கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து

Page 1

|- * -

Page 2

வேருடன் பிறங்கிய/ தWலிலிருந்து
நி.பி.ஆடுலnnனந்தம்

Page 3
நூற்குறிப்பு
வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து உரிமை : நீபி.அருளானந்தம்
முதற் பதிப்பு : ஆனி 2008 I UT : 300/=
ISBN 978. 955 - 1055 - 05 - 9
WAYRUDAN PUDUNGIYA NALILIRUNTHU
SUBJECT
POEM
AUTHOR: N.PARULANANTHAM Computer Type Setting: Mrs.S.Maheswary {S PRINT, Colombo -06) Art:
Mathi Pushba Back Cover Photo: K.V.Mani
FIRSTEDITION:
JUNE-2008 PUBLISHED BY: THIRUMAGAI PATHIPPAGAM NO.7, LILLIYAN AWENUE, MT.LAWINA. TP4967027
PRINTED:
A.J. Prints 44, Station Road, Dehiwala
2734765, 272.3205 II
登]高砷岳、 கவிதை
ஆசிரியர் நீ.பி.அருளானந்தம் ஓவியங்கள் மதிபுஷ்பா 0776701568 கணினி தட்டச்சமைப்பு: திருமதி மகேஸ்வரி சதீஸ்குமார் (ரண்யா கிராபிக்ஸ் & எஸ் பிறின்ட்) கொழும்பு -08 பின்புற அட்டை ஒளிப்படம்: கே.வி. மணி (ஒளிப்பதிவாளர் சென்னை) வெளியீடு: திருமகள் பதிப்பகம் இல 7 லில்லியன் சாலை கல்கிசை (தொ.பேசி 487027) அச்சுப்பதிப்பு: ஏ. ஜே. பிரிண்ட்ஸ், 44. புகையிரதநிலைய வீதி ,
தெஹரிவளை. 8784 ፖ65, ፰ ፳ይ8፰ዐ5

அணிந்துரை
தமிழ்மரபில் படைப்பிலக்கியங்கள் கலைவடிவங்களாகவும், அதனைப் படைப்பவர்கள் கலைஞர்களாகவும் இனங்காணப்படுவது வழக்கம். இவ் வகையில் கவிஞர் அருளானந்தம் அவர்கள் கவிதை மட்டுமல்லாது சிறுகதை, நாவல், நாடகம் எனப் பல வேறு துறைகளிலி Lal) சாதனைகளைப் படைத்துக் கலைத் தாயின் ஒர் மகனாய்த் திகழ்கின்றார்.
இதில் ஒரு சிறப்பம்சம் அருளானந்தத்தின் எழுத்துக்கள் பல சிறந்த படைப்புகளாகத் தெரிவு செய்யப்பட்டு ஹிருதுகள் பெற்றமையாகும். படைப்பிலக்கியங்கள் சிறப்பாக அமைந்து விட்டால் மட்டும் போதாது அவை சிறந்தவையாக இனங் காணப்பட்டு அங்கீகரிக்கப்படல் படைப்பாளிக்கு வழங்கப்படும் கெளரவமும் அங்கீகாரமுமாகும். இலங்கை சாகித்திய விழா பீடத்தினால் பல விருதுகளைப் பெற்ற அருளானந்தம் அவர்கள், தமிழ் கூறும் நல்லுலகினால் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு நன்கு வாசிக்கப்பட்டவர் எனலாம்.
பாட்டுத்திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திட வேண்டும் என்று கூறிய பாரதியின் கூற்றுக்கமைய தமது கவிதை ஆற்றலால் தமிழ் பேசும் மக்களை ஆழ்ந்து கவரும் நோக்கு அருளானந்தம் அவர்களிடம் காணப்படுகின்றது. ஓவியம், இசை, சிற்பம் போன்ற நுண்கலைகளை விட கவிதை ஆக்கமும் இரசனையும் விளக்கமும் சற்றுச் சிக்கலானவை என்பர். கவிதையின் இலட்சணங்களாக கற்பனை, சொல்வளம், ஒலிச்சிறப்பு. அணிநயம், குறிப்புப்பொருள். பொருள்நயம் எனப் பலவற்றைக் கருத்திற்கொள்ளும் போது அருளானந்தத்தின் கவிதைகளில் இவற்றைத் துல்லியமாகக் காணமுடிகின்றது
II

Page 4
என்பதை வாசகர்கள் அறிந்து கொள்வர். சமகாலத்தமிழர் வாழ்வின் இன்னல் நிறைந்த அனுபவங்களை, மேற்கண்ட கவிதை இலட்சணங்களுடன் முன் வைக்கும் கவிஞரின் பாங்கு பாராட்டுதற்குரியது.
கவிஞர் அவர்கள் பொதுவாகப் படைப்பிலக்கியத் துறையிலும் கவிதைத்துறையிலும் இன்னும் பல உச்சங்களைக் கண்டு, தமிழ் இலக்கியத்துறையை மேலும் செழுமைபடச் செய்ய வேண்டும் என்பதே எமது அவா.
கல்விப்பீடம் பேராசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகம் சோ.சந்திரசேகரன் O. 5.28

தயவுரை
இன்றைய யதார்த்தத்தின் எதிர்காலத்திற்கான ஆவணம்
கவிஞன் பிறக்கின்றான். உருவாக்கப் படுவதில்லை! இந்த தொகுப்பில் உள்ள கவிதை வரிகள் அக்கூற்றை நிதர்சனம் செய்கின்றன.
யாப்பறிந்தவர்கள் மட்டுமே கவிதை பாடலாம் என்ற நிலை மாறி, இன்று யாப்பிலிக் கவிதைகள் புற்றீசல்போல் பிரசவமாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் மிகச் சிலர் மட்டுமே காத்திரமான படைப்புக்களை வெளிக்கொணர்ந்திருக் கின்றனர். அவ்வகைச் சிலருளி இந்நூலாசிரியரும் ஒருவர் என இந்நூலில் அவரது கவிதைகள் அவரை அடையாளங் காட்டுகின்றன.
கவிஞன் மென்மையான இதயம் படைத்தவன் துயர்கண்டு உருகும் பண்புடையவன். இத்தொகுப்பில் வரும் பல கவிதைகள் இன்றைய நாட்டின் துன்பியலை வெளிப்படுத்துவதாய் அமைந் துள்ளமை அதற்குச் சான்றாகும். இந்நூலாசிரியர் ஒரு சிறுகதை எழுத்தாளர், நாவலுக்கானதும் சிறு கதைக்கானதுமான மூன்று சாகித்திய மண்டலப் பரிகம் பெற்றவர். நீண்ட கால வாசிப்பின் தேறலாய் சொல்வளம் மிக்க ஒரு சிறந்த படைப்பாளி அவருடைய கவிதைகள் அதனை நிரூபணம் செய்கின்றன.
சொற்பஞ்சம் இவருக்கு இல்லை என்பது கவிதைகளில் கோக்கப்பட்டுள்ள வார்த்தைகளால் புரிந்து கொள்ளமுடிகின்றது. கண்ணால் காணாத ஒன்றையும் செவியேறலால் கற்பனை வளங்கூட்டி ஒரு ஆளுமையுள்ள கவிஞனால் கண்டது போல் சொல்லிவிட இயலுமாகும். ஆனால் அனுபவத்தின் வெளிப்பாடு முன்னையதிலும் உன்னதமாக அமையும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
"ו

Page 5
இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள் அனுபவத்தின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. தான் வாழ்ந்த புலத்தில் தனது அனுபவங்களை அவர் கவிதை வரிகளுக்குள் கட்டுன்ைனச் செய்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு கவிஞன் வாழ்வதை அவ்வரிகள் அச்சொட்டாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இன்று யுத்த பூமியாக உருவெடுத்துள்ள எமது மண்மீது அவருக்குள்ள ஆழமான பற்றுதல், அது புண்பட்டு பாழாய்ப் போவது கண்டு குமுறச் செய்கின்றது. மீண்டுமொரு புதுவாழ்வு மலராதா என ஏங்கித் தவிக்கின்றது. பண்டுதொட்டுப் பலவகை வளமும் கொண்டு திகழ்ந்த தமது மண்ணின், மாந்தரினின் அழிவுக் கண்டு மனம் நொந்ததால் பிறந்த வரிகள் இதயத்தை நெருடுகின்றன.
துரத்தப்பட்டும், தாமாகப் புலம் பெயர்ந்தும் துன்பத்தின் எல்லையைத் தொட்டுத், தொடர்ந்தும் அநுபவித்தும் வரும் தம்புல மக்களின் அகதி வாழ்வைத் தானும் அனுபவித்துத் தெள்ளு தமிழில் சொல்லியிருப்பது எதிர்காலத்திற்கான ஆவணமாகும்.
விளங்காத இருண்மைக்குள் புரியாத வார்த்தைகளைக் கோத்து, பிறருக்கு மட்டுமன்றி பிறிதோர் போழ்து படித்தால் தமக்கும் ளங்கிக்கொள்ள இயலாத சோக வெளிப்பாடுகளாக இவர் கவிதைகளில் ஒன்றும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை. இலகுமொழியில் முகஞ்சுழிக்கும் வார்த்தைகளின்றி அழகிய சொற்களால் ஆனவை இவரது வரிகள், அழகியலிலும் இவரது அவதானிப்புக்கள் அவ்வாறே கூடி நிற்கின்றன. மீண்டும் புதுப்பொலிவு புலரவேண்டும் என்பதன் ஆதங்கம், அவற்றை நேர்த்தியாக அவர் தன் கவிதைவரிகளில் சொல்லி இருக்கின்றார்.
இனி அவரது கவிதைகளில் பதப்பருக்கைகளாகச் சில சூழல் மாசடைவது பற்றிச் சொல்லும் ‘பாழி என்னும் கவிதையில்,
மனிதன் இயற்கையை நஞ்சூட்டுவதுபோல செயல்படுகின்றான் இந்தப் பூமியோ மீண்டும் தன் நிலைமைக்குவர சறுக்கு மரத்தில்
ஏறுபவனைப் போல
Yi

கால்கள் தரையில் மோத வழுக்கிக் கொண்டே இருக்கின்றது. என்னும் ஆதங்கத்தோடு பேகசின்றது.
'மூழ்கிப் போன காலம்” என்னும் கவிதை இன்றைய அந்தரிக்கும் வாழ்வின் துயர்களைச் சுட்டி, கடந்த காலத்தை எண்ணி ஏங்குவதான உணர்வுகளின் வெளிப்பாடு, “அந்த ஞாபகமே ஒரு துயரம்" என்னும் கவிதையில் யுத்த அரக்கனால் ஏற்பட்ட விளைவுகளை பொருந்தும் வார்த்தைகளால் புரியவைக்கின்றார்.
உரித்துப்போட்ட என் மண்ணின் நிலை மனதை வாட்டியது என் தேசம் குண்டுவிழுந்து வெடித்து புழுதிக் காற்றில்மூழ்கி
LITLA TÉ தன் மூச்சை இழந்தது "ஷெல்"கள் விழுந்து பிளந்து துடித்த மண்ணுடன் சேர்ந்து மனிதருடன் செத்துபோன பனைகளோ பல லட்சம்
"புதிய உலகம்” என்னும் கவிதை அழகியதோர் வெளிப்பாடு இன்றைய யதார்த்தத்தின் வேதனைகளோடு சங்கமித்து நொந்துபோன ஒரு இதயத்தின் தவிப்பு யுத்தமும் இனவிரோதங்களும் அழிந்து புத்தம் புதிதாய் ஒரு பசுமையான வாழ்வை நாடி இயற்கையைக் குறியீடாக்கி ஏங்குகின்ற தனி மனத்தின்றிச் ஈழத்தின் பொதுமனங்களின் வேண்டுதல்.
“பயப்பீதி" வடக்கில் நடக்கும் கொடுமைகளின் ஒரு துளி மட்டும் தான் இக்கவிதை பேசுவது. ஆயினும் பானைச் சோற்றுக்குப் பருக்கை பதம் போல எதிர்காலத்திற்கான ஆவணப்படுத்தல். அது போன்றதே பல கவிதைகள் அழிவுற்ற உடைமைகளுடன் உயிர்ப் பறிப்புகளும் ஒருமித்து போனதை ஆசிரியர் இள்வாறு சொல்கிறார்.

Page 6
உழும் நிலத்தில்
வெடிகள் பரவியுள்ளன காற்று வெளிக்கு அப்பால் நின்ற உயரமான பனைமரங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளன. உன் வீடு உனக்கில்லை உன் வீட்டிலிருந்து ஒரு தொலை தூரம் எல்லாமே மண்ணோடு மண்ணாகிவிட்டன விவசாயிகளில் அனேகர் இப்போது அங்கில்லை தங்கள் நெற்றி வியர்வையை நிலத்துக்கு நிராக்கிய அவர்கள் அந்த மண்ணுக்கே உரமாகி விட்டார்கள் எனச் சொல்கின்றார். வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து “என்னும் கவிதையில்” துரத்தப்பட்டும், தாமாக வெளியேறியும் சொந்த மண்ணிலும் தூர தேசங்களிலும் அந்தரித்துத் திரியும் அகதிகள் பற்றிக் கவிஞர் பேசுகின்றார். எம்மண்ணை விட்டுக் காற்றைப் போலல்லவா வெளியேறினோம்
அகதிகளாய் இன்று சாலை நடை பாதையிலும் தாழ் வாரங்களிலும் தெருநாய்கள் போல பாழாகி விட்டது வாழ்வு
என்றும் இன்னும்மொரு கவிதையில் உயிரற்ற ஒளிமின்னும்

அவர்கள்
கண்களுக்குள்ளே
பழைய நினைவுகள்
ஓடோடி வருகின்றன
பிறந்து வளர்ந்த மண்ணில்
அன்னிய பட்டவர்கள் போன்று
இன்று
வீட்டை நாடிப் போவதற்கும்
அவர்களுக்குக் கடினம்
தம் வீடுகளை நினைத்துக்கொண்டு
மரங்களுக்குக் கீழே
உறங்கின்றனர்
மாலைக் குருவிகள்
பறந்து செல்வதைப்
பார்க்கின்றனர்
அந்தப் பார்வையிலோ
தேங்கி நிற்கும்.
சோகந்தான் எத்தனை
அந்தப் பறவைகள்
மறைந்து விட
தங்கள் பார்வையும்
இழந்ததாய்த்
தவிக்கின்றனர்.
குடிக்காரரைப் பற்றிக் கேலி செய்யும் “போதை” என்னும் கவிதை
படிக்கப்படிக்க இனிக்கும் கவிதை. குடிக்காரர்களை நாய்க்கு
உவமித்துப் பேசுவது.
பெரும்பாலும் எல்லா கவிஞர்களும் காதலைப் பாடுவர்.
மனத்தில் இளமை இருக்கும் வரை அது தொடரும். இவரும்
இவ்வாறான கவிதைகளால் இளமைக் காலத்தை இரை மீட்டி
இருக்கின்றார்.
இவ்வாறு கவிதைகள் பற்றித் தொடர்ந்து பேசுமாறு ஒவ்வொரு
வரிகளும் உணர்வுபூர்வமாக அழகிய வார்த்தைகளால் ஆவணம்
பெற்றுள்ளன. இதுபோன்று கவிதைகள் அவர் இன்னும்
செய்யவேண்டுமெனக் கேட்டு வாழ்த்துகின்றேன்.
16, பாடசாலை வீதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
தெஹிவளை. 12.05. 2008

Page 7
UлJanevnА 2έήήGωΛυ
நாவலுடன் நம்நாட்டில் நற்சிறுகதை படைத்த நண்பர் நீ பி யும் வடித்த இக்கவி படித்தே நல்வாழ்த்துக்காய் சில வரியெழுத நான் எடுத்த வல்லவொரு பேனா வரிகள் சில வடிக்க
நெற் பஞ்சம் நம்நாட்டில் நின்று நிலவுகையில் சொற்பஞ்சம் இன்றி சுவைகொட்ட அழகு தமிழ் விழுந்து கிடக்காமல் நின்றுதலை நிமிர்ந்துவிட விளைந்து மணம் பரப்ப விதைக்கின்ற விவசாயி
யாப்புப் பல்லக்கில் தானேறி செருக்கும் தலைக்கேறி கோப்புக்குள் தூங்கி கொண்டவர்க்கும் விளங்காமல் சந்தத்தைக்கூட சந்தோசமாய்த் துறந்தே இயல்பாக வந்த வார்த்தைகளால் சமூகத்தின் சீரழிவைச் சாடுகிறார்.
யதார்த்தங்கள் நிழலாட இயற்கையின் காப்பே நினைவாக பதார்த்தங்கள் கொட்டிப் பாரைப் பாழ்படுவார் செய்கின்ற இயற்கைத் தாய் வெறுக்கும் ஈனங்கள், தப்புக்கள் புரிவோரை செயற்கையால் சூழலதை சீரழிக்கும் சீர்கெட்ட மானிடனை
வேருடன் பிடுங்கிய நேரியதோர் வாழ்வுதனைப் பசுமைதனை பாருடன் போர் தொடங்கிப் பாழ் மனிதன் அழிவதனை ஊரெல்லாம் விட்டோடி உறவெல்லாம் வேற்று மண்நாட யாரெல்லாம் றோட்டில் நின்றால் தான்நமக்கென்ன
என்றொருகால் நினைக்காமல் எண்ணித் திறந்து விழி கொண்டொருபால் நேயத்துடன் இயற்கைதனைக் காக்கும்வழி சென்றிடும் நாட்பதிவுகளை முன்னோரின் சீரியநல் வாழ்வுதனை பண்பொடு வாழ் பழம் மனிதன் காத்தெடுத்த வளமதனை

பூமிப்பந்தைப் புட்போலாய் புரட்டியே விளையாடும் புலையர் தன்னை நிச்சயமாய் புறமுதுகிட்டோட வைக்கும் மரங்களுக்கு வழங்கும் மரணத்தை மறுதலித்து உரங்கள் இடுவதற்கு உரமாகக் கூவுகிறார்.
காதற்சுவை கொட்டும் முற் காலத்து நினைவுகளை காதில் விழுந்தொலிக்கும் சில்வண்டின், குயிலின் கூவல்களை காலத்தால் எம்மக்கள் மறந்து கனவாகிப் போகாமல் பாலமாய் இணைக்க நண்பர் பயணித்திருக்கின்றார்.
எளிய நடையில் எண்ணத்தைப் பகிர்ந்தது போல் அழியாக் கவிபடைத்து நண்பர் புதுப்பாதை போகின்றார் வழித்துணையாய் அப்பாதையதில் நாமும்நடைபயில்வோம் பழி சொல்லா தெதிர்காலம் பங்காளர் ஆகிநிற்போம்.
G.J. 6 TGiv. Fibg56001 Unggnt ( SILEAS) உதவிக் கல்விப் பணிப்பாளர்
74/44 , சரணங்கர பிளேஸ்,
தெஹிவளை. 10.06.2008

