கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 1999.10-12

Page 1
ృ*
Ugafl ffiji) க இரி
&agg
)
岔
Quarterly Z Ceylon Hindu Congress
%)
父
微量 《滚
*
}
 
 
 
 
 

"أمير
فیلمی
*-్ళ
@?
○。
○ー
y"
لیبی با
墨
2م

Page 2
다.
திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் தலைவர் திரு வளர் அவர்களும், சுவாமி சித்பவானந்தா ஆச்சிரம ஸ்தாபக மாமன்றத்திற்கு வருகைதந்தபோது அவர்களுக்கு அளிக் நடைபெற்ற சிறப்புப் பூஜை வைபவத்தில் கலந்து கொண்ட
 
 
 

திருகாசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்
கப்பட்ட வரவேற்பும், மாமன்றப் பிரார்த்தனை மண்டபத்தில்
காட்சிகளும்.
த் தலைவர் பூரீமத் சுவாமி ஓங்காாாநந்தா அவர்களும்
மட்டக்களப்பு முதியோர் இல்லத்திற்கு மாமன்றம் அளிக் கவி ரு க் கும்
நி தி யு த வி யி ன்
முதற்கட்டமாக, ரூபா 3OOOOOW- E
காசோலை வழங்கப்பட்ட
நிகழ்வு.

Page 3
e 2- . . ཛོད། UGA4 l/I/76007/h/.4567 திருச்சிற்றம்பலம் தேவாரம் பண்: தக்கேசி சுந்தரமூர்த்திசுவாமிகள்அருளியது
கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லாளனைச் சொற்ப தப்பொருள் இருள் அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட நற்பதத்தைநள்ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
திருவாசகம்
மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது
யானேதும் பிறப்பஞ்சே
னிறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில் வேண்டேன்
மண்ணாள்வான் மதித்துமிரேன். றேனேயுமலர்க் கொன்றைச்
சிவனேயெம் பெருமானெம் மானேயுன் னருள் பெறு நா
ளென்றென்றே வருந்துவனே.
திருவிசைப்பா பண் பஞ்சமம் கண்டராதித்தர் அருளியது களிவான் உலகில் கங்கை நங்கை
காதலனே அருளென் றொளிமால் முன்னே வரங்கிடக்க
உன்னடி யார்க்கருளும் தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள் ஒளிவான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ.
திருப்பல்லாண்டு மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்காட்
செய்மின் குழாம்புகுந் தண்டங் கடந்தபொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
சேக்கிழார் சுவாமிகள் அருளியது மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர்நல் விழாப்பொலிவு கண்டார்தல் உண்மையா மெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.
திருச்சிற்றம்பலம்
 

தீபம் 4 3.Lfr 1 பிரமாதி வருடம் கார்த்திகை 19ம் நாள் 05.12.1999
நாவலரை நினைந்து போற்றுவோம்
'ഝേത്രമക്ഗ്ഗരഖബ് ഗ്രീബഗ്ഗി சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே - 67ல்வ வரும் ഉച്ഛ് ഗ്ര7ഞ്ഞ7 ജൂകമറീക്ക് ബീക്സ് ഗ്രീമ6ിമീ ஆத்தன் அறிவெங்கே அறை"
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் மேற்படி பாட்டிலிருந்து நாவலர் அவர்கள் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டு வெள்ளிடை மலைபோல் விளங்கி நிற்கக் காணலாம். தங்கள் மொழியையும் சமயத்தையும் உலகமெலாம் பரப்புவதற்கு வந்த அன்னிய ஆட்சியாளரின் கெடுபிடிகளையெல்லாம் துணிச்சலுடன் எதிர்த்து நின்று தமிழுக்கும் சைவத்திற்கும் மறுமலர்ச்சியூட்டி வளர்த்த இரட்சகர் ஆறுமுகநாவலர் ஆவர். நாவலர் பிறந்திருக்காவிட்டால் தமிழும் சைவமும் என்றோ அழிந்தொழிந்திருக்கும். நாமெல்லோரும் தமிழரென்றும் சைவ சமயிகள் என்றும் நம்மைக் கூறிக் கொள்ளும் பெருமையும் என்றோ அழிந்தொழிந்து அன்னியர் மொழியிலும் சமயத்திலும் சங்கம மாகியிருப்போம். இவ்வண்ணம் எம்மையெல்லாம் தமிழர் என்றும் சைவ சமயிகளென்றும் ஏனையோருடன் சரிநிகர் சமானமாய் நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை நாவலரையே சாரும்.
தனது தன்னலமற்ற தொண்டினால் நமது மொழியையும் மதத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றி எம்மை மானத்துடன் வாழ வைத்த பெருமானை நன்றிக் கடனுடன் நினைவு கூருமுகமாகவே இந்த இதழின் அட்டையில் அவருடைய திருவுருவப் படத்தையும் இடம் பெறச் செய்து சிறப்பித்து இந்த இதழினையும் அவருக்குச் சமர்ப்பணம் செய்கின்றோம்.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவத்திற்கும் தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து தமிழுக்கும் சைவத்திற்கும் ஒளிவிளக்கேற்றிஎம்மையும் எமது சந்ததியினரையும் தமிழராகவும் சைவ சமய ஒழுக்க சீலர்களாகவும் வாழ வழி வகுத்த இரட்சகரை அவருடைய நினைவு தினத்தில் அவர் காட்டிய வழி நின்று நினைவு கூர்ந்து எமது நன்றியறிதலைத் தெரிவிப்போமாக.

Page 4
டிசெம்பர் 5ம் திகதி பgஸ்பூரி ஆறுமுக நாவலர் நினைவு தினம், !
சென்ற நூற்றாண்டில், அந்நியர் ஆட்சியின்கீழ், நம் மக்கள் வாழ்ந்த போது, சைவத்தையும், தமிழையும் மறுமலர்ச்சியடையச் செய்த சைவத் தமிழ்த் திருமகன் நிலபூநீ ஆறுமுக நாவலர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவரின் சைவப்பணிகள், தமிழ்ப் பணிகள், கல்விப் பணிகள் அளப்பரியன என்பதும் உண்மையே. அவருக்குப் பின் வந்த LJAJ (5 Lú, |5| ബബ് இச்சுற்று வட்டத்திற்குள்ளேயே வைத்துப் பெருமை பேசினர், விமர்சனஞ் செய்தனர், ஏன் ஒரு சிலர் தூற்றவும் செய்தனர்.
நாவலருக்குப் பின், நாவலரின் பணிகளைத் தொடருவதற்கு நாவலர் பரம்பரை உருவாகியது. இப்படியொரு பரம்பரை தனக்குப்பின் தோன்ற வேண்டும், அவர்கள் இன்ன இன்ன பணிகள் ஆற்ற வேண்டும், அவர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகள், கொள்கைகள் T fi 7 E ? என்ற குறிப்புக்களை நாவலர் எவ்விடத்திலும் விட்டுச் செல்லவில்லை. அவர் தனி மனித இயக்கமாகவே செயல்பட்டார். தேவை நோக்கிக், கால உணர்வோடு அவர் செய்த பணிகள் சில, அவர் வாழ்ந்த காலத்திற்குப் பொருந்தக் கூடியனவாகவும், அத்தியாவசியமாகத் தேவைப்பட்டனவாகவும் இருக்கும். அவை, காலஞ் செல்லத் தேவையற்றனவாகியும் விடும். எனவேதான், நிறுவன ரீதியில்ே அமைத்துப் பணிகளை ஆற்ற நாவலர் முயலவில்லை. நிறுவனம் என்று ஒன்று தோன்றும்போது தம்மைப் போலவே, அனைவரும் சிந்திப்பர் என்பது என்ன நிச்சயம் என்றும் நாவலர் எண்ணியிருக்கக் கூடும். நாவலரின் உள்ளக்கிடக்கையை உள்ளபடி அறிந்தவர்கள் யாராவது இருந்திருப்பார்கள் என்பதும் சந்தேகமே. நாவலரை உள்ளபடி உணர்ந்து கொள்வது கடினமான காரியம் நாவலர் நீதிமான். நீதி நெருப்பு. எனவே அவருக்குக் கிட்ட நெருங்குவது என்பது மிக அரிதான விடயம்.
இந்த நிலையில், நாவலரைப் பற்றி அவருக்குப் பின் வந்தோர் அறிந்து கொண்டது கைம் மண்ணளவு அறிந்து கொள்ளாதது உலகளவு எனலாம். அறிந்து கொண்ட ஒரு சிலவற்றை வைத்துக் கொண்டுதான் அவர்கள் செயலாற்றினார்கள்.
மொழிபெயர்ப்புக்கள், தழுவல்கள் என்பன மூலத்தின் கருத்துக்களை அப்படியே கொண்டுள்ளன என்று சொல்வதற்கில்லை. அவ்வாறுதான் நாவலர் பரம்பரையினரின் நிலையும் நாவலரைத் தூற்றியோரை வன்மையாகக் கண்டித்தும்,
இந்து ஒளி
 
 

ஆகுமாரசாமிசோமசுந்தரம்
இதனையொட்டி இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது
நாவலர் மரபினைப் பேணியும் சைவத்தமிழ்ப் பண்பாட்டினை இம்மியளவும் வழுவாது வளர்த்தும் வந்தவர்கள் நாவலர் பரம்பரையினர். ஆயினும், நாவலரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து கால ஓட்டத்திற்கேற்ப, சமூகப் பொருத்தப்பாட்டுடன் செயலாற்ற இவர்களால் முடிந்ததா என்பது ஆய்விற்குரியது.
"நாவலர் பரம்பரையினை நோக்கும் போது இலக்கிய இலக்கண நூற்புலமை, கல்விப்பணி, நூல் வெளியீடு, சைவசமய பிரசாரம், பிறமத கண்டனம், பிரசங்க முறை, புரான படனம், அருட்பாக் கோட்பாடு என்பனவற்றை முக்கியமானவையாக இனங்காட்ட முடியும்' என அறிஞர்கள் கூறுகின்றனர். பரம்பரையினரிடம் கானப்பட்ட பண்புகள் சிலவற்றைக் கொண்டுதான், நாவலர் எடைபோடப்பட்டும் வந்துள்ளார்.
நாவலர் பரம்பரையில் வந்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், நாவலரின் உள்ளக்கிடக்கையை
உள்ளவாறு அறியவும், கால ஓட்டத்தோடு பொருத்திப்பார்க்கவும், முயன்றவர். இவற்றில் ஈடுபாடுகொண்டு, ஆய்வுசெய்து உண்மையை வெளிப்படுத்தும் முயற்சிகளில் முன்னின்றவர்களை ஊக்கு வித்தவர். இந்த வகையில் நாவலர் பணிகள் சிலவற்றை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தவர் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர், காலஞ் சென்ற ச. தனஞ்சயராசசிங்கம் ஆவர். அன்னார், தாம் மேற்கொண்ட முயற்சிகளைப் பூர்த்தி செய்யுமுன்னரே காலமாகியமை துர்ப்பாக்கியமே. தாம் கண்டு பிடித்தவற்றை "நாவலர் பணிகள்' எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
1848த் தொடங்கி வாரந்தோறும் நாவலர் செய்த பிரசங்கம் ஒவ்வொன்றுக்கும் இருபது இறைசால் விலைபேசிய உதயதாரகையின் விளம்பரப் புதினம், கஞ்சித் தொட்டித்தருமம் என்கின்ற கண்ணிர் இலங்கைச் சட்ட நிரூபண சபைப் பிரதிநிதித் தெரிவு என்கின்ற நெருப்பு: கல்வித் திட்டங்கள் ஆகிய விளக்குகள் உதவி நன்கொடை பெறுவதற்கு நேர்ந்த இடறுகட்டைகள் விவசாயம், வர்த்தகம் என்கின்ற நாட்டை வளம்படுத்தும் வாழ்க்கை வழிகள் என்றிவைகளும் பிறவுமாக இப் புத்தகத்திற் காட்டப்பட்டவைகள் விரிந்த நாவலர் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் அமைதற்கு நல்ல வித்துக்களாம்' என இந் நூலிற்குத் தாம் வழங்கிய அணிந்துரையில் பண்டிதமணி குறிப்பிட்டிருப்பது நோக்கற்பாலது.
3) பிரமாதி வருடம்ஐ

Page 5
நாவலர் ஒரு சிறந்த மானுடன்; மனிதாபிமானம், மானுட நேயம், மனித நல நாட்டம், மனிதத்துவ உணர்வு, அனைத்துலக நோக்கு என்பவற்றைக் கொண்டிருந்தவர் என்பது அவரைப் பற்றி மேலும் மேலும் ஆராயும் போது தான் நமக்குத் தெளிவாகின்றது. நீதி கேட்பதில் அவர் நெருப்பு: ஆனால் மனிதகுலம் படுகின்ற வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றைத் தணிப்பதில் நாவலர், இரக்கம், அன்பு, கருணை என்பவற்றின் முழுவடிவமாகவே விளங்கினார்.
நாவலரைக் கண்டு அஞ்சியவர்கள், நீதி நெறி தவறியவர்களும், நாவலரின் இரக்க குணத்தை அறியாதவர்களுமே ஆகும். நாவலரைப் பயன்படுத்தியவர்களும், அவரின் மானுட இரக்கத் தன்மையைக் காட்ட முற்படவில்லை. அதனாலும் நாவலர் முழுமையாக அறியப்படாதிருந்தார். பலர் தப்பாகவும் எடைபோட்டனர்.
1876 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மழை பொய்த்தது. நெல் முதலிய பயிர்கள் நீரின்மையால் விளைச்சலைத் தரவில்லை. நிர் நிலைகள் வற்றின. பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஆடு, மாடு முதலியனவும் நீரும்புல்லுமின்றி வாட்டம் அடைந்தன. தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. ஏழை மக்கள் தானிய உணவினை விலக்கிப்பனங்காயினை உண்டனர். ஆனால் முன்பு அரைச் சதமாய் விலைப்பட்ட பனங்காய் ஒன்று, இவ்வாண்டில் பஞ்சத்தின் நிமித்தம் மூன்று அல்லது நான்கு சதம் வரை விலைப்பட்டது. இவ்வாறு அஞ்ஞான்று வெளிவந்த இலங்கை நேசன் பத்திரிகை நிலைமையைக் குறிப்பிடுகிறது. பஞ்சத்துடன் கொள்ளை நோயும் மக்களை வாட்டி வதைத்தது. மக்கள் படுந் துன்பம் கண்டும் அக்கால ஆங்கிலேய ஆட்சியாளர் சும்மா இருந்தனர். இந்த நேரத்தில்தான் மானுடநேயமும், இரக்கமும் கொண்ட ஆறுமுகநாவலர், மக்களின் பசித்துயர் துடைக்கும் பணியில் தம்மை அர்ப்பணித்தார். கஞ்சித் தொட்டித் தருமம் நாவலரால் தொடங்கப்பட்டது. சமய வேறுபாடின்றி பலரின் உதவிகளையும் பெற்றுக்கொண்டார். அவ்வாறே எவ்வித பேதமுமின்றிநாள் தோறும் கஞ்சி உணவு ஏழைமக்களுக்குப் பரிமாறப்பட்டது. இக் கைங்கரியத்தில், நாவலருடன் இணைந்து உழைத்தவர் கி.பிறிற்றோ என்ற கிறிஸ்தவப் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது. நாவலரின் சமூகசேவை, இரக்கம், மானுடம் என்பன சாதி, சமய, சமூக எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பது இதிலிருந்து விளங்குகின்றது. கஞ்சித் தொட்டித் தருமத்தின் மூலம் தமிழர் சமுதாயத்தில் காணப்பட்ட சாதி, சமய, சமூக நிலை ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும், ஒன்றுபட்ட சமூகம் என்பதனை உணர்த்தவும் நாவலர் பாடுபட்டார்.
நாவலரின் மற்றொரு சமூகத் தொண்டு, திருகோணமலையை அண்டியுள்ள கந்தளாய்க் குளத்தைச் சுற்றியுள்ள காட்டுப்பிரதேசத்தை அரசினரிடமிருந்து பெற்று, இலங்கைச் சுதேசிகளுக்கு வழங்கி வேளாண்மையில் ஈடுபடுத்துவதாக இருந்தது. சைவசமயப் பிரசாரகராக விளங்கிய நாவலர், சமூக நன்மையின் பொருட்டு விவசாயப் பிரசாரகராகவும்; சமூக ஊழல்களையும் ஆங்கிலேய அரசாட்சியாளர்களையும் எதிர்த்தும் பிரசாரஞ் செய்பவராகவும் மிளிர்ந்தார். யாழ்ப்பாண மட்டக்களப்பு வர்த்தக வேளாண்மைச் சங்கம் நாவலரின் முயற்சியால் நிறுவப்பட்டது. ஆங்கிலேயத் துரைமார்களும், கம்பனிகளுமே பெருந்தோட்டத்துறைகளிலும், வியாபாரத்திலும்
 

ஈடுபட்டுவந்தன. நெற் செய்கையிலாவது சுதேசிகள் ஈடுபடவேண்டும் என்று கருதிய நாவலர், பல முயற்சிகளை மேற்கொண்டார். சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டு நிலையில் நின்று நாவலர் பணிபுரிந்தார் என்பது, 1877, 1878 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இலங்கை நேசன் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் சான்று பகரும்.
1876 பஞ்சத்தின் பின் யாழ்ப்பாண உழவர்கள் விதை நெல் இல்லாமையால் பெரிது கஷ்டப்பட்டனர். நாவலர், ஆங்கிலேய அரசிடம் வருந்திப் பெற்ற விதை நெல்லும், வடமாகாண அரசாங்க அதிபரினால் மக்களுக்கு வழங்கப்படாமை கண்டு பொங்கியெழுந்தார். அப்போது அரச அதிபராக இருந்த துவைனந்துரையினால் உழவர்க்கு இழைக்கப்பட்ட அநீதிபற்றியும், அவரின் வேறு பல ஊழல்கள் பற்றியும் வெளிப்படையாகக் கண்டித்தவர் நாவலர். பொது மக்கள் நன்மை கருதி அவர் யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் எனத் தேசாதிபதியிடம் விண்ணப்பஞ் செய்தார்.
1850 ஆம் ஆண்டில், பீற்றர் பேர்சிவல் அடிகளின் வேண்டு கோளுக்கிணங்க, விவிலியம் எனப்படும் புனித பைபிள் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நாவலர். பல மொழிபெயர்ப்புக்களில் நாவலரின் மொழி பெயர்ப்பே சிறந்தது என சென்னையில் கூடிய கற்றோர் அவை ஏற்றுக் கொண்டது. கிறித்தவ திருச்சபையின் அங்கீகாரத்தையும் பெற்றது. "நாவலர் இப் பணியினால், தமிழ் வசன நடை வளர்ச்சிக்கு மட்டுமல்ல, கிறித்தவ வேத வளர்ச்சிக்கும் அருந்தொண்டு புரிந்துள்ளார்’ என இலங்கையின் முன்னைநாள் கிறீத்தவ அத்தியட்சகர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
நாவலர் கண்டித்தது எதனை, என்று நோக்கில், அன்றைய நிலையில், கிறித்தவமும் ஆங்கிலேய ஏகாதிபத்திய அடக்கு முறையும் ஒன்றித்திருந்தமையை என்று உணரலாம். இந்த வகையில் தான்தோன்றித்தனமாக, நீதிக்குப் புறம்பாக நடந்து கொண்ட சைவப்பிரபுகளையும், சைவக் கோயில் எசமானர்களையும் கண்டிக்க அஞ்சவில்லை. சாதி என்பது பிறப்பால் அன்று; குணத்தாலும் ஒழுக்கத்தாலும் என்பது நாவலர் நிலைப்பாடு. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் பண்டைத் தமிழர் பண்பாட்டின்படி ஒழுகியவர் நாவலர். மனிதகுலத்தை, சாதி சமய, இன அடிப்படையில் அவர் வெறுத்தவரல்லர். ஆனால் அநீதிகள், ஊழல்கள், அடக்கு முறைகள் எங்கிருப்பினும் தமர், பிறர் என்ற பேதமின்றிக் கண்டிக்கவும் தயங்காதவர். பிறவியில் இரக்க குணம் கொண்டவர்; மானுடநேயம் மிகுந்தவர். இக் குணங்களினால் உந்தப்பட்டு நாவலர் ஆற்றிய மானுட சமூகப் பணிகள், நாவலரின் உண்மை நிலையைக் காட்டுகின்றன.
"நாவலர் கோட்டிலே நின்றாலுஞ் சரி, அயலிலே எரிகிற தொரு வீட்டிலே நின்றாலுஞ் சரி, அவரது வாழ்க்கை நீதியிலும், இரக்கத்திலுமே நடந்திருக்கிறது” என்பது பண்டிதமணியின் நாவலர் பற்றிய மதிப்பீடு.
மானுடம் என்பது மனிதநலப் பண்பை உள்ளடக்கியது. 'மானுடம் வென்றதம்மா’ என்பது கம்பன் கண்ட தத்துவம். மானுட தத்துவத்திற்குச் செயல் வடிவம் கொடுத்து மானுடனாக வாழ்ந்தவர், ழரீலழரீ ஆறுமுகநாவலர்.

Page 6
'வித் என்ற வினையடியில் இருந்து பிறந்ததே வேதம் வித் என்றால் அறிதல் என்னும் கருத்தை உணர்த்துவது. வேதங்கள் அறிவின் இருப்பிடம். வேத இலக்கியம் மிகவும் அகன்ற பரப்பினை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு நிலவிய சமய வழிபாட்டு முறை பற்றி சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
இருக்கு வேதத்திலிருந்து அதர்வ வேதம் வரையில் இந்துக்களின் ஆரம்பகால வழிபாட்டின் ஒரு படிமுறை வளர்ச்சியினையும் நாகரீக பண்பாட்டியல் மாற்றங்களையும் அவதானிக்க முடிகின்றது. இருக்கு வேதம் காலத்தால் முற்பட்டதாகும். இது இயற்கையில் இறைவனைக் கண்டு இயற்கையோடு தொடர்புபட்ட வகையிலான இறைவனை வழிபடத் தொடங்கிய நன்மையைக் கூறுவதாகவுள்ளது. இயற்கை நிகழ்வுகளை அவதானித்த மக்கள் இவற்றையெல்லாம் நிகழ்த்துவிக்கின்ற மேலான ஒரு தலைவன் இருக்கின்றான் என்றும், அவனே கடவுள் என்றும் நம்பி வழிபாடியற்றத் தொடங்கியிருந்தனர்.
ஆரம்பத்தில் வானத்தினை தலையாகவும், பூமியை பாதமாகவும், நான்கு திசைகளையும் கைகளாகவும், சூரிய சந்திரர்களைக் கண்களாகவும், காற்றினை மூச்சாகவும் இயற்கை ஒலிகளைப் பேச்சாகவும் கொண்டு இயற்கையோடு கலந்த வகையில் உலகெங்கும் வியாபித்திருப்பவனாக இறைவனை உருவகித்து வேதகால வழிபாடு நடாத்தப்பட்டிருந்தது. இவ்வாறு இயற்கை எங்கும் நிறைந்த ஒரு தெய்வத்தை வழிபடத் தொடங்கிய வேதகால, மக்கள் காலப்போக்கில் பல தெய்வ வழிபாட்டிற்கு மாறத் தொடங்கினர். கூடவே வேள்விகளும் யாகங்களும் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.
பயன் வேண்டி குடும்பமட்டத்தில் மட்டுமன்றி சமூகதேசிய மட்டத்தில் கூட வேள்விகளும் யாகங்களும் மேற்கொள்ளப்பட்டன. வேதகால மக்களின் சமூக வாழ்க்கை திட்டமிட்ட ஒழுங்கமைப்பைக் கொண்டதாகவே காணப்பட்டது. தந்தை குடும்பத் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தான். சிறிய குடிசைகளாக இவர்களது வாழ்விடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் சாணத்தால் மெழுகப்பட்ட தரைகள் மிகவும் சுத்தமானவையாக இருந்தன. தர்ப்பை புற்களை ஆசனமாக இவர்கள் பயன்படுத்தினர். மாடுகள் இவர்களது பெரும் செல்வமாக கருதப்பட்டன. குடும்ப நிர்வாகம் தந்தையிடம் இருந்தது போலவே சமூக நிர்வாகம் சமூகத் தலைவரிடமும், நாட்டு நிர்வாகம் மன்னரிடமும் இருந்தன. நாட்டு நலன் கருதி மன்னர்களும் பெருமளவிலான யாகங்களையும் வேள்விகளையும் செய்திருந்தனர். இராஜ சூயம், அசுவமேதம் போன்ற யாகங்கள்
 
 

