கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2002.01-03

Page 1
இலங்கை இந்து மாமன்றம்
காலாண்டிதழ்
 


Page 2
2_
சிவமயம்
IIGhd IIUT600Ilhlö6II திருச்சிற்றம்பலம் (356) ITT UTI) (சம்பந்தமூர்த்தி நாயனார்) தும்ம லிருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மை யினுந்துணை அஞ்செழுத்துமே.
திருவாசகம்
(மாணிக்கவாசக சுவாமிகள்)
"مي
வழங்குகின்றாய்க் குன் அருளார்
அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கு கின்றேன் விக்கினேன்
வினையேன்என் விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணிர்
பருகத்தந் துய்யக் கொள்ளாய் அழுங்கு கின்றேன் உடையாய்
அடியேனுன் அடைக்கலமே
jBob6î6OJÍ LITT (கண்டாதித்தர்) கனிவான் உலகில் கங்கை நங்கை காதலனே அருளென் றொளிமால் முன்னே வரங்கிடக்க
உன்னடியார்க் கருளும் தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள் ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவது மென்றுகொலோ,
Bob IIIGGT600 (6
(சேந்தனார்)
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்ற
தார்பெறு வார்உலகில் ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல்லாண்டு கூறுதுமே.
5(5 JT600IIb
(சேக்கிழார் சுவாமிகள்) கருப்புவில் லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி விருப்புறும் அன்புமேன்மேல் மிக்கெழும் வேட்கைகூர ஒருப்படும் உள்ளத்தன்மை உண்மையால் தமக்குநேர்ந்த திருப்பணி பலவுஞ்செய்து சிவபத நிழலிற் சேர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்
இந்து ஒளி C

வி"ெ வருடம் IDIf 28s hIGil
2 O3, 2002
புதிய சகாப்தம் உருவாகப் பிரார்த்திப்போம்
நாட்டின் இருவர் சூழ்ந்த கடந்த காவப் பகுதியை எவருமே மறந்து விட முடியாது. உயிரை இழந்தவர்கள் வசிப்பிடத்தையும் உடைமைகனையும் இழந்து அகதியானவர்களிர் 7ன்போர் ஒரு /றமிருக்க, பெற்றோர்களையும் உறவினர்கனையும் இழந்து அனாதைகளான சிறுபிள்ளைகள் முதல் வளர்ந்தோர் வரையில் நீண்ட பட்டியவாகவே அமைந்து வந்திருப்பது ஒரு துரதிர்ணய்ட வசமான நிகழ்வாகும். எங்கள் அன்புச் சகோதரங்கள் இத்தகைய துரதிர்விங்ட நிலையில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வந்திருப்பதை 'இந்து ஒளி'யின் இந்தப் பகுதி ஊடாக பல தடவைகள் எடுத்துச் சொல்வி வந்திருப்பதுடன், அது விஷயத்தில் அவர்களுக்குநிவாரணம் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொதுநல நிறுவனங்களுடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றம் தன்னால் இயன்ற வரையில் உதவி வந்திருப்பதை இந்தவேளையில் சிறப்பாகத் தெரிவிக்க வேண்டும் சமயமும் சமூகமும் ஒன்றினைந்தது என்ற உயர் நோக்கில் சமூகப் பணியையும் முன்னெடுத்துச் செல்கிறது 7ன்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மாமன்றம் அவ்வப்போது உணவுப்பொருட்கள், பால்மா மற்றும் உடுப்பு/வகைகள், பாடசாவைப் பின்னைகளுக்கான சீருடை, அப்பியாசப் புத்தகங்கன், எழுது கருவிகள் போன்றவைகனை அனுப்பி வந்துர்ைனது.
இது தவிர, பெற்றோர்கனை இழந்த பின்னைகளுக்காக இரத்மலானை இந்துக் கல்லூரியில் இவவச மாணவர் விடுதியொன்றை மாமன்றம் நடத்தி வருகிறது. நாற்பது பின்னைகளுடன் ஆரம்பமான இந்த இவவச விடுதி, அதன் മൈബ്രിബ) இந்த ബഗ്ഗ്മ நான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யவிருக்கும் நிவையில் சுமார் நூறு பின்னைகளை രൂഖഴ്ച ഗ്ര70ീഴ്ക് ൧്മ ഖണ് ബിഗ്രിഗുള) உண்மையிலேயே பெருமைக்குரியது. மனிதநேய நிதியமும் சிவ பொதுநல நிறுவனங்களும் தனிப்பட்ட அன்பர்களும் அவ்வப்போது 2ழங்கி வரும் பேராதரவு, இந்த இவவச விடுதியை மேலும் வளர்ச்சிபெறச் செய்ய உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
மாமன்றம், ஆதரவற்ற வயோதியர்களுக்காகவும் ஒரு ராமரிப்பு இவ்வத்தை இரத்மலானையில் நிறுவிவருகிறது. இதன் வேலைகள் அடுத்த ஒரிரு மாதங்களில் பூர்த்தியானதும் இயங்கத் தொடங்கும். இது தவிர, மட்டக்கணப்பு இந்து இனைஞர் மன்றம் நிறுவிய முதியோர் இல்வத்தின் ஒரு பகுதியை அமைப்பதற்கான நிதியுதவியை மாமன்றம் வழங்கியிருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.
இந்த நிலையில் நாட்டின் அரசியல் வானில் நம்பிக்கை 5ட்சத்திரமொன்று தோன்றியிருப்பதன் த7ரன72/7க மேற்கொன்னப்பட்டுவரும் சமாதானமுன்னெடுப்புத்திட்டத்தின் கீழ் 7ற்பட்டுள்ள பாரிய மாற்றங்களின் வினைவாக தற்காவிதமாக வேனும் ஓர் இயல்பு நிலை தோன்றியதையடுத்து - இனிவரும் ாட்களில் நல்ல நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதனையே எங்கள் /ன்புச் சகோதரங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவ்வேளையில் வரும் மகா சிவராத்திரி தினத்தில், கடந்த காவ /யரமான நிகழ்வுகள் முற்றாகவே நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் ைேறந்த புதியதொரு சகாப்தம் உருவாக வேண்டும் என அருள்மிகு நீ சிவகாமரி அம்பான் சமேத பறி நடராஜப் பெருமானைப் %ീഗ്മ,
) விஷ" வருடம் தை பங்குனி )

Page 3
புலவர் பூரீவிசுவாம்பா
சிக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி பற்றிய செய்தி கந்தபுராணத்தில் கச்சியப்ப சுவாமிகள் பக்தி நனி சொட்டும் அழகிய தமிழால் பாடியுள்ளார். அதில் தொன்னூற்றொன்பது பாடல்கள் உள்ளன.
இச்செய்தியைப் படைத்தற் தொழிலாகிய பிரமன் தன் மகனாகிய ஆட்டுத்தலையையுடைய தக்கனுக்குக் கூறுவதாக உள்ளது.
தக்கன் சிவத்துரோகம் செய்து யாகம் செய்தான். வீரபத்திரர் யாகத்தை அழித்து தக்கனின் தலையையும் துண்டித்தான். உமாதேவியின் வேண்டுதலால் வீரபத்திரர் தக்கனின் உடம்பில் ஆட்டுத்தலையை ஒட்டியபின் தக்கன் கவலைப்பட்டான். அப்போது பிரமா 'தக்கனே கேள், சிவபெருமானே உலகின் பிரமப் பொருள். நீ சிவப்ெருமானை மதியாது யாகம் செய்தாய். அதன் பலனையும், கண்டாய். நானும் திருமாலும் சிவபெருமானே முதற் கடவுளென்பதை மறந்து, நானே முதற் கடவுள், நானே முதற் கடவுள் என்று எம்முள் கூறிக் கொண்டு வாயினாலும், ஆயுதங்களாலும் சண்டை செய்தோம். இவ்வாறு ஐயாயிரம், சண்டை நடந்தது. பின்னர் எங்கள் சண்டையால் உலகமே அழியப் போகிறதெனக் கண்ட உலகின் பிரமப் பொருளாகிய சிவபெருமான் மாபெரும் சோதி வடிவமாக எங்கள் இருவரின் நடுவில் நின்றார். எனது, அடி முடியை உங்கள் இருவரில் முதல் காண்பார்களோ, அவர்களே உலகின் முதற்கடவுளென்றார். திருமால் பன்றியுருவமாகிப் பல்லாயிரமா ண்டுகளாக, நிலத்தை அகழ்ந்து கொண்டே சென்றார். ஜோதியின் அடியைக் காணாது தனது தோல்வியை ஒப்புக் கொண்டு கைகூப்பியபடி சோதியின் அருகே நின்றார். அன்னப் பறவையாக நான் பல்லாயிரமாண்டுகளாக மேலே மேலே பறந்தேன். எனது உடல் சிறகுகள் அசதியுற்றன. அப்படி இருந்தும் மேலே மேலே பறக்க முயற்சி செய்தேன்.
அப்போது அச்சோதிக்குள் இருந்த சித்தர்கள், கடல்மீனை உண்கின்ற இந்த அன்னம் எம்பெருமானின் முடியைக் காண்பேன் என்று போய், அநியாயமாக வீழ்ந்து இறக்கப் போகின்றதே. இவ்வாறுதான் திருமாலும் அடியைத் தேடிச் சென்று களைத்து வந்து சோதியின் அருகில் நிற்கிறதெனக் கதைத்தார்கள். நானும் உடனே கீழே இறங்கி திருமாலை அணுகி, நாங்கள் இருவரும் “சிவபெருமானே முதற்கடவுளென” அறியாது விணாகப் போர் செய்தோம். எமது சண்டையைக் கண்ட நாரத முனிவன் சொன்னவற்றை அவமதித்தோம் சிவபெருமானே சோதி வடிவாய் எம் நடுவில் வந்தார். நாம் சிவலிங்கம் அமைத்து வேதவிதிப்படி வணங்குவோம் என்று அவ்வாறே வணங்கினோம்.
இந்து ஒளி C
 

If thilбошо
விசாலாட்சி மாதாஜி
எம்பெருமான் எமது சிவலிங்க அபிடேக முதலிய பூசைகளை ஏற்றுமழுவிடைமேல் உமாதேவி சமேதராய்த் தரிசனம் தந்தார். நாங்கள் எமது பிளைகளை மன்னித்தருளும்படி வணங்கினோம். அந்த ஜோதிமலை சுருங்கி சிவலிங்க வடிவமாகியது. அதுவே இன்று திருவண்ணா மலையாகக் காட்சியளிக்கின்றது. இந்நிகழ்ச்சி நடந்தது மாசி மாத பூர்வபக்க அமாவாசைத் தினமாகும். இதுவே சிவராத்திரியாகும். அன்று தொடக்கம் மக்கள் இத்தினத்தில் விழித்திருந்து. இறைவனைச் சிவலிங்க வடிவத்தில் பூசித்து உய்தி அடைகிறார்கள்” எனப்பிரமா தக்கனுக்கு கூறினான்.
"அரியும் யானும்முன் தேடும்அவ் வனற்கிரி யணல கிரியெ னும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த இரவ தேசிவ ராத்திரி யாயின இறைவற் பரவி யுய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும்
கந்தபுராணம் (அடிமுடி தேடுபடலம் 96ம் பாடல்)
சிவராத்திரி விரதம் அனுட்டிக்கும் முறை
சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி விஷ்ணுவே விரதங்களுள் சிறந்த உத்தமமானதொரு விரதம் பற்றிக் கூறுகின்றேன். உலகத்தில் முத்தி அளிக்கக் கூடிய விரதங்கள் நான்காகும். அவை சிவார்ச்சனை, உருத்திர பாராயணம், சோமவாரம், பிரதோஷம், இந்த நான்கு விரதங்களுள் மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி மிகவும் சிறப்பும் உத்தமமும் ஆனதாகும். அதனால் பேரின்ப வீட்டினை விரும்பும் சிவ பக்தர்களுக்கு இதைவிடச் சிவ விரதம் ஒன்றுமில்லை, என்றார்.
மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நள்ளிரவு பதினான்கு நாளிகையானது கோடி பாவங்களை நீக்கிவிடும். ஆகையால் அந்தச் சிவராத்திரி தினத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறேன்.
அன்று விடியற்காலையில் எழுந்து மகிழ்ச்சியுடன் மானுடப் பிறவி எடுத்தல் அரிது, இவ்வாறு அரிதாகக் கிடைத்தமானுடப் பிறவியை நல்ல வழிப்படுத்திப் பிரயோசனப்படுத்த வேண்டுமெனின் இந்த மகா சிவராத்திரி விரதம் விதிப்படி அனுட்டிப்பேனென்று சபதம் எடுத்து, அயலில் உள்ளவர்க்கும் இவ்விரதத்தின் மகிமைகளைக் கூறி அவர்களையும் விரதம் இருக்கத் தூண்டி ஊக்கப்படுத்த வேண்டும்.
பின்னர் இப்புண்ணிய காலத்தில் தந்த சுத்தி முதலியன முடித்து நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து நைமித்திய அனுட்டான விதிகளைத் தொடங்க வேண்டும்.
2 D விஷ வருடம் தை-பங்குனி )

Page 4
இதன்பின் சிவாலயம் செல்ல வேண்டும். இப்புண்ணியகாலம் சிவனுக்குரியது, ஆகையால் திரிகரண சுத்தியுடன் சிவநாமங்களையே தியானிக்க வேண்டும். சிவபூசை செய்பவர்கள் சிவாலயத்தில் இருந்து சிவபூசை முதலியன செய்தல் வேண்டும். சிவபூசை முடிந்தபின் முக்கரண சுத்தியுடன் சிவபெருமானைச் சரணாகதி அடைந்து அவனை வணங்கி, “வாமதேவா மஹாதேவா! சதாசிவா! நீலகண்டா உமது கருணையால் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டுமென அதிக ஆவல் கொண்டேன். அதனால் இந்தச் சிவராத்திரி விரதம் முடியும் வரையும் காமம் முதலிய தீய சக்திகள் என்னை அணுகாமலும், தீயவர்களுடன் வீண்வார்த்தை பேசாமலும், இடையிடை ஜம்புலன்களைப் பொருத்தமற்ற இடங்களில் செலுத்தாமலும், பொருத்தமற்ற அசுத்தங்களைத் தீண்டாமலும், உன்னையே இமைப்பொழுதும் மறவாது தியானிக்க அருள வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரதம் அனுட்டிப்போரில் விசேட தீட்சை பெற்றவர்கள் சிவபூசையை ஆகமவிதிப்படி அனுட்டிக்க வேண்டும். அதன் பின்புதான் பரார்த்தபூசை செய்தல் வேண்டும். சிவபூசை செய்பவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகே உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள பார்த்திவலிங்கத்தின் தெற்கில் அல்லது மேற்கில் தான் சிவபூசை செய்யும் இடத்தை நிச்சயிக்க வேண்டும். அதன் பிற்பாடு சிவபூசைக்குரிய பூசைத் திரவியங்களைச் சேகரித்து வைத்தல் வேண்டும்.
மீண்டும் அந்தத் திருக்கோயிலில் நீராடி, தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, மூன்றுமுறை ஆசமனம்செய்துபூசையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் அசரலிங்கமான அந்தப்பார்த்திவலிங்கத்திற்கு அதற்குரிய மந்திர பூர்வமான உபசாரத்துடன் பூசை செய்வித்தல் வேண்டும். மந்திரமில்லாமல் பூசிக்கக் கூடாது. எந்தெந்தப் பூசைத் திரவியங்கள் எந்தெந்தமந்திரங்கட்குச் சொல்லப்பட்டதோ அந்தந்தப் பூசைத் திரவியங்களை அந்தந்த மந்திரங்களைச் சொல்லிப் பூசை செய்யவேண்டும். பின்புகீதம்,நிருத்தம்,வாத்தியம் சொல்லியேபூசை செய்ய வேண்டும். இவ்வாறு முதற் சாமத்தில் பூசை செய்து சிவமந்திரம் ஜெபித்துத்தான் தினந்தோறும் பார்த்திவலிங்கப் பூசை செய்யும் வழக்கமுடையவனாக இருந்தால், தன் வழக்கப்படியே பூசை செய்ய வேண்டும். அல்லது முன்னதாகப் பார்த்திவப் பூசை செய்ய வேண்டும்.
அதன் பின்பு சிவபெருமான் தன்னிடம் தயை, அன்பு வைக்கும்படி சிவதோத்திரங்களாலேனும், திருமுறைகளாலேனும் தியானிக்க வேண்டும். அல்லது பிறர் சொல்லச் சிரவணம் (மனப்பாடம்) செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு சாமங்களிலும் நான்கு பார்த்திவ லிங்கங்களைச் செய்து ஆவாஹானாதி விசர்ஜனாதிபூசைகளைச் செய்து முடித்துஸ்தாபித லிங்கத்திற்கும் பூசை செய்வித்துநித்திரை இல்லாமல் உற்சவம் (திருவிழா) முதலிய சிவபணிகளைச் செய்து கொண்டே விழித்திருந்து இரவைச் சிவப் பொழுதாக்கிக் கழிக்க வேண்டும். பின்னர் விடியும் முன்புமீண்டும் ஸ்தாபித லிங்கத்திற்குப்பூசை செய்வித்து நீராடி சந்திய வந்தனம் முதலியவற்றை முடித்து “எம்பெருமானே உமது கிருபையால் நான் விரும்பிய சிவராத்திரி விரதத்தை விக்கினம் இன்றி எனது சக்திக் கேற்ப முடித்தேன். தேவரீர் நான் செய்த சிவராத்திரித்தவத்திற்கு
இந்து ஒளி C

மகிழ்ந்து தக்க பயன் தரவேண்டும் என்று புஷ்பாஞ்சலி செய்து பார்வதி தேவியையும் வணங்குதல் வேண்டும்; பூசைப் பயனைச் சிவப்பிரிதி செய்து ஆசமனம் செய்து அவ்விரவு நியமத்தை விடவேண்டும்.
இன்னும் தொடர்ந்து சிவபெருமான் விஷ்ணுவை நோக்கிக் கூறுவார். “நான்கு சாமங்களிலும் தன் மனத்திலுள்ள வேண்டுதல்களையும் சேர்த்து அத்தியாதிப் பிரயோகமாகிய சங்கற்பம் செய்துஸ்தாபிதலிங்கத்தையும், பார்த்திவலிங்கத்தையும் பக்தியோடு பூசிக்க வேண்டும். பால், தயிர். நெய், தேன், சர்க்கரை முதலியவற்றால் அவற்றிற்குரிய மந்திரங்களைக் கூறி அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு உலர்ந்த துணியால் சிவலிங்க மூர்த்தியை உபசாரமாக ஒற்றி சுகந்த பரிமள சந்தனம் சாற்றி முதல் சாமத்தில் அரிசி அக்ஷசதையும், இரண்டாவது சாமத்தில் யவை (றவ்வை) அட்சதையும், மூன்றாவது சாமத்தில் கோதுமை அட்சதையும் நான்காம் சாமத்தில் அரிசி, உழுந்து, பயறு, தினை அல்லது ஏழு விதமான அட்சதையும் சமர்ப்பிக்க வேண்டும். மலர்கள் முதல் சாமத்தில் சதபத்திரம், கரவீரம் முதலியனவும், இரண்டாம் சாமத்தில் தாமரை மலரும், வில்வமும், மூன்றாம் சாமத்தில் அறுகும் ஆத்தியும் நான்காம் சாமத்தில் நறுமணம் கமழும் மலர்களால் சிவநாமங்களால் அல்லது குரு தந்த மந்திரத்தால் அர்ச்சிக்க வேண்டும். நிவேதனம் முதல் சாமத்தில் சுத்தா அன்னம் கறிவகைகள் பலகாரங்களும் இரண்டாம் சாமத்தில் பரமா அன்னம் லட்டு முதலியனவும் பலகாரமும், மூன்றாம் சாமத்தில் மாவாற்செய்த நெய் சேர்த்த பலகார வகையும், பாயசமும், நான்காம் சாமத்தில் கோதுமை சர்க்கரை நெய் சேர்த்துச் செய்த மதுரமான பலகாரங்களையும், பழங்களையும் சேர்க்க வேண்டும். முதல் சாமத்தில் வில்வம் பழத்தையும், இரண்டாம் சாமத்தில் பலாப் பழத்தையும், மூன்றாம் சாமத்தில் மாதுளம் பழத்தையும், நான்காம் சாமத்தில் பலவகையான பழங்களையும் சமர்ப்பித்து, தாம்பூலத் தட்சணைகளோடு சாமங்கள் நான்கிலும் பிராமணர்களுக்குப் போசனம் முதலியன செய்யவிக்க வேண்டும் என அருளினார்.
மேற் கூறப்பட்டபடி விரதம் இருத்தல் இன்று எல்லா மக்களாலும் முடிவதில்லை. அப்படி இயலாத மக்கள் தங்களால் இயன்றளவு சிவ ஆலயங்களுக்குப் பூசைத்திரவியங்கள் உதவி, சிவலிங்கத்திற்கு நடக்கும் அபிடேகம், தீப ஆராதனைகளைப் பார்த்துச் சிவத்தியானம் உள்ளவராய் விழித்திருந்து விரதத்தை முடிக்கலாம்.
இன்றைய மக்களில் பலர் பலகோணங்களாகச் சிவராத்திரி விழிப்பிருக்கின்றனர். சிவத்தோடும் சிவநாமத்தோடும் தொடர்பு இல்லாது நித்திரையை ஏமாற்றத் தொலைக்காட்சி பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கண்விழித்தல் பெரும் கேடாகும். குளிக்கப் போய்ச் சேறுபூசியது போலத்தான் முடியும் அல்லவா ? இவ்விரதத்தை மிகவும் பக்தி சிரத்தையோடு அனுட்டிப்போருக்கு கோடானு கோடிபலன் உண்டென சிவமகாபுராணத்தில் எம்பெருமானே கூறியுள்ளார்.
எனவே விரதங்களுள் சிவராத்திரி விரதம் சிறப்புடையது என்பதை, விரத வரலாற்றில் எம்பெருமான் திருமாலுக்கு அருளியுள்ளார். இச்செய்தி சிவமகா புராணத்தில் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள வசனநடையில் உள்ளது. சைவ
விஷ"வருடம் தை- பங்குனி)

Page 5
உலகம் இதனை அறிந்து உய்யச் சிறியேன் மிகவும் இலகு தமிழில் எழுதியுள்ளோம். இனிச் சிவராத்திரியென்று அறியாத பாவிகள் தீயன செய்யவென நினைந்து விரதமில்லாதும் ஆசாரம் இல்லாதும், அன்றைய தினம் விழித்துச் சிவபதம் அடைந்த கதைகளை அறிவோம். இக் கதைகள் சிவமகாபுராணத்தில் உள்ளன.
வேதநிதியின் கதை
இந்தியாவின் வடக்கே அவந்தி என்ற ஒருநகர் இருந்தது. அந்த நகரில் ஒரு தீஷிதர் இருந்தார். அவர் உயர்ந்த குலப்பிறப்பும் ஒழுக்க சீலருமாவர். நற்பண்புடையவர், சகல வேதசாஸ்திரங்கள் முதலிய ஞானநூல்கள் கற்றுப் பாண்டித்தியம் உடையவர். அவருடைய மனைவி கற்பினிற் சிறந்த நற்குணமுடையவள். அவர்களுக்கு சுநிதி, வேதநிதி என்று இருபுதல்வர்கள் இருந்தனர். சுநிதி, “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ’மெனப் பெற்றாரைப் போற்றி அவர்களுடைய பணிவிடைகளை விருப்பத்துடன் செய்து வந்தான். வேதநிதி வேதங்களைக் கற்று வல்லுனனாக இருந்த போதிலும் குலத்திற்குத் தக்க ஒழுக்க சீலமற்றவனாக இருந்தான். அவனுடைய நாட்டம் எல்லாம் பரத்தையரிடம் இருந்தது. பெற்றோர் கண்டித்துப் பணியாதவனாகக் காணப்பட்டான்.
இவ்வாறாக இருந்த காலத்தில் அந்த நாட்டு அரசன் தீஷிதரின் விசேடத் திறமைகளைக் கண்டு அவர் மீது அனுதாபம் கொண்டு மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கல் மோதிரத்தை அளித்தான். தீஷிதர்அதனை மிகவும் கவனமாகக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுத்து வேத நிதிக்குத் தெரியாது மறைத்து வைக்கும்படி கொடுத்தார். அப்படியே மனைவியும் மோதிரத்தை மறைத்து வைத்தார். இச்செய்தியை எப்படியோ மகன் வேத நிதி அறிந்தான். எவ்வாறோ அவன் அந்த மோதிரத்தைத் திருடி அன்றிரவே தனது ஆசைநாயகி (தாசி)யிடம் கொடுத்துவிட்டான். அவளும் அதனை வாங்கிக் கண்ணிலொற்றினாள். பின் தன் கைவிரலில் அணிந்தாள்.
மறுநாள் அவள் அரண்மனைச் சபையில் நடனமாடச் சென்றாள். மிகவும் அழகாக நெளிந்து வளைந்து ஆடினாள். அவளின் கைவிரலில் இருந்த இரத்தினக்கல் மோதிரம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அரசன் அதனைக் கண்டு திடுக்கிட்டான். "தான் தீஷிதரிடம் கொடுத்த இரத்தினக்கல் மோதிரம் இந்தத் தாசியிடம் எவ்வாறு வந்தது” என யோசித்தான். பின்பு அந்த நடனக்காரியை அழைத்து, இரத்தினக்கல் மோதிரம் வந்த வரலாற்றை விசாரித்தான். அவள் உண்மை கூற மறுத்தாள். பயமுறுத்திக் கேட்ட பின்பு அவள் வேதநிதி கொடுத்ததாகக் கூறினாள். அரசன் அந்த மோதிரத்தை அவளிடம் இருந்து வாங்கினான். மறுநாள் அரச சபைக்குத் தீஷிதரை அரசன் அழைத்தான். நான் உன்னிடம் தந்த மோதிரம் எங்கே, அது இப்போது எனக்குத் தேவை. பார்த்தபின் மீண்டும் தருவதாகக் கூறினான். தீஷிதர் வீடுசென்று மனைவியிடம், “நான் உன்னிடம் கொடுத்த மோதிரம் எங்கே ? அரசன் கேட்கிறான்" என்று மனைவியைக் கேட்டார். மனைவி வைத்த இடம் சென்று தேடினார் காணவில்லை. தீஷிதர் மிகவும் துக்கத்துடன் அரசனிடம் நடந்த நிகழ்வைக் கூறினார்.
இந்து ஒளி ‘. . . . ...'... : -که