Page 8
என் ஆன்மாவின் இறுக்கம் இளகும் போதுதான் நான் கவிதை எழுதத் தொடங்கினேன். என் ஊமைத் தனத்திலும் மனத்திலிருந்து சிலவேளை உரத்த பேச்சு வரும் போது, அவற்றை அப்படியே கவிதையிலே வடித்து விடுகிறேன். இந்தக் கவிதைகளில் சிலவற்றை நான் எழுதும் போது ஆனந்த உணர்வு எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் எழுதிய வேறு எந்த ஆக்கங்களிலும் கிடைக்காத தனி சுகம் அது! நான் சித்தனென்றும் என்னை நினைத்துச் சிந்திக்கிறேன். சித்தர் பாடல்களின் கருத்து நுட்பங்களை அதிகம் புரிந்து கொள்ள முடியாதிடினும் அவர்களிடமிருந்து வீசும் அலைகள் எனக்குள்ளும் இருந்து பொறிபோல சுடர் விடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்.
கவிதைகள் மனத்தில் நிரந்த வாசமாகும் வாசனையுடையது. அவைகளை எழுதும்போது அதற்குள்ளே முங்கிக் குளிப்பது ஒரு பரவசம், மெல்லிய சந்தோஷம், ஆர்வம், அதனால் ஒரு சுகம்! கவிதைக்குள்ளே இன்பம் நிறைந்து கிடக்கிறது. சொல்லாலே மாளிகை கட்டிக் கொள்ளலாம். என் கருத்துப்படி கவிதைகள் உணர்வுகளை எழுப்பும் வாசமலர்கள். அழகு தரும் சொல் மண்டபத்துக்குள்ளே யாழிசையாய் எம்மை மயக்கும் சக்தி கவிதைக்கே உண்டு.
இன்றைய யுத்த சூழலில் எல்லாவற்றையும் ஒழுகவிட்டு ஒட்டையாய்க் கிடக்கிறது எங்கள் வாழ்வு, நாங்கள் பசியோடும் தாகத்தோடும் வாடிவதங்கிய நாட்கள் எத்தனை? நாங்கள் வடித்த கண்ணிரை யார் கண்டார்கள்? எமது நெருக்கடிகளை யார் உணர்ந்தார்கள்? தூசி போல உதறிவிட போய் விடும் துன்பங்களா இவைகள்? முன்னைய வாழ்வு எவ்வளவு எங்களுக்கு உன்னதமானது. அதுதான் ஒவ்வொரு நொடியும் பின்தள்ளி வெகு தூரம் முன்பிருந்தே அவைகளை என் கவிதைகளால் சொல்லத் தொடங்கியுள்ளேன். முட்டை ஒட்டுக்குள் நான் காத்துக் கொண்டிருந்ததெல்லாம் அதன் மூலம் இப்போது நான் எழுதும் கவிதையாக வெளிவரத் தொடங்கிவிட்டது. விதை விழுந்து முளைவிட்டு எழுந்து மரம்வரையாக எல்லாவற்றையும்
Χ

நான் பார்த்தவாறேதான் இருக்கிறேன். இன்னும் என்கவிதைகள் முற்றுப் பெறவில்லை. அதனால் கவிதை எழுதுகிற கணம் பற்றிய யோசனை எனக்கு வரநேர்கிறது. இன்னும் கவிதையை மேலெடுத்துச் சென்று சாதிக்க வேண்டும் என்ற அவாவும் எனக்குள்ளே இருக்கிறது.
நான் அநுபவித்த உணர்வுக் கணங்களை அநுபவித்தவர்கள் இருந்தால் நிச்சயம் அவர்கள் இந்தக் கவிதை மழையில் நணையத்தான் வேண்டும்.
இந்தக் கவிதைகளை நான் எழுதி முடித்த போது, இவைகளைக் கொண்டு சென்று பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களிடம் கொடுத்தேன் அவர் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இக்கவிதை நூலுக்கோர் முன்னுரை எழுதித்தந்தார். அதன் பிறகு கவிஞர் Dr. ஜின்னாஹற் ஷரிபுத்தீனிடம் இதைக் கொண்டு சென்று அவரிடம் வாசிப்புக்குக் கொடுத்தேன். அவர் என் கவிதைகளைப் படித்துவிட்டு, உங்கள் கவிதைக்குள்ளே குளிர்மையான நதியும் ஒடுகிறது என்றார். என் கவிதைகளை தொட்டுப்பேசினார். நான் கேட்டதற்கிணங்க இக்கவிதைகளுக்கு சிறப்பிடம் கொடுத்து நயவுரையும் விரிவாக எழுதித்தந்தார். இவ்வளவும் நிறைவு பெற்றபின் இக்கவிதைகளுக்கெல்லாம் பேசும் சித்திரங்களை வரைந்து கொடுத்தார் ஒவியர் கனிவுமதி இவர்கள் மூவரையும் நான் சந்தித்து விலகினாலும், அவர்கள் செய்தவற்றிற்கான நன்றி என் நெஞ்சில் எக்காலமும் இருக்கும்.
அன்புடன் இல, 7. லில்லியன் சாலை நீ.பி.அருளானந்தம் கல்கிசை தொ.பே. 4967027

Page 9
utarasi bibiy5y
ஆங்கில இலக்கிய வானிலே பட்டம் விட்ட அச்சுவேலி பாவலர் மியரி ஜேம்ஸ் துரைராஜா தம்பிமுத்து அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.
புகழாரம்
இருபதாம் நூற்றாண்டிலே ஆங்கில இலக்கியத்திற்கு ஏதாவது காத்திரமான பங்களிப்புச்செய்த ஆங்கிலேயர் அல்லாதவர் தம்பிமுத்துத்தான். இவரைவிட்டால் ஜேம்ஸ்ப்லோவின் அவர்களைத் தான் குறிப்பிடலாம். ஆனால் அவர் அமெரிக்கராவர்.
இம்மதிப்பீடு செய்தவர் ஜக்மோகன் அவர் விக்டர் லூயிஸ் டைம்ளப் ஒப் சிலோன்' ஆசிரியராக விளங்கிய காலத்திலே அதற்குக் கலை விமர்சகராகவும் இந்திய இலங்கைத் தொடர்பு விளக்குநராகவும் இருந்தவர்.
E TIJiři - POET TAMB IMUTTU - A PRO FILE)
N
 

uրկ:
கொதிக்கும் பூமியின் மையம் பலம் குன்றிய என் இதயம் போல் வெப்பத்தில் கிடந்து துடிக்கிறது
சனத்தொகை வழியும் பெரு நகரங்களிலெல்லாம் தொழிற்சாலைகளின் புகை நீல வானை கறுத்திடச் செய்கிறது
சுற்றுச் சூழல் மாசடைந்து பூமிப் பந்து சோக சங்கீதத்தை ❖Ií &ሡ} ''W:፲ታLL]ሰI ,÷
வாசிக்கிறது
மனிதன் இயற்கையை நஞ்சூட்டுவது போல செயல் படுகிறான் இந்தப் பூமியோ மீண்டும் தன் நிலைக்குவர சறுக்கு மரத்தில் ஏறுபவனைப் போல கால்கள் தரையில் மோத வழுக்கிக் கொண்டே போகிறது
"தினமுரசு" ድሃ"ሔahû! " É8=gùùያ
நீஅேருளானந்தம் \ 1

Page 10
மூழ்கிப்போன காலம்
கிராமத்துச் சீவியத்தில் முன்பெல்லாம் வானக் கூரையை அண்ணாத்து பார்த்தால் நட்சத்திரங்களின் ஒளி அங்கு உச்சமாகத் தெரியும்
அந்த நெற்றியிலே பொட்டு வைத்தாற்போல நிலவின் ஒளிவெள்ளமும் பூரணமாய்த் தெரியும்
எவ்வழியொருவர் சென்றிடினும் அவ்வழியெல்லாம் அங்கே தவித்துக் கொண்டிருக்கும் புழுக்கத்திற்கு
அமைதிதரும் நிழல் மரங்கள் நின்று உடலுக்கும் குளிர்மை தரும்
இப்போது நகரத்தில் நிழல் தேடி பறந்து திரிகிறது என்மனம் இந்த அக்கினி வெக்கையிலும் இலை அசையாச் சுடுகாற்றிலும் முன்னைய ஆசைகளை நான் மனதுக்குள் வைத்து பூட்டிக் கொள்கிறேன்
நச்சுப் போன்ற செயற்கைச் சூழலில்
எண்பொழுது கழிகிறது
2 /வூேருடன் பிடுங்கியநாள்லிருந்து

ஆன்மாவிற்கு குளிர்மைதேடி இடம் மாறி மாறி எங்கெல்லாமோ ஒடித்திரிகிறேன் மீண்டும் அந்த இயற்கை மடிக்குள் புக ஆனச எனக்குப் பொங்குகிறது தாகத்தில் கிடந்து மனசு அலைகிறது ஈரமில்ல்ா வெளிச்சிட்ட சாலையில் நீளக் கால்களுடன் நடந்து ஈரப்புல்தரையை தேடித்தேடிப் பார்க்கிறேன்
வேறு வேறு முகங்களைப் பார்த்து -ଞଡୀଦାର୍ଯ୍ୟନ୍୩ଘTର୍ମ, காட்டுகிறாயா நீ எனக்கு என்று கேட்கிறேன் - அவர்கள் என் மனதில் விதைத்ததெல்லாம் வவிதான் தான் நிலவைப் பற்றி கதைத்தால் பழைய கோட்பாடுகளை தூக்கி எறி என்கிறார்கள்
மரத்தைப் பற்றி கதைத்தால் சிலுவையில் அறையப்படுவாய் என்கிறார்கள் இதனால் மனவருத்தத்தோடு கழிகிறது என் நகரவாழ்வு
ஆனாலும், வெறுமையான உலகில் இன்று என் மனக் கணி எப்போதும் திரும்பிப்பார்க்கிறது கடந்தகாலத்தை.
நீ.பி.அருளானந்தம் \ 3

Page 11
அந்த ஞாபகமே ஒரு துயரம்
பனைகள் அதிகம் அழிந்து விட்டதாக முகம் காட்டிவிட அழிந்ததைக் கவனம் கொள்ளும்
Trailer
ரத்தரேகைகளுடன் தார்ச்சாலையை நேரே பார்க்கிறது ஏங்கித் தவிக்கும் முகட்டைக் கொடி படர இல்லை இப்போ நிறையனை காற்றில் ஒலமிடும் ஒலைச் சிறகுகளையும் அதிகமாய்க் காணவே இல்லை
இதையெல்லாம் எண்ணிப்பார்க்க உரித்துப்போட்ட எண்மண்ணின் நிலை மனதை வாட்டியது. இந்தத்தேசம் குண்டுகள் விழுந்து வெடித்து புழுதிக் காற்றில் மூழ்கி இயல்பாய் உள்ள தன் மூச்சை இழந்தது செல்கள் விழுந்து பிளந்து துடித்த மண்ணுடன் சேர்ந்து மனிதருடன் செத்துப்போன பனைகளோ பல லட்சம், இவ்விடம் பூமாதேவி மூச்சின்றி அடங்கிப் போனாள். என்றாலும், எனக்கு இன்னும் முக்கு இழைகளில் மணக்கிறது அன்றைய பனம் பழத்து வாசம்
4 'வேருடன் பிடுங்கிய நாளிலிருத்து
 

&ambu ாறவும் கூடும்
kyಷToಘ್ನ காற்றும் இல்லை' விரையமாகத் தொடங்கியது வியர்வை எல்லா பருவங்களையும் கண்டிருக்கும் சன்னல் உறங்குகிறது
நினைவைத் தீட்ட, வீங்கிப் புடைக்கும் நரம்பினிலே உடலின் ரத்தம் இதயத்துள் நீந்திக் கடக்கிறது.
ஆடிய இலை யொன்று கண்களுக்கு அடையாளம்
காட்டியது
ஒரு முகவரியுமின்றி சன்னலைக் கடந்து வந்து எண்ணில் அனைத்து கொண்டது காற்று ஆகா- என்ன ககமது ஏதுமில்லா இந்த நிலையிலும் எனக்கு

Page 12
மனசுக்குப் பிடித்தது
ஒரு காலத்தில் மரங்களுடனும் செடிகளுடனும் கிராமத்தில் வசித்திருந்தேன் நான் பாருங்கள் இதோ என் நிலைமை: ஆரவாரங்களற்ற அந்த வாழ்க்கையிலிருந்து இப்போது
விசனகரமான மிருகத்தனமான நரக வாழ்வு என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது
இந்த பூமி பிரதேசத்திலே நகர்ப் புறப் பக்கம் என்ன தூய்மை இருக்கிறதா? உலோகம் உருகி வழியும் தொழிற்சாலைகளின் புகையாலே சுவாசிக்கும் காற்றும் குமட்டும் ஒரு வாடையாக வெறுப்பைத் தருகிறது
நீங்கள் கேட்பீர்கள் ஏன் நீமரத்தையும் குளத்தையும் பற்றியே அதிகம் புலம்புகிறாய்? என்று விடியற்காலையில் பூக்களின் மீது மறைந்திருக்கும் பனித்துளி போன்று குளிர்ச்சியாய் உள்ளது
6 /8வருடன் பிடுங்கியநாளிலிருந்து

என் இதயம்
அது ஒவ்வொரு நாளும்
எனக்கு வேண்டப்படும்
நிழலைத் தேடுகிறது
எனவே மரங்கள் வேண்டும் SSS
அவை உயிர்ப்பை எனக்குத் தருகிறது 3 இப்படித்தாள் குளங்களில் தண்ணீர் நிரம்பி இருக்க நான் காணல் வேண்டும் நான் இயற்கையை நேசிப்பவன் அந்தப் பச்சைவளமெல்லாம் புதைக்கப்பட்டு இனிக் காணமுடியாது போய் விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன் இந்த மதில்களெல்லாம் நகரத்தை நாளும் உயர்த்தி நிரந்தரமாக்கலாம் ஆனால் எனக்குத் தேவை இதுதான்! அந்த இடம்
கிராமம்
இங்கே தான் நான் வாழ வேண்டும்.
நீஅேருளானந்தம் N 7

Page 13
ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு கதை
வெட்டப்பட்டு நிலத்தில் கிடக்கின்றது அந்த மரம் இன்னும் தன் கிளைக் கைகளை நீட்டிக் கொண்டிருக்கும் அந்த மரத்தின் நினைவு எனக்கு அழியவில்லை
நான் பார்க்கிறேன் இப்போது வெட்டப்பட்டுக் கிடக்கின்ற அதன் ஆயிரம் உடல்கள்ை
அந்த மரத்தின் சிறு சிறு கிளைச் சிறகுகளை ஒரு வெறிக் கழுகு பொறுக்குகிறது பக்கத்தில் போட்டு எரிப்பதற்கு
கற்கள் போன்ற அவனின் கண்களுக்கு பச்சை வளங்கள் பிடிப்பதில்லைப் போலும்
அந்த மரத்தின் பழங்களைத்தின்றுவிட்டு அதன் இரத்தத்தை குடித்துவிட்டான் அழிவான்
மரத்தின் பெரிய பாகம் லொறிக்குள்ளே உருண்டு போகிறது ஒரு விறகு காலைக்கு
8 /ஜேருடன் விடுங்கியநாளிலிருந்து

2ஜி 组 SS స్టీమ్తో
::::::ج
ఫ
廖 S8
ఘీజ్స్తో
எல்லாம் பார்த்து சவுக்கடி பட்டது போல மனம் நொந்தது நான் தான், வேறொருவருமங்கில்லை
அந்த மரம் நின்ற இடம் வெறிச்சோடித்துவிட்டது அதன் எரியும் வேர்களைமட்டும் பார்த்தபடி - என் மனம் புகையை மூச்சினாஸ் வெளிவிடுகிறது.
நீசிஅருளானந்தம் N 9

Page 14
ஏ, மனிதர்காள்
உங்கள் கைகளில் கோடாலிகளும் அரிவாள்களும் இருக்கும் விரை மரங்களைக் காப்பது கடினம் வசந்த காலத்திலே புதிதாய்த் தன்னை மரம் வளர்த்தெடுத்ததும் உங்கள் இதழ்களில் புன்னகையுடன் கண்கள் குரூரம் கொள்ளும் கொன்றொழிக்கும் உங்கள் இதயத்தை வைத்துக் கொண்டு நொந்து போக மரத்தை வெட்டுவீர்கள் துக்கம் தோய்ந்த இலைகள் விழும் மன்னின் மேலே இரத்தனெறி கொண்டாடும் நீங்கள் கண்ணிர் வடிக்கும்
பறவைகளை அங்கே காண்பதில்லை
பாரம் தன் தலையை இழந்ததைத் தெரியாது அழிந்துவிடும்
ஆனால் மரங்களை அழிக்கும் உனக்குத் தெரியவில்லை; நீஅழிப்பதெல்லாம் உன்னை நீ அழிக்கத்தானென்று
10 / ஆருடன்பிடுங்கியநாளிலிருந்து

அதிர்வு
அமைதியாக கடல் புன்னகைக்கிறது உல்லாச வாசிகள் காற்று வாங்கியபடி நடைபயிலுகிறார்கள்
நீலக் கடல் ஒரமெல்லாம் வலைக்குள் சிறைப்பட்ட மரக் கன்றுகள்
நடப்பட்ட கன்றுகளில் துளிர்! உதிர்ந்த பழுப்புகள்
வெக்கை மனலில்!
கதிரவன் உச்சி வானைப் பிடிக்கிறான் கடல் பொங்குகிறது கடற்கரையை
விழுங்குகிறது.
"தினமுரசு" է:քirturl 2Անճ
நீஅேருளானந்தம் \ 11

Page 15
அவற்றோடே நானும்
என்வீட்டு வளவில் மெலிந்தபடி நிற்கும் அந்த வேம்பு காலா காலமில்லாது இலையுதிர்க்கும் மெளனத்தை கம்பிவலை சன்னலுக்குள்நின்று மனத்துடிப்போடு பார்க்கிறேன்
வயிற்றுக்கு உணவின்றி வாடி விழுகிறதா இலைகள்? என்ற குழப்பத்தோடு, அது தளிர்க்கும் ஜீவிதம் பார்த்து மனம் தேடலில் அவிய என் உடலும் அவிழ்கிறது.
மொத்தமான அவதானிப்பில் என் புலன்களனைத்தும் தொடுவானுக் கடியில் சென்றதாய் ஒடுங்குகிறது.
கெடுகாலத்தை உடைத்துக் களிகொண்டு சின்னஞ் சிறு இலைத்தளிர்கள் மொட்டையாய் நிற்கும் கிளைகளில் சிறகு உலர்த்தி வரவேண்டும் அலையும் பட்டாம் பூச்சிகள் மலர்ச்சியின் உச்சத்தில் அதற்கு மேலாலும் பறத்தல் வேண்டும் என்ற நினைவுகளோடு பார்த்துப் பார்த்தே சில நாளைக் கழித்தேன்
12 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

அந்தத் தியானத்தினூடே
கிளையெங்கும் அதிலே
அரும்புகள் முகிழ்ந்தது மத்தாப்புகளின் மகிழ்ச்சியோடு என் கண்களில் சிக்கிக் கொண்ட இலைத்தளிர்களையெல்லாம் இப்போதைக்கு இன்னமுமாக என் விழிகளை அதில் பதியமிட்டு இலைகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
நீ.பி.அருளானந்தம் \, 13

Page 16
நிம்மதி
காலை நேரம் பளிங்குத் தொலைவில் முதிரை மரத்திலிருந்து மூச்செடுத்துப் பாடுகிறது சில் வண்டு விடுதலை தரும் சுகத்தோடு எழுவோம் என்று சாடும் இசைக் கீறல் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது அந்த இசையின் அசைவுகளில் கவிதை பிறந்து என் உயிர் மூச்சு முழக்கம் போடுகிறது இனிப் பயமில்லை என்றதாய் என் இதய மொட்டு விரிகிறது களிக்க வைக்கும் புதிய காற்று என் முகத்தைக் கழுவுகிறது தூரமாகவிருந்து கேட்கும் மணிஓசையில் மனமும் நிறைவுபெற சலனமும்
விலகிப் போகிறது.
14/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