ர் மகா வித்தியாலயம் 15% – Uו
இவ்வகையில் நாட்டு நலன் வேண்டி செய்யப்பட்டவற்றுள் சிலவாகும். சந்ததி விருத்தி வேண்டி மன்னர்களும் - சாதாரண மக்களும் கூட ‘புத்திரகாமேஷ்டி' யாகம் போன்றவற்றைச் செய்திருந்தனர். பிற்காலத்தில் பயன் வேண்டி இந்து மக்கள் செய்யும் காமியக் கிரியையின் ஒரு முன் தோன்றலாக இவ் வேதகால வேள்விகளையும் யாகங்களையும் குறிப்பிடலாம்.
இருக்கு வேதகாலத்தைத் தொடர்ந்து வந்த யசுர் வேதகாலப்பகுதி இத்தகைய வழிபாட்டியற் கிரியை முறைகளையும் அவற்றிற்கான விளக்கங்களையும் கூறுகின்றது. யசுர்வேதம், சுக்லயசுர், கிருஷ்ணயசுர் என இரு பகுதிகளாகவுள்ளது. இதில் சுக்லயசுர் கிரியைகளையும் வழிபாட்டு முறைகளையும் பற்றிக் கூற கிருஷ்ணயசுர் அவற்றிற்கான விளக்கங்களைக் கூறுகின்றது.
ஒரு தெய்வ வழிபாட்டிலிருந்து பல தெய்வ வழிபாட்டிற்கு வந்த வேதகால மக்களின் வழிபாட்டில் 33 தெய்வங்கள் வரை இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இவற்றில் விண்ணைச் சார்ந்த தெய்வங்கள், மண்ணைச் சார்ந்த தெய்வங்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட தெய்வங்கள் என்ற மூன்று பிரிவுகள் காணப்பட்டன. மனித இயல்புகளின் சில பலங்களும்-பலவீனங்களும் கூட தெய்வங்களிடம் இருந்ததாக இவர்கள் நம்பினர். சோமபாணம் போன்றவற்றையும் இறைவனுக்கு நைவேதிப்பதற்கு இதுவும் ஒரு காரணமெனலாம். ஆண் தெய்வங்கள் மட்டுமன்றி உஷை, இராத்ரி போன்ற பெண் தெய்வங்களும் வழிபாட்டில் இடம் பெற்றிருந்தன.
வேதகால வழிபாட்டு முறையில் ‘அக்னியின் இடம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. வேள்விகளிலும் யாகங்களிலும் வழங்கப்படும் ஆகுதிகளை இறைவனிடம் சேர்ப்பிக்கும் தூதுவனாக "அக்னி யே கருதப்பட்டான். தமக்கு மிக விருப்பமான பொருட்களை யாக குண்டத்து அக்னியில் போட்டு தாம் வேண்டுவதை இறைவனிடம் யாசிப்பதே இவர்களது வழக்கமாக இருந்தது. இங்கு முதன்மை நிலை பெற்றிருந்த அக்னி இன்றுவரை இந்து சமய சடங்குகளிலும் வழிபாட்டிலும் முக்கியத்துவத்தை இழக்காது தொடர்ந்து வருவதொன்றும் வியப்பானதன்று. இந்து சமயிகளின் முக்கிய வழிபாட்டுச் சின்னமான சிவலிங்கத்தின் தோற்றத்திற்கும் எரியும் தீச்சுவாலைக்கும் பிற்காலத்தில் ஒற்றுமை பேசப்படுவதும் இறைவன் ஒளிப்பிளம்பானவன், சோதி வடிவானவன் என வருணிக்கப்படுவதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
சாம வேதம் இசைவடிவானது, கலைகளில் இறைவனைக் காண்பதும் வழிபாட்டு முறைகளில் அவற்றை முக்கியத்துவப் படுத்துவதும் பிற்கால இந்து சமய வழக்கங்களில் நாம் காணக் கூடியதே. இறைவன் சாம காணப்பிரியன் என

Page 7
கூறப்படுவதும் வேதகாலத்தின் பின்வந்த இதிகாச புராண காலத்தில், இராவணன் சாமகானம் பாடி இறைவனை திருப்திப்படுத்தி இடரிலிருந்து தப்பித்தான் என்று குறிப்பிடப்படுவதும் இந்து சமயத்தில் தொடர்ந்து வரும் வேதகால தொடர்புகளுக்கு நல்ல உதாரணங்களாகும். வழிபாட்டிற்குரிய மந்திரங்களும் தோத்திரங்களும் இக்காலத்தில் இசையுடன் பாடப்பட்டன. இவ்வகையில் பார்க்கும் போது சாம வேதகால அம்சங்கள் பிற்கால இந்துசமய வழிபாட்டியலில் மிக முக்கியமான இடத்தினைப் பெற்றுவந்தன எனலாம்.
ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டவையாக விளங்கின. மந்திரப்பகுதி, பிராமணியப்பகுதி, ஆரணியப்பகுதி, உபநிடதப் பகுதி என்பவையே அவையாகும். இருக்கு வேதத்திலிருந்து சாம வேதம் வரையிலான காலப்பகுதியில் வேதகால வழிபாட்டு முறையின் ஒரு உயர்ந்த போக்கினை பிற்கால இந்துசமய வழிபாட்டின் ஒரு முன்னோடியாக விளங்கிய ஒரு பண்பாட்டியலை அவதானிக்க முடியும். ஆனால் வேதகாலப் பகுதியில் இறுதியாக வந்த அதர்வவேதம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்பட்டது.
ஏற்கனவே தனிப்பட்ட குடும்ப, நாட்டு நன்மைகளுக்காக செய்யப்பட்ட வேள்விகளும், யாகங்களும் அதர்வவேதத்தில் நோக்கவியல் தன்மையில் மாற்றம் பெறத் தொடங்கின. பிறருக்கு துன்பம் ஏற்படுத்துவதற்காகவும் மற்றவர்களின் வீழ்ச்சிக்கர்கவும் வேள்விகளையும், யாகங்களையும் மேற்கொள்ளும் பண்பு அதர்வ வேத காலத்தில் வளரத் தொடங்கியது. பிறருக்கு
1. யானை முகம் : “ஒம்” என்னும் பிரணவ வடி 2. அங்குசம் : மதயானையை அடக்கும். 3. Luna#ūb : உயிர்களைக் கட்டிக் காப்ப 4. தந்தம் அபயம் : தியாகத்தின் சின்னம், அடி 5. வரதம் உயிர்களிற்கு அனுக்கிரகம் 6. Guолфъü) பஞ்சபூதங்களின் வடிவில 7. பருத்த தொந்தி : பிரபஞ்சம் முழுவதும், தனச் 8. எலி வாகனம் : ஞானம் பெற்ற ஆன்மாக்க வற்றிற்குப் பெரிதாகவும் பெருந்தன்மை. 9. இரத்தினக்கலசம் : பொன் போன்ற அருள் செ
N
Cz
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேடுவிளைவிக்கும் வகையிலான (செய்வினை, சூனியம்) மந்திரங்கள் அதர்வ வேதத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது. யாக குண்டத்தில் விலங்குகளைப் பலியிடும் வழக்கம் முன்னைய வேத காலங்களிலேயே இருந்தாலும், அதர்வ வேதத்தில் நரபலியிடும் வழக்கம் கூட இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு வேதகாலத்தில் அதர்வவேதப் பகுதி பின்னடைந்து சென்றபோது அதாவது வழிபாட்டு முறைகளும் பண்பாடும் திசைமாறிச் சென்ற போது அவற்றைச் சீர்திருத்தும் வகையிலேயே உய நிடதங்கள் தோற்றம் பெற்றன. வேதத்தின் இறுதிப் பகுதியாக வந்து முடிந்த முடிவான பிரமத்தைப்பற்றி பேசுவதனால் வேதாந்தம் என குறிப்பிடப்படும் இவ் உபநிடதங்கள், வேள்வி-யாகம் என்பவற்றுக்குப் புதிய விளக்கம் கொடுத்தன.
“உள்ளமாகிய அக்னி குண்டத்தில் ஞானம் என்கின்ற தீயை வளர்த்து பக்தி என்கின்ற நெய்யைச் சொரிந்து ஆசை என்கின்ற மிருகத்தைப் பலியிடுவதே உண்மையான வேள்வி” என உபநிடதம் கூறியது.
பொதுவாக வேதகால வழிபாட்டின் சமய கலாச்சார மரபுகள் பிற்கால இந்து சமய நடை முறைகளுக்குப் பெரிதும் முன்னோடியாக அமைந்தன என்பதனை மறுப்பதற்கில்லை. அதர்வ வேதத்தின் தீய தன்மைகள் கூட மக்களிடத்திற் குறைந்த அளவிலாவது பரவாமலில்லை. இத்தீய தன்மைகளையும் நீக்கும் வகையில் எழுந்தவையே அடுத்து வரும் உபநிடதங்களாகும்.
டிவம். ஆயுதம். ஆணவம் மிக்க ஆன்மாக்களை அடக்குபவர்.
ாளைக் காத்தருளல்.
) G4FuijuGh//i.
ான இல்வுலகத்திற்கு தாமே ஆதாரம் என உணர்த்துதல். குள் அடக்கம் என ஆன்மாக்களிற்கு, அறிவூட்டல். ளை தாமே ஆட்கொள்பவர் என்னும் தத்துவம். பெரிய
, சிறியவற்றிற்குச் சிறியதாகவும் விளங்கும் தனிப்
ல்வத்தை தருவேன் என்பது.
Z வே. ச. சுப்பையா Y
ല്ല്

Page 8
ஈழத் தாயின் திருமகனே, இ ஆழக் கடனேர் அறிவோனே வாழத் தமிழைப் பலவகைய
யாழைப் புதுக்கித் தந்தோனே
செம்மை அழகு நலமென்னு மும்மைத் தமிழின் துறையெ இம்மைப் பிறவிப் பயனெல் அம்மெய்ப் பொருளை அறி
பண்டைத் தமிழர் கலைமாண் பண்டைப் பனுவற் கடல்படி விண்டு விரித்தாய் யாழ்நூன
தொண்டுக்குவமை சொலப்
இதங்கொள்கலையாம் நாட விதங்கொள் வடநூல் ஆங்: மதங்க சூளாமணியென்னு! பதங்கள் மனத்தில் இருத்திய
சொல்லின் கிளத்தி ஒருத்திய பல்லவாகு மெனுமெய்ம்ை மல்லற் கவிதை வளந்தேர்ந் இல்லைப் புலவர் எம்மிடை(
முறையாய்த் தமிழைக் கல்வி நிறையாப் போலிக் கல்வியி கறையே மலிந்த நூலியற்ற அறையோ யவருக் கறிவுறு
 
 
 

ன்பத் தமிழுக் கொருமகனே,
அருளே உருவாந்துறவோனே, ால் வளர்த்துச் சிறப்புச் செய்தோனே,
7, ua GT 2 laiiGOGOT GUU/7G1
ம் தெய்வப் பண்பைத் தெரிவிக்கும் ல்லாம் மூழ்கித் திளைத்த புலவோனே லாம் இன்பத் தமிழின் பணியென்றே வுறுத்தி அழியா வாழ்வைப் பெற்றாயே!
ாபைப் பாரோர் அறியப் பன்முறையும் ந்து பாழில் மறைந்த பொருளாய்ந்து
ல விபுலா நந்தா நிசெய்த 3uтGирт, GT-Fт6й65ір UGGират (ВодтуғьGур!
டகத்தை இழந்தார் இற்றைத் தமிழரென கிலத்தில் விளங்குஞ் செம்மைப் பொருடேர்ந்து ம் மங்காத் தமிழ்நூல் செய்தோய், நின் புனைப் பரவிப் பணிவோம் பத்தியொடே.
வள் தோன்றுங் கோலம் மொழிவகையாற் மபாங்காய் உணர்த்த ஆங்கிலத்தின் து மாணத் தமிழில் வழங்கினையால், யே, இன்னும் ஒருகால் வாராயே.
pாதோர்முழுதும் அறிந்தார் போனடிப்போர் னோர் நெஞ்சில் நேர்மை இல்லாதோர் விக் கன்னித் தமிழைச்சிதைக்கின்றார் பத்த அண்ணல் ஒருகால் வருவாயே!
செ. வேலாயுதபிள்ளை (ஈழத்து செவ்வேள் படையல்கள்)

Page 9
புதுமைக்கும் வழிகா
( நின்றொளிரும் பண் حصر "
“நாட்டிற்கு நல்லது நல்லரசு அதனின் நல்லது நல்லறிவே"
பண்டைக் காலத்து தமிழ் மக்கள் கல்வியறிவைப் பெரிதாகப் போற்றி வந்தார்கள். நாம் சாதாரண மக்களாகக் கருதும் அவர்களே கல்வியறிவில் மிகச் சிறந்து விளங்கினார்கள். அத்தகையோருடைய கல்வியறிவின் உயர்வு எம்மைப் பிரமிக்க வைக்கின்றது. வள்ளுவப் பெருந்தகை ஒரு சாதாரண நெசவுத் தொழிலாளி. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான “மணிமேகலை’ ஆசிரியர், ஒரு சாதாரண தானிய வகை வியாபாரியாவர்.
நாட்டு மக்களைப் போலவே, நாட்டின் அரசர்களும் கல்வியறிவைப் போற்றி, அனுசரித்து வந்தார்கள். அக் காலத்தில் இருந்த முறையின்படி, அரசு குடும்பத்து, வயதில் மூத்தவனே அரசுக்குக் கட்டாயமாக உரியவனாகான். அது அவருடைய கல்வியறிவைப் பொறுத்தே நிச்சயிக்கப்படும். f
கல்வியறிவின் கட்டாயத்தையும், அதனைப் பொறுத்தே அரசுரிமை நிச்சயிக்கப்படுவதாகிய முறையையும், எடுத்துப் புகழ்ந்து பாடல்கள் மூலம் புலவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
ஆசிரியர்க்கு வழங்க வேண்டிய பொருளைக், கொடுத்தும், கீழ்ப்படிந்து பாடம் கேட்பதை வெறுக்காதும், கற்பது மிகவும் நல்லது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இருவருள்ளும், அறிவுடையவன் பாலே தாயாரின் மனமும் நாடும். அரசுரிமையும் மூத்தவனுக்கே கட்டாயமாகச் சேராது. அறிவுடையோன் பாலே அவ்வுரிமை சேரும். கீழ் வர்க்கத்தில் உள்ள ஒருவன் மிக்க கல்வியறிவுடையவனாயின், அவனிடத்தே, வந்து, பணிந்து, மேல் வர்க்கத்தில் உள்ள ஒருவன் பாடம் கேட்டலும் கூடும். இதற்குரிய பாடலைப் பாருங்கள்:
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற்றுள்ளும் சிறப்பின் பாலாற்றாயுமணம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவன் அவன்கட் படுமே - புறநானூறு (183)
இதனைப் பாடியவர், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் அரசன்.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான் 'சிலப்பதிகாரம்
 

ட்டிகளாகப் பண்டே பாட்டுச் சுடர்கள் ) - 6
ஆசிரியர், அரசரது, இளைய மகனாவர். அவரே அரசுக்கு உரியவராவர் எனச் சோதிடம் கூறிற்று. அதற்கமைய அவரது கல்வியறிவும் சிறந்திருந்தது. ஆனால், தான் இருப்பின், தன் தமையனார் அரசுரிமை இழந்து விடுவார் என்னும் பரோபகாரச் சிந்தையால் உந்தப் பெற்றுத் துறவுக் கோலம் பூண்டார் அவர்.
நாட்டு மக்களைப் போலவே, நாட்டு வேந்தர்களும் கல்வியறிவிற் சிறந்து, கவிஞர்களாகவும் விளங்கினார்கள். உதாரணத்திற்காகச் சங்ககால இலக்கியமான 'புறநானூறு என்னும் நூலை எடுத்துக் கொள்வோம். ஆங்கு இடம்பெற்றுள்ள பல பாடல்களின் ஆசிரியர்கள் வேந்தர்களாக இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
எடுத்துக் காட்டாகச் சில அரசர்களின் பெயரும், அவர்கள் யாத்துள்ள சில பாடல்களின் தொகையும் கீழே தரப்பட்டுள்ளன:
பெயர் பாடல் தொகை கோப்பெருஞ் சோழன் 10 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் நலங்கிள்ளி
அதியமான் நெடுமானஞ்சி பாண்டியன் இலவந்திகைப் பள்ளத் துஞ்சிய நன்மாறன் கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி சேரமான் குட்டுவன் கோதை
பாண்டியன் அறிவுடை நம்பி
இங்குச் சொல்லப் பெற்றதிலிருந்து, அக் காலத்தில் ஆண்கள் மாத்திரமே கல்வியறிவு பெற்றிருந்தார்கள் என்னும் முடிவுக்கு வருதல் பிழையாகும். பெண்களும் கற்றிருந்தார்கள் என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. ஒளவைப் பிராட்டியாரது பாடல்கள் பல புறநானூறு என்னும் இலக்கியத்தைச் சிறப்பிக்கின்றது. காவற்பெண்டு என்னும் பெண் சிறந்த ஒரு பாடல் பாடியுள்ளார். பெரும் கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் என்பவர் மூன்று பாடல்களை யாத்துள்ளார். இளவெயினியார் என்பவர் ஒரு பாடல் நல்கியுள்ளார்.
அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் ஒரு குறு நில மன்னன். ஒருநாள், வேட்டம் புரிவான் சென்ற அவ்வரசன் தனது நாட்டிலுள்ள மலைக்குச் சென்றான். அம்மலையிடத்தே பிளவு ஒன்று உண்டு. அதன்கண், அரிதாகக் கிடைக்கும் அருநெல்லிக் கனியொன்றினை மரமொன்று தாங்கி நின்றது. அதனை உண்டோர் நெடிது வாழ்வர் என்பர். வேட்டைக்குச் சென்ற, அஞ்சி, அக் கனியை மிகவும் சிரமப்பட்டுப் பறித்து, அதனை ஆறுதலாக அரண்மனையிற் கொண்டு வந்து உண்ணலாம் என்னும் நினைவுடன், அரண்மனைக்குத் திரும்பினான். அங்கு வந்து சேர்ந்ததும், தன்னைக் காண்பதற்காக ஒளவைப் பிராட்டியார்

Page 10
வந்திருப்பதை அறிந்தார். உடனே பிராட்டியாரை நன்கு வரவேற்று, இருக்கச் செய்து, விளக்கம் ஒன்றுமே சொல்லாமல், அக்கனியைப் பிராட்டியாருக்கு உண்பதற்கு நல்கினான். கனியை உண்ட பின்னரே அதன் தாற்பரியம் பிராட்டியாருக்குத் தெரிய வந்தது. மன்னரின் பரோபகாரச் செயல் அம்மையாருக்குப் பெருவியப்பை உண்டாக்கிற்று. அதனை வியந்து பாடுகின்றார்.
வெற்றியுள்ள தப்பாத வாளை எடுத்து, பகைவர் தளத்தின்கட்பட வென்ற, கழல விடப்பட்ட வீர வளை பொருந்திய பெரிய கையினையுடைய அதிபர் கோமான், மாற்றாரைப் போரின்கட் கொல்லும் வீரச் செல்வத்தினையும், பொன்னாற் செய்யப்பட்ட மாலையையுமுடைய அஞ்சி, நீ, பால் போலும் பிறை நுதல் போலப் பொலிந்த திருமுடியையும், நீல மணி போலும் கரிய திருமிடற் றினையுமுடைய ஒருவனைப் போல, நீ நிலை பெறுவாயாக! இதோ அதற்குரிய காரணத்தைக் கேட்பாயாக!
பழைய, நிலைபெற்றுள்ளதாகிய பெரிய மலையினது பிளவின் கண்ணே நின்ற மரத்தின் உச்சியிலிருந்து இனிய கனியை மிக அரிதிற் பெற்று, பெறுதற்கரிதென்று கருதாது, அதனை உண்பதனாற் பெறும் பேற்றிணை எமக்குக் கூறாது,
OKXXXXXXXXXOKCOKXOKOXXXXXXXXXXXX>OKXXX சத்திய வாக்கு r மனமும் வாக்கும் ஒன்றாக அமைவது சத்தியம். சத்தியத் சத்தியத்தையே நினைக்கும். வாக்கும் சத்தியத்தையே ே இருக்கும். தவறி ஒன்றைச் சொல்லும் அந்தச் சொ நினைப்பதையே - சொல்லும் வாக்கு அப்படியே பலிக்கு சித்தியாவது சத்தியத்தினால்தான்.
X
தன்னம்பிக்கை உள்ளவன்தான் மற்றவர்கள்மீதும் ந மற்றவர்களை மட்டும் எப்படி நம்பப்போகிறான்?
VA
ሥ
454545 VGdLVUD உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்க வேண்டு உலகமாகப் பாவிக்கவேண்டும். இதுவும் நல்ல வாழ்க் இரண்டு சுவாமிகள் முருகனும் பிள்ளையாரும். உலகத்தைச் சுற்றி வந்தால் மாம்பழம் கிடைக்கும் எ பிள்ளையாரோ பெற்றோரைச் சுற்றினார். 'உலகமே குடு பிள்ளையார் கொள்கை.
இவை முரண்பாடுகள் அல்ல. ஒரு மரத்தின் இரு பிரிவுக குடும்பமே உலகம்-இது வேர். உலகமே குடும்பம்-இதுகின கிளைகள் மாதிரி
y
அன்பு "அன்பே சிவம் 'அன்பே தெய்வம் என்றெல்லாம் சொல்கி சமயங்களில் தவறாகக் கூட பயன்படுத்தப்படுகிறது. ச நிலையில் ஏற்படும் அன்புக்கும் வேறுபாடு உண்டு பற் உண்டு. இவையெல்லாம் உலகியல் சம்பந்தப்பட்டது. { அன்பு, பிரேமை எனப்படும். அது சரிர சம்பந்தமானது அ புனிதமானது; என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய
OXCCXXXXXXXXX >CXXXIXXXXCCXXXXXCXXCCXXX.
 
 
 

நின்னுள்ளே அடக்கி, சாதல் ஒழிய எனக்கு அளித்தனையே, பெரும! அதனால், நீ, நீலமணி மிடற்றொருவன் போல நெடிது வாழ்வாயாக! இதோ அதற்குரிய பாடல்:
வலம்படு வாய்வாளேந்தி யொன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே, தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீந்தனையே - புறநானூறு - 91
"நாட்டிற்கு நல்லது நல்லரசு
அதனின் நல்லது நல்லறிவே"
என்பதன் உண்மையை உணர்ந்த மன்னனின் செயலே இது கல்வியறிவைப் போற்றிய பெருமைதான் என்னே!
C

Page 11
LLLL S0LLSL SA0LL AAAALS AAALS AAALLL SALS0Lq -Zše s izses
6)
TLJJLLLLLLSJSeLJLJY qJLLJSLSqSLJLLJ0Y qJLLJSeeeSLLLLLLLJLLLLLLSJS SqLJL0LJSALJLLJYSqSqqJLLJ0S
“பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றி வருகின்றது. அது இல்லாமலிருந்தால் பல வருடங்களுக்கு முன்னமேயே எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். சொந்த முறையிலும், பொதுஜன ஊழியன் என்ற முறையிலும் நான் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டதை நீங்கள் அறிவீர்கள். அவ்வப்போது திடீர் தீடீரென்று ஏக்கம் பிடிக்கும். அப்போதெல்லாம் பிரார்த்தனை செய்வேன். எனது ஏக்கம் பறந்து போய் விடும். பிரார்த்தனை செய்யச் செய்ய கடவுள் பக்தி அதிகமாயிற்று. அதனால் பிரார்த்தனை செய்வதில் ஒரு ஆசையும் ஆனந்தமும் ஏற்படத் தொடங்கியது”என்கிறார் மகாத்மா காந்திஜி
பிரார்த்தனையின் தனித்துவ சிறப்புக்களைப்பற்றி காந்திஜியின் கூற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது. உடலுக்கு எவ்வாறு உணவு அவசியமோ, அவ்வாறே ஆத்மாவுக்குப் பிரார்த்தனை அவசியம் என்று சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
“பிரார்த்தனை நமது இதய பரிசோதனையாகும். கடவுளின் ஆதரவு இல்லாவிட்டால், நமக்கு வேறு துணை இல்லை என்பதை அது நினைவூட்டுகிறது” என்று இன்னொரு இடத்தில் மகாத்மா காந்திஜி கூறியிருக்கிறார். அது வெறுமனே உதடுகளால் நிறைவேற்றக்கூடிய காரியம் அல்ல. உள்ளத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியது என்பது தத்துவார்த்தமான உண்மை.
நமது நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகள், தொடர் பிரார்த்தனையொன்றுக்கு வழிவகுத்துள்ளது. பல்வேறுபட்ட துயர நிலைமைகளையும் பயங்கரமான விளைவுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் கொடிய யுத்தம் ஒழிக்கப்பட்டு, இந்த நாட்டிலே மீண்டும் அமைதியும், சமாதானமும் நிலவி, மக்கள் அனைவரும் தங்கள் சொந்தக் கிராமங்களில், சொந்த வசிப்பிடங்களில் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்பதில் முழுமையானதொரு பலனை அடையும் வகையில் இறைவனுக்கு பிரார்த்தனை மூலம் விண்ணப்பம் செய்யும் ஒரு முற்போக்கான ஏற்பாட்டை செயற்படுத்திவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு இந்த விடயத்தில் உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் பேராதரவு கிடைத்து வருவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இறைவனின் வல்லமை மிகவும் வலிமையுள்ளது என்பதை மனதில் வைத்து, சமாதானத்திற்கும் நியாயத்திற்கும், சமத்துவத்திற்கும் வழிவகுக்குமாறு ஆன்மீக வழியில், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கூட்டு வழிபாடாக பிரார்த்தனை செய்வதன் மூலம் இறைவன் நிச்சயமாக செவிசாய்த்து, அருள்பாலிப்பான் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும்.
 
