கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 1998.04-06

Page 1
**************
|l).
[sae.
Illae.
Lae.lae llae
O జై
s.
│ │ │
 
 
 
 

မျိုး မျိုး

Page 2
கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் திரைநீக்கம் செய்து விடுதியைத் திறந்து வைக்கிறார்.
விடுதியை ஆரம்பிக்க அயராது உழைத்த கல்லூரி அதிபருக்கு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மலர்மாலை அணிவித்துக் கெளரவிக்கின்றார்.
விழாவுக்கு வருகைதந்து விருந்தினர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
 
 
 

1- மாணவர் விடுதி திறப்பு விழா நிகழ்ச்சிகள் சில.
கோழுப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் விடுதி மானவர் சேர்வுப் பதிவேட்டை ஆரம்பித்துவைக்கிறார்.
*毽
"இந்து ஒளி' வெளியிட்டு வைபவத்தின்போது இதழை வெளியிட்டு வைக்க கொடைவள்ளல் திரு.திருக்குமார் நடேசன் அவர்களை மாமன்றத் தலைவர் அழைக்கிறார்.

Page 3
பஞ்ச புரானங்கள் திருச்சிற்றம்பலம்
席
தேவாரம்
திருநாவுக்கரசர் திருத்தாண்டகம் ம்ே திருமுறை
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாறுகில் ஒருகாலும் திருக்கோயில் குழாராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட்டு உன்னாராகில் அருநோய்கள் கெடவென்னிறனியாராகில்
அளியற்றார் பிறந்தவாறேதோவென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே !
திருவாசகம் மானிக்கவாசகர்
8ம் திருமுறை ܒ ----- வேண்டத்தக்கதறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ! வேண்டும் அயன் மார்க் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டிநீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன்றுண்டென்னில் -
அதுவும் உன்றன் விருப்பன்றே
திருவிசைப்பா சேந்தனார் பண் - பஞ்சமம் 9ம் திருமுறை
ஏகநாயகனை இமயவர்க் கரசை
என்உயிர்க் கமுதினை, எதிரில் போக நாயகனை, புயல்வணற்கு அருளிப்
பொன்நெடும் சிவிகையாயூர்ந்த மேகநாயகனை மிகு திருவிழி
மிழலைவிண்ணிழிசெழுங் கோயில் யோகநாயகனை பன்றி, மற்றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே
திருப்பல்லாண்டு சேந்தனார் பண்ட பஞ்சமம் 9ம் திருமுறை
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான்; மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆவிக்கும் அந்தனர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம் பலமே இடமாகப் பாவித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
பெரிய புரானம் சேக்கிழார்
12ம் திருமுறை சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கியஞானம் உவமையிலாக்கலைஞானம் உணர்வரியமெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்,
திருச்சிற்றம்பலம் آئے۔ خیا
வெகுதானிய வருடம் சித்திரை-ஆணி

தீபம் : 2 கடர் = 3 வெகுதாணிப வருடம் ஆவி 25ம் நாள்
O9-07-1998
இன்னல்கள் திர இறைஞ்சிநிற்போம்
இந்தத் தீபச் சுடர் ஒளிவிடும் காலப்பகுதியாகிய சித்திரை-ஆனிகாலப்பகுதி எமது சமய வரலாற்றிலே முக்கிய நிகழ்வுகளின் காலமாகும். எமது சமய குரவர்களான திருநாவுக்கரசு நாயனார், திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், மாணிக்கவாசகசுவாமிகள் இறைவனோடு இரண்டறக் கலந்து தினங்கள் முறையே சித்திரைச் சதயம், வைகாசி மூலம், ஆனி மிகம் ஆகிய நாட்களாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டுயுகங்கள் ஆட்சிபுரியும் வரத்தைப்பெற்ற சூரபன்மனை அவனுடைய குலத்தோடு அழித்தொழித்து அவனால் சொல்லொணாத் துன்பங்களுக்காளான தேவர்களுக்கு வாழ்வளித்த கலியுக வரதனான கந்தப் பெருமான்,
அதிகிழிழிது:ஆதிதிரிப்பrாப்திரன்தாப் பிரTப்ரீன்து சோதிப்பிyபதேர்மேனிாசிச் கருண்ைசுர்ஜீகங்கனாலும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு இந்த உலகம் உய்யும் பொருட்டுத்திருவவதாரம் செய்த நாள் வைகாசி விசாக நன்னாளாகும்.
தனது பழம்பிறப்புணர வந்த மணிமேகலை மணி பல்லவத்தீவில் அமுதசுரபியைப் பெற்று வறியவர்களின் இன்னல்களைத் தீர்த்தது வைகாசி விசாக நன்னாளிவாகும்.
ஆறு பருவகாலங்களில் சிறந்தது இளவேனிற்காலமாகும். இளவேனிற்காலத்தில் முதல்மாதம் சித்திரையாகும். சகல ஜீவராசிகளின் கணக்குகளையும் எழுதிவைக்கும் சித்திரகுப்தனுக்குப் பூசையும் உற்சவமும் நடைபெறும் நாள் சித்திராபூரணையாகும்.
இந்திரன் தன் குருவை அலட்சியம் செய்த பாவம் தீர்தற் பொருட்டு பூசை நிகழ்த்தியது சித்திரைப்பூரணையிலாகும்.
பரீ நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் உள்ள ஆறு அபிஷேகங்களில் ஆனி உத்தரஅபிஷேகமும் ஒன்றாகும். ஆனி உத்தர அபிஷேகமானது திருமஞ்சனத் திருநாளாக அமைந்து மாலை வழிபாட்டுநாளாக மிளிர்கின்றது.
இத்தனை நற்காரியங்கள் நிகழ்ந்த இந்தக் காலப்பகுதியில் நாமும் எம்மிடர்கள் அனைத்தையும் தீர்த்தருளும்படி பநீ சிவகாமி அம்பாள் சமேத பரீ நடராசப் பெருமானிடம் சரணடைந்து இறைஞ்சிநிற்போமாக
இந்து ஒளி

Page 4
(கிழக்கிலங்கை தந்த பேராசான்)
60)J6)IÚIÎ jIÎ[[. hÖLI600ÎLIITTÖJÓ LIII
சைவமும் தமிழும், சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கு பெரும் தொண்டாற்றிய ஈழத்து தமிழ் அறிஞர்களுள் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காரைதீவு என்ற சிற்றுாரில் 1892 ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி சாமித்தம்பிகண்ணம்மையார் தம்பதியினருக்கு புதல்வனாக அவதரித்த இவரது இயற்பெயர் மயில்வாகனம் என்பதாகும்.
சின்னஞ்சிறு வயதிலேயே கல்வி கற்பதில் ஆர்வமிக்கவராக விளங்கிய இவர் தமிழ்மொழிமீது வைத்திருந்த அளவிலாத பற்றும், பாசமும் காரணமாக பழந்தமிழ் இலக்கியங்களையும் படித்துஅறிவதில் காலத்தைச் செலவிட்டார். இதுவிஷயத்தில் இவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பெரிதும் துணைபுரிந்தனர். இவர் நன்னூல்' என்ற பழந்தமிழ் நூலைக் கற்கும்போது செய்யுள்களின் தன்மைகளை உளரலானார். இதனால், தனது பன்னிரெண்டாவது வயதிலேயே, தாமாகவே செய்யுள் இயற்றும் திறமையைப் பெற்றார். பிறரின் துணையின்றி அணி யாப்பு வகைகளையும் கற்றார்.
இவர் தனது பத்தாவது வயதிலிருந்தே ஆங்கிலத்தையும் கற்க ஆரம்பித்தார். இதற்காக 1902ம் ஆண்டில் கல்முனை மெதடிஸ்த கல்லூரியில் சேர்க்கப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.கேம்பிறிட்ஜ்ஜுனியர், கேம்பிறிட்ஜ் சீனியர் பரீட்சைகளில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, 1911ம் ஆண்டு கொழும்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் சேர்ந்து கொண்டார். மறுவருடம் (1912) ஆசிரிய கலாசாலைப் பரீட்சையில் சித்தியடைந்ததைத்தொடர்ந்து மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் இரண்டு வருடகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவர் மொழி, இலக்கியத் துறைகளில் மட்டுமல்ல, விஞ்ஞானத் துறையிலும் T திறமையை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. 1915ம் ஆண்டு கொழும்பு அரசினர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று, 1916ம் ஆண்டு பொறியியல் டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்தார். விஞ்ஞானக் கல்வியை ஆங்கிலத்தில் கற்றாலும், தமிழ் மொழியின் இலக்கன. இலக்கியங்களை மேலும் கற்றறிவதில் ஏற்பட்டிருந்த ஆர்வத்தை அவர் கைவிடவில்லை.
1916ம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதன்மையாக தேர்ச்சியடைந்து பண்டிதர் பட்டத்தையும் பெற்றார்.
* இந்தrதற தோள் பிரபஞ்சத்திவேப்பே தேசிறந்த காட்gt;iந்தோர்களா கட்டிலும் டிரீதர் உதிர்ந்தவர்
இந்து ஒளி ?

ம் தழைத்தோங்க
முத்தமிழ் வித்தகர்
| რ ||
இதனால், இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதலாகப் பெற்றவர் என்ற பெருமைக்குரியவரானார்.
1917ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றினார். இதனைத் தொடர்ந்து 1920ம் ஆண்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இலங்கையில் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்க ஓர் அமைப்பு இல்லாததைக் கண்டு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக அறிஞர்கள் பலரையும் கலந்து ஆலோசித்து தனது அயராத முயற்சியின் பயனாக "யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்" என்றதொரு கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்த சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர் பால பண்டிதர், பண்டிதர் ஆகிய மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். இவரது இந்த முயற்சி, எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளிப்பதற்கு பேருதவியாக இருந்துள்ளது.
1922ம் ஆண்டு இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது என்று சொல்லலாம். அதிபர் பதவியைத் துறந்து, சென்னை மயிலாப்பூரிலுள்ள இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்து பிரமச்சரிய திட்சையையும், சந்நியாச தீட்சையையும் பெற்றார். இவருக்கு அங்கு 'பிரபோதசைதன்யர்' என்ற தீட்சா நாமம் வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்த காலத்தில் பல்வேறுபட்ட தமிழ், இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட "இராமகிருஷ்ண விஜயம்' என்ற தமிழ் சஞ்சிகைக்கும், "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்தார். இந்த காலகட்டத்தில் |LTL உ.வே. சாமிநாத ஐயர், தமிழ்க்கடல் திரு.வி.கல்யாணசுந்தரனார் போன்ற பெரும் தமிழ் அறிஞர்களின் நட்பும் கிடைத்தது. இக்காலத்தில் மதுரை தமிழ்ச்சங்கத்தின் விழாக்களில் கலந்து கொண்டு பல இலக்கிய ஆய்வுரைகளை நிகழ்த்தினார். மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சகராகவும் பணியாற்றினார். தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" என்ற சஞ்சிகையில் பல இலக்கியக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவந்தார்.
துறவறத்துக்குரிய கடமைகளை ஒழுங்காகப் பூர்த்தி செய்திருந்த பிரபோதசைதன்யருக்கு 1924ம் ஆண்டு சித்திரை மாதம் பெளர்ணமி தினத்தில் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவராகவிருந்த சுவாமி சிவானந்தரால் "சுவாமி விபுலானந்தர்' என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது.
உடTரும் விரிநரேமோ ஜீவன் எவ்வாயிருகங்காளர்
மrதனை விட உயர்ந்தர் யாருஜிே: "காவியேகாந்தச்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 5
1925ம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் தாயகம் திரும்பி, சமய சமூகப் பணிகளை மேற்கொண்டார். இலங்கையிலுள்ள இராமகிருஷ்ணமிஷன் பாடசாலைகளை பராமரிக்கும் முகாமையாளரானார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாடசாலைகளை நிறுவியுள்ளமை சுவாமிகளின் சமூக, கல்விப் பணிக்கு சிறப்பான எடுத்துக்காட்டாகும். கல்வியின் மூலமே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதில் சுவாமிகள் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்
நீலழரீ ஆறுமுகநாவலர் சைவமும், தமிழும், தழைத்தோங்க பெரும் பணியாற்றியதுபோலவே, ॥ விபுலானந்தரும் மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களில் மட்டுமன்றி மலையகப் பகுதிகளுக்கும் சென்று சைவமும், தமிழும் வளரும் வகையில் ஆற்றிய சேவைகளை வரலாற்றுப் பதிவுகள் சிறப்பாக எடுத்துச் சொல்லுகின்றன. மட்டக்களப்பு நகரத்தில் ஆங்கிலக் கல்வியை வளர்க்க சில கல்லூரிகள் இருந்தபோதிலும், சைவசமயத்தவர்கள் அதிகமாக வாழும் அங்கு சைவசமய நெறிகளைப் பரப்புவதற்கு ஆங்கிலக் கல்லூரியொன்று இல்லாதது சுவாமிகளுக்கு ஒரு பெரும் குறையாகத் தெரிந்தது.
மட்டக்களப்பில் அப்பொழுது கல்லூரி ஆரம்பிக்கக்கூடிய இடவசதி இல்லாததினால், சிறிது தொலைவிலிருந்த கல்லடிஉப்பேடை என்ற ஊரில் காடாகக் கிடந்த ஒரு இடத்தை தெரிவு செய்து, பலரது உதவிகளைப் பெற்று, கல்லூரி நிறுவும் பணியினைத் தொடங்கினார். 1929ம் ஆண்டு மே மாதத்தில் கல்லூரி இயங்கத்தொடங்கியது."சிவானந்த வித்தியாலயம் என்ற பெயரை இந்தக் கல்லூரிக்குச் சூட்டியதன் மூலம், சுவாமி விபுலானந்தர் தனது குருமீது வைத்திருந்த பக்தியின் சிறப்பை நன்கு தெரிந்து கொள்ளமுடிகிறது.
1931ம் ஆண்டு சென்னை சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்றதன் மூலம், தமிழ்நாட்டின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமையை நமது நாட்டைச் சேர்ந்த சுவாமி
விபுலானந்தர் பெற்றிருக்கிறார்.
இமயமலைச் சாரலிலுள்ள இராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட "பிரபுத்தபாாத' என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியராக சில காலம் சிறப்பான சேவையாற்றியிருக்கிறார்.இந்த இதழில் தமிழ்மொழியின் சிறப்புப் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு பற்றியும், சைவசமய தத்துவங்களைப் பற்றியும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
1943ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பதவியேற்றார். அத்துடன் கல்விப் பகுதி பாடநூற்சபை, தேர்வு சபை, கல்வி ஆராய்ச்சி சபை ஆகியவற்றின் கெளரவ உறுப்பினராகவும் திகழ்ந்தார். பாடசாலைகளில் சைவசமயம் படிப்பிக்க வேண்டும் என்ற திட்டம் ஏற்பட்டபோது, சமயத்திற்காக ஒரு திட்டத்தை சுவாமிகள் வகுத்துக் கொடுத்தார்.
இயல், இசை நாடகம் எனும் முத்தமிழைக் கற்றுனர்ந்து, அவற்றின் தனித்துவத்தையும், சிறப்புக்களையும்
# குடும்பம் ஒரு தருவைப் போன்றது. அதற்கு ே வைகள் அன்பு மலர்கள் கருனை பழங்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

வெளிப்படுத்தியதன் வாயிலாக ஆற்றிய நற்பணியின் காரணமாக "முத்தமிழ் வித்தகர்" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் கட்டுரைகள், பாடல்கள் அடங்கிய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் ஒன்றுதான் மதுரை தமிழ்ச் சங்க வெளியீடாக வந்துள்ள 'மதங்க சூளாமணி" என்ற நாடக நூலாகும்.
சைவசமயத்தத்துவங்களில் ஆழ்ந்த புலமையும், தெளிந்த அறிவும் பெற்றிருந்த சுவாமிகள், தனது சமயச் சிந்தனைகளைப் பல கட்டுரைகள், நூல்கள் வாயிலாக வடித்துள்ளார். நடராச வடிவம், தில்லைச் திருநடனம் போன்ற நூல்கள் அவரது சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்துவனவாக அமைந்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. இவை தவிர, அவர் இயற்றிய கனேச தோத்திரபஞ்சகம், கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை, குமரவேள் நவமணிமாலை, கங்கையில் விடுத்த ஒலை, மகாலசந்தமி தோத்திரம், ஈசன் உவக்கும் இன்பமலர் போன்ற கவிதைகள் இறைபக்திக்குச் சான்றாக விளங்குகின்றன. எம்மதமும் சம்மதம் என்ற உயர்ந்த கருத்துகமைய சுவாமிகள் அனைத்து சமயங்களையும் மதித்து, அவற்றின் சிறப்புக்களை தனது ஆக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
சுவாமி விபுலானந்தரின் தமிழ்த் தொண்டால் தவை சிறந்து விளங்குவது அவருடைய "யாழ் நூல்" ஆராய்ச்சியாகும். சுவாமிகள் பதினைந்து ஆண்டுகாலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினை 1947ம் ஆண்டு மே மாதம் திருக்கொள்ளம் பூதூர் திருக்கோயிலில் அரங்கேற்றினார்.
யாழ்நூல் அரங்கேற்றத்துக்குப் பின்னர் நாடு திரும்பிய சுவாமி விபுலானந்தர் சுகவீனமடைந்து கொழும்பில் சிகிச்சைபெறும் வேளையில், அதே ஆண்டு ஜுலை மாதம் 19ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
சுவாமி விபுலானந்தர் ஜெனனமாகி ஒரு நூற்றாண்டு காலம் மறைந்துவிட்டபோதிலும் அவரது கல்விப் பணியும், அவர் விட்டுச் சென்ற எழுத்துச் செல்வங்களும் இன்றும் அவரை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றன. அவரது சமய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால்
அழியாதவை.
சுவாமி விபுலானந்தரின் பணிகளை நினைவு கூரும் வகையில் அவரது ஐம்பதாவது ஆண்டு நினைவுதினமாகிய கடந்த வருடம் (1997) ஜுலை மாதம் 19ம் திகதியன்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் சுவாமிகளது உருவச்சிலை நிறுவப்பட்ட சிறப்பான வைபவமொன்று நடந்தேறியது.
தமிழ் மக்களின் நெஞ்சிருக்குவரை, சுவாமிகளின் நினைவிருக்கும் என்பது மட்டும் உண்மை.
-சூரியர்
வர் மனைவி அடிமரம் கனவள் கிளைகள் மக்கள்; நன் தருமம், கிதழ்தக கிருடாவித்தவூர்
இந்து ஒளி 3

Page 6
ஒரு நாட்டில் வாழும் மக்களது பண்பாடு, நாகரீகத்தை வெளிப்படுத்தி நிற்கும் பல்வேறு அம்சங்களில் கலை, சமயம் ஆகிய இரண்டும் முதன்மை பெறுகின்றன. பண்பாடு என்பது (Culture) எனும் ஆங்கிலப் பதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். மக்களது வாழ்க்கையுடன் ஒட்டிய அம்சங்களின் வெளிப்பாடாகும். ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள், காலங்காலமாகத் தமது வாழ்வியலினூடாகத் தோற்றுவித்துக் கொண்ட மதநடைமுறைகள், தத்துவார்த்த கருத்துக்கள் , கல்வி, கலை விஞ்ஞானம், தொழில்நுட்பம், விளையாட்டு, பொழுது போக்குப் போன்ற பல்வேறு அம்சங்களினதும் ஒரு தொகுதியாகவே சொற்களால் நாகரீகம் நகரத்தை அண்டிய வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. நகர அமைப்பு, தெருக்கள், கால்வாய், வடிகால் அமைப்பு முறைகள் கட்டிடம், சிற்பம், ஓவியம் போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கி வளர்ச்சி பெற்ற ஒரு நகரத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறையைக் குறித்து நிற்கிறது. நாகரிகம் எனும் பெருவட்டத்துள் பண்பாடு அடங்கிவிடுகிறது. ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களது நாகரீகத்தில் வேறு நாகரீகங்களிள் செல்வாக்கு ஏற்பட்டாலும், அம்மக்களுக்கே தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் தொடர்ந்தும் அவர்களாற் பேணப்படுவதனைக் காணலாம். இத்தகைய பண்பாட்டில் சமயம், கலை இரண்டும் மிகுந்த செல்வாக்கை உண்டு பண்ணுயல்வ. பண்பாடு, சமயம், கலை ஆகிய மூன்றுக்குமிடையேயான ஊடாட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளல் அவசியமாகும்.
FLD LI LO
சமயம் என்பது மனிதனது நம்பிக்கைகள், சடங்குகள், ஐதீகம், தத்துவம் போன்ற பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கடவுள், உலகம், உயிர்போன்ற மூன்று விடயங்கள் பேசப்படுவது வழக்கம். மனிதன், அவன் உடலியக்கத்திற்குக் காரணமான உயிர் அல்லது ஆத்மா, மனிதன் வாழும் பிரபஞ்சம், இவையனைத்திற்கும் அடிப்படையாகவுள்ள, அதேநேரம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு நிற்பதுமாகிய பரம்பொருளாகிய இறைவன் ஆகிய மும்பொருட்களுக்குமிடையேயுள்ள சம்பந்தமே சமயத்திற் பேசப்படும் அடிப்படை விடயங்களாகும். கடவுள்
* நாம் செய்யும் பாவத்துக்கு மூலம் கெட்ட காரியம், கெட்ட மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி செய்தால்தான் நிரந்தரமான
இந்து ஒளி 4
 

( திருமதி.ஏ.என்.கிருஷ்ணே வணி
விரிவுரை யாளர், துண்கலைத் துறை, யாழ். பல்கலைக்கழக
அல்லது பரம்பொருள்பற்றிய பேசாத சமணம், பெளத்தம், உலகாயதம் போன்றனவும் மதங்களாகவே கொள்ளப்படுகின்றன. சமயம் மனிதன் ஒரு நெறியுடன் வாழ்வதற்குரிய வழிபாடு, சிந்தனைகள், ஒழுக்க விதிகளைப் போதிக்கின்றது. இவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக ஒருவர் வாழ்வில் விடுதலைபெற முடிகிறது.
இந்துப்பாரம்பரியத்தில் கோயில் வழிபாடு முக்கியத்துவம் பெறுவதனால், வழிபாட்டுக்கு வேண்டிய சிற்ப விக்கிரகங்கள் கல்லிலும், உலோகத்திலும் வடிக்கப்பட்டு கோயில்களிற் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகம மரபிற்கமைய நிந்திய நைமித்திய, காமிய சடங்குகள் இடம்பெறுவதுடன், அங்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, நாதோபாசனையும் இடம்பெறுகின்றது. இத்தகைய கோயில் வழிபாடும், கிரியைமுறைகளுமே இந்துப்பண்பாட்டில் சமயம்சார் கலைகள் வளருவதற்குக் காரணமாயிற்று. தாழ்ந்து கிடக்கும் உயிர்கள் உயர்ந்து விளங்க வேண்டுமென்ற பெருநோக்கத்தில் எல்லையற்ற பரம்பொருளை ஆள்நிலைப்படுத்தி (Personal God) வழிபாட்டில் ஈடுபடுத்தப்படுகிறது. காணப்பயில்வுகள் யாவும் மனிதன் தனது உயிர்குறிக்கோளை அடைவதற்குரிய மார்க்கங்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் தம்பக்குவ நிலைக்கேற்ப கிரியைகளினூடாக ஞானம்பெற்று மோட்சத்தைப் பெறமுடிகிறது. இவ்வழிபாட்டில் பிரதான இடத்தைப் பெறுவது பக்தியே. இறையுணர்வில் வழிபடுவோனை ஈடுபடுத்துவதற்கு தெய்வீக அழகு (divine beauty) கவர்ச்சி வேண்டியதாக உள்ளது. எனவேதான் FLNLLIh, வழிபாடு, கரணங்களுடன் தொடர்புடையனவாகக் கலைகள் வளரமுடிந்தது.
OG
இந்தியக்கலை வரலாற்றில் குப்தர்காலம் வரையும் இயற்கையின் வெளிப்பாடாகக் கலை அமைவதனையும், குப்தர்காலத்தில் தோன்றிய புராண இதிகாச சம்பவங்கள்,அவதார தத்துவம் பற்றிய சிந்தனைகள் கலைகளின் தோற்றத்திற்குக் கருவாய் அமையும் நிலையில் சமயத்தோடு தொடர்புடைய கலைகள் (Religious ATIS) தோற்றம்பெற்றன. இதனால் இவை ஒரு குறிக்கோளினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இலட்சிய LnLLILIGggLL (Idealiged Arts) 5.E: El LT gii,
蠶 ஆன. ஆள்கயால், நம் கஷ்டம் அனைத்துக்கும்
துக்க நீங்ாத்திண்டாகும். ஜ்கக்குரு காஞ்சிகர்கோ ட்ரச்ேசர்ரியர்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 7
கொள்ளப்படுகின்றன. இந்துக்களைப் பொறுத்தமட்டில் கலையும் மோட்ச சாதனமாகவே கொள்ளப்படுகின்றது. கலைகள் இற்றைவரை நிலைத்து நிற்பதற்குரிய காரணம் அவை மதத்துடன் கொண்ட தொடர்பே என்பதனையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
மனிதத்திறன், மனித ஆற்றல் வழியாகப் படைக்கப்படுவது கலை என்று விளக்கப்படுகிறது. கலைகள் (Fine Arts) மிகநுட்பமாக, அழகு வெளிப்படும் ಇಂ¶ கலைகளாக கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை ந இலக்கியம் என்ற எழு கலைவடிவங்களையும் குறித்து நிற்கிறது. இந்துக்களைப் பொறுத்தமட்டில் எமக்கு மிகுதியாகக் கிடைப்பவை சிற்பவடிவங்களே. கோயில் வழிபாட்டில் திருவுருவ வழிபாடு முக்கியத்துவம் பெறுவதனால், சிற்பக்கலையும் நன்கு
டளம், நாடகம்,
வளர்ச்சியடைந்துள்ளது.
சிற்பக்கலை
தென்னிந்திய சிற்பக்கலைமரபில் சிற்பம் என்பது வாஸ்துவித்யா, சிற்பம், சித்திர லக்ஷணம் என்ற மூன்று கலைகளையும், சிற்பம் சிற்பவிக்கிரகக் கலைகளையும், சித்திரவ கூடினம் ஒவியக்கலையையும் குறித்து நிற்கிறது. கலைப்புலவர் நவரட்னம், சி.சிவராமமூர்த்தி போன்றோர் தென்னிந்திய சிற்பக்கலை சம்பந்தமாக வெளியிட்ட நூல்கள் இக்கலை வடிவம் பற்றி அறிந்து கொள்வதற்குப் பெருந்துணைபுரிகின்றன.
இந்துச்சிற்பங்கள் வழிபாட்டுக்குரியனவாக அமைவதனால் அவற்றை எந்த ஒரு ஸ்தபதியும் தான் விரும்பியவாறு அமைத்து விடமுடியாது வழிபடு மூர்த்தங்களை அமைப்பதற்குரிய விதிமுறைகள், பயன்படுத்தப்படவேண்டிய மூலப்பொருட்கள், பின்பற்றப்படவேண்டிய கலைநியமங்கள், இவற்றைச் செய்யும் ஸ்தபதிகள் பின்பற்றவேண்டிய ஒழுக்கவிதிகள் யாவும் சிற்ப நூல்களிற் கூறப்பட்டுள்ளன.
தெய்வீகச் சிற்பங்கள் ஒவ்வொன்றுக்கும் அடிப்படையாக அமைந்த ஐதீகம், கதைமரபுகள், விதிமுறைகள் பற்றி அக்கினி புராணம், கருடபுராணம் போன்றனவும், ஆகமங்களும் மயமதம், சிவபரத்தினம், மானசாரம், வாஸ்துவித்யா, சகளாநிகாரம், சமராங்கன சூத்திரதாரம், அபிலாகூரிதார்த்த சிந்தாமணி போன்ற சிற்பநூல்களும் விளக்கம் தருகின்றன. இந்துக்களின் கோட்பாடுகளில் சிற்பம், ஓவியம் நடனம் ஆகிய மூன்றும் நெருங்கிய தொடர்புடையவை. பெரும்பாலும் பொதுவான வரைவிலக்கணங்களையும், விதிமுறைகளையும் கொண்டவை. விஷ்ணுதர்மோத்தரம் ஓவியக்கலைபற்றிய கொள்கைகளை சிறப்பாக விளக்குகிறது.
சிற்பக்கலைமரபில் பின்பற்றப்படும் கலைநியமங்கள் ஒவ்வொன்றும் சிற்பங்கள் அழகுற அமையவேண்டும் என்ற
* உண்மைக்காக எதனையும் துறக்கலாம். ஆனால், எதின் பொறு
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டவை. புலனறிவுக்கு அப்பாற்பட்ட இறை அனுபவத்தை வெளிப்படுத்தும்போது இசைவும் பொருந்தப்பாடும் கொண்டு நரம்புகள், எலும்புகள் போன்ற உடற்கூறுகள் வெளியே புலப்படாமல், சாஸ்திரங்களிற் கூறப்பட்ட அளவைப் பிரமாணம், லக்ஷனவிதி, பங்க அமைதி, கையபிநயங்கள், முத்திரைகள், ஆடை ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்ற பல்வேறு அம்சங்களுடனும் உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு அமையும் சிற்பங்களே மங்களகரமானவை எனவும், எனையவை வழிபாட்டுக்குப்பயன்படாத அமங்கல வடிவங்கள் எனவும் சிற்பநூல்கள் கூறுகின்றன. தென்னிந்திய சிற்பங்களைப் பொறுத்தமட்டில் அவற்றின் அழகு அவற்றுக்குப்பின்பற்றப்படும் கலைநியமங்களிலேயே தங்கியுள்ளது.
அளவைப்பிரமாணம் உறுப்பண்மதியைக் குறித்து நிற்கிறது. சிற்பங்கள் பார்ப்போர் மனதில் ரசபாவங்களை உண்டு பண்ணும் வகையில் அமையவேண்டும் விதிபற்றிக் சுடறுகிறது. இதிலிருந்து வழிபடுவோரிடம் பக்தியை உண்டுபண்ணுதற் பொருட்டு சிற்ப சாஸ்திரங்கள் எடுத்த பெருமுயற்சி பெறப்படுகிறது.
தென்னிந்திய சிற்பங்களின் அழகு அவற்றுக்குப் பின்பற்றப்படும் கலைநியமங்களிலே தங்கியுள்ளது என்ற உண்மையும் புலனாகிறது. பங்க அமைதி என்பது திருவுருவங்கள் நிற்கின்ற அல்லது இருக்கின்ற நிலையாகும். சிலவடிவங்கள் எந்த விளைவுகளுக்கும் உட்படாமல் ஒரே சீராக நிற்கும், இருக்கும் தன்மை உடையன. இவை சமபங்கவடிவங்கள். சந்திரசேகரர், விஷ்ணு, சுப்பிரமணியர் போன்றோரது உருவங்கள் உதாரணமாகும். தேவியின் வடிவங்களும், அடியார் உருவங்களும் ஒரு விளைவுக்குட்பட்ட அபங்க வடிவங்கள் ஆகும். நடராஜர், நர்த்தன கிருஷ்னர், கோதண்டராமர் ஒன்றுக்கு மேற்பட்ட விளைவுகளைக்கொண்ட திரிபங்கம் அல்லது அதியங்கவடிவங்களுக்கு உதாரணமாகக் கொள்ளப்படத்தக்கவை. 00கங்கடலி என்பவரது கருத்துப்படி தென்னிந்திய சிற்பங்களுக்கு அழகூட்டு பங்க அமைதி நேபாளத்து ஒரு சில சிற்பங்களிளத் தவிர வேறெங்கும் இல்லை.
பங்கங்களைப் போன்று முக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம் கை அபிநயங்கள். இவற்றை ஹஸ்தம், முத்திரை எனவும் அழைப்பர் விரல்களை மடித்தும்,நீட்டியும் ஆயுதங்களைத் தாங்கிய தன்மை, உருவங்களது உன்னத இயல்புகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சிற்பங்களிற் பெரும்பாலும் வரத ஹஸ்தம், அபயஹஸ்தம், கடகஹஸ்தம், அஞ்சலி ஹஸ்தம் போன்றவை இடம்பெறுகின்றன. இவைகுறியீட்டு ரீதியாக சமய தத்துவக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. மேலும் ஒவ்வொரு தெய்வத்திற்குரிய ஆடைகள், அவற்றின் வர்ணங்கள், அணிகலன்கள் பற்றியும் சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இவ்வாறு ஸ்தபதியினால் கலைநியமங்களுக்குட்பட்ட வகையில் உருவாக்கப்படும் சிற்பங்கள், கோயில்களிற்
நட்டும் உண்மையைத் துறக்கக்கூடாது. சுவாமி விவேகrத்தத்
இந்து ஒளி 5