வாழ்வின் தேன்
கொதிக்கும் மண் என் பாதம் உறிஞ்சவும் நடக்கிறேன் நடு வழியினில் இப்போது தெரிகிறது அந்த மலை
முன்னைய அந்த இனிப்பு நினைப்பு, சுவாசங்களிலும் பகிர்ந்து கொள்ள என் மூச்சிலும் மகிழ்கிறேன் ஒரு ரிஷி போல
அந்த மலையில் உள்ள பூச்சி புழுக்கள் ஆகிய கோடி உயிர்களில் ஒடிய நினைவு மனதில் நிறைய ஒருபோதும் அழிந்திடா பாறைகளின் மேல் ஏறி நின்று, இயற்கையிடம் உண்மைகளைப் பேசி, ஒரு நாள் மனிதனிடம் அணையும் மரணத்தையும் அறிந்து, கலங்கிக் கலைந்த கனவுகளிலும் ஆழ்ந்து,
நீசிஅருளானந்தம் N 15

Page 17
பின்பு
ஆடிக்குதித்து சூரிய உறவு பெற்று, காட்டுப் பூ செடிகளின் கஷ்டத்தையும் மனதில் கவிதையாக எழுதிக்கொண்டு, மாலையின் துக்கத்தையும் பார்த்துக் கொண்டு, அந்த மலையிலிருந்து
豬經裂災懿刻憑後 8ša ဒ္ဓိန္တိ၊ స్టోడ్డ
స్టీడెక్కన్స*్వ" #:
影
隆
தனிமையில்
அந்தமலைமேலிருந்து நானே எனக்குள் பேசிக் கொள்வதில் ஏதும் தடையே இல்லை அந்த இளைய வயதில்!
ஆயினும்
மனம் சலித்த வயோதிபத்திலோ WA
தூர இருந்து • :, பார்த்து ரசிக்க 恋 Ấ மட்டும்தான் 激 s முடிகிறது. بلجگمات
16 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து
 
 
 
 
 
 

வபரு வவளியில் நிலா
விடிய விடிய
மட்டும் வானில் ஒரு நட்சத்திரம் வைக்கோற் போரின்மேல் படுத்திருந்தவனுக்கு கதை சொல்லியது
வர்ணப்பூக்களைப்போல புதிது புதிதாய் ஒவ்வொரு கதைகளும் இருக்க அவன் காட்டின் மேல் எழுந்து நின்ற நிலவைப் பார்த்தான்
நிலவு
ஆயுதமில்லாத கண்களுடன் முகம் காட்ட கதையைப் பிடிக்காது கண்கொண்டு நிறைந்து விட்ட அந்த ஒளிக்குள்ளே அவன் கலந்தான்
உனக்குள் நானும் எனக்குள் நீயும் அடங்கும் கதை ஏதுமுண்டோ என்றே அவன் நிலவைக் கேட்டான்
பொழுது பிறக்கும் போது என் வாழ்வு பறிபோய் விடும்
நீசிஅருளானந்தம் \ 17

Page 18
அதற்குள் உனக்காய் நான் ஒளியை உயிராய்ச் சுரந்து தருகிறேன்
pë அதற்குள் அடங்கி சமாதானம் கொள் என்றது
அழகான புன்சிரிப்போடு அந்த நிலா
18 /வூேருடன் பிடுங்கியநாளிலிருந்து
 

அழியத் தொடங்குகிறதே
மிருகங்களையும் காட்டையும் தின்றிடும் பசியில் இந்த மனிதர்கள்
வயல் நிலங்கள் இல்லாது போய் காலூன்றும் இடமெல்லாம் இப்போ
மிதிவெடிகள். இரக்கமுள்ள மனிதர்கள் இரங்குகின்றனர் அழுகின்றனர் இழப்பை உணர்கின்றனர்.
சொர்க்கமான பூமியை குதறி எறியும் மிருகத்தனத்தை சினேகச் செழுமையுடன் சொன்னாலும் எவர்க்கும் அது காதில் ஏறவில்லை
உயிரளிக்கும் பச்சைப் பசுமையை அழித்திட்டால் அலைந்திடுமே எங்கள் வாழ்வு
கம்பளிப் போர்வையான பசுமையை அழித்து
பூமியை
சூடு பகர எழுப்பி அது தரும் அபாயம் பற்றி எச்சரிக்கிறேன் நான்! நிறுத்து உன் அழிவுச் செயலை
நீ.பி.அருளானந்தம் N 19

Page 19
அலைகளின் அலைவு
கடல் அலைகளுக்கு
ஆகாயம் முழுவதும் சொந்தம்
இரவிலும் உறங்காமல் பகலிலும் களைக்காமல் அதன் பயணம் தொடர்கிறது
இரவில் பரிசுத்தமான நிலவொளியைச் சுமந்து காலையில் சூரிய ஒளிக்கும் காத்திருக்கிறது உபபுக கடல
அலை அசையும் போது பளபளப்பில் மின்னும் கடல் வெண்நிற மேகத்தையும் வியப்புற வைக்கிறது
அலைகளில் இவ்வளவுதான் பார்க்க முடியுமா? அம்மணக் கோலத்துடன் கடல் நீரில் சுதந்திரமாய் சவாரிசெய்கிறதே k அலையோடு எந்தன் a மன அலைகள்
"தினமுரசுεριτή ά 2008
20 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து
 

ஆகாத நாள்
இடம் பெயர் கவலைகளில் ஒரு குரலில் அழுகிறார்கள் இவர்களின்
நெருப்புப் பெருமூச்சு புயலானதோ? காற்றைக் கூடத் தடுக்கும் மரங்கள் அனாதைப் பிணமாய் வீதியில் கிடக்க நிழல் வளர்த்தவர்க்கு மனத்தில் சோகம் ஆகாயக் கூரையின் கீழ் இரவுக் குயில்களுக்கோ தங்க இடமில்லை முறிந்த சிறகுகள் பறக்க முடியாது நடு நடுங்குகின்றன முகம் பார்க்கும் ஆகாய வெளி மறுபடியும்
பெருமூச் செறிந்தது
பிடிவாதமாய்
மழை வருகிறது.
-மித்திரன் வாரமலர்ஆகஸ்ட் 2007
நீசிஅருளானந்தம் \ 21

Page 20
புதிய உலகம்
கோயில் மணி ஓசையோடு காலையில் குருவிச் சத்தங்கள் கேட்கவேண்டும் மாலையில் சூரிய ஒளி
என் மேல் பட வேண்டும்
எப்பொழுதும் பூக்கள் சொரிகிறதை நான் பார்க்க வேண்டும் சுத்தமான காற்று வீச சுகந்தமாக அநுபவித்து நான் அதை சுவாசிக்கவேண்டும் எங்கும் மரநிழல்களாய் பூமியும் குளுமை பெறட்டும் எனையும் குளிர்த்தியாக்கட்டும்
தாமரைக் குளத்தினிலே மலர்த் தண்டாக நானும் கிடப்பேன் மலர்களோடு நானும் மலராவேன் இந்த உலகமே ஏதேன் தோட்டமாய் மறுபடியும் மாறினால் சிங்கம் புலி கரடியெல்லாம் எங்கள் நண்பர்களாகிடுவர்
அந்தப் புதியவுலகம் எத்துணையினிமை அங்கே விரோதமில்லைப் பகையுமில்லை பழிவாங்கலேதுமில்லை சுற்றுச் சூழல் மாசும் சிறிதேனுமில்லை
22 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

எங்குமே பசுமை யாவும் இனிமை மனித மனங்களிலெல்லாம்
அன்பு மலர்கள் பூத்துக்கிடக்கும்
யுத்தமென்பதில்லை எவ்விதச் சத்தமுமில்லை
இயற்கையிலெல்லாம் இனிமை இசைந்து கிடக்கும் அந்த இயற்கையுடன் இயற்கையாய் நானும் கலந்து விடுவேன்.
நீசிஅருளானந்தம் \ 23

Page 21
5éu
உனது நெற்றிக்கண்ணால் உலகில் நீசரை எரிப்பதற்கு
பதில் காட்டை எரித்தாயே எங்கள் கூடும் குஞ்சும் தணலில் எரிந்து கருகிட யாருக்கு வஞ்சனை செய்தோம் இனிமேல்
நாங்களும் அகதிகள்தானா
-65
1998
24 M வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

սանմ%
விடியற்பொழுது வவுனியாவில் நெஞ்சு நடுங்க எங்கிருந்தோ குண்டு வெடிக்கும் சப்தம் கேட்கிறது மனம் விட்டு நிம்மதிபறக்கிறது பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டேன் பீதி எழுதிய கண்களுடன் விரல் நடுங்க நிற்கிறாள் எண்மனைவி இரவும் பகலும் பகலும் இரவும் இதே சனியன்தான் என்று மூச்சுவிட்டுச் சபிக்கிறாள் பாட்டி வீதியில் உறுமியவாறு ஆமிடிராக் போகிறது தூரத்தில் எங்கோ ஓர் இடத்தில் இழவுப் பிலாக்கணம் இழைகிறதாமென்று ஒரு சிறுகும்பல் ஒடிக் கொண்டிருக்கிறது நீபத்திரம் தம்பி வெளியால இப்ப போறது என்று அம்மா சொல்கிறாள் அவள் கண்களில் மங்கிய இரண்டு அகல் விளக்குகள்.
தினக்குரல்" ஏப்ரல் 2007
நீசிஅருளானந்தம் Ν. 25

Page 22
வாசகங்கள்
கல்லறைகள் நிரம்பிவிடுகின்றன ஆனால் பாதாளம் நிரம்பியாவதில்லை அது தன்வாயை அளவுகடந்து பிளந்துள்ளது பூமி காக்கும் சவப் பெட்டிகளிலே மனித குலத்தில் பெரும்பாலோர் மரணத்தில் துயில்கிறார்கள்
ஏற்கனவே விழுங்கிவிட்டிருந்தாலும் ஏராளமான ஆட்கள் வரவேண்டுமென்று கல்லறைகள் ஏங்குகின்றன புதைக்கப்படுகிற கல்லறைகளிலே வெள்ளைப் பட்டிப்பூக்கள் மழைத்துளியால் உயிர்க்கின்றன அழுகிக் கொண்டிருக்கும் உடல்களுக்கு வார்த்தைகள் பயன்படுவதேயில்லை.
26 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

சாத்தானின் நீண்ட யுத்தம்
இந்த நாட்களில் எங்கள் ஒவ்வொரு நிமிடமும் விஷங்களைக் கொண்டிருந்தன செல்கள் விழும் சத்தம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தன வெளிச்சம் வந்தும் வெளியே வெளிக்கிடாமல் வீட்டுக்குள் சுருண்டு கொண்டு கிடந்தோம் கதவுகள் அதிர்ந்து திறந்த கோல்களும் தங்கள் பாட்டிலேயே பூட்டிக் கொண்டன மூக்குப்புழைகளை மூடுபனிபோல
புகை வந்து தாக்கிக் கொண்டிருந்தது கரிப்புகை எங்கள் சுவாசங்களை நிறைத்துவிட்டு நாங்கள் சமைத்துவைத்த உணவுகளையும் தேடுகிறது நாங்கள் சாப்பிடுகின்ற வேளையில் நாக்கு நஞ்சு ருசியைக் காட்டுகிறது
முடிவில்லாத இக் கொடிய யுத்தத்தினோடே அப்படியே ஒரு விதமாக எங்களது வாழ்க்கைப் பயணமும் சென்ற வாறே இருக்கிறது
-வீரகேசரி. 0.02.2008
நீ5.அருளானந்தம் \ 27

Page 23
எமது மன்னில்
நண்பனே
அங்கே நீ அடையாளம் காட்டும் வீடு உனக்கு இல்லை உன் வீட்டிலிருந்து ஒரு தொலைதுாரம் மட்டும் எல்லாமே மண்ணோடு மண்ணாகிவிட்டன
உழும் நிலத்தில்
மிதிவெடிகள் பரவியுள்ளன காற்று வெளிக்கு அப்பால் நின்ற உயரமான பனைமரங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டன
ஒரு சண்டையிலிருந்து இன்னொரு சண்டை முடிவில்லாமல் அங்கு நடைபெறுகிறது வானத்திலே பயணித்துத்தான் நீ அங்கெல்லாம் போய்ச் சேரலாம்
அன்றெல்லாம் அங்கு நீ வாழ்ந்த காலத்தில் வாழ்வு ஒரு பழச்சோலையாக உனக்கு இருந்திருக்கலாம் உன் கடும் உழைப்பில் சோளப் பயிர்போல தழைத்தோங்கியதாய் நீவாழ்ந்திருக்கலாம்
ஆனாலும் உன்னுடன் ஒன்று கூடி
28 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

விதைகளைத் தூவிய விவசாயிகளில் அனேகர் இப்போ அங்கில்லை
தங்கள் நெற்றி வியர்வையை நிலத்துக்கு நீராக்கிய அவர்கள் அந்த மண்ணுக்கே பிற்பாடு உரமாகியும் விட்டார்கள்
நீசிஅருளானந்தம் Y 29

Page 24
எனக்கான விடு
ஒரு காலம்
சின்னவயதிலே என் அன்னையின் மடிமீது தலைசாய்த்து நான் தூங்கும் போதெல்லாம் என் மண்ணின் மணத்தையும் நுகர்ந்து கொண்டே நான் தூங்கிப்போனேன்
எங்கள் வீட்டு முற்றத்தில் சிவப்புப் பூப்பூக்கும் செம்பரத்தை தன் பூ இதழ்களால் மெத்தென வருடி என்னை துயிலுற வைப்பது போல அக் கனவுகளோடு வாழ்ந்ததின் ஒரு காலமுண்டு
இப்போதோ ஒரு தூர தேசமதில் ஊரோடுள்ளதும் உறவுகள் அற்றுப்போய் மகிழ்ச்சியேயில்லா முகத்துடன் சிறகு முறிந்திட்ட பறவைபோல நான் வேதனையடைகிறேன்
என் நினைவினில் திரும்பத்திரும்ப வளையவரும் நான் பிறந்த வீடு அங்கு நாம் வாழ்ந்த அறிகுறிகளின்றி அழிக்கப்பட்டதாய் விட்டதாம் என்ற ஒரு சேதி என் செவிகளில் நிறைக்கப்பட்டபோது என் ஆத்மாவும் மரித்துப் போய் அதற்குள்ளே நானும் புதையுண்டது போலவே வாழ்வின் நம்பிக்கை வேரெல்லாம் என்னிலிருந்து அறுந்தது.
30 /வேருடன் பிடுல்கியநாளிலிருந்து

கடந்து போதல்
பிறந்த மண்ணில் அந்த வாசனையுடன் துயிலெழல் போலிருக்கிறதா இடம் பெயர்ந்த பிறகு இங்கே
பனைகளின் பயனை நினைக்கையில் ஆஹா! அற்புதம் அற்புதம் என்று, இனி எவரும் கதைகளில்தான் சொல்லவேண்டும் அவைகளைக் கனவிலும் காண முடியுமா? குதிரைக் கொம்புகளாகிவிட்டனவா? இது நமது இழப்பா? அவைகள் அசையும் நினைவும் எங்களைவிட்டு பிரிந்து போயினவா?
நீங்கள் பாடிகொண்டிருக்கும்போது இலையும் மொட்டும் கொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் வேம்பு உங்கள் பிரிவுக்குப்பின் துஞ்சுதலாய் நிற்கிறதாம்! வசந்தத்திலும் அவை பூக்கவில்லையாம்! இப்போதும் உருகியுருகி அவை வளரவுமில்லையாம்! அது தன் சந்தோஷக் குதிப்பை இழந்து கண் மலரவிருக்கும் மொட்டுக்களையும் நிலத்தில் உதிர்த்துக்கொண்டே சோகத்தில் நிற்கின்றதாம்! விதைகளையும் தடிகளையும் வேர்களையும் நிலத்திலுான்றி
நீ.பி.அருளானந்தம் \ 31

Page 25
நம்பிக்கையுடன் நாம்வளர்த்தோம் இது பனை, இதுமா, இது தென்னையென எல்லாமே அவை வளர்ந்தனவே! விளைந்து கிடப்பதும்
பழுத்துக் கிடப்பதும் உண்ணுவதற்கு எமக்கே உரிமையல்லவா? நிச்சயம் எம் மண்ணிலே இருந்து வாழ நாம் திரும்பவும் அங்கே சென்றே தீர்வோம்.
32 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

கற்சிலையாக
தூய பனிபோல ஒரு குதிரை போல ஒய்வு எதுவுமின்றி தொடராக ஒடுகிறதே மேகம் அதனிடம் நடுக்கம் ஏதும் இல்லை
ஆனால் யுத்தத்தால் இந்த மண் தேம்பி அழுகிறது மனித இரத்தத்தால் தான் பற்றியும் எரிகிறதாக சொல்கிறது எனக்கு
இரத்த நாற்றத்தினூடே கண்ணிர் விட்டு அழும் மக்களை நான் கடந்து போகிறேன்
இறந்தவர்களுக்காய் நான் எழுதிய இரங்கற் கவிதைகள் ஈமச் சடங்குகளிலே கண்ணிர் சிந்துகின்றன
இந்த உலகில் உயிருடன் வாழ்ந்தும் ஒரு இறந்த மனிதனாக என் ஆன்மா வெறுப்படைந்து வாழ்கிறது இப்போது
நீ.பி.அருளானந்தம் \ 33

Page 26
யுத்தம் பிறந்த நாளிலிருந்து
மலர்க் காட்சிகளை பார்க்கப் போகிறவர்களைவிட மரணக் காட்சியை பார்க்கப் போகிறவர்கள்தான் இன்று நாட்டிலே அதிகம்
மண்ணில் போட்ட விதை வெடித்துப் பயிராவதற்குள் ஏராளம் குண்டுகளிங்கே வெடித்து விடுகின்றன
பிள்ளைபெற்ற தாய்க்கு கஞ்சிகுடிக்கவும் வழியில்லை அவள் மடியில் பால் சப்பும் பசியோடு குழந்தை அழுகிறது வறுமை எல்லாவிடத்திலும் பேய்போல் தாண்டவமாடுகிறது
சருகாய்ப்போன அகதிகளை தலைவருட சிலர் வருகிறார்கள் அவர்கள் சிங்கப்பல்தெரிய சிரிக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளியொலிபரப்பப்படுகின்றன.
34 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

&வருடன் பிடுங்கிய நாளிலிருந்து
துடைத்தகற்ற முடியாத மனவேதனை எங்களுக்கு. எம் மண்ணைவிட்டு காற்றைப் போலல்லவா
வெளியேறினோம்.
பல வருடங்களாய் இன்று அதற்கு வெளியே எங்கள் உடலென்றாலும், மனதில் ஓங்கிநிற்கிறது நாம் பிறந்த மண்ணின் நினைவுகள்.
அவை கத்தியால் கீறி அறுக்கும் துன்பமாய் மனதை வாட்ட, சதைக்குள் இதயம் நடுங்கி வீங்கிப்புடைக்கின்ற தாய்
இருக்கிறது.
அகதிகளாய் இன்று சாலை நடைபாதையிலும் தாழ்வாரங்களிலும் தெருநாய்கள் போலே எல்லையில்லா தொரு பாழாகிவிட்டது வாழ்வு
எங்களது நனவில் உயிரற்ற பார்வையில் குந்தியிருக்கும் இடத்திலிருந்து முன்னைய வாழ்விடத்தை கூடுகட்டுகிறோம். நெரிசலான
நீ.பி.அருளானந்தம் Ν 35