 
 

AST0LqL S TASLSSA0LS L AA0LS0AL0LS AA0L SASA0LLS A ATLLL S L 0LLT
p6) றவனுக்கு விண்ண ப்பம்
AiLqL JLLL0J LLLJLL0J SALqL M JYLL0 LLLLLL SJJY Aiq JG0SLL JLLLJYeqqqJLLLJeSLLLLLLLS 2T*NSYN
இதனை வலியுறுத்தும் வகையில், அகில இலங்கை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்து நடத்தி வரும் மாதாந்தப் பிரார்த்தனைத் தொடரின் முதலாவது நிகழ்வு, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 2ம் திகதி வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரார்த்தனை நிகழ்வு, கடந்த மே மாதம் 29ம் திகதியன்று கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தின் ஆதரவுடன், ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது.
மூன்றாவது பிரார்த்தனை நிகழ்வு, கடந்த ஜுன் மாதம் 27ம் திகதியன்று விவேகானந்த சபையின் ஆதரவுடன், சபையின் பூசை மண்டபத்தில் நடைபெற்றது. இதே தினத்தன்று, தென்னிந்தியா தமிழ்நாடு மாநிலத்தின் பல பகுதிகளிலும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டன. மாமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திலுள்ள இலங்கை அன்பர் மறவன்புலோ திரு. க. சச்சிதானந்தன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
நான்காவது பிரார்த்தனை நிகழ்வு, ஜுலை 25ம் திகதியன்று கொழும்பு இந்துக் கல்லூரியின் (இரத்மலானை) ஆதரவுடன், கல்லூரி வளவிலுள்ள பூரீ கற்பக விநாயகப் பெருமான் ஆலயத்தில் நடைபெற்றது.
ஐந்தாவது பிரார்த்தனை நிகழ்வு ஆகஸ்ட் 29ம் திகதியன்று கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆதரவுடன், சங்கத்தின் நால்வர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
ஆறாவது பிரார்த்தனை நிகழ்வு, செப்டம்பர் 26ம் திகதி இலங்கை சின்மயா மிஷனின் ஆதரவுடன், கொள்ளுப்பிட்டி ஸ்கோவில் பிளேஸ், பத்தாவது ஒழுங்கையிலுள்ள சின்மயா மிஷன் தலைமையக வழிபாட்டு மண்டபத்திலும், ஏழாவது பிரார்த்தனை நிகழ்வு கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி, கொழும்பு இந்துக் கல்லூரி (இரத்மலானை) யூரீ கற்பக விநாயகர் ஆலயத்திலும் நடந்தேறியிருக்கின்றன.
இந்துமத நிறுவனங்களினதும் அறக் கட்டளைகளினதும் ஒன்றியமான அகில இலங்கை இந்து மாமன்றம், தனது அங்கத்துவ சங்கங்களுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் ஒன்றில் இந் நாட்டுமக்களின் இன்னல்கள் அகல, நல்லதோர் அரசியற்தீர்வுடன் நாட்டின் நிரந்தர அமைதிக்காக இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை தங்கள் பகுதிகளில் ஒழுங்கு செய்து நடத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
அ. கனகசூரியர்

Page 12
梵**************紫********
a
案
********************@
இறைவனோடு இசைந்த இன்பம் இன்பத்திற்குள் எல்லாம் தலையாயது. இன்பங்களை மெய், வாய், கண்,மூக்கு, செவி அறிவு வாயிலாகப் பெறுகின்றோம், பலவழி முறைகளைக் கையாண்டு பெறுகின்றோம். இயமம், நியமம், சமாதி, வீடு, ஒன்றியிருந்துநினைத்தல்,சாக்கிரம்,சொப்பனம் என்பன அவற்றுள் சில. அவ்வாறு கருவி, கரண வாயிலாகப் பெறும் சுகானுபவ இன்ப அனுபவத்தை கும்பிடுவதனாலும் குறைவறப் பெறலாம்.
இன்ப அனுபவங்களுக்குள் எல்லாம் மேலானதாகவும், எல்லோராலும் விரும்பப்படுவதாயும், மானுடப் பிறவியினால் அரிதாக அடையப் பெறுவதாகவும் ஞானிகள் சதா நாடிக்கொண்டிருப்பதாகவும் உள்ளது வீட்டின்பம். முத்திப் பேறு. அந்த அரிய முத்தி இன்பத்தையும் வழிபாட்டு இன்பம் கைவரப்பெற்ற பெரியோர்கள் விரும்பமாட்டார்கள் என்றால் வளம் பெற்ற வழிபாட்டினால் வரும் இன்பத்தை யார் வரையறுக்க வல்லார்? அதனைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் சிறப்பாக விளக்குவார். V
இறைவனோடு அந்நியமின்றிக் கூடுவதற்கான அன்போடு கும்பிடுவதே அன்றி வீட்டினைக் கொடுத்தாலும் ஏற்காக கொள்கையில் வலிமையோடு விளங்குவார்கள். மெய்ம் மையான கும்பிடும் கொள்கை கூடப்பெற்றவர்கள் முத்தி இன்பம் சித்திக்க வேண்டியதில்லை என்ற உறுதியோடு உலாவுவார்கள். அவர்கள் கும்பிட்டுச் சுகம் கண்ட மெய்ஞானிகள். அதனால் அவர்கள் வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்பர்.
அத்தகைய வழிபாட்டின்ப உணர்வு திருநாவுக்கரசு நாயனாருக்கு வாய்க்கப்பெற்றது. திருவண்ணாமலை திருக்கோவில் வழிபாட்டின் போது திருநாவுக்கரசரும் அந்நிலைய ரானார். வீட்டின்பத்திற்கு மேலான இன்ப உணர்வை வழிபாடு நல்கியது. பிறப்போடு இருப்பது வீட்டின்பத்திற்கு மேலான பெருமையைத் தரவல்லது என்ற பெருமையை திருவண்ணாமலையில் நிலை நாட்டினார். “தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்’ என்று அதனை உறுதிப்படுத்துவார் சேக்கிழார்.
சுந்தரமூர்த்தி நாயனார் சிதம்பர தரிசனத்தின் போது பெற்ற அனுபவம் பேரின்பப்பேறாகும். வழிபாட்டில் அவர்-இந்து வாழ்கின்ற சடையுடைய பெருமான் ஆடுகின்றார். அது அளவும் ஒப்பும் கடந்த பெருநடனம். கும்பிடுவதால் தமக்கு நிகழ்ந்த பேரின்பக் கடலில் திளைக்கின்றார். சமான மற்ற மாறுபாடில்லாத மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
கண்களில் நின்றும் ஆனந்த அருவி சொரிகின்றது. கைகள் உச்சி மேல் குவிகின்றன. வாய் வாழ்த்துகின்றது;“நிலா மலர்ந்த சடையுடைவனே! உனது திருநடனம் கும்பிடும் வாழ்வு பெற்றேன். இவ்வுலகத்தில் நான் வந்த மானிடப் பிறப்பு எனக்கு நல்ல இன்பமானது.”
 
 

k 米米米米米米米米 米米米朱 味 米 来 米 米米米米米米米米
米 கவடிவேலு 米米米米 米 米 米米米米米米米米来来米 米米 இவ்வாறு மானுட வாழ்வில் சிவவழிபாட்டில் கிடைக்கும் பேறு முத்தி இன்பத்தை விடச் சிறந்தது. அந்த வழிபாட்டு அனுபவ வாயிலில் நின்றபோது வாதவூரடிகளாருடைய வாயில் வந்த மணிவாக்கு “இன்பமே என்னுடைய அன்பே" என்பது.
சிவபெருமானிடத்தில் செலுத்தும் அன்பு வழிபாட்டினால் அடையப்பெறும் இன்ப நிலையைப் பலர் வழிபாடு செய்தும் இழந்துவிடுகின்றார்கள். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கினாலும், சிரங்குவித்துக் கும்பிட்டாலும் குறிக்கோளைத் தவற விட்டு விடுவதால் வழிபாட்டு இன்பம் வழி தவறிவிடுகின்றது. அதனால் வழிபாடு இன்புறுவதற்காக அல்ல. துன்பங்களைத் துடைப்பதற்காக புதிதான இன்பங்களை வரவழைப்பதற்காக என்ற புது வணக்கம் திருக்கோவில் வழிபாட்டில் எல்லோரது உள்ளங்களிலும் பாரம்பரியத் தன்மை போலக் குடியேறிவிட்டது. அதனால் வழிபாட்டில் இன்பம் உண்டு என்ற நிலை மறக்கப்பட்டுவிட்டது. குறைகளைப் போக்கிக் கொள்ளுவதற்கும், குதூகலத்தை வருவிப்பதற்குமே என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. வழிபாட்டின்பம் மறைக்கப்பட்டுவிட்டது.
வழிபாட்டு இன்பம் இல்லை. வழிபாட்டின் போது வேண்டுவனவற்றை வேண்டிப்பெற்றுக்கொள்ளலாம் என்ற உணர்வு நிலையாக நிலைத்து நின்றுவிட்டது. சுவாமியின் தீபாரதனையின் போது வேண்டியதை கேட்டுப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் மனம் அழுந்தினால் ஆராதனை இன்ப அனுபவம் எங்கே
அடைதற்குரிய மானுடப் பிறப்பைப் பெற்றும் - அடைதற்குரிய பெருமானுடைய பாதங்களைப் பணியமாட்டார்கள். அதனால் வழிபாட்டின்பமான கிடைத்தற்கு அரிய இன்பத்தை இழந்தார்கள் என்பது திருமந்திரம்.
வான்புகழ் கொண்ட வள்ளுவனாரும், "மெய்யறிவினையுடைய பெருமானது நற்பாதங்களை வழிபடாராயின் எல்லா நூல்களையும் கற்ற கல்வியினாலாய பயன் யாது?
“எட்டுக் குணங்களையுடைய பெருமானது தாள்களை வழிபடாத தலைகள் பயன்படுதலுடைய வல்ல’ என்று வலியுறுத்துவார்.
வழிபாட்டு இன்பத்தை வழுவிக்கும்பிடும் கொள்கையை திருவாசகம் திருந்த அமைத்துக் காட்டும்.
"வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் மாலையை அணிந்த பெருமானைத் தேவர்கள் வந்து வணங்குகின்றார்கள். எதற்காக? வானவர்கள் வாழும் பொருட்டு வணங்குகின்றார்கள். தாம் மேலும் உயர்வு பெற வழிபடுகின்றார்கள். தம்மைப் பிறர் எல்லாம் வந்து வணங்கும் பொருட்டு வழி படுகின்றார்கள். நானும் உன்னை வழிபடுகின்றேன். “பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே” எனப் பாடுவார் வாதவூரர்.

Page 13
வழிபாட்டு இன்பத்தை மறந்து, பிறப்பை நீக்கி, பிறவாமையைப் பெற்று, வீட்டின்பம் பெறுதலே திருக்கோயில் வழிபாட்டின் குறிக்கோள் என்பதும் மணிவாசகப்பெருமான் காலத்தில் மறுக்கப்பட்டிருந்ததைச் சொல்லாமல் சொல்லுகின்றார் வாதவூரடிகள், மாறாக உலக லெளகீகங்களில் பட்ட இச்சைகளை நிறைவேற்றுவதற்காக திருக்கோவில் வழிபாடு பயன்படுத்தப்பட்டது. தாம் மேன்மையான வாழ்வுபெறுதல், தங்கள் பதவிகளை உயர்த்திக் கொள்ளுதல், தம்மையும் பிறர் வந்து வணங்குதல் என்ற குறிக்கோளுடையதாக வழிபாடு அமைந்திருந்தமையை வாதவூரர் நன்கு உணர்ந்தார். ஆதலின், "திருமால் பிரமன் இந்திரன் என்போர் முன் வந்து தரினும் அப்பதவிகளைக் கொள்ள மாட்டேன். நின் அன்பருடன் உறவாடுவேன், அன்றி நின் திருவருளால் நரகம் புகின் அதனையும் விரும்புவேன்” என்றார். நின்னையே முற்றிலும் வாழ்த்தி வழிபாடு செய்வதற்கு வீரக்கழல் அணிந்த திருவடியில் செலுத்தும் அன்பினை அருள் செய்ய சிவபெருமானிடத்தில் இரந்து வேண்டுவார்.
திருமால் ஈரடியால் மூவுலகங்களை அளந்தவன், நான்கு திக்குகளிலும் உள்ள முனிவர்கள் ஐம்புலன்கள் விரிவடையப் போற்றி செய்வார்கள். ஒளிவீசும் திருமுடியைக் கவித்த நெடுமால் பன்றி வடிவம் கொண்டு பாரினை அகழ்ந்தான். அவன் கீழ் ஏழு உலகங்களையும் இடந்து சென்றான். ஏன் தெரியுமா? திருவடியைக் கண்டு தானே சிவபிரான் ஆகி விட ஆசை கொண்டான்.
தன்தலைக்குப் பதிலாக ஆட்டின் தலையைப் பெற்றுக்கொண்ட தக்கன் நாராயணனை விட ஒரு படி அதர்ம வழியில் முன்னேறிச் சென்றான். சிவபெருமானே நமக்கு வேண்டப்படுவதில்லை என்று எண்ணி வேள்வி செய்தான்.
器罚
器
器器器器器器器器器器器器器器器器德器器器器器器器器器器器
鑒 விநாயகரை வணங்கும்போதுத
து வடக்கேயிருந்து ஒருநாள் அகத்தியர் தம்முடைய கமண்ட6 து வைத்துக்கொண்டு சிவபூசை செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் இந்திரன் சீகாழியில் மறைந்திருந்து பூசை பூசைக்குப் பூ கிடைக்கவில்லை. இதற்கு என்ன செய்வது எ அகத்திய முனிவருடைய கமண்டலத்திலிருக்கும் நீரை வெளி
உடனே இந்திரன் பிள்ளையாரை வழிபட்டு அகத்தியரின் கம காக்கை வடிவில் சென்று கமண்டலத்தின்மீது அமர்ந்தார். ஆ
கமண்டலத்தைக் காலால் உந்திவிட்டுப் பறந்தது. கமண்டல
இ அகத்தியர் காக்கையைச் சீறினார். காக்கை ஒரு சிறுவனாக உ * குட்டஒடினார். சிறுவனும் ஒடினான். அகத்தியர் மேலும் விரட் க் காட்டவே திகைத்துவிட்டார் அகத்தியர். பின்னர் அவர் பிள்ை க் என்று கருதிக் குட்டவந்த நானே சிறுவன் என்று சொல்லித் தம்
பிள்ளையார் "அன்பனே இன்று முதல் எம்திருமுன் பக்தியுட
器 சீரிய செல்வமும் பெற்று வாழ்வர்” என்றார். அது முதல் ஏற்ப 器 器器器德器器德器器德器器器德德德器器德器器德德器德德器器器器
 

器器器器器器器器器器器器器器器器器德器器器器器器德器器器器
ககளாலும் தலையில் குட்டிக் கொள்ளுகிறோம். ஏன்? பத்தில் கங்கை ஆற்றுநீரை அடைத்துக்கொண்டு பக்கத்தில்
செய்து கொண்டிருந்தான். நெடுநாள் மழையில்லாமையால் ன்று இந்திரன் கலங்கினான். அப்போது அங்கு வந்த நாரதர் பில் பாயும் படி செய்தால் நந்தவனம் செழிக்கும் என்றார். ண்டல நீரை வெளியேற்றும்படி வேண்டினான். பிள்ளையார் புகத்தியர் காக்கையைக் கையசைத்து விரட்டினார். காக்கை ம் கவிழ்ந்தது. கமண்டலநீர் காவிரியாகப் பெருக்கெடுத்தது.
ருமாறி நின்றது. சிறுவனை இரண்டு கைகளாலும் தலையில் டிக் கொண்டேஒடினார். பிள்ளையார் தம் உண்மை வடிவைக் 1ளயாரை வணங்கி, ஒங்காரப் பொருளே, உன்னைச் சிறியவன்
ட்டதுதான் இந்தக் குட்டிக் கொள்ளும் வணக்கமுறை.
செந்தமிழ் நாட்டில் கன்னிப் பெண்கள் தாம் விரும்பிய கணவரை அடையச் சிவநோன்பு நோற்று சிவனே சிவனே! என்று ஒலமிட்டு வழிபட்டார்கள். “பழமைக்குப் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் விளங்கும் பெருமானே!உன்னுடைய சிறந்த அன்பரை வணங்குவோம். அவரே எம் கணவராவர். அவர் தொழும்பை பணிந்து செய்வோம். இவ்வரத்தை எமக்கு நல்கினால் எமக்கு குறைவு இல்லை” என வேண்டுதலால் அறியலாம்.
பொய் அன்பும் மெய் அன்பும் கலந்த வழிபாட்டில் கண்ணப்பருடைய அன்பு தவிர்ந்த ஏனைய அன்பு எல்லாம் பொய்யன்பு என்பது புலனாகும்.
சிவபூசை வழிபாட்டில் குறுக்கிடும் சிவபாதகத்தைத் தடுப்பதில் ஏற்படும் பாதகமும் சிவபுண்ணியப் பலனைத் தரும் என்பதற்கு விசாரசருமனார் என்றும் சான்றாக உள்ளார்.
உமையம்மையாரோடு, அழகிய அம்பலத்தை ஆடுகின்ற ஆடல் வல்லான் வழிபாட்டிற்குத் தலையை வழங்கினான். வாழ்த்துவதற்கு வாயை வைத்தான். கூடிப்பழகுவதற்குத் தன் சிறந்த அடியார் கூட்டத்தையும் வைத்தான். எம் பெருமான் இலக்கை அடையத் தந்த சிவலோக நெறியை மாற்றி வழிபாடு திசை திரும்பியது எதனாலோ? நெறி அல்லா நெறியை நெறியாகக் கொள்வது ஏன்? தூய வழிபாட்டில் பூதாகாரமான பிரபஞ்சம் புகுந்து விட்டது. அது உள்ளும் புறம்புமாக அத்துவிதமாக உப்பும் நீரும் போலாகிவிட்டது. அதனால் உண்மை எது? உண்மை அல்லாதது எது என்பதைப் பிரித்தறிய முடிவதில்லை. உற்று நோக்கின் திருவாசகம் உண்மையை உணர்த்தும் ஒளி விளக்காகும்.
“மாணிக்கம் பதித்த பொன்மலையே! உன்னிடத்தில் நீங்காத அன்பினை என் நெஞ்சினுள்ளே நிலையாக உருகும்படி அருள் புரிவாய்” என்பதும் மாணிக்க மணிவாக்கு.
லையில் குட்டிகொள்வது ஏன்? 鑒
O5
தலையில் குட்டிக் கொண்டார்.
ன் நின்று தம் தலையில் குட்டிக் கொள்வோர் கூரிய அறிவும்
(நன்றி. ஞானமணி) 器器德器器器器器器器器器器德器器德德器德器器德器德器器德器德
器

Page 14
இ8zaseG öööööööööö፻፰፻፵፰፻፰፻፵፰፻፰፻፰፻፷፬
வேலவனே விநாயகனு
உலகினையே ஆடவை
கால வெள்ளம் அள்ளி
நலம் தந்து காத்தருள்
நாட்டினிலே நல்லாட்சி
ஆட்டிப் படைக்கின்ற அ
போட்டி பொறாமைகள்
காட்டிடுவாய் உன்திற
எட்டுத்திசை பாலகர்கள் முட்டவரும் கொடு வின்
சட்டவிதிமுறைகள் சம
வாட்டம் நீங்கிவிட வழி
மருத நிலச் சூழலிலே ம மட்டுமாநிலத்தினிலே
வேதனைகள் சுமந்து (
விரைந்து வந்து காத்து
உன்னப்பன் சிவனெங்
காக்கும் கடமை கொன
கூட்டிவந்து காட்டிவி பாடியுந்தன் அடிபணி
s
sحتمی
2% 4 • Vum V LLeLLeeeLSLLESLLESEESEEELS
 
 
 
 
 

லுக்கு இளையோனே
பக்கும் சிவனார் மைந்தா
வரும் வேதனைகள் மறைந்துவிட
வாய் சித்தாண்டி வேலவனே
நாளும் நிலைத்து விட அரக்கநிலை தான் அழிய
பூண்டோடு மறைந்து விட
னைச் சித்தாண்டி வேலவனே
* இனிதெம்மைக் காத்துவிட
னைகள் எட்டிலே விலகிவிட த்துவத்தை நிறுவிவிட
Nதருவாய் சித்தாண்டி வேலவனே
2யிலேறி வருவோனே
குடியிருக்கும் கோமகனே நிற்கும் எங்கள் தமிழ் மக்களையே
5ருள்வாய் சித்தாண்டி வேலவனே
பகே, அன்னையவள் உமையெங்கே
ண்ட மாமன்தான் எங்கு சென்றான்
டு, கொடுமைகளை நீக்கிவிடு ந்தேன் சித்தாண்டி வேலவனே
த. மனோகரன் “உமாபதி”
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

Page 15
செல்வி.
B. A
மகளிர் கல்லூ சிங்கமருவிய காலப்பகுதியில் ஊற்றெடுத்த சைவ பக்திப்பிரவாகம் பல்லவர் காலத்தில் பெருநதியாகப் பெருக்கெடுத்து ஒடுவதற்கு முன்னின்று உழைத்தவர்கள் நாயன்மார்களாவர். சைவ சமயத்திற்கு கதியாகக் குறிப்பிடப்படுபவர்களும் இவர்களே. இவர்கள் சம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் என்போராவர். சைவம் என்ற மாளிகையை தாங்கிநிற்கும் தூண்களும் இவர்களே என்றால் மிகையில்லை. இன்றைய உலகவாழ்வில் நாலுபேர் சொல்லைக்கேள், நாலுபேர் மெச்சும்படி நட, நாலு பேர் பேச்சைக் கேட்டு நட என்ற மொழிகள் இந்த நாயன்மார்களையே குறித்து நிற்கின்றதென எண்ணத்தோன்றுகின்றது. இறைவன் இவர்கள் மூலம் நமக்கு வேண்டிய வாழ்க்கை நெறியை அருளியதாக நம்புகின்றோம். சம்பந்தர் தனது பாடலிலே “எனதுரை தனதுரையாக’ எனக் குறிப்பிட்டதிலிருந்து
இவ்வுண்மையை அறியலாம்.
நாயன்மார்களில் திருஞானசம்பந்தரை நோக்கினால் சீர்காழிப்பதியிலே சிவபாதவிருதயருக்கும் பகவதிஅம்மைக்கும் மகனாகத் தோன்றியவர். ஒரு நாள் தந்தையார் கோவிலுக்குச் செல்லத் தானும் வருகிறேன் என அழுது தந்தையாரோடு தோணிபுரக்கோவிலுக்கு சென்று தந்தை நீராடும் போது குளக்கரையில் இருத்தி நீரில் மறைந்து மூழ்க, ஊனத்தந்தையைக் காணாது ஞானத்தந்தையை நோக்கி அழ இறைவன் உமாதேவியாரோடு இடபத்தில் காட்சியளித்தார். ஞானப்பாலையும் வழங்கி மறைந்தார். நீராடி வந்த தந்தை மகன் வாயில் பால் வடிந்திருப்பதை கண்டு யாரிடம் இருந்து பால் பருகினாய் என வினவ தோணிபுரத்தை நோக்கி “தோடுடைய செவியன் விடையேறியோர்” என்ற தொடரை உடைய பாடலைப் பாடி இறை பெருமையை விளக்கினார். அப்பொழுது அவருக்கு மூன்று வயது.
திட்டமிட்ட வகையில் பக்திப் பாடலைப்பாடி இயற்கையிலே இறை பெருமையை கண்டும், காட்டியும், சிவன் பெருமையை தமிழ் நாடெங்கும் பரப்பினார்.
இவர் பாடிய பாக்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறையாக வகுக்கப்பட்டு வேதசாரமாக விளங்குகின்றது. இறைவனை தந்தையாகவும் தன்னை மகனாகவும் கருதி சற்புத்திர மார்க்கத்தில் நின்று சைவர்களுக்கு வழிகாட்டி சாமிய முத்தியைப் பெற்று இறைநிலை அடைந்தார்.
நாயன்மார்களில் மூத்தவராகக் கருதப்படுபவர் நாவுக்கரசர். புகழனார் மாதினியாருக்கு மகனாகத் தோன்றி சிறு வயதில் பெற்றோரை இழந்து சமண சமயத்திற்கு சென்று மீண்டும் சைவரானார். இறைவன் அருள் இல்லாவிட்டால் அவனைக் காண்பதே அரிது என உணர்ந்து “காட்டுவித்தால் ஆரொருவர் காணதாரோ’ எனப்பாடுகிறார். இறைவனுக்கு பாமாலை புனைந்தும் உழவாரத்திருப்பணிபுரிந்தும் அஞ்சா நெஞ்சினராகி சைவத்தை வளப்படுத்தினார். இதனை "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என அடிகளில் காணலாம்.
இவரது தேவாரங்கள் 4, 5, 6" திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. இவர் இறைவனை தலைவனாகவும் தன்னை அடிமையாகவும் கருதி வழிபட்டார். எனினும் நாயகன்நாயகி பாவத்திலிருந்தும் பக்திக் காதலை தெளிவுறுத்துகிறார். இதனை “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தியவனிருக்கும் வண்ணம் கேட்டாள்" என்ற தொடரையுடைய பாடலில் காணலாம். சரியை நெறியில் நின்று 81 வயதுவரை இவ் உலகில் வாழ்ந்து சாலோக முத்தியை பெறுவதற்குரிய வழியை சைவ மக்களுக்கு உணர்த்தியவராவார்.
 

