கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிச்சம் (சிறுகதைகள்)

Page 1

தகள்
丽 四 阴

Page 2

வெளிச்சம்
நீ.பி.அருளானந்தம்

Page 3
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் நிலையம் - பட்டியலாக்க வெளியீட்டுப் பிரிவு
அருளானந்தம், நீ.பி.
வெளிச்சம் : சிறுகதைத் தொகுதி / நீ பி. அருளானந்தம் :- கொழும்பு : திருமகள் பதிப்பகம், 2010; ப. 160, ச. மீ. 21
விலை 350.00
ISBN 978-955-1055-07-3 i. 894.81 13 Lq65 22 i. தலைப்பு
i. சிறுகதை
ISBN 978- 955-1055-07-3
ii

நூற்குறிப்பு வெளிச்சம் உரிமை : நீ.பி.அருளானந்தம் முதற் பதிப்பு : ஆனி 2010
உரூபா : 350/=
VELICHCHAM GÍGS),
SHORT STORY ஆசிரியர்:
AUTHOR:
էւն. N.PARULANANTHAMllo அருளானந்தம் XO
Copy Right: கணனி தட்டச்சமைப்பு:
Author திரு.சதீஸ்குமார்
Type Setting Mr. Sadis Kumar FIRST EDITION: JUNE-2010 PUBLISHED BY: THIRUMAGAL PATHIPPAGAM NO.7, LLLIYAN AVENUE, M. LAVINA. TELEPHONE NO: 4967027, 2731887,072284954 PRINTED:
A.J. Print Station Road, Dehiwala 2734765, 2723205
0777 605934 (எஸ்.பி.கிராபிக்ஸ் ) கொழும்பு -06 ஒவியம்:
திரு.கனிவுமதி தொ.பே. 0776701566
பதிப்பு: திருமகள் பதிப்பகம் இல 7, லில்லியன் அவென்யூ கல்கிசை தொ.பே 4967027 அச்சுப்பதிப்பு: ஏ.ஜே.பிரின்ட், 44. புகையிரத நிலையம் வி
தெஹிவளை 2734765, 2723205
iii

Page 4
அமைதியாக தலை குனிந்து கொண்டு சிந்தனையின்றி மீண்டும் மெளனமாகிறேன்
துன்பங்களையும்சொல்லிலொணாக் கஷ்டங்களையும் அனுபவித்து யுத்தகாலத்திலே செத்துமடிந்துபோன அப்பாவிகளான அந்தத் தமிழ் மக்களுக்கு
- இந்நூல் சமர்ப்பிதம்.
iV

மதிப்புரை
நாவலொன்று வெளிவந்ததன் பின்னர் அதே ஆசிரியருடைய சிறுகதைத் தொகுதியொன்று வெளிவருவது சில இலக்கிய இடர்ப்பாடுகளையேற்படுத்தும்.
இத் தொகுதியிலே வரும் சிறுகதைகள் பல - 'துயரம் சுமப்பவர்கள் எழுதப்பட்டதற்கு முன்னரேயெழுதப்பட்வையென்பது தெளிவாகத் தெரிகிறது. இடம்பெறும் சிறுகதைகளும் பிரபல சஞ்சிகைகளில் வெளிவந்தவையாகும். அந்த அளவில் இச் சிறுகதைத் தொகுதிக்கு நிச்சயமானவொரு வரவேற்பு உண்டு. இச்சிறுகதைத் தொகுதியின் பலம் - மிகப் பெரிய பலம். இது அண்மைக்காலத்தில் வடபகுதி மக்கள் உள்ளூர் போர் காரணமாகப்பட்ட துன்ப துயரங்களைச் சொல்வதாகும். இராணுவக் கெடுபிடிகள், பங்கர் வாழ்க்கை, ஒட்டு மொத்தமாக எல்லோரும் சந்தேகிக்கப்படுதலெனும் பல்வேறு இன்னல்கள் அக் காலத்தில் எம்மைச் சூழ்ந்திருந்தன. இத்தகைய இன்னல்களை அநுபவித்துக் கொண்டு வவுனியாவிற்குத் தெற்கே செல்ல வேண்டியேற்பட்டு விட்டால் நாம் இன்னொரு நாட்டிற்குச் செல்வது போன்றிருக்கும். இந்த விடயங்கள் எதுவும் சிங்கள மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை; சொல்லப்படுவதற்கான வாய்ப்பும் இல்லை. இச்சிறுகதைகளில் வரும் பல இன்னல்களை மற்ற வர்களுடன் சேர்ந்து தாங்கிக் கொண்டவன் எனும் வகையில் இச்சிறு கதைகள் உடனடியாக சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பெற்று சிங்கள மக்களிடையே பரப்பப்படல் வேண்டு மென்று கருதுகிறேன். இந்தச் சிறிய தீவின் ஒரு பகுதி மக்கள் என்னென்ன கஷ்டப் பட்டார்களென்பதை மற்ற இனக்குழுமத்தினர் புரிந்து கொள்ளல் வேண்டும். இதனை ஒர் அடிப்படை அரசியல் தேவையாகக் கூட கருதுகிறேன். ஏனெனில் இத்தகைய இன்னல்கள் பலவற்றை அரச நிலையிலும், இயக்கங்கள் நிலையிலும், தமிழ்ப் பகுதிகளுக்குள் மாத்திரம் ஒதுக்கி வைத்திருந்தமையால் சிங்கள மக்களுக்கு நடந்த தெதுவுமே தெரியாது போயிற்று. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் சிங்களத் தலைவர்களுக்கும் கூட அவை தெரியாமலிருந்தன. எனவே தான் இவை சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்தப்படல் வேண்டும்.
நாம் பட்ட இன்னல்கள் அத்தனையையும் அருளானந்தம் மிகத்
துல்லியமாக எடுத்துக் கூறியுள்ளார். இச்சிறுகதைத் தொகுதியை V

Page 5
வாசிக்கும் பொழுது அருளானந்தம் பற்றி ஏற்கனவே எனக்கிருந்த மதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கின்றது. பட்ட இன்னல்களின் துயரங்களை அச்சொட்டாக விபரிக்கும் அதே வேளையில் அதையேற் படுத்திய வர்களின் பின்புலங்கள் பற்றிய காழ்ப்புணர்வு எதுவுமில்லாமல் எழுதி யிருப்பது அவரது படைப்புத்திறனுக்குச் சுட்டியாக அமைகின்றது.
அதனிலும் மேலாக இத்தகைய இராணுவ வழி இன்னல்களை அவர் எத்துணை நிதானத்துடன் பார்க்கின்றாறென்பது முக்கியமாகும். எனவேதான் இந்தச் சிறுகதைகள் நிச்சயமாக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டுமென்று கருதுகிறேன்.
புலம் பெயர் நிலையில் வாழும் தமிழர்கள் சில தங்கள் அனுபவம் பற்றியெழுதிய பொழுது, அவை மிகைப்படக் கூறப் பட்டவையென்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடந்தவற்றைக்கூட ஒதுக்கி நோக்கும் மனப்பான்மை நிலவுகின்ற நமது நாட்டில், குறிப்பாக மற்றைய இனக்குழு மக்களிடையே இந்தக் கதைகள் நடந்த உண்மைகளை உணர்த்த உதவுமென்று கருதுகிறேன். இவ்வாறு சொல்லும் பொழுது யுத்த இன்னல்களை எடுத்துக் கூறும் முறையிலேதான் அருளானந்தத்தின் எழுத்துத் திறமை தங்கியுள்ளதென்று கூறிவிட முடியாது. அருளானந்தத்திற்கு ஒரு அகண்ட பார்வையுண்டு. இலங்கையின் அனுபவங்கள் பலவற்றை இலக்கியச் செழுமை குன்றாது தருகின்றார்.
சுருங்கச் சொன்னால் ஏற்கனவே வந்த துயரம் சுமப்பவர்கள்'" நாவலும், இச்சிறுகதைத் தொகுதியும், நீ.பி. அருளானந்தத்தை இலங்கையின் சம கால தமிழ் எழுத்தாளர்களுள் முதன்மையிடம் பெறக் கூடியவர்களிடையே சேர்த்து விடுகிறது. நல்ல மொழிபெயர்ப்பு வருமேயானால் இலங்கையின் சமகால நல்ல எழுத்தாளர்களுள் ஒருவ ரென்ற பெயரையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இறுதியில் இலக்கிய நிலைப்பட்ட ஒரு குறிப்பினைக் கூறல் வேண்டும். எத்தகைய விவாதத்திற்கும் இடமில்லாத வகையில் நாவலே இக்காலத்துக்குரிய பிரதிநிதித்துவ இலக்கிய வகை என்பது உண்மை யென்றாலும் கூட தனிமனித இன்னல்களை முனைப்புருத்தி அவை காட்டும் மனிதாப நிலைகளைக் காட்டும் வளம் சிறுகதைக்கு இன்றும்
உண்டு என்பதற்கு இவரது கதைகள் சில நல்ல உதாரணம் ஆகும். இது Vl

தொடர்பாக தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூலில் இறுதி அத்தியாயத்தில் வரும் இறுதி வாக்கியத்தை இங்கு மீளத்தர விரும்புகிறேன்.
சிறுகதையின் முக்கிய பண்பு மனித நிலையை சிறப்புறக்காட்டுவதே மனிதாயத அடிப்படையில் வளரும். இன்றைய நாகரீகம், பண்பு, அம்மனித நிலைக்கு மதிப்புக் கொடுப்பதாகவே அமையும் அந்நிலையை சித்தரிப்பதற்கு சிறு கதை பயன்படுத்தப்பெறுமென்று ஃபிராங்க் ஒ கொணர் (Frank O'- Connor) கூறுகின்றார்.
நாவலை முழுமையான வாழ்க்கை வழியிற் கிடக்குமொரு கண்ணாடியெனக்கூறும் அவர் (Frank O- Connor) சிறுகதையை தனித்துப்போன குரல் (The Lonely Voice) எனக் குறிப்பிட்டுள்ளார்.
பின் குறிப்பு இச்சிறுகதைத் தொகுதி சிங்களத்திலே கட்டாயமாக மொழி பெயர்க்கப்படல் வேண்டும். தமது நாட்டின் ஒரு பகுதியிலுள்ள மக்கள் அநுபவித்த இன்னல்களை நாட்டில் முழுமக்களும் அறிதல் வேண்டும். இனவாத, வகுப்பு வாத நோக்குகளுடனேயே இலங்கையின் பிரச்சினை களைப் பார்க்குமாறு வழங்கப்பட்டடுள்ள சிங்கள மக்களுக்கு, அருளானந்தத்தின் இச்சிறுகதைகள் - குறிப்பாக ‘வெளிச்சம்' உண்மையைக் காட்டும் இவ்வேளையிலேதான் மிக ஆழமான ஒர் அரசியற் சிந்தனை பதிவு செய்யப்பட வேண்டியதாகின்றது. ஒரு நாட்டில் வாழும் ஒரு இனக்குழுமக்கள், தங்கள் அபிலாஷைகளும் துன்பங்களும் சரியான முறையில் நாட்டு மக்கள் யாவருக்கும் எடுத்துக்கூறப்படாத நிலையில் ஏற்படும் அந்நியப்பாட்டுணர்வே பிரிவினை வாதத்திற்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்திற்று.
இலங்கையின் தமிழர்கள் நாட்டில் பிரிவினையை வேண்டி நிற்கவில்லை இலங்கையின் பிரஜைகளாக மற்றைய பிரஜைகளுக்குரிய சம உரிமைகளுடன் வாழவே விரும்புகின்றார்கள்! விரும்புவார்கள்.!
கார்த்திகேசு சிவத்தம்பி 23 A, Vanderwert Place, Dehiwala.
vii

Page 6
எனி ஆண்மாவில்
அமர்ந்துவிட்ட
ஒரு கதை
அது இச்சிறுகதைத் தொகுதி நூலுக்குள்ளே அடங்கி உள்ள வெளிச்சம் எனும் சிறுகதைதான்.
வெளிச்சம் இல்லாத கும்மென்ற இருட்டுக்குள் எதையும் ஒருவர் தங்களது கண்களாலே பார்த்துவிடவும் முடியாதல்லவா. அந்தவிதத்தில் நான் கவனம் மிக்க என் சிந்தனையைச் செலுத்தினேன். வெளிச்சமென்னும் அந்த ஐந்தெழுத்துக்கள் சேரும் சிறு கதைக்கான தலைப்பு இந்நூலிற்கும் கூட தலைப்பாக வைத்துக்கொள்ள விசேஷ பொருத்தமாய் இருக்கின்றதுபோல் அப்போது எனக்குத் தெரிந்தது.
இந்த "வெளிச்சம்" - என்னும் சிறு கதையானது என் கண்களுக்கு முன்னால் பெரிய எழுத்துப்போல் காட்சி அளிப்பதற்கு ஒரு காரணம் ! அந்தக் கதை வழங்கிடும் வெளிச்சமான நினைவுகளையெல்லாம் அதை எழுதி முடித்து விட்ட பின்னும்கூட என்னாலே சிறிதும் மறக்க முடியாது இருப்பதுதான்.
எனது இந்த நிலைமையை வைத்துக்கொண்டு இந்தக் கதையைப் படிக்க விரும்புகிறவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்வேன்.
நீங்களும் இந்தக் கதையைப் படித்து முடித்ததன் பிறகு-அந்தச் சம்பவங்களை நினைத்து நினைத்து மனத்துயரடைவீர்கள் என்பது நிச்சயமேதான்!”.
இச்சிறுகதைத் தொகுதிக்குள் உள்ள அதைப்போன்ற பல சிறு கதைகளை நான் எழுதுமுன்பாக சனங்கள் பட்டுக் கொண்டிருக்கும் துன்பங்களை வவுனியாவுக்குச் சென்று நான் பார்த்த போது, கரும் பெரும் நண்டுகள் கக்கியது போன்ற நுரைகள் என் மூளைக்குள்ளும்
viii

சுரந்து கொண்டு இருப்பதைப் போல் தலை இடிக் கோலமாக எனக்கு வந்தன.
அந்த வேளையில் என் மனத்தை நெக்குருகச் செய்துவிடும் அளவுக்குத் தங்களது துயரமான கதைகளை எனக்கு முன்னால் நின்று சொல்லி மனம் நொந்து அவர்கள் அழுதார்கள். அவ்வேளை அவர்களுக்கு ஆறுதல் சொல்லித்தேற்றுதற்கு என்னால் முடியவில்லை.
இந்த வேளையில் அவர்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதற் கென்று நான் என்ன விதமாகத்தான் ஆறுதல் வார்த்தைகள் சொல்வது? பச்சை வாசமெல்லாம் இழந்து சருகாகிப் போனது போல காட்சி யளிக்கின்ற அவர்களை, நான் பார்வை புகைய அப்படியே நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர்களின் அந்தப் பரிதாபகரமான நிலைமையைப் பார்த்து, என் மனம் நெக்குருகியதாய்த்துக்கத்தில் எழுந்தது - நீர் வந்து கரைத்து என் இமைகளும் துடித்தன.
பெரிதாகச்சரிந்து விழும் வீட்டை என்னால் எப்படி விழாமல் தாங்கிப்பிடிக்க முடியும்? ஆனாலும் என்னாலே செய்யக் கூடியதான ஒரு காரியம் மட்டும் இருந்தது. அவர்கள் சொன்ன சம்பவங்களை யெல்லாம் வைத்து சில சிறு கதைகளை எழுதி விட வேண்டுமென்று அப்போது நான் நினைத்தேன்.
வவுனியா சூசைப் பிள்ளையார் குளம் என் பிறந்த இடம். இப்போ கொழும்பில் வசிக்கின்ற நான் அடிக்கடி அங்கே போய் வருகிறதுண்டு. நான் பிறந்த அந்த மண்ணிலே போய் கால் வைத்து விட்டுத் திரும்பிவந்த பிறகு - இழை நெசவாகப் பாயும் பாசன நீர்க் கால்வாயிலே கால்வைக்கும் போது ஏற்படும் ஜில்லென்ற குளிர்ச்சி என் உடலிலும் மனத்திலும் அப்போது இருக்கும். அதற்குப் பிறகு மிக்க சுறு சுறுப்பான ஒரு நடைமுறைப் பழக்கவழக்கங்களும் சில நாட்களுக்கு என்னோடு இருக்கும்.
ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் வவுனியாவிற்குச் சென்று
1X

Page 7
வந்ததன் பிறகு மிக்க மனக் கொதிப்புடன் எனது தலையை நான் எனது கைகளில் ஒய்வாகச் சாய்த்துக் கொண்டிருந்தபடி யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதாய்த்தான் இருந்தது.
என்றாலும் நான் அடுத்த நாள் காலையில் எழுந்து நடைப் பயிற்சிக்காகக் கடற்கரைப் பக்கம் போனேன். அங்கே வானத்தில் மிதந்து வரும் சுடரை - அந்த ஊசி ஒளி கண்ணுக்குள் ஊடறுத்துப் போகும் வரை தொடர்ந்து நேரிலே சில நிமிடங்கள் வரை நின்றபடி பார்த்தேன். அப்படிப் பார்த்தாலாவது புண்பட்டாற்போலிருக்கும் என் மனம் சுகப்படும் என்றும் நினைத்தேன்.
ஆனாலும் அப்படி நான் அந்த ஒளியைப் பார்க்கும்போது கண் எனக்கு வெப்பமாய்ச் சுட்டு விட்டது. உடனே தலையை வேறுபக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்போல் எனக்கு இருந்தது.
வெற்று வயிற்றுக்குள் பசி கிள்ளாத அளவுக்குப் பயம் கிள்ளுகிற மாதிரியாக எனக்கு இருந்தது. என்றாலும் என்னை சமாளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
என் வீட்டு வாசலில் கூட உண்மை இருக்கும் போது என் வாயில், பேனாவில், அது வராது விடுமா? வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களது கஷ்டங்களையும் அலைச்சல்களையும் இழவுகளையும் பார்த்துவிட்டும் கேட்டுவிட்டும் வந்த பிறகு, அதே ஞாபகமடிப்புக்குள் சிறிது நாட்கள் இருந்து கொண்டு தான் ಡ್ದಿಗಾಗಿ சிலவற்றை நான் எழுதிமுடித்தேன். அக்கதைகள் சில்வற்றில் அவர்களது அவலங்களையும் கூர்மையாகச் சித்திரித்துள்ளதாகவே நான் எண்ணுகிறேன்.
நம் தமிழ் இனத்தவர்கள் - தங்கள் தன் மானத்தை விட்டுக் கொடுக்காத ஒரு கெளரவத்துடன் என்றும் தங்கள் வாழ்க்கையை நடாத்திப் பழகியவர்கள்.
இன்று தனிமையை அவர்கள் தங்களுக்குள் அமைத்துக் கொண்டு, கசப்பை நெடுகஷம் தின்று கொண்டிருக்க வேண்டியதான ஒரு நிலையாகிப் போய்விட்டது.

இவற்றுக்கெல்லாம் காரணம் - அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமேதான்!
அப்படித்தானே ஒரு விதத்தில் இவற்றையெல்லாம் சொல்லி இறுதியாக நான் எழுதிமுடிக்கவும் வேண்டியதாக இருக்கிறது.
இதைவிட நீளமாக நெடுகஷம் விரித்து விட்டவாறு சொல்லிக் கொண்டு போவதற்கு வேறு எது விஷயமும் என்னிடத்தில் இப்போது இல்லை.
ஆனால் இந்நூலிலுள்ள சிறுகதைகள் பற்றி சில வரிகளில் நான் என்கருத்தைச் சொல்லவேண்டிய ஒரு தேவை இருக்கிறது. நான் ஒரு பழைய மனிதன்தான்- ஆனால் புதிய ஒரு நாள் தொடங்கும்போது தன்னையும் புதுப்பிக்கச் செய்தபடி வளர்ந்து வருகிறது இன்றைய சிறுகதைப் போக்கு. அதனால் நிலாத் திரு விழாக்களை நெடுகவம் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்துலக பிரம்மாக்களைப் போல் இல்லாமல் இக்கதைகளில் புதிய புதிய நுணுக்கங்களையும் நான் கையாண்டிருக்கிறேன். இந்தக்கதைகளைப் படித்து வாசகர்களும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு அதனால் இருக்கிறது.
இன்றைய இந்தத் தமிழ் இலக்கிய உலகிலே - விமர்சனத் துறையில் அசையும் முடிவற்ற ஒரு ஆலமரமாக இருந்து கொண்டிருக்கும் ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிதான். எனது இந்தச் சிறுகதைத் தொகுதி நூலுக்கும் தன் இலக்கிய அளவுகோல் கொண்டு அளந்து அணிந்துரையை அவர் வழங்கியிருக்கிறார்.
தமிழ் உலகமே இன்று போற்றிப் புகழ்பாடும் அந்த மாபெரும் அறிஞர்- எனது இந்த நூலுக்கும் அணிந்துரை எழுதித்தந்ததையிட்டு நானும் அதனால் பெருமை அடைந்துள்ளேன். அதற்காக பணிவுடன் அன்னாருக்கு எண் நன்றியையும் கூறுகிறேன். எண் எழுத்துலக வாழ்வானது மென்மேலும் வளர்ந்து சிறப்புற- வெற்றிலையில் கிளைத்த நரம்பு போல் இருந்து என்னை உறுதியாக்கி வைத்திருப்பவர்கள் என் வாசகர்களும் நண்பர்களும்தான். எனது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு உறுதுணையாய் இருக்கும்.அந்த உயர்ந்த உள்ளம்கொண்ட வர்களை நான் என்றென்றும் மறந்திலேன்!
xi

Page 8
அவர்களையெல்லாம் என் இதயம் கலந்த நன்றியுடன் நான் நினைவு கூறுகிறேன். எனது நெஞ்சார்ந்த நன்றியை அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் நீபி. அருளானந்தம் திருமகள் பதிப்பகம் இல, 7 லில்லியன் அவனியூ கல்கிசை பூரீலங்கா. தொ.இல. 4967027 27.31887
072 284954
Xii

g 6nїര്ബ്
தவளை
திருத்தம்
எப்போது சம்பவிக்கும் 2O
கிழவர் பழுத்த விட்டார் 30
பிரிவின் கண்கள் 40
சபிக்கப்பட்ட நாட்கள் 53
அழித்திருத்தல் 62
திறப்பு 68
666fégib 72
எலி வேட்டை 97
கடவுளே உனக்குக் கேட்கிறதா
மிகச் சிறிய மிருகங்கள் I27
xiii

Page 9
Xiv
 

தவளை
எந்தக்காலத்துக்கும் இவன் குணம்’ எண்ட ஒருவன்தான் இன்னும் மாறாம இருக்கிற ஒரு மனுசன். "ஆ1 முந்திச் செய்த தொழில் எனக்கு இப்ப மறந்துபோச்சு..." என்று இண்டைய இந்த நிலையிலயும் அவன் ஆருக்குமே சொன்னதில்ல.
“எதையும் தள்ளி ஏன் நான் மறைப்பான் எண்டுதான் அவனுக்கு உள்ளாலயா இந்த நினைப்பு"
அப்பத்தைய வருஷங்களில அவன் காடுவழிய திரிஞ்சு தேன் எடுத்திருக்கிறான். இரவில வள்ளத்தை நந்திக்கடலில கொண்டு போய் விட்டு கட்டுவலை விரிப்பான். அந்தக் கட்டுவலையில நல்ல கரும் பச்சைப்பெருநண்டு பிடிபடும். அதே கடலில வீச்சுவலை நடந்து போய் வீசி றாலும் பிடிப்பான், மீனும் பிடிப்பான். இப்படி அந்தக் கடல் தொழில் செய்து பிழைச்ச பிழைப்பால அவனுக்கு எவ்வளவு காசுகள் மிச்சம். தண்ணி அளவுக்கு மீனும் றாலும் நண்டுமாச் சேர்ந்து பெருவாரியாக் கிடக்கிற இடம்தானே நந்திக்கடல். அந்தக் கடலிலேயே வள்ளம் ஒட்டி மீன் பிடிச்சு வித்துச்சேர்த்த காசுகளிலதானே பவளம், கனகம் என்று இருக்கிற தாவணி சுத்தின தன்ர தங்கச்சிமா ர்களையும் அவன் நல்ல இடத்தில கலியாணம் செய்து குடுத்துக் கரைசேர்த்தவன்.
1 வெளிச்சம்

Page 10
"அப்பிடியே உண்ரை தங்கச்சிமார் ரெண்டு பேரையும் இப்பிடிக் கஷடப்பட்டு நீ கரைசேர்த்துப் போட்டாயடா சிங்கம்..” என்று ஊருக்கையுள்ள பெரிசுகளெல்லாம் இப்பிடிச் சொல்லி அவனுக்கு மரியாதையும் வைச்சவேயள்தானே.
"ஆத்தே அந்தப்பிள்ளை கிடந்து கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு நெடுகத் தன்ரை குடும்பத்துக்கே உழைச்சுக் கொண்டு கிடக்கு..” என்று குணத்தின்ர கதையச் சொல்லி என்ன மாதிரியொருகாய் நகர்த்தல்.” “இப்பிடியெல்லாம் சொன்னால் உச்சி சுடும் வேலையில்லாம வீட்டில கிடக்கிற தறுதலையளுக்கு” என்று குடும்பங்கள் வழியே உள்ள தகப்பன்மார் நினைக்கிறதுக்கு குணம் எண்டுறவன் ஒரு உதாரண புருஷன்தானே.
அந்தச் சுற்றுவட்டாரத்துக்குள்ளயே தேடிப் பார்ப்போம். இவன மாதிரி இப்பிடியா அங்க ஆரும் இருக்கினமோவெண்டு. அப்பிடியாத்தான் எங்க அதுக்குள்ள தேடினாலும் தனிய இவனொருவன் குணம் எண்டுறவன்தானே தேடுற ஆக்களுக்குக் கண்ணுக்கு எம்பிடுவான். குணத்துக்கு எல்லாம் இப்ப படமாய் நினைவில ஒடுகிது தன்னினதும் ஊரினதுமான பழைய காலக்கதை. அந்த இடத்தில தானும் சனமும் வாழ்ந்த அந்த இனிமையான வாழ்க்கையை நெக்கநெக்க அவன்ர மனம் இப்ப வேக் காட்டில வெந்துபோகுது. எல்லாக் கதையும் இப்ப நினைச்சுப்பார்க்க முள்ளு ஒன்று தன்ர ஒற்றைக் கண்ணைக் குத்திக் கிழ்ச்சதுபோல இருக்கிது அவனுக்கு.
காட்டாறுமாதிரி கட்டுக்கடங்காம சுதந்திரமாத் திரிஞ்ச இடமெல்லே அவன் பிறந்து வளர்ந்த அந்த இடம். நெல்லுக்குத்தித்தான் சோறு. கடலில பிடிச்சுக்கொண்டு வந்த மீனில உடன் கறி காலேலையும் பின்னேரத்திலயும் மாட்டுப்பால் கறக்க பக்கத்தில உட்கார்ந்தா, சட்டுச்சட்டெண்டு காம்பில தண்ணியடிச்சு காம்ப உருவஉருவ 'சொர் சொர்’ என்று செம்பு நிறைய பிறகு பால்.
நீபி.அருளானந்தம்

அந்தநேரமே பால் காய்ச்சி- சுடச்சுட வாய்ச் சாயம் கலந்த தேத்தண்ணி காலேல அதக் குடிச்சாலே பிறகு மூச்சு வாங்காம மண்வெட்டி பிடிச்சு வேலசெய்யலாமே நடுமத்தியானமட்டும். குணத்தின்ர தேப்பனும் சரியாய்க் குணம் மாதிரி முந்திக் கெட்டித்தனமான ஆள்தான். குடியிருப்புக் காட்டந்தோனியார் கோயிலடிப் பக்கம் தான் அவரின்ட சொந்த ஊர். இவன் குணம் பிறந்த இடமும் அந்த இடம்தானே. குணத்தின்ர தகப்பன் வேற உங்க இருக்கிற சில ஆக்கள் மாதிரி ஒரு பேச்சும் பேசாம சும்மா இருந்து கொண்டு அரச மரத்தில அணில் பார்த்துக் கொண்டிருந்தவரில்ல. உடம்பு அசங்காமக் கசங்காம வைச்சுக்கொண்டு சும்மா இருந்த ஆளில்ல அந்த ஆள். ஆம்பிள எண்டவனுக்கு தொழில்தானே புருஷ லட்சணம். அவர் அப்பவெல்லாம் ஊருக்குள்ள ஆடு மாடு அடங்கி சனங்களெல்லாம் உறங்கி தெருநாயஸ் கூட கடைசியாக் குலைச்சிட்டுப்படுக்கிற பிறகும் அந்தச் சாமத்தில கூட நந்திக் கடலுக்குப் போயிடுவார் தொழிலுக்கு.
இந்தப் புதுக்குடியிருப்புக் காட்டந்தோனியார் கோயில் எங்க இருக்கு.? அது மந்துவில் எண்டுற இடத்துக்குப் பக்கத்தில தானே இருக்கு. இவங்கள் எல்லாம் போய்த் தொழில் செய்யிற இந்த நந்திக் கடல் காட்டாந்தோனியார் கோயிலடிக்குப் பக்கமாகத்தான் தொடங்கி வற்றாப்பளை எண்டு இருக்கிற அவ்வளவு தூரமாப்போய்ப் பிறகு முடியுது.
எதையும் தள்ளி மறைக்காம இன்னும் விவரமாச் சொன்னா. நந்திக்கடலின்ர மறு கரைப்பக்கம் கேப்பாபுலவும் - அப்பிடியே போய் வட்டு வாகல் வரை போகிற இடமு மெண்டுசொல்லவேணும். கடலோட நந்திக்கடல் தொடுவாய் உள்ள பக்கம் வட்டுவாகலும் முள்ளிவாய்க் கால் எண்டுற இடங்களும் இதுகளுக்கவா இப்ப சொல்லவேண்டி வருகிது.
மழை நல்லா அடிச்சுப் பெஞ்சு தண்ணி முட்டினா இந்த நந்திக்கடல் நிரம்பி வட்டுவாகல் பக்கமா உடைச்சுக்
3. வெளிச்சம்

Page 11
கொண்டுபோய் அப்பிடியே கடலில கலக்கும். அந்த மிதப்போட தேடி ஓடிவந்த மாதிரி கடலில உள்ள மீனெல்லாம் நந்திக்கடலுக்குள்ளயா வரும். அப்பிடி வந்த பிறகாத்தான் இந்த றால் மீன் நண்டெல்லாம் அதுக்க விளையிறகாலம் வருகுது.
அதுக்குப்பிறகுதான் அங்க இருக்கிற சனமெல்லாம். "நந்திக்கடலுக்குள்ள எங்களுக்கு மீன் விளையப்போகுதடா. பெரிய றால் வரப்போகுதடா. நண்டு இனிவந்திடுமடா."எண்டு அந்தக் கடலக் கடலப் பார்த்துக் கொண்டே - உதுக்க நாங்களெல்லாம் எப்பவா இறங்குவோம் - எண்ட யோசனையோட தெம்பா இருக்குங்கள். இப்பிடியா அங்க உள்ள மனுசர் கூட்டத்துக்கெல்லாம் இந்தா அந்தா எண்டு மனம் அலைய தங்கட நாளை அதுகளெல்லாம் இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருக்குங்கள். அந்தக் கடலில கூட்டிக்குமிச்சதாய்த் தாங்கள் அள்ளப்போகிற - றால் - நண்டு மீன்களையும் கூட சிலதுகள், நித்திரையிலயும் கூட கனவு கண்டு கொண்டுதானே இருக்குங்கள்.
அப்பிடியா அதுகள் எல்லாரும் நினைச்சுக் கொண்டி ருக்கிற அவசரமும் சரியாத்தானிருக்கு. அந்தக் கடலுக்க பிறகு பொதுக் கெண்டதாய்த்தானே பிறகு கெதியா எல்லாமே கிடந்து விளையிது. நந்திக் கடலுக்க றால் மீன் நண்டு விளைஞ்சா ஊருக்குள்ள அங்கயா பிறகு ஆர் வீட்டுக்குள்ள இருப்பினம்.? சுட்லுக்குப் பக்கமுள்ள இட மெல்லாம் என்ன ஆள் இல்லாத அனாதிக் காடாயுள்ள இடமா..? எவ்வளவு சனம் அங்கயெல்லாம் இருக்கு.? எல்லாமே சொந்தக்காறப் பட்டாளங்கள்தான். கூப்பிடக்கூப்பிட நான்வாறன் நான்வாறன் எண்டுகொண்டு கூட்டமாய்க்கூடி நந்திக்கடல்ப் பக்கமாப் போகுதுகள் எல்லாம். கடலில கிடக்கிறத அள்ளிக்கொண்டு வாற கணக்கில,
அங்க அந்தக் கடலுக்க சுட்டு விரலையும் நண்டுக்குமேல வைச்சு அழுத்திச் சிலதுகள் நண்டப் பிடிச்சிருங்கள். சிலதுகள் கம்பிக்குத்தால யூரியாபாக்கு நிறைய சேத்துடுங்கள் நண்டுகள்.
M
நீபி.அருளானந்தம்

ஒரு பேச்சும் வீணாப் பேசிக்கொண்டிராம கிடக்கிற அந்த நாலு மாசம் மட்டும் கடலுக்க இறங்கி இதுதான் வேலை எல்லாருக்கும். வத்திப்போகாம ஊறிக்கொண்டிருக்கிறமாதிரித்தான் நந்திக்கடல் இந்த நாலு மாதம் மட்டும், அந்த ஊர்ப்பிறவியள் எல்லாத்துக்கும் தன்னட்ட உள்ளத நெடுகக் குடுத்துக்கொண்டிருக்கு சலிக்காம. இந்தக்காலமெல்லாம் சனங்கள வீட்டில சும்மா இருக்க விடாம அந்த தண்ணிருக்க நெடுகவா வாங்கோ வாங்கோ எண்ட மாதிரியா அந்தக் கடல் சிரிச்சமாதிரி கைவிரிச்சு எல்லாரையும் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். இப்படி வசதியான தங்கட காலத்தில பெண்டுகளெல்லாம் மீன் வித்த சம்பாத்தியக் காசுகளில ஒண்டுக்கு ரெண்டாய் வீட்டுக்கெண்டு பாய் வாங்குதுகள், அண்டா, உரல், உலக்கை, திருகை, அம்மி எண்டு பலதும் வாங்குதுகள். இந்தக் கடல் பிழைப்பால இப்புடியெல்லாம் வசதியாய் வாங்க எல்லாருக்கும் வழி பிறந்திட்டுது. முனகிக்கொண்டே கூட்டின பழைய விளக்குமாறையும் எறிஞ்சு போட்டு இந்தக்காலம்தானே புதுவிளக்குமாறு கூட சிலதுகள் வாங்குதுகள்.
கடலை இப்பிடி அலசி அலசி நாலுமாதம் சீவியத்தைப் போக்காட்டிப் போட்டுதுகள் சனங்கள். சோளகம் காத்தும் எழும்பி வீசத்துவங்கீற்று - இப்ப ஒரு ஈ காக்கா போலவும் இல்ல, வெறிச் சோடிச்சமாதிரித்தான் அந்தப்பக்கம் வந்திட்டுது.
சனமெல்லாத்துக்கும் இப்பவா அந்தத் தொழில் நிண்டு போச்சுது. பாவங்கள்! மனம் குளுந்து கொண்டிருந்த ஏழைச் சனத்துக்கெல்லாம் இப்ப மனம் காஞ்சு போச்சு. வீடு வீடா அங் காலையும் இங்காலையுமாச்சிலதுகள் போய்த் திரிஞ்சு பத்து ரூவா கடன் கேட்டுக் கொண்டுத்திரியுதுகள். மாடுகள் வைச்சு வளக்கிறவயள் மேயப் போய் வீடு வாறமாடுகளைப் பாத்துக்கொண்டிருக்குதுகள். அதுகளில பால் எண்டாலும் கறந்து வித்து காசு கையில சிலவுக்கு எடுப்பம் எண்டும் அதுகள் யோசிச்சுக்கொண்டிருக்குதுகள்.
எல்லாரும் இந்த நிலையில தலயைப்போட்டு சொறிஞ்சு
s வெளிச்சம்

Page 12
கொண்டு கல்லுமாதிரி யோசனையில குந்திக்கொண்டிருந்தாலும், குணம் எண்டவன் மாத்திரம் கிறுங்கேல்ல. மற்றவயள் மாதிரி என்ன பண்ணுவம் ஏது பண்ணுவம் எண்டு அவன் ஏன் யோசிக்கப்போறான்? தவளை நிலத்திலயும் கிடந்து சீவிக்கும் தண்ணியிலயும் கிடந்து கூட அது சீவிக்கும். எங்கயும் கிடந்து சீவியத்தப் போக்காட்டக்கூடியது தானே தவளை. அந்தத் தவளையை மாதிரித்தானே இவன் குணமெண்டவனும்,
குணமென்ன புத்தியில்லாத பிழைக்கத் தெரியாத ஆளா? கடல் தொழில் போனா என்ன வன்னிக்காடு இருக்குத்தானே அங்க அவனுக்குப் பிழைப்புக்கு? எல்லாரும் அப்பிடியே வேலயில்லாம விறைச்சமாதிரி கிடக்க அவன் ஊருக்குள்ள உள்ள பெடியள் நாலு பேரையும் தன்னோட கூட்டிக் கொண்டு போயிட்டான் காட்டுக்குள்ள தேன் எடுக்கிறதுக்கு.
காட்டுக்குள்ள போன இளம் பெடியளுக்கு பெரும் தேனிக் குளவியளென்டாலே சரியான பயம். அதுகளெல்லாம் காட்டுக்குள்ளயா ஒரு ஒரமா ஒதுங்கி ஒதுங்கி நடந்துகொண்டிருக்குதுகள். தேனீக்கள் குத்தி எங்களுக்கு ஒண்டும் ஆயிடப் பிடாதெண்டு - குல தெய்வத்தையும் கும்பிடுதுகள். “எங்களைப் பிழைக்க வைச்சிடு வத்தாப்பளை அம்மாளாச்சி." என்று மீசையில்லாக் குட்டி என்று எல்லாரும் கூப்பிடுற சின்னவன் தன்ர வாயாலையும் சொல்லிக் கொண்டுவாறான்.
காட்டுக்குள்ள நெடுகப் புழங்கிப் புழங்கி குணம் எண்டுற இவனுக்கு தேன் எடுக்கிறதிலயும் நல்ல பரீட்சை இருக்கு. இப்பிடி இவனமாதிரி பரீச்சையில்லாத ஒருவன் காட்டுக்கயா தேன் எடுக்கப்போனா, காஞ்ச கத்தாழ நாராய்த்தான் அதுக்க அலைஞ்சு திரிந்து போட்டு வெறுங் கையோட வெளியால வரவேணும்.
ஆனா இவன் குணம் மாத்திரம் காட்டுக்க போனா, எப்பவும் வெறுங்கையா திரும்பி வந்ததில்ல. யார் அவனோட காட்டுக்கிளயா கூடப்போனாலும், தேனீக்களிண்ட இரைச்சல் சத்தம் குணத்துக்கு மாத்திரம் தெரியும். அப்பிடி அந்தச் சத்தத்தக்
6 நீபி.அருளானந்தம்

காதில அணைவு வைச்சமாதிரி அவன் பிடிச்சிடுவான். காட்டுக்குள்ள அவன்ர கண்ணுக்குத் தேனிக்கள் காணாமப் போகுதா இல்லையா - அவன் பிடிச்சிருவான் ஒழுங்குமுறையாப் பாத்து எங்க தேன் கூடுகட்டி இருக்கெண்டு.
மரப்பொந்துத் தேன் எண்டா உயரம் நாலு அடி உயரமளவுக்கும் அதுக்குள்ளயா தேன் வதை இருக்கும். பெருந் தேனி கட்டின கூடாயிருந்தால் அதுகள் பொத்தி வளத்த வதை எல்லாத்துக் கிளயும் நிறையவாத் தேன் இருக்கும். மரத்துக்கு மரம் தேனும் சுவையில வித்தியாசப்படும்தானே. வேம்புப் பொந்துத் தேனாயிருந்தா அதின்ர சுவை தான் இருக்கும். பாலைமரமெண்டா அது ஒரு சுவை. இலுப்பையெண்டா அது அதின்ர பூ மணத்தோட உள்ளது மாதிரியாவேற.
மரத்தில பொந்துத்தேன் இருக்கு எண்டு அறிஞ்சா குணம்தான் மரத்தில ஏறுவான். மேல ஏறி அவன் நிண்டுகொண்டு பொந்தை வெட்டிப் பெருப்பிப்பான். துலையில நிண்டு அவனோட போன பெடியள் அவன் செய்யிறதக் கவனிச்சுக் கொண்டே இருப்பாங்கள். குணம் பொந்து பெருப்பிச்சாப் பிறகு, வாசன பிடிக்கிற மாதிரி அதில முகத்தைக் கொண்டு போவான். அவன் பிறகு ஏதோ வாயால ஊதுறமாதிரித் தூரத்தில நிக்கிற பெடியளுக்குத் தெரியும். அது ஏதோ கம்ப சூத்திரம் மாதிரித்தான் அந்தவேல. பிறகு அவன் பொந்துக்காலே வதைகளை எடுத்து, வாய் அகட்டின சுரக்குடுக்கைக்குள்ள போட்டுக் கீழவா இறக்கிக் கொண்டருவான். பச்சைத்தண்ணிக்கும் தேனுக்கும் பொருத்தமேயில்ல. பச்சைத்தண்ணி விழுந்தாத் தேன் புளிச்சிடும். அதால தான் தேன் எடுத்துப் போட்டு வைக்கிற சுரக்குடுக்கையில தண்ணி சொட்டும் இல்லாம காஞ்சதாயிருக்கக் குணம் பாத்துக் கொள்ளுவான். காடு என்னவோ சொந்த இடம் மாதிரித்தான் குணத்துக்கு. அவன் மடமடவென்று அதுக்குள்ளாலே நடப்பான். கடைசியா காட்டுக்குள்ளால
7
வெளிச்சம்

Page 13
வெளியேறப்போற இடம்கூட அவனுக்கு நல்லாத் தெரியும். ஒரு நாளைக்கு ஒரு காடு என்று அந்த வன்னிப் பக்கத்துக் காட்டுக்கையெல்லாம் உள்ளே போய் வெளியே வாறதெல்லாம் அவனுக்கு நல்லாத் தெரியும். குணத்துக்கு எப்பவும் அவனுக்கு வைச்ச பேர் போல ஒரு தங்கமான குணம்தான்! தனக்குக் கிடைச்சத நாலு பேருக்கும் பிறிச்சுக் குடுக்கிறதில மகிழ்ந்து மலர்ந்து குளிர்ந்து
போறவன்தான் அவன்.
குணம் மழை பெஞ்சு வெள்ளாம விளையாட்டி விறகாவது வெட்டிப் பிழைக்கக்கூடியவன். மழைத்தூறல் கண்டால் உடும்பு வேட்டைக்கு நாயோடையும் அவன் காட்டுக்கு வெளிக்கிடுவான். அவன் வளக்கிற நாய் வேட்டை நாய். ஒடுற உடும்பை தரையில வைச்சு அந்த நாய் பொத்தின மாதிரிப் பிடிச்சிடும். அப்பிடியே அந்த இடத்தில அழுத்திப் பதிச்சு மிதக்காம உடும்பை அமுக்கி வைச்சிருக்கும் அந்த நாய். அதுக்கு உடும்பின்ர வித்து எடுத்து மூக்கில அடிச்சு விட்டதாலதான் அந்த ரோசம். அதாலதான் உடும்ப வாயில ஒரு இறுக்கு இறுக்கி ஆப்படிச்சமாதிரி அத அந்த நாய் பிறகு நிலத்திலயும் அடிக்கும்.
இப்பிடியே காட்டுக்குள்ள கல்லுகளோடயும் முள்ளுக ளோடயும் கலந்து கிடந்த வாழ்க்கை குணத்துக்குக் கொஞ்சக் காலம் செல்லக் கடந்து போகுது. ஒரு தொழிலுக்கும் அண்டைக்குப் போகக் கிடைக்காட்டி வீட்டில இருந்து தன்ர மிருதங்கத்தை யெண்டாலும் எடுத்து அவன் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவன் மிருதங்க வித்துவானும்தான். வீட்டில அவன் வாசிக்கிற மிருதங்க அடி இப்ப வெளியாலயும் உள்ள ஆக்களுக்கு கேட்டுக் கொண்டிருக்கு. இண்டைக்கு ஒரு கோஷ்டிக்குப்போய் வாசிக்க அவன் இருக்கிறதால அதில பாடுற பெடியனையும் அவன் ஆள்விட்டுக் கூப்பிட்டிருக்கிறான். கோஷ்டிக்குப் போறதெண்டால் அவன் பாடுற பாட்டுக்களை படிக்கச்சொல்லி ஒரு கை பழக்கப்படுத்திக் கொண்டுதான் அவன்
8
நீபி.அருளானந்தம்