Page 27
இடங்களிலெல்லாம் இடையில்கூட படுத்துறங்க இடமில்லை எங்களுக்கு.
எல்லா விதத்திலும் சருகிலை போலவே எரிந்து கருகிறோம் நாம்.
உயிரில்லாதது போல் அசையும் தாய்மார்களின் மடிகளிலிருந்து
பிள்ளைகள் பாலுக்காக அழும்
சத்தங்கள் கேட்கின்றன
நல்ல உணவு உண்ண எங்களுக்கோ வசதியில்லை நிழலுமில்லை வெளிச்சமுமில்லை தேற்றுதலாய்
ஒருவரதும் வார்த்தைகளுமில்லை நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மண்ணுக்குள்ளே அடங்குகிறோம் பழைய நினைவுகளோடு.
36 /வேருடன் பிடுல்கியநாளிலிருந்து
 

யுத்தம் தந்த துன்பம்
எனக்குள்ளேயும் நடக்கிறது யுத்தம் எனக்கு வெளியாலும் நடக்கிறது யுத்தம் இறைவனது சக்திக்கும் மீறிவிட்டது யுத்தம் வார்த்தைகளில் அடக்க முடியாத கொடுமையானதும் யுத்தம் வாய் திறக்கவே முடியாது செய்கிறது யுத்தம் அன்பை அழித்து இருக்கிறது யுத்தம் கடவுள் எங்கே என்று கேட்க வைத்ததும் இந்த யுத்தம் மனிதர்களின் மூர்க்கத்தால் எழுவது இந்த யுத்தம் மனிதனை மனிதன் அடக்கி ஆள நினைப்பதாலும் இந்த யுத்தம் இந்த யுத்தத்தால் எப்போதுமே அழியாததாய்த்தான் துன்பம் சமாதானம் தேவையென நினைப்பவர்க்கு அதனால் எவ்வளவுதூரம் அதன் முடிவுக்காலம்.
- நீ.5.அருளானந்தம் \ 37

Page 28
நட்சத்திரத் தொலைவில்
நான் சுதந்திரமாக இருந்து வாழ்ந்த நாட்களெல்லாம் ஒளிநிறைந்தவை அவைகளெல்லாம் இன்று ஒரு போதும் திரும்பிவரமுடியாதவாறு இன்று அகன்று போயிற்று இரவின் இருளை பழக்கிவிட்டது எனக்கு அடிமை வாழ்வு புல்நுனி அள்வு கூட அதன் பொருட்டு நிம்மதியோ எனக்கில்லை எந்தக் கவிதையை எடுத்துப்படித்தாலும் அதில் சூரிய ஒளியை நான் காணவில்லை என் உடலில் மின்னிய எல்லா நட்சத்திரத்தின் அழகும் உதிர்ந்து இமாலயப்பனி உறைகிறது. இயற்கை கொளுத்தப்பட்ட வெளிச்சங்களுடன் சேர்ந்து மனித மரண ஒலங்கள் ஒவ்வொரு நாளும் என் காதில் விழுகிறது அன்பும் கருணையும் எங்கு நான் சென்றாலும் உலர்ந்த இலைகளாக என் கால்களில் மிதிபடுகின்றன. எல்லா மனிதத்தலைகளிலும் இன்று பெரிய பெரிய கொம்புகள்! ஒரு விடிவெள்ளி பார்க்க ஒவ்வொரு நாள் புலர்தலிலும் வானத்தைப் பார்த்தபடி நான் ஏங்குகிறேன்.
தினக்குரல்
Ꭴ2.Ꭴ2.2008
38 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

நமது கண்ணீர் முடிந்துவிட்டது
கொடிய நரகத்திலே எம்மைத் தவிக்கவிடுகிற யுத்தமே, வேதனையே கலக்கமே, ரோதனைத் தளர்ச்சியே உன் நாட்களைத் தாண்டி எப்போ நாம் இனி நிம்மதியுறுவோம் சுகமாக உறங்குவோம் நாம் பிறந்த மண்ணில் ஒரு புல்குடிசையிலென்றாலும் வாழ்வதெமக்கு நிறைவல்லவா? அந்த இனிய வாழ்வையெல்லாம் புல்போல நினைத்து நீயே அரிவாள் கொண்டு அறுத்தெடுத்தாய் எம்மை அண்டை நாடுகளுக்கு முடங்களாக்கித் துரத்தினாய் போர்ப் பிசாசே நீஅஸ்தமிக்கமாட்டாத கர்வத்திலே எம்மண்ணில்நின்று கொண்டு அட்டகாசம் புரிகிறாய் இன்று எவரெஸ்ட் வரை எதிரொலிக்கிறது உன் மூர்க்கமான சண்டைச்சப்தம் ஆனால் அகதியாகிவிட்ட நாங்களோ, புதைந்த காலத்தை நினைத்தபடி கவலையில் வாழ்கிறோம் எனினும் நாளைய விடிதலின் வெளிச்சம் எம் கண்களில் மின்னிடுகிறது அந்த நம்பிக்கையே மனக் கவலைகளை மறக்கடித்து எம்மை மகிழ்ச்சிக்குத் திருப்புகிறது.
நீ.பி.அருளானந்தம் \ 39

Page 29
அதிர்ச்சி
வீதியில் குண்டுவெடித்ததும் எல்லாமே சுக்குநூறாகி நாசமாகின.
பலபேர்
இடியை நிகர்க்கும் வெடியுடன் இறந்தார்கள். ஆனாலும் யாருக்குத் தெரியும் நான் அதிலிருந்துதப்புவேனென்று! இதன் பிறகு அந்தப் பயங்கரக்கதையை யாராவது என்னிடம் கேட்டால், அது எப்படி நடந்தது என்று சொல்ல முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன் நான்! என் காதைக்கிழித்தெறிந்தபடி கேட்ட அந்தக் குண்டுச்சத்தம், சாதாரண கைதட்டலைக்கூட இன்று கேட்க முடியாத அளவுக்குச் செய்துவிட்டது. அன்றைய நாள் முழுவதுமே என் தலை சுற்றியது. செய்திகள் வந்தன. அன்று இறந்தவர்களில்
ஒருவன் என் ரெத்தபந்தங்களில் ஒருவன்
என்றும் அறிந்தேன். அதனால் நெஞ்சில் கண்ணிரும் கலந்து விட்டது. இதன் பிறகு தெருக்களிலும் சந்துகளிலும் குண்டுவெடிக்கின்ற ஓசைதான் என் பிரமையில்.
40 / வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

தெளிவு
வீட்டுத் திண்ணையில் இருந்தேன் அதிர அதிர செல்லடிச் சத்தம் கேட்க எதிரே உதிருகிறது மாவிலைகள் வானில் வேகவேகமாயொரு விமானம் சுற்றிச் சுற்றி அதனடிவயிற்றிலிருந்து குண்டை எங்கோ அவிழ்த்துப் போட்டது எனக்குப் பீதி தோன்றியது மூளை குழப்பமாக இருந்தது ஆச்சிக்குச் செவிடு குலுங்கும் சலங்கையாக பாக்குரலில் தாம்பூலம் இடிக்கிறார் பயம் உள்ள முகங்களுடன் என்பிள்ளைகள் வீட்டை விட்டுவிட்டு பதுங்கு குழிக்குப் போக ஒடுகிறார்கள் ஒரு செல் என் வீட்டுப்பக்கம் விழுந்து பூமி குலுங்கிற்று ஆனால் ஆகாயம் குலுங்கவில்லை அது எப்போதும் போல அமைதி அமைதி
() ()() (DC) ()() () ()() ()() ()() (OC) ()() ()() ()() (DC) ()() ()() ()() (OC)
பறவைகளின் இனத்தைத் தேடுகிறேன் என்னை நோக்கி பட்டமரக் கிளிையில் புலம்பிக் கொண்டே இருந்தது தன்னைப் பற்றி
ஒரு மீன் கொத்தி
நீபி.அருளானந்தம் M 41

Page 30
அமைதியைத்தேடி
சன்னலில் விழுந்து பரவிய மஞ்சள் நிற சூரிய ஒளியை பார்த்தபடி நான் தனித்திருக்கிறேன்
அந்த ஒளி என் இதயத்துள்ளும் கோலத்தை இட்டுக்கொண்டு பழைய நினைவுகளை ஊசியையும் நூலையும்போல 3(uplul-g(upullதைத்துக் கொண்டிருந்தது என்னோடு பழகிய விழிகளும் பால் போன்ற முகங்களும் புன்னகை சிந்தும் போது மின்னலாய் ஒருதிரை நெளிந்தபடி வந்து மறைக்கிறது
அக்கா தம்பி
அப்பா அம்மா என்று ஒடும் நினைவுகளுடன் செத்துப் போன என் ஆச்சியும் கடைசிமுகமாக வந்து எனக்குள்ளே பிரவேசிக்க அனுமதி கேட்கின்றா
போரில் நொறுங்கும் சத்தம் கூடிக்கொண்டிருக்கிறது மன ஒசையாய் ஓ! வென்று கத்துகிறேன்
42 /வேருடன்பிடுங்கியநாளிலிருந்து

என் மன அதிர்வில் பாறைகளும் சிதறுகின்றன கயிறறுந்து நான் விடைபெறுகிறேன் மீட்சியடைய
நீ.பி.அருளானந்தம் N 43

Page 31
இடம் வபயர்வு
காலங்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன நாங்கள் சலனத்துடன் படுத்துக் கிடக்கிறோம்
பகலின் திசைகள் இருள நிம்மதியை குழப்பத்தோடு நித்திரையில் தேடுகிறோம்
நம் மூச்சுக் காற்றில் நிறைவேறா
ஆசைகளே கரைந்து கொண்டிருக்கின்றன
கனவுகளில் கடந்த காலத்தைப் போர்த்தி உறங்குகின்றோம் நாம் காலனின் ஏலம் தொடங்கி விட்டது ஒரு தரம்
இரண்டு தரம்
மூன்று தரம்
44 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

கன்பூக்க
இந்த மண்ணில் ஒன்றாய்த் தவழ்ந்து விளையாடிய ஒரு தாயின் குழந்தைகள் போன்றவர்களே நாங்கள் ஏன் எமக்கு இந்த யுத்த நெருப்பு தலைமேல் ஏன் இந்தச் சுடுகாடு எச்சிலை ஏன் துப்புகிறோம் பிரச்சனைகளுக்கு ஏன்நூல் நூற்கிறோம்
அன்றைய நாளிலெல்லாம் பலாமரத்து நிழலின் கீழ் காலங்கள் பறந்தோட கதைகள் பேசி மகிழ்ந்தோமே முன்னைய வசந்தம் எப்போ இனிச் சூடுமோ இந்த யுத்த நெருப்பு அணையும் நாள் எப்போ வருமோ எத்தனையோ வசந்தங்கள் நிம்மதியற்று உதிர்கின்றன இந்த இருட் காலம் மறைந்து பொற்காலம் எப்போது வருமோ அனைவரும் மனிதரென்ற சமநீதி இனிமேல் தழைக்குமோ
நீ.பி.அருளானந்தம் \ 45

Page 32
இருளிலும் நிழல்
புல்லின் வேர்போல பெருகிவிட்டார்கள் ஆள் கடத்தல் காரர்கள் மலைப்பாம்பு இறுகி இறுகி நெருக்குவது மாதிரி பய உணர்வுகள் தைத்துக் கொண்டிருக்க உலாவுகின்றனர் தமிழ்ப்பேசும் மக்கள்
எப்போதும் தனிமையிலே நீண்ட மெளனத்தில் ஒரு பறவையின் குரல் அவன் காதில் கேட்க இவை யாவையும் கவிதையாய் அவன் எழுதிக் கொண்டிருக்கிறான்
இந்தக்துக்கம் அவன் மனதைப் பற்றிச் சுமக்கையில் எழுதும் பேனா பிடித்த உறுதியும் போயின
மாடிப்படிகளில் காலடியோசை நெஞ்சு படபடத்து பறையடிப்பாய் அடிக்கிறது அவனுக்கு இன்னமும் கொதிநீர் ஊற்றியது போல நெருப்பான சூடு
ஆனாலும், கோப்பி வாசனையோடு அவன் மனைவிதான் அறைக்குள்ளே அவ்வேளையிலே வந்தாள் இருந்தபயம் உடனே அவனுக்கு இறங்கிப் போனது
46 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

துரதிர்ஷ்டப்பூ
உன்னுடைய புஷ்பங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் பிடுங்க விரும்பின மலர்களைச் சொன்னார்கள் யாருக்கும் வேதனையுண்டாக்க விரும்புகிறாயா? என்று என்னைக் கேட்டார்கள் இல்லை என்றேன் நான் அவர்கள் மலர்களை விட்டு விட்டார்கள் அவைகள் வெகு பிரகாசமாய் இருந்தன அருகே உள்ள கிணற்றடிக்கு என்னைக் கொண்டு போனார்கள் நான் கிணற்றை எட்டிப்பார்த்தேன் தண்ணின் மேலே பூக்கள் மிதப்பது தெரிந்தது அந்தப்பூக்களில் ஒன்று என் தோட்டத்துப்பூ பயத்தில் நான் அலறினேன் இந்தத் துயரத்திலிருந்து என்னை விடுவியுங்கள் என்றேன் அவர்கள் வேறோர் உலகத்துக்கு என்னைக் கூட்டிப் போனார்கள்
"தினக்குரல்" G3D -2007
நீபி.அருளானந்தம் N 47

Page 33
இறந்து போகாதந்த நினைவு
காற்று மந்தகதியாக சலித்தாலும்
கடலைகள்
உயர்கின்றன காற்று சற்று வேகமாக சலிக்கையிலும் அலை மலர்கள் வேகமாக எழும்புகின்றன
கடற்கரையில் மினுமினுப்பில்லாத சொறிப்பிடித்த நாய்கள் ஒரு காகம் அந்தரத்தில் பறந்து வந்து
மனுசரின் இருக்கையிலே இருக்கிறது
தாழை மரங்கள் உண்டு அதில் மென்மையாகவும் வெண்மையாகவும்
9Բ(5 Լե காணப்படுகிறது
அதிலிருந்து வரும் சுகந்தம் எவ்வளவு சுகம் ஆனாலும் பிடுங்கி எனக்குத்தர ஆளில்லை
நேரம் கடந்து செல்கிறது நீலச் சட்டை கறுத்தப் பாவாடையுடன்
ஒருத்தி ஒடுகிறாள்
48 / வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

அவளின் கோலம் ஏதோ ஒரு வண்ணத்துப் பூச்சி பறப்பதைப் போல பார்க்கவும் வசீகரமாயிருக்கிறது
அவளைக் கண்டுமயங்கி ஒரு துளசிச்செடிபோல நான் துளிர்க்கிறேன் பார்வையை உயர்த்திக்கொண்டு சூரியனைப் பார்க்கிறேன்
பொடிப்பறவையும் வானில் பறந்து செல்கிறது ஜம் மென்று
பறந்து செல்லும் அந்தப் பறவையைப் பார்த்ததோடு என் மனம் என் சொந்த மண்ணை நினைக்கிறது.
நீசிஅருளானந்தம் \ 49

Page 34
இங்கே வ8ரன் இனி
கடலில் இருந்து அலைகள் வந்து அடிக்கத்தான் செய்யும்
எந்த மனதில்தான் துயரமில்லை நினைத்துப்பார்?
எனக்குச் சொல் நீ கேட்கவொரு கதையை, LD600r60)6007 அரித்துச் செல்லும்
அலைகளை எப்படி ஜெயிக்க முடியும்? எனறான அவன்
அது எல்லாம் இருக்கட்டும் எப்படியும் நான் சொந்த ஊருக்கு ஒருநாள் போய் விடுவேன்
ஒ
9t it its போனால்தான் என் உயிர் பிழைக்கும் என்னுடைய
50 / வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

ஆசைகள்
இந்த மணலைப்போல பொடிப்பொடியாய் போகாது
ஒ, இன்னும் போகவில்லையா நீ இந்தக்
கட்டாந் தரையிலிருந்து ராத்திரியாகி
விட்டதே?
அதுதான் என் பெட்டி படுக்கைகளைக் கட்டிவைக்கிறேன் இன்று இரவு ரயிலேறி பயணம்
திரும்பிவருவோயோ அந்தக் கடற்கரைக்கு?
அது என்னவோ எனக்கே நிச்சயமில்லை என்ன ஏதேதோ சொல்கிறாய் இந்த இடம் சொகுசான இடம் காசிருந்தால் இங்கு சொகுசுண்டு
நீசிஅருளானந்தம் \ 51

Page 35
சும்மா வீசி எறியாதே உன் சொற்களை
அவை உண்டுதான் நீ சொல்வதெல்லாம் இல்லை
என்கவில்லை இங்கே வந்தது போல் எல்லாமே போய்விடும் தலை காலாக நடந்து இருபது ஆண்டுகள் இங்கே கடந்தும் என்ன கண்டேன் நான் நான் போகிறேன் சொந்த ஊருக்கு
தினக்குரல்03 Guigaunf? 2008
52 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

மழை நாளில் ஒரு சவ ஊர்வலம்
மேகத்தின் கண்கள் கண்ணிர் விடுகின்றன
வீதி முழுவதும் நீண்டு கொண்டிருக்க, சுமை பொறாமல் விரையும் சுடுகாட்டுக்கு இவ்வளவு சீக்கிரம் போக வேண்டும்
அழுது கொண்டு சிறு பொறிகளை பெருமூச்செறிகிறது நெருப்புச் சட்டி அழுகின்றதுக்கம் செவியுறும் போது, பாடை தூக்கிகளுக்கு எவ்வளவு பாரம்?
வீட்டுக்காரன் போய்விட்ட பிறகு மட்கிப் போயிருக்கும் அந்தக் கல்வீடு, சொந்தங்கள் யாருமே தொலைவிலிருந்து வரவில்லை நிம்மதியற்ற சிதறலாய் இந்த மழை
அப்பப்பா.
எவ்வளவு தொலைவில் இருக்கிறது எப்போதும் இருண்டு கொண்டிருக்கும் அந்தச் சுடுகாடு.
"தினமுரசுசெப்டம்பர் 2007
நீசிஅருளானந்தம் Ν 53

Page 36
έπτωlυ மீதான Qalmյնկ
சொல்லப் போனால் என்னை விட என்னிலே உருவான என் நிழலேதான் உண்மையானது என்னைப் போல அதனிடம் பொய் இல்லை கண் பார்வையின்றி என்னைத் தொடரும் என் நிழலுடன் சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமன இடையிலும் அதைக் கண்டு நான் பேசிக் கொள்கிறேன் சில வேளைகளில் நான் ஒளியைப் பார்த்து முன்னால் நடக்கும்போது அதுவும் என் பின்னால் வந்து கொண்டு என்னை மெளனமாக விழுங்கிக் கொண்டிருக்கும் நான் திரும்பிப் பார்ப்பேன் இது என்ன என்னைத் தொடரும் ஒரு அவல நிழல் அருவருப்பு என்று நினைத்து என் கால்களால் அதை மிதித்து சிதைக்கப் பார்ப்பேன் ஆனாலும்
எந்த எட்டு
என் கால்களால்
54 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