வேந்தன், தான் ஊகித்தது சரியென நினைத்து, “நடனமாடுகிறவளிடம் அந்த மோதிரம் இருந்தது. நான் அதை வாங்கினேன்” என்று கூறினான். தீஷிதர் வீடுவந்து மனைவியைக் கண்டித்தபின், தனது மகன் வேதநிதியை அழைத்து, “நீ இனி எங்களுக்கும் உலகுக்கும் உதவாதவன். உன்னால் எல்லாருக்கும் கேடு, உன்னால் எங்களுக்கு வசை. அதனால் நீ இந்த வீட்டை விட்டுப் போய்விடு" என வேதநிதியைத் துரத்தினார்.
வேதநிதி வீட்டை விட்டு விலகிப் புறப்பட்ட பின் பல நாட்களாக உணவு ஏதும் இல்லாமல் பட்டினியால் வருந்தினான். பின்னர் தன் காதற் கிழத்தியிடம் சென்றான். அவள், உன்னிடம் பொருள் ஏதும் இல்லை உன்னால் எனக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்று துரத்தி விட்டாள். அவனும் ஆதரவும் ஆகாரமும் எதுவும் இவ்லாமல் தள்ளாடியபடி ஓர் ஆலயத்திற்குச் சென்றான். அன்றுமாசிமாதமகா சிவராத்திரி இதனால் பக்தர்கள் சுவாமிக்குப் பெருவிழா எடுத்தனர். அபிடேகம் முதலியன செய்தார்கள். நைவேத்தியமாகப் பலவிதமான நிவேதனப் பொருள்களைப் படைத்தார்கள். இவ்வாறு சிவராத்திரியின் முதற் சாமப்பூசை ஆகம விதிப்படி செய்தபின் சிலர்வீடுசென்றார்கள். சிலர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தார்கள். பசியினால் வேதநிதி தவித்தான். எவ்வாறாயினும் சிவாலயத்திலுள்ள பிரசாதத்தைத் திருடி உண்ண நினைத்தான். ஆனால் ஆலயத்தின் விளக்கின் ஒளி மங்கியமையால், உணவுப்பண்டங்கள் அவனுக்குத் தெரியவில்லை. இதனால் அவன் தன்மேல் இருந்த உத்தரிய(சால்வைத்தில் சிறிய துணியைக் கிழித்துத் திரித்து விளக்கிற் பொருத்தினான். அது பிரகாசமுடன் எரிந்தது. உடனே அவன் தனக்கு வேண்டிய மட்டும் சுவாமியின் முன் காணப்பட்ட உணவுப் பண்டங்களை எடுத்துக் கொண்டு வேகமாகப் புறப்பட்டான். அவன் அப்படிப்போகும் போது சேவகரின் காலைத் தற்செயலாக மிதித்துவிட்டான். அவன் கூச்சலிட்டான். வேதநிதி உணவுப்பொதியுடன் வேகமாக ஓடினான். ஆலயத்தில் உள்ளவர்கள் “திருடன் திருடன்” எனக் கூச்சல் போட்டார்கள். இதனை அரசரின் ஏவலர் கேட்டு வேதநிதியைத் துரத்தினார்கள். அவன் வேகமாக ஒடவே அம்பு எய்தார்கள். அம்பு தைத்து அவன் அப்பவே நிலத்தில் வீழ்ந்து இறந்தான். அன்று சிவராத்திரி இரவாகும்.
வேதநிதி அஞ்ஞானம் நிறைந்தவன். அவன் வேத ஆகம விதிப்படி சிவராத்திரி விரதம் அனுட்டிக்க வில்லை; எனினும் சிவ ஆலயத்தின் பூசை நிகழ்வுகளை ஒழுங்காகப் பார்த்தான், பகல் நேரம் பட்டினியாகவும் இருந்தான்; அவனுடைய இறப்பின் முறையால் சிவராத்திரி விரதம் பூரணமாகியது. அதனால் வேதநிதியின் உயிரைக் கவரச் சிவபெருமான் சிவகணநாதரை அனுப்பினான்; இயமனும் வேதநிதி செய்த பாவங்களுக்காக அவனை நரகத்திற் தள்ள இயம தூதுவர்களை அனுப்பினான்; சிவ தூதுவர்களும், இயமதூதுவர்களும் வந்தார்கள். ஒவ்வொருவரின் தூதுவரும் வேதநிதியின் உயிரைக்கவரப் போட்டியிட்டனர். வேதநிதி பாவியென யமதூதுவர் கூறினார்கள். வேதநிதி பாவியாக இருந்தாலும் அவன் சிவராத்திரியில் காரணமில்லாமல் விழித்தாலும் சிவராத்திரி இரவாகையால் அவனுடைய பாவம் பழிகள் யாவும் தொலைந்தமையால் சிவலோகம் போவதற்குத் தகுதியுடையவன். அதனால் நாமே அவனுடைய உயிரைக் கொண்டு போவோம் என்று கூறி வேதநிதியின் உயிரைச் சிவலோகம் கொண்டு சென்றனர்.
4 D விஷாவருடம் தை - பங்குனி

Page 6
வேதநிதி மறுபிறப்பில் கலிங்க தேசத்து மன்னனாகப் பிறந்து சிவபூசை செய்வதையே விரதமாகவும் தவமாகவும் கொண்டான். தன் இராட்சியம் எல்லாம் சிவாலயம் அமைத்து சிவராத்திரி ' விழாவையும் விரதம் பூசை முதலியனவும் நிகழ்த்தினான். தன்னாட்சிக்குட்பட்ட மக்களையும் சிவராத்திரி விரதம் வேத ஆகம விதிப்படி அனுட்டிக்கச் செய்தான். அதன்பின் அவன் பேரின்ப வீடு அடைந்தான் என்பது கதையாகும்.
பூர்வீகப் பிறவியில் வேதநிதி செய்த கொடுமைகள் பாவங்கள் அளப்பிலா, அவைகளால் உண்மையில் அவன் கொடிய நரகத்தில் வீழ்ந்து துன்பப்படவேண்டும். ஆனால் அவன் தன்னையறியாமல் உணவிற்காகச் சிவாலயத்தில் விழித்திருந்தான். அணையப் போன விளக்கை அணையாமல் தனது உத்திரியத் துணியில் சிறிது கிழித்து அந்த விளக்கைப் பிரகாசமாக எரியச் செய்தான். விளக்கு ஆலயங்களில் ஏற்றுதல் ஞானம் உண்டாகும் என்பது வேத ஆகம இலக்கண விதியாகும். அந்தப் புண்ணியமும் முதலாம் சாமம் வரை விழித்தது, இவையாவும் வேதநிதிக்குச் சிவபதவி கிடைத்ததுடன், மறுபிறவியில் அரசபிறவியும் கிடைத்தது என்றால் ஞானத்தோடு தினமும் சிவாலயங்களில் தீபம் வைப்பவர்களும் ஞான உணர்ச்சியோடு விதிப்படி சிவராத்திரி விரதம் இருப்பவர்கட்கும் இம்மையிலும் மறுமையிலும் சிவபெருமான் சுகத்தைச் செய்வான் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.
வேடன் கதை
ஒரு இருளடைந்த காட்டில் பெரிய குடும்பத்துடன் ஒரு வேடன் இருந்தான். அவன் மிருகங்களை வேட்டையாடுவதோடு, வழிப்பறி செய்வதும், போக்குவரத்துள்ள மக்களைக் கொல்லுவதும் தொழிலாகக் கொண்டிருந்தான். இளமையில் இவன் மறந்தும் நல்ல காரியங்கள் செய்தறியான். இதனால் இவனுடைய தோற்றமும் செயலும் மிகப் பெரிய பயங்கரமாகக் காணப்பட்டது.
ஒரு முறை சிவராத்திரி வந்தது. இது இந்த வேடனுக்கோ அவனின் குடும்ப அங்கத்தவர்களுக்கோ தெரியாது. அன்று அவனுடைய பெற்றார், மனைவி, பிள்ளைகள், வேடனை நோக்கி, "நாங்கள் நல்ல பசியாக இருக்கின்றோம். இன்று நீ காட்டிற்குப் போய் வேட்டையாடி மிருகங்களைக் கொன்று அந்த மாமிசத்தைக் (இறைச்சியைக்) கொண்டு வரவேண்டும் இல்லையேல் நாங்கள் உயிர் துறப்பது நிச்சயம்” என்று கூறினார்கள். அப்போது வேடன் அம்பும் வில்லுமாக அந்தப்பெரிய காடு முழுவதும், பொழுது மறையும் வரை அலைந்தான் ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. அவனுக்கு அதிக பசியும் தண்ணிர்த் தாகமும் எடுத்தது. இதனால் எங்கேயாவது நீர் நிலை உளதோ என்று பார்த்தான். தூரத்தில் ஓர் சிறு குளம் தெரிந்தது. அவ்விடம் சென்று தனது முகத்தைக் கழுவி விட்டுத், தண்ணிரை இருகைகளாலும் அள்ளித் தாகந்தீரப் பருகினான். பின்னர் தான் கொண்டு வந்த கரைக் குடுவையில் நீரை அள்ளினான். அருகில் இருந்த வில்வமரத்தில் ஏறி இருந்தான். அவனுக்குத் தனது குடும்பத்தாருக்கு இன்றிரவு உணவளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் உணவு கிடைக்கும் என்று ஏமாந்து பட்டினியால் சாகப் போகிறார்களே எனக் கவலைப்பட்டுக் கொண்டு வில்வ மரத்திலிருந்து, நீர் அருந்த (குடிக்க) ஏதாவது காட்டு மிருகங்கள் வரலாமோ என எண்ணிய படி எதிர்பார்த்து இருந்தான். அவன் எதிர்பார்த்தபடி முதல்
இந்து ஒளி ○

யாமத்தில் மிகுந்த பயத்தோடு ஒருபெண் மான் தண்ணிர் குடிக்க அவ்விடம் வந்தது. அங்கும் இங்கும் பார்த்தபடி பயத்தோடு நீர் அருந்த ஆயத்தமானது. இந்த மானைக் கண்ட வேடன் மனம் மகிழ்ந்தான். நல்ல கொழுத்த மான். இதைக் கொல்லத்தான் வேண்டும் இதன் இறைச்சி இன்று என் குடும்பத்தாரின் பசியைப் போக்கும் என்று எண்ணியபடி, அம்பை வில்லில் பூட்டினான். அவனுடைய உடல் அசைவால் சிறிது நீரும் சில வில்வம் இலைகளும் வில்வமரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனால் அந்த வேடன் சிவராத்திரியின் முதற்சாம பூசை செய்தவன் ஆயினான். இதனால் அவனுக்குச் சிறிது ஞானம் வந்தது.
வேடன் வில்லில் அம்பு பூட்டிய சத்தத்தை அந்தப் பெண்மான் கேட்டு விட்டது. மேலே வேடன் அம்பு வில்லுடன் காணப்பட்டான். எப்படியும் இவ் வேடன் என்னைக் கொல்வான். நான் பிழைக்க வேண்டுமாயின் ஓர் தந்திரம் செய்ய வேண்டுமென யோசித்த அந்தப் பெண்மான் வேடனை நோக்கி, "வேடா இப்போது என்ன நினைக்கிறாய்” என்று கேட்டது. அதற்கு வேடன் “மானே! நான் ஒரு பெரிய குடும்பஸ்தன்; அவர்கள் இன்று பகல் முழுதும் உணவில்லாமல்பட்டினி இரவிற்கும் உணவில்லாவிட்டால் நிச்சயம் இறந்து விடுவார்கள்; அதனால் உன்னைக் கொன்று இறைச்சியை அவர்களுக்கும் எனக்கும் உணவாக்க வேண்டும்” என்றான். இதனைக் கேட்ட மான் "இந்த உடல் எதற்கும் பயன் இல்லாதது. இவ்வுடல் உம்மையும் உமது குடும்பத்தையும் காப்பாற்றும் என்றால் நான் பெரும்பாக்கிய சாலி, இப்புண்ணியம் கோடான கோடி பயன் தரும். ஆனால் எனக்குச் சில குட்டிகள் உண்டு அவைகளை என்னுடன் பிறந்த இளையாளிடம் ஒப்பித்து, எனது கணவனையும் அவளைத் திருமணம் செய்யச் செய்து உடன் வருவேன்” என்றது வேடன் அதை நம்பவில்லை. “ஆபத்துக் காலத்தில் பொய் கூறலாம் என்று ஒரு பழமொழிநீஎன்னை ஏமாற்றுவாய்” என்றான். அதற்கு மான், “வனராசா” சத்தியம்“என்ற அந்த உண்மையாலே தான், சூரியன் சந்திரன் முதலியனவும் தேவர்களும் பிரகாசிக்கின்றன. ஐம்பூதங்கள் யாவும் கட்டுப்பாட்டுள் நடக்கின்றன சுருங்கச் சொன்னால் சத்தியம் இன்றேல் உலகமே பொய்த்துவிடும். எதுவும் இயங்காது" என்றது. வேடனும், மானின் சொல்லை நம்பிமானை அதன் இடத்திற்கு போகச் சொல்லி, பின்பு விரைவாகத் தன்னிடம் திரும்பி வரும்படி பணித்தான்.
முதல் வந்த மானின் இளையமான், தனது மூத்தாள் நீர் குடிக்கப் போய் இன்னும் வரவில்லையே, அதற்கு என்ன நடந்தது என்று ஏங்கிய படி குளக்கரைக்கு வந்தது. தண்ணிர் குடிக்க ஆயத்தமானது. வேடன் இந்த மானையும் கொல்ல ஆயத்தமானான். முன் போலவே, சில இலைகளும் சிறிது தண்ணிரும் சிவலிங்கத்தின் மேல் விழுந்தமையால் இரண்டாம் சாமப் பூசை செய்த பலனைப் பெற்றமையால் அவனிடம் சிறிது தயையும் ஞானமும் வந்தது. பெண்மான் தன்னை வேடன் கொல்லப் போகிறானே என நினைத்து, தனது மூத்த மான் சொன்ன சில நீதிநெறி வாக்கியங்களைக் கூற வேடனும் இளைய மானிடத்தில் நம்பிக்கை வைத்து அனுப்பினான்.
பெண்மான்கள் இரண்டும் நீர் நிலைக்குப் போய் இன்னும் திரும்பவில்லையே என்று அவைகளைத் தேடி ஆண்மான் நீர் நிலைக்கு வந்தது. ஆண்மான் நீர் அருந்த ஆயத்தமாக நின்றது. முன்னைய மான்களை விட இந்த மான்மிகவும் கொழுத்தது;
R པ།༽ 5 D விஷ வருடம் தை - பங்குனி )

Page 7
எப்படியாயினும் இதனைக் கொல்லவேண்டுமென வேடன் வில்லில் கணையைப் பூட்டும்போது, அவனுடைய உட்லின் அசைவால், முன் போலவே குடுவையில் இருந்து சிறிதளவு நீரும் சில இலைகளும் மரத்தின் அடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தமையால், வேடன் மூன்றாம் சாமப் பூசை செய்தவனானான். மானுக்கு வேடன் அம்பை வில்லில் பூட்டித் தொனி எழுப்பியது கேட்டது, அதுவும் முந்திய மான்கள் கேட்ட கேள்வியைக் கேட்க, வேடனும் முன்பு போலவே பதில் கூறினான். இந்த ஆண்மானும், முன்பு பெண்மான் கூறியநிதி நெறிகளைக் கூறியது. வேடனும் ஆண்மானையும் அதன் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.
பெண்மான்கள் இரண்டும் ஆண்மானும் சந்தித்தன. மூத்த பெண்மான்தான் வேடனின் வேண்டுகோளை நிவர்த்திசெய்யவும் தனது சத்தியத்தைக் காப்பாற்றவும் நினைத்து, தனது குட்டிகள் அநாதையாகாமல் இருக்க ஆண்மானிடம் ஒப்படைத்து, வேடனுடன் நடந்த நிகழ்வுகளைக் கூறியது. இளையமான் தான் வேடனிடம் போக வேண்டுமெனக் கூறியது. இவ்வாறு மூன்று மான்களும் தங்கள் தங்கள் சத்திய வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத் தம் குட்டிகளை மற்றைய மான்களுடன் விட்டு விட்டு வேடனிடம் வந்தன.
வேடன், இந்த மூன்று மான்களும் தாங்கள் செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டுவருகின்றன என்று மிகவும் சந்தோஷப் பட்டுத் தனது வில்லை டங்காரம் செய்தான். அப்போதும் வில்வமிலையும் நீரும் சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. இதனால் வேடன் சிவராத்திரிகாலத்தின் நான்கு சாமப்பூசை செய்த பலனை அடைந்தான். இதனால் வேடன் இப்பிறவியிற் செய்த கொடிய பாவங்களும், முற்பிறவியிற் செய்த ஊழ்வினை போன்றனவும் நீங்கிச் சிவஞானம் நிறைந்தனவாகப் பிரகாசித்தான்.
அப்போது அங்கு வந்த மூன்று மான்களும், ஒ வனராசாவே, எங்கள் மூவரின் மாமிசங்களை விரைவில் உனக்கு உணவாக்கிக் கொண்டு எங்களைப் புண்ணியவான்களாக்க வேண்டும்” எனக் கூறின.
வேடன் அந்த மான்களின் வாாத்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். கல்வியறிவு உலக அறிவு ஏதும் இல்லாத வேடன், பாவமே திரண்டு உருண்டு பார்ப்போரை நடுங்க வைக்கின்ற பயங்கரத் தோற்றம் கொண்ட வேடனே அவன் சிவராத்திரியென்று அறியாது, விழித்திருந்து, வில்வ மரத்தின் கீழ் காணப்பட்ட சிவலிங்கத்திற்கு நான்கு சாமத்திலும் பூசை செய்த பயன், அவனுக்கு ஞான அறிவைப் பூரணமாகக் கொடுத்தது. இதனால், மான்கள் தாங்கள் செய்த சத்திய வாக்கின்படி அங்கு
தீமை செய்தவர்களுக்கே நன்மை செய்த பெரி செய்யாதவர்களுக்கு நன்மை செய்தால்கூட, தவறு ஒன்
பிறர் நம்மை இகழ்கிறார்களே என்று அவர்க வகையில் காரணமாக இருந்தோம் என்பதை அறிந்தா
மனம் சஞ்சலமடையும்போது முடிவில்லாத ட நினைத்து அடுத்த காரியத்திற்கு அடித்தளமிடு.

வந்து அப்படிக் கூறுவதையும் நிற்பதையும் கண்டு பின்வருமாறு சிந்திக்கலானான்.
“அறிவுக் குறைவுள்ள இந்த மிருகங்கள், தங்கள் தேகத்தால் அந்நியருக்கு உதவிசெய்து எவ்வளவு புண்ணியத்தைத் தேடுகின்றன. நான் மனிதப் பிறவி எடுத்து, என் குடும்பத்தையும் என் உடலையும் வளர்த்தேன். இதனால் என்ன புண்ணியம் செய்தேன். என்ன சம்பாதித்தேன். பிறரை வருத்தி உயிர்வாழ்ந்த எனக்கு என்ன கதிகிடைக்குமோ? நான் எத்தனை கஷ்டங்களை அனுபவிப்பேனோ? இந்த உடலால் பலவிதமான பாவங்களைச் சம்பாதித்தேனல்லவா? இதுகாறும் தீவினைகளைச் செய்து இப்பொழுது துக்கப் படுகின்றேன். என்வாழ்க்கை நிந்திக்கத் தக்கது என்று பலவாறு தனக்குள் புலம்பி, இனிமேல் நான்உயிர்க் கொலை, கொள்ளை முதலியன செய்யமாட்டேனெனச் சபதம் செய்தவனாய் வில்லில் இருந்து நாணை எடுத்தபின் “ஓ உத்தம குணத்தையுடைய மான்களே, நீங்கள் சத்திய சீலர்கள்! நான் உங்களைக் கொல்ல மாட்டேன். நீங்கள் உங்கள் வசிப்பிடத்திற்குப் போகலாம்” என்று கூறினான்.
அப்போது சிவபெருமான் ஐந்து திருமுகங்களோடு வேடனுக்குத் தரிசனம் கொடுத்து, உனது நான்கு சாமப் பூசையும் ஏற்றுக் கொண்டோம். உனது விடயத்தில் நான் அதிக விருப்பம் உடையவனாகவே இருக்கின்றேன். உனக்கு என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார். வேடன் எம்பெருமானை வீழ்ந்து வணங்கி “சுவாமி நான் இதுவரை பல பாவங்கள் செய்து பெரிய பாவியர்கி விட்டேன், அவற்றை மன்னித்து எளியேனை அநுக்கிரகிக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான். மகா தேவனாகிய சிவபெருமான் அவனுக்குக் குகன் என்னும் பெயரளித்து உன் மனதிற் கருதிய சுகபோகங்களை அடைவாய்; உன் வமிசம் விருத்தியாகும்; தேவர்களாலும் துதி செய்யத் தக்க கீர்த்தியுடையவனாய் ஒரு இராசதானியின் அரசனாக விளங்குவாய்; ழரீ ராமன் உன்னாற் பூசிக்கப்படுவான்; தேவர்கட்கும் முனிவர்கட்கும் கிட்டாத பதவியை நீ சிவராத்திரி விரதம் இருந்து நான்கு சாமங்களும் பூசைசெய்து அடைந்தாய், உனது வேடுவ வம்மிசத்தவர்களும், இந்தச் சிவராத்திரி விரதம் அனுட்டித்து செல்வர்களாக வாழட்டும் என்று அருளி மறைந்தார்.
எனவே சிவராத்திரி விரதம், அனுட்டித்து அறிவற்றவர்களே நற்பேறு அடைந்தால், அறிவுள்ளவர்கள் ஆகம விதியோடு இவ் விரதம் அனுட்டித்தால் பெரும் பேறு அடைவர்கள் என்பது துணியாகும்.
N
யவர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, நன்மை றும் இல்லை என்று தோன்றும்.
- ஓர் அறிஞர்
ள் மேல் கோபம் கொள்வதைவிட, அதற்கு நாம் எந்த ல் பலன் உண்டு.
- ஓர் அறிஞர்
பரம்பொருளை நினை. எல்லாம் அவன் செயல் என்று
-ஓர் அறிஞர்
ノ
6 O ' . . . விஷ வருடம் தைபங்குனி )

Page 8
(மகா சிவராத்திரி சிறப்புக் கட்டுரை:2)
நடராஜர் வடிவமு
மு. மனோகரன். பீ. ஆசிரியர் கல்விவள
சிவமூர்த்தங்களுள் நடராஜர் வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவத்தின் பெருமை சங்கமருவிய காலத்தில் வாழ்ந்த காரைக்காலம்மையாரது திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் பின்வருமாறு காணப்படுகின்றது:
'காடுங்கடலும் மாலையும் மண்ணும் விண்ணுஞ் சூழ அனல் கையேந்தி ஆடும் அரவப் புயங்கற் எங்கள் அப்பன்இடம் திருவாலங்காடே” இதே போல் அம்மையார் பாடிய
அடிபேரிற் பாதாளம் பேறாரும் அடிகள் முடிபேரிற் மாமுகடு பேருங் - கடகம் மறிந்தாடுகை பேரில் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றாதரங்கு” என்ற அற்புதத் திருவந்தாதியிலும் அப்பர் பாடிய “குனித்த புருவமும்கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” எனத் தொடங்கும் திருப்பாடலும் இவ்வடிவத்தை எடுத்துக் கூறுவனவாக அமைகின்றன. இவ்வாறான வடிவம் தாண்டவத்தையே குறிப்பதாகக் கருதிக் கொள்ளலாம்.
இவ்வாறான வடிவம் பண்டைய மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில் அவர்களால் எடுப்பித்த ஆலயங்களில் காணப்படுகின்றன. இவ்வடிவம் சோழர்காலச் சிற்பிகளால் மிகவும் அழகுடன் அமைக்கப்பட்டது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் பல நடராஜர் வடிவங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ் நாட்டுச் சிவாலயங்களில் நடராஜர் வடிவங்கள் கான்னப்படுகின்றன வேனும் இவ்வடிவங்களைச் சில தன்மைகளில் மாத்திரம் ஒத்த நடன மூர்த்தங்கள் பிற இடத்து ஆலயங்களிலும் காணப்டுகின்றன. சாளுக்கியரின்தலை நகரான பாதாவிக் குகைச் சுவரில் 16 கரங்களுடன் கூடிய சிவ தாண்ட மூர்த்தம் காணப்படுகின்றது. பல்லவகால காஞ்சி கைலாசநாதர் கோயிற்சுவரிலும் நடராஜர் வடிவம் ஒன்றுண்டு எல்லோராக் கோயில்களிலும் நடராஜர் வடிவங்கள் பல உண்டு. தென்கிழக்காசிய நாடான காம்போ தேசத்திலும் பல நடராஜ வடிவங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் சிவாலயங்களிலும் நடராஜர் வடிவங்கள் உள்ளன. பொலநறுவையில் கண்டெடுக் கப்பட்ட நடராஜர் வடிவம் சிறப்புடையது. காலிச் சிவன் கோயிலுள்ள நடராஜர் வடிவம் அழகு வாய்ந்தது. ஈழத்துக் காரைநகர் சிவன் கோயிலிலும் தனித்துவமான நடராஜர் வடிவம் ஒன்று காணப்படுகின்றது. தென்னிந்தியாவிற் கோயில்களில் காணப்படும் ஆடவல்லான் வடிவம் தென்னிந்தியாவிற்கேயுரியது. வட இந்தியாவில் காணப்படும் நடேஸ்வரர் வேறு தென்னிந்திய நடராஜர் வேறு. சிவன் ஆடிய நடனத்தைத் தாண்டு என்னும் மகரிசி பார்த்து அதனை உலகிற்கு அறிமுகம் செய்தபடியால் சிவனது ஆடல் சிவதாண்டவம் எனப் பெயர் பெற்றதென்பர். இதனை அடிப்படையாகக் கொண்ட ஆடல் வடிவம் ஆடவல்லான்
இந்து ஒளி C
 

ம் அதன் தத்துவமும் . (கல்வியியலில் டிப்ளோமா) பூலோசகர், மேல்மாகாணம்.
வடிவமென்றும் அது தமிழ்நாட்டிற்குரியது என்றும் மேல் நாட்டறினரான கமில்கபிலபெல் குறிப்பிடுவர்.
நடராஜ வடிவத்தின் கலையழகு சொல்லும் தரமன்று. இவ்வடிவத்தின் கலையழகுப் பெருமைக்கு இராஜராசன் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலிற் ஆடவல்லான் வடிவமும் தில்லைச் சிதம்பரத்திலுள்ள ஆடல்வல்லான் வடிவமும் உதாரணங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவற்றில் தில்லைச் சிதம்பரத்தின் ஆடவல்லான் வடிவம் பின்வருமாறு காணப்படுவதாகக் கூறுவர். அலையலையாகப் பறக்கும் சடையும் அலையலையாகச் சுருண்டு காணப்படும் நாகமும் ஒன்றோடொன்றுபொருந்துவதாக அழகுடன் அமைந்துள்ளன. சுருள் சுருளாக அமைந்துள்ள சடையுடன் பாம்பும் சுருண்டு சுருண்டு காணப்படும் அழகுதான் என்னே” என்று வியப்புறுவர். இவ்வாறான வடிவத்தின் பெருமையை கலாயோகி ஆனந்தகுமாரசாமி அவர்கள் தன் சிவ நடனம் (DANCEOFSIVA) என்ற ஆங்கில நூலில் “நடராஜர் வடிவம் ஒரு கூட்டத்தார்க் குரியதன்று. ஒரு காலத்துக்குரியதன்று. குறிப்பிட்ட சிந்தனையாளர்க்குரியதன்று. எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் எல்லாத் தத்தவ ஞானிகளுக்கும் எல்லாப் பக்தர்களுக்கும் எல்லாக் கலைஞர்களுக்கும் பொருந்துவதாக அமைந்து தத்துவரூபம் காட்டும் அற்புத வடிவமாகவுள்ளது. இத்தகைய வடிவத்தைத் தமது தியானத்தாலும் ஆத்ம ஞானத்தாலும் தோற்றுவித்த இருடிகளது ஞானயோக நிலையைப் போற்றாமலிருக்க முடியாது” என்கின்றார்.
இவ்வாறான நடராஜர் வடிவம் பலதத்துவங்களைக் கொண்டது. இருநிலையில் காணப்படும் ஒன்று எல்லாவற்றையும் கடந்து சொரூபம் அல்லது நிர்க்குணம் என்றும் மற்றது. தடத்தம் அல்லது சகுணம் என்றும் அழைக்கப்படும் எல்லாவற்றையுைம் கடந்த சிவத்துக்கு உருவம் அருவம் ஐந்தொழில் என்பன இல்லை. சிவம் இயற்கையோடு இயைந்து நிற்கும் நிலையே எல்லாவற்றிலும் கலந்த நிலை. சிவம் அறிவுப் பொருள். தனித்த சிவத்துக்கும் தனித்த (இயற்கைக்கும் இயக்கம் கிடையாத சிவமும் இயற்கையும்) கலந்த நிலையை விளக்கும் இடமாக சிதம்பரம் உள்ளது. சிதம்பரம் என்னும் கோயில் வெறும் கல்லன்று கட்டமற்று மூன்று காண்டங் களையுடையது. ஞானசபை, நடராஜமன்று, சிவகாமிப் பொது எனக் காணப்படும் காண்டங்களை கொண்டதே நடராஜ வடிவம். இந்த வடிவம் மூன்று கண்களும் நான்கு தோள்களும் சாந்தகுணமும், சிவப்பு நிறமும் புன்முறுவல் செய்யும் முகமும் கொண்டிருக்கும். சடைமுடியில் கங்கை பிறை கொக்கிறகு, ஊமத்தை, எருக்கு, சிறுமணி, மண்டையோடு, பாம்பு, இடதுகாதில் பத்திர குண்டலமும் வலது காதில் மகர குண்டலமும் கொண்டும் காணப்படும். வலது பாதம் முயல்கன் மீது ஊன்றிய நிலையிலும் இடதுபாதம் தூக்கிய நிலையிலும் காணப்படும். நான்குகைகளில் பின் வலது கையில் உடுக்கும், பின் இடது கையில் தீயும் உண்டு. முன் வலது கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வீசுகரமாகவும்
7D. விஷ~வருடம் தை-பங்குனி)