வெளிக்கிடவேணும்.
இதெல்லாமே முன்னொருகாலம் அவன் வன்னிக்குள்ள இருக்கேய்க்க வாழ்ந்திருந்த வாழ்க்கை, இண்டைக்கோவெண்டா அவன் வெளிநாடு எண்டு போய் ஒரு பாலைவனம் பிரதேசத்தில இருந்துதான் வேலைசெய்து சீவிக்சுக்கொண்டிருக்கிறான். அவனின்ர சகோதரிகளும் தாய் தேப்பனும் ஏலவே யாழ்பாணத்தில போய் இருந்து கொண்டதாயிருந்தாலும் - அங்க வன்னிக்கிள்ள உள்ள எத்தனைபேர் என்ர உறவினர்கள், எத்தனைபேர் என்ர தாயைப் போன்றவர்கள், சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள், என்று நினைச்சுத் தொடர்ந்து நித்திரை கொள்ள முடியாத அளவிலதான் அவன் துடிச்சுக் கொண்டிருக்கிறான். தான் சீவிச்ச இடத்த இங்கயிருந்து அவன் நினைக்கேக்க எல்லாமே கண்ணுக்கு எட்டிய வெளியாத்தான் அவனுக்கு இப்பயாத் தெரியுது. காட்டுக்க கூட எந்த ஜீவராசிகளின்ட சத்தத்தையும் இப்ப கேக்காத மாதிரியாத்தான் அவன் நினைக்கிறான்.
9
iiiiiiiiiiiiiiiii
Goauauflösuh

Page 14
அப்பிடி எல்லாம் சரியான கெடுதி ஒண்டும் அங்க நேரக்கூடாதெண்டு அவன் எத்தினை நாள் கடவுளப் பார்த்துப் பிரார்த்தனை செய்திருக்கிறான். கூடுதலா அப்பிடி ஒரு கெடுதியும் அங்க நேராதெண்டு அவன் யோசிச்சுமிருந்தான். ஆனாலும் பிறகு எல்லா அதிர்ச்சியையும் அவனுக்குப் பலபேர் சொல்லக்கேட்டு சிந்திக்கக் கூடியதாய்த்தான் போச்சுது. எல்லாச் சுவடுகளும் அழிந்த மாதிரியாக என்ன வாழ்க்கை அந்த வன்னி மண்ணில சீவிச்ச சனத்தின்ரை வாழ்க்கை.
குணம் அந்தச் சனத்தோட ஒரு காலம் உடனிருந்து சீவிச்சவன். அந்தச்சனங்களிண்ட வலியை உணர்ந்த பங்காளிகளில இவனும் ஒருவன்தானே? ஆனாலும் இந்த அநியாயத்தைப் பற்றியெல்லாம் ஒரு வரியைக்கூட காகிதத்தில இண்டைக்கு அவனால ஆருக்கும் எழுதவே முடியாது. இப்ப அவனால ஒழுங்காப் பேசவும் முடியாது. எல்லா அதிர்ச்சிகளையும் அவன் அறிஞ்சதுக்குப் பிறகு ஒரு மாசமா ஒரே யோசனை அவனுக்கு. அவன் பிறகு இப்ப கொடிய வருத்தத்திலதான் கிடக்கிறான் ஒரு ஆஸ்பத்திரி வார்டில. அவன அங்கினதான் இப்பவாப் போட்டுக்கிடக்கு. அவனுக்கு 'பரலைய்ட்' எண்டுற வருத்தமாம்! அப்பிடி எண்டுதான் அவனுக்கு வைத்தியம் பாக்கிற டாக்குத்தர் ரெலிபோனில யாரோ விசாரிச்ச இடத்தில இப்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.
(நீராநதி - டிசம்பர் 2009) (சுடர்ஒளி - நவம்பர் 29-2009) (தாமரை - மார்ச் - 2010)
10
நீபி.அருளானந்தம்

திருத்தம்
“என்னிடமுள்ளதுன்பத்தை யார் அகற்றுவார்கள்” - என்று மனைவியைப் பார்த்து நான் கேட்டேன். “சரிதான் நீங்கள் சரியாகத் தூங்கவில்லை! உங்களை நகைப்புக்கு ஆளாக்கும் இந்தக் கதையை மட்டும் திரும்பத்திரும்ப யாரிடமேனும் தயவுசெய்து சொல்லிக்கொண்டு திரியாதீர்கள்” - என்று சொன்னாள் அவள்.
“யாரை நீங்கள் ஏமாற்றப் பார்க்கிறீர்கள். உங்கள் சுகபோகத்தையே நீங்களெல்லாம் விரும்புகிறீர்களே உங்களுக்கு வெட்கமாய் இல்லையா? நான் சினத்துடன் அவளைக் கேட்டேன். தாம்பத்திய உறவில் நான் என் மனைவியை சில காலங்களாக பிரிந்தே இருக்கிறேன். என்னுடைய மோக உணர்வுகளெல்லாம் வரவர இப்போ காற்றோடு போன மாதிரியாகப் போய் விட்டன. காரணம் நாட்டு நிலமை - யுத்தத்தால் சனம்பட்டுக் கொண்டிருக்கிறகேவலங்களை நினைக்க நினைக்க, எல்லாமே எனக்கு வற்றியதாய்ப் போய்விட்டன.
“தொடக்கத்திலேயே இவைகளெல்லாவற்றையும் நினைத்துக் கல்யாணம் கட்டிக் கொள்ளாமலே நீங்கள் இருந்திருக்கலாமே? நான் ஒரு சரியான மடைச்சி!” - என்று அவள்
11
வெளிச்சம்

Page 15
சொல்லிக்கொண்டு அதிலே நின்றாள். "என் மனைவி என்னை வெறும் பொருளாக நடத்தத்தான் நினைக்கிறாள் போலும்!” - என்று நான் எனக்குள் நினைத்தேன். “பெரிய தவறு செய்துவிட்டேன். திருமணத்துக்கு முன்னம் என்னைப்பற்றி அவளுக்கு நான் தெளிவுபடுத்தியிருக்கலாம். அதுவொன்று என் பிழைதானே?”
மேசைமேல் அவள் எனக்குத் தயாரித்துக் கொண்டு வந்து வைத்திருந்த பால் தேத்தண்ணிர், மேலும் மேலும் ஆறிக்குளிர்ந்து கொண்டிருந்தது. எனக்குத் தேநீரும் பருக விருப்பமே வரவில்லை. பென்னை எடுத்துக்கொண்டு வந்து அந்த மேசைக்குப் பக்கத்தில் உள்ள கதிரையில் இருந்தேன். அதிலே கிடந்த வெள்ளைக்காகிதத்தை முன்னே நகர்த்தி அதில் ஒரு சிறு கதையை எழுதுவோம் என்ற திட்டத்தில் எழுதத் தயாரானேன்.
என் கண்களுக்கு முன்னே மழைத்துளிகள் விழுந்ததுபோல இருந்தன. எல்லாமே வெறும் நினைவுதான். ஆனாலும் அதிலே உண்மை நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் உண்மை என்ற ஒன்று இருப்பதால்தானே அந்த நினைவு எனக்குத் திரும்பத் திரும்ப வருகிறதாய் இருக்கிறது.
தமிழ்ச்சகோதரன் ஒருவன் - எனக்குத் தன் ஊரில் வன்னிக்குள் நடந்த உண்மைக்கதையைச்சொன்னான். அன்று அங்கு நல்ல மழையாம். கனத்த மேகங்கள் கீறிய தண்ணிர்த் தோல்பைகள் போல வானம் நீரைக் கொட்டிக்கொண்டிருந்தாம். அந்த மழைக்குள்ளாலே விதவையாம் அவள். மூன்று பிள்ளைகளாம் அவளுக்கு எங்கேயோ அலைந்து திரிந்து அவள் அரிசி கொஞ்சம் போல வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாள் - வீட்டில் உள்ள தன் பிள்ளைகளுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்ற. இன்னும் கையிலுள்ள அரிசிப்பையோடு வீடுவந்து சேரவில்லை அவள். சேற்றுக் குழம்பலில் "சளப்சளப்” என்ற காலடி ஓசையுடன் அவள் நடந்துவந்து கொண்டிருக்கின்றபோது - அந்த நேரம் அடை மழையின் சோவொலியையும் அமுக்கிக் கொண்டு
12
நீபி.அருளானந்தம்

நெருங்கி வந்ததாம் டமாரஒலி - வெருண்ட சுண்டெலி போல உடனே ஒடுங்கினதுதான் அவள். அடுத்த கணம் ஷெல் துண்டுகள் பறந்து வெட்டிக் கால்களே அவளுக்குத் துண்டிக்கப் பட்டுவிட்டதாம். அடுத்தகணம் அதையடுத்துக் களகளத்துப் பெருகியதாம் இரத்தம். அவள் அப்படியே பிறகு மயக்கமட்ைந்து விட்டாள்- என்றான் அவன். நானும் அவன் சொன்ன கதையைக் கேட்டுப் பரிதாபப்பட்டேன். அதற்குப்பிறகு என் ஆழ்மனத்தில் அவன் சொன்ன அந்தச் சம்பவம் அழியாமல் இத்தனை நாளும் கிடந்து கொண்டிருந்தது. அதையே கதையாக எழுதலாம் - என்றுதான் நெடுகஷம் என்மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அதையெல்லாம் இடையில் வந்து குழப்பிவிட்டது இன்னும் அனேகமான மனத்துயரங்கள். எல்லாக் கொடுமைகளையும் கேள்விப்படக் கேள்விப்பட, மனத்தாலே தாங்கிக் கொள்ள முடியாத கொடூரமான துயரக் காட்சிகளை மக்கள் தொலைக்காட்சியிலே பார்க்கப் பார்க்க, இந்தக் கொடுமைகளுக்கெல்லாமே ஒரு அளவில்லையோ? - என்று நினைத்து இரத்தக் கண்ணிர் வடிக்கின்ற அளவுக்குத்தான் நிலமை எனக்கு வந்துவிட்டது. இன்றைய நாட்டு நிலமையில் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சுதந்திரம் இருக்கிறது? கீழ்த்தரமாகத்தான் தமிழராகிய நாங்கள் இருக்கிறோம். கொழும்பிலே இருக்கிறோமென்ற படியாலே நாங்கள் இன்று நலமாயிருக்கிறோமா? நிம்மதியாயிருக்கிறோமா? நாங்கள் முன்னின்று அங்கேயுள்ள மக்களுக்கு ஏதும் உதவ முடியுமா?
அப்படியாக வெளிக்கிட்டால் எங்கள் உயிருக்கே சிலவேளை ஆபத்தாகவும் வருமே? எண்மனைவி இன்னும் என்னைப் பார்த்தபடியே அதிலே நின்று கொண்டிருந்தாள். எனக்கு முன்னால்தான்! வைத்த கண்வாங்காமல் பார்ப்பது என்கிற மாதிரித்தான். "இந்த மாதிரி ஆளுடன் இவளவு காலமும் என்னால் எப்படிச் சேர்ந்து வாழ முடிந்தது?" - என்றதாய்த்தான் அவள் என்னைப் பார்த்து இப்போது நினைத்துக் கொண்டிருக்
13
Gauonfiškesub

Page 16
கிறாள்போல. என்று அவளின் களைத்த விழிகளின் பார்வையைக் கொண்டு நான் இவ்விதம் கணித்துக்கொண்டேன்.
"நல்லது தேத் தண்ணிர் தந்து விட்டீர்தானே. இனிநீர்போய் உம்முடைய வேலையளப்பாரும்” என்று நான் அவளுக்குச் சொன்னேன். பேச்சுமேலே ஒடவில்லை.
ஆனால் அவள் : "எழுத்து வேலையை நீங்கள் தொடங்கப் போகிறீங்களோ?" - என்று என்னைக்கேட்டாள்.
"அதைத்தள்ளிப்போடுவானேன்! எவ்வளவு சீக்கிரத்துக்கு அவைகளைப் பற்றியெல்லாம் என்னால் எழுதமுடியுமோ அவ்வளவுக்கு எழுதி விடுகிறது நல்லது அல்லவா?" - என்றேன் நான்.
"அதுவும் சரிதான்! ஆனால் எந்தச் சம்பவத்தை முக்கியமாக எடுத்து நீங்கள் கதை எழுதப் போகிறீர்கள்?” - என்று ஒரு கேள்வி கேட்டாள் அவள்.
அவள் கேட்ட கேள்வியோடு எனக்கென்றால் பெரும் யோசனை.
மேசைக்குப் பக்கத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் ஒரத்தில், பூச்சி ஒன்று ரீங்காரம் செய்வது மாதிரி சத்தம் எனக்குக் கேட்டது. அது ஈயாக இருக்க வேண்டுமென்ற நினைப்போடுதான் நான் அங்கே பார்த்தேன். ஆனால் நான் நினைத்துக் கொண்டு பார்த்ததுபோல் அது ஈ அல்ல - கோடுகளிட்ட பெரிய குளவி. சிறகுகளை படபடத் தவாறு கண்ணாடியில் அது பிடிவாதமாக நகர்ந்து கொண்டிருந்தது. என் சிந்தனையும் அந்தக் குளவியின் நிலையில்தானே இவ்வேளை இருந்துகொண்டிருக்கிறது. எதை எழுதுவோம், எதை எழுதுவோம்? - என்று ஒரு இழுவைப் பாடாய்த்தானே எனக்கும் இருக்கிறது. ஒன்றிலும் திட்டவட்டமாக முன்னேறவே எனக்கு முடியாமலிருக்கிறதே?
இந்தக் காகிதம் முன்னால் இருந்தாலே பிழை. இதை
14
நீபி.அருளானந்தம்

மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டால் படபடப்பு இராது. கொஞ்சம்போல் இதிலே இருந்து சிந்தித்துவிட்டு எழுதலாம் - என்ற யோசனையும் எனக்கு வந்தது. அதுவும் நல்ல யோசனைத்தான்!” என்று உடனே அந்த நீலக் கோடிட்ட காகிதத்தை மடித்து நான் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அங்கே யாழ்க்குடா நாட்டில் - யுத்தத்தால் ஏற்பட்ட கொடுமையான நிகழ்வுகளை ஞாபகத்தில் கொண்டு வர நான் முயற்சித்துப் பார்த்தேன். மனப்பதிவுகள்முன்புபோல் அவ்வளவு வலிமை மிக்கனவாய் எனக்கு இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் இப்போது தளர்ந்து விட்டது மாதிரியாகத்தான் எனக்கு இருந்தது. “என்ன எல்லாம் புகையாய் மறைந்துவிட்டது மாதிரி இருக்கிறதே?” - என்று நான் நினைத்துப் பயந்தேன். அனேகருக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடும் அவை நினைவில் பசுமையாய் இருக்குமே! எனக்கு ஏன் இப்படி? எண்மனைவி இப்பொழுதும் அதிலேயே நின்றபடி என்னையே ஊடுருவும் முறையில் பார்த்துக் கொண்டு நின்றாள். மின்வெட்டுப்போல அவள் மூளையில் ஒர் எண்ணம் உதயமாயிருக்க வேண்டும். அதனால், "நான் உங்களுக்கு சில விஷயங்கள் சொல்லலாமா?" - என்று அவள் கேட்டாள். நான் அவள் கேட்டதற்குச் "சரி சொல்லுமன்” - என்றேன். "நீங்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது பற்றிய அந்தச் சம்பவத்தை வைத்துச் சிறந்த சிறுகதையினைப் படைக்கலாமே?”
இதைச் சொல்லும் போது அவளுடைய கண்கள் பளிச்சிட்டன. "தமிழருக்கென்று இருந்துவந்த மதிப்பிட முடியாத அந்தப் பெரும் சொத்தை - அவர்களைப்பற்றிய வரலாற்று நூல்களை எரித்தமாதிரியான ஒரு சம்பவம் மாதிரி வேறு ஏதாவது சம்பவம் எங்களுக்குப் பெரிதாக இருக்குமா?" - என்று அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
நான் உடனே "ஆமாம்! மெய்தான்! இருக்காதுதான்..!"
i.15 אי, * ... זו كسب التي لا
Glorof&afib

Page 17
என்று திடுமெனக் கத்தினேன். “நூலகத்தை எரித்த மாதிரி இருக்குமா எதுவும்?” - என்று அவள் சொன்னதை அப்படியே திரும்பவும் நான் அவளுக்குச் சொன்னேன். எனக்கு உடல் பதற்றமும் கோபமும் ஏற்பட்டன. அதனால் மூச்சை உள்ளே அழுத்தி அடக்கி வெடிக்கப்போகிறவன் போல அமர்ந்திருந்தேன். "இதையெல்லாம் என் மனைவி சொல்லி புரிந்து கொள்கிற அளவுக்கு ஒரு மரம் போல நான் இருந்திருக்கிறேனே?” - என்றதாய் ஒரு எண்ணமும் அப்போது என்மனதில் உதித்தது. என்றாலும் நான் அந்தத் தமிழ்ச் சகோதரன் சொன்னானே ஒரு கதை. அந்தச் சம்பவத்தில் அவன் சொன்ன அந்த விதவைத் தாயின் துயரமாக கடைசி நிகழ்வை - மனைவி சொன்ன சம்பவத்தோடு இணைத்து நினைத்துப் பார்த்தேன். கால்கள் இரண்டையும் இழந்து விட்ட அந்தத் தாயானவள் மயக்கமடையும் வரை “என்ர பிள்ளையஸ் என்ர பிள்ளையஸ்” - என்று சொல்லித்தான் அழுதிருக்கிறாள். இலேசாய்த்துளியளவே அவளுள் எஞ்சியிருந்த சுய நினைவோடு - யாரோ சிலர் அவளை வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறார்கள். அங்கே சுயநினைவு திரும்பியதும் அவளுக்குத் தன் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டது நினைவில்லை. அந்த அச்சத்தின் ஜில்லிப்பு இல்லாமல் - தான் அப்போது கையில் கொண்டு வந்து கொண்டிருந்த அரிசிப் பையிலேதான் அவளின் நினைவுஎல்லாம்! அப்படி உறுதியாய் அந்த நினைவு அவள் மனதில் நிலைபெற்றுவிடக் காரணம் என்ன? அந்தத் தாய்க்குத் தன் பிள்ளைகளின் பசிதான் மிகைப்பானதாய் மனதிலிருந்தது. அந்த ஒரேயொரு நினைவோடு இருந்ததினால் தான் "என்ர அரிசிப் பை எங்கே...? என்ர பிள்ளைகளுக்குப்பசி! அதுகள் அங்க பசியில துடிச்சுக் கொண்டு கிடக்கப் போதுகள்!” என்று அழுது புலம்பியவாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள். அந்தத் தாயின் தாய்ப்பாசம் தான் எண் மனதை உலுக்கிப் போட்டது. ஒ.!! எப்படிப்பட்ட கவலைக்குரிய சம்பவம்! இந்தச் சம்பவத்தை நீட்டி இழுத்துப் போகாமல், சிறுகதைக்குரிய இறுக்கத்துடன் எழுத முடிந்தால் படிப்பவர்களின் மனதை
16
நீபி.அருளானந்தம்

இக்கதை ஒரு உலுப்பு உலுக்கி எடுக்கும்’ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில்,
"இன்னொரு சம்பவத்தைப் பற்றியும் கதையாக எழுதிவிட உங்களுக்கொரு வாய்ப்பு இருக்கிறது. யாருமே ஒரு எழுத்தாளர் இதுவரையில் எழுதாத கதையாகவும் அது இருக்கிறது. அந்தச் சம்பவத்துடன் ஒப்பிடக் கூடியதான சம்பவம் இந்த உலகில் எதுவுமே இல்லை. அதையே நீங்கள் எழுதுங்களேன். அப்படி நீங்கள் எழுதினால் இந்த விவகாரத்தைப் பற்றி - பேச்சு வருங்காலச் சந்ததிகளிடமும் அடிபடும்" - என்று மீண்டும் ஒரு அருமையான விஷயத்தைப் பற்றி சொல்லத் தயாராக நின்றாள் அவள்.
“ஓ அப்படியா? பொறுத்துக்கொள், பொறுத்துக் கொள்! அவ்வளவு பயங்கரமான சோகம் நிறைந்த வெறுக்கத்தக்க ஓர் சம்பவமா நீ இப்போதைக்காய் எனக்குக் கூறப்போவது?” - என்று ஆவலுடன் நான் அவளைக் கேட்டேன். என்னுடைய வாய் சற்று திறந்தபடி நின்றது. என் மனைவி கதைகள் எழுத ஆரம்பித்தால் என்னைவிடத் தேர்ந்த திறமையுடைய எழுத்தாளராகவும் ஆகிவிடுவாள் - என்றும் நான் அவ்வேளையில் நினைத்தேன். இனி அவளுடன் முட்டி மோதிக் கொள்ளாது அன்புடன் நான் நடந்து கொள்ள வேண்டும் என்றும் என்மனத்துக்குள் நான் தீர்மானம் எடுத்தேன். “ என்ன யோசனை உங்களுக்கு?” - என்று என்னைக் கேட்டாள் அவள். "ஒன்றுமேயில்லை நீர் சொல்ல வந்ததைச் சரியான படிக்குச் சொல்லும்” - என்றேன் நான்.
"அந்தச் சம்பவத்தைப் பற்றிய விளக்கத்தை உங்களுக்குத் தருவது இப்போதுள்ள உலகத்தின் சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கும்! இன்றைய காலத்தில சீவிக்கிற சனங்கள வெறும் முட்டாள்களாக நீங்களெல்லாம் நினைச்சிடாதயுங்கோ?" - என்று விட்டு தன் பேச்சை சற்று நிறுத்திக் கொண்டு அவள் யோசித்தாள்.
"நீங்கள் இந்த வரலாற்றைப் புரிஞ்சி கொள்ளுங்கோ.
இரண்டாவது மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஜேர்மனி
༣.་ 17
வெளிச்சம்

Page 18
நாட்டு ஹிட்லர் என்ற சர்வாதிகாரி, தன் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் துப்பாக்கி ஏந்தி போருக்குச் செல்ல வேண்டும் என்று கட்டளைபோட்டான். ஹிட்லர் சொல்லவும் பணிந்து எல்லாரும் துப்பாக்கியை ஏந்தினார்கள். என்றாலும் இரண்டாயிரம் பேர்கள் வரை துப்பாக்கியையே நாங்கள் எங்கள் கைகளால் தொடவே மாட்டோம் என்று சொல்லி முற்றாக அதை மறுத்துவிட்டார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற சமயத்தவர்கள். ஹிட்லர் தான் போட்ட சட்டத்தை அவர்கள் மீறியதற்காக அவர்களை குகைபோன்ற ஒர் இடத்தில் அடைத்து வைத்து நச்சுப்புகை அடித்துக் கொன்றான். இந்த நிகழ்விலிருந்து இந்த மனிதகுலம் எவ்வளவோ படிப்பினையைக் கற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சியாக சுதந்திரமாக நிம்மதியாக வாழ மனித குலத்திற்கு இந்த ஆயுத கலாசார மெல்லாம் எதற்கு? போர் எதற்கு? ஏன் கொன்றொழிக்கும் ஆயுதங்களை ஒரு மனிதன் கையாலே தொடவேண்டும்? மனிதனின் வாழ்வுக்கு அன்பா ஆயுதமா தேவை? அப்படியானால் அன்று உயிர்துறந்த அவர்கள் அத்தனை பேரும் வீணாகிப்போன ஆத்துமாக்கள்தானா?” என் மனைவி என்னிடமே கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தபடி நின்றாள். நான் கணப்பொழுதுக்கு வாயடைத்துப் போய்விட்டேன். அப்படியே எங்கள் இருவருக்குமிடையிலும் பரவிய மெளனம் விரிசல் விடுகிறது.
எவ்வளவு அக்கறையாக இந்த உலகத்தை என் மனைவி கவனிக்கிறாள்! என்று நினைக்க வியப்பாக இருந்தது எனக்கு. "தன் அதிகாரத்தைச் செலுத்தி நான் சொல்கிறபடி நீ போய்க் கொலைசெய்” - என்ற நிலைமையில்தானே யுத்தமே உலகில் பிறக்கிறது. விலங்கு உணர்ச்சியும் மூர்க்கத்தனமும் கொண்டது தான் போர்’ என்று சிக்மண்டப் பிராயிட்டும் சொல்லி இருக்கிறாரே'- அவைகளை வைத்தும் என் மனைவி கடைசியாகச் சொன்ன சம்பவத்தை வைத்தும் ஒரு அருமையான சிறுகதையை படைத்துவிடலாமே? - என்று நான் இப்போது முடிவெடுத்தேன். ஒரு ஆணின் முன்னேற்றத்துக்கு பெண் என்பவள்தான் முன்னால்
18
நீபி.அருளானந்தம்

நின்று கொண்டு அவனுக்கு வழிகாட்டுகிறாள் என்பது இவ்வேளையில் எனக்கு விளங்கியது.
(தாமரை - ஏப்ரல் -2009)
(சுடர் ஒளி - ஏப்ரல் - 2009)
(தினக்குரல் வாரமஞ்சரி - 04 ஆக்டோபர் -2009)
19
வெளிச்சம்

Page 19
எப்போது சம்பவிக்கும்
(குரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடை யாளங்கள் தோன்றும் பூமியின்மேலுள்ள ஜனங்களுக்கு தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும் சமுத்திரமும் அலைகளும் முழக்க மாயிருக்கும். (லூக்கா 21 அத் 25ம் வசனம்- பரிசுத்த வேதாகமம்)
இந்த உலகம் பூராவும் கூடிய சீக்கிரத்தில் அழிந்தொழியப் போகிறது எனும் ஒரு குரூரவாக்கு எத்தனை மனிதர்களின் வாய்களிலிருந்து இன்று வெளியே ஒசையிட்டுக் கொண்டி ருக்கிறது. உலகம் அழியப்போகிறது என்று சொல்லி தங்கள் பெயரை மக்களிடம் மறவாமல் கவனம் பெறச்சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த உலகம் அழியும் கதையானது மக்களிடம் பயத்தை அளித்ததை விட நல்லதொரு சுவாரஸ்யத்தைத்தான் ஏற்படுத்தி விட்டது. எல்லாரசனைகளிலுமிருந்தும் தங்களை வெட்டிக் கொண்டதாய் வைத்துக்கொண்டு இந்த உலக அழிவை நோக்கியே அவர்கள் திரும்பி நின்று கொண்டதாய்த் தங்களுக்குள் இப்போதெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
20
நீபி.அருளானந்தம்

இவ்வகையில் அவர்களைப் போல இல்லாது முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை எழுதுவதற்கு கதாசிரியனான என்னாலும் கூட இயலாதிருக்கிறது. எனது கதைகளை அவர்கள் படிக்கும்போது கதைச் சுவாரஸ்யத்தை அவர்கள் விட்டு விடாமலிருக்க நானும் இப்படியான உலக அழிவைப் பற்றிச் சொல்லவே பெரும்பாலும் என் பொழுதுகளில் சிந்தனையைக் கூட்டி யத்தனித்துக் கொண்டிருக்கிறேன். கதைகளின் முதல் தகுதியை எண் மனதைப் போட்டு எலியாய் விறாண்டிக் கொண்டிருக்கும் இந்த விதமான விஷயங்களுக்குக் கொடுத்தே என் பேனாவும் இப்பொழுது பழக்கப்பட்டதாய் விட்டது. என் கதைப் பாணியை ஒரு மொழிக்கூர்மையுடன் இந்த விதமான அழிவைச் சொல்லவே பிரயோகித்துக்கொண்டு அதனுடன் சார்ந்ததாகி விட்டேனோ? என்ற கேள்வியும் என் மனத்திலிருந்து சில வேளைகளில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. பூமியோடு வெகுவிரைவில் இணையவிருக்கும் - இன்றோ நாளையோ என்கிற அதன் அழிவுக் கதையுடன், நித்திய வாழ்வு இந்த உலகில் ஒரு சமூகத்து மக்களுக்குக் கிடைக்கப் போகிறது என்ற அந்த வினோதமாக வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களும் - இப்போது போதனை செய்து கொண்டுதிரிகிறார்கள்தான்.
எது எப்படியோ இருந்துகொள்ளட்டும். ஆனால் இன்று சமயங்களிடமிருந்து மக்களுக்குக் கொடுக்கப்படும் கருத்து க்களால் அவர்களின் வாழ்வு ஆழமாக வேரோடியபயத்தோடு மென்மேலும் சீரழிந்தே வருகிறது. கலாசாரம் சீரழிந்து ஒழுக்கக்கேடுகள் நிறைகின்றன. எச்சரிக்கைக்காரணங்களால் ஆயிரத்திலொருவன் உண்மைக் கடவுள் வணக்கத்தாருடன் சேர்ந்து புனிதராயானாலும், தீவிரமான அகங்காரத்தின் வலிமையால் நல்ல சமூகமனத்தின் அக்கறையெல்லாம் இழந்து அனேகர் குறுகிய தங்கள் வாழ்க்கைக்காலத்துக்குள்ளே எல்லாக் கேடு கெட்ட ஆசைகளையும் வைத்துக் கொண்டு அவற்றை யெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளவே பித்தம் பிடித்துக் 2 نسلسلسللس- " "*"
வெளிச்சம்

Page 20
கொண்டதாய் இன்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் ஒரு நிரந்தரத் தன்மையில்லாத தம் வாழ்வை நினைத்து உல்லாசசல்லாப வாழ்கைக்குள் சென்று அவர்கள் குலுங்கிச் சிரிக்கிறார்கள். அதன்பின்பு அவைகளால் உண்டான முழுவதுமான வேதனைகளின் சுமையால் இறுகின முகத்துடனிருந்து தாங்கள் பட்டுப் போய்விட்டதை நினைத்து உடலு றுப்புக்கள் தளர்ந்து போய் அவர்கள் கண்ணிர்
வடிக்கிறார்கள்.
நிறம் மங்கிப்போன இந்த உலகத்திலிருந்து அது சாகப் போகும் பறையொலி எனக்கு இப்போது கேட்டபடியே இருக்கின்றது மாதிரியான ஒரு நிலைமை. பூமியின் கண்கள் பேசுவதுமாதிரி, சிரிப்பது மாதிரியானதொரு நல்ல நிலைமையெல்லாம் போய், இயங்குவதற்கு இயலாது திகைத்த கண்களுடன் தடதடத்துக் கொண்டு இப் போதிருப்பதாக மைக்கல் ஜக்கூடினின் மிகச்சிறப்பான அருமையான கருத்துள்ள பாட்டிலும் காட்சியிலும் நான் கண்டேன். அவருடைய g|Gil 1556) a Gitat (Earth Songs) What About Sun Rise? What About Rain? What About All The Things'? GTGispy G5ITLIigl b அந்தப்பாட்டிலே என்தவிப்பை பலமடங்குக்கு அதிகப்படுத்தியது மரம் வெட்டப்பட்டு அழிந்து கிடக்கின்ற அந்தச் சூழல்தான்! கண்ணெட்டும் தூரம் வரை மரங்களே இல்லாது அறுத்து விடப்பட்டதாய் நிலத்தோடு ஒட்டிக்கிடக்கின்ற அடிக்குற்றிகள். பச்சைவெளி இல்லாமல் பாலைவனம் போல அலை அலையாக விரிந்து கிடக்கின்ற பூமிப்பரப்போ அது என்றதாகவே வெறுமையுடன் எனக்கு அவைகள் காட்சியளிக்கிறது. வானிலோவென்றால் அங்கே பிரகாசமே இல்லாத உறைந்த அந்தகாரஇருள்.
நாசமும் நசிப்பும் கொடுக்கும் இந்த அழிவெல்லாம் பூமிக்கு யாராலே ஏற்படுகின்றது. மனிதராலேயா? அல்லது கடவுளா லேயா? கடவுள் தான்படைத்ததை முழுவதும் தானே பிறகு
22
நீபி.அருளானந்தம்

அப்படியாக அழிப்பாரா? இதற்கான பதிலை என்மன அமைதிக் காகத் தேடும் ஒரு தேடலில் என்மிகப் பெரிய அலுமாரியிலுள்ள மிகப் பழமையானதோல் அட்டை போட்ட புத்தகங்களை யெல்லாம் எடுத்து நான் இப்போது வாசிக்கத் தொடங்கி விட்டேன். இத்தகைய புத்தகப்படிப்பில் அலைந்து ஆராய்வது, லட்சக்கணக்கான - டண் மண்ணை வெளியே தோண்டி எடுப்பதைப்போலவே எனக்குக் கடும் உழைப்பாக, உடலையும் மூளையையும் சேர்த்து வாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் தெய்வத்துக்கும் கோபமூட்டாத வகையில் என் இறுதி முடிவை எடுக்க வேண்டுமென்றும் நான் கவனமாயிருக ’கிறேன். என்றாலும் நான் சில நாள் இரவுகளில் நித்திரை கொள்ளும் போது, எகிப்திய பழமையான தெய்வமாகிய அம்மோன்'- என்ற தெய்வம் தன் கரத்தில் அரிவாள் வடிவபட்டயத்தை பிடித்திருப்பது போல காட்சியளித்து, விட்டு என் கழுத்தை வெட்ட வருவது போல பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. எகிப்திய ‘அம்மோன் தெய்வம், இந்துக் கடவுள் அம்மன் மாதிரியாகத் தான் தோற்றத்தில் ஒன்றானதாக கனவில் எனக்குக் காணத் தெரிகிறது. அந்தக் கனவுகளிலே நான் கண்ட காட்சிகளினால் ஏற்பட்ட ஆன்மாவை கரைத்துக் கொண்ட பீதி என்மனத்தைவிட்டு இலகுவில் விலகுவதாயில்லை.
நான் படித்த அனேகமான புத்தகங்களிலே, போலியான பக்தி ததும்பும் வார்த்தைகளேயல்லாமல் எண் கேள்விக்குத் தெளிவான உண்மை வார்த்தைகள் ஏதும்கிடைக்கப்பெறவில்லை. கடவுளின் நோக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தரிசனத்தை எந்தப் புத்தகத்தைப் படித்து நான் பெறலாம்? அதன் மூலமாகத்தானே தண்ணிரின் அடியில் மறைந்ததாய்க்கிடக்கும் உலகஅழிவு என்ற பாறையின் அச்சுறுத்தல்களை நான் அறிந்து கொள்ளலாம்.
கோடான கோடி படைப்புகளைக் கொண்ட இந்தப் பூமியின் அழிவானது ஓரிரண்டு பக்கங்களிலே எழுதுவதற்கும்,
23
Geisfigub

Page 21
சிறிய நேரத்திற்குள்ளே வாயாலே சொல்லி விளங்க வைப்பதற்கு முரிய சர்வசாதாரணமான ஒரு விஷயமா?
மனிதன் ஏன்மரிக்கிறான்? என்பதையும், அவனுடைய தற்போதைய துன்பநிலைக்கு காரணத்தையும் ஒழுங்காக கண்டு பிடித்துக் கொள்ளமுடியாத இந்த மனிதனினாலே உலக அழிவை மட்டும் சரியாகச் சொல்லிவிடுவதற்கென்று அவனுக்கு என்னதான் ஒரு தகுதியிருக்கிறது. ? உலகம் அழியப் போகிறது! அழிந்தொழியப் போகின்றது. என்று கொடிய குரல் கொடுத்துக்கொண்டு திரிகிறார்களே - அவர்கள் கூறுவதில் அழியப் போகின்றதாயிருப்பது இந்தப்பூவுலகமா, அல்லது இந்த உலக அமைப்புக்களா?
உலக அமைப்புக்கள் என்று சொன்னால் அழிந்தொழியப் போவது அரசியல் ரீதியான நிர்வாகம் என்றும் உள்ளதான ஒரு கருத்தைக் கொள்ளலாம். அடுத்து அரசியலிலே அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிற சமயங்கள், அதன் குருமார்கள் என்றும் புரிந்துகொள்ளலாம். இப்படியாக இவைகளுடன் சேர்ந்து எவை எவையெல்லாம் அந்த உண்மையான ஒரே ஒரு கடவுளால் விரைவில் அழிக்கப்படப் போகின்றன? -- என் மனதுக்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் வெளிச்சம் பாய்ச்சிவிட்ட இந்த விதமான கருத்துக்களை புத்தகத்திலிருந்து படித்து மனத்தில் வைத்துக்கொண்டு, இறுதி விடைகளை நோக்கி இன்னும் என் மனத்திலுள்ள இருள் திரை விலகிப்போக நான் தேடலிலே காலத்தைச் செலவழித்துக்கொண்டு தான் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறேன்.
இந்த அதிகப்படிப்பு இருக்கிறதே பாருங்கள், அதுவும் கூட மனிதனின் உடம்புக்கு ஒரு விதமான இளைப்புதான்.!
படித்துப் படித்துத்தான் எந்த விஷயத்தை இதிலே நான் சரியாகக் கண்டுபிடித்துக் கொண்டது? இன்றுஇரவு வேளை
24
நீபி.அருளானந்தம்

யானதும் ஒரு ஆங்கிலப்படத்தையாவது பார்த்து சிறிது நேரம் பொழுதைப் போக்கிக் கொள்வோம் என்று நினைத்து ஏலவே நான் வாங்கி வைத்திருந்த 2012என்ற ஆங்கிலப்படத்தை மேசைலாச்சியிலிருந்து வெளியே எடுத்து அதை டெக்கில் பதியப்போட்டு றிமோட்டின் உதவியால் உள்ளே தள்ளிவிட்டேன். TVயில் அந்தப் படம் ஆரம்பமாகியது. வர இருக்கும் உலக அழிவை முன்னறிவிக்கும் ஒரு குறிப்பேடு மாதிரியாகத்தான் அந்த ஆங்கிலப்படத்தில் காண்பிக்கப்படும் காட்சியெல்லாம் காண்பிக்கப் படுகிறது. சுழற்காற்று வீசுவதுபோல அச்சம்தரும் விதத்தில் கடல் பொங்கி அடித்துப்பெரும் திவலைகள் சுவர்களாய் எழும்பி தேசங்களை அழிப்பதைப் பார்க்க ஒரு விதத்தில் மனத்தைப் போட்டு ஆட்டி வைக்கிறது. கொடிய அந்தக் தரிசனத்திலே ஒரு கருத்தும் வலியுறுத்தப் படுவது அதி புத்திசாலித்தனம்தான். இந்தப் படத்திலே மரண இருளின் தேசத்திலே குடியிருப்பவர்கள் போல, நிலம் பிளக்க மனிதர்களெல்லாம் உயிரைத் தப் புவிக்க ஒடித்திரிவது எங்களுக்கும் இனிமேல் நடக்கப் போகிறது என்ற மாதிரியாக பெரிய வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதாயிருக்கிறது. எதையும் காலத் தோடு செய்வதில் ஹாலிவூட் சினிமா எடுப்பவர்கள் நிகரற்றவர்கள் என்று இந்தப் படத்தைப் பார்த்து முடித்தவுடன் நான் நினைத்தேன்.
இந்தப்படத்தைப் பார்த்த பிறகு சாவைத்திடீரெனப் பார்த்து சந்தித்ததொரு பயத்துடன், இன்னும் பல நூல்களை நூல் நிலையத் துக்குச் சென்று கருத்துான்றிப்படிப்பது எனக்கு வழக்கமாகி விட்டது. இருண்ட உலகெனும் குன்றின் மேலிட்ட சத்திய விளக்காய்ச்சுடர்விட்டுப் பிரகாசிக்கும் உலக அழிவு என்கிற இந்த விடயத்தைப்பற்றி பைபிள் புத்தகத்திலுள்ள கருத்தாழம்மிக்க தீர்க்கதரிசன வார்த்தைகள், எல்லாப் புத்தகத்திலிருந்தும் மிகுந்த அர்த்தமுள்ளவையாக இருக்கிறதை நான் கண்டேன்.
உலக அமைப்புக்களாயிருந்து பொய்மை ஒன்றையே
25
Galefirg-Lh

Page 22
தமக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யும் இந்த அதிகார வர்க்கங்களையெல்லாம் கடவுள் அழிப்பது பற்றிய அதிலே உள்ள செய்தி, எனக்கு மிகவும் மன ஆறுதலையே தருகிறது. இந்த விதமான உலக அழிவை புரியாத ஒரு புதிராக மூடிவைப்பதற்கான காரியங்கள் அந்தப் புத்தகத்திலே இல்லாதிருப்பதை நான் கண்டது, இன்னும் பல முறை நான் பைபிளை படிக்க வேண்டும் என்ற ஆவலையே மனத்தில் எனக்கு உண்டாக்கிவிட்டது.
"கடவுள் முதல் மனிதர்களை பூமியில் என்றுமாக வாழக்கூடிய எதிர்பார்ப்புடன் படைத்தார்' - என்ற வாக்கியம் என் மனதில் நிலை நிற்க - அதையே நான் திருப்பித்திருப்பி பைபிள் புத்தகத்தில் படித்துக் கொண்டிருக்க ஆரம்பித்தேன். ஏதேன் தோட்டத்திலிருந்து ‘ஏவாள்' மறுபடியும் மறுபடியும் கனிகொடுக்கும், காய்த்துக் குலுங்கும் அந்த விரூட்சத்தைப் பார்த்ததைப் போல நானும் இந்த வார்த்தைகளை படித்துப் படித்துப் பார்த்தேன். படிக்கப் படிக்க மனப்பாரம் எனக்கு விடுப்பட்ட தாய் இருந்தது. அந்த வார்தைகளில் உள்ள அர்த்தத்துடன் நான் மனமுவந்து சேர்ந்து கொண்டேன். இதனாலே தைரியமாக மதத் தலைவர்களின் மாய்மாலத்தை நான் அம்பலப்படுத்த வேண்டும் என்ற கோப உணர்வு எனக்கு வந்தது.
நிலையான சமாதானத்திலும் மகிழ்ச்சியிலுமாக வாழ்ந்து கடவுளின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பவர்களை கடவுளின் நீதி என்றும் காப்பாற்றி அவர்களைப் இப்பூவுலகிலே மரணமின்றி நெடுகஷம் வாழவைக்கும் என்ற வார்த்தைகள் இந்தப் பூவுலக அமைப்புகள் அழிக்கப்படும் போது கடவுளின் பக்கம் உள்ளவர்கள் காப்பற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையை என் மனதில் ஏற்படுத்தியது. என்றாலும் இந்த அபத்தமான அழிவு எப்போது சம்பவிக்கும்? என்ற செய்தியை பைபிள் புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் புரட்டி வாசித்து நான் தேடத் தொடங்கினேன்.
26
நீபி.அருளானந்தம்

பைபிளின் 66 புத்தகங்களையும் வரிசை முறைப்படி ஆராய்ந்ததில் அவைகளிலே தெய்வீக சத்தியத்தை வெளிப்படுத்திய வர்களிலே "மத்தேயு - என்ற சீடர் கூறியவை என் மனதுக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாய்விட்டது. வரிவசூலிக்கும் அதிகாரியாகவிருந்து இயேசுவின் வழிகாட்டலில் அவருக்குப் பின்னாலே சென்று அவரின் சீடனாக மாறியவர் அப்போஸ்தலர் மத்தேயு, தன் பதிவை அவர் எழுதி முடித்திருந்த அந்த அத்தியாயத்தில் இன்று எம்மைப் போன்றவர்களின் மனதில் உள்ள ஆவலைப் போல அன்றைய கிறிஸ்துவினது சீடர்கள் கூட இந்த உலக அழிவு எப்போது சம்பவிக்கும் என இயேசுவை அவர்கள் கேட்டதாக அங்கே எனக்கு வாசிக்கக் கூடியதாக இருந்தது.
அவர்கள் அப்படியாக அவரைக் கேட்டதற்கு ‘இயேசு’ என்ன சொல்கிறார்? மத்தேயு இருபத்தி நான்காம் அதிகாரம் - 36வது வசனம் அதனை எவ்வளவு துல்லியமாக விளங்க வைத்து விடுகிறது. அவர், அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முன்னாலே கூறியதும் தீர்க்கதரிசனமான சத்திய வசனம் தான். “எது தான் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” என்று சொல்லி விட்டுத் தானே தன் பதிலை அவர், அவர்களுக்குக் கூறத் தொடங்குகிறார்.
"அந்த நாளையும் அந்த நாழிகையையும் என்பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்-பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.”
இதைப் படித்ததும் தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டவாறு அசையாமல் இருந்தபடி நான் வான சரிவுவரை செல்கிற அளவுக்கு யோசித்தேன். இயேசு கடவுளல்ல - அவர் கடவுளின் நேச குமாரன். அவருக்குத் தெரியாமல் கூட சகல வல்லமைகளும் பொருந்திய அந்த ஒரே ஒரு கடவுளானவர் சில காரியங்களை வெளியிடாமல் தன்னிடத்திலேயே தக்கவைத்தபடி வைத்துக் கொண்டிருக்கிறாரா?
27
வெளிச்சம்