எடுத்து முன்வைத்தும் கனத்த மண்ணில் படர்ந்து இருக்கும் என் நிழல் தலையை நசித்து இல்லாமல் செய்ய என்னால் முடியவில்லை நிழல்,
எனக்குள்ளேயே அடங்கிப் போய் இருந்திருக்கலாம் அது ஏன்
என்னை விட்டு வெளிப்பட்டு என்னை அளந்து கொண்டு ஒரு ரகசிய காவலனாய் பின் தொடர்கிறது? என்னுடன் ஒன்றாகி என்னை ஒரு நாள் நிர்வாணமாக்கி என் நிஜத்தை தொலைத்துவிட முயல்கிறதா
நிழல்? நடந்து கொண்டிருக்கிறேன் நான்.
*தினமுரசு" நவம்பர் 2007
நீ.பி.அருளானந்தம் Ν. 55

Page 37
&யாகம் சுகம்
நட்சத்திர வானின் எல்லையைக் கடந்து வேர் கொள்கிறது என் தியானம்
வானத்துக்குப் பின் உள்ள எல்லையை கடந்தது போல மெய்மறந்த நிலைக்குப் போகையில் என் சுவாசம் பாடுவதைப் போல
இருக்கிறது
சுவாச ஓட்டம் பந்தயத்திலே எப்போதுமே எனக்கொரு சந்தோஷம்
அந்த மகிழ்ச்சியிலே மூக்கிலே நான் ஏந்தித்திரியும்
G-6) FOI ஒம் என்று ஒலிக்கும் ஒரு நிலையைப் படைக்கிறது
ஒவ்வொரு முறையும் உள்ளே காற்றைக் தடுத்து நிறுத்தி நான்
சுமக்கும் போது இன்னும் மனதுக்குள்
குழிகளைத் தோண்டுகிறேன் காற்றைப்புதைப்பதற்கு
56 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து
 

ஊசி முனையில் உாழ்வு
என்னில் தன் சுமையை நாட்டி எங்கும் அலைக்கழிக்கவைத்து இருளில் கண்களை மூடிவிட்டது ஒருநாள்!
அடுத்த நாள் முழுக்க
மடிமேல்
உட்கார வைத்து வாழ்க்கையைப் பற்றி அது சொல்லும் கதைகள் எனக்கோசெவியில் ஏறவில்லை
குரல் வளையை துக்கம் நின்று அடைக்க வறுமைப்பட்ட இந்த வாழ்க்கையில் யாரிடமும் எதையும் கேட்க எனக்கும் தன்மானம் இடம்தரவில்லை
வீட்டில் பதுங்கியிருக்கும் வறுமையெனும் கொடியமிருகம் வெளியே போவென்று முன்னிலும் தீவிரமாய் என்னைக் கலைத்துக் கொண்டே இருக்கிறது
மனம் நனைந்த பஞ்சாய் கனத்துப் போய்க் கிடக்க விழிகளை இமைக்காது எங்கும் அலைகிறேன் வேலை ஒன்று எனக்குத் தேடியபடி.
நீ8.அருளானந்தம் N 5 7

Page 38
உாழ்வுப் பார்வை
நகரம் ஒரே நரகம் தான்
நாற்றம் இருந்தே ஆகிறது வீட்டுக்கு உள்ளேயும் வெளியிலும்
பொய்
இருந்தே ஆகிறது
யோசித்து
திட்டமிட்டு செலவு செய்தாலும் முழுவதும் கைவிட்டுத்தான் போகிறது காசு
ஒருவரிலொருவர் உறவுக்குள்ளும் அன்பாயில்லை முட்களாகவே கடைசிவரையிலும்
எல்லாமே
இங்கே
அந்தந்த நிமிஷங்களோடு சரி இங்கே இருக்கிறோம்
என்பதால்
விழிதிறந்தே இருக்க வேண்டும் நித்திரையுமின்றி
58 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

கொஞ்சம் திமிராக இல்லை என்றால் இருக்க இருக்க புதைத்தும் விடுவார்கள் புதைகுழிக்குள்
"தினமுரசு" நவம்பர் 2007
நீ.பி.அருளானந்தம் Ν. 59

Page 39
elanity,க்கு இட்டுச்செல்க
நாம் வாழும் இந்த மண்ணைவிட்டு எல்லைகடந்து எங்கே போவது நாங்கள் வைத்த மரங்களைக் கண்டும்
அழுகிறோம்
பிறந்த நாளிலிருந்து இந்த மண் எங்களை தாயாக மடியில் சுமந்து பால் தந்து வளர்த்தது இங்கு நம் மூதாதையரின் கல்லறைகளிலே நாமும் அடங்குவோம்
எங்கள் செம்பாட்டு மண்ணில் திராட்சைக் கொடியாய்வளர விட்டு விடுங்கள் இங்கேயே நாங்கள் வேர் கொள்கிறோம் இருண்ட மூலைகளிலாவது நாங்கள் வாழ்கிறோம்
இந்த ஏக்கத்தை எங்களுக்கு அமைதிப்படுத்துங்கள் வேறேதும் அல்ல எங்களுக்கு வேண்டியது.
60 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

பறிமுதல்
இங்கேதான் என் உடல் வதைக்கப்பட்டது நான் ஒரு போதுமே அறியாத புது இடம் ஒரு கட்டிலில் நான் படுத்திருந்தேன் என் கண்களினால் கண்ணாடி ஒளியை பார்த்தேன் என்சுவாசத்தின் ஓசையோடு அவனையும் தேடினேன் எல்லாக் கைகளும் அறைக்குள் கையுறையோடு வந்தன வேண்டாம் என்ற நிலையில் அந்தக் கைகளை நான் பிடித்துக்கொள்ள பாடுபட்டேன் கல்லைப் போன்று என் உடல் முன்னம் நான் இருந்த நிலையின்றி இருந்தது அவன் கையிலுள்ள கத்தி பரபரப்போடு இயங்கியது என் உடலை விட்டுச் செல்லும் உறுப்புகள் தெரிந்தது கொறித்து தின்னப்படுவது போல என்னை குத்தித்துளைத்தாலும்
நீ.பி.அருளானந்தம் N, 61

Page 40
என்கண்கள் நிலைத்தபடி சலனமற்று
இருக்கின்றன
ஆனாலும்
கீழே போகிறது மேலே போகிறது மூச்சு என்னிலிருந்து எல்லாமே விலகி விலகிப் போக வடிவமிழந்து போய் முழுமையற்றவனாகிறேன் என்னிலிருந்து ஏறியப்பட்டவைகளை நிரப்ப என்பக்கத்துக்கட்டிலில் படுத்துக்கிடந்தவன் இப்போது வேட்டையாடப்படுகிறான்.
62 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

பேய்க்காட்டல்
நிழல்போல வருமாம் பேய்கள் என்று ஈமக் காட்டில் கைகட்டி நின்றபடி ஒருவன் சொன்னான் ஒவ்வொன்றாக எடுத்து வெளிவிட்டான் பேய்க் கதைகளை மிக நன்றாகப் பயந்தேன் நான் கோயிலிலும்
வந்து
குரிசிலும் ஏறுமாம் பேய் கதை விட்டான்
இல்லாததை உள்ளது போலும் தன் சொல்லில் உள்ள பொய் என்னிடம் சிக்காமலும்
பேசி
உன் கண்முன் தெரிகிறதை காண் என்றான்
உள்ளுக்குள் இருப்பதெல்லாம் வெளியே உன் கண்ணுக்குள் தெரிய
வராது
ஆனாலும்
பேய்களின் நிழல் தெரியும்போது
நீசிஅருளானந்தம் \ 63

Page 41
அது மிகப் பெரியது பயந்து போவாய் என்றான்
அவன் பிறகு சொன்னான்
கறுப்பு நிறமென்றால் அது பேயாம் பூச்சி என்றால் அதுகும் பேயாம் ஆணும்பெண்ணாகவும் சேர்ந்து அதுவருமாம் இப்படியெல்லாம் அவன் என்னை பேய்க் காட்ட நானும் ஒரு மடப் பேயன்
ஆகினேன் 64/8வருடன் பிடுங்கியநாளிலிருந்து

அலைகளின் அலறல்
ஊரை சுருட்டிவைத்துப்போன கடல் அலைகளே, உங்கள் கோபம் இனிமேல் நிரந்தர அமைதிப்படுவதாக
கடல் நீரின் உப்புச்சுவையை நான் அறிவேன் என்றேன் ஆனாலும் அந்த உப்பை உனக்கு உண்ணத்தந்தும் நீநன்றியில்லையே மனிதா? என்கிறீர்கள்
கடற்கரையில் இந்தக் குரல் கேட்டு நான் நடுநடுங்குகிறேன் மனிதன் உணவின் மீது எங்கள் உப்பைத் தூவுகிறான் அதனால்தான் அவன் சுவையாக உண்ணக் கூடும்
ஆனால் அலையின் நாக்கில் கொண்டுவந்து ஏன் எங்களுக்கு நஞ்சை ஊற்றுகிறான்?
என்கிறீர்கள்
நான் இதற்கு மறுபேச்சுப் பேசமுடியாது மெளனமாகிவிட்டேன் ஒரு படகின் மேல் போய் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன் கடல் திடமானதுதான் ஆனால், அலைகளோ இரக்கத்தில் நெகிழ்கின்றன காற்று அலைகளின்மேல் உரிமை பாராட்டுகிறது அதற்கும் அது கொடுத்தது சுதந்திரத்தை
எல்லாமே அதனில்
நீசிஅருளானந்தம் Ν 65

Page 42
முழுமையானதோர்பூரணம் ஆனாலும் அதற்கு ஏன் இந்த அகங்காரம்? நான் அவ்வேளை கண்ணால் கண்டேன் அலை புரளும் இடத்தில் நிர்வாணமாய் அனேகம் சொப்பிங்பைகள் அலைமலர் கோபம்கொண்டு. எழுகிறது
மலைக்கு மேலாக உயர்கிறது
பயத்தில் நான் ஒராயிரம் அடிகள் ஓடியவாறு பின் வாங்குகிறேன்
66 /8வருடன் விடுங்கியநாளிலிருந்து

புத்தம் புதுப் பாடல்
சுகந்தமான மாலைநேரம் சூரிய ஒளி அழிகிறது பறவைகள் இருப்பிடம் நாடி பறந்து செல்கின்றன
வறண்ட என்மனதிலே இரவு வானில் எழுந்த நிலவு போல அவள் நினைவு வருகிறது
திறவுகோல் நடுங்க மனக் கதவைத்திறந்தேன் எலுமிச்சைப் பழம் பிளக்கப்பட்டதைப்போல சிந்திக்கொண்டிருக்கிறது
என் கண்களில் கண்ணிர்
நெஞ்சில் நிறைந்த நீ என்னிடமிருந்து ஏன் இல்லாமல் போனாய்? மெளனமான ஒரு விதையின் முளையைப் போல என்னிடம் எழுகிறது இந்தக் கேள்வி
உன்னை இந்தக் கவிதைவழியே
நான் சொந்தம் கொண்டாடுகிறேன் எனதாக்குகிறேன் இக்கவிதையை
எழுதிமுடிக்க அது எவர் வாயிலும் பாடப்படுகிறது
நீ.பி.அருளானந்தம் \ 67

Page 43
ஒரு சோகத்தை முனங்கும் இனிப்பான கவிதையே
இது
அன்பே
உன் முகத்தின் ருசி சமுத்திரஜலத்தை ருசிக்கும் போதும் எனக்கு வெளிப்பட்டது
முட்களே இல்லாத மலர்களை அணைத்த
திருப்திகள் இவை
காலம் சுழன்று ஆழத்தில் போனாலும் என் மனதிலொரு இடம் எப்போதும் உனக்குத்தான் வேறு எவர்க்குமில்லை.
68 /8வருடன்பிடுல்கியநாளிலிருந்து

வநஞ்சில் நிலைத்தவள்
என் நெஞ்சில் நின்றாடும் பனிமலரே நித்தம் நான் அகத்துள ஜெபிக்கும் உன் நாமம் அறிகிலையோ இன்னும் நீ?
என் மனதிலே
அடங்கி ஆடும் பாவையாய் இருக்கவே நீசெய்கிறாய்
உன்னை நினைத்து
சும்மா இருந்தாலும் எனக்குச் சுகம்தானடி
உன் நினைவில் இரவுபகல் எனக்கு இல்லவே இல்லை
ஈயும் எறும்பும் கடித்தாலும் உன் கைபட்ட சுகம் தான்
என் உயிரிலே ஒளி போல உடன்கலந்தவள் நீ என்றுமே உன் உரு அழியா மாயம்தான் என்னவோடி?
நீ.பி.அருளானந்தம் Ν 69

Page 44
2 lúffa gasr
உன்னுடன் கதைத்த பிறகு முன்னம் இருந்த துக்கம் மறைந்து
மனம்
பழங்கள் கனிந்த தோட்டமாகின
மலர்கள் என் நினைவில் குளிர்மையாக இருந்து உன் வாசனை ருசி தந்தது
உன கதை இனிப்பானது மட்டுமல்ல
அது
கசப்பிலும் காரத்திலும் ஒழிந்திருக்கிறது
இதையே கண்டு கொண்டு உன்னை என் மனம் விரும்பச் செய்கிறது
உன் நினைவு என் நெஞ்சில் இறகைப்போல இருந்து அசைந்து வாழ்வை எப்போதும் நீடிக்கும்
உனக்காக பல கவிதைகளை எழுதி நினைவில் சுமக்கும் என் உயிர் இவ்வுலகில் உனக்காகவே வாழும்
70 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து
 

பழைய விலாசங்கள்
என் பாட்டனார் கட்டிய இந்தக் கல்வீட்டுக்கு நூறு ஆண்டுவயதாகிறது என்றாா என அம்மா அவர் அவ்விதம் சொல்ல என் நினைவுகளில் அம்மா கூறிய சொற்களை நிரப்பி வைத்துக்கொண்டு விரிசல்களும் கீறல்களும் வடுக்களுமுடைய வீட்டுச் சுவர்களை சாய்விருக்கையில் அமர்ந்தபடி நான் பார்த்தேன்
கண்ணாடி ஒட்டின் வழியாக விழுந்த சூரிய ஒளி
ஊற்றாய் ஊறும் சுவர் அழுக்கை சுத்தமாக எனக்குக் காட்டியது
இந்த வீடு
எப்படித்தான் வெள்ளையடித்தாலும் வெள்ளையாவதில்லை நிறமாற்றம் அதற்குப்பிடிப்பதில்லை தனக்குப் பழகாததை அது ஒப்பவில்லை அது காலம் செல்ல செல்ல தனக்கென்றே வாழவேண்டுமென்ற சுயநலத்தில் பழகிவிட்டிருக்கிறது
நீசிஅருளானந்தம் \ 71

Page 45
அப்போதும்போல இப்போதும் ஒரு குகைக்குள் நுழைவதுபோல இந்த வீடு குளிர்மையாகவும் அமைதியாகவும் இருப்பதோடு ஊருக்குள் மதிப்பாகவும்தான் இருக்கிறது ஆனால நாங்களோவென்றால்?
72 /வூேருடன் பிடுங்கியநாளிலிருந்து

பெரிய கலை
இந்த நேரம் பலா மரத்திலிருந்து ஒரு குயில் கூவி விட்டு நிறுத்தியது அந்தக் கறுப்பு நிற தேவதையை அதிசயமாக பார்த்தாள் அவள்
அதன் குரலில், எத்தனை சுத்தமான சுருதி குறையில்லாத ஓர் நிறைவு மழையின் குளிர்மை
அதுதன் சங்கீத தகுதிக்கு கிரீடம் வைக்கச் சொல்லி யாரிடமும் கேட்கவில்லை
குயில் எந்தச் சங்கீத விதிகளுமே இல்லாமல் அடிவயிற்றிலிருந்து சத்தத்தை வெளியே உதிர்த்தி விழுத்துகிறது
எப்படியாய் அது அலகைத் திறந்தும் அலறுகின்றதில்லை அதுபடிக்காத சங்கீத நூல்கள் மூடியே கிடக்கின்றன
அந்தக் குயில்களது குரலைக் கேட்டுப் பழகிய கேள்வி ஞானம் தான் சங்கீதத்திலே அவளுக்கும்
அவள் எந்த இசை விழாவிற்கும் தலை காட்ட மறுக்கிறாள்
நீசிஅருளானந்தம் N 73

Page 46
ப்ரியமில்லை அதெல்லாம் அவளுக்கு
அந்தப் பலாமரத்து நிழல்தான் அவளுக்கு இசையரங்கம் அந்த மரநிழலின் கீழ்நின்று குயிலைப் போன்று அந்த ஒரு அடிதான் அவளுக்கு எடுத்துவைக்க முடிகிறது
குயில்
சற்றே அவளின் இசையையும் காது கொடுத்து கேட்கவும் தான் செய்கிறது.
74 / வேருடன் பிடுங்கியநாளிலிருந்து
ity S S2
* Անց:
徽務蓉 { لی క్రే
* ̈x ዶ• リー 经
蟹濠警
Sஐཀྱང་བཙན་ཛབ་ལ༔ ܀
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் கண்ட சொந்தங்கள்
நண்பனே இன்னுமா உனக்குத் தெரியவில்லை உறவுகளென்றால் அப்படித்தான்
உன் வசந்த காலத்தில் ஒரே குடும்பமென உணர வைத்து உன்னோடு ஒட்டிக் கொள்வார்கள்
உன்னோடு ஒன்றாய்ச் சேர்ந்து உணவும் உண்டு உடலில் தளுக்கு அசைவுகளும் வாளிப்பும் பெற்று தாங்கள் மின்னுவார்கள்
உன்னைப் போற்றி உனக்கிசைவாய் நடந்து பொழுதெல்லாம் உன் கால் பிடித்து பூப் போட்டும் கும்பிடுவார்கள்
உன்னை மூடுபல்லக்கில் வைத்தும் தாங்கள்
தோள் சுமந்து தூக்கிப் போவார்கள்அடிவானத்துக்கு அப்பாலும் போகும் அதிகாரம் உனக்கு
அப்போதிருக்கும்
நீ.பி.அருளானந்தம் \ 75

Page 47
நீஒரு குதிரை வீரன் போல சவுக்குடன் சவாரி செய்வாய்
ஆனால், உன் செல்வம்தேய வருமானமும் குறுகிவர
தங்கள் மனக்கசப்புகளை உனக்குப்பருக்கி வலும் சண்டையும் கிளப்பி உறவை அறுத்துக்கொண்டு போய்விடுவார்கள்
நண்பனே நான் கண்ட சொந்தங்கள் சில நாய்களை விட
கேவலம்
நக்கித்தின்றாலும் என்வீட்டு நாய்க்கு நன்றி என்ற குணம் எப்போதும் உண்டு ஆனால்
அவர்களெல்லாம்
76 /வூேருடன் பிடுங்கியநாளிலிருந்து