Page 9
உள்ளன. பஞ்சபூத நாயகனான இவர் அவற்றைச் செய்கிறார். திருக்காஞ்சியில் நிலமாகவும் திருவானைக்காவில் நீராகவும் திருவண்ணாமலையில் தீயாகவும், திருக்காளத்தில் காற்றாகவும் திருத்தில்லையில் ஆகாயமாகவும் நின்று அருள் புரிகின்றார். ஊற்றிய பாதம் நிலத்தையும் முடியில் உள்ள கங்கை நீரையும் இடக்கையில் ஏந்திய அக்கினி தீயையும் இருபுறமும் பறந்து செல்லும் விரிசடையும் ஆடையும் காற்றையும் திருவாசியில் நின்று எழும் பிரபை விசும்பையும் சுட்டுவன ஐந்தொழில்களை இவ்வாறு நிகழ்த்துவதை "காறியோடாடிக் கனகாசலத்தாடிக்
கூறியோடாடிக் குவலயத்தேயாடி நீடிய நீர் தீ, கால் நீற்வானிடையாடி நாளுற அம்பலத்தேயாடும் நாதனே" எனத் திருமூலர் குறிப்பிடுவர்.
உண்மை விளக்கம் என்ற நூலில் "தோற்றம் வடியதனில் தோயும் திதியமைப்பில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப் பாதத்தில் உற்ற திரோதம் முத்தி ஈன்ற மலர்ப்பதத்தே நாடு எனக் குறிப்பிடப் படுகின்றது. உடுக்கு ஏந்திய கை படைத்தலையும், அபயகரம் காத்தலையும், அக்கினி ஏந்திய கை அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும் குஞ்சி பாதம் அருளலையும் எடுத்துக் காட்டுவதாக இப்பாடலிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். சிவன் ஐந்தொழில்களைச் செய்ய எழுவகைக் தாண்டவங்களை ஆடினார். காளிகா தாண்டவத்தைப் படைத்தல் தொழிலுக்காக திருநெல்வேலியிலும் கொடு தாண்டவத்தைக் காத்தலுக்காக திருப்புத்தூரிலும் அசந்தியா தாண்டவத்தை காத்தலை நிலைநாட்ட மதுரையிலும் சங்கார தாண்டவத்தை அழித்தலுக்காக பிரபஞ்ச நடுச் சாமத்திலும், திரிபுர தாண்டவத்தை மறைத்தலுக்காக திருக்குற்றாலத்திலும், ஊர்த்துவ தாண்டவத்தை அருளலுக்காக திரு வாலங்காட்டிலும், ஆனந்த தாண்டவத்தை பஞ்ச கிருத்தியத்திற்காக தில்லைச் சிதம்பரத்திலும் நிகழ்த்தியதாகக் கூறுவர்.
இந்த நடனத்தை பஞ்சாட்சரத்தோடு ஒப்பிடுவர். திருவடி 'ந'கரத்தையும், திருவுதரம் 'ம'கரத்தையும், திருத்தோல் சிகரத்தையும், திருமுகம் வகரத்தையும், திருமுடியகரத்தையும்
றம் அல்லது பம்பலப்பிட்டி சரஸ்வதி
பெற்றுவிண்ணப்பிக்கலாம்
 

சுட்டி நிற்கும். இத்தோடு சூக்கும் பஞ்சாட்சரத்தால் அமைந்துள்ளதாகவும் கூறுவர். வடி"சிகரத்தையும், வீசுகரம் வகரத்தையும், அபயகரம் யகரத்தையும், அக்கினி நகரத்தையும் முயலகன் மகரத்தையும் சுட்டுவன என்பர். ஒர் உருவமில்லாத இறைவனுக்கு திருமேனியாக ஆகாயமும் திசைகள் எட்டும் அவனது திருக்கைகளாகவும் காணப்படுகின்றன என சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதியில் குறிப்பிடுவர்.
சஞ்சிதம்பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகள் தரும் துன்பங்களை இறைவனது புன்முறுவல் அழிக்கின்றதென சிவதர் மோத்திரம் கூறுகின்றது. நடராஜர் அணிந்துள்ள பிறை இவருடைய பேரறிவையும் திருநீறு பராசக்தியையும் பூனூல் குண்டலினி சக்தியையும் குறிப்பதென்பர். காதுகள் ஓங்காரத்தையும் சூலம் முக்குணங்களையும் முத்தொழில்களையும் மும்மூர்த்திகளையும் மும் மலங்களையும், பரசும் வாளும் பேராற்றலையும் குறிக்குமென்பர். வாளினை ஞானம் என மணிவாசகர் குறிப்பிடுவர். மழு பராசக்தியின் உருவாகவுள்ளது. அத்துடன் பராசக்திக்கு மேலாக இறைவன் உள்ளான் என்பதையும் புலப்படுத்துகின்றது. நாத வடிவினனாக இறைவன் உள்ளான் என்பது “மணி” மூலம் தெரிய வருகின்றது. வீசிய கை தூக்கிய திருவடியை நோக்கி நிற்பதால் உயிர் பேரின்ப நிலையை அடைவதாகக் குறிக்கிறது. பாம்பு குண்டலினி சக்தியைக் காட்டுகின்றது. முயலகன் ஆணவத்தின் வடிவமாகவும் ஆன்மாவைப் பற்றி நிற்கும் மலமாகவும் கொள்ளப்படுகிறது. முயலகன் மீது நடராஜர் ஆடுவதன் மூலம் அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தைப்பெருக்குகிறார். சிவன் பெரியதொரு யோகி. இது அவருடைய தலையிலுள்ள பாம்பு பிறை என்பன புலப்படுத்துகின்றது. சடையிலுள்ள கபாலம் மரணத்தை எண்ணாத வாழ்வு நிரந்தரம் என நினைப்போரைப் பார்த்துச் சிரிக்கிறது. கங்கை உலகுக்கு ஊட்டச் சக்தியளித்துப் பேணுகிறது. பாம்பு அழிவில்லாத ஆன்மா ஒரு தேகத்திலிருந்து இன்னொரு தேகத்தைச் சென்றடைகின்ற தென்பதை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறாக நடராஜ வடிவம் ஏனைய சிவ வடிவங்களுற் தலை சிறந்ததாகக் காணப்படுவதோடு, அதனது தத்துவமும் முக்கியத்துவம் வாய்ந்தாகவும் காணப்படுவதை யாவரும் மனங் கொள்ள வேண்டும்.
இலக்கிய மாநாடு ாடு ஜூன் மாதம் சென்னையில் நடத்துவதற்கு ஒழுங்குகள்
ாகபூரீ ஜயந்திர சரஸ்வதிசுவாமிகள், மேல்மருவத்தூர் ஆதி சக்தி
தலைவர்களின் பூரண ஆசியுடனும் ஆதரவுடனும் 2001ம் ஆண்டு
ராச்சாரியசுவாமிகளால்ஆரம்பிக்கப்பட்டஉலகத்தமிழ் இலக்கிய
ாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் அகில இலங்கை இந்து
லது கொழும்புவிவேகானந்த சபையிலிருந்து விண்ணப்பப்
చ. . . .
குபற்றவிரும்புவோர்தாங்களே செய்து கொள்ள வேண்டும்.
பொதுச் செயலாளர் ... அகில இலங்கைஇந்து மாமன்றம் )
s D விஷ வருடம் தை-பங்குனி )

Page 10
dBH bħrbDbDr FN
க. தங்கேஸ்வ
உலகில் புகழ் பெற்ற பல பெண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மீகத்துறையைப் பொறுத்தவரை அன்னி பெசன்ட் அம்மையார், நிவேதிதா, அன்னைதெரேசா, அரவிந்த ஆசிரமத்தின் அன்னை போன்றவர்களைப் பற்றியெல்லாம் உலகம் நன்கு அறியும்.
ஆனால் இவர்கள் எல்லோரையும் விட முக்கியத்துவம் பெற்ற ஒரு பெண்மணி இந்தியாவின் ஞான ஒளியாக ஆன்மீகத் தாயாக வாழ்ந்திருக்கிறார். அவரைப் பற்றி உலகம் அறிந்தது மிகவும் சொற்பமே. அவர் யார்? ஒவ்வொரு இந்துப்பெண்மணியின் இதயத்திலும் அன்னை பராசக்தியாகக் குடியிருக்க வேண்டிய அந்தப் பெண்மணி யார்? அவர்தான் அன்னை சாரதாதேவி.
ழரீராமகிருஷ்ணமிஷனைச் சேர்ந்தவர்களுக்கு, பகவான் பூநீராமகிருஷ்ணர். சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதாதேவியார் ஆகியோரைப் பற்றி நன்கு தெரியும்.
இறைவனே மனித உருவெடுத்து வந்தவர்தான் பகவான் பூநீராமகிருஷ்ணர் இதை அவரே தன்வாயால் சுவாமி விவேகானந்தருக்குக் கூறியிருக்கிறார்.
சுவாமி விவேகானந்தருக்கு பகவான் பூரீராம கிருஷ்ணரையிட்டு ஒரு சந்தேகம் மனதில் தோன்றியது.இப்போதும் இவர்தான் இறைவன் என்பதைக் கூறுவாரானால் அதை நான் ஏற்றுக் கொள்ளுவேன்” என்று விவேகானந்தர் மனதில் நினைக்க உடனே ராமகிருஷ்ணர் "ராமனாகவும் கிருஷ்ணனாகவும் யார் பூமியில் அவதாரம் செய்தார்களோ அவரே இன்று ராமகிருஷ்ணராகப் பூமியில் அவதரித்துள்ளார்” எனக் கூறினார்.
அன்றுமுதல் விவேகானந்தர் பூரீராமகிருஷ்ணரை இறைவனின் அவதாரமாக ஏற்றுக் கொண்டார்.
தெய்வத்தின் தெய்வம்
பகவான் ஏன் ராமகிருஷ்ணராகப் பூமியில் அவதரித்தார்? உலக மக்களுக்கு உடனடியாகச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒரு செய்தி அவரிடமிருந்தது. அதாவது உலகத்துச் சமயங்களெல்லாம் ஒன்று, அவை நாடிச் செல்லும் இறைவனும் ஒன்று . எனவே சமயத்தின் பேரால் வேறுபாடு கற்பிப்பதும் சண்டை சச்சரவு செய்வதும் அறியாமை.
இந்தச் செய்தியை ராமகிருஷ்ணர் நேரே உலகமக்களுக்குச் சொல்லமுடியாத சூழ்நிலை இருந்தது. அதற்காகவே சுவாமி விவேகானந்தர் அவதாரம் செய்தார். சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டிலும் அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் சூறாவளிப் பயணம் செய்தும் அவர் பகவான் ராமகிருஷ்ணரின் இந்தச் செய்தியை எடுத்துச் சொன்னார். உலக மக்கள் மிகுந்த தாகத்துடன் அச்செய்தியை ஏற்று தங்களைத் திருத்திக் கொண்டனர்.
இந்து ஒளி C

ரதாதேவியார்
ஏ.(சிறப்பு)
அதுமட்டுமல்ல இந்தியப் பெண்களே பெண்மையின் பூரணத்துவத்தைப் பெற்றவர்கள். அவர்களே உலகப் பெண்களுக்கெல்லாம் வழிகாட்டி என்று எடுத்துக் கூறினார். அதையும் உலகமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இவ்வாறு உலக மக்களுக்கு ஆன்மீகத்தைப் போதித்த பகவான்பூரீராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் அன்னை பராசக்தியாக ஒரு பெண்ணைப் போற்றி வணங்கினார்கள். அவர்தான் நமது அன்னை சாரதாதேவியார் என்றால் இதற்கும் மேலாக அவரைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
அன்னை பராசக்தி
இந்த அன்னை சாரதாதேவியார் உலகப் புகழ்பெற்ற பெண் மணிகளைப்போல படித்துப் பட்டம் பெற்றவர் அல்ல. உயர் பதவிகளை வகித்துப் புகழ் பெற்றவர் அல்ல.
கல்கத்தாவிலே ஒரு குக்கிராமத்திலே பிறந்த, ஒன்றும் அறியாத ஒரு பட்டிக்காட்டுப் பெண். இந்தப்பட்டிக்காட்டுப் பெண் சிறுமியாக இருந்தபோது இறைவனின் அவதாரமான யூரீ ராமகிருஷ்ணர் அவரைத் தேடிப் பெற்றார். அவர்களுக்குப் பால்ய விவாகம் நடைபெற்றது. பாமரர் கண்களுக்கு அது திருமணம். ஆனால் உண்மையில் அது சிவமும் சக்தியும் இணைந்த ஒரு நிகழ்வு. காலக்கிரமத்தில் அந்த உண்மை வெளிப்பட்டது.
பகவான் பூரீராமகிருஷ்ணரே அன்னை சாரதாவை சுவாமி பீடத்தில் ஏற்றிவைத்துப் பூசை செய்திருக்கிறார். ஷோடோபசாரம் செய்திருக்கிறார். அது மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தர் ஐரோப்பிய நாடுகளில் ஆத்மீகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது நிவேதிதா சுவாமி பிரம்மானந்தர் (ராக்கால்) சாரதானந்தர் முதலியோருக்கு எழுதிய கடிதங்களில் அன்னை சாரதாதேவியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றைப் படிக்கும்போது சாரதாதேவியாரை விவேகானந்தர் அன்னை பராசக்தியாகவே பாவனை செய்தார் என்பது தெளிவாகிறது. பூரீராமகிருஷ்ண பரமஹம்சரின் மறைவுக்குப்பின் அன்னை சாரதாவின் ஆத்மீக சக்தியே அவரது சீடர்களையும் பக்தர்களையும் வழிநடாத்தி வந்துள்ளதென்றால் அது மிகையாகாது.
கிராமத்துச் சிறுமி
அன்னை சாரதாதேவியார் உலகுக்களித்த செய்தியை விவரிப்பதற்கு முன்னர், அவருடைய வாழ்க்கை பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.
கல்கத்தாவுக்கு மேற்கே 60 மைல் தொலைலில் உள்ள பங்குரா மாவட்டத்தில் ஜயராம்பட்டி என்னும் ஒரு குக்கிராமம் உள்ளது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் நமது பக்கத்துக் கிராமங்கள் எப்படி இருந்தன என்று ஒரு கணம் கற்பனை செய்து
) விஷ"வருடம் தை - பங்குனி

Page 11
பாருங்கள். எங்கும் நிலத்தோடு ஒட்டிய ஒலைக்குடிசைகள் - களிமண் குடிசைகள்.
இவ்வாறுதான் ஜயராம்பட்டிக்கிராமம் அன்று இருந்தது. கல்கத்தாவிலிருந்து அக்கிராமத்துக்குச் செல்வதாயிருந்தால் அந்த நாளில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள வேண்டுமாம். அவருடைய தந்தை பெயர் ராமச்சந்திரன். ராமச்சந்திர முகர்ஜி என்று அழைப்பார்கள். முகர்ஜி என்பது குடும்பப் பெயர். தாயார் பெயர் சியாமசுந்தரி தேவி. இது ஒரு ஏழைப்பிராமணக் குடும்பம். ஆனால் தெய்வத்தின் அருள் பெற்ற தெய்வீகக் குடும்பம்.
சாரதாதேவி இவர்களுக்கு முதற்குழந்தையாக 1853 ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 22ந்தேதி பிறந்தார். அந்தக் காலத்தில் வங்காளத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு பெயர்கள் வைப்பது வழக்கமாம். அதன்படி சாரதாதேவியின் ஜாதகப் பெயர் தாகூர்மணி என்று வைக்கப்பட்டது. கூப்பிடும் பெயர்ஷேமங்கரி என்று இருந்தது. சாரதாதேவியாரின் மாமியாருக்கு சாரதாதேவி என்று ஒரு குழந்தை இருந்தது. இது இறந்ததும் அந்த சோகத்தை மறைக்க இக்குழந்தைக்கு சாரதாதேவி என்று பெயர் வைத்தார்களாம். பிறக்கும் போது இவ்வாறு திருவுடையவராகப் பிறந்திருக்கிறார்.
படிப்புக்குள் அடங்காத பண்புகள்
அந்தக் காலத்தில் பெண்கள் படிப்பது கூடாது என்று கருதப்பட்டது. அதனால்தானோ என்னவோ அவரது கல்வி வெறும் அரிச்சுவடியுடன் நின்று விட்டது. பிற்காலத்தில் அன்னையார் தட்சிணேஸ்வரத்தில் வாழ்ந்தபோதுதான் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. குருதேவரின் சிகிச்சைக்காக சியாம்புக்கூர் சென்று விட்டபின் அவரது பக்தர்களில் ஒருவரான பவமுகர்ஜியின் விட்டிலிருந்து ஒரு பெண் அடிக்கடி வந்து அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாக அன்னையார் கூறுகிறார்.
அன்னையார்புத்தகக் கல்வியைப் பெறாவிட்டாலும் மக்களை வழிநடத்தும் அளவுஞானக்கல்வியைப் பெற்றிருந்தார் என்பதை நாம் இப்போதுகாண்கிறோம். சிறுவயதில் அவர்கேட்ட சொற்பெர்ழிவுகள் மூலமும், தெருகூத்து நாடகங்கள் மூலமும், பல சுலோகங்களையும் பாடல்களையும் கேட்டு அவரது அறிவு வளர்ந்தது.
இதில் ஒன்றும் புதுமையில்லை. இன்றும் கூட நமது கிராமங்களில் உள்ள பெண்கள் கோயில் நிகழ்ச்சிகளையும் கூத்துகளையும் பார்த்தே பண்புள்ளவர்களாக வளர்ந்திருக் கிறார்கள். அவர்கள் பட்டினத்தில் உள்ள பெண்களை விட அன்பு, தியாகம், பாசம், பதிபக்தி முதலிய நற்பண்புகளில் மேலோங்கியிருப்பதை இன்று நாம் பார்க்கிறோமல்லவா?
இந்தக் குக்கிராமத்துப் பெண்ணுக்கு, அன்றைய சமூகத்தவர்களால் ‘பைத்தியம்" என்று கருதப்பட்ட ராமகிருஷ்ணன் மணமகனாக வாய்க்கிறார். 1859ம் ஆண்டு மே மாதத்தில் இத்திருமணம் நடைபெற்றது. ராமகிருஷ்ணர் 1836ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிறந்தவர். சாரதாதேவியார் 1853ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர். கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசம் திருமணத்தின் போது ராமகிருஷ்ணருக்கு 23 வயது சாரதாவுக்கு 6 வயது. ஆனாலும் என்ன இது தெய்வத் திருவருளால் ஏற்பட்ட சங்கமம்அல்லவா?
இந்து ஒளி سببي سيسعي يسببسببسبب <

அன்னை அளித்த செய்தி
சாரதாதேவியார் உலகுக்கு விட்டுச் சென்ற செய்தி என்ன? அது பகவான் ராமகிருஷ்ணரின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. அதைப்படிக்கும்போது இறைவன் காரைக்கால் அம்மையாரைப் பார்த்து"அம்மையே” என்று அழைத்தமை நினைவுக்கு வருகிறது. ழரீ ராம கிருஷ்ணர் கூறியது இதுதான் "இறைவனின் தாய்மை என்னும் அன்புத்தத்துவத்தை உலகிற்குப்போதிக்க அவதரித்தவர் அன்னை" - இவ்வாறுதான் பூரீ ராமகிருஷ்ணர் அன்னை சாரதாவின் பிறவிநோக்கம் பற்றிக் கூறுகிறார். அதை சாரதாதேவியார் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை அவரது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பார்க்கிறோம்.
பகவான் ராமகிருஷ்ணர் சாரதாவிடம் கண்ட “தாய்மை" பற்றி சுவாமி விவேகானந்தரின் மேலைநாட்டு சிஷ்யை சகோதரி நிவேதிதா என்ன கூறுகிறார் தெரியுமா? "என் இன்னுயிர் அன்னையே உண்மையில் தாங்கள் இறைவனின் வியத்தகு படைப்பாகும். உலகிற்கென பகவான் ழரீராமகிருஷ்ணர் அளித்த அன்புக் கிண்ணம்" இவ்வாறு நிவேதிதா அழைக்கிறார்.
ஏனெனில் நிவேதிதா அன்னை சாரதாவின் ஆசிரமத்தில் பல வருடங்களாக அவருடன் வாழ்ந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானித்தவர். அவருடைய பாதாரவிந்தங்களில் அமர்ந்து இந்தியப் பெண்களின் மகிமையையும், மகத்துவத்தையும் அறிந்தவர். அமெரிக்க நாட்டுப் படிப்பறிவுமிக்க பெண்ணான நிவேதிதா, பட்டிக்காட்டுப் பெண்ணான அன்னைசாரதாவில் தெய்வத் தன்மையைக் கண்டார் என்றால் - தெய்வத்தின் தாய்மையைக் கண்டார் என்றால், அன்னையின் தெய்வீகத் தாய்மைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை.
கீழைத்தேயப் பண்பு
இவ்விடத்தில் கீழைத்தேய, மேலைத்தேய பண்பாடு பற்றிய ஒரு விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அன்று மட்டுமல்ல இன்றும் கூட மேல் நாட்டவரைப் பார்த்து நம்மவர்கள் வேஷம் போடும் வழக்கம் தீவிரமாக உள்ளது. அதிலும் பெண்கள் இதில் முன்னணி வகிக்கின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேல் நாட்டவரின் உடை, நடை, பாவனை ஆகியவற்றைக் கொப்பியடித்துவிட்டால், அது உயர்ந்த நாகரிகம் என்று கொள்ளும் ‘மூடநம்பிக்கை இன்றும் நம்மிடையே உலவுகிறது. அந்தவகையில் அண்மையில் மேல் நாட்டுப் பெண்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கொள்கை “பெண்ணிலை வாதம்” என்பதாகும்.
உண்மையில் உலகத்துக்கே பெண்ணிலை வாதத்தைப் போதித்தவர்கள் நமது இந்துப் பெண்கள். உலகிலேயே மிக உன்னதமான பெண்மை, நமது இந்துப்பெண்மை. இதை ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பெண்களுக்கு எடுத்துக் கூறி அதை ஏற்றுக் கொள்ளச் செய்தவர் நமது சுவாமி விவேகானந்தர். பெண்மை என்பது வெறும் வடிவம் அல்ல - அது தாய்மை - தோழம்ை - தியாகம் - பண்பு - பாசம் என்ற பல்வேறு விழுமியங்களின் உருவம் - பல்வேறு பண்பாடுகளின் சங்கமம்.
தாயாக, தாதியாக, தோழனாக, ஆசானாக, அமைச்சனாக
10) விஷ" வருடம் தை பங்குனி

Page 12
குடும்பத் தலைவனுடன் இணைந்து, தாம்பத்தியத்தின் புனிதத் தன்மையைக் கட்டிக்காப்பவள் இன்றும் நமது இந்துப்பெண்தான். அத்தகைய இந்துப் பெண்களில் ஒருத்தியாக அனைத்துப் பெண்களுக்கும் தாயாக - அனைத்து உயிர்களுக்கும் தெய்வீகத் தாயாக வாழ்ந்தவர் நமது அன்னை சாரதாதேவியார் என்றால் அது மிகையாகாது.
இறைவனின் அவதாரமே தாய்
இறைவன் தான் படைத்த ஒவ்வொரு உயிரிலும் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தாயாக அவதாரம் செய்கிறான். இதை மூடநம்பிக்கை என்று இன்றைய விஞ்ஞானம் கூறலாம். ஆனால் உலகின் தொன்மை வணக்கமான தாய்வணக்கம் இதை நிரூபிக்கிறது. “தாயினும் நல்ல தலைவர்” என்றும் “தாயின் நேர் இரங்கும் தலைவரே" என்று நமது சமய குரவர்கள் இந்த உண்மையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் இறைவனைத்தான் தாய்க்கு ஒப்பிடுகிறார்களேயன்றி தாயை இறைவனுக்கு ஒப்பிடவில்லை. இது ஒரு முக்கியமான செய்தி
அந்த வகையிலும் அன்னை சாரதாதேவியின் “தாய்மை" முக்கியத்துவம் பெறுகிறது. அன்னை, தன்னைப் பற்றிக் கூறும் போது “கடவுளின் தாய்மை எப்படிப்பட்டது என்பதை செயல் முறையில் காட்டுவதற்காகவேழீராமகிருஷ்ணர் தன்னை உலகில் விட்டுச் சென்றிருக்கிறார்” என்று பலமுறை கூறியிருக்கிறார். (அன்னை பூரீசாரதாதேவியர் வரலாறு - பக். 362)
அன்னையார் தனது ஆசிரம வாழ்க்கையின் போது இதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபணம் செய்தார். தீட்சை பெறுவதற்காக, ஆஸ்ரமத்திற்கு வரும் பக்தர்களில் தீயவர்களை, பிரம்மானந்தர், அன்னையிடம் அனுப்பிவிடுவார். அன்னையாரோ அவர்களிடம் எவ்வித வேறுபாடும் காட்டாது அனைவருக்கும் தீட்சை கொடுத்ததுடன் அதன் விளைவாகத் தன் உடல் மேல் குவிந்த கர்ம வேதனைகளையும் முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
அவ்வாறே பாவிகள் தமது பாதங்களைத் தொடுவதன் மூலம் தன்னிடம் சேரும் பாவச்சுவைகளை, முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்டார்.
அன்னையின் பணிகள்
அன்னையார் படிப்பறிவற்றிருந்த போதும் தன்னுடைய ஆத்மீக சக்தியால் ராமகிருஷ்ணருக்கு உதவியாக ஆசிரமத்தில் பல பொறுப்புகளை மேற்கொண்டார். ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கும், அங்கு தங்கியிருப்பவர்களுக்கும் உணவு அளிக்கும் கடமை சாரதாதேவியாரைச் சார்ந்திருந்தது. அவருக்கு உதவியாகச் சில சீடர்கள் இருந்த போதும், இந்த வேலைகளில் எவ்வித குறைவும் ஏற்பாத வகையில் அன்னையாரின் நிர்வாகம் இருந்தது.
1886ஆகஸ்ட்16ம் தேதி பூரீராமகிருஷ்ணர் மறைந்தார். அப்போது சாரதாதேவியாருக்கு 33 வயது. அதுவரை காசிப்பூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த அன்னையும் சீடர்களும் பலராம் போஸ் என்பவரின் வீட்டுக்குச் சென்றனர். பின் அன்னையார் வட இந்தியாவின் பல புண்ணியதலங்களுக்கும் யாத்திரை
இந்து ஒளி C

