த்துப் படுத்துக் கொண்டார். அவன் அவருக்கு அருகே கிடந்த வாங்கில் போய் இருந்தான். "எங்கயப்பா எங்கயணை பால்? குடலை விறாண்டுது கொண்டா கெதியா?” மெல்லிய சூட்டோடு பாலை செம்பில் ஊற்றி - அதற்குமேல் வாழை இலைத்துண்டு போட்டு மூடிக்கொண்டு வந்து - அதைக் கணவரிடம் கொடுத்தாள் இராசம்மா ஆச்சி. "தம்பிக்கு இப்ப இனி வாறன் பிள்ளை கொண்டந்தாறன்” . என்று சொல்லிவிட்டு ஆச்சி மாலின் உள்வாசலால் போக விசயா பால் கிளாசுடன் அவனுக்குத் தெரியக்கூடியதாய் அதில் நின்று தன்னை வெளிக்காட்டினாள். மீண்டும் அவனை நோக்கி அதேபார்வை. அந்தப் பார்வையில் அவள், செளந்தரியத்தின் மந்திரச் சுவர்களை திறந்து வைத்திருக்கிறாளா? - என்று அவன் நினைத்தான். அவனுக்கும் ஒருவித மயக்கம். ஆனாலும், அது ஒரு வினாடி நேரம் மட்டுமே அவனுக்கு நீடித்தது. அவள் கொண்டு வந்த பால் கிளாசை அப்பம்மாவின் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். அவள் போனதன் பின்பு புதியகாற்று தன் முகத்தில் வீசிய போதுதான் அந்த மயக்கத்திலிருந்து அவன் விடுபட்டான். ஆச்சி கொடுத்த அந்தச் சர்பத்துக் கிளாசிலுள்ள பாலை குடித்தபோது மனத்தில் அவளைப் பற்றியெழுந்த ஆசைகளும் ஓசைகளும் அடங்கியதைப் போல அவனுக்கு இருந்தது. ஆச்சி தன்னிடம் பாலைக் கொடுத்துவிட்டுத் திரும்பிப்போய்விட்டாள் என்பது அவனுக்குத் தெரியும்.ஆனாலும் இதுவரை, ஐயாவை அவன் கவனிக்கவில்லை. அப்போதுதான் அவரைப் பார்த்தான். அவர் தான் குடித்து முடித்துக் காலியான செம்பினுள் வாழை இலையை உள்ளே வாய்க்குள் புகுத்திவிட்டு; தொண்டையைச் செருமினார். சிறியதொரு யாசனைக்குப்பின் “பிள்ளை விசயா மாட்டுக்குத் தீனை கவனமாக் கலந்துகொண்டுபோய் வைச்சுவிடடி பிள்ளநீ!. அவன் அந்த மாட்டயும் கலைச்சுக்கொண்டு போட்டான் காலேல. எல்லாமே எனக்கு அதாலை இப்ப குழம்பிப் போச்சு. எல்லாத்தையும் அவன் தலைகீழாக்கிப் போட்டான். இனிப்போய் நான் கறி வாங்கி வரவேணும் . அதுவேற வேலை இருக்கு இனி எனக்கு. நானில்லாம ஒரு வேலையுமே இங்க ஒழுங்கா ஒருக்காலும் நடவாது - சிக் - பிள்ளை சொன்னது கேட்டுதே உள்ளுக்க குசினிக்க இருக்கிற உனக்கு.?” அவள் குசினிக்குள்ளே நின்று கொண்டு மாலுக்குள்ளேயிருந்து ஐயா சொன்னவைகளைக் கவனத்துடன் கேட்டபடி நின்றாள். ஆச்சியும் அவ்விடம் குசினிக்குள்ளே ஒரு பலகையில் குந்தி இருந்தபடி அவர் சொன்னதை மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
வரழ்க்கையின் சிறக்கஸ் O li l O

Page 16
"இந்தா பிள்ளை அங்கயிருந்து ஐயா இப்ப சொல்லிப்போட்டாரெல்லே? கவனமாய் அவர் சொன்னதெல்லாத்தையும் நீ ஒழுங்காய்ச் செய்திடடி பிள்ள அடுத்தறையிக்க அள்ளி எடுத்திருக்கிற அந்தக் குறைச்சாக்கில கிடக்கெல்லே - கொஞ்சம் பச்சரிசித்தவிடு - அதை வாளிக்கிள்ள கணக்காயெடுத்துப்போட்டு - அந்த நெல்லுமூட்டையள் அடுக்கியிருக்கிற அட்டிக்குக்கீழ உள்ள வாய் கட்டின சாக்க அவிட்டு - அதிலை கொஞ்சம் உளுத்தம் குறுணியும் எடுத்துப்போட்டுக் கொண்டோய் மாட்டுக்கு வைச்சு விடு? "அப்பம்மா கொண்டல் கடலையும் வெந்தயமும் அதுக்க போட வேணுமோ, வேண்டாமோ?” அவள் மாட்டுத் தீனிக்கலவையில் இரண்டு தானியப் பொருட்கள் குறைந்ததாகி விட்டதோ? - என்ற சந்தேகத்தின் நிமித்தம் அப்பம்மாவிடம் இதைக் கேட்டாள். "ஆ அதுகளா? அவர் நேற்றைக்கு மாடுகளுக்குப் போட்டு வைச்சிருக்க வேணும் பிள்ளை! நான் அவர் ஊறவைச்ச அந்தக்கடலையையும் வெந்தயத்தையும் போட்டு அதுக்க கலக்கைக்க கண்டனான். அதால இனி அடுத்த கிழமைதான் தீனியில பிறகு அதுகளுக்குக் கடலையக் கலந்து வைக்க வேண்டிவரும். இப்ப நீ உதுகளைத்தான் எடுத்து வை - போ.” சொல்லிவிட்டு ஆச்சி கீரைக் கட்டை கடகப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்துச் சுளகில் வைத்துக் கொண்டாள் கத்தியால் அரிய. "அப்பம்மா இண்டைக்கு என்ன கீரைக்கறி அப்பம்மா அப்பப்பாவுக்கு?” "நல்ல புளியாரைக் கீரைதான் சோத்துக்கு அவருக்கு இண்டைக்கு! இது அங்க எங்கட கிணத்தடிப் பின்னாலயள்ள தோட்டத்துக்கதான் வெட்டிக் கொண்டந்தது - நேற்று முருங்கையிலையெல்லே - முந்தநாள் வந்து சமைச்சது அந்த முளைக்கீரை - அதுக்கு முதல் பருப்புக்கீரையும் - ஆக அதுகளெல்லாத்துக்கும் முதல் நாள் பாற்சொதிக்கீரை சமைச்சதுக்கு இண்டைக்காயிந்தக் கன நாளுக்குப் பிறகு புளியாரைக்கீரைதான் இலைக்கறி இந்தக் கீரைக்கு ரெண்டு பச்ச மிளகாயப்போட்டு சொட்டுத் தேங்காயெண்ணயை வாடையும் காட்டீட்டால் காணும். அதோடயடி பிள்ளை கொத்தவரங்காய்க் குழம்பு. விரால் மீன் குளம்புக்கு இது எப்டி-டி இருக்கும் பிள்ளை அந்த மாதிரியெல்லே!!” ஆச்சி சமையலில் பதார்த்த லட்சணம் அறிந்தவள். அவளது அனுபவத்தை ஆர்வத்தோடு விசயா கேட்டுவிட்டு, "ஐயா இன்னும் கறிக்குக் கடைப்பக்கம் போகேல்லயோ அப்பம்மா..?" என்றுதன் யோசனையில் வந்துதித்த கேள்வியை ஆச்சியிடம் பார்த்துக் கேட்டாள். “இனித்தான் வெளிக்கிடப் போறார் போலக்கிடக்குப்பிள்ள. அன்ரனும் உங்க வந்திருக்கெல்லே - கதைச்சுக் கொண்டிருப்பார் - நேரம் போனாப்பிறகு பாத்துத்தான் அவுக், அவுக்கெண்டு வெளிக்கிட்டுப் போகப் பாப்பார். இனி இதில நிண்டு சுணங்காம அங்க போ பிள்ளை - மாட்டுக்குத் தீனிவைக்க - அந்த உன்ரை வேலையைப் போய் வடிவாப்பாத்துச் செய்து முடிச்சுப்போட்டு
கெதியா வா இங்க குசினிக்கு.”
്. ി, GGൾ O 12 O

ஐயாவுடைய வேலையை சரியாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் ஆச்சிக்கு எப்போதுமே ஒருவித பயப்பிராந்தி மனசுக்குள் உண்டு. அவருடன் தான் வாழ்ந்த இந்த வாழ்க்கையில் பட்டுக்கழித்த எல்லாவற்றிலும் கிடைத்த அனுபவங்களின் தேர்ச்சி, அப்படியாக இது நாள் வரைக்குள் அவளைப்பழக்கி எடுத்து விட்டது. அவள் பேர்த்திக்குச் சொன்ன வாக்கிலே, விசயாவும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு கைவாளியுடன் வெளிக்கிட்டு விட்டாள். அவள் போய் சாமான் போட்டு வைத்துள்ள அந்த அறைக் கதவைத்திறக்க, நேற்று மெழுகிட்ட சாணியின் பச்சைமணம் அறைக்குள்ளிருந்து மூக்கில் கப்பென்று அவளுக்கு அடித்தது. மொத்த மாய முகத்திரையிட்ட இருட்டறையாயிருந்ததால் மெழுகிய சாணி நன்கு இன்னும் காயாதிருந்து, உள்ளே சென்றதும் அவளுக்குக் கால்கள் அதிலேபட குளிர்ச்சியாயிருந்தது. வெளிச்சப் பொட்டே இல்லாத அந்த இருட்டுக்குள் இயன்றவரை விழி விரித்து, அவள் மாட்டுக்குத் தீனி அள்ளி அந்த வாளியினுள் போட்டுக் கொண்டாள். அப்போது கூரையின் மேலால் வவுனியாக் குளத்திலிருந்து கலைபட்டுப்பறந்து வந்துகொண்டிருந்த ஆட்காட்டிக் குருவிகள், கர்ண கடூரமாகக் கத்திக்கொண்டு போயின. ஆட்காட்டிக்குருவிகளின் அந்தச் சத்தத்தைக் கேட்டதோடு, அவள் குளத்தடியில் நின்று கொண்டிருக்கும் தன் தம்பியை நினைத்துக் கொண்டாள் மாடுகளைக் கல்ைத்துக் கொண்டு சென்று அந்த வேணாத வெயிலில், விளாத்திக் காடெல்லாம் வேடுவனைப்போல் திரிந்து கொண்டிருக்கும் அவனது நினைவு அப்போது அவளின் மனத்தை மிகவும் வாட்டி எடுத்தது. காலையில் அவித்துக்கொடுத்த பிட்டும் நேற்றையப் பழங்கறியும் - அது விரால் மீனைப் பொரிச்சு வைச்ச குழம்பாயிருப்பதால் மதியம் வைத்துச் சாப்பிட அவனுக்கொரு நல்ல சாப்பாடுதான்! ஆனால் அப்பிடித்தின்று மாத்திரம் வளர்ந்து பிறகு என்னதான் அவனுக்குப் பிரயோசனம்? இப்பிடியே மாடு கலைச்சுத்திரிஞ்சு உலகத்தில அவன் ஒரு முன்னேற்றத்துக்காளாகி வரமுடியுமா? எப்பனும் படிப்பில்லாமல், துளியும் கையுக்க ஒரு பணங்காசு ஏதுமில்லாமல் வளர்ந்தவன் பிறகு என்ன செய்யப்போறான் சீவியத்துக்கு?” என்று நினைத்து வேதனைப்பட்டு, அந்தச் சிந்தனை மடுவின் ஆழத்தில் அவள் அமிழ்ந்திப்போய்விட்டாலும், கைகளென்னவோ செய்யும் வேலையை அவளுக்கு ஒழுங்காகத்தான் செய்து ஒத்துழைத்தன. அந்த வாளியில் எடுத்துப் போட்டுக்கொண்ட மாட்டுத் தீனியோடு அறையைவிட்டு அவள் வெளியேறியநேரம் - “சாமியார் போலக்கிடக்கு படலை திறக்கிறார்?" - என்று ஒரு சிரிப்புடன் ஐயா மாலுக்குள் இருந்து அன்ரனுக்குச் சொல்வது அவளுக்கு அப்போது கேட்டது. அவள் மண்திண்ணைப் படிகளாலிறங்கி வெளிநிலத்தில் கால்வைக்க இரண்டு வளர்ப்புப்புறா அவளுக்கு முன்னால் பக் பக் பக்கென்று எளிய கூச்சலுடன் பறந்தடித்துக்கொண்டு வந்து நிலத்தில் நின்று - நாவல் நிறக் கண்களால் விழித்தன.
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 13 O

Page 17
தவத்தில் ஒடுங்கிய மார்பில் விபூதிப்பூச்சு அலங்காரத்துடன் வரும் ஆரோக்கியமான அந்தச் சாமியாரை அதிலே நிற்கும் தருணம் அவளும் பார்த்துக்கொண்டாள். வலக்கை மணிக்கட்டில் அவர் கட்டியிருந்த மஞ்சள் நூலையும், தலை மொட்டையையும், கழுத்தில் அவர் நிறையப் போட்டிருந்த உருத்திராட்சை மாலைக்கட்டையும், கண்ணால் பார்த்து அளந்துவிட்ட உடனே அவளுக்குச் சிரிப்புச் சுழித்தது. அந்தச் சிரித்தவாய் மூடாமல் அப்படியே, அவள் மாட்டுக் கொட்டில் பக்கமாகப் போக நடந்தாள். 'பிளாச்சென்று எப்போதுமே திறந்தபடி கிடக்கும் அந்த மாலுக்குள்ளே சாமியார் வர - "சாமியாரை எங்க கன நாளா இந்தப்பக்கம் காணேல்ல?” என்று கேட்டார் பொன்னுத்துரை. "சாமி இங்கயுமிருப்பார் எங்கயுமிருப்பார். இப்ப இந்தச் சாமிக்கு சக்திகளும் கிடையாது முக்திகளும் கிடையாது. அதுதான் இனி எனக்கு யோக வீடு தாறனெண்டிருக்கிறா கெளரி அம்மா - திருக்கேஸ்வரத்துக்கு அதுதான் போய் நான் அலைஞ்சு திரியிறன்! எப்பதாறாவோ? எப்பதான் எனக்கந்தக் காலம் வருமோ? - தருவா! அவ சக்தி தேவி ஒவ்வொரு நாளும் நெருப்புப் பந்தம் கையிலை வைச்சுச் சுற்றுறா என்ரை கனவில வந்து நிண்டு.” - கொங்கணவர் கொக்கைப் பார்த்து எரித்த பார்வையைப் போல் தன் பார்வையையும் ஆக்கிக் கொண்டு சொன்னார் சாமி “சரி சரி ஆறுதலா உதில இருஞ்சாமியார், களைச்சுப்போய் வாறிர். பாலை, மோரை எதையெண்டாலும் வாங்கிக் குடியுமன் ஆச்சியிட்ட?” உபசரிப்பாய்ச் சில வார்த்தைகளை பொன்னுத்துரை அவரிடம் கேட்டு வைத்தார். "என்ரை வீட்டில ஆருஞ்சொல்லி நான் ஏதும் எடுத்துக் குடிக்கவேணுமோ? இது என்ரை வீடு. அப்பிடி ஒரு உறவு எனக்கு இங்க நெடுக இருக்கு. ஆதால நானே இங்க எனக்குத் தேவையானதுகளை வாங்கிக் குடிப்பன் - ஆனா இப்ப உதுகளொண்டும் வேண்டாம் ஐயா எனக்கு - களைப்புக்கு கொஞ்சம் கொண்டுவந்த இதை முதல் குடிப்பம்.!” அவர் என்னத்தைக் குடிப்போமென்று சொல்லிச் சறுக்குகிறார் என்று அன்ரனுக்கு விளங்கவில்லை. அவன் கேள்விக்குறியோடு அவரின் முகத்தைப் பார்த்தபடி இருக்க; ஐயா அவன் நினைத்துக் கொண்டிருந்ததை சாமியாரிடத்தில் கேட்டார். "என்னத்தையப்பா குடிக்கப் போறனெண் டுறீர். ஓ! அந்தக் கோதாரி பிடிச் சதையோ கொண்டந்திருக்கிறீர்? அதை ஏனப்பா பத்திக் குடிச்சுத் துலைக்கிறீர்?" ‘ஐயனே பழகிப் போச்சுதய்யா இது பல காலமா. இந்தப் பழக்கத்தின்ர கைதியா நான் இப்ப ஆகிப்போனன். அது ஒரு தாகம். இந்த மூலிகைத்
தாகம் எனக்கிடைக்கிட வருது. நான் என்ன செய்ய?”
"என்னவோ செய்து துலையும்! அது சரி எங்க இருந்தெல்லாம் உந்தச் சனியனை நீர் இங்க வாங்கி வர்றிர்?”
"மலைக்காட்டிலதான் துரை ஐயா இந்த மூலிகை கிடக்கு செட்டிகுளம்
ඊ. ග්‍රී. ලෑහvගvණිග(5 O 14 O

பக்கத்தில தந்திரி மலைக்காட்டிலதான் இதுவிளைஞ்சது பாருங்கோ. ரொம்பக் காரமான பொருள் அப்பன். சுகமானதொரு ஞானம் தாற புகையையா. இதை அடிச்சால் மேல சொர்க்கம் போய் இறங்கினதுக்குச் சமனாயிருக்கும்.” மூலிகையின் மூலவர் அகத்தியர் போல் அந்தக் கஞ்சா இலைபற்றி சாமியார் ஐயாவுக்குச் சொன்னார். "ஐயோவோணை உம்மட தமிழ் நல்ல செந்தமிழ்.” "அதெல்லாம் அது தாற ஞானமையா! ஞான மூலிகை ஐயா இது! அம்மா! தண்ணீர் கொஞ்சம் செம்பில வேணும் தாயாரே எனக்கு?” "ஆரு சாமியே இப்ப கேட்டா..?” - ஆச்சி குசினியிலிருந்தவாறு கேட்டாள். “ஓம் தாயே! நான்தான் சக்தி தாயே சீக்கிரமாகக் கொண்டந்து தாருமம்மா தயவாய்..?” அன்ரனுக்கு அந்தச் சாமியாரின் நடவடிக்கைகளைப் பார்க்கச் சிரிப்பாயிருந்தது. அவருடைய ஒடுங்கிய உடம்பின் நேர்த்தியைப் பார்த்து அவர் ஏதோ சாமிப் போக்கான ஆளாகத்தான் இருப்பார் என்று அவன் நினைத்தான். நெற்றியில் இடைவெளி இல்லாமல் இருக்கும் விபூதிப்பட்டை, கழுத்து, புஜங்கள், முழங்கை, மார்பு, வயிறு என்று உடம்பு பூராகவும் உள்ள விபூதித் திட்டுகள் என்பன அவரது உடலமைப்புக்கு ஒரு பிரகாசத்தைக் கொடுத்திருந்தன. கண்களில் தெரிந்த மினுக்கம் யோகியாக்கும் என்ற தொனியையும் அவனுக்குத் தந்தது. அவன் அவரைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தான். அவனது புன்னகையைப் பார்த்துவிட்டு - "தம்பி ஆரோ?” - என்று ஐயாவைப் பார்த்துக் கேட்டார் சாமியார். "அவர் எங்கட பக்கத்து வீட்டுத் தம்பி.” பொன்னுத்துரை சொன்னார். "ஒரொழிவும் மறைவுமில்லாதவர் தம்பி இவர் எங்கட பெரியவர் இந்த ஐயா.” - பொன்னுத்துரையைப் பார்த்து கடவுளை வேண்டுகிற பாவனையில் கைகளை உயர்த்தி விரித்துப் பிடித்தபடி சொன்னார் சாமியார். "நிண்டுகொண்டு நெடுக என்ன கதை. இருங்களன் சாமியார்?" - என்று ஐயா அப்படிச் சொல்ல, அவர் நிலத்தில் சப்பரம்போல குந்தி இருந்துகொண்டார். "இதுதான் எனக்கு நல்ல சுகமய்யா சுகம்!” என்று இருந்துகொண்டு அவர் சொல்லிக் கொண்டார். "ஒமோம் அதெல்லாம் வெளியில நிலத்தில எடுத்து வைச்சு உங்கட வேலையைத் துவங்க உதுதான் உங்களுக்குச் சுகமாயிருக்கும் என்ன?” - ஐயா இதைச் சொல்லிவிட்டு வாயை மூடிக் கொண்டு சிரித்தார். சாமியாரின் முகத்தில் இந்தக் கதைகளின் நிமித்தம் எவ்வித மாறுபாடான பிரதிபலிப்புகள் எதனும் ஏற்பட்டதாயில்லை. சாமி என்கிற அமைதியான லட்சணத்தில் அதற்கேற்றாப்போல தன் முகத்தை அவர் எவ்வித சலனமுமற்றதாக வைத்திருந்தார். இராசம்மா ஆச்சி செம்பில் தண்ணீர் கொண்டுவந்து அவரின் பக்கத்தே வைத்தார். "எங்க சாமியாரைக் கன காலமாய் இந்தப்பக்கம் நான் காணக்கிடைக்கேல்ல?” "நான் நினைச்சநேரம் இந்தப்பக்கம் வருவனம்மா! இங்காலிப்பக்கம் வரேக்க உங்களை வந்து பாக்காமல் போவனேம்மா?”
"அன்ரன் இவர் சாமியார் இங்க இடைக்கிடை வருறவரடா தம்பி
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 15 O

Page 18
கண்டியோ. ஆனாலும் கொஞ்சக்காலமா உவர் இங்காலிப்பக்கம் வரக்காணேல்லத்தான். பாவம் மனுசன்!” "பாவம் நானும் ஒரு பாவம்!” - என்று ஆச்சி சொல்லிவிட்டுப் போனதுக்கு தானும் ஒரு கதை அடுத்ததாய்ச் சொல்லி சாமியார் கடகட'வென்று சிரித்தார். அந்தச் சிரிப்போடு தன் காவி நிறத்தூக்குப் பைக்குள் கையை விட்டுத் துளாவி ஒரு பச்சைத் தென்னோலையை அவர் வெளியிலெடுத்தார். அந்த ஒலையை வளைத்து அடிப்பக்கம் கூரானதும் நுனிப்பக்கம் வாய் அகண்டதுமான குழாய் போன்றதொருவடிவில் அதை உருவாக்கினார் சாமி அதன்பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு சுண்டுப் பேணி ஒன்றை அவர் வெளியில் எடுத்து வைத்தார். கால்வாசிக்கு அந்தச் சுண்டுப் பேணிக்குள் செம்புத் தண்ணீரை எடுத்து ஊற்றிவிட்டு; பிற்பாடும் அந்தப் பைக்குள் கையைவிட்டு ஒருசரையை அதற்குள் இருந்து எடுத்துக் கீழே வைத்துப் பிரித்தார். அதற்குள் இருந்தது. பச்சை நிறச் சாயமிட்டு வெயில் காயவைத்து எடுத்தாற்போன்றிருந்த இலைச் சருகுத் தூள்கள். "உதுதான் கஞ்சா எண்டுறது! உந்தப் புகையைக் குடிக்கத்தான் சாமியார் இந்தப்பாடெல்லாம் இப்ப படுகிறார் கண்டியோ தம்பி!” - என்று அதை ஐயா அன்ரனுக்கு, தன்கண்களைச் சுழற்றிக் கண்ஜாடை காட்டிவிட்டுச் சொன்னார். அவர் சொன்னதை அறிந்து அவன் அங்கே பார்க்கவும், அந்தக் கஞ்சாவை அவர் உள்ளங்கையில் வைத்து அதில் ஐந்தாறு சொட்டுத் தண்ணிர் பேணியில் இருந்து எடுத்துவிட்டார். பிறகு அதை நசுக்கி நசுக்கி, உருட்டி பெருவிரலால் அழுத்திவைத்து நீரை வடித்துவிட்டு, பிறகும் அதேபோல சொட்டுத் தண்ணீர்விட்டு நசுக்கிப் பதம் பண்ணினார். அப்படியே அதை உருட்டி உருட்டி, பலமுறை முன்போல அப்படிச் செய்துகொண்டு - "மூலிகை பதமா வந்தால்தானையா நெருப்புக்குப்பேந்து அது கணக்காப்படிஞ்சு கிடந்து புகை தரும்” - என்று ஐயாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு தன் செய்கைக்கெல்லாமாக அவர் ஒரு விளக்கம் சொன்னார். கஞ்சாப் புகையிலையை அந்த ஒலைச்சுருளுக்குள் போட்டுக் கொண்டு பிறகு நெருப்புப்பெட்டியிலிருந்து குச்சை எடுத்துப் பற்றவைத்து நெருப்புக் கொளுத்தினார் அவர். சில "சட புட” - வென்றதான மெல்லிய தெறிப்புச் சத்தத்தோடு, நீல நிறம் கலந்த சிறு நெருப்பு எரிதலுடன், சுருளை உடனே சுண்டுப் பேணிக்குள் இருந்த தண்ணிருக்குள் விட்டு வைத்துக்கொண்டார் சாமி பின்பு பேணியின் வாய்ப்பக்கம் தன் கைகளால் மூடிக்கொண்டு, சிறு இடைவெளி அதில்வைத்துக் கொண்டு தன்வாயை அதில் வைத்தபடி உறைப்பாகப் புகையுறுஞ்சினார் அவர், நாகபாசத்தின் சக்திமாதிரி அந்தக் கஞ்சாப்புகையின் வெறி மூளையில் ஏற ஏற, அவருக்குக் கண்கள் செவ்வானம் போல் சிவத்தன. அந்தக் கண்கள் செவ்வரிபடர்ந்து, கொள்ளிபோல் ஒளிவிட்ட கண்களாய் அவரது முகத்தில்
ඒ.4%. ථNovගvෂීඝ(b O 16 O

தெரிந்தன. "கடு-குடு-குடு-குடு-குளுக்-குளுக்” - என்ற சத்தம் ஒவ்வொரு புகை இழுவைக்கும், தண்ணிர் மலமலத்துக் கொதிப்பது போன்று அந்தப் பேணிக்குள் இருந்து கேட்டது. அவர் வாய்க்குள் இழுக்கின்ற புகைக்கெல்லாம் அந்தத் தண்ணீரின் சத்தம், ஒரு ஆதார ஒலியாக இருந்தது. அவர் கதகதவென்று எரிந்து வந்த கஞ்சாப் புகையை இழுத்து வெளிவிடாமல் உள்ளே அடக்கி வைத்தபடி, கழுத்தில் சுருக்குக் கயிறு இறுக்கிக் கொண்டதுபோல தடுமாறினார். அலவாங்கை விழுங்கியது போன்று விறைப்பாக நிமிர்ந்திருந்து கொண்டு; விழிகளைக் கீழே விழுத்தி விடுவதைப்போல இந்நேரம் அவர் தன் விழிகளை அகல விழித்தார். இதுதான் சினிமாப்படம். பியூசின்னப்பா தேவர் இவரிட்டத்தோத்தான் போ.” - அவரது சங்கடங்களைப் பார்த்து அடக்க முடியாமல் சிரிப்புப் பொத்திக் கொண்டுவர, பெரிதாகச் சிரித்துவிட்டுச் சொன்னார் பொன்னுத்துரை. அவருக்குச் சிரித்து வயிற்றை வலித்தது. பொன்னுத்துரையர் சிரித்துக் காட்டியதோடு, அன்ரனுக்கும் அவரைப் பார்த்ததில் பெரிதாகச் சிரிப்பு வந்து விட்டது என்றாலும் அவன் சிரிப்பை மறைப்பதற்கு உதடுகளால் பற்கள் தெரியாமல் இருக்க இறுக்கி மூடினான். ஆனாலும் அடக்க முடியாது அவனுக்குப் போய்விட உதட்டை இழுத்து இறுக்கி மூடிச் சிரித்தான். சாமியார் வாயைத் திறந்தார். ஒரு புகை மண்டலம் குகைபோலத் திறந்த அவரது வாயிலிருந்து வெளியே வந்து கொண்டேயிருந்தது.
“சிரிக்க என்னப்பனே என்னில இருக்கு?” - அவர் புகை வாயாற் சொன்னார். அப்படிச் சொல்லிவிட்டு பேணியைக் கையால் பொத்திப் பிடித்தபடி தீசடசடக்கும் ஒலியுடன் மீண்டும் அவர் புகை இழுத்தார். அப்படி ஒவ்வொரு புகை இழுப்பிற்கும் கஞ்சாவில் எரியும் நெருப்பு ஒளி அந்தச் சுருளுக்குள் சிவப்பாகப் பதிந்திருந்தது.
சாமியாரின் நரம்புகளுக்கு முறுக்கேற்படுத்தும் சக்தியை கஞ்சா இழந்து விட்டதா? - என்று நினைக்கக்கூடிய அளவிற்கு புகை புகையாய் உள்ளே இழுத்தும் சாமியார் வெறி ஏற்றமில்லாச் சாதாரண ஒரு ஆளாய் இருந்தார். ஆனாலும் தனக்குள்ளே மெளனச்சக்தி பெற்று அவர் விறுவிறுப்படைந்தார். இந்நிலையில் அன்ரனுக்கு நேரம் போனது போல் தெரிய அந்த அவசரத்தில் வாங்கைவிட்டு எழுந்தான். "ஐயா நேரம் போன மாதிரி இருக்கு, நான் போயிற்று நாளைக்காலேல வாறன் வண்டில் பூட்ட. என்னையா?” - என்றான். “ஓம் வாரும் போயிற்றுத்தம்பி! கட்டாயம் நாளைக்காலேல்ல நேரத்துக்கு இங்க வந்திடும் ரெண்டுபேரும் வண்டிலில நாளைக்கும் ஒருக்கா றண்வேய்ப்பக்கம் போய் ஒரு சுத்து சுற்றிப்போட்டு வருவம்.!” சொல்லிக்கொண்டு அவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று கொண்டார். "வருவனய்யா கட்டாயம் அந்த நேரம்." - என்றான் திரும்பவும் அவன். "நானும் இனிக் கறிக்குப் போய்வர ஒருக்கா வெளிய வெளிக்கிட வேணும் எணேய் சுறுக்கா நீ காசை எடுத்துக்கொண்டாணை
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 17 O

Page 19
y
மீனுக்குப்போக."
என்றுதன் மனைவியை அவர் அழைத்தார். அவர் கதிரையில் கிடந்த சால்வையை எடுத்துத் தோளில் போட்ட தருணம் - “வாறன் இந்தா வாறன்! விசயா இங்க வா கெதியா குசினியிக்க. ஐயாவுக்கு நான் காசெடுத்துக் குடுக்க வேணும் கறிக்குப் போக.?” ஆச்சி திண்ணையில் நின்று வெளியே பார்த்து மாட்டுக் கொட்டிலடியில் நின்ற பேர்த்தியை அங்கே வரக் கூப்பிட்டார். அவர் கூப்பிட்ட கையோடு அவள் குசினிப்பக்கம் வர நடந்து வந்தாள். வந்த இடத்தில் அந்தத் தேசி மரத்துக்குக் கீழே இருந்த தண்ணீர் வாளியில் மாட்டுக்குத் தவிடு கலந்த தன் கையைக் கழுவிவிட்டு பாவாடையில் ஈரம் போகத் துடைத்துக் கொண்டாள். “அன்ரன் போய்விட்டாரா?” . என்று அதையும் ஒருக்கால் அங்கே பார்த்து அறிந்து கொள்ள அவளுக்கு மனத்தில் ஒரு உந்துதல், திரும்பி அங்கே மாலடிக்கு வெளியாலே அவள் பார்த்தப்ோது அங்கு அவன் போக வெளிக்கிடுவது அவளுக்குத் தெரிந்தது. அவன் போகும்போது வலிமைகொண்ட அவனது நடையழகை ன்னால் நின்றவாறு பார்த்து ரசித்து தன் கண்பார்வையால் அவனைப் பின்தொடர அவளுக்கும் அவா. என்றாலும் அப்பம்மா கூப்பிடுகிறாரே என்ற அவசரத்தில் மனமில்லாத நிலையில் அவள் திரும்பிநடந்து குசினியடிக்குப் போனாள். “இந்தா பிள்ளை நீ இரு இங்க குசினிக்கை! ஆளில்லாட்டி குசினியுக்க கோழி போயிருமெல்லே? அதான் கூப்பிட்டனான் இங்கினையா உன்னை! நீ இப்ப நான் அரிஞ்ச கீரை மிச்சத்தை உதிலயிருந்து அரி. நர்ன் ஐயாவுக்குக் கறிவாங்கப் போகக் காசு எடுத்துக் குடுத்துப்போட்டு வாறன். பிள்ளை உந்தக் கீரையை நீ மயிர்மயிராப் பேந்து நீ அரிஞ்சு போடாத? உது புளிக்கீரை கண்டியோ! உதைக் கொஞ்சம் விட்டுப் பெரிசாக் கத்தியை வைச்சரி.” "நானரிவன் அப்பம்மா! நீங்க போங்கோ. குழந்தைப் பிள்ளைமாதிரி உதை எனக்குச் சொல்லிக்கொண்டு” - அவள் தன் மார்பை முழங்காலில் இடித்துக்கொள்ளுமளவுக்குப் பக்கத்துப் பலகையில் இருந்தாள். ஆச்சியின் வேலையை அவள் தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கவும் - அங்கேயிருந்து பொன்னுத்துரையரும் சத்தம் போட்டார். “வாணை இங்க சுறுக்காய். என்ன செய்யிறாய் குசினிக்க கிடந்து?” " இந்தா இந்தா சுறுக்கா வாறன்!” படுக்கை அறையினுள் இருந்த செருகு பனையோலைப் பெட்டியைத் திறந்து காசை எடுத்ததோடு, வண்ணத்துப்பூச்சு உரிந்த றங்குப் பெட்டி மூடியை அவசரத்தில் பட்டென்று கைவிட்டாள் இராசம்மா ஆச்சி அடுப்பிலிருந்து வீசுவது போன்ற அனல், அந்தச் சூடான பெட்டியிலிருந்து வீசிற்று. தகரப்பெட்டியின் வாய தன்பாட்டுக்கு விழுந்து மூடும் தருணத்துக்குள்ளே அறை வாசலைக் கடந்துவிட்டாள் அவள். “சுறுக்குச் சுறுக்கா வாவன்? - என்று அங்கே மாலடிக்கு வர அவளைத் துரிதப்படுத்தி மீண்டும் அழைத்தார் அவர் அவள் அங்கு வந்து சேரவும், அவளிடமிருந்து காசை வாங்கிக் கொண்டு அவர் சாமியாரை ஒரு கணம் திரும்பி நின்று
ff.4%. ෆර්ගvශováහub O 18 O

பார்த்தார். சாமியார் லாகிரியின் உஷ்ணத்தில் கண்களை மூடியும் மூடாமலுமான அரைக் கிறக்கத்தில் இருந்தார். "சாமி இரும்! அப்ப நான் ஒருக்கா வெளியால கடைப்பக்கமொருக்காப் போட்டு வாறன்.” - நான் சொல்வதைக் கேட்பாரோ விடுவாரோ, என்று நினைத்துக்கொண்டு அவர் சொல்ல - "இருக்கிறனையா பனி மூடின பர்வதத்தில! இப்ப இமய மலையில ஞான சுகத்தில இருக்கிறன்!” - என்று அவர் கேட்டதற்கு பரவசத்துடன் சொன்னார் சாமி, தாம்மிக்க மகிழ்ச்சியடைவதாகச் சொல்லிவிட்டு, அமரிக்கையும் மர்மமும் வாய்த்த அவரதுமோன நிலைக்குத்திரும்பினார்; அலையோய்ந்த சமுத்திரம்போல அவர் அசைவற்று இருந்துகொண்டு. "அங்கேயே ஞான சமாதியில நீர் இரும் இறங்காதேயும் பேச்சு மூச்சில்லாம ஒரு இடத்தில இருந்தா சிலவேளை ஞானம் கிடைக்கும்தான்!” பொன்னுத்துரைக்கும் ஒரு தத்துவம் பிறந்து அவர் சொன்னதுக்குத் தோதாய்ச் சொல்லக் கிடைத்தது சொன்னார். அதைச் சொல்லிவிட்டுப் போய் வெளிப்படலையைத் திறந்து கொண்டு அவர் வெளிக்கிட்ட நேரம் வீதியின் நாற்சந்தியில் திரும்பிப்போகும் மேற்குப் பக்கத்து வீதி வழியாக தன் வீட்டுப் பக்கம் போக நடந்து கொண்டிருந்தான் அன்ரன். அந்த வீதியாலே ஒரு சில அடிகள் தூரம் வரையில் அகல வைத்து நடந்து அவன் கடந்தபோது, அந்தக் 'காஞ்சிரை மரத்துக்குக் கீழ் இருந்தவாறு ஒருகுரங்கு இன்னொரு குரங்குக்குப் பேன் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. பேன் பார்த்துக் கொண்டிருந்த மந்தி இவனைக் கண்டு விட்டுப் பயந்து, ஒரு பாய்ச்சல் பாய்ந்து, அந்த முதுமையடைந்த காஞ்சிரை மரத்தின் முடிச்சுப்போன்ற கிளைகளைப் பிடித்துக்கொண்டு மேலே போக ஏறியது. மரத்தின் உருண்டையான பழங்கள் இதனால் கீழே நிலத்தில் விழுந்தன. பழம் விழப் பார்த்துவிட்டு, மற்றக் குரங்கும் இவனுக்கு வலித்துக்காட்டி கேலி செய்துவிட்டுப் பாய்ந்து, கிளைகளைப் பிடித்துத் தாவி மேலே அந்த மரத்தில் ஏறியது. அந்தக் குரங்கு வேறு எங்கோ இருந்து கையில் பிடுங்கிக் கொண்டுவந்த இலைகளை, வாயில் சொருகி மென்று கொண்டிருந்தது. அந்தக் குரங்குகளைப் போலவே தாவித்திரிந்து அலைந்து கொண்டிருக்கும் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஒரு நிலையில் அதை வைத்துக் கொள்ள அன்ரனாலும் முடியவில்லை. அவன் அந்த வீதியில் நடந்து கொண்டிருக்கும்போது, விசயாவை தன் நினைவில் வைத்துக் கொண்டு எதை எதையெல்லாமோ சேர்த்து வைத்துக்கற்பனை பண்ணியவாறு இருந்தான். அந்த அவளது நினைவுகளுக்கு கடிவாளம் போட்டு நிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையில், அவளை வைத்துத் தன் மனத்தில் பல வர்ணச் சித்திரங்கள் தீட்டிக் கொண்டு அந்த இன்பசுகத்தில் அவன் தன் வீட்டை நோக்கி, வேகமாகவும் நடக்காமல், மெதுவாகவும் நடக்காமல், இடைத்தரமாக நடந்து சென்றான். அவனுக்கு வெக்கையான பெருமூச்சு வநதது.
வரழ்க்கையிண் சிறக்கஸ் O 19 O

Page 20
இரண்டு
வவுனியாக்குளம் கடுங்கோடையிலும் நீர் நிரம்பியிருக்கும் வற்றாத பெருங்குளம். பூந்தோட்டமெனும் இடத்திலுள்ள பெருநெல் வயல்களுக் கெல்லாம் தண்ணீர் பாயப், போதும் போதுமென்றதாய் உள்ள நீர்த்தேக்கம் அக்குளத்திலே எப்பொழுதுமே இருந்தவாறு இருக்கும். குளக்கட்டுக்குக் கீழே குளிர்ச்சியான நிழலிருக்க, குளத்துக்குள்ளே குடை விரித்தவாறு நிற்கும் மருத மரங்கள், வேர் ஓரிடத்திலும் முகம் ஓரிடத்திலுமாய் வளைந்து நின்று தண்ணிரைக் குளு குளு' - வென்றதாய் எப்போதுமே வைத்திருக்கும். அதனாலே அங்கே வந்து குளத்தில் முழுக்குப் போடுகிறவர்களுக்கும் நல்ல உடற் சுகம். அந்த வெளியிலிருந்து எழுந்து வந்து குளக்கட்டுப்பக்கமாய் வீசும் காற்று, மனத்தினையும் லகுவாக்கிவிடும் அவர்களுக்கு. அந்தக் குளத்தின் ‘கருங்களி மண் வெடித்திருக்கும் அலை கரைப்பக்கம் இன்னும் எடுத்துச் சொல்லத்தக்க அபரிமிதமானதொரு அழகான இடம். அந்தவெளிக்குப் பக்கத்திலே உள்ளது அடர்த்தியான ஒரு காடு, செடிப்பற்றைகளுக்குள்ளே புகுந்து திரியும் மிருகங்களும் அநேகமாய் அங்கே உண்டு. பெருயானைக்கூட்டமும் வந்து போகிற அளவுக்கு மனிதக் குடியிருப்பில்லாத மிருகங்கள் வாழும் இடமாகத்தான் அந்த இடத்தைச் சொல்ல வேண்டும். இதையெல்லாம் அங்கு போய்ப்பார்த்தவர்கள் விளங்கிக் கொள்ள ஆனைலத்திகள் அங்கே காய்ந்து போய்க்கிடக்கும். அதனால்த்தான் அவ்விடத்திலே போய் ஊசலாடுகிறவர்கள் சிலர் ஆனை லத்திக் காடு என்று அதனை அழைக்கிறார்கள் போலும். குளத்துத் தண்ணீருடன்கூடிய இங்காலேயுள்ள பக்கத்தில் உள்ள அந்த வெளியெங்கும் விளாமரங்கள். குயவர்கள் மண் அள்ளுகின்ற குழிவிழுந்த அந்த இடங்களுக்குப் பக்கத்தே நிற்கின்றன பன்னிச்சைப் பழ மரங்கள். ந்தராட்சச மரங்கள் விலாசமான கிளைகளால் ஒன்றையொன்று தழுவிப் பிணைந்தவாறு, அந்தக் குழி விழுந்த நிலத்தருகே முடிச்சுவேர்களை ஆழ ஊன்றி உறுதியாய் நின்றன. இந்தப் பழ மரங்களுக்கெல்லாம் குளத்துத் தண்ணீரின் குளிர்ச்சி ஒரு வித செழிப்பைக் கொடுத்திருந்தது. அந்த வெளியில் வீசுங்காற்றும் நல்ல சுவாத்திய நிலைக்குத் தோதாகவுள்ளதால், அந்த மரங்கள் குளுகுளுப்பில் காய்காய்த்துத் தள்ளுவதும் காலம் காலமாய்த் தவறாதிருக்கும். இவ்வளவெல்லாம் அங்கிருந்தும், இப்படியெல்லாமே பார்த்து ரசிக்க அவ்விடத்திலொரு சுகமிருந்தும், யார்தான் இங்கே இந்த வெளியாயுள்ள இடத்தைத்தேடி வரப்போகிறார்கள்? பல பட்டி மாடுகள் வந்து புல்லு மேயும் இந்த வெளியிலே மாடுகளைக் கொண்டு வந்து விட்டு அதிலே தாங்கள் நின்று கொண்டு அவைகளைப் புல்லுமேயவிட்டுப் பார்த்தவாறு இருப்பவர்கள் - காலையில் மாடுகளை அவ்விடத்தில் விரட்டிக் கொண்டுவந்து மேய விட்டுப்போய்; மாலையில் வந்து மாடுகளைச் சாய்த்துக் கொண்டு போகிறவர்கள், இப்படியான ஒரு சிலரைத்தவிர
jණ්.4). ලාංඝිvග්vජ්හෆ් O 20 O

அந்தத் தரைவை வெளியில் இறங்கி அவ்வளவுதூரம் நடந்து போவதற்குச் சோலி ஆருக்குண்டு. இருந்தாலும், விளா மரங்கள் காய்த்துப் பழம் தரும் காலத்தில்தான் அந்தப் பகுதிக்கு பெரிசாக மவுசு வந்துவிடும். அட்சய பாத்திரம்போல அந்த விளாத்தி மரங்கள் எல்லோருக்கும் ஆய்ச்சலுக்கு விளாங்காய்களை கொடுத்துக் கொண்டிருக்க கேள்விப்பட்ட கணிசமான சனம் எங்கிருந்தோவெல்லாம் அக்காலத்திலங்கு பழம் பறிக்க வருவார்கள். அவர்களெல்லாம் அந்த மரங்களிலேறி செம்பழங்களைப் பார்த்துப் பிடுங்கி சாக்கில் போட்டுக் கட்டிக்கொண்டு போவார்கள். இதன்பிறகு காய்கள் எதுவும் இல்லாதது போன்ற சூனிய உணர்விலே அந்த மரங்கள் நிற்கும். அந்த மரங்களால் விழும் விளாம்பழங்களை இரவு வேளையில் தின்ன வரும் யானைகளின் வரத்தும் படிப்படியாக அங்கே பிறகு குறைந்துவிடும். பிற்பாடு ஆனைபோட்ட குவிந்த லத்திகள் மாத்திரம் பார்ப்பதற்கு அவ்விடத்திலுள்ள தரைவையில் வெய்யில் காயக்கிடக்கும். அதோடு பெரிதாக இல்லாததுபோல இந்த மனித சஞ்சாரமென்பது அங்கு பிறகு அஸ்தமனமாகிவிடும். ஓரிருவரை அவ்விடத்தில் கண்டுகொள்வதே இன்னொருவருக்கு அங்கு அரிதானதாயிருக்க, அவன் மட்டும் அந்தப் பட்டுப்படைக்கிற வெயிலில் ஒரு விளாமரத்தின் கீழ் நின்று அங்கு புல்லு மேய்கின்ற மாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கதைக்க ஆளில்லாத அந்த இடத்தில், மாடுகளோடுதான் அவனுக்குக் கதை. மாடுகளைப் பார்த்து அவைகளை மிரட்டிக்கலைத்துப் பிடித்துக்கொண்டு அவ்விடமெல்லாம் திரிவதும், விளாமரங்களில் ஏறி காய்களைப் பறித்து சாக்கினுள் போட்டுக் கொள்வதும்தான், குளத்து அலைகரையினில் அவனுக்கு வேலையாய் இருந்தது. மாடு சுருக்கு மூத்திரம் விடுவதையும், கூடையளவு சாணி போடுவதையும், குளத்துத் தண்ணீர் விளிம்பருகே நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதையும், விளாமரங்களின் நிழல்களின் கீழ் மாறி மாறிப் போயிருந்து பார்த்துக்கொண்டு, வெளித்துக் கிடக்கும் வானத்தையும் கண்டு கொண்டிருக்கப் பொழுது நகர்ந்து விடும் அவனுக்கு. “செங்காரி இங்கவா..? நீதான் சொல்வழி கேக்காதனி? உனக்கு கம்பால அடிச்சு ஒண்டும் பெரிசா உறைக்காது. சூட்டுக் கோலாலதான் உனக்கு நெருப்புப் பொசுங்கக் குண்டியில சூடு வைக்கவேணும்.? அவன் அந்த மாட்டைப் பார்த்து ஆத்திரத்துடன் பேசிக்கொண்டிருக்க, அந்தக்காளை கொஞ்சம் அதற்குத் தூரமாய் நின்று புல்லு மேய்ந்துகொண்டிருந்த பசுமாட்டை வாடைபிடித்துப்போய் விரட்டிக் கொண்டிருந்தது. இந்த வயதில் அவனுக்கு அதைக் காணச் சவம்' என்றதாய் ஒரு வெறுப்பு எழுந்தது. “சவம் பிடிச்சமாதிரி இந்தச் சனியன் மாடு." என்று பல்லைக் கடித்துக்கொண்டு திட்டினான். அப்படி அவன் வாய் திட்டினாலும் கண்பார்வை திரும்பவும் அவனுக்கு அது என்ன செய்கிறது? என்று அறிய அந்தவிடத்தில்தான் சென்றது. அந்த மறையன் பசு வாலைத்தூக்கிக் கொண்டு நிதானமாக சுருக்கு மூத்திரம் விட, செங்காரி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டே
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 21 O

Page 21
அதை நெருங்கியது. பசுவின் வாலுக்கடியில் முகத்தை வைத்து மயிரோடு சேர்ந்து ஒழுகும் மூத்திரத்தை முகர்ந்து பார்த்துக் கொண்டு, இளித்துக்கொண்டு அது பிறகு நின்றது. அதைக் கண்டுவிட்டு: 'மாடுகளையெல்லாம் ஒவ்வொரு கன்னைக்குப்போக இந்தச்சவமாடு இப்ப கலைக்கப்போகுது சனியன்!” - என்று சொல்லியபடி அவன் கம்போடு அதற்குக் கிட்டப்போக, இங்க வராத' - என்பது போல இவனை நோக்கித் திரும்பி கோபத்தோடு அது மூச்சு அடித்தது. மாட்டின் அந்த நிறமும், நிமிர்ந்த உடல் கட்டும், உயரமான திமிலும், ஊசிக்கொம்புகளும் சிறுவனான இவனைப் பயந்து பின்நோக்கிச் செல்லும்படியாய் ஆக்கிவிட்டது. “சனிமாடு! ஐயாட்டச் சொல்லி கட்டில போட்டுத்தான் நல்லா உனக்கு அடி தரவேணும் பார்!” - எரிச்சல் வந்துவிட்டது அவனுக்கு. அந்த மாடு சும்மா நின்றுகொண்டு புல் மேய்ந்தால் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்ட முகத்தோடு அதனுடைய உடல் முறுக்கையும் வடிவழகையும் அந்த மரங்களுக்குக் கீழ் இருந்து அவன் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனால் அந்த மாடு மற்ற மாடுகளையும் கலைத்தால் எல்லா மாடுகளும் திமிலோகப்பட்டு நாலா பக்கமும் பாய்ந்து ஓடிப்போகும். பிறகு மாடுகளை ஒருங்கிணைத்துக் கொண்டுவர அவனுக்கல்லவோ பெரும்பாடு? அதோடு இந்த விளாங்காய்ச் சாக்கையும் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு பொழுதுபட அவன் மாடு கலைத்துப்போக வேண்டும். அப்படியும் ஒரு பெருத்த வேலை பிறகு இருக்கிறதே இவனுக்கு. மாடுகளுக்கு மோப்ப சக்தி அதிகமென்று அவனுக்குத் தெரியும். அந்த இன்னுமொரு மாடு அந்த நேரம் எங்கிருந்துதான் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்ததோ அவனுக்கு அது ஒன்றும் விளங்கவில்லை. விலா எலும்புகளின் முடிவில் வயிற்றுப் பதிவும் தெரியாது நிரம்பியுள்ள செழிப்புள்ள அந்தமாடு இந்த மந்தைக் கூட்டத்திலுள்ளதல்ல. அது மற்ற மாடுகளை இடித்துக் கலைத்துக்கொண்டு இடறிப் புரண்டடித்தவாறு வர, பசு மாடு காதை விடைத்தபடி வாலை நிமிர்த்தித் தறிகெட்டு திணறிக் கொண்டு பாய்ந்தது. இதனால் எல்லா மாடுகளுக்கும் மிரட்சி அவைகள் நின்ற திக்கில் ஒவ்வொரு பக்கம் ஒவ்வொன்றாய்ப் பாய்ந்தோடத்தொடங்கின. "இவனுக்கு இங்காலே போவோமா? அங்காலே போவோமா? எங்காலிப் பக்கமாய் போய் இதுகளைக் கலைச்சுக் கொண்டுவந்து ஒரு இடத்தில விடுறது? - என்கிற பதற்றம். அந்தக் குளத்துத் தரைவையில் சேற்றுக் கண்டம் தாண்டி வெடித்த மண்கண்டத்திலே கவனமாகக் கீழே பார்த்துக்கொண்டும் ஓடி, மாடுகளைக் கலைப்பது என்பது முன்பு அவன் பட்ட அனுபவத்திலிருந்து பார்த்தால் கஷ்டமானதொன்றுதான்! என்றாலும் அவன் எப்போதும் கையிலே இருந்து கீழே வைக்காத அந்தக் கருமையேறிய பிரப்பங்கம்பை கையிலே வைத்துச் சுழற்றிக்கொண்டு, பெரிதாகவுள்ள அந்த வெளியில் ஒரு அரைவட்டமான தூரத்துக்கு களைக்காமல் ஓடினான். அங்கும் இங்குமாய் அலைந்த மாடுகள் அவன் ஒடிக் கொண்டுபோட்ட சத்தத்திலே கொஞ்சம் பிறகு அடங்கின. பசு மாட்டைக் கலைத்த மாடும் களைத்துப் போய் திமிரடங்கி நின்றது. பதினான்கு வயதுச் சிறுவனான அவனும் ඊ.4%. ථNගvශvෂීඝ(b O 22 O

அந்தக் காய்ந்து வெடித்திருந்த நிலத்தில் ஒடிக் களைத்துப் போய்விட்டான். கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்கியபடி, அவன் கொஞ்ச நேரத்துக்கு முன் பிடுங்கிப் போட்டு வைத்திருந்த விளாங்காயிருந்த குறைச்சாக்கின் மேல் போய் இருந்தான். மேலிலே கசகசத்த வேர்வையை கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வெளியில் வீசும் காற்று உணர்த்தியது. கால்சட்டைப்பித்தான்கள் எடுபட்டுப் போயிருந்ததால் அந்த அரைக்கால்சட்டையின் சிறு இடைவெளிக்குள்ளாலேயும் காற்றுப் புகுந்து கவட்டைப் பக்கத்தையும் அவனுக்கு குளிர்ச்சியடைய வைத்தது. களைத்த வேளையில் இப்போதுதான் அவனுக்குப் பசி குடலைப் பின்னி முறுக்கியது; பிய்த்துப் பிய்த்துத்தின்றது. அந்த இடங்களில் அலைந்து திரியும்போது கல் இல்லாத அந்த இடத்தில், விளாங்காயின்மேல் விளாங்காயை அடித்து உடைத்து இனிப்பான கயருள்ள அந்த முற்றிய விளாங்காய்களைச் சாப்பிட்டதும் - பன்னிச்சம் பழத்தை மங்குஸ்தான் பழமாக நினைத்துக் கொண்டு வாயில் வைத்து உமிந்து பிறகு வெளியே துப்பியதுமாயிருந்ததும் - என்று இப் படியெல்லாம் தின்று கொண்டிருந்தவைகள் எங்கு போய் ச் சேர்ந்ததோ!! என்று நினைக்கத்தோன்றும் படியாகவிருந்தது அவனது வயிற்றினில் எழுந்தபசி “பசிக்குதெனக்கு இனிச் சாப்பிடப்போறன் நான். சாப்பிடேக்கயாவது கரைச்சல் தராம நீங்களெல்லாம் இருங்கோவென்ன!” - அவன் மாடுகளைப் பார்த்துச் சொல்லவும் அவனிருந்த பக்கம் தங்கள் தலைகளைத் திருப்பி ஏதோ அவன் சொன்னதை ஏற்று நடக்கிறோம் என்பதைப்போல சில மாடுகள் அவனைப் பார்த்தன. இவனைப் பார்க்காமல் தம்போக்குக்கு புல்லு மேய்ந்துகொண்டிருந்த மாடுகளும் அவன் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் ஒரு பெருமூச்சோடு விழிகளை நன்றாய்த் திறந்து அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டதுபோல் இருந்துகொண்டு "மொடுக் மொடுக் - கென்று புல்லுகளை தலையசைத்துத் துண்டித்து மேய்ந்து கொண்டிருந்தன. இன்னும் சில மாடுகளோவென்றால் எங்களுக்கு இது எல்லாம் முக்கியமல்ல என்பதைப்போல அவனைப் பார்த்தன. அவன் சாப்பிடமுன் மரம்பிடித்து ஏறின அழுக்குப் படிந்திருந்த கறுத்துப்போன கைகளைக் கழுவ, கிட்டத்திலே உள்ள இடத்தில் தண்ணீர் உள்ளதா, என்று பார்வையைச் சுழல விட்டான். அங்கே சிறிது தூரத்தில் தாமரைப் பூவொன்று வெள்ளையாக இதழ்விரித்துக்கிடப்பது அவன் கண்களுக்குத் தெரிந்தது. சிறு பள்ளமான இடத்தில் அது பூத்திருப்பதைக் கொண்டு அங்கே தண்ணீர் உள்ளது. என்பதை அதனால் அவன் தெரிந்து கொண்டான். உடனே அந்த இடத்துக்குக் கிட்டவாய் அவன் ஓடிப்போய் நின்றான். அவனுக்குத் தண்ணீர் வேண்டும். தண்ணீர் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு அக்கறையில்லை. அந்த இடத்தில் தனது எந்தத் தேவைக்கும்சரி அப்படியான தண்ணிரைப் பாவிப்பதில் அவனுக்கு வெறுப்பேயில்லை. கைகளால் தண்ணிரை முகந்தள்ளி எடுத்துக் குடிக்க முடியாத இடத்தில் கீழே நிலத்தில் குப்புறப் படுத்துக்கிடந்து ஒரு மிருகத்தின் பாவனையில், அந்தத் தண்ணிரை அவன் வாயை வைத்து உறிஞ்சிக் குடிப்பான். விளாங்காய்க்கயர் தின்று அது வழ்க்கையிண் ரிறக்கஸ் O 23 O

Page 22
தொண்டையைக் காய்ச்சினால் கொண்டுவந்த போத்தல் தண்ணிர் முடிய இப்படியெல்லாம் தண்ணீர் குடிப்பது அவனுக்கொரு பழக்கமாகிவிட்டது. அங்கே அந்தச் சிறு பள்ளத்தின் நடுவே தாமரை பூத்திருந்த இடத்தில் உள்ள சிறு குழியில் மாத்திரம், அவனால் கைவைத்து தண்ணிரை அள்ள முடியுமாப்போல பார்ப்பதற்கு இருந்தது. ஆனாலும், அந்தப் பள்ளத்துக்குள் காலை வைத்து இறங்கினால் 'சொத, சொத" வென்று கீழே ஆழமாயுள்ள சேறு கால்களை உள்ளே புதைத்துக்கொண்டு போய்விடும் என்றும் அவனுக்குப் பயமாக இருந்தது.
"இலைச்சருகுகள் சுழித்தபடி இருக்கும். அந்தச் சேற்றுக்கும்பலுக்குள்ளே இறங்கினால், குளத்துச்சேறு சில வேளை முழங்கால் வரை கூட அதிலே அப்பிக்கொள்ளும், பிறகு காய்ந்து போன அதைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கு வீட்டுக்குப் போய்ப்படுகிற பாடு எனக்குச் சீயென்றதாய்ப் போய்விடும். என்ன செய்யலாம்? - எல்லாம் தண்ணீர்தானே! இதிலேயே கழுவுவம்!” - என்று நினைத்துக் கொண்டு, உள்ளே அதற்குள் இறங்காமல் - அந்தப் பூச்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் சேற்றுத் தண்ணிருக்குள் ஒருவாறு தன் கைகளை நனைத்து அவன் கழுவிக் கொண்டான். பிறகு முகத்தில், கழுத்தில் தண்ணீரை எடுத்து அறைந்துகொண்டு - கழுவிக்கொண்ட தன் கைகளைப் பார்த்தான். ஈரம்பட்ட கையில், ஊத்தை போய்விட்டது மாதிரி அவனுக்குத் தோன்றியது. 'அழுக்கு இருக்கிறது - என்று மீதமிருந்த ஒரு ஐமிச்சத்தில் அவன் தன் கைகளை போட்டிருந்த கால் சட்டையின் மேல் துடைத்தான். இதற்குப் பிறகு கைகளில் படிந்த அழுக்குப்பற்றிய சிந்தனை அவனுக்குப் பறந்துபோய்விட்டது. எழுந்த பசியைப் பொறுக்க முடியாமல் ஈரமுகத்துடன் விளாத்திக் கிளையில் கட்டித்தொங்கவிட்டுள்ள தன் சாப்பாட்டுப்பையை அவிழ்த்தெடுப்பதற்கு அவன் அவ்விடத்துக்குப் பறந்தோடினான். விளாமரத்தின் வளைவான கீழ்க்கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த சாப்பாட்டுப் பையின் முடிச்சை அவிழ்த்தெடுத்துக் கொண்டதும் நல்ல இடம் பார்த்து சாப்பிடுவதற்கு அதிலே அவன் இருந்து கொண்டான். கல்லுமாதிரி இறுகிக் கிடந்த சாப்பாட்டுச் சரையை புல்நிலத்தில் வைத்து அவன் ஆவலுடன் பிரித்தான். பிட்டில் ஊறியிருந்த விரால்மீன் புளிக்குழம்பும் அதோடு இருந்த துண்டமான ரெண்டு மீன் துண்டும், ஆசையைத் தூண்டி வேகம் கொடுத்து அவனை சில நொடிகளுக்குள்ளாகவே சாப்பிட்டு முடிக்கவும் வைத்து விட்டது. சாப்பிட்டு முடித்த ஏவறையோடு ஒருமுறை அவன் அந்த மாடுகளையும் கவனித்தான். மாடுகள் தங்கள் பாட்டுக்கு சாவதானமாக புல்மேய்ந்து கொண்டிருந்தன. சாப்பிடும் பையில் கிடந்த கால் போத்தலளவு தண்ணிரைக் குடித்துவிட்டு, சாப்பிட்ட கையை விளாத்தி மரத்திலே அவன் தேய்த்துத் துடைத்தான். வயிறு நிரம்பிய இந்த நேரத்திலே தன் பெற்ற தாயைப் பற்றியும், தங்கைகளைப் பற்றியுமான நினைவு அவனுக்கு இப்போது வந்தது. அவனுடைய வீட்டிலே உள்ளவர்களுக்கு இந்தச் சாப் பாடு விஷயம் ஒன்றுதான் நாளாந்தம் வயிற்றுக்கு நிச்சயமில்லாததொன்று - இதை அங்கே இருந்தபோது அவன்
ඊ. ෆි. ථNගvගvජ්ග(5 O 24 O

அவர்களுடன் நன்றாகப் பட்டுக்கழித்தவன் - இதனால் வீட்டிலுள்ளவர்களின் பசியைப் பற்றிய அந்த வேதனையுணர்வுகளை அவன் சிறிது நேரம் அதிலே நின்றபடி நினைத்துக் கவலையுற்றான். "நானெண்டாலும் இங்க வந்து அப்பம்மா வீட்டில இருந்து கொண்டு இந்த மாடுகளை மேய்க்கிறன் - அதால இங்க நேரத்துக்கு நான் சாப்பிடுறன். அங்க அம்மா எங்கட வீட்டில சமைக்கிறாவோ சாப்பிடுறாவோ?. ஒண்டுமாத் தெரியேல்ல - தங்கச்சியள் எல்லாம் சாப்பாடில்லாத நாளில எப்பிடிப்பள்ளிக்கூடம் போவினம்? சீயென்ன சீவியம் இது?” இந்தச் சிறிய வயதினில் அவனுக்கு இதையெல்லாம் நினைக்க உலகமே வெறுத்துப்போனது போல் ஒரு சூனிய உணர்வு மனத்தினில் படர்ந்தது. அவன் தான் போட்டிருந்த அந்த அழுக்குக் கால்சட்டையையும் மேல் சட்டையையும் ஒரு முறைதன் தலையைத் தாழ்த்திப் பார்த்தான்.
“இது ஊத்தை உடுப்பெண்டாலும் நான் போட்டுக்கொண்டு திரியலாம். மாடுகளை மேய்க்க வரேக்க இந்த உடுப்புத்தான் தோது. ஆனா பள்ளிக்கூடம் போற தங்கச்சிமாருக்கு பொத்தலும் ஒட்டையுமில்லாத நல்ல உடுப் பெல்லே அங்க போட்டுப் போவேணும். ஏதாவது காலேலையெண்டாலும் கொஞ்சம் வயித்துக்கு சாப்பிடவெல்லே குடுத்துப் பள்ளிக்கூடம் அனுப்பவேணும். எல்லாம் எங்கட அப்பகவிலதான் பிழை - அவர் ஒழுங்கா உழைப்புப் பிழைப்புக்குப் போய் வந்தா எங்களுக்கேன் இந்தக் கஷ்டங்கள் வருகுது. நானும் அக்காவும் எங்கட அம்மாவையும் தங்கச்சியளையும் விட்டுட்டு ஏன் இங்க வந்து தனியக்கிடந்து கஷ்டப் படவேணும்? இதுக்கெல்லாம் அவற்றை குடிதான் காரணம். குடி குடியெண்டு சும்மாவே? அவர் ஒரே குடி சவம்! வேலை விட்லட்டி ஒண்டும் இல்லாம சும்மா குடிச்சுக்கொண்டு திரிஞ்சுகொண்டு என்ன அப்பா இவர் எங்களுக்கு? - அம்மாதான் இவரோட எல்லாத்துக்கும் கிடந்து கஷ்டப்பட்டுக்கொண்டு பெரிய பாவம்!” அவனுக்குத் தாயை நினைக்க அழுகை வருமாப்போல இருந்தது. சாப்பிட்ட வயிறும் அவனுக்கு துக்க மேலீட்டால் எரிந்து காந்தியது. "அம்மா. அம்மா." என்று ஏங்கியபடி அவன் அதிலே நின்றவாறு விம்மினான். அவனுக்குக் கண்களில் நீர் பனித்தது. நீர் பனித்த அந்தக் கண்ணிர்த் திரையோடு அவன் மாடுகளைப் பார்த்தான். மாடுகள் கவலை இல்லாததைப்போல இருந்துகொண்டு சுகமாக புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் - அதை நினைத்து பின்னரும் மனக் கவலையில் ஒருகணம் அவன் தன் வீட்டையும் நினைத்துப் பார்த்தான். "இந்த மாடுகளுக்குக்கூடச் சாப்பிடப் புல்லுகள் இந்தத் தரைவையில எல்லாம் முளைச்சுக்கிடக்கு - அதுகள் இஷ்டம் போலத் தங்கடை எண்ணத்துக்கு இதுகளைச் சாப்பிடுதுகள். தங்கடை வயித்தை நிரப்புதுகள் - ஆனா எங்கட வீட்டில கால் வயித்துக்கும் ஒழுங்காச் சாப்பிடறதுக்கே கஷ்டமாயிருக்கே.?” அவன் இப்படியும் நினைத்துப் பெருமூச்சு விட்டான். இந்தக் கவலைகள் எல்லாவற்றையும் போக்கிக்கொள்ள அவன் வான் வெளியைத்தான் பார்க்கவேண்டி இருந்தது. அந்த இடத்தில் தன் துயரத்தைப் போக்கிக் கொள்ள
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 25 O

Page 23
வெறுமையாய் இருந்த வானத்திலே ஆழமாயுள்ள நீலத்தொலைவுகளை பார்ப்பதை விட வேறு வழியே இல்லை என்கின்ற மாதிரி அவனுக்கிருந்தது. அந்த ஒளி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததில் மனத்தின் கவலைகள் நீங்கி தேறுதல் அடைந்ததைப்போல பிறகு அவன் ஆகிவிட்டான். இப்போது கும்பலாக அங்கு நின்றுகொண்டு புல்லு மேய்ந்து கொண்டிருக்கின்ற மாடுகளை எண்ணிக் கணக்கிட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. பொழுது சாய்வதற்குக் கிட்டவாக இரண்டு தடவைகளாவது மாடுகளின் எண்ணிக்கையை அவன் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் அப்பப்பா அவனுக்குச் சொல்லிக்கொடுத்தது. ‘உன்ரை அப்பா குடிகாரன்! உனக்கும் ஒழுங்காப் படிப்பேறேல்ல. என்ரை காலத்துக்குப் பிறகு இந்த மாடெல்லாம் உனக்குத்தான், அதோட என்ர வயல் காணியிலயும் கால்வாசிக் காணி உனக்குத்தான்!” என்று அவர் ஒருநாள் மாலுக்குள் இருந்து அவன் இரவு படுக்கப் போகுமுன் கூறியதிலிருந்து, இதிலே அவன் அதிக அக்கறைப்பட்டிருந்தான். மாடுகள் ஒருகாலம் தன்கைக்கு வரும் என்ற எண்ணம் அவன் மனதில் ஒருபுறமிருக்க, இன்றைய நடப்பில் மாடுகள் ஏதும் தொலைந்தால் செம்மையாக அவரிடம் அடிவாங்கித் தொலைக்க நேரிடும் என்ற பயம்தான் அவனிடம் அதிகம் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக “புல் மேயச் சாய்த்துக்கொண்டு வந்து விட்ட மாடுகளை ஏன் கவனமில்லாமலிருந்து துலைச்சுப்போட்டுப் போவான்?” - என்ற அக்கறையின் நிமித்தம் அவன் அதிக அவதானமாகவிருந்து அவைகளை எண்ணிக் கணக்கிட்டான்.
அப்படிக் கணக்கிட்டதில் தனது பட்டி மாடுகளின் எண்ணிக்கைக் கணக்கு, கணக்குக் கணக்காய் அப்படியே ஒன்றும் குறைவில்லாத அளவில் இருப்பது அவனது மனசுக்கு ரொம்பவும் நிம்மதியாயிருந்தது. பிறகு காட்டுப்பக்கம் அவன் பார்த்துக்கொண்டு அந்த மாட்டுக்கள்ளர்களை அவன் நினைத்தான். “பட்டியை விட்டுக்கலைஞ்சுபோய் உடம்புத் திமிரின்ரை தாங்கேலாத கொம்புத்தினவில மண் எடுத்துக்கொண்டு திரியிற குளுவன் மாடுகள - இடியன் மாடுகளையெல்லாம், அவங்கள் எப்பிடிப் பிடிக்கிறாங்கள்?” - என்று ஐயா ஒரு நாள் நிலவின் வெளியில் நின்றுகொண்டு அவனுக்குச் சொன்னது இப்பொழுதும் ஞாபகத்திலே அவனுக்கு நல்ல வெளிச்சமாயிருந்தது. “அவங்கள் பெடியா கூட்டத்தை விட்டுத் தனியனாப்போன அந்த மாடுகளைப் பிடிக்க ராவில அவங்கட ஊர்ப்பக்கமிருந்து அந்தக் காட்டுக்கால வந்து அந்த மேய்ச்சல் வெளிக்கு வந்து சேருவாங்கள். வரேக்க கயிறுகளோடதான் அங்கினை வருவாங்கள். மாடு பிடிக்கிற கள்ளருக்கு எந்தத்திமிர் பிடிச்ச மாடுகளுக்கும் பயமெண்டில்ல - அந்த மாடுகளுக்கு சுருக்கு வளையம் போட்ட அந்தக் கயித்தைக்கழுத்திலயெறிஞ்சு அதுகள் பாஞ்சோடேக்க எம்பிட்ட மரத்தில பிடிகயித்தை ஒருவன் சுத்திப்போடுவான் கண்டியோ - மற்றவனும் சரியான வேளைக்கு கழுத்தில அது மாதிரி கயிறெறிஞ்சு அந்த மாட்டை இழுத்து கீழ விடுத்தீடுவான். பேந்தென்ன..? கொண்டுவந்த கோடாலியால ஒரு
* 8.Ᏸ. ථAගvගvණිගර් O 26 O

அடி நெத்தியில மாட்டுக்கு உறைப்பா விழும். அந்த மரண அடியோட சரி அதுக்குப் பிறகு உரிச்சு வெட்டிச் சாக்கில போட்டு அந்தப் பார இறைச்சிச் சாக்கைக் கூட நாலுபேர் ஆளாளுக்கு பஞ்சுமாதிரியாத் தூக்கிச் சுமந்துகொண்டு போயிருவாங்களடா." அவனுக்கு இதைக்கேட்க ஆத்திரமாகத்தான் இருந்தது. இன்னொருவரின் வளர்ப்பு மாட்டை அடித்துக் கொன்றுபோட்டு அதன் இறைச்சியைக் களவாடிப்போகும் அவர்களை நினைக்க இனியில்லை எனும் அளவுக்கு அவனுக்கு மனசில் எரிச்சல் எரிந்தது. இப்பொழுதும் அப்பப்பா சொன்ன அந்தக் கதைகளை நினைத்து ஆத்திரப்பட்டுக்கொண்டு, அவன் விளாங்காய் போட்டிருந்த அந்தச் சாக்கருகே வந்தான். நல்ல மரம்தெரிந்து பிடுங்கி எடுத்த அந்த ருசியுள்ள விளாங்காய்களையெல்லாம், சாக்கின் வாயைத் திறந்து அவன் ஒருமுறை உள்ளே பார்த்தான். அவனது மனத்திற்கு இன்று மரத்தில் பறித்தெடுத்த விளாங்காய்களின் கணக்கு எண்ணிக்கை திருப்தியாயிருந்தது. ருசிமிக்க அந்த விளாங்காய்களில் ஒன்றை எடுத்துத் தின்னக் கொடுத்துத்தான் சாக்கிலுள்ள முழுவிளாங்காய்க்குமாக இன்று ‘எமானிஸ்' - என்கிற அந்த வெற்றிலைப் பெட்டிக்கடை முதலாளிக்காரரோடு விலை பேச வேணும். கறாராகக் கதைத்தால்தான் விலையில் பத்துச் சதமாவது அவர் மேலதிகமாகப் போட்டுக் கொடுப்பார் - "அவருக்கு என்ன தெரியும் நான் இங்கே விளாங்காய் ஆயப்படுகிறபாடு? - கயர் ருசியானதாயுள்ள விளாங்காய் பறித்தெடுக்க வேண்டுமென்று நினைத்தால் - கறுத்தப் பெருங்குளவி, சாம்பல் பொத்தைக்கூடு கட்டியுள்ள விளாமரங்களிலும் தான் நான் கட்டாயம் ஏறவேணும் - குளவிகலைந்த வெறுங்கூடுள்ள மரங்களில ஏறப் பயமில்ல! - ஆனாலும் குளவி வெளிக்கிடுற கூடுள்ள மரங்களில ஒரு கிளையிலயெண்டாலும் ஏறிப் பிடிச்சிருந்து பயந்துகொண்டு விளாங்காய் புடுங்கிக் கீழே போடுறது - அந்தக் கொஞ்சத்துக்கு என்ரை உயிரைக் கையில பிடிச்சு வைச்சிருக்கிறது மாதிரி ஒரு வேலைதானே? இதையெல்லாம் அவர் கொஞ்சம் மனசில நிநெச்சு பத்துச்சேம் - மாவது கூடவாப்போட்டுத் தரவேணாமே?” - என்று தன் உடல் கஷ்டத்தையும் நினைத்துப் பார்த்து - அதோடுதன் வியாபார விரித்திக்கும் ஒரு வழியை எண்ணிச் சிந்தித்துக்கொண்டு - அந்த இடத்தில் தனக்குச் சூழவாயுள்ள விளாத்திமரக் காட்டையும் ஒருமுறை தன் கண் பார்வையினால் அவன் அளந்தான். “நாளைக்கு எட்டத் தள்ளியுள்ள அந்த மூண்டு மரங்களிலும் ஏறி அதிலனுள்ள காயளப் புடுங்கிப் போடவேணும்! நல்ல முத்தின பருவேமாய் அத்தில்லைதான் பெருத்த உருண்டையான விளாங்காயள் நிறேய்யக் கிடக்கு - சம்பலுக்கும் அதியம் கொட்டையளில்லாத புளியும் அதியமில்லாத அந்தச் சதைதான் ருசி - அதை ஆயுவம் - எமானிசும் நல்ல விலைக்கு அதை வாங்குவார்.” என்று அதையும் ஒருமுறை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு சற்றேதான் நின்று கொண்டிருந்த இடத்தில் நின்றபடி, மஞ்சளாய் வீசிக்கொண்டிருந்த வெயிலைப் பார்த்தான். அந்த வெயிலில் தன் நிழல் நீண்டு வளர்ந்திருப்பதைக் கவனித்து, அந்திவெயில் சாய்கிறதென்று அவன் உணர்ந்தான். மாடுகளும் மாலையானதில் தாழக்குரல் எழுப்பத்தொடங்கி வழ்க்கையின் சிறக்கஸ் O 27 O

Page 24
விட்டன. அவைகள் மேய்ச்சலில் இப்போது வேகம் காட்டினதால் அந்த மேய்ந்ததழைகளின்வாசம் காற்றில் அவனுக்கு மணத்தது. சில மாடுகள் நடந்து நடந்து இடையிடையே புல் மேய்ந்து கொண்டுபோக, அவனும் குறை விளாங்காய்ச் சாக்கின் வாயை முறுக்கிப் பிடித்து அதனடியில் கயிற்றால் ஒரு கட்டுப்போட்டான். "என்னையிந்த ஆடாத ஆட்டமெல்லாம் தாங்கள் வைச்சு ஆட்டிக் களைக்க வைச்சுப்போட்டு இப்ப வீட்டப் போகேக்க மாத்திரம் ஆளுக்கையாள் இடிச்சுப்பிடிச்சுக் கொண்டு நெல்ல புள்ளயஸ் மாதிரி நடக்குறியளென்ன!” - என்று அந்த மாடுகளைப் பார்த்துச் சொல்லிக்கொண்டு சாப்பாட்டுப் பையை தோளில் கொழுவியபடி 'ம்' என்று அடக்கும் மூச்சுடன் அந்தச் சாக்கின் விசிறிப் பட்டைப் பிடித்துத்துக்கி - அந்தப் பாரச் சாக்கைத் தட்டத்தனியனாய் ஒரு எம்பு எம்பித் தன் தோளிலேற்றிக் கொண்டான் அவன் பிறகு “ஹோய்.ஹேய்.ஹே.” - என்ற மாடுவிரட்டல் சத்தத்தோடு அவன் அவைகளின் பின்னாலே நடக்கும் போது - கையில் வைத்திருந்த கம்பையும் ஒசைபட கீழே அடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான். அந்த வெளியாலே நடந்து வரும்போது காலும் - பாரம் சுமந்து சுமந்து பிடரியும் வலித்தது அவனுக்கு. சாக்கின் உள்ளே இருந்த விளாங்காய்களினது பாரமும், நடந்து கொண்டிருக்கும் அவனை அமுக்கிக் கீழே இருக்கவும் வைத்து விடும் போலிருந்தது. என்றாலும் நாளாந்தம் பார வண்டில் இழுக்கும் மாடு போல அவனும் இந்தப் பாரத்தைச் சுமந்து நடந்து பழக்கப்பட்டதாகிவிட்டதால் மூச்சைப்பிடித்து இடையிடையே உள்ளே வைத்தபடி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவன் நடந்தான். “இந்த விளாங்காயளை வித்துக்கொண்டு போய் அக்காவுக்கு நான் குடுத்துவாறகாசில ஒரு கணக்குச் சேரவிட்டு, அவ ஒரு பவுண் சங்கிலியை வாங்கிக் கழுத்தில போடுவா - அப்பிடி அவ போட்டான பிறகு சங்கு மாதிரியுள்ள அவவின்ர வெள்ளைக் கைக்கும் ஒரு சோடி காப்பு வாங்கிக் குடுக்க வேணும் இப்பிடியே நெடுகக் காசுகள் சேரச்சேர அதுவும் நடக்கும்.! ஒரேயொரு தம்பியெண்டும் இருக்கிறன் நான்! அப்பிடி இருக்கிறவன், அக்காவுக்குத்தானே முதலிய உழைச்சுக் குடுக்க வேணும்? அப்பாவும் அக்காவுக்கு ஒண்டும் செய்துகுடார் - அம்மாவுக்கும் ஏலாது பாவம் - ஆனபடியா என்ரை அக்காச்சிக்கு நான் தானே ஏதாவது செய்து குடுக்கவேணும்!” மாடுகள் முன்னே நடந்துபோக, பின்னால் அவைகளைப் பார்த்துக்கொண்டு பாரத்துடன் நடந்து கொண்டிருந்தபோது, இந்தச் சிந்தனைகள் மனத்தில் எழுந்து அவனது களைப்பைப் போக்கி உற்சாகத்தை அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தன. இவ்வளவு தூரமாய் அந்த வெளியிலே தன் கால்களைப் பார்த்தபடி, அந்தப்பாரத்துடன் கீழே குனிந்துகொண்டு நடந்து வந்தவன்; தான் நடந்து வந்த தூரத்தின் அளவு கணக்கை நன்றாய் அறிந்து வைத்துக்கொண்டுள்ள அநுபவத்தில் தலையை நிமிர்த்தி அவ்விடத்தில் நின்று நேரே பார்த்தான். இப்படிப்பார்த்த வேளை அவன் முகத்தில் மகிழ்ச்சிக்களை மின்னலிட்டது. கொறப்பத்தானை வீதியில் இனிப்போய்ச்சேருவதற்கு சிறிது தூரம்தான்
ඒ.ෆි. ෆ‍්‍යගvගvර්‍ගdb O 28 O

இருக்கிறது, என்பதை தன் கண்களால் பார்த்து நிச்சயித்துக் கொண்டதில் அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது. அந்த வீதியின் அருகிலுள்ள பெருவாகை மரங்களில் காகங்களின் கூட்டக் கத்தல்கள், அவனது காதுகளுக்கு நன்றாகக் கேட்கத் தொடங்கிவிட்டது. அந்த வாகை மர முடிகள் மீது, அஸ்தமிக்கும் தறுவாயிலிருந்த சூரியனின் வெப்பமற்ற மாலைச் செங்கதிர்கள் தழல் ஒளி வீசின. பாலத்துக்குப் பக்கத்தேயுள்ள சராயக் கடைக்கு முன்னால், காரங்கள் இட்ட தீன் விற்கின்ற தள்ளுவண்டிலும் நிற்கிறது. அதனருகிலும் நான்கு ஐந்துபேர் நிற்கின்றார்கள். வாகை மரத்துக்குக் கீழே பொழுது படவும் குறவர்களெல்லாம் வந்து கூடிவிட்டதினால், அவர்களது உடுதுணிப் பொட்டலங்களும் சாய்வான நீண்ட மரக் கிளையில் தொங்கிக் கொண்டிருப்பது அவனது கண்பார்வைக்கு துலாம்பரமாகத் தெரிகின்றன. “சுறுக்காய் நடந்து 'எமானிஸ் ஐயாவின்ரை கடையடிக்குப் போனால்தான், இதை விலை பேசிக்குடுத்துப்போட்டு மாடுகள் நிக்கிற பக்கம் திரும்பியும் வரலாம். நான் அங்காலையிங்காலை போனாலும் இந்த மாடுகள் பாலத்தடியை விட்டு எங்கையும் அசும்பாதுகள் - நான் வந்து கலைச்சால்தான் அதுகள் பிறகு றோட்டைத்தாண்டும். என்னவோ ஐயாவுக்குத் தெரியாம இந்த விளாங்காய் பிடுங்கி விக்கிற காரியத்தை நான் கொஞ்ச நாளா ரகசியமாச் செய்து கொண்டு வாறன். முருகா இது ஐயாவுக்குத் தெரிய வேண்டி வந்தா நான் பேந்து துலைஞ்சன். அவர் பேந்து என்ரை தோலை உரிச்சு உப்புக் கண்டம் போட்டிருவார்.” - என்ற அந்தப் பயத்துடன் யாராவது ஐயாவுக்குத் தெரிந்தவர்கள் அந்த வீதியால் போகிறார்களா என்று ஒரு முறை அவ்விடத்தில் நோட்டம் பார்த்துவிட்டு, அவன் அந்த வீதியில் ஏறி சாராயக் கடைக்கு கொஞ்சதூரம் தள்ளி இருந்த எமானிஸ் ஐயாவின் பெட்டிக் கடையை நோக்கி நடந்தான். அப்படி நடந்து கொண்டிருக்கும் போது, கருசனையோடு அந்த மாடுகளையும் “அவைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?” - என்றும் அவன் திரும்பி அங்கே ஒருமுறை பார்க்காமலும் போய்விடவில்லை. அவைகளும் "மேய்ப்பன் வரும்வரை நாங்கள் இவ்விடத்திலேயே காத்திருப்போம்' என்பதுபோல தங்களைவிட உயரமான மற்ற மாடுகளின் முதுகின்மேலே தலையை நீட்டிக்கொண்டும் ஒட்டநின்று ஒன்றுடன் ஒன்றாய் தங்களது உடலை அவற்றுடன் உரசிக்கொண்டும் பட்டியில் நிற்கின்ற பாவனையோடு பொழுதுபடுகின்ற அந்தவேளையில் அதிலே நின்று கொண்டிருந்தன. அவனுக்குக் காகங்கள் கத்திக் கொண்டிருக்கும் வாகை மரத்தைத் தாண்டி, அந்தச் சாக்குடன் அங்காலே போகுமட்டும் ஒரு வில்லங்கமொன்று காத்து இருந்தது. "ஐயா தம்பித் தெம்பி விளாங்கா ஒண்ணு குடுத்துட்டுப் போய்யா.” ஒரு குறத்தி கேட்டால் மற்றக் குறத்தியும் அவளுடன் சேர்ந்துகொண்டு கேட்பாள். இது அந்தக் கூட்டத்தவர்களுக்கு இருக்கின்ற ஒரு பழக்கம், "ஒண்ணு குடுய்யா. குடுய்யா. நல்ல புல்ல ஆசையா திங்க ஒண்ணு குடுய்யா." இப்பொழுது அவர்களது குழந்தை குட்டிகள் என்று அந்தக் கூட்டம் முழுவதுமே, அவனது சாக்கிலுள்ள
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 29 O

Page 25
விளாங்காயின் எண்ணிக்கைக் கணக்குக்குத் தோதாய் நின்று கொண்டு கேட்டுக்கொண்டு இருப்பது போல அவனுக்கிருந்தது. இதனால் அந்தப் பக்கமே அவன் பார்க்கப் பயந்து கொண்டு, எமானிஸ் கடையை நோக்கி சாக்குப் பாரத்துடன் அந்த வீதியிலே ஒடிப் போனான். அவன் அதிலே ஓடுவதைப் பார்த்துவிட்டு "தம்பி. தம்பி!” - என்று ஒரு குறவன் அதிலே இருந்தபடி பெரிதாக கெக்கட்டமிட்டுச் சிரிப்பது அவனது காதுகளுக்குக் கேட்டது. குறத்திகளும் அவனோடு சேர்ந்து கொண்டு சிரிக்கிறார்கள். அவர்களுக்கென்ன கவலை! வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாத ஒரு சமூகம்தானே அவர்கள்! அதனாலே அவர்கள் சிரிப்பார்கள் - சந்தோஷமா எல்லோருமாகச் சேர்ந்து குடிப்பார்கள் - சாப்பிடுவார்கள் - படுப்பார்கள் - விடியற்காலையில் அந்த இடத்திலிருந்து கலைந்து போவார்கள். பின்பு அன்றையநாள் அந்த ஊர்வழியவும் அவரவர் பாட்டுக்கு அலைந்து திரிவார்கள். தங்கள் பிழைப்பை நடத்துவார்கள் - வாழ்க்கை அவர்களுக்கு அப்படி! அவர்களை மாதிரி நாங்கள் வாழமுடியுமா? ஒவ்வொரு நாளும் விளாங்காயை கஷ்டப்பட்டுப் பறித்துக் கொண்டுவந்து இவர்களுக்குக் காசில்லாமல் சும்மா கொடுத்துவிட்டுப் போனால் என்னுடைய பாடு எப்படி இருக்கும்? அக்கா பிறகு சங்கிலி வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்ட மாதிரித்தான் இருக்கும் போ..!" இந்த நினைப்போடு முதுகுக்குக் கீழே தொய்ந்து போய்க் கீழே சரிந்த சாக்கைச் சரி செய்து தோளின் மேல் நிறுத்திக் கொண்டான் அவன். எமானிஸ் ஐயா தன்னுடைய தகரக் கூரைக் கடையின் உள்ளே இருளைப் போக்க விளக்கு வைக்கிறார். அவர் கறுத்தப் பெருமூக்குப் பேணி விளக்கைக் கொளுத்தி வைக்கவும், அந்த வெளிச்சத்துக்கு முன்னால் இவன் போய் நின்றான். “எமானிஸ் ஐயா நேரம் போகுது கெதியா இந்த விளாங்காயளைப் பட்டடையில கொட்டிக்கொண்டு உடன தாங்க காசை. ருசியான முத்தல் விளாங்கா இது விரிஞ்ச இந்த மூளைப் பாருங்க இது எப்பிடியெண்டு பாக்கிறது கிடக்க திண்டு பாருங்க இதின்ரை ருசியை?” அவன் ஆவலாய் இவ்வளவற்றையும் அவருக்குச் சொல்லிக்கொண்டிருக்க, அவர் வெற்றிலைத் தட்டுக்குத் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். “பொறு தம்பியின்னா அவசிரம்.!” “சீயெனக்குச் சரியா நேரம் போகுதய்யா. மாடெல்லாம் பாலத்தடியில அங்க நிக்குதெல்லே.?” "அது நிற்கும்! மாடுகள்தானே அது. நீ கொஞ்சம் பொறு தம்பி!” "ஐயா! எங்கட அப்பப்பா பேசுவார் எமானிஸ் ஐயா..! நேரம் போயிற்றெண்டா சில நேரம் தேடியும் வெளிக்கிடுவார்! பிறகு என்னைத் தேடி இங்காலை வாறத்துக்கு.” "அந்த ஐயா இந்த நேரம் வெளிக்கிட மாட்டுது நமக்குத் தெரியும். சும்மா பயப்புடாம நீ நில்லுதம்பி! பொழுது படவுமா இந்த வேலையிங்களை நான் முடிச்சு வாறன்." அவர் அப்படிச் சொல்லியபடி
|ඊ. ග්‍රී. ථNගvගvජ්ග(5 O 30 O

ஊதிபத்தியைக் கொளுத்தினார். ஒரு சிறிய அளவான விளக்கு வெளிச்சத்தில் பிரகாசமாய்த் தெரியும் புத்தரின் படத்துக்குக் கிட்டவாய், நறுமணப் புகை வளைவிட்டுப் போய்க் கொண்டிருந்த பத்திகளைக் கொண்டுபோய், அவர் ஒரு ஒரமாய் அவைகளை சிலாகையிடையிற் சொருகினார். அந்த ஊதுபத்தியின் நறுமணம் மெல்லிய இழையாக இழைந்து, காற்றோடு கலந்து அவனது மூக்கருகிலும் வந்து வீசிற்று. அந்தப் புகை மணத்தை, சுவாசத்தில் பெற்று அனுபவித்துக்கொண்டு இவன் அவரைப் பார்த்துக் கேட்டான். “எமானிஸ் ஐயா. காய் ஆயிறது இப்ப வவுனியாக் குளத்தடி மரங்களில கஷ்டமா வந்திட்டுது. எல்லாரும் வந்து ஆஞ்சதிலை இப்ப உச்சிக் கிளை வழிய உள்ளதுதான் மிச்சமாய்க் கிடக்கு. அதுகளை ஆய அந்தக் கொப்புகள் வழிய அப்பிடியே மேல ஏறவேணும் மேல.”
"விளாங்கா மரம் பெரிய மரமா தம்பி அது என்ன ஒரு சின்னதுதானே?” “சரி! நான் அங்கயிருந்து இந்தப் பாரத்தைத் தலையில தூக்கிக் கொண்டு வாறனெல்லே?” "அதுக்குத்தான் அம்பேசோம் தாறன். பெரிய காசிடா தம்பி அது உனக்கு!” "ம். பெரிய காசு அம்பேசேம்.! பத்துச்சம் கூடத் தரவேணும் இண்டைக்குக் கண்டியளோ! இல்லாட்டி பெரிய சாமியின்ரை பெட்டிக்கடைக்கு இதைக்கொண்டுபோய்க் குடுத்திடுவன்!” "அப்ப அவேயட்டக் குடு போ.” “நாளைக்கி இனி அங்கதான் நான் குடுப்பன் எமானிஸ் ஐயா உப்புடிச்சொன்னா?” “அட என்ன பிள்ளையடா தம்பி நீ கோவிக்கிறாய் நீ? பத்துச்சதம் என்னடா தம்பி எனக்குப் பெரிசு! நீ உதிலை அதைக் கொட்டீடு உண்ட கையால. கொட்டீர்ரா தம்பி? உன்ரை ராசி எனக்கும் நல்ல ராசி - எனக்குது நல்லா விக்கும் தம்பி கொட்டுடா?" அவனுக்கு இப்போது சந்தோஷமாயிருந்தது. சாக்கு முடிச்சையவிழ்த்து வெற்றிலைத் தட்டுக்குப் பக்கத்தில் இருந்த பலகைத் தட்டில், விழாங்காய்கள் கீழே உருண்டு விழாத மாதிரியாக அவதானமாக அவற்றைக் கொட்டினான். என்றாலும் அந்தச் சாக்கிலிருந்து கொட்டும்போது ஒரு பெருத்த விளாங்காய் கீழே விழுந்து உருண்டுபோய் எமானிசின் காலடியிலே அது நின்றது. அவர் அதை எடுத்து வாசம் முகர்ந்தார். கையில் வைத்து அதை உருட்டிவிட்டு, கொஞ்சம் மேலே எறிந்து அதை மீண்டும் கைக்குள் பிடித்தார். "நல்லவாசம். செம்பழம்.! பவுண்மாதிரி இருக்குதடா தம்பி காயின்ர மூள்.!”
"அப்படிச் சொல்லுங்க! காசை எடுங்க எமானிஸ் ஐயா?”
“பெரிய கறைச்சல் காசிக்காசு. இந்தாக்காசு” - அவர் லாச்சியிலே
வரழ்க்கையின் சிறக்கஸ் O 31 O

Page 26
இருந்து காசை எடுத்து அவன் கையில் வைத்தார். "தம்பி நாளைக்கும் கொண்டா?”
ம். ம். இதே கணக்குத்தான்! - பத்துச்சேம் இதுமாதிரியே இனிக் கூடத்தான் எமானிஸ் ஐயா! இனி குறைக்கமாட்டன் விலை சரியா?” “சரிடா தம்பி நீ கொண்டா?” அவர் சொல்லிவிட்டு பட்டடையில் கொட்டியிருந்த விளாங்காய்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். அவன் தன்கையில் வாங்கின பத்துப் பத்துச் சதக் குத்திகளை பையில்போட்டுக் கொண்டு, ஒரே ஒட்டமாகப் பாலத்தடிப்பக்கம் ஓடிப்போனான். வீதியில் அவன் விரைவாக ஓடி வருவதை பாலத்தடிக்குக் கீழ் நின்ற மாடுகளில் அநேகம் தலையை நிமிர்த்திப் பார்த்தன. அவன் அதிலே வந்த நேரம் வாகை மரத்துப் பக்கமாகவிருந்து ஒரு நரிக்குறவனும், நரிக்குறத்தியும் சாராயக்கடைக்குச் சாராயம் குடிக்கப் போய்க்கொண்டிருந்தார்கள். அவன் பாலத்தடிப் பள்ளத்தாலே கீழே இறங்கி வெறும் சாக்கை மடித்து ஒருகையில் வைத்துக்கொண்டு கம்பாலே அருகிலிருந்த செடிப் பற்றையின் இலைகளில் ஓசைஎழுப்பும் அளவுக்கு அடித்தான். அந்தச் சத்தத்துடன் மாடுகள் கோறோப்பத்தானை வீதியைக் கடந்து, சூசைப்பிள்ளையார் குளம் வீதியில் ஏறவும், துரிதமாக அவைகளை முன்னால் போக விரட்டிக் கொண்டு தானும் அவைகளுக்குப் பின்னாலே நடந்தான். அந்தக் கிரவல் மண் வீதியின் அருகில் நின்ற தேக்கும், கூமா மரங்களும் கருங்காலி நாவல் போன்ற சடைபிடித்த பெரு மரங்களும் இருளும் வேளையிலே இன்னும் இருட்டை அதிலே அதிகரித்து விட்டிருந்தன. அருகேயுள்ள அந்தோனியார் கோயில் வளவுக்காட்டு மரங்களிலெல்லாம் இருள் சூழ்ந்துவிட்டது போல் தெரிந்தது அவனுக்கு. மாடுகள் வளவடிக்குப் பக்கத்தே போனதும். "அக்கா அக்கா” - என்று கூப்பிட்டுக்கொண்டு வீதிக்குக் கீழே உள்ள கானால் இறங்கிப் போனான் அவன், “திறவுங்கோ படலையை. பால் மாடுகள, உள்ள கட்டிவிட” என்று தன் தமக்கையை அவன் கூப்பிட்டுச் சொல்ல அவள் வந்து அந்தப்படலையைத் திறந்தாள். "தம்பி! ஏன்ரா தம்பி நேரம் போன இங்க வாறத்துக்கு?” "அது பெரிய கதையக்கா” - அவன் பால் மாடுகளை “ஹோய், ஹேய்” என்று உள்ளே கலைத்து விட்டபடி சொன்னான். “கொண்டந்த சாக்கை கவனமா அதில போட்டியாடா தம்பி?” "பத்திரமா கோயில் வளவுகூமா மரத்துக்குப் பின்னால மறைவாப் போட்டிட்டு வாறன்’ "ஸ். சத்தம் அங்க கேட்டிடும் அப்பம்மாவுக்கும்!" மெதுவான குரலில் அவனுக்குச் சொல்லிவிட்டு உள்ளே வந்த காராம் பசுவை செம்பருத்தி மரத்தில் கட்டினாள் அவள். "அக்கா இண்டைக்கு விளாங்காயளை பத்திச்சம் கூடத்தான் விலைக்குக் குடுத்தனான்.”
“sub DMT... ?”
ඒ.ඡී. ෆ(හvගvණිගර් O 32 O

"உண்மையா.” அவன் கால் சட்டைப் பைக்குள் தன் கையைவிட்டு கிலுக்கிக் காட்டினான். "தம்பி கவனமடா உந்த மரங்களில மேல ஏறுறது”
“போக்கா. உந்தப் பெரிய பால மரங்களில, வீர மரங்களில, புளிய மரங்களில ஏறுற எனக்கு அந்த விளாமரம் என்ன அதுகளவிடப் பெரிசே?” "எண்டாலும் உந்த மரங்கள் வழிய ஏறுறது தம்பி உனக்கு லேசான விளையாட்டில்ல - கால் சறுக்கினா - கொப்பில கை பிடிக்கிறது பிழைச்சாச் சரி பாடு - உடன கிழ விழவும் வரும் - மரம் ஏறுறதில ஆரும் கெட்டித்தனம் பேசேல்லாது கண்டியோ?” “உப்பிடிச் சொல்லுறியளக்கா நீங்கள் - கள்ளுக்கு அவங்களும்தானே ஒவ்வொருநாளும் காலையும் பின்னேரமுமாத் தென்னை வழியவும் பெரிய பனை வழியவும் ஏறுறாங்கள் - அதுக்கென்ன நீங்கள் சொல்லிறியள்?” "அது தொழில் அவங்களுக்கு! அது பழகிப்போன பழக்கம் ஏறியிறங்குவாங்கள் மரம் வழிய அவங்கள் கவனமாய் - ஆனா நீ ஒரு சின்னப் பெடியனெல்லேடா?” “போக்கா சின்னப் பெடியனாம் நான்! பயந்து சாகிறா இவ!” அவளுக்கு தம்பி இப்படிக் கதைக்க சிரிப்பாய் வந்தது. a. “சரவணா நீ இப்பிடியே அந்தக் காசை என்னட்டத் தந்திட்டு கிணத்தடிக்குக் குளிக்கப்போ. நான் இங்கினை இந்த மாடுகளைக் கட்டீட்டு அங்கினையா பிறகு வாறன் நீ குளிகேக்கை மேலூத்தை தேச்சு விட.” “அச்சோ நீங்க ஊத்த தேச்சாலே என்ரை மேல் எரியும் வேணாம்! “ஊத்தை தேக்கிற கள்ளத்திலையா உதைச் சொல்லுறாய் கள்ளா. பேசாம அங்க கிணத்தடிக்குப் போய் உந்தக் காச்சட்டையையும் அங்க கழட்டிப்போடு நான் கும்மிப்பிழிஞ்சு கல்லில அடிச்சுத் தோச்சுப்போட்டு விடுறன்.”
“இது ஊத்தையா இன்னும் வரேல்லையக்கா.”
"சிக் அடிச்சனெண்டா ஒரு அடி உனக்கு. அதை உன்ர மேலில இருந்து அங்கபோன உடன நீ கழட்டிக் கீழ போடு. நான் வாறன் அதைத் தோய்ச்சுத்தர உனக்கு." அவனைக் கிணற்றடிக்குப் போகத் துரத்திவிட்டு விசயா பசு மாடுகளை உள்ளே கட்டிவிடும் வேலையை செய்து கொண்டிருந்தாள். “நானும் வரட்டே பிள்ளை உனக்குத் துணைக்கு. அங்க கட்டியாச்சே பிள்ளை மாடுகளெல்லாத்தையும்?” அப்பம்மா அப்படிச் சொல்லிய தருணத்தோடு அங்கு தன்னிடத்தில் வரத் தயாராகிறது மாதிரி; அவர் அந்தத் திண்ணைப் படிகளிலிருந்து கீழே இறங்குவது அவளுக்குத் தெரிந்தது. "அப்பம்மா பொழுதுபட்ட நேரம் சாணியும் மூத்திரமும் கலந்து சேறு குழம்பிக்கிடக்கிற இதுக்க வந்து காலை வைச்சிடாதயுங்கோ. நீங்க அங்க இருங்கோ நான் இதுகளைப் பாத்துச் செய்வன்.”
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 33 O

Page 27
“தம்பி எங்கயம்மா குளிக்கப் போயிற்றானே பிள்ள?” "குளிக்க அவனைக் கிணத்தடிப் பக்கம் போக துரத்திவிட்டிருக்கிறன் அப்பம்மா.” "அத்தான் சரி. அந்த உடுப்புகளையும் அவனை மாத்தச் சொல்லடி பிள்ளை” "அதுக்குத்தான் நான் அப்பிடிச் சொல்ல அவன் பெரிசா எனக்குச் சத்தம் போட்டுட்டுப் போறான் அப்பம்மா. திருந்தான் அவன்!” “பிள்ளை பொழுதுபட்ட நேரமெல்லேயம்மா அவனைத் தண்ணியத் தலையில கெதியா ஊத்திட்டு கிணத்தடியால வெளிக்கிட்டு வரச்சொல்லணை.” “ஓம் அப்பம்மா அதெல்லாத்தையும் நான் பாக்கிறன் நீங்க வீட்டுக்கையும் கையோட அங்க குசினிக்கையுமா விளக்கைக் கொளுத்தி வைச்சிடுங்கோ நேரத்தோட.” அப்பம்மா அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு திரும்பியதும், அவள் அந்த மாடுகளைக் கட்டும் வேளையில் கல்லுக்குமேல் வைத்த பத்துச் சதக் காசுகளை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு எண்ணிப்பார்த்தாள். அந்த அறுபது சதத்துடன் உண்டியலில் தான் போட்டுவைத்துள்ள இருப்பையும் சேர்த்துக் கணக்குப் பார்த்தபோது இன்னும் சில காலங்கள் செல்ல தன் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி ஏறும் என்ற நம்பிக்கையானது அவளைத் தங்கத்தேரிலே ஏற்றிப் பறக்கவிட்டதைப் போல இருந்தது. உடனே அந்தச் சில்லறைகளை கையில் இறுக்கவும் பொத்தியபடி இருக்க வைத்துக்கொண்டு, அவ்விடமிருந்து நட்ந்துபோய் மாலுக்குள்ளாலே திரும்பி தன் படுக்கை அறைக்குள் நசுக்கிடாமல் அவள் நுழைந்தாள். அந்த அறை இருட்டாகவிருந்தது. அந்த இருட்டுக்குள்ளே தேடி தன் உடுப்புப் பெட்டியைத் திறந்தாள். அதற்குள்ளே இருந்த அந்த உண்டியலின் வாய் வெட்டுக்குள் சத்தம் போடாமல் கையிலிருந்த காசை விழுத்தும்போது, இரு எலிகள் அந்த அறைக்குள்ளே சல சலப்புடன் பதுங்கி ஓடின. எலி ஒடிப்போன கையோடு அங்கே அந்த வாசல் பக்கமாக, வெளிச்சம் ஏற்றிய லாம்புடன் அப்பம்மா வந்துகொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. "என்ன பிள்ளை உந்த இருட்டுக்கயிருந்து நீயென்ன செய்து கொண்டிருக்கிறாய். அவனைக் கிணத்தடிப்பக்கம் போக விட்டிட்டு?” "இங்க அப்பம்மா சவுக்காரம் பாக்கிறன்! அங்க தம்பிக்குக் குளிக்கக் கொண்டுபோய்க் குடுக்க!” - அவள் தான் போட்ட காசு, உண்டியலில் விழுந்துவிட்ட நிம்மதியில் வார்த்தைத் தடுமாற்றம் இல்லாமல் அப்பம்மாவுக்கு பதில் சொன்னாள். "நீ ஒரு விசர்ப்பிள்ளை அங்க கிணத்தடியில வாங்கிப் போட்டுக் கிடக்கு ஊத்தைக்குப் போடுற சோப்பு! அது அங்க கிடக்க நீ இங்க கிடந்து இருட்டுக்க ஏன் தடவுறாய்? அவன் அங்க நிண்டு சும்மா தலையில சாட்டுக்கு தண்ணியை ஊத்திக்கொண்டு
ரீ.பி. அருளWணந்தம் O 34 O

ஊத்தை தேச்சுக் குளிக்காம இங்க வந்திடப்போறான் - அதுக்குள்ள சுறுக்கா அவனை நீ போய்ப் பார் கிணத்தடியில - போ. கெதியாப் போவணை பிள்ளை நீ அங்க.?” அப்பம்மா இப்படி ஒரு அகராதியைப் படித்து முடித்துவிட - அதை ஏதோ தான் அக்கறையாகக் கேட்டதுபோல் அவருக்கு முன் இருந்துவிட்டு - அவள் விரைவாக அறையை விட்டு வெளியே நடந்து வந்தாள். "தன்னைக் கண்டு அங்கு கதைக்காமல் தன்தம்பி ஒருநாளும் அங்கே தலைக்குத் தண்ணியை ஊத்தமாட்டான்" - என்ற நினைப்பில் அந்தக் கிணத்தடிப்பக்கம் போய்ச்சேர விரைவாக அவள் நடந்தாள். "அக்கா போட்டீங்களா காசை உண்டியலிலை” கிணத்தடிக்குவந்த அக்காளிடம் கேட்டான் சரவணன். “ம்.ம்.ஹிம்.” அவனுக்கு அக்காளின் தலையாட்டத்தையும் அவளது செழித்த முகத்தையும் சேர்த்துப் பார்க்கச் சந்தோஷமாயிருந்தது. "அக்கா உண்டியலுக்க இப்ப சேர்ந்திருக்கிற கணக்கு மொத்தமா எவ்வளவு எண்டு எனக்கொருக்காச் சொல்லுங்க பாப்பம்?” "நேத்துத்தானேயடா இதைச் சொன்னனான் உனக்கு?” “அது நேற்றெல்லே. இண்டைக்கு - இண்டைக்கு அதில போட்டதோட மொத்தக்காசு இருக்கிறதெவ்வளவு?” “யேய் நீயே அதைக் கணக்குப் பாரன்! நேற்றைக்கும் இண்டைக்குமாய்ச் சேத்து எவ்வளவு வருதெண்டு?” "என்னக்கா நீங்க! கோவப்படுறிங்க! சும்மா சொல்லுங்களன் அதை எனக்கு நீங்களே?” “கோவமென்னடா தம்பி உன்னில, என்ரை செல்லச் சிகாமணிக்குஞ்சு!
இண்டையோட சரியா எல்லாமாச் சேத்து நாப்பது ரூவா அறுவேசம் grf(Bu...?'
&G
சூ. அம்மா அ.வ்.வ.ள.வோ? அ.வ.ளவு வந்திட்டுதோ?” காட்டு வெக்கை முகத்திலிருந்து விலகி பூவொன்று புதிதாய் மலர்ந்ததைப் போன்ற மகிழ்ச்சி அவன் முகத்திலமைந்தது. “நீ குளிடா தம்பி இனி!” அவள் சொல்லிவிட்டு, தம்பியின் முக அழகைப் பார்த்து தானும் சிரித்தாள். அவன் ஒரு வாளி தண்ணீர் துலாவில் அள்ளியெடுக்க அவள் அதைவாங்கி தம்பியின் தலையில் முதலில் ஊற்றிவிட்டாள். அதன்பிறகு தன் பாவாடையை சிறிது மேலே தூக்கி இடுப்பிலே அதைச்சொருக்கிக் கொண்டு நின்று தம்பிக்குத் தண்ணிரள்ளி அவள்தான் தலையில் முழுகவார்த்தாள். "கால மடிச்சு கீழவா இருடா தம்பி தலைக்கு ஒழுங்காத் தண்ணியூத்த!” "ஏன் நான் வளந்திட்டனாக்கா?” "ஆம்பிள்ளைப் பிள்ளையெல்லே நீ? வளரத்தானே வேணும் நீ சுறுக்காய்?” "அக்கா நான் நல்லா வளரவிட்டு உங்களுக்குத்தானக்கா நல்லா உழைச்சுத்தருவன்!”
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 3.5 O

Page 28
“போடா தம்பி அதுக்குள்ள நான் கிழவியாவும் போயிடுவன்’ சொல்லிவிட்டு அவள் துலாக்கயிற்றை இரண்டு தடவைகள் வேகமாக கிணற்றுக்குள்ளே இழுத்துவிட்டாள். "அக்கா உப்புடிப்புடிச்சுக் கயித்தை இழுக்கிறதே!. கவனமக்கா’ அவன் பயத்தோடு அக்காவுக்குச் சொன்னான். அதைக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் அவள். “தம்பி நீ திரும்பி ஒருக்கால் நில். முதுகுக்குச் சவுக்காரம் போட?” அவள் சொல்லிவிட்டு அவனது கையை தன்கையால் பிடித்துக் கொண்டு கண்ணாடி வளையல்கள் ஒலிக்க மறுகையாலே அவனது முதுகுக்கு சோப்பைப் பூசினாள். "அக்கா எங்கட அம்மா இண்டைக்கு இங்காலிப்பக்கம் வந்தவவோ?” “இல்லையடா தம்பி" அவள் முதுகை இறுக்கித் தேய்க்க அவன் அசைந்து பிடித்துக்கொண்டு மீண்டும் அவளிடம் கேட்டான். "நான் ஒருக்கா எங்கடவீட்ட போய் அங்க அம்மாவையும், தங்கச்சியையும் பாத்திட்டு ஒருநாளைக்கு அங்கின நிண்டிட்டும் வரவே அக்கா?” "அப்பப்பாவிட்ட நீ இதைக் கேட்டாப் பேசுவார். உன்னை விடார்.!” “ஒரு நாளைக்கு என்னை அங்கின விட்டா என்னவாம்? அவன் அக்காவின் கையை விலக்கிக் கொண்டு எரிச்சலோடு கேட்டான்.
“ஒரு நாளைக்கெண்டு அவரிட்டக் கேட்டிட்டு அங்கின போய் நீ நிப்பாய் பிறகு இங்க லேசில திரும்பி நீ வரமாட்டாய்! இங்கின திரும்பி நீ வருமட்டும் இந்த மாடுகளையெல்லாம் இங்க இருந்து ஆர் பார்க்கிறது? இங்க கேப்பார் மேய்ப்பாரில்லாம அதுகளும் போயிடும் பேந்து உதால அப்பப்பா உன்னை அங்க விடுவாரோ என்னவோ? அதெல்லாம் கிடக்க நீ உந்தக் கட்டில நீட்டி உன்ரை காலைவை சவுக்காரம் போட - அந்தக் குளத்து ஊத்தை உறண்டலெல்லாம் அப்பிப் போய்க்கிடக்கு உன்ரை காலில.”
"காலுக்கு நான்தான் சவுக்காரம் போடுவன்! நீங்க அந்தச் சவுக்காரத்தை என்ரை கையிலயாத்தாங்கோ?”
é é
பூ பெரிய மனிசனாயிட்டான் இவன்!” அவள் சவுக்காரத்தை சிரித்துக்கொண்டு அவனிடம் கொடுத்துவிட்டு கையை தண்ணிருக்குள் வைத்து அலம்பினாள். அவன் சோப்பைக் காலுக்குப் போட்டுக் கொண்டுவிட, அவனது தலையிலே அவள் தண்ணிரை ஊற்றினாள். பாக்குமரத்தில் அடைந்த மைனாக்குருவிகள் பல குரல்களெடுத்துக் கத்திக்கொண்டிருந்தன. “கிணத்துக்கட்டு முழுவதும் சவக்குருவியள் உதுக்கயிருந்து பீச்சித்தள்ளிவைக்கப் போகுதுகள்!” குளித்த குறையில் ஒடிப்போய் ஒரு கமுகம் மட்டையை எடுத்து சத்தம் போட்டுக்கொண்டு அவன் அந்தக் கமுகமரங்களிலே தட்டினான். "படார், படார்” - என்கிற அந்தச் சத்தத்தோடு பறந்தன எல்லாக் குருவிகளும். "குளிக்கவெண்டு வந்தா குளிச்சு முடிக்கிறதுக்கு முன்னால எங்கயடா கூப்டக் கூப்ட குதியன் குத்திக்கொண்டு அங்காலையும் இங்காலையுமாப் பாஞ்சு திரியிறாய்?" அவள் தண்ணீர் வாளியை கையில் வைத்துக்கொண்டு அவனைப் பார்த்துச் சத்தம் போட்டாள். உடனே அவன் ஓடி
ரீ.பி.அருஸ்ணந்தம் O 36 O

அவ்விடத்துக்கு வந்து வாளிக்கு முன்னாலே தலையைக் கொடுத்துக் கொண்டு நின்றான். “கீழ இற்றா தம்பி இரு!” - என்று ஒரு அதட்டு அவனை அதட்டி விட்டு அந்தத் தண்ணீரை அவன் தலையிலூற்றினாள் அவள். அவன் "இனிக்காணும்" - என்று தன் அக்காவுக்குச் சொல்லிவிட்டு கிணற்றடியிலிருந்து வீட்டுப்பக்கம் விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். “டேய் தம்பி கொடியில துவாயிருக்கெடுத்துத் தலையை நல்லாத் துடை” அவள் சொல்லிக்கொண்டு பாவாடைச் செருகலை திரும்பவும் காலடிக்குப் போக இழுத்துவிட்டாள். கமுக மரங்களில் மீண்டும் அந்த மைனாக்கள் பறந்துவந்து அடைய, அதைப் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அதிலே நின்றுவிட்டு, தானும் கிணற்றடியிலிருந்து வெளிக்கிட்டு வீட்டுக்குப்போக அவள் நடந்தாள். “சரவணன் குளிச்ச கொஞ்சக் குறையோட அதுக்குள்ள ஓடிட்டானே விசயா? அவள் அந்த இடத்தாலே வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்க தங்கம்மாதன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவளிடம் கேட்டாள். “சரியான குழப்படி சின்னம்மா அவன்!"
"பாவம் அவன் உந்த வெய்யிலுக்க குளத்து வெளியெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு களைச்சுப் போயிருப்பான். கறி சோத்தை நல்லாப் போட்டுக்கீட்டுக் குடு அவனுக்குச் சாப்பிடுறதுத்துக்குப் பிள்ள?” W "அதெல்லாம் குறைச்சலில்லாமல் அவனுக்கு நான் குடுக்கிறனான்தான் சின்னம்மா! நீங்கள் போத்தல் கழுவி குசினிச் செத்தையடியில வைச்சணியளோ பால் ஊத்தக் காலேல உங்களுக்கு?” "தம்பி கொண்டோய் அங்க வைச்சிட்டான் பிள்ளை அப்பவே” "அப்பச்சரி! தம்பிமார் ரெண்டு பேரும் எங்கயுங்கோ சின்னம்மா?” “ஒருவர் பள்ளிக்கூடம் முடிஞ்சுவந்து உள்ள இருந்து படிச்சுக் கொண்டிருக்கிறார், மற்றவர் பின்னேரக் கடையப்பம் கொண்டுபோய்க் குடுத்திட்டுவர கடைப்பக்கம் போட்டார்.” சின்னம்மா அதைச் சொல்லிமுடிய “அதற்குப் பிறகு என்ன கதையைத்தான் அதிலே நின்றுகொண்டு அவவோடு கதைப்பது” என்று விசயா நினைத்தாள். அவருடைய வாடிய முகத்தை இவள் பார்க்க - நகை ஒன்றுமில்லாத இவளது வெறுங்கழுத்தை அவர் பார்க்க சிறிது நேரம் இருவருக்கும் ஒருவித வெறுமை உணர்வுதான் மனத்தில் உண்டாகியது. அதை இனி மேல் தம்மிடமாக இருந்து தவிர்த்துக்கொள்ள ஆளையாள் விலகிப் போவது நன்றென ஒருவித தவிப்பு இருவரிடமும் பிறகு எழுந்தது. "தம்பிக்குப்போய் ஏதாவது போட்டுக்கீட்டுக் குடுப்பம் சின்னம்மா?” என்று அவள்தான் அதிலே இருந்து தப்பிப்போகும் அளவுக்கு சின்னம்மாவிடம் ஒருகதையைச் சொன்னாள். "ஒமோம் கெதியாப்போபோ பிள்ளை. போய் அங்க அவனுக்கேதாவது போட்டுக்கீட்டுக்குடு தின்னுறதுக்கு!” - தங்கம்மாவும் தன்னை அவளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள அவசரப்பட்டுக்கொண்டு இதைச் சொன்னாள். விசயா சின்னம்மாவின் முகத்திலிருந்த தன்
வ0ழ்க்கையின் ரிறங்கஸ் O 37 O

Page 29
பார்வையை விலக்கி எடுத்துக்கொண்டு தலை குனிந்த பார்வையுடன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கஷ்டப்பட்ட சீவியத்திலும் சின்னம்மாவின் பிள்ளைகள் படிப்பது பற்றிய நிலைமையை நினைக்க அது அவளுக்குப் பெருமையாயிருந்தது. கஷ்டப்பட்ட ஒரு விதவைக்கிருக்கும் கெட்டித்தனத்தில் ஒரு சிறு தகுதிகூட கல்லுப் பிள்ளையார் மாதிரி சும்மா இருக்கும் தன் அப்பருக்கு இல்லாமலிருக்கிறதே. என்ற மன வருத்தத்துடன் அவள் குசினிப்பக்கம் போய்ச்சேர, தேசி மரத்துக்குப் பக்கத்தில் நின்று சரவணன் துவாய்த் துண்டால் தலை உணர்த்திக் கொண்டு நின்றான். “சரவணா தோய்ச்சு எடுத்து வைச்ச காச்சட்டை கிடக்கு கொண்டாறன்! நீ உடுப்பை மாத்தீட்டு வா சாப்பிட." "கெதியாக் கொண்டாங்கோ அக்கா காலெல்லாம் ஈரமூறுது, குளிருது, நடுங்குது” “கொஞ்சம் பொறுடா அதுக்குள்ள கிழவர்மார் மாதிரி நடுங்கிறான்” அவள் அப்படிச் சொன்னகையோடு ஓடிப்போய் தம்பிக்கு உடுக்கக் கால்சட்டை கொண்டுவந்து கொடுத்தாள். அவன் அதை வாங்கி துவாயை இடுப்பில் கட்டிக்கொண்டு ஈர உடுப்பைக் களைந்து போட்டுவிட்டு; கொண்டு வந்து கொடுத்த கால்சட்டையைப் போட்டுக் கொண்டான். ஈர உடுப்பை கொடியில் விழ எறிந்துவிட்டு அக்காவுக்குப் பின்னாலே அவன் போக. திண்ணைக் கட்டில் கம்பிக் கைப்பிடிபோட்டுத் தூக்கிவிட்டிருந்த பேணிக்குள் தன் கையை விட்டு, ஒரு விரல் பிடி திருநீற்றையெடுத்து தம்பிக்குக் கொடுத்தாள் விசயா. அதை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டு அவன் கைகூப்பி வணங்கி நிற்க, அந்தக் குசினி வாசலில் இருந்து விழுந்த விளக்கு வெளிச்சத்தில், அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள் விசயா. அத்தருணம் அவளுடைய மனம் இளகிக் கனிந்தது. “என்னக்கா வடிவா என்னையே நீங்க அப்படிப் பாக்கிறீங்க?"
"ஒமடா தம்பி நீ இந்த விளக்கு வெளிச்சத்தில நான் கும்பிடுற முருகன் மாதிரியேதான்ரா இருக்கிறாய்” - அவள் தன் மனத்தில் நினைத்ததைச் சொன்னாள். "என்னக்கா நீங்க! சில நேரங்களில நீங்க ஒருமாதிரித்தான் கதைக்கிறீங்க? எனக்கு என்னெண்டு ஒண்டும் விளங்குறேல்ல." "உனக்கு இது விளங்காதடா தம்பி! சிலரில அப்படியே நான் சொன்ன தெய்வ இயல், தெய்வச் சாயலெண்டு, அந்தக் கடவுள் அம்சம் இருக்கும் தம்பி!”
"அப்பிடியாக்கா! அது என்னில இருக்காக்கா?” "இல்லாம.? உன்ரை முகத்தில எனக்கும் பாக்க அந்தப்பிரகாசம் நல்லாத் தெரியுது திருநீறைப்பூசிய உடன உன்ர முகம் அப்பிடிக்கிடந்து நல்லா ஜொலிக்குதடா தம்பி!” அவள் அப்படிச்சொல்ல அவனுக்கு இரண்டு கண்களும் கலங்கியது. அப்படியே அவன் மனசுருகிப் போனான். "இப்பிடியே அக்காவின் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கண்களை
ඵ්. ග්‍රී. ලාංඡුගvශග්නර් O 38 O

மூடிக்கொண்டிருந்தால் எவ்வளவு மனசுக்குச் சுகமாக விருக்கும்” என்று அவனுக்கு அப்போது ஆசையாய் இருந்தது. “பசிக்குதாடா தம்பி உனக்கு?” "இல்லையக்கா எனக்குப் பசியே இல்லை” - அவன் தன் அக்காவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு சொன்னான். சற்றைக்கு முன் வயிற்றில் எழுந்த பசி பறந்ததைப் போல இருந்தது இப்பொழுது அவனுக்கு. “பொய் சொல்றாய் வாவா சாப்பிட - கொஞ்சம் வெந்தயக் குழம்போட சோத்தைச் சாப்பிடு - அந்தக் காஞ்ச புட்டச் சாப்பிட்டதுக்கு இப்ப சோத்தைக் கொஞ்சம் தயிரோட சேத்துக் குழைச்சுச் சாப்பிடு வயிறு குளிரட்டும்" அக்கா அந்தக் கறிச்சுவையை அப்படியெல்லாம் பக்குவமாய்ச் சொல்ல அமர்ந்திருந்த பசி உடனே அடிவயிற்றிலிருந்து எழுந்து குடலை விறாண்டியது அவனுக்கு. “போடுங்கக்கா சோத்தை! இப்ப நீங்க பக்குவமாச் சொல்லச் சொல்ல எனக்குப் பசிக்குது சரியாய்!” - என்றான் அவன். அவள் குசினிக்குள்ளே அவனைக் கூட்டிக் கொண்டு போய் இருக்கவைத்து அவனுக்கு முன்னால் தட்டப் பீங்கானை எடுத்துவைத்தாள். சோறும், கறியும், தயிரும் அதிலே நிரம்பப் போட்டு விட, அவன் அவை எல்லாவற்றையும் சேர்த்துக் குழைத்துத் தின்னத் தொடங்கினான். “டேய் தம்பி சாப்பிடேய்க்க இதை உனக்குச் சொல்லப்பிடாது - எண்டாலும் என்ன செய்யிறதெண்டு இப்ப அது ஞாபகம் வர உனக்கு நான் சொல்றன். நீ அந்தச் செங்காரிக் கண்டக் கட்டையவிட்டு அவிட்டு காலேல கலைச்சுக் கொண்டு குளத்தடிக்குப் போயிற்றியெண்டு அப்பப்பா வெள்ளன இங்க சத்தம்
போட்டவரடா என்னோட”
"சைய் முருகனாணை நான் அதை மறந்திட்டனக்கா.” - அவன் அந்த யோசனையில் தட்டிலுள்ள சோற்றை தன் கைகளில் பிசைந்து கொண்டிருந்தான். “சரி சரி அதெல்லாம் அப்ப நடந்து முடிஞ்சுபோச்சு. ஐயாவின்ரை சத்தத்தையே இப்ப இங்கினேக்க காணேல்ல. ஏதாவது புத்தகம் வைச்சிருந்து இப்பப் படிச்சுக் கொண்டிருக்கிறார்போல. அதில அவருக்குப் பொழுது போறதால இப்ப உன்னை ஏசப்பேச மாட்டார். நீ இப்ப இதைச் சாப்பிட்டுட்டு ரவைக்கு நான் இடியப்பம் அவிப்பன். அதிலையும் ஆறேழச் சாப்பிட்டுட்டுத்தான் படுக்கைக்கு போவேணும். இப்ப இதைச் சாப்பிட்டிட்டு மட்டும் ஒடிப்போய் நீ மாலுக்குள்ள உள்ள அந்த வாங்கில பிரண்டிராத. பேந்து உன்ன நித்திரையால எனக்கு எழுப்பேலாது” அவன் தமக்கையின் கதையைக் கேட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்த கையை பீங்கானில் வைத்து கையைக் கழுவிக்கொண்டிருந்தான். "என்னடா தம்பி ஒரு மாதிரியிருந்து யோசிக்கிறாய்?” "இல்லையக்கா அப்பிடி ஒண்டும் இல்லையக்கா. அங்க அம்மாவும் தங்கச்சியளும் சாப்பிட்டினமோ எண்டு தெரியேல்லையக்கா?”
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 39 O.

Page 30
"இதானடா நான் உனக்கு அதைச்சொல்ல வேணுமெண்டு நெச்சன். அம்மா இங்க முந்த நாளுக்கு முதல் நாள் வரேக்க நான் களவா அரிசி வெங்காயமும். கொஞ்சம் இங்க இருந்த கருவாடும் குடுத்துவிட்டனானடா" "அந்த நேரம் அப்பம்மாவும் அப்ப இங்க இல்லையோ அக்கா வீட்டில” "அவ அப்ப இல்லை வெளிய போயிருந்தவ! பின்னேரம் சீட்டுக்கெண்டு!” விளக்கொளியில் வெளித்த அவள் முகத்தையும் ஒளி விட்டிருக்கும் கண்களையும் பார்த்துக்கொண்டு அவள் சொல்வதையெல்லாம் கேட்டுச் சந்தோஷப்பட்டான் அவன். "அப்ப இண்டைக்கு எப்படியும் ஏதாவது அங்க கட்டாயம் சமைச்சுத் தானிருப்பா அம்மா!”
"ஒமோம்ரா அவவுக்கு ரெண்டு மூண்டு நாளைக்குப் பறவாயில்லையடா சரவணா. அப்பாவும் எங்காலையும் போய் எதையாவது செய்துகிய்து கொண்டு வந்து குடுப்பார்தானே வீட்டுக்கு!” தமக்கை அப்படிச் சொல்வதைக்கேட்க அவனுக்கு நிம்மதியாயிருந்தது. பீங்கான் கழுவிய தண்ணீரை தேசி மரத்தடிப்பக்கம் சென்று ஊற்றிவிட்டு தட்டைக் கொண்டுவந்து குசினியில் வைத்தவேளை அரைக்கண்ணால் தன் சகோதரியை அவன் பார்த்தான். ஒரு மாதிரிக் கிறக்கம் நிறைந்த அசதியான தூக்கம் அவனுக்கு வந்தது. "என்னடா நித்திரை மொய்ப்பில நிக்கிறியே பொழுதுபட்ட நேரத்தில?” “நான் போய்க் கிடக்கப் போறனக்கா வாங்கில." "அப்பம்மா பேசுவாவடா இப்ப படுத்தா.” “எனக்குத் தெரியா நான் போய்ப் படுக்கப் போறன்!” சொல்லிவிட்டுப்போய் மாலில் உள்ள அகல வாங்கில் அவன் குப்புறப்படுத்துவிட்டான். நித்திரை மயக்கம் அப்படியே இமைகளை அழுத்தத்தொடங்கவும் கண்களை அவன் மூடினான். சுகமான நித்திரை வந்து அவனை அணைத்தது. கனவு வந்து அவனை எங்கேயோ கூட்டிச் சென்றது. அந்தக் கனவிலும் அவன் கொழுகொழுவென்று கொப்புகள் விட்டு வளர்ந்திருக்கும் அந்த விளாத்தி மரக்காடுகளில்தான் சந்தோஷத்துடன் அலைந்து கொண்டிருந்தான். அங்கே மரத்தில் திரள் திரளாகத் தொங்கும் விளாங்காய்களை ஆய்ந்து கூடை கூடையாக அவன் நிரப்பிக் கொண்டிருந்தான். அந்த விளா மரங்களில் ஏறும்போது குரங்கு போல ஏறி - ஆமாம் அசல் குரங்கைப் போலத்தான் போய்விடுகிறான். எங்கேயோ இருந்து அவனது தமக்கையின் குரல் அவனுக்குக் கேட்கிறது. y “காணுமடா தம்பி! இது இனிப் போதுமடா தம்பி." அவள் திரும்பத்திரும்ப இதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறாள். ஆனால் அவன் அதைப் பரவாய் பண்ணுகிறதாயில்லை. அவன் மரத்திலிருந்து காய்களை பிடுங்கிப் பிடுங்கிக் கீழே போட்டவாறே இருக்கிறான். விளாங்காய்க்கூடைகளின் எண்ணிக்கை அதிலே வரவரப் பெருகிக் கொண்டே போகிறது. இந்தக் கனவு இன்னமும் இன்னமும் அவனுக்கு நீள்கிறது. ஆனாலும் அவனது உடலின் நியதி தனக்கான ஒய்வுப் பாதையில் பிரவேசிக்க, நல்ல நித்திரை வந்து அசும்பாமல் படுத்துக் கொண்டு ஆழமாய் அவன் மூச்சுவிடுகிறான்.
Jෂ්. ග්‍රී. ලාංඡිගvශovෂීඝගී O 40 O

மெய்மறந்த நல்லதோர் தூக்கத்தில் கண்ட கனவுகளையும் தொலைத்து விட்டு, நிம்மதியாக அந்த இரவில் நித்திரையை அவன் தொடர்ந்து கொண்டிருந்தான்.
முன்று
மாடுகளைக் கட்டியிருந்த அந்தத் தொழுவத்திலிருந்து சாணநாற்றம் வீசிக் கொண்டிருந்தது. அதோடு சேர்ந்ததாய் அந்த அரலி மரத்தோடண்டியிருந்த எருக்கும்பலில் இருந்தும் புதியவை, பழையவை, மட்கியவை எல்லாம் மணத்தன. விசயா குசினிக்கு அருகே நின்ற தேசி மரத்துக்குக் கீழே இருந்து பால் பாத்திரங்களை தேய்த்துத் துலக்கிக் கொண்டிருந்தாள். அவள் தும்புடன் பிடித்த சாம்பல் கலந்த மண்ணால் அந்தப் பாத்திரங்களை துலக்கும் சத்தம் கேட்டு, இராசம்மா ஆச்சியும் படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள். காலைச் சோம்பல் முறித்துக்கொண்டு இரண்டு எட்டு வைத்து நடந்து போக எத்தனித்தபோது நாரிப்பக்கத்தில் வாய்வு வந்து பிடித்துக்கொண்டதுபோல சூடாக சுள்ளென்று குத்தியது அவளுக்கு. அந்த இடத்திலே வலி சுருட்டிச் சுருட்டிப் பிசைந்தது அவளுக்கு. "என்ரை ஆத்தேய் சரியா நோவுது.” - என்று நாரியில் ஒரு கையை வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு, பெருவிரலை நன்றாகப் பதித்து அவ்விடத்திலே அவள் அழுத்தித் தேய்த்தாள். அவளுக்கிருந்த வாதக் குணத்தில் காலெல்லாம் சோர்ந்துபோன மாதிரியும் இருந்தது. “இந்தக் குத்துளைவோட குந்தியிருந்து எப்-பிடிப் பால் கறக்கிறது?” முனகிக்கொண்டே அறையின் முதிரைக்கதவைப் பிடித்தபடி இராசம்மா ஆச்சி சொல்லிக்கொண்டாள். அதோடு பிறகு முழங்கால் மூட்டில் கை வைத்தும் குனிந்து நின்று மூச்சிளைத்தாள். "சும்மா கொஞ்சம் படுக்கையில கிடந்திட்டெழும்பு! இப்ப என்ன அவசரம் உந்த இருட்டு வழிய போய் விழுந்து துலைக்கப் போறாய் போலக்கிடக்கு” அவர் கட்டிலில் ஒரு பக்கம் புரண்டுபடுத்துக் கொண்டு, மூச்சை நன்றாக வெளியில் விட்டபின்பு தன் மனைவிக்கு இதைச் சொன்னார். அதைச்சொல்லியதோடு அன்று காலையில் சவாரி வண்டில் பூட்டி இறம்பைக்குளம் றண்வே - பக்கமாக வெளிக்கிட்டாக வேண்டும் என்ற அந்த நினைவு உடன் வந்து தோன்ற, கட்டிலில் படுத்துக்கிடந்தவாறே காலைக்கையை நீட்டி எழுந்து கொள்வதற்குத் தயாராக, அவரும் தன்னைத் தயார் படுத்தினார்.
படுத்தபாயில் இருந்து எழுந்துவிட்டு, மீண்டும் திரும்பிப்போய்ப் படுப்பதென்பது இதுநாள் வரைக்குமாக சீவிய காலத்தில், ஆச்சியிடமில் லாத ஒரு பழக்கமாயிருந்தது. அப்படிப்படுத்தால் “வீட்டுக்கு மூதேவி பிடிச்சிடும் தன்னையும் பிறகு வருத்தம் முத்திப்போய்ப் படுத்த படுக்கையில போட்டுத் துலைச்சிடும்” - என்கிற பயத்தில் செத்தையில் ஒரு கையை தாங்கலாகப் பிடித்துக்கொண்டு, மெல்ல மெல்லக் காலுக்கு
வ0ழ்க்கையின் ரிறக்கஸ் O 41 O

Page 31
இரத்த ஓட்டம் சீராகப் பாய்வதற்காக, திண்ணைப் பக்கத்திலே அவள் நடக்கத் தொடங்கினாள். குசினிக்குப் பக்கத்தில் திண்ணைத் தொங்கலிலுள்ள மேல் படியிலே விசயா ஏற்றி வைத்திருந்த பித்தளைக் கைவிளக்கு, நிழலை மாத்திரம் கீழே வட்டமான சிறு இடத்தில் விழுத்திக்கொண்டு, நல்ல மஞ்சள் வெளிச்சத்துடன் பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. விசயா உண்கலங்களைத் தேய்த்துவிட்டு தண்ணிரலம்பிக் கழுவும் சத்தம், தேசிமரத்தடியிலிருந்து ஆச்சிக்குத் தெளிவாய்க் கேட்டது. அப்படியே நடந்துபோய்த் திண்ணைப் படிகளிலிருந்து ஒருவாறு கீழே இறங்கி நின்றுகொண்டு, பொங்கிப் பிசுக்கிடுகின்ற இமைகளை இலேசாகக் கைகளால் தேய்த்து விட்டபடி "விசயா பிள்ளை” என்று அவள் கூப்பிட்டாள். ஆச்சி கூப்பிடவும் விசயா பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த கையோடு இருந்துகொண்டு, திண்ணைப் பக்கம் திரும்பிப்பார்த்தாள். "ஒயப்பம்மா விடியிறத்துக்க ஏன் எழும்பி இங்காலை வந்தனிங்க இந்த இருட்டுக்க.?” "விடிஞ்சிட்டுதுதானே பிள்ளை இப்ப, பேந்தினி என்ன படுக்கை எனக்கு வேண்டிக்கிடக்கு எண்டாலும் பிள்ளை எனக்கு நாரிக்கிள்ள நல்லா இறுக்கிப் பிடிச்சுக்கொண்டுது கண்டியோ பாயால எழும்பேக்கிள்ள." "அப்ப அப்பம்மா நோ எடுபர்றதுக்கு நெளுக்குளம் பரியாரி தந்த நோ எண்ணையை ஒருக்கா உங்களுக்கு என்ரை கையாலயொருக்காப் பூசி விடட்டே?” "இப்ப வேணாம் ராசாத்தி என்னால இண்டைக்கு குந்தியிருந்து மாட்டில பாலும் கறக்கேலாது போலக்கிடக்கு. நீ தான் முழுமாட்டிலயும் பால் கறந்து முடிக்க வேணும் மாதிரி வந்திட்டு இண்டைக்கு. அதுக்கு என்ன செய்யப் போறாய் நீ?" "அதுக்கேன் அப்பம்மா நீங்க வீணாக் கவலைப்பட்டுத் துலைக்கிறியள்? நான் தட்டத்தனியக் கறந்திடுவன் எல்லா மாட்டிலையும் நீங்க முகத்தைக் கழுவிப் போட்டுப் போய் சார்மனைக் கதிரையில கொஞ்சம் சாஞ்சு கிடவுங்கோ - நான் அதுக்கிடையில கோப்பி போட்டுக் கொண்டு வந்திடுறன் உங்களுக்கும் அப்பப்பாக்கும்.” "அப்ப நான்ரா ராசாத்தி முகம் கைாலைக் கழுவிக் கொண்டுபோய் அங்கின கதிரையில கொஞ்சம் ஆறுதலுக்குச் சாஞ்சிருக்கிறன், நீ முதலில கோப்பியைப்போட்டுக் கொண்டு வந்து அப்பப்பாவுக்கு முதலில குடிக்கக் குடுத்திடு. நீ இப்ப தண்ணியை அடுப்பில வைச்சியெண்டாத்தான் பிள்ள, அவர் கிணத்தடிக்குப் போயிட்டு ஆகவேண்டிய அலுவலை முடிச்சிட்டுவர அடுப்பிலையும் தண்ணி கொதிச்சதாயிருக்கும்.” ஆச்சி அப்படி விவரமாக எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு போக, விசயாவும் பாத்திரம் கழுவுகின்ற வேலையை முடித்துவிட்டு எழுந்து நின்றாள். அவள் அந்த இடத்தில் குந்தி இருப்பதற்கு முதல் முழங்காலுக்குமேலே
iෂ්. ග්‍රී. ලාංඡිගvග්‍යvෂීන(b O 42 O

இழுத்து வைத்துத் தொடைப்பக்கங்களின் இடையில் சொருகி வைத்திருந்த முரட்டுத் துணியிலான அந்தப் பாவாடை அவள் எழுந்து நின்ற வேளை ஒரு பக்கம் மடிப்புகள் விழுந்து சுருங்கிப்போயிருந்தது. அந்தச் சுருக்கலை விடுபடவைக்க, காலை அகட்டி வைத்து, அந்தச் சுருக்கங்களை கைகளால் அவள் நீவி விட்டுக் கொண்டாள். பிறகு குனிந்து பால் பாத்திரங்களை கைவிரல்களின் இடுக்கில் அழுத்திப் பிடித்துக்கொண்டு, கேத்திலையும் மறுகையில் தூக்கிக் கொண்டு அவள் குசினிப்பக்கம் வந்தாள். “என்னப்பம்மா இதிலை பேந்தும் அங்காலையாப்போகாம நிண்டு கொண்டேயிருக்கிறியள்?” "இல்லப்பிள்ள நானே குசினிக்கை போய் அடுப்பை மூட்டித் தண்ணியை வைச்சு விடுவம் எண்டு பாக்கிறன். உனக்கும் பால் கறக்கிற பெரிய வேலையெல்லாம் கிடக்கு, நீ எல்லாத்திலையும் அப்புடி மாயிறதே கிடந்து?” “ஆய்ச்சோ என்ன அப்பம்மா நீங்க! இதெல்லாம் பெரிய வேலை எண்டு எனக்குக் கிடக்கே..? நீங்கதான் உப்புடிச் சொல்லிப்போட்டடிக்கிறீங்க.?” "அப்பிடியெண்டில்லைப் பிள்ளை காலையில சும்மா எழும்பி வேலை ஒண்டுஞ் செய்யாம இருக்க விசராக்கிடக்கு எனக்கு - அதாலதான் அப்பிடிச் சொன்னனான் - அங்கபாத்தியே கிணத்தடிப் பக்கத்தில துலாச்சத்தமும் கேக்குது? அப்பப்பா எழும்பி கிணத்தடிப்பக்கம் போயிட்டார் போலக்கிடக்கு.? இண்டைக்கு காலேல அவர் வண்டில் பூட்டுறாராக்கும்! அன்ரன் தம்பியும் அதுக்காகக் காலையில இங்க வரும்போல.” அப்பம்மா சொல்லிக்கொண்டிருந்த கடைசிக் கதையைக் கேட்டுக் கொண்டு அவள் ஆனந்தப்பட்டுக்கொண்டுதான் கோப்பி தயாரிக்க கேத்தில் வாய்க்குள் தண்ணிர் ஊற்றினாள். வழமையை விட சற்று அதிகமாக அதற்குள் அவள் தண்ணீர் ஊற்றிக்கொண்டது, அன்ரனுக்கும் கோப்பி போட்டுக் கொடுக்க வேண்டும் என்ற அந்த நினைப்பினால்தான். அவள் அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு தண்ணிர்க் கேற்றிலை அடுப்பேற்றினாள். அந்த அடுப்பு நெருப்பின் செம்மை ஒளி, அவள் உடலெங்கும் சிவப்பாகப் பதிந்திருந்தது. அதனால் பெற்ற உஷ்ணத்துடன் அவளது நினைவுகளும் ஒன்று சேரக்கலந்து அவளது உடலும் மனசும் கலகலத்தது. கொஞ்சம் அந்த அடுப்பு உஷ்ணத்தை கைவிரல்களை விரித்து ஏற்றிக்கொண்டுவிட்டு அப்படியே அந்தச் சூட்டை தன் புஜங்களில் பிறகு வைத்து அதை அனுபவித்துப் பார்த்தாள். அந்த உஷ்ணமான சுகம், அன்ரனின் மேலிருந்த ஆசை நினைவுகளை மேலும் அவளுக்கு வளர்ந்திடச் செய்தது. அவனுடைய அகன்ற மார்பையும், உரம் பெற்ற தோள்களையும், சிரித்த முகத்தையும், சுருள் சுருளாகவுள்ள கேசத்தையும் நினைத்துப் பார்த்து ரசித்துக் கொண்டு கனவுலகக் கற்பனையில் அவள் மிதந்து கொண்டிருந்தாள். வாழ்க்கை என்பது ஒரு பாலாறு, என்று நினைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பருவத்திலே கனவுகளுக்கு ஏது குறை? அவளாலும் அப்போது அந்தக் கற்பனையிலே, ஒரு அழகிய உலகத்தைப்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 43 O.

Page 32
படைக்கக் கூடுமானதாகவே இருந்தது. அது காதலை மட்டுமே பேசிக் கொண்டிக்கிற ஒரு தனி உலகம். சிகப்பு மலர்கள் பூத்துக் குலுங்கும் சிருங்காரப் பூந்தோட்டம். மலர்கள் எல்லாம் அவள் மனம் போல அங்கே மலர்ந்திருக்கின்றன. அந்த மலர்களுக்குச் சொந்தம் கொண்டாடும் வண்டுகள் மட்டும் "இர்ர்.ம்’ என்ற ஒசையுடன் ரீங்காரமிட்டுக் கொண்டு அங்கே அந்தரத்தில் பறந்தபடி இருக்கின்றன. குஞ்சித்தும்பிகள் மேலும் கீழுமாகச் சுற்றிப் பறந்து கோலம் போடுகின்றன. அவ்விடமெங்கும் மலர்களின் தேன் மணம் வீசுகிறது. அந்த அழகான சூழ்நிலையின் மத்தியிலே ஒரு பக்கமுள்ள புல்தரையின்மேல் இருந்து கொண்டு அவனும் அவளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சுற்றிலும் சிலையென்று எண்ணமுடியாதது போன்ற உயிருள்ள சிற்பங்கள்! என்ன துல்லியமான வடிவங்கள்! - காதல் கொண்டாடிடும் அந்தச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு தாமும் அவற்றைப்போல் சிலையாகி விடுவதைப் போன்ற ஒரு கற்பனை.
ஆனாலும் அது அவளுக்கு மேலும் நீடிக்கவில்லை. அது மனத்தின் ஒரு இமைப்பில் அவளுக்குக் கலைந்து மறைந்தது. ஓ. என்ன இனிப்பான நினைப்பு! அந்த இனிமையிலும் இனிமையான கனவு கண்டது போன்ற உணர்வோடு அவளுக்கு இன்ப ஊற்றுப் பிறப்பெடுத்தது. தேகமெங்கும் ஒடிப் பரந்த அந்த இன்பத்தை அநுபவித்துக் கொண்டிருக்கையில், மலமலத்துக்கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரின் ஓசை - கனவு சார்ந்த கற்பனைகளில் ஒரு சில நிமிடங்களை இழந்துவிட்டிருந்த அவளைப் பழைய உலகத்துக்கு மீண்டும் இட்டுக்கொண்டுவந்தது. "அப்பம்மாவையும் குசினி வாசலடியில காணேல்ல. நான் காணாம உந்த இடத்தில இருந்து அவ எப்புடிப் போனா? ஏதாச்சும் அவ சொல்லி நானும் கேக்காத மாதிரி ஊமையா அடுப்பங்கரையில இருந்திருப்பனோ? வரவர ஏன் இந்த மாற்றம் எனக்கு வந்து சேருது? - இப்பிடிக் கனவுத் தோரணங்களை வளைச்சு வளைச்சுக் கட்டுறதிலதான் என்ரை நேரமும் காலமும் இப்ப போறமாதிரிக் கிடக்கே..? எல்லாமே அலையில கரையிற நிழல் மாதிரி மெல்ல மெல்லவா மறைச்சிடுதே? அவள் அப்படி அப்பொழுதில் நினைத்தாலும் அதையிட்டுப் பெரிதாக தன் மனத்தைப் போட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இப்படிக் கனவுகளைப் பேணி வளர்த்து வாழ்வதிலும் ஒரு உள்ளக் களிப்பு எனக்கு உண்டுதான் - அதைத் தழைக்க வைத்து மனக்கண்ணால் பார்த்து ரசித்து வருவதிலே, வேறு உள்ள மனக்கவலைகளெல்லாம் எங்கு போனதென்று தெரியாத அளவில் பறந்துவிட்டது மாதிரி எனக்குப் போய்விடுகிறதுதானே? என்றும் அவள் தனக்குள் நினைத்துப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அடுப்பில் ஏற்றியிருந்த கேத்தலின் மூக்கு, ஆவியை வெளியே தள்ளத் தொடங்கிவிட்டது. தண்ணீர் தாளம் தப்பாமல் கொதிக்கத் தொடங்கியது. கேத்தில் மூடியிலிருந்தும் ஆவிபோக அமைந்திருந்த சிறு துவாரத்தினூடாக, கொதித்த தண்ணீரின் நீராவி மூச்சு வெளிக்கிளம்ப ஆரம்பித்துவிட்டது. அவள் கைப்பிடித்த துணியால் கேத்திலை அடுப்பாலிறக்கினாள். பெரிய கோப்பையினுள்ளே
ரீ.பி.குருஸ்ணந்தம் O 44 O

அந்தக் கொதிநீரை கோப்பித்தூள் கரைந்தெழும்ப ஊற்றினாள். பிறகு கலங்கிக் கொண்டு சாயமிறங்கியமர்ந்த கோப்பித் தண்ணிருக்குள் கணக்கான சீனி போட்டுக் கரண்டியால் கலக்கி, அதை முதலில் பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதி, இரண்டு கைப்பிடிக் கோப்பைகளில் கோப்பியை ஊற்றி எடுத்துக்கொண்டு அவர்களது அறைப்பக்கமாக அவள் போனாள்.
"அப்பப்பா கோப்பிக் கோப்பையை உங்கட கையில உடன பிடியுங்கோ அப்பப்பா?”
"அப்பம்மாவுக்குக் குடன் நீ பிள்ளை முதல்?”
“உங்களுக்குத்தான் முதலில குடுக்க வேணுமெண்டு இதை அவ பேந்து பேசுவா எனக்கு.”
“சரி பிள்ள அப்ப தாவன் நீ எனக்கு. சுடுகுதோடா பிள்ளை கோப்பி?”
“ஆறினா நீங்க குடிப்பியளே அப்பப்பா! கணக்காத்தானிருக்கு இதில உள்ள சூடு குடிக்க உங்களுக்கு.” அவள் சொல்லிவிட்டு அவருக்கு முன்னால் கோப்பிக் கோப்பையை நீட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவருக்கு, அவள் நீட்டிக்கொண்டிருந்த கோப்பையை கையில் வாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கைக்கு வேறு வேலை ஒன்று இருந்தது. அவர் தலைமுடியைச் சுழற்றி பிரடிப்பக்கம் சின்னதாக ஒரு குடுமி போட்டுக் கொண்டிருந்தார். "வாறன் வாறன் நீ இதிலை நிண்டுகொண்டு மினக்கடாம உந்தக் கொப்பர் பெட்டிக்கு மேல கோப்பிக் கோப்பையை வைச்சிட்டுப் போ பிள்ளை” அவர் சொல்லிவிட்டு தன் மீசையை இரு விரல்களினால் அழுத்திவைத்து அமர்த்திக்கொண்டு நுனி மயிரை பிறகு தட்டி சிலும்பலாக்கி சீராக முறுக்கி இரு பக்கங்களையும் முள்ளைப் போல் கூராக்கினார். அந்த வளைக்கப்பில் தொங்கிக் கொண்டிருந்த சதுரவடிவமான முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்னால் நின்று கூரான தன் முறுக்கு மீசையை அக்கறையோடு அவர் பார்த்துக்கொண்டிருக்க அவள் அவருக்கென்று கொண்டுவந்த அந்தக் கோப்பியுள்ள கோப்பையை அதிலேவைத்துவிட்டு அங்கே ஆச்சிக்கும் கொண்டு போய்க்கொடுத்துவிட்டாள் கோப்பி “நீ பிள்ளை தம்பியை ஒருக்காப் படுக்கையிலிருந்து தட்டிவிடு போய். எழும்பட்டுமவன் நேரமாச்சுது. முகம் அவன் கழுவினாப் பிறகு கோப்பியையும் அவனுக்குக் குடு குடிக்க.” "அவன் இப்ப அப்பம்மா படுக்கையால எழும்பி இருப்பான். நேற்று ராவும் சாப்பிட்ட கையோட நேரத்துக்கும் ஒடிப்போய் பொத்தெண்டு படுத்தவன் வெளிவாங்கில" இராசம்மா ஆச்சி சிரித்தாள். “பெடி பாவம் பிள்ளை! புட்டவிச்சுக் கறிபோட்டுக்கட்டிக்குடு அவன் போகேக்க” “அதான் எல்லாத்துக்கும் எனக்கு நேரம் போகுது அப்பம்மா - நான் போறன் கெதியா அங்க பால் கறக்க” அவள் அப்படி அப்பம்மாவுக்குச் சொன்ன கையோடு சுறுசுறுப்பாகப் பின்பு தான் செய்ய வேண்டிய
αρκώδειοδιόδουκ διμνώδcή O 45 O

Page 33
வேலைகளில் இயங்கத் தொடங்கினாள். குசினிப்பக்கம் விரைவாகச் சென்று, கோப்பி ஊற்றி வைத்திருந்த அந்த இன்னுமொரு கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு, மால் உள்ள பக்கமாய்ப் போய் தன் தம்பியை அங்கே அவள் தேடினாள். அவன் படுத்திருந்த வாங்கு வெறு வாங்காயிருந்தது. "தம்பியைக் காணேல்லயே. கிணத்தடிப்பக்கம் முகம் கழுவப் போயிற்றானோ?” - என்ற நினைப்புடன் திரும்பி அதிலிருந்து வேப்பமரம் நின்ற இடத்தருகில் அவள் வந்து நின்று பார்த்தபோது, அவன் அங்கே அவளைக் கண்டுவிட்டு சிரித்துக்கொண்டு நின்றான். பிறகு அவள் அவனுக்குக் கிட்டவர அவன் அந்த வேப்பமரத்தின் கிளைகளைப் பார்த்துக்கொண்டு சுண்டுவில்லில் கல்லேற்றி அடிப்பதுபோல அபிநயம் செய்தான். "எங்க தம்பி படுக்கையால எழும்பி அங்கயிங்க திரியிறாய்.? காலேல நீ குசினிப்பக்கம் வாறகில்லையே கோப்பி குடிக்க?" "ஏனக்கா அப்பம்மா கோப்பி போடேல்லயோ நீங்க உதிலையெண்டு நிண்டு மினக்கெடுறீங்க..? நீங்க அங்கபோய் பால் கறக்கேலயோ LDIT'uq6)?” "உந்தக் கதையை இப்ப விட்டிட்டுக் கோப்பியைப் பிடி. உன்னைத்தேடி நான் அலையுறன் காலேல. முகம் கழுவியாச்சே நீ.?” "முகம் கழுவாம நீங்க எனக்குக் கோப்பி குடிக்கத் தருவியளோ?” அவன் சிரித்தான். உமிக்கரி போட்டுப் பல் துலக்கியதில், அவன் பல் எல்லாமே பளிச்சென்று வெண்மையாகப் பளிட்டது அப்போது, "இந்தா கோப்பி ஆறுதலாக் குடிச்சிட்டு நீ சாமி கும்பிட்டிட்டு திருநீறப் பூசு. நேரமில்ல நிண்டுகொண்டு உன்னோட இப்ப கதைக்க எனக்கு." அவள் சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து திரும்பவும் குசினிப்பக்கம் வந்தாள். அந்த நேரத்திலே கோழிக் கூட்டுக்குள் இருந்து - எத்தனையாவது தடவை இப்போ அந்தக் குடுமிச் சேவல் கூவிக்கொண்டிருக்கிறது - என்ற கவனம் அதன் மேல் திரும்பிவிட, அங்கே கோழிக் கூட்டின் பக்கமாகவும் ஒருமுறை பார்க்க வேண்டியதாய் அவளுக்கு இருந்தது. கோழிகள் கூட்டுக்குள் இருந்து வெளியேற கலவரப்படுகிற மாதிரித் தெரிந்தது அவளுக்கு. "நிலம் தெளியக்கு முதல் இந்தக் கோழியளைக் கூட்டால திறந்து விட்டா கோயில் வளவுப் பக்கத்து வேலி வழியவும் போயுதுகள் தீன் தேடப் போகும். அந்தப் பத்தைக்க தான் இருக்கும் கோழி பிடிக்கிற பெரியகீரியள் - அதைவிட அங்க அதுக்க கோழி போனா இந்த நேரம் மரநாயும் தேடிவரும் - எல்லாத்துக்கும் பாக்க விடிவு தெரிய முதல் இதுகளைத் திறந்து விட்டா அதுகளுக்கு, பரபரப்போட போய் தீன் பொறுக்கித் தின்னவும் கஷ்டம் - வேணாம்!” என்று அந்த வேலையை அப்போது செய்வதை நிறுத்திவிட்டு குசினிக்குப் போனாள் அவள். பால் கறக்கும் தன் கையை சுத்தமாக இருக்கிறதா? என்று அதை ஒருமுறை பார்த்தாள். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி எடுத்துக்கொண்டு மற்ற வெறும் பாத்திரங்களையும் அதோடு மற்றக்
ඊ. ෆි. ලාංඡිගvශov%හdb O 46 O

கையால் தூக்கிக் கொண்டு அவள் மாடுகள் கட்டியிருந்த செம்பரத்தைச் செடிகள் உள்ள பக்கமாகப் போக நடந்தாள். மாடுகள் கட்டி விட்டிருக்கும் அந்தஇடத்தருகே போகும்போது, அழகும் கொழுமையும் கொண்ட செம்பரத்தைப் பூக்களிலேதான் அவளுக்குக் காலை வேளையிலே முழுவியளம். நல்ல வயதான அந்த மரங்கள் செழுமையான மலர்களை உற்பத்தி செய்வதைப் பார்க்க அவளுக்குப் பிரமிப்பாக இருக்கும். பால் கறக்க வேண்டியிருக்கும் பசு மாடுகளையெல்லாம் செம்பரத்தைச் செடிகளிலேதான் கட்டி வைப்பதால், சாணியும் மூத்திரமும் ஊறிய பசளைச் செழிப்பிலே, அந்தச் செம்பரத்தைச் செடிகள் உரம் ஓங்கி வளர்ந்து உயரமாய் நின்றன. அச் செடிகளனைத்தும் பூப்பூப்பதும் கூட ஏராளம்! இதழ் பிணிப்பு அவிழ்ந்த அந்த மலர்களிலே கருநிற வண்டுகளும், பூவைத்தின்று நாசம் செய்கின்ற கறுத்தப் பொட்டுள்ள சிவப்பு வர்ண வண்டுகளும், - ஆக இவையெல்லாம் அதிலே தங்கத் தூசி படிந்திருப்பதைப் போல மொய்த்திருந்தன. அந்தச் செம்பரத்தைச் செடிகளுக்குக் கீழே உதிர்வதற்காகவே பூக்கள் பூப்பதுபோல் அவ்வளவு பூக்கள் கீழே கிடந்தன. அந்தத் தொழுவத்துக்குப் பக்கத்தேதான் வன்மரமாக வளர்ந்திருந்த அந்தக் காஞ்சிரை மரமும் நின்றது. அந்த மரம் நின்ற இடம் மாடுகள் கட்டாமல் ஒதுக்கப் பட்டிருந்த ஒரு வேற்றிடம். அதன் நஞ்சு கலந்த நிழலோ என்று நினைக்கும்படி, கீழே அதனடியில் மருந்துக்குக்கூட ஒரு புல் பூண்டு இல்லை. ஆனாலும் அவ்விடத்தில் பழுத்துப் பிய்ந்து மரத்தால் உதிர்ந்த காஞ்சிரம் பழங்கள் மட்டும், அழுகிப் பரந்து நாறிக்கிடந்தன. இந்தமரம் நஞ்சு மரம்தான்! - ஆனால் எந்த வேளையிலும் இந்த மரத்தில் மைனாக்குருவிகளுக்குக் குறைவில்லை. இலைச் சடைவுகொண்ட அந்த மரத்தில், அக்குருவிகளெல்லாம், இருக்கின்றனவோ, இல்லையோவெனக் கண்டுகொள்வது மிகக் கஷ்டம். அந்த அளவுக்கு அதிலடையும் குருவிகளெல்லாம், குழை மறைவில் இருந்து கத்திக்கொண்டிருக்கும். அந்தக் காலை வேளையிலே இனிய தென்றல் அவள்மேல் வீசியது. அவள் அந்தக் காற்றிலே அசையும் பூப்போல நடந்து, அந்த மாடுகளைக் கட்டியிருந்த இடத்தருகே வந்தாள். கன்றையுடைய பசுக்களின் அம்மா என்ற கன்றைத்தேடிய குரல்களையும் - கட்டில்போட்டுக்கிடந்த கன்றுகளின் பால்தாகக் குரல்களையும், அதிலே வந்தவுடன் கேட்க அவளுக்கும் மனத்தில் இரக்கம் சுரந்தது. ஓரளவு அந்தப் பசுக்களிலெல்லாம் பாலைக்கறந்துவிட்டு, கன்றுகளையும் உடனே ஊட்ட விட்டுவிட வேண்டும் என்று அவள் நினைத்தாள். அந்த நினைப்பின் வேகத்தோடு சாதுவான குணமுள்ளதும், செம்பு நிறையப் பால் கறக்கக் கூடியதுமான அந்தக் காராம்பசுவின் அருகில் போய், அதன் தாடையைத் தடவிவிட்டு மண்டியிட்டவாறு அவள் இருந்தாள். பிறகு பாத்திரத்தில் உள்ள தண்ணீரைக் கையில் விட்டு, மடியில் இறைத்துக்கழுவி சுத்தம் செய்துவிட்டு, துடையில் பாத்திரத்தை இடுக்கிக் கொண்டு, பாலுள்ள விரைப்பான அந்தக் காம்புகளையெல்லாம் தன் மென்மையான விரல்களால் நீவிவிட்டுக் பீச்சத்தயாரானாள். அவளது விரல்கள் வேகமாய்
6ლყkდგāრთგußმიძk NoწმეyxსნიNo O 47 O

Page 34
அந்தப் பசுவின் மடிக்காம்புகளில் இயங்கத் தொடங்கிவிட்டன. அந்தப் பசுமாட்டின் மடுவில் வேகத்தோடு நிறையப் பால் இருந்தது. அவளின் விரல்கள் பால் இறங்கிய மடிக்காம்புகளைப் பிடிக்கும்போது வெள்ளை நூல்களாக பால் பீச்சியடித்துக்கொண்டே இருந்தது. அந்தக் காராம்பசுவின் பால்மணம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். பாலில் உள்ள இயற்கையான சூடு அவளது துடைகளுக்கு சுகமானதொரு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தது. பாத்திரத்தில் பால் விழும் ஓசை "சர், சர்’ ரென்று ஒரு சுகமான சத்தம். சொரு சொரு வென்று அந்தப் பால் பாத்திரம் நிறைந்து கொண்டு வரும் போது, அன்ரனும் அங்கு வந்து வேலிப்படலையைத் திறந்தான். அதைத் திறந்த கையோடு படலையை விட்டு விடாமல் அப்படியே வைத்துக்கொண்டு நின்றான் அவன். அவனுக்குத் தெரியும்! இந்த நேரமாய் அவள் அங்கு இருந்து பால்கறந்து கொண்டிருப்பாளென்று. முதலில் படலையடியில் அப்படியே நின்றபடி மாலுக்குள்ளே பார்த்தான் - அங்கே யாரையும் காணவில்லை - குறிப்பாக அவன் நினைத்துப்பயப்படும் ஐயாவும் அங்கு இல்லை - சரவணனையும் அங்கு காணோம் - ஆச்சியும் இல்லை - சில வேளையில் இராசம்மா ஆச்சி பால் கறக்குமிடத்தில் இருந்து கொண்டிருந்தாலும் அவரால் தொலைதூரத்துக்குப் பார்க்க முடியாது. அந்த முறையில் நிச்சயமாக அதிலே நிற்கும் தன்னைப் பார்க்கமாட்டார் அவர் - என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. ஆனால் ஐயாவின் நிலைமை அப்படியல்ல: அவர் டால்ஸ்டாய் எழுதிய முட்டையளவு தானியம் கதையில் வரும் மூத்த கிழவர் மாதிரி. பார்க்கும் பார்வை நல்ல சுத்தம்! - கண்கள் முதுமையினால் விளையும் மங்கலிலில்லாது ஒளிச்சுடராயிருப்பதால், ஊசியையும் குறிப்பாகப் பார்த்துப் பிடித்துவிடுவார். - அவரிடம் தப்ப இயலாது. என்ற அந்த நினைப்புடன் அவளைச் சிறிது நேரம் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற அந்தக் கள்ளத்துடன், படலையைப் பிடித்த கையை மெல்ல அதோடு கொண்டுபோய் சத்தம் எழும்பாத அளவுக்கு அதைக் கப்போடு சேரவிட்டான். அதற்குப்பிறகு கொஞ்ச தூரம் அதிலே நடந்து வந்து நின்று கொண்டு, அந்தச் செம்பரத்தைச் செடிகளுக்குக் கீழே நின்று கொண்டிருந்த நாட்டு இனத்தைச் சேர்ந்த பசு மாடுகளின் பக்கம் - அவள் எங்கே இருந்து கொண்டு பால் கறக்கிறாள்? என்று அறியக் கண்களால் தேடினான். அந்த இடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது அவன் பார்வை. அந்த வட்டமிட்ட பார்வையில் அவள் அதிலே இருப்பதை உடனே அவன் கண்டுபிடித்துவிட்டான். அவளது முகத்தை பசுமாட்டின் வயிறு மறைத்தது. என்றாலும் அவள் இருந்த அந்த இருக்கையில், வடுப்படாத கனிபோல் அவள் உடம்பு அவன் பார்வைக்குப் பளபளத்தது. “என்னமாதிரி இவள் வடிவானவள். அம்சமானவள்!” - என்று அவன் அப்போது நினைத்தான். இன்னும் அவளைக் கிட்ட நெருங்கிப்போய் நின்று நான் பார்த்தால்ெனன? இதற்காக இந்த மாலுக்குள்ளே நான் போகாது இதற்குப் பின்னால் உள்ள அந்த வீட்டுப்பக்கம் போக அதாலே
ඒ.4). ලාංඝිගvග්viżහරේ O 48 O

நடந்துபோய் அவளிருக்கும் இடத்துக்குச் சற்றுத்தூரமாக நின்று ஐயாவைக் கூப்பிடலாம்” என்ற இந்த ஆசையை மனத்தில் தேக்கி வைத்துக்கொண்டு மெல்ல அவன் நடந்தான். அவள் இருக்கும் இடத்துக்குக் கிட்ட நெருங்க - அவள் நுரையைத் தொட்டுப் பால்கறக்கும் லாவகத்தை அதிலே நின்று பார்த்துக் கொண்டிருக்கலாம் போல அவனுக்கிருந்தது. அந்தப் பால் பாத்திரத்தை அவள் வனப்பு மிகுந்ததன் வலிய உருண்ட தொடைகளின் இடையே வைத்து இறுக்கிப் பிடித்தபடி இருக்கும் அழகே ஒரு தனி அழகு. அப்படிக் குந்தி இருக்கின்ற நிலையில் அவளது பாத நுனி செம்பரத்தைப் பூச்சிவப்பாய்த் தெரிவதையும், இமையசையாமல் சிலகணம் அதிலே நின்றபடி அவன் பார்த்தான். அவனது சுவாசம் காய்ச்சல் வந்தவனின் சுவாசம் போல வந்து விட்டது. பால் சொரு சொரு வென்று பாத்திரத்தில் நிறைந்துகொண்டுவருவதை, பால்மீது பால் விழும் ஒசையிலிருந்து அவனால் நிதானிக்க முடிந்தது. அவள் இனி அந்த மாட்டிலே பாலைக்கறந்து முடித்துவிட்டு எழுந்துவிடுவாள். அப்படி அதிலே இருந்து அவள் எழும் வேளையில்தான் என்னையும் அவள் பார்ப்பாள். மலர்ந்த ரோமமுள்ள அந்த அமைப்புத்தான் அவளது கண்களுக்கு எத்தனை அழகு. அவள் கண்களால் எனக்குச் சொன்ன எத்தனை கவிதைகளை என் மனத்திலே நான் பதித்து வைத்திருக்கிறேன். அவளது ஒரவிழிப் பார்வையில் உள்ள தாகத்தை இன்னும் எத்தனை நாள்தான் நான் இருந்து பார்த்துக்கொண்டிருப்பது. இந்த என் மனத்திலுள்ள வேதனைகளைத் தீர்க்க - வெளிப்படையாக என் மனதைத்திறந்து அவளோடு பேச - என் உள்ளத்து அன்பை அவளோடு பரிமாறிக் கொள்ள - என்றாவது ஒரு சந்தர்ப்பம் - அது கிடைக்குமா எனக்கு? இந்த நினைவில் அவனுக்கு அந்த இடத்தைவிட்டு அசையவே மனமில்லை. அவளது செழிப்பான செம்பரத்தைப் பூப்போன்ற அழகிய முகத்தை நான் ஒருமுறை பார்த்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகரவேண்டும்; என்ற வேரோடிய நினைவில் அசையாது அதிலே அவன் நின்றான்.
“பால்நுரை பொங்கியிருந்த பாத்திரத்துடன் சந்திரனைக்கண்டது போன்றதுஅவளது முகதரிசனம் - அத்துடன் எத்தனையோ நூறு ஆனந்தங்களுக்கு வித்திடும் இன்பமான ஒரு பார்வை!! - அவள் பால் பாத்திரத்துடன் அந்த மறைவில் இருந்து எழுந்து நின்றபோது அவன் அப்படித்தான் அவளைப்பார்த்ததும் நினைத்துப் பிரமித்தான். முன்பின் எதிர்பார்க்காத ஒரு சந்திப்பால் அவளுக்கும் மனத்தில் அவனைக் கண்டவிடத்தே பெரும் திகைப்பு. அந்தத் திகைப்போடு சேர்ந்ததாய் பெருங்குளத்தின் நிறை தண்ணிரைப்போல ஆனந்தம் தாளாமல் அவள் மனசு தத்தளித்தது. "திருட்டுத்தனமாக அதிலே நின்று கொண்டு அவர் என்னைத்தான் பார்த்தபடி நின்றிருப்பார்” - என்று உடனே தன் உள்ளத்திலே அவளுக்குப் பிறகு எண்ணத்தோன்றியது. இதுவெல்லாமே அவளுக்கு தன் வாழ்க்கையில் இன்னும் படிக்காத புதிய பாடங்கள். இயல்பாகவே தனக்குள் ஊட்டப்படும் அந்தப் பாடத்தை பிறகு அவள்
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 49 O

Page 35
பரீட்சித்துப் பார்க்கிறாள்.
"அவர் செய்வதைத்தானே நானும் செய்து செய்துகொண்டிருக்கிறேன். நானும் அவரை மறைந்திருந்து பார்ப்பதைவிட இன்னும் அவர் நினைவில் எதை எதையோ விளங்காத அளவிலும் செய்து கொண்டு அன்றாட அலுவல்களில் அநேகத்தவறுகளையும் இழைக்கிறேனே? அவளுக்கு திடீரென தன் முன்னால் அவனைக்காணவும் நாணம் வந்துவிட்டது. ஒருவித இன்ப அதிர்ச்சியில் உடல் சோர கைப்பாத்திரம் சிறிது சரிந்து பாலும் கால் பெருவிரலடியில் சொட்டியது. அவள் கைக்குப் பலத்தைக் கொடுத்து பால் பாத்திரத்தை சீராக நிமிர்த்திக் கொண்டதோடு அன்ரனிடமும் அப்போது கதைத்துவிட வேண்டும் என்று தனக்குள் துணிவையும் வரவழைத்துக்கொண்டாள். "அப்பப்பா வெளிக்கிட்டிட்டார் உங்களைப் பாத்துக் கொண்டுதான் உள் அறையிக்க நிக்கிறார்” அவள் ஒரு கவர்ச்சியான புன்னகையுடன் அதிகமான மென்மையோடும் கனிவோடும்தான் அதை அவனுக்குச் சொன்னாள். அவளது மோகனப் புன்னகையிலே அன்ரன் சொக்கிப்போனான். அப்படியே காந்தம் இழுப்பதைப்போல அவள் நின்றுகொண்டிருந்த பக்கமாக, ஏதோ ஒரு மாய சக்தி தன்னை இழுப்பது போல அவனுக்கிருந்தது. அவள் அருகே சென்று சிறிது நேரம் அவளுடன் எதையாவது கதைத்தாலென்ன, என்று அவனது மனம் ஏவியது என்றாலும் கால்கள் முன்னே பாவாது வேரோடி விட்டது மாதிரியான ஒரு நிலையில் அவன் அதிலே நின்றான். அவள் தன்னுடன் கதைத்து விட்டாளே என்ற மகிழ்ச்சி, உச்சந்தலை வரை பாய்ந்து அவனது உடலையும் சிலிர்க்க வைத்தது. "இண்டைக்குக் காலேல வண்டில்பூட்டி வெளியால ஒருக்கா வெளிக்கிட்டுப்போவம் எண்டு ஐயா எனக்குச் சொன்னவர்.” அவன் அவளுடன் கதையைத் தொடர்ந்தான். இது ஒரு நல்ல சந்தர்ப்பம்! சிறிது நேரமாவது அவளுடன் கதைக்கலாம்; என்று அந்தச் சந்தர்ப்பத்தை அவன் தனக்குச் சாதகமாய் எண்ணினான். "அப்ப நான் நீங்க இங்க வந்திட்டியளெண்டு உள்ளபோய் அங்க ஐயாவிட்டச் சொல்லவே?” அவள் பால் கறந்த அந்தப் பாத்திரத்தை வழமையாக வைக்கும் அந்தக் கல்லின் மேல் வைத்து மூடிவிட்டு அவனைப் பார்த்து ஆசையின் அதிசயிப்புடன் கேட்டாள். அவனுடன் கதைக்கும் போது வரவர மிருதுவான பூப்போன்ற நிலையில் அவள் மாறிக் கொண்டிருந்தாள். அவளது மிருதுவான அந்த உடல் அழகை ரசித்துக்கொண்டு, அவனும் மனம் மயங்கினான். அதை இன்னமும் தன்னிடத்தில் நீடித்து வைப்பதற்கு அவள் அங்கு அவ்விடத்தே நிற்க வேண்டும். அவள் தன்னுடன் கதைக்கவேண்டும். இதற்காகவென்று அவள் தன்னுடன் எதையாவது கதைக்கலாம். அப்படி அவள் தன்னுடன் எதையாவது கதைத்தாலும், அவள் கண்பார்வை என்னவோ என்னிடம் அந்தக் காதல் கதையைத்தானே பிரதானப்படுத்திப் பேசும் - அந்தக்காதல் கதைகளையெல்லாம் கண்ணாலேயாவது தனியே பேசிக்கொள்ள கனிந்த காலம் இதுதானே! இந்தச் சந்தர்ப்பத்தை வீணாய் நழுவவிட்டுவிட்டால், இனி எப்போதுதான் இதைப்போலொரு சந்தர்ப்பம் மீண்டும் எனக்கு
ඒ.4%. ථAගvගvණීඝඨ O 50 O