சிறைப்பட்டுக் கிடக்கிறேன்
நான் மெளனமாக இருந்து உனக்கு ஒன்று சொல்ல இருக்கிறது என் மூச்சு அகல விரிய உன்கைகளைப் பற்றி பிடித்தபடி அதை சொல்கிறேன்
எனக்காகத்தானே நீ உன் நட்சத்திர விழிகளை அசைக்கிறாய் உன் கண்களின் அறைகளில் பூக்கின்ற ஒரு மரமாக என்னை அதற்குள் கண்டேன்
என் குரலின் மென்மையுடன் இதையெல்லாம் நான் சொல்ல நீ அலங்காரமாகச் சிரிக்கிறாய்
உன் கண்ணாடி இதழ்களில் இந்தச் சிரிப்பு ஏன் நெடுக வருகிறது
என்னைக் கசக்கி எத்தனை பருவங்கள் இன்னும் நீ கடத்தப் போகிறாய் இப்படியாக காக்கவைத்து
நீ.பி.அருளானந்தம் Ν. 77

Page 48
காற்றாய் ஊலகல்
கடல்
அலைகளின் துள்ளலுடன் பொழுது விடிகிறது
கிழக்கின் வழியாக சூரியன் ஒளியும்
எனக்குள் வழிந்து நரம்புகளையும் மின்னலாய் முறுக்கேற்றிக் கொண்டிருக்கின்றன
கடலின்மேல் செல்கின்ற படகுபோல என்னிலிருந்து கடந்து செல்கிறது வாலிபம்
நிறம் மாறும் முடிக்கற்றைகளில் ஒன்றை என் கரம்பிடித்து பிடுங்கித் தூர வீசுகிறேன்
காலங்களை ஆறுதலாய்க் கரைக்க மன அழுக்குகளையும் அகற்றிக் கொள்கிறேன்
இப்போது சுத்தமாய்
இருக்கிறது மனம் எந்தத்துக்கமான
மழைத் தூறலும் இல்லாமல் 78 /8வருடன்பிடுங்கியநாளிலிருந்து

என் இதயம்
வேஷம் போடுவது பிடிப்பதில்லை எனக்கு மனதில் பொல்லாப் புழுக்களை வைத்துக் கொண்டு பேச வேண்டாம்
இன்னும் அந்தக் கண்களில் பாம்பாய் வருகிறதே நஞ்சு புழுவும் பூச்சியுமாய் ஒரு கூடையில் அள்ளலாம் உன் குணத்தையும் அது போல
உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லையென்று இரங்கினேன் உறவும் இல்லை உனக்கு என்று வருந்தினேன் உன் உண்மை உரு தெரியாமல் அப்போது
மயங்கினேன்
ஏன் இந்த மன இளக்கம் அது என்னுடைய குணமாயிற்றே ஆகாய சிந்தனையில் லயிப்பவனாயிற்றே
இத்துடன் முடிவடைந்ததா உன கதை இதைச் சொல்கையில் பெருமூச்சு விடத்தான் வேண்டும்
நீயார்? என்று எனக்குத் தெரியாமல் பார் என்னை
நீ.பி.அருளானந்தம் N 79

Page 49
முழுதும் நம்பிவிட்டேனே உன்னை
இதற்காக என்னைப் பார்த்து
நானே சிரிக்க வேண்டும்
உன் வணிகப் பேச்சால் கீறிக் கீறி என்னை அப்பால் போட என் இரத்தம் கசிந்து தசைகள் துடித்தாலும் பரந்து விரிந்த இந்த மனம் இவ்வளவுதானே ஒன்றுமில்லை என்று உன்னை மன்னித்துவிட்டது பார் அது எவ்வளவு பெருந்தன்மை
80 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

நேற்றிரவு ஒரு கனவு
விடியும் வரை பாடுகின்றன கரிச்சான் குருவிகள் மாசிப் பனியும் தெளிவுறுகிறது முற்றத்தில் செவ்வந்திமலர்கள் பூத்திருக்கக் காண்கிறேன் நள்ளிரவுச் சந்திரன் மேகத்துள் இன்னும் மறையவில்லை நான் இரவு கண்ட கனவு நினைவில் வருகிறது அந்த உருவம் வேறு எனக்குத் தெரிந்த யாராகவுமில்லை இன்னும் அசைபோடுகிறேன் நாற்பது வருடங்களை பின் தள்ளி இப்போ நினைவில் ஒளிர்கிறது
அந்த நிலா
LITTg555 தெளிவாய் இருக்கிறது கண்கள் சந்திக்கின்றன கண்ணிர் சிந்துகிறேன் என் மனதுக்குள் சொல்கிறேன் நிலா என்று அது மட்டுதான் நிகழ்ந்தது நான் பின் வாங்குகிறேன் இன்றைய நாளுக்கு.
நீசிஅருளானந்தம் \ 81

Page 50
சுவைச் சுளை
பூங்காவில் விழித்திருக்கும் பூக்களைப் பார்த்து முள் உழும் மன வேதனையை சற்றே மறப்போம் என்று அங்கே போனான் இலையே இல்லாக் கிளையிலெல்லாம் பூப் பொலிவுள்ளதை அங்கு கண்டும் அவன் சருகு மனத்தில் கவலையோ விலகவில்லை
அங்கே காலாற நடந்தும் பாட்டுக் கேட்டும் பழைய மன வலியை கலைத்துப் போட அவனால் முடியவில்லை
உள்ளே சிற்றெறும்பாய் செல்லும் கூட்டத்தோடு ஆட்டு மந்தைபோல அவன் அலைந்தான்
இன்ப நுகர்வில் இளம் சோடிகள் சிலர் நினைவில் நிலவின் சுடர்தலுடன் சிலைக்குக் கூட சிலிர்ப்பூட்டும் ஆபாசம் காட்டியபடி செடிமறைப்பில் கிடக்கிறார்கள்
82 /வூேருடன் பிடுங்கியநாளிலிருந்து

அவன் கடந்தகாலம் அவனெதிரே இப்போது தெரிகிறது
பூக்களை வெறித்துப் பார்த்தபடி அவனுள் விரிகிறது நெஞ்சில் ஒரு முள்.
நீசிஅருளானந்தம் N 83

Page 51
logosoluri நிற்கும் நினைவு
விரிந்து
கிடக்கிற
மலையில்
இரவு
நிலவு
பளபளக்கிறது மலைக்கு ஏறுகிற முடிவற்ற பாதையில் சிறு கிராமம் தூங்குகிறது உறைபனிக்குளிரில் விழித்திருந்து நிலவைப் பார்க்கிறாள் பாப்பாத்தி எப்படித்துரங்குவாள்? உறக்கம் கிடைக்கவில்லை சுவாகக் காற்று சுகமாகக் கிளம்பி காய்ச்சும் போது காதலன் நினைவு அடம் பிடித்து எழ,
32 L-l@R9
காலிப் பாத்திரமாய் நெருப்பாய்க் கொதிக்கிறது மார்புகள் அவளுக்கு எப்படி இவ்வளவு இயல்பாய் விழித்து விடுகின்றன, வரைந்து பார்க்கிறவன் தன் நினைவு அவளுக்கு வந்து விட
84 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

வறண்ட தன்மை
வருகை தருகிற மழை நீரை சமுத்திரம் கண்டு ஆழத்தில் அழைக்கிறது
உவர்த்த சுமை பொறாமல் அலைகின்ற கடல்மேல் கட்டுமரத்தொட்டிலிலே அந்த மீனவன்
வலை வளைத்து வீசியும் வள்முள்ள கடல் சுமையில்லாத வலையை திருப்பி அவனுக்கு அளித்தது
இனியும்
இந்தக் கடல் பக்கம் அவன் வலை விடுகிறான் இனியாவது மீன் வந்து வலையில் தட்டுப்படுமென்று
நீபி.அருளானந்தம் N 85

Page 52
வான் கவிந்த மணல்முற்றம்
இங்கொரு அலையின் சப்தம் காதில் ஓவென்ற ஒசையாய்க் கேட்கிறது வானம் தெரிந்த இந்தக் கடல் வெளியில் தலைசாய்த்துப் படுக்க உன் மடியை விரி இன்றையப் பொழுது இங்கேயே தூங்குவோம் இங்கு அலைகளின் சப்தத்தை அழிக்கவே முடியாது அந்த அலைகளில் மிதந்து கொண்டு உன்னுடன் நான் பேசுவேன் இந்த ஆகாசத்தைப் பார்க்க வேறு எங்குவாய்க்கும் இங்கு இல்லை என்பது எதுவுமே இல்லை அமைதியாய் இந்தப் பொழுது மிதந்து செல்லும் விறைத்திருக்கும் இரும்புச்சுவர் இல்லாததால் இங்கே நட்சத்திரங்களை நீகாண்பாய் முழு நிலாவைப் பார்த்து ஒளி தெரிகிறது என்று நீசொல்வாய் நான் உன்னை முத்தமிடும் போது நிலா திரும்பிப் படுக்கும் நிலவில் எங்கள் நிழல்கள் விரிந்துகிடக்க வினோதம் ஒன்று உலையில் இருந்து கிளம்பும் குளிர் மணலில் நிற்கும்
எங்களது கண்கள் அந்தியில் தொலைத்த கதிரவனை மீண்டும் தரிசிக்கும்
상
புகையிலை கச்சாலை எச்சில் துப்புகிறாய் கடலலைகளும் கரையிலே துப்பிக்கொண்டிருக்கிறது நீஎறிந்து விட்டுப் போன சொப்பிங் பைகளை
86 /வேருடன் விடுங்கியநாளிலிருந்து

குத்துப் போடுகிற இசை
கேட்க
இருக்கவே முடியாத
இசை அது மனமும் அதிருகிறது
வேகமாக
காதை அடைக்கிறது கூச்சலிடும் ஒரு குரல் அதில் வந்து கொண்டே இருக்கிறது வார்த்தைகள் எல்லாம் தாறுமாறாக ஏறியப்படுகிறது ரசிப்பதற்கு ஒன்றுமே இல்லை நீதெருமுனையில் நின்று அதைக் கேட்கிறாய் எனக்கோ நிம்மதியில்லை நெஞ்சைத் தொட்டுப் பார்க்கிறேன் இடியத் தொடங்குகிறது இதயம் அணுக் குண்டு வெடித்த இறப்பைச் சந்திக்க அது தயாராகிறது
உறக்கத்தில் நான் கேட்டு ரசிக்கும் இசை என் நினைவில் வந்து தாளம் போடுகிறது இதன் முடிவைத் தேடி
நீசிஅருளானந்தம் \ 87

Page 53
நிலைத்திருக்கும் ஒரு தருணத்தில்
புல்லாங் குழலின் இனிய ஓசை, பறவையின் சிறகுக்குள் இருந்ததைப் போன்ற ஒரு நினைவை மீட்டு எனக்குத் தந்தது
அன்றொருநாள், மழையில் அவளுடன் சேர்ந்து கொண்டு நான் சென்ற போது, பெய்யும் ஒரு ஒரு துளியையும் உன் மின்னல் ஸ்பரிசத்துடன் சேர்த்து நான் இப்போரசிக்கிறேன் என்றாள் எம் இருவர் மேலும் இந்த மழை பூத்தூவிக் கொண்டிருக்கிறது என்றேன் நான் அவளுக்கு மூச்சுப் பெருகிற்று நீ ஒரு மொழி சொல்? என்றேன் நான் அவளின் பதில் தொடர்ந்தது "எங்கள் தேசத்தை வாழவைத்து, பின் தொடங்குவோம் எங்கள் வாழ்க்கையை” என்றாள் அவள். "அது முடிவில்லாக் காலம் எதையும் நினை நீ விதிக்காதே எல்லை" என்றேன் நான் "முடிவு வரும்பூத்தூவிக்கொண்டே' என்றாள் அவள் அவள் இதழ்களிலிருந்து எனக்கும் என் மண்மணத்தது நானும் நெஞ்சை நிமிர்த்தி அவளுடன் நடந்தேன்
திடமாக,
88 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

என் அடுத்த கேள்வி
சிறகசையும் தங்கள் சுவாசங்களை யிழந்து தப்பிப் பறந்து கொண்டிருக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள் இரும்புச் சத்தத்தோடு இயந்திர எலும்புகள் கொட்டாவி விடும்
"பூ"வினுக்குள் இல்லாமல் போய் விடும் படைப்பைப் பார்த்து நிழல் பிணமாய் இருந்து இயற்கை கண்ணிர் விடுகிறது முன்னைய உன்னத நாளை விரிந்து கிடக்கும் வானமும் மறந்து விட்டது மரங்களின் இலைகளோ சாம்பல் பூத்த சுமையுடன் மிதிவெடி விதைக்கப்பட்ட மண்ணில் காலம் காலமறியாது உதிர்ந்து கொண்டே இருக்கின்றன அற்புதமான இவ்வுலகம் யாராலே அரூபமாய்ப் போனது என்றதே பூமாதேவியினது கேள்வி இன்னும் உங்கள் கவிதைகளில் வண்ணத்துப் பூச்சிகளை வர்ணிக்கும் கவிஞர்களே சொல்லுங்கள் நீங்கள் கவிதைகளில் வர்ணங்கள் தீட்டுகிற வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடித்தலை எங்கே எனக்கும் ஒருக்கால் நீங்கள் காட்டுங்களேன் பார்க்கலாம்.
நீசிஅருளானந்தம் N 89

Page 54
வெறுமை வமாட்டுகள்
அகத்திலே ஒரு சுருக்கம் விழுவதை என்னாலே கண்ணாடியில்
பார்க்க முடிகிறது
இன்னும் முழுமையடையாத சுருக்கங்களின் வரிக்கோடுகள் இருப்பதையும் ஒரு பீதியுடன் நான் கவனித்தேன் கைகளோ இலைநுனியாய் நடுங்குகிறது
நிழலைப் போல என் நிர்வாணம் கடிகார இயக்கத்துடன் என்னைக் கடக்கிறது
ஒய்வில்லா ஆசைகளிலே ஒளிரும் கதிர்களைப் பார்த்து மூச்சு எனக்கு எரிகிறது
இறந்த காலத்தையே நினைத்து வயலின் மீட்டுகிறேன்
பழைய திருக்குமறுக்கான நூலிழைகள் நெஞ்சை வந்து இறுக்குகின்றன காரணம் அறியவே முடியவில்லை அதிலேதோ இருக்கின்றன
இருள் முத்தமிடும் மடியில் எனக்கு இன்றைய நாட்கள்
கைவிட்டுப்போன சுகத்தை காணலாமென்று இப்பொழுதும் தான் நான் ஏங்குகிறேன்.
90 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

ஒதருவழியில் ஒரு மரம்
அது பருவகாலம் ஆரம்பிக்க பூக்களை சிருஷ்டிக்கும்
அவையுதிரவும் பிஞ்சுகள் கிளைகளில் தலையசைக்கும்
திரளும் காய்களை தின்று பசியாற உதிர் வயசுகளும் கள்ளிப்பால் நாவை நீட்டியபடி நிற்கின்றனர்
காய்ப் பருவத்திலேயே அதற்கு சதையிய்ய விழும் கல்லெறி
மரம்
மடியிலுள்ள அத்தனையும் நிலத்திலுதிரப்போட்டு, பின்பு மொட்டை மரமாகி நிற்கும்.
நீசிஅருளானந்தம் N 91

Page 55
விலகிப் போவதில்லை
உன்னிடம் நான் வைத்த அன்பை நீ பறித்துக் கொண்டால் கவிதைக் குள்ளே சென்று நானும் மடிவேன்
நீவிரும்பும் சிறையில் என்னைப் பூட்டி ஒரு ஏட்டையாவதுதா நம் காதலின் கதையினை எழுதிவைக்க
அதை எழுதியபடி கனவு மடியிலே உன் ரகசிய நட்சத்திரங்களை என் விழிகளிலேந்தி உன் போக மொழி பேசிய நாளினை என் வாழ்வு தீரம் வரை நினைத்து நான் வாழ்ந்து கழிக்கிறேன்.
92 /வேருடன்பிடுங்கியநாளிலிருந்து

காயப்படுத்துகிறாய் நீ
என்னைக் காணும் போதெல்லாம் நீயேன் குடைபிடிக்க தொடங்குகிறாய் நீ உன்னை முகம் மூடுகிற போதெல்லாம் ஒரு விலகல் தன்மையை நீகடைப்பிடிப்பதைப்போல தோன்றுகிறது இந்த முடிவை எடுக்க உன்னைத் தூண்டிய உள் விசைதானென்ன அதே கேள்வி என் மனதில் மெளனமாக எழுந்து நிற்கிறது நம காதல்
எந்தப் புகாரும் இல்லாமல் இறந்து போக வேண்டுமா?
அந்த ஏக்கங்களும் ஏமாற்றங்களும் பொங்கிநிற்க என் நெஞ்சு சோருக்குயிலாய் கூவுகிறது சில நிமிடம் நம் உறவான உறவை மீண்டும் மீண்டும் நீ எண்ணிப் பார் முளை நீட்டும்
நீசிஅருளானந்தம் M 93

Page 56
அந்த நினைவுகளில் மரவேலிகட்டியதைப் போல மனதில் வளைத்தெடுத்து வைத்துள்ள சில சம்பவங்கள் அப்போதாகிலும் உன் மனதை குணமாக்கி மீண்டும் நம் காதல் உறவை உன்மனதில்
பூப்பூக்க
நிச்சயம் வைக்கும்
94 /வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

ஊடல்
இந்தப்பூவனத்திலுள்ளவை எல்லாவற்றிலும் நீ புல்லே அழகென்றாய் இல்லைப்பூவே அழகென்றேன் நான் எது அழகென்று இன்னும் உனக்கே புரியவேயில்லை என்றாய் நீ உன் மூச்சு என்னைச் சுட்டு எரித்தது பச்சைப்புல் விரிப்பில் கலவரப்பட்டுக் கொண்டு அந்த நிழலிலிருந்த
நாம் பிரிந்தோம் நாம் இருந்த இடத்துப் புல்லும் உலர்ந்தது அதன் பூவும் உதிர்ந்தது பொழுது விழுந்ததும் நம் காதல் உறவையும் கதவாய் மூடிவிட்டது
கரும் இருட்டு
நீ5.அருளானந்தம் N 95

Page 57
விரல் விட்டு எண்ணுகிறேன்
நம் கரங்கோர்க்கும்
உறவை நீ
கதவுகளால்
அறைந்து மூடினாய் காதல் சிற்பத்தை
திரைமூடினாய் என்னை வெம்மைப்படுத்தி தேள் கடி வார்த்தைகளால் சாடினாய் பொங்கி வழியும் குடிகாரனாக என்னை மாற்றினாய் தாடிக் கேசமாய்
நான் திரிய
நவநாகரீக வாழ்விற்கு
நீபோனாய் அவ்வாறு ஆனாலும் நீபெண்ணே நானோ இன்று மின்னலின் அதிர்வுகளைக் காணும் போதெல்லாம் உன்னை இழந்ததைத்தான் வாசிக்கிறேன்
நீநீங்கின என் மனத்தின் வெற்றிடம் உன் தியானத்தைத்தான் தரிசிக்கிறது ஆனாலும் இன்று உனக்கு ஒரு வாழ்வு இருக்கிறதென்றால் எனக்கும் ஒரு குடும்ப வாழ்க்கை இருக்கவேதானே செய்கிறது.
96 /வூேருடன் பிடுங்கியநாளில்ருந்து

குருட்டுச் சேவலொன்று
விடிந்த பிறகு கூவிற்று விடியப் போகிற தென்று
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
நாளைய மலர்தலுக்காய் எல்லாப் பூக்களிலுமிருந்து ஒரு மொட்டு நீளமாக தலை நீட்டுகிறது தனிப்பூவாய் தான் மலர்தலுக்கு
நீஅேருளானந்தம் N 97

