கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 1997.07-09

Page 1
. . .
في شي
அகில @a
ཀྱི་
କ୍ଷୁ
©ಲಿ [TiF65N5OTT6ზ77/-
リ
as
a
Törngress
ர7
in st スI 呜
III Cerami, J
 
 
 

ܛ
oo -o -o -o -o -o -o -o -o -o ~o ~o ~o ~o ~o ~o ~o ~o
ఉ ఉు
血邸
oo -翁 - B
Աg uagflfն இ
ప్రావై

Page 2
r- -ܐ ܚܝ ܫܫ --- - །
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றும்பலம்
தேவாரம் திருஞானசம்பந்தர்
(பண்-கொல்லி) (3ஆம் திருமுறை)
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை:
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
திருவாசகம் மாணிக்கவாசகர்
(8ஆம்திருமுறை)
நானேயோ தவம்செய்தேன் ? சிவாயநமளனப் பெற்றேன் தேனாயின் அமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான் தானேவந் தெனதுளம் புகுந்து, அடிற்ேகு அருள்செய்தான் ஊன்ஆரும் உயிர்வாழ்க்கை ஒறுத்துஅன்றே வெறுத்திடவே
திருவிசைப்பா பூந்துருத்தி நம்பிகாடநம்பி
(பண்- சாளரபாணி) (9ஆம் திருமுறை)
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்டு எமையாளும் சம்பந்தன் காழியர்கோன் தன்னையுமாட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளும் தானு மணிதில்லைச் செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே
திருப்பல்லாண்டு
சேந்தனார்
(பண்-பஞ்சமம்) (9ம் திருமுறை)
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
துாமனத் தொண்டருள்ளீர்! சில்லாண்டில் சிதையும் சில
தேவர் சிறுநெறிீrே வில்ஆண்ட கனகத்திரள்
மேருவிடங்கன் விடைப் பாகன் பல்லாண் டென்னும் பதம்கபக்தரகைக்கே
பல்லாண்டு கூறுதுழிே
பெரியபுராணம் சேக்கிழார்
(12ஆம்திருமுறை)
தூயவெண்நீறு துதைந்தபொன் மேனியும், தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும், நைந்துருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும், பதிகச்செஞ்சொல் மேயசெவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே!
திருச்சிற்றம்பலம்
ASASeAeSSSA SHSiSAS HSieieASAHS0 EES SAS AAAAAL ܗ. - ܫ -܀ -” ۔۔۔۔۔۔حت۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ܗܝ 1----- --ܢܠܶܠ
ஈசுர் வருடம் -ஆடி-புரட்டாதி

호_
சிவமயம்
இந்த ஒளி
தீபம் : 1 சுடர் ஆவணித்திங்கள் சீகசவூருடம் ஆவணி2ம்திாள்
18.08.1997
கட்டிடக் கலைஞர்களின் சேவைக்கு ஒரு பாராட்டு
இந் நாட்டின் இந்து மாமன்றங்களின் கூட்டமைப்பாக - உச்ச நிறுவனமாக 42 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமையகம் தலைநகரில் பூர்த்தி பெற கடந்த ஆண்டு தான் ஆண்டவனருள் கிடைத்தது.
பல கஷ்டங்களின் மத்தியில் ஏழு ஆண்டுகளுக்குமுன் அன்றைய தலைவர் திரு. வே. பாலசுப்பிரமணியம் தந்த துணிச்சலான தலைமையின் கீழ் தலைமையகக் கட்டிட வேலைகளை மீண்டும் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டி வைத்தவர் மாண்புமிகு அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள்.
இக் கைங்கரியத்தை நிறைவேற்றி வைக்க தாராள நிதியுதவி தந்தவர்கள் சிலர். தங்கள் சொல்லாலும் செயலாலும் ஆக்கமும் ஊக்கமும் தந்தவர் இன்னும் சிலர் பாரிய திட்டத்தை மட்டமான நிதியுடன் துணிச்சலாக ஆரம்பித்து நிறைவேற்ற காரணமாக இருந்தவர்களில் மூவர் சிறப்பான இடத்தைப் பெறுகின்றனர். கட்டிடக் கலைஞர் திரு. வி. எஸ். துரைராசா, தலைமையக் கட்டிட வரைபடத்தை வரைந்தது முதல் கட்டிட அமைப்பின் ஒவ்வொரு நுட்ப வேலையையும் மேற்பார்வை செய்து தன் எழில்நுட்ப திறனை எங்களுக்கு எவ்வித சன்மானமும் கருதாது தந்துதவிய செம்மல் அவரின் கை வண்ணத்தில் இந்நாட்டில் உருவாகிய உருவாக்கிக் கொண்டிருக்கும் எங்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கட்டிடங்கள் பல என்பதன்ை அனைவரும் அறிவீர்கள்.
கட்டிட நிர்மாண வேலைகளை வழிநடத்தி தங்கள் கட்டிட நிர்மாண நிபுணத்துவத்தை எவ்வித கைம்மாறும் கருதாது தந்த செம்மல்களில் இருவர் முன்ன்னியில் இருந்தனர். இலங்கை புகையிரதப் பகுதியிலும், வெளிநாட்டிலும் தன் நிபுணத்துவத் திறமையை வெளிப்படுத்தி சிறப்புப் பெற்ற திரு. என். ஏ. வைத்தியலிங்கம் தள்ளாத வயதிலும் தயங்காது படிகளில் ஏறி கரிசனையுடன் கட்டிடவேலைகளை வழிநடத்திய உத்தமர். ஜீழ்டி வேலைகளின்நாளாந்த வளர்ச்சிக்கு திட்டமிட்ட செலவிற்கமைய கட்டிட வேலைகளை கண்காணிப்பதில் உதவிய கடமையும் கண்ணியமும் தவறாத பெருமகன் அமரர் திரு. எஸ். ஞானப்பிரகாசம் அவர்கள் இம்மூவரையும் இன்று கெளரவவிப்பதுடன் வேலைகளை மீண்டும் ஆரம்பித்து வைத்த மாண்பு மிகு.அமைச்சர் தொண்டமான் அவர்க ள இன்று தலைமையகத்தின் நினைவுக் கல்லையும் திரைநீக்கம் செய்து வைக்கிறார்.
தலைமையகம் பூர்த்தியாகி காலாண்டிதழான இந்து ஒளி நாலாவது முறையாக சுடர்விட்டு பிரகாசிக்கிறது. எங்கள் சேவைக்கு பூரீ சிவகாமி அம்மாள் சமேத நடராஜப் பெருமானின் அருளையும் உங்கள் எல்லோரினதும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.
இந்து ஒளி1

Page 3
எஸ். துரைராஜா
 
 
 

எப்பிரகாசம்
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 4
இன்றைய மாணவ சமுதாயமும், ஏன் அதற்கு மூத்த சமுதாயமும் கூட பல சிந்திக்க வேண்டிய விடயங்களை, அறியாமையினாலோ அன்றி புற தாக்கங்களின் வலுவினாலோ சிந்தியாது விட்டு அவை மறைந்து செல்லும் தன்மையை அடைந்துள்ளன. முன்னைய காலத்தில் காப்பியத் தலைவர்கள், சமயப் பெரியார்களையே உதாரண புருஷர்களாகக் கொண்டு அவர்கள் காட்டிய வழியில் மக்கள் வாழ்ந்தனர். (Hero Worship) அதாவது தனது மனதுக்கு இனிய மேன்மை மிக்க ஒரு தலைவனைத் தேர்ந்து அவன் குணாதிசயங்களைத் தாமும் பின்பற்றி மாணவர்கள் சிறந்த இலக்குகளை அடைந்ததனால் வீடும் நாடும் சிறந்து விளங்கியது. இன்று அந்நிலை மாறியுள்ள்து. அத்தகைய ஒரு நிலையை மீண்டும் உருவாக்கி மாணவர்களது உள்ளத்தில் நற்பண்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்நூலாசிரியர்கள் இராஜராஜனை ஒரு உதாரண புருஷனாகத் தேர்ந்து அவனைப் பற்றிய தகவல்களையும், பிள்ளைகள் அவன் பால் பெற்று விருத்திசெய்யக் கூடிய பண்புகளையும் இந்நூலில் எடுத்துக் காட்டுகின்றார்கள்.
இராஜராஜனது பெரும் பணி, மறைந்து இருந்த தேவாரப் பாடல்களை உலகிற்கு மீண்டும் கொணர்ந்ததாகும். திருமுறை கண்ட புராணத்தை ஆதாரமாகக் கொண்டு இந்நூலின் முதலாம் அத்தியாயத்திலே அரசன் தேவாரங்களை மீட்ட வரலாறு, அவற்றை நம்பியாண்டார் நம்பிமூலம் தொகுத்து அமைத்தமையும் பண்கள் பற்றிய தகவலும்
இடம்பெறுகின்றன.
இராஜராஜன் கட்டடக்கலைக்கு கொடுத்த முக்கியத்துவம் இரண்டாம் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அழகிய தஞ்சைக் கோயிலின் வெளித்தோற்றத்தையே அட்டைப்படமாகக் கொண்டு, மேலும் ஒரு தோற்றத்தை கொண்ட படமும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. மன்னன் கட்டிய கோயில்கள், புனரமைத்த கோயில்கள் சிலவற்றின் விபரங்களும், அக்கோயில் பற்றி மூவர் பாடிய தேவாரங்களும் இந்நூலைச் சிறப்பிக்கின்றன.
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி
 
 

லாசிரியர் திரு. சின்னத்துரை குமாரசாமி பதில் உரை நிகழ்த்துவதையும் து சமய கலாசாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. குமார் வேல், இணை நூலாசிரியர் பூரீமதி குமாரசாமி, கலாசார அமைச்சின் லதிகச் செயலாளர் திருமதி இ. கைலாசநாதன் ஆகியோரையும்
ST6.
அடுத்து இராஜர்ாஜனது கலை ஆர்வத்தை அவன் வெளிப்படுத்திய சிற்பத் தொகுதிகள் ஒவியம், மற்றும் அவன் பெரிதும் போற்றி வளர்த்த ஆடற்கலை, இசைக்கலை, வார்ப்புக்கலை, எழுத்துக்கலை ஆகியனபற்றிய தகவல்களும்
இது எடுத்துக்காட்டுகிறது
அரசனது சமூகப்பணி பற்றியும், அவனுடன் நெருங்கித் தொடர்புடையவராய் இருந்தவர்கள் அதாவது சகோதரி, மகன், ஆலோசகராய் இருந்த கருவூர் தேவர் இவர்கள் பற்றியும் தகவல்கள் உண்டு. இவற்றைச்சித்தரிக்கும் படமும் உண்டு. அடுத்த இரு அத்தியாயங்களே மிகவும் முக்கியம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. இராஜராஜன் இலங்கை விஜயம், அவன் ஆட்சி, மற்றும் அவனால் கட்டுவிக்கப்பட்ட கோயில்கள் வரலாறும், அவன் வருகையால் இலங்கையில் சோழர் கட்டடக்கலை, சிற்பம், ஒவியம், நடனக்கலை, பண்ணிசை மேலும் பல கலாசார அமைவுகள் பதிந்த வகையும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வருகை பெரு மறுமலர்ச்சியை உருவாக்கியது. இலங்கையில் முன்னர் வாழ்ந்த மக்கள் வாழ்விற்கும், இன்று நாம் வாழ்வதற்கும் இந்த மன்னன் வருகை மிக முக்கியமானதாக விளங்குகிறது. இதனை நாம் நன்கு சிந்தித்துப் பார்த்தால் நாம் அவனுக்கு எவ்வளவு
இந்து ஒளி3

Page 5
நன்றியுடையோராய் இருக்க வேண்டுமென்பது விளங்கும். இது சிந்திக்க வேண்டிய அத்தியாவசியமான ஒரு விடயமும் ஆகும்.
இறுதி அத்தியாயம் எமது சிந்தனையை மேலும் தூண்டும் நிலையில் வைக்கின்றது. நாம் யார்? நாம் என்னிலையில் உள்ளோம் என்பதையும் இவ்வத்தியாயம் எமக்கு நன்கு துலக்கும். தேவாரங்கள் பெறப்பட்டமையால் அவற்றை நாம் காள வைத்த இம்மன்னன் போற்றுதற்குரியவன். எமக்கு ஞான ஒளியைத் தூண்டி வைக்கும் தேவாரங்களை அவன் வருகை எமக்குக் கொடுத்துள்ளது. இவ்வத்தியாயத்தில் மாணவர்களையும் பெற்றோர்களையும் தட்டிக் கொடுத்துச்
சிந்திக்க வைக்கின்றார்கள் நூலாசிரியர்கள்.
喇__翡 LSSSSSSLSSSSSSLSSSSSSYS . . . . . .
இறைவன் உலகைப் படைக்கின்றான்: =இறைபண்மையை உடன்படுர்ரமயங்கள் பல -உலகைப் படைத்தலும், காத்தலும் அழித்த =சமயங்களும் ஒரே வகையில் வி ைதருவதில்
-என்றும் வீனுக்கு என்றும் விளையாட்டுக்கு
வகையில் விடைகள் புகலும்=
- சைவசித்தாந்தச் சான்றோர்களாகிய "விளையாட்டு' என்னும் கொள்கையை அற =கொள்ளாமலும், ஒரளவில் ஏற்றுதான்பட்( விளையாட்டு என்றுமொழிதலும்ஆர்' என் கொள்கின்றார் அருணந்தி சிவம்'ஏற்ற இ இயம்புபவர்கள்' என்று குறிப்பிடுகின்றார்: முத்தொழில் இயற்றுதல் திருவிளையாட்டின் முழுவதும் இல்லாவிட்டாலும் ஒரளவேனும்:
"காத்தும் படைத்தும்
=கரந்தும் விளையாடி
="ஐயா! நீஆட்கொண்டு: அருளும் விளையாட் ஆய்வார்கள் உய்யும்=
வகையெல்லாம் உய்ந்
-எனத் திருவாசகம்,திருவெம்பாவைப்பாடல்களி மலர்ந்தருளிச்செய்திருத்தலை நினைவுகூர்ந்தன்
 
 
 
 
 
 
 

அவர்களது நோக்கம், ஒவ்வொருவரும் இராஜராஜனது பண்பில் ஒன்றையாவது தேர்ந்து அதனை இலட்சியமாகக் கொள்வதாகும். சமயப்பணி, ஆத்மீகம் கூறப்பட்ட பல்வகைக் கலைகளுள் ஒன்று அன்றி அரசியல் ஆற்றல் இவை எவற்றிலும் ஒன்றை மேற்கொள்வதன் அவசியம், திருமுறைகளை ஒதும் முறை, திட்சையின் அவசியம், கடவுள் நம்பிக்கை, மூத்தோரை கெளரவித்தல், இன்னோரன்ன பண்புகளைப் பெறுதலின் முக்கியத்துவமும் கூறப்பட்டுள்ளது. நல்லதோர் சைவப் பரம்பரையை உலகு காணவேண்டும் என்ற துடிப்பு இதில் தொனிக்கின்றது. அழிந்து செல்லும் சமயப்பற்றை தாக்குவித்து உயிர்கொடுக்கும்படி வேண்டுகின்றார்கள். சமயத்தைப்பற்றியும் சமய வாழ்வைப்பற்றியும் சிந்திக்க நல்லதோர் தூண்டியாக
விளங்குகின்றது.
。_輯_ _*.』轉.」喇_」*..*.。*。.*_*.」噸.」轉._*
** ** ** + t **
காக்கின்றான் அழிக்கின்றான் என்பதனை= வர் கூறும். ஆயினும் இங்ங்னம் இறைவன்= லும் எதற்கு? என வினவினால், எல்லாச் லை. தன் பொருட்டு என்றும் பிறர் பொருட்டு= என்றும் வெவ்வேறு ராமங்கள் வெவ்வேறு=
அருள் நந்தி சிவமும், உமாபதி-சிவமூர் வே மறுத்துவிடாமலும் முற்றிலும் தழுவிக் = நிக் கொள்ளக்காண்கின்றோம். மன்னவன்
எச்ச உம்மை கொடுத்து உரைத்துத் தழுவிக்– ளை அரன் அருளின் திருவிளையாட்ார்கள்= மாதிசிவம் (சிவப்பிரகாசர் 18) இறைவன் = பொருட்டே என்னும் சிலர்கொள்கையினை= சைவசித்தாந்த ஆசிரியர்கள் தழுவிக்கொள்ள–
தொழிந்தோம்" 目
ல்(2)மாணிக்கவாச ம பற்றியேயாம் என துணிந்து சுறலாம் 目
ப்பெருமான்திருவாய்
=புலவர் நராமுருகவேள் =
திருக்கேதீச்சரம் திருக்குடத்திருமஞ்சனமலர்-1976)
ஈகர வருடம்-ஆடி-புரட்டாதி

Page 6
அகில இலங்கை இந்து மாமன்றத் எங்கும் நிறைந்த இறைவா எனும் கல்வி இராஜாங்க அமைச்சரும்,
திருமதி.இராஜனோகரிபுலேந்திர
கடந்த யூலை மாதம் 12ம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண செயலாளர் த மனோகரன் ஆக்கிய "எங்கும் நிறைந்த இறைவா திரு.கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது. இலங்கை இறைவன் மீது பாடப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்கள் திருமதி, ப. பா
இந்து சமயத்தின் சார்பில் சிவபூநீவிஸ்நாதக் குருக்களும், கி சமயத்தின் சார்பில் பெரியார் மரைக்கார் பாவா அவர்களும் கலந்து
இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர் மா. கணபதிப்பிள்ளை வரவேற்புரை நிகழ்த்த சைவப்பெரியார் குே
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் வன்னி பாராளும் வெளியிட்டு வைக்க கொழும்பு விபுலானந்த தமிழ் மகாவித்தியாலய
மதிப்புரைகளை திறந்த பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிசு சேர்ந்த திரு. மு.ச.அப்துல் றகீமும் ஆற்றினர்.
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் சிறப்புரை நிகழ்: திரு. ந. மன்மதராஜன் நன்றியுரை வழங்கினார்.
ஈசா வருடம் - ஆடி-புரட்டாதி
 

壬-三 ܬܐܒܩ܂
துணைச்செயலாளர் ஆக்கி வெளியிட்ட கவிதை நூலின் முதற் பிரதி முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான துக்குநூலாசிரியரால் வழங்கப்படுகின்றது.
மிசன் மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத் துணைச்
' எனும் கவிதை நூல் வெளியீடு, மாமன்றப் பொதுச் செயலாளர் பின் பல பாகங்களிலும் உள்ள திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள லேஸ்வரன், செல்வி மீரா வில்லவராயர் ஆகியோரால் பாடப்பட்டன்.
றிஸ்தவ சமயசார்பில் அருட்செல்விவில்பிறட் அவர்களும், இஸ்லாமிய கொண்டு மங்களவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.
ர்களின் இறை வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்ச்சிகளில் சாமசுந்தரம் ஆசியுரை வழங்கினார்.
மன்ற உறுப்பினருமான திருமதி இராஜமனோகரி புலேந்திரன் நூலை
அதிபர் திருமதி மாலதி சிவகுமார் அறிமுகவரை ஆற்றினார்.
புரையாளர் திரு. து. இராஜேந்திரனும், தேசிய கல்வி நிறுவகத்தைச்
த்த, அகில இலங்கை இந்து மாமன்றத் துனைத் தலைவர்
நா. யோகராஜா.
இந்து ஒளி 5

Page 7
L S K S S S S S S S S
சிவாபத்தில் மாமன்றக் கல்விக்குழு நடத்திய இந்து நாகரிக பயிலரங்கில் பங்குபற்றியமானவ மாணவிகள்
டப்ளியூ ஜே ஆதர் அப்புஹாமி சான்றிதழ் வழங்குகின்றார்.
அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக்குழு அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் சிலாபம் புனித பெர்னதேத்தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் இந்து நாகரிக பாடத்திற்குத் தோற்றும் மாணவர்க்களுக்காக இலவச பயிலரங்குகளை கடந்த ஜுன், ஜூலை மாதங்களில் நடத்தியது.
புத்தளம், உடப்பு, ஆண்டிமுனை, சிலாபம், கல்பிட்டி, கொட்டாரமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 73 மானவ, மாணவியர் இப்பயிலரங்குகளால் பயன்பெற்றனர்.
6 இந்து ஒளி
 
 
 
 

பயிலரங்கில் பங்குபற்றிய உடப்பு:தமிழ்ம விமானவிக்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.பி. எம். எம்.சனூர் சான்றிதழ் வழங்குகின்றார்.
மாமன்றக் கல்விக்குழுச் Girl TILLI A u IT FTT fi FfiT நெறிப்படுத்தலின் கீழ் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்க உறுப்பினர் திரு. ப. காளிதாசன் பயிலரங்குகள் சிறப்பாக நடைபெற ஏற்ற ஒழுங்குகள் செய்திருந்தார். பயிலரங்கை ஆரம்பித்து வைத்து சிலாபம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) திரு. பி.எம்.எம்.சனூர், மேற்படி வித்தியாலய அதிபர் திரு. டப்லியூ ஜே. ஆதர் அப்புஹாமி, திரு. பி. காளிதாசன், கல்விக்குழுச் செயலாளர் திரு. த. மனோகரன் ஆகியோர் உரையாற்றினர். மாமன்றத்தின் சார்பாக பொருளாளர் திரு.மு.கந்தசாமியும் திரு. மா. கணபதிப்பிள்ளையும் கலந்து கொண்டதுடன், சிலாபம் சைவமகாசபை சார்பில் திரு. எஸ். சிவநாதனும் கலந்து கொண்டார். பயிலரங்கில் திருமதி. மீரா விக்னேஸ்வரன், திருவாளர்கள் மு. மனோகரன், சோமசுந்தரம் முரளி ஆகியோர் விரிவுரையாற்றினர்.
பயிலரங்கில் பங்குபற்றிய சகலருக்கும் இருவேளை தேநீரும், பகலுணவும் வழங்கப்பட்டது. முன்னீஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயில், சிலாபம் சைவமகா சபை, அகில
இலங்கை இந்து மாமன்றம் ஆகியன இதற்கான உதவிகளைச் செய்தன.
கொழும்பிற்கு வெளியில் நடத்தப்பட்ட முதலாவது பயிலரங்கில் பங்குபற்றிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.எம். எம். சனூர் அவர்களும், அதிபர் டப்லியூ ஜே. ஆதர் அப்புஹாமி அவர்களும் வழங்கிய ஒத்துழைப்பு மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்தது.
ஈசா வருடம்-ஆடி-புரட்டாதி

Page 8
தமிழகத்தின் இந்துப் பண்பாடு பெரிதும் தமிழிலக்கிய வரலாற்றினையொட்டியே ஆய்வு செய்யப்படுகிறது. காரணம்
அக்கால இலக்கியங்களே அக்கால இந்து சமய, சமூக, u6dioTurf G பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வரலாற்றாதாரங்களாக விளங்கின. இலக்கியம் காலத்தின் கண்ணாடி எனப்படும். ஆரம்ப காலத் தமிழகத்து இந்துப் பண்பாடுபற்றி அறிந்து கொள்ள பெரிதும் இவ் இலக்கியக் கண்ணாடி பயன்பட்ட போதிலும், பிற் காலத்தே கல்வெட்டுக்கள் மற்றும் கட்டட, சிற்ப, ஒவியங்களும் கூடவே பெரிதும் பயன்பட்டன எனின் மிகையில்லை.
இந்து சமுத்திரத்திலே இந்திய உபகண்டத்தில் வடக்கே வேங்கட மலைக்கும், தெற்கே குமரிமுனைக்கும் இடைப்பட்டதாய் வங்காள விரிகுடாவைக் கிழக்கெல்லையாகவும், அரபிக் கடலை மேற்கெல்லையாகவும் கொண்டது பண்டைத் தமிழகம். இதனையே
"வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு”
என்று கூறுகிறது தொல்காப்பியம்.
தமிழகத்தின் கண்ணே தமிழிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாறு 'தமிழிலக்கிய வரலாறு’ எனப்படும். தமிழிலக்கிய வரலாற்றினை பலரும் பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தி ஆய்வர். எனினும் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களுடைய காலப் பகுப்பினையே இன்று பலரும் பொதுவாக ஏற்றுக் கொள்கின்றனர். அவரது பகுப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டது. அது வருமாறு.
1. முதலாழ்வார் மூவர்-பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதந்த
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி
 
 

சோமசுந்தரம் முரளி B.A (Cey)
1. சங்க காலம் - கி.பி.1முதல் கி.மு. 3 வரை 2. சங்கமருவிய காலம் - ” 3 ’ ’ 6 ” 3. பல்லவர் காலம் - ** 6 ** ** g ** 4. சோழர் காலம் - g ' ' 4 5. நாயக்கர் காலம் - ' 4 ' ' 16 '' 6. ஐரோப்பியர் காலம் - ’ 16 ’ ’ 19 ’ 7. தற்காலம்/நவீனகாலம் - ’ 2 0 ஆ ம்
நூற்றாண்டு
சங்ககாலத்தில் சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரது ஆட்சி நிகழ்ந்தது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், என சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலம் சங்ககாலம். இக்கால மக்கள் இயற்கையோடிணைந்த வாழ்வை நடாத்தினர். அகத்திற் காதலும், புறத்திற் போரும் சிறப்பிக்கப்பட்டது. ஆதலின் இது ‘காதல் ஒழுக்க காலம்’ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இக் காலத்தே எழுந்த நூல்கள் “பதினெண் மேற்கணக்கு நூல்கள்” எனப்படும்.
கி.பி.3 ஆம் நூற்றாண்டின் களப்பிரர து படையெடுப்பினால் பாண்டியராட்சி வீழ்ச்சியுற‘சங்கம் மருவிய காலம் உதயமாயிற்று. சமண, பெளத்தச் செல்வாக்கு எழுந்தது. சைவமும் தமிழும் இன்னல்களை எதிர்கொண்டது. துறவு போதிக்கப்பட்டது. அறவொழுக்கம் கூறும் நூல்கள் தோன்றின இக்காலத்தே தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன. சங்கமருவிய காலத்திற் பிற்பகுதியிலே காரைக்காலம்மையாரும், முதலாழ்வார் மூவரும் தோன்றி சைவத்திற்கும் வைணவத்திற்கும் தொண்டாற்றினர். துறவறம் மட்டுமன்றி இல்லறத்தில் இருந்தபடி பக்தி மார்க்கத்தின் வழியும் முத்தி பெறலாமெனக் கூறி வாழ்ந்தும் காட்டினர். எனவே சங்க மருவிய கால பிற்பகுதி பக்தி வித்திடப்பட்ட காலமாக மிளிர்கிறது.
கடுங்கோன் பாண்டியனின் படையெடுப்பு தமிழுக்கும் சமயத்திற்கும் விடிவெள்ளியாயமைந்தது. பாண்டிய பல்லவ படையெடுப்புக்களால் தமிழக வரலாற்றின் "இருண்ட காலம், என வரலாற்றாய்வாளர்கள் வர்ணிக்கும் களப்பிரர் காலம் அஸ்தமனமானது. சமண பெளத்த மதங்களும் வீழ்ச்சிகாண மீண்டும் சைவ, வைணவ மதங்கள் உயர்நிலையடைந்தன. சங்கமருவிய கால பிற்பகுதியில் வித்திடப்பட்ட பக்தி பெருவழக்காகியது. பல்லவகாலம் பக்தி இயக்க காலம்' எனப்
ழ்வார்.
இந்து ஒளி 7

Page 9
போற்றப்பட்டது. இக்காலத்தே சான்றோர் இலக்கியம் படைக்க, மன்னர்களும் கோயில்களைக் கட்டலாயினர். இதனால் இக்காலத்தை ‘கோவிற் பெருவளர்ச்சிக் காலம்' என்றும் கூறுவர். பெரும்பாலான நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி சைவ, வைணவ இலக்கியங்கள் படைத்ததும் இக் காலமே.
பல்லவரது வீழ்ச்சியோடு சோழராட்சி உதயமானது. பல்லவர்கள் இந்துக்களானபோதும் தமிழரல்லர் ஆயின் சோழரோ பெரிதும் சைவத் தமிழராயே இருந்தனர். எனினும் அவர்கள் பிற மதங்களை எதிர்க்காது சமயப் பொறையைக் கடைக்கொண்டனர். எனினும் சைவ, வைணவ மதங்களோடு ஏனைய மதங்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. மன்னர் புவிச்சக்கரவர்த்திகளாய் விளங்க புலவர்களும் கவிச்சக்கரவர்த்திகளாய் மிளிர எண்ணி இலக்கியம் படைத்தனர். காப்பியங்கள் பல தோன்றின. சோழர் காலம் 'காப்பிய காலம்' எனப் புகழப்பட்டது. புராண இதிகாசங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றன. மன்னர்கள் பிரமாண்டமான கோவில்களைக் கட்டினர். சோழர் காலம் அரசியல் சமூக, சமய, பொருளாதார நிலைகளில் உயர்ந்து பொற்காலமாக விளங்கியது.
பிற்காலச் சோழர்கள் பலங்குன்றியவர்களாக விளங்க, சிற்றரசர்களும் அடிக்கடி கலகம் விளைவிக்கத் தொடங்கினர். அடிக்கடி தமிழகத்தின்மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்ந்தது. சோழர் காலத்தே கோவில்களே சமூகத்தின் உயிர்நாடியாகத் திகழ்ந்தது. அரசின் திறைசேரியாகவும் கோயில்களே விளங்கின. ஆதலின் இஸ்லாமியர்களது முக்கிய இலக்கு கோவில்களாகவேயிருந்தது. ஆதலின் 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர் தங்களது மதத்தினை காக்கும் முதன் முயற்சியாக தம்மை ஆளும் பொறுப்பை நாயக்க மன்னரிடம் ஒப்படைத்தனர். இவர்கள்
விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியை நிகழ்த்தியமையால் இது விஜயநகரப் பேரரசுக் காலம்' எனவும்
8 இந்து ஒளி
 

அழைக்கப்படுகிறது. இவ் விஜய நகரப் பேரரசுக் காலத்திலே சைவ, வைணவ மதவளர்ச்சியிலே முக்கிய பங்கு வகித்தவை மடங்களும், ஆதீனங்களுமே. மன்னர்களும் தம் பங்கிற்கு இஸ்லாமியரால் சிதைக்கப்பட்ட கோவில்களைப் புதுப்பித்தும், புதிய ஆலயங்களைக் கட்டியும், தம் பங்கை வழங்கினர். கோவில் அமைப்பு முறையில் பல முக்கிய மாறுதல்கள் தோன்றின.
ஐரோப்பியர் வியாபார நோக்கோடு இந்தியாவினுள் நுழைந்து பின் நாட்டையும் அடிமைப்படுத்தினர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மூன்று இனத்தவர்களால் தொடர்ச்சியாக இந்தியா முழுமையும் ஆளப்பட்டு வந்தது. சமண பெளத்த மதங்களைப் போலன்றி இவர்களாற் புகுத்தப்பட்ட கிறிஸ்தவ மதம் மக்களை விரைவாகக் தன் வசப்படுத்திக் கொண்டது. மதம்பரப்ப மொழியின் அவசியம் கருதி ஐரோப்பியர் பலரும் தமிழ் கற்றனர். இலக்கியம் படைத்தனர். தமிழ் வளர்ந்தது. சைவமும் , வைணவமும் பயன் பெற்றதென்பதற்கில்லை. ஆயினும் ஈழத்து நல்லைநகருதித்த நாவலர், சி.வை.தாமோரம்பிள்ளை உள்ளிட்ட பல அறிஞர்கள் சைவமும் தமிழும் தழைக்கத் தம்மை அர்ப்பணித்தனர்.
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அந்நியரிடமிருந்து விடுதலை பெற்றன. மக்களாட்சி மலர்ந்தது. மதச் சுதந்திரம் மக்களது அரசியல் அடிப்படை உரிமையாயிற்று. பழைமையைப் போற்றலும் புதுமையை ஏற்றலுமென்று இந்து மதம் தனக்கேயுரிய பாதையில் வீறுநடைபோடுகிறது.
இது காலும் தமிழிலக்கிய வளர்ச்சியோடிணைந்து இந்துப் பண்பாடு வளர்ச்சிபெற்றதை மேலெழுந்தவாரியாக நோக்கினோம். இது ஒரு அறிமுகம் மட்டுமே. ஒவ்வொரு காலத்தும் தமிழகத்து இந்துப் பண்பாடு பற்றி இனிவரும் இதழ்களில் தனித்தனி நோக்கலாம்.
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 10
“சுவாமி விபுலானந்தரின் பெயர் இ அவரது ஆக்கங்களையும் அனைவரும் ஆ சுவாமி விபுலானந்தரைப் பற்றி பேசுவதற் கடல். அவரைப் பற்றி பேசுவதற்கு தமிழ் புலமையும் அவருடன் சேர்ந்து பிறந்துவ மட்டும் பார்க்க முடியாது. மிகவும் து ஒய்வில்லாத அவரது வாழ்க்கையை நாட முழுப் புலமையும் ஆழ்ந்திருக்கிறது" எ பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியின் சிற வைபவத்தில் கலந்து கொண்ட இலங்கை
ஆத்மகானந்தஜி அவர்கள் தனது சிறப்பு
மேலும் அவர் தனதுரையில் கூறி விபுலானந்தரின் முக்கிய அங்கம் என்று ே இறைவன் என்பதை ஆணித்தரமாக எ வாழ்க்கையில் உயர்வாக வெளிப்படுத்தி தீண்டாமையைப் பற்றி சொல்லப்பட்டு தகாதவர்களாகவும் சமுதாயம் மதித்தே சமமாகப் பேசக் கூடியதாக சேவையாற் பணி செய்து கிடப்பதே" என்று வாழ் இறைவனைக் கண்டு சேவை செய்தவர். கு பிரகாசிக்கின்றது. சுவாமி விபுலானந்தரி அனுஷ்டிக்கும் அகில இலங்கை இந்து தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சுவாமி சமுதாயத்தின் உயர்ந்த பண்பாடு, சமுதா
மேற்படி வைபவத்திற்கு, மாமன் தலைமை தாங்கினார். சிலையை நீ இவ்வைபவத்தில் கெளரவிக்கப்பட்டார் பூரீ சிவசுப்பிரமணியசுவாமி ஆெ
வழங்கப்பட்டது.
சிகர வருடம் - ஆடி-புரட்டாதி
 