சு. சுதமதி
Hons ரி, சாவகச்சேரி
சைவ நாயன்மார்களில் தோழனாக இறைவனைக் கண்டு வழிபட்டவர் சுந்தரமூர்த்தி நாயனார். பல்லவர் கால நடுப்பகுதியில் சடையனார் இசைஞானியருக்கு மகனாகத் தோன்றியவராவார். தேவலோகத்தில் ஆலாலசுந்தரர் என்ற பெயரோடு சிவத்தொண்டு புரிந்த இவர் அணிந்திதை கமலினி இரு பெண்களைக் கண்டு காதல் கொண்டமையால் பூலோகத்தில் திருநாவலூரில் தோன்றி இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பெருமைக்குரியவர்.
சுந்தரர் இறைவனிடம் கொண்ட தோழமை நெறி சிவபக்தியின் பெருக்கத்தை நன்குணர்த்தி நிற்கின்றது. பக்தி பாவங்களில் மற்றைய எவர்க்கும் இல்லாத நெருங்கிய உறவைத் தோழமை நெறியிலே காணலாம். ஏனைய உறவுகளில் மதிப்பு, மரியாதை காணப்படும். இவ் உறவில் ஏசவோ, கோபிக்கவோ, கிண்டல் செய்யவோ உரிமை ஏற்படுகிறது. சுந்தரர் இறைவனை தோழனாக ஏற்று குண்டையூரில் பெற்ற நெல்லை எனக்கு பெற்றுத்தரவேண்டும், உன்னைவிட்டால் யாரும் இல்லை என ஏவுகின்றதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதனை “நீளநினைந்தடியேன்” என்ற பாடலில் அறிந்து கொள்ளலாம்.
பண்நயம் பொருந்திய பக்திப் பாடல்களையும், வசைப்பாடல்களையும் பாடி சைவசமயத்தை வளம் படுத்தினார். இதனை “பண்ணாய் இன் தமிழாய் பரமாய பரஞ்சுடரே" என்ற அடிகளில் இருந்து பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்தில் சுவை ஒப்பாய் என்பதிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
வசைபாடும் போது உரிமையோடு “ஒதக்கடல் நஞ்சினையுண்டிட்ட பேதைப் பெருமாள்” என்றும் “நீலமார்க்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்தா” எனவும் வஞ்சிக்கிறார்.
இவரது பாடல்கள் சைவத்திருமுறையில் ஏழாவதாக வகுக்கப்பட்டுள்ளன. இப்பதிகத்தில் இயற்கையில் இறைவன் வீற்றிருக்கும் சிறப்பையும் நாயகன் நாயகி பாவத்தில் நின்று இறைவன் பக்தியையும் பாடி, சகமார்க்கத்தில் நின்று சாலோக முத்தியை பெற்று வழிகாட்டினார்.
நால்வரில் இறுதியாகக் குறிப்பிடத்தக்கவர் மாணிக்கவாசகர். சம்புபாதசிரயருக்கும் சிவஞானவதியாருக்கும் மகனாகத் தோன்றிதேன் போன்ற திருவாசகத்தையும் திருப்பாவையையும் சைவ சமயம் வளர்ச்சியடையும் பொருட்டு வழங்கி உள்ளார். அவன் அருள் இன்றி அவனை அடைய முடியாது என்ற உண்மையினை “அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற அடிகள் மூலம் உணர்த்தி சைவத்திற்கு வழிகாட்டினார்.
திருக்களுக்குன்றம், சிதம்பரம், திருஉத்தரகோச மங்கை போன்ற தலங்களை தரிசித்து இறைவனிடம் இருந்து பெற்ற அனுபவங்களை திருவாசகமாக தந்துள்ளார். இவ் வாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்றும், திருவாசகம் தேன் என்பதிலிருந்தும் இதன் உண்மையை நன்கு உணரலாம்.
இறைவன் நாயகன் நாயகி பாவனையில் நின்று வழிபட்டு சன்மார்க்க நெறியை காட்டி சாயுச்சியம் என்ற முத்தியைப் பெற்று வழிகாட்டியவராவர்.
இவ்வாறு நாயன்மார்கள் காட்டிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் நின்று பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி, முத்தி என்னும் கரையை அடைவோமாக.

Page 16
சித்தர்களின் பார்
நாம் வாழும் இந்த உலகம் பரந்தது. பல்லாயிரக் கணக்கான ஜீவராசிகள் இன்று இப்பாரெல்லாம் வாழ்கின்றன. பார்க்குமிடமெல்லாம் எண்ணிலடங்கா இறைவன் படைப்புக்கள் பல்கிப் பெருகியிருக்கும் ஜீவராசிகளில் ஆண்டவனின் அற்புத படைப்பே மனிதன். உலகின் இன்பப் பிறவியே இம்மனிதன்தான். “எண்ணரிய பிறவிதனில் மானிட பிறவிதான் யாதினுமரிதரிது காண்” எனத் தாயுமானவர் சிறப்புரைக்கிறார். மனித உடம்பை விட மகத்தான பிறவி கிடையாது. பொன் வைடூரியம், கோமேதகம் போன்றவைகளிலும் மேலாகப் போற்றி பாதுகாக்க வேண்டிய பொருள் உண்டென்றால் மனித உடலைத்தான் நாம் குறிப்பிடலாம். மனித உடம்பை மரகத மாளிகை என்றும், நடமாடும் பொற் கோயில் என்றும் கவிஞர்கள் கருத்துரைக்கின்றார்கள். காலமெல்லாம் அழியாத வைரத்தைவிட காற்றால் அழியும் இம்மனிதப் பிறவி மதிக்கப்படுகிறது. திருமூலர் அவர்கள் உடம்பின் பெருமையை பின்வருமாறு எடுத்துரைக்கிறார்.
"உடம்பினை முன்னமிழக் கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளேயுறு பொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில் - கொண்டானென் உடம்பினை யானிநந் தோம்புகின்றேன்.” சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம். நல்ல திடகாத்திர உடம்பிருப்பின் இவ்வுலக இன்பங்களை இனிதாக அனுபவிக்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கினையும் அடைவதற்கு ஆதாரமாக இருப்பது நமதுடம்பு. இவ்வுடம்பு அழியின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இன்பங்கள் எமக்கு எட்டாக்கனியே. இதைப்பற்றி திருமூலர் தமது திருமந்திரத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
உடம்பாரழியிலுயிரா ஏழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டா நடம்பை வளர்க்கு முபாய மறிந்தே யுடம்பை வளர்த்தே உயிர் - வளர்த்தேனே,
மகத்தான மானிட உடம்பு எங்கு, எவ்வாறு, எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டது. மனிதனின் ஆரம்ப தோற்றம் எவ்வாறிருந்தது? போன்ற கேள்விகள் இன்னும் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. மேல்நாட்டு அறிஞரான டார்வின் என்பவர் “மனிதனானவன் குரங்கிலிருந்தே படிப்படியாக மாற்றமடைந்து வந்துள்ளான்” என்கிறார். ஆனால் இன்றும் பல அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்த சித்தர்கள் தமது தவப் பயனால் பல உண்மைகளை இவ்வுலகுக்கு எடுதுரைத்துச் சென்றுள்ளார்கள். மனிதன் முத்தி பெறும் வழிகளையும் அவர்களை வாட்டும் நோய்களுக்குரிய மருந்துகளையும் பற்றிப் பலவிதமான நூல்களை எழுதிச் சென்றுள்ளார்கள். அத்சித்தர்கள் மனித தோற்றத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைச் சற்று ஆராய்வோம். உலகில்
 

வயிலே .
இன்று காணப்படும் சகல பொருட்களும் மண், நீர், நெருப்பு, காற்று, வளி என்னும் ஐம்பூதங்களாலும் இறைவனின் திருவருளாலும் ஆக்கப்பட்டவை என்பது சித்தர்களின் வாதம். இதைப்பற்றித் திருமூலர் தமது ஞானோபதேசத்தில் இப்படிக் கூறுகிறார்.
"மண்ணுடன் நீரு மருவியுடையதாய் விண்னொடு வாய்வு விரும்பியுயிரதாய் திண்டழல் தன்னோடு சேர்ந்து கலந்துநின் றண்ட ழகாகவமரும் சிகாரமே”
ஐம்பூதங்களாகிய மண்ணும், நீரும் சேர்ந்து உடம்பாகவும், காற்று ஆகாயமும் சேர்ந்து உயிராகவும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் நெருப்பானது இவற்றைக் கலந்து சக்தியை உருவாக்கியிருப்பதாகவும், இச்சக்தி எப்போது உடம்பை விட்டு நீங்குகிறதோ அப்போது உயிர் நீங்குகிறதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் உயிர் நீங்கிய உடம்பு வெறும் மண்ணும் நீரும் கலந்த கலவையே எனக் குறிப்பிடுகிறார்கள். இதனால்தான் புதைக்கப்பட்ட உடம்பானது அழிந்து மீண்டும் மண்ணாகவும் நீராகவும் மாறி அழிந்து விடுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்கள் இந்திய சித்தயோகிகள்.
உலகிலுள்ள நான்கு வகை யோனிகளும் ஏழுவகைத் தோற்றங்களும் எண்பது இலட்சம் ஜீவராசிகளும் மனித உடம்பும் மண்ணிலுள்ள ஒவ்வொரு கருவியிலிருந்தும் ஆண்டவனால் படைக்கப்பட்டதாக இந்து வேத ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
மரங்களில் பெரியதெனக் கணிக்கப்படும் ஆலமரம் தோன்றியதெவ்வாறு? அதன் ஆரம்ப நிலை என்ன? சிந்திக்கும்போது வியப்பான விடை வருகின்றது. சிறிய ஆலம் வித்து இன்று பெரிய மரமாக உரு மாறிநிற்கின்றது. இவ்வாறே இறைவனின் அற்புத சிருஷ்டியான மனிதனை நோக்குவோம். ஆறடி வளர்ந்த மனிதனின் ஆரம்ப வடிவம் ஒரு துளி விந்துதான். இதை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் "அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெருகியொரு ஆகமாகியோர் பாலரூபமாய்ப்" எனபிக அழகாகப் பாடியுள்ளார். இவ்வாறு பட்டினத்தாரும் "ஒரு மடமாது ஒருவனுமாகி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து" என்னும் பாடல்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அணுவளவாகிய சிறியவெண்ணிற விந்து கருவில் சிவப்பு நிறநாதத்துடன் கலந்து இருபத்துநான்கு நிமிடங்களில் பேன் வடிவிலும் இருபத்து நான்கு மணித்தியாலங்களில் குண்டுமணி அளவாகவும் வளர்ந்து விடுவதாகவும் பின்னர் பத்து தினங்களில் அது ஒரு குழந்தை வடிவைப் பெறுவதாகவும் ஒரு மேல்நாட்டறிஞர் குறிப்பிடுகின்றார்.
இதற்கு முன்னரே பாடப்பட்டுள்ள தேவாரத்தில் "ஊணே ஊனினுள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற கருவே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஒப்புநோக்கும்போதுதேவாரத்தின் கூற்றை மேல்நாட்டறிஞரின் விளக்கம் ஆமோதிப்பதை நாம் அறியலாம்.

Page 17
சித்தர் நூல்களில் சில விபரங்கள் நமது சிந்தனையை கவருவதாக உள்ளன. ஒருவனுடைய அறிவு அவனது தந்தையின் அறிவை ஒத்ததாகவும், மனமானது தாயின் மனதை ஒத்ததாகவும் மனமும் அறிவும் ஊனிலிருந்தே உருவாகியுள்ளதாகவும் அவை கூறுகின்றன.
உடம்பில் முதன்மையாகவுள்ளது தாதுவாகும். தாது என்பதற்கு முதல் எனவும் பொருள் கொள்ளலாம். இத்தாதுக்களை சித்தர்கள் ஏழுவகையாகப் பிரித்து நோக்குகிறார்கள். (1) இரத்தம் (2) ஊண் (3) கொழுப்பு (4) எலும்பு (5) மச்சை (6) நிணநீர் (7) விந்து
இவற்றில் விந்துதான் உடம்பிலுள்ள பொருள்களில் முதிர்ந்தது. முதன்மையாகவும் உள்ளது. இது அதிகமாக அழிக்கப்படின் ஐம்புலன்களும் மங்கும். உடல் மெலிந்து ஆயுள் குறையும். இவ்வாறு மெலிந்த உடலுக்குத் தேவையான உணவும் ஒய்வும் தகுந்த மருந்துகளும் கொடுத்து நிவர்த்தி செய்யலாம் என சித்தர்கள் ஆலோசனை தருகிறார்கள்.
சித்த நூல்களின் சில விளக்கங்களை ஆராய்வோம். நமது இரத்தத்தில் இரும்பும் கந்தகமும் உள்ளன. இரத்தம் குறைந்தவர்களை இரும்பும் கந்தகமும் சாப்பிடச் சொல்லி சித்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இக்கருத்தையே “இளைத்தவன் இரும்பைத்தின்’ என்னும் மூத்தோர் கூற்று எடுத்துரைக்கின்றது. நமது நரம்பில் வெள்ளியும் உடம்பு முழுவதும் கந்தகமும் மலத்தில் சிறுநீரில் ஊன்சத்தும் நவச்சாரமும் காபனும், எலும்பில் வங்க சத்தும், உடம்பில் சுண்ணாம்பு வெடியுப்பு கறியுப்பு முதலியனவும் இருப்பதாகவும், இவற்றில் ஏதாவதொன்று குறைந்தாலும் நமதுடம்பு நோய் என்னும் பள்ளத்தில் விழுமெனவும், இவற்றுக்குரிய மருந்துகள் வழங்கப்படின் அந்நோய்கள் நீங்குமெனவும் சித்தர் நூல்கள் விளக்குகின்றன.
மனிதனின் உடம்பில் கந்தகச் சத்து குறையின் அவனுடம்பில் பலமும் அழகும் குன்றும் எனச்சித்தர் நூல்கள் எச்சரிக்கின்றன. சித்தர்கள் பைத்தியம். நீரிழிவு மனோ வியாதிகள் போன்றவற்றிற்குக் குறிப்பிட்டிருக்கும் சில மருந்துவகைகளை நாம் அவதானிக்கும்போது அவை நமக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியனவாக இருக்கின்றன. பண்டைய காலத்தில் இவ்வைத்திய முறைகள் கையாளப்பட்டு சிறப்பான வெற்றியும் பெறப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆங்கில வைத்தியங்களில் சில நோய்கள் உடனே தீர்ந்தது போல் தோன்றினாலும் மீண்டும் சில நாட்களின் பின்னர் அந்நோய் வருவதை நாம் அவதானிக்கலாம். ஆனால் சித்தர்களின் இவ்வைத்திய முறை நோய்களைப் பூரணமாக குணப்படுத்தியுள்ளன என்றால் வியக்கத்தானே வேண்டும். சித்தர்கள் கையாண்ட சில நோய்களுக்கான வைத்திய முறையைக் கருத்தில் கொள்வோம்.
மனிதனின் மண்டையோட்டைப் பொடி செய்து பசுப்பால் விட்டு அரைத்து வில்லைகளாக உருட்டி பின்னர் நன்றாகக் காயவைத்து ஒரு புடத்தில் நன்கு சூடாக்கி பயன்படுத்தினால் பைத்தியம் தீரும் என்றும், அத்துடன் நீரிழிவு இரத்த சல நோய்கள் என்பவற்றுக்கும் இவ்வைத்திய முறையைப் பயன்
 

படுத்தலாமென்றும் மேலே குறிப்பிட்ட பொடியையும் உடம்பிலுள்ள ஒருவித குடலையும் எடுத்து நீற்றி திருநீற்றுடன் கலந்து கொடுத்தால் பயம் மனோவியாதிநீங்கும் எனவும் சித்தர் நூல்கள் விளக்கம் தருகின்றன.
அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்து முதல்நாள் காய்ச்சி ஆறவைத்த நீரில் ஒருகோப்பை அருந்தி வந்தால் நீண்ட ஆயுளைப்பெறலாம் என்றும், இதுவே முன்னர் காயகல்ப்பம் வழங்கப்பட்டு வந்ததாகவும் நூல்களில் இருந்து அறியக் கிடக்கின்றது. சர்மரோக நிவாரணியான சஞ்சீவி மூலிகையை அறிந்து கொள்வதற்கும் இந்நூல்களில் வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இம்மூலிகையைக் கொதிநீரில் இடும்போது வாடியிருந்த இச்செடி விரிந்து மலரும். மனித உடம்புக்கும், சந்திரன் சூரியன் நட்சத்திரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் தமது நூல்களில் தெளிவுபடுத்துகிறார்கள். சந்திரன் மாதந்தோறும் தேய்ந்து வளரும்போது மனித உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனித உடம்பில் மட்டுமல்லாது கடல், மரம், நிலம் என்பவற்றிலும் சந்திர சக்தியால் மாற்றம் ஏற்படுவது நாம் அவதானிக்கத்தக்கது.
உதாரணமாக, நிலவு வெளிச்சமுள்ள காலங்களில் வெட்டப்படும் மரங்கள் விரைவில் உக்கிப்போவதையும், அமாவாசைக்கு முன் இருட்டாக இருக்கின்ற ஐந்து நாட்களிலும் வெட்டப்படும் மரங்கள் உக்காமல் பலகாலம் பயன்தருவதையும் நாம் அனுபவத்தால் அறியலாம். மேலும் வளர்பிறைக் காலங்களில் மக்கள் உடம்பில் மனோசக்தி நிலை அதிகரிக்கின்றது. பெளர்ணமி காலங்களில் பைத்தியம் பிடித்தவர்களுக்கு பைத்தியம் முற்றுவது சாதாரணமாக நாம் காணும் நிகழ்ச்சி. தமிழ் மக்கள் நற்காரியங்களைத் தேய்பிறையில் செய்யாது வளர்பிறைக் காலங்களில் செய்வதை நாம் இதனுடன் ஒப்பிட்டு நோக்கலாம். தமிழ் வைத்திய முறையில் மூலிகைகளை வளர்பிறையில் பிடுங்கினால் தான் வைத்தியம் பலிக்கும் என்ற நம்பிக்கை பல காலமாக நிலவி வருகின்றது.
பெளர்ணமி ஏகாதசி நாட்களில் சந்திர சக்தியால் மனித உடம்பில் சூடும் குளிர்ச்சியும் மாறுபடுவதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள், இதனாற்றான் தமிழ் வைத்திய நூல்களிலும் இந்நாட்களில் விரதம் அனுஷ்டிக்கச் சொல்லி அறிவுரை கூறப்பட்டுள்ளது. மேலும் இந்நாட்களில் விஷப் பூச்சிகளேதும் கடித்தால் உடம்பில் அதிகமான எரிச்சல் அரிப்பு உண்டாவதையும் நோய்கள் அதிகமாவதையும் நாம் அனுபவத்தில் கண்டிருக்கலாம்.
இவ்வாறே சூரியன் நட்சத்திரங்களால் ஏற்படும் மாற்றங்களையும் அவை பற்றிய சித்தர்களின் கருத்துக்களையும் ஆராயலாம். எனவே சித்தர்கள் எவ்வாறு தம் ஆராய்ச்சி மூலம் பயன்தரும் விடயங்களை மானிடர்க்கு காட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை ஆராயும்போது, இன்றைய மேற்கத்திய விஞ்ஞானத்தை அன்றே தம்ஞானத்தால் தெளிவுபடுத்திய அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

Page 18
உலகெல்லாம் இயங்க அடிப்படைச்சக்தியாக விளங்கும் பரம் பொருளைத் தாயாக எண்ணி வழிபடும் பேறு எமக்கும் பெரும் பேற்றை அளிக்கின்றது. புண்ணியப் பாரத பூமியில் ஏன் எமது ஈழத்திலும் பன்னெடும் காலமாக படைத்துக் காக்கும் அன்னையாக சக்தி தேவி போற்றி வழிபடப் பெறுகின்றாள். அன்னையானவள் அகிலத்தை அருள் செறிந்த அன்பு நோக்கினால் இயக்குவதால் “எல்லாம் சக்தி மயம்” என்கின்றனர் சான்றோர். உலகத் தாயாக விளங்கும் சக்தியின் மேல் எதுவும் நடவாது. அன்னையின் சக்தி அன்னையாகும். சக்தி இன்றேல் நாம் சக்தி பெற்று வாழ்வது எவ்வாறு? எனவே தான் “அன்னையே - முழுமுதல் தெய்வம்” என்ற உண்மை உணரப்பெற்று ஆதிநாள் தொட்டு அன்னையை வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
சக்தி வழிபாட்டுக்கென்றே ஆதி நாளில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் கட்புலனுக்கும் கருத்திற்கும் விருந்தளிக்கும் வகையில் அவ்விருந்தின் வாயிலாக மனத்தை அமைதி கொள்ளச் செய்வதற்கும், ஒரு முகப்படுத்தி இன்புறுவதற்கும் ஏற்ற வகையில் அன்னைக்கு ஆலயங்களை எழுப்பினர். அவ்வாலயங்கள் அன்று முதல் இன்று வரை அன்னையின் அருள் சுரக்கும் அருளாலயங்களாகத் திகழ்கின்றன. அன்னையானவள் தன்னை மெய்யன்போடு வழிபடுபவர்க்கு வேண்டுவதையெல்லாம் வழங்குகின்றாள். இவ்வாறு அருள் பெற்றவர்களில் கவிகளிதாசர், கம்பர், அமரகவி பாரதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சக்தி வழிபாடுகள் பலவுள்ளன. ஆயினும் பின்வரும் வழிபாடுகளினூடு அவற்றை நோக்குவோமானால் தலவழிபாட்டில் அன்னை வழிப்பாட்டை முதன்மையாகக் கொண்டவர்களும் ஏனையவர்களும் சக்தி ஆலயங்களுக்குச் சென்று புண்ணிய நீரில் தீர்த்தமாடி முறையான நோக்கில் சக்தியை வழிபட்டு வினைப் பிணிகள், வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் அன்னையின் அருள் கடாட்சத்தின் மூலம் நீக்கி புதிய இன்ப உணர்வுடன் மிளிரலாம். எப்படிப்பட்ட தலப்பயணங்களை மேற்கொண்டாலும் இறையருள் பெறுவதற்கு சக்தியே காரணம். அத்தகைய தலப்பயணத்திலும் சக்தி வழிப்பாடே முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.
சக்தி வழிபாட்டின் மற்றுமொரு அம்சம் விழா வழிபாடாகும். இவ்விழா வழிபாட்டில் அழகே உருவான அன்னையை அலங்கரித்து திருவீதி பவனி வரச் செய்து அன்பர்கள் கண்குளிரக் கண்டு வழிபட வழி கோலுகின்றது. பண்டிகை வழிபாட்டை எடுத்துக் கொள்வோமானால் எமக்குப் பண்டிகை இல்லாத மாதம் கிடையாது எனலாம். பொதுவாக பண்டிகை என்றால் மலத்தினின்று நீக்கி ஆன்மாவைப் பண்படுத்துதல் என்று பொருள். இதனூடே பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம். சிறப்பாக மகளிர் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதம், மாங்கல்ய விரதம் போன்றன அன்னை வழிபாட்டில் இடம் பெறுவனவாகும். இவ்வாறு விரதம் அனுஷ்டித்து வீட்டிலும் விழா முறையில் கொண்டாடப் பெறும் பண்டிகைகளுள் நவராத்திரி விழா சிறப்பானதாகும்.
நவராத்திரி என்பதற்கு ஒன்பது நாட்கள் செய்யப்படும் நோன்பு அல்லது விழா எனப் பொருள். ஒன்பது நாள் நிகழ்வுறும்
 
 

XXభx ష్ర இந்நோன்பு பத்தாம் நாள் தசமியில் முடிவுறும். புரட்டாதியில் அல்லாது அதற்கு முன்வரும் சுக்கில பட்சபிரதமையில் தொடங்கி தசமியில் முடிவுறும் இதை மகாநோன்பு என்பர்.
நவராத்திரியில் ஒன்பது நாட்கள் அன்னைக்கு பூசை செய்தல் வேண்டும். இந்த நவராத்திரியில் துர்க்கைக்கு மூன்று நாட்களும் இலக்குமிக்கு மூன்று நாட்களும் சரஸ்வதிக்கு மூன்று நாட்களுமாக ஒன்பது நாட்கள் பூசை செய்தல் வேண்டும். நவராத்திரியானது கல்வி செல்வம் வீரம் என்னும் மூன்று தத்துவங்களை உணர்த்துகின்றது. பொதுவாக இப்பூசையை கன்னி பூசை என்பர். இப்பூசையின் பலனாக இம்மை மறுமைப் பயன்களைப் பெறலாம். இப்பூசை மேற்கொள்வோர் கலசம் வைத்து நவதானியங்களைக் கொண்டு சுற்றிலும் பாலிகை தெளித்துக் கலசத்தில் அன்னை துர்க்கையை எழுந்தருளச் செய்தல் வேண்டும். பின் சங்கு, சக்கரம், பதுமம் ஆகியவற்றைக் கரத்தில் ஏந்தி சிங்க ஊர்தியில் சண்டியின் திருவுருவையோ அல்லது காளியின் உருவுக்கு தூப தீபம் காட்டி மல்லிகை, சண்பக மணமலர்களைக் கொண்டும் தேங்காய், மாதுளை, திராட்சை, வாழை, பலா முதலிய கனிகளைப் படைத்தும் வழிபட்டு அன்னதானம் செய்தலோ, படைத்த பொருளை வழங்குதலோ முக்கியம். இப்பூசை காலை, நண்பகல், இரவு ஆகிய மூவேளையும் செய்யப்படல் வேண்டும். பூசை புரிவோர் நோன்பிருந்து ஒரு வேளை உண்டு தரையில் படுத்தல் வேண்டும். இவ்வாறு ஒன்பது நாட்கள் நிகழ்தல் வேண்டும். இவற்றில் குமாரி வழிபாடு கொலு வழிபாடு இடம் பெறுவதுடன் இலட்சுமிக்கும் அடுத்து மூன்று நாள் செல்வம் வேண்டி வழிபாடு இடம் பெறுகிறது.
நவராத்திரி வழிபாட்டில் இறுதிநாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாகும். அன்னை சரஸ்வதி அவதரித்த நாள் அதுவே. ஏழாவது நாள் சரஸ்வதியின் முறை தொடர்கின்றது. இந்நாளில் சரஸ்வதி பிறந்த மூல நீட்சத்திரம் உச்சமாக இருப்பதால் சிறப்பாகப் பூசை நிகழ்தல் பெறும். அந்தப் பூசை திருவோணம் என்ற நட்சத்திரம் வரும் நாளில் நிறைவுறும். “வீடு தோறும் கலையின் விளக்கம்” எனும் பாரதியாரின் வாக்கு மெய்ப்பிக்கப்பெறும் நிலையில் கல்வி தொடங்குவதற்குரிய நாளாம். அன்னை சரஸ்வதி, வாக்கிற்கு அதிதேவதை. இதன் இறுதிநாளன்று ஏடு தொடக்குதல் நிகழ்வு முக்கிய இடம் பெறுகின்றது. இத்தினத்தில் சிறுவர்களுக்கும் சிறுமியர்க்கும் எழுதப் படித்துக் கொடுக்கப்படும். பாடசாலைகள் பல்கலைக் கழகங்கள் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் சரஸ்வதி பூசை கொண்டாடப்படுகின்றன. கலைமகள் இல்லையெனில் உலகில் சிறந்த கல்வியறிஞர்கள் ஏன் விஞ்ஞானிகள் கூட இலராவர். கலைவாணி தன்னைப் பூசித்து வழிபடுவோருக்கு அறிவைப் பெருக்கிக்கொள்ள அருள் புரிவாள். மலர் வழிபாட்டின் மூலம் அன்னையைப் பூசிப்பவர்களுக்கும் இன்னல் தொலையும், ஏழ்மை அகலும், பகைமாயும், செல்வம் நிறையும், ஆயுள் வளரும், வலிமை பெறும், மறுமையில் வீடு பேறு கிடைக்கும்.
"கலையாத கல்வியும் நிலையான செல்வமும் குலையாத வீரமும்
அருள்வாய் சக்தியே”