வாய்க்கும்.?” என்று இதையெல்லாம் அவன் நினைத்து மனதில் வைத்துக்கொண்டு - "அப்படியெல்லாம் அவசரமெண்டில்ல அங்க இருக்கட்டுமவர். பறவாயில்ல அவர் ஆறுதலா வெளிய வரட்டும், நான் அதுமட்டும் இங்க நிக்கிறன்!” என்று சொல்லிவிட - அவள் சிரித்தாள். அவன் மட்டுமென்ன அவனுடன் கதைக்கும் அற்புதமான நிமிஷத்தை அவளும் தான் இதுவரை எதிர்பார்த்து மனம் ஏங்கிக் கொண்டிருந்தாள்; அதனால் அவளுக்குத் தேவை இப்போது அதுவாகத்தான் இருந்தது. "நீங்க இண்டைக்கு மாடுகளில தனியக் கறக்கிறீங்க பால். ஆச்சி இண்டைக்கு வரேல்லயோ பால் கறக்க?" "அங்க அப்பம்மாவுக்கு இண்டைக்கு சுகமில்லாமப் போச்சு. அதால நான்தான் எல்லா மாட்டிலையும் இண்டைக்குப் பால் கறக்க வேண்டியிருக்கு” - அவள் அதிலே இருந்த வெற்றுப் பாத்திரத்தை குனிந்து கையால் எடுத்துக்கொண்டு, காற்றுக்குக் கலைந்து கண்முன்னே மறித்து நிற்கும் முடிக்கற்றையைத் தன் புறங்கையால் ஒதுக்கினாள். அவளுக்கு மாடுகள் நிற்கும் பக்கமாகப் போய் அவற்றில் பால் கறக்கவென்று உட்காரவே இப்போது துளியும் மனமில்லை. அதிலேயே அவனுக்குக் கிட்டவாய் ஒரு இடத்தில் நின்றுகொண்டு, அவனுடன் கதைத்துக்கொண்டிருப்பதுதான் அவளுக்குப் பேரானந்தமாக இருந்தது. "இவ்வளவு மாட்டிலையும் பால்கறக்க உங்களுக்குக் கை உளையாதா?” அவன் நகைச்சுவை உணர்வுடன் இதை அவளிடம் கேட்டான். “மாவிடிக்கிற இந்தக் கைக்கு பால்கறக்கிற வேலை என்ன பெரிசா?” "இல்லை உங்கட உந்தக் கை பாக்கப் பூமாதிரியிருக்கே?” அவன் அப்படிச் சொல்ல, அவள் முகம் செக்க சிவந்து விட்டது. புன்னகையின் இளவெயில் அவள் உதடுகளில் வீசியது. மனதுக்குள்ளே அவளுக்குச் சொக்கடித்துப் போக, அதன் மூலம் அவளுக்கு இன்பக் காளான்கள் முளைத்து வளர்வது போல இருந்தன. அதனால் கார்வண்ண இமைக்கதவுகளுக்கிடையே அமைந்த அவளது கருநிற விழிகள் மகிழ்ச்சியில் சுடர்விட்டுப் பிரகாசித்தபடி இருந்தன. அலைமீதுபட்ட ஒளிபோல் அந்தச் சுடரொளி அவளது அழகு கண்ணில் வீசிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அந்த அதிர்வுகளைத் தன்னிலிருந்து வெளியே தெரிய விடாமல் அவள் தன்னைப் பிறகு அடக்கிக் கொண்டாள். தனது உதடுகளை மகிழ்ச்சிப் புன்னகை புரியாதபடிக் கட்டுப்படுத்த முயற்சி செய்துவிட்டு. "வீட்டில இருக்கிற வேலையளை அதில உள்ள பொம்பிளையஸ்தானே செய்யவேணும்?” - என்ன? என்று கேட்கும் புருவ நிகழ்ச்சியுடன் அவ்வேளை அவனைப் பார்த்தாள் அவள். "ஆம்பிளையஞம் பொம்பிளையஞக்கு ஒத்தாசையா வீட்டில இருக்கிற நேரம் அவயளோட கூட நாட இருந்து உதவி செய்து குடுக்கலாம்தானே” அவன் அப்படிச் சொல்லிவிட, அவளுக்கு தனக்கு வந்துவிட்ட சிரிப்பை உடனே அடக்கமுடியவில்லை. அதனால் தன்னை மீறியநிலையில் பலத்த
வரழ்க்கையின் சிறக்கஸ் O 51 O

Page 36
சத்தமாக அவள் சிரித்துவிட்டாள். அது மகிழ்ச்சியான சிரிப்பாக இருந்தாலும், ஏதோ வரம்பை மீறி விட்ட நிலைக்குப் போய்விட்டதான உணர்ச்சியில் தன்தோள்களை உள்பக்கம் வளைத்துப் பிடித்துக்கொண்டு நுனிநாக்கை பற்களிடையில் வைத்துக்கடித்துக்கொண்டாள் அவள். அந்த நளினம் நிறைந்த அவளது செய்கையை அவன் மிகவும் ரசித்துப் பார்த்தான். செம்பருத்திப் பூவை சுற்றிப் பறக்கும் க்ருவண்டுகளைப்போல அவளது கருவிழிகளும் தன்னையே சுற்றிச் சுற்றி சுழல்வதைக் காண அவனுக்கும் தவிப்பாயிருந்தது. அந்தத் தவிப்பை அவளுடன் கதைக்கையில், குரலில் தளர்வு விட்டுவிடக்கூடாது என்று அவன் கவனத்தோடு இருந்தான். இன்னும் அவளுடன் நான் கதைக்க எந்த விஷயத்தையென்று தேர்ந்தெடுப்பது? என்மனத்தில் அவளுடன் எனக்குள்ள காதல் கதையைத்தான் பேச வேண்டும் என்ற ஒரு ஆவல் எந்நேரமும் என்னிடத்தில் இருந்து கொண்டேயிருக்க, அதை எங்கேயோ என்மனத்தின் இருள் குகையில் ஒதுக்கி விட்டு வேறொரு விஷயத்தை வலிந்து இழுத்துக் கதைப்பதென்பது பெரும் குழப்பம்தானே. என்றாலும் தன்னை அதற்குள் சுதாரித்துக்கொண்டு, அவன் திரும்பவும் அந்த மாடுகளைப் பற்றிய கதையையே அவளிடம் திரும்பவும் கதைத்தான். "உந்த மாடுகள் எல்லாம் பிரளிபண்ணாம உங்களுக்குப் பணிவா விடுமா பால்கறக்க?” அவன் எதையாவது தன்னுடன் கதைக்க வேண்டும். அவன் கேட்பதற்கெல்லாம் தானும் பதிலைச்சொல்லி அவனுடன் கதையை வளர்க்க வேண்டும் என்ற மன ஆவலை தன்னுள் வைத்துக்கொண்டு இருந்தவள்; இந்நேரம் அத்தருணம் தனக்கு வாய்த்த அளவில் அவன் கேட்ட கேள்விக்கு ஒரு விரிவான பதிலைக் கூறினாள். "அப்பிடிப் பிரளி பண்ணுற மாடுகளெண்டு இதுகளுக்க பெரிசா ஒண்டுமில்ல. எல்லாம் எனக்கு நல்லாப் பழகின மாடுகள்தான் இதுகள். ஆனா அந்த நாற்கால் சிலம்பிலையும் நிறம் விழுந்திருக்கிற, அந்த நெத்தியில தேங்காய்ச் சுட்டி உள்ள பகத்தான் காலால அடிக்கிற குணமுள்ளது - எண்டாலும் அந்த மாடு இந்தப் பட்டி பெருக வந்த லக்கான மாடு. அதின்ரை லட்சணமெல்லாம் வேற மாட்டுக்கில்ல! அப்பிடி அது இந்த வீட்டுக் கஷ்டம் நீக்கிற லக்கான மாடெண்டாலும், இந்தக் காலால அடிக்கிற குணம் அதுக்கிருக்கு!” "அப்ப எப்பிடி அதில நீங்க பால் கறப்பீங்க அது கட்டில நிண்டபடி நீங்க கதைச்சுக் கொண்டிருக்கக் காதை விடைச்சபடி உங்களையே பாக்குது? அப்பிடியானது பால்கறக்கக் கிட்டப் போனா காலால அடிச்சுப்போட்டிடுமே?” "அதுக்குத்தான் அதில பால்கறக்கிறத்துக்கு முதல் அதின்ரை பின் முட்டுக்காலுக்குமேல கரம்பக் கயித்தால கட்டிப்போடுவம் - நரம்பு மெலியிற அளவுக்கு காலில நெருக்கிக்கட்டிப் போட்டா அதால பேந்து காலத்தூக்கேலாது. நாங்களும் அதில பாலக்கறந்திடுவம்; அப்பிடிக் கறந்து முடிஞ்சாப்பிறகு கட்டை அவிட்டு விட்டிடுவம்.”
මී.4%. ථNගvශovෂීන(ර් O 52 O

"அப்ப கால் கட்டுப்போட்டா எல்லாம் படிமானத்துக்கு வரும் எண்டு சொல்லுறீங்க?” எதை வைத்து அர்த்தப்படுத்தி இதை சொன்னனான் என்று அவளுக்கும் விளங்கிவிட்டது. இதனால் அவள் அவனது கதையிலுள்ள நகைச்சுவையை ரசித்து ஓங்கிச் சிரித்தாள். அவள் சிரிக்கக் கண்டு அவளோடு சேர்ந்துகொண்டு அவனும் சிரித்தான். இருவரும் அப்படியே தங்களை மறந்து ஒரு சில விநாடிகள் மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டு நின்ற அவ்வேளையில்தான் - ஐயாவும் அங்கே அவர்கள் எதிர்பாராத அளவில் அந்தத் திண்ணைத் தொங்கலில் வந்து நின்றார். அவரைத் தொழுவத்திலிருந்து பார்க்கக்கூடிய வசதியாய் விசயாவும் இருந்ததால் அவரதிலே வந்து நின்ற உடனே அவரைப் பார்த்துவிட்டாள் அவள். உடனே ஐயா என்ற சொல் அவள் வாயிலிருந்து தன்னையறியாமல் திடீரென்று வெளிவந்துவிட்டது. அதைக் கேட்டதும் தனக்கும் அவளுக்குமான ஒரு எச்சரிக்கையாய் அதை நினைத்து அந்த இடத்தைவிட்டு ஐயா நின்றபக்கம் செல்வதற்கு அவன் நடந்தான். அவனைப் போலவே அவளும் தன் உணர்வுகளை எச்சரிக்கையுடன் அடக்கிப்போய் ஒரு பசுமாட்டின் வயிற்றுப்பக்கம் முகத்தை மறைத்தபடி இருந்துகொண்டு மீண்டும் மாட்டில் பால்கறக்கும் வேலையிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். “தம்பி என்ன அதில வந்திட்டு ஒண்டும் பேசாம நிண்டிட்டீர். என்னையொருக்கா அதில நிண்ட நீர் உடன கூப்பிட்டிருக் கலாந்தானே? அல்லாட்டி இதால நேரா இங்க திண்ணைப் பக்கம் வாறதுதானே?” சாந்தமான இனிய சுபாவத்தைக் காட்டும் இதமான புன்னகையோடு அவனைக் கேட்டார் அவர். "இல்ல மால் பக்கம்தான் வந்திருந்து உங்களைக் கூப்பிடுவமெண்டு நான் நினைச்சன் - ஆனாலும் நான் பேந்து இப்பிடி வந்தன். அது சரி ஏனையா இந்தக் காஞ்சூரை மரத்தை அனாதியாய் நிண்டு காண்டிருக்கிற மாதிரி உதிலை பெரிசா விட்டு வைச்சிருக்கிறியள்.? ஒரே குப்பையாக் கிடக்குது உந்த மரத்துக்குக் கீழ! அதைத் துப்பரவாக்கிறதே பெரிய மாச்சலா இருக்கும் போலக் கிடக்கு.? உதைப் பிரயோசனமில்லாம ஏன் இதிலை விட்டு வைச்சிருக்கிறீங்க - வெட்டி விடலாம்தானே?” "ஓம் தம்பி அன்ரன்! நீர் நெக்கிற மாதிரித்தான் நானும் நினைச்சன்! உதை வெட்டத்தான் அப்ப உது ஒரு அளவா வளந்து நிண்ட நேரம் நான் அடுக்குப் பண்ணினனான். ஆனா பேந்து இவதான் அதில ஒரு வைரவர் இருக்கு - என்ரை கனவில அது வந்து சொன்னது வெட்ட வேணாம் வெட்டவேணாமெண்டு - அதால உந்த மரம் நிக்கட்டும் வெட்டாதேயுங்கோ எண்டு சொல்லிப்போட்டா - அதாலதான் பேந்து நான் உவையள் உப்புடிச் சொல்லுகினம் எண்டு போட்டு நானும் உதிலை கை வைக்காம விட்டிட்டன். இப்ப அது "பேட் மாதிரிப் பெரிசா வளந்திட்டுது. பாரும் உந்த மரத்தை? - எனக்கென்ன உது நிண்டுட்டுப் போகுது - அவயள்தானே உதைத் துப்புரவாக்கிற வேலையளையும் செய்யிறது.!"
ගණනී6හනuffic), නිgyජ්හෆ් O 53 O

Page 37
தன்னை அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்புவித்துக் கொள்வதற்காகவே அந்த மரத்தைப் பற்றிய கதையை அவரிடத்தில் அவன் கேட்டான். என்றாலும் அவர் அந்த மரத்தைக் குறித்து தனக்குச் சொல்லிய விளக்கத்துக்குப் பிறகு, அதைப்பற்றிய ஒரு புதுமையானதொரு செய்தியை அவனாலும் அறிய இயலுமானதாக இருந்தது. வவுனியாவிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் பலவற்றிலும் உள்ள மக்களிடம் காவல் தெய்வ வழிபாடு என்று சொல்லப்படுகின்ற வைரவர்' வழிபாடு இருக்கிறதை அன்ரன் அங்குள்ள பல இடங்களுக்கும் செல்லும்போது பார்த்திருக்கிறான். அந்த வைரவர் வழிபாட்டுக்கு ஈடாகச் சொல்லக்கூடிய ஐயனார்’ தெய்வ வழிபாட்டையும் அங்குள்ள மக்களிடம் அவன் கண்டிக்கிறான். இந்த "ஐயனார்’ தெய்வ வழிபாடு அங்குள்ள கிராமப் புறத்தில் வாழ்ந்த சிங்கள இன மக்களிடமும் இருந்தது. இந்த வழிபாட்டுடன் வைரவர் தெய்வ வழிபாடும் அவர்களிடத்தே இருந்தது. அங்குள்ள விகாரைகளில் உள்ள சாதுக்களே அவனது வீட்டுக்கு அருகாமையில் சிற்ப வேலை செய்துகொண்டிருந்த ஆசாரி ஒருவரிடம் ஐயனார் சிலைகளைச் செய்வித்து அவற்றை வழிபாட்டுக்கு வைக்கவென வாங்கிக் கொண்டு சென்றதை சில பொழுதுகளில் அவன் கண்ணால் கண்டும் இருக்கிறான். அதைவிட அந்த ஆசாரியருடன் சில வேளைகளில் அவன் கதைக்கும் சந்தர்ப்பத்தில் "வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப்பிறவி எடுத்தார் என்று கூறப்படுகிறது”. என்று அவர் தனக்குச் சொல்லக் கேட்டதில் மேலும் அதைப்பற்றி பல விவரங்களையெல்லாம் அவன் அறிந்தும் வைத்திருந்தான். இத்தனைக்கும் அவன் ஒரு கிறிஸ்தவ சமயத்தவனாக இருந்தாலும் தன் பரம்பரையிலுள்ள அந்த வேர்களைப் போன்ற அனைவருமே இந்துக்களாக இருந்தார்கள் என்ற சத்தியத்தில் அச்சமயத்தில் அவனுக்குப் பற்றும் ஈடுபாடும் இருந்தது. இதையெல்லாம் ஊக்குவிக்கும் அளவுக்கு அவன் பிறந்து வளர்ந்த அந்தச் சூசைப்பிள்ளையார் குளம் கிராமத்திலே அவனது வீட்டிற்கு அருகே குடியிருந்தவர்களெல்லாம் இந்துக்களாகவே இருந்தனர். அவர்களெல்லாம் ஆதி இனக் குழுக்கள் மாதிரி ஒருவருக்கொருவர் குடும்பத்துக்குக் குடும்பம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து குளவிகள் போல் கூட்டாய் வாழ்வதிலும், தேவையின் போது பரஸ்பரம் உதவி செய்வதிலும் பேர் பெற்றவர்கள். ஒருவருக்கொருவர் அன்புடையோராய் நடந்து கொள்வதுதானே மானிட வாழ்வின் அடிப்படை நியதி மனிதர்கள் எல்லோரும் சமத்துவமானவர்களாய், சோதர வாஞ்சை கொண்டவர்களாய் இருக்க வேண்டுமென்பதுதானே அடிப்படையான சமய உணர்ச்சியாகிறது. இதன் காரணமாய் அவர்களோடு சேர்ந்து வாழப் பழகியதில், சமயம் என்கிற வேறுபாடே அன்ரனின் குடும்பத்திலுள்ளவர்களுக்கு இல்லாதொழிந்துவிட்டது. இதனால் இந்து சமயத்திலுள்ள சில பழக்க வழக்கங்களையும் சில கடவுள் வணக்கத்தையும் கூட இவர்களும் கைக்கொள்ளத் தொடங்கி விட்டிருந்தார்கள் அன்ரனின் தாய் சதுர்த்தி விரதம் பிடித்தாள். வெள்ளி, செவ்வாய், வியாழன், சனியென்று அவர்களைப் போல் நாளும் பார்த்து நடந்து கொள்டாள். விஜயதசமி
jෂ්, ග්‍රී. ලාංඤොහvගvෂීඝඨ O 54 O

நாளன்று பண்டாரி குளத்து அம்மன் எழுந்தருளி வந்து வவுனியாக் குடியிருப்புப் பிள்ளையார் வீதியில் வந்து சேர்ந்த பின்புதான் மானம்பூத் திருவிழா நடைபெறும். அந்தத்திருவிழாவின் இறுதி நிகழ்வான வாழை வெட்டு முடிய பூசையாகி அம்மன் வெளிக் கிட்டு சூசைப்பிள்ளையார் குளம் வீதியூடாகவும் பவனி வருகையில் அன்ரனின் தாய் தன் வீட்டுக்கு முன்னால் வைத்து அம்மனுக்கு நைவேத்தியம் கொடுப்பாள். அம்மனையும் தான் பக்தியோடு கும்பிட்டு நிற்பாள். இதுவெல்லாம் அவர்களுக்கு ஏற்பட்டது ஒரே கடவுள் என்ற தமது மன நம்பிக்கையின் ஒரு உந்துதலால்தான். எல்லாம் சிவமென்று சொல்லிப் போற்றி வணங்கும் சைவ சமயம்தான் இந்த உணர்வுகளை அவர்களிடத்தில் பிறகு வளர்த்தும் விட்டது. "என்ன எங்கேயோ எதிலையோ யோசனையை விட்டிட்டீர் போல?”
"அப்பிடி ஒண்டும் இல்லை ஐயா!” அவன் அப்படிச் சொல்லியதோடு அவரைப்பார்த்துச் சிரித்தான். “என்ன அப்பிடி ஒண்டுமில்லையெண்டிறீர்?” - அவரும் இதைச் சொல்லிவிட்டு அவனைப்பார்த்துச் சிரித்தார். “சரிவாரும் அன்ரன் கோப்பியைக் குடியும் முதலில” அப்படிச் சொல்லிவிட்டு முழங்கால் உயரத்துக்கு மேல் இருந்த அந்த மண் திண்ணையால்ருந்து, அந்தப் படிகளாலிறங்கி கீழ் நிலத்திலே நின்று கொண்டார் அவர். “மாலுக்க இப்பிடியே போவமா தம்பி” என்று பின்பு அவனைப் பார்த்துக் கேட்டார். "ஒமோம்!” என்று சொல்லிவிட்டு அவனும் அங்கு போவதற்குத் திரும்பினான். அந்தச்சந்தர்ப்பத்தில் மாடுகள் கட்டி நின்ற பக்கமும் இயல்பாக அவனுக்குப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இன்னும் அங்கு இருந்து மாட்டில் அவள் பால்கறந்துகொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. ஆனாலும் அவளைக் கண்டுவிட்டதும் பார்வையை அவ்விடத்தில் நிலைகுத்தியவாறு வைப்பதை உடன் அவன் தவிர்த்துக் கொண்டான். "எணை நாங்க மாலுக்க இருக்கிறம் தம்பிக்கும் இப்ப கோப்பி கொண்டரேலுமே?” “சரி சரி கொண்டாறன்! இருங்கோ நீங்க அங்கால! நான் வாறன் இப்ப.!” அதைச் சொன்ன கையோடு, உள்ளே அறைக்குள் இருந்தவாறு மூச்சிழுத்துக் கொண்டே ஒரு தேவாரப்பாடலை ஆச்சி முணுமுணுத்தாள். "ஐயா காலம நான் கோப்பி குடிச்சிட்டுத்தான் வாறன். ஆச்சிக்கு ஏன் கரைச்சல் குடுக்கிறீங்க காலத்தால?” "இல்லத்தம்பி இது என்ன கரைச்சல் அவளுக்கு அடுப்புத் தணலில கிடந்து கோப்பித்தண்ணி சுட்டுக் கொண்டிருக்கும் அதைக் கோப்பையில ஊத்தி எடுத்தாறதுதானே. அது என்ன பெரிய வேலையே?. விசயாவும் அப்படி ஐயா சொன்னதை அதிலிருந்தவாறு கேட்டுவிட்டாள். அவர் சொன்னதைக் கேட்ட தருணத்திலிருந்து அவளுக்கு அதில் இருக்கவே மனமில்லை. பால் கறக்கும் வேலையை இடைநிறுத்திவிட்டு தொடைகளின்மேல் இருகைகளையும் வைத்துக்கொண்டு சோர்ந்து வpழ்க்கையின் சிறக்கஸ் O 55 O

Page 38
போனது மாதிரியாக அவள் இருந்தாள். அன்ரனுக்கு எதையாவது கொண்டுவந்து கொடுப்பதில் தன்னைப் புகுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவளுக்கு ஆசை. இன்று அந்தச் சந்தர்ப்பம் நழுவிப்போய் விட்டதே என்ற கவலையில் பெருமூச்சு விட்டாள் அவள். அந்தப் பெருமூச்சோடு அவளது மார்புகள் எழுந்தசைந்தன. என்றாலும் அந்த யோசனைகளோடு தொடர்ந்து அதிலே இருந்துகொண்டு செய்கின்ற வேலையைச் செய்யாமல் வீணே நேரத்தைக் கழிக்க அவள் விரும்பவில்லை. எனவே மீண்டும் தன் வேலையிலே அவள் தன்னைப் பிறகு முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள். அன்ரன் ஆச்சி கொண்டு வந்து கொடுத்த கோப்பியைக் குடித்த கையோடு மாலுக்கு வெளியே வந்து நின்று கொண்டான். ஐயாவும் அவன் மாலுக்குள்ளே இருந்து வெளியே வந்தபோது தானும் தோளில் போடுகிற சால்வையை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு வந்தார். அப்போது கற்பூரம் போன்ற ஒரு கோயில் மணம் அவரிடமிருந்து வீசியது. அந்த மணம் நிறைவாகவும் இதமாகவும் அன்ரனுக்கு இருந்தது. காலையில் திருநீறணிந்த தூயவராகவும், அதிலே ஒரு சந்தணப் பொட்டுடனும் செழிப்பாய்த் தெரிந்த அவர் முகத்தைப் பார்க்க அன்ரனுக்கும் சந்தோஷமாயிருந்தது. அவர் இடுப்பில் கட்டிக் கொண்ட அந்தச் சால்வைக்குப் பிறகு வழமையை விட ரெட்டிப்பானதொரு கம்பீரத்தை அடைந்துள்ளார் என்று அவன் அவரைக் கண்டுவிட்டு வியந்தான்.
ஐயா இறப்பில் செருகியிருந்த சாட்டைக் கம்பை உருவி வெளியே எடுத்தார். கம்பின் இருபக்கத்து நுனிகளையும் தன் இரு கைகளாலும் பிடித்துச் சிறிது வளைத்துப் பிடித்தவாறு அன்ரனுக்கு இதைச் சொன்னார். “தம்பி அன்ரன்! சும்மா ரெண்டு மாட்டைக் கட்டி வளத்துச் சாப்பாடு போட்டிட்டு அதுக்குப்பிறகு கொஞ்சம் நடக்கவிட்டும் அப்பிடி இப்பிடி அதை வண்டில பூட்டி அங்க இங்க ஓட விட்டும் பழக்கினாப்போல அதுகளை றேசில கொண்டுபோய் ஓட விடேலுமே. றேகக்கு மாட்டைப் பழக்கி எடுக்கிறதுக்கெண்டு ஊரிப்பட்ட வழியள் கிடக்குக் கண்டீரோ!! இங்க நான் வளக்கிற மாட்டை நான் தான் சவாரியளிலயும் கொண்டுபோய் ஒட்டுறன். அப்பிடி நான் ஒட்டுறமாதிரி வேற ஆக்கள் தாங்கள் வளக்கிற மாட்டைத் தாங்களே சவாரியில கொண்டுபோய் ஒட்டுறதில்ல, அது தெரியுமே உமக்கு? ஆனா இது என்ரை ஒரு தனிப்பட்ட கெட்டித்தனம்தான். என்னை மாதிரியா வே இப் பிடிச் சில பேர் றே சுகளில வண்டிலோட்டுகினம்தான். ஆனாலும் அப்பிடியாய் எல்லாருமில்லை! என்னெண்டு கண்டீரோ அதிலை என்ரை மாட்டை சவாரியிலை நான் கலைச்சாலும், அதை அடிச்சு ஏவுறதுக்கெண்டு ஒரு ஆள். அவர் இந்த மாட்டோட பழகாத ஆள். அவர்தான் வண்டிலில அப்ப இருப்பார் - அப்பிடித்தான் செய்ய வேணும் - அல்லாட்டி மாடுகள் பயப்பிடாது! - பேந்து அதுகள் ஓடிக்குடுக்காது! அதுக்கு அந்த ஏவலாளரா வாறவர் என்ன செய்வாரெண்டா, சவாரி றேஸ் அதுகள் ஒடுறதுக்கு முதல்நாள் - அந்த மாடுகள் இருக்கிற கொட்டிலுக்க போய் - திடீரென்டு எட்டி
Iණි. ඵ්. ෆණ්vග්vණිගර් O 56 O

அந்த மாட்டின்ரை நாணயக் கயித்தப் பிடிச்சு அதின்ரை காதை தன்ரை வாயால பெலத்து ஒரு கடி நோகக் கடிச்சுவிட்டிடுவார். அந்தக் கடியோட சவாரி ஒட்டுற நேரம் மாட்டை அடிக்கிற தன்ரை ஊசிக்கம்பாலயும் காதிலை அதுக்கு ஊசி ஏத்தி இறுக்கீட்டு - மாட்டிலையும் குத்தி அடிச்சுப் பயமுறுத்திப் போட்டுத்தான் போவார். அதுக்குப்பிறகு வண்டில் சவாரி நடக்கிற அண்டைக்கு தரவையில கொண்டுபோய் வண்டியை நிறுத்தி மாட்டநுகத்தில பூட்டிப் போட்டு கடைக்கிட்டியாளர் மாட்டுக்குப் பக்கத்தில நிண்டு பிடிச்சாப்பிறகுதான் இவர் வண்டியில ஏறி இருப்பார் கண்டீரோ. அவர் வண்டிலில ஏறின உடன மாடும் அப்பத்தைக்கு கடைக்கண்ணால அவரைப் பாக்கும். அப்பிடிப் பாக்கவேணுமெண்டுதானே காது நுனியை சவாரி மாட்டுக்கும் வெட்டி அறுத்தும் அதுகள் அவரைப் பாக்கக் கூடியது மாதிரியும் வைச்சிருக்கிறது. இப்ப கண்டீரோ அவரைக் கண்டவுடன அந்த மாடுகளுக்கு எப்பிடி இருக்கும்?” - என்று அவ்வளவையும் அவனுக்குச் சொல்லிவிட்டு உச்சபட்ச மகிழ்ச்சியிலே அவர் நல்லதொரு சிரிப்புச் சிரித்தார். எந்தக் காரியத்திலும் அறிவுடனும் திறமையுடனும் செயல்பட்டால்தான், ஒருவருக்கு வெற்றி கைகூடி வரும் என்று ஐயா இவ்வளவு நேரம் சொன்ன கதையைக் கேட்டு, அன்ரனுக்கு அப்போது உணரக்கூடியதாக இருந்தது. அவர் சிரித்ததருணத்தோடு கையிலிருந்த கம்பை நிலத்திலுான்றினார். அவருடைய கையிலுள்ள தசைகள் கம்பை ஊன்றிய தருணத்தில் உருண்டு மேலெழுவதை அன்ரன் கண்டுவிட்டு வியந்தான். சரவணன் அப்போதுதான் கிணற்றடிப்பாதையால் குசினிப்பக்கம் போவதற்கு நடந்துவந்துகொண்டிருந்தான். அவள் கையில் ஒரு பழப்பாக்குக் குலையும் இருந்தது. அவன் அந்தக் குலைப்பாரம் தாங்காமல் ஒரு பக்கம் உடலைச் சரித்தபடி வளைந்து நிமிர்ந்துகொண்டு நடந்து வர ஐயாவின் பார்வையும் சொல்லிவந்த கதையை விட்டு விட்டு அவனிலே விழுந்தது.
“சரவணா என்னடா கையில பாக்குக் குலையோட வாறாய்?” "கிணத்து மூலைக் கமுகு பழுத்துக் கீழே கொட்டுது அப்பப்பா” - அவன் அவர் முகத்தைப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துக்கொண்டு பதில் சொன்னான். "நான் அதைக் கேக்கேல்ல. பிண்ணாக்குமடையா. கமுகில ஆர் ஏறின காலத்தால?”
"நான் தானையா!” "அடக் கோதாரி விழ அதுவே மசுந்தி மசுந்தி நீ ஒட்டி நிக்கிறாய்? நீ - நீயேன்ரா அதில போயேறினனி.? ஆரேன் மரமேறுறவன் இங்க வரேக்க புடுங்கெண்டா உடன புடுங்கிப் போடுறான். அப்பிடியாயிருக்க உனக்கேனுந்தத் தொழில?” அவர் அப்படி அவனை ஏசிய கையோடு ஆச்சியும் குசினிக்குள்ளே இருந்து சத்தம் போட்டாள்.
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 57 O

Page 39
“அட என்னடா அது? இதெல்லாம் இதுக்க இருக்கிற எனக்கு என்ன மாடா தெரியும்? எட குழப்படிப்பெடி? எடேய் பெடியா - காலேல ஏன்ரா உனக்கு இந்தத் தேவையில்லாத வேல? பேந்து இங்க ஏதும் நடந்து கிடந்தா நான் சொல்லித்தான் அப்பிடியெல்லாம் நடந்ததெண்டெல்லே அதுகள் இங்க வந்து குளறும். முருகா சும்மா நான் இருக்காம ஏன் இந்த இதுகளைக் கூட கூப்பிட்டு வைச்சுக் கொண்டு ஒரு வில்லங்கப்பாடு எடுக்கவேணம்.? வேலிக்குத்தேடினது பேந்து காலுக்கு முள்ளாய்ப் போயிட்ட கதையாய்ப் போயிடும் போலக்கிடக்கு? இதுகள் எல்லாத்தையும் ஒடெண்டு பிடிச்சுக்கலைச்சுப் போட்டு இங்க என்ரை பாட்டைப் பாத்துக்கொண்டு இருக்கிறதுக்கு ஏன் எனக்கு இந்தத் தேவையில்லாத வேலையள்? நான் இளகின செஞ்சாயிருந்து அதுகளுக்கு இளக்காரம் குடுத்து நடக்க உதுகள் எனக்கு இப்பிடியெல்லாம் செய்யுதுகள்.?” இனிமேலே அவர் சொல்லிக்கொண்டு போனால் அது ஒப்பாரியாகத்தான் வருமென்று நினைக்கும் அளவுக்கு இராசம்மா ஆச்சியின் குரல் ஒரு இழுவையாக மாறிக்கொண்டு வந்தது. ஐயா அதை நிறுத்திவிட வேண்டும் என்று உடனே நினைத்துவிட்டார். "நீ அவன முனிஞ்சு கொட்டாம இனிச்சும்மா கொஞ்சம் அதுக்க இரணை கத்தாம” - என்று அவருக்குக் கேட்கக்கூடியதாய் அதிபாரப்பாங்கில் சொல்லி அவரை அடக்கிவிட்டு “சரி போடா போ போய் ஆக வேண்டிய அலுவலைப்பார்” - என்று அவனைப் பார்த்து உறுக்கிச் சொல்லிவிட்டு அவர் நின்றார். அவன் ஐயாவிடம் பேச்சு வாங்கின கவலையில் முகத்தைச் சுளுக்கியபடி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அந்தக் கைக் குலையை மறுகைக்கு மாற்றிப் பிடித்துக்கொண்டு அவருக்குத் தன் பின்புறத்தைக் காட்டியவாறு அங்காலே போவதற்கு நடந்தான். சரவணன் அந்த இடத்தாலே போகும்வேளையில் அன்ரனும் அவனைப் பார்த்தான். அவன் கையில் பிடித்திருந்த பவழ நிறப் பாக்குக் குலையையும் பார்த்தான். அந்தக் காணியின் செழிப்பு அவன் கைப்பிடித்துத் தூக்கச் செல்லும் பழப்பாக்குக் குலையில் மிளிர்வதை அவன் கண்கள் கண்டு வியந்தன. ஐயா அன்ரனுக்குச் சொல்லி இடை நடுவில் நிறுத்திக் கொண்ட அந்தக் கதையை மீண்டும் அவனுக்குத் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார். "தம்பி இந்த மனுசரைச் சிலபேர் மாடுமாடு ஒண்டுமே தெரியாத மாடு எண்டு இழிவாச் சில நேரங்களில பேசேக்கிள்ள ஆத்திரத்தில சொல்லியெல்லாம் பேசுகினம். ஆனா அப்பிடி அவயள் சொல்லிப் பேசுற இந்த மாடுகளுக்கு இருக்கிற அந்த ஞாபக சக்தியை நீரொருக்கா நான் இப்பச் சொல்லுற கதையை வைச்சு யோசிச்சுப் பாரும். இந்த மாட்டுக்கிருக்கிற அறிவும் ஞாபகசக்தியும் நீர் நினைக்கிறமாதிரி ஏதோ ஒல்லுப்போலயாயில்ல. அதில பாரும் நான் அப்ப சொன்னனெல்லே சவாரி ஒடுறவர் கொட்டிலுக்க வந்து அப்பிடி அதின்ரை காதைத் தன்ரை பல்லால கடிச்சு ஊசியை இறுக்கிக் குத்தி அடிச்சுப்பயமுறுத்திப் போட்டுப் போவாரெண்டு - அப்பிடி அவர் இதையெல்லாம் அதுகளுக்குச்
Iෂ්. ග්‍රී. ලාංහvග්vජ්ගර් O 58 O

செய்துபோட்டு றேஸ்ஒடுற அண்டைக்கு அவர் சவாரி வண்டிலில வந்து ஏறைக்க மாடுகள் அவரைக் கடைக்கண்ணால பாக்கு மெண்டனெல்லே - உடன பாரும் அதுகளுக்கு அப்ப அவர் இன்னதெல்லாம் முன்னம் தங்களுக்குச் செய்தவரெண்டுறது சரியா அதுகளுக்கு அப்ப ஞாபகம் வந்திடும். அப்பிடி ஞாபகம் வந்தவுடன பயத்தில அதுகள் மூச்சாகப் பிறகு ஒட வெளிக்கிட்டிடும்.”
அவர் அந்தச் சவாரி ஓட்டம் சம்பந்தமான விஷயத்தை அன்ரனுக்குச் சொல்லி முடித்த வேளையிலே வெளிவீதி வழியாக அரியத்தின் வண்டில் விறகுக்கென்று காட்டுக்குப் போவதற்குப் போய்க் கொண்டிருந்தது. அந்த மாட்டுவண்டில் உள்ளாழிக்கு மசி இல்லாத காரணத்தால் "கிற்கிர்” என்று ராக ஆலாபனம் செய்து ஆடிக் குலுங்கிக் கொண்டுபோக அதையும் கேட்டுவிட்டு அவர் - “அரியமும் சரியா இந்த நேரம் விறகுக்கெண்டு காட்டுக்கு இப்ப வெளிக்கிட்டுப் போகுதுபோல. நாங்கள் இனி இங்க நிக்காம வண்டிலைப் பூட்டிக் கொண்டு வேளைக்கு வெளியால வெளிக்கிடுவம்' - என்று அன்ரனைப் பார்த்துச் சொன்னார். அவர்களிருவரும் மாடுகளைக் கொண்டுவந்து வண்டிலின் நுகத்தில் நிற்கவிட்டு தாழக் கயிற்றைக்கட்ட விசயாவும் அங்கே அந்தப் பசுக்களில் பால் கறக்கின்ற வேலையை முடித்துக்கொண்டு விட்டாள். ஐயா மாடுகளை வண்டிலில் பூட்டிய கையோடு மாடுகளை கொஞ்சம் முன்னால் போகக் கலைத்து வண்டில் படலையடிக்கு வர, பிடி கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டார். அதைப்பார்த்து அன்ரன் முன்னாலே போய்ப் படலையைத் திறந்தான். திறந்த படலை வழியாக அந்த வண்டிலை ஐயா வெளியே ஒட்டிக்கொண்டுபோக "நான்கட்டி விடுறன் படலையை’ என்று சொல்லிக்கொண்டு விசயா அந்தப் படலையடிக்கு வந்தாள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு படலைக்கு வெளியாலே
ன்றுகொண்டு அன்ரன் விசயாவைப் பார்த்தான்.
"நான் அப்ப போயிற்று வாறன்” - என்று சத்தம் வராத அளவில் மெதுவாக அவளுக்கு இதை அவன் சொல்ல அவள் உடனே சொண்டுக்குள் சிரித்தாள். அப்படிச் சிரிக்கும்போது அவளது கண்கள் அகல மலர்ந்தன. மலர்ந்த விழிகளுடன் உடனே அவனைப்பார்த்து அவள் தலையசைத்தாள். அங்கே வீதிக்குப் போய் வண்டிலேறி விட்ட பிறகுதான் ஐயா தலையைத் திருப்பி இங்காலே ஒருக்கால் அன்ரனைப் படலைப் பக்கமாகப் பார்த்தார். "தம்பி ஏறுமன் வண்டிலில ஒடியந்து கெதியாய்?" என்று சொல்விட்டு மெல்ல மாடுகளின் பிடி கயிற்றை அவர் தொய்வாய்க் கொஞ்சம் கை விட்டார். உடனே எந்தவித ஏவுதலும் இல்லாது மாடுகள் உடனே வீச்சாக வெளிக்கிட்டு ஓட ஆரம்பித்தன. அந்த ஏழரைச்சுற்றுள்ள சில்லுகளின் அச்சும் அதன் குழாயும் சுலபமாகச் சுற்றிக்கொடுக்க எடுத்த எடுப்பில் அவ்விடமெங்கும் புழுதியைக் கிளப்பிக்கொண்டு அந்த வண்டில் வெளிக்கிட்டது. உடனே கண் இமைக்கும் நேரத்துக்குள் அன்ரன் அந்த வண்டிலின் பின்னால் பாய்ந்து ஏறிக்கொண்டான். அப்படி ஏறின வேகத்தோடு கையால் வண்டில் கிறாதியைப் பிடித்துக்கொண்டு அவன்
வரழ்க்கையிண் ரிறங்கஸ் O 59 O

Page 40
பின்புறமாகத் திரும்பி இருந்தான். அப்படி அதிலே இருந்துகொண்டு அந்த இடத்தைத் தாண்டி வண்டில் போகுமட்டும் அவள் நின்ற வேலிப்பக்கமாக தன்பார்வையை அவன் படர விட்டபடியே இருந்தான். வண்டில் தன் பார்வையை விட்டு மறைந்துவிட்ட பொழுதும்கூட விசயா தான் நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தாள். வண்டில் அந்த இடத்திலிருந்து போய் அதன் சத்தம் மெல்லமெல்ல மறைந்து போன பின்பும் அன்ரனைப் பற்றிய சிந்தனை போகாமல் அதிலே நின்று சிறிது நேரத்தை அவள் போக்கடித்தாள். இந்நேரம் வாடிக்கையாக இங்குவந்து பால் வாங்குகிற அந்தப் பெண் படலையைத் திறந்தாள். அவளைக் கண்டுவிட்டு அதிலே நின்று கொண்டிராமல் விசயா பாலுள்ள பாத்திரங்களைத்தூக்கி எடுத்துக்கொண்டு மால் பக்கமாக வந்தாள். அந்தப் பெண்ணுக்கு அவள் கொண்டுவந்த போத்தலில் பாலை ஊற்றிக்கொடுத்து அவளை அனுப்பிவிட்டு, இன்னும் ஒரு போத்தல் பால் சின்னம்மாவுக் கென்றும் போத்தலில் வார்த்து அதைக் குசினிச் செத்தையில் சாய்த்து வைத்துவிட்டு, பால்பீச்சின இந்த வேலைகளெல்லாம் முடிந்தது என்ற ஆறுதலில் அவள் குசினிக்குப் போனாள். அவள் குனிசிவாசலில் போய் நின்ற தருணம், ஆச்சி சுளகில் பிட்டுக்குழலைச் சரித்துப் பிடித்தபடி அகப்பைக் கம்பால் சில்லைத்தள்ளிக் கொண்டிருந்தாள். பிட்டுச் சுடச்சுட தேங்காய்ப்பூவுடன் சுளகில் கிடப்பதைப்பார்க்க அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பக்கத்தில் சரவணன் கறிக்கு வெட்டிப்போட வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தான். "அப்பம்மா என்ன இது சுகமில்லை எண்டீங்க இப்ப இந்த நெருப்பு வெக்கையிக்க கிடக்கிறீங்க? என்ன அப்பம்மா நீங்க செய்யிறவேலை?” "இங்க பார் உன்ரை தம்பி வெங்காயம் உரிச்சு அழுகிறான். உவனுக்குச் சாப் பாடு குடுத்து வேளைக்கு குளத் தடிப் பக்கம் போக அனுப்பவேணுமெல்லே பிள்ளை?” "எண்டாலும் நான் செய்வன்தானே உதையெல்லாம் நேரத்துக்கு அப்பம்மா” “பூ போடி போ!! எத்தின வேலையெண்டிருக்குப் பிள்ளை உனக்குச் செய்ய! எல்லாம் தனிய நீ செய்து முடிப்பியே நேரத்துக்கு? பாவமெல்லே நீ? எல்லாத்திலையும் தனியக்கிடந்து முறியப் போறாயெண்டு நினைச்சுப் போட்டுத்தான், நான் பிறகு புட்டவிக்க வெளிக்கிட்டன். நான் இதை அவிச்சு முடிச்சாப் பிறகு இவனுக்குச் சாப்பாடு போட்டுக் கட்டிக்குடுக்கிறன். நீ அங்கபோய்ப் பிள்ளை சாணியை வளிச்சுக் கும்பியில போட்டிட்டு முத்தத்தைக் கூட்டு. கோழியளையும் பாத்துக் கூட்டால திறந்துவிடு” இன்னும் அவள் செய்ய வேண்டியிருக்கும் வீட்டு வேலைகளையும் அவளுக்கு ஞாபகப்படுத்தி அதையெல்லாம் அப்பம்மாதன் வாயால் ஒழுங்குபடச் சொல்லிக்கொண்டு போவதைக் கேட்க அவளுக்கு அந்தரமாயிருந்தது. “ஓம் அப்பம்மா நீங்க சொன்னமாதிரி கனக்க வேலையை இன்னும் நான் செய்யக் கிடக்குத்தான்! நான் அதுகளைச் செய்ய அங்க கொட்டில் பக்கமும் முத்தத்துப் பக்கமும் போறன்.
No. ტმ. ლSტიrwkgOზptბ O 60 Ο

எண்டாலும் அப்பம்மா நீங்க உந்த வெக்கேய்க்கை கன நேரம் கிடந்து நெருப்புக் காயாதேயுங்கோ. வருத்தமெல்லே உங்களுக்கு?" "அப்பிடி என்ன பெரியவருத்தம் பிள்ளை உதுகளெல்லாம் எனக்கு? வயசு போனா எல்லாருக்கும் இந்த மாதிரியான வருத்தம் கிருத்தம் பிடிக்கத்தானே செய்யும்! இதுகளைப் பாத்துக் கொண்டு மூலைக்க போய்ப் படுத்துக்கிடந்தா சீவியப்பாடு போகுமே? இதுகளை நான் இங்கபாத்துச் செய்யிறன் ராசாத்தி! நீ போய் இனி அந்த வேலையளைப் பாரணை.!” அப்பம்மா சொன்னதுதான் தாமதம் அதற்குப் பிறகு அந்த இடத்தில் அவள் நிற்கவில்லை. அவள் முடுக்கிவிட்ட யந்திரம் மாதிரி சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்தாள். வீட்டுக்கோடிப்பக்கம் போய் தடி விளக்குமாறை எடுத்துக்கொண்டு, முற்றத்தடிக்கு அவள் போனாள் மாடுகள் கட்டியிருந்த பகுதியை சுத்தம் செய்வதற்கு அவைகளை வெளியில் போக விட்ட பின்புதான் அதற்குள் இறங்கலாம். அதுவும் அந்த இடத்தில் சாணி வழித்துப் போட்டாற் பிறகுதான் கூட்டிப் பெருக்குகிற வேலையைச் செய்ய முடியும் எனவே அந்த வாசலடிக்குப் பக்கத்தில் நின்ற வேப்பமரத்தடியிலே போய் அதிலே இருந்து தொடங்கி அவள் குப்பையைக் கூட்ட ஆரம்பித்தாள். அந்த வேப்பமரத்திலே ஏடவிழுந்த வேப்பம் மொட்டுக்கள், இதமான ஒரு கசந்த வாசனையைக் கொட்டிக் கொண்டிருந்தது. அந்த மரத்துக்குக் கீழே அலர்ந்து வீழ்ந்த பழம் பூக்கள் சித்திரம் தீட்டினாற்போல் கோலம் போட்டிருந்தன. அதைப் பெருக்கிக் கொண்டிருக்கும்போது தன் வீட்டிலுள்ள பட்டினியும் பாடும் அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது. அந்த நினைப்பில் பிறகு எல்லா இயக்கங்களும் அவளுக்கு சோகை பிடித்து மந்தம் தட்டிக்கொண்டு போவது போல் இருந்தன. இதனால் சற்று முன் இருந்த மகிழ்ச்சியான நினைவுகளெல்லாம் அவளுக்கு, நீர் அலையில் கலையும் நிழல் போல் மெல்ல மெல்ல மறைந்து கொண்டு போயின. அந்த அவளது வீட்டின் கஷ்டமான சூழ்நிலையிலுள்ள நினைவுகள் மட்டும் ஆழநீருக்குள் இருந்து "கிளு, கிளுவென குமிழிகள் மேலெழுந்து உடைவதுபோல் மனத்தில் அந்த நேரம் அவளுக்கு எழுந்தவண்ணமாக இருந்தன.
நான்கு
இரண்டாவது உலகமகாயுத்தம் நடந்து முடிந்துவிட்டாலும், அந்த யுத்தம் தன் ஞாபகமாக விட்டுச்சென்ற எச்சங்கள் பல இந்த வன்னிப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அநேகம் காணப்படத்தான் செய்கின்றன. அதிலே மிகப்பெரியதான ஒன்று கனரக விமானங்கள் வந்து இறங்கி ஏறத்தக்கதான வசதியானதொரு விமான ஓடுபாதை. வவுனியா நகரின் வசீகர சக்தியின் ஒரு பகுதிதான் இந்த இடமும். இதை இறம்பைக் குளம் கிராமத்துக்கு அருகிலே யாரும் பார்க்கக்
வரழ்க்கையின் ரிறங்கஸ் O 6 O

Page 41
கூடியவிதமாக இருக்கிறது. இந்த விமான ஓடுபாதை அந்த யுத்தம் நடைபெற்ற காலத்திலேதான் நிர்மாணிக்கப்பட்டது. இந்த விமான ஓடுபாதைக்கு அருகிலே பலரது தோட்டத்துக் காணிகள், அவர்களது வீடுகள் என்று அவ்விடமெல்லாம் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் இதற்கு அருகேதான் பிரதான வீதியாக வாகனப் போக்குவரத்துக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்தக் கண்டிவீதி உள்ளது. அதோடு இந்த விமான ஒடுபாதைக்கு அருகேயுள்ள இடங்களிலெல்லாம் பாலையும் வீரையும் செறிந்திருக்கும் பசுமைக்காடுகள். அந்தக் காடுகளுக்கு உள்ளேயுள்ள சிறு வீதிகளுக்குப் பக்கவாட்டிலெல்லாம், நெருக்கியடித்தபடி இருக்கும் விடத்தல் பற்றைகள். அதற்குள்ளே ஒருவர்தன் கண்பார்வையை மேலே உயர்த்திப் பார்க்கக் கஷ்டப்படும் அளவுக்கு மிகவும் உயரமான பாசி படர்ந்த பழைய கட்டடங்களும் இருக்கின்றன. அவையெல்லாம் இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்வேளையில் இராணுவத்தினரின் பாதுகாப்புக்கென்று கட்டப்பட்ட உறுதியான கட்டடங்கள். அவைகளுக்குள்ளே சில கட்டடங்களின் வடிவமைப்பைப் பார்க்கும் போது அப்படிப்பட்டவைகள் விமானங்களைப் பாதுகாப்பாய் உள்ளே விடுவதற்குக் கட்டப்பட்டிருக்கலாம் என்றே விஷயம் விளங்கியவர்களுக்கு எண்ணத் தோன்றும். அந்தக் கட்டடங்களின் அமைப்புகளைப் பார்த்து அட' என்று வியந்து மாய்ந்து போன பிறகு, அவைகளெல்லாம் முன்பு யுத்தம் நடைபெற்ற அந்தக் கால எல்லையில் எப்படியாக இருந்திருக்கும் என்றே கற்பனா சக்தி மிக்கவர்கள் சிலர் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பார்கள். இவைகள் மட்டுமல்ல அந்த இடத்தைச் சூழவும் இருப்பவை, இன்னும் இவைகளை விடச் சொல்லத்தக்கவை. ஏராளமாய் அங்கே இருக்கவே இருக்கின்றன. அந்தக் காட்டுப் பகுதிக்குள்ளாலே சுற்றிச் சுற்றி வந்து கச்சிதமாக அந்தவிமான ஓடுபாதை வழியே பொருந்துகிறதே சில வீதிகள் - அவைகளைப் பற்றி இங்கே சிறிதளவாவது சொல்லாதிருக்க முடியுமா? அந்த வீதியிலே தார் இறுகிப் போயிருக்கின்ற ஒரு சிறு கல்லை எந்த இராட்சச பலத்தைக் கொண்டும் ஒருவர் கடப்பாரையால் கொத்தி அதை இலகுவில் தனியே பெயர்த்தெடுக்க முடியாது. அந்த அளவு தரமுடையதாய் இதை அவர்கள் நிர்மாணிக்கும்போது அன்றையப் பொழுதில் இதற்கு அவர்கள்தார்தான் உருக்கி ஊற்றினார்களா, அல்லது தாரைப் போன்று உள்ளவேறு ஏதோ ஒரு இரும்பைப் போன்ற பொருளைத்தான் உருக்கி இதற்கு வார்த்து விட்டார்களா என்றே அதன்மூலம் எண்ணத் தோன்றுகிறது. இப்படியான நிலையிலுள்ள இந்த உறுதியான வீதிகளையும் பெரிய குகை போன்ற வாயிலையுடைய அந்த உயர்ந்த கட்டிடங்களையும் அவர்கள் நிர்மாணிக்கும் போது, இந்த ஊரிலுள்ளவர்களைத் தான் தொழிலாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் போட்டு வேலை செய்வித்து அவர்களுக்குக் கூலியும் கைநிறையக் கொடுத்தார்களாம். இதுவெல்லாமே இன்னும் இவ்விடங்களில் இருந்து வாழ்கின்ற பலராலும் பேசப்பட்டு வருகின்ற ஒரு கதை. இந்தக் கதையுடன் சேர்ந்து அந்த காலத்தில் நடந்த இன்னும் பலவாறான கதைகளையெல்லாம், அவர்கள்
ரீ.பி. அருளWணந்தம் O 62 O

இதையெல்லாம் அறியாத பலருக்கும் சொல்லிக் கொண்டுதான் இவ்விடங்களிலே வாழ்கிறார்கள். என்றாலும் அவைகளெல்லாம் எப்பொழுதோ ஒரு காலத்தில் நடந்து முடிந்து போன பழங்காலத்துக் கதைகள் தானே! ஆதலால் அவர் களது கதைகளில் தேவையற்றதையெல்லாம் இப்போது பெரிதுபடுத்திச் சொல்லாமல் விட்டுவிடுவோம். இங்கேயுள்ள நடப்பு விவகாரத்துக்கு இனிமேல் வருவோம். இன்று இந்தவிமான ஓடுபாதை வழியே மாடுகளும், அதன் கன்றுகளும்தான் தங்கள் பாட்டுக்கு அங்குமிங்குமாகப் போனபடி திரிகின்றன. கடைப் பக்கமிருந்து வேர்க்கடலை மூட்டைகளை மாட்டு வண்டில்களில் ஏற்றிக்கொண்டு இவ்விடத்தில் கொண்டு வருபவர்கள், இதிலே படங்கை விரித்து அவைகளை வெயில் காயப் போடுகிறார்கள். சப்பி பிடைக்கிறார்கள் - திரும்பவும் அவைகளைச் சாக்கில் போட்டுத் தைத்து வண்டிலில் ஏற்றிக் கொண்டு போய்விடுகிறார்கள். இன்னொரு வேளைக்கு மிளகாய்ப் பழங்களும் இந்த இடத்திலே கிடந்து வெய்யிலில் காய்கின்றன. கடலை அள்ளின கணக்காய் இவைகளையும் அப்படியாக அள்ளியெடுத்து சாக்கில் போட்டுத் தைத்துவிட்டு முன்னம் செய்ததுபோலவே இவைகளையும் அவர்கள் பார வண்டிலில் கொண்டுபோய் விடுகிறார்கள். தங்கள் இஷ்டம்போல் இதையெல்லாவற்றையும் இங்கு செய்துகொள்ள, இந்த இடம் நல்லதொரு வசதியாகிவிட்டது அவர்களுக்கு. இவைகள் மட்டுமா இந்த இடத்தில் நடக்கின்றன? இரவிலே தங்களுடைய மன நமைச்சல்களைத் தீர்த்துக்கொள்ள, இங்கே வந்து இருந்து காற்று வாங்கிக்கொண்டு சாராயம் குடிக்கச் சிலர் விரும்புகிறார்கள். அதற்கென்றும் இவ்விடத்துக்கு அவர்களெல்லாம் தாராளமாய் வந்திங்கே இருந்து கொள்கிறார்கள். இதைவிட சனசந்தடியற்ற ஒதுக்குப் புறமாயுள்ள இந்த இடத்திலே இருண்ட வேளையிலே சிலரிங்கு வருகிறார்கள். அவர்கள் ஏன் இது வருகிறார்கள்? என்று விவரமாகவெல்லாம் சொல்வது அசிங்கம் அந்த அசிங்கத்தை ஒரே வார்த்தையில் சொன்னால், எல்லோருக்கும் அது உடனே நன்றாக விளங்கிவிடும். அப்படியாக சுருக்கமாகச் சொல்லி ஆருக்கும் விளங்கவைக்கக் கூடியதான, விபச்சாரம் என்கிற பழம்பெரும் தொழிலுக்கும் தோதான இடமாய் இந்த இடம் சிலருக்கு இப்பொழுது ஆகிவிட்டது. அப்படியாக என்னதான் இவ்விடத்தில் இப்போது வேறு விதமான பல வேண்டாத அலுவல்களெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும், இந்த இடத்துக்குரிய அதற்கான ஒரு தனிப் பெருமை ஏதோ அருமையாகச் சில வேளைதனில் நிகழும் இப்படியானதொரு சந்தர்ப்பத்தில்தான் வெளிப்படுகிறது. தனியாருக்குச் சொந்தமான விமானம் வந்து இந்த இடத்தில் இறங்கும்போது, இந்த இடத்துக்கு அருகாமையில் இருக்கின்றவரெல்லாம் அந்த விமானத்தைப் பார்க்கவென்று தரைக்கடியிலிருந்து உதித்தெழுந்தது போல் நொடிப்பொழுதுக்குள் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிடுவார்கள்.
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 63 O

Page 42
இது விமானம் இறங்குகிற இடம் என்பதை, அந்த விமானம் விமான ஓடுபாதையில் ஓடி மேலே வானத்தில் பறக்கும் போதுதான், அதைப் பார்த்து அவற்றையெல்லாம் தம் மனத்திலெண்ணி அவர்களெல்லாம் பிரமிப்பார்கள். ஆனாலும் அந்த விமானம் அவர்களது கண் பார்வையிலிருந்து மறைந்து போனபிறகு, இது விமான ஓடுபாதையென்பது அவர்களுக்கு முற்றாக மறந்துபோய்விடும். அதற்குப்பிறகு வேதாளம் முருங்கைமரத்தில் ஏறின கதைமாதிரி பழையபடி அவர்களால் அந்த அலுவல்களெல்லாம் இந்த இடத்தில் திரும்பவும் வழமையாக நடைபெறவும் ஆரம்பித்துவிடும். இப்படியே இந்தவெளி ஏதும் வேறு பிரயோசனமின்றிச் சும்மா கிடந்தாலும், சித்திரைப் புதுவருஷம் வரும் காலத்திலே மாட்டுவண்டில் சவாரிப்போட்டி நடத்துவதற்கென்று பெரிதும் பயன்பட்டது. விமான ஒடு பாதைக்குப் பக்கத்தே உள்ள தரைவைவெளி மாட்டுவண்டில் சவாரிப்போட்டி நடத்துவதற்குத் தோதாய் இருந்ததால், வருடம் ஒரு தடவையோ இரண்டு தடவைகளோ இந்த இடத்தில் வண்டில் சவாரி கோலாகலமாய் நடைபெறும் அளவுக்கு வந்துவிட்டது. வட மாகாணத்தை உள்ளடக்கி நடத்தப்படும் இந்தச் சவாரிப் போட்டிகளிலே பங்குபற்ற, வண்டில்களும் மாடுகளும் இத்தருணத்தில் லொறிகளில் பத்திரமாய் கொண்டுவந்து இங்கே சேர்க்கப்படும். வண்டில் சவாரி நடக்கும் அன்றைய நாளிலே, இந்த ஊரிலுள்ள மக்களெல்லாம் இவ்விடத்தில் திரண்டுவந்து நிற்பார்கள். இந்த வீர விளையாட்டுக்குள்ள மவுசு எப்படியென்று பார்வையாளரைக் கொண்டு எடைபோட்டுப் பார்க்க நினைப்பவருக்கு, அங்கு திரண்டு வந்திருக்கும் ஆண், பெண் பாலரின் தொகைக்கணக்கைப் பார்க்கவே உடனே புரிந்துவிடும். அப்படியான இந்தப் பெரிய நிகழ்வு ஒன்று மட்டும்தான் வருடா வருடம் இந்த விமான ஒடு பாதைப் பகுதியில் நடக்கும் முக்கிய சம்பவம். அந்த முக்கிய நிகழ்வான வண்டில் சவாரிப் போட்டிக்கு தன் வளர்ப்பு மாடுகளையும் தோதாய்த் தயார்படுத்தும் நோக்கத்தில்தான், பொன்னுத்துரையும் சில கிழமைக் கணக்காய் இவ்விடத்துக்கு சவாரி வண்டிலை ஒட்டிவருவதற்குத் தொடங்கியிருந்தார். இன்றும் அந்தத் தெரு நாற்சந்தி வீட்டிலிருந்து புழுதி கிளப்பிக்கொண்டு விரைவாக வெளிக்கிட்ட அவரது சவாரி வண்டில், வடக்கு வீதி வழியாக விமான ஒடுபாதையடிக்குப் போகவென்று வேகமாக வந்து கொண்டிருந்தது. முதலில் எதிர்ப்பட்ட சேரிப்பக்கத்தால் அந்த வண்டில் போய்க்கொண்டிருந்த போது, காலை வேளையில் வாளிக்கக்கூசு எடுக்க வண்டிலைத்தள்ளிக் கொண்டுவந்த தோட்டி ராமன்; எதிரே வேகமாக வரும் அவரது வண்டிலைப் பார்த்துப் பயப்பீதியில் வண்டில் தள்ளுவதை விட்டுவிட்டு, அதற்கு வழிவிடுவதற்காக வீதியின் கான்வழியே இறங்கி அங்கு நின்றுகொண்டு விட்டான். அவனைத்தாண்டி வண்டில் போய்விட, அடுத்ததாக அந்த வீதியில் குடி தண்ணிருக்காக பானையுடன் அலையும் பெண்டிர் சிலர், அவனை மாதிரியே இறங்கிக் கான் வழியே பரிதாபமான ஒரு நிலையில் நின்று கொண்டார்கள். அப்படி யாருக்கும் அந்த வீதியில் நடந்து போக இடம் கொடுக்க மறுக்கிற கறார்த்தனத்திலே, அந்த வண்டில் மாடுகள் பேயோட்டம் ஓடிக்கொண்டிருக்க, ஐயா
iෂ්. ග්‍රී. ලාහ්ගvගvණිගර් O 64 O

விறைப்பாக நெஞ்சு நிமிர்த்தியபடி வண்டிலின் ஆசனத் தட்டில் இருந்து கொண்டிருந்தார். சேரி வீதி கழிந்து சவக்காலையடிக்கு வண்டில் வரும்போது, அந்தப்பக்கம் வீதியருகில் நின்ற இலுப்பை மரத்திலிருந்து வந்த இலுப்பைப் பூவின் தேன் மணம் அன்ரனுக்கு ஒருவித கிறக்கத்தைத் தருவதாயிருந்தது. அந்த இலுப்பைப் பூவின்தேன் மணத்தால், அவனுக்குத் தலை கிறுகிறுத்தது. அந்த நறுமணத்தை அனுபவித்துப்போக, அடுத்து வந்த இடத்திலிருந்து மல நாற்றமும் கப்பென்று மூக்கில் அவனுக்கு அடித்தது. அந்த இடம் சுற்றிவரப் புளியமரத்துக்காடு. அந்த மரத்திடைவெளியிலே குழிகளை வெட்டிவைத்து, அந்தக் குழிகளில்தான் மனித மலக்கூழைப் பீப்பாய்களில் கொண்டுவந்து, தோட்டிகள் கொட்டிவிட்டு மண்ணை மூடிவிடுவார்கள். அன்ரன் அந்த இடத்தால் வண்டில் போய்க்கொண்டிருக்க, தன் நாசித்துவாரங்களை விரல்களால் பொத்திப்பிடித்தபடி, அந்தக் காற்றிலே இமிரி வரும் நாற்றக்கலவையைப் பொறுத்துக் கொண்டிருந்தான். என்றாலும் வண்டிலின் வேகத்திலே பரவியெழும் அந்த நாற்றப்புயல், ஒரு வெள்ளி மின்னலைப்போல் தோன்றிய வேகத்திலே ஒடி மறைந்துவிட்டதைப் போல, தன் விரல்களை மூக்கிலிருந்து எடுத்துவிட்டுச் சுவாசித்தபோது அவனுக்கிருந்தது. இறம்பைக் குளம் பகுதியிலே இப்போது பொன்னுத்துரையின் வண்டில்மாடுகள் கிட்ட நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த்க் குளக்கட்டுப் பக்கம்தான், பார்ப்பதற்கு மிகவும் செழிப்பாயுள்ள இடம். குளத்துத் தண்ணின் இந்தக் குளிர்ச்சிக்கு, வேறு ஏதாவது பிரயோசனமான மரங்கள் இதிலே நின்றால் எவ்வளவு நன்றாயிருக்கும். இந்தக் குளக்கட்டுக்குக் கீழ் எல்லையில்லாமல் பரந்து இருக்கும் அந்தச் செழிப்பான நெல் வயல் வெளிக்கும், பூக்களின் நூறுவகைக் கச்சல் நாற்றம் கொண்ட இந்தப் பற்றைச் செடிகளுக்கும், கொஞ்சம் கூடப் பொருத்த மென்பதில்லையே?”
அந்த இடத்தாலே இந்த வண்டில் போய்க் கொண்டு இருக்கையில், அன்ரன் இவற்றைத்தான் நினைத்துச் சற்றுச் சிந்தித்தான். அந்த அளவுக்கு அவன் நினைக் குமாறு, அவ்விடங்களிலே பொத்தக் கள்ளி, சப்பாத்திக்கள்ளி, இலந்தை, நெருஞ்சி, பிரண்டை, சிவப்புப் பூ எருக்கு, நாயுருவி, பீளைசாறி, காட்டாமணக்கு என்று ஊ.! எத்தனை வகை! அவைகளில் பலதும் முள் முரடுகள் உள்ள செடிகளும் கொடிகளுமாயிருந்தன. சப்பாத்திக்கள்ளி முள்பரப்பிவிட்டு இரத்தக்கட்டி போன்ற பூக்களைப் பூத்திருந்தது. காட்டாமணக்கு செடிமட்டும் உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சியதைப் போன்று செழித்து வளர்ந்து கிடந்தது. என்றாலும் அவைகளிலே எருக்கலைச் செடிகள்தான் அதிகப் பூக்களைப் பூத்திருந்தன. பூக்கும் பருவத்துக்கு வளர்ந்து நின்ற எருக்கலைச் செடிகள், இடுக்கிய கண்கள் போன்ற ஒடுங்கிப்போன பூக்களோடு முட்டிமோதின. காற்றுக்குப் பூ - ஆடும் அழகை வண்டிலுக்கு வெளியே காலைக் கீழே தொங்கப் போட்டபடி அவன் பார்த்துக் கொண்டிருக்க, வெளியான அந்தப்பாதையில் விரைவாக வந்து ஏறிவிட்டது அந்தச்சவாரி வண்டில்,
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 65 O

Page 43
காற்று வீச்சமானதாக வீசும் அந்தப் பெரு வெளியடிக்கு வண்டில் வந்ததும், பிடிகயிற்றையிழுத்து மாடுகளைத் திருப்பி மண்பாதைக்குப் போகக் கலைத்தார் பொன்னுத்துரை. அங்கே சரியான இடத்துக்கு வண்டில் போனதும் பிற்பாடும் பிடிகயிற்றை இழுத்து மாடுகளை நிறுத்தியபடி பின்னால் திரும்பி அவர் அன்ரனைப் பார்த்தார். "தம்பி இண்டைக்கு நீர்தான் இந்த இடத்தில வைச்சு மாடுகளைக் கலைச்சுப்பாக்கப் போறிர்?” அதை அவர் சொல்லிவிட அவனுக்குச் சந்தணத்தைத் தன் நெஞ்சில் தடவிவிட்டமாதிரி இருந்தது. அவருடைய மாடுகளை இந்தத் தரைவையில் வைத்துத்தானும் ஒரு நாள் கலைத்துப் பார்க்க வேண்டும் என்றதான தன் நெடுநாள் ஆசை. இன்று தனக்குக் கைகூடி வந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு அவன் அந்தப் பிடிகயிற்றை அவரிடமிருந்து வாங்கினான். “இண்டைக்குத் தானையா என்ரை சீவியத்தில இந்தத் தரைவையில வைச்சு நான் சவாரி மாடுகளைக் கலைச்சுப் பார்க்கப் போறன்.” “இப்பிடி இடக்கிட வேற இடங்களிலையும் வைச்சு இந்த மாடுகளைக் கலைச்சுப் பாக்க உமக்கு நான் தந்திருக்கிறன்தானே..? அதொண்டும் அவ்வளவு பெரிசில்லத்தம்பி! இப்ப நீர் மாடுகலைக்கப்போற இந்த இடம்தான் ஒரு இடைஞ்சலுமில்லாத வெளியான இடம். இதிலை நீர் கண்ணை மூடி முழிக்கமுதல் மாடுகள் சும்மா அந்தத் தொங்கலுக்குப் பாஞ்சிடும் பாரும்! அதால கவனமாய் இதில இருந்துகொண்டு நீர் இப்ப உதிலை மாட்டைக் கன்லச்சு விட்டுப்பாரும் நீர் சவாரிக்குத்தோதான ஒரு ஆள்தான் அதையும் நம்பிக்கையா மனதில வைச்சுக் கொள்ளும் என்னவும்”
"எல்லாம் உங்கட உதவியள்தான் ஐயா”
"இன்னொண்டு அதை நான் உமக்கு முன்னம் பலதரம் மாடுகளை நடத்திக் கலைக்கிற நேரமெல்லாம் அப்பப்ப இதைச் சொல்லியிருக்கிறன் எப்பவும் சவாரி ம்ாட்டைத் தொங்கண்ணா பாச்சலில ஒடவிடக்கூடாது. முதலில நாய்ப் பாய்ச்சலிலதான் மாடுகளை ஒடவிட வேணும் பேந்து வேகம் கூடினாப் பிறகு குதிரைப் பாச்சலில அதுகளை ஒடவிடவேணும், தெரிஞ்சுதே? மாடுகள் டங்கு, டங்குவெண்டு ஓடிச்செண்டா துள்ளத்துள்ள, அடிவயிறு அதுகளுக்குக் கீழ இறக்கம் குடுத்திடும். அப்படியா வந்துதெண்டா, மாட்டின்ரை ஒடுறவேகம் குறைஞ்சிடும். பேந்து அதுகள் மூச்சுப் பிடிச்சு ஓடாதுகள் கண்டீரோ.?” அவன் மாட்டைக் கலைக்கத் தயார் நிலையில் இருந்து கொண்டு அவர் சொன்ன சொல்லுக்குத் தலையாட்டினான். “சரிதானேயப்ப ம். ஹேய்” என்று சாதாரணமான குரலொலியில் மாடுகளை ஒடவிரட்டிவிட அவர் சத்தம் வைத்தார். அதே தருணம் பார்த்து அவன் பிடி கயிற்றைத் தளர்த்தி மாடுகளை ஓடவிட்டான். எடுத்த எடுப்பில் அந்த மாடுகள் அந்தத் தரைவை வெளியிலே வேகமாக ஒடத்தொடங்கின. அவன் காற்றைப் போல் பாரமில்லாமல் உடம்பை வைத்துக்கொண்டு, அந்த வண்டில் ஓட்டத்துக்குத் தோதாய் அந்த ஆசனத்தட்டிலே இருந்துகொண்டான். பிடிகயிற்றை நேர்சீராய்ப் பிடித்துக் ரீ.பி. அருஸ்ணற்றம் O 66 O

கொண்டு அந்த மாடுகளைத் தாராளமாய் அந்த வெளியிலே அவன் ஓடவிட்டான். அந்த மாடுகள் விரைவாக ஓடியதால் சில நிமிடப் பொழுதுக்குள்ளாகவே அந்த இடத்தின் கடைசி எல்லையைத் தொட்டுவிட்டன. பிடி கயிற்றைக் கடைசி வேளையில் இழுத்துப் பிடித்து அவன் மாடுகளை நிறுத்த முயன்றும், அவைகள் வெகுதூரம் ஓடிச்சென்றுவிட்டுத்தான் ஓட்டத்தை நிறுத்தி ஓய்ந்து நின்றன. ஐயா சிரித்தார். "அச்சா ஒட்டம்தான்!” - என்று மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்துச் சொன்னார். அப்படி அவனுக்குச் சொல்லிவிட்டு, மாடுகள் ஓடிவிட்ட இந்த வேகத்தை கவனத்தில் மீண்டும் எடுத்து, அதைப்பற்றித் தனக்குத்தானே அவர் ஒருமுறை எடைபோட்டுப் பார்த்தார். இன்றுதான் சவாரி விடுகின்ற ஆளாயில்லாமல் ஒரு ஏவலாளனாக அந்த வண்டிலில் இருந்ததில், அவருக்கு அநேக விஷயங்கள் கண்டுகொள்ளக் கிடைத்ததைப் போல் இருந்தது. தன்னுடைய வளர்ப்புக்காளைகள் இன்றையப்பொழுது ஓட ஓட மூச்சுப் பிடித்து ஓடியதாக கண்டு கொண்டதில், வரப்போகும் சவாரிப் போட்டியின்போது தனக்குத்தான் முதல்பரிசு கிடைக்கும் என்று அவர் இப்போது முழுதாக நம்பினார். “என்னையா எப்பனும் ஒரு சத்தம் கித்தம் காட்டாமப் பேசாம இருந்திட்டியள்?” அவன் மெளனமாயிருந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் அவரைப்பார்த்து வினாவினான். அந்த மாடுகள் அவன் பிடி கயிற்றை இழுத்து வைத்திருந்ததால் தலைகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு நின்றன. அவைகளுக்கு நாணயம் குத் தியிருந்த விதம் உச்சக்குத்தாயிருந்ததால், தலைகளை அந்தளவுக்கு உயரமாய் அவைகள் தூக்கி வைத்திருந்தபடி நின்றன. அவன் கேட்ட கேள்வியோடு ஐயா தூரத்தில் தெரிந்த இறம்பைக்குளத்துப் பக்கம் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தார். "ஒண்டுமில்லைத் தம்பி!” என்றுதான் முன்பு மனத்திலெண்ணியதை அவனுக்குச் சொல்லாதுமறைத்துவிட்டு, அதற்குப் பிறகுதான் நினைத்துக் கொண்டதை மட்டும் அவனிடம் சொல்ல அவர் வெளிக்கிட்டார். “இப்பவாற றேகக்கு ஒரு கிழமைக்கு முதல் இந்த மாடுகளைக்கொண்டு வந்து, உந்தக் குளத்தில இறக்கி நல்லா களைக்குமட்டும் இதுகளைத் தண்ணியில நீந்தவா விடவேணம் தம்பி, மாடுகள் உண்டு உறங்கியிருந்தா சோம்பிப் போயிடும்! இதுகள். தின்னுற தீனுக்குப் பேந்து ஊளைச்சதை வச்சிடும்! அதால இதுகளை நீச்சலடிக்க விடவேணும்! அதுதான் உந்தக் குளத்துப்பக்கம் பாத்தவுடன நான் யோயிச்சன் - ஆ. அதைப் பேந்து ஒருநாள் பாப்பம் நாள் கிடக்குத்தானே?” "அதுக்கெல்லாம் நானும் உங்களுக்கு இருக்கிறன்தானே ஐயா உதவிக்கு.! உங்களோட கூட நாட வந்து எல்லாத்தையும் செய்தாறத்துக்கு..! அதுக்கேன் இப்ப நீங்க யோசிக்க வேணும்.?றம்பைக்குளத்திலையெண்டு இல்லாம வவுனியாக் குளத்திலையும் இதுகளைக் கொண்டுபோய் அங்க இதுகளை நீந்த விடலாம்தானே?”
வரழ்க்கையின் சிறுக்கஸ் O 67 O

Page 44
“இல்லைத்தம்பி அந்த இடத்தில கொண்டுபோனா அங்க குளிக்கவெண்டு நாலுசாதி சனமும் அங்க வரும். கடைத்தெருவை அண்டின இடத்தில உதெல்லாம் கரைச்சல் - மாட்டில பேந்து மணிசரிண்ட கண்ணுறு விழுந்திடும் - இது சின்னக் குளமெண்டாலும் நடுக்குளத்துப்பக்கம் மாடுகளை இறக்கி தண்ணியில இதுகளை நல்லா நீந்த விடலாம். அதிகம் ஆக்களும் உவ்வடைத்தைக்கு வாறதும் குறைவு - எண்டபடியால இந்த இடம் பறவாயில்ல - எப்பவும் தம்பி சவாரி மாடுகள தண்ணிரில கட்டாயம் நீந்த விடவேணும் - அப்பத்தான் தம்பி மாடு நீளும், உஷாராவுமிருக்கும்!” அவர் கடைசியாகச் சொல்லிய கதையில் அவனுக்கும் ஆர்வம் வந்துவிட்டது. “இனிக் கட்டாயம் ஐயா இதுகளை நாங்கள் இடைக்கிடை செய்வம்” என்று அவருக்கு இதை ஆர்வத்தோடு அவன் சொன்னான். "அதோட இன்னொரு வேலையும் எங்களுக்குக் கூட இருக்குது தம்பி” “அதென்ன வேலை ஐயா"
"அதுதான் இந்த மாடுகளை அழகு படுத்துற வேலை" அவர் சொல்ல அவன் அதைக்கேட்டு முதலில் சிரித்தான். "என்னையா தைமுடிஞ்சு பொங்கல்களும் கழிஞ்சிட்டுது. இனி எதுக்கு இந்த மாட்டைச் சோடிக்கிற அலுவல்கள் கிடக்கு எண்டுறியள்’ அவரும் இப்போது அவன் சொன்னதைக்கேட்டு எகத்தாளமில்லாத சுத்தச் சிரிப்புச் சிரித்தார். “தம்பிப் பெடியர் உமக்கு பொங்கல் மட்டும்தான் உந்த மாடுகளைப் பற்றிக் கதைக்கேக்க ஞாபகம் வருகுது என்ன? ஆனா எனக்கு எப்பவும் சதாகாலமும் இந்த மாடுகளைப் பற்றித்தான் ஒரே நினைப்பு! பாரும் எனக்கு என்ரை கமபுலத்தில கூட பெரிசாய் அவ்வளவு அக்கறையில்லை. அந்த அளவுக்கு அதுகளைவிட எனக்கு இந்தச் சவாரிமாடுகளிலையும் றேககளிலையும்தான் சரியான விசர்மாதிரி. அந்த நாளில என்ர சின்ன வயசில இருந்து பாரும் நான் அப்ப சவாரி போய்ப்பாக்கத் தொடங்கினனான். அப்ப எனக்கு வயசு என்னெண்டா - பத்து வயசுதான்! - அதுக்குப்பிறகு நான் இளந்தாரியா வந்த காலத்தில மாடுகளைப் பாத்து வாங்கி, கட்டிக்கொண்டு போய் அதுகளை றேஸ்காரருக்குத்தான் வித்துப் பழகினன். அதுக்குப் பிறகுதான் ராசா நான் பேந்து சவாரியிலையும் காலை வைச்சனான். இண்டைக்குப்பாரும் இதிலைதான் என்ரை நாளும் பொழுதும் போகுது - வருமானமும் நல்லா வருகுதுதான்! அப்பிடியாயும் இது பிழையில்லை - அதோட ஒரு குடிவெறியெண்டு ஒண்டுமில்ல எனக்கு - சுறுட்டுப்பத்திற பழக்கமுமில்ல - நல்லமாதிரியும் இருக்கிறன்தானே?” அவர் தன் வாழ்விலே நடந்த சில சம்பவங்களை மனம்திறந்து தனக்குச் சொல்லுவது மாதிரி அவனுக்கிருந்தது. அதனால் ஒன்றுமே தான் பேசாது இருந்துகொண்டு, மரியாதை கொடுப்பதுபோல சற்று நேரம் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அவன் மவுனமாயிருந்தான். என்றாலும் அவர் முன்பு தனக்குச் சொல்லவந்த
ரீ.பி. அருளWந்ைதம் O 68 O

விஷயம் நடுவில்; அவரது வேறு ஏதோகதைப்போக்கில் முறிந்துவிட்டது என்பது பற்றிய ஞாபகம் அவனுக்கு வந்துவிட, அதை அவன் திரும்பவும் அவருக்கு ஞாபகத்தில் ஏற்றிவிட்டான். "இந்த மாடுகளுக்கு ஏதோ கொம்பு சீவி வைக்கப் போறன் - அது இது எண்டு ஏதோ முன்னம் சொன்னியளே ஐயா. அந்தக் கதையை வேறு ஏதோ கதைக்குள்ள எங்கயோ நீங்க கொண்டுபோய்விட்டுட்டு சொல்ல மறந்திட்டியள். இப்ப அது நான் சொல்லேக்க திரும்பவும் ஞாபகம் வருதே உங்களுக்கு?” "ஆ ஆ. அதுதான் கதை! இப்ப பிடிச்சிட்டன். அதை வடிவாச் சொல்லாம எங்கேயோ என்ரை சரித்திரத்தையும் பெரிசா உமக்குச் சொல்ல நான் அப்ப வெளிக்கிட்டிட்டன் போல. தம்பி. நான் அப்ப உமக்குச் சொன்னதை கட்டாயம் லீவா உள்ள நேரம் ஒண்டில நான் செய்யத்தான் வேணும். நெடுகலும் உதை நான் யோசிக்கிறனான்தான்! எண்டாலும் இதின்ரை அலுவலில இன்னும் நான் இறங்கேல்லப்பாரும். இந்த மாடுகள் இருக்கெல்லா தம்பி அதுகளுக்கு இந்த அதுகளின்ர கொம்புகளும் பெரிசா நல்ல வடிவுதான்! அது மாடுகளுக்குப் பாக்கிறதுக்கு ஒரு லட்சணம்தான் பாரும். இந்த வலக்கைப் பக்கமுள்ள உந்த மாட்டையொருக்காப் பாரும் அந்த மாட்டின்ரை கொம்பு அதுக்கு முன்னாலையா வளைஞ்சிருக்கெல்லே - இதைப் பட்டிபாத்த கொம்பன் - எண்டு சொல்லிவினம் தம்பி அடுத்த பக்கம் மற்ற மாட்டை இனிப்பாரும்! அதின்ரை அந்தக் கொம்பைக் கூடு கொம்பு எண்டு சொல்லுவினம்! அதுக்கு அந்தக்கொம்பு தலையின்ரை வெளிப்பக்கத்தால வளைஞ்சு நெற்றி முட்டுக்கு நேராய் இருக்கெல்லே - இது மாதிரியான மாடுகள் வீட்டுக்கு நல்லது - அதோட இந்தமாதிரி மாடுகள் சவாரிக்கும் நல்ல தோது. அதோடு பாரும் தம்பி உழவுக்கும் இதுகள் தோது. அதாலதான் உதுகளிண்ட கொம்புகளை உதுகளுக்கு வடிவான அளவில மேல நுனியில சீவி, மட்டமாக்கி அதில பூண்போட்டுவிடப் பாக்கிறன். அப்பிடிப் போட்டாப்பிறகு உதுகள் ரெண்டையும் பாக்க என்ன லட்சணமாய் இருக்கும் தம்பி?” அவர்தான் சொல்லிய அச்செயலை உடனே மனக்கண்களால் பார்த்துக் கொண்ட மகிழ்ச்சியில் அத்தருணம் பூவைப்போல முகம் விரியும் அழகாய்ச் சிரித்தார். அவரது மகிழ்ச்சியில் பங்கேற்காமல் விட்டு அவனாலும் அந்நேரம் தனித்திருக்க முடியவில்லை - அவனும் மகிழ்வாய் முகமலர்ந்தான். அப்படியே மூக்கணையில் காலை நீட்டி கால்களைப் பிணைத்துக்கொண்டு "இனி நாங்கள் வெளிக்கிடுவமய்யா?” - என்று அவன் அவரைப் பார்த்துக் கேட்டான். “சரி வெளிக்கிடுவம்! ஆனாலும் ஒரு கதை இன்றும் இங்க நிண்டபடி உமக்குச் சொல்லவேண்டிக்கிடக்கு அதையும் கேட்டிட்டு” "சொல்லுங்களன் கேப்பம்?” அவன் தனியே ஒரு கையில் அந்தப் பிடிகயிற்றைப் பிடித்தபடி மற்றக் கையை வண்டிலின் தளத்தில் வைத்து தன் உடல் பாரத்தை அதிலூன்றியபடி அவரைப் பார்த்தான். “தம்பி எனக்கு இப்ப இந்தக் கொஞ்ச நாளையிக்க எங்கயும் போய் கொஞ்சம் மாடுகள் பாத்து வாங்கி அவிட்டுக் கொண்டுவந்து வீட்டில கட்ட வேண்டிக்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 69 O.

Page 45
கிடக்கு கனபேற்றை தொந்தரவு எனக்கிப்ப வந்திருக்கு நாலுபேரும் என்னட்ட வீட்ட வந்து மாடுகள் அவிட்டுத் தங்களுக்கும் கொண்டந்தரச் சொல்லுகினம்! நல்லாத் தொழில் செய்யக்கூடிய மாடுகள், றேஸ் ஓடக்கூடிய மாடுகளெண்டு, அப்பிடிக் கொத்த காரம் கூடின மாடுகளெல்லாம் இங்காலிப் பக்கங்களிலதானே கூடுதலாக்கிடக்கு? இதுகளுக்கு உங்க சமளங்குளப்பக்கம் அல்லாட்டி உயிலங்குளம், கனகராயன் குளம், எருக்கலம்பிட்டி எண்டு இங்காலைப்பக்கமெண்டு மாத்திரம் இல்லாம, அங்கால மன்னார்ப்பக்கமும் போயும் பாக்கலாம். அல்லாட்டிப் புத்தளம், சிலாபமெண்டு அதால போனாலும் நல்லமாடுகள் பாத்து அவுக்கலாம். இப்பிடி இங்காலிப்பக்கத்து மாடுகள் கண்டீரோ கானலில வளருறது! புல்லுமில்ல ஒண்டுமில்லாம அதுகள் திரிஞ்சு வளருறதால அதுகள் லேசில றேககளில ஓடிக் களைக்காது - அப்பிடி அந்த மாடுகளின்ரை தசை நாருகள் வீணைத் தந்தியளைப்போல விரைப்பாயிருக்கும் தம்பி அதுகள்தான் சவாரிக்கும் வேலைக்கும் தோதான மாடுகள். அதால அங்காலிப்பக்கமா கிட்டடியில இன்னன்னம் இரணி டொரு நாளைக் குள்ள போய் மாடு அவிட்டுக் கொண்டரலாமெண்டுதான் நான் பாக்கிறன். அதுக்கு நீரும் என்னோட வந்திரெண்டா எனக்கு நல்ல உதவியெண்டு யோசிக்கிறன். ஏதும் வேலைவில்லட்டி இல்லாட்டி வாருமன் நீரும் பொழுது போக்காய் என்னோட?”
“என்ன இது உங்களுக்குத் தெரியும்தானே ஐயா, எனக்கு என்ன வேலை இங்க கிடக்குச் செய்ய? வெள்ளாமை வேலையிலயிருந்தும் இப்ப எனக்கு ஒய்வானகாலம், எங்கயும் போய் வாறதில எனக்கும் பிரச்சினையில்லத்தானே? நீங்க கூப்புடுற அண்டைக்கு நானும் உங்களோட வாறன். அதுக்கு எல்லாம் நீங்க யோசியாதயுங்கோ.” அப்படிச் சொல்லிவிட்டு பனை மரத்தால் செய்து போடப்பட்டிருந்த அந்த வண்டிலின் பொறுப்பான துலாமரத்தின் மேலே, நீட்டி வைத்துக் கொண்டிருந்த காலை அவன் கீழே விட்டுக்கொண்டான். "நேரமாகுது வெய்யிலேறிட்டுது மேல என்னதம்பி?” என்றார் அவர். அவர் அதைச் சொல்ல அவன் விமான ஓடுபாதைப் பக்கமாகப் பார்த்தான். காலை வெய்யில் அதில் நீட்டி விழுந்திருந்தது. மறுபக்கம் மண் பாதையிலுள்ள வேலியையும் அவன் அடுத்ததாய்த் திரும்பிப்பார்த்தான். அந்த வேலிப்பக்கமுள்ள மேட்டுநிலத்திலே உள்ள பசும் புற்களின் நுனிகள் சிலுசிலுக்க அந்த வெட்ட வெளியிலிருந்து காற்று வீசிக்கொண்டிருந்தது. - அதிலே நின்ற ஊமத்தஞ்செடிகளின் நீலப் பூக்களின் இதழ்களிலும், சூரிய ஒளிபட்டு வண்ணம் துலக்கிக் கொண்டிருப்பது அவன் பார்வைக்குத் தெரிந்தது. இன்றும் ஒரு அபூர்வ கானப் பறவை; அந்த வேலிச் செடியிலிருந்து சத்தமிட்டுக்கொண்டிருப்பதையும் அவன் தன் காதால் கேட்டான். அந்தச் சத்தத்தைக் கேட்டுவிட்டு, ஆவலுடன் அந்தப் பறவையைக் காணத்தேடியது அவன் விழிகள். ஆனாலும் இலை மறைவுக்குள் இருந்த அந்தப் பறவையை அவனால் தன் கண்பார்வையைக்கொண்டு தேடிக் கண்டடைய
jෂ්, ෆි, ෆර්ගvශvෂ්ත්‍රාෆ් O 70 O

முடியவில்லை. அது அவனுக்கு ஒரு இழப்பின் மீது ஏற்பட்டதொரு ஏமாற்றம் போல் இருந்தது. இந்த ரசனையின் உணர்வுகளையெல்லாம் அவன் தனக்குள்ளாகவே பொத்தி வைத்துக்கொண்டான். இதை ஐயாவுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளக்கூடியதான நிலையில் அவரது வயதும் சிந்தனையும் இருக்காது என்றெண்ணி அவன் மெளனமாக இருந்துவிட்டான். இந்த மெளனத்துக்குள்ளாலே அவன் மனத்தில் அலை போன்றெழுந்த குளிர்ச்சியானதோர் எண்ணம் தவழ்ந்தது. அந்த அபூர்வ கானப் பறவையின் இனிய சத்தத்தைப் போன்றே விசயாவின் குரலினிமையும் ஒத்ததாய் இருப்பதைக் கண்டுணர்ந்து; அவள் இன்று தன்னுடன் படலை திறந்துவிடும்போது கதைத்ததை, இவ்வேளை தன் நினைவில் மீண்டும் அவன் புதுப்பித்துப் பார்த்தான். அந்த நினைப்பின் சுகம் அவனுக்கு மிகவும் இனிமையாயிருந்தது. தம்பி இனிப்போவம் வெளிக்கிடுவம்” - என்று அவரும் தன் யோசனையில் சிறிது நேரம் மூழ்கி இருந்துவிட்டு இதைச் சொன்னார். "ஐயா நீங்களா இப்ப வண்டிலை ஒட்டப் போறிங்க?" “இல்லை நீர்தான் அப்பிடியே இருந்து கொள்ளும். நீரே இப்பவும் ஒட்டிப்போம். ஆனாலும் உதுவழிய அங்கால போகவிறகுக்குச் சுள்ளி முறிக்க அந்தச் சின்ன றோட்டு வழிய சனம் வரும் கவனம்!”
"அதை நான் பாத்துக் கொள்றன்” "அப்பவிடும் விடும் நேரமாகுது வீட்ட போவம்!”
இப்போ அந்த வண்டில் காளைகள் முன்பு வந்த பாதையால் விரைவாக ஒடிக்கொண்டிருந்தன. கருங்காலி மரத்தடிப்பக்கம் அந்த வீதி கிளைவிட்டுப் பிரியும் பாதையால் அவன் அந்த மாடுகளைத் திருப்பி, ஆல மரத்தடிப் பக்கமாகப் போக இப்போது அவன் அந்த வண்டிலை ஒட்டினான். சிறிது நேரத்துக்குள்ளாகவே அந்த வண்டில் மாடுகள் ஆலமரத்தடி வயிரவர் கோயிலடிக்கு வந்து சேர்ந்துவிட்டன. அந்த ஆலமரத்து வேரடிக்கிடையிலே மண்ணில் உருவிக் குத்திவைத்திருந்த வயிரவ சூலத்தை, வண்டிலில் இருந்து கொண்டு பொன்னுத்துரை பார்த்தார். அந்தச் சூலத்தைப் பார்த்தகையோடு “வயிரவா” என்று சொல்லி தன் நெஞ்சிலும் அவர் ஒரு கையை பதித்து வைத்துக் கொண்டார். அந்தச் சூலம் துருப்பிடித்துப்போய் ஒரு பக்கம் சாய்ந்திருந்தது. அந்தச் சூலத்தைப் பார்த்து வணங்கிய தருணத்தோடு தன் மூத்த மகன் சேனாதியின் ஞாபகம் அவருக்கு வந்து - அது நெஞ்சில் திரும்பத்திரும்ப அவருக்கு முட்டிக்கொண்டிருந்தது. தன் வீட்டுப் பொறுப்புக் கொஞ்சம் கூட இல்லாமல் அந்தக் குடும்பத்தைத் தவிக்க விட்டிருக்கும் அவரிலே இவருக்கு அப்போது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. இன்னம் அவருக்கு முன்னால் நான்கு பட்டிசிச் சித்திரங்கள் கைகளை நீட்டிக்கொண்டு நிற்பது மாதிரித் தெரிந்தன. இப்படியே ஒன்று மற்றொன்றைத் தட்டிவிடுவதுமாதிரியான அந்த அபஸ்வர நினைவுகளால், அவரது மனம் தளர்ந்து உடல் சிறிது
வரழ்க்கையிண் ரிறங்கஸ் O 7 O

Page 46
ஆட்டம் கண்டது. அவரது சக்தியுள்ள சதையும், பணிந்தது. இதையெல்லாம் அந்த வண்டிலில் இருந்து நினைத்துக் கொண்டு அவர் உள்ளம் குமைந்தார். அந்த வண்டில் ஆட்டத்துக்கு அவரது உடலும் சேர்ந்து இப்போது அங்குமிங்குமாக அசைந்து கொடுத்தது. காலையில் இருந்த உடல் கம்பீரமும் மன உறுதியும் அவருக்கு இப்போது எங்கு சென்றதென்றே தெரியாத ஒரு குழப்பம். அந்த வண்டிலின் ஓட்டத்திலே எழும்பிக் கொண்டிருக்கும் புழுதிச்சுழிபோல அவர் மனத்திலும் இவ்வேளை ஒரு பெரும் தும்புதூசிப் படலம் எழும்பி, நல்ல மகிழ்ச்சியான அவரது சிந்தனைகள் எல்லாவற்றிலும் படிந்து அவைகளை நாசப்படுத்திக் கொண்டிருந்தன. எங்கேயோ இருந்து ரிஷிகளின் மூலமந்திர முனகல்போல சில்வண்டு - சத்தம் போட்டுக் கொண்டிருப்பது இப்போது அவரது காதுகளில் விழுந்துகொண்டிருந்தது.
ஐந்து
உதய சூரியனின் ஈரச்செங்கதிர்கள் வலுப்பெற ஆரம்பித்த நேரத்திலிருந்து தகிக்கும் உச்சி வெயில் ஏறிய பொழுது வரை, அந்த இடத்திலுள்ள வீடுகளிலெல்லாம் படியேறியிறங்கியிறங்கி தான் கடன் அரிசி கேட்டுத் திரிந்ததை புனிதம் நினைத்துப் பார்த்தாள் மானத்தை விட்டு அப்படியாய்த் தன்வீட்டுப் பட்டினியையும் பாட்டையும் சொல்லி, இந்த நான்கு சுண்டுப் பேணி அரிசி வாங்குவதற்கு மற்றவர்களின் காலைப்பிடிக்க வேண்டியதாய் போய் விட்டதே, என்று மீண்டும் அவள் தன் நினைவில் ஒரு முறை அதை நினைத்துக் கொண்டதில், வேதனையிலும் வெட்கத்திலும் அவளுக்கு மனம் சுருங்கிவிட்டது. கண்ணிரும் இமைகளில் அவளுக்கு அடர்ந்தது. “வர வர மரியாதையையும் மானத்தையும் தலை முழுகிப்போட்டு செத்த பிணங்கள் கணக்காய் நாங்கள் மட்டும் சீவிக்க வேண்டியிருக்கே? இப்பிடி அர்த்தமில்லாத இந்தச் சீவியத்தை வாழுறதுக்காக வேண்டி இந்த உசிரை நாங்க பிடிச்சு வைச்சிருக்க வேணுமா?" அவளுக்கு உள்ளமும் கசந்தது, உலகமும் கசந்தது. கண்பார்க்கும் எல்லாமே அவளுக்குக் கசப்பாய்த் தெரிந்தது. அந்தக் கசப்பு நிலையுடனே அவள் இப்போது தன் வீட்டை நோக்கி, வெந்து கிடந்த மண் சூடு உள்ளங்காலில் ஏற நடந்துகொண்டிருந்தாள் கையிலுள்ள மாட்டுத்தாள் பையிலுள்ள அரிசியின் கனம் குறைவது போல ஒரு சந்தேகம்! அது தன் தரித்திரத்தின் மூலம்தான் தன்னிடத்தில் எழுந்த ஒரு சந்தேகம் என்று பின்பு அவளுக்குப் புரிந்துவிட்டது. “கமலம் சரியாகத்தானே சுண்டில் கையைக் குவித்து அளந்து நாலு சுண்டுப் பேணி அரிசி எண்டு சொல்லிப்போட்டுத் தந்தாள். அதுக்கிடேயில அரிசியென்ன காத்திலேயா கரைஞ்சுபோம்?” இதையும் நினைத்துவிட நெஞ்சைப் பிடுங்குகிற ஏக்கத்தில் அவளுக்கு அழுகை வருவதுபோல, துக்கம் வந்து மனத்தில் அலைமோதியது. எதிலும் சந்தேகம், சீ.பி. (ஆஸணந்தம் O 72 O.

நம்பிக்கையினம் - ஏழ்மையின் நிலையில் இதுவெல்லாமே எப்படி எப்படியெல்லாம் வந்து மனத்தில் சூழ்கிறது - இதுவெல்லாம் ஒரேயடியாக வந்து எங்களை அழித்துவிட்டுப் போகாமல் அணுவணுவாக எங்களைச் சித்திரவதைப்படுத்துகின்றனவே?” சூரியன் தகதகவெனத் தணலாடை தரித்திருந்தது. வெயில் வானமுகடேறி நின்று செங்குத்தாய்த் தாக்குகிற வேளையில், அந்தக் கொதி மண்ணிலே மனத்தில் வேதனையுடன் நடந்து கொண்டிருக்க, கீழேயிருந்து வெக்கையுடன் மணல் காங்கையும் வீசுகிறது மாதிரியாகவும் அவளது கண்களுக்குத் தெரிந்தது. சுற்றிலும் நெருப்பு ஜ்-வாலை துரத்திவர நடப்பது போல் மூச்சுத் திணறியது அவளுக்கு. அந்த வெப்பக் கனலையும், புழுக்கத்தையும், உடல் பெலவீனத்தால் தாங்க முடியால் அவள் தவித்தாள். "ஆ. ஆ. பச்சை ஓலையும் பத்திக் கொள்ளுறமாதிரி என்ன வெய்யில் என்னவா மனுஷரைப் போட்டுக் கொல்லுற வெக்கையிது?” யாருக்கென்றும் அதைச் சொல்லாமல் தனக்குத்தானே அதை அவள் சொல்லிக் கொண்டாள். அப்படிச்சொல்லிக் கொண்ட கையோடு அவள் தன் தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டாள். அந்த முக்காடு சரிந்து விழாமல் இருக்க பற்களால் அதைக் கடித்துக்கொண்டு அவள் நடந்தாள். இப்போதெல்லாம் தனக்குத்தானே ஒரு கேள்வியை மனத்துக்குள்ளாக நெடுகலும் கேட்டுக் கொள்வதும், அந்தக் கேள்விக்குரிய பதில் தெரியாமல் தானே இருந்து கொண்டு பிறகு விழிப்பதும் - கேள்விக்குப் பொருத்தமில்லாத பதில்களை பொருத்தி வைத்துக்கொண்டு, தன் மனத்தை ஆறுதல் படுத்திக் கொள்வதுமான செயல்களை சில மாதங்களாக அவள் அநுபவித்துக் கொண்டுதான் இருக்கிறாள். இன்னும் அநுபவிக்கப் போகின்ற அவமானங்கள் சிலவும் அவளது நினைவில் சிக்குப்பட்டு வருகின்றன. தான் வயிற்றிலே இப்போது சுமந்து கொண்டிருக்கும் இந்தச் சுமையும் ஒரு அவமான கரமானதாகவே அதன் மூலம் அவளுக்குத் தெரிகிறது. "இந்த வயதிலும் இப்பிடியொரு படாவாரியான ஒரு கஷ்டத்திலயும் இதுமாதிரியொரு தலை எழுத்தாடி உனக்கு?” - என்று நன்றாக அவளோடு பழகி வருகின்ற கமலம் அவளைத் தூண்டித் துளைத்துக் கேட்டு விட்ட பின்பு, கவலைப்பட்டுச் சொன்னது அவளது நெஞ்சைக் குடைந்து விட்டதைப் போல இப்போது துன்பத்தைக் கொடுத்தது. கமலம் சொன்னதை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனையோ அதுபோன்ற சம்பவங்களையும் இவள் தன் கற்பனையில் ஓடவிட்டுப் பார்த்தாள். தன் வயிறு வீங்குவதைக் காணக் காண வாயை வைத்துக்கொண்டு ஊராரெல்லாம் இனிமேல் இவ்விடத்தில் சும்மாவா இருக்கப் போகிறார்கள்? வாய்க்கு வந்தபடி பேசுவதற்குத்தானே சிலருக்கு வாயே அமைந்திருக்கிறது. வெற்றுத் தாளிலே வரலாறு வாசிப்பவர்கள் இப்படியென்று கண்டுவிட்டால் சும்மா இருப்பார்களா? “வீட்டுக்கு வீடு சுளகெடுத்துப் போய் சமைக்கவெண்டு கேட்டு எல்லாரிட்டையும் கடன் அரிசி வாங்கிக் கொண்டு போறா. அதைச் சமைச்சுத்திண்டிட்டு மனுஷனோட கூடிப்படுத்து எழும்பி வயித்தையும் தள்ளிக்கொண்டு இப்பவாத்திரியிறா. இவ தனக்கு வீட்ட சாப்பிடக் கஸ்டமெண்டு தன்ரை
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 73 O

Page 47
குமர்ப்பிள்ளையைக் கொண்டு போய் மனுசன்ரை தாயின்ரை வீட்டில தள்ளிப் போட்டு வந்து இந்த மாதிரியான தன்ரை வயசிலை போய் ஒரு அறிவுகிறிவு இல்லாத மாதிரியா உந்த வேலையையும் பாத்திருக்கிறா” இந்த ஆவலாதி அவர்கள் வாயிலிருந்து வருகிற போது செத்தாலும் எனக்குத் தேவலையே என்கிறது மாதிரித்தானே எனக்கு இருக்கும்! ஒரு ஆயுட்காலம் பூராவும் போதுமே எனக்கு இதைப்பற்றி அவளவயள் பேசின பேச்சுக்கள்.” என்று தனக்குள் நினைக்க அந்த வெயில் வெக்கையை விட வெப்பியாரத்தால், அவள் உடல் முழுக்கவும் வியர்வை கசகசவென்று ஆறாக ஓடியது. அந்த விரும்பாத சம்பவங்களை ஏன் தேவையில்லாமல் இப்போது நினைத்து சும்மா மனதைப் போட்டு நான் அலட்டிக் கொள்வான்? என்று அந்தக் கேள்விகளின் சுமைதளர்த்த அவைகளையெல்லாம் மனத்திலிருந்து எடுத்தெறிய முயன்றாள் அவள். ஆனாலும் அது அவளால் இலகுவில் முடியவில்லை. அவளுக்குரிய எல்லாப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் ஒருருவாக மாறி அது அவள் கணவன்தான் என்று அறியும் படி அவளுக்குக் காட்சியளித்தபோது, முன்னம் துன்பத்திலாழ்ந்த மனம் இப்போது வேறு கோணத்தில் இருந்துகொண்டு ஆத்திரமுற்றது.
“ரோஷமில்லாத இந்த மனுஷனை நான் என்னெண்டுதான் ஒரு கதையளைச் சொல் லித் திருத்துறது? அவர் ஆமான ஒரு ஆம்பிளையெண்டா எங்கயும் போய் ஒரு வேலைவில்லட்டியைப் பாத்து அதை ஒழுங்காயிருந்து செய்ய வேணும்! தன்ரை குடும்பத்தப் பாக்க வேணும்! அதைவிட்டிட்டு சதாகாலமும் றோட்டு வழிய சும்மா நெளிவு எடுத்துக் கொண்டு தான் திரிஞ்சு கொண்டு, கண்ட காட்டானோட சேந்து கண்டது கடியதுகளை வாங்கிக் குடிச்சுப் போட்டு வந்து வீட்டில தன்பாட்டுக்குக் கிடந்தா எப்பிடிக் குடும்பத்துக்குச் சாப்பிட வழி கிடைக்கும்? இப்பிடி நெடுகலும் வேலையில்லாம ஒரு ஆம்பிளை வீட்டில குந்தியிருந்து கொண்டு நான் மாதிரிப் பொம்பிளை எங்கயும் போய் வாங்கிக் கொண்டாறதைத் தின்னுறது வடிவே? உதையெல்லாம் நான் நெடுக நினைச்சு நினைச்சு என்ன ஒரு புண்ணியம்! இதையெல்லாம் அந்த மனுசனெல்லே நினைச்சுப் பாக்க வேணும் அப்பிடி நினைச்சுத்தான் திரிந்தியெல்லே அவரா ஒரு வேலை வில்லட்டிக்குப்போய் அதை ஒழுங்காப் பாத்துச் செய்ய வேணும்?” அவளுக்குத் தன் வயிற்றுக்குள் இருந்து ஒரு உயிர் அசைந்து துடிப்பதுபோல் இருந்தது. இப்பொழு தெல்லாம் களைப்பு அதனால் தனக்கு அதிகமாகி வருவதையிட்டு அவள் கவலைப்பட்டாள். அந்த அவளது களைப்புக்குக் காரணம் வெறுமையாய் இருந்த வயிற்றுக்குள்ளே எழுந்த பசிதான். அந்த அவளது வயிற்றுப் பசி இன்னொரு உயிருக்கும் சேர்ந்த பசியாக அவளது உணர்வுகளில் உரம் கொள்ள தன் கால்களை அவள் எட்டி வைத்த நடையாய் நடந்தாள். உடம்பின் நீர்த்த சக்தியின் ஓட்டமெல்லாம் அவளுக்கு நடையாகி விட்ட நிலை. இந்த அவதியான நடையைத் தன் பிள்ளைகளை நினைத்தும்தான் அவள் நடக்க ஆரம்பித்தாள். “பிள்ளையஸ் பள்ளிக் கூடத்தால இந்த
്. ി. (G O 74 O

அதிகதிக வெய்யிலுக்குள்ள துடிச்சுப் பதைச் சுக் கொண்டு வரப்போகுதுகள். அதுக்கிடையில நான் வீட்ட போய் இந்த அரிசியைக் கிளைஞ்சு உலை வைச்சு பசியில களைச்சு வாற என்ரை பிள்ளையஞக்கு கொஞ்சம் கஞ்சித் தெளிவெண்டாலும் குடுக்கவேணும் குடிக்க!” பிள்ளைகளின் பால்முகம் அவளுக்கு மன அவஸ்தையைக் கூட்டுகிறது. அந்த நினைவோடு அந்த அரிசிப்பையை கீழே அவதானமாகப் பிடித்து தன் உள்ளங்கையில் அதைப் பாரம் பொறுக்கும்படியாக அவள் வைத்துக் கொண்டாள். கையில் கசிந்த வியர்வையால் காகிதப் பை ஈரமாகியதையிட்டு சிலவேளை அது பிய்ந்து கொட்டி விடுமோ என்று அவளுக்கு இந்தப் பயமும் ஏற்பட்டிருந்தது. முன்பு ஒரு முறை தனக்கு நடந்த சம்பவத்தையிட்டு பெற்ற அனுபவம் இது அவளுக்கு ஒரு நாள் மேலே பார்த்துக் கொண்டு நடந்ததால் மரத்தின் வேர் காலில் தடுக்கிக் குப்புற அடித்து அவள் விழுந்து விட்டாள். அந்த விழுகையோடு காகிதப்பை பிய்ந்து அரிசியெல்லாமே கீழே நிலத்தில் சிதறிக் கொட்டுப்பட்டு மண்ணில் கலந்து விட்டது. அப்படி நடந்ததெல்லாமே தனக்கொரு பாடம் படிப்புத்தான் என்று ஒரு தத்துவ விளக்கத்தை தனக்குள்ளே எண்ணிக்கொண்டு அருகே இனிமேல்தான் நெருங்கப்போகும் அந்த ஆலமரத்தைப் பார்த்தாள். கிளை வீசி நிற்கும் ஆந்த ஆலமரத்தின் ஒவ்வோர் இலையும் கொடுத்த குளிர் நிழல், அவளை அங்கே வா வா என்னிடத்தில் என்று அழைப்பது மாதிரியானதோர் ஆசை காட்டியது. இந்த அக்கினி வெக்கைக்கு நிழலின் குளிர்மையை நாட அவளது உடலுக்கும் அது பெரிய ஏக்கம்தான்! அவ்விடம் போய் ஆறுதலுக்குக் கொஞ்சம் நின்று ஆறாவிட்டாலும் அந் நிழல்பட அதனடியால் நடந்து, குளிர்ச்சியைச் சிறிது வாங்கிப் போவோம் - என்று நினைத்து அவ்விடத்தில் அவள் நோக்கியபோது: W ஆலமர வேரடியில் நிலத்தில் இரண்டு நிழல் வடிவங்கள் புரண்டு கொண்டிருப்பது போல அவளுக்குத் தெரிந்தது. வெயில் வெளிச்சத்தை வீதி நெடுகலும் வாங்கிக் கொண்டு வந்த அவளது சோர்ந்த கண்களுக்கு, அந்த உருவங்கள் பார்த்த உடனே துலக்கமாகத் தெரியவில்லை. அதற்காக இமைகளை இரண்டு மூன்று தடவைகள் இறுக்க மூடித்திறந்துவிட்டு, வெயிலில் கூசும் கண்களை இடுக்கியவாறு அங்கே உன்னி உன் அவ்விடத்தில் உற்றுப் பார்த்தாள். புரண்டு கொண்டு கிடக்கும் அந்த உருவங்கள் கண் மணியில் தெளிவாய்த் தெரிய வர அவளுக்கும் நெஞ்சில் படபடப்புக் கூடியது. அவற்றைத் தெளிவாய்க் கண்டுகொண்டு இன்னதுதான் அவை என்று தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டதும் அவளது இதயம் தானாகவே துரிதகதியில் அடித்துக் கொண்டது - உடல் அச்சத்தில் வெடவெடத்தது. நாக பாம்பும் சாரைப்பாம்பும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு பிணையலாடுவதை, சீவியத்தில் இன்றுதான் அவள் பார்க்கிறாள். கண்ணாடிப் பளபளப்பில் கயிற்று முறுக்காகக் கிடந்து நிலத்தில் புரளும் அந்த இரண்டு பாம்புகளையும் கண்டதும், அந்த மர நிழலும் கூட நெருப்பாகத் தெரிந்தது அவளுக்கு.
வரழ்க்கையின் சிறக்கஸ் O 75 O

Page 48
"பிணையலடித்துக் கிடக்கிற பாம்பு ஆளரவமறிஞ்சு கலைஞ்சுதெண்டா துரத்தித் துரத்திக் கொத்துமாமே?” அந்தப்பயம்தான் அவளை பதைபதைக்கச் செய்து கொண்டிருந்தது. அவளுக்குத் திரும்பி நடக்க மனமில்லை. அந்தக் காட்சியின் உக்கிரம் தலையில் விறுவிறுவென ஏறிய வண்ணமிருக்க அதைப் பார்த்துக்கொண்டே தன்னிச்சையாக அவள் பின்பக்கம் நாலைந்து எட்டுகள் வைத்து நடந்தாள். அவ்விடமாய்ப் பார்த்துக் கொண்டே அப்படிப் பின்னேறி நடப்பது, தனக்கு ஒரு பாதுகாப்பாக அவளுக்குத் தெரிந்தது. பாம்பு தன்னை ஒரு வேளை துரத்தினால், அதைக் கண்டுவிட்டுப் பிறகு திரும்பி ஓடலாம் என்ற எச்சரிக்கை உணர்வில், அவ்விதமாக பல எட்டுக்கள் வைத்து பின் புறமாக நடந்து வந்தவள், அந்த முட்கம்பியடித்த வேலியருகில் வந்ததும் நின்றாள். அந்த இடத்தில் அவளைக்கண்டு விட்டு காட்டுக் கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் புதருக்குள்ளே மறைந்தது. அதைப்பார்த்து விட்டு அந்தப் பாதையால் இனிமேல் தானும் போக முடியாது என்ற மாதிரித் தெரியவர, அந்த நாலு பட்டு அடித்த முட்கம்பி வேலிக்குள்ளாலே புகுந்து, அந்த வெறுங்காணிக்குள்ளாலேதான் நடந்து போய் - அடுத்து வரும் பொட்டு வேலிக்காலேயும் நுழைந்து, தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில், சீலையை ஏறத்திரைத்துக் கட்டிக்கொண்டு கம்பி வேலிக்குள்ளாலே ஒரு காலைத்தூக்கி உள்ளே வைத்தாள். முதுகைக் குனிந்து அந்தக் கம்பிகளுக்கிடையே புகும்போது, அந்த இரும்பு முட்கள் குத்திவிடும் என்ற கவலை அதிகம் அவளுக்கு எழவில்லை. ஆனாலும் தன் கைப்பிடித்திருந்த அந்த அரிசிப்பையில் இப்போதும் அவளுக்குக் கவனம் மிகுந்திருந்தது. அதிலே கவனம் வைத்துக்கொண்டு உள்ளே கம்பிக்குள்ளால் புகுந்து காலை அதற்குள் இழுக்க, எறும்பு கடித்ததைப் போல ‘சுள்ளென்று இருந்தது அவளுக்கு. அந்த வலியின் சுரணையறிந்ததும் ஒற்றைக்காலைத்தூக்கி ஆடும் சிவானந்த நடனத்தில் நின்றபடி கால் பாதத்தை அவள் தூக்கிப் பார்த்தாள். கம்பி முள் கிழித்த காயம் சிறு கீறுதான் - கீழே நிலத்தில் பழையபடி காலை ஊன்றிக் கொண்டு கறள் நஞ்சேறிவிடும் என்று பயந்து இரத்தத்தை வழிய விட அதிலே கைவிரலை வைத்துச் சிறிது அழுத்தினாள். இப்போதுதான் தன் உடல் நிலையை நினைத்து அவள் மனம் வருந்த வேண்டியதாய் இருந்தது. காயம் பட்ட இடம் சிகப்புக் கோடாகக் காட்சியளித்ததேயொழிய இரத்தத்தை அதிலிருந்து சிறிதும் துளிர்க்கச் செய்யவில்லை. அதற்காக "ஆண்டவா” - என்று இறைவனை இறைஞ்சிய அவளது வாய் பிறகு "புதூர் நாகதம்பிரானே காப்பாத்தினாயப்பு என்னை அந்த இடத்திலயிருந்து” - என்று தன் குல தெய்வத்தையும் வேண்டிக் கொண்டது. அவள் அதிலே இன்னமும் நின்று கொண்டு மினக்கெடாமல் நடையில் துரிசங்கட்டி காணிக்குள் இருந்த அந்த முள் வழிப் பாதையாலே விறைப்பாக நடந்தாள். சின்ன முள்ளுகள் காலில் ஏறி ஒடிந்து எங்கோ உள்ளே கிடந்து நடக்கும் போது வேதனை தந்தும், அதைப் பொறுத்துக் கொண்டுபோய் வேலிப்பொட்டுக்கால் அவள் நுழைய - வெளி முற்றத்தடியில் நிற்கும் மாமரத்துக்கு அடியில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ரீ.பி. அருளwணந்தம் O 76 O.

சக்கை இறுக்கிய துவக்குத்தான், முதன் முதலில் அவளது கவனத்தை ஈர்த்தது. அவள் நடந்து வருவதைக் கண்டுவிட்டு அந்த மாமரத்து நிழலுக்குக் கீழே நிலத்தில் குழி பறித்துப் படுத்துக்கிடக்கும் வீட்டு நாயும் எழும்பி, முதுகை வளைத்துச் சோம்பல் முறித்தவாறே ஆவலே வடிவாய் நின்று கொண்டது. அந்த வீட்டிலே உள்ள தரித்திரத்தைச் சொல்ல நான் தான் ஒரு முக்கிய காட்சிப் பொருள் என்கிறது மாதிரி இயக்கமில்லாத தன்மையில் எழுந்து நின்ற அந்த நாய், அவளைக் கண்டுவிட்டு நன்றி உணர்விலே தன் வாலை மட்டும் கஷ்டப்பட்டு ஆட்டியது. நாயை அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நாய் ஏமாந்தது. அவள் விறுவிறுவென்று முற்றத்தடியால் நடந்து போய் தலை வாசலின் நின்று உள்ளே பார்த்தாள். மண் திண்ணையில் எப்போதும் விரித்தபடி கிடக்கும் மயிரிழந்த அந்த மான் தோலில் குத்துக்காலிட்டு இருந்து கொண்டு அவர் பீடி புைைகத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ‘என்ன இப்பானையோ நீங்க வந்தனியள்? ஏதும் இங்க சமைக்க வழிபாத்துக்கொண்டு வந்தனியளோ? பிள்ளையஞம் பள்ளிக் கூடத்தால இப்ப வரப்போகுதுகள்!” அவர் நூரப்போகும் தருவாயிலுள்ள பீடிக்குறையில் கடைசிப் புகையை உள்ளே இழுத்து எடுக்கப் பிரயத்தனப் பட்டார். அந்த முயற்சி பயனின்றிப் போய் துண்டு பீடி நூரவும் வாசலில் அவளுக்குப் பக்கத்தாலே வெளியே போக அதைச் சுண்டி எறிந்தார். "என்னப்பா நான் இப்பிடி இதைக் கேக்கிறன் நீங்கள் ஒண்டும் தெரியாத பாவனயில பாசாங்கா தன்பாட்டில அதில சும்மா இருக்கிறியள்,” அவள் தன் களைத்த முகத்தோடு அவரைப் பார்த்து திரும்பவும் கேட்டாள். அவருக்கு எறிந்த பீடியிலிருந்து கடைசியாக இழுத்த பீடிப்புகை ஒவ்வவில்லை. உள்நாக்கெல்லாம் அவருக்குக் கசந்து ஆழறியது. அவ்விடத்திலிருந்து எழுந்து போய் அவளுக்குப் பக்கத்தில் நின்று, வாசலுக்கு வெளியே எச்சில் துப்பினார். "ஒரே புறுபுறுப்பும் பெரிய உத்தரிப்புமாப் போச்சு. மனுசன் ஒரு நிமிசம் இந்த வீட்டில வந்து நிம்மதியாக் கொஞ்சம் இருக்கேலாது.” அவளைப் பார்த்து எரிச்சலோடு சொல்லிவிட்டு திரும்பவும் முன்பு இருந்த இடத்தில் போய் அவர் இருந்தார். "என்னப்பா நான் என்னவோ கேக்கிறன் நீங்க என்னவோ சொல்லுறியள்?” அவள் தன் மனவேதனையை அடக்கிக் கொள்ள முடியாமல் தடுமாறினாள். கைகள் பலவீனத்தால் அவளுக்கு நடுக்கம் கண்டது. “எப்பவும் நான் வீட்ட வர நீ இதே கதை. உதுகளை மணி இலையானாட்டம் நீ வாய்க்க முணுமுணுக்கிறாய் நான் என்ன இந்த வீட்டில நிம்மதியா இனி இருக்கிறேலயே?’ அவருடைய பேச்சு அவளுக்கு சுள்ளென்று முள்ளாய்க் குத்தியது. சர்வாங்கமும் குலுங்கிப் போனாள் அவள். "இருக்கிற மாதிரி வீட்டு ஆம்பிளையிருந்தா ஏன் இதையெல்லாம் நான் உங்களோட கதைக்கிறன்” - என்று அவரைக் கோபத்தோடு கேட்டாள் அவள்.
"ஏன் முண்டை நான் உங்களுக்கு ஏதும் செய்யாதனானே? எவ்வளவு காசு பணத்தச் சம்பாதிச்சுக் கொண்டந்து நான் இந்த வீட்டில
வUழ்க்கையின் ரிறங்கள் O 77 O

Page 49
கொட்டியிருப்பன். நீங்களும் திண்டிருப்பியள்! அதையெல்லாம் மறந்துபோட்டு இப்புடியே கதைக்கிறது. நானும் ராவெல்லாம் உந்தக் காடுகாடாய் அலைஞ்சு தவண்டையடிச்சுக்கொண்டு திரியிறன் ஒரு மிருகம் கண்ணில சந்திக்குதில்ல அப்பிடி அலைக்கழிஞ்சகளையோட நான் இருக்கிறன். ஆரும் எரிச்சல் பிடிச்சவன் நான் வேட்டைக்குப் போற நேரம் பாத்து, மாந்திரீகம் செஞ்சு காட்டைக் கட்டிப் போடுறான் போலக் கிடக்கு. அதுக்கு ஒருக்காப் பார்வை பாத்து வயிரவரை ஆவாகனம் செய்து தேசிக்காய் வெட்டினாத்தான், பழையபடி மிருகம் என்ர கண்ணில எம்பிடும் போலக் கிடக்கு” - அவர் சொல்லிவிட்டு தட்டிக்கப்போடு சாய்ந்துகொண்டார். "உந்த வேட்டைத் தொழில் வீட்டுக்குப் பெரிய தரித்திரமெண்டு சொல்லுறன் நீங்க அதைக் கொஞ்சமும் கேக்கிறியளில்ல. எந்த ஒரு செயலுக்கும் விளைவு தொடந்து வருமெண்டுறது நிச்சயமானதொரு நியதியெண்டு எல்லே இருக்குது. நீங்க செய்யிற இந்த வேட்டைத் தொழில் பெரிய பாவமெண்டு உங்களுக்கு விளங்கேல்லயே? உந்த வேட்டைக்குப் போற ஆற்றையும் குடும்பங்களில உள்ளவயள் எங்கயெண்டாலும் பாருங்கோ, ஒழுங்கா வீட்டில பொங்கிச் சாப்பிடுறேல்ல. அப்பிடியான தரித்திரம் பிடிச்ச தொழிலை ஏன் நீங்களும் செய்யவேணும்? உந்தப் பாவத் தொழிலை விட்டுட்டு ஏதோ சீவனத்தை ஒட்டுற அளவுக்கு வேற ஒரு உருப்படியான தொழிலைப் போய்ப் பாத்தாலென்ன?” அவருக்கு இப்போதுதான் ரெட்டிப்பானதோர் ஆத்திரம் வந்தது. "என்ன தொழிலையெண்டு என்னைப் போய்ப் பாக்கச் சொல்லுறாய், அப்பிடி என்ன ஒழு புழுக்கை வேலை என்னைச் செய்யச் சொல்லுறாய் விசரி என்ன நீ வர வர புடிச்சிராவி கணக்காய் நிக்கிறாய்? அனுமார்ப்பிடியில எங்கயும் என்னை கூலி வேலைக்குப் போகக் கலைக்கப்பாக்கிறாய்? ஏன் அப்பிடி ஓயாமக் குத்திக்குத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாய் என்னை? ஆரிட்டயும் போய் கூலி வேலையையே நான் செய்யச் சொல்லுறாய்? டிய நான் ஆர் எண்டு உனக்குத் தெரியுமே? - நான் ஆரிண்டமோன் எண்டு உனக்கு விளங்குமே?” - அவர் விழிகளை உருட்டி கோபமாய் விழித்து அவளைப் பார்த்தார். "கண் நன்றாக இவருக்குச் சிவந்திருக்கிறது. வெறியோ? - என்று அவள் தனக்குள் நினைத்தாள். "ஒழுங்கா ஒரு வேலைவில்லட்டிக்குப்போய் மரியாதையா இருந்து சீவிக்கிறதுக்கும் உந்தப் பரம்பரை பரவணிக்கும் என்ன ஒரு சம்பந்தம் இருக்கு. ஏன் நான் எதைப் பறைஞ்சாலும் நீங்க எடுத்தெறியிற மணியமாக்கதைக்கிறியள்? மானத்தோட வாழ எந்தத் தொழிலைச் செய்தா என்ன? கூலி வேலைக்கும் போகலாம். அது மரியாதைக் கேடெண்டு இல்ல! இப்புடிச் சும்மா ஒரு ஆம்பிளை திரியிறது தான் மரியாத கேடு.” - தன் வெறுப்பெல்லாவற்றையும் சேர்த்து அவள் குத்திப் பேசினாள்.
“டிய எடீ எடுத்தனெண்டாத் தும்புக்கட்டை உன்ன வெளுத்துப் போட்டுத்தான் கீழ வைப்பன் போட்டி அங்கால வாய நீட்டாம, உன்ர நாக்கு வாயில கிடக்கமாட்டனெண்டுதோடி. வர வர என்னோட கொழுப்புப்
്. ി. (Gൾ O 78 O.

புடிச்சகதை கதைக்கத்தான் நீ வெளிக்கிட்டிருக்கிறாய் என்ன? சீவியத்தில நான் செய்யாததெல்லாம் உனக்காக செய்ய வெளிக்கிட வேணுமோ? அந்த நாளில காரும் வானும் பீக்கர் செற்றுக்களும் வைச்சுக்கொண்டு ராசா மாதிரிச் சீவிச்ச சேனாதியடி இந்த நான் தெரியுமே உனக்கு?” - அவர் தன் மார்பிலே கையால் தட்டிக் கொண்டு கட்டுக்கடங்காத ஒரு வெடிச்சிரிப்புடன் விலாசமாய் இதைச் சொன்னார். "அப்ப என்ன கியாதியெண்டு அதைமாத்திரம் சொல்லிக்கொண்டு இருக்கிறியள்? இப்ப அதெல்லாம் சீலம் பாயாக்கிழியிறது உங்களுக்கு தெரியேல்லயே? அதை நீங்க இப்பவும் சொல்லிக்கொண்டிருந்தா காணுமே, இப்பவும் அப்பிடி வசதி இருக்கே எங்களுக்கு? இப்ப நடக்கிறதுகளை வைச்சுக் கதைக்காம ஏதோ அப்ப பாழ்பட்டு அறுந்து கொட்டுப்பட்டுத் துலைஞ்சதுகளை யெல்லாம் ஞாபகம் வச்சு இப்பவும் சும்மா கதைச்சசுக் கொண்டு
திரியிறியள்?”
"நான் அப்ப அந்த நேரம் இருந்த மாதிரியைக் கதைக்கத்தானேயடி வேணும்? நீ மறந்தாலும் எனக்கு அதுகளை மறக்கேலுமே பேச்சி? நான் அப்பிடிச் சீவிச்சனான் தானே?” "அது அப்பத்தயக் கால நில! அதையெல்லாம் தாம்தூமெண்டு உங்கட இஷ்டத்துக்கு ஆடிப் போட்டடிச்சு நடந்துதான் நீங்க அழிஞ்சனியள். அப்பத்தைக்கு இருந்த தூசி கூட அதில உள்ள சொத்து ஏதாவது இப்ப ஒண்டு உங்களிட்ட இருக்கே கதைக்கிறதுக்கு?” - வாலில் பாம்பாட்டியின் கரம் பட்டதும் பாம்பு படம் விரித்து ஆடுகிறதே அதைப்போல அவரது பேச்சுக்கு சுருக்கென்று அவள் பதில் சொன்னாள். "இப்ப என்னட்ட இல்லத்தான்! எண்டாலும் இனிமேல அதுகள் வரும்! அப்பிடியும் வரும்தானே ஒருக் காலம்? அப்பிடித் திரும்பவும் அதுகள் வந்து எனக்கு ஒருநாள் கையில சேரும்தானே?” “வரும் வரும், இப்பிடி நீங்க றோட்டளந்து கொண்டிருந்தா எல்லாம் வரும், உங்களுக்கென்ன எதையும் சொல்லிக்கொண்டு வெறுங்கையோட வீட்ட வந்துகிடப்பியள், ஆனா எனக்கெல்லே கிடக்குது இங்க பெரியபாடு? அதுகள் குழந்தையள் ரெண்டும் பள்ளிக்கூடத்தால வந்து அம்மா பசிக்குதெண்டு என்னத்தானே பாடுபடுத்துங்கள்.” கொதிநீராக தகித்துப் பரவுகிறது அவள் குரல். அவளுக்குத்தான் சொல்லும் சொல்லை இதற்கு மேல் தொடர முடியாது போய் உதடுகள் இரண்டும் நடுக்கம் கண்டு துடித்தன. நெஞ்சில் தழும்பு வந்து அடைத்தது. இமை இரண்டின் நீளத்திற்கும் நீர் கோத்து நின்றன. விழிகளில் திரண்டு நின்று தன் கண் பாவையை மறைத்த நீர் முத்துக்களைச் சிமிண்டி கண்களை அவள் காலியாக்கினாள். என்றாலும் தான் சொன்னதை அவருக்கு முழுக்கவும் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற வேகம் மனத்தில் பொங்கிட எச்சிலை உள்ளே முண்டி விழுங்கினாள். காய்ந்த தொண்டையில் எச்சில் ஈரம் பரவ மீண்டும் அவளுக்குத் தெம்பு வந்தது. "அப்பிடிப் பிள்ளையஸ் வீட்ட வந்து ஆறாப் பசியில கத்துமேயெண்டு போட்டு அரிசி புளிக்கு நான் ஆர் வீட்டையும் இல்லாத்தனத்தில இப்ப அலைய வேண்டியிருக்கு. வரழ்க்கையின் ரிறக்கஸ் O 79 O

Page 50
கடன் எண்டு கேட்டு எவரிட்டயும் ஏதும் வாங்கினா அதைப் பேந்து எப்பவும் நாங்க திருப்பிக் கொண்டோய்க் குடுக்க வேணும். அதுதானே முறை? அப்பிடியில்லாம திரும்பத் திரும்ப வாங்கினதுகளிட்டப்போய் எந்த யோக்கியதையை வைச்சுக்கொண்டு பிறகும் அதுகளிட்ட நாங்க கடன் வாங்கிறது?” - அவளுக்கு எரிச்சலாக வந்தது. தீயாக பற்றிக் கொண்டு வந்தது. "கடன் வாங்கினா ஒரு காலம் அதைத் திருப்பிக் குடுக்கிறதுதானே, அதுக்கென்ன நீ ஒரு ஞாயம் கதைக்கிறாய்? அதில நீ என்ன நெறி கேட்டி என்னட்டயாய் நீ கண்டனி?” - என்று அவர் தன் கண்ணில் தழல் வீசக் கேட்டார். "இப்புடி வீட்டில நீங்க இருந்துகொண்டு என்ன கதை நீங்க கதைக்கிறியள்? கடன் வாங்கப்போறது நீங்களே, நான்தானே? இண்டைக்குப் பின்னைக்கு எண்டு போக்குச் சொல்லிக் கொண்டு ஒரு தரம் ரெண்டு தரம் ஒரு வீட்டு வாசல் படியில ஏறலாம். ஆனாலும் நெடுக அப்பிடி அதுகளிட்டப் போய் எந்த முகத்தை வைச்சுக் கொண்டு அரிசி தா தேங்காய் தாவெண்டு நான் கடன் கேக்கிறது? ஒருவரிட்ட நேர்சீராய் அதைக் கொண்டுபோய் ஒண்டை வாங்கினா ஒழுங்கா நறுக்கா அதுகளிட்ட அதைப் பேந்து திருப்பிக் குடுக்க வேணும்! அதில்லாம திரும்பவும் திரும்பவும் போய் கடன் தா தா வெண்டா எப்பிடி அதுகள் சாமான் தருங்கள்? என்ர அப்பா அம்மாவெல்லாம் ஆரிட்டயும் வாய்விடாச் சாதியள். அப்பிடி நானும் வளந்தனான். அந்தப் பழக்கத்தில இருந்த நான் இப்பவெல்லாம் வீடு வழிய போகேக்க உசிர் போற மாதிரிக் கிடக்கு. அதுகள் என்னப் பாக்கிற பார்வையும் கேக்கிற கேள்வியும் என்னக் கொல்லக் கொண்டுபோமாப்போலக் கிடக்கு: இந்த வயசிலையும் எனக்கு இப்படியொண்டு போதாக் குறைக்கு வயித்திலயும் வந்திருக்கு, இதெல்லாம் ஆரால ஆ.?” அவள் அப்பிடிச் சொல்ல அவர் குற்ற உணர்வில் தன் தலையை அடிமைக்குனிவுடன் கீழே தொங்கப் போட்டுக் கொண்டார். அதைக்காண இன்னும் அவளுக்கு ஆத்திரம் மேலிட்டது. "உங்களுக்கென்ன, நீங்க ஆம்பிளை! எங்கையும் திரிவியள் வருவியள் உங்களுக்கென்ன வெக்கம்? என்னப் பிடிச்சுக் கொண்டு எத்தினை பெண்டுகள் என்ன மாதிரியெல்லாம் விடுப்புக்கதை கதைக்கிறாளவயள். என்ன உன்ர உடம்பெல்லாம் வரவர பொசிப்பா மினுமினுப்பா வருது வையிறும் ஒரு மாதிரியா தள்ளிக் கொண்டு வித்தியாசமாக் கிடக்கு என்ன விசயம்? எண்டு என்ன விடுத்து விடுத்து கேக்கிறாளவயள். எனக்கெண்டா அவளயஸ் அதுமாதிரிக் கேக்கேக்க சீல கழண்டு நாரியால விழுமாப்போல வெக்கமாக் கிடக்கு. இப்பிடி அவளயள் நாலு பேர் சேந்து என்னக் கேக்கேக்கிள்ள, எந்த நாக்கால நான் அதுகளுக்குப் பதில் சொல்லுறது? நான் அவளயள் சொல்றதெல்லாம் கேட்டுக் கொண்டு ஒரு ஊமணச்சிக்கணக்காத்தான் இருக்கிறன் என்னும் கொஞ்ச நாளில நான் வெளிக்கிட்டு வெளியால எங்கயும் போகேலுமே? இந்த வயதிலையும் ஏன் இந்தக் கிலிசுகேட்ட எனக்குத் தந்தாரோ இந்தக்கடவுள்! கடவுளே போன கிழமை அங்க போக மூத்த பெட்டையும் ஒரு மாதிரிப் பாக்கிறாள். அவளுக்கு இன்றும் விளங்கேல்லயெண்டாலும் அவள் குமர்ப்பிள்ளைக்கு என்ரை வாயால இதை எப்பிடிச் சொல்ல?
මී. ග්‍රී. ලාංNගvගvෂීභ(b O 80 O

எல்லாருக்கும் எவ்வளவு நாளைக்கெண்டு இதை நான் ஒழிச்சு மறைச்சு வைக்கிறது? பாத்திரம் ஏந்திப் பிச்சை எடுக்கிற மாதிரியான இந்த நிலையிலையும் இப்பிடியொரு சீத்துவக்கேடு நடக்குது? நீங்கள்தான் ஒரு மனுப்பிறவி எனக்கு வாய்ச்சு இந்த வேலை செய்திருக்கிறியள்! கலியாணமாகிற வயசில பிள்ளை ஒண்டையும் வீட்டுக்குள்ள வைச்சுக்கொண்டு, ஒரு மனுத்தறிவில்லாம நீங்க நடந்திருக்கிறியள்? இப்ப ஒண்டும் தெரியாத ஆள் மாதிரி ஊமைக் கொட்டை கணக்கா உதிலை இருக்கிறியள். எல்லாத்துக்குமா நான் இந்த உசிரை வைச்சுக் கொண்டிராம ஆத்தாக் கடசியில சத்தியமா கிணத்தில குளத்தில விழுந்து செத்துப்போடுவன், உண்ணான நீங்க என்னப் பாக்காதயுங்கோ? நான் சொல்லுறது சொல்லுக்குச் சொல் பலிக்கும்! அப்பிடித்தான் உலகம் வெறுத்துப்போச்செனக்கு. மனம் சீச்சீயெண்டு கிடந்து சலிக்குது! எண்டாலும் பாவங்கள், இந்தக் குஞ்சுகள் குழந்தையள் பரிதவிச்சுப் போயிடுமே, அதுகள் நட்றோட்டில பேந்து நிண்டு கொண்டு தவிச்சுப் போடுங்களே, எண்டு நெச்சுத்தான் நானும் கிடந்து இந்த உலகத்தில இப்ப சீவிக்கிறன்." அவள் அழுகையின் ஊடாக முந்தானையால் மூக்கைச் சிந்தினாள். மரணம் ஒன்றுதான் எல்லாவற்றையும் முடித்து வைக்கிற அற்புதமான ஒரு விஷயம் என்று நினைத்து அவள் அப்படிச் சொன்னபோது, கண்ணுக்குப் புலப்படாத அந்த மரணம் ஒரு கணம் அவள் நினைவில் சுற்றிவிட்டு மறைந்தது. “சரி சரி அழாத, இதெல்லாம் காலப்பிழைதான்! கிரகமாற்றம் எங்களைப் போட்டு இந்த ஆட்டு ஆட்டுது போலக் கிடக்கு.” - என்று சொன்னார் அவர்.
“என்ன கிரக மாற்றம்? நீங்கள் உங்களை அடக்கிக் கொண்டிருந்தா உப்புடியெல்லாம் நடந்திருக்குமோ? நான் உதுவேண்டாம், இந்த வயசுகளில இனியும் வேண்டாமெண்டு நிண்டாலும் என்னைச் சும்மா விடுற ஆளே நீங்க? இப்பப் பாருங்களன், எனக்கெல்லே இது பெரிய வெக்கக்கேடாப் போச்சுது இந்த வயசில பிள்ளைத் தாச்சியெண்டா ஆர்தான் பாத்துச் சிரிக்க மாட்டினம்? சிலதுகளுக்குக் காறித்துப்பியே மனுசரக் கொண்டு போடுறவாய் கிடக்கு, அதுகளிட்டத் தப்பேலுமே? இதுக்கை இனி மாமா, மாமி வீட்ட போய் அங்க மகளிட்டக் கேட்டு ஏதாச்சும் வாங்கிக்கொண்டு இங்க வீட்டுக்கு வர்றதும் இல்லாமப் போகப் போகுது. நான் இனி அங்க இனிப் போமாட்டன், ஐயோவென்ர பிள்ளேன்ர முகத்திலபோய் நானெப்பிடி இனி முழிப்பன்! ஐயோ என்ர முருகா நான் ஆற்றிய பாவத்துக்கு இதுதான் கழுவாயெண்டு என்னக் கைவிட்டிட்டியோ." அவளுடைய இமைகள் வெட்டுண்ட பல்லி வாலாய்த் துடித்தது இப்போது "சும்மா கிடந்து பேக்கத்துக் கத்தாத? திரும்பத் திரும்ப உதையே சொல்லிச் சொல்லி என்ன நீ விசராக்காத, துவக்கத்தில கொஞ்சக் காலம் இப்புடிச் சனம் கதைக்கும். பேந்தெல்லாம் வரவரச் சரியாப் போடும் எங்களுக்குப் பிள்ளை வேணுமெண்டு நாங்க பெறுறோம், இதில மற்ராக்களுக்கு என்ன நோ - உந்தக் கதையை விட்டிட்டு யோசியாம சும்மா நீ இனி இரு பாப்பம்?” அவர் தன் மீது உள்ள பிழையை
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 81 O

Page 51
எண்ணி கொஞ்சம் இறங்கி வந்து அவளுக்கு சமாதானம் சொல்ல முனைந்தார். “இனிமேல என்னத்தப் பாக்கிறது. ஆறேழு மாதத்தால ஆஸ்பத்திரிச் செலவும் வரப்போகுது. அதுக்கென்ன செய்யப் போறியள்? எனக்கு இந்த வயசில அங்க தறுமாஸ்பத்திரியில பிள்ளப் பெறப்போய் என்ன வெள்ளிடி வந்து சம்பவிக்குமோ தெரியேல்ல. அதை நெச்சாலே 'திக்’-கெண்டு நடுங்கு தென்ர நெஞ்சு, இங்க ஒருக்காவென் ர காலப்பாருங்கோ? அங்க ஆலமரத்தடிக்குக் கீழ பாம்பு ரெண்டு பிணைஞ்சு கிடக்க அதைப் பாத்திட்டுப் பயந்து போய், வேலுப்பிள்ளேன்ரை காணிப் பக்கமா நான் கம்பிக்குள்ளால பூந்தன். கருக்குக் கீறிப் போட்டமாதிரி அந்தக் கம்பி உடன கிழிச்சுப் போட்டுது. ஆனா அந்தக் காயத்தில ஒரு சொட்டு ரெத்தம் என்ரை கண் பாக்க வெளிய வரேல்ல, அப்பிடிக் கேட்டுப் போச்சு தென்ரை உடம்பு வரவர எலும்புச் சுள்ளியாட்டம் நான் போயிட்டன். இதெல்லாம் ஏனெண்டு கேக்க ஒரு நாதியில்ல அப்பிடியாயிட்டன்” - அவள் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்செறிந்தாள். காலில் ஏற்பட்ட வலியினால் அவள் முகம் கோணலாக நெளிந்தது. "பாம்பு கிடந்ததோ?” "ஓ கிடந்தது அதுக்கென்ன?” என்று தன்பாட்டில் ஆரவாரித்துக் கேட்டாள் புனிதம்.
“பிணைஞ்சோ” "ஓ பிணைஞ்சபடிதான், சீச்சி வழுவழுப்பும் மினுமினுப்புமா நெளுநெளெண்டு ரெண்டு மரியண்டம், அங்க வர்ற இடத்தில கிடந்தது.” “இப்ப - இப்ப வரேக்க நீ உன்ரை கண்ணிலயாக் கண்டனியோ?”
“ஒ, வரேக்கைதான்! 'ஊ. ஊ. ஊஷ்' எண்டு அதின்ரை சத்தம்! உந்த ஆலமரத்துக்குக்கீழ தேர்வடம் மாதிரி அதின்ரை உருப்படியள்! நாகமெண்டால் அது கருவிழி நாகமெண்டுதான் நான் நெக்கிறன்.” “யடி பேச்சி, சொல்லி இருக்கலாம் தானேடி நீ இங்க வந்தவுடன எனக்கு?” “என்னத்துக்கு அதை? சவப்பாம்புக் கதையை நான் ஏதோ ஏக்கத்தில மலாரடிச்சுப் போய் வாறன், அவருக்கு ஒரு பாம்பு வேணுமாம்! பாம்பு! என்னத்துக்கு அதை?” அவள் வெறுப்பை நெருப்பாகக் கக்கினாள். “என்னத்துக்கோ. அதின்ரை அருமை தெரியுமோ உனக்கு?” “என்ன அருமை எருமை அந்தப் பாம்பில பாக்கக்கிடக்கு? சும்மாவென்னப் பிச்சுப் புடுங்கிக் கேக்கிறியள்?” “சைக். வந்தவுடன நீ சொல்லியிருந்தியெண்டா, ஒரு துவாய்த் துண்டெண்டாலும் அதுக்கு மேல நான் கொண்டு போய்ப்போட்டு எடுத்திருப்பன்.” “என்னத்துக்காம் அதை?” - என்ற கேள்வியோடு ஒத்த புருவ நிகழ்ச்சியுடன்
சீ.பி. இருஸணந்தம் O 82 O

அவரைப்பார்த்தாள் அவள். "உனக்கென்ன தெரியுமெண்டு கிடந்து இந்த உலகத்தில இவ்வளவு நாளாய்ச் சீவிக்கிறாய், பாம்பு பிணையேக்க அதுக்கு மேல கொண்டு போய் வெள்ளைச் சால்வையோ, துவாயையே போட்டெடுத்தா - அதைத் தோளில போட்டுப் போனா, எங்கையும் போகேக்க வெற்றி தான்ரீ” “எ-ல்-லாம் போச்சு உதுதான் இப்ப அவசரமாத் தேவையாக்கும் உங்களுக்கு? இந்தக் காலத்தில நீங்க சொல்ற உந்த வாகடங்களெல்லாம் சரிவருமே?” "நீ என்ன இப்ப நான் சொல்லுற தொண்டையும் கணக்கெடுக்கிறாயில்ல? எல்லாத்துக்கும் நான் கேக்கிறதுக்கு மூக்கால நீ நொண நொணவெண்டு பதில் சொல்றாய் - சும்மா எல்லாத்துக்கும் வெடுசுடுத்துக்கொண்டு முனிஞ்சு கொட்டுறாய் நீ? - உப்புடி லேசில எவைக்கும் உது சந்திக்குமே? நீ வந்தவுடன இதைச் சொல்லியிருந்தியெண்டா ஒடிப்போய் அதுக்கு நான் அலுவலப் பாத்திருப்பன், இப்ப அதுகள் கலைஞ்சிருக்குமென்ன?” “எனக்கென்ன தெரியும்? உங்களுக்குத்தானே எல்லாம் உலகத்தில தெரியுமெண்டு கிடந்து கொண்டு ஆடுறியள், பேந்து என்னட்ட ஒரு விளக்கம் கேட்டுக் கொண்டு நிக்கிறியள்?” th “சரி போகுது உதுகள் எல்லாத்தையும் விட்டுப் போட்டு இனி உலையைக்கிலையைப் போய் அங்க நேரத்துக்கு வையன்?” "சமையலுக்குச் சாமான் கொண்டந்தனியளோ, சமைக்க அடுக்குப்பண்ண?” "உது கையில என்ன இருக்கு? என்ன கொண்டந்தனி?” "நான் உங்களிட்ட கேக்க வேண்டியதுதான் உந்தக் கேள்வி, உங்களுக்கு உப்புடி இருந்து கதைக்க வெக்கமாயில்லயோ? உந்த ஊர் முழுக்கத் திரிஞ்சு, வீட்டையெண்டுமில்ல - ஒண்டும் இல்லயெண்டு, இல்லப்பாட்டு அதுகளிட்டப் பாடி நான் இங்க வீட்டுக்குத் தெண்டிக்கொண்டு வாறன். நீங்க வெறுங்கையோடவந்து இங்க வேளைக்குச் சாப்பிட நிக்கிறியள்?” "உதென்ன கதையிது? தட்டுப்பாடு வந்தா ஒருவரிட்டப் போய்க்கடன் வாங்கிறது குடுக்கிறதுதான், அதுக்கு நீ பெரிய விண்ணாணம் கதைக்கிறாய்? பொறு எனும் கொஞ்ச நாளில எப்பிடியோ நானுந்தக் கடனெல்லாம் அடைச்சுப் போடுறன்! பாரன் அந்த மரைய - அது கொஞ்ச நாளா அந்தக் காட்டுக்குள்ள என்ரை கண்ணுக்கு மறைஞ்சு பேக்காட்டிக்கொண்டிருக்கு, அதை வெடி விழுந்தக்கணக்கத்தான் அந்த இத்தி மரத்தில, கெவட்டைக்க பறண்போட்டு ராவில அதுக்கு மேல போய் நான் ஒவ்வொருநாளும் இருக்கிறன். ஆனா சவம்! அந்த நேரம் வழிய காத்துச் சுழட்டி அடிக்கிறதால அது அங்காலிப்பக்கம் குளத்தில தண்ணி குடிக்கக்கூட தலைவைச்சும் படுக்குதில்லை. புனிதம்! அது பெரிய உருப்படியடி!! வெடிபறிஞ்சா அதில அந்த மாதிரித்தான் இறச்சிவரும்! நெய்யா வடியிற கொழுப்போட அதின்ரை இறைச்சி சும்மா மரச்சிராய் மாதிரித்தான் இருக்கும். எப்பிடியும் பாரன் நீ என்ர வெடிக்கட்டை ஒரு குண்டுக்குமேல உமிழாட்டிலும் அவரை நான்
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 83 O

Page 52
கிட்டடியில வெடிவைச்சு விழுத்தாம விடன். விழுத்துற அண்டைக்கு இறைச்சி விக்க விக்கக் கிடைக்கிற காசை உடன நீ கொண்டு போய்க்குடுத்து கடனழிச்சுப்போடு என்ன?” “இறைச்சி எப்ப வரப்போகுது, நானெப்ப கடன் குடுக்கப்போறன்? உசிர் வித்து மசிரும் மிஞ்சா தெண்டுங்கள், உந்த வேட்டையாடுற அநியாயத்த விட்டிட்டு வேலைக்கு நீங்க போங்களன்?”
“என்ன வேலை?”
"அங்க செல்வராசா தன்ரை காணிக்க கிணறு வெட்டிறாராம், வேலைக்கு ஆளில்ல எண்டு திரியிறார். சும்மாயிருக்கிறியள் நீங்கள்! போகலாம் தானே?” “ஆ மப்பிடியே எங்கயோ கிடந்து அடையுண்டு வந்ததுகளை யெல்லாம் எனக்குப் பெரிய ஆளா நீ கொண்டந்திட்டாய்? - செல்வராசா ஆர் நான் ஆர்றி? - உதுக்கெல்லாம் நான் ஆப்பிடுவனெண்டு அந்த ஆசையெல்லாம் வையாத? எங்கடை வமுசமென்ன அவேற்ற வமுசமென்ன?” “ஆற்றை ஆக்களாவும் அவர் இருந்திட்டுப் போவட்டுமே? எங்களுக்குத் தேவை வேலை தானே? ஊருக்க அவர் எங்களோட சகோதரம் கணக்காப் புழங்கிறார். நல்ல ஒரு மனுசன், இரக்க வாளி அவர் சம்பளமும் புழையில்லாமத் தருவார். அவரிட்டப் போய்வேலை செய்ய என்ன வெக்கம்? கொஞ்ச நாளைக்கெண்டாலும் அப்பிடி நீங்க உழைக்கிற காசில ஆனமான ஒரு கறி புளியை எண்டாலும் நாங்களும் பிள்ளையஞமா வீட்டில காச்சிச் சாப்பிடலாம் தானே?”
“எந்த நேரமும் சாப்பாடு சாப்பாடெண்டுதான் நீ அலயுறாய், நாள்முழுக்க உனக்கு உள்ள யோசினையெல்லாம் அதுதான்! வேற ஒண்டும் உனக்குத் தேவையில்ல. ஆர் எப்பிடிப் போனாலுஞ்சரி! அப்பிடித்தானே உனக்கு? ஊருக்குள்ள உப்புடியெல்லாம் ஆரிட்டயும் போய்க்கீழ வேலை செய்து மானத்தை விக்கேலாது எனக்கு அவரை விட்டா எனக்கு இந்த உலகத்தில வேற வேலை கிடையாதே? அந்த ஆள் நெருப்ப விழுங்கி நீர் ஏப்பம் விடுற ஆள், அவரிட்டப் போய் அப்பிடியெல்லாம் செய்யிற வேலைக்கு இங்கயிருக்கிற என்ரை காணிக்கயுள்ள வேலய பகலைக்கு நான் பாப்பன். புலுபுலுவெண்டு என்ன மாதிரி நல்ல லேசான மண் இந்தக்காணி மண், ஆனாக் கிணறுதான் இதுக்க கிண்டக் கிண்ட ஆழம் போய்க்கொண்டிருக்கு. எப்பிடியும் கிட்டத்தில அதுக்க தண்ணி வந்திடும். இப்ப கிண்டக்கிள்ள அலவாங்க அலாக்காய்த் தூக்கித்தள்ளுது. உந்தக் கிணத்து வேலையில அவ்வளவு மண்ணையும் நானே தான் வெட்டி, நானேதான் கூடேல வாரி, நானேதானே வெளியில ஏறித்தட்டியிருக்கிறன் கொஞ்ச நாளைக்க உந்தக் கிணத்துக்க தண்ணி ஏறி வராட்டிக்குப்பார்? இதை என்ர பணப்பிசாசு பிடிச்ச அப்பரும் இருந்து பாக்கத்தானே போறார்? உவ்வளவு மாடுகண்டையும் காணியளையும் வைச்சுக்கொண்டு உந்தக் கிழட்டு வயசில அவருக்குகேன் உந்தச் சொத்துப்பத்தை எனக்கும் அவர் வைச்சிருக்கிற மாடுகள் கண்டுகளில கொஞ்சத்தத்தந்து, வயல் காணியளிலையும்
No. 45მ. CSეტიrOkgOზეptბ O 84 O

கொஞ்சம் புறிச்சுத் தரலாம்தானே? அதெல்லாம் அவருக்குத் துண்டாய் விருப்பமில்ல, அவருக்கு ஒரே கண்ட சீருக்கு தன்ர மகள்தான் பெரிசு! எனக்குச் சகாரா பாலவனத்தைப் பூதானம் குடுத்தமாதிரி இதை வெறுங் காணியாத் தந்திட்டு, அந்தக் கோள்காற நாரதத்துக்கு எல்லாத்தையும் பொத்திப் பொத்தி வைச்சிருந்து பேந்து அவவுக்கும் அவவின்ரை மோள்மாருக்கும் ஒளிவு மறைவாக் கருமம் பாத்துக்குடுக்கத்தான் அவருக்கும் பிளான் போல. அவற்றை ஒண்டுக்குமத்த அந்தக் காணியில வரம்பு வைச்சுத் திருத்தி நெல்லுண்டாக்கினவன் நான், அதை அவர் இப்ப மறந்திட்டார்!”
“உதெல்லாத்தையும் அவருக்கு முன்னால போய் நிண்டுகொண்டு ஐயோ அம்மோ நேர அவற்றை முகம் பாத்து நீங்க கதைப்பியளோ? அவருக்கு முன்னால போனா தலையைக் கவுண்டுகொண்டு உம்மாண்டி பிடிப்பியள்! பேந்து கதைக்கிறியள் ஒரு கதை உப்புச்சப்பில்லாம? இப்பிடி வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோவெண்டு கண்டதையும் நீங்க கதைக்கிறது சரியில்ல. மாமா உங்களுக்கு எவ்வளவு மாடு கண்டுகளைத் தந்தவர், அவர் போகம் போகம் ரெண்டோ நாலோ தாற நெல்லையும் எங்களுக்குத் தின்னயில்லாம வித்துச் செலவழிச்சுத் தூத்தெறிச்சுப்போட்டு ஏதோ அவரப் பொரி பொரிஞ்சு ராகப்பாட்டுப்பாடுறியள்? மாமா ஏதோ இந்த வயசிலயும் தனிக்கை அடிச்சு மற்றவேக்கும் கீழ போகாமல் நேர் சீராச் சீவிக்கிறார். இப்பவும் அவயள்தான் எங்கட ரெண்டு பிள்ளையளையும் வைச்சு வயித்துக்குக் கஞ்சி ஊத்துகினம். அல்லாட்டி அந்தப் பிள்ளையஞம் இங்க கிடந்து வயிறு காயுங்கள். அந்தக் குமர்ப்பிள்ளைக்கொரு ஆனவாகிய நகையில்ல நட்டில்ல ஆமான ஒரு உடுப்பில்ல. துளசியப் போல தூய்மையா அந்தப் பிள்ளை பூத்துக்கன்னி காத்துக் கொண்டிருக்கு, அவளை ஒரு நல்ல இடத்தில ஒப்பேத்தி விடுறத்துக்கு ஆமானதா ஒண்டுமில்ல அவளிடத்தில - அப்பிடியெல்லாமிருக்க உங்களுக்கு என்ன அக்கறை எங்களில இருக்கெண்டு அவரைப் பற்றிக் குற்றம் சொல்லுறியள்? எங்களோட உள்ள இந்தப் பெட்டைப் பிள்ளையஸ் கீழ்க் கண்டுகள்தான். அந்த அளவில இப்போதைக்குப் பறவாயில்ல, ஆனா அந்தக் குமர்ப்பிள்ளையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது அக்கறையிருக்கே? இந்த ஊருக்க சில குடும்பத்தில உள்ளதுகள் மறுசாமத்தியம் வந்ததோட பெட்டப் பிள்ளயள ஆருக்கும் சோறு குடுப்பிச்சு கலியாணம் முடிச்சு வைச்சுப் போடுதுகள், ஆனா எங்கட வீட்டுக்க உள்ள குமர் முத்திக் குரங்காகிற வயசாகுது, இதொண்டும் உங்களுக்கு அக்கறையில்ல. இப்பிடியெல்லாம் இந்த வீட்டுக்க ஊரிப்பட்ட பிரச்சினை இருக்க, காலயில இருந்து பொழுது பட்டது வர உலகம் முழுதையும் வசபாடுறதுதான் உங்களுக்கு வேல.” அவள் உறைப்பாக இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டுவிட்டு தலையை உயர்த்தி வீட்டின் முகட்டைப் பார்த்தாள். ஒட்டை விழுந்த முகட்டு ஒலைக்குள்ளாலே கண்ணாடிக்குழாய் போல உள்ளே விழுந்து கொண்டிருந்தது சூரிய ஒளி அது அவளது கண்களில் பட்டுப் பார்வையைக் கலக்கிவிட மீண்டும் கீழே தலையைச்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 85 O

Page 53
சரித்து அவள் அவரைப் பார்த்தாள். புனிதம் சினந்த விறுத்தம் அவள் முகத்தில் இன்னும் பம்மிக்கொண்டிருந்தது.அவளது பார்வைக்குத்தன் பார்வையை பதிலாய் வைத்துக் கொண்டு பதில் சொல்லத் தொடங்கினார் சேனாதி "எல்லாத்தையும் விட்டா கதைப்பாய் கதைப்பாய் மேலயும் மேலயும் நீ விடாமல் நெடுகக் குத்திப் பேசிக் கதைச்சுக் கொண்டுதான் இருப்பாய், வர வர நான் ராங்கியா இங்க வீட்டில இருக்கேலாது போலத்தான் வருது. வார்த்தைக்கு வார்த்தை எரிஞ்சு விழுறதும், முணுமுணுப்பும், வெடுசுடுத்துக் கதைக்கிறதும், உன்னட்டயிருந்து கூடிக்கொண்டுதான் இப்ப வருது இந்த வீடே சந்தைக் கடையா, சத்தக் காடாப் போச்சு. எப்பவும் இங்க வந்தா ஒட்டப் பானையில நண்டவிட்ட கணக்கா ஒரே தொணதொணப்பு நான் ரெண்டொரு நாளில அங்க போப் போறன் நெடுங்கேணிப்பக்கம்! அங்க போயிருந்தாத்தான் நாலு பணம் இனிமேல உழைக்கலாம் போலக்கிடக்கு. அங்க வெடிவைச்சகல் எண்டிருக்கிற ஊருக்க இருக்கிற துரை எண்டுற என்ர சினேகிதன், இங்க எனக்கு ஆள்விட்டுக் கொண்டிருக்கிறார் என்னை அங்க வா வா எண்டு - இந்தக் காலம் புலி வேட்டையாடலாமாம் அங்கின! அங்க போனனெண்டா எனக்கும் வாச்சுப்போகும், நல்ல சீல் சாராயம் வாங்கித் தருவார் குடிச்சுக் கொண்டு, அவரோட நானும் சேந்து அங்க வெடி வச்ச கல்லுக் காட்டுப்பக்கம் புலி வேட்டைக்கும் போகலாம். புலித்தோல் வாங்க இப்ப கொழும்பில இருந்து யாவாரியள் அடிபட்டுக் கொண்டு அங்கினேக்க வாறாங்களாம். அதை வித்தாகையில நிறையக் காசுவரும். கொஞ்சம் அப்பிடிக் கையில நிறையக் காசு சேரவிட்டு, உன்ரை கையில அதெல்லாத்தையும் நான் கொண்டுவந்து தாறனே. நீ பேந்து உன்ரை கடனையெல்லாம் இறுத்துத் துலைச்சுப் போட்டிரன்.” அவர் அப்படிச் சொல்ல தன் மனசில் ஒடும் உணர்வுகளை மறைக்கத் தெரியாமல் வெகுளியாய் வெளிக்காட்டியபடி அவள் அவரை பரிதாபமாகப் பார்த்தாள். அவளது ஏழ்மை மனசு அவர் சொன்னவற்றையெல்லாம் நம்பி ஏங்கியது. கட்டிய கணவனை நம்பாமல் அவள் யாரைத்தான் நம்பி வாழ்க்கையை ஒட்டுவாள். அந்த நிலையினாலே அவளுக்கு முகம் சிறிது பிறகு தெளிந்தது. என்ர தலையில வெறுங்களிமண்தான் இருக்கு. என்ரை தலைக்க இருக்கிறதயும் கெதியா இல்லாமலாக்கிப் போடுவனோ? என்ற நினைப்புடன் நிம்மதியாக ஒரு பெரு மூச்சை வெளியே விட்டபடி, கனவைப் போன்று நடக்கும் அந்த நிகழ்வுகளையெல்லாம் சிறிது நேரம் மனத்திலெண்ணி அவள் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தாள். "என்ன இருந்தாப் போல யோசிக்கிறாய்?’ ‘இல்லை.” அவள் ஆறுதலடைந்தவளாய் அவர் கேட்டதுக்கு இப்போது மெதுவாக பதில் சொன்னாள் இரக்கமற்ற கடினமான உற்சாகமில்லாத வாழ்க்கையிலிருந்து விடுபட்டதைப் போன்ற ஒரு நிலை அவளுக்கிருந்தது. "அப்ப உலையைப் போய் வையன்?” என்று அவர் சொல்ல: “கறிக்கொண்டும் இல்ல” என்று அந்தச் சிறு வார்த்தையை குரலில் இதங்குழைத்து இப்போது பணிவாகச் சொன்னாள் அவள்.
iෂ්, ෆි, ෆණ්wගvෂීහරේ O 86 O

"சரி சம்பலையெண்டாலும் சோத்துக்கு அரைச்சுவையன் சாப்பிடுவம்” "அதுக்கும் தேங்காய் மட்டு மட்டு கயர்ப்பாதிதான் கிடக்கு” “சரி அது காணும்! அதோட அங்க அம்மா வீட்டில இருந்து நீ கொண்டு வந்த பிடி வெங்காயத்தில நாலைஞ்சு உருவி எடு, உந்த வேலியில படந்து கிடக்கிற பிரண்டைக் கொடியில துளிரா நாலைஞ்சு கெட்டு உடைச்சுத்துப்பரவாக்கு பேந்து பொன் வறுவலா அதைச் சட்டியில போட்டு வறுத்துப்போட்டு, செத்தமிளகாய் வைச்சு உப்புப் புறி சுள்ளிட நல்லதொரு சம்பல் அரை, அது காணும்! கன நாளா கண்டது கடியதுகளையும், குடிச்சு எனக்கு வயிறு ஒரு மாதிரி அம்மலாக்கிடக்கு, உந்தப் பிரண்டைச் சம்பல் திண்டாத்தான் குடல் திறக்கும், ஆனவாவில எனக்குப் பசிக்கும். சரி, பேந்தேன் நிக்கிறாய்? போய்ப்பார் உன்ரை வேலையை? நான் ஒருக்கா உவடம் மட்டும் உதால வெளிய முச்சந்திக்கொருக்காப் போட்டு வாறன்! எப்பவும் குடும்பத்துக்க வீக்க தூக்கம், சண்டை சச்சரவுகள், சள்ளுமுள்ளுகள் வரத்தான் செய்யும். அதயெல்லாம் கண்டும் காணாம ஒத்துமேவி சமாளிச்சு நடக்கிறதுதானே புத்தி” அவர் சொல்லிவிட்டு சாறனை உதறிக்கட்டிக் கொண்டு புலி வேட்டைக்குப் போகிற வீரதீர நினைப்போடு, உஷாராக வெளியே வெளிக்கிட்டார். குடிப் பழக்கத்திற்கும் அதன் மயக்கத்திற்கும் ஆட்பட்ட அவரின் மனசும் உடம்பும் அடங்கிச் சும்மா இருக்கவில்லை, அந்தத் தண்ணி மப்பில்தான் மதிய்ப் பொழுது சலம்பலாக அவருக்கு நகரும். அதனால் தன் வாய் நம நமத்துக் கொண்டிருக்க காய்ச்சிச் சாராயம் விற்கும் அந்த இடத்தை நாடி அவர் போய்க்கொண்டிருந்தார். எப்படியும் கணவர் புலி வேட்டைக்குப் போய் புலி நகம் பல்லு விற்றுக் காசு கொண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன், காலையில் சாம்பல் அள்ளியதிலிருந்து அடுப்பு மூட்டாமலிருக்கும் அடுப்பங்கரைப் பக்கமாக அரிசியைக் கொண்டு அவள் போனாள். அங்கு போனதும் பானையில் அடைத்திருந்த புளியம் பழமொன்றை உப்பிலே தோய்த்து வாயிலே திணித்துக்கொண்டு, புளியம்பழத்தின் இனிப்புக்கலந்த கடும் புளிப்பைச் சுவைத்துக்கொண்டு, ஆக வேண்டிய சமையல் வேலையை அவள் செய்யத் தொடங்கினாள். அங்கும் உலை ஏறிப் போகின்ற அதிசயத்தை அறிவிக்கவோ என்னவோ என்கிற மாதிரி ஒரு காகம் இருந்து கொண்டு, வாயைப் பிளந்து கொண்டு ‘கா கா’ என்று உரக்க அதிலே குசினிக்கு முன்னால் இருந்து கழுத்தைக் குறுக்கிக் கொண்டு கத்திக் கொண்டிருந்தது. "இங்க எங்களுக்கே தின்னச் சோத்துக்குத் திண்டாட்டம், ஆரும் விருந்தினர் வருகுதெண்டே நீ இங்க நிண்டு உப்புடிக் கத்துறாய்?" என்று சருவச் சட்டியில் அரிசியைக் கொட்டிக் கொண்டு புனிதம் காகத்தைப் பார்த்துக் கேட்டாள். அது தன் திட்டமான அலகைச் சரித்து, இயல்பான தன் பார்வையில் அவளைப் பார்த்துக் கொண்டு, தத்தித் தத்தி நின்று மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காகக் கூட்டம் அதிலே தம் வலிமையான சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்து வந்து சேர, வ0ழ்க்கையின் ரிறக்கஸ் O 87 O

Page 54
அதிலே படுத்துக் கிடந்த வத்தலும் கொத்தலுமான அந்த நாய் எழுந்து வந்து காகக் கூட்டத்தைக் கலைக்க ஊளைக் குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. அது தன் காதுக்கு எட்டாத குரலில் குரைத்துவிட்டு, தன் குரைப்பு பயனற்றது எனத் தெரிந்து கொண்டது போல உடனேயே நிறுத்திவிட்டது. அவள் அரிசிக்குள் தண்ணிரை விட்டு அரிக்கஞ்சட்டியை ஆட்டிக் கொண்டு விரல்களில் அரிசியை ஏந்திக் கொண்டிருந்தாள். அதிலே இருந்து கொண்டு கை அரிசி கிளைந்தாலும், பார்வை என்னவோ அவளுக்கு அந்தக் குசினி வாசலின் நேரே தெரியும் கரையான் பிடித்த வேலிப்படலைப் பக்கமாகவே நெடுகலும் இருந்து கொண்டிருந்தது.
“பிள்ளையஸ் இப்ப பள்ளிக் கூடத்தால வந்திடுங்கள், வரப்போகுதுகள்” என்று அவளது மனம் சொல்லிக்கொண்டிருக்க, அரிசிகிளையும் வேகத்தை அவள் கூட்டிக் கொண்டிருந்தாள். நாய் அதிலே முற்றத்தடியில் நின்று காகங்களைக் கலைத்துக் களைத்துப் போய் வந்து குசினி வாசலடியில் படுத்துக் கொண்டது. அவள் சுள்ளிகளைப் பொறிக்கிக் கொண்டுவந்து, அவற்றை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்பில் வைத்தாள். அணையும் தறுவாயிலிருந்த கட்டைகள்மேல் அவள் வைத்த சுள்ளிகள் குதுாகலமாகத் திகுப்பென்று தீப்பற்றிக்கொண்டு, முனகல்களும் சீழ்க்கைகளுமாக மும்முரமாக எரிந்தது. பிறகு உலை மூட்டினாள். உலையில் புழுங்கல் அரிசி வெந்து நுரைத்து வாசனை வீசியது. அதைப் பார்த்துக் கொண்டு அந்த நாயும் குசினி வாசலில் அவள் போடப்போகும் சோற்றுப் பருக்கைகளுக்காக அவ்விடத்தில் காவல் காத்தபடி கிடந்தது.
මෙ50]
அன்று கோடைக்காற்றின் கோரத்தனம் மிகுதியாயிருந்தது. அது செம்புழுதியைச் சுற்றியபடி அடித்தது. அந்தச் சூறை சுருட்டிக் கொண்டு வந்த புழுதியோடு, அன்ரனின் வீட்டுத் தோட்டத்தடியில் நின்ற வேப்பமரத்திலிருந்து பழுத்தலிலைகள் உச்ச பட்ச அளவில் உதிர்ந்து கொண்டிருந்தன. அந்தக் காணிக்குள்ளே மரவள்ளித் தோட்டத்துக்குள்ளும் அவைகள் காற்றுக்கு அள்ளுப்பட்டு வந்து கொட்டுப்பட்டன. அந்தப் பழுத்தலிலைகளும் சருகுகளும், அந்த நிலத்தையும் நிலத்தில் கிடந்தவற்றையும் ஜமக்காளம் போல் மூடின. அன்ரன் மரவள்ளிக்கிழங்கு இழுப்பிற்காக அவ்வேளை தன் தோட்டத்துக்குள்ளே நின்று கொண்டிருந்தான். கிழங்கு இழுப்பிற்காக நேற்றுத் தண்ணீர் இறைத்து விட்டிருந்த நிலம் ஈரத்தோடு மிகவும் இதமாக இருந்தது. அவனிடம் கிழங்கு வாங்கிப் போவதற்கென்று வந்திருந்த மனுவேற்பிள்ளை உபதேசியார் அந்த வேப்பமரத்துக்குப் பக்கத்திலே நின்று கொண்டிருந்தார். அந்தச் சுழல் காற்று மாறி - பிறகு 'ஒஹோ' என்று மேல்காற்று வீசத் தொடங்கியது. அந்த மேல் காற்று வீசும்போது நிலை கலங்கி வேப்ப
ரீ.பி. (ஆஸணந்தம் O 88 O

மரத்தின் இலைகள் ஒலி எழுப்பியது. "என்ன தம்பீயிது! இப்பிடிக் காலம் மாறிப் பொங்கப் பொங்கச் சுழிக்கக் காத்தடிக்குது உள்ள தூசு தும்புகள் இலைகளையெல்லாம் அலை அலையா இந்தக் காத்து எழும்பி அள்ளிக் கொட்டுது தலையில! எல்லாம் வரவர இப்ப உலகத்தில மாறிநடக்கிற காலமாப் போச்சுப் பாத்தீரோ?” உபதேசியார் தோட்டத்துக்குள் நின்ற அவனிடம் அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோதான ஒரு கதையைச் சொன்னார். "அதுதான் ஐயா எனக்கும் பாக்க இது சரியான ஆச்சரியமாகக் கிடக்கு. இருந்தாப் போல எழும்பின காத்து இது மூண்டு நாளா இப்ப தொடந்து இது அடிக்குது எங்கயும் அப்பிடி ஒரு இடம் வழிய புயல் அடிச்சிருக்குமோ தெரியேல்ல.?” அவன் உபதேசியாரைப் பார்த்துச் சொன்னான்.
"நீர் சொல்லுறமாதிரியும் ஏதும் இருந்தாலும் இருக்கும்தம்பி எண்டாலும் தம்பி பைபிளில சொல்லுப்பட்டது மாதிரி இப்ப வருற இந்தப் பெரிய இயற்கை அழிவெல்லாம் ஏற்படுறது உலக அழிவு கிட்டடியில வாறதுக்கெண்டொரு அடையாளந்தான்! பைபிளில உள்ள அந்த வெளிப்படுத்தல் எண்டுற அத்தியாயத்தில இதையெல்லாம் நீர் எடுத்துப் படிச்சுப்பாக்கலாம் தம்பி! இதுகளோட இன்னும் அதிலயெல்லாம் இப்பிடியும் கூட எழுதிக்கிடக்குக் கண்டீரோ? உலக அழிவு வாற அந்தக் காலத்துக்குக் கிட்டதாய் ஒரு ராஜியத்துக்கு எதிராக இன்னொரு ராஜியம் எழும்புமெண்டும் மதத்துக்கு எதிராக மதமும் எழும்பு மெண்டும் அதில எழுதியிருக்குத்தானே? இப்பவும் பாரும் உலகத்தில எங்க பாத்தாலும் இந்த மதச்சண்டைகளும், நாட்டுக்கு நாடு நடக்கிற சண்டைகளும், மொழிச்சண்டைகளும், சாதிச்சண்டைகளுமெண்டுதானே பாக்கிறதுக்கும் கேள்விப்படுறதுக்கும் ஏலுமாய்க்கிடக்கு. உலகமகாயுத்தமெண்டு இந்த இருபதாம் நூற்றாண்டுக்கு முதல், சரித்திரத்தில எங்கையும் அப்பிடி ஒரு யுத்தம் நடந்ததாய் நீர் படிச்சிருக்கிறீரோ? இல்லையென்ன! அப்பிடி இந்த இருபதாம் நூற்றாண்டு வழியதானே இந்த உலக மகாயுத்தங்களெண்டு அப்பிடிப் பெரிசா யுத்தங்களெல்லாம் நடந்தது! முதலாவது உலக மாகாயுத்தம் முடிஞ்சு அடுத்த ரெண்டாவது உலக மகாயுத்தமும் வந்துது! இதுக்குப்பிறகு இந்த ஐக்கிய நாடுகள் சபையெண்டு சமாதானம் கருதி கூட்டாக நாடுகள் சேர்ந்திருக்கு. இதெல்லாம் ஒற்றுமையா நிலைச்சு இருந்து நெடுகலும் இப்பிடி நடக்குமெண்டுறீரோ நீர்? இந்த மனுஷன் எப்பவும் ஒற்றுமையாச் சீவியான் தம்பி! அதுக்குப் பரலோகத்தில இருந்து கடவுளால சபிச்சுத்தள்ளப்பட்டு - இப்ப பூலோகத்தில இருக்கிற அந்த ஆவி உடலோட திரியிற பிசாசு விடாது - இந்தப் பிசாசுக்கு மனுசனக் கடவுள் சொன்ன வழியில போகாம ஏமாத்துறதுதான் தொழில் - இந்தப் பிசாசெண்டவன் என்ன செய்வான்? அவன் மனுசருக்கு உலக ஆசையைக்காட்டி ஏமாத்தி பொறாமையை வளத்து வர்மத்தை உண்டாக்கி மனுசனைக் கடைசியில சீவியத்தில இல்லாம அழிச்சுப் போடுவான். அதனால இந்த உலகத்தில பாரும் கடவுளின்ரை குமாரன் கிறிஸ்து ஒருவர்தான் தம்பி சமாதானத்தைக்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 89 O

Page 55
கொண்டு வரவேணும். அவர்தான் சமாதானத்தின் பிரபு அவரில்லாம இந்த மனுஷரெல்லாம் தாங்கள் நினைச்சுச் சமாதானம் கொண்டு வாறத்துக்கு நினைச்சா அது ஒண்டும் நெடுக நீடிக்காது தம்பி!” அவர் தன் கையிலே வைத்திருந்த பைபிள் புத்தகத்தை இறுகப் பிடித்துக்கொண்டு அவனுக்கு இதைச் சொற் சுத்தமாகச் சொன்னார். ஆழ்ந்த மத நம்பிக்கையோடு இருக்கும் அவரை ஒருமுறை முழுமையாகப் பார்த்துவிட்டு அவர் சொன்ன சில வசனங்களை மனதில் பதித்து சிந்தித்தபடி, அன்ரன் பாசன வாய்க்கால் வழியாகப்போய் மரவள்ளிப் பாத்திக்குள்ளே காலை வைத்தான். அவன் காலை வைத்த இடத்தில் நின்ற இலைச் சடைவான மரவள்ளித் தடிகளின் இடையிலே இருந்த சிலந்தி வலைப் பின்னலில், காற்றுக்கு வந்து விழுந்த வேப்பமிலைச் சருகுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றை இரண்டு பச்சை மரவள்ளி இலைகளை ஒடித்து, அதிலே பதித்துச் சுழற்றி எடுத்துவிட்டு, வெளியே அதை அவன் வீசி எறிந்தான். "அப்ப இந்த உலகம் இனி அழியப் போகுதெண்டு நம்பிக்கையா நீங்க சொல்லுறியளே உபதேசியார்?”
மரவள்ளிப் பாத்திக்குள் நின்ற படி அவன் உபதேசியாரைப் பார்த்துக் கேட்டான். அவனுக்கு அவர் சொன்ன கதையைச் சிந்தித்துப் பார்த்ததில் சுவாரசியமாக இருந்தது. அந்தத் தடிகளைப் பிடித்து கிழங்கு இழுப்பதற்கு முதல், ஆதியோடந்தம் அந்தக் கதையின் விவரமெல்லாம் அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். என்று அவன் விரும்பினான். உபதேசியார் அப்படி யாரும் விரும்பிக் கதை கேட்டால் நாள் முழுக்க அவர்களுடன் இருந்து கதையளப்பார். அவரையும் ஒரு கதை சொல்லியாகவே அந்த ஊரிலே அவருடன் பழகியவர்களெல்லாம் கருதினார்கள். அவர் அந்தோரியார் கோயிலின் உபதேசியாராக இருந்ததில் அந்த ஊரில் உள்ள கிறிஸ்வத குடும்பங்களின் பிரச்சினைகள், கஷ்ட நஷ்டங்கள், எல்லாவற்றையும் நன்றாய் அறிந்து வைத்திருந்தார். அந்த ஊரிலே உள்ள கிறிஸ்தவரெல்லாம் அவரையும் தங்களுடைய ஒரு ஞானத் தந்தையாகவே மதித்து, தங்களுடைய கஷ்டநஷ்டங்கள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கூறி அவர் தங்களுக்குக் கூறும் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு பின்பு மனம் தேறுவார்கள். அவர் எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைப்பதற்கு ஆலோசனை வழங்க, பைபிளிலுள்ள வார்த்தையைத்தான் எடுத்துச் சொல்வார். அதன் பிரகாரமாய் இப்போது அன்ரன் தன்னிடம் கேட்க அந்தக் கேள்விக்கு, எந்த இடத்திலிருந்து பைபிள் வசனத்தை எடுத்து மேற்கோள்காட்டி அவனது அறிவுக்கு ஏற்றதாய் அவற்றை விளங்க எடுத்துச் சொல்வது என்று உபதேசியார் சிந்தித்தார். பைபிள் கதையை எடுத்தால், ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் நிமித்தம், மனிதனுக்கு மரணம் சம்பவித்த கதையை சங்கிலிப் பின்னலாக ஆரம்பத்திலிருந்து, அறுபடாத இழையில் கோத்துக் கொண்டு போவது மாதிரிச் சொல்லிக்கொண்டு வரவேணும். இதற்குப் பிறகு அவர்கள் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக இந்த உலகில் மனிதனாகப் பிறந்து, தன்னைக் கழுமரத்தில் பலியிட்டு, உலகத்து
ി.. SGൾ O 90 O.