ன்று உலகம் முழுவதும் பரவியிருப்பதுடன் ஆறிந்திருக்கிறார்கள். முத்தமிழ் வித்தகரான கு எனக்கு தகுதி இல்லை. அவர் ஒரு தமிழ்க் அறிஞர்களால் மட்டுமே முடியும். தமிழ்ப் ாளது. அவரை, வெறும் தமிழ்ப் புலவராக டிப்பான வாழ்க்கை வாழ்ந்தவர். சிறிதும் ) பார்க்கிறோம். யாழ் நூலிலேயே அவரது ன்று 1997.07.19ம் திகதியன்று மாமன்றப் ]ற சுவாமி விபுலானந்தரின் ஐம்பதாவது ப்பம்சமான உருவச்சிலை நிறுவப்பட்ட இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிஜி |ச் சொற்பொழிவின் போது கூறினார்.
யதாவது, “மனித சேவை என்பது சுவாமி சொல்லலாம். அன்புதான் சிவம், அன்புதான் ாடுத்துக் காட்டியவர் அவர். அன்பையே ய சமயம் இந்து சமயம். சமய நூல்களிலே ள்ளது. மனிதனை மிருகமாகவும், தீண்டத் போது மனிதனை உயர்த்தி, தெய்வத்திற்கு றியவர் சுவாமி விபுலானந்தர், “என் கடன் )ந்து காட்டியவர். எல்லா உயிர்களிலும் நரியனைப் போன்று இவரில் தமிழ்ப் புலமை ன் ஐம்பதாவது சிரார்த்த தினத்தை சிறப்பாக மாமன்றத்திற்கு எனது பாராட்டுதல்களை விபுலானந்தரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பத்தில் வளரவேண்டும் என விரும்புகிறேன்"
றத் தலைவர் திரு. வி. கயிலாசப்பிள்ளை றுவிய திரு. புல்லுமலை நல்லரத்தினம் . அதனைத் தொடர்ந்து, கொம்பனித்தெரு
யத்தில் மாமன்றத்தால் அன்னதானம்
இந்து ஒளி 9

Page 11
பிறப்பு
1892ம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் நாள் (கரவருடம் பங்குனித் திங்கள் 16ம் திகதி ஞாயிறு உதயம், பூரட்டாதி நட்சத்திரம்)
தந்தையார் சாமித்தம்பி அவர்கள், தாயார் கண்னம்மையார், இளமைப்பெயர் தம்பிப்பிள்ளை, பின்னர் கதிர்காமத்தில் மயில்வாகனம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
பிள்ளைப்பருவம்
1898ல் மட்டக்களப்புக் காரைதீவில் வித்தியாரம்பம் 1901ல் கல்முனை மெ.மி.பாடசாலையில் ஆங்கிலக் கல்வி 1904ல் மட்டக்களப்பு மெதடிஸ்த மிசன் மத்திய கல்லூரி
Larts: Tril séI
1906ல் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரில் கற்றார்.
॥
வாழ்க்ை
1906ம் ஆண்டு மார்கழித் திங்களில் கேம்பிறிட்ஜ் ஜூனியர்
பரீட்சையில் சித்தி 1908ல் கேம்பிறிட்ஜ் சீனியர் பரீட்சையில் தேர்ச்சி 1912ல் கொழும்பு அரசினர் ஆசிரியர் பயிற்சியில் சித்தி 1916ல் பொறியியல் டிப்ளோமா பரீட்சையில் தேர்ச்சி 1918ல் மதுரைத்தமிழ்ச் சங்க பண்டிதரானார் 1920ல் B.Sc.(Lond) பரீட்சையில் தேறி பட்டதாரியானார்.
ஆசிரிய ।
1909 மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியர் 1911 கல்முனை கத்தோலிக்க மிசன் பாடசாலையில் ஆசிரியர் 1913-1914 மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியர் 1917ல் கொழும்பு அரசினர் கல்லூரியில் வேதிநூல் உதவி
ஆசிரியர் 1917-1920 யாழ்ப்பாணம் அர்ச்சம்பத்தியார் கல்லூரியில் வேதிநூல்
தலைமை ஆசிரியர் 2-92 மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் 1928ல் திருகோணமலை இந்துக் கல்லூரியின் அதிபர் 1929ல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய அதிபர்
துறவறம்
1922ல் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். ஆசிரமப் பெயர்
பிரபோதனிசதளியர்
1924 சித்திரைப் பூரணையன்று ஞானோபதேசம் பெற்றுச் சுவாமி விபுலாநந்தர் என்னும் துறவுத் திருநாமம்பூண்டார்
பேராசிரிய சேவை
1931-1933 அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் கீழைத் தேசக் கல்விப் பீடத் தலைவராகவும் பணியாற்றியது.
1943ல் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்
10 இந்து ஒளி
 

վհմI60լիֆi)
கக் குறிப்பு
1914
சமூக சேவை
முதலாம் உலக யுத்தம் ஆரம்பித்த காலத்தில்போர் வீரராக நாடு காக்க முன்வந்தமை
1922-1924 இராமகிருஷ்ன விஜயம் (தமிழ்) வேதாந்த கேசரி
世925
博25
1925
1925
1925
世929
1930
|E
DE
(ஆங்கிலம்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகச் சேவை செய்தார். நவம்பர் மாதம் 6ம் திகதி கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். காரைதீவு, ஆனைப்பந்தி, மண்டூர், ஆரைப்பற்றை என்னும் இடங்களில் உள்ள பாடசாலைகளைப் பொறுப்பேற்றார். காரைதீவு சாரதா வித்தியாலய அடிக்கல் நடல் திருமலையில் ஆங்கிலக் கலாசாலை அடிக்கல் நடல் வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம் ஆகியவற்றை நடத்தும் பொறுப்பேற்றார். வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் அனாதைச் சிறுவர் இல்லத்தை ஆரம்பித்தார். மே மாதத்தில் சிவானந்த வித்தியாலயம் திறக்கப்பட்டது. யாழ்ப்பானத்தில் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தை தமிழறிஞர்களுடன் சேர்ந்து நிறுவினார். "பிரபுத்தபாாத" (ஆங்கிலம்) பத்திரிகை ஆசிரியனாக சேவை
தமிழ்த் தொண்டு
மாணிக்கப்பிள்ளையார் இரட்டைமாலை, சுப்பிரமணிய இரட்டை மணிமாலை என்னும் இரு பிரபந்தங்கள் இபற்றியமை
1911-1912 கோதண்ட நியாயபுரி குமரவேணவமணிமாலை,கனேச
1915
1922
1925
தோத்திர பஞ்சகம் என்னும் இரு பிரபந்தங்களை இயற்றினார். மேற்படி நான்கு பிரபந்தங்களையும் நூலாக
fifth LIT. பண்டிதமணி நவநீதகிருஷ்ண பாரதியாரால் ஆக்கப்பட்டு, மட்டக்களப்பு வித்துவான் சபூபாலபிள்ளை அவர்களால் உரையெழுதப்பட்ட உலகியல் விளக்கத்தைப் பதிப்பித்தார். மதங்கசூளாமணி என்னும் சிறந்த நாடக நூலை மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிட்டார்.
1934-1938 கலைச் சொல்லாக்கப் பணியில் ஈடுபட்டு
19凸高
19구
'கலைச்சொற்கள்' என்னும் அகராதி நூலினை வெளியிடக் காரனாயிருந்தார். மே மாதம் 5ம்,6ம் திகதிகளில் திருக்கொள்ளம் பூதூரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.
வீடுபேறு
ஆடிமாதம் 19ம் திகதி இரவு 1 மணி 15 நிமிடமளவில் கொழும்பு மாநகரில் வீடுபேறடைந்தார். அன்று ஆயிலிய நட்சத்திரம்
நன்றி மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற வேளியீடு-14)
ஈகர வருடம் -ஆடி-புரட்டாதி

Page 12
வையகத்தில் வாழ் வாங்கு வாழ்ந்து ஞானஒளி பரப்பி இன்று உலகமெல்லாம் போற்றி நிற்கும் பேறுபெற்ற யோகர் சுவாமிகளுக்கு ஒரு நினைவாலயம் எழுப்பப்படப்போகின்றது என்பது உலகிலெல்லாம் பரந்து வாழும் இந்துப் பெருமக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையிலிருந்து அருள் வெள்ளம் பாய்ச்சிய யோகர் சுவாமிக்கு அவரது சீடரான அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருந்து சமயப் பணியாற்றும் சுப்பிரமுனிய சுவாமிகளின் முயற்சியால் அமையப் பெற்ற திருவுருவச் சிலை உலகிலுள்ள இந்துக்கள் வாழும் நாற்பத்தி இரண்டு நாடுகளுக்கு வழிபாட்டிற்காகக் கொண்டு செல்லப்பட்டு இறுதியில் சுவாமிகள் வாழ்ந்த கொழும்புத்துறைக்குக் கொண்டு வரப்பட்டு நினைவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
சுவாமிகள் 1915ம் ஆண்டில் கொழும்புத் துறைக்கு வந்து அங்கு இருக்க எண்ணிய வேளை, அமரர் சின்னத்தம்பி வல்லிபுரம் அவர்கள் சுவாமிகளை வரவேற்று உபசரித்து தங்குவதற்கு இடமும் அளித்து கொழும்புத்துறைக்குப் பெருமை சேர்த்ததுடன் யோகரின் நற்சீடனாக இருந்து உதவிகளும் புரிந்தார்.
அதன் பின் அவரது சகோதரி மகனான சம்பந்தர் திருநாவுக்கரசு அவர் தொடர்ந்த திருப்பணியை இனிதே செய்து வந்தார். யோகர்சுவாமிகள் சமாதியடைந்தபின் அவரது அஸ்திக்கலசம் அவர் வாழ்ந்த ஆச்சிரமத்தில் வைத்து வழிபடப்பட்டு வருகின்றது.
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி
 

த. மனோகரன், (பொதுச்செயலாளர். அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம்)
உலகெங்கும் யோகர்சுவாமிகள் பற்றிய பக்தியுணர்வு பரவிவரும் இவ்வேளையில் அமரர் திருநாவுக்கரசுவின் புதல்வியான திருமதி. செந்தில் செல்வி பாலகிருஷ்ணன் தமது பரம்பரைக் காணியான சுவாமிகள் இருந்து ஞானவிருந்து படைத்த ஆச்சிரமத்தையும், தனது இல்லத்தையும் அதைச்சூழவுள்ள ஒன்பது பரப்புக் காணியையும் யோகர் சுவாமிகளது திருப்பெயரில் தொடரும் பணிகளை நிறைவேற்று முகமாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இன்று யோகர்சுவாமிகள் வாழ்ந்த காணி இந்துப் பெருமக்களது பொதுச் சொத்தாகிவிட்டது. யோகர்சுவாமிகளது ஆச்சிரமத்தில் ஒய்வு பெற்ற ஆசிரியை வினாசித்தம்பி அன்றாடத் திருப்பணிகளைச் செய்து சுவாமிகளதுஞானச் சுடர் பிரகாசிக்கத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.
இந்துக்களின் புனித இடமான கொழும்புத் துறை ஆச்சிரமத்தில் எதிர்காலத்தில் இந்து சமய நூல் நிலையம் அமையப் பெறவும், மடாலயங்கள் அமைந்து சமயப் பணி ஆற்றவும், இந்து சமய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும் என்பது உலகம் வாழ் இந்துப் பெருமக்களது விருப்பமாகும்.
பூதவுடல் துறந்தாலும் புண்ணியர்களின் ஞான சக்தி எங்கும் பரவி அருள் ஒளிதந்து எம்மை ஆதரித்து, ஆசிவழங்கும் என்ற நமது நம்பிக்கைக்கமைய யோகர் சுவாமிகளது திருவிடத்திலிருந்து கருணை வெள்ளம் பெருகி எம்மை காத்தருளப் பிரார்த்திப்போம்.
இந்து ஒளி1

Page 13
சைவசமயம் சிவ சம்பந்தமுடையது. ஆழமும் அகலமும் நுட்பமும் உடையது. இச் சமயத்திற்குரிய முதன்நூல்களாக வேதங்களும், ஆகமங்களும் திகழ்கின்றன. ஆன்மாக்களின் நன்மையின் பொருட்டு இறைவனால் அருளிச் செய்யப்பட்ட முதன் நூல்களாக இவை திகழ்கின்றன. இந்து சமயத்தின் முக்கிய அம்சங்களான சமய, தத்துவ, கலை, பண்பாடு சார்ந்த அனைத்து விடயங்களும் அடங்குகின்றன. இவற்றில் வேதம் பொது நூல் என்றும் ஆகமத்தைச் சிறப்பு நூல் என்றும் கூறப்படுகிறது. ஆகமம் அனைத்து இந்துசமய தத்துவங்களுக்கும் அடிப்படையாக அமைந்து விளங்குகின்றது. அதனால் அது சிறப்பு நூல் என்று அழைக்கப்படுகிறது.
ஆகமம் என்ற சொல் தோற்றம் வருகை'சாஸ்திரம் 'ஆப்தவாக்கியம் 'தெய்வத்திருநூல் மரபுவழிக் கோட்பாடுகளின் தொகுப்பு மரபு தந்திரம்' எனப்பல பெயர் பெறும் ஆகம என்ற மூன்றெழுத்தும் முறையே பாசம், பசு, பதி எனப் பொருள்படும். இன்னொருவகையில் சுடறும்போது "ஆ" என்பது சிவஞானம் என்றும் "க" என்பது மோட்ச சாதனம் என்றும் "ம" என்பது மலநாசம் எனவும் பொருள்படும். ஆகவே ஆன்மாக்களின் மலத்தை நாசம் பண்ணி சிவஞானத்தை உதிப்பித்து மோட்சத்தை வழங்குவதாகும்.
இத்தகைய ஆகமங்களில் ஒவ்வொரு சமயத்திற்குரிய ஆகமங்களும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகின்றன. இவ்வகையில் சைவ ஆகமம் சிவாகமம் என்று அழைக்கப்படுகிறது. இந்து சிவாகமங்கள் இருபத்தெட்டு அவற்றில் சிவபேதம் பத்து என்றும் உருத்திரபேதம் பதினெட்டு என்றும் கூறப்படுகிறது. உபாகமங்கள் 207 சிவாகமங்கள் 28ம் இறைவனால் அருளிச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமூலரது திருமந்திரத்தில்
'அஞ்சன் மேனி அரிவையோர் பாகத்தான்
அஞ்சோடிருபத்து மூன்றுள ஆகமம்'
என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.
வேதங்களோடு ஆகமங்களையும் ஒன்றாக
இணைத்துப் போற்றப்படும் மரபு உண்டு. பூநிகண்ட சிவாச்சாரியார் தமது வேதாந்த சூத்திரத்திற்குரிய
 

திருமதி முரளிகெளரி B.A (Hons)
பாஷியத்தில் "வேத சிவாகமங்களுக்குப் பேதம் காண்கின்றிலம், வேதமும் சிவாகமும் ஒன்றே' என்று வேதாகம ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி உள்ளார்.
ஆகமங்கள் கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவாரும் உளர். திருமூலர் காலத்தையே பின் எல்லையாகக் கொள்வர் அறிஞர். இதன் காலம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டோரில் வின்ரனிற்ஸ், ஸ்கோமாஸ், எபர்குவார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
சிவாகமங்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு சிவாகமங்கள் இந்து சமயத்தில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. சிவனுடைய ஐந்து முகங்களோடும் 2B ஆகமங்களும் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக காமிகம் முதல் அஜிதம் வரை உள்ள ஐந்தும் சத்தியோகஜாதி முகத்தினின்று கெளசிகி முனிவருக்கும், சுப்ரபேதம் முதல் அம்சுமத் வேதாகமம் வரை உள்ள ஐந்தும் வாமதேவ முகத்தினின்று காசிய முனிவர்க்காகவும் உபதேசிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இவ்வாறு ஆகமங்களுக்கு முறையான ஒரு உபதேசக்கிரமம் கூறப்படுகிறது. சிவாகமம் அன்று தொட்டு இன்று வரை ஒரு ஞான பரம்பரையாக உபதேசிக்கப்பட்டு வருகிறது. சதாசிவமூர்த்தி அனந்த தேவருக்கும் அனந்த தேவர் பூரீகண்டருத்திரருக்கும் பூரீகண்டருத்திரர் திருநந்தி தேவருக்கும் திருநந்திதேவர் சனற்குமாரருக்கும் சனற்குமாரர் முனிவர்களுக்கும் முனிவர்கள் மானுடருக்கும் மானுடர் மானுடர்க்கும் என ஒரு முறையான உபதேசக்கிராமமாக உபதேசிக்கப்பட்டது. ஒரு ஞான குரு பாம்பரையை தோற்றுவித்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனே குருவாக நின்று உபதேசித்து குருவழிப்பாட்டை சிறப்பித்த பெருமையும் உண்டு.
குருர்பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரர் குரு சாகராத் பரப்பிரம்மைதஸ்மை நிகுருவேநமக!
என்று கூறப்படுகிறது.
ாகர வருடம்-ஆடி-புரட்டாதி

Page 14
மேலும் சிவாகமங்களில் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ற வகையில் பின்பற்றக்கூடிய வகையில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதங்களில் அடங்கும் வகையில் தனது பொருளை விளக்கி நிற்கிறது. சரியாபாதம் ஒருவனது வாழ்வியல் ஒழுக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. கிரியாபாதம் கிரியை விதிகளைக் கூறுகிறது. காரணாகமம் காமிகாகமம் என்பன கிரியை பற்றிய விதிகளைக் கூறுகிறது. பிராணாயாமம் முதலிய யோகப் பயிற்சி பற்றிக் கூறுவது யோகா பாதம். பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் பற்றிக் கூறுவது ஞானபாதமாகும். இவ்வகையில் அவனவன் வாழ்வியல் பக்குவ நிலைக்கு ஏற்ற விதிகளைக் கூறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்துக்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவிபுரியும் இடமாகத் திகழும் ஆலயம், ஆலய சேவை பற்றிக் கூறுவதிலும் ஆகமம் முக்கியத்துவம் பெறுகிறது. கிரியாபாதம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு கர்ஷணம், பிரதிஷ்டை, உற்சவம், பிரயாசித்தம் என வகுத்தும் கூறப்படுகிறது. கர்ஷணம் என்றால் ஆலயத்திற்கான இடத்தை தேர்ந்தெடுத்து அதனை சமப்படுத்தி சதுரமாக்கி பண்படுத்தி ஆலயம் ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்குரிய கிரியைகளை கூறுகிறது. பிரதிஷ்டை என்றால் நிலை நிறுத்தல் அல்லது ஸ்தாபித்தல் என்று பொருள்படும். ஆலயத்தையும் அதில் விக்கிரகங்களையும் ஸ்தாபித்தல் பற்றிய விதிமுறைகளைக் கூறுகிறது. பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் உற்சவம் என்ற பெயரிலும் ஆலயத்தில் இடம்பெறும் கிரியைகளில் தெரிந்தோ தெரியாதோ ஏற்படும் குறைகளை நீக்க செய்யப்படுவது பிராயச்சித்தம் என்ற பெயரிலும் இடம்பெறும். இவை கூறப்படும் ஒழுங்கு முறையில் சில ஆகமங்களின் வேறுபட்டு அமைந்திருப்பதை அறியலாம். காமிகாகமத்தி 71வது படலம் பிரகாரிலிசுஷ்ண விதிப்படலத்தில் ஆலயம், ஆலயம் அமைக்கக் கூடிய இடம் பற்றி முதலிலும் பரிவாராலயங்கள் பரிவார தேவதைகள் என்பன பற்றிய விதிகள் அதனைத் தொடர்ந்தும் இடம் பெறும். ஆலயப் பிரகாரங்களின் எண்ணிக்கை ஆலயப் பிரமாணங்கள் என்பன பற்றியும் விளக்கப்படுகிறது.
திருவுருவங்களை உருவாக்கும் சிற்ப நுணுக்கங்கள் பற்றியும் சிவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. காமிகாகமமும் காரணாகமமும் இதில் சிறப்புப் பெறுகிறது.
இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாம் வ சக்திக்கு அப்பாற்பட்ட மாபெரும் சக்தி மயப்படுத்தப்படுகிறது. ஜீவாத்மா பரமாத்மா என்று அறியப்படுகிறது. அன்புதான் சிவம் எ6 அருளை வழங்குகிறது. அருள் அன்பை மேம்ப
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ܓܠ
ஈசுர வருடம்-ஆ-புரட்டாதி
 

திருவுருவ அளவுப் பிரமாணம் பற்றிக் கூறுவதில் உத்தரகாரணாகமம் சிறப்புப் பெறுகிறது.
இவ்வகையில் ஆகமம் கூறும் விதிக்கமைய தென்னாட்டிலும் இலங்கையிலும் அமைந்து விளங்குஞ் சிவாலயங்களிற் பல அமைந்திருப்பதோடு அவை கூறும் விதிமுறைக்கு ஏற்ப கிரியை நடைமுறைகளையும் கொண்டு விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி கா. கைலாசநாதக் குருக்கள் குறிப்பிட்டிருப்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.
இவை தவிர மந்திரச் சிறப்பு பஞ்சாட்சர ஜெபம், தூய்மை, நீரின் முக்கியத்துவம் போன்ற விடயங்களும் கூறப்பட்டிருப்பது அறியப்படுகிறது. உதாரணமாக ரெளரவ ஆகமத்தின் 1" படலம் கலையின் முக்கியத்துவம் பற்றியும் 4 அத்தியாயம் தூய்மை பற்றியும் 6" அத்தியாயம் நீரின் முக்கியத்துவம் பற்றியும் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சைவ சித்தாந்தம் குறிப்பிடும் உண்மைப் பொருட்களான பதி, பசு, பாசம் பற்றிய கருத்துக்களும் இடம் பெறுகிறது. இம் முப்பொருள் உண்மையை அறிய ஆகம அளவையே சிறந்தது என்றும் கூறப்படுகின்றது. மேலும் ஆலயத்தில் இடம்பெறும் சிவலிங்கம் பதி எனவும், நந்தி பசு எனவும், பலிப்பீடம் பாசம் எனவும் சுட்டப்படுவதோடு திருவாசி பிரணவப் பொருளை உணர்த்துவதோடு திரைச்சீலை மாயையை விளக்கி நிற்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வகையில் சிவாகமம் இந்துக்களின் சமய, தத்துவ, கல்வி பண்பாடு சார்ந்த அனைத்து விடயங்களையும் விளக்கி நிற்பதால் இதனை அடுத்து எழுந்த பத்ததிகளில் ஆகமம் பற்றிய கருத்தே பின்பற்றப்பட்டிருக்கும் சிறப்பு பெறுகிறது. உதாரணமாக அகோரி சிவாச்சாரியார் பத்ததி குறிப்பிடத்தக்கது.
தொகுத்து நோக்குமிடத்து இறைவின் நூல் என அழைக்கப்படும் ஆகமம் இந்துக்களை வாழ்வில் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ற வகையில் ஒழுகும் வகையில் பல விடயங்களைக் கூறுவதோடு ஆலயத்திற்குரிய பிரமாணவிதிகளையும் கிரியை நடைமுறைகள் பற்றிய இன்னோரன்ன விடயங்களையும் கூறி இந்து சமய இலக்கியப் பரப்பில் முதன்மை பெறுகிறது.
பல்லவன். மாபெரும் கொடையாளி. எங்கள் இறையுணர்வு வளர ஆன்மா அன்பு ாவாக வளர்ச்சியடைகிறது. அன்பு தான் சிவம் ன்பதை அறிய அறிவு தேவைப்படுகிறது. அறிவு டுத்துகிறது. அன்பு சிவமாகிறது.
(நன்றி : முருகானந்தம்)
لص ـ ـ ـ ـ صـ ـ ـ ـ
இந்து ஒளி 13

Page 15
புத்தளம் முத்து ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ {
(நித்திய சீர்மை வாழ்வு நிம்மதியோடு எ
கொண்ட அன்னை முத்துமாரியின்
புத்தளம் நகரின் எல்ல்ை பூமிை சித்திகள் வழங்க வென்று சீர்ை எத்திக்கும் உந்தன் அன்பு ஏற்றி சத்தியம் அதுவேயுண்மை தாே
வெற்றிகள் வந்து சேர வேதeை நற்றுணையாவாய் அம்மா நாடி ஆற்றலைத் தந்தெமக்கு ஆறுத போற்றியே அடிபணிந்தோம் த
முன்புறம் திருக்குளமும், பின்ட் அன்புரு கொண்ட உந்தன் ஆல இன்புற இனிய வழி ஈந்திட வ உன்னடி சரணடைந்தோம் தாே
நவராத்திரி நாட்களிலே நல்லழு நகர்வலம் வந்தெமது நன்மைச நலமே எமக்கருளும் உனை நா நாடியின் உயிர்த்துடிப்பே தாயே
பெருமைகள் கொண்ட அம்மா அருள் வெள்ளம் பெருக்கி யெ இருள்தரும் துன்பநிலை இல் ஊரெங்கும் உந்தன் மாட்சி ஒ6
சத்தியம் நிலைத்து நிற்க, சாத் இத்தலம் கோயில் கொண்ட இ நித்திய சீர்மை வாழ்வு நிம்மதி புத்தளம் அமர்ந்த ஜோதி தாயே
14 இந்து ஒளி

| LonTrif ଜ୍ଞ, ଜ୍ଞ, ଜ୍ଞ, ଜ୍ଞ, ଜ୍ଞ, ଜ୍ଞ
ாமக்கருளும் புத்தளம் நகரில் கோயில்
அருள்யாவர்க்கும் கிட்டிடட்டும்)
)யத் தாங்கும் அன்னை மயாய் கோயில் கொண்டாய் டுெம் தெய்வ ஜோதி ய முத்து மாரியம்மா
ன அகன்று ஒட யே இறைஞ்சுகிறோம் நல் தருவாய் தேவி ாயே முத்துமாரியம்மா
றம் உப்பளமும் )ய எல்லைகளே
ருவாய் அம்மா ய முத்துமாரியம்மா
நள் பரப்பிநின்று 5ள் காப்பவளே டியே நிற்குமெங்கள் முத்து மாரியம்மா
பேதமை போக்கிடுவாய் ம்மை ஆள நீ கருணை கொள்வாய் லா தொழித்திடுவாய் ரிரட்டும் தாயே முத்துமாரியம்மா
தனைகள் மேலோங்கிவெல்ல இணையில்லாப் பேரருளே யோடெமக்கருளும் முத்து மாரியம்மா
த.மனோகரன் “உமாபதி” கொழும்புத்துறை
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி ,

Page 16
சைவத்தையும் அதன் தன்மைகளையும் இன்றுவரை
பலர் சொல்லக் கேட்டு சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.
1. வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்.
2. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்.
3. இறந்தாலும் உனை மறவாதிருக்க வரந்தர வேண்டும்
இவ்வையகத்தே.
4. நீர்மேல் குமிழிபோல் நிலையிலா வாழ்க்கை.
என்று இவ்வாறு பலபல விதமாகக் கூறிக் கொண்டே போயுள்ளார்கள். அப்படியானால் நாம் எதைச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
கடவுள் ஒருவரே. அவர் சிவம் எனப்படுவர். அவர் எங்களுடைய மனத்துக்கு எட்டாதவரும், அப்பாற்பட்டவருமாவார். இதையே "அங்கிங்கெனாபதி எங்கும் பிரகாசமாய்” என்றார்கள் அனுபூதிமான்கள் அன்றியும் பூரீலழரீ ஆறுமுகநாவலர் ஐயா அவர்கள் “எங்கும் நிறைந்தவர்” என்றார். இதனாற்தான், மண்சுமந்து அடியுண்டபோது,
தார்மேனின் நிலங்குபுயவழுதி மேலுந், தன்மனைமங்கையர்
மேதுமமைச்சர் மேலு மார்மேலும் சென்று பொலுஞ் சேனைமேலுமயன்மேலுமான்மேலு
மறவோர் மேலுந் தேர்மேல் வெம்பகள் மேது மதியின் மேலுஞ்சிறந்துள
விந்திரன்மேலுந் தேவர்மேலும் பார்மேலுங் கடன் மேலும் மரங்கள் மேலுபட்டதரன்
மெய்யிலடிபட்டபோதே.
என்று கடவுள் மாமுனிவர் பாடியுள்ளார். திருவாதவூர் அடிகள் புராணத்தில் இன்னும் சற்று முந்திய காலத்திற்குப் போனால் திருவருட் சக்திக்கு உமாதேவி என்று பெயர். உமாதேவிக்கு இலக்குமி, சரஸ்வதி, காளி, கெளரி, தட்ஷா,
எனவேறு பலகாரணப் பெயர்களுமுண்டு. சிவபெருமான்
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி
 

இரா. மயில்வாகனம்
சக்தியினாற் பல்வேறு தொழில்களைச் செய்வார். வெவ்வேறு தொழில்கள் செய்தலினால் பலகாரணப் பெயர்களைப் பெறுவார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையுஞ் செய்யும்போது பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற பெயர்கள் அவற்றைச் செய்யும் சக்திகளுக்கு ஜனனி, ஹாயித்திரி, ஆசினி என்ற பெயர். இந்த மூன்று சக்திகளும் சூலத்தின் மூன்று கவர்களை ஞாபகப்படுத்தும் உயிர்களுக்கு அறிவைக் கொடுக்கும் சக்திக்கு ஞானசக்தி, முத்தொழிலையுங் செய்யுஞ் சக்திக்கு கிரியா சக்தி, பிரபஞ்சத்தை ஆளும் சக்திக்கு இச்சா சக்தி என்று பெயர். பிரபஞ்சத்துக்கு மூலமாகிய மகாமாயைக்குத் தலைவராய் இருப்பதால் சிவபெருமையுடைய விநாயகர் என்றும் கூறுவர்.
குருவாய் இருந்து மெய்யறிவை ஊட்டுதலால் தட்சணாமூர்த்தி என்றும், சுப்பிரமணிய மூர்த்தி என்றும் பெயர். உலகத்தைக் காக்கும் சக்தி பத்து மூர்த்தங்களையுடையது. மேற்பக்கத்தைக் காக்கும் போது பிரமா என்றும், கீழ்ப்பக்கத்தைக் காக்கும்போது விஷ்ணு என்றும், கிழக்கு முதல் எட்டுத் திசைகளையும் காக்கும்போது இந்திரன், அக்னி, யமன் நிருதியமன், வாயு, குபேரன், ஈசானன் என்றும் பெயர். இந்த மூர்த்தங்கள் உலக பாலகர்கள் எனப்படுவர். இவர்களுக்கு ஆயுதம் என்று சொல்லப்படுவனவும், அவருடைய சக்தியின் ரூபங்களே. அவை, பதுமம், சக்கரம், வச்சிரம், சக்தி, தண்டம், வாள், பாசம், துவசம், கதை, சூலம், என்பன. இவைகள் சதாயுதம். இவற்றை ஒரே முறையில் பிரதிவிம்பங்களில் சித்தரித்து படங்களாகக் காட்டும் போது ஒருவகைப் பீதி உண்டாவதும் உண்டு. உதாரணமாக வீரபத்திரர், வைரவர், காளிகா, இவைகளைப் படங்களில் காணும்போது இந்த மெய்ப்பாடு உண்டாகிறது. இது இயற்கையே.
கடவுள் உருவம் இல்லாதவராயினும் அவரை நினைத்தற்கும், வணங்குவதற்கும் உருவஞ் சொல்லப்படுகின்றது. உருவத்தின் பகுதிகள் அவருடைய தன்மைகளையே குறிப்பன. ஐந்து முகங்களாகத் தோற்றப்படும்போது, ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம், என்று பெயர். இவைகள்
முறையே அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல்,
இந்து ஒளி1