செய்தார். அவருடன் முக்கிய சீடர்களான யோகானந்தர், அபேதானந்தர், அற்புதானந்தர், லட்சுமி, கோலாப்மா ஆகியோரும் சென்றனர். இப் பயணத்தின் போது பிருந்தாவனம் என்னும் இடத்தில் ஒராண்டைக் கழித்தனர். புனித யாத்திரையின் பின் அனைவரும் 1887ல் கல்கத்தா திரும்பினர்.
1888 முதல் அவர் இறக்கும் வரை (1920) 33 ஆண்டுகள், கல்கத்தாவில் 6 மாதம் அவர் பிறந்த ஜெயராம்பாடியில் 6 மாதம் என அவர் காலம் கழிந்தது. 1893ல் அவர் "பஞ்சதவம்” என்னும் கடுமையான தவத்தை மேற்கொண்டார். இந்தக்காலத்தில்தான் அன்னையின் ஆத்மீக வளர்ச்சி உச்ச நிலையடைந்தது. உலக மக்களிடம் ஆத்மீக விழிப்பை ஏற்படுத்தும் குரு தேவரின் பணியைத் தொடர்ந்து செய்வதற்கான தகுதியை அவர் இந்தக் காலத்தில் தான் பெற்றார்.
ஆத்மீக வளர்ச்சி
கல்கத்தாவில் அன்னையாருக்கு யோகின்மா என்னும் சிஷ்யை துணையாக இருந்தார். அவர் எப்போதும் அன்னையின் கூடவே இருந்தார். இக்காலத்தில் அன்னையார் ழரீராமகிருஷ்ணரைப் போலவே அடிக்கடி சமாதியில் மூழ்கிப்போனார். தான்வேறு, பூநீராமகிருஷ்ணர் வேறு இல்லை, இருவரும் ஒருவரே என்பதை அவர் உணர்ந்தார். அதை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தினார். சுருங்கச் சொன்னால் பூரீராமகிருஷ்ணர் விட்ட இடத்திலிருந்து அவரது பணிகளை அன்னையார் தொடர்ந்தார்.
பூரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின் சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண சங்கத்தை அமைத்தார். பூரீராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் 15 பேருடன் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர் பரிவிராஜகராக (பரதேசியாக) இந்தியா எங்கும், இமயமலை வரை யாத்திரை செய்தார். அதன் பின் சற்றும் எதிர்பாராத வகையில் 1893ல் சிகாகோவில் நடைபெற்ற உலகசமய மாநாட்டில் கலந்து,அதைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள் எங்கும் பயணம் செய்து ழரீராமகிருஷ்ணரின் ஆன்மீகச் செய்தியை உலகெங்கும் பரப்பினார்.
அதே போல அன்னை சாரதாதேவியார் கல்கத்தா ஆசிரமத்தில் தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முன்பு பூரீராமகிருஷ்ணர் எவ்வாறு ஆன்மீக ஒளியைப்பரப்பி, தனது ஆத்மீக சக்தியால் பல காரியங்களை நிறைவேற்றினாரோ, அவ்வாறே பல காரியசாதனைகளைச் செய்தார். ஆசிரமத்தைத் திறம்பட நிர்வகித்தார். வெளி நாட்டிலிருந்து வந்து பலருக்கு ஆதமீக வழிகாட்டியானார். உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக உபதேசத்திற்கும் தீட்சைக்கும் கூட்டம் கூட்டமாக வந்த போது அவர்களுக்கு ஆன்மீக விளக்காக விளங்கினார்.
அன்னையின் இறுதிக்காலம்
இவ்வாறு 33 வருடங்கள் (1887 - 1920) பூரீராமகிருஷ்ணரின் பணியைத் தொடர்ந்த அன்னையார், தமது
1) விஷ" வருடம் தை - பங்குனி)

Page 13
இறுதிக்காலத்தில் அவரைப் போலவே, பக்தர்களுக்குத் தீட்சை வழங்கியதன் மூலம் கிடைத்த பாவச்சுமையைக் கரைப்பதில், சில நாட்கள் துன்புற்றார்.
இந்த இறுதிநாட்களில் அன்னையார் பெரும்பாலும் சமாதி நிலையிலேயே இருந்தார். யாராவது அவரை அணுகினால் எரிச்சலுற்றார். பல டாக்டர்கள் வந்து பார்த்தனர். யோகின்மா என்ற சிஷ்யையும் சாரதானந்தர் என்ற சீடரும் அவரது தேவைகளைக் கவனித்துக் கொண்டனர்.
கடைசி மூன்று நாட்கள் அவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார். ஒரு முறை சுவாமி சாரதானந்தரை அழைத்து “சரத்” நான் போகிறேன். யோகின்மா, கோலஸ்மா மற்றும் எல்லோரும் இருக்கிறார்கள். “அவர்களைக் கவனித்துக் கொள்” என்றார். கண்ணைமூடினார்.
1920 ஜூலை 20ம் தேதி பகல் அவர் உயிர் பிரிந்தது அன்னை மகா சமாதி அடைந்தார்.
இன்று அன்னையின் ஒளிமயமான வாழ்க்கையையும், பணிகளையும், உபதேசங்களையும் நினைவு கூரும் வண்ணம் மூன்று நினைவாலயங்கள் உள்ளன. அவை, பேலூர்மடம் உத்பாதன் மாளிகை, ஜெயராம்பாடி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
அவருடைய தாய்மையைக் குறித்து சுவாமி அபேதரனந்தர் இயற்றிய பாடல்களில் ஒன்று
இருவிழிப் பார்வையில் யோகம் இலங்க
எழில்முகம் தன்னில் கருணை விளங்க வருந்தும் உயிர்பால் மனம் மிக உருக
வளரொளி பொழியும் தூய்மையின் விளக்காய் பெருங்கொடை வழங்கும், திருவுடை வடிவாய்
பேருல குயிர் நலம் கருதி வந்துற்றுப் பரமஹம்சரின் நினைவிலே இன்பம்
பருகிய தாயை வணங்கிடுவோமே
சிவதொண்
சமயப் பிரசாரத்திலும் சமூகப் பணிகளிலும் ஈடுபடவும், ம ஏற்படுவதைத் தடுத்துநிறுத்திப்பணியாற்றும் நோக்குடனும் அகி அணி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் அவ்வப்போது கூட்டமொன்று இம்மாதம் (மார்ச்) 3ம் திகதிஞாயிற்றுக்கிழமை,ப மாமன்றத்தின் பிரதித் தலைவர் திரு. மா. தவயோக இராஜபுவனிஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்,திருமதி வசந்தா வைத் அம்மையார் உட்பட பலர் உரையாற்றினார்கள்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மன்றங்களின சைவத் தொண்டர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தன கொழும்பு மாவட்டத்திற்கான சிவதொண்டர் அணியி மாமன்றத் தலைமையகத்தில் நடத்துவதென்று மேற்படி கூட்டத் மாமன்றப் பொதுச்செயலாளர் திரு. கந்தையா நீலகண்ட ܢܠ
இந்து ஒளி ○

நாம் உணர வேண்டியது
பகவான் ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் அன்னை சாரதா ஆகிய மூவரைப்பற்றியும் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானத்திலும், அஞ்ஞானத்திலும் மூழ்கியிருந்த மேற்கத்திய உலகுக்கு மெஞ்ஞான வழியைக் காட்டியவர்கள் நாங்கள். வாழ்க்கை என்பது வெறுமனே உலோகாயதமான செல்வங்களில் தங்கியிருக்கவில்லை. அது நமக்குள்ளே நிறைந்திருக்கின்ற ஆத்மீகத்திலேயே தங்கியிருக்கிறது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள் நாங்கள். போட்டி, பொறாமை புகழ், பணம் இவையெல்லாம் வாழ்க்கை அல்ல. அன்பு, பாசம்,தியாகம் இவையே உண்மையான வாழ்க்கை என்ற உண்மையை உலக மக்களுக்கு எடுத்துக் கூறியவர்கள் நாங்கள்.
இன்று அந்த உண்மையை உணர்ந்து கொண்ட மேல் நாட்டு மக்கள், நாங்கள் காட்டிய ஆத்மீக வழ்க்கையை நோக்கி, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வந்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பூரீராமகிருஷ்ணமிஷன் கிளைகள் ஆல்போல தழைத்து அறுகுபோல் வேரூன்றி உள்ளன. நம்மை விட மேல்நாட்டவர்களே, இன்று பூரீராமகிருஷ்ணமிஷன் நூல்களை அதிகம் படிக்கிறார்கள். இந்தப்பாரிய பணியில் அன்னை சாரதாதேவியின் பங்களிப்பு அளப்பரியது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு முறை மேல் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் போலித்தனமான மார்க்ஸிஸம் பெண்ணியம் போன்ற வேஷங்களை அணிந்து கொண்டு ஆர்ப்பரிப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். நமது பெருமையை நாமே நமது காலின் கீழ் போட்டு மிதிப்பதாகும். எனவே இவ்வாறான அந்நிய மாயைகளை உதறித்தள்ளி விட்டு, அன்னை சாரதா, பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் காட்டிய பாதையில், சுயகெளரவத்துடன் ஏறு நடை போடுவோம்.
ாடர் அணி
க்களிடையே சமய அறிவை வளர்த்து தவறான வழியில் மதமாற்றம் ல இலங்கை இந்துமாமன்றம் ஆரம்பிக்க விருக்கும் சிவதொண்டர் நடைபெற்று வந்துள்ளன. இந்தத் தொடரில் அறிமுக/ தேர்வுக் ாமன்றத் தலைமையகப்பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்றது. ாஜா தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், திரு. க.
தியநாதன், அன்னை ஆதிபராசக்தி இல்லம் திருமதி இராமமூர்த்தி
தும், பாடசாலை இந்து சங்கங்களினதும் பிரதிநிதிகளும், ஏனைய i. ன் முதலாவது பயிற்சிப் பட்டறை, மார்ச் மாதம் 17ம் திகதியன்று தில் தீர்மானிக்கப்பட்டது. -ன் வழங்கிய நன்றியுரையுடன், கூட்டம் நிறைவெய்தியது.
لر
12) விஷ வருடம் தை - பங்குனி

Page 14
sists surfsit buijsur
திரு. கி. புண் B..A., Dip ir
ഴ്സ് சங்கரர் தென்னிந்தியாவில் கேரள நாட்டில் “காலடி” எனும் ஊரில் கி. பி. 788 இல் நம்பூதிரிப் பிராமண குலத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சிவகுரு. தாயின் பெயர் விஷிஷ்டா (ஆரியாம்பாள்). இவர் தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார். சங்கரருக்கு எட்டாவது வயதில் உபநயனம் நடைபெற்றது. பதினாறு வயதிற்குள் சகல கலைகளையும் கற்று ஆறு தரிசனங்களிலும் வல்லவரானார். நர்மதை நதிக்கரையில் கெளடபாதரின் சீடரான கோவிந்த பகவத் பாதரைச் சந்தித்து அவருடைய சீடரானார். குருவின் உத்தரவுப்படி வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதினார்.
இமயம் முதல் கன்னியாகுமரிவரை; காஷ்மீர் முதல் காமரூபம் வரை கால்நடையாகவே யாத்திரை மேற்கொண்டார். வாதத்தில் எதிரிகளை வென்று தர்மக் கொடியை நிலைநாட்டினார். பூர்வ மீமாம்சக மதத் தலைவரான குமாரிலபட்டரின் சீடரான மண்டன மிரரரையும் அவர் மனைவி உபயபாரதியையும் வாதில் வென்று மண்டன மிசிரரைத் தன் சீடராக்கினார். சங்கரருடன் எதிர்வாதம் புரிந்தவர்களில் பலர் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் எல்லோரும் பின்னர் சங்கரரையே பின்பற்றலாயினர். சங்கரர் மறைமுக பெளத்தர் எனவும் அழைக்கப்பட்டார்.
அத்வைத வேதாந்தக் கொள்கைக்கு நிலையான அத்திவாரமிட்டபின் சங்கரர் பாரதத்தின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார். அவையாவன:-
திசை மடம் தலைவர் வேதம் 2ufl-503I
வாக்கியம் 1வடக்கு ஜோதிர்மடம் தோடகர் அதவர்வம் அயம்,ஆத்மா,பிரமம்
இந்த ஆத்மாவே
பிரமம் மாண்டுக்கியம் 2 தெற்கு சிருங்கேரி சுரேசுவரர் இருக்கு பிரக்ஞானம்
ஞானமயம்பிரமம் ஐதநேயம் 3. கிழக்கு கோவர்தன பத்மபாதர் யசுர் அகம்பிரமாஸ்மி
LDLih நான்பிரம்மாய்
{ခြွအပေါ်
பிருஹதாரணியம் 4 மேற்கு துவாரகாமடம் ஹஸ்தாமலகர் சாமம் தத்துவமஸி
அதுநீயாகிறாய் |醬}
இந்து ஒளி ... . . . . <

Buh, BFTSGEOGOTERĮsttid
ணியமூர்த்தி Edu, M.Ed.
சங்கரரின் சிஷ்ய பரம்பரை “தசநாமிகம்” எனப் பத்து வகைப்படும். அவர்களுக்கு கிரி, பூரி, பாரதி, ஸரஸ்வதி, தீர்த்த, ஆச்ரம், வன, அரண்ய, பர்வத, ஸாகர எனப்பட்டப் பெயர்கள் உண்டு.
சங்கரர் இயற்றிய நூல்கள்
சங்கரரின் நூல்கள் பிரகரணக் கிரந்தங்கள் எனப்படும். அவையாவன:
1. விவேகசூடாமணி
2. அபரேசுஷானுபூதி
3. தட்சணாமூர்த்தி தோத்திரம்
4. ஆனந்தலகரி
5. செளந்தரியலகளி
6. ஆரியாசதகம்
7. பஜகோவிந்தம்
8. விவேக சூடாமணி
9. உபதேச சாயஸ்ரி
10. சிவானந்தலகரி
இவற்றுடன் அன்ன பூர்ணாஸ் தோத்திரம், சிவநாமாவளி,
லக்ஷ்மி நரசிம்மஸ்தோத்திரம், காலபைரவ அஷ்டகம், மநீஷா
பஞ்சகம், மாத்ருகா பஞ்சகம், சுப்பிரமணிய புஜங்கம்,
கனகநாஸ்தவம் வேதசார சிவஸ்தம், ஆத்மபோதம், விஷ்ணுசகஸ்ர
நாம பாஷியம்,உபதேசஸாஹஸ்ரீ, ஹஸ்தமலகிய பாஷ்யம் என்பன
போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
உரைகள்
ஈச, கேன, கட, பிரஸ்ன, முண்டக, மாண்டுக்ய, ஐதரேய, தைத்திரீய, பிருகதாரணியக சாந்தோக்கிய ஆகிய தசோபநிடதங்களுடன் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை என்பவற்றிற்கும் உரை எழுதியுள்ளார். அற்புதங்கள்
லட்சுமி தேவியை நோக்கி கனகதாராஸ்தோத்திரம் பாடிதங்க நெல்லிக்கனி மழை பொழியச் செய்தமை. ஊமைச் சிறுவனைப் பேசச் செய்தமை. பூர்ணா நதியைத் திசைமாறி ஓடச்செய்தமை, ஓர் இளைஞனின் தொழுநோயைக் குணப்படுத்தியமை தாய்க்கு விஷ்ணு தரிசனம் கிடைக்கச் செய்தமை. தாயின் தகனக்கிரியைகளுக்காகத் தனது வலது கையிலிருந்து அக்கினியை உருவாக்கித் தகனக் கிரியைகளை முடித்தமை. கேதாரத்தில் தனது சீடர்களுக்காக வெந்நீரூற்று உருவாக்கியமை. சமயச் சீர்த்திருத்தங்கள்
பூரீசங்கரர் வாழ்ந்த காலத்தில் வைதீக சமயிகளிடையே பல பிரிவுகள் காணப்பட்டன. சமயப்பிரிவுகள் காரணமாக வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. இவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் எனும் முயற்சியில் சங்கரர் ஈடுபட்டார்.
3) விஷ"வருடம் தை-பங்குனி )

Page 15
வைதீக சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமயங்கள் தோற்றத்தில் வேறுபட்டாலும் கருத்து நிலையில் ஒன்று எனும் பரஸ்பரத் தொடர்பினை நிலை நாட்டினார். இந்து சமய மரபில் சமய நெறிகளின் ஆதாரம் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர் சங்கரரே எனலாம். இவர் தனது சீர்திருத்தங்களுக்கு உபநிடதங்களையே அடிப்படையாகக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமய சீர்திருத்தங்களைத் தனது அத்வைதக் கோட்பாட்டினூடாகவே மேற்கொண்டார்.
இவர் சமயம், சமுதாயம் என்பவற்றை முழுமை நோக்கில் சிந்தித்தவராவார். அறுவகைச் சமயப் பிரிவுகளையும் தோற்றுவித்ததால் இவர் சண்மதப் பிரதிஸ்தாபகர் என அழைக்கப்படுகிறார். சிவன், அம்மன், விஷ்ணு, சுப்பிரமணியர் முதலியோரைப் பற்றி இவர் பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்கள் சமயங்களைக் குறித்துப் பரந்த நோக்கில் பிரதிபலிக்கின்றன எனலாம்.
சங்கரர் அடிப்படையில் ஒரு வைதிக சாத்திர விற்பன்னராகவும், விமர்சகராகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கையும் சாதனைகளும் எடுத்துக்காட்டவே அமைகின்றன.
இவருக்கு முன்பு வேறு எவரும் அடிப்படை நூல்களை ஆதாரமாக மிக வலிமையோடு வற்புறுத்தவில்லை. வேதமென்பது உபநிடதம் என்றே அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை அவர் இந்து சமய சிந்தனைகளுக்கும், தத்துவத்திற்கும் கருவூலமாகக் கொண்டார். இவருக்கு வேள்வி, சடங்கு, கிரியைகளில் பிரியமிருந்ததாகக் கருத முடியவில்லை. இவர் தசோபநிடதங்கள் பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியவற்றிற்கு எழுதிய உரைகள் சிறப்பானவை. ஞானமார்க்கமே மேலானது என்பது இவரது கொள்கையாகும்.
/
ଓଗg; வெளியீட்
மாமன்றத்தின் காலாண்டிதழான இந்து ஒளி ஆறாவது ஆண்டு சிறப்பு மலரும், இந்து மக்களுக்கு ஒரு கையேடு என்ற நூலும் கடந்த டிசெம்பர் 16ம் திகதியன்று மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்த வைபவத்தில் கொழும்பு பூரீ பொன்னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தான பிரதம குரு சிவபூரீ சி.குஞ்சிதபாதக்குருக்கள் ஆசியுரை வழங்கினார். அவர் தமது உரையில், இலங்கையிலுள்ள இந்து மக்களுக்கு பலவகையிலும் உதவிவரும் அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிடும் இந்து ஒளி சஞ்சிகை மாணவர்களுக்கு மட்டுமல்ல ஏனையவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அதைவிட, பலவித விஷயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாகக் கையேடு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. இதுதவிர, வறுமை நிலையிலுள்ள மாணவர்களுக்கான விடுதியும், விரைவில் ஆரம்பமாகவிருக்கும் வயோதிபர்களுக்கான ப்ராமரிப்பு விடுதியும் மாமன்றத்தின் அரும்பணிகள் என்பதுடன், இத்தகைய சேவை மேலும் சிறப்பர்க விருத்தியடைய வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி வெளியீட்டு வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட உயர்நீதிமன்ற நீதியரச கெளரவ சி. வி. விக்னேஸ்வரன் பேசும்போது இந்தக் கையேடு சைவ வினாவிடை போலல்லாது, கேள்விகள் கேட்காமலேயே எங்கள் உள்ளக் கிடக்கைகளை அறிந்து விடயங்களை முன்வைத்துள்ளது. இந்து சமயத்தின் பலவித சடங்குகள், சம்பிரதாயங்கள், அனுட்டானங்கள் போன்ற விடயங்களுடன் அதன் \தாற்பரியங்களும் அழகுற வெளிபடுத்தப்பட்டுள்ளன.
இந்து ஒளி မ္ပိ မွို : て

இந்து சமய மறுமலர்ச்சி
பூரீ சங்கரர் தனது பாண்டித்தியத்தினாலும், வாதத் திறமையினாலும் சமய வாதங்கள் புரிந்து வேதாந்தக் கோட்பாடுகளை விளங்கச் செய்தார். அத்துடன் பிறரையும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். பெளத்தம் இவரது கோட்பாட்டாலும் செயற்பாடுகளாலும் பெரிதும் நலிவுற்றது. எனினும் அவருடைய சிந்தனைகள் வைதீகத்தை மட்டும் பின்னணியாகக் கொண்டமையாது சமகாலத்தில் பெளத்தசமயக் கோட்பாடுகளையும் தனது கருத்துக்களுக்குப் பயன்படுத்தினார். இரு சமய நெறிகளையும் கடந்த ஒரு பொது நிலையையும் உருவாக்கினார். இந்து சமய தத்துவ நூல்களையும் இவர் தோற்றுவித்தாார்.
பரதகண்டத்தில் இந்து சமயத்தைப் புனருத்தாரணம் செய்தவர் இவரேயாவார். இவர் காலத்தில் மகாயான பெளத்தம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றதோடு வட இந்தியாவில் சில பகுதிகளில் சமணமும் மேலோங்கியிருந்தது. பொது வழக்கில் பெளத்தம், இந்து சமயம் போன்றவை பரஸ்பர செல்வாக்கினால் கலப்புறத் தொடங்கிய போதும் பிரசார அடிப்படையில் தகராறுகள் கூர்மை பெற்றன. பெளத்தர்களின் சூனியவாதக் கோட்பாட்டை எதிர் கொள்வதும், மறுப்பதும் சங்கரரின் பொறுப்பாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் பிரமத்தின் நிலைபேறான தன்மையினைப் புதிய வழியில் வலியுறுத்தினார்.
இவர் தமது சீர்த்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதற்குப் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் யாத்திரை செய்து புறச்சமய வாதிகளை வாதில் வென்று மடங்களை அமைத்தார். பெளத்த சங்கத்தைப்பின்பற்றித்துறவிகளின் சங்கங்களை நிறுவனரீதியாக அமைத்த சிறப்பு இந்து சமய வரலாற்றில் இருவருக்கே உரியது.
N
OG GOD@011 1@11D
சைவச் சூழலில் வளர்ந்த இந்து சமயிகள் சாதாரணமாகவே சமய அனுட்டானங்கள், சடங்குகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வித்தியாசமான வேற்று சூழலில் வாழுகின்ற சைவசமயிகள் அவற்றைக் கற்றே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கையேடு எதிர்மாறான சூழ்நிலைகளினால் ஏற்பட்ட சமய அறிவுசார் குறைபாட்டை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. இந்துக்கள் தம் வாழ்க்கையில் முகம் கொடுக்கும் பல விஷயங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும் இந்நூல், ஒவ்வொருவரினதும் கையில் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று
அறிமுக உரை நிகழ்த்திய கம்பவாரிதி இ. ஜெயராஜ் மிகவும் பரந்து விரிந்த இந்து மதம் ஆழமான சிந்தனையாளர்களால் கட்டியெழுப்பப்பட்டது. அத்தகைய இந்து மதத்தின் கிரியைகளைப் பற்றிய பொதுவிளக்கம் இந்த நூலில் காணப்படுகிறது. உலகம் குழம்பிப் போயிருக்கும் இவ்வேளையில் இந்து சமயம் அனாதையில்லை என்பதைச் சொல்வதற்கு இருக்கக்கூடிய ஒன்றுதான் இந்து மாமன்றம் என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வெளியாகிய இந்துஒளி சஞ்சிகைகளைப் பற்றிய ஆய்வுரைகளை திருமதி வசந்தா வைத்தியநாதன், பேராதனை பல்கலைக்கழக கலைப்பிரிவுவிரிவுரையாளர் பேராசிரியர்வை.நந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
கையேட்டின் அடுத்த பதிப்பு விளக்கப் படங்களுடன் மேலும் திருத்தியமைக்கப்பட்டு வெளியாகும் என்பதுடன், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் வெளிவரவிருப்பதாகவும் நன்றியுரை வழங்கிய மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் கூறினார். ノ
14) ်း விஷ வருடம் தை - பங்குனி

Page 16
சைவசித்தாந்த அ
திருமதி உ.
யா/ கோப்பாய் 8
சிைவசித்தாந்தம் என்பது சைவத்தின் முடிந்த முடியாக உள்ள கொள்கை ஆகும். இவ் சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் எனும் முப்பொருளுண்மை பற்றிக் கூறுகிறது. பதி என்பது இறைவனையும், பசு என்பது ஆன்மாவையும், பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் உலகத்தையும் குறித்துநிற்கிறது. இவ் முப்பொருளுண்மைபற்றிய கருத்துக்களை மெய்கண்ட சாத்திரங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. ቌ
இவ் மெய்கண்ட சாத்திரங்கள் முப்பொருளுண்மையை விளக்குவதற்கு, காட்சி அளவை, அனுமானம், ஆப்தவாக்கியம் என்ற மூன்றுவகை அளவைப் பிரமாணங்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றுள் ஆப்தவாக்கியத்திற்கே மிக முக்கியம் கொடுக்கின்றன. எனவே ஆப்தவாக்கியத்தை சுருதிப்பிரமாணம், ஆகமபிரமாணம் எனவும் அழைப்பர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சைவ சித்தாந்தம் பதியின் உண்மையை விளக்குகின்றது.
சைவசித்தாந்தம் கூறும் பதிபற்றிய கருத்துக்களை இரு வகையாக நோக்கலாம். அவை பதியின் உண்மைத் தன்மை, பதியின் இலக்கணம், இயல்பு என்பனவாகும். சைவ சித்தாந்தம் வேதாகமங்களை ஆப்தவாக்கியங்களாகக் கொண்டு கடவுள் என ஒருபொருள் உண்டு எனக் கூறி அதனைப் பதி என்று அழைக்கின்றது. இப்பதியின் உண்மையைச் சைவசித்தாந்தம் நிரூபிக்கும் போது உலகின் உண்மையைக் கொண்டு அதனைப் படைத்தவனும் ஒருவன் உளன் எனக் கூறுகின்றது. ஒரு பானையைக் கொண்டு அதனை வனைந்த குயவனும் ஒருவன் இருக்க வேண்டுமென்பதை அனுமானித்து அறிந்து கொள்கிறோம். இது போல உலகத்தைக் கொண்டு அதனைப் படைத்தவனும் ஒருவன் இருக்கவேண்டும் என்பதை ஊகித்து அறிந்து கொள்ளலாம். அவ்வாறு உலகின் தோற்றத்திற்கு இறைவனே நிமிந்த காரணன் எனக்கூறி இறைவன் உண்மை விளக்கப்படுகிறது. ஒரு காரிய நிகழ்ச்சிக்கு வேண்டப்படும் காரணங்கள் மூன்றாகும். மண்ணில் இருந்து பானை தோன்றுகிறது. எனவே பானைக்கு முதற்காரணம் மண், திரிகை நுளைக்காரணம், குயவன் நிமித்த காரணம். இதே போன்று மாயையில் இருந்து உலகை இறைவன் தனது சக்தியின் துணைக்கொண்டு தோற்றுவிக்கிறான். எனவே உலகின் தோற்றத்துக்கு முதற்காரணம் மாயை, சக்தி நுளைக்காரணம், இறைவன் நிமித்த காரணம் என அறியலாம். இவ்வாறு சைவசித்தாந்தம் உலகின் உண்மையைக் கொண்டு அதனைப் படைத்தவனும் உளன் என நிரூபிக்கிறது.
இந்து ஒளி . . . . . . . . ○