Page 19
d ----------------- * 8X
சுவாமிவிவேகானந்தரும்
ஆறுமுகம்
தரம் -12 கமு/உவெஸ்லி உய கல்மு
பDனிதகுலத்தின் எழுச்சிக்காகவும் இந்தியாவின் ஆன்மீகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இந்துமத மறுமலர்ச்சிக்காகவும் அங்கம் நயம்பட அங்கநாதம் எழுப்பியவரும், தூங்கிக்கிடந்த இந்தியாவை வீரமுழக்கத்தால் சிலிர்த்து எழச் செய்தவரும் இவ்வாறு ஆற்றலைப்பற்றிய அரிய கருத்துக்களை உலகிற்கு வழங்கிய பெருந்தகை ‘சுவாமி விவேகானந்தராவார்"
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்துமத மறுமலர்ச்சியில் சுவாமி விவேகானந்தரின் பங்கு முக்கியமானது. அறியாமை எனும் இருளில் மூழ்கியிருந்த பாரதநாட்டு மக்களை மட்டுமன்றி இலங்கை, இந்திய அயல் நாடுகள், அமெரிக்கா போன்ற பிறநாடுகளிலும் இந்துமதத்தின் பரந்த நோக்கினை போதனைகள் சாதனைகள் மூலம் மக்களுக்கு உணரச் செய்த பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும்.
இவர் ஆயிரத்து எண்ணுாற்றி அறுபத்து மூன்றாம் ஆண்டு தைமாதம் பண்னிரண்டாந் திகதி விசுவநாததத்தருக்கும் புவனேசுவரியாருக்கும் புதல்வனாக அவதரித்தார். இவரின் இளமைப் பெயர் “நரேந்திரநாதன்” ஆகும். துணிச்சலுடையவர், உயர்கல்வி பெற்றவர். இராமகிருஷ்ணரால் ஆட்கொள்ளப்பட்டமையால் உயர்கல்வியான இவரது சட்டக்கல்லூரிப் படிப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இராமகிருஷ்ணரின் சிறந்த சீடனாக மதிக்கப்பட்டார். இவர் இறந்ததும் இவரது போதனைகளைச் சாதனைகளாக மாற்றி e மீண்டும் மலர்தல் ” என்று பொருள்படும் மறுமலர்ச்சியை இந்து மதத்தில் ஏற்படுத்தினார்.
விக்கிரக வழிபாடு மூட நம்பிக்கை எனக் கூறிய மகாராஜாவுக்கு இவை இறைவனை ஞாபக மூட்டுவதற்காகவே அமைத்துள்ளனர் என்று விளக்கம் கூறினார். இவ்வரசரின் உதவியோடு சுவாமி விவேகானந்தர் ஆயிரத்து எண்ணுாற்றி தொண்ணுாற்றி மூன்றாம் ஆண்டு சிக்காக்கோ நகரில் நடைபெற்ற
Ο
LLS LALLS ALLLLLLLS LLLLLLLLS LL LLLLLL ALLLS ALLLLLLLS LLLLLLLLS LLLLLL AALLLLLS LLLLLLLLS ALS AAALALS ALS ALS ALS ALS ALLLLLLS LLLLLLS ALS LS LALS S LS LS LS ALL LS LS LS LAL 80x8 & 8X-X & 8X-X-X- 0x8 *? * 0x0x- •x (X- {X- 0-x- •X- * •X
«Ο
X
d
Ο
&
உலகப்பற்று அதிகமுள்ள மனிதனுக்கு ஞானம் தோன் இருக்கிறதோ அதற்கேற்றபடி ஞானமும் வளரத் தொடங் கடவுளுக்கு கற்பூரம் காட்டுதல் நமது தொன்று தொட்ட சிறந்ததாகும். அது, ஒளியில் தன்னைக் கரைத்துக் கொள்ளு ஆண்டவன் ஒளியில் எதுவும் மிஞ்சாமல் கரைந்துவிடவே
0.«Ο Х•
Ᏹ*
கண்பார்வை அற்றவன் குருடன் அல்லன்; தன் குற்றங்கு குருடன்(மகாத்மா காந்திT)
LLLLLL LLLLLL ALLLLL LL LLLLLLLLS ALLLLL LL LLL LLLLLLLLS LLLLLL AALLLLL AALeLeS ALeLS ALLLLLS LLS LLS LLS LLS LLLeL S LLLLL LLLLLLS ALLLLLLS LeeLS ALALS AAALS ALLLLS LLL LLLSS LLLeLS LeeLS LLLLL LLLLLL LL LLL LLL LLLLL Y LLLLLL LL LLLLLLLLJJJkLL LLLL LLLL kL LL JkLLL J LLLJ JJ LJ
«Ο4)«Ο«Ο«ΟΦ X-&Х•X-&X-
 
 
 

:
இந்துமதமறுமலர்ச்சியும் !
மதுசூதனன்
(கலை) Jagbød dvæC-dra 606v னை
சர்வமத மகாநாட்டில் கலந்து கொண்டு இந்து மதத்தின் பரந்த நோக்கினை விளக்கி அனைவரையும் கவர்ந்தார். அச்சம் அடிமையுணர்வு அகல உதவினார்.
இந்து மதத்தில் காணப்பட்ட சாதிப் பாகுபாட்டை ஒழித்து மதவெறியினை நீக்கவும் பசியோடு இருப்பவனுக்கு சமயபாடம் போதிக்கக் கூடாது எனவும் கூறினார். ஆண்மை, பலம், ஞானம், தியாகம், சேவை என்பன அன்னாரது தாரக மந்திரங்களாகும். இந்துமத மறுமலர்ச்சிக்காக சுவாமி விவேகானந்தரின் போதனைகள் வருமாறு.
எந்தக் கோயிலிலுள்ள விக்கிரகம் எமக்குத் தெய்வத் தன்மையைக் கொடுக்கிறதோ அதனை வழிபடுங்கள். வழிபாடு சடங்கு என்பவற்றில் எவர் சண்டையிடுகின்றார்களோ அவர்கள் தெய்வத்தன்மையை இழந்து மிருகத்தன்மையிலிருப்பதை அவர்கள் உணர வேண்டும். பொறாமையை உங்கள் வாழ்விலிருந்து விலக்கினால் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும். எவன் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுகின்றானோ அவனையே நான் " மகாத்மா ” என்பேன். மரணத்திற்கு அஞ்சுபவன் முத்தி என்னும் உயர் நிலைக்குச் செல்லத் தகுதியற்றவன். வாய்மையை வாழ்வில் கடைப்பிடியுங்கள் என்றெல்லாம் இவர் இந்துமத மறுமலர்ச்சிக்காக அளவற்ற போதனைகளைப் போதித்துள்ளார்.
e
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் ”
என்று கூறிய தெய்வப்புலவர் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து காட்டி இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாருலகைக் குலுக்கிய இப்பெருந்தகை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து மூன்றாம் ஆண்டு விண்ணுலகு எய்தினார். இவ்வாறு சுவாமி விவேகானந்தர் இந்துமத மறுமலர்ச்சிக்குக் காரணமாக விளங்குகின்றார்.
R
வாழ்க சுவாமி விவேகானந்தர் வளர்க அவரது இந்துமத மறுமலர்ச்சிப்பணி”
Х• (X * 8 8 8 «Х• や 8 KX
LLLLLS LLLLS SLLLLL S LLLeLLLLS LLS LLS LLS LLS LLS LLLeL S LLeLS LS eLeLS LeLeeLS LLLLLLLLS LLLLLLS ALLLS LeeeLS LeS LLLLeLS LLLLLLS LLLLLL ♦Y YYYs LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLLLLJLLLJJ LLLLL LLLLLJJ LLLLL JJJJ eLL
ராது. எந்த அளவுக்கு அவனுக்கு உலகப்பற்று குறைந்து கும். (பூனரீராம கிருஷ்ண பரமகம்ஸர்) - மரபாகும். கற்பூர வழிபாடே எல்லா வழிபாடுகளிலும் நம்போது எதுவும் மிஞ்சுவதில்லை. அதுபோல நம் ஆன்மா ண்டும் என்பதே கற்பூர வழிபாட்டின் தத்துவமாகும்.
(நன்றி ! இதயதீபம்) .
றைகளை உணராதவன் இருக்கிறானே, அவன்தான் சரியான
8 .' *Xo
X
(X-
*
{X-
{X-
令
(X
令
(X
や
や
(X-
(X-
(X-
&
«Х»
●
(X-
令
ぐ
令
(X-
令
*
令
令
«Х»
«Х•
令
々
-X
4x

Page 20
些圣
呈
f ***
些 是一些 是一 是 基→ 基一 呈- 基- 基·基- 皇- 呈·些
(திருவெம்பாவை உற்சவம் டிசெம்பர் 14ம் திகதி
திருவாசகமும் திருக்கோவையாரும் எட்ட "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் பகுதி திருவெம்பாவையாகும். "பாவை பாடிய வாயால் கோ கூறியதாகச் சொல்லப்படுவதிலிருந்து திருவெம்பாவையின் ஊகிக்கத்தக்கன.
மாதங்களில் சிறந்தது மார்கழி என்பர். தேவர் அதிகாலையிலேயே மார்கழி நோன்புகளில் பெண்கள் நீர் பெண்கள், தங்கள் தோழியரை வழிதோறும் நித்திரையின அழைத்துச் செல்வதாக இதற்குத் தத்துவப் பொருள் கூற
திருவெம்பாவைச் செய்யுள்கள் திருவருளாகிய இறைவனையடைதல் சாலாதாகலின், திருவருள் வழிபாட்
இன்னும் இறைவனுடைய கருணைத்திறம், முதலாகவும் முடிவாகவும் விளங்கும் தன்மை, அவன்
வெம்பாவைச் செய்யள்களிலே வகவகை யாம் படிக்கி திரு 珂 ருவதை டிதத்
புனிதமான மார்கழித் திங்களிலே இந்துப் பெரும அனுஷ்டித்து, நீராடி வழிபட்டு இறைவன் திருவருளைப்
呈一
垒一
呈一
呈一
呈一
呈一
呈一
呈一
是一
是一
是一
呈
 
 
 

呈·呈一些一些·呈- 呈一呈·些 呈一些·呈- 呈- 呈一
DI U I GOOG
ஆரம்பமாகி, 23ம் திகதி நிறைவு பெறுகிறது)
ாந் திருமுறையில் அடங்குகின்றன. இவற்றுள், " என்று சிறப்பித்துப் பேசப்படும் திருவாசகத்தேனில் ஒரு வை பாடுக” என்று இறைவனே மணிவாசகரை விளித்துக் பெருமையும், திருக்கோவையின் பெருமையும் ஒருவாறு
களுக்கு வைகறைப் பொழுதாகிய மார்கழித் திங்களில் ாடி சக்தியை வணங்குவர். இவ்வாறு நீராடச் செல்லும் Pன்றும் எழுப்பி இறைவன் அருள் நீரில் திளைப்பதற்கு ப்படுதலைக் காணலாம்.
சக்தியைப் புகழ்வன. திருவருள் பெற்ற வழியன்றி, டின் பெருமை உணரத்தக்கது.
மெய்யடியார்களின் இயல்பு, இறைவன் உலகுக்கு பொற்பாதங்களின் மகத்துவம் என்பன மிக அழகாகத்
து மகிழலாம்.
க்களின் வழிபாட்டுக்குரிய இத் திருவெம்பாவை நோன்பை பெற்றுய்வோமாக.
(நன்றி: சிவதொண்டன்- மார்கழி 1979)
皇
- 呈- 是 呈·呈·
བབས་ ற்றிப் பணிவோம்
ம் அந்தமும் அறவே இலாத மேனிப் பத்தினி உடையோன் ய் எவர்க்கும் நின்றிடும் நிகரிலோன் ம் பாசத் திருவிடத் தமர்வோன் பும் புரையா உருவிலாப் பெரியோன்
போற்றிப் பணிவோம் நாமே
ஜெ. நிவேதன் 9ம் ஆண்டு பரி. யோவான் கல்லூரி
些·
- 皇·基·呈- 皇一些·呈·呈·呈·呈卡
J هي "*

Page 21
இந்து மதத்தின் சிறப்பம்சங்களும் இ2 அறிந்து கொள்வதற்குதவும் சிந்து
கே. சத்தி
<沙 பொத்துவில் மெமரி தீ
இந்துமதத்தின் சிறப்பியல்புகள்
(அ) தொன்மை வாய்ந்த சமயமாக விளங்குதல் (ஆ) சனாதன தர்மமாக விளங்குதல் (இ) சமய தத்துவத்தை மரபாக கொண்டிருத்தல் (ஈ) அறநெறி வாழ்க்கையினை வலியுறுத்தல் (உ) கலையம்சங்களை மரபாகக் கொள்ளும் சிறப்பு (ஊ) ஆன்மாக்களின் உயர் இலட்சியத்துக்கு வழிகாட்டல் (எ) பரந்த நோக்குடைய மதமாக விளங்குதல்.
என்பன யாவும் இந்துமதத்தின் சிறப்பம்சங்களாகக் கொள்ளப்படுகின்றன. இந்துமதத்தின் புராதன நிலைகளும் சிந்துவெளி அகழ்வுப் பொருட்களும்
இந்து மதத்தின் புராதன நிலைகளை அறிந்து கொள்ள சிந்துவெளி அகழ்வுப் பொருட்கள் ஓர் வரலாற்று மூலமாக விளங்குகின்றன. அவற்றின்படி புராதன இந்து மதத்தில் பல கடவுள் கொள்கை, உருவ வழிபாடு, உருவ வழிபாட்டுடனான கிரியை முறைகள், சமய தத்துவ சிந்தனைகள், கலை மரபுகள் என்பன அம்மதத்தில் எந்தளவிற்கு இணைந்து சிறப்புற்று விளங்கியது என்பதனை அறிந்து கொள்ளலாம். உருவ வழிபாடும் பல கடவுள் கொள்கையும்
சிந்துவெளி அகழ்வுப் பொருட்களாகிய உருவ இலட்சனைகள், சிலைகள், இலிங்கங்கள், தாயத்துக்கள், கருமண் பொருட்கள் போன்றவற்றின் மூலம் அக்கால மக்களிடையே சிவ வழிபாடு (சைவம்), சக்தி வழிபாடு (சாக்தம்) மற்றும் ஏனைய வழிபாட்டம்சங்களான மரம், மரத்தேவதை, நதி, நந்தி, நாகம், சூரியன் என்பனவும் வழிபடப்பட்டு வந்தன என்பதை புதை பொருளியலாளர்கள் சமயசார்புடைய தொல்பொருட்கள் மூலம் சான்று பகிர்வர். இவ்வாறான வழிபாட்டு முறைகளும் அம்சங்களும் இன்றைய இந்து மதத்தின் உருவ வழிபாட்டிற்கும் பல கடவுள் கொள்கைக்கும் அடிப்படையாக விளங்கியது எனக் கூறலாம்.
சிவ வழிபாடு (சைவம்)
சிந்துவெளியின் இரு பெரு நகரங்களான மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல் பொருட்களான கொம்புடைய மனிதனின் உருவ இலட்சனைகள், ஆண் சிலைகள், இலிங்கங்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு அக்கால மக்களிடையே சிவ வழிபாடு நிலவியுள்ளது என்பதனை புதை பொருளியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அவற்றின்படி சிந்துவெளி அகழ்வுப் பொருட்களில் கருத்தைக் கவரும் தெய்வம் "கொம்புடைய தெய்வமாகும்”. அத்தெய்வத்தின் உருவம் மூன்று இலட்சனைகளில் பொறிக்கப்பட்டிருந்தது.
 
 

அம்மதத்தின் புராதன நிலைகளை
வளிகொல் பொருள் அய்வகளும் 32
ല്ല്
zارC/762Jaz%یزیک762ی 42 %
அவற்றில் இரு இலட்சனையில் உள்ள உருவம் ஒர் கற்பீடத்தில் அமர்த்திருப்பதாகவும் மற்றைய இலட்சனையிலுள்ள உருவம் நிலத்தில் அமர்ந்தும் இருந்தது. இத் தெய்வத்தின் இருக்கையானது பத்மாசன நிலையில் யோக வடிவமாய் அமர்ந்திருக்கும் திருக்காட்சியாக உள்ளது. அத்தெய்வத்தின் உடல் ஆடையின்றி அம்மணமாக உள்ளதோடு கையில் பல கடகங்களையும் கழுத்தில் ஆரம் போல தோன்றும் அணிகலன்களையும் அணிந்துள்ளது. அதன் தலையிலுள்ள இரு கொம்புகளுக்கிடையில் செடி போன்ற பொருள் ஒன்று வளர்ந்துள்ளது. இம்மூன்று இலட்சனைகளில் பெரியதில் கொம்புடைய உருவத்தினைச் சூழ யானை, புலி, காண்டாமிருகம், எருமை என்பன நிற்கின்றன. அத்தெய்வம் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் இரு மான்கள் உள்ளன. புலியின் முகம் போன்ற அதன் முகத்தில் வலம், இடமாக இரு புடைப்புக்கள் உள்ளன. அதனை அவதானித்த ஜோன்மார்சல் கருத்துக் தெரிவிக்கையில் “முந்து சிவன்” எனக் கூறினார். இத்தகைய கொம்புடைய தெய்வத்தின் உருவ அமைப்பில் அதன் ஆண்குறி நிமிர்ந்து நிற்பதும் தலையிலுள்ள கொம்புகளுக்கிடையில் செடி போன்ற அமைப்பு இருப்பதும் அதனை ஒரு வளத்தெய்வமாக கருத இடமுண்டு. கொம்புத் தெய்வத்தின் உருவ அமைப்பிலுள்ள அம்சங்கள் பலவற்றையும் தொகுப்பாக நோக்குமிடத்து பிற்காலத்தில் சைவசமயத்தில் எழுந்த சிவ தத்துவத்தை விளக்குவதாக அமைகின்றது. அவற்றின்படி கொம்புத் தெய்வத்தின் யோக வடிவம் “யோகிகளுக்கெல்லாம் யோகி மகா யோகி’ எனும் யோக தட்சணாமூர்த்தியின் சிவ நாமத்தை விளக்க வல்லது. விலங்குகளினால் சூழப்பட்ட அத்தெய்வத்திற்கு பசுபதி (உயிர்களின் தலைவன்) எனும் பெயரும் பொருந்தும். இவ்வுருவத்தில் காணப்படும் மூன்று முகங்கள் முக்கண்ணன் என்ற சிவ நாமத்திற்கும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று முகூர்த்தங்களையுடையவன் சிவன் என குறிப்பிடுவதற்கும் இடம் கொடுத்திருக்கலாம். சில ஆய்வாளர்கள் அம்மூன்று முகங்களையும் முத்தொழில் தத்துவத்தை குறிப்பன என்றும் கூறுவர்.
ஹரப்பா நகரின் 'ஆபூ” எனும் மலைக்கண்மையில் கண்டுகொள்ளப்பட்ட சிலையொன்று மூன்று முகம் கொண்டது. அக்காலத்தில் இது மும்மூர்த்திக் கருத்தாக அமையாவிட்டாலும் பிற்காலத்தில் இடம்பெற்ற மும்மூர்த்திக் கொள்கைக்கு இது அடிப்படையாக அமையலாம். சிந்துவெளி அகழ்வுப் பொருட்களில் இடது காலைத் தூக்கியாடும் மற்றுமொரு ஒடிந்த சிலையின் அமைப்பு முறையினை அவதானித்த ஜோன்மாஷல் பிற்கால நடராஜர் தத்துவத்திற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் எனக் கருதுகின்றார்.

Page 22
சிந்துவெளி மக்கள் இலிங்க
வணக்கமுடையவர்களாக விளங்கினர் என்பதற்கு அங்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட போது கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான இலிங்கங்களை ஆதாரமாகக் கொண்டு கூறலாம். இவை இன்றைய இலிங்க அமைப்பு முறையினை பின்பற்றி அமைக்கப்பட்டவையல்ல என்பதனால் அவற்றினை சாதாரண கற்களாகவும் கருத இடமுண்டு. இருந்த போதிலும் அக்கற்கள் பயன்பாடு கருதி ஆக்கப்பட்டவை என்பது தெளிவு. எனினும் கி. பி 1500 ம் ஆண்டளவில் இந்தியாவின் வட பகுதியில் பிரவேசித்த ஆரியர்கள் அங்கு ஏற்கனவேயிருந்த இலிங்க வணக்கமுடையவர்களை “தாஷர்கள்” எனக்கூறி போரிட்டு வெற்றி கண்டதாக இருக்கு வேதம் குறிப்பிடுவதனால் இந்தியாவிற்கு ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னர் சிந்துவெளி மக்கள் இலிங்க வணக்கமுடையவர்களாக விளங்கினர் என்பதனை உணர்ந்து கொள்ள இடமுள்ளது. எனவே இன்றைய சைவ சமயத்தில் இடம்பெறும் சிவனின்
- சிவயோக முகூர்த்தம்
- நடராஜர் முகூர்த்தம்
- இலிங்க - அருவுருவத் திருமேனி என்பனவற்றிற்கு சிந்துவெளி தொல்பொருட்களே சான்று பகிர்கின்றன.
சக்திவழிபாடு (சாக்தம்)
பண்டைய உலகில் சிறந்து விளங்கிய தாய்த்தெய்வ வழிபாடு பண்டைய காலத்தில் இந்தியாவிலும் சிறந்து விளங்கியதற்கு தொல்பொருட்களும் இலக்கியங்களும் சான்றாக உள்ளன. பண்டைய இந்தியர்கள் தமக்கு வளம்பல அளிக்கும் தரையை பெண்ணாக உருவகித்து வழிபாடு செய்ததன் விளைவாக அங்கு சக்தி வழிபாடு உருவாகிற்று. அவ்வழிபாட்டின் மிகத் தொன்மையினை சிந்துவெளி தொல்பொருட்களான முத்திரைகள் சுடுமண் கல்லிலான சிலைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். முத்திரை ஒன்றில் தாயும் குழந்தையும் இணைந்து அச்சமூட்டும் தோற்றமும் மற்றுமொரு முத்திரையில் அமைதியான தோற்றமுடைய பெண் வடிவமும் காணப்படுவதனையிட்டு பிற்காலத்தில் சிவனின் சக்தியாகப் பேசப்படும் துர்க்கை, உமை, பார்வதி எனும் முகூர்த்தங்களுக்கு அடிப்படையாக உள்ளதென ஆய்வாளர்கள் கருதுவர்.
பெண்ணுருவம் பொறிக்கப்பட்ட இலட்சனைகளில் தலைகீழாகத் தொங்கும் பெண்ணின் உருவம் கருத்தாழமிக்கது. அதன் வயிற்றின் தொப்புளில் இருந்து செடியொன்று வளர்கின்றதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த உருவ அமைப்பினை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் ‘தரையை தாயாக உருவகப்படுத்தி’அது மக்களுக்களிக்கும் பொருட்களை கருவுயிர்க்கின்றதாக காட்டும் தத்துவத்தை சித்தரிக்கின்றதாகக் காட்டுவர். இதிலிருந்து “அகிலாண்ட கோடியீன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் உண்மையே’என அடியவர்கள் உருகியுருகி உளம் குலைந்து போற்றும் அகிலாண்ட நாயகியின் ஆரம்பத் தோற்றம் இதுவாக
 