Page 17
ஆகியவற்றைச் செய்யும் திருவருளைக் குறிக்கும். இருதயம் மெய்ப்பொருளாதலையும், சிரசு நித்தியானந்தத்தையும் குறிக்கும். சிகை (முடி) ஆன்மாக்களை வசப்படுத்தும் சக்தியையும், கவசம், இரட்சிக்கும் சக்தியையும், நேத்திரம் (கண்) சகத்திற்கும் காரணமாய் இருக்கும் சக்தியையும் குறிப்பன. ஐந்து முகங்களும் பஞ்சப் பிரம்மம் என்றும், ஆறு அங்கங்களும் ஷடங்கமென்றும் பெயர் பெறும் (ஷடம்: ஆறு) ஆன்மாக்கள் சிவஞானத்தைப் பெற்று சிவத்தன்மையை அடைந்து சிவபெருமானை அறியும் வரைக்கும் அருள் வடிவங்களையே பூசிக்கவும் தியானிக்கவும் வேண்டும்.
உதாரணமாக ஒர் ஆகாயக்கப்பலோட்டி மேலே எழும்பும் போது நிலத்திலே சிறிது நேரம் ஓடவேண்டும். இதற்கு சில்லுகள் வேண்டும். இவற்றின் உதவியினால் தரையிலே ஒடியபின் மேலே எழும்பிப் பறப்பான். இதே போன்று ஆன்மா சிவத்தை அடைவதற்கு நிலத்தில் ஒடுவதுபோல் முன் செய்தவற்றை நீக்க வாழ்க்கையாகிய வண்டியை ஒட்டவேண்டும். இவை நாலு சில்லாகவும் இருக்கும். நானூறாகவும் இருக்கும். இச்சஞ்சீவி வினை முடிந்த பின்னரே மேலே ஏறிப் பறக்க வேண்டும். இதனுடைய சித்தாந்தக் கொள்கை மிகவிரிவானது.
எவற்றிலும் மேலானதாகிய மூலமந்திரம் ஐந்தெழுத்தெனப்படும். ஐந்து முகங்களினுடைய பெயர் சார்ந்த மந்திரங்கள் மிரமமந்திரங்கள். ஆறு அங்கங்கள் சார்ந்தவை அங்க மந்திரங்கள். இப்பதினொரு மந்திரங்களும் சங்கிறை மந்திரமெனப்படும். (சங்கிறை என்பது தொகுத்து வருவன)
ஆன்மாக்களும் இவ்வாறே என்றும் உள்ளன. ஆதி அந்தமில்லாதன. உருவமற்று அருவமானவை. அறியும் வல்லமை உடையன. இயல்பாகவே மலத் தொடர்புட்ையன. சிவபெருமானது திருவருளால் மலப்பற்றின் நின்று நீங்கி சித்தத்தன்மையை அடையத்தக்கவை. சிவத்தன்மையை அடைவதற்கு முன் அளவிலாத பிறவிகள் எடுக்கவேண்டிவரும். இவைகள் மலங்களின் தன்மைக்கேற்ப
இருக்கும்.
பிறவி என்பதை வள்ளுவப் பெருந்தகை பிறவிப் பெருங்கடல் என்றார். மலங்களை ஆணவம், கர்மம், மாயை என மூன்றாக முன்னோர் கூறினர். ஆணவம் பொய்யறிவைக் கொடுப்பது. கர்மம் ஆன்மாக்கள் செய்யும் வினை, மாயை உலக அறிவாகிய சிற்றறிவைக் கொடுப்பது. இவைகள் தொழிற்படும் போது முன் செய்த கர்மத்துக்கு தக ஆன்மா உருவைச் சாரும். அவ்வுருவம் ஆணவத்தை பெற்று கர்மம் செய்யும். இதை மாயை மறைக்கும், வெளிப்படுத்தும். இவ்வாறே தோன்றித் தொழிற்படும். அப்போ அதை வாழ்க்கை என வர்ணிக்கிறோம். இவற்றின் முதற்காரண
16 இந்து ஒளி

நிமித்த காரண மூலமாகவே கடவுளும் தொழிற்படுவார். இதையே நாம் இடையீடாக விதி என்று கூறி மனமாறி வாழுகின்றோம்.
ஆணவச் செயல்களின் பயனை அனுபவித்தலால் ஆணவம் வலி குறையும். கடவுளரின் திருவருள் வழிநின்று செய்வனவற்றால் மெய்யறிவு பொலியும். மாயையிலே சுத்தமாயை அசுத்தமாயை என்று இருவகை உண்டு. சுத்தமாயையிலிருந்து தோன்றுஞ் சிவதத்துவங்களைந்தும் ஆன்மாவுக்கு அன்பையும் அறிவையும் வல்லமையையும் கொடுப்பன. அசுத்தமாயையினின்று வித்தியாதத்துவங்கள் ஏழும் ஆன்மதத்துவங்கள் இருபத்தைந்தினாலும் தோன்றும், வித்தியா தத்துவங்கள் ஆன்மதத்துவங்களை நடத்துவன. மாயையிலிருந்து தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூவகையுடம்புகளும் உலகங்களும் ஆக்கப்படும்.
இவற்றை நாம் ஏன் சிந்திக்க வேண்டுமானால் கடவுளின் பார்வையில் ஆடையில்லாமல் பிறந்த இந்த உயிருள்ள உடம்பு மற்றைய உடம்புகளையும், உடம்பு கொண்ட வாழ்க்கைகளையும் நோக்கும்போது எவ்வளவு வேறுபாடுடையனவாய்த் தோன்றுகின்றன. இவ் வேறுபாட்டிற்கு முன் சொன்ன சித்தாந்தக் கொள்கைகளே பதிலிறுக்கும். வாழ்வாவது மீளாத்துயர் என்று எண்ணி வெறுக்கவேண்டாம். எல்லாம் அவன் செயல், எப்பவோ முடிந்த காரியம் என்று மனதை மதியப்படுத்தி நிற்க வேண்டும்.
இரத்தம் தசை முதலியவற்றால் ஆக்கப்பட்ட உடம்பு தூல உடம்பு எனப்படும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலியவற்றைச் சார்ந்த உடம்பு சூக்கும உடம்பு. சிவதத்துவங்கள் சார்ந்துள்ளது காரணவுடம்பு மாறிமாறி இப்படி அழிந்தும் தோன்றுவதும் தூலவுடம்பே.
நம்போன்றவர்களை விட மற்றைய தேவர், அசுரர் இவர்களும் கடவுள் நம்பிக்கை உடையவர்களா? என்பது இன்னொரு விடயம் ஆகும். தேவர்களும், அசுரர்களும், மிகவல்லமை உள்ள பிறவிகள். ஆயினும் மெய்யறிவினால் உண்டாகும் குணத்தையுடையவர்களைத் தேவர்கள் என்றும் பொய்யறிவினால் உண்டாகுங் குணத்தையுடையவர்களை அசுரர் என்றும் கூறலாம். ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய முயலும் போது மெய்யறிவு ஒருபக்கமும் பொய்யறிவு இன்னொருபக்கமும் வந்து முட்டி மோதும். இதையே நாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உண்டாகும் போர் என்று சொல்லலாம். எத்தனையோ முன்கூறிய புராணங்களின் உண்மையான அறிவு இதுவே. இதை நான் நினைவிலிருத்த வேண்டுமென்றே கூறுகிறேன். உயர்ச்சி, தாழ்ச்சி, பெரியது, சிறியது, முன்வந்தது, பின்வந்தது, நானே ஆக்குவேன் அழிப்பேன், எனது, என்னுடையது என்ற அகங்கார
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 18
மமகாரங்களும், தேவ,அசுரர்களே. இவற்றின் உண்மையை
இலகுவாக் அறிய முடியாது.
தேவர்களின் சிருஷ்டியைப் பலவாறு காணலாம். இவைகள் சிவமூர்த்தியின் தத்துவங்களே. உருத்திரர் வித்தியேசுரர் எனப்படுவர், உருத்திரர் என்போர் சிவமூர்த்தியின் சிறந்த அருளைப் பெற்றவர்கள். அவர்களின் பெயர் மஹாதேவர், ஹரர், உருத்திரர், சங்கரர் நீலலோகிதர், ஈசானர், விஜயர், பீமர், தேவதேவர், பவோற்பவர், கபாலீசர்,
என்பன.
மகேசுவரருடைய சிறந்த திருவருளைப் பெற்றோர் வித்தியாசுரர். இவர்கள் மந்திரங்களுக்குத் தலைவர் ஆதலால் வித்தியேசுவரர் எனப்பெயர் பெற்றனர். அநந்தர், சூசுஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்தர், திரிமூர்த்தி, சிகண்டி, எனப்பல பெயர்களால் அழைக்கப்படுவார்கள்.
இப்படியே முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், ஞானிகள், வேறுவேறு வழிகளால் கடவுளாரின் திருவடியைக் காணமுற்படுபவர்கள். இவர்களுக்கும் சஞ்சீவியின் நெருக்குதல் உண்டு. இவை விருக்கிற் பெருகும்.
உதாரணமாக, தக்கன் பிரமதேவனின் மகன். பிரசாபதி, பிரசைகளுக்கு அவன் அதிபதி. மூன்று உலகத்து உயிர்களோடும் தொடர்புடையவன். தக்கனுக்கு சிறுவிதி என்பது மறுபெயர். விதி-வித்தகத் தொழிலைச் செய்யும் பிரமதேவர். தக்கன் பிரமதேவருக்கு அடுத்தபடியில் உள்ள ஒர் பிரமதேவன். பிரமதேவனுடைய பதின்மர் புதல்வர்கள். அவர்களை உபப்பிரமர்கள் எனச் சொல்வதுண்டு. அவர்களுக்குள்ளே சிறந்தவன் தக்கன்; வெகு புத்திமான்.
r
குமரண் குநள்
முருகன் திருநாமம் முப்போதும் போற்றப் பெருகுமே சீரெல்லாம் பெய்து
அருவுரு வேமுருகாம் அம்கையில் வேலேந்தும் உருவைத் தொழுதே உயர்
குன்றுதோறாடும் குமரேசன் பாதமலர் என்றும் தொழமிகுமே இன்பு சித்தத்தில் நின்றாளுஞ் செவ்வேளே எம்மவர்தம் முத்திக்கு வித்தாம் முதல் இயற்கையாய் நின்று இதயத்து உறைவான் வியத்தகு வேந்தனாம் வேள்.
(நன்றி : முருகானந்தம்)
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி

புத்திமானும் பிரசாபதியுமாகிய தக்கன் தந்தையாகிய பிரமதேவனிடம் வேதாந்தங்களைக் கற்றுத் தெளிந்தவன்.
“சங்காரக் கடவுளுக்குப் படைத்தல் காத்தல்களைச் செய்யும் கடவுளரினதும் பார்க்க உயர்ச்சி பேசுவதேன். சங்காரத் தொழில் கீழான தாமதக் குணத்தொழில் அன்றோ?” என்று பிதாவும் குருதேவருமாகிய பிரமதேவரைத் தக்கன் கேட்டான்.
சங்காரமாவது படைக்கப்பட்ட தனு, கரண, போகங்களாகிய உலகங்களை ஒடுக்குவதாம். அச்செயலின் விளைவு ஆன்மசுகமாம். செயல் தாமதகுணத்தோடு கூடிய மற்றச் செயலே போன்று தோன்றினும் அஃது அருள் எனப்படும் அநுக்கிரகமேயாம். நடுவனாகிய இயம தர்மராசனது செயல் கொடுஞ் செயல்போன்று தோன்றும். அவனது செயல் அரிதாகிய நீதியின் செயல்
சங்காரதொழிலைப்பற்றிச் சொல்லப்படுஞ் செயல் இறைவனுக்கு இயல்பான குணமன்று, செயற்குணம். இறைவன் நிர்க்குணன். சாத்துவிகம், இராசதம், தாமதம், என்றே மூன்று குணமும் இல்லாதவன். இதனாலே இறைவன் ஒரு குணமும் இல்லாதவன் என்பது கருத்தன்று. அவன் எண்குணன். பகவன். பகம்- அறுகுணம்.
இதையுன்னியே
தீயதன்நடுஞ் செயலும் நல்லருள் ஆயின் ஆவிகள் அழிந்துந் தோன்றியும் ஓய்விலாதுபுன்றுலைவுறாமலே மாயவு செய்திறை வருத்தும் மாற்றலால் என்பார்.
། அகில இலங்கை இந்து மாமன்றத்தில் நடைபெறவுள்ள விசேட பூசைகள்
15997 ஆவணி 30ந் திகதி திங்கள் நடேசரபிஷேகம் 1097 புரட்டாதி 25ந்திகதி சனி விஜயதசமி 141097 புரட்டாதி 28ந் திகதி செவ். நடேசரபிஷேகம் 131297 கார்த்தி 25ந்திகதி சனி சர்வாலயதீபம் 12.197 மார்ச் 28ந் திகதி திங்கள் மார்கழித் -
திருவாதிரை நடேசரபிஷேகம்.
14198 தை 1ந் திகதி புதன் தைப்பொங்கல் 27298 மாசி 13ந் திகதி வெள்ளி மஹா சிவராத்திரி
13398 மாசி 27ந்திகதி வெள்ளி மாசிமகம் -
நடேசரபிஷேகம்
இந்து ஒளி 17

Page 19
எமது இந்து சமயத்திலே குரு, இலிங்க, சங்கம வழிபாடுகள் மிகவும் இன்றியமையாதனவாக வலியுறுத்தப்படுகின்றன. இவற்றுள்ளும் குருவழிபாடே மிகவும் முதன்மை பெறுகின்றது. குரு என்பவர்
அறியாமையாகிய இருளைப் போக்கி அறிவென்னும் பேரொளியை எம் இதயத்தில் ஒளிரச் செய்பவர் ஆவார். எனவே அருளாளராக விளங்கும் இந்த ஆன்மீக குருவை பக்தியோடு வணங்குதல் அவசியமானதாகும். குருவழிபாடானது பண்டைக்காலம் தொட்டுப் பேணப்பட்டு வருவது. முடி சூடும் மன்னரும் குருவின் திருவடி பணிந்து அருள்வழி நடந்தது குருகுலக் கல்வி முறை. அவதார புருஷராக விளங்கிய பூரீராமபிரான் கூட குருகுலக் கல்வி முறைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார் என்பது இதன் சிறப்பு.
"முடி சூடிய மன்னரும் பிடி சாம்பராவது திண்ணம்.” எனவே, இந்த ஜகத்திலே ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனதும் குறிக்கோள், உயர்ந்த பதவி வகிப்பதோ உலகளவு நிதி பெறுவதோ உலகோர் புகழ வாழ்வதோ அல்ல. உலகிற்கே முழுமுதலாக விளங்கும் ஆத்மநாயகனின் ஆனந்தமயமான பாதார விந்தங்களின் கீழ் அமைந்து பேரின்பப் பெருவாழ்வினை அடைதலே ஆன்மீக இலக்காகும். இந்த ஆன்மீக வழியிலே அடியார்களை இட்டுச் செல்ல ஆண்டவனே குருவாக எழுந்தருளி வந்ததை மாணிக்கவாசகரின் வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம். இதன் மூலம் குரு என்பவர் இறைவனாகப் பாவித்துப் பூஜிக்கப்பட வேண்டியவர் என்பது புலனாகின்றது. “மாதா, பிதா, குரு தெய்வம்” என்பது ஆன்றோர் வாக்கு.
குருவிடம் கல்விகற்கும் போது எவ்வாறான நிலையிலிருந்து கற்க வேண்டுமென ஒரு சமயம் மூவுலகும் புரக்கும் முக்கட்பெருமானே எமக்கு எடுத்துக் காட்டுகிறார். அதாவது, தனது குமாரனாகிய முருகப் பெருமானிடம் பிரணவத்தின் பொருள் கேட்டபோது ஆண்டவன் கை கட்டி, வாய் புதைத்து ஐம்புலன்களும் அடக்கி நின்று கேட்டார் என்று கூறப்படுகிறது. எமது இந்து சமயத்தின் பொது நூலாக விளங்கும் வேதங்களின் முடிவாகிய வேதாந்தம் அதாவது, வேதசிரசு என்று அழைக்கப்படும் ‘உபநிடதங்கள் என்பதன் பொருள் ‘மறைபொருட் கோட்பாடுகளை
18 இந்து ஒளி
 

சல்வி. லலித சொரூபினி கந்தசாமி - வேம்படி மகளிர் கல்லூரி
அறிவுறுத்தும் ஓர் ஆசிரியரின் அடியிலிருந்து கேட்டல் என்பதாகும். இதன் மூலம் இந்து சமயத்தில் குருவிற்கு கொடுக்கப்பட்டுள்ள முதன்மை விளங்குகிறது. தன்னிடம் நேரடியாகக் கல்வி கற்காமல் தன்னை மானசீக குருவாகக் கொண்டு வில்வித்தை கற்ற ஒரு மாணவனின் குருபக்தியைக் கண்டு ஆசிரியரே வியந்து நின்றார். இது மகாபாரதத்தில் எமது கண்களை நீர் ததும்பும் குளமாக மாற்றும் ஓர் உயிர்த்துடிப்பான சம்பவம். சிஷ்யனின் குருபக்தி கண்டு வியந்து நிற்கும் ஆசிரியர் வேறுயாருமல்ல, துரோணாச்சாரியாரே ஆவார். இவர் அரச குலத்தவர்களுக்கு மட்டுமே வித்தை கற்பித்து வந்தார். இவரிடம் கல்வி பயில ஏகலைவன் என்னும் மாணவன் ஆசையுற்றான். ஆனால் அவரோ வேடன் என அவனை ஒதுக்கினார். இதனால் மனமுடைந்த ஏகலைவன் தன்விதியை நொந்து விட்டு, துரோணாச்சாரியாரைத் தன் குருவாக மனதிலே நினைந்து வழிபட்டு விற்பயிற்சியை ஆரம்பித்தான். அதிலே அவன் சிறந்த தேர்ச்சியுமடைந்தான். ஒரு சமயம் தனது பிரியத்திற்குரிய மாணவனாகிய அர்ச்சுனனுடன் துரோணர் ஏகலைவன் வசித்த பகுதிக்கு அண்மையாக சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் ஏகலைவன் அமைத்து வழிபட்டு வந்த துரோணாச்சாரியாரின் உருவச்சிலை மீது அர்ச்சுனனின் நாய் அசுத்தம் பண்ணியது. இதனால் சினமுற்ற ஏகலைகன், ஒரம்பினால் அதனைக் கொன்றான். இது கண்டு வெகுண்ட அர்ச்சுனனைக் கையமர்த்தி விட்டு ஏகலைவனிடம் திரும்பிய துரோணர், “எதற்காக இந்நாயைக் கொன்றாய்” என்று கேட்டார். அதற்கு ஏகனிலவன் “சுவாமி ! தங்களை என் மானசீக குருவாக நினைந்து வில்வித்தை கற்று அதில் சிறந்த தேர்ச்சியும் அடைந்துள்ளேன். தங்கள் உருவச்சிலையை அமைத்து அதனைத் தாங்களாகவே பாவித்து வழிபட்டு வருகிறேன். அச்சிலை மீது இந்நாய் அசுத்தம் பண்ணியது. அதனாலேதான் அதனைக் கொன்றேன்” என்றான். அப்பொழுதுதான் துரோணர் தனது உருவம் அங்கு சிலையாக நிற்பதைக் கண்ணுற்றார். ஏகலைவனின் குருபக்தியை மனதினுள் மெச்சிய துரோணர் அதனை மேலும் சோதிக்க விரும்பி, ஏகலைவனிடம் “ஏகலைவா! நீ குருவாகிய எனக்கு காணிக்கையாக நான் கேட்பதைக் கொடுப்பாயா?” என்று கேட்க, “எது கேட்டாலும் கொடுப்பேன் சுவாமி” என அவன் மொழிந்தான். உடனே
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 20
துரோணர் ‘உனது வலதுகைக் கட்டை விரலைத்தா ’ என்றார். சிறிதும் தாமதியாத ஏகலைவன் தனது கையிலிருந்து கட்டை விரலைத் துண்டித்து அவரது பாதாரவிந்தங்களில் காணிக்கையாக செலுத்தி வணங்கி நின்றான். தனக்குக் கல்வி கற்பிக்க மறுத்த குருவாகிய துரோணருக்கு வில்வித்தைக்கே ஆதாரமாக விளங்கும் வலதுகைக் கட்டை விரலைத் துண்டித்துக் காணிக்கையாக்கிய ஏகலைவனின் குருபக்தியைக் கண்டு, ஆனந்தக் கண்ணிர் சிந்த வாயடைத்து நின்றார் துரோணர். குருபக்தி என்பது மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள மதிப்பு நிறைந்த எல்லையற்ற அன்புத் தொடர்பு.
அருளாளர்களாகிய ஞான குரவர்கள் உளம் மகிழ்ந்தேனும் அன்றேல் வெகுண்டேனும் அருளிச் செய்யும் வார்த்தைகள் பயன் பயப்பனவாகும். இவற்றை நிறைமொழி என நவில்வர். இந் நிறைமொழி மாந்தர்களாகிய நல்லாசான்களின் பாதமலர்களைப் பக்தியோடு சேவித்து நல்லாசி பெற்றவர்கள் நலிந்தது கிடையாது. உத்தம குரவருக்குப் பக்தியோடு காணிக்கை செலுத்தச் சித்தமது கொண்டு வித்தகன் கிருஷ்ணனும் சத்தமது செய்திடும் சமுத்திரம் தனிற்புகுந்து சங்கவுருக் கொண்டு நின்ற அரக்கனைக் கொன்று "பாஞ்சசன்னியம்’ எனும் சங்கு தனைப் பெற்றான். ஆணவம் தனை வென்ற ஆருணி எனும் சிஷ்யன் குருவடி தனைப் பணிந்து அருள்வழி நிதம் நடந்து உத்தாலகர் எனப்பெற்று உயர்வாழ்வு எய்தி நின்றார். தொல்காப்பியருக்கு அகத்தியர் கொடுத்த நல்லாசி"எனது இலக்கண நூலாகிய அகத்தியமும் ஒரு நாள் அழிந்து போகலாம். ஆனால் உனது நூலாகிய தொல்காப்பியம் என்றென்றும் நிலைத்து நின்று தமிழை வளர்த்து நிற்கும்” என்பதாகும். இந் நிறைமொழி காரணமாய் அன்னாரின் இன்னமுதப் பொக்கிஷமாம் தொல்காப்பியம் இன்று வரை நிலைத்திருப்பது யாவரும் அறிந்ததே. துர்வாச முனிவருக்கு தூய்மைசேர் உள்ளத்துடன் பக்தியொடு பணி செய்த பாவை குந்தி பயன்பெறும் முகமாக அன்னார் உபதேசித்த மந்திரம் காரணமாய் பின்னாளில் அன்னவள் புத்ரபாக்கியம் பெற்றனள். இவையாவும் குரவர்கள்தம் தாள் பணிந்த
c
(டித்தி
கிறிஸ்தவ சகாப்த ஆரம்ப காலத்துக்கு முை அரசர்கள், பிரதானிகள் முதலியோர்களின் பெயர்கை கூறுகிறது. சிவன், மூத்த சிவன், ஐயா சிவன், மகா தனசிவன், என்னும் பெயர்களைத் தாங்கிய பலர் ஆ இருந்திருக்கின்றனர் என்பதை “ மஹாவம்ச இப்பெயர்களிலிருந்தே இந்நாடு எவ்வளவு தூரம் 6 முறுகி இருந்தது என்பது தெளிவாகின்றது.
r
- ܢ
ஈகர வருடம்- ஆடி-புரட்டாதி

புண்ணியாத்மாக்கள் பெற்ற பயன்கள். அவர்தம் சாபத்தால் விளைந்தவற்றை சிறிது நோக்கினால், நூறு அஸ்வமேதயாகம் செய்து இந்திரப் பதவி பெற்ற நகுஷன் என்பான் இந்திராணியை விரைந்து அடைய விரும்பி சப்தரிஷிகள் தாங்கி வந்த பல்லக்கின் மேல் இருந்து “விரைந்து நட ஸர்ப்ப” என்ன, முன் கொம்பு தாங்கி வந்த அகத்தியர் வெகுண்டெழுந்து "ஸர்ப்பமாகக் கடவாய்” என்று நகுஷனை சபித்திட பாம்பாக மாறினான் ஆணவத்தின் உருவான நகுஷன். பரசுராமரிடம் பொய் கூறிக் கற்றதனால் பொல்லாத சாபம் பெற்றுப் பிரம்மாஸ்திர வித்தைதனை சாகுந்தறுவாயில் மறந்தான் கர்ணமகாராஜன். எனவே, குருவின் மனதிற் கோபத்தை உண்டு பண்ணாமல் இதமான செயல்களால் அவர்களை இன்புறச் செய்து நல்லாசி பெறுவதே குறிக்கோளாக இருத்தல் வேண்டும்.
முத்தி என்னும் உயர்ந்த உன்னதமான பேரின்பப் பெருவாழ்வை அடைவதற்கான ஏணிப்படிகளிலே எமது சுவடுகளை நிதானமாகவும் ஆழமாகவும் பதித்து முன்னேறுவதற்கு அவ்வழியிலுள்ள அறியாமை என்னும் இருள் தடையாக அமைகிறது. அதனை அகற்றி மெய்யறிவு என்னும் ஒளியை அளித்து எம்மை முத்திக்கு இட்டுச் செல்லும் விளக்காக குரு அமைகிறார். அந்த விளக்கு இடைவழியிலே அவிந்து விடாமல் இறுதிவரை ஒளிதர வேண்டுமெனில், சிஷ்யர்களாகிய நாம் அதற்குப் பக்தி என்னும் எண்ணைதனைச் செலுத்திவரல் வேண்டும்.
குருபக்தி இல்லாவிடத்து, ஞானாசிரியர் மனமுடைந்து, எம்மைப் புறக்கணித்து விட்டால் எமது முத்திக்கான பயணம் முற்றாவது எப்பிறவியில்?
எனவே, தவசீலகுரவரது குணநலன் புரிந்து; சத்தியம், அகிம்சை எனும் சன்மார்க்க நெறி நின்று மனமுருகி பக்தியொடு குரவரடி பூசித்து; சித்த சுத்தியோடு முத்தியையும் முயன்று நாம் பெறுவோமாக 1.
சுபம் !
ஸ் சைவம்
ானர், இந்த ஈழநாட்டில் பிறந்து வளர்ந்து அரசாண்ட ள“மஹாவம்சம்” என்ற சமய சரித்திரநூல் தெளிவாகக் சிவன், பூரீகண்டசிவன், சண்டசிவன், சண்டமுகசிவன், அரசர்களாகவும், பிரதானிகளாவும், இந்த ஈழநாட்டில்
b என்ற நூலிலிருந்து நாங்கள் அறிகிறோம். சைவ வாழ்விலும், சிவவழிபாட்டிலும் ஊறி, முதிர்ந்து,
ஏழாலை மு.ஞானப்பிரகாசம் நன்றி. திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர்-1976)
لم
இந்து ஒளி 19

Page 21
(க.பொ.த.உயர்தர மாணவர்களுக்காக
"கண்ணுடையோர் என்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர்”என்றார் தெய்வப்புலவர்
வள்ளுவர்.
இந்து ஒருவனின் வாழ்க்கையில் கல்விக்கு மிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பண்டைய இந்து ஒருவனது வாழ்க்கை நெறி பற்றி அறிந்து கொள்வதற்கு எமக்குக்கிடைக்கும் மிகப்பழைய இலக்கிய ஆதாரங்கள் வேதங்கள் ஆகும். குருகுலக்கல்வி என்பது குருவையே மையமாகக் கொண்டு கல்வி கற்பதைக் குறிக்கும். குஎன்பது அஞ்ஞானத்தை அழிப்பது என்றும், ரு என்பது மெய்ஞானத்தை கொடுப்பது என்றும், குலம் என்பது கோயில் எனவும் பொருள்கொண்டு அஞ்ஞானத்தை அழித்து மெய்ஞ்ஞானத்தை கொடுக்கின்ற கோயிலே குருகுலம் எனப்பட்டது. குருவின் வீட்டிற்குச் சென்று குருவிற்கும், குருபத்தினிக்கும் சேவை செய்துபின் கற்பான் என வேதமகாவாக்கியம் கூறுகின்றது. “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற வாக்கிலும் கூட இறைவனை அடைய குரு அவசியம் என்பதினாற் தான் குருவிற்கு அடுத்ததாக தெய்வத்தைப் போற்றினர். அக்கால கல்வியானது எழுத்துமுறையால் அன்றி கேள்விச் செல்வமாகவே பின்பற்றப்பட்டது. பாடத்தை மனனஞ் செய்யும் முறை அக்காலத்தில் காணப்பட்டது. குரு நிலத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த மாணவர்களுக்கு வேதப் பாடங்களை வாயாற் சொல்ல அம்மாணாக்கர் நாள்தோறும் பலமணி நேரம் அப்பாடங்களை ஒன்றன்பின் ஒன்றாக மனனஞ்செய்தனர். முதலிற் சொற்களைத் தொடுத்தும் பின்னர், தனித்தனியாகப் பிரித்தும் படித்தனர். இதனைப் பதபாடம் எனஅழைப்பர். பின்னர் சொற்களில் ஒன்றைவிட்டு ஒன்றைக்கூட்டி அ.ஆஆ.இ.இ.ஈ என்ற ஒழுங்கில் இவ்விரண்டாக இணைத்துப் படித்தனர். இது கிரமபாடம் எனப்படும். இவ்வாறாக வேதங்கள் மனனஞ்செய்யப்பட்டு வந்தமையால் தம்வடிவம் மாறாது பழைய நிலையிலேயே இருந்தன.
20 இந்து ஒளி
 

募
7.
ICU
Ŝ\I.
修
NŞ
काका"
S
经
ல் குருகுலக்கல்
Gosansf.ggsgaorColgi), B.A.Dip-in-Edu., கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
வெளியிடப்படும் விசேட கட்டுரை)
மாணவர்கள் வேதங்களை மட்டுமன்றி வேறுபல கலைகளையும் கற்றதாக அறிய முடிகிறது. அவற்றுள் வேதத்தைச் செவ்வையாக விளங்கிக் கொள்வதன் பொருட்டு வேதங்கள் ஆறும் பயிற்றுவிக்கப்பட்டன. அவை கற்பம், சிட்சை, வியாகரணம், சோதிடம், சந்தோவிசிறி, நிருத்தம் என்பனவாகும்.
1. கற்பம்- வேள்வி இயற்றும் முறையைத் தொனிப்பது.
2. சிட்சை- வேதத்தின் ஒளியியலை அதாவது வேதப்பாடங்களை ஒசை வேறுபாட்டோடு உச்சரிக்கும்
முறையைத் தெரிவிப்பது.
3. வியாகரணம்- வேதத்தில் உள்ள எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றில் இலக்கணத்தைத் தெரிவிப்பது.
4. சோதிடம்- வானவியல் அதாவது வேதங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்குரிய காலங்களை நிச்சயிக்கும் கலையைத் தெரிவிப்பது.
5. சந்தோவிசிறி- வேதத்தில் உள்ள செய்யுள் வகைகளையும் அவற்றின் யாப்பமைதிகளையும் தெரிவிப்பது.
6. நிருத்தம்- வேதத்தில் உள்ள எழுத்து, சொல், பொருள்
ஆகியவற்றின் இலக்கணத்தைத் தெரிவிப்பது.
இத்தகைய வேதங்களையும் மாணவர் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
வேதத்தின் இறுதிப்பகுதியாக அமையும் நூல்கள் உபநிடதங்கள் ஆகும். உபநிடதம் வடமொழியில் “உபநிஷத்” எனப்படும். உபநிஷத் என்பது குருவிற்கு அருகில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையே குறிக்கும். குரு,
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 22
சீடர்களுக்கு இடையில் இடம்பெறும் உரையாடல் வடிவிலேயே உபநிடதங்கள் போதிக்கப்பட்டன. உதாரணம்
1. நாரதர் சனற்குமாரரிடம் ஆத்மாவைப் புரிந்து கொள்ள
விரும்புகின்றேன் என்றார்.
2. நசிகேதன் யமனிடம் பரம்பொருள்பற்றி அறிய
விரும்புகின்றேன் என்றார்.
3. சுவேதகேது உத்தாலகேயரிடம் இவ்வுலகம் எவ்வாறு
தோன்றியது என வினாவுகின்றார்.
மாணவர்கள் ஏனைய வேதங்களைக் கற்றுத் தகுதிபெற்ற நிலையிலேயே அறியும் பொக்கிஷங்களாக உபநிடதங்களை விளங்கிக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றனர். இது பிரமம் என்ற கடவுளின் உண்மை, ஆன்மாக்களின் உண்மை, இரண்டும் அடிப்படையில் ஒன்று என்ற கருத்துக்களைப் போதிக்கின்றன.
இதிகாசங்களில் ஒன்றாகிய இராமாயணத்தை நோக்கின் அயோத்தி அரசன் தசரதனின் புத்திரர்கள் இராமன், இலக்குமணன் வசிட்டரின் வீட்டிற்கு சென்று கல்வி கற்றனர். குருகுலக்கல்வியில் அரசன், ஏழை என்ற வித்தியாசம் பாராட்டப்படமாட்டாது என்பதை அரசனின் மகனான இராமனும், ஏழைப்பிராமணனின் மகனும், காந்தீப முனிவரிடம் சென்று அவருக்கு பணிவிடை செய்து கல்வி கற்றதாக பாகவாத புராணம் கூறுகின்றது. பாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் துரோணரிடம் கல்வி, கலைகள், படைக்கலப்பயிற்சிகளைப் பெற்றனர். கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் குருவாக இருந்து பகவத்கீதையைப் போதித்தார். ஏகலைவன் துரோணரைக் குருவாகக்கொண்டு குருவிற்கு தட்சணையாக தனது பெருவிரலை அளித்தான் என்று பாரதம் கூறுகின்றது. புராணங்களில் முருகப்பெருமான் தந்தையாகிய சிவனுக்கு “ஓம்’ என்ற பிரணவப் பொருளின் கருத்தை ஞானஉபதேசம் செய்ததை அவதானிக்க முடிந்தது.
இந்து ஒருவனது வாழ்க்கை பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என நான்கு நிலையாக வகுக்கப்பட்டிருந்தது. பிரம்மச்சரிய நிலையில் கல்வியைக் கற்கின்றான். மாணவன் பெற்ற பயிற்சிகளில் ஒன்று சந்தியா வந்தனம் ஆகும். இது காலை, மாலை, நண்பகல் என்று மூன்று வேளைகளிலும் செய்யப்படும் சூரிய வழிபாடாகும். இவ்வழிபாட்டில் காயத்ரி மந்திரம் ஒதுதல், மூச்சை அடக்குதல், நீரை சிறிதளவு உட்கொண்டு
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