மனிதர்களின் பாவம் போக்கிய கடவுளின் குமாரனாகிய இயேசுவைப் பற்றியும் சொல்லவேண்டும். ஆதாம் ஏவாள் செய்த பாவத்துக்குத் தூண்டுதலானவன் ஏமாற்றுக்காரனான அந்தப் பிசாசானவன்தானே? அந்தப் பொய்காரச் சாத்தானின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தால், ஒரு பகல் முழுக்கப் பொழுது போய்விடும். அதுக்குப் பிறகுதானே அந்தச் சங்கிலிப் பின்னலான கதையின் கடைசிக் கண்ணியான இந்த உலக முடிவைப் பற்றிய கதையைக் கதைக்கலாம்? இப்படி எல்லாவற்றையும் திறம்பட வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டுவந்தால் பெடியனின் கிழங்கு இழுவை எப்பிடி நடக்கும்?
அதை நினைத்துக் கொண்டு அவர் வான மண்டலத்தைப் பார்த்தார். "ஞானத்தை அருளுகின்ற பிதாவே சாலமோன் மன்னனுக்கு ஞானத்தைக் கொடுத்ததுபோல எனக்கும் நீர் ஞானத்தைத் தந்தருளும்” - என்று வல்லமையுள்ள ஒரேயொரு கடவுளாயிருக்கின்ற அவரை வேண்டிக் கொண்டு, அவன் கேட்ட கேள்விக்குத் தேவையானதொரு விளக்கத்தைச் சுருக்கமாக அவனுக்குச் சொல்லத் தொடங்கினார் அவர். "தம்பி! நீர் கேட்ட மாதிரித்தான் இயேசுவின்ரை சீடர்களெல்லாம் ஒருநாள் அவரைப் பாத்து - இந்த உலக முடிவு எப்ப சம்பவிக்கும்? எண்டு கேள்வி கேட்டிருக்கினம். அதுக்கு அவர் என்ன சொன்னார் எண்டு தெரியுமே? அந்தநாளை நான்கூட அறியேல்ல! அது என்ர பிதாவாகிய அந்தத் தேவன் ஒருவருக்கு மட்டும்தான் தெரியும்! எண்டு அப்பிடிச் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்குது தம்பி! இந்த பைபிள் சொல்லுறத எல்லாம் நெச்சுப் பாத்து எங்கட இந்தக் கிறிஸ்தவ சமூகம் இப்ப தங்கட சீவியத்தில திருத்தி நடக்குதே? கடவுள் சொன்ன பிற சினேகத்த இதுகளெல்லாம் முக்கியமானதாக் கருதி அதைக் கடைப்பிடிச்சு மற்றைய சனத்தோட அன்பா நடக்குதுகளே? இயேசு சொன்ன நல்ல சமாரித்தன் உவமையை நீர் படிச்சிருப்பீர் தானே? அந்தக் கதையில யேசு என்ன கருத்தை முதன்மைப்படுத்தினார்! பிறர் சினேகத்தைத்தானே? ஒரு கன்னத்தில அடிச்சா மற்றக் கன்னத்தைத் திருப்பிக் கொடு எண்டு அவர் சொன்னது, தேவையான ஒரு நேரத்தில ஒரு மனுசன் பொறுமை காத்து நடக்கவேணம் எண்டதுக்குத்தான்! காலத்தால சகோதரனோட சச்சரவுப்பட்டா பின்னேரம் சூரியன் மறையக்கிடையில போய் ஒப்புரவாகீடு எண்டு சொன்னதும் அவர்தானே? ஒரு மனுசனை மன்னிக்கிறதையும் அவன் செய்த இடைஞ்சல்களை மறந்து அவனோட திருப்பவும் அன்பாயிருக்கிறதையும், இன்னொரு மனிசனை தன்னை நேசிக்குமாப் போல நேசிக்கிறதையும் கிறிஸ்தவ சமயம் என்ன அழுத்தமா மற்றவயளுக்குச் சொல்லிக்குடுக்குது. இதையெல்லாம் படிச்சு தெரிஞ்சு வைச்சிருக்கிற எங்கட சமூகத்தில உள்ள சனங்கள் இது மாதிரியெல்லாம் இப்ப நடக்குதுகளே? எங்க அப்பிடி இங்க அதுகள் நடக்குதுகள்? ஆளையாள் பிடிச்சுத்தின்னுற மாதிரிப் பொறாமையில இங்கினேக்க உதுகளெல்லாம் அடிபட்டுச் செத்துப் போடுங்கள் போலக் கிடக்கு? எத்தினையோ குடும்பத்தில ஒரு தாய்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 91 O

Page 56
வயித்தில பிறந்து ஒரு மாரில பால் குடிச்சு வளந்த பிள்ளையஞக் குள்ளயே உந்தப் பொறாமையும் அடிபாடு சண்டையஞம் நடக்குது. உதுகளை நானும்தானே பாத்துக்கொண்டிருக்கிறன். உப்பிடியெண்டா கடவுள் சாபம் தானே அதுகளுக்குக் கிடைக்கும். இப்பிடிப் போனா உலக அழிவு வராம இங்க ஏதேன்தோட்டமே சீவிக்க மனுஷருக்கு வரும்?” சொல்லிவிட்டு உபதேசியார் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார். கதை சொல்லிக்கொண்டு வரும்போது அவருடைய கண்களில் ஒரு பிரகாசமான ஒளி சுடர் விட்டதைப்போல் இருந்ததைக் கொஞ்சம் அவருக்குத் தூரவாய்த் தான் நின்றபோதும் அன்ரன் அதைக்கண்டு கொண்டான். கிழங்கு இழுப்பதற்காக முதன்முதலில் ஆகவேண்டிய அலுவலில் இப்போது அவன் இறங்கினான். அவன்நின்ற பாத்தியில் உள்ள மரவள்ளித்தடிகளின் குழைப்பகுதியைக் கையால் உடைத்து வெளியே ஒரு பக்கமாக அவன் போட்டுக்கொண்டிருந்தபோது, அவர்: “நான் இப்பிடிக் கதையோட கொஞ்சத்துக்கு இருந்ததில உமக்கும் நேரம் செண்டுட்டுது என்னதம்பி?” என்று அவனுக்குச் சொன்னார். "அப்பிடி எண்டு ஒண்டுமில்ல ஐயா! இந்த வேல முடிஞ்சா வீட்ட சும்மா இருக்கிறது தானே? ஆனாலும் இண்டைக்கெண்டு ஒரு அலுவலுக்கு நான் வெளியில போக வேண்டியிருக்கு. இந்தக் கிழங்குகள இழுத்து வெட்டிக் குமியலா நான் போட்டிட்டா அம்மா பேந்து இங்க வரப்போற யாவாரிக்கு திராசு படியில இதுகளை நிறுத்துக் குடுத்து அவேயிட்டக் காசை வாங்குவா.” "விலையென்ன றாத்தல் போகுது தம்பி இப்ப கிழங்கு?” “றாத்தல் அஞ்சு சதம் ஐயா" “கொஞ்சம் அப்ப விலை கூடி இருக்குப் போல எண்டாலும் ஏன் இத அடிவிலைக்கு நீங்க நட்டமா விக்கிறியள்? நல்ல மண் தம்பி உங்கடை இந்த வீட்டுக் காணிக்கையுள்ள மண்! இதில விளையிறதெல்லாம் பவுண்தான்! இந்தக் கிழங்கும் கறி காய்ச்சேக்க உடன மசிஞ்சு கரைஞ்சு கறிக்கு என்னமாதிரி ருசியாயிருக்கு! நல்ல மாப்புடிப்புள்ள என்னமாதிரிச் சோக்கான கிழங்கிது! இந்த மரவள்ளிக்கிழங்குக் கறியயும் பழஞ்சோத்தையும் கறிச்சட்டியில போட்டு ஒராள் குழைச்சுத்தர, பூவரசெம் இலையக் கையில வைச்சுக்கொண்டு தாறதுகளத் திரணை திரணையாத் தின்னுறதில என்ன ருசி! அதுபோக. உம்மட அப்பா அம்மாவைச் சடங்கு செய்த காலத்தில எத்தினை இனிப்புத் தோடை மரங்கள் உதுக்குள்ள அம்பாரமாய் நிண்டதெண்டு உமக்குத் தெரியுமே?” இன்னும் ஒரு பழைய காலக் கதையை அவனுக்கு எடுத்துச் செல்வதற்காகத் தான் சொல்லிக்கொண்டு வந்த முதல்கதைக்கு, உடனே முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதிலே சற்று ஆறுதலாக அவர் நின்றார். "இப்பிடி நெடுக நேரம் நிண்டபடி வேல செய்யிற பெடியோட கதையைக் குடுக்காம நாலு தடியிழுத்து முடிச்சாப்பிறகு இதைப் பற்றி பெடிக்குச் சொல்லுவம்!” என்று அத்தருணத்தில் அவர் நினைத்தார். அந்த அவரது மெளனமான இடைவெளி அவனுக்கும் உதவுவதைப் போல இருந்தது. அவன்
சீ.பி. அருளWணந்தம் O 92 O

கால்களை அகலித்து வாகாக ஊன்றிக்கொண்டு, மரவள்ளித் தடிகளை இழுத்தெறியத் தொடங்கினான். ஆழமாய் மண்ணில் புதையுண்டு கிடக்கும் கிழங்கின் வேர்களோடிய பக்கத்திலே, அதற்குத் தக்கபடி கால்களை மாற்றி ஊன்றி நின்று கொண்டு அவன் மூச்சைப் பிடித்துத் தடியை இழுத்தான். உபதேசியார் அவன் கிழங்கு இழுக்கும் லாவண்யத்தை அதிலே நின்றபடி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அவன் மூச்சைப் பிடித்துக்கொண்டு மரவள்ளித்தடியை இழுக்கும்போது தானும் அவனுடன் சேர்ந்து கிழங்கு இழுக்கின்ற பாவனையில் அவரும் தன்னை அறியாது மூச்சைப் பிடித்தபடி நின்றார். என்றாலும் அவனது வாலிபத்துக்கு இணையாக தன்னுடைய உடலும் இருப்பதாக நினைத்துக்கொண்டு, வெறுமனே அதிலே நின்றபடி அந்த மூச்சைப் பிடித்து வைத்திருப்பதுகூட, முதிர்ந்த அவரது வயதுக்கு முடியாதிருந்தது. "இந்த உலகில் மனிதன் என்றும் இளமையோடிருப்பதற்கும், இறவாது என்றும் நித்திய ஜீவனாக அவன் சீவிப்பதற்கும்தான் உலகில் கடவுளால் படைக்கப்பட்டான்” - என்று றோமன் கத்தோலிக் கமல்லாத இன்னொரு சபையினர் உபதேசித்துக்கொண்டு திரிகிறார்களே? மனிதரது மனத்திலுள்ள இயல்பான ஆசையை ஆராய்ந்தால் அதுவும்கூட பெருமளவு உண்மையாகத்தானே தோற்றுகின்றது? உலகத்தில் எந்த மனிதன்தான் மூப்பையும் சாவையும் விரும்புகிறான்? இளமையாய் என்றும் இருக்கத்தானே எல்லா மனிதர்களும் தங்கள் மனத்தில் ஏங்குகிறார்கள்? இந்த எண்ணங்களும் இறைவனால் கொடுக்கப்பட்டதுதானே? பிறகு ஏன் இந்த மூப்பும், சாவும் அவனுக்கு ஏற்பட்டது? இந்த மரணத்துக்குக் காரணமானவன் மனிதனா? அல்லது அவனைப்படைத்த இறைவனா? நிச்சயமாக மரணத்துக்காளாக இந்த மனிதனைக் கடவுள் படைத்திருக்கமாட்டார்! இந்தப் பூமியில் வளரும் சில சாதி மரங்களே ஐயாயிரம் ஆறாயிரம் வருடங்களுக்கு மேல் சீவிக்கும் போது இந்த மனிதன் மட்டுமேன் சிறிது காலத்துள் மரணத்துக்கு ஆளாகிறான்?” இந்தச் சிந்தனையின் உச்சத்தில் உபதேசியார் தன்னைச் சூழவும் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் மறந்துவிட்டார். ஒவ்வொரு மண்டலமாகப் போய் எதையோ தேடிக்கொண்டிருக்கிற மாதிரியான நினைப்பில் அவர் நின்று சிந்தித்துக் கொண்டிருக்க, அவன் கிழங்கு இழுத்து முடித்துவிட்டு வேர்த்துக் களைத்துப்போய் பாத்திக்கு வெளியாலே வந்தான். அவன் கிழங்கு வெட்டத் தோட்டத்துக்குக் கொண்டு வந்திருந்தது கூரான கத்தி! அந்தக் கத்தியின் கைப்பிடியும் தன் கைக்குப் பிடிப்பதற்குக் கணக்காக இருந்தது அவனுக்கு. அவன் தடியின் அடியில் மூழ்பாத்து கிழங்கை வெட்டத் தொடங்க அந்தச் சத்தத்தைக் கேட்டு ஞானத்தூக்கம் கலைக்கப்பட்டு இயல்பான நிலைக்குத் திரும்பினார் உபதேசியார். 'தம்பி அப்பிடியே எங்கேயோ எனக்குப் போயிற்று யோசினையெல்லாம்!” அவர் இவ்வாறாகச் சொல்ல அவன் சிரித்தான்.
“என்ன சிரிக்கிறீர் சொல்லும் தம்பி?”
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 93 O

Page 57
"இல்லை ஐயா இல்ல." இப்போது மீண்டும் அவனுக்கு சிரிப்பு வந்தது. அவருக்குச் சங்கடமாக இருந்தது. “நான் முதலில உமக்குச் சொன்னதுகளில ஏதும் பிழையோ?” "அப்பிடியாயெண்டு ஒண்டுமில்ல ஐயா! நான் சும்மா என்ர யோசினேல சிரிச்சன்..!” "நீர் என்ன நினைச்சீர்? அதையும் ஒருக்காச் சொல்லுமன் நானும் இருந்து கேக்க?” "அவன் மீண்டும் ஒருமுறை சிரித்தான். "அப்பிடி என்ன இருக்கையா ஒண்டுமில்ல ஒண்-டுமில்ல." “இல்லேல்ல ஏதோ இதுக்க நீரும் ஏதும் நெச்சிருப்பீர் எனக்குச் சொல்றத்துக்கு. ம் - பறவாயில்லப் பறவாயில்ல சும்மா சொல்லும்?” “என்ன பெரிசா நீங்க சொல்லுறதுக்கேற்ற மாதிரி நான் சொல்ல இருக்கு? இந்த பைபிளை நான் அப்பிடி முழுசா ஒண்டும் வடிவா இதுவரைக்கும் படிச்சு முடிக்கேல்ல. அதைப்பற்றி இல்ல நான் இப்ப நினைக்கிறது. இந்தக் கிறிஸ்தவ சபையெண்டு பிறிம்பு பிறிம்பா எத்தின சபை இப்ப வெளிக்கிட்டிருக்கு? எல்லாரும் இந்த பைபிளை வைச்சுக்கொண்டு தங்க தங்களுக்கு ஏத்தமாதிரி புதுப்புது விளக்கம் சொல்லிக்கொண்டு திரியினம்? இது பெரிய குழம்பத்தானே கேக்கிற சனங்களுக்கு? அதத்தான் நான் யோயிச்சுச் சிரிச்சன்!” "ஆ அப்புடியே நெச்சீர்? ஒ சரிதான் நீர் சொல்லுறதும் பாரும் தம்பி நீர் இப்புடிப் புத்திசாலித்தனமா கதைக்கேக்க உம்முட அம்மம்மான்ர தேப்பன்ர ஞாபேம்தான் எனக்கு வருது அவரந்த நாளேல ஒரு முற்போக்கான கொள்கையான ஆளாத்தான் சீவிச்சிருக்கிறார். நல்ல விஷயமெண்டா அதச் செய்ய அவர் எதுக்கும் பயப்பிடாராம்! அவேற்ற ஊர் இந்தவுரில்ல. சில்லாலதானே அவற்றை ஊர்! அங்கினைக்க அவர் இருந்த காலத்தில அந்த ஊர்க் கோயிலுக்க எளியஞ்சாதியெண்டு சொல்லி கோயிலுக்க ஒரு கோடுகீறிவச்சு, அதுக்கை அவயள இருக்கவிட்டு தலேல துப்பட்டி போடப்படாதெண்டு அங்க உள்ளவெள்ளாம் ஆக்கள் அதுகளுக்கு கடுஞ்சட்டம் வைச்சிருந்தவையள் கண்டீரோ. ஆனா உங்கட அம்மம்மான்ர தேப்பனுக்கு அதொண்டும் விருப்பமில்லாம தங்கட ஆக்களோட அப்பிடித்தான் கடும் வாக்குவாதப்பட்டு, ஊராக்களோட எல்லாம் பிறகு சரியான சண்டைபிடிச்சு, வேண்டாமந்த ஊரெண்டுதான் அங்கவிட்டுப்போட்டு வந்து இந்த இடத்துக்கு வந்து குடியேறினவராம். அப்படி அவர் இங்க வந்து சீவிச்சாலும், இந்த ஊரை ஊமப்பட்டுத்தும் அளவுக்கு மதிப்பு நல்லா இங்க இருந்தது தம்பி அவருக்கு இந்தவுரில அது பெரிய சரித்திரம் தம்பி அதுக்குப் பிறகு உம்மட அம்மாவின்ரை அப்பாட அந்தச் சரித்திரத்தைக் கேட்டாலும் நீர் விறைச்சுப் போவீர்?” அவர் சொன்னவைகளைக் கேட்டதும் அவனுக்கு ஆச்சரியத்தில் புருவங்கள் வில்போல் வளைந்தன. “எனக்கே இண்டைக்கு நீங்க சொல்லித்தான் இப்ப இந்த விஷயங்களெல்லாம் தெரியுது ஐயா.
്. ി. SGൾ O 94 Q

இவ்வேளவு விஷயமும் உங்களுக்கு எப்பிடித் தெரியும்? எங்கட பரம்பரச் சரித்திரத்தையெல்லாம் உங்களுக்கார் சொன்னது?"
"வேறவும் பிறத்தியாராரும் சொல்லி இதெனக்குத்தெரிய வரேல்லத்தம்பி! உங்கட பரவணிக்க உள்ள அந்த ஆக்களே தங்கட வாயளால சொன்ன கதைதான் இதுபாரும்! அதில பாரும் ஒரு கத அதென்னண்டா இங்க அவயள் வந்தாப் பிறகு. ஆ. அதான் உங்கட அவ அம்மம்மா கலியாணம் செய்தது - சொந்த மாமன் முறையானவரைத்தான் தம்பி! அந்த அளவுக்கு அங்க அவயள் அந்த ஊரைவிட்டு இங்க வந்தாப்பிறகு அங்க ஊரில இருந்தவயளுக்கும் இங்க இவயளுக்கும் பேந்து ஒரு விதமான தொடசலும் இல்லாமப் போச்சு! அவவுங்கட அம்மம்மா இருக்கிறாவல்லோ அவ இங்க அப்பம் வாங்க உங்க அவயளிண்ட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு வீட்ட போறவவாம்! அங்க அவவின்ரை மாமன். அவரத்தன்ர சொந்தத்தாய் மாமனெண்டு சரியா இவவுக்குத் தெரியாது. அதால அவரைக் கண்டப்பிறகு நாளாக ஆக, அவரோட கதைக்க வெளிக்கிட்டு பிறகு ரெண்டு பேரும் காதலாயிட்டினம். பேந்து இதெல்லாம் இவவின்ரை வீட்டுக்குத் தெரிய வந்து, ரெண்டு பேருக்குமுள்ள ரெத்த உறவும் வெளிப் பட, எல்லாரும் களபுளப்பட்டிருக்கினம். எண்டாலும் இந்தக் காதல் வேகத்தில, இரத்த சம்மந்த மெல்லாம் மறந்து, அவவக் கிளப்பிக்கொண்டு அவர் அன்ராசபுரத்துக்குக் கூட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார். உங்கட அம்மாதான் பிறகு அவயஞக்குப் பிறந்த ஒரேரு பிள்ளை.” உபதேசியார் இது காறும் சொல்லிக்கொண்டு வந்த கதையை இடை நிறுத்திவைத்துவிட்டு நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தார். ஒரு சந்தேகத்தின் முளை அவர் முகத்திலுதித்தது. தான் சொன்ன கதை அவன் மனத்தைப் புண்படுத்தியிருக்குமோ என்ற ஐயம் அவருக்கு அப்போதுதான் மனத்தில் திடீரென எழுந்தது. ஆனால் அன்ரனோ, அவர் நினைத்த மாதிரியில்லாமல் எவ்வித பாதிப்பும் இல்லாத மாதிரி தன் முகத்தை சாந்தமாக வைத்திருந் தான். தன் பரம்பரையை இழிவு முத்திரை குத்தி ஒதுக்குவதற்காக அந்தக் கதைகளையெல்லாம் அவர் தனக்குச் சொல்லவில்லை என்று அவனுக்கும் விளங்கியது. அதனால் இன்னும் உள்ள மிகுதிக் கதையையும் அவரிடமிருந்து கேட்க வேண்டுமென்று அவன் ஆவலுற்றான். "என்ன உபதேசியார் சொல்லிக்கொண்டந்த கதையை இடேயில நிப்பாட்டிட்டியள். அதின்ரை மிச்ச சொச்சத்தையும் விளக்கமாச் சொல்லுங்களன் கேட்பம்?” "இல்லத்தம்பி! இந்த என்ர மோட்டுவாய் சில நேரத்தில சொல்ல வேண்டியது எது சொல்லக்கூடாதது எது எண்டு ஒரு கட்டுப்பாடு இல்லாத அளவிலயும் பீத்திவிட்டுட்டும் அதான் எனக்குப் பயம்!”
"இதில என்னையா நீங்க ஒரு பிழையான கதையை எனக்குச் சொல்லியிருக்கிறீங்க? நீங்க அறிஞ்சதை ஏதோ என்னட்டையும் மறைக்காமச் சொல்லியிருக்கிறீங்க. ஒரு மனுசன் தன்ரை பரம்பரையயும் அவயின்ர சீவிய காலத்தில நடந்தவயளையும் கட்டாயம் அறிஞ்சிருக் கத்தானே வேணும். ஒரு மனுசனுக்குப் பரம்பரையாவுள்ள வருத்தமு
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 95 O

Page 58
மிருக்கு அது மாதிரியா பரம்பரைக்குணமுமிருக்கு எண்டுதானே பைபிள் சொல்லுது இண்டைக்கு விஞ்ஞானமும் அதை உண்மையெண்டுதானே சொல்லுது பைபிள் சொல்லுற சரித்திரத்தில சீவிச்ச சகல ஆக்களிண்ட விபரமும் ஒளிவு மறைவில்லாம வெளிப்படையா அதில சொல்லப்பட்டிருக் குத்தானே? அதைப்படிக்கிறது வாழ்க்கைய நாங்க நல்ல படியா கொண்டு நடத்திறத்துக்கு எங்களுக்கொரு படிப்பினையா உதவுதுதானே? பைபிள் ஒரு பரம்பரையைச் சொல்லிக்கொண்டு போகுது சரி நாங்களும் அதுமாதிரி எங்கட பரம்பரையில உள்ளவயளிண்ட வாழ்க்கையில நடந்ததுகளை கொஞ்சமெண்டாலும் தெரிஞ்சு வைச்சிருக்கத்தானே வேணும்! அப்பிடித் தெரிஞ்சிருக்கிறதால அவயள் தங்கட காலத்தில செய்த நன்மையான காரியங்களை நாங்களும் எங்கட காலம் வழிய தொடந்து செய்யலாம். அது மாதிரி அவயள் செய்த கூடாத காரியங்களையும் விலத்திநடந்து நாங்களும் கவனமாச் சீவிக்கலாம்தானே?” அவருக்கு அவன் சொன்னவைகளைக் கேட்கவும் உற்சாகம் மனதில் அலை போலெழும்பி கரைபுரண்டது.
"நீருண்மையா ஒரு கெட்டிக்காரன்தான்! உம்மட்ட நல்ல பொறுமயிருக்குத் தம்பி! அதாலதான் கடவுளும்ம ஆசீர்வதிச்சிருக்கிறார். அதில பாருந்தம்பி கிறிஸ்தவ சமயம் மனிசன் செய்த பாவத்தை மன்னிக்குதுதான்! ஆனாலும் இந்த றோமன் கத்தோலிக்க சமயம் தம்பி சமயச் சட்டப்படி நடக்காம பிழை செய்தா, அந்தப் பிழைக்கேற்ற தண்டனையும் அவயஞக்குக் குடுத்திடும். உம்மட அம்மம்மாவும் பாட்டனும் செய்த பிழைக்கு அவயளுக்கு என்ன தண்டனை கோயிலில கிடைச்சுது தெரியுமோ? ரெத்த சம்பந்தத்துக்குள்ள அவயள் புருஷன் பெஞ்சாதியாச் சேந்ததாலயம்? கோயிலில சட்டப்படி சடங்கு செய்யாம அப்பிடி ஆளையாள் கூட்டிக் கொண்டு ஓடினதாலயம், கொஞ்சக்காலத்தால அவயள் தங்களுக்குப் பிறந்த அந்த ஒரு பிள்ளையோட இங்க வரேக்க கண்டீரோ அவயக் கூப்பிட்டு, ரெண்டு பேரோடையும் கதைச்சுப்போட்டு, தாங்கள் பிழை செய்து போட்டம் எண்டு அவயள் ஒத்துக்கொள்ள ஒருநாள் சுவாமியார் கோயிலுக்கு அவயள் ரெண்டு பேரையும் வரச்சொல்லியிருக்கிறார். அவயளும் அண்டைக்குக்காலேல பூசைக்கு வர, அங்க பூசை முடியக்காட்டி ரெண்டு பேரையும் கோயிலுக்கு வெளியாலயுள்ள குரிசு மரத்தடிக்குச் சனத்தோட கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். பேந்து அதில ரெண்டு பேரையும் முழங்காலில அந்தக் குரிசு மரத்தடிக்குக் கீழே இருக்கவிட்டு, ரெண்டு பேருக்கும் தலையில முள்முடி வைச்சுப்போட்டு, சாட்டுக்கு ரெண்டு அடி கம்பால அடிச்சு அவயஞக்கு இனிமேல இந்த உறவு இல்லையெண்டு அவ்வளவு சனத்துக்கு முன்னாலயம் வைச்சப் புறிச்சு விட்டிட்டினம். அது எவ்வளவு மனவருத்தமான ஒரு விசயமெண்டு பாரும்! அவ்வேளவு ஆக்களுக்கு முன்னால அவயள் ரெண்டுபேரும் அப்ப எவ்வளவு வெப்பிராயப்பட்டிருப்பினம்! அதைக் கண்ணால காணாம வாயால உமக்குச் சொல்லுற எனக்கே எவ்வளவு இங்க உள்ளுக்க மனக் கவலையாயிருக்குத்தம்பி பாவங்கள் அதுகள்! ஏதோ தெரிஞ்சும்
මී. 49. ථGövගvණිගර් O 96 O

தெரியாம இப்பிடி ஒரு பிழைய அதுகள் செய்து போட்டுதுகள் எண்டு போட்டு நாலு பேருக்கு முன்னால இந்தப்பிரச்சினையைக் கொண்டு வராம அவயளை மன்னிச்சு விட்டிட்டா, அதுகளைப் பாத்து வேற மற்றச் சனங்களும் நடக்கத் துவங்கீடுங்களெல்லே? இதுக்குத்தான் இந்தத் தண்டனையை அவயஞக்கு அந்த நேரம் குடுத்தவயள் எண்டு நான் நெக்கிறன். இந்த நெருங்கின ரெத்த உறவுக்க சடங்கு செய்யப்பிடா தெண்டுறது றோமன் கத்தோலிக்கத்திலுள்ள கடுஞ் சட்டமெல்லே? அதை அவயளும் நடைமுறைப்படுத்தத்தானே வேணும்! ஆனா இவையஞம் கண்டீரோ தங்களுக்கை உள்ள சொந்தபந்தம் உண்மையா தெரியாமத்தான் ஆரம்பத்தில சேந்திட்டினம்! பிறகுதான் அவளுக்கு அந்தத் தாக்கம் தெரிஞ்சிருக்கு. அங்க அன்ராசபுரத்தில இருந்து கொஞ்சக் காலத்தால இங்க வந்தாப்பிறகு, அவயள் இந்த மாதிரியா தாங்கள் செய்த பிளையால கோயிலுக்கும் போகேலாத அளவுக்கு ஆளாயிட்டினம். அதோட சொந்த பந்தத்தோடையும் மற்றவயளோடையும் அவயஞக்கு ஆளையாள் சேந்து நடக்கேலாத மாதிரி நெருக்குவாரமாவும் போட்டுது. இதுக்காகத்தான் தங்கட உறவை வெட்டிக் கொண்டு அவயள் பிறிஞ்சவயள். இதில பாதிக்கப்பட்டது பேந்து உம்மட அம்மம்மாதான். அவ பேந்து தன்ர சீவியப்பாடை நடந்த தறுமாஸ்பத்திரியில வேலைக்குப்போய்ச் சேந்தா. உம்மட பாட்டன் பேந்து வேறேரு கலியாணம் முடிச்சு அந்த மனுசிசாக இன்னொரு பொம்புளையைப் பேந்து முடிச்சு அப்படி அவற்றை வாழ்க்கை போச்சுது அவயஞக்கெல்லாம் பிள்ளையளில்லை. உம்மட அம்மாதான் ஒரு பிள்ளை அவருக்கு, உம்மட அம்மாவை வளக்க தகப்பனிட்டக் குடுக்கச் சொல்லித்தான் கோட்டிலையும் பேந்து தீர்ந்தது. அதுக்குப்பிறகு உம்மட அம்மா வளந்து அப்பரைக் கலியாணம் முடிச்சாப்பிறகு, உந்தக் காணியெல்லாம் தோடை மரங்கள் வைச்சு வளத்து அதில வந்த வரும்படிய எடுத்துதான் உந்தக் கல்வீட்டு கட்டினவயள்.” அவர் பைபிளிலுள்ள பழைய ஏற்பாட்டைப் படித்துக் காட்டினது போல அவனது தலைமுறையினரின் பூர்வீகக் கதைகளை நிறுத்தம் வைத்திடாமல் தொடர்ந்து சொல்லி முடித்தார்.
அவனுக்கு இவ்வளவு காலமும் அறியாத அந்த விஷயங்களையெல்லாம் அவர் சொல்லிக் கேட்டதில் அதிர்ச்சியாயிருந்தது. காலம் செல்லச் செல்ல எத்தனையோ விஷயங்கள் வெளித்தெரியாத அளவுக்கு மண் போட்டு மூடியதைப்போல் மறைக்கப்பட்டு விடுன்றன. இதையெல்லாம் தெரிந்து கொள்ள அகழ்வாராய்ச்சி செய்வதுபோல் யாரும் தோண்டிக் கொண்டா இருக்கிறார்கள்? தங்கள் பரம்பரையிலுள்ள அழுக்குகளையெல்லாம் மறைத்து வெள்ளை அடித்துவிட்டு, எத்தனையோ பேர் தங்கள் பரம்பரையை பெரிதாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மற்றவர்களுக்கு கதைக்கிறார்களே? தங்கள் வாழ்விலே தாங்கள் மற்றவர்களுக்குச் செய்துவிட்ட அந்தக் கொடும் வினைகளையெல்லாம் மறைத்து வைத்துவிட்டு சத்தியவான்களாகத் தங்களை வெளிக்காட்ட பொய்ச்
சுயசரிதை எழுதி வெளியிடுகிறவர்களும் எத்தனையோபேர் இக்காலத்தில்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 97 O

Page 59
இருக்கத்தானே செய்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு பொய்மைகளில் புரண்டு கொண்டிருக்கும் அவர்களது ஈனச்செயலை அறியாமல், ஆகா, ஓகோவென்று சொல்லி அவர்களை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு புகழ்பாடுவதற்கும் ஒரு கூட்டம் உலகில் இருக்கத்தானே செய்கிறது” அவன் இவ்வாறெல்லாம் நினைத்தபடி வெட்டுக்கத்தியில் ஒட்டிய ஈரமண்ணை மரவள்ளித்தடியில் வைத்து அழுத்தித்தேய்த்து அதைச் சுத்தமாக்கினான். அதன்பிறகு தடியிலிருந்து கிழங்கைக் கத்தியால் வெட்டித் துண்டிக்கும் வேலையை மீண்டும் அவன் ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே சற்று நேரம் பேச்சுத் தொடர்பு இல்லாதவாறு இருக்கும்படி அவன் செய்துகொண்டிருந்த வேலையும் இருந்தது. ஒரு சூனிய உணர்வு மனத்தில் சூழ்ந்துகொண்டதைப் போன்றதொரு தாக்கம், கிழங்குகளை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்த அவனுக்கு அப்பொழுது ஏற்பட்டது. ஏதோ தனிமைப்பட்டுப் போனமாதிரி ஒருதவிப்புவர அதை நிவர்த்திக்க வழி ஏதும் உண்டா என்று தனக்குள் குழம்பியபடி உபதேசியாரை அவன் உற்றுப்பார்த்தான். 'தம்பீன்ர மனச நான்வந்து இப்பிடீயெல்லாம் சொல்லிக் குழப்பிவிட்டிட்டனோவெண்டு நான் யோசிக்கிறன் தம்பி!” அவர் தன்னைத்தானே குறைப்பட்டுக் கொண்டது மாதிரிச் சொல்லிக்கொண்டார். "அப்பிடி ஒண்டும் இல்லை ஐயா! நீங்க சொன்னதைக் கேட்டு மனம் கொஞ்சம் மனவருத்தப்பட்டாலும் இப்பதான் நான் நல்ல தெளிவாயிருக்கிறன் என்னையும் ஒருக்கால் நான் பரிசோதிச்சுப் பாத்துக் கொள்றத்துக்கு நீங்க சொன்னதெல்லாம் எனக்கு உதவியா இருக்கிறதாத்தான் நான் இப்ப நெக்கிறன்!” "இதெல்லாம் உம்மட நல்ல குணத்த வெளிப்படையாத்தான் காட்டுகுது நீர் முன்னேற்றமா வர இதெல்லாம் உதவும்” அவர் ஆனந்தப்பட்டவாறு சொன்னார்.
"அப்ப உதில இருந்து உங்களுக்குத் தேவையான கிழங்க நீங்க எடுங்கையா கிழங்கு இப்ப வெட்டியும் முடியுது” "அதுக்கென்ன நான் எடுக்கிறன்! ஆனாலும் விக்கிற இதிலயிருந்து நான் முதல் எடுக்கிறதால நீர் இதை நிறுத்தெல்லே எனக்குத் தரவேணும், காசையும் கையில வாங்கவேணும்?” "அது தேவேல்ல ஐயா!” அவன் சிரித்தான். "இங்க இதென்ன தம்பி நீர் செய்யிற வேல! நீர் நிறுத்து அப்பிடித்தந்து காச வாங்கும்?” "ஐயோ அப்பிடியொண்டும் தேவயில்ல ஐயா! நீங்க உதுக்க உங்களுக்குத் தேவையானத எடுங்கோ.” அங்கு அவர் வரும்போது கொண்டுவந்திருந்த உமல் பையை அவன் கேட்டு வாங்கி அந்தப் பையைத் தூக்கிப்போகும் அளவுக்கு அளவுகணக்காக அதற்குள் கிழங்கைப் போட்டு அதை அவன் அவரிடத்தில் கொடுத்தான். "தம்பி இதால நான் வெளிக்கிடேக்க உங்கள்ண்ட அம்மாவயும்
്. ി. ട്രങ്ങൾ O 98 O

ஒருக்காப்பாத்து அவவுக்கும் சொல்லிப் போட்டுத்தான் நான் போவேணும். இவ்வளவு கிழங்கக்காசும் வேண்டாமத் தந்திருக்கிறியள்.? எனக்கு மனம் ஒரு மாதிரிக் கிடக்குத் தம்பி” கவலைப்பட்ட மனத்தோடு சொன்னார் அவர். "இதெல்லாத்தையும் பெரிசா ஏன் நீங்கள் நினைக்கிறியள் ஐயா? நீங்களே ஒரு வருமானமில்லாம எதயும் எவரிட்டயும் எதிர்பாக்காம கோயிலுக்குத் தொண்டு செய்யிறியள். ஊருக்கவுள்ள ஆக்களுக்கெல்லாம் ஏலுமான சரீர உதவியளெல்லாம் செய்து குடுக்குறியள். அப்பிடிக் கொத்த உங்களுக்கு நாங்கள், இந்த வளவுக்க நிக்கிற கிழங்குத் தடிய இழுத்துத் தந்து போட்டுக் காசு வாங்கிறதே?” அவன் சொல்லிவிட்டு நேசமாய் அவரைப் பார்த்துக் கொண்டு சிரித்தான். 'தம்பி உமக்கு நல்ல வெள்ள மனம் உம்முடையப்பா இளம்வயசில இறந்து போனாலும், உம்மடை அம்மா குறை தெரியாம பாதிப்புத் தெரியாம உம்மை எவ்வளவு அருமையா வளந்து விட்டிருக்கிறா எண்டுறது உம்மட ஒவ்வோரு நடவடிக்கேயிலும் எனக்குத் தெரியுது! அப்ப வெளிக்கிடுவமே தம்பி?” சொல்லியதோடு அவர் அந்த உமல் பையைக் கைப்பிடித்துத் தூக்கினார். “சரியான பாரந்தானிது உமல் சரியாக் கனக்குது!” "இங்க உதத்தாங்கோ நான் இதைத் தூக்கிக் கொண்டந்து அங்கால போய்த்தாறனே உங்களிட்ட” ta “வேணாந்தம்பி என்ர வீட்டுக்குத் தேவையான சாமான்கள முந்தி நான் தலைச்சுமையிலேயே கொண்டு போறனான். நானும் ஓரளவு பாரந்துக்கி நடப்பன்!” அவர் உமலைத்தூக்கி கையில் பிடித்துக் கொண்டார். “அங்காலையும் இத நான்தானே காவிக் கொண்டு போக வேண்டியும் வரும். நீர் வாரும்?” சொல்லிவிட்டு அவர் உமலைக் கொண்டு நடக்க அவனும் அவரது காலடிக்குத்தக் கவாறு தன் நடையையும் வைத்துக்கொண்டு நடந்தவாறு, அவரைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு முன்னுளஸ் முற்றத்தடிக்கு வந்தான். அவர்கள் இருவரும் அவ்விடத்துக்கு வரும்போது, அத்தருணம் அன்ரனின் தாய் அமுதமும் வீட்டு வாசற்படியிலே வந்து நின்று கொண்டாள். "வாருங்கோ உபதேசியார் கொஞ்சம் இதுக்கவா வந்திருந்து காலாறக் கொஞ்சம் இருந்து பேந்து தேத்தண்ணியும் குடிச்சுப்போட்டு நீங்க போகலாந்தானே? அன்பானதோர் உபசரிப்புக்கு அமுதம்தான் ஒரு முன் உதாரணம் என்கிற மாதிரியாக இருந்து அவரை அவள் அழைத்தபோது, உபதேசியாருக்கு அப்படி எண்ணத் தோன்றியது. "இருக்கட்டும் பேந்து பாப்பம் பிள்ளை! இப்ப எனக்கு வீட்ட போக இருக்கிறதால இனியும் நிண்டு கொண்டிருக்க நேரம் போகுதம்மா. இப்ப கண்டியளோ அங்கின கோயில் வேல எனக்குக் கணக்கக் கிடக்கு. றம்பைக்குளம் பக்கம் போய் அங்க வீடுகளில தாபரிப்புப் பணம் அறவாக்க வேணும்! அதோட கிட்டடியில கோயில் பெருநாளும் வருகுதெல்லே? அதுக்கும் ஆக்களிட்டக் கேட்டு பெருநாள் காசு வாங்க வேணும். அந்தோனியார் கோயில் கொடியேற்றம் ஆனி மாதம் நாலாந்தேதி தங்கச்சி! அது ஞாபகம் இருக்குத்தானே உங்களுக்கும்?” என்று அவர் அமுதத்தைப் வரழ்க்கையின் ரிறக்கஸ் O 99 O

Page 60
பார்த்துக் கேட்டார். "என்னையா கோயில் பெருநாளை ஆரும் மறப்பினமோ? பதின்மூண்டாம் தியதியெல்லே அந்தோனியாற்றை பெருநாள்?”
"ஒமோம் அது சரி அதில ஒன்பதாவது நோவினை உங்களின்ரை!” அவர் சொல்ல அமுதம் அதற்குத் தலையாட்டினாள். "அப்ப இந்த முறையும் ‘வேஸ்பர்’ பாட சுவாமிமாரும் வேற மீசாம்களிலயிருந்து இங்கவருவினமோ?” - அன்ரன் அவரைக் கேட்டான். "வராம என்ன? ஒவ்வொரு முறையும் பெருநாள் உந்தக் கோயிலில அப்பிடித்தானே தம்பி நடக்கிறது! திரிகால மணியடிச்சு உந்த வாத்தியங்களெல்லாம் முழங்கத்தானே 'வேஸ்பர் துவங்கும். நோவினை காரற்றை சோடினையளில கோயில் என்ன மாதிரி வடிவா இருக்கும் எண்டு உமக்குத் தெரியும்தானே? அதோட பீடத்தில இருந்து முகப்பு ஈறா வெள்ளை விரிப்பெண்டும் எத்தினை மாரியாதை அந்த அந்தோனி முனிக்கு இந்தப் பெருநாள் முழுக்கக் கோயிலில மனோகரமான காட்சிதான் தம்பி என்ன செய்யிறது அப்ப உங்கட அப்பாவும் கோயிலில திரைவிடுகவி படிச்சவர் இப்ப அவர். ம். இல்ல.!” தன் கணவனைப்பற்றி உபதேசியார் சொல்லக் கேட்டதும் அமுதத்தின் மனம் கவலையில் கரைந்தது.
é á
ம். அவரிருந்திருந்தா இப்பவும் இதுகள சிறப்பாகச் செய்வார் உபதேசியார்!” - அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னாள். "அது சரிதான்! அவரிருந்தாச் சிறப்புத்தான்! ஆனாலும் என்ன செய்யிறது? எல்லாம் கடவுள் சித்தந்தானே பிள்ள! இப்ப உங்கட மகன் இருக்கார் தானே? அப்பாமாதிரி உருவசருவசாங்கமான இவர் உங்கட மகனும் கெட்டிக்காரர்தானே எல்லாத்திலயும்.” உபதேசியார் அவ்வாறு சொல்லல அன்ரன் தாயின் முகத்தைப் பார்த்தான். அவளது முகம் மகிழ்ச்சியில் தாமரை போல் மலர்ந்திருப்பதை அப்பொழுது அவன் கண்டுகொண்டு நிம்மதியடைந்தான். உபதேசியார் அந்த நேரம் வேலிப்படலைப் பக்கம் பார்த்தார். பத்துப் பெண்கள்வரை அந்த வேலிப்படலைக்குப் பிறகாலே, வெறுங்குடங்களை வைத்துக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு: "தம்பி அந்தப் பிள்ளையஸ் தண்ணிருக்கெண்டுவந்து படலையடியில அங்க நிக்குதுகள் போல.” - என்று அன்ரனுக்கு அதை எடுத்துச் சொன்னார். அன்ரன் உடனே அந்தப் பக்கமாகப் பார்த்து: “படலையைத் திறந்து கொண்டு உள்ள வாறதுதானே. ஏன் தண்ணிக்கெண்டு வந்தனியள் படலையடியில நிண்டு தூங்குறியள்?’ என்று சொன்னான். "நான் அங்க உதுகளின்ர பானையஞக்கு கிணத்தில தண்ணியள்ளி ஊத்திவிடட்டுக்கே தம்பி? நீர் இப்ப வெளிய போறதெண்ட மாதிரி அப்ப சொன்னீர்? அதால உதுகளில நிண்டு நீர் மினக்கெட நேரம் போயிடாதே?” - அமுதம் மகனைப் பார்த்துக் கேட்டாள். “இல்லையம்மா! நான் பாத்து உதுகளுக்கு இப்ப கொண்டாற பானையளுக்கு தண்ணியூத்திவிட்டுட்டுப் போறன்! நீங்க உங்களிண்ட வேலையளப் பாருங்கம்மா’ அவன் சொல்ல அவர்கள்
jෂ්. ශ්‍රී. ලාංබ්‍යගvගvණිග(b O 100 O

இருவரினதும் கதையை நின்றுகொண்டு கேட்டுவிட்டு உபதேசியார் மெல்லச் சிரித்தார். "தாயும் பிள்ளையுமிருந்து ஆளையாள் சளைக்காம பிறத்தியாருக்கு உதவுற வேலையளில முன்னுக்காய் நிக்கிறியள்! நல்ல சீவன்கள்தான் நீங்க ரெண்டுபேரும் அப்ப நான் இனி வெளிக்கிடுறன்ரா பிள்ள?” ஒரு புகழ்ச்சி மாலையை இருவருக்குமாய்ச் சூட்டிவிட்டு, உபதேசியார் அந்த இடத்திலிருந்து கிழங்கு போட்டுக் கட்டிய உமலோடு நடையைக்கட்ட வெளிக்கிட்டார். “உபதேசியார் நீங்க மறக்காம அடுத்த கிழமை முடியவந்து கோயில்காசு சகலத்தையும் இங்க எங்களிட்ட வாங்கிப் போடுங்கோ” என்று அதை உபதேசியாருக்கு ஞாபகப்படுத்திச் சொன்னாள் அமுதம் “ஓம் நானெண்டா மறக்கமாட்டன் பிள்ள! நீங்க சொன்ன நாளுக்கு நான் சரியா இங்கவாறன்! இப்ப நேரம் போகுது நான் போயிற்றொருக்கால் ஆறுதலா அந்த நாளையில இங்க வாறனே?”
அவர் வெளிக்கிட, அன்ரன் அவரை வேலிப்படலையடி மட்டும் கூட்டிக் கொண்டுபோய், அதிலே நின்று படலையைத் திறந்து அவரைப்போக வழியனுப்பி வைத்தான். அவர் போனபிற்பாடு படலைக்கு வெளியே நின்ற அந்தப் பெண்களெல்லாம், தாங்கள் வைத்திருந்த வெறும் பானைகளுடன் வரிசை பிடித்து விட்டதுமாதிரி அங்கேயிருந்து நிரையாக நடந்து உள்ளே வந்தார்கள். அவர்கள் கிணற்றடியில் கொண்டுவந்து வைத்த குடங்களுக்கு துலாவாளியால் கிணற்றில் தண்ணீரள்ளி, அவன் நிறைய நிறைய அவற்றில் தண்ணிரை ஊற்றி விட்டான். அவர்கள் தண்ணீர் நிரம்பிய தங்கள் குடங்களைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு, தங்களுக்குள் சிரிப்புகளும் கதை பேச்சுகளுமாக அந்தக் காணிப்படலையைத் திறந்துகொண்டு வெளியேறினார்கள். அவர்கள் என்னதான் சிரித்தாலும் கதைத்தாலும், நடையில் உடல் அசைந்தாலும், தலையில் கொண்டு போகின்ற அந்தப் பானைகளிலுள்ள தண்ணீர் தளம்பாமலும் வெளிச்சிந்தாமலும் இருந்தது. அந்தளவுக்கு பானைகளைத் தலையில் பக்குவமாக வைத்துச் சுமந்துகொண்டு கதைகள் பல சொல்லிச் சிரித்தவாறு அவர்கள் தங்கள் வீட்டுக் போகின்ற அந்த வீதியால் நடந்து போனார்கள்.
օJԱՔ
வராதுபோல் வந்த மாமணியாக நல்ல அடர்மழை இரவு முழுக்கவும் பெய்து, சமளங்குளம் என்ற கிராமத்தை குளிர்வித்து விட்டு ஓய்ந்து போனது. மழை நின்றிருந்த அந்த நேரம் பொன்னுத்துரையின் மாட்டு வண்டில் “சல், சல்”லென்று மணிச்சத்தம் போட்டுக்கொண்டு சமளங்குளம் கிராமத்து வீதியில் வந்து கொண்டிருந்தது. மாடுகளை விரட்டியபடி வண்டிலைப் பொன்னுத்துரை ஐயா ஒட்டிக் கொண்டிருக்க, அன்ரன் அதிலே ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு விடியும் அந்தக்காலை
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 1 0 1 O

Page 61
வேளையில் மழைக்குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டு, சூழவும் உள்ள இயற்கைக் காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். வண்டில் போகின்ற அந்த வீதியிலே நின்ற சில காட்டு மரங்கள், இலைகளையே தமக்கிடமாகிக் கொண்டு சித்திர விசித்திர வண்ணப் புஷ்பங்களைப் பூத்திருந்தன. அவன் ஈரித்துக் குளிர்ந்த பூக்கள் நிறைந்த அந்த அழகான காட்சியைப் பார்த்தான். அந்த வீதியெங்கும் இடையிடையே அந்த மரங்களிலிருந்து பூக்கள் உதிர்ந்து நிலத்தில் புதுக்கோலம் போட்டிருந்தன. நல்ல வெய்யில் அடித்து சில மாதங்களின் பின் மழை பெய்ததால், வேப்பமரம் ஏராளமான இலைகளையும் காய்களையும் உலர்ந்து உதிர்த்து தரையெல்லாம் படர்ந்திருந்தது. சில இடங்களில் மைச் சிந்தல் போல் கருநாவற்பழங்கள் நிலத்தில் பரவிக் கிடந்தன. நாவல் பழத்துக்குச் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் பறவைக் கூட்டங்களின் ஒலிகள் வரவர முற்றிக்கொண்டே வந்தன. சற்றைக்கு சிறிது நேரம் முன்னால்தான் மழை விட்டிருந்ததால், அங்குள்ள மரங்களின் கிளைகளின் இலையெங்கும் வெள்ளி தங்க ரச குண்டுகளாய் தண்ணீர் ஒட்டிக் கிடந்து ஜொலித்தன, அந்த வீதியெங்கும் மழைக்குப் பிறகு யாருமே கிறங்கிப் போகும்படியாக, வேப்ப மணம் மண் வாசனையோடு கலந்து வீசிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டுவந்த அவனது மனத்தில், மகிழ்ச்சி சொல்லொணாத அளவில் கரைபுரண்டது. அந்த மகிழ்ச்சியில் அவன் திழைத்திருக்க, சிறிது நேர வண்டிலோட்டத்தின் பின், வெட்ட வளி பொட்டைக் காட்டைத் தாண்டி அண்டாகரமான வயல் காடு அவன் கண்பார்வையை அங்கே ஈர்த்தது. அங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொத்தமான கதிர்களுடன், நெல் மணிகள் பழுத்துச் செழித்து விளைந்திருப்பதை அவன் அப்பொழுது பார்த்தான். அந்த நெல்லின் முற்றிய தாள்களின் இதமான மணம் வெளியெங்கும் காற்றில் கலந்து வீசிக் கொண்டிருந்ததால், அது அவன் நாசியிலும் புகுந்து இன்ப மகிழ்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. வெள்ளமாய் விளைச்சல் பொங்கிப் பெருகியிருந்த அந்த வயல் காட்டை பார்த்ததும் அதன் செழிப்பைப் பார்த்து "அடே.யப்பா..!!” என்று வியந்து மாய்ந்து போனான் அவன். பொன்னுத்துரை ஐயாவும் கமபுலம் வைத்திருப்பவர். அவரும் அந்தப் பக்கம் நிறைமாசக் கர்ப்பிணியாக முற்றித் ததும்பி நிற்கின்ற அந்த வெள்ளாமையைப் பார்க்காமலில்லை. "தம்பி பாத்திரே உந்த வயலின்ரை விளைச்சல? எருவுள்ள நல்ல மண்ணில முளைச்சவுந்தப்பயிர் திடமாய் பூஞ்சையில்லாம வளந்திருக்கு, நெல் மணியெல்லாம் அசலாப் பால்கூட்டி அந்தமாதிரியா நல்லா முத்துக் கோத்திருக்கு உதில விளைஞ்சிருக்கிற நெல்லு நல்ல நெருக்கமாப் பிடிச்சிருக்கிற மாதிரித்தான் தெரியுது. இந்த மாவட்டத்துக்குள்ள வயல் வெள்ளாமயில கூடுதலான இடம் இந்தச் சமளங்குளம்தான் தம்பி! இந்த இடம் அப்பிடியான நல்ல மண் கண்டம், இங்க உள்ளவயின்ர மாட்டுப் பட்டியளில ஒரு கிழமைக்கொருக்காப் பட்டி வளிச்சா மாட்டெரு ரெண்டு லொறி லோட்டுக்கு வரும். அப்பிடியாயிருக்கேக்க சாணி சகதி குப்பையெல்லாம் எருவாய்ப் போட்டு
Noმ. ტ. ლStტიrOkgroზptბ O 102 O

இவையள் செய்யிற வயல் வெள்ளாம, எப்பிடி விளையுமெண்டு நீரொருக்கா நெச்சுத்தான் பாருமன்? இப்பிடி கனமா பசளை குடுத்தா, பயிர் தளதளவெண்டு வந்து விளைச்சல வீசும்தானே?”
"இந்த ஊரில வசதியான ஒருவரிண்ட வயல் காணியா இது இருக்கும் என்னையா?” அவன் மொசு மொசு' என்றிருந்த அந்த வயலைப் பார்த்தபடி அவரைக் கேட்டான். “ஓம் அவர் நாகராசாவின்ர வயலாத்தான் இதுவும் இருக்குமெண்டு நான் நெக்கிறன் ஒண்ட மண்ட சாதி சனமெண்டு அவயளும் அவயின்ரை ஆக்களுந்தான் உங்க ஊருக்க உள்ள பழைய ஆக்கள்! அவர் நாகராசா லேசுவாசான ஆளில்ல! அவரிட்டத்தானே நாங்களும் இப்ப மாடு பாத்து அவுக்கப் போறம். அங்க வந்தாப் பிறகு நீர் பாரும், அவற்றை பட்டியில எவ்வளவு மாடு கண்டு நிக்குதெண்டு.” சொல்லிவிட்டு சோர்ந்து நடைபோட்டுக் கொண்டிருந்த மாடுகளை "ஹய். ஹாய். ஐக். ஐக் ஜிஜ்ஜிஜஜ்" என்று தன்னுடைய ஒருவித சங்கேதப் பாஷையில் அவர் அவைகளைக் கலைத்தார். அவருடைய சத்தத்தைக் கேட்டு, வயல் வரப்பில் இருந்த மடையான்கள் மிரண்டு போய்ப் பறந்து அடுத்த வயல் தலைமாட்டில் போய் உட்கார்ந்திருந்தன. அந்த மாடுகள் முன்பு அந்த வீதியிலே வண்டில்கள் போன தடத்தில் கால் பதித்து ஓடிக் கொண்டிருந்தன. அவற்றின் கழுத்து மணிகள் ஓட்டத்துக்குத் தகுந்ததாய் “கல், கல்” என்று ஒலி செய்து கொண்டிருந்தன. அவன் நிறையத் தெரிந்த அந்த வெளியைப் பார்த்துவிட்டு, மீண்டும் மறு பக்கமுள்ள அந்த மரங்களைப் பார்த்தான். அந்த மரங்களிலே தம் குரல்களை இயன்ற வரை பயன்படுத்திக் கொண்டு, அணில்கள் கிளைகளில் அங்குமிங்குமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தன. அதைப் பார்க்கவும் அவனது மனத்துக்கு லேசாக இருந்தது. அந்த அணில்கள் கழுத்துப் புடைக்கக் கத்துவது, கேட்கக் கிடைக்காத சங்கீதமாய் அவனுக்கிருந்தது. “ஊருக்கயா நாங்க இப்ப நெருங்கி வந்திட்டந்தம்பி!” ஐயா அவனைத் திரும்பிப் பார்த்து இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் முன்னாலே பார்த்துக்கொண்டு மாடுகளைக் கலைத்தார். மழை நன்றாக இரவு பெய்திருந்ததால் ஊருக்குள் வரும்போதே சாணக்கழிசலின் புழுக்கமான நெடியும், மூத்திரக்கவிச்சை வாசமும், இருவரது மூக்குகளிலும் வந்து குப்பென்று அடித்தது. "ஒரு மாதிரி அப்ப நாங்க நேரத்துக்கு இங்கின வந்து சேந்திட்டம் என்னையா?” என்றான் அவன். "பின்ன அதுக்குத்தானே நான் இந்த மாடுகளை ஓட ஓட விரட்டிக் கலைச்சுக் கொண்டந்தன் தம்பி! நாங்கள் அவரிட்ட வாறம் எண்டு சொல்லியனுப்பினதுக்கு அந்தாளும் இங்க தன்ர மேச்சல் மாடுகள பட்டியால இருந்து காலத்தால திறந்து விடாம அடைச்சு வைச்சிருப்பார், நேரத்தோட நாங்க இங்க வந்தாத்தானே மாடுகளைப் பாத்தும் புறிச்சுக் கட்டிப்போட்டு, பிறகு அதுகளைப் பட்டியால திறந்து விடலாம். அந்தாள் எங்கள நம்பி இதெல்லாத்தையும் செய்யேக்க நாங்களும் ஒழுங்கா அதுமாதிரி நடக்கத்தானே தம்பி வேணும்? அப்பிடி இல்லாட்டி இன்னொரு நேரம் நாங்கள் சொல்றதை அவயள் கேப்பினமே? எங்களயொரு மனுசரா
arbánnou6ak řípyback O 103 O

Page 62
பேந்து மதிப்பினமே அவயள்?” அவர் சுருதிபிழைக்காது அவனுக்கு விளங்குமாறு சொன்னார். "ஐயா நீங்க இப்ப சொன்னது நூற்றுக்கு நூறு சரி இப்பிடியா நடக்கிறதான் எனக்கும் விருப்பம்!” அவன் சொல்ல அவர் சிரித்தார். அவன் தன் மோவாயை உயர்த்தி மேலே பார்த்தான். மேலே இடி மேகங்கள் முற்றிலும் சிதறிப்போய் விட்டன. பெய்து தீர்ந்த வானம் அலசி விட்டதைப்போல் சுத்த நீல மயமாய், நிர்மலமாய் விரிந்து கிடந்தது. அந்த நீல நிற ஆகாயத்தில் ஒரு வெள்ளைப் பறவை போல, தனிமையாக ஒரு மேகம் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அந்த மேகத்துக்குக் கீழே பசிய கால்களையுடைய வயசாளி வெள்ளைக் கொக்கு ஒன்று, கத்திக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. அதற்குக் கீழே மழைக்குருவிகளும் தாழப் பறந்து கொண்டிருந்தன. ஒரு குருவி அவர்களது வண்டிலை ஆரத்தி சுற்றிவிட்டு மேற்கு நோக்கிப் பறந்தது. கிழக்கு வானில் சிறிய நங்கூர வடிவத்தில் சில பறவைகளும் பறந்து கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்துவிட்டு.
s
“மழை நல்லா வெளிச்சிட்டுதய்யா.” என்று அவன் மகிழ்ச்சியாகச் சொன்னான். “எங்களுக்கும் காலம் நல்லதுக்குத்தான்! இங்க நாங்க நிண்டு மாடுகள அவிட்டாலும் அதுகள எங்கட இடத்துக்கு நடத்திக் கலைச்சுக்கொண்டு தானே போவேணும்? அதுக்கு மழைவந்து நெடுகப் பிடிச்சா எவ்வளவு கரைச்சல்?” வண்டில் அந்த வீதியில் ஒரு ஏற்றத்திலேறி இறங்கியது. அது இறக்கத்தில் இறங்கும்போது இருவருக்கும் முதலில் கண்களில் தென்பட்டது ஒரு குடிசை அந்தக் குடிசையின் வைக்கோல் கூரைமீது சருகுகள் விழுந்து மட்கிப் பரவி, அதன்மீது நெற்களும் சிறு செடிகளும் முளைத்துத் திட்டுத் திட்டாகப் பச்சையாகத் தெரிந்தது. அந்தக் குடிசையின் பக்கமுள்ள வீதியாலே வண்டில் போக, அன்ரன் அந்தக் குடிசையின் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் குடிசையின் உள்ளே இருந்து அப்போது, உரலில் உலக்கை ஆவேசமாக விழும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அந்த குடிசை கடந்து வண்டில் சென்று கொண்டிருக்க, இன்னும் அங்கே பல பெரிய வைக்கோல் கூரை வீடுகளை அவன் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவைகளையும் கடந்து கொஞ்சம் தூரம் சென்றதன் பின்பு, ஒட்டி அடர்ந்த மரங்கள் கொண்ட தோப்பு உள்ள காணிக்கு முன்னாலே ஐயா வண்டிலைக் கொண்டு வந்து நிறுத்தினார்.
“இதான் தம்பி நாகராசற்றை வீடு. வண்டிலை இதில நாங்க விட்டிட்டு மாட்டையவிட்டு மரத்தடியில கட்டிப்போட்டு உந்தக் காணிக்கால அவற்ர வீட்டிற்கு நாங்க போவம்" அவர் சொல்லவும் வண்டிலுக்குப் பின்புறமாக அவன் உடனே கீழே இறங்கிவிட்டான். ஐயாவும் இறங்கி வண்டில் குத்துக் கம்பை நிலத்தில் விரியப் போட்டுவிட்டு, ஒரு பக்க நுகத்திலிருந்து மாட்டை அவிழ்த்தார். அவனும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காமல், தானும் அவருடன் சேர்ந்து கொண்டு மற்றைய மாட்டை அவிழ்த்து அதன் பிடிகயிற்றைக் கையில் பிடித்தான். அவர் மாட்டைக் கொண்டு போய் அந்தப் பெருமரத்தடியில் உள்ள வேரில் கட்டினார். அவனும்
சீ.பி. அருஸ்ணத்தம் O 104 O

தான் அவிழ்த்த மாட்டைக்கொண்டுபோய் ஐயா கட்டின மாட்டுக்குக் கொஞ்ச தூரம் தள்ளியதாய் அதைக் கட்டிவிட்டான். பிறகு அந்தக் காணிப்படலையைத் திறந்துகொண்டு அவர்கள் இருவரும் உள்ளே போனார்கள். மா, பலா, வாழையென்று அந்த காணி முழுவதும் கனிதரும் மரச்சோலையாகவிருந்தது. அந்தத் தோப்புக்குள்ளாலே பொடு பொடென்று அவர் முன்னால் நடந்துபோய்க்கொண்டிருக்க, அவருக்குப் பிறகாலே அவனும் நடந்து கொண்டிருந்தான். வேலிப் படலையிலிருந்து கொஞ்ச தூரம் அந்தத் தோப்புக்குள்ளாலே நடந்து போன பின்புதான் நாகராசாவின் வீடு அவர்களுக்குத் தெரிந்தது. அவர்களைத் தங்கள் கண்ணால் காண்பதற்கு முன்னாலேயே, அங்கே கட்டில் கிடந்த அந்த வெளிர்ச்சிகப்பு நிறமுடைய இரண்டு நாய்களும் உர்ரென முறைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டன. நாய் தொடர்ந்து குரைக்கவும், வெளியே முற்றத்தடியில் இருந்து மரக்கட்டையில் ஒரு லயம் வைத்தவாறு கத்தி தீட்டிக் கொண்டிருந்த நாகராசாவுக்கு, மனத்தில் நம்பிக்கை சுடர் விட்டது. அப்படியே தீட்டிக் கொண்டிருந்த கத்தியை அவ்விடத்தில் வைத்துவிட்டு “ஆக்கள் வந்திட்டினம் போல.” என்று தனக்குத்தானே வாயால் சொல்லிக்கொண்டு, படலைப் பாதையடிக்கு வாலிபமிடுக்கோடு அவர் நடந்து வந்தார். ஐயா அங்கே தன்னிடம் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் நாகராசாவுக்கு சந்தணத்தை நெஞ்சுக்குள் தடவியது போல் குளிர்ந்தது. தன் தங்க அடைப்பு இடப்பட்ட பற்களைக் காட்டி முழுவாயும் விரியும் படியாகச் சிரித்துக் கொண்டு “வாங்கோ ஐயா வாங்கோ.” - என்று முகமலர்ந்து அவரை வரவேற்றார். அன்ரன் அவருக்குப் புதிய முகம், ஆனாலும் அன்ரனையும் "வாங்கோ வாங்கோ” என்று பண்பாக அவர் வரவேற்றார். “நல்லோரு மழை பெஞ்சிருக்கு என்ன நாகராசா உங்கட ஊருக்குள்ள?” “உங்கள மாதிரி நல்ல மனுசர் ஊருக்குள்ள கால் வைச்சா, மழைத் தண்ணியில்லாத வலுத்த கோடயிலும் மழை பெய்யும் தானே? நாகராசா ஐயா சொன்னதுக்குப் பதில் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு ஆகாயத்தை நோக்கி கடகடவென்று சிரித்தார் பொன்னுத்துரை. அவருடைய வெண்நிறமான மீசையோடு பற்களின் ஒளி போட்டியிட்டது. "அப்பிடி என்னையும் நீங்க ஒரு கணிப்பு வைச்சிருக்கிறியள்?” "இல்லாமலென்ன நான் சொல்லுறதென்ன பொய்யே? உங்கட மரியாத இங்க வவுனியாவில வேறாருக்கிருக்கு? நீங்க இந்த உலகம் முழுக்கத் தெரிஞ்சாள்! அதயில்லையெண்டு ஆருஞ்சொல்லேலுமே? உங்களோட வண்டில் சவாரியில ஆரும் கிட்ட நிக்கேலுமே?” நாகராசா அவரைப் புகழ்ந்தார். ஐயா உள்ளூரக் கூச்சப்பட்டுக்கொண்டு: கூடக்குறைய என்னப் புகழ்கிறியள்!” - என்றார். "அப்பிடியா ஏன் நாங்க சொல்ல வேணும்? ஊருலகஞ் சொல்றதத்தானே நானும் சொல்லுறன்! என்னாம்பி நான் சொல்றது சரியோ பிழையோ?” அன்ரனைப் பார்த்தும் நாகராசா கேட்டார். அவன் அவர் சொன்னது உண்மைதான் என்றாற்போல தலையாட்டினான். 'தம்பி ஆர்?’ ஐயாவை நாகராசா கேட்டார்.
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 105 O

Page 63
''
"அவரெங்கட பிள்ளைதான்! எங்கட பக்கத்து வீடு" ஐயா சொன்னபோது அன்ரனைப் பார்த்தும் ஒரு இளஞ்சிரிப்பை உதிர்த்தார் நாகராசா. நாகராசா மிகவும் வசதி படைத்தவரென அவரது வீட்டைப் பார்த்தபோது அன்ரனுக்கு விளங்கியது. அந்தக் கல் வீட்டுக்கு அறைகள், கூடங்கள், வாசல்கள் எல்லாம் நல்ல அகல நீளம் வைத்துக் கட்டியிருப்பது போல வெளிப்பார்வைக்குப் பார்க்கும் போதே அதெல்லாம் அவனுக்கு விளங்கியது. அந்த இனம் தெரியாத கலப்பின நாய்கள் இன்னமும் விடாமல் உரக்கக் குரைத்துக் கொண்டிருந்தன. "ஏய்ப் பேசாமலிரு.” என்று அவைகளைப் பார்த்து பெரியதொரு அதட்டல் சத்தம் போட்டார் நாகராசா. ஆனாலும் குரைப்பதை விடவில்லை அவைகள். அவற்றின் பார்வையும் மோப்பம் பிடிக்கும் திறனும் மிகக் கூர்மையாக உள்ளதான நாய்களாக அன்ரனுக்கும் ஐயாவுக்கும் அவைகளிரண்டையும் பார்த்தபோது தெரிந்தது. அந்த நாய்களில் ஒரு நாய் குரைக்க மற்ற நாய் வாழைப்பூ மடல்கள் போல் தன் காதுகளை விறைப்பாக வைத்துக் கொண்டவாறு உறுமிக்கொண்டிருந்தது. பிறகு உறுமிக்கொண்டிருந்த நாய் குரைக்க, அடுத்த நாய் உறுமிக்கொண்டிருந்தது. “வரேய்க்க மழைக்க நனைஞ்சீயளே ஐயா?” - நாகராசா அக்கறையுடன் ஐயாவைப் பார்த்துக் கேட்டுவிட்டு அதே நேரம் அன்ரனையும் ஒருக்கால் பார்த்தார். "நனையிறது வெயிலில காயிறது எல்லாம் கமக்காரனுக்கு ஒண்டுதானே!” சொல்லிவிட்டு ஐயா சிரித்தார். அன்ரனுக்கும் புன்னகைமாதிரி உதடு நெளிந்தது. “குளிருக்குக் கோப்பியை எண்டாலும் குடியுங்கோ? வாங்களன் உள்ள வீட்டுக்க இனிப்போயிருந்து கதைப்பம்?” - என்று கூப்பிட்டார் நாகராசா. “கைகாலக் கழுவிக் கொள்ளுவம் முதல்ல! அதுக்குக் கிணத்துப்பக்கம் போவமே?” சேறு படிந்த தன் காலைப் பார்த்துக் கொண்டு அவர் சொன்னார். “அதுக்கேன் கிணத்தடிக்குப் போவான்? உந்த வாழையடியில உள்ள றம்மில நிறைச்சுவிட்டிருக்குத்தானே தண்ணீர்! அதில வடிவாக் கழுவலாம் வாங்கோ அவ்வடத்தடிக்குப் போவம்!” - என்று சொல்லி அவர்களை அவ்விடத்துக்குக் கூட்டிச் சென்றார் நாகராசா.
கை, கால் முகத்தை அங்கே அவர்கள் கழுவிக் கொள்ளவும் அவர்களை வீட்டுக்குள்ளே அவர் அழைத்துச் சென்றார். அங்கே உயர் முதுகுடைய நாற்காலிகளைக் காட்டி, அதிலே அவர்களை அமரும்படி சொன்னார் அவர். அதிலே அவர்களுக்கு இருக்கவும் சுகமாக இருந்தது. முதுகு சுகம் கண்டது. அந்தநேரம் அவருடைய மனைவியார் எல்லாருக்கும் கமகமக்கும் கோப்பி கொண்டுவந்து குடிக்கக் கொடுத்தார். அந்த வயதிலும் இடுப்பொடுங்கி, தசை இறுகிய உடற் கட்டு உடையவராக அவர் இருந்தார். முகத்தில் சுருக்கங்கள் நீங்கி, இளமை இறங்கி, விழிகளில் ஒளி கூடியதாய்த் தெரிந்த அவரைப் பார்த்துவிட்டு அந்தக் கிராம வாழ்க்கை அவர்களுக்கு அளித்துள்ள கொடையின் சிறப்பை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான் அன்ரன். அந்தக் கிராம வாழ்க்கை முறையின் வாசனை அப்போது மெதுவாக அவனுக்கு நினைவிற்கு வந்தது. கோப்பியை அவர்கள் தம்ளரிலிருந்து வாயிலூற்றிக் குடிக்கும்போது,
මී. ග්‍රී. ලාංNගvග්vúñó O 106 O

நாகராசா எதையோ ஒரு விஷயத்தை பொன்னுத்துரையரிடம் சொல்ல அந்தரப்பட்டுக்கொண்டு நிற்கின்றது மாதிரி இருந்தார். தம்ளரிலிருந்து கொஞ்சம் கோப்பித்தண்ணிரைக் குடித்துவிட்டு, பொன்னுத்துரை ஐயா நாகராசாவின் முகத்தைப் பார்க்க, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு: "நேத்து ரா இங்க ஊருக்க வயலுக்குப் போன ஒரு ஆளுக்கு ரத்த விரியன் கடிச்சுப் போட்டையா, உடன ஆக்கள் அவர இங்க கொண்டந்து என்ர மகன்தான் அவர உழவு மிசினில பம்பைமடுப் பாம்புக்கடி வைத்தியரிட்ட கொண்டு போனார்!’ என்று சொன்னார். "நேற்றநாள் பறுவமெல்லோ.” ஐயா உடனே அவரைக்கேட்டார்.
G6
ஓ அதுதான் நினைக்கச் சரியா எனக்குக் கவல. ஆளுக்கு அஞ்சும் இத்துணுாண்டு வளந்த சின்னப் பிள்ளையஸ்! ஆள் நேற்றைக்குப் பின்னேரமாய் இங்க என்ர வீட்ட வந்து என்னோட கதைச்சுப்போனவர். மரைக்காய்மாதிரி மனுசன் எல்லாவேலையும் செய்வார். உங்களுக்கு மாடுகளைப் பிணைச்சு நடத்திக்கொண்டு போறது கஸ்டமாயிருக்குமெண்டு அவரையும் இன்னும் ஊருக்கயிருந்து ரெண்டு ஆக்களையும் நான் ஒழுங்குபடுத்தி வைச்சிருந்தனான். ஆனா ஆளுக்கு. முருகா இப்பிடி ஒரு கெடுதல் ராத்திரிப் பாவம் நடந்திட்டுது’ - நாகராசாவின் முகம் இதைச் சொல்லும்போது வாடிப்போய்விட்டது. அதைக் கண்டுவிட்டு உடனே, "பம்பமடுப் பாம்புக்கடி வைத்தியரிட்ட வேளைக்குக் கொண்டுபோய்ச் சேத்தால் ஆள் உடன பிழைச்சிடும், அவரெந்த விசத்தையும் இறக்கிப் போடுவார் ஆள் வலு கெட்டிக்காறன்” - என்று நாகராசாவுக்கு தைரியம் சொன்னார் பொன்னுத்துரை. அன்ரனுக்கு, அந்த மனிதனுக்கு நடந்த அபத்தத்தை அவர்கள் இருவரும் மாறி மாறிக் கதைத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டிருந்ததில், குடித்துக் கொண்டிருந்த அந்தக் கோப்பியின் சுவைகூட நாவுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வயல் புல்களில் திரியும் விஷப் பாம்புகளை நினைக்க, பயத்தில் அவனுக்கு நாவும் கசந்தது. வயலில் பலகையடித்துப் பதனிட்டு பின் விதை தெளிந்து அது முளைவிடும்போது - அந்த முளையடிச்ச நெல்லை சிறகைப் பறவை தின்னாமல், காவல் கொட்டியில் கிடந்து காவல் காத்து; பிறகு அது விளைந்து அறுவடையாகிய பின் பலனை வீட்டுக்குக் கொண்டுசென்று சேர்க்குமளவில், ஒரு கமக்காரன் கோவணத்துணியுடன் நின்று எவ்வளவு முரட்டுப் பாடுகளையும், சொல்லொணாக் கஷ்டங்களையும் அனுபவித்துத் தள்ளுகிறான் என்று அவன் தனக்குள் நினைத்துக் கவலைப்பட்டான். கூடத்தில் இவர்களெல்லாம் இருந்து கதைத்துக் கொண்டிருக்கும்போது, கால் கொலுசுகள் ராகமிசைக்க அவ்விடத்தாலே ஒரு இளம் பெண்; தன் தலைப் பின்னலைக் கண்ணுக்கு இனிய கைகளால் பின்னிக் கொண்டே வந்து எதிரே இருந்த அறைக்குள் போகப் போனாள். அவள் அவ்விடத்தாலே போகும்போது, இவவென்ர கடைசி மோள்' என்று ஐயாவைப் பார்த்து நாகராசா அவளைக்காட்டிச் சொன்னார். அப்படிச் சொல்லும்போது நாகராசாவின் முகத்தில் மனநிறைவு ஒளிர்ந்தது. தகப்பன் சொன்னதைக் கேட்டுவிட்டு, அவருக்கு மரியாதை
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 107 O

Page 64
கொடுக்கும் முகமாக அதிலே முகம் சிவக்கிற பெண்ணாக அவள் ஒரு கண்ம் நின்றாள். அங்காலே இருந்த அவரைப்பார்த்து சின்னஞ்சிறு வெட்கச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, பிறகு அவள் அவ்விடம் விட்டு அகன்றாள். அவரைப் பார்த்துச் சிரிக்கும்போது அவளது கண் ஒரு கணம் தயங்கி, மின்னல் சொடுக்குகிற நேரம் அன்ரனையும்தான் சேர்த்துப் பார்த்தது. அவனைப் பார்த்தபோது அவளுக்கு எழுந்த உற்சாகப் பெருக்கு, இறக்கை அடித்து மகிழுகின்ற ஒரு மயிலைப் போல இருந்தது. அந்த நேரம் அன்ரனின் பார்வையும் தளிர்வாழை இலைபோல செழிப்பான அவள் முகத்தில் சுழன்றது. அவளது அழகான இமைகளின் புருவங்களின் ரோம அமைப்பு கறுப்பில் பளபளத்ததை அவன் பார்த்தான். அப்போது நீண்ட கறுத்த அவளது கண்ணிமைகள், பாதி மூடிய கண்களின் மின்னொளி தெறிக்கச் சிலிர்த்தன. மீனின் கண்களைப்போல் ஒளிகூடிப் பளிச்சிட்ட துயரமில்லாத அவளது கண்களைப் பார்த்துவிட்டு, விசயாவை ஒரு கணம் அவன் நினைத்தான். அக்கணம் சுருதி சேர்ந்தபின் வீணையை மீட்டுவதுபோல அவனுக்கு இருந்தது. அந்த நினைப்பில் விசயாவின் கண்கள் வெளிக்காட்டும் ஆழ்ந்த அந்தச் சோகச் சாயையின் காட்சி விரிந்தது. இதனால் முன்பு இருந்ததைவிட அவள் மீதுள்ள அன்பு இன்னமும் மிகைப்பட்டு அவளது நினைவு சில கணம் அவனது மனதுக்குள் நின்று விம்மிக் கொண்டேயிருந்தது. ஐயா கோப்பியைக்குடித்துவிட்டு காலியான அந்தத் தம்ளரை, தன் முன்னால் இருந்த விரிந்தமைந்த கால்களுடைய அந்தச் சிறிய மேசையின் மேல் இருந்த தட்டில் வைத்தார். "தம்பி நாகராசா ஏன் இங்க சும்மாயிருந்து நேரம் சுணக்குவான்! வந்ததோட வந்ததாய் நாங்க வேளைக்கங்க போய் ஆகவேண்டிய அலுவலப் பாப்பமே..? நேரத்துக்கலுவல் முடிஞ்சா வேளைக்கு நாங்க வீட்டபோய்ச் சேரவும் வசதியாயிடும்” - நேரம் போகிறதே என்ற அளவில் ஐயா அவதிப்பட்டார். "இப்பத்தானே பிரயாணத்தால வந்திருக்கிறியள்? கொஞ்சம் ஆறமர இருந்து போட்டு காலத்தால ஏதேனும் வயித்துக்குக் கொஞ்சம் சாப்பிட்டிட்டு அங்கயாப் போவமே?” நாகராசாவுக்கு தன்னுடைய வீட்டுக்கு வந்தவர்களை நன்றாக உபசரித்து அனுப்பவேண்டும் என்ற அக்கறைதான் மனத்தில் அதிகம் இருந்தது. "அதெல்லாம் நாங்க அங்கபோய் உள்ள அந்த வேலயள முடிச்சு இங்க வந்தாப்பிறகு ஆறுதலாவிருந்து சாப்பிடுவம், இதெல்லாம் இப்ப முக்கியமில்லத்தம்பி, அங்க நீங்க பட்டிவழிய மாடுகண்ட அடச்சு வைச்சிருப்பியள், அதில நாங்க போய்ப் பாத்து தேவயான மாடுகண்ட பட்டியில இருந்து புறிச்சு வெளியாலயாக் கட்டீட்டா, அதுகளைப் பேந்து உடன நீங்க மேச்சலுக்குப் போக திறந்து விட்டிடலாம்! ஏனென்டா அதுக்குள்ள நிறைசினை மாடுகளும் நிக்கும்!” என்று அவர் சொல்ல, அன்ரனும்: "பாவங்கள் வாயில்லாச் சீவன்கள், ஐயா சொன்ன கணக்க அதுகள் கத்திக் கொண்டு நில கொள்ளாம நிண்டு கொண்டு இருக்குங்கள் அதால அந்த வேலய முதலில போய் ്. ി. ട്രങ്ങൾ O 108 O

பாப்பம்!” - என்று நாகராசாவைப் பார்த்துச் சொன்னான். “சரி சரீ உங்கட இஸ்டம்தான் எல்லாம், நான் நீங்க என்ர வீட்ட வந்திருக்கிறியள் முதலில எண்டுபோட்டு எல்லாத்தையும் விட உங்கள உபசரிக்கத்தானே வேணும் எண்டு நினச்சன்!” "அதில என்னவும் நாகராசா ஒரு குறை! அந்த இருக்கிற வேலமுடிய வந்து வடிவா உங்கட இந்த வீட்டில இருந்து சாப்பிட்டாப் போச்சு" - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பொன்னுத்துரை. “சரி சரி அப்ப போவம் வெளிக்கிடுவம்!” என்று சொல்லிவிட்டு அவர்களை அங்கிருந்து வீட்டுக்கு வெளியே கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டார் நாகராசா. அந்தத் தோப்புத்துரவு கடந்து, நேரான சிறு பாதை வழியே அவர்கள் போனபோது, வெட்ட வெளியான ஒரு இடம் வந்தது. அந்த வெளியின் நடுவே நெட்டுக் குத்தலாய் நின்றிருந்த ஒற்றைப் பனைக்குக் கீழே மாடுகள் கன்றுகளை அடைத்து வைத்திருந்த பட்டியின் பக்கமாய் அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார் நாகராசா. அவர்கள் அதிலே போன வேளை இவ்வளவு நேரம் அந்தப் பட்டிக்குள்ளே நின்றதில் பொறுமையை இழந்த ஒரு காளை மாடு முரட்டுத் தனத்துடன் கால்களால் தரையைச் சுரண்டிக் கத்திக் கொண்டிருந்தது. அன்ரன் அங்கே பட்டிகளில் நிற்கின்ற மாடுகள் கன்றுகளைப் பார்த்துவிட்டு அப்பிடியே பிரமித்துப் போய்விட்டான். அந்த வியப்பு நிலைக்கு உள்ளான தன் பார்வையைத் திருப்பி, அந்தப் பட்டிக்கு வெளியே கண்ணுறு படாது காக்க வைத்திருந்த வெருளித்தலையின் மீது அதை அவன் மோதவிட்டான். அந்த வெருளித்தலையில் தன் பார்வை நிலைத்திருக்க, இவ்வளவு மாடுகள் இவரிட்ட மட்டும் நிண்டால் இன்னும் எவ்வளவு மாடுகள் இந்த ஊருக்கயிருக்கும்?” என்றும் அவன் நினைத்தான். அங்கே அந்தப் பட்டிக்கு கொஞ்சதூரம் தள்ளியிருந்து தங்களுக்குள் கதைத்துக் கொண்டு இரண்டுபேர் வெற்றிலை போட்டுக்கொண்டு இருந்தார்கள். "மாடுகளைப் பிணச்சு இவேட்டக் குடுத்துத்தான் உங்கட வீட்டுப்பக்கம் நடப்பிச்சு அனுப்பப்போறன். நான் நேற்றுச் சொல்லிப் பிடிச்சு வைச்ச ஆக்கள் உவயள்தான்!” நாகராசா அவர்கள் நின்றபக்கமாய், தன் கையைக் காட்டிக் காண்பித்து ஐயாவுக்கு இதைச் சொன்னார். அவர்களை அவர் பார்த்துவிட்டு: "அப்ப எங்களுக்குப் பெரிய வேலையொண்டு இல்லாமப் போச்சு. எங்களுக்கப்பிடிப் பெரியதோர் உதவி நீங்க செய்திருக்கிறியள்!” என்று நன்றி உணர்ச்சி ததும்ப நாகராசாவைப் பார்த்துச் சொன்னார் பொன்னுத்துரை. அவரின் பார்வை இப்போது பட்டியின் உள்ளே நிற்கின்ற மாடுகளின் பக்ககமாய் ஆழமாய் வேரூன்றியது. அந்தப் பட்டிக்குள்ளே மாடுகள் இடறி இடறி புரண்டடித்துக் கொண்டிருந்தன. அவர் பட்டியின் அருகில் சென்று கம்பு வேலியில் ஒரு கையை வைத்தபடி நின்றவாறு அன்ரனைப் பார்த்து "வாரும் இப்பிடி எனக்குக் கிட்டவாய்த் தம்பி?” - என்று அமுக்கலான புன்னகையோடு தன் மறு கையால் அவனை சைகை செய்து கூப்பிட்டார். அவன் அவர் கூப்பிட்ட கையோடு அவரின் அருகில் போய் நிற்க, பட்டியின் உள்ளேதன் சுட்டு விரலால் சுட்டிக்காட்டி
வரழ்க்கையின் ரிறங்கஸ் O 109 O.

Page 65
"அங்க அந்த ரெண்டு மாட்டையும் நீரும் பாருமனொருக்கா.” - என்று பூர்ண மன நிறைவோடு அந்த மாடுகளை குறிப்பாய் அவனுக்குச் சொன்னார்.
"அந்தச் செங்காரியையும் மயிலையையுமா சொல்றீங்களயப்யா?” - என்று தான் பார்த்ததை உறுதிப்படுத்திக் கொள்ள அவரைக் கேட்டான் அவன்.
“சரியாப் பிடிச்சிட்டீர்! அதேதான்! நீர் சொன்னதுதான்! உமக்கும் கொஞ்சம் விசயம் இப்ப வரவரப் பிடிபட்டுவருது போகப் போக இப்பிடியெல்லாம் அநுபவத்தில உதுகள் உமக்கும் இனித் தெரியவரும். அதில தம்பி செங்காரியிலயும் கூட அதிகம் சிவப்பிருக்கக் கூடாது! குறைவான செங்காரியாய் இருந்தாத்தான் அது நல்ல மாடு! உந்தச் செங்காரியும் நான் சொன்ன மாதிரியா அப்பிடியாயிருக்குப் பாத்திரே? அதால தான் உது நல்ல மாடு எண்டு நான் சொல்லுறன். அதே மாதிரித்தான் அந்த அடுத்ததும் எண்டு நான் சொல்லுற அந்த மயிலயுமிருக்கு! அதுவும் அந்த மாட்டிண்ட கணக்காய் குறைஞ்ச மயிலயாயிருக்கிறதால சோக்கான மாடாய் அதுகுமிருக்கு! அதோட அந்த மாட்டுக்கு நெத்திச்சுழி ஏறு சுழியாயிருக்குக் கண்டீரோ? அதிருக்கிறதால உந்தமாடு நல்லா நிமிந்து நடக்கும். இன்னும் இந்த ரெண்டு மாட்டுக்குந்தம்பி கச்சைக் கட்டும் கறுப்பாயிருக்கு, அதுவும் வலுதிறந்தான். அதோட ஆரமும் இதுகளுக்குச் சின்னனாயிருக்கு மான்குட்டி மாதிரி. சூ.!!!” இதையெல்லாம் அவர் சொல்லிக்கொண்டுவர மாடுகளையும் பார்த்து அவரின் முகத்தையும் திரும்பிப் பார்த்து இப்படி மாறி மாறிப் பார்த்துக் கொண்டு அவர் சொல்லும் விஷயங்களை, அவன் காதிலேற்றி மனத்தில் அவற்றை தக்கவைத்துக் கொண்டிருந்தான். அந்த மாடுகள் இரண்டையும் கண்டு கொண்டதில் ஐயாவின் கண்கள் திருப்தியில் நிறைந்ததையும் அவன் கண்டு கொண்டுவிட்டு மகிழ்வுற்றான். அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருந்த அந்த இடத்துக்கு அருகே நாகராசா செல்லவில்லை. அவர் சற்றுத் தூரவாய் தனிமை விரும்பும் தனிமையுடன் நின்று கொண்டிருந்தார். மாடுகளைப் பார்த்து வாங்கி அவிழ்த்துப் போகிறவர்கள் தங்களுக்குள் அதைப்பற்றிப் பத்தையும் பலதையும் கதைத்துக் கொள்வார்கள். அப்படி அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு சரி பிழையைக் கதைத்துக் கொள்ள விடாமல் மாட்டுச் சொந்தக்காரர்கள் அவர்களுக்குப் பக்கத்தில் நின்றால் அது ஒரு இடைஞ்சல்தானே? என்று நினைத்து மனசறிந்த நாகரீகத்துடன் அவர்களை விட்டு அவர் இந்த நேரம் விலகி கொஞ்சம் தூரவாய் நின்று கொண்டார். பட்டியில் உள்ள மாடுகளைப் பார்த்துக் கொண்டு அந்த இடத்தைச் சுற்றி நடந்து வந்தார் பொன்னுத்துரை. அவனும் அவரைப் பின் தொடர்ந்தான். அங்கே மாடுகளைப் பார்த்துக்கொண்டு வந்த அவனது கண்களின் பார்வை, அந்தப் பாதைக்கருகில் கிடந்த பனையோலைகள், காய்ந்த பனம் மட்டைகளையும் பார்த்து விட்டு மேலே அந்தப் பனை மரத்தை நோக்கி உயர்ந்தது. அந்தப் பனைமரத்து உச்சியில் தூக்கணாங் குருவிக் கூடுகள் வீசியகாற்றுக்குக் கிடந்து ஊஞ்சலாட்டம் போட்டுக் கொண்டிருந்தன.
iෂ්. ග්‍රී. ලාංඡිගvගvණිගර් O 1 10 O

ஒலைகளின் “சேவ்” என்ற இரைச்சலுக்கேற்றதான அந்தக் கூடுகளின் அசைவைப் பார்த்துவிட்டுப் பார்வையைப் பட்டியின் பக்கமாய் அவன் மீண்டும் திருப்பிக் கொண்டான். ஐயா நடையில் நிறுத்தம் வைத்துவிட்டு அந்த இடத்திலே நின்றுகொண்டார். உள்ளே மற்றைய மாடுகளுக்குள்ளாக விலகி விலகிச் சென்று கொண்டிருக்கும் அந்தக் காளை மாட்டை அவர் ஆர்வத்தோடு கண்ணிமையாமல் பார்த்தார். அவருக்குத் தேடிப் போகும் மூலிகை வந்து தன் காலில் சிக்குப்பட்டது மாதிரி இருந்தது. அந்த மாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தபடி அவருக்குச் சிறிது நேரம் அப்படியே அதில் நெஞ்சு ஈடுபடக் கழிந்தது. அந்தக் காளையின் உடல் முறுக்கையும், அங்கலட்சணங்களையும், சுழி சுத்தத்தையும், வாகையும் - விட்டு அசையாமல் பார்த்துப் பார்த்து, அவர் வியந்து ஆனந்தப்பட்டார். "நல்லோர் மாடு. நல்ல லச்சணமான காள” - என்று மகிழ்ச்சியின் உணர்ச்சி மேலிட்டில் அதைப் பார்த்தபடி சொல்லிவிட்டு அருகில் நின்ற அவனையும் தனக்குக் கிட்டவாக வரக்கூப்பிட்டு: "அந்தச் செவிலி நிற மாட்டயொருக்காப் பாரும் தம்பி எப்பிடியெண்டு?” - அவர் புருவங்களை மேலே உயர்த்தி கண்களை அகலத் திறந்தபடி அவனைப் பார்த்துச் சொன்னார். அவனும் அவர் அடையாளம் வைத்துச் சொன்ன மாட்டைப் பார்த்துவிட்டு “அந்த வைத்தில புள்ளியா மறுவுள்ள அந்த மாடோ நீங்க இப்ப சொன்ன மாடு?” என்று கேட்டான்.
"அதேதான்! அந்த மாடுதான் தம்பி உந்த மாட்டுக்கு இடது பக்கம் விரி சுழியிருக்கெல்லே அது வலு விசேஷம், அதோட நீர் முதல் சொன்னீர் அந்த வயித்தில உள்ள புள்ளி, அதுவும் நல்ல சிலாக்கியம்தான்! அதோட நாங்க முதல் பாத்த அந்த ரெண்டு மாடுகளைப்போல இதுக்கும் வால் எலிவாலாயிருக்கு. முழங்காலுக்கு மேல குஞ்சமிருக்கு - ஏரியிலயும் சுழியிருக்கு - உந்த ராஜ சுழி வீட்டுக்கு நல்லம் தம்பி உது விசேஷமான மாடு” - அவர் அந்த மாட்டினது சுழிசுத்தத்தை அவனுக்குச் சொல்லிப் புகழ்ந்தார். ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனுக்கு, அவையெல்லாம் மூளைக்குள் சிக்கலும் சிடுக்குமாக விளங்காத அளவில் இருந்தன. மாடுகள் பார்த்து அவிழ்க்கின்ற விஷயம் இப்படி மலைபோல் பிரச்சினை உடையதொன்றாக இருக்குமென்று, அவன் முன்பு நினைக்கவில்லை. ஆனாலும் இங்கே வந்து மாடுகளைப் பார்க்கும்போது, அவர்மூலம் பெறப்பட்ட தகவல்களின் மூலம் உண்மையிலேயே அவன் மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனான். எல்லாவற்றிலும் எத்தனை எத்தனை விதிமுறைகளையும் அதற்கான விளக்கத்தையம் எங்கள் மூதாதையர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எதையும் நுணுகி ஆராய்ந்து கொண்டு போனால் அர்த்தமுள்ளதாய்த் தானே இறுதியில் அவைகள் வெளிச்சமாகின்றன, என்று நினைத்து அவன் வியந்தான். “என்னம்பி மூச்சையுங்காணேல்ல பேச்சையுங்காணேல்ல உமக்கு” ஐயா அவனைக் கேட்டபோதுதான் அந்த நினைவுகள் அவனுக்கு விடுபட்டது. "ஒண்டுமில்லய்யா! எனக்கொரு சமசியம்! மாடுபாக்கிறதில இப்பிடி சிக்கல் முக்கல் இருக்கெண்டு முந்தி எனக்குத் தெரியேல்ல, ஆனா நீங்க
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 1 1 1 O

Page 66
மாடுகளைப் பாத்து ஒவ்வொரு லட்சணமாச் சொல்லச் சொல்ல எனக்குத் தலைசுத்துது. என்ன இப்பிடிச் சுழி பாத்துத்தான் மாடு வாங்கவேணுமே? அப்பிடிப் பாக்காம மாடு வாங்கினா என்ன? இதொரு குழப்பமா மூளைக்க எனக்கு இருக்கையா?” - அவன் தனக்குள் அடக்கி வைத்திருந்த சந்தேகங்களையெல்லாம் ஒன்று சேரவாய் வைத்து இத்தருணததில் ஐயாவிடம் அவைகளை வெளியிட்டான். அவர் அவன் கேட்டதை மனத்தில் வைத்துக்கொண்டு ஒரு புன்சிரிப்பை உதிர்த்தார். "தம்பி இதுகளில கணக்க உண்மையிருக்கு ராசா என்ர அனுபவத்திலயும் நான்கண்ட உண்மதான் இது மாடுகளுக்குச் சுழி பாக்கிறது - ஈணுற நாள் பாக்கிறது - அதில வர்ற நன்மை தீமயெண்டு உள்ளதுகள், இதுகளெல்லாம் நான் மட்டும்தான் பாக்கிறதெண்டில்ல, மாடுபாக்கிற எல்லாருந்தான் இத அறிஞ்சிருக்கினம். இதயெல்லாம் நல்லா அறியாம வீட்டுக்கு வளக்க மாடு வாங்கினவயளும் பேந்து கஸ்டப்பட்டிருக்கினம் கண்டீரோ?” அவர் இப்படிச் சொல்லிக்கொண்டு அவனது கண்களை உற்றுப் பார்த்தார். தான் சொல்வதை முற்றாக அவன் நம்பவில்லை என்கிறதாய் அவனது பார்வையின் வெளிப்பாடு அவருக்கு உணர்த்தியது. இதனால் அதைப்பற்றிய மேலும் விவரங்களை அவர் மீண்டும் அவனுக்குச் சொல்ல விழைந்தார். "தம்பி நான் முன்னம் சொன்ன மாடுகளைப் பாத்து வாங்கினா வீட்டுக்கு நல்லதெண்டு சொன்னனே, அதே மாதிரியாய் இல்லாம இந்தச் சுழிக் குற்றங் காட்டுற மாடுகளை ஆரும் வாங்கிக் கொண்டுபோய் அதை வீடுவழிய கட்டினா, பேந்து அது அந்த வீட்ட முற்றாக் குடி கெடுத்து முழுசா நாசமாக்கிப் போடும். வீட்டில வளக்கிற மிருகங்களில பசு மாடுகள்தான் தம்பி சீதேவி. அது எல்லா மிருகங்களையும் விட உயந்தது, ஆனாலும் அதையும் லட்சணம் பாத்துத்தான் தம்பி ஒருவர் வாங்க வேணும்” "அப்பிடியெண்டா மாட்ட நல்லாப் பாத்து அறிஞ்சு, சுழி சுத்தம் பாத்துத்தான் அதை வீட்டுக்கு அவிழ்க்க வேணுமெண்டு நீங்க நம்பிக்கையா சொலறிங்களோ அய்யா” "இல்லாமலென்ன? அப்பிடித்தான் பாத்து ஆரும் மாடவிழ்க்க வேணும்! இல்லாட்டிக் கரைச்சலெல்லோ? இங்க பாருமன் தம்பி! இப்ப உமக்கு நான் உதால வாற கெடுதலையும் விளக்கமாச் சொல்றனே! ஒரு மாட்டுக்குத்தம்பி முதுகந்தண்டில உள்ள கோட்டுக்கு வலப்புறத்தில மாத்திரம் ஒரு சுழி இருந்தா அதைப் பாடைச்சுழி எண்டுவாங்கள். ஐயோ உண்மையடா இது தம்பி. இது கொண்டவன உடன பாடையேறச் செய்து போடுமப்பு இது மாதிரி மாட்டின்ர முன் முழங்காலுக்குக் கீழ ரெண்டு சுழி இருந்தா அத விலங்குவைச் சுழி எண்டுவினம்; இதைக் கொள்பவனிண்ட காலுக்கு விலங்கு வரும். ஆனா இதே சுழி இடப்பக்கமிருந்தா அது விரி சுழி - அது நல்லம்! இன்னும் மாடுகளுக்குத் தம்பி வாலில சுழி இருந்தால் அது நாகம் - வீட்டுக்கு ஆகாதந்தமாடு! இதுகள் மாதிரி மாடுகளுக்கு ஏறுவால், வெட்டுக்குளம்புமிருந்தா அதுகளும் கூடாது, சரியில்ல! இந்த மாடுகளுக்கெல்லாம் ஒரு காதுக்குக் கீழ
ரீ.பி.குருஸணந்தம் O 1 12 O

மாத்திரம் சுழி இருந்தா அதப்பூரான் கவ்வலெண்டுவினம் - இதுவும் கூடாது. இதுமாதிரி இடிக்கிறது, உதை காலி, மிரட்சி, படுக்காங் கொள்ளியுங் கூடாது. இன்னும் இந்தக் கடைக் கண்ணில புள்ளியுள்ள மாடிருக்கெல்லா அது கவடுதம்பி உடம்பில எல்லாம் புள்ளியாயிருக்கிற மாடும் ஆகாது. துவரை நிறக்காரம் பசு இருக்கடாதம்பி அது கட்டாயம் குடி நசிக்கும். எல்லாத்துக்கும் மேல அது காராம்பசுவோ காள மாடோ எதெண்டாலும் மாட்டின்ரை நெத்திக்கு மேல சுழி இருந்தா இடிமேல இடிவரும்!” அவர் தொடர்ந்து இந்த விவரங்களையெல்லாம் அவனுக்குச் சொல்லி முடித்தபோது அவன் மனதைக் குவித்துக் கொண்டு வலுவாக இவைகளைப் பற்றி யோசித்தான். இவைபற்றிய சிந்தனை அவனுக்கு அடிவானத்தைத் தாண்டிப் போன மாதிரிப் போய்க் கொண்டிருந்தது. “என்ன இப்ப இன்னுங்கூடவா நீர் யோசிக்கத் துவங்கீற்ரீர்?” . அவர் அந்த வேலித்தடியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையை இடுப்பில் வைத்துக்கொண்டவாறு அவனைப் பார்த்துக் கேட்டார். அவர் அப்படிக் கேட்டதற்கு தன் மனத்திலுள்ளதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் இப்போது அவனது மனத்தில் உதயமானது. “இப்புடியான சில விஷயங்களை நம்பக் கூடியதாயுமிருக்கு நம்பேலாதமாதிரியுங்கிடக்கு! அதால இதில எந்தப்பக்கம் உண்மை இருக்கெண்ட குழப்பம் எனக்கிருக்கையா? - இவ்வாறு அவன் சொல்ல. அன்ரன் எதையோ தனக்குச் சொல்லத் தயங்குகிறான் என்று ஐயாவுக்கு விளங்கிவிட்டது. "இதிலதம்பி ஏதோ எனக்குத் தெரிஞ்சத நான் உமக்குச் சொன்னன். மனுசன் எனப்பட்டவன் நல்லது கெட்டது எதெண்டு அறிஞ்சுதான் எந்தப் பொருளையும் பாத்துக்கித்து வாங்கிறான்! அதில பாரும் மாட்டின்ரை நடுப்பல் தாழ்ந்திருந்தா பாதி வயது அதுக்கெண்டு மதிக்க அதுக்கொரு கணக்கிருக்கு, இப்புடி மாட்டுக்கு வயசு பாக்கறத அதின்ர பல்லிலையும் பாக்கினம். மாப்பல் உள்ள மாடிருக்கல்லோ அது பெலவீனம் புடிச்ச மாடு! ஆனாத் திரைப்பால் மாடு உரம் இதே மாதிரித்தான் பில்லை மாடும் நல்லது! இப்புடியா அதின்ரை உடம்பு உறுப்புகளையும் பாத்து சிலதுகளை அறியக் கூடியதாயுமிருக்குத்தம்பி இப்பிடி அதுகளையும் இதுகளையுமா இவையள் எல்லாத்தையும் வைச்சுப் பாத்துத்தான் இதைப்பற்றித்தெரிஞ்சாக்கள் மாடு வாங்கினம்!” அவர் சொன்னவைகளைக் கேட்டு விட்டு அவன் சற்று நேரம் மெளனமாக நின்றான். ஏதோ மேற்கொண்டு தனக்குச் சொல்ல விரும்புகிற ஐயாவின் முகத்தையே அன்ரன் பிறகும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகம் முழுக்க சந்தேகத்தின் வலைப்பின்னல் இருந்தது. "தம்பியுதெல்லாம் ஒரு படிப்புத்தான் கண்டீரோ? இதின்ரை சரியெல்லாம் அவனவன் தன்ர அனுபவத்திலதான் கண்டுகொள்ள வேணும், அதுக்குப் பிறகுதான் இதில ஒருவருக்கு நம்பிக்கையெண்டுறது வரும்!” அவர் தான் சொல்லவேண்டி இருந்ததையெல்லாம் அவனுக்குச் சொல்லி முடிந்துவிட்ட அளவில்: இறுதியாக தனது சொந்தக் கருத்தையும் சேர்த்து அவனுக்குக் கூறி வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 1 13 O

Page 67
விட்டு அந்தக் கதையை நிறுத்தினார். இதேநேரம் பார்த்து அன்ரனும் தன் கண்களைச் சுருக்கி யோசித்து விட்டு தனது சொந்த அபிப்பிராயத்தை அவரிடம் கூறத் தலைப்பட்டான். "அய்யா நீங்க உங்கட அனுபவப்பட்ட அந்த நம்பிக்கயில அதுகள எனக்குச் சொன்னிங்க அது சரி. அதே மாதிரி உங்கள மாதிரி கணக்கப்பேர் அதெல்லாத்தையும் நம்பி நடக்கினமெண்டும் சொல்றீங்க, எங்கட பழய காலத்தாக்கள் இதெல்லாத்தையும் எழுதி வச்சிருக்கினம் எண்டுறீங்க, இதெல்லாத்தையும் மறுத்து நான் பொய்யெண்டதாச் சொல்லேல்ல. ஆனாலும் எங்கட சமயப் புத்தகமிருக்கே பைபிள் - அதில குறிபாக்காத - சாத்திரம் பாக்காத - எண்டெல்லாம் சொல்லியிருக்கு. இதான் எனக்கிப்ப பெரிய மனக்குழப்பம்! இதில எந்தப் பக்கமா சாயிறது, எதக் கடப்பிடிச்சு நடக்கிறது எண்டுதான் எனக்கிப்ப இருக்கிற பெரிய பிரச்சின?” அவன் தன் மனசைத் திறந்து வெளிப்படையாகத் தன் கருத்தைக் கூறியதையிட்டு ஐயாவும் அவனைப் பார்தது ஒரு புன் முறுவல் பூத்தார். என்றாலும் அவன் சொன்ன கதைகளுக்கு ஏதும் விளக்கம் அவனுக்கு அவர் சொல்லவில்லை. அதற்குப் பிறகு அதைப் பற்றிய கதை ஒன்றையும் அவர் எடுக்கவில்லை. "தம்பி மாடுகளை பாத்து இனி அவங்களுக்கு நாங்க சொல்லுவம். இனியும் கதையோட நாங்க நிண்டா நேரம் போயிடும். அதால இன்னொரு நேரம் ஆறுதலா இதப்பற்றி நாங்க கதைப்பமே?” என்றார் அவர். பிறகு அங்கே நின்ற இருவரையும்: "இங்காலியா நீங்க இனி வாருங்கோ?" - என்று அவர் தான் நின்று கொண்டிருந்த அந்த இடத்துக்கு அருகே அவர்களை வருமாறு அழைத்தார். அவர் அழைத்ததும் அதிலே நின்ற இருவரிலே ஒருவன் தன் கையிலே வைத்திருந்த புகையிலையைச் சுருட்டி வாயின் பக்கத்துக்கொடுப்புக்குள் அதைத்திணித்தபடி, சுரு சுருவென்று கிறங்கடிக்கிற சுகமான அந்த காந்தல் ருசியை அனுபவித்துக்கொண்டு ஒரு வகைப் பக்கவாட்டு நடையுடன் அவருக்கு அருகில் வந்தான். அவன் நனைந்த பனை மரத்தைப் போன்று கறுப்பு நிறமாய் இருந்தான். கருங்கோரைப் புற்களைப் போல மயிர் அவனுக்கு நீண்டிருந்தது. அவனுக்குப் பின்னாலே மற்றவனும், வாயில் குதப்பிக் கொண்டிருந்த காரமான சாரமில்லாத வெற்றிலைச் சக்கையை வழி நடையில் துப்பிவிட்டு, ஒரு பிஞ்சுச் சுண்டங்காய் அளவு சுண்ணாம்பை விரலில் வைத்து உருட்டிப் பிடித்துக் கொண்டவாறே வந்தான். அவனுக்குக் கீழ் உதடு ஒரு பக்கமாய்ப் பிதுங்கியிருந்தது. வெற்றிலையின் அடர் சாறு படிந்த உதட்டோரங்களில், நீண்டு வெளிவந்திருக்கும் சிங்கப் பல்கள் அவனுக்குத் தெரிந்தன. "அந்தம் மூண்டு மாடுகளையும் வெளியால புறிச்சுக் கட்டுங்கோ’ . என்று அவர் அவைகளை அவர்களுக்கு அடையாளம் காட்டினார். “இன்னம்மந்த பில்லை நிற மாட்டையும் செவிலி நிறத்தையும் வெளியில பிடிச்சுக் கட்டுங்கோ, அதோட அந்த மெல்லிய கறுவெள்ளை மாட்டையும் அதே மாதிரியொரு மாவெள்ளைக் கலரில அங்க ஒண்டு மூலேல நிக்குது - அதையும் பிடியுங்கோ." அவர் சொன்னதும் உடனே தங்கள் தலையை ஆட்டிக் காண்பித்துவிட்டு, அவர்கள் கயிற்றுடன் பட்டிக்குள்ளே நுழைந்தார்கள். அப்போதுதான் தூரவாய் இவ்வளவு ඊ.4). ථෂ්ගvගvෂීහූ(b O 1 14 O

நேரமாக அதிலே நின்று கொண்டிருந்த நாகராசா அவர்களுக்குப் பக்கமாய் வந்தார். "என்ன அதிலேயா பிறகு நிண்டு கொண்டீங்க. இங்காலிப்பக்கமே வராம?” "ஏன் வரேல்லயெண்டுறது உங்களுக்குத் தெரிஞ்ச விசயம்தானே?” நாகராசா சொல்லிவிட்டுச் சிரித்தார். “இதயெல்லாம் ஏன் பெரிசாயெடுப்பான்! நீங்களும் கிட்ட நிண்டு மாடு பாக்கிறதில எனக்கொண்டும் இடைஞ்சலில்லத் தம்பி!” "எண்டாலுமொரு நாகரீகமா நாங்களும் நடக்கவேணும்!” “என்னநாகரியம் இதிலயிருக்கு? நான் மாடு பாக்கிற மாதிரித்தானே நீங்களும் பாப்பியள்? அதிலயென்ன குற இருக்கு?” "இல்லயதுக்கில்ல! நானும் உங்களுக்கொண்டச் சொல்ல வெளிக்கிட்டிட்டா அதும் பேந்து குறையாயிடுமெல்லே?" "அப்பிடியாயில்ல! எனக்கின்னொருவர் தனக்கு இதில தெரிஞ்சத அறிஞ்சத சொல்லக் கேக்கத்தான் ஆச இன்னும் இந்த விசயத்தில எவ்வளவோ எனக்குத் தெரிய வேண்டியிருக்கு! அதயெல்லாம் நான் அறிய வேணுமெண்டு எனக்கும் ஆருவமமிருக்கு!" ta “உங்களுக்கேதும் இவ்வளவு காலந் தெரியாதத நான் சொல்லப் போறனே.? உங்களிட்டயிருந்து நாங்களெல்லோ படிக்கவேண்டியிருக்கு?” நாசுக்காக அவர் சொல்ல, அவரைப் பார்த்து பரம திருப்தியாகச் சிரித்து விட்டு பொன்னுத்துரை பட்டிக்கு உள்ளே திரும்பிப் பார்த்தார். அந்த நேரமாய் அங்கே முதன்முதலில் பட்டிக்குள்ளே போய் மாடு பிடிக்கப் போன அந்த வேலையாளை ஒரு மாடு கொம்பால் இடாசியது. பின்பு அது குதியாளம் போட்டது. அவன் நுட்பமாய் அதற்கு விலகி நைசாக வளைச்சமாதிரி வந்து அதற்குக் கழுத்திலே கயிறு போட்டான். உடனே அது பயந்து உடம்பை நெளித்து அவனது இடுப்புக்குக் கிட்டவாய் வந்தது. பிறகு ஆங்காரமாய் சீத்தடித்தது அந்தமாடு. அப்படியே அவன் அதை கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து படலையால் அதை வெளியேற்றி ஒரு குத்துக்கம்பிலே அதை அவன் கட்டினான். கட்டில் போட்டபின்பும் அந்தமாடு கொஞ்சநேரம் நிலைகொள்ள மாட்டேன் என்பதுபோல் நின்றது. பிறகு அடங்கிவிட்டது. மாடுகளெல்லாம் அவர் சொன்னவிதாமாகப் பிடிக்கப்பட்டு வெளியே கொண்டுவந்து அவர்களால் கட்டி விடப்பட்ட பின்பு: "அப்பிடியே மூண்டு மூண்டு மாட்டாப் பிணைச்சு உதுகளை நடப்பிச்சுக் கொண்டு போற வேட்டை மாட்டையும் அதோட சேத்துப் பிணையுங்கோ?” - என்று அவர்களை நோக்கி உத்தரவுகளைப் பிறப்பித்தார் நாகராசா. "வேட்ட மாட்டச் சேத்துப் பிணைக்காட்டி இதுகள் சொல்வழி கேக்காதுகள்! நடப்பிச்சுக் கொண்டு போறவனுக்கும் அதால கஸ்டந்தானே அய்யா?”
வரழ்க்கையின் சிறக்கஸ் O 1 15 O

Page 68
"அப்ப வேட்டை மாடுகளையும் உந்த வேலைக்குத் தோதா நீங்க பழகித்தான் வைச்சிருக்கிறியள் தயாரா?” ஐயா அவரைக் கேட்டார். "பட்டி கொஞ்சம் பெருகீற்றெண்டா இப்புடியாத் தேவையும் வருந்தானே அய்யா? அதால எல்லாம் என்னட்ட ஒழுங்கா இருக்கவேணும் எண்டு நினைச்சு இப்பிடி வேட்ட மாடுகளையுந்தான் நான் பழக்கி இப்ப வச்சிருக்கிறன்!” "உப்பிடியெண்டா மாட்டைப் பழக்கி எடுக்கிறதிலயும் நீங்க கெட்டிக்காரர்தான் போலக்கிடக்கு?” "என்னை ஏனையா சும்மா புகழுறியள்! இந்த விசயத்தில உங்களுக்கு முன்னால நானென்ன பெரிசு? நீங்க முந்திச் சவாரி ஓடின அந்தச் சின்னச் சுட்டியன என்னமாதிரிப் பழக்கி வைச்சிருந்தீங்க அது வண்டியில ரெண்டு பக்கமும் பூட்டி ஓடக் கூடிய திறம் மாடெல்லே? அந்த மாட்டால வண்டில் றேகம் ஓடினிங்க, உங்கட பெரிய அந்த வயலையும் உழுதீங்க. அது வெறுங்கிழ மாடாப்போய் பல்லெல்லாம் கொட்டிப்போன பிறகும் அதுக்குக் கரைச்சுப் பருக்கி றேஸ் வண்டிலில பூட்டி சவாரியோடி முதலாம் பிறைசும் அடிச்சீங்களெல்லே நீங்கள்?” “ம். மது பழைய கததான் ஒரு றேசில அந்த மாடு கொம்படிபட்டு பிறகு இழுத்துக்கிடந்து நோயால செத்துது. அதயிப்ப நினைச்சாலும் எனக்குப் பெரிய கவல!” அந்த மாட்டைப் பற்றிய கதையிலே இருவரும் இருந்த வேளையில், பட்டிக்கு வெளியே நின்ற அந்த வேலையாட்கள் இருவரும் அந்த மாடுகளை கயிற்றால் பிணைத்து விட்டார்கள். மூன்று மாடுகளுக்கொரு வேட்டை மாட்டையும் அவற்றோடு பிணைத்ததன் பின்பு மாடுகளைச் சாய்த்துக்கொண்டு போவதற்கு அவர்கள் தயாராகினார்கள். “சரி இப்ப எல்லா அலுவலும் முடிஞ்சுது, இனியெண்டாலும் எங்கட சாப்பாடு விசயத்தைக் கவனிப்பமே? இனிப் போவமய்யா வீட்ட அங்க இருந்து ஆறுதலா பிறகு கதைக்கலாம்!” "இதென்ன! விலைபேசாம நான் மாடவிழ்த்திருக்கிறன்! இனியெண்டாலும் அதப்பற்றிக் கதைக்க வேணுமே?” “உங்களோட எனக்கென்ன அய்யா விலையும் ஒரு வியாபாரமும் ஏதோ நீங்க இதுகளை அறிஞ்சு தாறதத்தாங்கோ?” "அது ஞாயமில்லயே நாகராசா?” "அப்பிடி ஒண்டுமில்லையையா எல்லாத்துக்கும் நான் ஓம்தான்! நீங்கள் விலையக் கணிச்சுத்தாங்கோ அது எனக்கு மனசுக்குத் திறுத்தி நீங்க வார்த்தையள தராசு முள்சாயாம நிறுத்த மாதிரிப் பேசுறணியள்! அப்பிடி நேர்மையான ஒரு ஆள் நீங்கள்! எல்லாத்துக்கும் முதலில வீட்ட போயிருந்து இதுகளை இனிக் கதைப்பம்!” - என்று ஐயாவைப் பார்த்துச் சொல்லிவிட்டு "என்ன தம்பி நான் சொல்றது?” - என்று பிறகு அன்ரனையும் பார்த்துக் கேட்டார் அவர். இதற்குப் பிறகு அந்த இடத்தை விட்டு அவர்கள் அவரின் வீட்டுக்குப் போகக் கிளம்பும்போது, "என்னை இங்கால
ரீ.பி. அருஸ்ணற்றம் O 1 16 O

ஒருக்காப் பாருங்கோ, அய்யாவின்ர வீடு உங்களுக்குத் தெரியுந்தானே?” என்று அங்கு நின்ற அந்த வேலையாட்களைப் பார்த்து நாகராசா கேட்டார். "ஓ! வடிவாகத் தெரியும் அவற்றை வீட்ட. நாங்க ஒழுங்காப் போய்ச் சேருவம் அங்க..! போகேக்க இடையில அய்யாவின்ர வண்டிலையும் சந்திப்பம்தானே நாங்கள்?” - என்றான் அந்தச் சிங்கப்பல்காரன். அதற்குப் பிறகு இவர்கள் மூவரும் வீட்டுக்கு வந்தார்கள். பொன்னுத்துரை நியாயமான முறையில் அந்த மாடுகளுக்குரிய விலையை நிணர்ணயித்து கணக்குப் போட்டு அவைகளுக்குரிய பணத்தை நாகராசாவுக்கு எண்ணிக் கொடுத்தார். அதன்பிறகு அங்கேயே மதிய போசனத்தையும் முடித்துக் கொண்டு அவர்கள் வெளிக்கிடும்போது, ஒரு பங்கு ஆட்டிறைச்சியை பச்சை ஓலையில் ஒரு பெரிய பட்டைபிடித்து, அதற்குள்ளே இறைச்சியை வைத்து வாயை மூடி ஒரு ஒலை இதழால் இழுத்து சுருக்காக முடிச்சுப்போட்டு, அதை அவர் ஐயாவின் கையில் கொடுத்தார். அதை அவர் வாங்கும்போது, "என்னவும் நாகராசா விசேஷமோ? ஆட்டிறைச்சியில விழுந்திருக்கிறீங்க?" என்று ஆனந்தம் மேலிட்டவராய்க் கண்களைச் மிட்டிக் கொண்டார். "ஒண்டும் அப்பிடி இல்ல அய்யா! பக்கத்து வீட்டில ஆடடிச்சுப் பங்கு போட்டினம்! ஆட்டிறைச்சி நெடுகத் தின்னக் கிடைக்காத தீன்தானே? அதால உங்களுக்குமாச் சேத்து நான் ரெண்டு பங்குக்குச் சொன்னன். அவங்கள் றச்சிக்குப்போட்ட இந்தக் கறுத்தக் கிடாயாடு நானறிய அந்தக் கொட்டிலில கட்டில கிடந்து சீக்காயும் வேப்பிலையுந் திண்டுதான் வளந்தது. நீங்க இந்த இறைச்சியச் சாப்பிட்டுப் பாருங்கோ? சவ்வுகிவ்வு இல்லாத அந்த மாதிரி இதின்ரை இறைச்சி தின்ன நல்ல ருசியா இருக்கும்!” "நான் இதோட அங்கே வீட்ட போக நேரஞ்செல்லுமோ தெரியேல்ல நாகராசா? இறச்சி அதுக்கிடயில பதங்கெட்டு பழுதாகிடுமோ தம்பி?”
"சேச்சே அப்பிடிப் போகாது. ஒலைக்க றச்சி அப்புடியே பத்திரமாகக் கிடக்குமய்யா! நீங்க பயப்பிடாமக் கெதியாக் கொண்டுபோங்கோ.” - அவர் இவ்விதம் சொல்ல ஐயாவும் வீட்டுக்குப் போக வெளிக்கிட்ட அவசரப்பட்டார். அதை அவரின் முகக் குறிப்பிலே நாகராசாவும் உணர்ந்து கொண்டார். உடனே அவர்களோடு வண்டிலடிக்குப்போய் அவர்களை அங்கு வழியனுப்பி வைப்பதற்காக நாகராசாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். அவர்களெல்லோரும் தோப்பைத் தாண்டி வேலியடிப் படலைப் பக்கமாய் வந்தார்கள். அங்கே கட்டில் கிடந்த அந்த வண்டில் மாடுகள் ரெண்டுக்கும் வைக்கோல் போட்டுத் தண்ணிரும் வாளியில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து திருப்திப் பட்டார் பொன்னுத்துரை. "நாங்க மாட்டக் கட்டீட்டு வந்ததோட அதின்ர நினைப்பு இல்லாம பிறகு எல்லாம் மறந்து போச்சு! நாங்க உங்களுக்குச் சொல்லாமலே தண்ணியையும் தீனையும் நீங்க வைப்பிச்சிருக்கிறீங்க.” "உங்களுக்கு பிரயாணம் பண்ணி வந்த களைப்பு! நாங்கதானே இதுகளைப் பாக்கவேண்டிய ஆக்கள்!"
αρκώδειοδιόλαδί διμνύόςή O 17 O

Page 69
''
"எண்டாலும் உங்களுக்கு நாங்க எவ்வளவோ கடமப்பட்டிட்டம் "நீங்க எங்களைத் தேடி வாறிங்க, நாங்களும் உங்களைத் தேடி பல அலுவலுக்கு அங்க வாறம். இதில என்ன கடமை ஆளையாளுக்கிருக்கு? இப்பிடி ஒருவருக் கொருவர் ஏலுமான உதவியளைச் செய்து குடுக்கிறதுதானே?” அவர்கள் இருவரும் அங்கு கதைத்துக்கொண்டு நின்ற வேளையில், அன்ரன் போய் கட்டில் போட்டுக் கிடந்த அந்த இரண்டு மாடுகளையும் அவிழ்த்துக் கொண்டுவந்தான் வண்டில் நுகத்தில் கடைக்கிட்டிக் குள்ளாக வைத்து அவற்றுக்கு அவன் தாழக்கயிறு போடும்போது நாகராசாவிடம் சொல்லிக்கொண்டு பொன்னுத்துரையும் வெளிக்கிட்டார். "இந்த முறையும் நீங்கள் ஓடப்போற அந்த வண்டில் சவாரிப் போட்டியைப் பாக்க நானும் அங்க கட்டாயமா வருவன்!” என்று அவரை நடந்து போகவிட்டு பின்னால் நின்றவாறு சொன்னார் நாகராசா. “ஓ பின்ன கட்டாயமா நீங்க முதன் நாளே என்ர வீட்ட வந்து தங்கியிருக்க வேணும்?” என்று தான் நடந்து கொண்டிருந்த வேளையில் வலக்கையால் அவருக்குச் சைகை காட்டிக்கொண்டு சொன்னார் பொன்னுத்துரை. "அப்ப இனியா நாங்கள் வெளிக்கிடுவமே ஐயா? - என்று வண்டிலுக்குப் பக்கத்தில் வந்த அவரைக் கேட்டான் அன்ரன். “ஓ தம்பி சரி நீரே இப்ப ஒட்டும் வண்டில. நானேறிப் பின்னாலயா இருந்து கொள்ளுறன்” - என்றார் ஐயா. அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அவன் தம்பிடித்து ஆசனத்தட்டில் ஏறவும் மாடுகளும் அதேவேளை நடக்க வெளிக்கிட்டன. வண்டில் ஆடிக்குலுங்கிக் கொண்டு வெளிக்கிட நாகராசாவைப் பார்த்து "அப்ப நாங்க வாறம் வெளிக்கிடுறம் தம்பி” என்று விடைபெற்றுக்கொண்டு பொன்னுத்துரை வண்டில் பின்புறத்தில் துள்ளியேறிக் கொண்டார். அன்ரன் வண்டிலில் உட்கார்ந்தபடி நாகராசாவைப் பார்த்து தன்கையை ஆட்டிக் காண்பித்தான். நாகராசா: “போயிற்று வாங்கோ' - என்று அந்த வண்டில் நகர்ந்து கொண்டிருக்க, இருவருக்கும் கூறுவதுபோல் சொன்னார். சேற்றுக்குழிகளுள்ள அந்த வீதியிலே, தாழப்பதிந்த அந்த வண்டில் சில்லுகளை தம் கால்களை நிலத்தில் சதபுதவென உந்திப் பதிய வைத்தவாறு இழுத்துக்கொண்டு, அந்தப்பலமுள்ள இரட்டைக்காளைகள் கிணுமணி ஓசையுடன் நடந்து கொள்டிருந்தன. மழைத்தண்ணீர் நன்றாக மண்ணின் கீழ் இறங்கி சதப்பித்தள்ளியிருந்ததால் சகதிகளின் பக்கம் வண்டில் சில்லுகள் சுழல்வதற்குச் சிரமப்பட்டவாறு இருந்தன. அன்ரன் அந்த இடம் வழியே மாடுகளை அதட்டித் துன்பப்படுத்தாமல் அவைகளை அதற்குரிய நடையிலே போகும்படி விட்டுவிட்டு அமைதியாக இருந்தான். அந்த இடத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு மாடுகள் வண்டிலை இழுத்துச் சென்றன. வண்டில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தூறலுமில்லை சாரலுமில்லை என்பதைப்போல முதல் பெய்த நல்ல மழைக்குப் பிறகு ஒரு துணை மழைவந்து அவர்களையும் நனைத்தது. பெய்கின்ற அந்த மழையை வெறுத்து
ரீ.பி. அருளWணந்தம் O 118 O

மறுப்பேதும் சொல்லாமல் தங்கள் பிரயாணத்தை அந்த மழைத்துாறலிலும் அவர்கள் தொடர்ந்து கொண்டு இருந்தார்கள்.
எட்டு
மரவள்ளித் தடிகளெல்லாம் இழுத்து அன்ரன் கிழங்கு விற்றான பிறகு வீட்டுக்குப் பின்புறமாயிருந்த அந்தத் தோட்டத்து நிலத்தில் பயிர் பச்சையென்று ஏதுமில்லாமல் ‘ஓ’ வென்ற மாதிரி பார்ப்பதற்கு வெளியாகிவிட்டது. ஐயாவுடன் மாடுபார்க்கப் போய்த் திரும்பி வந்தாற்பிறகு தனி ஒருவனாய் அந்தத் தோட்டக் காணியிலே நின்று கொண்டு, மண்வெட்டியால் அந்தக் கிழங்கு இழுத்த நிலமெல்லாம் ஆழங்காண அவன் கொத்திப் பண்படுத்தினான். இந்த வேலை தொடங்கிய நாளிலிருந்து ஐயாவின் வீட்டுப் பக்கம் போகாமல் பகலும் இரவுமாய்ப் பொழுதுகள் போய், அவனுக்கு ஒரு வாரம் ஆயிற்று, பத்து நாட்களும் சென்றுவிட்டன. அந்தக் கடைசி நாளன்று "இண்டையோட இந்த வேலையளயெல்லாம் செய்து முடிச்சுப்போட்டு அங்காலிப் பக்கமொருக்கா பின்னேரமாப் போய்வரவேணும்” என்று நினைத்துக் கொண்டு மீந்திருந்த வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் வேலையில் உடம்பைப் போட்டு அவன் மாய்ந்தான். இவ்வளவு நாளும் தொடர்ந்து மண்வெட்டி கையில் பிடித்து நிலத்தைக் கொத்தியதால் சிறுகச் சிறுக பலமெல்லாம் குறைந்து போய் ஏற்படும் அலுப்பு அன்றைக்குத்தான் இவ்வளவு நாள்களிலுமில்லாமல் அவனுக்குத் தெரிந்தது. அவ்வளவு முரட்டுவேலை ஒவ்வொரு தசைநாரும், ஒவ்வோர் இழையும், ஒவ்வோர் உயிரணுவும் களைத்துப் போய்விட்டது மாதிரி அவனுக்கு இருந்தது. உள்ளங்கையிலும் காய்ந்த காய்ப்புகள் எரிச்சலைக் கொடுத்தது. கட்டை விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையில் கன்றிச் சிவந்து விட்டது. இப்படி உடம்பிலும் நோவு, எலும்பிலும் நோவு எழும்ப களைப்புடனும் பலவீனத்துடனும் போய் கொஞ்சநேரம் வீட்டுவாசற்படியில் இருந்து களைப்பாறிவிட்டு, பிறகு கிணற்றிலே தண்ணிரள்ளி அவன் முழுகினான். நல்ல குளிர்ச்சியான அந்தக் கிணற்றுத் தண்ணிரைத் தலையில் ஊற்றிக் கொண்டபோது, உடம்பில் இருந்த அலுப்பெல்லாம் எங்கு போனதென்று தெரியாத அளவுக்கு அவனுக்குப் பறந்து போனது போன்று ஆகிவிட்டது. குளித்து முடித்துத் தலையைத் துவட்டிக் கொண்டு வந்ததும் அம்மா கொண்டு வந்து தனக்குக் குடிக்கக் கொடுத்த கடுங்கோப்பியோடு, அவனுக்கே உரிய இயல்பான அந்தச் சுறுசுறுப்பை மீளவும் அவன் பெற்றுவிட்டான். பிறகு வெளேர் வெள்ளை வேட்டியையும் சட்டையையும் எடுத்து அணிந்தவாறு அங்கே பொன்னுத்துரையரின் வீட்டுப் பக்கமாக அவன் போய்ச்சேர, அந்த வீட்டில் அங்கே யாருமே இல்லாத அளவுக்குத் தெரியும் நிசப்தம் நிலவுகிறதை அவன் கண்டான். அப்படி வந்தவன் "ஒரு சனத்தையும் இங்க வீட்டிலயாக் காணேல்லயே" வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 19 O

Page 70
என்று தனக்குள் நினைத்துக்கொண்டு அந்தப் படலையைத் திறந்து உள்ள போய் அந்த முற்றத்தில் நின்றுகொள்ள அங்கே தன் வீட்டுக்கு வெளியே நின்று கொணி டு அடுப்புக் குச் சுள்ளி விறகு முறித்துக்கொண்டிருந்த தங்கம்மா அவன் அங்கே முற்றத்தடியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டாள். "அங்க வீட்டிலயிப்ப ஒராக்களும் இல்லப்போல இருக்குத்தம்பி! அவயள் எல்லாரும் வெளியில போயிற்றினம் போலக்கிடக்கு!” - என்று அவனைப் பார்த்து விபரமாகச் சொன்னாள் அவள். "அய்யா எங்க போயிற்றார்?" - என்று கேட்டு அவரை விசாரிக்கும் சாட்டில் பிறகு கூடவே விசயாவும் எங்கு போனாள் என்பதையும் அறிந்துகொள்ள அவன் தங்கம்மாவிடம் கதை கொடுத்தான். "உங்க ஆரோ மத்தியானத்துக்குப் பிறகு வீட்டவா வந்து மாமாவ குடியிருப்புப் பக்கம் கூட்டிக்கொண்டு போனமாதிரிக் கிடக்குத் தம்பி இவள் விசயாவ மாமி கூட்டிக்கொண்டு பண்டாரிகுளம் அம்மன் கோயிலுக்குப் போயிருக்கிறா. சில நாள் செவ்வாய்க்கிழமவழிய அந்தக் கோயிலுக்கும் மாமி பின்னேரமாய்ப் போய்வாறவ. இண்டைக்கெண்டு விசயாவையும் கூட்டிக்கொண்டு போயிற்றா.
தங்கம்மா சொன்னதைக் கேட்கவும் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. விசயாவை அநேக நாள் பார்க்காததற்கு இன்றாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றுதான் அவன் நினைத்துக்கொண்டு இங்கே வந்தான். என்றாலும் அது கைகூடவில்லை என்ற ஏமாற்றத்தை தன் முகத்திலேற்படும் மாற்றத்தின் மூலமாய் தங்கம்மாவுக்கு வெளிக்காட்டி விடுவேனோ என்கிற ஒருவித பயம் அவனது உள்ளுணர்வுகளில் எழுந்தது. உடனே அதைச் சமாளித்துக்கொண்டு சாதாரணமாக தங்கம்மா சொன்னதை எடுப்பவன் போல தன் முகத்தை வைத்துக்கொண்டு "அப்ப நான் போயிற்று இன்னொரு நாளைக்கு இங்காலிப் பக்கமா வாறனக்கா” என்று அவரைப் பார்த்து அவன் சொன்னான்.
அன்ரன் ஒரு தங்கமான பெடியன் என்பது, அவனைச் சிறுவயதிலிருந்து அவள் கண்ட காலம் தொட்டு இற்றைவரையில் தங்கம்மாவுக்கு நன்றாகவே விளங்கும். அவள் திருமணமாகி இங்கே வாழவந்த காலத்திலே அன்ரன் ஒரு சின்னச் சுட்டிப் பயலாக இருந்து, நுங்கு வண்டிலைக் கெவட்டைக் கம்மால் தள்ளிக் கொண்டு அந்த
வழியாக வெங்கும் ஓடி விளையாடுவான். அன்றைய அந்த நினைவெல்லாம் இன்றும் அவளுக்கு வாலிபனாயிருக்கும் அவனைக் காணும் போதெல்லாம் அநேகமாய் ஞாபகத்தில் வருகின்றதுண்டு இன்றும் அவனைக் கண்டவுடன் அந்த நினைவினால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் அவனுடன் சிறிதுநேரம் அன்பாய்க்கதைக்க வேண்டும் என்று ஒரு ஆவல் மனத்தில் அவளுக்கு ஏற்பட்டது. "தம்பி வந்ததுதான் வந்தீர் அப்பிடி வந்ததுக்கு இங்காலிப்பக்கமா என்ரை வீட்டுக்கொருக்காலும் வந்து இதில இருந்து கொஞ்சம் என்னோடயுமிருந்து கதைச்சிட்டு நாலு அப்பமும் சாப்பிட்டுப் போமன். நான் இப்ப பின்னேரக் கைக்கு அப்பம் சுட சட்டிய அடுப்பில வைக்கத்தான் ஆயித்தமாகிறன். சின்னனில
്. ി. (G O 120 O

பாலப்பமெண்டா உமக்கு உயிரல்லே? அப்ப சின்னனில என்னட்ட ஓடியோடி வருவீர் - அப்பம் வாங்கிக் கொண்டுபோக - இப்ப பெரிய ஆம்பிளயா வளந்திட்டதோட அதெல்லாத்தையும் மறந்திட்டீர்?" - தங்கம்மா அவனது சின்ன வயதுக்காலக் கதையைச் சொல்லி பழய சம்பவங்களை ஞாபகமூட்டிய வேளை அவனுக்கும் அதைக் கேட்க மனதுக்கு ஒரு மனச்சாந்தி ஏற்பட்டது. "என்ன உங்களிட்ட வாங்கிச் சாப்பிடுறதில எனக்கென்ன குறஇருக்கு? வாறனே இப்ப நாலு அப்பம் தாங்களன் அக்கா? எங்க நீங்க தாங்கோ அக்கா சாப்பிட்டுப்பாப்பம்? அக்காவின்ரை கையால அப்பம் வாங்கிச் சாப்பிட்டு இப்ப எத்தின வருசமாச்சு?” அவன் சாதாரணமாகத்தான் இதைச் சொல்லிக்கொண்டு தங்கம்மாவின் வீட்டுப்பக்கம் வந்து கொண்டிருந்தான்; என்றாலும் தங்கம்மா அக்கா தன்னுடன் அப்போது அன்பாக கதைத்ததையும் தன் சிறிய வயதுக் காலக் கதையை ஞாபகமூட்டியதையும் அவன் இதற்குள்ளே நினைத்துப் பார்க்க வேண்டியே இருந்தது. இதனுடன் தங்கம்மாவுக்கு உள்ள வறுமையையும் சேர்த்து வைத்து ஒன்றாக எல்லாவற்றையும் அவன் நினைத்தான். அதனால் அவனுக்கே தெரியாமல் அவன் கண்களில் கண்ணிர் பனித்தது. "இப்பிடியிங்க இதில முற்றத்திலயா நீர் காத்துப்பட இருந்தம்பி, இங்க வீட்டுக்கயெல்லாம் ஒற்ரே இருட்டு. உதுக்க புகை முட்டிக்கொண்டு உள்ள நிக்கும், பேந்து நீர் அதுக்க கிடந்தா புக குடிக்க வேண்டி வரும்?” என்று சொல்லிக்கொண்டு அன்ரனுக்குக் கொண்டுவந்து வெளியில் ஒரு கதிரையைப் போட்டாள் தங்கம்மா. “பறவாயில்ல அக்கா இதிலயிருப்பம்! இப்பிடி முன்னாலயள்ள மரங்களையும் இதில இருந்துகொண்டு பாத்துக் கொண்டிருக்க மனத்துக்கும் கொஞ்சம் நல்லாத்தானிருக்கு!” - என்றான் அவன். பிறகு அவரின் வீட்டுக்குள்ளே அந்தக் கதிரையில் இருந்தபடி அவன் பார்த்துவிட்டு: “எங்க தம்பிமாரையெல்லாம் வீட்டில இங்க காணேல்ல?” - என்று தங்கம்மாவிடம் அவரின் பிள்ளைகளைக் கேட்டு விசாரித்தான்.” மூத்தவர கடைப்பக்கம் இங்க வீட்டுக்கு ரெண்டு சாமான வாங்கி வர்றதுக்கு நான் அனுப்பிப் போட்டன். சின்னவன் உதில றோட்டால, லாலா மிட்டாய் பம்பாய் முட்டாய் என்டொருவன் கத்திக் கத்தி வித்துக் கொண்டுபோக அத வாங்கிச் சாப்பிட்டான். பேந்து இப்ப பின்னேரக் கைக்கு கோபாலப்பு வீட்டடிக்கு முன்னால உள்ள நாவல் மரத்துப்பக்கமா அதுக்குக்கீழ பெடியளோட சேந்து கிளித்தட்டு விளையாடவெண்டு என்னட்டச் சொல்லிப்போட்டு அங்கோடிட்டான் தம்பி!” என்று சொல்விட்டு “இருந்தம்பி இதிலரெண்டுநிமிசந்தான்! அதுக்குள்ள தம்பிக்கு நான் அப்பம் ஊத்தியெடுத்துத்தாறன்!” என்று சொல்லிவிட்டு அந்த வாசலடிப் பக்கமிருந்த அடுப்படிக்கு அருகே பலகையை இழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தாள் அவள். அவன் வெளியே அந்தக் கதிரையில் இருந்தவாறு தங்கம்மாவின் கிடுகு ஒலை வீட்டுக்கு அருகே நின்ற மாவும் வேம்பும் பிணைந்து மேலே போயிருந்ததாய்த் தெரிந்த மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். என்றாலும் அவனது கவனமெல்லாம் அதிலேயில்லாமல், சிந்தனையெல்லாம் தங்கம்மாவைப் பற்றிய வரழ்க்கையின் ரிறங்கள் O 121 O

Page 71
ஏழ்மையான அவளுடைய தற்போதைய நிலைமையை நினைத்தே சுழன்று கொண்டிருந்தது. தங்கம்மா உடுத்தியிருந்த சாயம்போன வெளுறிய அந்தப் பழைய நூல் சேலையும், குகைபோன்று தெரிந்த இருட்டு உறைந்துள்ளதான அந்தக் குடிசையும், விதவைகளுக்கேயுரிய ஒருவித ஏக்கமான அந்த அவளுடைய வாடிய முகமும், அவனது மனத்துக்குள்ளே ஒரு வேதனைமிக்க உணர்வுகளை உண்டாக்கிவிட்டன. ஊதாங்குழலை கையில் பிடித்து புகையெழும்பிவர தங்கம்மா அடுப்பூதிக்கொண்டிருந்தாள். பக்' - கென்ற ஒரு சத்தத்துடன் சுள்ளியில் நெருப்புச் சட சடத்துப் பற்றிவிடவும் அன்ரன் அங்கே ஒருமுறை அடுப்படிப்பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். நெருப்பு வெக்கை தாக்கித் தாக்கி மங்கு விழுந்து படர்ந்த அவளது முகம் அந்த ஒளிபட்டு அவ்வேளையில் அவனுக்குச் சிவப்பாய்த் தெரிந்தது. ஆனாலும் அந்த உலை வீசும் அனலிலும் அவள் முகம் கணிவை வீசுகிறது மாதிரித் தெரிந்தது அவனுக்கு. "இப்பிடி அடுப்பு வெக்கைய்க்க இருந்தே உங்கட சீவிய காலமெல்லாம் கழியிது என்னக்கா?” என்று மனவருத்தப்பட்டுக்கொண்டு சொன்னான் அவன். "என்னாம்பி நான் செய்யிறது? என்ர துக்கத்தையும் துன்பத்தையும் நான் ஆரட்டச் சொல்லுறது? இப்பிடி நெருப்புத்திண்டே என்ர காலம் போவேணுமெண்டு என்ர தலயில எழுதியிருக்குப்போல..? அதுதான் இதுக்கயிருந்து எனக்கு ஈடேற்றமே வராமக் கிடக்கு. இந்தப் பிள்ளையள அவரென்ர தலையில வச்சிட்டுப் போயிற்றார். அதுகள நேர்மையா செவ்வயா வளத்து ஆளாக்கி விடவேணும் தம்பி! அதுதான் இப்ப எனக்கிருக்கிற பெரிய கவல. அதுகள் படிச்சுக்கிடிச்சு கொஞ்சம் ஆளாகி வந்திட்டாத்தான் இதில இருந்து எனக்கு விடுதல கிடைக்கும். இதுகளைப் பச்சக் குழந்தையளாயிருக்கேக்கிளயே அதுகளையும் என்னயும் தவிக்கவிட்டிட்டு அவரும் போய்ச் சேந்திட்டார். அதுக்குப்புறகு நானும் ஒரு பஞ்சை பராரியாகப் போட்டன். இதுகளுக்குப் பிறகு ஆரிண்டையும் உதவியள் பெரிசா எனக்கு இல்ல. அது தெரிஞ்ச விசயம்தானே உமக்கும்?” - அவள் குரல் தளுதளுக்க இதைக் கூறினாள். அவளது முகத்தில் விசனக் கோடுகள் நெளிந்தன. விவரிக்க முடியாத ஒரு கனம் அவள் உள்ளத்தைப் பிடித்து அழுத்துவதுபோல இருந்தது. தங்கம்மா சொன்ன கதைகளைக் கேட்க அவனுக்கும் கவலையாயிருந்தது. "ஐயா உங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல பெரிய உதவியயளப் பாத்துச் செய்யலாம். அவருக்குக் கணக்க வசதிகள் இருக்குத்தானே? ஆனாலும் அவர் ஏன் உங்களுக்கு உதவி செய்யிறேல்ல?” - இந்தக் கேள்வியை தங்கம்மாவிடம் அவன் கேட்கவும் அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று நினைத்தபடி சில கணங்கள் தங்கம்மா மெளனமாக இருந்தாள் வயது போன தன் மாமனாரைப்பற்றி குறைகுற்றம் இன்னொருவரிடத்தில் சொல்லவும், அவளுக்கு மனம் வரவில்லை. “ஏதோ அவரால இயன்ற அளவு வருடாவருடம் தன் வயலில் விளையும் நெல்லில் சிறு அளவேனும் சாப்பாட்டுக்கென்று தனக்கும் பிள்ளைகளுக்கும்
ඒ.ඡී. ථ(හvගvජ්ගර් O 122 O

தருகிறார்தானே? இதைவிட பெருநாள் திருநாளென்று வந்தால், புது உடுப்புகள் வாங்கிப் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறார். தனக்கும் ஒரு சேலை வாங்கிக் கொண்டுவந்து அதோடு தராமலா விடுறார்?” - என்று இதெல்லாவற்றையும் தனக்குள் அவள் நினைத்துப் பார்த்துவிட்டு: “ஏதோ அவரும் இந்த வயசில ஓய்வு ஒழிச்சலில் லாம சோம்பல் கழிப்பிணித்தனமில்லாம உழைச்சுப் பாடுபட்டு எங்களுக்கும் அங்கின கொஞ்சம் தாறார் தம்பி! அதைவிட அவரும் வேற என்னதான் செய்வார்? அவற்றை மூத்த மகனும் குடும்பப் பொறுப்பில்லாதவராய் வேலைக்குப் போகாமச் சும்மா திரியிறார். இவற்ற நிழலிலதான் அங்க அவற்றை மகனின்ர குடும்பத்து ஜீவனோபாயக் கொடியும் தண்ணி குடிச்சுக் கொண்டிருக்கு. அப்பிடி அந்தக் குடும்பத்துக்கும் அவர் உதவி செய்யவேணும்! இப்பிடி எத்தின தலைச்சும இருக்குதவருக்கு?" - அன்ரனுக்கு இப்படி தங்கம்மா கதை சொல்லிக்கொண்டிருந்தாலும் அடுப்படிக்குப் பக்கத்திலிருந்தவாறு அவளது கை பரபரக்க வேலை செய்துகொண்டுதான் இருந்தது. அப்பமாவைச் சட்டியிலுாற்றிச் சிவாவுவதும், பின்பு அதிலே பாலூற்றிக் காயவிட்டு தட்டகப்பையால் கிளப்பியெடுத்துப் பக்குவமாய் அதைச் சுளகில் வைப்பதுமான வேலையை தன் கதையோடும் இருந்துகொண்டு அவள் அதைத் தொடர்ந்து செய்துகொண்டும்தான் இருந்தாள். சுட்ட அப்பங்கள் சுளகில் நாலைந்து சேரவிட்டு கணக்காய்ச் சூடு ஆறிக்கிடந்த ரெண்டு அப்ப்த்தை முதலில் எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டு வந்து அன்ரனுக்கு அதைச் சாப்பிடக்கொடுத்தாள் அவள். அவன் தட்டை அவள் கையிலிருந்து வாங்கின கையோடு மீண்டும் வாசல் பக்கமுள்ள அந்த அடுப்படிக்குப் பக்கத்திலே அவள் போய் இருந்துகொண்டாள். "தம்பி அப்பம் எப்பிடியடி இருக்கு? நீர் முந்திச்சாப்பிட்ட ருசி மாதிரியே வாய்க்கு இப்பவும் இது உமக்கு ருசியாயிருக்கோ?” அவன் ரெண்டு விள்ளல் அந்த அப்பத்தில் பிட்டு எடுத்து வாயில் வைத்துக் கொண்டபோது அவனைப் பார்த்துக் கேட்டாள் அவள். "அந்தமாதிரியே இப்பவும் அப்பம் நல்லோய் ருசியாயிருக்கக்கா!!” அவன் சொன்னதைக்கேட்டுவிட்டு அவள் சந்தோஷப்பட்டுச் சிரித்தாள். “வயதும் எனக்குப் போய்க்கொண்டு இருக்கெல்லா தம்பி! ஏதும் குறையாக் குற்றமா என்ர சமையல் சாப்பாடு சமைக்கேக்க இப்ப வந்திட்டோவென்று நான் நெச்சன்!”
"இல்ல அப்பிடியே முந்தின மாதிரித்தான் இப்பவும் அப்பம் நல்ல ருசியா இருக்கு" மீண்டும் அவன் சொல்ல தங்கம்மாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியாகி விட்டது. "என்னவோ தம்பி எல்லாம் காஞ்சு வறண்டமாதிரிப் போயிற்றுதென்ர வாழ்க்க நான் வாலறுந்த பல்லியா மூளியாப் போயிட்டன்! இங்க என்ர வீட்டுக்கு அவர் செத்தாப்பிறகு சொந்தபந்தமெண்டு இருக்கிற ஆக்கள் ஆருமே ஒருத்தரும் இங்க வாறேல்ல. முன்னம் பெரியப்பா, சித்தப்பா, மாமாவெண்டு இங்க சொந்தங்கொண்டாடிக்கொண்டு வந்தவயளெல்லாம் அதுக்குப் பிறகு இங்காலிப்பக்கமே வராம விட்டிட்டினம். ஏதோ வந்தா இங்க பாத்து
உரழ்க்கையின் ரிறக்கஸ் O 123 O

Page 72
ஏதோ அதஇதத் தங்கட கையால இருந்து குடுத்திட்டுத் தாங்கள் போவேணுமெண்டாக்கும் அவயள் நினெக்கினம் போல. நானெண்டா இதுவரைக்கும் ஆரிட்டயும் எந்தவுதவியும் எதிர்பாக்கிறேல்லத்தம்பி. சொந்தமெண்டிருக்கிற ஆரிட்டயும் ஒருசேமும் உதவியெண்டு இத்தறுதிக்காலத்துக்கும் நான் கேட்டுமில்ல. எனக்கென்ரா தம்பி குற? என்ர கைகாலாடு மட்டும் இந்த நெருப்புக்குப் பக்கத்திலயிருந்து ஏதோ நான் பாடுபட்டு என்ர சீவியத்தத் தள்ளுவன். அதுக்கு இந்தக் கைகால ஆட்டி உந்த வேலையளச் செய்ய முருகன் என்ன நோயில்லாம சுகதேவியா வச்சிருக்கவேணும்! அதுதான் நானந்தக் கடவுளிட்டயாக் கேக்கிறது. என்ர சீவிய காலத்தில இதுகள் மட்டும் எனக்குக் கடவுள் தந்திட்டா அது காணும்! அதைவிட இந்த உலக மனுசரிண்ட சாவாசம் ஒண்டும் எனக்கு வேணாம்!” - இதைச் சொல்லிக்கொண்டு அடுப்படியில் இருந்து எழுந்துவந்து அவன் வைத்திருந்த அந்தத் தட்டை அவள் கையை நீட்டிக் கேட்டுவாங்கினாள். மீண்டும் அவள் உள்ளே போய் அந்தத்தட்டில் இரண்டு சோடி அப்பங்களை வைத்துக்கொண்டுவந்து அதை அவனிடத்தில் கொடுத்தாள் அவள்.
“காணுமக்கா.” ‘இதென்ன எப்பனா ரெண்ட எடுத்துத் திண்டிட்டு உடனேயே காணுமெண்டுறீர்? இன்னும் நாலஞ்சத் தாறன் எடுத்து நல்லா ஆசைக்குத்தின்னும்!” சொல்லிவிட்டு மீண்டும்போய் அவள் அந்த அடுப்புக்குப் பக்கத்திலே இருந்தாள். "எப்பிடி உங்கட வண்டில் சவாரியெல்லாம் போகுது? தங்கம்மா கேட்கவும் அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அப்பத்தைத் தின்று கொண்டிருந்த வாக்கிலே சிரித்தான். "சும்மா போகுது..!” "நீரும் சவாரி பழகுறீராம்? மாடுவாங்கவும் போறிராம்?” "உதை ஆர் சொன்னதக்கா?”
"ஆரோ சொல்லிச்சினம்." "இல்லச் சொல்லுங்கோ? உண்மையா ஆர் அதச் சொன்னதெண்டு.?” "அவன் கேட்க தங்கம்மா அன்ரனின் முகத்தைப் பார்த்தாள். "இத எனக்கு விசயாதான் சொன்னவள்” என்று சொல்லிவிட்டு அவன் கண்களை மட்டும் அதற்குப் பிறகு கூர்மையாக அவள் உற்றுப் பார்த்தாள். அவனுக்கு என்னவோ தங்கம்மாவின் கூர்மையான பார்வையைக் காணக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் பிறகு அது ஒருவிதத்தில் சந்தோஷமாகவும் அவனுக்கு இருந்தது. "அவவுக்கென்ன என்ர கதையில ஒரு அக்கற?"
ம். ஏதும் அப்பிடி இருக்கிறதாலதானே அந்த நினைப்பில இருந்து அதை எனக்கும் வந்து சொல்லுறா..?” - என்றுவிட்டு தங்கம்மாவும் கொஞ்சம் சிரித்தாள். "அவளிந்தக் குடும்பத்துக்குள்ள ஒரு நல்ல பிள்ள
ඊ. ෆි, ෆයි‍ෙගvගvණිගර් O 24 O

தம்பி! தங்கமான குணம் என்ன செய்யிறது இங்க அதுகள் கஷ்டத்தில கெண்டுவந்து தள்ளிப் போட்டுப் போட்டுதுகள். அவளிதுக்க அவயட்டக்கிடந்து கொண்டு எல்லா வேலையளையும் செய்து மாயுறாள். அங்க கொழும்பில இவயள் எங்கட மாமாவின்ரயும் மாமியின்ரயும் மகள் ஒருத்தி இருக்கிறாள். அவவுக்கும் ரெண்டு பெம்புளைப் பிள்ளயஸ் இருக்கிறாளயள். அவளயஞக்கெல்லாம் சரியான டாம்பீகம். அதுகள் இங்கவந்தா மாமி அதுகளுக்கு இங்க மேசையெடுத்துப்பாப்பா, ஒண்டும் அவளவயள் இங்கின வந்தா வீட்டில துரும்பக்கூட ஒரு இடத்த எடுத்துப் போட மாட்டாளவயள். அவளயள் பொம்புளப் பிள்ளயஸ் எண்டு இருக்கிறாளவயள் எரியிற அடுப்புக்கு ஒரு விறகெடுத்து வைக்கத் தெரியாது! அப்பிடித்தான் தாய் வளத்திருக்கிறாள். அப்பிடி வேல செய்யக் கள்ளியள் அவளேயஸ்! இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு, என்னவோ லிவு கிடச்சிருக்கெண்டு அவளேயஸ் இங்க வரப்போறாளயஸ் போலக் கிடக்கு. அப்புடித்தான் இங்கின உவயிட்ட இப்ப கத அடிபடுது! அவயள் வந்தா உங்க உள்ள எல்லா வேலையையும் அவள் பேய்ப்பெட்டை விசயாவின்ரை தலயிலதான் பொறியும். பாவம் அந்தப் பெட்ட. உதுக்காலயிருந்து எப்பதான் அந்தப் பெட்ட வெளிக்கிடப் போறாளோ தெரியேல்ல. எங்கேயும் சடங்குமுடிச்சு உதுக் காலயிருந்து வெளிக்கிட்டாத்தான் அவளுக்கு விமோசனம் வரும்.” தங்கம்மா அந்தக் குடும்பக்கதையை எடுத்து பிரச்சினைகளைச் சொல்லிக்கொண்டு போக, தனக்கு ஒன்றும் அதிலே சரி. பிழைகளைச் சொல்வதற்கு உரிமை இல்லை என்று நினைத்துக் கொண்டு பண்பான முறையிலே அவன் மெளனமாக இருந்தான். என்றாலும் விசயாவைப் பற்றித் தங்கம்மா சொன்ன கதைகளைக் கேட்டதில் அவனுக்கு முகம் வாட்டம் கண்டது. இதனால் அதைத் தங்கம்மாவுக்குத் தெரியாமல் மறைக்கவேண்டும் என்பதற்காக மொறுமொறுத்த அப்பக் கரைகளைப் பிய்த்து, சாப்பாட்டிலேதான் தனக்குக் கரிசனை என்பதாகக் காட்டிக் கொண்டு, அப்பத்தை முன் பற்களால் கொறித்து அதை அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 'தம்பி என்னும் ரெண்டெடுத்துத் தட்டில உமக்கு வைக்கவே?” "ஹா. ம் வேணாமக்கா இதுவே கனக்க! நீங்க தந்தது இன்னும் இந்தத் தட்டில கிடக்கெல்லே? அப்பமென்ன திண்டாப் பேந்து கண்ண மூடி நித்திரதான் வருமக்கா!” - அவன் சொல்லிவிட்டுச் சிரித்தான். அவனின் சிரித்த முகத்தை தங்கம்மா பார்த்துவிட்டு. 'தம்பி நீர் உம்முடைய அம்மாவுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை, நீர் வெய்யில் மழைக்க திரிஞ்சாலே அவ கண்டாத் துடிச்சுப்போடுவா, அப்பிடிச் செல்லமாத்தான் அம்மா உம்மை வளத்திருக்கிறா, இந்த ஊருக்கிளயே கல்வீடு முதல் முதல் கட்டின ஆக்கள் நீங்கள்தானே! இப்பவும் உம்மட அம்மாவின்ர பாட்டன்ர சூசைப்பிள்ளை எண்டுற அவற்ற பேர்தான் சூசைப்பிள்ளையார் குளம் எண்டு இந்த இடத்துக்கும்
வரழ்க்கையின் ரிறங்கஸ் O 125 O

Page 73
ஊர்ப்பேராய் இருந்துகொண்டிருக்கு அப்பிடியான ஆக்களெல்லே நீங்கள்! உமக்கு எவ்வளவு காணி பூமியெண்டெல்லாம் சொத்திருக்கு, அதுகள வடிவாப் பாத்தெடுத்துக் கவனிச்சுக் கொண்டிருக்கிறத விட்டிட்டு இந்தச் சவாரியெண்ட கோதாரியளில விழுந்து நீரும் ஏன் அலஞ்சு கொண்டிருக்கிறீர்? இந்த வண்டில் மாட்டுறேஸ் ஒடுறதும் சரியான வலு பயங்கரந்தம்பி! இதில விழுந்து முறிஞ்சு எழும்பித்திரியேலாத ஆக்களாவும் எத்தின பேர் அங்கின இங்கினையும் இருக்கினம். அங்கின முட்டுப்பட்டது இங்கின முட்டவிட்டதெண்டு, இந்த வண்டில் சவாரியில சண்டை சச்சரவு வெட்டுக்கொத்தெண்டு எவ்வேளவு சோலி வரும்! அதால ஏன் நீர் உதுகளுக்கு விருப்பப்பட்டுக் கொண்டு திரியிறீர்?" அன்ரனை தனக்கு இருக்கும் ஒரு உடன்பிறவாச் சகோதரனாக நினைத்துப் பார்த்துக் கொண்டு தங்கம்மா வாஞ்சையுடன் அவனைப் பார்த்துச் சொன்னாள். "அப்பிடியா நீங்க சொல்லுறமாதிரி பெரிசா ஒண்டும் இதில கெடுதலெண்டு இல்லையக்கா, பாக்கிறியள்தானே ஐயாவும் இந்த வயசில சவாரி ஒடுறார்! அவருக்கென்ன இவ்வளவு காலம் வந்தது அப்பிடி? ஒண்டுமில்லையே?” "அவேற்ற கத வேறதம்பி அவர் இதுகளில சின்னனில இருந்து அனுவவப்பட்டவர். உடம்பிலயும் நல்ல தைரியசாலி அவர்! அதுதான் இந்த வயசு கடந்து போயும் இளந்தாரியாட்டமா சவாரி றேசெண்டு ஒடியாடித் திரியிறார். அவர் லேசுப்பட்டவரில்லத்தம்பி இளந்தாரி வயசில ஆள் வலு பொல்லாதவர். சுள்ளெண்டு அவருக்கு உடன கோவம் வந்திடும். அவர் அந்த நாளயில என்ன ஆட்டமெல்லாம் ஆடிப்போட்டு இப்ப, இப்பிடி இருக்கிறாரெண்டு உமக்குத் தெரியாது? அப்பிடி அவற்ற கத பெரிய கத தம்பி! இப்பிடி சவாரி மாத்திரம் ஒடிக்கொண்டு திரிஞ்ச ஆள் எண்டு நீர் அவரப் பாத்து நெக்கிறீரே? அதுதான் இல்ல. அவர் அப்ப நாடகங்கள் கூத்துகளெண்டு இந்தியாவில இருந்தும் அந்த மாதிரி கோயில் சில மாதிரியான வடிவான நாட்டியக் காறியளயெல்லாம் கூட்டிக் கொண்டுவந்து இங்க கூத்துகளெல்லாம் போட்டவர். சோடின, சீன், உடுப்பெண்டு எல்லாம் அங்கயிருந்துதான் அவர் எடுப்பிச்சு பெரிய சிலவாயெல்லாம் சிலவழிச்சு ஆள் செய்தவர்.” "அப்ப அவர் அங்கயிருந்து கொண்டு வந்து போட்ட நாடகங்கள் கூத்துகளயெல்லாம் நீங்களும் பாத்தனியளே அக்கா?” "நானெங்க தம்பி அதப் பாத்தது. இதெல்லாம் நான் கலியாணம் முடிச்சு வந்தாப் பிறகு எங்கட மாமி அவரைப் பற்றிச் சொன்ன கத.” “சரி! அப்ப பேந்தேன் நாடகங்கள் கூத்தில அவருக்கு விருப்பமில்லாமப் போச்சுதாம்?” "வாறன் அதச் சொல்றனே இனி நான்! அவர்தம்பி அந்த நாளில உதுக்குப் பெரிய எடுப்பெல்லாம் எடுத்து உள்ள காசு பணமெல்லாம் செலவழிச்சுத்தான் அந்தக் கூத்துகள நடத்தி ஒப்பேற்றினவர் கண்டீரோ? அப்ப அவர் அந்தக் கூத்து நடத்த முழுப் பனமரங்கள ஒரு ஆளின்ர கழுத்தளவு உயரத்துக்கு அப்பிடியாப்பிடியே குறுக்காக இருக்க வெட்டி
്. ി. (G O 126 O

அதத் தரையில நிறுதிட்டமா நிறுத்தி உந்த றோட்ட மறிச்சு அந்த மாதிரிப் பெரிசா நீளமான மேடை தெருவடக்கிப் போட்டவராம் நாடகத்துக்கு உங்காலிப்பக்கங்களில எங்கயெல்லாமோ அலஞ்சு திரிஞ்சு பெரிய பெரிய பனயெல்லாம் வெட்டிக் கொண்டந்துதான் அப்பிடியா அந்தக் கொட்டகை போட்டவயளாம். விடிய விடியக் கூத்தாம் தம்பி அதில நடந்தது. அப்பிடியா ஒரு கிழம முழுக்க நடந்தது, ராமாயணம் எண்டுற அந்தக் கூத்தாம். அது முடிஞ்சப் பிறகு பேந்து பத்துப் பதினைஞ்சு நாளுக்கு பாரதம் கதை போச்சாம். இதுக்கெல்லாம் என்னென்ன சிலவு வரும்? எப்பிடிக் காசுகள் சிலவழிஞ்சு போகும்?”
“செலவெல்லாம் இவர் தனியாத்தானோ அதுகளுக்குச் செலவழிச்சவர்.?”
"இல்லாம ஆர் இந்த வேலைக்கு அந்தளவு காசு செலவழிச்சுக் கொட்டுவினம்.? வந்த நடிகைகளுக்கெண்டும் சீன்ஸ்காரன், தாளக்காரன், ஆர்மோனியக்காரன் எண்டு அவங்களுக்கெண்டும் இங்க மாமிதானாம் சாப்பாடு மூண்டு வேளைக்கும் அவிச்சுக் கொண்டினவ, அவ மாமி இப்ப கூட உதுகளைப் பற்றிக் கேட்டா ஆத்திரத்தோடதான் அந்தக் கதய ஆருக்கும் சொல்லுவா.” “எனக்கெண்டா நீங்க உதுகளச் சொல்ல புதினமாயிருக்கக்கா! இவ்வேளவு காலமா இதயெல்லாம் எனக்கு ஐயா கூடச் சொல்லேல்ல. ஏன் அப்பிடி எல்லாக் கதையளயும் எனக்குச் சொல்லுறவர் இத மட்டும் எனக்குச் சொல்லாம விட்டார், எண்டு எனக்கு ஆச்சரியமாக் கிடக்கு.” "அதுதான் உள்ளுக்க அதுக்க கன விசயங்கள் இருக்குத் தம்பி! இந்த வீட்டு வார்த்தயள வெளியாலவிடக்கூடாதெண்டாலும் நான் அதச் சொல்லுறனே உமக்கு விபரமாய்! நீர் எங்கட வீட்டு பிள்ள மாதிரித்தானே? உமக்குச் சொல்லுறதில ஒண்டும் பிழயில்லத்தானே? இந்தக் கூத்து நடத்தின கதய அவர் மாமா உமக்குச் சொல்லாம விட்டதுக்கு ஒரு காரணம் இருக்குத்தம்பி! அந்தக் கதயில ஒண்டச் சொன்னா, இன்னொண்ட அவர் சொல்லாம தனக்குள்ள மறைக்கத்தான் வேணும். ஏனென்டா அதச் சொன்னா அவருக்கு வெக்கையீனம் தானே.?” "அப்பிடி என்ன கூத்து நடத்தி ஒரு கரைச்சல் அவருக்கு வந்தது?” அதான் முழுக்க இப்ப நான் சொல்லப் போறன் பொறுமன், அவர் ராமாயணக் கூத்துப் போட்டார் எண்டு நான் சொன்னனெல்லே, அந்த ராமாயணக் கூத்து முடிஞ்சு கொஞ்ச நாளில ராமாயணச் சங்கடப்படலம் இவர் மாமாவின்ர குடும்பத்தில ஆரம்பமாவிட்டுது. முதலிய ஊரிப்பட்ட உந்தச் சிலவெல்லாம் கடன் வாங்கி அவர் செலவழிச்சதில, பேந்து அவருக்குக் கடன் எண்டுற சுருக்குக்கயிறு கழுத்தில ஆளுக்கு நல்லாவந்து இறுக்கிவிட்டிட்டு, அப்பான்ரா தம்பி உவருக்கு வயலில வெள்ளாம வெட்டும் இருந்தது. என்ன செய்யிறது பேந்து? உந்தக் கடனுகளத் தீக்க அந்தப் பெரிய வயல் விதச்ச காணியளயெல்லாம் அரிவு வெட்டி விளஞ்ச வெள்ளாமையில ஒரு புசல் நெல்லக்கூட தின்றத்துக்கெண்டு
რიgფტàინინußმsk NoწმეysსóსიNo O 127 O