Page 23
அப்படிப் பார்க்கப் போனால் இனி இந்த உலகத்தை இராஜாவாக ஆழ்வதற்கு கடவுளாலே நிச்சயிக்கப்பட்ட இயேசுவுக்குத் தெரியாதது முற்றிலுமாக உலகத்திலிருந்து இனி மேல் அழிக்கப்படப் போகின்ற பிசாசானவனுக்கும் கூடத்தான் தெரியாத தொன்றாயிருக்கும். பிசாசானவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் இந்த அழிவின் பிறகு அழித்தொழிப்பது தானே கடவுளின் முதல் இலக்கு.
ஆகவே அவனுக்கும் கூட தெரியாமல் காப்பாற்ற ப்பட்டதாய் அந்த இரகசியத்தை கடவுள் வைத்திருக்கிறார் போலும் - என்றதாய் நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். இப்படியாக நான் என் சிந்தனையை முன்பு என் பார்வை படாத மூலைகளில் செலுத்தியது மாதிரியாய் செலவிட்டுக் கொண்டிருந்த நேரம் - நான் இருந்து கொண்டிருந்த அந்த விசாலமான அறை முழுக்கக் காற்றின் குளிர் அதிகரித்தது. அந்த குளிர் என் சதையில் உறைக்க ஆரம்பித்ததும் பின்னாலிருந்து ஓங்கி உயர யாரோ ஒருவர் விட்ட வெளி மூச்சு வெப்பமாய் என் தோளைத் தொட்டது போல் இருந்தது. உடன் உடல் வெடவெடக்க முழங்கால்கள் மீது கைகளை வைத்துக்கொண்டு நான் பயத்தில் திரும்பி உற்றுப் பார்த்தேன். ஒன்றுமே காணப்படவில்லை.
கேற் வாசலில் மணி அடித்த சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியில் போனேன். "தபால் பெட்டியில் கடிதம் போட்டுக் கிடக்கிறதோ?" என்று நினைத்து பெட்டிக்கதவைத் திறந்து பார்த்தேன். ஒரு துண்டுப் பிரசுரம்மட்டும் அதிலே கிடந்தது.
அதன் தலையங்கம் 'உலக அழிவு' - என்றது தான்! அந்தப் பளபள காகிதத்தில் மின்னிக்கொண்டிருந்த எழுத்துக்களைப் படிப்பது எனக்கு மிகவும் இனிமை பரவிய ஆர்வமாயிருந்தது. அப்படியே பறப்பதைப் போன்ற ஒரு மகிழ்ச்சியோடு அதைத் தொடர்ந்து கண்களை எடுக்காமல் படித்தபடி வீட்டுவாசல்
28
நீபி.அருளானந்தம்

படியேறினேன். படிப்பதிலே உள்ள பரபரப்பு ஓங்கியடிக்கும் அலைகள் போல எண்ணிடத்தில் பரவிநிற்க படியேறுவது உறுதியில்லாத மாதிரி இருந்தது.
அதை யோசிக்க முதல் தடால் என கீழே என் மண்டை
உடைய அதிலே நிலத்தில் என்னை விழுத்திவிட்டது. "என்னை விழுத்திவிட்டது” என்று எதைத்தான் நான் நொந்து கொள்வது.
நானாகத் தானே ஒழுங்காக ஏறிக்கொள்ளாததில் தடுக்கி விழுந்து
விட்டேன். பிறகு எதன்மேல்தான் எனக்கு நோவு. நிலத்தில் விழுந்த பிறகு மண்டையில் இருந்து எனக்கு இரத்தம் "குபுகுபு" வென்று
பாய்ந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது. அதன் பிறகு சில
நிமிடங்களுக்குள்ளாக அம்புலன்ஸ் வண்டிக்குள்ளே நான்!
அம்புலன்சின் உள்ளே உள்ள படுக்கை என்னை ஊஞ்சல் மாதிரி
ஆட்டிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டத்துக்குத் தோதாக
நித்திய. ஜீவன் நித்திய ஜீவன்’ என நான் செபம் சொல்வது
போல தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
(தாயகம் - 2010)
29 Gau6figh

Page 24
aspari UCupgigsoilst
முள்ளுக்கம்பி வேலிக்குள்ளே சிறை வைக்கப்பட்டது போலக் கிடக்கிற இந்த அகதி முகாம் வாழ்க்கை வேலுப் பிள்ளைக்கு இப்ப வாச்சரியான சோகமாகிப் போச்சு. இந்தவயசுபோன காலத்தில தன்ர தேப்பனுக்குக் தேப்பனா அவரப் பாத்துப் பராமரிச்சுக் கொண்டிருந்த வளர்ந்த ஒரு குமர்ப் பிள்ளையான அந்த ஒருத்தியும் வன்னிப் பக்கம் விழுந்த செல்லடியில கழுத்தறுந்து செத்துப் போயிட்டாளே. அந்த அதிர்ச்சியில உறைஞ்ச ரெத்தம் இப்பவும் குங்குமக்கட்டி மாதிரி இவரிண்ட நெஞ்சில ஒட்டின மாதிரிக் கிடக்கு.
"இன்னும் தனக்கு என்னென்ன சூறாவளி இப்படியா வந்து சுத்தப் போகுதோ..?" - எண்டதுதான் இதுக்குள்ள நாளும் பகலுமா அவருக்கு இருக்கிற பெரிய்ய மனக் கவல.
இந்தப் பத்தடித்தறப்பாழ்க் கூட்டுக்கிள்ள வெக்கைக்குள்ள கிடந்து கொண்டு தங்கட சீவியத்த நினைச்சு நினைச்சு அழுகாத சனம் பாக்கியில்ல. எல்லாரிண்ட அழுகிற சத்தமும் கேக்குது அவருக்கும்! சிலதுகள் அழுதழுது சொல்லியழுகிற ஒப்பாரிகளும் விழுகுது அவருக்குக் காதில!
30
நீபி.அருளானந்தம்

உயிருக்குப் பயந்து ஒடி ஒடித்திரிஞ்சு மெலிஞ்சுஉசிர் வத்தினமாதிரிப்போன சனங்கள்தான்இதுக்கிளயா இப்ப இருக்கிற சனங்கள். தொற்றுநோய் வருத்தம் வந்து கோழி பொம்மிக் கொண்டு திரிஞ்சு செத்துப் போற கணக்காத்தான் இந்த அகதிமுகாமுக்கயும் வன்னிச் சனங்கள் வருத்தம் வந்து சாகுதுகள். பிணமாப் போன அந்த மனுசரப் பாத்துக்கொண்டு இதுக்குள்ள உசிரோட இருக்கிறதுகள் பேச்சு மூச்சேயில்லாமல் கவலையோட கிடக் குதுகள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஆள் செத்த அடையாளமே இல்ல. காம்புக்குள்ள பிணத்தவிடுவாங்களே? கொண்டுபோயிற்றாங்கள் செத்துப்போன பிணத்த,
"தானாடாவிட்டாலும் தன்ரைசதை ஆடுமெண்டு சொல்லு
yy
வாங்களேயப்பா.
தன் ஊர்ச்சனம் இப்பிடி ஆடுமாடுகள் செத்தமாதிரிச் சாக, வேலுப்பிள்ளைக்கும் மனசப் போட்டுப் பிழிஞ்செடுக்கிற மாதிரிப் பெரிய கவலைதான்! எண்டாலும் இந்த அநியாயமெல்லாம் அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும் ! அவர்தான் இதுக்கொரு நீதியக் கேக்க வேண்டுமெண்டு போட்டு அவர் மனம் கொறிச்சாலும் பேசாமல் இருந்து கொள்ளுறார்.
இண்டைக்கு மங்கலாயிருந்த மத்தியானத்துக்குப் பிறகு மேகம் ஒரு மாதிரியாக் கறுத்து இறங்கிக்கிழ வந்த மாதிரிக் கிடக்கு. "இதென்னப்பா இது கோலம்? நாங்க இருக்கிற கேட்டுக்கு மழையும் வந்து பிளந்து கட்டப் போகுதோ..?” எண்டு சனங்களெல்லாம் வெட்டுக்கிளிக்கூட்டம் மாதிரி குமிஞ்சு நிண்டு கொண்டு வானத்தையே பரிதாபமாப் பாத்துக் கொண் டிருக்குதுகள். மழை பெஞ்சு பள்ளத்துக்க வெள்ளம் நிண்டமாதிரி சேறாப் போனா தட்டத் தரையிலயும் இதுக்கிளயெல்லாம் மனுசர் இருக்கேலாது. படுக்கேலாது மாதிரியா உள்ளதும் போயிடுமே. மழைக்கு வேற எங்கயும் இதுக்க ஒதுங்க நிக்க
31 வெளிச்சம்

Page 25
ஒழுங்கா ஒரு இடமுமில்லையே? தலைவலி காய்ச்சல் எண்டு கிடக்கிறதுகள் இதுகளுக்க பிறகு படுத்துக்கிடக்கேலுமோ..? மழையிக்க நனைஞ்சாப்பிறகு சன்னியாக்கியும் போடுமே..?
ஆண்டவனே ஆண்டவனே. எண்டு மேகத்த விரட்டி அடிக்கிற மாதிரியா அதுகளெல்லாம் சொல்லித் தவிச்சிக் கொண்டு நிண்டாலும் மேகங்களொண்டும் கலைஞ்சு போகேல்ல. அதக் கலைச்சுவிடுறதுக்குக் காத்தும் ஒழுங்கா வீசேல்ல. எங்கயும் ஒழிஞ்சு ஒட்டமா ஒடாத கணக்கில அடிச்சுக்கொண்டு இறங்கி வந்திட்டுது பேந்து 'கடகட'வெண்டு கொட்டுற பெரிய மழை. இந்த வெட்ட வெளியான ஒரு இடத்திலயா மழையும் காத்தும் ஆதிக்கம் செலுத்தினா எப்புடியிருக்கும்? அதை யெல்லாம் வாயால எப்பிடிச் சொல்லேலும்? தாய்மாரெல்லாம் அழுகிற கண்ணக் கசக்கிக்கொண்டு பிள்ளையளத் தூக்கிவைச்சுக்கொண்டு தார்ச் சீலைக் கொட்டிலுக்க நடுங்கிக்கொண்டு நிக்குதுகள். வகுத்துப் பிள்ளைக்காறியள் ஈரக்குலையை அறுக்கிற நனைஞ்ச அந்தக் குளிரோட கிடந்து நடுங்கிக் கொண்டிருக்குதுகள். அரைப்பிள்ளையை வகுத்துக்க வைச்சுக் கொண்டு இப்பிடியா அதுகளுக்கு ஒரு கஷ்டம். நனைஞ்ச வயிறு தெரியுதேண்டு சீலைய இழுத்து மறைச்சுக் கொண்டு அந்தப்பிள்ளை நிக்குது பாவம். முதல் அடிக்காத காத்து இப்பச்சுளிர் சுளிரெண்டு சுழட்டிச் சுழட்டி அங்காலயும் இங்காலயுமா பேய் மாதிரி அடிக்குது. உடம்பு தெம்புபலம் இல்லாம குளிரில நடுங்கினபடி. ஆளையாள் பாத்துக்கொண்டு அழுகை அழுகையா வர “இப்பிடி ஒரு விதிய எங்கட தலையிலயும் எழுதீட்டியா கடவுளே” எண்டு சொல்லி அதுகள் கடவுளையும் திட்டுதுகள். இருக்க ஒரு கூடும் இல்லாத மாதிரியாப் போய் இப்பிடிக் கிடந்து நாங்கள் கஷ்டப்படுகிறமே எண்ட கவலை அதுகளுக்கு! ஆனாலும் இதுக்குள்ள சிலதுகள் கண்ணிரும் வருத்தமுமாய்ப்பட்டு இவ்வளவு நாளும் உறைஞ்சமாதிரி போனதிலை மனதில வைராக்கியம் முத்தினதாகவும் நிண்டு கொண்டிருக்குதுகள். பழைய
32
நீ.பி.அருளானந்தம்

கஞ்சியெண்டு எதக் கிடைச்சாலும் பசியப் பிடிச்சுவைச்சுக் கொள்ளுறதுக்கு மளமளவெண்டு குடிச்சுப் போட்டு அதுகள் பேசாம இருக்குதுகள் இப்ப.
அடிச்சகாத்து சுத்தி விட்டுப் போன மாதிரிப் போனாப் பிறகு, உறைச்சுப் பெஞ்சுகொண்டிருந்த மழையும் நிண்டுபோச்சு. வேரோட பிடுங்க இதுக்க ஒழுங்கான மரமில்லாத இந்த இடத்தில விசிறி அடிச்சமாதிரி வீசின கடுங்காத்து தறப்பாள்ச் சீலையள கிழிச்சுச் சுருட்டித் தூரவா எறிஞ்சு போட்டுப் பிறகு போயிற்ருது.
வறுத்தெடுக்கிற வெயிலுக்க வேர்த்து விறுவிறுக்கக் கிடந்து இந்தக் கூடாரங்களில நாங்க சுக்காக் காஞ்சு போனாலும் பறவாயில்லக் கடவுளே! ஆனா இந்த மழை தப்பியும் இனிவர வேண்டாம். தள்ளியும் இனிவரவேண்டாம். எப்பவுமே வேண்டாம்! எண்டு எல்லாச் சனங்களும் வாயால சொல்லிக் கொள்ளுதுகள். மழையில நனைஞ்சு குளிர்க்காய்ச்சல், மார்ச்சளி பிடிச்சதுகளெல்லாம் முகாமுக்குள்ள நடத்திற வைத்தியசிகிச்சைப் பிரிவுக்குப் போகுதுகள் மருந்துவாங்க. ஊரில அங்க வன்னிப் பக்கம் இருக்கேக்க சுண்டு வலி, முதுகுவலி கூட வந்ததில்லச் சிலதுகளுக்கு. இப்ப இதுக்க கிடந்து படுறபாட்டில மாரில நெஞ்சுவலி எண்டு கொண்டு மருந்தெடுக்கப்போகுதுகள் கீயூவில.
வேலுப்பிள்ளைக்கும் நெஞ்சில கொஞ்சம் சளி வருத்தம் தான். அகதி முகாமில இருக்கிற சனங்களெல்லாத்தையும் ஒண்டா உரிமை கொண்டாடுற வருத்தம் இந்தச் சளிவருத்தம் தான். அது வேலுப்பிள்ளைக் கிழவரையும் பிடிக்காம சும்மா விட்டுடுமா? அவரும் நெஞ்சுச்சளியைக் காறிக் காறி ஒரு எத்து எத்தி வேலிப்பக்கமாய்ப் போய்த் துப்பிப் போட்டுவந்து, பேந்து மூலையெல்லாம் இடமில்லாம ஊத்தை பிடிச்ச வேட்டிய மடிச்சுக்கட்டிக் கொண்டு, உள்ள சேற்றுப்பகுதி இடமெல்லாம் அங்காலயும் இங்காலயுமா நடந்து கொண்டிருக்கிறார்.
33 வெளிச்சம்

Page 26
பூமி குளிரப் பெய்த அந்த மழையோட அவருக்கு இப்பவாத் தன்ரைவயல் ஞாபகம் ஊர் ஞாபகம் வந்திட்டுது. கண்ணுக்கெட்டினதுரம் மட்டும் பறந்துகொண்டிருக்கும் காக்கா குருவியள அதுக் குள்ளயா நடந்தபடி வெறிச்சு வெறிச்சு உத்துப் பார்த்துக் கொண்டு அதையே அவர் யோசிக்கிறார்.
தான் விதைச்ச நெல்லு வெள்ளாமைக் காடுகள் பிணம் எரிக்கிற சுடுகாடுமாதிரி இண்டைக்கு ஆகிப் போச்சே எண்டுற கவலையள் இருதயக்கூட்டில அவருக்கு.நாத்து நட்டாப்பிறகு நிறுத்தி வைச்ச மாதிரி தளதளவெண்டு மலர்ந்து மலர்ந்து பச்சப் பசுமையா வெல்லே அந்த அவற்ற வயல் முழுக்கவாப்பாக்க இருக்கும். அந்தப் பயிர் முளைச்ச வயல்களப் பாக்கப்பார்க்க அவருக்கு எவ்வளவு ஆச.ஆச! அந்த விதைச்ச வயலுகள் ஒழுங்கா விளைஞ்சு பிறகு வீடு வந்து சேந்திட்டா ஆறாள் பத்தாள் கூட அவரிண்ட வீட்டில வருசம் முழுக்க இருந்து சாப்பிட்டுத் திண்ணயில படுக்கேலுமே.
வீட்டில நிக்கிற அவரிண்ட பசுக்களும் நாம்பன்களும் தலையைத்தூக்கிப் பாக்காமத் திண்டு கொண்டிருக்கிற அளவுக்கு வைக்கோலும் பிறகு கிடக்குமே வளவுக்க, கோவணத்த இறுக்கிப் பின் அருணாக்கொடியில செருகிக்கொண்டு இவ்வளவு நாள் வயலுக்க நிண்டு தனியவாக்கஷ்டப்பட்டதெல்லாம் அவருக்குப் பிறகு கொஞ்சநாளுக்கு அப்பவா இல்லாமலாப் போயிடுமே.
அதுக்குப் பிறகெல்லாம் அவர் எப்படியாயெல்லாம் நல்ல சந்தோஷமா வீட்டில நிம்மதியா சீவியத்தப் போக்காட்டுவார். நல்லாச் சாப்பிட்டுக் குடிச்சு ஒரு அலுப்பு வந்தா பகலிலயும் அவர் படுத்துக்கொள்ளுவார். பொழுதுபட்டா மேல் நனைஞ்சுகுளிர தண்ணியூத்திக் குளிச்சு அது முடிய வீட்டுத்திண்ணையில அவர் கால் நீட்டி உக்காந்து கொண்டு புத்தகமும் படிப்பார். இப்படியா அங்கினேக்க வாழ்ந்து எல்லாச்சுகத்தையும் அனுபவிச்சவர்தானே -9վ@lfT.
34
நீபி.அருளானந்தம்

ஆனா அவர் உழுத அந்த வயல் உள்ள பூமிக்கிளயெல்லாம் பிறகு மனித இரத்தம் கடுஞ் சிவப்பாக் கசியுமெண்டு அவர் கனவிலகூடக் கண்டாரா? யுத்தம் எண்டு ஒண்டுவருகிறதாலதான் விபரமொண்டும் அறியாத அப்பாவியான சனங்களிண்ட சீவியங்களெல்லாம் பாழாய்ப் போறது. எண்டு அப்பிடியெல்லாம் அங்க நடந்த பிறகால தானே அவர் தன்ர அனுபவத்தில கண்டு கொண்டார். இந்த வேதனையான காட்சிகளையெல்லாம் பிறகு அவர் கண்டு கொண்டபடி யாலதானே அவர் நெஞ்சப் பிடிச்சுக் கொண்டு இப்படியெல்லாம் யோசிக்கத் தொடங்கினார்.
காடுகரையெல்லாம் அங்கங்க ஊடுருவி ஆமி வருகுது எண்டு சொல்லிக்கொண்டு கையில எடுக்கக் கூடியதுகள சனம் எடுத்துக் கொண்டு தங்களக் குப்பை கூட்டித் தள்ளின மாதிரியா ஒட, இவரும் தான் அதுகளுக்குப் பின்னாலேயே அந்தநேரம் ஒட்டமும் நடையுமாய் ஓடினார். களைக் கொத்தெடுத்துச் சுரண்டியெறிற மாதிரியா அப்பத்தான் அவர் தன்ரவிடு வாசலாலே அவர் வெளிக்கிடுத்தி விடப்பட்டார். முழங்கால் தண்ணிருக்கையும் இடுப்பளவு கழுத்தளவு தண்ணிக்குமேலயும் இறங்கி நடந்து கரை யேற அவர் என்ன மாதிரியான பாடெல்லாம் அப்ப பட்டார். பூமியும் பிழைப்பும் அப்பத்தைய அந்த நாளோடுதானே அவருக்குப் பாழாய்ப் போன மாதிரி அழிஞ்சு போச்சுது.
மூண்டு அறையாத்தடுத்திருக்கக் கட்டிவைச்ச பெரிய கல்வீடு டெல்லே இவருண்ட வீடு. அவர் சிறுகச் சிறுகக் கட்டிக்கட்டிப் பெரிசாக்கின வீடு அந்தக்கல்வீடு. உள்வீட்டு அறைக் கதவிலயிருந்து எல்லா அறைக்கதவுகளுக்கும் அவர் போட்டிருந்த பலகதிறம் வேப்பம் பலக.
பின்கதவத் திறந்தா செடிசெத்தையெல்லாம் செருக்கி அவர் வைச்சிருந்த திறந்த வெளியால இருந்து குப்பெண்டு அடிச்சமாதிரி
35 Goauorfflssub

Page 27
அறைக்கிளயா நல்ல காத்து வரும். வளவைச் சுற்றி முள்ளுக்கம்பி அடிச்சு கிளுவையும் கறி முருங்கையும் அதுவழிய போட்டதான அந்த உயிர் வேலியோட வீட்டுக்கும் அது நல்ல ஒரு மறைப்புத்தானே!
அதெல்லாம் இப்ப அங்கினேக் கயா இருக்குமோ இல்லையோ? எல்லாம் துலைஞ்சது மாதிரி இப்ப அந்த வீடும் செல்லடியில தாறுமாறாச் சிதறிப் போயிருக்குமோ..? நினைக்க நெஞ்சுக்கதவை அடைக்கிறமாதிரி வருகுது அவருக்குச் சோகம். அந்தச் சோகத்த மனத்தில இருந்து விலக்கிக் கொள்ளாத அளவுக்கு அவருக்கு கண்ணிரும் இப்ப வருகுதே.
& Nệz^SềSiế
姿ラ & リなSMX。
25 W2
EAEWs
岐 ཞི་དག་དག་དད་དད་
\ത്ത
கண்ணால இருந்து நீர் சொட்டச் சொட்ட அவர் அந்த முள்ளுக் கம்பி வேலிக்கு வெளியாலே தூரவாய்ப் புல் மேய்ஞ்சு கொண்டிருக்கிற மாடுகளப் பாக்கிறார். தன்ர வீட்டு மாடு கண்டு களிண்ட நினைவுகள் இப்ப சூடுபிடிக்கவாப் புத்தியில அவருக்கு ஓங்கி உறைக்குது. அவர் வீட்டை விட்டு வெளிக்கிட்டு புத்திதடுமாற்றத்தில ஓடின அண்டைக்கு பட்டியில அடைச்சுக் கிடந்த பசு மாடு கண்டுகளையும் வெளியால போக விடவா அவர்
36
நீபி.அருளானந்தம்
 
 
 
 
 

திறந்து விடேல்லயே?
"ஷெல் அடி விழ விழ அந்தப் பசுமாடு கண்டுகள் அதுக்க கிடந்து என்னா கத்துக் கத்திச்சுதோ பாவங்கள்.” அதுகளப் பட்டியில இருந்து அவிட்டுக்கலைச்சுவிடாத பழிபாவம் தான் இப்ப எனக்கு வந்து இப்பிடி முள்வேலிக் கூட்டுக்கிள்ள கிடந்து கஷ்டப்படுறதா ஆயிட்டுதோ?
இந்த எல்லாக் கவலையளும் அவருக்கு தொண்டைக் குழியில நிக்கிறமாதிரி தட்டிக் கொண்டு நிக்குது. ஆனாலும் தன்ரகவலயள உசத்திப் பிடிச்சுக் கொண்டு, ஆருக்கு அவர் இதுகளைச் சொல்லி இங்க அழலாம்? இளந்தாரி வயசுக்கு ஏற்ற வளத்தியில்லாமல் குரும்பையா இருக்கிற பெடியள் பெட்டையளயே இதுக்கிள்ள வாறவங்கள் சிலபேர் உருட்டி உருட்டிப் பாத்துப்போட்டுக் கூட்டிக்கொண்டு போயிடு றாங்கள். அப்பிடியா ஒரு இழவு வீடாவே சீச்சிஎண்டு சொல்லுற அளவுக்கு இந்த அகதி முகாம் இருக்கு. இதையெல்லாம் பாத்து நெஞ்சில காரமுள்ளும் - சூரமுள்ளும் - கள்ளி முள்ளும் சேர்ந்து ஒண்டாக் குத்தினதுமாதிரி சனங்கள் வேதனையில கிடந்து வதைபட்டுக் கொண்டிருக்குதுகள். தங்கட பிள்ளயஸ் பலிக்கடாவாப் போயிருங்களோ வெண்டு நினைச்சு சில தாய் தேப்பன்கள் கிடந்து அழுது புலம்பினபடி இருக்குதுகள். இப்பிடியான அதுகளிண்ட பெரிய பெரிய துன்பக் கதையளுக்க இவர் தன்ரகதைய ஆருக்கும் சொல்ல வெளிக்கிட்டா அதையெல்லாம் ஆர்தான் தங்கட காதுகளில பெரிசா இதுக்குள்ள எடுக்குங்கள்.
இந்தக் கடைசி யுத்தம் குடுத்து விட்டுப் போன கொடுமையளப் பார்த்தா அதில தங்கட அப்பன் செத்துப் போட்டானெண்டு சிலதுகள் சொல்லி அழுகிறதாயிருக்குதுகள், சில பெம்புளயள் கட்டினவன் செத்துப்போயிட்டான் எண்டு செத்தசவம் மாதிரித் திரியுதுகள். தாய் தகப்பன் செத்துப்போச்சு - பிள்ளைகள் செத்துப் போச்சு எண்ட சாவிண்ட மூஞ்சிகள
3 வெளிச்சம் 7

Page 28
தங்களிண்டமுகத்தில வைச்சுக்கொண்டு சீவிக்கிறதாய் எத்தின சனங்கள் இப்ப இதுக்க இருந்து கொண்டிருக்கிதுகள். இதுகளுக்கெல்லாம் ஆரும் தெம்பு திறம் சொல்லி மனச ஆத்தேலுமே? இதுகளெல்லாம் இழப்புக் குடுத்த அந்த நேரத்திலதுடங்கி உசிர்கிழிய ஓங்கிக்கத்திக்கத்தி இப்பவா உடம்பு வழிய உசிரு ஏதும் இல்லாதது மாதிரித்தான் இருந்து கொண்டிருக்குதுகள்.
இதெல்லாம் சிலமாதங்களுக்கு முதல் நடந்து முடிஞ்சு துலைஞ்சு கெட்டுப் போச்சுத்தான். ஆனாலும் எப்பத்தைய வருஷத்துக்கும் எங்கட சாதிசனத்தாலும் மறக்கவே முடியாதகதயள் தானே இதுகள் எல்லாம். இனிமேல இந்தச் சனத்துக்குப் பிறக்கப்போற பிள்ளைகளாலும் இது மறக்க முடியாத கதயாத்தான் இதெல்லாம் நெடுகவா இருக்கும் போலப் பாக்கக்கிடக்கு. இதெல்லாம் எங்களுக்கு நடந்தது என்ன விதியோ? என்ன தலையெழுத்தோ? இல்லாட்டி ஆர்எவர்செய்து விட்டுப்போன பழி பாவமோ தெரியாது! உமியப் புடைச்சுச் சுளகால தள்ளின மாதிரி எல்லாமே தூசியாய்ப் பறந்து போனமாதிரித்தானே உள்ள உசிருகள் உடமைகளெல்லாம் இப்ப இந்தச் சனங்களுக்கு துலைஞ்சு போன கணக்கா ஆச்சு.
இனிமேல இதுக்குள்ளாலயா இருந்து நான் வெளிய வெளிக் கிட்டு என்ர இடத்துக்குப் போனாலும் அங்கின ஆள் இல்லாத ஆனாதிக் காட்டில ஒத்தப் பாதையில நான் தனியப் போறமாதிரித்தானே முடிஞ்சு போகும் போல. இப்படியாத்தானே இவங்களெல்லாம் சேந்து எங்களக் குத்திக் குத்தி ரெத்தம் ஒழுக விட்டமாதிரிச் செய்திருக்கிறாங்கள்.
இந்தக் கெடுவெல்லாம் வந்து கேடு கெட்டதால உண்மையாவே செத்துப்போனா என்ன எண்டது மாதிரித்தானே மனம் எங்களுக் கெல்லாம் இப்ப வெறுப்பா இருக்கு?
நீபி.அருளானந்தம்

ஆனாலும் என்ன எங்களுக்கு ஆர் இப்பிடிகொடுமையள் செய்தாலும் எங்களிட்ட இருக்கிற இந்த மனத்தைரியம் மட்டும் எப்பவுமே எங்களுக்கு இனிக் குறைஞ்சு கெட்டுப் போகாது. நாங்கள் சாப்பிடாமக்கிடந்தாலென்ன? அங்கபோயும் எங்ளிண்ட வயலநாங்கள் உடன உழ ஏலாமக்கிடந்தாலென்ன? பெத்தபிள்ள இல்லாட்டியென்ன? ஒரு பிழைப்பில்லாமலா போனால் தான் இனி யென்ன?- போய்த்துலைஞ்சதுகள் இனிமேலயா போய்த் துலைஞ்சதா யிருக்கட்டும்.
"ஆனாலும் ஒண்டு! எங்களிண்ட மனசில பச்சை குத்திவிட்டுப் போன மாதிரியா உள்ள இந்த நினைப்புகள் எப்பவுமே எங்கட சனத்துக்கு இனி அழியவே அழியாமல் ஆயுசுபரியந்தம் மட்டும் இருக்கத்தான் போகுது. நாங்க எந்த இடத்தில இருந்தாலும் அந்த ஞாபகம் எப்பவும் எங்களுக்குச் சாகவே ஒரு நாளும் சாகாது.” என்று அதையெல்லாம் நினைக்க நினைக்க தன்னிடமிருந்து எழுந்து வந்த அழுகை நிற்க வில்லை வேலுப்பிள்ளைக்கு. தன் கண்ணை விட்டுத்தவ்வி வந்த கண்ணிர்த் துளிகளின் வழிவை இரண்டு கைகளாலும் அவர் நடை நடந்துகொண்டு தானே பிறகு துடைத்தும் கொண்டார். அவ்வேளை நெஞ்சுக்குள்ளே அவருக்கு சுத்தமான அக்கினி சுவாலித்து எரிவதுபோலவும் இருந்து கொண்டிருந்தது.
(ஜனவரி 2010)
39 வெளிச்சம்

Page 29
பிரிவினி கணிகள்
சிங்கப்பூரில் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழும் ‘லிட்டில் இண்டியா' என்கிற இடம்தான் அது. அந்த இடத்தில் வானை உதைப்பதுபோல உயரமாய் நிற்கும் பல கட்டடங்களுக்கு அருகே இருக்கிறது அந்தப் பார்க்,
ஞாயிற்றுக்கிழமை நாட்களிலே சனநடமாட்டத்தினால் அந்தப்பார்க் நிரம்பிவழியும். பின்னேரமாய் அந்தப் பார்க் இருக்கும் பக்கம் போனால், கண்களால்மறக்கமுடியாத காட்சிகளும் பார்க்கக் கிடைக்கும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரையான உழைப்பில் மாஞ்சு மாஞ்சு உடம்பை ஒடுக்கிக்கொண்ட இந்தியத் தமிழர்கள் இந்த இடத்திலேதான் வந்திருந்து ஆறுவார்கள். நண்பர்கள் உறவினர்களை அந்த இடத்திலே வரவழைத்துச் சந்தித்ததும், இருந்த விரக்தி மறைந்து ஒரு சுறுசுறுப்பும் பிறந்து விடும் அவர்களுக்கு. கதையில் ஒரு கல கலப்பு டன் சிரித்துக் கொண்டு முகமகிழ்ச்சியாய்ப் பிறகு அதிலே இருந்து கொண்டிருப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமையென்றால் சாதாரணம் மீறிய அளவிலே
அவர்களுக்கு, அன்றைய செலவும் இருந்து கொண்டிருக்கும்.
40
நீபி.அருளானந்தம்

மதுப் புட்டிகளையும் வாங்கிக் கொண்டுவந்து அந்த இடத்திலே இருந்து உல்லாசமாக அவர்கள் குடிப்பார்கள். வெறி ஏறஏற ஆகாயத்தை தாங்கள் எப்படி சுண்டுவிரலால் தொடுவது என்கிறமாதிரியும் அவர்களுக்குக் கற்பனை சிறகடிக்கும். தாங்கள் மாதா மாதம் வாங்குகிற சம்பளப்பணத்தை. சேமித்து, அதை எவ்வாறு பிறந்த மண்ணிலே கொண்டுபோய் விதைவிதைத்த மாதிரி ஒழுங்காக ஏதாவது சொந்தத் தொழில் செய்து பயிராக்கிப்பழமறுப்பது என்பன போன்றவற்றை யெல்லாம் தங்களுடன் இருந்து கொண்டிருப்பவர்களுடன் யோசனை பண்ணி அவர்கள் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
இருட்டுப்பட்டாலும் மின்சார விளக்குகள் அவர்களுக்கு அதிலே இருந்து கொள்வதற்கு நேரத்தை வளர்க்கும். ஆணின் கண்களுள்ள வேறே மாதிரியான பெண்களும், அதிலே இருந்து சில ஆண்களுடன் உல்லாசமாகக் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
இரவு வேளை மின்சார வெளிச்சம் குறைந்த இந்தப் பார்க்குக்குள் இங்கேயே தங்கிப் போனதாய்த்தான் பலர் இருப்பார்கள். எதையாவது சாப்பிடவென்று வாங்கிவந்து அதிலே வைத்துச் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே பிறகு படுத்து நித்திரை
கொள்பவராகவும் பலர் இருப்பார்கள்.
அப்படியாக இந்த ஞாயிற்றுக்கிழமை நாளிலே அவர்களுக்கு எந்தவித அவசரமும் இருப்பதில்லை. அந்த இடத்தில் அமைதியாய் மின்சார விளக்கு வெளிச்சம் பார்த்துக்கொண்டு, மனஅலை அடங்க அவர்கள் மெளனமாகி விடுவார்கள்.
இப்படியொரு சுதந்திரமான மனித வாழ்க்கைக்கு சிங்கப்பூரும் ஒரு சிறந்த நாடுதான்.
இந்த நாட்டுக்கு நான் வரமுதல் இந்த இடத்தைப் பற்றி
41 GolauGriffssub

Page 30
பலரும் எனக்குச் சொன்னது "கரெக்டா இருக்கிறதா? என்பதையும் நான் இங்கே வந்ததும் நேரில் கண்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவேண்டுமே?”
சிங்கப்பூருக்கு நான் வந்த அன்று முன்னமே நான் ஒழுங்கு செய்திருந்த அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் உள்ள அறைக்கு ஒரு மாத காலம் தங்கி இருக்கவென்று வந்திருந்தேன்.
நான் விமான நிலையத்திலிருந்து அங்கே வந்த நேரம் இருட்டுப் பட்டதுமாதிரியான ஒரு சமயம்தான்!
என் உடுப்புப் பெட்டியை உள்ளே அறையில் வைத்து வெளிக் கதவைப் பூட்டி விட்டு, முன்னாலுள்ள வெளி ஓடை விறாந்தையில் நின்றபடி உயரத்திலிருந்து கண்ணுக்குத் தெரிந்த நகரத்தைப் பார்த்தேன்.
அந்த இருபத்தோராம் மாடி விறாந்தையிலே நான் நின்றபோது, ஜில்லென்ற காற்று எண் மேல் பட்டுக் கொண்டிருந்தது. என்னைப் பிரயாணக் களைப் பிலிருந்து விடுதலையாக்கி, உடம்போடு என்னைத் தேவலோகத்துக்குக் கொண்டுபோவது போல் இருந்தது.
வர்ணமின்சார விளக்குகளுக்கு ஒரு பாஷை யுண்டு. அதற்கும் மணமில்லாத ஒரு மலரைப் போல பேசுவதற்குத் தெரியும். இருளின் திறந்தவாய்க்குள் அணைந்து ஒளிகாட்டும் அதன் தன்மையை ஒரு தினுசாய்ப் பார்த்துக் கொண்டு நான் அப்போது யோசித்தேன். " நீ பார்த்துக் கொண்டிருக்கிற இந்த இடம் பெருதாகிக் கொண்டு வருகிறது - பார்! - பார்!-”
என்று என் கண்களுக்குத் தெரிந்த இடத்தையெல்லாம் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தது அங்கங்கே நெருங்கிக் கிடந்ததாய் ஒளி விட்டுக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள். "இந்த மாடிக்கட்டிடத்திலிருந்து என்னைப்பிடித்துக் கீழே யாரும் தள்ளி
42 நீபி.அருளானந்தம்

விட்டு விடு வார்களோ..?" காரணம் புரியாமல் ஒரு நினைவு வந்து பக்கத்தில் உள்ள இரும்புக்கம்பியை நான் இறுக்கிக் கைகளால் பிடித்துக் கொண்டேன்.
"நான் யாரையும் என்வாழ்க்கையில் இதுவரையில் எந்தப் பள்ளத்திலும் தள்ளிவிட்டு மாய்த்த அளவுக்குச் செய்ததில்லையே? அப்படியாக இருக்கும் போது என்னையாரும் பிடித்துக் கீழே இப் படித் தள்ளி விடுவார்கள் என்று நான் ஏன் பயப்பட வேண்டும். ?”
நெருப்பை வைத்தாற் போல ஏன் எனக்கு இந்த நினை வெல்லாமே நிலைத்திருக்கிறது.
“ஒஹற். ஹோ”
இன்னும் என் மனதில் மடிமடியாய் விழுந்துகிடக்கும் யுத்தபயம் அகன்றதாகவே இல்லைப்போலும்!
'பினாட்டுத் தட்டுப்போலல்லவா இதெல்லாமே ஒட்டிக் கிடக்கின்றன. ஏற்கனவே நான் பட்ட துன்பங்களின் நினைவுக ளெல்லாம் எங்கே நான் இருந்தாலும் திடுக்கென்று எகிறு கின்றனவே.?
தாய்க் குருவியும் குஞ்சுகளும் "கீச் கீச்" என்று கத்துவது போல எனக்கு ஒரு நினைவாய் இருந்தது. தாயும் பிள்ளைகளுமாக பசியில் கத்துவதுபோல் பிறகு ஒரு நினைப்பாகவும் எனக்கு இருந்தது.
"ஏன் இதிலே நிற்கிறாய்? கீழே இறங்கிப் போ"- என்றது மாதிரி. சொல்லிற்று என் மனம்,
அருகே காணப்பட்ட லிப்ட் உள்ளபக்கம் போனேன். திறந்த லிப்டுக்குள்ளே போய் . கதவை epi–C) பட்டனை
43 வெளிச்சம்

Page 31
அமுக்கினேன்.
பிறகு G) கிறவுண்ட் பட்டன். அதற்குப் பிறகு பதுங்கிய மிருகம் மாதிரி யோசனையுடன் நான் லிப்டின் உள்ளே நிற்க, கீழே இறங்கிக் கொண்டிருந்தது லிப்ட். அது கதவைத்திறந்து கொள்ளவும் வெளியே நான் வெளிக்கிட்டேன். அங்கே பார்த்தால் ஒரேசன நெரிசல், என்றாலும் முன்னே உள்ள வீதியின் குறுக்காலே நடந்து போய் பூங்காவில் கால் வைத்தேன. அதற்குள்ளே போக விட்டு மனம் எனக்கு லேசாக இருந்தது.
அங்கேயுள்ள மின்சார விளக்குகள் இன்னும் அதற்குள் வெளிச்சம் போதாமல், வேறே இன்னமும் ஒன்றை ஒன்று தேடிக் கொண்டிருப்பதுபோல எனக்குப் பார்க்கவும் இருந்தது.
நான் ஏதோ கையிலுள்ளதை சிந்திவிட்டதைப் போல் நான் தேடும் பொருள் எனக்கு அகப்படாதா - என்ற நிலைபரத்தில் அவ்விடங்களில் சுற்றிச் சுற்றி நடந்து வந்தேன்.
அதற்குள்ளே பனை மரங்களின் விசிறி போன்ற பெருங் கொண்ட ஒலைகளைக் கொண்ட விருட்சங்கள்- ' என்னைப் பாருங்ககோ. என்னைப் பாருங்கோ." என்ற விதத்தில் என்
பார்வையின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தன.
அங்கே தங்கள் பேச்சில் மூழ்கியபடி அந்த மரங்களுக்குக் கீழே பலர் இருந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தின் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக் கொண்டு நானும் ஒரு மரத்தடியிலே போப் புல் மெத்தையில் ஏதோ சிங்காசனத்தில் உட்கார்ந்ததைப்போல உட்கார்ந்தேன்.
அந்த மரத்தடியிலே எனக்கு முன்னால் இருந்து கொண்டிருந்தவர்கள் "எங்கள் வேதனையை யாராவது பிறமனிதர் அறிந்து கொள்ள முடியுமா..? " - என்ற அளவுக்கு முகத்தில் வேதனையுடன் இருந்தார்கள்.
AA
நீபி.அருளானந்தம்

அவர்களுக்கு மூச்சு உண்டு தான் - ஆனால் பேச்சில்லை! முகம் செத்துப் போனதென்ற மாதிரித்தான் அந்த இருவரும் இருந்தார்கள்.
அதிலே அவர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்திருந்த என்னை வரண்ட கண்களுடன் அவர்கள் பார்த்தார்கள்.
இதென்ன மெளனம்! எனக்கு அவர்களுடன் கதைக்க வேண்டும் - என்ற ஆசையாக இருந்தது.
அவர்களும் தங்கள் கவலையின் ஒரு கதவை மூடிவிட்டு
இன்னொரு கதவை எனக்காகத்திறந்து விடுகிறவர்கள் போல எனக்குத் தெரிந்தார்கள்.
அந்த இருவருக்குள் சடை மறைத்த முகமாயிருந்த வாலிபனுடன் முதலில் நான் கதையைக் கொழுவினேன்.
"நீங்கள் இந்தியரா?”
ஆங்கிலத்தில் கேட்டேன்.
தலையை ஆம்! " - என்ற தினுசில் ஆட்டினான்.
"தமிழரா?" என் - தாய்ப் பாஷையில் பிறகு அவனைக் கேட்டேன். அவன் 'ம்.!" என்றான்.
அவன் இப்படி சொல்லவும்தான் இன்னும் பல கேள்விகளை அவனிடத்தில் கேட்கவேண்டுமென்ற ஆர்வத்தில் என் தொண்டைக்குள் பல வார்த்தைகள் இறக்கையடித்துக் கொண்டிருந்தன.
தூரத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருப்பவர்களின் சிரிப்பு எனக்குக் கேட்டது.
45 வெளிச்சம்

Page 32
"நீங்கள் தமிழ்நாட்டில் எவ்விடம்?” நான் கதையைத் தொடர்ந்தேன்
“மதுரை.!”
“இங்கே சிங்கப்பூருக்கு வந்து எவ்வளவு காலம்?”
"ஒரு வருடம்! sy
“வேலை செய்கிறீர்கள்.?”
“լb... !"
“உங்கள் வாழ்க்கைச் செலவுக்கும் - வீட்டுக்கும்
அனுப்புவதற்கு ஏற்ற ஊதியம் உங்களுக்குக் கிடைக்கிறதா..?”
"கிடைக்கிறதுதான்..!"
புரியாத ஏதோ ஒரு பெரு மூச்சுடன் அவன் இதைச் சொன்னான். 'அவன் மன இருளுக்குள்ளே உள்ள வேதனை யென்னும் சருகுகளை என் பேச்சு துன்பம் மிகைப்படவைக்க நனைக்கின்றதோ..?’ என்று நான் நினைத்தேன். என்றாலும் என் உரையாடலைத் தொடர்ந்தேன்.
“உங்கள் சம்பளத்தில் இப்படி பியர் வாங்கியெல்லாம் குடிப்பதற்கு உங்களுக்குக்கட்டுமா..?”
"அப்படி தொடர்ந்தெல்லாம் நாங்கள் குடிப்பதில்லை.
மாதத்துக்கு ஒரு முறை மாத்திரம் இப்படியாய் வைத்துக் கொண்டிருக்கிறோம்.”
" இருவருக்கும் இன்றளவில் இதற்காக ஐம்பது டொலராவது செலவு வருமா..?”
"அப்படியாகத்தான் வரும்.”
46
நீபி.அருளானந்தம்