தெளித்தலும் அதாவது ஆசமனஞ் செய்தலும் இடம் பெற்றன. இவ்வாறு பல்வேறுவழிபாட்டு முறைகளையும் கடமைகளையும் செய்து கல்வியைக் கற்றுக்கொள்வான்.
சங்ககாலத்தில் குருகுலக்கல்வியானது அறிவுடையோரிடமிருந்து ஏனையோர் கற்றதாகவும், சங்க மருவிய காலத்தில் சமணர்கள் சமணப்பள்ளிகள் மூலமும், பெளத்தர்கள் விகாரைகள் மூலமும், காரைக்காலம்மையார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் பதிகங்கள் மூலம் இந்துசமயத்தை போதித்தனர். சோழர்காலத்தில் இராஜராஜசோழன் ஆலயங்களில் காணப்பட்ட மண்டபங்களை கல்விச்சாலைகளாக மாற்றியதாக இலக்கியங்கள் கூறுகின்றன. நாயக்கர் காலத்தில் விஜயநகரப் பேரரசு ஆங்காங்கே மடங்களையும் ஆதினங்களையும் நிறுவி சமயத்தை போதித்தன. ஐரோப்பியர் காலத்தில் மேனாட்டார் வருகையால் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக்கல்லூரிகள் ஆகிய அமைப்புக்களின் கீழ் குருகுலக்கல்வி வளர்ச்சியடைந்தது.
தற்கால கல்வி முறையில் குருவும் மாணவர்களும் ஒரே இடத்தில் இருந்து கல்விகற்கின்றனர். தற்போதைய பல்கலைக்கழகங்களில் ஆரம்பகாலகல்விமுறைபோன்று கல்வியைப் போதிப்பவர்களும், கற்பவர்களும் ஒரே இடத்தில் வாழ்ந்து தாம் விரும்பிய நேரங்களில் தமக்கு விரும்பியதுறையில் கல்விபயின்று வருகின்றனர். ஆரம்பகால கல்விமுறையானது வேதங்கள் ஆகமங்கள், புராணங்கள் போன்றவற்றைக் கற்று உண்மைப்பொருளை அறிவதற்கு உதவி செய்தன. ஆனால் தற்கால கல்வி முறையானது தொழில்வாய்ப்புக்களைத் தேடவும், பொருள் பலத்தை தேடவும் உதவும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆம் வள்ளுவரும்
அருளில் லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”
என்றார். தற்கால கல்வி முறை விஞ்ஞான வளர்ச்சியால் மெய்ஞானம் குறைந்து ஒழுக்கம், சத்தியம் குருபக்தி, கடமை போன்ற பண்புகள் படிப்படியாக சீரழிக்கப்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறாக இந்துக்களின் கல்வி பாரம்பரியத்தில் தொன்று தொட்டு இன்றுவரை குருகுலக்கல்வியானது குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது.
இந்து ஒளி21

Page 23
g பகவத்கீதை
இந்துசமய பிரஸ்தானதிரயங்களாக உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பூரீமத் பகவத்கீதை ஆகியன விளங்குகின்றன. பூரீமத் பகவத்கீதை மகாபாரதத்தில் பீஷ்ம பருவத்தில் 25 வது அத்தியாயத்திலிருந்து 42வது அத்தியாயம் வரையில் உள்ள 18 அத்தியாயங்களில் , 700 சுலோகங்களில் அமைந்துள்ளது. பூரீமத்பகவத் கீதையின் முதன்மையை விளக்குவதாக பின்வரும் கூற்றுக்கள் அமைகின்றன. உபநிடதங்களைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால், பூரீமத்பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். மகாபாரதத்தில் அடங்கியுள்ள விடயங்களைப் பால் என்று வைத்துக் கொண்டால் பூரீமத் பகவத்கீதை விடயங்களை வெண்ணெய் என்று பாராட்டலாம்.
குருசேத்திரப் போர்க்களத்தில் காண்டீபத்தை
நழுவவிட்ட அருச்சுனனை மீண்டும் காண்டீபத்தை எடுத்து கடமையைச் செய் என உபதேசித்த நூலாக பூரீமத் பகவத்கீதை விளங்குகிறது. குருசேத்திரப் போர்க்களம் என்பது ஒவ்வொரு மானிட வாழ்விலும் மனதில் ஏற்படும் போராட்டமாகும். ஒவ்வொரு மனிதரும் அர்ச்சுனராகின்றனர். பூரீ கிருஷ்ண பரமாத்மா ஒவ்வொரு மனிதனுக்கும் உபதேசித்ததாக பூரீமத் பகவத் கீதை அமைகிறது. பூரீமத் பகவத்கீதையின் ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் உபநிடதமாகவும் யோகமாவும் சிறப்பிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக பிரமவித்தையைப் புகட்டுவதும், யோக சாத்திரமானதும், பூரீ கிருஷ்ணார்ச்சுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிடதத்தின் கண் அர்ஜுன விஷாதயோகம் என்ற முதல் அத்தியாயம் என அமைகிறது.
பூரீமத் பகவத்கீதையில் இடம் பெறும் பதினெட்டு அத்தியாயங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.
அர்ஜுன விஷாத யோகம் சாங்கிய யோகம்
கர்மயோகம் ஞானகர்ம சந்நியாச யோகம் சந்நியாச யோகம்
தியானயோகம்
22இந்து ஒளி
 

ଖୁଁ SMĽGóáňLaGunálÓ
செல்வி, புனிதச்செல்வியோகேஸ்வரி முருகேசு
(விரிவுரையாளர், ஆசிரிய கலாசாலை, கோப்பாய்)
7. ஞானவிக்ஞான யோகம்
8. அசரப்பிரம்ம யோகம்
9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 10. விபூதி யோகம் 11. விச்வரூப தரிசன யோகம் 12. பக்தி யோகம் 13. கூேடித்ர கூேடித்ரக்ஞ விபாக யோகம் 14. குணத்திரய விபாக யோகம் 15. புருஷோத்தம யோகம் 16. தெய்வாசுர சம்பத் விபாக யோகம் 17. சிரத்தாதிரய விபாக யோகம் 18. மோகூடி சந்நியாச யோகம்
தத் துவம் அஸி என்ற வேத மகா வாக்கியத்தின் வியாக்கியானமாக பகவத்கீதையின் அத்தியாயங்கள் அமைகின்றன. பூரீமத் பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் துவம் (நீ) என்பதற்கு உரியதாக ஆத்ம தத்துவ விளக்கத்தை அளிக்கின்றன. ஏழாம் அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரை தத் (அது) என்பதற்குரியதாக பரமாத்மாவின் இயல்பை விளக்குகிறது. பதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரை அஸி அதாவது ஜீவாத்ம பரமாத்ம இணக்கத்தை தெளிவுபடுத்துகிறது. தத்துவம் அஸி என்ற மகா வாக்கியத்தின் மூன்று பகுதிகளுக்கும் கீதையில் ஒரே மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தத்துவம் அஸி என்ற மகாவாக்கியம் ஜிவாத்மாவாகிய நீ பரமாத்மாகிய மெய்ப்பொருளுக்கு அன்னியமானவன் அல்லன் என விளக்கமாக அமைகிறது.
பூரீமத் பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என தொகுத்தும் கூறுவர். வாழ்க்கை என்னும் தேருக்கு நான்கு யோகங்களையும் நான்கு குதிரைகளாகப் பூட்டுகிறார். அவைகள் வெண்குதிரைகளாயிருப்பது அவைகளின் சாத்துவிக இயல்பையும் தூய்மையையும் விளக்குகிறது. தேர் விரைந்து ஓடுவதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்கவேண்டும். நான்கு யோகங்களும் ஏககாலத்தில்
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 24
சேர்த்து அனுட்டிக்கப்படும் பொழுது வாழ்க்கையின் இலட்சியம் இனிது நிறைவேறுகிறது.
ழரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயமாக அமைவது கர்மயோகமாகும். கர்மயோகத்தின் இயல்பு 43 சுலோகங்களில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கர்மானுஷ்டானத்தை முறையாகச் செய்து வருவதால் அறிவு தெளிவடைகிறது. தெளிந்த அறிவு மூலம் ஆத்ம சொரூபத்தை விளக்குவது கர்ம யோகம் எனப்படுகிறது.
“பாபமற்றவனே, தத்துவ விசாரம் செய்கிறவர்களுக்கு ஞானயோகம் என்றும், அதை அனுட்டிக்கின்றவர்களுக்கு கர்ம யோகம் என்றும், இரண்டு நன்னெறிகள் முன்னே என்னால் இயம்பப்பட்டிருக்கின்றன என கீதை கூறுகின்றது.
சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரகிருதி. அது கர்ம சொரூபம். ஆதலால் அதில் கட்டுண்டு கிடப்பவர்கள் கர்மம் செய்யவேண்டும். சுவாசிப்பது, உண்பது, உறங்குவது ஆகிய எல்லாம் நித்தியகர்மம், !
யாரும் ஒரு கணப்பொழுதேனும் செய்லாற்றாது இருப்பதில்லை. ஏனென்றால் பிரகிருதியினின்றும் உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன்வயமின்றி கர்மம் செய்விக்கப்படுகின்றது. கர்மமேந்திரியங்களை அடக்கி இந்திரிய விடயங்களை மனத்தால் எண்ணிக்கொண்டிருக்கும் மூடன் பொய் ஒழுக்கம் உடையவன் என்று பகரப்படுகிறான். ஆனால், இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று, கர்மேந்திரியங்களைக் கொண்டு கர்மயோகம் செய்பவன் மேலானவன்.?
பூரீ ராமகிருஷ்ணபரமகம்சர் சாதுவும் பாம்பும் என்ற கதையில் இதனை விபரிக்கின்றார். அனைவரையும் கடித்து துன்புறுத்திய பாம்பு சாதுவின் சொற்கேட்டு தீங்கு செய்யாது வாழலாயிற்று. அப்போது பாம்பின் உடல்புண்ணாகும்படி மக்கள் பாம்பிற்கு தீங்கு செய்தனர். இந்நிலையில் பாம்பைச் சந்தித்த சாது "நண்பா, யாரையும் கடிக்கவேண்டாம் என்று மட்டும் உனக்குச் சொன்னேன். ஒருவரையும் பயமுறுத்த வேண்டாம் என்று நான் சொல்லவில்லை என சாது கூறினார். அதுபோல நீ உலகத்தில் வாழ்ந்திருக்கும் வரையில் பிறர் உன்னிடம் அச்சமும் மரியாதையும் கொள்ளும்படி நட. ஆனால் ஒருவருக்கும் நீதீங்கு செய்யாதே. பிறரால் உனக்கு தீங்கு வராதபடியும் காத்துக்கொள்.
நித்தியகர்மத்தை நீ செய். செயலின்மையை விடச் செயல் சிறந்தது. செயலிலானுக்கு உடலைப் பேணுதல் கூட இயலாது. நித்திய கர்மங்களைச் செய்வதால் புண்ணியம் ஏதும் கிடையாது. ஆனால் அவைகளைச் செய்யாவிட்டால்
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

பாபம் உண்டு. உதாரணமாக உணவு அருந்துவதில் புண்ணியம் ஒன்றும் இல்லை. ஆனால் உண்ணாது பட்டினி கிடந்தால் உடல் நலிவடைதல் என்ற பாவம் ஏற்படுகின்றது.
யக்ளு கர்மம் தவிர மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்ணுகிறது. யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நன்கியற்று. கர்மத்தில் பறித்தல், பங்கிடுதல், படைத்தல் என்று மூன்று இயல்புகள் உண்டு. விலங்கு நிலையில் உள்ள உயிர்கள் பறித்து புசித்து உயிர்வாழ்கின்றன. இந்நிலையில் வாழ்க்கை என்பது ஒர் ஒயாத போராட்டம். வலிவுடையது முன்னணிக்கு வருகிறது. வலிவற்றது பின்னணியில் வருந்தி வாழ்கிறது. மனித உயிர்களுக்கிடையில் பறித்தல் குறைகிறது. பங்கிடுதல் அதிகரிக்கின்றது. ஒரு மனிதன் மற்றைய மனிதனுக்கு துணை புரிந்து வாழ்கிறான். இதனினும் உயர்ந்த நிலை தனக்கென்று தேடாது தன்னிடத்திருப்பதை பிறர்க்கென்றே பண்புடன் படைத்து வருவதாகும். அன்புடன் வகையறிந்து கொடுப்பதால் கொடுப்பவனுக்கும் ஏற்பவனுக்கும் குறையொன்றும் வருவதில்லை. இறைக்க இறைக்க கேணி நீர் ஊறுவது போன்று, எடுத்து முறையாக வழங்க வழங்க ஆற்றலும் ஆக்கமும் உயிரின் கண் உயர்கிறது. தலைசிறந்த இச்செயலுக்கு யாகம் என்று பெயர். இது வாழ்க்கையின் மேலாம் கோட்பாடாகும். உதாரணமாக ஒருவன் கல்வியை மற்றவர்களுக்கு கற்பிக்கின்றளவுக்கு தானே கற்றவனாகின்றான். ஞானத்தை வழங்குபவனுக்கு ஞானம் வளர்கிறது. செல்வத்தை பொது நன்மையின் பொருட்டு முறையாகத் தேடிப் பயன்படுத்துகின்றளவுக்கு செல்வம் வளர்கிறது. பொது நன்மையில் தனி நன்மை அடங்கியிருக்கிறது.
தனிநலம் கருதாத புண்ணியச்செயல், தியாக புத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படும் செயல், ஈசுவர ஆராதனையாக ஆற்றும் வினை, பரமார்த்திகப் பெரு நோக்கத்தோடு செய்யப்படும் கர்மம், ஆகியன எல்லாம் யக்ஞம் என்றே அழைக்கப்படுகின்றன. மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள மேலோர்க்கு தேவர் என்று பெயர். அவர்களது நல்ல வினையில் ஒத்துழைப்பது யாகமாகிறது. * 影
பரமாததுமா
ப  ைட ப் பு த் G فاراده  ெத ரா ட க் க த் தி ல் ய க் ஞ த் தே (ா டே பிரஜைகளைப் படைத்து இ த ன T ல் விருத்தியடையுங்கள். இது
உ ங் க ஞ க கு காமதேனுவா கட்டும். இதனால் தேவர்களைப்
பேணுங்கள். தேவர்கள் உங்களைப் பேணட்டும். இகத்திலுள்ள கர்ம சக்கரம்
இந்து ஒளி23

Page 25
பரஸ்பரம் பேணிப் பெருநன்மையெய்துவீர். யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு நாடிய போகங்களை நல்குவார்கள், அங்ங்ணம் அவர்களால் கொடுக்கப்பெற்று அவர்களுக்கு கைமாறு அளிக்காது நுகர்பவன் திருடன். யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாவங் களினின்றும் விடுபடுகின்றனர். ஆனால் தங்கள் பொருட்டே
சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்கின்றனர்."
உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன. மழையினின்று உணவு உருப்படுகின்றது. யக்ஞத்திலிருந்து மழை வருகிறது. யக்ளுத்துக்கு பிறப்பிடம் கர்மம். கர்மம் வேதத்தினின்று உதித்ததென அறிக. வேதம் பரமாத்மாவினின்று வந்தது. ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது. இகத்தில் இங்ங்ணம் இயங்கப்பெற்றுள்ள சக்கரத்தைப் பின்பற்றாதவன் பாபவாழ்க்கையுடையவனாய் புலன்களில் பொருந்தியவனாய் வீணே வாழ்கிறான். ஆனால் ஆத்மாவில் இன்புற்று, ஆத்கவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை. அவனுக்கு கர்மம் செய்து ஒன்றைப் பெறுதலும், செய்யாது எதையாவது இழத்தலும் இல்லை. ஏதாவது பொருளை நாடி உயிர்களைச் சார்ந்திருப்பதும் அவனுக்கில்லை. ஆகையால் யாண்டும் பற்றற்று பண்புடன் பெருவினையாற்றுக. ஏனென்றால் பற்றற்றுத் தொழில் புரியும் புருஷனே பெருநிலையைப் பெறுகிறான்." ஜனகர், அசுவபதி முதலிய ராஜரிஷிகள் இராட்சிய பரிபாலனம் என்ற நானாவித கர்மங்களில் பிரவேசித்தனர். நன்கு அரசாளுதலோடு
அவர்களுடைய வாழ்க்கை நின்றுவிடவில்லை. கர்மமார்க்கத்தைப் பின்பற்றியே அவர்கள் முக்தியடைந்தனர்.
ஞானியர்கள் கர்மத்தில் ஈடுபடுதலின் இன்னொரு சிறப்புண்டு. குருடனுக்கு குருடன் வழிகாட்ட முடியாது.
சிவச
இறைவன், சத்தியும் சிவமும் எனப் பெ இருவேறுவகைப்பட்ட தன்மைகள் உடையனாயி என்ற இரு பகுதியாக இயங்குகின்றது. இக்க சிவஞான சித்தியாரில் விளக்கப்பட்டுள்ளது. அத்
“சத்தியுஞ் சிவமும் ஆயதன்மை இவ்வுலகம் எல் ஒத்து ஒவ்வாஆணும் பெண்ணும் உணர்குணங்கு வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்ை இத்தையும் அறியார் பீட இலிங்கத்தின் இயல்பு
(ந6
24 இந்து ஒளி

கண்ணுடையவன்தான் கண்ணிலாதவன் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு போக முடியும். ஞானக் கண்ணுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றிச் செய்ய வல்லவராவார். கர்மம் செய்தே முன்னேற்றம் அடைந்தாக
வேண்டிய உலகமக்களை நல்லவழியில் நடாத்துதல் இயலும்.
மேலோன் எதனைச் செய்கின்றானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகின்றனர். அவன் எதனைப் பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறது. பற்றுள்ளவராய் பாமரர் கர்மம் செய்வதுபோல் பண்டிதர் பற்றில்லாதவராய் பாரினில் பெருநெறி புகட்டுதற் பொருட்டு கர்மம் செய்யவேண்டும். ஞானியானவன் கர்மப்பற்றுள்ள அஞ்ஞானிகளிடத்து மனக்கலக்கத்தை உண்டு பண்ணலாகாது. எல்லாக் கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களையும் ஈடுபடுத்தவேண்டும். பிரகிருதியின் குணங்களால் யாண்டும் கர்மங்கள் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மோகமடைந்தவன் நான் கர்த்தா என்று நினைக்கின்றான். குணகர்மத்தின் தத்துவஞானியோ குணங்கள் குணங்களில் பிரவர்த்திக்கின்றனவென்று அறிந்து பற்று வைப்பதில்லை. பிரகிருதியின் குணங்களால் மோகமடைந்து குணங்களின் தொழில்களில் பற்றுவைக்கின்ற மந்தபுத்தியினாரை தெளிந்த அறிவுடையோர் கலங்கும்படி செய்யலாகாது. கர்மங்களையெல்லாம் எனக்கர்ப்பித்து சித்தத்தைச் சைதன்னியத்தில் வைத்து ஆசையையும் மமகாரத்தையும் அகற்றி மனக்கொதிப்பின்றிப் போர் புரிவாயாக. பூரீகிருஷ்ணனது இக்கோட்பாட்டை எம்மனிதர் சிரத்தையுடனும் பொறாண்மைப்படாதும் பின் பற்றுகின்றார்களோ அவர்கள் கூட வினையினின்று விடுபடுகின்றார்கள். நன்கியற்றப்படும் பரதர்மத்தைவிட குணமிலாத் தன்தர்மம் மேலானது; சுயதர்மத்தில் இறப்பது மேல்; பிறர்தர்மம் பயம் தருவதாகும்."
த்தி V− ༽
1ண்பாலாகவும், ஆண்பாலாகவும், தம்முள் ருத்தலால், இவ்வுலகம் எல்லாம் ஆண் பெண் ருத்து அருணந்தி சிவாசாரிய சுவாமிகளாற் திருவாக்கு வருமாறு:
tbחט, குணியும் ஆக )க எல்லாம் ம் ஒரார்"
சித்தியார். 189 ன்றி:திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர்-1976)
لر
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 26
கலைப்பிரிவு ம
சிவனை முழுமுதலாகக் கொள்ளும் வாழ்க்கைநெறி சைவம். சைவத்தின் முதற்பிரமாணநூல்களெனக் கொள்ளப்படுவன வேதங்களேயாகும். வேதங்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வம் எனும் நான்காகும். எனினும் சைவர்களைப் பொறுத்தவரையில் யஜுர்வேதத்தின் பங்களிப்பே அதிகமானது. ஏனெனில் சைவபரமாகிய சிவப்பரம் பொருளைப் பற்றியும், அப்பொருள்பற்றிய உண்மைகளையும், அப்பரம் பொருள்தாங்கும் திருவடிவங்களையும், திருநாமங்களையும் ஒவ்வொன்றாக அடுக்கியடுக்கிக்கூறும் வேதப்பகுதியாகிய பூரீருத்ரம் (சதருத்திரீயம்) இவ்யஜுர் வேதத்தின் மத்தியபாகத்திலேதான் விளங்குகிறது இச்ழரீருத்ரம்,
“ஓம் நமோ பகவதேச ருத்திராய ச” எனத் தொடங்கி, தொடர்ந்து போய், நடுப்பாகத்தில்;
"சங்கராய சமயஸ்கராய ச:
நமசிவாயஸ்ய ச. சிவதராய ச” என அமைந்து, பின்னுந் தொடர்கிறது.
இங்கு முதலடியில் 'ருத்ராய' எனவுள்ளமைகண்டு, “ருத்திரனென்பான் சிவனதாணைப்பிரகாரம், அவனுக்குக் கட்டுப்பட்டவனாய் அழித்தற் தொழில் புரிவானாயிற்றே? அவன் சிவனல்லவே” என்பாரும் இல்லாமலில்லை. ஆயினும் 'ஊழிமுதல்வனாய் நின்றவொருவனை' என்றபடி “சிவன், சகல புவனங்களும் ஒடுங்குறுங்காலத்து “யூரீமகாருத்ரன்” எனும் திருநாமந்தாங்கி மற்றைய உயிருள்ளனவும், உயிரற்றனவுமாகிய சர, அசரங்களையெல்லாம் தானே தனக்குள் ஒடுக்கிக் கொண்டு நடனமாடுவன்’ என்ற விளக்கமும் இவ்வாசங்கைபற்றி எழாமலில்லை. இவற்றைக் கருத்துட் கொண்டுதானோ,
“சங்கார காரணனாகிய முதலை முதலாகவுடைத்திவ்வுலகு” எனச் சிவஞான போதமாபாடியக்காரருமருளிச் செய்தனரென்பது தெரியவில்லை. ஆதலின் யஜுர் வேதத்துட் காணப்படுவதாகிய பூரீருத்ரம் சிவனைப்பற்றியதே என்பது பெறப்படும்.
மேற்படி "சங்கராயச” எனத் தொடங்கும் ஸ்லோகம் இரண்டாமடியில் "நமசிவாயஸ்ய ச” எனக் கொண்டமைதல் காண்கின்றோம். இங்கே பாஞ்சாட்சரம் ஒதும் முறைப்படி முதலில் அமையவேண்டியதாகிய 'ஓம்' எனும் பீஜாட்சரம் இல்லாமை கண்டு,"இஃது சைவங்கூறும் பஞ்சாட்சரமந்திரமாகாது” என்பர் சில விதண்டாவாதிகள். இங்கே பூரீருத்ரம் ஒரு தொடராகச்
rt
செல்வதுTஉம், முதற்சுலோகத்திலேயே “ஓம்’ எனத்
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி
 

குப்பிளான், ஏ. அனுசாந்தன் ாணவன் (யாழ். பல்கலைக்கழகம்), சமயப்பிரசாரகர், நல்லைஆதீனம்.
தொடங்குவதுTஉம் காண்கிறோம். எனவே தொடர்நாமஸ்லோகமாதலால் முதலிலுள்ள் 'ஓம்' என்பது முழுவதற்குமுரியதாகும் என்பதிலேதும் பிரச்சினைகளில்லையே.
இவைகளால் வேதமத்தியபாகமாகிய யஜுர் வேதத்தின் அநாகதபாகமாக (மார்புப் பகுதி) விளங்கும் பூரீருத்திரத்தில் ஹிருதயம் போன்று 'நமசிவாய' என்ற பஞ்சாட்சரமந்திரம் விளங்குகின்றது என்ற உண்மை பெறப்படுகின்றது. இப்பஞ்சாட்சரம்பற்றிய உட்பொருள் விளக்கங்களையும், இதனை ஒதும் முறைமைகளையும் சற்று நோக்குவோம். சைவர்கள் பஞ்சாட்சரமந்திரத்தினை தூலபஞ்சாட்சரம், சூக்குமபஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம் எண்முன்று பெரும் பிரிவுகளிலடக்கிக்கூறுவர்.
தூலபஞ்சாட்சரமென்பது 'நமசிவாய' எனவுச் சரிக்கப்படுவதாகும். இம்மந்திரத்தை உலகபோகசம்பத்தைப் பெறவிரும்புவோர் உச்சரிப்பர். இம்மந்திரம் கூத்தப்பிரானது திருவடிவத்தினை பாதாதிகேசமாக (பாதத்திலிருந்து திருமுடிவுரை) நினைவுபடுத்துகிறது. இம்மந்திர ஜபத்தின் பொழுது உருத்திராக்ஷத்தைக் கீழ்நோக்கித் தள்ளவேண்டு மென்பது விதியாகும். சூக்கும பஞ்சாட்சர மென்பது சிவாயநம எனவுச்சரிக்கப்படுவதாகும். இம்மந்திரம் சைவத்தின் முடிந்த முடிபாகிய சைவசித்தாந்தக்கொள்கையினை நேரே படம் பிடித்துக் காட்டுவதாகும். அதாவது; இங்குள்ள சிகரவுயிர்மெய் - சிவனையும், மகரவுயிர்மெய் - ஆன்மாக்களைத் தாயினுஞ்சாலப்பரிவு காட்டியாட் கொண்டு தன் நாயகனிடத்தில் வழிப்படுத்துந் திருவருட்சக்தியையும், யகரவுயிர்மெய் - தனித்தியங்கும் ஆற்றலறவேயில்லாத (முத்திநிலையில் சிவத்தையும், பெத்தநிலையில் மலங்களையும் சார்ந்தே நிற்குமியல்பினதாகிய) சதசத்து எனப்படும் உயிரினையும், நகரவுயிர்மெய்-அறியாமையிலழுந்தி, உலகமுகப்பட்டுவிளங்கும் உயிருக்கு அவற்றையனுபவித்தற்கேதுவாக இறையருளாலேற்படுத்தப்படும் குறையறிவாகிய திரோதான சக்தியையும், மகரவுயிர்மெய் - ஆணவ, கன்ம, மாயை ஆகிய மும்மலங்களையும் குறித்து நிற்கின்றன. இம்மந்திரத்தினை திருவடியின்பத்தை அவாவிநிற்போர் ஜபிப்பர். இதனை ஜபிக்கும் போது உருத்திராசுஷ் மாலையை மேல் நோக்கி அசைப்பர். இம்மந்திரத்திலுள்ள :
'சி' -கூத்தப்பிரானது உடுக்கையேந்திய கரத்தையும், வ- வீசுகரத்தையும்,
இந்து ஒளி25

Page 27
ய - அபயகரத்தையும், 'ந' - அக்கினிச்சுடரேந்திய கரத்தையும், 'ம' - ஊன்றி திருவடியையும் குறிப்பதாகக் கூறுவர்.
இதனை,
*சேர்க்குந்துடி சிகரம்; சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிறைக்கு
அஞ்சி நகரம் முயலகனார் தங்கும்
மகரமது தாம்’
எனவரும் செய்யுளானுமறியலாம். அதிசூக்கும பஞ்சாட்சரமென்பது ‘சிவாயசிவ' என்பதாகும். இம்மந்திரம் முற்றுந்துறந்த முனிவோர்க்குரியது. “முற்றுந் துறந்தோரிடம் திரோதானமும், மலமும் வாதனை செய்யா" என்பதனை இது விளக்குகிறது.
இனி, பஞ்சாட்சரமந்திரத்தின் சிறப்புக்கள் பற்றி நோக்குவோம். சைவசமயவழிபாட்டு நெறிமுறைகளை எமக்கு எடுத்துக் காட்டியருளிய பெருமைக்குரியவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய சமயகுரவர்கள் நால்வருமே இம்மந்திரப் பெருமைகளைப் பாடியிருத்தலூடாக இம்மந்திரப் பெருமைகளை அறிந்துகொள்ளலாம். தேவாரமுதலிகள்மூவரும் பதிகங்களாகவே பாடியுள்ளனர். சம்பந்தசுவாமிகள் ஐந்தெழுத்துப்பதிகம், எனவும், 'நமச்சிவாயபதிகம்' எனவும் இருவேறு பதிகங்களில் இம்மந்திரச் சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்றார். எட்டாந்திருமுறை பாடியருளிய மணிவாசகசுவாமிகளது திருவாசகமும் "நமச்சிவாய வாழ்க’ என்றே ஆரம்பிக்கின்றது. இவர்கள் மட்டுமல்லாது; அடியார்களைப் பாடியருளிய சேக்கிழாரும்; “ஞானமெய்ந்நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொல்லாம்” (பெரி - 1248) என்று ஞானசம்பந்தசுவாமிகள் புராணத்திற்கூறுவதுங் காணலாம். இவ்வாறாகச் சைவ அருளாளர்களாற் பக்தியோடு போற்றப்பட்டுள்ளதாகிய பஞ்சாட்சரத்தினை ஒதும் முறையினையுங் கண்டுகொள்வோம்.
சைவமரபிலே எக்கைங்கர்யத்தையாற்றினும் குருமுகமாக உபதேசம் பெற்றுச் செய்தல் வேண்டுமென்பதே விதியாகும். சிறப்பாக மந்திரோட்சாடனம், ஜபம், தியானம் முதலியன இவ்விதிக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும். எனவே இப்பஞ்சாட்சரமந்திரத்தினை சிவஞான மெய்கண்ட பரம்பரையிற்றோன்றிய குருவிடமிருந்து உபதேசமாகப் பெற்று, சந்தியாவந்தனம், ஜபம், த்யானம் முதலியன நிறைவேற்றுதலே கடனாகும். இங்கு ஜபம்' என்பது நாவும், பற்களும் தெறிக்க சப்திப்பதாகாது. இதற்குரிய விதியினைத் தம்பாடலில்,
“நெக்குளார்வம் மிகப் பெருகி நினைந்து அக்குமாலை குடக்கையிலெண்ணுவார்”
எனச் சம்பந்தசுவாமிகள் அழகொழுக வெழுதிக் காட்டுகின்றார்.
26 இந்து ஒளி