Page 58
அழுக்குத் தேரைகள்
வேலை நிமித்தம் இப்பெரு நகர்வந்து இப்போகருகும் அவள் மனத்தை உறவினர் எவரும் புரிந்து கொள்ளவேயில்லை
வேலைக்காக வென்று தன் கவிழ்ந்த முகத்துடன் பெரு விரைவு பேருந்தில் ஏறி இறுகிச் சுருங்கிய இடத்தில் நின்று கசங்கிப் போகும் ஒரு பூவாய் மாறி உருகி விலகும் அந்தப் பாம்புகளின் இடுக்குகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வரும் கோபத்தை இறுக்கிக்கொண்டு இறங்கி இனிப்புத் தொழிற்சாலை சென்று வார்த்தைகளற்ற புன்னகையுடன் வேலையில் தன் உடலை கரைத்துவிட்டு வந்தும் மெல்ல மெல்லவாய் அவள்மேல் பஸ்ஸிற்குள் சாய்ந்து கதகதப்பாய் அவள் உடல் மேல் மத மதப்புறும் கூட்டம் பிரயாணத்தில் திரும்பும் போது ஒவ்வொரு தினமும் அவளை இரையாக்கியபடியே இருக்கிறது
"தினமுரசு" நவம்பர் -2007
98 /வூேருடன் பிடுல்கியநாளிலிருந்து

இறைஞ்சுகிறேன்
அவளை துயிலெழுப்பாதீர்கள் தடைஏதும்
செய்யாதீர்கள்
அவள் கண்
துயிலட்டும்
தொட்டிலை
ஆட்டுங்கள்
தாலாட்டுப்
பாடுங்கள்
புலரியிலும்
அவள்
உறங்கட்டும்
அவள்
கனாக் காணட்டும் புன் சிரிப்பு
சிரிக்கட்டும்
அவள் அருந்துயில் கொள்ளட்டும் திரும்பவும் வேண்டுகிறேன் அவளை எழுப்பாதீர்கள் துயிலட்டுமவள் இப்போது அவள் தூங்காவிட்டால் இனி எப்போது அவள் தூங்கப் போகிறாள்
*தினமுரசுgoaf -307 *
நீ6அருளானந்தம் \ 99

Page 59
ஒரு முகவரியுமின்றி
எனக்குள் இருக்கும் அந்த எரியும் நெருப்பைக் கிளறி உன்னையும் ஏன் நீ எரிக்கின்றாய்
என்னில் புதைந்த உன் நினைவுகள்
என் இதயத்துள் நசுங்கி இளைப்பாறி விட்டன
உன்னைப் பற்றிய ஒரு நிமிட நினைவும் வேண்டாம் எனக்கு
இனி
தாலி மாற்றிக் கொள்கின்ற நினைவை
என்மனதில் கருச்சிதைவு செய்ய
நான்
ஏழு கடல் தாண்டிக்கொண்டிருக்கின்றேன்.
100/வூேருடன் பிடுங்கியநாளிலிருந்து

கண் விழிப்பில்
அடர்ந்து தெறிக்கும் மின்னல் கொடிகள் ஒளிரும் சூரியன் உதயமான நிலவு நீண்டிருக்கும் கடல் பனை மரங்கள் குளிர்ந்த மலை இருக்கின்ற பூக்கள் குளத்துப் பாம்புகள் விண் பருந்து திராட்சைக் கொடி பெய்யும் மழை பாக்கி உள்ள
தேள்
rr;
காகம்
புல்
ஆகாயம்
மஞ்சள்
பச்சை
வெள்ளை என்று உள்ள எவ்வளவோ போக இன்னும் எவ்வளவற்றையோ முந்தைய நாளிலிருந்து தியான விரிப்புடன் என் கண்ணாலே பார்க்கிறேன் கண்களை துடைத்துக்கொண்டு அந்த விதமாக பார்க்க ஏங்குகிறேன் என் சுதந்திர பூமியை
நீசிஅருளானந்தம் \101

Page 60
நான் உன் சினேகிதன்
துயரமே
இதயம் என்று ஒன்று என்னிடம் இருப்பதால் தானே நீtண்டும் மீண்டும் என்னிடத்தில் வருகிறாய்
நான் எத்தனை தாள்களில் எழுதித் தகர்த்தாலும் நீஅடங்கி இருந்து கொண்டு இன்னமும் தான் ஏன் அசைபோடுகிறாய் என்னை விட்டு
வெளியே நீ
பிரிந்து போக மாட்டாயா
வயது ஐம்பதாகி மேனியில் நீர் படாத மண்புழுப்போலவும் நான் வறண்டு விட்டேன் தாடியும் வளர்ந்து ஒரு காட்டு மரத்து நிழலின் கீழே நான் இருக்கிறேன் என்றாலும் இந்த வாழ்க்கையிலும் நீஎனக்குள் நின்று நடனமாடுகிறாய்
இனியும் உன்னுடன் போட்டியிட என்னால் இயலாது நீசுடுநெருப்பென்றாலும் இனிநான் உன்னோடு சினேகிதமாகிறேன்
102/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

என்வேர்களை மட்டும் முறிக்காமல் விட்டு விட்டு இஷ்டம் போல் எனக்குள் நீ ஆடிக்குதித்து நட இதை விட நான் என்ன
செய்யலாம் இனி
நீ.பி.அருளானந்தம் N103

Page 61
இதயத் துடிப்பிலே மலர்கிறவள்
உன் ஞாபகம் நட்சத்திர ஒளிபோல நெஞ்சினுக்குள் சுடர்கிறது என் மூச்சிலே உன்னைக் கட்டவும் நீஇதயத்துள் நுழைந்து பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கிறாய்
என் சுவாசம் எத்தனை நொடிகள் தான்
களைத்த இருதயம்
உன்னை என்னில் மறப்பிக்க, சுவாசக் காற்றுடன்
வெளியே துரத்துகிறது
என் இதயம் உன்னைப் பிரிவதும், பிறகும் நீதேடி வருவதும்
gfதோ ஓர் விதியென்றே நான் நினைக்கிறேன்
என் உடலில் நீயே உயிர் எழுத்து என்றும் வாழும் உன் நினைவையாவது நான் காதலித்து
அமைதியாகிறேன்.
盤○や稀 考鲨
క్లNస్టీఫాన్ల
ਅ *ణిజ్య
104/வேருடன் பிடுங்கியநாளில்ருந்து
 
 
 
 
 
 

அடக்கம்
ஆலமரவேரைவிட உன் பார்வை என்னை ஆழமாக ஊடுருவுகிறது
உன் உடல் அசைவுகள்கூட இசை போல ஒரு தனி ! கண்ணுக்குள்ளே மத்தாப்புச் சிதறல்கள் எவ்வளவு பார்அது உம் ஒரு அழகு! என்னுள் அது இன்பத்தைக் கொடுக்கிறது.
உன்னைத்தேடிய என் எண்ண அலைவு நெஞ்சில் இன்னமும் நெடுகவாய் அசைந்து கொண்டே இருக்கிறது ஈரக்கசிவுடன்.
ஐயோ உன் அழகு ஒரு தாஜ்ஜியூமஹால் அதை இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலே எனக்கு வாழ்நாளெல்லாம் போதும் அப்படியே நான் ஒரு சாஜகானைப்போல நிம்மதியாகக் கல்லறையில் அடங்கிவிடுவேன்.
நீ.பி.அருளானந்தம் N105

Page 62
காத்திருப்பு
தங்களது மகளுக்கு அன்றுபோல இன்றும் மாப்பிள்ளை தேடுகின்றனர் பெற்றோர் அழகெல்லாம் இவள்மேலே ஆயிரமாய் வீசியிருந்தும் சிலர் பார்த்து
ஆ ஆ என
புகழ்ந்தும் சீதனம் என்ற ஒன்று இவளிடம் இல்லாததில் பெண்பார்க்க வந்தவர்கள் நழுவிச் செல்கின்றனர்
எண்ணப்பூக்கள் வாட எழும்நிலவு தன்னிலே விழவும் கொதிக்கும் மனத்துடன் இவள் மனம் கருகுகிறாள்
சொடுக்கும் சவுக்குப் போல் சீதனம் என்ற பேச்சுவர இவளுக்கோ அவ்வேளை ஒயிலான மெல்லிய வலுவான பாதங்களும் நிற்க முடியாது சோர்ந்து போச்சு
முகத்தில் சிரிப்பு மறைந்து இனித்தன் வாழ்வுபூக்குமா என்ற சங்கடத்துடன் அந்த ஒரு நாள் வரும் இனிய நிலவினிற்காய் நித்தம் ஏங்குகிறாள் இங்கேயோர் பேதை,
106/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து
"சுடர்ஒளி(15 ஜூன் 2008)

qüuy.luủ ulua...Tổ dpyluổ
என்னைக் கசக்கி உள்ளே நுழைந்து ஒற்றைக் காலில்நின்று பஸ்ஸில் பயணித்தேன்
குலுக்கலோ அப்பாடா எனக்குப் பெருமூச்சு அனைவரின் அசைவுக்குள்ளே நானும் ஒருவனாகி
தூங்கியும்
பின்பு விழித்தும்
தொய்ந்தேன்
காலியாகும் இருக்கைகளை மனம் சலித்துச்சலித்து தேடியபடி முயற்சிக்கிறேன் இருப்பதற்கு பஸ்ஸிற்குள் யாரோ உள்நுழைந்தான் என்று தோன்றுகிறது அவனே பிறகு என்னிடத்தில் வந்து குரங்காககை நீட்டி பிச்சை கேட்டான்
குறைந்தபட்சம் பத்து ரூபாய் அவன் கை நீட்டும் பரிதாபம் பார்த்து கொடுக்க வேண்டும் போலிருந்தது அதை இழந்தேன்
நீசிஅருளானந்தம் N1 O7

Page 63
பயண முடிவுவரை உயிரில்லைப்போல எனக்குத்தெரிந்தது குளிர்ந்த காற்றும் பசுமையான மரங்களும் பஸ்ஸிற்கு வெளியே ஆனாலும் இன்னும், சில மைல் கல் போகவேண்டும், அதோடு
o IGE Gðið )
முடிந்து விடும். 108/வேருடன் பிடுங்கியநாளில்ருந்து

uoւնկ
ஒரு அழகிய சிலைவடிக்க என்கையில் உளியை எடுத்தேன் ஒரு கலைஞனின் ஞானத்தோடும் தெளிவோடும் இல்லாத ஒரு வித்தியாசத்தை அதில் பதிக்கத் திட்டமிட்டேன்
இந்தச் சிலை முகத்தை உற்று நோக்கும் ஒரு மனிதன் சூரியனை உணர வேண்டும் கூர்ந்து கவனித்தால் அதன் ஆழத்தில் உயிர் உள்ளதுபோல் தோன்ற வேண்டும்
கரியதொரு இருட்டுக்குள் எனக்குள் எழுந்த கனவில்வந்த உருவம்தான் இது அந்த உருவம் இப்போதும் என்மனதுக்குள் மறையாமல் இருக்கிறது அதைத் தொலைத்திடாமல் கல்லிலே செதுக்கப் பார்க்கிறேன் பசிதாகமின்றி அதிகமான உழைப்பு நாள் தோறும் எனக்கு
அந்த உருவத்தின் மேல் தேவையில்லாத கற்களை யெல்லாம் நான் கழற்றிவிட்டேன் கடைசியில் அந்தச் சிலை உருவிற்கு கண்களில் நான் வெளிச்சம் வைத்தேன் ஆனாலும் அதற்குக் கண்களில் பார்வைவரவில்லை அதனால் பேசவும் முடியவில்லை இந்தச் சிலைவெறும் கற்சிலையாகவே கல்லுக்குள் உறக்கம் கொண்டது.
நீபி.அருளானந்தம் NO9

Page 64
மனதின் கோணல்
மலர்ந்து நறுமணமூட்டும் தாழம் பூவிலும்
OG GIFO இருக்க இருக்க மணம் பிடிக்கும் அந்தமலரின் மென்மை உன் உடலிலும் தான் பூத்திருக்கிறதை
நான் காண்கிறேன்
நிலவின் ஒளி விழும் குளத்திலும் உன் கண்களின் ஒளிதான் இடையுறாது ஒளிர்கின்றதைப் போல இருக்கிறது
நீ என்னை
பார்க்கும் போதும் பேசுகிற போதும் சொல்லவே முடியாத உயரத்தில் மகிழ்வுடன் பறக்கிறது என் மனம்
உன்னில் எனக்கு அன்பு வளர்ந்த போதும் அமைதியாக நான் உட்கார்ந்திருக்கிறேன்
என்னை நான் உன்னிலே இழந்து விட்டேன் என்கிறதை இன்னும் நீயோ அறியவே இல்லை
110/8வருடன் பிடுங்கியநாளிலிருந்து

கண்கள் உனக்கு அந்தக்கடல் அலைகளில் இந்தப் பக்கத்து மணல் மேல்டிலோ சிறு நண்டு ஒன்று என்னைப் பார்த்தபடி பொந்துக்குள் உடனே நழுவிச் சென்று விட்டது என் கண்களில் அதன் கண்கள் இப்போது.
நீ.பி.அருளானந்தம் N111

Page 65
விலகல்
உன் முகம் கண்டவுடன் ஏன் எனக்கு இந்த ஆனந்தம் அடிமனத்திலும் குளிர் உன் பாதத்தைக் தொட்டு பூஜிக்க ஒராயிரம் வெப்பங்களுடன் என் விரல்களும்தான் கிடந்துதுடிக்கின்றன
சந்திரனைப் போன்ற உன் கண்களோடு அசைகின்ற உந்தன் பின்னல்களும் கண்டு ஆனந்தச் சலங்கையாய் என் மனதும் குதூகலிக்கிறது நீநிற்கிற இந்த நிலை என்னே ஒரு வசீகரம் இன்பத்தில் சரிகிறேன் நான் ஒரு சந்தர்ப்பத்திலேனும் உன் நினைவிலே நான் அமருவனோ இல்லையோ அது தெரியவில்லை உன் முகம் என்ற கண்ணாடியில் நேருக்கு நேர் நின்று என் முகத்தைப் பார்க்க எனக்கோ முடியாதிருக்கிறது நான் ஒதுங்கிப் போகிறேன்.
112/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

மிக அருமை
உன்னைப் போன்றே எலும்பு, தோல், ரத்தம், நரம்பு, தசையைப் பெற்றவள் நான் நீகாணும் ஒவ்வொன்றிலும் புதிதாக என்னிடம் என்ன இருக்கிறது?
ஏன் நாம்
சினேகிதர்களாக இருக்கக் கூடாது? அற்ப சலனத்தைத் தள்ளி நம்மை இணைக்கும் நட்புடன் உறவாடி மனக் கழிவுகளைக் களை அந்தப் பயணம் இனிதாகும் இனியும் நிரந்தரமாகும்
நட்புக்கு என்றும் உயிர் இருக்கும் அந்த நட்போடு பேச வேண்டும் பார்க்க வேண்டும் அழகை ரசிக்க வேண்டும்
இவ்வளவும் சேர்ந்திருந்தால் கிழமாய்ப் போயும் சுகந்தமாய் நாம் இருப்போம்
அமைதியாக நினை நான் மூக்கணாங் கயிறுடனும் நீ, முதுகில் சுமையுடனும் அது என்ன வாழ்க்கை இது கூடவா புரியவில்லை?
*தினமுரசுநவம்பர் 2007
நீசிஅருளானந்தம் \113

Page 66
பூக்களிலும் நிறைந்துள்ளது கண்ணீர்
காட்டுப்பூக்களுடன் நான் உரையாடுகிறேன் என்றுமே என் கனவு மலரான அழகின் பூக்களே அவை
அதன் இதழ்களிலே என் உதடுகள் வைத்து கண்கள் மூடுகிறேன் அது அழகைக் கசிந்து போதையூட்டுகிறது
நான் அதைக்கையில் பறிக்கவில்லை என் முத்தத்தின் பின்பு நிறையத் தன் வாழ்வை புலம்பியது பூ
கானகத் தனிமையில் அதன் சோகக் கதைகேட்டு மின்னும் என் கண்களிலே துளிர் விடுகிறது கண்ணிர்
என் குவித்த கைக்குள்ளே அதன் அழகை நான் கண்டு இன்னும் ஏன் கவலை பூக்களிலே நீஆதிப்பூ அழாதே அழகாயிரு என்றேன் நான்
எந்தப்பூக்களையுமே இதுவரை பறிக்காத ஒரு பூந்தோட்டத்துக்
காவல் காரனாக,
114/ வூேருடன் பிடுங்கியநாளிலிருந்து

கனவிலும் நீயே
என் இதயத்தில் உன் நினைவு முடிவற்ற கனவுகளாய் வாழ்கிறது
நிலாவின் ஒளிபோல் குளிர்ந்திருக்கும் உன் முகம் நீரில் தென்படும் அலைகளைக் களைந்து என் மனதை அசைக்கிறது
நாளும் உன் நினைவுகள் வெளிச்சச் சிறகுகளுடன் மின்சாரம் பாய்ந்தது போல் என்னை ஆக்கிரமிக்கிறது என்னுடன் நீ கூடவே இல்லாத நாள்கள் நிலவில்லா வெறுமையாகவே இருளைத் தருகிறது
உன்னை நாடியே என் நினைவின் வேர்கள் எல்லாம் ஊன்றிவிட அது எப்படியாய் வேறிடத்தில் சென்று பதியும்
தும்பியின் சிறகடிப்பான
உன் கை அணைப்பிலே
எனக்குள்ள தவிப்பை
நீயுணர்ந்தால்
அது என்னை மன
நிம்மதிப்படுத்தும்
நீ என் கூடவேயிருந்தால்
ரோஜாவின் மணம்போல
என்றும் என் வாழ்வு
மணம் வீசும். "தினமுரசு. ஜூன் 2007
நீசிஅருளானந்தம் N115

Page 67
அகதிluri அலைந்து
வானத்தின் கீழ் இருக்கக் கூரைகளே இல்லாத இடமெல்லாம் அவர்கள் அலையத் தொடங்கினார்கள் நிமிர்ந்து நடப்பதற்குப் பழகியவர்கள் எல்லாரும் கூனிப் போய் விட்டார்கள்
உயிரற்ற ஒளிமின்னும் அவர்கள் கண்களுக்குள்ளே பழைய நினைவுகள் ஓடோடி வருகின்றன
பிறந்து வளர்ந்த மண்ணில் அன்னியப்பட்டவர்கள் போன்று இன்று வீட்டை நாடிப் போவதற்கும் அவர்களுக்குக் கடினம் தம்வீட்டை நினைத்துக் கொண்டு மரங்களுக்குக் கீழே உறங்குகிறார்கள்
அந்தப் பக்கம் மாலைக் குருவிகள் பறந்து செல்வதை அவர்கள் பார்க்கிறார்கள் அந்தப் பார்வையிலே தேங்கி நிற்கும் சோகங்கள்தான் எத்தனை
அந்தப் பறவைகள் மறைந்துவிட தங்கள் பார்வையும் இழந்ததாய் தவிக்கிறார்கள் அவர்கள் படுத்துறங்கும் இடத்திலிருந்து சிறிது தூரம்தான் அவர்களின் வீடு எனினும் தொலைவிலே ஒரு பாலைவனத்து மணலில் படுத்துள்ளது போன்றே அவர்களது நினைவு
116/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