ாத்திரங்களில் பதி
ரேந்திரகுமார் றிஸ்தவக் கல்லூரி
இறைவனது உலகப் படைப்பின் நோக்கத்தை அவதானித்தால் ஆன்மாக்கள் அநாதியாகவே மலங்களினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆன்மாக்கள் அறியாமைக்குட்பட்டுக் கன்மங்களைச் செய்து மீண்டும் மீண்டும் பிறவிக்குட்படுகின்றன. அப்பிறவியினின்றும் விடுபட்டு இறைவனோடு இரண்டறக் கலப்பதே ஆன்மாவின் இலட்சியமாகும். ஆன்மாக்கள் இத்தகைய இலட்சியத்தை அடைவதற்காகவே இறைவன் ஒரு ஆன்மா செய்த கன்மத்தை அந்த ஆன்மாவிடம் சேர்ப்பித்து பிறவியைக் கொடுக்கிறான். எனவே ஒரு ஆன்மா செய்த கன்மத்தை அந்த ஆன்மாவிடமே சேர்ப்பிப்பதற்கு அறிவுடைய ஒருவன் வேண்டும். அவனே இறைவன் எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. இவ் இறைவனின் உண்மையை சிவஞான போதகம்
“அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையில் தேற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என் மனார் புலவர் “
அவன் அவள் அது என்று சுட்டிக் கூறப்படும் உலகம் தோன்றுதல், நிலைபெறுதல், ஒடுங்குதல் என்று மூன்று தொழில்களை உடைமையினால் ஒருவனால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருளேயாகும். இவ்வுலகம் கடவுளிடத்தில் ஒடுங்கி மீண்டும் தோன்றுவதாகக் கூறப்படுகிறது. ஒழுக்கத்தைச் செய்யும் கடவுளே முதற்கடவுள் என்று அறிஞர்கள் கூறுவர்.
அடுத்து பதியின் இயல்புகளை ஆராய்ந்தால் தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல்,இயற்கையுணர்வினாதல் முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், பேரருளுடமை, முடிவிலாற்றலுடமை, வரம்பிவின்பமுடமை ஆகிய எட்டுக் குணங்களையும் கூறலாம். இவற்றை சத் சித் ஆனந்தம் என்ற மூன்று இயல்புகளாகச் சுருக்கிக் கூறலாம். சத்' என்றால் உள்பொருள் எனவும், சித் என்றால் அறிவுள்ள பொருள் எனவும் அதனியல்பு ஆனந்தமயமானது எனவும் கூறலாம்.
பதிக்கு சைவசித்தாந்தம் சொரூபம், தடந்தம் என்ற இருநிலைகள் கொடுக்கின்றது. சொரூபம் என்றால் குணம் குறிகளுக்கு அப்பாற்படும் நிலை, மனம் வாக்குக்கு எட்டாத நிலையாகும். தடத்த நிலை என்றால் குணம் குறிகளோடு கூடியநிலையாகும். சொரூப நிலையிலுள்ள இறைவன் தடத்த நிலைக்கு வந்து உருவத்திருமேனி எடுத்து படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் என்று ஐந்தொழில்களைப் புரிந்து ஆன்மாக்களுக்குப்பாசங்களினின்றும் விடுவித்து மோட்சத்தைக் கொடுப்பதாகச் சைவசித்தாந்தம் கூறுகிறது.
15) விஷ" வருடம் தை- பங்குனி)

Page 17
மனிதப் பிறவியும்
சைவப் புலவ
இராசைய
'அரிது அரிதுமானிடராய்ப்பிறத்தல் அரிது’ என்பது முது தமிழ்ப்புலவர் ஒளவையின் வாக்கு. கிடைத்தற்கரிய பிறவியாகிய மனிதப்பிறவி எடுத்த நாம் அதன் மகத்துவத்தையும் புனிதத்தையும் மதித்துப் பேணுவது முக்கியம்.
மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். நினைக்கும் கருவி மனம், மனத்தை உடையவன் மனிதன். தமிழில் மனிதன், வடமொழியில் மநுஜா, ஆங்கிலத்தில் Man. இவை அனைத்தும் மன் என்ற பகுதியடியாகவே பிறந்தவை. இப்பரந்த நிலவுலகின் கண்ணே ஏகப்பட்ட ஜீவராசிகள் பிறந்திறந்து உழல்கின்றன. ஆறறிவு படைத்த இந்த மனிதன் ஒருவன் தான் தன் நிலையை உணர்ந்து வீடு பேறடைய முயற்சிக்கும் வல்லமை பொருந்தியவனாகத் திகழ்கின்றான். மனிதனாகப் பிறந்தவரெல்லோரும் உண்மையில் மனிதனாகி விட முடியாது. உணவைப்பற்றியோ உறக்கத்தைப்பற்றியோ வேறு மற்ற உலகப் பொருள்களைப் பற்றியோ சதா நினைத்துக் கொண்டிருப்பவன் மனிதனல்லன். உண்பது, உறங்குவது, மக்களைப் பெறுவது, உலாவுவதுமுதலியயாவும் விலங்குகளுக்கும் மனிதனுக்கும் பொது.
விலங்குகளும் உண்கின்றன. நாமும் உண்கின்றோம். விலங்குகளும் குட்டிகளைப் பெறுகின்றன. நாங்களும் குழந்தைகளைப் பெறுகின்றோம். ஆகவே விலங்குகளைவிட நாம் எந்த வகையில் மேலானவர்கள்? இந்தக் கேள்விக்கு விடை என்ன?
நான் யார்? என் உள்ளம் யார்?நான் எங்கிருந்துவந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? இந்த உடம்பு தானே வந்ததா? ஒருவன் கொடுத்து வந்ததா? தந்தவன் தனக்காகத் தந்தானா? எனக்காகத் தந்தானா? நான் எங்கே போக வேண்டும்? இந்த உடலைத் தந்த அந்த ஒருவன் யார்? அவன் பெயர் என்ன? அவனை அடையும் வழிதான் எது?
இத்தனை வினாக்களுக்கும் இற்றைவரை பதில் கண்டிருக்கிறோமா? இது பற்றிச் சிந்தித்து விடைகான முற்படுபவனே உலகில் மனிதன். இல்லையேல் சாதாரண விலங்குதான்.
மக்களை மக்களாக வாழவைப்பது அன்பும் அறிவு மேலாம். சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்ட மனிதன் தீயவழியில் செல்வதை எண்ணும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது. நல்லவற்றைச் சிந்தித்து நல்லதையே செய்து இறைவன் திருப்பாதத்தைச் சென்றடைய நாம் முயற்சிக்க வேண்டும். அதற்கான வழிவகைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.
ஒரு கிராமத்துக்கும் மறு கிராமத்துக்கும் என்ன வேற்றுமை? நடுவில் ஒர் எல்லைக்கல். அதுவே இரண்டு கிராமத்தையும் பிரிக்கின்றது. அதேபோல மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஓர் எல்லைக்கல் உண்டு. அதுவே கடவுள்
இந்து ஒளி エ

வேண்டுவதே .
ர் கவிமணி, ா பூரீதரன்
நினைவு. கடவுள் நினைவு இல்லையேல் அவன் எத்துணை பெரிய அறிஞனாயினும் விலங்குதான்.
“கண்ணாவா ரேனுமுனைக் கைதொழாராயின் அந்த மண்ணாவார்நட்பை மதியேன்பராபரமே என்கிறார் தாயுமானவர். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” யாரும் முதலில் பற்று விலக வேண்டும். பற்று விலகினால் பரகதி பெறலாம். ஆண்டவன் நினைப்பு வரவேண்டும். அப்போதுதான் ஆணவமுனைப்பு எம்மை விட்டு நீங்கும். மனிதன் மனிதனாக வாழவேண்டும்.
“மனிதர் காளிங்கே வம் மொன்று சொல்லுகேன் கணிதந்தாற்கனி உண்ணவும் வல்லிரோ புனிதன் பொற்கழல் ஈசனெனும் கனி இனிது சாலவு மேசற்றவர்கட்கே” என்றபடி மனிதன் இறைவனை அடைவதற்கு முயலவேண்டும். நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். பொன்னையும் பொருளையும் வீட்டையும் மாட்டையும் பட்டத்தையும் பதவியையும் நினைத்து வீணே மடிந்து விடக்கூடாது. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?, எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' என்ற வரிகள் ஈண்டு நோக்கத்தக்கன.
“இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும் காணப்பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று தேவாரத்திலே வருகின்றது. ஆகவே இறைவனுடைய பேரழகைக் காண்பதற்கு மனிதப் பிறவி அவசியமாகின்றது. ஆனால் அருணகிரிநாதர், “நாலாயிரம் கண்படைத்திலனே அந்த நான்முகனே" என்கின்றார். எப்படிப் பார்த்தாலும் மனிதப் பிறவி மாண்பு மிக்கதே என்பது தெற்றெனத் தெளிவாகின்றது.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை ஏத்தி ஏத்தித் துதிக்க வேண்டியது நமது தலையாய கடனாகும். இறைவன் படைத்ததே அவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாகும்.
எனவே மனிதப் பிறவி எடுத்த நாம் அதன் மகத்துவத்தை உணர்ந்து, மாண்பினை மதித்து இறைதொண்டின் மூலம் அவனை அடைவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுதல் தக்கது.
“நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்றபடி நான் மறந்தாலும் நாக்கு மறக்காது என்கிறார் நாயனார்.
“புண்ணியமாம் பாவம் போம் போனநாள் செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்” ஆகவே, நாம் நாம் செய்த வினை நாமே அனுபவிக்க வேண்டும். யாரும் இந்த நியதியிலிருந்து எள்ளளவேனும் தப்பமுடியாது. யோகர் சுவாமிகள் சொன்னதுபோல்"இது எப்பவோ முடிந்த காரியம்” “ஒரு பொல்லாப்புமில்லை” என்ற மகாவாக்கியங்கள் ஆழ்ந்த பட்டறிவினால் வெளிப்பட்டவை.
6> விஷ வருடம் தை-பங்குனி )

Page 18
மனிதன் முதலில் மனிதனாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் உயர்திணையில் வைத்து எண்ணப்படுவான். நாங்கள் எவ்வளவுதூரம் நல்லனவற்றைச் சிந்தித்து, நல்லனவற்றைச் செய்து, நல்லனவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல எமதுவாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்கின்றோமோ அவ்வளவுதூரம் நாம் இறைவனுக்குக் கிட்டப் போனவர்களாவோம். நாம் இறைவனை நோக்கிப்பத்தடி போனால் அவன் நம்மை நோக்கி நூறடி வைப்பான்.
குறுகிய மனப்பான்மையை விடுத்துப் பரந்த நோக்குடன் பரந்தமனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரேவழி நாம பஜனையே. இறை நாமத்தைச் சொல்லச் சொல்ல நமது உள்ளம் தூய்மையடையும்.
ஒரு கையினால் ஓசை எழுப்பமுடியாது. இரண்டு கைகளும் சேர்ந்தால்தான் ஒசை எழுப்பமுடியும். கூட்டுப்பிரார்த்தனையின் மூலம் நாம் அருஞ் சாதனை புரியலாம். ழரீராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் தியானத்தின் மூலம் இறைவனைக் கண்டவர்கள்.
/
திருக்கேதீச்சரத்தில்
இலங்கையின் வரலாற்றுப் பெருமையுள்ளதும், தே திருத்தலங்களுள் ஒன்றுதான் திருக்கேதீச்சரம்.
இலங்கையின் வடபகுதியில், மன்னார் மாவட்டத்தின் கொண்டு எழுந்தருளியிருக்கும் கேதாரநாதரை மூலமூர்த்தி இடைவெளிக்குப் பின்னர் மகா சிவராத்திரி விழா இம் பாகங்களிலுமிருந்து ஏராளமானஅடியார்கள் விழாவில் கல
நாட்டின் கடந்தகால சூழ்நிலைகளினால் பூஜைகள் அண்மைக் காலமாக செய்யப்பட்டுவரும் புனர்நிர்மாண வேை காலம் செல்லும் என்பதால், இங்குள்ள பிள்ளையார் கோவி நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையினரின் சிவராத்திரி மட பரிபாலன சபையும் (மன்னர் கச்சேரி அடியார்களுக்கு அன்னதானமும் தாக சாந்தியும் அளிக்க
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சும் இந்து ஆலய நிகழ்வுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பும் உதவி ஆலயத்தில்12ம் திகதி காலை 6.00 மணிக்கு இடம்டெ 7.30க்கு நடைபெறும் காலைப்பூசையுடன் ஆரம்பமாகும் சிவ தொடர்ந்து காலை 6.00 மணிக்கு அடியார்கள் பாலாவியில்
அன்றைய சிறப்பு நிகழ்ச்சிகளாக கானவாருதி மு. குழுவினரின் நாதஸ்வர தவில் இசைவிருந்து, மன்னார் சி வழங்கும் திருமுறைப் பண்ணிசை, பஞ்சபுராணம், திருப்ப நடராசா குழுவினர், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தின ஒதுவார் பண்டிதர் ஆ கனகசபை வழங்கும் திருக்கேதீச்சா முந்நாள் முதல்வர் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்களி திருக்கேதீச்சர ஆலய சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி நிலையங்களுடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமு
இந்து ஒளி ○

ஐம்புலன்களையும் அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிப்பதன் மூலமும் கடவுளைக் காணலாம்.
கூடியவரை நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருக்க வேண்டும். அதுவே பெரிய தொண்டாகும். நாவுக்கரசர் பெருமான் எமது ஒவ்வோர் அவயவங்களுக்கும் வேலை கொடுக்கின்றார் திருவங்கமாலைப் பதிகம் மூலம் நமக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள். அவர்களைப்பின் தொடர்ந்து நாமும் நன்னெறியில் வாழத் தலைப்பட்டோமேயானால் நாம் புனிதர்களாவோம். "குறிக்கோள் இல்லாது கெட்டேனே" என்று அங்கலாய்க்கிறார் அப்பரடிகள். வாழ்க்கையில் இலட்சியம் இருக்க வேண்டும், நோக்கம் இருக்க வேண்டும்.
எனவே இனியாவது, நம்மை நல்லவழியில் இட்டுச் சென்று சிவபெருமானின் பாத கமலங்களைப் பணிந்து நற்கதி அடைய முயற்சிகள் எடுத்து வாழ்வில் உதாரண புருஷர்களாகத் திகழ வழி சமைத்து இலட்சிய நோக்கோடு வாழத் தலைப்படுவோமாக.
ཡོད
வாரத் திருப்பதிகங்களில் சிறப்பித்துப் பாடப்பெற்றதுமான
) flourishfl 65) giT
மாந்தை என்ற சிற்றுாரில் பாலாவிதீர்த்தக் கரையிலே கோயில் தியாகக் கொண்ட திருக்கேதீச்சர திருத்தலத்தில் நீண்ட கால முறை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல ந்து கொள்ள வருகை தருகிறார்கள்.
எதுவுமின்றி பழுதடைந்த நிலையிலிருந்த இந்த ஆலயத்தில், லகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் செய்யப்படுவதற்கு சிறிது லிலேயே திருத்தம் செய்யப்பட்டு இம்முறை சிவராத்திரி சிறப்பு
ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் சிவராத்திரி விழாவில் மகா ), கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்களும் இணைந்து சிறப்பான ஒழுங்குகள் செய்துள்ளனர்.
சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் திருக்கேதீச்சர பும் அளித்து வருவதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. றவிருக்கும் கும்ப பூசை, அபிஷேகத்தைத் தொடர்ந்து காலை ராத்திரி சிறப்பு நிகழ்வுகள் மறுநாள் காலைசந்திப்பூசையைத் புனித தீர்த்தமாடலுடன் நிறைவுபெறும். பஞ்சாபிகேசன் குழுவினர், கலைமாமணி க. கணேசபிள்ளை த்திவிநாயகர் இந்து தேசியக் கல்லூரி மாணவ மாணவியர் னந்தாள் சோ. முத்துக்கந்தசாமி தேசிகர், அளவெட்டி வ.க. ர் ஆகியோர் வழங்கும் திருமுறைப்பண்ணிசை, திருக்கோயில் த் திருப்பதிகம், திருப்பனந்தாள் K.B.S.S. கலைக்கல்லூரி ன் சொற்பொழிவு என்பன இடம்பெறவிருக்கின்றன. களை இலங்கை வானொலி உட்பட தனியார் வானொலி ம் நேரடியாக அஞ்சல் செய்கின்
நரடி அளுச னறன 一ノ
17) விஷ"வருடம் தை பங்குனி)

Page 19
உலகம் அமைதி
செல்வி க.
இன்றைய வாழ்வில் மக்கள் பற்பல இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் உட்பட்டு அல்லலுறுகின்றனர். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் போதியளவு கிடைக்கப்பெறாமல் பெரும்பாலார் அவதிப்படுகின்றனர். அறிவும் ஆற்றலும் வளம்பெறாமல் துன்பப்படுகின்றனர். இதனால் மக்கள் சமூகத்தில் எண்ணற்ற இடுக்கண்களுக்கு ஏழைஎளிய மனிதர்கள் உட்பட்டுத் தொல்லைப்படுகின்றனர்.
இத்தகைய இன்னல்கள் உலகில் நிலவா வண்ணம் எல்லோரும் இனிது வாழ நம் ஆன்றோர்களான சான்றோர் ஆதியில் ஆன்மீகத் துறையினையும் அறமுறைகளையும் ஏற்படுத்தினர். ஆனால் அவர்கள் அச் சான்றோர்களின் அடிப்படைக் கருத்துக்களையே மறந்து தத்தம் நல வளங்களைப் பெருக்கவே முனைந்துள்ளனர். இதனால் சமூகநல வாழ்வு மேலும் சீரழிந்து வருகின்றது.
ஆண்டவன் படைப்பில் இவ்வவனியில் மக்கள் நலத்திற்கும் வளத்திற்குமாக மண்,நீர், நெருப்பு காற்று,வெளி ஆகியஐம்பெரும் பொருள்கள் சிறக்கக் காண்கிறோம். இவற்றின் இயக்க முறையில் ஏற்படும் கலவையே உலகப் பொருள்களும் பிற சாதனங்களும் ஆகும். இவ் ஐம்பொருள்கள் இன்றி உலகமே இல்லை. இவை யாவும் உலக மக்கள் எல்லோருடைய நலனுக்கும் பொதுவாக அமையப் பெற்றவையாகும். இவற்றில் எதனையும் யாரும் தமக்கென உரிமை கொண்டாடத் தகுதியுடையவரல்லர். ஆனால் இன்று வாழ்வில் அறிவு வளம் பெறாத மக்களுடைய எளிமையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் இவற்றில் சில-பல பொருள்களைத் தமதெனக் கொண்டு அவற்றின் பால் உரிமை கொண்டாடும் கொடுமை நேர்ந்திருக்கின்றது. இதனால் பெரும்பாலார் வாழ்க்கையின் தேவைகளை அடைய முடியாமல் தொல்லைப்படும் அவல நிலையில் வாடுகின்றனர். மோசமாகிய இவ்விழிநிலை ஆண்டவன் திருப்பணியினையே அவமதிப்பதாக இருக்கின்றது. இத்தகைய அடாச் செயலை மாற்றுவது அறிஞர்களின் கடமையல்லவா.
பாரெங்கும் பரந்து வளர்ந்து வரும் இப்பரிதாபப்
போக்கினைச் சீர்செய்யவே அவ்வப்போது பற் பல இயக்கங்கள் தோன்றுகின்றன. அவையும் தம்மாலான பணியைச் செய்து வருகின்றன. ஆனால் அடிப்படையான இவ் ஐம்பொருள்களின் பொதுமையையும் உரிமையையும் பற்றி ஒருவரும் கருதி
வைத்திய க நிை
மாமன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், கொ சங்கத்தினதும் முன்னாள் தலைவருமான அமரர் வைத்திய கலாநி மாதம் 13ம் திகதி காலை மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை
மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமையில் பிரதோஷ சொற்பொழிவுநாயகி, செந்தமிழ்ச் செல்வி (வாரியார் வி எனும் பொருளில் பேருரையாற்றினார். மாமன்றப் பொதுச் செயல
8
مصۂ
C
c

காண வேண்டும்
காந்திமதி
பாடுபட்டோராக இல்லை. ஆகையால் மேலும் மேலும் இந்த அநீதிகள் செழித்து நிலையாக நிலைத்துவிட்டன. இதனடிப்படையில்தான் உலகின் இன்றைய அக்கிரமங்களும் அனர்த்தங்களும் ஏற்பட்டு வளர்ந்து வருகின்றன. இதனை உணராமல் வேறு என்ன முறைகளைக் கொண்டாலும் நாட்டில் அமைதி நிலவாதென்பது உறுதியாகும்.
மக்கள் நலனுக்காக வென்று கற்பிக்கப்பட்ட பணம் ஒரு சில செளகரியத்துக்கு இடமளித்தாலும், அவற்றிற்கான மதிப்பும் மரியாதையும் மற்ற எல்லாவற்றையும் புறமொதுக்கிவிட்டது. பணம் இருந்தால் எதிலும் வெற்றியடையலாம். பணம் பத்தும் செய்யும் என்பதும் பழமொழியல்லவா? ஆகையால் பணம் பெருக்குவதற்காக எந்த இழி தொழிலையும் செய்ய மனிதர்கள் பின் வாங்காநிலை ஏற்பட்டுவிட்டதென்றே கருத வேண்டியுள்ளது. இத்தகைய இழி முறை இந்நாடேயன்றி பிற நாடுகளிலும் இருக்கலாமா? அப்படியானால் அறிஞர்கள் போதனைகளும் கற்பனைக் கருத்தோவியங்களும் எதற்கு? சாத்திர சம்பிரதாயங்களும் ஏன்? விழலுக்கிறைத்தநீர் போல் வீணேயல்லவா இப்படிச் செய்வது. இது
gepasT? Fflur?
ஆகவே மக்கள் சமூகம் மாட்சிமையுற அறிவும் ஆற்றலும்
கொண்டு மிளிர அறிவு மிக்க சான்றோர்களும் மக்கள் நல
வளங்களைப் பெருக்க அமையப் பெற்றுள்ள ஆட்சிப் பொறுப்பினரும் ஆழ்ந்து சிந்தித்து ஆக்க பூர்வமான செயலில் ஈடுபடுமாறு வேண்டுகிறோம். “ஒன்றே செய்ய வேண்டும், அது நன்றே செய்ய வேண்டும், அதனை இன்றே செய்ய வேண்டும்; அதுவும் இப்பொழுதே செய்யவேண்டும்” என்று நம் அறிவுசார்ந்த சான்றோர் வாக்கும் வற்புறுத்துகின்றதன்றே?
சான்றாண்மைக்குதலை சிறந்த இடமாகிய பாரத நாட்டில் இச்சிறந்த நிலையினை உண்டாக்கவே சுவாமி சிவானந்த பரஹம்சரும், வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளாரும், இவர்களுக்கு முன் பற் பல இடங்களிலும் சித்தர் பெருமக்களும் பலர் தோன்றியுள்ளனர். அவர்களுடைய கருத்துக்கள் செயல்பட்டால் இன்று நாடெங்கும் பரவியுள்ள இவ்விழி நிலை நீங்குவதுடன் அமைதியும் ஆற்றலும் பெருக்கும் நிலை அவனியை ஆட்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. அதற்குரிய சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை.
லாநிதி க. வேலாயுதபிள்ளை )ணவுப் பேருரை
ழும்பு விவேகானந்த சபையினதும் இந்து வித்தியா விருத்திச் தி க. வேலாயுதபிள்ளை நினைவுப் பேருரை நிகழ்வுகடந்த ஜனவரி மண்டபத்தில் நடைபெற்றது. ல் நடைபெற்றமேற்படி நிகழ்வில், சொல்லின் செல்வி, இசைக்குயில், ருது)கலாநிதிலட்சுமிராஜரட்ணம் அவர்கள் “மார்கழி மாத மகிமை” ாளர் திரு. கந்தையா நீலகண்டன் நன்றியுரை வழங்கினார்.
18) விஷ வருடம் தை - பங்குனி

Page 20
இது சிறுவர்களுக்கான ஒன்றினை இங்கு தருகி இக்கதையைப் படித்துக்கா
கவானின் பக்த கோடிகளுள் நாரதர் மிகச் சிறந்த பக்தர் இனிய குரலில் பக்திப்பரவசத்தோடு பாடிக்கொண்டும், அதற்கேற்ப அழகிய வீணையை மீட்டிக் கொண்டும் மூவுலகையும் அவர் வலம் வருவார். எல்லோரும் அவரிடம் பக்தியும் அன்பும் காட்டுவார்கள்.
ஒருநாள் 'நாராயண நாராயண' என்று இறைவனுடைய திருநாமத்தை ஒதிக் கொண்டே அவர் வைகுண்டம் சென்றார். விஷ்ணுவும் அவரை வரவேற்று இருக்க இடம் அளித்து உபசரித்தார். பின் நாரதரின் மனப்போக்கை அளவிடக் கருதி, நாரதா, உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறாய். சிறப்பாக ஏதாவது உன் பார்வையில் பட்டதா? என்று கேட்டார். உடனே நாரதர், 'அன்பருக்கு அன்பனே, என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. மக்கள் உலகாயதத்தில் மேலும் மேலும் மூழ்கி வருகிறார்கள். உடலின்பத்தில் மேலும் மேலும் ஆழ்ந்து அழிந்து போகிறார்கள். இப்படியே போனால் ஒருவருக்கும் தங்களை நினைக்கவே நேரமில்லாமலும் போகலாம். இதைப் பற்றித் தாங்கள் ஏதாவது சிந்திக்கத்தான் வேண்டும். இல்லை என்றால் உங்களை மறந்தே போய் விடுவார்கள். "உலகைக் காப்பவன்' என்ற உங்கள் பதவிக்கே கேடு வந்தாலும் வரலாம், என்று பதில் சொன்னார்.
மகாவிஷ்ணு மெளனமாகச் சிரித்தார். ஒவ்வொருவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒளிந்து கிடக்கும் தன்மையை அறிய வல்லவர் பகவான். தம்மை விடவும் பக்தியில் மிஞ்சியவர் யாருமே கிடையாது என்று நாரதர் கர்வம் கொண்டுள்ளார் என்பதும் அதனால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார் என்பதும் பகவானுக்கு நன்கு புரிந்தது. நாரதர் மீது கொண்டுள்ள பேரன்பால் அவரைத் திருத்தி நல்வழிப்படுத்தத் திருவுளம் கொண்டார்.
இந்து ஒளி C
 
 

சிறப்புப் பகுதி, பூநீராம கிருஷ்ணரின் நீதிக்கதை றோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டி அதன் தத்துவத்தை விளக்குவது கடன்.
வனின் நாமம்
எனவே நாரதரிடம், நாரதா, எனது புனித நாமத்தை நீ இடைவிடாது சொல்லி வருகிறாய். அதைக் கேட்டும்கூட மக்களுக்குப் பக்தி உண்டாகவில்லையா? நீ சொல்வதைக் கேட்டும் அவர்கள் அதை திரும்பச் சொல்வதில்லையா? என்று கேட்டார். இந்தக் கேள்வி நாரதரின் அகங்காரத்தை அதிகப் படுத்துவதாயிற்று.
நாரதர், 'சுவாமி, பக்தி என்பது அவ்வளவு சுலபமில்லை. நான் இருபத்து நான்கு மணி நேரமும் உங்கள் திருப்புகழ் பாடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால் சாதாரண மனிதர்களால் அது ஆகக்கூடிய காரியமில்லையே' என்றார். இது நாரதரின் கர்வத்தைப் படம் பிடித்தாற் போன்று காட்டுவது ஆயிற்று.
நாரதருக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்பதை இப்போது பகவான் நிச்சயப்படுத்திக் கொண்டார். அவர் புன்னகையோடு, 'நாரதா, பக்தியில் ஒரு சிலரே உனக்கு இணையாவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சாலக்ராமம் என்ற கிராமத்தில் உள்ள கோவிந்தனை நீ போய்ப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு வேளை அவனிடமிருந்து பக்தியைப் பற்றி இன்னும் அதிகமாக நீ அறிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்' என்று கேட்டுக் கொண்டார்.
நாரதரின் அகங்காரத்திற்கு ஓர் அடி வீழ்ந்தது. யாரது கோவிந்தன்? என்னை விடச் சிறந்த பக்தனாமே? அவனிடமிருந்து பக்தியை நான் அறிந்து கொள்வதாமே? அவனை நிச்சயம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் எண்ணமிட்டவாறே நாரதர் பூமிக்கு வேகமாக வந்து சேர்ந்தார்.