இருக்கலாம் என பலரும் உணர்கின்றனர். பிற்காலத்தில் இடம் பெற்று வரும் சக்தி வழிபாட்டு முறைகள் இவைகளை ஒட்டியது இல்லையென்றாலும் அடிப்படைகளில் அவற்றிடையே ஒற்றுமையினை காண முடிகின்றது. உதாரணமாக "சக்தியே படைப்பின் மூலம்’ எனும் சமயக் கருத்து பொதுவாக அமைந்திருப்பதனைக் காண முடியும்.
ஏனைய வழிபாட்டம்சங்கள்
சிந்துவெளி சமயச் சார்புடைய தொல்பொருட்களாகிய இலட்சனைகள் பலவற்றில் காணப்படுகின்ற சித்திர உருவ அமைப்புக்களை நோக்குமிடத்து அக்கால மக்களிடையே
- எருது வழிபாடு - மர வழிபாடு - மரத்தேவதை வழிபாடு - ஆற்று வழிபாடு
என்பன இடம்பெற்றிருக்கலாம் என கூறிக்கொள்ள முடியும்.
எருது வழிபாடு :-
சிந்துவெளி மக்கள் எருது வழிபாட்டினைப் பின்பற்றினர் என்பதற்கு காளை உருவமைப்புடைய இரு வேறுபட்ட இலட்சனைகள் ஆதாரங்களாக அமைகின்றன. ஒருவகை இலட்சனைகளில் காளையினது ஒற்றைக் கொம்புடன் காணப்படுகின்றது. அது வளச்சடங்குக்காக தானியங்களை முளைக்க வைக்கும் ஒர் பீடத்தில் தானிய முளைகளை உண்டவாறு காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்ச்சி மங்களச் சடங்கின் ஒர் கூறாகலாம். இவ்வாறான எருது அக்காலத்தில் சிவனுடன் சேர்த்து வழிபடப்படவில்லை. அக்கால மக்கள் தமது விவசாயத் தொழிலுக்கு பெரிதும் உதவிய எருதினை தெய்வமாகப் போற்றி அதற்கென வளச்சடங்கு ஒன்றினையும் நிறைவேற்றி வந்துள்ளனர். அவ்வாறான நிலையில் அங்கு எருது வழிபாடு நிலவியிருக்க முடியும். மற்றுமொரு இலட்சினையில் திமில் பெருத்த காளை ஒன்று காணப்படுகின்றது. இது நந்தி தேவரைக் குறிக்கும். சிந்துவெளி கால மக்களிடையே இத்தகைய நந்தி வழிபாடானது தனியொரு வழிபாடாக இருந்து பிற்காலத்தில் சிவனுடன் சேர்த்து வழிபடப்பட்டிருக்கலாம் என ஊகித்துக் கொள்ள முடியும்.
மரம், மரத்தேவதை வழிபாடு -
சிந்துவெளி இலட்சனைகள் சிலவற்றில் திருவுடைய மரங்களாக அரசு, வேம்பு ஆகியன காணப்படுகின்றன. அரசமரமொன்றின் கொப்பொன்றினிடையே இரு கொம்புகளையுடைய பெண் தெய்வமொன்று நிற்கின்றது. அதனை கொம்புடைய வேறு தெய்வமொன்று வணங்குவது போன்றும், மனிதத் தலையுடைய ஆடொன்று அந்த மங்கள வினையை பார்ப்பது போன்றும் கூந்தலைப் பின்னிவிட்ட ஏழு பெண்கள் அந்தப் பெண் தெய்வத்திற்கு திருப்பணிகள் செய்யக் காத்திருப்பது போலவும் நிற்கின்றனர். இவர்கள் பெண் ஜயைமார்களாக இருக்கக்கூடும். வேறுசில முத்திரைகளில் கொம்புடைய மரத் தெய்வத்திற்கும் கொம்பு புலிக்குமிடையில் போராட்டம் இடம் பெறும் காட்சியும் வேம்பு மரத்தடியில்

Page 23
மேடையமைக்கப்பட்டு இருப்பதும் மரக்கிளைகளுக்கிடையே ஓர் பெண் ஆடையின்றி நிற்பதும் அம்மரத்தடியில் ஆடையுடைய பெண்ணொருத்தி வழிபாடு செய்வதனையும் காணக்கூடியதாக உள்ளன. எனவே இன்றைய இந்துக்கள் மரத்தினை வழிபாடு செய்வதும் அவற்றில் தெய்வீக தேவதைகள் இருப்பதாகவும் நம்பிக்கை கொள்வதும் சிந்து வெளி கால மக்களின் மரவழிபாடு, மரத்தேவதை வழிபாட்டின் அடிப்படையில் இருந்தே வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத இடமுண்டு.
இலட்சனையொன்றில் முக்காலி மீது ஒர் பாத்திரம் இருப்பதும் அப்பாத்திரத்தினை நாகமொன்று பார்த்தவாறு நிற்பதும் அக்கால மக்களிடையே நிலவிய நாக வழிபாட்டினை நினைவூட்டுவதாக அமைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவர். சில முத்திரைகளில் கொம்புடைய நாகங்களும் காணப்படுகின்றன.
ஆறு வெவ்வேறு தலைகளுடன் கூடிய வடிவம் ஹரப்பா இலட்சினையில் காணப்படுகின்றன. இவ்வுருவினை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கதிரவனைக் குறிக்கும் எனக் கூறுவர். வேறொரு இலட்சினையில் ஒர் போர்வீரன் இரு புலிகளுடன் போராடும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சனைகளில் காணப்படும் வீரனின் முகம் வட்டமானது. அவனுடைய தலைமுடி வழக்கத்திற்கு மாறான வகையில் வாரி, வகிர்ந்து கோலம் செய்யப்பட்டிருந்தது. இவ்வுருவினை நோக்குமிடத்து இன்று இந்துக்களின் கோயில்களில் தீட்டப்படும் ஆரிய உருவத்திற்கு அடிப்படையாக உள்ளதென்பதை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். இவ் இலட்சினைகளில் காணப்படும் புலி இருளின் வலிமையை குறிப்பதாக அமைகின்றது எனக் கருதப்படுகின்றது.
இலட்சினைகளில் சிறு மீன்களை வைத்திருக்கும் முதலை, ஆமை போன்ற உருவங்கள் ஆற்று வணக்கத்தின் அடையாளங்களாக கலாநிதி மா. இராசமாணிக்கனார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உருவ வழிபாட்டுடனான கிரியை முறைகள் -
சிந்துவெளி அகழ்வுப் பொருட்களில் உருவ வழிபாட்டு முறைகளினுடனான கிரியை முறைகள் இடம் பெற்றுள்ளன என்பதற்கு பல்வேறு சான்றுகளுள்ளன. அவையாவன,
1 கைக்குழந்தைகளை ஏந்தி நிற்கும் தாய்ப்பதுமைகள் 2. தவழ்ந்து செல்லும் குழந்தைப் பதுமைகள். 3. விலங்குப் பதுமைகள் - என்பனவாகும்.
இவை நேர்த்திக் கடன் பொருட்டு கோயில்களில் வைக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். இரு முத்திரைகளில் சமயக் குறிகள் எனக் கருதப்படும் எருது முதலிய விலங்குகளை மக்கள் தூக்கிச் செல்லும் ஊர்கோலக் காட்சி இன்றைய கோயில் விழாக்களில் தூக்கிக் கொண்டு செல்லப்படும் நந்தி முதலிய வாகனங்களை நினைவூட்டுவதாக அமைகின்றது. இன்றைய இந்து சமயத்தில் உள்ள ஒவ்வொரு கடவுளர்களும் வாகனங்கள் இருந்ததுபோல் சிந்துவெளி மக்களிடையே வழிபாட்டுத் தெய்வங்களுக்கும் வாகனங்கள் இருந்தன. K. N. Diksit
 

என்பவர் பிரம்மாவிற்கு அன்னமும், சிவனிற்கு எருதும், துர்க்கைக்கு புலியும் வாகனங்களாக சிந்துவெளி சமய நிலையில் காணப்பட்டன என கூறுகின்றார்.
இங்கு இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியின் போது கண்டுகொள்ளப்பட்ட சில பெண் சிலைகளில் புகை பிடித்திருப்பதனை அவதானித்த ஆய்வாளர்கள் தூப, தீப, நைவேத்திய முறை நிலவியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். சில மனைகளில் மாடங்கள் இருப்பதும் அவற்றில் புகையேறி இருப்பதும் தெய்வப் பதுவைகள் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. சில இலட்சனைகளில் பெண்கள் படைக்கும் தட்டுக்களை ஏந்தியவாறு நிற்கும் காட்சி இன்றைய இந்துக்களால் பின்பற்றப்படும் படையல் செய்யும் வழக்கத்தினை நினைவூட்டுகின்றது. இவற்றினை விட விலங்குப் பலி, நரபலியிடல் முறைகளும் அங்கு இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.
சிந்துவெளி தொல்பொருள் ஆய்வுகளின்படி இங்கு நிலவிய சமய மரபுகளில் கோயில் வழிபாடு செய்தமைக்கான சான்றுகள் எவையும் கிடைத்ததாகத் தெரியவில்லை. சில அறிஞர்கள் சுமேரியர் போன்று இங்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவர். ஆனால் இதற்குத் தக்க சான்றுகள் இல்லை. இங்கு இறைவழிபாடு அருவமாகவும் உருவமாகவும் இடம் பெற்றிருக்கலாம். உருவ வழிபாட்டிற்குரிய குறிகளாக சிலைகள் இலட்சனைகள் அவற்றிலுள்ள சின்னங்கள் முதலியவற்றை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.
கலை மரபுகள்
இன்றைய இந்து மதத்துடன் நெருக்கமான
தொடர்புடைய அம்சம் நுண்கலை மரபுத்தத்துவமாகும். இத்தகைய கலை மரபுகளுக்கு சிந்துவெளி நுண்கலைகளே அடிப்படையெனக் கூறலாம். சிந்துவெளிக் கால கலையமைப்பு முறையானது
(அ) கட்டிடக் கலை
(ஆ) சிற்பக்கலை
(இ) ஒவியக்கலை
(ஈ) நடனக்கலை
(உ) இசைக்கலை
என்றவாறு பிரிகையடைந்து காணப்பட்டன. அவற்றில் காணப்படும் கலைப்பண்புகள் பிற்கால இந்தியக் கலைகளுக்கு அல்லது இந்துக் கலைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன எனக் கொள்ள இடமுண்டு. கட்டிடக் கலை :-
சிந்துவெளி மக்களிடையே வணக்கத்திற்குரிய பொது வழிபாட்டுத்தலம் இருந்தமைக்கு போதியளவு ஆதாரங்களில்லை. அங்கு காணப்பட்ட நீர்க்கேணிக்குத் தெற்கே சிறிது தூரத்தில் 200 X 100 நீள அகலமுடைய பெருங் கட்டிடம் ஒன்று காணப்படுகின்றன. அக்கட்டிடம் சமயச் சடங்கு பொருட்டு அமைக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் ஊர் அரண்மனையாகவும் 9انٹ இருக்கலாம் எனவும்

Page 24
கருதப்படுகின்றது. இருந்தபோதிலும் அது இந்துக் கோயில்களில் காணப்படும் பெரு மண்டப அமைப்பு முறைக்கு ஒப்பானதாக உள்ளதனைக் கண்டு கொள்ள முடியும். பொதுவாகச் சிந்து வெளி கட்டிட அமைப்பு தொழில் நுட்ப முறைகள் மனித வாழ்க்கைக்குரியனவாக இருந்த போதிலும் அக்கட்டிட அமைப்பு முறைகளில் இடம்பெறும்.
1. கட்டிடங்களுக்கான தலங்கள்
சதுர அமைப்பு முறை மேடையமைப்பு முறை மண்டப அமைப்பு தூண்கள் அவற்றிற்கான குழிகள் தரைகீழ் கட்டிடம் அமைக்கும் முறை படிகள் அமைக்கும் முறை
என்பன யாவும் இன்றைய இந்துக் கோயில் கட்டிடக் கலையமைப்பு முறையில் பின்பற்றப்படுகின்றன. நீர்க்கேணி அமைக்கும் முறை, தரைகீழ் கட்டிடம் அமைக்கும் முறைக்கும் அதனருகே காணப்படும் ஒய்வு சாலைகள் பிற்கால கோயில் முறையில் நீண்ட மண்டபங்கள் அமைப்பதற்கு முன்னோடியாக இருந்தன. சிந்துவெளியில் காணப்பட்ட நடுமுற்ற வீடுகளில் காணப்படும் மேடைபோன்ற அமைப்புதிராவிடக்கோயில் முறையில் கற்பாக்கிரகம், தூண், விமானம் என்பனவற்றை அமைக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட மேடைகளைப் போன்றுள்ளது. எனவே திராவிடக் கட்டிடக்கலை மரபுமுறைக்கு சிந்துவெளி கட்டிடக் கலை மரபுகளே அடிப்படையாக விளங்கியது எனக் கூறலாம்.
சிற்பக் கலை மரபு :-
சிந்துவெளி தொல்பொருட்களில் காணப்படும் உருவ இலட்சனைகள் (சுதீற்றைற்று இலட்சனைகள்) சுடுமண்ணிலான சிலைகள், சுதீற்றைற்று சிலைகள், வெண்கலப் படிமங்கள் என்பன இக்கால இந்து மதத்தில் காணப்படும் பல்வேறு சிற்ப அமைப்புக்களின் அடிப்படைகளாக அமைந்திருப்பதனை காணக் கூடியதாகவுள்ளன.
(Lib+ - و)
(1) சுதீற்றைற்று உருவ இலட்சனைகள் இன்றைய இந்துக்
கோயில்களில் காணப்படுகின்ற புடைப்புச் சிற்பத்திற்கு
(2) சுடுமண்ணிலான சிற்பங்கள், சுதீற்றைற்று சிலைகள் என்பன
இன்றைய இந்துக் கோயில்களில் காணப்படுகின்ற தூபிகளில் இடம்பெறும் பொம்மைச் சிற்பங்கள், தெய்வ முகூர்த்தங்கள் என்பவற்றிற்கும் கோயில்களில் உள்ள தனிச்சிற்பங்களுக்கும்
(3) வெண்கலப்படிமங்கள் இன்றைய கோயில்களில் காணப்படும் பெரும் வெண்கல விக்கிரகங்கள் தெய்வீகச் சிலைகள் என்பனவற்றிற்கும் அடிப்படையாக விளங்குகின்றதனை கண்டுகொள்ள முடியும்.
ஒவியக் கலை :-
சிந்து வெளி தொல் பொருட்களில் காணப்பட்ட ஓவியக் கலைகள் சமயச் சார்புடையனவாக காணப்பட்டன என்பதற்கு போதிய ஆதாரங்களில்லை. அகழ்வாராய்ச்சியின் போதுஎராளமான மட்பாத்திரங்களில் பல்வேறு ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்வோவியங்களில் காணப்படும் பல்வேறு அம்சங்களும் பிற்கால இந்து குகையோவியம், கோயில் சுவரோவியம் என்பவற்றோடு
 

தொடர்புடையன. உதாரணமாக இந்தியகுகையோவியங்களான அஜந்தா ஒவியம்,எலிபந்ரா,எல்லோரா,சித்தண்ண வாசல் முதலான ஒவியங்களில் காணப்படும்.
(அ) இயற்கை வனப்பை சித்தரிக்கும் ஒவியங்கள் (ஆ) மனித வடிவங்கள் (இ) தெய்வ வடிவங்கள்
என்ற வரிசையில் சிந்துவெளி தொல்பொருட்களில் இயற்கை வனப்புக்கள், மனித உருவம் என்ற வகையில் மரங்கள், மலர்கள்,மிருகங்கள், இலைக்கொத்துக்கள், பறவைகள், மீன்கள் என்பன இயற்கை வனப்புக்களுடனும் மீனவன் வலையை தோளில் சுமந்து செல்லும் காட்சி மனித உருவ அமைப்புடனும் தொடர்புடையன. இக்காலத்தில் தெய்வங்களின் வடிவம் ஓவியக் கலைகளில் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையெனினும் அதன் குறைபாட்டினை தெய்வ வடிவங்களை சித்தரிக்கும் உருவ இலட்சனைகள் நிறைவு செய்திருத்தல் வேண்டுமெனக் கூறலாம்.
நடனக் கலை :-
சிந்துவெளி தொல்பொருட்களில் வெண்கலத்தால் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் சிந்துவெளி மக்களின் கலை உணர்வினையும் வெளிக் காட்டுகின்றன. இந்நடன வடிவம் பெண்மைக்குரியது. இதன் இடதுகை நிறைய வளையல்கள் காணப்படுகின்றன. இச்சிலை வளவளப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளதாகும். இதனை ஆய்வு செய்த சில ஆராய்ச்சியாளர்கள் “கோயிலில் ஆடும் விலைமகளிர் (தேவதாசியர்) குலத்திற்குரியவள்” எனக் கூறினர். ஆயினும் இக்கருத்து நிரூபிக்கக் கூடியதல்ல. ஆனால் அம்மகளிர் கோயிலில் ஒர் ஆடல் மகளிர் என்பது புலனாகும். றோவான்ட் எனும் ஆய்வாளர் இந்நடன கோலத்தினை சிவனது நடராஜகோலத்திற்கு அடிப்படையானது என்றார். சுந்தரம் என்ற அறிஞர் அது ஆராய்ச்சிக்குரியது எனக் கூறுகின்றார்.
இசைக்கலை :-
நடனக் கலையோடு நெருங்கிய தொடர்புடைய இசைக்கலையும் சிந்துவெளி மக்களிடையே பயிற்சியான ஓர் கலை முறையாக விளங்கியது என்பதற்கு - களிமண்ணிலான ஆணுருவத்தின் கழுத்தில் தொங்கும் மேளம், மிருதங்க அமைப்புடைய உருவினை சித்தரிக்கும் முத்திரைகள் வீணை வடிவில் அமைந்த ஒவியம், பாகவதர்கள் தாளமிடப் பயன்படுத்தப்படும் சப்பாளக் கட்டை, நுண்துளை இடப்பட்ட ஊதுகுழல்கள் என்பன யாவும் அக்கால சமய மரபுகளுடன் தொடர்புடையன எனக் கூறக் கூடிய அளவிற்கு ஆதாரங்கள் இல்லாத போதும் இன்றைய இந்துக் கலைகளின் வளர்ச்சியடைந்த இசைக்கலைக்கு அல்லது இந்திய இசைக்கலை வளர்ச்சிக்கு இவை அடிப்படையாக உள்ளன. எனவே சிந்துவெளித் தொல் பொருட்கள் இன்றைய வளர்ச்சியடைந்த இந்துசமய மரபுகளின் பல்வேறு அம்சங்களான உருவ வழிபாடு, பல கடவுள் கொள்கை, கிரியை முறைகள், நுண்கலை மரபுகள் யாவற்றிற்கும் அடித்தளமாக அமைந்துள்ளதனை எடுத்துக் காட்டுகின்றன.

Page 25
S S S S S S S S S S S S S S S S S S S S S 0
சிவபெருமான், பிரமாவினதும், விஷ்ணுவினதும் செருக்கை அடக்கி அருள் புரிய, அவர்கள் சிவனை வணங்கி தங்களுக்கு அருள்பாலிக்கவேண்டியபோது, அவ்வாறே “கார்த்திகை மாதக் கார்த்திகை தோறும் தோன்றி அருள் செய்வோம்’ என்று கூறியருள் புரியும் நாளே திருக்கார்த்திகையாகும். இந்த அருட் சோதியின் அருளைக் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திர நாளில் யாரும் கண்டு தரிசித்து அருள் பெறலாம். அவ்வாறு அங்கு அருள் தோன்றிப் பாலிக்கும் நாளே இச் சிறந்த திருவிழாவாகும்.
x
ஒரு சுடராய் உலகேழும் ஆனான் கண்டாய்” “சோதியே சுடரே சூழொளி விளக்கே"
“தூண்டு சுடரணைய சோதி கண்டாய்” என்னும் திருமுறைகளின் பொருள் இதுவேயாகும்.
முன்னொரு காலத்தில் தேவர்கள் சிவபிரானை வேண்டித்தவம் செய்து பலவகையான வரங்களைப் பெற்றனர். சாத்துவிகக்குண மேலீட்டினால் இறைவனை வேண்டி வரங்கள் பெற்றனர். வரம் பெற்றபின் தாமதக்குண்ம் அவர்களை வந்தடுக்க, ஆணவமலம் மமதையை உண்டாக்க இறைவனை மதியாது மயக்குற்றனர். தீமைகள் மேலோங்குங் காலங்களில், அவற்றை நீக்கி ஆட்கொள்ளுவது, இறைவனின் பேரருட்டிறம். அவ்வாறே இறைவன் ஒரு கிழ வடிவு எடுத்துக்கொண்டு, இந்திரன் சபையை அண்மினர்.
لم
அவர்கள் மமதை மயக்கால் விளங்காது கர்வமுற்று இருந்தனர். அப்பொழுது கிழவன் அவர்கள் முன்னிலையில் ஒரு துரும்பை நட்டு இதை "யாராவது, பிடுங்கி எடுங்கள்" என்றார். அவர்கள் அத்துரும்பை இலகுவாகப் பிடுங்கி விடலாம் என்று கிழவனைப் பார்த்து இகழ்ச்சி நகை செய்து பிடுங்க முயன்றனர். இந்திரன், வருணன், வாயு, அக்கினி முதலிய தேவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி முயன்றனர். ஒருவராலும் அசைக்க முடியவில்லை.
ஆணவ மமதை அடங்கிக் கிழவனைப் பார்த்தனர். அவர் சோதி வடிவாய் நின்றனர். அன்று தான் கார்த்திகை
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
 
 
 

S S S S S S 0 S S 0 S S S S S S S S S S S S S S
மாதத்து கார்த்திகை நட்சத்திரம் கூடிய தினம். ஆணவம் இருள்; அதைச் சிவபெருமானின் ஞானச் சோதியினாலேயே போக்கி அருள் செய்ய முடியும்.
விளக்கு + ஈடு = விளக்குகள் இடுதல். இது கார்த்திகைமாதம் பூரணை கூடிவரின் சர்வாலய, விஷ்ணுவாலயதீபமாகும். அத்துடன் கார்த்திகை நட்சத்திரம் கூடினால் குமாராலய தீபமாகவும் கொள்ளப்படும். அன்றைக்குக் கோவில்கள், வீடு வளவுகள், மடம், தடம், சோலைகள்யாவும் தீபங்களால் அலங்கரிக்கப்படும்.
கோவில்களில் செய்யும் முறை சொக்கப்பனைசுடுதல். இதனால் அன்று பெரும் நெருப்பு உண்டாக்கி, சிவபெருமானுடைய சோதி வடிவத்தை வழிபடலாம். விளக்கீடு அன்று பொழுது பட்டபின் சுவாமியைத் திருவிழாச்செய்து எழுந்தருளப்பண்ணிச் சொக்கப்பனைக்கு முன் நிறுத்தி அதைச் சிவமாகப்பாவித்து ஒரு தகழியை அதன் தலையிலும் மற்றைய எட்டுத் தகழிகளையும் எட்டுத்திசைகளிலும் வைத்தால் அவைகளில் உள்ள நெருப்பு சருகுகளிற் பிடித்து முற்றும் பெருஞ் சோதியாய் எரியும். அதைச் சிவபெருமானின் சோதி வடிவாய்ப் பாவனை பண்ணி வணங்க வேண்டும். எரிந்த சாம்பரைச் சுவாமிக்குச் சாத்திவிட்டு சொக்கப்பனை மரத்தை மேல் மூன்று பங்கும் கீழ் இரண்டு பங்கும் அமைய வெட்டி விடுதல் வேண்டும். “விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்றபடி கோயில்களில் விளக்கேற்றுதல் சொல்ல முடியாத நன்மைகளைத் தரும். கோயிலில் எரிந்த விளக்கு ஒன்று, எண்ணெய் குடிக்கச் சென்ற எலியின் மூஞ்சிபட்டுத் தூண்டப்பட்டதால் அந்த எலி அடுத்த பிறவியில் மாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்து அரசாண்டார். விளக்கேற்றுவதால் வரும் பலன்களைச் சொல்லவும் முடியுமா?
இத்தினம் சைவமக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இது சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் உரிய விரதமாகும். இத்தினத்தில் கடவுளை வேண்டிய மட்டும் வழிபாடுகள் செய்து நற்பலனை அடைவோமாக!
لم
d
لم
d
لم
d
d
(நன்றி: சிவதொண்டன்-கார்த்திகை 1965) பூ
. . . . . . . . . . . . . . . . . . . . . .