சொல்லிவிட்டு போத்தலை கையிலெடுத்து வாய்ப்பக்கத்தை வாயில் வைத்துக்கொண்டு பியரை உறுஞ்சினான் அவன். பியரைக் குடித்துவிட்டு போத்தலை அவன் கீழே வைக்கும் போது உள்சென்ற திலிருந்து எரிப்பு மூச்சொன்று அவனிட மிருந்து வெளிப்பட்டது. வேர்வை அவன் நெற்றியில் முத்திட் டிருந்தது. என்றாலும் மெத்தான அமைதியாய்ப் பிறகு அவன் இருந்தான்.
இப்படி குடிக்கும்போது ஒருவருக்கு என்னசுகம்! என்ன சுகம்! என்று நானும் என் உடல் வருத்தத்துடன் ஒரு நிமிஷம் அதற்காக ஆசைப் பட்டுக்கொண்டேன்.
ஆனால் பிறகு அவனுக்குப் பக்கத்திலிருந்தவனும், தனக்கு முன்னால் உள்ள போத்தலில் உள்ள பியரை எடுத்துக் குடித்துவிட்டு, நாய் போல பிறகு இரைத்தது எனக்கு முன்பிருந்த அந்த ஆசையை மனத்திலிருந்து விரட்டியது.
முன்னம் என்னோடு பேசியவனின் உடலில் ஒரு வித வெறி யின்பம் பரவியதில் இப்போது என்னுடன் அவன் பேசத் தொட ங்கினான்.
47 வெளிச்சம்

Page 33
"நீங்கள் எந்த இடம்?"
"பூரீ லங்கா.”
sy
" அங்கே பிரபாகரன் இறந்தது உண்மையா..? உள்ளத்தை குத்திப் பார்க்கிற மாதிரியாக ஒரு கேள்வி கேட்டான் அவன். எனக்கு மாம்பழத்தில்கத்தியிறக்குவதுபோல அவனது வார்த்தைகளைக் கேட்கவும் இருந்தது. “பூரீலங்காவிலிருந்து எவனொருவன் வெளிநாட்டுக்குச் சென்றாலும் முதுகில் இரண்டு அறை வைப்பது போல அங்கிருப்பவர்களெல்லாம் இந்தக் கேள்வியைத் தானே விடுத்து விடுத்துக் கேட்கிறார்கள்.கண்களில் ஒளி ஊடுருவும் கத்திப் பார்வையுடன் கேள்வி கேட்கும் இவர்களுக்கு என்போன்ற ஒன்றுமறியாதவர்கள் என்ன பதிலைத்தான் சொல்வது..?” ,
அவனின் முகத்தை நான் பார்த்தேன் அவன்முகத்தில் ஒரு தாயினது வேதனையும், ஒரு தகப்பனது வேதனையும் சேர்ந்திருப்பது மாதிரியாக எனக்குப் பார்க்கவும் தெரிந்தது.
நான் அவன் கேட்ட கேள்வியோடு ஜலத்தில் அமுங்கிய குடம் போல எனக்குள் மூழ்கினமாதிரியாய் ஒரு நிமிடம் இருந்தேன்.
சில விஷயங்களைக் கோழி அடைகாத்ததுமாதிரிவைத்துக் கொண்டு திரிபவர்களுக்கு என்னத்தைத்தான் என்போன்றவர்கள் சொல்வது.
நெருப்புச் சிவப்பாக - தூரத்தில் தெரிந்த ஒரு மின்சார "பல்ப்" வெளிச்சத்தை சிறிது நேரம் நான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘என்னதான் அவர் முடிவு? ஆள் இருக்கிறாரா - இல்லையா..?”
நீபி.அருளானந்தம்

என்னை ஆராய்கிறதுமாதிரி திரும்பவும் கேள்வி கேட்டான் அவன். வீணாக இதிலேயாய் வந்து இவனுடன் சகவாசம் கொண்டா டியதில் எனக்கு இந்தப் பாடுவந்து விட்டதே? என்று உடனே நான் நினைத்தேன்.
அவ்வாறு நினைத்துக் கொண்டு நான் அவனின் கண்களைப் பார்த்தேன். அவன் கண்கள் இன்னமும் ஆவலில் என்னைப் பார்த்தபடி திரிகள் மாதிரி எரிந்து கொண்டிருந்தன. "இன்னும் எத்தனை நிமிடங்களும் என்பதிலை கேட்பதற்காக அவன் பொறுமையோடு தயார்தான். ”என்பதுமாதிரி அவன் பார்ப்பதற்கு எனக்குத் தென்பட்டான்.
"இந்த விஷயத்திலெல்லாம் ஒன்றைப்பத்தாக்கி பத்தை நூறாக்கி சொல்வதற்கெல்லாம் எனக்குத்தெரியாது.”
முதலில் இப்படியொரு சொட்டுச் சொல்லை வாயால் சிந்த விட்டேன் நான். அதற்குப் பிறகு நான்சொன்னேன்.
“உங்கள் நாட்டிலே உலகம் உங்களுக்குப் பெரிதாக இருந்திருக்கலாம், அப்படியாக நீங்கள் எங்கேயும் போகவும் வரவுமாகச் சுதந்திரமாகச் சீவித்திருப்பீர்கள். ஆனால் என்போன்ற தமிழர்கள் சீவிக்கும் கொழும்பு போன்ற இடங்களிலே இருந்து அவர்கள் இந்தக் காலங்களில், இருந்த இடத்தை விட்டு அப்படியான இடங்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்குக் கூட போய்க்கொள்ள முடியாதபடி அவர்களைச் சுற்றி சுவர்கள் நான்கு புறங்களிலும் முளைத்துத் திமிர்த்து நிற்கிற அடைப்புக்குள்ளே ஆழ்ப்பட்டதாய்த்தான் போய் விட்டார்கள். ஆள் திரும்பக்கூட இடம் இல்லாதபடி நெருக்குகின்ற மாதிரியான ஒரு நிலைமை எங்களுக்கு. இதனால் நாங்களும் உங்களைப் போல தொலைக்காட்சியில் தோன்றித் தோன்றி மறையும் காட்சி களைத்தான் தனியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்."
49.
GoManuaflssub

Page 34
வாய்ப்பாடு ஒப்பிப்பது போல் குரலைத் தணிவாய் வைத்துக் கொண்டு அவனுக்கு நான் சொன்னேன் "யுத்தம் ஆலஹால விஷ மெண்டாலும் அதில இருந்து அமிர்தம் கிடைக்குமெண்டு பார்த்தம், ஆனால் கவலை! கவலை! கவலை! நான் கவலை உலகமே - கவலை! எல்லாமே கவலை! கவலை!
கவலை! கவலை!."
அவன் நிலத்தில் தன் கையை பக்கத்தில் ஊன்றிவைத்துக் கொண்டு வெறியில் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் நாங்கள் இருக்கும் இடத்தடியில் ஒரு தலை எட்டிப் பார்த்த மாதிரி பார்த்துவிட்டுப் போனது.
“குப்பை ஏதாவது இந்த இடத்தில் போட்டிருக் கிறோமா..? என்று அந்த பொலிஸ்காரன் பார்த்துவிட்டுப் போகின்றான்.”
என்று அவர் பார்த்துவிட்டுப்போனபிறகு, எனக்கு அவன் சொன்னான்.
அவன் அப்படிச் சொன்ன கையோடு நான் அவனுக்கு முன்னால் கிடந்த அந்த சொப்பிங்பையை பார்த்தேன். 'என் நாட்டிலே எனக்குப் பெரிதாகப் பழக்கமில்லாத ஒன்றை கற்றுக்கொள்கிற வழியையும் நான் தெரிந்து கொள்ள வேண்டுமே..?’ என்று எனக்கு அக்கறையாயிருந்தது.
விதம்விதமாய் என் மனத்தில் ஆச்சரியம் வழிய அவன் அந்தச் சொப்பிங்பையில்போட்டு வைத்திருந்த பியர்போத்தல் மூடி, கடலைப்பைக்கற் கவர், சிகரெட் பில்ட்டர்களை நான் பார்த்தேன்.
50 நீபி.அருளானந்தம்

அவன்தின்று தெறிந்த ஒரு பருக்கை கூட அவன் பக்கத்தில் இல்லாதிருப்பது என் கண்ணுக்குத் தெரிந்ததாயிருந்தது.
அந்த வாலிபனின் கண்கள் என்னைக் குற்றம் சாட்டுவது மாதிரியான ஒரு சாபத்தைச் சிந்திக்கொண்டிருந்தன.
இந்த விஷயத்தைப்பற்றி என்னதான் என்போன்றவர்கள் விளக்க முயன்றாலும் அதை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதாகவே இல்லை." என்று அவன் கேள்வியால் என் மனதில் கவ்விக்கொண்டிருந்த இனம் புரியாத கொதிப்பின் அதீத நிலையை நான் படிப்படியாக தணித்துக் கொள்ளப் பாடுபட்டுக்கொண்டிருந்தேன்.
குனிந்த எண்முகம் அவ்வப்போது நிமிர்கையில், அவன் கண்கள் என்னைக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது போல எனக்குத் தெரிந்தது.
நான்:
-என்னை விட்டுடுடா- விட்டுடுடா."
என்ற அளவில் என்னை அவர்களிடமிருந்து விலக்கி எடுத்துப் போகின்றதான ஒரு நிலையில், இருந்த இடத்தால் இருந்து எழுந்து நின்றேன்.
அவன் என்னை சமயத்துக்குத் தக்கவாறு நடந்து கொள்பவன்போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
எனக்கு இனி என் தங்கும் அறைக்குப்போய் அடைக்கலம் தேடிக் கொள்வது நல்லது என்பதாகப்பட்டது.
நான் அவனின் ஓங்கிய பார்வையை பார்த்துக் கொண்டு நான் போய் வருகிறேன். என்று சொன்னேன்.
ast வெளிச்சம்

Page 35
அவன் நான் சொன்னதற்கு தலையை மட்டும் ஆட்டினான். ஆனால் அவன் பார்வை மட்டும்???? இப்படியான ஒரு கணக்
கெடுப்பிலே தொடர்ந்து என்னைப் பார்த்தபடியே இருந்து கொண்டிருந்தது.
(GoLu’lupraunfo 2010)
・ ・・ ・ :、 52 நீபி.அருளானந்தம்

சபிக்கப்பட்ட நாட்கள்
அறுவடை செய்யப்பட்ட வயல்களின் அடிக்கற்றைகள் போலத்தான் தன்னைச்சுற்றிலும் இருந்து கொண்டிருந்த அவர்களை அவனுக்குப் பார்க்கவும் தெரிந்தது. எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து அவன் மனவருத்தப்பட்டான். உடலின் மிருதுத் தன்மை போய் சொரசொரப்பாகத்தான் எல்லோருமே இருக்கிறார்கள். அங்கே தாயுட னிருந்து தரையைப் பாாத்தபடி இருக்கிறாளே அவளையும் அவன் புதுக் குடியிருப்பு சந்தை வழியே பல தடவைகள் முன்பெல்லாம் கண்டிருக்கிறான். அந்த நேரம் காணும் போது. அழகா. என்ன மாதிரியான அழகானவள் அவள். அன்னப்பட்டுப் போன்ற கண்கள். தேன் போன்ற நிறம் படைத்த கரங்கள். ஒரு பார்வை பாத்தாளென்றால். ஸ்சா. சுவர்க்கத்தியிருந்து வந்த மாயக் கன்னி மாதிரித்தான் அவள். இப்போது அவள் முகத்தில் குளிர்ந்த பார்வையுமில்லை. முகத்தில் ஒரு பாவமுமில்லை. என்னமாதிரியாக உடல் வறண்டும்போய் விட்டாள்.
இந்தப் போரின் மத்தியிலே அங்குள்ள மற்றைய வர்களுடன் சேர்ந்து தானும் அழிந்து போகத்தயாராக இருப்பது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. கூடாது இனி ஒரு அழிவு அப்படியாக யாருக்குமே வரக் கூடாது என்று நேற்று அங்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துக் கொண்டு தனக்குத்தானே அவன் கூறிக் கொண்டான். அதற்குப்பிறகு "கடவுளே என்பிதாவே" என்று
பலதடவைகள் அவன் சொல்லிக் கொண்டான். வேறு ஒரு
வெளிச்சம்

Page 36
வார்த்தைகள் சேர்க்காமல் இதையே பல தடவைகள் சொல்லிக் கொண்டிருந்தான். அப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நேற்றைக்குப் போல தான்கண்ட அந்தச் சம்பவம் நினைவில் நின்று தள்ளி நிற்கும் என்றும் அவன் நினைத்தான்.
ஆனாலும் முடியவில்லை. "கடவுளே என் பிதாவே..." என்று பல தடவைகள் சொல்லி முடிய திரும்பவும் அவனுக்கு வந்து விட்டது அந்த நினைவு. வயிறுகளை வானுக்குக் காட்டிக் கொண்டு செத்து விழுந்து விடும் பூச்சிகள் போல, செல்பட்டுச் செத்துப்போன அந்தப் பெண்கள்- குஞ்சு குரு மண் மாதிரிப் பிள்ளைகள் - கிழவர்கள் - கிழவிகள் - என்று அதிலே அவர்கள் கிடந்தார்களே அந்தக்காட்சி இன்னமும் அவன் கண் களிலிருந்து மறையாமல் காணப்படுவது போலத்தான் அவனுக்கு திரும்பவும் இருந்தது.
கடலை உழுது கொண்டிருப்பது போல் விசைப்படகுகள் போய்க் கொண்டிருக்கும் சப்தம் அவன் காதுகளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தன. அயர்ந்து போய் ஒரு காலத்தில் அமைதியாகக் கிடந்த கடல், இப்போது பீரங்கிப்படகுகளின் விரைவால் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.
தரையைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்தார் அவனுக்குப் பக்கத்தில் இருந்த கிழவர். பீதி அவரைப் பற்றியிருந்தாலும் கோபமாக எழுந்து கொஞ்சதூரம் நடந்து விட்டு வந்து முன்பு இருந்து இடத்திலேயே அவர் இருந்தார். இந்தப் பட்டினியில் புழுப்போல் அவரின் குடல் துடித்துக் கொண்டிருக்கும் என்றும் அவனுக்கும் தெரியும்.
இந்த இடத்தில் இரைச்சல் போடாமல்தான் இப்போது குருவிகளும் பறக்கத் தொடங்கி விட்டன. அப்படியான ஒரு சூனியத்தில் சொந்தங்களை அவன் நினைவில் தேடினால், ஒருவர்
aliikuminiai 54 நீபி.அருளானந்தம்

நினைவும் அவனுக்கு வரவில்லை. வியர்வை வேர்த்து அவனுக்கு வடிந்து. அவன் நரம்புகள் துடித்துத் தெறித்தமாறியாக இருந்தன.
பசி அவனதும் உள் குடலைப் பிடுங்கிற்று. அவனைப் பிசைந்து வலி உண்டாக்கிற்று.
“முழங்காலுக்க சரியா வலிக்குது.” என்று அந்தக்கிழவர் சொல்லிக்கொண்டிருந்தார். "பசிக்கவும் பசிக்கிது” என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் அதை மறைத்துக் கொண்டு, “மானஸ்தர் தான் கிழவர்!” - என்று அவன் மனதுக்குள் அவரைப்பற்றி நினைத்துக் கொண்டான்.
ஷெல் சத்தங்களும், துப்பாக்கிச் சத்தங்களும் இன்னும் ஒயவில்லை. "எப்போது வந்து எங்கே செல்விழுமோ?” என்ற பயம் எல்லோருக்கும் உடம்பை நடுக்கிக் கொண்டிருந்தன. கிழவர் வயிற்று வலிபோல உடலைக் கோணி வளைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கடினமாகவும், கேட்கும் படியாகவும், பெரிதாகவும் மூச்சு விட்டார். அவரின் உலர்ந்த அதரங்கள் தானாகவே சில வார்த்தைகளை உச்சரித்தன.
"இன்னும் கஞ்சி ஊத்தேல்லயோ சனத்துக்கு.?” அவர் சொல்லிய பிறகு நிலவிய அமைதி பாறாங்கல்லைப் போல அவனுக்குக் கனத்தது. தலையைச் சாய்த்துக் கொண்டு பிச்சைகேக்கிறமாதிரிக் கேக்காமல் “ஏதோ தந்தால் தாதராட்டிப் போங்கோ.” என்ற மாதிரி நிரையில்நின்று கொடுக்கிற கஞ்சி, தண்ணிரை வாங்கிச் சாப்பிட்டுக் குடிக்கிறவர் இந்தக் கிழவர்.
"உணவு நசித்துவிட்டால் உடல் நசித்துவிடுகிறது. அதுவும் வயதுபோன இவரைப் போன்றவர்களுக்கு "- என்று அவரைப்பற்றி நினைக்கவும் அவரிடமுள்ள திரை ஒன்று கிழி பட்டது போல அவன் எண்ணினான். கிழவரைப் பற்றி நினைத்துக் கொண்டு தன் துயரை பெரிது செய்துகொண்டான். எங்கோ ஒரு குழந்தை
55 வெளிச்சம்

Page 37
கத்தியது கேட்கவே அவனுக்கு உயிரைக் கொண்டு போகுமாப் போல இருந்தது. வேறு ஒன்றும் காதில்விழாமல் அதுவேமட்டும் கேட்பது போல அவனுக்கு இருந்தது. உடனே காதுகள் இரண்டையும் கைகளால் பொத்திக் கொண்டான்.
அன்றையத் தினம் பின்னேரவேளையில் குடிக்கக்கிடைத்த சோற்றுக் கஞ்சியைக் கூட அவன் அந்தக் கிழவருக்கே குடிப்பதற்குக் கொடுத்துவிட்டான்.
கிழவர் அவனிடமிருந்து அதைக் கையில் வாங்குவதற்கு முதல் “ஏன் தம்பி நீ உன்ரை பசிக்குக் குடியனப்பு. ஏன் எனக்கு இதத்தருறிர்.?” என்று கேட்டார்.
“பறவாயில்லைப் பெரியவர். எனக்கு இப்பவயித்துக்கு ஒரு மாதிரி சரியாயில்லப் பெரியவர். அதால நீங்க இதக் குடியுங்கோ"- என்று தன் பசியையும் அடக்கிக் கொண்டு அவருக்கு அவன் பொய் சொல்லிவிட்டான். கிழவர் பாவம்! அவன் சொன்னதை உண்மைதான் என்று நம்பிக் கொண்டு அதைக் கையில் வாங்கினார். அதன் பிறகு ஆழமான ஒரு சோகத்தோடு அவரும் கையில் பாத்திரத்தோடு வைத்திருந்த கஞ்சியை குடிக்காமல் வைத்துக்கொண்டு இருந்தார்.
அவருக்கு இரத்த அழுத்தம் ஏகமாக எகிறி விட்டதால் தலைச்சுற்றல் மயக்கமாக மாறுவது போல இருந்தது. அதனால் கையிலிருந்து கோப்பைக் கஞ்சியை யாருக்காவது உடனே கொடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டு அங்கே அவருக்குப் பக்கத்திலிருந்த பையனைத் தன்னருகில் கூப்பிட்டு அவனுக்குக் கஞ்சிக் கோப்பையைக் கொடுத்தார். அதைக் கொடுத்தகையோடு அப்படியே மயக்கம் போல வந்து கீழே சாய்ந்து விழுந்துவிட்டார் கிழவர்.
கிழவரின் நிலையைக் கண்டு பீதியில் அவனுக்கும் முகம் வெளுப்புத்தட்டிவிட்டது . அவனின் நுரை ஈரல். ஆக்ஸிசனு
56-س
நீபி.அருளானந்தம்

க்குத் தவித்தது மாதிரி அவதிப்பட்டது, தொய்வு நோய்க்காரன் தானே இவனும், அதனால் "புஸ் புஸ்”சென்று மூச்சு வாங்கினான். என்ன செய்வதென்று தெரியாத நொடிகள் கடந்த பின், கிழவரின் தலையை அப்படியே தன் மடிமேல் தூக்கி வைத்துப்ப டுக்கவைத்துக் கொண்டு, கஞ்சி வாங்கிக் கொண்டு போன அந்தப் பையன் கொடுத்த குவளையில் இருந்த தண்ணிரை அவரின் முகத்தில் தெளித்தான். அவரின் சால்வையை உதறி வேர்வை வழிந்த உப்புக்கரித்தப் போன கழுத்தையும், முகத்தையும் தோள்பட்டைகளையும் துடைத்து விட்டு துண்டைச் சுழற்றி சுழற்றி அவருக்கு விசிறிக் கொண்டிருந்தான்.
பட்டை கழற்றும் வெயில் காங்கை கக்கிக் கொண் டிருந்தது. பெரியவரின். நிலையைப் பார்த்து அவனுக்குக் கண்களில் நீர் திரண்டு விட்டது. பெருமூச்சிழுத்து அடக்கிக் கொண்டான். தூக்கமுடியாத கனத்தில் துக்கம் மனதை வாட்ட கிழவரின் முகத்தையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
தூரத்திலிருந்து ஒரு பெண் வைத்த ஒப்பாரி பனைஒலை களையும் தாண்டி அந்த மணல் பாங்காண தரையிலெல்லாம்
எதிரொலித்தது.
செல்விழுந்து நேற்றுப் பறிக்ககப்பட்ட உயிர் செத்துப் போன தன் மகனை நினைத்துத்தான் அவள் அழுது கொண்டி ருக்கிறாள்.
" நேற்று அவளுக்குச் சபிக்கப்பட்ட நாள்தான்.” என்று அங்கே இருந்தவர்களெல்லாம் நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இது தான் ஒரு துயரம் என்று குறிப்பிடமுடியாத அளவிற்கு அங்கு உள்ளவர்கள் யார் கண்ணிலும் இப்பொழுதெல்லாம் துயரம் என்கிற களைதான். எங்கு கால்வைத்தாலும், எந்தப்பக்கம் திரும்பினாலும், எங்களுக்கு ஒரு விபத்து நேரக் காத்திருக்கிறது என்ற பயம் அவர்களுக்கு.
57
GoauauflFFLb

Page 38
இதனால் சுடு மணலில்தங்கள் இதயத்தைப் புதைத்ததைப் போன்ற வேதனைதான் எல்லோருக்கும். கிழவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை அவனுக்குப் பயம் அதிகமாகிக் கொண்டு வந்தது. "இப்படியே கிழவர் சிலவேளை இறந்தும் விடுவாரோ."? என்று நினைத்ததில் ஒரு வித அச்சம் வயிற்றில் அவனுக்கு முள்ளாய்க் குத்தியது போல இருந்தது. இது போர்க்களம். - தீயும், சாவின் வேதனைகளும் நிரம்பிய இடம். எனவே எல்லாமே சகஜம் தான். "அடுத்த நிமிடம் நான் உயிருடன் இருப்பேனோ? அல்லது அவர் உயிருடனிருப்பாரோ? இல்லை இதிலே இருக்கின்ற எல்லோரும்தான் ஒன்றாக நாங்கள் களப்பலிகளாக இவ்விடத்தில் செத்தும் மடிவோமோ யாருக்குத்தான் அது தெரியும்?”
என்று இவை எல்லாமே அவனது நினைவில் ஒரு கரும் புள்ளியாய் வந்து விட்டுப்போயின. செல்விழுந்து எழும்புகை போல அலைந்தது அவனது மனம். யார்தான் யாரைக் கவனிக்க முடியும். கிழவர் மயக்கமாகக் கிடப்பது இவ்விடத்தில் ஒன்றும் புதிய விசயமல்ல. இதுவும் சர்வ சாதாரணம் தான்' என்கிற ஒரு நிலையிலே இவனுக்குப் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்து கொண்டிருந்தார்கள். “டேய் ஓட்டங் காட்டினி யெண்டா அடிப்பன் உனக்கு..” என்று சொல்லிக்கொண்டு தன் சின்ன மகனை கக்கத்தில் தூக்கிக் கொண்டு அவனுக்குப் பக்கத்தாலே போனாள் ஒருத்தி. கொஞ்சம் அவனுக்குத் தொலைவில் போய் அவள் இருந்து கொண்டு "ராசா இப்பிடி என்ற மடியில கொஞ்ச நேரம் இருடா பிள்ள..” என்று சொல்லிக்கொண்டு பிள்ளையை இருக்கவைத்துப் பின்பு குழந்தையை உச்சி மோர்ந்து முத்தமிட்டாள் அவள்.
அதை இவன் பார்த்து விட்டு. “வரம் வாங்கி தவம் வாங்கிப் பெத்த ஆசை மகன் போல” - என்று அந்தப் பிரச்சனையான வேளையிலும் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
58
நீபி.அருளானந்தம்

மணி சற்றேக் குறைய ஏழு மணி இருக்கும். எப்போது நான் சோர்ந்து மயக்கமானேன் என்பது எனக்கு நிச்சயமாத் தெரியவில்லை, என்ற பார்வையோடு கிழவர் கண் முழித்து விட்டார். அவனுக்கு நெஞ்சுக்குள் தண்ணிர் வந்தமாதிரியாக நிம் மதியாக இருந்தது. கிழவரை படுத்து இருக்கும்படி சொல்லி சால்வையை விரித்து அதிலே அவரைக் கிடத்திவிட்டு, விறைத்துப் போன காலை பழைய நிலைக்கு கொண்டுவர நினைத்து எழுந்து நின்றான். நடந்தால் தேவலை போல அவனுக்கு அப்போது இருந்தது. இந்தச் சனக்கூட்டத்தில் எங்கே தான் அவனுக்கு நடக்க இடம் இருக்கிறது. என்றாலும் நடந்து தான் ஆகவேண்டும் என்ற மாதிரியாக உடம்பு உளைந்தது. அதனால் மெல்ல மெல்ல அதற்குள் நடக்க வெளிக்கிட்டான். சேற்றில் புதைத்த காலைப்பிடுங்கி - நாற்றுக் களை மிதித்திடாமல் நடப்பது போல சனங்களுக்குள்ளாக கவனமாக நடந்து போய்விட்டு வந்தான் அவன்.
59
வெளிச்சம்

Page 39
தன் இடத்துக்கு வந்தும் கையை உதறி உளைவு எடுத்துவிட்டு பின்பு தான் இருந்த இடத்திலேயே மீண்டும் குந்தினான். "முன்ன மெல்லாம் எப்படி இருந்தது எங்களிண்ட இந்த ஊர்” - என்று நினைக் கையில் அவனுக்குப் பார்வை மறைத்து வழிந்தோடியது கண்ணிர். அது மறைவதற்காகக் கண்களை இறுக்கி அவன் மூடிக்கொண்டான். மறுபடியும் சிந்தனைத் திடத்தைப் பெற அவன் முயன்று கொண்டிருந்தான்.
அன்றையத்தினம் அவன் உணவு உண்ணவில்லை என்பதால் இரவில் சொட்டு உறக்கமும் அவனுக்கு வரவில்லை. ஒன்றும் அவன் குடிக்கவுமில்லை. கீழே சோர்வாக அவன் படுக்கவுமில்லை.
மணி சற்றேறக் குறைய பன்னிரண்டு மணியிருக்கும்! வினாடிகள் யுகங்களாக கடந்து கொண்டிருந்த அந்த வேளையில் அவனுக்கு தொய்வும் இழுக்கத் தொடங்கிவிட்டது. அவன் நெஞ்சை உருப்பெருக்கி இழுத்துக் கொண்டிருந்தது தொய்வு வருத்தம். அதனால் அமைதியற்ற பாழ் வெளியாய் நீண்டது அவனுக்கு அந்த இரவு.
வெளிச்சத்தின் சுவடே தெரியாமல் எங்கும் இருட்டுத்தலை விரிகோலமாய்ப் பயமுறுத்திக் கொண்டிருந்த இரவு கலைந்துபோய் விடிந்தது. பாரமுள்ள தலைச் சுமையோடு நடப்பது போல, இரவு நித்திரையில்லாமல் கிடந்த அவர்களெல்லாம் எழுந்து தள்ளாடியவாறு அது வழியே நடந்து கொண்டிருந்தார்கள். வளைக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் நண்டாக அவர்களிலேயுள்ள சில பேர்களின் முகங்கள் இருந்தன.
காலை வெயில் 'சுரு சுரு" வென்று கடுமை காட்டத் தொடங்கி யிருந்தது. "என்ன செய்யலாம்?” - என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான். ஏதோ மூளைக்குள் பழுதாகிவிட்டது மாதிரியாக இவனுக்கு இருந்தது. வாய்
60 நீபி.அருளானந்தம்

முணுமுணுக்க, பித்துப்பிடித்தவன் மாதிரி இருந்து விட்டு எழுந்து கொஞ்சத்துாரம் பிறகு கஷ்டப்பட்டு அவன் நடந்து போனான். நடக்க நடக்க அவனது மன வேகம் அதிகரித்தது. ஏதோ ஒரு அபாயமொன்று இவ்விடத்தில் நடக்கப் போகின்றதென்று அவனுக்கு உள் உணர்வுகள் கூறுவது மாதிரியாக இருந்தன.
ஒரு சின்ன மரத்தில், பூங்குட்டியாக இருக்கும் அணில் குட்டி தாயுடன் இருந்து கத்திக்கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. அதே நேரம்தான் சீறிக்கொண்டுவந்து அவன் முன்பு இருந்த இடத்தில் விழுந்து வெடித்தது ஷெல்.
எங்கும் புகை! புகைமண்டலமாகவே எல்லா இடமும் பார்க்கக் கிடந்தன. அவனுக்கு ஒரு கணம் கண்களைத்திறந்து அந்தப்பக்கமாக பார்க்கவேமுடியாமல் இருந்தது. செல்விழுந்த இடத்தில் மாரடித்துக் கதறிய மாதிரி கத்தியழும் குரல்கள் கேட்டன, "ஐயோ என்ர பிள்ள. என்ற அம்மாவே. என்ர
கடவுளே”
அவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. மரணதேவதையின் சுவாச உஷ்ணம் அவனைத் தகித்தது. துடைப் பக்கம் குளிர்ந்தமாதிரி இருந்தது. குனிந்து பார்த்தான். செல்துண்டு வெட்டிய சிராய்ப்புக் காயந்தான்! அவன் அதைப் பொருட் படுத்தாமல் முன்பு தான் இருந்து கொண்டிருந்த இடத்துக்கு நொண்டி நொண்டி நடந்து போனான். அங்கே செல் விழுந்த இடத்தில் சில உடல்களை அவனுக்கு முழுதாகப் பார்க்க முடியவில்லை. சில உடல்கள் முண்டமாகக்கிடந்தன.
அந்தப் பெரியவர் எங்கே...? அவர் எங்கே..? அவனது கண்களில் நீர் கோர்த்தது. கண்ணிர் வழிந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு செல் பட்டு செத்துப்போனதன் பாட்டனின் நினைவோடு - அவன் உடல் குலுங்கிக் குலுங்கி அழத்துவங்கிவிட்டான்.
(சுடர்ஒளி வாரமலர் -யூன், 07 - 2009)
61 வெளிச்சம்

Page 40
அழித்திருத்தல்
“பிள்ளைகளே பாத்தீனியம் எனும் இந்தச் செடிபற்றி நன்றாக நீங்கள் தெரிந்து கொண்டு இனிமேல் விழிப்புடன் இருங்கள். இந்தச் செடி விஷம்கொட்டும் மிகவும் ஒரு நச்சுத் தன்மையுடைய செடி. மற்றைய தாவரங்களின் இரை கெளவி போலத்தான் இந்தச் செடியையும் சொல்லக் கூடியதாக இருக்கிறது. இத்தாவரம் மிக வேகமாக விவசாய நிலங்கள், வீட்டுச் சூழல் தொகுதிகள், வீதியோரங்கள், மேட்டு நிலங்கள், குளத்தின் நீரேந்துப் பிரதேசங்கள் - ஆகிய இடங்களில் அதிகளவில் பரவி வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் இந்தச் செடிக்கு கட்டாயம் நீங்கள் விலகி இருங்கள். பாத்தீனியம் சிறு அளவில் உயரமாய் வளரும் செடிகள்தான்! ஆனால் இதற்குள்ள வேர்களென்றால் மற்றைய செடிகளைப் போலல்லாது பெரிய அளவுடையதாகவே இருக்கும். இத்தாவரத்திலிருந்து சுரக்கப்படும் 'பார்த்தெனின்" - எனப்படும் நச்சுப்பதார்த்தம் மனிதனின் தோலில், அரிப்பு, சிவப்பு, தடிப்பு, கொப்பளம், மூக்கடைப்பு, ஆஸ்துமா - போன்ற கடினப்பட்ட நோய்களையும் உண்டாக்கி விடுகிறது.
எமது வருங்கால சந்ததியினருக்கும், விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இக்களையைப்பற்றி நீங்கள் இப்போது சிறிய அளவிலாவது தெரிந்து கொண்டீர்கள் தானே - சரி..!
62
நீ.பி.அருளானந்தம்

இனிமேல் இதிலே நிற்கின்ற நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு செடியைக் கூட தப்புவதற்கு விட்டுவிடாமல் அவை எல்லாவற்றையும் முதன் முதலாக நிலத்திலிருந்து பிடுங்குங்கள். அடுத்ததான உங்களது வேலை - நீங்கள் பிடுங்கிய அந்தச் செடிகளையெல்லாம் ஒரு இடத்தில் வெயில் காயக் கூடியதாகப் போடுங்கள் - நாளை இவற்றை தீயிட்டு நாங்கள் கொளுத்தி விடலாம். அதற்கு பிறகுதான் இந்த இடம் உருப்படும்."
- என்று பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானம் உள்ள பக்கம், அதைத் துப்பரவு செய்வதற்காக வந்து நின்ற எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் கூறிக்கொண்டிருந்தார். மாணவர்களுக்கு பாத்தீனியம் செடிகள் பற்றிய விவகாரம் ஏலவே இருந்து சிறிய அளவிலாகத் தெரிந்ததுதான்! அதன் காரணமாக அவர்கள் அச் செடிகளின் வெண்நிறப்பூந்துணர்கள் உள்ள ஈனப் பூக்களை மன வெறுப்புடன் பார்த்தார்கள். அதை அழிப்பதற்கு தங்களுக்கும் பெரிய பங்களிப்பு உண்டென அவர்களும் உணர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் அச் செடிகளைப் பிடுங்கி, வேர்களில் சேர்ந்து ஒட்டி வந்த மண் பிடியை உதறி ஒரு பக்கமாகப் போட்டார்கள். அந்த நிலத்தில் பாத்தீனியம் எங்கும் பரவியதாய் முளைத்திருப்பதைப்பார்த்து அவர்களது பிஞ்சு மனங்களிலும் சினம் மூண்டது.
ஆனாலும் அந்தச் செடிகள் எல்லாவற்றையும் பிடுங்கி அவ்விடத்தை வெட்ட வெளியாக்கிவிட அவர்களுக்கென்றால் அரை மணித்தியாலநேரமளவுதான் சென்றது.
இளவெயில் பரவியது. வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்த மாணவர்களின் முகங்களிலே காலைச் சூரியனின் கனிந்த வெளிச்சம் விழுந்துகொண்டிருந்தது. பூக்களில் இரைதேடும் வண்ணத்துப் பூச்சிகள் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலே பறந்தவாறு போய்க் கொண்டிருந்தன.
63
வெளிச்சம்

Page 41
சிறகுமுளைத்த பூக்களாகத் தெரிந்த வண்ணத்துப் பூச்சிகளை பார்த்துக்கொண்டு அதிலே நின்ற மாணவனொருவன் மற்றைய மாணவர்களுக்குச் சொன்னான்:
"இந்த வெண்ணிறப் பூ முடிகளை நூற்றுக்கு மேற்பட்டதாய் தோற்றுவிக்கக்கூடிய இந்தச் செடியால் வருகிற கேடு பற்றி எம் ஆசிரியரும் கூறி இப்போதுதான் நாம் அவற்றை நன்கு அறிந்து கொண்டோம். இங்கே முளைத்து நிற்கின்ற இந்தச் செடிகளை விடவும், இன்னும் அனேகமாக எங்கள் வீடுகளின் வளவுகளிலேதான், இதைப் போன்று குடை விரித்தாற்போல நிற்கும் இந்தச் செடிகளை நாங்கள் பிடுங்கி எறிய வேண்டியதாய் இருக்கும்."
அவன் அதைச் சொல்லவும், அவனுக்குஎதிரே முன்னால் நின்று கொண்டிருந்த மாணவன், மெல்லத்தன்தலையை உயர்த்தி அவனுடைய கண்களை ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சிரித்தான்.
“உம். எங்கள் வீட்டைச் சுற்றி காணிநிலமே இப்போது இல்லையே. காணிநிலம் இன்றைய சூழ்நிலையில் நல்ல விலை ஏறியதால் என் தந்தை அவற்றைத் துண்டுபோட்டு கேட்டவர்கள் பலருக்கும் அவைகளை விற்றுவிட்டார். இப்போது அங்கே எங்களுக்குத் தனி வீடு மட்டும் தான் உண்டு.”
அவன் இவ்விதம் சொல்ல எல்லோரும் அதைக் கேட்டுச் சிறிது நேரம் மெளனமாய் நின்றார்கள். அந்த மெளனத்தைக் கலைத்துக் கொண்டு இன்னொரு மாணவன் சொன்னான்:
"இந்த நச்சுச்செடியானது இந்தியாவிலிருந்துதான் இங்கே வந்து பரவியதாம். இந்திய இராணுவம் அமைதிப்படை' என்று சொல்லிக் கொண்டு இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளுக்கு வருகிற போது, தங்கள் உணவுக்காக இங்கே கொண்டு வந்த ஆட்டு மந்தைக் கூட்டங் களுடன் இந்தப் பாத்தீனியவிதைகள்
64 நீபி.அருளானந்தம்

ஒட்டுண்ணிகளாக அவைகளுடன் சேர்ந்து வந்து நிலத்தில் விழுந்து முளைத்துத் தான் நம் நாட்டிலெல்லாம் இது உற்பத்தியானதாகச் சொல்கிறார்கள்”.
* இந்தச் செடிகள் முளைப்பதால் அது எங்கள் விவசாயத்தையும் பாதிக்கிறது. எங்கள் இடத்தின் வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப் படுகின்றன. இவைகள் எங்களது உடல் நலத்தையும் கூட கெடுக்கிறது.”
என்று சொன்னான் இன்னொரு மாணவன்.
“இந்தக் கணக்கற்ற செடிகள் முளைத்துப் பரவும் அளவுக்கு இந்த மண்ணே அதற்குப் போதாது. அந்தளவுக்கு இதைச் சொல்லுமளவிற்குத் தீவிரமாக இருக்கிறது இதன் நெருக்கம்.”
என்று சொன்னான் பிறிதொரு மாணவன்.
“மனிதர்கள் வசிக்காத தீவுகளிலே இவைகள் அங்கேயெல்லாம் முளைக்கின்றதா, இல்லையே? இங்கே மனிதர்களான நாங்கள் வசிக்கின்ற இந்த இடங்களில்தானே, இவையும் தாங்கள் வளரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் போட்டி போடுகிற அளவுக்கு இருக்கின்றன.”
“ஒ. அப்படித்தான். அப்படித்தான்! நாங்கள் இப்போ பார்க்கின்ற அளவிற்கு பாத்தீனியம் எனும் செடிகள்தான் எங்குமே முளைத்து வளர்ந்ததாய் இருக்கின்றன. இதோடு போட்டி போட்டு முளைக்க இங்குள்ள தகரைச் செடிகளுக்குக்கூட முடியாது தான்."
தான் பிடுங்கி வைத்திருந்த செடிகளைக் கொண்டுபோய் கும் பலில் அடக்கமாகப் போட்டுவிட்டு வந்த இன்னொரு மாணவன் அவர்களுக்குச் சொன்னான்:
65
வெளிச்சம்

Page 42
"இதெல்லாம் இன்று வடகிழக்குப் பகுதியான இடங்களிலேதான் பெருகி விட்டிருப்பதாக விவசாய திணைக் களமும் - டெங்கு நோய் மற்றும் சுகாதார மேம் பாட்டிற்குமான விஷேச செயலனியும் கணக்கெடுத திருக்கிறது. எங்கள் வவுனியா - மண்ணின் பச்சைப் பசுமைப் பண்பாடு நிலைமையை அதல பாதாளத்துக்குக் கொண்டுபோய் விடுமள விற்குத்தான் இந்தப் பாத்தீனியம் செடிகள் பயங்கரமாகப் பரவி முளைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் எம் பகுதிகளிலிருந்து எந்த மரஞ்செடிகன்றுகளையும் தென் பகுதிக்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. எங்கள் ஊர் எல்லையில் வீதியோரம் பெரிய அறிவிப்பே விளம்பரப்பலகையில் அதற்காக எழுதிப் போட்டிருக்கிறார்கள். அதை நீங்கள் யாருமே பார்க்கவில்லையா?" -
அந்த மாணவர்களது உரையாடல்களை தூரத்தில் நின்று கொண்டு, ஆசிரியரும்தான் கேட்டு அவர்களுக்கிருக்கும் பொது அறிவைப்பற்றி மிக அமைதியாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.
பாடசாலை மணி "டாண்டாண்” என்று ஒலித்தது. மைதானத்தில் நின்று கொண்டிருந்த மாணவர்களெல்லாம் தண்ணிர்க் குழாயடிக்குப்போக அகலக்காலெறிந்துநடந்தார்கள். அங்கே தங்கள் கை கால்களை சுத்தமாக தண்ணிரால் கழுவிட்டு புத்தூக்கத்துடன் பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்தார்கள். நேரம் செல்லச்செல்ல வெயில் ஏறிக்கொண்டிருந்தது.
மாணவர்கள் பிடுங்கிக் குவித்து விட்டிருந்த பாத்தீனியம் செடிகள் அந்த வெயிலினது வெக்கைக்கு வாடி வதங்கியபடியே குவியல் உயரம் அடங்கிய நிலைக்குப் போய்க் கொண்டிருந்தன. நாளைக் காலையில் அல்லது அடுத்தநாள் காலையில் பாத்தினியக் குப்பைகள் நெருப்பில் எரிவது என்னவோ நிச்சயம்தான்!
66 நீபி.அருளானந்தம்

ஆனாலும் அந்தச் செடிகளிலிருந்து விழுந்து கிடக்கின்ற அசுரவித்துக்கள், அதே மைதானத்தில் இப்போதும் தங்கள் உயிர்த்தலுக்காய் முளைகட்டியபடி தயார்நிலையில் இருந்து
கொண்டிருக்கின்றனவே.
(சுடர்ஒளி - ஏப்ரல் 2009) (தினகரன் வாரமஞ்சரி - மே மாதம் 3ம் திகதி 2009) (தாமரை - செப்டெம்பர் 2009)
67
வெளிச்சம்

Page 43
திறப்பு
இரவு படுத்தபின்பு நன்றாக எனக்கு நித்திரை போய்விட்டது. காலையில் நித்திரை விட்டெழுந்து வெளியே நான் வந்து பார்த்தபோது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று முடிவில்லா மனிதர் கூட்டம் காலைச் சாப்பாடு வாங்கிக் கொள்ள நிரையில் நின்று கொண்டிருந்தார்கள்.
அந்தப் பரிதாபகரமான நிலையில் எல்லோரையும் அங்கே நான் கண்டபோது, என் மனம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நான் துயரத்தில், மேலே உள்ள வானத்தை நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். முகாமெங்கிலும் பெரும் சத்தங்கள்! அவை யெல்லாம் என்காதில் விழுந்து கொண்டிருந்தன. என்றாலும் சத்தங்கள் எதையும் உள்வாங்கிக் கொள்ளாது, செவிடானது போல எண் காதுகள் அவைகளை ஒதுக்கித் தள்ளியபடி இருந்தன.
நான் மண்டையைப் பிளக்கும் கவலையில் மூழ்கியி ருந்தேன். என் சிந்தனைகள் மரத்துப் போய்க்கிடந்தது. என் மொத்த இருப்பும் சூனியத்தில் இருந்தது.
எந்தக் காரணமும் இல்லாமல் சாம்பல் நிறவானத்தை
68 நீபி.அருளானந்தம்

வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்கள், திடீரென சூரிய ஒளியால் தாக்குப்பட்டது. அதன் பிரகாசமான ஒளிக் கீற்று என்னில் தாக்குப் பட என் நினைவுகள் விழித்துக் கொண்டது. மூளைக்குள் முன்பு என் கண் முன்னே நடந்த அந்தக் காட்சிகள் ஒன்றின் பின் ஒன்றாய் நகர்ந்து சென்றன.
யுத்தம் நடக்கும் காலமெல்லாம் வீடுவாசல்களிலே நானும் என் மனைவியும் பிள்ளையும் நிம்மதியாகவா இருந்தோம்? தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் நான், ராணுவம் ஊருக்குள் வந்து விட்டது என்று எல்லாரும் கிடந்து கலவரப்படும்போது வீட்டைப் போய்ப்பார்க்க முடியுமா? செல்வந்து விழுந்துகொண்டிருக்கும் போது என் உயிரைத் தப்பித்துக் கொள்வதற்கு எங்காவது திசையை நோக்கி நான் ஓடிவிடவேண்டுமல்லவா? இப்படித்தான் இடம் பெயர்ந்து எல்லோரும் ஒடிக்கொண்டிருக்கும் போது, தன்னுடைய தாயை, தன்னுடைய மனைவியை, தன்னுடைய மகனை, தன்னுடைய மகளை - என்று ஒடிக்கொண்டிருக்கும் சனத்துக்குள்ளே பிரிவைச் சந்தித்தவர்க ளெல்லாம் நின்று கொண்டு தேடிக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறாகத்தான் ஒரு நாள் நான் அவ்விடத்தில் வந்து செல்விழுகிறது என்ற பயத்தில் ஓடிவர, என் மனைவியும் மகளும் என்னைப் போலவே பயந்துகொணடு வீட்டிலிருந்து எங்கே யாவது போவோம் என்ற நினைப்பில் வெளிக்கிட்டு ஓடி வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வெறுங் காலோடுதான் ஒடிவந்திருக்கிறார்கள். அந்நேரம் மனைவியின் மண்டைக்குள் மட்டும் என்னைப்பற்றிய கேள்விகள் இருந்ததாம்!
மகள் பிறகு அதைப்பற்றியெல்லாம் எனக்குச் சொன்னாள்.
" அவர் எங்க போனாரோ? என்ன ஆனாரோ? எங்கள எங்கயும் இதுகளுக்க அவர் நிண்டுகொண்டு தேடுறாரோ?"
69 வெளிச்சம்

Page 44
மகள் அதை எனக்குச் சொல்ல, நான் கேட்டு விட்டுக் குழறிக் கத்தினேன். அதற்குப் பிறகு அவளை நினைத்து நான் அழுது அழுதுதான் எண் கண்ணிரெல்லாம் எனக்கு வற்றிப் போனது. உடலே எதையும் செய்வதற்கு உதவ மறுத்தது.
இன்று இங்கே நாங்கள் வந்தது முதலாய், எவ்வளவு நாட்கள் கழிந்து விட்டன. கமலம் நிறத்தில் ரொம்ப அழகு தான்! இப்போது என்மகள் அவளின் அச்சுத்தான்! அம்மா மாதிரித்தான் அவள்! என்னைப் போல் இல்லை! இவளுக்குப் பதினேழு வயதாகிறது. பெரிய கண்களும், கறுத்த முடியும், வலது கன்னத்தில் பெரிய மச்சமும் இருக்கிறது தாயைப்போல இந்தச் சந்தோஷத்தோடு மீண்டும் அதை நான் நினைக்க, என் முகம் வெளிறிப்போகிறது. எந்த நம்பிக்கையில் நான் இந்த உலகத்தில் இனி வாழ்வேன்? என்றாலும் மதநம்பிக்கையில் நான் எதை எதையோ வெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எதுவுமே எனக்கு ஆறுதலளிக்கவில்லை. என் ஆன்மாவை எப்பொழுது அழைப்பாய், என்று நான் இப்போது கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படி நான்கேட்டும் கடவுள் என் ஆன்மாவை அழைப்பது போல் இருக்கின்றதாகவேயில்லை.
விதியைப் பற்றியெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட அக்கறை யில்லை. செல்வந்து விழுந்து அதில் சிக்குண்டுதான் என் மனைவி இறந்தாள் என்பது உறுதி. அவளோடு அவள் எண்ணங்களும் மரணம்கொண்டு விட்டன. இந்த யுத்தம் தான் என் மனைவியைக் கொன்றது. அந்தச்செல்லை என் மனைவி மீது ஏவிவிட்டவன் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படவில்லை.
இந்த முகாமில் நான் இருந்தாலும் என் வேட்டிக் கட்டுக்குள்ளே சிறுபொட்டலம். ஒன்று மறைப்பாக இருக்கிறது. அதில் கொஞ்சம் நகைகளும் ஐம்பதினாயிரம் ரூபாய்களும் இருக்கின்றன. என் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வரும்
70
நீபி.அருளானந்தம்

போது இதையெல்லாம் என் மகளிடம் நான் கொடுத்து விடவேண்டும். என் மனநலமும் குன்றி விட்டது.
என் மனைவி இறந்த அந்த நினைவுகளை விட வேறெதிலும் என்நினைவுகள் நகர மறுக்கின்றன. எண்மனைவியும் பிள்ளையும் வீட்டை விட்டு ஓடி வரும்போது கொஞ்சம் தள்ளியதாய் உள்ள ஒரு வீட்டுச் சுவர்க்கரையில் அந்தச் செல் வீழ்ந்ததாம்.
"அப்படித்தான் நடந்தது” என்று என் மகள் சொன்னாள்.
தன் மகள் மீது அந்தத் தாய்க்கு எவ்வளவு பாசம் செல் விழுந்து குடல் தனியே கிடக்கிற நிலையிலும் "என்னை விட்டு ஓடி விடு - வேகமாய் நீ ஒடிப் போய் விடு” என்று அவள் சொல்லியிருக்கிறாளே? என்றாலும் என் மகள் தாயை விட்டு எங்கும் போவதற்கு அசையவே இல்லை. அவளின் கண்களுக்கு முன்பாகத்தான் என் மனைவி தன் கடைசி மூச்சை விட்டாள்.
மகளுக்கு அன்று அசதியுற்ற மூளை இன்னும் வருந்திக்கொண்டுதான் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் விடிவு என்பதே இல்லாமல் போய் விட்டது. திரும்பத்திரும்ப முகாம்களுக்கும் அலுவலகங்களுக்கும் நாங்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறோம். இவ்வளவு பாடுகளையும் நாம் பட்டுக்கொண்டிருக்கிறோம்.ஆனாலும் எல்லோரும் ஒத்த குரலில் "சமாதானம் வரும் சமாதானம் வரும்” - என்று தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிற சமாதானம் வருமா? என் மனம் இதை நினைத்து சோர்ந்து போகிறது. இன்று இரவும் முகாமில் நான்படுத்துக் கிடக்கிறபோது, நல்ல நித்திரையிலும் என் உடல் சில அசைவுகளைக் காட்டியது. செயலற்றுக் கிடந்த என் கைகள் வேட்டி இடுப்புக்குள் கட்டிவைத்திருந்த பொட்டலத்தைத் தடவிப்பார்த்துக் கொண்டது - கவனத்துடன்.
(சுடர்ஒளி - செப்.08, 2009)
71
வெளிச்சம்

Page 45
G66fitab
“எங்களுக்கு நேர்ந்த இந்தக் கேடுகள் வேறயாருக்குஞ்சரி நேரக்கூடாதண்ண."
பிரபா எண்டவள் இப்படித் தன்ர கதையைத் தொடங்கி வாய மூடாமப் பேசிக் கொண்டிருக்கிறாள்.
அவள் தன் கதையைச் சொல்லும் போது பழைய துக்கத்தின் புதிய வேகம் அவளிடமாய்த் தென்படுகிறது.
நான் அவளுக்கு முன்னாலுள்ள கதிரையில இருந்து கொண்டு அவள் சொல்லுறது வெறும் கதை தானே எண்டமட்டில கேட்டுக் கொண்டிருக்கேல்ல. அவள் சொல்லுற கதயளக் கேக்கக் கேக்க - என்ர மனசில துக்கங் கட்டிப்போய்ப் பிறகு அது பந்தல் கொடிபோல உள்ளுக்கப்படந்து கொண்டேயிருக்கு. அவள்தான் அங்கயாப் பார்த்த சம்பவங்களில, எனக்குச் சொல்ல முடியாதவற்றையும் தன் பேச்சிலே முடிந்த அளவுக்கு எனக்குச் சொல்லிக் கொண்டுதான் வருறாள். அந்தக் கதைகளை அவள் சொல்ல சொல்லகேக்க எனக்குத் தல கிடந்து சுத்துது. நெஞ்சு விண்விண் எண்டதாக் கொதிக்கிது. கோபத்தில மாரடைச்சுப்
72
நீபி.அருளானந்தம்

போய் வெடிக்கிறமாதிரியிருக்கு. நெஞ்சும் சகிக்க முடியாத கவலேல பாறையாக் கணக்குது. சூரிய அஸ்தமனம் பார்த்த பிறகு இந்த வாழ்க்கையில ஒரு மனுசனுக்கு என்னதான் இருக்குது என்ற நினைப்பில தவிக்கிற மாதிரி பிறகு நான் பெருமூச்சு விடுறன். நான் விட்ட அந்தப் பெருமூச்சு எல்லா ஒசையளையும் அடக்கிய பெருமூச்சாக எனக்குக்கேக்கவா இருந்தது. அவள் நெஞ்சில ஏக்கத்தையும் பயத்தையும் உள்ள வைச்சுக் கொண்டு தன்ர நெஞ்சில ஏர் பிடித்து உழுகிறமாதிரியா அங்கத்தையிடத்தில அவ்வப்போதையா நடந்த பயங்கரச் சம்பவங்கள நீழல்களாய் இப்ப எனக்குச் சொல்லிக் கொள்ளவாத் துடங்கீட்டாள்.
எத்தின சாவுகள்? எத்தினை துன்பங்கள்? எத்தினை கஷ்டங்கள்? எத்தினைத் துயரங்கள்? அம்மா! மரக்கிளையள வெட்டிக் கொண்டு போற ஷெல் - உடலைச் சீவுறதுக்கு என்ன கஷ்டமா? மனுசர் அங்க னேக்க சாகச் சாக மேலயும் மேலயும் அங்க புதுப்பிச்சுக் கொண்டிருந்தது அந்தச் சாவுகள்தான். வெட்டி விறகாயடுக்கின மாதிரி செத்தபிணங்களும் போட்டு ஒரு இடத்தில எரிக்கப்பட்டுது. குழப்பம் - கலக்கம் - பீதி - பிறகு அப்பட்ட பயம். அவள் இதையெல்லாம் சொல்லும் வேளை குரலின் தொனி நடுங்கிற்று. ஒரு இருமல் அவள் இருமினாள். எனக்குத் தந்திநாதம் போல அவள் இருமல் சத்தம் கேக்கவா இருந்தது. இருமலின் பிறகு அந்த வேதனையில சிறகுகளை விரித்துக் கொண்டு ஒரு பறவை இருக்கிறது போல் அவள் பார்க்கவும் இருந்தாள்.
நான் அந்த நேரம் கிரகணம் மறைத்ததைப் போல இருந்த அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி அவளைப்பார்த்துக் கொண்டிருந்த போது - என்ன? எப்படி? எங்கே? என்கிற கேள்வியெல்லாம் அவளைக் கேட்க வேண்டுமென்று என்மனசிலே அவைகள் உதிக்க ஆரம்பித்து விட்டன. ஆனாலும் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு நான் மெளனம் காத்தேன். என் மனம் மரத்திலிருந்து கல்லடித்து
ulimwiliniiiiiiiiiiiiiiiiiiiii 73
வெளிச்சம்

Page 46
வீழ்த்தப்பட்ட ஒரு பால் மாங்காயைப் போல கவலைப் பாலைக் கசிந்து கொண்டிருந்தது. எச்சில் துப்புவது போன்ற கோபத்தில் இருந்து கொண்டு பிரபா பிறகு தன் கதையைத் தொடர்ந்தாள். "உடைஞ்சு உருமாறிப் போன மாதிரித்தானண்ண அங்க இருந்து வந்தாப் பிறகு இந்த அகதி முகாமுக்கிளயும் நாங்க இருந்து போட்டு இப்ப வெளியாலயா வந்திருக்கிறம். அதுக்குள்ள நாங்கப்பட்ட பாடுகளெல்லாம் ஒரு ஈனப்பட்டபாடுகள் தான். சொல்லவெண்டு இதெல்லாத்தையும் நெக்கவே இருதயம் எனக்கு வெடிக்குது. நாங்க இருந்த முகாமுக்க தண்ணியள்ள தண்ணிக் கிணறில்ல - குழாய்கிணறில அடிச்சுத்தான் எல்லாரும் அதுக்கவா தண்ணி எடுக்கவேணும். அதுக்கவா இரவு பத்து மணி போல அதுக்குள்ள ரியூப் கானுகளோட நாங்க கியூவில தான் ஆளுக்குப் பின்னால ஆளா நிக்க வேணும்.
அதுக்கயெண்டா ஒரு மைல் துாரமளவுக்கு அப்பிடியா எல்லாரும் போலினில நிண்டு அரக்கி அரக்கிப் போய்த்தான் விடிய நாலு மணி அளவிலயா நாங்க அந்த ரியூப் வெல் அடியில போய் தண்ணி அடிச்சு எடுத்துக் கொள்ளலாம். இதுக்குள்ளயா இடை நடுவில உள்ள ஆள் களைப் பில நித்திர கொண்டமாதிரி உறங்கீட்டா பின்னால கியூவில நிண்டு கொண்டிருக்கிற ஆள் முன்னால அப்பிடியே முன்னேறிப் போயிடும்.
தலையப் புடுங்கிற அந்த வெய்யிலுக்க பத்தடித் தறப்பாழ்க் கூட்டுக்குள்ள எட்டுப்பேர் எப்பிடியா இருக்கிறது? எங்களுக்கு ஒராளிண்ட மூச்சுப்பட்டாலே கூச்சம். ஆனா இதுக்க இடிபட்டுக் கொண்டு ஐயோ. வெந்து வேர்த்து அப்படியே சீவன் போற அளவுக்கு வெக்கைச் சூடு மனுசனின்ட உடம்ப ரெத்தச்சத்துக்கெட்டுப்போற அளவுக்குக் காச்சித்திண்டிருமே..?
அப்பிடி அதுக்க ரத்தம் செத்துப்போக மனுசக்கூட்டங்கள வைச்சுக் கொண்டு திண்னக் குடுக்கவெண்டு நிவாரணம் தருவினம். கிழமைக்கு ஒராளுக்கு ஒரு யொக்கு அரிசி (1 கிலோ)
74
நீபி.அருளானந்தம்

ஒரு கிலோ மா. நூறு கிராம் சீனி. காக்கிலோ பருப்பு.
தேங்காயெண்ண காப்போத்தல்.
ஆனாப் பதினைஞ்சு நாளுக்கொருக்கா தேங்காய் - முட்டை - உருளைக்கிழங்கு - சோயாமீற் - உப்பு - தூள் புளி - அப்பிடியெல்லாம் தந்திச்சினம்.
மறுமாற்றமில்லாம அவயள்குடுத்தது எங்களுக்கு இப்படியாத்தான் ஒரு கணக்கு. இதில தான் நாங்க சோறாக்கிக் குழம்பாக்கிச் சாப்பிடவேணும்.
இதெல்லாம் அதுக்க பிறகு நடந்த சம்பவங்கள் தான் எங்களுக்கு. ஆனா அதுக்க முந்தி முதக் கொண்டு நாங்க வந்த நேரம் நடந்ததுகளப் பார்த்தா ஒரு நாள் கூட அதுக்க சுகம் கிடையாது.
அந்த முள்ளுக் கம்பியடிச்ச இரும்புக் கூடுமாதிரியான இடத்தில இருந்து முன்னமெல்லாம் எங்களுக்கு வெளியால வெளிக்கிட்டுப் போறதுக்கு அனுமதியேயில்ல. பச்சத் தளிர உடைச்சு நெருப்பில போட்ட மாதிரி இப்படியா இதுக்க வந்தும் எங்கட பாடுகள் கஷ்டங்கள் கூடிக் கூடிக் கொண்டரத் துடங்கீற்று . அங்க கம்பி வேலிக்கு வெளியால நிக்கிற சொந்தக்காரரை இந்தக் கண்ணால காண எங்களுக் கெண்டா அழுகை அழுகையா வந்திட்டுது. எப்பிடி இருக்கிறியள் எண்டு அதுகளும் எங்களக் கண்டு அழுகிறது மாதிரிக் கேக்க நாங்களும் சதுரம் நடுங்கித் தவிச்சுப் போய் விக்கி விக்கி அழுறம்.
என்னத்தைத்தான் நாங்கள் அதுகளுக்குச் சொல்லுறது - நல்லதகவலெண்டு எங்களிட்ட என்னதான் ஒரு விஷயம் இருக்கு?
எண்டாலும் இப்பிடி வருற இனம் சனத்தக் கண்டு நெஞ் சிண்ட பாரத்தயாயிலும் கொஞ்சம் குறைச்சுக்
75
வெளிச்சம்

Page 47
கொள்ளுவமெண்டு பார்த்தா காவலுக்கு நிக்கிற ஆடமிக்காரர் அங்க வந்து நிக்கிற ஆக்களத் துரத்தத் துவங்கிடுவான்கள்.
பத்து நிமிசத்துக்கு மேல அதில நிண்டு ஆரும் காம்புக்குள்ள வுள்ள ஆக்களோட பேசக்கூடாது. போங்க போங்க எண்டு அவன் அதாலயா அதுகளக் கலைச்சுவிட - ஒரமாப் பாத்துப் பாத்து அதுகளும் அங்கால ஒதுங்கிப் போய்ப் போயிருங்கள்.
நாங்கள் அதுகளப் பார்த்து கண்ணத்துடைச்சுக் கொண்டு பெருமூச்சு விட வேண்டியதுதான். வேற என்ன செய்ய..?
இப்பிடித்தான் நெஞ்சில சதை உரிச்சமாதிரித்தான் நாங்க உள்ள வேதனைகளெல்லாம் பட்டது. எதுக்கும் நாங்க அதுக்குள்ள கியூவிலதான் நிக்கவேணும். போலிங்கில நிக்காட்டி அடிதான் அங்ககிடைக்கும்.
எனக்கெண்டா பயப்பிட்டுப் பயப்பிட்டுப் போய் இப்ப மூளையே சரியில்ல. நடந்த சம்பவங்கள சிந்திச்சு சிந்திச்சு நேர்த்தியாயும் உங்களுக்கு சொல்லேலாம இருக்கு.
அவள் இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டாள்.
நான் கண்களை அசைக்காமல் அவள் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.
அவள் கசப்புடன் சிரித்துக்கொண்டாள்.
அங்க ஒடியாடி அலைஞ்சு அலுத்ததிலும் பிறகு சனங்கள் செத்ததுகள்தான். சாவே வா.
சொல்லிவிட்டு என்ன செய்யலாம் என்று அவள் என்னையும் கேட்டுக் கொண்டாள்.
76
நீபி.அருளானந்தம்

பக்கத்து வீட்டுக்காரன் குப்பை கூட்டி வைத்து எரித்து விட்டதில் நாங்கள் இருந்து கொண்டிருந்த பக்கமும் புகையோடு அலைந்து வந்தது மணம்.
யோசனைக்கும்கவலைக்கும் அந்த வேப்பம் இலைச்சருகின் எரிப்புப் புகை சுவாசிப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. நான் மூச்சில் இழுத்து அதைக் கொஞ்ச நேரம் அடக்கி வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வெளிவிட்டேன்.
அங்கேயும் நாங்கள் வன்னிப்பக்கம் உள்ள பங்கள் வழியில இருக்கேக்கையும் அவயள் வந்து சின்னப் பெடியள் தரவளியையும் பிடிச்சுக் கொண்டு போன வயள்தான். அந்த நேரம் புள்ளயளிண்டதாய் தேப்பன்கள் பகிரங்கத்தகறாரில அவங்களோட சண்டை பிடிக்க சிலதுகளை எரிச்சல் நொடியில ஆவிபறத்தி விட்டவங்கள்தான். தாய் தகப்பனெண்டா பிறகு கோபத்திலயும் கவலேலயும் அங்கின தங்களிட்ட உள்ள சாமிப் படங்களையெல்லாம் அடிச்சு நொறுக்கினதுகள்தான். பிடிச்சுக் கொண்டு போனதுகள் சிலதுகள் செத்து பிணமாயும் பிறகு கொண்டந்து குடுக்கப்பட்டதுதான்.
எல்லாத்துக்கும் எரிஞ்சு கொண்டிருந்த சிம்மினி விளக்குத்தான் சாட்சி அப்பிடியாத்தான் நெஞ்சில எங்களுக்கு நெருப்பவைச்ச மாதிரி இருந்திச்சு அங்கத்தையில நடந்த சம்பவங்கள் . இப்ப அத நான் நினைச்சாலும் உடல் எனக்குச் சிலிர்க்குது. சிலதாய்மார் அங்க தங்கட பிள்ளயளப் பிடிக்கத் தங்கட தலவழிய உடனேயே மண்ணெணய் ஊத்தி நெருப்பு வைச்சுக் கொண்டும் செத்துதுகள். அவள் சொல்லச் சொல்ல என் மனத்தில் தெள்ளுப்பூச்சிகள் ஊர ஆரம்பித்துக் கொண்டிருந்தன. பொறிவிட்டுப்புறப்பட்ட அவள் குரலோடு வேப்ப மரத்திலிருந்து எங்கோ கத்திக் கொண்டு பறந்ததுகிளி. அடுத்தவீட்டுப் பூனை குசினிவாசலடியில் நின்று எங்கள் இருவரையும் கண் உருட்டிப் பார்த்தது.
monumu 77
வெளிச்சம்

Page 48
" கள்ளப்பூனை. சூ” - என்று அவள் கையை ஒரு முறை தூக்கி விசுக்கினாள்.
சிர்க். என்றதாயிருந்தது- அது நின்ற சுவடே பிறகு தெரியவில்லை.
"இருபத்தி நாலு- ரெண்டாயிரத்தி ஒன்பதில எங்களுக்கு நடந்தது.”
எனறாள அவள.
என் கடமையைச் செய்யும் எண்ணத்திலே ஒரு கொப்பியையும் பென்சிலையும் அவளிடம் நான் கேட்டு வாங்கி, கையின் விரல்களால் பேனையை வருடியபடி - இப்ப சொல்லுத்துவங்குங்கோ - என்றேன்.
நான் சொல்லவும் கொஞ்சம் கூட மெளனமாக நேரம் பிடிக்காமல் அவள் தான் சொல்லும் அந்தக் கதைக்குள் நெருங்கினாள். அண்டைய நாளண்ண நாங்கள் மாத்தளனுக்குக் கிட்டவாயுள்ள - 'பொக்கணை இடக்காடு எண்ட இடத்தில ஒரு அறிஞ்ச தெரிஞ்சாள் ஒருவரிண்ட வீட்டில இருந்தம்.
அண்டைக்கெண்டாச் சரியான செல்லடி. ஆமி அப்ப முன்னேறிக் கொண்டு வருகுதெண்டு அதால நாங்க நினச்சம். எண்டாலும் நாங்களெல்லாம் பங்கருக்குள்ளதான் இருந்தம். அங்கால யெண்டா சனங்களெல்லாம் முள்ளிவாய்க்கால் பக்கமாவும் அதே நேரம் அங்காலிப்பக்கமிருக்கிற கடற்கரையப் பாத்தும் ஒடிக்கொண்டிருந்ததுகள்.
நாங்கள் இருந்த பங்களில ஏழுபேர் இருந்தம். அங்கின உள்ள சின்னத்துண்டுக் காணிக்கிளயே சனம் இருக்கிறதுக்கெண்டு பத்து பங்கராவது இருக்கும். இவளவு சனம் இப்பிடி ஒரு காணிக்கிள இருந்ததுக்குக் காரணமென்னவெண்டா அங்கால இங்கால உள்ள இடத்துச்சனங்களெல்லாம் இடம்பெயர்ந்து இந்த வீட்டுக்காரரிண்ட வீட்டுக்கு தஞ்சமா வந்ததுதான்.
• •.••४« :'. & * •' 78
நீபி.அருளானந்தம்

அடே அம்மாடி. அந்த பங்களில இருந்தாலும் ஒரு பங்கரில இருந்து அடுத்த பங்கரில உள்ள ஆக்களிட்ட கதைச்சுக் கொள்ளவும் ஏதும் பிரச்சினை யெண்டும் போகவேபோகேலாது.
இப்பிடியாசனங்களிண்ட பங்கருக்கு மேலயும் செல்லுகள் விழுந்து உள்ளுக்கிள்ள இருந்த அந்தக் குடும்பம் முழுக்கலுமா செத்துப்போயும் இருக்கு.
நல்லா எனக்கு அண்டையத்தினம் ஞாபகம் வருகுது. இருபதாந் தேதி நாலாம் மாசத்தில தான் இது நடந்தது. அண்டைக்கு எங்கட பக்கத்தில உள்ளபங்கரில தான் செல் விழுந்தது. ஆனா அது வெடிக்கேல்ல. அதோட அந்த பங்கர்வழிய இருந்த நாங்களும் வேற உள்ள ஆக்களெல்லாம் அந்த இடத்தவிட்டு ஓடிப் போயிட்டு திரும்பவும் நாங்கள் அவ்விடத்தையா வந்து பங்கள் வழியையே இருந்தம்.
அந்த நேரம் அந்த இடத்த விட்டு வெளிக்கிட்டு ஆமியிட்டப் போகவெண்டு வெளிக்கிட்டவயளெல்லாம் இங்காலிப் பக்கத்தில உள்ள வயளிட்டயிருந்து சூடுவாங்கிச் செத்திச்சினம். அதால நாங்கள் சரியாப் பயத்தில அவங்களிட்டப் போகாம இருந்தம். இதுக்குப்பிறகு அவயளெல்லாம் வெளிக்கிட்டு பொக்கணைக் கடற்கரைப் பக்கம் போயிட்டினம்.
இடைக்காடு பொக்கணைப்பக்கமிருந்த நாங்கள் இதுக்குப்பிறகு இருநூறுமீட்டர் அளவு தூரத்தில நிண்டு கொண்டிருந்த ஆமிக் காரரிட்டப் போய்த் தஞ்சம்புகுந்திட்டம்.
அங்கால - பண்ட் - இருந்த பக்கம் ஆமிக்காரனுகள் நிண்டாங்கள். அவங்கள் நிண்ட இடத்தடிக்குப் போனாப் பிறகு அதத் தாண்டி நாங்கள் இறங்கின இடத்தில. எங்கட கழுத்தளவுக்கு இருக்கும் தண்ணிர். ரெண்டு கிலோமீட்டர் அளவுக்கு அப்புடியாத்தண்ணிர்.
79
Goeau Grifflbarth

Page 49
இந்தக் கடல் தான் நந்திக் கடல் தண்ணிர். நந்திக்கடல் தண்ணிர் இரட்டை வாய்க்காலுக்கு வந்து விழுகுது. இந்தத் தண்ணிர் மாரியில யெண்டா கூடுதலாப் பாயும். அந்த நேரம் போட் வழிய தான் இதால போவலாம்.
நாங்கள் இந்த இடத்தால தான் இறங்கி நடந்து அந்தளவு தூரம் கடந்தம். பச்சைப் புல் மோட்டையால இருந்து இரணப்பாலவருமட்டும் தண்ணிக்காலதான் நடை. அது மட்டும் தண்ணிர் தான்.
இந்த இரணப்பாலையில வைச்சுத்தான் எங்களப்பஸ்வழிய இராணுவம் ஏற்றி விஸ்வமடுப் பக்கத்தில உள்ள வல்லிபுனம் இடத்துக்குக்கொண்டு வந்திச்சு.
பிறகு அங்கின இருந்துதான் எங்கள ஒமந்தைக்குக் கொண்டு வந்திச்சினம். இந்த நேரம் நிறையச் சனங்களெல்லாம் ஒண்டடி மண்டடியாத் திரண்டு வந்ததால இராணுவத்தாலயும் வந்த சனங்களக் கட்டுப்படுத்த முடியாமப் போச்சுது. சாப்பாடு தண்ணியில்லாம சனங்கள் மயக்கம் போட்டும் விழுந்ததுகள். அப்படியா விழுந்ததுகளில வயசுபோனதுகள் செத்ததுகள்தான்.
சொல்லிவிட்டு பிரபா களைத்துப் போனமாதிரியாக இருந்தாள். என்னைப் பார்த்தபடி தன்னிடம் மரியாதைக்குரிய முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.
"அங்க நடந்ததுகள் எல்லாத்தையும் வடிவாச் சொல்ல என்னால ஏலாது. அண்ணருக்கெண்டா அப்பிடிவடிவாச்
சொல்லத்தெரியும்.”
என்று சோர்வானகரகரத்த குரலில் அவள் முணுமுணுத்தாள்.
80 நீபி.அருளானந்தம்

இமைகள் அவளுக்கு நனைந்திருந்தன.
நான் ஒரு கேள்விக் குறியைப் போல வடிவமைக்கப்பட்ட விதத்தில் உடம்பை நெளித்து வைத்துக்கொண்டு புரியாத ஒரு மனோ வேதனையுடன் அவளைப் பார்த்தபடி இருந்தேன்.
"என்னால இப்ப உடன அவரக் கண்டு பிடிக்க
முடியுமோ..?" கேட்டேன்.
"இப்ப அவர் இங்க சாப்பிடுறத்துக்கு வருவார்”
அவள் சொல்லவும், கேற்பக்கம் நான் பார்த்தேன். வீதியிலே சென்று கொண்டிருப்பவர்களின் தலைகள் வேலிக்கு அப்பால் மறைந்து கொண்டிருந்தன.
'பிரபா அங்கு நடந்த ரகசிய விஷயங்களைச் சொல்லி கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிற மாதிரியான ஒரு நிலைமைக்குச்செல்ல விரும்பவில்லை’ என்பதுபோல் என் மனதுக்கு நினைக்கவும் பதிந்தது. எனக்கு முக்கியமாக சொல்லவேண்டியவையெல்லாம் பயத்தில் அவளுக்கு சொல்ல முடியாமல் தொண்டையிலே மரித்துப் போய் விட்டதாக்கும். என்றும் நான் எண்ணினேன். நான் அப்பிடி நினைத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களுக்குள்ளாக பிரபாவின் தமையனும் அவ்விடம் வந்து விட்டான்.
நான் வீட்டுப் படியில் அவன் கால் வைத்து ஏறுகையில் அவன் கால் நகங்களைப் பார்த்தேன். நீண்ட நாளாக வெட்டாது புறக் கணிக்கப்பட்ட நகங்களாக அவைகள் எனக்குத்தெரிந்தன.
நான் தூய்மையான வெள்ளைத்தாமரை போன்ற என் உள்ளங்கையை - விரல்களை நீட்டி வைத்தப்படி பார்த்துக் கொண்டேன். a 81
חוילה ול
வெளிச்சம்

Page 50
அண்ணா என்ற அவளின் குரலுடன் - அவன் அவளருகில் வந்து நின்றான்.
அவன் எங்கோ கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து விட்டு வருகிறான் என்பது எனக்கு வெளிப்படையாகத்தெரிந்தது.
நான் அவனைப் பார்த்தபோது அவன் தன் கண்களில் என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான்.
"இவர் எங்கட அம்மா அப்பா ஆக்களுக்கு நல்லாத் தெரிஞ்சவர்.”
என்று அவள் சொல்ல, பார்வையை அவள் பக்கம் அவன் திருப்பினான்.
"வன்னிக்கிள்ள என்ன நடந்த தெண்டு கேக்கிறார். கடைசியா அங்க இருந்து வந்த ஆக்களாவும் நீங்க இருக்கிறீங்க. நடந்ததென்ன வெண்டு உங்களுக்குத் தெரிஞ்சதச் சொல்லுங்கோவன்.?"
அவள் சொல்ல - நான் தேவை இருப்பது போல ஒரு பார்வை அவனைப் பார்த்தேன். அவன் ஏதோ தொலைந்து போனவனான ஒரு நிலையில் ஒர் நிமிடம் நின்றான்.
அடுத்தநிமிடம் அவன்நம்பிக்கையோடு எனக்கு முன்னால் உள்ள கதிரையில் வந்து இருந்தான்.
"இலை பழுத்து உதிருறமாதிரித்தான் மனுசரிண்ட வாழ்க்கை."
நான்முன்னம் அவன் பார்வையில் பார்த்தபோது பொருந்தியதை - இப்போது அவன் வார்த்தையிலே கண்டது போல இருந்தது. உடனே நான்:
82 நீபி.அருளானந்தம்

yy
"நீங்கள் இப்ப சொன்னது கவிதை மாதிரி இருக்குது. என்றேன்.
"ஆனா எனக்கு அப்படித்தெரியேல்ல”
என்று அவன் சொன்னான். அப்படி சொல்லும்போது மூழ்கி மறைவதற்கு முன்னால் பாய்ச்சும் ஒரு விதமான வெறுப்பான பார்வை அவனிடமிருந்தது.
"எண்டாலும் உண்மையைக் கண்டுபிடிக்க அது கன காலம்
yy
போகும் . நீங்க எழுதுங்கோ சொல்லுறன்.
என்று சொல்லிவிட்டு தனக்கு நடந்ததையும் தான் கண்டதையும் சொல்லத் தொடங்கினான் அவன்.
நான் அவனோடு இணைந்து இயங்குகிற அளவுக்கு பேனாவுடன் எழுதத் தயாரானேன்.
நாங்க அப்பகுமுழ முனை வீதி முறிப்பு - முள்ளியவளை - எண்ட இடத்தில தான் இருந்தம். அங்க ரெண்டு பகுதிக்கும் நடந்த மோதலில அங்க இருக்க ஏலாமல் எங்கட வீட்டுச் சாமான்களயெல்லாம் றைக்டரிலயும் மாட்டு வண்டில்களிலயும் ஏத்திக் கொண்டு நாலுமைல் தூரத்தில உள்ள நீராவிப் பிட்டி எண்ட இடத்துக்கு வந்து அங்கயும் எங்கட ஒரு சொந்தக்காரரிண்ட வீட்டில தங்கி - அந்த இடத்திலயும் எங்களுக்கெண்டு ஒரு பதுங்கு குழியும் வெட்டிக்கொண்டு இருந்தம்.
அங்கயெல்லாம் இந்த கிபீர், பைட்டர் -மிக், எண்ட குண்டுபோடுற பிளேனுகள் எல்லாம் வந்து கொத்துக்கொத்தாக் குண்டுகளெல்லாம் போட்டுக் கொண்டிருந்துது. படபட வெண்டு எல்லா இடத்திலயும் இந்தக் குண்டுகள் விழுந்து
woonligionu 83سيس
வெளிச்சம்

Page 51
வெடிக்கும். இதால அயல்சனங்களெல்லாம் அந்தப் பகுதிகளில இருந்து வெளிக்கிடத்து வங்கீட்டுது. நாங்களெண்டா அதுகள் அப்பிடி வெளிக்கிட்டுப் போகத்துவங்கினாப் பிறகும் ஒரு மாதகாலம் அந்த இடத்த விட்டு வெளிக்கிடாம அங்கயே இருந்தம்.
அதுக்குப்பிறகு அவ்விடத்தையில எல்லாம் மோசமான நிலைமையா வர அங்கயிருந்து வெளிக்கிட்டு எங்கட சாமான்கள றைக்டரிலயும் வண்டில்களிலயும் ஏத்திக்கொண்டு புதுக்குடி யிருப்புக்கு நாங்கள் வந்தம். எங்கள மாதிரி கனக்கச்சனம் அங்கயிருந்து விஸ்வமடுவுக்கும், வல்லிபுனம் - இரணைப் பாலை - மாத்தளன் பகுதிக்குமாப் போய்க்கொண்டிருந்ததுகள்.
றோட்டில எண்டா சனங்கள் அந்த நேரம் விலத்தி முன்னால லேயாப் போகவே ஏலாது. மெல்ல மெல்ல மாத்தான் சனம் அதால போகலாம். அந்த நேரம் அவ்விடம் வழிய செல் விழுந்து போய்க் கொண்டிருந்த சனங்களும் செத்ததுகள்தான்.
சின்னக் குழந்தப்பிள்ளயஸ் கூட மழைக்குள்ளயா நனைஞ்சு நனைஞ்சு தாய் தகப்பனோட அழுதழுது அப்ப நடந்து வந்துதுகள். அந்தப் பிள்ளயளெல்லாம், தங்களால ஏலுமான கேத்தில்கள், பானையளக் கைவழிய தூக்கிக் கொண்டு நடந்து வந்ததுகள்தான்.
இப்பிடி சனங்களெல்லாம்போய்ப் பள்ளிக் கூடங்கள் கோயில் வழியையும் இருந்ததுகள்.
நாங்கள் அப்பிடியே புதுக்குடியிருப்புக்கும் போய் அங்க எங்கட சொந்தக்காரர் ஒருவரிண்ட காணிக்கிளயா கொட்டில் போட்டுக் கொண்டு இருந்தம். அந்த நேரம் சரியா அடிச்சுப் பெஞ்ச மழைக்கிள நாங்களும் அதுக்க கிடந்து படாத பாடெல்லாம்பட்டம்.
8
4
நீபி.அருளானந்தம்

செல்லடி கிபீர் அடியில இரவில சனங்களும் ஆமி வந்திட்டாங்கள் எண்டு சொல்ல - சந்தைக்குப்போன சனம் - கடைத் தெருவில இருந்த சனம் அங்க நிண்ட சனம் இங்க நிண்ட சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடிக் கால் கைகளையும் உடைச்சுக்கொண்ட அளவுக்குப் பதட்டப் பட்டதுகள்தான்.
பேந்து பதினொராம் திகதி அங்க நடந்த செல்லடி கிபீர் தாக்குதலில நிறையச்சனம் செத்துப்போகநாங்கள்அந்த இடத்தை விட்டு திரும்பியும் எங்கட சாமான்களை அங்க கொண்டு வந்த மாதிரி ஏத்திக்கொண்டு இரணப்பாலேல இருக்கிற எங்கட சொந்தக்கார ஆள் வீட்டயாப்போனம்.
அங்க நாங்க இருக்கேக்கிள செல்லடியில கனக்கச் சனம் செத்துப்போச்சுதுகள். அதால அங்கயும்சனம் றோட்டால திரண்டு கொண்டு மாத்தளனுக்கும் பொக்கணைக்கும் போய்க் கொண்டிருந்ததுகள். சனம் வலய மட்டத்துக்கும் போய் கொண்டிருந்ததுகள்.
இந்த இடத்திலதான் பிறகு செல்லடி சரியான மோசமா நடந்து கொண்டிருந்தது. இந்த இடத்தில தான் அவயள் வந்து ஆக்களையும் பிடிக்கத் துடங்கீட்டினம். வீட்டுக்கு ஒண்டு எண்ட அளவில அது நடந்தது. இப்பிடி ஒரு பக்கத்தால கரைச்சல்,
வன்னியில் இருந்த எங்களிண்ட சனங்களிண்ட காசே - பங்கர் வெட்டிச் செலவழிச்சதால தான் முடிஞ்சுது. அப்பிடித்தான் சொல்ல வேண்டியும் இருக்கு.
கொஞ்சக்காலம் பங்கருக்கிள்ளதான் எந்த நேரமும் எங்களுக்கு வாழ்க்கைச் சீவியமாயிருந்தது. குழந்தைப் பிள்ளயஸ் கூட வெளியபோய் விளையாட ஏலாது. அங்க இரணப்பாலை எண்டுற இடத்தில வெறும் உப்புத்தண்ணிதான். அதால வேற இடங்களுக்குப்போய் லைனில நிண்டு போய்த்தான் தண்ணி எடுத்துக் கொண்டர வேணும். , -85
வெளிச்சம்

Page 52
இந்தக் கஷ்டத்தால உப்புத்தண்ணியிலதான் நாங்கள் சமையல் எல்லாம். குடிக்கிறதுக்கெண்டு மட்டும் தான் எங்கயேனும் போய் நாங்க தண்ணிர் கொண்டருவம், அங்கினயா இப்பிடி தண்ணி அள்ளிக்கொண்டரப்போன சனங்களும் தங்கட இருப்பிடத்துக்கு தண்ணியோட வந்து சேராம செல்லடிபட்டுச் செத்தும் இருக்கு.
அங்கயெல்லாம் கோயிலிலயும் பள்ளிக் கூடத்திலயும்தான் ஒண்டடி மண்டடியாச்சனம்.
அங்க வன்னியில வசதியாருந்த சனங்களும் சாப்பாடு தாங்கோ பசிக்குது எண்டு கேட்டு பிச்சையும் எடுத்ததுகள். ஒம். நாங்கள் அறிய ஒரு கிழவி மனுசி கழுத்திலதான் போட்டிருந்த தாலிக் கொடிய ஒரு ஆளிட்டயாக் கழட்டிக்குடுத்திட்டு இதுக்குத் தனக்கு ஒரு சாப்பாட்டுப் பார்சல் தாருங்கோ எண்டு அதக்குடுத்த பிறகு நம்பிக் கொண்டு அவ்விடதையாநிண்டுது. ஆனா தாலிக் கொடிய வாங்கிக்கொண்டு போனவன் சாப்பாட்டுப் பார்சலோட அவ்விடத்தையாப் பிறகு வரவே வரேல்ல. இது மாதிரித்தான் சிலதுகள் காதுத்தோட்டக் கழட்டிக் குடுத்திட்டுத் தேத்தண்ணி ஒரு கோப்பை வாங்கிக் குடிச்சும் இருக்குதுகள்.
அங்கினயெண்டா பங்கர் இல்லாம சொந்தக்காரரிண்ட உதவியில்லாம அங்கின இங்கின இருந்த சனம் கணக்க செல்லடி பட்டும்செத்ததுகள்.
நாங்களெண்டா இரணைப் பாலயில இருந்து பேந்து பொக்கனைக்கு எங்கட எல்லா சாமான்களையும் வாகனம் பிடிச்சு ஏத்திக்கொண்டு போனம். இதையெல்லாம் கொண்டுபோற செலவுகளுக்கு உள்ள நகைகளையும் கூட நாங்கள் வித்ததுதான்.
சொல்லிவிட்டு ஏதோ அடுத்த சிந்தனை போல பிரபாவின் அண்ணன் தலையைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டி ருந்தான்.
86 நீபி.அருளானந்தம்

நான், அப்போது எழுதிய ஒற்றைகளின் எண்ணிக்கையிலே கவனத்தை விழுத்தினேன்.
“தேத்தண்ணி ஊத்தியரவே. குடிக்கிறீங்களே” பிரபா கேட்டாள்.
“வேண்டாம். நீங்க சொல்லுங்கோ” என்று முதலில் அவளுக்கு நான் சொல்லி விட்டு பிறகு பிரபாவின் தமயனைப் பார்த்தேன்.
அவன் புதைந்த ஆழங்களிலிருந்து மீண்டும் எழத்தொடங்கியது போல மிகுதியை சொல்லத் தொடங்கினான்.
“பொக்கணைக்கு நாங்க போன கதையிலயெல்லே அப்பவாவிடு பட்டது. அப்பபொக்கணைக்கு நாங்க போய்ச் சேந்தா அங்க நோய். அதாலயம் சனங்கள் வருத்தம் வந்து செத்துக் கொண்டிருந்ததுகள்.
அங்க செல்லடியில கனக்கச் சனம் அடிப்ட்டு ஆஸ்பத்தரிக்கும் போக ஏலாமச் செத்துதுகள். றோட்டு முழுக்க ரெத்த ஆறுதான். தாய இழந்த பிள்ள எண்டும் மனுசிய சாகக் குடுத்திட்டுத் திரியிற புருஷன்மாரெண்டும் - புருசனைச்சாகக் குடுத்திட்டு அழுது கொண்டு திரியிற பொம்புளயளெண்டும்
கனக்க.
நாங்கள் பொக்கணையிலயும் தெரிஞ்ச ஒராளின்ட வீட்டு பங்கரில இருந்தம். எங்கட வீட்டுச் சாமானெல்லாத்தையும் பங்கருக்கு மேலயா வைச்சிருந்தம்.
இந்த பொக்கணை எண்ட இடத்தில பங்கர் வெட்டிறதெண்டா மண் இடிஞ்சு கொண்டே இருக்கும். வீட்டுச்சீற் தகரம் நிறுத்தித் தான் பங்கள் செய்யவேணும்.
87
வெளிச்சம்