Page 74
கொண்டுவந்து வீட்ட போடாம களத்திலயே வச்சு வித்துப் போட்டுத்தான் அவர் அந்தக் கடன் குடுத்தவர். பாரும் தம்பி அந்தப் பெரிய வயல் விதச்சவர் கூட இந்தக் கூத்தை நடத்தி இளச்சுப் போனார். அது அப்பிடிப் பவுணாய் விளைஞ்சும் கூட பத்தாமத்தானே போச்சுது என்ன செய்யிறது? அதுக்கப் பிறகு வயலில இருந்து பெருமூச்சு விட்டுவிட்டு அவர் வீட்டுக்கு வந்து சேந்தாராம்" "கடன் படுற ஆன், பேந்து அதக்குடுக்கிற ஆன், இது எல்லாருக்குமா இருக்கிற ஒரு பிரச்சினதானேயக்கா? இத அவர் எனக்குச் சொல்ல ஏன் வெக்கப்பட வேணும்? உலகத்தில நாலு சனத்துக்கும் வாற பிரச்சனதானேயிது? அத எனக்குச் சொல்லாம ஏன் அவர் மறைக்க வேணும்.?”
"அதுக்க அவரிட்ட ஒரு கள்ளமிருக்கே அதச் சொல்லேலாதே உமக்கு அவர்?” “என்ன கள்ளமெண்டு அப்பிடி ஒண்டு?” - அவன் கேட்க தங்கம்மா சிரித்தாள். "தம்பி இவரிண்ட இந்த நாடகத்தில இதுக்குப்பிறகு நடந்ததுதான் தம்பி உச்சக்கட்டம். இந்தக் கதய மாமி எனக்குச் சொல்லேக்க எனக்கும் சிரிப்புத்தான் வந்தது. எண்டாலும் நான் அடக்கி அத வச்சிருந்தன். ஏனெணி டா மாமி என்னையும் வேறு என்னவுமா ஏதும் நெச்சுப்போடுவாவோ எண்டு எனக்கும் பயம். அதால வந்த சிரிப்ப அப்புடியே வாய்க்க நான் அடக்கிப் போட்டன். இவர் எங்கட மாமா தம்பி அந்தக் கூத்துகள் நடக்கிற காலத்தில, அங்க இந்தியாவில இருந்து இங்க கூத்து நடிக் கவெண்டு வந்த ஒரு பொம் புளயோட சினேகிதமாயிட்டாராம். அவள் பாக்கிறத்துக்கு கலப்பு இனப் பெண்டுகள் மாதிரி உடல் வளைவுகளும் சரிவுகளுமா வடிவான மணிக்குட்டி மாதிரிப் பொம்புளயாம். அவள ஆரும் ஒரு தடவ பாத்தா வேற இடத்துக்கு கண்ணயே எடுக்கேலாதாம்! அப்பிடி அய்யோடா தம்பி செக்கச் செவேலெண் டு செம்பகப் பூப் போல அவள் வ-டீ-வாம் டா. அவளிவரப்பிடிச்சதுதான் புளியங்கொம்பு எண்டு வைச்சுக் கொண்டாள். தன்னுரு முழுக்கக் காட்டி அவள் நல்லா இவரை மயங்கிப் போட்டாள். அவள இவர் பேந்து கூட்டிக்கொண்டுபோய் ஒரு வீட்டில வலுப்புறியமா வச்சுக் கொண்டு இருந்திருக்கிறார் கண்டியோ. அதால இங்க வீட்டுக்கு வராம ஊணும் உறக்கமும் அவருக்கு அங்கேயாப் போச்சுது. இங்க மூண்டுநாலு நாளா அவரக் காணேல்லக் காணேல்ல எண்டு போட்டு மாமியும் பாதகத்தி இங்க எச்சில் விழுங்க முடியாத துக்கத்தோட தாங்கித் தாங்கி இருந்து அவரைப் பார்த்துப் பாத்துக் களச்சுப் போயிற்றாவாம். அப்பிடிச் சோறு தண்ணியில்லாம அவவும் சுக்குப்போல உலர்ந்து போனாவாம். இங்க அவருக்கு இவ குணவதி மாமிதம்பி சாப்பிடுறதுக்குச் சாப்பாடெல்லாம் சட்டமாகச் சாப்பிடத்தான் அவருக்குப் பெரிய அடுக்கெடுத்துச்செய்யிறவ. அவருக்கு எப்பவும் மேம்பானச் சோறுதான்ரா
சீ.பி.அருஸ்ணத்தம் O 128 O

தம்பி போடவேணும். மத்தியானம் சோறு சாப்பிடுறதெண்டா ஒலப்பெட்டி கவிழ்த்துப்போட்டு, அதுக்கு மேல கிழிசல், வாடல், கசங்கல், இளகல், முத்தல், கோணல் இல்லாத அகலமான தளதளப்பான வாழை இலைத்துண்டுபோட்டு, சுடச்சுட குழையாத பொல்லுப்போல சோறும் விழுதா, அம்மியில அரச்ச மிளகாய்க்கூட்டுப் போட்டுவைச்ச குழம்பும் ஊத்தவேணும் அவருக்குச் சாப்பிட. அந்தக் குழம்பில உப்பு, புளி, உறைப்பு கொஞ்சம் முனைப்பா இருக்கவேணும் தம்பி! அப்பிடி ராஜோபசாரமாகச் சாப்பாட்டுக்கு மாமி அடுக்கெடுத்து வைக்கவேணும் தம்பி அவருக்கும்! அவரும் ஒரு கறுவேப்பிலயோ பச்சமிளகாயோ கழிவு போகாம எல்லாத்தையும் சாப்பிட்டிடுவார். எப்பவும் மாமா கறிவாங்கப் போனா அவர் வீட்ட வாங்கிவாறது ஒரே இன மீன் வகதான் தம்பி அந்த விரால் மீன்! அதுதான் அவருக்கு வேணும்! உந்தப் பாவக்குளம் பக்கத்தில இருந்து குறவர்தான் இந்த மீன சுரக்குடுவைக்க தண்ணிவிட்டு அதுக்கபோட்டு, துடிக்கத் துடிக்க அங்க 'கொறோப்பத்தான றோட்டடிக்குக் கொண்டு வாறவங்கள். அதில ரெண்ட மூண்ட கோருவையா வாங்கி கையில தோறணம் தொங்கவிட்ட கணக்காய்ப் பிடிச்சுக் கொண்டுவந்து உங்க குசினிக்கு வெளியால அவர் போடுவாராம் அதயெல்லாம் மொழுக்கு மொழுக்கெண்டிராம கறிகாச்சிக் குடுக்க, இப் புடியெல்லாம் தனக்கு அவர் செய்து பிோட் டாரெண்டு ஆத்திரப்பட்டுக் கொண்டு 'அந்தப் பறவே சைக்குப்பார் நல்ல படிப்புப்படிப்பிச்சு நான் காட்டிவிடுறன் எண்டு சொல்லிக் கொண்டு இவ வரிஞ்சு இழுத்துச் சீலய இடுப்பில கட்டிக்கொண்டு அங்க காணப்போயிருக்கிறா.” "இது கூத்து நடந்து முடிஞ்சாப் பிறவோ நடந்தது அக்கா?” "அந்தக்கூத்து நடந்து கொண்டிருக்கேக்கயே இவற்ற இந்தக் கூத்தும் நடக்குது தம்பி! அவளயஞக்குக் காசு தானே வேணும்! இவர் அப்பிடி அந்தத் தேவடியாளுக்கு அள்ளிக் கொட்டியிருப்பார்!” "அப்ப கூத்து நடத்தி முடிச்சத விட பெரிய அழிமானம் இந்தக் காசு செலவழிப்பில போலத்தான் கிடக்கு? அதாலதான் கூடக் கடன் ஏறியிருக்கும்போல?” “உண்ணான அப்பிடித்தான் தம்பியடா இருக்கும்! அவளவயள் பாதகத்தியள் இப்புடி வறுக வந்தவயள் இடம் கிடச்ச இடத்தில வறுகிக் கொண்டு போகாமலிருப்பாளவயளே?” “பேந்து சொல்லுங்களன் நடந்தத?” “பெரிய பாவம் தம்பி இவ என்ர மாமியும் அவவும் தான் பட்ட வலிகள் எத்தன சுமந்த சுமையும் எவ்வளவெண்டு என்னட்ட முந்திச் சொல்லிச் சொல்லி சாவுக்கு அழுகிறது மாதிரி வாய்விட்டு அழுவா. அப்பிடித்தான் கஸ்டப்பட்டிருக்கிறா இந்தப் பிரச்சின வந்து." "ம். அப்ப பிறகு அவ அப்பிடி வெளிக்கிட்டு அங்க போய் என்ன
იყkყგàრtიტußმიქk NoმდyxსნიNo O 129 O

Page 75
நடந்தது?”
"இது கேக்க ஒரு பக்கம் பகிடிதான்தம்பி ஒரு பக்கம் தம்பி கேக்க மனவருத்தமும் வரும் அவ அங்க போன நேரம் தம்பி, அந்தவிட்டில, சூப்பனகை போல உள்ள அந்தக் காமரூபிணிய வைச்சுக்கொண்டு இவர் மாமா அந்த வீட்டுப்பறனுக்கு மேல படுத்துக்கிடந்தாராம். இவ அந்தப் பறணுக்குக் கீழ போய் நிண்டு கொண்டு பொறுமயா அவரைப்பாத்து, ஐயா வாங்கோ இறங்கி வீட்ட! வாருங்கோ ஐயா? எண்டு பெரிய தயவாக் கூப்பிட்டிருக்கிறா. ஆனா அவர் அப்பிடி இவ தயவாக்கூப்பிட போடிபோ படுவேசை ஏன்ரி வீட்டால இருந்து வெளிய வெளிக்கிட்டு நீ இங்காலயெல்லாம் வந்தனி தோற - எண்டு தூசணத்தாலயம் வைச்சுப் பேசியிருக்கிறார். இவயள் ரெண்டுபேரும் புருசன் பெஞ்சாதி கதைக்கினம் தம்பி நீ சும்மா இரன்என்ன வாயவைச்சுக் கொண்டு. ஆனா அவள் அப்பிடி இருக்கேல்லயாம்! அவள் வைப்பாடிச்சிதம்பி! பாரும் அவளுக்கு உள்ள அந்த வாய்க்கொழுப்ப? மாமி அவளப்பாத்து வேசை, வேசையெண்டு காறித்துப்பிப்போட்டுக் கத்த: பூ போடிபோ வெளுவாக்கலங்கெட்ட தோற நிண்டியெண்டா வாயக் கிழிச்சு கும்மிப் பிழிஞ்சுபோடுவன் எண்டு அவளும் இவமாமியப் பேசியிருக்கிறாள். பாரும் அவளிண்ட குண்டிக்கொழுப்பத்தம்பி அப்பிடிப் பேசவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மாமி என்ன லேசான ஆளெண்டு நீர் நெச்சீரே - மாமியெண்டாத் தம்பி அவ ஒரு ஓங்குசாங்கான பிறவி ரோசக்காரி உடனே அவ காளி - மகா காளி - பத்திரகாளியெண்ட மாதிரித்தான் நிண்டாவாம் அதில. அப்பிடி நிண்டுகொண்டு நல்லாக் குடுவ குடுத்திருக்கிறா அவ! இப்புடிப் போட்டு வாய்க்கு வந்தபடி கன்னாரே பின்னாரேயெண்டு நல்லாக் கிழகிழியெண்டு அவள் பரதேசியாளப் போட்டு இவ மாமி கிழிக்கத்தம்பி, உடன பறனால இறங்கி வந்து அவர் மாமா இவவுக்கு, இடக்கையாலயும் வலக்கையாலயும் மாறி மாறி விட்டாராம். நல்ல அட்டி! அது பெரிய அக்குறுமம் என்ன? பாவம் என்ன அவ? அந்த அடியோட இவ துடிச்சுப் பைைதச்சுப்போய் நிக்க, எட்டி அவவின்ர பத்தைபத்தையான தலைமயிரில இவர் பிடிச்சிருக்கிறார். அவ மாமியின்ர தலைமயிர் தம்பி இந்த வயசும்போயும் மயிர் முடிச்சு விழுந்து தொங்கேக்க இப்பவும் நீட்டம், அப்ப எப்பிடி இருந்திருக்கும்?, அவர் அப்பிடி அவவின்ர தலமயிரைப் பிடிக்கேக்க கையில அது வடம் மாதிரித்தான் என்ன தம்பி? அப்பிடியான அந்த தலமயிரில இவர் பிடிச்சு, விலகின அந்தத் தலப்பின்னலோட அவவுக்கு முதுகில நல்ல அடியும் துடைக்குக் கீழ உதை மிதியெண்டும் எல்லாமாப் போட்டு பப்புளிக்காய் இந்த றோட்ட்ால இழுத்துக் கொண்டரேக்கயாம் அவவின்ர ரவிக்கயின்ர சட்டைப்பின்னெல்லாம் விட்டுப்போய் மாராப்புச் சரிஞ்சு இந்த நெஞ்செல்லாம் தெரிய றோட்டால கேவலப்பட்டதாத்தான் தன்ன இழுத்துக் கொண்டந்தாராம் அவர் எண்டு எனக்கு அந்தக் கதயச் சொல்லேக்க, தான் பட்ட இந்த நிந்தனயளயும் நிஷ்டுரங்களையும் மாமி ஒரு நாள் எனக்குச் சொல்லி சரியா அழுதவ
iෂ්, ගී, ෆණ්vග්vෂීඝ(b o 130 o

தம்பி!”
“பேந்து. எவள்? அவள்தான் அந்த நாட்டியக்காறி எண்டு சொன்னியளே அவள் எங்க அக்கா போனவள்?
"அவளோ..? அவளயஸ் இந்திர சாலக்காறியள் எங்கயும் அலம்புப்பட்டுத் திரிஞ்சவளயள் இருக்கிறாளவயளே இவரோட நெடுகலும்? கூத்து முடிஞ்சு எல்லாரும் ஊருக்கு வெளிக்கிட்டுப்போக பெட்டி கட்டினதோட சேந்து இந்தச் செம்மூஞ்சியாளும் பேந்து வறுகிறத இவரிட்ட நல்லா வறுகிக் கட்டிக்கொண்டு இவருக்குக் கடுக்காய் குடுத்திட்டு வந்தவங்களோடயே சேந்து கூடிக்கொண்டு பறிஞ்சிட்டாள்.” "சீ இந்தக் கூத்து நடத்தப் போய் எவ்வளவு கேவலம் வந்திட்டவருக்கு பாத்தியளே அக்கா?” "கூத்து நடத்தி இவருக்கு வில்லங்கம் ஒண்டும் வரேல்லத்தம்பி! இவர் மாமா அவவோட சேந்து இப்பிடிக் கூத்தடிச்சுத்தான் எல்லா இழவும் வந்தது. எண்டாலும் பேந்து தம்பி இதில உள்ள சரி பிழயக்கண்டு அவர் பேந்து திருந்தீட்டார். என்னட்ட என்ன பிழ எண்டு கீறி அவர் பேந்து வயித்தியம் பாத்திருப்பார் போலக்கிடக்கு, அதுக்குப்பிறகு புத்தி சுத்தப்பட்டு கொஞ்ச நாள் கழிஞ்சு ஒரு நாள் செக்கலுக்க அவர் வீட்டவா வந்து ஒழுங்கா இருந்திட்டாராம். எண்டாலும் ரெண்டு பேருக்குமிடயில அதுக்குப்பிறகு வறுபட்ட தாம்பத்தியம் கணக்கில கொஞ்சக் காலமா கதபேச்சு இருக்கேல்லயாம் தம்பி அவர் ராவில முத்தத்தில கிடுக விரிச்சுப் போட்டு அதிலதான் படுத்துக் கிடப்பாராம். போகப்போக இப்பிடியே தெளியாதே ரெண்டு பேரும் புருஷன் பெஞ்சாதிதானே, ஒருமாதிரி பிறகு சமாதானமாயிட்டினம். அதுக்குப் பிறகு மாமா ஏதும் பிரளி விட்டமாதிரி எனக்குத் தெரியேல்ல. நானறிய உந்த வண்டில் சவாரியும் ஆளுமாத்தான் இப்ப அவர் திரிஞ்சு கொண்டிருக்கிறார். என்ன செய்யிற ஒருவருக்குத் தலையில எழுதினத அழிச்செழுத முடியாது. எல்லாம் பண்டை வினைப்படிதானே நடக்கும்? இவருக்கும் அப்பிடித்தான் என்ராம்பி?” இவ்வாறு தங்கம்மா அந்தக் கதைகளையெல்லாம் கூறிமுடித்துவிட்டு, அப்பங்களை எடுத்து பக்குவமாக ஒரு ஒலைப்பெட்டிக்குள் அடுக்கினாள்.
"தம்பி இன்னும் ஒரு ரெண்டு.?” “காணும் காணும் எனக்கு வயிறு நிறைஞ்சிட்டுது அக்கா!” - என்று சொல்லியவாறு கதிரையில் இருந்து எழுந்து நின்றுகொண்டு தன் கையிலிருந்த தட்டை அந்தக் கதிரையிலே அவன் வைத்தான்.
''
"தம்பி குடிக்கத் தண்ணி அல்லாட்டி கோப்பி ஏதேனும்?” "கொஞ்சம் தண்ணி குடிக்கத் தந்தாக் காணுமக்கா, கோப்பி வேணாம்!” தங்கம்மா மண் குடத்திலிருந்த குளிர்மையான தண்ணீரை செம்பில் வார்த்துக்கொண்டு வந்து கொடுத்தாள். அப்பம் தின்ற வாய்க்கு இரண்டு மிடறு தண்ணீரைக் குடிக்க அவனுக்கு வயிற்றுக்குச் சுகமாக இருந்தது. வரழ்க்கையின் சிறக்கஸ் O 31 O

Page 76
அந்த வேலியில் நின்ற பனை மரத்திலே பின்னேர வெய்யில் உயரத்துக்குப் போய்விட்டதை அவன் பார்த்தான். அந்த நேரமாய்த் தங்கம்மாவின் இரண்டு பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மூத்தவனிடம் அப்பப் பெட்டியைத் தூக்கிக் கொடுத்து அதைச் சாப்பாட்டுக் கடைக்குக் கொண்டு போகுமாறு சொல்லி அவனை தங்கம்மா முதலில் வெளியே அனுப்பினாள். பிறகு இளையவனை கைகால் முகம் கழுவி வந்து புத்தகத்தை எடுத்துப்படிக்குமாறு அவனைப் பார்த்து அவள் சத்தம் போட்டுச் சொன்னாள். அவன் நேரம் போவதை அறிந்துகொண்டு: "இன்னொரு நாளைக்கு நான் இங்காலிப்பக்கம் வாறனக்கா. இப்ப வெளிக்கிடப்போறன்” - என்று தங்கம்மாவுக்குச் சொல்லிக்கொண்டு புறப்படத் தயாரானான். அப்பிடி வெளிக்கிடும் தருவாயில் தான் சாப்பிட்ட அப்பத்துக்கு தங்கம்மாவிடம் காசைக் கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்ற நினைப்பு அவனுக்கு வந்தது. ஆனாலும், அப்பத்துக்குக் காசைக் கொடுத்தால் அதைக் கையில் அவர் வாங்கவே மாட்டார் என்று அன்ரனுக்கு நன்றாக அது விளங்கியது. இதனால் தன் சட்டைப்பையில் இருந்து கையிலெடுத்த காசை கதிரைக்குமேலே அங்கே வைத்துவிட்டு "நான் போயிற்றுப் பின்ன வரட்டேயக்கா?” என்று விடைபெறும் நோக்கில் தங்கம்மாவைப் பார்த்து அவன் கேட்டான். “இது என்ன தம்பி?” அவன் கதிரையில் வைத்த காசைப் பார்த்துவிட்டு தங்கம்மா பிறகு அவனைப் பார்த்துக் கேட்டாள். “அது.” என்று மேலே தொடராமல் அந்த வார்த்தையை மட்டும் இழுத்துச் சொன்னான் அவன். “இது என்ன தம்பி இதுக்கே நான் உம்ம அப்பம் சாப்பிட இங்க வரக்கூப்பிட்டனான்.” “அது சும்மா நான்.”
“என்ன சும்மா..?”
“எடுங்கக்கா பறவாயில்ல அத எடுங்கோ?” - என்று சொல்லிக்கொண்டு அந்த இடத்திலிருந்து அவன் நடையைக்கட்டத் தொடங்கினான். அந்த வீட்டு வேலிப்படலையைத் திறந்துகொண்டு, வெளியே வீதிக்கு வந்து வீட்டுக்குப்போக அவன் நடந்து கொண்டிருக்கும்போது, ஐயாவைப் பற்றி தங்கம்மா பொய்யான கதையை இட்டுக்கட்டிக் கூறவில்லை என்பதாகவே, அவனது சிந்தனையில் தங்கம்மா கூறியவையெல்லாம் பட்டது. அந்தக் கதை களிமண்ணைப் போல் ஈரமும் பிசுபிசுப்புமாக அப்படியே நினைவில் இருக்க, இன்னும் ஐயாவைப் பற்றிய இந்தப் பிரஸ்தாபமெல்லாம் அவனுக்கு வேறு நினைவுகளையும் இழுத்துக் கொண்டுவந்தது. ஏதோ ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினையான சம்பவங்கள் முன்னம் நடந்துதானே இருக்கின்றன. இப்படிப்பார்த்தால் வீட்டுக்கு வீடு வாசல்படிதான்! என்பதைப் போலத்தானே ஆருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியதாய் வருகிறது, என்று இப்படியும் அவனுக்கு அப்பொழுது நினைக்கத் தோன்றியது. ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியில் இல்லை என்றுதானே பைபிள்கூடச் சொல்லுகிறது.
මී. ග්‍රී. ලාංකී්ගvගvණිගර් O 132 O

ஐயாவும் ஏதோ சந்தர்ப்பவசத்தால் பலவீனப்பட்டு பிழைசெய்துவிட்டார். ஆனாலும் பிறகு அதை உணர்ந்து அவர் திருந்திவிட்டார். இப்போது ஒரு நல்ல வாழ்க்கையை அவர் வாழ்கிறார். அதனாலே அவர் செய்த பிழைகளை நான் காதால் கேட்ட இத்தறுதிக்குள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எப்பொழுதும் போல் அவருக்கு நான் மதிப்பளித்தே வரவேண்டும் - என்று தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டு தன்வீட்டுப் படலைக்கு முன்னாலே வந்ததும் கொஞ்சநேரம் அவன் அதிலே நின்றான். அவனுடைய மனத்தில் அன்று பின்னேரம் ஐயாவின் வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்து, ஏதோ ஒன்றைத் தொலைத்தது போன்றதொரு குறை அதிலே நின்று யோசித்தபோது அவனுக்கு இருந்தது. யாருடையவோ எவரிடத்திருந்தோ என்று அவனால் அறிந்திட முடியாத அந்த மரபுவழி மூலமாக அவனிடத்தில் சேர்ந்துவிட்ட ஒரு குறை. அது என்ன? - அவனால் தவிர்க்க இயலாதபடி மனம் இந்தக் கேள்விகளைப் பின்னிக் கொண்டேயிருந்தது. வானவிளிம்பில் அந்த இடத்தில் அவன் நின்று கொண்டிருக்க, சூரியன் மறைந்து ஒளிச் சாயைகள் தண்ணிய செம்மை படிந்து இலங்கிக் கரைகின்றன. அப்படியே அறவே அந்திவெளிச்சம் நரைத்துக்கருகிக் கொண்டு அழியும் தருவாய்க்கு வந்துவிட்டது. இன்னும் இரண்டு நாழிகையில் இருள் நிலத்தில் இழியும் என்பதைப் போல் காணப்பட்ட பிறகு படலையைத் திறந்துகொண்டு அவன் அந்த முற்றத்தால் நடந்துபோய் தன் வீட்டுவாசற்படியில் ஏறி உள்ளே போனான். அங்கே வீட்டுத்திண்ணையில் லாந்தர் விளக்கு வெளிச்சத்துடன் ஆடிக் கொண்டிருந்தது.
ஒன்பது
மேகப் பந்தலில் நட்சத்திரங்கள் வெளித்தெரிந்தன. அவைகள் வெளுறிய நீல நிறத்தில் மங்கலாக சிணுங்கிக் கொண்டிருந்தன. அந்த நட்சத்திரங்கள் வானத்திலே முல்லைச் சரமாகயும், பூந்தோட்டமாகவும், பூத்தொடுத்த மாலை போலாகவும், செபமாலை போன்றும் மலர்ந்திருந்தன. அந்த இருட்டு வேளையிலே வெளவால்கள் இறம்பைக்குளம் அந்தோனியார் கோயில் வளவிலுள்ள இலுப்பை மரங்களில் வயிறு முட்டப் பழங்கள் தின்றுவிட்டு, பொன்னுத்துரையின் வளவிலுள்ள மாமரங்களில் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த வளவுக்குள் நின்ற காஞ்சிரை மரம் தன்னை மாத்திரம் சுற்றி வைரித்த கிளைகளாலும் இலைகளாலும் அடைத்துக்கொண்டு நீட்டுப்போருக்கு நின்றதால் இருளிலும் சற்று கூடுதல் இருளாய் நின்றது.
நாளைக்கு நடக்கவென்று இருக்கிற மாட்டு வண்டில் சவாரிப் போட்டிக்காக, பொன்னுத்துரைக்கு உதவி ஒத்தாசை செய்யவென்று வந்தவர்களெல்லாம் இந்த நேரம் வீட்டு மாலுக்குள்ளே பெற்றோல்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 133 O

Page 77
மாக்ஸ் வெளிச்சத்தில் இருந்துகொண்டு, குதூகலமாகத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கிழமைக்கு முன்னதாகவே கொழும்பிலிருந்து வந்திருந்த பொன்னுத்துரையின் மகளும், இரண்டு பேர்த்திமாரும், வீட்டுத் திண்ணையிலே கதிரைகளைப் போட்டு அங்கே அதிலே இருந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரினதும் கைகளில் வைத்திருந்த பீலிசுகளில், உள்ளங்கை அகலத்திலான உளுந்து வடைகள் இருந்தன. அந்த வடைகளை வாய்க்கு ருசியாகச் சாப்பிட, தொட்டுக் கொள்ளக் காரமான சம்பலும் அதிலே கூடவும் இருந்தது. இவர்கள் சுவாரசியமாகப் பல கதைகளையும் தங்களுக்குள் கதைத்துக் கொண்டு, வடைகளையும் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். குசினிக்குள்ளே வீட்டிலுள்ள தங்கள் எல்லோருக்குமாகவும், வந்திருக்கிற விருந்தாளிகளுக்குமாகவும் சேர்த்து இரவுச் சாப்பாடு சமைத்தெடுக்கிற வேலையில் விசயா ஈடுபட்டிருந்தாள். அரிசி மாக்குழைத்து அதைச் சுண்டுப் பேணியாலே கொத்தி உதிரிகளாக்கி, பிறகு அதனுடன் தேங்காய்ப் பூக்கலந்து அதை நீத்துப் பெட்டியில் போட்டு அவள் பிட்டு அவித்துக்கொண்டிருந்தாள். இங்கு வந்த பின்பு பல மாதங்களாக இந்த அடுப்பு வெக்கையில் கிடந்து அவளும் பழகியவள்தான்; என்றாலும் இன்றுதான் அந்த அடுப்பின் வெக்கைக் கனல் தன் உடலை வாட்டுவது போல ஒரு தாக்கம் அவளுக்குத் தெரிந்தது. அன்று நடு மத்தியானத்துக்குப் பிறகு தான் இந்த மாறுதல்களெல்லாம் தனக்கு வந்திருப்பதாக அவள் மனத்துக்கு அப்போது தோன்றியது. இதற்கான சரியான காரணமும் அவளுடைய மனசுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அந்தத் துயரமான விடயத்தை அவர்கள் தங்கள் வாயாலே தன்னிடத்தில் வந்து நின்று சொல்லவும், அதைக்கேட்டுத் தன் மனம் பட்டுவிட்ட வேதனையை நினைத்து இன்னும் மேலதிகமாக அவள் இவ்வேளையும் துன்பமுற்றாள். அவள் கண்களிலே முன்னம் இருந்த களை இல்லாமல் போய், அம்பு பட்ட மானின் வேதனை அதில் தேங்கி நின்றது. அந்த முற்றத்தடியில் கீழே கிடக்கும் சுருங்கிய இதழோடான செம்பரத்தம் பூக்களைப்போல் அவள் முகம் சுருங்கிவிட்டது. சோகத்தில் அவளது முகம் ஒரு அழும் உணர்ச்சியை வெளிக்காட்டியது. அப்பப்பாவும், அப்பம்மாவும் சேர்ந்து தன்னை, கொடுமையாக இந்த அளவில் இப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று இதுநாள்வரையிலும் அவள் கனவிலும் கூட கருதவில்லை. அப்படியாகத்தான். அன்பும் பாசமும் நம்பிக்கையும் அவர்கள் மேல் அவள் முன்பு வைத்திருந்தாள். அதையெல்லாம் தவிடு பொடியாக்கி, தன் மனதைச் சிதைத்துவிட்டதே இந்த மனச்சாட்சி இல்லாததான அவர்களது செயல்? நம்பக் கூடியவைதான் என்று நாம் நினைப்பவைகள்தான், போலிகள் பொய்மைகள் என்ற மாதிரித்தானே இதெல்லாவற்றையும் பார்க்கும்போது இருக்கிறது? அப்பப்பாவுக்கும் அப்பம்மாவுக்கும் பிறந்த இந்த மூன்று பிள்ளைகளும் தனியே ஒரேயொரு கொடியில் பூத்த மலர்கள்தானே? அதில் ஏதோ விதி வசத்தால் இரண்டு பிள்ளைகளினதும் குடும்பங்கள் வறுமையில் கஷ்டப்பட்டுப் போய்விட்டன. ஒரு பிள்ளை இறந்து போனதில் ඊ. ෆි. ථNගvගvණිග(ගී O 134 O

அவரது மனைவி இந்தச் சின்னம்மாவும் கிடந்து அந்தப்பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு, ஒழுங்காச் சீவியம் செய்யமுடியாத அளவில் நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களுடைய அந்தப் பணக்காரியான மகள்; என் மாமிக்கென்னவாம் குறை? அவர்கள் கொழும்பிலே இருந்துகொண்டு வசதியாகவும் டாம்பீகமாகவும் சீவிக்கிறார்கள். அவர்களுக்குப் போய் இன்னமும் காசு பணமென்றும் நகைகளென்றும் இவர்கள் அள்ளிக் கொட்டிக் கொடுப்பதற்குப் பதிலாய், அவைகளை ஏழைகள், இளைச்சதுகள் எண்டதாயிருக்கிற இந்த இரண்டு குடும்பங்களுக்கும் பார்த்துக் கொடுக்கலாம்தானே? ஆர் ஆருக்கு எதெதக் குடுக்க வேணுமெண்ட ஒரு இது இருக்குதெல்லே? அது ஒண்டும் இதுகளுக்குத் தெரியாது கொழும்பிலே இருந்து வந்திருக்கிற உங்கள் பணக்காரப் பேர்த்திகளுக்குக் கொடுத்த அந்தப் பவுண் மாங்காய் மாலையையும், கல் இழைத்த முத்துக் குவியல் தோட்டையும் - நானும் உங்கள் பேர்த்தி கழுத்திலே கைகளிலே ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருக்கிறேன், என்று நினைத்துப் பார்த்து எனக்கு அதைத் தந்திருக்கலாம் தானே? சரி வேண்டாம்! நீங்கள் அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டுமென்று இன்னமும் விருப்பப்பட்டுக்கொண்டு கொடுக்கிறீங்கள். நீங்கள் உங்களுக்கு விருப்பமான பேர்த்தி மார்களுக்குக் கொடுப்பதை கொடுக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்த எனக்கு என்ன உரிமை இருக்கிறது? நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு உங்களுடையதைக் கொடுங்கள். அதை வேண்டாம் என்று நான் தடுக்கவில்லை. ஆனாலும் நான் ஒருத்தி இங்கே இந்த வீட்டில் வந்து இருந்துகொண்டு, உங்களுக்கு விடியும் வரையிலிருந்து நீங்கள் நித்திரைப் பாய்க்குப் போகுமட்டும் உங்களுக்காகவென்று நான் மாடாய் இங்கே உழைக்கிறேனே - அதையாவது நீங்கள் கொஞ்சம் நினைத்துப்பார்த்து - பெரும் நகையென்று அப்படி ஒன்றும் வேண்டாம்! அதில்லாமல் ஒரு நூலளவு மொத்தத்திலயாவது கழுத்தில போட்டுத்திரிய ஒரு சங்கிலியாவது செய்து எனக்குத் தந்திருக்கலாம்தானே? என்று இந்தக் கேள்விகளையெல்லாம் தன் மனத்துக்குள் திரும்பத்திரும்பக் கேட்டவாறு அவள் வேதனைத் தீயில் வெந்து கொண்டிருந்தாள். இதற்கெல்லாம் தனி அறையில் போய் தாளிட்டுக் கொண்டு, கொஞ்ச நேரம் 'ஓ' - வென்று அழவேண்டும் போல் அவளுக்கிருந்தது. ஆனாலும், அதற்கு இந்த நேரம் வசதியில்லாத அளவில் தன்னை ஒருவாறு அடக்கிக் கொண்டு அடுப்புக்குப் பக்கத்திலே இருந்துகொண்டு, உள்ள அந்தச் சமையல் வேலையை அவள் அப்போது செய்துகொண்டிருந்தாள். என்றாலும் இன்னும் அவளுக்குக் காலையில் நடந்த சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் விட்டுப் போகாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. “இந்த நகையள எனக்குச் செய்து தந்ததா உங்க ஆருக்கும் சொல்ல வேணாம். ஆருக்கும் இதப்பற்றி வெளியில எங்கயும் மூச்சுவிடவேணாம் - என்று அப்பம்மா தனக்குச் சொன்னவவாம்! இதையேன் அவ மாமியின்ர மகள் வந்து எனக்குச் சொல்லவேணும்? உதுதான் அந்தப் பேச்சுத்தான் வேண்டாமெண்டுறன்! அப்பிடியெல்லாம் வரழ்க்கையிண் சிறக்கஸ் O 135 O

Page 78
எனக்குச் சொல்லி ஏன் அவள் எனக்குப் பிலுக்குக் காட்ட வேணும்? அவளப்போலத்தானே நானும் ஒரு பெண்! இதெல்லாம் அந்தப் படிச்சவளுக்குத் தெரியேல்லயே? எல்லாப் பொம்பிளயஞக்கும் உள்ளதைப்போன்ற சிந்தனையளும் உணர்ச்சியளும் எனக்கு இருக்கு எண்டுறத நினைக்காமத்தானே அவள் இப்பிடிக் கதைச்சாள்? போகட்டும் விடுவம்! அவள் மச்சாள் எனக்கு வந்து சொன்னாள். அவளும் என்ர வயசுக்காரிதானே? சின்ன வயசில இருந்து அவள் வசதியாச் சீவிச்சவள்! என்ர வறுமைய நினைச்சுப் பாக்காம ஏதோ வாயில வந்ததயெல்லாம் வெளியால சொல்லிப்போட்டாள்! ஆனா மாமிக்கென்னவாம் மதிகெட்டுப் போச்சு? அவவும் ஏன் மகள்மாதிரியே வந்து எனக்கொரு கத இங்க சொல்ல வேணும்? தன்ர அண்ணன்ர மகளெண்டு எப்பனும்கூட நினைக்காமல் - ஒல்லிப்போலயம் பாசமில்லாமல் இதைச் சொல்றாவே. அவவுக்கெல்லாம் என்ன மாதிரிக்கல்மனம்! இப்பிடி மனம் வந்து இதயெல்லாம் சொல்றாவே அவவுக்கு நானும் ஒரு மகள் போலத்தானேயெண்டு அவ நெக்கேல்லயே? எனக்குச் சொன்னமாதிரி அவவின்ர மகளுக்குப் பாத்து இதைச் சொல்லுவாவோ? மாமியெண்டு பெரிய உறவு பாராட்டிக் கொண்டு இங்க என்னோட வந்து கதைக்கிறா, உன்ர சொந்தச் சகோதரம் என்ர அப்பாவைப் பற்றி என்னட்டையா ஒரு வார்த்த கேட்டாவே? இல்லாட்டி அம்மாவைப்பற்றி? ஊஹாம்! அதைப்பற்றியெல்லாம் அவ மூச்சுக்கூட விடேல்ல! நானும் அவவின்ர முகத்த பாத்துக்கொண்டிருக்கிறன். எங்கடவீட்டு விசயத்தைப் பற்றி ஏதாச்சும் அவ கதைப்பாவோவெண்டு அவ இருந்து என்னென்னவோ எதுகளைப்பற்றியோவெல்லாம் கத கதைக்கிறா? ஆரை ஆரயெல்லாமோ எதுகளைப்பற்றியோவெல்லாம் விசாரிக்கிறா - ஆனா எங்கட வீட்டுக் கதை ஒண்டைக்கூட மருந்துக்கும் கூட அவ எடுக்கேல்ல. கண்ணுக்கு முன்னால இருக்கிற என்னையே நல்லாப் பாத்தும், கண்டு கொள்ளாதமாதிரி ஒரு கத கதைக்கிறவ, அவயளப்பற்றி ஏன் என்னட்டப் பெரிசா விசாரிக்கப் போறா? எனக்கு இப்பத்தான் பாக்க மாமியின்ர குணத்தப் பற்றித் தெரியுது. ஆனா அப்பாவுக்கு இவவோட கூடிப்பிறந்ததால எல்லாம் அப்பவே இருந்து அவருக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கும். அதுதான் இவ கொழும்பில இருந்து இங்க வந்திருக்கிறாவெண்டு கேள்விப்பட்டும் இங்காலிப்பக்கம் அவர் இவவை பாக்கவெண்டு வரேல்ல. அவர் வராததும்தான் பார்த்தா ஒரு வழிக்கு நல்லம் போல. அவர் இங்க வந்திருந்தாலும் நல்லா வெறியப்போட்டுத்தான் இவவையும் பிள்ளையளயும் பாக்க வந்திருப்பார். இந்த நகை குடுத்த விஷயம் அவரும் அறிஞ்சா எல்லாரோடையும் வெறியில பேந்து நெருப்பெடுத்திருப்பார். ஆனாலும் எங்கட இந்த அம்மா ஏன் இங்காலிப் பக்கம் வரேல்ல? அவவுக்கு என்ன நடந்தது? அவ சும்மாவெண்டாலும் இங்கால வந்து இவயள ஒருக்காப் பாத்துக்கொண்டு போகாம விடமாட்டாவே? இப்பிடி இருக்கும் ஒருவேளை அவ வெளிக்கிட்டிருப்பா இங்க வரவெண்டு, ஆனா அப்பர் அவவை போகவேண்டாம் நீ அங்க எண்டு சொல்லி மறிச்சிருப்பார் - நல்லம்தான்! அவயள் ஒருத்தரும் jෂ්. ග්‍රී. ලාංඡිගvග්vෂීහරේ O 136 O

இங்கால வராம விட்டது அது எல்லாத்துக்கும் நல்லம் போலத்தான் பாக்கக்கிடக்கு. இங்க வந்தாலும் அவயஞக்கு என்னதான் கிடைக்கப் போகுது? கடசியில மனவருத்தம்தான் இங்க வந்தா அவயஞக்கு மிஞ்சும்! அவவுக்குப் பிள்ள மாதிரி இருக்கிற என்னையே இப்பிடிக் கதைச்சு மனவருத்தப்படுத்திறவ, அவயஞக்கு என்ன என்ன கதையளயெல்லாம் சொல்லுவாவோ ஆருக்குத் தெரியும்? அவ காலத்தால கதைச்ச ஒரு கதையிலயே நான் சரியாப் பிடிச்சுக் கொண்டன், மாமி இப்பிடியான குணமுள்ள ஆள் தானெண்டு. மாமி எண்டு உள்ளவ ஒருத்தி வந்து எனக்குச் சொல்லுற கதையே இது?
என்னக் குசினிக்குள்ள வந்து உன்னியுன்னி வடிவாப் பாத்திட்டு முந்திப் பாத்ததுக்கு நீ இப்ப நிறமாயிருக்கிறாய் எண்டுறா, ஆ என்ன அவ்வளவு அடையாளம் தெரியாம என்னாயிட்டன்? அதச் சொல்லேக்க அவவின்ர முகத்தில தெரிஞ்ச மாற்றம் - அசிங்கமான ஒருவித பொறாம எண்டுதான் எனக்குத் தெரிஞ்சுது - அந்த அளவுக்கு முகமெல்லாம் கண்ணாகிப் பாத்தா அவ. அவ சொன்னதுக்கு அர்த்தம் என்ன? அங்க அப்பாவோடையும் அம்மாவோடையும் கிடந்து தின்ன இயலாமக் காஞ்சனி, இங்க வந்து சாப்பிட்டு நல்லாயிருக்கிறாய், இங்கயே இவயளுக்கு சட்டி கழுவிக்கொண்டு மாடுகளுக்கும் சாணி மூத்திரமும் அள்ளிக் கொண்டு கிட அதுதான் உனக்கு நல்லம்! எண்டுறமாதிரித்தானே கருத்து? இந்தக் கிழடுகளைப் பாத்துக்கொண்டு இப்பிடியே நீ இரு எண்டுறதுதானே சரியான அர்த்தம்? இன்னும் அந்த வாய நீ சும்மா வைச்சுக் கொண்டிரு. இதையும் நீங்க சொல்ல வேணுமோ? உயிரோட வைச் சுக் கழுத்தறுக்கிறமாதிரிக் கிடக்கு இந்தக் கத. நீ நல்லா ருசியாச் சமைக்கிறாயாம், சொல்லுவியள் தானே? ஒரு கிழமையாய் உங்களுக்கெல்லாம் இங்க குசினியிக்க தனியக்கிடந்து மூண்டு வேளையும் நான்தானே உங்களுக்கு அவிச்சுப் போடுறன். சரி சமைக்கிறன். நான், நீங்க சாப்பிட்டிட்டு ருசியா அதெல்லாம் இருக்குதெண்டு சொல்லுறியள். நல்லவேளை இதொண்டிலயெண்டாலும் உண்மையச் சொல்லுறியள்! அல்லாம நான் இப்பிடியெல்லாம் கஸ்டப்பட்டு சாப்பாடு சருக்கட்ட அதைத்திண்டுட்டு நீங்க ருசியில்லயெண்டா எனக்கு என்னமாதிரியிருக்கும்? அதில் லக்கத! அதுப்பிறகு ஒண்டச் சொன்னியள்? அதுதான் சுடுதண்ணியென்னில ஊத்துப்பட்டது மாதிரிக் கிடந்தது. உன்ர வடிவுக்கும் குணத்துக்கும் நீ சாப்பாடு சமைக்கிறாய், அதின்ர ருசிக்குமாச் சேத்து இதெயெல்லாம் ஒருவன் கண்டா சீதனம் கீதனம் ஒண்டும் வேண்டாமெண்டு சொல்லி அவன் பிறகு உன்ன கலியாணம் செய்துகொண்டு போயிடுவானாம். ஐயோ முருகா! ஆருக்கு நீங்க இந்தக் கதயச் சொல்லி ஒரு கத விட்டுப் பாக்குறியள்? ஒரு உப்புப்புளி இல்லாத கதயவந்து பெரிசா எனக்குச் சொல்லுறியள்? இதே கதய உங்களிட பிள்ளையஞக்கு வைச்சுப் பாப்பம்? அப்பிடி உங்கட பிள்ளய வந்து ஒருவன் கேட்டா சரியெண்டு சொல்லி நீங்க அவள ஒண்டுமில்லாமச் சும்மா அவனோட வெறுங்கையாப் போக நீங்க அனுப்புவீங்களோ? இன்னும் அவயள்
வாழ்க்கையின் ரிறக்கஸ் O 137 O

Page 79
அப்புடிச் சொன்னதுக்காக ரெட்டிப்பா அவளுக்குக் குடுத்துத்தான் நீங்க அப்பிடிக் கேட்டவனுக்கும் கலியாணம் முடிச்சுக் குடுப்பியளென்ன? போகிறவள் எங்கயும் மரியாதையாப் போவேணும், இல்லாட்டி எங்களுக்கு மரியாதயில்ல எண்டு மாப்பிள வீட்டாக்கள் கேக்காமலே எல்லாம் நீங்க செய்வியள். இப்பிடி நீங்க உங்களுக்கு அப்பிடித்தான் செய்ய வேணுமெண்டு ஒரு சட்டம் வைச்சுக் கொண்டு அதயெல்லாம் செய்வியள். ஆனா என்னப்போல இருக்கிற பெம்புளைக்கு அதெல்ாலம் இல்ல. அவள வெறுங்களுத்தோட மாத்திரம் அனுப்பலாம். எப்புடியும் அவள் போய்ச் சீவிக்கலாம்! அவளுக்கொண்டும் தேவயில்ல. நாளாந்தம் ஏதோ புருஷன் தேடிக் கொண்டாறத அவள் திண்டாச் சீவியம் சரிதானே? அந்தச் சீவியம் என்னயமாதிரி இளப்பம் சளப்பமாயிருக்கிற ஒண்டுக்கும் வழியில்லாத குடும்பத்தில இருக்கிற பிள்ளைக்குக் காணும் அப்பிடித்தானே?” என்று இதையெல்லாம் தனக்குள் அவள் ஆதியோடந்தம் நினைத்துக் கொண்டிருக்க அவையெல்லாம் அவள் மனசில் அடிப்பானையில் சோறு பிடித்தது மாதிரி ஒட்டிப்போய் நின்றது. அதுவெல்லாமே செருப்புக்கடித்த புண் காய்காய்த்தாற்போல மனசில் மரத்துப்போன மாதிரியும் பிறகு அவளுக்கு இருந்தது. அடுப்புத் தணலின் வெக்கை அவளது மென்மையான கால்பாதங்களை தாக்கி சூட்டை எழுப்பியது. அவள் எரிந்துபோய் குறையாகிவிட்ட கொள்ளிக் கட்டைகளை, அடுப்புத் தணலுக்குள்ளே கைவிரல்களால் உள்ளே தள்ளிப் புதைத்தாள். சுள்ளி விறகுகளை அதற்குமேலே பிறகு அடுக்கி வைக்க, தானாய்ப் பற்றிக் கொண்டது நெருப்பு. பிறகு அவள் தனக்கு இருந்த யோசனைகளையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, அந்த அடுப்பில் ஆடும் நெருப்புக் கொழுந்துகளில் சிகப்பு விட்டு விட்டுக் கக்கிறதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கண்ணின் பார்வையை மறைத்த நீரைடைய பார்வையோடு சில கணங்களாக அதையே அவள் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவ்வேளை உஷ்ணவாடையுடன் நீண்டதொரு பெருமூச்சு அவளுடைய அடி வயிற்றில் இருந்து புறப்பட்டு வந்தது.
இரவு அடர்ந்து கறுத்தது. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஒளிப்புள்ளிகளாய் மின்னின. அந்த இருட்டின் அமைதியிலே அங்கே அந்த முற்றத்தில் நின்ற சில செடிகளிலுள்ள மலர்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அந்தப் பூச்செடிகளில் மின்மினிப் பூச்சிகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. சூழவும் இருந்த இருட்டுப் பூச்சிகள் கண்ணாடிக் சிறீச்சொலிச் சத்தத்துடன் இருளைப் பெருக்கியபடி இருந்தது. இருந்தாலும் கண்களில் சந்திரன் தென்படவில்லை. அந்த மாலுக்கு அருகில் நின்ற பவள மல்லி, நித்திய மல்லியிலிருந்து பூவின் வாசம் கனக்கும் காற்றுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது. ஐயாவுடன் அந்த மாலுக்குள்ளே இருந்தவர்களில் ஒருவர் செக்கச் சிவந்த உருண்டை முகத்துடன் குட்டையாய்க் குண்டாய் இருந்தார். அவருடைய முகத்தில் ஞானமும் சாந்தமான முதிர்ச்சி அடைந்திருக்கும் அறிவும் சுடர்விட்டது. அவர் புராதன கிரந்தங்களை
ரீ.பி. குருஸ்ணற்றம் O 138 O

மூலத்திலே கற்றவர். தன் வாழ்நாளில் சத்தான பகுதிகள் பூராகவும் சமயப்போதனைகளில் செலவழித்தவர். சிவகீர்த்தனைகள், விஷ்ணு கீர்த்தனைகள், பூரீ கிருஷ்ண கர்ணாமிருதம், யக்ஷகானங்கள், ஆயிரக்கணக்கில் அவருக்கு மனப்பாடம். இதெல்லாம் போட்டி போட்டு பேசக் கூடிய பேச் சாளி. அவர் பால் ய காலத்திலிருந்து பொன்னுத்துரையின் நண்பர். இந்த வயதிலும் தம் பழைய நட்பு விட்டுப் போகாதிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொன்னுத்துரை பங்குபற்றும் நாளைய வண்டில் சவாரியைப் பார்க்கவென்று அவர் இங்கே வந்திருந்தார். அவர் மாலுக்குள்ளே ஐம்பமாக கதிரையில் உட் கார்ந்தபடி, அங்குள்ளவர்களுக்கு பல சுலோகங்களைச் சொல்லி அவற்றுக்கு அர்த்தங்களையும் சொல்லிக் கொண்டிருந்தபோது, சமளங்குளத்தில் இருந்து வந்திருந்த நாகராசா என்பவர் மட்டும்தான் அங்கிருந்தவர்கள் எல்லோரையும் விட மிகவும் கவனமாக அவர் சொன்னவைகளை விருப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து தீவனம் தின்னுகிற காளைமாட்டின் கழுத்துமணி அசைவுச் சத்தம் மாட்டுத் தொழுவத்திலிருந்து கேட்கத் தொடங்கியது. அந்த வெண்கல மணிச் சத்தத்தைக் கேட்டுவிட்டு, நாளைய வண்டில் சவாரிக்கென்று ஏவலாளராக அங்கு வந்திருந்தவர் பொன்னுத்துரையரைப் பார்த்து “என்ன அங்க அந்தக் கழுத்துமணிச் சத்தம் கேக்குது. மாடு தீன் தின்னுற மாதிரி? தின்னுறதுஎங்கட இந்தச் சவாரி மாடுதானே ஐயா?” என்று கேட்டார். "அது பாரமிழுக்கிற வண்டில் மாடுகள் தம்பி! அதுகள்தான் தீன் தின்னுது, அதுகள் சவாரி மாடுகள் கட்டியுள்ள கொட்டிலுக்கு அங்காலிப்பக்கமுள்ள கொட்டிலிலவேறயாக் கட்டிக்கிடக்கு." "அந்தக் கருங்கழுத்து வெள்ளையும், கழுகுமோ?” "ஒம், ஓம்! அதுகள் தான்! அந்தச் சாரைவால் மாடுகள சிங்கள நாட்டுப்பக்கத்தில நான் போய் வாங்கி மூண்டு வருசமாச்சு. அதுகள் நல்லாவிப்பபார வண்டிலிழுக்குது அங்காலிக் கொண்டிலுக்குள்ள கட்டிக் கிடக்கிற சவாரி மாடுகளுக்கு, இண்டைக்குச் சாப்பாடெல்லாம் நான் அளவு கணக்காத்தான் வைச்சிருக்கிறன். இனி நாளைக்கு அதுகள் சவாரி ஒடவெண்டு இருக்கிறதால நாளைக்கு அதுகளுக்கு தீன் போடாமத்தான் வைச்சிருக்கவேணும்!” "எல்லாம் பக்குவமாத்தான் பாத்திருக்கிறீங்க? அந்த உங்கட சவாரி மாடுகள் ரெண்டையும் பாக்கவே எனக்கு உடன தெரிஞ்சிட்டுது. அதுகள நாணய இழுவையோட நல்லா நடத்திப் பழக்கி தேவயான பயிச்சியும் நீங்க குடுத்திருப்பீங்க போலத்தான் கிடக்கு?” "அத்துகளில நான் வெலு கவனம் தம்பி சவாரி ஒடுறதெண்டு மாடுகளை பேருக்கு வளத்துக்கொண்டுபோய், தரைவேயில வைச்சுக் கொண்டு பெரிசாய்ச் சவாரி விடப் போறனெண்டு நிக்கேலுமே? சவாரி மாடுகள் வளக்கிறதெண்டா அதுகளுக்குத் தண்ணியத் தீனிய வைக்கிறதிலயிருந்து நல்ல கவனமாயிருக்க வேணுமெல்லே? ஒருதரம் தின்னுற தீனியையும்
αρκώδειοδιόδου κύρινύαςή O 39 O.

Page 80
அதுகள் குடிக்கிற தண்ணியையும் கூட அதுகளுக்கு வைக்கேக்க அஞ்சாவெல்லே பிறிச்சுப் போட்டு கொஞ்சம் கொஞ்சமா அதுகளுக்கு வைக்கவேணும். அல்லாட்டி ஒரே மூச்சில தண்ணி குடிச்சு அதுகளுக்கு வயிறெல்லே பெருத்திடும்?”
"அதெண்டா முழுக்கச் சரிதான்! அதான் நீங்க மாடுகளைக் கவனமாப் பாத்து ஒழுங்காப் பழக்கி வைச்சிருக்கிறியளெண்டு முதல் நான் உங்களுக்கு அதுகள கதையோட கதையாச் சொன்னன். முந்தியும் ஒரு முறை நான் சவாரிப் போட்டிக்கு உங்களுக்கு வண்டிலில ஏவலாளா வந்து எல்லாம் திறமயாச் செய்து சவாரியிலயும் அந்த முறை நாங்கள் வெண்ட நாங்கள்தானே? இந்த முறை கலைக்கிறது புதுச் சோடி மாடுகள்தான். உந்த மாடுகளுக்கு கொடிக்கம்பம் மாதிரி வயிறுகள் இருக்கு வன்னி மாடுகளுக்குரிய அந்த அங்க லட்சண ஜாடைகளோட, சுத்தத்தோட உந்த மாடுகள் இருக்கு. நான் பாக்கிறதுக்கு அருமயான காளையஸ் உந்த ரெண்டும் எண்டுதான் சொல்லுவன்! கட்டாயம் பாருங்கோ இந்தமாடுகள்தான் இந்தமுறை வண்டில் சவாரியிலயும் கட்டாயம் முதல் பிறைஸ் அடிக்கும். அப்பிடி ஐயாவும் நாங்களும் சேந்து வெற்றி எடுக்க, உடன அங்க ஆன வெடியெல்லாம் கொளுத்தி அத அங்க பெரிசாக் கொண்டாடித்தான் எல்லாரும் நாங்க பிறகு இங்க வாறது.” - என்று அவர் சொல்ல அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒருவருக் கொருவர் கெளரவமான புன்னகையைப் பரிமாறிக் கொண்டார்கள். நாகராசர் அங்கு வந்திருந்த அந்த ஏவலாளர் சொன்ன கதையிலே ஐயாதான் நாளை சவாரிப் போட்டியில் வெல்லுவார் என்ற நம்பிக்கையில், தான் இருந்த கதிரையின் சட்டங்களின் மீது கைகளால் தட்டித் தாளம் போட்டுக்கொண்டு இருந்தார். நாளைய வெற்றிக்கான அந்த நிகழ்வை அந்தக் கதிரையில் இருந்தவாறு அவர் அப்போது தன் மனத்தில் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தார். ‘என்ன தம்பி நாகராசா கனக்க உமக்கு யோசனை போகுது போலக்கிடக்கு? - என்று அவர் கைத்தாளம் போடுவதைப் பார்த்துவிட்டுக் கேட்டார் பொன்னுத்துரை. ‘இல்ல நாளைய எங்கட வண்டில் சவாரிப் போட்டிய நினச்சுத்தான்!” - என்று தான் சொல்லவந்த வசனங்களை முழுவதும் சொல்லி முடிக்காமல் இடையில் அவர் நிறுத்திக் கொள்ள, முன்பு அங்கே இருந்தவாறு சுலோகங்களைச் சொல்லிக்கொண்டிருந்த அந்தப் பெரியவர் உடனே: "இவர் பொன்னுத்துரை என்ர நெருங்கிய ஒரு நண்பர். அவர் உருக்கு மனுசன், உறுதியானவர், தயிரியசாலி, இன்னும் என்னென்னவோ சொல்லி அவரப் பாராட்டலாம். அந்த நாளில இருந்து அவற்ற குண நலமெல்லாம் எனக்குத்தான் விளங்கும். இவர் சாந்த மூர்த்தியான அந்த ராமனைப் போல பார்வைக்குத் தெரிஞ்சாலும் லட்சுமணனைப்போல கோபியான அந்தக் குணத்தையும் கொண்டவர். எந்தப் பிரம்மாவோ வந்தாலும் கூட தான் நெச்சதச் சாதிச்சு முடிக்கவேணுமெண்டுற அந்தப் பிடிவாத குணம் இவரிட்டயிருக்கு அதிருக்கிறதால நாளைய விஷயத்திலயும் பாருங்கோ. அவர் எனக்கு முன்னம் ஒருவர் சொன்னதுமாதிரி கட்டாயம் உவர்
ரீ.பி. அருளWணந்தம் O 140 O

உந்தச் சவாரிப் போட்டியிலயும் வெல்லுவார்” என்று அங்குள்ள எல்லோருக்கும் அதை அவர் உறுதிபடச் சொன்னார். எல்லோரும் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தார்கள். “ஓம் கட்டாயம் ஐயாதான் வெல்லுவார்” என்று எல்லோரும் ஏலேலோப் பாட்டுப் பாடுவது போல சேர்ந்து கூறலானார்கள். காற்று அடித்ததும் மாலுக்குள்ளே இருந்த பெற்றோல் மாக்ஸ் விளக்கு ‘பக் பக் கென்றது. அதோடு அந்தப் பெற்றோல் மாக்ஸ் - வெண்ணிற அற்புத ஒளியிழந்து மங்கிப் போய்ச் சோபிதம் இழந்து காணப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு பொன்னுத்துரை இருந்த இருக்கையை விட்டு எழுந்துவந்து பெற்றோல் மாக்ஸை கொக்கியில் இருந்து கழற்றி கீழே நிலத்தில் வைத்துவிட்டு அதற்குக் காற்றடித்தார். ‘எங்களுக்கு பாதி ராவெண்டும் காலமெண்டுமில்லாம இண்டைக்கு நல்லா பொழுது போகுது போலக்கிடக்கு என்னையா? - என்று நாகராசா கொக்கியில் பொன்னுத்துரை பெற்றோர் மாக்ஸை தூக்கிவிடும்போது இதை அவருக்குச் சொல்லிவிட்டுச் சிரித்தார். 'உண்மதான் எல்லாரும் நீங்க ஒண்டாச் சேந்து இங்க வந்திருக்கிறதால நீங்க சொன்னதுமாதிரி நல்ல பைம்பலாத்தான் இண்டைக்கு இருக்குது. எண்டாலும் நாளைக்கு உள்ள எங்களோட வேலயள நினைச்சு இண்டைக்கு கொஞ்சம் வேளைக்கு நாங்கள் படுத்து நித்திர கொள்ளத்தான் வேணும்! எப்புடியும் நாளைய பொழுதில நாங்க உசாரா இருக்க வேணுமே? - என்று அவரைப் பார்த்து பொன்னுத்துரை பதில் சொல்ல: நாளைய வண்டில் சவாரிப் போட்டிக்காக மாட்டு வண்டிலுக்குக் கடைக்கிட்டி பிடித்துவிட வந்திருந்தவர் அவர் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரித்தபடி, பசியோடு தூக்கத்தோடு குட்டையாக ஒரு கொட்டாவி விட்டார். அவர் தூக்கம் சொக்கி கொட்டாவி விடுவதைப் பார்த்துவிட்டு பொன்னுத்துரை: தம்பிக்கு பசிக்குதோ சாப்பாடெடுத்தரச் சொல்லவோ? - என்று கேட்டார். 'எனக்குப் பசிக்கேல்ல மத்தியானம் இங்க வந்தர்ப்பிறகு ஒரு செம்பு மோர் குடிச்சுப் போட்டன். அதுதான் எனக்கு மந்தமோ என்னமோ சோம்பலாக்கிடக்கு இப்ப சாப்பாடெண்டு எனக்கு அவசரமில்ல ஆறுதலாச் சாப்பிட்டாப் போச்சு” - என்று அங்கிருந்தவர்களுக்கு முன்னே ஐயாவைப் பார்த்து பெரியதொரு பொய்யைச் சொன்னார். அதற்குச் சரி என்கிற மாதிரி தலையை இசைவாக அசைத்தார் பொன்னுத்துரை. பசிக்கவில்லை என்று சொன்னவர் பிறகு ஒரு நீண்ட ஒரு பெருமூச்சு விட்டார். அதற்குப் பிறகு சூத்தை மட்டும் அரக்கி பின்னுக்கு உள்ள கப்பில் முதுகைச் சாய்த்துக் கொண்டு, தூக்கம் சொக்கிய நிலையில் அப்படியே இருந்துகொண்டார். 'ஐயா முந்தி உங்களோட என்ர வீட்ட வந்தாரே அந்தப்பெடி அவர் இங்காலிப்பக்கம் வரேல்லயோ? ஆள் உங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் எண்டு சொன்னியள். அவற்றை சிலமனைக் காணேல்ல இங்க? - நாகராசாவுக்கு அன்ரனின் ஞாபகம் வந்து இதைக் கேட்டார். 'ஆ அவர் காலேல இங்க வந்து என்னோட இருந்து கொஞ்ச நேரம் கதைச்சுப்போட்டுத்தான் பிறகு போனவர். நாளைக் காலையில வாறனெண்டவர். எப்பிடியும் அந்த நேரம் இங்க வருவார் எண்டுதான் நினைக்கிறன்’
வரழ்க்கையின் சிறக்கஸ் O 141 O

Page 81
என்று அதற்கு அவர் பதில்சொல்ல, நாகராசா அவர் சொன்னதுக்கு சரி என்கிறமாதிரி தலையை இசைவாக அசைத்தார். இந்தத் தலையாட்டல் அவருக்கே என்று உள்ள ஒரு பிரத்தியேகமான செய்கையாக இருந்தது. ‘என்ன முதல் நீங்க சொல்லிக்கொண்டு வந்ததையெல்லாம் சடாரென்று நிப்பாட்டிப்போட்டு இருந்திட்டியள்? - என்று நாகராசா பிறகுஅந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்டார். அவர் உடனே மூக்குக் கண்ணாடிக்குள் இருந்து நாகராசாவை உற்றுப் பார்த்தார். "என்ன சொல்லிக்கொண்டு வந்தன்? ம் ம், சுலோகங்களைப் பற்றி! அதுகள் எல்லாத்தையும் ஒழுங்காச் சொல்லுறதெண்டாத் தம்பி ஒ சொல்லி முடியாது, நாள் கணக்கு மாதக்கணக்கெண்டெல்லே போகும்! நான் அதுக்காகத்தான் எல்லாத்திலயும் கொஞ்சம் பிச்சுப் பிச்சு எடுத்து அதுகள உங்களுக்குச் சொன்னனான். நான் சொல்லிக்கொண்டு வந்ததில இங்க பிறகு வேற கதையெல்லே வந்து குழப்பிப்போட்டுது. நீர் நான் சொல்றதக் கேக்கிறதில கவனமா முயன்று எண்ணங்கள ஒழுங்குபடுத்திக் கொண்டு ஆர்வமா இருக்கிறீர். ஆனாக் கேக்கிற எல்லாரும் அப்பிடியில்ல! அவயள் வெளிப்பார்வைக்கு இதுகளை வடிவாக் கேட்டபடி இருப்பினம். ஆனா மனசில இதுகள அவயள் பதிய வையாயினம்! அருவி விழுற வேகத்தில செம்பு பொங்கி ஒருக்காலும் நிறையாது - அப்பிடித்தான் அவயள்! அது கிடக்கட்டும் ஒருபக்கம். எனக்கென்னவோ தம்பி இந்த மாதிரிச் சுலோகங்களை மற்றவயளுக்குச் சொல்லேக்க அதைக் கேக்கிறவயளுக்கு என்னமாதிரி இருக்கோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு இதுகளைச் சொல்லேக்க ஏதோ உலகியல் கடந்த ஆனந்தம் உண்டாகுது. வரவர எனக்குத்தம்பி இந்த வயசில உந்தச் சுலோகங்களெல்லாம் என்ரகாதில கேக்கிறமாதிரி புதுசா ஒரு அனுபூதி உண்டாகிக் கொண்டருது” - என்று இரண்டு கைகளையும் ஏந்தி விரித்துப் பிடித்தபடி அவர் சொன்னார். "எல்லாம் ஒரு ஞானம்தான்! நீங்க வாழ்க்கய ஆழமாப் பாத்திருப்பியள். பல அனுபவங்களையும் பெற்றிருப்பியள். இந்த வயசுக்கு உங்களுக்கிருக்கிற அறிவுக்கு அப்புடியெல்லாம் ஒரு பக்குவம் வரும்தானே” என்று நாகராசா சொல்ல: “எதோ விட்டகுற தொட்டகுறதான் தம்பி! எல்லாக் கவுரமும் எனக்கு சிலந்தியின்ர பலவீனமான வலயளப்போல இப்ப அறுந்துபோச்சு” - என்று அவருக்கு அமைதியாக இதைச் சொன்னார் பெரியவர்.
அந்த நேரம் அவரின் முகத்தில் ஏதோ ஓரானந்தம் ஒரழகு ஒளிர்ந்ததைப் போல நாகராசாவுக்குப் பார்ப்பதற்குத் தெரிந்தது. அவரின் முகம் வெளிப்படுத்திய புது மலர்ச்சியையும் இளஞ்சூரியனைப்போல லேசாக வீசுகிற அவரது தெய்வீகத் தன்மையையும் தான் மட்டுமே கண்டுணர்ந்ததாக நாகராசா தன் மனதுக்குள் அப்போது எண்ணிக் கொண்டார். இவர்களெல்லாம் இங்கிருந்து தங்களுக்குள் அளவளாவிக் கொண்டிருந்த வேளையில், அங்கே உள் அறை வீட்டுக்கு முன் உள்ள மண் திண்ணையிலே உள்ள கதிரைகளில் இருந்துகொண்டு, நடப்புச் சமாச்சாரங்களை பேசிக்கொண்டிருந்த பொன்னுத்துரையின் மகள் தங்கப் பழத்துக்கும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளுக்குமிடையே வர வர
சீ.பி. அருளWணந்தம் O 142 O

சம்பாஷணை மேலும் மேலும் சூடுபிடித்துக் கொண்டு போனது. இராசம்மா ஆச்சி அவர்களுக்கு முன்னால் கீழே நிலத்தில் போடப் பட்டிருந்த பாயில் இருந்து கொண்டு, அவர்கள் பேசுவதை கண்களால் மாறி மாறிப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர ஒன்றும் பேசவில்லை. பொன்னுத்துரையரின் பேர்த்திகளிலே முகப்பருக்கள் கூம்பியிருக்கும் சிறிய முகமுடையவளுக்குப் பெயர் நிலா. அவளுடைய முகத்தில் வெண்பனிபோல படர்ந்திருந்த அந்தக் குட்டிக் குராவின் அருமையான வாசனை இருந்தது. அந்தத் திண்ணையிலிருந்த விளக்கு ஒளிபட்டு அவளுடைய சிகப்புநிற ஆடையிலிருந்து அபூர்வமான சிகப்பு அவளுடைய முகத்தின் மேல் பரவியிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் தாவணிச் சோபிதத்தோடும் ஒரு அழகிய முடிச்சில் விரிந்து ஒடுங்கியிருந்த அந்த அழகான கூந்தலுடனும் அந்தக்கதிரையில் இருந்தவாறு தன் தங்கை மாலாவுடன் பிறகும் பிற்பாடும் கதைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தாவணித் திரையை மீறி இரண்டு மலை முகடுகளைப்போல் புடைத்துத் தெரியும் மார்புகளும், கொடி இடையும், சிரிக்கும்போது ஏற்படும் கன்னக்குழிகளும் அவளது எடுப்பான அழகை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன.
நிலாவின் தங்கை மாலா, பருவத்தின் தலைவாயிலில் நிற்பவள். அக்காவிலும் பார்க்க அவள் நாலைந்து வயது இளையவள். அவள் பாம்புச் சட்டை மாதிரி பட்டுத் துணியில் பாவாடையும் சட்டையும் போட்டிருந்தாள். அவள் உடல் சதைப் பற்றால் இறுகி, அரும்பு கட்ட ஆரம்பித்துவிட்டது மாதிரிப் பார்ப்பதற்குத் தெரிந்தாள். பச்சரிசிக் கொழுக்கட்டையின் உருவ அமைப்பு அவளைப் பார்க்கிறவர்களுக்கு உடனே ஞாபகம் வந்துவிடும். அப்படியாகத்தான் வயிற்றுக்கு நல்ல அடக்கம் இல்லாமல் சாப்பாட்டை வீமன் பிடிபிடித்து வருகிறவள் போல் அவள் பொதுக்கென்று காணப்பட்டாள். அவளது சொத சொத உடம்பு வேர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தது. "இந்த ஒல வீட்ட நெடுகலும் வைச்சக்கொண்டு எப்பிடி இதுக்க நெடுகலும் இருக்கிறியள் அம்மம்மா? உள்ள ஒரே இருட்டாயிருக்கு அறை வழிய போனா ஒண்டும் கண்ணுக்குத் தெரியுதேயில்ல. சின்ன வீடாயிருந்தாலும் நாலு பக்கமும் வெளிச்சம் வர ஜன்னல்கள் வச்ச கல்வீடா ஒண்டக் கட்டிவிடச் சொல்லுங்களன் அப்பப்பாவிட்ட” - என்று மூத்த பேர்த்தியான நிலா தன் அம்மம்மாவைப் பார்த்துச் சொன்னாள் "ஏன் பிள்ள அப்பிடிச் சொல்லுற?” என்று பேர்த்தியப் பார்த்து இராசம்மா ஆச்சி ஒர் சின்னச் சிரிப்பலையுடன் கேட்டாள். "பின்ன என்ன? இந்த இருட்டுக் குகைக்க நாங்க எப்பிடிவந்து நாலு நாளெண்டாலும் ஒழுங்கா நிக்கிறது? ஒண்டும் இதுக்க இருக்க எங்களுக்கு வசதியில்லாமக் கிடக்கு வெளியால மாடுகளிண்ட மொச்சவாசம் தாங்கவே முடியல்ல, அதோட ஆடுகளின்ட புழுக்க, கோழியளிண்ட ‘பி’ எல்லாஞ்சேந்து நாறுது, மாட்டு மூத்திரத்தாலயம் சாணிக்கும்பலாலயும் நுளம்பு வேற கடிக்குது. குத்துக்குத்தெண்டு நுளம்பு உடம்பு முழுக்கக் குத்துது அங்க அந்த மாட்டு மூத்திரம் நனைஞ்சிருக்கிற முத்தத்தில
வரழ்க்கையின் ஈரிறக்கஸ் O 143 O

Page 82
நிக்கேலுமே? எண்டாலும் அந்த முத்தத்தில நிண்டு காலத்தால பூக்களைப் பாத்துக் கொண்டு நிண்டன். அப்ப அதில பக்கதில நிண்டமாடு சாணிபோட்டு அது சட்டையெல்லாம் தெறிச்சுப் போச்சு” தங்கை மாலா அக்கா சொன்னதைக் கேட்டுவிட்டுச் சிரித்தாள். "நீர் பொத்தும் வாய சும்மா உம்மட பல்லமாத்திரம் மற்றவயளுக்குக் காட்டாதயும்?” என்று சொல்லியபடி விளக்கமுடியாத அழகிய பாவத்துடன் நிலா தன் தோள்களைக் குலுக்கினாள். அந்த நேரம் அவளது செழிந்த மார்பகங்கள் சீரான மூச்சில் ஏறி இறங்கின.
"நான் சிரிச்சா என்ன உமக்கு?” “சிரிக்கிற கதயே நான் சொன்னனான் உமக்கு?” “நீர் சட்டம் போட வேணாம்?” - என்று தன் உடல் பாஷையையும் உக்கிரமாக சேர்த்து வெளிக்காட்டி தமக்கைக்கு அவள் சொன்னாள். தங்கையின் பேச்சைக் கேட்டு நிலாவின் முகம், குங்குமமாய்ச் சிவந்து விட்டது. “பாருங்கோ அம்மா? முளைச்சு மூண்டு இலவிடேல்ல, அதுக்குள்ள அவவின்ர ஆங்காரத்தையும் கொழுப்பையும் அக்கா எண்டு ஒரு மரியாதையில்லாம கதைக்கிறா? இங்க வந்தவுடன நாட்டுப் பாணியில சத்தம் போட்டும் கதைக்கத் துவங்கீட்டா?” இந்த இடத்தில் சட்டென்று அவர்களுக்குள் நடந்த பேச்சு நின்றது. “ரெண்டு பேரும் இருந்து இதில சண்டைபிடியாதயுங்கோ? என்ர அப்பா சொல்லியிருக்கிறார் தான் உயிரோட இருக்குமட்டும் இந்த ஓல வீட்டப் பிரிக்கமாட்டனெண்டு. இதில இருந்துதான் அவர் சாகுமட்டும் சீவிப்பாராம்! அவருக்கு விருப்பம், இப்பிடியான ஓலை வீட்டிலதான் இருந்து சீவிக்கிறதுக்கு அவர் தனக்கு விருப்பமான தான் கட்டின வீட்டில இருந்து சீவிக்கிறார். நீங்க உங்களுக்கு விருப்பமெண்டா நான் வரேக்க என்னோட சேந்து இங்க வாங்கோ, இல்ல இங்க வர உங்களுக்கு விருப்பமில்லாட்டி அங்க உங்கட அப்பரோட சேந்து கொழும்பிலயே நில்லுங்கோ. நான் வந்து இங்க என்ர அப்பாவையும் அம்மாவையும் பாத்துக் கொண்டு போவன்” தாய் சொல்ல அவரின் பெண்கள் இருவரும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருந்தார்கள். “சரி விடு பிள்ள அதுகளும் ஏதோ தங்கட விருப்பத்தச் சொல்லுதுகள் கொழும்பில இருந்து சீவிச்சு சின்னதில இருந்து பழகினதுகளுக்கு இப்பிடியெல்லாம் வந்திருக்க - இதுவளிய படுத்து எழும்பப் பிடிக்காதுதானே? நான் என்ன பிள்ளயஸ் செய்யிறது? எல்லாம் ஐயாவின்ர விருப்பந்தான்! அதுக்கு நானும் அவரோட சேந்து எல்லாத்துக்கும் ஒமெண்டு நடக்கவேணும். அவரிண்ட குணம் தெரியாதே உங்களுக்கு? நாளைய அவற்ற வண்டிச் சவாரி ஒட்டமெல்லாம் முடிஞ்சு, ரெண்டு மூண்டு நாளைக்கு பேந்தும் இங்க நீங்க பிடிவாதக் காறியளா நிக்காம நல்ல பிள்ளயளா நிண்டு கிண்டு போட்டு ஆறுதலா பேந்து கொழும்புக்கு ஒடுங்கோ, இங்க ஐயாவோட அணைஞ்சு கிணஞ்சு நடந்தா இப்பிடித்தான் இன்னும் உங்களுக்கு அவர் நகைய நட்ட செய்து தருவார் பிள்ளையஸ்! அதக்
ரீ.பி. அருஸ்ணந்தம் O 144 O

குழப்பாம நீங்க அவரோட நேசமா நடவுங்கோ? இராசம்மா ஆச்சி பேர்த்திமார்களுக்குச் சொன்ன கதையோடு அவர்கள் இருவரும் பிறகு மெளனமாக இருந்துவிட்டார்கள். அதற்குப் பிறகு கதிரையில் இருந்து கொண்டிருந்த இராசம்மா ஆச்சியினுடைய மகள் அதிலிருந்து எழுந்துவந்து, தன் தாய் இருந்துகொண்டிருந்த ஒலைப் பாயிலே அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள் புடவையின் மேல் பாகத்தை சரியாய் தள்ளியமைத்துக் கொண்டு, தனக்குப் பக்கத்திலே இருந்த வெற்றிலைத் தட்டத்தை இழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். இராசம்மா ஆச்சியின் மகள் அவளே முனைப்புடன் விரும்பும் நாட்களில் மட்டும் வெற்றிலை போட்டுக் கொள்பவள். இப்போது எழுந்த ஆசையிலே களிப்பாக்கை, பாக்குவெட்டியால் வெட்டி ஒரு வித ஒழுங்குடன் முகர்ந்து பார்த்து வாயில் முதலில் போட்டுக் கொண்டு, ஒரு முழு வெற்றிலையை எடுத்து காம்பைக் கிள்ளி வீசிவிட்டு சிறிது வாசனை றோஸ் சுண்ணாம்பைத்தடவி அதை மடித்துவிட்டு, வாய்க்குள் அதைச் செலுத்தி குதப்பத் தொடங்கினாள். அவள் வெற்றிலையைக் குதப்பத் தொடங்கியபோது காதுகளின் பக்கத்தில் மேல் தாடையின் எலும்புப்புடைப்பு மேலும் கீழும் வந்து போய்க்கொண்டிருந்தது. அந்தத் தாம்பூலத்தின் ருசியை அநேக நாட்களின் பின்பு அநுபவிக்கும் கிறக்கத்தில் பல இரகசியங்களை மீளவும் அவள் நினைத்துப் பார்த்தாள். பிறகு திண்ணையில் உள்ள மண்சுவரில் முதுகை சாய்த்துக் கொண்டு அமைதியாக அவள் இருந்து கொண்டாள். அவள் வாய் முழுக்க வெற்றிலை எச்சில் அடங்காமல் தவித்தது. கதிரையில் இருந்து கொண்டிருந்த சகோதரிகள் இருவரும், நிலவிய அமைதியைக் குலைத்துவிட்டு அந்த நேரம் கசு புசு வென்று சன்னமான குரலில் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். நீட்டுப் போருக்கு இருந்த புழுக்கம் நிறைந்த அந்தத் திண்ணையிலே இவர்கள் இருந்த இடத்துக்குக் கொஞ்சம் தொலைவாய், அங்கே பாயில் சரவணனும் இருந்து கொண்டிருந்தான். தனக்குப் பக்கத்தில் இருந்த பழைய அரிக்கன் ளக்கைச் சுருக்கி வைத்துக்கொண்டு தூக்கக் கலக்கத்தில் சொருகிப் போகிற கண்ணைத் திறக்கப் பிரயாசைப் பட்டபடி, எப்போது சாப்பிடுவோம், விழுந்து இதிலே படுப்போம் என்ற நிலைபரத்தில் அவன் இருந்தான். கண்ணயர்ந்து தூங்கி விழுந்துகொண்டிருந்த அவனுக்கு முன்னால் இருந்த அந்த அவலமான விளக்கு, எண்ணெய் குறைந்தும் எரிந்து புகைகக்கிக் கொண்டிருந்தது. அந்த விளக்கைக் கண்டு திகைத்த தூங்கு மூஞ்சி ஈக்கள் அதை விர்ரென்று சுற்றியபடி இருந்தன. பின்னேரம் மாடுகளைச் சாய்த்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாற்பிறகு, மாமியின் பிள்ளைகள் சொல்லும் எடுபிடி வேலைகளையெல்லாம் ஒடியோடிப் போய்ச் செய்துகொண்டிருப்பது அவன் மனதுக்குப் பிடிக்காமல்தான் இருந்தது. மாமியின் பிள்ளைகள் அவனைக் கூப்பிட்டு ஏதாவது கதை கேட்டால், அந்தக் கதைக்கு ஏதாவது பதில் சொல்லும் கவனத்தைவிட, அவனது கண்பார்வையெல்லாம் அவர்களது கழுத்திலுள்ள கைகளிலுள்ள
வரழ்க்கையிண் சிறக்கஸ் O 145 O

Page 83
நகைகளைத்தான் பார்த்தபடி இருக்கும். இந்த அவனது பார்வையின் நோக்கம் விளங்காமல் “என்னடா சரவணா அப்புடீயெங்களைப் பார்த்துக்கொண்டு என்னடா திருத்திரெண்டு கிடந்து முழிக்கிறாய்?" - என்று அவனைப் பார்த்து அவர்களிருவரில் யாராவது ஒருவர் அவனைக் கேட்டால்: "ஒண்டுமொண்டும் அப்பிடி இல்லையக்கா - என்று சொல்லும்போது தன் தலையையும் அதற்கேற்றாப்போல் ஆட்டி அவர்களுக்குக் காண்பிப்பான் அவன். அதற்குப் பிறகு அவர்கள்: “சரி கெதியா நீ போய் அத எடுத்துக்கொண்டா. அங்க போகேக்க இதையுங் கொண்டுபோய் அதில வை!” - என்று பல வேலைகளை அவனுக்குச் சொன்னால், அவன் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு உடனுக்குடன் அந்தவேலையளை அவர்களுக்குச் செய்து கொடுப்பான். மாமியின் பிள்ளையஞக்கு ஐயா நகைகள் கொடுத்த விஷயம் ஒன்றையும், விசயா தன் தம்பி சரவணனுக்கு இதுவரையிலும் வெளியிடவில்லை. தனக்குள் இருக்கின்ற மன வேதனையை, தன் தம்பியின் மனத்திலும் ஊற்றி விடக்கூடாது என்ற நினைப்பில் அதைச் சொல்லாமல் அவள் தன் மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாள். இதன் மூலம் அந்த விஷயத்தைப் பற்றி யாதொன்றும் சரவணனுக்குத் தெரியாமலேயே இருந்துவந்தது. என்றாலும் அவர்களது கழுத்திலுள்ள கைகளிலுள்ள தங்கப் பவுண் நகைகளையெல்லாம் அவன் தன் கண்களால் காண்கின்ற வேளை தன் அக்காவைப் பற்றித்தான் சிந்தித்து அவன் மனவேதனையடைந்தான். “கழுத்தில அவவுக்கொரு பவுண் சங்கிலியொண்டச் செய்துபோடவே எனக்கிவ்வளவு பாடாய்க்கிடக்கு. ஆனா இவேயளெல்லாம் கழுத்தில கையளில ஒண்டுக்குப் பத்தா இப்பிடி அடுக்கிப் போட்டிருக்கினமே? இவயள் இந்தளவில செய்து உதுகளைப் போட்டுக்கொள்ள எப்படித்தான் முடிஞ்சுது?” - என்று இவ்வாறெல்லாம் அவர்களைப் பார்க்கும் தருணம் அவனுக்குச் சிந்திக்கத் தோன்றியது. இதெல்லாவற்றையும் அவன் தன் அக்காவிடம் சென்று ஆறுதலாக இருந்து ஒரு வேளையில் கதைக்கலாமென்றால் மாமியும் அவரது பிள்ளைகளுமாக ஒருவர் பின் ஒருவர் அங்கு மாறி மாறி சமையல் அறைப் பக்கம் வந்து கொண்டே இருந்தார்கள். அதனால் அவனுக்கும் தனியனாகப் போய் இருந்து தமக்கையாருடன் கதைக்க இந்தச் சிலநாட்களாக அவனுக்கு ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. என்றாலும் வழமையாக அவன் விளாங்காய்கள் விற்றுக் கொண்டுவரும் அந்தச் சில்லறைக் காசுகளை தன் அக்காவிடம் கொடுக்கும் போது அதை அவள் வாங்கி உண்டியலில் போட்டு வருவது மாத்திரம் எதுவித தடையில்லாமல் கிரமமாக நடந்து கொண்டே வந்தது. இரவுச் சாப்பாட்டை எல்லோருக்கும் கொடுப்பதற்கு நேரம் போய்க்கொண்டிருக்கிறது - என்று நினைத்துவிட்டு சமையலறைப் பக்கமாக இராசம்மா ஆச்சி வந்து அந்த வாசலிலே நின்று கொண்டாள். “என்ன பிள்ளை விசயா சாப்பாடு சருக்கட்டி முடிஞ்சுதே? நேரம் போகுதம்மா?” - என்று இராசம்மா ஆச்சி கேட்கவும்தான்; அடுப்படியி லிருந்து கொண்டு விசயா அவரைப் பார்த்தாள். வேதனையோடு ஒரு சிரிப்பின் மினுக்கம், "பிட்டு கணக்கா ஆறிக்கிடக்கு - கறி நல்ல சூட்டோட ്. ി. ട്രഞ്ഞ് O 146 O

கிடக்கு - எடுத்து எல்லோருக்கும் போட்டுக் குடுங்களன் அப்பம்மா? நான் தண்ணிச்செம்ப வாளியோட வாசலில கோண்டோய் அங்க வைக்கிறன்!” - என்று அவருக்கச் சொல்லிவிட்டு அவள் தண்ணீர் வாளியை எடுத்துக்கொண்டு மால் உள்ள பக்கம் போவதற்கு வெளிக்கிட்டாள். அவள் அங்கே போய் தண்ணீர் வாளியை வைத்துவிட்டு திரும்பிக் குசினிக்கு வந்தான பிறகு, அங்கே போய் எல்லோரையும் பாயில் இருக்கவிட்டு, வாழை இலைபோட்டு அவர்களுக்கு பிட்டும் கறியும் பரிமாறியவர் இராசம்மா ஆச்சிதான். அவர்கள் எல்லோரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள். பின்பு இரண்டு குறிஞ்சிப்பின்னல் போட்டுப் பின்னிய பனை நார்க்கட்டில்களை மாலுக்குள்ளே கொண்டுவந்து வைத்து, அவற்றிற்கு மேலே மெத்தைகளைப் போட்டு நாகராசாவையும் அங்கு வந்திருந்த அவருடைய பால்யகாலத்து நண்பரான அந்தப் பெரியவரையும் படுக்க ஒழுங்கு பண்ணிக்கொடுத்தார் பொன்னுத்துரை. மற்ற இருவருக்கும் கீழே நிலத்தில் பாய் விரித்து தலையணையும் போர்வையும் அவர்களுக்குக் கொண்டுவந்து அவர் கொடுத்தார். பொன்னுத்துரையரின் பேர்த்திமார்கள் இரண்டுபேரும் இங்குவந்த நாளிலிருந்து விசயா படுக்கிற அந்த அறையில்தான் நித்திரைக்குப் போய் படுத்துவந்தார்கள். இன்றும் அவர்கள் இரவுச் சாப்பாடை சாப்பிட்டு முடித்துவிட்டு, அந்த அறைக்குள்ளே நுழைந்து பாய்களை விரித்துப் போட்டுக் கொண்டு வழமைபோல அங்கே படுத்துக் கொண்டார்கள். இளையவள் பாயில் சரிந்த சிறிது நேரத்துக்குள்ளே நன்றாகத் தூங்கிப்போய்விட்டாள். மூத்தவள் படுத்துப்பார்த்தாள், ஆனால் அவளுக்கு நித்திரை வருவதாயில்லை. எனவே எழுந்து தான் கொழும்பிலிருந்து கொண்டுவந்திருந்த கதைப்புத்தகத்தை பிரயாணப் பையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து அவள் அந்தப் பாயின் மீது மல்லாந்து படுத்துக்கிடந்தவாறு புத்தகம் படிக்கத் தொடங்கினாள். அவள் பாயின் மீது படுத்துக் கிடந்தவிதம் அவளுடைய நெஞ்சில் இரண்டு குத்து விளக்குகளை நிறுத்தி வைத்திருப்பது போல இருந்தது.
இராசம்மா ஆச்சியின் மகள் தன் தாயும் தகப்பனும் படுக்கிற அறையில் போய் அங்கே படுத்துக் கொண்டாள். சரவணன் திண்ணையிலே காலையும் கையையும் குறட்டிக் கொண்டு அந்தப் பாயிலே தடித்த போர்வைக்குள் வியர்வை வடிய சுருண்டு படுத்துக்கிடந்தவாறு நித்திரையாகிவிட்டான். அந்த வீட்டிலே நித்திரை கொள்ளாமல் படுக்கையில் கிடந்து கதைத்துக் கொண்டிருந்த ஆண்பெண் யாவரும் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். வேறெந்த ஒலியும் கேட்காத அந்த அர்த்த ராத்திரியின் உரத்த மெளனத்துக்கிடையே அந்தக் காஞ்சிரை மரத்தில் அலறிக்கொண்டிருந்த ஆந்தையின் சத்தம் மாத்திரம் தெளிவாக் கேட்டது. அது சத்தத்தை நிறுத்தியபிறகு அந்த மாலில் படுத்திருந்த பெரியவர் தொண்டையைச் சரிசெய்ய செருமும் ஒலி மட்டும் அங்கிருந்து இடையிடையே கேட்கத் தொடங்கின. அவர் படுத்துக் கொஞ்ச நேரத்தால் எழுந்து வெளியே போய் ஒன்றுக்கிருந்துவிட்டு, அந்தத் தூக்கத்தின் தொடர்பு விட்டுப்
ωριόδειοδιόλων δημνώόςή O 147 O

Page 84
போகாமல் வந்து படுத்தவாறு ஒரு யோகிகைப் போல இருந்தும் இல்லாத துயிலில் பிறகு ஆழ்ந்து விட்டார். இருண்ட இரவின் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக சற்றும் எதிர்ப்பின்றி வலுத்தது. விசயா தான் செய்ய வேண்டியிருந்த மிச்ச சொச்ச வேலைகளையெல்லாம் குசினிக்குள்ளே இருந்து செய்து முடித்தாற்பிறகு, வெளிக்கிட்டு அப்போதுதான் தன் படுக்கை அறைக்குள்ளே வந்தாள். அவள் அறைக்குள்ளே வந்து பார்த்த நேரம், அந்த இரண்டு பெண்களும் தாறுமாறாய்த் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடனே போய் சாவிக்கொத்தின் சிணுங்கல் ஒலியுடன் அவள் அந்த அறைக் கதவைப் பூட்டினாள். பிறகு அவள் தான் படுக்கிற பாயை அவர்கள் படுத்துக் கொண்டிருந்த அந்த இடத்திற்குத் தூரமாய் அங்கே விரித்துப் போட்டாள். அவளுக்கு அங்கே அந்த இளையவள் கால்களை அகட்டி கைகளை அகலித்து மல்லாந்து படுத்துக்கிடக்கிற நிலமையைப் பார்க்க நெஞ்சில் இரக்கம் வந்தது. உடனே அவள் மாலாவின் விலகிய துணியை சரிசெய்து அப்போதும் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்தாள். பிறகு அவள் தான் படுக்கிற பாயில் போய் படுத்துக் கொண்டு கிடந்தாலும், நித்திரையைத் தொடராத அளவில்தான் புரண்டு புரண்டு கொண்டு அதிலே கிடந்தாள். அவளுக்கு ஓய்வாக கொஞ்சம் படுக்கின்ற இந்தக் காலத்திலும் மாமியின் இரு பிள்ளைகளின் குணநலத்தை நினைத்துத்தான் மன வேதனையாக இருந்தது. எல்லாவற்றையும் எனக்கே எனக்கென்று வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அவர்களின் சுயநலத்தை நினைத்து நெஞ்சில் அவளுக்கு ஆத்திரமும் எழுந்தது. ஆனாலும் நேரஞ்செல்லச் செல்ல அது அடங்கிப்போய், அன்ரனைப் பற்றிய ஒரு நினைவு மட்டும் அவளை ஆக்கிரமித்துக் கொள்ளத் தொடங்கியது. அந்த நினைவுப் பூக்களெல்லாம் தண்டுக்குள்ளாலே எழுந்து பூக்கத் தொடங்கியது போல், அவளது மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவைகள் மொட்டவிழ்ந்து பூக்கத் தொடங்கிவிட்டன. அந்தக் காதல் வீசும் வாசம் மனத்திலே இருந்து அவளுக்கு மணம் பரப்பிக் கொண்டிருக்க, அதைச் சுவாசத்துடன் கலந்து அனுபவித்த நிலையிலே இன்பக்கிலேசம் அவள் மார்புள் அமிழ ஆரம்பித்தது. இதனால் அவளது இளமையின் வெகுமதிகள் உயர்ந்து தாழ்ந்தன. மனம் அமுங்கிக் கிடந்த பாறாங்கல்லை நகர்த்திவிட்டது மாதிரி சந்தோஷித்தது. அவளுக்கு படுத்த நேரத்திலிருந்து நித்திரையே வரவில்லை. காகங்கள் மூன்றாவது முறையாகவும் கரைந்தன. அவள் தூங்கவேயில்லை.
பத்து
பின்னேர வெயிலின் வெள்ளிப் பளபளப்பைப் போர்த்துக் கொண்டு இறம்பைக் குளம் மின்னுகிறது. கண்ணாடி உடைசல்கள் போல, அது ஒளியை அள்ளிக் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஒரே வர்ண
ரீ.பி. அருஸ்ணந்தம் O 148 O

வெள்ளத்தில் பல சாயல்களில் தண்ணீரின் மேலே சூரிய ஒளி இழைவது போல் அப்பொழுது அங்கு காணப்பட்டது. அந்தக் குளத்தின் அலைகரைப் பக்கம், வைரம் பாய்ந்த ஒரு மரம் விழுந்து செம்மிக் கிடக்கிறது. அதிலே நின்று ஆட்காட்டிக் குருவிகள், முரண்டு அரற்றி ஓலமிட்டவாறு நாலாதிசைகளிலும் பறந்து திரிகின்றன. அதேபக்கமாய் நின்ற கொக்குகள் சேற்று விளிம்புகளில் சகதிப்படலம் நலுங்காமல், கால்களை நீட்டி நீட்டி வைத்துக்கழுத்தைச் சொடுக்கிச் சொடுக்கி நடக்கின்றன. நிறைய நீர்க்கோழிகள் குளத்தில் தெரிந்தன. அந்தத் தண்ணீரின்மேலே வந்து வீச்சு வீச்சாக முள்ளும் மீசையும் உள்ள மீன்கள், வாயைத் திறந்து மூச்சு விட்டுக்கொண்டிருந்தன. சில மீன்கள் வெள்ளிக் காசுகளை மேலே அள்ளி வீசுவதைப் போன்று தண்ணீரின் மேலே துள்ளி விழுந்தன. குளக்கட்டில் ஆட்களைக் கண்டதும் அவைகள் வேகமாகக் கீழே அழுங்குகின்றன. அதனால் சரசரவென்று தண்ணீரிலே நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன. சின்ன மீன்களின் மினுக் மினுக்கென்ற அசைவுகள், இன்னும் அங்கும் இங்கும் தெரிகின்றன.
அந்த இடத்துக்கு அருகேயுள்ள விமான ஓடுபாதையில் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. அந்தக் குளத்துத் தண்ணீரிலிருந்து ஈரம் நக்கி எடுத்து வரும் குளிர்ச்சியான காற்றை சுவாசித்து அனுபவித்துக் கொண்டு, அந்த விமான ஓடுபாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த அநேகம்பேர், அந்த மண் பாதையிலே பிறகு இறங்கி வண்டில் சவாரி ஆரம்பிக்கும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு நின்ற பழையதொரு ஹென்றிபோர்ட் மோட்டார் காரின் மேலே ஒலிபெருக்கி கட்டப்பட்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அங்கு நடக்கப் போகின்ற அந்த வண்டில் சவாரிப் போட்டியைப் பற்றியவிவரங்களை, அந்த ஒலிபெருக்கியினூடாக ஒருவன் மேல்மூச்சுடன் பேசி முழங்கிக் கொண்டிருக்கிறான். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகக் கூடி நிற்கின்ற அந்தப் பகுதியிலே, நொறுக்குத் தீன் விற்கும் வியாபாரிகளினது வியாபாரமும் களை கட்டியிருக்கிறது. குளிர்ச்சியாகக் குடிப்பதற்கு குளிர்ப்பெட்டியில் குளிர்களியை வைத்து விற்றுக் கொண்டு, பல வியாபாரிகள் அவ்விடத்தில் சயிக்கிளிலே அங்குமிங்கும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சவாரிப் போட்டியில் பங்கு பற்றுகிறவர்களெல்லாம் மாடுகளை வண்டிலில் பூட்டி களைக்க வைத்துவிடக்கூடாது என்ற காரணத்தால், அவைகளை நடக்கவிட்டுக்கொண்டு அங்கு அவைகளைக் கொண்டு வருகிறார்கள். அந்தச் சவாரி மாடுகள் தலையை நிமிர்த்திக் கொண்டு சொகுசாக நடந்துவர, அவைகள் இழுத்துப் போகவேண்டிய அந்த வண்டிலை இன்றைய தமது தேவைக்காக அவர்கள் மாடுகள் இழுப்பது போல் தாங்களே இழுத்துக்கொண்டு வருகிறார்கள். இது ஒரு வேடிக்கையாக அங்கு நின்ற சிறுவர்களுக்குப் பார்க்கத் தெரியவும், அவர்கள் தங்கள் முழுவாயும் விரியும்படி அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். கொஞ்சம் வயதுக்கு வந்தவர்களும் வயது போனவர்களும் தங்கள் மனதுக்குள்ளே
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 149 O

Page 85
இதை நினைத்துச் சிரித்துக் கொண்டார்கள். தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக இந்த மனிதன் எப்படியெப்படியெல்லாம் தருணத்துக்கேற்றாப்போல மாறிவிடுகிறான். ஒருவனிடமிருந்து ஒரு உதவியைப் பெற வேண்டுமென்பதற்காக அவனது காலைப் பிடிக்கிறான். கையைப் பிடிக்கிறான். அப்படியெல்லாம் அவனைக் காக்கா பிடிக்கிறான் என்று பார்த்தால் மிருகங்களிடத்தும் அதே விதத்தில் தன் சுயநலத்துக்காக இவன் பணிந்து போய்விடுகிறானே? இந்த மனிதனின் விபரீதமான குணத்தை அந்த மாடுகள் இப்போது எங்கே அறிந்து கொள்ளப் போகின்றன? இன்னும் கொஞ்ச நேரத்தின் பின் அந்தச் சவாரியிலே அந்த வண்டிலை அவைகள் இழுத்துக் கொண்டு ஓடும்போதுதான், தாங்கள் வாங்கப்போகின்ற சாட்டையடிகளையும், ஊசிக்குத்தல்களையும் அவைகள் பட்டுக் களிக்கப் போகின்றன. என்று அங்கு வயசாளியான ஒருசிலர் அங்கு நடப்பவற்றைப் பார்த்து தங்களுக்குள்ளே சிந்தித்தார்கள். அவர்களுக்குள்ளே இந்த விசயங்களை விலாவாரியாக நினைத்துப் பார்த்துக் கொண்டவர், பொன்னுத்துரையரின் நண்பரான அந்தப் பெரியவர் மட்டும்தான். அவர் வெளேர் வெள்ளை வேட்டிக்கேற்ப சட்டையுடன், வேளைக்கே அங்குவந்து சவாரியைப் பார்க்கவென்று நின்று கொண்டார். வவுனியா இறம்பைக்குளம் கிராமத்துக்கு அருகேயுள்ள கிராமம்தான் சூசைப்பிள்ளையார் குளம். இந்த சூசைப்பிள்ளையார் குளம் கிராமத்திலிருந்து குறுகிய தூரமளவிற்கு சவக்காலைப் பக்கம் வீதியால் ஒருவர் நடந்து வந்தால், விமான ஒடு பாதையில் அவர் விரைவில் காலை வைத்துவிடுவார். அப்படிக்கிட்டவாயிருக்கும் இடத்துக்கு ஏன் வேளைக்குப் போக வெளிக்கிடவேணும்? என்ற நோக்கில் பொன்னுத்துரை நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தார். இதற்குள்ளே நல்ல நேரம் நல்ல சகுனம் பார்த்து வீட்டால் மாடுகள் வண்டிலைக் கொண்டு வெளிக்கிட வேண்டுமென்ற யோசனையும் அவருக்கு இருந்தது. மதிய வேளை உணவு உட்கொண்ட கையோடு வேளைக்கே அன்ரனும் இங்கே பொன்னுத்துரையின் வீட்டுக்கு வந்துவிட்டான். உரிய இடத்துக்கு அந்தச் சவாரி வண்டிலை இழுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பிப்பதற்கு அன்ரனும், வண்டிலுக்கு கடைக்கிட்டி பிடித்து விடவென அங்கு முன்னைய அந்த இரவில் அங்கு அவரது வீட்டில் வந்து தங்கியிருந்த அந்த ஆளும், ஏற்கனவே பொன்னுத்துரை சொல்லிவைத்திருந்தில் அவர்கள் ஏற்பாடாயிருந்தார்கள். மாடுகளை நடக்க வைத்துக் கொண்டு போக நானும் நாகராசாவும் என்று அந்த வேைைய பொன்னுத்துரை நாகராசாவிடமும் விட்டு தனக்கும் எடுத்துக் கொண்டிருந்தார். “அங்க நாலு மணிக்குச் சவாரி துவங்கிறதெண்டா இங்கயிருந்து மூண்டு மணிக்கே நாங்க சரியா வெளிக்கிட்டிட வேணும்?” - என்று நாகராசா தாம்பூலத்தைத் தரித்துக் கொண்டு பொன்னுத்துரையைப் பார்த்துச் சொன்னார். "சனங்களெல்லாம் பெரிய ஊர்வலம் வச் சமாதிரிச் சேந்து சவக்காலைப்பக்கத்து றோட்டால அங்க றண்வேப் பக்கம் இப்பவே வேளைக்குப் போய்க் கொண்டிருக்கினம்!” அவர்களுக்கு அருகே நின்று
jෂ්. ග්‍රී. ලාංඡිගvගvජ්ග(b O 150 O

கொண்டிருந்த அன்ரன் அப்படியாய்ச் சொல்ல: “நாங்க இந்தப் பக்கம் ஆலடி வயிரவர் கோயிலடியால மாட்டையும் வண்டிலையும் கொண்டு போவம், அதில போகேக்க வயிரவர் கோயிலில நிண்டு ஒரு தேங்காய் உடைச்சு கற்பூரமும் கொளுத்திக் கும்பிட்டிட்டுப் போறதுதான் நல்லம்! அதில நிண்டு ஆலடி வயிரவருக்கு முன்னால கையெடுத்துக் கும்பிட்டாத்தான் எல்லாம் சரிவரும்!” “ஓம் அப்ப இனி நாங்க அங்க போறத்துக்கு வெளிக்கிடுவம்! இப்ப நேரம் சரிதானே? " என்று திரும்பவும் நாகராசா ஐயாவுக்குச் சொன்னார். அவர் சொன்ன நேரம் சுப நேரம்தான் என்று பொன்னுத்துரையர் தனக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளக் கிழக்குத் திக்கில் பல்லி ஒன்று இருந்து சத்தம்வைத்தது. "கிழக்குத்திக்கில திங்கக்கிழம பல்லி சொன்னா அதின்ரை பலன் தனலாபந்தான்! எங்களுக்கிண்டைக்கு நிச்சயமா வெற்றிதான்!” என்றார் நாகராசா மகிழ்ச்சியுடன். இந்த நேரம் தன் கைக்குள் ஒரு தேசிக்காயோடு மாலுக்குள்ளே வந்தார் இராசம்மா ஆச்சி. அந்த மஞ்சள் பழத்தை அவர் ஐயாவின் கையில் பொத்திப் பிடித்தபடி கொடுத்து, அப்படியே அதை அவரின் கைக்குள் இருக்கவைத்து விரல்களாலும் மூடிவிட்டார். பிறகு அவருக்கு திருஷ்டி விழாமல் இருக்க அவரது இரு கைகளையும் தடவித்தன் இரண்டு கைவிரல்களையும் மடக்கி அழுத்தி சட சட'வென்று சொடக்குகள் விழவைத்தார். இராசம்மா ஆச்சியும் இன்று விடியலில் தான் கண்ட கனவிலே மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இன்று சூர்யோதயத்தில் தான் கண்ட கனவு இன்றைக்கே பலிக்கினும் பலிக்கும் என்று அவள் அதை நன்றாக நம்பினாள். கண்ணைக் கசக்கி இமை சிமிழ் திறந்ததும், அந்தக் கனவை நினைத்து நினைத்து எத்தனை தடவை இன்று அவள் அதற்கு உயிர் கொடுத்துவிட்டாள். இப்போதும்கூட அந்தக் கனவை உசுப்பேற்றி தன் நினைவில் மீண்டும் அதை ஊசலாடவிட்டுப் பார்த்தாள். தன் கணவர் ஏருழக்கண்டதோடு தானும் விரிந்த வீதியில் நடப்பதாய்க் கண்டுவிட்ட அந்தக் கனவால், கணவருக்கு கெளரவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்தக் கனவின் பலன் தெரிந்திருந்ததால் அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இக்கனவு கண்ட நேரம் தேக அஜீர்ண பலஹினமோ, அல்லது அதி பித்த ரோகமோ தனக்கு இல்லாமலிருந்ததால், அது பொய்யெனத் தகாத ஓர் உண்மைக் கனவென்று மனம் அவளுக்கு அடித்து அடித்துச் சுப செய்தி கூறிக்கொண்டிருந்தது. “மாட்டப் போய் அவிட்டு அதுகளை இப்ப கொட்டிலால இருந்து வெளிய வெளிக்கிடுத்திக் கொண்டருவமே?” - என்று பொன்னுத்துரையைப் பார்த்துக் கேட்டார் நாகராசா. “வண்டில அதுக்கு முதல் படலைக்கு வெளியால எடுத்துவிட்டு இவயிட்டக் கொண்டுபோகக் குடுத்திட்டு’ - என்று அவர் கேட்டதுக்கு பொன்னுத்துரையர் சொல்ல; அவர் சொன்ன கதைச் சூட்டோடு உடனே அன்ரனும் அந்த ஆளுமாகச் சேர்ந்து வண்டில் நின்ற அந்த இடத்துக்குப் போக நடந்தார்கள். நாகராசா அவர்களுக்கு முன்னம்போய் வேலிப்படலையைத் திறந்தார். கையிலே தான் வைத்திருந்த
வரழ்க்கையின் சிறக்கஸ் O 15 O

Page 86
பழத்தேசிக்காயை சில்லுக்கடியிலே அவ்வேளை பொன்னுத்துரை வைத்தார். அன்ரனும் மற்ற ஆளும் சேர்ந்து அந்த வண்டிலை நகர்த்த: அவர் தேசிக்காய் வைத்த பக்கமுள்ள வண்டில் சில்லை மேலே கைப்பிடித்து அதைக் கீழே கொஞ்சம் நிலத்தில் அழுத்தினர். உருளும் சில்லிலே நசுங்குண்டு அப்பொழுது அந்தத் தேசிக்காய் பாதியாய்ப் பிய்ந்தது. அதன் சாறு வெளியே பீச்சப்பட்டு நிலத்தில் அது ஊறவும் "இனி நீங்க வண்டில இழுத்துக்கொண்டு போங்கோ. நாங்க மாடுகளை நடத்திக் கூட்டிக்கொண்டு உங்களுக்குப் பின்னால வந்துகொண்டு இருக்கிறம்!” - என்றார் பொன்னுத்துரை. அவர் சொல்லவும் நுகத்தடியின் இருபக்கங்களிலும் பிடித்துக்கொண்டிருந்த அந்தப் பிடியோடு அவர்கள் வண்டிலை இழுத்துக்கொண்டு படலைப் பாதையால் அதை வெளியே வீதிக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். மாடுகள் இரண்டையும் கொட்டிலிலிருந்து அவிழ்த்துக்கொண்டு, அதே படலைப்பாதையால் இவர்கள் இருவரும் அவர்களுக்குப் பின்னாலே போகப் பிறகு வெளிக்கிட்டார்கள். “மாடுகள நடத்திக் கொண்டுபோறது லேசு, இந்த வண்டிலை இழுக்கிறதுதான் கஸ்டம் என்ன தம்பி? அப்ப ஆள் மாறுவமே?” - என்று வீதிக்கு வந்தபோது அன்ரனைப் பார்த்துக் கேட்டார் ஐயா. வேணாம் அப்படி இது என்ன பாரம் இழுக்கிற வண்டிலே? காத்துமாதிரி இந்தச் சவாரி வண்டில பிடிச்சு இழுக்கேக்க கிடக்கு!’ என்றான் அவன். "எண்டாலும் உந்த றோட்டால போகேக்க உம்மட அம்மா நிண்டு தற்சேலா உம்மப் பாத்திட்டா என்னத்தான் பேந்து பெரிசா குற சொல்லுவா. இப்பிடியா தன்ர மோன வச்சுநான் மாடு மாதிரி வண்டிலிழுக்க வைச்சிட்டனெண்டு.”
66
ஆ. அவ பாத்தப் பாக்கிறா! பேசினாப் பேசிறா! அது எனக்குப் பறவாயில்ல கிடக்கட்டும்!” - அவன் அலட்சியமாக அவருக்குச் சொல்லியபடி நெஞ்சில் சேந்த்துப் பிடித்திருந்த நுகத்தடியை முன்னால் தள்ளியபடி வண்டிலை இழுத்துக்கொண்டு நடந்தான். அவனுக்குத் தானும் சளைக்காமல் இருந்ததைப்போல் நடந்துகொண்டிருந்தான் மறுபக்கத்தில் நுகத்தடியைப் பிடித்துக்கொண்டிருந்தவன். தன் கணவர் வெளியே வெளிக்கிட்டுப் போகும்போது இராசம்மா ஆச்சி சாமியறைக்குள்ளே முருகனின் படத்துக்கு முன்னாலே நின்று கொண்டிருந்தாள். "என்ர மனமும் இண்டைக்கு நல்லாயிருக்கு எல்லாம் இண்டைக்கு முருகன்ர அருளால நல்லா நடக்கும்” அதால எல்லாம் அவனே துணை என்ற நம்பிக்கையை தன் மனதில் வைத்துக் கொண்டு அவள் கைகளைத் தலைமீது குவித்து வைத்துக்கொண்டபடி சாமி கும்பிட்டாள். ஏற்கனவே அவளுக்கு இருந்த மன நம்பிக்கையும் ஒன்று நேர அவளது முகத்தில் புதுத்துல்லியம் பிறந்தது.
சமையல் அறையை விட்டு விசயாவால் கொஞ்சநேரம்கூட வெளியே வெளிக்கிட்டுப் போய்வர முடியவில்லை. காலையில் போய் மாடுகளில் பால் கறந்த வேலையோடு, முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு, அடுத்து உள்ள வேலையான கோழிகளைப் பார்த்தும்
No. ტ. ლ5xტაიrükgvJზეpuბ O 152 O

கூட்டுக்கு வெளியாலே அவைகளைத் திறந்துவிட்டு - அவற்றில் முட்டை இடுகின்ற கோழிகளை இனங்கண்டு அடைத்துவைத்து - எல்லோருக்கும் பிறகு காலை உணவும் தயாரித்துக் கொடுத்து முடித்துவிட்டு - கையோடு அதிலேயே அடுப்படிப்பக்கமாக குந்தி இருந்து மதிய உணவும் சமைத்ததில் அவள் அலுத்துச் சலித்துக் களைத்துப் போனாள். இன்னும் குசினிக்குள்ளே வரவர அவளுக்கு வேலைகள் சிறிது சிறிதாய்ப் பெருகிக் கொண்டிருந்ததேயொழிய சற்றும் குறைந்தபாடாய் இல்லை. ஒன்றுமுடிய ஒன்றாக அணைதலில்லாத அந்த அடுப்பு நெருப்பிலே, பானை சட்டி ஏறிக் கொண்டே இருக்கிறது. அடுப்பிலே வைத்த பாத்திரங்களில் இடும் உணவுப் பொருட்கள் அவிகின்றதையும், எண்ணெய்யில் பொரிகின்றதை யும், பார்த்தெடுக்கும் வேலையில் அடுப்புப் பக்கம் விடிகின்றதிலிருந்து நெடுகஷம் இருந்து கொண்டதில் தேகமே அவளுக்கு முழுதும் அனலாய்க் கொதிக்கிறது. இப்பொழுது இரவுக்கென்று உணவு தயாரிக்க அடுப்பிலேற்றி வைத்த தாச்சியில் அரிசி மா சூடாகிக் கொண்டிருக்கிறது. இந்த அரிசிமாவை தாச்சியில் வறுத்தெடுப்பதும் பெரியபாடுதான். அகப்பையைப் பிடித்தகை ஆட ஆட அந்த உளைச்சலில் உடல் சலித்துப் போகிறது அவளுக்கு ஒரு நிமிடம் கூட எழும்பி நிற்காமல் கொள்ளாமல் இப்பிடியே நெடுகஷம் இந்தப் பலகையிலே எவ்வளவு நேரம்தான் குந்திக் கொண்டிருக்கிறது. இந்தக் குசினியை விட்டு வெளியில் போய் விறு விறுவென்று நன்றாக கொஞ்ச நேரம் முற்றத்தில் நடந்து விட்டுவந்தால், அல்லது நன்றாக உஸ்' இந்த உடற்சூடு தணிய கிணத்தடியிலே போய் நின்று தண்ணிரை மொண்டு மொண்டு தலையிலும் தோளிலும் மாறி மாறி கொட்டிக் கொண்டு வந்தால், என்று இப்படி எதை அவள் அப்போது நினைத்தாலும் அடுப்படியிலிருந்து அவளுக்கு எழமுடியாமல்தான் இருந்தது. இந்த நிலைபரத்தில் இடையிடையே குசினிக்குள் வந்து அவளுடைய அப்பம்மா செய்து கொடுத்த உதவிகள் எந்த மூலைக்கு? “ஏதோ அவவுக்கு ஏலுமான உதவியளயெண்டாலும் செய்துதந்தாவே அதுவே எனக்குக்காணும்! அவவுக்குத்தான் வயசு போட்டுது. மனமிருந்தாலும் இங்க ஒரே இடத்திலயிலிருந்து பொறுப்பான வேல ஏதுஞ் செய்ய அவவுக்கெப்பிடி ஏலும்? ஆனா அங்க கொழும்பில இருந்து இங்க வந்திருக்கிற பொம்புளயள் இதுக்க ஒருக்காவெண்டாலும் வந்து எட்டிப்பாத்து - அட தனியக் கிடந்து அவள் இதுக்க கஸ்டப்படுறாள் பாவம் எண்டு நினைச்சு கூடநாட எனக்கு இங்க ஏதாவது சின்ன ஒரு உதவியெண்டாலும் செய்து தந்திருக்கலாம்தானே?” இதை நினைக்க அவளுக்கு மன எரிச்சல் பிடித்தது. இந்த எரிச்சல்களுக்குக் காரணம், அவள் விரும்பியிருந்த அந்த நேரம் வெளியே போக முடியாமல் போனதுதான். அன்ரன் அங்கு வந்திருந்த தருணம் அவனை வெளியே போய் நின்று அவள் ஒருமுறை தன் கண்ணால் அவனைக் கண்டிருந்தால் - அவனும் அவளை ஒருமுறை பார்த்திருந்தால், அவளும் மனம் குளிர்ந்து சாந்தியாயிருப்பாள். இன்னும் எவ்வளவோ நெருப்பு வெக்கையைக்கூட குளிராக அவளுக்கு மாற்றிவிடக்கூடிய ஒரு சக்தியை அவனது பார்வை
வழ்க்கையின் ரிறங்கள் O 153 O

Page 87
ஒன்றே அவளுக்குக் கொடுத்திருக்குமே? ஒன்றுமே எனக்கு இவ்வுலகில் நிறைவேறிடாத ஆசைகளோடே என்ன வாழ்க்கை இது எனக்கு? என்று சலித்தது அவளது மனம். அந்த வெறுப்பு மனத்தில் மேலெழுந்து அலையடித்துக் கொண்டிருந்தது அவளுக்கு. அந்த அமைதியில்லாத அவளது மனதிலே இன்னம் பல நினைவுகள். அவையெல்லாம் காரை உதிர்வது போல பொருக்குகளாக உதிரத் தொடங்கின. தன்னுடைய வயதுதானே மாமியினுடைய மூத்த பெண் பிள்ளை என்று நினைத்து அதன்மூலம் எவ்வளவற்றையோவெல்லாம் அவள் தனக்குள் நினைத்து நினைத்துக் கவலைப்பட்டாள். இந்தக் கணத்திலே அவள் இது காறும் நினைக்கவே விரும்பாமல் விலக்கி ஒதுக்கி வைத்திருந்த நினைவுகளெல்லாம், அவளையும் மீறி அவள் மனத்துள் உயிர்த்தெழுந்தன. அவர்கள் சவாரி பார்க்கவென்று உடுத்திக்கொண்டுபோன பட்டாடைகள், நகங்களில் பூசிக்கொண்ட வர்ணம், தன் மனத்தைப் புண்ணாக்கிவிட்ட அந்த நகைகள், அவர்களுக்கு இந்த வீட்டிலே இருக்கும் மதிப்பு, சுதந்திரம், எல்லாமே நினைத்துப் பார்க்க அவள் தலைக்குள் இருந்து வெடித்துச் சிதறும் அளவுக்கு அவைகள் தாக்கத்தைக் கொடுத்தன. இந்நேரமாய் அவளது மூச்சு நின்று ஆழ்ந்த பெரு மூச்சுகளாக வெளியே வந்து உள்ளே சென்றது. என்றாலும் சிறிது நேரத்தில் அவள் தன் மனத்தை ‘ஆறுமணமே ஆறு' என்று தனக்குள்ளே ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வைத்துக் கொண்டாள். ஏழைகளுக்கு இன்பமில்லை என்பதுதானே நியதி அந்த மந்திரச் சொல்லை தன் மனதுக்குச் சொல்லியே அவள் தன் மனத்தை மடக்கி அமைதியாகும் ஒரு வழிக்குக் கொண்டு வந்திருந்தாள். பொன்னுத்துரையும் நாகராசாவும் அந்த வீதியாலே நடக்கவிட்டுக் கொண்டு போகும் அந்தக் காளைகளை, அந்த இடத்தில் காணக்கிடைத்தவர்க ளெல்லாம் பார்த்தார்கள். இதற்கு முன்னம் அந்தக் காளைகளை பொன்னுத்துரை அந்த வீதியால் கலைத்துக்கொண்டு போகும்போது அவர்கள் அவற்றைப் பார்த்ததற்கும், இன்றைய நாளிலே அவர்கள் அவைகளைப் பார்ப்பதற்கும் ரொம்பவுமே ஒரு வித்தியாசம் இருந்தது. ‘இன்றைய நாள் இந்தக் காளைகள் அந்தச் சவாரிப் போட்டியிலே பங்குபற்றி ஓடி வெல்லுமா? இல்லை தோற்றுவிடுமா? என்று இந்தக் கேள்விகளை தம் மனசுக்குள்ளே அடுக்கிக்கொண்டு பார்த்த ஒருவிதமான பார்வையாக அவர்களது பார்வை அளவைக் கோல் கணக்காகவும் மாறியிருந்தன. அந்த ஆலடி நிழல் அண்மிக்கவும் அடர்ந்து தழைத்த அந்த இலைமறைவுக்குள்ளேயிருந்து குருவிச் சத்தங்கள், கற்பனைப் படி விரிவுபடுத்தக்கூடிய வகையில் மேலேறும் வரிசையிலும் கீழிறங்கும் வரிசையிலும் கேட்கத் தொடங்கின. அந்தச் சத்தத் துளிகள், முத்துமுத்தாய், மெத்து மெத்தென எழுந்தன. அதைத் தன் காதுகளுக்கு இன்பமாய் நினைத்து ரசித்தான் அன்ரன். “இதிலயாக் கொஞ்சநேரம் நாங்கள் நிப்பமா. நிண்டு கொஞ்சம் ஆறுவமா?” - என்று பொன்னுத்துரை அந்த ஆலமரத்தடிக்குக் கீழே வந்ததும், விழுதுகள் வளைந்த பாதையை ஏற்படுத்தியுள்ள அந்த இடத்தில் நின்றபடி இதை அன்ரனிடம் கேட்டார்.
ரீ.பி. இருஸனந்தம் O 154 O

தாங்கள் அந்த மாடுகளை நடத்திக் கொண்டு வருவதைவிட அவர்களுக்கு அந்த வண்டிலை இழுத்து வருவது கொஞ்சம் கஷ்டம்தானே என்று அவர் நினைத்துவிட்டார். ஆனாலும் அன்ரன் "எங்களுக்கெண்டா ஆறக்கீறத் தேவையில்ல. எண்டாலும் உங்களுக்குக் கொஞ்சம் நிண்டாறவேணுமெண்டா நாங்களும் கொஞ்சம் நிக்கிறம்!” - என்று அவருக்குச் சொன்னான். அப்படிச் சொன்ன கையோடு தனக்கு அந்தப்பக்கம் நுகத்தடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தவரையும் அன்ரன் ஒருக்கால் தன் தலையைத்திருப்பிப் பார்த்தான். அவனும் அன்ரன் பார்க்க “எனக்கும் அப்பிடித்தான் களையில்ல” என்று சொன்னான். “சரி அப்ப நாங்கள் நடப்பம்! நீங்க கற்பூரத்தக் கொளுத்தி தேங்காய உடையுங்களன்?” அன்ரன் அப்படியே அந்த நுகத்தடியை தன் கைகளில் பிடித்திருந்தபடியே இதை அவரிடம் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு பொன்னுத்துரை தான் கொண்டுவந்த மாட்டின் பிடி கயிற்றை நாகராசாவிடம் கொடுத்துவிட்டு, சூலம் நாட்டிக் கிடந்த பக்கம் போனார். அந்த வயிரவர் சூலத்திலே அரி அரியாய் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த மிளகாயும் தேசிக்காயும், பளுப்பேறி மங்கிப் போயியிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டு தன் இடுப்புச் சால்வைக்கட்டுக்குள்ளேயிருந்து பொன்னுத்துரை ஒரு பெரிய கட்டியளவுக்கிருக்கும் கற்பூரத்தையும்; அதோடு சேர்ந்ததாய் தீப்பெட்டியையும் வெளியே எடுத்தார். கற்பூரத்தைக் கொளுத்திவிட்டு, தான் வரும்போது ஒரு கையில் பிடித்தபடி கொண்டுவந்திருந்த தேங்காயை தீபத்தின்மேல் காட்டி, மூன்றுதரம் பிறகு அதை அதிலே சுற்றியெடுத்துக் கையோங்கி அதைக் கல்லிலே அறைந்தார். இளசும் முற்றலுமில்லாத நடுத்திறமான அந்தத் தேங்காய் பொன்னுத்துரையரின் ஒரே அடியில் இரண்டு பாகமாம்படி உடைந்து கிடந்தது. உடைந்த தேங்காயில் திடீரென உதயமாகும் தூய வெண்மை! அதைக் கண்டதும் இங்கு தங்களுக்கு நடக்கப்போகின்ற கார்யம் கட்டாயம் சுகத்தைத்தரும், தனதான்ய விருத்தியையும் தரும், என்று பொன்னுத் துரைக்குப் பின்னால் நின்று கும்பிட்டுக் கொண்டிருந்த நாகராசா உடனே தன் மனத்தில் எண்ணிக் கொண்டார். வயிரவர் சூலம் மட்டுமே காட்சியளித்த அந்த மரத்தடியில் திருநீறு பூசிக்கொள்ள வழியில்லை. அது அங்கே இல்லாததாய் இருந்தது. கும்பிட்ட இடத்திலிருந்து ஏதேனும் ஒன்றை எடுத்து திருநீறுபோல் நெற்றியில் பூசிக் கொண்டு போகவேண்டுமென்பதுதான் பொன்னுத்துரையருக்கு விருப்பம். அந்தக் கல்லின்மேல் கற்பூரங்கள் எரிந்து போனதினால் உண்டான கறுப்பு நல்லெண்ணைய்க் கறுப்பாக படிந்திருந்தது. அதிலேதன் விரலிரண்டையும் வைத்து அழுத்தி, ஒரு இழுவை அவர் இழுத்தார். தன் ஏறு நெற்றியில் பிறகு அந்த விரல்களை வைத்து ஒரு மொத்தக்கோடு இழுத்துக்கொண்டார் அவர். அவர்கள் எல்லோரும் அதிலிருந்து மாடுகளையும் வண்டிலையும் விமான ஒடுபாதைக்குப் பக்கத்திலே கொண்டு வந்திருந்த நேரம், சவாரிப் போட்டி நடக்கும் நேரத்துக்கு அவ்வேளை கொஞ்சம் கிட்டமுட்டவாக இருந்தது. அவர்கள் அங்கு விமான ஓடுபாதைக்கு அருகில் வந்திருந்த வேளையில்தான் நிலாவும், மாலாவும், அவர்களுடைய தாயாரும் வரழ்க்கையின் ரிறக்கஸ் O 155 O

Page 88
அந்தவழியாக வண்டில் சவாரி ஆரம்பிக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் மிகவும் கவனத்துடன் தங்களை அலங்கரித்துக்கொண்டுவந்தது புலப்பட்டது. அவர்களது வதனங்களில் ரோஜா மலரினுடையதும், யார்ட்லி பவுடரியுடையதுமான ஒரு கலவை நறுமணம் இருந்தன. மூத்தவள் நிலா காதிலிருந்த வெள்ளைக் கம்மல்கள், அவள் கழுத்தைத் திருப்பும் போதெல்லாம் காதருகில் விந்தையாக இடி மின்னலைத்தோற்றுவித்தன. கற்கள் பதிந்த கனமான நெக்லஸ் அவளது பனிக்குடங்கள் போன்ற மார்பில் பதிந்திருந்தன. சூரிய ஒளியில் வலப்பக்கம் மூக்குத்தி மின்னி அவள் முகம் ஜொலித்தது. மாலாவினதும் நிலாவினதும் தாய் கனமான பெரிய கொண்டைவைத்து முடியலங்காரம் செய்துகொண்டு வந்திருந்தாள். அவள்தன் கொண்டை வளைவில் ரோஜா மலர்களைக் குத்திச் சொருகியும் அழகுபடுத்தியிருந்தாள். ‘இதில நடக்க நடக்க என்னமாதிரியப்பா காத்து வீசுது! காதுக்குள்ள காத்து விசிலும் அடிக்குது இந்தக் காத்து பாக்கப்போனா ரெண்டு வகயான காத்து அலைகளாயிருக்கு ஒண்டு குளுமையாயிருக்கு மற்றது வெக்கையா யிருக்கு இந்த இரண்டும் சேந்து என்ர முகத்தில மோதிப்போட்டுப் போகுது!” - என்று அதைத் தான் அனுபவித்துக்கொண்டு சொன்னாள் நிலா. “ஆனாலும் வெந்து கிடக்கிற இந்த வன்னி மண்ணுக்கால இருந்து சூடு செருப்புக்குள்ளால உள்ளங்காலில ஏறுது?” - என்று இளையவள் மாலா அதையடுத்து அவளுக்குக் கதை சொன்னாள். அவள் நடந்து கொண்டிருக்க வானம் முன்னால் போவது மாதிரி அந்த வெளியில் அவளுக்குத் தெரிந்தது. அந்த மேக மண்டலத்தில் ஒரு முகில் உருவத்தை நாரதர் வருவது போல அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்தக் கற்பனையோடு தான் முன்னம் சொன்ன அக்கதையை அத்துடன் நிறுத்தாது, கவிதை நடையில் இந்தக்கால் சூடு விசயத்தை அவள் தன் தமக்கையாருக்குச் சொல்ல வெளிக்கிட்டாள். ‘இந்த நிலச்சூடு காலில இருந்து தலை நோக்கி ஒரு காந்தம் போல ஊடுருவிக் கடுக்குதக்கா!” - அவள் சொல்லவும் அதைக்கேட்டுவிட்ட அவர்கள் இருவருக்கும் அது மிக ரசிப்பாகத்தான் இருந்தது. அவள் சொல்லியதின் ரசிப்பை தனக்குள் அசை போட்டவாறு நிலா வெகுநேரம் வரையில் நினைத்து நினைத்துச் சிரித்தாள். ஆனாலும் நிலாவுக்கு இதைக் கேட்டதன் பிறகு அவளுக்குத் தன்னிலே ஒரு குறை தென்பட்டது. அந்தக் குறையை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்று அவள் யோசித்தாள். பிறகு அவள் தங்கைக்குத் தானும் சளைத்தவளாயில்லை என்பதைக்காட்ட அவளும் ஒன்றைச் சொன்னாள் ஒரு கவிதை போல. “இந்த வெயில் தலையில கண்டு வேர் பிரிஞ்சு நடு முதுகால இறங்குதடி.” இவளும் இப்பிடிச் சொல்லிவிட தன் இரு பெண் பிள்ளைகளின் கவித்துவத்தை நினைத்துக்கொண்டு தங்கப்பழத்துக்குத்தான் பெரு மகிழ்ச்சி அவள் தன் சின்னவளினதும் பெரியவளினதும் சொல்லாடல்களை மனதுக்குள்ளே வைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டு ரசித்துச் சிரித்தாள்.
இளையவள் பொதுக்குப் பொதுக்கென்று தன் தளதளத்த பார உடலை
ඒ.ඡී. ථNගvශග්ග(b O 156 O

தூக்கமுடியாத அளவுக்குத் தூக்கிக்கொண்டு நடக்க அவளது பொட்டுப் பாவாடையும் காற்றுக்கு சுருக்கங்கள் அலைய ஆடிக் கொண்டிருந்தது. "இப்பிடி ஒரு காத்துத்தானே இதில எப்பவும் அடிச்சுக் கொண்டிருக்கும்” - என்று நினைத்துக் கொண்டு அவள் காற்றுக்குக் கலைந்து கண்முன்னே மறித்து நிற்கும் முடிக்கற்றையை ஒரு கையால் ஒதுக்கி விட்டுக் கொண்டு தன் மறுகையை வீசி சுகமாக நடந்தாள். ஆனாலும் எதிர்பாராத அளவில் அவ்விடத்தில் வீச்சாக அடித்தகாற்று அவளது அரைப்பாவாடையை புடைத்துயரச்செய்தது. அவளது உருட்டுத் தொடைகளை வெளித்தெரிய வைத்தது. உடனே “என்ன இந்த விசமக்காத்து” என்று அவள் இடித்துரைத்து தன் இரு கைகளாலும் உடனே பாவாடையை உருவிப் பொத்திப் பிடித்துக் கொண்டாள். அவள் கன்னங்களில் சிவப்புத் திட்டுத்திட்டாய்ப் பூத்துவிட்டது.
வண்டில் சவாரி ஆரம்பிக்கின்ற இடத்திலிருந்து அது ஓடி முடிக்கப்படுகின்ற இடம்வரை, சனங்கள் ஒருபக்கம் நின்று கொண்டிருந்தார்கள். சவாரி ஆரம்பிக்கிற இடத்திற்கும் வெற்றிக்கோடு போடப்பட்டிருக்கும் அந்தக் கடைசி எல்லைக்கும் இடை நடுவில் நின்றால்தான், வண்டில் சவாரியின் ஆரம்பமும் முடிவும் ஒழுங்காகக் கண்ணுக்குத் தெரியும் என்று நினைத்து, சிறிதானதோர் சனக் கூட்டம் அதிலே நின்றபடி ஆளையாள் இடித்துப்பிடித்துக்கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. வண்டில் சவாரி ஆரம்பிக்கின்ற இடத்திலே அந்தப் போட்டியில் பங்குபற்றும் மாடுகளைப் பார்த்துக்கொண்டு பலபேர் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். நாட்டு இனத்தைச் சேர்ந்த அந்தக் காளை மாடுகளின் பலவிதமான நிறங்களையும், பல மாதிரித் திரும்பியுள்ள கொம்புகளையும், கொழு கொழுவென திமிரும் முதுகுகளையும் சாட்டையாய்ச் சுழன்றடிக்கும் வால்களையும் அவைகளின் கழுத்துகளில் கட்டியுள்ள மணிகளையும் பார்த்துக்கொண்டு அவர்கள் தங்கள் பொழுதைப் போக்கியபடி இருந்தார்கள். அவர்களிலே மாடுகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த சிலர் அந்த மாடுகளின் அண்டையில் நெருங்கியும், தொலைவில் விலகியும், நேர் எதிராக நின்றும் அவைகளைப் பார்த்தவாறு நின்றார்கள். ஒலி பெருக்கியிலே தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு - என்ற பாட்டு அங்கு நடக்கப்போகின்ற அந்த நிகழ்ச்சிக்குத் தகுந்தாற்போல அதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘இன்னும் சிறிது நேரம். இன்றும் சிறிது நேரம்’ என்று ஒலிக்கின்ற அந்தப் பாட்டை இடையிடையே நிறுத்திவைத்துக்கொண்டு அங்கே சவாரி எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலாய்ப் பார்த்துக் கொண்டிருந்த சனத்தை ஆறுதல்படுத்த இடையிடையே இந்தத் தகவலை ஒருவன் ஒலிபெருக்கியில் சொல்லிக்கொண்டிருந்தான். வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும் வண்டிலைக் கொண்டுபோய் ஒரு வசதியான இடத்தில் விட்டுவிட்டு அன்ரனும் அவனோடு சேர்ந்து நுகத்தடி பிடித்துக்கொண்டு வந்தவனும் அதிலேயே நின்று கொண்டார்கள். காளைகளை நடத்திக் கொண்டுவந்த பொன்னுத்துரையும் நாகராசாவும் அவைகளை அந்த
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 157 O

Page 89
வண்டில் பக்கம் நின்ற கொண்டல் மரங்களிலே கட்டி விட்டார்கள். அங்கு சவாரிக்கென்று வண்டில் மாடுகளைக் கொண்டு வந்தவர்க ளெல்லாம் காட்டுமுட்களால் வரிசைபிடித்து வேலி போடப்பட்ட அந்த இடத்துக்கு அருகில் நின்று பொன்னுத்துரையைத்தான் அடிமுடி ஏற இறங்கவாகப் பார்த்தார்கள். வண்டில் சக்கரத்தின் நடுவே உள்ள கறுப்புமாதிரி அவர்களுடைய முழிகள் அவரைப் பார்க்கின்ற தருணத்தில் இருந்தன. அவர்கள் எல்லோருக்கும் அவர் அங்கு வந்திருப்பதைக் கண்டு கிடிக்கலக்கமாக இருந்தது. தங்கள் காளைகள் இந்தப் போட்டியில் வென்றால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு அவைகள் விலைப்போகும். ஆனால் அவைகள் தோற்றால் அதையே ஒரு குறைபாடாகப் பிடித்துக்கொண்டு விலையைப் பாதாளத்தில் கொண்டுபோய் வாங்க வருகின்றவர்கள் விழுத்திவிடுவார்களே? - என்ற ஒரு யோசனைதான் எல்லோரினதும் நெஞ்சங்களில் அவரைக்கண்டது முதல் இருந்து கொண்டிருந்தது. இன்னும் சவாரி என்று அதிலிறங்கும்போது வெற்றி பெற்று அதனால் பேரும் எடுக்க வேண்டுமென்பதுதானே எல்லோருக்கும் இருக்கின்ற பெருத்த ஆசை. அதுவும் தான்சேர்ந்து அவர்களிடமிருந்தது. பலசாலி ஒருவனை விழுத்திவிட கூட்டுச் சேர்ந்து கொள்வதுதானே வாழ்க்கையில் அநேகம்பேர் கைக்கொள்ளுகின்ற ஒரு தந்திரம். யாழ்ப்பாணத்திலே இருந்து அங்கு வந்திருந்த ஒருவர் இந்த வண்டில் சவாரியிலேயெல்லாம் பெரியபுள்ளி எந்த இடியன் மாட்டையும் அவர் அடக்கிவிடுவார். இந்த விடயத்திலே உள்ள எல்லா சூட்சுமமும் அறிந்தவர் அவர். அவருக்கும் சாதாரணமாய் நல்ல வயதுதான். ஆள்புளியவிதை மாதிரிச் செங்கறுப்பான நிறத்திலிருந்தார். அவரது அந்த மீசையும் சிவந்த வட்டக் கண்களும் முகத்தை அவருக்குக் கடுகடுப்பாக்கி இருந்தன. என்றாலும் பீங்கான் போன்ற வழுவழுத்த கன்னம் அவருக்கு, அவரது கன்னம்போல கழுத்துச் சரிவில் கூட சுருக்கம் இல்லை. இப்படியாய் அவருக்கு மாறாத இளமை இயங்கிக் கொண்டிருந்தது. அவர் இவ்வளவு நேரமாய் அவ்விடத்தில் நின்ற சிலருக்கு. ‘நான் அந்த நாளில மருதனாமடத்தில சவாரி ஓடி முதல் பிறைஸ் எடுத்த ஆள்! அப்ப அங்க ஐயக்கோன் சட்டத்தரணி இருக்கிற நேரம் ஒரு றோட்ட அங்க தார் கீர் ஒண்டும் போடாம மறிச்சு அதுக்கெண்டு அவர் அலுவல் பாத்து சவாரிக்கெண்டு விட்டிருந்தவர். அதிலயெல்லாம் அப்ப அங்க நாள் குறிச்சு நோட்டீஸ் போட்டுத்தான் சவாரி நடக்கும்! அங்க ஓடின எல்லா மாட்டுச் சவாரியிலையும் நான்தான் வெண்டனானப்பா. நான்தான் வெண்டனான்!” - என்று தன்மார்பிலும் தட்டி வானத்துக்கும் தன் கையை உயர்த்திக்காட்டி ஆண்மையும் கர்வமும் நிரம்பிய குரலிலே மதிப்பாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார் அவர். அதிலே அவருக்குப் பக்கத்தில் நின்ற மற்றைய சவாரிக்காரர்கள் எல்லோரையும் வெங்காயம் போல் கொஞ்சம் கொஞ்சமாகவும் தளுக்காகவும் உரித்துக்கொண்டே வந்து, தன்னை மாத்திரம் தனியாக நிறுத்திக்கொள்ளும் ஒரு கெளரவமான எண்ணத்திலே தான் அவரது கதை பேச்சு சென்று கொண்டிருந்தது. அவர் கையை மேலே தூக்கிய தருணம் கமக்கட்டுக்குக்கீழே முலைக்காம்பைப்போல
jෂ්, ගී, ෆAගvගvජ්හර් O 158 O

ஒரு பாலுண்ணி இருப்பது தெரிந்தது. இவரோடுதான் காளை மாடுகளைக் கொண்டு வந்திருந்தவரெல்லாம் ஐக்கியமாகி விட்டார்கள். அவருக்குப் பக்கத்திலே நின்று அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு செயற்கையான முறையில் அவரைப்பார்த்து அவர்கள் சிரித்துக் கொண்டார்கள். அவர்களைக் கடந்து இந்தப் பக்கமாய் வந்துகொண் டிருக்கும்போது நாகராசா கேட்டார். "ஆர் ஐயா உதில ஒருவர் அவயஞக்க நிண்டு எப்பவுமே தலைப்பாக்கட்டு தான் அவிழ்க்காத மாதிரிக் கதவிடுகிறார்?” "அவற்ற பேர்தான் தருமர் நாகராசா. பெரிய றேஸ்காரன்!” “எங்கயிருந்து உவர் வந்திருக்கார்?” "ஊர் யாழ்ப்பாணம் நாகராசா உவருக்கு!” "ஆள் பெரிய வாய்ச்சவடாலான ஆளோ?” "இல்ல அவர் காரியக்காறன். ஆள் பெரிய தந்திரக்காறன்!” "அப்பிடியெண்டா?” "இவர் ஒரு விதத்தில ஆள் ஒரு பெரிய கெட்டிக்காரனும்தான்! எண்டாலும் உவர் இந்தச் சவாரியளில எடுத்த வெற்றியெல்லாம் ஏதோ ஒரு குறுக்கு வழியால தேடிக்கொண்டதேயொழிய ஏதும் ஒரு நேர்மையான வழியப்பிடிச்சு வந்ததாயில்ல!” “எனக்கு நீங்க சொல்லுறது விவரமா விளங்கேல்ல?” "சொல்றனே எல்லாம். அதுக்கு முதல் கொஞ்சம் நாங்கள் அங்காலயாய் போய் ஒரு பக்கத்தில நிப்பம்!” "சரி இப்ப சொல்லுங்கோ?” "அன் ரனும் அவரும் அங்கின அதிலயேதான் இப் பவும் நிண்டுகொண்டிருக்கினம் போல” - பொன்னுத்துரை அங்கே பார்த்துவிட்டு நாகராசாவிடம் இதைச் சொன்னார். "அதிலயே அவயள் நிக்கட்டும், அதுதான் நல்லம்! அங்க நிண்டு அவயள் அந்த மாடுகளையும் கொஞ்சம் பாத்துக்கொள்ளத்தானே வேணும்?” "ஒமோம் இப்ப நிலமை அப்பிடித்தான்! எத்தின சத்துராதிகள் உதில நிக்கிறாங்கள். எல்லாரிண்ட கண்ணிலயும் எங்கட மாடுகளுக்கு நஞ்சூட்டப் போதுமான குரூரம் தெரியுது அந்த மாடுகள தங்கட கண்ணால அளந்து ப்ப அவங்கள் கங்காணி வேலைபாத்துக் கொண்டிருக்கிறாங்கள்.” "அதுதான் நான் சொன்னனான்! மாடுகளுக்கும் இவங்கள் ஏதாவது கெடுதி செய்து துலைச்சும் போடுவாங்கள்.” "ஆ. நாகராசா உங்களுக்கும் விளங்குது இது இப்ப.” "பின்ன உவயள் ஆக்களின்ரை அந்த முழியளைப் பாக்க அப்பிடித்தானே கிடக்கு! .. ஆ. இனிச் சொல்லுங்களன் ஐயா அவரைப்பற்றியத." வழ்க்கையிண் ரிறக்கஸ் O 159 O

Page 90
"உவர் பாரும் நாகராசா அங்க முந்தி யாழ்ப்பாணத்தில மாட்டு வண்டிலில பாரங்கள் ஏற்றித்தான் உழைச்சவர். அந்த நேரம் லொறியள் அதிகமில்லாத காலத்தில பாரங்கள் ஏத்திக் கொண்டுபோக மாட்டுவண்டிலத்தானே பிடிக்கிறது. அதில இருந்து உவர் வண்டில வைச்சு உழைச்சு, பேந்து ஆள் என்னயும் மாதிரி மாடுகள வாங்கி வித்தெடுக்கிற அளவுக்கும் யாவாரத்திலயா ஆள் இறங்கீட்டார். அப்புடியே இருந்து கொஞ்சக் காலஞ்செண்டு பேந்து உவர் வண்டில் சவாரி ஒடுற அளவுக்கும் பிறகு மிதந்திட்டார். எது எப்பிடியாயிருந்தாலும் ஆள் உவர் கெட்டிக்காரரெண்டு நானும்தான் சொல்லுவன். உவர் சவாரி நேரம் வண்டில்கள் ஒடேக்க மற்ற வண்டில்களுக்குக் கிட்ட வெட்டிக்கொண்டுபோய் ஒடுற மாடுகளுக்கு றோதயால அடிச்சு குழம்ப உடச்சுப் போடுவார். அந்தமாடுகள் பேந்து எங்க ஒடுறது? அப்புடியெல்லாம் வலு சுழியன் ஆள் கண்டீரோ."
"எண்டாலும் இப்புடிப்பட்ட ஒரு வஞ்சகம் பிடிச்ச ஆக்களிட்டயிருந்து கவனமாத் தப்பிக்கத்தான் வேணும்?” O "அதுஞ் சரிதான்! எண்டாலுமெண்டாலும் நீர் ஆகக் கொஞ்சம் உவயளக் கண்டு கூடவாப் பயப்புடுறீர் போல?” 'இல்லேல்ல. அப்புடியில்ல! நான் அவர நெச்சு மாத்திரம் பயப்படேல்ல. என்ர யோசனையெல்லாம் அவர் உந்தத் தருமர் எணடவர மாத்திரம் வைச்சுக் கொண்டில்ல. அங்க நீங்களும் ஒருக்காப் பாருங்களன்! ஹிரண்யன், துரியோதனன், சகுனி எண்டமாதிரி அவரோட சேந்து அதில எத்தினபேர் நிக்கினமெண்டு கண்டுட்டியள்தானே நீங்களும்? அதாலதான உவயளப்பாத்து என்ர யோசன ஒரு மாதிரிப் போச்சுது! அவயளப் பாருங்களன் ஆக்கள! இப்ப எல்லாருமாத்தானே அதில அவரோட சேந்து கூட்டுச்சேந்து நிக்கினம்! உங்களோட அதில நிக்கிறவயள் ஆரும் ஒராள் வந்து ஏதும் உங்களோட ஒரு கத கதச்சவயளே? அட இத்தறுதிக்கும் இல்லத்தானேயப்பா? அப்புடி என்ன அவயள் எல்லாருக்கும் உங்களில ஒரு வெறுப்பு. நான் கேக்கிறன் உங்கள..? "அதென்ன இதுதான் தம்பி! நான் அடுத்தடுத்து இந்த றேககளில வெண்டுவாறனெண்டு ஒரு எரிச்சல் வேறென்னத்த நான் உமக்குச் சொல்லுறது?” "அதான் அதான்! அவயள் இருக்கட்டும் எல்லாரும் எரிஞ்சுகொண்டு! இந்தமுறையும் உங்களுக்குத்தானே வெற்றி வரப்போகுது. அப்ப என்ன உவயள் செய்யப் போகினமாம்?” "எல்லாத்துக்கும் அதியம் நாங்கள் பெரிசா மனசப்போட்டடிக்கக்கூடாது நாகராசா இனிப் பொறுமையா அவதானமா எல்லா அலுவலையும் நாங்க பாப்பம்! எதுவும் அந்தந்தத் தருணத்தில கவனமா இருந்து கெட்டித்தனமா நாங்க காரியம் பண்ணவேணும்!. இங்க பாரும் முக்கியமான ஒரு வேலய விட்டிட்டு தேவயில்லாத கத கதச்சுக் கொண்டு நிக்கிறம். எங்கட சவாரிக்கெண்டு வந்த அந்த ஏவலாளன இன்னும் இங்கினையா வரக்காணேல்ல! இங்க நாங்க நிக்கிற இடத்துக்கு ඒ.ඡී. ථGගvගvණිගඨ Ο 160 Ο

நேரத்துக்கு வாறனெண்டார் அவர்.” "அதானே. இப்ப ஆள் எங்க இங்கின காணேல்ல? அந்த பரதேசி எங்க போயிற்றுது? அய்யா என்னையா இங்க வாரானோ அவன்? "கடத்தெருவால போய்ச் சுத்திக்கொண்டு அதால போய் கண்டி றோட்டுப் பக்கமுள்ள குறுக்கு றோட்டாலயா இங்க வந்து சேருறன் எண்டுதான் ஆள் என்னட்டச் சொன்னவர். அவரக் கூடநாட எங்களோட கூட்டிக் கொண்டர ஏலாதெல்லே நாகராசா? எப்புடியும் மாடுகளுக்கு அவரக் கண்ணில காட்டினா பயமில்லாமப் போயிடுமெண்டு நான் தான் தனியவா நீர் வாருமெண்டு வெளியால ஆள அனுப்பினன். அவர் வெளியால போகேக்க ரவுணுக்கொருக்காலும்தான் போவேணுமெண்டு சொன்னார். அவர் பீடி சுருட்டுப் பத்துறவர் போல. அதால நானும் சரியெண்டு அவருக்குச் சொல்லிப்போட்டு விட்டுட்டன்.” “இன்னும் வேற ஏதும் அவர் பாவிக்கிறவரோ ஐயா? அப்புடி ஏதும் இருந்து அவ்விடம் வழிய ஆள் போய் மினக்கடுதோ? அப்பிடி ஏதும் பழக்கமிருந்தா இனி அஞ்ஞனம் பாத் தெல்லோ நாங்க அவர் ஆளைத்தேடிக் கண்டுபிடிக்கவேணும்?” “ஆங்ங்ா. அப்புடியாயில்ல. எப்புடியும் ஆள் இதில இத்தறுதிக்கு வந்து சேந்திடும் எண்டுதான் நான் நினைக்கிறன்!” “என்ன நினைப்பு உங்களுக்கு ஐயா? அங்க முதல் ஒட்ட றேசுக்கு வண்டில்கள் விடப்போகினம் போலக்கிடக்கு! அங்க பீக்கரிலயும் அதுகளப்பற்றிச் சொல்லப்படுது. வேற ஆக்கள் மாடுகள வண்டிலில பூட்டி இப்ப றேஸ் ஓடக் கொண்டாறாங்கள். அதில இப்ப உந்த மூண்டு சோடி மாடுகளும் ஓடி முடிய அடுத்த செற்றில நாங்களும் தான் அங்கபோய் நிக்க வேணும்! அப்பிடித்தான் எங்கட பேர் வாசிபடுது பீக்கறில. நீங்கள் கேக்கேல்லயே? - இப்புடியான நேரத்தில அவன் கமுக்கெண்டிருந்து கழுத்தறுத்துப் போட்டான்.” பூளலில அரைச்ச மிளகாயைத் தடவி விட்டமாதிரி நாகராசாவுக்குப் பத்திக் கொண்டுவந்தது. அவர் மிகவும் கோபவேசமாய் நின்றார். கொதிப்பு ஏறிய நல்லெண்ணெய் போல பொங்கி எழுந்தார். பொன்னுத்துரையருக்கும் அந்த ஆளைக் காணாதவிடத்து மிகவும் பதற்றமாயிருந்தது. அவர் தனக்குள் ஆழ்ந்த யோசனையோடு நின்று கொண்டார். என்றாலும் அவரது கண்கள் திரையால் மறைக்கப்பட்டதைப்போல ஒன்றுமே பேசாமல் நாகராசாவைப் பார்த்தன. முதல் போட்டி ஆரம்பமாகப் போகிறது என்று ஒலிபெருக்கியில் ஒருவன் சொல்வதைக் கேட்டதோடு? அதிலே நின்ற சனங்களெல்லாம் முன் வரிசையில் நின்று பார்க்க ஆளையாள் இடித்து நெருக்கிக் கொண்டிருந்தார்கள். சரியாக அதிலே கொடி அடித்த சமிக்ஞையோடு ஆரம்பக்கோட்டில் நின்றுகொண்டிருந்த காளைகள் ஒன்றையொன்று முந்திப் போகிற அளவுக்கு ஒடிப்போய்க் கொண்டிருந்தன. வண்டில் போன பக்கமாக பிறகு புழுதிப்படலங்கள் மேலே எழுந்தன. இதைப் பார்ப்பதா அவனைத் தேடுவதா என்ற இரண்டுங்கெட்டான ஒரு
வரழ்க்கையின் ரிறங்கஸ் O 161 O

Page 91
நிலைபரத்திலிருந்து கொண்டு நாகராசாவும் பொன்னுத்துரையும் நின்று குழம்பிக்கொண்டிருக்க: அந்தச் சனத்துக்குள்ளாலே இடித்துப் பிடித்துக்கொண்டு ஒருவாறு அவர்கள் நின்ற இடத்துக்கு அந்த அவர்களுடைய ஏவலாளன் வந்து சேர்ந்தான்.
"இங்க வந்திட்டார் நாகராசா எங்கட ஆள். கையில வாழப்பழத்தோட." - என்று அவரைக் கண்டவுடன், நாகராசாவுக்கு அவரைக்காட்டினார் பொன்னுத்துரை. அவரை உடனே ஒரு மரத்தைப் பார்ப்பது போல வெறித்துப்பார்த்தார் நாகராசா. திடீரென அவரை மீறிய கோபாவேசம் அடிவயிற்றிலிருந்து அவருக்கு எழுந்தது. அவருக்குக் கண்கள் சிவத்தன. அந்தக் கண்கள் இன்னும் சற்றுச் சிவந்தால் சுற்றமெங்கும் நெருப்புப் பற்றிக் கொள்ளுமெனத் தோன்றும் உக்கிர பார்வை. பொறிபறக்கும் கோபத்தி அவருக்கு கைகள் முஸ்டித்தன. அவர் உடலே அவர் ஆத்திரத்தில் கிடு கிடென ஆடிற்று. அவரை இப்படிப் பார்த்தவுடனே பொன்னுத்துரையருக்கு பெருத்த கஷடமாகி விட்டது. அவரை எப்படியாவது சாந்தப்படுத்திவிட வேண்டுமென்று உடனே அவர் நினைத்தார். "இங்க நாகராசா என்னயொருக்காப் பாரும்” - என்று பொன்னுத்துரை சொல்ல நாகராசா வந்தவனிடம் தலையை உயர்த்தி வைத்த தன் முறைத்த பனைப் பார்வையைத் திருப்பி இங்காலே நின்ற பொன்னுத்துரையைப் பார்த்தார். ‘நாகராசா இப்ப ஏதும் உந்த ஆளுக்குச் சொல்லிக் குழப்ப வேணாம்! எல்லாத்தையும் இங்க நடக்கிற காரியங்கள் முடிஞ்சாப் பிறகு ஆறுதலா அவரோட கதைப்பம், நாங்கள் மாடுகளுக்கு, சவாரி அதுகள் ஒருதரம் ஓடினதோட களைப்பு எடுபட, வாழப்பழம் தின்னக் குடுக்கிறனாங்களெல்லே. அத நாங்க வீட்டயிருந்து வரேக்க கொண்டராம மறந்து வந்திட்டம். ஆனா ஆள் இதெல்லாம் எப்புடியோ தெரிஞ்சு, உங்கபாரும் அதுகளக் கையில இப்ப கொண்டந்திருக்கு. எல்லாம் எங்களுக்கு நன்மைக்குத்தான் எண்டு இருப்பம். இனி அடுத்ததா நாங்கள் தான் நாகராசா உதில வண்டிலக் கொண்டந்து விடவேணும்.!" - என்று பொன்னுத்துரை சொல்ல நாகராசா அதைத் கேட்டு தன்னை அடக்க முடியாமல் இருந்தும் ஒருவாறு பிறகு தன்னை அடக்கிக் கொண்டு மெளனமாக நின்றார். வண்டில்கள் ஓடி முடித்த இடத்திலிருந்து கேட்ட சனங்களின் கூச்சல் காதைப் பிளந்தது. "ஆற்ற ஆக்களிண்ட மாடுகள் முதலாம் இடத்துக்கு வந்தது?" என்று மற்றயவரைப் பார்த்துக் கேள்வி கேட்டபடி அந்த இடத்திலே பலர் திரிந்தார்கள். மாடுகள் ஓடி முடித்து இரண்டு நிமிடங்கள் கழிந்ததன் பிறகேதான், முதலிடம் பிடித்து வெற்றியீட்டிய அந்த மாட்டு வண்டில் சொந்தக்காரரின் பெயர் விலாசத்தை போட்டி நடத்தியவர்கள் ஒலி பெருக்கியில் சொல்ல வெளிக்கிட்டார்கள். அதை அவர்கள் இரண்டு தடவைகள் ஒலிபெருக்கியில் சொன்னதன் பிற்பாடு, "இந்த றேசில பண்டாரிக்குளம் மணியற்ற மாடு ஓடி முதலாவதா வந்திட்டுதாம்!” - என்று அங்கு நின்றவர்களெல்லாம் திரும்பத்திரும்ப அந்தக் கதையையே வைத்து கொஞ்சநேரமாய்த் தங்களுக்குள்ளே அதைக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாவது சவாரிப்போட்டிக்குத்
ඒ. ග්‍රී. ලාංහvගvනිව්ෆ් O 162 O

தயாராக இரண்டு மாட்டு வண்டில்கள் கோடுபோட்ட இடத்துக்கு வந்துவிட்டன. இனி அவ்விடத்தில் அந்தப் போட்டியில் பங்குபற்ற வந்து நிற்க வேண்டியது பொன்னுத்துரையின் வண்டில்தான். ஆளும் பேருமாக அவர்களெல்லாம் சேர்ந்து மாடுகளை வண்டிலில் இணைத்து அவ்விடத்தில் கொண்டுவந்துவிட, அந்தக் காளைகள் இரண்டும் மான் குட்டிகள் மாதிரி தாங்கள் ஓடப்போகின்ற கெட்டித்தனத்தை பார்வையாளர்களுக்குக் காட்டுகின்ற நிலையில் நின்றன. இப் போது அங்கு நின்ற பார்வையாளர்களின் கண்நோக்கு அத்தனையும் பொன்னுத்துரையரின் மேலேதான் குவிந்திருந்தன. அவரின் வயதைக் கணித்தும் இப்பொழுதும், அவருக்கிருக்கின்ற அந்தக் கம்பீரமான பாங்கைப் பார்த்தும், வியந்து கொண்டிருந்தன அவர்களின் கண் பார்வைகள் அவர்முகம் மலர்ந்தவாறு ஆசனத்தட்டில் இருந்தபடி பிடி கயிற்றை இழுத்துப் பிடித்தபடி இருந்தார். அந்தக் கூட்டத்தில் இருந்து கனல்பறந்த அளவில் இரு கழுகுக் கண்களும் அவரைக் குறிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தன. இடுப்பில் ரெண்டு கைகளையும் வைத்துக்கொண்டு, கண்களைச் சுரித்துக்கொண்டு தருமர் பார்த்த அந்தக் கவனிக்கும் கண்பார்வை, பொன்னுத்துரையை இந்தப் போட்டியில் விழுத்த சதிவலையைப் பின்னிக் கொண்டிருப்பது போல் பிரதிபலித்தது. இன்னும் ஒரு இடத்தில் நின்று அன்னப்பட்டுப் போன்ற கண்களால் பார்த்துக்கொண்டிருந்த ஒருத்தியின் கண்பார்வையும் பொன்னுத்துரையரின் வண்டில் நின்ற பக்கமாகத்தான் இருந்து கொண்டிருந்தது. அவள் வேறுயாருமல்ல நிலாதான்! அவள் அதிலே நின்று கொண்டிருந்த அந்த வண்டில் காளைகளில் அவ்வளவாக கவனம் வைக்கவில்லை. ஆனாலும் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த அந்தக் காளை வயதுக் காரனையே அவள் தனது விம்மிய மார்பை முன்னுக்குத் தள்ளியவாறு, கண்ணுக்குள் கொண்டுவருகிற காந்தம் போன்ற ஈர்ப்பில் கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அன்ரன் அந்த வண்டிலின் பக்கம் நின்று கடைக்கிட்டி பிடித்துக்கொண்டிருக்கும் அழகு அந்த அளவுக்கு அவளது மனதை மயக்கி விட்டிருந்தது. அவளது கண்கள் மின்னூட்டம் பெற்றவைபோல் மாறாப் பார்வையுடன் அவனது சட்டையில்லா மேனியை தழுவித்துளைத்து அளைந்துகொண்டிருந்தன. அவனுடைய மார்பின் நடுநீரோடையில் மோஹிக்கும் அவளுடைய பார்வைபட்டு அப்படியே வழுக்கிக் கொண்டு சென்றது. அங்கு நின்ற சனங்களின் ஆரவாரித்தலுடன் இரண்டாவது போட்டியில் பங்குபற்றின அந்த மூன்று வண்டில் மாடுகளும் அந்தத் தரைவையில் ஓடி முடித்தன. பலபேர் அந்தப் போட்டி ஆரம்பமாகும் முன்பே அதில் பொன்னுத்துரையர்தான் கட்டாயம் முதல் இடத்துக்கு வருவார் என்று தீர்க்க தரிசனம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்பிடிச் சொன்னவர்களது வாய்ச்சொல்லு பிழைபோகாத அளவுக்கு, பொன்னுத்துரை அந்தப் போட்டியில் முதலாவதாகத்தான் வந்து இறுதிப்போட்டியில் பங்குபற்றத் தெரிவாகினார். இந்த இரு போட்டிகளும் நடந்து முடிந்ததன் பின்பு அடுத்ததாக பங்குபற்றப்போகும் அந்த மூன்று வரழ்க்கையின் ரிறக்கஸ் O 163 O

Page 92
வண்டில்களையும் காளைகளையம் அங்கு நின்றவர்களெல்லாம் வேளைக்கே தெரிந்து கொண்டுவிட்டார்கள். தருமர் அந்தக் கடைசிச் சவாரியிலே பங்குபற்ற வண்டில் மாடுகளைக் கொண்டுவந்து நிறுத்தி வைத்திருந்தபோது, பொன்னுத்துரையும் அவரை அதிலே, சனங்கள் நின்று கொண்டிருந்த ஒரு பக்கம் நின்று அரிமாநோக்காக தலையை நிமிர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தார். தருமர் ஒரு அலட்சியப் போக்கிலே மாட்டின் பிடிகயிற்றைக் கையால் இழுத்து வைத்துக்கொண்டு, வண்டிலின் ஆசனத்தட்டில் இருந்தபடி தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய வீச்சான காளைகள் மூஞ்சிமுழுக்க நிமிர்ந்து பார்த்தபடி, குபிரென்று பாயத்தயாராய் ஒடும் மூச்சுடன் துடிப்பாக அதிலே நின்று கொண்டிருந்தன. அந்த மாடுகள் கொடி அடிப்போடு அந்த இடத்திலே இருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு போகும் வேகத்தில் வெளிக்கிட்டன. அவைகள் ஓடிக்கொண்டிருந்த வேகத்தைவிடவும், இன்னும் அதிக வேகத்தைக் கூட்டி அவைகளை ஓட விரட்ட தருமர் அந்த வண்டிலின் துலாக் கம்பிலே குனிந்து, பின்பு அதிலே தன் உடலை நீட்டிப் படுத்துக்கொண்டு இருந்து அந்த மாடுகளின் காதுகளைத் தன் பற்களால் இறுக்கிக் கடித்தார். அந்த வேதனையை அனுபவித்துக்கொண்டு அந்த மாடுகள் விரைவாகப் பாய்ந்தோடின. அந்த விரைவான வண்டிலோட்டத்துக் குள்ளே தனது தசைத்தடல் புடல்களைக் காட்டிக்கொண்டு செய்த வீரம் மிக்க அந்த அவரது செய்யை பெரியதொரு சாகசம் போல் பார்வையாளர்களுக்கெல்லாம் பார்க்கத் தெரிந்தது. அந்த அதிசயத்தைப் பார்த்து கூச்சல் போடாது எல்லோரும் வாயடைத்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தமாடுகள் ஓடிப்போகிறதா இல்லை பாய்ந்து தான் செல்கின்றதா என்று அதை கணிப்பிட்டுக்கொள்ள முடியாமல் அவர்களது பார்வைகள் தடுமாறிக் கொண்டிருந்தன. அந்தச் சவாரியில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி இலக்கை ஈட்டிக் கொண்டது தருமரின் சவாரி வண்டில்தான்! அவர் அந்த வண்டிலைத்திருப்பி மீண்டும் வந்த பாதையாலேயே அந்த வண்டிலை ஒட்டிக்கொண்டு அந்த ஆரம்பக் கோடு போட்டிருந்த இடத்தைநோக்கி வந்து கொண்டிருக்கும் போது, இனிவரும் வெற்றிக்கான கடைசிப் போட்டியைப் பற்றியும் தன் மனதிற்குள் சிந்தித்தவாறு வந்தார். முழு வெற்றிக்கான அந்தக் கடைசிப் போட்டி ரொம்பச் சாதாரணமானதல்ல. அது கடுமையானது, கஷ்டங்களும் நிறைந்தது என்கின்ற நினைப்பு அவரது மனத்தைப்போட்டு அப்போது குழப்பியடித்தது. சவாரி வண்டில் போட்டி ஆரம்பமாகும் இடத்திலிருந்து புறப்படும் ஓரிரு வினாடிகளுக்குள், மற்ற வண்டில்களைச் சுழித்துக் கொண்டு முன்னால் போனால்தான் வெற்றி எனக்குக் கிடைக்கும்! அதிலே குறிப்பாக பொன்னுத்துரையின் வண்டிலை அது ஓட ஆரம்பித்த நொடிப்பொழுதுக்குள்ளே வெட்டி மறித்து அவரை எனக்கு முந்திப்போகாத அளவுக்குச் செய்யவேண்டும். இதிலே அவரது மாடுகளை மாத்திரமல்ல! அந்த வண்டிலை மறிப்பதோடு அதோடு வருகின்ற மற்றைய வண்டிலுக்கும் வழிவிட்டுவிடாது அதையும் மறிக்கவேணும். அதிலும்
கவனம் தேவை! இப்படிப்பல திட்டங்களை அவர் தன் மனதுக்குள்
ඒ. ඊ. ථAගvගvහීහරේ O 164 O

நினைத்து தன்னைத் தயார் படுத்தி வைத்துக் கொண்டார். இந்நேரம் தன் வண்டில் காளைகளிலும் அவரது கவனம் திரும்பியது. மூன்றாவதாய் நடந்த போட்டியில் இந்த மாடுகள் ஓடி முடித்துவிட்டு இனிவரும் கடைசிப் பரிசுப் போட்டியிலும் பங்குபற்ற வேண்டிய நிலையில் இவைகள் இருக்கின்றன. இந்த மாடுகள் தங்கள் களைப்பை ஆற்றிக் கொள்ளவும் விடுகின்ற அளவுக்கு, இங்கே போட்டியை நடத்துகின்றவர்கள் நேரத்தையும் பெரிதாக ஒதுக்கமாட்டார்கள். சவாரி ஓடிக்களைத்த மாடுகளுக்கு வாழைப்பழம் தின்னக் கொடுத்தால்தான் அது பிறகு களைப்பு நீங்கி சாதாரண நிலைக்கு வரும். அடுத்த ஓட்டத்திற்கு அதனால் அது பிறகு கொஞ்சம் களைப்பு நீங்கி உஷாராகிவிடும். இருந்தாலும் மாடுகளுக்கு வேகமூட்டிவிட வாழைப் பழத்தைவிட சாராயம் தான் சொல்லப்பட்ட மருந்து அதுகளைப்பையும் மாற்றும் - நன்றாய் ஓடுகின்ற அளவுக்கு வீரியத்தையும் மாடுகளுக்கு அது விரைவாக ஏற்றிவிடும். என்றாலும் போட்டியில் உள்ள விதிமுறைகளில் ஒன்று இந்தச் சாராயத்தை மாடுகளுக்குப் பருக்கக்கூடாது என்பதுதானே? அதோடு இந்தக் கஞ்சா உருண்டை பிடித்து அதை மாட்டின்ரை நாக்கில அதக்கி வைத்துவிடுறதும் கூடாது எண்டு சொல்லப்பட்டிருக்கு.
“பாப்போம்.! எல்லாம் ஆரும் காணாத அளவில இந்தக மாடுகள அங்க எங்கயாவது மரங்கள் நிக்கிற இடம் வழிய மறைவாக் கொண்டு போய்க் கட்டீட்டு. இந்தக் காரியத்தை அதில வச்சுச் சரியா நடத்தி முடிப்பம். களவு செய்யிறத்துக்குப் பொருத்தமான காலத்த கள்ளங்கள் தெரிஞ்செடுத்துக் கொண்டுவிட்டா அவங்கட்ட இருந்து அந்தத் தேவாதி தேவன் கூடத் தப்பிக்கேலாது எண்டுதானே சிலப்பதிகாரம் கூடச் சொல்லுது. களவு செய்யிற ஆக்களிண்ட எட்டு வகைத் தந்திரங்களில இந்த இடம், காலம், மருந்து எண்ட மூண்டை மாத்திரம் நான் துணையாகக் கொண்டு இந்தக் காரியத்த நான் திறமையாச் செய்து முடிச்சுக் காட்டுறன்” - என்று அப்பொழுது அவர் நினைத்தார். அவருள்ளத்தில் புழுத்த புழு இப்போது நெளிந்து கொண்டிருந்தது. அந்த ஆபத்தான இழைப் புழுக்களிலிருந்து இன்னும் பல புழுக்கள் அவைகளிலிருந்து துளைத்துக்கொண்டு வெளியே வெளிக்கிட்ட வண்ணமாயிருந்தன. தான் நினைத்ததை அங்கே செயல்படுத்திக்கொள்ள அந்த வண்டில் மாடுகளை ஒட்டிக்கொண்டுபோன அவர், சனப்புழக்கம் இல்லாத ஒரு இடத்தைத் தேடினார். அடர்ந்த மரங்கள் நின்ற ஒரு பற்றை மறைவில் தோதான இடம் கிடைத்துவிட்டது அவருக்கு. அது அவரின் இந்தக் காரியத்தை நடத்தி முடிப்பதற்கு எல்லாவிதத்திலும் ஏற்ற இடம். வெற்றி தோல்வியை நிச்சயிக்கும் கடைசிச் சவாரிப் போட்டியை ஆவலோடு அங்கு நின்ற சனங்களெல்லாம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். இங்கே இந்தக் காலம் அவருக்கு துணைசெய்கிறது என்றதல்லக்கதை - அந்தக் காலத்தை அவர் தன் அளவில் சாதகமாக்கிக் கொண்டதாக அவர் தனக்குத்தானே நினைத்துக்கொண்டார். இனித் தேவையானது அவருக்கு மது என்னும் மருந்து அது ஏற்கனவே அவரது கையாட்களால் அவ்விடத்துக்குக்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 165 O

Page 93
கொண்டுவரப்பட்டதுதானே. அப்பப்பா. அவருக்கென்று எத்தனை கையாட்கள். அவர் அதிலே ம். மென்று மாத்திரம் சொல்லி ஒரு மூச்சு விட்டால் போதும் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டு உடனே அவர் சொல்வதைச் செய்துமுடிக்கவென்று ஒரு பட்டாளமே அவருடன் இங்கு நிற்கிறதே? அவர் மனத்தில் திட்டம் போட்ட காரியம் பிறகு அங்கே அவ்விடத்தில் நடக்கத்தொடங்கிவிட்டது. ஒரு பாவத்தைச் செய்கிற குற்ற உணர்வில் மனசுக்குள் இது ஒரு முள் சுமையாக இருந்தாலும் அதைப்பற்றிக்கவலைப்படாது அவர்கள் அந்தக் காரியத்தைச் செய்ய வெளிக்கிட்டார்கள். அப்படியே கால்போத்தல் கணக்காக அந்த இரண்டு மாடுகளுக்கும் சாராயத்தை அவர்கள் அவைகளின் வாயைத் திறந்து பிடித்து உள்ளே போத்தலை விட்டு ஊற்றிப் பருக்கிவிட்டார்கள்.
மணம், குணம், சுவை அறிந்து ஒரு உணவை சாப்பிடக்கூடிய தகுதியைப் பெற்றவன் இவ்வுலக ஜீவராசிகளிலே இந்த மனிதன் மட்டும்தானே? நாவில் எல்லாச் சுவையும் அறியும் தகுதி இவனுக்கென்று மட்டும்தானே இருக்கிறது? என்றாலும் அவன் தன் மூக்குப் பக்கம் எடுக்கமுடியாத சுவைகெட்ட இந்த மதுவை விரும்பிக் குடிக்கிறான். தானே வலிந்து அதைக் கஷ்டப்பட்டு தொண்டைக்குள்ளே விட்டு விழுங்கித் தொலைக்கிறான். இந்த மனிதனுடைய நிலைவேறு - அவன் அதைக் குடிக்கவென்று விரும்புகிறவன்தானே? அவன் குடித்துக்கொள்ளட்டும்! ஆனால் புல்லுத்தின்னுகின்ற இந்த மிருகங்கள் பாவம், அவர்களுக்கு அவைகள் என்ன கெடுதலைச் செய்தன? அவர்கள் பருக்கிவிட்ட சாராயத்தை அவைகள் திமிறித் திக்காடி நின்று குடித்துவிட்டு, ஒன்றுமே தங்களுக்கு விளங்கிடாத அளவிலே நின்று கொண்டு அவைகள் தங்கள் கண்களை மூடி மூடித் திறந்துகொண்டன. இந்த வாய் பேசாத மிருகங்களுக்கு இப்படியான செய்கை எவ்வளவு கொடுமை! இவற்றையெல்லாம் மிருக ஜீவன்களில் இரக்கமுள்ளவர்கள் யாராவது நின்று பார்த்திருந்தால் தங்கள் மனங்குமுறி வேதனைப்பட்டிருப்பார்கள். ஆனாலும் யாரும் ஒரு மனுத்தறிவான நல்ல இதயம் கொண்ட மனிதன் அவ்விடத்தில் அப்போது அதைப்பார்க்கவில்லை. அந்தக் காளைகளுக்கு மதுவை ஊட்டியவர்கள் தாங்களும் போதையில் இருந்ததால், அந்தக் காளைகளைப் பார்த்துச் சிரித்தார்கள். தங்களுடைய இந்தப் பலாத்காரம் வாய் பேசாத அந்த மிருகங்களில் பலித்ததில் கண்டெழுந்த ஏளனச் சிரிப்பு அது இதெல்லாம் நடந்து முடிந்ததற்குப் பிறகு தருமரின் மாடுகள் உஷாராகிவிட்டன. ஒடிக்களைத்து நுரைகக்கிக் கொண்டிருந்த மாடுகள் பழையபடி தெளிவான நிலைக்கு வந்துவிட்டதாகத்தான், தருமர் தன் மாடுகள் இரண்டையும் கண்டுவிட்டு இப்போது நினைத்தார். அங்கே போட்டி ஆரம்பிக்கும் அந்த இடத்திற்கு இரண்டு வண்டில்களும் வந்து நின்றதாகிவிட்டன. அதிலே ஒன்று பொன்னுத்துரையரின் மாட்டு வண்டில், இரண்டாவதாக அங்கு நின்றது பண்டாரிகுளம் மணியருடையது. மூன்றாவதாக அதிலே வந்து நிற்க வேண்டிய தருமர் என்பவரின் மாட்டு வண்டில் எங்கே? - என்று அதிலே நின்று கொண்டிருந்த
ඒ. ග්‍රී. ෆAvගvණිගර් O 66 O

பார்வையாளர்களெல்லாம் தங்கள் விழிகளை நாலாதிக்கிலும் சுழற்றிப் பார்த்தவாறு இருக்கிறார்கள். தருமர் ஆற அமர அதிலே ஒரு இடத்தில் மறைவாக நின்று விட்டுத்தான் தன் வண்டில் மாடுகளைக் கொண்டுவந்து அவ்விடத்தில் விட்டார். மூன்று வண்டில்களிலும் உள்ள ஆசனத்தட்டுகளில் அமர்ந்திருந்த அவர்கள் ஒருவரையொருவர் அர்த்த புஷ்டியான பார்வையோடு தங்கள் இருக்கைகளில் இருந்தபடி பார்த்துக் கொண்டார்கள். ஒட்ட நேரத்தில் எவ்வாறு அந்த இரு வண்டிலையும் ஓரங்கட்டிவைத்து தன் மாடுகளை முன்னால் செல்லக் கலைப்பது என்பதுதான் தருமரின் கண்பார்வையில் பிரதிபலித்தது. பொன்னுத் துரையின் எண்ணம் அதற்கு நேர்மாறு இன்னும் வித்தியாசமானது. ஓட்டம் எடுத்த தருணத்துக்குள்ளேயே மாடுகளை எட்டவிட்டுக் கலைத்து மற்ற வண்டில்களுக்கு முன்னால் தன் மாட்டு வண்டிலை கொண்டுபோய் விட வேண்டுமென்பது அவரது ஆழ்மனத்திலுள்ள திட்டம் , மணியருக்கென்று இருக்கிற அவரது கொள்கை அது வேறொரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருந்தது. அந்த இருவரிடமும் இருந்து ஓட்ட நேரத்தில் தான் தப்பித்து இடைஞ்சலின்றி அந்தத் தரைவையில் வண்டில் ஒட்டினால் எனக்கு அது காணும்! முதல் பரிசு தவறினாலும் இரண்டாவது பரிசு கிடைத்தாலே திருப்தி என்றதாக அந்த இருவரினது எண்ணங்களிலுமிருந்து தான் கொஞ்சம் கீழிறங்கி அவர் நின்றுகொண்டிருந்தார். என்றாலும் இந்த நேரம் இவர்கள் மூவரிடத்தும், வேகமுள்ள விறுவிறுப்பான பாவனைகள் இருந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டில்களின் இருபக்கங்களிலும் கடைக்கிட்டி பிடித்து விடப்போகின்றவர்கள் அப்போது தயாராக நின்றுகொண்டார்கள். வண்டில் ஓட ஆரம்பிக்கும் போது கொஞ்சதூரம் கடைக்கிட்டி பிடித்தவாறு மாடுகளோடு சேர்ந்து பக்கத்தில் ஓடிவிட்டு நின்றுவிடுவது ஒன்றுதான் அந்தச்சவாரியிலே அவர்களது பங்கு. ஆனால் வண்டிலுடன் கூடவே இருந்துபோகும் ஏவலாளன் வேலை என்பது சாதாரணமல்ல. அவன் மாடுகள் ஒடுகின்ற நேரத்தில், அவைகள் தொய்கிற நேரம் அடித்து ஏவிவிட வேண்டும். இதற்கெல்லாம் அங்கு ஏற்றாப்போல் அதற்குரிய ஆட்கள் அவ்விடத்தில் அந்தந்த வண்டிலுக்குரியவராய்த் தயாராக நின்று கொண்டார்கள்.
கொடி அடித்த சமிக்ஞையோடு இந்த மகத்தான போட்டி ஆரம்பமானது. அந்த மூன்று மாட்டு வண்டில்களும் எடுத்த எடுப்பிலேயே வேகம் கூட்டி வெளிக்கிட்டுவிட்டன. கடைக்கண் பார்வையால் அடித்து ஏவுகின்ற மனிதனைக் கண்டு பயந்த மாடுகள், தலைதெறிக்க ஓட ஆரம்பித்தன. முன் எடுப்பிலேயே மூச்சாக ஒடும் அளவுக்கு மாடுகளைக் கலைத்தார் பொன்னுத்துரை. கடைக்கிட்டி பிடித்தவர்களெல்லாம் விட்டுவிலக, பெரும் புயல் காற்று வேகத்தில் மாடுகள் ஓடத்தொடங்கின. “ஹேயா. ஹா. ஹா.’ என்ற பெருஞ்சத்தத்துடன் தன் வண்டில் மாடுகளைக் கலைத்தார் தருமர். ஒவ்வொரு வண்டில்களிலும் இருந்த ஏவலாளர்கள் சீறிக்கொண்டே வலதுசாரி இடதுசாரியாகப் பிரம்பை உபயோகித்தார்கள். வண்டில்கள்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 67 O

Page 94
ஒடுகின்ற வேகத்தில் புழுதிப்படலம் எழுந்து வானை நிறைத்துக் கொண்டிருந்தது. மாட்டு வண்டில்க்காரர்கள் கிளப்பிவிட்டுப்போன புழுதி சிலருக்கு மூச்சைத் திணறடித்தன. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஒடுவது நல்லமாட்டின் இலக்கணம் இல்லையென, தலைநிமிர்ந்து வாயில் வெண்ணுரைதள்ள அந்த மாடுகளெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன. கொடி கீழே அடிபடும் கணத்துக்குள்ளே தன் மாடுகளை வெளிக்கிடவைத்து விரைவாகக் கலைத்ததால் பொன்னுத்துரையின் மாடுகள் அந்த இரண்டு வண்டில்களையும் முந்தி முன்னுக்குப் போய்க் கொண்டிருந்தன. முன்னாலே போன அந்த மாடுகளுக்கு ஓட ஓட மூச்சுக் கூட பின்னாலே ஓடிவந்த மாடுகள் அவைகளை முந்திப்போக மிகவும் கஷ்டப்பட்டன. என்றாலும் மாடுகளை ஏவி விரட்டும் திறமையில் தருமர் கைதேர்ந்தவராக இருந்ததால், தன் மாடுகளை அந்தக் கணத்தில் தன் யுக்திகள் பலதையும் பிரயோகித்து பொன்னுத்துரையின் மாடுகளுக்கு அருகே மிகவும் நெருங்க நெருங்க அவர் கொண்டுவந்துவிட்டார். தான் ஒட்டும் வண்டிலின் ஒரு பக்கத்து சக்கரத்தால் பொன்னுத்துரையின் வண்டில் மாட்டுக்கு கால் குளம்பை அடித்து ரணப்படுத்துவதற்காக தன் வண்டிலை அவரது வண்டில் பக்கமாக அவர் நெருக்கினார். அதைக்கண்டு சமாளித்து சாதுரியமாகத் தன்வண்டிலை விலக்கி எடுத்து மாடுகளை வேகமாகக் கலைத்தார் பொன்னுத்துரை. அவரது வண்டிலில் ஏவலாளராக இருந்தவனும் அவருக்குத் தோதானவன்தான். அவன் தொய்கின்ற மாட்டை சரியாகப் பார்த்து சாட்டைக்கம்பால் அடித்து அவைகளை நன்றாய் ஒட ஏவினான். பொன்னுத்துரையின் மாடுகள் இதனால் ஒட்டத்தில் நன்றாக வேகம் கொண்டுவிட்டன. அந்த வேகத்தைக் கணித்து தன் மாட்டு வண்டிலின் வெற்றியை நிச்சயித்துக்கொண்டு ‘இந்த வீச்சான ஓட்டத்துக்கு இனிமேல என்ர கையில பிடிகயிறு தேவையில்ல' - என்ற நம்பிக்கையில் அவர் தன் கையிலிருந்த பிடிகயிற்றை நுகத்தின்மீது தூக்கி எறிந்துவிட்டார். பரிசுக்கான இந்தக் கடைசி வண்டில் சவாரியைப் பார்த்துக்கொண்டு இருந்தவர்களெல்லாம் தங்களை மறந்து உணர்ச்சிப் பெருக்கில் உரத்துச் சத்தம் வைத்து ஆர்ப்பரித்தனர். இதைப் பார்த்துக் கொண்டு நின்ற புத்தகப் படிப்பறிவுள்ளவர்கள் சிலரது சிந்தனைகள், பழையகாலத்துச் சரித்திரக் கதைகளில் நடந்த இப்படியான சம்பவங்களை மீட்டெடுத்துப் பார்த்துக் கொண்டன. குறிப்பாக அவர்கள் அந்தக் காலத்தில் நடந்த குதிரைவண்டில் ஒட்டப் போட்டிகளை, இந்நிகழ்வோடு சேர்த்துப் பொருத்திப் பார்த்தார்கள். அதிலே ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிறிஸ்து வாழ்ந்த காலம்) ரோமாபுரியின் குதிரையோட்ட வீரர்களுக்கும் தனி ஒருவனாக அவர்களுடன் போட்டியில் கலந்து கொண்ட அந்த யூதனுக்கும் இடையில் நடந்த அந்தக் குதிரைவண்டிலோட்டப் போட்டி, சரியாக அவர்களுக்கு இப்போது ஞாபகம் வந்தது. அந்தக் குதிரை வண்டில் சவாரியைப் போன்று ஒரு சிறப்பான மாட்டுவண்டில் சவாரிப் போட்டியை, தங்கள் கண்ணெதிரில் இன்று தாங்கள் காணக்கிடைத்ததாக நினைத்து அவர்களெல்லாம் ஆச்சரியப்பட்டவாறு நின்றார்கள்.
சீ.பி. அருளWணந்தம் O 168 O

பொன்னுத்துரையின் சவாரி மாடுகள் வெற்றிக்கோட்டைத் தாண்டிய பிறகும்கூட, தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்ள முடியாது ஓடிவந்த மூச்சிலேயே தொடர்ந்தும் சிறிதுதுரம் ஒடிக்கொண்டிருந்தன. அந்த மாடுகளை அமைதிப்படுத்தி ஓட்டத்தை நிறுத்த “ஹோவ். ஹோவ்' என்று அவர் பெரிதாக சத்தம் வைத்தார். ஒட்டுநரின் சத்தத்தைக் கேட்டு அவைகளும் அமரிக்கையடைந்தன. உடனே துலாக் கம்பில் ஒரு கையை ஊன்றியடி குனிந்து மாட்டினது பிடிகயிற்றை மறுகையால் எடுத்துக்கொண்டு மீண்டும் அவர் ஆசனத்தட்டில் இருந்து கொண்டார். அவரது வண்டிலுக்குப் பின்னால் வந்து சேர்ந்த தருமரின் சவாரி மாடுகளும், கடைசியில் வந்த மணியரின் சவாரி மாடுகளும், இவ்வண்ணமே அந்த வெற்றிக்கோடு தாண்டியும் கொஞ்சதூரம் ஒடிச் சென்றதன் பின்புதான் அமைதியடைந்தன. இவர்கள் இருவரினதும் வண்டில்கள் வந்து சேரவிட்டு, முன்னம் தான்வந்த பாதையாலேயே திரும்பவும் தன் வண்டிலைத் திருப்பி போட்டி ஆரம்பித்த இடத்தை நோக்கிப் போக மாடுகளைக் கலைத்தார் பொன்னுத்துரை. சற்று முன் வெற்றிகரமாக முடிக்கப்பெற்ற காரியத்தால் தம் முன் எழுந்த மகிழ்ச்சிப் புன்னகையை அவர் இந்நேரம் அடக்கிக் கொண்டார். தருமரின் முகம் முதல் பரிசு தனக்குக் கிடைக்கவில்லையே என்ற துயரத்தில் கறுத்துவிட்டது. அது பெரும் தோல்வியாக அவரது மனதைத் தாக்க அவர் கூனிக் குறுகிப்போனார். கவலை நிறைந்த வற்றிய முகத்துடன் சண்டையில் அடிபட்ட கோழியைப்போல அவர் தோற்றமளித்தார். அவரது தலைக்குள் கம்பளிப்பூச்சிகள் ஊர்ந்ததைப்போல இருந்தன. அதிலே நின்றபடி தன் புண்பட்ட மனத்தின் தன்மானத்தகிப்புடன், எரியும் கண்களில் வெறுப்புடன் அவர் பொன்னுத்துரையைப் பார்த்தார். சனங்கள் போடுகின்ற கோஷங்களுக்கும் ஆரவாரப் பேச்சுக்களுக்கும் மத்தியில் பரிசு வழங்கும் அந்த இடத்துக்குப் போனார் பொன்னுத்துரை. அவரின் ஆதரவாளர் பலர் பட்டாசு கொளுத்தினார்கள். ஒலி பெருக்கியில் முற்றுப்பெற்றுவிட்ட கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களது பெயர்களை வரிசைப்படுத்தி ஒருவர் திரும்பவும் திரும்பவும் அதைச் சொல்லிக்கொண்டிருந்தார். முதல் பரிசு பொன்னுத்துரைக்கு என்று சொல்லவும் வெடிகளின் ஓசைகள் வானைப் பிளந்தது போல் அதிர்ந்தன. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட தருமரின் வெற்றிக்கும் வெடி கொளுத்தலும் மக்கள் ஆரவாரிப்பும் இருக்கத்தான் செய்தன. மணியருக்கும் அவ்வாறே இவையாவும் அமைந்து அவரும் தான் மக்களிடத்தில் மகிமையடைந்தார். இவ்விடத்தில் நடந்து முடிந்த சவாரிப்போட்டிக்காக பரிசுகள் வழங்கவென்று வந்திருந்த அரச உயர் அதிகாரி, இப்போட்டியில் பங்குபற்றியவர்களையெல்லாம் பாராட்டிப் பேசினார். தன் கையால் அவர் மூவரின் கழுத்திலும் மலர் மாலைகளை அணிவித்தார். மூவருக்கும் சான்றிதழ் அவரின் கையாலேயே வழங்கப்பட்டன. அந்த அதிகாரி முதல் பரிசு பெற்ற பொன்னுத்துரையை தன் கையால் அவருக்கு முத்துக்குடை பிடித்த மேன்மையில் வைத்துப் பாராட்டிப் பேசினார். அவரிடமிருந்து முதல் பரிசுக்குரிய தங்கப்
வழ்க்கையிண் சிறங்கள் O 169 O.