எல்லாத் துன்பங்களும் சப்பாத்தி முட்கள் போல ஊசியாகி மனத்தில் தைக்க மனம் அவர்களுக்கு புண்ணாகிறது ரெளத்திரம் உடலைப்பிடுங்குகிறது தங்கள் தசைகளைக் கீறி இதயத்துயரை காட்ட விரும்புகின்றனர்
அவர்களின் கண்கள் நெருப்புத் தணல்கட்டிகளாகத் தகதகக்கிறது
பிரமா படைத்த அத்தனை படைப்புகளையும் அழித்துவிடும் ஆத்திரத்தோடேதான் அவர்களின் உரு.
நீ.பி.அருளானந்தம் M117

Page 68
grມ້ບໍ່umະບໍ່
என் உடலை தன் உதரத்திலே பத்துமாதங்களாய் தண்ணீரின் மேல் தாமரை போல சுமந்தாள்
பூக்கள் விழிக்கும் உலகினை எனக்குக் காட்டினாள் நடுநிசியிலும் தாலாட்டுப்பாடினாள் எப்பொழுதும் பாசத்துடன் அணைத்து முத்தமிட்டாள் தன் குருதியை பாலாக்கிப் பருகத்தந்து என் நிறைவின் பொழுதில் தன்னில் ஒரு நிறைவு கண்டாள் பூத்துக் காய்ந்து போகும் முலலை மலரலல என் அன்னையவள் அவள் என்றும் எனக்கு நீல வான முழு நிலா குளுர்ச்சி தரும் ஒளி அவளுக்கு இவ்வுலகில் எதுவும் இணையில்லை நான் சொல்ல
118/வேருடன் பிடுல்கியநாளிலிருந்து

உருங்கால மகிழ்ச்சி
என் இரத்தத்திலுள்ள உயிர்க்கலன்களெல்லாம் உன்னைக் காண்கயிலேயே புதுப்பிக்கப்படுகின்றன
ஆகாயமும் பூத்துக் குலுங்கியது போல என் மன வெளியை உடனே நிறைக்கிறது நீயும் நானும் மட்டுமே
அன்பே அப்பொழுது எம் மண்ணில் நடக்கும் யுத்த சூழ்நிலையிலும் மகிழ்வாயிருந்தோம்
நீ என் மீது படரவிடும் ஒவ்வொரு பார்வையிலும் இன்பப்புறா பறந்து வந்து தன் சிறகுக்குள் என்னை அணைக்கிறது வறுமைப் பசியில் நாங்கள் இருந்தாலும் என்றும் வற்றா நதியருகே நின்றிருக்கும் பசுமை மரங்களாய் குளிர்மையாக நாம் இருப்போம்
இவ்வுலகின் செல்வமெல்லாம் விலகட்டும் திரும்பியே வராது போகட்டும் ஒன்றன் பின் ஒன்றாய் இவையெல்லாம் எம்மை விட்டுப் போனாலும் வீடின்றி நாம் படுத்துறங்கும் அந்த வெளியிலும் இறந்து போன காலம்தனை மறந்துவிட்டு எதிர் கால இன்ப நினைவுகளுடனே நாமிருவரும் துயிலுறுவோம்.
நீ.பி.அருளானந்தம் M119

Page 69
அழகான மயிலிறகே
சந்திரனைப் பார்த்து உன் கண்ணொளி கண்டேன் என்னை உன் விழி வீச்சிலே அறவிழுங்கிக்
கொண்டாய்
இரும்பாய் இருந்த என் இதயத்தை உன் பார்வை
உருக்கி நீராக்கிவிட்டது
அன்று முதல் நான் என்னையிழந்தேன் நீயின்றி எனக்கு இனி இன்பமில்லை
என்று மாண்டேன்
நாளெல்லாம் உன்னை நான் சிவபூசை செய்கிறேன் உன் வாசனைதான் எனக்கு எப்போதும் இந்தச் சவ்வாதும் இப்போது மணம் தரவில்லை
இளம் கமுகு காயைக் கண்டால் கூட உன் நினைவேதான் பவளம் வெள்ளியெல்லாம் உன் மலர்ப்பாத ஜொலிப்புக்கு கிட்ட வருமா உள்ள அழகெல்லாம் தனியே உன்னிடமே உள்ளது குறையென்று உன்னிடம் இல்லவே இல்லையே
120/8வருடன் பிடுங்கியநாளிலிருந்து

நிலா ரீ இருக்கிறாய்
உன் நினைவுகளுடன் வாசனை வீசும் மலர்களை சேகரிக்கிறேன்
பக்கத்துப் பிள்ளையார்கோயில் சங்கு ஒலிக்கையில் உன்னைத்தேடியதாய் என் கண்கள்
ஒளிமின்னுகின்றன
சுருள் சுருளான உன் கூந்தல் வேர்கள் என் இதயத்தைப் பற்றி பம்பரமாக சுற்றிவிடுவதேன் இந்தக் காதல் விதை எனக்குள் எங்கு விழுந்து முளைத்ததென்று அறியவே முடியவில்லை நான் கண் விழித்து பார்க்கும் போதெல்லாம் சுற்றிலும் உன் உருவம்தான் முறுவலிக்கும் உதடுகளுடன் காணப்படுகின்றன
உன் கொலுசு ஒசை என் தோட்டப் பூங்கொடிகள் அசைகின்ற போதெல்லாம் சாதில் ஒலிக்கிறது
உன் நினைவு மாறாமலே இரவுகளும் எனக்குக் கழிகிறது அசையாத ஒரு மரக் குதிரையாய் என் மனதில் அமர்ந்து விட்டது உன்மேல் எனக்குள்ள காதல்.
நீ5.அருளானந்தம் N121

Page 70
உறங்கிவிட்ட நேரத்தில்
ஒரு நாளிரவு
இந்தக் கனவு குளித்துக் களைத்துப் போய் கடற்கரை மணல்மேல் படுத்திருந்தேன் அலை இளகியது போன்ற உடற்சுகம்
மனத்திலோதாகம் என்பிரியமான காதலி பக்கத்தில் நின்று பூவிதழ் தூவினாள் காட்டின் கனவுடன் என்மோகம்! அவள் பொங்கித் தாழ்ந்திடும் முலைகளை என்நெஞ்சில்வைத்து ஆவாஹிக்க பலம்மிக்க ஒருவனாய் நான் எழுந்தேன் அவள் விழிகளை அருகே கண்டதும் பயந்தேன் அவளோ கடற்கண்ணிமகள் அறிந்ததும் உறைந்தது என் ஆசை அவள் உடனே விஹாரமானாள் என்னைத் கைப் பிடித்து உடனே கடலின் அடிமட்டத்துக்குள் இழுத்துச் சென்றாள் தண்ணீர்க் குழிக்குள் மீன் உருவம் கொண்டாள் ஆவேசத்தின் ரெளத்திரத்துடன் உறங்கிடும் என் உடலை விழுங்க நெடு நீளத்தில் தன் மீன் வாயை பிளந்தாள் என் ஆன்மாதுடித்துப்பதறுகிறது அவளது வாய்ச் சூட்டில்
122/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

மனத்தில் நடனம்
உன் நினைவில் என் உடல் சூடேறுகிறது பனிக் கட்டியாய் நான் கரைகிறேன்
பழம் போன்ற உன் இதழ்களின் புன் சிரிப்பு என்னைக் தூக்கி வானத்தில் எறிகிறது
என் மனக் கடலில் உன் உருவம் நீந்திக் கொண்டிருக்க உன்னுடன் நானும் சேர்ந்து சிரிக்கும் கடல் நுரையில் குளிக்கிறேன் சில வேளைகளில் என் நினைவில் நீ ஒரு மாய அரபி குதிரையாகவும் ஓடிவருகிறாய்
உன் நினைவுகளின் லயிப்பில் பகலும் இரவும் கடந்து போகின்றன நான் கண்திறக்கும் போதெல்லாம் சுந்தரி உன் அசைவு தெரிகிறது உன் உடல் மணம் பூக்களிடம் இல்லாத புதுமணம்
என் போர்வைக் கல்லறைக்குள் உன்னைப் பற்றிய கனவுகாட்சி இப்படியே நீண்டுகொண்டே போகட்டும்.
நீகஅருளானந்தம்\123

Page 71
வெற்றி மாலைகள்
இரும்பு வலைகளுக்குமேலே பாவம் அந்தப்பூங்கொடி வெயில் காமம் தணித்துக்கொள்ள தன்ஒளி விரல்களை அதில் பற்றுகிறது
ஒரு பக்கம் பட்டாம்பூச்சிகள் கொடியின் இளவட்டபூக்கள் மேலே சிறகு விரித்து அமர்ந்து வடுக்களை அதன் மீது வார்த்துவிட்டுப் பறக்கிறது பூவை வலிக்கும் கறைகளைக் கழுவ வானம் துப்பிய மழை காயமருந்திடுகிறது
பூக்கள் மீண்டும் விரியும் வெளிச்சத்தில் தெரிந்தது வீரப்பதக்கங்களுக்கு மாலைகளாகின அந்தப்பூக்கள்.
124/வேருடன்பிடுங்கியநாளிலிருந்து

போதை
கடலும் வானும்
ஒன்று போல் கண்களுக்குத் தெரிகிறது இப்போது எங்கே நாங்கள் இருக்கிறோம்? பியர் வழியும் கிளாசை தூக்கிக் கையில் பிடித்தபடி ஒரு நாய் சொல்கிறது வாசனைச் சுருட்டு அதன் வாயில் கிடந்து புகைகிறது மற்ற நாய்க்கோ சத்தி போத்தலில் உள்ளதை கிளாசில் வார்க்க முடியவில்லை மூன்றாவது வெறியில் மணலில் படுத்துவிட்டது கறுத்த நீண்ட மூஞ்சிநாய்க்கு சிந்தனை மனிதராயிருந்தோம் நாங்கள் எப்படி
நாய்கள் ஆகினோம் புலம்புகிறது விடிவுவரை
தினமுரசு ஜனவரி 2008
நீசிஅருளானந்தம் N25

Page 72
புகைப்பதற்கு முழுக்கு புகைத்தலை விட்டுத்தள்ளு - அதற்கு வழியையும் சொல்லிவிடுகிறேனதன்படி செல்லு மனதாலே வெறுத்திட வேண்டும் - பொல்லா
சிகரட்டை வீசி நீயெறிந்திட வேண்டும் புகைப்போர் முன் நில்லாதே - மீண்டும் ஒரு கணமுமதை நினைவில் கொள்ளாதே ஒம் சாந்தியென்று நிதம் சொல்லு - நிச்சயம் தியானத்தை நன்றாய்க் கைக்கொள்ளு புகைப்பிடித்தால் பணம் செலவாகும்-நொடிதில் நோய் வந்துன்னை வேளைக்குமுன்மாய்க்கும் கூட இருப்பவரை புகைதாக்கும் - சுவாச குழல்களில் புற்றுநோயுண்டாக்கும்
இருதய நோயது குடிகொள்ளும் - நாற்றம் உடலிலுமுடையிலும் நீடித்திருக்கும் இருமலும் தடிமலும் சேர்ந்தே - நோயாளி என்றுன்னை ஊரெல்லாம் தெரிவிக்கும் சீரணவுறுப்பைக் கெடுக்கும் - ருசி நாக்கிலுமறியாது சப்பென்றிருக்கும் நகம் பல்லில் காவிபடியும் - முக சுருக்கத்தையும் கொடுத்தழகைக்கெடுக்கும் எல்லாவிதமான தீமை - புகை யிலையிலுண்டென்று பாராய் ஆயிரக் கணக்கதிலிருக்கு நஞ்சு - இதை மருத்துவர் கூற்றிலிருத்தறிவாய் உடலாரோக்கியமது வேண்டில் - தீய புகைத்தலுக்கு முழுக்குப் போடு பணமுமதிகம்மிஞ்சும் - நீடிய ஆயுளுமுனக்குக் கிடைக்கும்
தினக்குரல்፲ 98 8
126/8வருடன் பிடுங்கியநாளிலிருந்து

aննկ
நீஊமையானாலும் பேனாபேசும் எழுதுகின்ற புதுக்கவிதை வெளிவரும் அதனால் மக்கள் விழிப்பர் மடமை ஒழியும்
മൃണ്ണbl
உடன் உண்டகடனுக்கு தன்னிடமுள்ளதை தானமாக
கொடுத்து செஞ்சேற்று கடன்தீர்க்கும் நன்றி கொண்டோன்
-வீரகேசரி. 998
-வீரகேசரி. 993
நீசிஅருளானந்தம் M27

Page 73
நிறைவான வாழ்வு
நான் பிறந்த மண்ணிலே மலருக்கு வாசமுண்டு பழங்களுக்கும் இனிப்புண்டு நல்ல பண்புகளும் நிறைவாயுண்டு சுவையோடுண்பதற்கங்கே வகை வகையாயெல்லாமிருக்கு வெயிலாக விருந்தால் கூட சுகமாயிருக்கு முடலுக்கு விளைமீனுக்கில்லை பஞ்சம் பசும் பாலுக்கு மங்கில்லையே குறை திருவிழா நாளாகிவிட்டால் கோயிலிலும் பொழுது போகும் தோட்டத்திலே பயிரைநட்டால் பணம்வந்து பெட்டியிலுறையும் உறவினருடன் சேர்ந்து வாழ கவலைகளுமற்றுப் போகும் மாத மொரு மழை பெய்யவே பசுமையாயிருக்குமங்கே மரமும் நல்ல நிழல் தரவும் தென்றலும் சேர்ந்து குளிர்ச்சிதரும் பனையும் தென்னையும் மிருப்பதனால் பஞ்சத்திலும் வாழ்ந்திடலாம் துன்பம் நேராது காத்திடவே அன்னக் கந்தனிருப்பான் காவலுக்கு குறையேதுமில்லையங்கே நல்ல குடிதண்ணிருமிருக்குதங்கே கொடுத்துவைக்கவேண்டுமெவர்க்கும் பிறந்த மண்ணில் வாழ்வதற்கு.
தினக்குரல்1998
128/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

அவதாரம்
கண்கண்ட தெய்வங்கள் மனித உருவில் வந்துமே
உலகில் மனிதனாக வாழ்ந்து காட்டினரே LDLD605
வாழ்வில் கொண்டு நீ அழிந்திடாது காத்திடவே
தர்மம்
பலவும் எடுத்துரைத்து தரணியில் நிறைவாய் வாழவைக்க அருள் பெற்ற அவதார புருஷர்கள் அவதரித்தார் இவ்வையத்தில்.
தினக்குரல்1998
நீ.பி.அருளானந்தம் N129

Page 74
&களும்தம்பி
இளவயதில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தொழுகிடில் வயோதிபனாகியும் உடலுறுதியுனக்கிருக்கும் இல்லையேல் காளையில் முதுமையடைந்து கூனி குறுகிப்போயுன்தாயார் அவித்துப்போட்டறு சுவை உணவெல்லாம் விழலுக்கு இறைத்திட்டநீராக போனதாகவே போய்விடும் கஞ்சியை குடித்திடினும் கட்டுப்பாடொழுக்கத்தை வாலிபத்தில் துணைக்கொண்டால் வலிமையுற்றுனியிருப்பாய் துன்பமுன்னையணுகிடாது துயரற்று மனமகிழ்வாய் இல்லையிதையுதறி பிஞ்சிலே நீபழுத்து இன்பமென்றலைந்து கெடில் பலமிழந்து பிணியுற்று பாதிவயதிலே போயிடுவாய்
மேலுலகம் கவனம்தம்பி
தினக்குரல்1998
130/வேருடன் பிடுங்கியநாளிலிருந்து

எங்கே ஒழிந்தாய்
நடுநிசிவேளையில் எங்கிருந்தோ எழுந்து உறைப்பாக அடித்து ஓசையுடன் வீசி எதை எதையோ முறித்து வெளியில் போட்டு அள்ளி மேலே எறிந்து சுழன்று வீசி வீடுகளின் கூரைகள் குடிசைகளின் ஒலைகளை பிடுங்கி தூர விசிறி மரத்திலுள்ள பிஞ்சுகளை வீணலே கீழேயுதிர்த்து இலைகளை சொரிந்து பெருமரங்களையும் பெயர்த்து சிறிது நேரம் அட்டகாசங்கள் புரிந்து பலமெல்லாம் காட்டி பயமுறுத்தி உன் வீர பிரதாபங்களை சிந்திக்க செய்து கொஞ்ச நேரம் நுளம்பிலிருந்து விடுவித்து எனது ரோஜா செடியை மண்ணிலே படுக்கவைத்து மேலே ரி.வி. அன்ரனாவையும் அள்ளிச் சென்ற வாயுதேவா திரும்பவும் நீஎங்கே ஒழிந்து விட்டாய் என்னவாறு அடங்கிவிட்டாய் என்ன ஆச்சரியம்
தினக்குரல்1998
நீ.பி.அருளானந்தம் M131

Page 75
ീഴിൽ (
சிறுகதைத்தொகுதிகள்
மாற்றங்கள்மறுப்பதற்கில்லை
கபளிகரம்
ஆமைக்குணம்
கறுப்பு ஞாயிறு
(அரசின் சாகித்திய விருதுபெற்றது)
அகதி
ஒரு பெண்ணென்று எழுது
றவைல் 었
* வாழ்க்கையின் நிறங்கள்
(அரசின் சாகித்திய விருதும்வடமாகாண தமிழ் இலக்கிய விழாவில் சிறந்த நாவலுக்கான பரிசும் பெற்றது)
கவிதை 용:
* வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து.
132/வூேருடன் பிடுங்கியநாளிலிருந்து


Page 76
விளங்காத இருண்மைக்குள் புரி பிறருக்கு மட்டுமின்றி பிறிதோ விளங்கிக் கொள்ள இயலாத
கவிதைகளில் ஒன்றும் தன்னை இலகு மொழியில் முகம் சுழிக் சொற்களால் ஆனவை இவரது
அவதானிப்புகள் அவ்வாறே பொலிவு புலரவேண்டும் என்பதன் அவர் தன் கவிதை வரிகளில் செ தாமாகப் புலம் பெயர்ந்தும், து தொடர்ந்தும் அனுபவித்தும் வாழ்வை தானும் அனுபவித்துத் எதிர்காலத்திற்கான ஆவணமாகு
 

கால வாசிப்பின் தேறலாய் சொல் மிக்க ஒரு சிறந்த படைப்பாளி
ருளானந்தம் அவருடைய கவிதை அதனை நிரூபணம் செய்கின்றன. ஞ்சம் இவருக்கு இல்லை என்பது தகளில் கோக்கப்பட்டுள்ள வார்த்
ால் புரிந்து கொள்ள முடிகிறது.
யாத வார்த்தைகளைக் கோத்து,
போழ்து படித்தால் தமக்கும் சோக வெளிப்பாடுகளாக இவர் இனங்காட்டிக் கொள்ளவில்லை. கும் வார்த்தைகளின்றி அழகிய வரிகள் அழகியலிலும் இவரது டிநிற்கின்றன. மீண்டும் புதுப் ஆதங்கம், அவற்றை நேர்த்தியாக ல்லி இருக்கிறார். துரத்தப்பட்டும் பத்தின் எல்லையைத் தொட்டுத் வரும் தம்புலமக்களின் அகதி தெள்ளுதமிழில் சொல்லியிருப்பது
கவிஞர் Dr. ஜின்னாஹ் ஷரிபுத்தின்
SBN 978. 955 - 1055 - 05 - 9
வெளியீடு திருமகள் பதிப்பகம்