Page 21
பகவான் குறிப்பிட்ட அந்த கிராமத்திற்குச் சென்று கோவிந்தனது இருப்பிடத்தை அடைந்தார் நாரதர் கோவிந்தனோ எளிய குடிசையில் வாழும் ஓர் ஏழைக் குடியானவன். நாரதர் ஒரு மரத்தின் மறைவில் நின்றவாறே அவன் செயல்களை எல்லாம் கவனிக்கத் தொடங்கினார்.
கோவிந்தன் அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து, முகம், கைகால் கழுவி, பகவான் படத்திற்கு முன் நின்றான். 'நாராயண நாராயண நாராயண'என்று உளமுருக மும்முறை சொன்னான். பிறகு கலப்பையை எடுத்துத் தோள்மீது வைத்துக் கொண்டு வயலுக்குப் போனான். அங்குநாள் முழுவதும் உழுதான், நீர் பாய்ச்சினான். மாலை சாய்ந்த போது விடுதிரும்பினான். குளித்துவிட்டுபகவான் படத்தின் முன்மறுபடியும் வந்து நின்றான். 'நாராயண' என்று மும்முறை மனம் கரையச் சொன்னான். உணவு உண்ட பின் குறட்டை விட்டுத் தூங்கினான்.
நாரதர் திகைப்படைந்தார்."இந்தபட்டிக்காட்டு கோவிந்தன் எவ்வாறு என்னைவிடச் சிறந்தவன்? எந்த வகையில் இவன் பக்தனாவான்? ஒருவேளை பகவான் என்னை அலைபவிட்டு வேடிக்கை பார்க்கிறார் போலிருக்கிறது என்று ஏமாற்றமும் கோபமும் நிறைந்தவராக வைகுண்டம் சென்று சேர்ந்தார்.
பகவான் புன்னைகையோடு அவரை வரவேற்று நாாதா, கோவிந்தனைச் சந்தித்தாயா? என்று கேட்டார். நாரதர் துக்கம் நிறைந்த மனத்துடன், "ஆம், கோவிந்தனைப் பார்த்தேன். ஆனால் நீங்கள் விளையாட்டிற்குச் சொல்வதாகச் சொல்லி இருக்கலாமே! அந்தக்கோவிந்தன்தங்கள் பெயரை ஒருநாளைக்கு இருவேளைகள் மட்டுமே சொல்கிறான். நான் இருபத்து நான்கு மணி நேரமும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவனிடமிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள இருக்கிறது? நீங்கள் என்னைக் கோவிந்தனோடு ஒப்பிடுகிறீர்களே என்று வருத்தத்தோடு கேட்டார்.
பகவான் தொடர்ந்து சிரித்துக்கொண்டே"நாரதா, ஒன்று செய்கிறாயா? எண்ணெய் நிரம்பிய ஒரு கிண்ணம் கொண்டுவா என்றார். நாரதரும் அவ்வாறே செய்தார்.
'இப்போது இந்தக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இந்தச் சபையை மும்முறை சுற்றிவா. ஆனால் ஒருதுளி எண்ணெய் கூடக் கீழே சிந்தக்கூடாது என்றார் பகவான்.
இந்து ஒளி C
 

நாரதரும் பகவான் சொன்னபடியே கவனமாகக் கிண்ணத்தைப் பிடித்துக் கொண்டு சபையை மும்முறை சுற்றி முடித்தார். ஒரு துளி எண்ணெய்கூடக் கீழே சிந்தவில்லை.
நாரதர் பெருமையோடு, நான் உங்கள் தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் இதை எதற்குச் செய்யச் சொன்னீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என்று பகவானிடம் வேண்டினார்.
நாாதா, நீ சுற்றிவரும் போது எத்தனை முறை என்னை நினைத்துக் கொண்டாய்? என்று பகவான் கேட்டார்.
நாரதர் பரிதாபமாக,'பிரபோ, என்ன இப்படிக் கேட்கிறீர்கள் கிண்ணத்திலிருந்து எண்ணெய் சிந்தக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கும் போது எப்படி உங்களை நினைக்க முடியும்? என்றார்.
பகவான் பலத்த சிரிப்போடு, குழந்தாய், இந்த எண்ணெய்க் கிண்ணத்தில் உன் எண்ணம் பதிந்ததனாலேயே ஒருமுறை கூட என்னை நினைக்க உனக்கு நேரம் கிடைக்காமல் போயிற்று. ஆனால் கோவிந்தனைப் பார். அவனுக்குக் கவனம் முழுவதும் குடும்பத்தை நடத்திச் செல்வதில் இருந்தாலும், எப்படியோ வேலை ஆரம்பிக்கும் முன்னும், முடிந்த பின்னும் மறவாமல் என்னை நினைக்கிறான். அவ்வளவு உலக காரியத்துக்கு இடையிலும் கூட அவன் என்னை நினைக்கிறான் என்பதுதான் இங்கு நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது என்றார்.
நாரதரின் அகங்காரம் மறைந்தது. இறைவன் தம்மைத் திருத்தி ஆட்கொண்டதை எண்ணிக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பக்தி என்பது கடவுளின் நாமத்தை எத்தனை முறை சொன்னோம் என்பதில் அல்ல. எந்தக் கடினமான சூழ்நிலையிலும் தொடர்ந்து பகவானை நினைக்க முடியுமா? என்பதில் தான் உண்மை பக்தி அடங்கியுள்ளது.
20 D விஷ" வருடம் தை பங்குனி

Page 22
இது மாணவர்களுக்க கதைகள் உட்பட மாண8 இதுபோன்ற விஷயங்க
பெரிய
குங்கிலியக்கலய நாயனார்
சோழ வளநாட்டில் திருக்கடவூர் என்னும் திருத்தலம் ஒன்று உண்டு. அங்கு வேதியர் குலத்தில் குங்கிலியக்கலயனார் என்பவர் தோன்றினார். அவர் காலனைக் காலால் உதைத்துமார்க் கண்டேயனுக்கு அருள் புரிந்த, அமிர்த கடேசராகிய சிவபெருமானுக்கு நாடோறும் குங்கிலியத் தூபம் இடும் திருத் தொண்டில் ஈடுபட்டுவந்தார். ஆதலால், அவரை எல்லோரும் குங்கிலியக்கலயர் என்று அழைத்தனர்.
இவ்வாறு இருக்கும் நாளில் நம் நாயனார் தெய்வச் செயலால் வறுமை அடைந்தார். ஒரு நாள் நாயனாரின் மனைவியார், மக்களும் சுற்றமும்பசியால் வருத்துவதுகண்டு தமது தாலியைக் கழற்றி நாயனாரிடம் கொடுத்து அரிசி முதலியன வாங்கிவருமாறு அனுப்பினார். நாயனார் தெருவில் செல்லும்போது வழியில் ஒரு வணிகர் குங்கிலியப் பொதியைக் கொண்டு வருதலைக் கண்டு மனம் மகிழ்ந்தார். தாம் எடுத்துச் சென்ற தாலியை வணிகரிடம் கொடுத்து அம்மூட்டையை வாங்கிக் கொண்டார். அதனை நேராகத் திருக்கோயில் பண்டாரத்தில் சேர்த்தார். தாமும் வீடு செல்லாமல் அங்கேயே இருந்தார்.
அன்று மனைவியாரும் மக்களும் மிக்க பசியினால் வருந்தி அயர்ந்து தூங்கினர். அந்நிலையில் சிவபெருமான் தமது திருவருளால் அவர்கள் வீடு முழுவதும் நெல்லும் பொன்னும் குவியுமாறு செய்தார். அதனை நாயனாரின் மனைவியாரிடத்துத் தெரிவித்து நாயனாரையும் அசரீரி வாக்கால் அழைத்து, அன்பனே நீ மிகவும் பசித்தாய்; நீ வீடு சென்று பால் உணவு உண்க” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவன் கட்டளைப்படியே நாயனார் வீடு சென்று நெல்லும் பொன்னும் குவிந்திருக்கக் கண்டார்; மனைவியார் வாயிலாகச் செய்தியை உணர்ந்து அச் செல்வங்களை யெல்லாம் சிவனடியார்களுக்கும் கொடுத்துத் தாமும் அனுபவித்து நலமாக வாழ்ந்து வந்தார்.
அக்காலத்தே திருப்பனந்தாளில் சிவலிங்கம் சாய்ந்திருந்தது. யானை, குதிரை முதலியன கட்டி இழுத்தாலும் அது நிமிராதது கண்டு அரசன் கவலை அடைந்தான். அதனைக் கேள்வியுற்ற நாயனார் தமது கழுத்தில் கயிறு கட்டிப்பூட்டி இழுக்க இந்து ஒளி ○
 

ான பக்கம். இதில் சமய வரலாறு மற்றும் புராணக் வர்களுக்குப் பயனுள்ள பல விஷயங்கள் அலங்கரிக்கும். ளை மாணவர்களும் எழுதியனுப்பலாம்.
புராணக் கதைகள்
அச்சிவலிங்கம் நிமிர்ந்தது. நாயனார் அங்குச் சில நாட்கள் தங்கி இருந்து திருக்கடவூர் சென்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரைக் கண்டு அமுது செய்வித்தார். இவ்வாறு பற்பல திருப்பணிகளைப் புரிந்த நாயனார் சில நாட்களுக்குப் பின்னர் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.
மானக்கஞ்சாற நாயனார்
கஞ்சாறுார் என்னும் தலம் சோழ நாட்டில் வளமிக்இ ஒர் ஊராகும். அங்குக் கொம்புத் தேனும் கொழுங்கனிச்ச்ாறும் நிறைந்து விளங்கும். அங்கு வாழ்ந்த மானக்கஞ்சாற நழப்னார்
"பணிவுடைய வடிவுடையார்
பணியினொடும் பனிமதியின் அணிவுடைய சடைமுடியார்க்கு
ஆளாகும் பதம் பெற்ற தணிவில் பெரும் பேறுடையார்
தம்பெருமான் கழல்சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே
ஏவல்செய்யும் தொழில் பூண்டார்” (பனிமதி - குளிர்ச்சி பொருந்திய சந்திரன்; பணி - பாம்பு தணிவில் - குறையாத
அவருக்குச் சிலகாலம் மகப்பேறு இல்லாமல் சிவபெருமான் திருவருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்பெண்குழந்தை வளர்ந்து மணப்பருவம் அடைந்தாள். மானக்கஞ்சாறர் அப்பெண்ணை ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம்புரிவிக்க ஏற்பாடுசெய்திருந்தார். கலிக்காமர் அவளை மணம் புரிந்துகொள்ளக் கஞ்சாறுாருக்குச் செல்ல முயன்றார்.
அவர் செல்வதற்கு முன்னரே சிவபெருமான் மாவிரதியார் வடிவம் கொண்டு மானக்கஞ்சாறர் வீடு சென்று "அங்கு நடக்கும் மங்கல நிகழ்ச்சி யாது?’ என்று வினவினார். நாயனார் தம் மகளுக்குத் திருமணம் என்றார். மாவிரதியார் பெண்ணின் நீண்ட கூந்தலைக் கண்டு. "இப்பெண்ணின் கூந்தல் நமது பஞ்சவடிக்கு உதவும்" என்றார். திருமணமாவதற்கு முன் அடியார் கேட்டதற்கு மனமுவந்துமானக்கஞ்சாறர் அக்கூந்தலை உள்ளன்போடு அரிந்து கொடுத்தார். சிவபெருமான்மாவிரதியார் வடிவத்திலிருந்து மறைந்து உமாதேவியுடன் காளை வாகனத்தின்மேல் காட்சி அளித்தார். 21) விஷ” வருடம் தை - பங்குவி

Page 23
கலிக்காமர் கஞ்சாறுாருக்கு வந்து முண்டிதமான பெண்ணை மணக்க விதியின்மையால் திரும்பமுயல்வதை அறிந்து, "கலிக்காமா, நீவருந்துதல் வேண்டா, இப்பெண்ணிற்குக் கூந்தலை மீளக் கொடுத்தருளுவோம்மணம்செய்துகொள்"என்று திருவாய் மலர்ந்தருளினார். கலிக்காமர் அப்பெண்ணுக்கு மீண்டும் கூந்தல் வளர்ந்தமை கண்டு அவளை மணந்துகொண்டார். பின்னர் சுற்றம்
சூழத்திருமங்கலம் என்னும் தன் திருநகரினை அவர் அடைந்தார்.
அரிவாட்டாய நாயனார்
சோழ நாட்டுக் கணமங்கலம் என்னும் ஊரில் தாயனார் என்னும் சிவனடியார் கற்பிற் சிறந்த தம்மனைவியாருடன் இல்லறம் என்னும் நல்லறம் நடத்தி வந்தார். அவர் தினந்தோறும் சிவபெருமானுக்கு செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் படைத்து வந்தார்.
இவ்வாறு ஒழுகி வரும் நாட்களில் அவர் செல்வம் சுருங்கி வறுமை அடைந்தார். அப்போதும் கூலிக்கு வேலைசெய்து கிடைத்த செந்நெல் அரிசியைச் சிவபெருமானுக்குப் படைத்துத் தாம் கார் அரிசி அன்னம் உண்டு வந்தார்.
இந்நிலைமையை மாற்றுவதற்காக இறைவன் அவ்வூர் வயல்களிலெல்லாம் செந்நெல்லே விளையும்படி திருவுளம் கொண்டார். அதனால் அவருக்குக் கூலியாகக் கிடைத்த செந்நெல் முழுவதையும் இறைவனுக்கே படைத்துவிட்டுத் தாம் தம் மனைவியார் சமைத்துக் கொடுத்த கீரை உணவை உண்டு காலங் கழித்தார். பின்னர் கீரை வகைகளும் குறைந்தன. தாயனார் அப்போதும் விரதத்தைக் கைவிடாமல் நீர் முதலியவைகளை அருந்திப் பசிதீர்த்தார்.
ஒரு நாள் தாயனார் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் தாங்கிச் சிவாலயத்திற்குப் புறப்பட்டார். அவர் மனைவியார் பஞ்சகவ்வியம்தாங்கிப்பின்னேசென்றார். தாயனார் உணவில்லா இளைப்பாலும், அரிசி முதலியவை தாங்கிச் சென்ற தாலும் கால் தள்ளாடிக் கீழே விழுந்தார். அவர் பின்னால் சென்ற மனைவியார் அவரைத் தாங்கிக்கொண்டார். ஆயினும் அவர் கையிலிருந்த பொருள்கள் யாவும் தரையில் நிலவெடிப்பில் சிந்தின. இந்நிகழ்ச்சியால் தாயனார் இனிமேல் கோவிலுக்குப் போவதில் பயனில்லை என்று எண்ணி அரிவாளை எடுத்துக் கழுத்தில் வைத்து ஊட்டியை அறுத்துக் கொள்ளத் தொடங்கினார். அச்செயல் பிறவித் துன்பமாகிய வேரை அறுப்பதுபோல இருந்தது. அதற்குள் சிவபெருமான் நில வெடிப்பிலிருந்து தம் கையை நீட்டித் தாயனார் கையைப் பிடித்துக்கொண்டு மாவடுவைக் கடிக்கும் 'விடேல் விடேல்' என்னும் ஓசையை உண்டாக்கினார். அவ்வோசை கேட்டுத்தாயனார் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார்.
எம்பெருமான் அவரை ‘சிவலோகத்தில் வாழ்ந்திரு’ என்று
இந்து ஒளி C;

திருவருள் புரிந்து மறைந்தார். தாயனார் அறிவாளால் தம் ஊட்டியை அரிந்தமையால் அரிவாட்டாய நாயனார் எனப் பெயர்
பெற்றார்.
ஆனாயநாயனார்
மழநாட்டில் மங்கலலூர் என்னும் திருப்பதியில் ஆயர் குலத் திலகமாய் ஆனாயர் என்னும் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் வேய்ங்குழலில் பஞ்சாட்சரத்தை இசைத்து வருவார். மழைக் காலத்தில் ஒரு நாள் பசுக்காத்தல் பொருட்டு பசுக் கூட்டத்துடன் அவர் காட்டுக்குச் சென்றார். அங்கு மிகுதியாகப் பூத்த கொன்றை மரம் ஒன்றைக் கண்டு அதனடியில் சென்று பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலில் இசைத்தார். அதனால் சராசரங்கள் எல்லாம் இசையில் ஈடுபட்டு மயங்கி நின்றன.
இவ்வாறு சராசரங்கள் இசையில் மயங்கி நின்ற நிலையைச் சேக்கிழார் பெருமானார் சுவைபட,
நலிவாரும் மெலிவாரும்
உணர்வுஒன்றாய்நயத்தலினால் மலிவாய்வெள் எயிற்று அரவம்
மயில்மீது மருண்டுவிழும் சலியாத நிலை அரியும்
தடங்கரியும் உடன்சாரும் புலிவாயின் மருங்கு அணையும்
புல்வாய புல்வாயும்”
“மருவியகால் விசைத்து அசையா
மரங்கள் மலர்ச்சினைசவியா
கருவரைவிழ் அருவிகளும்
கான்யாறும் கலித்துஒடா பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வு ஒழியப் புனல்சோரா இருவிசும்பின் இடைமுழங்கா
எழுகடலும் இடைதுஞம்பா" (எயிற்று - பற்களையுடைய, அரவம்- பாம்பு,அரி- சிங்கம், கரி - யானை, புல்வாய் - மான், கால்- காற்று, வரை- மலை, கலித்து-ஒலித்துமுகில் -மேகம், புனல் - நீர்) என்று பாடியுள்ளார்.
சாம கீதப் பிரியராகிய சிவபெருமான் உடனே ஆனாயருக்குத் தரிசனம் தந்து, "அன்பனே, நம் அடியார்கள் குழலோசை கேட்கும் பொருட்டு நீ இப்போது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்திற்கு வருவாயாக’ என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆனாய நாயனார் சிவபெருமான் பக்கத்தில்
குழல் இசைத்துக் கொண்டே திருக்கைலாயத்தை அடைந்தார்.
22) விஷ" வருடம் தை - பங்குனி

Page 24
negara ତୁଣୀ
திருவிளை
நான்மாடக் கூடலான படலம்
ருெணன் தன் செயல் நிறைவேறாமையால் சினங் கொண்டான். ஏழு மேகங்களையும் அழைத்துக் கடல் நீரையெல்லாம் குடித்து இடித்துப் பெய்து மதுரையை அழிக்குமாறு அவன் கட்டளையிட்டான். உடனே மேகங்கள் ஏழும் நிலம் தெரியுமாறு கடலைக் குடித்து உடல் கருகி மின்னின; ஊழிக் காலத்தில் வெடிக்கும் அண்டகடாக ஒலிபோல் பெருமுழக்கம் செய்தன, அதனால் ஆதிசேடன் மணிகள் சிதறி உடல் நெளிந்தது; திக்கு யானைகள் நிலை கெட்டுநடுங்கின. பூசணிக்காய் போன்ற நீர்த்துளிகளும், பளிங்குத் தாரை போன்ற நீர்த் தாரைகளும் காணப்பட்டன. எங்கும் ஒரே இருள்.
அபிடேக பாண்டியன் மனம் கலங்கி, ‘சோமசுந்தரப் பெருமானே இன்னும் நம்மைக் காப்பார்”என்று திருக்கோயிலுக்குச் சென்று முறையிட்டான். சிவபெருமான் தன் சடையில் உள்ள நான்கு மேகங்களையும் மதுரையை வளைத்து நான்கு மாடங்களாகி, அவ்வேழு மேகங்களையும் போக்குமாறு கட்டளையிட்டார். அம் மேகங்கள் நான்கும் சிவபெருமான் கட்டளைப்படியே நான்கு மாடங்களாகிச் சந்துவாய் தெரியா வண்ணம் மதுரை நகரம் முழுவதும் கூரைபோல் மூடிக் கொண்டன. மக்களும் அரசனும் அமைச்சர்களும் அம்மாடங்களில் முன்பு இருந்ததைவிட மிகவும் நலமாகத் தங்கியிருந்தார்கள். ஏழு மேகங்களும் உடல் வற்றி நாணமுற்று நின்றன. வருணனும் நாணமடைந்து பொற்றாமரைக் குளக்கரையை அடைந்தான். அதற்குள் அவன் வயிற்றுநோயும் நீங்கியது.
பின்னர் வருணன் அக்குளத்தில் நீராடிச் சோமசுந்தரக் கடவுளை விதிப்படி பூசித்து எழுந்து நின்றான். சிவபெருமான் மகிழ்ந்து, “வருணனே! நீ விரும்பியது யாது? சொல்” என்று கேட்டார். உடனே வருணன் அவரை வணங்கி, “எந்தையே தீராத என் கொடிய வயிற்றுநோய் பொற்றாமரைக் குளக்கரையை அடையுமுன்பே நீங்கப்பெற்றேன். குற்றமே குணமாகக் கொள்வது உன் குணமோ! என் உடற்பிணியாகிய வயிற்று நோயேயன்றி உயிர்ப்பிணியாகிய இரு வினைகளும் மலங்களும் நீங்கப் பெற்றேன். இனி எனக்கு மணியும் மந்திரமும் மருந்தும் வேறொன்றுமில்லை. அடியேன் செய்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்” என்று வேண்டிச் சில வரங்கள் பெற்றுத் தன் நகர் அடைந்தான்.
வருணன் விட்ட மேகங்களைத் தடுக்கும் பொருட்டுச் சிவ பெருமானது சடையினின்று நீங்கிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடியிருந்த காரணத்தால் மதுரை மாநகரம் அன்று முதல் நான்மாடக் கூடல் என்று அழைக்கப்பட்டது.
“வன்றிறல் வருணன் விட்ட
மாளியை விலக்க ஈசன் மின்றிகழ்சடையினின்று
நீங்கிய மேகம் நான்கும் குன்றுபோல் நிவந்து நான்கு கூடமாக் கூட லாலே அன்று நான் மாடக் கூடல்
ஆனதால் மதுரை மூதூர்”
இந்து ஒளி ○
 
 
 
 

பாடற் புராணக் கதைகள்
(மாரியை - மேகத்தை, மின்திகழ் - மின்போல் பிரகாசிக்கின்ற, நிவந்து - உயர்ந்து, கூடம் - மாடம்)
என்று பரஞ்சோதி முனிவர் இந்நிகழ்ச்சியைப் பாடுகிறார்.
எல்லாம் வல்ல சித்தரான படலம்
அபிடேக பாண்டியனுக்கும் பாண்டிய நாட்டவருக்கும் இம்மை, மறுமைப் பயன்கள் உண்டாகும் பொருட்டுச் சோமசுந்தரக் கடவுள் எல்லாம் வல்ல சித்தராக வடிவம் கொண்டார்.
சித்தர் புன்முறுவலும் குறுவேர்வையும் கொண்ட திருமுகம் உடையவராகிக் கடைவீதி, சித்திரக்கூடம், நாற்சந்தி, நிலா முற்றம், உப்பரிகை, மாளிகை, திண்ணை ஆகிய எல்லா இடங்களிலும் சென்று விளங்கினார். தெற்கில் இருப்பவர் போலக் காட்டி வடக்கில் இருப்பார்; கிழக்கில் இருப்பார்போல் காட்டி மேற்கே போய் இருப்பார்; யாவரும் தேடிக் காணாதபடி திடீரென்று மறைவார்.
தொலைவில் உள்ளதை அருகில் காட்டுதல், முதியவரை இளைஞராக்குதல், இளைஞரை முதியவராக்குதல், ஆண் வடிவத்தைப் பெண்ணாக்குதல், பெண் வடிவத்தை ஆணாக்குதல், மலடியை மகப்பேறடையச் செய்தல், ஊமையைப் பேச வைத்தல், குருடரைப் பார்வையடையச் செய்தல், எட்டி மரத்தில் சுவை மிகுந்த பழங்களைப் பழுக்கச் செய்தல் போலும் அளவில்லாத வித்தைகளைச் சித்தர் புரிந்து வந்தார். மதுரை நகர மக்கள் யாவரும் சித்தர் செய்யும் வித்தைகளில் வைத்த கண்களையும் மனத்தையும் அடக்கமுடியாதவர்களாய்த்தத்தம் தொழில்களையும் மறந்து விட்டனர்.
இச்செய்திகளை அறிந்த அபிடேக பாண்டியன் சித்தரைத் தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தான். சித்தரோ, எமக்கு அரசனாலாகும் பயன் ஒன்றுமில்லை' என்று மறுத்துவிட்டார். அதனையுணர்ந்த பாண்டியன், “எல்லாம் வல்ல இறைவன் திருவருளைப் பெற்று இம்மை, மறுமைப் பயன்களை வெறுத்த சித்தர்கள் மண்ணரசரையும் விண்ணரசர் முதலிய தேவர்களையும் மதியார்” என்று எண்ணிக் கொண்டு வாளா இருந்தான்.
கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்
பின்னர் அபிடேகப்பாண்டியன் சித்தர் வாராமையால்மனம் வருந்தி, தானே அவரைக் காண்பது நல்லது என்று எண்ணினான். பாண்டியன் குறிப்பை உணர்ந்த சித்தர் அதற்கு முன்னரே தமது பொன் விமானத்துக்கு வடமேற்கில் வந்து எழுந்தருளி இருந்தார். தைத்திங்கள் முதல் நாளில் பாண்டியன் ஆலயத்துக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வலம் வந்தான். வழியில் சித்தர் இறுமாப்புடன் அமர்ந்திருந்தார். அரசனுக்கு முன்வந்த மக்கள் சித்தரைப் பார்த்து, எழுந்து போ’ என்றார்கள். பாண்டியன் அவரைப் பார்த்து, உமது நாடு எது? ஊர் எது? பெயர் என்ன? உமக்கு யாது வரும்? என்ன வேண்டும்? என்று கேட்டான். சித்தர் அரசனைப் பார்த்து, அப்பா நாம் எல்லா நாடுகளிலும் திரிவோம். எனினும் தற்சமயம் காசுமீரம் என்னும் நாட்டில் காசி நகரத்தில் வாழ்கிறோம். பிச்சைப் பெருவாழ்வு உடையவர்கள் எல்லாம் எம்மவர்களே! நாடோறும் நாம் வித்தை செய்து திரியும் சித்தர் ஆவோம். யாம் இங்குள்ள சிவத்தலங்களை வழிபட வந்தோம். இம் மதுரை மாநகரில் வாழும் மக்களுக்கு எம் விளையாடல்களைக்
23) விஷ~வருடம் தை-பங்குனி)