Page 53
இங்க நிவாரணம் காக்கிலோ சீனி சங்கக்கடையில குடுக்கினம் எண்டுநிண்ட சனம் நூறுக்கு மேல செத்தது.
ஆரம்ப சுகாதார நிலயத்தில குழந்தப் பிள்ளயஞக்கு மாப்பெட்டி வாங்க கியூவில நிண்ட சனம் அறுபத்தைஞ்சு க்குக்கிட்ட செத்ததுகள்.
விறகுக்கு வீட்டுக் கதவுகள் வெட்டி எடுத்து பங்கள் வாசலில அடுப்பு வைச்சுத்தான் நாங்கள் தின்ன ஏதும் சமைச்சனாங்கள். செல்லடிச்சசத்தம் அங்கயிருந்து கேட்டவுடன நாங்க பங்கருக்குள்ள புகுந்திடுவம்.
அப்ப செத்தல் ஒரு கிலோ அங்க ஐய்யாயிரம் ரூபா,
உலக உணவுத் திட்டம் (W.H.O) வெள்ளயங்கள் அங்க கப்பலில கொண்டு வந்து பூசணிக்காய் ஒரு சின்னத்துண்டும் - ஒரு உருளைக்கிழங்கும் குடுத்திச்சினம்.
பொக்கணைக்கிள்ள நாங்க இருக்கேக்கிள்ள பிள்ளையளப் பிடிக்கிறாங்கள் எண்ட பயத்தில - சாமிப்படத்தடியில வைச்சு சாப்பாடு குடுத்துப் போட்டு - கையப் பிடிச்சுக் குடுக்கிற கலியாணங்களும் நடந்தது- கலியாணம்முடிச்ச மாப்பிள்ளை பொம்புளயளை - பொம்பு ளையாக்கள் வீட்டு பங்கருக்கு அனுப்பிச்சினம். வேறபாதுகாப்பான பங்கருக்கும் அனுப்பிச்சினம். அங்க அவயளத்தனியா இருக்கவிட்டு அந்தப் பங்கரில உள்ளவயள் வேற பங்கர் வழிய போய் அவயளோட இருந்திச்சினம். இந்தத்தப்புற அலுவலில தமையன்தங்கச்சியையும் கலியாணம் முடிச்சதா எல்லாம் செய்து அவங்களுக்குப் பேய்க்காட்டிப் போட்டு தங்கட பிள்ளயளதப்ப வைச்சதாய் தேப்பனும் இருக்குதுகள்.
இப்பிடியே தான் சனங்கள் பட்டுக் கொண்டிருகிற பாட்டோட நாங்களெல்லாம் அந்த இடத்தாலயிருந்து
88 நீபி.அருளானந்தம்

இங்காலயா வரேக்கிள்ள. கஷ்டப்பட்டு கடைசிவரைக்கும் கட்டிக்காத்துக் கொண்டு போன எங்கடசாமான்களையெல்லாம் அப்புடியே பங்கருக்கு மேலதான் விட்டுப்போட்டு வந்தனாங்கள்.
அங்கயெல்லாம் ஆள் இல்லாத பிளேன் வந்து சுத்திப்போட்டுப் போக பிறகு கிபீர்வந்து குண்டுகளப்போடும். கடல் பக்கமாவும் பீரங்கிப்படகுகள் இருந்து குண்டுகளக்கக்கும்.
அங்கயெல்லாம் கதிரவழிய வெளிய ஆள் இருந்தா தலைபோயிடும். முண்டம்தான் பேந்து நிக்கும். இதால ஒரே படுக்கை தான் நாங்கள்.
எங்கப் பார்த்தாலும் அங்க ஒரே அழுக்குரல்தான். காயம்பட்ட ஆக்களயும் ஆஸ்பத்திரி வழியவும் கொண்டு போய்ப்போட ஒரு இடமில்ல. அங்க மருந்து கட்ட வெண்டு போனாலும் அது வழிய அதுக்கெண்டு காத்துக்கிடந்து மூண்டாம் நாள் தான் மருந்தும் கட்டலாம். இப்பிடித்தான் செத்தவனையும் அங்கபாக்கேலாது காயக்காரனையும் பாக்கேலாது எண்ட
மாதிரியான ஒரு நில.
செல் விழுந்தா அங்கின அது வழிய ஐநூறு அல்லது ஆயிரம் சனம் சாகும். - இரண்டாயிரம் காயப்படும்.
அங்க அடுத்தடுத்து சனங்களுக்கு சாப்பாடில்லாத பிரச்சினையும் பெரிய பிரச்சினை. அந்த நேரம் அரிசியின்ர விலை அங்க 2500/= அல்லது மூவாயிரம் ரூபா. சீனி ஒரு மூடை 1, 1/2 லட்சம் ரூபா பிறகு சீனியின்ட விலை மூண்டுலட்சம் ரூபாவுமா விலை வந்தது. ஒரு முழுப்போயிலை 1500/= அந்த நேரம் 3 தேங்காயக் குடுத்து ஒரு ஆட்டோ வாங்கலாம்.
2 தேங்காய்க்கு 1 டிவி டெக் எண்டு வாங்கினாங்கள். அப்பிடி வாங்கின எல்லாச்சாமான்களையும் அவயஞம் பிறகு அங்கின அங்கின விட்டிட்டு வந்ததுதான்.
89 வெளிச்சம்

Page 54
ஒரு கொட்டைப் பாக்கின்ர விலை அப்ப 150 ரூபா - இந்த விலை குடுத்து வாங்கேலாத ஆக்கள் ஆலம் பட்டையை காயப்போட்டு அதைச் சப்பிச்சினம் - வெத்திலைக்குப் பதிலாய் நாயுண்ணி இலையையும் சீதுளாய் இலையையும் சாப்பிட்டிச்சினம்.
1 வெத்திலையின்ர விலை கொஞ்ச நஞ்சக் காசோ - 500ரூவா வெத்திலை.
அங்க அப்ப - ஐ.சி.ஆர்.சி -கப்பலில தான் இந்த வெத்திலையும் வந்திச்சு. அதில சாமான் இறக்கவெண்டு வந்த கூலியாக்கள் இதைக் கொண்டு வந்து வித்திச்சினம்.
1 சுருட்டு 125 ரூவா எண்டும் வித்தவங்கள்.
லக்ஸ்பிறே ஒண்டு அப்பவா மூவாயிரம் ரூவாய்க்கு வித்துது.
இந்தக்காலம் போலத்தான் - அங்க சங்கத்து வாச்சரை அடிச்சுச் சாக்காட்டிப்போட்டு அம்பது மூடை சீனியைச் சனம்
களவெடுத்துக் கொண்டு போயிற்றுது.
இந்த நேரம் பெடியள் சனம் சாப்பாடில்லாமக் கிடக்குதுகள் எண்டு கண்டு ஒருவடை - ஒரு மோதகம் - ஒரு தேத்தண்ணி 50 ரூவாக்குக்குடுத்திச்சினம்.
இங்கயெல்லாம் டிரைக்டர் மெசின் இருபத்தையாயிரம் ரூவாய்க்கு புத்தகத்தோடயா வாங்கக் கூடியதாயிருந்துது.
வாகனங்களெல்லாம் செல்விழ எரிஞ்சு எரிஞ்சு உள்ள இட மெல்லாம் ஒரேகரிப்புகைதான் - அதுக்குள்ளாலயா வேற சரியான
90 நீபி.அருளானந்தம் •

காயக்காரர் செத்த ஆக்களத் தூக்கிறதுக்கு ஆக்களில்ல. அது கள விட்டிட்டு, மற்ற ஆக்கள் வந்தது தான் - என்ன செய்யிறது. கையில காயம் காலில காயம்பட்டதுகளெல்லாம் அரக்கி அரக்கிப் போனதுதான்.
கடைசியா வந்திருந்த இடத்தில ஒரு சின்னத்துண்டுக் காணிக்கிள்ள பக்கத்தில பக்கத்தில பங்கர் வெட்டி ஒவ்வொரு பங்கருக்குள்ளயும் பத்துப் பதினைஞ்சு பேர் எண்டு குடும்பம் குடும்பமாஅதில சனங்கள் இருந்திச்சிதுகள். ஆனாலும் பங்களில இருக்கிற ஆக்கள் அதுக்குள்ளயே இருக்க வேண்டியதுதான். அவயள் பக்கத்து பக்கத்து பங்கருக்குப் போகவே ஏலாது. பக்கத்துப் பங்கர் வழிய உள்ள ஆக்கள் காயப்பட்டாலென்ன இவயள் அவயளப் பாக்கவெண்டு கடைசி மட்டும் போகேலாது.
அந்த அளவுக்கு செல்லடி. றவுன்சும் வரும்.
பங்கருக்குள்ள அப்படியா இருக்கேக்கிள்ள மேல செல்வந்து விழுந்து அப்பிடியே குடும்பத்தோட ஒண்டடியா அதிலயே செத்தாக்களும் இருக்கினம்.
இப்பிடியெல்லாம் அங்கின ஒரு வீட்டிலயா மூண்டு நாலுபேர் எண்டு அங்க நடந்த சண்டைக்குள்ள செத்த ஆக்களும் இருக்கினம். பத்துப் பதினைஞ்சு பேர் எண்டும் செத்துப் போயும் இருக்குதுகள்.
இந்த அவதிக்குள்ள நிறைமாத பிள்ளைத்தாச்சியா இருந்த பெண்டுகளிண்ட பாடுகள் பெரிய பாடுகள். பாவங்கள் அதுகள் பிள்ள பெத்ததெல்லாம் அதுகள் அதுகளிண்ட இருந்த அந்த இடத்திலதான். அதுகள ஆஸபத்திரிக்கு கொண்டு போக முடியாது. அங்க ஆஸ்பத்திரியில காயம் பட்டுவாற ஆக்களப் பாக்கிறது எங்க - இதுகள மாதிரி பிள்ளைத்தாச்சியள பிள்ளப் பெறப்பாக்கிறது எங்க. இதால தாயும் பிள்ளையுமா அங்க இங்க கனக்கச் செத்ததும் நடந்தது.
91
GoauauflFFb

Page 55
ஒரு நாளைக்கு ஒரு வேளையெண்டாலும் கிடக்கிற பருப்பையும் அரிசியையும் வைச்சு எங்களுக்கு அங்க சமைச்சுச் சாப்பிடுறதுக்குக் கூட ஏலாது. அப்பிடி எவ்வளவு எவளவு பிரச்சினையள்.
இதுக்கெல்லாம் பிறகு நாங்கள் பச்சைப்புல்லு மோட்ட யிலயிருந்து தண்ணிருக்குள்ளால தண்ணிருக்கால தாண்டு தாண்டு வரேக்க ஆமி எங்களுக்கு கை தந்து தூக்கிவிட்டுது.
அவங்கள் ஒப்பின் பங்கரில எங்களையெல்லாம் அதுக்குள்ள பாதுகாப்பா இருக்க விட்டிட்டு அவங்க அதுக்கு மேலயா நிண்டு கொண்டு இருந்தாங்கள்.
அங்க கடைசி நேரம் நிமிர்ந்தா எங்களுக்குத் தலை பறந்திடும் - நாங்கள் குனிஞ்சும் தவண்டும் பங்கர் வழிய வந்து விழுந்து கிடந்தும் தான் வந்து சேந்தம்.
ஆத்துக்குள்ளால வரேக்க (நந்திக்கடல்) பிள்ளையளத் துாக்கிவர முடியாது தானே. அந்தத் தண்ணிக்குள்ளால எத்தினையோ மைல் நடந்தும் வரவேணுமே. அதால வாகனங்களிண்ட ரியூப் வழியதான் காத்தடிச்சு அதுக்கு மேலயா பலக போட்டு பிள்ளைகளை அதில இருக்க வைச்சுத்தான் இழுத்துவாறது.
இந்த நந்திக்கடலில எண்டா-எல்லாச்சாதி இனத்து மீனும் இருக்கும். கெழுத்தி மீன் கூட இருக்கும். வருறவயள் ஏதும் சாப்பாடு சாப்பிட்டு அது தண்ணியிலயும் விழேக்கிள்ள, அதைச்சாப்பிட உடன அடிச்சுக்கொண்டு இந்த மீனெல்லாம் மேலே வருங்கள். அப்பிடியா வருற அந்த மீன்களிண்ட முள்ளு ரியூப்பில குத்த - பிள்ளையள ஆக்கள் இழுத்து வாற அந்தரியூப்காத்துப் போயிடும். •
92
நீபி.அருளானந்தம்

பெரிய அந்த மிசின் ரியூப் மீன் முள்ளுக்குத்தி காத்துப் போக பிள்ளையளெல்லாம் தண்ணிக்கிள்ள விழுந்து மூழ்கிடுங்கள். இருட்டுக்கிள்ள பிறகு என்னதான் செய்யிறது..? அதுகள அதுக்குள்ள எப்பிடித்தான் பிறகு நிண்டு தேடுறது. விட்டிட்டு வரவேண்டியதுதான். இந்த இடத்தால பகலில கடல் தண்ணிக்காலயா வரஏலாது. ஏனெண்டா அதில ஆக்களக் கண்டா செல் அடிப்பாங்கள்.
இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு இவள் தங்கச்சி சொன்ன மாதிரித்தான் கடைசியில நாங்க இங்க வந்து சேந்தம்.
இங்கவந்தா முகாமுக்கு உள்ள எங்களுக்கு சாப்பாடு வருகு தெண்டுட்டு ஐநூறு ஆயிரம் பேர் அதை வாங்கிறதுக்குப் பாயிறது. லைன் பிடிச்சு நிண்டால்தானே இங்கேயும் முகாமுக்குள்ள சாப்பாடு கிடைக்கும்.
இங்க காம்பில உள்ளவயஞக்கெண்டு அவங்கள் இருநூறு, இருநூற்றம்பது சாப்பாட்டுப் பாசல்களைத்தான் அவங்கள் கொண்டருவாங்கள். அவளவு பாசல்களையும் நாய்க்குத்துக்கி எறிஞ்சது போல எங்களுக்குப் போட்டுட்டுப் போவாங்கள்.
அதால மிச்சம் பேர்சாப்பாட்டுப் பாசல் கிடைக்காம இருக்க வேண்டியதுதான். இதுக்குப் பிறகு இன்னொரு வாகனம் வரும் - அதிலயும் அப்பிடியாக் கொண்டாந்தே சாப்பாட்டுப் பாசல் குடுப்பினம். அதால சாப்பாடு அங்க எல்லாருக்கும் சாப்பிடவெண்டு கிடைக்காது.
தண்ணிரும் இதே மாதிரித்தான் குடிக்கக் கிடையாது.
தண்ணியக் கொண்டந்து அவங்கள் குடுத்தாலும் அந்தத் தண்ணியவாங்கிக் கொள்ளுறதுக்கு யத்து ஏதனம் ஒண்டும் கையிலயா இல்லாத நிலை.
93
வெளிச்சம்

Page 56
ஒரு குடும்பத்துக்கு ஒரு சாப்பாட்டுப்பாசலெண்டு இங்க முகாமில வந்து சேந்தாப் பிறகு அப்பிடியாக்கிடைச்சாலும். அந்தப் பாசலையே அந்தக் குடும் பத்தில தங்களுக்க பிரிச்சுச்சாப்பிட ஏலாத பரிதாபமான நில.
ஏனெண்டா - நாலு நாளெண்டாலும் அவங்களோட சேந்திருந்த தெண்டு போட்டு, இங்க அந்தப்பிள்ளயள இவங்கள் வந்து பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள்.
நாங்களெல்லாம் இங்க காம்புக்கு வந்து சேந்து ரெண்டாம் மூண்டாம் நாள் - யூனியன் கோப்பிறட்டி லொறி இங்கயா வந்திச்சு. அவங்கள் வந்து சீனி தேயிலை- டேட் போன சாமான்களும் கொண்டு வந்து தந்திட்டுஅதுக்கு -வில ஆயிரத்து ஐநூறு ரூபா- ரெண்டாயிரம் ரூபா - எண்டு சொல்லுவாங்கள்.
. . . 94
நீ.பி.அருளானந்தம்
 

என்ன செய்யிறது நாங்கள் அதையும் ஒண்டுமில்லாத அங்கினைய எங்கட தேவைக்கு வாங்கத்தானே வேணும்.?
என்று பிரபாவின் தமையன் என்னைப் பார்த்துக் கேட்ட இந்தக் கேள்வியோடு - தான் சொல்லி வந்ததை நிறுத்திய பிறகு - நான் ஏதும் பேசாமல் சில நிமிடங்கள் இருந்தேன். அப்படியாய் இருந்து கொண்டிருந்த நேரத்திலே என் மனதில் விழும் சாட்டையடிகளை நான் வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு இத்தருணத்தில் இந்த உலகத்தையே வெறுத்தமாதிரி இருந்தது. இருதய அடைப்பிலிருந்து இரத்தம் உருவிக் கொண்டு சீறி எழுந்தது மாதிரி - பக் பக் என்று எனக்கு நெஞ்சு அடித்துக் கொண்டிருந்தது.
நோகாமல் புண்ணியம் சம்பாதிப்பவர்களெல்லாம் பக்தி சுபாவத்தோட இராமாயணம் - பாரதம் - கதைகளைவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நியாத்திற்காக கொல்வதும் கொல்வதும் - கொல்வதும் ’தான் தர்மம் - என்று சொல்லிச் சொல்லி அதர்மமான நியாயமற்ற வழிகளை யெல்லாம் கடைப்பிடித்துப் போர் நடத்தி - பின்பு அமைதியுடன் அயர்ந்து தூங்குகிற அந்தக் கதாபாத்திரங்களின் கதைதான் இன்றைய இந்த உலக வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறதோ..?
லேசில் இனி எப்படித்தான் இந்தத் துன்பத்தையெல்லாம் மனதிலிருந்து விடுவித்துக் கொள்வது
ஐயோ இந்தக் கதைகளையெல்லாம் நான் இவர்களி டமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாமே..?
எனக்கு படிப்படியாக உடல் இயக்கமெல்லாம்தணிந்து கொண்டு வருவது மாதிரியாக இருந்தது.
95
வெளிச்சம்

Page 57
சருகுகள் கிணற்றிற்குள் உதிர்ந்து விழுவதைப் பார்ப்பது போல தலையைக் குனிந்து கொண்டு நான் கீழே பார்த்தபடி அந்த விதமான யோசனைகளோடிருந்தேன். அந்த மூன்று பேருமாக வுள்ள நாங்கள் மிச்சம் இருக்கும் மீதி இது தான் எங்களிடத்தி லென்று எப்படி ஒரே நேரத்தில் பெருமூச்சு விட்டுக் கொள்வது.
நான் அவர்களை விட்டு அந்தக்காரியத்தில் அவ்வே
ளையில் முந்திக் கொண்டவனாகிவிட்டேன்.
(tprrĩrở: 2010)
96
நீபி.அருளானந்தம்

எலி வேட்டை
"உண்ரவாழ்க்கைச் சீவியத்துக்கெண்டு ஒரு துணை யில்லாத தனிஆளாயெல்லே நீஇப்பவாப் போயிற்றாய்பிள்ளை." திறந்த கண்களுடன் மாமி அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கொண்டு சொன்னது, அவளுக்குப் பிளக்க முடியாத ஒரு வெறுப்பை தன்னிடத்தில் உருவாக்கித்தான் இருந்தது. மாமி அப்படி அவளைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போனதன் பிறகு, அவள்தன்னைத் திருமண வாழ்விலிருந்து அன்னியமாக்கிய அந்தக் காரணங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தாள்.
“எல்லாவற்றையும் நிதானமாக யோசிக்க வேண்டும்.” என்று எண்ணிக்கொண்டு, அப்போது தனக்குப் பேசிவந்த கல்யாணங்களை யெல்லாம் “வேண்டாம் எனக்கு." என்று தவிர்த்ததை இப்போது நினைக்க ஒரு கணம் இழப்புணர்வில் அவளுக்குத் தொண்டை அடைத்தது. மார்பின் துடிப்பு உரக்க உடலெங்கும் எண்ணற்ற அதிர்வுகள் அவளுக்குக்கேட்டன. மூச்சு அவளுக்கு அழுத்திக்கொள்வது போல இருந்தது. வாயால் அவள் மூச்சுவிட்டாள். பெரியதொரு களைப்பு கைகால்கள் மீது பரவ, அப்படியே பக்கத்தில் இருந்த சோபாவில் பிறகு அவள் அமர்ந்துவிட்டாள். முகம் கவலை நிரம்பியதாக அவளுக்குவந்து விட்டது. மனத்திலே மீண்டும் அவளுக்குப் பழைய நினைப்பு
' ' ' , 'o' • , y:!-- i: , : კIX 97
GoManuaflssub

Page 58
உருவாயிற்று. கண்ணெதிரே தெரியும் வெள்ளையடித்த சுவரை உதட்டைக் கடித்தப்படி அவள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் அவளுக்குத் திறந்து கொண்டது. அவளுக்குப்படம் போல சில காட்சிகள் அடுத்தடுத்து ஒடுவதுபோல நினைவில் வந்து கொண்டிருந்தன.
அன்றையப் பொழுதுகளில் பல தடவைகள் - அவள் தன் தாயைப் பார்த்து உரத்த குரலில் “எனக்குக் கல்யாணம் ஏன். வேண்டாம் வேண்டாம்.இனி அந்தக் கதையையே நீங்க திரும்ப என்னோடயாக் கதைக்க வேண்டாம்." - என்று சொன்னதெல்லாம் இப்போது அவள் காதுகளில் வினோதமான பறவைகள் எழுப்பும் சத்தங்கள் போல கேட்டபடி இருந்தன. தாய் அப்படி அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு ஒன்றும் பேசாது அமைதியாக இருந்து விடுவாளா? அவளுக்கு நெஞ்சில் பார உணர்வு ஏற்பட்டது.
"நீ இப்பிடி நெடுகஷம் எங்களுக்குச் சொல்லிக் கொண்டி ருக்கிறதில என்ன அர்த்தமிருக்கு.?" வலுவான சக்தியோடு இந்தக் கேள்வியை மகளிடம் அவள்கேட்டாலும் அந்தக் கேள்விக்குத் தன் மகள் இப்படித்தான் பதிலைக் கூறுவாள் என்று தனக்குள் உணர அவளுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது.
* உங்களுக்கு உங்கட நிலமை தெரியாம இருக்கிறீங்க. தனியாளா என்ன மட்டும் நீங்க பெத்துப் போட்டிட்டு காசு பணமும் சேர்த்து வைச்சுக் கொள்ளாமலா இப்பவா இருக்கிறீங்க.நான் கலியாணம் முடிச்சு ஒரு பக்கம் போயிற்றா உங்கள வைச்சு யார் பாக்கவெண்டு இருக்கினம்? இந்த ரீச்சர்வேலைச் சம்பளக் காசையும் வருறவன் எனக்குத்தா எண்டு கேட்டுப்புடுங்கி வாங்கீற்றா. பிறகு நான் உங்களுக்கெண்டு என்ர கையால என்னத்தைத் தான்தாறது.?"அவள் பிரித்துப் பிரித்துச் சொன்ன கதையிலே புதிதாய் ஒன்றும் இருக்கவில்லைத்தான் ! ஆனாலும் அதைக் கேட்கத் தாய்க்கு நடு நடுங்கியது மாதிரி சதிரமெல்லாம் இருந்தது. என்றாலும் அவள் மன முடைந்து
போகாமல் திரும்பவும் சொன்னாள்.
98
நீபி.அருளானந்தம்

“எங்கள் ரெண்டு பேற்றை சீவியத்தையும் ஏதோ எங்களுக்கு ஆண்டவன் தாற கஞ்சியக் கூழைக் குடிச் சென்டாலும் நாங்கள் காலம் கடத்திக் கொள்ளுவம் பிள்ளை. ஆனாலும் நீகலியாணம் செய்யவேண்டிய வயசிலயாக் கலியாணம் செய்து கொள்ளாமக் காலம் கடத்திப் போட்டு பேந்தெல்லே கிடந்து கொண்டு கஷ்டப்படப் போறாய்?"
மகளின் மனதில் ஆழப்பதியக்கூடியதாய்த்தான் பெற்ற அந்தத் தாய்ப் பாசத்தோடு அவள் சொன்னாள். ஆனாலும் அந்தத் தாய்ப்பாசத்தின் நெருக்கம் இன்னும் இவள் மனதை உள்ளூர அவள் நிலையில் உறுதிப்படவே வைத்தது. "அம்மா, பேந்தும் பேந்தும் உதுகளையே எனக்குச் சொல்லிச் சொல்லி ஏன் எனக்குள்ள இருக்கிற என்ர நிம்மதியக் கெடுக்குகிறீயள்? உந்தக் கதையள என்னோட கதைக்கிறத இனிமேலயா விட்டிடுங்கோ. ஆனாலும் இதுக்குள்ளயா நான் ஒண்ட உங்களுக்குச் சொல்லுறன் அதயும் நீங்கள் உங்களுக்குள்ளயா கொஞ்சம் யோயிச்சுப் பாருங்கோ. நாளைக்கு உங்களுக்கு வரப்போகிற கஷ்டத்தையும் கொஞ்சமாவது சிந்தியுங் கோ.அப்பா என்னம்மா நீங்க நினைக்கிறமாதிரி இப்பவா ஒரு தைரியமான ஆளே..? அவருக்கு இருதய வியாதியும் தொட்டுக்கொண்டுது. பெலவீனப் பட்டுப் போய்த்தான் தன்ர வேலையளப் பார்த்துக் கொண்டு இப்ப அவர் திரியிறார். அவருக்கு உளி பிடிக்க - சிவிலிக்கூடு பிடிக்கவே கை நடுங்கும். அவர் செய்யிற தச்சாசாரித் தொழிலை அவருக்கு இனிச் செய்யேலுமே..? அதால இனியாவது இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாவது நீங்க யோசியுங் கோ. அப்பிடி யோயிச்ச பிறகாவது நீங்க என்னய இந்தக் கதேக்கிளையாலயா இனி இழுக்காம விட்டுப் போட்டுச் சும்மா உங்கட பாட்டுக்கு இருங்கோ. ys
ஒரு சொல்லிலிருந்து முளைத்து, காடாகும் அளவுக்குப் பெரிதாகத்தான் தாய்க்கு விளக்கம் கொடுத்துவிட்டாள் அவள். ஆனால் மகள் சொன்னதெல்லாம் தாய்க்குக் கேட்க
99
வெளிச்சம்

Page 59
அவையெல்லாம் சாரம் அற்ற வெறும் சொற்கூடாகவே இருக்கிறதாகத் தெரிந்தது. என்றாலும் இப்படியாகவெல்லாம் அவளின் நிலையை உணரவைக்க கூடிய அளவிலே எத்தனையோ தடவைக்ள் அவள் இதை மகளுக்கு எடுத்துச் சொன்னாலும், அவளோ கர்வத்துடன் எல்லாவற்றையும் துண்டித்த மாதிரியாகவே நடந்து கொண்டுவந்தாள்.
மகளுக்கு இப்படியாக வெல்லாம் தன்னையே ஏமாற்றிக் கொண்டு காலங்கழிப்பதில் மிகையும் துன்பத்தைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லைத்தான்.
அந்தத்துன்பத்திலிருந்து வெட்ட வெளியான ஒரு நிம்மதியைத் தேடிக் கொள்வதற்கு அவள் பிறகு முற்று முழுதாக பாடுபடத்தொடங்கினாள். ஆரம்பத்தில் பூக்கன்றுகளையும் மலர்மரங்களையும் நட்டு வளர்த்து அழகு பார்த்தாள். ஆனாலும் இருக்கிற கவலையை ஒத்திப் போடுவதற்குக் கூட அது ஒத்துழைப்பதாய் இருக்கவில்லை. அந்த அழகை அவள் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒன்றை அவள் அடையவேண்டும் என்பதாகவே உணர்த்திக் கொண்டிருந்தது.
வேண்டாம்இவைகளை - என்று ஒரு நாள் அந்த ஒரே நாளிலேயே முற்றத்திலுள்ள பூஞ்செடிகளையெல்லாம் வெட்டிப் போட்டு தூர எறிந்துவிட்டு வெட்ட வெளியாக்கிப்பார்த்தாள். அதைப்பார்த்துக் கொண்டிருக்க- தான் வேறு ஒரு பெண்ணாக இப்போமாறியது போலவும், தான் வெட்கத்திலும் சுய பரிதாபத்திலும் இப்போ ஆழ்ந்து போய்க் கொண்டிருப்பதாகவும் அவளுக்கு நினைக்கவும் தோன்றியதேயல்லாமல் வேறு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை. “ஒரு நிம்மதியான மனத்தினளாய் நான் வாழ்ந்து கொள்வதற்கு இனி என்ன வழியைத்தான் நாடுவது?"
"கவலைகளை அழிக்கும் வெளிச்சம் இந்த நீல வானத்திலே நிச்சயம் இருக்கும். மனத்தைத் தொடும் அளவுக்கு அந்த
100
நீபி.அருளானந்தம்

வெளிச்சத்தைப் பார்த்தால், கவலையில் கூம்பியிருக்கும் என்மனம் திரும்பவும் மகிழ்ச்சியில் மலர்ந்து வந்து விடும். சூரியனைப் பார்த்து முகத்தை ஏந்தினால் அந்தப் பேரழகை என் கண் பார்வையால் தொடும்போது, பெரு மெளனமாய் நிரம்பியுள்ள என் மனக் கவலைகளெல்லாம் என்னிடத்திலிருந்து அழிந்து திரும்பவும் எனக்கு மன மகிழ்வுகிட்டும்.”
இப்படி ஒரு முயற்சியையும் தான் அவள் செய்து பார்த்தாள். அந்த ஒளிப்பிம்பத்தை அவள் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்குக் கண்களிலிருந்து கண்ணிர் சிந்தியது. கண்விழித்து நெடுநேரம் அதைப்பார்த்தும் மன அவலங்களின் திரை அவளுக்கு மனத்திலிருந்து அகலவே இல்லை. அந்த ஒளிச் சக்தி கூட அவளுக்கு தரவேண்டிய மன ஆறுதலை அளிக்கவில்லை.
ஏதோ பசி அவளை அடிமையாக்கி உள்ளுக்குள் அதிகாரம் பண்ணிக் கொண்டே இருந்தது. நாள் முழுக்க தன்னந் தனியனாக கொட்டுக் கொட்டு என்று. விழித்துக் கொண்டிருப்பது போல இப்படியாக நான் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை...!"
இதையெல்லாம் நான் இன்னும் எவ்வளவு காலம் தான் அனுபவித்ததாய் வாழ வேண்டியதாய் இருக்குமோ? சர்வ வியாபியாக இருக்கும் என் வாழ்க்கையில் உள்ள இருட்டுக்குள் எப்போதாவது ஒரு வெளிச்சம் வந்து போகாதா? - அந்த ஒரு ஈடேறலான ஆசையை நெஞ்சிலிருத்திக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வெளிக்கிட்டு தேவாலயத்துக்குப் போகவென்று அவள் வீதிவழியே மெளனமாக நடந்து கொண்டிருந்தாள். முன் பெல்லாம் அவள் வீதியில் நடந்து போகும் போது, களையான அவள் மேனி எழிலைக் கண்டு மனச்சலனமடையக்கூடிய விழிகள் ஏராளம் இருந்தன. தன் அழகால் அடித்து வீழ்த்தப்பட்டது போலப் போய்க் கொண்டிருக்கும் அப்படியான ஆண்களையெல்லாம் அவள் பார்த்திருக்கிறாள். ஆனால்
101
வெளிச்சம்

Page 60
தன்வெட்கத்தை விட்டு கண்ணை இப்போது அவள் யாரிடம் நிறுத்தினாலும் கரப் பாண் பூச்சியைப் பார்ப்பது போன்ற வெறுப்புடன் ஆறுதலான ஒரு பார்வையுடன் அவர்களெல்லாம் போவது ஏதோ ஒரு வித சவத்தன்மையை தன்னிடம் அவர்கள் பூசிவிட்டுப் போவது போல நெஞ்சில் ஒரு உடைசலை அவளுக்கு ஏற்படுத்தத்தான் செய்கிறது. அவ்வித விரக்திகளுடன், வேர்களை இழந்த மாதிரியான ஒரு உணர்வுடன் நடந்தவாறு ஆலய வாசலருகில் வந்தவள், அந்த இடத்தில் சையிக்கிளில் வந்து இறங்கிய யூலியனைப் பார்த்தாள்.
இத்தனை வயது போயும் இவர் முகத்தில் பரிபூரண நிம்மதி நிலவுகின்றதான ஒரு அழகு இருந்து கொண்டிருக்கிறதே? இப்பொழுதும் உருண்ட திரண்ட தோள்களுடன் - டெனிம் ஜின்ஸ்சும் போட்டுக் கொண்டு இளமை குன்றாத மாதிரியாகவெல்லவோ இவர் இருக்கிறார்.!"
முன்பெல்லாம் யூலியனை அவள் காணும்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை ஒரு மின்னல் சக்தி அவள் உடலில் பாய்ந்து மறையும். ஆனால் இன்று உடல் சோர்வு அந்த உணர்வுகளை யெல்லாவற்றையும் தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்ட கணக்காகத்தான் கோப்பை மூடிய மாதிரியாக அவளுக்கு இருந்தது. பல்லிவால் போல அதெல்லாம் துண்டிக்கப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் கிடந்து அதெல்லாம் துடித்துக்கொண்டிருக்கிறதோ?
அவனின் மேலுள்ள பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு, “வாய்க்கெட்டாமல் போய் விட்டானே...!" என்ற ஏக்கத்துடன் தேவாலயவாசல் படியில் அவள் கால் தூக்கி வைக்கப் போனாள்.
“மார்கிறட்..!”
பாதம்அதிராமல் ஒரு படி ஏறி நின்றவள் யார் என்னைக் கூப்பிடகிறார்கள்?" என்ற நினைப்பில் திரும்பி நின்று பார்த்தாள்.
102
நீபி.அருளானந்தம்

கூப்பிட்டது யூலியன்தான் என்பது அவளுக்கு நன்றாக தெரிந்து கொண்டுவிட்டது. சையிக்கிளின் காண்டிலை ஒரு கையால் பிடித்துக்கொண்டு தன்னைப் பார்த்தபடி உதட்டில்சிரிப்புத் தவழ நிற்கின்ற அவனைப் பார்க்கவும், அவளுக்கு உள்ளூர மனத்திலே புளகாங்கிதமாகவே இருந்தது.
ஏறிநின்ற படியிலிருந்து கீழே உடனே இறங்கிவிட்டாள் அவள்.
அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது. முன்னைய காலத்து நினைவூட்டலின் குளிர்ச்சி மனத்திலுற அவன் முகத்தைப் பார்த்தாள். ஆண்முகத்தை தொடர்ந்து கண்பார்வையை எடுக்காமல் பார்ப்பதற்கு இப்பொழுது அவளுக்குத் துணிச்சலும் இருக்கிறதுதான்.
- சட்டென்று அவளுக்குச் சிரிப்பு வரவில்லை. இதழ்களை அதற்காக விரித்துக் கொள்வதற்கே நேரம் போவது போல இருந்தன. "கோடை கால வெயில் அதிகரித்ததில் வறண்டு போய் விட்ட மாதிரியல்லவோ இருக்கின்றது என் உதடுகள்."
“மாக்கிறட்” திரும்பவும் அவள் பெயரைச் சொல்கிறான் அவன்.
அவன் கூப்பிட்ட குரலினூடே சந்தோஷத்தில் நிரம்பியது அவள் இதயம்.
“யூலியன் எப்படி?” அவளும் சமரசம் செய்து கொள்வது போல அவனைப் பார்த்துச் சொன்னாள்.
"எங்க கோயிலுக்கா..?"
கோயிலடி வாசலிலேதானே இப்போது நான் நிற்கிறேன் பிறகு ஏன் இந்தக் கேள்வி"
103
வெளிச்சம்

Page 61
உள்மனதில் நினைத்துக் கொண்டாலும் 'ம்' என்றாள். அந்த "ம்" என்ற ஓசை கூட தன்னிடமிருந்து இளமை கலந்த இனிமையானதாக வெளி வரவேண்டுமென்பதில் பெரு மூச்சுக்கொப்பான ஆசை அவளுக்கு.
“வெளிநாட்டில் இருந்து கொஞ்சக் காலம் அப்பிடியே போயிற்று. இங்க வந்ததில கோயில்பக்கம் ஒருக்கா பாத்திட்டு வருவமெண்டு வந்தன்."
அவன் பிறகு இதைச்சொன்னான். அவன் நிற்கின்ற நிலை வசீகரமாக அவளுக்குத் தெரிந்தது.
அவன் சொன்ன அந்தக் கதைக்கு பிறகும் 'ம்' - என்றாள் அவள்.
நீங்கள் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளேல்லயா..?
"இல்லை.”
" அப்படி ஏன் பிடிவாதம் பிடித்தமாதிரியா இவ்வளவுகாலமா நீங்க இருந்திட்டீங்க..?”
இதை அவன் கேட்க தர்மசங்கடமாயிருந்தது அவளுக்கு. நெளிந்தாள். ஒடும் குளிர்ந்த ஆறு குளுகுளுவென்று குறுக்கிடுவது போல சில நிமிடங்கள் அவளுக்கு இருந்து கொண்டிருந்தபோது, இந்த வட்டச் சூரியன் ஏன் அவன் வார்தையினுாடே சேர்ந்து வந்தான் என்னைச் சுட.? தன் முன்னே சில பாம்புகள் குறுக்கே போகின்றது மாதிரியான ஒரு உணர்வாய் இருந்தது அவளுக்கு. உடம்பு அவளுக்கு அலுத்துச் சலித்துத்தவித்தது.
தன்னைப் பழிவாங்குவதைப் போல இருக்கும் அவன் கேட்ட கேள்விக்குத் திருப்பி என்ன பதிலைத்தான் கூறி அவள் சமாதானம் கொள்வாள்.
104
நீபி.அருளானந்தம்

“இப்போதைக்கு எனக்குக் கலியாணம் செப்து கொள்ளுறதில விருப்பமில்ல. இப்பவும் எனக்கு முந்தினதுகள நினைச்சு சொட்டும் வருத்தமுமில்ல”
“உண்மையாவா..?”
"இல்லாம பொய் ஏன் நான் அதுக்காக வெண்டு சொல்ல வேணும்.? சரி அதையெல்லாம் நீங்க ஏன் என்னட்ட இப்பயாக் கேக்கிறீங்க..?”
"முந்தியெல்லாம் உங்களிட்ட நான் இதையெல்லாம் கதைக் கேலாது தானே?"
"அப்ப இப்பவா உங்களுக்குத் துணிவு வந்திட்டோ கேக்க..?”
"அப்பிடியாகவும் ஒரு கதைக்கு வைச்சுக் கொள்ளுங் களன். உங்களை ஒரு காலம் பாத்து ஆசைப்பட்டுக்கொண்டும் நான் திரிஞ்சனான் தானே. இப்பவும் என்ன. உங்களில எனக்கு நல்ல விருப்பந்தான்..!"
இப்போது மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவில் நிர்வாணத்தைப் போல அந்தக் கதையை சொன்னான் அவன். அவள் உடனே அவனை ஊடுவிப் பார்த்தாள். “இந்த வயது வந்தால் இப்படி ஒரு விளையாட்டான கதையில இவர்களைப்போன்றவர்களுக்கு பொழுதும் கடந்து போகுமோ.
இந்தக் கதைகளைச் சொல்லி என்னிடம் ஏறி வருவதற்கு இவருக்கு ஏணியும் கிடைத்திருக்கிறது போலும்." அவளுக் குத்தன் நிலையை நினைக்க வேடிக்கையாக இருந்தது. யூலியன் அப்படி சொன்னதுக்கு ஒப்பாக தானும் தன் மனதிலுள்ளதை இப்போது வெளிப்படையாக சுதந்திரமாக சொல்லாம்தானே
0S
Goaulofssub

Page 62
என்றவாறு அவள்நினைத்தாள். இனி எந்தத் தொந்தரவுகளிலும் வீண்தகராறுகளிலும் மாட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் எதனாலும் வராது என்றது போலவும் அவளுக்கிருந்ததது.
இளமை வயதான அன்றைய யூலியன் தன்னை சுவரோடு சொகுசாக அழுத்திப்பிடித்து - தன் கனத்தை இரட்டையாக்கிக் கொண்டு - மூச்சு புஸ் புஸ் என்று முகத்தில் சுட கொஞ்சுவதுபோல அவளுக்கு ஒரு பிரமை.
"ஐயோ. இப்படியாக வெல்லாம் யூலியன் என்னை நெடுகஷம் நினைச்சுக் கொண்டு இருந்திருக்கிறாரே. இந்த விஷயம் முன்கூட்டியே எனக்குத் தெரியவில்லையே." குற்ற உணர்ச்சி அவளை அழுத்திப் பிடித்துக்கொண்டு மனத்தைப் போட்டுப் பிடுங்கிக் கிழித்தது.
என்றாலும் ஒரு நிமிஷம். இல்லை. இரண்டு நிமிஷம்தான் அவளிடம் இத்தகைய நிலை. அவள் வசப்படவில்லை.
"இப்படித்தான் என்னோடு படித்த டேவிட்டும் ஒரு நாள் என்னைக் காணேக்கிள சொன்னார். அவரும் என்னை அப்போது விரும்பினாராம். இப்பவும் என்னையை விரும்புறாராம். எப்படி யிருக்கு இந்தக் கதையெல்லாம். எல்லாஆம்புளயஞம் இப்ப நடிகர் ஜெமினி கணேசன் போல கலியாணங்களை முடிச்சுக்கொண்டு இருக்கக் தான் ஆசைப்படுகினம் போல."
அவள் தனக்குத்தாளே இதை சொல்வதைப் போல சொல்லிவிட்டு விரத்தியுடன் யோசித்தாள்.
"மாக்கிறட் நீர் நினைக்கிறது மாதிரி நான் இல்ல.நான் உண்மையா உம்மை ஒரு காலம் விரும்பினனான்தான்..!"
சொல்லிவிட்டு அவளைக்கிண்டிப்பார்ப்பது மாதிரிப் பார்த்தான் அவன். அவனுக்கு ஊரான் வயலில் இறங்கி அறுவடை
106
நீபி.அருளானந்தம்

செய்கிற ஆர்வம் மனதில் துடித்துக் கொண்டிருந்தது.
மாக்கிறட் அவன் கதையில் மனம் இளகிப் போய் விட்டாள். இளகிய அவளின் மனம் பிறகு டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்த கதிபோல பாதியாக உடைந்தது போன்ற திடீர் வேதனையாக இருந்தது.
"யூலியன்! வாழ்க்கை பொய்களால் ஆன தெண்டுதான் நான் என்னளவில இண்டைக்கும் யோசிச்சுக் கொண்டிருக்கிறன். ஆனாலும் நீங்க இப்ப என்ன அப்ப விரும்பினிங்க எண்டு சொன்னது என்னய அப்பிடியே திடுக்கிட வைச்சிட்டுதுயூலியன். மனம் எனக்கு அப்பிடியே உறைஞ்சு போனமாதிரி எனக்கு இருக்கு. நான் வேற ஆரும் நீங்க சொன்னமாதிரி சொன்னா நீங்களுமாச்சு உங்களிண்ட பேச்சுமாச்சு எண்டு வேண்டா வெறுப்பா சொல்லிப்போட்டுப் போயிடுவன். ஆனா நீங்க அப்படியா இப்ப எனக்குச் சொன்னதக் கேட்கேக்க பெரிய கவலையாயிருக்கு. யூலியன் உண்மையா உங்கடமனதில இருந்ததை எனக்குச் சொல்லுங்கோ. நீங்க அப்ப என்னைய விரும்பியே இருந்தனிங்கள்.?"
அவள் உணர்ச்சி வயப்பட்டு கண்கள்கலங்க இதைக்
கேட்டாள்.
“பொய்ய நான் ஏன் சொல்லுறன். அப்பநான் உங்கள எவ்வளவோ விரும்பி மனதில ஆசைப்பட்டனான் தான்.”
பொறுமையாகவும் நிதானமாகவும் வார்த்தை வார்த்தை யாகச் சொன்னான் அவன்.
ஆனால் மார்கிறட்டுக்கோ, அவளின் ஆத்மாவில் இரத்தமாய்க் கண்ணிரும் கண்களில் நிரம்பிவிட்டது.
"அப்ப நீங்க ஏன் அந்த நேரம் இதை எனக்குச் சொல்லேல்லாம பொத்திப் பொத்தி வைச்சுக் கொண்டது மாதிரி
107
வெளிச்சம்