Page 8
பிரதிஷ்டைசெய்யப்பட்டு வனங்கப்படும் போது பல்வேறு அலங்காரங்களுக்கும் உரியனவாகின்றன. பக்தி மோட்சசாதனமாக அமைவதனால் விக்கிரக வழிபாடு பக்தியின் வெளிப்பாடாகவே அமைகிறது.
பக்திநெறி
பக்தி என்பது 'பஜ் என்ற வினையடியாகத் தோன்றியது. இறைவனது அன்பில் ஈடுபடல் என்ற அர்த்தத்திற் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பக்தன் ஒருவன் தன்னை முற்றாக இறைவனிடம் ஒப்படைத்து, அவனது அன்பில் திளைத்தல் என்று பொருள்படும். பகவத்கீதை பக்தியை ஒரு யோகமாகக் கூறுகிறது. 'சகலவிதமான தர்மங்களையும் கைவிட்டு ஒருவன் என்னையே சரணம் என்று அடைந்தால், நான் அவனுடைய பாவங்களில் இருந்து அவனை விடுவித்து அவனுக்கு மோட்சத்தை அருளுவேன்’ என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறுவது குறிப்பிடத்தக்கது.
உலகவாழ்வில் பல்வேறு உறவுநிலைகளுக்கும் உட்படுவது போல், இறை வழிபாட்டிலும் பல்வேறு உறவு நிலைகளில் இறைவனைக் கண்டு குழந்தையாக, தந்தையாக, எஜமானாக, தோழனாக, காதலனாக வழிபட்டு உய்வுபெற்றவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களுமே, கண்ணனைக் குழந்தையாகக் கண்டுபாடல்களைச் செய்தவர் பெரியாழ்வார். இறைவனைக் காதலனாகக் கண்டவர் ஆண்டாள். இறைவனை எஜமானாகப் போற்றியவர் நாவுக்கரசர். பரமபதத் தந்தையாக இறைவனை வழிபட்டவர் ஞானசம்பந்தர். சுந்தராது தோழமை நட்பு அவரது பாடல்களில்
== స్టేక్సైకో
19. (நடேசர் அபிஷேக, கு
அகில இலங்கை இந்து மாமன்றத் த எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் தினங்கள் சம்பந்தமான விபரங்கள்.
நடேசர் அ
Ո 1.117:1448 .3Ja17 הנ புதன்
5.9, 1998 ஆவணி 20 III-III, III Գ8 புரட்டாதி 18 ஞாயிறு
FLD LIIGUUG) II
I.1.1 வைகாசி 28 வியாழன் R. ஆனி14 ஞாயிறு H ஆடி 15 வேர்ாளிנייני31.07.1
2KSK SESSESSESSIšKSESS
* சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடை இதனை அறிந்து நீ வெறும் ஈர்க்
இந்து ஒளி 5
 

வெளிப்படுத்தப்படுகிறது. மானிக்கவாசகர் இறைவனைத் தலைவனாகக் கொண்டு பாடியதாகக் கூறப்பட்டாலும் அதனை மதுரபாவமாகப் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு பக்தியின் பல்வேறு உறவு நிலைப்பட்ட வெளிப்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தவை சிற்பங்களே. பக்திநெறியை வளர்த்த இவர்களது உருவங்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டு கோயில் வழிபாட்டில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
மிகவும் சிறப்புடைய நடராஜவடிவம் ஐந்தொழிற் தத்துவத்தை வெளிப்படுத்துவதுடன், அழகிய சிற்பமாகவும் போற்றப்படத்தக்கது. அத்தகைய தோற்றத்தை நாவுக்கரசர் "இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கானப்பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று பாடுவது சிற்பங்களில் வெளிப்படுத்தப்படும் சாந்த பக்திரசங்களின் இயல்புகளை எடுத்துக் காட்டுகிறது.
திருவுருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டபக்திநெறியின் பல்வேறு நிலைகளையும்பூரீமத்பாகவதம்,
கிரவனம் கீர்த்தனம் விஷ்னே ஸ்ரணம் பாதசேவனம் அர்ச்சனம் வந்தனம்தாஸ்யம் பகியம் ஆத்மநிதேன்ம்
என்று விளக்கிக் சுடறுகிறது.
இவ்வாறு மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் பக்திநெறியின் வெளிப்பாடாகவும், பக்தி சாதனமாகவும் சிற்பம் அமைவதுடன், கலைவடிவங்களில் மக்கள் ரசபாவங்களை உண்டு பண்ணும் ஒப்பற்ற கலைவடிவங்களாகவும் அவை அமைந்து விடுகின்றன என்று கூறலாம்.
98 குருபூசைத் தினங்கள்)
லைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில், நடேசர் அபிஷேக, சமயகுரவர் குருபூசைத்
பு:பிஷேகம்
உத்தரம்
கக்கில பட்ச சதுர்த்தசி சுக்கில பட்ச சதுர்த்தசி
ர் குருபூசை
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் சுவாமிகள்
சுந்தரமூர்த்தி நாயனார் S.
হিব্রুং স্ক্সষ্ট্র
பும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்டான். கம் செய்யாதே, 'த:கிதழ்கினர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 9
அம்மை அப்பர்
சன்மார்க்கர் சகாரிக்கர் சற்புத்திசார்க்கம்
தாதமார்க் கம்மென்றுஞ் சங்கரனையடையும்
நன்மார்க்க நால்வகைத்தாம் ஞானயோக
நற்கிரியைசரியையென்நவிற்றுவதும் செய்வர் சன்மார்க்க முத்திகள் சாபோக்கிய சாமீப்பிய
சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் விதமாம் முன்மார்க்க ஞானத்தால் எய்துமுத்தி
முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திடத மென்டர் - சிவஞானசித்தியWW
ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்பவராதலால் சங்கரன் என்னும் நாமத்தைப் பூண்ட அம்மையப்பர் தரிசனத்தை அடைவிக்கும் சைவநன் மார்க்கங்கள்: -
தாத மார்க்கம் - சரியை, சிவ சாலோகம், சற்புத்திரமார்க்கம் - கிரியை, சிவ சாமீப்பியம் பதமுத்தி சகமார்க்கம் - யோகம், சிவசாரூப்பியம்
சன்மார்க்கம் - ஞானம், சிவசாயுச்சியம்-பரமுத்தி
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்லப்படுகின்ற நால்வகை மார்க்கங்களும், உண்மை, உபாயம் என இருவேறுவகைப்பட்டு உண்மைச் சரியை, கிரியை, யோகம், ஞானமெனவும், உபாயச் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனவும் அமையும்.
உண்மை மார்க்கம் பரபோகத்தையும், உபாயமார்க்கம் உலகபோகத்தையும் அடைவிக்கும். உண்மை மார்க்கம் சிவப்பணி: உபாய மார்க்கம் தன்மணி எனவே, இங்கு சைவ நன்மார்க்கங்கள் என்றது உண்மை மார்க்கத்தையே, அதுவே அம்மையப்பரைத்
தரிசிக்கும் நன்மார்க்கம்
ஆகமங்கள் அதன் சாரமாயமைந்த திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் யாவும் சைவநன்மார்க்கங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நால்வகைப்படுத்திக் சுடறுகின்றன.
பதினான்கு சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருக்களிற்றுப்படியார், நான்கு சைவமார்க்கங்களில் சரியையும் கிரியையும் ஒன்றாக்கிச் சிவதன்மமென்றும், யோகத்தைச்
* மின்துேக்கு ஆர்மீகம் தனது செய்வாக்கேஜ் ஆர்ஜ முதல் ஆந்தச் சமுதாயத்தித்த ஆதி ஆர,
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 

வி. சங்கரப்பிள்ளை ரேச்சித்தத்த ஆசிஃபர்சிஃஜசிறித்தரிக் ஆகத்)
சிவயோகம் என்றும், ஞானத்தைச் சிவஞானமென்றும் மூன்று மார்க்கங்களாகக் கூறுகின்றது.
நல்ல சிவதன்மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்வசிவ ஞானத்தால் நானறிய = வல்வதனால் ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்கான் ஆரேனுங் காணாத அரன்'
=திருக்களித்துப்படிTர்.
சிவளை நோக்கின சைவசித்தாந்தத்திலே, சிவதன்மத்தாலேயாதல், சிவயோகத்தாலேயாதல், சிவஞானத்தாலேயாதல்,அம்மையப்பரைக்கூடும்படி சாதிக்குமவர், தங்களாலே செய்யப்பட்டதாகக் கருதாதே, அம்மையப்பரின் ஏவல் என்றேயறிந்து தம்முடைய சுதந்திரத்தை விட்டு, அவர் கைப்பட்டு வரவல்லவர் ஆவர். அவர்களே அந்த அம்மையப்பர் மேலே மிக்க அன்பை வைக்கில் பிரம விஷ்ணுக்களாலும், இன்றளவுங் காணப்படாத அம்மையப்பர் தரிசனமாவார்.
சிவதன்மம் - சிவதருமம்
ஆறஞ் செய விரும்பு" தருமஞ் செய்ய விரும்புங்களென்று மக்களுக்குக் கட்டளையிடுகிறார் ஒளவை மூதாட்டியார் தருமமே செய்யத் தக்கது; அது மக்களை உய்வடையச் செய்வது,
தருமம் செய்வோரின் கருத்து வேறுபாடு வகையால் அது இருவேறு வகைப்படும்.
1. பசு தருமம் - பகபுண்ணியம்-தன்பணி 2. சிவ தருமம் - சிவபுண்ணியம் - சிவப்பணி
பசு புண்ணியம் இக வாழ்வைத் தருவது சிவபுண்ணியம் பரவாழ்வைத் தருவது. சிவ தருமமே சைவ நன்மார்க்கமாதலால் அதுவே செய்யத்தக்கது.
சிவ தருமம், சிவ அறம், சிவபுண்ணியம், சிவப்பணி, இறைபணி, சைவப் பணி, சைவநிதி என்பன ஒரு கருத்துடையன,
தந்து உகந்தர் தங்கியெடுக்க ஆரம்பிக்கிறதே ங்கித்து விதிகிறது 'சுவாமி விவேதாந்தர்
இந்து ஒளி 7

Page 10
"சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது" "சைவந்தனையறிந்தே சிவம் சாருதல்" "சைவம் சிவாநந்தம்" "சைவம் சாயுச்சியம்' என்பன திருமூலர் திருமந்திர பொன்மொழிகள்.
பெரிய புராணத்திற் கூறப்படும் மெய்யடியார்கள் சரியை, கிரியை நெறிகளில் நின்று சிவப்பணி - சிவதருமம் ஆற்றியவர்கள், தன்பணிநீத்தவர்கள் அவர்கள்,
இறை பணியாளர்கள்" "பாரம் ஈசன் பணியெனக் கொண்டவர்கள்" ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குபவர்கள்" பூகநீறுபோல் உள்ளும் மனிதர்கள்" "மாதோர் பாகர் மலர்த்தாள் மறவாதவர்கள்" "செயற்கரிய செய்த தொண்டர்கள்"
செயற்கரிய செயல்களைச் செய்த தொண்டர்களாகிய பெரியார்களைப் பற்றிக் கூறும் நூல் பெரிய புராணம்- தொண்டர் புராணம் ஆனது
பெரிய புராண மெய்யடியார்கள் சரியை, கிரியை மார்க்கங்களில் நின்று சிவதருமம் சிவப்பணியாற்றி மத்தியோகஞ் செய்து ஞானங் கைவரப் பெற்று அம்மையப்பர் தரிசனம் நேரிற் கண்டவர்கள். இதுபற்றியே திருக்களிற்றுப் படியார் ஆசிரியரும் சைவநாற்பாதங்களுள் உள்ள சரியை, கிரியை இரண்டையும் ஒன்றாக்கி சிவதருமம் என்றும்,யோகத்தைச் சிவயோகம் என்றும், ஞானத்தைச் சிவஞானம் என்றும் மூன்று பாதங்களாகக் கூறினர் போலும்.
உமையம்மையார் காஞ்சிப்பதியிலிருந்து அறநெறிகளை வளர்த்துக்காட்டியருளியிருக்கின்றார். பெரியபுராண நாயன்மார் ஒரேவிதமான சரியை, கிரியை சிவதருமங்களைச் செய்யவில்லை. நினைத்தற்கரிய வன்முறைச் சிவதருமங்களையும் செய்திருக்கின்றார்கள். இதனால் சிவதருமம் மெல்வினை என்றும், வல்வினையென்றும் இரண்டாகக் கூறப்படுகின்றது.
"மெல்வினை யென்ன வியணுலகில் ஆற்றரிய வல்வினையே யென்ன் வருமிரண்டும் - சொல்லிற் சிவதன்மம் ஆமவற்றிற் சென்றதிலே செல்வாய் பவகன்மம் நீங்கும் படி"
-திருக்களிற்றுப்படியார்
பிறப்புக்கேதுவாகிய வினை விட்டு நீங்கும்படி பலன்களைக் கருதிப் பதங்களையடையாமல், சாயுச்சியமே பெறுகைப் பொருட்டாக உண்மையான சிவஞானத்தைப் பெற, மெல்வினையென்றும், உலகத்தாராலே செய்தற்கரிய வல்வினையென்றுஞ் சிவனை வழிபடத்தக்க இந்த இரண்டு வகையுஞ் சொல்லுமிடத்து, சிவதருமம் என்றே சொல்லப்படும்.
* பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால் தவிர சூனியத்தைச்சரான

ஆகையால், இவையிரண்டினுள் உன்னுடைய கருத்துக்குப் பொருத்தமானதொன்றை வேறொரு பலனுங்கருதாதே Gl Fijel IITILITEI.
மென்தொண்டர் - மெல்வினை
ஆகமங்களில் அருளிச் செய்தபடியே, அம்மையப்பரை உள்ளபடி அர்ச்சித்து வழிபடத் தக்க கிரியாவிதிக்கும் பக்குவனாம்படி இவனுடைய அவயவங்களினாலே அந்தந்த அவசரங்களிலே செய்யத்தக்க திருவலகு, திருமெழுக்கு, திருவிளக்கு, திருநந்தவனம் திருப்பள்ளித்தமம், திருமஞ்சனம், திருமாலை, கூத்து, பாட்டு முதலாகவுள்ள தொழில்களும், திருவேடத்தரை வழிபடுகையும், சிவபத்தருக்கு வேண்டுவன செய்கையும், திருமந்திரம் செபிக்கையுமாக இப்படியே செய்யப்பட்ட குற்றமற்ற வழிபாடான சரியையும், இந்தச் சரியையின் முதிர்ச்சியினாலே திருவுள்ளத்தடைத்து அம்மையப்பரை அர்ச்சித்து வழிபடுகிற கிரியா விதியும், நல்ல செயற்பாடென்று நமக்கு எளிதாகச் செய்கையாகையாலே இவை இரண்டையும் மெல்வினையென்று திவ்விய ஆகமங்கள் கூறும்.
ஆதியை ஆர்ச்சித்தற் கங்கமும் அங்கங்கே தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே நல்வினையாம் என்றே நமக்கெளிதானவற்றை மெல்வினையே யென்றது நாம்வேறு"
=திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் உபதேச நூலாகையால் சீடனை நோக்கி "வேதியனே' என்று விளிக்கப்பட்டது.
சிவப்பணி நின்றமெல்வினை, வல்வினையாளர்கள் பெரியபுராணத்திற் கூறப்பட்டுள்ளார்கள்.
சரியை வழிநின்று மெல்வினையாற்றிய அப்பரடிகளும், கிரியை வழிநின்று மெல்வினையாற்றிய சம்பந்தாடிகளும் ஞானம் பெற்றுச் செய்த அற்புதங்கள் பல. அவ்வற்புதங்களைத் திருக்களிற்றுப்படியார் சுடறுவது.
அப்பரடிகள்,
"கொல்கரியின் நீற்றறையின் நஞ்சிற் கொவை தவிர்த்தில் கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தள் - நல்ல மருUTர் மறைக் காட்டில் வாசல் திறப்பித்தில் бояғыттеу түтатf7 ClғШай”
சம்பந்தரடிகள்,
"ஒடம் சிவிகை உலாக் கிழியடைக்கப் பாடல் பனைதானம் பாலை நெய்தல் - ஏதிெர்வெப் பெண்புக் குயிர்கொடுத்தல் சிங்கிவைதாம் ஒங்கு புகழ்த் தென்புகலி வேந்தன் செயல்"
அது கடைசியாக இறைவனைக் கண்டு பிடிக்குமே டயாது. கவிஞர்கண்கதின்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 11
வன்றொண்டர்- வல்வினை
சரியையினையுங் கிரியையினையும் மெல்வினையாக்கி இந்த நிலைகளின் முதிர்ச்சியினாலே பின்புண்டான சனகத்திலே அம்மையப்பரோடு மிகுந்த சிநேகமாகி விளைந்த வல்வினை இருக்கும் முறைமை-திருக்களிற்றுப்படியார் கூற்று.
வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள் கரங்களினால் அன்று கறியாக்க-இரங்காதே கொள்வினையே செய்யும் கொடுவினையே ானவற்றை வள்வினையே யென்றது.நா மற்று
நல்ல வரங்களைத் தருகின்ற வயிரவ வேடங்கொண்டெழுந்தருளிய கடவுளுக்குக் கறியமுது செய்யும் பொருட்டு முன்னே இரக்கமின்றித் தமது திருக்கரங்களாலே பிள்ளையைக் கொலை செய்த சிறுத் தொண்ட நாயனாரது கொடுவினை போன்றவை வல்வினை. சரியை வல்வினை.
பாதக சென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத்தாளிரண்டும் - சேதிப்பக் கண்டிர்தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தன்செயலால்தான்"
நல்லூர் முருகன்
தருமகிழ் வேம்பு நிழல்தரு காவில்
தண்ணிழ வருளத் தருவோனே
அருந்தமிழரசர் ஆண்டநல்லூரில்
அருண்மழை யாகி அமர்வோனே
உருவளர் அருளாய் உவப்பவர்க் கெல்லாம்
உணர்வலை யாகி உறையோனே அருவுருவாக அறியவர்க் காகி
அறிவுருக் காட்டி அமர்வோனே கருவிழி யன்ன கண்மயில் தோகைக்
காவடி யாடக் கசிவோனே ஒருதிரு முருகாய் உலகமே உய்ய
ஒருவடி வேலாய் ஒளிர்வோனே குருநெறி வாழச் சிவகுருவாகிக்
குறுமுனிக் குருவின் குரவோனே மருவிடும் மிருபுற மடந்தையர் சூழ
மயில்தவழ் நல்லைப் பெருமானே.
- கவிஞர் ஊரெழு நன்றி-முழு
,
* தூய்கை பொது:றுதிசி ஆகிய ஆத்துடன் இயே ஆசாத்திற்குச் ேேயாகி அள்.
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 
 
 
 
 
 

பாவம் பழிகளை நோக்காமல், பிதாவும் பிராமணனுமாகியோனது பாதங்களை திருமஞ்சனப் பாற் குடத்தை உடைத்தமைக்காகச் சேதித்த சண்டேசுர நாயனாரது வல்வினையை நோக்கி, அம்மையப்பர் தாமாம் தன்மையையருளினார். கிரியை வல்வினை. சாத்திரங்களிற் சொன்ன வழியன்றியே அளவற்ற அன்பின் பெருமையாலே, உலக இயற்கையைவிட்டு யாவராலும் செய்ய வொண்ணாத செயல்களைச் செய்தமையாலும், இவற்றை ஒரு பிரமான நூல்களாலுஞ் சொல்ல அரிதாகையாலும், இவை வல்வினையென்று சொல்லப்பட்டன.
இப்படிக் கொடிதான வல்வினையைச் செய்யும்போதே இந்தக் கொடிய செய்திகளால் அகிதம் வராமல் அம்மையப்பரை நோக்கியே நின்று அவரில் வைத்த அன்பின் பெருமையாலே இந்தச் செயல்களையும் முறைமையான செயல் என்றே கொண்டு, தம்மையும் மெள்ள அம்மையப்பர் கையிலே கொடுத்துப் பரங்கெட்டு நிற்கையாலே அவர்கள் அம்மையப்பர்கைப் பட்டு முத்தியே பெறாநிற்பர்.
சன்னதி முருகன்
முரவிளங் கயல்விளை கெளிறினந் திரளி முனைந்தெழ வலம்வரும் முருகோனே அரசடி நிழவில் ஆனந்த வடிவாய்
அணைபவர்க் கருளி அமர்வோனே நரரொடு சுரரும் நாடியே போற்ற
நடுநிலை நிறைவாம் நலத்தோனே பரவிடு மடியார் பசிக்களை தீர்க்கப்
பாலொடு அன்னம் படைப்போனே விரவுநற் றாழை விரைகமழ் அலரி
விறலுயர் சோலை விழைவோனே உரமுறு அறிவும் உண்மையு மொன்ற உருவது காட்டி உறைவோனே அரவணி பெருமான் ஆண்மகனாகி
அகிலமே வாழ அசைவோனே சரசர வெனனே செடில்பிடித் தாடும்
சன்னதத் துறைசந் நிதியோனே.
கதிரமலைபான்.
ருகானந்தம்)
வெந்நீக்கு நின்றி இதந்தாக வேண்டுக்க்வாமி விவேகானந்தர்
இந்து ஒளி 9

Page 12
பூழியர் கோன் ப்ெபொழித்த புகலியர் கோன்கழல் போற்றி ஆழிமிசை கன்மிதப்பில் அனைந்தபிரான் அடிபோற்றி
Wழிதிருநாவலூர் வன்றொண்டர் தம் போற்றி ஊழிமல் திருவாதவூரர் திருத்தாள் போற்றி"
சைவ சமய குரவர்கள் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்காவாசகர் ஆகியோர்களே அந்நால்வர். 'நாலுபேர் சொன்னதைக் கேட்டு நட' என்று பெரியோர்கள் முன்னர்க் காலங்களில் இளையோர்களுக்கு ஆலோசனை கூறி வந்தார்கள். இளையோர்கள் கேட்டு நடந்தபடியினால், தொல்லைகள், துன்பங்கள் இன்றிச் சுபீட்சமாக வாழ்ந்தார்கள். அது ஒரு காலம். இன்று அப்படியில்லை. நிலைமைகள் மாறி விட்டன. எனவே, 'நாலுபேர் சொன்னதைக் கேட்டு நட' என்று சொல்பவர்களையும் காண்பது அரிதாகியுள்ளது. கேட்டு நடக்கவும் அநேகர் ஆயத்தமாக இல்லை. முரண்பாடுகள், அமைதியின்மை, அவலங்கள் என்பன தற்காலத்தில் பெருகி வருவதற்கு இதை விட வேறு காரணங்கள் தேவையில்லை.
இங்கு குறிப்பிட்ட அந்த 'நாலு பேர்" யாவர்? என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். நம்முடைய சமுதாயத்திலுள்ள பெரிய மனிதர்கள், படித்த மனிதர்கள், அறிவாளிகள் நாலுபேர் என்று பொருள் கொள்ளலாம். அப்படித்தான் அநேகம் பேர் எண்ணி வந்துள்ளனர். அதிலும் தப்பில்லை. ஆயினும் உண்மை நிலையினை நோக்கும்போது, 'நாலு பேர்' என்று குறிப்பிடப்படுபவர்கள், எமது சமய குரவர்கள் ஆக விளங்கும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பவர்களே என்பது தெரியவரும். சைவமாம் சிவநெறியைப் பாதுகாத்து, மக்கள் நெறியாக்கி, என்றும் வாழுகின்ற செம்மைநெறியாக்கிய பெருமை இவர்களையே சாரும்.
வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்கச் செய்த இந் நால்வர் காட்டிய வழியில் நடந்து செல்பவர்களுக்கு எவ்வித துன்பங்களும் ஏற்படாது. அவர்கள் இகபர சுகங்களைப் பெற்று இனிது வாழ்வர். ஈற்றில் முத்தியும் கை கூடுவது உறுதி. எனவே தான் 'நாலுபேர் சொன்னபடி நட'நான்கு பேரின் வார்த்தைகளைத் தட்டக்கூடாது." என்றெல்லாம் நம் பெரியவர்கள் சொல்லி வந்தார்கள்.
திருஞான சம்பந்தர் முதலிய சமயாசாரியர் நால்வரும் காட்டிய நன்னெறிதான் என்ன? என்னும் வினா அடுத்து எழலாம். அவர்கள் காட்டியது அன்பு நெறி, பக்தி நெறி,
* பணத்தைச் சேமிப்பதால் மதிப்பு கொடுப்பதில்தான் மதிப்பு கிடைக்
இந்து ஒளி 10
 