“கொலைமுதலிய பாவங்களைப் புரிவோரும், அவற்றை நீக்கி இப்பஞ்சாட்சரத்தையோதின் அப்பாவங்களினின்றும் விடுபடுவர்” என்பதனை; “கொல்வாரேனுங் குணம்பல நன்மைகளில்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத்தீங்கையும் நீக்குரென்பரால்” என கூறியுள்ளமையினைச் சாட்டாக வைத்துக்கொண்டு, “பஞ்சாட்சரமோதுவதற்குக் கோலம் எது?, சீலம் எது?” என்று மேடைப்பிரசங்கம் செய்வோரும் மிகமலிந்த காலமிது. இவர்களுக்கு ஒரு கேள்வி.
சம்பந்த சுவாமிகள்;
“கொல்வாரும் குணம்பல நன்மைகளில்லாரும் இயம்புவராயிடின் எல்லாத்தீங்கையும் நீக்குவர்” எனக் கூறாது,
“கொல்வாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீக்குவர்” என்று கூறியிருத்தல் ஏன்தானோ?
இதற்குரிய விடையையும் கூறாது விடுதல் பொருந்தாது. குணம்பல நன்மைகளில்லாத கொலை, புலை, பாவங்களைச் செய்வோர், தம்மிடத்தே பாவங்கள் விழையக் காரணராகின்றனர். அப்பாவங்களிலிருந்து விடுபடவேண்டுமாயின் பெரியவர்களையணுகி, நல்லவற்றைச் செய்ய வேண்டும். அப்பரடிகள் “பெரியானைப் பெரும்பற்றைப்புலியூரானை” என்று சிவபிரானையே பெரியவர் என்கிறார். ஆகவே எம்மாலே அணுகப்படவேண்டியவர் சிவபிரானேயாவர். அவரை “நியமத்தால் நினைதல்” தான் நற்செயல். இவ்வாறாக நடந்து கொண்டால் முன்வினைப்பாவங்களின் முடிச்சு அவிழும். மேற்படி பாடலிலும் “இயம்புவர் ஆயிடின் எல்லாத்தீங்கையும் நீக்குவார்” என்ற அடி இக்கருத்தினையே சுட்டுகின்றது.
என்வே திருவருள் உள்நின்றுணர்த்தப்பாடிய அருளாளர்களது பாடல்களைத் தத்தமக்கேற்றபடி பயன்படுத்துதல் தவிர்க்கப்படுவதுடன் 'ஒழுக்கத்திற்கு இடமில்லாதருக்கும் மந்திரம்' என்ற இழிநிலையும், அதுபற்றிய அவம்பெருக்குவோர் சிந்தனைகளும் சுட்டெரிக்கப்படல் வேண்டும்.
ஒருருவம் ஒருநாமமில்லாற்காயிரந்திருநாமம்பாடி'என்ற மணிவாசகர் வாக்கிற்கிணங்க இறைவனுக்கு ஆயிரமாயிரம் பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஆயினும் அவருக்குரிய உரிமைப்பெயர் 'நமச்சிவாய' என்பதேயாகும் என்பது ஞானப்பாலுண்டாரது கருத்தாகும்.
"நாதன் நாமம் நமச்சிவாயவே” என்பது அவர் கூற்று. ஆகவே அவர் பெயராகிய பஞ்சாட்சரநாமத்தினை குருமுகமாகப் பெற்று சிந்தித்து, வந்தித்து, மறவாமையைச் செய்து பிறவாமையைப் பெறுவோமாக!
சிவசிவ .
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 28
(தீபம்-1, சுடர்-35ம் பக்கத் தொடர்ச்சி)
மனித பண்புகளுக்கெல்லாம் ஆணி வேராக மிளிர வேண்டியது, உளத் தூய்மை, சம்பந்தப் பெருமான் ஒரு தேவாரப் பாடலிலே அடியவர்களது உளம் தூய்மையாவதற்குரிய நற்பண்புகளைத் தொகுத்துக் கூறுகின்றார்.
“ஒல்லையாறி, உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லையாறித் தூய்மை செய்து காமவினையகற்றி"
(ጹ-50-፲]
ஒல்லை என்பது மனப் பரபரப்பு. மனிதராய் உள்ளவர் யாவர்க்கும், குறிப்பாகப் பள்ளி மாணவர்க்கும், சாதாரணமாக இத் தன்மை இருப்பதனை உணர்ந்துபோலும் இதனைப் பெருமானார் முதலாவதாகச் சொன்னார். மனப் பரபரப்பினால் காரியம் பிழைபடுவதேயொழிய வெற்றியாகாது. மன அமைதி, சாந்தம் இருந்தால் எதனையும் சாதிக்க முடியும். ஆன் மீகத்திலும் சரி உலகியலிலும் சரி, உள்ளத்தின் ஒன்றித்த ஊக்கம் வேண்டும். கள்ளம் என்பது அறவே ஒழிக்கப்படல் வேண்டும். மனம் ஒன்று சிந்திக்க, வாய் வேறொன்றினைச் சொல்ல, மெய் பிறிதொன்றினைச் செய்யும் கள்ளம் ஆகாது. பிறர் பொருளை வஞ்சித்துக் கவருதலோ, களவாடுதலோ, களவாட நினைத்தலோ, கள்ளத்தின் பாற்படும். கடுமையான வார்த்தைகள் ஒருபோதும் ஆகாது. “கடுமையொடு களவற்றோமே" என்றார் அப்பரடிகள் (6.58-6). இனிய சொற்களையே பேசுதல் வேண்டும்
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே"
(-திருமந்திரம் -252)
யாவர்க்கும் இயலக்கூடிய இலகுவான செயல்களுள்
பிறர்க்கு இன்னுரை வழங்குதலும் ஒன்று என்பது திருமூல நாயனாரின் கோட்பாடு. காமவினை கொடியது. விலக்கப்படல்
இவ்வாறு செய்வன செய்து, தவிர்வன தவிர்ந்து உளத்தூய்மை செய்து கொள்பவரே இறையன்புக்கும் நல்வாழ்வுக்கும் உரியவராவார்.
ஐம்பெரு வேள்வி
சமயத்தவர் யாவரும் தினமும் ஐவகை வேள்வி செய்தல் வேண்டும் என்னும் ஒரு நியதி உள்ளது. இந்த வழக்கம் திருஆக் கூரிலும் திருஓமாம் புலியூரிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வந்தமையைச் சம்பந்தப் பெருமான்
எடுத்தோதியுள்ளார்.
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி
 

s 6 தறி ஆகுணநாயகம்
(தலைவர் மாமன்ற அறங்காவலர் சபை)
1) “அங்கம் ஆறொடு மறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே”
(2-42-4)
2) "ஏழிசையும் மலியும் ஆறங்கம் ஐவேள்வி
இணைந்த நால் வேதம்" (3-122-6)
வேள்வி என்பது "யக்ஞம்" என்று வடமொழியிற் கூறப்படுகிறது. இதற்கு யாகம் என்றும் பெயர் உண்டு. “வேள்” என்னும் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல், கொடை அல்லது உபகாரம் எனப் பொருள்படும். வேளாளர் என்னும் பதமும் உபகரிப்பவர் என்னும் பொருளுடையது. எனவே, இங்கு ஐம்பெருவேள்வி எனச் சொல்லப்படுபவை தியாக சிந்தையுடனும் நன்றியுணர்வோடும் ஈசுவரார்ப்பணமாகச் செய்யப்படும் செயல்களேயாம். அனுசரிக்கப்பட வேண்டிய ஐம்பெருவேள்விகளும் பின்வருமாறு:
1. தேவ வேள்வி அல்லது தெய்வ வேள்வி
இது கடவுள் வழிபாட்டினைக் குறிக்கும். கடவுள் வழிபாடு இல்லாது ஒரு நாளாவுதல் கழிதலாகாது. சிலர் ஒமம் வளர்த்து வழிபாடு செய்தலும் உண்டு.
2. பிரம்ம வேள்வி
வேதத்திற்குரியவர் பிரமா என்பதினாலே அவருக்கு வேதன் என்னும் பெயரும் உண்டு. உலக நன்மையின் பொருட்டுச் சான்றோர் வேதம் முதலான பல சாஸ்திர தோத்திர நூல்களை ஆக்கி மறைந்தனர். அவர்களிற் பலர் தமது பெயரையே வெளிக்காட்டாது சென்றனர். இத்தகைய மேம்பாடான செயல்களை நன்றியுணர்வுடன் மனதிற் கொண்டு ஒவ்வொருவரும் தத்தமக்குரிய தோத்திர, சாஸ்திர, நூல்களை ஒதுவதும், மற்றையோர்க்கு எடுத்து ஒதுவதும், மற்றையோரை ஒதச் செய்வதும் இதனுள் அடங்கும். இத்தகைய செயல், உரிய நூலாசிரியர்களைப் போற்றுதற்கும் ஒப்பாகும்.
3. பிதிர் வேள்வி
பிதிர் என்பவர் இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்த எமது பெற்றோர் உட்படச் சகல முன்னோர்களும். அவர்கள் எம்
நாட்டவராயிருந்தாலும் சரி, பிற நாட்டவராயிருந்தாலும் சரி, யார்
இந்து ஒளி27

Page 29
யாரது சேவைகள்ால் நாம் இப்போது பலவகைச் செளகரியங்களையும் நுகர்கின்றோமோ, அவர்களுக்கெல்லாம் எமது நன்றிக் கடனைச் செலுத்தும் வேள்வி இது. இது நீர்க்கடன் எனவும்படும். எமது பெற்றோர் உயிருடன் இருப்பின் அவர்களுக்குச் செய்யும் பணிவிடைகளும் இதனுள் அடங்கும்.
4) மனித வேள்வி
விருந்தோம்பல், ஏழைகளுக்கு உணவளித்தல், பிணிநீக்குதல், கதியற்றோர்க்கு உதவுதல், பொதுநல சேவை ஆற்றுதல், கல்விப் பணிபுரிதல் முதலிய பல இதனுள் அடங்கும். சுருங்கக் கூறின், தனக்கென மாத்திரம் வாழாது பிறர் பயன் கொள்ளும்படியாகவும் நமது நாளாந்த வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்பதே இதன் தாற்பரியம்.
5) பூத வேள்வி
மக்களினமல்லாத பிற உயிர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணியே இது. ஆடு, மாடு, குதிரை, கழுதை, ஒட்டகை, பறவையினங்கள் முதலாயினவற்றால் நாம் பெறும் பயன் அனந்தம். பசுவைக் கோமாதா, கோதனம் என்று அழைக்கின்றோம். மண்ணின் கீழேயுள்ள மண்புழு விளை நிலத்தைப் பண்படுத்த எவ்வளவு உதவுகின்றது என்பதனைப் படிக்கின்றோமல்லவா? இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு, இடம், காலம், நேரம் ஆகியவற்றிற்கு ஒப்ப, ஏதோ ஒரு பணியை இவ்வுயிரினங்களுக்கு நாம் ஆற்றுதல் வேண்டும். மாட்டுக்குப் புல்போடுதல், தண்ணிர் கொடுத்தல், பறவையினத்திற்கு ஏற்றதான உணவு வழங்குதல், எறும்புகளுக்குத் தானும் மாக் குறுணி, அரிசிக் குறுணியிடுதல் ஆகியன செய்யலாம்.
இவ்வேள்வி முறையை உற்றுப்பார்க்கும்போது இதுவோர் அற்புதமான ஒழுங்கு என்பதனை உணரலாம். தெய்வம், தேவர், பிதிரர், மனிதர், பிற உயிரினம் யாவும் இந்த முறையினில் அடங்குகின்றன. இதனைக் குறிப்பாக இளைஞர்கள் உணர்வாராயின் அவர்களுக்கு இது ஒரு விழுமிய வழிகாட்டியாக அமையுமன்றோ!
நம் முன்னோர்க்கு நாம் நன்றி செலுத்துதல் வேண்டும் என்பதனைச் சம்பந்த மூர்த்தி சுவாமிகள் ஆணித்தரமாகச் சொல்லிப் போந்த செய்தியை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
"குணக்கும் தென்திசைக் கண்ணும் குடபாலும் வடபாலும் கணக்கென்ன அருள் செய்வார், கழிந்தோர்க்கும்
ஒழிந்தோர்க்கும் வணக்கம் செய் மனத்தராய் வனங்காதார் தமக்கென்றும் பிணக்கம் செய் பெருமானார் பெருவேளுர் பிரியாரே'
(3-64-3)
கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய எத்திசையில் உள்ளோர்க்கும் ஒரு படித்தாகப் பாரபட்சமின்றி அருள் புரியும்
28 இந்து ஒளி

பெருவேளூர்ப் பெருமான், முன்னோர்க்கும், அவரல்லாத இப்போது உள்ளோர்க்கும், எமக்காகப் பலவகைப் பணிகளைச் செய்யும் யாவர்க்கும் வணக்கம் செலுத்தாதவர்க்கு மாத்திரம் அவ்வாறு அருள் புரிய மாட்டார்.
கொடை பொதுநலப் பணி, முயற்சி
எமது உழைப்பினாலேயோ, சேவையினாலேயோ, உலகத்தவர்க்குப் பயன் கொடுத்திராத நாம், ஏனையோரின் உழைப்பினால் வரும் பயனை அனுபவிப்பது ஒரு கள்வனின் செயல். இக் கருத்துப் பகவத்கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. எமது திருமுறைகளைப் பொறுத்த வரையில் அப்பரடிகள் இதனை ஈகையிலே வைத்து அருமையாக விளக்கியுள்ளார்கள்.
“இரப்பர் தங்கட் கென்றும் கொடையிலேன், கொள்வதே நான்?"
(4-6-7)
மற்றையோர்க்கு ஒரு பயனும் அளிக்காத நான், பிறர் பயனைக் கொள்வது என்ன நியாயம் என்று தன்னையே கேட்கின்றார். கொடை என்பது பணக் கொடையாயிருக்கலாம், அறிவுக் கொடையாயிருக்கலாம், அன்புக் கொடையாயிருக்கலாம், சேவைக் கொடையாயிருக்கலாம். கொடைப்பண்பு, திருமுறைகளில் மேலும் மேலும் வற்புறுத்தப்பட்டுள்ளது. கொடைப் பண்பினைப் பிரதிபலிக்கும்
உதாரணம் பல காட்டப்பட்டுள்ளன.
இன்மையார் சென்றிரந்தார்க்கு இல்லையென்னாது
ஈந்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே”
(2-42-9)
"கொடையுடை வண்கையாளர்மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சை வயமே”
(2.83.2)
« ያ F A. வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர்'
(2-42-3)
வேளாளர் என்னும் சொல் கொடையாளர் என்னும் பொருளுடையது என்று முன்னர்க் காட்டப்பட்டது. கொடைப்பண்பின் காரணமாக ஆங்குள்ள வேளாளர் மேன்மை மிக்குள்ளனர். மேலும் அவர்கள் தாளாளர். அத்ாவது விடாமுயற்சி உடையவர்கள். இவ்விடாமுயற்சி காரணமாகவே அவர்கள் மற்றையோர்க்குக் கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.ஊக்கம், உழைப்பு உடையவரே மேன்மையுறுவர். இதனை இளைஞர்கள் குறிப்பாகக் கவனித்தல் வேண்டும். அசைவில்லாத ஊக்கமுடையவனது வீட்டைப் பொறுத்த வரையில் அந்த வீடு எங்கே இருக்கிறது என்று வழிகேட்டுக்
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 30
கேட்டுச் செல்ல முதல்வியாகிய திருமகள் சென்றடைவாள் என்று பொய்யா மொழிப் புலவர் கூறுகின்றார்.
ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை”
(594)
ஆக்கம்- செல்வம். இங்கு அது செல்வியைச் குறிக்கின்றது. அதர் -வழி.
கொடுக்கும் ஆற்றல் இருந்தும், கொடுக்காதவர்க்குக் கடவுள் தண்டனை உண்டு என்பது அப்பரடிகள் கோட்பாடு.
"கரப்பவர் தங்கட் கென்றும் கடுநரகங்கள் வைத்தார்”
(4-38-10)
கொடைத்திறன் சங்க காலத்தில் மிகவும் போற்றப்பட்டு வந்தது. ஒரேயோரு உதாரணம் மாத்திரம்.
தலைவன் ஒருவன் தனது தலைவியின் கூந்தலின் மேன்மையைப் பாராட்டிப் பேசுகின்றான். 媛}& வண்மையையுடைய ஓரி என்னும் கொடை வள்ளலது பூஞ்சோலையைத் தடவி வந்து வீசுகின்ற காற்றைப்போல நறுமணம் உடையதாம் தனது தலைவியின் சுருளமைந்த கூந்தல். கொடைவள்ளலாகிய ஒரியின் ஊரில் வீசும் காற்றுக்கு அத்தகைய மேன்மை இருக்கின்றது.
"கைவள் ஓரிகானம் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்”
(குறுந்தொகை 199)
பணியைப் பொறுத்த மட்டில், “என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று ஒரு வாசகத்திற் கூறிய அப்பரடிகள், “கிடப்பதே" என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்(5-19-9). பணி செய்கின்றார். அவ்வளவுடன், விருப்பு வெறுப்பற்ற, பயன்கருதாத அவரது செயல்முடிவுபெறுகின்றது. அவரது பணி சிவார்ப்பணம் ஆக்கப் பெற்றுவிட்டது. அதற்கு மேல் அவருக்கு வேலை இல்லை. இதனைத்தான் செயலற்ற நிலை என்று எமது முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.
“செத்துத் திரிவர் சிவஞானியோர்களே’ (16171) என்று வேறொரு வகையாகக் கூறினார் திருமூல நாயனார்.
சிவதொண்டு செய்பவர் ஒருநாளும் துன்பமுறார் என்று சம்பந்தப் பெருமான் அருளிப் போந்தார்.
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி

துன்புறுவாரல்லர் தொண்டு செய்வாரே”(3-125-3) தொண்டினைப் பற்றி அப்பரடிகள் சொல்லுவார்.
உய்யப் போந்து நீ தொண்டு செய்து என்றும் சோற்றுத் துறையர்க்கே உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே” (5-33-10)
சிலர் உண்பதற்காகவே உயிர் வாழ்கின்றார்கள். பணி செய்வதற்காகவே உண்ணுதல் வேண்டும் என்கின்றார் அப்பரடிகள்.
பிறர் பயன் கொள்வதற்காகவே பணி செய்யப்படல் வேண்டும். இவ்வாறு பிறருக்காகவே வாழ்வோரது பெருமையைச் சங்க இலக்கியங்கள் எடுத்துப் போற்றியுள்ளன.
ஒரு உதாரணம் மாத்திரம்.
வினை முடித்து மீளும் தலைவனை எதிர்பார்த்து நிற்கும் தலைவி தனது சிறுவனுக்கு முழு மதியின் நிலாவிலே உணவு ஊட்டும் போது, இனிய மதியே இங்கே வா என்று, மகனுக்குப் பாசாங்கு செய்து மதியை விளிக்கின்றாள். மதியின் அழகு எத்தகையது ? சொல்கின்றாள்.
தனக்கென மாத்திரம் வாழாப் பிறர்க்கெல்லாம் உரியனாகிய பண்ணன் என்பானது சிறு குடியைச் சார்ந்த
தோட்டத்தில் உள்ள சிறிய இலையினையும் புல்லிய வித்தினையுமுடைய நெல்லியின் செவ்விய காய்களைத்தின்றவர், நீர் குடித்தபோது எழும் சுவைபோல அரும்பும் நிலவினால் அழகு பெறும் இளைய மதியே’
நெல்லிக் காயைத் தின்றவர் தண்ணீர் குடித்தால், இனிக்கும், இங்கு பிறர்க்குரியாளனான பண்ணனது நெல்லிக்காய் மேலான மிக்க சுவையைத் தருகின்றதாம். என்னே பிறர் பணியின் பெருமை கூறியவாறு
“தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப் புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி சுவையில் தீவியம் மிழற்றி முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்'
(அகநானூறு- 54)
தொடரும்.
இந்து ஒளி29

Page 31
திருக்க்ைலாயத்திலே நவரத்தினங்களிலான சிம்மாசனத்தின்மீது பரமேஸ்வரனாகிய சிவனும் பார்வதிதேவியாகிய உமையும் கொலுவீற்றிருக்கின்ற வேளையில் பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், ரிஷிகள், அஷ்டவசுக்கள் மற்றும் தேவரிஷிகளும் தினந்தோறும் பரமசிவனையும் பார்வதி தேவியையும் நமஸ்காரஞ் செய்து கொண்டு போவார்கள். ஒருநாள் பிருங்கி என்கிற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதிதேவியை புறம்பாகத் தள்ளிவிட்டு பரமேஸ்வரனை மாத்திரம் வணங்கி ஆனந்தக் கூத்தாடினார். அப்பொழுது பார்வதிதேவியாருக்கு மஹா கோபம் உண்டாகியது. பிரம்மா, விஷ்ணு தேவர்கள், ரிஷிகள் யாவரும் ஈஸ்வரரையும் நம்மையும் வணங்கிச் செல்ல, பிருங்கி மகரிஷி நம்மை புறம்பாகத் தள்ளிவிட்டு வணங்கினாரே என்று கோபத்துடன் பரமேஸ்வரி பரமேஸ்வரனிடம் , கேட்க, பரமேஸ்வரர், “பர்வதராஜகுமாரியே! பிருங்கிரிஷி பாக்கியத்தை
. கோரியவனல்ல, மோஷத்தை மட்டுமே கோரியவன்” என்று
காரணம் கூறினார். இதனால் கோபமுற்ற பார்வதிதேவி, “பிருங்கிரிஷியே! உன்தேகத்திலுள்ள ரத்த மாமிசம் நம்முடையது. அதை நீ கொடுத்துவிடு” என்று கேட்க பிருங்கிரிஷி தன் சரீரத்திலிருந்த ரத்த மாமிசத்தை உதறிவிட்டார். இதனால் பிருங்கிரிஷி நிற்கமுடியாமல் நின்றதைக் கண்ட பரமேஸ்வரர், பார்வதி இப்படி ஒரு தண்டனையை தந்துவிட்டாரே என்று மனமிரங்கி பிருங்கியிடம் ஒரு ஊன்றுகோல் கொடுத்து உதவினார். Lu JLDf6n 6oT ஊன்றுகோல் கொடுத்து உதவியமையால், பரமசிவன் தம்மை உதாசினம் செய்துவிட்டார் என்று கோபம் கொண்ட பார்வதிதேவியார் கைலாயம் விட்டு பூலோகத்திலே பன்னிரண்டு வருடங்கள் மழையின்றி இருந்த இடத்தில் விருட்ஷத்தின் அடியில் எழுந்தருளினார். அவ்விடம் அதிசயமான பூங்காவனமாக மாறி நறுமணம் வீசியதைக் கண்ட, வால்மீகி முனிவர் பார்வதிதேவி எழுந்தருளியிருப்பதை கண்டு, “தெய்வமான பராசக்தியே! ஈஸ்வரியே! தேவியே! எத்தனை கோடி தவஞ்செய்தேனோ இக் காட்சியை நாமும் எம்முனிவர்களும் காண, கைலாயம் விட்டு பூலோகம் எழுந்தருளியதென்னவோ” என்று கேட்க, பார்வதிதேவி நடந்தவற்றை உரைத்தார். வால்மீகி முனிவரும் பார்வதியை தன் ஆச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கும்படி வேண்டிக்கொள்ள பார்வதிதேவியும் எழுந்தருளினார். அப்போது பார்வதி
30 இந்து ஒளி
 

வால்மீகியிடம் “இந்த பூலோகத்தில் நாம் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நூதனமும் மேலானதுமான விரதம் ஒன்று இருக்குமாயின் உரைக்க வேண்டும்” என்று கேட்க, வால்மீகி “பார்வதி தேவியே கோபமடைய வேண்டாம் பூலோகத்தில் ஒருவருக்கும் தெரியாத விரதமுண்டு. அந்த விரதம் தான் கேதாரீஸ்வரர் நோன்பு என்று பெயர். அதை இதுவரையாரும் அனுஷ்டிக்கவில்லை. நீங்கள் விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்டசித்தியாகும் என்று உரைத்தார்.
இவ்வேண்டுகோளை ஏற்ற பார்வதி, எவ்விதமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று வால்மீகியிடம் கேட்க, வால்மீகி “புரட்டாதிமாதம் சுக்கிலபட்ச தசமி தொடங்கி ஐப்பசிமாதம் கிருஷ்ணபட்சம் தீபாவளி அமாவாசை வரைக்கும் இருபத்தொரு நாட்கள் பிரதிதினம் ஸ்நானம் செய்து, சுத்தமான ஆடை அணிந்து ஆலவிருட்சத்தின் கீழ் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்து, விபூதி சந்தனம் குங்குமம் புஞ்பம்சாத்தி வெல்ல உருண்டை, சந்தன உருண்டை, மஞ்சள்உருண்டை, பால், பழம் வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஒன்றாக வைத்து வில்வத்தினால் அருச்சனை செய்து தூபதீபம் நைவேந்தியஞ் செய்து நமஸ்கரித்து ஒரு பருத்தி நூல் எடுத்து முறுக்கி அதை தினம் தினம் ஒரு முடியாக இருபத்தொரு நாள்களும் முடித்து தினமும் உபவாசமிருந்து நைவேத்தியஞ் செய்து வந்தால் இருபத்தொராம் நாளாகிய தீபாவளி அமாவாசை தினம் பரமன் இடபவாகனத்திலே காட்சியளித்து கேட்ட வரத்தைக் கொடுப்பார்” என்று செல்ல, அதைக் கேட்ட பார்வதி மகிழ்ந்து நியம நிஷ்டையுடன் விரதமனுஷ்டித்தார். பரமேஸ்வரியின் விரதத்தை ஏற்று மகிழ்ந்த பரமேஸ்வரன், தனது இடபவாகனத்தில் பரமேஸ்வரிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக கைலாயத்திற்கு எழுந்தருளி வீற்றிருந்தார். இதன்மூலம் சிவன் பாதி, சக்தி பாதி அதாவது சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்ற உண்மையும் ஆன்மாக்களுக்கு தெளிவாகின்றது. இப் பூலோகத்தில் கேதாரீஸ்வர விரதத்தை மனப்பூர்வமாக விரும்பி செய்பவர்களுக்கு பரமேஸ்வரர் கேட்ட செல்வங்களை எல்லாம் கொடுப்பார் என்பதாம்.
செல்வி. சி. கந்தவனம்.
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 32
இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக புருடார்த்த எனும் கோட்பாடு கூறப்படுகின்றது. இந்த உலகிலே பிறந்த மனிதன் உலகியல் வாழ்க்கையை சிறப்பாக எங்ங்ணம் வாழ்வது என்பதனை சிறப்பித்து தரும் பொருட்டு எழுச்சி காண வைக்கப்பட்ட கோட்பாடே புருடார்த்த கோட்பாடாகும். இதனால் இக்கோட்பாடு “உலகியல் வாழ்க்கையை சிறப்பிக்கும் கோட்பாடு" என்று சிறப்பிப்பது மட்டுமல்ல உலகியல் வாழ்க்கையை சிறப்பிக்கும் கோட்பாட்டிலே துறவு வாழ்க்கை பற்றியும் கூறி இல்லறம், துறவறம் இரண்டுமே ஒருவனை இறைநிலை அடையவைக்கும் என வலியுறுத்துவதால் இக்கோட்பாட்டினை “இம்மை வாழ்க்கைக்கும் சிறப்பளித்து மறுமை வாழ்க்கைக்கும் சிறப்பிக்கும் கோட்பாடு” என கூறப்படுகின்றது. புருடார்த்தங்களாக அறம், பொருள், இன்பம், வீடு கூறப்படுகின்றன. இவற்றை விரிவாக நோக்குவோம்.
கோட்பாட்டிலே முதன்மை பெறுவது அறமாகும். அறம் என்றால் கடமை எனப் பொருள்படும். இக்கடமை இல்லிற்குரிய கடமை துறவிற்குரிய கடமை என இருவகைப்படும். இல்லறத்தானவன் தர்மத்தின் வழியே பழிபாவங்களுக்கு அஞ்சி பொருளை ஈட்டவேண்டும். இதனை வள்ளுவர்,
பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்” என்ற குறள் மூலம் புலப்படுத்துகிறார். அத்தோடு இல்வாழ்வான் தன் வாழ்க்கையை நல்ல வழியில் நடத்தி செல்வானாயின் அதற்கு புறமான துறவறத்தால் பெறத்தக்க பயன்வேறு இல்லை. இதை வள்ளுவர்,
"அறத்து ஆற்றின் இல்வாழ்க் jறின் புறத்து ஆற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்' என்று கூறுகிறார். இதுமட்டுமல்ல துறவியானவன் உலகப்பற்றை முழுமையாக விடுத்து நல்வினை, தீவினை, இரண்டையும் சமநோக்கில் கொண்டு எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வதாகிய நெறியே துறவறமாகும். இவ்வாறு இல்லறத்தான் இல்லறநெறிமுறையில் இமையளவேனும் பிசகாதும் துறவி துறவறநெறிமுறையில் இமையளவேனும் பிசகாதும் பேணினால்தான் வீடுபேறு அடையமுடியுமென இவ் அதிகாரம் கூறுகின்றது.
அடுத்து சிறப்பிடம் பெறுவது பொருளாகும். இங்கு உலகியல் பொருள், மெய்ப்பொருள் என இருவகையான பொருள்கள் கூறப்படுகின்றன. இந்த இரு பொருளையும் எங்ங்ணம் ஈட்ட வேண்டும் என்பதை பொருள் என்ற பகுதியில் “பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை” என்பதற்கமைய
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி
 

யாழபபாணம.
உலகியல் வாழ்க்கையாளன் தனக்குரிய 566) ஆற்றுவதற்குப் பொருளை ஈட்டவேண்டும் என்பதையும் அப்பொருளானது அறவழிக்குட்பட்டதாக பாவவழியை கடந்து நேரியவழியில் ஈட்ட வேண்டும் என்பதையும் கூறுவதோடு மட்டுமல்ல இல்வாழ்வான் தான் ஈட்டிய பொருளை மற்றவருக்கும் பகிர்தல் வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றது. இதனை வள்ளுவர் கூறுகையில்,
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை' என்கின்றார். இவ்வாறு இவ் அதிகாரத்தில் பொருளின் சிறப்பு பற்றி கூறப்படுகின்றது.
அடுத்து சிறப்பிடம் பெறுவது இன்பமாகும். இதை சிற்றின்பம், பேரின்பம் எனப் பிரிப்பர். அதாவது உலக வாழ்க்கையிலே பெறப்படும் பொருட்களால், பதவியால், குடும்ப உதவியால் கிடைப்பதாகிய இன்பம் உலகியல் வாழ்க்கையிலே நாம் வாழும் காலம் வரையுமே பயன் தருவது ஆதலால் அது சிற்றின்பம் எனக் கூறப்படுகின்றது. பேரின்பம் என்பது இறைவனோடு இன்புறும் இன்பமாகிய முடிவற்ற இன்பம் எனப் பொருள்படும்- இதுவே பேரின்பமாகும்.
இவ்வாறு சிற்றின்பம், பேரின்பம் என்கின்ற இரண்டையும் அடையும் வழிகளை இன்பம் எனும் தலைப்பிற் தரக் காண்கின்றோம்.
இறுதிக் கோட்பாடாகக் கூறப்படுவது வீடு என்பதாகும். வீடு என்பது உலகியல் வாழ்க்கையாளன் வதியும் வதிவிடமாகிய இல்லம் என்ற ஒரு பொருளும் இறைவன் வதியும் வதிவிடமாகிய மோட்சம் அல்லது முத்தி என்பதை குறிப்பதாக அமைகின்றது. உலகியல் வாழ்க்கையாளனுக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் பெறும் ஒரு இடமாக வீடு அமைவது போல அறவழியில் நின்று அந்த வழியிலேயே பொருளை ஈட்டி நேர்வழியில் நின்று இன்பத்தை அனுபவித்து அதனை விடுத்து அவ் வாழ்க்கையின் சிறப்பினால் இறைநிலையை அடைதலே வீடு என அழைக்கப்படுகின்றது.
எனவே அறம், பொருள், இன்பம் எனும் மூன்றினாலும் வீடு என்ற குறிக்கோளை அடைய முடியுமென வழிகாட்டி நிற்கின்ற கோட்பாடாக இந்த புருடார்த்த கோட்பாடு அமைவதைக் காண முடிகின்றது.
இந்து ஒளி31

Page 33
2 வது வே.பாலசுப்பிரமணியம் நினைவுப் பேருரை
பத்தொன்பதாம் hÖ OTT6ð0 இருபதாம் நூற்றாண்டிற்
(அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகத்தில் 1997 ஜு
திரு. பொன். பூலோகசிங்கம் ர நிகழ்த்துகிறார். அருகில், மாமன்றத்தில்வர் திருஃ "ேஅவர்களும், Lortosirp பொதுச் சிெயலாளர் திரு.க.நீலகண்டன் அவர்களும் வீற்றிருக்கிறார்கள்.
சைவசமயம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம். அப்பெருமானை அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் மூன்று நிலைகளிலே வைத்துச் சைவர் வழிபடுவர். அருவம், ஊனக்கண்களுக்குப் புலனாகாதது; பார்க்கும் இடம் எங்கும் நீங்கமறப் பரம்பொருளைக் காணவல்ல பக்குவம் எய்திய யோகியருக்குத் தத்துவ வடிவமாகப் புலனாகுவது. உருவம், 25 விக்கிரக பேதங்களை உடையது. இவற்றிலே லிங்கோத்பவர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், தகூறிணாமூர்த்தி, நடராஜர், பிக்ஷாடணர், வீரபத்திரர் என்னும் திருவடிவங்களையே அநேகமான சிவதலங்களிலே பரிவார மூர்த்தங்களாகக் காணலாம். அருவுருவம், சிவலிங்கம்.
ஆன்மார்த்த பூசையிலும் பரார்த்த பூசையிலும் அருவுருவமாகிய சிவலிங்கத்திற்கு அதிமுக்கியத்துவம் உண்டு. சிவன் கோயில்களிலே, சதாசிவ மூர்த்தமாகிய சிவலிங்கம், மூலமூர்த்தியாக எழுந்தருளலே சைவமரபாகும். உருவத்திருமேனிகள் பொதுவாகச் சிவதலங்களிலே பரிவார மூர்த்தங்களாகவே இடம்பெறுவன.
சிவபெருமானின் குறியீடாகவே இலிங்கத்தினைச் சைவர் வழிபடுவர்.
32 இந்து ஒளி
 