Page 63
இருந்தியள்.?”
அவள் குரல் உடைந்த அளவில் கேட்டாள்.
ஆனால் யூலியனுக்கு அவளின் உணர்ச்சிப் பிரதிபலிப்பைப் பார்க்க, சுவாரஸ் யகரமான ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பது போல பொழுது போக்காக இருந்தது.
“உங்களிட்டயா முன்னம் அந்த என்ர ஆசையை சொல்லத்தான் நான் இருந்தன் ஆனா செல்லேல்ல."
“அதான் ஏன் அப்பவா எனக்கு அதைச் சொல்லேல்ல நீங்க எண்டு கேக்கிறன்.?”
“சொல்லேலாத ஒரு நிலையா அப்ப எனக்குப் போயிட்டுது என்ன செய்ய.?”
அவன் அப்படி சொல்ல தன்னை எரித்து சாம்ப லாக்கினவன் போன்று நினைத்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் மார்க்கிறட் அவளுள் ரகசியம் போல ஒரு சோகம் அதன்பிறகு மனத்தினுள் கவிந்தது.
"நானும் அப்ப ஆரையும்கூட லட்சியம் செய்யாம ஒரு கெப்பர்த் தனத்தில எங்கயும் போய்க்கொண்டிருப்பன் என்ன?”
முன் ஒரு காலம் தன் வாழ்வின் வழிகளை அடைத்துக் கொண்டு தவறிழைத்து விட்டதான சோகத்தோட சொன்னாள் அவள். மனப்பரப்பு அவளுக்கு அதிர்வுற்றதால், தன் மூக்களவு உயரமான - குதியுயர்ந்து கூர்மையான காலணிகளுடன் நின்று கொள்வதற்குக் கால்களும் அவளுக்குத் தடுமாற்றமாக இருந்தன.
ஆனால் யூலியனுக்கு - மார்கிறட்டுடன் கதைத்தெல்லாம் மனதில் ஒரு வித தாக்கமுமில்லாது சர்வசாதாரணமாகவே
108
நீபி.அருளானந்தம்

இருந்தது. முன்னம் அவளுக்கிருந்த கர்வத்துக்கு இப்போது - தான் ஒரு கொடூர மான அமில மழையை அவள் மீது பொழிந்ததான மகிழ்ச்சியுடன் அவன் இருந்தான்.
“ என்னோட சேர்ந்து பழகிற ஆக்களிலயும் உண்மையான அன்பு, பாசம், காதல் இருக்கிறது எண்டுறது இப்பத்தான் எனக்குத் தெரியுது யூலியன். ஆனாஇனி நான் அதையெல்லாம் உணர்ந்து என்னதான் பயன் வரப்போகுது. எல்லாமே என்ர தலையெழுத்து. என்ர தலையெழுத்தே சரியில்ல. நான் வாறன்யூலியன்."
தன்முகத்தில் திடீரெனப் பழுத்த -- காய்ந்த தவத்தின் கடுப்போடு சொல்லிவிட்டு, கோயில் வாசல் படிகளில் ஏறிச் சென்று கொண்டிருந்ததாள் மார்கிறட் அவளுக்கு இப்போது எண்ணம் நேராய் மாறிய அளவிலேதான் இருந்தது. அவள் படிகளில் ஏறிச் செல்வதை அதிலே நின்று சிறு நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தன் சைக் கிளை எடுத்துக் கொண்டு
109
வெளிச்சம்

Page 64
புறப்பட்டான் யூலியன். அவன் சையிக்கிளை ஒடிக்கொண் டிருக்கும்போது - இளம் பெண்ணின் குட்டைப்பாவடை மாதிரி கச்சிதமாக ஒரு காலம் இருந்த மார்க்கிறட்டின் கவர்ச்சியான உடல் அழகு அவன் நினைவில் வசீகரத்துடன் வந்தது. அங்கங்களின் பிதுங்கல்கள் பளபளத்ததாய் ஜொலிக்க உள்ளத்தைச் சூறையாடுகிற மாதிரிமினுமினுக்கி மிளிர்கிற மாதிரியாய் ஒளிர்கிற நடை அவளது நடை. அந்த நினைவிலே கிடந்து உழன்று கொண்டு அவன் சையிக்கிள் மிதித்துக்கொண்டிருந்தபோது, மனைவி பின்னேரவேளை சாப்பாட்டுக்கடையிலிருந்து தனக்கு வாங்கிவரச் சொன்ன வடையின் ஞாபகமும் அவனுக்கு வந்தது. அவன் உடனே மார்கிறட்டின் நினைவை தன்னிலிருந்து தள்ளியதாய் வைத்து விட்டு மனைவி தன்னிடத்தில் சொன்ன அந்த வடை வாங்கிக் கொண்டு போகவேண்டும் என்ற நினைவில் கழுத்தளவு மூழ்கியவனாய்த் தன் நிலையை உடனே மாற்றிக்கொண்டான்.
(தினகரன் வாரமஞ்சரி - மே - 16, 2010)
110
நீபி.அருளானந்தம்

கடவுளே உனக்குக் கேட்கிறதா
மாலைப்பொழுது முகம், சிவந்துவிட்டது.
“வேலை முடிந்துவிட்டது தானே வேளைக்கு வெளிக் கிடு.” என்கிறதாய் ஜெயந்தியினது மனம் வாதாடியது. மூச்சில் சுருளும் இந்த இரத்த நாற்றத்தைவிட்டு வெளியேற வேண்டு மென்றும் அவளுக்கு அந்தரம்.
வார்ட்டுக்குள் ஒரு பெண்ணின் குரல் அவளைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டது போல இருந்தது. குரல் மன ஆழத்தில் புரண்டு அவளை அந்தப் பக்கம் இழுத்தது. வைத்திய சாலையில் இனித் தன் வேலை முடிந்துவிட்டது தானே என்று ஒரு கணம் மனத்தில் அவள் நினைத்தாலும்கூட, அவ்விடத்தை நோக்கி அவள் ஒட்டமும் நடையு மாகப் போனாள். வார்ட்டுக்குள் சென்றதும் அங்குள்ளவர்களை முகம் முகமாகப் பார்த்தாள். கட்டிலில் படுத்துக் கிடக்கின்ற நோயாளிகளுக்கும், கீழே பாய் விரிப்புக்களில் கிடக்கின்ற நோயாளிகளுக்கும் வாய்திறந்து ஏதும் சொல்ல முடியாத அளவுக்குச் சோர்வு!
அங்கே கடைசிக் கட்டிலில் படுத்துக் கிடந்தவள் மாத்திரம் அவளை உள்ளே கண்டதும், "அம்மா இவ்விடத்தையா வாங்கோ. இங்காலையா ஒருக்காக் கெதி பண்ணி வாருங்கோ." - என்று சொல்லி அழைத்தாள்.
111
வெளிச்சம்

Page 65
'இவள் தான் - முன்னம் என்னை அப்பிடியாக் கூப்பிட்டி
ருப்பாள்..!' - என்று உடனே குரல் அவளுக்குப் பிடிபட்டு விட்டது.
"என்ன என்ன..?” என்று அவசரமாகக் கேட்டாள்.
"அங்க விறாந்தைப் பக்கமா அந்தப் பிள்ள உடுப்பும் ஒழுங்கா யில்லாததா ஒடுதம்மா..!"
அவள் சொன்னதும் தான்தாமதம், வார்ட் வாசலடிப்பக்கம் விரைவாக வந்தாள் ஜெயந்தி - அதிலே நின்றபடி ஆண் நோயாளர் வார்ட் பக்கம் பார்த்தாள். அந்தப் பெண் விரிந்த கூந்தலோடு பழி வெறி கொண்ட மாதிரி அதிலே ஒடிப் போகின்றது அவளுக்குத் தெரிந்தது. அதே நேரம் ஒடுபவளுக்கு முன்னால் தாதிகள் இருவர் நேரே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் விளங்கி விட்டதாயிருக்க வேண்டும், எச்சரிக்கை அடைந்தார்கள்.
“பேசண்டப் பிடியுங் கோ. பிடியுங்கோ ஒட விடாதயுங்கோ." - என்று இவளும் விரைவான நடையோடு அவர்களுக்குச் சத்தமாய்ச் சொன்னாள். அவளை அந்த இரு தாதிகளும் ஒட விடாமல் உடனே நன்றாக தங்கள் கைகளினால்
இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள்.
அவர்களிடம் பிடிபட்டுக் கொண்ட அவள் கனத்த குரலில் சிரித்தாள். பிறகு, "ஐயோ என்ரை ஐயோ” - என்று தன்தலைமயிரை, பிய்த்தெடுக்கிற மாதிரி கைகளால் பிடித்து இழுத்துக் கொண்டு திமிறியபடி கூவினாள். மார்புக்குள் பாரமாக இருக்கின்ற ஒன்றை உடைப்பவள் போல அவள் முறுகினாள்.
"என்னை விடு. என்னைவிடு.” - என்று சொல்லியவாறு அவர்கள் கைகளிலிருந்து தன்னை நழுவி விடுத்துக் கொண்டு மண்டை அடிபட அவள் பிறகு தரையில் விழுந்தாள். தலையைத் தரைமீது அறைந்தபடி அவள் அழுதாள்.
112
நீபி.அருளானந்தம்

கீழே விழுந்த அவளை தாதிகள் இருவரும் ச்ேர்ந்து அசையவிடாமல் பிடித்துக் கொண்டார்கள். ஜெயந்தி தாமதிக்காமல் உடனே வார்ட்டுக்குள் ஒடிப்போய் கட்டிலில் கிடந்த ஒரு வெள்ளைநிற போர்வைத்துணியை எடுத்துக் கொண்டு வந்து அவளின் கழுத்துக்குக் கீழே போர்த்தினாள். அவள் திமிறியபோது மீண்டும் அவளின் உடல் தெரிந்தது.
"கடவுளே என்ன கொடுமை இது. ?” என்று உள்ளம் நிறைந்த விம்மிதத்தோடு, தனக்கு வாயில் வந்ததைச் சொன்னாள் ஜெயந்தி.
வைத்தியசாலை என்ன மனித வாசமில்லாத காடா? எத்தனையோ மனிதக் கண்கள் அந்த விறாந்தையிலே அரை நிர்வாண மான நிலையில் ஓடிவந்த அவளைப் பார்ப்பதற்கும் வழியுண்டு தானே?
ஒரு படியாக தாதிகள் எல்லோருமாக சேர்ந்து அவளை அப்படியே துணியால் சுற்றிப் பிடித்துக் கொண்டுபோய் கட்டிலிலே கிடத்தி அடக்கினார்கள். ஜெயந்தி ஓடிப்போய் ஊசியில் அவளுக்கான மருந்தை அவசரமாக நிரப்பிக் கொண்டு வந்து கையிலே குத்தி ஏற்றினாள்.
அவள் புலம்பிக் கொண்டிருந்தபடி பிரேதத்தைப் போல, அடங்கிய சலனங்களுடன் ஒரு சில கணங்களுக்குள் அப்படியே நல்ல நித்திரையாகி விட்டாள்.
"கடவுளே. இவள் ஒடித்திரிவதை இனி நிறுத்திவிட்டு சில மணித்தியாலங்களாவது தன்னை மறந்து தூங்கினால் போதும்.” - என்று ஜெயந்தி மனதுக்குள் நினைத்தாள்.
"இதற்குப் பிறகு இனியும் இதுக்குள்ளயா நான் நிண்டு கொண்டு மினக் கெட்டால் - நல்லாப் பொழுது பட்டுப் போகும்." - என்ற நினைப்போடு சுறுக்காக நடந்து சையிக்கிள்
113
வெளிச்சம்

Page 66
தரிப்பிடத்துக்குப் போய்த் தன் கால் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டாள் அவள்.
"நேரம் போய் விட்டது' - என்ற நினைப்புடன் ஆஸ்பத்திரி வீதி வழியாக அவள் சையிக்கிள் மிதித்த வேகத்தில் உடம்பெல்லாம் குப்பென்று வியர்வையாகிவிட்டது. சட்டையின் உள்ளுக்குள் நெருஞ்சி முள்ளாக உறுத்துகிற ஈரநசநசப்பு.
வேலைவிட்டு வெளியே வந்து, வவுனியா கோயில் குளத்தி லுள்ள தன் வீட்டுக்குச் சையிக்கிளில் போய்க் கொண்டிருக்கும் போதும் கூட வைத்தியசாலை நினைவுகளை அவளுக்கு மறக்கவே முடியவில்லை.
நிர்வாணமாக ஒடித்திரிந்த அந்த இளம் பெண்ணின் நினைவு இன்னும் போட்டு அவள் நினைவை வருத்தியபடிதான் இருந்தது. ஆள்கள் கூட்டத்தில் அவள் தன்னை மறந்து நிர்வாணமாக ஒடித்திரிந்ததற்குக் காரணம் தான் என்ன?
t "நான் இனிமேல் உயிர் வாழ்ந்தே ஒர் அர்த்தமுமில்லை" - என்பது தானே?
"உடலுக்குள் என் உயிர் சிறைப்பட்டிருக்கிறது. அதை விடுவித்து விடு கடவுளே." - என்பது போல்தானே?
"அந்தப் பெண் ஏன் இப்படியாக மனம் குழம்பிப் போனாள்? - என்ற அந்த விபரத்தை, ஜெயந்தி தான் அறிந்து கொண்டதும், அங்கே சிகிச்சை பெற்று வந்த இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான். காய்ந்த முள் மரத்தில் விழுந்த மாதிரியாகத்தான் அவளுக்கும் ஷெல் சிதறல்களால் ஏற்பட்ட காயங்கள் இருந்தன. முழுங்கி மறைக்கிற உள்காய வேதனைகளோடு அவளும் ஆணியடித்தமாதிரியான பார்வை யோடுதான் இருந்தாள்.
114
நீபி.அருளானந்தம்

மனதுக்குள் இறுகிய பாரமாக கனத்து இருந்த ஒன்றை உடைப்பது போல 'அம்மாளாச்சி. அம்மாளாச்சி. - என்று வற்றாப்பளை அம்மானை நினைத்து அவள் கூப்பிட்டவாறு தான் கட்டிலில் கிடந்தாள்.
அங்கே யுத்தம் நடைபெறுகிற இடத்தில் அவள் இருந்தபோது, அவள் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஷெல் விழுந்து உடல் சிதறிக்கிடக்கிறதைக் கண்ட காட்சி, அவள் கண்களை விட்டு இன்னமும் கூட அகலவே இல்லை.
அந்தக் காட்சியை ஒவ்வொரு நிமிடமும் அவளால் ஞாபகத்துக்குள் கொண்டு வரவே முடிகிறது. அந்தக் காட்சி அவள் மனதில் ஒடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்போது நான் இங்கே இந்த வைத்திய சாலைக்குள் இல்லை - அங்கே யுத்தம் நடக்கின்ற அந்த இடத்தில் தான் இப்போதும் நான் இருக்கின்றேன்" - என்ற பிரக்ஞை தாக்கிக் கொண்டேதான் அவளுக்கு இருக்கிறது.
வார்ட்டுக்குள்ளே ஒடித்திரிந்த அந்தப் பெண்ணினது தாயார் அங்கே எப்படியாக இறந்துபோனாள் என்று அவள் இதை சொல்லும் போது - எல்லா உணர்வுகளும் அவளிடத்தில் அதிர்ந்த மாதிரித்தான் ஜெயந்தியின் கண்களுக்கு அவள் காணப்பட்டாள்.
'உயிருக்குப் போராடி அங்கிருந்து வந்திருக்கும் அனைவருக்கும் மனப்பயம் இருக்கும் நனைந்த நூலாக அவர்கள் செயலற்றுத்துவண்டு கொண்டிருக்கிறார்கள். அப்படியான அவர்களிடம் போய், இப்படியாகவெல்லாம் தான் கேட்பது மனக் குழப்பத்தைத்தான் உண்டுபண்ணி அவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்' - என்ற அந்த விஷயம் ஜெயந்திக்கு நன்றாய்த் தெரிந்திருந்தும், தன் வயதுடைய அந்தப் பெண்ணின் கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவளுக்கு ஏனோ ஒரு விதத்தில் மிகவும் அக்கறையாகவே இருந்தது.
115
வெளிச்சம்

Page 67
"அந்தக் கொடுமையளை எல்லாம் என்ரை வாயாலயா சொல்லிக் கொள்ளவே ஏலாதம்மா தங்கச்சி” - என்று தீவிரமாக அதையெல்லாம் மறுக்கிறாப்போல முதலில் சொல்லிவிட்டுத்தான் அவளைப் பற்றிய அந்தச் சம்பவத்தையே ஜெயந்திக்கு அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
“சுர்க்கெண்டு வந்து அதில ஷெல் விழுந்தவுடன தங்கச்சி அந்த மண்முழுக்கலுமே அப்பிடியே சதைச் சிதறலாய்ப் போயிற்றம் மா. ஐயோ. சிகப்புச் சதைத் துண்டுகளாய் அங்கயெல்லாம் பார்க்கக் கிடந்துது பிள்ள. கூறுபோட்ட இறைச்சித் துண்டங்கள் மாதிரிப் பிள்ள. நாலா பக்கமும் பாத்தா சள்ளெண்டு தெறிச்ச ரெத்தம் தான் முழுக்க. ம். ம்ம். இந்தப் பிள்ளையின்ரை தாய் தலைகாலெல்லாம் சிதறிப்போய் வயித்தில இருந்து பொதுக்கெண்டு வெளிய சரிஞ்ச ஈரக்குடலோட அப்பிடியே அதிலேயே செத்துப் போனாளம்மா. அதைப் பார்த்ததோடதான் உந்தப் புள்ளை உப்புடியாப் போச்சுது. உந்தப் பெட்டைக்கு தகப்பனுமில்லச் சகோதரங்களு மொண்டுமில்ல இனிமேல உந்தக் குமருக்கு ஆர்காவலோ? எப்பிடி இது இனி இந்த உலகத்தில சீவிக்கப் போகுதோ..?”
'. அவள் சொல்லி முடிக்கவும், ஜெயந்திக்கு அவள் கதையைக் கேட்டதில் வேதனையினால் கண்களில் கண்ணீர் ஊறிவிட்டது.
சில மாதங்களாக இந்த வைத்தியசாலையில் அவள் எத்தனையோ துன்பப்பட்ட மனிதர்களைப் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறாள். சத்திர சிகிச்சை நடக்கும் அறையிலே அவள் வேலை செய்யும் நாட்களில், இவளுக்கு வயிற்றில் அமிலப் புளிப்பு குழம்பிய மாதிரித்தான் சில வேளைகளில் வந்துவிடும்.
ஆயுதங்களிலே சதையும் இரத்தமும் குதறிப் போயிருக்கு மளவிற்கு, சிதைந்து சிதறிப் போன கை, கால் அவயவங்
116
நீபி.அருளானந்தம்

களையெல்லாம் அவர்கள் துண்டித்துப்போட்டு விடுவார்கள். வெட்டி ஒதுக்கப்பட்ட சிதைந்த கை கால்கள் அந்த அறையின் மறைவிடமுமாயுள்ள பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் போய்விடும்.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க அவளுக்கு மனம்கிடந்து எரியும். அழுகை அழுகையாக அவளுக்கு வரும். கை கால்கள் எடுக்கப் பட்டவர்களெல்லாம் தமக்கு நினைவு திரும்பிய பிறகு கன்னத்தில் சரமாய் இறங்கிச் சரிகிற கண்ணிரோடுதான் அவள் பார்க்கின்றபோது காணப்படுவார்கள். சிலர் 'மடேர் மடேர் - என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவார்கள். அவர்களின் கதறலோடு சேர்ந்து கசிகின்ற வார்தைகளோ அவளுக்குக் கேட்டுக் கொண்டிருக்கவே மனத்தால் தாங்கவே இயலாது.
அவர்கள் புலம்பிச் சிதறுகிற சோகச் சொற்களை கேட்கும் போது அவளுக்கு, நானும் இப்படியே செத்தால் தான் என்ன." - என்பது போலவே வாழ்க்கைதனில் வெறுப்பும் கூட வந்து விடும்.
nau 117
வெளிச்சம்

Page 68
அந்த மண்ணே கொலைக்களமாகக் கிடக்கிறது' - என்று தான் காயப்பட்டு உயிர்தப்பிவந்த நோயாளிகளெல்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கிறபோது அவளுக்குச் சொன்னார்கள். ‘உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகள் அளவிற்கு பிரேதங்கள் அங்கே குவிந்து போய்க் கிடக்கின்றன - என்றும் அவளைப் பார்த்து அவர்கள் குழப்பமான கதறலோடு கூறினார்கள். சின்னஞ் சிறு பிள்ளைகள் சிகிச்சை பெறும் வார்ட்டில் அவள் வேலை செய்கிறபோது - இரவிலும் அந்தப் பிள்ளைகள் முழித்துக் கொண்டு தேடுகிறார்கள், "அம்மா. அப்பா." - என்று சொல்லிக் கொண்டு.
இழப்பின் சோகம் அந்தச் சின்னஞ் சிறார்களுடைய பிஞ்சு மனத்தைப் போட்டு அழுத்துகிறது. சில சிறுவர்களுக்கு செல் துண்டுகள் பறந்து வெட்டியதால் அவர்களின் பிஞ்சுக்கால்கள் போய்விட்டன. விளையாட்டில் புழுதிபடிய கால்கள் இனிமேல் இல்லை அவர்களுக்கு. முள்குத்தினாலே பிடுங்கும்போது எங்களுக்கு எவ்வளவு வருத்தம். ஆனால் இங்கே இவர்களுக்கு இப்போது கால் இல்லை, கை இல்லை. சிதறிய காயமுள்ள கால்களை கைகளை பிரயோசனமில்லை என்று வெட்டிப் போட்டு நாளாந்தம் அதுவும் ஒரு குப்பை போலத்தான் ஆஸ்பத்திரியில் தள்ளப்படுகிறது.
‘என்ன யுத்தம் தான் கடவுளே இது? ஒரு கண நேரங்கூட இடை வெளியே இல்லாமல்...? - என்று தான் கிட்டித்துவிட்ட இறுக்கத்தி லிருந்து காயங்களுடன் வெளியேறிய மக்கள் அவளுக்கு ஆஸ்பத்திரியில் சொல்லி அழுகிறார்கள்.
கருக வாட்டிய வாழை இலைபோல எரிகுண்டு தீண்டிக் கரியான தமது உறவினர்களின் உடல்களையெல்லாம் அவர்கள் பார்த்தி ருக்கிறார்கள். பொறிக்குள் சிக்கிக் கொண்ட எலியைப் போல யுத்தம் நடைபெறுகிற அந்த இடத்திலே முன்னுக்கும் போக முடியாமல் பின்னுக்கும் ஒட இயலாமல் எவ்வளவோ 118
நீபி.அருளானந்தம்

கஷ்டப்பட்டு வந்தவர்கள் அவர்கள்.
இந்த வெயிலுக்கு ஒரே புழுக்கம்! நசநசப்பு மூச்சே போக வில்லை! மயக்கப்படபடப்பு! இந்த மாதிரியான அவர்களது உடல் நிலையில் காடே நடுங்கிய செல்வீச்சுக்களால் (விமானக் குண்டு வீச்சுக்கள்), அங்கே ராட்சதக் குடையாக தலை விரித்துக் கிடந்த மரங்களெல்லாம் மொட்டையாகப் போய்விட்டதாம்.
இந்த நிலையில் மரநிழலிருட்டு றெக்கைக்குள்ளே அவர்கள் இனிமேல் எங்கே இருப்பது?
'வயோதிபர்கள் கிடந்து அங்கே படுகின்ற பாடுகலெல்லாம் வார்த்தைகளால் விளக்கிச் சொல்லவே முடியாது. அவ்வளவு துக்கம்!” - என்கிறார்கள்.
பூப்பல்லக்கில் போக வேண்டிய அவர்களது பிரேதங்க ளெல்லாம் அங்கங்கே அநாதரவாகக் கிடக்கின்றதாம்!"
"இரண்டு தலை முறைக்கு இருந்து தின்னலாம் சொத்து. ஆனால் எங்களுக்கு அங்கே ஒரு வேளைகூட சாப்பிடவும் வழி யில்லாமல் போச்சு. ஒரு மிடறு தண்ணிர் வாய்க்க ஊத்திக் கொள்ளுறதுக்கும் ஏலாத கஷ்டமாப் போச்சுது. இப்ப விட்டுப்போட்டு வந்தாச்சு. என்று ஒரு சோர்ந்த பெருமூச்சோடு சொல்லிக் கொண்டு இருக்கிறவர்களின் கதையையும் இவள் கேட்டவள் தானே..?"
சாப்பாட்டு நேரம் வந்தால், 'பிள்ளையஞக்குப் பசிக்கு என்னத்தைத் தின்னவாக் குடுக்கிறது’ - என்று குமுறிக் கொதித்துப் போயிருக்கிற தாய்மார்கள். பிள்ளை குட்டிகளும் மனைவியும் வயிற்றுப் பசியால் கிடந்து துடிப்பதை நினைத்தபடி வெறித்த நீர் நிறைந்த கண்களுடன் மரங்களைப் பார்த்தபடி படுத்திருக்கும் தகப் பன்மார்கள். கண்முன்னே இப்பொழுது தான் அவர்களெல்லாம் உயிருடன் பார்க்க இருந்தார்களே. இந்த
119
வெளிச்சம்

Page 69
நிமிஷத்தோடு அவர்களெல்லாம் எங்கே?
"சிதறிக் கிடக்கும் உடல் பிள்ளைகளே நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்?"
"அனிதா நீ எங்கிருக்கிறாய்?”
"ராசன் - தயா - குட்டி - நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்ர மக்களே நான் பெத்த செல்வங்களே.”
அவள் எவ்விதமாகவோ சைக்கிள் மிதித்துக் கொண்டி ருக்கும் இந்த நேரத்திலும், அவர்கள் எல்லாம் சொன்ன அந்த யுத்த சம்பவங்களை தான் நினைவில் வைத்துக் கொண்டு இப்படியாகவும் கற்பனை பண்ணிப்பார்த்தாள்.
அனிதா, ராசன், தயா, குட்டி என்று சொல்லிக் குழறி அந்தத்தாய் அழுவதைப்போல அவளுக்குப் பிரக்ஞையாயிருந்த வேளை, அவளுக்கும் அழுது விட வேண்டுமாப் போலத்தான் உணர்ச்சி யாயிருந்தது.
அதனால் பெடலை மிதிக்கக் கூட அவளுக்கு இப்போது கால்கள் பலங்கொள்ளவில்லை. எனவே இலகுவாக்கி ஆறுதலாக அதைப் பின்னாலே சுழல விட்டாள். என்றாலும் வீதி இறக்கத்தில் அப்போது சைக்கிள் உருண்டு கொண்டிருந்ததால் அவள் உடலுக்கு கொஞ்சம் சுகம் இருந்தது. காற்றுப்பட்டது உடலுக்கு சிறிது புத்துணர்ச்சியையும் அவளுக்கு உண்டுபண்ணியது.
முஸ்லீம் பள்ளிவாசல் சந்தியடிக்கு சையிக்கிளில் வரவும் அங்கேயுள்ள கடைகளை அவள் பார்த்தாள். முன்பெல்லாம் வவுனியா கடைத்தெருவில்சாயங்காலமானால் ஏகக்கூட்டம் இருக்கும். நெரிபுரி யான கசகசவென்ற சனத்தோடு சாயங்கால வியாபாரம் இந்தக் கடைகள் வழியே அமளியாக நடக்கும்.
120
நீபி.அருளானந்தம்

“என்ர பில்லப் போடுங்கோ. என்ர சாமான் சரக்கைக் கட்டிக் கெதியாத் தாருங்கோ." - என்ற சலசலத்த கூச்சல்கள் அங்கே கேட்கும்.
சாமான்கள் கட்டிக் கொடுக்கின்ற வேலையாட்களுக்கு பண்னிரண்டு கைகளா இருக்கும்?
இராவணனைப் போல - அல்லது இருபது கைகளா இருக்கும்? என்றாலும் பாவம்! அவர்களும் பறந்து பறந்து தான் பொருட் சரைகளை கட்டிக் கட்டிக் கொடுப்பார்கள். முதலாளி மேசைலாச்சியை இழுப்பதும் மூடுவதுமாக இருந்து கொண்டு
வேர்வை துடைக்க நேரமில்லாமல் கணக்குப் பார்ப்பார்.
இப்போது அவ்விடத்தே கடைகளெல்லாம் வேளைக்கே கதவெல்லாம் பூட்டுப்பட்டுப் போய்த்தான் கிடக்கிறது. சனம் - சத்தம் - சாவடி - என்று ஒன்றையும் சந்தியிலும் காணவே இல்லை. ஜெயந்திக்கு ஒரு கணம், பொழுது படுகிறதே என்று மீண்டுமொரு முறை நினைத்ததில் மனதுக்குள் இன்னும் சற்று பயம் ஏறியது.
பலமாக அதன் பிறகு அவள் பெடலை மிதிக்கத் தொடங்கினாள். சைக்கிள் அதன் பிறகு வேகமாகப் போகத் தொடங்கியது. இறம்பைக் குளம் தாண்டியதும் இன்னும் கொஞ்சம் வேகமாக அவள் பெடலை மிதித்தாள்.
“ஓடியோடி வேலை செய்து குறுக்கு எலும்புகளெல்லாம் குடைச்சல் எடுக்கிற வலியோட பிறகு எனக்கு இந்தச் சையிக்கிள் ஒட்டமும் வேறயாய். இதற்கெல்லாம் சலித்துப் புளித்துப்போய் சம்பளம் தருகிற மாதிரித்தான் ஆஸ்பத்திரிச் சம்பளம். தானமாக ஏதோ தருவது மாதிரி இந்த லட்சணத்துக்குள்ளே சிரித்துக் கொண்டே செருப்பால் அடிப்பது போல கதைக்கக் கூடிய டாக்குத்தர்மாரும் இருக்கினம் தானே..?"
121
வெளிச்சம்

Page 70
சைக்கிள் ஓட்டத்தின் இறுக்கம் தளர்ந்த போது இந்தவித சிந்தனையும் அவளுக்குத் தொடங்கியது. வீடுகிட்டவாய் வரவர பெடஸில் உள்ள கால்கள் மெத்தென இருக்கிறது மாதிரி அவளுக்கு இருந்தது. அவளின் வீட்டுக்கு முன்னாலுள்ள இலவ மரத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் காய்கள் அவளுக்குத் தெரிந்தன. ஆ. இப்போது எவ்வளவு கூர்மையாக இருக்கிறது இந்த உணர்வுகளெல்லாம் அவளுக்கு.
வீட்டுப்படல் நெருங்கியதும் அதைத் திறந்து கொண்டு சைக்கிளுடன் போனாள். அவளின் தாய் வாசல் படியிலே நின்று கொண்டிருந்தாள்.
"ஏன் பிள்ளை இண்டைக்கும் இப்பிடி உனக்கு நேரம் செண்டிட்டுது..?"
“எத்தினை சாவுகள்! எத்தினை வகையானதுன்பங்களம்மா
அங்கத்தையச் சனத்துக்கு."
"நான் என்னத்த இவளிட்டக் கேட்டன். அதுக்கு இவள் என்ன பதில் சொல்லுறாள்?” - என்றதாகத்தான் மகள் சொன்ன கதையைக் கொண்டு தாய் நினைத்தாள். அவளுக்கு ஒவ்வொரு நிமிடமும் மகளின் கல்யாணப் பிரச்சனை பற்றித்தான் நினைப்பு! மகளுக்கு வரன்கள் வந்து நழுவி நழுவிப்போகின்ற கொடுமையை அவளால் தாங்க முடியவில்லை. "ஒரு உதவியும் இல்லாமல் தனியே என்னோடு மகளை வைத்துக் கொண்டு இப்படியே நான் காலம் தள்ளுகிறேன்?" - என்றதாய் அவளுக்கு மனதிலே ஏக்கம்.
"உங்கட மோள் நல்ல கறுப்பாம். அது ஒண்டாலதான் நான் பேசிக் கொண்டு போற கலியாணங்களெல்லாம் குழம்பிக் கொண்டிருக்கு."- என்று தரகரும் சொல்லத் தொடங்கிவிட்டார்.
"கறுப்பெண்டாலும் என்ரபிள்ள பார்க்கிறதுக்கு நல்ல முக
122 நீபி.அருளானந்தம்

வெட்டும் வடிவும் தானே..?" - என்று தாய் கேட்க, ஒரு கதையை அதற்கு அவர் உடனே அவிட்டுவிட்டார். "அவயள் சொல்லுற அந்த ஒரு காரணம் என்னண்டாலம்மா பேந்து பிறக்கிற பிள்ளையும் கறுப்பாச் சிலநேரம் வந்திடுமாம்."
தாய்க்கு இதைக் கேட்டதும் உள்ளுக்குள் - தடக் தடக். எல்லோரும் சூழ்ந்து நின்று தன்னைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது மாதிரி இருக்கிறது அவளுக்கு. தோலுரிக்கப்பட்டது மாதிரி ஒரு அவமானம் அவளுக்கு வந்தது.
ஜெயந்தியின் வீட்டில் கல்யாணப் பேச்சுக்கள் அடிக்கடி நடக்கத் தான் செய்யும். இவள் சிரிப்பாள்! அவளின் அம்மா அவளைப் பார்த்து அழுவாள் - பிறகு இருவரும் ஒருங்கச் சேர்ந்ததாய்ப் பெருமூச்சு.
"இரண்டு தலை முறைக்கு இருந்து தின்னலாம் அப்படிச் சொத்து. எண்டாலும் பிள்ளைக்கொரு கலியாணம் சரிவருகு தேயில்லையே..?." - என்று தாய்க்கு நிதம் கவலை.
ஜெயந்தி அறைக்குள் போனதும் துணிமணியை மாற்றினாள். உடம்பைக் கழுவத் தோன்றவில்லை. மனதுக்குள் இனம்புரியாத விசனம் அவளுக்குப் பொங்கிக் கொண்டு வந்தது. வயிறு முட்ட ஒரு செம்பு தண்ணிர் குடிக்க ஆசை. என்றாலும் செம்பில் தண்ணிரை எடுத்துக் குடிக்கப்போக இரத்த நாற்றத்தில் அவளுக்கு வயிற்றைப் புரட்டியது. செம்பை அப்படியே கீழே வைத்து விட்டு, "அம்மா ஒரு பிளேன் ரீ போட்டுத் தாருங்கோ குடிக்க.." என்று அவள் கேட்டாள். அவள் சொன்னகையோடு குசினிக்குள் போய்த் தேநீர் போட்டுக் கொண்டு வந்து மகளிடம் நீட்டினாள் தாய். தேநீர் சுடச்சுடவாகக் குடிக்கும் போது நெஞ்சுக்கு இதமாகத்தான் அவளுக்கு இருந்தது.
இதற்காகத்தான் ஒரு தருணத்தை வைத்துக் கொண்டு நான்
123
Goauauflösuh

Page 71
காத்துக் கொண்டிருந்தேன்' - என்ற விதத்தில் அம்மா அவளிடம் ஒரு கதையைப் போட்டாள்.
"இண்டைக்கு ஒருவர் உனக்கொரு கலியாண சம்பந்தம் பேசி வந்திருந்தார் பிள்ள..” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள் அவள். கிளியோபாட்ரா மாதிரியாயுள்ள தன் நீண்ட மூக்கை பெருவிரலாலும் பக்கத்து விரலாலும் பிடித்தபடி தாயின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் ஜெயந்தி
கொதிக்கிற மனதை ஆற்ற தன் தாயார் பட்டுக் கொண்டிருக்கிற பாடுகளையெல்லாம் நினைக்க அவளுக்கும் மனம் கிடந்து கொதித்தது.
“என்னவாம்.?” - என்று மென்மையாக வருடுகிற குரலில்
தாயைக் கேட்டாள்.
ஒரு நிமிஷம் நத்தையாய் நகர்ந்தது. அறுபட்ட பல்லி வாலின் மெல்லிய துடிப்பாய் ஒரு வலி அவள் பார்வையில்! கையைப் பிசைந்து கொண்டு தாய் சொன்னாள்.
"இந்தச் சம்பந்தம் எங்களுக்கும் நல்லதுதான் பிள்ள - நல்ல குடும்பம்! நல்ல சாதி சனம்! பெடியனும் கனடா பேமனண்ட் றெசிடண்ட். ஆனா.”
“என்ன ஆனா..?”
அம்மாவிடம் மெல்லிய உடம்பின் அசைவுகள் நிற்கின்ற மாதிரி அவளுக்குத் தெரிந்தன.
"பெடியன் முந்தி கலியாணம் முடிச்சவராம்! ஆனா அந்தப் பொம்பிள அவரை விட்டுப் போட்டு அங்கினயா உள்ள வேற ஆரோடயோ ஒடிப்போட்டாளாம். ஆரில என்ன பிழை எண்டத அங்க எல்லாம் நல்லா விசாரிச்சுப்பாத்து நீங்கள் உங்கட 124
நீபி.அருளானந்தம்

மகளுக்கு விரும்பினா இந்தக் கலியாணத்தச் செய்யலாம் எண்டுறார் புறோக்கர்." - என்று இதமாய்ப் பதமாய் கனிவாய்ச் சொன்னாலும் அப்படி சொல்லுகிறபோது அவளுக்குத் தொண்டை கரகரத்தது. அந்த உணர்ச்சி மோதலில் கண்களில் கண்ணிர் சுரந்து நின்றாள் அவள்.
ஜெயந்தி தாயின் முகம் பார்த்தாள். அவளுக்கும் அடி வயிற்றுக்குள் புரள்கிற ஓர் உணர்வு. ‘வயது எனக்கும் ஏறிப்போகிறதே" - என்று நடுங்குகிற ஒரு அச்சம் - அவள் மார்பை இரு கைகளாலும் அழுத்திக் கொண்டாள். அவளுக்கு அகதிகளின் நினைவுகள் ஒரு பக்கம் இழை பின்னினாலும், தன் வாழ்கையின் மீதும் ஒரு கண். கலியாண ஆசையும் உள்ளுக்குள்வலை பின்னத்தான் செய்கிறது. வெயில் பட்டால் சிலந்தி வலை மின்னுகிற மாதிரி சில வேளைகளில் அவளுக்கு பயமாகவும்தான் இருக்கிறது. என்ன குறை இருந்தாலும் - ஒரு பக்கம் நான் கலியாணம் கட்டிப்போய்க் கரைசேர்ந்து அம்மாவை இந்தத் துன்பத்திலிருந்து விடுதலையாக்கி விடவேண்டுமென்று இத்தருணம் அவள் நினைத்தாள்.
"சரியுங்கோ அம்மா. நல்லா விசாரிச்சுப்போட்டு இந்தக் கலியாணத்தையே இனி செய்துவிடப்பாருங்கோ. எனக்கும் இது விருப்பம்." - என்று சொன்னாள்.
மகள் சொன்ன பதிலைக் கேட்டதும் தாய்க்கு ஒரு பெருஞ் சுமையை இறக்கியது மாதிரியாய் இருந்தது. தன் மகள் இனி சீக்கிரத்தில் சடங்காகி விடுவாள் - என்ற நம்பிக்கையோடு அவள் மகிழ்ச்சியுடன் வேறு உள்ள வேலைகளைப் பார்ப்போமென்று குசினி அடுப்பங்கரைக்குப் போய்விட்டாள்.
ஜெயந்தி தன் வாழ்க்கைப் பிரச்சினைகளை நினைத்ததில் - தானும் இப்போது ஒரு யுத்த பூமியில் இருக்கிறது மாதிரியான நிலைமையை கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.
125
வெளிச்சம்

Page 72
அவளுக்கு ஒரு பக்கம் துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருக்கிற மாதிரியாக இருந்தன. மறுபக்கம் அங்குமிங்குமாக பரபரப்பாக தானும் ஒரு துப்பாக்கிக் குண்டாக பாய்ந்து ஒடுவது மாதிரியாகவும் அவள் நினைத்தாள்.
கவலையும் பீதியுமாக பிறகு தான் ஒரு இருட்டுக்குள்ளே மூழ்கிவிட்டது மாதிரியாயும், அதன் பிறகு உஷ்ணப் புழுதியில் வெட்டிப் போட்ட மாதிரியாய்த் தான் கிடந்துகொண்டு வாடுவதாகவும் அவள் நினைத்துக் கொண்டாள். இந்தச் சிந்தனைக்குள்ளே நெஞ்சிற்குள் அவளுக்கு “கப கபா” - என்று ஏதோ ஒரு மூலையில் கொடிய வேதனையாயிருந்தது. உடம்பெல்லாம் கொதித்தது. “அகதிகளின் நிலையை இப்படி நான் நினைவுபடுத்தி எந்நேரமும் வைத்துக் கொண்டால் அது எனக்கு மாறாத மனவருத்தமாகப் போகும். அந்த மனிதர்கள் படுகின்ற மோசமான அவலங்களை நினைத்தால் சில வேளையில எனக்குப் புத்தி பேதலித்ததாயும் வந்து விடும்” - என்று தனக்குள் நினைத்தபடி, இன்றே மிச்சமின்றி எல்லாவற்றையும் நினைத்து நான் அழுது தீர்த்து விடவேண்டும் - என்று எண்ணியவளாய் அவள் குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு அதற்குள்ளே போனாள். கதவைச் சாத்திக் கொண்டாள்.
உள்ளே பிறகு தன் அழுகைச் சத்தம் காதை நிறைப்பதை உணர்ந்து அவள் உடனே தன் வாயைக் கையால் பொத்திக்
கொண்டாள்.
(டிசம்பர் 2009)
126
நீபி.அருளானந்தம்

tíðasåägíu tíbsasnas6úr
"உன்னோடு சேர்ந்திருந்து கொண்டு இந்த அறையில் வாழ்வது மிகவும் கஷ்டம்.”
என்று கூறிவிட்டு உன் நண்பனும் இன்று உன்னை விட்டுப்பிரிந்து அந்நியமாகப் போய் விட்டான். அவன் போன பிறகு, உன் வீட்டுப் படலைக்கு முன்னாலுள்ள நிலத்தில் புதைந்து கிடந்த - உடைந்த ஆட்டுக்கல்லின் மேல் அசதியோடு குந்திக் கொண்டிருந்தபடி நீ யோசித்தாய். பிறகு நீ வெளியே போய் வெயிலெல்லாம் அலைந்து உளுத்து அவிந்து போன கணக்கில் வந்து, ஏதோ இயந்திரத் தனமாகத் தான் இப்போது இருந்து கொண்டிருக்கிறாய்.
ஆனால் வீட்டுக்குள்ளே உன் பார்வையை நீ சுழலவிட்ட போது அங்கு காணப்பட்டவை எல்லாமே உனக்கு எப்போதும் போல இயல்பாக இருப்பதாகவே தென்படுகிறது. வீட்டுக்குள்ளே எரியும் மின்சார விளக்குகள், பாவனைப் பொருட்கள், ஆடைகள் - எல்லாமே எப்போதும் போல இயல்பாக இருப்பதாகவே உனக்குத் தோன்றுகின்றன. "அப்படி உள்ள எல்லாவற்றையும் போலத்தான் உன்னிடத்தில் ஏதும் தவறு இல்லை" - என்று உன்
127
வெளிச்சம்

Page 73
கையை அசைத்து நீகூறியும் கொள்கிறாய். ஆனாலும் இங்கு ஏதோ எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தவறு நடந்துவிட்டது. அதனால் தான் இப்படியான ஒரு தவறாக பிறகு எங்கள் இருவருக்கும் அது வந்து விட்டது -- என்றும் நீசிந்திக்கிறாய்.
"வாழ்க்கையில் ஏற்பட்ட எந்த விததாக்குதல்களுக்கும் தைரியமாக நின்று ஈடுகொடுக்க என்னைப் பழக்கிவிட்டவன் அவன். நான் அவனை அதன் பொருட்டு எவ்வளவாய் நேசித்தேன். ! ஒரு மனுசனுக்கு ஏதாவது ஒரு பலகீனம் இருக்குமென்பது அவனுக்குத் தெரியாதா..?”
அவன் வருவான் வருவான் என்ற எதிர்பார்ப்புகளின் நாட்கள் என்பது உனக்கு, இந்த நினைவுகளுடன் மிகவும் வலி நிறைந்ததாகவே இருக்கிறது.
ஆனாலும் அங்கே - அவன்தான் இனி உன்னோடு சேர்ந்து இந்த அறையில் இருந்து கொள்ளப் போவதில்லை." என்று நினைத்துக் கொண்டிருப்பது உனக்கு எங்கே அதெல்லாம் தெரியப் போகிறது? என்றாலும் இனி அவன் வருகை என்பது நிச்சயமாக்கப்படாத ஒன்றுதான் - என்று நீஇப்போது நினைக்கத் தொடங்கி விட்டாய். அவன் உன்னிடத்தில் வராததற்குரிய விளக்கங்கள் இப்போது உன்னினடத்தில் மன அடிவரைப்பாய்ந்து வலுவானவையாகிப் போய்விட்டன. மிகச் சிறப்பாக அவனிடத்தில் நீ மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுத வேண்டும் என்றும் நீ இப்போது நினைக்கத் தொடங்கிவிட்டாய்.
உன் வீட்டுக் கூரையின் மேலிருந்து வெள்ளைக் கண்ணாடி ஒட்டால் விழுந்த சூரிய வெளிச்சம் கூட இப்போது விழாமல் விட்டு விட்டது போல உன் கண்பார்வைக்கு இப்போது இருக்கிறது. தனிமையின் நிழல்கள் இப்படியாய் உன்னிடத்தில் நீளமாய் வளரத் தொடங்கிவிட்டன. உன் கவலைகளை
128
நீபி.அருளானந்தம்