Page 25
காட்டி அவர்கள்விரும்பும் சித்திகளையும் செய்வோம். யாம் வேதம் முதலிய கலைகளிலும் வல்லவர். நின்னால் எமக்கு ஆவது ஒன்றுமில்லை என்று கூறிச் சிரித்தார்.
சித்தர் பேச்சைக் கேட்ட பாண்டியன் அவரது இறுமாப்பைச் சோதிக்கக் கருதினான். அவன் அவரிடத்தில் ஒரு கரும்பைக் காட்டி இதனை இந்தக் கல்லானை உண்ணுமாறு செய்வீராயின் எல்லாம் வல்லவரும் நீரே; சோமசுந்தரக் கடவுளும் நீரே! நீர் விரும்புவதை அளிப்பேன்’ என்றான். அதைக் கேட்ட சித்தர், நான் உன்னிடத்தில் பெறவேண்டிய பொருள் ஒன்றுமில்லை; ஆயினும் உன் ஆசை நிறைவேறும்படி செய்வோம்; இக்கல்லானை கரும்பைச் சுவைத்தலைப் பார்” என்று கூறி, உடனே கல்லானையைக் கடைக்கணித்துப் பார்த்தார். உடனே கல்லானை மதம் பொழிந்து, இடிபோல் ஒலித்துத் தன் துதிக்கையால் அரசன் கையில் இருந்த கரும்பைப் பறித்துத் தின்றது. சித்தர் மீண்டும் யானை மீது கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். அந்த யானை அரசன் கழுத்தில் உள்ள கண்ட மாலையை எட்டிப் பறித்தது. பாண்டியனும் உடன் இருந்த கஞ்சுக மாக்களும் அது கண்டு ஆத்திரம்
விசேட தினங்களும் வ
LDF -
Oss 16 சஷ்டி
21 - ஏகாதசி 02 சங்கடஹர சதுர்த்தி 22 - சனிப்பிரதோஷம் 09 ஏகாதசி 24 பூரண்ை 11 பிரதோஷம் 28 சங்கடஹர சதுர்த்தி 12 மகா சிவராத்திரி 13 . அமாவாசை ஜூலை 18 முதலாம்பங்குனித்திங்கள் 19 கார்த்திகை 06 கார்த்திகை, ஏகாதசி 20 சஷ்டி 07 பிரதோஷம் 26 பிரதோஷம் 10 , அமாவாசை 28 பங்குனி உத்தரம் 13 , சதுர்த்தி
15 குமாரசஷ்டி,ஆனி 6JLJJ 17 :ಶಿ
20 சிய்ன ஏகாதசி 01 சங்கடஹர சதுர்த்தி 21 பிரதோஷம் 08 ஏகாதசி, கடைசியங்குனித் 23 , முதலாவது ஆடி j. G.
திங்கள் 24 பூரணை 10 , பிரதோஷம் 28 சங்கடஹர சதுர்த்தி 12 அமாவாசை 14 சித்திரபானு வருடப்பிறப்பு 9.66m) 15 கார்த்திகை 16 சதுர்த்தி 02 . கார்த்திகை 18 சஷ்டி 04 - ஏகாதசி 23 ஏகாதசி 06 பிரதோஷம்
ά O8 . bas24 பிரதோஷம் 11 醬 26 பூரணை, சித்திரகுப்த 12 நிாகசதுர்த்தி
ரத O 13 சஷ்டி,கடைசி ஆடி 30 சங்கடஹர சதுர்த்தி 18 ஏகாதசி,முதலாம்ஆ மே 20 பிரதோஷம்
21 . ஆவணி ஓணம் 22 பூரினை 08 ஏகாதசி 26 - சங்கடஹர சதுர்த்தி 09 பிரதோஷம் 30 கார்த்திகை
ಹಾಕಿ; கார்த்திகை 31 . பூரீகிருஷ்ண ஜெயர் சதுர்த் 18 சஷ்டி செப்டெம்பர் 22 - ஏகாதசி 24 பிரதோஷம் 03 ஏகாதசி 25 வைகாசி விசாகம் 04 பிரதோஷம் 26 பூரணை 06 அமாவாசை 30 சங்கடஹர சதுர்த்தி 10 விநாயக சதுர்த்தி
e 12 சஷ்டி ஜூன் 15 கடைசி ஆவணிஞ
17 - ஏகாதசி 06 ஏகாதசி 08 சனிப்பிரதோஷம் 18 பிரதோஷம் 09 கார்த்திகை 21 பூரணை,முதலாம் ட 10 , அமாவாசை 25 சங்கடஹர சதுர்த்தி 14 சதுர்த்தி 26 கார்த்திகை இந்து ஒளி ○

கொண்டனர். ஏவலர் சித்தரை அடிக்கச் சென்றனர். சித்தர் அவர்களை கையமர்த்தி நிறுத்தினார். அவர்கள் நின்ற இடத்திலேயே கற்சிலைபோல் நின்றனர். அரசன் அது கண்டு சினம் தணிந்து சித்தரைப் பார்த்து, ‘அடியேன் பிழைகள் பொறுத்தருள வேண்டும்” என்று அவர் திருவடிகளை வணங்கி வேண்டினான். சித்தர் மனம் இரங்கி, அவனுக்கு வேண்டிய வரத்தைக் கேட்குமாறு கண்டளையிட்டார். பாண்டியன் தனக்கு மக்கட்பேறு அருளுமாறு வேண்டினான். சித்தர் அவ்வாறே ஆக அருள் செய்தார். மீண்டும் அவர் யானையை நோக்கினார். யானைத் துதிக்கையை நீட்டி அவனுடைய முத்துமாலையைக் கொடுத்தது. சித்தரும் தீடீரென்று மறைந்தார். யானையும் முன்போலவே கல்லாகவே மாறிவிட்டது.
இவையெல்லாம் சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலே என அறிந்த பாண்டியன் ஆலயம் சென்று அவரை உளமார வாயாரத் துதித்து வழிபட்டான். பின்னர் அவன் விக்கிரம பாண்டியன் என்னும் மகனைப் பெற்றுச் சிலகாலம் அரசாண்டு தன் மகனுக்குப் பட்டம் கட்டிச் சிவபதம் அடைந்தான்.
ச் செவ்வாய்
பிரத நாட்களும் - 2002
IgäFIDLIst
அக்டோபர்
02 - ஏகாதசி 04 பிரதோஷம் 06 அமாவாசை 07 நவராத்திரி >ھPال ubi uid 09 சதுர்த்தி 11 சஷ்டி
12 . கடைசிபுரட்டாதி சனி 14 - சரஸ்வதி பூஜை 15 விஜயதசமி, கேதாரகெளரி
விரதாரம்பம் உத்தரம் 16 ஏகாதசி
18 பிரதோஷம், முதலாம் ஐப்பசி
வெள்ளி 20 பூரணை சவ்வாய் 23 கார்த்திகை
25 சங்கடஹர சதுர்த்தி நவம்பர்
01 ஏகாதசி
02 சனிப்பிரதோஷம் 04 அமாவாசை, தீபாவளி, கேதார
கெளரி விரதம் முடிவு 05 கந்தசஷ்டி விரதாரம்பம் 08 சதுர்த்தி
10 , கந்தசஷ்டி விரதம் முடிவு 15 . ஐப்பசி வெள்ளி 17 பிரதேர்ஷ விரதம்
வணிஞாயிறு 18 முதலாம் கார்த்திகை சோமவாரம்
19 . பூரணை,திருக்கார்த்திகை,
குமாராலயதீபம்
20 விநாயகவிரதாரம்பம்
23 சங்கடஹர சதுர்த்தி
30 - ஏகாதசி
qőFOLUAT
02 பிரதோஷம் 04 அமாவாசை 07 சதுர்த்தி 09 விநாயக சஷ்டி, கடைசி கார்த்திகை
சோமவாரம் 12 திருவெம்பாவை பூஜாரம்பம் யிறு 15 வைகுண்ட ஏகாதசி
17 பிரதோஷம், கார்த்திகை 19 . ரணை 21 நீம்ெபாவை நிறைவு ாட்டாதி சனி 23 - சங்கடஹர சதுர்த்தி
30 ஏகாதசி
31 பிரதோஷம்
:4) விஷ" வருடம் தை - பங்குனி

Page 26
பக்தி மணம் கமழும் நாலா
செல்வி கிருஷ்ண வேம்படி மகளிர் உ யாழ்ப்
ருமாலைத் தலைமையாகக் கொண்ட வைணவ வழிபாடு, தொல்காப்பியம், கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க நூல்களில் பாராட்டப்படுவதைக் காணமுடிந்தாலும் எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பன்னிரு ஆழ்வார்களின் பக்திப் பாடல்களால் மறுமலர்ச்சி பெற்றது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் முதலாழ்வார்கள் மூவருடன் திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேகராழ்வார் என்னும் ஒன்பதின்மரும் ஆகிய பன்னிரு ஆழ்வார்கள் நூற்றியெட்டு வைணவத் தலங்களைப் பாடியுள்ளனர். இவர்களுடைய அருட்பாடல்களைத்தொகுத்துநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்" எனப்பெயரிட்டுள்ளனர்.
திவ்வியப் பிரபந்தத்தையும், அதன் சிறப்புப் பொருளையும் தமிழுலகிற்குத் தந்துதவிய பெருந்தகையார் நாதமுனிவர் ஆவர். மடல் மாலை அந்தாதி போன்ற பிரபந்த வகைகளும், பிற்காலப்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களும் இப் பாடல்களில் பயின்றுவரக் காணலாம். இப்பாக்கள் தேவாரப்பாடல்களைப்போன்றுகனிந்த மொழியையும், எளியநடையையும், தெளிவு, பக்திச்சுவை, ஓசைப்பெருக்கு முதலிய பல சிறப்புகளையும் கொண்டு விளங்குகின்றது.
காஞ்சிபுரத்தினரான பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி பாடினார். மாமல்லபுரம் என்னும் திருக்கடல் மல்லையூரினரான பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியிலே
அன்பேதகளியாய் ஆர்வமே நெய்யாக இன்புருகுஞ் சிந்தை இடுதிரியாய் -நன்புருகி ஞானச்சுடர்விளக்கேற்றினேன்நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்"
என்ற பக்தி நயம் சொட்டப்பாடுகின்றார். மயிலாப்பூரைச் சேர்ந்த பேயாழ்வார் பக்திப்பரவசத்தால் நெஞ்சம் சோர்ந்து, கண் சுழன்று, அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய்பிடித்தாற்போல இறைவனைத் தொழுது மகிழ்ந்ததாலே இப்பெயர் பெற்றார். இவர் மூன்றாம் திருவந்தாதியைப் பாடினார். இசைபாடுவதில் வல்லவராக உறையூரைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் விளங்குகின்றார். இவர் பாடிய அமலனாதிபிரான்பதிகம் உள்ளத்தைக்கவரும் திருவரங்கநாதரின்மேல், மங்கை ஒருத்திகாதல் கொண்டதாகப்பாடப்பட்ட பக்திச்சுவை நூலாகும். எளிமையான வெளிப்பாட்டையும் ஆழமான உணர்ச்சிப் பெருக்கையும் உடையது. அவர் மாலின்மேல் கொண்டிருக்கும் மையலைப் பாருங்கள்!
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்டகண்கள் மற்று ஒன்றினைக் காணாவே"
என்கின்றார். சைவத்திற்குத் திருமூலர் போன்று வைணவத்திற்கு திருமழிசையாழ்வார் விளங்குகின்றார். இவர் திருச்சந்த விருத்தமும், நான்முகன் திருவந்தாதியும் பாடியுள்ளார். "நாரணனை எண்ணி என் தொழிலெல்லாம் உன்னைத் தொழுவது; பொழுதெல்லாம் உன்னைப் புகழ்வதே" எனக் கூறுகின்றார். “வாழ்த்துக வாய் காண்க கண், கேட்க செவி, தாழ்த்துக தலை" என இறைஞ்சுகின்றார்.
இக்து ஒளி ဒြို. : . ------- C

யிரத்திவ்வியப் பிரபந்தம்
ா முத்துக்குமாரன் யர்தரப் பாடசாலை பானம்
சடகோபர் எனப்படும் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த நம்மாழ்வார் திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரியதிருவந்தாதி என்ற நான்கு நூல்களை இயற்றியுள்ளார். இவற்றை வைணவர் சதுர்வேதம் எனப் போற்றுகின்றனர். இவர் ஒன்றிய திங்களைப் பார்த்து “ஒளிமணிவண்ணனே"என்றும் நின்றகுன்றத்தினை'நெடுமால்'என்றும் நன்றுபெய்மழையை'நாரணன் வருகை என்றும் பக்தி மையல் கொண்டு பாடும் இயல்பினர்.
நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் “கண்ணி நுண் சிறுத்தாம்பு" பாடிப் பெயர் பெற்றவர். இவர் திருமாலைக் கூடப்பாடாது நம்மாழ்வாரையே தாம் கண்ட கடவுளாகப் பாடுகின்றார். அன்னையாக, அத்தனாக, தம்மை ஆளும்தன்மையாகத்தம் ஆசிரியரைக் காணுகின்றார். 'விஷ்ணுசித்தன்','பட்டர்பிரான்'என்றெல்லாம் அழைக்கப்படும்பூரீ வில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வார் பூமாலையோடு இறைவனுக்குப் பாமாலை கட்டுவதிலும் பெருவிருப்புக் கொண்டவர். இவர் பெரியாழ்வார் திருமொழிவு, திருப்பல்லாண்டு என்னும் நூல்களைப் பாடியுள்ளார். கண்ணனுடைய குழந்தைப்பருவத்தைப்பிள்ளைத் தமிழாகப்பாடியுள்ளார். பெரியாழ்வார் வளர்த்த பெண் பிள்ளையாகிய ஆண்டாள் “சூடிக்கொடுத்த நாச்சியார்” எனச் சிறப்பிக்கப்படுகின்றார். இவர் இறைவனைக் காதலனாகவும் தம்மை அவர் காதலியாகவும் பாவித்து நாச்சியார் திருமொழி','திருப்பாவை ஆகியவற்றை காதற் சுவை ததும்ப நெஞ்சு நெக்குருகிப்பாடியுள்ளார். இவருடைய பாடல்களில் இளமைமணம் வீசுகின்றது. பள்ளமடையில் பாயும் வெள்ளம்போல் உணர்ச்சிப்பெருக்கு பொங்கி நுரைத்து விழுகின்றது. பெரியாழ்வாரின் பாடல்கள் தூய அமைதிவாய்ந்த அன்புக் கடலில் விளைந்த பக்தி அனுபவச் சொத்துகளாகும். ஆனால் ஆண்டாளின் பாடல்களோ அலைபட்ட காதற் பெருங்கடலின் அலைகள் சுழிகள்! நீரோட்டங்கள்!
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுத்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, பெரிய திருமொழி என்ற ஆறு பக்திப் பிரபந்தங்களை இயற்றியுள்ளார். அருள் என்னும் வாளால் ஐம்புலன்களையும் எறிந்து செறிந்தேன் நின் அடிக்கே என்று சேவிக்கின்றார்.
தொண்டரடிப் பொடியாழ்வார் கள்ளம் கரைய உள்ளம் உருகிப் பாடிய பாக்கள்தாம் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்பனவாகும். இவர் “ கார் ஒளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன், ஆர் உளர்? களைகண் அம்மா? அரங்கமா நகருளானே!"என்று இறைவனை நோக்கி அலறுகின்றார்.
சேர நாட்டினரான குலசேகராழ்வார் சிம்மாசனத்தைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை மேற்கொண்ட பெரியார். இவர் பெருமாள் திருமொழியைப் பாடினார். இவர் திருவேங்கடத்திலே பறவையாக, மீனாக, மரமாக, ஆறாக, படியாகவெல்லாம் கிடக்கும் பேறுபெற்றால், அதுவே பெரும் பேறாமெனப் பாடுவது பக்தியிலக்கியப் பாடல்களில் ஒப்பற்ற உணர்ச்சிப்பிழம்பாகப் போற்றப்படுகின்றது.
இவ்வாறாகப் பன்னிருவர் பாடிய பிரபந்தங்களில் முதிர்ந்த அனுபவமும், அபூர்வ எளிமையும், அன்பு முதிர்ச்சியும் வெளியாகின்றது. பக்தி மணம் கமழ்கின்றது. படிப்பார் நெஞ் சத்தை உருக்குகின்றது. பக்தியுணர்வின் ஆழமும் அகலமும் அமைந்து ஒப்பற்றுத் திகழ்கின்றன. 5) விஷாவருடம் தை பங்குனி)

Page 27
என். ச நஸ்ரியா மத் சில
நிர்ணித்தனி சமயங்களின் கொள்கை விளக்கங்களையும், வழிபாட்டுமுறைகளையும் கூறும் நூல்களே ஆகமங்கள் எனப்படும். இந்து மதத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்கள் தமக்குரியகோட்பாடுகளை ஆகமங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சைவ சமயத்திற்கு காமிகம் முதல் வாதுளம் ஈறான இருபத்தெட்டு ஆகமங்கள் உள்ளன. இவை தவிர நாரசிங்கம் முதல் விசிவான்மகம் ஈறாக இரு நூற்றேழு உபாகமங்களும் உள்ளன. இவை முன்சொன்ன இருபத்தெட்டு சிவாகமங்களுக்கும் வழி நூல்களாகும். இன்னும் தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், தத்துவத் திரய நிர்ணயம் முதலான பல சார்பு நூல்களும் உள்ளன.
சைவ ஆகமங்கள் இருபத்தெட்டு என்று பெயரளவிலே அறியப்படினும் அவையெல்லாம் அச்சேறவில்லை. காமிகம், காரணம், வாதுளம்,சுப்பிரபேதம் என்னும் நான்கு ஆகமங்களும் பெளட்கரம் என்னும் உபாகமம் ஒன்றுமே தென்னாட்டு கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
சிவாகமங்கள்
பெற்றநல்லாகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர்சித்தம் வாதுளம்
மற்றவ்வியாமளம் ஆகும் கலோத்தரம்
துற்றநற்சுப்பிரம் சொல்லும் மகுடமே
- திருமந்திரம்
சிவாகமங்கள் ஒவ்வொன்றும் சரியா பாதம், கிரியாபாதம், யோக பாதம், ஞான பாதம் என நான்கு பிரிவுகளை உடையன. ஆன்மாக்கள் ஞானம் எய்திச் சிவத்தோடு இரண்டறக் கலக்கும் முத்திக்கு வழி காட்டுவதே சிவாகமங்களின் குறிக்கோளாகும்.
காமிகம்,யோகஜம்,சிந்தியம், காரணம்,அஜிதம்,தீப்தம்,சூக்குமம், சகசிரம், அம்சுமான், சுப்பிரபேதம், விஜயம், நிச்சுவாசம், சுயாயம்புவம், ஆக்நேயம், வீரம், இரெளவரம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம் என்பனவே இருபத்தெட்டு சிவாகமங்களாகும்.
திருமூலர் திருமந்திரத்தில் ஆகமச் சிறப்பு பற்றி கூற வந்த இடத்திலே
அஞ்சன மேனிஅரிவையோர்பாகத்தன்
அஞ்சோடிருபத்துமூன்றுள ஆகமம்.
என்ற ursůli
சிவபெருமான் இருபத்தெட்டு ஆகமங்களை அருளிச் செய்தார் என்று கூறும் கருத்து நோக்கத்தக்கது. இவ்வாகமங்களுள் முதற் பத்தும் விஞ்ஞானகலருட்பரமசிவன் அநுக்கிரகத்தைப்பெற்றுபிரணவர் முதலிய அணுசதாசிவர் பதின்மருக்கும் அருளிச் செய்யப்பட்டமையால் சிவ பேதம் எனவும், ஏனைய பதினெட்டு ஆகமங்களும் அநாதிருத்தர் முதலிய பதினெட்டு உருத்திரர்களுக்கும் அருளிச் செய்யப்பட்டமையால் உருத்திர பேதம் எனவும் வழங்கப்படுகின்றன.
ஆகமங்கள் உபதேச கிரமத்தின்படி ஒவ்வொரு தலைமுறைக்கும் வழங்கப்பட்டு வந்துள்ளதை உணர முடிகின்றது. இந்த வகையில் ஆகமங்களோடு தொடர்புற்ற ஒரு ஞானகுரு
இந்து ஒளி C
 

ரஸ்வதி திய கல்லூரி Tuto
பரம்பரையே உபதேச கிரமமாக உருவாகி வந்துள்ளதை உணரலாம். இதன்படி சதாசிவ மூர்த்தி ஆகமங்களை அனந்த தேவருக்கும், அனந்த தேவர் பூரீகண்டருத்திரருக்கும், அவர் ஆகமங்களை திருநந்தி தேவருக்கும், திருநந்தி தேவர் சனற்குமார முனிவருக்கும், அவரால் மனுடனுக்கும், மனுடரால் மனுடருக்கும் குரு பரம்பரையாய் உபதேசிக்கப்பட்டு உலகத்திற் பரவுவனவாய் உள்ளன. இன்மை, மறுமைப்பயனை அடைய விழைவோர் புதிய ஆலயங்களை அமைத்தல், பழைய ஆலயங்களைப் புதுப்பித்தல், மண்டபம் கட்டுதல், திருக்குளம் வெட்டுதல், திருநந்தவனம் அமைத்தல், விக்கிரகங்களை அமைத்தல், உற்சவம் நடத்துதல் முதலான பணிகளிலே தம்மை ஈடுபடுத்த வேண்டுமெனவும், பொருள் வசதி குறைந்தோர் தமது உடலால் செய்யக்கூடிய சிவாலயத் தொண்டுகளை மேற்கொள்ளல் வேண்டுமெனவும் ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன.
அத்துடன் ஆலய வழிபாட்டோடு தொடர்புடைய பல விடயங்களையும், ஆகமங்கள் விரிவாக கூறுகின்றன. ஆலயம் அமைப்பதற்கான இடம், ஆலய அமைப்பு முறை, தெய்வச் சிலைகளை வடிக்கும் இலக்கணம், சிலைகளை நிலைநாட்டும் விதி, வாகனங்களை அமைக்கும் முறை, தேர் அமைக்கும் முறை, அர்ச்சகர் ஒழுக்கம், அடியார் நடைமுறை, ஆலய தரிசன விதி, பூசை, விழாக்கள் செய்யும் முறை அவற்றின் பலன்கள் போன்றவற்றையும் ஆகமங்கள் கூறுகின்றன.
இறைவனுடைய திருவுருவங்களை உருவாக்கும் சிற்ப நுணுக்கங்களைப் பற்றி காரணாகமம், காமிகாகமம் போன்ற ஆகமங்கள் கூறுகின்றன. திருவுருவங்களின் தீர்மானங்களைப் பற்றி உத்தரகாரணாகமம் கூறுகிறது. திருவுருவங்களின் அமைப்புமுறைபற்றி காமிகாகமம் கூறுகின்றது.
ஆகமங்கள் தென்னாட்டிற்கே சிறப்பாக உரியன எனக்கூறின் மிகையில்லை. தென்னாட்டுக்கு அண்மையிலுள்ள இலங்கையில் விளங்கும் சைவமும் ஆகமங்களுடன் இதே தொடர்பு கொண்டுள்ளதை நாம் அறியலாம். இங்கு எழுந்த பெரும்பாலான திருக்கோயில்கள் ஆகம விதிகளுக்கு அமையவே எழுந்தவையாகும். காலத்துக்குக் காலம் ஆகமத்தோடு தொடர்புடைய அறிவுவிரிவடைந்துவந்துள்ளது. எனினும் நிறைவான அளவில் விரிவடைவதில் சில தடைகளும் இருந்துள்ளன. முதலில் ஆகமங்கள் நூல் வடிவம் பெற்ற காலம் பற்றி சிந்திப்பது பொருத்தமானதாகும். இவ்விடயத்தில் பல பிரச்சினைகளை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆகமத்தைப் பேணியவர்கள் அவற்றை ஏடுகளில் எழுதி அவ்வேட்டுச் சுவடிகளை தம்மளவிலேயே வைத்திருந்தனர். அவை முறையாகப் பாதுகாக்கப்படாத காரணத்தால் பல்வேறு சூழ்நிலைகளில் அழிவுற்றிருக்க இடமுண்டு. ஆகமங்களை பெரும்பாலும் ஆலயத்தோடு தொடர்புடைய சிவாச்சாரியார்கள் பயன்படுத்திவந்தமையால் அவர்களே அவற்றைப் பேணியும் வந்தனர்.
சிவாகமங்கள் அறிவுக்கருவூலங்களாக, சிற்பநூல்களாக, ஆலயப் பிராமண நூல்களாக, கிரியை நூல்களாக விளங்கி சைவ சித்தாந்த செம்பொருளை விரிப்பனவாக அமைந்து, ஆன்மாக்கள் ஆன்ம ஈடேற்றம் பெற உதவுகின்றன. சைவத்தின் ஆதார நூல்களாக விளங்கும் 'சிவாலயங்களின் சிறப்பை உணர்ந்து சைவ சமயிகள் யாவரும் ஆகம
மரபைப் பேணிப் பாதுகாப்பது பயன்தரும் செயலாகும்.
26) விஷன் வருடம் தை - பங்குனி