குமாரசாமி சோமசுந்தரம்
அதனையே fra Galiji என்றும் சைவநெறி என்றும் அழைக்கின்றனர். இந்த அன்பு நெறியாம் சைவநெறி எல்லோர்க்கும் உரியது; அதனை வாழ்வில் கடைப்பிடித்தல் எல்லோராலும் செய்யக்கூடியது. மனிதரை விலங்கு நிலையிலிருந்து, மனித நிலைக்கும், மனித நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கும், உயர்த்தும் தன்மை வாய்ந்தது அன்பு நெறி.
நம்முடைய பழந்தமிழர்கண்ட வாழ்வியல் நெறி, அன்பு நெறியாகும். அந்த அன்பு நெறியைச் சைவசமய நெறியாகவும் ஆக்கிய பெருமை நால்வர் பெருமக்களையே சாரும். ஏற்கனவே இருந்த கருவுக்கு உருக்கொடுத்தார்கள். அது வாழும் உருவம் ஆக விளங்க வேண்டுமெனில் அதனைப் பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். எங்கேயோ அரச சபையிலும், கற்றோர் நெஞ்சங்களிலும் ஒதுங்கியிருந்த சைவநெறியை, சாதாரண மக்களும் அறியும்படி ஒரு பேரியக்கத்தையே நடத்தினார்கள். இந்நால்வரும், அவர்களுடன் இணைந்து கொண்ட ஏனைய அடியார்களும். இப்பேரியக்கமே, தமிழ் நாட்டில் பக்தி இயக்கமாக கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை விளங்கியது.
தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் விகரமாகச் செயற்பட்ட முன்னூறு ஆண்டுக் காலப்பகுதியில், சைவநெறியை வளர்ப்பதில் பெருந்தொகையான சிவனடியார்கள் பங்கு கொண்டனர். இவர்களின் புனித வரலாற்றைச் சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் பெரிய புராணத்தில் நமக்குத் தந்துள்ளார். அவர்கள் பக்தி நெறியில் நின்று, சிவப்பணிகள் புரிந்து, செயற்கரிய தியாகங்கள் செய்தவர்கள். வேற்று மதங்களின் ஊடுருவல்களை நிறுத்திச் சைவத்துறையை விளங்கச் செய்தவர்கள். சைவத்தின் பெருமையை நிலை நாட்டியவர்கள். திருநீறு, திருவைந்தெழுத்து, ஆலய வழிபாடு, இறை பக்தி, சிவத்தொண்டு , ஆருயிர்க்கு அன்பு செய்தல் என்பவற்றை ஓங்கச் செய்தல், பக்தி இயக்கத்தின் அடி நாதம் ஆகும். பக்தி இயக்கம் மக்கள் இயக்கமாகவே செயற்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சம்.
பக்தி இயக்க உணர்வைப் பாடல்களாக வெளிப்படுத்தினர். அவை மக்களை இலகுவில் சென்றடைந்தன. பண்ணோடு இசை பாடப்படும் போதுமக்கள் பக்தி உணர்வில் திளைத்தனர். காரைக்காலம்மையார், திருநாவுக்கரச்ர் திருஞான சம்பந்தர், சுந்தார், மாணிக்கவாசகர் என்போர் பண்னமைந்த பாடல்களால் மக்கள் மத்தியில் சைவ உணர்வைப் பரப்பியவர்கள்.
கிளிடப்பதில்லை. பணத்தை தாளமாகக் கிறது. சுவாகி கண்டதிசச்சிதான்ந்தா
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 13
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் ஒரே காலத்தவர்கள். எனினும் நாவுக்கரசர் மூத்தவர்; அவரே பக்திச் செயற்பாடுகளைப் பரந்த சமூக மட்டத்திற்கு முதலில் கொண்டு சென்றவர். பல ஊர்களுக்கும், திருத்தலங்களுக்கும் கால் நடையாகவே பயனங்களை மேற்கொண்டு, தமிழோடு இசைபாடும் பணியையும் தொண்டுகளையும் புரிந்தவர். ஆயினும், பக்தி இயக்கத்தில் ஒரு அடிமட்டத் தொண்டராகவே செயற்பட்டவர்.
திருஞானசம்பந்தர் பக்தி இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசரும் ஏற்றுக் கொண்டார். இறைவனே திருஞானசம்பந்தரை, ஒரு தலைவராக, குநானகுருவாக அறிமுகப்படுத்தும் பாங்கினை நோக்கும் போது, சம்பந்தர் அதற்கெனவே அவதரித்தவர் என்பது புலனாகின்றது. ஒரு பெருந்தலைவன் எழுந்தருளுவது போன்று, မျိုးမျိုး
直
பெருமானை முத்துச் சிவிகை, முத்துப் பந்தர், முது சின், முத்துக்குடை முதலிய உபசாரங்களை வழங்ஆனிப்
பெருந்தவைவனுடைய இலட்சனங்களுடன், தாக அமைத்தருளி உலக மக்களுக்கு எடுத்துக் கட்டிய எம்பெருமானின் திருவருட் திறனைச் சிந்தித்துப் பார்ப்போருக்கு இது விளங்கும்.
ஒரு சைவப் பேரியக்கத்திற்கு தலைமை தாங்குபவன், இறைவனை விசாரித்து சரி, பிழை என்னும் தீர்ப்பை கூறக்கூடியவன். அவன் இறைவனின் அருள் பெற்றவன் மட்டுமல்ல, இறைவனுடன் நேரடியாகப் பேசவல்லவன் மாத்திரமல்ல, தம்மைச் சூழ்ந்துள்ள மக்களுக்கு, இதோ இவன்தான் இறைவன் எனச் சுட்டிக் காட்டும் பேராற்றல் உடையவனாகவும் விளங்க வேண்டும்.
"பிடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்
இவன் அன்றே' என்று அத்துணை துல்லியமாக இதோ இவன்தான் இறைவன் என்று பிறருக்குக் காட்டும் வல்லமையைக் கொண்டிருந்தவர் ஞானசம்பந்தப் பெருமான்.
அத்தகைய ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தின் சூானகுருவாகவும், பக்தி இயக்கத்தின் தலைவனாகவும் எம் பெருமானின் திருவருள் நியதிப்படி விளங்குகிறார்.
"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாது மோர் குறைவிலை கண்ணில் நல்லஃது உறும் கழுமல வளநகர்ப் பெண்ணின் நல்லாளொடு பெருந்தகை இருந்ததே'
"அரிது, அரிது மானிடர் ஆதல் அரிது", அத்தகைய மனிதப் பிறவியை எடுத்த நாம் சதா துன்பங்களில் உழன்று கொண்டு இருக்கிறோம் என்றால், அது எங்கள் பிழை. தனு, கரண, புவன போகங்களையெல்லாம் இறைவன் தன் கருனையினால் நமக்கு அளித்தமை, அவற்றை வைத்துக் கொண்டு துன்பங்களை அனுபவிப்பதற்கல்ல. நாம் அனைவரும் இம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்பதே இறைவனின் சித்தம்
*இந்த உபகர் மிகப்பெரிய ஒளி உடற்பர்சிக் கூடம் இங்குநர்நந்: ஆபிறr
வெகுதானிய வருடம் சித்திரை-ஆளி
 

இந்த உறுதியைத்தான் ஞானசம்பந்தப் பெருமான், 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை' என்ற அடிகளின் மூலம் தெளிவாக்குகிறார். ஞானகுருவாக விளங்கும் சமாயாசாரியார் இக் கருத்தை வழங்கும்போது, அதற்கு மறு கருத்தும் உண்டோ, ஞான சம்பந்தரின் கருத்து, இறைவனால் உணர்த்தப் பெற்ற கருத்தல்லவா.
இந்த மனித வாழ்க்கை அழுக்குமல்ல, இழுக்குமல்ல, அதனால் அதனை வெறுக்கவோ, துறக்கவோ தேவையில்லை என்பது சைவ நெறியின் நிலைப்பாடு, ஞானசம்பந்தப் பெருமானும் அதே நிலைப்பாட்டில் நின்று கொண்டு, உறுதியான உள்ளத்துடன் மனிதரை விளித்து "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தால், "நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை' என உரமாகக் கூறுகிறார்.
இப்பூமியில் நல்ல வண்ண்ம் வாழ்பவர்களுக்கு இறைவனை அடைதல் நிச்சயமாகி விடுகிறது என்னும் ஞானசம்பந்தரின் கருத்தை, தமிழ் வேதம் தந்த வள்ளுவப் பெருந்தகையின்,
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்' என்னும் குறளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உண்மை ஒன்றுதான், அதில் மாற்றமில்லை என்ற உண்மை தெளிவாகின்றது.
"மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்று அதே உண்மையைத்தான் திருநாவுக்கரசரும் வெளிப்படுத்துகிறார்.
வாழ்க்கை செம்மையாக, நல்ல வண்ணம் அமையப் பெற்றால் முத்தியும் நிச்சயம். அவ்வாறு அமையாமல் ஒழுக்க வீனங்களும், நெறிப் பிறழ்வுகளும், பாதகச் செயல்களும் வாழ்க்கையில் இடம் பெறுமேயானால், முத்தி சித்திக்காது என்பது சைவத்தின் நிலைப்பாடு. மனித ஈடேற்றத்திற்கு முக்கியமான நிபந்தனை மனிதன் அப்பழுக்கற்ற நல்வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதாகும்.
இறைவனின் கருத்தை விசாரித்து அறிந்து, "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; அப்படி வாழ்ந்தால் இறைவனை அடையப் பெறுதலாகிய நல்ல கதி நிச்சயம் கைகூடும்" என்று நிதானமாகக் கூறியருளிய ஞானசம்பந்தப் பெருமானின் தலைமைத்துவமும், குருத்துவமும் தான் என்னே!
திருஞானசம்பந்தர், சோழ நாட்டிலே, சீர்காழி என்னும் திருப்பதியிலே, வைதிகப் பிராமணர் குவத்திலே, கவுணியர் மரபிலே, சிவபாதவிருதயர், பகவதியார் என்பாருக்கு சித்திரைத் திருவாதிரை நன்னாளிலே தோன்றினார். சைவத்தைத் தழைத்தோங்கச் செய்ய அவதரித்தவரல்லவா. அதற்கு ஏதுவாக அவரது மூன்றாம் வயதிலே, அப்பிள்ளைக்குத் திருவருள் புரியச் சிவபெருமான் உமாதேவியார் சமேதராக
டயவர்களாக்கிக்கொர்ருவதற்காக விந்திருக்கிரேக்சுவாமி விவேகானந்தர்
இந்து ஒளி 1

Page 14
இடபத்தில் எழுந்தருளிக் காட்சி கொடுத்தார். உமையம்மையார் தம்முடைய ஞானப்பாலைப் பொற்கிண்ணத்தில் எடுத்து அப்பிள்ளையைப் பருகச் செய்தார். அக்கணமே அப்பிள்ளை, ஞானத்துடன் சம்பந்தப்பட்டு, ஞானசம்பந்தர் ஆனார். "தோடுடைய செவியன்.” என்னும் தேவாரத்தை முதலில் Lu Tiy. GOTT fif. பக்தி நெறி வளர்க்கத் தலைப்பட்டார். தலைமைதாங்கி பக்தி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். திருத்தலங்கள் தோறும், தந்தையுடனும் அடியார்களுடனும் சென்று தேவாரப்பதிகங்கள் பாடினார். 'நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்' என அழைக்கப்பட்டார். திருநீற்றையும் திருவைந்தெழுத்தையும், விளங்கச் செய்தார் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு' என்று திருநீற்றின் மகிமையை உணர்த்தி, திருநீற்றினால் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தினார். பாண்டியமன்னன் சமணத்தினின்று சைவத்திற்கு மீட்கப்பட்டான். அவனின் சுடனும், சுரமும் நீங்கப் பெற்று நின்ற சீர் நெடுமாறன் ஆயினன். பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரினதும், மந்திரி குலச்சிறையாரினதும் நெடுங்காலத் தவம் பலித்தது. அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றைச் சமணருடன் நடத்தி ஞானசம்பந்தர் வெற்றி வாகை சூடினார். இவையனைத்திற்கும் காரணம் திருநீறும், திருவைந்தெழுத்து மந்திரமுமேயாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சைவர்களாகிய நாமும் திருநீற்றையும், திருவைந்தெழுத்தையும் பேணிப் போற்றி வந்தால், வாழ்வில் நாம் அஞ்ச வேண்டியது ஒன்றுமில்லை. எமக்கு ஒரு பொல்லாப்பும் நேராது. இது ஞானசம்பந்தப் பெருமான் எமக்குக் காட்டிய நன்னெறி.
盾
5926T6ID@DILIITTITf6õT 5 TT
1. மதிப்பாதார் முற்றம் மதித்தொரு மிதிபாமை கோடி பெறும்.
2. உண்னிருண்னரீரென்று உப
உண்னாமை கோடி பெறும்.
த்தும் தடிப் பி கோடி கொடுத்தும் குடிப் מידי
கூடுதல் கோடி பெறும். -- 1. கோடானு கோடி கொ டுப்பினு கோடாம்ை கோடி பெறும்.
திருக்கு
கடுகைத் துளைத்தேழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்.
-இடைக்காடர்
* அமைதியும் பொறுமையும் மனிதனின் ஆ
இந்து ஒளி 12

நமசிவாய மந்திரத்தை நாம் எப்படி ஒதவேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறார், சம்பந்தப் பெருமான். "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' மந்திரத்தை ஒத வேண்டும் என்கிறார். இறைவன் மீது காதலாகிப் பக்தியோடு கண்ணில் இருந்து நீர் வடிய, மெய் சிலிர்க்க, வெதும்பிய உள்ளத்தோடு, வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய எம்முடைய நாதனின் நாமமாக விளங்குகின்ற நமசிவாய மந்திரத்தை ஒத வேண்டும். அது நம்மை நன்னெறிக்கு இட்டுச் செல்லும், அவ்வாறே தேவாரங்களையும் பண்னோடும் பாராபனம் பண்னல் வேண்டும். நம்மை அது நன்னெறிக்கு இட்டுச் செல்லும்.
பண்கனிந்த பாடல்களால் சிவபிரானை ஏற்றிப் போற்றி, பாடிப்பணிந்து, அவர் புகழ் பரப்பிய ஞானசம்பந்தர்,
இறைவனோடு தந்தை-மகன் உறவுபூண்டு, சற்புத்திரமார்க்கத்தில் நின்று ஞானம் பெற்றுப் பாமுத்தியடைந்தவர். எமது இலங்கை நாட்டுத்
திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பவற்றின் மீது தேவாரப் பதிகங்கள் பாடி, சிவபூமி எனத் திருமூலர் மொழிந்தமையை மேலும் ஸ்திரப்படுத்தியவர். மாபெரும் சிவபக்தனான இலங்கை வேந்தன் இராவணனை, தாம் பாடிய பதிகங்களில் குறிப்பிட்டு ஏற்றிப் போற்றியவர். திரு நீற்றின் மகிமையை உணர்த்த வந்த சம்பந்தப் பெருமான், 'இராவணன் மேலது நிறு' என்னும் போது இராவனேஸ்வரனின் சிவபக்தி எத்துணை மகத்தானது என்பதற்கு அதற்கு மேலும் சான்று தேவையோ? ஒரு வைகாசி மாத மூல நட்சத்திரத்தன்று, தமது திருமனத்திற்கு வருகைத்தந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு ஞானசம்பந்தர் சிவசோதியுட் கலந்தார்.
pI (335TTIQ (o II DIIDTT6O TD
தபாற் சென்று ട്ട് 。
சரிபார்தம் மனையில்
Èy, frii JLÈCE DITOG *_、
__====== . நம தன்னுடைநT
சிறப்பு)
அணுவைத்துளைத்தேழ்கடலைப்புகட்டிக் குறுகத்தறித்த குறள்.
- ஒளவையார்.
ற்றலை அதிகரிக்கச் செய்கின்றன. ஒது அறிஞர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 15
இரத்மலானை இந்துக் கல்லூரி மாணவர் விடுதி 1998.03.15 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா அவர்களால் 嗣 நந்து வைக்கப்பட்ட து. இந்து வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகளும், அமரத்துவம் அடையும் போது அதன் தலைவராகவும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத்தலைவராகவும், சமூகநலன் குழுத்தலவராகவும் இருந்த அமரர் வைத்தியகலாநிதி க. வேலாயுதபிள்ளை அவர்கள் இவ்விடுதியை ஆரம்பிக்க அரும்பாடுபட்டார். எனவே, அன்னாரின் பெயரை இவ்விடுதிக்குச் சூட்டுவதென்று அகில இலங்கை இந்து மாமன்றம் தீர்மானித்தது.
இந்துப் பெரு மக்களின் முயற்சியால் தலை நகரில் ஆரம்பிக்கப்பட்ட பல பாடசாலைகளில் இரத்மலானை இந்துக் கல்லூரி முக்கிய இடம் பெறுகின்றது. இந்நாட்டில் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட வன்செயல்களால் இரத்மலானை இந்துக் கல்லூரியும் பாதிக்கப்பட்டது. 1958, 1977, 1983 ஆகிய ஆண்டு வன்முறையால் இக் கல்லூரி தாக்கம் அடைந்தது.
1983 வன்முறையின் பின் இக்கல்லூரி அகதி முகாமாகவும், பின்னர் இராணுவ முகாமாகவும் மாற்றப்பட்டது. இதனால் இக்கல்லூரி 1983க்குப்பின் தற்காலிகமாக தெகிவளை தமிழ் வித்தியாலயத்தில் இயங்கியது. அதிபராக திரு. ந. மன்மதராஜன் பணியாற்றினார். வசதிகள் குறைந்த சூழலில் இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி என்ற பெயரை வேறு இடத்திலும் கட்டிக்காத்த பெருமை திரு. ந. மன்மதராஜனுக்கே உண்டு என்பதை மறுக்கமுடியாது.
இக்கல்லூரி மீண்டும் தனது சொந்தக் கட்டிடத்தில் இயங்க வேண்டும் என்ற முயற்சியில் அதிபரும், அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து வித்தியாபிவிருத்திச் சங்கமும் பெரும் போராட்டமே நடத்தவேண்டியிருந்தது.
காலஞ்சென்ற ஜனாதிபதி திரு. ரனசிங்க பிரேமதாச முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. இராஜமனோகரி புலேந்திரன், அமைச்சர் மாண்புமிகு செள. தொண்டமான், முன்னாள் கைத்தொழில் இராஜங்க அமைச்சர் திரு. எம்எஸ் செல்லச்சாமி, முன்னாள் கொழும்பு நகரபிதா திரு. கே. கணேசலிங்கம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இக்கல்லூரி மீண்டும் தனது சொந்தக் கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது.
1996ம் ஆண்டு இப்பாடசாலை அபிவிருத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. மாணவர் விடுதி ஆரம்பிப்பதற்கு
*தன்னுடைய சொந்தக்கத்திகளை மட்டுக்க
கார்க்காரருக்கு ரகத்திரங்க
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 

ஆர்வம் இருந்தபோதும் கல்லூரிக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் இராணுவமுகாம் இருந்தமையால் அம்முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் 1997ல் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கெளரவ சி. வீ. குணரத்தின அவர்களுக்கும், மேல் மாகாண முதலமைச்சர் கெளரவ சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும், கொழும்பு மாவட்ட பா. உதிரு.அமல் சேனாவங்க அதிகாரி அவர்களுக்கும் இக் கல்லூரி வளாகத்திலுள்ள இராணுவத்தை அகற்றித்தர வேண்டுமென்றும், காணியையும், கட்டிடத்தையும் இந்து வித்தியாபிவிருத்திச் சங்கத்திடம் மீளக்கையளிக்க வேண்டுமென்றும் அதிபர் ந. மன்மதராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குச் செவிமடுத்த அமைச்சரும், முதலமைச்சரும் கல்லூரிக் கட்டிடத்திலிருந்து இராணுவத்தை வேறிடம் மாற்றி கல்லூரிக் கட்டிடத்தையும், விடுதியையும் அதிபரிடம் 97.12.30gij கையளிக்க ஏற்பாடு செய்ததன் மூலம் மீளவும் இரத்மலானை இந்துக் கல்லூரியின் வரலாறு புதுப்பிக்கப்பட்டது.
இவ்விடுதித் திறப்பு விழாவன்று இந்து வித்தியாபிவிருத்திச் சங்கத்திற்குரிய காணியை மீளவும் சங்கத்திற்கு வழங்கும் உத்தரவுக் கடிதத்தை தெகிவளைகல்கிசை மாநகரபிதா திரு. ஜயரத்ன பெரேரா இந்து வித்தியாபிவிருத்திச் சங்கத்திடம் கையளித்தார்.
இப்பாடசாலை விடுதியை ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்த அமரர் வைத்தியகலாநிதி க. வேலாயுதபிள்ளை அவர்களும், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை, மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன், மாமன்றப் பொருளாளர் திரு. மு. கந்தசாமி, சமூக நலன்புரிக் குழுத் தலைவர் திரு. சி. தனபாலா, செயலாளர் திருமதி, வானதி இரவீந்திரன் உள்ளிட்ட சகலரும் என்றும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் பணியாற்றியவர்கள்.
கல்லூரியில் அமையப் பெறவுள்ள கற்பக விநாயகர் ஆலயத்திற்கு சுவாமி ஆத்மகனானந்தா அவர்களும், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும், பொதுச்செயலாளர் கந்தையா நீலகண்டன் அவர்களும், ஆலய மண்டபத்திற்கு பெரியார் பழனியப்பச் செட்டியார் அவர்களும் அடிக்கல் நாட்டியுள்ளனர். விரைவில் கும்பாபிஷேகம் காணப்போகும் கற்பகவிநாயகர் நிரந்தர நிம்மதியை நாட்டிற்கு வழங்குவார் என்று நம்பிக்கை கொள்வோம்.
நா. யோகராஜா
தி:ேஇத் ரிேதி:
அளித்துக் கொண்டு சோழ்ப் வாழ்க்கை வாழும் ளேடக்காது 'சுரிேவிவேகாநந்தர்
இந்து ஒளி 13

Page 16
க.பொ.த. உயர்தர வகுப்பு மானவர்களுக்கு D
கிராமிய மக்கள் தமக்கேற்ற மரபு, கலாசாரம் பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தமக்கென தனியான ஒரு இடத்தைப் பிடித்து வாழ்வர் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். இந்த வகையில் சமயப் பழக்கங்களிலும் அதனோடு தொடர்புடைய வழிபாட்டு முறைகளுடனும் (சடங்கு) சடங்குகளோடு தொடர்புடைய தெய்வங்களையும் வழிபட்டு வருவது கண் கூடாகும். வழிபாட்டு முறைகளில் வழிபடும் தெய்வங்களும் ஆண், பெண் தெய்வங்கள் எனப் பாகுபடுத்தி வனங்கப்பட்டு வருவதும் நோக்கத்தக்கது. இங்கு பெண் தெய்வங்கள் வரிசையில் "கொத்தி முதன்மையான இடத்தைப் பெறுபவள் என்ற வகையில் அவளது தோற்றம் வழிபாட்டு முறைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை இங்கு நோக்குவோம்.
இக்கொத்தித் தெய்வமானது Si EEN ETT பேற்றுக்குரியவளாவாள். இத் தெய்வம் ஏன் பிள்ளைப் பேற்றுக்குரிய தெய்வமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகின்றாள் என்பதற்கு பின்வரும் கதை ஒன்று சான்றாகும். முன்னொரு காலத்தில் பலவகைச் சக்திகளைப் பெற்றிருந்த இராட்சதன் ஒருவன் சிறுசிறு தெய்வங்களை வருத்தி அழிப்பதில் இன்பமடைந்தான். அவன்ாலே சில தெய்வங்கள் அழிக்கப்பட்டன. சில ஆங்காங்கே ஒடி ஒழித்தன. அவ்வாறு அடைக்கலம் கொடுத்த சமூகங்கள் அத்தெய்வங்களை தம்தம் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டன. கொத்தி என்பவள் பிள்ளை பெறும் வீட்டில் ஒழித்தமையால் கிராமியத் தெய்வமாகக் கருதப்பட்டு காலகதியில் அவளே பிள்ளைப் பேற்றுக்குரிய தெய்வமாகக் கருதப்பட்டாள். இன்றும் அந்நிலை தொடர்ந்து பேணப்பட்டு வருவதை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
பிள்ளைப் பேற்றுக்குரிய தெய்வமான கொத்தியை இன்று கிராமிய மக்களைத் தவிர நகர்புறமக்களும் அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ வழிபட்டு வருகின்றனர் என்ற உண்மையையும் இந்த இடத்தில் நினைவு சுடர வேண்டும்.
கொத்தி சங்ககால பாலை நிலைத் தெய்வமான கொற்றைவையின் மரபுவழித் தெய்வமாவாள். இவள் காடுகாள் சூரி, வேலன் தாய், பழையோள், தொல்குடி குமரி என்ற
* இறைவனே தனக்கு சகலமும் என்று முழுை
மிகவும் உயர்ந்த வலிமை பீறிட்டுச் கிளட்
இந்து ஒளி 14
 

மு. மனோகரன்
நீரகப்பிரிவிஸ், த ப்ளோரே
பெயர்களால் : பட்டு வருகின்றாள். சிலர் இவளைப்
பேய் என்றும் அழைப்பர். ஆனால் அந்தத் தன்மை கொண்டவள் அல்ல. இவ்வழிபாடு இலங்கையில் சிறப்பாக யாழ்ப்பான மாவட்டத்திலேதான் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் ஏனைய இடங்களிலும் இவ்வழிபாட்டு முறையைக் காணக் கூடியதாகவே இருக்கின்றது. குறிப்பாக வடமராட்சிப் பகுதி, தென்மராட்சி, தீவுப்பகுதி போன்ற பகுதிகளில் வழிபடப்பட்டு வருகின்றது.
இவள் பிள்ளைப் பேற்றுக்குரிய தெய்வமாகக் கருதப்பட்டு அவள் வழிபடப்பட்டு வருகின்றாள். இத் தெய்வம் ஆல மரத்தையே தனது பிரதான உறைவிடமாகக் கொண்டுள்ளது. ஆதலால் கொத்தியால் என்ற சொல் மரபும், கொத்தி மூலை, கொத்தித் தெரு, கொத்தி ஒழுங்கை என்ற சொற்றொடர்களும் இன்றும் கையாளப்பட்டு வருகின்றன.
கொத்தி கிராமிய வழிபாட்டுத் தெய்வமாகக் கருதப்பட்டதற்கும், கண்கண்ட தெய்வமாகக் கருதப்பட்டதற்கும் காரணம் அவளால் கற்பவதியாக இருக்கும் பெண்ணானவள் இடையில் குறைப்பிரசவம் இரத்தப் பெருக்கு போன்ற அசெளகரியங்களிலும் காப்பாற்றுவாள். பிள்ளை பிறக்கும் நேரம் இரத்தப் பெருக்கு ஏற்படாமலும் சுகப் பிரசவமாக அமைவதற்கும் இவளே துணை புரிகின்றாள்.
அன்றைய காலங்களில் பிள்ளைப் பேறு வீட்டு அடுக்களையில் அல்லது அடுப்படியில் தான் நடைபெறும். இன்று கல்வி, உயர் போக்கு வரத்து சுகாதார வசதிகள் காரணமாக அந்நிலை இல்லாமல் போனதெனலாம். அடுக்களையில் நடக்கும் பிள்ளைப் பேற்றை ஊரின் வயது சென்ற மூதாட்டி ஒருத்தியே கவனிப்பாள். அவள் மருத்துவிச்சி என்று அழைக்கப்படுவாள். இப்பெண்ணைக் கூட கொத்தியால் அல்லது கொத்தியாத்தை என்றே அழைக்கும் மரபு இருந்தது.
கொத்தித் தெய்வத்தால் பிள்ளைப் பேறு நடக்கும். ஆண்பிள்ளையானால் சுடரையில் தட்டியும், பெண்பிள்ளையானால் அம்மியில் தட்டியும் அறிவிக்கும் மருத்துவிச்சி, கொத்தியை நினைவு கூர்வதற்காகவே செய்கின்றாள். பிள்ளையையும் தாயையும் தொடர்புபடுத்தும் தொப்புள் கொடியை பாக்குவெட்டி போன்ற ஆயுதங்களால்
பாக உணர்ந்து கொள்பவள். தனது உள்ளத்திலிருந்து
புவதை உணர்கிறான். துரி'ஈத்தர்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 17
வெட்டியே மருத்துவிச்சி இருவரையும் வேறாக்குகின்றாள். இக்செயலும் கொத்தியின் கருனை இல்லாது செய்யின் ஏற்புவலி போன்ற கொடிய நோய்கள் ஏற்படும். அதன் மூலம் உயிராபத்துக்கள் கூட ஏற்பட இடமுண்டு. இந்த இடத்தில் கொத்தியில் மக்கள் வைத்த அந்த நம்பிக்கையை எளிதில் மறந்து விட முடியாது.
கொத்தியின் அருளாள் பிள்ளை பிறந்த பின் மருத்துவிச்சியானவள் 11ம் நாள் grau gege வைப்பாள். அன்று சோறுகறிகளுடன் விசேடமாக மீனும் பொரிக்கப்படும். இவற்றை அடுக்களைக்குள்ளுள் மருத்துவிச்சி சுளகில் வைத்துப் படைப்பாள். படையவோடு கொத்திக்குப் பிரியமான சுருட்டும் சேர்த்துப் படைக்கப்படும். அதன்பின் தென்னம் பாளையில் கட்டிய தீப்பந்தத்தை கையிலேந்தி விட்டில் தாயும் பிள்ளையும் சுகம் சுகம் எனக் கூறிக்கொண்டு அடுக்களையின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றுவாள். பின் படையலோடு கலை (சன்னதம்) ஆடிக்கொண்டு வெளியே ஒடுவாள். பெரும்பாலும் கொத்தி குடி கொண்டிருக்கும் ஆல மரத்தையே நோக்கியே ஒடுவாள். இதனைப் பரியெடுத்தல், அல்லது மருக்கை என கிராமிய மக்கள் அழைப்பர். படையலைப் படைத்த மருத்துவிச்சி வீட்டிற்கு வந்து தாயும் பிள்ளையும் சுகமா? எனக் கேட்பாள். கொத்தி தன் நிலையிலிருந்து மாறாது காணப்படுவதை அறியும்
காலி நகரத்தின் மத்தியில் எழுந்தருளியிருக்கும் நூறு மீனாட் சோமசுந்தரப் புலவர் அவர்கள் அதில் ஒரு பாடல் இதோ:
எண்னோங்கு நாதவிந்
இயலோங்கு மா கண்ணோங்கு சிவாகம கலையோங்கு ே
மண்னோங்கு வகுத்த
மனமோங்கு ம1
விண்னோங்கு காலிநக
மீனாட்சி சுந்தர
# கட்டுளின் குழந்தைகளுக்குத் தோன்தி செய் ஆர்களுக்குத் தொன்றி செங்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி
 