Page 26
கம்பவாரிதி (
10ணிதப் பிறவியின் நோக்கம் ஆன்ம ஈடேற்றமே. அறிவுப் பொருளாகிய ஆன்மா மல வயப்பட்டு சடம் போற் கிடக்குமோர் நிலையுண்டு. ஆன்மாவின் இந்நிலையை, கேவலம் எனக் குறிக்கும் சித்தாந்தம். அறிவிருந்தும் சடம் போலக்கிடக்கும் ஆன்மாவை உய்விப்பதற்காக அதற்கு, விருப்பு, அறிவு, செயல் எனும் தூண்டுதல்களைக் கொடுப்பதோடு அவை அனுபவத்திற்கு உட்பட, தனு, கரண, புவன, போகங்களையும் மாயையினின்றும் உருவாக்குகிறான் இறைவன். அறிவற்ற நிலையிலிருந்து விடுபட்டு இச்சிற்றறிவு தூண்டப்பட்ட நிலையை ஆன்மாவின் சகலநிலை' எனச் சுட்டும் சித்தாந்தம். தனு, கரண, புவன, போகங்களுக்கு உட்பட்ட ஆன்மா நான், எனது என்னும் அகங்கார மமகாரங்களுக்கு உட்பட்டு பல பிறவிகளிலும் இன்ப, துன்ப அனுபவங்களைப் பெற்று, அவ்வனுபவங்களால் மெல்ல மெல்ல அறிவு வயப்படுகிறது.
ஓர் நிலையில் முழுமையாய் மலங்களினின்றும் விடுபடும் ஆன்மா முற்றான அறிவு கிட்ட தன்னையுணர்ந்து இறைவயப்படுகிறது. இம் முத்தி நிலையையே ஆன்மாவின் சுத்த நிலை' எனப் பேசும் சித்தாந்தம். அகங்கார, மமகாரங்கள் முற்றாய் நீங்குதலே முத்தி நிலைக்கான ஆன்மாவின் தகுதியாய்க் கருதப் படுகின்றது. ஆன்மாவின், தனு, கரண, புவன போகங்களோடு கூடிய மாயைக்கு உட்பட்ட பெத்த நிலையில் அதனிடம்
நான்' எனும் அகங்காரம் முதலிற் பிறக்கிறது. அதன் தொடர்பாய் எனது' எனும் மமகாரம் பிறக்க ஆன்மா பந்தப்படுகிறது. பின், முத்தி நிலையின் போது மறுதலையாய் மமகாரம் முன் நீங்க, அகங்காரம் பின் நீங்குகிறது. தோற்றத்தின் போது மரமாகிப் பின் கிளைவிடுதலும் அழிப்பின் போது கிளைகள் துண்டிக்கப்பட்டு பின் மரம் வீழ்த்தப்படுவதும் மேற்கூறிய அகங்கார மமகாரங்களின் தோற்றம் மறைதலுக்கான உவமைகள். இங்ங்ணம் மலங்களின் வயப்பட்ட ஒர் ஆன்மா மமகார அகங்கார நீக்கம் பெற்று அன்பு நிலையெய்தி பரம்பொருளோடு கலப்பதாய சித்தாந்தக் கருத்தை நேரடியாய் அன்றி
 
 

தாற்பரியம்' எனும் குறிப்புப் பொருளால் கம்பன் ஒர் காட்சியில் விளக்கம் செய்கிறான். கம்பனின் அவ்வற்புத விளக்கம் காண்பாம்.
00 a. & X-X-X-X-X-
கங்கைக் கரையில் இராமனும் குகனும் சந்திக்கின்றனர். அன்போடு வந்த குகனை இராமன் தன் சகோதரனாய் ஏற்கிறான். இது, கம்பனால் அமைக்கப்பட்ட வெளிப்படையான காட்சி. இக்காட்சியில்
இராமனைத் தெய்வமாகவும், குகனை மலவயப்பட்ட ஆன்மாவாகவும் இராமன் குகன் அங்கீகரிப்பதை ஆன்ம
விடுதலையாகவும்
கொண்டு
மறைப் பொருளை உட்பொருளாய்ச் சுட்டுகிறான்,
கம்பன்.
இராமனைச் சந்திக்க வருகிறான் குகன், அவனைச் சூழ, சுற்றத்தார்; அவன் கையிலும் இடையிலும் வில்லும் வாளும்; சீறும் கண்கள்;
கடுமையான தோற்றம். இது கம்பன் குகனைக் காட்டும் முறை. முனிவர்கள் சூழ ஆசிரமத்திற்குள் வீற்றிருக்கிறான் இராமன்.
இராமனைக் காணும் ஆர்வத்தால் வந்தவனாகிய குகன், ஆசிரமம் அண்மித்து விட்டதையுணர்ந்து மரியாதை கருதி குறித்தவோர் எல்லையில் உறவினர்களை நிறுத்தி விடுகிறான். இராமனைக் காணும் எண்ணம் மேலும் உந்த, கையிலும் இடையிலுமிருந்த வில்லையும் வாளையும் உதறுகிறான். குற்றமில்லாத மனங்கொண்ட குகனிடம் இப்போது அன்பு மட்டுமே. அவ்வன்போடு ஆசிரமத்தை அணுகுகிறான். தன் அன்பு நிலையால் இலக்குவனின் கருணைக்கு ஆளாகி அவன் துணையால் இராம தரிசனமும், அணுக்கிரகமும், அங்கீகரிப்பும் கிட்ட சகோதரனாய் இராமனுடன் ஒன்றாகிறான். குகன், இராமனைக் காண வந்ததாய அந்நிலையைக் கம்பன்கவி வெளிப்படுத்துகின்றது.
'சுற்றம் அப்புறம் நிற்க, சுடுகணை விற்றுறந்து அரை வீக்கிய வாளொழித்து அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன் நற்றவப் பள்ளிவாயிலை நண்ணினான்
இது வெளிப்படையான கம்பனின் காட்சியமைப்பு.

Page 27
இக்காட்சியமைப்புள் கம்பன் காட்டும் சித்தாந்த உட்பொருள் காண்பாம்.
இராமன் நிலையோடு ஒப்பிடும்போது, குகன் சாதியால் வேறுபட்டவன், தாழ்ந்தவன். வேட்டையாடித் திரிபவன். வியாபக அறிவு கொண்ட இறைவனோடு ஒப்பிடும் போது,
எல்லைப்பட்ட அறிவுடைய ஆன்மா, சாதியால் வேறுபட்டது. தாழ்ந்தது. புலன் நுகர்விற்காய் உலக இன்பங்களை வேட்டையாடி திரிவது. இம் முதலொப்புமையால் இராமனைப் பரம் பொருளாயும் குகனை மலவயப்பட்ட ஆன்மாவாகவும் காட்டுகிறான் கம்பன். இறைநாட்டமேற்பட பரம்பொருளை நோக்கிய ஆன்மாவின் பயணம் தொடங்கும். இராமனின் மேற்கொண்ட அன்பால் குகன் அவனை நாடுதல் இதற்கு ஒப்புமை.
பக்குவப்பட்ட ஆன்மா உலகியல் வயப்பட்ட ஆன்மாக்களினின்றும் நீங்கி தனித்து ஆண்டவனை நாடும்.
'அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள், அகலிடத்தார்.ஆசாரத்தை ‘உற்றாரை நான் வேண்டேன் எனும் அப்பர், மணிவாசகர் அடிகள் இந்நிலையை விளக்கம் செய்யும் தக்க மேற்கோள்கள். குகனும் ஒர் நிலையில், சுற்றத்தாரை நிறுத்தி இராமனை நோக்கிச் செல்கிறான். உலகியலினின்றும் நீங்கிய ஆன்மா, முதனிலையில் மமகார நீக்கம் பெறும். எனது என்னும் மமகாரத்தின் உச்சநிலை வெளிப்பாடே உறவுகள்.
இராமனைக் காணவரும் குகன் உறவினரை விட்டுத் தனித்து முன்னேறுதல் மமகார நீக்கத்தின் விளக்கமுமாம். 'சுற்றம் அப்புறத்தே நிற்க உறவினரைத் துறந்த குகன், தொடர்ந்து வில்லையும், வாளையும் துறக்கிறான். வில்லும், வாளும் தற்காப்புக் கருவிகள். நான்’ எனும் எண்ணத்தின் குறியீடுகள். மமகாரம் நீங்க, தொடர்ந்து அகங்காரம் நீங்கும். உறவினரை நீக்கிய குகன், ஆயுதங்களையும் நீக்கினான் எனவே அகங்கார நீக்கமும் பெறப்பட்டது. சுடுகணை விற்றுறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து. நான், எனது என்பவை நீங்க, மாசு நீங்கி ஆன்மா தூய்மைப்படுகின்றது. ‘அற்றம் நீக்கிய மனத்தினன் ஆன்மா, மாசு இருந்து நீங்கப் பெறுவதென்பதைச் சுட்ட நினைக்கும் கம்பன், குகனைத் தூய மனத்தினன்' என்று தத்துவ நோக்கம் கருதிப் பேசுகிறான்.
இந்து ஒளி
 

ஆன்மாவில், இம்மாசுகள் நீங்கியதும் தூய அன்பு சுரக்கும். ‘காதலாகிகசிந்து கண்ணிர்மல்கி
எனும் சம்பந்தர் தேவார அடி, இவ்வன்பு நிலையைச் சுட்டும். நான், எனது எனும் குற்றங்கள் நீங்கிய குகனும், இவ்வன்பு நிலையை எய்தியமையைக் காட்ட, அடுத்த சொல்லை இடுகிறான் கம்பன்.
‘அன்பினன்
அன்புருவாய் பூரண நிலைப்பட்ட ஆன்மா,
இறை சந்நிதி வயப்படும். குகனும் இராம சந்நிதி வயப்படுகிறான்.
நற்றவப் பள்ளிவாயிலை நண்ணினான்
மேற்கூறியவாறு தூய்மையுற்று, அன்பினால் இறை சந்நிதி வயப்பட்ட ஆன்மாவுக்கு, குருவருள் கிட்ட
அக்குருவின் துணையால்
இறையருள் கிட்டுதலும்,
பேதம் நிங்கி அவ்வான்மா இறையோடு ஒன்றாதலும் நிச்சயமன்றோ. இங்கும் குருவின் நிலையில் இலக்குவன். குகனின் அன்பு நிலைகண்டு தக்கவாறு இராமனிடம் முன்மொழிந்து அவனை இராமனின் அன்புக்காளாக்குகிறான். அவ்வன்பினால் அரசன், வேடன் எனும் பேதம் நீங்க இராமனுடன் சகோதரனாய் ஒன்றாகும் நிலை கிட்டுகிறது.
முக்தி நிலை பெற்ற பின்பும் சில ஆன்மாக்கள் உடலோடு கூடி நிற்கும். இந்நிலையை 'சீவன் முத்த நிலை' எனச் சித்தாந்தம் பேசும்.
கன்மம் முடிவுறாததால் உடல் சுமந்து வாழும் அச் சீவன் முத்தர்கள் உலகியல் துறந்து நின்று
தாம் பெற்ற இறையருளை மற்றைய ஆன்மாக்களுக்கும் பெற்று ஈவர். இச் சீவன் முத்த ஆன்மாக்கள் மற்றோரையும் இறை வயப்படுத்துதல் போல குகனும்
தன் உற்றாரையும் இராமனின் அன்பிற்குட் படுத்துகிறான். 'உன் கிளை எனதன்றோ உறுதுயர் உறலாமோ என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் இராமனின் இக்கூற்று குகனால் மற்றைய வேடர்களும் இராமன் கருணையைப் பெற்றமையை இரு பொருளாகவும் வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வாறு,
கம்பன் செய்யும் சித்தாந்த விளக்கம் கவியின்பத்தோடு கலந்து
மன மகிழ்வு தருகிறது.

Page 28
செ. வேலாய
சிவலிங்க வழிபாடு பாரத நாட்டில் வடக்கே காசுமீரம்
முதல் தெற்கே கன்னியாகுமரி வரையும் பரவிக் காணப்படுகின்றது. சிவபூமி என்று திருமந்திரம் குறிப்பிடும் இலங்கையிலும் இவ்வழிபாடு தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. இற்றைக்கு ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகத்திற் சிவலிங்க வழிபாடு பரவலாகக் காணப்பட்டது. மொகஞ்சதாரோ, அரப்பா ஆகிய புதையுண்ட புராதன நகரங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிவலிங்க உருக்கள் இதற்குச் சான்று பகர்வனவாய் உள்ளன. சிந்துவெளி நாகரிகம் இந்தியாவுக்குள் ஆரியர் வருகையோடு தொடங்கிய வேதகாலத்துக்கு (கி.மு. 2000) முற்பட்டது; ஆரியர் அல்லாத இனத்து மக்களுக்கு (இம் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்று பெரும்பாலான ஆராய்ச்சியாளர் அறுதியிட்டுக் கூறுகின்றனர்) உரியது. சிவலிங்க வழிபாடு தம்மினத்தவர் அல்லாத பழங்குடிகளிடம் காணப்பட்டமையால் ஆரியர் அதனைப் பழித்தனர் என்பதற்கு இருக்கு வேதத்திற் சான்றுண்டு. ஆயினும், காலப்போக்கிலே பழங்குடிகளின் பண்பாட்டுக் கூறுகள் ஆரிய மக்களின் வாழ்க்கையிற் புகுந்த பின்னர் வடநாட்டிலே ஆரியரும் சிவலிங்க வழிபாட்டை ஏற்றுக்கொண்டனர். இருக்கு வேத காலத்து ஆரியரின் இயற்கைத் தெய்வங்கள் சிறப்பிழந்து போக, சிவ வழிபாடும், திருமால் வழிபாடும் இதிகாச காலத்திலே தலையெடுத்தன. இக்காலம் முதலாகச் சைவம், வைணவம் என்னும் இரு பெருஞ் சமயங்களும் வைதிக சமயங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு, இருக்குவேத காலத்திலும் அதற்கு முன்பும் திராவிட இனத்தைச் சேர்ந்த பழங்குடிகளிடம் காணப்பட்ட சிவலிங்க வழிபாடு, இதிகாச கால முதல் இந்தியா எங்கணும் பரவலாயிற்று. இந்தியாவின் வடகோடி தொட்டுத் தென்கோடி வரையும் பரவியுள்ள பன்னிரு சிவாலயங்களில் உள்ள சிவலிங்கங்கள் மிக்க பழைமை வாய்ந்தவை என்று நூல்கள் கூறும். காசியிலுள்ள விசுவேசு வரலிங்கம், குஜராத்திலுள்ள சோமநாதலிங்கம், உச்சயினியிலுள்ள மகாகாளலிங்கம். அமரேசுவரலிங்கம், இமயமலையிலே கேதாரத்திலுள்ள திருக்கேதாரநாதலிங்கம், வங்கத்திலுள்ள வைத்தியலிங்கம், நருமதைக் கரையிலுள்ள ஓங்காரநாதலிங்கம், நாசிக்கிலுள்ள திரயம்பகேசுவரஸிங்கம், கெளதமேசலிங்கம் ஆந்திராவிலே
 
 

தபிள்ளை
தக்கினியிலுள்ள பீமசங்கரலிங்கம், ஆந்திரப்பிரதேசத்திலுள்ள சீபர்ப்பதநாத (பூரீசைவ)லிங்கம், இராமேசுவரத்திலுள்ள இராமேச்சரலிங்கம் என்பவையே இப்பன்னிரண்டு இலிங்கங்களுமாகும்.
இன்றும் வடநாட்டிலே சிவனை வழிபடுவோர் இலிங்கங்களை மட்டுமே நிறுவி வழிபடுகின்றனர். ஆளுருவில் அமைந்த சிவமூர்த்தங்களை ஆலயங்களில் நிறுவி வழிபடும் வழக்கம் அங்கே இல்லை. சிவவழிபாடு சிறந்து விளங்கும் தென்னாட்டிலே எண்ணிறந்த சைவத்திருக்கோயில்கள் உள்ளன. இங்கே சிவபிரானுடைய பல்வேறு ஆள் வடிவ மூர்த்தங்களைச் சிவாலயங்களில் நிறுவி வழிபடும் வழக்கம் உளதாயினும் மூலத்தானம் எனப்படும் கருவறையிலே சிவலிங்கம் மட்டுமே காணப்படும். தென்னாட்டில் வேதகாலத்துக்கு முற்பட்ட கற்காலத்திலேயே இலிங்கங்கள் இருந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். திருப்பதியை அடுத்துள்ள குடிமல்லம், களத்தூர், குடுமியான்மலை என்னும் இடங்களிலுள்ள பழைய கோயில்களிற் காணப்படும் இலிங்கங்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவை (கி. மு. 2ஆம் நூற்றாண்டின்) என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் கல்லாலான, பழைய இலிங்கங்கள் இரண்டு இன்றும் உள்ளன. இவை பீடமற்ற இலிங்கங்களாதலினால், மிகவும் பழங்காலத்தன என்று கருதப்படுகின்றன.
தென்னாட்டு வழிபாட்டு முறையே நிலவிவரும் இலங்கையிலும் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், முன்னேச்சரம், நகுலேச்சரம் என்பவை தொன்மைச் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களாய்த் திகழ்கின்றன. இவற்றுள் திருக்கேதீச்சரம்,திருக்கோணேச்சரம் இரண்டும் தேவாரம் பெற்ற சிறப்புடையவை. இலங்கையின் ஆதிக்குடிகளாகிய நாகர்களது தலைசிறந்த வழிபாட்டுத் தலமாக, விஜயன் இலங்கைக்கு வந்தபோது (கி.மு 5ஆம் நூ.ஆ) விளங்கியது என்று வரலாறு கூறுகின்றது. கி. பி. 16ஆம் நூற்றாண்டுவரை நிலவிப் பின்னர் மூன்று நூற்றாண்டுகளாக மண்மூடிக் கிடந்த பழைய கோயில் இருபதாம் நூற்றாண்டிலே மீள நிறுவப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கப்பட்ட பழைய மகாலிங்கம் தொன்மைச் சிறப்புடன் இன்றும் விளங்குகின்றது.
(நன்றி ஈழத்து செவ்வேள் படையல்கள்) திதிராSசமும் ့်ဖွဲ့စ္ဆိမ္ပိန္ဓိုမွဲဖို့ ဖွဲ့ချွဲန္တိ `ို
§
éeʼʻv.ʼk
'.
.
S.S.S.S.& ளூ

Page 29
சிவநெறிச் செல்வ
இன் சொல்லும், பணிவும் உடையவனாயிருந்தும் கையில் ஒன்றுமில்லாதவனை உலகம் இகழும். கடுஞ் சொல்லும் பணிவாமையுமுள்ளவனைச் சூழ்ந்து புகழ்ந்து பணிந்து அவன் சேவடிக் கீழ் ஒதுங்கும் புகழுடையவரை இகழ்ந்தும், இகழ்ச்சியாளரைப் புகழ்ந்தும் வரும் உலகம் அறிவுடையதல்ல, மயக்கமாகிய பித்துடையது என்றார் குமரகுருபரர்,
"இன் சொல்லன் தாழ் நடையன் ஆயினும் ஒன்றில்லானேல் வன் சொல்லின் அல்லது வாய் திறவா- என் சொல்லினும் கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம் பிந்துடைய அல்ல பிற.
இதனால் ஆவதை ஒழித்து, அழிவதை மேற்கொள்ளலும், போற்றப்படுவதைத் தூற்றுவதும், துாற்றப்படுவதைப் போற்றுவதும் ஆகிய செயல்கள் பித்திள் இலக்கணம் காரணமின்றிச் சிலர் சிறிதும் பொருந்தா'உரை பகர்வர். அதுவும் பித்தின் இலக்கணமேயாகும். இறைவன் இத்தகைய பித்தன் அல்லன். உலகப் பித்தினைப் போக்கித் தன்பால் பித்துக் கொள்ளுமாறு அருள் செய்பவன். இறைவன் சுந்தரரை உலக மையலில் சிக்கா வண்ணம் தடுத்து ஆட்கொள்ள பித்தன் என்ற பெயர் பெற்றார்.
ஆளுடைய நம்பிகள் அருளிய திருப்பாட்டின் முதற்பாட்டின் முதன்மொழி பித்தன் என்பது இத் திருநாமத்தின் சீரிய உட்கருத்தினைக் காண்டாம் நம்பிக்கு திருமணம் தொடங்கும் அமையத்து பெருமான் கிழ வேதியர் கோலம் பூண்டு பந்தரிடையெய்தி ஆரூரன் என் அடிமை என்றனர். ஆருர் அந்தனர். அந்தணர்க்கு அடிமையாதல் எங்கும் கேட்டிலா நீர் பிந்தரோ என எள்ளிநகையாடினர். "யான் பித்தனுமாக பேயனுமாக வித்தகம் பேச வேண்டி பணி செய்ய வேண்டு" மென்றனர் வேதியர். பின்னர் அற்புத பழஆவணம் காட்டி ஆட்கொண்டவா"முன்பு என்ன பித்தன் என்றனை, பித்தன்,என்றேபாடுக"வென்றார்.ஆருதூர்"பித்தாபிறை சூடி பெருமானே அருளாளா" என்று பாடினார். வல்வழக்காடிய வேதியனா இன்னாரென்று அறியாத நிலையில் முறையிலாது "பித்தரோ நீர்" என்று கூறிய பொருளில் அவரை இன்னார் என அறிந்த பின்னரும்,
"பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா அத்தா உனக்காளாய் அல்லேன் எனலாமே"
என்று கழிந்தகற்கு இரங்கிய சமயத்தும் ஆண்டவனை "பித்தன்" என்று நாணாது கூறத் தலைப்பட்டிருப்பதா என்பது ஆராய்தற்குரியது. உலகப் பித்துடையார்க்கு பெய்யுணர்வின் வடிவாம் இறைவன் பித்தனாகக் காணப்படுதல் பொருத்தமே. ஆனால்,"பேயாய்த் திரிந்தெய்தேன் பெறலாக அருள் பெற்றேன்" என்று தமது இழிதக விளையும் அதற்கு மாறாகத் தம்மைத்
 

;-&ދި
ர், அறநெறி அன்பர்
LIGO LILIJI
தடுத்தாண்ட மேதக வினையும் ஒப்பிட்டுக் கண்ட ஆரூரர் இறைவனை உலகவர் கூறும் பொருளில் பித்தன் என்று உணர்த்திராதிலை? பின்னை இறைவனை எத்தகைய பித்தன் என்றாரெனின்? "அன்புப் பித்தன் "அருள் பித்தன்' என்றே உரைத்திருக்க வேண்டும். பெருமான் கயிலையில் அருள் செய்த சாலு மொழியால் தடுத்தடிமை கொள்வான் மண்ணிடை வந்து கிழவேதியராய்த் தமது பரவியல்பைக் கருதாது தனதடிமை பென்பதை வழக்காடி வென்று தம்மை அறிவுறுத்தி ஆரூார்க்குப் பண்டைய நிகழ்ச்சியினை நினைவுறுத்தியது ஆண்டவனது அருள் பித்தன்றோ. அதனை நினைத்தே ஆரர் பித்தன் என்று கூறி இரக்க வேண்டும். இப்பித்தினாலன்றோ இறைவன் தம்மைத் தொழுவாரிடை குற்றமே குடி கொண்டிருப்பினும் அதனைக் குனமாகக் கொண்டு "தொழுவார் அவர் துயராயின் தீர்த்தல் உனதொழிலே" என்றபடி திங்கள் தனது கலைதேயப் பெற்றபோது இறைவனனப் புகலடைந்தமையால் இடுக்கண் களைந்து முடியில் அணிந்து 'பிறைசூடி" என்று பட்டம் பெற்றதை அடுத்துக் கூறியுள்ளார். அனைத்தும் உயிர்க்கும் தலைவனாய் நிற்கும் பெருமையால் பெருமானே என்றார். வினையுள் அழுந்தும் மக்களைக் கடைத்தேற - மணற்சோற்றில் கல் ஆராய்வார் போலன்றி மக்களது தகுதி நோக்காது தனது கருணையே துணையாகக் கொண்டு உய்விப்பவன் என்பார் அருளாளர் என்றழைத்தார். இதனால் ஆரூரர் பால் ஆண்டவன் கொண்ட பித்து அருள் பித்தெனல் வேண்டும். இங்ங்னம்பித்தாதல் இறை இயல்பாதலை ஆரூரர் பிறிதோரிடத்து
H கடைந்தெழுந்த ஆல் நஞ்சு கண்டவர் மிக இரிய அமரர்கட்கு அருள் புரிவது கருதி நீலமார் கடல் விடந்தனையுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த சீலம்"
என்ற விடத்து பித்த என்றது அருள் பித்தாதவை விளக்கி நின்றது. அருள் மொழித் தேவர் கண்ணப்பர் புராணத்து "தேவுமால் கொண்டான் இத் திண்ணன்' என்று கூறியிருப்பதும் நினைத்தகத்தக்கது - ஆரூாது இக் கருத்திணைபுணர்ந்த சேக்கிழார் பெருமான் அன்புப் பித்தன் ஆண்டவன் என்பதை அவர் சரிதையில் மூன்றிடங்களில் அமைத்து விளக்கியுள்ளமை அறிந்தின் புறற்குரியது. ஒன்று நாம் தடுத்தாண்டோம். ஆண்டவனார் அவ்வொலியினை "என்றெழும் ஓசைகேளா ஈன்ற ஆன்கனைப்புக் கேட்ட கன்றென நம்பி கேட்டார்” என்பது இரண்டாவது "மெய்த்தா யினுமினியானை அவ்விய நாவலர் பெருமான்' என்பது. மூன்றாவது கயிலையில் கண்ணுதலை அடைந்த நிலையை "சேணிடை விட்டகன்று கோவினைக் கண்டணைந்த தெனன்" என்பது. பெற்ற மனம் பித்து என்ற பழமொழி இதற்குச் சான்றாகும்.
-

Page 30
ஆதரவு வேண்டிநி
மட்டக்களப்பு மாநகரில் o
உலகெங்கணும் அதிகரித்துவரும் சுகாதார வசதிகள் மற்றும் ஊட்டச் செயன்முறைகள் காரணமாக அகில உலக ரீதியில் மனிதர்களது ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. இதனால் சனத்தொகையில் முதியோர்வீதம் படிப்படியாக அதிகரித்துச் செல்கிறது. இந்தப் போக்கிற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தற்போது அண்ணளவாக 9% ஆகக் காணப்படும் முதியோர் வீதமானது 2020ம் ஆண்டளவில் 20% ஆக அதிகரித்துவிடும் என்பது புள்ளிவிபரவியல் எதிர்பார்ப்பாகும்.
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக இந்த முதியோர்கள் பெருமளவு பிரச்சினைகள் எதிர்நோக்குகின்றனர்.
இந்து கலாசாரமானது கூட்டுக் குடும்ப அமைப்பினுாடாக முதியோர்களுக்கான பராமரிப்பினை உறுதி செய்வதாக அமைந்திருந்தது. தமது மூத்த தலைமுறையினரைப் பராமரிக்கும் பொறுப்பினை இந்து சமூகம் கரிசனையோடு சிறப்பாகச் செய்து வந்தது.
வட-கிழக்கில் நிகழும் நிகழ்வுகளால் முதியோர்களின் எதிர்காலம் வேதனைக்குரியதாக மாறிவருகிறது. வருமானம் தரக் கூடிய தமது நிலபுலங்களைப் பயன்படுத்த முடியாத நிலைமை ஒருபுறம், தம்மைப் பராமரிக்கக் கூடிய தமது வழித்தோற்றங்களை இழந்து நிற்கும் நிலைமை ஒருபுறம், தம்மைப் பராமரிக்க வேண்டிய தமது பிள்ளைகளைப் போர்க்காலச் சூழலின் காரணமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டுப் பராமரிக்க நாதியின்றித் தவிக்கும் முதியோர் நிலைமை ஒருபுறம், போர் நிகழ்வுகள் காரணமாகத் தாம் இது காலவரை செய்துவந்த தொழில் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட முடியாது அல்லற்படும் நிலைமை ஒருபுறம் எனப் பல்வேறு வகையினரான முதியோர்கள் இன்று பராமரிப்பிற்கான ஆதரவை நாடிநிற்கின்றனர். இவர்கள் யாவரதும் பிரச்சினைகள் எமது சமூகத்தின் பிரச்சினைகளே என்பதைச் சமூக உணர்வுள்ள மனிதாபிமானமுள்ள எந்தவொரு குடிமகனும் ஏற்றுக் கொள்ளவே செய்வான்.
மேற்கு நாடுகளில் முதியோர்கள் சிரேஷ்ட பிரஜைகளாகக் கருதப்பட்டு அவர்களது வாழ்க்கை வசதிகட்கான முழுப்பொறுப்பினையும் அவ்வந்நாட்டு அரசுகளே ஏற்று நடாத்தி வருகின்றன. எமது இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் நிதி நிலைமை அத்தகைய வாய்ப்புக்களை முதியோர்களுக்கு வழங்குவதற்கு இடமளிப்பதாகவில்லை.
 