Page 95
பதக்கத்தையும் பணப்பரிசையும் பொன்னுத்துரை பெற்றுக் கொண்டார். இதன்பிறகு இந்தப் போட்டியை ஆண்டாண்டு தொடர்ந்து நடத்த அரசாங்கத்திலிருந்து கிடைக்கும் நிதி உதவியிலிருந்தும் சிறுதொகைப் பணம் இதற்குச் செலவிட தான் முன்வந்திருப்பதாக, தன் கீழ் முகவாயை முன்னே நீட்டிக்கொண்டு கட்டைக்குரலில் சொல்லி அவர் பேச்சை முடித்துக்கொள்ள. ஒலி பெருக்கியில் உடனே பாடும் இயந்திரம் - கிராமபோனின் பாட்டு எழுந்தது. அந்தப் பாட்டொருபக்கம் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருக்க; பொன்னுத்துரையைப் பாராட்டவென்று பலபேர் அங்கே அவரைச் சுற்றிச் சூழ்ந்தார்கள். அதைக் கண்டுவிட்டு மனம் தாங்காது தருமர், மூச்சைக் கூட்டிக் கொண்டு உதடு இறுகத்தலை குனிந்தபடி அந்தச் சனக்கும்பலிலிருந்து தனிமையான இடத்துக்கு வேகமாக நடந்து போய்விட்டார். பொன்னுத்துரை அவ்விடத்தில் நின்று தனக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கெல்லாம் ‘இது தனிப்பட்ட என்ர வெற்றியெண்டில்ல எங்கள் எல்லாருடையதான ஒரு வெற்றிதான் - என்று அந்த வண்டில் சவாரியில் தன்னுடன் சேர்ந்து பாடுபட்ட சகலரையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களைப் புகழ்ந்ததாய் அங்கு நின்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். வெயிலும் தாழ்ந்து நிழல்கள் கூட கிழக்கே நீண்டு படர்ந்துவிட்டன. கரைத்துக் கொட்டிய ஆரத்திபோன்று அந்தச் சூரிய ஒளியின் செம்பிளம்பு, விமான ஒடுபாதையில் வழிகிறது. அந்திவானம் இரத்தச் சிவப்பாய் மாறிக் கொண்டிருந்தது. ஒருபுறம் ஆதவன் அஸ்தமிக்கும் இடத்திலே, வானவிளிம்பு இன்னும் வெண்மை பொலிந்து செலவு பெறும் கடைசி ஒளிர்வால் தண்ணிய செம்மை படர்ந்து இலங்கியது. சவாரிப் போட்டியைப் பார்த்த மனமகிழ்வோடு சனக்கும்பல் அங்கிருந்து, சமனப்பட்டு நெகிழத் தொடங்கிவிட்டது. அந்த விமான ஓடுபாதையில் இருளுக்கு முன்னே வீசும் குளிர்காற்று ‘ஓ’ வென்று ஓங்காரமாய் வீசத் தொடங்கியது. சவாரிப்போட்டிக்கு வண்டில் மாடுகளைக் கொண்டுவந்தவரிடத்திலெல்லாம் தங்கள் காளைகளைப் பற்றிய, முன்னம் இருந்த அந்த அக்கறை இப்போது விட்டுப் போயிருந்தது. தங்கள் காரியம் ஆகிவிட்டால் கைகழுவி ஒருவரை விட்டு விடுவதைப் போன்ற சுயநலத்தில், இக்காரியத்திலும் அவர்கள் தங்கள் மாடுகளில் உள்ள அக்கறையை இப்போது விட்டுத் தொலைத்திருந்தார்கள். அந்த வண்டில் மாடுகளெல்லாம் முன்னம் இந்த இடத்துக்கு வரும்போது, சுமையில்லாமல் சுதந்திரமாத்தான் வந்திருந்தன. இப்போதோ தாழக்கயிறு பூட்டிய நுகத்தடியை சுமந்துகொண்டு, அவைகள் வண்டிலை கடனே' - என்று இழுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தன.
്.. ( O 170 O

பதினொன்று
வண்டில் சவாரிப் போட்டி நடந்து முடிந்து ஒரு கிழமை வரையில் சென்றுவிட்டது. ஆனாலும் இந்த இடைப்பட்ட நாட்களுக்குள்ளே அன்ரன் அங்கே பொன்னுத்துரையின் வீட்டுப்பக்கம் போய் வருகிறதைத் தவிர்த்திருந்தான். அங்கே பொன்னுத்துரையின் மகளும் பிள்ளைகளும் கொழும்பிலிருந்து வந்திருந்ததால் அங்கு போய் ஐயாவுடன் தான் இருந்து கதைத் துக் கொண்டிருப்பதுகூட, அவர்களுக்கு அது ஒரு இடைஞ்சலாகவிருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான். இருந்தாலும் நேற்றையப் பகல்வேளை, முடிந்த அளவுக்குச் சூரியன் உயரத்திலேறி நின்ற நேரமாக, அவன் தருமலிங்கம் வீதியாலே நடந்து வந்து புளியடிச் சந்தியிலே திரும்பும்போது, ஐயாவும் நடையிலே அதிலே வரக்கண்டுவிட்டான். "எங்கால இருந்தய்யா..? அவனுக்குத் தெரியும்! விரால்மீன் கோர்வையோடு வருகிறார் - வீட்டுக்குப் போகிறாரென்று! என்றாலும் அவரைக் கண்டதுக்கு இந்தக் கேள்வி அவன் வாயிலிருந்து வெளிவந்தது. "இங்க பாரும் என்னெண்டு! இதுக்குத்தான் போனன்! இத வாங்கியாச்சு இப்ப அங்கயிருந்து திரும்பிவாறன்.! நேரா இப்ப வீட்டவாப் போறன்..!" “உது நல்ல கொழுத்த விரால் மீன் போலக்கிடக்கு.? இதில்லாமல் உங்களுக்கு மத்தியானம் சோறே சாப்பிட இறங்காதென்ன?” "அதெண்டாச் சரிதான்! நீர் சொல்லுறமாதிரித்தான் இருந்தாலும், ஏன்தம்பி நான் இதப் பெரிசா இப்ப விருப்பப்பட்டுத் தின்னப்பழகினன்.? எல்லாம் இந்த வன்னிப் பக்கத்துக்கு வந்துதான் இந்தப் பழக்கம் எனக்குத் தொட்டுது. கடல் மீன் இங்க எங்க பிள்ள நல்ல மீனாய் வருகுது வாங்கித்தின்ன? எல்லாம் அதுகள் வாறது இப்ப அரும்பொட்டுத்தான். கனக்கச் சந்தையிக்க உங்க விக்கிறதெல்லாம் புழுத்த நாறல்! ஆனா இது சமைக்கிறதுக்குச் சோக்கான உடன் மீன்! துடிக்கத் துடிக்க இருக்க உங்கின வாங்கலாம்! கறிகாச்சித்தின்னலாம்! குளத்துமீன் எப்பவும் குளுமைதானே உடம்புக்கும்? இதுவும் ஒரு நல்ல சாப்பாடுதானே தம்பி இங்க எங்களுக்கு?” "அத இப்ப இல்லையெண்டு ஆர் சொன்னதையா? எண்டாலும், இதின்ரை ருசி உங்களுக்கு நாக்குக்கு நல்லாப் பிடிச்சுப் போச்சு. ஆ அப்பிடித்தானே.?” "ஓ-ம் தம்பி எண்டாலும் ஆரும் இதக் கறி சமைக்கவும் தெரியவேணும்! இதச் சமச்செடுக்கிறதிலதான் ருசியும் மணமும் வந்து அதத் தின்னவும் விருப்பமாயிருக்கும்.” "ஓம் நீங்க சொன்ன பக்குவத்தில இத ருசியாச் சமைச்செடுக்க ஆச்சியோட ஆரெண்டாலும் கிட்ட நிக்கேலாதய்யா அவ அப்பிடியெல்லாம் உங்களுக்கு சமைச்சுத்தாறதாலதான் அது உங்கட நாக்குக்கு ருசிபட்டுப்போய்
வரழ்க்கையிண் சிறக்கஸ் Ο 171 Ο

Page 96
நெடுகலும் அலுக்கேலாத அளவுக்கு இத நீங்க சாப்புடுறியள்.” "அதுதான்! அதுதான் உள்ளகத! அப்பிடித்தான்! நீர் சொன்னமாதிரி அவ நல்லா ருசியா இதைச் சமைப்பாதான். இதைவிட வேற என்னத்த அவ சமைச்சாலும் அப்பிடி அவவின்ர கை, சமையலில நல்ல பக்குவமா எல்லாத்தையும் செய்யும். ஆய கலைகள் அறுவத்தி நாலில இந்தச் சமையல் கலையும் ஒரு கலைதான் தம்பி. இது அவவுக்கு கைவந்த ஒரு கலைதான்!” - அவரின் கதையைக் கேட்டுக்கொண்டு அவருடன் சேர்ந்து நடப்பதும் அன்ரனுக்கொரு கஷ்டம்தான். "அட கதைத்துக்கொண்டு போகும் போதாவது இந்த மனிதர் கொஞ்சம் சாதாரணமாக எங்களைப் போல் அடியெடுத்து வைத்து மெதுவாக நடந்து போகலாம்தானே?” - என்று அவன் நினைத்தான். அவரின் கதையிலும் கவனம் வைத்து, அதேபோல் அவரின் நடையிலும் கவனம் கொண்டு, அவருக்கு ஈடு கொடுத்து தான் நடந்து போவதென்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது அவனுக்கு. "சவாரி முடிஞ்சாப்பிறகு உங்காலையா உங்கட வீட்டுப் பக்கம் அந்த மாடுகளைப் பாக்கவெண்டு ஆக்கள் ஆரோவெல்லாம் சேந்து கூட வந்த மாதிரிக்கிடக்கு? நான் அவயளப் பாத்தவுடனேயே நினச்சன்! இதுக்குத்தான் அவயள் வளையம் போடுகினமெண்டு. ஆமோ ஐயா இப்ப நான் உங்களைக் கேக்கிறன். அதுக்குத்தானோ அவயள் உங்களிட்ட வந்தவயள்?" “நீர் என்ர வீட்டையும் கொஞ்ச நாளா வரக் காணேல்ல. அவயள் வந்தத நீர் எங்கயாக் கண்டனீர்?" "அதெப்பிடி எண்டால் அவயள் எங்கட வீட்டுப் பக்கமாகத்தான் வந்து உங்களைக் கேட்டுக் காரியார்த்தமான தோரணையில விசாரிச்சவயள். நான் உங்கட வீட்ட அடையாளம் காட்ட அவயஞக்கு இப்பிடிச் சொன்னன். இந்த றோட்டோரமாயுள்ள அந்தக் காஞ்சூரை மரத்துக்குப் பக்கத்தில சோல மாதிரி வளவாயுள்ளதுதான் பொன்னுத்துரை ஐயாவின்ர வீடெண்டு. நான் அப்ப அவயஞக்கு அப்பிடித்தான் உங்கட வீட்ட அடையாளம் காட்டிவிட்டனான்." - பொன்னுத்துரை சிரித்தார். “ஓ. ஒ. சரி. சரி நீர் பாத்த அவயள் தான் என்னட்ட அங்க வந்த ஆக்கள் போலக்கிடக்கு நல்ல விலை வைச்சு மாடுகளை அவயள் கேட்டவயள்தான் தம்பி - எண்டாலும் இப்ப ஏன் அதுகள விக்க அவசரப்படுவானெண்டு போட்டு ஒரு யோசனையில நான் - இப்ப இந்த மாடுகளை விக்கிறதாயில்ல - எண்டு அவயஞக்கு ஒரேயொரு கதையாச் சொல்லி அனுப்பிவிட்டிட்டன்.” "இன்னும் ரெண்டு சவாரிகளில அதுகள் ஓடி முறையாவெண்டாப் பிறகு இதவிடக் கூட விலை வருமெண்டு பாக்கிறியளோ ஐயா நீங்க?" "அதுகும்தான்! அப்பிடியும்தான் ஒரு யோசின இருக்கெண்டு வையுமன்! அதவிடத்தம்பி இப்ப இந்த மாடுகள வித்திட்டா, யாழ்ப்பாணத்தில இனி நடக்கப்போற சவாரிக்கு எந்த மாட்ட றேகக்கெண்டு நான் அங்க கொண்டு போறது? இத வித்திட்டு அந்த றேகக்கெண்டு புதுசா ரெண்டு மாடுகள
്.. SGൾ O 172 O

வைச்சு திடுதிப்பெண்டு அதுகளை ஒடப் பழக்கி எடுக்கிறதெண்டுறது என்ன சின்ன லேசுப்பட்ட வேலையெண்டு நீர் அத நெக்கிறீரே?” "ஓம் அதுவும் சரிதான்! இதுகள கைவிட்டிட்டு என்னொண்ட வைச்சுப் பழக்கியெடுக்க எவ்வளவு காலமாகும்?” "நான் முதல் உமக்குச் சொன்னத மாத்திரம் வைச்சு உந்த மாடுகள நான் விக்காம விடேல்லத்தம்பி! இதுக்குள்ளயடா தம்பி பெரிய சூத்திரம் இருக்கு, அத இப்ப நான் சொல்லுறனே உமக்கு.” ".” அவன் தன் வாயால் ஒரு வார்த்தையும் பேசாது மெளனமாக அவரைப் பார்த்தான். "தம்பி இனி நான் சொல்லேக்க அதெல்லாம் உமக்கு விளங்கப் போகுது பாரும்! தம்பி அண்டைக்கு வந்தவயளிட்ட கதயில இருந்து அவயள் என்ன பிளானோட என்னட்ட வந்தவயள், ஆர் அவயள இங்க என்னட்ட அனுப்பினது எண்டதெல்லாம் நான் சரியாகப் பிடிச்சுக்கொண்டன். அவயள ஆர் அனுப்பினதெண்டு நீர் உம்மட யோசனையில யோயிச்சு ஒருக்கா சொல்லும் பாப்பம்?”
"பாத்திரே உமக்கும் அது வடிவாப்பிடிபடேல்ல. நீர் கிடந்து யோயிச்சுக் கொண்டிருக்கிறீர்? எனக்கு ஆனா மூளைக்கு உடன அது அப்பவே பிடிபட்டுப் போச்சு. இந்த அலுவலுக்கெல்லாம் சூத்திரதாரி தருமர்தான் தம்பி! அவர்தான் இவயளக்கொண்டு என்ரமாடுகள் வாங்குவிச்சு, தான் அங்க இதுகள அடிச்சக் கொண்டுபோய் வைச்சிருக்கிறதுக்குப் பாத்திருக்கிறார். அங்க இனி நடக்கப்போற றேசில என்னை மண்கவவ விழுத்திப்போடத்தான் இந்தவழி எத்தினை சதிகாரர் - என்னமாதிரி வேலயள் பாரும் அவங்கட குள்ள மூளய.?” "இப்புடியெல்லாம் இதுக்க இருக்குமெண்டு எப்பனும் நான் யோசிக்கேல்ல. அப்பிடி ஒரு சதிவேலையா அவற்றை அலுவல் கிடக்கெண்டு, இப்பத்தான் எனக்கு விளங்குது நீங்கள் சொல்ல."
"உதென்ன பெரிசு. உதுமாதிரிப் பல அலுவல்கள் சூழ்ச்சியள் எல்லாம் இந்தச் சவாரி றேககளில நடக்கும். எனக்கிதெல்லாம் பட்டுக் கழிச்ச அனுபவம் தம்பி இப்ப என்ர வயசுக்க இதுகள அறிஞ்சு வைச்சிருக்காம பேந்தென்ன ஒரு சீவியம். இதெல்லாம் வீட்டயா இருந்துகொண்டு அங்க ஆற அமர ஒரு நேரம் கதைக்க வேண்டிய கதையள். றோட்டில நடந்து கொண்டு பேசிமுடியாத விசயங்கள் இதுகள். ஆமோ அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் இப்ப நான் கேக்கிறன் உம்ம. நீர் ஏன் கன நாளா அங்க என்ர வீட்டுப் பக்கம் வரேல்ல? எனக்கு மகள் பேரப்பிள்ளையஸ் எல்லாம் கொழும்புக்குப் போய் அங்க வீடே வெறிச்சமாதிரிக்கிடக்கு. உம்மையும் இதுக்க காணேல்லயெண்டு தான் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறன். அப்ப நீர் வருவீரே இனி அங்க வீட்டுப்பக்கம்.?” - அன்ரன் அடக்கமாகச் சிரித்தான். "வருவன், ஐயா
வரழ்க்கையிண் சிறக்கஸ் O 173 O

Page 97
நாளைக்கு அல்லாட்டி நாளையிண்டைக்கு ஆய்ச்சும் வாறனே நான் கட்டாயம்." - என்று மரியாதையுடன் அவருக்குச் சொன்னான். "கட்டாயம். கட்டாயமா வாரும் வீட்ட. அப்ப என்ன? என்ர வீடும் கிட்ட வந்திட்டுது..?” “உதக் கொண்டோய்க் குடுங்கையா கெதியா. ஆச்சி வேளைக்கு உங்களுக்குச் சமைக்கவும் வேணுமெல்லே.?” "ஒமோம்! இண்டைக்குத்தான் இந்த அலுவல் எனக்கு நேரஞ்செண்டு போச்சுப்பாரும்! அப்ப வரட்டே நான் தம்பி?” "வாங்கோ ஐயா." - என்று அவன் சொல்ல அவர் தன் காணிப் படலையைப் பார்த்துக்கொண்டு நடந்தார். அவரைச் சந்தித்த இந்தச் சந்திப்பு முடிந்து. அதற்குப்பிறகு ஒருநாள் சென்று, மறுநாள்தான் அவரைப் போய்ப் பார்ப்பதற்கு நினைத்து இவன் தன் வீட்டை விட்டு வெளிக்கிட்டான். அவன் அந்த நாற்சந்தியில் இடப்பக்கமுள்ள வீதியில் திரும்புகின்ற வேளை, கோயில் வளவு வேலிப்பக்கமாக அவன் கண்பார்வை போனது. அந்த வேலியில் உள்ளவை எல்லாமே ஒரு இனமுட்செடிகள்தான். பார்க்க அழகு அவைகளில் பூத்திருந்த பூக்கள். அந்தச் சிகப்பு நிற போர்ன்விலா பூக்கள் நெருப்புப் பிடித்து எரியும் விளக்குச் சுடர்கள் போல இருந்தன. எல்லாம் பூவும் சேர்ந்து கிளைகளை மூடியிருந்தன. பார்வையை அப்படியே மறுபக்கம் திருப்பி கான் உள்ள பக்கம் அவன் அதை நீள விட்டான். பொன்னுத்துரையின் காணி வேலிக்குப் பக்கத்திலுள்ள சாணக் கும்பலில் கோழிகள் பறி பறியென்று விறாண்டிக் குழி பறித்துக் கொண்டிருந்தன. சேவலுக்குத்தான் அந்தப் பெரிய வேலை. கிளறிவிட்ட எருக்குழிகளிலிருந்து கொறவணன் புழுவைக் கொத்தி அது பேட்டுக் கோழிக்குக் கொடுத்தபடி இருந்தது. படலையைத் திறக்கும் போது அவன் மேலே பார்த்தான். அந்தப் படலையருகில் நின்ற பொன் அரளி, அதன் கிளைகளிலுள்ள காய்களைக் கீழே கொத்தாய்ச் சரித்தபடி நின்றது. தலைக்குக் கிட்டவாயிருக்கும் பச்சைக் காய்களை விரும்பாத மனத்துடன் பார்த்தவாறு அவன் படலையைத்திறந்தான். அந்த முற்றம் நிறைய இருக்கும் பூமரங்களிலே அவனுக்கு இப்போது கவனம் சென்றது. அந்தப் பொசுபொசுவென்ற பூக்களைப் பார்த்ததோடு விசயாவின் நினைவுதான் அவனுக்கு வரத்தொடங்கியது. சிறிது நாள் கோலாகலமாகவிருந்த இந்த வீடு அமைதியாக இப்போது மாறிவிட்டது என்றும் அடுத்து அவன் நினைத்தான். முற்றத்துக்கு அருகிலும் அவன் பார்வை போனது. அங்கு உள்ளகளத்தில் மரவள்ளிக் கிழங்கு சீவல்கள் வெயில் உறையக் கிடந்தன. அதற்குக் கொஞ்சம் தள்ளி இரண்டு மரங்களுக்கிடையே அங்கு கட்டிக் கிடந்த துணிக்கொடி அருகில் விசயாதான் நிற்கிறாள். ஆனால் இன்னும் அவள் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவள் நின்ற இடமாக அவளைச் சுற்றி, கறுத்தத்துளிகள் விழுந்த, செக்கச் சிவந்த வண்ணத்துப் பூச்சியொன்று சிறகடித்துப் பறந்துகொண்டு
ඒ.4%. ථNගvශováහරේ O 174 O

நிற்கிறது. அவள் குளித்து முடித்தான பிறகுதான் இவ்விடத்துக்கு வந்துள்ளாள். தோய்த்த துணியொன்று அவள் தோளிலே தொங்குகிறது. கையிலே உள்ள ஈரச் சேலையை முறுக்கி நீர் விடுத்துக் கொண்டிருக்கிறாள். குளித்த ஈர ஆடையுடன் நிற்கும் பெண்ணைப் பார்ப்பது முறையல்ல என்று தன்பார்வையை அவளிடமிருந்து வேறு ஒரு பக்கம் திருப்பிக் கொள்ளத்தான் பார்த்தான். ஆனால் அது அவனுக்கு முடியாத காரியம் போல் ஆகியிருந்தது. அவள் மேல் மாறாத அந்தப் பார்வையை வைத்துக்கொண்டு "ஐயா.” என்று கூப்பிட்டான். எங்கே யாரைப் பார்த்து எவரை அழைக்கிறேன், என்ற ஒரு விவஸ்தையே இல்லாமல். எங்கிருந்து அவரின் அந்தக்குரல் தன் பக்கத்துக்கு வந்தது என்ற நினைப்பில், தானாய்த்திரும்பிய பார்வையில் உடனே இவனைக் கண்டு கொண்டாள் விசயா. அவனைக் கண்டதும் மழை பெய்து மரம் நீர்க் குளுகுளுப்பில் மலர்ந்தது போன்ற ஒரு மாற்றம் உடலிலும் மனத்திலும் வந்துவிட்டது அவளுக்கு. அவளுடைய மனசு கும்மி கொட்டிக் கூத்தடித்தது. சொண்டைக் கடித்தாள். ஒரு காலை மாற்றி மற்றக் காலில் நின்றாள். "இருங்கோ. அங்க மாலுக்கு உள்ள” அந்த ஈர உடுப்போடு அன்ரனுடைய பார்வைக்கு முன் நிற்பது அவளுக்கு வெட்கமாயிருந்தது. இருந்தாலும் தான் வெட்கத்தோடு இருந்து அவனை வேணுமான அளவு கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க அனும்தித்தது போல் அவ்விடத்தில் நின்றாள். "ஐயா நிக்கிறாரே?” “வருவார். நீங்க வாங்கோ அங்க மாலுக்க வந்து நீங்க இருங்கோ” - அவள் சொல்லிவிட்டு வளவளவென்ற தன் தொடைகள் திரள நடக்கிறாள். அந்த அவளது நடையிலே தெரியும் உடலின் வளைவுகளை அவன் வியந்து பார்த்தான். அந்த ஈரமான ஆடையோடு அவள் நடக்கின்ற நடை ஒரு குதிரையின் நடையைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்துகிறது. துடைகளுக்குமேல் மார்பை எட்டிப்பார்க்க ஒரு துண்டு மட்டும்தான் அவள் கட்டியிருக்கிறாள். மார்பில் அந்த நனைந்த துண்டின் இறுக்கம் கண்ணாடி ஈரத்தால் நன்கு தெரிந்தது அவனுக்கு ஆடைகட்டி வெயில்படாத இடமெல்லாம் அவள் மேனியில் துல்லியமாகத் தெரிகின்றன. ஈர ஆடைச் சலசலப்புடன் நீர் சொட்டச் சொட்ட நடந்து இவனையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தபடி அவள் பின்பக்கமுள்ள குசினியடிக்குப் போக, இவன் அந்த மாலின் வாசலடிக்குக்கிட்டவாக வந்துவிட்டான். அவள் இனி அந்த மறைவுக்குள் மறைந்துவிடப்போகிறது; அவன் கண்பார்வையிலிருந்து சந்திரஒளி மறைந்து இருளைப் பார்க்கிற தன்மைக்கு அவனைக்கொண்டு வருவது போல் இருக்கிறது. இருந்தாலும் இவ்வேளையில் இங்கு தன்னிடம் அவள் கதைப்பதற்காக கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு. அந்த மாலுக்குள்ளே போய் பெரிய வாங்கில், ஒரு கற்சிலைவாகாய் அமர்ந்து கொண்டதுபோல் அவன் இருந்துகொண்டான். ஆச்சி இருப்பதாகவும் சிலமனைக் காணவில்லையே என்றும் அவன் நினைத்தான். யாருமில்லாத இந்தத் தனிமை மனத்தில் பலவித கற்பனைகளை அவனுக்குத் தூண்டிவிட்டவாறு இருந்தது. அவன் மனம் இலவம் பஞ்சாக மகிழ்ச்சியில் மிதந்தது. அவளது காலடி ஒலிப்புக்காக அடங்காத
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 175 O

Page 98
ஆவலோடு அவன் அவ்விடத்தில் காத்திருந்தான்.
விசயா தன் அழகான இனிமையான உடலை ஒரு பறவையைப் போல ஆக்கிக்கொண்டு நீர் சொட்டச் சொட்ட நடந்து தன் படுக்கை அறைக் குள்ளே போனாள். அவளது மனமும் ஒரு நிலையாயில்லை. அவசரமாக உடுப்புப் பெட்டியைத் திறந்து, தன் நிறத்துக்கும் உடம்புக்கும் அதுதான் வடிவு என்று நினைத்துக்கொண்டிருக்கும் அந்த நீலப்பாவாடையை வெளியே எடுத்தாள். இந்தப் பாவாடைக்கு எந்த நிறச் சட்டை தோது என்று கொஞ்சநேரம் சிந்தித்தாள். அந்தப் பாவாடைக்குத் தோதான நிறமும் தன் மார்புகளை எடுப்பாகத் தெரியச் செய்யக்கூடிய இறுக்கமானதுமான அந்தப் புதுச்சட்டையை விருப்புடன் பார்த்துவிட்டு, அவள் அதைக் கையில் எடுத்தாள். உள்பாவாடையையும், மார்புக் கச்சையையும், மளமளவென பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்துவிட்டு, எழுந்துநின்று தன்னில் உடுத்தியிருந்த அந்த ஈரத்துண்டைக் கழற்றினாள். அந்தத்துண்டைக் கழற்றும்போது பழுப்புக்காம்புகள் கொண்ட அவளது நெருங்கி ஒட்டிய கூர்த்த சீர்த்த முதிரா மார்புகள் அசைந்தன. அவள் தன் நெஞ்சடியில் இருந்து கழற்றிவிட்ட ஈரத்துணி அவளது வனப்புமிகுந்த வலிய கால்களைச் சுற்றி 'தொப்'பென்ற சத்தத்துடன் கீழே வட்டமாக விழுந்தது. அவள் நேரம் போகின்றதே என்ற நினைப்பில், மளமளவென்று அங்கே எடுத்து வைத்திருந்த ஆடைகளை எல்லாம் அணிந்து கொண்டாள். அவளுடைய தவிப்பு உடல் கொதிக்கும் அளவுக்குக் கூடிக்கொண்டிருந்தது. பரிச்சயமற்ற புது சிந்தனை ஒன்று அவளது மனவட்டத்தில் 'கிச்சு முச்சு மூட்டுவதாகத் தோன்றியது. அவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். அதிலே தெரிந்த தன் கண்களே தன்னைப் பார்த்துப் படபடப்பது போல் அவளுக்கு அதிலே தெரிந்தது. கண்மை வைக்காமலேயே கோரைப்புல் மாதிரி மலர்ந்திருக்கும் ரோமமுள்ள இந்த அமைப்பு என் கண்களுக்குத்தான் எவ்வளவு அழகாயிருக்கிறது என்று இந்நேரம் அதையும் பார்த்து அவள் ரசித்துக் கொண்டாள். அந்தத் திருப்தியுடன் லேசாக அலை வீசி நெளிபுனையும் சுருள் சுருளான தன் கூந்தலை - தலையைச் சரித்து நெஞ்சில் விழுத்திக் கொண்டு ஒரு பக்கம் திரும்பி நின்று கூந்தலழகையும் கண்ணாடியில் கவனித்தாள். அதைப் பிரித்துப் பின்னலிட்டுக் கொண்டுபோக எனக்கு நேரம் போதாதே? என்ற ஒரு குறை அவளின் மனத்தை வாட்டியெடுத்தது. என்றாலும் என்கூந்தல் அடர்த்திக்கு நான் கொண்டை போட்டுக் கொண்டாலும் எடுப்பாகத்தான் இருக்கும் என்று நினைத்து, அந்தத்தலை முடியைக் கலைத்து கொண்டையாக நிமிர்ததிக் கொண்டு, விறு விறுவென்று நடந்து அவள் மாலடியின் வாசலடியை நெருங்கினாள். அந்த இடத்தில் அவள் வரத்தான் தான் நெற்றியில் பொட்டிட்டுக் கொள்ளவில்லை என்ற குறை நினைவில் அவளுக்கு வெளிப்பட்டது. "அந்தச் சூரியகாந்திப் பொட்டை, அல்லாட்டி சந்திரகாந்திப் பொட்டை நான் நெத்தியில வைச்சுக்கொண்டு வந்திருந்தா முகம் என்னமாதிரி வடிவா இருந்திருக்கும்? இருந்தாலும் இவரையும் இதில கன நேரம்
്. ി. ട്രങ്ങൾ O 176 O

நான் காக்க வைக்கக் கூடாதெண்டுதானே எனக்கு அவ்வளவாய் ஒரு அவசரம்.” இந்த நினைப்போடு அந்த நுழைவாசலில் உள்ள கதவிலே போய் அந்தக் கதவில் மெதுவாக கூந்தல் சுமையுடன் அவள் சாய்ந்துகொண்டு அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். “விசயா.” அதிகமான மென்மையோடும் கனிவோடும் உச்சரித்தான் அவன். அன்ரன் அவளது பெயரைச் சொல்லி அழைப்பது இதுவே முதல்தடவை. அவன் அப்படி தன் பெயரைச் சொல்லி அழைத்தபோது, அவளது இதயத்தின் ஆழத்தில் எங்கோ ஆனந்தச் சலங்கை ஒலி செய்து குதித்தது. அவள் சிரித்தாள். இந்த ஒரேயொரு சிரிப்பிலேயே தன் முகத்தில் கோடானு கோடி அழகுகளைக் காட்டி என் மனதைத் தோரணமாட இவள் வைத்துவிட்டாளே என்று அன்ரன் உடனே நினைத்தான். "ஐயாவும் வீட்ட இல்லையெண்டால் ஆச்சியும் வீட்டவாய் இங்க இல்லையோ? ஒருவருமில்லையோ?”
"ஓ ஒருவருமில்லை." செவியில் விழாத மெல்லிய குரலில் அவனுக்கு அவள் பதிலளித்தாள். எந்த விஷயத்தையும் இரகசியம் போலச் சொன்னால் அதில் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுவிடும். அவள் சொன்ன விதம் அவன் மனத்தைக் கவர்ந்து அதை அவன் தன் நினைவில் வைத்து ரசித்துக் கொண்டபடி அவளிடம் கதையைத் தொடர்ந்தான். “முந்தநாள் என்னைப் பாத்து இண்டைக்கு இங்க வரச் சொன்னவர் ஐயா..” “அது என்னவோ அவர் அதப் பேந்து மறந்து போட்டார் போல. இண்டைக்கு அவர் எங்கயோ காலேல வெளிக்கிட்டுப் போயிற்றார்.” “அப்ப ஆச்சி?” "அவவும் இங்கால இண்டைக்கு கந்தசாமி கோயிலுக்கெண்டு போயிற்ரா.” "அப்ப நீங்க தனியவா இங்க?” “அங்க சின்னம்மா பக்கத்தில வீட்ட இருக்கிறா.” இதை அவளிடம் கேட்டதற்குப் பிறகு ஒரு நிமிடநேரம் அவன் மெளனமாக இருந்தான். அதற்கு அடுத்த நிமிடத்தையும் அப்படியாகவே மேலும் தொடர்ந்துவிட அவன் விரும்பவில்லை. “உம்மட்ட நான் ஒண்டைச் சொல்ல வேணும் சொல்லவேணுமெண்டு இவ்வளவு நாளாப்பாத்திருந்தன். ஆனா அதச் சொல்லுறதுக்கெண்டு எனக்குச் சந்தர்ப்பமே கிடைக்கேல்ல.” அவன் அப்படிச் சொல்ல. “அதச் சொல்லுங்கோ இப்ப எனக்கு.” - என்று உடனே அவனிடம் இதைத் தன்வாயால் கேட்டுவிட, ஒரு வேகம் அவளுக்கு மனத்தில் எழுந்தது. ஆனாலும் அதைப் பிறகு அடக்கிக் கொண்டு மெளனியாகி விட்டாள். இந்த மெளனம் என்பதுதான் இப்படியான தருணத்தில் ஒருவருக்கு வார்த்தைகளை வடித்தெடுக்கத் துணையாகிறதோ என்பதைப்போல, அவனும் கூடவே மவுனத்திலாழ்ந்துவிட்டு பிறகு அவளைப் பார்த்துக்கேட்டான். "நான் இங்கயே வந்து நெடுகலும் பழகிறதில உம்மத்தான் அடிக்கடி நான் காணுறனான். அதால எனக்கு உம்மோட நல்லா கதைக்கவேணும் பேசவேணுமெண்டு மனதுக்கு, ஒரு.” அவன் இவ்வளவற்றையம் சொல்லியதோடு வார்த்தைகளை இடைநிறுத்தி விட்டான். அவளது ஆழமான கறுப்பு நிறக்கண்கள் மிகவும் ஆவலோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. உங்கள் நிலைதான் என்நிலையும்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 177 O

Page 99
உங்கள் இதயத்திலிருப்பதை மனம்திறந்து சொல்வதற்கு ஏன் தயக்கம்? என்று அவனைப் பார்த்து தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் அவள். “என்னவோ சொல்ல வெளிக்கிட்டீங்க ஏன் இடையில. இல்ல நீங்க அதச் சொல்லாம.?" இவ்வளவையும் தான் சொன்னதுக்கு தன் சொண்டை பற்களால் அவள் கடித்துக் கொண்டாள். ஏதும் அதிகப்பிரசங்கித்தனமாய் நான் எதையாவது அவருக்குச் சொல்லிப்போட்டேனா? அல்லது அவரை மீறிய அளவில் துணிவாக நான் முந்திக்கொண்டு வாய் உளறி விட்டேனா? என்றவாறு அவள் நினைத்தாள். "எண்டாலும் இவர் ஒரு ஆண்மகன்தானே அவர் சொல்ல விரும்பியதை வெளிப்படையாக எனக்குச் சொல்வதில் என்னதவறுதான் இப்போது நடந்து விடப்போகிறது? இவ்வளவு காலமும் நான் அவரைக் காணும் போது இந்தக் கண் களால் நான் பேசியதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா? அப்படி அது எல்லாம்கூட இவருக்கு இதுவரை ஏதும் புரியாமலா இருந்திருக்கும்? எவ்வளவு நாட்கள்? எவ்வளவு கிழமைகள்? எத்தனை மாதங்கள்? இவ்வளவு காலத்துக்குள்ளே இப்படி ஒரு சந்தர்ப்பம். அவருக்கும். ஏன் எனக்கும் கூடத்தான் இன்று கிடைத்திருக்கிறது. இப்படி வாய்த்த சந்தர்ப்பத்தை நீங்களும் இப்போது நழுவவிட்டு விடுவீர்களோ? உங்களைப்போல் நானும் இதைத் தவறவிட்டுவிடுவேனோ? அச்சச்சோ. இப்படியான இந்த நல்ல தருணத்தை இருவருமே கோட்டைவிட்டுவிட்டால் இனிமேல் எப்படி ஒரு நல்ல நேரம் இதுபோல் கிடைக்கும் எங்களுக்கு?” அவளுக்கு இதை நினைக்க நெஞ்சு கூடுதலாய்ப் படபடத்தது. அவளது பூரணமான மார்பு விம்மித்தணிந்தது. இந்த நிலையில் இருவரினது மனமும் இப்படியான ஒன்றைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தன. என்றாலும் அவர்கள் இருவரினதிலும் சக்திபெற்றது அவளது எண்ண அலைகள்தான். அது இவ்வேளை அவனது மனத்துக்குள்ளும் புகுந்துவிட எலுமானதாகவும் இருந்தது. அதனால் அவனது உள்ளம் அவளது மன எண்ணங்களை உடனே அறிந்துகொண்டுவிட்டதான ஒருநிலை. அதன்மூலம் அவளின் நினைப்புக்குச் சாதகமாய் அவனும் தைரியத்துடன் பேசினான். “விசயா எவ்வளவோ நாளா இதை நான் உமக்குச் சொல்லுவோமெண்டுதான் பாத்தன். ஆனா இங்கின நான் வாற நேரமெல்லாம் உம்மோட தனிய என்னால கதைக்கேலாமப் போச்சு. நீர் இங்க வந்த காலம் நாம் உம்மக் கண்ட நாளில இருந்து உம்மத்தான் நான் மனசில நெச்சுக் கொண்டிருக்கிறன். உம்மை என்னால மறக்கவே முடியாமலிருக்கு. உம்மை நான் உண்மையா விரும்புறன். ஆனா நீர் என்ன?” அவன் அத்துடன் வார்த்தைகளை மேலே சொல்ல முடியாமல் இடை நிறுத்திவிட்டான். அவளுக்கு அப்படி அவன் கேட்டதற்கு என்ன பதிலை சொல்வதென்றே தெரியவில்லை. இரகசியங்களைப் பேசி சிரிக்கக்கூடிய இருளிலே இருந்து அன்ரனிடம் தனக்குள்ள காதலின் தவிப்பை எத்தனையே இரவுகள் தனக்குத்தானே பேசிப்பார்த்து அந்த இன்பத்தை அனுபவித்தவள்தான் இவள். ஆனாலும் இவ்வேளை நேரே அவனது முகத்தைப் பார்த்து தனக்கும் அவனிடம் காதலுண்டு என்று
jණි. ගි. ථAගvගvණීභ(ගී O 178 O.

தன் வாயாலேயே அதை அவனிடம் வெளிப்படையாகச் சொல்ல நாணம் அவளைத்தடுத்தது. இதன்மூலம் எதையும் சொல்லத்தயங்கும் கட்டுப்பெட்டித்தனம் தனக்கு இருப்பது பற்றியும் நினைத்து அவள் தன்னைத்தானே நொந்து கொண்டாள். என்றாலும் அவன் சொன்னதுக்கு அவள் இணக்கமாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்போடு அவளது முகம் வட்டமுள்ள 54 பட்டை தீட்டப்பட்ட வைரம் போல ஜொலித்தது. அவளது சிரிப்பைக் கண்டதும் அவனுக்கும் அதனால் ஒரு நம்பிக்கை மனத்திலேற்பட்டது. “சிரிக்கிறீர்? ஆனா ஒண்டும் உம்மட்டயிருந்து ஒழுங்கா பதிலைக் காணேல்ல? உம்மடை மனத்தில உள்ளத வெளிப்படையா சொன்னாத்தானே எனக்கும் நிம்மதியாயிருக்கும்?
"நான் சொல்லுறது.! நாங்க ஏழை! நீங்க நல்ல பெரிய வசதியாகவும் உள்ளவயள்! என்ர நில உங்களுக்கு வடிவாத் தெரியுந்தானே.?” “அதெல்லாம் நான் நல்லா அறிஞ்சுதான் இருக்கிறன் விசயா. அதையெல்லாம் நீர்தான் பெரிசா எடுத்துச் சொல்லுறீர்? ஆனா நானெண்டா நீர் சொன்ன உம்மட நிலபரத்த துப்பரவா நெச்சுக்கூடப் பாக்கேல்ல.? எனக்கு உம்மட குணம் பிடிச்சிருக்கு. நீர் நல்ல வடிவாயுமிருக்கிறீர்..! உண்மையும் தூய்மையும் அன்பும் உம்மட கண்ணில இருக்கிறத நான் பாக்கிறன்! அதுதான் உம்மட்ட இருந்து இப்ப நான் விரும்புறது! அதுக்குப் பிறகு வேற எனக்கு என்னவேணும்.?” - அவன் சொல்ல அவள் தலைகுனிந்துவிட்டாள். "நீர் எதுக்கும் அதிகமா யோசிக்கத்தேவையில்ல! என்ர அம்மா என்ர விருப்பத்த எப்பவுமே தட்டிவிடாமல் ஒத்துக் கொள்ளுவா.” அவன் திரும்பவும் வார்த்தைகளைத் தொடர அவள் தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். தன் ஈரவிழிகளால் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு "சமயமும் ஒரு பிரச்சினைதானே இதுக்குள்ள. அத உங்கட வீட்டில முக்கியப்படுத்தினா அதுகும் ஒரு பிரச்சினயா வரும்! அப்பிடி அங்கால இல்லாட்டியும் இங்கால எங்கட ஆக்களுக்கயாவது இதுபற்றி பிரச்சினையாகக் கதைச்சா என்ன செய்யிறது?” "நாங்க ரெண்டு பேரும் விரும்பினா இவயள் ஆரும் ஏதுஞ்சொல்லி எங்களத் தடுக்கிறதுக்கில்ல.? எனக்கு இப்ப தேவ உம்மட விருப்பம்தான். நீர் என்ன விரும்புரீரா? அதுதான் நான் அறிய வேண்டியிருக்கு.?” - அவன் இப்பொழுது வெளிப்படையாகவே அவளிடம் கேட்டான். “உங்களில விருப்பமில்லாமல் நான் இருக்கிறனா?” - அவள் வெட்கப்பட்டுச் சிரித்தாள். "அதென்ன இருக்கிறனா? எண்டு ஒரு கேள்வி. ஒரு முடிவும் தெரியாத பதிலா இருக்கு.?” . "உண்மையா ஒருத்தரில ஒருத்தி நேசம் வைச்சிட்டா பிறகு அதுக்கு முடிவே இருக்காதுதானே?" "அப்ப நீரும் என்ன விரும்புரீர் அப்பிடித்தானே?” “நான் வாயால சொல்லாம அத நீங்க கண்டு பிடிக்கேலாதா?" - தாமரையெனச் சிவந்த அவள் முகத்தில் வண்டாக மிதந்த கண்கள் அவனைப் பார்த்துப்படபடத்தன.
"எண்டாலும் ஆரும் வாயால சொல்லுற சொல்லில ஒரு சக்தி இருக்கு
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 179 O

Page 100
அதுதானே சத்தியம்! அன்புக்கு அதுதான் விதை! அதை என்ர மனதில நீர் உம்மட சொல்லால நட்டுத்தானே ஆகவேணும்.?” “ம். விருப்பம்தான்.!” - அவள் இணக்கமும் இசைவும் தெரிவிக்கும் இதமான குரலில் சொன்னாள். அவளது அந்த வார்த்தை சப்த சுத்தமாகியிருந்தது. “என்ன இது அரைகுறையாய் அத முழுசா வாயால சொன்னா என்ன..?” - "உங்களில எனக்கு உண்மையா விருப்பம்” - அவள் வாசல் நிலையை தன் கையால் தடவியபடி இதைச் சொல்லிவிட்டு ஒருக்களித்திருந்த அந்தக் கதவுக்குப் பின்னாலே தன்னை மறைத்து நின்றுவிட்டாள். "என்ன கதவுக்குள்ள மறஞ்சிட்டீர் இங்கால வெளியால வாரும் உம்மட முகத்தைப் பாப்பம்?” - அவன் கதவைப் பார்க்க அந்தக் கதவைப் பிடித்தபடி இருக்கும் அவள் கை விரல்கள் மாத்திரம் அவனது பார்வையில் இப்போதுபட்டது. அவனுக்கு ஏதோ ஒரு வேகம். அந்த வாங்கிலிருந்து எழுந்து அந்தக் கதவண்டையில் போனான். அவள் விரல்களின் அருகில் கையை வைத்து அந்த விரல்களின் மேலே தன்கையால் மெல்லத்தடவி ஏற்றினான். அப்படியே தன் விரல்களை அவள் விரல்களுக்குள் கோர்த்து மென்மையாகப் பிசைந்தான். அந்த ஸ்பரிசம் மென்மையாக இனிமையாக இருந்தது அவளுக்கு. அந்த உணர்ச்சியில் அவள் கதவிலிருந்து தன் கையைக் கீழேவிட, அவன் அப்படியே அவளது மென்மையான கையை தன் வெப்பமான கரத்தால் பிடித்தான். அவன் விரல்களில் அவள் கசங்க அவளது கை இனிய சுமையுடன் நடுங்கியது. அவளுடைய இரத்தநாளங்களிலே நெருப்புப் பாய்ந்தது. “விசயா நான் உம்ம என்ர உயிருக்கும் மேலா நேசிக்கிறன்.” - அவன் சொல்லும் போது அவனது மூச்சுக்காற்று அவளது முகமெல்லாம் பட்டது. அந்த மூச்சுக்காற்று அவளைப் பூமரத்தில் காற்றுப்பட்டமாதிரி சிலிர்க்க வைத்தது. "என்னக் கைவிட மாட்டியள்தானே.?" - அவனை ஊடறுக்கும் பார்வையில் அவனது அணைப்புக்குள் இருந்தவாறு அவள் கேட்டாள். அவளுக்கும் மூச்சுக் காற்றில் உஷ்ணம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அப்பிடியே மென் தழுவலாய் அவனைச் சுற்றிக் கொண்டாள் அவள். ஏன் அப்பிடியெல்லாம் நீர் சொல்லுறீர்? என்னில உமக்கு நம்பிக்கை இல்லையா விசயா?" - "என்ன இருந்தாலும் பொம்பிளையஸ் எண்டிருக்கிற எங்களுக்குப் பயம்தானே?” இதைச் சொல்லும்போது அவள் கண்கள் கலங்கி மங்கின. "அப்பிடி ஒண்டும் நீர்பயப்பிடாதயும் என்ன நம்பும்.” சொல்லிக்கொண்டு அவளை அவன் நெருக்கமாக அணைத்தான். அவனுடைய செயலுக்கு இணக்கமான எதிர்வினை தருவதாய் அவளும் இதமாய் அவனுடன் அணைந்தாள். அவளது ஈரம் உலராத கேசத்திலிருந்து எண்ணெய் வாசனையும் சோப்பும் சேர்ந்து படைத்த போதைதரும் நறுமணம் அவனது மூக்கில் நுழைந்தது. அவனது அணைப்பில் நெஞ்சில் கல்லிட்ட ஸ்தனங்கள் அவளுக்கு அமுங்கி விம்மின. வாணம் வெடித்து மத்தாப்புக் கொட்டியதுபோல் தலையுச்சிக்குள் அவளுக்கு இருந்தது. அவர்கள் இருவரது உணர்ச்சிகளும் கொதி நிலையில் இருந்த இந்த நேரம் அவர்கள் விடும் மூச்சுக்காற்றின் உஷ்ணமும் அதிகரித்துக்
്. ി. ട്രഞു O 180 O

கொண்டே வந்தது. மூச்சோடு மூச்சுக்கோர்த்து வாங்கும் மூச்சிறைப்பில் யார் மூச்சு யாருடையது என்பதாக அவர்களுக்குப் போய்விட்டது. அவள் அவனது முகத்துக்கு முன் தன் முகத்தைத் திருப்பாமல் வைத்திருந்தாள். அவனது அணைப்பின் சுகத்தில் அவிழ்முகைபோல் அவள் விழிகள் பாதியாகி இருந்தன. அந்தவேளை அவன் தன் முகத்தை அவளது முகத்துக்குக் கிட்டவாகக் கொண்டுபோனான். அவனது அரைக்கண் பார்வையில் அவள் அன்று காலை உரசிப் பூசிய மஞ்சள் தெரிந்தது. அப்படியே அவன் தன் உதடுகளை அவளது கன்னத்துக்குக்கிட்டவாகக் கொண்டு போகவும் திடீரென அவனது உஷ்ண மூச்சுக்காற்று தன் முகத்தில் உறைப்பதையும் பிறகு உதடுகள் அவளது முகம் உரசி முனகிக்கொண்டே தன் கன்னத்தில் உரசுவதையும் அவள் உணர்ந்தாள். அவனது உதடுகள் கோடிழுத்துச் சென்றது மாதிரிப்போய் அவளது உதடுகளில் பதிந்துவிட்டது. அவள் உணர்ச்சிவயப்பட்டு மெளனமாகி இப்போது அவனை ஆர்வத்துடன் அழுத்திப் பிடித்துக்கொண்டாள். அவள் இரு முலைகளும் அவன் நெஞ்சில் அழுத்திக் கொண்டன. அவளுடைய நரம்புகள் முடுக்கிவிடப்பட்ட வீணை நரம்புகளாக இருந்தன. அவனது ஒவ்வொரு ஸ்பரிசத்துக்கும் பதில் சொல்வதுபோல் அவள் உடம்பில் ஒரு துடிப்பு. ஒரு பூரிப்பு. ஒருலயம். அவளுக்கு பரபரப்பையும் உணர்ச்சியையும் எழுப்பிவிட்ட அவனில் தடுக்கமுடியாத ஆசை கிளர்ந்ழுெந்தது. அவன் சுவைத்தான் இதழ்களை மெதுவாக - மிருதுவாக - அவளுடைய இதழ்களும் நாக்கும் மாறிமாறி அவனது வாய்க்குள் சுவைபட்டது. அவளது உதடுகளை உறுஞ்சி இதழுக்குள் தனது நாக்கைச் சுழற்றி முத்தமிட்டு சத்தம் எழ அவளது நாக்கை நுங்குபோல கவ்விச் சுவைத்தான். அவள் கூசினாள். ஒ! இவள் எப்படிக் கூச்சமடைந்தாள் என்று அவன் நினைத்து அவள் கூசக் கூச அவளது கூச்சங்களை உதிரச் செய்தது அவன் அதிகமானான். அவளது உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக இளகி ஆச்சரியமான மிருதுத்தன்மை கொண்டதாய் மாறியது மாதிரி அவனுக்குத் தெரிந்தது. அந்த மிருதுத்தன்மையுடன் ஒரு மணமும் கூட அவளிடம் பிறகு ஏற்பட்டது. அந்த அவளது உடலின் நறுமணங்களை கண்டெடுக்க வேண்டும் என்ற அவாவிலே, அவன் விழைந்தான்.
இப்படிச் சில நிமிடங்கள் கழிந்தன. இந்த வேளையில் எல்லாமே ஒரு எல்லை கடந்ததாய்ப் போவதாக அவளுக்கு நெஞ்சில் பயம் வந்துவிட்டது. ஆனாலும் எந்த வார்த்தையைச் சொல்லி, அவனைத் தடுக்க விரும்பினாளோ அவைகள் அவளின் தொண்டையிலேயே நின்று விட்டன. என்றாலும் “வேண்டாம். வேண்டாம்.” என்று அவள்தன் உடலை அசைத்துக் கொண்டு அவனுக்கு முடியாத குரலொன்றில் கூறுவதுபோல அவனுக்கு இருந்தது என்றாலும் உணர்ச்சியின் கொதிநிலையில் இருந்து இன்னும் வசதியாக நிற்க அவள் அவ்விதம் அசைகிறாள் என்று அவன் தெளிவாய்க் கண்டான். அவளது மார்பின் மெத்தன்மையை அப்போதைய அவளது சிறிய அசைப்பினால் அவன் அநுபவித்தான். என்றாலும் அவளுக்குத் தெரியாத உலகத்துக்குள் அவளைக்கொண்டுபோக அவன்
வரழ்க்கையின் ரிறங்கள் O 18 O

Page 101
விரும்பவில்லை. அங்கே வெளியிலுள்ள வேலிப்படலை அப்போது கிறீச்சலுடன் அடைபட்டது. குசினியின் உள்ளேயும் பாத்திரங்கள் கிடுங்கின ஓசையும் வேறு கேட்டது அவளுக்கு “சத்தம் கேக்குது” - என்று ஒரு செல்லக்குழந்தையின் சிணுங்கலுடன் திடுமென அவனுக்குக் கூறியவாறு அவன் பிடியிலிருந்து தன்னைப் பிய்த்துக்கொண்டாள் அவள். "ஐயோ அங்க அப்பம்மா அதால குசினிப்பக்கம் வந்திட்டார்போல. இங்காலயும் ஆரோ தெரியா படலையைத்திறந்தமாதிரியிருக்கு, நான் அங்கால கெதியாப் போயிருறன்." - அவள் திகைப்புற்றுச் சொல்ல அதைக்கேட்டு அவன் நிலைதடுமாறி அப்படியே நிலைப்படியோரம் நின்றான். அவளுக்குப் பயத்தில் ஊர்ச்சத்தம் உலகச்சத்தமெல்லாம் அடங்கியது மாதிரி காதுக்குள் ‘ங். - என்று அடைந்தமாதிரி இருந்தது. நெஞ்சுதிடுக்கிட: அந்த இடத்திலிருந்து விறுவிறுவென்று நடந்து அவள் குசினிப்பக்கம் போய், வாசலில் நின்று அதற்குள்ளே எட்டிப் பார்த்தாள். அவள் நினைத்துப் பயந்து மாதிரி அங்கே அப்பம்மாவையும் காணவில்லை ஒருவரையும் காணவில்லை. ஆனாலும் அவளைக்கண்டு விட்ட பயத்தில், உள்ளே குசினிக்குள் இருந்து ‘பசபச' - வென்று உடலெடுத்த பூனையொன்று அவளது கண்பார்க்க அதுதன் கண் உருட்டி அவளைப் பார்த்துவிட்டு, அந்த வாசலால் வெளியே பாய்ந்தோடியது. அவள் அந்தப் பூனையைப் பார்த்துவிட்டு "அம்மா” என்று தன் நெஞ்சிலே ஒரு கையை வைத்துக்கொண்டு கண்களை நிம்மதியாக மூடினாள். அப்போ படலையைத் திறந்தவர்கள் யார்? - அவளுக்கு யோசனை போனது. இனியார்தான் வந்தாலென்ன? - என்று அவள் மனம் பிறகு ஆறுதலும் அடைந்தது. இப்போது மீண்டும் அன்ரனைப்போய் அதிலே பார்த்துக் கதைப்பதற்கு அவள் எண்ணினாள். அந்த எண்ணத்தில் மீண்டும் தான் வந்த உள் அறைக்குள்ளாலேபோய் மாலடிக்குப்போக அவள் நடந்தாள். ஆனாலும் நடந்து போகும்போது இடைநடுவிலே அவளுக்கு ஒரு யோசனை தட்டியது. அந்தப் படலைச் சத்தத்துடன் யாரோ ஒருவர் முற்றத்தடியால் இப்போது முன்னால் வந்துதான் இருப்பார் என்று அவள் எண்ணினாள். அப்பப்பா வெளிப்படலையைத் திறந்தால் பெட்டைச் சாரைமாதிரி விர்ரென்று விரைவாய் தன்நடையிலே வந்து விடுவார். அப்படி வருபவர் வழமைபோல் அந்த மால் வாசலால் ஏறி உள்ளே போய்த்தான் - திரும்பித்தன் அறைக்குள்ளும் போவார். ஆனாலும் இப்போ அன்ரன் அங்கே இருக்கும் காரணத்தால் அங்கேயே இருந்து, அவரும் அன்ரனோடு கதைத்துக் கொண்டிருக்கவும் கூடும். அதனால் இப்போ நான் என்ன செய்வது? எனக்கு ஒன்றுமே தெரியாத மாதிரியும் யாரையுமே இதுவரையில் நான் கண்டு கொள்ளாத மாதிரியும் இருந்துகொண்டு, அந்த மாலடி வெளி வாசலடிக்கு இந்த முற்றத்தைச் சுற்றி வெளியில் நடந்து நான் அங்கே போக வேண்டும். இப்பொழுதுதான் அங்கே முன்னமாய் வந்து நான் பார்த்த மாதிரியான ஒரு பார்வையில் மாலிலுள்ள அவர்களை நான் பார்க்கவேண்டும். இதெல்லாம் தேவையில்லை என்ற அளவில் அங்கெல்லாம் போகாமல் நான் இந்தக்
ඊ. ෆි, ෆර්ගvශváහගී O 182 O

குசினிக்குள்ளேயே இருந்து கொள்ளலாம். ஆனால் அங்கு நான் அன்ரனின் அணைப்பிலிருந்து என்னைப் பிய்த்துக்கொண்டு வந்ததில், அவர் என்னை என்னவும் நினைத்திருப்பாரோ? ஆரம்பத்திலேயே இப்படி ஒரு வெறுப்பை நான் அவருக்கு இதனால் உண்டாக்கிவிட்டேனோ? இது நான்விட்ட பெரிய தவறுபோல்தானே இருக்கிறது. இதை நிவர்த்திக்க இப்போதோ நான் அவரின் கண்காண அதிலே நின்று கொள்ள வேண்டும். என் கனிவான பார்வையை அவர்மேல் படரவிடவேண்டும். அதன் மூலம்தான் எனக்கும் அவருக்குமுள்ள இந்த உறவு இன்னும் தழைக்கும். என்னிடமுள்ள இந்த வாழ்க்கையே அவருடையே கைகளில்தானே தங்கி இருக்கிறது. அவர் என்னைப்பார்த்து மன ஆறுதலுடனும் நம்பிக்கையுடனும் இங்கிருந்து செல்வதற்கு நான் இப்போது நினைத்ததுதான் சிறந்தவழி.” என்று அவள் அப்படியெல்லாம் நினைக்க, அவளுக்கேயுரிய அந்தப்பேதை மனம் “போ போ நீ அங்கே! அவர் சீக்கிரமாய் அங்கிருந்து வெளியே சென்றுவிடப் போகிறார்” - என்று திரும்பத்திரும்ப அதை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. இதன்மூலம் அந்த எண்ணங்களால் ஏற்பட்ட மனச்சுமையைத் தாங்காது அவள் அவ்விடத்தேயிருந்து தன் நடைக்கு விரைவு கூட்டினாள். அவள் குசினி முற்றத்தால் வந்து திரும்பி மாலடிக்குக்கிட்டவாக வர அங்கு அதற்குள்ளே இருந்து வேறொரு குரல் அவளது காதுகளில் கேட்டது. “ஒருவருமில்லையெண்டா. இங்க அவயளெல்லாம் வீட்ட விட்டு வெளியால எங்கால போனவயள்?’ - அந்தக் கேள்வியை கேட்டவரின் குரலை வைத்து இன்னார்தான் அவர் என்று அவள் சரியாக அடையாளம் பிடித்து விட்டாள். "அவர் ஆருமில்லச் சாமியார்தான்!” என்று நன்றாக இப்போது அவளுக்கு விளங்கிவிட்டது. அந்தத் துணிச்சலுடன் அவள் மால் அருகிலே போய் தன்முகத்தை அங்கே காட்ட அன்ரன் அவளைப் பார்த்துச் சிரித்தான். இன்னும் அந்தக்கிறக்கம் இறங்காத கள்ளுற்றுக்களாகிய பாளைகள் போன்ற அவனது கண்களைப் பார்த்து அவளும் சற்றுமுன் அவனின் அணைப்பில் தனக்குக் கிடைத்த இன்பத்தை நினைத்துப் பார்த்துக்கொண்டாள். அந்தச் சம்பவம் மறு உயிர் பெற்று அவளுக்குத் தோன்றியது. அவனைத் தழுவியதில் கிடைத்த கணகணப்பு இன்னும் உடலிலிருந்து மறையாத மாதிரி அவளுக்கு இருந்தது. வாசலடியில் அவள் வந்து நிற்கவும் சாமியார் அவள் நின்ற பக்கம் தன் தலையைத் திருப்பிப் பார்த்தார். "பிள்ள நீர் அப்ப இங்கயாவே வீட்டில நிக்கிறீர்? ஆரையும் நான் இங்க காணாம நான் தம்பியிட்ட இங்க உள்ளவயள் எங்க போயிட்டினமெண்டு விசாரிச்சன். இவர் தம்பியும் இப்பத்தான் இங்க நான் அவரைப்பாக்கிற அளவில வீட்டயா வந்திருக்கிறார் போலக் கிடக்கு? - சாமியார் அப்படிச்சொல்ல அன்ரனுக்கு அவர் சொன்னதைக் கேட்டு உடனே ஒருமாதிரி முகம் மாறிவிட்டது. இதை விசயா அன்ரனின் முகத்தைப் பார்த்து தெரிந்துகொண்டுவிட்டாள். உடனே அவள் சாமியாருக்கு அந்தக் கதையை மேலும் அன்ரனிடம் வளர்க்கச் சந்தர்ப்பம் வைக்காமல் அவரைப்
பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தாள். இப்பொழுது தான் வேறு கதை
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 83 O

Page 102
ஒன்றை இதற்குள் கொண்டுவந்து விட்டால் அன்ரனைப்பார்த்து அவர் இன்னும் கேட்கவிருக்கும் தேவையற்ற கேள்விகள் அதனாலேயே விலகிப்போய்விடும் என்று நினைத்துவிட்டு: “என்ன ஐயா உதுகள்? கையில நொச்சி இலையும், வேப்பிலையும் சேத்து ஒருகட்டாக் கட்டிக் கொண்டந்திருக்கிறியள். ஆருக்கு உது தேவயெண்டு இங்க நீங்க கொண்டந்தனியள்.?” என்று அவர் கையில் வைத்துக்கொண்டிருந்த குழைக் கொத்தைப்பார்த்து விட்டு அதிலே அவரின் கவனத்தைத்திருப்பி விடுவதற்காக அவள் அவரைக் கேட்டாள். "இதையோ. இந்தக் குழையையோ கேக்கிறீர்? இதை என்னட்ட மருந்துக்குக் கேட்டவர் ஒருவர். அதான் முறிச்சுக் கொண்டந்தன்பிள்ளை. இந்த ரெண்டில ஒரு குழை வேப்பங்குழையெல்லேம்மா. இங்க உந்த வேம்புதான் உலகமெல்லாம் பாக்க நிக்குதே? அதுக்கெங்க இவ்விடமெல்லாம் தட்டுப்பாடு? அப்பிடியெல்லாம் இங்கால சொல்லுறதுக்கு எண்டு இல்லத்தான். ஆனாலும் என்னட்ட நொச்சிக்குழை கொண்டு வாங்கோ எண்டு கேட்டவருக்கு இந்த வேப்பிலையும் சேத்துக் கொண்டோய்க் குடுப்பம் எண்டு நான் இத அங்க மரத்தில முறிச்சுக் கட்டினனான். அவர் இதைக் கேட்டவர் வந்து எனக்கு வேண்டுப்பட்ட ஒரு ஆள்பிள்ள. முந்தநாள் அவர் என்ன றம்பக்குளத்துக்கட்டில போகக் கண்டிட்டு தான் விழுந்தடிச்சதில ஒரு உடம்பு நோவெண்டு எனக்கொரு வருத்தஞ் சொன்னார். இதை அவிச்சுக் குளிச்சா உடம்பு நோ பறந்திடுமெல்லே அம்மா." - "ஓம் ஓம் அதுசரி அப்ப உதை அவரிட்டக் குடுக்காம இங்கின கொண்டு வந்தது ஏன் ஐயா?” “இப்பிடியே இங்க கொஞ்சம் நிண்டு போட்டு ஆறி இனித்தான் அங்க அவரிட்டப்போக நான் வெளிக்கிடப் போறன்." "அப்ப நீங்க உதுக்க இனி இருந்து கொள்ளுங்கோ ஐயா. இப்போ இந்த நேரம் சரியா எங்கட அப்பப்பா வந்தாலும் வந்திடுவார்.” “நல்லோபிள்ளை நீ! நல்லா இருக்க வேணும்.!" அவர் சொல்லிய கையோடு சக்கப்பணிய அந்த நிலத்திலே இருந்துவிட்டார். அன்ரனுக்குப் பெருத்த நிம்மதி, மெல்ல அந்த வாங்கிலிருந்து எழுந்து அந்த மாலின் வாசலடிக்கு வந்து விட்டான். எப்போதைக்கு இதிலே இருந்து வெளியே நழுவிப் போவோமென்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு விசயா அவருடன் கதை கொடுத்துப் பராக்குக்காட்டிவிட்டது அவனுக்கு அது ஒரு நல்ல சந்தர்ப்பமாய் ஆகியது. அவன் வாசலால் கீழே இறங்கும்நேரம் "நான் வாறன் அப்ப சாமியார்.” என்று அவரைப் பார்த்துச் சொன்னான். அவன் இப்படி அவருக்குச் சொன்ன நேரம் அவர் நிலத்தில் இருந்தபடி வேறு ஏதோ அலுவலில் ஈடுபட்டிருப்பவர்போல அவனுக்குக் காணப்பட்டார். தலையைக் குனிந்தபடி தோளில் தொங்கிய கைப்பைக்குள்ளே தன் கையைப் போட்டு அவர் எதையோ தேடிக் கொண்டிருந்தார். என்றாலும் அன்ரனின் கதையைக் காதில் கேட்ட அரை நினைப்பில் “சரி. ஆ. வாரும் வாரும் தம்பி.” என்று அவனைப் பார்க்காமலேயே அதைச் சொல்லிவிட்டு தன்
ரீ.பி.அருளWணந்தம் O 184 O

கருமத்திலேதான் பிறகு அவர் கண்ணாகிவிட்டார். அன்ரன் அங்கே வாசலில் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த விசயாவைப் பார்த்தான். அவளின் மென்மையான கனிவான பார்வையைப் பார்த்துவிட்டு "நான் இனி வெளிக்கிடுறன்! ஐயா வந்தாப்பிறகு இங்க நான் பிறகு வாறன் விசயா.” என்று அவளைப் பார்த்து அவன் சொன்னான். வெளிப்படையா வாய்திறந்து வேறு ஒன்றும் பேச இயலாத அந்த இடத்தில் அன்ரனின் கண்பார்வை அவளுக்குப் பல கதைகள் சொல்லின. அவனது கண்கள் பேசும் மொழியைப் புரிந்து கொண்டதில் இவளது அகத்தின் வேரில் குளிர் நீர் பாய்ந்தது. அவன் அவ்விடம் இருந்து வெளிக்கிடும் நோக்கில் விசயாவைப் பார்த்து தலையை அசைவின்றி அசைத்துக்கொண்டான். அந்த முற்றத்தில் அவன் முன்னால் நடந்து கொண்டிருக்க சிறிது தூரம் இடைவெளிவிட்டு ஆவனுக்குப் பின்னால் விசயா நடந்து போனாள். அன்ரன் அந்தப் படலையைத் திறக்கும் நேரம் - அவன் கண்பார்வை தன்னிலே சிரமமின்றி விழக்கூடியதான இடத்திலே ஒரு பூஞ்செடியின் அருகே அவள் போய் நின்றாள். அவள் மனத்தில் நெருக்கமானவர்களின் மீது உருவாகும் மிகைப்படும் அன்பு ஒன்று அன்ரனின் மீது உருவாகிக் கொண்டிருந்தது. தனக்கு இனிமேல் அவர் சொந்தம் என்ற உரிமையை மனத்தில் வைத்துக்கொண்டு "இனி எப்பவா இங்க வருவியள் சொல்லிட்டுப் போங்கோ” என்று அந்தப் பூக்கிளையை தன்னிடம் இழுத்து வைத்துக்கொண்டு அவனிடம் இதை அவள் கேட்டாள். நாளைக்கு நாளையிண்டைக்கு அடுத்தநாள் எண்டுமாத்திரமில்ல இனி உம்மைப் பாக்க நான் நெடுகலும் தான் இங்கவருவன்! நீரும் எப்பிடியும் என்னோட இனிக்கதைக்கத்தான் வேணும்" "ஐயையோ அப்பப்பா அப்பம்மா எப்பவும் இங்க வீட்டில இருப்பினம்!” "அப்ப எப்பிடி நான் உம்மோட கதைக்கிறது?”
“இரவில ஆருக்கும் தெரியாம அசங்காம நான் இங்க வந்தா நீர் எழும்பி ராவில வெளிய வருவீரா? நான் வாறது எவருக்கும் - ஒரு குஞ்சு குருவிக்கும் தெரியாது" இயல்பான குரலைத் துறந்துவிட்டு அதி மென்மையான குரலில் இதை அவன் அவளிடத்தில் கேட்டான். அவள் கூந்தல் சுருள்களைக் குலுக்கினாள். "ஐயையோ செத்தன் நான். கொண்டுபோடுவினம் இங்க உள்ளவயள் எல்லாருஞ்சேந்து.” “அப்ப எப்பிடி நான் உம்ம சந்திக்க? எதுக்கும் ஒரு வழிய நீராச்சும் எனக்குச் சொல்லுமன்?” அப்படிக் கேட்டுக் கொண்டு தன் விரிந்த பார்வையை அவன் அவள்மேல் விதைத்தான். "அப்பிடிச் சந்திப்பெல்லாம் இப்போதைக்கு வேணாம். எனக்கு நீங்கள் இங்க வந்து போகேக்க உங்களைக் கண்ணால கண்டா மட்டும் காணும், எண்ட திருப்தியில இருக்கிறன். நீங்களும் என்ன மாதிரியே அப்பிடியாய் இருங்கோ? கொஞ்ச கொஞ்ச நாளைக்கு!” அவள் பேச்சைக் கேட்டு சிரித்துவிட்டு “அதுக்குப் பிறகு எப்பிடி?” என்று மேலும் கதையை வளர்த்தான். “நான் கதைச்சா இப்படியே விடாம என்னோட கதைச்சுக் கொண்டிருக்கத்தான் பாப்பீங்கள்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 185 O

Page 103
போலக்கிடக்கு. அங்கால சின்னம்மாவும் வீட்டில இருக்கிறா, அவவும் வெளியால வந்தொருக்கால் இங்காலிப் பக்கம் பாத்தாலும் பாப்பா. பேந்து ஏதும் மனசுக்க நெச்சாலும் நினைப்பா..?” “அவவுக்கும் சாடைமாடையா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்! நீர் அவவோட கதைக்கேக்க ஏதோ பிடிகொடுத்திட்டீர் போல.?” “சீச்சி அப்பிடி நான் ஒண்டுமே அவவுக்கு இவ்வளவு காலமாச் சொல்லேல்ல. அப்பிடி இருக்க அவவுக்கெப்பிடி இதெல்லாம் தெரியவந்திச்சு.?’ அவள் குரல் உள்ளடங்கிப் போயிற்று. “சரிசரி அதொரு பக்கம் கிடக்கட்டும். இங்க நீங்க என்ன இந்த இடத்த விட்டே போகமாட்டீங்க போல இருக்கு. அங்க அந்த மால் வாசலால இருந்து நீங்க வெளியில வெளிக்கிடேக்கிள்ள சாமியார் அதில இருக்கிறார் எண்டுபோட்டு என்னோட ஒரு சத்தமும் காட்டாமல் இங்காலயா வந்தியள். ஆனா இப்ப இதில வந்தாப்பிறகு நானும் உங்களுக்குப் பின்னால வர நல்லா இதில நிண்டு என்னோட கதைக்க வெளிக்கிட்டிட்டியள்.? இப்ப இந்த நேரம் அப்பப்பா கட்டாயம் வந்தாலும் வருவார்! நான் இதில இனி நிக்கேலாது. அங்கால போப்போறன்.!” “சரி ஏன் பதறுறிர்? என்னால உமக்கேன் ஒரு கஸ்டத்த. அப்ப நான் வாறன் விசயா? எப்பிடியும் நானைக்கு இங்காலிப்பக்கம் நான் வரத்தான் செய்வன்!” - அவன் அவ்விதம் சொல்ல அதை அவள் கேட்டபடி அவனை அணையாத விருப்பத்துடன் இமையசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். உதட்டில் உறைந்து படிந்த மெளனத்துடன் அவனைப் பார்த்துத் தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தாள் அவள். அன்ரன் படலைக்கு வெளியாலே வந்து அந்த வீதியிலே கால் வைத்தான். அந்தச் சந்தியாலே திரும்பி தன் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும் அவனைத் தன் கண்கள் பட்டுப்பூச்சிபோல் படபடக்க நெஞ்சம் அளவற்ற ஆனந்தத்தில் சிறகடிக்க அதிலே நின்றபடி அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அந்த வீதியால் தன் வீட்டுக்குப் போக நடந்து கொண்டிருந்த அன்ரனுக்கு கோயில் வளவுக்காட்டு மரக்கிளைகள் காற்றுக்கு உரசி உறுமும் சத்தம் கேட்டது. அவன் சற்றுமுன் தனக்கும் விசயாவுக்கும் இடையில் நடந்த அந்தச் சம்பவங்களை ஒரு முறை மனத்தில் நினைத்துப் பார்த்தான். விசயாவை தான் கட்டி அணைத்து முத்தமிட்டது எல்லாமே அந்தக் கணம் நடந்ததாயும் எந்தக் காலத்திலேயோ நடந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது. அவன் தன் உணர்ச்சிகளை புத்தி மண்டலத்துக்கு உயர்த்தி தன்னை சோதித்துப்பார்க்க வெளிக்கிட்டான். ஐயாவும் ஆச்சியும் இல்லாத ஒரு நேரத்திலே வலிய அவளிடம் போய் - அவள் என்னில் விருப்பப்பட்டாலும் - நான் அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டது இவ்வாறு நான் அந்தக் களங்கமற்ற பெண்ணை நிறைவேற்றம் பெறாமல் வதைத்த என் இச்சையினால் உணர்ச்சிக் குவியலாக்கிவிட்டது - எல்லாமே என் தவறுதானே? என்று அவன் இவ்வேளை நினைத்து மனம் நொந்து கொண்டான். அதிலே நான் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாத அளவுக்கு காமத்தின் கழுகு இறாஞ்சலுக்குள் அள்ளுப்பட்டுவிட்டேனோ? நான்
്. ി, SGM O 86 O

அவளைக் காதலித்தாலும் நிச்சயம் நான் அவளைத் திருமணம் செய்வதாய்க் கூட இருந்தாலும் இது ஒரு தவறு போல்தானே தோன்றுகிறது? இந்தக் குறும்புத்தனத்தின் மூலம் அவளுடைய கருத்தில் என்னைப் பற்றி ஏதாவது ஒரு குறை அவளிடம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ? - என்றெல்லாம் அவன் மனவிசாரப்பட்டான். இதனால் வேதனை வாய்ந்த ஒரு போராட்டம் அவன் மனத்துள் ஏற்பட்டது. அந்தக் குற்ற உணர்ச்சி ஒரு கம்பளிப் பூச்சியைப்போல அவன் உடம்பு முழுதும் படர்ந்து கொண்டிருந்தது. இந்த நினைவுகளோடு அவன் நடந்துகொண்டிருக்க அதாலே அவன் நெடுகலும் போக வரும்போது கண்டுகொண்டுபோகும் அந்தக் கொண்டல் மரம் அவன் கண்களின் பார்வைக்குப் பட்டது. வேறு பொழுதென்றால் அந்த மரத்தைப் பார்க்கும்போது: அது எப்போது சரஞ்சரமாகப் பொன் மலர்களை தொங்கவிட்டபடி பூப்பூத்தது? பூத்ததை உதிர்த்தது? காய்த்தது? என்றெல்லாம் அவன் மனத்தில் பெரிய ஆராய்ச்சி தொடங்கும். ஆனால், இவ்வேளை அவ்வாறில்லாமல் அவற்றையெல்லாம் மனத்தில் அடைத்து மூடிவிட்டு தனக்குள்ள அந்தச் சிந்தனையோடு மாத்திரம் அவ்வழியே அவன் நடந்து கொண்டிருந்தான். என்றாலும் அவனது சிந்தனைக்கு முற்றுப் புள்ளியை வைத்துவிடும் அளவுக்கு ஒரு காளை மாடு அந்தக் கொண்டல் மரத்தடி அளவுக்கு ஓடிவந்தது. அந்த மரீடு தரை மண்குத்தி வீசியது. அதைப் பார்த்துப்பயந்து போய் அவன்தன் நடையைத் துரிதப்படுத்தினான்.
பன்னிரண்டு
வவுனியாப்பிரதேசம் பூராகவும் அன்று விடியற்காலையில் கடும் மழைப்பொழிவு. அந்த மழை பெய்ததோடு பெருத்த காற்றும் அதனுடன் சேர்ந்து வீசி, மழைச் சரத்தை அறுத்தறுத்துப் பிணைத்தது. அவ்விடம் முழுமைக்கும் ஒரு மணி நேரமாய் மழை தன் குளுமையை இறைத்துப் போக, இயற்கைத் தேவி புனித ஸ்நானம் செய்த சுமங்கலிபோல காலையில் அழகாய்த் தோன்றினாள். அந்த மழை பெய்து நின்று விடிந்து வெகுநேரம் வரை சென்றபோதும்கூட, விசயாவினால் வீட்டு முற்றத்தைக் கூட்டிப்பெருக்கித் துப்பரவு செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான் கறுத்தமேகம் விழுங்கிய சூரியன் விடுபட்டு, அந்த முற்றத்தில் சிகப்பு ஒளி விழுந்து கொண்டிருந்தது. அவள் அந்த வெயில் நீளும் இடத்திலே போய் ஒளிக்கு முகம் கொடுத்து நின்றாள். அந்த ஒளிக்கற்றையின் முன்னே தன் கைகளையும் நீட்டிப் பார்த்து, மலர்போல் மலரும் இளமை தன் அங்கமெல்லாம் பொங்கி வழிவதைக் கண்டு அவள் பூரித்தாள். அந்த இடத்திலே சிறு உஷ்ணத்தோடு ஒரு போலிக் குளிரின் ஆனந்தம் அவளுக்கு உறைத்தது. மூளையில் தான் செய்ய
வரழ்க்கையின் சிறக்கஸ் O 87 O

Page 104
வேண்டிய வேலைகளைப் பற்றிய அந்த யோசனையும் அவளுக்குத் திரும்பியது.
"எருவை ரெண்டு தகரப்பட்டைகளால் இதிலே நின்று நான் அள்ளி அவயள அங்க எருக்கும்பலில கொண்டோய்ச் சேக்க வேணும். எதுக்கும் விடிஞ்சு இந்த மழ பெஞ்ச பிறகு எப்புடியோ நான் மாடுகளில ஒழுங்காப் பால் கறந்து, அந்தப் பெருத்த வேலய கடவுளேயெண்டு செய்து முடிச்சுப்போட்டன். இதுக்குமுதல் நாளாந்தம் என்ர வழமயப்போல வீட்டில உள்ள எல்லாருக்கும் காலேல நான்தானே கோப்பியும் போட்டுக் கொண்டோய்க் குடுக்கிறனான். சரவணனுக்கும் சாப்பாடு சரிக்கட்டிக் குடுத்து காலமயே அவனும் வெளிக்கிட்டு, மாடுகளைச் சாச்சுக் கொண்டு போட்டான். இனி எனக்குச் செய்ய வேண்டி இருக்கிறது இந்த மிச்ச வேலதான் எண்டு இருந்தாலும், இந்த வேலய இதுக்க நிண்டு செய்ய ஏலாம இதுக்க உள்ள ஈரநிலத்தில சாணியும் மூத்திரமுமாக் கலந்து சேறு குழம்பிக் கிடக்குதே?” - அருவருப்பினால் கீழ் உதடு அவளுக்கு முன்னால் நீண்டுவிட்டது. "சீ. அங்க கூளமும் சாணமும், மையம் குழிந்த மாட்டு மூத்திரத் தடங்கலுமாய் விரவிப் போய்க்கிடக்கு. நளுக்கெண்டு கால் புதையிற அதுக்குள்ள எப்பிடி ஒரு மனுஷர் போறது? வேணாம். இந்த வேலையள் ஒண்டும் இப்பத்தைக்கு வேணாம்! நிலம் நல்லா வெய்யிலில காயவிட்டு பின்னேரக் கைக்கு வந்து நான் பாத்துச் செய்வம்" - சூரிய ஒளி இப்போது அவள் உடம்பில் அக்கினியாய்ச் சுட்டது. "சூ. வம்மாடி இது என்ன நெருப்புக்க நிண்டது மாதிரி ஒரு வெக்க.? மழ பெய்தும் நிலத்தில அது இப்ப குளிராயில்ல.? சரியாக் கடுகடுவெண்டு உடன வெய்யிலேறுது..? - குசினிக்குப் போவோம்!” என்று நினைத்துவிட்டு அவள் அங்கிருந்து நடந்தாள். அதாலே நடந்துவரும்போது, இரவு பெய்த மழையில் நனைந்த அந்த மரங்களின் மோன மோகன எழிலைக் கவனித்தாள். எல்லா மரத்திலும் பார்க்க குறிப்பாக அந்த வேம்பிலேதான் அவளுக்குக் கவனமெல்லாம் பட்டாம் பூச்சியாய்ப் பறந்து போய் நின்று கொண்டது. அந்த வேப்பமரக் கிளைகளிலே உள்ள மொட்டவிழ்ந்த புதுப் பூக்கள், மழைநீரை இதழ்களில் வைத்துக் கொண்டு குலுகுலுத்திருந்தன. காற்று இளங்கொப்பு அசையாத அளவிலே வீசிவிட, ரெண்டொரு பழுத்தவிலைகள் அதிலே இருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. அந்த இடத்தைத் தாண்டியதும் அவள் கோழிகள் உள்ள கூட்டடிக்குப் போய், அங்குள்ள கோழிகளிலே அடைத்து வைக்கவேண்டிய முட்டை இடுகின்ற கோழிகளை உள்ளே ஒரு கூட்டுக்குள்விட்டு மூடிவிட்டு, மற்றவைகளையெல்லாம் வெளியே போகக் கதவால் திறந்துவிட்டாள். அந்தக் கோழிக் கூட்டின் கதவைத்திறந்து மூடும்போது, சரிந்து குலைந்துவிட்ட தன் கூந்தலை இரு கைகளாலும் பின்னால் சேர்த்துப் பிடித்து விரல்களை நுழைத்துக் கொண்டை போட்டுக் கொண்டபோது, அவளுக்குப் பெருமூச்சும் வந்தது. "இனிக் குசினி வேலதான் எனக்கு.” - என்று நினைத்துக்கொண்டு அவ்விடத்தால் அவள் அங்கே போய்ச் சேரவும், அப்பம்மாவுக்கு முற்றத்தைக் கூட்டிப் பெருக்காததைப் பற்றிய
ඊ.ජී. ථNගvගvණීහූ(z) O 188 O

விளக்கத்தைச் சொல்லிவிடவேண்டியதாய் அவளுக்கு ஆகிவிட்டது. அதற்காக குசினியடியில் அப்பம்மா வந்துநின்றதுகூட அவளுக்கும் அது பெரிய செளகரியம்தான். உடனே அந்த விஷயத்தைப் பற்றி அவரிடமும் கதைக்கக்கூடியதாக அவளுக்கு ஆகியது. "நல்லோரு மழ இண்டைக்கு விடியப்புறமா என்னப்பிள்ள..?” - என்று முதலில் ஆச்சி இவளிடம் கதையைத் தொடங்கினாள். "அங்க முத்தம் முழுக்க ஒரே சேறும் சகதியும்தான் அப்பம்மா. தகரப் பட்டயப் பிடிச்சால் அதுக்க சாணி சரியா உள்ள அள்ளுப்படுதில்ல, எல்லாம் நிலத்தில சாணி தண்ணியோட கரஞ்சும் கிடக்கு. அதுக்குள்ளபோய் எப்பிடி இப்பநான் நிண்டு கூட்டுறதும் வேறவேலயளநிண்டு பாக்கிறதும்.?” “சீ.ய். அதுக்க கை போட்டியோ சிரங்கு பிடிச்சிடும்.! இப்ப அதுக்க போய் நீ கை போடாத பிள்ள..?”
"ஓம் அப்பம்மா! அதுதான் அந்த ஒரு வேலய மட்டு நானே செய்யாம உடன நிப்பாட்டிப் போட்டன்.” “வெயில் இனி நல்லா வரவிட்டி நிலம் நல்லாக் காயப் பின்னேரமா அதப்பாக்கலாம் பிள்ள..?” "அப்பிடி இப்ப ஒரு நல்ல வெய்யிலும் வெள்ளனவே அடிக்குது, அத நீங்க பாக்கேல்லயே அப்பம்மா..?” “ஓம் பிள்ள நானும் வெளியால ஒருக்கா நிண்டுதான் அதையும் பாத்தன்! எங்கட வீட்டுக்கூரையால ஆவி போகுது உந்த வெய்யில் உறைப்பால. அங்க பாத்தியே? நீயும் வந்து ஒருக்காப்பாரன் வெளியால நிண்டுகொண்டு அதையும்.?” - ஆச்சி படிகளாலே இறங்கி வெளியாலே போய் நிற்க அவளும் வெளியாலே அவருக்குப் பின்னால் போய் நின்று அங்கே பார்த்தாள். கூரையின் மேல் ஆவி எழும்பிப் போகும் புதினம் இப்பொழுதும்தான் அங்கு நிகழ்ந்துகொண்டு இருந்தது. விசயா அதை ஆற அமர நின்று அதிலே பார்த்துக்கொண்டிருக்க, இராசம்மா ஆச்சி தன் பார்வையை அதிலிருந்து விடுவித்துக் கொண்டு போய் அங்கே வெளிப்படலையிலே அதைப் பிறகு நிலைக்க வைத்துவிட்டாள். "ஆர் அதில இப்ப வந்து கொண்டிருக்கினம் பிள்ள? உன்ர கொம்மா போலத்தான் பாக்கக் கிடக்கு? பாரன் அங்க நீயொருக்கா விசயா? அவவோட வாறது உன்ர தங்கச்சியும்தான் போல. ஒகோ அவயள் ரெண்டு பேரும்தான் சரியா வருகினம் இங்க.” - இராசம்மா ஆச்சி இதைச் சொல்லிவிட.” “என்ன இப்பிடிச் சோர்வான நடை அம்மாவுக்கு.?” - என்று விசயா படலையடியால் வரும் தன் தாயைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக்கொண்டு, இன்னும் உன்னிப்பாக மீண்டும் அவளைப் பார்த்தாள். “உதென்ன கொம்மாவுக்கு வயிறு உப்புடிக் கீழ இறங்கிப் போயிருக்கு.? எனக்கு உது அப்பவே தெரியும்.!” - ஆச்சி அப்பிடிச் சொல்ல. "அம்மாவுக்கு என்னவோ..?” - என்று நினைத்து உடலில் பாம்பு சுற்றிய பதைபதைப்போடு விசயா தவித்துப்போய் நின்றாள். அவளுக்கு நெஞ்சு உலர்ந்தது மாதிரிப் போய்விட்டது. “ஏன் அப்பிடி வித்தியாசமான ஒரு கதய அப்பம்மா சொல்ல வேணும். அப்பிடியெண்டால்..?” என்று அவள் அதைப்பற்றி சற்று மிகையாகவும் நினைப்பதற்கு முன்னால்.” இதென்ன பாவம்தான் இது? கொம்மா
வரழ்க்கையின் சிறக்கஸ் O 189 O

Page 105
பிள்ளத்தாச்சி போல சரியா இப்ப பாக்கக் கிடக்குப்பிள்ள. அதுதான் அதுதான்! அப்பிடித்தான் எனக்கிங்க நெஞ்சுக்க ஒரு மாதிரிக் கிடக்கு உதுகள நெக்கேக்க? அவனொரு அறிவில்லாதவன்! எங்கேயோ அந்த ஒடுகாலி போயிற்றானாம்? அங்க கிடந்து தின்னக்குடிக்க இல்லாத்தனத்தில என்ன செய்யுதுகளோ உதுகள்? எப்பிடித்தான் அங்க கிடந்து சீவிக்குதுகளோ? ஏன் இங்காலயா இந்தப் பக்கமே இவ்வளவுநாளா உந்தப் பிள்ள வரவே இல்ல? இந்த நேரத்தில இங்க வந்து எதையெண்டாலும் இந்தப் பிள்ள வாங்கிக் கொண்டு போகலாந்தானே? எனக்கு இதுகள கொஞ்சம் நினைச்சிட்டாலே சரியாத் தலையைச் சுத்துது. தலையைச் சுத்துது பார் பிள்ள?” - கமறிய குரலில் அப்பம்மா சொல்ல விசயாவுக்கும் கண் கலங்கிவிட்டது. இதற்குள்ளே அவர்கள் நின்று கொண்டிருந்த அந்த இடத்துக்கு புனிதமும்வந்து சேர்ந்து விட்டாள். அவர்கள் இருவரினதும் பார்வை தன்மேல் கூர்ந்து விழ அவளுக்கு ஆயிரம் பல்லிகள் தன் உடலிலே ஊர்வது போல இருந்தது. புனிதத்தின் சின்ன மகள் தாயை விட்டு விலகி வந்து தமக்கைக்கு அருகில் நின்றாள். தங்கை தன் அருகில் வரவும் விசயா அவளைப்பார்த்துவிட்டு சிரிக்கத்தான் நினைத்தாள். ஆனாலும் அவள் தன் தங்கையைப் பார்த்து சிரித்தாளென்றாலோ அதுதான் இல்லை. அவளுக்கு தாயின் உடல் நிலையைப் பார்த்ததில் எற்பட்ட அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. முகத்தசைகளெல்லாம் அவளுக்கு இறுகிப்போன மாதிரி இருந்தது. தன் வாயைத் திறந்துகொண்டு வாயாலே மூச்சுவிட்டபடி, தன் அம்மாவின் முகத்தை அவள் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். தாயின் அந்த வயிற்றைப் பார்க்க அவளுக்குக் கண்களில் கண்ணிர் முட்டியது. "மாமி.” - புனிதத்தின் வாய் மாமி என்று தன் மாமியாரை அழைத்தாலும் கண்கள் மகளைத்தான் கருணையோடு பார்த்தன. “அவள் ஏன் கண் கலங்குகிறாள்.?” - என்று அவள் கவனித்துவிட்டு "என்னை நீ மன்னிப்பாயா?” என்று அவளைப் பார்த்து இறைஞ்சுவது போல இருந்தது பிற்பாடு அந்தத் தாயின் பார்வை, “நீ பிள்ள ஒரு வார்த்த ஆரிட்டயும் சொல்லி அதுகள இங்க அனுப்பியிருக்கலாம்தானே? நான் இவன் சரவணனிட்டயாவது அதயிதக் குடுத்து பிறகு அங்கின உங்களுக்கு ஏதும் அனுப்பி விட்டிருப்பன்.?" இராசம்மா ஆச்சி மருமகளைப் பார்த்து பரிவோடு கூறினாள். “நெடுகலும் உங்களிட்டயே வந்து அதயிதத் தாங்கோவெண்டு எல்லாத்தையும் நான் கேட்டு வாங்கிக் கொண்டுபோய்க் கொண்டிருந்தா அவருக்கு எப்பிடி உள்ள வீட்டுப் பொறுப்பு வரும் மாமி.?” - தன்னிடம் உள்ள நியாயத்தை மாமிக்குச் சொல்ல வேண்டும் என்று புனிதம் மனதுக்குள் நினைத்துவிட்டு, இதை உடனே சொன்னாள். "அம்மாவுக்கு கண் கலங்கீற்றுதுதான்! நீங்கள் ஏனம்மா கவலப்படுறிங்க?” என்று விசயா நினைத்தவாறு தன் தாயைப் பார்த்துக் கொண்டு நின்றாள். “சரி பிள்ள இங்கபார்! நீயிப்ப பிள்ளத்தாச்சியாய் எல்லே இருக்கிறாய்? வாயும் வயிறுமா இருக்கிற நீ உன்னோட சேத்து வயித்துப் பிள்ளையயுமே பட்டினி போடுறது?” “ஏதோ கைய்க்குக் கிடைக்கிற அதயித வீட்டில
ரீ.பி. அருஸ்ணந்தம் O 90 O.

சமச்சுக்கிமைச்சு நான் தின்னுறந்தானே மாமி?” - புனிதம் எச்சிலை மிண்டு விழுங்கினாள். மகளுக்கு முன்னால் இதையெல்லாம் இப்பொழுது வெளிக்காட்டி தான் அழுதுவிடக்கூடாது என்றும், சற்றும் என் கண்களில் கண்ணிரும் வந்து அது வெளியே தெரியக்கூடாது. என்கிறது மாதிரி ஆனதுமான ஒரு நினைப்பில் தன் மனத்தை அவள் உணர்ச்சிகள் மேவாது கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். தன் மனத்துயரத்தை அவள் மாற்றிக் கொள்ள - ஒண்டும் நீ மன வருத்தப்படாமலிரு’ என்று தன்னைத்தானே அவள் அதிகாரம் பண்ணி வைத்தும் கொண்டாள்.
“அவனெங்க-யவன்? அவன் நெடுங்கேணிக்குப் போயிற்றானாம் நெடுங்கேணிக்கு? கேள்விப்பட்டன் நான் அப்பிடியே.?” “ஓ ஒம்மாமி அவர் ராத்தங்கி அங்க அவருக்குப் பழக்கமான அந்த ஆளோட புலிவேட்ட பாக்கப் போறனெண்டுதான் போனவர்.” “வாயும் வயிறுமா இருக்கிற உன்ன கொலப்பட்டியா இந்த நிலயில விட்டிட்டு அவனுக்கென்ன அங்க போயொரு கண்டறியாத வேட்ட.?” இராசம்மா ஆச்சியின் முகத்தில் கொதி கொப்பளித்தது. அதைப்பார்த்துவிட்டு புனிதம் தலையைக் குனிந்து கொண்டாள். கீழே நிலத்தைப் பார்த்தபடி உதடுகளை அசைத்தும், நாக்கைத் துருத்தியும், தன் அவஸ்தையை அவள் வெளியேற்ற முயன்றாள். விசயா தன் தாயைக் கண்ட நேரத்திலிருந்து வாயைத் திறந்து ஒரு கதை தானும் கதைக்க முடியாத நிலைபரத்தில் நின்றாள். அவள் உடலில் அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்த இரத்தம், இப்போது உருகியோடும் நெருப்பைப் போலக் கொதித்தது. அப்பம்மாவுக்கும் அம்மாவுக்கும் முன்னால் அவர்கள் இருவரும் நின்று கதைத்துக்கொள்ளும் கதையில், தான் அதற்குள்ளே குறுக்கிட்டு அவர்களிடம் எதைப்பற்றித்தான் ஒரு கேள்வியைக் கேட்பது? "அம்மாவின் இப்படியொரு உடல் நிலையை தெரிந்துகொள்ள மகள் நான் எப்படி இவ்விதத்தில் அவைகளை அவரோடு கதைத்து, பின்பு அவருடன் அன்பாக அணுகுவது.? என் தாய்க்கு சிறிதாகவேணும் ஒரு மன ஆறுதலை உண்டாக்க எப்படி நான் அவரோடு அந்தக் கதையை ஆரம்பிக்க வேண்டும் ? எப்படித்தான் இவையெல்லாவற்றையும் நான் நினைத்தாலும் அவரது கண்ணிரைத் துடைத்து கஷ்டத்தை நிவர்த்திக்க என்னால் என்னதான் செய்ய முடியும்? அப்படி என்ன ஒரு தகுதி எனக்கு இப்போது இங்கே இருக்கிறது?” என்று இதெல்லாவற்றையும் நினைக்க, அவளுக்கு மனத்தில் ஒரு பெருஞ்சுமை ஏறியதுபோல் கனத்தது. அவள் பழைய ஓவியத்தில் உள்ள பாவிப் பெண்போன்று சிந்தனையிலாழ்ந்தாள். "இனியென்ன பிள்ள இதில யோசிக்கக்கிடக்கு? இதெல்லாம் குடும்பம் வழிய எங்கயும் நடக்கிறதொரு விசயம்தானே? சரி பிள்ள இனி நீ போ இப்ப குசினியிக்க. இவ்வளவு தூரம் அங்கயிருந்து நடந்து களைச்சுப்போய் நீ வாறாய்? ஏதோ பசிக்குத் தாகத்துக்கு உன்ர மகள் தாறத வாங்கித்திண்டு குடி இவள் சின்னவளின்ர முகத்தப் பாக்க வாடிப்போன மாதிரியும் கிடக்கு. பிள்ள நீ விசயா இதில இன்னும் நிண்டு நீ இங்க ஆரிண்டயும் முகத்தைப் பாத்துக் கொண்டிராத? நீ என்ன பிள்ள இதில நிண்டுகொண்டு சரியா ஏதோ
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 9 O

Page 106
உனக்குள்ள யோசிக்கிறாய்? அப்பிடி என்ன ஒரு யோசன இப்பவும் உனக்கு? எப்பவும் நாங்கள் இப்பிடி நடக்கிறது எல்லாத்தையும் எங்களுக்கு நன்மைக்கெண்டுதான் யோசிக்க வேணும். சந்தோஷமாயில்லாம இதில உனக்கு என்ன துக்கம்? எல்லாம் கடவுளிண்ட செயல்! கடவுள் தாறதுதான் இதுகளெல்லாம் எங்களுக்குப்பிள்ள! இதுகளில எதுக்கும் எப்பவும் நாங்கள் கவலைப் படக் கூடாது! அம் மாவ நீ பத்திரமாகக் கூட்டிக்கொண்டுபோய் எல்லாத்தையும் அவவுக்கு எடுத்துக்குடு? உங்க ஐயாவும் அறிஞ்சிட்டா வேறெதையும் பாரார். நல்லா அவரும் உள்ளத கையில இருந்து குடுத்து விடத்தான் பாப்பார். சரிசரி இனிமேலும் மினக்கடாம எல்லாரும் நீங்க அங்காலயா குசினியிக்க போங்கோ? போவன் விசயா..?” இராசம்மா ஆச்சி தான் உலகனுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த ஒரு பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை என்று நினைக்கும் அளவுக்கு நல்ல விவரமாக இவைகளெல்லாவற்றையும் விசயாவுக்கும் அவளின் தாய்க்கும் கூறினாள். விசயா அதிலே இவ்வளவு நேரமாய் நின்று கொண்டிருந்தாலும் ஏதோ அதிலே தான் இல்லாதது மாதிரியான ஒரு உணர்வோடுதான் மலைத்துப்போனமாதிரி நின்றிருந்தாள். என்றாலும் இப்போது அப்பம்மா கூறிய ஆறுதல் வார்த்தைகளால் அவளுக்கு, பழைய உற்சாகம் வந்துவிட்டது. அந்தத்துன்பத்தையெல்லாம் மனத்திலிருந்து மறந்த அளவிலே, ஒரு புது மகிழ்ச்சி அவள் முகத்திலே தழைத்தெழுந்தது. அம்மாவிடமிருந்து தங்களுக்கு இனிக்கிடைக்கப் போவது தம்பியா? தங்கையா என்ற குதூகலத்துடன் அங்கே தனக்குப் பக்கத்திலே நின்றுகொண்டிருந்த தன் தங்கையின் கையை அவள் மெதுவாக தன் கையை நீட்டிப் பிடித்தாள். "வசந்தா எப்பிடியடி இருக்கிறாய்? பள்ளிக்கூடம் போறியா?” “ஓம் அக்கா.!” - வசந்தா தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த அக்காளின் கையை தன் மற்றக் கையாலே பிடித்துக்கொண்டு அவளைப்பார்த்தபடி சொன்னாள். அவளுக்கு அக்காவைக் கண்டது முதல் உற்சாகம், உல்லாசம், எல்லாமே முட்டி மோதி வந்தது மாதிரி என்னமோ ஆனந்தம், மனப்பூரிப்பு "என்ன ஓம்
எண்டு வாய்க்க சொல்லுறாய், அதிரப் பேசாத அமைதியான பெட்டயாயிட்டியா நீ? என்ன நீ கொஞ்சம் இப்ப நான் பாக்க வளந்திட்டாய் போலயிருக்கு? துருதுருவெண்டு இப்ப வண்ணாத்திப் பூச்சி மாதிரி இருக்கிறாய்?" - விசயா தாயைப் பார்த்தும் பார்க்காததுமாக இருந்து கொண்டு, தங்கைக்குக் கதை சொன்னாள். “விசயா இனியும் இதில நிக்காம நேரா நேரத்துக்கு எல்லாருமா உள்ள போயிருங்கோ பிள்ள? நான் கொஞ்சம் அந்த மரம் வழிய உள்ள பூப்புடுங்கிப்போய் சாமிப்படத்துக்கு வைச்சுக் கும்பிட்டிட்டு அதால பேந்து நான் குசினியடிக்கு வாறன்! புனிதம் போம்மா உள்ள முதலில உன்ர காலக் கழுவு உந்த வாளிக்க. உன்ர காலில இப்ப செருப்புமில்லப்போல கிடக்கு.?” . என்று சொல்லியபடி ஒரு பெருமூச்சையும் விட்டுவிட்டு இராசம்மா ஆச்சி அதிலே நிற்காமல் முற்றத்தடிக்குப் போக நடக்கத்தொடங்கிவிட்டாள். “என்னம்மா எங்கயும் வெளியால காலில செருப்புமில்லாமலே இப்ப
ඒ.ඡී. ථAගvගvණිගර් O 192 O

நீங்க திரியிறியள்?” - விசயாவின் குரல் தழுதழுத்தது. “ஓ - செருப்பு ஒரு சோடி நான் வாங்க வேணும்தான்! அதில்லாம அங்க வீட்ட இருந்து இங்க மட்டும் நடக்க நடக்க நடைவழியும் தீராத மாதிரித்தானிருக்கு! கோயில் குளம் பகுதி றோட்டெல்லாம் உனக்குத் தெரியும்தானே? கரடு தட்டிப்போன வண்டில் பாதையாவே கிடக்கும்! அதில கத்தி மாதிரி ஊசியாவும் கல்லுகள் நெடுகக் கிடக்கு அதுக்க பாத்து தெத்துக் குத்தாக் கிடந்த பருக்கக் கல்லொண்டு காலிலயும் வரேக்க எனக்கு சின்னதா வெட்டிப்போட்டுது.” “ஐச்சோ அம்மா! நீங்க எ-ன்-ன ஒரு குழந்தப் பிள்ள மாதிரியம்மா? ஒண்டுமே உங்களில எப்பவும் கவனமில்லாமத்தான் இருப்பீங்க? அங்கால அந்த முள்ளுக் காட்டுக்கயாக் கிடந்துகொண்டு காலில செருப்புமில்லாமலும் எங்கையும் வெளிய திரியிறதே?” தாயின் வயிற்றை சோர்வடைந்த தன் கண்ணால் பார்த்துக்கொண்டு விசனத்துடன் விசயா கேட்டாள். "நெடுகலும் இந்தக் கால் செருப்புகளப் புதுசு புதுசாய் எனக்கு வாங்கேலுமே பிள்ள? அதுக்கெண்டு எவ்வளவு காசு எனக்கு வேணும்? நான் வைச்சிருந்து காலில போட்டுத் திரிஞ்ச செருப்பு அற - அற அதுக்குப் பின்னக் குத்திக் - குத்திப் போட்டுக் கொண்டு இவ்வளவு நாளும் திரிஞ்சன். அதுவும் பிறகு ஒண்டுக்கும் உதவாத மாதிரி அறுந்து துலைஞ்சு போட்டுது. நான் இந்த என்ர கால சும்மா அப்பிடி இப்பிடி சரட்டிச் சரட்டி நடக்கிறதும் இந்தச் செருப்புத் தேயிறதுக்குக் காரணமாயிருந்திருக்கும் என்ன? கண்டறியாத உந்தச் செருப்புத்தான் எல்லாத்திலும்பாக்க எனக்கொரு குறை இப்ப.?” - சொல்லியபடி புனிதம் தன் விழிகளை மகள் மீது நாட்டினாள். இப்பொழுதுதான் தாயின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள் விசயா. வானத்திலும் பூமியிலுள்ள எல்லாவற்றையும் வெறுத்து, அவ் வெறுப்பிலே உயிர் வைத்திருப்பவள் அவள் என்பதை அவளது அந்தப் பார்வையில் இருந்து விசயா உணர்ந்து கொண்டு விட்டாள்.
"அம்மா எப்படிப் பூரண சூனியம் ஆனாள்.??”
"அம்மா காலில காயப்பட்டதெண்டீங்க காட்டுங்கோ பாப்பம்? ரெத்தம் கித்தம் வந்ததோ அதால?” “நீ அத விட்டிட்டுச் சும்மா கொஞ்சம் இரு?” அதைச் சொல்லிவிட்டு அவள் ஒரு வறட்டுச் சிரிப்புச் சிரித்தாள். தன்னுடைய இந்த உடலின் இரத்தத்தைப் பற்றியதான ஒரு பிரச்சினை அவளுக்குத்தானே அது தெரியும். சில நாட்களின் முன்பு அந்த முட்கம்பி காலில் கிழித்தபோது தன்னிடத்தில் ரத்தமோ ஈரமோ இல்லை என்கிறதை அவள் தன் கண்ணால் கண்டு உள்ள அந்த தன் நிலையை அவள் தெரிந்துகொண்டிருப்பவள்தானே? ஆனாலும் இதை தன் மகளிடம் சொல்லி அவளை ஏன் கவலைக்குள்ளாக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அவளுக்கு உள்ள கவலையெல்லாம் தன் உடல் பற்றியதானதாய் இப்பொழுதொன்றும் பெரிதாய் இல்லை. தன் வீட்டு வறுமையைப் பற்றிய அந்த நினைப்பும் அவ்வளவாக அவளுக்கு வரவில்லை. இந்நேரம் மகளைப் பற்றித்தான் அவளுக்குக் கடுமையான சிந்தனை, காலா காலத்தில் கல்யாணமாக வேண்டிய வயதுக்கு வந்துவிட்ட மகளல்லவா
იყkდგöიინსt&ak NoნეyšსნიN O 193 O

Page 107
அவளின் முன்னாலே நின்றுகொண்டிருக்கிறாள். "இவள ஆராவது ஒரு நல்லவன்ர கையில பிடிச்சக் கொடுக்கிறதுக்கு அவளுக்கெண்டு என்னத்தான் எங்கட கையளில நாங்க வைச்சிருக்கிறம்? அந்த ஒரு யோசனையுமேயில்லாத தாயும் தேப்பனுமாய் நாங்க ரெண்டுபேரும் இருக்கிறோமோ? அவர மட்டும் நான் எடுத்ததுக்கெல்லாம் வைச்சுக் குற கூறிக் கொண்டிருக்கிறன். ஆனா என்னட்டயுள்ள குற்றங்களும் குறயஞம் எனக்குத் தெரியேல்ல? எனக்கு உள்ள மதி எங்க போட்டுது? இப்பிடியெல்லாம் ஒரு கோலத்தில வந்து என்ர மேளுக்கு முன்னால நிண்டுகொண்டு ஒரு அறிவுமில்லாம ஒண்டும் நான் இன்னும் தெரியாத ஒரு ஆள் மாதிரி நிண்டு கதச்சுக் கொண்டிருக்கிறனே.? ஒரு பெரிய பொறுப்போட இருந்து வீட்டுக் கடமையள முதலில பாத்துச் செய்ய வேண்டிய ஒரு தாய்க்கு இதுதானோ ஒரு லட்சணம்.?” - எங்கயோ தட்டித்தட்டிப் போய் இன்னும் மேல எங்கேயே போகுது எனக்கு யோசன. என்று இதற்குள்ளே புனிதம் நினைத்துவிட்டாள். “வாளியில மாமி சொன்னமாதிரி இந்தக் காலக்கழுவிறன் நான் விசயா..?” - என்று அவள் அங்காலே வெளிக்கிட "அம்மா நானும்.” - என்று சின்னவளும் தண்ணீர் வாளிக்குப் பக்கத்தில் போனாள். "நீயிரடி பொறு அம்மா கழுவட்டும் முதலில.?” - என்று விசயா தாய்க்கு அதிலே கிடந்த சருவச் சட்டியால் அள்ளித்தண்ணீர் காலுக்கு ஊற்றி விட புனிதம் பிறகு வாளியைச் சரித்துத் தன் காலுக்குத்தானே தண்ணீரை ஊற்றி கால்களைக்கழுவிக் கொண்டாள். "அம்மா வெறுங்காலோட உதில நிக்க உங்களுக்குக் குளிர் ஏறப்போகுது. வீட்டுக்க இனிப்போவமம்மா..?” - புனிதம் விசயாவின் முகத்தைப் பார்த்துவிட்டு முன்னால் நடக்க, தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு அம்மாவிற்குப் பிறகாலே விசயா நடந்தாள்.
“என்ன என்ர கையப் போட்டு நடக்கேக்க இழுக்கிறாய்?” "அக்கா அக்கா விலிம்பிலிக்காய்..?” “சீச்சீ - அதென்ன கடும்புளி, இந்த மழக் குளிருக்க அது உனக்குக்கூடாது சளிப்பிடிக்கும் நெஞ்சில.?" "அப்பிடி ஒண்டுமில்ல அக்கா? நான் போய்ப் புடுங்கப் போறன்! நல்ல இனிப்பான மஞ்சள் பழமும் அதில தெரியுது?” “இல்ல வேணாம் என்ர சொல்வழியக்கேள்? நீ இப்ப என்னோட குசினிக்குப் போகவா? அங்க அம்மாவோடயும் நீ இருந்து ஏதும் குடிச்சுத் திண்டுபோட்டுத்தான் அங்கால பேந்து நீ எங்கயும் போறது?” - அவள் தங்கைக்கு இதைச் சொல்லிக் கொண்டு தனக்கு முன்னாலே நடந்துபோகும் தாயின் நடையைத்தான் நன்றாகக் கவனித்தாள். "அம்மா நடக்கிற நடைமுன்னுள்ளது போல அவவுக்கு சாதாரணமாக இல்லாமல் இந்த வயதில் இப்படி சுமை சுமந்து நடக்கவுமாய் வந்துவிட்டதே?” என்று அவளுக்கு மன இரக்கமாய் இருந்தது.
புனிதம் வீட்டுத் திண்ணைப் படியிலே போய் தன் காலை வைக்க முன்பு கிணற்றடிப் பாதைப்பக்கம் ஒருமுறை திரும்பிப்பார்த்தாள். "தங்கம்மா தங்கச்சியாளோ அங்க நிண்டுகொண்டு இங்கால பாக்கிறா.?” தாய் அவளைக் கேட்க விசயாவும் அவ்விடத்தே தானும் திரும்பிப் பார்த்தாள். “அவதான் சின்னம்மாதான் வெளிய நிண்டு உங்களப்
ඒ. ඊ. ථNගvගvෂ්නර් O 194 O

பாக்கிறா?’ - புனிதம் மகள் சொனதுக்கு ஏதும் உடனே பதில் சொல்லவில்லை. அவளுக்குத் தன் தங்கை முறையானவளின் கண் பார்வையிலிருந்து தப்பித்து, எங்காவது மறைவிடத்துக்குப் போய் ஒழிந்துவிடவேண்டும்போல் இருந்தது. காலில் பிடித்த ஈரமண்ணை திண்ணை வாசல் படியில் தட்டி உதறிவிட்டு, சாணியிலும் சாக்கடையிலும் புரட்டப்பட்டு நடந்துபோவது போன்ற ஒரு உணர்வோடு அவள் உள்ளே குசினி வாசலடியில் போய் உடனே நின்று விட்டாள். விசயா தான் படியேறும் போது திரும்பி சின்னம்மாவின் வீட்டுப்பக்கம் இப்பொழுதும் பார்த்தாள். அவர் இப்போது அங்கு இல்லை. அவள் திண்ணையில் ஏறிவிட்டு தாயைப் பார்த்து "அம்மா” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தாள். “வாங்களனம்மா குசினியிக்க உள்ள வந்து பலகயில இருங்கோ?” - அவள் தாய்க்குச் சொல்ல, புனிதம் குசினிக்குள்ளே வந்து குனிந்து நின்று அங்கே செத்தைக்குப் பக்கத்தில் கிடந்த பலகைக் கட்டை ஒன்றை சிரமப்பட்டுக் கைகளாலே அது நிலத்தோடு உராஞ்ச இழுத்தாள். “அம்மா அது சின்னப் பலகை. உதில இருந்தா வயிறு உங்களுக்குப் பேந்து முட்டு முட்டா இருக்கும்! ஆனா இதெண்டா உங்களுக்கு இருக்க உயரமான பலகை?” - அவள் தாயின் அருகில் அதை எடுத்து வைத்தாள். "அம்மா இப்பிடியிருங்கோ? - புனிதம் தன் மகளைப் பார்த்து இப்பொழுதுதான் சிரித்தாள். "நீ அதில அப்பிடி இருந்து கொள்ளு வசந்தா?” என்று தன் தங்கைக்குச் சொல்லிவிட்டு அம்மாவைப்பார்த்து தானும் மகிழ்ச்சியைக் காட்டச் சிரித்துக்கொள்டாள் விசயா. "அம்மா ஆறிப்போய் ஆடைபடிஞ்ச பால் கிடக்கு அதைச் சீனி போட்டுத்தரவே.? இல்லாட்டி இதை இப்பிடியே அடுப்பில வைச்சுச் சூடாக்கித் தரவே?” “ சாடையா சுடவைச்சுத்தான் தாம்மா அதுதான் குடிக்கவும் ஒரு மாதிரி வாய்க்கும் நல்லம்?” “அக்கா எனக்கெண்டா நல்லாச் சுடச்சுடத்தானக்கா?” “ஓம் உனக்கெண்டா நல்லாச் சுடச்சுடத்தான்!” - அவள் தங்கைக்குச் சொல்லிச் சிரித்துக்கொண்டு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்தாள்.
"இது நெருப்புத் தணலிலயே கிடக்கச் சூடாயிடுமம்மா. எண்டாலும் கெதியாக் கொதிக்க விறகு எரிக்கிறன்.” என்று தன் அம்மாவுக்குச் சொல்லிவிட்டு "ஏனம்மா நீங்க கன நாளா இங்காலிப்பக்கமே வரேல்ல.?” - என்று நெஞ்சில் உள்ள ஏக்கத்தோடு மீண்டும் அம்மாவைப் பார்த்து அவள் கேட்டாள். அவ்வண்ணம் அவள் கேட்டுவிட, புனிதத்தின் புருவத்தை கவலை உயர்த்தியது. "என்னம்மா நீங்க பாக்கிறதுக்கு ஓவெண்ட மாதிரியும் வாடிப்போனிங்க? ஏதும் வீட்ட இல்லாத நாளில பாத்து என்னட்டையா இங்க வாறனிங்க ஏன் இப்ப இங்கால வாறதையே நிப்பாட்டிட்டீங்க..? - அவளது அனுதாபப் பார்வை இதைக் கேட்கும்போது தாயினுள் ஊசிகளாகப் பாய்ந்தது. புனிதம் பெருமூச்சு விட்டாள். தாயின் பெருமூச்சைக் கண்டுவிட்டு விசயாவும் மெளனமாக இருந்தாள். அவளது தங்கையும் இருந்த பலகையிலிருந்து அப்படியே குனிந்தபடி தன் கால்களுக்கு நடுவே கைகளை நீட்டி கீழே நிலத்தைத் தொட்டு
ωριόδειοδιόδου δημνώδςή O 195 O

Page 108
வைத்துக்கொண்டிருந்தாள் மூவரும் சேர்ந்துகொண்டு இப்போது மெளனம் காத்தார்கள். காலிவண்டில்கள் கடகடவென்று வெளியே வீதியில் போய்க்கொண்டிருந்தன. அவைகளுக்குப் பின்னால் இரண்டு வைக்கோல் வண்டில்கள் வந்து கொண்டிருந்தன. வைக்கோல் மேல் நீட்டிப் படுத்துக்கொண்டு வைக்கோல் கட்டுக்கட்டி அதன்மேல் போட்டவர்கள் உரக்கப்பாடிக் கொண்டு போனார்கள், வீட்டு முற்றத்தில் சேவலால் துரத்தப்பட்டோடும் விடக்கோழிச் சத்தத்தைத் தவிர வேறொருசத்தம் இல்லை - கோயில் வளவு மரக்கிளைகளின் சந்திலே காற்று ஊளையிடும் சத்தம் சாதுவாய்க் கேட்டது. மரக்கொத்தி டொக் டொக் என்று கொத்துவது அந்த இடத்தில் - இடையில் ஏற்பட்ட நிசப்தத்திலே ஒரு இன்னிசையாகவும் இருந்தது. அவர்கள் மூவரிடத்தும் இன்னும் சில கணங்கள் அடர்த்தியான ஆழ்ந்துபோன மெளனம். இடையில் விசயாதான் அதை உடைத்தாள். "அப்பா இப்பவும் முன்னம் மாதிரியோ..? பழய மாதிரியே இப்பவும் அவர் குடிச்சுக்கொண்டு திரியிறாரோ.? அங்க நெடுங்கேணிக்குப் போனவரெண்டுகினம். உங்களுக்கு அதுக்கப்பிறகு ஏதும் வீட்டுக்கெண்டு அனுப்பினவரோ, என்னமாதிரி அவேற்ற பாடு இருக்கம்மா..? - முகம் வாடிய நிலையிலே கேட்டாள் அவள் "என்ர துக்கத்தையும் துன்பத்தையும் நான் ஆரிட்டப் போய்ச் சொல்லியழப் பிள்ள..? நான் பெருமூச்சு விட்டுவிட்டுநருக்கலடிச்சுப் போனதுதான் இவ்வளவு நாளும் நான் சீவியத்தில கண்ட பலன்.” கலங்கலான குரலில் இதைத் தன் மகளுக்குச் சொல்லிவிட்டு மேலே ஒன்றும் பேசாது அவள் மெளனமாக இருந்தாள். விசயா தாயின் கதையைக் கேட்டுக் கொண்டு தன் இருக்கையிலிருந்து உடலை இருபக்கவாட்டிற்கும் அசைத்துக் கொண்டாள். அவளுக்குத் தன் மனசுக்குள்ளே பொறுக்க முடியாதவாறு வேதனை அதிகப்பட்டது. உணர்ச்சியில் எதையோ கூறவேண்டுமென்று கூறமுனைந்து பாதி திறந்த வாய் அவளுக்குத் துடித்தது. "நீயேன் போட்டு உன்ர மனச அலட்டுறாய் பிள்ள? இது என்ர விதி எனக்கெண்டு இது தலயில எழுதிவிட்ட எழுத்து இதை எல்லாத்தையும் நான் என்ர சீவியம் மட்டும் சுமந்துதானே ஆகவேணும்?” - புனிதம் தன் மகளுக்கு எதைச் சொல்லவேண்டும் எதைத் தவிர்க்கவேண்டும் என்று தெரியாத ஒரு மனக் குழப்பத்தில் இருந்தாள். விசயாவின் மனநிலையும் தாயைப் போன்றதான ஒரு நிலைபரத்திலேதான் இருந்தது. அவர்கள் இருவரும் சுற்றிச் சுற்றி இந்த ஒரே பிரச்சினையைப் பற்றிய கதையைத்தான் மாறி மாறி தங்களுக்குள்ளே கதைத்துக் கொள்வதில் மனவேதனைப் பட்டுக்கொண்டிருந்தார்கள். விசயா அடுப்பு நெருப்பை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். “பால் பொங்குதெல்லே விசயா?” - என்று புனிதம் அதைப் பார்த்துவிட்டு விசயாவுக்கு உடனே சொன்னாள். " அட்டட்டட்ட. பூ. பூ. பூ.!” என்று கொதி நுரையில் வாய்க்காற்றை ஊதிவிட்டு பட்டென்று தன்பாவாடையில் பிடித்து அவள் கீழே அதை உடனே இறக்கி வைத்தாள். விசயா பிறகு அந்தப்பாலை ஒரு கோப்பையில் ஊற்றி அதை இன்னுமொரு வெறுங்கோப்பையை வைத்துச் கூடாற ஆற்றிக் கொண்டிருக்க, புனிதம்
iෂ්. ඊ. ෆර්‍ගvගvණිගඨ O 96 O

அவளைப் பார்த்துக் கொண்டு வீட்டு விவகாரங்களில் சிலதை அவளுக்குச் சொன்னாள். "பிள்ளையஸ் விசயா ஒரு நாள் அவர் குடிக்கத்தான் வெளியில போப்போறார் எண்டுற சாங்கத்தப்பாத்திட்டு அப்பிடியே அவற்ற கால கொடிப்பின்னலாவும் கட்டிக்கொண்டு அவர வெளிய விடாம பிடிச்சிருத்தியும் பாத்துதுகள். அவரெங்க அதையெல்லாம் யோசிக்கிறது? அவர் குடிச்சுப் பழகினவர் குடிக்கப் போகாம விடுவாரே?”
"அம்மா என்ன இருந்தாற்போல இந்தக் கதையை எனக்குச் சொல்லுறா?” என்கிற நினைப்பில் பாலை தான் ஆற்றிக் கொண்டிருந்தபடி அவள் அம்மாவின் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள் என் அம்மாவின் முகத்தைப் பார்த்து அதில் என்னத்தைத்தான் ஒன்றை நான் இப்போ கண்டுபிடிக்கத் தேடுகிறேன்; என்கிறமாதிரி தாயின் முகத்தைப் பார்த்தபோது அவளுக்கு எண்ணிடத்தோன்றியது. புனிதம் மகளின் பார்வையைச் சந்தித்தாள். தன்னைப் பார்த்தவாறு அவள் பாலை ஆற்றும் அந்த விதத்தை அவள் கவனித்தாள். அவளது கை நிதானம் தவறி பால் கீழே நிலத்தில் சிந்திவிட "கோப்பையைப் பாத்தாத்தான் பிள்ள பாலெல்லே நிலத்தில கீழ் ஊத்துப்படுது?” - என்றாள் அவள். "அக்கா பாலை நீங்க ஆத்தியே கீழ முழுக்க ஊத்தீடுவீங்கபோல பாக்கக் கிடக்கு? எனக்கு உந்தப் பால் ஆறினது காணும். நீங்க என்ர பங்க உந்தக் கோப்பையில இப்ப ஊத்தித் தாங்க..” என்றாள் வசந்தா, "இவள் இப்பிடித்தான் நொடுக்கு நொடுக்கெண்டு எப்பனும் சும்மா இராள்.?” “நீங்க சும்மா இருங்கம்மா? அக்கா நீங்க ஊத்துங்கோ அக்கா?” - விசயா அவளுக்குப் பாலை ஒரு கோப்பையில் ஊற்றி அதை அவளுக்கு முன்னால் வைத்தாள். "இவள எப்பிடியம்மா நீங்க வைச்சுச் சமாளிக்கிறீங்க?” - என்று சொல்லியவாறு விசயா தன் தங்கையின் கணிதுள்ளும் பசிய கண்களைப் பார்த்தாள். "இதுகள் ரெண்டும் வீட்டில இருந்து குதிக்கிற குதிப்பு? என்னைப் போட்டுப் படுத்திறபாடு?” - என்று சொல்லியவாறு "அப்பா எனக்கு இந்தக் கால் ரெண்டும் விறகு கட்டமாதிரி விறைச்சுப் போச்சு?” - என்று புனிதம் தன் கால்களை அகட்டி முன்னுக்கு நீட்டி வைத்தாள். "நல்லா விறைச்சிட்டாம்மா?” “இப்ப சரி இப்பிடி இருக்க நாரிப்பக்கம் உளைஞ்சு கொண்டு அதுவும் வலிதான்.!! "அப்ப இன்னொரு பலகைய அதுக்கு மேல இருக்க வைச்சுத்தரவேயம்மா?” - விசயா தான் இருந்த பலகையை முன்னால் குனிந்து கொண்டு ஒரு கையால் அதைப் பிடித்து வெளியில் இழுத்தாள். “வேணாம் வேணாம் பிள்ள இது காணும் எனக்கு நீ இருந்தமாதிரி அதில இரு. அதால இருந்து நல்ல ஊதுபத்தி வாசமும் இங்க இப்ப மணக்குது என்ன பிள்ள?” “அது அப்பம்மாதான் இப்ப சாமிப்படத்துக்கு பத்தி கொளுத்தி விட்டிருக்கிறா போல.” “முருகா.” கலங்கலான குரலில் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள் புனிதம். "இந்தாங்கோ நீங்க பாலக் குடியுங்கோ அம்மா?” புனிதம் விசயா கொடுத்த பால் கோப்பையை கையில் வாங்கிக் கொண்டாள். வசந்தா பாலை உறும் உறுமென்று உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தாள். "அம்மா என்ன மாதிரி.? இவயள் ஒழுங்கா ரெண்டுபேரும் அங்க பள்ளிக்கூடம்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 197 O

Page 109
போகினமோ..?” “ஏதோ வீட்டில் நான் சமைக்கிறதத்திண்டிட்டுப் போகுதுகள்தான்! ஆனாப் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காப் போட்டுப்போக இதுகளுக்கொரு நல்ல சட்டைவீட்டில இல்ல. அவள் சின்னவளுக்கு வங்கு வங்காய் உடம்பெல்லாம் ஒரு சொறி. அவளநான் பள்ளிக்கூடம் விடாம இப்ப மறிச்சு விட்டிருக்கிறன்.” " அப்ப அவளுக்கு மருந்து வாங்கிப் பூசி விடேல்லயோ?” “களிம்பு பிள்ள ஆசுப்பத்திரியில நான் கொண்டுபோய்க் காட்டக் குடுத்தவையள். அதைத்தான் இப்ப அவளுக்குப் பூசுப்படுது.” - அவள் அடுப்புப் புகைந்து கொள்ளத் தொடங்க உடனே விறகை வெளியே இழுத்து விட்டாள். “அதுதான் உங்களிட்ட நான் முதல் கேட்டன். அப்பா என்னவும் உங்கடவீட்டுச் செலவுக்கு, ஏதும்பாத்து அனுப்பினவரோ எண்டு?." - விசயா தன் முகத்திலடித்த புகையை கையால் விசிறிக் கலைத்துக் கொண்டு இதைக் கேட்டாள். "அங்க போனத்துக்குப்பிறகு ஒரேயொருக்கால் மாத்திரம் எங்களுக்குக் கொஞ்சம் பாத்து அனுப்பினதோட பிறகு ஒண்டையுமே காணேல்லப் பிள்ள? என்ன செய்யிறது? இந்தத்துாரம் இந்தப் பிள்ளையளாலதான் நான் இப்ப வெளிக்கிட வேண்டி வந்திருக்கு. நான் படுற கஷ்டம் பெரும் கஷ்டம். அதுக்க இந்தப் பெட்டையெண்டால நான் படுற பாடு. இவள் பள்ளிக்கூடம் போய் அங்க சோதினைக்கொரு சின்னக் குருத்தோலப் பெட்டிய இழைச்சுக் காட்டிப்போட்டு அதப் பேந்து இங்க வீட்ட கொண்டந்திட்டாள். அந்தப் பெட்டிக்குள்ள தனக்குப் புட்டும் போட்டு சீனியும் போட்டு அதுக்க வாழப்பழமும் வைச்சு நான் குழைச்சுத் தின்னுறதுக்குத் தாம்மா எண்டு கேட்டுக் கொண்டு இப்ப நெடுகலும் வள் அடம்பிடிச்சுக் கொண்டு நிக்கிறாள். அவள் சின்னவள் இவள் மாதிரியில்ல. இவள்தான் இப்பிடி. இவள் இவ்வளவு வளந்தும் இன்னும் இந்தக் குழந்தப் புத்தித்தனம்தான்! தன்ர வேலயத்தான் ஒழுங்காப் பாக்கிற வயசிலயும் இவள் எல்லாத்துக்கும் என்னப் போட்டுத்தான் வதைப்பாள். காலமயில கையில சீப்பை வைச்சுக் கொண்டு வழிய வழியத் தனக்கு தலைமயிரைச் சீவி விடுங்கோவெண்டு என்ன இவள் போட்டுக் கரைச்சல் படுத்துவாள். நான் நீயே உன்ர தலையை இழுத்து விட்டுக் கொண்டு போ எண்டா என்னப் பாத்து இவள் விறைப்பா ஒரு முழி முழிப்பாள். என்ர தலயே காஞ்சு புல்தரை மாதிரி இப்ப கிடக்கு, எண்ணெய் சீப்புப் பாத்து எத்தினை நாளாச்சு? என்னும் சிக்கெடுத்துச் சீவேல்ல எண்ட மாதிரி நான் என்ர வேலயையே செய்ய ஏலாமலிருக்க இதுகள் தாற வேதன? இப்ப முந்தி மாதிரி ஒடியாடி ஒரு வேல செய்ய எனக்கு உடம்பில பெலமிருக்கே? அப்பிடியான என்னப் போட்டு இதுகள் என்ன மாதிரியெல்லாம் இப்ப கரைச்சல்படுத்துதுகள்.” சொல்லி முடிக்கவும் பெருமூச்சு வந்தது அவளுக்கு. "முழியா முழிக்கிறதப் பார்? ஏன்ரி நீ அம்மாவைப் போட்டு இப்பிடி வருத்துறாய்?” - விசயா வசந்தாவைப் பார்த்துக் கேட்டாள். அவள் பால் குடித்து முடிந்த அந்த வெறுங்கோப்பையை கையில் வைத்திருந்தபடி கணத்துக்கு ஒரு கோணலாக உடம்பை வளைத்துக் கொண்டு பேசாமல் இருந்தாள். "அம்மா
ff.4%. ෆණ්vගvණිගඨ O 198 O

நீங்கதான் இவளுக்கு இளக்காரம் குடுத்து நடக்கிறியள்? அதுதான் அவள் இப்பிடிச் செல்லம் விடுறாள்?” - விசயா வசந்தாவைப் பார்த்துக்கொண்டு தன் அம்மாவுக்கு இதைச் சொன்னாள். "டியேய் வசந்தா என்ன தலையக் குனிஞ்சபடி நீ இருக்கிறாய்? வீட்டில உள்ள வேலயள விரலாலும் தொடுறதில்லையாம் நீ? என்ன நீ செண்டம் விடுறாய்? செல்லம் பொழியிறாய்? இது உனக்கடுக்காது கண்டியோ? அம்மா வருத்தக்காறிக்கு நீ இப்பிடியே செய்யிறது? நீயெல்லே வீட்டயிருந்து அவவுக்கு இப்ப முழு உதவியும் செய்து குடுக்கவேணும்? நீ இப்ப வளந்த பிள்ளையெல்லே. அம்மா சொல்லுறதையும் எப்பன் நீ கேட்டு நடவன்? இப்பிடி நீ ஏன் அம்மாவின்ர சொல்வழி கேக்காம நடக்கிறாய்? ஆனா ஒண்டு வசந்தா, இப்பிடி இனிமே நீ திரும்பவும் திரும்பவும் குழப்படி செய்தியெண்டா நல்ல முதுகுப் பூசைதான் நான் உனக்குப் போடுவன். அத நீ நெச்சிக்கொள்?”
அவள் தலையை நிமிர்த்தி அக்காவைப் பார்த்தாள். அவளின்ரெட்டைவால் சடை அசைந்தது. "அக்கா நான் ஒண்டும் அம்மாவுக்கு அப்பிடியெல்லாம் கரைச்சல் குடுக்கிறது இல்லையக்கா? இங்க வந்தாப்பிறகு அக்காவுக்கு என்னைப்பற்றி நீங்க என்னென்னம்மா எல்லாம் சொல்றீங்க?” அடித்தொப்புளிலிருந்து அவள் கத்தினாள். “சரி சரி போப்போ கத்தாத இதில இருந்து கொண்டு சனியன்! விலிம்பிலிப்பழம் வேணுமெண்டாய் போய் அங்க நிண்டு ஆஞ்சு தின் போ?” என்று விசயா அவளைக் கலைத்தாள். இதுதான் சந்தர்ப்பமென்று வசந்தா உடனே குசினியிலிருந்து வெளியாலே ஒடி விட்டாள். கடலை மூக்கை தரையில் தட்டி விரிசல் உண்டாக்கும் சத்தத்தில் ஒரு பூச்சி அந்தக் குசினிச் செத்தைக்குள் இருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. தங்கை வெளியே போன பின்பு தனக்கும் தாய்க்கும் உள்ள அந்தத் தனிமையில் விசயாவுக்கு விபரீத நினைப்புகள் மூளையைத் தின்னும் புழுப்போல மொய்த்தன. அவள் தாயைக் கூர்ந்தும் பராக்காகவும் கவனித்தாள். இம்சித்துக் கொண்டிருந்த அந்தப் பூச்சியின் ஒசை தலையிலே கிர்ரென்று அவளுக்கு ஏறியது. "அம்மா இப்பிடியெல்லாமுள்ள இந்த எங்கட கஷ்டத்துக்குள்ள அப்பாவுக்கென்னம்மா ஒரு அறிவுமில்லையா? அவர் குடிக்கிறதும் வீட்டப்பாக்காம சும்மா திரியிறதும்தான் உங்களுக்குக் கஷ்டமெண்டு பாத்தா, அதவிட இப்பிடிப் பெரிய ஒரு பிரச்சினையையும் தானே இப்ப உங்களுக்குக் கொண்டந்திட்டார்?" - மகள் அப்படிக் கேட்க புனிதம் நத்தையாய்ச் சுருண்டாள். அவளுக்குத் திடீரென்று அழுகை வந்து முட்டியது. விழி அவளுக்கு மெளனம் ஆகி மூடிக்கொண்டது. “எனக்கெல்லாம் இது சனிச்சது முதலில தெரியேல்லப் பிள்ள! துடக்கு கலங்கல்பட்டுக் கொண்டு கிடந்ததால அது ஒண்டும் அப்ப எனக்கு விளங்கேல்ல. ஒரு நிதானமும் எனக்கு அதால பிடிபடேல்ல. அப்ப துடக்கு எனக்கு தன்னோட்டமாய்ப் போய்க்கொண்டிருக்க எனக்கு நிக்கிற வயசுக்கு அப்பிடிப் போகுதெண்டு நான் நினைச்சன். எனக்கு இதில சந்தியமாப்பிள்ள ஒண்டும் தெரியேல்ல. பிறகுதான் உப்புடியா எனக்கு
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 199 O

Page 110
வந்திட்டெண்டு எனக்குத் தெரிஞ்சுது உந்த ஆள். உந்த ஆள்." அவள் விம்மினாள். "அவற்றை சுபாவத்தில அவர் தன்ர ஆட்டத்த ஆடி முடிச்சுப் போட்டுப்போயிட்டார். எனக்குத்தான் இப்பிடியாச்சு! எல்லாரும் நிமிண்டி நிமிண்டி என்ன என்ன? எண்டு என்னக் கேக்குதுகள்? எவ்வளவு கிலிசகேடு எனக்கு? றாங்கியா நான் வீட்டயிருந்து தின்னுற நிலபரமெண்டாலும் பறவாயில்ல? நான் அப்புடியே இருக்கிறன்? அப்பிடியே அவர் என்னை வைச்சிருக்கிறார்? அங்க வீட்ட ஒரு பொட்டுப் பொடிச்சாமான் கூட இல்ல. அதால ஆரிட்டயும் போய் ஒரு கொத்து அரிசியைக்கடன் வாங்கினாலும் அதத் திருப்பிக் குடுக்க இண்டைக்குப் பின்னைக்கு எண்டு நான் போக்குச் சொல்ல வேண்டியிருக்கு. எங்களுக்கு வர வரக் கஷ்டம் கூடிக்கொண்டுதான் போகுது. அங்க ஊருக்குள்ள உள்ள சனம் நித்திர கொள்ளுற நேரம், உலைவைச்சு ஆக்கி அவுக்கவுக்கெண்டு வாயில போட்டு விழுங்கிப்போட்டும் இப்ப நாங்க இரவில படுக்கிறம்! வேற என்னதான் நாங்க செய்யிறது? இதுக்குள்ள நீயும் தம்பியும் அங்க இருந்தா எவ்வளவு கஸ்டம் பார்? நல்லகாலம் நீயும் அவனுமாயிங்க வந்தது. அல்லாட்டி நீங்களும் அங்க எங்களோட சேந்து பட்டினிதான்! இவள் வசந்தாவும் இப்ப"திமுதி”வெண்டு இருக்கிறாள். இண்டைக்கு நாளைக்கோ எண்டு தெரியேல்ல. நான் ஆஸ்பத்திரிக்குப் போய் ஆச்சுப் போச்செண்டு கிடந்திட்டா அந்தப் பிள்ளையும் அந்த நேரம் பெரிசாயிட்டா என்ன நான் செய்யிறது? இந்த எல்லா வேதனையையும் வாதனையையும் என்னால பொறுக்கவே முடியேல்ல?” - புனிதம் சொல்லிவிட்டு ஈரமாய் இருமினாள். அவள் மனத்தில் ஆறுதலடைய மறுத்த தீக்கணு எரிந்து கொண்டிருந்தது. விசயா சொட்டு நீர் சுமந்த விழிச்சுடரோடு தன் அம்மாவைப் பார்த்தாள். அவளுக்குத் தாயின் துயரம் பிசின்போல ஒட்டிக்கொண்டது. அவள் கண் முடிகளின் கருமுடிகளிலும் கண்ணிர் பளிச்சிட்டது. "அம்மா. அம்மா. (உங்களை எத்தனை தரம் அழைத்தாலும் எனக்கு வாய் அலுக்காது) நீங்க கவலப்படாதயுங்கோ அம்மா." என்று சொல்லிவிட்டு அவள் ஒரு கணம் மெளனத்திலாழ்ந்தாள். அவளது சிந்தனைப்படகு ஒரேயொரு எண்ணத்தைத் தாங்கிப் பாய்விரித்துச் சென்றது. "என்னவோ எங்கள ஒருக்காலும் அந்தக் கடவுள் கைவிடமாட்டாரம்மா?” என்று தான் இப்போது நினைத்து முடிவெடுத்தத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு தாய்க்கு தைச் சொன்னாள். “நானும் எதையோ தேவையில்லாமல் எல்லாம் உங்களைக் கேள்வி கேட்டுக் கேட்டு சரியா மனவருத்தப்படுத்திட்டன். இனி நீங்க ஒண்டுக்கும் யோயிச்சு மனவருத்தப்படாதயுங்கோ. உங்களுக்கெண்டு நான் வச்சிருக்கிற காசையம்மா இப்பநான் உங்களுக்குத் தந்துவிடுறன். அதானால் என்ர காசு கூட இல்ல. அது சரவணன் என்னட்ட கொண்டந்து தாற காசம்மா?” “சரவணனுக்கு எங்காலயம்மா விசயா காசு?” அவளுக்கு ஆச்சரியத்தில் சொல் நின்றுவிட்டது. “அது அவன் விளாங்காய் வித்து எனக்குக் கொண்டுவந்து தந்த காசு அம்மா..” “விளாங்காய் வித்தவனோ பிள்ள..?” "ஒமோம்
சீ.பி. அருஸ்ணந்தம் O 200 O

குளத்துப்பக்கம் ஒவ்வொரு நாளும் போறவனெல்லேயம்மா. அங்கே போகேக்க விளாங்காய் பிடுங்கிப் பிடுங்கி கொண்டோய்த்தான் பெட்டிக்கடைவழிய வித்தவன் அவன்.” "ஐயோ இது இங்க மாமாவுக்குத் தெரியுமே பிள்ள..?’ புனிதம் பெரிய மூச்சிழுத்தலுடன் கேட்டாள். "இல்லையில்ல அவருக்குத் தெரியாது. இவ அப்பம்மாவுக்கும் இது தெரியாது. இப்ப மொத்தம் ஐம்பது ரூவாக்காசு அவன் என்னட்டத்தந்து சேத்து வைச்சுக்கிடக்கு உண்டியலில. அத நான் ஆருக்கும் தெரியாம வைச்சிருக்கிறன் பெட்டிக்க.” - அவள் நம்பிக்கைதரும் உறுதியான குரலில் சொன்னாள். "என்னம்மா நீ சொல்லுறாய்? இப்பிடியொரு பெரிய தொகையை அவன் சேத்தானோ?” - அவள் சரீரம் சிலிர்த்துப் போனாள். "எல்லாம் எனக்கு ஒரு சங்கிலி கழுத்துக்குப் போட வாங்கித் தரவேணுமெண்டுதான் தம்பி இந்தக் காசச் சேத்தவன் அம்மா." "ஐயோ அப்பிடியெண்டால் பாவம்! அது வேண்டாம் பிள்ள எனக்கு? நீயே அத வைச்சு அவன் சொல்லுற மாதிரி ஒரு சங்கிலியச் செய்து கழுத்தில போடு அவன் பாவம் கறுமம்! அவனுக்கு அவ்வளவு வீட்டுப் பொறுப்புத் தெரியுது! ஆனா அவர் அப்பருக்கு இப்பவும் என்னதான் விளங்குது? அந்தப்பிள்ள மயிலிறகு சேத்து வைக்கிற வயசில இந்தப் பொறுப்போட காசச் சேக்குது இந்தளவு வயசு செண்டும் அந்த மனுசனுக்கு எங்க இது மாதிரி நல்ல அறிவு வந்தது?" புனிதத்தின் மனம் குதிரைப்பந்தயம் செய்து கவலையை வரவழைத்துக் கொண்டது. அவளது அடி வயிற்றிலிருந்து பெருமூச்சுப் பீறிட்டதோடு அனுதாபப் பார்வையும் ஊசிகளாக விசயாவினுள் பாய்ந்தது.
விசயா பலகையிலிருந்து எழுந்தாள். "நீங்க உப்புடி உதில இருந்து கொள்ளுங்கோ அம்மா. இப்பவே நான் போனமாதிரியாவே உடன திரும்பியும் இங்க வந்திடுறன்.” - என்று தாய்க்குச் சொல்லிவிட்டு தன் அறைக்குள்ளே அவள் போனாள். அப்பம்மா அங்கே குசினிக்கு வர முதல் அந்த உண்டியலை எடுத்துக்கொண்டுபோய் அப்படியே அதைத் தன் தாயிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற அவதி அவளுக்கு இருந்தது. அவள் தன் அறைக்குள் போனவுடன் தன் உடுப்புப் பெட்டியைத் திறந்தாள். தன் ஆசைகள் எல்லாவற்றையும் ஏறக் கட்டிவிட்டு அந்த உண்டியலை எடுத்துக்கொண்டு அவள் உடனே குசினிக்கு வந்து விட்டாள். "அம்மா அம்மா இந்தாங்கம்மா கெதியா இத நீங்க கையில வாங்கீட்டு, உடன நான் தாற ஒரு பையிக்க இத மறைச்சு வைச்சுக் கொள்ளுங்கோ. ஒருவருக்கும் இதப்பற்றி இங்க நீங்க மூச்சுவிடவேணாம். ஆருக்கும் இது தெரியப்பிடாது. உவள் வசந்தாவுக்கும்தான் அம்மா! அதுதான் நான் இப்பிடி சூட்சுமமாச் சொல்லுறன். இனி இதில அப்பம்மா கட்டாயம் இப்ப வந்திடுவா. இதக் கவனமா நீங்க மறைச்சு வைச்சிருங்கோ.?" - புனிதத்தின் கை அவள் அப்படிச் சொல்லவும் தான் உடனே அதை வாங்கிக் கொண்டது. "அம்மா நீங்க இனி யோசியாம இதில உள்ள காச எடுத்து என்னவும் நல்லசாப்பாடுகளா சாமானா வாங்கி சமைச்சுச் சாப்பிடுங்கம்மா?” “பிள்ள எனக்குச் சில்லறைக் கடனுமிருக்கு அதைக்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 201 O

Page 111
கேட்டுக் கேட்டு என்னயதுகள் கும்மிப் பிழிஞ்சு போடுதுகள். அதால ஊனுறக்கமில்லாம சரியானயோசனயாயிருக்கு எனக்கு! அவளயஸ் பேசவும் ஏசவும் நானென்ன அவயஞக்குக் கீழ்த்தரமான ஆளோ? ஆனாலும் கைநீட்டி அதுகளிட்ட வாங்கினதால நான் குண்டியும் வாயும் பொத்திக்கொண்டிருக்கிறன். அதால எப்பிடிப் போனாலும் சரி, முதல் அந்தக் கடன நான் குடுத்துத் துலைச்சிடுறன் பிள்ள, அந்தச் சவத்தக் குடுத்துத் தள்ளிட்டனெண்டா நான் பேந்து நிம்மதியாயிருப்பன்.”
“உங்கட யோசினைக்கு இத வைச்சு என்னத்தையும் நீங்க செய்து கொள்ளுங்கோ. எப்பிடியும் இப்ப அப்பம்மாவும் உங்களுக்கு ஏதும் இங்க காசக் கீசத் தரத்தான் பாப்பா. அதோட ஏதும் சாப்பாட்டுச் சாமான்களும் கட்டாயம் தந்துதான் போகவிடுவா.” - அவள் தாய்க்கு இதை இரகசியமாகச் சொல்லிவிட்டு சுறுசுறுப்புடன் அவ்விடமெல்லாம் தான் தேடி ஒரு பையை அங்கே எடுத்து அவரிடம் கொடுத்தாள். உண்டியலைப் புனிதம் அந்தப்பைக்குள் வைத்துக்கொள்ள, அந்தப்பையை அவரிடத்திலிருந்து தான் பிறகு கையில் வாங்கி அந்தப் பையை சுருட்டி எடுத்து அதைத் தன் தாய் இருந்து கொண்டிருந்த பலகைக்கு அருகிலே அவள் அதை வைத்துவிட்டாள். "அம்மா நான் ஒண்டு சொல்லுறன் உங்களுக்கு? இதெல்லாம் அப்பாவுக்கு கடைசிவரையும் தெரியப்பிடாது. அப்பிடி அவருக்குத் தெரிஞ்சு வீட்ட உள்ளதுகளையும் அவர் தனக்குக் குடிக்கக் காசு தட்டுப்பட்டா, வழிச்சுத் துடைச்சு எடுத்துக்கொண்டு போகத்தான் பாப்பார். இது பிறகு இங்க உள்ள இவயளுக்குத் தெரிஞ்சா பேந்து அப்பப்பா கோவத்தில உங்களுக்கு ஒண்டுமே தரார்.” "ஐயோ முருகா நான் ஏன் பிள்ள இதுகளயெல்லாம் அவருக்குச் சொல்லப்போறன்? என்ர சின்னவன் சரவணன் ஒரு பாவம்! இந்த வெயிலுக்க அந்தப் பிள்ள இந்த மரங்களிலயெல்லாம் ஏறி கஷ்டப்பட்டு, அதுகளைப் புடுங்கிக் கொண்டுபோய்க் குடுத்து அவங்கள் குடுக்கிற காசைக் கொண்டந்து உனக்குத்தர, நீயதை எனக்குத்தூக்கித்தாறாய்? அப்பிடி நீ தந்த காசை நான் கொண்டுபோய் ஊதாரித்தன வேலையைச் செய்வனே?” “அதுதான் அதுதான்! இது உங்களுக்கும் வடிவாத் தெரியுந்தானே? அதாலதான் நானும் இதைத் தந்ததோட முன்னமே எல்லாம் உங்களுக்கு வடிவாய்ச் சொல்லி விட்டிருக்கிறன்! அங்க வீட்டில உங்கள எங்கள எல்லாம் எங்கட அப்பர் கஞ்சியிருந்தா உப்பில்ல உப்பு இருந்தா கஞ்சியில்ல எண்டது மாதிரித்தான் சாப்பாட்டுக்கு இவ்வளவு நாளும் எங்களை வைச்சுக் கஷ்டப்படுத்தினவர். அது உண்டோ இல்லையோ? அதால அதைத் தெரிஞ்சு கொண்டு நீங்க இனி நடவுங்கோ? நீங்க எல்லாரும் அங்கயிலிருந்தாலும் எனக்கும் தம்பிக்கும் உங்கட யோசினதான்! எனக்கு உங்களையெல்லாம் நினைக்க சிலநேரங்களில இப்படியெல்லாம் எங்களுக்குக் கஷ்டம் ஏன்? ஏன்? ஏன்? எண்டமாதிரித்தான் மனசுக்குள்ள நினைச்சு அழுகை வருது. தலை கிறுகிறுக்குது.” வெடு வெடுவென்று அவள் வார்த்தைகளை விட்டாள். “பிள்ள ஏனம்மா ஆத்திரப்படுறாய்? என்னைப் பேசி நானென்னம்மா செய்ய.? "உங்களில எனக்கொண்டும்
ரீ.பி. அருளWணந்தம் O 202 O

அப்பிடி இல்லையம்மா? உங்களைப் பேசி ஏசி என்னதான் வரப்போகுது? நீங்க ஒரு பாவம் எண்டு நான் கண்டுதான் இதுகள நினைச்சு இவர் எங்கட அப்பரில எனக்கு ஆத்திரமாத்திரமா வருது” “அதில பிள்ள அவரக்குற சொல்லிச் சொல்லி என்னம்மா இனி எங்களுக்கு வரப்போகுது? அவருக்கும் இப்ப வயசாயிட்டுது. அவர் என்னவோ ஆரோடையும் சேராம ஒற்றைக்காட்டு ஓரி மாதிரி சீவிச்சுப் பழகீட்டார். அவருக்குள்ள ஒரு குற அந்தக் குடி அந்தச் சுமயோட அவர் இருக்கிறார். அவர் தன்னை அடக்கேலாத இந்தக் குறையோட பிறந்திட்டார். அவரிட்ட உள்ள சில நல்ல குணத்தையும் இந்தக் குடி துலைச்சுப் போட்டுது. அதுக்கு என்ன செய்யிறது? அவராத்தான் இனி அவர் திருந்த வேணும்." - அவள் இதைச் சொல்லிவிட்டு இருந்து கொள்ள - நடப்பது கேட்காமல் இருக்கும் அந்த நடையின் காலடிச்சப்தம் திண்ணைப்பக்கமிருந்து விசயாவின் காதுகளுக்குக் கேட்டது. "அம்மா அம்மா இங்கே. அப்பம்மா இங்காலே வாறாபோல.” - என்று இரகசியமாக இதை தாய்க்குச் சொல்லிவிட்டு அவள் உடனே போய் தான் முன்னம் இருந்து கொண்டிருந்த அடுப்படிக்குப் பக்கத்துப் பலகையிலே இருந்துகொண்டு விட்டாள். “பிள்ள விசயா ஏதாச்சும் அம்மாவுக்குக் குடிக்கக்குடுத்தியோ? புனிதம் நீ ஏதும் வாங்கிக் குடிச்சியேம்மா?” - அங்கு வந்ததும் இருவரையும் பார்த்துக் கேட்டாள் ஆச்சி. “பால் காய்ச்சி அம்மாவுக்குக் குடுத்தனான் அப்பம்மா." என்றாள் விசயா. “ஓம் மாமி விசயா தந்து நான் குடிச்சனான்!” - என்றாள் புனிதம். "அப்ப அவளெங்க பிள்ள சின்னவள்?” “அந்த விலிம்பிலிப்பழம் வேணுமெண்டு இங்க நிண்டு அடம் பிடிச்சாள். சரிப் போய்ப் புடுங்கு எண்டு நான் கலைச்சு விட்டிட்டன்.” “அவளும் ஏதும் குடிச்சவளோ?”. பால் இவள் குடுத்து அதக் குடிச்சிட்டுத்தான் அங்க போனவள் அவள் மாமி.” “சரி இந்தா இத நீ இப்ப வைச்சக் கொள்ளு பிள்ள?” “இதென்னமாமி?” “இதப் பிடியன் கையில நீ?” தன் கையில் உள்ள காசைப் புனிதத்தின் கையில் வைத்தாள் ஆச்சி "இதில அம்பது ரூவா இருக்குப் பிள்ள? இது தான்ரியம்மா என்ர சேமிப்பில பெட்டிக்க கிடந்த காசு? இன்னும் எனக்கு எடுக்க ரெண்டு சின்னச்சின்னச் சீட்டும் இருக்கு. அந்தக் காசையும் கடைசியாச் சீட்டு முடிய விட்டு நான் உனக்கு எடுத்துத்தாறன். நான் தாறத்தில பத்திரமா அதில கொஞ்சத்த எடுத்துவைச்சு உன்ரை ஆசுப்பத்திரிச் செலவுக்கும் வைச்சிரு. இனி உனக்கு ஐயாவும் கொஞ்சம் தருவார். அதையும் நான் வாங்கி உனக்கு அனுப்பிவிடுறன். அவன் சேனாதிய அங்க நெடுங்கேணிப் பக்கத்தில நெடுகலும் இருக்கவெண்டு நீ விடாத? உனக்கினி பிள்ளப் பெறுற காலமும் கிட்ட வந்திடும். அவன் இங்கின வந்துவேலயில்லாட்டிலும் பறவாயில்ல. உனக்குத் துணையா இங்க உன்னாடே வீட்டில இருக்கட்டும் பிள்ள?” - மாமியின் எதற்கும் இரங்கும் இலவம் பஞ்சனைய மனத்தைப் பார்த்துப் புனிதம் கண்கலங்கி விட்டாள். அவரது பரிவான கதை முடிந்ததும் புனிதத்தின் முகம் நனைந்திருந்தது.
"சீச்சீ என்ன பிள்ள நீ. அழுறாயோம்மா? கவலப்பட்டு உனக்கு என்ன
வரழ்க்கையின் சிறக்கஸ் Ο 203 Ο

Page 112
வரப்போவுது?” “இல்ல மாமி இந்த வயசிலயும் உங்களுக்கெண்டு சேத்து வச்சிருக்கிற காசை நீங்க எனக்குத் தாறியளெல்லே அதுதான் எனக்கு நினைக்கவும் மன வருத்தம். நாங்கள் உங்கள வைச்சுப் பாக்கிற கடமயிருக்க நீங்க இந்த வயசிலயும் எங்களுக்குச் சாப்பாடு போடுறீங்களே?" "அதான் போகுது சும்மாவிடு. உனக்கு அப்பிடி எழுத்து எங்களுக்கு இப்பிடியொரு தல எழுத்து ரெண்டும் ஒண்டுதானே பாக்குறதுக்கு இப்ப. உதுக்கப் போய் நீ கவலப்படுறியே? உதுகள இனிவிடு. எண்டாலும் பிள்ள நீயும் கொஞ்சம் யோயிச்சு நடக்க வேணும். அவன்ர ஆட்டத்துக்கெல்லாம் நீயும் சேந்து இனிமேல் ஆடாத.? நீயொரு ஏமலாந்தி, அவன் நல்லா உன்னை ஏமாத்திக்கதையள் சொல்லிக்கொண்டு இருப்பான். நான் பெத்த பிள்ளய எனக்குத் தெரியாதே? சரி அதெல்லாம் போகட்டும் இனிவிடு. விசயா இங்க நீயொருக்கா என்னப் பார்? அம்மா சாப்பிட்டாவே ஏதும்.?” “இல்ல அப்பம்மா? நான் இப்ப காச்சிக் குடுத்த பாலை மாத்திரம் குடிச்சிட்டு இருக்கிறா." "அப்ப ஏதும் காலைச் சாப்பாடு பிள்ள?” “அதொண்டும் இப்ப எனக்கு வேணாம் மாமி! வயித்துக்க குடிச்ச பால் அப்பிடியே முட்டாக் கிடக்கு. அதால சாப்பிடுறதுக்கு பசி எண்டு இல்ல." "அப்ப விசயா மத்தியானம் நல்ல சோறுகறியெண்டாலும் சமைச்சு அம்மாவுக்கு குடன்?” “அதான் அடுப்பில உலை வைக்கப்போறன் நான் அப்பம்மா." "மாமி நானெண்டா இனி அங்க எங்கட வீட்ட வெளிக்கிடப்போறன்.” “என்ன பிள்ள நீ கதைக்கிறாய்?” “அங்க வீட்டில சின்னவள் தனிய மாமி” "அதுக்கு நீங்க ரெண்டு பேரும் இங்க சாப்பிட்டிட்டு ஏதோ அவளுக்கும் போகேக்க சாப்பாடு போட்டுக் கட்டிக் கொண்டுபோய்க் குடுக்கிறது தானே?” "ஐயோ அந்தப் பிள்ளய அங்கத் தனியவிட்டிட்டு வந்து இங்க நான் சாப்பிடுறதெண்டுறது எனக்குப் பிறகு அது தொண்டைக்குள்ளாலயும் இறங்காம விட்டிடும் மாமி! நீங்க சொல்லியாச்செண்டு இங்க சாப்பிட எனக்கு வயிறு உடன்பாடாயிருந்தும் நெஞ்சு அதுக்கு ஒத்துக்கொள்ளுற மாதிரி இல்ல. சின்னவள் அவளுக்கு மேல் முழுக்கவா ஒரு சொறியும் பாவம்! அதால நான் அங்கின வீட்ட போய் எல்லாருக்குமாச் சேத்து சமைப்பம் எண்டு பாக்கிறன்.” - சொல்லிவிட்டு தன் வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.
“சரி உன்ர இஸ்டம் பிள்ள உனக்கு விருப்பம் போல செய். எண்டாலும் இப்ப உந்த வெயிலுக்கால எப்பிடியம்மா நீ போவாய்?” “இப்பத்தான் வெய்யிலேறுது மாமி நான் கெதி கெதியா மத்தியானத்துக்குள்ள அங்க வீட்ட நடந்து போய்ச் சேந்திடுவன்.” - புனிதம் அப்படிச் சொல்ல ஆச்சி விசயாவைப் பார்த்ாள். “விசயா..?” “என்ன அப்பம்மா?” “சுணங்காம ஏதோ உங்க கிடக்கிற சாமானில கொஞ்சம் எல்லாத்திலயும் எடுத்து இப்பத்தைக்கு பையில போட்டு அம்மாட்டக் குடுத்துவிடம்மா. பேந்து ஒரு வேளைக்கு நான் பாத்துப் பிறகும் கொஞ்சம் சாப்பாட்டுச் சாமான்களை இவன் சரவணனிட்டையாச்சும் நாங்கள் குடுத்து அனுப்பலாம். நீ வெயிலேற முதல் சுறுக்குச் சுறுக்கா எடுத்து உதுகள அம்மாட்டக் குடுத்து உவவை வேளைக்கு நீ அனுப்பி விடடியம்மா?
ரீ.பி. அருளwணந்தம் O 204 O