'I96öI 60J6)IJIDUI 6T(pjafur) கான படிப்பினைகளும்.
பேராசிரியர் (கலாகீர்த்தி) பொன். பூலோகசிங்கம்
ன் 21ம் திகதியன்று இந்நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது)
நினைவுப் பேருரை வைபவத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒரு பகுதியினர்.
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்றார் சேக்கிழார் பெருமான் (பெரிய சாக்கிய.8). நடுகல் அமைத்து மறைந்த மாவீரருக்கு வீரவணக்கம் செலுத்திய மரபினர் இறைவனையும் குறியீடாக முன்னிறுத்திப் போற்றுதல் எதிர்பார்க்கக் கூடியதேயாம். நாயன்மார் திருப்பாடல்கள் இந்நிலையினைச் செவ்வனே எடுத்துக்காட்டுகின்றன.
II
இருக்கு வேதத்திலே 'சிசனதேவ' என இருமுறை இடம்பெறும் தொடர் சிவலிங்கத்தினை இழித்துரைப்பதாகக் கருதப்படுகின்றது. இவ்வேதத்தில் அரிதாக வழங்கும் சிவ எனும் பதம், தெய்வப் பெயராக அல்லாது மங்கலத்தைக் குறிப்பதாகவே அமைகின்றது. இருக்கிலே மூன்று பாடல்களைப் பெறும் ருத்திரன் தகுதியை மதிப்பீடு செய்தவர்கள், அவனை ஒரு அந்நிய தெய்வம் என்றே கருதமுற்பட்டனர். ருத்திரன் ஏனைய இருக்குத் தெய்வங்களோடு ஒத்த உயர்வுடையவனாக
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 34
அங்கு மதிக்கப்படவில்லை. ஏனைய தெய்வங்களுக்கு அவிபாகம் அக்கினியில் இடப்பட, ருத்திரனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும் மக்கள் உலவாத நாற்சந்திகளிலே உணவு எறியப்பட்டது. கொடுந்தெய்வமாகவும், அச்சுறுத்தும் தெய்வமாகவும் ருத்திரன் இருக்கு வேதத்திலே கருதப்படுகிறான்.
ஆரியருக்கு முற்பட்ட ஆதிசிவனின் ஆரியமயப்படுத்தப்பட்ட ருத்திரன், நாளடைவில் அவர்களிற் சிலரிடையே வழிபடு தெய்வமாக உயர்ந்ததோடு அமையாது, சிவனுக்குரிய பண்புகளையும் சிறிது சிறிதாக ஏற்று உருத்திர சிவனாக மாறிவிட்டான். யசுர் வேதத்தில் இடம்பெறும் சதருத்திரியம், ருத்திரனின் வளர்ச்சியில் முக்கிய கட்டமாகும். இங்கு இடம்பெறும் நாமங்களிலே ருத்திரன் பழைய வேத மரபுகளில் இருந்த நிலையில் இருந்து வளர்ச்சியடைந்து உயர்நிலை எய்தியதைக் காணலாம். பிராமணங்களிலே அவன் பெருந்தெய்வமாகி விட்டான். சுவேதாஸ்வதர உபநிடதமும் அதர்வசிரஸ் உபநிடதமும் ருத்திரனுக்குத் தனிமுக்கியத்துவம் கொடுக்கும் உபநிடதங்களிலே குறிப்பிடத்தக்கவை. ருத்திரன் சிவனாகப் பூரணத்துவம் அடைந்துவிட்ட கட்டத்தினை உபநிடதங்கள் காட்டுகின்றன.
வைதீகம் வேண்டா வெறுப்புடன் அனுமதித்த அந்நிய தெய்வம், அது பெற்றிருந்த சமூக முக்கியத்துவத்தினாலே வேதகாலம் முடியு முன்பே, அங்கு கெளரவ தானத்தை அடைந்து கொண்டது. சைவத்தின் முழுமுதற் கடவுளை வைதீகத்தினாலே சிறுதெய்வமாக வைத்திருக்க முடியவில்லை.
III
சைவசமயம் ஈழத்து மண்ணிலே பண்டைக் காலம் முதலாக வேரூன்றி இருந்தது. ஈழத்திற் காணப்பெறும் மிகப் பழைய பிராமிச் சாசனங்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும் கி.பி.முதலாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்துக்கு உரியனவாகக் கருதப்படுவன. இச்சாசனங்களிலே இடம்பெறும் 'சிவ' என்ற பெயர்களையும், ‘சிவ என்று தொடங்கும் பெயர்களையும், ‘சிவ என்பதுடன் முடியும் பெயர்களையும் செ.குணசிங்கம் தொகுத்துத் தந்துள்ளார். (கோணேஸ்வரம், 1973, பக் 28-31), சிவ' என்ற பெயருடையோர் எப்போதும் சிவசம்பந்தம் உடையவராகவே இருத்தல் வேண்டும் என்று கருதுவது பொருந்தாது. ஆயினும் இப்பெயர்கள் அச்சாசனங்கள் எழுந்த காலத்திற்குப் பிற்படாமல் ஈழத்திலே சைவசமயம் நிலவியிருந்தமைக்குச் சான்றாகக் கொள்ள இடம் தருவன. வேல, வேலு, வேலு சுமண எனும் பிராமி சாசனப் பெயர்களை இலங்கையில் பண்டைக்காலத்தில் முருக வழிபாடு நிலவியமைக்குச் சான்றாக H. எல்லாவளை கொண்டமை gig, LOGOTriGlassisirsT55585g). (Social History of Early Ceylon, 1969, P.158)
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

அநுராதபுர அரசன் மகாசேனன் (274-301) விகாரைகளைக் கட்டுவதற்காக அழித்த சிவன் கோயில்கள் பற்றிய செய்திகள் மகாவம்மிசத்திலும், மகாவம்மிசதீகையிலும் இடம் பெறுகின்றன என H. எல்லாவளை கூறியிருக்கிறார் (Ibid, p.157)
தாடாவம்மிசம் லீலாவதி ஆட்சியிலே எழுந்தது. இந்நூலிலே பூரீ மேகவர்ண ஆட்சியின்போது (352-379) மஹாதித்த'யில் இந்துக் கோயில் நிலவியதாகக் கூறப்படுகின்றது என்பர். H. எல்லாவளை (Ibid,p118) பாளிநூல்கள் மாதோட்டத்தினை “மஹாதித்த’ என்று வழங்கின. மாதோட்டத்தில் நிலவிய திருக்கேதீஸ்வரம் பண்டைப் பெருமை வாய்ந்த சிவதலம்.
வாயுபுராணம் கி.பி.நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டிலே எழுந்தது. இந்நூல் கூறுகின்ற கோகாணம், திருக்கோணேஸ்வரம் ஆதல் வேண்டும் என வாயு புராணச் செய்திகள் மூலம் அறியக் கிடக்கின்றது. தகூரிணகைலாச புராணம் கோணேஸ்வரத்திற்குக் கோகர்ணம் எனப்பெயர் வந்தமைக்குக் காரணம் கூறும் முகமாகக் கதை கூறுகின்றது.
அநுராதபுர அரசர் காலத்தின் பிற்கூறுக்குரிய சில சைவக் கோயில்கள் அநுராதபுர நகர அழிபாடுகளில் காணப்படுகின்றன.
சோழப் பெருமன்னர் ஆட்சிக்கு ஈழம் உட்பட்டிருந்தபோது (992-1070) தமிழ்ப்பிரதேசங்களிலும், சிங்களப்பிரதேசங்களிலும் பல சைவக்கோயில்கள் எழுந்தமைக்குச் சாசனங்களும் அழிபாடுகளும் சான்று பகர்வன.
பொலன்னறுவை அரசர் காலத்திலே (1070-1215) மானாபரணன், முதலாம் பராக்கிரமபாகு, நிசங்கமல்லன், இரண்டாம் விக்கிரமபாகு, இரண்டாம் கயபாகு என்போர் சைவமதச்சார்புடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
காலிங்க மாகன் ஆட்சியிலே (1215-1255) வீரசைவம் இலங்கையிலே செல்வாக்கடைந்ததும் பெளத்தம் ஒடுங்கப்பெற்றதும் நினைவு கூரத்தக்கது.
வன்னியர் ஆட்சியிலே அவர்களுடைய பிரதேசத்திலே சைவக் கோயில்கள் பல நிலவியமைக்கு வையாபாடல் சான்று கூறுகின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சியிலே வட பிரதேசத்திலே சைவசமயம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கொண்டிருந்ததற்கு தகூழிணகைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, கைலாயமலை, வையாபாடல் என்பன ஆதரவு நல்குகின்றன.
இந்து ஒளி 33

Page 35
iv
பிரான்சிஸ்கன் மிஷனரிமார் ஈழத்தின் வட மாவட்டங்களிலே 1520 வரை கத்தோலிக்க மதத்தினை அறிமுகஞ்செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்று காட்டச் சான்றுகளுள என ஆயர் எட்மண்ட் பீரிஸ் கூறியிருக்கிறார். 1543இலே கோட்டையரசன் அழைப்பினை ஏற்றுFra Joam de Vila de Conde தலைமையில் நான்கு பிரான்சிஸ்கன் குருமார் கோட்டையரசில் மதமாற்றம் செய்யவந்தபோது, மன்னார்ப்பிரதேசத்திலே அர்ச் பிரான்சிஸ் சேவியரின் உதவியாளரில் ஒருவர் அங்கு மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறுவர். 1560 இலே DOn Constantino de Braganca படையெடுத்து மன்னார்த் தீவிலே ஒரு கோட்டையை அமைத்தான். அக்காலம் முதலாகப் போர்த்துக்கேயர் செல்வாக்கு வடபிரதேசத்திலே வலுப்பெற்றது. QueyroZ 1560 முதலாக யேசுசபை மிஷனரிமார் மன்னாரிலே காணப்படுவதாகக் கூறுவர். 1561 இலே என்றிக்கு என்றிக்குவேசு சுவாமிகள் மன்னார் வந்து 1564 வரை சமயப்பணி செய்துள்ளார்.
ஆரியச் சக்கரவர்த்திகள் மரபினரிடையே காணப்பட்ட பிளவுகளும் கழுத்தறுப்புகளும் போர்த்துக்கேயர் தம் நிலையை மேலும் திடப்படுத்த உதவியது. எதிர்மன்னசிங்கன் (1591-1617 பாடவை போன்று அரசோச்சிய பின்பு வந்த சங்கிலி குமாரன் (1617-1619) சுயேச்சையாக ஆட்சி புரிய முற்பட்டுத் தோல்வி கண்டான். வடபகுதியில் நிலவிய தமிழரசு 17ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலே முடிவடைந்து விடுகின்றது.
போர்த்துக்கேயர் ஆட்சியிலே (1619-1658) கத்தோலிக்க மதம் ஏகபோக உரிமையை அநுபவித்தது. ஏனைய மதானுசாரிகள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். அவர்களுடைய திருத்தலங்கள் தரைமட்டமாக்கப் பெற்றன. பண்டைய பாரம்பரியம் மிக்க திருக்கேதீஸ்வரமும் திருக்கோணேஸ்வரமும் சூறையாடப்பட்டு, அவற்றின் கட்டிடப் பொருள்களும் வேறு தேவைகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டன. சைவர்தம் திருத்தலங்களை இழந்து, களவாக இஷ்ட தெய்வங்களை ஒளித்து வைத்து வணங்கிய கட்டம் இது. இக்காலத்தில் ஆங்காங்கே சிற்சில மடங்களிலே மூர்த்தியின் சின்னங்கள் எழுந்தருளுவிக்கப்பட்டு வழிபாடு இயற்றப்பட்டுள்ளது. நல்லூர் முருகன் கோயிலும் இவ்வாறு இயங்கியதாக அதன் பாரம்பரியங்கள் கூறுகின்றன. விரதம் அனுட்டித்தோர் எச்சில் இலையை இறப்பிலே திணித்துவைக்கும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்திருக்கிறது. இவ்வழக்கு மறைவாக - களவாகஅவர்கள் தம் அனுட்டானங்களை செய்தமைக்கு எடுத்துக்காட்டாகலாம்.
34 இந்து ஒளி

ஒல்லாந்தர் 1658 இலே போர்த்துக்கேயரிடமிருந்து காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டபோது கத்தோலிக்கம் ஒடுக்கப்பட்டபோதும் சைவம் அவர்களிடம் சமயக் காழ்ப்பினை எதிர்நோக்கவில்லை. ஆயினும் தம்மதத்தினை மேலோங்கச் செய்ய அவர்களுக்கு ஆட்சியாளரின் ஆதரவு கிடைக்கவில்லை. சமயதாபனங்களும் சைவரிடையே ஈழத்தில் அக்கட்டத்திலே காணப்படவில்லை. சைவாதீனங்கள் தமிழ்நாட்டிலே இக்காலகட்டத்திலே தம்மத பாதுகாவலராக நின்று அதனை வளர்த்து வந்தமை மனங்கொளத்தக்கது. இந்நிலையிலே சைவசமயம் வலுவிழந்து சைவரிடையே சமய அறிவினை விருத்திசெய்ய முடியாது பல்வேறு வகையான ஊழல்களுக்கும் இடம் விட்டு ஒதுங்கிக் கொண்டது. சைவம் தன் பழைய நிலையை அடைய முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டிருந்தது.
1795 இலே காலனித்துவ ஆட்சியைத் கைப்பற்றிய மூன்றாவது ஐரோப்பிய இனமான ஆங்கிலேயரும், உடையாலுரிலே பண்டாரவன்னியன் 1810 இனை அடுத்து விழுப்புண்களோடு மரணத்தைத் தழுவியபோது, காலனித்துவ ஆட்சியாளர் அதுவரை எதிர்நோக்கிய அடங்காப்பற்றின் தொல்லைகளில் இருந்து விடுபட்டனர். ஐந்தாம் படை உதவியுடன் கண்டி ராச்சியத்தினையும் 1815 இலே தலைகவிழ வைத்தனர். மூன்று நிர்வாகப் பிரிவுகளாக பழைய அரசியல் அமைப்பினை ஒட்டி அமைந்திருந்த நாட்டினை ஆங்கிலேயர் நாற்பதுகளிலே ஒன்றாக்கி, ஒரே நிர்வாக அமைப்பு உடையதாக்கி, அவற்றின் தனித்துவத்தினை முற்றாக அழித்து விட முற்பட்டனர்.
முன்னைய காலனித்துவ ஆட்சியாளரிலும் அதிகார வலுமிக்க ஆட்சியாளரை ஆங்கிலேயரில் இலங்கைமக்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆயினும் கைத்தொழில் புரட்சி தோற்றுவித்த முற்போக்குச் சிந்தனைகள் காலனித்துவ ஆட்சியாளரின் அணுகுமுறையிலே சிற்சில மாற்றங்கள் ஏற்படக் காலாயிருந்தன. மேலும் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு புதிய யுகத்தினை உருவாக்கிக் கொண்ட அமெரிக்க மிஷனரிமாரின் வருகையும் இவற்றுக்கு ஒரளவு காரணமாய் இருந்தன. இவற்றால் காலனித்துவ அதிகாரத்தின் மூர்க்கத்தனம் ஒரளவு குறைந்து காணப்பட்ட போதும் சுதேசிய வளர்ச்சிக்கு மனப்பூர்வமான ஆதரவு இருந்தது எனல் பொருந்தாது
W
ஆங்கிலேயர் சுதேசிகளின் கல்வியில் அக்கறையுள்ளவர்கள் போல் வெளிக்காட்டிக் கொண்டபோதும், அதன் வளர்ச்சிக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை.இதனால் ஆங்காங்கே " இயங்கிக் Ger டிருந்த சில' அரசாங்கப்பள்ளிக் கூடங்களும் பத்தொன்பதாம்
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 36
நூற்றாண்டின் நாற்பதுகளிலே தாமாகவே மூடிக்கொண்டன. இலங்கைக் காலனித்துவ ஆட்சி தமிழ்மக்களைக் கிறித்தவ மிஷனரிமாரிடம் தஞ்சம் அடைந்து கல்வி கற்க வைத்தது. தமிழ்நாட்டிலே அரசாங்கத்துடன் தனிப்பட்டவர்களும் கல்வியில் அக்கறை செலுத்தியதனால் இளைஞர் கல்விக்கு மிஷனரிமாரை மட்டும் நம்பியிருக்கும் தேவை ஏற்படவில்லை. இதனாலேயே ஆறுமுகநாவலரும் பின்பு அநகாரிக தர்மபாலாவும் முறையே சைவரையும் பெளத்தரையும் கல்வி கற்பதற்கு இந்தியா செல்லுமாறு வற்புறுத்தினர்.
இளமையிலே அகப்படுத்தல் கிறிஸ்தவத்தின் பரம்பலுக்கு பேருதவியாகும் என்பதை உணர்ந்த கிறிஸ்தவ மிஷனரிமார் 1816 இல் இருந்து தமிழ்ப் பாடசாலைகளைத் தமிழ்ப்பிரதேசங்களிலே நிறுவத்தொடங்கிவிட்டனர். இடைநிலைக்கல்விப் பாடசாலைகளையும் மிஷனரிமார் உருவாக்கினர். சேர்ச்சு மிஷன் சங்கம் நல்லூரிலே 1823 இலே ஆண்பிள்ளைகளின் ஆங்கிலப்பாடசாலையையும் வெஸ்லியன் மிஷன் 1834இல் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலையையும் கத்தோலிக்க மிஷனரிமார் 1850 இலே யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆங்கிலபாடசாலையையும், ஆரம்பித்தனர். அமெரிக்கன் மிஷனரிமார் 1823 இலே உயர்கல்வியின் பொருட்டு வட்டுக்கோட்டை செமினறியினை ஆரம்பித்தனர்.
திண்ணைப்பள்ளிகளும் குருகுலங்களும் கவரமுடியாத அளவுக்கு கிறித்தவ பாடசாலைகள் மாணாக்கரைக் கவர்ந்தன. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய ஆங்கிலக்கல்வியின் கவர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆயினும் புதிய கல்விமுறையின் அமைப்பு, போதானா முறை, உபகரணங்கள் முதலியனவும் இந்நிலைக்கு உதவியுள்ளன எனல் வேண்டும்.
கிறிஸ்தவ மிஷனரிமாருக்கு மதமாற்றத்திற்கு உதவும் கருவியாகவே கல்வி பயன்படுட்டது. இதனால் ஆரம்ப பள்ளியிலிருந்து செமினறி வரை கிறித்தவ மதக் கல்வி இன்றியமையாத இடத்தினைப்பெற்றது. வாசிப்பு, சொல்வதெழுதல் என்பனவற்றில் மட்டுமன்றி புவியியல், வானசாத்திரம், வரலாறு முதலியவற்றிலும் கிறித்தவ கல்வி முக்கியத்துவம் பெற்றிருந்தது. கிறித்தவ கல்வியின் விருத்திக்குத் துணையாக அமையவே வேறு பாடங்கள் படிப்பிக்கப்பெற்றன.
கல்வியிற் சிறந்த வகையில் பணியாற்றிய வட்டுக்கோட்டை செமினறி அடிப்படையான சமயவொழுக்கம் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்காதபோது 1855 இலே மூடப்பட்டது.
“முன்னைய காலங்களிலே பெற்றிருந்ததும் சிறந்ததுமான சமயா வன்மை துண்டிக்கப்பெற்று
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

கட்டுப்பாட்டிற்காப்பாற்பட்ட சந்தர்ப்பங்களின் வலுவாற் பெரும்பாலும் இந்து இளைஞரின் உலகியல் நன்மைக்கே பணிபுரிவதாக அமெரிக்கன் மிஷனரிமார் எண்ணியமையே வட்டுக்கோட்டை செமினறி மூடப்படுவதற்குக் காரணமாகும்”
என்று இலங்கை மெதடிஸ்த சேர்ச்சு வரலாற்றிலே W.J.T.Small (p.216) a fluscsá áprii. 1855 gCao வட்டுக்கோட்டை செமினறியில் பயின்ற 96 மாணாக்களில் 11 பேரே கிறித்தவர்.
அமெரிக்கன், வெஸ்லியன், சேர்ச்சுமிஷனரிமார் என்ற முப்பிரிவுகளும் தமிழ்பிரதேசங்களிலே தம்மிடையேயுள்ள வேறுபாடுகளை மறந்து சமயப்பரம்பலிலே சேர்ந்து உழைத்தனர். ஒரு பிரிவினர் களமாகக் கொண்ட இடத்தினை ஏனைய பிரிவினர் தவிர்த்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளாது ஒற்றுமையுடன் செயலாற்றினர். அவர்களுடைய ஒற்றுமை சைவத்தின் முன் வலுவான அரணாக அமைந்தது. இவ்வொற்றுமை ஈழத்தின் தென் பிரதேசங்களில் மிஷனரிமாரிடம் காணப்படவில்லை.
மிஷனரிமாரின் கெடுபிடிகளை அரசாங்கம் பாராமுகத்துடன் விட்டதோடு அமையாது அவர்களுக்கு உதவிப்பணமும் ஒழுங்காகக் கொடுத்துவந்தது. சமயபாடம் விருப்புக்கு மாறாக திணிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனை உதவிப்பணம் பெறுவதற்கு இருந்தபோதும் மிஷனரிமார் அதனைப் புறக்கணித்து உதவி பெற்றனர் . பொதுமக்கள் ஆட்சேபணை அதிகரித்த போது 1855இல் அமெரிக்கன் மிஷனும் 1862 இலே சேர்ச்சு மிஷனும் உதவிப் பணத்தைக் கைவிட்டு தனித்தியங்கின. வெஸ்லியன் மிஷனும் கத்தோலிக மிஷனும் நிபந்தனையை ஏற்று உதவிப்பணம் பெற்றனர்.
மிஷனரிமார் கேந்திரமான இடங்களில் தங்கள் TLSF 60) 606 6061T அமைத்து சைவர் அவ்வெல்லைகளுக்குள்ளே பாடசாலை அமைத்து அரச உதவி பெற முடியாதபடி செய்தனர்.
வித்தியா தருமத்தினை சமண பெளத்தரும் பின்பு கிறிஸ்தவரும் மதப்பரம்பலுக்கு தலைசிறந்த கருவியாகப்பயன்படுத்தியதை ஆறுமுகநாவலர் நிதர்சனமாகக் கண்டு கொண்டனர். இதனால் 1846 இலே திண்ணைப்பள்ளி ஆரம்பித்து கருவி நூல்களையும் சமயநூல்களையும் வேதனம் பெறாது கற்பிக்கத் தொடங்கினர். இத்திண்ணைப்பள்ளி அளித்த ஊக்கத்தினால் 1848 இலே வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையைத் தாபித்தார். நாவலரவர்களுக்கு முன்பு உடுப்பிட்டிப் பள்ளிக்கூடம், உடுப்பிட்டி திருவல்வை குமார சுவாமிகள் பள்ளிக்கூடம் முதலிய சில பள்ளிக் கூடங்கள் ஆங்காங்கே நிலவிவந்தன. ஆயினும் அவற்றால்
இந்து ஒளி 35

Page 37
கிறிஸ்தவத்துக்கு எந்த ஆபத்தும் இருக்கவில்லை. 1842இலே வண்ணை சிவன் கோயில் மடத்திலே கூடிய கூட்டம் தோற்றுவித்த வேதாகம பள்ளிக்கூடம் செட்டியார் உதவியிருந்த போதும் இயங்கமுடியாமல் நின்றுவிட்டது. 1848 இலே வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை தோன்றிய போது அமெரிக்கன் மிஷனறிமாருக்கு மட்டும் 105 தமிழ்ப்பள்ளிக் கூடங்களும் 16ஆங்கிலப்பள்ளிச் கூடங்களும் இருந்தன. ஆயினும் 1852 இலே நாவலரவர்கள் அரசாங்க உதவி கோரிய போது கிறித்தவ மிஷனரிமார் வன்மையாகக் கண்டித்தனர். உதயதாரகை தொடர்ச்சியாக கண்டனங்களை வெளியிட்டது. வட்டுக்கோட்டை செமினறி ஸ்போல்டிங் பண்டிதர் விட்டோரியா மகாராணியார் தங்கள் சமயத்தின் பாதுகாவலரா? சைவத்தின் பாதுகாவலரா? என்று ஆட்சேபித்திருந்தார்.
இவற்றிற்கெல்லாம் காரணம் நாவலரவர்களின் வித்தியாசாலை சைவசமயத்தினை வளர்ப்பதிலே அக்கறை கொண்டிருந்தமையேயாகும். பழைய கல்வி முறையில் நல்ல அமிசங்களையும் புதிய கல்வி முறையிற் பாரம்பரியமான பண்பாட்டிற்கு உகந்த அமிசங்களையும் சேர்த்து நாவலரவர்கள் சைவசமயப் பண்பாட்டினைப்பேணும் கல்வித் திட்டத்தினை உருவாக்கினார். மிஷனரிமார், தம் சமயப் பரம்பல் தடைப்படும் என்று அஞ்சி எதிர்த்தனர். 22 வருடம் நிதி உதவி பெறாமலே வண்ணை சைவப்பிரகாச
வித்தியாசாலையை நாவலரவர்கள் நடாத்திக் காட்டினார்.
1870 இலே வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அரசாங்கம் நிதியுதவி அளித்த போது கிறித்தவ வேதாகமத்தினை ஒரு ஆங்கிலபாடநூலாக வைக்கவேண்டி இருந்தது. அப்பொழுதும் அதனை சுயபாஷை பள்ளியாகப் பதிந்து குறைந்த உதவியே அளித்தனர்.
நாவலரவர்களின் விடா முயற்சியும் அவர் ஈட்டிய வெற்றியும் சைவத்தினை துலக்கமுறச் செய்யும் வித்தியாசாலை பல தோன்றுவதற்கு காலாயின. சி.வை.தாமோதரம்பிள்ளை (1832-1901), உடுப்பிட்டி தா.சின்னத்தம்பி (1831-1876) வல்வை ச.வயித்தியலிங்கம்பிள்ளை (1843-1900) போன்றோர் சைவ வித்தியாசாலைகளைத் தாபித்துள்ளனர். கோப்பாய், புலோலி எனும் இடங்களிலும் தமிழ்நாட்டில் சிதம்பரத்திலும் தோன்றிய சைவப்பிரகாச வித்தியாசாலைகளுக்கு நாவலரவர்களே மூல காரணராவர். நாவலரவர்கள், சிவசின்னம் தரித்துப் பள்ளி சென்றதால் நீக்கப்பெற்ற மாணவர் பொருட்டு ஆரம்பித்த வண்ணை சைவாங்கில வித்தியாசாலை (1872-1876) நிதியுதவி கிடையாததனால் தொடர்ந்து செயற்படவில்லை. ஆயினும் சைவமக்கள் எண்ணக்கருவை விருத்தி செய்ய 19ம் நூற்றாண்டின் ஈற்றிலே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எழுந்தது.
36 இந்து ஒளி

நாவலரவர்களின் கல்வி முயற்சிகள் மிஷனரிமாரின் மதப்பரம்பல் வேகத்தினைத் தடுத்து தமிழ்க்கல்விக்கு புது அமிசங்களை அளித்து சைவபாரம்பரியம் கால்கொள்ள வழியமைத்தன. இந்துபோர்டு இராசரத்தினம் (1884-1970) சைவவித்தியா விருத்திச்சங்கத்தினை வழிநடத்தியபோது தமிழ்ப்பிரதேசங்களிலே புதிய LT LEFIT 66NGS 6H6T தாபித்ததோடு அமையாது பிறர் ஆரம்பித்தனவற்றையும் பொறுப்பேற்று திறம்பட நடாத்தினார். இப்பாடசாலைகளுக்கு வேண்டிய ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கத் திருநெல்வேலியிலே 1928 இலே பயிற்சிக் கல்லூரியையும் தொடங்கி அதன் மூலம் சைவக்கல்வி உயிருடன் இயங்க வழிசெய்தனர். கிறித்தவ பள்ளிக்கு அருகில் சைவப்பள்ளி தொடங்கி நன்கொடைபெறும் வாய்ப்பினை இந்துபோர்டு இராசரத்தினம் சட்டசபையில் இருந்த காலத்தில் தமிழர் பெற்றுக் கொண்டனர்.
சுதந்திர இலங்கையில் அரசு பாடசாலைகளைப் பொறுப்பேற்ற போது, சைவப்பாடசாலைகள் சுயாதீனமாக இயங்கும் நிலையை இழந்தன. அக்காலம் முதலாகச் சைவப்பாரம்பரியங்கள் சைவப்பாடசாலைகளிலே போற்றிப் பேணப்படுமாற்றினை மதிப்பீடு செய்தல் அவசியமாகின்றது.
சைவசமயம் பாடவிதானத்தில் இடம் பெற்ற போதும் சைவப்பிள்ளைகளுக்கு அதனை படிப்பிக்க ஆசிரியர் இல்லாதிருத்தல் அல்லது சைவசமய அறிவு இல்லாதோர் படிப்பிக்க முற்படுதல் பரவரலாகக் காணப்படுகிறது. சமய அறிவு மாணாக்கருக்கு எந்த அளவில் வழங்கப்படுகின்றது? மணாக்கருக்கு சமய அறிவு தேவையா? என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. ஓர் இனத்தின் பண்பாடும் கலாசாரமும் அதன் சமய அடிப்படையிலே பெரிதும் தங்கியிருப்பதை நாம் மறந்துவிடுதல் ஆகாது
νi
கிறித்தவ மதப்பரம்பலுக்கு மிஷனரிமார் தம் ஏகபோக உரிமையாகக் கொண்டாடிய கல்விச்சாலைகள் மட்டுமன்றி பிரசுர வசதிகளும் பேருதவி புரிந்தன. யாழ்ப்பாணத்திற்கு சேர்ச்சு மிஷனுக்குக்காகக் கொண்டுவரப்பெற்ற அச்சுப்பொறி அன்றைய ஆளுநர் நல்லூரிலே நிறுவ இடம் கொடாமையால் அமெரிக்கன் மிஷனரிமார் பொறுப்பிலே மானிப்பாயிலே நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்ட காலம் முதல் புற்றிசல் போல கிறித்தவ துண்டுப்பிரசுரங்கள் சுயமாகவும் மறு பிரசுரமாகவும் அங்கிருந்து வெளிப்போந்தன. அவற்றை எளிதிலும் குறைந்த விலையிலும் பிரசுரித்துப் பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்துச் சமயப்பிரசாரத்தினை இலகுவாக்க மிஷனரிமாரினால் முடிந்தது. குருட்டுவழி, மும்மூர்த்தி லட்சணம், சமயப்பரீட்சை, சைவ தூஷணபரிகார நிராகரண சுப்பிரபோதம் முதலான எத்தனையோ துண்டுப்பிரசுரங்கள் சைவத்தை இழித்தும் பழித்தும்
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 38
பிரசுரிக்கப்பெற்றன. போதாதற்கு உதயதாரகையும் 1841 இலிருந்து கிறிஸ்தவ மிஷனரிமாரின் பிரசாரப்பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. அப்போது சைவர் தமிழ்நாட்டிற்கோ அல்லது கொழும்புக்கோ சென்று தமது பிரசுரங்களைப்பதிப்பிக்க வேண்டியிருந்தது. சைவசம்பந்தமான புறச்சமய கண்டனங்களை மானிப்பாய் அச்சியந்திரசாலை அவர்களுக்கு அச்சிட்டு உதவத்தயாராயில்லை. இதனால் கிறித்தவ மதப்பிரசாரத்தின் முன்னே ஆரம்பத்தில் சைவம் ஈடுகொடுக்க முடியாமற்போய்விட்டது.
1849 இலே ஆறுமுகநாவலர் தமிழ்நாட்டிலிருந்து அச்சுப்பொறிகொண்டுவந்து யாழ்ப்பாணத்திலே நிறுவினார். அதுவே சைவர் இலங்கையில் நிறுவிய முதல் அச்சியந்திரசாலை. இவ்வச்சியந்திரசாலையிலிருந்து நாவலரவர்கள் தம் கிறித்தவ கண்டனங்களைத் தொடக்கிவைத்தார். சுன்னாகம் முத்துக்குமார கவிராசரின் ஞானக்கும்மியையும் யேசுமதபரிகாரத்தையும் நாவலரவர்கள் இருமுறை பதிப்பித்தித்திருக்கிறார். நாவலரவர்கள் சுயமாக எழுதிய கிறித்தவ சமயகண்டனங்களிலே சைவ தூஷணபரிகாரம் மிஷனரிமாரினையே ஆச்சரியப்பட வைத்ததாகும். சைவத்திற்கும் வேதாகமத்திற்கும் இடையுள்ள ஒப்புமைகளை விரிவாக எடுத்துக் காட்டி கிறித்தவர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்துவது சைதூஷண பரிகாரம்.
நீர்வேலி சங்கர பண்டிதர், காரைதீவு மு.கார்த்திகேயையர், வடகோவை சபாபதி நாவலர், கொக்குவில் சிலம்புநாதபிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை, உடுப்பிட்டி சி.ஆறுமுகம்பிள்ளை, காசிவாசிசெந்திநாதையர், சுன்னாகம் குமார சுவாமிப்புலவர், வல்வை வயித்தியலிங்கபிள்ளை, நல்லூர்குகதாசன் போன்றோர் அன்று நாவலரவர்களின் கண்டனப் போரிலே துணை நின்றனர்.
கிறித்தவராகத் தோன்றி சைவத்தைத் தழுவிய சி.வை.தாமோதரம்பிள்ளையின் சைவ மகத்துவமும் விவிலிய விரோதமும் கிறித்தவர் மத்தியிலே பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தின. சைவமகத்துவம் சைவத்தினையும் கிறித்துவத்தினையும் ஒப்பிட்டு அவற்றின் தாரதம்மியங்களை விளக்குவது. விவிலிய விரோதம் வேதாகமத்திற் காணப்பெற்ற மாறுபாடுகளை எடுத்துவிளக்குவது. சி.வை.தாமோதரம் பிள்ளையின் நூல்கள் ஒரே புத்தகமாக 1867இலே வெளிவந்தன. ஆயினும் அவை வெளிவந்து சிலபல ஆண்டுகளுக்குப் பின்பும் அது பற்றிய வாதிப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன. கத்தோலிக்க பத்திரிகையான சத்திய வேத பாதுகாவலன் ஆசிரியர் காரைக்கால் அருளப்ப முதலியார் தலைமையில் கிறித்தவர்களும் வவ்வைச் ச.வயித்தியலிங்கபிள்ளை,
ஈசுர வருடம் - ஆடி புரட்டாதி