 

மருத்துவிச்சியானவள் "செத்தைக்கை நின்றேன் என்று சொல்வாதை கொத்தியாத்தை பத்தைக்கே நிற்றேன் என்று சொல்லாதை கொத்தியாத்தை' எனக் கூறி கொத்தியை நினைவுபடுத்தவே செய்வாள். பின் மருத்துவிச்சி ஏனையோருடன் உணவருந்திய பின் தன் வீடு செல்வாள் இல்லாறு கொத்தியானவள் பிள்ளைப் பேற்றுக்குரியவள் என்ற வகையில் அவளை மேற்கூறப்பட்ட இடங்களோடு ஏனைய இடங்களில் மக்களும் அவளை வழிபட்டே வருகின்றனர்.
கொத்திக்குரிய சிறப்பான வழிபாட்டு இடங்கள் யாழ்ப்பானப்பகுதிகளில் பல உள. அவற்றுள் நெடுந்திவிற்கு மேற்கே உள்ள குருக்கள் மடத்திலிருந்து 1/4 மைல் தொலைவிலுள்ள கொத்தியால் கோயிலும், கரவெட்டி வடக்கிலுள்ள கொத்தியால் கோயிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கோயில்களாகும். இக்கோயில் இரண்டினுள்ளும் முன்கூறிய இடத்து மக்கள் இவள் மீது அதிக நம்பிக்கை கொண்டு நேர்த்தி வைத்து ஆண்டிற்கொரு பொங்கவிட்டு வழிபடுகின்றனர். பெரும்பாலும் இவ்விடத்து மக்கள் தமது குல தெய்வமாகவே நினைவு கொண்டு வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறாக கொத்தி கிராமிய வழிபாட்டுத் தெய்வங்களுள் குறிப்பிட்ட
வழிபாட்டுத் தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றாள்.
அமைந்துள்ள சிவன் கோவிலில் ட்சி சுந்தரேஸ்வரர் மீது நவாலியூர் ஊஞ்சல் பாடல்கள் பாடியுள்ளார்.
து காலா நாட்டி
ரிமாமறை விட்டம் பூட்டி
மாங்காரத் தவிசு கூட்டி மணி ஊஞ்சன் மீதே டிமபவர்கள் வடந்தொட்டாட்ட
ர் விரும்பி வாழும்
ரே பாடீர் ஊஞ்சல்,
நூல் வடங்கள் மாட்டிக்
தன் மூலும் ஆண்டதுேக்கே நீ தோண்டு செய்கிநாம் 'சுவாமி விவேகானந்தர்
இந்து ஒளி 15

Page 18
கடம்பமர் காளை முருகப்பெருமான்
முருகப் பெருமானை சா வனப் பொய்கையில் அனைத்தெடுத்தவர் உமையம்மை. உமையம்மை பாகர் சிவபெருமான், சிவபெருமான் அழகிய திருக்கடம்பூர் திருக்கோவிவில் எழுந்தருளி இருக்கின்றார். அவருடைய கடமை என்னைப் பிறவியில் ஆழ்த்தாது தாங்கிக் கொள்ளுதல். எனக்குக் கடமை அவருக்குப் பணிபுரிதல் ஆகும் என்று உரமாக உரைத்தவர் திருநாவுக்கரசர் உரைத்தவாக்கில் உறுதியாக நின்று அருட்பணி புரிந்தவர் நமது நாவரசர். -
"என் கடன்பணி செய்து கிடப்பதே" என்று பார் அறியப்
பாவிசைபாடியவர் அவர்.
சுந்தரமூர்த்திசுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் "திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன் தன்னடியார்க்கும் அடியேன்" என்று பாடிப் பணிந்து பரவுவார்.
சேக்கிழார் பெருமானும் "திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ.' என்று சுவாமிகளுடைய
பாக்கதையை பாடுவதற்கு எடுத்துக் கொள்ளுவார்.
"காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல், பேவினர்க்கு வேண்டுமென மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும், நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் திருத்தொண்டை ஆரம்பித்தார். இளம்பராயத்தில் அத் திருத்தொண்டைத் தொடங்கினார். வளர வளர வளர்ந்த திருப்பணி அண்ணலார் சேவடிக்கீழ் அமரும் வரையில் நிகழ்ந்தது. திருப்புகலூர்ப் பெருமான் திருவடிக் கீழ் அப்பரடிகள் அமரும்போது அகவை எண்பத்தொன்று.
எண்பத்தொராம் ஆண்டிலும் நாவரசர் திருத்தொண்டு நலம் பெருகச் செய்தார். இறைவனுடைய திருவருளால் உழவாரம் செல்லும் இடம் எங்கும் செம்பொன்னும் நவமணியும் ஆகத்
* எளிமையான வாழ்க்கையும் உயர்ந்த எண்ணமும் வாழ்க்
இந்து ஒளி 15
 

திகழ்ந்தது. எங்கள் பெருமான்
fi | Fig fi அவற்றையும் உழவாரத்தினில் ஏந்திக் கொண்டார். வாசனை கமழும் பூக்கள் நிறைந்த தடாகத்தில் அவற்றைப் புக எறிந்தார்.
சேக் கிழார் பெ ரு மான் அந்நிகழ்ச்சியை உணர்த்தும்
பாங்கு அவர்க்கேயுரியது.
"எம்பெருமான் வாகீசர் உழவாரத் தினிலேந்தி,
வம்பலர்மென் பூங்கமல வாவியினிற் புக எறிந்தார்."
நன்றியால் வாழ்வது நல்லுலகம், பலவகையாலும் பேணப்படுவது நன்றி. அந்நன்றிக்கு உரித்துடையவர் சிவபெருமான், சிவபெருமானுக்குச் செய்யப்படும் திருத்தொண்டு நன்றி மறவாமையினுள் தலையாயது. அவ்வுட் கருத்தின் வெளிப்பாடாக அமைந்தது அப்பாடிகளாருடைய திருத்தாண்டகம்
'நெஞ்சே! நீ வா! நாள் தோறும் நம்பன் திருக்கோவிலுக்குச் செல். பொழுது புலர்வதற்கு முன்னராக அலகிடு திருமெழுக்கிடு மலர் கொய், பூமாலை புன்ை. புகழ்ந்து பாடு மனம் கொள்ளத் தலையால் வணங்கு கூத்து ஆடு. சிவநாமம் சொல். சங்கரா செஞ்சடையாய் ஆதி. ஆரூரா. என்று
என்றெல்லாம் வாய் ஓயாமல் சொல்.
"நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்கு புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாாக் கும்பிட்டுக் கடத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அவறா நில்லே."
கையின் குறிக்கோளாகக் கருதவேண்டும், சுவாசி சிரத்தது
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 19
இளம்பிராயத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் திருத்தொண்டு முற்றிப் பழுத்த நிலையிலும் பற்றி நின்றார். மாற்றமாம் வையகத்தில் மாற்றத்தையே மனம் விரும்பும் சரியை என்ற தொண்டில் சலிப்படையவில்லை. உறுதியாக நின்றார். புறத்தே சரியைத் தொண்டாகப் புலப்படுகின்றது. அகத்தே அவருக்கு அது ஞான மார்க்கமாக நலம் பயந்தது போலும்.
நானிலத்தில் நானாக வகுத்த நாதனுக்கு அது நற்றொண்டு. திருக்கோவில் உள்மாத்திரம் அன்று புறத்திலும் நாவரசு பெருமான் அத்திருத்தொண்டை நன்கு பேணினர்.
"கைத்திருத்தொண்டுசெய்யும் காதலிற்பணிந்துபோந்தார்." ". செம்பொற்றாளே சார்வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவிதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார். ' என்று எல்லாம் திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டினைச் சேக்கிழார் பாடிப்பணிவார்.
திருத்தொண்டின் நெறி வாழ விளங்கிய பெருமகனார்
நாவரசர். -
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் அப்பரின் திருத்தொண்டிற்கு முன்னுரிமை கொடுத்துச் சிந்திக்கின்ற சந்தர்ப்பம் திருவிழி மிழலையினில் நிகழ்கின்றது. திருவிழி மிழலையினில் எம்பெருமக்கள் இருவருக்கும் விழிமிழலைப் பெருமான் படிக்காசு வழங்குகின்றார். ஞானக்குழந்தையின் காசு வாசிபடுங் காசு. அதனால் சிந்திக்கின்றார்.
'அதி உண்மையில் மேம்பட்ட திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசு. அதனால் அதற்கு வாசி இல்லை. தொண்டில்லாத காசு நான் பெறும் பொற்காசு. அதனால் வட்டம் தீர்த்தருளப் பாடுவேன்" என்று "வாசி தீரவே காசு நல்குவீர்.” என்று திருப்பதிகம் எடுத்து இறைவனுக்கு விண்ணப்பிக்கின்றார். இறைவனும் திருநாவுக்கரசு நாயனாருடைய திருத்தொண்டினை உலகோர்க்கு உணர்த்தவே திருவுளங்கொண்டாரோ? ஆரறிவார்.
ஆலயத்திற்குச் சென்றால் மட்டும் போதாது. அரனை வழிபட்டால் மாத்திரம் காணாது. தொண்டு செய்ய வேண்டும். அது திருத்தொண்டாக மாற வேண்டும். அத்தொண்டில் சாலவும் உறைப்புற்று ஒழுக வேண்டும். தொண்டு செய்பவன் தொண்டன், இறைவன் 'தொண்டருள்ளத்து ஒடுக்கம்' என்று சும்மாவா
சொன்னார்கள்.
* கடவுள் ஒவ்நொருஜினிலும் குடி கொண்டிருக்கிரஸ்
சேவை செவன்தடங்ாAகிள் கட்டிருக்குச்சே
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

உள்ளும் புறமும் சிவமயமாக விளங்கியவர் திருநாவுக்கரசு சுவாமிகள். அகத்தொண்டு போலவே புறத்தொண்டையும் கருதினார். போற்றினார். பணிந்தார். மற்றவருக்குத் தொண்டின் பெருமையைப் பேசலாம். புத்தகம் புத்தகமாக எழுதி வெளியிடலாம். தொண்டில் நிலைத்து நிற்க
முடியுமா?
சன சந்தடிகள் அதிகரித்தது நகரம். போக்கு வரவு மிகுதியாக உள்ளது நகரம். அவ்வாறான நகரத்தில் நான் முந்தி நீ முந்தி என்று மக்கள் கடமைகளை கவனிக்கக் கங்கணம்
பூண்டு நிற்பார்கள்.
வாழ்க்கைச் சிறப்பு நலங்கள் யாவும் அமையப் பெற்ற ஒருவர் நான் திருத்தொண்டு செய்யப் போகின்றேன் என்று எழுவாரா? கையினில் தோண்டியும் உழவாரமும் தாங்கிச்
(Friul III ITTF
சனநெரிச்சல் இடையே அவ்வாறு செல்லத் துணிவு வேண்டும். அது துணிச்சலோடு நின்று விடுவது அல்ல. மெஞ்ஞானத் தெளிவு வர வேண்டும். இறை அன்பு உருவாக வேண்டும். தெய்வ நம்பிக்கை தலை எடுக்க வேண்டும். நோய் துன்பம் அணுகாதிருக்க வேண்டும் உலகம் வாழவேண்டும் என்ற உயர் சிந்தனை உருவாக வேண்டும். இவை போல இன்னும் அநேகம், அவற்றுக்கு எல்லாம் மேலாகச் சென்று அப்பணியில் ஈடுபட வேண்டும். அது திருநாவுக்கரசு சுவாமிகள் ஒருவராலேயே
ஆளது.
சிவசின்னம் தரித்தல், மார்பாரப் பொழிகண்ணீர், மழை வாரும் திருவடிவு மதுரவாக்கில் சேர்வாகும் தீந்தமிழின் மாலை, செம்பொற்றாளே சேர்வான திருமணம், சமயத் தெளிவு.அதனால் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்டவர் திருநாவுக்கரசர் என்றார். அவர் அடிச்சுவட்டில் வந்த சேக்கிழார் பெருமானும், திருநாவுக்காக சுவாமிகள் வளர்த்த திருத்தொண்டாதலின், "திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டு' என்றார்.
திருத்தொண்டைச் சிந்திப்பவர்கள் திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டு என்று சிந்திக்க வேண்டும். அப்பொழுது அதில் ஒரு புதுவேகம் பிறக்கும். உறுதி உள்ளத்தில் நிலைக்கும். தொண்டு தொடரும். அண்டரும் கண்டு அதிசயிப்பர்.
வளர்க திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டு.
வாழ்க திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டின் நெறி.
தைத் தவிர்த்தனியாக துே ஒரு கடன் இவ்வி பக்கருக்குச் டிசெப்டினாகிரன் கவாமி விவேகானந்தர்
இந்து ஒளி 17

Page 20
பொன்னாலைகே பொல்லாதார் தரும் துன்பங்கள் Las G: துணையாக இருந்து
தூக்கத்தில் இருந்து தொடர்ந்து வரும் து | அதர்மத்தை அழித் ஸ்லோலகல்லோ
Iñigos, Lisigif
வேதங்கள் கூறுகி
வேதனைகள் போ
பால்குடியும் மாறா பாற்கடலில் நீ படு: குற்றங்குறைபொறு குணமான நிறைவ
சக்கர த்தைக் கைப் υςoόταρυσοίοδι T முக்கண்ணன்மை
சத்தியத்தைக் காத்
த.மனோ
"E.L.I.
கொழும்பு
(யாழ்ப்பாணம் பொன்னாலையில் கே வரதராஜப் பெருமாள் அழு
* வரப்போவதை முன்னே அறிந்து காத்து
நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பப்
இந்து ஒளி 18
 
 
 
 

பயில் கொண்ட பெருமாளே துன்பம் போக்கிடவே வா நாடி துரத்தி வரும் வேளை
து காப்பதன்றோ உனதுதிருவேலை
விட்டால் தூயவனே நீ துன்பங்களைப் போக்கிடுவதார் தொழிக்க அவதரிக்கும் நீ
லப்படும் எம்மைக் கண்திறந்துபார்
ரிக்கும் எமக்குத்துணைவா ன்ற மெய்ப்பொருளேவா
க்கியெம்மை ஆட்கொள்ளவா
தபாலகர்கள் துடிதுடிக்க ந்துறங்கல் நீதியாமோ வத்தருளி ஆட்கொள்ளவா
ழ்வை எமக்களித்துப்போ
லேந்திதுரித மாய்வா னே விரைந்தோடிவா த்துனனே, சக்தியவள் சோதரனே திடவே எழுந்தோடிவா
ாயில் கொண்டு எழுந்தருளியுள்ள நள்நாடி யாத்தபாடல்)
நீ கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு அவர் b ஒன்றும் இல்லை, திருவன்ஞர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 21
யாண்டு பலவாகியும் தலைமுடி
நரையாதது ஏன்?
பாண்டி நன்னாட்டிலே பிசிராந்தையார் என்னும் ஒரு பெரும் புலவர் இருந்தார். அவர் நற்குன நற் செயல்களிலும் மேம்பாடுடையவர். அதே காலத்தில் சோழ வளநாட்டிலே கோப்பெருஞ்சோழன் ஆட்சி புரிந்து வந்தார். இவ் வேந்தனும் நற்குண நற்செயல்களில் மிக்க மேம்பாடுடையவராக இருந்தார். அக்காலத்திலே தொடர்பு சாதனங்களும் போக்குவரத்து வசதிகளும் குறைவாக இருந்த காரணத்தால் வேந்தனும் புலவரும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் ஒருவர் மற்றவரது குணநலன்களைக் கேள்வி மாத்திரையால் நன்கு அறிந்து இருந்தனர்.
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்'
என்னும் இத்திருக்குறளுக்கு உதாரண புருஷர்களாக நட்புரிமை பூண்டு ஒழுகி வந்தனர்.
இது இவ்வாறிருக்கும் காலத்திலே கோம்பெருஞ் சோழனுடைய புத்திரர்கள் அரசு கோரி, தந்தை மீது படையெடுக்க விழைந்தனர். அரசனும், அவர்கள் மீது போர் தொடுக்க முனைந்தான். ஆனால் சான்றோர் பலர், இவ்வாறு போர் தொடுப்பது சரியில்லை என்று சொன்னதை ஏற்றுக் கொண்டு, வடக்கிருந்து தவம் செய்து உயிர் துறக்கத் தீர்மானித்தான் வேந்தன், வடக்கிருத்தலாவது ஊர்ப்புறத்தே தனியிடங்கண்டு, அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப் புல்லைப்பரப்பி அதன் மீதிருந்து உண்ணாநோன்பு நோற்றுக் கொண்டு தவம் செய்தலாகும். இத்தவம் செய்து உயிர் துறப்போர் வானோர் உலகம் புகுந்து இன்புறுவர். இதுவே பெரும் தவமாக அமையுமாயின் வானுலகிற்கு மேலாகிய வீட்டின் கண் சென்று பிறவா நிலையினை எய்துவர்.
கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்க முடிவு செய்துள்ளாள் என்னும் செய்தி பிசிராந்தையார் காதுக்கு எட்டிற்று. இந்நிலையில் எது வகையிலும் வேந்தனைச் சென்று அடையவேண்டுமென்று புறப்பட்டார். புலவர் கட்டாயம் தன்னை வந்து சந்திப்பார் என்று வேந்தனும் நிச்சயித்துத் தான் வடக்கிருக்கும் இடத்திற்கு அருகாமையில் புலவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வைக்கும்படி அங்கு உள்ளவர்களிடம் கட்டளையிட்டான். அவர்களோ, புலவர் வருகை தருவார் என்பதை முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு விடையாக வேந்தன் சொல்லுவார்;
# திழைகளிடமும் பifளிகளிடமும் நோயாளிகளிடமும் சிவபெருனனைக் காண்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆணி
 

"செல்வக் காலை நிற்பினும்
அவ்வற் காலை நிவ்வன் மன்னே"
வேந்தனுடைய சிந்தனைக்கு அமைய பிசிராந்தையார் சோழ நாடு வந்து சேர்ந்தார். அவர் வருகையை அறிந்த சோழநாட்டு மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்."ஐயா, உங்களை நாங்கள் நேரிற் கண்டதில்லை. மிக்க வயது முதிர்ந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனாலும் உங்கள் தலைமுடி நரைக்கவில்லையே. என்ன காரணம்? அதனை எமக்கு விளக்குவீர்களா?”
புலவர் விடைபகருகின்றார்.
ாண்டு பரிவாக நரையில் கிாகுதல் யாங்கா கியூரென வினவுதி ராயின் மாண்ட எண்மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே'புறநானூறு)
எனக்கு ஆண்டுகள் பல சென்றனவாயினும் ஏன் 6659|| ஏற்படவில்லை என்று கேட்கின்றீர்கள். விடைதகுகின்றேன், கேளுங்கள். (மாண்ட என் மனைவியொடு)-அறிவு: ஒழுக்கங்களால் மாட்சிமை, மேம்பாடு எய்தியுள்ள மனைவியுடன்) மக்களும் அப்படியே நிறைவு எய்தியுள்ளனர். எனக்குப் பணிபுரியும் உதவியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்வதை நான் காண விரும்புகிறேனோ அவ்வண்ணமே அவர்கள் தாமாகவே 西L画@ கொள்கின்றார்கள். எமது வேந்தனோ திங்கு ஒன்றுமே இளைக்கமாட்டார். அதற்கு மேலதாக, பசிப்பிணி, நோய் நொடி முதலான உட்பகைகள், வேற்று நாட்டுப் படையெடுப்பு ஆகிய புறப்பகைகள் யாவற்றினின்றும் எமக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றார். இவற்றிற் கெல்லாம் மேலதாக, ஜம்புலங்களையும் வென்றுள்ள, நற்குண நற்செயல்களால் நிறைந்துள்ள சான்றோர், ஒருவர், இருவரல்ல, பலர் எனது ஊரிலே இருக்கின்றார்கள். இவையே எனக்கு நரை ஏற்படாமைக்குக் காரணம்.
புலவரின் கொள்கைப்படி நரை திரைகட்குக் காரணம், முதுமையன்று, மனக்கவலையே. புலவரைப் பொறுத்த மட்டில் அவரது குடியிலோ, ஊரிலோ, நாட்டிலோ கவலை ஏற்படக் கூடிய ஏதுக்கள் ஒன்றுமே இல்லை.
பவனே உங்கAகிள் சிவபெருகாமா ஆபதிகிறான். கவசதி விவேகானந்தர்
இந்து ஒளி 19

Page 22
மாணவர் ஒளி)
エー "மானவர் ஒக
ஆக்கங்கள்ை
செல்வி, அருட்ப ஆண்டு-8 (கொ'இராமந
தென்இந்திய மன்னர்களான பல்லவ, சோழ, நாயக்க மன்னர்கள் கட்டிய, வரலாற்றுப் பெருமைமிகு திருக்கோயில்கள் வரிசையிலுே கொழும்பு கொச்சிக்கEL பூநீ பொன்னம்பலவாணேஸ்வரம் விளங்குகின்றது. தனிக் கருங்கற்களால் ஆன இச்சிவாலயம் இலங்கையில் வாழ்ந்த இந்துப் பெரியவரான சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டைய தமிழ் மன்னர்களின் சிறப்பு, அவர்களால் அமைக்கப்பட்டு திருக்கோயில்கள் குளங்கள் என்பவற்றால் என்றும் நினைவு சுடரப்படுகின்றது. சேர்.பொன்னம்பலம் இராமநாதன் இந்நாட்டுக்கு ஆற்றிய பெரும் பணிகளில் என்றும் நிலைத்திருக்கும் பெருமை பெற்றது. பூரீ பொன்னம்பலவாணேஸ்வரம் நிறுவிய திருப்பணியாகும். ஆலயம் முழுவதும் கருங்கற்களில் பொளிந்த சிற்பங்கள் நிறைந்து விளங்குகின்றன.
இவ்வாலயம் நிறுவப்படுவதற்கு முன்பே இவ்விடத்தில் ஆலயம் ஒன்று இருந்தது. முன்னைய கோயிலின் கும்பாபிஷேகத்தை 1857ல் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் தந்தையாரான பொன்னம்பலம் முதலியார் நடத்தி வைத்தார்.
கொழும்பு மாநகரிலே சிவாலயம் ஒன்று இல்லாக்குறை பூநீ பொன்னம்பலவாணேஸ்வரம் உருவாவதற்கு ஒரு காரணமாக இருந்தது. இவ்வாலயம் நிறுவப்பட்ட பின் முகத்துவாரத்தில் அருணாச்சலேஸ்வர சிவன் கோயிலும் மருதானை கப்பித்தாவத்தையில் கயிலாசநாதர் சிவன் கோயிலும் நிறுவப்பட்டன.
கொழும்பு மாவட்டத்தில் பழம்பெரும் சிவாலயமாக இருந்து 1519ம் ஆண்டு போர்த்துக்கீசரால் நிர்மூலமாக்கப்பட்ட நந்தியேஸ்வரம் என்னும் பழம் பெரும் சிவாலயத்தின் சின்னங்கள் அண்மையில் இரத்மலானையில் உள்ள கொனா கோயில என்ற சிற்றுாரில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1907ம் ஆண்டு வெயாங்கொடையில் இருந்து கருங்கற்கள் கொண்டு வரப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி 1912ம் ஆண்டு முற்றுப் பெற்றது பொன்னம்பல வாணேஸ்வர ஆலயம். இந்தியாவில் இருந்து கோயில் கட்டும் கலைஞர்களை வரவழைத்து இரண்டு வருடங்கள் ஓயாது திருப்பணி செய்து தாமே அப்பணியை மேற்பார்வை செய்து என்றும் நிலைத்திருக்கக் கூடிய இக்கற்கோயிலைக் கட்டி முடித்தார்.
* இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்க உறக்கம் நீங்கி விரித்துக் ாேள்
இந்து ஒளி 20
 
 
 

இந்து மாதிரவர்களின் பகுதி மாணவர்க ளிடமிருந்து மேலும் ייתו வரவேற்கிறோர்.
FIS-SENS AUrá A
ாதன் இந்து மகளிர் கல்லூரி
ாவை சிவகுருநாதன்
கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையிலே அமைந்துள்ள இவ்வாலயத்தில் தினமும் ஆறு காலப்பூசை நடைபெறுகின்றது. காலை 7 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடைபெறும் பூசைகளில் நித்தியாக்கினி வளர்க்கப்படும். அதன் பின்னர் சுவாமி அம்பாள் சமேதராக சிறிய தேர் ஒன்றில் உள் விதி வலம் வருவார். இது நித்திய உற்சவம் எனப்படும்.
பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் மகோற்சவம் சிறப்பாக நடைபெறும் விநாயகர், சோமஸ்கந்தர். அம்பாள் சுப்பிரமணியர் சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் ஐந்து தேர்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத் திருவிழாவுடன் மகோற்சவம் நிறைவு பெறும்.
தைப்பூசம், மகாசிவராத்திரி, ஆவணி மூலம், நவராத்திரி கந்த சஷ்டி, திருவெம்பாவை, நடேஸ்வர அபிஷேக தினங்களில் விஷேட பூசைகள் நடைபெறுகின்றன. மாதப்பிறப்பன்று சங்கிராந்தித் தீர்த்த உலாவும், பிரதோஷ தினங்களில் பிரதோஷ உற்சவமும், ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளில் பூரீ சக்கர பூசையுடன் ராஜராஜேஸ்வரி உற்சவமும் நடைபெறும் ஆடிப் பூரத்துக்கு முந்திய ஒன்பது நாட்களும் பூரீ சிவகாம சுந்தரி அம்பாளுக்கு அபிடேகம், பூசை இயந்திரபூசை இலட்சார்ச்சனை ஓமம், உற்சவம் ஆகியவை இடம் பெறும்
இறுதிநாளான ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.
கலை அம்சங்கள் நிரம்பிய தனிக்கருங்கற்களால் ஆன இக்கோயில் இலங்கை வாழ் இந்து மக்களின் கலைச்சிறப்புக்கும் பண்பாட்டு மேன்மைக்கும் பக்தி உணர்வுக்கும் உறுதியான வெளிப்பாடாக விளங்குகின்றது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், மீனாட்சி கந்தரரேஸ்வரம் போன்ற சிவாலயங்கள் வரிசையிலே பூரீ பொன்னம்பலவாணேஸ்வரம் இடம் பெற்றுள்ளது. இந்துப் பெருமக்களுக்கு நிலையான பெருமையை வரலாற்றில் குறிப்பிடும் தன்மை பெற்றது.
பொன்னம்பலவாணேஸ்வரத்தின் பெருமை உலகம் எல்லாம் பரந்து வாழும் இந்துக்கள் மத்தியிலே பரவவேண்டும். பொன்னம்பலவாணேஸ்வரர் உலகிலே சாந்தியும், சமாதானமும் நிலவ அருள் பொழிய வேண்டும் என்று நாம் எல்லாரும் அப்பெருமான்ை நோக்கி பிரார்த்தனை புரிவோமாக.அன்புமயமான சிவன் அகிலம் எல்லாம் நல்லமைதி நிலவ வழிவகுக்க வேண்டும் என்று பொன்னம்பலவாணேஸ்வரரை வேண்டுவோமாக.
ம் வருதலைப் போன்றது. பிறப்பு எனப்படுவது, வாதப் போன்றது. 'திரவன்னர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆணி

Page 23
பTழ்ப்பான நகரிலே கொழும்புத்துறை மேற்கில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் வதிரிபிட விநாயகர் கோயில் வரலாற்றுப் பெருமை கொண்டது. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் அரசர்களால் போற்றி வளர்க்கப்பட்டமைக்குப் பல சான்றுகள் உள்ளன.
இலங்கையிலேயே முதன்முதலாகத் தங்கியிருந்து மருத்துவம் பெறும் வைத்தியசாலை நிறுவிய பெருமை யாழ்ப்பானத் தமிழ் அரசர்களையே சாரும், மக்கள் பணியே மகேசன் பணியென்று இந்து சமய வழி நின்று நாடாண்ட யாழ். அரசர்கள் நாயன்மார்க் கட்டில் நிறுவி நடத்திய நாயன்மார் கட்டு முறிவுதெறிவு வைத்தியசாலை, சமய ஆசாரப்படி ஒழுகும் வைத்திய பரம்பரையால் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று சட்ட திட்டங்கள் வகுத்து வைத்தனர் யாழ். அரசர்கள்.
பலநூறு ஆண்டுகளுக்குமுன் தமிழ் அரசர்களால் இ ந்து சமய பாரம்பரியத்திற்கமைய நிருவகிக்க வழிவகுக்கப்பட்ட அவ் வைத்தியசாலை இன்றும் அதே முறையில் இயங்கி வருவது யாழ். தமிழ் அரசர்களது இந்து சமய வழிவந்த சமூகப்பணிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.
இவ்வைத்தியசாலையை நிருவகிப்பதற்கு ஆலோசனை கூறவும், ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் யாழ். அரசர்கள் மூன்று ஆலய தர்மகர்த்தாக்களுக்கு உரிமை வழங்கியுள்ளனர். அதில் கொழும்புத்துறைமன்றுளாடும் விநாயகப்பெருமான் ஆலய தர்மகர்த்தாவும் அடக்கம். இவ்வாறு சமயப் பணியுடன் சமூகப்பணியையும் இணைத்துக் கொண்ட பெருமை கொண்ட ஆலயம் வரலாற்றில் இடம் கொண்ட பழம் பெரும் கோயிலாகும்.
கல்விக் குழு
அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக்குழு பின்வரு
1. க.பொ.த. (உதரப் பரீட்சையில் இந்து நாகரிகம், இந்து கொழும்பு சிலாபம், புசல்லாவ ஆகிய இடங்களில் இல:
2. இந்துசமய சம்பிரதாயங்களை விளக்குமுகமாக (கும்பம்
வகுப்புகளையும், அதற்கான சமய தத்துவ விளக்கங்கள்
3. ஆங்கிலமொழி ஊடகத்தில் பயிலும் மாணவர் நலன்கரு
* செல்வம் பெருகியுள்ள காலத்தின் ஒருவ
சுருங்கும் வறுமையுள்ள நாலத்தில் பு:
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 

செல்வி. திருமகள் கயிலைநாதன், ஆண்டுைேசMங்கை&ர்ஆசிர்-திகாழிந்து-சி)
இலந்தைக்குளம் என்னும் குளமும், கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயமும், யோகர் சுவாமிகள் ஆச்சிரமமும் இக்கோயிலை அண்டி இருப்பது மேலும் பெருமை சேர்க்கின்றது.
போர்த்துக்கீசர் யாழ்ப்பான அரசைக் கைப்பற்ற பூநகரி வழியாக வந்தபோது இக்கோயிலடியில் பெரும்போர் மூண்டுள்ளது. போர்த்துக்கீசரை எதிர்த்து சங்கிவிமன்னன் படை இவ்விடத்தில் விரத்துடன் போரிட்டது. கோயில் குருக்களும் வாளேந்தி அந்நியருக்கெதிராகப் போரிட்டு மாண்டதாக வரலாறு உள்ளது. போர்த்துக்கீசரால் சிதைக்கப்பட்ட இவ்வாலயம் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது. போர்த்துக்கீசரால் சிதைக்கப்பட்ட வரலாற்றுப் பெருமையுடைய இந்துக் கோயில்களில் கொழும்புத்துறை விநாயகர் ஆலயமும்
இத்திருக் கோயிலுக்குப் பக்கத்தில் அதே வளவில் பழனியாண்டவர் கோயிலும் உள்ளது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் முக்கியவத்துவமும், இந்து சமயப் பாரம்பரியத்தின் சின்னமாகவும் கொள்ளப்படும் இத் திருக்கோயில் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகின்றது.
நம்பிக்கை கொண்டு வழிபடும் அடியார்கள் துன்பங்கள் போக்கி அருளும் கொழும்புத்துறை வதிரிபீட விநாயகர் அருளால் நாட்டில் நிலவும் துன்பம், துயரங்கள் நீங்கி நிம்மதி ஏற்பட வேண்டுமென்று பிரார்த்திப்போம்.
ச் செய்திகள்
ம் செயற்பாடுகள்ை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.
சமயம் ஆகிய பாடங்களுக்குத் தோற்றும் மாணவர் நலன்கருதி, வசக் கருத்தரங்குகள் நடத்துதல்.
வைத்தல்,தோரணம் கட்டுதல்,கோலமிடல் போன்ற) செயல்முறை ளையும் அளிக்கும் பயிலரங்குகளை நடத்துதல்,
நதி ஆங்கிலம் மூலம் இந்துசமய வகுப்புகளை ஒழுங்கு செய்தல்.
த. மனோகரன், துணைச்செயலாளரும், கல்விக்குழுச்செயலாளரும், அகில இலங்கை இந்து மாமன்றம்
1றுக்குப் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து அரியாத உயர்வு வேண்டும். 'கிதவள்ளுதவிர்
இந்து ஒளி
1

Page 24
. a
Religion comes from the Latin word "Religio" "-re"= back. "ligre" = to bring. That which brings back the soul with God is religion. Hinduism is the oldest of living religions. Hinduism is also known by the names "Sanatana Dharma" and "Waidika Dharma". Sanatana Dharma means 'eternal religion". Waidika Dharma means 'religion of the Vedas".
The Vedas are the foundational scriptures of Hinduism. The ancient rish is and sages of India have expressed their intuitive, spiritual experiences in the Upanishads, which are a part of the Vedas. Their experiences are direct and infallible. Hinduism regards the spiritual experiences of the rishis of yore as its authority. The priceless truths that have been discovered by the Hindu rish is and sages through millenia, that is through thousands of years, constitute the glory of Hinduism. It is a revealed religion.
Hinduism, unlike some other religions, does not dogmatically assert that the final emancipation of the soul, is possible only through its means and not through any other. Hinduism allows absolute freedom to the rational mind of man, in regard to questions on the nature of God, soul creation, form of Worship and the goal of life. This is the fundamental feature of Hinduis II.
This essay is mainly based on the summary of an article made by the late advocate A.C. Nadaraja, for Inany years the President of the Colombo Divine Life Society, on the article on Hinduism by Swami Sivananda in the Commemoration Volume issued by the World Parliament of Religions held at Rishikesh in April 1953.
However, there are slightly varying descriptions and definitions of Hinduis II by others. In my essay on "Hinduism and its Impact on Buddhism", published in London in 1992, in the Saddhatissa Commemorative Volume entitled "Buddhist Essays", I have described and defined Hinduism as given hereafter.
# பாரனைப் பண்புள்ளவனாகரர் பண்பற்றவனாகஜர் தெய்வதாக
இந்து ஒளி 22
 
 
 

=ப்ா"==ெ बाया
還A蠶
リー三ーリーエーエー=三ー -
hy. T. Duraisingam
The people of the Indian side of the Sindhu (the Indus) were called the Hindus by the Persian and the later Western invaders, and their civilization is called the Hindu civilization. From the Punjab, the civilization flowed over into the Valley of the Ganges, where it met with numerous cults of primitive tribes. In its southward advance, the Aryan culture came into contact with the Dravidian culture, and ultimately dominated it, though undergoing some modification from its influence.
As the civilization extended over the Whole of India, it suffered many changes, but it kept up its continuity with the old Vedic type developed on the banks of the Sindhu. The term "Hindu' had originally a territorial and not a religious significance. It implied residence in a well defined geographical area. Aboriginal tribes, savages and half-civilized people, the cultured Dravidians and the Vedic Aryans were all Hindus, as they were the sons of the same mother, The Hindu thinkers realized the fact that the men and women dwelling in India belonged to different communities, Worshipped different gods, and practised different rites.
In addition to this, outsiders had been settling there and had made for themselves a home in India. How was Hindu society built up out of materialso diverse, so little susceptible in many cases to assinilation, and scattered across a huge continent, measuring nearly two thousand miles from north to south and eighteen hundred miles from West to east?
In a few centuries the spirit of cultural unity spread through a large part of the land, and racial stocks of warying levels of culture became steeped in a common atmosphere. The differences among the sects of the Hindus are Illore or less on the surface, and the Hindus as such remain a distinct cultural unit, with a common history, a common literature and a common civilization.
உயர்த்தும் கருத்தே தம் எனப்படும் 'சுவாமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 25
Swami Sivananda has set down the Warious subdivisions that Hinduism has within its fold, such as Vedanta, Saivis II, Saktism, Waishnavism and so on. It has various cults and creeds. It is more a league of religions than a single religion with a definite creed. Hinduism pays respect to all these religions. Rig Veda declares "Ekam sat wipra bahudha Vadanti", that is, truth is one; Sages call it by Various names.
The Upanishads declare that all spiritual paths lead to the same goal, just as cows of Variegated colours yield the same white milk. Sri Krishna says in the Bhagavat Gita, "However men approach me, even so do I welcome them; for the paths that men take from every side are mine".
Schopenhaur studied the Upanishads and meditated on the thoughts of the Upanishads. He said that "the Upanishads are the solace of my life and they will be solace to me after my death also."
Religion is the practical aspect of philosophy. Philosophy is the rational aspect of religion. Hindu philosophy is a way of life. Religion is spiritualisation of human life for a Hindu. The religious history of the World tells us that from time in Ilemorial, India has been the home of great sages and rishis.
England is famous for industry: America for commerce; Italy for sculptural Works; but India is famous for its religious devotion, yogis and saints. The goal of a religious Indian is self-realisation, or attainment of God-consciousness through renunciation.
THE HINDUSCRIPTURES
The foundation of Sanatana Dha TI Thai is Sruti: Smiritis are its walls; the Puranas and Itihasas are the buttresses or supports. In ancient times, the Srutis Were learnt by heart. The teacher sang them to his pupils and the pupils sang them after him. They were not written in book form at first. All sects and philosophical systems accept the Srutis as the final authority. Smiritis stand next in authority to the Srutis. Smiritis are Dharma Sastras. They consist of four great works by sages, which deal with laws and regulations for the carrying on of the individual. family, social and national duties. The most important
* எண்ணுவதெல்லாம் உயர்வைப் ப கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Smiriti is Malu Smiriti. The Puranas consist of anecdotes, stories and allegories. They are meant for the masses, or the common people who are not able to study and understand the abstruse Wedas. They contain the essence of the Vedas in a simple for In. There are eighteen Puranas. They were Written by the greatsage, Weda Wiyasa. The Itihasas coInprise oftwo great poems or epics-Ramayana and Mahabharata. The lofty discources of Bhisma on Dharma and the BhagawatGita are contained in the Mahabharata.
The Upanishads, the Wedanta Sutras and the BhagawatGita are regarded as the most authoritative scriptures of Hinduism. Each system of philosophy treats of three main problems, namely, the God, the world and the soul.
SCHOOLS OF METAPHYSICALTHOUGHT
The three main schools of metaphysical thought are dualism (Dvaita), qualified monism (Wisishtadvaita) and pure monism (Advaita). They are different rungs in the ladder of yoga. They are not contradictory but complementary to one another. Madhava said "Iman is the servant of God" and established his Dvaita philosophy, Ramanuja said "man is a ray or spark of God" and established his Wisista dwaita philosophy. Sankara said "man is identical with Brahman or the Enternal Soul and established his Kevala Advaita philosophy.
THE WEDAS
The Wedals are the fountain-head of Hindu religion. The Vedas are the ultimate source to which all the religious knowledge of the Hindus can be traced. The Vedas are the oldest books in the library of man. Religion is of divine origin. It is revealed through intuition. It is embodied in the Wedas. Sruti literally means what is heard and Smiriti means what is remembered. Suti is revelation, SIIliriti is tradition.
The rishi is only a medium or an agent to transmit to people, the intuitional experiences which he receives. Hence the truths of the Vedas are called revelations. The Wedas are four: the Rig Weda, the Yajur Weda, the Sama Weda and the Atharya Weda. Each Weda consists of four parts-the Manthras or hymns, the Brahman as or explanations of the manthras, the Aranyakas and the Upanishads.
றியே எண்ணவேண்டும். அவ்வுயர்வு துவதை விடக்கூடாது. இதன்ைஞவர்
இந்து ஒளி 23

Page 26
THE UPANISHADS
The Upanishads contain the essence or the philosophical portion of the Vedas. The philosophy of the Upanishads is sublime, profound, lofty and soulstirring. The Upanishads are the concluding portions of the Vedas or the end of the Wedas. The teaching based on them is, therefore, called Wedanta. They for II the Gnana Kanda. They are the most important portion of the Wedas. They form the very foundation of Hinduism. They speak of the identity of the individual soul with the Supreme Soul. They reveal most subtle and deep Spiritual truths.
The most important Upanishads are Isa, Kena, Katha, Praslina, Mundaka, Mandukiya, Aitlereya, Taithireya, Chandogiya, Briha d- Araniyake a rld Swetas Watara. These a Te supremely authoritative. The subject matter of the Vedas is divided into:
(1) Karma Kanda or ritualistic section; it deals
with the various sacrifices and rituals;
(2) Upasana Kanda or worship section; it deals with the various kinds of Worship or meditation, and
(3) Gnana Kanda or Knowledge section; it deals with the highest knowledge of Nirguna LLLLLLLLS LLLLaL LLLLLLLHHLLLLLLL LLLL LLLLLLLGLLLLSL constitute the Karma Kanda; the Araniyaka, the Upasa Kanda; and the Upanishads the Gnana Kainda,
THE LAW OF KARMA
Ka IIIla Ineans not only action, but also the result of the action. The consequence of an action is nota Separate thing. It is a part of the action and cannot be parted from it. Any deed or any thought that causes an effect is called a Karma. The Law of KarTima I mea Ins LLaL aLHH LLLL LLLLLLLLS LLLLLLa CLaL LLLLLaLa LL a aaLaLaLaS aLLL effect must be produced thereto. A seed is the cause for the tree, the latter being an effect of the for Iller, The tree produces seeds and becomes the cause of the seeds. The Law of Karma is one of the fundamental doctrines of not only of Hinduism, but also of Buddhism and Jainism. As a man sows so shall he reap. This is the Law of Karma. If you do an evil action, you must suffer for it.
* சுயநஐரே ஒழுக்கக்கேதி சுந:மின்மையே நல்வோழுக்கம் இதுதான் ஒழுக்க
இந்து ஒளி 24

If you do a good action, you must get happiness. You are the master of your own fate, you are the architect of your own fortune. You are responsible for what you suffer. You sow an action and reap a habit. You sow a habit and reap a character, You sow a character and reap a destiny.
THREE KINDS OF KARMA
Karma is of three kinds, namely Sanchita (accumulated works), Prarabdha (fructifying works) and Agami (current works). Prarabdha is that portion of the past Karma, which is responsible for the present life. The past actions which have begun to take effect and which he has to experience. The whole lot of Sanchita Karma is destroyed by attaining kпowledge of Brahman or the Enternal. It can be greatly modified, by entertaining lofty, divine thoughts and doing virtuous actions. Agami Karina can be destroyed by expiatory rites or Prayachita, and by removing the idea of agency through Nimitta Bhav (the attitude of being an instrument in the hands of God), or Sakshi Bhaw (the attitude of a silent witness of the actions of the senses and the mind).
HINDUETHICS
Ethics is right conductor Sadachara. Without ethics, you cannot have progress in the spiritual path. Ethics is the foundation of Yoga. Ethics is the corner stone of Vedanta. Ethics is the gateway to God realisation. Malu SITiriti and the other Smiritis contain the code of conduct for man. Good conduct is the root of material and spiritual prosperity. It is good conduct that generates virtues. Ethical culture is the very pivot of spirituality,
WARNASHRAMA DHARMA
It is Dharma alone which keeps a nation alive. Dharma is the very soul of man. The duties of the different castes are called Warnadharma. The fouT principal castes of the Hindus are Brahmana, Kshatriya, Vaishiya and Sutra. The four Ashramas or stages in life are Brahmacharia, Grihasta, Wanaprasta and Sanniyasa. The principle of Varnashrama Dharma is one of the fundamental principles of Hinduism.
த்திற்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம் ஆகும் 'சுவாமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 27
Sri Krishna says in the Gita, "The four castes were emanated by me, by the different distribution of qualities and actions, Know me to be the author of them, though I am actionless and inexhaustible". The underlying principle in the caste system is division of labour. There is no question of higher or lower division.
There are three Gunas namely, Satva (purity), Rajas (extrovert tendency) and Tamas (inertia). Satwa predominates in Brahmanas. They are wise persons or thinkers. In some Rajas is predominant. These are Kshatrias. They are warriors and the ruling class.
In some Tamas is predominant. They are Waishias or traders. Sudras are servants. They serve the other three castes. Wit II ashrama Dharma is a characteristic feature of Hinduism. The caste system has degenerated into Adhar II na during the past centuries.
A Brah TiT is Tot a Brahmin, if he is Incot endowed with purity and good character. A Sudra is a Brahmin, if he leads a pious and virtuous life. Caste is a question of conduct and character. A SHIRAMLA LO HARMIA
There are four Ashramas or stages in life, namely Brahmachariya or the period of scholastic education; Grahasta or the period of family life; Wanaprasta or the period of seclusion; and San nyasa
or the life of renunciation. Each stage has its own duLies.
THE FOUR PATHS FOR GODREALISATION
The four main paths for God realisation are Karma Yoga, Bhakti Yoga, Raja Yoga and Gnana Yoga, Karma Yoga is suitable for a man of active tempera Inent, Bhakti Yoga for a man of devotional temperament, Raja Yoga for a nan of mystic temperament, and Gnana Yoga for a man of rational and philosophic temperament. Karina Yoga is the way of Selfless service.
The selfless Worker is called the Karma Yogin. Bhakti Yoga is the path of exclusive devotion to God. He who seeks the union through love or devotion is called the Bhakti Yogin. Raja Yoga is the way of self
* துன்பங்களிஜெல்லாம் கொடிய துன்பமாகிய ஆசை ாடரத் இன்பமாகிய பேரின்ப
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

restrailt. He Who seeks to have Lillion with the Lord through Illysticism is called a Raja Yogin. Gnana Yoga is the path of Wisdom.
He who seeks to unite himself with the Supreme Self through philosophy and inquiry, is called the Gnana Yogin. The Yoga of synthesis is the most suitable and potent form of Sadhana. In the mind there are three defects, namely Mala or impurity, Wikshepa or tossing, and Averna or Weil. The impurity should be removed by Worship or Upasana. The Weil should be to In as under by the practice of Gnana Yoga. Wikshepa or tossing of the mind should be controlled by the practice of Raja Yoga. It is only then that selfrealisation is possible. Only the Yoga of synthesis can bring about an integral development. The Yoga of synthesis will develop the human personality in the In OSL appropriate manner, and lead the aspirant towards the goal of perfection. To become har Inoniously balanced in all aspects is the ideal or religion. This can be achieved by the practice of the Yoga of synthesis.
The four paths are in fact one, in which the four temperaments emphasis one or the other of its inseparable constituents. Yoga is the method by which the Self can be seen loved and served. The foundation of Hinduism has been laid on the pivot of spiritual truths. The entire structure of Hindu life is built on eternal truths, which were discovered by the Hindu rishis or seers. That is the reason why the structure has lasted through scores of centuries. Few religions are so wery elastic and tolerant like Hinduis Ill. Hinduism is very stern and rigid regarding the fundamentals. But is very elastic in readjusting to the external formalities and the non-essentials. That is the reason Why it has succeeded in living through millennia, that is thousands of years. Hinduism is a World religion. The Hindus live in perfect harmony, peace and friendship with the followers of other faiths. Their tolerance and fellow feeling towards other religions are remarkable.
I conclude by quoting key-Words of Swami Sivanandaji's teachings:
Serve, Love, Give, Pierify, Meditate, Realise, Be good do good be kird be corri passiorate. Elgirie "Whoa P", know the Selfard be free.
என்னும் துன்பம் இல்லாது போனால், இந்த உலகத்தில் த்தை அனுபவிக்கல்ாம். இதன்ைஞன்ச்
இந்து ஒளி 25

Page 28
பக்தி பல வகை, ஆனாலும் பக்தி என்னும் போது நாம் எண்ணுவதெல்லாம் இறை பக்தியைத்தான். பக்தி என்பது நம்பிக்கை, கடவுள் மேலுள்ள அசையாத நம்பிக்கையே கடவுள் பக்தி, பண்பான வாழ்வுக்கு கடவுள் பக்தி கட்டாயம் வேண்டும். ஆனால், பக்தி இன்று பலரிடையே பகல் வேடமாக மாறி விட்டது. பழங்காலத்தில் பரமனை ஏழைப்பங்காளன் எனப்பகர்ந்தனர்.ஆம், ஏழைகளிடம் உண்மையான பக்தி உண்டு. பகட்டான பகல் வேடம் இல்லை. இதை விளக்க ஒரு கதை சொன்னார் ஒரு பெரியவர்.
'ஏழைக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட பெண் ஒருத்தி நாள்தோறும் விடியுமுன் சாணம், தெளித்து, முற்றத்தை மெழுகிக் கோலமிட்டு, மாலை சாய்வதற்குமுன் விளக்கேற்றி வாசலில் தினமும் வைத்தும் வந்தாள். அந்த வீட்டில் விரைவில் செல்வம் குவிந்தது. வெள்ளிக் கிழமை தோறும் விலையுயர்ந்த ஆடை அணிகள் அணிந்து அழகான பெண்ணொருத்தி அந்த வீட்டுக்குள் நுழைவதைக் கண்டஅப்பெண்ணின் மாமியார் வீட்டில் நுழையும் பெண்னைக் கண்டு"நீ யார்?" என்று கேட்டாள். "நான் தான் மகாலட்சுமி உன் மருமகளின் நற்காரியங்களுக்காக உன் வீடு தேடி வந்தேன்" என்றாள்.
மாமியாருக்கு பொறாமை ஏற்பட்டு, மருமகளிடம் "இனிக் காலையில் சானநீர் தெளிப்பதும், மாலையில் விளக்கேற்றி வைப்பதும் கூடாது' என்று தடுத்து விட்டாள். அடக்கமுள்ள மருமகளும் மாமியாருக்குத் தெரியாமல் காலையில் ஒரு விரல் நுனியில் சாணியை எடுத்து வாசலில் போடுவாள். மாலையில் ஒரு குடத்துக்குள் விளக்கை ஏற்றிவைப்பாள்.
தான் மருமகளைத் தடுத்த பிறகும் மகாலட்சுமி வருவதைக் கண்ட மாமியார்,"இன்னமும் ஏன் என் வீட்டுக்கு நீ வருகிறாய்” என்று கடிந்தாள். அப்போது மகாலட்சுமி " குடத்துக்குள் இட்ட விளக்குக்கும் குன்றிமணி சாணிக்காகவும் தான் இன்னமும் வருகிறேன்" என்று சொல்லி உள்ளே நுழைந்தாள்.
உள்ளன்போடு இறைவனை வழிபடும் ஏழைகளின் இல்லத்தில் இறைவன் வாழ்கிறான் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்தக் கதை. ஆனால் இன்றோ ஏழை பங்காளன் என்ற சொல்லுக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது. பக்தி பகல் வேடமாக மாறிகொண்டே வருகிறது. பணம் படைத்தோர் பலர் பக்திமான்களாகக் காட்டிக்கொள்கின்றனர். "ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்' என்பது இன்று வேண்டாத கதையாகி வேதனையைத் தருகிறது. பட்டுடுத்தி, பகட்டாகக் காரில் வந்து கட்டுப்பணத்தைக் காணிக்கையாக்கிபக்திக்கு விலைபேசும் எத்தர்கள் கூடிவிட்டனர்.
* உண்மை, நூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெங்ா ஆற்றல் விண்ணுலகியோ மண்ணுலகிலோன
இந்து ஒளி 26
 

ந. மகாதேவன் (பொருளாளர், அனைத்திலங்கை இந்து வாவிபர் சங்கம்)
இன்று சில ஆலயங்களில் 'காசேதான் கடவுளடா என்ற கீதம்தான் ஒலிக்கிறது. வெள்ளித் தட்டில் அள்ளிக் கொடுப்போரைக் கண்டதும் அர்ச்சகர் கூட துள்ளிக் குதிக்கிறார்.
ஆலயங்கள் சில வணிக நிலையங்களாக வளர்ந்து விட்டன. ஒவ்வொரு வகை அர்ச்சனைக்கும் ஒவ்வொரு கட்டணம் பக்தி விலைபேசப்படுகின்றது. சமயத்தத்துவம் பின்தள்ளப்படுகின்றது. பக்தர்கள் மனநிலை பாதிக்கப்படுகின்றது. ஆயிரக் கணக்கில் அளவின்றிச் செலவழித்து, அமர்களமாக இலட்சார்ச்சனை செய்து, "ஆயிரத்துக்குப் பூ மட்டும் வாங்கினேன், ஆயிரத்துக்கு நைவேத்திய சாமான்கள்,அர்ச்சகருக்கு ஒரு பச்சைத்தாள்" என்று ஆயிரங்களின் கணக்கையே பக்தியின் மதிப்பாகக் கொடுத்த ஒருவரிடம் "அப்படியெல்லாம் வாரி வழங்கி ஆண்டவனுக்குச் செய்ய நீ புண்ணியம் செய்திருக்கிறாய்" என்று எடுத்துக் கூறி அந்தப் புண்ணியத்தையும் நாம் விலைப் பொருளாக்குகிறோம்.
ஆனால் பக்தி என்பதைப் பக்திமான்கள் விவரிக்கும் விதமே வேறு
ஈழத்தின் புகழ்மிக்க பக்திமான் விபுலானந்த அடிகள் கடவுள் நாடும் பக்தியை பின்வருமாறு தெளிவுறுத்துகின்றார்.
"வெள்ளை நிற மல்லிகையோ, வேறெந்தமாமலரோ, வள்ளலினையடிக்கு வாய்த்த மலரெதுவோ, வெள்ளை நிறப்பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
இன்று பல இன மக்களாலும் போற்றிப்புகழப்படுகிறார் சத்திய சாயி பாபா. இன மத பேதமின்றி இன்னல்படும் மக்கள் பலர் பாபாவின் அருளை நாடுகின்றனர். நன்மை பெறுகின்றனர். நம்பிக்கை வைக்கின்றனர். அப்படிப்பட்ட மகான் சத்திய சாயிபாபா இப்படிக் கூறுகிறார் பக்தியைப் பற்றி
" மனத்தினுள்ளே பிரார்த்தனை செய், ஓர் அனா அல்லது இரண்டனாவுக்குக் கிடைக்கும் பழங்களும், மலர் மாலைகளும் எனக்குத் தேவையில்லை. உண்மையில் அவை உங்களுடையன அல்ல! உங்களுக்குச் சொந்தமானதும், தூயதாகவும், நறுமணமுள்ளதாகவும் உள்ள ஏதாவது ஒரு பொருளை களங்கமில்லாமல் நல்ல மனத்துடன், செய்த குற்றத்திற்கு மனம் வருந்தி கண்ணிரால் கழுவிக் கொடுங்கள்.
நீங்கள் கொண்டுவரும் பழங்களும், மாலைகளும் காட்சியிலுள்ள பொருட்களைப் போன்றவை. உங்கள் பக்திக்கு
Iம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய பகுமே கிடையாது 'சுவாமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆளி

Page 29
அவை ஒரு கண் கட்சியாக இருக்கின்றன. செய்ய இயலாதவர் பார்த்து இரங்கத்தக்க பக்திக் கண்காட்சி தேவையற்ற ஒன்று.
கடவுளை மனதில் உருவகம் செய்யுங்கள், செயல் என்னும் பழத்தாலும், உள்ளுணர்ச்சிகள், எண்ணங்களாகிய மலர்களாலும் அந்த இறைவனை வழிபடுங்கள். அவ்வித பக்தியையும் வழிபாட்டையும் நான் நேசிக்கிறேன்."
இப்படி அவர் உண்மையான பக்திக்கு வழிசொல்லித் தருகிறார். நமக்கு அந்த பக்தியின் ஆதாரம் நம்பிக்கை, அதற்கு ஒரு நிகழ்ச்சியை மகாபாரதத்திலிருந்து விளக்குகிறார்.
ஒருநாள் கிருஷ்னனும் அர்ச்சுனனும் போய்க் கொண்டிருந்தார்கள்.
கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்து "அது புறாவா?' என்று கேட்டார்.
அர்ச்சுனன் "ஆம், அது ஒரு புறாதான்' என்றான், கிருஷ்ணன் "அது ஒரு கழுகோ?' என்று உடனே மாற்றிக் கேட்டார்.
அர்ச்சுனன் "ஆம், சந்தேகமில்லாமல் அது ஒரு கழுகு தான்' என்றான்.
உடன்ே கிருஷ்ணன், "இல்லை அருச்சுனா, அது எனக்கு ஒரு காகம் போலத் தோன்றுகிறது. காகமா அது?’ என்றார்.
பதிலுக்கு அருச்சுனன், "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சந்தேகமின்றி அது ஒரு காகமேதான்'
என்றான்.
அருச்சுனன் தான் எதைச் சொன்னாலும் ஒப்புக் கொண்டதற்காக கிருஷ்னன் அவனைப் பாராட்டித் தட்டிக்
JI)
எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நட
* நீ எதையும் சாதிக்க முடியும். அ போதுமான அளவிற்கு உண்மையாக அடைகிறாய்.
ஒரு மனிதனோ, நாடோ தன்னம்பிக்க
* அறியாமைமிக்க, உயிரற்ற புல்பூண்
மேலானது.
* தன்னை இறைவனுக்குக் கொடுத்தல்
வேகுதானிய வருடம் சித்திரை=ஆனி

கொடுத்தார். அருச்சுனன் அது காகமா, கழுகா என்று ஆராய்ந்து தன் புத்திசாலித்தனத்தை நிலைநாட்டி, இறைவனிடம் வாக்கு வாதம் செய்யாமல் தன் பக்தியை நிலைநாட்டி விட்டான்.
அவன் கூறினான் 'என் கண்களால் பார்ப்பதை விட உங்கள் வார்த்தைகளில் உள்ள நம்பிக்கையே எனக்கு வலிவுடையதாகத் தோன்றுகிறது. உங்களால் அதைக் கழுகாகவோ, காகமாகவோ, புறாவாகவோ மாற்ற முடியும், நீங்கள் அதைக் காகமென்றால் அது காகமாகத்தானிருக்க முடியும். அதுவே ஆத்மீக வெற்றிக்கு வழியாகும்.'
இன்று சில கோவில்களுக்குச் சென்றால் அங்கு பக்தியுடன் வனங்க முடியாது. ஆத்ம சாந்தி அடைய முடியாது.
அங்கே நடப்பதெல்லாம் கேளிக்கைகளும் களியாட்டங்களும்தான். இந்த அவல நிலை மாற்றப்படவேண்டும்.
இவையெல்லாம் நமக்கு எடுத்துரைப்பது என்ன? உள்ளத்தைக் கடந்தவர் கடவுள். அவர் நம் உள்ளத்தில் உறைந்திருக்கிறார். அவரைத் தேடி எங்கும் அவைய வேண்டாம். ஆலயம் என்பது எமது ஆத்மா லயிக்குமிடம்,
கடவுள் விரும்புவதோ, நேசிப்பதோ பக்தர்களின் பகட்டையல்ல அவர்களது நம்பிக்கை மிக்க பக்தியைத்தான் என்பதை நாம் உணர வேண்டும். பனமும் பலமும் உள்ள பலர் இன்று பக்திமான்களாக வேடமிடுகின்றனர். பகட்டும் படாடோபமும் தான் இன்று பக்திக்கு வித்திட்டுப் பாராட்டும் பெறுகின்றன. இந்த நிலை மாறி பக்தி பனம் படைத்தோர்க்கும் பரம ஏழைகளுக்கும் ஒன்றுதான் என்ற நிலை என்று வரும், எப்போது இந்து சமயத்தின் உன்னத கோட்பாடுகள் உலகெல்லாம் பரவும் என்ற உண்மைப் பக்தனின் ஆசை நிறைவேறவும், இந்துசமயத்தின் சமத்துவ, சகோதரத்துவ சமரச வழி பிரகாசிக்கவும் ஒவ்வொரு இந்துவும் சிந்தனை செய்து புதுவழி காணவேண்டும்.
வேகானந்தர்
ம்பிக்கை இல்லையோ, அவனே நாத்திகன்.
ளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் நீ முயற்சி செப்பாத போதுதான் தோல்வி
கை இழந்தவுடனேயே அழிவு வருகிறது.
டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே
ன்ே உயர்ந்தவன். "சன்கிசிக்க்த்தர்

Page 30
இந்து சமயத்தில் தெய்வத்திற்குத் தாயுருவம் தந்து வழிபடும் பண்பு பண்டு தொட்டு நிலவிவருகின்றது.
இறைவனை அம்மையப்பனாகக் கண்டு போற்றும் பண்பைக் கொண்ட நமது சமயம் தாய்மைக்கு முதலிடம் வழங்கி வருகின்றது. தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்பது முதுமொழி.
உலகிலேயே இறைவனைத் தாயாகக் கொண்டு வழிபடும் சமயமாக இந்து சமயத்தையே கொள்ளலாம். வீரத்திற்கு துர்க்கையையும், செல்வத்திற்கு இலட்சுமியையும், அறிவுக்கு சரஸ்வதியையும் பெண்மையிலே உருவகித்துப் போற்றித் தொழும் நாம் பேசும் மொழியைத் தாய்மொழியென்றும், வாழும் பூமியைப் பூமாதேவியென்றும், இவ்வாறு எங்குமே தாய்மையைக் காண்கின்றோம்.
இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றாகிய ‘சாக்தம் சக்தியை அதாவது தாய்மையைப் போற்றும். தாய்மைக்கு முதலிடம் கொடுக்கும் வகையிலே அமைந்தது. உலகின் செயற்பாட்டிற்கு, இயக்கத்திற்கு சக்தி இன்றியமையாதது என்பது நமது கொள்கை. இவ்வாறு சக்திக்கு அதாவது தாய்மைக்கு முதலிடம் கொடுத்து வழிபடும் பண்பு மலையகத்தில் சிறப்பாக இடம் பெறுகின்றது.
மலையக நகரங்களிலும், தோட்டப்புறங்களிலும் பல அம்மன் கோயில்கள் உள்ளன. மலையக இந்து மக்கள் மத்தியிலே சக்தி வழிபாடு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. அம்மன் கோயில் திருவிழாக்காலம் மலையகத்தில் மிகச் சிறப்பான நாட்களாக அமைகின்றன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் சக்தி கொண்ட பல
அம்மன் கோயில்கள் சிறப்புற இருந்து அருள்புரிகின்றன.
மாத்தளை நகரிலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் மாசிமாத திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு அன்னையின் அருள் பெற்றுச் செல்கின்றனர். மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் இன்று
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய மூன்றையும் பெ அதை எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல் அவ
இந்து ஒளி 28
 

திருமதி. அருள்மொழி பத்மநாதன் -ஆசிரியை, கொ'டி.பீ.ஜாயா.ம.வி.
இலங்கையிலுள்ள இந்துக்களின் լճlE முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகின்றது. அம்மன் தேரேறிப் பவனிவந்து அடியார்க்கு அருள் வழங்கும் காட்சி
கண்கொள்ளாக் காட்சியாகும்.
அதே போன்று நாவலப்பிட்டி நகரிலும், கம்பளை நகரிலும் நுவரேலியா நகரிலும் அமைந்து அருள்புரியும் அம்மன் ஆலயங்கள் மலையக இந்துக்களின் பக்தி பூர்வமான
திருவிடங்களாக விளங்குகின்றன.
மலையகத்திலுள்ள தோட்டங்கள் தோறும் என்று கூறினாலும் மிகையல்ல. அங்கெல்லாம் அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. அங்கு திருவிழாக்காலங்களில் பக்திமயமான சூழலில் அடியார்கள் அன்னையின் அருள்நாடி, அவள்தாள் பணிந்து போற்றித் தொழுகின்றனர். நவராத்திரி
விரதமும் மலையகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
மாரியம்மா என்று மனம் மகிழ்ந்து உளமுருக வேண்டி நிற்கும் மலையக இந்துப் பெருமக்கள் மனதில் அம்மையின் அருள்கடாட்சம் நிறைந்து துர்க்கை அம்மன் அருளால் வீரமும், மகாலட்சுமியின் அருளால் செல்வங்களும், சரஸ்வதி தேவியின் அருளால் அறிவும், ஆற்றலும் மேலோங்க வேண்டும். மலையக இந்து மக்களின் வாழ்வில் ஒளியேற்றி உயர்வளிக்க எல்லாம் வல்ல சக்தியம்மனின் திருப்பார்வை படவேண்டும் என்று
பிரார்த்திப்போம்.
மாரிபொய்த்தால் நாட்டின் வளம் குன்றும். மாரியம்மன் கருணை கிட்டாவிட்டால் மக்கள் வாழ்வின் வளம் குன்றும் என்பது மலையக மக்கள் நம்பிக்கை. ஆதரவின்றி அல்லல் படுவர்களுக்கு அருள் தந்து ஆறுதல் அளிப்பவள் அன்னை சக்தி, மலையகத்தில் பலநூற்றுக்கணக்கான அம்மன் ஆலயங்கள் அமைந்து அருள் அளிக்கின்றன. அங்கெல்லாம் இந்துப் பாரம்பரியமும், பண்பாடும் சீர்பெற்று சிறப்படைய இந்துசமய நிறுவனங்கள் முன்னின்று செயற்பட வேண்டும்.
ற்றுள்ள ஒருபாப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், துக்கு உண்டு, 'சுவாமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 31
சென்ற இதழ் தொடர்ச்சி
கடந்த மார்கழி ம ாதத்தில் தஞ்சைப் பல்கலைக்கழகத்தி உலகச்சைவ மகாநாட்டில் ஆற்றிய ஆய்வுக் கட்டுரை)
ஏற்கனவே இராக தாள நடைகள் பண்களிலிருந்து வந்தனவென்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தேவாரங்களில் தாளங்ளையும் நடைகளையும் உற்று நோக்கும் பொழுது காணப்படும் தற்காலிகத் தாளங்களும் நடைகளும் பின்வருமாறு:
தாளம் - ஜாதி
1. ரூபகம் =சதுச்ரம் 2. திரிபுடை திசுரம், சதுச்ரம் 3. ஏகம் 4. ஜம்பை - சதுச்ரம் 5. मTIL| - கண்ட மிஸ்ரம்
முதலியனவைகளாம்.
நடைகள் பின்வருமாறு:
1. விளம்பம் 2. மத்திமம் 3. துரிதம்
இதில் ஒரு நடையிலேயோ இரண்டு அல்லது மூன்று சேர்ந்த நடைகளிலேயோ பாட்டுக்கள் பாடப்படும் மரபைத் தேவாரங்களில் காணலாம்.
ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த சொல் அசைகள் வகையினைக் கட்டளை என வழங்குவது மரபு தானாதனா தான, தன முதலிய அசைச் சொற்களை வாய்ப்பாடுகளாகக் கொண்டு எழுத்தெண்ணி அடிவகுக்கும் முறையாக கட்டளைகளை நம்பியாண்டார் நம்பி திருநீலகண்ட யாழ்ப்பானர் மரபில் பிறந்த பாடினி ஒருவரைக் கொண்டு மூவர் தேவாரப் பாடல்களுக்கு இசையமைத்தார். இன்னென்ன பண்களுக்குரிய பதிகங்கள் இத்தனை இத்தனை கட்டளைகட்கு உரியன என்று திருமுறைக் கண்ட புராணம் கூறுகின்றது. யாழ்நூல் என்ற ஆய்வு நூலில் தேவாரவியல் என்ற பகுப்பின் கண் இக்கட்டளைகளைப் பகுத்துக் காட்டியுள்ளார்கள் தமிழ்ப் பெரும் புலவர் துறவுச் செல்வர் விபுலாநந்த அடிகள்.
நட்டபாடைப் பண்ணின் கீழ் 1,2,3,4,5,6,7,8 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
தக்கராகத்தின் கீழ் 12,3,4,5,6,7 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் கானலாம்.
பழந் தக்க ராகத்தின் கீழ் 1,2,3,4,5,6 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் கானலாம்.
* கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகி:ே பந்த்தான ஆாl
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 

நில் நடைபெற்ற சட்டத்தரணி ம.நாகரத்தினம்
(தேவாரப் பண்ணிசை மன்றத்தலைவர், விவேகானந்த சபைக்குழுத்தலைவர்)
பண் தக்கேசியின் கீழ் 1.2 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
குறிஞ்சிப் பண்ணின் கீழ் 1,2,3,4,5 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
வியாழக் குறிஞ்சியின் கீழ் 1,2,3,4,5,6,7,8,9 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம். இவைகளில் திருதாளச் சதி ஏழு கட்டளைகளிலும் திருவேக பாதம் எட்டு. கட்டளைகளிலும், திருவெழுக் கூற்றிருக்கை ஒன்பது கட்டளைகளிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.
மேகராகக் குறிஞ்சியின் கீழ் 1,2,3,4 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பண் இந்தளத்தின் கீழ் 1,2,3,4,5,6,7 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பண் சீகாமரத்தின் கீழ் 12 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் கானவாம்.
பண் காந்தாரத்தின் கீழ் 1,2,3,4,5,6,7,8,9,10 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பியந்தைக் காந்தாரத்தின் கீழ் 1,2,3 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் கானலாம்.
நட்டராகத்தின் கீழ் 1,2,3,4 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பண் செவ்வழியின் கீழ் 1 கட்டளையில் அமைந்த LJITá, érs?]gsl á, TITENATFUITLh.
காந்தார பஞ்சமத்தின் கீழ் 1,2,3,4,5 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பண் கொல்லியின் கீழ் 1,2,3,4 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பண் கெளசிகத்தின் கீழ் 12 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காண்லாம்.
யம் எாதயும் சாதித்துவி முடியாது "க்ரிரிவேகானந்தர்
இந்து ஒளி 29

Page 32
பண் பஞ்சமத்தின் கீழ் 123 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பண் சாதாரியின் கீழ் 123 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம்.
பழம் பஞ்சுரத்தின் கீழ் 1,2,3,4,5,6 கட்டளைகளில் அமைந்த பாக்களைக் காணலாம். இவைகளில் திருவியமகம் 5 கட்டளைகளிலும் மாலைமாற்று 6 கட்டளைகளிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.
அத்தாளிக்குறிஞ்சியின் கீழ் ஒரே கட்டளையில் அமைந்த பாக்களைக் காணலாம். இவைகளை எங்களுக்களித்த திருமுறை கண்ட புராணத்திற்கு சைவசமயிகள் என்றும் பெருங்கடன்பட்டுள்ளனர் என்று கூறலாம்.
மேலும் எந்தப்பண் எந்த நேரத்தில் பாடவேண்டும் எனும் மரபு தொன்று தொட்டு வந்துள்ளது. புறநீர்மை, காந்தாரம், பியந்தைக்காந்தாரம், கெளசிகம் இந்தளம், திருக்குறுந்தொகை, தக்கேசி நட்டராகம், சாதாரி நட்டபாடை, பழம் பஞ்சுரம், காந்தார பஞ்சமம், பஞ்சமம் ஆகிய பண்கள் பகற்காலத்தில் ஒதும் பகற் LJETITEHETITI.
தக்கராகம், பழந்தக்கராகம்,சீகாமரம்,கொல்லி, கொல்லி கெளவானம் திருநேரிசை திருவிருத்தம், வியாழக்குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி ஆகிய பண்கள் இராக்காலத்தில் ஒதும் இராப்பண்களாம்.
செவ்வழி,செந்துருத்தி, திருத்தாண்டகம் ஆகிய பண்கள் பகல், இரவு எக்காலமும் பொதுவாக ஒதும் பொதுப் பண்களாம்.
செவ்வழிப் பண் ஞானசம்பந்தப் பெருமான் ஒருவரே பாடியுள்ளார். செந்துருத்திப் பண் சுந்தரர் ஒருவரே பாடியுள்ளார்.
திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் ஆகியவை அமைந்த திருப்பதிகங்கள் திருநாவுக்கரசர் ஒருவரே பாடியருளிய மட்டிலுள்ளன.
ஆளுடைப் பிள்ளையாரின் பண்ணின் இசையிலும், பக்திப் பெருக்கிலும் மகிழ்ந்த இறைவன் அவர் வேண்டிய அற்புதங்களைச் செய்ய அருளினார். பாலை நிலத்தை நெய்தலாக்கிய அற்புத நிகழ்ச்சியை பிள்ளையார் பாடிய திருப்பதிகத்திலுள்ள வருணனைப்பகுதியே சான்று பகருகின்றது. திருவாவடுதுறையில் உலவாக்கிழி பெற்றது."இடரினும் தளரினும் என்று தொடங்கும் பதிகத்தில்
இதுவோ எமையாளுமாறிவதொன் றெமக்கிலையேல் அதுவோ ஆனதின்னரு விாவடுதுறையரனே"
எனும் வரிகளால் உறுதியாகின்றது.
இனி இறைவனைத் தலைவனாகக் கொண்டு வாட்டமுறும் தலைவியொருத்தியின் நிலையைத் தோழி இறைவனிடம் முறையிடுவதாக ஒரு பதிகம் அமைகின்றது.
* யார் ஒருவன் தனக்குள்ள கெளரவமும் மரியாமதயும் டே அவமானத்தைத் தான் அடைகிற
இந்து ஒளி 30

நிறைமொழி மாந்தராகிய திருஞான சம்பந்தர் மலர்ந்தருளிய திருப்பதிகங்கள் இம்மறைமொழி மந்திரங்கள் வணிகனுடன் போந்த கன்னியின் துயர் நீக்கக்கருதிய ஆளுடைப் பிள்ளையார் இறைவனைத் தலைவனாகக் கொண்டு அகப் பொருட்துறை அமையப்பாடிய இத்திருப்பதிக மந்திரத்தால் கன்னியின் மாமனாகிய வணிகன் உயிர் பெற்று எழுந்தனன் எனக் கொள்வதே ஏற்புடையதாகும்.
'மறையார்மருகல் மகிழ்வாய் இவள்ை இறையார் வளை கொண்டெழிப் பல்வினையே"
எனும் வரிகளால் விளக்கப்படுகிறது.
மேலும் திருமறைக் காட்டுக் கதவம் திருக்காப்பிடத் திருஞான சம்பந்தர் பாடிய அப்பதிகத்தின் முதல் பாடலிலேயே,
இதுநன் கிறை வைத்தருள் செய்க எனக்குள் கதவந்திருக் காப்புக் கொள்ளுங்கருத்தாவே"
(a 17.3.1)
என்னும் அடிகளால் தெளிவாகின்றது. மதுரையில் திருமடத்துக்கு சமணர் தீயிட்டபோது அது பாண்டியனைப் பற்றி வெப்புநோய் ஆக்கியதற்கு திருஞானசம்பந்தர் திருவாக்கே காரணம் என்பது
"டையவே சென்று பாண்டிற்காகவே”
(-309)
என்ற தொடரால் விளக்கப்படுகின்றது. திருநீற்றைப் போற்றி பாண்டியன் உடலிலுள்ள தீப்பிணி தீரப்பாடல் சாற்றியமை திருநீற்றுத் திருப்பதிகத் திருக்கடைக் காப்பு வரிகளால் தெளிவாகின்றது.
ஆலவாயான் அருளைப் போற்றி. ஞான சம்பந்தன் தேற்றித் தென்ன்னுடலுற்றுதிப்பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்து" (고- 2211)
ஆளுடைப் பிள்ளையாரால் பாண்டியன் பேரவை முன்னர் தீயில் இடம்பெற்று ஏடு வேவாது பச்சையாய் விளங்கியது. "போகமார்த்த' எனத் தொடங்கும் திரு நன்னற்றுப் பதிகமே என்பதை” தளிரிள் வளரொளி' எனுந் திருப்பாட்டில் குறிப்பாக அவரே உணர்த்தியுள்ளார். (நு 345). மேலும்
"கொற்றவன் எதிரிடை எரியினில் இடஇவை கூறிய சொற்றொரி ஒருபது"
என்ற திருக்கடைக்காப்பும் சான்று பகருகின்றது. இவ்வாறே ஞான சம்பந்தரால் வைகையில் இடப்பெற்ற ஏடு சிவபிரான் திருவருளால் எதிரேறிச் சென்றது என்பதும் அருகர் பரப்பிய பழிச்சொல் கெட்டு சைவ சமயம் தழைத்தோங்கியது என்பதும் பின்வரும் திருக்கழு மலைப் பதிகத்தின் காப்பினால் தெளிவாகின்றன.
ய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் ன் சுவாமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 33
பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம் தெழுநிலை வையெதிரே வருந்தியிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே"
(凸37112} முள்ளியாற்றில் தம் பாவன்மையால் பிள்ளையார் கோலின்றி ஒடம் செலுத்தி திருக்கொள்ளம் புதூர் வந்து சேர்ந்ததென்பது
"ஒடம் வந்தனையும் கொள்ளம் புதூர்'
(IEl.354.5)
எனுந் தொடர் திருக்கடைக் காப்பில் உள்ளமையாலும் தெளிவாகும். இம்முள்ளியாறு இக்காலத்தும் 'ஒடம் போக்கியாறு' என்ற பெயருடன் விளங்கி வருதல் இல் வரலாற்றின் மெய்மைக்கு பெருந்துணை புரிவதாகும். ஆண் பனை குலையின்ற அற்புதச் செயல் திருவோத்தூரில் நிகழ்ந்தது. இஃது அப்பதிகத்துத் திருக்கடைக்காப்பில்
குரும்பை பாண்டனை பீன் குவை மோத்தூர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ii.5)
என்பு பெண்ணாக்கிய அற்புதம் "மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் திருப்பதிகத்தில் சிவபெருமானுக்குத் திங்கள் தோறும் நிகழும் திருவிழாக்களை எடுத்துக்கூறி இத்தகைய விழாக்களின் விளக்கம் கானாது இவ்வுலகினை நீத்துப் போகின்றனையோ என்று வினவுவராகப்போதியோ பூம்பாவாய் என்று பண்முறை பாடியிருத்தல் அறியத்தக்கது. (2183 (1-10)
இவ்வற்புதம் மயிலாப்பூரில் நிகழ்ந்தது என்பது மரபு.
ஆளுடைப் பிள்ளையார் இறைவனை நேரே கண்டு திருவருள் கலந்த பால் ஊட்டப் பெற்றவராதலால் முத்தமிழ் விரகர் அப்பெருமான் திருவுருவத்தை தம் திருப்பாடல்களில் எழுதிக் காட்டுகிறார். ஒளி வடிவினனாகிய சிவபிரான் காட்டிய கருணையில் அவரை 'அடியொடு முடியறியா அழலுரு' "எரிதரும் உருவினர்' " ஒளிதிகழ் உருவா” என்றெல்லாம் எடுத்துரைப்பார். இறைவனின் பல்வகைக் கோலத்தை "அம்மையொரு பாகனாக,' "அறவனித்தவனாக', "திருவோலகத்தனாக” பாடியிருக்கும் கவிதைகள் பலவாகும்.
இறைவன் ஈரெழிற் கோலமாக தன் திருவுருவில் அம்மையுடன் வீற்றிருக்கும் காட்சி பற்றிப்பாடும் பதிகங்கள் சில உள்ளன. இத்திருக்கோலத்தில் "கழலும் சிலம்பும்', 'தோடும் குழையும்" ஆகியவற்றை அழகு பெறப் பாடுவார் பிள்ளையார். இது,
"தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாள' எனும் அடியால் அறியக் கிடக்கிறது. அர்த்த நாரீசுவரர் திருக்கோலம், ஆணழகும், பெண்ணழகும் கலந்து விளங்குவதால் ஈரெழிற் கோலம் என்று புகலி வேந்தர் புகழ்ந்திருப்பது பொருந்துவதாகும்.
முத்தமிழ் விரகர் இறைவனுடைய வீரச் செயல்களினைக் கூறும்போது அவருடைய எட்டு வீரச் செயல்களையும் "அட்ட
* சர்வ சக்தி வாய்ந்த தடவுளுடைய அருள் வந்தடை இதன் அறிந்து நீ வெறும் தர்.
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

வீரட்டான' தலங்களில் பாடியிருக்கிறார். மார்க்கண்டேயர் உயிரைக் கவர வந்த சுற்றன்ை உதைத்த வீரம் திருக்கடவூரில் நிகழ்ந்தது என்பது மரபு.
"வஞ்சகமற்றடி வாழ்த்த வந்த கூற்றஞ்ச இதைத்தனன் ஆஞ்செழுத்துமே”
என்னும் அடிகளால் இச்செயல் விளங்கக் கிடக்கிறது (தி.க.தே.280-1) திரு விற்குடியில் சலந்தானை அழித்த வீரம் இடம் பெற்றது. தவம் பெரிது தருக்கியவன் இச் சலந்தரனை திகிரியால் அறுத்தான் இறைவன் என்பதை
"சந்தரனை அழியும் வகை ஆழியினால் ஈரும் வகை செய்து அருள் புரிந்தவன்’(திசுதே.3271)
எனும் அடியால் விளங்கக் கிடக்கிறது.
மன்மதனை எரித்த வீரச்செயல் திருக்குறுக்கையில் நிகழ்ந்ததென்பது மரபு
"மாலோடயன் இந்திரன் ஆஞ்சமுள் என்கொள்
காசியார் சிவைக் காமினைக் காய்ந்த கருத்தே
எனும் அடிகளால் அறியக் கிடக்கிறது.
அந்தகாசுரனை அழித்த வீரச்செயல் திருக்கோவலூரில் நடந்ததென்பது மரபு.
'ஆாரரானவர் ஏத்த அந்தகன்கள்ை குலத்தில் ஆய்த்ததே"
எனும் அடியால் விளங்கக் கிடக்கிறது. (திருவிற்குடி)
தக்கனை அழித்த பெரும் வீரம் ஆளுடைய பிள்ளையாரால் எண்னற்ற இடங்களில் கூறப்படுகிறது. இவ்வீரம் திருப்பறியலூரில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மலையான் மகளை இழந்த சிறு மதியினைப் பெறாது அவன் செய்வித்த வேள்வியினை அழித்தவன் இறைவன்.அடுத்து வருவது திரிபுரம் எரித்த வீரச் செயல். அச் செய்தியையே குறித்துச் சொல்லும் பதிகங்களை பிள்ளையார் திருவாக்கிற் காணலாம். அச்செயல் நடந்தது திருவதிகையில் என்பது மரபு. அடுத்து பிள்ளையார் திருவாக்கிற் காணலாகும் வீரச் செய்கை பிரமன் சிரமறுத்த செய்தியாகும். இது திருக்கண்டியூரில் நிகழ்ந்ததென்று கூறுவது மரபு. ஈற்றில் தாருகாவனத்து இருடியர் விடுத்த யானையை உரித்துப் போர்த்த வீரச் செயல் பிள்ளையாரால் சில பாடல்களில் கூறப்படுகிறது. இது வழுவூரில் நடந்ததென்பது மரபு.
ஆளுடைப் பிள்ளையார் கூறும் இயல்புகள் பின்வரும் சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கிக் கூறுவதைக் கானலாம். இறைவன் உடனாய் நிற்கும் நிலையை ஆளுடைப் பிள்ளையார் எடுத்துரைக்கும் நிலைகள் உள.
சித்தாந்த நூல்கள் சுத்தாத்வைத நிலை" எனக் குறிப்பது இந்நிவையே. இறைவன் ஐம்புலன்களை வென்றவர்க்கு
யும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். க்கம் செய்யாதே. reகிதஷ்ணர்
இந்து ஒளி 31