நானும் ஒருக்கா இப்ப வெளியால போவேண்டியிருக்கு இந்தச் சீலையைப் போய்க் கழட்டி வேறு ஒரு சீல எடுத்து நான் மாத்தி உடுத்தப்போறன்.” "அப்ப புனிதம்” – மாமி அவளைக் கூப்பிட புனிதம் அவரின் முகத்தைப் பார்த்தாள். "அப்ப போயிற்று வாம்மா நீ சந்தோசமாய்.” “ஓம் மாமி!” அவள் அன்பாய்ச் சொன்னாள். இராசம்மா ஆச்சி குசினியால் வெளிக்கிட்டு வெளியே விறாந்தையடிக்குப் போக விசயா அங்கே சாப்பாட்டுச் சாமான்களில் பலதையும் பத்தையும் எடுத்து தான் முதலில் தாயிடம் கொடுத்த அந்த உண்டியல் போட்டுவைத்த பையிலே உள்ளே வைத்தாள். "அம்மா பாரந்தூக்கேலாதெல்லே இப்ப உங்களால. அதால இப்ப கொஞ்சமா தூக்கக்கூடியதை நீங்க கொண்டுபோங்கோ. பிறகு சரவணனிட்ட மிச்சத்தை நான் வீட்ட அங்க குடுத்து விடுறன். அவன் காவிக்கொண்டந்து அங்க இத உங்களுக்குத் தருவான் என்னம்மா..?” - அவள் அப்படிச் சொல்ல புனிதம் தன் மகளின் முகத்தை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். "என்-ன-ம்-மா அப்பிடிப் பாக்கிறியள்?” - என்று தாயின் அன்புப் பார்வையைக் கண்டுவிட்டு அவளும் மனதுருகிப் போய்க் கேட்டாள். “ம். ஒண்டுமில்லப் பிள்ள” என்று பெருமூச் செறிந்தவாறு புனிதம் தன் மகளுக்குச் சொன்னாள். பையை விசயா அப்போது தன் கையில் தூக்கிக் கொண்டாள். “அவளெங்க பிள்ள வசந்தா? இவ்வளவு நேரம் வெளியில அவள் என்ன் செய்யிறாள்?” “வெளியால நாங்க போவம் அம்மா. அவள் அங்கதான் அந்த மரத்துக்குக்கீழ நிண்டு கொண்டிருப்பாள்.” என்றுவிட்டு "வசந்தா." - என்று அவள் ஒரு சத்தம் வைத்தாள். "வா வா இனி வெளிக்கிட வேணும் அம்மா இங்க வீட்ட போக வெளிக்கிட்டிட்டா.” - அப்படிச் சொல்லவும் அவள் உடனே திண்ணையடிக்கு வந்து விட்டாள். "அந்த மரத்துப்பக்கம் இவ்வளவு நேரம் உன்ர பாடுதான் போல கிடக்கு. உள்ள புளியெல்லாம் நீ திண்டு முடிஞ்சுதே? பிடி இந்தப் பையைக் கையில?” - என்றாள் அவள். அவள் இவளிடமிருந்து அந்தப் பையை கையில் வாங்கிக் கொள்ள புனிதம் திண்ணைப் படிகளால் கீழே இறங்கினாள். இருவரும் அந்தப் படலையடிக்குச் செல்லமட்டும் அவர்களுடன் சேர்ந்து சென்றாள் விசயா. “அம்மா நீங்க வெயிலிலயும் தூத்தலிலயும் வெளிய எங்கயும் போயிடாதயுங்கோ அம்மா? ஒரு செருப்பையும் நீங்க வாங்கிக் காலில போட்டுக் கொள்ளுங்கோ என்ன? இனி நீங்க ஆசுப்பத்திரிக்குப் போயிற்றும் பிள்ளத்தாச்சியப் பாக்கிற டொக்டரிட்டக் காட்டுங்கோ அம்மா? சும்மா ஒண்டும் உங்களில அக்கறையில்லாம இனி இருக்காதையுங்கோ அம்மா?” புனிதம் அவள் சொன்னவைகள் எல்லாவற்றுக்குமாய் மெளனம் சமைந்த சோகத்துடன் கேட்டுக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள். அவர்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து வீதியால் நடந்துபோகும் போது அந்தப் படலையடியில் நின்று விசயா தாயும் தங்கையும் போவதை சற்று நேரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வீதியோரத்து இலுப்பை மரம் அவர்களை மறைக்கும்வரை அதிலே நின்று பார்த்துவிட்டு அவள்
வரழ்க்கையின் சிறுக்கஸ் O 205 O

Page 113
திரும்பிவந்து குசினிக்குள்ளே மீண்டும் அந்தப் பலகையிலே இருந்தாள். அவளது உள்ளத்திலிருந்த ஆசைகள் வெளியே பறந்து சுவர்களில் முட்டி மோதி சிறகு உதிர்ந்து கொட்டுப்பட்டதைப்போல அப்போது அவளுக்கு இருந்தது. இப்படியே தன் வாழ்க்கை முழுவதும் தான் நினைத்தது ஒன்றும் நடக்காமல் தோல்விகளாகவே எல்லாம் முடிந்து விடுமோ என்று அவள் ஒரு கணம் தனக்குள் நினைத்துப் பார்த்தாள். உடனே அவளது உள்ளம் படபடத்தது. அந்தப் படபடப்போடு அந்தப் பலகையில் இருக்க மனம் ஒரு நிலைகொள்ளாததில் அவள் எழுந்து நின்றாள். தான் ஒரு மரமாகவுமில்லை. அதையும் விட உணர்ச்சியில்லாத வெறும் கல் என்கிற மாதிரியாக தன்னிலே அவளுக்கு மனத்தில் விரக்தியேற்பட்டு வெறுப்பு வெளிப்பட்டது. அந்தத் தாக்கத்தில் அவள் தலை குனிந்து கொண்டு தன்னையேதான் பார்த்துக் கொண்டு எதை எதையெல்லாமோ சிந்தித்தாள். அந்தச் சிந்தனையில் சிறு துளியாக முலைகள் அறுந்த சிலை போலவும் அவள் தன்னை நினைத்தாள். அந்த நினைப்பு அவளது மனத்தை அமிலத்தில் கரைத்துவிட்டது போல் திரவமாக்கி விட்டது. "வற்றாப்பளை அம்மாளாச்சி.” என்று அவளது வாய் சொன்னது. உடன் ஒரு பெருமூச்சையும் அவள் வெளிவிட்டாள். காலையில் மலர்ந்த மலரில் பனித்துளிகள் மின்னுவது போல் அவளது கண் மலர்களிலும் நீர்த்துளிகள்.
பதின்முன்று
ஆனி மாதத்து நான்காம் திகதிதான் இன்று - என்று காலை வேளை நாள் காட்டியில் திகதி கிழித்துவிட்டுக் கண்டதும் அமுதம் அக மகிழ்ந்தாள். உடனே முதல் வேலையாக அவள் தன் வீடு முழுக்கக் கழுவினாள். வீட்டைக் கழுவுவதற்காக கதவுகள் ஜன்னல்கள் திறந்துவிடப்பட்டிருந்தால், அறைகள் சூரியனுடைய பளபளப்பான ஒளிக் கற்றைகளால் பிரகாசித்தன. அவள் தாயறை வாசலின் மேல் இருந்த புனித அந்தோனியாரின் படத்துக்குப் பூவைத்து குமஞ்சான் புகை காட்டினாள். அந்த இடத்திலே முழங்காலிட்டு ஐந்து நிமிடங்களாகப் பிரார்த்தனை செய்தாள். இன்று அவள் செய்த எந்த வேலையிலும் சரி எவரிடம் அவள் கதை கொடுத்தாலும் சரி, சந்த அந்தோனியாரே, அந்தோனியாரே என்கிற அந்தப் புனிதரின் நாமம் அவள் வாயிலிருந்து அளவுக்கதிகமாகவே வெளிப்பட்டது. இன்று ஒவ்வொரு மணிநேரத்தின் போதும் அதைப் பற்றிய நினைப்புத்தவிர அவளுக்கு வேறெதுவும் இல்லை. கோயில் பெருநாள் ஆரம்பமென்று ஒரு மகிழ்ச்சிச் சுமையை சுமந்து கொண்டு, அமுதம் மதியவேளை உணவிற்காக தடல் புடலாக சமையலும் செய்தாள். தான் பெற்ற மகனைவிட வேறு பெரிதாய் உறவென்று சொல்லிக்கொள்ள அவளுக்கு யார்தான் இருக்கிறார்கள். அன்று மதியவேளை போசனத்துக்கு விசேஷமாய்ச் சமைத்த சாப்பாட்டை மகனோடு சேர்ந்து, அவனோடு
ரீ.பி. இருஸ்ணந்தம் O 206 O

மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டு அவள் சாப்பிட்டாள். பின்னேரமாகியதும் அன்ரன் கிணற்றடிக்குச் சென்று, தண்ணீரை மொண்டு மொண்டு தலையிலும் தோளிலும் மாறிமாறிக் கொட்டிக் கொண்டு வந்து வீட்டு வாசலடியில் நின்றான். அமுதம் உடனே மகனுக்குப் பூந்துவாலையை எடுத்துக் கொடுக்க, அதாலே தலையையும் மேலையும் அவன் துடைத்துக் கொண்டுவந்து விட்டு, பிறகு புதுவேட்டியை எடுத்து அவன் உடுத்தினான். அந்த வேட்டிக்கு மேலாலே சட்டையை அணிந்து சட்டைக் கைகளை அவன் சுருட்டி மடித்துக் கொண்டிருந்தபோது "இந்தச் சங்கிலி ஏன் அலுமாரிக்க நெடுகக் கிடக்கு இத நீர் கோயில் பெருநாள் வழிய எண்டாலும் எடுத்துக் கழுத்தில போட்டுப் போமன் மகன்?" - அமுதம் அந்தத் தங்கப் பவுண் சங்கிலியை தன் கையில் வைத்திருந்தபடி முகம் முழுக்கப் பூரிப்புடன் மகனுக்குச் சொன்னாள். "அது அப்பாவின்ர சங்கிலியெல்லே. அதையங்க இருந்த இடத்திலயே அந்த முதிர அலுமாரிக்க திரும்பவும் கொண்டுபோய் பவுத்திரமா நீங்க வைச்சு விடுங்கோ அம்மா?" "அப்பாவுக்குப் பிறகு நீர்தானே அதப்போடவேணும் பிள்ள?” - அமுதம் குளித்துவிட்டு வந்தவள் தலை மயிரைத்தள்ளிவிட்டு மகனைப் பார்த்தாள். "அதென்ர கழுத்துக்க பெரிய வடம் மாதிரிக் கிடந்துகொண்டு வலு பாரமம்மா. அதொருபக்கம் கிடக்கட்டும். நீங்கள் உங்களிட்டக் கிடக்கிற அந்தக் காப்புச் சங்கிலியள எடுத்து எங்கயும் போகேக்க உங்கட கையில கழுத்தில அதுகளப் போடலாம் தானே அம்மா? ஏன் வெறும் கையும் கழுத்துமா நீங்க வெளிய திரியிறீங்க? "அது. உன்ர அப்பா இல்லையெண்டாப் பிறகு பேந்து அதுகளயெல்லாம் நான் போட விரும்புறேல்ல மகன்.” - அவள் புன்னகை புரிந்து வெளியே தெரியாதபடி தன்னுள் மறைத்துக் கொள்ள முயன்ற ஏதோ ஒரு உணர்ச்சியின் தாக்கத்தால் அவதிப்பட்டாள். அவளுடைய குரல் நடுங்கிற்று. “சரியம்மா. சரி அது கிடக்கட்டும் நான் அதுகளச் சொல்லி உங்கட நெஞ்சில இருக்கிற துக்கத்த தலைகாட்டச் செய்யமாட்டனம்மா. அதுகள நீங்க ஏன் இப்ப யோசிப்பான். அந்த நகையளப் போட உங்களுக்கு விருப்பமில்லையெண்டா அது அப்பிடியே கிடக்கட்டுக்கும். உங்கட இஸ்டப்படி நீங்க உங்கடபாட்டுக்கு இருங்கோ அம்மா." - அவன் தன் அம்மாவின் கவலையை ஆற்ற ஆறுதல் வார்த்தை சொன்னான். இது போதாதா இந்த ஆயுட்கால முழுமைக்கும் - இது போதாதா அவளுக்கு. அமுதத்துக்கு தான் இந்த நேரம் அந்தக் கதைகளை மகனுக்கு ஏன் சொன்னேன் என்றவாறு மனமடித்தது. இனிமேல் தன் மகனுக்கு மகிழ்ச்சியான ஒரு கதையைச் சொல்லுவோம் என்று அவள் பிறகு நினைத்துக்கொண்டு "என்னட்டயுள்ள நகயளயெல்லாம் எனக்கு வாற மருமோளுக்கெண்டுதான் குடுக்க நான் இப்ப அதப் பத்திரமா அலுமாரியில வைச்சிருக்கிறன். நான் போடவேண்டி விருப்பப்பட்ட நகயளயெல்லாம் அப்பவே ஆசதிரப்போட்டு அனுபவிச்சுக்கழிச்சு அந்தக்காலம் எனக்கு முடிஞ்சுது. இனி இதுகளயெல்லாம் நான் எனக்கு வாற என்ர மருமகளுக்குத்தான் நான் போட்டுப்பாத்து வடிவு பாப்பன்." “உதென்னம்மா உங்கட ஒரு புதுக்கத. உலகத்தில இப்புடி எந்த ஒரு வரழ்க்கையின் ரிறக்கஸ் O 207 O

Page 114
மாமியாரும் தன்ர மருமகள நீங்க சொல்றமாதிரியெல்லாம் பாக்க ஆசைப்படுறதா நானெண்டா இதுவரைக்கும் கேள்விப்படேல்ல?” - தாய்க்கு இதைச்சொல்லிவிட்டு சிரிக்கும்போது அவன் விசயாவை அதற்குள்ளே நினைத்துக்கொண்டான். "இந்த நகைகளையெல்லாம் அவள் கழுத்துக்கும் கைகளுக்கும் போட்டுக் கொண்டால் அது அழகுதான்! இவைகளை அவள் அணிந்துகொண்டால் அவள் பிறகு அழகு இராணிதான்!” என்று அவன் சிறிது கணம் அந்தக் கற்பனையிலே மிதந்தான். கோயில் மணியோசை காற்றிலே மிதந்து வந்தது. “காத்து அந்தப்பக்கம் அடிக்கிறதால கோயில் மணிச் சத்தமே இங்காலிப்பக்கத்துக்கு எங்களுக்கு வடிவாயே கேக்குதில்ல?” - தன் அம்மா சொல்லிக்கொண்டிருந்தது அவன் காதிலும் இப்போ விழுந்து கொண்டிருந்தது. அவனும் தன் தாயைப் போல அந்தச் சத்தத்தை காது கொடுத்துக் கேட்டுவிட்டு “நேரம் போற மாதிரிக் கிடக்கு. நான் அப்பமுதல் கோயிலுக்காய் வெளிக்கிடுறனேயம்மா..? நீங்க பேந்து ஆறுதலாவும் வரலாம்! ஏனெண்டா நான் அங்கபோய் இனி வேளைக்கும் நிண்டுகொள்ள வேணும்! இண்டைக்குக் கொடியேற்றம்தானே. அங்க கோயிலில போய் கொடிமரம் ஏத்த நானும் நாலு சனத்தோட கூடநாட அங்க நிற்கவேணுமே?” “நான் உம்மை மினக்கடுத்தேல்ல மகன். நீர் போம் வேளைக்கு நான் பிறகால வாறன்.” - அம்மா அப்படிச் சொன்னதும்தான் தாமதம் அவன் விறுக்கு விறுக்கென்று வீட்டு வாசற்படியால் இறங்கி நடையைத் தொடங்கிவிட்டான். வேலிப்படலையைத் திறந்த கையோடு, பிறகு விரைவாக அகலக் கால் வைத்து தேவையற்ற எந்த அசைவுகளுமின்றி மிகக் கண்ணியமாக அவன் நடக்கவும் ஆரம்பித்தான். இந்தநேரம் விசயா தன் வீட்டு முற்றத்தில் நின்ற நிலையிலேயே அன்ரனைக் கண்ணால் கண்டுவிட்டாள். புது வேட்டியும் சட்டையுமாய் மழுங்கச் சிரைத்த முகத்துடன் கழுக்கு மெழுக்கென்று அவன் ஒரு அழகான நிலையில் கோயிலுக்குப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, தன்னை அவன் கண்களில் தெரியுமாறு ஒருமுறை அவனுக்குக் காட்டிக் கொள்ள அந்த வேலிப்படலைக்குப் போக அவளும் விரைவாக நடந்தாள். ஆனாலும் அவன் அவளை விட விரைவாக வீதியில் நடந்ததால், கோயில் வளவுக்கூமா மரத்தை அவன் தாண்டிவிட்டான். அன்ரனுக்கு இப்போது கோயில் நினைப்பு ஒன்றே மன ஓட்டத்தில் இருந்தது. அந்த நினைவு ஒன்றே அவனை ஆட்கொண்டிருந்ததால் வேறு நினைப்பு ஒன்றிலும் அவன் மனம் ஈடுபடவில்லை. விசயா அந்தப் படலைப் பக்கம் வந்து அவனை வீதியில் வெளியாகக் கண்டுகொள்ள முடியாததால் ஏமாந்தாள். தான் அந்தப் படலையடிக்கு வரமுன்னமே அவன் அந்தச் சடைத்த கூமா மரத்தைத் தாண்டி மறைந்துவிட்டாற்போலப் போனது; தாரகைகளை வானில் பார்க்கிற வேளையில் அது முகிலுக்குப் பின் மறைந்தது போல அவளுக்கிருந்தது. அதனால் ஒரு ஏமாற்றத்துடன் உடலில் சூடுபிடித்த நிலையில் அவள் குசினிப்பக்கம் பிறகு திரும்பிப் போனாள். அன்ரன் அந்த வீதியால் நடக்கும்போது யாருடைய கண்களையும் அதிகம்
ரீ.பி. அருஸ்ணந்தம் O 208 O

சந்திக்காமலேயே பலரையும் கடந்துபோய் கோயிலடியில் சேர்ந்துவிட்டான். கோயில் வாசலுக்கு முன்னாலே மண்ணில் நீட்டிக் கிடத்தப்பட்டிருந்தது அந்தக் கொடிமரம். அந்தக் கொடிமரம் ஏற்றியபின் அதைத்தாங்கி நிற்கும் கயிறுகளிலெல்லாம் வர்ணக் கொடிகளும் கட்டப்பட்டுக் கிடப்பதை அவன் பார்த்தவாறு மணிக்கூண்டின் அருகில் போய் நின்றான். கொடியேற்றம் காரணமாக கோயிலுக்கு வெளியே எங்கும் பரபரப்பாக இருந்தது. கலகலவென்ற பேச்சுக்கள். அதிலே ஆண்களின் சிலமனைவிட பெண்களின் சிலமனே அதிகமாக இருந்தது. வசதியுள்ள பெண்கள் பட்டுப் புடவைச் சலசலப்புடன் மூங்கில்மாதிரி ஒளியும் நிறமுமுள்ள தம் கைகளில் அடுக்கிய வளையல்களோடு நின்றார்கள். அந்த வெளியில் ஆங்காங்கே கலைந்த வாக்கில் பலபேர் உட்கார்ந்திருந்தார்கள். நடுத்தர வயதுப் பெண்கள் தங்களுக்குள் ஏதாவது பேசிக்கொள்வதும் யாராவது பேசினால் கவனிப்பதுமாக இருந்தார்கள். கோயிலுக்குள்ளே இருக்கும் பீடத்துக்கு முன்னால் முழங்காலிட்டு சற்பிரசாதநாதரை வணங்கி பின்பு எழுந்து நின்றார் சந்தியாப்பிள்ளை. இன்றைய நோவினைக்காரர் செய்த சோடனை அங்கே கோயிலுக்குள் எப்படி அமைந்துள்ளது என்று அவர் பின்பு அவைகளைப் பார்க்க வெளிக்கிட்டார். எந்தப் பக்கத்தில் போய் நின்றால் கோயில் சோடனையெல்லாம் தன் கண்ணில் ஒழுங்காய்த் தென்படும் என்று சிந்தித்து கோயிலின் பக்கவாசலில் போய் நின்று தன்பார்வையை அவர் உள்ளே சுழற்றினார். எல்லாமே முன்னைய வருடத்திலும் விட சிறப்புத்தான்! என்பதுபோல அவர்பார்வைக்கு அதுவெல் லாமே அழகாய்த் தெரிந்தது அவருக்கு. ‘முதல் நோவினைக்காரர் எல்லா நோவினைக் காரரையும் வெண்டுபோட வேணுமெண்டுதான் இப்பிடி வடிவாச் சோடிச்சிருக்கினம்போல.” என்று அவரது மனம் அப்போது கணித்துக்கொடுத்தது “அது உண்மைதான்” - என்று ஒன்றுமே வாய்பேசாது அவர் தன் தலையை அப்போது ஆட்டிக் கொண்டார். "அந்தளவுக்கு இந்தச் சோடினையளில எத்தனையெத்தனை வர்ணங்கள் எத்தனையெத்தனை நிறபேதங்கள்! மஞ்சளாய், பச்சையாய், அடர்ந்த சிகப்பாய், இள நீலமாய், ஆழ்ந்த நீலமாய், ஊதாவுமான அப்பிடியப்பிடி வர்ணமயமான காதிதப்பூச்சோடன” அவர் வியந்து கொண்டு தன் தலையைத் திருப்பி கோயில் இடப்பக்கத்தின் துணைப் பீடத்திலிருந்த எழுந்தருளி அந்தோனியார் சொரூபத்தைப் பார்த்தார். ஒவ்வொரு பெருநாள் காலத்திலும் தன் பொறுப்பில் வைத்திருந்து தான் அந்தோனியார் சொரூபத்துக்குப் போடும் அந்தத்தங்க ஆபரணங்கள் இன்றையப் பெருநாள் ஆரம்ப நாளிலும் சரியாய்த்தான் உள்ளதா? அவைகளையெல்லாம் திருச்சொரூபத்துக்கு நான் சரியாகப் போட்டு விட்டிருக்கிறேனோ? “இரண்டு கழுத்துச் சங்கிலி - அது சரி! அடுத்து தலைமுடி - அதுதான் பிரகாசமாய்த் தெரிகிறதே? அந்தக் கைக்குருசு? இன்னும் பால இயேசுவின் கழுத்திலும் ஒரு செயின்? எல்லாமே சரிக்குச்சரி அதெல்லாம் அந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள்ள வலு பத்திரமாய் அவருக்குப் போட்டபடி கிடக்கு." என்று இதையெல்லாம்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 209 O

Page 115
கணக்கிட்டுப்பார்த்து மனத்தில் பிறகு திருப்திப்பட்டுக்கொண்டு கோயிலுக்குள்ளாலே இருந்து வெளிக்கிட்டு வெளிவிறாந்தையாலே அவர் நடந்தார். கோயில் முகப்பு வாசலிலே போய் நின்றால் உடம்புக்குக் கொஞ்சம் குளத்துப்பக்கமிருந்து வீசுகிற காத்தும் பிடிக்கும். அங்கே நாலு பேரைச் சந்தித்ததாகவும் போகும். குருவானவரின் தாபரிப்புப் பணம், பெருநாள் பூசைக்காசென்று கதையோடு கதையாக எல்லாருக்கும் சொல்லி வைக்கிற வேலைதானே இந்த மூப்பர் எனப்பட்டவயஞக்குத் தொழில் நினைக்கும்போதே அவருக்கு சொண்டுக்குள்ளாலே சிரிப்புச் சுழித்தது.
"இதென்ன யோசினையும் சிரிப்புமெனக்கு நெடுகவெண்டுறன். அங்க ஆறு மணிக்கு சரியா நான் திருந்தாதியும் அடிக்கவேணுமே? இப்ப இந்த ரெண்டாம் மணிய ஆரக்கொண்டு அதில நான் அடிப்பிப்பம்.? மாதாவே பிதாவே.” நினைத்துக்கொண்டு அவர் அந்த மணிக்கூண்டடி யிலே பார்த்தார். அதற்குக் கீழே ஒடிப்பிடித்துவிளையாடிக் கொண்டிருந்த ஒரு பையனை பிறகு அதிலே கண்டுவிட்டு “டேய் தம்பி தம்பி இங்காலயொருக்கா என்னப்பார். நீ கூண்டுக்கபோய் ரெண்டாம் மணிய அடிச்சுவிர்ரா.?” - என்றார். அவன் துள்ளிப் பறந்ததுபோல் ஓடிவந்து மணிக்கூண்டுப் படியில் கால் வைத்ததும் “வேணாம் வேணாம் நீ நிப்பாட்டு நிப்பாட்டு. நீ சின்னப்பெடி பேந்து பிழயா மணி சொட்டிப்போடுவாய். நீ விடு விடு உனக்கு விளங்காது.” - என்றார். பிறகுதான் நின்ற படியிலிருந்து ஒரு படி கீழே இறங்கி அவர் நின்றார். “இந்தா நீதான் உன்னையேதான் தம்பி. திரும்பவும் வாவன் நீ இங்கால என்னோடயா இதில ஒரு கத இருக்கு உன்னோட.” - முன்பு மணியடிக்கத்தான் கூப்பிட்ட அந்தப் பெடியனை திரும்பவும் அவர் கூப்பிட்டார். “மணியடிக்க விடாம அதில போகவும் என்னக் குழப்பிவிட்டவர் பிறகேன் தம்பி தம்பியெண்டு தேனா ஒழுகிக் கூப்பிடுறார்?” - என்ற ஒரு வெறுப்பான பார்வையை வைத்துக்கொண்டு அவன் அவரைப் பார்த்தான். தொங்கித் தொங்கி துள்ளித் துள்ளி அந்த மணிக்கூண்டிலுள்ள கயிறிழுத்து மணியடிப்பதிலே ஒரு சுகம் கண்டு சொக்கியவன் அவன். அந்த மணிச் சத்தம் எத்தனை தொலைவு தூரம் மட்டும் கேட்டும். அதற்குக் காரணம் நான்தானே? - என்று நினைத்துக்கொண்டு அந்த மணியாட்டுகிறதிலேதான் அவனுக்கு எவ்வளவு நிறைவான சந்தோஷம். மூப்பர் சொன்னாரே என்று நான் உடனே அதிலே போக அவர் மூதேவி பிடிச்ச மாதிரி பிறகு வேணாமெண்டுட்டாரே?. மனத்திலே அவனுக்குச் சினம் சூழப்பட்டாலும் பெரியவர் அவர் என்று நினைத்து, ஒரு மரியாதைப் பயத்தோடு அவன் அவர் நின்ற படிக்குக் கிட்டவாய் ஓடி வந்தான். "தம்பி. அங்கபார் அந்தக் கேற்று ஒரு பக்கம் சனம் அம்பாரம் இங்க வாற நேரமாச் சாத்தப்பட்டுக் கிடக்கு. அத நல்லா நீ போய் உள்ளயா இழுத்துத் திறந்துவிட்டுரா பிள்ள..?” - அவரின் முகத்தைப் பார்த்தான் அவன் திரும்பி நின்று கொண்டு பிறகு அவன் அந்த கேற்றைப் பார்த்தான். பிறகு அவ்விடத்துக்கு ஒட்டத்திலே அவன் போனான். மேளகார வினாசி
ரீ.பி. அருளWணந்தம் O 20 O

கோயில் வாசற்படியின்மேல் நின்ற உபதேசியாரை தன்முன்னாலுள்ள பறைமேளத்தின்மேல் கையை வைத்தவாறு பார்த்துக்கொண்டிருந்தான். மணியடித்து முடிந்த அந்தக் கையோடு அவன் அந்தப் பறை மேளத்தை அடிக்க வேண்டியிருக்கும். வெற்றிலையைச் சப்பி கோயில் வளவுக்குள் எச்சில் துப்பக்கூடாது என்று நினைத்து அதை அவன் விழுங்கிக் கொண்டிருந்தான். கேற்றை தான் அனுப்பிய பெடியன் போய் திறந்து விடுகிறானா என்று உபதேசியார் அங்கே பார்த்தார். துறுதுறுத்த அந்தப் பெடியன் இடிவிழுந்த சத்தமாய் அதைத் திறந்துவிட, அவர் அதைப்பார்த்துக்கொண்டு அந்தப் படிகளின் கீழே இரண்டு படி இன்னும் இறங்கி நின்றார். சிலை திரும்புவது மாதிரி மீண்டும் மணிக்கூட்டுப் பக்கமாய்த் திரும்பினார் அவர்.
"அன்ரனே.?” - அவனைத்தான் பார்த்துக்கேட்டார். அந்தச் சிமெந்துக் கட்டில் இருந்த அவன் அவரைப்பார்த்துச் சிரித்துக்கொண்டு எழுந்து நின்றான். "நானும்மக் காணேல்லத்தம்பி இவ்வளவு நேரம். இதிலேயே நீர் இருந்து கொண்டிருந்தீரோ கணக்க நேரமாய்..?” “ஓம் நான் முதலாம் மணி அடிச்சுக்கேட்ட கையோட அப்பவே உடன வீட்டால வெளிக்கிட்டு இங்க கோயிலுக்கு வந்திட்டனய்யா.” “சரி சரி. அதுதான் நடந்தது எனக்கு. நான் அப்ப உள்ள கோயிலுக்கயா நிண்டு கெண்டிருந்தன். தம்பி எனக்கிப்ப இந்தக் கை உளைவு. அந்தக் கயிறு பிடிச்சு இழுத்து மணியடிக்கிறதே வரவர எனக்கு கஸ்டமா வருது. உந்தப் பெடியளோ..? அவங்களிட்ட ஒண்டும் நம்பிச் சொல்லேலாது. ஒழுங்கா என்னத்த அவங்கள் செய்வாங்கள். குழப்படிகாரப் பெடியள். நேரம் போகுது இப்ப முதல் உந்த மணிய நீர் அடிச்சுப் போட்டு வாரும். ரெண்டாம் மணி." அவன் அதைக்கேட்டுக் கொண்டு அந்த மணிக்கூண்டுக்குள்ளே போய்விட்டான். மணியிலே இரண்டு என்று கேட்பவர் தெரிந்துகொள்ள முறையாக அதிலே இரண்டுதரம் சொட்டி ஒலி எழுப்ப வேண்டும். அவன் மணிக்கயிற்றை மெல்ல இழுத்துக் கணக்காக மணியைச் சரிக்கக் கூடியதாகக் கொண்டுவந்து மணிநாக்கால் இரண்டுதரம் சொட்டினான். பின்பு தொடர்ந்ததாய் அந்தக் கயிற்றைக் கீழே இழுத்து அது மேலே மீழும்போது விட்டு லாவகமான கையசைப்பில் ஒரு லய ஒழுங்கில் அசைய அந்த மணியோசையை எழுப்பிவிட்டுப் பிறகு அவன் அதை நிறுத்தினான். ‘ண்ண்ண்.’ என்று இன்னும் அந்தக் கார்வை ஒலி அசையாத அந்த மணியிலிருந்து கேட்டபடி இருந்தது. அவன் மணிக்கூண்டுக்குள்ளே இருந்து வெளியில்வர மேளத்தின் இழுவைப் பட்டியில் சொருகி வைத்திருந்த குச்சியை வினாசி வெளியே இழுத்து எடுத்தான். துணைமேளகாரனும் தன் முன்னால் உள்ள மேளத்தில் வளையம்போன்று முன்னால் கட்டியிருந்த அந்தக் குச்சியை கையில் எடுத்துக்கொண்டு ஆயத்தமாகி விட்டான். ஆரம்பமாய் ஒரு பக்கம் தன் கையால் தட்டி மேளத்தில் ஒலி எழுப்பிய கையோடு அந்தக் குச்சால் வினாசி ஒருபக்கம் விளாசத்தொடங்கினான். பக்க மேளகாரன் இடைவிட்டு நிறுத்தாமல் தட தடவென்று ஒரு ஒலியை பெரும் மேளச் சத்தத்துக்குத் தோதாய் இருக்க
வரழ்க்கையின் சிறக்கஸ் O 21 1 O

Page 116
அடித்து அதற்குச் சுருதி சேர்த்தவாறிருந்தான். மணியோசை கேட்ட செவிகளுக்கு பறைஒலி அது நன்றாகத்தான் இருந்தது எல்லோருக்கும். சந்தியாப்பிள்ளை உபதேசியார். மணிக்கூண்டின் அருகில் போய் அன்ரனோடு கதைக்கவேண்டும் என்ற விருப்பத்தில் நின்றார். ஆனாலும் அவர் அவனோடு அதிலே கதைக்குப்படியாக மேளச்சத்தம் இடம் கொடுக்கவில்லை. அன்ரனும் அவர் முகத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பேசாமல் நின்றான். இந்தப் பறைமேளம் அடிப்பதில் என்னையாரும் மேவிப்போக முடியாது என்பதாய் மற்றவர்களுக்குக் காட்ட, மேளத்தை உரமாக அடித்து கிடுகிடுத்த ஓசை எழுப்பிக்கொண்டிருந்தான் வினாசி அவன் அடியின் வேகத்தைக் கூட்ட, சின்ன மேளத்தின் தடதடப்புச் சத்தத்தையும் அதற்குத் தோதாய்க் கூட்டிக்கொண்டிருந்தான் பக்க மேளகாரன். அந்த மேளச் சத்தத்தையும் கேட்டு அதனுடன் சூழவுள்ள காட்சிகளையும் சேர்த்து ரசிக்க முற்பட்டான் அன்ரன். கோயிலுக்கு முன்னாலே பூத்த பருவத்தில் நின்ற அந்த முதிய அந்தச் சீமை வாகை மரம், புதிதாக வலிமையைத் திரட்டிக் கொண்டு இளமை அடைந்துவிட்டதைப்போல அடர்த்தியாக மலர்களை ஏந்திக்கொண்டிருந்தது. அது பழுத்தவிலைகளை காற்றின் மெல்லமைதியான அசைவினால் இடையிடையே சுழன்று வரும் சுழல் வீழ்ச்சியில் உதிர்த்துவது, ஆசி அட்சதையைத் தூவுகிறமாதிரி அவனுக்குத் தெரிந்தது. அந்த மரத்துக்குப் பக்கத்தே இருந்த மாதா கெவியில் அந்த மேளச் சத்தத்தினூடும் விம்மலும் அழுகையும் பிரார்த்தனையுமாக, சில பேர் அங்கே இருந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கொளுத்தி அங்கு மாதாவுக்கு முன்னால் நட்டுவைத்திருந்த மெழுகுவர்த்திகளின் தழற்புள்ளிகள், அமைதியில்லாமல் அங்குமிங்கும் அலைந்தன. அந்த வாகை மரத்திலே அடைந்த பளிச்சிடும் செவ்வலகு கொண்ட கொக்குகள் அந்த மேளச் சத்தத்தைக் கேட்டு, கொம்பூதுவது போல் ஒலி எழுப்பியபடி இன்னுமொரு மரம் இன்னுமொருமரமென்று வேறே அங்கு நிற்கின்ற மரங்களுக்கும் பறந்தபடி இருக்கின்றன. இவ்வளவற்றையும் கவனித்துவிட்டு அந்த வாகை மரத்தில் பறந்துபோகாது தனித்து நின்றிருக்கும், அந்தக் கொக்கினது வெண்மென்மையை அவன் பார்த்தான். அந்தக் கொக்கு அசும்பாமல் அதிலிருந்து கொண்டு, தன் இனிமையான நடுங்கும் சிறகுகளை சட்டென விரித்துச் சொருகியது. டப்பென்று அந்தக் கடைசிக்கைத் தட்டுச் சத்தத்தோடு வினாசியின் மேளச்சத்தம் நின்றது. அவன் பழையபடி மேளக்கட்டில் குச்சியைச் சொருகினான். பக்க மேளகாரன் வளையம் போட்ட குச்சை கொட்டின் பக்கம் நிமிர்ந்த நிலையில் சொருகி வைத்துவிட்டு இருந்தான். அடுத்த தன் மேள அடியை ஆலய மணிச்சத்தம் நிற்கவும் அவன் தொடர வேண்டும். அவன் ஆறுதலாக இனி இருந்து வெற்றிலை போட்டுக் கொள்வோம், என்று நினைத்து வெற்றிலைச் சரையைப் பிரித்தான். "தலை நடுங்கியாடுகிற கிழவரிலயிருந்து குஞ்சு குழந்தையெண்டு எல்லாமே புதினமா இண்டைக்கெண்டுபாத்து கோயிலுக்கு வந்திருக்கு
ඊ. ෆි. ථNගvගváහගී O 212 O

துகள்." - மேளச்சத்தம் நின்ற கையோடு உபதேசியார் அப்படிச் சொல்ல, அன்ரன் மெளனமாய் நின்றான். "நானும் ஒழுங்கா கோயிலுக்கு இங்க வராத அளவில இதுக்கொண்டும் அவருக்குப் பதில் சொல்லக்கூடாது.” - என்று அவன் வாய்மூடியபடி இருந்தான். உபதேசியார் ஒரு பாட்டம் ஏவறை விட்டார். ஏவறை கழிய, கீழ்வாயுபிரிகிற சத்தம் "புர்புர்றுக்.” என்று அவர் பக்கமிருந்து அன்ரனுக்குக் கேட்டது. வெற்று வயிற்றின் காரணமாக எழுப்பும் அபான நாற்றமாக அது - அவன் நின்றபக்கம் வந்து அவனுக்கும் மணத்தது. உபதேசியார் உடனே உள்ளாந்தரத்தில் வெட்கப்பட்ட அளவில் நின்றுகொண்டார். தன் தலையில் வளைந்த கத்திகளை நட்டாற்போலிருந்த நரைமயிர்களை தன் இரு கைகளாலும் தடவி விட்டபடி தலையை அவர் கீழே சரித்தார். பிறகு அன்ரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். “இந்த வாய்வு பறியிறது பெரிய தொல்லையடா தம்பி எனக்கு. இந்த வாய்வு கிடந்து வயித்துக்கூட்டுக்க சங்கு ஊதுறது மாதிரியும் நெடுக எனக்குக் கிடக்கு. அதோட என்ர வயித்துக்கயும் ஒரு வருத்தம்! இதால பாயில படுத்துக் கண்ண மூடிக் கொண்டு கிடக்கிறதொழிய ராவில எனக்குச் சரியா நித்திரயுமில்ல." - என்று தன் காதின் பின்னே சொறிந்துகொண்டு அவர் சொல்லி முடித்தார். "அப்ப நீங்க ஒருமருந்தும் உதுக்கெண்டு நீங்க சாப்பிடுறதில்லயோ உபதேசியார்?” “மருந்தெண்டு ஊரிப்பட்ட கச்சல் மருந்துகள் வீட்டில வைச்ச இப்ப நான் குடிச்சுக் கொண்டுதான் இருக்கிறன் தம்பி.” “அதென்ன உங்களுக்கு வாய்வும் வருத்தமுமெண்டுறியள். அதெல்லாம் இப்ப பெரிய வருந்தங்களே? அப்பிடியெண்டு இல்லையே உதுகளச் சொல்லுறதுக்கு?” “சே. எனக்கு அதெண்டுமாத்திரமில்லத்தம்பி. அதுக்குமேல இன்னும் பெரிசாய் கணக்க வருத்தங்களுமிருக்கு எனக்கு. எனக்கிருக்கிற இந்தக் கை கால் உளைவு நாரிக்குத்தெல்லாம் வாதசம்பந்தமான நோயஸ் தம்பி! இதுகளும்தான் எனக்கு அந்த வருத்தங்களோட சேந்து வந்து கிடக்கு.” "இதுக்கெல்லாம் இப்ப உங்களுக்கு நல்ல தமிழ் வைத்தியமாப் பாத்துச் செய்யலாம்தானே?” “ஒ. ஒ. செய்யலாம் செய்யலாம்! நான் ஒரு பரியாரியிட்டக்காட்டி அவர் தாற சூரணவக, குழம்புவக, செந்தூரவக, குடிநீர்வக, பத்தியவக எண்டு எல்லாம் மாறி மாறி இப்ப வடிவா வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறன். அப்பிடியெல்லாம் நிறுதிட்டமா எனக்கு நடக்குதுதான். எண்டாலும் கண்டீரோ என்ர இந்த வாய் எனக்குக் கட்டுப்பாடில்லக் கண்டீரோ? அப்பிடி நான் கண்டது கடியதுகளையெல்லாம் தின்னுறதும் இந்த வயதில வருத்தம்தானே? தின்னுறதையும் குடிக்கிறதையும் விட இந்த மனுசன் சீவியத்தில வேற என்னத்தைத்தான் ஒரு இன்பத்தக் கண்டவன் தம்பி? ஒரு மனுசன் தன்ர கடைசிக்காலமட்டும் சீவியத்தில அதை மட்டும்தானே செய்யேலும். இதைத்தானே பைபிளில சொலமன் அரசனும் தான் எழுதின நீதி மொழிகளில சொல்றார். எனக்கும் இந்த நொட்டத்தீனிலையும் அதுகளிலயும் இதுகளிலயுமா சரியானதொரு அவாதான்! அவர் பரியாரி எனக்குத்தந்த மருந்துக்கு சோத்துக் கஞ்சிதான் பத்தியம் எண்டு சொல்லிவிட்டவர். நாலு நாளுக்கு வேற ஒண்டும் நீங்கள் சாப்பிடாம இந்தக் கஞ்சியத்தான் குடிக்க வேணுமெண்டு அவர் வாழ்க்கையின் நிறங்கள் O 213 O

Page 117
கண்டிப்பாச் சொல்லியிருந்தவர். நானும் அவற்றை சொல்லக்கேட்டு ரெண்டு நாள் கஸ்டப்பட்டு வாய அடக்கிவைச்சு - இந்தக் குருட்டுக் கோழி தவிட்ட விழுங்கின கணக்கா, சும்மா அப்பிடி அந்தக் கஞ்சியைக் குடிச்சன். இப்பிடி இந்த ரெண்டு நாளும் நான் பத்தியம் காத்துக்கிடக்க, அண்டைக்கெண்டு என்ர மேன் கொழும்பில இருந்து வந்திட்டார். அப்ப அவர் வர இவ என்ர மனுசி வீட்டில இராசவள்ளிக்கிழங்கு காச்சி, அந்தக் கிழங்குக் கழிய ஆவி கக்கக்கக்க ஒரு சருவச்சட்டியில கொண்டு வந்து என்ர மேனுக்கு முன்னால வைச்சாள். எனக்கு அதின்ரை மணம் குணம் பாக்க ஆச விடேல்ல. நான் உடன மெல்லவாக் குசியிக்க போய் சின்ன மண் சட்டியொண்டுக்குள்ள, பானையில உள்ள அந்தக் கழிய எடுத்துவிட்டு நல்லா வயிறு முட்டக் குடிச்சிட்டன். இப்பிடித்தான். இப்பிடித்தான் வாயடக்காமத்தான் எல்லாம் திண்டு என்ர பத்தியமும் முறிஞ்சு போகுது எனக்கு. இன்னும் இதவிடக் கோதாரியொண்டு நடந்தது அண்டைக்கு எனக்குத்தம்பி ஒரு தெரிஞ்ச வீட்ட நான் போகேக்க, அதுகள் பண்டி வதக்கல் காச்சினதெண்டுபோட்டு எனக்கு அங்க கறியயும் தின்னத்தந்திட்டுதுகள். அது என்ர வருத்தத்துக்கு அந்தோனியாரே. ஆகக்கூடாது. ஆனா நான் வாங்கித் திண்டுட்டன் ஆசையில. இப்பிடியெல்லாம் செய்துதான் எனக்கு வருத்தம் பெலத்தது. அவர் பரியாரிதாறது நல்ல மருந்துதான்! எண்டாலும் அவரிண்ட மருந்துக்கு பத்தியம் தான் வலுவலுகடும. வாய்க்கட்டுப்பாடோடதான் அவற்றை மருந்தச் சாப்பிவேணும்.”
“எந்தப் பரியாரி ஐயா அவர்.?” “உவர். அவர் ஆரெண்டா தனபாலசிங்கம் தம்பி.” “எதடியில அவற்ற இடம்? அவேற்ற வீடு எதில இருக்கு.? “உமக்குத் தெரிஞ்ச இடம்தான் தம்பி அது! நீர் வன்னியில பிறந்தனிர் அந்த இடம் தெரியாதெண்டு உமக்குப் பெரிசா நான் சொல்லவே? எண்டாலும் வடிவாச் சொல்லுறனே நான் கோயில் குளம் போற நேர் றோட்டால போய், அந்த வாய்க்கால் வரப்பெல்லாந்தாண்டி, குடிசைக்குச்சொழுங்க முடுக்குகளிருக்கு - அதால திரும்பி, குட்டன் குட்டனா மூங்கில் குத்துகள் கிடக்கிற இடத்தாலபோக இவர் மூத்ததம்பிக் கமக்காரன்ர வளவு வரும். அதுக்கங்கால ஒரு கொய்யாக்காடு வரும். அந்தக் காணிக்கதான் இவற்றை வீடு இருக்கு. அதுக்கு இந்த றம்பைக்குளத்துக் கட்டால போய் அந்தப் புல்லுக்காட்டுக்காலயும் போய்ச் சேரலாம். அந்தக் காணிக்கிள்ளதான் அவற்றைவீடு இருக்குத்தம்பி. அந்த அவற்ற வீட்டுக்கு முன்னால நல்ல கனம் குறைஞ்ச உயரமான ஒரு பலாமரமும் நிக்குது. அது நல்ல வருக்கப் பிலா. காயப்பாக்கத் தெரியுது எனக்கு. அவர் தனி மனுசன் தம்பி தனபாலசிங்கம். இன்னும் அவர் கலியாணஞ் செய்யேல்ல. வயசு போட்டுது இப்ப அவருக்கு. ஒரு பக்கம் காணிக்க பெருவாரியா அவர் பப்பாசி வைச்சிருக்கிறார். அதில பழுத்தாலும் பெரிசா ஒண்டும் அவர் புடுங்கார். அதெல்லாம் பழுத்துக் காகம் கொத்திக் கிளறி அந்தப் பழத்திலயிருந்து கறுப்புக் கொட்டையள் விழுந்தபடிதானிருக்கு. எப்பிடியிருந்தாலும் அவர் இந்தச்
jෂ්, ෆි, ෆයි‍ෙගvශvෂ්නර් O 214 O

சொல்லுப்பட்ட வைத்தியத்தில திறம். அவரில பிழ ஆருஞ்சொல்லேலாது. அப்பிடியா வலு கெட்டிக்காரன் இதில ஆள். அதாலதான் அவரிட்ட நான் நெடுகப் போய்த்திரியிறன். ஏதேன் உமக்கும் வருத்தமாயிருக்கோ தம்பி, பாரியாரை நல்லா விசாரிக்கிறீர்? அப்படியில்லாம வேற ஆருக்குமிருக்கோ ஏதும் வருத்தம் கிருத்தம்.?” “எனக்கப்பிடி ஒண்டுமில்ல. அம்மாவுக்குத்தான் ஒருபக்கத்தலையிடி இருக்கு அய்யா." "அப்படியே சங்கதி. அத வைச்சிருக்கக் கூடாது தம்பி எப்பவும். அவர் நல்ல வைத்தியர் தம்பி. அவரிட்ட நம்பி அவவக் கூட்டிக் கொண்டு போய்க் கட்டாயம் காட்டும் ஒரு நாளைக்கு.?”
உபதேசியார் அதிலே அன்ரனோடு கதைத்துக் கொண்டிருக்க, அப்போது தான் கோயில் கேற்வாசலைத்தாண்டி உள்ளே வந்துகொண்டிருந்தார் இராயப்பு. அவர் கேற் வாசலால் வரும்போதே உபதேசியாரைக் கண்டுவிட்டார். பூனை பூச்சியைக் குறிவைத்துப் பார்ப்பதுபோல அவர் உபதேசியாரைப் பார்த்தவாறு, அவர் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு நடந்துவந்தார். இராயப்பு தன்னிடம் வருவதை உபதேசியார் கண்டு கொண்டுவிட்டார். “ஒரு உபத்திரமொண்டு இப்ப என்னட்ட வருதுதம்பி” என்று அன்ரனுக்கு உடனே சொன்னார். அன்ரன் உடனே உபதேசியார் பார்வையை விட்ட அந்த இடதிலே தானும் பார்வையைச் செலுத்தினான். இராயப்புவை அவனுக்கு ஏலவே நன்றாகத் தெரியும். எந்நேரமும் அவர் முகத்தில் மது போதையின் மினுமினுப்பு இருப்பதை அவன் அவரைக் காணும்போதெல்லாம் கண்டு கொண்டுதான் இருக்கிறான். தன்னுடைய நெருக்கிய தாடிக்குள் தன்னுடைய வாழ்வையும் மறைத் து வைத்திருக்கிறாரா மனிதர் என்ற மாதிரி அவரின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அன்ரன் அவரைப்பற்றி மனத்தில் எண்ணிக்கொள்வான். எப்போதும் இராயப்புவைக் கண்ணால் கண்டால், கொம்பும் குளம்புமுள்ள பெரும் விலங்கைப் பார்த்துப் பயப்படுவது போலவே சந்தியாப் பிள்ளைக்கு ஆகிவிடும். எனவே இந்த இடத்தைவிட்டு எப்படி அவரிடம் கதைகொடுக்காமல் தான் தப்பிப்போவது என்று அவர் தனக்குள்ளே யோசித்தார். என்றாலும் அதிலே நின்று அவர் எங்கும் அசைவதற்கு முன்பே இராயப்பு அவர் நின்றிருந்த இடத்துக்கு விரைவாக வந்துவிட்டார். மூச்சை மிகுந்த சிரமத்துடன் இழுத்துவிட்டபடி அதிலே வந்ததும் அவர் நின்றார். அவருக்கு சுவாசக் கோளாறால் அவதிப்படுகிறவனைப்போல "புஸ், புஸ்” என்ற சத்தத்தில் சிரமமாய் இழைகிறது மூச்சு, அவரைத் தன்முன்னே கண்டதும் ஒன்றும் தெரியாத பாவனையில் பாசாங்காகத் தன் பாட்டில் இருந்தார் உபதேசியார்.
"என்ன உபதேசியார் எப்பிடி உங்கடபாடுகள் போகுது? இங்க கோயில் பாடும் எப்பிடி இப்ப போகுது..?” அவர் உபதேசியாரைப்பார்க்காமல் கோயில் முகப்பிலுள்ள சிலுவையைப் பார்த்துக்கொண்டு கேட்டார். "..” “என்ன ஒரு சத்தத்தையும் காணேல்ல” கேட்டுக் கொண்டு இராயப்பு இப்போது அவரின் முகத்தைப் பார்த்தார். "ஓமோம்.” - என்று மட்டும் அவருக்குக் கூறி ஒரு சிரிப்பையும் அதனோடு கூட சேர்த்துக்கொண்டார்
வரழ்க்கையிண் சிறக்கஸ் O 215 O

Page 118
உபதேசியார். "நீங்கள் ஏன் உபதேசியார் பெருநாள் காசு வாங்க என்ர வீட்டுப் பக்கம் வரேல்ல.?” “ஒ. ஓ. வரேல்லத்தான் நான் அங்கால.” (வந்தாலும் நீங்க கோயிலுக்கெண்டு ஏதும் தருற ஆக்களே?) என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சொன்னார் உபதேசியார். “இப்பிடியெல்லாம் இப்ப நீங்கள் பாக்கிற உந்த வேலை உங்களுக்கு சரியில்ல உபதேசியார். இப்பிடியெல்லாம் நீங்கள் செய்யற வேலயள் பச்சப்பிழை. கோயில் காசுக்குப் போனா எல்லா வீட்டயும் காசு அறவிடவெண்டு நீங்க போகவேணும். அதுக்குத்தானே கோயில் மூப்பரெண்டு உங்களைப் பெரிசா பதவிகுடுத்து வைச்சிருக்கு. அல்லாம வேற எந்த வேல செய்ய மூப்பரெண்டு கோயிலில நீங்கள் இருக்கிறியள்? ஒரு மனுசருக்கு காசுத்தட்டுப்பாடு வாறது ஆன். பேந்து குடுக்க வேண்டியதுகளக் குடுக்கிறது ஆன். அதுக்காக ஒரு முறை ரெண்டு முறை அப்பிடிப் பிழ நடந்திட்டா அதோட முற்றா எங்கள பெருநாள் காறரில்ல எண்டு ஒதுக்கி விடுறதே? நாங்கள் என்ன மற்ற ஆக்களில இருந்து குறஞ்ச ஒரு நோவினக்காரரே? நாங்கள் ஒன்பதாம் நோவினக்காரரெல்லே.?” - "வெடித்திரிவழியாக தீநாக்கு எரிந்துகொண்டு வருகிறது மாதிரிக் கதை வருது. இனி இது எப்ப வெடிக்கப்போகுதோ?” - என்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு யோசித்தவாறு இருந்தார் சந்தியாப்பிள்ளை, அன்ரன் இராயப்புவின் கதையைக் கேட்டுக்கொண்டு அவரது வாயசைப் புக்கு அசையும் தாடியையும் பார்த்துக் கொண்டிருந்தான். “அதுசரி அதுசரி. இனிமேல் பட்டு நான் அங்க உங்கட வீட்ட கட்டாயம் வாறன் ராயப்பு.” “என்ன இனி இனி அங்க வாறதெண்டு ஒரு கத விடுறியள். இந்தாங்கோ இப்பவே இதில வைச்சு நான் தாறன் பெருநாள்காசு. இத நீங்க கையில டப்பெண்டு பிடியுங்கோ..? காசிருந்தா எப்பவும் உங்களுக்குத் தெரியாது நான் ஒரு வெள்ளக்காறன் மாதிரி. உங்க சிலபேர் இருக்கினம் அவயட்ட காசிருந்தாலும் நரகத்திலபோய் சிலவழிக்க விரும்புறமாதிரிக் கஞ்சத்தனம். ஆனா நான் அப்பிடியாயில்ல! இருக்கிறநேரமெல்லாம் உடன எடுத்து ஆருக்கும் இந்தக் காச வீசி விட்டிடுவன்..!” “இப்ப என்னட்ட ரிசீற்றுப் புத்தகம் கையில இல்ல ராயப்பு? காச நான் வாங்கினா உடனே றிசீற்றும் போட்டுக் குடுக்கவேணுமெல்லே.?” “றிசீற்று ஒரு பக்கம் கிடக்கட்டும்! அது இப்ப தேவயில்ல எனக்கு. இந்தக் காச நீங்க உங்கட கையில உடன பிடியுங்கோ? உந்த உங்கட நசனல் பைக்கற்றுக்குள்ள இத அப்பிடியே வையுங்கோ.?" "அப்ப றிசீற்று.?” “அத என்ர வீட்ட பிறகு ஒரு நாளைக்கு கொண்டந்து தாருங்கோவன்.? .நானில்லாட்டி வீட்டில மனுசியட்டக் குடுங்கோ. ஆ அது எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டுக்கும், சுவாமியோட ஒரு நாளைக்கு உந்தப் பெருநாள் முடியவிட்டு எனக்குக் கணக்கக் கதையிருக்கு. என்னமாதிரி நூல்ஸ்சுகளெல்லாம் இவயள் கோயில் நிர்வாகத்தில வைக்கினம் எண்டுறன்.? அங்க வீட்டில செத்த சவமிருக்க அதத்தாக்க சவக்காலேக்க இடம்கேட்டு உங்க வர. வருஷக்காசு, கோயில்காசு எண்டெல்லாம் கணக்குப் பாத்திச்சினமாம் சுவாமியினண்ட அறவீட்டில..? அப்பிடிக் காசுகட்டாட்டி அவயின்ர வேதச் சவக்காலேக்க
ரீ.பி. அருஸ்ணந்தம் O 216 O

சவத்தத் தாக்க முடியாதெண்டு தலைக்கெறுக்குப் பிடிச்ச ஒரு கத கதச்சாராம் ஒருவர்.? என்ன மாதிரிச் சட்டங்கள் உதுகள்.? ஆர் வந்து எப்ப வைச்சவயள் உந்தச் சட்டங்கள..?” “எல்லாத்தையும் நிர்வாகப் படுத்தி கோயிலில செய்யிறதுகள ஒழுங்காச் செய்துவர அதுக்குக் காசு பணமும் தேவைதானே ராயப்பு.? அத ஆர்குடுக்க வேணுமெண்டு நான் உங்களைக் கேக்கிறன்.?” உபதேசியார் அப்படிச் சொல்லிக்கொண்டு வினாசியைத்தான் பார்த்தார். இராயப்புவின் முகத்தைப் பார்க்க அவருக்கு வெறுப்பாக இருந்ததால் அவர் தன் பார்வையை வேறு பக்கங்களுக்குச் செல்ல திருப்பிக்கொண்டிருந்தார். "அப்பிடி என்ன ஒரு பணக்கஷடம் இந்தக் கோயில் சுவாமிக்கு வந்ததெண்டு நான் உங்களக் கேக்கிறன்? அப்பிடி இவருக்கு கோயில் அலுவலில ஏதும் காசு தட்டுப்பாடா வந்தா மடுக்கோயில கேட்டு உடன அங்கயிருந்து காசு வாங்கலாம் தானே? அங்க நடக்கிற பெருநாளுக்கெல்லாம் லட்சக்கணக்கான சனம் போய் உண்டியலில காசப் போட்டுப்போட்டு எடுத்து எண்ணிமுடியாத காசு அதுக்குள்ள அவயஞக்குச் சேருது. அங்க பிறகு சவளிலதான் காசுகளை அள்ளி சாக்கில கட்டுகினம். அதுகளில கொஞ்சம் பிசப்பிட்ட இவர் கேட்டுவாங்கி உதுகள நல்லா நடத்துறதுதான். இனித்தாபரிப்புத் தாபரிப்பெண்டு உந்தச் சுவாமிக்கு என்ன கண்டறியாத ஒரு தாபரிப்பு எண்டுறன் நான்.? உந்தச் சுவாமிதான் உங்க* இப்ப பெரிய மரக்கறித்தோட்டமும் செய்யிறார். அது தெரியுந்தானே உங்களுக்கும்.? அப்ப அந்தக் காலத்தில யோசுவாஸ் அடிகள் இங்கயா வந்து உந்தக் கோயில் கிணத்தை இங்கயுள்ள சனத்தைக்கொண்டு தோண்டுவிச் செடுத்தது - இங்க தண்ணியில்லயே எண்டு பரதவிச்சுத்திரிஞ்ச சனத்துக்கு தண்ணி அள்ளிக்குடிக்கத்தான். அந்தத் தண்ணியக் குடிச்சதும், குளிச்சதுமான ஆக்களுக்கு இந்த எங்கட அந்தோனியாரிண்ட புதுமையால பிறகு நோய் பிணிகளும் குணமானது தெரியுமே உங்களுக்கு.? மடுவுக்கெண்டு போக இதால நடந்து வந்தும், வேற வண்டிலிலயும் அங்க போகவெண்டுவாற சனங்கள் இந்தக் கோயிலில தங்கி அந்தக் கிணத்தில தண்ணி அள்ளிக் குடிச்சு ஆறித்தான் பேந்து பிரயாணமும் பண்ணினதுகள். அப்பிடிக் கிணறு அது. எப்பவுமே வத்தாத சமுத்திரக்கிணறு அது. இப்ப இந்தப் பெரிய காணியோட உள்ள அந்தக் கிணறு உந்தச் சுவாமிக்கு இப்ப வலுவா வாச்சுப் போச்சு. சுவாமிக்கு என்னகுற? கோயிலில பெரிசா அக்கறையில்லாம அவருக்கு தோட்டத்திலதான் இப்ப பெரிய ஈடுபாடு. இப்பிடி எல்லா வருமானத்தையும் தான் எடுத்து காய்கறியள், சூப்புகள், ஒயின் - எண்டு எல்லாத்தையும்தான் வைச்சு விழுங்கிக் கொண்டு அவர் இப்ப குண்டுத்துறவியா இருக்கிறார். இங்க பிள்ளயள இப்ப கூப்பிட்டு அவர் ஞான உபதேசம் படிப்பிச்சுக் குடுக்கிறதுமில்ல ஒண்டுமில்ல. உவர் என்ன சுவாமி எண்டு நான் கேக்கிறன்? ஒரு கதயிருக்கு உங்களுக்குத் தெரியுமே உபதேசியார்?” - இராயப்பு இப்படிச் சொல்லிக்கொண்டு உபதேசியாரின் கையில் தட்டினார். என்ன இது ஒரு உபத்திரம். என்றதாய்ப் போல மனதில் நினைத்துக் கொண்டு உபதேசியார் வரழ்க்கையிண் சிறக்கஸ் O 217 O

Page 119
இராயப்புவைப் பார்த்தார். அவர் தன்னைப் பார்க்கவிட்டு “அந்தக்கத வந்து என்னெண்டா.” - என்று அவருக்குச் சொல்லியவாறு ஒரு சிரிப்புச் சிரித்தார் இராயப்பு. அந்தச் சிரிப்போடு அவருக்கு வாய்க்குளிருந்த எச்சில் கழுக்கென்று உதடுவழியாய்ச் சிதறி தாவாங்கடையில் ஒழுகி ஓடியது. அவர் தோளிருந்த சால்வையால் ஒழுகிய எச்சிலை அழுந்தத் துடைத்தார். "எனக்கு அந்தக் கதய நெக்கேக்கயே சிரிப்பு வருது..!!” - இராயப்பு மீண்டும் இவ்விதம் சொல்ல அதற்கு தன் தலையை அசைவின்றி அசைத்துக் கொண்டார் உபதேசியார். “கேளுங்களன் உபதேசியார் அந்தக்கத இதுதான்! இது எங்கட இந்தக் கோயில் சுவாமியாருக்கும் பொருந்தும். (சிரிக்கிறார்) நான் சொல்லுற அந்தக் கதையில வாற சாமியார் கோவணத்தை எலி கடிக்கிதெண்டு போட்டு. என்ன செய்வம்? எண்டு நெச்சு அதப் பிடிக்க ஒரு பூனைய வளர்த்தாராம் - பூனை வளத்தா அதுக்குப் பால் வேணுமே குடிக்கக் குடுக்க? அதுக்காக அவரென்னை பிறகு செய்தாரெண்டாலாம். பேந்து ஒரு மாட்டை வாங்கி வளத்தாராம் அந்தமாடு மேய்க்கிறதுக்கு பேந்து ஒரு ஆள் வேணுமே? இப்பிடியா அவர் செய்துகொண்டுபோய் துறவியா இருந்த அவர் கண்டியளோ பிறகு படோடோபமாகி, துறவி எண்ட நிலையில இருந்து வேற ஒரு நிலைபரத்துக்குப் போயிட்டாராம். எப்பிடி இருக்கு இந்தச் சாமி ஒருத்தருண்ட கத.? சாமி இல்ல இவயள் எல்லாம் சரியான ஆசாமிகள் தான் இவயள்! இவயளப்பற்றி ஆருக்கும் தெரியாது. இதெல்லாம் அந்தச் சர்வேஸ்வரனுக்குத்தான் வெளிச்சம்.” - அன்ரனுக்கு அவரது கதையை இன்னும் பொறுக்க முடியாததைப் போல் ஆத்திரமாகிவிட்டது. நல்ல தமிழிலே உறைப்பாக இவருக்கு என்ன சொல்லலாம் என்று நினைத்துவிட்டு "பழிகளை ஆர்மேலும் சுமத்துறது உங்களுக்கு ரெண்டாந் தோலாய் ஆகிட்டுதோ ஐயா?” என்று சுடச்சுட அவரைக் கேள்வி கேட்டான். "என்ன நீர் எங்கட ரெண்டு பேற்ற கதயிக்க வந்து மூக்க நுழைக்கிறீர்? உமக்கென்ன அலுவல் கிடக்கு எங்கட கதையிக்க பூர. உம்மட பாட்டில நீர் சும்மா இரும் என்ன?" - சந்தியாப்பிள்ளைக்கு இப்போது ஆத்திரம் வந்துவிட்டது. "தம்பி உம்மைச் சொன்னதில என்னதான் ஒரு பிழை இருக்கெண்டு தம்பிய நீர் பேசுறீர்?" - என்றார். இராயப்புவின் முகம் சந்தியாப்பிள்ளை இப்பிடிச் சொல்ல இறுகிப்போய்விட்டது. "அப்ப நான் சொல்லுறதில ஒரு ஞாயமுமில்ல ஆக நீங்க எல்லாம் சொல்லுறது மட்டும்தான் சரி எண்டுகொண்டு இப்ப நிக்கிறியளோ?” “சும்மா நீங்க ஏன் ஆரையும் குறைகூறுவான்? சாமியார் சனத்திட்ட எல்லாத்தையும் தனக்குக் கேட்டுக்கொண்டு நிக்கக் கூடாதெண்டு கொஞ்சம் தன்ர தேவைக்கெண்டு தோட்டத்தச் செய்யிறார். அது பிழையே? இந்தச் சுவாமிக்கு இந்த மீசாமைக்கட்டி மேய்க்கிறது எண்டுறது அவருக்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாளுற மாதிரித்தான். அப்பிடித்தான் அவருக்குப் பிரச்சினையள் கிடக்கு. உங்க மீசாமில உள்ள சனங்கள் எதுவும் தங்களுக்குப் பிரச்சினயெண்டா இங்க சுவாமிட்டத்தான் ஓடி வருங்கள். பேந்து அதுகள் அவர் சொல்லுறதக் கேட்டுச் செய்துபோட்டு ஏதோ ஒரு குறையுந்தான் பிறகு அதில ്. ി. ട്രങ്ങൾ O 218 O

அவருக்குச் சொல்லிப்போட்டு போகுங்கள். இப்ப உள்ள கோயில் சுவாமியார் ஆரிட்டயும் தன்ர வார்த்தயள தராசுமுனை சாயாத மாதிரி நிறுத்துப் பேசுறவர். அப்பிடியான அவர ஏன் வீணா குற சொல்ல வேணும். ஆ.” "ஒமோம். எல்லாம் சிகரத்தில இருந்து பேசுங்கோ. உங்களயெல்லாம் தெரியுந்தானே எனக்கு. உங்க கோயிலில பெருநாள் நடத்திறது உங்கள மாதிரி ஆக்களுக்குத்தானே வாசி. அந்தோனியார் கோயில் பெருநாளில கடகம் கடகமாய்ச் சோத்த அவிச்சுக் கொண்டுவந்து கோயில் விறாந்தயிக்க தட்டிப்போடேக்க இருந்து அங்க அடுகிடைபடுகிடையாகக் காவல் கிடக்கிற ஆக்கள் ஆரெண்டு எனக்குத் தெரியுந்தானே? பிறகு பின்னேரமா கடகப் பெட்டியளில சோத்தையும் கறியையும் செம்மச் செம்ம நிறைச்சுக் கொண்டுபோய்: நான் தின்னு நீ தின்னு எண்டு அண்டைக்குத்தான் ஒரு நாள் வயிராறச் சாப்புடுற ஆக்கள் ஆரெண்டும் எனக்கு நல்லா விளங்கும்தானே?” “என்னையா நீங்க என்னத்திலயோ ஒரு கதயில துவங்கி வேற என்னத்திலயோ அந்தக் கதயக் கொண்டுபோய்ச் செருவுறீங்க..” “என்ன நான் கதைக்கேக்கிள்ளயெல்லாம் நீர் அதுக்க டக்கு முடக்கா வாரீர்?. நீர் ஆற்ர மகன்.?” - சந்தியாப்பிள்ளை அன்ரனைப் பார்த்து "அவருடன் கதை இனிமேல் வேண்டிாம். - என்கின்ற மாதிரி அவனுக்கு விளங்க வைக்க தன் தலையை அசைத்துக் காட்டினார். "நான் கதைக்கிறதில ஆருக்கும் என்ன வரப்போகுது? ஏதாவது அப்பிடி இப்பிடி விசயமேதும் இருந்தா உங்களோட கதைக்கத்தானே வேணும் உபதேசியார்?” - என்று உடனே இராயப்பு உபதேசியாருக்குச் சொன்னார். பிறகும் அவர் சொன்னார்: "நான் வேற ஒரு கதயிக்க அந்தக் கதயக் கொண்டந்து செருகீட்டன். நான் இப்ப சொன்னது அந்தப் பறச் சாதிகளிண்ட கத. உண்மையென்னண்டா அதில இதுதான் நான் இப்ப சொல்லப்போறதுதான் உண்மை உபதேசியார். அவயஞம் பாருங்கோ உபதேசியார் கொஞ்சம் கொஞ்சமா இப்ப கோயிலுக்க வந்து இப்ப எல்லாத்திலயும் செருகிக்கொள்ளத்தான் நிக்கினமென்ன. அவயளக் கோயிலுக்கயும் இன்னும் இங்க வேற உள்ள அலுவலிலயும் கணக்கா நீங்க வைச்சுக் கொள்ளுங்கோ. எல்லாம் உங்க அப்பிடியானவயள் ஏதும் கோயில் அலுவலில தாங்களும் பூரவெண்டு வந்தா அச்சறிக்கை பண்ணி அவயளின்ர தராதரத்தில எல்லாத்திலயும் அவயளக் கீழ வைப்பிச்சுக் கொண்டு நடத்துங்கோ. அப்பிடியா இருந்தாத்தான் அவயளக் கணக்கா நீங்க வைச்சிருக்கலாம். அல்லாட்டி ஆக்கள் எங்கட தலைக்கு மிஞ்சீடுவினம். அவயின்ர நடை உடை பாவனையும் செருக்கும். செருப்புகள் - எனக்கு உதுகளக் காணக்காண சரியா இங்க மனங்கிடந்து உள்ளுக்க கொதிக்குது.” "அப்ப உங்கட மனசில எரியிறத இழுத்து வெளிய போடுங்கோவன் கொதிப்பு அடங்கும்.?” - அன்ரன் சொன்னான். அவனுக்கு சண்டாளமாய் ஆத்திரம் வந்தது. "என்னெண்டு சொல்லுறதித இவற்ற கத ஒரு கதயே உபதேசியார்? இவற்ற வயதுக்கு என்ன தெரியுமெண்டு ஒரு விளக்கமும்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 219 O

Page 120
நையாண்டியும் எனக்குச் செய்யிறார். முன்னம் வந்த காதுகள விட பின்னம் வந்த கொம்புகள் தான் இப்ப பெரிசாப் போச்சுது போல." - சொல்லிவிட்டு அவர் “மே” என்கிறமாதிரி நின்றார். "சீச்சீச்சீச்சீ. அரியமரியண்டம் என்ன இது கதயள்? கோயிலுக்க வந்து ஊருலக ஞாயங்களெல்லாம் கதைச்சுக் கொண்டு. நீங்க என்ன வரவர மோசமான கதயஞக்குப் போறியள்? ஆற்றையும் துயரத்தையும் துக்கத்தையும் ருசிபாக்க நீங்க நிக்கிறியள்? ஒரு மனுசர இன்னொரு மனுசர் கீழ்த்தரமா அப்பிடியாயெல்லாம் நடத்துறது சரியே? ஆண்டவனே? கோயிலுக்க எல்லாருக்கும் ஒரே நியதித்தானே அனுசரிக்க வேணும்? ஒரு மனுசனெண்டிருந்தா அவன் மொத்தமா மனிச குலத்தின்ர நலனுகளப் பற்றியெல்லே பேசவேணும். ஒரு மனுசன நேசிக்கிற மனுசத்தன்மையில எப்பவும் கதைக்க வேணும். அப்பிடிக் கதையோட மட்டும் நிண்டிடாம சகோதரத்துவத்தோடயும் மனிதாபிமானத்தோடயும் ஆரோடயம் நடக்க வேணும் அதவிட்டிட்டு சும்மா தீவட்டிக்கு எண்ண ஊத்துறது மாதிரி கத கதைச்சு பொல்லாப்புகளைத் தூண்டி விட்டுக்கொண்டு. இது என்ன வேல. இது ஒரு மனுசனுக்கழகே? நல்ல நாள் கோயில் பெருநாள் துவக்கத்தில வேறேதும் கத வரேல்லயே வாயில உங்களுக்கு?” உபதேசியார் வெடிமருந்து மாதிரி ஆர்த்தெழுந்தார். இன்னும் அவருக்குப் பேச்சுக் கொடுத்தால்தான் நல்லம் போலவும் அவருக்குத் தெரிந்தது. நீங்க உதால போனாக்காணும் என்கிற ஒரு வெறுப்பான பார்வையை அவர் மேல் வைத்துக் கொண்டு, அப்பிடியான தனது அந்தப் பார்வையாலேயே அந்த இடத்திலிருந்து அவரைக் கலைத்துவிட வழிபார்த்தான் அன்ரன் இருவரிடமும் இப்படியெல்லாம் பேச்சு வாங்கிக் கட்டிக்கொண்டதில் இராயப்புவுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. தன்னை புழுமாதிரியாக அன்ரனும் உபதேசியாரும் அலட்சியப்படுத்தியதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் செக்கச் சிவந்த முகத்துடன் நின்றார். அவர் ஒன்றும் பேசாது பிறகு தன்னை அடக்கிக்கொண்டு அங்காலே இருந்த வினாசியைப் பார்த்தார். அவருக்குத்தான் எதை இழந்துவிட்டேன் என்பதைப் பற்றிய தெளிவில்லாத சிந்தனைமட்டும் இருந்தது. இந்த நேரம் வினாசி பறைமேளத்தை அடித்தால் தன் நிலைபரத்தில் மனதுக்குக் கொஞ்சம் அது ஆறுதலாயிருக்கும் போல அவருக்கு அப்போது இருந்தது. உபதேசியாரும் அன்ரனும் அவர் அங்கு பார்க்கிறாரே என்ற ஒரு உள்ளுணர்வுடன் இருந்து, தாங்களும் அங்கே பார்த்தார்கள். வாயால் வெளி வந்த அந்த வார்த்தைகளை தமது மனதுக்குள் நினைத்து மனம் வருந்தியபடி, வினாசியைப் பார்வையில் அவர்கள் கண்ணுக்குள் வைத்தபடி இருக்க, “ஐயாமார் மூண்டு பேரும் அதில நிண்டுகொண்டு என்னத்தான் இப்ப வடிவாப் பாக்கினம்” - என்ற ஒரு மகிழ்ச்சியில் வினாசி உதட்டுக்குள் மெல்லியதாகச் சிரித்துக்கொண்டான். இராயப்புவிற்கு இனியும் அதிலே நின்று கொண்டிருக்க இயலாமல் இருந்தது. அவருக்குப் பத்மவியூகத்தில் சிக்கிக் கொண்டது போலாயிற்று. அதனால் பெரும் திக்குமுக்காடினார். ஏதோ ஒரு கதையை அங்கே உபதேசியாருக்குப் போட்டுவிட்டு இதாலே இருந்து jෂ්. ග්‍රි. ථඝගvගvණිග(b O 220 O

இனி நழுவிவிட வேண்டும் போல் அவர் பிறகு நினைத்தார். “உபதேசியார் றிசீற்ரப் பிறகு வீட்ட கொண்டு போய்க் குடுங்கோ” - என்று மரச்சக்கையால் செய்த மனிதன் போல அதிலே அவர் நின்று கொண்டு இதை அவர் உபதேசியாருக்குச் சொன்னார். “கட்டாயம் நான் கொண்டந்து குடுக்கிறன் ராயப்பு” என்று அவர் கேட்டதிற்கு உடனே தன் பதிலைக் கூறினார் உபதேசியார். அதற்குமேல் இராயப்பு அவ்விடத்தில் நிற்கவில்லை. அவர் பிறகு அவர்களிடத்தில் ஒன்றுமே பேசாதிருந்துவிட்டு மெல்லக்கழன்று அங்காலே சென்றுவிட்டார். அவர் அந்த இடத்தாலே சென்ற கையோடு அன்ரன். “இவர் என்ன ஒரு மனுசன்” - என்று உபதேசியாரைப் பார்த்துக்கொண்டு சொன்னான். “அவற்ற தோரணையே இதுதான் தம்பி! இவ்வளவு வயசு போயும் அவரிட்ட இன்னும் அழிஞ்சிடாம உந்தக் குணம் உப்புடியேதானிருக்கு. புளி செத்தாலும் புளிப்புச் சாகேல்ல எண்டதுமாதிரித்தான் அவர். இவயின்ர குடும்பமே தேவ சாபம் விழுந்த குடும்பம்தம்பி அது உமக்குத் தெரியாது என்ன” - உபதேசியார் சொல்வதைக் கேட்கும் ஆர்வம் அன்ரனின் முகத்தில் தெரிந்தது. “ஓம் அது அந்தக் காலம் வழிய நடந்தது அதால அது உமக்குத் தெரிஞ்சிருக்க ஞாயமில்ல. உவயள் எல்லாருமெண்டு அவயிண்ட பரம்பரயே கோயில்சுவாமிமாரோட சண்டைபிடிக்கிற அப்பிடிக் கடை கெட்ட மனுசர்தான்ரா தம்பி.’ அவன் “ஆ. பிறகு” - என்று அந்தக் கதையை அவரிடம் கேட்பது போல் தன் தலையை இடவலமாக ஆட்டினான். “இவற்றை சகோதரியிண்ட புருஷன் தம்பி அவரும் ஆள் ஒரு துடியாட்டக்காரன்தான். அவர் தம்பி முந்தி இங்க இந்தக் கோயிலில சுவாமியா இருந்தவரோட நல்ல வெறியில ஒரு நாள் வந்து கதவெளிப்பட்டிருக்கிறார். அப்பிடிக் கதவெளிப்பட்டதோட நாலு பேருக்கு முன்னால அவற்ற லோவில பிடிச்சு இழுத்து மரியாதை கேடும் பண்ணிப்போட்டார். அந்தச் சுவாமி பாவம் ஒரு சம்மனசு மாதிரி. நல்ல பக்தியான சுவாமி அவர். அவர் உடன அவன் செய்துவிட்ட இந்தக் கொடுமைக்கு கண்ணால கண்ணிர்விட்டு உடன அதில அழுத்திட்டார். அப்பிடி அழுததோட அவர் நிண்டுபோடேல்ல. தன்ர மனம்வருந்தி உடன அவர் அவனைச் சபிச்சும் விட்டிட்டார். உண்ணாணத்தம்பி அப்பிடி நல்லா கடவுள் பத்தியா நடக்கிற சுவாமி மாற்ற சாபம் உடன பலிக்குமடாதம்பி. அவன் இப்பிடியெல்லாம் அவரக் கேவலப்படுத்த அவர் உடன என்ன சொன்னாரெண்டு சொல்லுறனே நான். அவர் இப்பிடித்தான் சொன்னவர் தம்பி.! அழகு. அவற்றபேர் அழகுதம்பி.! அப்ப. அழகு! நீ இப்பிடி நான் கடவுளுக்கு பிரமாணிக்கமா நடக்கிற எனக்கு இப்பிடி இப்பிடியெல்லாம் செய்துபோட்டாய் - நான் என்ரமனம் இந்தமனம் கொதிச்சு உனக்குச் சொல்லுறன். இந்த ஒரு கிழமையிக்க உன்னைப் பிரேதமா இந்தக் கோயிலுக்க கொண்டர நான் உன்ர அந்தப் பிரேதத்தை ஆசீர்வதிப்பன். எப்பிடி இது கேக்க எங்கட இந்த உடம்பே புல்லரிக்குது என்ன தம்பி.?” - அவனும் மூக்கால் “ஊம்” - என்றபடி விரைவாக இமை கொட்டினான். “சத்தியமாப் பிறகு அந்தச் சுவாமியார் சொன்னது அப்பிடியே பேந்து பலிச்சிட்டுதடா தம்பி. அவன ஒரு
வாழ்க்கையின் சிறங்கள் O 221 O

Page 121
கிழமையிக்க ஆரோ ஒருவன் அவனோட உள்ள ஒரு தகராறில ஒழிச்சுநிண்டு துவக்கால சுட்டுப்போட்டான் தம்பி. அது உண்மையா நடந்ததுதான். பேந்து அவன்ர பிரேதத்த கோயிலுக்க எல்லாரும் கொண்டர அவர் சுவாமி தான் இப்பிடி தெரியாம முன்னம் வாயால சொல்லிப்போட்டேனே எண்டு நினைச்சு அழுஅழெண்டு அழுது போட்டு பேந்து வந்து அந்தப் பிரேதத்தை அவர்தான் சவக்காலைக்குக் கொண்டுபோக முதல் கோயிலில வைச்சு ஆசீர்வதிச்சு விட்டவர். எப்பவும் மாதா பிதா குரு என்னப்பட்டவயள் எங்களுக்குத் தெய்வம் மாதிரித்தம்பி. அவயள நாங்கள் தூற்றப்பிடாது. எப்பவும் நாங்கள் அவயஞக்கு மரியாதை குடுக்கவேணும். எப்பவும் ஒரு நல்ல மனுசற்ற சாபத்த நாங்க ஒருக்காலும் வாங்கப்பிடாது தம்பி.” - சந்தியாப்பிள்ளை இவைகளை அன்ரனுக்குக் கூறிவிட்டு தன் குழம்பிப்போன மனத்தைத் தேற்ற அதில் நின்றவாறு கெவியில் உள்ள லூர்து அன்னையின் திருவுருவத்தைப் பார்த்தார். அங்கே அன்னையின் முகத்தைக் கண்டு ஆறுதலடைந்துவிட்ட மனத்தோடு அதிலே நின்ற ஒரு பெடியனையும் பார்த்து “இங்க வாரும் நீரொருக்காத்தம்பி.’ என்று கூப்பிட்டார். அவன் இவர் கூப்பிடதும் இவரின் அருகே வந்தான். “அங்கபாரும் தம்பி மெழுகுதிரியள் காடாய் எரியிறத.” கெவிப்பக்கம் தன் கையைக் காட்டினார். “இங்க பூசைக்கு உதவுற பெடியன் தானே நீர்..?’ அவர் கேட்க அவன் தலையை ஆட்டினான். ‘அப்ப தம்பியொருக்கா நீரதில போய் ராசா அந்த மெழுகுதிரியளயெல்லாம் நூத்து அங்க உள்ள கெவிப்பூசைப்பீடத்துக்குப் பிறகால அதுகளப் போட்டுவிடும். அங்க அதில பிறகும் புதுமெழுகுதிரியளக் கையளில வைச்சுக்கொண்டு சனமும் நிக்குதெல்லே.” ஓம் சரி என்ற தோரணையிலே அவன் அவரைப் பார்த்தான். “அப்ப இனி என்னப்பாக்காம அதப் போய்ச் செய்திட்டு கெதியாப் போய் சங்கிறித்தாம் அறைக்க உம்மட உதவுற உடுப்பை எடுத்து உடுத்தும்.” அவர் சொல்லவிட்டு, அவன் கெவிப்பக்கம் போக நடந்தான்.
“உபதேசியார் நேரமாகுதெல்லே கொடிமரம் ஆசீர்வதிக்க சுவாமியார் இங்க கோயிலுக்க வந்திட்டாரே?” - ஒருவர் கேட்டுக் கொண்டு அவரிடம் வந்தார். “ஆ நீங்க எங்கடலோறன்ஸ் செல்லே வாங்கோ. ஒ நேரமாகுதுதான் நீங்க சொன்னமாதிரி. அப்ப நான் சுவாமிக்குச் சொல்லி வரச்செய்யிறன்! அங்க அவற்ற அறைவீட்ட நான் அப்ப போய்ச் சொல்லப் போறன். நீங்க உங்க எல்லாத்தையும் சரி பண்ணுங்கோ. அன்ரன் நீரும் நிண்டு எல்லாரும் இங்க செய்யவேண்டிய அலுவலைப்பாருங்கோ. இந்தா நான் அவர வெளிக்கிட்டு வரச் சொல்லப்போறன்.” - அவர் சொல்லிவிட்டு வெளிக்கிட்டார். உபதேசியார் குருவானவரின் அறைவீட்டுக்குப் போக வெளிக்கிட்டதுதான் தாமதம் கொடிமரத்துக் கயிறுகளின் பக்கம் ஆட்கள் போய் நின்று கொண்டார்கள். மூப்பர் போய் சொல்லியதும் சுவாமியார் உடனே தன் அறை வீட்டுக் குள்ளாலிருந்து வெளிக்கிட்டு சங்கிறிஸ்தாம் அறைக்குப் போய்விட்டார்.
ඒ.4%. ෆර්‍ගvග්ග්හර් O 222 O

அங்கிருந்து அவர் ஆராதனைக்குப் போடும் மேலங்கியுடனும், பரிசுத்தப்படுத்தும் அந்தக் கழுத்துப் பட்டியுடனும், யாவரும் காண கோயிலுக்குள்ளாலே நடந்து வந்தார். அவருக்குத் துணையாளர்களாக உதவுகிற உடுப்புப் போட்ட மூன்று பையன்களும், அவருக்கு முன்னாலே வந்தார்கள். அவர்களில் ஒருபையன் புனித வெள்ளிச்சிலுவையை தூக்கிப் பிடித்தபடியும், மற்றப் பையன் குமஞ்சான் தூபம் காட்டும் சங்கிலித் தூக்கான சட்டியை ஒரு கையில் கொண்டும், மூன்றாவதாக வந்த பையன் ஆசிநீர் தெளிப்புக்காயுள்ள அந்தச் சிறியதோர் வாளியையும், தெளிப்புக் கருவியையும் கொண்டுவந்தான். சுவாமியாரும் துணையாளர் களும் கோயில் வாசற்படிகளாலே இறங்கிக் கீழே வந்தனர். சுவாமியார் கொடிமரத்தருகில் வந்து பரிசுத்த சிலுவையை வணங்கிவிட்டு, அதன் பிற்பாடு கொடிமரத்துச் சிலுவையையும் கொடியையும் ஜெபம் சொல்லி ஆசிநீர் தெளித்தார். பின்பு தூபத்தைக்காட்டி மேலும் அதைப் பரிசுத்தப் படுத்திவிட்டு, முன்பு வந்தவாறாகவே திரும்பவும் அந்தத் துணையாளர்க ளோடு சேர்ந்து கோயிலுக்குள்ளே போனார். இந்நேரம் ஆலயமணி ஒலித்துக் கொண்டேயிருந்தது. பறை ஒலியும் அதனுடன் சேர்ந்தொலி செய்தவாறிருந்தது. இப்போது அவர்கள் அந்தப் பாரிய கொடிமரத்தை உயரச்செய்து நிறுத்துவதற்காக கோயில் முகப்புப் பக்கம் கிடந்த கொடிமரத்துக் கயிறுகளைப் பிடித்து இழுத்தார்கள். இவ்வேளை மரத்தின் இருபக்கங்களிலும் நின்று தங்கள் கைகளால், மரத்தின் கீழே பிடித்து, அதன் அடிப்பாகத்தை குழிக்குள்ளே சரியாக இறக்கிவிடும் வேலையில் சிலர் முனைந்திருந்தார்கள். அவர்கள் அந்தக் கொடிமரத்தை அந்நுழைவாயிலில் போகக்கூடியதாகத் தூக்கிக் கொடுக்க சூழநின்றவர் களின் கயிறிழுவையோடு கொடிமரம் நேராக உயர்ந்து கொண்டு வந்தது. அந்தக்கொடிமரம் உயர எழும்புகின்றவேளை சுவாமியார் அங்கு ஒரு பக்கத்திலே தூரவாய் நீங்கி நின்று, இவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். கொடி மரம் முற்றாக இன்னும் அதற்குரிய குழியின் அடியில் சென்று நிறுத்தம் பெறவில்லை என்பது, அதன் சரிவிலும் ஆட்டத்திலும் அங்குள்ள எல்லோருக்கும் தெரிந்தது. அப்படியாக அந்தப்பாரியமரம் எழுந்த நிலையைப் பார்க்க, எல்லோருக்கும் மனத்தில் திகிலாக இருந்தது. மாலை மயங்கிவரும் இருட்டும், கோயிலின் முகப்பில் சரம்சரமாகத் தொங்கிய மின்சார வர்ண விளக்குகளின் ஒளியும், இதைப்பார்த்துக்கொண்டிருந்தவர் நெஞ்சில் பீதியை இன்னும் அதிகரித்துவிட்டிருந்தன. மரம் எந்தச் திசையில் சென்று சாய்கிறதோ அதற்குத்தகுந்தபடி கயிற்றை இழுத்துக்கொடுத்து, அடிமரத்தை சரியாக அதன் குழிக்குள் போகச் செய்யவேண்டும். இவ்விதமாக அந்த வேலை அங்கு ஒழுங்காக நடைபெறவில்லை என்றுதான் பலருக்கும் பார்க்க அது விளங்கியது. “இதன் பலன் என்னவாகப்போகிறதோ..” என்றவர்கள் மனத்தில் நினைக்கும்போதே, அவர்கள் அப்படி மனதில் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்த அச்சம்பவமும் உடனே அங்கு நிகழ்ந்தது. அந்தப்புறமும் இந்தப்புறமும் ஒரு நிலை கொள்ளாத நிலையில் நின்று ஆடிச் சரித்த அந்த மரம் சீரான கயிற்றிழுவை இல்லாததன் பொருட்டு வரழ்க்கையின் ரிறங்கஸ் O 223 O

Page 122
ஒரு பக்கக் குழியை உடைத்து மண்ணை வெளியே துப்பிக்கொண்டு ஒரு படபடப்பு சடசடப்பு இல்லாமல் கீழே நிலத்தில் சரிந்துவிழுந்தது. அந்தக் கொடிமரம் விழுகின்றவேளை அதன் கயிற்றை யார்தான் கையில் வைத்துப் பிடித்தபடி நிற்பார்கள்? அப்பிடியான ஒரு நிலையிலேதான் கயிற்றைப் பிடித்தபடி நின்றவர்களெல்லாம், அந்தக் கயிற்றை மரம் சரியும் வேளையிலே கைவிட்டார்கள். பல பேர் அந்தக் கொடிமரம் கீழேவிழுந்தும் "ஐயோ அந்தோனியாரே.” - என்று ஒலமிட்டுக் கத்தினார்கள்.
அன்ரனுக்கும் பக்கத்தில் நின்ற உபதேசியார் “ஐயோ.” - என்று கத்தினார். அது ஒரு தளர்வுற்ற ஒரு வயதான நாயின் ஒலத்தைப் போல அன்ரனுக்குத் தோன்றியது. அன்ரன் தன் கையிலிருந்து உருவிப்போன கயிற்றுக்குப் பிறகு அச்சத்திலே அசையாமல் சிலைபோல விறைத்து நின்றான். கொடிமரம் கீழே விழுந்ததைப் பற்றி ஒருவருக்கும் கவலை இல்லை. ஆனாலும் அந்தக் கொடிமரம் விழுந்ததில் யாருக்கும் படுகாயம் ஏற்பட்டதோ? குஞ்சு, குழந்தைகள், இளையவர், முதியவர் என்று பலரும் கூடிநின்ற இடமல்லவா அது.? அதனால் எல்லோருக்கும் ஒரு பதகளிப்பு தாய், பிள்ளை, கணவன், மனைவி, சகோதரர், உறவினர் என்று ஒன்றாகக் கூடி அங்கு வந்தவரெல்லாம் தங்கள் உறவுகளைத்தேடி. அவர்கள் அங்கே அதற்குள்ளே நின்றிருந்தால் என்னவாய் அவர்களுக்கு ஆகியிருக்குமோ. அந்தோனியாரே. அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அடித்துப்புரண்டுகொண்டு, மரம் விழுந்த இடம்நோக்கி ஓடிச்சாடிப்பாய்ந்து சென்றார்கள். கோயிலுக்குள் இப்போது ஒரு சனமும் இல்லை. மெழுகுதிரிகளின் ஒளி கோயில் சுவர்களில் பதிந்து சிகப்பாக ஆடியவாறு இருந்தது. வெளியே களபுளவென்று சனங்களின் சப்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது. கொடிமரம் விழுந்த கையோடு வினாசி மேளத்தை நிறுத்திவிட்டான். ஆலய மணியை அதை அடித்துக்கொண்டிருந்தவன் கைவிட்டுச் சென்றதால், அதுவாகவே மெல்ல பிறகு அது ஓய்ந்து நின்றது. அன்ரன் அவ்விடமெல்லாம் ‘அம்மா. அம்மா” - என்று தன் தாயை அதற்குள்ளே கூப்பிட்டுக்கொண்டு அவரைத்தேடியபடி எல்லா இடமும் அலைந்தான். அமுதம் தன் மகனைத் தேடி ‘அன்ரன். அன்ரன்.” என்று கூப்பிட்டுக்கொண்டு அலைந்தாள். இப்படி அவ்விடத்தில் தங்கள் உறவுகளைத் தேடி அலைந்தவர் முகங்களெல்லாம் பயத்தில் இறுகிப்போயிருந்தன. இந்த நேரம் விழுந்து கிடந்த கொடிமரக் குருசுக்குப் பக்கத்தில் நின்ற ஒருவர் “ஒருவருக்கும் இதில சின்னச் சிராய்ப்புமில்ல. சேதாரமுமில்ல.” - என்று ஒரு உறுதியான தன் குரலில் எல்லோருக்கும் கேட்கும்படி இதைச் சத்தமிட்டுச் சொன்னார். அலைந்து அதற்குள்ளே திரிந்து கொண்டிருந்த அமுதம் எங்கேயோ பார்த்துக் கொண்டு தன் மகனைத் தேடியபடி போக. “அம்மா அம்மா’ என்றுஅங்கே அதற்குள் தன்னைத் தேடிக்கொண்டிருந்த மகனை ஒருவாறு கண்டுகொண்டுவிட்டாள். தனக்குப் பக்கத்தில் நின்றவர்களை வேகமாக விலக்கிக் கொண்டு சென்று
്., SGM O 224 O

மகனின் கையைப் பிடித்தாள் அவள் அன்ரனுக்கு அன்னையை எதிரில் கண்டதும் கண் கலங்கிவிட்டது. அவன் ‘அம்மா. அம்மா’ என்று ஏங்கிச் சொல்ல அவள் அவனது கையை தன் கைகளில் ஏந்தியெடுத்துக் கொஞ்சினாள். 'மகனே' என்று சொல்லி அவளும் விக்கி அழுதாள். 'அம்மா எனக்கொண்டும் இல்லையம்மா” - என்று சொல்லிக்கொண்டு அவனும் தன் அன்னையின் கைகளை பாசத்துடன் தடவினான். பலபேர் பயத்தில் கண்கலங்கி நின்ற அந்த இடத்துக்கு வந்து - குருவானவரும் எல்லாவற்றையும் பார்வையிட்டார். ‘ஒருவருக்கும் ஒண்டும் நடக்கேல்லச் சுவாமி அந்தோனியார் எங்களையெல்லாம் ஆபத்தில்லாமக் காப்பாத்திட்டார்.” என்று அங்கு நின்ற ஒருவர் சுவாமியைப் பார்த்துச் சொன்னார். “கொடிமரம் ஏத்த இப்புடியே மோட்டுத்தனமாய் பிடிச்சுக் கயிறிழுக்கிறது.? ஒண்டும் தெரியாத மடச்சாம்புறாணியள் புண்ணாக்கு மடையங்கள்?” - என்று இராயப்பு சுவாமியாருக்குப் பின்னால் நின்று கொண்டு தான் சொல்வது நன்றாக சுவாமியாருக்குக் கேட்கக் கூடியதாகவும், தனக்கு முன்னால் சுவாமிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தவர் இவ்வேளை தன்னைப் பார்த்துக்கொண்டு இதை கேட்கக்கூடிய அளவிலுமாகச் சொல்லிக் கொண்டார். இவர் பின்னால் நின்று இப்படி ஒரு கதை சொல்ல “ஆர் எனக்கு இதைச் சொன்னது?” என்று ஒரு கேள்வியை மனத்தில் வைத்துக்கொண்டு சுவாமியார் மெல்லத் தலையை திருப்பிப் பின்னாலே பார்த்தார். ஊரிலே உள்ளவர்கள் பற்றி உபதேசியார் சொல்லிவைத்த தகவலின் படி சுவாமிக்கும் இராயப்புவைப்பற்றி சாடையாகத்தெரியும். சுவாமியார் பிறகு அவரைப் பார்த்துவிட்டு ஒன்றும் அவருடன் பேசாது திரும்பி தனக்கு முன்னால் கதை சொன்னவரைப் பார்த்தார். சுவாமிக்கு முன்னால் நின்றவர் இராயப்புவை ஒருமுறை முறைத்துப் பார்த்தார். பிறகு சுவாமியை அவர் பார்த்து ‘அப்பிடி ஒண்டுமில்லச் சுவாமி. வழமையாச் செய்யிறமாதிரித்தான் எல்லாம் இங்க சரியாகச் செய்தது. ஆனா இந்த வருசம் ஏன் இப்பிடியோ..?” - என்ற ஒரு கேள்வியோடு நிறுத்தினார். “எண்டாலும் சுவாமி இனிமேல்ப்பட்டு எல்லாம் சரிவரும். இப்ப மரம் ஒழுங்காக் குழிக்குப் போய்ச்சேர கொஞ்சம் பக்கத்திலயும் கணக்கா மண்ணை வெட்டிவிட்டிருக்கிறம். இனிமேல ஒரு பிரச்சினையும் நடவாது.” - சுவாமி அதைக் கேட்டுக் கொண்டு “சரி” என்றாற்போல ஒரு தலையாட்டலோடு பிறகு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டார். அவரைப் போகவிட்டு இராயப்புவை ஒரு பார்வை பார்த்தார் கொடி மரத்தடியில் நின்றவர். கடும் பயங்கரத்துடன் அவர் உறுத்து விழித்த விழிப்பில் இராயப்புவுக்கு வயிற்றைக் கலக்கியது. கப்சிப்பென்று அவர் நழுவி ஆட்களுக்குள்ளாலே போய் அவர் கண்பார்வையில் நின்று பிற்பாடு மறைந்துவிட்டார் அவர். இப்போது இராயப்புவுக்கு திரும்பவும் கதைக்கக் கிடைத்தவர் உபதேசியார் தான். அவர் அங்கு ஒரு பக்கத்தில் நிற்பதைக் கண்டுவிட்டு அவரருகில் இவர் போனார். நெருக்கடியான இந்த நிலைமையிலும் கூட அவர்
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 225 O

Page 123
செஞ்சொற்பேச்சை விட்டுவிடவில்லை. “ஐயோ உபதேசியார் பாருங்களன் இவங்களிண்ட விழல் வேலைய. அந்தக் கயிறுகள கண்ட காட்டானும் கண்டபடி தெரியாம இழுத்துத்தான் இந்தக் கொடிமரம் ஏத்தயிக்க அப்பிடிச் சரிஞ்சு விழுந்தது. எல்லாரும் ஒக்கலிச்சு வடிவாப் பிடிச்சிருந்தா அது இப்பிடி சரிஞ்சிருக்குமே?. இப்ப நீங்க கொடிமரம் விழுந்த அந்த இடத்த ஒருக்காப் பாருங்கோ உபதேசியார், அது விழுந்த பக்கம் எங்க எண்டு. அங்க றம்பக்குளத்தப் பாத்துத்தான் அது விழுந்திருக்கு என்ன? இது இறம்பக்குளத்துக்கு ஒரு துக்குறி உபதேசியார்.” - உபதேசியாருக்கு இந்தக் கதையைக் கேட்க ஆத்திரம் வந்தது கொடிமரம் விழுந்ததிலிருந்து கலங்கிக் கொண்டு இவ்வளவு நேரமாய் நின்றவர் இப்போது ராயப்புவிடம் தன் எரிச்சலைக் கொட்டினார். “கொடிமரம் விழுந்ததெண்டு முதலில அதுக்குச் சாத்திரமே பாக்கிறது ராயப்பு.? நீங்க பேயின்ர வழியில போற ஆக்களே? இதுக்கெல்லாம் சாத்திரமும் மூத்திரமும் பாக்கிறியள். கத்தோலிக்க ஆக்கள் சாத்திரம் பாக்கிற ஆக்களே ராயப்பு? குறி சொல்லுறவனோடயும் சூனியம் செய்யிறவனோடயும் சேராத. சாத்திரம் பாக்காத. நாள் பாக்காத இப்பிடி இதையெல்லாம் பாக்காம அதுகள நம்பாம கடவுளிண்ட வார்த்தய நம்பி நீ வாழ்க்கையை நடத்து எண்டெல்லாம் பைபிள் சொல்லுறது உங்களுக்கு மூளைக்கால இருந்து எங்க போனது?” - அவர் உறைப்பாக இதைக் கேட்டார். “ஆ அப்ப அது கிடக்கட்டும் கிடக்கட்டும் சாத்திரம் வேணாம் விடுவம். ஆனா அந்த மரம் விழுந்த இடத்துக்குக் கிட்ட ஒரு பிள்ளத்தாச்சியொருத்தி நிண்டவள் உபதேசியார். அது உங்களுக்குத் தெரியேல்ல என்ன..? கடவுளே அதில அவளிண்ட குடும்பமே நிண்டு பார்த்துக் கொண்டிருந்திச்சு உபதேசியார். அந்த மரம் விழுந்து கொஞ்சம் அரக்கி அதுகளிண்ட மேலில விழுந்திருந்துதெண்டா கடவுளே அதுகள் காயும் பூவும் கொத்துமாய் போய்ச் சேர்ந்திருக்குங்கள். இதுக்கெல்லாம் இங்கால நிண்டு கயிறு பிடிச்ச ஆக்கள் ஆர் அவயள் எண்டு உங்களுக்குத் தெரியுந்தானே? உண்ணான நான் சொல்லுறது சொல்லுக்குச் சொல் பலிக்கும் உபதேசியார். அப்ப நான் அதுகள உங்களுக்குச் சொல்ல என்னை நீங்களெல்லாம் போட்டு லோட்டி கட்டீட்டியள் என்ன? அவரொருவர் உங்களோட சேந்து நிண்டார் உதில அவரெங்க அவர்? பெரிசாக் கத என்னட்ட விட்டார். அவருக்கும் இதில நிண்டு கயிறிழுத்தவயளிண்ட பாடு தெரியாதாக்கும்? எங்க போயிட்டார் ஆள்? அவர் இதில நிண்டு கேக்கிறதுக்கும் தான் நான் இந்தக் கதய இப்ப சொல்ல வேணும்? அம்மாடி கததான் கதைக்கத் தெரிஞ்சது எல்லாருக்கும் வேற செய்ய ஒழுங்கா ஒரு அலுவலும் அவயஞக்குத் தெரியாது. இதில அப்போத ஆர் சிமிக்கிணாம வந்து நிண்டு கயிறு பிடிச்சவயளெண்டு உங்களுக்கு அது தெரியுமே உபதேசியார்.? நீங்கள் அந்த நேரம் சுவாமியைக் கூப்பிட அறைவீட்டுக்குப் போயிற்றியளென்ன? அந்த நேரம்தான் நான் இப்பச் சொல்லுற ஆக்களெல்லாம் இந்தப்பக்கம் நிண்டு கயிறு பிடிச்சவயள்.” இராயப்பு உபதேசியாரின் முகத்துக்குக் கிட்டவாக தன் முகத்தை கதையோடு கதையாக முன்னால்
Iෂ්, ෆි, ෆණ්vගvණිගර් O 226 O

கொண்டுவந்தார். உபதேசியாரின் பார்வையில் தன் கண்களைக் காணவைத்து தான் சொல்லுகிறதையெல்லாம் அவரும் ஒத்துக் கொள்ள வைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக முகத்தை அவருக்கு முன்னால் திருப்பி வைத்துக்கொண்டு அவர் இத்தனைக்கும் படாத பாடுபட்டார்.
இராயப்புவின் முகம் தனக்குக் கிட்டவாக வரவும் அவர் தன்னுடன் கதைக்கவும் உபதேசியாருக்கு அவருடைய பேச்சில் கள்ளின் புளிப்பு வாடை வீசியது. கடுகடுப்பு மிகுந்த கள். அந்தப் புளிப்பு ஏறிய தென்னங்கள்ளின் வாசனை தூக்கியடிக்க அவர் மூக்கைப் பொத்திக் கொண்டு காகம் போல் அவரைத் தன்கண்ணால் சரித்துப்பார்த்தார். அவரது சாராய நாற்றத்தில் உபதேசியாரின் நுரையீரல் பிராணவாய்வுக்குத் தவித்தது. "என்ன மணக்குதென்னில எண்டு நீங்க உங்கட மூக்கப் பொத்துறியள்? நான் உங்க உள்ள மற்றவயள் மாதிரி வீட்டுக்க வைச்சு கள்ள மொளிச்சு அப்பிடி மறைச்சுக் குடிக்கிறேல்ல. எண்டாலும் நான் இப்ப கோயிலுக்கு வரேக்க குடிச்சுட்டு வரேல்ல. அப்ப கேளுங்களன் கதய. இங்காலிப்பக்கம் நிண்டு கயிறுழுத்தவயள் ஆர் அவயள் எண்டுறியள்? அவயளெல்லாம் இங்க தங்களுக்குள்ள ஒரே கூட்டு. மேளகாறன், தாளக்காறன், நாவிதன், வண்ணானெண்டு எல்லாம் ஊமைப் பிசாசுகளும் காட்டுப் பேயஞம் மாதிரி ஆக்கள். அதால உங்களுக்கு இப்ப தெரிய வருகுதுதானே இந்த மரம் விழுந்ததெண்ட அந்தக் காரணம். அவயின்ர வேர்வை வழுக்கி உருவிப் போட்டெண்டு பேந்து பொய் சொல்லுவாங்கள். ஆனா நான் சொல்லுவண் அவங்கள் வேணுமெண்டுதான் அந்தக் கயிறை விட்டிருப்பாங்கள். அதுதான் உதுக்க கட்டாயமா நடந்திருக்கும்.” “அடி உந்தச் சனியன் பிடிச்ச நாய. கோயில் வளவுக்க குட்டிச்சாத்தானா வந்து எங்களுக்க முன்னால நிண்டு குதிபோடுது..?” - குரல் கேட்டதும் பின்னால் இருந்து ஆர் அது.?” - என்ற திகைப்பில் ராயப்பு திரும்பினார். பிறகு அன்ரனைக் கண்டுவிட்டு “என்ன என்ன..??” - என்றுகொண்டு திரும்பி நின்றபடி ஒரு சண்டித்தனப் பார்வை பார்த்தார் இராயப்பு அன்ரன் தன் கையை நீட்டி முன்னாலே அவருக்கு அதைத்தன் கண்ணாலே அவர் பார்த்துக்கொள்ளக் காட்டினான். இராயப்பு அவன் காட்டிய இடத்தை சட்டென்று பார்த்தார். பறநாய் ஒன்று அங்கு நின்றது. அன்ரன் கீழே தன் காலுக்குப் பக்கத்தில் கிடந்த கல்லொன்றை எடுத்து நாய்க்கு எறிந்தான். வள்ளென்று அது விழுந்து ஓடியது. “பறைப்பிசாசு நாயஸ் சனியன்கள்.” - என்று அவரைப் பார்த்து அந்த நாய்க்குப் பேசுவது போல, மலம் மிதித்ததாய் தன் முகம் சுளுக்கிச் சொன்னான் அன்ரன். “ம். இப்புடியெல்லாம் ஒரு சேட்டையுமிருக்கு ஆ. நான் ஒரு கிழட்டுப் பயந்தாங் கொள்ளியெண்டுதான் நினைப்புப்போல.” - என்று அன்ரனைப் பார்த்து முறைத்தார் அவர். எப்போதும் உயிரற்றிருக்கும் அவர் முகம் இப்போது கல்லில் செதுக்கியதுபோல் காணப்பட்டது. இந்நேரமாய் அங்கே திரும்பவும் கொடிமரம் ஏற்றும் ஆயத்தத்தில் சுற்றிலும் விரிந்து கிடந்த கயிறுகளின் பக்கமாய் ஆட்கள் போய் நின்றார்கள். அன்ரனும் இராயுப்புவிடம்
வரழ்க்கையிண் சிறுங்கள் O 227 O

Page 124
பேசிக்கொண்டிருந்த கதையை நிறுத்திவிட்டுப் போய் அங்கே ஒரு கயிற்றுப்பக்கம் நின்றவர்களோடு நின்று தானும் அந்தக்கயிற்றைப் பிடித்துக் கொண்டான்.
திரும்பவும் மணியோசையும் பறை ஒலியும் சேர்ந்தொலிக்க கவனத்துடன் நின்று செயல்பட்டு எல்லாரும் அந்தக் கொடிமரத்தை உயர்த்தி அந்தக் குழியிலே நிறுத்திப் போட்டார்கள். கொடிமரக்கயிறுகள் சூழநின்ற மரங்களில் கட்டப்பட்ட வேலை முடிந்தபின்பு கோயிலுக்குள்ளே புரிந்துகொள்ள முடியாத புராதன “லத்தீன்” மொழியில் “வேஸ்பர்” ஆரம்பமாகியது. சுவாமியார் எப்போதும் உபயோகிக்கும் அதே குரலில் வழிபாட்டை நிகழ்த்தினார். அங்கே நடந்த வழிபாட்டுத் தோத்திரங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அன்ரன் கவனமாகக் கேட்டு அவற்றின் உணர்ச்சியில் ஒன்றிவிட அவன் முயற்சி செய்தான். அதன் பின் சொரூப எழுந்தேற்றம் ஆசீர்வாதமென்று அந்தப் பெருநாள் காலத்தின் முதல் நோவினையானது எல்லா வருடத்தையும் போல் அன்றும் அது சிறப்பாக நடந்தது. வேஸ்பர் முடிய ஒளியும் சுகமும் தன் இதயத்துக்குள் நுழைந்தது மாதிரியாக அன்ரனுக்கு அப்போது இருந்தது. அவன் அந்தோனியார் திருச் சொரூபத்தை நெருங்கி அவரின் பாதங்களை பரவசத்திலும் மகிழ்ச்சியிலும் முத்தமிட்டு விட்டு ஆசி நீர்த்தொட்டியில் அந்தப் பரிசுத்த நீரைத் தன் கைவிரல்களில் நனைத்து எடுத்துக் கொண்டான். அதன் பிறகு நெற்றியில் முதலில் அதையிட்டு திரித்துவ ஸ்தோத்திாம் செய்து வணங்கிவிட்டு, அவன் தன் வீட்டுக்குப் பிறகு வந்து சேர்ந்தான். அதற்குப் பிறகு தாயும் மகனும் வீட்டு விறாந்தையில் இருந்து, கோயிலில் நடந்துபோன சம்பவங்களைப் பற்றியே ஞாபகப்படுத்தி வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகக் கதைத்தார்கள். கோயிலில் கொடிமரம் சரிந்து விழுந்தது, ஒரு கவலைச் சம்பவமாகவே இருவரது பேச்சிலும் அவைகள் வெளிப்பட்டன. அதற்குப் பிறகு அவர்களிருவரும் சேர்ந்து இரவு உணவை உட்கொண்டார்கள். உண்டகளைப்பிற்குப் பின் அன்ரன் தன் படுக்கை அறையில் சென்று கட்டிலில் படுத்தான் நித்திரை அவன் நினைவுகளையும் இழுத்துக்கொண்டு எங்கேயோ போனது. அதனால் பிறகு அவன் கனவென்னும் ஒரு கடலாழத்துக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான். அவனது கனவில் கோயிலில் விழுந்த கொடிமரம் வரவில்லை. ஆனாலும் பெரியதொரு சிலுவைமரம் தெரிகிறது. அதிலே இயேசுவை ஆணியறைந்த இடங்களில் உள்ள அந்த மூன்று ஆணிகளும் கூராய் அதில் வெளித்தெரிய குத்திக் கொண்டிருந்தபடி அவனுக்குக் காணப்படுகிறது. சிலுவையைச் சூழநின்று எத்தனையே பேர் முழந்தாளிட்டு இருந்தவாறு ஜெபிக்கிறார்கள். ஆனால் இராயப்புமாத்திரம் சிலுவைக்கு நேராக தன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு அதிலே நிற்கிறார். அவர் முகத்தில் பக்திக்களை சிறிதும் இல்லை. பாவத்தின் சம்பளமென்ற அத்தனை இருட்டும் அவர் முகத்தில் படிந்திருப்பதுபோல தெரிகிறது. ஏதோ ஒரு பிசாசு அவருக்குள் புகுந்து அவரை ஆட்டுவிப்பதைப்போல "நான் நான்” என்று சொல்லியபடி அவர் அந்தச் சிலுவையைப் பார்த்து இன்னும்
Iෂ්, ෆි, ෆයි‍ෙගvශvජ්හර් O 228 O

எதையோவெல்லாம் சத்தமிட்டபடி அவர் சொல்லியவாறு இருக்கிறார். அவருடைய அந்தச் சத்தத்தைக்கேட்டு அந்தச் சிலுவையே தன்பாட்டுக்கு அசைகிறது. அங்காலேயும் இங்காலேயுமாக அந்தச் சிலுவை தன்னை அதில் அசைத்துக் கொள்கிறது. சிலுவை அசைய அதைப்பார்த்து அவர் ராங்கி காட்டுகிறமாதிரிச் சிரிக்கிறார். அப்போது அது மேலும் பெரிதாக வானத்தைத் தொடும்படி ஆடிக் குலுங்குவதைப்போல அசைகிறது. சுற்றியிருந்து ஜெபிப்பவர்களின் ஜெபத்தின் ஒசை வரவர அதிகமாகி அது வானைப் பிளப்பது போல் பெலக்கிறது. ஜெபிப்பவர்களது குரலில் பயபக்தியுள்ள அடிமைத்தனம் தொனிக்கிறது. அந்தச் சிலுவையைப் போன்ற உருவில் தன் கைகளை அதுபோல் விரித்துக்கொண்டு, அந்தச் சிலுவைக்கு முன் நானும் ஒரு சிலுவை என்றவாறு நிக்கிறார் இராயப்பு. இன்னும் “நான் நான்’ என்ற சொற்தொடர்கள் தான் அவர் வாயிலிருந்து வருகின்றன. புழுவிலிருந்து புழுவெளிப்படுவதைப்போல இன்னும் சுத்தமில்லாத கொடிய வார்த்தைகள், அந்த நான் என்னும் வார்த்தையோடு அவர் வாயிலிருந்து அனேகம் புறப்பட்டு வெளிவருகின்றன. அசையும் நிலையிலிருந்து இருந்தாற்போல அந்தச்சிலுவை, தன்னை ஆழங்காண முடியாத கறுப்புக் குழியிலிருந்து பிடுங்கிக் கொண்டுவந்து அவரின்மேல் கணக்காகச் சரிந்து விழுகிறது. தன்னைச் சிலுவையாக்கின நிலையில் நின்று கொண்டிருந்த இவர்மேல் இயேசுவின் பாடுபட்ட சிலுவை அப்படியே சரிந்து, அவர் நின்ற அந்த வடிவத்துடனேயே அவரைக் கீழே விழுத்தி தானும் அவருக்குமேலே விழுந்து அவரை நசுக்குகிறது. அவரது கைகளிரண்டிலும் சிலுவையின் கூரிட்ட ஆணிகள் குத்திப் பொத்துக் கொண்டு போகின்றன. இதைப் போல் கால்களிலும் ஆணி தைத்து அவையும் காலுக்குள்ளாலே கிழிந்து துருத்திக் கொண்டு வெளியே வந்து விட்டன. சிலுவைக்குக் கீழே அமைந்தடங்கிக் கிடந்துகொண்டு புகலற்ற தீனக் கூச்சலுடன், எதையோ முணுமுணுத்து முறையிடுவது போல இருந்து அவர் அழுது புலம்பியவாறே சிலுவையை முத்தமிடுகிறார். ஆணி தைத்து காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் அவருக்குப் பீறிட்டு வழிகிறது. அது நிலத்தில் இரத்தச் செம்மைபடர்ந்து தகதகக்கிறது. "இரத்தப்பலி. இரத்தப்பலி.”
என்று சூழவிருந்த சனங்களெல்லாம் செபப் புத்தகத்தை கீழே போட்டுவிட்டுக் கத்துகிறார்கள். அவர்களுடைய கண்கள் கலவரமடை கின்றன. அவர்கள் போடும் உரத்த சத்தத்திலே அருகிலுள்ள மரங்களிலிருக்கும் இலைகளும்தான் நடுங்குகின்றன. அணுகிவரும் சாவின் ஏக்கம் படிந்து இராயப்புவின் முகம் வெளிறிப்போய்விட்டது. அவர் இப்பொழுது எவ்வளவோ சின்னவராக மெலிந்தவராகத் தோன்றுகிறார். கடைசியாக அவரது குவிந்த வாயிலிருந்து இனங்கண்டு கொள்ளமுடியாத ஈர அடர் ஆவி வெளியேறுகிறது. அந்த அடர் ஆவி ஒளியை ஊடுருவக்கூடிய அதிகப் பிரகாசமாய்க் காணப்படுகிறது. அணுவிலிருந்து திசுக்கள் வரை எல்லாப் பொருட்களிலும் நுழையக்கூடியதுபோல அது இருக்கிறது. தீமை செய்தவனின் விதியை எளிதாக்க அவர் இறப்பதை
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 229 O

Page 125
அங்கே அவரைச் சுற்றி நின்றவர்கள் யாரேனும் விரும்பவேயில்லை. அவர்கள் துயரம் பொங்க - "கடவுளே இவரை மன்னித்தருளும்” என்று பூமி கரைந்துபோகும் அளவுக்கு அழுதுகொண்டு மன்றாடுகிறார்கள். இந்தக் கனவு இதற்குப் பிறகு அவனுக்கு நீளவில்லை. சிலுவை விழுந்து நசுக்குப்பட்டு அவர் சீவனை விடப்போகும் அந்த இடம் ஆகக்கரிய இருட்டாகவே பிறகு மூட்டப்பட்டுவிட்டது. அந்த இருள் சுருள்விரியத் தொடங்கி பரந்து அங்கு உச்சத்தில் நிலைத்துவிட்டது. உலகத்தை விழுங்கிய அந்த இருளிலிருந்து ஒரு சத்தம். அது ‘ஓ’வென்றதுபோல ஓசையுடன் எழுந்து “ம்”மென்று முடிவாக ஒலிக்கின்ற வேளையில் அவன் திடுக்கிட்டுப்போய் குரல் வராமலேயே கத்திக்கொண்டு கண் விழித்துவிட்டான்.
அந்தக் கனவைக் கண்டு பயந்து துள்ளிக் குதித்து கட்டில் கம்பில் மோதிக்கொண்டு எழுந்தபோது, வலியை உணர்ந்தான் அன்ரன். அப்போது அவன் ஆற்றில் மிதப்பதுபோல, அந்தக் கட்டில் ஆடிக்கொண்டிருந்தது. தான் கண்டுவிட்ட கனவை நினைத்து அவனுக்குப் பிறகு மனத்தில் சிந்தனைகள் திரண்டு மோதிக் கொண்டிருந்தன. இந்தக் கனவிற்கு இராயப்புவின் மேலிருந்த வெறுப்புத்தான் தனக்கு மூலவேராக இருக்குமோ, என்றவாறு அவன் அப்போது நினைத்துக் கொண்டான். இதனால் பிறகு தனக்குள் இராயப்புவை நினைத்து, அவன் உருக்கத்தோடு மனவருத்தப்பட்டான். பிறகு கட்டிலில் திரும்பவும் படுத்துக்கொண்டு தலையணையில் தலையைச் சாய்த்துக்கொண்டு, மறுபடியும் தூக்கத்தைத் தொடர அவன் முயன்றான். மனித சிந்தனையின் மின் இயக்கம் எவ்வளவு சக்தி கொண்டது, என்று இப்போது தான் கண்ட கனவை நினைத்துக் கொண்டு அவன் வியந்தவாறு இருந்தான். இந்தக் கனவைப் பற்றிய நினைவில், கனவு என்பது எல்லாமே ஒரு கண்ணுக்குத் தெரியாத நூலால் கட்டப்பட்டு இழுத்தாட்டுவிக்கப்படுவதாய்த்தான் இருக்கிறது, என்றதாய் அவன் மனம் எண்ணியது விடியலில் வீசும் குளிர்காற்று அவன் படுத்திருந்த அறை ஜன்னலுக்குள்ளாலே உள்ளே வந்து வீசியது. அந்த வளவில் நின்ற மூதாட்டி வேப்பமரத்தின் உச்சியிலிருந்த பறவைகள் ஆகாயத்தில் பறந்ததைப்போல் சிறகடிப்புச் சத்தம் அவனுக்குக் கேட்டது. அந்தப் பறவைகள் தன் பறத்தலை உயர்த்திக்கொண்டு பறந்ததற்குப் பிறகு, கண்ணின் கருமணியை இழுத்துக்கொண்டு போவதைப்போல திரும்பவும் அவனுக்குக் கண்ணை மூடத்தூக்கம் வந்து அள்ளிக்கொண்டு போயிற்று. அப்படியே அவன் நிச்சயமான புலனடக்கம் ஏற்பட்டு பிறகு நன்றாகச் சுகமாகத் தூங்கிவிட்டான். விடியலில் மாடுகளின் குளம்போசை கேட்டு எழுந்து கொள்வதுதான் அவனது நித்திய பழக்கமாக இருந்தது. அதோடு சேவலின் கூவல் புதுநாளின் ஆரம்பத்தை அறிவித்தபிறகு அவன் பாயிலே கிடக்கமாட்டான். ஆனால் இன்று வெயில் எழுந்தும் அவன் நித்திரைவிட்டு எழவில்லை. அந்த அளவுக்கு கும்பகர்ணன் மாதிரி அவன் நித்திரையிலிருந்தான். அமுதம் காலையில் கையில் கோப்பித்தம்ளரோடு மகனின் படுக்கை அறைக்கு வந்து அவனைப்
jණ්. ඊ. ෆAගvගvණිගර් O 230 O

பார்த்தாள். தன்மகன் கழுத்தடியில் வியர்வை துளிர்க்க அயர்ந்து தூங்க அதைப்பார்த்து. “நல்ல பஞ்சியில கிடக்குறானாக்கும்.” என்று நினைத்துவிட்டு, அவளும் அவனை நித்திரையில் எழுப்பாது விட்டுவிட்டு குசினிப்பக்கம் பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள்.
பதினான்கு
புரட்டாசி மாதம் பிறந்து ஊரெல்லாம் நாய்கள் கோலாகலம் பண்ணிக் கொண்டிருந்தன. எல்லா வீட்டு நாய்களும் தெரு நாய்களும் சேர்ந்து, தங்கள் இருக்கும் இடங்களை ஊளையினாலும் குரைப்பினாலும் வெளிக்காட்டியபடி ஆர்ப்பாட்டங்கள் செய்தவாறு இருந்தன. அன்று பின்னேரம் அன்ரனின் வீட்டுக்கு முன்னால் உள்ள நாற்சந்தியின் தபால் பெட்டிக்கு அருகே ஒரு நாய் நின்று, ஊழியிடி போன்ற ஊளைக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. அன்ரன் வேலிப்படலையைத் திறந்த கையோடு, கீழே ஒரு துண்டுச் செங்கல்லை எடுத்து அதற்குக் குறிபார்த்து எறிந்தான். அவன் குறிவைத்து வீசியது அங்கே தவறவில்லை. அந்தக் கல் நாயின் குண்டிப் பகுதியிலே சரியாப்போய் "தக்”-கென்று அடித்தது. "வள்” ளென்று உடன் ஒரு சத்தத்தோடு அந்த நாய் கல்லைத் திரும்பிப்பார்த்து விட்டு பிறகு ஒரே ஒட்டம் “சவ நாயஸ்.” - என்று பேசிவிட்டு தூசியைக் கையிலிருந்து தட்டியபடி, அவன் பிறகு வீதியாலே நடக்கத்
தாடங்கினான். இன்றைப் பின்னேரமான பொழுது தன் மனதுக்கொரு சந்தோஷமாய் இருக்கின்றதைப்போல் அப்போ அவனுக்கிருந்தது. அவன்போய் பொன்னுத்துரை ஐயாவின் வீட்டுப் படலையைத் திறந்து உள்ளே போன தருணம், அந்த முற்றத்தில் உதிர்ந்து கிடந்த மாவிலைகள் மெதுவாகக் காற்றுக்குச் சுழன்றன. அவன் முற்றத்தாலே நடந்து போனபோது தன் கண்களால் அங்கே கண்டது இராசம்மா ஆச்சியைத்தான். அவர் முற்றத்தில் போட்டு இருந்து கொண்டிருந்த அந்தப்பலகைக்குப் பக்கத்தில் - “ஓ! இவள் விசயாவும் சேந்துதான் இதிலயாய் நிக்கிறாளே?” - என்று அவன் அவளையும் அதிலே கண்டதும் உடனே குதூகலமடைந்தான். அவனைக்கண்டதும் - "இங்காலயா நீர் இப்பிடி வாருந்தம்பி” - என்று தன் பக்கமாக அவனை அங்கே வரக்கூப்பிட்டாள் இராசம்மா ஆச்சி அதிலே அவன் வரவும் விசயாவின் முகமெல்லாம் மகிழ்ச்சிப் பூப் பூத்தாற்போல ஆகியது. அவள் அப்பம்மாவிற்குப் பின்புறமாய் மறைந்து நின்று அவனைப் பார்த்துச் சத்தமின்றிச் சிரித்தாள். அந்தச் சிரிப்பைக் காணவும் அவனுக்குக் குளுகுளுவென்றதாய் மனம் குளிர்ந்தது. இப்படி அவளுடைய அதரங்கள் மனோரம்மியமாக முன்பு ஒருபோதும் தன்னைப் பார்த்து முறுவலித்ததில்லை என்றாற்போல அவன் நினைத்துக் கொண்டான். "நீர் என்ன தம்பி கனநாளா இங்காலிப்பக்கமே காணேல்ல?”
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 231 O

Page 126
என்று அப்போது இராசம்மா ஆச்சி அவனைக் கேட்க உடனே அதற்கும் அந்த மறைவிலே தன்னை வைத்துக்கொண்டு மீண்டும் விசயா சிரித்தாள். அவன் உடனே அங்கே நின்று சிரிக்கின்ற அவளைப் பார்த்தான். அவள் அப்பம்மாவின் கேள்வியை தன் பார்வையில் வைத்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் உடனே அவனுக்கு அவளைக் கதவுக்குப் பின்னால் வைத்து அன்று கட்டி அணைத்து முத்தமிட்டபோது இருந்த பார்வை வந்துவிட்டது. அவளும் அதைத் தெரிந்துகொண்டு தானும் உணர்ச்சிக்குள்ளாகிவிட்டாள். அன்று அவன் அணைப்பில் தான் நுகர்ந்த கணப்பு அவள் உடம்பில் இப்போது ஏற்றம் பெற்றுவிட்டது. இராசம்மா ஆச்சி இடுப்பளவு மட்டும் அவனைப் பார்ப்பதை விடுத்து இப்போதுதான் தன்மோவாயை மேலே உயர்த்தினாள். அவன் அந்த நேரம் ஆச்சியின் முகத்தைப் பார்த்துச் சமாளித்துவிட்டான். இராசம்மா ஆச்சியும் அவனது முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். தன் கையில் பொத்தியபடி வைத்திருந்த அந்தப் பட்டுத்துண்டை கையை விரித்து அவனுக்குக் காட்டியபடி, "இதில உள்ளத உமக்கொருக்காக் காட்டிவிடத்தான் இங்க நான் உம்மைக் கூப்பிட்டன்." அவன் உடனே ஆச்சியின் கையிலிருந்ததைப் பார்த்தான். "அப்பிடி என்ன புதினமாய் ஒரு பொருள் எனக்குக் காட்டவெண்டு நீங்க இந்தப் பட்டுத்துண்டுக்க சுத்தி வைச்சிருக்கிறீங்க?" அவன் ஒரு சிரிப்போடு இதைக் கேட்டான். “உண்மையேதான். இதை உம்முடைய சீவியத்தில எங்கயுமே கண்ணால எப்பவுமே கண்டிருக்க மாட்டீர்தான்!” "அப்பிடி நீங்க வடிவாயுதைச் சொல்லுறதைப் பாத்தா. அது ஏதோ விலை மதிப்பில்லாத ஒரு பொருளாவும் இருக்குமென்ன?” அவன் தன் மனதுக்குள் அப்போது நினைத்துக் கொண்டதை அவருக்குச் சொன்னான். "ம். அப்பிடியாத்தம்பி நீர் சொன்னமாதிரியும் கதைபேச்சுக்கு அத வைச்சுக்கொள்ளலாம். ஆனாலும் நீர் சொன்னதுக்கும் மேலயும் இது பெரிய மகத்துவமானதுதான் தம்பி.!” “சரி சரி அதையுந்தான் இப்ப பாத்திடுவமே. இப்ப அதக் காட்டுங்களன் பாப்பம் ஒருக்காய் எனக்கும்?” அவன் கேட்டான். "இதை உமக்கு இப்ப காட்டத்தானே இங்கின உம்மை நான் இப்ப கூப்பிட்டனான். எதுக்கும் நீர் இதில எனக்கு முன்னால இதைப் பாக்கிறதுக்கு - இதில ஆற அமர வடிவாய் முதல் இருந்து கொள்ளவேணும். அதுக்கு” - என்றுவிட்டு தனக்குப் பின்னாலே நின்றுகொண்டிருந்த விசயாவை அவள் திரும்பிப் பார்த்து “பிள்ள அந்தக் கதிரய உள்ளபோய் நீ எடுத்துக் கொண்டந்து இதில போட்டு விடம்மா தம்பிக்கு இருக்க.” - என்று அவளிடம் சொன்னாள். விசயா அப்பம்மா அதைத்தனக்குச் சொல்லி முடிக்குமுன்னமே விழுந்தடித்துக்கொண்டு அங்கே திண்ணையடிக்கு ஓடினாள். அங்கே திண்ணையில் உள்ள ஒரு கதிரையில் இருந்து கொண்டு பொன்னுத்துரை பாரதம் வைத்துப் படித்துக்கொண்டிருந்தார். விசயா வந்து அதிலே இருந்த ஒரு கதிரையை தூக்கிக் கொண்டு போக, அவர் தன் புத்தகத்திலிருந்த பார்வையை எடுத்துவிட்டு திரும்பி அங்கே அவளைப் பார்த்தார். அவர் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தபோதே வெளி முற்றத்தில் கேட்ட அன்ரனின் குரலையும் நிதானம் பிடித்து வைத்திருந்தார். விசயா கதிரையோடு ரீ.பி. அருளWணந்தம் O 232 O
s

திண்ணையால் இறங்கிப்போக "தம்பியோண அங்க வந்திருக்கு” என்று தொண்டை இறுக்கத்தோடு சத்தமாய் அதிலிருந்தவாறே இராசம்மா ஆச்சியிடம் அவர் கேட்டார். "ஓம். இங்க எனக்குக் கிட்டவாத்தான் அந்தத் தம்பி இப்ப நிக்கிறார்." "அப்ப வரச்சொல்லன் அவரை இங்க திண்ணைக்கு.?” “நீங்க இருந்து உங்கட புத்தகத்த வாசிச்சுக் கொண்டிருங்கோ. தம்பியோட எனக்கும் இண்டைக்கு ஒரு கதை கதைக்க வேண்டியிருக்கு.” - இராசம்மா ஆச்சியும் தன் குரலை மேலே உயர்த்திச் சொன்னாள். அவள் இதைச் சொன்ன பிறகு பொன்னுத்துரையிடமிருந்து யாதொரு சத்தமுமில்லை. விசயா கதிரையை அவ்விடத்துக்குக் கொண்டு வந்து அப்பம்மாவுக்கு முன்னாலே அதை வைத்தாள். "நீர் இருந் தம்பி இதில வடிவாய்.” "ஐயாவும் என்னை அங்க வாவெண்டு அப்போதே கூப்பிட்டார்." - இராசம்மா ஆச்சிக்கு இதைச் சொல்லிக்கொண்டு அவன் விசயாவின் கைவிரல்களைப் பார்த்தான். அந்த அவளது விரல்களை, அவள் கதிரையைக் கொண்டு வந்து வைத்த வேளை பார்த்ததற்குப் பிறகு, இப்போதும் அதைத் திரும்பவும் அவனுக்குப் பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது. அவள்தன் மல்லிகை மொட்டுப் போன்ற நகங்களுக்கு மருதாணி இட்டிருந்தாள். அதை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல அவனுக்கு இருந்தது. ஆனாலும் அதற்கு இனிமேல் வழியில்லைப்போல இந்நேரம் அவனுக்கு ஆகியது. ஆச்சி அவனைப் பார்த்து "நீர் ஏன் தம்பி யோசிக்கிறீர். இதில இரும் நீர். அங்க அவர் இருந்து புத்தகத்த வாசிக்கட்டும்." - என்று சொன்னாள். "நீங்க கூப்பிட்டு எனக்குச் சொல்ல வந்த விஷயம் என்ன எண்டு நான் அறிய இதில இருந்துகொள்ளத்தானே இப்ப எனக்கும் விருப்பம். " - என்று அதை ஆச்சிக்குச் சொல்லாமல் தன் மனதுக்குள்ளே அதை நினைத்துக்கொண்டு அவன் அந்தக் கதிரையில் இருந்தான். விசயா இப்போதும் அப்பம்மாவுக்குப் பின்னாலேயேதான் போய் அதிலே நின்று கொண்டிருந்தாள். அதுதான் அவளுக்கு வசதியாக இருந்தது. அதிலே நின்றால் மட்டும்தான் அப்பம்மாவுக்குப் பிடி கொடுக்காமல் நெடுகலும் அவனை அவள் பார்த்துக்கொண்டிருக்க முடியும். இந்தப் பார்வையாலே காதல் கதைகள் பேசுவதைத்தவிர வேறு என்ன வழி உண்டு இங்கு அவளுக்கு. மனம்போல் அவளுக்கு இப்பொழுது கைகளும் கிடந்து பரபரத்தன. அதற்கு வேலை கொடுக்க தன் தலைப் பின்னலை முன்னே மார்பில் போட்டு, அதை நீட்டிப் பிடித்தபடி விரல்களால் அதை அவள் பின்னிவிடத் தொடங்கினாள். ஆனாலும் அவள் பார்வை மட்டும் முன்போலவே அவனிடத்தில். "பிள்ள பொழுதுபட முதல் கொஞ்சம் அந்த வேலி வழிய கொழிஞ்சு குழை பிடுங்கியும் அந்த ஆட்டுக்கிடாய்க்குத் தின்ன நீ கட்டிவிட வேணும். அது முடிய அரங்கற்றி பார்பிள்ள நீ திண்ணைப்பக்கம்.? அங்க என்ன கிடக்கெண்டு நீ இப்ப பாத்தியோபிள்ள..?” - அப்பம்மா அவளிடம் கேட்க அவள் அன்ரனைத்தான் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் வரழ்க்கையின் சிறக்கஸ் O 233 O.

Page 127
"என்ன உன்ர சத்தமொண்டையும் இருந்தாப்போல இப்ப காணேல்ல.” - என்று இன்னும் அவள் விசயாவைக் கேட்க - அவள் இன்னமும் அவனையே - பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பார்வையை மாற்றாமல் "ம்." - மென்றாள். அந்த இம்மென்ற ஓசை ஒரு இனிமையான ஸ்தாயியில் அவளிடமிருந்து அமைதியாக வெளிவந்தது. அது அன்ரனுக்கு ஒருவித கிளுகிளுப்பை மனதிலுரட்டியது. ஆச்சி மேலும் விசயாவோடு கதையைத் தொடர்ந்தாள். "நீயொருக்கா அங்கபாரன் பிள்ள அந்தத்திண்ணயடியில. அதில அடைக்கலங்குருவியளிண்ட எச்சம் விழுந்து அப்பிக்கிடக்கு. அவ்விடத்த எல்லாம் நாளைக்காலேல வேலயோட வேலயாச் சேத்து அதயும் சாணிபோட்டு மெழுகிவிட நீ அலுவல் பாக்க வேணும். வீடு நிறைஞ்ச நாச்சியார் நீ அதயும் பாத்து நீ செய்ய வேணும் பிள்ள.” - என்று மீண்டும் ஆச்சி இந்த வேலையையும் சேர்த்து அவளுக்கு சொன்னாலும்; அவர் என்ன தனக்குச் சொல்கிறார் என்று அதிகம் அதில் அக்கறை கொள்ளாது “ஓம் அப்பம்மா. ஒமோம் கட்டாயம் நான் அதைச் செய்யிறன் அப்பம்மா." என்று ஆச்சிக்கு அவள் உஷாராக ஒப் போட்டாள். அன்ரன் ஆச்சியைப் பார்த்தான். "கிடாயும் இப்ப வளக்கிறீங்களோ..? வாங்கினநீங்களோ..?” - என்று அவரைக் கேட்டான். "ம். ஐயாவுக்கு வேற என்ன வேல. எங்களுக்கு வீட்ட உள்ள வேலயளோட இன்னம் எங்களுக்கு வேற வேலயளயும் கூட்டி விடுறதுதானே அவருக்கு வேல. அங்கபாருமன்! அதுதான் அவர் கொண்டந்த ஆடு.!” - சொல்லிவிட்டு ஆச்சி ஆடுகட்டிநின்ற திசையை நோக்கி தலையைத் திருப்பியபோது அவரது அருவி போன்ற நரைக் கூந்தலின் சரிவு அவர் முதுகிலே புரண்டது. அந்த வேலியோரத்து மூலையைப் பார்த்தபடி அவர் முகவாயை உயர்த்த அன்ரனும் அவ்விடத்தே பார்த்தான். "ம். நல்ல நிறமான கிடாய்.” “ஒஒஒ. நல்ல கிடாய்.” “எங்க அவிட்டதாமெண்டுறன்?” "நெடுங்கேணிப்பக்கம்தான் போய்க் கொண்டந்தவர் தம்பி.” “அங்க கிடாய்வெட்டி வேள்வியும் ஒரு கோயிலில வருஷா வருஷம் நடக்கிறதெண்டுகினம் அது உண்மையே?”
"ம்.ம். அது உண்மையுந்தான். காட்டு முனியப்பர் கோயிலெண்டு அந்தக் கோயில எல்லாருஞ் சொல்றது. அந்தக் கோயிலில கிடா வெட்டுறவயள்தான்! அந்தப்பக்கம் ஆக்கள் கிடா வளப்பிலை கெட்டிக்காரச்சூரர். ஒரு முறை முந்தி அப்ப ஐயா அங்க போய் ஒரு ஆட்டை அவிட்டுக்கொண்டுவந்து இங்க எங்கட வளவுக்க கட்டினவர் தம்பி. அந்தக்கிடாய் அப்பிடியொரு திறம் கிடாய்தான்! அந்தாடு அங்க சீக்காயும் வேப்பிலையும் திண்டு திண்டு வளந்தா எப்பிடி இருக்கும்.? அது இங்க கொண்டந்து கட்டினாப்பிறகு அறுத்திச்செண்டா ஒருவரும் அதப்பிடிக்கேலாது - பேந்து ஐயாதான் அதப் பிடிக்க வேணும். பெரிய வீரக்கட்டையளயே அப்பிடித் தடக்கெண்டு கொம்பால மேல தூக்கி எறியும் தம்பி அந்தப் பொல்லாத ஆடு. அதுமாதிரித்தான் உது உந்தக் கொம்பன் ஆடும். உத லேசுப்பட்டதெண்டுறீரே பாரும் அத.” - அவனும் பார்த்தான் அந்தக்கிடாய் கூரிய கொம்புகள் கொண்ட மயிரடர்ந்த
iෂ්. ග්‍රී. ලාංඡිගvගvතීව්‍රර් O 234 O

கிடாயாயிருந்தது. சதை தொங்கும் கழுத்தும், கனத்து அசைந்த விதைகளும் கொண்ட அந்தக் கிடாய் அப்பொழுது செருக்கடித்துத் தும்பியபடி முன்னங்காலால் மண்ணை உதைத்தது. "சூ. உந்தக்கிடா வீரியமாத்தான் நிக்குது." - என்றான் அவன். அந்த வேலியில் இருந்து வால்குருவி ஒன்று கூவியது. குருவிச் சத்தத்தைக்கேட்டதோடு இராசம்மா ஆச்சி அங்கே பார்த்தாள். அங்கே அவள் பார்வைக்குத் தெரிந்தது அந்தக்குருவியல்ல. வேறு ஒன்று அது. அது ஓணான்தான். தன் தொங்கு தசைச் சவ்வு துடிக்க வேலிக்கம்பில் இருந்துகொண்டு தலைய்ை பிரட்டிப் பிரட்டி மேலே அது எட்டிப்பார்த்தபடி இருந்தது. ஆச்சி அதைப் பார்த்தும் பாராததுபோல் இருந்துவிட்டு இந்தப்பக்கம் தன் முகத்தைத் திருப்புவதற்குள் - அன்ரனின் கள்ளக்கண்கள் விசயாவைப் பார்த்துப் பறவையாடிவிட்டன. ஆச்சி குருவியைத் தான் அதிலே காணக்கிடைக்காது போனதன் பிறகு, பழையபடி முன்பு இருந்ததுபோலத் திரும்பி இருந்தாள். அவனும் விசயாவை இப்போது பார்ப்பதைவிடுத்து ஆச்சியைப் பார்த்தான். “முருகா எனக்கு இந்த நினைப்பே இவ்வளவு நேரம் வராம எங்கயோவா அது போய் இருந்து கொண்டுது.” - என்று சொல்லிக்கொண்டு அவள் தன் கையை விரித்தாள். தன் கைக்குள் உள்ள பொருளின் மேல் சுற்றிக்கிடந்த அந்தப்பட்டுத்துணியை விலக்கினாள். ஆச்சி அந்தப் பட்டுத்துணியை விரித்தபோது, அதற்குள்ளே அங்கே திருநீறு மட்டுமே கிடப்பதாய் அன்ரனுக்கு அவ்வேளையில் தெரிந்தது.
விசயாவும் தலைப்பின்னலை பின்னால் தள்ளிவிட்டு, தலையைக் கீழே குனிந்தபடி அப்பம்மாவின் கையிலிருந்ததைப் பார்த்தாள். அவளும் அங்கே அந்தச் சீலைத்துண்டுக்குள் உள்ள திருநீற்றைத்தான் கண்டாள். அந்தத் திருநீற்றுக்குள்ளேயிருந்து ஆச்சி பிறகு தன் விரல்களை விட்டு வெளியே எடுத்த பொருள் ஒரு பாக்கு என்பதைப்போலத்தான் அன்ரனுக்கு அப்போது காண்பதற்குத் தெரிந்தது. அந்தப் பாக்கும் முழு உருப்படியில் லாமல் பாதியாக வெட்டப்பட்ட அரைப்பாக்காத்தான் அவன் கண்டான். வெட்டப்பட்ட அந்தப் பாக்கின் பாதி முகத்திலே, திருநீறு நன்றாய் அப்பிப் போய்க் கிடந்தது. "என்ன இது ஒரு பாக்கு மாதிரிக்கிடக்கு.?” - என்று சொல்லிவிட்டு அவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான். முன்பு அவனுக்கு இருந்த அந்த ஆர்வமெல்லாம் "புஸ்” என்றாற்போல அவனுக்கு உடனே அடங்கிவிட்டது. "இதுதானா மகத்துவமான பொருள்? இந்தப் பாக்குப் பாதியையா விலை மதிக்க முடியாதெண்டதாய் ஆச்சி எனக்குச் சொன்னார்? இந்த வயசு இப்பிடியுமா ஒரு புளுகுக்கதையும் விடும். இதுதான் அறளையா..?” - என்று நினைத்துக்கொண்டு அவன் ஆச்சிக்குப் பின்புறமாய் நின்று கொண்டிருந்த விசயாவைப் பார்த்தான். விசயாவுக்கும் ஏதும் புரியவில்லை. அவளும் கண்டது தனியே அந்தப்பாக்கின் மொழுமொழுவென்ற வெளிவடிவத் தையும் அதனுடன் இருந்த திருநீற்றையும்தானே? அவளும் தன் முகத்தில் கேள்விக்குறியை வைத்துக்கொண்டு நின்றாள். ஆச்சி பாக்கில் அப்பிக் கிடந்த திருநீற்றைத் தன் கைவிரல்களால் பாக்கைப் பிடித்துக்கொண்டு, அதைச் சுண்டுவிரலால்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 235 O

Page 128
மாத்திரம் தட்டித்தட்டி அதைத் துண்டுக்குள்ளே வெளியே சிதறாமல் விழ விட்டாள். திருநீறு அதைவிட்டுக் கழன்று போக, அந்தப் பாக்குப் பாதியிலே இப்போது ஒரு உருவம் புலப்பட்டது. ஆம் அது ஒரு சிலைதான்! என்று கண்டுகொண்டு தன் விழிகளை அகலவிழித்து அதைப் பார்த்தான் அன்ரன்.
அந்தப் பாக்கில் வடித்த சிலையை தன் உள்ளங்கையின் மேல் வைத்திருத்தபடி, அதை அவனுக்கும் கிட்வாய் கையை நீட்டிக் காட்டியவாறு "என்ர அம்மாளாச்சி.” என்று சொன்னாள் இராசம்மா ஆச்சி. அப்பொழுது ஒரு இனம்தெரியாத மகாசக்தியை அவன் ஆச்சியுடைய கண்களிலும் முகத்திலும் கண்டான். அவனுக்கும் அவனையறியாமல் ஒரு பயபக்தி வந்துவிட்டது. 'தம்பி திருநீறக் கீழ நிலத்தில கொட்டவிடப்பிடாது. அதோட வாயாலயும் ஊதிக்கிதி மண்வழிய அத கீழ விட்டிடவும் கூடாது. அதாலதான் பக்குவமா அதச் சீலத்துண்டுக்க வடிவாத்தட்டி எடுத்துப்போட்டு இத நான் உமக்குத் துலக்கமாப் பாத்துக்கொள்ள எடுத்துத்தாறன். பாரும், பாரும் இந்த அம்மன. மதுரமீனாட்சியம்மன் அப்பிடியே இதில உயிரோட இருக்காவடா தம்பி.” ஆச்சி இதைச்சொல்லிக்கொண்டு அதைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு அவனிடமாய் அதை தீர்த்தம் தரும் பாவனையில் பிறகு பயபக்தியாய் நீட்ட அவனும் அதை ஒரு பணிவோடு இருந்து தன் கையில் வாங்கினான். விசயா அப்போது அங்கே அவர்களிடத்தில் கைமாறும் சிலைய்ை சிலைபோன்ற தன் நிலையில் நின்று அதிசயப்பட்டவாறு பார்த்தாள். 'தம்பி இந்தப் பாக்கு தேவர்களுக்கு தாம்பூலத்துக்கெண்டு பயன்படுறதாம். அதில இந்தச் சிலய அவர் ஆசாரி எண்ணமாதிரி முழிப்பாச் செதுக்கியிருக்கிறார் பார்த்திரே? இது வெறும் ஒரு சிலைமாதிரியே பாக்க உமக்கும் தெரியுது? அப்பிடியா இது இல்லத்தம்பி! இது எனக்கெண்டா உயிருள்ள அம்மன்ரா தம்பி! அப்பிடித்தான் இந்த அம்மன் நேர இருந்து என்னோட பேசிற மாதிரி இதை நான் பாக்கேக்கயெல்லாம் இருக்கு மோன." - சொல்லிவிட்டு ஆச்சி ချီးဧခü தோளையும் மறைக்கின்ற - இறகு போல லேசாகிவிட்ட தன் தலை முடியோடு நிமிர்ந்து இருந்தார்.
அன்ரன் அந்தப் பாக்கில் வடித்திருந்த - புருவங்கள் இல்லாத வெற்றுக்கண் கொண்ட சிலையை இமையசையாமல் பார்த்தான். சோளக்காற்று மேற்றிசையிலிருந்து அலை அலையாய்த் தன் முழுவேகத்தோடு பிய்த்து வாங்கியது. துர்சியை அள்ளிக்கொட்டியது. அவன் அந்தக் காற்றடிக்கும் சூழ்நிலையிலும் அம்மனின் அந்தப் பயங்கர முக விலாசத்தைப் பஈர்த்துக்கொண்டிருந்தான். அதனுடைய சிருஷ்டிகரம் அவனைத் தாக்கியது. அந்தச் சிலை வடிவம் அவனை அதற்குள்ளே இழுத்துக் கொண்டு போவதைப் போல அப்போது அவனுக்கு இருந்தது. அந்தச்சிலை அவனது கண்களுக்கு முன்னால் மிகவும் பெரிய புனிதமான ஏதோ ஒன்றாக ஆழமான முக்கியத்துவம் உடையதாகத் தோன்றியது. இன்னும் இமைகொட்டாது அதைப்பார்த்துக் கொண்டிருக்கத்தான்

அவனுக்கும் ஆசை. ஆனாலும் அவன் கண்கள் கலங்கி மங்கின. 'தம்பீ.” என்றாள் பக்கத்திலிருந்த ஆச்சி அணையாத விருப்பத்துடன் அந்தப் பாக்கில் வடித்த சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான். "தம்பி இந்த அம்மனின்ர முகத்த நல்லாப் பார்த்தீர்தானே நீர்? இந்த உலகமெல்லாத்துக்கும் குளுமையை இறைச்சு நிம்மதியத்தாற மாதிரி இருக்கிற அவவின்ர கண்ணையும் நீர் நல்லாப் பாரும்.? அவவின்ர முகம் சாந்தி அலயடிச்சு களிநடனம் புரியிறமாதிரித் தெரியுதெல்லே உமக்கு.?” - ஆச்சி அப்படிச் சொல்லவும் அவன் குழம்பிப்போய்விட்டான். அவனின் பார்வைக்கு அந்த அம்மனின் முகம், பயங்கர முக விலாசத்தைக் காட்டியதை எப்படி ஆச்சியிடம் சொல்வது என்கிறதுமாதிரி அவனுக்குப் போய்விட்டது. ஒவ்வொருவர் பார்வைக்கும் தன் வெவ்வேறு உருவை வைத்துக் காட்டுகிறாளா இந்த அம்மன்.? அவனுக்குள் உளிச்சத்தம் எழாமல் சந்தேகச் சிற்பம் உருவாகிக் கொண்டிருந்தது. ஒரு கையால் முன்பு அவன் ஆச்சியிடமிருந்து வாங்கிய அம்மனின் அந்தச் சிலை உருவத்தை இப்போது தன் இருகைகளாலும் பிடித்துக்கொண்டு அதை அவன் பவ்வியமாக ஆச்சியிடம் கொடுத்தான். “கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயமலையைத் தேர்ந்தெடுத்தான் சேரன் செங்குட்டுவன். ஆனா இவர். இந்தப் பாக்கைத் தெரிஞ்செடுத்திருக்கிறார்." - அவன் ஆச்சரியத்தோடு இதை ஆச்சிக்குச் சொன்னான். "நீர் சொல்றது உண்மைதான் தம்பி ஒரு சிற்பியின்ர கலைத்திறம மஹாபலிபுரம் கல்லில உள்ள சிலையளில மாத்திரம்தான் பெரிசாத் தெரியுது எண்டு மட்டுமில்ல. இந்தச் சின்ன ஒரு பாக்கிலயும்தான் பாரும் நீர் அத. இந்தப் பாக்கிலயும் என்னமாதிரி அப்பிடி ஒரு அழகோட உயிரான வடிவத்தையும் இது பெற்றிருக்கு.?” "உண்மைதான் உண்மைதான்! நீங்கள் சொல்லுறதெல்லாம் சரியான உண்மைதான்! அந்தளவுக்கு இந்தப்பாக்கில நுணுக்கமா இத வடிச்சவர் மகாமகக் கலைஞர்தான்! அவர் ஒழுங்காச் சிற்பநூல் படிச்ச வல்லுநரான சிற்பாசாரியாத்தான் இருப்பாரெண்டு நான் இப்ப நெக்கிறன்.?” "பின்னத்தம்பி அவர் கடவுள் மாதிரித்தான்ரா தம்பி எனக்கு.? அப்பிடி ஏன்நான் சொல்லுறதெண்டாப் பிள்ள. இந்த அம்மன அவரெனக்கு இப்பிடிக் கொண்டந்து தந்தாப் பிறகுதான் தம்பி என்ர துன்பமெல்லாம் எனக்குத் துலைஞ்சது. நான் கண்ணிரோட கழிச்ச காலத்திலயெல்லாம் எனக்குத் துணையா ஆறுதலாயிருந்தது இந்த அம்மன்தான்..!” - இராசம்மா ஆச்சி மிகுந்த வாத்சல்யத்தோடு அந்தச் சிறிய சிலையை நெஞ்சில் வைத்து அணைத்தபடி சொன்னாள். அதற்குப் பிறகு கண்ணெதிரே மலர்ந்து பொலியும் ஏதொவொரு திவ்ய நிலையை நோக்கி பேசுவது போல மேலும் அந்தக் கதயை ஆச்சி தொடர்ந்தாள். "அந்தச் சிற்பாசாரி தம்பி இந்தியாவில இருந்துதான் இங்க வவுனியாவுக்கு சிற்பவேலை செய்யவெண்டு வந்தவர். அவர் ஸ்தபதி தம்பி! இந்த எஸ்தபதியெண்டு சொல்லுறது கோயில் நிர்மாணிக்கிற சிற்பியள.” “ஆ. அப்பிடியானவர் எண்டெல்லாம் நீங்க சொல்றவர் வவுனியாவுக்கு ஏன்
வரழ்க்கையிண் சிறக்கஸ் O 237 O

Page 129
வந்தார்? இங்க பெரிசா இந்துக் கோயிலெண்டு சொல்ல விசேஷமா அப்பிடி ஒண்டும் இல்லாத இடமெல்லே இது. அப்பிடியான இந்த இடத்தில எங்கயும் ஒரு கோயில் சிற்ப வேலையைச் செய்ய அவருக்கு வேண்டியதாய் வந்ததோ..?” 'தம்பி இங்கதான் நீர் விளங்கிக்கொள்ள வேண்டிய கணக்க விஷயங்கள் இருக்கு. எனக்கும் உதுகளப் பற்றி முதலில ஒண்டுமே தெரியாமலிருந்தது. அவர் தான் அதையெல்லாம் எனக்குச் சொன்னவர். அவர் சொன்னதுக்குப் பிறகுதான் நானும் இதையெல்லாத்தையும் அறிஞ்சன். இதையெல்லாத்தையும் விட இங்க வவுனியாவுக்கு வந்த அவரோட எங்களுக்கு எப்பிடி அறிமுகமேப்பட்டது எண்டு அதை முதல் நான் உமக்குச் சொல்லுறனே" “அதைத்தான் நானும் இப்ப உங்களிட்ட கேக்க நினைச்சன். அதை ஒருக்காச் சொல்லுங்கோ.?” - என்று விபரிக்க முடியாத கனிவுடன் அவன் ஆச்சியைக் கேட்டான். இராசம்மா ஆச்சி இப்பொழுது யோசித்தாள். அவர் என்ன அப்படி இருந்து இப்பொழுது யோசிக்கிறார்? என்று அன்ரன் நினைத்துக்கொண்டு அவரது முகத்தைப் பார்த்தான். பலமான யோசனை போலத்தான் ஆச்சிக்கு இருக்கிறது என்று அவனுக்குத் தெரிந்தது. ஆச்சிக்கு இறுக மூடிய அவளது வாயில் - ஓரத்தில் இரண்டு சுருக்கங்கள் விழுந்திருந்தன. உயர்ந்த புருவங்கள் நெரிந்திருந்தன. “தம்பி என்ர வாழ்க்கையில ஆரும் எனக்குச் செய்த ஒவ்வொண்டையும் ஒவ்வொரு விநாடியையும் நான் நினைவில வைச்சிருக்கிறன் தம்பி.” ஆச்சி இப்படிக் கதையைத் தொடங்க அவன் மெளனமாயிருந்தான். “ம். அதெல்லாம் எப்பவோ நடந்து முடிஞ்சுபோன கதையள்.” என்றாள் அதன்பிறகு, காஞ்சிரையின் வெதுவெதுப்பான நெடியுடன் வறண்ட காற்று அதிலே வீசியது. "அப்ப முதல் நான் என்ன உமக்குச் சொல்லிக் கொண்டிருந்தன். ம். ம். அந்த ஆசாரியாரைப்பற்றி. ” என்று சொல்லியதோடு மீண்டும் விட்டகுறையில் இருந்த அந்தக் கதையை மேலும் தொடர்ந்தாள் ஆச்சி “தம்பி இங்க இந்த ஊருக்கு எந்தப் பெரிய மனுஷர் வந்தாலும் ஐயாவின்ரை கண்ணில தட்டுப்படாம விடமாட்டினம் ராசா. அவரோட ஒரு நிமிசம் ஒராள் பழகீட்டாலும் உடன ஒரு புறியம் அவரில அவயஞக்கு வந்திடும். அப்பிடித்தானே இவற்றை நடை, உடை, பேச்செல்லாம் இருக்கு! இனி நாலு விஷயமும் நல்லா அறிஞ்சு தெரிஞ்சு வைச்சிருக்கிறவர் இவர்! நல்லா ஆக்களோடயும் முகத்தை முறிக்காமக் கதைப்பார்! உபசரிப்பார். உதவியளுஞ்செய்வார். இப்பிடியான ஆளோட ஆர்தான் பழகாகினம்.?”
''
"அதெண்டாச் சரிதான். "ஆ. அது உமக்கும் தெரியுதுதானே? இப்பிடித்தான் நீர் அவரோட கதைச்சுப் பழகினமாதிரித்தான் அந்த ஆசாரியார் அவரும் இவரை எங்கயோ கண்டு கொண்டதோடு பிடிச்சு பேந்து கதைச்சு இவரோட நல்லா ஒட்டீட்டார் தம்பி! இப்ப நீர் அவரோட நேசமாயிருக்கிறது
ரீ.பி. மூருஸ்ணந்தம் O 238 O

மாதிரியெண்டு ஒரு கதைக்கு வையுமன். இப்பிடிப் பழக்கத்தோட பேந்து அவர ஐயா சும்மா விட்டிடுவாரே? அவரெல்லாம் நல்ல இடத்தில படுக்க எழும்பச் சாப்பிடக் குடிக்க வசதியில்லாமல் வேலத்தலத்தில கிடக்கிறார் எண்டு இவர் பாத்து நினைச்சுப் போட்டு, ஒரு நாள் அவர இங்க கொண்டந்து ஐயா ஒரு மாதிரி எங்கட வீட்டிலயாச் சேத்திட்டார். அவர் மனுசன் நறுக் கெண்டு ஆரோடையும் நாலு வார்த்தைதான் கதைப் பார்தம் பி.! ஆனாலும் எப்பவும் அவர் ஏதோ ஒரு யோசனையோடதான் இருப்பார் தம்பி என்னவோ ஏடெல்லாம் அவர் வைச்சிருந்தவர். அதையெல்லாம் மாறிமாறிக் கையில எடுத்து வைச்சு அவர் படிச்சபடிதான் இருப்பார். இப்பிடியிருந்த காலத்திலதான் ஒருநாள் அவர் இங்க கொட்டிலுக்க கிடந்த சாக்கில ஒரு பாக்கை எடுத்து தன்ர கையில வைச்சுக்கொண்டு, உருட்டி உருட்டி அதைப்பாத்துக் கொண்டிருந்தார். நான் அவர் அப்பிடி அந்தப் பாக்கை அவர் வைச்சுக் கொண்டு பாக்கிறதைப் பாத்திட்டு. ஏனையா என்னவும் வாய்க்கு ஏதும் நீங்க வெத்தில இப்ப போடப்போறியளோ..? நல்ல பாக்கு வெத்திலயாப் பாத்து தவத்தி எடுத்துத்தரவோ? - எண்டு கேட்டன். அவர் உடன எனக்கு. நான் வெத்தில போட இல்லையம்மா. வேறொரு என்ர தேவைக்கு உறுதியான இறுகிப்போன ஒரு கொட்டப்பரக்கு ஒண்டைத் தேடுறன். எண்டார். இங்க கமுகு மரம் இப்பவும் காய்ச்சுத் தள்ளுறவிதம் உமக்குத் தெரியுந்தானே? இதே மாதிரித்தான்தம்பி அப்பவும் இந்த வளவுக்க கிணத்தச்சுத்தி நல்ல நல்ல சாதிக் கமுக மரங்கள் நிறைய நிண்டது. அதால கொட்டப் பாக்குக்கு இங்க ஏதும் குறையாய் இருக்குமே? அங்க வீட்டுக்கவுள்ள சாக்கு ஒண்டில நிறையப் பாக்கு எங்களிட்டக் கிடந்திருந்தது. நான் அவரிட்டக் கொஞ்சம். பொறுங்கோ ஐயா - உங்களுக்குத் தேவையானத நான் இப்ப எடுத்துத்தாறன் எண்டு சொல்லிப்போட்டு ஒரு கடகப் பெட்டிய என்ர கையில கொண்டுபோய், சாக்கில உள்ளத அதில நிறையக் கொட்டிக் கொண்டந்து அவருக்கு முன்னால அதநான் மெழுகின நிலத்தில கீழ கொட்டிவிட்டன். அவர் அதுக்க கொஞ்சம் பாக்கைத் தெரிஞ்செடுத்து கையில அதுகளைத் தூக்கிப் பாரம் பாத்து. நிலத்தில அதுகளையும் விழப்போட்டுப் பாத்து. தண்ணிக்கையும் பிறகு போட்டுப்பாத்து, இப்பிடிப் பலமான பரிசோதனைக் குப் பிறகு அந்தக் குவியல் கொட்டைப் பாக்குகளில தனக்குப் பிடிச்ச ஒரு பாக்க அவர் கஷ்டப்பட்டு தெரிஞ்செடுத்தார்.”
"அதிலதான் உதச் செய்திருப்பார் போல என்ன?” “பொறுமன்! இந்தக் கதய இன்னும் என்னட்டக் கேக்காம நீர் முந்திப் போகப் பாக்கிறீர்? அந்தப் பாக்கில தம்பி இப்பிடியெல்லாம் அவர் செய்வாரெண்டு எனக்குத் தெரியுமே? அதில அப்பிடியெல்லாம் செய்ய அவருக்கெப்பிடி அந்த யோசனை வந்ததெண்டு அதை முதல் நான் இப்ப உமக்குச் சொல்றனே. எனக்கு அந்த நாளேல தம்பி இந்தியாவுக்குப் போய் மதுர மீனாச்சியம்மனைப் பார்த்துக் கும்புட்டுட்டு வரவேணுமெண்டுறது சரியான ஒரு ஆச. அந்த அம்மனப் போய் என்ர கண்ணால காணவேணுமெண்டு
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 239 O.

Page 130
எனக்குக் கனவிலயும் நினவிலயும் நாளாந்தம் ஆசையோ அப்பிடியொரு ஆசையடா தம்பி! அத ஐயாவிட்டயும் நானென்ன அங்கயொருக்காக் கூட்டிக் கொண்டுபோய் அந்த அம்மனை எனக்கொருக்காப் பாக்கக் காட்டுங்கோ காட்டுங்கோவெண்டு கேட்டுக் கேட்டும் சலிச்சுப் போனன். பேந்து அது எனக்குச் சரிவராதெண்டுபோட்டு அவரிட்டக் கேக்கிற அந்தக் கதையையே முழுசா விட்டிட்டன். அது எனக்கு நினைக்கேக்கிள்ள யெல்லாம் பெரிய சலிப்புத்தான் மனசுக்கு எண்டாலும் நெச்சு நெச்சுச் சலிச்சுப் போட்டு என்ர பாட்டில பேந்து நான் சும்மா பேசாமல் இருந்திட்டன். ஆனாலும் எனக்கு நினைப்பெல்லம் அந்த அம்மனிலதான் தம்பி. ஆரோட நான் கதைச்சாலும் அந்தக் கதைக்குள்ள எப்பிடியும் அந்த அம்மனையும்தான் நான் கொண்டந்திடுவன். அப்பிடி அந்த அம்மனிலயே பயித்தியமான ஒரு போக்குப் போலயம் எனக்குப் பிறகு வந்திட்டுதடா தம்பி. இப்பிடி இருக்கேக்கிளதான் எங்கட அந்த ஆசாரி அவர ஐயா எண்டுதான் நான் மரியாதையாக் கூப்பிடுறனான். அப்பிடி நான் அவர நல்லா மதிச்சு மரியாதையா நடந்தனான். அவர் அப்ப ஒருநாள் உங்களுக்கு அந்த அம்மனில அவேளவு விருப்பமாம்மா..? அந்த அம்மினயே ஒரு நாளு உங்க கையில நான் செஞ்சு குடுத்திர்றனே. அப்புறமா நீங்க உங்க இஸ்டப்பட்ட நேரமில்லாம் அந்த ஆத்தாளையே நீங்க பாத்துக்கிட்டிருக்கலாமில்ல. எண்டு தங்கட கதைப்பாசையில எனக்குச் சொன்னார். நானும் அத அவர் சொல்றாரெண்டு ஏதோ இருந்து அப்பிடிக் கேட்டுப்போட்டுப் பிறகு அதையெல்லாம் நான் மறந்துபோய் சும்மா என்ரபாட்டுக்கு இருந்திட்டன். இதுக்குப் பிறகு அந்தப் பாக்கும் ஒரு பூதக் கண்ணாடியுமா அவர் குவாறியில இருந்து வேல முடிஞ்சு இங்க வீட்டில இருக்கிற நேரங்களில ஏதோ உது வழிய இருந்து அதில ஏதோ நுணுக்கமான வேலை வைச்சுச் செய்து கொண்டிருப்பார். ஒரு மலையையே சிலையாக்கிற திறம கொண்ட சிற்பிக்கு பாக்கில சிலை செய்யிறதெண் டுறது என்ன பெரிசே.? எண்டாலும் அதெல்லாத்தையும் பொம்பிளைதானே நான். அதால கிட்டப்போய் ஒருக்காலும் பாக்கிறேல்ல. ஆனா அவர் ஒரு நாள் வெள்ளிக்கிழமை போல - தான் கிணத்திலபோய் குளிச்சுப் போட்டுவந்து ஐயாவும் நானும் உந்தத் திண்ணையில இருக்கேக்க இத என்ரை கையில கொண்டு வந்து தந்தார். நீங்களம்மா சாமிப்படத்துக்கு முன்னால கொண்டுபோய் முதல் இதை வைச்சுப்போட்டு சாம்புறாணிப் புகையெல்லாம் காட்டீட்டு இத எடுத்துக் கொண்டந்து முதல் முதல் சூரிய வெளிச்சத்தில உங்கட கண்ணால இத நீங்க பாருங்கோ எண்டு சொல்லித் தந்தார். நானும் உடன அவர என்ன ஏது எண்டு கேக்காம அவர் சொன்னமாதிரியே எல்லாம் செய்துபோட்டு சூரிய வெளிச்சம் விழ அத வைச்சு முதல் முதல் பாத்தன். முதல் முதல் இந்த அம்மனக் கண்ட எனக்கு எப்பிடி இருக்கும் தம்பி எண்டுறீர்? எனக்கு இந்த அம்மன்ர வடிவப் பாக்கவே உடம்பு அப்பிடியே ஒருக்காப் புல்லரிச்சுப் போச்சடா மோனே. எனக்கு அப்ப இருந்த சந்தோஷத்த ஆர் தான் அறிவினம்? ஓ! அதக் கண்டவுடன எனக்கு ஏற்பட்ட பூரிப்பு. அங்க மதுரையில உள்ள கோயில விட்டுட்டு
ரீ.பி. அருஸ்ணற்றம் O 240 O

அந்த அம்மன் என்ர மனசுக்குள்ள வந்து பூந்தது மாதிரி எனக்கு அப்ப இருந்திச்சுத் தம்பி." - என்று கூறும்போது ஆச்சியின் விழிகள் நீர்மல்கின. அன்ரன் ஆச்சியின் கண்களுக்குள் எட்டிப் பார்த்தான். ஆம் அவன் நினைத்தது சரிதான்! ஆச்சியின் கண்களுக்குள் அம்மன் இருக்கிறதைப் போலத்தான் அவனுக்குத் தெரிகிறமாதிரிப் பிரமையாய் இருந்தது. "இந்த அம்மன் சிலையோட கூடவும் சேத்து ஒரு பெரிய கதையையும் நீங்க மனசில வைச்சுக் கொண்டுதான் இருக்கிறீங்க என்ன?” - என்று அந்தச் சிலையின் நினைப்புடன் தான் இருந்து கொண்டு பிறகும் அன்ரன் ஆச்சியிடம் இதைக் கேட்டான். “ஓம் இந்த நினைப்புத்தான் தம்பி எனக்கு எப்பயும். அப்பிடி எனக்கு இந்த அம்மனில உள்ள அன்பு நான் மண்ணோடு மண்ணாகிறமட்டும் என்ன விட்டிட்டுப் போகாதடா தம்பி! நான் இதைப் பெட்டிக்க வைச்சாலும் மனசில ஒரு கண் இருக்கு..! அதாலதான் நான் இந்த அம்மனைப் பாக்கிறன். ஒரு நாள் எனக்கு அடிச்சுப்போட்டதுமாதிரி உடம்பும் நோகப் பஞ்சியாயும் கிடக்க இரவு நல்ல நித்திரையும் போயிட்டுத் தம்பி. அப்ப நான் நல்ல நித்திரை கண்டீரோ.? அதுக்குள்ள ஒரு கனவுமடா தம்பி எனக்கு. இந்த அம்மன்ரா தம்பி. அவ நான் வைச்சிருந்த பெட்டிக்கிள்ளால வெளிக்கிட்டு அப்பிடியே மேலால வானத்தில பறந்து அங்க மதுரைக்குப் போறமாதிரிக் கிடந்தது. நான் உடன திடுக்கிட்டு துடிச்சுப் பதைச்சுக்கொண்டு எழும்பீட்டன். எனக்கெண்டா நெஞ்சு நெருக்கெண்டு போச்சு. அம்மாளாச்சி உனக்கு நான் என்ன குறையையம்மா விட்டனான்? எதுக்கம்மா நீ என்ன விட்டுட்டுப் போறாய், எண்டு சொல்லி நான் அழுதுகொண்டு உடனபோய் அவவை நான் வைச்சு விட்டிருந்த என்ர றங்குப்பெட்டியைத் துறந்தன். அங்க பாத்திரெண்டாத்தம்பி அதுக்க நான் சுத்தி வைச்ச பட்டுத்துண்டுக்க அத விரிச்சு உடன பாத்தா என்ர அம்மன் அதுக்க பவுத்திமா இருக்கிறா.” சொல்லிவிட்டு இராசம்மா ஆச்சி முத்து முத்தாய்ப் பளிச்சிட்ட கண்ணீர்களுக்கிடையே இனிமையாகச் சிரித்தாள். உடனே அன்ரன் விசயாவின் முகத்தைப் பார்த்தான். அவளும் ஆச்சியினுடைய அந்தக் கலங்கிய கண்களோடுதான் நின்றாள். இருவர் முகத்திலும் உள்ளது கவலையா? களிப்பா? அவர்கள் இரண்டுவித உணர்ச்சிகளிலும் ஒரேயடியாகத் தாக்கத்துக்குள்ளாகி அழுதுகொண்டுதான் சிரிக்கிறார்களா என்பதை அவனாலும் கண்டுபிடிக்க முடியாமல்தான் இருந்தது. அவர்களின் முகங்களை பார்த்ததன் பிறகு அந்த முற்றத்து நிலத்தை கதிரையிலிருந்தவாறு அவன் தலையைக் குனிந்து பார்த்தான். அந்த ஆசாரியைப் பற்றிய நினைப்பு அவனுக்கு அப்போது திரும்பவும் வந்தது. அந்த நிலத்தில் அவன் இருந்த கதிரைக்குக் கிட்டவாக ஒரு பீயுறுட்டி வண்டு சாணி உருண்டையொன்றை தன் கால்களாலே உருளவிட்டுத் தள்ளிக்கொண்டு போனது கறுத்த கட்டு கட்டான எறும்புகள் ஒரு பக்கம் அதிலே நேர்வரிசையாகப் போய்க் கொண்டிருந்தன. அவன் தன் தலையை நிமிர்த்தினான். அவனுக்குப் பக்கத்தாலே இரைச்சல் போடாமல் ஒரு குருவி பறந்துகொண்டு போனது. எங்கும் அமைதி
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 241 O

Page 131
“பிறகு அந்த ஆசாரீன்ர கதய நீங்க சொல்லாம விட்டிட்டியள்?” - என்று ஆச்சிக்கு விட்டுப்போன கதையை எடுத்துக்கொடுத்தான். “ஓம் தம்பி அவற்றை கதை இன்னம் சொல்லக்கிடக்கு” - என்றாள் ஆச்சி அப்படிச் சொன்ன கையோடு அந்த அம்மனை அவள் அந்தத் திருநீறுக்குள் புதைத்து அப்பிடியே அந்தப் பட்டுத்துண்டால் அதைச் சுற்றி எடுத்து வைத்துக்கொண்டாள். 'தம்பி அந்த ஆசாரியார் இந்தியாவுக்குத் திரும்பிப் போகமட்டும் இந்த வவுனியாவிலதான் கணக்க வருசம் இருந்தவர். இங்க இருந்துதான் கோயில்களுக்கு விக்கிரகங்கள் செய்து வேற வெளி இடத்துக்கோயில்காரருக்கெல்லாம் குடுத்தவர். இந்தக் கற்சிலையளை யெல்லாம் செய்யிறதுக்கு வவுனியாப் பக்கங்களில உள்ள கல்லுகள்தான் நல்லதிறம் எண்டு அவர் சொல்லுவார் தம்பி. அது என்னெண்டா. வவுனியாவிலதானாம் ஈரப்பசையான கல் இருக்கெண்டு அவர் அதுக்கு ஒரு காரணம் சொல்லுறவர். இங்க வவுனியாவச் சுற்றிவரக் குளம் இருக்கிறதால இங்கத்தயக் கல்லெல்லாம் நிலத்துக்கடியில குளிர்ச்சியா ஈரப்பசையா இருக்குதாம். அந்த ஈரமுள்ள கல்லிலதானாம் உயிர்ப்பு இருக்குதாம். அதால இந்தக் கல்லுகள்தானாம் தங்கட சிற்பவேலைக்குத் தன்மையான கல்லெண்டும் தங்கட வேலைக்கும் இது சுலபமான கல்லெண்டும் அவர் சொல்லுறவர். அவர் இங்க எவ்வளவோகாலம் தங்கி இருந்தவர் தம்பி. உங்க வவுனியாவுக்குள்ள அங்க பக்கத்து இடம் அந்த மடுக்கந்தயிலயும் இங்கால மாமடு எண்ட இடத்திலயும் அங்கால உள்ள மிகுந்தலை நெடுங்கேணிப் பக்கத்திலயும் தங்கட வேலைக்கு அப்படிப்பட்ட திறங்கல் இருக்கெண்டு போட்டு அங்கத்தையப் பக்கமெல்லாம் போய் கொஞ்சக் காலம் ஆள் இருந்து வேலை செய்தவர்தான். கல்லில அவர் சிலை செய்யிற மாத்திரமெண்டில்லாம இந்தக்கருங்காலி மரத்தில, தேக்கில, தேவதாருவில, மாமரத்தில, காட்டுவாகையில எண்டெல்லாம் அவர் சிலையள் செய்தவர்தான்.” “உங்களுக்கு உந்தக் கொட்டப்பாக்கில.” “ஊம் தம்பி அதில அம்மன உயிரா அப்பிடியே எனக்கும் செய்தந்தவர்தான்." - சொல்லியபடி ஆச்சி தன் விரல்களைப் பொத்தியபடி வைத்துக்கொண்டிருந்த அந்தக் கைகளைத்தூக்கி நெஞ்சிலே வைத்துப் பிடித்தபடி மகிழ்ச்சியாகச் சிரித்தாள். அந்தச் சிலை உருவோடு பரவசமுற்றிருக்கும் ஆச்சியும் பாதிக் கடவுளாக அன்ரனுக்குப் பார்க்கும்போது தெரிந்தது. "இது பெரிய கலைப்பொக்கிசமாகவும் ஒரு வழிக்குப் பார்க்கேக்க எனக்குத் தெரியுது. இத நீங்க உங்களுக்குப் பிறகு வைச்சுப் பாதுகாக்க ஆரிட்டக் குடுப்பீங்க.?” என்று ஆச்சியின் மகிழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு அன்ரன் அவரைக் கேட்டான். "அவர் பெரிய மகான். ஞானி. இத எனக்குச் செய்தந்திட்டு பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பிப் போயிட்டார். இந்த உலகத்தில எல்லாத்தையும் பற்றி மறந்துவிடுறமாதிரி அவரை நான் மறக்கேலாது தம்பி. நான் அவற்றை ஞாபகமாகவும்தான் தம்பி இந்த அம்மனை வைச்சுக்கொண்டு வவைப்பாக்கேக் கிளயெல்லாம் அந்தப் பெரியவரைப் பற்றி
ඒ.ඡී. ථNගvශvෂීඝඨ O 242 O

நினைக்கிறன். இந்த உலகத்தில எல்லாத்தையும்விட இந்த அம்மனிலதான் எனக்கு உயிர். என்ர உயிர் போனாப்பிறகு இது ஆரிட்டப் போகவெண்டு ஒரு பாக்கியத இருக்கோ அவயிட்ட இது போய்ச் சேரட்டும். எண்டாலும் இதநான் விசயாவிட்டத்தான் என்ர உயிர்போக முதல் என்ர கையால எடுத்துக் குடுப்பன். அவள்தான் இந்த அம்மனைப்போல ஒரு அம்சமானவள். அவளோடதான் இந்த அம்மனும் இருக்கப்பொருத்தம்.” - ஆச்சி இப்பிடிச் சொல்லிக்கொண்டுவந்த வேளையிலே அவள் கண்களில் ஒரு மென்மை. லேசாய்ப் போன உணர்வு. எதையோ இறக்கிவைத்த திருப்தி தெரிந்தது. அன்ரன் நிமிர்ந்து விசயாவைப் பார்த்தான். அவள் அப்பம்மாவின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தைகளையும் அப்போது ஆவலுடன் பருகிக்கொண்டிருப்பவளைப்போல இருந்தாள். அவன் வந்தது இங்கே ஐயாவுடன் இருந்து கதைத்துவிட்டுப்போக - ஆனால் சந்தர்ப்பவசத்தால் இன்று ஆச்சியுடன் இருந்து கதைக்க வேண்டியதான ஒரு நிலைமை அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. என்றாலும் அவன் ஆச்சியுடன் இருந்து கதைத்துக்கொண்டிருந்த அந்த இடத்திலே விசயாவும் கூட நின்றது கதைத்தது எல்லாம் இதுநாள்வரையிலும் அவனுக்குக் கிடைக்காத ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே அவனுக்கு இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தச் சிலை - அவன் உள்ளத்தில் ஏற்படுத்திவிட்ட ஆச்சரியமான உணர்வு அலைகள், இன்னமும் அவன் உள்ளத்தில் புரண்டு கொண்டே இருந்தன. இப்போது அந்தச் சிலை உருவான அந்த அம்மனையே மனத்தில் இருத்தி வைத்துக்கொண்டு அவன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குப் போக நடையைக் கட்டினான்.
அன்ரன் போன பிறகு தகதகத்த மாலை வெயிலைப் பார்த்துக்கொண்டு அந்த வேலி வழியே குழை பிடுங்கி ஆட்டுக்குக் கட்டினாள் விசயா. அவன் இவ்விடம் வந்து போன பிறகு அவள் இறக்கையில் பறப்பவள் போலத்தான் இவ்விடமெல்லாம் நடந்து திரிந்து தன்னுடைய வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். சூரியன் அஸ்தமிக்கும் இடத்திலே வான விளிம்பு பகலின் கடைசி ஒளிர்வைக் காட்டியது. இந்நேரம் சரவணனும் மாடுகளைக் கலைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். தம்பியும் தமக்கையும் சேர்ந்து பிறகு மாடுகளைக் கட்டில் போடுகிற வேலையிலே மும்முரமாய் தாங்கள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் அந்த வேலையில் மும்முரமாய் ஈடுபட்டபடி அங்கே நிற்க: ஆச்சி ஒருவரோடும் கதை பேச்சு வைக்காமல் வாயை மூடிக்கொண்டு, மெளனமாகப்போய் முற்சந்தியில் காலடி மண் எடுத்துக்கொண்டு வந்தாள். பிறகு இருட்டிவிட இன்னம் சில நாழிகளே இருக்க, அவள் அதைச் சிரட்டை நெருப்புக்குள்ளே போட்டு வெளியே கொண்டுபோய் வீதியில் வைத்துக் காறித்துப்பிவிட்டு வந்தாள். இப்படி வெள்ளிக்கிழமை நாட்களிலே பொழுது படச்செய்கின்ற அந்தக் கண்ணுறு கழித்தலும் முடிந்த பிறகு, அவள் போய் விளக்குகளை ஏற்றித் திண்ணைக்கும் அறைகளுக்குமாக அவைகளைக் கொண்டுபோய் வைத்தாள். அதைவிட
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 243 O.