சுன்னாகம் பூ.முருகேசு பண்டிதர், சுன்னாகம் அ.குமாரசுவாமி புலவர் முதலிய சைவர்களும் தொடர்ச்சியாக கண்டனக் கணைகள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஏவுவதைக் காணலாம்.
இலங்கை நேசன் (1875), (சைவ) உதயபானு (1880), சைவாபிமானி (1884) என்பன உதயதாரகைக்கு பதில் தரக்கூடிய பத்திரிகைகளாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக் கூறிலே வெளிவந்தன. Gogoushurajgorg GDu 1889 geócsig The Hindu Organ அல்லது இந்து சாதனம் என இருமொழிப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கியது. சைவ மக்களுக்கு களமாக இந்து சாதனம் நெடுங்காலமாக திகழ்ந்து வந்திருக்கின்றது.
புறச்சமயிகளின் தீவிரமான சமயப்பிரசாரத்தினை முறியடிக்க சைவர்கள் கண்டனப் பிரசுரங்களிலே பிரதானமாகக் கைக்கொண்டனர். இதனை நாவலரவர்களின் சைவப்பிரசாரம் தெளிவாகக் காட்டுகின்றது. அவருடைய புறச்சமய கண்டனங்கள் பிரசுரங்களாகவே புறப்பட்டன. பிரசங்க மேடையை அவர் புறச்சமய கண்டனங்களுக்குப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.
புறச்சமய பிரசாரத்திற்கு எதிரான அரணை நிறுவுவதற்கு சுயமதத்தெளிவும் அதன் மாசற்ற இயல்பும் இன்றியமையாதன. சுயமதத்திற் காணப்படும் ஊழல்களை உணர்ந்து களைந்து சுயமத அறிவை விருத்தி செய்தால் புறமதம் ஊடறுத்து முன்னேற முடியாது. இவ்வுண்மையைச் சைவப்பிரசாரகர் தெளிவாக உணர்ந்தார்கள். சைவசமய விளக்கம் அகச்சமய புனருத்தாரணத்திலே ஓரளவு தங்கி இருக்கிறது. ஆயினும், களைகட்ட முற்படும்போது சைவப்பிரசாரகர் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. கோயிலதிகாரம் , பிராமணியம், வீரவணக்கம் என்பன அவற்றிலே குறிப்பிடதக்கவை. புராணபடனத்தினைச் Ց* ԼՌեՍ விளக்கத்திற்கும் பிரசங்கத்தினை சமயவிளக்கத்தோடு சுத்தீகரணத்திற்கும் அவர்கள் பயன்படுத்தினர்.
ஈழத்திலேயே புராணபடனம் செய்யும் மரபு எப்பொழுது ஆரம்பித்தது என்று சித்தாந்தமாகக் கூறமுடியாது. ஆயினும் அது கச்சியப்ப சிவாசாரியாரின் கந்தரபுராணம் எழுந்த பின்பே ஆதல் பொருத்தமாகும். ஏனெனில் கந்தபுராணமே ஈழத்தில் புராணபடன மரபிலே பயிற்சியும் செல்வாக்கும் மிக்கதாகக் காணப்படுகின்றது.
ஆறுமுகநாவலரின் ஆசிரியர்களான இருபாலை சேனாதிராய முதலியாரும் நல்லூர் சரவணமுத்துப்புலவரும் நல்லைக்கந்தன் சந்நிதானத்திலே புராணப்படனம் செய்தமை பற்றிய செய்திகள் அறியப்படுகின்றன. ஆனால்
இந்து ஒளி37

Page 39
ஆறுமுகநாவலர் காலத்திலேயே புராண படனம் பூரணத்துவம் பெற்றதாகத் தெரிகிறது. நாவலரவர்களும் அவர் மருகர் வித்துவசிரோமணி ச.பொன்னம்பலபிள்ளையும் தனித்தனியே புராண படனம் செய்வதிலேயே பொதுவாக ஈடுபட்டபோதும் மாமனும், மருகனும் சேர்ந்து புராணபடனம் செய்யும் காலங்கள் யாழ்ப்பான மக்களுக்கு பெருவிழாவாக அமைந்தன. பண்டிதமணி சிக்ணபதிப்பிள்ளை சுந்தரபுராண கலாசாரம் என்ற நூலிலே இருவரும் சேர்ந்தும் தனித்தனியும் செய்த புராண படனங்கள் பற்றியும் அங்கே தோன்றிய புதுமைகளையும் விஸ்தாரமாக எழுதியிருக்கிறார்.
வித்துவசிரோமணி ச.பொன்னம்பலபிள்ளையின் மாணவர் வண்ணை சி.சுவாமிநாத பண்டிதரும் புராண படனத்திலே பேரெடுத்தவர். புராணபடனமரபு அழிந்து போகாமல் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஈழத்தில் சமய விளக்கத்திற்கு அது ஆற்றியிருக்கும்பங்களிப்பு சொல்லுந்தரமன்று. கந்தபுராணம், கதையினூடே சைவசித்தாந்த விளக்கத்திற்கு அளிக்கும் விளக்கம், சைவப் பிரசாரகரால் மட்டுமன்றி சாதாரண மக்களாலும் தெளிவாக உணரப்பட்டுள்ளது. கந்தபுராண கலாசாரம் என்பது கந்தபுராணம் கூறும் சமய நெறி வழியே ஒழுகி சைவம் பற்றித்தெளிந்தவர்கள் சமூகம். கந்தபுராணத்தினை 1869 இலே முதன்முதலாக ஆறுமுகநாவலர் பதிப்பித்த போது, அங்கு தனியே, தமிழ்நாட்டவருக்கு கந்தபுராணம் தெரியாதபோதும், தம் நாட்டுப்பெண்கள் கூட அதன் அறிவிலே முதிர்ச்சி உடையவர் என்பதை குறிப்பிட்டிருக்கிறார். நாவலர் பெருமான் கூறுகின்ற நிலை மாறிக்கொண்டு வருகிறதா? அதனை நாம் போற்றவேண்டாமா? போற்றா விட்டால் சமய விளக்கத்திற்குச் சிறந்த கருவியாக விளங்கிவந்து கொண்டிருந்த முறைமை ஒன்றினை இழந்து விடுவோம். கந்தபுராணம் படித்தவர்கள் மட்டுமன்றி கேட்டவர்கள் கூட தம்மதம் இந்துமதம் என்று கூறமாட்டார்கள்; தாம் சைவமதத்தவர் என்று தெளிவாகத் தயங்காது உரைப்பர். ஏனெனில் அவர்கள் படித்த கேட்ட புராணம் அந்த அறிவினை அவர்களுக்கு ஊட்டியுள்ளது. எனவே, சைவம், தன்னிலை தாழாது போற்றப்படுவதற்குப் பொதுமக்கள் போற்றிய புராணபடன நெறி இன்றியமையாதது.
சைவப்பிரசாரகர் சமய விளக்கத்திற்குப்பிரசங்கங்களை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். இவற்றை இரு வகையாகப் பகுக்க முடியும் ஒன்று புராணப் பிரசங்கம், ஏனையது, சைவப் பிரசங்கம். ஆறுமுகநாவலருக்கு "நாவலர்” எனும் கெளரவப்பட்டத்தினைப் பெற்றுக் கொடுத்தது அவர் தம் பிரசங்க வன்மையே என்பதை மனங் கொளல் வேண்டும். நாவலரவர்களின் ஆரம்பகாலப்பிரசங்கங்கள் அகச்சமய விளக்கத்திற்கும் சுத்தீகரணத்திற்கும் முக்கிய இடம் தந்தன. இவை சைவ சமூகத்தினரிடையே ஏற்படுத்திய தாக்கத்தினை வண்ணை வே.கனகரத்தின உபாத்தியார் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
38 இந்து ஒளி

கிறித்தவருக்கு பைபிளும் இஸ்லாமியருக்கு குர்ஆனும் பெளத்தருக்கு திரிபிடகமும் பிரமாணமாக அமைகின்றன. அவ்வாறே சைவருக்குச் சைவாகமங்கள் ShiyLoT600Tuom85 அமைகின்றன. சைவர் 28 சைவாகமங்களையும் 207 உபாகமங்களையும் பிரமாணமாகப் போற்றிப் பேணி வந்துள்ளனர். இவற்றிலே சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நாற்பாதங்களும், பதி, பசு, பாசம் எனும் அநாதியே நித்தியமான முப்பொருளின் தொடர்பினை அடிப்படையாகக் கொண்ட சைவசித்தாந்தத்தின் தத்துவங்களும், வழிபாட்டுக் கிரியைகளும், திருக்கோயில் சிலாவிக்கிரக அமைப்புகளும் விரிவாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.
எந்த ஒரு சமயத்தையும் சமயமென நிறுத்தி நோக்குவதற்கு வழிபாட்டு முறைகளும் கிரியைகளும் மட்டும் போதா, அதனை இனங்காட்டும் தத்துவங்கள் ஆதியனவும் இன்றியமையாதன. இவற்றை உள்ளடக்கும் சிவாகமங்களில் சைவத்திற்கு தேவையான பிரமாணங்கள் தெளிவாக இடம்பெறுகின்றன. ஆயினும் சைவாகமங்களைப் புறக்கணித்துவிட்டு சமய பாதுகாவலராகத் தம்மைக் கருதிக்கொண்டோர் வேதங்களைச் சைவத்தின் பிரமாணங்களாகக் கொண்டு சைவத்தினை நிலைகுலைச்செய்து விட்டனர். சிவாகமங்களின் முறைப்படி திருக்கோயில் அமைப்பதையோ கிரியைகள் செய்வதையோ
அவர்கள் ஆதரிக்கவில்லை.
சைவமரபிலே வேதங்களுக்குச் சிறப்பிடம் இல்லை; சைவாகமங்களுக்கே அந்த இடம் உண்டு. எனவே சைவாகமங்கள் வழிப்படியே சைவர்கள் ஒழுகவேண்டும் என்பதை ஆணித்தரமாக நாவலரவர்கள் முன்வைத்துள்ளார்.
“ குரு லக்கணம் குறைவற அமைந்த சைவாசாரியாரை அடைந்து, சிவதீஷை பெற்றுக்கொண்டவர்களாய், விபூதி ருத்திராக்ஷரதாரணம், சந்தியாவந்தனம், ழரீ பஞ்சாக்ஷர ஜெபம், சிவத்தியானம், சிவாலயசேவை, சிவலிங்க பூசை, குருவாக்கிய பரிபாலனம், மாகேசுர பூசை முதலியவற்றைச் finnasan விதிப்படி மெய்யன்போடு செய்பவர்களாய் உள்ளவர்களே சைவர்கள் என்று சொல்லப்படுவ்ார்கள்.” இது நாவலரவர்கள் சைவருக்குத் தரும் இலக்கணமாகும், திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராண வசனத்தில் இடம் பெறுவது.
சைவருக்குரிய தீகூைடிகள், அனுட்டானக் கிரியைகள், பரார்த்தக்கிரியைகள், அபரக்கிரியைகள் யாவற்றுக்கும் பிரமாணம் சிவாகமங்களேயாம்; வேதங்களல்ல.
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 40
“விபூதிருத்திராக்ஷதாரணமும்பூரீபஞ்சாக்ஷர ஜபமும் சிவலிங்கோபாசனையும் வேதத்தில் விதிக்கப் படினும் சிவாகமத்தில் விதித்தபடி சிவதீட்சைடி பெற்றுக்கொண்டு அநுட்டிக்கப்பட்டாலன்றி முத்தி சித்தியாது என்று (ம்) விசுவசித்து, அங்ங்ணம் விசுவசித்தபடியே ஒழுகும் மார்க்கம் சைவ சமயமெனப்படும்”
தம்முக்கியத்துவத்தினை இழந்து நின்ற சைவாகமங்கள் மீண்டும் தம்மிடத்தினைப் பெறாவிட்டால் சைவசமயம் தனக்கென ஒரு இடத்தினைப்பெறும் சமயமாக நிலவமுடியாது என்பதை நாவலரவர்கள், தெளிவாக
உணர்ந்து அதன் உயர்ச்சிக்குப் பிரசாரகரானார்.
சமகாலத்தவரான தயானந்த சரஸ்வதி (1824-1886) தோற்றுவித்த ஆரிய சமாஜம் இந்தியர் சுத்தமான வைதீக வழக்கை மேற்கொள்ள வேண்டும் என்று செயற்பட்டது. வேதங்களுக்குப் பிற்பட்ட எந்த நூலையும் தயானந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. வேதவழக்கை பிரமாணமாகத் தயானந்தர் வற்புறுத்திய கட்டத்தில் ஆறுமுகநாவலர் சைவாகமங்களைப் பிரமாணமாக வற்புறுத்தினார். 1875 இலே ஆறுமுகநாவலர் வெளியிட்ட இரு “நல்லூர்க் கந்தசுவாமி கோயில்” பத்திரிகைகளும் சைவாகமங்களை தெளிவாக உணரவைப்பனவாம். நாவலரவர்கள் சைவசித்தாந்த உண்மைகளைப் பல்வேறு இடங்களிலும் தெளிவுபடுத்தியுள்ளபோதும் அவர்தம் பெரிய புராண சூசனம் அவற்றிலே சிறப்பித்துக் கூறத்தக்கது. இவற்றோடு நாவரவர்கள் எழுதிய நித்தியகன்மவிதி, சிவாலய தரிசன விதி, சைவசமயசாரம், சைவசமயம், சைவசமயி, அநாசாரம், திருக்கோயிற் குற்றங்கள், சைவவினாவிடைகள் என்பனவும் சைவசமய அறிவுக்குக் கருவியாவன.
மாதகல் சு.ஏரம்பையர், அச்சுவேலி அ.வேன்மயில்வாகனச் செட்டியார், காசிவாசி செந்திநாதையர், வேலணை வி.கந்தப்பிள்ளை, சுன்னை அ.குமாரசுவாமி புலவர், ஊரெழு சு.சரவணமுத்துப்பிள்ளை, வடகோவை சபாபதிநாவலர், அச்சுவேலி ச.குமாரசுவாமிக் குருக்கள் போன்றோர் நாவலரவர்களின் சைவப்பிரசங்க மரபினை இருபதாம் நூற்றாண்டு வரை இட்டு வந்துள்ளனர். மட்டுவில் க.வேற்பிள்ளை உபாத்தியாயர், சித்தன்கேணி ஆ.அம்பலவாண நாவலர் போன்றோர் புராணப் பிரசங்கிகளாகப் பேரேடுத்தவர்.
இணுவில் நடராசையர் தர்க்க திரு. குடாரதாலு தாரி வை. திருஞானசம்பந்தபிள்ளை போன்றோர் தமிழ்நாட்டிலும் சித்தாந்தம் போதித்துச் சிறப்படைந்தவர். வேலணை வி.கந்தப்பிள்ளை தத்துவப் பிரகாசவுரை பதிப்பித்தவர்; சிவநெறிப்பிரகாசம் பரிசோதித்தவர்; சைவசூக்குமார்த்த
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

போதினி எனும் சைவ சித்தாந்தப் பத்திரிகையை வெளியிட்டவர். மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை மாயாவாத தும்சகோளரி, அத்துவித சித்தாந்த மகோத்தாரணர், சைவசித்தாந்த மகாசரபம் முதலிய கெளரவங்களை சம்பாதித்துக் கொண்டவர். புலோலி சு.சிவபாதசுந்தரம்பிள்ளை சைவசித்தாந்த உண்மைகளை அண்மைக் காலத்திலே விளக்கிக் காட்டியவர்.
சைவசமய விளக்கமாக நாவலரவர்கள் எழுதிய சிறு நூல்கள் காலத்திற்குக்காலம் மறுபிரசுரம் கண்டுவந்துள்ளன. ஆயினும் ஏனையோர் எழுதிய சில நல்ல நூல்கள் அத்தகைய வாய்ப்பினைப் பெறவில்லை. இவை தேடிப்பதிப்பிக்கப்பட வேண்டியவை. அவ்வாறு செய்யின் சமய
விளக்கம் குறையாகத் தொடர்ந்து இருக்கமாட்டாது.
சைவசமய புனருத்தாரணமும் சைவப்பிரசாரகருக்கு பெரும் வேலையாக இருந்தது. சமயவுண்மைகளைப் போதிப்பதிலோ புறச்சமயிகளை எதிர்ப்பதிலோ நாவலரவர்கள் சளைத்துவிடவில்லை. சைவத்துள் புகுந்துவிட்டமாசுகளை நீக்க முற்பட்டபோதுதான் அவர்கள் எதிர்பார்க்காத எதிர்ப்புக்கு முகக்கொடுக்க வேண்டியிருந்தது. கோயில் அதிகாரம், பிராமணியம், வீரவணக்கம் என்பன அவ்வழியிலே நாவலரவர்கள் எதிர்ப்பட்டனவற்றிலே குறிப்பிடத்தக்கவை.
நல்லைமுருகன் அமைப்பும் அங்கே காணப்படும் நடவடிக்கைகளும் ஆகம விரோதங்கள் என்று நாவலரவர்கள் உரைத்தவற்றைக் கோயிலார் ஏற்றுக் கொள்ளாததால், 1847 முதல் 1872 வரை இருபத்தைந்து வருடம் இல்லாத தொடர்பை கோயிலாரை நம்பி நாவலரவர்கள் 1872 முதல் 1874 வரை பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். மீண்டும் தம்மைத் தாமே தண்டித்துக் கொண்டு, தம் இஷ்ட தெய்வத்தின் சந்நிதியை நாடாதே போய் விட்டார். அவர் ஆத்ம சாந்திக்காக 1969இல் சைவர்கள் எடுத்த முயற்சியையும் 1985இல் கோயிலார் முறியடித்து விட்டார்கள்.
கோயில் பொது சொத்து தனிமனித சொத்தாக அது
இருக்க முடியாது. என்று பொது மக்களுக்கு திறந்து விடப்படுகிறதோ அன்றே அது பொதுச்சொத்து.
பிராமணியம் 19ம் நூற்றாண்டின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு உயர்ந்த அந்தஸ்தினை பெற்றிருந்தது. உபநயனம் தரித்திருந்த ஒன்றையே வைத்துக்கொண்டு இவர்களில் பலர் தம்மைச் சமயப் பாதுகாவலராகப் பாவனை செய்து கொண்டு சைவத்தையும் சைவாகமங்களையும் சைவக்கிரியைகளையும் உதாசீனம்
செய்தனர். இவ்வைதீகப் பிராமணர் செய்த சிவாகம
இந்து ஒளி 39

Page 41
நிந்தையைக் கண்டித்து நாவலரவர்கள் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரசங்கம் செய்திருக்கிறார். அவர் தம் கட்டுரைகளிலே உண்மை நாயன்மார் மகிமை, குருபூசை என்பவனவும் இவ்விடயத்தினை தெளிவாக்குகின்றன. சைவர்கள் போற்றிவந்த சைவாகமங்களைத் தமக்கிருந்த செல்வாக்கினாலே ஒதுக்கிவிட்டு, சைவமதத்தையே வைதீக மதமாக மாற்ற எடுக்கப்பெற்ற முயற்சியை நாவலர் பெருமான் இனம் கண்டு கொண்டார். அதனால் ஈழத்திலே சைவமதம் தப்பியது. தமிழ்நாட்டிலே உண்டுபட்ட மயக்கத்தினால் வைதீக மதங்களின் பல்வேறு கருத்துகளுக்கும் இடம்கொடுத்து பல்வேறு சமயங்களையும் சைவம் உள்ளடக்கி வேறுபட்டு நிற்கின்றது.
ஈழத்திலே அண்மைக்காலத்திலே சைவம் என்ற பெயர் குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதாகவும் பரந்த மனப் UT BET EYLOGÜLLIĞ, காட்டும் குறிக்கப்படவேண்டும் என்று சிலர் கூற முற்பட்டனர். இலங்கையிலே வேதாந்தம் சில இயக்கங்களால் அண்மைக்காலத்தில் கால் கொள்ள தொடங்கியிருக்கிறது. சைவத்தோடு இணையாதவாறு வைணவ வழிபாடும் தலைகாட்டத்தொடங்கியிருக்கிறது. சாந்த மரபின்னப் போற்றாத மண்ணிலே அதனைத்திட்டமிட்டுப் புகுத்தும் முயற்சிகளும் காணப்படுகின்றன. ஆயினும் சைவ பாரம்பரியம் இன்றும் தன்னிலையை இழந்து விட வில்லை. சைவப்பெருமக்களை அந்த ஈசன் காப்பாறுவானாக!
களை கட்டும் கட்டத்தில் இறுதியாக நோக்கப்படவேண்டியது வீரவணக்கமாகும். இராமலிங்க
து திருவருள்வெள் ந்து உழலுகின்றன என்கின்
ன்"என்வரும்நீத்தல்வின்
 

சுவாமிகளின் அற்புதங்களை எள்ளி நகையாடி அவர்தம் பாடல்களை அருட்பா என ஏற்க மறுத்த நாவலரவர்கள் சைவ சமயத்திற்கு அன்று அரண் எழுப்பிக்காக்க முயன்றார். சைவத்துள்ளே போலிப்பண்புகள் புக இடம் விடக் கூடாது என்று அன்று நாவலர் பெருமான் நம்பினார். இன்று சைவசமயம் இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வந்தால் என்ன செய்யுமோ?
சைவர்களிடையே இயக்கரீதியான செயற்பாடு ஒழுங்கு பெறவேண்டும். அகில இலங்கை இந்து மாமன்றமும் இவ்வழியிலே செயற்பட தயாராகிக்கொள்ளவேண்டும். சமயம் சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்நோக்கி அவற்றுக்கு வழிசொல்லக் கூடிய அதியுயர் மதிப்புரைச்சபை ஒன்று அ.இ.இ.மா.போன்ற தாபனங்களால் அமைக்கப்படல் அவசியமாகின்றது. அரசாங்க உத்தியோகத்தர் நம் சமயப்பிரச்சினைக்கு தீர்ப்புக் கூற இடம்தரலாமோ ?
கிறித்தவரும், இஸ்லாமியரும், பெளத்தரும் தத்தம் மதாநூசாரிகளின் ஆத்மீகத் தேவைகளையும் உலகியல் தேவைகளையும் மனதில் கொண்டு, அவர்களுக்கு அவ்வவ்வழிகளிலே அறிவுறுத்தி வழிகாட்டக் கூடிய அமைப்புகளை உருவாக்கிச் செயற்பட்டு வருவது கண்கூடு,
சைவசமுதாயத்திலே அத்தகைய அமைப்புகள் தேவையில்லை என்று வாளா இருக்கிறோமா? சமய அறிவும் சமுதாய உணர்வும் கடமைப்பயிற்சியும் பெற்ற அமைப்பு ஒன்றினை சைவர் உருவாக்காமல் தள்ளிப்போடுதல் எமது சமூகத்தை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நாம் சிந்தித்துச் செயலாற்றல் வேண்டும்.
செய்திருக்கின்றார்ட்
-புலவர் நரா.முருகவேள் =
நன்றிந்திருக்கேதீச்சரம் திருக்குடத்திருமஞ்சள் மலர்-197ள்
ஈகர வருட்ம்-ஆடி-புரட்டாதி

Page 42
மண்ணில் நல்ல வண்
(1997 ஜூன் 1ம் திகதியன்று அகி பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்ற ஆ செஞ்சொற்செல்வன் ஆறு திருமுருகன் அ
“புனிதமான ஒரு தெய்வீக நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளுகின்ற வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. நிர்த்தன சுந்தர நடராஜன் சிவகாமி அம்பாள் சமேதராக இந்தப் புனிதமான இடத்திலே கொலுவீற்றிருக்கின்ற காட்சியோடு, அகில இலங்கை இந்து மாமன்றம் சைவத்தையும், தமிழையும் காப்பதற்காக ஆற்றுகின்ற பணிகளினுடைய எடுத்துக்காட்டை, இங்கு உரையாற்ற வருகின்ற வாய்ப்பினாலே நான் பெற்றிருக்கின்றேன். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றியும், வாழ்த்தும்.
துர்க்கா துரந்தரி, அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள், அகில இலங்கை இந்து மாமன்றம் ஆற்றுகின்ற பணிகளை வாழ்த்தி, இடம் பெயர்ந்த காலத்தில் அவர்கள் எங்களுக்குச் செய்த சேவைகளைப் போற்றி, நேரே சென்று அவர்களிடத்திலே நன்றி சொல்லிவிட்டு வரவேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டார். அந்த விடயமாக அவர்களைச் சந்திக்க முற்பட்டபோது, இன்றைக்கு உரையாற்றுகின்ற வாய்ப்பை தந்திருக்கின்றார்கள். அதனாலே, அந்த வாய்ப்பை குறுகிய நேரத்திலே உங்களுக்கு சிந்தனையாகச் சொல்ல முற்படுகிறேன்.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லதுேறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
என்று ஞானசம்பந்தர், பரம்பொருளாக இருக்கின்ற சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து வாழ்த்துகின்றபோது, அந்த வாழ்த்துக்குள்ளே இங்கு வழிபடுகின்ற அடியவர்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கின்றார். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வாழ்க்கைதான் எங்களை வாழ்விக்கும்.
எத்தனையோ வாழ்க்கை இந்த உலகத்திலே உண்டு. அந்த வாழ்க்கையிலே எல்லாம் அமைதியையும், ஆறுதலையும் தரக்கூடிய ஒன்றே ஒன்று கடவுள்
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி
 

ாணம் வாழவேண்டும்.
செஞ்சொற்செல்வன் ஆறு. திருமுருகன்
0 இலங்கை இந்து மாமன்றத் தலைமையகப் ரி உத்தரநடேசரபிஷேக வைபவத்தின் போது வர்கள் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு)
வழிபாடுதான். அதனாலேதான் ஆன்றோர்கள், முன்னோர்கள், எங்களுக்கு முன்னாலே வாழ்ந்தவர்கள் எல்லாம் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்றார்கள். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள். தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்றார்கள். அதனாலே, கடவுள் பக்தி என்கின்ற அந்த தெய்வீகம் தான் எங்களை வாழவைக்கும் என்கின்ற செய்தியை சொல்லவருகின்ற ஞானசம்பந்தர், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் - நீ இந்த மண்ணிலே பிறந்து விட்டால், இந்தப் புவியிலே வாழுகின்ற காலத்திலே நீ நல்லபடி வாழ வேண்டு மே யானா ல் , தெய்வீகத்தின் படி வாழவேண்டுமேயானால் உன்னுடைய கண்ணுக்கு தினமும் நல்ல காட்சியே தென்படவேண்டும் என்றார். அதனாலேதான், அந்தக் காலத்திலே நித்திரை விட்டு எழுந்தவுடனே காலையிலே ஆண்டவனுடைய சந்நிதானத்திற்குப் போவார்கள். தெய்வத்தினுடைய சிரித்த காட்சியை, மகிழ்ச்சியான காட்சியை, ஆரோகணித்திருக்கின்ற காட்சியை, இந்த அழகுக் காட்சியை கண்ணுக்குள்ளே பார்த்துவிட்டால், நல்ல காட்சியை ஒருவன் காலையிலே பார்த்து விடுவானேயானால் அவனது உள்ளதும் அழகாகிவிடும். உள்ளம் அழுக்காக இருக்கின்ற போது, வாழ்க்கையும் துன்பமாகிவிடும். அதனாலேதான் ஞானசம்பந்தர், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை - நாங்கள் எண்ணுவது கூட, எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். இன்று நல்ல காட்சியை நான் பார்க்க வேண்டும், நல்லவர்களோடு பேசவேண்டும், நல்லதைச் சிந்திக்க வேண்டும், நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஒரு ஆத்மா நினைக்கின்ற போதுதான், அந்த ஆத்மா ஆறுதலடையும். அதனாலேதான், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர் - கண்ணிலே எப்போ நல்ல காட்சியைப் பார்க்கவேண்டுமேயானால், அந்த நல்ல காட்சியைப் பார்க்கக்கூடிய இடம் கோயில்தான்.
இன்றைக்கு நான் தில்லைக்கூத்தனுடைய அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே, குனித்த புருவமும்,
இந்து ஒளி 41

Page 43
கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் என்று நாவுக்கரசர் சொன்ன அந்த சிரித்த காட்சி - சிவகாமி அம்பாளுடன் இருக்கின்ற காட்சியைப் பார்த்து மகிழ்கிறேன். தெய்வத்தோடு ஒவ்வொரு அடியவரும் உள்ளத்தாலே பேசவேண்டும். உள்ளத்தாலே பேசுகின்றபோதுதான், ஆண்டவன் எங்களைத் திரும்பிப் பார்க்கிறான். அதனாலேதான், ஞானசம்பந்தர் முதற்தேவாரத்திலேயே உள்ளம் கவர் கள்வன் என்று சொன்னார். ஆண்டவனைப் பார்த்து கள்வன் என்று சொன்னாரா என்று நீங்கள் ஆ ச் ச ரி ய ப் பட லா ம் . ஆண் ட வன் எ  ைத ப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்றால், அடியவர்களுடைய
உள்ளத்தை. அதனாலே, அடியவர்கள் ஆண்டவனிடத்திலே உள்ளத்தைக் கொடுக்கவேண்டுமானால், நல்ல காட்சியைக்
கண்ணினால் பார்க்க வேண்டும். கண்ணிலே நல்ல காட்சியைப் பார்க்க வேண்டுமானால் கடவுளுடைய காட்சியை விட, இந்த உலகத்தில் நல்ல காட்சி கிடையாது. அதனாலேதான் ஞானசம்பந்தர், கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே - அது ஆண்டவன் பார்வதியோடு இருக்கின்ற காட்சி இருக்கிறது. அதுதான் தயவுக்காட்சி, இரக்கக் காட்சி, ஜிவகாருண்யக்காட்சி, பாசம், நேசம், பரிவு, பக்குவம் என்று சொல்லப்படுகின்ற பெண்மையினுடைய, அந்தத் தாய்மையினுடைய உயர்ந்த காட்சியோடு இருக்கின்ற ஆண்டவனுடைய அந்த திருக்காட்சியைப் பார்க்கின்றபோது, ஒரு மனிதனுக்கு இரக்கம் வரும், ஒரு மனிதனுக்கு சாந்த குணம் வரும், ஒரு மனிதனுக்கு தர்ம எண்ணம் வரும் என்ற காரணத்தை வைத்துக் கொண்டுதான் இந்தப் பாடலைப் பாடி, தெய்வத்தை வாழ்த்தியது மாத்திரமல்ல, வாழப்போகின்ற, வளரப்போகின்ற அடியவர்கள் எல்லாரையும் பார்த்தால், கடவுளைப் பார்த்து இந்த நல்ல காட்சியோடு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.
நாங்கள் ஆண்டவனின் சந்நிதானத்துக்கு வந்து கும்பிடுகிறோம். தெய்வம் எத்தனையோ வடிவங்களில் இருக்கும். இன்றைக்கு பார்க்கின்ற, இந்தப் பரம்பொருளாக இருக்கின்ற சிவபெருமான் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு, ஒற்றைக் காலை ஊன்றிக்கொண்டு, கையிலே அக்கினியோடு, தலையிலே கங்கையோடு அந்தப் புனிதமான காட்சியைத் தருகின்ற காட்சிக்கு உலகத்திலே எத்தனையோ தத்துவம் சொல்கிறார்கள். நடராஜ தத்துவத்தை விரித்துச் சொல்லுவதல்ல. ஆனால், நடராஜதத்துவத்தினுடைய ஒரு அடிப்படை என்னவென்றால், நீ காணுகின்ற காட்சி எல்லாவற்றுக்குள்ளும் நான் இருக்கிறேன். அதனாலேதான், இறைவனைப் பார்க்கிறவர்கள்,
42 இந்து ஒளி