 

கும் முதியோர்கள்
மகிறது முதியோர்
இந்து சமூகம் மனித சேவை மகேசன் சேவை என்கிறது. ஒவ்வோர் உயிரினிடத்தும் இறைவனைக் காணும் கலாசாரம் இந்து கலாசாரம் ஆகும். இந்தக் கருத்தினைத் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்:
படமாடக் கோயில் பகவர்க்கொன் றியில் நடமாடும் கோயில் நம்மவர்க்கொன் றாகா நடமாடும் கோயில் நம்மவர்க்கொன் றியில் படமாடும் கோயில் பகவர்க்க தாமே
நடமாடும் கோயில்களாக மனிதர்களை இனங்கண்ட திருமூலநாயனார், அவ்வாறான நடமாடும் கோயில்களுக்கு அதாவது மனுக்குலத்துக்குச் செய்யும் பணியெல்லாம் இறைவனுக்குச் செய்யும் பணியாகிறது என்கிறார்.
சிவனடியார்களுக்குத் தொண்டாற்றிய Լ}6Ս நாயன்மார்களை நாம் பட்டியல்படுத்த முடியும். இவை யெல்லாம் சரித்திரங்களாக மட்டும் நிலைத்துவிட்ட நிலைமையினையே இன்று சமூக அமைப்பில் காணக்கூடியதாக உள்ளது. தனிக்குடும்ப வாழ்க்கை முறையை விருப்புவதும் தமது மூத்த தலைமுறையினரை உதாசீனம் செய்வதும் இன்று எமது சமூகத்தில் பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளன. இவ்வாறான நிலைமைகளினால் பராமரிப்பிற்காக ஏங்கித் தவிக்கும் நிலைமையினையே இன்னும் பல முதியோர்கள் எதிர்பார்த்து நிற்கும் நிலைமை உருவாகியுள்ளது.
அனுதாபப்படுவதும் அறிக்கைகள் வெளியிடுவதும் கண்டனங்கள் தெரிவிப்பதும் மாத்திரம் இவ்வாறான சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.
முதியோர்களது இந்த மனிதாபிமானப் பிரச்சினைக்கு ஒரு ஆக்கபூர்வமான தீர்வை வழங்கும் நோக்குடன் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றமானது, மட்டக்களப்பு நகரிலே 50 ஆண்களும் 50 பெண்களுமாக மொத்தம் 100 முதியோர்களை இந்து கலாசார சூழலிலே தமது வாழ்க்கையின் இறுதிநாட்களைக் கழிப்பதற்கு வாய்ப்பளித்துப் பராமரிக்கத் தக்கதான முதியோர் இல்லம் ஒன்றினை அமைத்து வருகிறது. இதற்கான அடிக்கல்லானது பூரீ இராமகிருஷ்ண மிசனைச் சேர்ந்த பூரீ மத் சுவாமிஜிவனானந்தஜி மகராஜ் அவர்களால் நாட்டப்பெற்று கட்டட நிர்மாண வேலைகள் தொடர்கின்றன.

Page 31
இந்தக் கட்டிடத் தொகுதியானது ஆண்களுக்கான விடுதி, பெண்களுக்கான விடுதி, ஆண்களுக்கான அறைகள், பெண்களுக்கான அறைகள், தொழிலாளர்கள் தங்கும் பகுதி, சமயலறை, கலாசார மண்டபம், உணவு மண்டபம், பிரார்த்தனை மண்டபம், உள்ளக பாதை அமைப்பு, வைத்திய சேவை அறை எனப் பல பகுதிகளையும் கொண்டது. இதன் மொத்த மதிப்பீடு ரூபா 26 மில்லியன் ஆகும். எனினும் அத்தியாவசியப் பகுதிகளான ஆண்கள், பெண்கள் விடுதிகள், சமயலறை, மலசலகூடத் தொகுதி, என்பவற்றினை அமைத்து இல்லத்தினைச் செயற்பட வைக்க ஆரம்பத்தில் ரூபா 6 மில்லியன் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தித் தொகுதியின் பகுதிகளை நிர்மாணிப்பதற்கான செலவினத்தைச் சமூக அமைப்புக்களும் நலன் விரும்பிகளான அன்பர்களும் ஏற்றுக் கொண்டு இப்பணிக்கு உதவி வருகின்றனர். விடுதிகளில் ஒன்றையும் மலசல கூட தொகுதி ஒன்றையும் அமைக்கும் செலவினத்தை அகில
இந்துக்களின் விசேஷ திை
യബ 1999 - டிசெம்பர்
03 (வெள்ளி) ஏகாதசி 05 (ஞாயிறு) பிரதோஷம் 07 (செவ்வாய்) அமாவாசை 11 (F6(f) சதுர்த்தி 13 (திங்கள்) விநாயக சஷ்டி 14 (செவ்வாய்) திருவெம்பாவை பூஜாரம்பம் 19 (ஞாயிறு) சுவர்க்கவாயில் ஏகாதசி 20 (திங்கள்) பிரதோஷம், கார்த்திகை 22 (புதன்) பூரணை 23 (வியாழன்) நடேசர் ஆருத்திரா தரிசனம்
GearonīO
மார்கழித் திருவாதிரை திருவெம்பாவை பூர்த்தி
02 (ஞாயிறு) ஏகாதசி 03 (திங்கள்) பிரதோஷம் 06 (வியாழன்) அமாவாசை 10 (திங்கள்) சதுர்த்தி 12 (புதன்) சஷ்டி விரதம் 15 (சனி) தைப்பொங்கல் 16 (ஞாயிறு) கார்த்திகை 17 (திங்கள்) ஏகாதசி 18 (செவ்வாய்) பிரதோஷம் 20 (வியாழன்) பூரணை 21 (வெள்ளி) தைப்பூசம்
 
 
 

இலங்கை இந்து மாமன்றம் பொறுப்பேற்றுள்ளது. இதற்காக ரூபா 12 மில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பதுடன், அதில் ரூபா 300,000/- முற்பணமாகத் தந்துதவியுள்ளது. காலத்தின் தேவையான இம்மனிதாபிமானச் சமூகப் பணிக்கு உதவிக் கரம் நல்குமாறு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றமானது சமூகப்பற்றுள்ள அன்பர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறது. தொடர்பு கொள்வதற்கான விலாசம் :
பொதுச் செயலாளர்,
* மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் ” 4/1 தாமரைக்கேணி வீதி, மட்டக்களப்பு.
أر 24322 — 065 .தொ. G3LI ܓܠ
- மட்/ இந்து இளைஞர் மன்றம்.
ாங்களும் விரத நாட்களும் 2000 τ - Lρπτά:
பெப்ரவரி)
01 (செவ்வாய்) ஏகாதசி
02 (புதன்) பிரதோஷம் 05 (F6of) அமாவாசை 09 (புதன்) சதுர்த்தி
11 (வெள்ளி) சஷ்டி விரதம் 13 (ஞாயிறு) கார்த்திகை 16 (புதன்) பீம ஏகாதசி 17 (வியாழன்) பிரதோஷம் 18 (வெள்ளி) நடேசரபிஷேகம் 19 (சனி) பூரணை, மாசி மகம் 23 (புதன்) சங்கடஹர சதுர்த்தி
01 (புதன்) ஏகாதசி 03 (வெள்ளி) பிரதோஷம் 04 (சனி) மகாசிவராத்திரி
05 (ஞாயிறு) அமாவாசை 09 (வியாழன்) சதுர்த்தி 11 (சனி) சஷ்டி, கார்த்திகை 16 (வியாழன்) ஏகாதசி 17 (வெள்ளி) பிரதோஷம் 19 (ஞாயிறு) பூரணை 20 (திங்கள்) பங்குனி உத்தரம் 23 (வியாழன்) சங்கடஹர சதுர்த்தி 31 (வெள்ளி) ஏகாதசி

Page 32
கிற்பூர ஆராத்தி எடுத்துவிட்டு அதனை அணைக்கக்கூடாது. எல்லாவிதமான கோயில்களிலும் இந்த வழக்கம் இருக்கிறது. கற்பூர தீபத்தை ஏற்றும்பொழுது கொஞ்சமாக கற்பூரத்தை வைக்கவேண்டும். அது எரிந்து தானாகவே அணைந்து போகவேண்டும். அதில் ஒரு தத்துவம் இருக்கிறது. எந்த சிற்சக்தியானது புத்தி சக்தியோடு சேர்ந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக சரியை, கிரியை, யோக சக்திகளிலும் முன்னுக்கு வந்து வந்து, அந்த ஞான அக்னி உண்டாகும் பொழுது எந்த வொரு புத்தி சக்தியினாலே
பூரீமத் சுவாமி
எல்லோருக்கும் மூலமாக இருக்கின்ற நூல் நான்கு வேதங்களுமேயாகும். இந்த வேதங்களின் அடிப்படையிலும் ஆதாரத்திலும்தான் 66)6u நூல்களெல்லாம் எழுந்திருக்கின்றன. அதனை பொது நூல் என்றும் சிறப்பான நூல் என்றும் நன்கு போற்றுகிறார்கள். எல்லோருக்கும் ஆதாரமாக இருப்பது வேதங்கள்.
வேதத்தை விட்டு அறமில்லை வேதத்தில் ஒதத்தகும் அறமெல்லாம் உள மதிஞர்தக்க வாதத்தை விட்டு வளமுற்ற வேதத்தை ஒதியே வீடு பெற்றார்களே.
திருமூலருடைய வேதச்சிறப்பு பகுதியிலுள்ள பாடல் அதன் சிறப்பைச் சொல்லுகிறது.
எல்லோருக்கும் உண்மையிலேயே மூலமாக இருப்பவை வேதங்கள். அந்த வேதங்களுக்குத் தருகின்ற விளக்கங்களிலேதான் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இருந்தாலும் எல்லோருக்கும் குறிக்கோள் ஒன்றே.
நாவலா ட
புண்ணிய நாள், நாளெல்லாம் போற்று நாள், ெ எண்ணி எதிர் பார்க்கும் இனிய நாள் - மண்ணு மேவு வுயர் சைவம் விளங்கிடு நாள், ஆறுமுக நாவலர் கோன் தோன்றிய நல்நாள்.
- கவிய
மும்மொழியில் வல்லுனராய், மூதறிவு மிக்கவர நம்மொழியும் சிவநெறியும் நன் முறையில் தை செம்மை நெறிதவறாத துறவு நெறிதாம் மேவி அம்மம்ம அவர் செய்த அருள்தொண்டை என் - புலவ
 
 
 
 
 
 
 
 
 
 

al الحجر
క్లేNస్రా
き
இறைவனைப் பார்ப்பதற்கென்று இருந்தோமோ, அந்த புத்தி சக்தி, எப்படி கற்பூரம் எரிந்து எரிந்து இறைவனை ஒளிகாட்டி தானும் அழிந்து விடுகிறதோ அதுபோல, இந்த அகங்கார சக்தியானது அழிந்து போகிறது. அப்படி அழியும்போது ஜீவனும் சிவனும் ஒன்றாகச் சேர்வார்கள். அதுதான் கற்பூர ஆரத்தி. அது எரிந்து எரிந்து அடங்கி ஒடுங்குவதற்கு முன் அதனை அணைத்து விட்டால், கடவுள் சந்நிதானத்தின் வாசல் மட்டும் போனால் போதும், உள்ளே போகத் தேவையில்லை என்று அர்த்தமாகிவிடும்.
(சுவாமி சாந்தானந்த சரஸ்வதி)
சிறப்பு
ஒங்காராநந்தா
மனம் அமைதி பெற வேண்டும். முழுமையான மனச்சாந்தி பெறவேண்டும் என்பதற்காகத்தான் எத்தனையோ நெறிமுறைகளை பெரியோர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். பெரியபுராணப் பாடல்களிலே இதனை நாம் காண்கிறோம்.
“வேதநெறி தளைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க”
என்று சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
மனித வாழ்க்கைக்குத் தேவை இறைவனைச் சார்ந்திருப்பது. உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் திறம்பட ஈசனை நாடுதல். இந்த உடம்பு பெற்ற பயன் இறைவனைச் சார்ந்திருப்பது தான். அப்படி இறைவனைச் சார்ந்திருக்கின்ற வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துச்சொல்லி, அந்த கடவுள் நம்பிக்கையின் மூலம் நல்ல விஷயங்களை ஒவ்வொருவருக்கும் புகுத்துவது சமுதாயத்திற்கு மிகவும் சிறந்தது.
(சுவாமி சித்பவானந்தா ஆச்சிரம ஸ்தாபகத் தலைவர் பூரீமத் சுவாமி ஓங்காராநந்தா அவர்கள் மாமன்றத்திற்கு வருகைதந்த போது வழங்கிய ஆசியுரையிலிருந்து எடுக்கப்பட்டது)
கழமாலை
சந்தமிழ்த்தாய் றுலகில்
னி தேசியவிநாயகம்பிள்ளை
rüü ழத்திடவே
னென்பேன் ர் கீரன்

Page 33
8.
C
மட்டக்களப்பு முதியோர்
அகில இலங்கை இந்து மாமன்றத் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் நிறு தொகுதியை தனது செலவில் அமைத்துக் கொடு நிதியுதவியாக ரூபா 12 இலட்சத்தை மாமன்றம்
இதன் முதற்கட்டமாக, ரூபா 300,000/- அக்டோபர் மாதம் 24 ம் திகதியன்று மாமன்றத் கூட்டத்தின் போது மாமன்றத் தலைவர் திரு. வி. இளைஞர் மன்றத் தலைவர் திரு. எம். பவளக வழங்கினார்.
சுவாமிகளுக்
இந்து சமய விவகார பண்பாட்டு செய்யப்பட்டிருந்த அருள்நெறி விழாவில் கல தந்திருந்த திருப்பனந்தாள் காசித் திருமடத்தலை: தம்பிரான் சுவாமிகள் அவர்களும், சுவாமி சித் சுவாமி ஓங்காராநந்தா அவர்களும் கடந்த ெ தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.
மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை சிவகாமி அம்பாள் சமேத பூரீநடராஜப் பெரு சுவாமிகள் இருவரும் கலந்து கொண்டதுடன் இ மற்றும் இரத்மலானை, கொழும்பு இந்துக் க வழங்கினார்கள்.
மண்டலாபிஷேகப் பூர்த்தி விழ
இரத்மலானை, கொழும்பு இந்துக் க கற்பக விநாயகர் ஆலயத்தில் இவ்வரு மகாகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 45 நாட்க
இறுதி நாளாகிய கடந்த ஆகஸ்ட் 14ம் பூர்த்தி விழாவில், மண்டாலாபிஷேகப் பூர்த்தி Dசஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
 
 

இல்லத்திற்கு நிதியுதவி
தின் அங்கத்துவ நிறுவனங்களில் ஒன்றான பிவரும் முதியோர் இல்லத்தின் ஒரு கட்டிடத் பதற்கு, மாமன்றம் முன்வந்துள்ளது. இதற்கான வழங்கவிருக்கிறது.
மாமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தலையகத்தில் நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கயிலாசபிள்ளை அவர்கள், மட்டக்களப்பு இந்து ாந்தன் அவர்களிடம் இதற்கான காசோலையை
த வரவேற்பு
அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு ந்த சிறப்பிப்பதற்காக இலங்கைக்கு வருகை வர் திருவளர்திருகாசிவாசி முத்துக்குமாரசுவாமி பவானந்தா ஆச்சிரம ஸ்தாபகத் தலைவர் பூரீமத் சப்டம்பர் மாதம் 9ம் திகதியன்று மாமன்றத்
மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மானுக்கு நடைபெற்ற விசேட பூஜையிலும் இங்கு வந்திருந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் ல்லூரி மாணவர்களுக்கும் அருளாசிகளையும்
வில் "இந்து ஒளி' வெளியீடு
ல்லூரி வளவில் அமைக்கப்பட்ட அருள்மிகு
டம் ஜ"லை முதலாம் திகதி நிகழ்ந்த ள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.
திகதியன்று நடைபெற்ற மண்டலாபிஷேகப்
சிறப்பு மலராக வெளிவந்திருந்த “இந்து ஒளி" -

Page 34
ҳxxxxx
)
அமரர் மாண்புமிகு செளமியமூர்த்தி () தொண்டமான் அவர்கள் மலையகத் தமிழ் மக்களின் ) ( தனிப்பெருந்தலைவர் மட்டுமன்றி, அனைத்து தமிழ் () மக்களினதும் பெருமதிப்பிற்குரிய ஒருவராகத் ) K திகழ்ந்தவர். அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் () அவர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும்,
மாமன்றத்தின் உறுப்பினர்கள் அவர்மீது வைத்திருந்த நெருங்கிய உறவும் சிறப்பாக மதிக்கத்தக்கது. ) K பழகுவதற்கு இனியவர்; பெருமையிலாப் பண்பாளன்.
1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி ) ( நடைபெற்ற மாமன்றத்தின் தலைமையகக் கட்டிடப் பூர்த்தி நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பட்ட வைபவத்திலே ) ( அமரர் தொண்டமான் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதும், 1990 செப்டம்பர் 30ம் திகதி மாமன்றத்
ў அனைத்து தமிழ் மக்களினதும் நெஞ்சிருக்கும்வரை
X
முதபெரும் அரசியல் தலைவரும் பிரபல தெ () தலைவரும் கால்நடை அபிவிருத்தி, பெருந்தோட்ட உ ) K தொண்டமான் அவர்கள் அமரத்துவமடைந்த செய்தி () மடைந்துள்ளது.
) ( அமரர் தொண்டமான் அவர்கள் தமிழ் மக் () எதிரொலிக்கும் வகையில் எப்பொழுதும் குரல் கொடு ) K மக்களுக்கும் இந்து மக்களுக்கும் ஆற்றிய அ () முடியாதவையாகும்.
மாமன்றத்தின்
) ( தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அவருை
முடியாத பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் துயருறும் அன்னாரின் கு மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவி ў வல்ல பூரீ சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெ
() வி. கயிலாசபிள்ளை
)K தலைவர் 8 XXXXXXXXXXXXXXX இந்து ஒள 魏
 
 
 
 
 

КXXXXXXXXXXXXX லைகள் S
(
)
தலைமையகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அதிர்ஷ்டம் மிக்க அமரரின் கரத்தால்தான் 1991 இல் 'ஆளுக் கொருபிடி” சீட்டு விற்பனை ஆரம்பித்துவைக்கப்பட்டதும் ) ( என்றென்றும் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள். அவர் திரை நீக்கம் செய்து வைத்த அந்த 'நினைவுக்கல்”, மாமன்றம் இயங்கும் எக்காலமும் அமரரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.
திரு. தொண்டமான் அவர்களின் மறைவுச் செய்தி வெளியானதும், மாமன்றத்தின் தலைவர் K திரு. வி. கயிலாசபிள்ளை அவர்களும், பொதுச் செயலாளர் () திரு. கந்தையா நீலகண்டன் அவர்களும் மாமன்றத்தின் ( சார்பில் அனுதாபச் செய்தியொன்றை கூட்டாக () வெளியிட்டிருந்தார்கள். அமரரின் ஆத்மா சாந்தியடைய K பிரார்த்திக்கின்றோம்.
ர அவரது நினைவிருக்கும் என்பது மட்டும் உண்மை. S
ாழிற்சங்க வாதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ள்ளகக் கட்டமைப்பு அமைச்சருமான கெளரவ செள. () கேட்டு மாமன்றம் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையு ) K
()
களினதும் இந்து மக்களினதும் அபிலாஷைகளை K த்து வந்த ஒரு மாபெருந்தலைவர். அன்னார் தமிழ் () புரும் பெரும் சேவைகள் என்றைக்கும் மறக்க (
()
டய இழப்பு இன்றைய கால கட்டத்தில் ஒர் ஈடுசெய்ய
டும்பத்தினருக்கும் உறவினர் நண்பர்களுக்கும், தமிழ் ) ( ரிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் ருமானைப் பிரார்த்திக்கின்றோம்.
)K
கந்தையா நீலகண்டன் ()
பொதுச் செயலாளர் ў ў XXXXXXXXXXXXXXX
မ္ဘီ::

Page 35
மாமன்றத்தின் தலைமையகக் கட்டிடப் பூ
நினைவுக்கல் திரை நீக்கம் செய்யட்
 
 

ர நினைவிருக்கும்
ரர் மாண்புமிகு செளமியமூர்த்தி
ண்டமான் அவர்கள் (கலந்துகொண்டு
பித்த சில நிகழ்வுகள்
go) آروہیلے

Page 36
ہے ے ہے ے ہے ے ہے ۔ عے ے ہے ے ہے ے ہے ۔ 9ق76//_ Z ہوئے تجزیے روایتھ/637ے
2.
18.
19.
பஞ்சபுராணங்கள்
நாவலர் என்றொரு மானிடன்
வேதகால சமய வழிபாடு
விபுலானந்த அடிகள் பண்பாட்டுச் சுடர்கள் பிரார்த்தனை மூலம் இறைவனுக்கு 6) 56ooT6OOT Li L u Lib திருவாசகத்தில் நுணுக்கமான சிவவழிபாடு சித்தாண்டி வேலவன்
நாயன்மார்கள் காட்டிய நெறி சித்தர்களின் பார்வையிலே
சக்தி வழிபாடு
சுவாமி விவேகானந்தரும் இந்து மத மறுமலர்ச்சியும்
திருவெம்பாவை
இந்து மதத்தின் சிறப்பம்சங்களும்
அம்மதத்தின் புராதன நிலைகளை அறிந்து கொள்வதற்குதவும் சிந்து வெளி தொல்
பொருள் ஆய்வுகளும்
திருக்கார்த்திகை விளக்கீடு
விட்டார், வீடுற்றார்
சிவலிங்க வழிபாடு
திருப்பாட்டின் முதற்பாட்டு
ஆதரவு வேண்டி நிற்கும் முதியோர்கள்
இந்துக்களின் விசேஷ தினங்களும் விரத
நாடகளும
கற்பூரதீபம் / வேதச் சிறப்பு
மாமன்றச் செய்திகள்
நினைவலைகள்
பிரமாதி வருடம்
தை - பங்குனி

ឱg ញចាf அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரமாதி வருடம் ஐப்பசி - மார்கழி இதழ் கார்த்திகை மாதம் 19 ம் திகதி
an
திரு ஆ குனநாடகம் ടി, ജ:'ഖ'g5് திரு. க இராஜபவனிஸ்வரன்
eI5 - JFI வருடாந்தச் சந்தா শুঢ়t_1 80.00 வெளிநாடு வருடச் சந்தா டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் 敌 A. C. H. C. 35Lʻ tqL r)
91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை கொழும்பு - 2. இலங்கை தொலைபேசி எண் 434990; தொலைநகல் எண் 344720
ფაირტიის வளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில்
தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
Alipasis Markazhi siste of ALL CEYLON HINDUCONGRESS 5th ecember 1999
EDITORIAL BOARD
MR. A. GUΝΑΝΑΥΑ (ΕΑΜ MR. R. STVA GURU NATHAN MR. K. RAJAPUVANESWARAN L SS SS YZ LLLLL SS S SS SS LL L LLL
Phice Rs. 20.000 per copy. Annual Subscription RS800 Foreign Subscription U.S. Տ10:Ռն
including Postage) த்
ALICEYION HINDUCONGRESS A, C, B, C, Big: 975, Sir Chittampalam A. Gardiner Mawatha Collenimbo - 2 Sri Lanka Telephone No. 434,990; Fax No. 344720.
ews expressed in the c Cre DSe
0 the c〔ributórs