Page 132
வீட்டுத்திண்ணையில் முற்றத்துக்கு வெளிச்சம் தெரிவதற்கென, கம்பியில் கொழுவி விட்ட ஒரு லாந்தர் விளக்கும் கிடந்து ஆடிக்கொண்டிருந்தது. விசயா இரவுப்பிட்டுக்கு ஒரு கறியைத் தேடவேணுமே என்று நினைத்துக்கொண்டு, முற்றத்தடிக்கு வந்தாள் முற்றத்தில் இருந்த இரண்டு தக்காளிச் செடிகளில் காய் வகையாகக் கட்டியிருந்தது. அது ஒரு குழம்பு வைக்கத்தகும் என்று நினைத்துவிட்டு, தன் கை நிறையவாய் காய்களைப் பறித்தெடுத்துக்கொண்டு அவள் குசினிக்குப் போனாள். அவளது சமையல் முடிந்து எல்லோரும் அங்கு சாப்பாடு சாப்பிட்டு ஆகியபிறகு அவர்களெல்லாம் தங்கள் படுக்கையில் போய் படுத்துக் கொண்டு விட்டார்கள். சரவணன் படுத்த பொழுதுக்குள்ளாகவே செத்த பிரேதம் போலக், கையையும் காலையும் அகலவிரித்துப் போட்டுக்கொண்டு சற்றே சவமாகத் தூங்கினான். வானத்திலே நட்சத்திரங்களும் பிறைநிலாவும் நிறைவாக இருந்தன. நேரம் சென்றுவிட பிறை நிலா மறைந்தது. நட்சத்திர ஒளியோடு நடுநிசி இருட்டும் கலந்துகொண்டது. நெடுந்தொலைவில் ரெயில் வரும்போது ஏற்படும் முதலாவது மெல்லிய அதிர்வு பாயில் படுத்தபடி இருந்த விசயாவுக்குக் கேட்டது. பிறகு எஞ்சினின் உரத்த இரட்டை ஊதல் அவளது காதுக்குள் உருண்டு ஒலித்தது. சக்கரங்கள் கடகடக்கவும் தண்டவாளங்கள் கணகணக்கவுமாக அந்த ரயில் போனதன் பிறகும் கூட விசயா தூங்கவில்லை. அவள் மூச்சுக்காற்றில் எழுந்தசையும் மார்புகளுடன் விழித்தபடி படுத்திருந்தாள். இரவுகளின் சகாவான பவழ மல்லிகை இதழ் விரிந்து நெடுநேரமாகிவிட்டது. வெளியே வீசிக் கொண்டிருந்த காற்றுக்கு கோயில் வளவுக்காடெல்லாம் அசைந்தாடி - அலையடிக்கும் மாகடல்போல் ஆரவாரித்துக்கொண்டிருந்தது. ஊர் அடங்கலும் உறங்கிற்று. ஆனாலும் விசயாவுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. அவள் அன்று மாலைநேரம் அப்பம்மா தனக்கும் அன்ரனுக்கும் காட்டிய அந்த அம்மனின் திருவுருவை நினைவில் வைத்தபடி, அதையே நினைத்து அந்த இருட்டுக்குள் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.
ஆனாலும் அவள் சிந்தனையைக் கலைப்பதுபோல் அங்கே தெருவில் எழுந்த அந்த ஓசை, அவளது மனசைப் பிறகு அறுப்பது போல இருந்தது. அந்த அர்த்தஜாம இருட்டில் கேட்ட குடுகுடுப்பையின் "கட, கட"வென்ற ஒலியைக் கேட்டுக்கொண்டு அவள் மூச்சை உள்ளே இழுப்பதும் அதை நிறுத்தி வைத்துவிட்டு, பிறகு வெளிவிடுவதுமான ஒரு நிலையில் இருந்தாள். குடுகுடுப்பையின் அந்தச் சப்தம் வரவர உரத்து, அது பிறகு காஞ்சூரை மரத்து கிளுவைவேலி - செம்பரத்தைமரம் - வேப்பமரம் கடந்தும் வந்து கொண்டிருந்தது. அந்த இரவில் நியாயமான நிசப்தத்தைக் குலைக்க எழும் அபசுரமாக அந்தக் குடுகுடுப்பையின் சப்தம் சக்தியுடன் ஒலித்தது. அவள் மூச்சை இழுத்துக்கொண்டு அந்தச் சத்தத்தைக் கேட்டபடி, உடம்பு பாரமாய் நிலத்தில் அழுந்த - பூமிக்கடியில் மூச்சை மறந்திருப்பதானதோர் நிலையில், கண்களை மூடாது விழித்துக் கொண்டிருந்தாள். அந்தக் குடுகுடுப்பையின் சத்தம் அவளது நரம்புகளைச்
ඒ.ෆි, ෆණ්vගvෂ්ත්‍රාහී O 244 O

சுண்டுவது போல் ஒலித்தது. காதில் விழுவதாகத் தோன்றும் அளவுக்கு அவளது நெஞ்சு படபடத்து அடித்துக்கொண்டது. உயர எழும்பிவரும் குடுப்பைச் சத்தத்தில் அவளது உடலிலுள்ள சர்வாங்க மயிர்களும் நட்டுக்குத்தலாக நின்றது. அந்தச் சத்தத்தோடு மணிகள் "கல், கல்லென்று ஒலி செய்துகொண்டே வந்தன. கோயில் வளவுப் பெருமரங்களும் விட்டில் நிற்கும் தென்னை மரங்களும் பெருத்த ஒலியாய் ஒன்றை ஒன்று கூவி அழைப்பது போல் இருந்தன. அவளது செவிகள் ஒவ்வோர் ஒலியையும் விடாது பற்றிப் பதித்துக் கொண்டன. கூர்மையானது அவளது செவிப்புலன். ஏய் நீ உச்சிமா காளி என் முன்னாலே வா..! டுங்கடகடகடக். நீலி சூலி கறுப்பாயி வாம்மா நீ சீக்கிரம் வா..! டுக்கடகடகடக். சொல்லடி நீ இத ஓங்காரி இதில வந்து நிண்ணு? டுங்கடகடகடக், டுங்கடகடகடக். குடுகுடுப்பைக்காரன் அந்தக் குடுகுடுப்பயின் சத்தத்தோடு தெய்வத்தையும் புராணிய தேவதைகளையும் முதலில் தனக்குத் துணையாக வரும்படி அழைத்தான். பிறகு மந்திரங்களைச் சொல்லி எதையோ விரட்டிக்கொண்டு போய்விட்டமாதிரி விட்டுவிட்டு, சிறியதோர் ஒலிமாறுபாட்டை அந்தக் குடுகுடுப்பையை அடித்து அவன் ஏற்படுத்தினான். அந்தக் குடு, குடுப்பையின் ஓசை தரைக்கும் மேகங்களுக்கும் இடையில் இருந்த பரப்பு முழுவதையும் நிறைத்ததைப்போல அந்த இருட்டில் இருந்தது. இதற்குப் பிறகு குடுகுடுப்பையின் ஒலியோடு - இசைந்து குரலெடுத்துப் பாட்டுப்பாடுவதைப்போல அந்தக் குடுகுடுப்பைக்காரன் மெதுவான குரலில் இதையெல்லாம் நீட்டி நீட்டிச் சொன்னான். அவனது ரசிப்புள்ள பாட்டிலே ஏதோ பயங்கரமும் இருந்தது. பூமரமொன்று தாயே இங்க பூப்பூக்கத்தான் காத்திருக்கு இது பூக்கிற பருவத்திலே பூமரத்துக்கோர் கெடுதியுமிருக்கு வாக்கு நான் சொல்லறதா - லாத்தா நீ கவனமம்மா கண்ணியில விழமுதலே அவள நீ காப்பாத்த வேணுமம்மா காத்திடத்தான் காளியம்மன் அந்தக் காலனுக்கு முன்நிற்பாள் திரிகுடுத்தையாடி நிற்கும் அந்த அமலனும் தான் சேர்ந்து நிற்பான். என்று அவன் குடுகுடுப்பையின் சத்தத்தோடு பிறகு இவற்றை ஒவ்வொரு அடியாகச் சொல்லிக்கொண்டுபோக ஆச்சியும் அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு மனத்தின் மூலாதார வேர்களில் பின்னிக்கிடக்கின்ற பயத்தோடு படுத்தபாயிலிருந்து எழும்பிவிட்டாள். அப்பிடியே குந்தி இருந்தபடி அந்தக் கச இருட்டுக்குள், முதுகு விறைப்பாக நிமிர்ந்தபடி அவள் இருந்தாள். அவளுக்கு நெஞ்சின் இடது பக்கத்தில் ஏதோ குதிபோட ஆரம்பித்தது திகிலில் அவளுக்கு இரத்த அழுத்தம் ஏகமாக எகிறிவிட்டது. எல்லோரையும் போல் பொன்னுத்துரையும் அப்போது விழித்தபடி இருந்தார். அவருக்கும் அமைதியாக ஊர்ந்துகொண்டிருந்த இரத்தம், இப்போது உருகியோடும் நெருப்பைப்போல கொதித்தது சிறிது (ിk ില്ക്ക് O 245 O.

Page 133
நேரத்தின் பின் அந்தக் குடுகுடுப்பைக்காரனின் உடுக்கின் சத்தமும் பாட்டும் அடங்கிப் போய்விட்டது. அவன் குதிக்காலைத் தரையில் இடித்து ஊன்றி நடந்து செல்லும்போது, விசயா அவன் காலடி ஓசையை உன்னிப்பாகக் கேட்டபடி பாயில் படுத்துக்கிடந்தாள். அந்நேரம் இடுகாடு போன்ற வெறுமையை விரும்பிய கூவை காஞ்சிரை மரத்தில் இருந்து கொண்டு கூவியது. இதன்பிறகு வெக்கை காலத்துக்கு உண்டான பின்னிரவுக் குளிர்காற்று இறங்கியிருந்தது. விசயா சிந்தனையிலே ஆழ்ந்தாள். தன்னுடைய மனம் ஏன் அத்தனை பரபரப்புக்கொண்டு அந்தக் குடுகுடுப்பைக் காரனையே சுற்றி வருகின்றது என்று அவளுக்கே வியப்பாக இருந்தது. கொஞ்சம் சூடானதும் குளிரானதுமான காற்று இப்போது வீசத் தொடங்கியது. சுற்றுமுற்றும் எல்லாமே ஒய்ந்து நிரந்தரமான மெளனியாகி விட்டன போலாகிவிட்டது. அந்தக் காற்றுப்பட்ட சுகத்தோடு விசயா, மெல்லப்பிறகு கண்ணயர்ந்தாள். அவளது கனவில் அந்தக் குடுகுடுப்பைக்காரன் சாயைபோல அவளுக்குப் பிறகாலே வந்துகொண்டிருந்தான். அவள் பின்னோடு அவன் நிழல் போல வந்துகொண்டிருக்க அவனுக்குப் பயந்து அவளும் முன்னாலே ஓடுகிறாள் ஒடுகிறாள் அப்படி இன்னும் ஒடிக்கொண்டேதான் இருக்கிறாள். கனவு இன்னமும் முறியவில்லை. அவள் ஓடுகிற அந்த ஓட்டமும் அவளுக்கு முடிவதாகவேயில்லை.
பதினைந்து
அன்று பின்னேர வேளையில் கந்தசுவாமி கோயிலில் நடக்கவிருக்கும் சூரசம்ஹாரத்தைப் பார்ப்பதற்காக தூரத்திலிருந்தெல்லாம் ஆணும் பெண்ணும் அடங்கலாக சாரைசாரையாக அந்த வீதிவழியே போய்க் கொண்டிருந்தார்கள். இந்த நிலைமையில் சூசைப்பிள்ளையார் குளம் என்கிற கிராமத்தோடு தொடர்புடைய சிவசக்தி வீதியும் கந்தசுவாமி கோயில் வீதியும் திருவிழாக்கோலம் பூண்டு பார்ப்பவர்களுக்கு அது அழகாகத் தெரிந்தது.
இன்றைய காலை வேளையிலிருந்தே சூரசம்ஹாரத்தைப் பார்க்க கட்டாயம் நான் போகவே வேண்டும் - என்ற ஒரு திட்டத்தை விசயா தன் மனத்திலே வைத்திருந்தாள். ஆனாலும் இதுவரையில் தன் மனத்திலிருந்த ஆசையை அவள் அப்பம்மாவிடம் வாய்திறந்து சொல்லவில்லை. பின்னேரமானால் சரவணன் மாடுகளைக் கலைத்துக்கொண்டு வீட்டுக்குவந்து விடுவான். அதன்பிறகு அவள் அந்த மாடுகளையெல்லாம் இங்கே முற்றத்துக்குள் விட்டு அவைகளைக் கட்டில் போடவேண்டும். இன்னும் அதோடொட்டி யுள்ள பிற வேலைகளையும் இங்கே அவள் நின்று பிறகு பார்த்துச் செய்ய வேண்டும். இப்படியாகவெல்லாம் இருக்கும்போது அவ்வேளையில் அவள் போய் கோயிலில் நின்று கொண்டிருக்க - அதை அப்பம்மா
ඒ. ඊ. ථGövගvණිග(ර් O 246 O

எப்பிடியும் விருப்பத்துடன் ஒப்புக் கொள்வாரா? அதையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருந்த பிறகும் - இதை அவரிடம் நான்கேட்டு அது எனக்குப் பிறகு நிறைவேறாததாய்ப் போய்விட்டதென்றால் எனக்கு அது மனவருத்தம்தானே? இதோடு உள்ளதாக இருப்பது இன்னொன்று - திருவிழாக் காலங்களிலே அப்பம்மா அப்படியெல்லாம் எந்தக் கோயிலுக்கும் போய்வருவதில்லை. என்பது விசயாவுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம். "உந்தச் சனத்துக்க போய் அங்க அதில நிண்டு சாமி கும்புடுறதிலயும் பாக்க வீட்டுக்க நான் இங்க சும்மா இருந்திடலாம். இங்க இருந்து நான் அந்த முருகனை வடிவா மனசில நினைச்சுக் கொண்டு கும்பிடலாம். அதில்லாம அங்கபோய் அந்தச் சனத்துக்குள்ள ஆளையாள் இடிச்சுப்பிடிச்சுக்கொண்டு நிண்டு அவதிப்படுறதும் - பிராக்குப் பாக்குறதுக்கும் பாக்க இது எவ்வளவோ திறந்தானே பிள்ள எனக்கு.?”
என்று விசயாவுக்கு முன்பு எப்போதும் அவர் சொல்வதெல்லாம் அவளுக்கு இப்போதும் அது நல்ல ஞாபகம்தான்! ஆனாலும் பின்னேர வேளையில் அந்த நேரம் நெருங்கநெருங்க - சனங்களெல்லாம் வீதியில் போவதைப் பார்க்கப் பார்க்க, அவளுக்கும் மனசு ஒரு நிலையில் நிற்காமல் தவியாய்த் தவித்தது. அதனால் “சரி ஏதோ இங்க இருக்கிற வீட்டு வேலைகளையாவது செய்து கொண்டு அந்த யோசனையில்லாமலாவது நேரத்தைக் கழிப்பம்” - என்ற ஒரு நினைப்புடன் கிணிற்றுக்குக் குடி நீர் எடுத்துவர குடங்கொண்டு போனாள் விசயா. எந்த வேலையையும் தான்: கெதி கெதியாகச் செய்ய வேண்டும் என்ற அவசர குணம் இப்போது அவளுக்குள் இருந்ததால் அந்தத்துலாக் கயிற்றைப் பிடித்து இழுத்து - ஒரே இழுவையோடு அந்த வாளியை தண்ணீரடிக்குப் போக அவள் விட்டாள். அங்கே தண்ணீர் வாளியில் கோலியதும் அதை வெளியே இழுத்தெடுக்காமல் விட்டுவிட்டு வேலிப்பக்கமாக அவள் பார்த்தாள். அந்த வேலிக்கு வெளியாலே வீதி வழியாக தன் வயதுக்காரிகைகள் தான் அங்கு போகிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டு அந்தக் குழைமறைப்பைத் தவிர்த்து வெளியாக நேரே ஒருக்கால் அவர்களை பார்த்துவிடும் ஆசையில் தன் ஒரு காலை வைத்து அந்தக் கிணற்றுக் கட்டின்மேல் பிறகு அவள் ஏறி நின்றாள். அந்த வீதியில் சென்று கொண்டிருந்த அவள் வயதுக்காரிகைகள் கால்களை நீள நீளமாக வீசி நடக்க ஆரம்பித்ததால் அவர்களின் பின்புறத்தைத்தான் அவளால் இப்போது, அதன்மேல் ஏறி நின்ற வேளையிலும் பார்க்கமுடிந்தது. அவர்களது சடையில் தொங்கிய பட்டுக் குஞ்சங்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நடக்கும்போது அவர்களுக்கு ஊஞ்சலாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. அந்தப் பட்டுக் குஞ்சத்தையும் அதன் ஊஞ்சலாட்டத்தையும் பார்க்க அவளுக்கும் அதிலே ஒரு ஆசை வழிந்தது. இன்னொருவர் இதையெல்லாம் அணிந்துகொள்ள, அதைப் பார்க்கும்போதுதானே அதன் உண்மை அழகே தெரிகிறது. இதை நான் அணிந்தால் அது என் கூந்தலுக்கும் அழகாய்த்தானே மற்றவர்களுக்கும் பார்க்க இருந்திருக்கும்! என்று நினைத்துக்கொண்டு திரும்பவும் அவள்
வரழ்க்கையின் சிறக்கஸ் O 247 O

Page 134
கிணற்றுக்கட்டின் கீழ் உள்ள படியில் இறங்கி நின்றாள். கிணற்றுக்குள் மீண்டும் அவள் பார்த்தபோது தண்ணிருக்குள் தாழ நின்ற வாளியோடு உள்ள நீர்ப்பிரவாகம் ஒரு வித கலங்கலுமின்றி ஸ்படிகம் போல் காணப்பட்டது. அவள் துலாக் கயிற்றைப் பிடித்து மீண்டும் ஒரே இழுவையில் வைத்து அந்த வாளியை வெளியே வர இழுத்தாள். அந்த வாளி உயர எழும்பிவரும்போது - கிணற்றின் உள் வாளி இடித்து விழுந்துபோன செங்கல் பொந்தில், வளர்ந்திருந்த செடிகளில் பட்டு தண்ணீர் உள்ளே கொட்டியது. உடனே கொண்டக்கிளாறு குருவி அங்கே அது கட்டியிருந்த கூட்டிலிருந்து வெளியே பறந்தது. அதைக் கண்டதும் அவள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தாள். அந்த வாளியும் தன் கைக்கு வந்துவிட அதையும் தன் கையில் பிடித்துக் கொண்டு இன்னும் ஒரு முறை அவள் உள்ளே பார்த்தாள். கூட்டிலிருந்து குருவிக்குஞ்சு வாளி அதிலடிபட்டதில் தவறி உள்ளே விழுந்திருக்குமோ..? - என்ற நினைப்பில் அந்தப்பத்து முழத்தண்ணின் மேற்பரப்பை அவள் பார்த்தபோது - அப்படி அங்கே எதுவும் அவளது பார்வைக்குக் காணப்படாது அந்தத் தண்ணிர் மாத்திரம் தலைசுற்றும் ஆழத்துக்குள் கிடந்து தளம்பிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததோடு இவ்வளவு நேரமாய்த் தொடர்ந்து அவசரப்பட்டுக் கொண்டிருந்த மனம் அவளுக்கு ஆறுதலடைந்தது போல இருந்தது. தற்சமயம் அந்தக் குருவிக்குஞ்சு தவறித் தண்ணீரில் விழுந்திருந்தால் அதன் கதி இப்போது என்னவாகியிருக்கும்.? என்று கவலையாகி மீண்டும் அதை ஒரு தடவை நினைத்துப் பார்த்தபடி அவள் தான் கொண்டுவந்த அந்தக் குடத்திலே தண்ணீரை நிரப்பினாள். அந்தக் குடத்தைத் தூக்கிக் கொண்டு அப்படியே விட்டுப்பக்கம் போன அவளுக்கு - அங்கே அப்பம்மா முற்றத்தில் நின்று கொண்டு அவளைப்பார்த்த பார்வை எதையோ தனக்கு இப்போ சொல்ல வருவது போல அவளுக்கிருந்தது. “பாரன் எவ்வளவு சனம்தான்பிள்ள இந்த றோட்டால இப்ப சூரன் போர் பாக்கவெண்டு போகுதுகள்” என்று தொடங்கிவிட்டார் அவர் "ஓம் அப்பம்மா அப்பிடித்தான் நிறைய உதால சனம் இப்ப றோட்டில போய்க்கொண்டிருக்கு” - என்று ஆர்வத்தோடு அவளும் சொன்னாள். "அயலட்டையில உள்ள உன்ர வயசுப் பிள்ளயஞம்தான் பட்டுப்பாவாடை பட்டுத் தாவணியோட அங்க பாரன் நீ பிள்ள. ஆளையாள் கூப்பிட்டுக் கூட்டிக்கொண்டு எல்லாம் அங்க கோயிலுக்கு இப்ப போகுதுகளாக்கும்.” என்று அவர் சொல்ல அவளும் தண்ணிர்க்குடத்தை இடுப்பில் இறுக்கிப்பிடித்த பிடியோடு அப்பம்மாவைச் சோகத்தோடு பார்த்தாள். "நானெண்டாப் பிள்ள இதுகளோட இப்ப நீயும் சேந்து அங்க கோயிலுக்குப் போகலாமேயெண்டுதான் அதையெல்லாம் உனக்குச் சொல்ல வெளிக்கிட்டன்” - என்று விட்டுச் சிரித்தாள் ஆச்சி விசயாவுக்கு இதைக் கேட்டதும் சந்தோஷம் வராமல் விடுமா? அவள் தண்ணீர்க் குடத்தை நன்றாக இன்னும் பொறுக்கத்துக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சிரித்து விட்டாள். “அப்பபிள்ள நேரமாகுதெல்லே.? இன்னும்
. . estarvarp O 243 O.

நேரஞ்செண்டா இங்கின இருந்தும் சனம் உதால போகாது. பேந்து நீ ஆரோட கூடிக்கோயிலுக்குப் போவாய்?"
"நான் போனா பின்னேரம் மாடுகண்ட ஆர் இங்க கட்டி விடுறது அப்பம்மா?”
"ஏன் எனக்குக் கைகால் விழுந்து போச்சே பிள்ள..? நீ இங்க வரக்கு முதலெல்லாம் உந்த வேலயள ஆரம்மா இங்க பாத்துச் செய்ததெண்டு நீ நினைக்கிறாய்? அதெல்லாம் எனக்குத் தெரியும் இங்க நான் செய்ய வேண்டியவேலயளப் பாத்துச் செய்ய. நீ உள்ள போய் வேளைக்கு உடுத்திப்படுத்தி வெளிக்கிட்டுக் கொண்டு உங்க ஆரும் உதால போற பெட்டையளோட போ பிள்ள.” "நான் கோயிலுக்குப் போயிற்றா. சரவணனும் வர அவனும் போறதெண்டு உங்களைக் கேட்டுக்கொண்டு நிப்பானேயெல்லே அப்பம்மா..?” "அதையேன் பிள்ள நீ இப்ப எனக்குச் சொல்லிக்கொண்டு உதில நிண்டு இன்னும் மினக்கெடுறாய்..? அவனையும் நான் நாலு சனம் அங்க கோயிலுக்குப் போற வேளையில அதுவழிய போய்வரக்கொஞ்சம் விடத்தானே வேணும். பொழுதுபடவா அவன் இங்க வந்தாலும். நீ அங்க ஓர்றா. ஒடிப்போய் எல்லாத்தையும் அங்க வடிவுர நிண்டு பாத்திட்டு பேந்து அக்காவையும் கூட்டிக்கொண்டு வீட்டவாடா எண்டு அவனுக்கு நானும் சொல்லி அனுப்பி விடுறனே." அவளுக்கு இப்படியெல்லாம் அப்பம்மா சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று ஒன்றுமே தெரியவில்லை. குடத்தின் வாயில் தளம்பிக் கொண்டிருந்த தண்ணீரை தன் கைவிட்டு எடுத்து முன்னால் வந்த கோழிக்கு அதை எத்திவிட்டு அவள் குசினிக்குப் போக எட்டிக் காலை வைத்தாள். "இன்னுமொண்டிருக்குப் பிள்ள..” என்று அவள் முன்னால் காலை வைக்கவும் சொன்னாள் ஆச்சி “என்ன..?” - என்ற முகபாவத்துடன் அப்பம்மாவைத் திரும்பிப் பார்த்தாள் விசயா. "உனக்கேதும் சிலவுக்குக் கையில காசும் வேணுமெல்லேப்பிள்ள. அங்க போய் ஆரும் ஏதும் வாங்கித் திண்டாக் கொண்டா நீ அதுகளிண்ட வாயப் பிராக்குப் பாக்கிறதே...?" - விசயா அப்பம்மாவின் முகத்தை இன்னும் ஆவலோடு பார்த்தாள். "அதுக்குப்பிள்ள அங்கின போகேக்க நீயும் ஏதும் கையில சிலவுக்கு எடுத்துக்கொண்டு போ. அங்க சாமி படத்துக்கு முன்னாலித் தட்டில என்ரை குங்குமம் வைச்சிருக்கிற சிமிழுக்குக் கீழ ஒரு அஞ்சு ரூவாத்தாள் கிடக்கு அத நீ கையில எடுபிள்ள..?” - அவள் கேட்டுக் கொண்டு தலையை ஆட்டினாள். "ம்.ம். போ பிள்ள. - சுறுக்கா வெளிக்கிடு போம்மா." - என்றாள் ஆச்சி அவள் அதைக் கேட்டதோடு பிறகு விரைவாக குசினிக்குப் போவதற்கு நடந்தாள். அங்கே போனதும் குடத்தை அதற்குள்ளே வைத்துவிட்டு நேராகத் தன் அறைக்குள்ளே போய் கதவை மூடினாள். கதவு மூலம் ஒசை, வேறு எதுவுமே இல்லை. அவள் முதலில் தலையில் முடிந்திருந்த ரிப்பனை சொடுக்கி இழுத்தாள். அவள் அதை இழுத்ததோடு "பம்."-மென்று விடுதலையாகிச் சுருள்
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 249 O

Page 135
சுருளாகக் கூந்தல் அவளின் தோளில் பாய்ந்தது. அதை அலைபாய விட்ட பின்பு அடர்த்தியாக வளர்த்துக் கொண்ட அந்தக் கூந்தலைக் கையால் கோதி அதைப் படியவைத்து இருபக்கமும் அவள் பின்னல் போட்டுக் கொண்டாள். இம்முறை நடந்த தீபாவளிப் பெருநாளுக்கு - சீலைப் பொட்டணகாரனைக் கூப்பிட்டு அவனிடம் வாங்கிய அந்தப் பாவாடை ரவிக்கைத் தாவணியையும் எடுத்து அணிந்துகொண்டு சுறுக்காக ஒரு பொட்டும்வைத்து கண்ணாடியில் அதை இப்பிடியும் அப்பிடியுமாகத் திரும்பி நின்று பார்த்துவிட்டு, பல கோணங்களில் தன்னை ஆராய்ந்து விட்டுப் பிறகு ஆச்சியின் அறைக்கு அவள் போனாள். அங்கே சாமிப்படத்துத் தட்டில் தடவத்தடவ ஏதோவெல்லாமாக அதிலே கிடந்த பொருட்கள் அவளுக்குக் கையிலே தட்டுப்பட்டன. அவளின் ரல்களில் பட்டு என்னவோவெல்லாம் அரக்குப்பட்டுப்போனது. வழவழப்பான அந்தக் குங்குமச்சிமிழ் எங்கே? - என்ற ஆர்வத்துடன் அந்த ஸ்பரிசத்தைத் தன்விரல்களிலே உணரும் வரை அந்த இடத்திலே கீழே பார்த்தபடி மேலே அவள் தன் விரல்களை வைத்து அதற்குள் துழாவினாள். அந்த நேரமாய் அவளின் கையில் தட்டுப்பட்ட பொருள் அதுதான் என்று நிச்சயிக்கும்படி அவளுக்கு உடனே தெரிந்தது. ஆனாலும் அவளது கையில் தட்டுப்பட்டு அரக்கி அந்தத்தட்டிலிருந்து அது கீழே உருண்டு விழுந்தது. அதே நேரம் அந்த இடத்தில் இருந்து கையில் எடுத்துக்கொண்ட ஐந்து ரூபாய்த்தாளோடு அவள் கீழே விழுந்த பொருளைப் பார்த்தாள். அந்தக் குங்குமச்சிமிழ் உருண்டு கீழே விழுந்ததும் சிதறி நாலைந்து துள்ளலில் தரையில் பூத்தது. அதைக் கண்டதும் “ஸ். அடடட.” என்று விசயா பல்லைக்கடித்து நெஞ்சையும் துடைகளையும் இறுக்கிக் கொண்டு கொஞ்சநேரம் நின்றுவிட்டாள். பிறகு குனிந்திருந்து கெதிகெதியாக கீழே கொட்டப்பட்டிருந்த குங்குமத்தில் எடுக்கக்கூடியதை சற்று ஈரமாயிருந்த தன் விரல்களைக் கொண்டு பிடித்து எடுத்து அதை மாத்திரம் சிமிழில் போட்டு மூடிவிட்டு அப்படியே அதை முன்பு அது இருந்த அந்தத் தட்டிலே வைத்தாள். அவளது கையிலே அந்தக் குங்குமச் சிவப்பு ஈரத்தோடு கப்பென்று பற்றி பூத்துப் படர்ந்திருந்தது. தன் இடையில் அந்தக் காசைச் செருகிக் கொண்டு போய் அவள் தேசி மரத்தடியிலுள்ள வாளித்தண்ணீரிலே தன் கையைக் கழுவினாள். சிகப்பு இன்னும் போகவில்லை. எனவே தன் கையைச் சிகப்பாக்கிய குங்குமத்தை அது இருந்தாலென்ன - என்று நினைத்து மீண்டும் அதைக் கழுவிப் போக்காமல் அவள் விட்டுவிட்டாள். ஆச்சி இந்நேரம் வீதியில் போன அயலட்டைப் பெண்பிள்ளைகள் இருவரை அவர்களுடன் கதைகொடுத்துக்கொண்டு அதிலே நிறுத்தியபடி வைத்திருந் தாள். இவள் தேசி மரத்தடியில் நின்று கைகழுவிக்கொண்டிருப்பதை அவள் பார்த்ததோடு “பிள்ள வா நீ கெதியா விசயா. இதுகளும் அதில நிண்டு உனக்காகக் காத்துக் கொண்டெல்லே கனநேரமாய் நிக்குதுகள்." - என்று பிறகு அவள் பேர்த்தியைக் கூப்பிட்டாள். "இந்தா நான் வந்துகொண்டிருக்கிறன் அப்பம்மா." என்று அப்பம்மா கூப்பிட்டதிற்கு
ரீ.பி. அருஸ்ணந்தம் O 250 O

தான் அதிலே நின்று சொல்லிவிட்டு அந்த நீண்ட பாவாடையின் சுருக்கங்கள் அலைய விசயா அவ்விடத்துக்குப் போக உடனே நடந்தாள். அவள் அணிந்திருந்த மெல்லிய நீல நிறப் பாவாடை அவளின் இளவயதின் வனப்பை கூட்டிக்கொண்டிருந்தது. அதிலே இவளுக்காக அங்கு காத்து நின்றவர்கள் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாடசாலையிலேநான்காம் வகுப்புவரை இவளோடு சேர்ந்து படித்தவர்கள்தான். விசயாவைக்கண்டுவிட்டு தங்கள் நட்புக்குரிய ஒரு சிரிப்பை அவர்கள் உடனே உதிர்த்தார்கள். "பவானி. ரதி.!” என்று அவர்களது பெயரைச் சொல்லிச் சிரித்தபடி விசயாவும் படலையைத்திறந்து கொண்டு அவர்களிடம் போனாள். அவர்களுக்குக் கிட்டவாகப் போனதும் அவள் இந்தப் பக்கமாகத் திரும்பி அப்பம்மாவைப் பார்த்தாள். "அப்பம்மா நான் போயிற்று வர்றன் அப்பம்மா. தம்பி வந்தா கோயிலடிக்குப் பிறகு அவனை அனுப்புங்கோ.?” என்று அவள் சொல்லவும் அவளுடன் சேர்ந்த அந்த இரு பெண்களும் முன்னாலே தாங்கள் முதலில் நடக்கத் தொடங்கினார்கள். அவர்களோடு சேர்ந்து மூன்றாம் ஆளாக அவளும் அவர்களது பக்கத்திலே நடந்தாள். அந்த இருவரும் விசயாவுடன் நடக்கும்போது தங்கள் தலையை பின்னாலே சரித்து - விசயாவின் பாதி பின்னிவிடப்பட்டு அவிழ்ந்திருந்த அவள் கூ தலைப் பின்னல், தோள்பட்டை மேல் நீளமாக சுருள் சுருளாக விழுந்து அலைவதைப் பார்த்தார்கள். அவ்விதம் பார்த்த பின்பு தங்களது தலைப் பின்னல் அவளது தலைப்பின்னலைப் போல் அழகாயில்லையே என்ற கவலை அவர்களது மனத்தில் சூழ்ந்தது. என்றாலும் உடனே அதை மறந்துவிட்டு விசயாவுடன் மகிழ்ச்சியாகக் கதைத்துச்சிரித்தபடி அவளோடு அவர்களும் சேர்ந்து அந்த வீதியாலே நடந்து கொண்டிருந்தார்கள். வண்ணத்துப்பூச்சி போல் அலையடித்துப் பறந்து நடக்கும் அந்தக் கன்னிப் பெண்களைப் பார்த்து தன் மனதுக்குள் சந்தோஷித்துக்கொண்டு ஆச்சியும் படலையருகே நிற்கின்றதை விட்டு முற்றத்தடிக்கு பிறகு நடந்து வந்து நின்றாள்.
நிழல் வீழ்ந்த அந்திநேரம் கணிசமான சனம், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் கூடி நின்றனர். அங்கு நின்ற சனத்தோடு இன்னும் கொஞ்சநேரம் போக அதிலே மகாமக் கூட்டமாகி விட்டது. அந்த நேரம் சூரன் வெளிக்கிடுவதை வெளியறையும் பறை ஒலி முழங்கியது. சூரனும் நெஞ்சிலே ஒரு பெரிய பூமாலை ஆடிநிற்க கைகளில் போராயுதங்களுடன் வெளிக்கிட்டுவிட்டான். சூரனைத் தூக்கி வைத்திருந்தவர்கள் ஒட்டப்பிசாசாக அந்த வீதிகளின் எல்லா இடமும் சூரனைக் காவிக்கொண்டு ஒடித் திரிந்தார்கள். சூரனைத் தூர தூரமாக அவர்கள் கொண்டுபோகப் போக அந்தச் சூரனின் தோளைப் பொறுப்பாகப் பிடித்துக்கொண்டு பின்னால் நின்றிருந்தவர் அந்தச் சூரனின் ஒரு செவியை தன் கையால் பிடித்திருந்தபடி அதன் தலையை அங்காலேயும் இங்காலேயுமாக ஆட்டிக்கொண்டிருந்தார். இந்நேரம் கோயில் வாசலால் குமாரக் கடவுளும் கையில் மூன்று சக்திகளின் உருவான வேல் சகிதமாக சூரபதுமனுடன் போரிட வெளிக்கிட்டுவிட்டார். பக்தர்கள் முருகனைத் தூக்கிக் கொண்டு
ගJශ්‍රහීණහනuák ඡgyණීනck O 251 O

Page 136
கற்படிகளால் கீழே இறங்கவும் கோயில் முகப்பில் நின்றவர்களெல்லாம் அரோகராச் சொல்லி தலைமேல் கை குவித்துக் கும்பிட்டார்கள். அப்படித் தலை மேல் கைகுவித்து நின்றவர்களில் சிலர் புறம் மறந்து முருகனை மனதில் நினைத்து ஒரு கணம் தங்கள் கண்களைத் தாளிட்டார்கள். முருகனின் திருவுருவச்சிலை வெளியே வந்து நிற்கவும் ஆனந்தச் சன்னதமாய் நாதஸ்வர ஓசையும் தவிலும் முழங்கிற்று. அங்கு நின்ற பெண்கள் கூட்டத்தோடு விசயாவும் அவளுடன் கூடவந்த அந்த இரண்டு பெண்களும் சேர்ந்து நின்று கொண்டார்கள். அந்தக் கோயில் வளாகத்தாலே சூரன் ஒடிப்போய் கந்தசுவாமி கோயில் வீதியில் நின்று கொண்டு ஆட்டம் போட சுவாமியைத் தூக்கி வைத்திருந்தவர்களும் அதேயிடத்தை நாடிப் போனார்கள். சூரனைத் தூக்கிவைத்திருந்தவர்கள் தங்களையும் மகாதீர சூரன்களாக நினைத்துக் கொண்டு அந்தச் சூரனைப் போட்டுப் பேயாட்டமாய் ஆட்டுவித்துக் கொண்டிருந்தார்கள். தீவட்டிகள் ஒருபக்கம் சுவாமிக்கும் மறுபக்கம் ஒட்டக்காவடியாய் நிற்கும் அந்தச் சூரனுக்கும் பக்கத்தில் எரிந்துகொண்டிருந்தன. இந்தத் தீவட்டிகளுக்கு எண்ணெய் ஊற்றவும் அவற்றைக் கண்காணிக்கவுமென்று ஒருவர் எண்ணெய்ச் சட்டியுடன் அவ்விடத்தில் அலைந்து கொண்டிருந்தார். சூரன் போர் ஒருபுறம் நடக்க அங்கே வந்திருந்த பெடிப்பிள்ளையஞக்கெல்லாம் வேறு என்ன வேலை? - அவர்களெல்லாம் ஒருவர் ஒருவராய் ஒழிந்துகொண்டு அவ்விடமெல்லாம் ஓடிப்பிடித்து விளையாடினர். சூரனைத் தூக்கி வைத்திருந்தவர்கள் அந்த வீதி முழுக்கவும் பிடித்துக் கொண்டு முன்னாலும் பிறகு பின்னாலுமாகவென்று ஓடிக் கொண்டிருக்க அந்தப் பெடிப்பயல்களும் சாக்கிலிருந்து நிலத்தில் கொட்டிய தேசிக்காய் உருண்டு போவதைப்போல அந்தச் சூரனுக்குப் பிறகாலே ஒடிச் சென்றார்கள். அந்தச் சூரன் போகும் இடமெல்லாம் அதிலே நின்று கொண்டிருந்தவர்கள் ஒருவரோடொருவர் இடித்து நெருக்கி நின்றார்கள். அவர்கள் தங்கள் பக்கம் விரைவாக வரவும் சிலர் பக்கவாட்டில் நின்றவர்களை இடித்து நெட்டித் தள்ளினார்கள். சூரனைத் தூக்கிக் கொண்டு ஓடியவர்களுக்கு வியர்வை பொங்கி வழிந்தது. அவர்கள் மூச்சிறைக்க வேர்த்து வழிந்த முகத்தோடு சுவாமிக்கு முன்னாலே சூரனைக் கொண்டுவர சங்கு முழக்கத்தோடு சூரனை நோக்கி வேல் நீண்டது. அந்தத் தலை வெட்டோடு முண்டமாகச் சூரன் பின்னாலே போனான். அதன் பிறகு எங்கேயோ மறைந்ததாய் நின்று விட்டு வந்த அந்தச் சூரனுக்கு யாரையும் விரட்டுவதாய் வெருட்டுவதாய்த் தெரியும் ஒரு புதுத்தலை முளைத் திருந்தது. பிறகும் அந்த இடத்திலே சூரனாட்டம் ஆரம்பித்தது. சுவாமியையும் நின்ற இடத்திலே இருந்து அவர்களும் சுமைதாங்கிக் கால்களை எடுத்துவிட்டு, கொஞ்சம் முன்னால் சென்று வைத்துக்கொண்டு நின்று விட்டார்கள். சூரனின் ஒவ்வொரு தலை வெட்டுக்கும், சுவாமியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் முன்னாலே மறுபடியும் மறுபடியுமாகப் போனவாறு இருந்தார்கள்.
ரீ.பி.குருஸ்ணந்தம் O 252 O

கண்டி வீதியிலே உள்ள அந்த மரவிதானத்தின் அடியை கந்தசுவாமியார் அடைந்ததும் - அந்த வீதியின் முனையில் மற்றைய மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வேறு மக்கள் வந்து, கடலில் சங்கமம் ஆகும் பெரிய நதியைப் போல் சேர்ந்து கொண்டார்கள். இந்த நேரம் அன்ரனும்தான் அங்கே கண்டிவீதிக்கு அருகில் வந்துவிட்டான். அவன் தூரத்தில் நின்றபடி இந்தச் சூரனாட்டத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். அங்கு நின்ற சனங்களின் தலைக்கறுப்புக்கு மேலாலே அந்தச் சூரன் நின்று ஆட்டம் போடுவது அவனுக்குப் பார்க்க ரசிப்பாக இருந்தது. அது ரமணியமாக அவன் மனத்தையும் கவரத்தக்கதாக இருந்ததால் அந்தச் சனக்கூட்டத்துக்குப் பின்னாலே அவனும் போய்க்கொண்டிருந்தான். சூரன் அவன் பார்வையிலிருந்து தொலை தூரம் போகும் வேளையில் அவன் அந்தச் சனக் கூட்டத்தையும் வேடிக்கை பார்த்தான். அங்கே எடுப்பாகச் சோடித்து வந்திருக்கின்ற ஆண்கள் பெண்களையும் இடையிடையே கண்டுவிட்டு, அவர்களையும் பார்த்தபடி அவன் பொழுதைப் போக்கியபடி இருக்க - அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில் அவனின் பார்வையில் பட்டு பிறகு மாயமாய் எங்கோ மறைந்துவிட்டவள் போல் அவன் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டவள் - அவள் விசயாதான்! - அதிலொரு சந்தேகமேயில்லை! - ஒன்று நன்றாக அவன் அதை உணர்ந்து கொண்டு விட்டான். இப்போது அவனுக்கு - அந்தச் சனக் கும்பலுக்கிடையே எப்படியாய் அவளைத் தேடிக் கண்டடைவது என்ற தவிப்பு மனத்தில் தொட்டுவிட்டது. பெண்கள் மட்டும் அங்கே தனியாக நிற்கின்ற இடத்துக்கு அவனால் போக முடியாதென்பதால் - ஆண்கள் நின்று கொண்டிருக்கும் பக்கமாக அவர்களுக்குள்ளே அவன் முரண்டி உள்ளே நுழைந்தான். அப்படி அவர்களுக்குள்ளே நுழைந்து அவளை எங்கேயென்று தேடுவது? என்பதான யோசனையாகவும் அவனுக்கு வந்துவிட்டது என்றாலும் அவளின் கண்களுக்கு ஒருமுறை தன்னைக் காண்பித்துவிடவேண்டும் என்ற முயற்சியில், சனத்துக்குள்ளே நின்று அவன் இடிபட்டுக்கொண்டிருந்தான். பெண்கள் கூட்டமாக நின்ற பக்கத்திலே விசயாவின் கையை தன் கையால் பிடித்துக்கொண்டு - பவானி அவளை முன்னால் தான் நடக்கின்ற போதெல்லாம் அவளை இழுத்துக்கொண்டு போனாள். இந்த விதமாக விசயாவும் ரதியை தன்கையால் பிடித்துக்கொண்டு பவானியின் இழுவைக்கெல்லாம் ரதியைத் தானும் அப்படியாக இழுத்துக்கொண்டு நடந்தாள். இப்போது கண்டி வீதியின் முக்கிய அந்த நாற்சந்திக்கு சுவாமியும் வந்தாகி விட்டது. அந்த இடத்தில் சனம் அங்காலேயும் இங்காலேயுமாகக் கலைந்து சென்று நின்ற பொழுது, ஒரு கணம் இதற்குள்ளும் அன்ரனின் கண்களில் விசயா ஒருமுறை தென்பட்டாள். என்றாலும் அந்தச் சூரன் வந்து அந்தச் சந்தியைச் சுற்றிச் சுழன்றதால் - அங்கு திரும்பவும் நின்ற இடங்களிலிருந்து சனங்கள் பல பக்கங்களிலும் கலைந்து சென்று நின்று கொண்டனர். இதனால் இம்முறையும் அவன் கண்பார்வையிலிருந்து தவறுப்பட்டுப் போனாள் விசயா. அதன்பிறகு அங்கே அதிலே சூழவும் நின்று கொண்டிருந்த பெண்களின் வாளிப்பான உடல்களின் இடைவெளியாகவும் அவன் பார்த்த வரழ்க்கையின் ரிறக்கஸ் O 253 O

Page 137
போது, அப்போதும் அவள் அவனது கண்பார்வையில் அகப்படவில்லை. இப்போது தனக்கு முன்நின்ற சனக்கும்பலுக்குள் நுழைந்து அவன் முன்னாலே ஒரு வெளியான அந்த இடத்துக்கு வந்தான். அந்த இடத்திலே அங்கே எந்தக் கோணத்தில் நின்று கொண்டிருப்பவர்களும், தன்னை வடிவாகப் பார்த்துவிடக்கூடிய இடம்தான் தான் இப்போது நின்று கொண்டிருக்கின்ற இந்த இடம், என்ற நினைப்பு அவனுக்கு வந்தது. அதன் பிறகு திரும்பவும் அவன் அங்கே தன் கண் பார்வையிலிருந்து முன்னம் விசயா தவறிப்போன அந்த இடத்தை நோக்கி பார்வையால் துழாவினான். கொஞ்சம் அந்த இடத்துக்கு முன்னாலேயும் அதற்கு அருகாமையிலுமாக அவன் தன் பார்வையை நீட்டிக் கொண்டுபோக, அங்கே ஒரு இடத்தில் நடுத்தர உயரமும் நிறைவான முழு மார்புமுடைய ஓர் இளம் பெண்ணுக்குப் பின்னாலே விசயா நின்று கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. அவளை அவன் கண்டு கொண்ட தருணம் அதிலே சூரனைத் தலை வெட்டிச்சரிக்க, சுவாமியைத் தூக்கி வைத்திருந்தவர்கள் முன்னாலே கொஞ்ச தூரத்துக்கு நடந்து சென்று கோயிலுக்கு அருகே நின்றார்கள். இந்நேரம் அங்கு ஆண்கள் பெண்களெல்லாம் கலந்து நிற்க, அன்ரனும் விசயா நின்ற இடத்தருகே போய் விட்டான். என்றாலும் விசயாவுக்கும் அவனுக்கும் இருந்த இடைவெளியான தூரம் இன்னும் இருந்துகொண்டே இருந்தது. கோயிலருகே சூரன் இப்போது மாமரவுருவை எடுத்திருந்தான். இந்தச் சூரனின் கைப்பிடியிலே இவ்வேளை ஒரு பெரிய மாங்கெட்டு மாத்திரம் இருந்து அது அவனின் தலைப்பாகத்தை குழைகளால் மறைத்துக்கொண்டிருந்தது. அந்த மாங்கெட்டில் மாங்காய் உலைய இப்போதும் சூரன் ஓட்டத்திலும் ஆட்டத்திலும் நின்று கொண்டிருந்தான். இப்போது சூரனை மேலும் கீழும் தூக்கி ஆட்டிக்கொண்டு சூரனின் யுத்தத்தை இன்னும் உக்கிரப்படுத்தி பார்வையாளரைக் கவர்ந்தார்கள் சூரனைத் தூக்கி வைத்திருந்தவர்கள். இவ்வளவு நேரமாய் அவர்கள் தங்கள் உடம்பைப் போட்டுக் கசக்கிப்பிழிந்ததால், அவர்களெல்லாம் நன்றாக வெளுத்துக் களைத்துப் போய்விட்டார்கள். தோள் பட்டைகளும் சூரனைத் தூக்கித் திரிந்ததில் முறுக்கிப் பிழிந்தது மாதிரி அவர்களுக்கு வலிக்கிறது. குத்திக் குடைகிற உளைச்சல்! அவர்களது நெஞ்சில் பருத்துப் பரபரப்பான மயிர்களில் வேர்த்து ஊற்றியது. அதே வேகத்தில் வேர்வை அவர்களுக்கு உடம்பு முழுவதுக்குமாகியிருந்தது. அவர்கள் எல்லோருடையதுமான மூச்சிறைப்பும் விசுவரூபமாகக் கேட்டது. அங்கு நின்றவர்களுக்கெல்லாம் சூரன் கையில் பிடித்திருந்த - அந்த மாங்கெட்டில் தொங்கும் மாங்காய் எண்ணிக்கையிலேதான் இப்போது கண். அதிலேயுள்ள மாங்காய் தமக்குக் கிடைக்காததாய்ப் போய் விட்டாலும் பரவாயில்லை - என்றாலும் அந்த மாவிலைகளில் தமக்கு ஒன்றாவது கிடைக்க வேண்டும் என்ற ஆசையோடு உள்ள ஒரு வேண்டுதலோடு அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அன்ரன் மாமரவுருவாய் மாறிவந்த அந்தச் சூரனைக் கூட இப்போது வடிவாகப்
ரீ.பி. அருளWரைந்தம் O 254 O

பார்க்கவில்லை. அவன் தன் கண்பார்வைக்கு இப்போது நன்றாகத் தனக்குப் பார்க்கத்தெரியும் விசயாவைத்தான், வைத்தகண் மாறாமல் தொடர்ந்து பார்த்தவாறு இருந்தான். அவனின் பார்வைக்கு அங்கே - இரவிவர்மாவின் ஓவியம் போல விசயா மிகவும் எழில் மிக்கவளாக இருந்தாள். இரவிவர்மா தன் சித்திரத்தில் வரைந்த அந்தச் சிங்காரப் புடவையின் வண்ணங்களும், அதன் மடிப்புகளும், அவள் உடையில் காணப்படாது விட்டாலும், அவரது சித்திரத்தை விசயா இப்போது அவனுக்கு நினைவூட்டினாள். அவன் பார்த்து அங்கே ரசித்துக் கொண்டிருந்தது அவளை மட்டும் தான் தனியே என்றிருக்க, அப்போது அங்கே விசயாவின் அருகில் நின்று கொண்டிருந்த பவானி இவன் இதிலே நின்றுகொண்டிருப்பதைக் கண்டுவிட்டு, அவனைப் பார்த்துக் கொண்டே மூக்குச் சுருங்கச் சிரித்துக்கொண்டிருக்க வெளிக்கிட்டாள். அன்ரனின் வீட்டுக்கு அயலில் உள்ள வீடுதான் பவானியின் வீடும். இதனால் அவனைக் கண்டதும் அவள் வயதுக்கு அப்படியொரு சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் பவானி அங்கே பார்த்து அன்ரனைக் கண்டுவிட்டு சிரித்ததோடு, விசயாவும் தன் பார்வையில் அதேயிடத்தில் நின்ற அன்ரனை உடனே கண்டுவிட்டாள். அவளது ஜொலித்த கண்கள் அவனது கண்களைக் கவ்வின. அவனையே பார்த்தாள். அவளுக்கு நுங்கின் குளிர்ச்சி இப்பொழுது, அவனை அங்கே பார்த்த கிையோடு அப்படியே அவள் பூத்துப் பொலிந்துவிட்டாள். அன்ரனைக் கண்டதும் ஆனந்தம் பொங்கிய அவளது முகத்திலே பிறகு இதழ்களில் சிரிப்பும் சேர்ந்தது. தன்னை அவள் இப்பொழுது கண்டுகொண்டுவிட்டாள் என்று அறிந்ததும், அன்ரனும் கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தான். அவனது பார்வை விசயாவை பன்னில் மூழ்கடித்தது என்றாலும் பவானி என்பவள் அவளுக்கு அருகிலே நின்று முழுப்பல்லும் வெளியே தெரிய தன்னைப் பார்த்து சிரிப்பதுபோல இருக்கின்றதைப் பார்க்க - அவனுக்கு புளியமரத்திலுள்ள பேய் இப்படித்தான் ஒரு சிரிப்புச் சிரிக்குமோ - என்பதைப்போல், அவளிடம் எரிச்சலாக வந்தது. அப்படியே எங்கேயாவது அவளை ஆணியால் அறையவேண்டும் போல் அப்போது ஆத்திரமாகவும் அவனுக்கு வந்தது. ஆனால் விசயா - அவள் ஒன்றும் அறியாமல் அதிலே நின்றபடி அவனைப் பார்த்தவாறு இருந்தாள். அவளிடத்தில் கட்டுக்கடங்காத பரவசம் பரவிக் கொண்டிருந்தது. அவனைக்கண்ட பிறகு ஒளிக்கோள்கள் போன்ற அவள் கண்கள் மேலும் தகதகவென்று பிரகாசிக்கவும் செய்தன. அவளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அவனும் தன் கண்பார்வையால் அவளைத் தன் அருகில் வா. அருகில்வா. என்பதைப்போல் கொக்கி போட்டு இழுத்தான். இப்படி அவன் கண்களால் பேசியதைத் தெரிந்துகொண்டதும் அவளுக்கு உடனே வெட்கம் வந்தது. உடனே அவள் கன்னங்களில் குருதிவந்து எட்டிப்பார்த்ததைப் போலிருந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் இப்பொழுது சந்தோஷப்
பாய்ச்சல்கள் - பரவச அலைகள்.
மாமரவுருவுக்கொண்டு வந்த சூரனை வேலாயுதத்தால் பிளவாக்கிவிட்டார்
6 orðsmaðuósk Jýgybecik O 255 Q

Page 138
முருகன். இங்கே அந்தச் சூரன் கைப்பிடியிலிருந்த மாங்கெட்டைத்தூக்கி கீழே நிலத்தில் ஒரு ஓரத்திலெறிந்தார், அந்தச் சூரனோடு அருகில் நின்றவர். ஒரு மாங்காய்க்கும் மாவிலைக்கும் என்று அதிலே நின்றிருந்த ஒரு சனக்கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டுப்போய், அது விழுந்த இடத்தில் மொய்த்தது. இந்த மாங்காய்க் கிளைக்கெட்டை அவர் கீழே விழ எறிய முன்பே எத்தனையே பக்தர்களின் கைகள் எனக்கு எனக்கு என்பதாய்க் கேட்டுக்கொண்டு உயர்ந்திருந்தன. அப்படிக்கை நீட்டிக் கெஞ்சியவர்களிலே விசயாவின் கையும் இருக்கப் பார்த்தான் அன்ரன். உடனே அந்த மாங்கெட்டு விழுந்த இடத்தில் பாய்ந்து தானும் அதற்குள் இடிபட்டான். தன்னைவிட உயரமான எத்தனையோ ஆண்களினது தோள்களில் இடிபட்டு நெருக்குப்பட்டு உள்ளே நுழைந்து அவன் அந்தக் கிளையில் அங்கே பிடித்த கைக்கு அகப்பட்டது அவனுக்கொரு மாங்காய் மட்டும்தான். அந்த மாங்கெட்டில் பெறுமதியானது மாங்காய்தானே? அதுதன் கைக்கு கிடைத்துவிட்டதென்ற மகிழ்ச்சியில் அவன் அந்த மாங்காயோடு தன் கையை மேலே தூக்க முயற்சிக்க, தள்ளிப்போ என்று ஒரு கரம் அவன் பிடரியைப் பிடித்து தள்ளுவதுபோல் இருந்தது. இன்னுமொரு கை அந்தச் சன நெரிசலுக்குள்ளே அவன் கையிலிருந்த அந்த மாங்காயைப் பறிக்கவும் முயன்றது. அவனது கை இரும்பைப்போல உறுதியானதுதான். என்றாலும் அந்தச்சிறிய விரல்களைக்கொண்ட சுறுசுறுப்பான கை அவனது கையிலிருந்த பொருளைப் பறிப்பதற்குப் பேராடும்போது, அவனும் ஒரு கணம் நிலைகுலைந்துபோய் தடுமாறியதாய் விட்டான். தன் கையிலுள்ள பொருள் பறிபோய்விட்டிடுமோ, என்கிற பதற்றத்தில் தன் விரல்களால் இன்னும் அதை இறுகப் பற்றியபடி, தன்
பாருளைப் பறிக்கப் போராடும் அக்கையிலேயே தன் பார்வையை உடனே கொண்டு சென்று அதற்குரியவரின் முகத்தையும் பார்த்தபோது, பெரிதாக ஒருமுறை கடகடவென்று சிரித்துவிட்டான் அன்ரன். தன்னுடன் மாங்காய்க்கு மல்லிட்டுக்கொண்டு நின்றவன், விசயாவின் தம்பி சரவணன்தான் என்று இவ்வேளை அறிந்துகொண்ட பிறகு, அவனின் கையைப் பிடித்து அவனைத் தன் கிட்டவாய் வர இழுத்தான் அன்ரன். "இந்தாரும் உமக்கு இந்த மாங்காய்தானே வேணும்.?” - என்று அன்ரன் அவனைக் கேட்டான். சரவணனுக்கு வெட்கம் வந்துவிட்டது. "இல்ல. நான் உங்களத் தெரியாமத்தான். உதுக்க இடிபட்டு உங்கட கையில உள்ளதையும் பிடுங்க நினைச்சன். என்ர கையிக்க உதுக்குள்ள இருந்து நான் எடுத்த மாங்காய ஆரோ பறிச்செடுத்துப் போட்டினம். அதோட இதில நிண்டவயஞம் எல்லாருமாச் சேந்து என்னக் கீழ நிலத்தில விழுத்தாட்டியும் போட்டினம்.” - அவன் இப்படிச் சொல்லிக்கொண்டு தன் சட்டையில்பட்ட மண்தூசியை ஒரு கையால் தட்டினான். "எங்க திரும்பும் பாப்பம். அட பின்னாலேயும் மண் ஊத்தையாக் கிடக்கு" - என்று அன்ரனும் அவனது முதுகுப் புறத்திலுள்ள சட்டையில் பட்டிருந்த தூசியைத் தன் கையால் தட்டிவிட்டான். "அது கிடக்கட்டும் பறவாயில்ல." - என்று சரவணன் அன்ரனைப் பார்த்துக்கொண்டு சிரித்தபடி சொன்னான்.
ඊ. ෆි. ථNගvගvෂ්නර් O 256 O

"இந்தாரும் நீர் இத வைச்சுக்கொள்ளும்." - என்று அந்த மாங்காயை அவனிடம் அன்ரன் கொடுத்தான். “உங்களுக்குத்தானே இதக் கொண்டுபோகவெண்டு எடுத்தனியள் அண்ணா.” என்று அவன் அந்த மாங்காயை கையில் வாங்கிக் கொண்டு அப்படிச் சொல்லவும் "எனக்கு அப்படித் தேவயில்லத்தம்பி. எண்டாலும் இதத் தேவையான ஆருக்கும் பாத்துக் குடுக்கலாமெண்டு நினைச்சுத்தான் நானும் உதுக்க இடிபட்டு எடுத்தனான். இப்ப உம்மக்கண்டு விட்டதால இத நான் உமக்குத்தாறன்.” - அவன் சொல்லிவிட்டு அங்கே விசயா முன்பு நின்ற அந்தப் பக்கம் திரும்பி எங்கே அவள் என்று தன் பார்வையில் அங்குமிங்குமாகத் தேடினான். அவள் இப்போதும் முன்புதான் நின்றுகொண்டிருந்த அந்த இடத்தைவிட்டு வேறு எங்குமே நகரவில்லை. தன்னை அங்கு கண்டு கொண்டாற்பிறகு அவள் அந்த இடத்திலேயே வேறு எவ்விடமும் போய்விடாது நிற்கின்றாள் என்பது அவனுக்கும் பிறகு அவளைக் கண்டதோடு தெளிவாகப் புரிந்துவிட்டது. உடனே சரவணனை அவன் பார்த்து “உம்மடை அக்காவும் அங்க அதிலயாத்தானே நிண்டு கொண்டிருக்கிறா. அவவை நீர் காணேல்லயோ. நீர் அவவோடதானே இங்க கோயிலுக்கு வந்தனிர்.?” - என்று கேட்டான். "அக்காவோ. அவவைத்தான் நான் இதுக்க இப்ப தேடிக்கொண்டு இருக்கிறன். எங்காலயா அவ நிக்கிறாவெண்டு நீங்க இப்ப சொன்னியள் அண்ணா.?” - அவன் அப்படி அன்ரனின் முகத்தைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு தனக்கு முன்னால் நின்றவர்களின் தலைகளுக்கு மேலாகவும் ஓரிரு முறை துள்ளிக் குதித்து அவ்விதமாகவும் பார்த்தான். "அதிலேதான் நிக்கிறா அங்க நான் காட்டிற இடத்தில இப்பபாரும்.” என்று அவனை ஒரு வசதியான இடத்தில் கொண்டுவந்து நிற்கவிட்டுவிட்டு தன் கையை நீட்டி அவளை சரியாக அவனுக்குக் காண்பித்தான் அவன். விசயா அன்ரனும் சரவணனும் நின்ற இடமாக, இவ்வளவற்றையும் தான்நின்ற இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அன்ரனைப் பார்த்துச் சிரித்தாள். அன்ரனையும் சரவணனையும் அதிலே நிற்க ஒன்றாகக் கண்டது, அவள் மனதுக்கு பரம சந்தோஷமாக இருந்தது. அவள் உடனே தம்பியைப் பார்த்து தன்னிடம் வருமாறு கையசைத்துக் கூப்பிட்டாள். சரவணன் தன் கையிலிருந்த மாங்காயை அவளுக்குத் தெரிய கையை உயர்த்திக் காட்டிவிட்டு "அண்ண. அங்கால அக்காவிட்ட நான் ஒருக்காப் போய்க் கதைச்சிட்டு ஒடியாறன்.” - என்று அன்ரனுக்கு அவசரமாக அதைச் சொல்லிவிட்டு அந்த நடுவழியாலே குறுக்காக அங்கேதன் தமக்கை நின்ற இடத்தை நோக்கி ஓடினான்.
இப்போது மாமரவுருவை விட்ட சூரன் தன் வரபலத்தால் திரும்பவும் நல்லுருக்கொண்டு முருகனுடன் போர்புரிய வந்துவிட்டான். அந்தக் கோயில் வாசலிலே அவனேவிய தேவாந்திரங்களின் வலியடக்கி அவனை பின்னிடச்செய்து முருகன் வேலால் அவனை இருபிளவாக்கினார். இவ்விடத்தில் "அரோகரா’ வென்று ஒரே சத்தம். நாதஸ்வர இசை முழக்கம் நாலாதிசையினிலும் காற்றோடு கலந்து நிற்க வெற்றிவேல்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 257 O

Page 139
முருகளை கோயிலுக்குள் கொண்டு போனார்கள் பக்தர்கள். மயிலும் சேவலுமாக மாறிய சூரனின் பிளவு கொண்ட உருக்கள் சுவாமிக்குப் பின்னாலே பிறகு உள்ளே போனது. அந்த மயிலை வாகனமாகக் கொண்டும் கோழியைக் கொடியாகவும் பிடித்த முருகனுக்கு முறையங்கள், கட்டியங்கள், சங்கு முழக்கங்கள் எனக் களைகட்டச் சிறப்புடன் அட்சரம் பிசகாத சமஸ்கிருதப் பிரயோகத்தோடு கோயிலுக்குள் பூசைகள் நடந்தன. விசயாவை இடித்து நெருக்கிக் கொண்டு அதிலே நின்ற பெண்களெல்லாம் கோயிலுக்குள் போகவென்று முன்னால் போனார்கள். விசயாவோடு வந்த அந்த இரண்டு பெண்களும் சரவணன் வந்து தமக்கையுடன் சேர்ந்த பிறகு அவளைப்பார்த்து: “நீ வர்றியா விசயா சாமி கும்பிட. நாங்கள் இப்ப கோயிலுக்க போகப் போறம்.” - என்று அந்த வேளையில் கேட்டார்கள். "நான் தம்பியோட இதில நிண்டுட்டு. உள்ள சனம் கொஞ்சம் குறைய வரவிட்டுப் போவமெண்டு பாக்கிறன். நீங்க இப்ப போறதெண்டாப் போங்கோ. எனக்கு இங்க தம்பி துணைக்கிருக்கிறான்தானே.?” - என்று விசயா அவர்களுக்குச் சொன்னாள். அவர்கள் அவள் சொல்வதைக் கேட்டதன் பின்பு அப்படியே கோயில் படிகளில் ஏறி உள்ளே போய் விட்டார்கள். விசயாவுக்கு அது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. தன்னைக் கண்டதன் பிறகு - அதுவும் தனியே தான் மாத்திரம் இதிலே நிற்பதை அன்ரன் தெரிந்துகொண்ட பிறகு, அன்ரன் எங்கும் அந்த இடத்தை விட்டுப் போகமாட்டார் என்பது விசயாவுக்கும் தெரியும். அதோடு எப்படியாவது தன்னுடன் அன்ரன் கதைப்பதற்காக வருவார் என்றும் அவள் அப்போது எதிர்பார்த்திருந்தாள். அதனால் வேறு யாருடனும் சேராத ஒரு தனிமையில் தான் நின்றுகொண்டு தன்னுடன் அவரும் கதைப்பதற்கு - ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கவே அவள் தன் இரண்டு சினேகிதிகளையும் அனுப்பிவிட்டு சரவணனுடன் சேர்ந்துகொண்டு அவ்விடத்தில் அவள் நின்றாள். சரவணன் தன் கையில் வைத்திருந்த அந்த மாங்காயை "அக்கா இங்க பாத்தீங்களா..?” என்று சொல்லியவாறு அவளிடம் காட்டினான். "இதை எப்பிடியடா தம்பி உந்தச் சனத்துக்குள்ள இடிபட்டு நீ எடுத்தாய்..?” - என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அவள். "நான் இத எடுக்க ஆக்களுக்க கிடந்து இடிபட்டனான் தான். ஆனாலும் பிறகு இது என்ர கைக்குக் கிடைக்கேல்ல" - "அப்ப உதையார் உனக்குத்தந்தது.?” "அங்க அவர் தான் அன்ரனண்ணா." - அவன் அவளுக்குச் சொல்லிவிட்டு அன்ரன் நின்ற இடத்தைப் பார்த்தான். பிறகும் என்னவோ ஒரு யோசனையில் "அங்க அதில அவர் எங்களப் பாத்துக்கொண்டு தனிய அதிலை நிக்கிறாரக்கா.” என்றபடி தன் கையால் அவளின் கையைப் பிடித்து விளையாட்டாக ஒருமுறை இழுத்துவிட்டு குறும்பாக ஒரு சிரிப்பும் சிரித்தான். பிறகு அந்த மாங்காயை அவள் கையிலே வைத்து தன் கை ரல்களாலே அதை அவன் தமக்கையின் கைகளின் மேலாகப் பொத்திப் பிடித்தான். அவளுக்கு அப்படி அவன் செய்த வேளையில் அன்ரனையும் அவள் அங்காலேயும் அதோடு பார்க்க முடிந்ததால் வெட்கமாகவிருந்தது.
്. ി, SGൾ O 258 O

அதனால் அவனைப் பார்த்துக் கொண்டு அவளுக்கு வந்துவிட்ட வெட்கத்தில் தம்பியின் கைகளிலிருந்து அவள் தன் கையை விடுவித்துக் கொண்டாள். பிறகு "சும்மா நீ இரன்ரா தம்பி.!" என்று தன் தம்பிக்கு அதை அவள் செல்லமாகச் சொன்னாலும் அந்த மாங்காய் மட்டும் அவள் கையில் பத்திரமாக இருந்தது. மேகங்கள் தங்களையும் சந்தன நிறமாக்குகிற அந்தியாகிவிட்டது. அதன்பிறகு வானம் இரும்புத் தகட்டைப் போல் ஒரு வர்ணமற்ற நிறத்தைக் காட்டியது. அதோடு கருகருவென மயங்கிக் கொண்டு வந்தது பொழுது அவள் நின்ற இடத்தில் இன்னமும் சனங்களின் இடிபாடு இருந்துகொண்டேதான் இருந்தது. உடல் பருத்த ஒரு பெண் வந்து பின்னாலே அவளை ஒரு இடி இடித்து முன்னால் அவளை தள்ளியதாய் விட்டுவிட்டு கோயில் பக்கமாக அவள் போனாள். அந்த இடியோடு விசயா ஒரு பக்கம் சரிந்து உடனே விழப்போனாள். அவளுக்குக் கால்களிலே பலமில்லாத அளவுக்கு பறக்கின்ற ஒருவிதமான மகிழ்ச்சியான சிந்தனைகளிலே பலமெல்லாம் போய்விட்ட மாதிரியாகத்தான் இருந்தது. அவன்மீது உள்ள காதல்தானே அவளை இவ்விதமாகவெல்லாம் மாற்றிவிட்டிருந்தது. இவ்வளவு நாட்களாக மாதங்களாக அவள் மனத்தில் குமிழியாக ஊற்றெடுத்து, ஓடையாக ஓடத்தொடங்கி, ஆறாகப் பெருக்கெடுத்து காட்டாறு வெள்ளமாக கடலில் சங்கமித்ததைப்போல் - ஆகிவிட்ட அந்தக் காதல் உணர்வுகளில் மூழ்கிவிட்டிருந்தவளல்லவா அவள். அதனால் ஒரு துணிவாற்றல் பொருந்திய சக்தி அவளது மனதுக்குள் இருந்து அவளை முன்னால் தள்ளியது. அவள் தன் தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு அவனைக் கூட்டிக்கொண்டு முன்னாலே அவன் நின்ற பக்கமாகப் போக நடந்தாள். அவ்வேளை தன் தம்பியை அவள் தன் கையில் பலம் வைத்துப் பிடித்தபடி அவனைக் கூட்டிக் கொண்டு முன்னாலே அன்ரன் நின்றிருந்த இடத்துக்குப் போனாளா..? அல்லது சரவணன்தான் அவள் நடக்க வெளிக்கிடவும் முன்னாலே அவன் நடந்துகொண்டு அன்ரன் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு அவளைக் கூட்டிக்கொண்டு போனானா..? என்கிற மாதிரி ஒன்றுமே புரியாத ஒரு அளவிலே - அந்த மங்கலான வெளிச்சம் விழுந்துகொண்டிருந்த, அவன் நின்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது அவளுடைய உணர்வுகளிலே அவளுக்கு அப்படியாகவெல்லாம் இருந்தது. அங்கே தன்னிடமாக வந்து நின்ற விசயாவைப் பார்த்தவுடன் அன்ரனுக்கு அந்தச் சந்தோஷத்தைத் தாங்கவே முடியவில்லை. தனியே வந்த ஒரு கன்னிப் பெண்ணோடு அதிலே பலபேர் பார்க்க கோயிலடியில் வைத்துக் கதைப்பது என்பது தனக்கென்றில்லாமல் அது அவளுக்கும் கூட மரியாதையைக் குறைத்துவிடும், என்று மனத்தில் அவனுக்கு ஆசையிருந்தும் அவன் அவளை விட்டு ஒரு பக்கத்தில் ஒதுங்கியே இவ்வளவு நேரமாகவும் நின்றிருந்தான். ஆனாலும் இவ்விடமாக அவள் தன்னிடமே தம்பியைக் கூட்டிக் கொண்டு இப்போது வந்துள்ளாள் என்று தெரிந்ததும், அவனும் தான் நின்ற இடத்திலிருந்து அவளை நோக்கி கொஞ்சம் முன்னாலே முகம் காட்டுகிற இருள் விழுந்த அந்த இடத்துக்கு நடந்தான். அவனுக்குக் கிட்டவாக அவளும், அவளுக்குக்கிட்டவாக அவனும் வந்தவுடன், வரழ்க்கையின் ரிறக்கஸ் O 259 O

Page 140
சரவணன் தமக்கையின் பிடியிலிருந்த தன் கையை உடனே விடுவித்துக் கொண்டான். அவன் தன் கையை விடுவித்துக் கொண்டவுடனேயே விசயாவுக்கு அன்ரனுடன் கதைக்கவேண்டும் என்று முன்பு அதுவரை மனத்தில் இருந்த தைரியம், இப்போது ஆடிப்போய்விட்டது மாதிரி ஆகிவிட்டது. இப்படியான ஒரு பொது இடத்திலே பலரும் பார்க்க தனியே நின்று தான் கதைப்பது பற்றி நினைத்துப்பார்க்க, ஒருவித நடுக்கமாகவும் அவளுக்கு இருந்தது. ஒரு பக்கம் பயம் - ஒரு பக்கம் வெட்கம் - இவை இரண்டும் அவள் மனதையும் உடலையும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்க, அவள் பிறகு மெளனமாக அவனுக்கு முன்னாலே நின்றாள். தனக்கு முன்னாலே நின்ற விசயாவை அன்ரனுக்குப் பார்க்கும்போது, அவள் எப்போதுமில்லாத அளவுக்கு புதுமையாக, அழகாக, உற்சாகமாகத் தோன்றுவதைப் போல இருந்தது. “தம்பியும் நீங்களுமா, இங்க தனியவா கோயிலுக்கு வந்தனிங்க. ஆச்சியோ அல்லது ஐயாவோ ஆரும் உங்களோட கூடவா வரேல்லயா..?” என்று அவன் முதலில் சரவணனைப் பார்த்துவிட்டு பிறகு விசயாவிடம் கேட்டான். “இல்ல அவேயள் ஒருத்தரும் இங்க கோயிலுக்கு வரேல்ல. என்னை அப்பம்மா அங்க எங்கட வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பெட்டையளோட இங்க போக விட்டிட்டா.’ என்று மிக மிக நருவிசாக உள்ள தன் இடுப்பை வளைத்து நின்றபடி அவள் சொன்னாள். அவள் நின்ற நிலையைப் பார்க்க அவளது யெளவனத்தின் லாகிரிப்பெருக்கு அவன் உள்ளத்தின் வேரை அறுத்துச் சென்றது. மூச்சில் பருத்துப் பருத்து ஏறியிறங்கும் அவளது மார்பின் அழகு அவனை அயர வைத்தது. “அப்ப உங்களோட வந்த அந்தப் பெட்டயளெல்லாம் எங்க..? - என்று பிறகு அவளைக் கேட்டான் அவன். “அவயள் எல்லாம் கோயிலுக்க சாமி கும்பிடப் போட்டினம்.” “அப்ப ஏன் நீங்க சாமி கும்பிடப் போகாம அவயள விட்டிட்டு வெளியவா நிண்டுட்டியள்.?”
“அங்க உள்ள ஒரே சனம்.” “அதாலதான் போகாம விட்டிட்டீங்களா?” - அவன் ஆனந்தம் பொங்கிய அவளுடைய முகத்தைக் களிப்புடன் உற்றுநோக்கியவாறு கேட்டான். அவளது கண்களைப் பார்த்துக்கொண்டு குறும்பாகச் சிரித்தான். அவளுக்கு அவன் அப்படிக் கேட்கவும், சிரிக்கவும் அதைப் பார்த்து வெட்கம் வந்துவிட்டது. என்றாலும் அந்த வெட்கத்தை தன் முகத்திலே முழுவதும் படர விடாமல் மறைத்துக்கொண்டு; “சூரன்போர் தொடங்கியதில இருந்து அது முடியுமட்டும் நீங்க இந்தச் சனத்தோட நிண்டுகொண்டு பாத்துக் கொண்டிருந்தீங்களா?” - என்று அவனைக் கேட்டாள். “ஓம் நான் பாத்துக்கொண்டுதான் அந்தச் சனத்தோட நிண்டன். அதுக்குள்ள நீங்களும் நிண்டுகொண்டிருக்க வேளைக்கே நானும் உங்களைக் கண்டனான்தான்!”
jෂ්. ග්‍රී. ලාහ්ගvගvණිග(b O 260 O

“என்ன நீங்க கண்டனியளோ..? - நானெண்டா நீங்கள் அதுகளுக்க நிண்டதக் காணேல்லயே.?” “உங்க நிறையச் சனம்தானே நிண்டது! நீங்க தனிய முருகனை மாத்திரம் அதில பார்த்துக்கொண்டு நிண்டிருப்பீங்க.?” “இல்ல சூரனையும் பாத்தனான்.!” - அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள். பொங்கும் நதியின் நுரைவெள்ளம் போன்ற அவளது சந்தோஷச் சிரிப்பு அவனை மயக்கியது. அந்த இடத்தில் அவளது அருகாமையே சூழ்நிலைக்கு ஒரு புத்துணர்ச்சி தருவதாக அவனுக்கு இருந்தது. “இப்பிடிக் கோயிலுக்கு வந்து இதையெல்லாம் நிண்டுகிண்டு வடிவாப் பாத்திட்டுப் போறதே ஒரு சந்தோஷமாத்தானிருக்கு. இந்தச் சூரன்போர் முடிய பிறகு இனி இந்தக் கோயிலில அடுத்தது என்ன திருவிழா நடக்கும்.?” - அவன் அவளைக் கேட்டான். அதற்குச் சரவணன்தான் உடனே பதிலைச் சொன்னான். “இனித் திருக்கலியாணம்தான் அண்ணா இந்தக்கோயிலில நடக்கும்! முருகனுக்கும் தெய்வானைக்கும் மூண்டாம் நாள் கோயிலில கலியாணம்.!” - அவன் சொல்லிக்கொண்டிருந்த நேரம் சரசரவெனக் கிளம்பும் வாணவெடி வானில் வெளிச்சமாக வெடித்தது. “இந்தா இப்பவே துவங்கீற்று அதுக்கான சிறுவானவெடி!” சரவணன் மேகத்தைப் பார்த்தான். அவன் முகத்தில் கொண்டாட்ட கும்மாள வெளிச்சம்! அன்ரன் விசயாவின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியாகச் சிரிக்க, விசயாவும் அன்ரனைப் பார்த்து கொடியில் மலர்ந்த முல்லைப் பூவாக பொங்கிச் சிரித்துவிட்டாள். “அக்கா நீங்க இதிலயே அன்ரன் அண்ணாவோட கதைச்சுக்கொண்டு நில்லுங்கோ நான் கோயிலுக்குள்ள போய் திருநீறு வாங்கிக் கொண்டாறன்.?” - அவன் விசயாவுக்குச் சொன்ன கையோடு அப்படியே திரும்பி கோயில் பக்கமாகப் போக ஓடினான். “தம்பி டேய். தம்பி.!” - என்று சிரித்தவாறே அவனை மெதுவான குரலில் அவள் உடனே அங்காலே திரும்பி நின்று கூப்பிட்டுப் பார்த்தாள் ஆனால் அவன் எங்கே அவள் கூப்பிட்டதற்கு நிற்பது; அவன் சிட்டாகப் பறந்து போனது போல் போய் கோயில் வாசற்படியிலே காலை வைத்து விட்டான். விசயா முகத்தைத் திருப்பினாள் - அன்ரனின் முகத்தைப் பார்த்தாள் - அவனுக்கு முன்னால் தனித்துவிடப்பட்டோமே என்கின்ற இன்பத்திணறல் அவளுக்கு. ஆசை அவளது எண்ணங்களை நிரப்பியது. தன் மனத்திலே உள்ளதை துணிவாக இந்த இடத்தில் வைத்துக் கேட்டுவிட வேண்டும் என்ற நினைப்பில் “உங்களிட்ட நான் ஒரு விசயம் கேக்கவேணுமெண்டு இருக்கிறன்?” - என்றாள். “சொல்லுமன் விசயா..?” - என்றான் அவனும் ஆர்வத்தோடு. “என்னை நீங்க. என்னை நீங்க.” - அவளது கண்களில் நீர் கோர்த்தது. “.கைவிடமாட்டீங்க தானே.?” கண்ணிரும் வடியக் குரல் இடறினாள் அவள். "சீச்சி. என்ன விசயா இது.? கோயிலுக்கு முன்னால ஆரும் பாத்திட்டாலும் அழாதயும். அழாதயும்.!” - அவன் சொல்ல அவளுக்கும் அது ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அவள் இப்படி அதை அவனிடம் சொல்லும்போது தன் கண்களில் அப்படிக் கண்ணிரும் உடனே வந்துவிடும் வரழ்க்கையின் ரிறக்கஸ் O 261 O

Page 141
என்று அதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை - இப்போது இந்தக் கண்ணிரை எப்படித் தன்கையாயே யாரும் பார்க்காமல் துடைத்துக் கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. கையிலும் கர்ச்சிப்பு இல்லை. அவசரமாக வெளிக்கிட்டு வந்ததில் அதையும் கூட விட்டுவிட்டு வந்து விட்டேனே என்றும் அவள் நினைத்தாள். ஆனாலும் இந்த வேளையிலே “நீர் ஒண்டுக்கும் இனி யோசிக்காதயும் விசயா. நான் எப்பிடியும் உம்மைத்தான் கலியாணம் செய்வன். என்னை நீர் நம்பும். நான் எப்பவும் உம்மைக் கைவிட மாட்டன். அதுக்கேன் நீர் இப்பிடியெல்லாம் சீச்சீ. உம்முடை உந்தக் கண்ணிரைத்துடையும். - என்று அவளுக்குத் தைரியம் அவன் சொன்னான். அவள் அங்காலேயும் இங்காலயுமாகப் பார்த்துவிட்டு பிறகு யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்று முற்றாக அதை அறிந்துகொண்டு தன் கண்களில் வழிந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். அதன் பிறகு அவள் சிரித்தாள். அதற்குப் பிறகு மனசின் ஒரு மூலையில் முகம் தெரியாத மகிழ்ச்சி அவளுக்கு. சரவணன் முன்பு அதிலே நின்று ஓடிப்போனது மாதிரியே கோயிலால் பிறகு வருகிறபோதும், ஓடிவந்து அவர்களுக்கு முன்னால் நின்றான்.
“தம்பி திருநீறு எடுத்தியா..?” “அந்தமாதிரி வாழையிலயில சுத்தி எடுத்தாறனக்கா.”
‘அப்ப பொக்கற்றுக்கை வையன்.”
அக்கா சொல்ல அப்படியே அவன் அதைத்தன் சட்டைப் பைக்குள் வைத்தான். “அப்ப நானும் தம்பியும் இனி வெளிக்கிடயாப் போறம். இனி நேரமும் போகுது போலக்கிடக்கு.” - என்றாள் அவள். “அங்க கோயிலுக்கு முன்னால அதில கணக்கப் பெட்டிக்கடயளும் வந்திருக்கு. அதையும் ஒருக்காப் பாத்திட்டுப் போவமே அக்கா. அன்ரன் அண்ணா நீங்களும் வாங்களன்?” - அவன் அன்ரனையும் பார்த்துக் கூப்பிட்டான். “அவர ஏன்ரா எல்லாத்துக்கும் எங்களோட வர இழுக்கிறாய்..?” என்று ஒரு பொய்க்கோபத்தைக் காட்டிக்கொண்டு தம்பியின் முதுகில் செல்லமாகத் தட்டினாள் விசயா. “அவரும் அங்க வாங்கிப் போக ஏதாவது இருக்கும். வாங்குவார் அவர்.” - என்று அவன் உடனே சொன்னான். “அங்க என்னடா இருக்கு அவருக்கு வாங்க? இதில உள்ளதெல்லாம் காப்புக்கடயஞம், பொம்புளயஞக்கெண்டு விக்கிற ரிப்பன் - கொலுசு - குஞ்சலம் - எண்டுற அந்தச் சாமான்களும் மட்டும்தானே இருக்கும்.” அவள் ஒரக்கண்ணால் அன்ரனைப் பார்த்தாள். “நீ போக்கா எதுக்கும் ஏதாவது அவரைப் பாத்துச் சொல்லிக்கொண்டு தனியாப் பொம்பிளயஞக்கெண்டு மாத்திரம் வாங்கிற சாமான்களுக்காகக் கடை போடுறாங்களா அவங்கள்.? அங்க ஆம்பிள பொம்பிளயஞக்கெல்லாம் வாங்கக் கூடியதுகள் எல்லாம் இருக்கும். அவரும் ஏதாவது வாங்கட்டும். நாங்களும் ஏதாவது பாத்து வாங்குவம்.” ‘அப்ப நீ நிறையக் காசு வைச்சிருக்கிறாய் போலக்கிடக்கு கிடந்து
ඒ. ඊ. ථAගvගváහරේ O 262 O

இந்தத் துள்ளுத் துள்ளுறாய்..?” “காசு என்னட்ட இருக்கிறபடியாத்தானே உங்கள நான் கூப்பிடுறன். உங்களுக்கு அதில என்ன ஒண்டு வேணுமெண்டு எனக் குச் சொல்லுங்களன். நான் வாங்கித்தாறன்?” - அவன் தன் சட்டைப் பையைத் தட்டிக் காட்டிக் கொண்டான். “நல்ல தம்பியும் அதுக்கு நல்ல சோடியான ஒரு அக்காவும்.” - என்று அவர்களைப் பார்த்துக்கொண்டு அன்ரன் சொல்ல விசயா அன்ரனைப் பார்த்துச் சிரித்தாள். "அப்ப வாருங்களன் கடயளையும் பாத்திட்டு அதில ஏதும் பிடிச்சிருந்தா அப்பிடியே எதையும் அதில வாங்கிக் கொண்டு நீங்க பிறகு அப்பிடியே வீட்ட போகலாம்தானே?” - அன்ரன் இப்போது அவர்கள் இருவருக்கும் இதைச் சொன்னான். தன் தம்பியும் தன்னோடு பக்கத்திலே எங்கும் வருவதால், அன்ரனோடு அங்கே கடைகளைப் பார்க்கவென்று போவது யார் கண்ணிலும் எதுவித சந்தேகத்தையும் உண்டாக்கிவிடாது என்கிற தைரியத்தில், விசயாவும் அன்ரனோடு அந்தக் கடைகளுக்குப் போகச் சம்மதித்தாள். தன் தம்பிக்குப் பக்கத்திலே விசயா நடந்து கொண்டிருந்தபோது அவன் விசயாவின் நடையழகைப் பார்த்தான். அவளது அந்த நடையழகிற்கு ஈடாக வேறு எந்த ஒரு அழகை ஒப்பிடுவது என்பதை எப்படித் தன் மூளையில் சிந்தித்தும், அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. என்றாலும் அவள் நடக்கின்ற அந்த நடையைப் பார்த்து, பெண்ணின் பாதி அழகு அவள் நடையிலேதான் இருக்கிறது என்ற ஒரு உண்மையை அப்போது அவன் தனக்குள் நினைத்துக்கொண்டான். சிவசக்தி கடை வீதியோரமாக அங்கே கடைபரப்பியிருந்த இடத்தி லெல்லாம் ஒரே சனம் - அதிலே காப்புச் சீப்பு விற்கிற கடைகளிலெல்லாம் பெண்களின் கூட்டம் மிகுதியாயிருந்தது. கிராமப் புறத்திலிருந்து வந்த பெண்கள் ஜில்லிப்பான குளிர்களியை அது கீழே நிலத்தில் சொட்டச் சொட்ட, வாயில் வைத்து சுவைத்துச் சாப்பிட்டுக்கொண்டு, அங்கே உள்ள பொருட்களுக்கும் விலைகேட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தையே கொட்டிக் கவிழ்த்துக் கழுவிவிட்டுப் புதிதாக வடிவமைத்து விட்டதாக அங்கே கடை பரப்பியிருந்த அந்த இடத்தைப் பார்க்கும்போது அன்ரனுக்குப்பட்டது. விசயாவுக்கு அன்ரன் தன்னோடு அருகில் நடந்து வருகிறார் என்பதில் உற்சாகத் துள்ளல். அவள் அங்கே உள்ள காப்புக் கடைகளைப் பார்த்தாள். அந்த றப்பர்க் காப்புகளும் கண்ணாடி வளையல்களும், நிறையவே அவளுக்கு வீட்டில் இருந்ததால், அதன் பக்கம் போகவே அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் அந்தக் கடைகளுக்குள் போகாது நேராகத் தான் நடந்துகொண்டு, எதையோ தேடுவது போன்ற ஆவலுடன் போய்க்கொண்டு இருக்க - அன்ரன் கோயில் பக்கத்திலே இருந்த ஒரு கடையை விசயாவுக்குக் காட்டி "அங்க அந்தப் பக்கமாயுள்ள கடையைப் போய்ப் பாப்பமா..?” என்று அவளைக் கேட்டான். “ஒரே வெள்ளியா மின்னுது. அங்க போவமக்கா. உங்கட காலுக்கு நல்ல கொலுசும் வாங்கலாம் வாங்க..?” - அவன் தமக்கையின் கையைப் பிடித்து அந்தப் பக்கம் போவதற்கு
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 263 O

Page 142
இழுத்தான். “பொறடா தம்பி காசு என்னட்ட அஞ்சு ரூவாதான் கிடக்கு. அது ஏதும் பெரிய விலை வருமோ தெரியாதடா..?” “அதுக்கேன் அக்கா நீங்க கவலைப்படுறிங்க? என்னட்ட பதினைஞ்சு ரூபா பொக்கற்றுக்க கிடக்கு. இப்பத்தான் நான் உங்களுக்கு காசு ஒண்டும் தருறேல்லயே. தந்ததையெல்லாம் நீங்க அம்மாட்டத் தூக்கிக் குடுத்திட்டீங்க. அதாலதான் நானே இப்ப உங்களுக்கெண்டு சங்கிலி வாங்கக் காசு சேக்கிறன்!” - சரவணன் தமக்கைக்கு இதை குசுகுசுவென்று இரகசியமாகச் சொன்னான். அவள் உடனே. “என்னடா வளவளவெண்டு வாயில வர்றதெல்லாத்தையும் சொல்லிக்கொண்டிருக்கிறாய்? கொஞ்சம் உந்த வாயை வைச்சுக்கொண்டு சும்மா இரு.” - என்று அவனைத் தன் விரல்களால் நோப்படாமல் கையில் கிள்ளினாள்.
“ஊ. ஊ.” - என்றான் அவன் பகிடியாக. அன்ரனுக்கு சரவணன் ஏதோ தன் தமக்கைக்கு அதிகம் கதை அப்போது சொல்லிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. ஆனாலும் அதைப் பார்த்துவிட்டு என்ன ஏது என்றெல்லாம் அவன் அவர்களைக் கேட்கவில்லை. பெற்றோல்மக்ஸ் வெளிச்சத்தில் அந்த வெள்ளி நகைகள் இருந்த கடை, இன்னும் வெளிச்சமாய் பார்க்கிறவர்களுக்கு மினுங்கிக் கொண்டிருந்தது. வண்ண வண்ணக் கற்கள் பதித்த கால் கொலுசுகளெல்லாம், கண்ணாடிப் பெட்டிக்குள் அங்கே காட்சிக்கு இருந்தன. அவர்கள் அதிலே போகவும் விசயாவைப் பார்த்து அந்தக் கடை வியாபாரி வாருங்கம்மா..” என்று நாலு பெண்களையும் தன் கடைக்குக் கூப்பிடுவதுபோல் அவளையும் பணிவாக நின்று அழைத்தார். சரவணன் முன்னாலே போய் கண்ணாடிப் பெட்டியின் அருகில் நின்று உள்ளே பளிச்சிடும் கால் கொலுசுகளைப் பார்த்தான். விசயா தன் பார்வையில் அதற்குள் எல்லா இடத்திலும் இருக்கும் கொலுசுகளில் தனக்கு விருப்பமானதொன்றைத் தேடினாள். “அது உம்முடைய காலுக்கு நல்ல வடிவாயிருக்கும். அந்தக் கல்லின்ர நிறமும் உம்முடைய உடம்பு நிறம்தான்.” அன்ரன் அதிலே ஒன்றைக்காட்டி அவளுக்குச் சொன்னான். அப்படி அவர் தனக்குக் காட்டின கொலுசும் அழகுதான். என்று விசயாவும் கண்களை அகலித்துக் கொண்டு அதைப் பார்த்தாள். அவளுக்கு அன்ரனைப் பிடிக்கும் - அதனால் அவன் விரும்பியதிலும் உண்மையிலேயே அவளும் விருப்பப்பட்டாள். ‘இது உங்களுக்கு விருப்பமாக்கா..? - என்று சரவணன் அவளைப் பார்த்துக் கேட்டான். “அது என்ன விலைவரும் ஐயா..? - என்று அந்தக் கடைக்காரரைப் பார்த்து அவன் விடாமல் பிறகு கேட்கத் தொடங்கி விட்டான். “பொறு தம்பி முதலில கண்ணாடிப் பெட்டிக்கால அதைக் கையில உங்களிட்ட நான் எடுத்துத்தாறன். அதுக்குப் பிறகு அத முதலில இந்தத் தங்கச்சி வடிவாப் பாத்துக் கொள்ளட்டும்.” - என்று அவர் அந்தக் கண்ணாடிப் பெட்டியைத் திறந்து அந்த வெள்ளிப் பாதசரத்தை எடுத்து அதை அப்படியே தன் இரு கைகளாலும் நீட்டிப் பிடித்தபடி அவளது கைகளிலே அவர் அதைக் கொடுத்தார். தன் கையில் வாங்கின கொலுசை அந்தக் கடைக்காரர் பிடித்தபடி தனக்குத் தந்தது மாதிரியே
ரீ.பி. அருஸ்ணன்றம் O 264 O

அவளும் பிறகு அதைத் தன் இருகைகளாலும் நீட்டிப் பிடித்தபடி பார்த்தாள். “இது உம்முடைய காலுக்கு வடிவாத்தான் இருக்கும்.! அப்பிடித்தான் அது உம்முடைய கையிலயே இருக்கேக்கிள்ள இப்ப அது தன்ர முழுவடிவையம் காட்டுது..!” - அன்ரன் தன் தலையைக் குனிந்து அவள் காதுக்குக் கேட்க ஒலி தணிந்த ரகசியக் குரலில் சொன்னான். அவள் கொலுசிலே உள்ள தன் பார்வையை விலக்கி அன்ரனைப் பார்த்தாள். கண்களில் கொஞ்சமும் குறையாத சந்தோஷக் களையோடு அவனைப் பார்த்து அவள் சிரித்தாள். அந்த அவளது சிரிப்பிலே அவனுக்கொரு மயிலிறகு வருடல் கிடைத்ததைப்போன்று இருந்தது. “இந்தக் கொலுசை நானே என்ர கையால உம்முடைய காலில பூட்டி விடவா..?” - அவன் தன்னை அவள் பார்த்ததோடு இரகசியமாக இதைக் கேட்டான். “ஆசையப்பாரன் அவருக்கு.?” என்று அவளும் வாய்க்குள்ளாக அதைச் சொன்னது மாதிரி சொல்லிவிட்டு தலையைப் பின்னாலே கொஞ்சம் சரித்தாள். அவளுக்கு நரம்பெல்லாம் பாய்ந்து பரவிய இன்பச் சிலிர்ப்பில் தேகமே குழைந்து விறைத்து தடுமாறித் தத்தளித்தது. அன்ரன் அந்தப் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் பளப்பளவென்ற அழகைக் கொட்டிக்காட்டும் விசயாவின் முகத்தை ஒரு கணம் இமைகொட்டாமல் ஆசையோடு பார்த்தான். எந்த உணர்ச்சிகளிலும் அழகைக் கொட்டும் அந்த அவளது முகத்தை இன்னும் அந்த வெளிச்சத்தில் வைத்து நெடுநேரம்நின்று அவனுக்குப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்போல் தோன்றியது. என்றாலும் தன் சட்டைப்பையில் கையை விட்டு பணத்தை எடுத்து, அவன் அந்தக் கடைக்காரரைப் பார்த்து கண்ணாடிப் பெட்டிக்கு மேலாலே அதை அவரிடம் நீட்டினான். “நீங்க காசைக் குடுக்க வேணாம். இங்க தம்பியிற்றையும் காசு இருக்கு என்னட்டையும் கொஞ்சம் இருக்கு. நாங்கள் குடுக்கிறமே..?” - அவள் புன்னகையுடன் சொல்லிக்கொண்டு தன்கையைக் கொஞ்சம் மேலாலே அவனது அந்தக் கைக்குப் பக்கத்திலே உயர்த்தினாள். “அக்கா. இந்தாங்கோ இதைப் பிடியுங்கோ.?” - என்று சொல்லிக்கொண்டு இந்தநேரம் சரவணனும் தன் சட்டைப் பையில் உள்ள காசை எடுத்து தமக்கையின் கைக்கு முன்னால் நீட்டினான். “இன்னும் பொருளுக்கு நான் விலையே சொல்லேல்ல. அதுக்குள்ள ஏன் நீங்க எல்லாரும் அவசரப்படுறியள்.?” - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் அந்தக் கடைக்காரர். அதனால் உடனே சரவணன் “அது என்ன விலை எண்டு கெதியா எனக்குச் சொல்லுங்களன்” - என்று கேட்டுக் கொண்டு அவசரப்பட்டான். “இருபது ரூபாய்தான் தம்பி.” - அவர் சொல்லவும் விசயா தன் தம்பியிடமிருந்து அந்தக் காசை வாங்கி, தன் காசையும் அதனுடன் சேர்த்துவைத்து அதை அங்கே கடைக்காரரிடம் கொடுக்க, தன்கையில் பிடித்தபடி நீட்டினாள். “உம்முடைய காசை நீர் வைச்சிரும் விசயா. தம்பியின்ர அந்தக் காசை தம்பியிட்டக் குடும்.” “அது பறவாயில்லை இப்ப எங்களிட்டக் காசு இருக்குத்தானே இப்ப
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 265 O

Page 143
இதக் குடுத்து வாங்குவமே?” “வேணாம் வேணாம் அதுகள நீங்க வைச்சுக் கொள்ளுங்கோ’ - அவன் அவளது கையை விலக்க உரிமையோடு தன்கையை அவள் கைமேல் வைத்தான். அவன் கைபட்ட அந்த ஸ்பரிசம் அவன் தன்னை முத்தியதுபோல் உடனே அவளுக்கு இருந்தது. அந்த உணர்ச்சியை மின்னலாய் உணர்ந்தெழுந்து மார்புகளும் அவளுக்கு இறுகின. வெட்கத்தால் கன்னம் முழுவதும் அவளுக்குச் சிவந்தது. என் முகத்தில் உணர்ச்சிகளின் சுவடுகள் இருப்பதை கடைக்காரர் பார்த்துவிடுவாரோ என்ற நினைப்பில், அவள் தலையைக் குனிந்தாள். “ஆளுக்காள் உங்களுக்குள்ள போட்டிபோடுறமாதிரி என்னட்டக் காசை நீட்டுறியள். உங்களில ஆரிட்ட நான் வாங்குறது.?” - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் அந்தக் கடைக்காரர். “நீங்க இப்ப இதை என்னட்டயா வாங்குங்கோ. இங்க இதைப் பிடியுங்கோ.?” - என்றவாறு தான் நீட்டிய பணத்தை அவரின் கைகளுக்குக் கிட்டவாகப் பிடித்தான் அன்ரன். “சரி உங்களில ஆர்காசைத்தந்தாத்தான் எனக்கென்ன. எனக்கு இந்தப் பொருளுக்குரிய காசு வந்தால் சரி. எண்டாலும் நீங்க மூண்டுபேருமாச் சேந்து இந்தக் கடைக்குவந்ததில, இவருக்கு பிடிச்சதெண்டு சொன்ன அந்தக் கொலுசைத்தானே பேந்து எல்லாருமாச் சேந்து விருப்பப்பட்டு வாங்கியிருக்கிறீங்க..? அப்பிடி ஒரு வழிக்குப்பாத்தா நான் அவற்றை கையில இருந்துதான் வாங்குறது முறை. அது ஞாயம் சரிதானே. அதால நான் அவற்றை கையில இருந்து காசை வாங்கிறன்.” இப்படி கடைக்காரர் விசயாவுக்குச் சொல்ல, அப்படி அவர் சொல்லி விட்டதற்கு இன்னும் பத்துரூபாய் பணத்தை அவருக்கு மேலதிகமாகக் கொடுத்தாலும் அது தேவலாம் என்கின்றமாதிரியும் அன்ரனுக்கு அப்போது இருந்தது. அவன் கடைக்காரரைப் பார்த்து நட்புடன் ஒரு சந்தோஷச் சிரிப்பைச் சிரிக்க. அவ்வேளை முகம் சிவந்த நாணத்துடன் விசயா தலையைக் குனிந்தாள். சரவணன் தன் தமக்கையின் முகத்தை அப்போது பார்த்தான். அன்ரனின் முகத்தையும் பிற்பாடு பார்த்தான். கொஞ்சம்தன் வாயைத்திறந்து வைத்துக் கொண்டான். அவர்களுக்குள் இருக்கின்ற இரகசியத்தை அதிகம் தெரியாத அளவில், கண்களால் மட்டும் தன் மகிழ்ச்சியை அப்போது அவன் வெளிக்காட்டினான்.
கடைக்காரர் காசை வாங்கிக் கொண்டு, அந்தக் கொலுசை மெல்லிய ஒரு கடதாசியில் வைத்துச் சுற்றியெடுத்து, அழகானதோர் வண்ணப் பைக்குள் போட்டு அதை விசயாவின் கையில் கொடுத்தார். அவர்கள் மூவரும் கடையிலிருந்து வெளிக்கிட்டு கோயிலின் அருகே வரும்போது அவ்விடத்தில் பூவாசமும், கற்பூர வாசமும் கம்மென்று பரவி மணத்தது. கோயிலுக்குள்ளே ஒருவர் தேவாரம் பாடிக்கொண்டிருந்தார். சங்கின் நாதத்தைப் போன்ற அவரின் சாரீரம் ஒலிபெருக்கியூடாக வெளியேயும் உள்ள எல்லோரினதும் செவிகளில் வந்து இனிமையாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அமுதகானம் பொழிவது போன்ற அவரது தேவாரப் பண் நீள்கிறது. அவர் தேவாரம் படிப்பதை ஒலிபெருக்கியில் எவ்வளவு
iෂ්, ෆි, ෆයි‍ෙගvගvජ්ගර් O 266 O

சத்தம் கூட்டி வைக்கமுடியுமோ, அப்படிக் கூட்டி வைத்து அதை அவர்கள் அலறவிட்டார்கள். கோயில் வாசலருகே வந்ததும் விசயாதன் தம்பியைப் பார்த்து “நேரம் போனதே எனக்குத் தெரியேல்லத் தம்பி. பிறகு அப்பப்பா இங்க எங்களத்தேடி வாறாரோவெண்டும் எனக்கு நினைப்பாயிருக்கு. நாங்கள் அப்ப வெளிக்கிடுவமோ தம்பி.?” - அவள் அவசரப்பட்டாள். “இண்டைக்குத்தானே எனக்கு வீட்டாலேயும் வெளிய வெளிக்கிடக் கிடச்சது. கோயிலுக்கயும் போய் நிண்டு ஆறுதலாக் கும்பிட்டுப் போட்டு பேந்து வீட்டுக்கு ஆறுதலா நாங்கள் வெளிக்கிடுவமே அக்கா..?" - அவன் தமக்கைக்குச் சொன்னான். அவனுக்கு இன்னும் அதிலே நிற்கவேண்டும் என்ற ஆசை. அன்ரன் விசயாவைப் பார்த்தான். ‘இனியெண்டாலும் நாங்க வீட்ட போக வெளிக்கிடவேணும் போல இருக்கு.” - அவள் அவனைப் பிரிய மனமில்லாதவளாக இருப்பதுபோல், பார்வையாலும் கதைபேசிக்கொண்டு சொன்னாள். “இப்ப இருட்டா அந்த றோட்டெல்லாம் இருக்குமே தனியவா நீங்க எப்பிடிப் போவீங்க.? நானும்
உங்களோட துணைக்குக் கூட வரவா?”
“ஐயையோ இதுவே அங்க வீட்டுக்குத்தெரிஞ்சா அது பிறகு எங்க எதில கொண்டுபோய்விடுமோ தெரியேல்ல. அதுவே எனக்குப் பெரிய பயமாயிருக்கு. எனக்கென்ன.? இங்க தம்பியும் என்னோட கூட இப்ப இருக்கிறான்தானே துணைக்கு? இன்னும் அதில கோயிலால வீட்ட இப்ப போற ஆக்களும் அதால போய்க்கொண்டிருப்பினம். அதால எனக்குப் பயமே இல்ல.” “எண்டாலும் உங்கள முன்னால போகவிட்டு பின்னால நான் வாறனே.?” - அவன் சொல்ல அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது என்றாலும் அவனைக் கனிவாகப் பார்த்து: “வேண்டாம் வேண்டாம் நாங்க எங்கட வீட்டுக்கு இந்த றோட்டால போறம் - அந்த அடுத்த றோட்டு உங்கட வீட்டுக்கு கிட்டின தூரம்தானே. அதால நீங்க போங்கோ. “அட அவ்வளவு பயமா..? சரி சரி. நான் அந்த றோட்டாலயே இப்ப என்ர வீட்ட போறன்..!” - அவன் சொல்லவும் “அப்ப நாங்க இனி வெளிக்கிடுறம்.!” - என்று விட்டு அவள் ஆசையின் இறுக்கத்துடன் அவனின் முகத்தைப் பார்த்தாள். அன்ரனும் அவளது விழிகளைப் பார்த்தான். இருவருக்கும் அந்தப் பிரிவின் வேதனை எப்படித்தான் வந்து முகத்தில் படர்ந்ததோ என்கிற மாதிரி அந்த நேரம் அவர்களுக்கு ஆகிவிட்டது. விசயா அவனைப் பிரிய மனமில்லாத ஒரு நிலையில் தன் தம்பியையும் கூட்டிக்கொண்டு ஒருவித மகிழ்ச்சியும் சோகமுமான மன நிலையோடு வீட்டுக்குப் போக நடந்தாள். அன்ரனும் அவளைப் போன்றே மன வாட்டத்தோடு, தன் வீட்டுக்குக் கிட்டியதான அந்த வீதி வழியே நடந்துகொண்டிருந்தான். அவனுக்கு முன்னாலே அந்த வீதியின் வழியே ஒருவர் தாமரைபூத்த தடாகமடி தண்டபாணிதேசிகர் பாட்டோடு, நிழலைத் தோற்றுவிக்காத அந்த இருளில் போய்க் கொண்டிருந்தார். அந்த வீதியின் ஓரங்களிலே அடர்த்தியான இருள் பூசியதைப்போல்
იpფგóიინußმიქk NoნეylსóიNo Ο 267 Ο

Page 144
தெரிந்த மரங்களில் காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. விசயாவும் சரவணனும் போய் தங்கள் வீட்டுப் படலையைத் திறந்தபோது மாட்டுக் கொட்டிலில் அரிக்கன் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அந்தக் கொட்டிலில் அப்பப்பா நின்றுகொண்டு வைக்கோலை உதறி மாடுகளுக்குப் போட்டுக் கொண்டிருப்பதை விசயா கவனித்தாள். சரவணன் “புழுங்குது. புழுங்குது.” என்று சொல்லியபடி தன் சட்டையைக் கழற்றிக் கையில் வைத்து அதைச் சுழற்றிக்கொண்டபடி மாலுக்குள்ளே ஓடினான். விசயா வீட்டுக்கு முன்னாலே உள்ள முற்றத்தாலே நடந்துபோய் மாமரம் நின்ற இடத்தைக் கடந்து அப்பம்மாவின் அறைப்பக்கமுள்ள திண்ணைப்படிகளில் ஏறினாள். ஆச்சி பனை மட்டையால் மறைப்புக் கட்டியுள்ள அறைவாசலுக்குப் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த கை விளக்குக்குப் பக்கத்தில் சம்மணமிட்டவாறு இருந்தாள். விசயாவைக் கண்டவுடன்: “இப்பவேணை வந்து சேந்தியள்.? நல்லா இருட்டியும் போச்சுதெல்ல பிள்ள இப்ப.? அவன் தம்பி சரவணன் எங்கயம்மா..?” “அவன் அங்க மாலுக்க வந்ததோட அறயிக்க போயிற்றான் அப்பம்மா.” அவள் சொன்ன கையோடு போய் அப்பம்மாவுக்குப் பக்கத்தில் இருந்தாள். “ஊத்தயாப் போகுதெல்லே பிள்ள உந்த உடுப்பு?” “மொழுகின நிலம்தானே அப்பம்மா.” “பிள்ள சூரன்போர் முடிய அங்க இவ்வளவு நேரம்செண்டு போச்சுதே பிள்ள..? “சரியான சனம் அங்க கோயிலில அப்பம்மா. கடைசியில நாங்களும் கோயிலுக்க போறத்துக்குப் பட்டபாடு.” “நாட்டுப்புறத்தில இருந்தெல்லாம் இந்த நேரம் அள்ளுப்பட்டு உங்க சனம் வருகிறதெல்லே பிள்ள. அதுதான் அப்பிடி இருந்திருக்கும்” - அப்பம்மா சொல்ல விசயாவுக்கு மனம் துணுக்குற்றது. கோயிலுக்குள்ளே தான் போனதாக ஏன் ஒரு பொய்யை அப்பம்மாவுக்குச் சொன்னேன் என்று தன்னிலே உள்ள அந்தக் குற்றத்தை மனதிலே சுமந்துகொண்டு அவள் மனம் நொந்தாள். “திருநீறு எடுத்தியளே பிள்ள..?” “ஓம். ஓம் அப்பம்மா! சரவணன்தான் அத வைச்சிருக்கிறான்.” “அப்ப உன்ரை கையில உள்ள உது என்ன..?” “அது கால் கொலுசு அப்பம்மா..!” “அடட அதுவும் அப்பிடியே.? அத எனக்கு ஒருக்காக் காட்டன் பாப்பம்.?” - ஆச்சி ஆவலோடு கேட்க: அவள் அந்தப் பைக்குள் இருந்ததைச் சரியவிட்டுக் கையிலெடுத்தாள் - சரையைப் பிரித்தாள். குத்துவிளக்கு வெளிச்சத்தில் சித்திர விசித்தரங்களோடிருந்த வெள்ளிக் கொலுசு
ன்னலிட்டது. ‘ஓ நல்ல திறம் வெள்ளி.!” - சொல்லியவாறு ஆச்சி அதை அவளது ඒ. ඊ. ථNගvගvෂීඝඨ O 268 O

கைகளிலிருந்து தான் வாங்கினாள். “கண் துலக்கமாத்தெரியாத என்ர கண்ணுக்கே இது வெளிச்சமா பளபளப்பாப் பிரகாசமாயிருக்கு. உங்கட கண்ணுக்கு என்னமாதிரி இது ஜொலிப்பாய் ஷோக்காய்ப் பாக்கிறதுக்கு இருக்கும்பிள்ள..?” - ஆச்சி சொல்லிவிட்டு பிறகு ஏதோ தனக்குள் நினைத்துக் கொண்டாள். “இதுவாங்க உனக்குக் காசேதடியம்மா..? அப்பிடி கனக்க இது இப்ப விலை வந்திருக்குமே?” - அவள் திரும்பவும் அதை பேர்த்தியின் கையில் கொடுத்துவிட்டுக் கேட்க விசயா காலை மடித்து அந்த நிலத்திலே வச்சிர ஆசனம்போட்டவாறு இருந்தாள். “நீங்கள் எனக்குத்தந்த அந்தக் காசும்.” “அதென்ன ஒரு பெரிய காசே. அதவிட வேற எப்பிடியா உனக்குக் காசு வந்தது?” “இதுக்கு முதலும் அப்பம்மா நீங்க தந்த காசுகளையும் அதோட சேத்துக் கொண்டுபோய்த்தான் இத வாங்கினன்.” “அட அப்ப நீ ஒரு பெரிய கெட்டிக்காரிதான்” - அப்பம்மா சொல்ல அவளுக்கு மனதுக்குள் ஒரு மாதிரி மனவருத்தமாகத்தான் இருந்தது. “சரி. சரி. நீ இத இப்ப போடம்மா ஒருக்கா உன்ர காலில பாப்பம்.?”
“முதல் முதல் போடேக்க காலைக் கையக் கழுவிக்கொண்டு போடுறனே அப்பம்மா. பேந்து அதப் போட்டிட்டு பிறகு உங்களுக்குக் கொண்டுவந்து நான் காட்டிறனே.” - அவள் அப்படிச் சொல்ல ஆச்சி சிரித்தாள். விசயா மீண்டும் அந்தத் திண்ணையாலேயிருந்து வெளி முற்றத்துக்கு இறங்கி தேசி மரத்தடிக்கு வந்தாள். தேசி மரத்து முள்ளிலே கையிலிருந்த அந்தப் பையைத் தொங்கவிட்டுவிட்டு காலைக் கையைக் கழுவிவிட்டு அதை மீண்டும் தன் கையிலெடுத்துக்கொண்டு தன் படுக்கை அறைக்கு அதைக் கொண்டுபோனாள். தன் காலிலே அந்தக் கொலுசைப் பூட்டமுன்பு அதைத் தன் காதருகில் கையால் கொண்டுபோய் சிலுங்கக் குலுக்கினாள். கொலுசு அதன் சத்தத்தை “சிங்கி சிங்கி” -யெனச் சிலுங்கியது. பிறகு அவள் தன் காலை முன்னாலே தூக்கி வைத்து பாவாடையை மேலே இழுத்து வைத்துக்கொண்டு அந்தப் பாத சரத்தைத்தன் காலிலே பூட்டினாள். அப்படி மறுகாலிலும் கொலுசை மாட்டியதும் திடீரென்று ஒரு கால் விரலில் எழும்பிச் சுழன்று வட்டமடித்த உற்சாகம் அவளுக்கு வந்துவிட்டது. இதன்பிறகு அவள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறது மாதிரியான ஒரு சந்தோஷத்தில் இருந்துகொண்டு அந்த அறைக்குள் கால்களின் புதுக் கொலுசு ஜல் ஜல்' என்று சிலுங்க தன் ஆசைவிடுபடமட்டும் நடை நடந்தாள். அதற்குப் பிறகு தன் அப்பம்மாவின் நினைவுவர அவருக்கு முன்னாலே போய் பட்டாம்பூச்சி சிறகு விரித்ததுபோல் தன் லேஸ்பூப்போட்ட பாவாடையை இருபக்கங்களிலும் விரியப் பிடித்துக்கொண்டு, அவருக்கும் தன் கால் கொலுசுகளைக் காட்டினாள். சரவணனும் ஓடிவந்து அதிலே நின்று அக்காவின் கால் கொலுசுகளைப் பார்த்தான். உள் அறையில் அந்தக் கட்டிலின் மேல் இருந்தபடியே ஐயாவும், திண்ணையில் ஆச்சியின் அருகில் நின்று
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 269 O.

Page 145
கொண்டிருந்த விசயாவின் கால்கொலுசுகளைப் பார்த்தார். அவள் அதிலே தன் தம்பிக்கும் அப்பம்மாவுக்கும் அந்தப் புதுக் கொலுசுகளைக் காட்டிவிட்டு, திரும்பவும் தன் அறைக்குப் போக, அந்தக் கொலுசுச் சத்தத்தைக் கேட்டதோடு விசயாவைப் பற்றியும் அவள் எதிர்காலத்தைப் பற்றியும் அப்போதுதான் முதன்முதலில் அவர் சிந்திக்கத் தலைப்பட்டார். கோயிலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அணைக்கப்படாத லவுட்ஸ் பீக்கள் சத்தம் அப்பொழுதுதான் ஒய்ந்து அமைதியடைந்தது. விசயா வீட்டிலுள்ள வர்களுக்கெல்லாம் இரவுச் சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்துத் தானும் சாப்பிட்டு முடித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றாள். அந்தப்பாயில் படுத்து வெகுநேரமாகியும் கூட அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அந்தப்பாயில் நித்திரையில்லாமல் புரண்டு கொண்டிருக்கும்போது அவள் கால்களிலுள்ள கொலுசுகளும் இனிய ஒரு இசையை உண்டுபண்ணியவாறு இருந்தன. அந்தக் கொலுசுச்சத்தத்தைக் கேட்டு அவள் மனது தவித்தது. உள்ளும்புறமும் அவளுக்கு அன்ரன் அன்ரன்' என்று புலம்பியது. "இது என்ன மந்திரமா? இந்த நேரம் என் உடல் முழுவதும் புல்லரிப் பானேன்? எந்த மாய சக்தி என் நாடிகளை அப்படி விறுவிறுப்பாகத் துடிக்க வைக்கிறது. உங்களால்தானே எனக்கு இந்தக் காயமும் வலியும் ஏற்பட்டது? அதற்குக் களிம்பு பூசவேண்டியது உங்கள் கடமையல்லவா?” - என்று அவள் அப்போது அந்த இருளில் அன்ரனை நினைத்து ஏங்கினாள் தாங்க முடியாத இரகசியங்களை இருளின் அடர்த்தியிலும், தனிமையின் வெற்றிடத்திலும் மட்டும்தானே பகிர்ந்துகொள்ள முடியும். அவளது மனதை புதிய உணர்வுகள் சுருட்டித் தள்ளின. அவளுக்கு உடம்பு ஒரு மாதிரி ஜிஜீம் ஜிஜீம்' என்றிருந்தது. அன்ரனின் நினைவில் அவள் உடம்பெல்லாம் ஈரமாகிவிட்டது. அவள் கைகளை உயர்த்தி உடம்பை முறுக்கினாள். இறுக்கித் தொடைகளை இணைத்துக் கொண்டு தலையணையை கைக்குள் இறுக்கமாகக் கவ்விக்கொண்டாள். அந்த மெளனச் சூழ்நிலையில் அவளது மேல்மூச்சு அவள் காதில் தெளிவாக விழுந்தது. அவளது இதயத்துடிப்பு சூடாக இருந்துவிட பெருமூச்சும் சூடாகவே இருந்தது. வெளியே ஒரு பசுமாடு சினைக் குரல் வைத்துக்கொண்டிருந்தது. சத்தம் இழுத்தால் சாமானியமாக நிறுத்தாத அதனுடைய விரகவலி தாளாத அழுகை ஒரு கணம் அவளையும் தீண்டியது. குசினிக்குப் பக்கத்தில் கோணாமாணாவென்று ஒலையைச் சரித்து நீட்டிக் கொண்டிருந்த அந்தத் தென்னையிலிருந்து ஓலை ஒன்று நிலத்தில் விழுகிற சத்தம் அவளுக்குக் கேட்டது. இன்னும் அந்தப் பாயிலே படுத்துக்கொண்டு நித்திரையில்லாமல் புரண்டுகொண்டு இருப்பதை அவள் விரும்பவில்லை. மெல்ல ஓசைபடாமல் படுக் கையைவிட்டு எழுந்து அந்த இருட்டுக்குள்ளாலே போய் அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு கொலுசும் சிலுங்காமல் நடந்து அவள் முற்றத்தடிக்கு வந்தாள். ஒய்யாரமாகக் கண்சிமிட்டும் விண்மீன்கள் கூரிய குளிரொளியுடன்
ඒ.ඡී. ථඝගvගvණිගර් O 270 O

வாரியிறைக்கப்பட்டதாய் வானில் சுடர்ந்து கொண்டிருந்தன. வானச் சரிவில் ஒரு நட்சத்திரம் டால்விட்டுக் கொண்டிருந்தது. அவளுக்கு ஒன்றுக்கு நெருக்குவதுபோல் உணர்வு குத்தியது. அந்த இருட்டுவேளையில் ஏன் மறைப்புக்குள்ளே போவான்? - என்று நினைத்துக் கொண்டு வேலிப்பக்கமாக அவள் நடந்து போனாள். அந்த வேலியில் நின்ற பாவட்டைச் செடிக்குக் கீழே போய் நிம்மதியாக அமர்ந்து அதிலே அவள் ஒன்றுக்கிருந்தாள். அமைதியைப் போக்கிக் கொண்டு அவளிடமிருந்து சீறியெழுந்த அந்தச் சத்தம் அவளையே வெட்கப்படச் செய்தது. என்றாலும் அந்த நீளம் நிற்காமல் கேட்ட ஒலிகூட அவளுக்கு அந்தரங்கமான ஒரு உவப்பாயிருந்தது. ஆனாலும் உணர்ச்சிகள் தரை இறங்காத நிலையில் அதிலேயிருந்து எழுந்து சென்று, அந்த வேம்பு மரத்தின் கீழே அடர்த்தியாக இறங்கும் இருளிலே அவள் நின்றாள். நட்சத்திர வெளிச்சத்தை அவளது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொண்டன. அந்த நட்சத்திரத்தின் நிழற்பரப்பில் அவள் அசைவுகளைப் பார்த்தாள். அதிலே நிற்கும்போது அவளுக்கு முன்னால் தூரத்தில் புலப்பட்ட இருளிலே, ஒரு அசைவு தென்பட்டதை அவளால் அதற்குள் பார்க்க முடிந்தது. “யார் அங்க இருட்டுக்குள்ள பிசாசு மாதிரி நிக்கிறது.?” அந்தக் கேள்வியில் அவளது மனத்தின் எண்ணங்கள் ஒழுங்கற்ற சித்திர அலைகளாய்ச் சென்றபடி இருந்தன.தலைக்கு மேல் இலைப்பரப்பு கூரைவிட்டிருந்த அந்த இடத்தைவிட்டு, இருளைப் பூசிய அந்த உருவம் இருண்ட ஓரத்திலிருந்து நகர்வது போல் இருந்தது.
ஆனாலும், இருளை விலக்கி அங்கேவந்து நிற்கும் அந்த உருவம், இப்போது அந்த நட்சத்திர ஒளியில் நிழல்படம்மாதிரித் தெரிகிறது அவளுக்கு. “அது யார்.? யார்.?” - என்று நன்றாக இருளுக்குள் ஊடுருவிப்பார்க்க, குள்ளமாக மரத்துண்டுபோல் நின்றிருந்த அந்த உருவம் - தங்கம்மாதான்! என்று அவளுக்குத் தெரிந்தது. மெல்லிய காற்றில் கிணற்றடியிலுள்ள கமுகமரங்கள் அலைகின்றதைப் போல இருந்தன. அவளது சிந்தனைப்படகு சின்னம்மாவைப் பற்றிய அந்த ஒரேயொரு எண்ணத்தைத்தாங்கி பாய்விரித்துச் சென்றது. சின்னம்மாவுக்குள் இருக்கும் தீ இழப்புத்தீ - இழப்பைத் தடுக்க முடியாத இயலாமைத்தி - அதுதான் நித்திரையில்லாமல் இந்த இருளுக்குள்ளே நிம்மதியில்லாமல் அவர் அலைகிறார். என் உறவினர்களைப் போலல்லாது இந்தச் சின்னம்மாவின் உள்ளம் எவ்வளவு சுத்தம். சின்னம்மா உலகில் அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எல்லாவற்றையுமே விட்டுவிட்டு இறந்த கணவனை நினைத்துக்கொண்டு விரதவாழ்க்கை நடத்துகிறார். அவரது வாழ்க்கையை நினைக்கவும் எவ்வளவு பாவம்.? - இவற்றையெல்லாம் நினைக்கவும் கவலை அவள் மனசைக் கவ்வியது. அவள்தாரகைகள் கார்முகிலுக்குப் பின் மறைவதுபோல சின்னம்மாவின் கண்ணில்படாமல் அந்த நிழல் இருட்டுக்காலே திரும்பிப் போய் அறையினுள் உள்ளதன் பாயில் மீண்டும் படுத்துக் கொள்டாள். ஏதோ இப்பொழுது அவளின் மனம் சோர்வாக இருந்தது. ஆனந்தம் பொங்கிய மனம் இப்போது இருளில் புதைந்தது
வரழ்க்கையின் சிறங்கஸ் O 271 O

Page 146
போலிருக்க - அந்தக் கவலையே இப்போது அவளுக்கு மேலாகப்பட்டது. அவள் அப்படியே அந்த நிகழ்வுகளின் நினைவில் கண்களிரண்டையும் மூடியபடி பூனை உறக்கத்தை வரித்துக்கொண்டாள்.
பதினாறு
அந்த அகலமான ஆட்டுரலில் ஊறிய உளுந்தைப்போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள் விசயா. அவளுக்குப் பக்கத்தில் ஊறி நனைந்த அரிசியும் ஒரு கிண்ணத்தில் மாவாக அரைத்து எடுப்பதற்கு அதிலே தயாராய் இருந்தது. அவள் கைக்குள் நுழுந்துகிற அந்த ஆட்டுக்கல் குழவியை சுழற்றிச் சுழற்ரி அந்தக் குழிக்குள்ளே வைத்து ஆட்ட உளுந்து அரைபட்டு உரல் முழுக்க வெள்ளை வட்டமாய் நின்றது. அது கணக்கான பருவத்துக்கு அரைபட்டுவர அதையெடுத்துப் பானையிலே போட்டு: கையில் பட்டிருந்ததையும் பானை வாயில் வழித்து அவள் உள்ளே விட்டாள். அடுத்த அரிசி அரைப்பும் முடிந்துவிட ஆட்டுரலைக் கழுவி விட்டுப் பானை நிறைய உள்ள மாக்கழியைக் கொண்டுபோய் அவள் குசினிக்குள் வைத்தாள். அந்தப் பானையை வைத்துவிட்டு நிமிர முட்டைக் கோழி ஒன்று முட்டை போடுவதற்கு “கோ. கோ. கோ” - என்று ராகம் பாடிக்கொண்டு குசினி வாசலடியிலே வந்தது. அந்தக் கோழியைப் போய் உடனே அவள் பிடிக்கப் போனாள் அடைகிற குணங்கொண்டிருந்த அந்தக் கோழியும் அவள் கைப்படவும் இணக்கமாக பிறகு அதிலே நின்றது. அந்தக் கோழியைப் பிடித்ததும் இடுப்போடு அதை அணைப்புக் கொடுத்தபடி, அதைக் கொண்டு நடந்து முற்றத்துக்கு அவள் போனாள். ஒரு நிழல் மரத்துக்குக் கீழே மரத்தூள் போட்ட கடகப் பெட்டியில் வைத்து அதைக் கூடையால் மூடிவிட, அந்தக் கோழி அதற்குள்ளே பம்மிக்கொண்டு படுத்துவிட்டது.
அவள் திரும்பி குசினியடிக்கு வர, அவளுக்குப் பின்னால் சேனாதியும் அப்பொழுது அதிலே வந்து விட்டார். திடுவுறாக அதிலே தகப்பனைக் கண்டதும் அவளுக்கு ஒரு கணம் திகைப்பாய்ப் போய்விட்டது. அவள் மறுபுறம் திரும்பி திண்ணையின் நேராக அங்கே பார்த்தாள். அங்கே யாரையும் காணவில்லை! மறுபடியும் அவள் இங்காலே திரும்பி அவரைப் பார்க்க “விசயா எப்படி இருக்கிறாய் மகள்? நீ சுகமாயிருக்கிறியேம்மா..?” - என்றார் சேனாதி அவளுக்கு அநேக நாட்கள் கடந்துபோய் இன்று தகப்பனைக் கண்டதில் கண்கலங்கிவிட்டது. அங்காலேயும் இங்காலேயுமாக ஒருக்கால் பார்த்துக்கொண்டு “வாங்கோப்பா வாங்கோ. எப்பவா நீங்க வந்தனியளப்பா நெடுங்கேணியால.?” என்று அவரைக் கேட்டாள். எப்படித்தான் இருந்தாலும் அவளுக்கு தகப்பனிடமுள்ள அந்தப் பாசத்தை அவரைக்கண்டதும் மனத்திலிருந்து துரத்திவிட முடியவில்லை. இப்பொழுது அவருடன் இருந்து நன்றாகக் கொஞ்சம் கதைத்துக்
്. ി. SGM O 272 O

கொள்வதால், தன்னிடம் உள்ள கவலைகளும் மறந்து போகும் போல அவளுக்கு இருந்தது. "இப்ப நான் அங்கயிருந்து இங்க வந்து ஒரு கிழமைதான் பிள்ள ஆகுது. உன்னைக் கண்டு எவ்வளவு காலமாச்செண்டு நினைச்சுப்போட்டு - இங்கவர எனக்கு அப்ப விருப்பமில்லாமலிருந்தும் என்ன செய்யிறதெண்டுபோட்டு உன்னைப்பாக்கவேணுமெண்டதால மட்டும் வந்தன்.”
"அப்ப அம்மா உங்களோட கூட வரவா வெளிக்கிடேல்லயோ..?” அவள் தாயை விசாரித்தவுடன் அவர் ஒன்றும் பேசாமல் நின்றார். விசயா தகப்பனின் முகத்தைப் பார்த்தாள். அப்பாவின் அதைத்துக்கிடந்த முகத்தையும் சிவந்துபோன கண்களையும் கண்டதும் அவளுக்கு விளங்கி விட்டது. "இங்க வரேக்கையெண்டாலும் ஒரு நேரம் மட்டும் நீங்க உதுகளைப் போய்க் குடிக்காமல் வரலாந்தானேயப்பா..? இங்க அப்பப்பாவுக்கு இந்தக் குடிக்கிறதே ஒண்டும் பிடியாதெண்டு உங்களுக்குத் தெரியும்தானே..? அப்பிடி அவரிண்ட குணம் தெரிஞ்சும் நீங்க இப்பிடிக் குடிச்சிட்டு வாறியளே..?” - இதை அவருக்குச் சொல்லும்போது அவளது குரல் கொஞ்சம் உயர்ந்தது - அதை உடனேயே அவளே உணர்ந்து கொண்டு சத்தத்தை பிறகு குறைத்தாள். "அதில்லயம்மா நான் இண்டைக்கு குடிக்கவெண்டு வெளியால வெளிக்கிடேல்லத்தான். ஆனா இங்க ரவுணுக்கெண்டுபோய் அதால சுத்தியடிச்சுக்கொண்டு நான்வர அங்க எனக்குத் தெரிஞ்ச ஒராள் பிறகு என்னைப் பிடிச்சுக்கொண்டார். அவர் அங்க ஒரு கடையில போத்தல வாங்கி எனக்குக் குடிகுடியெண்டு கரைச்சல்படுத்த என்ன செய்யிறதெண்டுபோட்டு நானும் அவற்ற முகத்தை முறிக்கப்பிடாதெண்டு நினைச்சிட்டுக் குடிச்சிட்டன். அதுக்குப் பிறகு இன்னும் அந்தாள் என்னைப் போக விடாம இழுத்துக்கொண்டுபோய், நாலு பிளா தென்னங்கள்ளையும் வெறியற்ற கள்ளுத் தவறணையில எனக்கு வாங்கித் தந்திட்டுது. நானென்ன செய்ய.? அன்பா அத அந்த மனுசன் எனக்கு வாங்கித்தருகிதே எண்டுபோட்டு சந்தோஷமா அவரோட சேந்து குடிச்சிட்டன்! நான் என்னவோ வீட்டால வெளிய இண்டைக்கு வெளிக்கிட்டது உன்னவந்து ஒருக்கா உன்ர முகத்தைப் பாத்திட்டுப் போவமெண்டுதான்! ஆனாப் பேந்து எனக்கு இப்பிடியா வெறிக்கோலமாப் போட்டுது. எண்டாலும் நான் வெளிக்கிட்டு வந்ததுக்கு என்ன செய்ய எண்டு உன்னைப் பாக்கிற ஒரு ஆசையில அதில ஒரு கடையில இந்தப் பேரிச்சம் பழத்தையும் உனக்கெண்டு குடுக்க வாங்கிக் கொண்டு நான் இங்க வந்திட்டன். இந்தா இத முதலில பிடியம்மா..?” அவள் அவர் கைகளில் நீட்டிய அந்தச் சரையைப் பார்த்தாள். பிறகு அதை அவள் தன் கையை நீட்டி வாங்கும்போது "அம்மாவும் இப்பிடி இருக்கிற ஒரு கஸ்டமான நிலயில் நீங்களும் இப்பிடிக் குடிச்சுக்கொண்டு திரிஞ்சா எப்பிடி..?” - அவள் இதைக் கேட்கவும் அவர் தலையைக் குனிந்துகொண்டார். அதை அவள் பார்த்துவிட்டு "சரிசரி - குசினிக்குள்ள வந்து இருங்கோ.” - என்று பிறகு அவள் தகப்பனுக்குச் சொன்னாள். சேனாதி அந்தக் குசினிக்குள்ளே பலகையைத்தானே எடுத்துப்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 273 O

Page 147
போட்டுக்கொண்டு இருக்கிறபோது ஒரு பக்கம் பிரட்டித்தள்ளிவிட்டது போல சரிந்தார். ஆனாலும் அந்த வெறியிலும் சரிந்து அந்தப்பக்கம் விழுந்துவிடாமல் பலகைக்குப் பக்கத்திலே கையை ஊன்றிக் கொண்டு அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டுவிட்டார். "அப்பா நீங்க என்னப்பா எப்பவும் இப்பிடியேதான் இருந்து கொண்டிருப்பியளா. நீங்க திருந்தவே இனி மாட்டியளா அப்பா..?” - அவரது சமாளிக்க முடியாத அந்த வெறிநிலையைப் பார்த்துவிட்டு அவளுடைய உதடுகள் மனவருத்தத்தோடு அசைந்தன. "சீச்சி. இதுக்கேன் போய் நீ இப்பிடிக் கவலப்படுறாய் விசயா. அந்தாள் வாங்கித்தந்ததெண்டு போட்டு நான் இண்டைக்குத்தான் என்ன செய்யிறதெண்டு போட்டுக் கடைசியாக் குடிச்சிருக்கிறன். இனிமேல்பட்டு சென்மத்தில சாராயம் கள்ளு எண்டது நான் எப்பவும் வாயில வையன். இது என்ர பிள்ளையாண உன்னில சத்தியம். சத்தியம் உன்னில! இனிமேல்பட்டு இண்டைக்கிருந்து நான் குடியன்! உண்ணாண இது மெய்! என்ர பிள்ளையாண இது உண்மை." - அவர் பலகையில் இருந்து முன்னால் கொஞ்சம் அரக்கிப்போய்த் தன் கையை அவளின் தலைமேல் அடித்து சத்தியம் பண்ணினார். அவர் அவளின் தலையில் தட்ட, கலங்கிப்போயிருந்த அவளது கண்களிலிருந்து கண்ணிர் வழிந்து உடனே முன்னால் நிலத்தில் விழுந்து தெறித்தது. அவள் நீர் விட்டுப்போன கண்களால் தகப்பனை விரக்தியோடு பார்த்தாள். அவர் வாயிலிருந்து வெளிவந்த அந்த வார்த்தைகளை சிறு வயது முதல் இருந்தே கேட்டுக் கேட்டுச் சலித்துப்போனதான அந்தப் பழக்கத்தால் இப்பொழுதும் அவர் சொன்னது அவளுக்கு ஒரு பழஞ்சலிப்பூட்டிவிடுவதாகவே அமைந்தது. அதனால் அவர் தனக்குக்கூறிய அந்த விழல்க் கதையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு "என்னப்பா என்னவும் காலத்தால உங்கட வயித்துக்கு ஏதாவது சாப்பிட்டியளாப்பா..?” - என்று தகப்பனைப் பார்த்து அக்கறையோடு கேட்டாள். "நானெங்க காலேல எப்பவும் சாப்பிடுறது பிள்ள. அப்பிடியொண்டும் நான் காலையில ஏதும் சாப்பிடுறதில்லையெண்டு உனக்கும் தெரியும்தானே? அப்பிடி ஆசைக்கு ஏதும் தின்னுறது எண்டு இருந்தாலும் இங்க வந்து இவயிண்ட வீட்ட இருந்து சாப்பிட வேணுமோ..?” - அவர் இதைக் கொஞ்சம் உரத்துச் சத்தத்துடன் சொன்னார். அவர் சொன்ன அந்த ஒலிப்பு வகையிலே விசயாவும் பயந்துகொண்டு, தான் உள்ளிழுத்த மூச்சிலே வந்த காற்றை கும்பம் செய்வித்த அளவாய் வைத்திருந்தவாறு - தன் பார்வையை அவர்மேல் குத்திட நிறுத்தி யோசித்தாள். பிறகும் மூச்சை வெளிவிடும் போது "அப்பா இங்கின இருந்து சத்தம் கூடப் போட்டிராதயுங்கோ அப்பா - அங்க அப்பப்பாவும் அப்பம்மாவும் அறைக்கயாத்தான் இப்ப கட்டாயம் இருப்பினம். அதில அப்பம்மா உங்கட குரல இப்ப கேட்டதுக்கு இங்கால சில நேரம் வந்தாலும் வருவா.” - என்று சொன்னாள். "அவியள் வந்தா வரட்டும் அவேயளப் பாக்கவே நான் இங்க வந்தனான்? நான் இங்க என்ர பிள்ளயப் பாக்க வந்தனான் - இங்க வந்ததுக்கு என்ர பிள்ளயோட நான் இருந்து வடிவாக் கதைச்சுப் போட்டு பிறகு நாள் போவன் - இத ஆர் கேக்கிறது எண்டுறன்.?”
ரீ.பி. அருளWணந்தம் O 274 O

"எண்டாலும் நீங்க வெறியில ஏதாவது ஒண்டக் கதைக்க, அவயஞம் அதுக்குப் பிறகு உங்களுக்கு வந்து ஏதும் சொல்ல, அதால பிறகு ஏதாவது ஒரு கதை வெளிப்பாடும் வரும். அது கரைச்சல்தானே.?” "ஒ. ஒ. அப்பிடி வரட்டுமன்! அப்பிடியெல்லாம் கதைபேச்சு வந்தாத்தானே நானும் அவயிட்ட கேக்கவேண்டிய கதையளையெல்லாம் நேர்நேருக்கு வைச்சுக்கொண்டு கேக்கலாம்." "ஐயோ பேந்து இதால நாங்களும் இங்க இருக்கேலாமப் போனாலும் போயிடும் அப்பா. அப்பிடியேதும் நடந்தா நான் தானும் அங்க உங்களோட வந்து தின்னாமக் கொள்ளாம ஒரு இடத்தில இருந்து காஞ்சு கிடந்திட்டும் போறன் என்ரை கதய விடுங்கோ. ஆனா அவன் ஆம்பிளப் பிள்ள என்ர தம்பியும் கிடந்து சோறு தின்னாமக் குறண்டிப் போக வேணுமோ? இப்பிடி நாங்க ஏதோ ஒரு இடத்தில வயித்துக் கெண்டாலும் தருகுதுகளே எண்டு இருக்க அதையும் நீங்க வந்து குழப்பப் பாக்கிறியளோ?" அவளுக்கு இவைகளைச் சொல்லிக் கொண்டு வர இரு கண்களிலும் கண்ணிர் ஊற்றெடுத்ததாய் வந்து நிறைந்தது. “பாரன் - பாரன் - உந்த ஒரு அழுகையெண்டது உன்ர கொம்மாவிலயும் இருக்கு உன்னட்டையும் அதே மாதிரி இருக்கு! உத நிப்பாட்டு! நானப்பிடி ஒண்டுமா இனிக்கதைக்கேல்ல." - என்றார் சேனாதி அவர் அப்பிடிச் சொல்லிவிட்டதற்குப் பிறகு ஆறுதலடைந்து அவள் இருந்தாள். “சரி உதெல்லாக் கதையையும் இனிவிட்டிடுங்கோ. அப்பிடிப் பிரச்சினையான கதையொண்டும் இங்க இருந்து நீங்க இனிக் கதைக்க வேண்டாம். நான் இங்கின வந்தாப்பிறகு உங்களக் கண்ணால கண்டே கன நாளாகுது! அப்ப ஒருக்கா அம்மா இங்க வரேக்க கூட நான் உங்களத்தான் வடிவா அவவிட்டக் கேட்டனான். அதால உங்கள இண்டைக்கு இங்க கன நாளுக்குப் பிறகு கண்டதிலயும் எனக்குச் சந்தோஷம்தான் அப்பா! நீங்க என்னைப் பாத்திட்டுப் போகவெண்டு அங்கயிருந்து வந்தனியள் ஏதும் என்ர கையால இண்டைக்கு நீங்க சாப்பிட்டிட்டுத்தான் போவேணும். இப்ப நேரமாகிறதால இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள சோறு கறியும் நான் ஆக்கிப் போடுவன். அப்ப நீங்களும் இருந்து இங்க மத்தியானச் சாப்பாட்டையும் சாப்பிட்டிட்டுப் போகலாம்தானேயப்பா?.”
"அம்மா உன்ரகையால நான் சாப்பிடாதனானே.? இவ்வளவு காலம் அங்க வீட்டயிருந்து எல்லாருக்கும் ஏதோ கிடக்கிறதுகள நீ தானே எங்களுக்குச் சமச்சுத்தந்தனி. எண்டாலும் நீ சொல்லுறதால உன்ர கையால இண்டைக்கு நீ சமைக்கிறத இங்கயிருந்து நான் சாப்பிட்டித்தான் போவன். ஆனா எனக்குப் பிள்ள இண்டைக்கு உந்தச் சோறு வேண்டாமம்மா. ஒரு றொட்டி கோதம்ப மாவில நீ எனக்கு இப்ப சுட்டுத்தந்தியெண்டா என்னவும் உங்க இருக்கிற பழங்கறி, ஒரு மீன் புளியாணத்தோட எண்டாலும் அத நான் உடன சாப்பிட்டிட்டுப் போயிடுவன். இண்டைக்கு என்ர வாய்க்கு இந்த றொட்டி சாப்பிடத்தான் அவாவாயிருக்கு. அத ஏலுமெண்டா இப்ப நீ செய்து தருவியோ பிள்ள..? - அவர் இப்பிடி அவளுக்குச் சொல்ல அப்பா ஆசைப்பட்டுக் கேட்கிறாரே. என்று அந்த
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 275 O

Page 148
றொட்டி தயாரிக்கும் யோசனையோடு “ அப்ப நீங்க என்னோட கொஞ்சம் உதில இருந்து கதையுங்கோ அப்பா. அதுக்குள்ள நான் உங்களுக்கு றொட்டியைச் சுட்டு சாப்பிடுறதுக்குத் தந்திடுறன். இந்த றொட்டி சாப்பிட நேற்றையான் பழைய மீன் குழம்புதான் இப்ப சட்டிக்கை இருக்கு அது உங்களுக்குப் பறவாயில்லையே..?" - என்று சற்று சந்தோஷமான ஒரு நிலைக்கு மாறிக் கொண்டு அவள் தன் தகப்பனைக் கேட்டாள். "அது காணும்! அது காணும்! அந்தப் பழங்குழம்பு மட்டும் காணும் எனக்கு. நீ மாவைக் கல்லுக்குப் போடம்மா கெதியா.” - என்று சேனாதி மகளுக்குச் சொன்னார். வெளியே முற்றத்தில் விசயா அடைத்து விட்டுவந்த கோழி அங்கே முட்டை இட்டு விட்டதில் “கொடேர் கொடேர்” - என்று கத்திச் சத்தம் போட்டது. வெளியே நின்று தீன் பொறுக்கித் தின்று கொண்டிருந்த சேவல் அந்தப் பேட்டுக் கோழி கூடைக்குள் சத்தம்போட தானும் அதைக் கேட்டதோடு பெருத்த சத்தம் போட்டது. குசினிக்குள் இருந்த விசயா கோழியின் சத்தத்தைக் கேட்டுவிட்டு "அப்பா உதிலயா கொஞ்சம் நீங்க இருந்து கொள்ளுங்கோ. நான் போய் கோழிமுட்டை இட்டிட்டுப்போல அத எடுத்துக்கொண்டு உடன வாறன்." அவள் இருந்த பலகையிலிருந்து எழுந்தாள். அதுக்குப் பிறகு அவள் அந்தக் குசினி வாசலுக்குப் போகவென முதலில் திரும்பிப் பார்க்க - அங்கே அப்பம்மா வாசலில் நிற்கின்றாவென்பது அப்பொழுதுதான் அவளுக்குத் தெரிந்தது. "ஆர் உங்க எங்கட சேனாதி வந்திருக்கிறான் போல இருக்குப்பிள்ள. அவன்ர குரல் வடிவா அங்க கேக்குது." - என்று ஆச்சி விசயாவைக் கேட்டார். விசயா வாயைத் திறக்க முதலே "ஓம் அம்மா நான் தான் வந்திருக்கிறன்..! உங்கட அரும மகன்!” - என்று சிரித்துக்கொண்டு சொன்னார் சேனாதி “என்னடா உனக்கு வெறியே? ஒரு மாதிரிக் கதைக்கிறாய்.?” - என்று கேட்டார் ஆச்சி "நீயம்மா எப்பவும் என்னோட கதைக்கேக்க முதலில உந்தக் கதயத்தான் கதைப்பாய்..? என்னக் கண்டவுடன ஒரு குறட்டுப் புடுங்கல். உன்ர பிள்ள நான் எண்டு நினைச்சு ஏதும் அன்பா ஆதரவாக் கதைக்க உன்ர வாயிலயும் ஒரு நல்ல வார்த்த எப்பவும் வராது என்னனை?” “டேய் நீ என்ர எங்கட பெத்த பிள்ளையடா. அப்படியெண்டு இருக்கிறதாலதானேயடா இந்த வயசு எங்களுக்குப் போயும் - நீ எங்களச் சாப்பாடு போட்டு வைச்சுச் சாக்கட்டிற வயசிலயும் நாங்கள் என்ன செய்யிறது எண்டுபோட்டு எங்கட கையளால பாடுபட்டு இப்ப உனக்கும் தந்துகொண்டு இருக்கிறம்.?” "ஒகோ..!! அங்க எனக்கு நீங்க பெரிசாத்தான் கொண்டுவந்து அள்ளிக் கொட்டுறியள்.? ஏதோ சிலவுக்கு தொட்டுக் கொள்ள துடைச்சுக்கொள்ளத் தந்து போட்டு அத நாங்கள் அங்கயிருந்து குசாலாத் திண்டுகொண்டுதான் இருக்கிறம் எண்டமாதிரி இப்ப கதைக்கிறியள்.?” "அப்பா உங்கட வாய வைச்சக்கொண்டு கொஞ்சம் சும்மா இருங்களன் அப்பா..?” - விசயா கொஞ்சம் ஆத்திரத்துடன் இதை தகப்பனுக்குச் சொன்னாள். "நான் இப்ப அம்மாவுக்கு என்ன சொன்னனான் விசயா? iෂ්.4). ථAගvගvෂ්ත්‍රාග් O 276 O

அப்பிடி நான் என்ன கதய அவவுக்குச் சொன்னதெண்டு அவ என்னோட சண்டைக்கு வாறா? நான் இவயளோட எந்த விசயத்திலயும் பட்டுக்கொள்ளாம அங்க கோயில் குளத்துப் பக்கம்என்ர வீட்டில ஒதுங்கிக் கிடக்கிறன். ஏதோ நீ இங்க இருக்கிறாயெண்டு நான் இங்க வர சும்மா என்னோட இந்த அம்மாவெண்டவ சண்டைக்கு வாறா.” "நானெங்கயடா உன்னோட சண்டைக்கு வந்தது? நீயென்ர பிள்ளை உன்னோட எனக்கு என்ன வெறுப்பு. நான் இங்க நீ வரேக்கயெல்லாம் பயப்படுறது இங்க ஐயாவுக்குத்தான்! நீ எப்பவும் இங்க வரேக்க ஒரு மனுசன் மாதிரியே வாறாய்? நல்லா முட்டமுட்டக் குடிச்சிட்டுத்தான் நீ இங்க வாறாய். இதெல்லாம் ஐயாவுக்குப் பிடிக்குமே? அதாலதான் நான் உன்னை இப்பிடிப் பேசுறது - அவர் இண்டைக்கு அந்த அறைக்கையும் இருக்கிறார். அங்க இருந்து எல்லாத்தையும் அவர் கேட்டுக் கொண்டுதான் இருப்பார். ஏதும் நீ இங்க இருந்து வெறிப்பாட்டில ஏறுக்கும் மாறுக்கும் ஏதுஞ்சொல்லிச் சளாப்ப அவருக்கும் கோவம் வந்திட்டெண்டா பிறகு ஐயாவின்ரை குணம் உனக்குத் தெரியுந்தானே தம்பி.?” "ஒமணை போ. பெரிய ஐயா ஒராள நீ எனக்குக் கபூட்டுறாய்?" “டேய் என்னடா கதைக்கிறாய்? வெறிப்பிசாசு வெறிப்பிசாசு.”
"அதுதானே! அப்பா. உந்த வாயக் கொஞ்சம் நீங்க மூடிவைச்சிருங்களன் கொஞ்சநேரத்துக்கு.?” விசயாவின் குரலில் அழுகையின் சாயல் வெளிக்கிட்டது. அதைச் சேனாதி கண்டுகொண்டுவிட்டு "என்னப்பா எல்லாரும் என்னோட இப்பிடி வலியச் சண்டைக்கு நிக்கிறியள்.? நான் இனி ஒண்டும் உதுகளப் பற்றிக் கதைக்கேல்ல. சரி உங்கட இஸ்டத்துக்கு வாய இனிப் பொத்திக் கொள்ளுறன்!” - என்று சொன்னார். "நீயேன் வாயப் பொத்துறாய்? நல்லா உன்ர மகளோட இருந்து கதை! அப்பிடி வடிவாக் கதைச்சுக்கொண்டிருந்திட்டு சாப்பிட்டுக்கீப்பிட்டுப் போட்டு நல்லா பிள்ளயா நீ திரும்பிப் போவன் வீட்ட.?” "அதுதானே அப்பா. அப்பம்மா சொல்லுறதையும் கொஞ்சம் கேட்டு நீங்க நடவுங்களன்.?”
"அடக்கோதாரி விழ, அதுதானே முதல் உனக்கு நான் சொன்னன் விசயா. முதல் நான் அதையெல்லாம் சொல்ல நீங்கள் கேட்டுட்டு இப்ப நான் ஏதோ இங்க சண்டைக்கொடி ஏத்தம்பண்ண வந்தது மாதிரியெல்லே கதைக்க வெளிக்கிடுறியள்.? ஐயோ இனி நான் ஒண்டும் இங்க வாய்திறக்கேல்லயப்பா. நான் சும்மா இருக்கிறன் வாயப்பொத்திக் கொண்டு.!” - அவர் தன் கையால் வாயைப் பொத்திக்காட்டினார். "ஐயோ கடவுளே.ம்..” - என்று மகனைப் பார்த்தபடி ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு இராசம்மா ஆச்சி குசினி வாசலிலிருந்து திரும்பித்தன் அறைக்குப் போக நடந்தார். விசயா: "அப்பா நீங்க இதில இருங்கோ அந்தக் கோழிய வெளியால திறந்து விட்டிட்டு முட்டையை எடுத்துக் கொண்டு நான் வாறன்.” - என்று விட்டு அவள் குசினிக்கு வெளியாலே
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 277 O

Page 149
போனாள். அவள் அங்கு கோழியை வெளியே திறந்து முட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு திரும்பவும் குசினிக்கு வரவும், சேனாதி இருந்து தன் பாட்டில் அங்கே பழைய சினிமாப்பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார். அவள் கையிலிருந்த முட்டையை உமிபோட்டிருந்த கருங்காலிக் கொத்துக்குள் வைத்துவிட்டு, கோதுமை மாவைத் தண்ணீர் விட்டு தேங்காய்ப் பூவுடன் கலந்து குழைத்தாள். பிறகு றொட்டித்தட்டை அடுப்பிலேற்றி விட்டு, மாவுருண்டையை அதிலே வைத்து அதைத் தட்டையாய்ப் பரப்பி, நெருப்பெரித்து அதை வேக வைத்தாள். தன் மகள் செய்கிற வேலைகளையெல்லாம் மெளனமாக அந்தப் பலகையில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் சேனாதி அவளை அப்படியே ஆராய்வது போல் பார்த்துக் கொண்டிருந்த அவரது கண்களுக்கு, அவளது கால்களில் கொலுசுகள் பளிச்சென்று இருப்பது பார்வையில் உடனே பட்டுவிட்டது. “உதார் வாங்கி உனக்குத் தந்தது பிள்ள கால் கொலுசு. வடிவாயிருக்கிது. உது உன்ர காலுக்கு." - என்று முன்னாலும் பின்னாலும் இடுப்புக்கு மேல் உள்ள தன் உடல் பகுதிகளை ஆட்டிக் கொண்டிருந்தபடி அவர் மகளைப் பார்த்துக் கேட்டார். அப்பாவின் அந்தக் கேள்வியோடுதான் தன் கால் கொலுசு பற்றிய ஞாபகம் அவளுக்குத் திடீரென்று வந்தது. அவள் இருந்தாற்போல தகப்பன் கேட்ட கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வதென்ற நிலையில் சில விநாடி நேரம் இருந்து தடுமாறினாள். கொலுசை நினைக்க ஒரு சந்தோஷச் சிரிப்பும் அவளுக்கு வந்தது. அந்தச் சிரிப்போடு அவள் கொஞ்சம் தன்னைச் சமாளித்துக்கொண்டு "அது அப்பம்மா காசு எனக்கு தந்ததில அங்க சூரன் போருக்கு கோயிலுக்குப் போன நேரம் அதில ஒரு கடையில நான் வாங்கினனப்பா.” - என்று ஒரு பொய்யை அவள் தகப்பனுக்குச் சொன்னாள். மகள் அப்படிச் சொல்லிவிட சேனாதி பிறகும் தன் மகளின் கால் கொலுசுகளை பார்த்தபடி நெஞ்சில் கனத்துப் போனமாதிரி இருந்த துயரத்தை மூச்சுக் காற்றில் சேர்த்து நீளமாக வெளிவிட்டுவிட்டு வயிற்றைச் சுருக்கினார். றொட்டி வெந்த நிலையில் ஒரு புது மணத்தைப் புகையோடு அலைந்து பரப்பியது. அவள் றொட்டியை தட்டகப்பையால் அதற்குக் கீழே விட்டுக்கொண்டு மேலேயும் தன் கை விரல்கள் இரண்டாலும் பிடித்தபடி அதை ஒரு சாப்பாட்டுத் தட்டியே வைத்தாள். பிறகு பழங்குழம்பையும் ஒரு பீங்கானில் ஊற்றி, அந்த இரண்டு தட்டுகளையும் அவருக்குப் பக்கத்திலே எடுத்து வைத்தாள். "அப்பா றொட்டி வலுவாச் சுடுது ஆனாக் குழம்பு - சூடாக்காததில அதில ஒரு மாதிரி நீங்க தொட்டுத் தின்னச் சரியாயிருக்கும்.”
"அதுதான்பிள்ள. அப்பிடித்தான் இருக்கவேணும்! பழைய குழம்பைச் சூடாக்கினா அதின்ர புளிப்புத்தன்மை தெரியாது! இதுதான் எனக்கு வாய்க்கு ருசி. இப்பிடியா இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்.!” - அவர் சொல்லிக்கொண்டு றொட்டியை நாலு பாதியாக உடைத்து தட்டில் வைத்துக் கொண்டார். - அதிலே ஒரு துண்டு றொட்டியை இன்னும் இரண்டாக வர உடைத்து குழம்பிலே அந்த ஒரு துண்டை ஊற வைத்து,
ඒ.ඡී. ෆර්ගvගvණීඝඨ O 278 O.