Page 34
அண்மையில் உள்ளவன். செருக்குற்று மயங்கிய மாலும் அயனும் ஆகிய இருவருக்கும் அரியவனாக உள்ளவன். அரியவனாய் நிற்கும் அண்ணல் எளியவனாய் நின்று தன்னை வழிபட்டுருகும் அடியார்களது வேண்டுகோட்கிணங்கி ஆட்கொள்ளும் தண்ணளி உடையவன்.
"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயென்றருள் புரியும் எம்பெருமான்'
"உன்னின்று உவகை தருகிாம்' என்றெல்லாம் இறைவன் உயிர்கட்கு செய்யும் நிலை வேறுபாட்டை தமிழ் விரகர் தம் பாடல்களில் ஆங்காங்கு கூறிப் போற்றும் இயல்பினராவர். உயிர்கள் பல என்பதும் அவை அழியாத நிலை பெற்றவை என்பதும் உயிர்கட்கு ஒரு தலைவன் உள்ளான் என்பதுவும், பிறப்பு, இறப்பு என்பன இரண்டையும் கடந்து சென்று சேர்வதற்குரிய வீடு உண்டு என்பதும் திருஞானசம்பந்தர் வற்புறுத்தும் திருநெறியே ஆகும். இனி உயிர்கள் அறியாமையை விளைவிக்கும் நல்வினை, தீவினை என்னும் இருவகைப் பாசங்களால் கட்டுப்பட்டுள்ளன என்பதும் அவரின் கூற்றாகும். மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்க உணர்வாகிய மருள் உயிர்கட்கு உண்டு. இங்கு கூறப் பெறும் இருள், வினை, மருள் என்பவற்றையே ஆணவம், கன்மம், மாயை என்றனர் ஆகம நூலோர் என்பது மறைமலையடிகளார் கூற்று. உயிர்கள் இறைவன் உணர்த்தினாலன்றி உணரமாட்டா இயல்பினை உடையன. அவற்றுக்குத் தக்கநிலை வருங்கால் கருணையால் உணர்த்திப் பற்றிறுப்பது பரம் பொருளின் நிலை.
"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயென்றருள் புரியும் எம்பெருமான்'
என்று வரும் அடிகள் இக்குறிப்புடையனவே. இறைவன் உலகத்தோடும் உயிர்களோடும் ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் உள்ளான் என்பதை திருவிழிமிழலைத் திருப்பதிகத்துப் பாடலில் விளக்குகிறார் பிள்ளையார்.
நோய் முதல் ஒன்றாய் இரு பெண்ணான்குணமூன்றாய் மாமறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் ஆறார் சுவை ஏழோசையொடெட்டு திசை தானாய் வேறாயுடன் ஆண்ானிடம் விழிமிழலையே'
என்னும் பாடலால் புகலிவேந்தர் புலப்படுத்துகிறார். சிவஞான சித்தியார் பின்வருமாறு பிள்ளையார் கூறிய இப்பெரு நிலையை ஆறு நூற்றாண்டுகளுக்கு பின்பு உரைக்கின்றது.
'உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒழியாய் ஓங்கி அலகிலா உயிர்கள் கண்மத்து ஆணையின் அமர்ந்து செல்வத் தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்தவின்றித் தானே நிலவுசிர் ஆவேனாகி நின்றவன் நீங்கா தெங்கும்"
* யார் ஒருவன் தாக்குள்ள கெளரவமும் மரியாEதயும் ே அவமானத்தைத் தான் அடைகிற
இந்து ஒளி 32

முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகட்கு ஏற்ப எடுத்த பிறவியில் அவ்வினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களை உயிர்கள் துய்க்கும் இயல்பினார். இதனையே பிள்ளையார் திருநீலகண்டப் பதிகத்தில்,
'அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்' என்றுரைப்பர் இதனையே பிற்காலத்து சைவ சித்தாந்த ஆசிரியர் 'அலகிலா வுயிர்கள் கன்மத்து ஆனையின் அமர்ந்து செல்ல' என்று மொழிதல் பொருந்துவதேயாகும். இறைவனை நினைத்துச் செய்யும் எவ்வினையும் அறவினையே. அவனை மறந்து செய்வது அறமாகாது. அவனை மறந்து செய்த தக்கனின் வேள்வி தீவினையாகித்துன்பம் விளைவித்தமையையும், சண்டேசர் தம் தந்தை தாளை விசிய கொலை வினை இன்பம் விளைவித்தமையையும் தம் திருவாக்கில் திருஞான சம்பந்தர் கூறியுள்ளார். இருள், வினை, மருள் என்ற பாசம் திருவருளால் நீக்கப் பெற்ற உயிர்கள் சிவப்பேறு பெற்று உலகின் கண் சீவன் முக்தர்களாய் இருப்பார்கள் எனத்திருஞான சம்பந்தர் கூறியுள்ளார். இனி "மலம்' என்று குறிக்கப் பெறுவது ஆனவமே என்று கூறுவர். அது உயிர்களோடு ஒன்றுபட்டு நின்று அவற்றின் செயல், அறிவு விளைவுகளை மறைத்து நிற்கின்றது.
"விளையாததொர் பரிசில் ஒரு பக பாச வேதனை ஒண்தளையாயின் தவிரவ்வருள் தலைவன்'
என்ற வரிகளால் இத்துன்பங்களைத் தவிர்ப்பவன் இறைவன் ஒருவனே என்று இயம்பியுள்ளார். இங்ங்னம் சைவ சித்தாந்தத் திருநெறித் திறங்கள் முப்பொருள் பற்றிய ET । சித்தாந்த சாஸ்திரங்கள் வருமுன்னரே ஆளுடைய பிள்ளையார் திருவாக்கில் காணப்படுகின்றன. மேலும் ஆளுடைப் பிள்ளையார் அவர் காலத்தும் அதன் முன்னும் வாழ்ந்த நாயன்மார்களைத் தனது பாடல்களில் கூறியுள்ளார். அபர் நீதியாரது கோவணத் தொண்டு அவர் பாடலில் காணப்படுகிறது. கண்ணப்பர் வரலாற்றில் வாய் நீர் உமிழ்ந்து காளத்தியப்பர்க்குத் திருமுழுக்காட்டியதும், கண்ணிடர்ந்து அப்பியதும், பிரானருள் பெற்றதும் குறிக்கப்பட்டுள்ளன. இதனை
"கண்ணப்பர்க் கருள்செய்த கயிலை எங்கள் அண்ணல்" என்று கூறுகிறார். குலச்சிறையார் அடியார் வழிபாடு செய்வதில் சிறந்தவர் என்பதும், ஆலவாயண்னல் மாட்டு ஆரா அன்புடையவர் என்பதும் தென்னவற்கு அமைச்சர் என்பதும், திருவேடத்திற்கு சிறப்புத்தரும் இயல்பினர் என்பதும் உரைக்கப்பட்டுள்ளன. கோச் செங்கட் சோழர் முற்பிறப்பில் சிவந்தியாக இருந்தும், அம்பர்பெருந்திருக்கோயில், ஆனைக்கா போன்ற கோயில்களை கட்டுவித்தார் என்பதையும் பாலறாவாயர் தம் பதிகப் போக்கிற் பகர்ந்துள்ளார். சிறுத்தொண்டாது திருத்தொண்டின் சிறப்பு அவர் தொண்டுக்கு உகந்து சிவபிரான் காணபதிச்சரத்தில் எழுந்தருளி அவருக்கு அருள் வழங்கியதும் அவர் வேண்டிடத் தாம் திருச்செங்காட்டுக் குடித் திருப்பதிகம் பாடியதும் ஆகியன தமிழ் விரகரால் குறிக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு புகலிவேந்தர் அடியார்களின் சிறப்புப்பற்றி கூறியிருக்கின்றார்.
பாய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறாளோ அத்தகையவன் ான், 'சுவாமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 35
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே"
என்பது திருமந்திரம், திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறை என்று கூறப்படுகின்றது. திருமந்திரம் பாடியவர் திருமூலர்.
திருமந்திரத்திலுள்ள மூவாயிரம் பாடல்களில் கடவுள் வாழ்த்தும் ஒன்று. இப்பாடலும் வெறுமனே சொற்களைக் கோவைப்படுத்தித் திருமூலர் அருளவில்லை.
ஓராண்டு காலம் உலகின் முழுமுதற் தெய்வமாகிய எல்லாம் வல்ல சிவபெருமானை நினைந்து தியானம் செய்து அருளிய பாடலாகும்.
நந்தியென்றால், எருது, விடை ஏறு இவ்வாறு பொருள்படினும் வெறுமனே மாடு என்று பலர் சிந்திப்பதனால், நந்தி சிவன் தான் என்ற பொருளை மறந்து விதண்டாவாதம் செய்கின்றனர்.
திருமூலர் பெரிய புராணத்தில் பேசப்படுகின்றது உண்மை. ஆனால் திருமூலர் காலம் பெரிய புராண காலமென்று கடறமுடியாது.
கைலாயத்திலிருந்த முனிவர் அகத்தியரைத் தரிசித்தபின் கைலாயம் திரும்பும் போதுதான் ஒரு அற்புத சம்பவத்தில் அந்த முனிவர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தார்.
இறைவனால் அருளப்பட்ட எழுதா மொழியாகிய ஆகமம், தமிழில் எழுதுவதற்காக முனிவரின் சடலம் எரிந்து விடுகிறது. இறந்த மூலனின் உடலில் புகுந்த முனிவரின் உயிர் திருமூலராகி உலகிற் சைவமும் சைவம் அனுட்டிக்கும் தமிழரும் உய்ய வேண்டித் திருமந்திரம் செய்த திருமூலர் எல்லாம் வல்ல எம்பெருமான் நந்தியாக இருந்து ஞானவிநாயகனைத் தந்ததாக "நந்தி மகன் தனனை ஞானக்கொழுந்தினை'யென்று பாடுகிறார்.
இவ்வாறு பல பாடல்களில் நந்தி சிவபெருமானேயென்று வரையறுத்துத் திருமூலர் பாடுவதை திருமந்திரத்திற் பரக்கக்கான முடிகின்றது.
குருவே சிவனெனக் கூறினன் நந்தி குருவே சிவேென்பதுகுறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரை/னர் விற்றதோர் கோவே'
# கட்டுவதே ஒழுக்கக்கேடு அடிநப&ள்ேைதன்பொழுக்கக் இதுதான் ஒழுக்கத்
- வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 
 

சைவநன்மணி, சிவமயச் செல்வி புலவர் பூரீ விசுவாம்பா விசாலாட்சி அம்மையார்
என்றும்,
தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த கோனந்தி பெந்தை குறிப்பறிவாரில்லை வானந்தி யென்று மகிழும் ஒருவற்கு தானந்தியங்கித் தனிச்சுட ராமே" என்று எம்பெருமானே நந்தியெனத் திருமூலர் பேசுகிறார்.
அதாவது தானே சிவபெருமானென விளங்கும் நந்தியங் கடவுள் வகுத்தருளிய சீலம், நோன்பு, முதலியவற்றுள், இறவாத நானெறியுள் அறிவு நெறியாகிய நன்னெறியின் கண் காணப்படுகின்ற திருவருள் முறைமையினை நல்கியருளிய நந்தியாகிய சிவபெருமான் அவனுடைய திருவருட் குறிப்பினை அறிவாரில்லை. அவனருளால் அறிவார்க்கு அவன் மேலோங்கிய சிவன் எனக் காணப்படுவன். அவ்வுண்மையினைக் கண்டு ஆன்மாக்கள் பெருமகிழ்வு கொள்ளும் அச்சிவனே மாலைக் காலத்து விளங்கும் அருட் சோதியுமாவான்.
எனவே நந்தி என்பது சிவன்தான் என்பதைத் திருமூலர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.
மணிவாசகப் பெருமான் திருப்பள்ளியெழுச்சிப் பதிகம் முதலாவது பாடலில் "ஏற்றுயுர் கொடியுடையாய் எனையுடையாய் பள்ளி எழுந்தருளாயே' என்று பாடுகின்ற பாடலிலிருந்து "ஏற்றுயர் கொடி" என்ற அடிகளில் எல்லாம் வல்ல எம்பெருமானே சைவசமயச் சின்னக் கொடியாக நந்திக் கொடியை வைத்திருப்பது புலனாகிறது.
இஃது இவ்வாறிருக்க பண்டைக் காலத்தில் நந்திக் கொடி இருந்திருக்கின்றது. போகப்போக காலங்கள் உருண்டோட நந்திக் கொடியின் ஞாபகமற்று வேறு ஏதாவது கொடிகளை இன்றுவரை நாட்டிவருவதுவேதனையாக உள்ளது.
நந்தியின் நிறம் வெண்மையான இடபத்தை ஒவியமாக மிருகமாகக் காணப்படும் போது சிவபெருமானின் சிந்தனை வரும் என்பதை மறந்து விட்டார்கள். ஆனால் உண்மையான சிவபக்தர்கட்கு நந்தியை ஒவியத்திலும் சிற்பத்திலும் உயிருடனும் கண்டால் சிவபக்தி ஊற்றுக் கேணி போலச் சுரக்கின்றது.
பல காலமாகத் தாய் நாட்டிலும் சேய் நாட்டிலும் நந்திக் கொடி பறந்த ஞாபகமில்லை. நந்தி வாகனம் சிவன் கோயில்களில் காணமுடிகின்றது.
கொழும்பு சைவமுன்னேற்றச் சங்கமும் அதன் தலைவரும் நந்திக் கொடிகளைப் பெற்று கொழும்பில் இருக்கும் இந்து நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கும் செயல் பாராட்டற் LITEgJ.
"மேன்மைகொள் சைாநிதி விளங்குக உலகமெலாம்"
திற்கு நாம் கொதிக்கக்கூடிய ஒரே இயக்கத்தார் ஆகும் 'சுவாமி விவேகானந்தர்
இந்து ஒளி 33

Page 36
(யாழ். மத்திய கல்லூரியில் அகில இலங்கை இ மாமன்றமும் இணைந்து நடத்திய சுவாமி விவே: யாழ். மாநகரசபை முன்னாள் துணை முதல்வர்
உலகத்தில் தோன்றிய உன்னத மகாள்களைப் போற்றி அவர்கள் காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொள்வது பண்பட்ட மனிதரின் இயல்பு. நல்ல சிந்தனைகளை மக்கள் மனங்களில் பதியச்
செய்யும் வல்லமை கொண்ட பெரியவர்கள் இன, மத, மொழி, நாடு போன்ற சகல வேறுபாடுகளுக்கும் அப்பாலிருந்து
நோக்கப்படவேண்டியவர்கள்.
இந்து மதத்துறவியான சுவாமி விவேகானந்தர் அந்த வகையிலே உலகப் பொது மனிதராக, உலகுக்கே வழிகாட்டியாக விளங்கினார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நன்கு உணர்ந்து கொண்டால் அவரைப் போன்ற ஒரு வழிகாட்டி நம் நாட்டிற்கும் வந்ததால் நாம்
பாக்கியம் செய்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
a_FU er ú பொதுமனிதராக ET STEILIO LLUIT ET சமதர்மவாதியாகத் திகழ்ந்தவர் சுவாமிகள், சமதர்மம் என்னும்போது அரசியல், பொருளாதார நிலைகளைத் தான் எவரும் கருத்தில் கொள்வார்கள். ஆன்மீக சிந்தனையாளராக, வழிகாட்டியாக விளங்கிய விவேகானந்தர் மனிதகுலம் முழுவதையுமே இன, மத, மொழி போன்ற சகல வேறுபாடுகளுக்கும் அப்பாலிருந்து ஏற்றத்தாழ்வற்ற ஒரே நிலையில் நோக்கிய சமதர்மவாதி. அவரது சிக்காக்கோ சர்வசமய மகாநாட்டு சொற்பொழிவு அதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
இன்று உலகத்திற்குத் தேவையானது சாந்தியும், சமாதானமும். இவற்றை அடைய ஆன்மீக வழியே சிறந்தது. சுவாமி விவேகானந்தர் காட்டிய பாதை அதாவது உலகமக்கள் யாவரும் சகோதரர்கள் என்ற தத்துவம் உண்மையிலேயே
சமாதானத்திற்கான நல்ல அறைகூவலாகும்.
* கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகிலே மகத்தான காரி
இந்து ஒளி 34
 
 

ந்து மாமன்றமும் யாழ். மத்திய கல்லூரி இந்து கானந்தர் இலங்கை விஜய நூற்றாண்டு விழாவில் திரு.எம்.ஜி. பவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
FELJT LEEF, FfFT பிறந்த | ΠΕΙΤΙΤΕΤ ஜனவரிமாதம் 12ம் திகதி இந்தியாவில்ே இளைஞர் தினமாகக்
கொண்டாடப்படுகின்றது. இலங்கையிலும்
அன்றைய தினம் இளைஞர் தினமாகக் கொண்டாட அகில இலங்கை இந்துமாமன்றம்
போன்ற அமைப்புகள் முன்னின்று
செயற்படவேண்டும். கவாமிகளின் பரந்துபட்ட
சிந்தனை இளைஞர் மத்தியிலே ஆழப்பதிந்தால் உலகில் பகை எது? போர்
எது? சாந்தியும், சமாதானமும் அல்லவா நிலவும்.
விவேகானந்தர் வழிவந்த நம்நாட்டின் பெருந்தகை சுவாமி விபுலானந்தர் ஆற்றிய பணி சிந்திக்கப்பட வேண்டியது. விவேகானந்தர் காட்டிய வழியிலே செயல்பட்ட விபுலானந்தர் போல் மக்கள் பணிக்குத் தம்மை அர்ப்பணிக்க நல்ல உள்ளங்
கொண்டவர்கள் முன்வரவேண்டும். அதுதான் சுவாமிகளுக்கு செய்யும் கைமாறு. வெறும் விழாக்களுடன் இருந்து விட்டால்
பயனில்லை என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.
விவேகானந்தரின் இலங்கை வருகையை முன்னிட்டு யாழ்ப்பானத்திலே நடைபெறும் நூற்றாண்டுப் பெருவிழாவிலே
கலந்து கொண்டு உரையாற்றக் கிடைத்தமையை யாழ்ப்பான
முஸ்லீம் என்ற முறையிலே பெருமையாக நினைக்கின்றேன்.
சுவாமிகள் காட்டிய வழியிலே யாழ்ப்பான மண்ளிைலே சமதர்ம சிந்தனை நிறையவேண்டும். நிம்மதி நிலைக்கவேண்டும். தமிழ் பேசும் மக்கள் ஒருதாய் மக்களாக ஒன்றுபட்டு வாழ வழியேற்பட வேண்டும். அதற்கு சுவாமிகளின் சிந்தனைகள் வழிகாட்டவேண்டும். தமிழ் பேசும்
மக்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள துன்ப இருள் அகல வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
யம் எதையும் சாதித்து விட முடியாது. 'கிரெமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 37
பேலியகொடை பூடு பூமாரி அம்பாள் ஆலய பிரதம குரு கவிஞர் குறிஞ்சி இசைஞன், பிரம்மபூரீ இலட்சுன ஐயர் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் அடங்கிய நூலொன்று
"தெய்வீக இசைப் பாடல்கள்' என்ற பெயரில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியன்று வெளியாகியிருக்கிறது. சர்வதேச இந்துமத குருபிடத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலில் தெய்வத் துதிப்பாடல்களுடன், சில பொதுவான பாடல்களும் இடம் பெற்றிருக்கின்றன. சம காலத்திற்குப் பொருத்தமான வகையில் அமைந்ததாக "ஒரு தாய் பிள்ளைபோல் வாழலாம்", "சமாதான வெண்புறாவே பாதியில் நின்று விட்டாயோ'நல்லூர் கந்தா நலம்தானா' போன்ற தலைப்புக்களில் பாடல்கள் கானப்படுகின்றன.
"நல்லூர்க் கந்தா நலம் தானா? உன் நாயகி இருவர் சுகம்தானா? அல்லலுறும் தமிழைக் காக்க வேண்டும், அகதிகள் வாழ்க்கை மாறவேண்டும்' என்று நூலாசிரியர் நல்லூர் முருகனுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் சமகாலப் பிரச்சனையை நன்கு வெளிப்படுத்துகிறார்.
"காலையில், விழித்தெழு தம்பி. என்று ஆரம்பமாகும் பாடல், சிறுவன் ஒருவனுக்கு நல்லறிவூட்டும், கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.பாரதியார், மகாத்மா காந்தி ஆகியோரின் சிறப்புக்களை சித்தரிக்கும் பாடல்களும் நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
இன்றைய உலக நிகழ்வில் மனிதர்களின் நிலைமைகளை, 'கலியுகத்தில் மனிதர்கள்', 'விந்தையான மனிதர்கள்', 'இதுதான் உலகத்தின் நியதியடி' போன்ற தவைப்புகளில் அமைந்த பாடல்கள் மூலம் நூலாசிரியர் நன்கு தெளிவாக சித்தரித்துக் காட்டியுள்ளார்.
மலையகத்தின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுவதாக
g: EE ፵፱ எங்கள் மலைநாடு'மலையகமே பல்லாண்டு வாழ்க" போன்ற பாடல்கள் அமைந்திருக்கின்றன.
இந்த நூலில் காணப்படும் பாடல்கள் ஒவ்வொன்றும், அர்த்தமுள்ள நல்ல கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருப்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம். பெருமளவில் காணப்படும் எழுத்துப் பிழைகளை தவிர்த்திருந்தால், நூலின் மதிப்பு மேலும் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் சொல்லிவைக்க வேண்டும்,
இந்த உங்கம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம் இங்கு நாம் நம்மை மினi
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 

நூலாசிரியரின் இத்தகைய ஒரு முயற்சி வெகுவாகப்
பாராட்டத்தக்கது.
இந்த நூலில் வெளியாகியிருக்கும் பாடல்களுள் ஒன்றை, "இந்து ஒளி சஞ்சிகையில் பிரசுரம் செய்வதில்
மகிழ்ச்சியடைகிறோம்.
-அ. கனகசூரியர்,
அமிழ்தினும் தமிழிசை அவையத்து வாழ்க ஆயகலைகள் வளர்த்தே வாழ்க இறைவா உன்புகழ் என்றென்றும் வாழ்க ஈடில்லா நின்கருணை இதயத்தில் வாழ்க - அமிழ்
உதவி செய் மாந்தர் உயர்ந்தே வாழ்க ஊக்கமளிப்பவர் இதயம் வாழ்க எழுதும் கலைகள் நிலைபெற்று வாழ்க ஏழ்மையைப் போக்கி ஏறுபோல் வாழ்க - அமிழ்
ஒழுக்கம் தவறா மனிதர்கள் வாழ்க ஓதிக் கற்கும் உத்தமர் வாழ்க ஐயம் நீங்கி அன்புடன் வாழ்க
ஒளடதும் போலவே ஐயுற வாழ்க =அமிழ்
பக்தியைப் பேணும் பண்டிதர் வாழ்க பாடித் துதிக்கும் பாவலர் வாழ்க கொடுக்கும் கரங்கள் நலம்பெற வாழ்க இடுக்கண் நீங்கி என்றும் வாழ்க - அமிழ்
இயற்கை வளங்கள் அழிவில்லாது வாழ்க இன்பமே எங்கும் பொங்கிட வாழ்க
அன்பும் அறனும் காத்தே வாழ்க
என்னுயிர் தமிழே உலகெல்லாம் வாழ்க - அமிழ்
V . ليس
:காாக்கிக் கொன்ரூந்தற்காக அந்திருக்கிறோர்கனாமி விவேகாந்தர்
இந்து ஒளி 35

Page 38
T ... Institute of AN, s i al II 獸 SI LI LI di e 5 (Chellai) is proud to host Lle: ] 15 P 1T ܨ. InteITlational
Ciferencē
Se Illinar
on Skanda-Murukan Lobe held December 28-30, 1998. The event will bring together for the first time scholars of various disciplines from around the World sharing a common interest in the composite Aryan- Dravidian god Skanda - Murukan and will also feature presentations by English-articulate devotees from India and other countries in the region.
Since late Vedictines in the Sanskrit tradition and perhaps far earlier among proto-Dravidian and tribal peoples of the South, the vigorous and collplex deity Skanda or Murukan has exerted a powerful influence upon Indian literature and religious thought. Even today, his cult continues to command the allegiance of Tillions in South India, Sri Lanka, Malaysia and wherever there are expatriate Tamil communities.
The need exists for greater dialogue among scholars of Skanda Murukan and the community of informed devotees. An international conference in Chennai that brings scholars and learned Murukan bhaktas together Will provide an un equaled opportunity for scholars and bhaktas alike to exchange findings and insights. By holding the three-day forum at the campus of the Institute of Asian Studies 16 km south of Chennai, participants including Englisharticulate bhaktas from across South India, Sri Lanka, and the region at large may gather for discussions in
The three impurities are Anara, Maya and th
இந்து ஒளி 35
 
 

First International DInference Semill:12T
Skanda - MULTITULUk2aIRTA
Ceteraj. 25-350 Jecer 7J Ebero 4793
ELin atmosphere conduci ve to vigorous intellectual exchange.
For scholars and devotee alike, the event represents an extraordinary opportunity to meet and interact with exceptionally well-informed Murukan bhaktas and scholars. Un doubtedly, the First International Conference Seminar On SkandaMurukan will long be remembered as a watershed in the study of one of the World's great religious and literary traditions.
Scope of the Seminar
The First International Conference Seminar will accept presentations concerning the cult of Skanda-Murukan from earliest times up to the present as considered from these disciplinary perspectives:
* History * Art History * Literature * Religion * Mythology Folklore * Philosophy * Anthropology * Sociology
Multi-media presentations including video productions (of less than one hour duration), slide presentations and photo exhibitions are also being accepted. The Conference will also host dramatic performances such as Murukan Tiruviaiyatal and Walli Tirumanan in the Bharata Natyam genre as performed by the Sri Kanci Kamakodi Tiruppukazh Mandali of Chennai and other performing artists.
MuTuka Il Conference Web Site On the Internet
The II situte of Asian Studies (Chennai) and the First International Conference Seminar on Ska IdaMurukan Inow hawe their own sites on the World Wide Web. They may be visited at these Internet addresses:
Home Page Intere addres5
e one caused by actions. (Sirablied: Againa)
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 39
Institute of Asian Studies......... http://xlWeb.com/heritage/asian Skanda-Murukan Conference. http://xiweb.cornheritage/murukan Muugan Bhakti., http://xlweb.com/heritagelskanda
The Website is updated weekly to keep up with developments, such as:
planning for Conference panel discussions; * topics, synopses and contact info of participating
scholars; * hyper-links to related WWW & ftp digital
TESOLIICES. video documentary projects in progress; and
* planning of Aru Padai Veedu post-conferencetour
Post-conference tour of Art Pada i Weed sites
An optional post-conference tour of Teno WIlled Murukan shrines of Tamil Nadu is also being planned for Conference delegates. The intent is to give scholars additional time in each other's company while touring Skanda-Murukan's Aru Padai Veedu andother cult centres in Tamil Nadu. Following a separate morning tour to Mahaba lipuram, the tour will wisit Tiruttani Subrahmanya Swami Tirukkovil near Chenni on the evening of 31 December -- the evening of the colorful Tiruppukazhi festival when throngs of Murukan devotees assemble to Wiew artistic performances and mark the New Year by ascending the hill's 365 steps amidst choirs singing Tiruppukazh verses. The customized tour of sacred sites Illy include:
Fron Hin are born the many (Froர Hiri are forma tሀሮ argel aid பிரத Iteart, and I'irdi, and t and flye பEாமு எய் 1: reaf.
1 ܒ+1 5 ܡܒ ܪ
Oure Cor IrīOLISTIEST, faki Ig சா and 21ction, is Prere III i II flye 1 alயாழ - For tje JOIuli IIIIIIrer
ー一ー
* பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால் தவிர சூனியத்தைச் சரணை
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி
 