நடராஜனுடைய வடிவத்திலே சைவசமயத்தவர்கள் ஆண்டவனை இருத்தி ஏன் வழிபடுகிறார்கள் என்றால், இவர் நிர்த்தனம் நித்தமாக ஆடிக்கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைவன் எங்கே இருக்கிறான் என்றால், எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தைச் சொல்கின்ற வடிவம் தான் இந்த நடராஜனுடைய வடிவம். அதனாலேதான், மணிவாசகர் நடராஜருடைய வடிவத்தைச் சொல்லுகின்றபோது சொன்னார் பஞ்பூதங்களையும் இயக்குபவன் இறைவனே.
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி உறையுணர் பிறந்த ஒருவ போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நாடு வாழவேண்டுமேயானால், 6ษ์ (B வாழவேண்டுமேயானால், ஒவ்வொரு ஆத்மாவும் வாழவேண்டுமேயானால் இந்தப் பரம்பொருளாக இருக்கின்ற நடராஜப் பெருமானை போற்றுதல் வேண்டும். தண்ணிரை வைத்திருக்கின்றான், தீயைவைத்துள்ளான், காற்றை வைத்திருக்கின்றான், ஆகாயத்தை வைத்திருக்கின்றான், பூமகளாகிய பூமாதேவியை வைத்திருக்கின்றான். நாங்கள் சுவாசிக்கின்ற அத்தனை இயல்புகளையும், பஞ்ச பூதங்களையும் அந்த ஆண்டவனே வைத்திருக்கின்ற காரணத்தினாலேதான் உலகம் இயங்குகின்றது. அந்த பஞ்ச பூதங்கள் அத்தனையும் எங்களைக் காக்கவேண்டும், அப்படிக் காக்க வேண்டுமானால், அந்தக் கடவுளுடைய காட்சியை நீ பார்க்கவேண்டும், அந்தக் கடவுளுடைய காட்சியை நீ பார்க்கின்ற போது உணர்ந்து கொள்ள வேண்டும், தீயதைக் கண்டு அழிக்கின்ற காட்சி அந்த முயலகனை நடராஜப் பெருமான் மிதித்துக் கொண்டிருக்கின்ற காட்சி, தீமை செய்தவர்களை நசுக்குவேன், அநியாயமானதை அழிப்பேன், தர்மத்தைக் காப்பேன் என்னும் அடிப்படைகளை உணரவைப்பதும் இக்காட்சியின் அடிப்படைகளில் ஒன்று. ஆண்டவனின் அருட்தத்துவங்களை அறிந்த ஞானசம்பந்தர் என்ன செய்தி சொல்லுகிறார் என்றால், நல்ல காட்சியைப் பார்த்து நலம் பெற வேண்டும் என்கிறார். நாங்கள் ஆண்டவனுடைய சந்நிதானத்திலே கொண்டு வந்து பூவைத்துக் கும்பிடுகிறோம். அந்தப் பூவை கண்ணுக்கு ஒத்தி காதிலே வைக்கிறோம். கண்ணுக்கு ஏன் ஒத்திக் கொள்கிறோம் என்றால், இறைவா! இன்றைக்கு
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 44
காலையிலே, இருந்து இரவு நித்திரைக்குப் போகும் வரை என்னுடைய கண்ணாலே நல்ல காட்சியைப் பார்க்கவேண்டும். அதனாலேதான், கண்ணில் நல்லஃதுறும் என்று ஞானசம்பந்தர் திருப்பிச் சொல்கிறார். கண்ணிலே எப்போதும் நாங்கள் ஆண்டவனுடைய பூவை ஒத்துவதன் உயர்ந்த அர்த்தம் என்னவென்றால், இறைவா! இந்தக் கண்ணுக்கு இன்றைக்கு நல்ல காட்சியே தெரியவேண்டும். அந்தப்பூவை, ஆண்டவனுடைய திருப்பூவை செவிகளிலே சாத்தி, என்ன கேட்கிறோம் என்றால், இறைவா! இன்றைக்கு என் காதுக்கு வருகின்ற செய்தி எல்லாம் நல்ல செய்தியாகவே இருக்கவேண்டும். அமங்கலச் செய்தி ஒன்றும் என் காதுக்குக் கேட்கக்கூடாது. நல்ல செய்தியே என்னிடத்திலே வந்து சேர வேண்டும். அப்பொழுதுதான் நான் மகிழ்ச்சியாக வாழ்வேன் என்று ஒவ்வொரு அடியவர்களும் கருத வேண்டும். அதனாலேதான், கண்ணில் நல்லஃதறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் இருக்கின்ற பெருந்தகை என்று சம்பந்தர் என்ன சொல்லுகிறான் என்றால், சாதாரண மனிதரிடத்தில்தான் சின்னச்சின்ன குணங்கள் இருக்கும். சின்னச் சின்னப் பிரச்சினைகளை பெரிதாக்குவோம். சின்னச் சின்ன குண்ங்களை வைத்துக்கொண்டு கோபித்துக் கொள்வோம். உண்டு, உடுத்து, உறவாடி மகிழ்கின்றவர்களோடு கூட, நாம் உறவுகளை இடைநிறுத்திக் கொள்வோம். ஞானசம்பந்தர் ஆண்டவனைச் சொல்லுகின்றபோது என்ன சொன்னார்? பெருந்தகை என்றார். மணிவாசகர் ஆண்டவனைச் சொல்லுகின்றபோது சொன்னார் பெம்மான், சு ந் தர மூர் த் தி நா ய னார் ஆண் ட வ ைன ச் சொல்லுகின்றபோது, முதற்தேவாரத்திலே என்ன சொன்னார்? பெருமான். என்று, இச்சொல்லின் அர்த்தம் என்னவென்றால், அவர் பெரிய மனம் படைத்தவர். பெரிய மனம் படைத்தவன் சின்னச்சின்ன பிரச்சினைகளை மன்னித்திடுவான். மற்றவர்களுடைய குற்றங்களைக் கண்டித்து அவைகளை ஏற்றுக்கொள்ளுகின்ற பக்குவம் உடையவன் இறைவன். அதனாலேதான், மண்ணில் நீ நல்ல வண்ணம் வாழவேண்டுமேயானால் இறைவனுக்கு இருக்கின்ற இயல்புகளை எல்லாம் உன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும். அதனாலேதான், ஞானசம்பந்தர் இந்தப் பாடலிலே என்ன சொல்கிறார் என்றால், கடவுளை நாங்கள் பார்த்துவிடுவோமேயானால், நல்ல காட்சியைப் பார்த்து வருவோமேயானால் எங்களோடு புன்னகை சேர்ந்துவிடும். இன்முகமே எமக்கு இயற்கையாகி விடும்.
பரம்பொருளாக இருக்கின்ற சிவபெருமான், மனிதனுக்குக் கொடுத்த பெரிய கொடை என்னவென்றால், உயர்ந்த நன்கொடை என்னவென்றால்,
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

சிரிப்பு. எந்தவொரு மிருகத்துக்கும் ஆண்டவன் இந்தக் கொடையைக் கொடுக்கவில்லை. மிருகங்களுக்கு எத்தனையோ இயல்புகளைக் கொடுத்திருக்கிறான். சில மிருகங்களுக்கு போரப்பற்களை ஆண்டவன் படைத்திருக்கிறான். சில மிருகங்களுக்கு வாலைப் படைத்திருக்கிறான். சில மிருகங்களுக்கு பொல்லாத நகத்தைப் படைத்திருக்கிறான். மனிதனுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கின்ற பெரிய நன்கொடை சிரிப்பு ஒன்றுதான். அதனாலேதான் ஆண்டவன் சிரித்துக்கொண்டு அடியவனைப் பார்க்கிறான். அடியவன் சிரித்துக்கொண்டு வாழவேண்டுமேயானால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணம் இருக்குமேயானால், அவனது வாழ்க்கையில் துன்பம் இல்லை. அதனாலேயே சிரித்துக்கொண்டு வாழுகின்ற அந்த வாழ்க்கை, எங்கள் எல்லோருக்கும் வேண்டும். உலகத்திலே உயர்ந்தது சிரிப்புத்தான். அது சீவியம் முழுவதற்குமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பொருள் தேடுகிறோம். நிறையைப் படிக்கிறோம். நிறையைச் சம்பாதிக்கிறோம். எங்களுக்குப் பின்னாலே வாழப்போகின்றவர்களும், எங்கள் சந்ததி சிரித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தாயும், தந்தையும், ஒவ்வொரு சகோதரரும் ஏன் ஆசைப்படுகிறார்கள் என்றால், எனக்குப் பின்னல் இருக்கின்றவர்கள் என் பொறுப்பிலே இருக்கிறார்கள். சிரித்துக்கொண்டே வாழவேண்டும், சீவியம் முழுவதும் சிரிக்கவேண்டும் என்கிறார். அப்படி சிரித்துக்கொண்டே வாழ வேண் டு மா னா ல் , சிரித்துக் கொண் டு வாழ்கின்றவர்களை பின்பற்ற வேண்டும். சிரித்துக்கொண்டு வாழ்கின்றவர்கள் யார் என்று கேட்டால், ஆண்டவன்தான் சிரித்துக்கொண்டு வாழ்கிறான்.
ஆண்டவன்-இந்த உலகத்தை உணர்ந்து வைத்திருக்கின்ற தெய்வம் சிரித்துக்கொண்டு வாழுகின்றபோது, சிரித்துக்கொண்டு வாழுகின்ற நல்ல அடியவனோடு தொடர்பு வைக்கின்றபோது, மண்ணில் நல்ல வண்ணம் வாழுகின்றவர்களுடன் நாங்கள் தொடர்பு வைக்கின்ற போது, துன்பம் இல்லை. அந்த துன்பம் இல்லாத வாழ்வைப்பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ தத்துவமாகச் சொல்லியிருக்கின்றார். தாயினுடைய வயிற்றிலே பிறந்து வாழத்தொடங்குகின்ற ஒவ்வொரு குழந்தையினிடத்தும், பெற்றதாய் இந்த உலகத்திலே முதல் எதிர்பார்ப்பது தன் பிள்ளையினுடைய புன்னகையைத்தான். அதனாலேதான், நான் 6) இடங்களிலே சொல்லியிருக்கின்றேன், ஒருதாய், குழந்தை பிறந்து கொஞ்சநாளிலே எதிர்பார்ப்பது என்னவென்றால், என்பிள்ளை எப்போது சிரிக்கும் என்பதுதான். அது
இந்து ஒளி 43

Page 45
இரண்டு, மூன்று மாதங்களில் கன்னக்குழியாலே ஒருக்கால் சிரித்து விட்டால் போதும், அந்தப் பெற்றதாய் படுகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. என் பிள்ளை சிரிக்கத் தொடங்கிவிட்டான், என் பிள்ளை சிரிக்கத் தொடங்கி விட்டான் என்று மகிழ்ச்சி கொண்டாடுகிறதாய், தன் கணவனைக் கூப்பிட்டுக் காட்டுவாள், என் பிள்ளை சிரிக்கத் தொடங்கிவிட்டான் பாருங்கள். ஒன்றும் தெரியாத இரண்டு மூன்று மாதக் குழந்தையை மடியிலே வைத்திருக்கின்ற தாய், தனது கணவனைக் கூப்பிட்டு என்ன கேட்கிறாள் என்றால், என் பிள்ளை சிரிக்கத் தொடங்கிவிட்டான் பாருங்கோ. இப்பொழுது பிள்ளைக்கு ஒரு செய்தி சொல்லுவாள். இவர்தான் உன்னுடைய அப்பா, உன் அப்பாவைப் பார்த்து ஒருக்கா சிரிச்சு விடு. ஒன்றும் தெரியாத அந்தக் குழந்தையினுடைய புன்னகையை எதிர்பார்க்கின்ற அந்தத்தாய், எவ்வளவோ நேரம் கரைச்சல் கொடுப்பாள் - தன் பிள்ளை சிரிக்க வேண்டும். அந்தக் கணவனுக்கு சிரித்துக் காட்டுவதோடு ஒருதாய் ஒதுங்கி விடமாட்டாள். வீட்டிலே இருக்கின்ற தாத்தா, பாட்டி ஒவ்வொருவரையும் கூட்டிக் கொண்டுபோய் காட்டி, இது உன்னுடைய தாத்தா, இது உன்னுடைய பாட்டி, இது உன்னுடைய சித்தி, இது உன்னுடைய உறவினர், எல்லோருக்கும் ஒருக்கால் சிரித்துவிடு என்பார். அந்தப் பிள்ளையினுடைய சிரிப்பை, பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி சீராட்டி வளர்க்கின்ற தாய் ரசிக்கின்ற சிரிப்பிலே, தாய் என்ன ஆனந்தம் கொண்டாடுகிறாள், வாழ்க்கை முழுக்க என் பிள்ளை சிரித்துக்கொண்டே வாழவேண்டும், பிள்ளையினுடைய சிரிப்பு என்னுடைய சீவியமாக இருக்க வேண்டும். அதனாலேதான், அன்றைக்கு முதல் அவள் தியாகமாவது போலத்தான், இந்த உலகத்தைப் படைத்துக் காத்து அருள் செய்கின்ற ஆண்டவன், உலகத்திலே மனிதனாக அரிய பிறப்பை எங்களுக்குத் தந்துவிட்டு, நல்லதை எம்மிடம் எதிர்பார்க்கிறான். எங்களுக்கு கொம்பு வைக்கவில்லை, கோரப் பற்கள் வைக்கவில்லை, வால் வைக்கவில்லை, அகோர முகம் வைக்கவில்லை. என்ன  ைவத் தி ரு க் கி றா ன் எ ன் றா ல் , புன் ன  ைக வைத்திருக்கின்றான், அதனாலேதான், ஆண்டவன் புன்னகை வைத்துவிட்டு, மனிதா! வாழ்ந்து கொண்டிருக்கின்ற அடியவனே, உலகத்திலே மற்றவர்களோடு ஜிவாத்மாக்களோடு நன்றாகப் பழகி, எல்லா ஜீவாத்மாக்களுக்கும் இரக்கம் காட்டி, நல்லதையே செய்து, தொண்டைச் செய்து, கண்ணிலே நல்ல காட்சி தென்பட வேண்டும் என்கின்ற அந்த எண்ணத்தோடு வாழ்வாயேயானால் உனக்குத் துன்பம் இல்லை என்று சொல்லவேண்டிய செய்தியை ஞானசம்பந்தர், அந்தப் பரம்பொருளாக இருக்கின்ற சிவபெருமான் பார்வதியோடு - பெண்ணோடு இருக்கின்ற காட்சியினுடைய தத்துவத்தை ஏன் சொன்னார் என்றால், பெண்ணுக்கு இயல்பாக இருக்கின்ற இரக்கம் ஆண்டவனோடு
44 இந்து ஒளி

இருக்கின்றபோது, அது அள்ளிக் கொடுக்கின்ற அதன் தன்மையைச் சொல்லத்தான்,
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்ததை இருந்ததே.
அதனாலே, அடியவர்களே, பெரியோர்களே, நாங்கள் எல்லோரும் காலையிலே எழுந்தவுடனேயே நல்ல காட்சியைப் பார்க்கவேண்டுமேயானால், ஆண்டவனை வழிபாடு செய்கின்ற காட்சிதான் உயர்ந்த காட்சி. அந்த உயர்ந்த வழிபாட்டுக் காட்சியோடு உள்ளத்திலே அழுக்கை அகற்றிவிடும். கோயில்களிலே நாங்கள் ஒரு முடறு தீர்த்தம் வாங்கிக் குடிக்கிறோம் என்றால், அந்தத் தீர்த்தத்தினுடைய உயர்ந்த பொருள் என்னவென்றால், இந்த நாக்கை சுத்தம் செய்வது மாத்திரமல்ல உள்ளத்தைச் சுத்தம் செய்யும். ஆண்டவனுடைய திருவடியிலே பட்ட தீர்த்தம். இந்த நாக்கிலே எத்தனையோ பொய் வரும், இந்த நாக்கிலே எத்தனையோ வன்மை வரும், இந்த நாக்காலே எத்தனையோ கெடுதி வரும். அதனாலே, அந்த நாக்கை நணைப்பது மாத்திரமல்ல, உள்ளத்தை நனைக்கவேண்டும். உள்ளத்திலே இருக்கின்ற அழுக்கை
கழுவுவதற்காகத்தான், ஆண்டவனுடைய சந்நிதானத்துக்குப் போய் வழிபாடு ஆற்றுவதோடு, இந்தச் சிவசின்னங்கள் என்று போற்றப்படுகின்ற
அத்தனையையும் பயன்படுத்தி எம்மைக் காக்க நாம் முயல வேண்டும்.
அந்த இறைவனுடைய தத்துவங்களை சொல்லுகின்றவற்றை எங்களோடு சேர்த்து மங்களப் பொருளாக இருக்கின்ற சந்தனத்தை, குங்குமமாக இருக்கின்ற சிவகாமி அம்பாளுடைய அந்த பார்வதியினுடைய ஆற்றல் மிகு கடாட்சமாக இருக்கிற சக்தியை எங்களோடு அரவணைத்து, அந்தச் செய்தியை எங்கள் காதுக்குச் சொல்லுவதுபோல திருவடியிலே பட்ட பூவை எங்கள் செவிகளிலே வைத்து என்ன கேட்கிறோம் என்றால், இறைவா! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு நீ வாய்ப்புத் தா என்று கேட்கிறோம். அதனாலே, கடவுளைப் பார்த்து அந்த வரம், இந்த வரம் என்று கேட்பதை விட, ஆண்டவனைப் பார்த்து நான் நல்லவனாய் வாழவேண்டும் என்று ஒரு வரத்திலே கேட்டு விட்டாலே தெய்வத்துக்கு எங்களைப் புரியும். தெய்வம் எங்களுக்கு வரத்தைத் தரும் என்ற காரணத்தை வைத்துத்தான் ஞானசம்பந்தர் இந்த திருமுறை அடிகளிலேயே இவ்வளவு தத்துவத்தை நான்கு, ஐந்து அடிகளிலே சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். நல்ல வண்ணம் வாழ்வோமேயானால் நல்ல கதியாகிய சிவகதியைச் சென்று அடையலாம் என்ற செய்தியினை அருமையாக எடுத்துக் காட்டியுள்ளார்.
ஈசுர வருடம் - ஆடி- புரட்டாதி

Page 46
An American friend who subscribes herself as a lifelong friend of India writes:
As Hinduism is one of the prominent religions of the East, and as you have made a study of Christianity and Hinduism, and on the basis of that study have announced that you are a Hindu, I beg leave to ask of you if you will do me the favour to give me your reasons for that choice. Hindus and Christians alike realize that man's chief need is to know God and to worship Him in spirit and in truth. Believing that Christ was a revelation of God, Christians of America have sent to India thousands of their sons and daughters to tell the people of India about Christ. Will you in return kindly give us your interpretation of Hinduism and make a comparison of Hinduism with the teachings of Christ? I will be deeply grateful for this favour.
I have ventured at several missionary meetings to tell English and American missionaries that if they could have refrained from "telling' India about Christ and had merely lived the life enjoined upon them by the Sermon on the Mount, India instead of suspecting them would have appreciated their living in the midst of her children and directly profited by their presence. Holding this view, I can'tell'American friends nothing about Hinduism by way of 'return' I do not believe in people telling others of their faith, especially with a view to conversion. Faith does not admit of telling. It has to be lived and then it becomes self propagating.
Nor do I consider myself fit to interpret Hinduism except through my own life. And if I may not interpret Hinduism through my written
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி
 

Mahatha Bandhi
word, I may not compare it with Christianity. The only thing it is possible for me therefore to do, is to say, as briefly as I can, why I am a Hindu.
Believing as I do in the influence of heredity, being born in a Hindu family, I have remained a Hindu. I should reject it, if I found it inconsistent with my moral sense or my spiritual growth. On examination, I have found it to be the most tolerant of all religions known to me. Its freedom from dogma makes a forcible appeal to me inasmuch as it gives the votary the largest scope for self-expression. Not being an exclusive religion, it enables the followers of that faith not merely to respect all the other religions, but it also enables them to admire and assimilate whatever may be good in the other faiths. Nonviolence is common to all religions, but it has found the highest expression and application in Hinduism. (I do not regard Jainism or Buddhism as separate from Hinduism) Hinduism believes in the oneness not of merely all human life but in the oneness of all that lives. Its worship of the cow is, in my opinion, its unique contribution to the evolution of humanitarianism. It is a practical application of the belief in the oneness and, therefore, sacredness of all life. The great belief in transmigration is a direct consequence of that belief. Finally the discovery of the law of Varnashrama is a magnificent resulf of the ceaseless search for truth. I must not burden this article with definitions of the essentials sketched here, except to say that the present ideas of cow -wor-ship and varnashrama appeared in the previous numbers of Young India. I hope to have to say more on varnashrama in the near future. In this all-too-brief a sketch I have mentioned what occur to me to be the outstanding features of Hinduism that keep me in its fold.
இந்து ஒளி 45

Page 47
One should practise Yoga for self purification. If one finds it difficult to concentrate on Brahanan Straightaway one should engage oneself in Karma Yoga as a prelude to Dhyana Yoga. When one does his duty conscientiously one learns to concentrate shutting out all other thoughts. When one surrenders his actions to God he is contemplating on God. Continued contemplation becomes concentration and continued concentration becomes meditation. One can gradually change ones concetration from the said karma Yoga to Dhyana Yoga, ie, concentration on God or Guru. Once one learns to take delight in communion with God one will eschew all sense pleasures.
For self-purification the first step is to practise Yama and Niyama. Here the Sadhaka should observe strictly Non-killing, not lying, not drinking, not lusting, sharing the good with others and generally doing good and development compassion and virtue. Also he should do Japa Kirtan, Siva-Pooja, Satsanga, reading the scriptures and charity.
It is important that one should know when, where and how to contemplate or to concentrate on the Divine. Early morning hours between 4.00 a.m. and 6.00 a.m. is considered Brahma Muhurtha. This is the best time to concentrate or meditate on God.
Again the Sadhaka should choose a lonely place with lot of fresh air and privacy. It is in Solitude that one can really assess one's mind;
46 இந்து ஒளி
 

M.Nagarathinam Member Religious Committee ACHC
in Solitude the untrained mind becomes turbulent, all suppressed desires surfacing at the conscious level. If he, the Sadhaka steadfastly fixes his gaze on the tip of the nose and thinks of God, all other thoughts will be shut out- (Prathiyahara)
Before one commences to concentrate it is important that one should choose a seat not too low nor too high and cover it with a grass mat or deer skin with a clean white cloth on its top. Thereafter the Sadhaka should sit on the said seat in Padmasana or Suhasana with his body, neck and head erect, and concentrate on his Guru or God, his eyes fixed on the tip of his nose.
The next step is to regulate the outgoing ingoing and retaining of breath. In order to achieve this one should do Paranayama exercise. There are three stages in this exercise (1) Resaham ie exhaling the breath thought the left nostril for twelve seconds repeating the mantra Om-Na-Ma-Si-Va-Ya mentaly twice (2) Pooraham ie, inhale the breath through the same nostril for six seconds mentally saying the same mantra once. (3) Kumpahamie retain the inhaled breath for twenty four seconds repeating the same mantra four times mentally. Thereafter change this pattern from the right nostril to the left. Do this exercise alternately at least ten to fifteen times morning and evening daily. Once the breath is regulated thus the mind becomes steady and fit for concentration. The aspirant should note that he should maintain the ratio 2-1-4. But one should
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 48
remember that there is a danger in doing prolonged retention. Therefore those who do this exercise on their own not being under the direction of a Guru should not do high pranayama. It is safe to adhere to the above given ratio ie 12/06/24 seconds pranayama.
The next step in Yoga is Prathiyahara. Here the aspirant should be seated in an Asana as aforesaid learn to withdraw his senses from the external objects thereby shutting out all the five senses from travelling out.
Thereafter one can do Dharana that is concentration for five minutes on the mental picture of one's Guru or on a Divine symbol like lingam or trident shutting out all other thoughts morning and evening daily. Then the aspirant can increase the time of concentration according to his capacity. When one concentrates without a break one pointedly for over five minutes one will enter into meditation. In meditation there is a continuous flow of thought. The aspirant can gradually increase the time of meditation having regard to his capacity. After meditating thus for some months the aspirant may have the experience of the meditated object merging with him. This is the stage called samadhi where the meditated and the meditator becomes one and the duality CC2SCS
Now the aspirant in his meditation will not have the object on which he meditated. He will have to meditate only on the impersonal God consciousness. When he is well established in Samadhi the vital energy or Kundalini will rise through the Sushumna nerve channel and gradually pierce through the six chokers one by one. Once this happens the aspirant will get First the power of clairaudience. He can hear the words of his Guru communicated telepathically. Thereafter the Guru's instructions will come to him no matter where he is. The aspirant too will get
ஈகர வருடம் - ஆடி-புரட்டாதி

the power to communicate with is Guru. Incidentallyit may be mentioned that there are some Gods Sidhas and Angels who too could communicate likewise.
Once the centre between the two eyebrows called Ajna Chakra opens a Yogi will get the power of clairvision, that is he will be able to see mentally distant happenings. Besides he will be able to direct his disciples to go to a particular place. When a Yogi masters the Sahasra centre he will get the power of clairaction; he can make his disciple's mouth to speak, hand to write or legs to walk and so forth. As a Yogi progresses he will get the power of clairvoyance that is he will be able to know the past, present, and future. A Yogi should note that he should not waste his time enjoying these powers which will only delay the emancipation of his self or Atma. Meditation and Samadhi are only means to realise the self and not an end in itself.
In meditation all modifications of the mind rest in the Self, the mind becomes quietened and serene and self will behold Self. This experience of bliss is the characteristic of Atma. Thereafter a Yogi sees himself in all beings and all beings in himself. He realises that it is the Paramatma who manifests himself as the multitudinous beings at all levels. One appearing as many is the eternal sport of the Lord. He and his manifestations are interrelated as the Ocean and the waves on it.
That Yogi who meditates on Brahman alone and not on minor deities excels as an adept in Yoga. At death the soul travels in the mental body Sukma Sareera) to take another birth. Once the soul realises itself it will be independent of the mental body, and there is no travelling in the mental body for it at Maha Samadhi. A Yogi attains immortality when the emancipated pure consciousness becomes one with the Cosmic consciousness (Paramatma).
இந்து ஒளி 47

Page 49
21.09.97 புரட் 05 ஞா கார்த்திகை விரதம்
27.0997 1 சனி ஏகாதசி விரதம் 29.0997 13 திங் பிரதோஷ விரதம் 30.0997 14 செ கேதாரேஸ்வர விரதம் 0110.97 15 புதன் அமாவாசை விரதம் 02.10.97 16 வியா நவராத்திரி விரதாரம்பம்
05.邯0.97 19 ஞா சதுர்த்திவிரதம்
07.0.97 21. ଜଗeF ஷஷ்டி விரதம்
10.10.97 24. ଗନ୍ଧା மஹாநவமிவிரதம் 11097 25 சனி கேதாரகெளரி விரதாரம்பம்
t2.19.97 26 ஞா ஏகாதசி விரதம்
13.10.97 27 திங் பிரதோஷவிரதம் 15.10.97 29 புதன் பூரணை விரதம் 181097 ஐப்பசி 01 சனி கார்த்திகை விரதம் 27.10.97 10 திங் ஏகாதசி விரதம்
28.10.97 11 Gy பிரதோஷ விரதம்
31.10.97 14 வெ அமாவாசைவிரதம்,
கேதாரகெளரிவிரதம் 0.1.97 15 சனி ஸ்கந்தஷஷ்டி விரதாரம்பம்
04.1.97 18 செ சதுர்த்திவிரதம் 06.1197 20 வியா ஸ்கந்தஷஷ்டி விரதம் 12廿97 26 புதன் பிரதோஷ விரதம் 14.仕97 28 வெள் பூரணை விரதம்,
கார்த்திகை விரதம் 25f197 கார்த் 10 செவ் ஏகாதசி விரதம் 27什97 12 வியா பிரதோஷ விரதம் 29.fl.97 14 சனி அமாவாசை விரதம் 03.1297 18 புதன் சதுர்த்தி விரதம் 05.12.97 20 வெள் ஷஷ்டி விரதம் 10.1297 25 புதன் ஏகாதசி விரதம் 11, 1297 26 வியா பிரதோஷ விரதம் 1212.97 27 வெள் திருக்கார்த்திகை விரதம்
13.297 28 6 பூரணை விரதம் 14.12.97 29 ஞாயி விநாயக விரதாரம்பம் 251297 மார்கழி 10 வியா ஏகாதசி விரதம் 27.1297 12 சனி சனிப்பிரதோஷ விரதம் 29.t2.97 14 திங் அமாவாசை விரதம் 020.98 18 வெள் சதுர்த்திவிரதம் 03.098 19 சனி விநாயக ஷஷ்டி விரதம்
திருவெம்பானவ ஆரம்பம்
08.098 24 வியா சுவர்க்கவாயில் ஏகாதசி
விரதம் கார்த்திகை விரதம் -ܠ
48 இந்து ஒளி
 
 

100.98 26 சனி சனிப்பிரதோஷ விரதம் 12.0甘98 28 திங் நடேசர் அபிசேகம்
ஆத்ராதரிசனம்,
பூரணை விரதம்
திருவெம்பாவை பூர்த்தி
14.01.98 தை 01 புதன் தைப்பொங்கல் 24.01.98 11 சனி ஏகாதசி விரதம் 25.01.98 12 ஞாயி பிரதோஷவிரதம்
27.0.98 14 செவ் அமாவாசை விரதம்
3.01.98 18 சனி சதுர்த்தி விரதம்
02.02.98 20 திங் சஷ்டி விரதம் 04.02.98 22 புதன் கார்த்திகை விரதம்
07.02.98 25 சனி ஏகாதசி விரதம்
O8.02.98 26 ஞாயி பிரதோஷ விரதம்
10,0298 28 செவ் தைப்பூசம்
102.98 29 புதன் பூரணை விரதம்
24.0298 மாசி 12 செவ் பிரதோஷ விரதம்
25.02.98 13 புதன் மகா சிவராத்திரி விரதம்
26,0298 14 வியா அமாவாசை விரதம்
02:03.98 18 திங் சதுர்த்தி விரதம்
O3.03.98 19 செவ் ஷஷ்டி விரதம் 04:03.98 20 புதன் கார்த்திகை விதரம்
08:03.98 24 ஞாயி ஏகாதசி விரதம்
0.03.98 26 செவ் பிரதோஷ விரதம் t103.98 27 புதன் மாசிமகம், நடேசரபிஷேகம்
1203.98 28 வியா பூரணை விரதம் 24.03.98 பங்கு 10 செவ் ஏகாதசி விரதம் 2503.98 11 புதன் பிரதோஷ விரதம் 27.03.98 13 வெள் அமாவாசை விரதம் 3.03.98 17 செவ் சக்தி கணபதி
சதுர்த்தி விரதம், கார்த்திகை
விரதம்
O2O4.98 19 வியா ஷஷ்டி விரதம் 05.0498 22 ஞா ரீராம நவமி 07.04.98 24 செவ் ஏகாதசி விரதம் 09.04.98 26 வியா பிரதோஷ விரதம் 飞].04.98 27 வெள் பங்குனி உத்தரம் 1104.98. 28 சனி பூரணை விரதம்
لراس۔
ஈசுர வருடம் - ஆடி-புரட்டாதி

Page 50
1童。
12
15.
13.
31.
4五,
10.
20
22.
25.
27.
30.
32.
45.
46,
45,
ប្រិgចំ சுடரில்.
/2写めae
பஞ்சபுராணங்கள்.
கட்டிடக் கலைஞர்களின் படங்கள்.
தேவாரம் தந்த இராசராசன்.
எங்கும் நிறைந்த இறைவா.
சிலாபத்தில் பயிலரங்கு தமிழகத்தில் இந்துப் பண்பாடு
சுவாமி விபுலானந்தர் ஒரு தமிழ்க் கடல். சுவாமி விபுலானந்தர் வாழ்க்கைக் குறிப்பு. யோகருக்கு ஒரு கோயில், s
சைவ ஆகமம்.
புத்தளம் முத்துமாரியம்மா.
கடவுள் இயல்.
குரு பக்தி இந்துக்களின் கல்விப்பாராம்பரியத்தில் குருகுலக் கல்வி
பூரீமத் பகவத்கீதை காட்டும் கர்மயோகம்
பஞ்சாட்சர மந்திரம்.
சைவத்திருமுறைகள் வகுத்துள்ள வாழ்க்கை நெறி.
பூரீ கேதாரீஸ்வரர் நோன்பு,
புருடார்த்த கோட்பாடு --
。 (6) 1. utaon 'n Jirgosfu ilih நினைவுப் பேருரை.
மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும்.
Why I am a Hindu.
The Progress of an Aspirant Through Raja Yoga.
விரத நாட்கள்.
《
ஈசுர வருடம் ஐப்பசி - மார்கழி
 
 
 
 
 
 
 
 
 

இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடை
HEINE OU O Aady-Puraddathi issue of All Ceylon Hindu Congress 18th August 1997.
Editorial Board :
Mr. A. Gunanayagam Dr. K. Velayuthapillai Mr. K. Rajapuvaneeswaran Mr. Kanadiah Neelakandan
Price R. 20.00 per c Annual Subscription Rs 80.( Foreign Subscription U.S. $ 1 ().() (including postage)
ALL CEYLON HINDU CONGRES"
A.C.H.C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Telephone Nos : 434990,344720