சூடும் குளிருமான நடுநிலையில் அந்த றொட்டித் துண்டைக் கையில் எடுத்து வாயில் போட்டு மென்றார். "நல்ல ருசியம்மா குழம்பு உப்புப் புளி உறைப்போட - இந்தத் தேங்காய் கலந்த றொட்டியும் எனக்கு நல்லாத்தானிருக்கு இப்ப.! இப்பிடியான ஒரு பக்குவம் உன்ரை கைக்குத்தான் சமைக்கவரும்.!” - அவர் இதை அவளுக்குச் சொல்லிவிட்டு அந்த இரண்டு துண்டு றொட்டியை இதுவரை ஏற்படாத ஒரு திருப்தியுடன் சாப்பிட்டார். ஆனாலும் குடித்த சாராயம் கள்ளுக்கு உறைப்பும் புளிப்புமாக அப்படி நன்றாகச் சாப்பிடத் தொடங்க, அவருக்கு வெறி இன்னும் தூக்கியடித்தது. சாப்பிட்ட சாப்பாடு சாராயம் கள்ளோடு கலக்க ஒரு ஆத்திரத்திமிரும் அவருக்கு உடல் முழுக்க முறுக்கியது. "என்ன இருந்தாலும் - இவர் என்ர அப்பர் - அவர் ஒரு மனுசனா..?” என்று இருந்தாற்போல சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தி உரத்து அவர் கத்திச் சத்தம் போட்டபடி சொன்னார். அப்பருக்கு என்ன இப்பிடி இருந்தாப்போல வந்தது' - என்று விசயாவுக்கு அது ஒன்றும் விளங்க வில்லை. வெறிமப்பு இருந்தாற்போல இப்படியெல்லாம் குரங்காட்டம் போடவைக்கும், மூர்க்கத்தைப் பீறிட வைக்கும் என்று அவளுக்கு என்னதான் தெரியும். அதனால் அவளுக்கு அப்பா சத்தம் போடவும் திடுக்கென்று ஒரு திகைப்பு நெஞ்சிலே வந்து ஒரு தடவை உதைத்தது. சேனாதி இப்போது கோபாவேசமாய் வார்த்தைகளை வெளியே துப்பினார். வித்தைகாட்டும் ஒருவரிடமிருந்து வாயில் வரும் வர்ணக் கடதாசியின் நீளம் போல், அவருக்கும் நிறுத்தமில்லாமல் வாயில் வார்த்தைகள் வெளிவந்தன. அந்தக் கலர்கலரான கடதாசிகள் போல - வெறுப்பு வேரூன்றியதான பேச்சுக்கள் தொடராக அவருக்குப் பொங்கிப் பொங்கி வெளிவந்தன. "அப்பரும் ஒரு மயிரும். இவரென்ன ஒரு அப்பர் எனக்கெண்டுறன்? இவர் எனக்கும் பிள்ளையஞக்கும் செய்யிற துரோகத்துக்கு அவருக்கொரு மரியாதையும் நான் குடுக்கவேணுமோ.” - என்று முதலில் சேனாதி தகப்பனைக் கரித்துக் கொட்ட ஆரம்பித்தார். "அப்பா. அப்பா என்னப்பா இது.?” - என்று கொண்டு அவர் சொல்வதைக் கேட்டபடி நடுங்கினாள் விசயா. “டேய் சேனாதி உன்ர வெறியாட்டத்த நீ எங்கயும் கொண்டோய் வை சேனாதி இங்க நிண்டு நீ வெறியாட்டாத சேனாதி.? - என்று திண்ணையில் வந்து நின்றபடி ஆங்காரமாகக் கத்தின்ார் இராசம்மா ஆச்சி "வாயை என்ன நான் மூடுறது? எல்லாத்தையும் என்ர வாயால உங்களுக்குச் சொன்னால்தானே உங்கட குறைகுற்றமும் உங்களுக்கு முழுக்கத் தெரியவரும்.? நானும் குடும்பமும் அங்க பஞ்சை பராரியாயிருக்கிறம். என்ர பிள்ள இந்தக் குமர் வந்து உங்களுக்கு இங்கயிருந்து அவிச்சுக் கொண்டிக் கொண்டிருக்கு. அவளுக்குப் போடுறதுக்கு கையில கழுத்தில ஒரு நகையும் இல்ல. பாவம் அவள்
டந்து இங்க உங்களுக்கு எல்லாம் மாடாய்க் கிடந்து கஸ்டப்பட்டு எல்லா வேலையளையும் அவள் செய்து தருறாள். அவள் அங்க என்ன மாதிரியா இருந்தவள். இப்ப உங்கட வீட்டவந்து உந்த நெருப்புக்க நெருப்புக்க நெடுகக் கிடந்து கருக மணி மாதிரிக் கறுத்தும்போட்டாள்.!
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 279 O

Page 150
அப்பிடியான இந்தப் பிள்ளைக்கு, உங்கட பேர்த்திக்கு எண்டு ஒண்டுமே ஒரு குண்டுமணி அளவில கூட ஒரு நகையைச் செய்துகுடாம - இவளுக்கு நீர்க்குமிழியளக் கோத்து மாலை கட்டிக் குடுத்த ஒரு வஞ்சகத்தைச் செய்துபோட்டு - அவள் உங்கட அந்தச் சாலங்களும் மாய்மாலங்களும் கொட்டிக் கொண்டு மூக்களவு ஆசையோட இங்கின வாற - அந்தக் கொழும்புக் காறியிண்ட மோள்மாருக்கு - நகை செய்து அவளவயளுக்கு கழுத்துமுட்ட அள்ளிப்போட்டு அனுப்பினியளாம்? என்னமாதிரிச் சத்துராதியளப்பா நீங்கள்? என்ன மாதிரி நஞ்சு பிடிச்ச ஆக்களப்பா நீங்கள்? அப்பிடி அவளவயளுக்கு எல்லாம் அப்பிடி செய்து குடுத்திட்டு - இந்தப் பிள்ளைக்கு இந்தக் குறத்தியள் போட்டுத் திரியிற வெள்ளிச் சங்கிலியக் காலில போட்டுப் பேக்காட்டி விட்டிருக்கிறியள் என்ன நீங்கள்? உங்கட உந்த எல்லாச் சூதும் வாதும் எனக்கும் தெரியாதெண்டு நீங்க நெக்கிறியளே? நான் எங்க இருந்தாலும் எனக்கு எல்லா நியூசும் வரும். எனக்கு ஒண்டும் தெரியாதெண்டு விடுறியளே ஒரு விடுகை.?” - அவர் இப்பிடியெல்லாம் அவர்களைப் பேசி பொரித்துக் கொட்டிக்கொண்டு போக "ஐயோ என்னப்பா. ஏனப்பா உந்தக் கதயளயெல்லாம் நீங்க தேவயில்லாமக் கதைக்கத்துவங்குறீங்க?” - என்றபடி தான் இருந்த பலகையில் இருந்து எழுந்து உடம்பெல்லாம் தளர்வடைய நின்றாள் விசயா. அவளுக்கு அப்பா இப்பிடியெல்லாம் தேவையற்ற பேச்சுக்களைப் பேசிடக் கேட்க. "ஓ! முடிந்தால் இந்த அப்பாவால் முடிந்தால் போய் ஒரு பத்து நிமிசங்களாவது வாயை மூடிக்கொண்டு அங்காலே ஒரு இடத்தில் நிற்க மாட்டாரா என்றிருந்தது. பொன்னுத்துரை தன் அறைக்குள்ளேயிருந்து சேனாதி பேசிய பேச்செல்லாவற்றையும் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையோடும் வரவரப் பிறகு ஆத்திரத்தோடும் கேட்டுச் சகித்துக்கொண்டிருந்தார். என்றாலும் பொறுமைக்கு ஒரு அளவுதான் என்று இருந்த அவரது நினைப்பில் பிற்பாடு திரிகியடக்கிய கோபம் அவரையும் மீறி எகிறிவிட்டது. சேனாதியின் பேச்சுக்கள் அவரை முறித்தாற்போல மண்டையில் அடித்தாற்போல இருக்க அவர் கோபத்தோடு அறைக்குள்ளாவிருந்து வெளியேறி குசினி வாசலுக்குப் போனார். இராசம்மா ஆச்சி திண்ணையில் நின்றிருந்தபடி கோபத்தோடு குசினிப்பக்கம் போய்க் கொண்டிருக்கிற ஐயாவைப் பார்த்தார். "ஆண்டவனே கடவுளே இண்டைக்கு அவன் சேனாதி கதைக்கிற கதைக்கு இங்க என்ன நடக்கப் போகுதோ..” என்ற நினைப்பில் அவள் தன் கையை நெஞ்சிலே வைத்து அழுத்திக் கொண்டு குழிந்து சுருங்கிய தன் விழியை நன்றாய்ப் பயத்தில் விழித்தபடி நின்றாள். ஐயாவின் உரமான காலடிச் சத்தம் கேட்டு விசயா வாசலைப் பார்த்தாள். சேனாதியும் பலகையில் இருந்தவாறு பார்த்தார். “டேய் சேனாதி றாஸ்கோல். என்னடா இங்க தண்ணியப்போட்டிட்டு வந்து காடு கிழியிறமாதிரிக் கத்திக் கொண்டிருக்கிறாய்..? இண்டைக்கு உனக்கு என்னவும் வலுவாத் தேவைப்படுதோடா..?” - என்று அவர் எரிச்சலுடன் இரைந்து கத்தினார். மகனுடன் பொன்னுத்துரையர் எப்போதுமே கதைப்பதில்லை; அப்படிப்
ඊ. ෆි. ථAගvගvජ්ග(5 O 280 O

பேசினாலும் ஒற்றைவரி ரெட்டைவரி. அவ்வளவுதான்! ஆனாலும் இன்று அவருக்கு மகனைப் போட்டுப் பேச பல கெட்ட வார்த்தைகளும் பொங்கிப் பொங்கி வந்தன. என்றாலும் அவற்றையெல்லாம் அவர் தொண்டைக்குள்ளாகவே வைத்து வெளிவராமல் விழுங்கி உள்ளே இறக்கினார். வாசலில் வந்து நிற்கின்ற அப்பாவைக் கண்டதும் சேனாதிக்கு கோபத்தில் வெறி இன்னும் தலைக்கேறியது. வெறி மப்பில் வந்த மதமதப்பினால் அவர் லகான் இழந்த மூர்க்கமடைந்தார். "எல்லாத்தையும் அறைக்க இருந்து கேட்டிட்டு இப்ப பெரிய மகா வேதாந்தி போல என்னோட வந்து கதைக்க வந்திட்டியளோ?" - என்று உடனே தகப்பனைக் கேட்டார் சேனாதி “டேய் கதச்சியெண்டா பல்லப் பல்ல உடைப்பன். எங்கயோ திரிஞ்சு ஆரோடயும் நக்கிக் குடிச்சிட்டுவந்து இங்க வெறிப்பீத்தலாட வந்தனியோடா நீ. அங்க அதுகளும் பிள்ளயஞம் தின்னாமக் குடிக்காமல் பட்டினி கிடக்க நீ மாத்திரம் எங்கயும் திரிஞ்சு கனகருக்கா நேரத்துக்கு வயித்துக்க கொட்டிக் கொண்டு திரியிறியாடா படுவா.” - ஐயா அப்படிக் கேட்க சேனாதி அவரைப் பார்த்து ஒரு விறைப்பு முழி முழித்தார். அந்த முறைப்பில் தீயின் வெக்கை - அனல் பார்வை - அலட்சியப் பார்வை - அந்த அவரது பார்வையிலே ஐயாவை அவர் ஒரு காட்டுப் பன்றியாக உடனே உருமாற்றினார். இப்பொழுது அந்தப் பன்றியைச் சுட்டுத் தள்ளத்தான் தயார் என்கிற குரூர உணர்வில் தன் கண்களை சக்கை இறுக்கிய இரட்டைக்குழல் துவக்காகவும் நினைத்துக்கொண்டு ஐயாவைச் சுடக் குறிபார்ப்பதுபோல் பார்த்தார் அவர். மகன் கண்களில் உமிழ்ந்த வெறுப்பைக் காணவும் ஐயாவுக்கு மனசுக்குள் கோப நெருப்பு பக்கென்றதாய் எரிந்து விளாசிட்டது. அது அவரது கண்களில் எரிய சேனாதி அதைப் பார்த்துவிட்டு “நீங்க மனச்சாட்சிக்கு விரோதமா நடிச்சுக் கொண்டு என்னோட பேய் பிடிச்சமாதிரி வந்து ஆடுறியளென்ன..?” - என்று கேட்டார். அந்த அவரது சொல் கூர் ஈட்டி மாதிரி நெஞ்சில் பாய்ந்து வேதனைப்படுத்திவிட்டது ஐயாவுக்கு “டேய் என்னடா மனச்சாட்சிக்கு விரோதமா நான் ஆருக்கும் செய்ததெண்டு நீ என்னட்டக் கதை கதைக்கிறாய். உன்ர வீட்டுக்கு தின்னுறதுக்கெண்டு நெல்லு மூடையள நான் அனுப்ப நீ அத வித்துக் குடிக்கிறாய். அப்பிடியான உனக்கு இப்ப போய் ஏதும் உதவி செய்தா அதையும் நீ அநியாயமாக்கிப் போடுவாய் - நான் இந்த வயசிலயும் கஸ்டப்பட்டுத்தான் உழைச்சுத் தின்னுறன். - ஆனா உனக்கு வேல குடிக்கிறதுதான் - குடிதான் உனக்கு வேல - அப்பிடிக் குடிச்சுக்கொண்டு சாணிப்பிணமா ஒரு வேலைக்கும் போகாம நீ வீட்டுக்க படுத்துக்கிடப்பாய்! அப்பிடி ஒரு உதவாக்கரை நீ! அப்பிடிப் பட்ட உனக்கு நான் இவ்வளவத்தை யெண்டாலும் செய்யிறன்! நாங்கள் உதவி செய்யாட்டி உன்ர பாடு நாய்படாப்பாடு - நாங்கள் இல்லாட்டி நீ நல்லா சீவிச்சுத்தான் விடுவாய் போ. நாங்கள் உயிரோட இல்லாட்டித்தான் உனக்கந்த அருமை எல்லாம் தெரிய வரும்.”
வரழ்க்கையின் சிறக்கஸ் O 281 O

Page 151
‘ஓ! பெரிய அருமையும் எருமையுந்தான்! நீங்க உயிரோட இருக்கிறதாலதான் நானும் சீவிக்கிறன்! அப்பிடி எனக்கு இந்த என்ர வீட்டு ஆக்கள் இருந்தாலும் கவலைப்படமாட்டன்: இல்லாட்டிலும் நான் கவலைப்படமாட்டன். ஆரும் மற்றவயளுக்கு நான் கவலயாயில்லக் கண்டியளோ. சந்தோஷமாத்தான் நான் எப்பவும் இருக்கிறன். நான் அப்பிடி நீங்க சொன்னமாதிரி யோசிக்க ஒண்டுமில்ல. நான் அதெல்லாத்தையும் யோசியாம விட்டிட்டன். நான் எதுக்கும் கவலப்படேல்ல - இனி நான் இங்க வரேல்ல ஒ. ஆனா எனக்கு நீங்க வைச்சு இருக்கிற சொத்தில பங்கு வேணும்! அத நீங்க கெதியா எனக்கு புறிச்சுத்தந்திட வேணும்.? அப்பிடி இல்லாம இல்ல நொள்ளயெண்டா அதுக்குப் பிறகு என்ர பங்கை எடுக்கிறமாதிரி ஒரு வழி எனக்கும் தெரியும்!”
“என்ன என்ன சொன்னனினியடா. சொத்தோ? - அதோ வேணுமெண்டு பிளான் பண்ணி இண்டைக்கு தண்ணியும் போட்டிட்டு நீ இங்க வந்தனி? - நான் தந்தது - உன்ர அவளிட்டயிருந்து எண்டு எல்லாத்தையும் வித்துத் தூத்தெறிச்சுப்போட்டு இனியும் உனக்கொரு சொத்து இங்க இருக்கெண்டு எண்ணத்தில என்னட்ட வாறியோடா நாயே? உன்ர குடும்பத்தையும் சீரழிச்சு எவ்வளவு ஈனம் எனக்கும் வைக்கிறாய் நீ. உனக்குத் தெரியேல்ல உன்னைப் பற்றி? உன்னைப் பாத்து எல்லா நேரமும் எல்லாருஞ் சிரிக்கினம். நீ குடிச்சுக் கொண்டு றோட்டு வழிய திரியிறது எனக்கு எவ்வளவு அவமானம்.?”
"அப்பிடியென்ன எல்லாரும் பாத்து என்னைச் சிரிக்க நான் பிழ செய்தனான். குடிக்கிறது எனக்கு அது அவமானமாயிருந்தா அவமானமாகவே இருக்கட்டும் - அது கெட்டதெண்டா எனக்கும் கெட்டதாயிருக்கட்டும் - தாழ்வு எண்டா அப்பிடியே இருந்திட்டுப் போவட்டுக்கும் - அதால உங்களுக்கு என்ன நட்டம்? எவ்வளவுக்கு நான் கீழ போறனோ அவ்வளவுக்கு எனக்கு நல்லம்தான்! அப்பிடித்தான் நான் சொல்லுவன்! இந்த உங்கட கதைக்குச் சொல்லப்போனா நீங்க தான் பிழைசெய்தனியளெண்டு நான் உங்களுக்குச் சொல்லவேணும்.? முந்தி அப்பிடி ஒரு இழிவான வேல செய்தது நீங்கதான்! சங்கை குறைஞ்ச ஆள் நீங்கள்தான் - நானில்ல! என்ன இப்பிடி நான் சொன்ன பிறகு கல்லுக்குத்திக் கணக்கா நீங்க பேசாம நிக்கிறியள்?” - சேனாதி அப்படிச் சொல்ல, விசயா வேர்த்து முகம் வெளுத்துப் போய் நின்றாள். இருவரது கதை வெளிப்பாட்டிலும் பயந்துபோய் அவளுக்குக் கைகளும் கால்களும் நடுங்கத் தொடங்கிவிட்டன. ஐயாவுக்கு சேனாதி கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் ரணகாயப்படுத்திவிட்டு அதற்குமேல் உப்புப் போட்ட ஒரு வேதனையைப்போல மனத்தில் அவருக்கு ஒரு எரிச்சலை உடனே உண்டாக்கியது. "டேய் என்ர கையால நீ சாகத்தான் போறியாடா இண்டைக்கு.” - என்று சினம் வெடிக்க அவர் உரத்துச் சத்தம் போட்டு சேனாதியைப் பேசினார். “கோரைப்புல் விதயான கிழங்கு சாகுமா..? நானும் அப்பிடித்தான் உங்கட கையாலயும் நான் சாகமாட்டன்; எதைக்
ரீ.பி. அருளWணந்தம் O 282 O

குடிச்சும் நான் சாகமாட்டன் பொன்னுத்துரை - உங்களால என்ர ஒரு மயிரையும் ஆட்ட முடியாது.” - என்று தகப்பனாருக்குப்பதில் சொன்னார் சேனாதி அவரது குரலில் ஒரு சவுக்கின் சொடுக்கு இருந்தது. அவரின் வயிற்றில் இறங்கியிருந்த நாலு பிளாக்கள்ளும் சாராயமும், பத்துமடங்கு ஆங்காரத்துடன் அவரை இப்பிடியெல்லாம் பேசவைத்துக் கொண்டிருந்தது. பொன்னுத்துரையருக்கு ஏறிய சினத்தில் அவருக்கு உச்சியிலே போய் ரத்தம் பேரலை அடித்ததுபோல் உதைத்தது. மகன் அராஜகமாகத் தலையிட்டு பங்குகேட்கிற மாதிரி ஒரு கடுகடுப்பும் அவருக்கு வர, ஒரு பம்பரம் கயிற்றிலிருந்து விடுபட்டுச் சுழலும் அலைவிலே அந்தக் குசினி வாசலிலிருந்து புறப்பட்டுப் போய்ப் பிறகு திரும்பவும் அந்த இடத்துக்கு வரும்போது கையில் ஒரு சாட்டைக் கம்போடு அவர் வந்தார். "எங்கயும் திரிஞ்சு மூக்குமுட்டக் குடிச்சிட்டு வந்து இங்க ஒரு சாப்பாடே நீ சாப்பிடுறாய்? வெளியால போடா நாயே." அவர் ஒரு மாறுங்குரலில் சொல்லிக்கொண்டு கம்புடன் குசினிக்குள்ளே போனார். அய்யாவின் கை கம்புடன் இருக்கக் கண்ட சேனாதி அவர் உள்ளே வரவும் பலகையால் இருந்து உடனே எழுந்தார். அவரிடமுள்ள அந்தக் கம்பின் தூரத்து அளவுக்கு விலகி தள்ளாடிப் போகின்ற தன் நடையிலே, ஒரு அலுமினியப் பானையையும் காலால் தட்டி உருட்டிவிட்டு அந்தக் குசினி வாசலடிக்கு அவர் போய் விட்டார். அந்த வாசலில் போய் அவர் வெளிக்கிட முதுகுப்பக்கம் அய்யாவின் பிரம்படி ஒன்று அவருக்கு உறைப்பாக 'சள்-ளென்று விழுந்தது. அந்த அடி முதுகில் விழவும் "ஆ.” - என்று புயல் வீச்சைப்போல அவர் அலறியவாறு முதுகை நெளித்தார். அப்பாவுக்கு அடிவிழவும் விசயா அதைப் பார்த்து திகைக்கடித்துப் போய்விட்டாள். "ஐயையோ அப்பப்பா. வேணாமப்பப்பா அப்பாவுக்கு அடிக்காதயுங்கோ அப்பப்பா. அப்பாவுக்கு அடிக்காதயுங்கோ அப்பப்பா.” - என்று கெஞ்சினாள். அடிவாங்கிக் கொண்டு சேனாதி வெறியிலே தலையும் தோளும் முன்னே சாய கண்களை தரையில் ஊன்றியபடி நடந்தார். ஆனாலும் வெறியில் உள்ள விறாய்ப்பு அவருக்குப் போகவில்லை. "உந்த மாடுகளை மேச்சுத்திரிஞ்சு உனக்கும் ஒரு மாட்டுக் குணம் வந்திட்டுது. என்னையும் ஒரு மாடெண்டு நீ நெச்சுப்போட்டியோ மாடா.” - என்று சேனாதி திரும்பி நின்று தகப்பனைப் பார்த்து ஆத்திரத்தோடு கேட்டார். இதை அவர் கேட்கும் போது முதுகுவலியில் அவர் குரல் சுழித்தது. என்றாலும் கம்பை அலட்சியப்படுத்தும் திமிரில் அவர் அந்தத் திண்ணையில் நடந்தார். சேனாதியின் வசவு பொன்னுத்துரையின் மனசைத் துளைத்து ரணத்தில் உப்புத்தோய்த்தது. தன்னை மாடு என்று மகன் பேசிவிட்டானே என்ற ஆத்திரத்தில் பொன்னுத்துரைக்கு உடலெல்லாம் உள்ள நரம்பு விண் விண்ணென்று கொதிப்பேறி விட்டது. முட்டைக் கோப்பியின் நுரை மாதி அவருக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அவர் கதைக்குப் பதிலாக கம்பாலே மகனுக்கு நல்ல குடுவை குடுத்தார். கம்பால் அவர் மகனுக்கு அடித்த அந்த அடிகள் சாதாரணமான அடிகளாய் இல்லை. முற்றத்திலே அவர் போக அவரை விரட்டி விரட்டி இவர் அந்தக் கம்பால் அடித்தார். வரழ்க்கையின் ரிறக்கஸ் O 283 O

Page 152
அடித்த அடியில் வெள்ளைத்தோலும் தெரிந்தது. அவர் சேனாதியை அடித்த அந்தக் கம்பு வளைந்து கொடுக்குமே தவிர ஒடியாது. அப்படி ஒரு ஜாதிக் கம்பு அது அந்தக் கம்பு கூட அவரது உறைப்பான போடுகையால் மிளாறுகள் சில்லுச்சில்லாய்த் தெறித்துப் பறக்கும் நிலைக்குப் போனது. மகன் இப்படியெல்லாம் தாறுமாறாய் அடிவாங்குவதைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு தன் விரிந்த மார்புகள் பொங்கியெழ ஓங்கரித்து அழுதாள் இராசம்மா ஆச்சி விசயா தகப்பன் தாறுமாறாய் அடிவாங்கி வேதனைப்படுவதைப் பாாத்துவிட்டு முற்றத்தடிக்கு இறங்கினாள். "அப்பப்பா என்ன வேல இது. அப்பா சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க." என்று அவள் அதிலே இதை அவருக்குக் கூறும்போது, அவள் விழிகள் நீரில் மல்கின. "அப்பா சாப்பிட்ட குறையோட இப்பிடி அடிச்சுக் கலைக்கிறியளே..?” - என்று நெஞ்சுடைந்த கண்ணிரோடு தொண்டை இடற அவள் மீண்டும் சொன்னாள். நீ தள்ளி நில்லு விசயா. இனி இவர் எனக்கு ஒரு அடி என்ர மேலில அடிப்பாரோ பாப்பம்.? என்ன கல்லுக்குத்திக் கணக்காப் பேசாமநிக்கிறீர். அடி. அடி. அடி பாப்பம்?” - என்று கொண்டு அவ்வளவு அடியைத் தான் வாங்கிய பிறகும் கல்லாய் இறுகின உடலாய் இறுக்கமாக வர்மத்துடன் சேனாதி நின்றார். “என்ன சண்டித்தனமோடா என்னோட இப்ப பண்ணிக் காட்டுறாய் றாஸ்கல்..?” - என்று வெறுப்பை நெருப்பாக்கிக் கொண்டு தன் கைப் பிரம்பை ஓங்கி “உஷ்-ஷென்று இரையும் படி முழு வலிமையுடன் சேனாதியின் முதுகில் சொடேரென விளாறினார் பொன்னுத்துரை. பிறகு மறுபக்கத்தி லிருந்து அதே போன்ற அடி, பிறகு இந்தப் பக்கமிருந்து, பின் அந்தப் பக்கமிருந்து, அப்படி மாறி மாறி வெளுத்த பிரம்பு வெளுவையிலே அடியின் வேதனை பொறுக்க முடியாமல் அந்த வெறியிலேபோய், படலைக்குப் பக்கத்தில் உயர்ந்து வளர்ந்து குடைகவிந்ததாய் நின்ற ஒரு பூமரத்தினது கிளையைப் பிடித்துக் கொண்டு, அதன் வளைவோடு அப்படியே நிலதில் சரிந்தார் சேனாதி அவர் அதிலே விழுந்த கோலம் கண்டு பதறிப்போய் விசயா உடனே அதிலே ஓடிப்போய் தகப்பனுக்கு முன்னாலே நின்றாள். தன் முன்னே அழித்தல் கடவுளைப்போல நின்ற அப்பப்பாவின் முகத்தை அவள் அப்பொழுது உற்றுப்பார்த்தாள். "அப்பப்பா. ஏன் எங்கட அப்பாவைப் போட்டு இப்பிடி நீங்க மாடு மாதிரி அடிக்கிறீங்க? இனி ஒரு அடி நீங்க உந்தப் பிரம்பால அடிச்சா நானும் அப்பாவோட சேந்து எங்கட வீட்ட போயிருவன். எல்லாத்துக்கும் ஒரு அளவு கணக்கு இருக்கு.? என்ன இருந்தாலும் அவர் எங்களப் பெத்த தகப்பன்.! என்ர கண்ணுக்கு முன்னால இப்பிடியெல்லாம் நீங்க செய்யிறது பிழை. அவருக்குத்தான் வெறி - வெறியில கதைச்சுப் போட்டார்! உங்களுக்கும் அவர மாதிரி வெறியோ? அவர் கதைச்சதிலயும் ஏதோ ஞாயம் இருக்குத்தானே? நீங்கள் அப்பிடியப்பிடி எனக்குச் செய்ததெல்லாம் உங்கட மனச்சாட்சிக்குச் சரியோ..? அத இப்ப நானும்தான் உங்களைப் பாத்துக் கேக்கிறன்.?” - என்று இத்தனை
ඒ.ඡී. ෆ(හvගváහගී O 284 O

நாட்களாக அவள் தன் நெஞ்சில் குமுறிக்கொண்டிருந்தவற்றையெல்லாம் தன் ஆத்திரத்தையெல்லாம் அவர் மேல் கொட்டிவிட்டாள். பொன்னுத்துரை பேர்த்தி இப்படிச் சொல்ல திகைத்துப் போய்விட்டார். அவருடைய கையிலிருந்த கம்பு நழுவி கீழே நிலத்தில விழுந்தது. தலையைக் கவிழ்த்து நிலத்தைப் பார்த்தார். அவர் பார்த்த இடத்தில் பவள மல்லிகைப் பூக்கள் வெட்டி வீழ்த்திய தலைகளாய் காம்பிலிருந்து முழுவதுமாகக் கீழே விழுந்து கிடப்பது அவருடைய கண்களுக்குக் காணப்பட்டது. அவர் அதை வெறித்துப் பார்த்தபடி சற்று நேரம் யோசித்திருந்துவிட்டு உடனே திரும்பி நடந்து தன் அறைக்குள்ளே அவர் போய்விட்டார். விசயா மண்தரையில் விழுந்து கிடந்த தகப்பனின் கைகளைப்பிடித்து 'எழும்புக்கோ நீங்க அப்பா.” - என்று அவரை அந்த நிலத்திலே இருந்து எழுந்து இருக்க தானும் சேர்ந்து உதவினாள். அவர் அப்பொழுது “நீ விடுபிள்ள நான் எழும்புவன்.” - என்று சொல்லிக்கொண்டு அந்த வெறி மப்பிலும் பக்கதிலுள்ள பூமரத்தின் கிளையைப் பிடித்துப் பிறகு வேலித்தடியையும் பொறுப்பாகப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றார். அவரது மண்பிடித்த வேட்டி சட்டையையும், மூக்குச்சளி வழிந்த முகத்தையும் பார்த்துவிட்டு, துக்கமும் ஏக்கமும் கலந்த குரலில் விசயா அழுதாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக ஒழுகத் தொடங்கிவிட்டது. அழுகையினிடையேயும் அவள் பேசலானாள். "அப்பா ஏனப்பா உங்களுக்கு இப்பிடி இந்த நிலையெல்லாம் வருது..? எங்களயெல்லாம் இப்பிடிப் போட்டு மனவருத்தப்படுத்தி நீங்களும் இப்பிடியாச் சீயெண்டு தூவெண்டதாய்ச் சீரழிஞ்சுபோய். ஏனப்பா நீங்க இப்பிடியெல்லாம் செய்யிறீங்க.?” மகள் அழுகையுடன் அவரைக் கேட்க நம்பிக்கை முறிவிலும் விரக்தியிலும் சேனாதி திண்டாடிப் போனார். அவருக்கும் உடனே பெரிய வெறிக்கவலை வந்து கண்களிலிருந்து கண்ணிர் வியர்வையுடன் கலந்து கன்னத்தில் வழிந்தது. "பிள்ள நான் இந்த வீட்டுப் பக்கம் செத்தாலும் இனி தல வைச்சும் படுக்க மாட்டன். இண்டையில இருந்து இவயள் எல்லாரையும் நான் தலை முழுகின மாதிரியா கழுவி விட்டிட்டன். இனி எனக்கு ஆருந்தேவையில்லை. நான் இனி இந்த வீட்டுக்கு அந்நியன்தான்! அப்பிடியாத்தான் நான் இனி நடக்கப் போறன்!” - என்று துக்கம் மேலிட அவர் சொல்லிக்கொண்டு படலைக்கதவைத் திறந்து கொண்டு வெளியாலே அவர்தள்ளாடிய நடையில் நடந்தார். அப்பாவின் குரலிலுள்ள துயரம் விசயாவினுள்ளே கத்தியால் குத்தியது. அவளும் நீர் விட்டு ஓய்ந்த சிவந்த கண்களுடன் தகப்பன் போவதைப் பார்த்தபடி மனம் வருந்திக் கொண்டிருந்தாள். எல்லோரும் தன்னை கைவிட்டுச் செல்வதாக, எல்லோரும் தன்னை துறந்துவிட்டுப் போவதாக திடுமென அவளுக்குத் தோன்றியது. "எனக்கு வெறி! வெறி இது வெறியேதான்! என்று சொல்லிக்கொண்டு சேனாதி அந்த வீதியால் போனார். யாரோ தன்னைக் காதைத் திருகி இழுத்துப்போனமாதிரி அந்த வெறியில் அவருக்கும்
வரழ்க்கையின் ரிறக்கஸ் Ο 285 Ο

Page 153
தோன்றியது. சேனாதி அந்த வீதியால் உடலை உதறிவிட்டு ஆவியாக நடந்து போவதுபோல நடந்தார். தன் முதுகை முறிக்கும் கடுமையான ஊமைக் காயத்தின் வலி அவருக்கு இப்போதுதான் தெரிந்தது. சாப்பிட்ட றொட்டியெல்லாம் இதோ சத்தியாக வெளியே வந்துவிடப்போகிறது என்று சேனாதிக்குப் பட்டது. என்றாலும் வசைகளை இறைத்தபடி அந்த இலுப்பை மரத்தடியையும் அவர்தாண்டி அங்காலே போய்விட்டார். தகப்பன் அங்கே போய்க்கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு நின்ற விசயா - அப்பா அந்த இலுப்பையின் பின்னே தன் பார்வைக்கு மறைந்ததாய்விட ஒரு பெருமூச்சைவிட்டாள். அவளது மனத்தில் கவலை அட்டைபோல் நெளியத்தொடங்கியது. கோபம் தீப்புண் எரிவது போல மனத்தில் எரிந்தது. "என்ன வாழ்க்கை இந்த மனிசற்ற வாழ்க்கை." - என்று மனசினுள் உள் விசும்பலுடன் அவள் சொல்லிக் கொண்டாள். இந்த வாழ்க்கை தனக்கு இரக்கமற்ற கடினமான உற்சாகமில்லாததான வாழ்க்கையாகிவிட்டதே என அவள் மனவிரக்தியடைந்தாள். அவளுக்கு மிக நெருக்கமாகவும் அன்பாகவும் இருக்கக்கூடிய எல்லாமே, மிகவும் பாசமில்லாதவையாக எங்கோ தொலைதுாரத்தில் இருப்பவையாக மாறிவிட்டனபோல அவளுக்குத் தோன்றியது. பாசமில்லாத இந்த உறவுகளோடு சேர்ந்து வாழ்ந்து என்னதான் பயன்? நிறமிழந்துபோன இந்த உறவுகள். அவளுக்கு சற்று முன் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் சிந்தித்துப் பார்க்க, மனம் என்னவோ கசப்பு ஊறி இருக்கும் காஞ்சிரை விதையாக இருந்தது.
அவள் திரும்பி நின்று தான் இருக்கின்ற அந்த வீட்டைப் பார்த்தாள். ‘எல்லாம் முள் முள்ளாய்க் குத்தும் போலிப்பாசம்' - என்று அப்பப்பாவை யும் அப்பம்மாவையும் அந்த வீட்டைப் பார்க்கும்போது அவள் நினைத்தாள். தன்னைச் சுற்றி எல்லாமே சுயநலமெழுதிய முகங்களாய்ச் சூழ்ந்திருக் கின்றன என்றதில் தன்னிலும் அவளுக்கு ஒரு வெறுப்பு. தன்னுடைய எதிர்பார்ப்புகளிலெல்லாம் சருகுகள் உதிர்ந்து கொண்டிருப்பதான ஒரு விரக்தி திரும்பிக் குசினிப்பக்கம் நடப்பதற்கு அவளுக்குக் கால்களும் ஏவவில்லை. ஆனாலும் நடந்து அங்கேபோனாள். அப்பம்மா திண்ணையில் இருந்துகொண்டு அழுதுகொண்டிருப்பது மாதிரித் தெரிந்தது அவளுக்கு. ஆனாலும் அவள் அங்கே தன் பார்வையை நிறுத்தவில்லை. ஏன் என்றதாய் எதுவித கதையையும் அவள் அவரோடு தொடங்கவில்லை. அவள்தன் பாட்டுக்கு நடந்து சென்று அந்தக் குசினிக்குள்ளே போனாள். தகப்பனுக்கு அவள் சாப்பாடு போட்டுக் கொடுத்த தட்டில், பூனை ஒன்று அங்கே குழம்பு கிடந்த தட்டில் வாய்வைத்தபடி தன் வேலை. கோழி மற்றத்தட்டில் கிடந்த றொட்டியைக் கொத்துவதோடு தட்டையும் சத்தமிட வைத்துக் கொண்டிருந்தது. அவள் குசினியிலிருந்து அந்தப் பூனையையும் வெளியே கலைக்கவில்லை. கோழியையும் வெளியே விரட்டவில்லை. எதுவும் எப்படியாவது போகட்டும் என்ற நிலையிலே உணர்ச்சியில்லாத ஒரு சக்கை உடலாய் அதிலே நின்றாள். இந்த உலக சீவியத்தில் என்னதான் ஒரு நன்மை எனக்கு வாழுங்காலத்தில் கிடைத்தது.
මී.4%. ථNගvග්‍යvෂීහූ(b O 286 O

இந்தக் கேள்வியைத் தன் மனதுக்குள் அவள் கேட்டுக் கொண்டபோது அதற்குப் பதில் பூஜியமாகவே எல்லாம் தோன்றி அவளது நம்பிக்கையை உடைத்துச் சிதறிடச் செய்தது. அவளுக்கு இந்த உலகம் வெறுத்தது. இந்த உலகில் உயிர் வாழ்வதும் அவளுக்கு வெறுத்தது. இதற்கு வழி ஒரு ஈசலின் வாழ்வைப்போல இறந்து விடுவதுதான். அழுத அழுகை நின்று போய் கவலையும் விரக்தியுமான விநோத ஒளி பளிச்சிட்ட அவளுடைய கண்கள் இப்போது அம்மியைப் பார்த்தபடி குத்திட்டு நின்றன. தான் எடுத்த இந்த முடிவுதான் தன் நிலைமைக்குச் சரி என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டு குசினி வாசலடிக்கு வந்து திண்ணையில் நின்றபடி முன்னாலே அவள் பார்த்தாள். அவளது நரம்புகளெல்லாம் அவளது அந்த ஒரேயொரு யோசனையில் பயத்தில் சுருங்கி விறைத்துப் போய் இருந்தன. இருக்கும் தன் உயரத்தைவிட அந்த விறைப்பில் இன்னும் அவள் உயரமாய் நின்றாள். குரலில், நடையில், பார்வையில் எல்லாமே அவளுக்கு உரு மாற்றம் ஏற்பட்டிருந்தன. தலை மயிர்களும் விறைத்து எழும்பி விரிந்து நின்றன. புருவங்கள் அவளுக்கு நேராகியதைப்போல இருந்தது. இதழ்களும் சுருங்கிப் போன நிலையில். இந்த உணர்வுகளைத் தன் உடலில் உணர்ந்தபடி அவள் அங்கே திண்ணையில் சோகக் கிரந்திதமாய் உட்கார்ந்திருந்த அப்பம்மாவிடம் "நான் அப்ப இனிக் கறிவைக்க அம்மியில முதல் மிளகாய்க்கூட்டு அரைக்கத்துவங்கவே அப்பம்மா?” என்று ஏற்ற இறக்கமில்லா ஒரு தொனியிலே இதைக் கேட்டாள். இராசம்மா ஆச்சிக்கு ஒன்றையுமே ஆரிடமும் அப்போது தான் கதைக்க விருப்பமில்லை என்றாலும் பேர்த்தி கேட்கிறாளே என்று நினைத்துவிட்டுத்தன் கவலைக் கண்களுடன் அவளைப்பார்த்தார். அவருக்கு பேர்த்தி கேட்ட கதைக்கு சமையல் இன்றைக்கு வேண்டாமென்று சொல்லவும் மனமில்லை - ஏதோ இம். மென்றதாய் மாத்திரம் குரலில் ஒரு இழுவை இழுத்து அவள் கேட்டதற்குப் பதிலாய் அதை வைத்து விட்டு; நிலத்திலிருந்து எழுந்து தன் குண்டிப்பக்கத்துச் சீலையைக் கையால் தூசு தட்டியவாறு அப்படியே அவர் முற்றத்தடிக்கு இறங்கினார். விசயா வலுத்த தன் சிந்தனையை நெற்றிப் பொட்டுக்குள் வைத்து ஒரு வினாடி யோசித்து தனக்குள் ஒரு முடிவு கட்டிக்கொண்டு, குசினிக்குப் பின்னால் உள்ள தேசி மரத்தடி மறைவிலுள்ள வேலியடிக்குப் போனாள்.
தேசி மரப்பாத்திற்கு அருகிலுள்ள வேலியின் நின்ற அந்த அரலி மரம் ஒரு கிளையைக் கிட்டவாக - காய் ஆய்வதற்குக் கிட்டவாக சரிந்து கிடக்க அவளும் அதிலே காய்களை பறித்துக்கொள்ள இலகுவாக இருந்தது. அவள் அந்தக் காய்களை கிளையிலிருந்து பறித்தபோது, கைமுழுக்க அதன் பால் பீச்சப்பட்டு விரல்களெல்லாம் அவளுக்கு ஒட்டுப்பட்டன. அந்தக் காய்களைப் பிடுங்கிய கையோடு அவைகளைத் தன் சட்டையிலே வைத்துச்சுற்றி கைகளால் அதைப் பிடித்துக் கொண்டு சாதாரணமான ஒரு நடையிலே அவள் குசினிப்பக்கம் போவதற்கு நடந்தாள். இராசம்மா ஆச்சி அதிலே வேப்ப மரத்தடியில் உள்ள
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 287 O

Page 154
பலகைக்கல்லில் உட்கார்ந்து தன் முன்னுள்ள பொருட்கள் எதிலும் பதியாமல், மனதுரத்தில் எங்கோ பார்க்கும் ஒரு நிலையில் இருந்து அப்போது யோசித்துக்கொண்டிருந்தார். விசயாதன் நடையோடு அவரைத் திரும்பிப்பார்த்தபோது, அவரது மங்கிய கண்களில் கண்ணீர் ஒழுகுவது போல அவளுக்குத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் "அப்பம்மாவும் இருந்து அதில அழுகிறாதான்!” என்று ஒரு உணர்ச்சியுமில்லாமல் அதை யோசித்துக்கொண்டு அவள் குசினிக்குப் போனாள். அறைக்குள்ளே கட்டில் மெத்தையில் தன் கைகளிரண்டையும் பக்கத்தில் விரித்து வைத்தபடி இருந்துகொண்டிருந்த பொன்னுத்துரைக்கு கோப ஆவேசம் தணிந்ததேயன்றி அதன் கவ்வல் அவரை இன்னமும் விடவில்லை. அவருக்கு பசி அடைத்துவிட்டது. கோபமும் கழிவிரக்கமும் வதைத்துக்கொள்ள அவருக்கு வீட்டில் இருப்பதும் இவ்வேளை வெறுத்ததுமாதிரி இருந்தது. அவர் வெளியே தான் போக வேண்டியிருந்த அந்த வேலைக்காக வேளைக்கே அப்போது வெளிக்கிட்டார். நலம்போடுவதற்காக பூர்வாங்கவேலைக்கு அவர் போகும்போது இராசம்மா ஆச்சியும் அவர் வெளியே போவதைக் கவனத்தில் கொள்ளாமல் தன்பாட்டுக்கு அதிலிருந்தவாறு யோசனையில் ஊறியபடி இருந்தாள்.
குசினிக்குள்ளே அந்த அம்மியை மூடிக்கிடந்த சுளகை எடுத்து ஒருபக்கம் வைத்துவிட்டு அதற்குப்பக்கத்தில் பலகையை இழுத்துப் போட்டுக் கொண்டாள் விசயா. விசயாவின் மனத்துள் அந்த முள் இன்னும் வதைத்துக்கொண்டிருந்தது. இப்போது தான் செய்கின்ற எந்தச் செயலையும் தனக்குள்ளே உள்ள ஏதோ ஒன்று இருந்து செய்விப்பதைப் போல ஒரு பிரமை அவளுக்கு எழுந்தது. ஆனால் அதையெல்லாம். ஆராயும் தருவாயில் அவளது நிலைமை இல்லை. எதுவாக இருந்தாலுமென்ன இப்போது தான் எண்ணிய எண்ணம் உடனே நிறைவேறிவிட்டால் சரி என்ற அளவிலே இப்போது அவள் செயல்படத் தொடங்கினாள். எதையும் அழித்துவிடவேண்டும் என்ற தீய எண்ணத்தை, மனதிலே வைத்துக்கொண்டு அதற்காகச் செயற்படும்போது மனிதன் ஒரு ராட்சஷனாக மாறிவிடுகிறான். எந்தத்திய செயலையும் செய்ய மனத்தில் துணிவும் பலமும் அவனுக்கு அப்போது கிடைத்துவிடுகிறது. அந்தமாதிரியான ஒரு பலத்தையும் குணத்தையும் விசயாவும் இவ்வேளை பெற்றிருந்தாள். எதையும் முறித்துவிட, எதையும் உடைத்துவிட, தன்னையே வெட்டி சதை சதையாகப் பிய்த்து எறிய, அப்படி ஒரு வெறியை யார் தனக்குள் இப்போது ஏற்றியது என்று அவளுக்கே அது ஒன்றும் விளங்காததாய் இருந்தது. தான் செய்வது எதையும் தான் தடுக்காத மாதிரியாகவும், தான் செயல்படும் எந்த ஒரு செயலுக்கும் தான் மறுப்பேதுமில்லாமல் இணங்கி நடப்பதாகவும் இருந்து அவள் இப்போது செயல்படத்தொடங்கினாள். தான் கொண்டு வந்த அரலிக் காய்களின் விதைகளை எடுத்து அம்மியில் வைத்து வலப்பக்கம் தட்டி இடப்பக்கம் தட்டி, எல்லாம் சேர்த்து பிறகு இழுத்தரைக்கும் வேலையை ஆரம்பித்தாள் விசயா - அந்த அரையலை இடையில் நிறுத்தி கொஞ்சம்
சீ.பி. அருஸ்ணந்தம் O 288 O

சர்க்கரையும் அதிலே எடுத்துவைத்து, அருவல் நெருவலாகக் கிடந்த விதைகளை அரை அரையென்று அவள் அரைத்தாள். அவளுக்கு அவசரத்துக்கு அது அரைத்து முடிகின்றபாடாய் இல்லை. பின்னாலே தக்குவிட்டு ஓய்ந்துபோய்க்கிடந்ததை நடு அம்மியிலே இழுத்துவிட்டு ஒரு பாட்டம் முன்னால், மறுபாட்டம் பின்னால், என்று ஒரே அரையல். அவள் அம்மியிலே அரைக்கின்ற சத்தம் வேலி தாண்டியும் கேட்டது. அது அரைபட்டு அரைபட்டுவர நேரம் தனக்கு நெருங்குகிறது என்ற நினைப்பில், உள்ளத்தைக் கட்டவிழ்த்துவிட்டு ஆறாக அவள் கண்ணீர் பெருக்கினாள். அவள் உகுத்த கண்ணின் சில துளிகள், அம்மியைப் பிடித்து அரைத்துக்கொண்டிருந்த அவளது கரத்தில் விழுந்து அக்கினித்திராவகம்போல் அவளுக்குச் சுட்டெரித்தது. வாய்நிறைய எடுத்துத்தின்னும் அளவுக்கு அந்த நஞ்சுவிதைகள் அரைபட்டதாய் மாற்றமடைந்துவர, முதல் உருண்டையை கையில் வழித்தெடுத்து உருட்டி அதைத் தன் தலையை நிமிர்த்திக் கொண்டு, தொண்டைக்குள் அது லேசாய் இறங்கும் அளவுக்கு வாய்க்குள்ளே அதை அவள் வைத்தாள். எதற்கெல்லாமோ முன்பு எல்லாம் கண்ணிர் வடித்திருந்த அவளுக்கு, இப்போது கண்களில் சாவின் கண்ணீர் கடைக்கண்களாலிருந்து வழிந்து பொல பொலவென்று நிலத்தில் விழுந்து சிதறியது. இனிமேல் சாவு தனக்கு நிச்சயம் என்ற உறுதியோடு மற்ற நஞ்சுருண்டைகளையும் அவள்தன் தொண்டையால் முழுக்கவும் உள்ளே செல்லும்படி முன்போலவுமாக வாயினுள் வைத்து முண்டி விழுங்கினாள். இனிமேல் தனக்கு வரப்போகின்ற அந்தச் சாவை எதிர்பார்க்க வேண்டும் என்ற நினைப்பு அவளுக்கு வந்தது. சாவு ஒரு இருட்டாகத்தான் இருக்கும்.! அந்த இருளுக்குள்ளே இருளாகக் கலப்பதுதான் சாவின் பின்பு ஒருவருக்கு நடப்பது.? அந்த இருளும் ஆழ்ந்த நித்திரையும் ஒன்றுதானே.? நிம்மதியான ஒரு நித்திரை. நினைத்துக்கொண்டிருக்க உடல் நரம்புகளையெல்லாம் அவளுக்கு முதலில் வேதனையுடன் இழுக்கத்தொடங்கியது. தொண்டை காந்தியது. தலைக்குள்ளே அந்த உதைப்புத் தெறித்தது போல இருந்தது அவளுக்கு. மார்பு படபடக்க தலைச் சுற்றலில் அவளுக்கு உடல் தள்ளாடியது. வேர்வை முத்துக்கள் ஓடைகட்டி உடம்பெல்லாம் பாய சதுரம் நடுங்கியது. வயிறும் பிரளய வலி வெடிக்க கீழே விழுந்து அவள் துடித்தாள். விரல்கள் நகங்கள் நிலத்தைப் பிறாண்டின. வலி உடலில் பெருக்கப் பெருக்க நிலத்தில் கிடந்து அவள் உருண்டாள். அவள் உருண்ட இடத்தில் கிடந்த தண்ணீர்ப்பானை சரிந்து உருண்டு தண்ணீர் கீழே குசினி நிலத்தில் ஊற்றுப்பட்டது. பாத்திரங்கள் அவள் உருண்ட இடங்களிலே தட்டுப்பட்டு உருண்டு ஒருபக்கம் சத்தத்தோடு சிதறின. நஞ்சு நன்றாக அவள் உடலெல்லாம் பரவி அவளின் உடம்பு விலுக்விலுக்கென தொடர்ந்து உதைத்துக் கொண்டது. அவள் வாயை ஒரு மாதிரி வெட்டி வெட்டி வலிக்கத் தொடங்கினாள்.
வேம்படிப் பலகைக்கல்லில் குந்தியிருந்து கொண்டிருந்த ஆச்சி வெளி
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 289 O

Page 155
விட்ட தன் மூச்சுக் காற்றிலே வேதனைகளையும் சேர்த்து வெளியே இறக்கியிருந்தாள் சொற்பம் சொற்பமாக அவளுக்கு அதன் பிறகு தென்பும் உடலில் ஏற்பட்டதால், அப்போது கேட்ட குசினிச் சத்தத்தையும் அவள் கவனித்தாள். "அங்க என்ன அப்பிடியொரு சத்தம்.? அவள் விசயா அங்க குசினிக்க இருந்து என்னதான் இப்ப செய்யிறாள்?” - என்றதோர் நினைப்போடு; அந்த மரத்தடிக்குக் கீழே இருந்தவள் எழும்பி அதாலே நடந்து குசினியடிக்குப் போனாள். திண்ணையில் முதலில் அவள் கால்வைத்து ஏறியபோது வாசலில் பரவியிருந்த தண்ணீர்தான் அவளுக்கு முதலில் தெரிந்தது. வாசலுக்கு உள்ளாலே அதோடு அவள் பார்வையையோட்ட ஓரிரு பாத்திரம் அதிலே கவிழ்ந்து கிடக்கின்ற மாதிரியும் முதலில் அவளது கண்களுக்குத் தெரிந்தது. ஆச்சி உடனே குசினியின் உள் இடத்தில் திகைப்புற்றபடி பார்க்க விசயா கீழே விழுந்தபடி கிடப்பது அவளுக்குக் காணப்பட்டது. அதனால் அங்கு நடந்தது எதுவுமே ஒன்றையும் தான் அறியாத அளவில் அவள் "ஐயோ..!” - என்று முதலில் கத்தினாள். "ஐயோ ஐயோ என்ர பிள்ள.” - என்று நடுங்கிக் கொண்டு கீழே உடனே அவளருகில் குந்தி இருந்து விசயாவின் தலையைத்துக்கி அவள் தன் மடியில் வைத்துக்கொண்டு பார்க்க விசயா வாயால் நுரை தள்ளினாள். அதைப் பார்த்ததும் "என்ர கடவுளே. ஐயோ உனக்கு என்னம்மா நடந்த. ஐயோ ஐயோ ஆராச்சும் உடன வாங்கோ என்ர கடவுளே என்ர ஐயோ.” - என்று அடிவயிற்றிலிருந்து பெரிய குரலெடுத்துக் கத்தினாள் இராசம்மா ஆச்சி அவள் போட்ட சத்தத்தைக் கேட்டுவிட்டு தன் வீட்டு குசினி அடுப்படியின் அருகில் இருந்து கொண்டிருந்த தங்கம்மா, துடிதுடித்துப் பதைத்துக் கொண்டு மாமி வீட்டுக் குசினியடிக்கு உடனே ஓடிவந்தாள். "இங்க பாரடியம்மா இவள.1 ஐயோ இவளுக்கு என்ன நடந்ததெண்டே எனக்குத் தெரியேல்ல.?” - என்று மருமகளை அதிலே கண்டுவிட்டுக் கத்தினாள் ஆச்சி. தங்கம்மா கிட்டப்போய் விசயாவைக் கலவரத்துடன் பார்த்தாள். அவளைப் பார்த்த கையோடு அவளும் “ன்ன்ர ஐயோ விசயா விசயா.” என்று மாமியின் குரலைவிடப் பெரிய சத்தம்போட்டு அவள் கத்திவிட்டாள். விசயாவின் கால்கள் உடல் வேதனையில் நிலத்தை நன்றாகத் தேய்த்தபடி உதைத்துக் கொண்டன. அவளது கால்கள் பிறகு ஆடாமல் அசையாமல் விறைத்ததுபோல் கிடந்தன. அவள் அவ்வேளை முகம் வெளுத்துப்போய்விட்டாள். அவளது கொலுசுகளில் ஒலித்த சிலுங்கல் ஒலி அடங்கிவிட்டது. இன்னமும் வாயிலிலிருந்து அந்த நுரை அவளுக்கு வழிந்து கொண்டிருந்தது. வழிந்த எச்சில் நுரைகளெல்லாம் ஆச்சியின் மடிச்சேலையை நனைத்தது. ஆச்சியும் கத்தி சத்தம்போட்டு அழுதாள். நல்லம்மாவும் கதறி அழுதாள். விசயாவின் சீவன் அத்தருணத்தில் எதையோ எதிர்பார்த்து ஒன்று குவிந்திருப்பதைப்போலத் தோன்றியது. இறக்கும் வரை அவளுடைய கீழுதடு துடித்துக்கொண்டே இருந்தது. அசைவில்லாத அவளுடைய தலை மடியிலே கனத்துக் கிடப்பதுபோல ஆச்சி உடனே உணர்ந்தாள். இதை அவள் அறிந்ததும்
ரீ.பி. அருளvணந்தம் O 290 O.

"ஐயோ.” என்று பெரிதாக ஒரு ஒலம் எழுப்பினாள் அவளது "ஓ."வென்று தொடங்கிய அந்த ஒப்பாரியின் சத்தம் அயலட்டை வீட்டிலிருந்த எல்லோரது செவிகளிலும் விழுந்து அவர்களை ஒரு உலுக்கு உலுக்கியெடுத்து வைத்துவிட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடனே அயலட்டையில் உள்ளவர்களெல்லாம் ஓடிவந்து பொன்னுத்துரை வளவில் நிறைந்து விட்டார்கள். கொஞ்சம் நாடி பிடித்துப் பார்த்தறியத் தெரிந்த நாட்டு வைத்தியர் ஒருவரும் அங்கே அவ்வேளை வந்ததால். அவர் உடனேபோய் விசயாவின்கையைப் பிடித்து நாடி ஓட்டத்தைப் பார்த்தார். நாடி ஓட்டம் பார்க்கும்போதே அதிலே கிடந்த சத்தி மணத்தைக் கண்டறிந்துவிட்டு "அரலிவிதைய இந்தப்பிள்ள அரச்சுத்திண்டிட்டு.” - என்று சட்டென்று அவர் சொல்லிவிட்டார். நாடி ஒட்டமில்லாத அந்தக் கையைக் கீழே மெல்ல வைத்துவிட்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டு அவர் வெளியே வர அங்கு வந்திருந்த எல்லாப் பெண்டுகளும் - இராசம்மா ஆச்சி தொடங்கி - ஐயோவென்று சொல்லிச் செத்தவீட்டுக் கத்துக்கத்தி அழுதார்கள். அங்கே வந்தவர்களில் ஒருத்தி ஓடிப்போய் அந்த அம்மியில் மூடிக்கிடந்த சுளகைத்தூக்கி விட்டுப் பார்த்தாள். அவளுக்கு அந்த அம்மியின்மேல் வைத்து ஏதோ அரைத்திருப்பது தெரிந்தது. குனிந்து பார்த்தாள். அரலிவிதையின் ஈரம் அதிலே உலராதிருந்தது. "அரலி விதையத்தான் இந்தப்பிள்ளை இதிலயா அரைச்சுத்திண்டிருக்கு.” என்று அவள் அங்கு நின்றவர்களைப் பார்த்துச் சொன்னாள். அவள் சொன்னதை "ஆ.!” - வென்று ஒரு சத்தம் வைத்து வியப்புடன் கேட்டுவிட்டு "ஐயோ.” - வென்று மெல்லிய சத்தத்தில் அவர்களெல்லாம் பிறகு ஓலமிழுத்தழுதார்கள்.
அந்தரப்பட்டு அவசரப்பட்டு சயிக்கிளிலே கோயில் குளத்துக்கு ஓடிப்போய் "விசயா நஞ்சு திண்டு செத்துப்போனாள்.” - என்று ஒருவன் விசயாவின் தாய் புனிதத்திடம் சொல்ல - அந்தச் சயிக்கிளிலே ஏறிவருவதற்குப் பிள்ளத்தாச்சிவயிறு இடங்கொடாததால் தன் இருபிள்ளைகளையும் கையோடு கூட்டிக்கொண்டு, தலை தலையென்று அடித்துக்கொண்டு வயிறுகுதற அங்கலாய்த்தபடி ஓடி வந்தாள் புனிதம். அவள் திறந்து கிடந்த படலைவழியாக உள்ளே வரும்போது "ஐயோ என்ர அம்மா." என்று வாயிலும், முட்டி வெளியே தள்ளிக் கொண்டிருந்த தன் நிறைமாத வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஓடிவந்தாள். விசயாவின் உடல் மாலில் உள்ள வாங்கிலே அப்போது கிடத்தப்பட்டிருந்தது. அவள் வாங்குக்குப் பக்கத்திலே வந்ததும் கையைப்போட்டு அந்த வாங்கிலே மடார் மடாரென்று பலமாக அடித்து அழுதாள். அவளது சுமை வயிறு அழுகையோடு எழும் மூச்சிரைப்பினால் விம்மித்தணிந்தது. அவளின் சரிந்த வயிற்றைப் பார்த்துவிட்டு எல்லோரும் இரக்கப்பட்டார்கள். அவள் “ம்க்ம்..ம்க்ம்" - என்று மூச்சுத்திணறி அந்த வேதனையையும் வெளிக்காட்டியபடி "விசயா என்ர மேளே அம்மாச்சி." - என்று அவளது பெயரைச் சொல்லிக் கத்தினாள். அந்த அவளது உச்சரிப்பையும் ஒலியையும் கேட்டுக்கொண்டு மூக்கு ஒழுகலை முந்தானையால் சத்தமில்லாமல் துடைத்துக்கொண்டு
வரழ்க்கையிண் ரிறக்கஸ் O 291 O

Page 156
பல பெண்கள் புனிதத்தைக் கவனித்தார்கள். புனிதம்: “ஏன் அம்மா உனக்கு இப்படிச் செய்தாய்” - என்று கேட்டுப் பிறகும் "ஏன்? ஏன்? ஏன்?" - என்று கேட்டுப் புலம்பியபோது ஒரு சில பெண்கள் அவளைப் பார்த்துக்கொண்டு அவளுடன் சேர்ந்து அழுதார்கள். பிள்ளைத்தாச்சியாய் இருந்த அவள் முனகிப் புலம்பியதை மற்றப் பெண்கள் கவலையுடன் பார்த்தார்கள். அவளைப்பார்த்து நிறைமாதக்காறி நீ அழாத.” என்று அவளுக்கு அவர்கள் எப்படித்தான் சொல்லுறது. இதனால் கண்ணிர் சிந்தியபடி இருந்தார்கள் இராசம்மா ஆச்சிக்கு பேர்த்தி செத்த கவலையில் மூச்சு இரைத்தது. வியர்வை பிரகவித்தது. பார்வை மங்கியது - சோகம் பொங்கியது - அழும்போது குரலுங்கூட உள்ளுக்குள் அமிழ்ந்தது. இராசம்மா ஆச்சி கண்ணும் கண்ணிருமாக இருந்தாள். பேர்த்தி இறந்த செய்திகேட்டு ஐயாவும் உடனே வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வேலிப் படலையடிக்குவர அங்கு நின்ற பத்துப்பேர் ஆண்கள் அவரிடமாகப் போய் அவரோடு சேர்ந்து அவரைக் கூட்டிக்கொண்டு மாலுக்கு உள்ளே வந்தார்கள். இறந்து கிடந்த பேர்த்தியின் உடலைக் கண்டதும் அவருக்கு உடனே கண்களில் கண்ணீர் முட்டிச் சிதைந்தது. கண்ணீர் வெள்ளம் அவரது கண்களில் அப்போது அணைதெத்தி வழித்தது. பகல் வேட்டைக்கு அருகே உள்ள காட்டுப்பக்கம்போன சேனாதி பின்னேர வேளைக்கு ஒரு காட்டுப்பன்றியைச் சுட்டு நெருப்பில் அதை வாட்டி எடுத்துக்கொண்டு தன்னோடு அங்கே வேட்டைக்குக் கூட்டிக்கொண்டுபோன சகாவோடு வீடு திரும்பினார். வீட்டுக்கு அவர் வரவும் மகள் செத்துவிட்டாள் என்ற சேதி உடனே அவருக்குத் தெரியவந்தது. உடனே பக்கத்து வளவுவீட்டில் ஒரு சையிக்கிளக் கேட்டு வாங்கிக் கொண்டு விரைவான சையிக்கிள் ஒட்டத்திலே அவர் இங்கே வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார். சேனாதி வந்து ஒரு குழந்தைப்பிள்ளையைப்போல - வரம்வாங்கி தவம் வாங்கிப் பெற்ற தன் மகள் விசயாவின் உடலைப்பார்த்து பார்த்து அழ அவரின் பெண்பிள்ளைகளும் மனைவியும் ஒன்று சேரக்கட்டிப்பிடித்து அழுதார்கள். ஒருவரையொருவர் தழுவிக் கொதிக்கும் கண்ணிரை ஒருவர்மீது ஒருவர் பெருக்கிக் கொண்டார்கள். தங்கம்மா அவர்கள் எல்லாரும் அழுவதைப் பார்த்து முந்தானைப் பந்து சுற்றி வாயில் அடைத்து முக்கி முக்கி அழுதாள். அக்கா இறந்த செய்தியை சரவணனிடம் சொல்ல குளக் கட்டுப் பக்கத்துக்கு ஆருமே போகவில்லை. மாலையாகியதும் மாடுகளைக் கலைத்து வீட்டுக்கு வந்தபிறகுதான் சகோதரி இறந்துகிடப்பதைப் பார்த்து அவன் நெஞ்சு திடுக்கிட்டான். அவன் அங்கு பிறகு தொடங்கிய அழுகை நிற்கவே இல்லை. சகோதரி இறந்த அந்த மன வேதனையை அவனால் தாங்கவே முடியவில்லை. அவன் நெடுநேரமாய் அந்தத்திண்ணைக் கப்பைக் கட்டிக்கொண்டு பரிதாபமாய் அழுதான். நெல் கொள்வனவு செய்கிற களஞ்சிய அறையில் காலையில் தான் கொண்டுபோன நெல்லை நிறுத்துக்கொடுத்துக் காசோலை எழுதுவித்து வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு வந்துசேர அன்ரனுக்கும் பொழுதுபட்ட
jෂ්. ග්‍රී. ලාංඡ්ගvගvජ්හර් O 292 O

நேரமாகிவிட்டது. வீட்டிலே அவன் வந்ததும் இந்த இடி விழுந்த சேதி அவன் காதில் விழ, தான் நடக்கிற வேகம் தெரியாமல் உடனே அங்கே நடந்துபோய் அவனும் விசயாவின் உடலைப் பார்த்தான். அவனுக்கு சுடு மணலில் தன் இதயத்தைப் புதைத்துவிட்டதைப்போல வேதனையாக - அவளது இறந்த உடலைப்பார்க்கவும் இருந்தது. பீறிவந்த அழுகையை உடனே ஒருவாறு மூச்சை நிறுத்தி உள்ளே அடக்கிக்கொண்டு, அந்த வளவைவிட்டு படலையடியாலே அவன் உடனே வெளியே வந்தான். அவன் உள்ளம் அப்போது சிறுபறவைபோலத் துடித்தது. தான் அங்கு நின்று அழுது விடுவதை ஆருங் கண்டுவிட்டால் அது இறந்தவளின் பெயருக்கும் கேடாய்வரும் - அது அந்தக் குடும்பத்தையும் பிறகு பாதித்துவிடும் என்ற காரணத்தால் அந்த இடம் எதிலும் அவன் நின்றுகொண்டிராது பிரதான ஒரு நேர் வீதிக்கு நடந்துபோய்ச் சேர்ந்து அந்த வீதியிலே அவன் அழுகிற அழுகையெல்லாம் சேர்த்தழுதுகொண்டு; பித்தம் பிடித்தது மாதிரியான ஒரு நிலையிலே அவன் அதாலே நடந்து போய்க்கொண்டிருந்தான். அந்த வீதியில் “எந்த இடத்தைத்தாண்டி இப்போது எங்கே நான் போய்க் கொண்டு இருக்கிறேன்." - என்ற எந்த நினைப்பும் அவனுக்கு இல்லை! மனதில் அவள் இறந்துவிட்ட அந்த வேதனையை வைத்துக்கொண்டு, நடக்க நடக்க தேகமே கொதிப்பில் எரிந்துவிடும்போல அவனுக்கு இருந்தது. நடந்த நடையில் அழுத அழுகையில் தேகமெல்லாம் வேர்வைக்கடலாகிவிட்டது அவனுக்கு அப்படி உடல் சோர்ந்தும் ஒரு வெறியின் வேகத்திலே இன்னும் அவனது கால்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தடித்த நடை அவனைக் குடிபோல் தள்ளுகிறது. கவனமில்லாமல் அவன் நடந்துகொண்டிருக்கும்போது இருட்டுக்குள்ளே ஒரு பெரியகல்லில் கால் தடக்குப்பட்டு அவன் கீழே நிலத்தில் விழுந்தான். விழுந்ததோடு வாயெல்லாம் புழுதிமண் விழுந்தவீச்சில் வாயைத்திறந்து நாக்கை உள்ளே காற்றோடு இழுத்தபோது தொண்டைவரையிலும் மண் வாய்க்குள்ளாலே போனது. அந்த மண்ணிலே வாயை வைத்து கண்களைத் திறந்தபடி பற்களைக் கடித்துக்கொண்டு கத்தி அழுதான் அவன். ஒரு எருமைக்கன்றின் தீனம்போல அவனது அழுகைக்குரல் இருந்தது அழுகை கொண்டுவந்த வாய்க்காற்று நாசிக்குள் அவனுக்குப் புழுதியையும் தள்ளியது - இதன்பிறகு எல்லா உடல் இயக்கங்களும் குறைந்து சோர்வு மேலதிகமாய்த் தலைதூக்கிவிட, விழுந்துகிடந்த நிலத்திலிருந்து அவன் எழுந்து அந்த இடத்திலிருந்து திரும்பி நடந்து தன் வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்தான். அப்படியே கட்டிலில் போய் விழுந்தவனுக்கு இதயம் புழுத்துடிப்பாய்த் துடித்தது. அன்று இரவு முழுக்க நரக வேதனையாய் இருந்தது அவனுக்கு. சூசைப்பிள்ளையார் குளம் கிராமமும் அதன் சுற்றுப் புறமும், பொன்னுத் துரையரின் பேர்த்தி தற்கொலை செய்துகொண்ட சேதி கேள்விப்பட்டு அமைதி இழந்துவிட்டது. அவளது இறப்பு ஊரைச் சோர்வு கொள்ளச் செய்துவிட்டது. முக்கியமாக அது கன்னிப் பெண்களை திடுக்கிட வைத்தது. கன்னி கழியாத கல்யாணமாதவள் செத்தா மோகினியா அந்த ஆவி
apošspsu6.sk flyšesok. O 293 O

Page 157
திரியும் என்று அவர்களெல்லாம் பயப்பட்டார்கள். அன்றுவிடியலிலேயே மேளகாரன் வினாசி வந்து செத்தவீட்டுத் தெருவை கிடுகிடுக்க வைத்தான். அந்த மேளச் சத்தத்துடன் பெண்டுகள் உருக்கமாக ஒப்பாரி சொல்லி அழுதார்கள். செத்தவீட்டுக்கு வந்திருந்தவர்களெல்லாம் சோகக் கிரந்திதமாய் நின்றார்கள். அவர்களது மனத்துள் அலைபாயும் சோகப் பெருவெள்ளம் கண்களிலும் முட்டி நின்றன. உடுத்திப் படுத்தி வைக்கப்பட்டிருந்த பிள்ளையின் இறந்த உடலைப் பார்க்க புனிதத்தின் வயிற்றில் நெருப்புத் துண்டங்களை அள்ளிப்போட்டது போலிருந்தது. அவள் மகளின் பிணத்தின் அருகில் நின்றபடி மற்றவர் மனசைப்பிழியும் குரலிலே அழுதாள். அவளின் ஒப்பாரி பிலாக்கணமாக மாறி தெருவையே நடுங்க வைத்தது. பிரேதம் எடுப்பதற்குக் கிட்டவாகத்தான் இராசம்மா ஆச்சியின் மகளும் பிள்ளைகளும் மருமகனும் கொழும்பிலிருந்து இங்கே செத்தவீட்டுக்கென்று வந்து சேர்ந்தார்கள். இராசம்மா ஆச்சியின் மகள் சனங்களுக்குக் காட்டவேண்டுமென்பதற்காக சால அழுகை அழுது கொண்டிருந்தாள். நடுப்பகல் நேரமாகியபொழுது "டிடிவிண் விண்விண். ண்டிட்.டிவிண்டா! டிவிண்டா.” என்ற அந்த உறுமிமேள முளக்கத்தோடு பக்கத்துச் சேரியிலிருந்து மேளகாரர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். பிற்பாடு வினாசியின் பறைமேளத்திற்கும் உறுமிமேள காரருக்குமிடையில் கடும்போட்டி வினாசி விட்டுக் கொடுக்கவில்லை. எல்லோரும் வெற்றிலைச் சப்பலோடு மேள அடியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்திருந்த அயலட்டைச் சனங்களெல்லாம் செத்தவீட்டுக் காரர்களுக்கு தாங்கள் செய்யவேண்டிய கடமைகளை யெல்லாம் ஒடியாடிச் செய்து கொண்டிருந்தார்கள். பின்னேரமாகியதும் மயானத்துக்குக் கொண்டு போவதற்கு பிரேதம் வீட்டால் தூக்கப்பட்டது. மயானத்துக்குத் தூக்கிக் கொண்டு போன பிரேதம் பிறகு குழிக்குள் வைக்கப்பட்டது. சவப்பெட்டி யில் மண் விழும்போது திட்திட்-டென்று கேட்டது. அங்கே தலையைக் கீழே குனிந்தபடி மெளனமெளனமாய் நின்ற அன்ரனினது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் அடர்ந்து புதைகுழியின் மீது விழுந்தன. எல்லோருடனும் சேர்ந்து மயானத்தால் திரும்பி வரும்போது, அவர்களுடன் சேர்ந்து அன்ரனும் அந்தக் குளத்தில் குளிக்க இறங்கினான். விசயா என்ற மன அலறல் ப்ராணவேதனையோடு வெளிப்பட்ட தருணம் குனிந்து குளத்து நீரில் அவன் முழுகினான். தலைக்குமேல் அவனுக்குத் தண்ணிர். அந்தத் தண்ணீருக்குள்ளேயே தன் துக்கத்தையும் கண்ணிரையும் கரைத்துவிட்டு குளத்துக்குள்ளாஸிருந்து வெளியேறினான் அவன்.
அழுத கண்ணின் சிவப்புடன் அந்திவானம் கவிந்தது. வீட்டுக்கு அன்ரன் வந்ததும் அங்கு தன் அம்மா தற்சமயம் இல்லை எனக்கண்டுவிட்டு அறையைப் பூட்டிக்கொண்டு அவன் 'ஹோ' வென்று அலறினான். தன் அலறல் அவனுக்கே அச்சமாகிவிட்டது. மனம் அவனுக்கு குமுறிக் குமுறிப் பொங்கிற்று. அவனால் அந்த மனவலியைத் தாங்கவே முடியவில்லை.
මී.4%. ලාංකී්ගvගváහෆ් O 294 O

பதினேழு
மார்கழி பிறந்த கையோடு ஆரம்பமாகிவிட்டது. அடை மழைக்காலம் வானிலிருந்து ஊற்றாக நாள் ஒன்று கூட இல்லை என்கிற மாதிரி மழைபெய்து கொண்டிருந்தது. வெளிச்சம் அதிகம் தெரியாது மழை இருட்டு பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரே ஈனமான இந்த மழை நாளில் ஒரு நாள் எல்லாநாளையும் விட நல்ல பலத்த மழை பெய்யத் தொடங்கியது. கூரை மேல் கல்லால் அடிப்பதுபோல சடசடவென வருகிற சத்தத்தோடு இராசம்மா ஆச்சி வீட்டுத் திண்ணையிலே வந்து நின்றாள். திண்ணைவழியாக வெளியே தெரிந்த எல்லாவற்றையும் ஆச்சியின் கண்களுக்கு மழை மாற்றிக் காண்பித்தது.
சிலர் துயரத்தை விரைவில் மறந்துவிடுகிறார்கள்; புதியபாதையில் விரைவாக அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால் இராசம்மா ஆச்சிக்கு பேர்த்தி இறந்த அந்த நினைவுகளில் இருந்து, விலகிச் செல்வதற்கு வேண்டிய வலிமை இருக்கவில்லை. நடந்தவற்றை மறந்துவிட அவளால் முடியவில்லை. கழிந்து போன நாட்களின் நினைவுகள் இன்னும் அவளுக்கு மறக்கப்படாததால் மழை பெய்யும் இச்சூழல் அவுளுக்கு மனத்தில் வேதனையை அதிகப்படுத்தியது. ஐயாவும் வீட்டிலில்லாத அவளது தனிமையிலே அது மேலும் அதிகப்பட “என்ர பேத்தி என்னவிட்டுப் போனாப்பிறகு எனக்குப் போக்கடி எங்க? எங்க போவன் நான்.? எங்க போவன் இனி நான்?". என்று துயரம் மேவ அப்பிடியெல்லாம் சொல்லிக் கொண்டு பெரிதாகச் சத்தம் போட்டு அவள் அழத்தொடங்கினாள். மழைச்சத்தம் அவளது அழுகைச் சத்தத்தைத் அமுக்கிக் கொண்டிருந்தது. அதன் காரணமாய் தானே அழுது தனக்குள் கவலையை ஆற்றிக் கொள்ளும் நிலையில் இருந்து, அவள் மேலும் தனக்குள்ளாக கசிந்து கரைந்தவளாக அழுதுகொண்டிருந்தாள். அவளது நெஞ்சு பேர்த்தியை நினைத்துவிக்கியெழுந்து கொண்டிருந்தது. அந்தப் பெருமழை ஒய்வதாயில்லை. அந்த மழை பொட்டுப்பொட்டாக நின்று பெய்ய மரங்களின் கிளைகளினூடே காற்று அலைவீசிக் கொண்டிருந்தது. பிறகு மரங்களையும் செடிகளையும் ஆகாயத்தையும் புரட்டிப் போடுகிறமாதிரி காற்றும் மழையும் சேர்ந்து அடித்தன. இராசமம்மா ஆச்சிக்கு இன்னமும் அழுகை நிற்கவில்லை; வேதனைத் தீயின் சூடுபட்டதால் தன் சிரசில் ஏறிய எரிச்சலைப்போக்க அவள் அந்த மழைக்குள் இறக்கினாள். "என்ர பேத்தி என்ர பேத்தி." என்று தொண்டை தழுதழுக்கச் சொல்லியபடி அந்த மழைக்குள் தன் கைகளை விரித்து நின்று கொண்டு வானத்தைப் பார்த்தபடி அவள் அழுது கொண்டிருந்தாள். மின்னல் வானத்தில் மழைக்குள்ளும் மின்னி கிளை பிரிந்து மறைந்தது. மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது. தனித்தனியாகவும் வீரியமாகவும் பெய்த துளிகளாக அது இருந்தது. அவள் பெய்து கொண்டிருந்த அவ்வளவு மழையையும் அதிலே தன் தலையில் வாங்கிய மாதிரி நனைந்து நின்று உடல் விறைத்தும் போய் விட்டாள். அந்த அதீத மழை அடித்து ஓய்ந்தது.
6ყkყგèინიგußმდk MopysსნიM Ο 295 Ο

Page 158
பெய்து தீர்த்த வானம், நிர்மலமாய் விரிந்து கிடந்தது. மழையின் ஒரே சீரான சத்தம் மறைந்து, இலைகளிலிருந்து விழுகின்ற மழைத்துளிகளின் சத்தம் கேட்டது. அதுவும் காற்றடிக்க மழையாய் மரத்தடியிலும் மழையாய் பொழிந்து தள்ள ஆரம்பித்தது. ஆச்சி குளிர் நிலத்தில் நின்று நடுநடுங்கியபடி முற்றத்தில் நனைந்து கிடந்த மர உரலில் போய் அதில் குந்திக் கொண்டிருந்தாள். மழைநின்ற பொழுதிலிருந்து சிவப்புச் செம்பரத்தம் பூக்கள் மரத்திலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. நுரைப் பூக்கள் மலரமலர மூத்திரப்பாலாய் முற்றத்தில் ஓடிய வெள்ளம் அவள் கால்களைக் கழுவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்குக் காலெல்லாம் குளிர்ந்துகொண்டு வந்தது. அந்த மழைக் குளிருக்கு எங்கோ ஒரு சேவல் கூவியது. இன்னொன்று பதிலளிந்தது. மழைவிட்ட நேரம் பார்த்து வெளியே அலுவலாகப் போயிருந்த பொன்னுத்துரை அப்பொழுது தான் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இராசம்மா நனைந்த ஈரத்தோடு அதிலே நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு அவர் உடனே பதறிப்போய் விட்டார். "ஏனணை நீ இந்த மழைக்க கிடந்து நனைஞ்சனினி. உனக்கென்ன பிடிச்சிட்டுது? ஐயோ உனக்கென்னவும் வருத்தம் உதால வந்தினித் துலைக்கப்போகுதே.? எழும்பன் உதால கெதியா.?” - அவரும் அந்த உரலிலிருந்து அவளை நிற்க வைப்பதற்கு தன் கைகளால் பிடித்து உதவ "எல்லாம் போச்செனக்கு. எல்லாம் போச்சு எனக்கு” - சொல்லியபடி அந்த உடல் நடுக்கத்துடன் அவரின் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்று பின்பும் அழத்தொடங்கி விட்டாள் அவள் "இப்பிடியே நீ அழுதழுது கொண்டு வீட்ட கிடந்து இனிமேல என்னணை நீ செய்யப்போறாய்.? இப்ப என்னத்துக்கெண்டு தேவயில்லாம நீ போய் இந்த மழைக்க நிண்டு முழுவதும் நீ நனைஞ்சனி.?” நெஞ்சு வெடித்த விம்மலோடு வந்தது அவரது வார்த்தை. "நான் இந்த உலகத்தில இருந்து என்ன செய்யப்போறன்.? நான் துலையத்தான் போறன். ஒ. இது உண்மைதான்! என்ர செல்வம் என்னைவிட்டுச் செத்துப் போனாள். என்ர சீதேவி என்னவிட்டுட்டுப் போயிற்றாள்.? அவள் போனபிறகு இனி என்னால இந்த உலகத்தில உயிரோட இருக்க ஏலாது. நான் அவளுக்கு உயிரோட
ருக்கைக்க ஒண்டும் ஒரு நல்லது செய்யாம விட்டிட்டன்..! என்ர திரவியத்துக்கு நான் செய்து விட்ட பெரிய பாவத்துக்கு செத்தும் என்ர ஆத்துமா இனிமேல சாந்தியடயாது.” - சொல்லிவிட்டு அவள் "ஓ" வென்று நடுக் கத்தோடு அழுது கத்தினாள். அவளை மழைத் தண்ணீருக்குள்ளே நிற்கவிடாமல் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுவந்து கட்டிலில் இருக்கவிட்டு பொன்னுத்துரை ஒரு துவாயை எடுத்து தானே அவளுக்குத் தலை ஈரம் துவட்டினார். சத்தம் கேட்டு அதிலே வந்து நின்ற தங்கம்மா வாசலில் நின்று உள்ளே பார்த்தாள். மருமகள் அதில் வந்து நின்றதைப் பார்த்தும் பொன்னுத்துரை அறைக்கு வெளியாலே வந்து விட்டார். திண்ணையில் கிடந்த ஒரு கதிரையில் கவலையுடன் அவர் போய் இருந்துவிட்டார். "ஏன் மாமி இந்த மழைக்க நிண்டு நீங்க நனைஞ்சனியள்.?” - பதற்றத்தோடு கேட்டபடி மாமியின் றங்குப் பெட்டியைத் திறந்து அவருக்கு மாற்றுடுப்புக்களை எடுத்துக்கொடுக்க
്. ി. (G O 296 O

அதற்குள் இருந்து அவைகளை வெளியே எடுத்தாள் தங்கம்மா. கையிலே சேலையையும் சட்டையையும் அவள் வைத்திருந்தபடி "உந்த மழைக்க போய் நீங்க நிண்டதால உங்களுக்கு வருத்தமெல்லே இனி வரப்போகுது..? அப்பிடி ஆண்டவனே இந்தக் குளிர் மழைக்க போய் நனையிறதுக்கு உங்களுக்கு என்ன அப்பிடியொண்டு நடந்தது.?" - அவள் நடுங்கி விழித்தபடி இருக்கின்றதன் மாமியைப் பார்த்துப் பாசத்தோடும் பரிவோடும் கேட்டாள். "ம். பிள்ள என்ர பிள்ள.” - ஆச்சிக்கு இயக்கமில்லை குளுமையான விளக்குகளை கொளுத்தி வைத்தது போன்ற ஒரு வித உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. உடல்விறைத்து குரலும் அவளுக்கு நடுங்கியது. இன்னும் அவளுக்கு தங்கம்மாவிடம் ஏதோவெல்லாம் நினைத்துச் சொல்லத்தான் விருப்பம். ஆனாலும் அவளுக்கு ஏதும் ஒரு சொல்லைச் சொல்ல நாப்புரளவில்லை. தங்கம்மா அதிலே பின்பும் மாமியுடன் கதையோடு நின்று கொண்டிருக்காமல் மளமளவென்று அவரின் நனைந்துபோன ஆடைகளைக் களைந்து அவரது உடல் ஈரத்தைத் துடைத்துவிட்டு மாற்றுடைகளை அவருக்கு உடுத்தி விட்டாள். "உப்புடியே உந்தக் கட்டிலில நீங்க சரிஞ்சு கொஞ்சம் படுங்கோ மாமி நான் உடன போய் உங்களுக்குக் கோப்பி போட்டாறன்.” - என்று சொல்லிவிட்டு தங்கம்மா பக்கத்துக் குசினிக்குள்ளே போனாள். இராசம்மா ஆச்சிக்கு மழைக்குள் நின்று நனைந்ததில் குளிர் ஏறி சதிரம் நடுங்கத் தொடங்கிவிட்டது. கைகள் தொடங்கி முதுகுவரை அனல் காற்றொன்று பரவி முன்னேறுகிறது மாதிரியாக அவளுக்கு இருந்தது. முனகலும் புலம்பலுமாக, நடுக்கத்தோடு அவள் கட்டிலில் கிடந்தபடி பிறகு பிதற்றத்தொடங்கி விட்டாள். குளிராய்க் கிடந்த அவளது தேகம் சிறிது நேரத்தின் பின் அனலாய் அவளுக்கு முழுவதும் கொதிக்கத் தொடங்கிவிட்டது. தங்கம்மா சூடான கோப்பியைக் கோப்பையில் கொண்டுவந்து படுத்துக் கிடந்த மாமியை எழுப்பி இருக்கவைத்து, தன் நெஞ்சிலே அவரை அணைத்துப் பிடித்தவாறு தானே அந்தக் கோப்பியை அவருக்கு அவள் பருகி விட்டாள். அவர் கோப்பியைக் குடித்தாற்பிறகு அப்பிடியே திரும்பவும் அந்தக் கட்டிலிலே அவரை அவள் படுக்கவைத்து, போர்வையால் உடல் முழுக்கப் போர்த்தியும் விட்டாள். இரவுப்பொழுதில் இராசம்மாவுக்குக் காய்ச்சல் விட்டுப்போகாமல் ஏறிக்கொண்டுவர, பொன்னுத்துரை காய்ச்சல் குளிசைகளை எடுத்து அவருக்குக் குடிக்கவென்று கொடுத்தார். ஆனாலும் இராசம்மா ஆச்சிக்கு காய்ச்சல் சற்றேனும் குறைந்ததாகவில்லை. காலிலும் அவருக்கு ஏற்பட்ட சேற்றுப்புண் சதைகளை அரித்து நமநமத்து வலியுண்டாக்கியது. காய்ச்சலில் கொடூரமான வேகம் தாங்காமல் அவர் விடாமல் பிறகு அனுங்கத் தொடங்கிவிட்டார். அந்த அனுங்கல்களுக்கிடையிலே . விசயா. விசயா.” - என்று தன் பேர்த்தியின் பெயரையும் அவர் விடாமல் உச்சரித்துக்கொண்டே இருந்தார். இரவு வேளை மாமிக்கு அங்கே துணையாய் தங்கம்மாதான் அவரது கட்டிலுக்குக் கீழே பாயைப் போட்டுக்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 297 O

Page 159
கொண்டு, தலையணையில் தன் தலையைச் சாய்ந்தபடி அரைக்கண் உறக்கத்திலே கிடந்தாள். மருமகள் வீட்டுக்குள்ளே மாமிக்குத் துணையாகப் படுத்துக் கிடந்ததால் பொன்னுத்துரை திண்ணையிலே பாயை விரித்துப் போட்டுக் கொண்டு படுத்துவிட்டார். அக்கா உயிருடன் இருந்த காலத்தைவிட இப்பொழுது சரவணனுக்கும் வேலைப்பளுவால் உடல் பஞ்சி - அவனும் வேளைக்கே சாப்பிட்டுவிட்டு அந்தத்திண்ணையிலே படுத்ததும் பின்பு நல்ல நித்திரையாகி விட்டான். இராசம்மா ஆச்சிக்கு உருகின ஈயம் உடலைச் சுட்டது மாதிரி உள்ளுக்குள்ளாலே அந்தக் காய்ச்சலுக்கு எரிந்துகொண்டிருந்தது. மூச்சுச் சூடாக துருத்தியிலிருந்து அடிப்பதுபோல் வந்து கொண்டிருந்தது. அவள் உள்ளே இழுத்து வெளியேவிட்டுக் கொண்டிருந்த சுவாசக்காற்றில் நூறு வகைவாசம் வந்து உரசியது. “பிள்ள தங்கம்மா. என்னம்மா இது.! என்ன எல்லாமோ இப்ப எனக்கு நல்ல மணங்கள் மூங்கில வந்து மணக்குது..? எங்கட வீட்டு வளவுக்க உள்ள எல்லாப் பூமரங்களும் ஒரேயடியாப் பூத்திருக்குப் போல. அதான் எல்லாஞ்சேந்து எனக்கு மூக்குக்க மணக்குது என்னப் பிள்ள..?” - இதையெல்லாம் ஒவ்வொரு ஒவ்வொரு சொல்லாக விட்டுவிட்டுக் கஷ்டப்பட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆச்சி நடு இரவு கடந்து சற்றேறக்குறைய ஒரு மணியாகியதும்; தங்கம்மா நல்ல நித்திரை. ஆனாலும் நித்திரையிலும் அவளுக்கு மாமி என்னவோ சொன்னமாதிரி ஒரு அருட்டு இரவுக்கோச்சியின் சத்தம் மழைக்குள் தெளிவாய்க் கேட்டது. அதன்பிறகு முன்னையைப் போலவே ஆச்சியின் முனகல் தங்கம்மாவின் செவிகளில் - அது எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது மாதிரியாக அவளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. தங்கம்மா மறுபக்கம் நித்திரையில் திரும்பிக் கிடந்தவாறு குளிருக்குக் குறண்டிக் கொண்டுபடுத்துவிட்டாள். ஆச்சிக்கு சம்மட்டியால் ஓங்கி மூளைக்குள் அடிப்பதுபோல வேதனை வலி தெறித்துக் கொண்டிருந்தது. கண்கள் அவிந்து போன மாதிரி சூடாகக் கொதித்தன. நீண்ட முயற்சிக்குப்பின் கண்களை லேசாகத் திறந்தாள். இமைகளை முழுதாகப் பிரிக்க முடியவில்லை. அவருடைய செவிகளில் ஒரு பெண்ணின் கூக்குரல், திடீர் என்று அந்த இரவு நிசப்தத்தில் கேட்டது மாதிரியாக இருந்தது. அது ஒரு தாலாட்டின் சாயலாகவும் ஒப்பாரியின் சோகமாகவும் மாறுகின்றது மாதிரி அதைக் கேட்கின்றபோது அவள் உணர்ந்தாள். "இது என்ர விசயாதான். அது அவளிண்ட குரல்தான். அவளேதான்.! இது அவளேதான். அவள் இப்பவும் சாகேல்ல இதுக்குள்ள உயிரோடதான் இருக்கிறாள்." - தன் வாயில் இவற்றை முனகியபடி கட்டிலால் பிறகு எழுந்திருக்கப் பார்த்தாள். ஆனாலும் காய்ச்சல் காய்ந்த உடல் தஞ்சக்கேடு தலையை நிமிர்த்தி கொஞ்சம் அவள் எழும்பவும் திரும்பவும் திரும்பவும் அவளைக்கட்டிலில் விழவைத்துவிட்டது. தலையணையில் திரும்பவும் விழுந்து கிடந்தவளுக்கு, திண்ணையில் இருந்து கேட்டதுமாதிரியிருந்த அந்தக்கொலுசுச்சத்தம் திரும்பவும் எழுந்து அவள் இருந்து கொள்வதற்கு உசுப்பிவிட்டது. இப்பொழுது நன்றாக அவள் கட்டிலிலே எழுந்திருந்து கொண்டாள். தங்கம்மா நல்ல
ඒ.ජී. ෆර්ගvගvෂීහූ(ගී Ο 298 Ο

நித்திரையென்று தெரிந்தது. காய்ச்சலோடுதனக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த அந்த அரிக்கன் லாம்பைப் பார்த்தாள். அது அவள் பார்வைக்கு இரண்டாகப் பிரிந்து நிற்கின்றமாதிரியாக இருந்து வெளிச்சம்போட்டது. அந்த வெளிச்சத்திலேயே தன் பார்வையை பதித்திருந்தபடி மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கவும் - மீண்டும் திண்ணைப் பக்கமிருந்து அந்தக் கொலுசின் ஒலி அவளுக்குத் தெளிவாய்க் காதுகளில் கேட்டது. அவள் தன்னுள் ஒரு நம்பிக்கையைச் சுமந்துகொண்டு கட்டிலிருந்து எழுந்து நின்றாள். கால்களுக்கு எப்படித்தான் அந்தப்பலம் வந்து சேர்ந்ததோ..? இப்போது ஒரு தளர்வுமில்லாமல் நடையில் தள்ளாட்டமும் போடாமல் நேராக அறைக்குள்ளாலிருந்து வெளியே திண்ணைப் பக்கத்துக்கு அவள் நடந்தாள் கொலுசு இன்னும் சிலுங்கியது. "கல்கல்” - லென்று அதன் சப்தம் சரியாக அது என் பேர்த்தி விசயாவின் அந்தக் காலடி வைப்பின்போது கேட்கும் கொலிசினது ஒசைதான்!” - இதை நினைத்திடவும் இராசம்மா ஆச்சிக்கு சூடான அவளது தேகம் குளிரான நிலைக்கு மாற்றமடைந்தாய்த் தோன்றியது. “விசயா. பிள்ள விசயா. அம்மாச்சி. அம்மாச்சி." - தன் பேர்த்தியை அன்பாகக் கூப்பிட்டபடி மெல்ல மெல்ல அந்தத் திண்ணையிலே அவள் நடக்கத் தொடங்கினாள். அவள் கேட்ட கொலுசின் ஒலிமுன்னால். சற்று இன்னும் கொஞ்ச தூரம் அவள் கேட்ட இடத்துக்கு முன்னால் என்று அந்தத் திண்ணையில் அவ்வொலி தள்ளித்தள்ளியிருந்து ஒலிக்கின்ற அளவுக்கு முன்னால் ஒலித்தபடி சென்றவாறு இருந்தது. குசினி வாசலடிவரையில் சென்றுவிட்ட ஆச்சி மங்கலாகத் தெரிந்த அந்த முற்றத்து வெளிச்சத்தில் வெளியாய்க்கிடந்த அந்த இடத்திலே பார்த்தாள். அவளால் இப்போது தன் கண்களையே நம்ப முடியாதிருந்தது. "நான் இப்போது காண்பது நிஜம்தானா..?” - அவளுக்கு ஒரு சந்தேகம் தோன்ற கண்களை பல தடவைகள் மூடித்திறந்து தன் பார்வையால் அவ்விடத்தில் மீண்டும் உற்றுப்பார்த்தாள். இதற்குப் பிறகும் உனக்கென்ன ஒரு சந்தேகம்.? - அவளது மனதுக்குள்ளே யாரோ ஒருவர் தன் குரலில் இதை அவளுக்குச் சொல்வது போல இருந்தது. இராசம்மாவுக்கு கொதிக்கும் வியர்வை குப்பென்று துளிர்த்தது. தனக்கு வந்த சந்தோஷத்தில் ஏலாய்ச் சிரிப்பாய்ச் சிரித்தாள். பிறகு தனக்கு முன்னால் இரண்டு அடி எடுத்து வைத்து நடந்தாள். அந்தத் திண்ணையின் கடைசி அந்தத்திலே அந்தப்படியின் மேலுள்ள இடத்தில் இராசம்மா ஆச்சி நின்றாள். "என்ர பேத்தி. எங்கபோய் இவ்வளவு நாளும் நீ இருந்து போட்டம்மா பிறகு இங்க இவ்வளவு வடிவாய் நீ வந்தது மாதிரி இப்ப திரும்பி வந்திருக்கிறாய்.?” - யாருக்கும் தான் சொல்வது கேட்டு விடக்கூடாது என்கின்ற ஒரு இரகசியக் குரலில் இராசம்மா ஆச்சி அதில் நின்றவாறு அங்கேதான் பார்த்த பேர்த்தியைப் பார்த்துக் கேட்டாள். அவள் கேட்டதற்கு விசயா ஏதும் பதில் சொல்வதாய் இல்லை. அவள் பூத்த கொன்றை மாதிரி அதிலே நின்று கொண்டு அப்பம்மாவைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். “ஏன் விசயா பேசமாட்டனெண்டுறாய்..? இந்த அப்பம்மாவில உனக்கேதும் கோபமே பிள்ள..? நீ கதையணையணம்மா என்னோட இப்ப. உனக்குப் பிள்ள
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 299 O

Page 160
இந்த அப்பம்மா நான் இனிமேல பாரன் கட்டாயமா நான் உன்ர கழுத்துக்குப் போடச் சங்கிலி ஒண்டு ஆறு தங்கப் பவுணில பெரிசாச் செய்து தரப்போறன். அதோட கல்லுகள் வைச்சுச் செய்த சோக்கான ஒரு நெக்கிலசும் உனக்கு நான் வாங்கித்தந்திடுவன். உன்ரை கை முழுக்கவுமாப் பவுண் காப்புகள்.! அப்பிடி எல்லாமே போட உனக்குப் பவுண் நகையளா நான்..!” - ஆச்சியின் கண்கள் அன்பு நிறைந்த உற்சாகத்தாலும் திருப்தியாலும் பிரகாசித்தன. அவள் அப்படிச் சொற்களை அடுக்கிக் கொண்டுபோக. ஒன்றுமே அப்பம்மா அப்படிக் கேட்கின்றதுக்கு தான் ஏதும் பதில் சொல்லாது; கொடியில் மலர்ந்த முல்லைப் பூவாக இராசம்மா ஆச்சியின் கண்களுக்கு தெரிந்த விசயா பொங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள். "ஆ. ஆ..! என்ர பிள்ள இப்பவாய் என்னோரு வடிவாய் பாக்க இருக்கு. ஆருமே ஒருவர் சிரிக்காத என்னமாதிரி ஒரு தெய்வீகச் சிரிப்பை என்ர பிள்ளை இப்ப சிரிக்குது. அந்த மதுரை மீனாட்சி அம்மன்ர அந்தத் தெய்வீகச் சிரிப்பும் என்ரை இந்தப் பேத்தியின்ரை சிரிப்பும் ஒரேமாதிரித்தானே எனக்குப் பாக்க இப்ப தெரியுது.? ஓம் ஓம் அதுவாத்தான் இருக்கும். விசயாவுக்குள்ள மதுரை மீனாட்சியம்மன்தான் குடியிருக்கிறா. அந்த அம்மன்தான் விசயாவில உள்ள விருப்பத்தில அவளத் தன்னோட கூட்டிக்கொண்டோய் வச்சிருந்திட்டு இப்ப பிறகும் இங்க இந்த வீட்ட கூட்டிக்கொண்டந்து விட்டுட்டுப் போயிருக்கிறா. அதுதான் இங்க நடந்த சங்கிதி. அதைத் தெரியாத ஒரு விசரியர் நான் போட்டன். எல்லாம் என்ர மோட்டு மூளையின்ர வேலதான்! அதாலதான் வேற என்னென்னத்தையோ வெல்லாம் நான்நெச்சுக்கிலி பிடிச்ச மாதிரிப் போட்டன். ஐயோ நான் ஏதோ நினைச்சுக்கொண்டு என்ர பிள்ளைய முத்தத்தில குளிருக்க நிக்கவைச்சுக்கொண்டு. இப்ப உடன மழை வந்திடப் போகுது. பிறகு மழைக்க உதில நிண்டு நீ நனைஞ்சிட்டா பேந்து உனக்கு அந்த மழைக்க நிண்டதால காச்சல் வந்திடும்.? பாத்தியே நான் சொல்லி வாய் மூடேல்ல ஐயோ அந்த மழையும் தூறத்துவங்கிற்றுது. தலையில தூறல் விழுந்தா உனக்கு உடன தடிமலாக்கிப்போடுமே..? பேந்து என்ன மாதிரிக் காச்சலும் வந்து பிடிச்சிடும். என்ர சொல்வழியக் கேள் நீ பிள்ள. வாம்மா நீ வீட்டுக்குள்ள..? பிள்ள உதான் உன்ர பிடிவாதம் எண்டுறது. என்ரை குணம் மாதிரித்தான் உனக்குமென்ன..? நான் உன்னட்டக் கிட்டவா வந்தாத்தான் நீயும் என்னோட சேந்து பிறகு இங்க வீட்டுக்க என்னோட சேந்து வருவா யென்ன. சரியான பிடிச்சிராவிக்குணந்தான் உனக்குமென்னப் பிள்ள..? சரி இப்ப நான் இந்தா இதால இறங்கிவாறனே உன்னட்ட.’
தன் பேர்த்தி ஒரு குமர்ப்பிள்ளையென்றாலும் அவளை அதாலே கூட்டிச் சென்று பிறகு அவளைத்தன் மடியிலே இருக்கவைத்து உச்சிமோர்ந்து முத்தமிட ஆச்சிக்கு ஆசை. தான் நின்ற இடத்திலிருந்து காலைத்தூக்கி அவள் முன்னே நிலத்தில் வைக்கப் போனாள். ஆனாலும் தரையிலே அந்தக் கால் போய்ப் பதியாமல் காற்றுக்குள் இறங்குகிற மாதிரியாக
ரீ.பி. அருஸ்ணந்தம் O 300 O

அது எங்கேயோ ஒரு வழிக்குப் போவது போல அவளுக்கு இருந்தது. உடனே அப்படியே தான் சரிந்தவாறு படிகளுக்குக் கீழாக நிலத்திலே அவள் விழுந்துவிட்டாள். தன்னை அதிலே குப்புறவிழுத்தி விட்டதைப் பற்றிய அந்த நினைப்பு மூளையில் அவளுக்குப் பதியவில்லை. அடிபட்ட வேதனை போல உடல் முழுக்கவும் அந்த உணர்ச்சியாய் அவளுக்கு அப்போது இருந்தது. கீழே விழுந்த கையோடு அவளுக்கு வாயில் வந்தது ஒரு வேதனைச் சத்தம். அது ஐயோ என்ற அலறலாகவும் இல்லை - அம்மா என்றதோர் முனகலாகவும் கூட இல்லை அவள் விழுந்த அதிர்ச்சியில் வாயில் காற்று வெளியே தள்ளுப்பட்டதோடு வந்த சப்தமாகத்தான் அந்த அவளது சத்தம் இருந்தது. இரவின் நிசப்தத்திலே இந்தச் சத்தம் கேட்டுப் பொன்னுத்துரை திடுக்கிட்டு உடனே நித்திரையில் இருந்து விழித்துவிட்டார். சத்தம் கேட்ட அந்தக் குசினிப் பக்கம் உடனே அவர் போனார். தங்கம்மாவும் எழும்பி பதறியடித்துக் கொண்டு ‘மாமி. மாமி.” என்று கூப்பிட்டவாறு அரிக்கன் லாம்பையும் கையில் பிடித்தபடி வர அந்த விளக்கு வெளிச்சத்தில் ஆச்சி அங்கே படிகளுக்குக் கீழே விழுந்து கிடப்பது அவர்கள் இருவருக்கும் தெரிந்தது. பொன்னுத்துரைக்கு இராசம்மா விழுந்து கிடந்த நிலையைப் பார்க்கவும் ஒருவித பயம் வயிற்றில் முள்ளாய்க் குத்தியது. உடனே பதற்றத்தோடு கீழே இறங்கி இராசம்மாவை தன் கைகளிரண்டிலும் தொட்டிலில் படுக்கவைத்ததுபோன்ற நிலையில் வைத்து அவர் துாக்கி எடுத்துக்கொண்டார். இராசம்மா ஆச்சிக்குத்தான் கீழே விழுந்த உடல் நோவு இப்பொழுதுதான் தெரிந்தது. அந்த விழுகைக்குப் பின்பும் மயக்கமடையாத நிலையில் இருந்து கொண்டதால். விசயாவை அதற்கு முதல் தான் கண்ட நினைப்பில் இருந்து "விசயா. விசயா.” - என்று அவர் முனகிக் கொண்டிருந்தார். பொன்னுத்துரை இராசம்மாவைத் தூக்கித் தன் கையில் வைத்திருந்த கையோடு மளமளவென்றதாய் நடந்து அவர் முன்பு படுத்திருந்த அந்தக் கட்டிலில் கொண்டுபோய் அவரை வளர்த்தினார். "என்னணை இந்த நடுச்சாம இருட்டுக்க நீ எங்க அதால போனனி.? என்ன நீ வரவர உந்த வருத்தத்தோட ஏதோவெல்லாம் செய்யிறாய்? உனக்கேதும் காயம் வந்திட்டுதோ விழுந்து..? என்ன இது கடவுளே.!” அவர் சொல்லித் தவித்துக் கொண்டிருந்த நேரம்; தங்கம்மா அந்த அரிக்கன் லாம்பை தன் ஒருகையில் பிடித்துக்கொண்டு மாமியின் கை காலொன்று அவரது உடம்பின் எல்லா இடத்திலுமாக அவருக்குக் காயம் பட்டிருக்கிறதா என்கிற நினைப்பில் அக்கறையாகக் கூர்ந்து எல்லா இடத்திலும் பார்த்தார். தன் கையால் மனைவியின் தலைதை தடவிக் கொண்டு பொன்னுத்துரையும் அவருக்குக் காயம் ஏதாவது தலைப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்றதா என்று அக்கறையோடு கவனித்தார். இராசம்மா ஆச்சி இந்நேரம் தன் விழிகளை ஒருவாறு திறந்திருந்தாள். அவளுக்கு மீண்டும் தன் உடல் வலுவாகக் கொதிப்பதுபோல் தெரிந்தது. விழுந்ததில் ஏற்பட்ட அந்த உடல் வேதனையும் அதோடு சேர்ந்துவிட, எல்லாமே தன் உடலைப்போட்டு முறிப்பது போல அவளுக்கு உடல் வருத்தமாக இருந்தது. ஆனாலும் அவையெல்லாவற்றையும் சகித்துக் வரழ்க்கையின் ரிறக்கஸ் O 301 O

Page 161
கொண்டு "எனக்கு ஒண்டுமில்லை. எனக்கு ஒண்டுமில்லை.” என்று அவர்களுக்கு தன் வாய்க்குள்ளாலே பெரிதாய் வராத ஒரு சத்தத்தில்
வைகளை அவள் சொன்னாள். "மாமா..! இனி மாமிய அங்க ஆஸ்பத்திரிக்குத்தான் உடன கொண்டு போகவேணும்.?” - என்று சொல்லி அவசரப்பட்டுக்கொண்டு நின்றாள் தங்கம்மா. "எணை அப்ப நான் வெளியில போய் கார் ஒண்டப் பிடிச்சுக்கொண்டாறன் - உடன ஆஸ்பத்திரிக்குத்தான் உன்னைக் கொண்டுபோகவேணும் போல கிடக்கு. வரவர உனக்குக் காச்சலும் பெலக்குது.” - என்று பொன்னுத்துரையும் மனைவிக்கு அதை உடனே சொன்னார். அதைக் கேட்டதும் இராசம்மா: "ஐயோ அந்த ஆஸ்பத்திரிப் பக்கம் மாத்திரம் நீங்க என்னக் கொண்டு போயிடாதயுங்கோ. எனக்கு நீங்க நினைக்கிற மாதிரி அப்பிடி ஒண்டுமில்லை. சும்மா இந்தக் காச்சலுக்கு என்னைக் கொண்டுபோய் அந்த நரகத்துக்குள்ள தள்ளாதயுங்கோ பரியாரியக் கூட்டிக் கொண்டந்து இங்க அவருக்கு என்னக் காட்டுங்கோ. அவர்தாற அந்த மருந்தக் குடிச்சா எனக்கு வருத்தம் பிறகு நல்ல சுகமாயிடும். நான் உங்களயெல்லாம் கும்பிட்டுக்கேக்கிறன். அந்த முருகனாணை என்ன அப்பிடியொண்டும் நீங்க செய்து போடாதயுங்கோ." இராசம்மா இதைத்தன் கணவரிடமும் மருமகளிடமுமாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு அழுதாள். அவர் கேட்டுக்கொண்ட முறையில் ஐயாவுக்கும் கவலையில் கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது. தங்கம்மாவும்: ‘மாமி அப்ப இருக்கட்டும் இங்க மாமா. காலம பேர்ய் நீங்க பரியாரியாரக் கூட்டிக் கொண்டாங்கோ. அவரும் நாடி பாத்துப்பிறகு வருத்தத்துக்கு நல்ல மருந்தாய்க் குடுப்பார்தானே” - தானும் மாமிக்காகப் பரிந்துகொண்டு நின்று அவருக்கு இதைச் சொன்னாள். தன் மருமகளும் இப்படிச் சொல்லுகிறாளே என்று அதை நினைத்துக் கொண்டு கொஞ்சம் மன அமைதியாக பொன்னுத்துரையும் அந்தக் கட்டில் கால்மாட்டிலே போய் இருந்தார். அரிக்கன் விளக்கை நன்றாகத் திரியைத்தூண்டி வெளிச்சத்தைக் கூட்டி வைத்துவிட்டு அந்த அறையின் வாசல்பக்கமாக தங்கம்மாவும் போய்அந்த இடத்தில் கீழே குந்தி இருந்துகொண்டாள். தலைக்கோழி கூவி பிறகு நேரம் கடந்த பின் பொழுது விடிந்தது. காலையிலே பொன்னுத்துரை போய்ப் பரியாரியாரைத் தன்வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தார். அவர்கள் வந்த நேரத்தில் இராசம்மா ஆச்சியின் உடல்நிலை ரொம்பவும் மோசமாக இருந்தது. பரியாரியார் வந்ததும் இராசம்மாவின் இடது கையைப் பிடித்து தன் மூன்று விரலாற் சமமாக மெதுவாக அழுத்தி அவரின் நாடி ஒட்டத்தைப் பார்த்தார். பின்பு விரல்களை மாறிமாறி அழுத்தியும் தளர்த்தியம் பார்த்தபிறகு அவருக்கு முகம் வாடிவிட்டது. என்றாலும் தன் முக வாட்டத்தை பொன்னுத்துரைக்குக் காட்டி அப்பொழுதே அவரைக் கவலைக்குள் ஆழ்த்திட ஏதுஞ் சொல்லாமல் விட்டுவிட்டு “நீங்க கையோட வீட்ட வாருங்கோ மருந்து அங்க எடுத்துத்தாறன்.” இதை மட்டும் அதிலே இருந்தபடி அவருக்குக் கூறினார். பொன்னுத்துரையர் போய் பிறகு பரியாரியிடம் மருந்துத் தண்ணிரும் குளிசையுமாகவெல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது
ඊ. ෆි. ෆ‍්‍යාගvගvණිග(b O 302 O

மனவிசாரத்தோடுதான் வந்தார். பரியாரியார் அங்கே அவரிடம் இராசம்மா ஆச்சியின் வருத்தத்தை இனிக் குணப்படுத்துவது கஷ்டம் என்பதாய் சொல்லிக் கைவிட்டது மாதிரிக் கதைத்ததை நினைத்து மலை சரிந்ததுபோல அவர் மனமுடைந்து போனார். அவர் வீட்டுக்குக் கொண்டுவந்த மருந்தை இராசம்மாவுக்குக் குடிக்கக் கொடுக்க முடியாத அளவுக்கு அப்பொழுது வாய் அலகும் அவளுக்குப் பூட்டிவிட்டது. அவளுக்குக் கரைத்துப் பருக்கிய மருந்தெல்லாம் கடைவாயால் ஒழுகியது. பட்சிகளின் ஒலித்தொகுதிகள் படிந்துகொண்டே போயின. பொழுதுபட்ட நேரம் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு தங்கம்மா மாமிக்கு அருகிலேயேளங்கும் அவரை விட்டுப் போகாமல் கூடவாக இருந்தாள். காய்ச்சலில் மாமிக்கு வெள்ள நிறமுள்ளங்கிபோல முகம் வெளுத்து விட்டதைப் பார்த்து, அவளும் கவலைக் கண்களோடு கண்ணீரும் வழிய இருந்தாள். இரவு நேரம் முனகலுடன் தன் கையைத் தூக்கி ஏதோ சைகைமூலம் தனக்குக் காட்டி விளங்க வைக்க மாமி பிரயத்தனப்படுகிறார் என்று தங்கம்மாவுக்கு அது நன்றாய் விளங்கிவிட்டது. ஆனாலும் அவர் இப்போது என்னத்தைத் தனக்குச் சொல்லி விளங்கவைக்க விழைகிறார் என்பது தங்கம்மாவுக்கு சரியாக அதொன்றுமே பிடிபடவில்லை. அவள் தனக்குள் எதையெதையெல்லாமோ அவர் தனக்குச் சொல்ல வருகிற சேதியைப் பற்றி நன்றாகச் சிந்தித்துப் பார்த்தாள். அப்படிப் பலதையும் பத்தையும் அதிலிருந்து கொண்டு அவள் ஆராய்ந்து பார்த்தும் ஒன்றுமே அவளுக்கு மூளைக்குப் பிடிபடவில்லை. மாமியின் முனகல் சத்தத்தைக் காதில் கேட்டுக்கொண்டு அவள் பிறகு அந்த அறைக்குள்ளே இந்த சாமிப்படங்களைப் பார்த்தாள். அங்கே அந்த அம்மனது உருவப்படம் அவள் ஏற்றிவைத்த படவிளக்கின் வெளிச்சத்தில் தெய்வீக அழகு காட்டியது. படத்துக்கு வெளியே உள்ள அந்த விளக்கின் ஒளி கண்ணாடிக்குள்ளும் விழுந்து பளபளப்பாய்த்தெரிய, அதைப் பார்த்த கையோடு அவளுக்கு மாமி அப்போது தன்னிடம் என்னத்தைக் கேட்டிருப்பார் என்பது சட்டென்று அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் அந்தப் படத்திலுள்ள அம்மனின் உருவத்தை கண்கொட்டாமல் உற்றுப் பார்த்தாள். இந்தநேரம் மாமியின் கடைசி ஆசை என்னவாக இருக்கும்? அவருக்கு இந்த அம்மனிலேதானே சரியான ஒரு பக்தி இதனால் அவரது கடைசி ஆசை இந்த அம்மனைப்பற்றியதாகத்தான் இருக்கும். அவர் வைத்திருந்த அந்த அம்மனது சிலையை எனக்கும் எத்தனையோ தரம் காட்டிக்காட்டி, எவ்வளவோ அதைப்பற்றிய கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்தானே என் மாமி. அதை நினைத்ததும் அந்த லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டுபோய் அவருடைய றங்குப் பெட்டிக்குள் அடியிலே அந்தச் சிலையைத் தேடினாள் தங்கம்மா. அதற்குள்ளே உள்ள பொருட்களில் ஒரு மஞ்சள் நிறத்துண்டால் சுற்றிக்கிடந்த அதைக் கண்டதும், உடனே அவள் தன் கையில் அதை எடுத்துக் கொண்டாள். அந்தத் துணியை விரித்துப் பார்க்கவும் தான் தேடியது அதற்குள்ளே இருக்கக் கண்டதில் அவளுக்கு மனம்
வரழ்க்கையின் ரிறங்கஸ் O 303 O

Page 162
நிம்மதியடைந்துவிட்டது. அந்தச் சிலையைச் சுற்றிக் கிடந்த சீலைத் துண்டையும் அதற்குள்ளே கிடந்த திருநீறையும் அந்தக் கடவுள் படங்களுக்குக் கீழ் இருந்த பலகைத் தட்டுக்கு மேலே கொண்டுபோய் அதை வைத்து விட்டு, அந்தச் சிலையைக் கொண்டு வந்து விளக்கு வெளிச்சத்தில் மாமிக்கு அதை அவள் காட்டினாள். “இதத்தானே மாமி நீங்க இப்ப கேட்டனிங்க. இந்த அம்மனை உங்களிட்ட எடுத்தரச் சொல்லத்தானே அப்பவா எனக்கு நீங்க சொன்னனிங்க..?” - மருமகள் சொன்னதெல்லாம் ஆற்றுத்தண்ணீர் ஓடுகிற சலசலப்புச் சத்தத்திலே இராசம்மா ஆச்சிக்குக் கேட்டது. கதைக்க இயலாத அந்த நிலையிலும் அவள் ‘ஓ’ என்றதாய் மாத்திரம் அதற்குப் பதில் அளித்தாள். இராசம்மாவுக்கு கைகால்கள் தளர்ந்துபோன மாதிரி ஆகியிருந்தது. அதனால் தங்கம்மா அந்தச் சிலையை அவரின் கைக்குள் பிடித்து வைத்து, அவரின் விரல்களையம் தானே பிடித்துப் பொத்திவிட்டு பிறகு அப்படியே அவரின் கையை அவரின் நெஞ்சின் மேல் தூக்கி வைத்துவிட்டாள். அவரது மறு கையையும் அப்படியாகக் கொண்டுபோய் மேலே அவர் நெஞ்சில் வைத்திருந்த அந்தக் கைக்கு மேலாக வைத்துவிட, ஆச்சி தனக்கு அது நிம்மதியாகிவிட்டது மாதிரிக் கண்களை மூடிக்கொண்டாள்.
அடுத்தநாள் காலையிலே இராசம்மா ஆச்சிக்கு இன்னும் காய்ச்சல் வலுத்துப்போய் கண்கள் குழியாக மண்டைக்குள் ஆழ்ந்துவிட்டன. உள்ளே இரத்தமோ ஈரமோ இல்லை என்று தோன்றுமளவிற்கு கண்கள் வெள்ளைக்கல் போல இருந்தன. வற்றிய உடலில் நீல நிற நரம்புகள் அவளுக்குத் துருத்திக் கொண்டு நின்றன. மரணத்துக்கு முந்திய இறுதி மூச்சுக்கள் ஆச்சியின் நெஞ்சுக்குள் இருந்து பீறிட்டு வந்து கொண்டிருந்தன. மனைவியின் இந்த நிலையைப் பார்த்து எதைப்பற்றியும் இவ்வளவு காலமும் கவலையின்றியிருந்த பொன்னுத்துரையர் கலங்கிப் போனார். அவரது முகம் போல அவரது மீசையும் வாயின் இரு ஓரங்களிலும் சோகம் தோன்றத்தொங்குகிறது. அவர் நன்றாக வாடி வதங்கிப் போய் நின்றார். ஆசைகளற்ற உள்ளத்துடன், ஜீவ ஒளியற்ற விழிகளுடன், ஒரு நிழல் போல நெஞ்சின் அடியாளத்தில் எதிலுமே நம்பிக்கை இல்லாதவராக அதிலே அவர் நின்றுகொண்டிருக்க - சேனாதியும் புனிதமும் பிள்ளைகளும் ஆச்சியின் கட்டில் கால்மாட்டிலே நின்றபடி அழுது கொண்டிருந்தார்கள். தங்கப்பழமும் புருஷனும் ஆச்சி சாகக்கிடக்கும் வேளையிலேதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். தங்கப்பழம் வந்ததும், கத்திச் சத்தம்போட்டு அங்கே அழத்தொடங்கினாள். தங்கையை அவ்விடத்திலே கண்டுவிட்டு வீட்டுக்கு வெளியே முற்றத்தில் போய் நின்று கொண்டுவிட்டார் சேனாதி அவருக்கு முன்பு இருந்த அழுகையெல்லாம் சகோதரியைக் கண்டுவிட்ட பிறகு இப்போது ஆத்திரமாக மாறி இருந்தது. அங்கே அந்த அறை வாசலுக்குப் பக்கத்தில் நின்று அன்ரனும் கைகளிரண்டையும் முன்னால் கட்டிக்கொண்டு தானும் கவலையோடு நின்றான். உள்ளே நின்றுகொண்டு அவர்களெல்லாம் அங்கே அழுவதைப் பார்த்து அவனுக்கும் கண்களில்
ரீ.பி. அருளWணந்தம் O 304 O

நீர் திரண்டது. அதைப் பெருமூச்சிழுத்துவைத்து அவன் அடக்கிக் கொள்ளப் பார்த்தான். எல்லோருமே துக்க மேலிட்டால் இப்படியே கத்தி அழுதுகொண்டிருக்க தொண்டைக்கும் வாய்க்குமாக சிரேடம் இழுத்துக் கொண்டிருந்த ஆச்சி எல்லாவற்றையும் மறந்து தலை சாய்ந்து அப்பிடியே உயிர்விட்டு விட்டார். இராசம்மாவின் மரணத்தை அவளது கணவர் பொன்னுத்துரை, அவரது படுத்துக்கிடந்த கட்டிலின் ஒரு பக்கத்தில்
ன்றும்; மற்றையதாய் உள்ள அவரது உறவுகளெல்லாம் அந்தக் கட்டிலைச் சுற்றியதாய் அதிலே அருகருகே நின்றவாறும் அதிர்ச்சியுடன் சந்தித்தார்கள். இராசம்மாவின் உடல் அதிலே மரணத்தில் அமைதிகண்டதைப்போல் நிம்மதியாகக் கிடந்தது. அந்த முகத்தில் இதயபாரம் ஒழிந்த சாந்தம் மட்டும் நிலைத்திருந்தது. அடுத்தநாள் இழவு வீட்டுக்கு வந்த ஆட்கள் பொன்னுத்துரையரின் வளவு முழுக்கவும் நிறைந்து போயிருந்தனர். அந்த வளவுக்குள்ளே பல இடங்கள் வைக்கோலாலும் தழைகளாலும் கிடாய் மூத்திரத்தாலும் நனைந்து வதங்கிப் போய்க் கிடக்கின்றதைப் பார்க்க, அவர்களுக்கும் பார்வை மறையும் அளவுக்கு கண்களிலே கண்ணிர்கசிந்து நிறைந்தன. செத்த வீட்டில் தாளாத துயரத்துடன் பொன்னுத்துரை நிற்க அவருக்கு ஆறுதல் சொல்லவேண்டுமென்று அடக்கமுடியாத ஆர்வத்துடன்அன்ரன் அவரின் அருகில் போய்நின்றான். ஆனாலும் அவரருகிலே அவன்போனதும், ஒன்றும் அவருடன் பேசாது பிறகு அவன் மெளனமாக நின்று விட்டான். இராசம்மாவின் கடைசிப்பயணம் வீட்டாலே வெளிக்கிட்டது. அவருடைய கடைசிப் பயணம் சூசைப்பிள்ளையார் குளத்தைக் கடக்கிற ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் அதிலே கலந்து கொண்டார்கள். மகன் சேனாதி கிருத்தியக் கோலத்துடன் பூணுால் மார்பில் துலங்க, கொள்ளிக் குடத்தைத் தோளில் சுமந்தார். பாடை தூக்கிப் போனபோது தூவிப்போன பொரிகளை மிதித்துக்கொண்டு அந்த இறுதி ஊர்வலத்தில் அன்ரனும் நடந்து கொண்டிருந்தான். மயானத்தில் தன் மனைவியின் உடல் தீயில் எரிந்து சாந்தியாகிச் சாம்பலாவதை பொன்னுத்துரையர் பார்த்தார். தன்னோடு அறுபதாண்டு காலமாக வாழ்ந்தவளின் உடல் தீயில் எரிந்து சாம்பலாவதைப் பார்க்க அவர் நெஞ்சிலும் கவலைத்தீபற்றி எரிந்தது. ஈமத்தீ எரிகிறதை நின்று பார்த்துவிட்டு வந்தவரெல்லாம் அந்தச் சுடலையை விட்டு வெளியேறுகிறார்கள். மயானத்தின் நடுவே இருந்த பாலைமரத்திலிருந்து எங்கோ கத்திக்கொண்டு பறந்தது கிளியொன்று தன்னந்தனியாய்.
பதினெட்டு
விசயா இறந்த பின்பு மிகுந்த சங்கடத்தைத் தரும் துன்பமான
அலைக்கழிப்பிலே அன்ரனுக்கு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
விசயாவின் மீது கொண்டிருந்த மாறாக் காதலின் நினைவுகள், அவள் வரழ்க்கையின் ஈரிறக்கஸ் O 305 O

Page 163
இறந்த பின்பும்கூட அவன் மனத்தில் சப்பாணியாக அமர்ந்து கொண்டு அவனது மனத்தை வருத்திக் கொண்டேயிருந்தன. அவனது ஆன்மாவையே இருளில் மூழ்கடித்தன. கொஞ்சநாள் செல்ல யாருடனும் பேசுகிற பழக்கமே அவனுக்கு அற்றுப்போய்விட்டது. ‘என்ன யுகம் முடிஞ்சது மாதிரி நீ பேசுறாய்..? அவன் நண்பர்களெல்லாம் அவனின் கதையைக் கேட்டு விட்டு திருப்பி அவனிடம் இப்படிக் கேள்வி கேட்டார்கள். “இப்படி நல்ல கோத்திரத்தில பிறந்தும் ஏன் நீர் எதையோ பறி கொடுத்ததுமாதிரி நெடுகலும் யோசிச்சுக்கொண்டிருக்கிறீர்..? உமக்கு என்ன நடந்தது.?” என்றதாய் உபதேசியாரும் அவனைக் காணும் போதெல்லாம் திரும்பத் திரும்ப இதையே கேட்டுக் கொண்டார். அவனுக்கு இதனால் சங்கடமாக இருந்தது. எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்களென நான் கவலையுடனேயே திரிவது.? என்று நினைத்து அவனும் தன்னை மாற்றிக் கொள்வதற்கு முயன்றான். வேறு எல்லாரையும் விட தன் தாயினது பாசம்தான் அவனை மீண்டும் முன்பிருந்தது போல மாற்றியது. அமைதியான தன் தாயின் முகத்தையும், அன்பாக அவர் சொன்ன அறிவுரைகளையும் கேட்டே அவன் முன்னம்தான் இருந்த அந்தப் பழைய நிலைமைக்கு மீண்டும் திரும்பினான்.
“இருட்டில் கோர்த்த கனவு மாலை வந்து கழுத்திலேயா விழுந்து விடப் போகிறது.? தன் மனத்தை இப்படியெல்லாம் அவன் நினைத்து சாந்தப்படுத்தினாலும், அவனுள் அந்த முள் இருந்து இன்னும் வதைத்துக்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் அவனது வாழ்வில் ஒரு வசந்தத்தை நிலவச் செய்ய, தாய் அமுதம் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க முயன்றாள். அவனுக்கு திருமணத்திலே விருப்பமில்லைத்தான்! என்றாலும் அம்மா சொல்கின்றாவே என்று நினைத்து பிற்பாடு அதற்கு அவன் இணங்க வேண்டியதாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் அந்தக் குடும்ப வாழ்வில் அவனுக்குப் பற்றேயில்லை! ஆனாலும் போகப் போக அதுவே அவனுக்கு மனசுக்கு ஆறுதலைக் கொடுத்தது. துயரத்திற்கு அதுவே ஒரு மருந்தாகவும் பிறகு அவனுக்கு அது ஆகிவிட்டது. அவன் இப்பொழுது பெரிய குடும்பஸ்தன் ஆகிவிட்டான். தன் குடும்பம், தன் தொழில், சமூக சேவையென்று விரிவடைந்து கொண்டே அவன் வாழ்வு முன்னேற்றம் காணத் தொடங்கியது. என்னுடைய இந்த முன்னேற்றத்துக்கெல்லாம் காரணம், என் அம்மாதான் என்று அவன் ஒவ்வொரு நாளின் விடியலிலும் நித்திரையை விட்டு எழும்போதெல்லாம் நினைத்தான். அந்த நினைப்புடனே ஒரு நிம்மதி அவனுக்கு ஏற்படும். அவனுடைய வாழ்க்கையில் தன்னோடு சேர்ந்து பழகியவர்களையும் அவன் மறந்து விடவில்லை. பொன்னுத்துரை ஐயாவிடம் உள்ள அன்பு முன்போலவே அவனுக்கு இப்போதும் இருந்து கொண்டுதான் இருந்தது. ஏதோ தனக்குக் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் அவன் அங்கே போகவே செய்தான். சில பொழுது அங்கு அவன் போகும் போது, அந்தப் படலை திறக்கவும் கண்ணீருடன் அவரது வீட்டை அவன் பார்ப்பான். அந்நேரம் இறப்பு
Iෂ්, ග්‍රී. ෆර්ගvගvණිගර් O 306 O

அற்றதான அந்த நினைவுகள் அவனுக்குத் திரும்பவும் வந்து விடும். அந்தத் துயர அலை அவனின் தொண்டைவரை அப்பொழுது பரவி நிற்கும்.
என்றாலும் உடனே அவன் தன்னை அந்த நிலையில் நின்று சமாளித்துக் கொண்டு விடுவான். இதற்கெல்லாம் வரவர அவனுக்கு மனம் பக்குவப்பட்டு விட்டது. அவனது சுகத்திலும் துக்கத்திலும் அவனது மனைவி பங்கு கொள்வதற்குத் தகுதியானவளாயிருந்ததால், துன்பம் அவனைச் சூழும் போதெல்லாம் மனைவியின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு மனம் ஆறினான் அவன். ஆனால் பொன்னுத்துரை ஐயாவின் நிலைமை அப்படியாய் இருக்கவில்லை. அவருக்கு அன்ரனின் வாழ்வைப் போல ஆறுதலடைய ஒரு வழியும் பிறக்கவில்லை. அவர் தன் துக்கத்தை யெல்லாம் மண்ணுக்குள் மறைந்திருக்கும் விதையைப் போல மனசுக்குள் புதைத்து வைத்திருந்தார். அவருக்குத் தன் மனைவி இராசம்மா இறந்தது, வாழ்வில் ஒரு பேரிழப்பாகவே போய்விட்டது. முன்பிருந்த சுறுசுறுப்பும் உற்சாகமுமெல்லாம் அவருக்கு எங்கு போனதென்று தெரியாத அளவுக்கு அவருக்கு மறைந்ததைப் போல் ஆகிவிட்டது. தன் அன்றாட அலுவல்களையெல்லாம் ஏனோதானோ என்ற அளவில் சோர்வுடனேயே அவர் செய்து கொண்டு காலம் கழித்துக் கொண்டிருந்தார். இந்த அவரது நிலையிலே அவருக்குத் தெரிந்தவர்கள், நண பர்கள் எனப்பட்டவர்களெல்லாம் அவரிடம் வந்து “நீங்கள் இந்த முறை நடக்கிற சவாரியில மாட்டைக் கலைச்சுப் பார்க்கலாம்தானே.?’ என்று சொல்லி அவரை முடுக்கிவிட்டார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு விட்டு பொன்னுத்துரை முதலில் பின்னடித்துக் கொண்டு நின்றார். பிறகு அவர்கள் சொன்னதையெல்லாம் வைத்து சில நாட்கள் ஆற அமர இருந்து, அவர் தனக்குள் யோசித்துப் பார்த்தார். இன்னும் அவருக்கு தான் ஒரு சவாரிக்காரன் என்றதாய் மனதுக்குள்ளே ஓர் ஒர்மம் இருந்ததால் "சரி விடுறதில்ல நான் இந்தச் சவாரி ஓட்டத்த எல்லாருஞ் சொல்லுறதால இந்த முறை மட்டுமெண்டாலும் நான் என்ர மாட்டைக் சலைச்சுப்பாப்பம்." அந்த முடிவெடுத்துக் கொண்டு முன்னப்போலவே அவர் தன் மாடுகளுக்கு சவாரி ஒட்டத்துக்கான பயிற்சிகளைக் கொடுத்தார். வண்டில் சவாரிப் போட்டி நடக்கும் அந்த நாள் வந்தது. அன்று அவருக்கு ஆதரவாளர்கள், வண்டில் ஒட்டத்திலே அவருடன் சேர்ந்து பங்கெடுப்பவர்களென்று பலபேர் அவருக்கு உதவ வென்று முன்நின்றார்கள். பல நாட்களாக பொன்னுத்துரைக்கு உதவியாக அன்ரனும்தான் அவருடன் கூட இருந்து எல்லா விதத்திலும் அவருக்கு உதவி புரிந்தான். இந்தப் போட்டியிலே பங்குபற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் வவுனியாவுக்கு வருவது போலவே, தருமரும் இந்த முறையும் தன் மாடுகள் வண்டிலைக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சவாரிக்கென்று அங்கு வந்திருந்தார். எகிப்திய 'பிரமிட்டு மாதிரி இவ்வளவு வயசு போயும் பார்ப்பதற்கு அவரும் கம்பீரமாகத்தான் இருந்தார். வழமையைப் போல இந்த முறையும் பின்னேர வேளையில் அந்த விமான ஒடு பாதைக்குப் பக்கத்தே மாட்டு
வரழ்க்கையின் ரிறங்கஸ் O 307 O

Page 164
வண்டில் சவாரிப் போட்டி ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் நடந்த தெரிவுப் போட்டியிலே பொன்னுத்துரையின் மாடுகளும் ஒடி இறுதிப் போட்டிக்கு அவை தெரிவாகின. அவரினதைப் போலவே தருமருடைய மாடுகளும், முதல் நடந்த சவாரிகளிலே ஒடிக் கடைசிப் போட்டியில் பங்கு பற்றுவதற்குத் தெரிவாகியிருந்தன. இறுதியாக அங்கு நடந்த போட்டியிலே பொன்னுத்துரைக்கும் தருமருடைய மாடுகளுக்கும்தான் - நீ முந்துவது - நான் முந்துவது என்கிறதாய்ப் பெரும் போட்டி தருமருக்கு இருக்கும் குள்ளப்புத்தியும் குரூரப் புத்தியும் இப்பொழுதும்தான் அவருக்கு விட்டுப் போகவில்லை. அவர் ஆக்ரோஷமாக இருந்து கொண்டு, தன் சவாரி வண்டியை பொன்னுத்துரையின் வண்டிலுக்கருகே கொண்டு வந்து சில்லால் இடித்தார். இம்முறை முன்போலில்லாது அவரின் இந்தத் தாக்குதலுக்கு, தன் வண்டிலைக் காப்பாற்றியெடுத்து மாடுகளைக் கலைக்க இயலாமல் போய்விட்டது பொன்னுத்துரைக்கு அவரின் மாடுகள் அந்த அதிர்ச்சியைச் சந்தித்ததும் கிலி கொண்டு விட்டன. அவரது மாடுகள் நிதானம் இழந்த நிலையிலே அந்த மாடுகளினது கால் குளம்புகளையும், தருமர் தன் வண்டில் றோதையால் தட்டிக் காயமுறச் செய்து விட்டார். இதனால் பொன்னுத்துரையின் மாடுகள் ஒடும் பாதையை விட்டு வெட்டிக் கொண்டு குறுக்கே பாய்ந்து விட்டன. அதைச் சமாளிக்க முடியாத நிலையிலே இருந்த பொன்னுத்துரையும் வண்டிலிலிருந்து கீழே நிலத்தில் வீசப்பட்டார். அவர் வீசப்பட்ட இடத்தில் சில கற்கள் கீழே நிலத்தில் இருந்தன. கீழே விழுந்த நிலையில் அவருக்கு உயிர்த் தலத்தில் அடிபட்டு பலமான நோவுண்டாகி விட்டது. உடனே அந்த இடத்திலேயிருந்து அவரை அன்ரனும் அவரது ஆதரவாளர்களும், அப்படியே அவரின் வீட்டிலே கொண்டு வந்து சேர்த்தார்கள். இவ்வளவு நாளும் சவாரிப் போட்டிகளுக்குப் போய் வெற்றியோடு வீடு திரும்பிய பொன்னுத்துரை, அன்றுதான் முதன்முதலில் தோல்வியைத்தழுவிக் கொண்டு வந்து வீட்டில் படுத்துக் கிடந்தார். அவருக்கு உடலிலும் நோவு உள்ளத்திலும் அதை விடப் பெரிய நோவாய் அப்பொழுது இருந்தது.
இந்த நிலையில் அவரைப் பார்க்கவென்றும் உதவி ஒத்தாசை அவருக்குச் செய்யவென்றும், அவரது பிள்ளைகள் குட்டிகளென்று அவ்விடத்திற்கு யாருமே வரவில்லை. ஆனாலும் அவரது மருமகள் தங்கம்மாதான் அவருக்கென்று வேண்டிய சாப்பாடுகளைச் சமைத்து எடுத்துக் கொண்டு வந்து, அவருக்குச் சாப்பிடுவதற்கென்று வேளா வேளைக்குக் கொடுத்தாள். அவருக்கு விழுந்து அடிபட்ட நோவு மாற பல நாட்களாகி விட்டன. படுக்கையில் கிடந்தவாறு யாருமில்லாத தனிமையில் இருந்து கொண்டு, இந்நாட்களில் அவர் மன உளைச்சலிலும் அவதிப்பட்டார். தனக்கிருக்கும் சொத்துப் பத்துக்களிலெல்லாம் அவருக்குப் பிறகு வெறுப்பும் அதிகரித்து விட்டது. தன் வீட்டு மாடுகள் கன்றுகளில் அரைவாசியை தன் மகன் சேனாதிக்கென்று கொடுத்து, சரவணனையும்
அவன் வீட்டுக்கு அவர் அனுப்பிவிட்டு, எஞ்சிய மாடுகளை விற்று
jෂ්. ග්‍රී. ලාංඤොහvගvණිෂඨ O 308 O

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பின்பு தன் சீவியப்பாட்டை கொண்டு போனார் பொன்னுத்துரை. தான் சேமித்து வைத்திருந்த பணத்திலே அரைவாசியை தங்கம்மாவிற்கும் அவர் கொடுத்து விட்டார். அதனுடன் அவருக்கு தன் விரல்களில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மோதிரங்களையும் விற்று, அந்தப் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தார். அந்த வீட்டுக் காணியை மகளுக்கென்று எழுதிவைத்து விட்டு வயல் காணிகளையெல்லாம் தான் விதைக்காமல் விட்டு, அவைகளை அவர் பிற்பாடு குத்தகைக்குச் செய்யவென்று தனக்குத் தெரிந்தவர்களிடம் கொடுத்து விட்டார். இதன் பிறகு புற உலகிலிருந்து தன்னைத் தூரத் தனிமைப்படுத்திவிட்டு, ஒட்டோடு ஒட்டாத விளாங்கனி போல தனித்து வாழத் தொடங்கி விட்டார் பொன்னுத்துரை. வீட்டிலே இருந்து கொண்டு பரும்பரும் புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டு, அவர் தன் நாளையும் பொழுதையும் அதிலேயே நெடுகலும் செலவழித்தார். அவருக்கு இப்படியே பழைய பழைய உலகத்தில் வாழ்ந்துவிட்டு இறந்தால் போதும் என்கிற கொள்கை இப்பொழுதும்தான் மனத்தில் இருந்து கொண்டிருந்தது.
இந்தச் சம்பங்களெல்லாம் நடந்து காலமும் நெடிய காலமாகி விட்டது. அந்த விமான ஓடுபாதையையும் அதற்குச் சூழவுள்ள இடங்களையும், அரசு ஒரு தேவையை எண்ணிக் கொண்டு அதைச்செப்பனிட்டு பிற்பாடு புதிப்பித்தது. அதனால் அந்த விமான ஓடுபாதைக்கு அருகேயுள்ள பலரது குடியிருப்புக் காணிகளும் தோட்டத்து நிலங்களும், பிறகு அவர்களிடமிருந்து அரசாங்கத்தால் சிறுதொகைப் பணம் நஷ்டஈடாகக் கொடுத்து பல வந்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த இடம் விமான நிலையமாக இனி இருக்கப் போகிறது என்று இங்கிருந்த மக்கள் எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் அவர்களெல்லாம் நினைத்ததற்கு மாறாக, அரச படைகள் ஆயிரக்கணக்கில் அங்கே கொண்டு வந்து குவிக்கப்பட்டன. இதன் பிறகு 83 இல் பிறகும் ஒரு இனக்கலவரம் இந்த நாட்டில் வெடித்தது. தமிழர்களை எவ்வாறு சீரழிப்பது என்பது சிங்கள அரசுக்குத்தெரியும். அதனால் அதோடு சேர்ந்து தமிழர்கள் வாழும் அவர்கள்து பாரம்பரிய மண்ணிலே, சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தைத் தொடங்கியது. அந்த யுத்தம் தமிழ் மக்களைக் கொன்று சூறையாடிப் பொசுக்கி அழித்தது போர் உக்கிரமமாய்த் தாக்கும் வாழ்க்கையை நேருக்கு நேர் எதிர் கொள்ளும்போது சீரழிவுகள் எப்படி இருக்கும்? கூழுக்கும் வழியின்றி அநேகம் பேர் தங்கள் குழந்தைகளுடன் பசியால் வாடினார்கள். இந்த யுத்தத்தால் கணக்கிலடங்காத பெருந்தொகையில் மக்கள் உயிரிழந்தார்கள். பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டார்கள். மாங்கல்யம் இழந்து விதவைகளானார்கள். பலர் உடல் ஊனமுற்றார்கள். கணக்குக்கூட்டக் கூட்ட இந்த அழிவுகளெல்லாம் அதிகரித்தன. யுத்தத்தால் நடந்த கொடூரங்களை அனுபவித்தவர்கள், கண்களை அசைக்காமல் உறுத்து நோக்கிக் கொண்டு நின்றார்கள்.
வரழ்க்கையின் சிறக்கஸ் O 309 O

Page 165
அவர்களுக்கு மூளையே குழம்பிற்று. எல்லா மக்களும் இவ்விடங்களிலே இல்லிடத்தை விட்டு இடம்பெயர்ந்து கடற் பறவைகளின் விடாத அலைதலைப்போல அலைந்தார்கள். ஷெல்களும் துவக்கு முனையும் அவர்களைப் பேயைப் போல பீதியூட்டின. வயிறுகளை வானுக்குக் காட்டிக் கொண்டு செத்து விழுந்து விடும் பூச்சிகளது நிலையில் தமிழ் மக்களின் நிலையும் போரிலே வந்து விட்டது. அதனால் பலர் இந்த நாட்டை விட்டும் வெளியேறினார்கள். அன்ரனுக்கும் இந்த யுத்த சூழ்நிலையை நினைத்துப் பார்க்க, மூளைக்குள் இருந்த திரை ஒன்று கிழிபட்டது போல இருந்தது. இந்தப் போரின் மத்தியில் அவனும் ஒரு ஜந்துபோல அழிந்து போகத் தயாராக இருப்பது போல அவனுக்கு இருந்தது. அதனால் அன்ரனும் தன் குடும்பத்துடன் கனடா நாட்டுக்கு இடம்பெயர்ந்தான். அங்கு அவனுக்கு அகதி அந்தஸ்திலே இருப்பதற்கு உரிமை கிடைத்தது. இந்தச் சூரியனுக்குக் கிழே பூமியில் நடக்கிற எல்லாவற்றையும் எல்லாருமே கூடிச் சேர்ந்து பேசித் தீர்க்கிறார்கள். இந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைத்தாலென்ன என்று தமிழ் பேசுகிற மக்களெல்லாம் ஏங்கியேங்கி சமாதானத்தை எதிர்பார்த்து பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரையும் ஏமாற்றுகிற சூழ்ச்சியில் மதகுருவின் புனிதக் குரல் போல குரல் வைத்துக் கொண்டு, அரசியல்வாதிகள் சமாதானத்தைப் பற்றி கதைத்தார்களேயொழிய இந்நாட்டில் நிரந்தர சமாதானமென்பது ஏற்படவே இல்லை. சுதந்திரத்தில் தழைத்த இந்த நாடு, ஒரு பக்கம் தமிழ் மக்களை சர்வாதிகாரத்தின் கீழ் ஒடுக்கிற வாழ்க்கையையே இன்னமும் அவர்களுக்கு அது அளித்து விட்டிருக்கிறது.
காலப் பறவை சிறகடித்துப் பறந்தது. பிற நாட்டில் போய் இருந்து ஒரு உப்புச் சப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்து இருபது வருடங்களுக்கு மேல் கடத்தி விட்டான் அன்ரன். தன் பிறந்த மண்ணில் இருந்து சொகுசுடன் வாழ்வதைப் போல ஒருவருக்கு வேறுநாட்டில் இருந்து மகிழ்ச்சியாக வாழ முடியுமா..? அந்த வாழ்க்கை எங்கே நிம்மதியாக அமைந்து விடப் போகிறது ஒருவருக்கு.? அந்த வாழ்க்கையில் எப்படி ஒருவருக்குப் பிடிப்பு ஏற்படும்.? அது திருப்தியாகவென்று அவருக்கு இருந்து விடுமா..? அப்படியாக இருக்காதுதானே? இதுதானே உண்மை! அதே மாதிரியாகத்தான் அன்ரனிலும் மற்றைய இடம்பெயர்ந்த ஒரு தமிழனுக்கிருக்கும் தவிப்பும் தத்தளிப்பும், பிற நாட்டில் இருந்து தன் வாழ்க்கையை நடத்தும்போது இருந்தது. இப்போது வெளிநாட்டில் அவனது வாழ்க்கை ஒரு யந்திரத்தைப் போன்றதான நிலையில், வெறும் சடமானதானதோர் வாழ்க்கையாகத்தான் இருந்தது. அவனுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்களில் சிலதுகள் ஞாபகத்தில், ஊமைப்படம் போன்றுதான் இப்போதெல்லாம் வரத் தொடங்கி விட்டன. அதனால் தன் ஊரை ஒருக்கால் போய்ப் பார்த்து வரவேண்டுமென்று அந்த ஆசையை பலநாளாக அவன்தன் மனத்தில் வைத்துக் கொண்டே இருந்தான். அந்த அவனது ஆசையும் ஒரு நாள் அவனுக்கு
ரீ.பி.குருஸ்ணந்தம் O 310 O

நிறைவேறிடவே செய்தது. அவன்தன் சொந்த நாட்டில் வந்து காலை வைத்தான். காலையிலே அவன் வவுனியா நகருக்கு தொடரூர்ந்தில் பயணம் செய்து வந்து, தன் விருப்பத்தில் கால் நடையாக அந்த வீதியிலே வந்து கொண்டிருந்த போது அந்த வீதியிலெல்லாம் காகம், குருவி, காடை கத்துகிற சத்தமாக இருந்தது சனக்கூட்டம். அவனுக்கு அவன் காலத்துப் பழைய நினைப்பு இதைப்பார்த்ததும் வந்தது. அந்நாளில் கண்டி வீதியின் நிலையினை ஒரு முறை எண்ணிப் பார்த்தும், அதிலே பத்துப் பேர்கூட இராத ஒரு காலமும் இருந்ததுதானே..? என்கிற ஆச்சரியமாகவும் - அது ஒர் அதிசயமாகவும்தான் அந்த வீதியில் இப்போது போய்க் கொண்டிருக்கும் சனங்களைப் பார்க்கவும் தெரிந்தது அவனுக்கு இடம்பெயர்வில் ஒரு புறம் வந்து அங்கே ஒதுங்கி இருக்கும் சனக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டு அவன்கடை வீதியில் நடந்து முன்னே சென்றான். வீதியில் துவக்கும் கையுமாக நிற்கின்ற இராணுவத்தினரின் கழுகுக் கண்களில் கடுமையும் கொடூரமும் சுடர்ந்திருப்பதை அவன் அங்கே கவனித்துக் கொண்டு, இன்னும் முன்னாலே அந்த வீதியால் நடந்து கொண்டிருந்தான். அந்தக் கண்கள் தன்னைப் பின் தொடர்ந்து முதுகிலே குத்திக் கொண்டிருப்பதைப் போலத்தான் இன்னமும் அவனுக்கு அதே நினைப்பு தான் கண்ணுற்ற யாவற்றையும் சிந்தித்தவாறு நடந்து கொண்டு வந்து சிவசக்தி வீதியை அணுகி விட்டான் அவன்.
“மனித உயிரே வறண்டு வாடிப் போகும் அளவுக்கு என்னவாக ஒரு வெப்பம்.? பச்சை ஓலையும் பத்திக் கொள்ளுகிற வெய்யில். இந்த வெய்யில் அனலாய் வீசுகிறதோ..?” என்று அவன் தவித்தான். வெளிநாட்டில் இவ்வளவு காலம் இருந்து பழகியவனுக்கு 'ஜிவு ஜிவு என்று கண் பொங்கிற்று.
“இது வழியே அலை அலையாக நின்ற மரங்களெல்லாம் எங்கே..? அந்த மரங்கள் இல்லாததுதான் காங்கை அனல் வீசுது.” அவன் அதை அறிந்து கொண்டு துயரம் மனசிலே மேவ, தன் வீட்டுக்குப் போகும் அந்த வீதியிலே நடந்தான். அந்தச் சந்தியிலே வந்து அங்காலே திரும்பிய போது, பொன்னுத்துரை ஐயாவின் வளவைப் பார்த்து விட்டு அவன் அதிசயித்தான். அங்கு ஒரு புதிய கல் வீடு கட்டப்பட்டிருக்கிறதைப் பார்த்ததும், பழைய அந்த இடத்தைத் திரும்பவும் ஞாபகத்தில் கொண்டு வருவது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. இதில நிண்ட அந்தக் காஞ்சூரை மரமெங்கே?' அவன் அதை நினைக்கும்போது - கீழ்க்காற்று புழுதியை எழுப்பி வீசியது. அப்படி ஒரு காற்றோடு கலைந்துபோய் விட்டது மாதிரித்தான் எல்லாமே இவ்விடத்தில் இல்லாமலாகி விட்டதா..? என்று அவன் உடனே நினைத்தான். அதை நினைத்தவாறு அந்த அவரது வீட்டு இரும்புக் கேற்றுக்கு முன்னால் அவனையறியாமலே சிறிது நேரம் அதிலே அவன் நின்று கொண்டான். அந்தக் கேற்றை இப்பொழுது திறந்து கொண்டு வெளியே யார் வருகிறார்கள்..? அதிலே வந்து
கொண்டிருப்பவரை வடிவாக அவன் பார்த்தான். என்ன. இவர் எங்கட
வரழ்க்கையின் சிறக்கஸ் O 31 1 O

Page 166
பொன்னுத்துரை அய்யாவா இவர்.? அவர்தான். அவரேதான்..! என்றதாய் பிறகு அவன் நன்றாக அவரைக் கிட்டவாகப் பார்த்ததோடு அடையாளம் கண்டு பிடித்து விட்டான். “எனக்கு முன்னால் அங்கே வீதியில் நின்றபடி இந்தப் படலையை அதிலே நின்றபடி பார்த்துக் கொண்டு நின்கின்றவர் யார்.?” அந்தக் கேள்வியைத் தன் கண்பார்வையிலே வைத்துக் கொண்டு அவரும்தான் இவனைப் பார்க்கிறார். ‘எங்கே என்னை இப்பொழுது இவர் அடையாளம் கண்டு கொள்வாரோ. கொஞ்சம் நின்றபடி பார்க்கலாம்.! அவன் மெளனமாக நின்றான். அவனுக்குக் கிட்டவாக இன்னும் கிட்டவாக நெருங்கி வருகிறார் அவர். பொன்னுத்துரைக்கு இப்போது தாகூர் போலத்தாடி. அவரது ஒரு விழி மற்றொன்றை விடக் கொஞ்சம் பெரிதாகக் காணப்பட்டது. ஈரமாய் இரண்டு தடவைக்கு மேல் இருமினார் அவர். பிற்பாடு குனிந்து இருமித்துப்பினார். அவர் தனக்குக் கிட்டவாக வந்ததும் அவரைப் பார்க்க பாவம் மாதிரி அவனுக்கு இருந்தது. அந்த நேரம் வேட்டைக் கம்பு மாதிரி விறைப்பாக இருந்தவர் சாட்டைக்கம்பு மாதிரி இளைத்துப் போய் விட்டாரே..? நிமிர்ந்த தோள் பட்டைகள் சுருங்கிச் சரிந்து போய் கூனிக் குறுகியதாய் இப்போது இருக்கிறாரே..? என்ன கேவலம் இது? அந்த உறுதியான விரல்களும் மெலிந்து தேய்ந்து விட்டதே? தோல்களும் சுருங்கு சுருங்கென்று சுருங்கி நிறமும் குறைந்தும் விட்டதே? அவன் கண்களில் கண்ணீர் ஈரம் கசிய பெருமூச்சு விட்டான். எத்தனை நாளுக்குத்தான் இளமைக்குச் சரீரம் அடிமையாக இருக்கும்.? அவன் இதை நினைத்தபோது. "நீர் தம்பி எங்கட அன்ரன்.!" என்று தன்வாயால் எடுத்தவுடன் சொல்லி விட்டார் பொன்னுத்துரை.
''
“ஐயா உங்கள நான் எவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்ப பாக்கிறன் “தம்பி அன்ரன் எனக்கு இப்ப நூற்றி அஞ்சு வயசு.!” அவர் சொன்னார். ஆனால் அப்படித்தான் சொன்னதுக்கேற்றதாய் ஒரு மகிழ்ச்சியான சிரிப்பைக்கூட அவரால் வெளிக்காட்ட முடியவில்லை. “எப்பிடியெல்லாம் நீங்கள் இப்ப இருக்கிறியள் அய்யா..?” “ம். நல்லாயிருக்கிறன் நான் தம்பி. ஆனா வயதுதான் எனக்குப் போட்டுது. எண்டாலும் என்ர பாட்டுக்குத் தனியத்தான் இந்த என்ர மகள் வீட்டுக்குப் பின்னால ஒரு கொட்டிலப் போட்டுக் கொண்டு அதில நான் இருக்கிறன்.” “ஏன் மகளோட இருக்கலாம்தானே ஐயா நீங்க.?” அவன் கேட்ட கேள்விக்கு எதையோ மறந்து விட்டுத் தவிப்பது போலிருந்தது பொன்னுத்துரையின் முகம். அவரது பார்வையில் வெறுமையும் அதில் துளை விழுந்து போனதான ஒரு சூனியமும் தெரிவதை அன்ரன் கண்டு கொண்டான்.
ரீ.பி. அருஸ்ணற்றம் O 312 O

“கொண்டான் கொடுத்தான் இடத்தில ஏன் நான் போய் இருக்க வேணும்.? கொடுத்தான் நிழலில போயிருந்தா மதிப்பாயிருக்குமா எனக்குத் தம்பி.? என்ன நான் சொல்லுறது தம்பி. எப்பிடி இது சரியோ..?”
அவர் அப்படியாய்ச் சொல்ல, அவர் சொன்னதற்குத் தான் என்ன பதிலைச் சொல்வது என்பதாய் அன்ரனுக்கு அது ஒன்றும் தெரியவில்லை. “உங்களோட நான் இருந்து ஒரு முழுநாள் முழுக்கக் கதைக்க வேணுமையா.” ஆவலோடு இதை அவருக்குச் சொன்னான். “ஒரு நாளென்ன பத்து நாளுங்கூட என்னோட நீர் வந்திருந்து வடிவாகக் கதையும் தம்பி. எனக்கும் உம்மக்கண்டதில் பெரிய சந்தோஷமாயி ருக்கு..! எப்பிடி இப்ப உம்மட குடும்பமும் நீரும்.? வெளிநாட்டில எப்பிடி உங்கட ஆக்கள் எல்லாரிண்டயும் சீவியம்.?”
‘எல்லாம் அங்க வசதிதான் ஐயா. அப்பிடி நல்ல வசதியான சீவியந்தான்! எண்டாலும் எங்கட இடம் வழிய இருந்து நாங்க சீவிக்கிற மாதிரி வெளியில எங்கையும் அப்படி வராதுதானே..? அவன் சொல்லி முடிய, அவர் அன்ரனின் முகத்தை தன் கண்களில் வினாவை தொக்க வைத்தபடி பார்த்தார். “அதுதான். எங்கட இடம் மாதிரி அங்க எங்கையும் எங்களுக்கு இல்லை ஐயா." அவன் அவருக்கு திரும்பவும் இதைச் சொன்னான்.
அந்தப் படலையை அப்போது ஒரு பெண் வந்து திறந்துவிட்டு இவனைப் பார்த்தாள். மிக மிகத் தீவிரமான பயிற்சிகள் எல்லாம் செய்து, அவன் மீது இறுகிய சந்தேகம் நிரம்பிய பார்வையை வீசினாள் அவள். “இது எங்கட பக்கத்து வீட்டுத் தம்பி.! அன்ரன்! வெளிநாட்டில இருந்து இப்பதான் வந்திருக்கிறார்.” ஐயா அவனைப் பார்த்துச் சொல்ல அன்ரனும் அவளைப் பார்த்தான். “இவள் என்ர பேத்தி மாலா தம்பி.” பொன்னுத்துரை ஐயா அவனுக்குச் சொன்னதும், அன்ரனுக்கு அவர் சொன்னதை இப்போது ஏனோ நம்ப முடியாத அளவிலே தான் இருந்தது. அன்று தான் கண்ட அந்த மாலாவா இவள்.? என்ன இவளும் இப்போ இப்படியாகவெல்லாம் ஆள் அடையாளம் கண்டு கொள்ளாத ஒரு அளவுக்கு மாறிவிட்டாள்.! பிடுங்கி வைத்த கீரைத்தண்டு போல இவளும் இப்போது வாடி விட்டாளே..? அன்ரனுக்கு அன்று மாலா இருந்த உடல் பருப்பத்தையும், இன்றைய அவளது மெலிந்து போன தேகத்தையும் காண பெரும் வித்தியாசமாகத் தெரிந்தது. இப்போது தன் முன்னே நிற்கும் மாலாவைப் பார்க்கவும், காட்டில் வளர்ந்த வாசனையற்ற பளுப்பு வெள்ளை மலரின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அவள் அன்ரனை அறிந்து கொண்டு விட்டதும் அவனைப் பார்த்துச் சிரித்தாள். “நீங்களெல்லாம் எப்பிடி அங்க சுகமாயிருக்கிறியளா..?” “ஓம் எல்லாரும் நல்லாயிருக்கிறம்..” “உங்களிண்ட அம்மா..” “ஓ. அவவும் நல்ல சுகம்."அவள் கடைசியிலே அவன் சொன்னதைக் கேட்டு விட்டு “ ஆ” என்று தன் குரலில் ஒரு இழுவை இழுத்தாள். இவர்கள்
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 313 O
99

Page 167
கதைத்துக் கொண்டிருந்த அந்த இடத்துக்குப் பிறகு நிலாவும் வந்து விட்டாள். இன்னும் அவளுக்கு அந்தக் கொழும்புப் பக்கத்துப் பழக்கவழக்கமாகத்தான் இருக்கின்றது போல் அவளைக் கண்டதும் அன்ரனுக்குத் தெரிந்து. வயது போனாலும் நிலா கவர்ச்சி வாய்ந்த நேர்த்தியான மெல்லுருவினளாகத்தான் இருந்தாள். ஒடிசாக ஒல்லியாக இருந்த அவள் தோள்கள் தெரியும்படி தணிந்தமைந்த ஆடை அணிந்திருந்தாள். அவளின் நெற்றியின் மீது கூந்தலின் வகிட்டுப் பிளவு தாழ்ந்து கவிந்திருந்தது. முன்னுச்சி நரையில் அவள் அப்பியிருந்த குங்குமம் வியர்வையோடு கலந்து ஒரு காலாக இறங்கியிருந்தது. நிலா படலையால் இருந்து வெளியே வரும்போதே அவனையும் உடனே அடையாளம் கண்டு பிடித்து விட்டு, முன்னைய அந்தப் பழைய சிரிப்பில் கவர்ச்சியோடு வந்தாள். “எப்பிடியெல்லாம் இப்ப வெளிநாடு வழிய நீங்கள்.? இன்னும் முன்னம் கண்டது மாதிரியே நீங்கள் இப்பவும் அப்பிடியேதான் இருக்கிறியள். ஒரு மாற்றமும் தெரியேல்ல." அவள் அப்படிச் சொல்லிவிட்டுச் சிரித்தாள்! அவள் இன்னும் பழைய நினைப்பிலேதான் இப்பொழுதும் இருந்து கொண்டு இப்படித் தன்னைப் பார்த்துச் சிரிக்கின்றாளா..? என்றதாய் அன்ரன் உடனே அவளின் சிரிப்பைக் கண்டு விட்டு மனத்தில் நினைத்தான். “உங்களுக்கு இப்ப எத்தின பிள்ளையளி.?” என்று அவனும் அவளிடம் கேட்க வேண்டியதாகவும் இருந்தது. ‘மூன்று.” என்று தணிந்த குரலில் சொன்னாள் அவள். அன்ரனுக்கு பிரயாணம் செய்து வந்ததில் களைப்பு மேலிட்டது. அவன் தன் கையில் கொண்டு வந்ததும் ஒரு சாதாரணப் பைதான்; அதையும் தன் கையில் ஒழுங்காகத் தூக்கி வைத்திருக்க முடியாமல், மறுகைக்கு மறுகைக்கு என்றதாய் அதை அவன் மாற் மாற்றிப் பிடித்துக் கொண்டு நின்றான்.” அங்க வெளிநாட்டிலயா இப்ப இருந்திட்டு வாறிங்க அப்பிடி அவ்வளவு தூரத்திலிருந்து பிரயாணம் பண்ணி இங்க வந்தனிங்க ஏன் இங்க வந்து பிறகு கால் நடையில நடந்து வாlங்க.? ஒரு வாகனத்தப் பிடிச்சுக்கொண்டு வீட்ட நீங்க ப்ப லேசாப் போயிருக்கலாம்தானே.?” நிலா அவன் தன் பையை கையில் வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதைப் பார்த்துக் கேட்டாள்.” கொஞ்சம் இப்பிடி எங்கட இந்த ஊரப் பாத்துக்கொண்டொருக்கால் றோட்டால எனக்கு நடந்து வரத்தான் ஆசை. அதாலதான் அப்பிடியே றெயினால இறங்கி நடந்து நான் வந்தன்.” “இங்க என்ன தம்பி அப்பிடி முந்தி மாதிரி என்னவும் உமக்குப் பாக்கக் கிடக்கு.? இங்க இப்ப எங்கயும் கட்டிடங்கள்தான் எழும்பியிருக்கு..! இப்ப வவுனியா ஒரு புதுநகரம். பழையது எண்டு அப்பிடியா இருக்கிறது ஒண்டுமா இங்க கிடயாது. அதே மாதிரித்தான் இங்க தெரிஞ்ச அறிஞ்ச ஆக்களும் அதிகம் இல்ல. முந்தி நாங்க சவாரி ஓடின அந்த இடத்தயெல்லாம் சும்மா இப்ப நாங்க வீட்டுக்கயிருந்து நினைச்சுக் கொண்டுதான் இருக்க வேணும். அங்க உள்ள சவுக்காலப் பக்கத்திலகூட முள்ளுக்கம்பியடிச்சு வேலிபோட்டு பக்கத்தில ஆமிக் காறங்கள். இப்ப
ரீ.பி.குருஸ்ணந்தம் O 314 O

துவக்குகளோட குந்திக் கொண்டு இருக்கிறாங்கள். ஏதோ இங்க இந்த ஊருக்கெண்டு நீர் வந்ததுக்கு ஒரு நாள்போய் அந்த இடத்தையும் ஒருக்கா பாருமன்.?” பொன்னுத்துரை அய்யா சொல்ல. “உங்கட முன்னைய அந்த வண்டில் சவாரி ஓட்டமெல்லாம் இப்ப எங்கயெண்டுமில்லாமல் போட்டுது. இங்க இப்ப முந்தி மாதிரியெல்லாம் மாடு வளப்பே இல்ல. மனுசர் இங்க இருக்க வீடில்லாமத் திரியிதுகள் மாடெங்க இங்க கட்டியெல்லாம் வளக்கிறது” நிலா சொல்லி விட்டு ஒரு சிரிப்புச் சிரித்தாள். “சரி. எப்பிடி இருந்தாலும் நான் பிறந்து வளந்த இந்த இடத்த என்னால ஒருக்காலும் மறக்கேலாதுதானே.?” அன்ரன் சொல்ல மவுனமாக இருந்து விட்டு அவனின் முகத்தைப் பார்த்தாள் நிலா. அன்ரன் அதற்குப் பிறகு அந்த இடத்தாலே இருந்து தான்வெளிக்கிடும் அளவுக்கு நின்றான். தன் பேர்த்திகள் கதைக்கும் போதெல்லாம் தான் அதற்குள் மூக்கை நுழைப்பது போல் குறுக்கிடாமல் அதிலே மெளனமாகப் பொன்னுத்துரை நின்று கொண்டிருந்தார். அவரை அன்ரன் இப்பொழுதும் பார்வையால் ஆழ ஊடுருவினான். கண்களை அசைக்காமல் அவரை உறுத்து நோக்கிக் கொண்டு நின்றான். அவர் தனக்குச் சொன்ன வயதுக் கணக்கை இப்பொழுது திரும்பவும் நினைத்த போது அவனுக்குத் தலை சுற்றியது போல் இருந்தது. நூற்றி ஐந்து வயது என்ன லேசான ஒரு வயதா? இந்தளவு வயதுக்கும் அவர் நோயில்லாத நிலையில் இருந்து வாழ்ந்து விட்டாரே..? என்பதில் அவனுக்குப் பெரிய ஆச்சரியம்!அவர் வயதில் மலையைத் தாண்டும் போது நான் மடுவைத் தாண்டுகிறேனே என்கிற நினைப்போடு, ஐயாவிடமிருந்தும் அவருடைய பேர்த்தி களிடமிருந்தும் விடை பெற்றுக்கொண்டு அவன் அந்த இடத்தாலே இருந்து வெளிக்கிட்டான். அவனை அந்த வீதியாலே போகவிட்டுப் பின்னால் தாங்கள் நின்ற இடத்திலே நின்று கொண்டு மாலாவும் நிலாவும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். பொன்னுத்துரை தனக்கு முன்னால் இருந்த மின்சார விளக்கின் கம்பத்தைப் பார்த்தபடி தன் பழைய யோசனையில் மூழ்கித் திழைத்துப் போயிருந்தார். அன்ரன் விசயாவுக்கும் தனக்குமாய் முன்னம் ஒரு காலத்தில் இருந்த அந்தக் காதல் நினைவுகளை அந்நேரம் ஞாபகத்தில் வரவழைத்துச் சிந்தித்தபடி நடந்து கொண்டிருந்தான். அவனுக்குத் தன் வீடு மிகவும் அருகில் வந்து விட்டதாகத் தெரிந்தது. உடனே கதைப் புத்தகங்களில் அடையாளத்துக்கு வைக்கும் தாள்போல ஓடிப்பரந்த அந்த நினைவுகளுக்கெல்லாம் தற்செயலாக ஒரு நிறுத்தத்தைச் செருகி விட்டு அவன் போய்த் தன்வீட்டுப்படலையைத் திறந்து கொண்டு காணிக்குள்ளே போனான்
அன்ரன் தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்து சென்ற பொழுது தான் குடியிருந்த வீட்டைத் தன் உறவினர்களுக்கு இருக்க வரழ்க்கையின் ரிறக்கஸ் O 315 O

Page 168
வென்றுதான் கொடுத்து விட்டுப் போயிருந்தான். எனவே அவன் அங்கு வந்தபோது, அந்த வீட்டிலே ஒரு அறையை அவர்கள் அவன் தங்கிப் போவதற்கென்று ஒதுக்கி வைத்து அவனுக்கும் வேண்டிய பல செளகரியங்களை அவர்கள் செய்து கொடுத்துமிருந்தார்கள். அன்று இரவு தனி உறவினர்களுடன் அந்த வீட் டிலிருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது, அன்ரனுக்கு அது பல ஆண்டுகளுக்குப் பின்னால் தான் அனுபவிக்கிற ஒரு மகிழ்ச்சியாகவே தென்பட்டது. அவன் அவர்களோடு இருந்து அவர்கள் சொல்லுகிற கதைகளையெல்லாம் அமைதியாக இருந்தபடி கேட்டான். அந்த ஊர்க் கதைகளை அவர்கள் சொல்லிக் கொண்டுவர, அவனுக்குப் பிறகு கவலையிலேதான் மீண்டும்போய் விழவேண்டியது மாதிரியாய் இருந்தது. அவனுக்கு விளக்கமாக இவைகளையெல்லாம் சொல்லியவாறு வந்த அவனது உறவினர். தனது கதையின் இடையே அந்த இறம்பைக்குளம் சவக் காலைப் பக்கத்துக் கதையையும்தான் பிறகு எடுத்தார். ‘ துவக்குகளோட அதில இப்ப ஆமிக் காறங்கள் காவலுக் கிருக்கிறாங்கள்.” என்று அந்தக் கதையோடு மெளமாகி விட்டார் அவர். அவனுக்கு உடனே இதைக்கேட்டதும்” அப்பிடி ஏன் அதில வந்து இப்ப இருக்கிறாங்கள்.?” என்று கேட்க மனத்தில் ஆவல் எழுந்தது. ஆனாலும் இது ஏலவே அங்கே அய்யாவின் வாயால் கேட்ட சேதிதானே. என்று நினைத்து விட்டு அவன்தன்பாட்டுக்கு பேசாதிருந்தான். ‘எப்பிடி இருந்தாலும் பிரேதம் அதில சவுக்காலைக்கு கொண்டுபோய் இப்ப புதைக்க ஏலும்தானே.?” என்று இதை மட்டும் அவரிடம் அவனுக்குக் கேட்க வேண்டும் என்கிற மாதிரியாக இருந்தது. அதனாலே கேட்டு விட்டான். ஆனால் அதற்கு அவர் சொன்ன பதில்: "அதுக்கெல்லாம் இப்ப இராணுவத்தின்ர காாரியாலயத்தில போய்த்தான் அனுமதி கேக்க வேணும். அவயஞக்கு எழுதிக் குடுக்கிற விண்ணப்பத்தில குழி வெட்டுறத்துக்கான அனுமதியையும்; அதோட அந்த இடத்தில
ரேதத்தைக் கொண்டு போய் சனம் நிண்டு அங்க ஈமக்கிரியை எல்லாம் செய்யத் தேவையான நேரத்தையும் கேட்டு, இதையெல்லாம் அதில விபரமா எழுதியும் குடுக்க வேணும். இதுக்குப்பிறகு அவயள் சனம் அங்க நிக்கத்தருற அனுமதியோடதான் அங்கின எல்லாமே செய்ய ஏலும். அதில்லாம ஆரும் ஆதுக்குள்ள சவக்காலைக்கெண்டு போனா. என்ன பிறகு அதில நடக்குமெண்டு தெரியுந்தானே.?” அவர் இவையனைத்தையும் சர்வ சாதாரணமாக நினைத்துக்கொண்டு அன்ரனுக்குச் சொன்னார். ஆனால் இராணுவத்தின் ராட்சசப்பிடிக்குள் சிக்கி அந்த இடம் போன அவலத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதை நினைத்தவுடன் தலைக்குள் அவனுக்கு கம்பளிப் பூச்சிகள் ஆயிரம் காலோடு நெளிந்தன. "அப்ப ஒரு மனுசர் இங்க உயிரோட இருக்கேக்கயும் கரைச்சல், செத்தாலும் கரைச்சல்தான். இப்டியெல்லாமே சனத்துக்கு தொல்லையும் கஷ்ட நிஷ்டூரங்களும்தான்! அப்படித்தானே.? ”
ரீ.பி. அருஸ்ணந்தம் O 316 O

அதுக்கென்ன செய்யிறது. அப்படியா ஒரு பிரச்சனையள் ஒரு பக்கம் சனத்துக்கு இங்க இருக்கத்தான் செய்யிது. இங்க இருக்கிற இப்பத்தைய நிலை இதுதான். ஆனாலும் வவுனியா முந்திய மாதிரியோ..? இப்ப அது எவ்வளவோ முன்னேறீட்டுது. இங்க இப்ப கம்பஸ் இருக்கு - ஆஸ்பத்திரிக்கும் எவ்வளவோ புதுப்புது வசதிகள் வந்திட்டுதுபள்ளிக்கூடங்களெல்லாம் பெரிசு பெரிசாகக் கட்டிக்கிடக்கு- சனத்துக்கு எல்லா வசதியும் ரவுணுக்கவே கிடக்கு. உதாலத்தான் இப்ப இங்க உள்ள காணிகளுக்கும் கோடிக்கணக்கான வில.” அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சொல்லிக்கொண்டு போனார். ஆனால் அவனது சிந்தனையில் சூனியம் நுழைந்து வட்டமிட்டது. அந்தக் கதைகளெல்லாமே உலர்ந்த நத்தைக் கூட்டைப் போலத்தான் கேட்க அவனுக்கு ஒரு பிடிப்புமில்லாமல் வெறுமையாகத் தோன்றியது. அப்படியே அந்தக் கதைகளை மேலும் இருந்து அவர் கதைக்கவிடாது அவன் வேறு கதைக்கு அவரைக் கொண்டு வந்தான். அவனுக்குத் தெரிந்தவர்கள் அறிந்தவர்களையெல்லாம் அவரிடம் அவன் கேட்டுக் கேட்டு விசாரிக்க வேண்டி இருந்தது. சிலரது பெயரைச் சொல்லி அவன் அவரிடம் கேட்க - அவர்கள் யுத்தத்திலே இறந்து விட்டார்கள் என்றார் அவர். இன்னும் சிலரை வருத்தத்திலே உயிரிழந்து விட்டார்கள் என்றும் அவர் கூறினார். முற்றியவை காற்றில் உதிர்வது போல் அந்த ஊரிலே முதியவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்றும்- ஒரு சிலர் வீட்டை விட்டு வெளிக்கிட்டுத் திரியாமல் அந்திமக்காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
அன்ரன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அந்த விறாந்தைச் சுவரில் பொருத்திக் கிடந்த மின்சாரக் குழல் விளக்கை பார்த்துக்கொண்டு. கட்டுலைந்து சிதறிப்போன மேகத்திரளைப் போல வேதனை தரும் சிந்தனையோடு இருந்தான். இன்னும் அவர் உலக நடப்புகளைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டுவர அவையெல்லாம் அவனது காதில் விழுந்து கொண்டுதான் இருந்தன. அப்பொழுது எங்கிருந்துதான் அந்த ஈசல் கூட்டம் எழும்பி வந்ததோ தெரியவில்லை. அவைகள் அம்பாரமாய் விறாந்தைக்குள்ளே பறந்து வந்து, வெளிச்சம் விட்டுக் கொண்டிருந்த அந்த மின்குழல் விளக்கிலே எல்லாம் சேர்ந்ததாய் விழுந்தன. இன்னும் பறப்பிலே நின்று கொண்டிருந்தன மிகுதியான ஈசல்கள். “ என்ன இது .? இப்புடியரயெல்லாம் இதுக்க வீட்டுக் குள்ளயா வந்திட்டுது ஈசல்கள். உடன உந்த லயிட்ட நூரும்." அவனுக்குக் கதை சொல்லிக் கொண்டிரு ந்தவர் தனக்கு நேராக எட்டத்திலே ஒரு கதிரையில் இருந்து கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்துச் சொன்னார். அவள் அந்த கதிரையில் இருந்து எழுந்து தன் தோள் அளவு உயரத்தில் அந்தச் சுவரில் கிடந்த பொத்தானைத் தட்டி விடவும்தான், எல்லாம் அங்கே அவ்விடத்தில் இருளாகி விட்டது. “அடுத்த அறைக்கயாய் இனி நாங்க போவமா..? அங்க வெளிச்சம் இருக்கு. " அன்ரனிடம் அவர் கேட்டார். “ இல்லத் தேவயில்ல இப்ப இந்த இருட்டுக்க இருக்கேக்கிளயும் நல்லாத்தானி
வ0ழ்க்கையின் சிறக்கஸ் O 317 O.

Page 169
ருக்கு. கொஞ்சம் இவ்விடத்த அமைதியா இருந்து யோசிச்சுக் கொண்டிருக்கிறதும் எனக்கு நல்லாத்தான் இருக்கு.” அவன் அப்போது அவரிடம் அப்படிச் சொன்னான். அவன் சொன்ன கதையில் உள்ள ஏதோ ஒரு அர்த்தம் அவருக்கு அப்போது விளங்கியிருக்கத்தான் வேண்டும். அதனால்தான் போல இருக்கவேண்டும் அவரும் அவனைப் போல அதிலே இருந்து கொண்டு அந்த இருளுக்குள்ளே மெளனம் காக்கத் தொடங்கி விட்டார்.
கடவுள் தந்த இன்றைய நாள் நேர்த்தியாக தனக்கு இருப்பதாக அன்று விடியற் பொழுதிலே அன்ரன் நினைத்தான். எனவே தொலை தூரத்துக்கு இன்று நடந்து போவோம் என்ற நினைப்புடன், அவன் தன் வீட்டிலிருந்து வெளியே வெளிக்கிட்டான். கொஞ்சம் நல்ல காற்று வாங்கிக் கொண்டு நடப்பதற்கு எந்தப்பக்கமாகப்போவது சிறந்தது என்று அவன் நினைத்த போது, வவுனியாக் குளக்கட்டுப் பக்கம் உடனே அவனுக்கு பிடித்தமான ரசிக்கத்தக்க இடமாக மனத்தில் இருந்ததால் - அவ்விடம் நோக்கிப் போக ஆஸ்பத்திரி வீதியைப் பிடித்து அதாலே அவன் நடக்கத் தொடங்கினான். நடந்து கொண்டு இருக்கும்போது, அவனுக்குத் தெரிந்த சிலரை அவனால் காணக்கூடியதாக இருந்தது. அவர்களிடத்தேயெல்லாம் சாரை சாரையாகப் போகும் எறும்புகளிடம் எதிரில் வரும் எறும்பு நலம் விசாரிப்பது போல், அவனும் நலம் விசாரித்துக் கொண்டு போனான். முன்பு ஆஸ்பத்திரி வீதியில் சாதாரணமாய் நின்ற மரங்களெல்லாம் இப்போது அவன் பார்வையில் நெடியனவாக நின்றன. அவைகளைப் பார்த்த மகிழ்ச்சியோடு போய் அவன் பிறகு அந்தக் குளக்கட்டிலே ஏறி நடந்தான். அதாலே அவன் நடந்து கொண்டிருந்த போது, குளத்துப் பக்கமிருந்து வரும் ஒரு வாசனையுள்ள காற்று அவனது சுவாசப்பையின் உட்சுவரெங்கும் பரவிப் பிராண வாயுவைப் பைகளில் நிரப்பி இதப்படுத்தியது. அவனுக்கு அந்த குளத்தைச் சுற்றி கற்பித்துக் கொண்ட கதைகளெல்லாம் நினைவில் வருகின்றன. குளத்தின் அலைகரைப் பக்கம் அடர் காடாயிருந்த பகுதிகளெல்லாம் வெட்ட வெளியாய் வீடுகளைக் கொண்டதாயிருப்பது அவனுக்குத் தெரிகிறது. எதைப்பற்றியும் கவலையின்றி காலத்தின் நீட்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவன் அங்கு காண்கின்ற குளக்கட்டுப் பக்கமாயுள்ள அந்த இலுப்பை மரம். ஆனால் அதிலே முன்னம் போல குருவிகளின் குரல்கள் அதிகம் அவனுக்குக் கேட்கவில்லை. அவ்விடத்திலே மந்தைகளையும் கூட்டமாக நிற்க அவன் இப்போது காணவில்லை. வயல் வெளிகள் இப்போதும் ஒரளவு உண்டுதான், ஆனாலும் இனி ஒரு காலத்தில் அவை இதிலே இல்லாமல் போய் அவற்றிலும் வீடுகள் எழும்பிவிடுமா..? அவன் நடுக்குளக்கட்டுக்கு வந்தும் அதிலே நின்றபடி தான் இவ்விடம் இருந்து வாழ்ந்த அன்றையக் காலத்துக்கும் இப்போதிருக்கின்ற இன்றைய நிலை பரத்துக்கும் உள்ள வேறு பாடுகளைச் சிந்தித்துப் பார்த்தான். மாற்றங்கள்
iෂ්, ෆි, ෆයි‍ෙගvගvෂීන(ර් O 318 O

அவன் உள்ளத்தில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி விட்டன. அப்போது அந்தக் குளமும் அருமை நிலமும், அழுது கொண்டு தமது துயரத்தை அவனுக்கு சொல்வது போல இருந்தது. அதனால் நினைவுகளெல்லாம் காரை உதிர்வது போல பொருக்குகளாக அவனுக்கு உதிரத் தொடங்கின. அந்த இடம் இப்போது உருக்குலைந்து போன காட்சியைச் சகியாதவனாக, கிழக்கு வானத்தை அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் மனசு நினைப்பு எல்லாமே எப்போது சமாதானம் வரும் என்ற ஏக்கத்தில் குவிந்து கிடந்தது. அவன் மனத்தில் இப்போது கவலை இருந்தது, துக்கம் இருந்தது. ஆனால் அவன் கண்களுக்குத் தெரிந்த அந்த வானம், குளத்து அலைகரைக்கு அப்பாலும் அழகான கடல் போன்ற நிறத்தில் தூரம் தூரமாகப் பரந்து விரிந்து கிடந்தது. அவன் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள அடிக்கற்றைகள் உயிரில்லாமல் சூரியனை நோக்கிச் சாய்வதுபோல, உதயமாகிக் கொண்டு வந்த அந்தச் சூரியனைப் பார்த்தான். சூரியக் கற்றைகளின் ஒளிச் சூறாவளியிலே அவனது சிந்தனைகள் சிதறுகின்றன. அந்தச் சூரிய ஒளி பிரகாசமான வெத வெதப்பாக அவனுக்கு முகத்திலே அடித்தது. வவுனியாக் குளத்தின் பின்னே அத்தகைய அற்புதச் சூரியோதயத்தை அவன் வெகு காலமாக் காணவில்லை. எனவே அந்தச் சூரிய ஒளியையே சில கணங்கள் அற்புதமான தெளிவுடன் அதிலே அவன் ப்ார்த்துக் கொண்டு நின்றான். அந்த ஒளியைப் பார்த்தபடி நிற்க, அவனுக்குள்ள துன்பமெல்லாம் மறைந்து போவது போல அவனுக்கு இருந்தது. சிறிது நேரத்தில் தாம்பாளமாய்த் தக தகக்கும் சூரியனின் ஒளிக்கத்தி அவன் முகத்தை தாக்குவது போல இருந்தது. அவன் உடனே தன் தலையைக் குனிந்து, குளக்கட்டுப் படிகளைத் தழுவிக் கொண்டு நின்ற தண்ணீர்ப் பரப்பைப் பார்த்தான். இப்போது அவனுக்கு கண்ணுக்கு அது மிகவும் குளுமையை ஊட்டுவித்தது. மனமும் இதனால் அவனுக்குப் பிறகு ஆசுவாசமாக இருந்தது. அவன் ஒரு புது விடியலை தன் வாழ்வில் காணவேண்டும் என்ற நினைப்புடன் மன அமைதியோடு தன் வீட்டுக்குப் போக குளக்கட்டால் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கே அவனது பார்வையில்பட்ட ஒரு குருவி நெற்பயிர்களின் உயரமான அலைகளுக்கு மேலே சுதந்திரமாகப் பறந்து போய்க் கொண்டிருந்தது.
வரழ்க்கையின் ரிறக்கஸ் O 319 O

Page 170


Page 171
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், வெளிச்சம் பரப்புகிற நிறங்களைக் இயல்புகளும் பொதுவான போக்கு செய்கின்றன என்றாலும் மனிதர் எதிர்காலம் வரும் என்ற மன உ கொண்டிருக்கிறார்கள் இதை இந் நாவல் நன்றாக உணர்த்துகிறது. பல ரக மனிதர்களின் உணர்ச்சி ந வர்ணித்திருக்கும் அருளானந்தம் கள் பூசுகிற கோயில் விழாக்கள் ( ச்சிகள் கந்தசாமி கோயில் குர காவல் தெய்வவழிபாடு (வைர முதலியவற்றையும் உரிய முறையி
எழுத்தாளர் நீபி.அருளானந்தத்தின்
காட்டுகிற இந்த நாவல் மனித வ
குகளையும், மனிதர்களின் உணர்ச் றின் விளைவுகளையும் யதார்த்தம் படைப்பாக விளங்குகிறது.
ஆசிரியரின் நூல்கள் சிறுகதைத்
மாற்றங்களை மறுப்பதற்கில்லை கயளிகரம்
ஆமைக்குணம்
கறுப்பு ஞாயிறு
லங்க அரசின் சாஹித்திய விருதினைப்பெற்
நாவல்
வாழ்க்கையின் நிறங்கள்
 

காலத்துக்கும் சூழ்நிலைக்குமேற்ப கொண்டதாக இருக்கிறது. மனிதரின் ளும் வாழ்க்கையை நிறம் இழக்கச் ள் நம்பிக்கையோடு ஒளிமயமான றுதியோடு வாழ்ந்து செயல்புரிந்து த வாழ்க்கையின் நிறங்கள் என்ற
டகங்களைத் திறமையாக எழுத்தில் னித வாழ்க்கையில் விசேஷ நிறங் அந்தோனியார் கோயில் விழா நிகழ் கரத் திருவிழா), கிராமங்களில் வர் வழிபாடு), வண்டில் றேஸ்
படம் பிடித்துக் காட்டுகிறார்.
எழுத்தாற்றலை சிறப்பாக எடுத்துக் ழ்க்கையின் விதம் விதமான போக் கரமான செயல்பாடுகளையும் அவற் ாகவும் அழகாகவும் பிரதிபலிக்கும்
lणीलाल
தொகுதிகள்
சிறுகதைத்தொகுதி 2006)
ISBN 955-1055-02-0