 
 

* TiTuttili * TITLICELLIT *** MLL di * Swami Malai * Tirupparnkunram *. Palani * Tanjavur * PicOli * Tiruchy, Fund - raising cffort
It is not the responsibility of participating scholars to raise finds for the staging of the First International Sciminar on Skandal-Murukail. Other concerned individuals including the Working and International Committees are seeking out potential sponsors but the success of the conference also depends upon adequate financial support from a
variety of sources including the business community.
For more information, contact
Dr. G. John Samuel, chair IIlan Working Committee or Patrick Ha Tigan, Secretary Working Coliittee Institure of Asian Studies
Cheminal Inche Ti, Sholinga mallur P.O. Chelli Ó COC) I 19) Indial
Tel 44-496-1662
Fax (091) 44-496-0959 Email ias gxlweb.com (Dr. G. John Sa Illuel)
harrigan (@xl.web.com (Patrick Ha Trigan)
Website http://xlweb.com/heritage)
| Deiffe lic Eing, TTFT
e TE ard CDTI
(MIndaka Upாthrd)
In ay Knowledge சleபாரதிere and
al i பாlettered trate
(Margendra Agama)
அது கடைசியாக இறைவனைக் கண்டு பிடிக்குமே டயாது. கவிஞர்கண்திைன்
இந்து ஒளி 37

Page 40
GouëIIIII.3, Hişintfl#I_g சிவயோக சுவாமிகள் ந நிரந்தர நினைவாலயத்
அன்பான அடியார்களே!
சிவபூமி என்று திருமூலரால் சிறப்பிக்கப்பட்ட எங்கள் நாட்டில் அவதரித்த புகழ் பூத்த தவஞானி யாழ்ப்பாணம் கொழும்புத்துறை சிவயோக சுவாமிகள். அவர் ஞானத்தின் திருவுருவமாக, நடமாடும் தெய்வமாக விளங்கி தன்னைச் சரண் அடைந்தோர்களையெல்லாம் தன் உபதேசங்களால் நன்னெறி காட்டியவர். அன்னாரின் நல் உபதேசங்களும் வழிகாட்டலும் முழு மனித சமுதாயத்திற்கும் சென்றடைய வேண்டுமென்ற பெருநோக்கினால் குருபரனின் நேர்வழிச் சீடர்கள் கொழும்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேட்ட பிரதி ஆளுநர் திரு. ச. ஈஸ்பரதாசன் அவர்களின் தலைமையில் சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியம் ஒன்றினை 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாலாம் திகதி ஆரம்பித்தனர்.
இந் நிதியம் ஆரம்பத்தில் வெள்ளவத்தை சிவானந்த நிலையத்திலும் இப்பொழுது பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் மாதந்தோறும் ஆயிலிய நட்சத்திரத்தில் சுவாமியின் திருவடி வழிபாடு, மாகேசுர பூசை என்பவற்றை ஒழுங்காக நடாத்தி வருவதோடு அவ்வப் பொழுது குருபரனின் போதனைகள் அடங்கிய சிறு நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு வருகின்றது. அத்துடன் பாடசாலை மாணவர்களிடையே சுவாமியின் நற்சிந்தனைப் பாடல் மனனப் போட்டியினை நடாத்திப் பரிசில்களும் வழங்கியுள்ளது. இப்பணிகளையும் புராண படனம் 'திருமுறை முற்றோதல் சிவத்தியானம் போன்ற இன்னோரன்ன சிவப்பணிகளைத் திறம்படச் செய்வதற்கு நிரத்தர நிலையம் ஒன்று இன்றியமையாதது.
இதை உணர்ந்து இந்நிலையம் அமைப்பதற்கு நிதிதிரட்டும் நோக்குடன் சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியக் கட்டிட நிதி ஒன்றினை ஆரம்பித்துள்ளது. இந் நிதி இறைவரித் தினைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இந்நிதிக்குத் தந்துதவும் நன்கொடைக்கு வருமானவரி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இன்றுவரை ஏறக்குறைய பத்து இலட்சம் ரூபா இக்கட்டிட நிதிக்கு நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. இப்பணத்தைக் கொண்டு கொழும்பில் ஒரு கட்டிடத்தைக் கட்டவோ அல்லது ஒரு சிறு கட்டிடத்தை வாங்கவோ இயலாதென்பதை நீங்கள் அறிவீர்கள். இத்திருப்பணியினை நிறைவேற்றுவதற்கு ரூபா எழுபத்தைந்து இலட்சம் வேண்டுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற குருபரனின் அன்பர்கள் அடியார்கள், அபிமானிகள் ஒவ்வொருவரும் மனமுவந்து, இன்னும் காலம் தாழ்த்தாது பொருள் உதவி செய்து கூடிய விரைவில் நினைவாலய நிர்மானத்தை நனவாக்கும்படி நிதியம் உங்களைக் கேட்கின்றது. மனமுண்டானால் இடமுண்டு என்ற பொன்மொழியை மனதிலிருத்தி நாம் செயற்படுவோமானால் மிக விரைவில் நிரந்தர நிலையத்தை அமைக்க முடியுமென்பது நிதியத்தின் முழு நம்பிக்கை,
+ - ܨ
* எப்போதுமே திரும்பிப் பாராதீர்கள் உங்கள் பார்ன பயந்து ஓடாதீர்கள். திரும்பி எதிர்த்து நில்லுங்கள். plief>
இந்து ஒளி 38
 
 
 
 

அடியார்களுக்கு ஒரு பணிவன்பான வேண்டுகோள் ம்பிக்கை நிதியம் கொழும்பில் நிர்மானிக்கவிருக்கும் திற்கு தாராளமாக நன்கொடை தந்துதவுங்கள்.
சிறுதுளி பெரு வெள்ளம். அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவோம் வாருங்கள்.
நன்கொடையைகாசோலையாகத் தர விரும்பும் அடியார்கள் குறுக்குக் கோடிட்ட காசோலையாக'சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியக் கட்டிடநிதி, இலங்கை வங்கி பம்பலப்பிட்டிக்கிளை சேமிப்புக் கணக்கு இலக்கம் 100 370 194656" எனக் குறிப்பிட்டு தலைவர் சிவயோகசுவாமிகள் நம்பிக்கை நிதியம் 846 லொறிஸ் றோட், கொழும்பு-04 என்ற முகவரிக்கு அனுப்பவும். Remitance to be made favouring Sivayoga Swami Trust Building Fund, Bank of Ceylon, Banbalapitiya, Savings A/C No. 100 370 1946.66 and to be sent to Mr. S. Easparathasan, Chairman. Sivayogaswami Trust of Sri Lanka, 846, Lauries Road, Colomb0-04 பணமாகத் தரவிரும்பும் அடியவர்கள் தலைவர் ச. ஈஸ்பரதாசனிடம் அல்லது டாக்டர் சோ.சண்முகசுந்தரன் என்பவரிடம் gsu.5 (Lpi sif GJITgiL-06, (Dr. N. Sa IIIlugasundaran No.5 LLLLLL LLLLLLLaaS LLLLLLLLmLLLSa00SSTTTTT TLLLLLL TTT TTTS TSTTS ஆறுமுகத்திடம் அல்லது பொருளாளர் திரு. கு. மகாலிங்கத்திடம் பனத்தைக் கொடுத்துப் பற்றுச் சீட்டை உடன் பெற்றுக் கொள்ளவும்.
மேலும் கட்டிட நிர்மானப் பணியினை நிறைவேற்றுதற் பொருட்டு சுவாமிகளின் அடியவர் எவராயினும் முன் வந்து இப்பணிக்குப் பொருத்தமான கட்டிடத்தையோ அல்லது இப்பணிக்குப் பொருத்தமான கட்டிடம் அமைக்கக் கூடிய நிலத்தையோ மனமுவந்து அன்பளிப்புச் செய்தால் இந் நிதியம் அதனைப் பெரும் பேறாகக் கொள்ளும், சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியம் மேற்கொண்டுள்ள இத்தூய பனிக்குத் தாங்கள் அளிக்கவிருக்கும் தாராள நன்கொடைக்காக நிதியம் தங்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளதாயும் மிக்க நன்றியுடையதாயுமிருக்கும்.
நீதிமிகுந்தர் Wெற்கு:தார் நிதி குறைந்ததிர் காசுகள் தTரீர்
"கொடுத்தார்க்கு முண்டோ குறைதான வரை படுத்தார்க்கு முண்டோ அடுக்கள்- எடுத்தான் தEத்துத் தத்தளிக்கச் செய்த சிவனைத் தலையால் கிணங்குந்தர்க்கு"
-நந்திந்தனை
ச. ஈஸ்பரதாசன் க. இ. ஆறுமுகம் கு. மகாலிங்கம் (தலைவர்) (செயலாளர்) (பொருளாளர்) OLSaS LLLLLLLLS LLLllaLS KKS LlLGLLLHaL LLLLLaLaSS 42. Ik L.
C01011b0 - 3 C - 4.
தொபே.எண். 586643 தொ.பே.எண் 575562 தொ.பே.எண். 538057
"வ முன்னோக்கியே இருக்கட்டும். எந்தச் சமயத்திலும் ாத் துரத்திவரும் சக்திகள் ஓடிவிடும் விதிவிவேக்பீல்த்தச்
வெகுதானிய வருடம் சித்திரை-ஆனி

Page 41
புதியன பொலியும் சித்திரைப் புத்தாண்டு
இந்துக்களாகிய எமது புத்தாண்டு சித்திரை மாதப் பிறப்புடன் ஆரம்பிக்கின்றது. இன்னாள் எமக்கு ஒரு மங்களகரமான நாளாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முது மொழிக்கினங்க நாமனைவரும் புத்தாண்டில் புதிய கருமங்களையும் நிகழ்வுகளையும் எதிர்ப்பார்ப்பதுவழக்கம் புத்தாண்டில் எமக்குச் சகலதும் நல்லனவாக நடக்க வேண்டுமென்ற எண்னத்தோடு வருடம் பிறக்கும் நேரத்தில் முற்றத்தில் நிறைகுடம் வைத்துப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றுச் சூரிய உதயத்தின் போது சூரியனுக்குப் பாற்பொங்கல் பொங்கிப் படைத்து கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து உற்றார், உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று உறவாடி புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறோம்.
சித்திரை முதல் நாள் எமது வருடம் பிறக்கின்றபடியால், ஆண்டு முழுவதும் நாம் எவ்வித குறையுமின்றிச் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்ற நினைவுடன் அன்றைய தினம் நல்ல முகூர்த்தத்தில் கைவிசேஷம் பரிமாறுதல், எமது தொழில்களை நாளுக்கு ஆரம்பித்தல், வியாபார நிறுவனங்கள் தங்கள் புதுக்கணக்குகளை ஆரம்பித்தல், மானவர் தங்கள் கல்வியை ஆரம்பித்தல் ஆகியன எல்லாம் ஆரம்பமாகும்.
சித்திராபூரனை
ஒவ்வொரு மாதமும் பூரனை வந்தாலும் கூட சித்திரை மாதப்பூரனை எமது மக்களுக்கு ஒரு அதி விசேட தினமாகும். வேறு எந்த விரதத்தையும் அனுட்டிக்காதவர்களும் தாயை இழந்தவர்கள் சித்திரைப் பூரணையன்றும் தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையன்றும் விரதம் அனுட்டித்துப் பிதிர்க்கடன் நிறைவேற்றத் தவறுவதில்லை. சித்திரா பூரணை விரதம் மற்றைய பூரனை விரதங்களை அனுட்டிப்பதன் பவனைக் கொடுக்க வல்லதாகையால் இவ்விரதத்தைச் சகலரும் அனுட்டித்தல் மிக இன்றியமையாததாகும்.
சித்திர குப்தன் வழிபாடும், சித்திரைக் கஞ்சியும்
சித்திரா பூரணையையொட்டி சகல சீவராசிகளின் கனக்குகளையும், எழுதிவைக்கும் சித்திரகுப்தரின் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்தவும் மகிழ்விக்கவும் விரதமிருப்பதும் வழிபாடுகள் செய்வதும் சித்திரகுப்தனாரின் கதைபடிப்பதும் அதனைத்தொடர்ந்து சித்திரைக் கஞ்சிவழங்குவதும்பண்டு தொட்டு நடந்து வரும் எமது பாரம்பரிய வழக்கமாகும். நாம் இறந்தபின் நரகத்திற்குச் செல்லாதிருப்பதற்கும் யம பயமில்லாதிருப்பதற்கும் இவ்விரதமும் விழாவும் அனுட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பூரீ நடேசரபிஷேகம்
பூநீநடராஜப் பெருமாலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆறு விசேஷ் அபிஷேகங்களிலொன்று சித்திரை மாதம் திருவோன நட்சத்திரத்தில் வருகின்றது. அன்றைய தினம் விரத அனுட்டானங்களுடன் பூரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானின் அபிஷேக தரிசனம் மிக விசேடமானது.
அக்கினி நாள்
அக்கிணி நாள் என்பது காண்டாவனம் என்றும் அழைக்கப்படும்.
சித்திரா பூரனையின் மறுநாட் தொடக்கம் வைகாசி அமாவாசையை
அடுத்துள்ள 8ம் நாள்வரை உள்ள காலம் அக்கிளி நாட்களாகும்.
இக்காவத்தில் சூரிய உஷ்ணம் அதிகமாக இருப்பதோடு காற்றும்
ஆனற்காற்றாக விசும் தாங்கமுடியாதவெப்பமாக இருக்கும். இக்காலத்தின்
+தன்னுடைய சொத்த சுகவசதிகளை மட்டும்: கதக்காரருக்குநரகத்தில் இடம்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி
 

ஆரம்பதினத்தன்று சிவலிங்கத் திருமேனியின் மேலே ஒரு பானை தொங்கவிடப்பட்டு அப்பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறு துவாரமும் விடப்படும். துவாரத்தினூடாக வரும் நூல் சிவலிங்கத் திருமேனியில் படும்படியாக விடப்பட்டு தினமும் காலைப்பூசையின் போது பானை நிரம்பத்தண்ணீர் விடப்படும். அந்தத் தண்ணீர் நூல் வழியாக வந்து சிவலிங்கத்திருமேனியில் இரவுபகலாக வந்து சிவலிங்கத்திருமேனியைக் குளிர்ச்சியாக்கிக் கொண்டிருக்கும். இதோடு தினமும் சுவாமிக்குத் தயிர்ச்சாதம் நிவேதிக்கப்பட்டு விசேட பூஜை நடைபெறும், ஆக்கினி நாட்களால் ஏற்படும் இடர்களைத் தவிர்த்துச் சிவபெருமானின் அருளை வேண்டி இவ்வாறான வழிபாடு நடைபெறுகின்றது.
ஏனைய விரதங்கள்
சித்திரை மாதத்தில் வரும் சதுர்த்தியில் விநாயகர் விரதத்தையும், சஷ்டி கார்த்திகை தினங்களில் முருகப் பெருமானின் விரதத்தையும் பிரதோஷம், சோமவாரம்ஆகிய தினங்களில் சிவவிரதத்தையும் முறைப்படி அனுட்டித்தல் விசேட பலனைத் தரும்
வைகாசிப் பொங்கலும் குளிர்த்தியும்
தைப் பொங்கலுடன் ஆரம்பமாகும் பொங்கல் பங்குனித் திங்கட் பொங்கல், சித்திரை வருடப் பிறப்புப் பொங்கல் என விரிந்து வைகாசியில் மலருகின்றது எனக் கூறலாம், விசேடமாக வைகாசித் திங்களிலும், வெள்ளியிலும் விசாகம், பூரணை ஆகிய தினங்களிலும் பொங்கள் சகல அம்மன் ஆலயங்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
பொங்கலுக்கு அடுத்தாற்போவ் அநேகமான ஆலயங்களில் வைகாசி மாதத்தில் வருடாந்தக்குளிர்த்திஇடம்பெறுவது வழக்கம் குளிர்த்தினன்பது ஊரில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து விசேட அபிஷேக ஆராதனைகளுடன் சோறு, கறி முதலியன சமைத்துமலைபோலப்படைத்து நைவேதித்து வழிபடுதலாகும்
விசாகமும் பூரனையும்
முருகப்பெருமான் திருவவதாரம் செய்தமையால் வைகாசி விசாகம் மிக முக்கியமாகவும் சிறப்பாகவும் அபிஷேக ஆராதனைகளுடன் முருகன் கோயில்களில் மட்டுமன்றிச் 凸、 கோவில்களிலும் கொண்டாடப்படுகின்றது.
ஆனி உத்திரம்
ஆனிடத்திரம்மிகவும் விசேடமானதுழநீநடராசப்பொருமானின் ஆறு விசேட E சு நாட்களுள் ஆனி உத்திரமும் ஒன்றாக விளங்குவதால் ஆனி உத்திரம் மகத்தானது.
கோவில்களில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறுவதுபோலநிநடராசப் பெருமானின் அபிஷேகங்களும் ஆறாகும். கோவில்களில் நடைபெறும் பூசைக் காலத்திற்கேற்ப நடேசர் அபிஷேகங்களும் அமைந்துள்ளன.
மார்கழிமாத ஆருத்திராதரிசனம் வைகறை வழிபாடாகும். மாசிமாத பூர்வ பட்ச சதுர்த்தசியில் வரும் அபிஷேகம் மத்தியான அபிஷேகமாகும் சித்திரை மாதத்துத்திருவோன நட்சத்திர அபிஷேகம் உச்சிக்கால வழிபாடாகும். ஆனி மாதத்து உத்திர நட்சத்திரத்தில் வரும் அபிஷேகம் மாலை வழிபாடாகும். ஆவணிமாதபூர்வபட்ச சதுர்த்தசி அபிஷேகம் இரவு வழிபாடாகவூம், புரட்டாதி மாத பூர்வபட்ச சதுர்த்தசி அபிஷேகம் அர்த்தஜாம வழிபாடாகவும் உள்ளது.
ஆணித் திருமஞ்சனத்தினமான ஆனி உத்திர தினத்தில் பூரீ நடராசப் பெருமானை விரத அனுட்டானங்களுடன் வழிபாடு செய்தாள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம்.
கவனித்துக் கொண்டூர்ந்து ஆாழிக்கோஆர்
கிடைக்காது சுஷர்ரி விவேகானந்தர்
இந்து ஒளி 39

Page 42
=ستېتمېم
வெகுதானிய வருஷம் *兰蔷* பங்குனி மாதம்முடியும்
201098 ஐப்பசி 3 செவ், அமாவாசை விரதம்
- கேதாரகெளரி விரதம்
2110.98 ஐப்பசி 4 புதன் ஸ்கந்தவுஷ்டி விரதாரம்பம் 241098 ஐப்பசி 7 சனி சதுர்த்தி விரதம்
26.10.98 ஐப்பசி 9 திங் ஸ்கந்த ஷஷ்டி விரதம்
31.10.98 ஐப்பசி 14 செவ், உத்தான ஏகாதசி
01193 ஐப்பசி 15 ஞாயி பிரதோஷ விரதம்
03.198 ஐப்பசி 17 செவ், பூரனை விரதம்
05:1193 ஐப்பசி 19 வியா, கார்த்திகை விரதம்
14:198 ஐப்பசி 28 சனி" ஏகாதசி விரதம்
16198 ஐப்பசி 30 திங், பிரதோஷ விரதம்
18:1193 கார் 2 புதன் அமாவாசை விரதம்
23:1193 கார் 7 திங், சதுர்த்தி விரதம்
25:198 கார் 9 புதன் ஷஷ்டி விரதம்
30:1193 கார் 14 திங் ஏகாதசி விரதம்
011298 கார் 15 செவ் பிரதோஷ் விரதம்
021298 கார் 15 புதன் திருக்கார்த்திகை விரதம்,
- குமாராலயதீபம்
03:1298 கார் 17 வியா பூரனை விரதம்,
- சர்வாலயதீபம், விளக்கீடு.
04.12.98 கார் 18 வெள். விநாயக விரதாரம்பம்
14.12.98 கார் 28 திங் ஏகாதசி விரதம்
15.12.988 LITT 1 புதன் பிரதோஷ விரதம்
18.12.98 மார் 3 வெள். அமாவாசை விரதம்
22:1298 மார் 7 செவ், சதுர்த்தி விரதம்
24.12.98 மார் 9 வியா, விநாயக ஷஷ்டி விரதம்
திருவெம்பாவை பூஜாரம்பம்
29.12.98 மார் 14 செவ், சுவர்க்க வாயில் ஏகாதசி விரதம்
30.1298 மார் 15 புதன் பிரதோஷ விரதம், கார்த்திகை விரதம்
01.01.99 மார் 17 வெள். பூரணை விரதம்,
-இரவுநடேசர் ஆர்த்திராபிஷேகம்
020139 மார் 18 சனி உதயம்நடேசர் ஆர்த்திரா தரிசனம்
13:0199 மார் 29 புதன் ஏகாதசி விரதம்
WES
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய மூன்றையும் பெர் அதை எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல் ஆங்:
[[]]
 

ப்சி மாதம் தொடக்கம்
15.0199 தை 01 வெள், தைப்பொங்கல்,பிரதோஷ விரதம்
17.0199 தை 03 ஞாயி அமாவாசை விரதம்
21.01.99 தை 07 வியா, சதுர்த்தி விரதம்
23.0199 தை 09 சனி ஒஷ்டி விரதம்
26.01.99 தை 12 செவ் கார்த்திகை விரதம்
27.01.99 தை 13 புதன் பீமரகாதசி
28.01.99 தை 14 வியா, வைஷ்ணவபீம ஏகாதசி
29.01.99 தை 15 வெள். பிரதோஷ விரதம்
3101.99 தை 17 ஞாயி. பூரனை விரதம், தைப்பூசம்
12.02.99 தை 29 வெள், ஏகாதசி விரதம்
13.02.99 மாசி 01 சனி சனிப்பிரதோஷ விரதம்
14.02.99 மாசி 02 ஞாயி மஹா சிவராத்திரி விரதம்
15.02.99 மாசி 03 திங் அமாவாசை விரதம்
19.02.99 மாசி 07 வெள், சதுர்த்தி விரதம்
2102.99 மாசி 09 ஞாயி டிஷ்டி விரதம்
22.02.99 மாசி 10 திங் கார்த்திகை விரதம்
25.02.99 பாசி 14 வெள், ஏகாதசி விரதம்
27.02.99 மாசி 15 சனி சனிப்பிரதோஷ விரதம்
28.02.99 மாசி 15 ஞாயி, நடேசரபிஷேகம்
01.03.99 மாசி 17 திங் பூரனை விரதம், மாசிமகம்
13.03.99 மாசி 29 சனி ஏகாதசி விரதம்
14.03.99 மாசி 30 ஞாயி காரடையா நோன்பு
15.03.99 பங், 01 திங் பிரதோஷ விரதம்
17.03.99 பங் 03 புதன் அமாவாசை விரதம்
20.03.99 பங், 05 சனி சௌபாக்கிய கெளரி விரதம்
22.03.99 பங் 08 திங் ஷஷ்டி விரதம்
25.03.99 பங் 11 வியா. பூநீராம நவமி
27.03.99 பங் 13 சனி ஏகாதசி விரதம்
29.03.99 பங் 15 திங் பிரதோஷ விரதம்
31.03.99 பங் 17 புதன் பூரணை விரதம் பங்குனி உத்தரம்
12.04.99 பங், 29 திங் ஏகாதசி விரதம்
13.04.99 பங், 30 செல். பிரதோஷ விரதம்
آیت
றுள்ள ஒருவளைப் பிரபஞ்சம் முழுபதுமே எதிர்த்துநின்றாலும், நுக்கு உண்டு, 'சுவாமி விவேகானந்தர்
வெகுதானிய வருடம் சித்திரை=ஆனி

Page 43
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சமூகசேவையாளரும் மாமன்றத்திற்கு வருகைதந்தபோது
மாமன்றம் அதன் அங்கத்துவ சங்கமான இந்து வித்தியாவிருத்திச் சங்கத்தின் அனுசரனையுடன்
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்த
ஆன்மீக இன்னிசைக் கச்சேரியின் சில நிகழ்ச்சிகள்,
蔷
도
திருமதி:தன்னக்குடி பாவாவும், திரு.மோகன் வைத்தியாவும், இன்னிசைக் கச்சேரி நிகழ்த்துகிறார்கள்.
甲
இன்னிசைக் கச்சேரியின்போது சமுகமளித்திருந்த ரசிகப் பெருமக்களில் ஒரு பகுதியினர்.
 
 

சமயத் தொண்டருமான திரு.எஸ்.அருச்சுனராஜா கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகள்,
மாமன்றத்தின் அங்கத்துவ சங்கமான கொழும்பு சைவ புன்னேற்றச் சங்கத்தின் 45வது ஆண்டு நிறைவுவிழாவின்போது சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் நிரு.இ.பத்மநாதன், திருமதி, வாசுகி பத்மநாதன் 31,53 || IIIII krijgt
விளக்கேற்றுகிறார்கள்.

Page 44
10.
13.
14.
16.
18.
19.
20.
21.
22.
26.
28.
29.
33.
34.
35.
36.
38
39.
40。
இந்தச் சுடரில்.
பஞ்ச புராணங்கள்
முத்தமிழ் வித்தகர்
தென்னிந்திய சிற்பக்கலை மரபில்" பக்தியும் அதன் தாக்கமும்
அம்மை அப்பர்
திருஞானசம்பந்தர் காட்டும் சைவவிழுமியங்கள்
இரத்மலானை இந்துக்கல்லூரி விடுதி
கிராமிய மக்கள் வாழ்வில் கொத்தி வழிபாடு
திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டு
பெருமாளே எழுந்தோடி வா
பண்பாட்டுச் சுடர்கள்
பூரீ பொன்னம்பலவாணேஸ்வரம்
வரலாற்றுப் பெருமை கொண்ட விநாயகர் கோயில் Hinduism. The Eternal Religion
இறைபக்தி
சக்தி வழிபாடும்
திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் அருளிய முதல்முன்று திருமுறைகள்
சைவசமயக் கொடி
உலகம் கண்ட தலை சிறந்த சமதர்மவாதி சுவாமி விவேகானந்தர்
தெய்வீக இசைப் பாடல்கள்
The First International Conference Seminar On Skanda-Murugan.
சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியம் கட்டிட நிதி
காலாண்டு விழாக்களும் விரதங்களும்
விரத நாட்கள்
அடுத்த சுடர்)
வெகுதானிய வருடம் ஆடி-புரட்டாதி
 

வாழ்த்து
அறனொடு அன்பும் வாழ்க அகிலமும் செழித்து வாழ்க மறையவர் குழாத்தினோடு அடியவர் குழாமும் வாழ்க கறைமிடற் றண்ணலார் தன் கருணையு மருளுமோங்கி இறையருள் தன்னா லெல்லா உயிர்களும் நீடுவாழ்க.
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சித்திரை-ஆனி இதழ்
வெகுதானிய வருடம் ஆனி மாதம் 25ம் நாள் 09-07-1998
ஆசிரிய குழு :
திரு. ஆ. குணநாயகம் திரு. இ. சிவகுருநாதன் திரு. க. இராஜபுவனிஸ்வரன் திரு. கந்தையா நீலகண்டன் ஒரு பிரதியின் விலை ரூபா 2000 வருடாந்தச் சந்தா ரூபா 8000 வெளிநாடு வருடச் சந்தா டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் A. C. H. C. 5 to Luf 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2. இலங்கை. தொலைபேசி எண்கள் : 434990; 344720. இந்துஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் N தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே. )
HINDU CD
| Sithironi - Alani Issue of
RUU C6 LON, HNDU CONGRSS 9th July 1998.
Editorial Board :
Mr. A. Gunanayagam Mr. R. Sivagurunathan Mr. K. Rajapuwaneeswaran Mr. Kandiah Neelakan dan
Price RS. 20.00 per copy. Annual Subscription RS. 80.00 Foreign Subscription U. S. $ 10.00 (Including Postage)
ALL CEYLON HINDU CONGRESS, A. C. H.C. BLDG. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha, Colombo – 2, Sri Lanka. Telephone Nos. 434990; 344720.
Next issue:
AADY - PURA DDATHY
Views expressed in the articles in Hindu Oii are those of the contributors.
أير .