வீட்டுச்சுவர்களும் உறிஞ்சிக் கொண்டது போல் கறுப்பு நிறமாகிவிட்டன. சுறுசுறுப்பாய் இருந்த நீ அது அற்றுப் போனதால் இப்போ முதுமை அடைந்த கணக்காகவும் ஆகிவிட்டாய். மனதில் கறுப்பு நிழல் கொண்ட ஒரு நிறுத்தம் இப்போது உனக்கு நிரந்தரமாகிவிட்டது போல் ஆகிவிட்டது. "இது என் தலைவிதினன்று சொல்லாமல் அந்தத் துன்பத்திலிருந்து ஒருவன் விடுபட வேண்டுமென்றால் போதுமான அக்கறையுடன் மனம் தளராது அவன் அதற்காக முயற்சி செய்துவர வேண்டும். நீயும் அதைப்போல உண்மையில் பழக்க முயற்சி செய்கிற ஒரு காலகட்டமாக உனது இன்றைய நிலையை எடுத்துக் கொண்டுவிட்டாய். சிறியதொரு துன்பமான மணல் மூடல் போன்றது தான் உன்னை இப்படி கவலையில் மூழ்கடித்திருக்கிறது - என்று நீஅதை யோசித்துப் பார்த்தாய்.
இலையின் மீது ஸ்தம்பித்து நிற்கும் வெட்டுக்கிளி போல அசையாது அந்த யோசனை உன் மூளையிலே நின்று கொண்டிருக்கிறது. தன்னை மூடிய மணலிலிருந்து துருத்திக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கும் ஒரு எறும்பின் முயற்சி போன்ற ஒரு குறிக்கோளுடன் அதற்காக நீசெயலாற்றத் தொடங்கி விட்டாய்.
"என்னைச் சுற்றியதாய் எப்போதுமே இருட்டு"-என்றதாய் இப்போதெல்லாம் நீ நினைப்பதில்லை. பகல் வேளையிலும் படுத்துப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நீ அந்தப் பழக்கத்திலிருந்தும் இப்போது விடுபட்டதாய் விட்டாய்
நீ அறைக்குள் நுழைந்த நேரமெல்லாம் உதவியற்ற ஒரு நிலை உனக்கு அப்போது இருந்தது. அந்த ஏக்கம் உனக்கு இருந்தது. துண்டிக்கப்பட்ட அவளின் தொடர்புடன், உன் நண்பனது தொடர்பு வரை எல்லாமே உன் தொண்டைக்குள் முள்ளை விழுங்கியது போன்ற ஒரு வேதனையாக இருந்தன. நீசிறு
129
வெளிச்சம்

Page 74
சிறு துண்டுகளாக அந்தக் கவலைச் சம்பவங்களை உன்னிடத்திலிருந்து வெட்டி வெட்டி அப்புறப்படுத்தியும் - 'டால்ஸ்டாயின் கதையில் வரும் அந்தப் பாதிரியார் போல உன் கர்த்திலுள்ள விரல் நுனியைக் கூட வெட்டிக் கொள்ள வேண்டியதான ஒரு பரிதாபமான நிலையில் இருந்தாய். ஒரு மனிதனுக்கு சிதைந்து போகாமலிருக்கும் மனத்துக்கத்தைக் காட்டிலும் வேறு என்ன ஒரு கொடுமை வந்துவிடப் போகிறது?
ஆனாலும் அந்தக்குப்பையான போலி வாழ்க்கையிலிருந்து ஒரு நல்ல மனித வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று உனக்கு இப்போது தெரிந்து கொண்டுவிட்டது. நண்பர்களாகிய உங்கள் இருவருக்கும் முன்னால் நின்று கொண்டு செம்பட்டை நிறம் பூசிய தலை மயிரைச் சீப்பால் இழுத்து வாரியபடி இனிப்பாகக் கதைத்தாளே அந்தச் சூழ்ச்சிக்காரி - அவள் நீங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதை நன்றாக தெரிந்து கொண்டுவிட்டு - நான் சொல்வது உங்களிடத்தில் இரகசியமாக இருக்கட்டும்" என்று உங்கள் இருவர் உள்ளத்திலும் பகைமை எண்ணம் தோன்றும்படி எவ்வளவு கொடுமையான பொய்களையெல்லாம் சோடித்து நன்றாகக் கூறினாள்.
“உங்கள் அனுமதியுடன் இதை நான் கேட்க விரும்புகிறேன்" - என்று ஆனந்தமாய்த் தான் இருந்தபடி ஆலிங்கனமான பார்வை வசியத்துடன் சிரித்துக் கொண்டு, ஏதோ தெரியாதவள் போல கதைகள் கேட்பாளே அவள்? அவள் ஒரு கலப்படம்! ஆமை போன்ற, அல்லது ஒரு நத்தை போன்ற பிராணிக்கு ஒத்தவள் அவள் - உங்கள் இருவருடைய உடல் கூட்டைத் தேடிப்பிடித்தது போல் பிடித்துக் கொண்டு. அதற்குள் தன்னை அவள் பிரிக்க முடியாதது போல் ஒட்டிக் கொண்டதாய் விட்டாளே..? அவள் உங்கள் இருவருக்குள்ளும் ஒடுங்கிக் கொள்ள - அழுக்கு பிடித்துச் சகிக்க முடியாத அளவுக்கு நீங்கள் புகை அடைத்தது போன்று ஆகிவிட்டீர்கள். இதனால் அவளின்
130
நீபி.அருளானந்தம்

பரபரப்பான அணைப்பிலிருந்து கையை இழுத்து உதறிக் கொண்டு பின்பு வெளியேறிவிட உங்கள் இருவருக்கும் பிற்பாடு முற்றாக இயலவில்லை. உங்கள் அவலம் தோய்ந்த முகங்களை அவளின் இருபாதங்களாலும் துடைத்துக் கொண்டு - ஒரு பூனைக்குட்டி போல அவளின் அருகில் பதுங்கி இருக்கும் நிலை உங்களுக்கு வந்து விட்டது போல அல்லவா நாள் செல்ல நாள் செல்லவாக உங்களுக்கு இருந்தது.
உங்கள் இருவருக்குமுள்ள வேலைகள் - கடமைகள் - அலுவல்கள் எல்லாமே அவளாலே அப்போது கெட்டுவிட்டன. எல்லாவற்றிலும் கவனக் குறைவு வளரத் தொடங்கிவிட்டது உங்களுக்கு. இதெல்லாமே விதிவசத்தால் எனக்கு வந்து நேர்ந்ததா என்று கெட்டியாக மூடப்பட்டுக் கிடந்த உன் சிந்தனை மண்டைக்குள் அப்போது தான் ஆயிரம் மடைகள் திறந்து கொண்டு விட்டது போல இந்தச் சிந்தனை வெளிப்படத் தொடங்கியது.
தன் நினைவு இழந்து தியானம் புரிபவன் போல நீதனியே இருந்தபடி ஒரு கணம் அவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்ததில் - ஒட்டக் குதிரைகள் பூட்டிய மாதிரியாய்ச் சூரியக் கடைசிக் கதிர்களோடு விரைவில் உனக்கு வந்தது அந்த ஞானமான நினைப்பு. புழு வெடித்துத் தட்டாம் பூச்சி கிளம்புவதைப் போன்ற அந்த நினைப்பு வந்ததும் - கருங்கல் நடைபாதை போன்ற கேடு கெட்ட அந்த இடத்தை விட்டு விலகி, சிறப்புடைய நல்ல வாழ்வினை நான் இனி வாழ வேண்டுமென நீ மாத்திரம் உன் நினைவில் இதை நெய்யத் தொடங்கி விட்டாய்.
இதனால் விளக்குச் சுடர் போல இருந்த அவள் மேலே நீ ஒரு பூச்சியைப் போல விழுந்ததாய் இருந்தாலும் - அந்த விளக்குத்தான்குப்பென்று அணைந்ததேயல்லாமல் நீஅதிலிருந்து தப்பியவன் போல பிறகு ஆகிவிட்டாய். ٠ہر : fak%نیلا
kar ஆலெனித்தம்ேே

Page 75
உன் நண்பன் சாத்வீகபாவமான மனமுடையவன். அவன் முகத்திலே எப்போதும் யோக முத்திரையால் எழும் சுவாசத்தின் வெளிச்சம் போல ஒரு தெளிவு இருந்து கொண்டிருக்கும். உன்னைத் திருத்திக் கொண்ட நீ - முன்னம் அலங்காரமாயிருந்த அவன் முகத் தெளிவிலே ஒரு மூதேவி இப்போது வந்து ஒளிந்திருப்பதைப் போன்ற ஒரு கெடுதியைக் கண்டாய்.
உடனே கூர்மையான பார்வையுடைய பளபளப்பான உனது கண்கள் இரண்டும்துக்கம் மேவிக் கலங்கியதாய் விட்டன.
"எங்கள் உடலையும் மனத்தையும் முட்புதரில் சிக்குண்டது போல துன்பத்தில் ஆக்கிவிடாமல் தூய்மையானதாக நாங்கள் ஆக்கிக் கொள்ளவேண்டும். இந்த ஆசையிலும் அருவருப்பிலுமிருந்தும் நாங்கள் வெளியேறிவிட வேண்டும்." என்று அவனுக்கு நீ உபதேசித்தாய். அவன் யானை பெரிதாக உறுமிக் கொள்வது போல நின்று கொண்டு உன்னைப் பார்த்தான். நீ அவனைப் பார்த்துப் பின்னகர்ந்தபடி பீதியுடன் நின்றாய். அவனின் பார்வை உன்னிடத்திலே அனலில் வாட்டிய தாமரை இலையை வைத்து அழுத்தியதைப் போல அப்போது இருந்தது.
அவன் புருவத்தை இறுக்கியபடி, இன்னும் அதே மாதிரியாகத் தன் பார்வையை உன்மீது எறிந்து கொண்டிருந்தான்.
அவன் பார்வை கூரான உளியை அவன் தன் கையில் பிடித்துக்கொண்டு கல்லாக உன்னை நினைத்துக்குத்திக் கொண்டு போவது போல உனக்கு இருந்தது. உடனே தாமரை கூம்பியது போல உன் உடல் சுருங்கியது. அவன் பாம்பு போல தன் பார்வையை உன்மீது ஊர்ந்து கொண்டு உன் கால் பாதங்கள் வரை
கீழே இறக்கினான்.
பிறகு புளியமரத்தினைத் தாண்டி வரும் வெப்பக் காற்றுப் போல - நெருப்பாய்மூர்க்கத்துடன் மூச்சுவிட்டான். அதன் பிறகு
132
நீபி.அருளானந்தம்

ஒரு அசைவாக மாறி'உன்னைத் தீண்டுவது போல தன் பேச்சை ஆரம்பித்தான்.
"நான் உன்மீதுள்ள நட்பிலிருந்து விலகவே இப்போது ஒருவித வெறியுடன் நிற்கிறேன் - நீ இப்போது என்னை வெறும் சதை மோகம் கொண்ட ஒரு மனிதனாகத்தானே நினைக்கத் தொடங்கிவிட்டாய்..? உன் தொண்டைக்குள் தலைமயிர் ஒட்டிப் போய் ஒங்காளித்துச் சத்தி எடுத்துக் கொண்டு - எனக்கு இப்போது நீ உபதேசிக்க ஆரம்பித்து விட்டாயா? நீ முதலில் பழைய சம்பவங்களை நோக்கி உன் கவனத்தைத் திருப்பிப்பார். ஒரு காலம் உன்னை வாழ்க்கைச் சீர்குலைவு களிலிருந்தும் சிதைவுகளிலுமிருந்தும் தெளிவாக யோசிக்க வைத்துத் திசை திருப்பி வாழ வழிகாட்டியவன் நான்! இப்படி நான் சொல்வதெல்லாம் ஐயமே இல்லாத ஏற்புடையதான ஒரு உண்மை. இதெல்லாம் உன் கண் முன் நிரம்பியிருக்கும் மாயப்படலத்திற்குள்ளாலே உன்னால் பார்க்க முடியவில்லைப் போலும்."
அவன் சொல்லிவிட்டு ஏளனமாய்ச் சிரித்தான். அவன் சுடர்போல தன் விரலை நீட்டியபடி உனக்குச் சொன்னவைக ளெல்லாம் எத்தனை கடுமையான சொற்கள். உனக்கென்றால் அவன் சொன்னவைகளைக் கேட்டு உச்சமெய்திய கவலைதான். உன் நினைப்பில் அவன் மிருகமாக இருக்கிறதாகவும். நீ ஒரு கல்லாகவும் ஒரு மரமாகவும் இருக்கின்றது மாதிரியான ஒரு நினைப்பு.
நீ அவனை நோக்கியபடி - "உன் மனதுக்குள் உனக்கு நாசமும் நசிப்புமுடைய அவளிடமிருந்து தப்ப வழியில்லை. தப்ப வழியேயில்லை. ஆம் தப்ப வழியே இல்லை." என்று சொல்லியவாறே இருந்தாய்.
133
வெளிச்சம்

Page 76
அன்று முதல் தான் உங்கள் இருவருக்குமிடையே நட்பாய்த்திறந்துகிடந்த அந்த வாசல் அடைபட்டது. ஒருவருக் கொருவர் நீங்கள் அரண்கட்டிக்கொண்டீர்கள். ஆணவம் பிடித்த செய்கைகளிலே இரக்கம் காட்டுகிற வார்தைகளும் அதற்குள்ளே அடக்கம் - என்றுதான் அப்பொழுது நீயும் நினைத்தாய். எல்லாம் மறைந்துபோக வேண்டும் என்று நினைத்து நீ திரையையும் இழுத்துவிட்டாய். இதற்குப் பிறகு அவன் கதியை நினைத்து நீ அழுதாய். நண்பன் அழிந்து போவதற்கு முன்னால்நானே உயிரைத் துறந்து அழிந்துபோய் விடலாமென்று நீ யோசித்தாய்.
யோசிக்க யோசிக்க உனக்குத் தலையைப் பிளப்பது போல வேதனையாக இருந்தது. வாழ்வை உணர்ந்து அறியாத போக்கில் சிறகுகளையெல்லாம் உதிர்ந்த பறவை பிறகு ஒரு சதைப்புழுவாக மாறியதைப் போல நீ அவதிப்படத் தொடங்கினாய். இந்த வேதனைகளிலே நீ உன் உதடுகளைக் கடித்து இறுக்கத் தொடங்கியதும் - உடனே வலி உனக்கு மாறிப்போய் மனம்
உனக்கு சற்றுத் திசை திரும்பத் தொடங்கியது.
அந்த கணம் முதல் நீ அவைகளைப்பற்றி நினைத்துக் கொள்வதைத் தவிர்க்கத்தொடங்கினாய். உடனே உனக்கு அடி வயிற்றுக்குள் அலை பிரிந்து கொண்டிருந்த பயம் விலகிப் போய் விட்டது. பயமுறுத்தும் நிழலாக வரும் இந்தச் சிந்தனைகளை இப்படி யான செய்கைகளாலும் விலத்தலாமோ..?
இது எப்படிச் சாத்தியம்?' என்று முன்பு நினைத்த உனக்கு இப்போது அது வியப்பாக இருக்கிறது. நாள் செல்லச் செல்ல உன் மனதுக்குள் அந்த நினைப்புகள் எல்லாமே சுருண்டு தூங்குகிற அளவுக்கு மாறிக் கொண்டதாய்த் தான்விட்டன.
நீ ஏறிக்கொண்டிருந்த துக்கமும் இருட்டும் நிரம்பிய
படிகள் - ஒவ்வொன்றாக இப்போது உன் நினைவில் மறைந்தாகிவிட்டன. இருட்டின் மெழுகலிலிருந்து காலைப்
134
நீபி.அருளானந்தம்

பொழுது விடிந்து விட்டது இப்பொழுது. உன் வாழ்க்கையும் அது போல விடிந்ததாய் விட்டது தானே. இந்த விடியிருட்டில் முற்றத்து மரத்திலிருந்து பறவைச் சத்தங்கள் உன் காதுகளுக்குக் கேட்கின்றன. காலையில் என்ன அற்புதம்! மசூதியிலிருந்து இமாமின் கூவல் உனக்கும் கேட்கிறது. நேரம் போகப் போக மரங்களின் கொம்புக் கிளைகளில் அமர்ந்தும் எழுந்தும் இறகுகளை அடித்துக் கொண்டு பறக்கின்ற பறவைகளுடன் நீயும் சேர்ந்து இருப்பதைப் போன்றதோர் மகிழ்ச்சி. கிழக்கு மூலையிலிருந்து சிவப்பான உதய ஒளி படர்கிறது. இந்நேரம் இடைமுறியாமல் ஒலித்த ஒரு பூச்சியின் ஒலியோடு நீயும் உன் மனத்தைக் கலந்தாய். வேளை முதிர முதிர பூச்சி வயிறகிர ஒலி எழுப்பியபடி இருக்கிறது. ஆனால் அந்த ஒலியை அடக்கி ஒடுக்க வேண்டுமென்பது மாதிரியாக வந்தன, உன் வீட்டுக் கோடியிலிருந்து வந்த உன் வளர்ப்பு நாய்களின் விபரீதமான பயங்கரமான குரைப்புச் சத்தங்கள்.
அவைகளின் குரைப்பு ஒலிகளில் மற்ற ஒசைகயெல்லாம் அச்சம் கண்டதைப்போல அடங்கிவிட்டன. நீ இருக்கும் அறை முழுக்கவும் நாயின் குரைப்புச் சத்தங்கள் பரவிப் பெருகி உன் காதிலும் கொடிய விஷம் போன்ற கணக்கில் பாய்கின்றன. நீ எச்சமயமும் அந்த நாய்களிலிருந்து அறிந்திடாத குரைப்புச் சத்தத்தோடு, பயத்தில் ஒருவித விஷ நீலம் உன் நரம்புகளிலும் ஆழப்புதைந்ததாய்ப் பாய்கின்றது மாதிரி உனக்கு இருக்கிறது.
மனிதக் கண்களுக்கு மனம் சொல்வதை உடனே சென்று பார்த்துவிடத்தான் ஆவல் இருக்கும். வர வர அந்த நாய்களினது குரைப்புச் சத்தங்கள் உன் காதில் விழ விழ, உன் நரம்புகளெல்லாம் பச்சை நிற வலைப்பின்னல்களாக புடைத்து எழுவதைப் போல இருக்கின்றன.
“என்ன நீ இப்படி அந்த நாய்கள் போடும் சண்டைச் சத்தங்களைக்கேட்டும் பூரண ஒய்வு கொண்டவன் போல இதிலே
135
வெளிச்சம்

Page 77
இருந்து கொண்டிருக்கிறாய். போ. போ. என்ன அங்கே நடக்கிறது என்று போய் உடனே பார்” - என்று சொல்கிறது உனது மனம்.
இந்த நாய்களினது சண்டையை நிறுத்த இங்கிருந்தே ஆணையிடுவது போன்ற மனத்தோடு நீ இருந்து கொண்டிருந்த கதிரையிலிருந்து எழுந்தாய். அந்த மூட நாய்களின் மண்டைகளைப் போய் உடைத்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தோடு நீ மள மளவென்று விரைவாக நடந்து உன் வீட்டுக்குப் பின்புறமுள்ள கோடிப்பக்கம் போகின்றாய். இவற்றுக்கு என்ன தான் கேடு? - என்று நீநினைத்துக் கொண்டு வீட்டுச் சுவரோடு உள்ள நடை வழியால் போக - கண்கள் உக்ரமாகஜ்வலிக்கும் அந்த மூன்று நாய்களும் அந்த தாழ்வாரத்தடியே உன் பார்வைக்குக் காணப்படுகின்றன.
உடற்பொலிவுள்ள அந்த மூன்று நாய்களையும் மனமகிழ்சியோடு முன்பெல்லாம் நீ பார்த்து வந்திருக்கிறாய். நீ பாசத்தோடு அவைகளின் தலையில் உன் கையை வைத்தால் அவைகள் உடனே தங்கள் உடல் குழைய நிற்கும். ஆனால் இப்போது உயிரைப் போக்கும் அளவுக்கு ஒன்றை ஒன்று கடித்தபடி தங்கள் பிடியை விடாமல் மரணஅவஸ்தையில் கால்களை உதைத்துக் கொண்டிருக்கும் அவைகளின் நிலைமையைக் கண்டதும் - ‘சாவின் அமைதியில் இவைகள் அடங்கிவிடுமோ..?’ என்ற ஒரு பதகளிப்பாக உனக்கு இருக்கிறது.
அந்த நாய்களின் கடிவாய்களில் இருந்து நனைந்து சொட்டிட்டுக் கீழே விழும் இரத்தத்தை இந்த அளவுக்கு எங்கும் நீ பார்த்ததில்லைப் போல் உனக்கு இருக்கிறது. நீ உடனே கதிகலங்கியதாய் விட்டாய். ஆண்டவனே - இந்த இரத்தத்துக்கு நான் இவ்விடமிருந்து விலகிப் போய்விட வேண்டும் மென்ற அளவுக்கு எவ்வளவு உனக்கு வெறுப்பாக இருக்கிறது. உன் மீது கொட்டி மூடியதுமாதிரியான இந்தப் பின்வாங்காத இரத்த
136
நீபி.அருளானந்தம்

வாடையை உன்னால் கொஞ்சம்கூட பொறுத்துக் கொள்ளவே
முடியவில்லையே.
என்ன குரோதத்தை தங்கள் மனதில் வைத்துக் கொண்டு இந்த நாய்கள் மூன்றும் இப்படிக் கடித்தகடியை விடாமல் மரணவாயிலடியில் நின்று கொண்டதாய் இருக்கின்றன? மூர்க்கத்தின் உச்சகணம் தான்! இறுகித் தினவு கொண்ட அந்தப் பெண் நாயின் கழுத்துத் தசையை தன் கடிவாயில் இறுக்கிப் பிடித்தபடிதான் மற்றைய அந்தப் பெண் நாய் குரூரப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கடிவாய்க்கு தன் கழுத்தைக் கொடுத்தாலும் அந்த இளம் பெட்டை நாய் சும்மா விட்டு விட்டு இருக்கவில்லை -- அதுவும் கழுத்தைத் திரும்பி - என் சதையைப் போலத்தான் உன் சதையையும் கிழித்தெடுக்கிறேன் - என்ற அளவுக்கு மற்றையப் பெட்டை நாயின் கழுத்தைக் கடித்துப் பிடித்தபடி இருக்கிறது. மூன்றாவதாவுள்ள அந்த ஆண் நாய், தன் நேச நாயைக் கடிக்கும் மற்ற நாயின் தொடைப்பக்கம் முழுமையையும் தன் வாயில் கடித்து உள் அடக்கியது போன்ற கோரமான பிடியுடன் அதன் தொடையிலுள்ள மாமிச வடிவை இழுத்துக் கிழிக்கின்ற மாதிரியான வெறியுடன் நிற்கிறது, எல்லா நாய்களிலிருந்தும் இரத்தம் ஒன்றை யொட்டியொன்றாய் நிலத்தில் சொட்டுப் போடுகின்றன - அவ் வுதிரத்துளிகள் காலை வெயிலில் பவழம் மின்னியதைப் போன்று மின்னுகின்றன. இந்த நாய்களைப் பிரித்துவிட என்ன செய்வது - என்ன செய்வது?
நினைக்க நினைக்க உனக்கு, வெட்ட வெளியான இருளுக்குள் ஒடித்திரிவது போன்ற அவதியாக இருக்கிறது.
நாய்கள் மூன்றையும் இந்த மஹா கொடுமைத் தனத்திலிருந்து விடுதலையாக்குகிற ஒரு நல்ல வழியை மாற்றி மாற்றி, மாறி மாறி யோசித்தபடி நீதவித்துக் கொண்டிருக்கிறாய்.
இது தான் இப்போது உன் தவிப்பு!
137
வெளிச்சம்

Page 78
அதற்குள்ளே உன் தவறும் நினைத்துக் கொள்ளவேண்டிய தொன்றாய் வருகிறது.
அதை நினைக்கவும் மண்டை உனக்குக் கிறுகிறுக்கிறது. பழைய ஏடுகள் தொடங்கி நீ படித்த மாதிரிப் பல நூல்களைப் படித்து முடித்திருக்தும் - ஒரு புத்தியில்லை - அறிவில்லை
உனக்கு?
ஒரு ஆண் நாய்க்கு இரண்டு பெண் நாய்களைச் சேர்த்து யாராவது வீட்டில் வளர்ப்பார்களா? அதுவும் ஒடுங்கிய தலைகளை யுடைய சுருண்டு தூங்கும் இந்தக் கொடுமையான கொமேரியன் சாதி நாய்களுக்கு? அந்த ஆண் கொமேரியன் நாய் தன் நேச நாயுடன் சேர்ந்து கொண்டு திரிவதை மற்றைய அந்தப் பெண்நாய் கடுமையாக எதிர்த்துக் கொண்டு இதுவரையுமாக வந்திருக்கிறது. அந்த நாயுடன் அது குரோதமாக இருந்திருக்கிறது. இன்று அந்த நாய்க்கு வாய்த்த சந்தர்ப்பத்தை இழக்க மனமில்லை. அந்தப் பெரிய பெட்டை நாய் இன்று தன் விரோதியின் உயிரைத் தான் பறித்துவிட வேண்டுமென்ற ஆக்ரோஷத்தில் நின்று கொண்டிருக்கிறது.
சாவுக்களை கூத்தாடும் இந்தக் குரூரத்தைப் பார்த்ததும் உன் நினைவு பின் நோக்கிச் சென்று ரோமாபுரியின் சரித்திரப் பரம்பரையான அந்தக் காலத்தை எட்டிப் பார்க்கவில்லை. கலிகுலா சீசரையோ அன்றி சிங்கக் கூட்டங்களை அந்த மெய்வணக்கத்தார் மேல் ஏவிவிட்டு அவர்களைக் கொன்றொழித்த நீரோ மன்னனையோ நினைவில் கொள்ளவில்லை.
ஆனால் லா. ச. ரா எழுதிய கதை தான் உடனே இந்தவித குரோதத்துக்கு மிகத் தோதானதாய் உனக்கு ஞாபகம் வருகிறது.
அந்தக் கதையிலே ஒரு பூனை புறமுதுகிட்டு ஓடாமல் தன்னை எதிர்த்த அந்த நாயுடன் போராடுகிறது.
138
நீபி.அருளானந்தம்

லா. ச. ரா. அந்தக் காட்சியை என்ன மாதிரியாக விபரிக்கிறார்.
பத்து எகிறி எகிறி தன் மேல் விழும் அந்தப் பூனையை இரண்டு மூன்று தடவைக்கு அந்த நாய் சமாளிக்கப் பார்த்தது. ஆனால் உயிரையும் உருவத்தையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு அந்தப் பூனை தன் மேல் விழுகையில் நாயின் முகத்தில் குழப்பத்தைத் தான் லா. ச. ரா. காண்கிறார்.
அந்தப் போராட்டத்தில் பூனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாய் ஓடியேவிட்டது. ஆனால் பிறகு சுயரூபத்துக்கு விரிந்த அந்த பூனையின் கடைசி முடிவு - அது அடி வயிற்றை நின்றபடியே அவகாசமாக நக்குகிறது. அது மெல்ல நடந்து மெல்ல நடந்துபோய்.
ஜயோ அதுவெல்லவோ பிறகு அதன் முடிவு.
அந்த முடிவை இவைகளிடமும் காணவா நான் இதுவரை ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் நின்றபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவனில்லாத இந்தத் தனிமையான என்நிலையில் என் கண் பார்க்க விதிக்கப்பட்டிருக்கும் கொடுமையோ இது.
உனக்குக் கையெல்லாம் நடுங்குகிறது. என்றாலும் முன்னாலே உள்ள முற்றத்தடிக்கு ஓடிச்சென்று அங்கு கிடந்த ஒரு வெற்று வாளியைத் தூக்கிக் கொண்டு மீண்டும் நீ நின்ற அந்த இடத்துக்குத் திரும்பி வருகிறாய்.
"தண்ணிர் தண்ணிர்."
என்கிறது உன் தாகமான மனம், நடுங்கிக் கிலி பிடித்ததால் பயத்தில் எழுந்ததாகத்தில் முதலில் தண்ணீரைக் கொஞ்சம்போல
139
வெளிச்சம்

Page 79
குடித்து விடவேண்டும் போலத்தான் உனக்கு அவதியாக இருக்கிறது. என்றாலும் அந்தத் தாகத்தை வெளியே காவலாக நிறுத்திவிட்டு - கொண்டுவந்த வாளிக்குள் - அதிலே உள்ள தண்ணிர்க் குழாயைத் திறந்து நீ தண்ணிர் நிரப்புவதற்குப் பிடிக்கிறாய்.
தாகத்தில் உனக்கு வாய் கசக்கிறது. கடவுளே இந்த தண்ணிராவது நாய்கள் கொண்டுள்ள குரூரத்தை மாற்றி இவைகளை வேறுவேறாக தனியே பிரித்துவிடட்டும். என்று நினைத்துக் கொண்டு, நீர் நிரம்பி வழிந்ததாய் இருக்கும் அந்த வாளியை தூக்கிச் சென்று - தண்ணிரால் அவைகளை மூழ்கடிப்பது போல இடிந்துவிழும் விசையில் மேலே அவைகளுக்கு கொட்டிப் பார்த்தாய். ஆனால் - இல்லை - இல்லை - ஏதும் பிரயோசனம் என்பதேயில்லை. தண்ணிரில் நனைந்து நாய்களது தோற்றம் சட்டென மாறிவிட்டது. ஆனால் அப்படியே இன்னும் குரூரத்தை தூண்டி எழுப்பியதில் - இருப்பதைவிட மேலும் மிஞ்சியதாய் விடுகின்றன அந்த நாய்கள். குளிர்ச்சியில் இன்னும் கொடூரமாக கடிவாயை அவைகள் இறுக்குகின்றன. நாய்கள் மேல் ஊற்றிய தண்ணிர் சிவப்புரத்தத்தில் கலந்து செம்பரப்பாக வாய்க்காலுக்குள் ஒடிக் கொண்டிருக்கிறது.
இன்னும் இதற்குப் பிறகு என்னால் செய்யக்கூடியது - ஒரே ஒரு வழிதான் - ஒரே ஒரு வழிதான். இருபக்கமும் பார்த்துவிட்டு - பிறகு வெறும் தரையில் தூங்துவது போல கிடந்த மண்வெட்டியை கண்டதும் நீஇவ்வாறு நினைத்துக்கொள்கிறாய். மடங்கிச் சரிந்து விழுந்து கிடந்த மண்வெட்டியை உன் கையில் உடனே எடுத்துக் கொள்கிறாய்.
இரும்பாலே இரும்பைக்கூட அறுத்துத் துண்டாக்கி விடலாம். இரும்பு தான் உங்களுக்கு இனிமேல் விடுதலையைத் தரும். V
140
நீபி.அருளானந்தம்

உன் கால்களை உதைத்தபடி இவற்றைச் சொல்லிவிட்டு - ரத்தச் சேறாய்க்கிடந்த அந்த நாய்களுக்கிடையே இரும்புப் பகுதியை ஆப்புப் போல இடையில் மெல்ல செலுத்தினாய். மிகுந்த அமைதியுடன் நீ பிரயாசைப்பட்டதற்குறிய பலன் கிடைத்து விட்டது. எல்லாம் சொற்ப நேரத்திலும் சொற்ப நேரம்தான் - விகாரமாகக் கோணிய உடலமைப்புகளுடன் அந்த மூன்று நாய்களும் பிடுங்குவது போல வைத்திருந்த வாய்க் கடித்தலை ஒருவாறு விட்டு விட்டன.
ஆனால் நீ இப்போது அவைகளைப் பார்த்து என்ன அறிகிறாய்? அந்த ஆண் நாயின் நேச நாய் தனக்குக் கிடைத்த மரணக் காயத்தால் ஏற்பட்ட வலியை எதிரியான அந்தப் பெட்டை நாய்க்குக் காட்டாது லா. ச. ரா. அந்தப் பூனையில் கண்ட கெளரவத்தோடும் தன்மானத் தோடும் தானும் சேர்ந்தது போலத்தான் தள்ளாடியபடி நடக்கிறது.
லா. ச. ராவின் மனதிலே தன் கெளரவத்தை பதித்துவிட்டு உயிர்நீத்தது அந்தப் பூனை. ஆனால் அந்த நாய் அதிலே போய் விழுந்து - ஆவ் ஆவ் - வென்று வாயைத் திறந்து திறந்து மூச்சுக்குத் தேடி பிறகு இறந்த அந்த நிகழ்வு உனக்கு என்னத்தைத்தான் மனதில் உணர்த்தியது? லா. ச. ரா. கண்ட - அவர் தன் நெஞ்சதறிந்த அந்தக் காட்சியிலே கெளரவம் தான் அந்தப் பூனையிலிருந்து பிரசன்னமாகியது.
ஆனால் இந்த நாய்களிலிருந்து நீகண்டு கொண்டது. மன அலைச்சலைக் கொடுக்கும் காமக் குரோத மோகங்கள். பாலியல் வக்கிரம்! அந்த வக்கிரத்தின் முடிவில் நீ அவைகளில் கண்டமைந்ததாய் இருக்கிறது - முடிவில் மரணம் தானே? அந்த ஆண் நாய் இறந்து போனதன் நேசநாயை - தவித்து மூச்சுவிட்டுக் கொண்டு பார்த்தபடி - ஒரு வித அவமான உணர்வுடன் நிற்பது போல நின்று கொண்டிருக்கிறது. தனக்குப் பிடித்ததை இனிமேல்
4.
Gauerfiðarib

Page 80
செய்ய அனுமதிக்கப்பட்டு விட்டதுபோல முகமெல்லாம் மெத்தான அமைதியுடன் இரத்தத்தால் சிவந்த மற்றைய அந்தப் பெட்டை நாய் நின்று கொண்டிருக்கிறது.
இறந்த அந்தப் பெட்டை நாயில் நீயும் அன்புள்ளவன்தான் - ஆனால் அந்த நாய் இறந்ததை நினைத்து உன்னை நீ ஆறாத்துயரில் ஏன் வருத்திக் கொள்ளப் போகிறாய்? நாய்களின் சண்டை முடிந்து ஓய்ந்த பிறகு உனக்கு சித்தத் தெளிவு வந்துவிட்டது. திரும்பிப் பெற முடியாத - கடந்த காலங்களை இப்போதெல்லாம் நீ இசைவுபடுத்திக் கொள்வதில்லைத்தானே? அந்த நாய் இறந்துவிட்டது. அதன் கதை முடிந்துவிட்டது. ஆனாலும் இப்போது நீ செய்ய வேண்டிய வேலைகள் இரண்டு - - நீ இனிமேல் செய்ய வேண்டியதாய்க் காத்திருப்பது போல இருக்கின்றனவே. அவற்றில் ஒன்று உடனே ஒரு கூலி ஆளை கூட்டி வந்து இறந்த நாயை புதைப்பதற்கு ஒரு குழிவெட்ட வேண்டும்.
அந்த வேலை முடிந்தும், இறந்தும் போய் விட்ட நாயை அதிலே போட்டுப் புதைத்துவிட்டு உயிருடன் உள்ள நாய்களுக்கு மருந்து கேட்டு வாங்கவென்று வைத்தியரை நாடிச் செல்ல வேண்டும். "இந்த வேலைகளையெல்லாம் நான் இனி எப்போது செய்யத் தொடங்கி என் நேரத்துக்குள்ளாக செய்து முடிப்பது.?”
அவசரத்தில் வீட்டைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு - மள மளவென்று வீதிவழியே இப்போது நீ யோசனையோடு நடந்து கொண்டிருக்கிறாய்.
வெயில் ஏறிவிட்டது.
உன் கையிலுள்ள வீட்டுக் கதவுச் சாவி நீ நடந்து
கொண்டிருக்கையில் நழுவிக் கீழே விழுந்தது உனக்குத் தெரியவில்லை "ஒய் ஒய்" என்று உன் பின்னாலிருந்து ஒருவன்
142 நீபி.அருளானந்தம்

உன்னை கூப்பிட்டவாறே இருக்கிறான். நீ அதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல இருந்தபடிதான் உன் கால்களை வருத்துமளவிற்கு மிகவும் அவசரத்தோடு இப்போது அவ்வழியே நடந்து கொண்டிருக்கிறாய்.
(Lontrij: - 2010)
143
வெளிச்சம்

Page 81
ஆசிரியரின் நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள்
O மாற்றங்கள் மறுப்பதற்கில்லை O கபளிகரம் O ஆமைக்குணம் O கறுப்பு ஞாயிறு (அரசின் சாகித்திய விருது பெற்றது) O அகதி O ஒரு பெண்ணென்று எழுது
O வெளிச்சம்
நாவல் O வாழ்க்கையின் நிறங்கள் (அரசின் சாகித்திய விருது பெற்றது -வடமாகாண சாகித்திய விருதும் பெற்றது) O துயரம் சுமப்பவர்கள்
கவிதை
O வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து (2008ம் ஆண்டு அரச இலக்கிய விருதுக்காக கருத்திற் கொள்ளப்பட்ட கவிதைத் துறையிலான நூல்களில், இறுதிச் சுற்றுக்காக விதந்துரைக்கப்பட்ட இந் நூலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது)
ஆசிரியர் எழுதிய சிறுகதைக்குக் கிடைக்கப் பெற்ற பரிசு
அன்பு பாலம் இதழ் நடத்திய வல்லிக்கண்ணன் சர்வதேச சிறுகதைப் போட்டியில் இவரது சிறு கதை "இரத்தம் கிளர்த்தும் முள்முடி" முதல் பரிசு பெற்றது. போட்டிக்காக அனுப்பப்பட்ட 900 கதைகளுக்குள் இருந்து முதல் பரிசுக்குத் தெரிவான சிறுகதை இது) இதற்கான பரிசை பாலம் மாத இதழின் சிறப்பாசிரியரான - ஞான பீட விருது பெற்ற த.ஜெயகாந்தன் அவர்கள் இவருக்கு வழங்கி கெளரவித்தார்.
144
நீபி.அருளானந்தம்

நூலாசிரியரைப் பற்றியதும் அவரது குடும்பத்தைப் பற்றியதுமான விபரங்கள்.
பெயர் நீபி. அருளானந்தம்
(நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா அருளானந்தம்)
பிறந்த இடம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளம்.
காலம் 12-11-1947
கல்வி இறம்பைக்குளம் அர்ச். அந்தோனியார்
பாடசாலையில் ஆரம்பக்கல்வி - அதன் பின்பு, வவுனியா மகாவித்தியாலயத்தில் S.S.C. வகுப்பு
வரை.
தொழில் கடை வியாபாரம்.
தந்தையாரின் பெயர் : நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா (அச்சுவேலி) (Varithamby Aratchair - Kathirgamar - Varithamby Murugar – Thillaiambalam Vidan - Mariam Pillai - Nicholapillai - Philippaiah) (Maniyampathy Santhathi Murai)
தாயாரின் பெயர் லூர்தம்மா (சில்லாலை) (லூர்தம்மாவின் தகப்பன்- சுவாம்பிள்ளை- தாயாரின் பெயர்- றோசமுத்து)
துணைவியார் பெயர் : பெற்றோனிலா சொர்ணம்தம்பிமுத்து.
இவரது தகப்பனாரின் பெயர் : கென்றி தம்பித்துரை தம்பிமுத்து (9ở 3, G36u6ứ6) (Varithamby Aratchiar - Kathirgamar - Varithamby Murugar - Thillaiyambalam Vidan - Santhiyagupillai – Tambimuttu Pillai - Henry Thambimuttu) (Maniyampathy Santhathi Murai)
தாயாரின் பெயர் கிறிஸ்டீனா. (ஏழாலை) (கிரிஸ்டீனாவினது தகப்பனின் பெயர் சங்கரப்பிள்ளை - தாயாரினது பெயர் - அன்னம்மா
145
வெளிச்சம்

Page 82
பிள்ளைகள்
சுரேஸ் ஜோக்கிம் (இற்றைவரையில் 63- கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்து ஆகக்கூடிய கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்தவர் என்ற தரத்தில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளதான ஒரு தகுதியையும் இவர் பெற்றுள்ளார்).
ரமேஸ் பிலிப் (கடை வியாபாரம்)
சத்தியசீலன் (கணினி தொழில்நுட்ப மென்பொறியியலாளர்)
மேரி சுமித்திரா
திருமகள்
மருமகன் நவரட்ணசிங்கம் தேவரஞ்சன் (சுமித்திராவின் கணவர்) (கணினி வலையமைப்பு தொழில்நுட்ப பொறியியலாளர்-அவுஸ்ரேலியா)
காட்சன் சவரிமுத்து (திருமகளின் கணவர்) (சட்டத்தரணி-லண்டன்)
மருமகள்: கிறிஸ்தா (சுரேஸ் ஜோக்கிமின் மனைவி) விஜிதா கத்தரின் (சத்தியசீலனின் மனைவி)
பேரப் பிள்ளைகள் :
யோசுவா
ஜேக்கப்
தபித்தா
யூலியானா
தமிரா
146
நீபி.அருளானந்தம்


Page 83
நாம் பட்ட ကြီး துல்லியமாக எடு குதியை லூசிக்கும் எனக்கிருந்த மதிப் இன்னல்களின் அதே ශීඝ්‍රගණ්ඨි
கள் பறிய காழ்ப்புணர்வு எதுவுமில்லாமல் எழு சுட்டியாக அமைகிறது இவ்வாறு சொல்லும் பொழுது பூத்த இன்ன அருளானந்தத்தின் எழுத்துத்திறமைதங்கியுள் தத்திற்கு ஒரு அகண்ட பார்வையுண்டு அ பலவற்றை இலக்கியச் செழுமை குன்றாது
இறுதியில் நிலைப்பட்ட &ცნ குறிப் ஜ்திற்கும் இடமில்லரது |Gගණ්හී ඒfණශීග්‍ය இக்க என்பது உண்மையென்றாலும் கூடதனிமன் டும் மனிதாதநிலைகளைத் இரது கதைகள் சில நல்ல உதாரணம் ஆகு துயரம் சுமப்பவர்கள் நாவலும் இச்சிறுக இலங்கையின் சமகாலதமிழ் எழுத்தாளர்களு சேர்த்து இடுகிறது.
ଜୂ(କ୍ତ 8
 

jiš-jiš,
லத்தில் வடபகுதி மக்கள் உள்ளுர் போர்
துன்பதுயரங்களைச் சொல்லுதாகும்.
ல்கள் ஆத்தனையும் அருளானந்தம் மித் துக் கூறியுள்ளார். இச்சிறுகதைத் தொ பொழுது அருளானந்தம்பர் ஏற்கனவே மேலும் மேலும் அதிகரிக்கின்றது. பட்ட துயரங்களை அச்சொட்டாக திரிக்கும் அதையேற்படுத்தியவர்களின் பின்புலல் தியிருப்பது அவரது படைப்பூத்திறனுக்குச்
களை எடுத்துக் கூறும் முறையிலேதான் இதன்று கூறிவிட முடியாது. அருளானர் ளானந்தம் இலங்கையின் அனுபவங்கள் ಹಿಟ್ನೆ)ಗೆ
னைக் கூற வேண்டும். ஏத்தகைய திருதத் லத்திற்குரிய பிரத்துவ இலக்கிய வகை இன்னல்களை முனைப்புருத்தி එගණ ඇසූ றுகதைக்கு இன்றும் உண்டு என்பதற்கு
சுருங்கச் சொன்னால் ஏற்கனவே ஆந்த ஜதத் தொகுதியும் நீ.பி.அருளானந்தத்தை
முதன்மையிடம் ரெக்கூடிய வர்களிலே
பேராசிரியர் கார்த்திகேசு சீஆத்தம்பி அலர்களது முதிப்புரையிலிருந்து)
SBN 978-955-1055-07-3