Page 28
ஆலயங்களு
செல்வி வ
நடன இராமநாதன் நுண்கலைப்பீ
ைேலகள் பல்வேறு ஊடகங்களின் ஊடும், பல் அறிஞர்களுடும் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. ஒரு நாட்டின் சரித்திரத்தில் இடம் பெறும் பல்வேறு அம்சங்களையும் எடுத்தியம்புவனவற்றில் கலைகளும் குறிப்பிடத்தக்க இடத்தினை வகிக்கின்றன. இந்த வகையில் கலைகளை இறைவனே தோற்றுவித்தார் என்றும், இதனால் இவை ஆலயத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தன என்ற கருத்தும் வரலாற்று ரீதியாக நிலவி வருகின்றது. இதனால் இவற்றை கோயிற்கலைகளென்றும் அழைக்கின்றனர். அரசர்களாலும், தேவரடியார்களின் தொண்டினாலும், நாயன்மார்களது பாடல், ஆடல்களினாலும், கிரியைமுறைகளினாலும் கலைகள் வளர்ச்சி பெற்றன என்று கூறலாம். இக்கலைகள் மறை பொருள் கொண்டவை. இத்துடன் வீடுபேற்றை நல்கும் சாதனங்களாகத் தொன்று தொட்டுப் பயின்று வருகின்றன. கோயில் கலைகளிலே வரலாற்றில் சிறப்பிடம் பெற்று விளங்கும் ஒரு கல்ை நாட்டியக் கலையாகும். இசை, கட்டிடம், சிற்பம், ஒவியம் போன்ற கலைகளுடன் நடனக் கலையும் ஒருமித்து வளர்ந்து வந்துள்ளது. இதனால் ஆலயத்திற்கும் நடனக் கலைக்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடம் என்றும், கோயில் என்பது அரசன் உறைந்திருக்கும் இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆலயங்கள் ஆன்மாவின் முத்தி நிலையினைச் செம்மைப் படுத்தப்படுவதற்காகவே அமைக்கப்பட்டன. தத்துவப் பின்னணியில் பார்க்கும் போது ஆலயமும், பரத நாட்டியமும் மனித ஆன்மா இறுதியில் அடையும் இடத்தைத் தேடுவதே உள்ளார்ந்த கருப்பொருளாகக் கொண்டு விளங்குகின்றன. எண்ணற்ற உருவங்கள், குறியீடுகளின் மூலமாகப் பரம்பொருளைத் தேடிச் செல்லுகின்ற ஆன்மாவின் பயணம் நடனத்தின் மூலம் காட்சிப் படுத்தப்படுகின்றன. நடனம் சாதாரண நோக்கில் லெளகீக அம்சமிருப்பினும் மிகவுயர்ந்த ஆனந்தமயமான ஆன்மீக அனுபவத்தின் குறியீடாக அமைந்துள்ளமையையும் நாம் காணலாம். ஆலயங்களின் அமைப்பு, கிரியைமுறைகள், சிற்ப ஒவிய காட்சிகள், விக்கிரகங்களின் ஹஸ்தாபியைங்கள் என்பவற்றின் ஊடு ஆலயங்களில் நடனக்கலை சிறப்புற்று வளர்ந்து செழுமை பெற்றுள்ளன.
ஆகம விதிப்படி அமைந்த ஆலயங்களின் கட்டிடங்களிலே சிற்ப, ஒவியங்கள் அழகிற்கு மெருகூட்டுவனவாக அமைந்துள்ளன. கூடுதலாக இறைவனது ஆடல் வகைகளும், அற்புதங்களுமே சிற்ப ஒவியங்களாகச் செதுக்கித் தீட்டப்பட்டுள்ளன. கட்டிடமோ, சிற்பமோ என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன. குப்தர் கால ஆலயங்கள், சிதம்பரம், தஞ்சைப் பெருவுடையார், காஞ்சி கைலாசநாதர், மாமல்லபுரம் போன்ற ஆலயங்களின் சிற்ப ஒவியங்கள்
இந்து ஒளி . ". . . ." . . . . て

ம் நடனமும் ா. சாந்தினி
ந்துறை டம், யாழ். பல்கலைக்கழகம்.
நடனத்துடன் தொடர்பு உடையனவாகக் காணப் படுகின்றன. சிதம்பரத்தின் நாற்புற கோபுரங்களிலும் கரண சிற்பங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. பல்லவர் காலத்து நடன முறைமைகளை அக்காலத்தில் தோற்றம் பெற்ற "வைகுந்த பெருமாள்” ஆலய சிற்பங்களில் சிறப்பாகக் காணலாம். மாமல்லபுர சிற்பங்களிலே சிவன் தண்டு முனிவருக்கும், தண்டுமுனிவர் பரதருக்கும் தாண்டவங்களைக் கற்பிக்கும் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயரதங்களிலும் நடராஜர் சிலை செதுக்கப்பட்டுள்ளமையும் சிறந்த நடன சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டாகும். சிதம்பரத்தில் அமைந்துள்ள நிருத்தசபை"ஆலயங்களில் நடனத்திற்கென ஒரு மண்டபம் இருப்பதனைப் பறை சாற்றிநிற்கின்றது. சிவனது ஆலயங்களில் இச் சபை சிறப்புப் பெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. தஞ்சைப் பெருவுடையார் ஆலயம் கலைகளின் கேந்திர நிலையமாகத் திகழ்கின்றது. இவ்வாலயத்தில் சிவனது 81 கரணங்கள் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம், யாழ்ப்பாண நல்லூர், யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலயங்களிலே சிவனது 108 தாண்டகரண ஒவியங்கள் தத்துரூபமாக விளங்குகின்றன. இவ்வாறு ஆலய அமைப்பு முறையில் விமானம், கோபுரம் போன்ற அமைப்புக்களில் சிற்பங்களாகவும், தூண்கள், வளைகள், சுவர்கள் போன்றவற்றில் சிற்ப ஒவியங்களாகவும் நடன வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறைவன் கலைஞராகவும், கலைவடிவினராகவும், கலைப் பொருளாகவும் விளங்குகின்றார். சிவனது தாண்டவங்களில் ஐந்தொழிலும் ஒருங்கு பெற்ற தாண்டவமாக ஆனந்த தாண்டவம் விளங்குகின்றது. ஆடற்கரசனாகவும், கூத்தப்பிரானாகவும், உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வடிவினராகவும், இவ் தாண்டவத்தின் மூலம் சிவன் வெளிப்படுகின்றார். பரத நாட்டியத்தில் புஸ்பாஞ்சலி செய்யும் போது நடராஜருக்கு அஞ்சலி செய்து அரங்க நிகழ்வினைத் தொடங்குவது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட பதினொருவகை ஆடல்களில் கிருஷ்ணர், அம்மன், முருகன் போன்ற தெய்வங்கள் நடனம் ஆடியுள்ளமையினையும் நாம் காணலாம். இறைவனே ஆடலினை நிகழ்த்தியமையினால், வழிபாட்டு முறைமையில் ஆடல் ஒரு சாதனமாக விளங்குகின்றது எனலாம்.
ஆலய கிரியைகளை திறம்பட நிகழ்த்துபவருக்கு பரத நாட்டியத்தில் கைதேர்ந்த கலைஞருக்குரிய ஆற்றல் இருத்தல் வேண்டும்' என்று கைலாசநாதகுருக்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளமை கிரியையில் நடனத்தின் செயற்பாட்டினை எடுத்துக் காட்டுகின்றது. மலர், தூபம், தீபம் போன்ற உபசாரங்களைவிட “நிருத்யோபசாரத்தை” ஆண்டவன் பெரிதும் விரும்புகின்றார் என நிருத்யரத்னாவவி என்னும் நூல் கூறுகின்றது. ஆலய கிரியைகளின் போதும் மூன்று வேளை பூசையின் போது நடனம் ஆடப்பட்டது. நைமித்தியக் கிரியைகளில்
27D விஷ வருடம் தை-பங்குனி)

Page 29
சிறப்பாக மகோற்சவ காலங்களில் நவசந்தி என்னும் நாட்டியம் ஆடப்பட்டது. ஒன்பது திக்குகளிலும் ஒன்பது வகையான நடனங்கள் ஆடப்பட்டன என்று பத்ததிகள் கூறுகின்றன. ஆலயங்களில் சிறப்பாக ஷோடபசாரங்களில் “பதினைந்தாவது உபசாரமாக நிருத்யோபசாரம்” இடம் பெறுகின்றது. இதனை அன்று தொடக்கம் இன்று வரையும் சில ஆலயங்களில் வழக்கில் இருந்து வருவதனை நாம் காணலாம். தீபாராதனை, புஸ்பாஞ்சலி போன்றவற்றின் போது பல நாட்டிய முத்திரைகள் உபயோகிக்கப்படுகின்றன. தீபங்களை ஆராதனை செய்வதற்கு முன் அக்கினி தேவனை பல முத்திரைகள் மூலம் ஆவாகணம் செய்ததன் பின் தீபாராதனை செய்யப்படுகின்றது. இவையாவும் ஆலய கிரியைகளில் நடனத்தின் செல்வாக்கினையே விளக்கி நிற்கின்றன. மேலும் காரண ஆகமம் ஆச்சாரிய லட்சணம் கூறும் போது "மந்த்ர தந்த்ர க்ரியா முத்ரா பாவநா பாவகர்பிதா” என்று விளங்குவதும் கிரியை முறையில் நடனத்தின் அவசியத்தினை எடுத்துக் காட்டுகின்றது என்றே கூறவேண்டும்.
அபிநய அரசி பாலசரஸ்வதி அவர்கள் நடன உருவப்படிகளின் அமைப்பினை ஒரு ஆலயத்தின் அமைப்பிற்கு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். அலாரிப்பில் தொடங்கி தில்லானா வரையிலான உருப்படிகளை செய்வது ஒரு ஆலயத்தின் கோபுர வாயிலில் இருந்து படிப்படியாக ஒவ்வொரு மண்டபங்களையும் தாண்டி கற்பக்கிரகத்தினை அடைந்து அங்கிருக்கும் இறைவனிற்கு கற்பூர ஆராத்தி காட்டி ஏற்படும் பக்தி பரவசம் அடைவதற்கு ஒப்பானது என விளக்கியுள்ளார்.
சிவனும், பார்வதியும் முறையே தாண்டவம், வாஸ்யம் என்னும் ஆடல் வகையை படைத்துள்ளனர். தாண்டவம் வீரம் நிறைந்ததும் ஆண்களால் ஆடப்படுவதாகும். வாஸ்யம் நளினம் நிறைந்ததும் பெண்களால் ஆடப்படுவதாகும். திருமால் நால்வகை விருத்திகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றார். பிரம்மா நாட்டியத்தினை ஐந்தாவது வேதமாக தொகுப்பித்துள்ளார். இவற்றில் இருந்து இந்து சமய கடவுளர்களிற்கும், நடனத்திற்கும் இடையிலான அத்தியந்தமில்லா தொடர்பினை விளக்குகின்றன.
நடன உருப்படிகளில் காணப்படும் சிருங்கார ரஸத்தை வெளிப்படுத்தும் உருப்படிகளில் பக்தியுணர்வே மேலோங்கி நிற்பதும் நடனத்தினையும், சமயத்தையும் இணைப்பதனை காட்டுகின்றது. ஆலய சிற்ப, விக்கிர, ஒவிய கலைகளில் நவரசங்களின் தன்மையை மிகத் தெளிவாகக் காணலாம். கடவுளர்களில் துர்க்கை, பத்திரகாளி போன்றவர்களின் தோற்றம் கோபரஸம் உடையதாகவும், தெட்சணாமூர்த்தியின் தோற்றம் (முக அமைப்பு) சாந்தரஸம் உடையதாகவும் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. ஒவ்வொரு கடவுளர்களின் முக அமைப்பில் சிரிப்புடன் கூடிய அமைதியான வடிவத்தினை நாம் தெளிவாகக் காணலாம்.
ஆலயங்களில் நடனக்கலையை வளர்ப்பதற்கென மன்னர்களின் ஏற்பாட்டினால் தேவரடியார்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சுவாமி வீதியுலா வரும் போதும், சில நைமித்திய கிரியைகளின் போது நடனாஞ்சலி செய்து இறைவனை மகிழ்வித்தனர். வழிபாட்டு முறைமைகளில் ஆடல், பாடல்களும் ஒரு சாதனமாக விளங்கியுள்ளன என்பதற்கு நாயன்மார்களதும், ஆழ்வார்களதும் பக்திப் பாடல்கள் சான்றாக
இந்து ஒளி C;

விளங்குகின்றன. இறைவன் பிரமா, விஷ்ணு முதலானவர்களால் கண்டறிய முடியாதவன், இவன் சுடுகாட்டில் நின்று ஆடுவான் என்பதனை சம்பந்தர் “ஆடினார் கானகத் தருமறை பின் பொருள்.” என்ற பாடலின் மூலம் விளக்கி இறைவனிற்கு ஆடலில் பிரியம் உண்டு என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வேண்டும் வரமாக "அறவா நீ ஆடும் போது உன்னடியில் இருக்க..” என வேண்டியுள்ளமையும், நம்மாழ்வார்திருமாலின் சிறப்புக்களை கூறி இசையும் பாடி ஆடி அகங்குழைந்து அவனை வழிபட வேண்டும் என்பதை “ஆடி ஆடி அகங்குழைந்திசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி." என பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கன.
கிராமிய நடன பிரிவுக்குள் வகுக்கப்பட்ட காவடி, கரகம், வசந்தன் போன்று நடனங்கள் இன்னும் ஆலயங்களில் விழாக்காலங்களில் ஆடப்படுவதனை நாம் காணலாம். மக்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்வதற்காக மேற் கூறப்பட்ட நடனங்களை ஆடித் தங்கள் நேர்த்திகளை நிறைவு செய்கின்றனர். இவ் ஆட்டங்களின் போது உடுக்கு, ஹார்மோனியம், மேளம் போன்ற வாத்தியங்கள் ஆட்டத்தினை மேலும் மெருகூட்டுகின்றன;தேர்த்திருவிழாவன்று ஆட்டத்தினை இன்றும் சில ஆலயங்களில் ஆடப்படுவது வழக்கில் உள்ளமையை நாம் காணலாம்.
மன்னர்கள் நடனக்கலையை லெளகீகரீதியில் மட்டுமன்றி, ஆன்மீக ரீதியிலும் வளர்த்துள்ளனர் என்பதற்கு அக்காலத்தில் எழுந்த நாடக நூல்களான குறவஞ்சி, பள்ளு போன்றன ஆதாரங்களாக உள்ளன. மகேந்திர வர்மன் எழுதிய“மத்தவிலாச” எனும் நாடக நூலில் சிவனின் தாண்டவ நடனங்களை விளக்கிக் கூறியுள்ளார். தஞ்சையில் இருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் நிகழ்த்துவதற்காக 18ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களால் அமைக்கப்பட்ட மேடை சான்றாதாரமாக உள்ளது. தஞ்சையை ஆண்ட சாஹஜி மன்னர் காலத்தில் திருவாரூர்க் கோயில் கொண்ட சிவன் மீது இயற்றப்பட்ட தியாகேசர் குறவஞ்சி நாட்டியநாடகம் நிகழ்த்தப்பட்டது. குற்றாலக் குறவஞ்சி, முற்கூடற்பள்ளு, பாகவதமேளா போன்றன நாட்டிய நாடகங்களாக ஆலயங்களிலே ஆடப்பட்டன. மேலும் ஆலயங்களில் தமிழ் கூத்து ஆரியக்கூத்து, சாந்தி கூத்து எனப்பல வகையான கூத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
மேற்கூறப்பட்டவாறு ஆலயங்களில் நடனமானது கிரியைகள், அமைப்புமுறைகள், நாடகங்கள் போன்றவற்றின் ஊடு வெளிப்படுகின்றமை சமயமும்,நடனமும் ஒன்றுடனொன்று பிரிக்க முடியாத அளவு தொடர்புபட்டுள்ளமையக் காணலாம். கோயிலானது சமயத்தை அழகுபடுத்த சமயத்தின் உள்பொருளை கலை வெளிப்படுத்துகின்றது. கலைகள் சமயச்சார்பும், தெய்வீக அம்சங்களும் கொண்டவை. இதனால் தான் நம் முன்னோர்கள் “சிவானுபவம் எங்கே பிறக்கின்றதோ அங்கே கலைகளெல்லாம் முகிழ்கின்றன” என்று கூறியுள்ளனர். கலைகளுக்கு புனிதமான தெய்வீகத் தோற்றத்தினைக் கொடுத்துள்ளமைக்கு அடிப்படைக் கலையாக நடனக்கலை விளங்குகின்றது என்றால் மிகையாகாது.
2s) விஷ” வருடம் தை-பங்குனி )

Page 30
Book Review
Тиirи Силиа
tle Hi
Mr. S. Sal
Thirugnanasambanthar was one of the four
distinguished Saints (nayanmars) venerated most by Hindus from amongst a galaxy of sixty three canonized Hindu saints. Gnanasambanthar was not born in this world, like other mortals, to redeem his past karma. He was sent here by Divine will so that he could achieve certain ideals in resusitating the Hindu religion within the short period of his life. He was born with the main objective of benefiting the world. One School of thought, consider him an incarnation of Lord Skanda, popularly known in South Sri Lanka as "Kataragama Deio".
During Sambanthar's time (7th Centurary A.D) Yagnas were a popular religious practice in northern India as an ancient tradition. Live animals were sacrificed as offerings in these yagna rites as the finale of the Yagna rites and the dead carcasses thereof were consumed by the participants as "prasath". Tamils living in South India set their face against this horrendous religious practice; they hated it, rebelled against this form of sacrifice and started embracing religious like Jainism and Buddhism which prohibit animal sacrifice.
Tamils proudly claim five renowned epics in the Tamil language. But Seevaka Sinthamani and Valaiyapathy the foremost of the five, expound the merits of Jainism. Manimekalai and Kundalakesi are primarily Buddhistic texts. Silappathikaram alone carries some references to Hindu religious practices. Its invocation verse makes no reference to God almighty, but hails the grace of the moon, the Sun and the rain. As admitted by the two authors themselves Silappathikaram was indeed the fore-runner of that great Buddhist epic Manimekalai. Strangely little or no reference is made in these epics to the importance of the Hindu precepts and practices. This unfortunate situation arose as there was hardly anybody, in this period, to explain to the people the greatness of the Hindu religion and its merits. As to how one could so beautifully arrange his worldly life according to the Hindu doctrine and eventually attain heavenly beatitude, with an individual's effort, was not adequately explained to the ordinary masses. As a consequence, the Hindu religion lay hidden from the ordinary folk and the other religious faiths prospered. Sambanthar's advent proved highly inimical to the cause of those religions.
 

Sainbarthar - Midova Saint
baratna Mudaliyar
Another significant contributory factor was that the adherents of the Hindu doctrine then were exclusively the Brahmins. The Slokas and mantras they chanted in their prayers to God were mostly in Sanskrit and the medium of all Hindu rituals were confined to the sanskrit language, to the detriment of their mother tongue, Tamil. In this background, Thirugnanasambanthar felt it his bounden duty to propagate the Hindu religion and the Tamil language. He boldly declared himself as Tamil Gnanasampanthan and hailed (Sivaperuman) Siva, the Lord almighty, as a Saivaite.
Jainism reigned supreme all over the Pandian land at that time. Religions that deny the existence of one God almighty, the Paramathma and the Athma (soul), could not spread adequate light to remove the ignorant darkness which enwraped the Tamil land then. Gnanasambanthar stressed that even local shrines, their environment and the presiding Deities served as foci of devotion, even for souls advanced in spirituality. By his more than thirty miracles he proclaimed the significance of the Sacred Ash of the Hindus to the whole world and helped people remove their ignorance, The Sacred Ash represents the Grace of God that illumines a soul on the removal therefrom of its inherent impurity of mala; it is rubbed on the forehead of people to remind them of the Grace of God which they have to seek daily.
"Ashes are produced by the burning of cow dung in the sacred fire. Cow dung is symbolical of the mala - power (Pasumalam) in man - Pasu being a name for soul as for cow; and malam being a name for our ignorance (Pasa) and cow, dung. When malam that envelopes the soul is burnt by fire of Gnanam or Pure wisdom, the Grace of God shines forth; and this Grace is symbolised by the sacred ashes - white in colour" When Gnanasambanthar arrived in Pandiyan territory, there were only two persons who were adherents of the Hindu faith then - viz: Mangayatkarasi, the Queen and her minister Kulachchirayar. With Divine Grace, Gnanasambanthar succeeded in converting all its people to Hinduism. The Holy Ash (Scofo) was the only instrument he used to achieve his mission. He was
29) နို် - விஷ~வருடம் தை-பங்குனி)

Page 31
free of any caste consciousness. But for the timely birth of Gnanasambanthar the Hindu religion would have been as dead as the Dodo. Preserving the religion of the Hindus for posterity was his greatest contribution. His object was to maintain and uphold Vaithika Saivam - the religion of the Vedas and Agamas.
In a brief life-span of sixteen (16) years his devotional outpourings to the Lord exceed 16000 decads, containing well over 160,000 hymns popularly known as Thevaram "Garland to God". So says the celebrated authority Umapathy Sivachchariar. It is our great misfortune that most of these hymns were forgotten as lost and only 384 Dacads, comprising about 3840 hymns are available to us today. He was a born poet and a perfect master of the musical art. His thevarams kindle in our hearts. true piety and love. He displayed in his hymns the beauties of Isaittamil.
Gnanasambanthar realized the importance of temple worship. He was grief struck when he witnessed the sufferings of people along the path of his tours. He paid special homage and displayed intense devotion to "Murthis" enshrined in the historic temples spread all over South India. He was compassionate enough to perform miracles and provide relief to suffering parties. As his objectives were achieved, he had the premonition that his time to depart from this world was fast approaching. But his parents felt it to be their duty to arrange a marriage for their son in marriageable age. They selected a suitable partner for him and took the couple to a temple "Thiru Nallur Peru Manam" to solemnize his marriage. The dutiful son who did not wish to displease his parents justindicated that a marriage for him was unnecessary; he was conscious of the rituals in a Hindu wedding where both the bride and the bridegroom had to swear to remain faithful rock-like to wedded life by symbolically placing the bride's leg on the grinding stone (golf) a piece of rock; he averted
நடேசர் அபிஷேக தினங்கள் (2002)
26.02.2002 (செவ்வாய்) சதுர்த்தசி 04.05. 2002 (FGof) திருவோணம் 15. 07.2002 (திங்கள்) ஆனிஉத்தரம் m 21. 08, 2002 (புதன்) சதுர்த்தசி 20.09.2002 (வெள்ளி) சதுர்த்தசி 21, 12 2002 (சனி) திருவாதிரை
சமய குரவர் குருபூசை தினங்கள் (2002)
06.05.2002 (திங்கள்) திருநாவுக்கரசு நாயனார் 28.05.2002 (செவ்வாய்) திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் 13.07.2002 (sgof) மாணிக்கவாசக சுவாமிகள்
புதன்) சுந்தரமூர்த்தி நாயனார்( 14.03.2002 ܢ
இந்து ஒளி * C
 
 

this swearing-in ceremony by not adhering to his parents arrangement. Having offered his prayers at the temple, Gnanasambanthar extemporized a thevaram in praise of the presiding Deity when a Divine announcement"You both enter and merge in this light" was heard from the sanctorum of the temple where a brilliant light appeared. The Divine order was obeyed by the couple and the merger was complete. In the Siddhanta doctrine God is one sublime glow of blissful intelligence in whose presence the various actions necessary for the movement of the Universe take place. Gnanasambanthar's farewell message to the Hindu public may be summarized thus:
Always, wear the sacred ashes, Always chant Namasivaya, the five letter mantra, Always dedicate yourself in service.
The story of the life of Thirugnanasambantha Nayanar, the eminent Hindu Saint, is available in English in a small book of 45 pages authored by S. Sabaratna Mudaliyar of Kokuvil. It has been reprinted in 2001 by the Kumaran Press, 201, Dam St., Colombo 12. Its first edition was a Translation from Periyapuranam and it appeared far back in the year 1920. The new edition will meet the needs of the present generation and will be useful reading especially to non-Hindus. This book which deals with his life, covers exhaustively all miracle performed by the Nayanar to relieve the suffering of persons during his extensive tour of historic Hindu shrines scattered all over South India Miracles of alien religions cannot stand a comparison with those of Gnanasambanthar. It also elaborates how Sambanthar achieved his main objective of benefiting his coreligionists who were menaced by the strong influence of heretical faiths.
S. Ratnapragasam 1 15/4 W.A. Silva Mawatha, Colombo 06.
மாமன்றத் தலைமையகத்தில் எழுந்தருளியிருக்கும் N நீசிவகாமி அம்பாள் சமேத நீ நடராஜப் பெருமானுக்கு வருடாபிஷேகம் 27.04. 2002 (JGofa Apson) தமிழ் புதுவருடப் பிறப்பு
தமிழ் புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கப்படி ஏப்ரல் மாதம் 13ம் திகதி சனிக்கிழமை பின்னிரவு 4மணி1நிமிடத்திலும்,திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி 19 நிமிடத்திலும் உதயமாகிறது. இவை இப்பொழுது நடைமுறையிலிருக்கும் மாற்றத்திற்குரிய நேரப்படியாகும்)
இப்புதிய வருடத்தின் பெயர் சித்திரபானு என்பதாகும். மொத்தமாகவுள்ள அறுபதுவருடங்களின்சுற்றுவட்டத்தொடரில் இது 16வது வருடமாகும். ノ
}Ꭴ Ꭰ விஷ" வருடம் தை - பங்குனி D

Page 32
RELIGION A
BY: Dr. S.
Indian Literature, both Sanskrit and Tamil a bounds in traditions which give pride of place to women. Women have earned the Veneration, Adoration and Admiration of those around them for their unblemished Chastity, Fidelity and Servility e.g Sita, Savithri Chandramathi, Dhamayanthi, Draupathi and Kannaki (Pattini Deviyo). Can we expect women of today to command affection and adoration in society, as was enjoyed by their ancient prototypes? It is stated in Tamil literature that women of virtue commanded the skies to give rain when there was dire need for water on earth.
In modern parlance, one refers to the wife as the "better half of man: like wise in Hinduism the Supreme deity, Shakthi and Shiva are believed to be (two-in-one) and the cause of the universe is evolution, resolution and dissolution Shathi and Shiva were represented by the symbols 'Lingam' and "Yoni' and venerated by the dravidians in their original home land, Mesopotamia, from whence the practice was brought to the Indus-valley region in 3000 B.C. The Lingam-Yoni worship was repugnant to the vedic-aryans who entered the Indus valley in 1500 B.C. Today, the Aryans of North India worship the lingam and yoni symbols with great zeal and piety. The pattern of dravidian worship eventually became the basis of modern hinduism.
Shiva, by himself is inert (Tamas) Shakthi is the dynamic force (Rajas) behind Shiva. When Shakthi and Shiva act, intelligence (Satva) i.e. the universe manifests.
ܔܔܛܔܛܔNܠܔܰܐܠܐ ೩æ ܐܶܡ
தன்னம்பிக்கை, ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு திருப்தி போன்றவை ஒருவனுக்கு வந்து விட்டால் போதும். ஒவ்வொரு தனிமனிதனும் அமைதி பெற்று விடுவான். அதனால் நாடும், உலகமும் அமைதிபெறும்.
மனிதநேயம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவனிடத்தில் தோன்றும் மனிதநேயம் தான், மற்றவர்கள் நன்மையைக் கருதி செயல்படும். அவரவர் தங்களது கடமையாக அமையும் தொழிலை, திறம்படச் செய்ய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம்' என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்.
விஞ்ஞான வளர்ச்சியாலும், வாழ்க்கை வசதிகளாலும், மனத்தின் அடித்தளத்தில் உள்ள ஆசைகள் பெருகிவிட்டன. இந்த ஆசைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை என்றால், நிறைவில்லாத வாழ்க்கைதான் வாழ முடியும்.
இந்து ஒளி V− ိ’’့်’ ... C
 
 

NO WOMAN
K. Vadivale
The question, Shakthi or Shiva (the woman or man) is the superior or the more powerful of the two, does not arise. The woman and man are complimentary and supplementary to each other. Both woman and man must act to be get a child.
Hinduism gives woman an exalted place both in the home and in society. Food, sleep and sex are a must (indispensable) to all living beings. Man alone, because of his highly developed sixth sense, craves for material wealth viz., gold, land and woman, Hinduism does not, like Buddhism and catholicism, believe in renunciation and celibacy as a pre-requisite and gate-way to salvation any person who lives a life of virtue can attain emancipation.
The Buddha was always uncomfortable in the presence of women and He was reluctant to admit them. into the Buddhist Sangha. The conversation between the Buddha and his favourite disciple Anand is relevant on this point. Anand
"How are we to conduct ourselves, Lord, with regard to woman - kind". "As not seeing them", replied the Lord. "But if we should see them, What are we to do"? "No talking Anand. "But if they should speak to us, Lord, what are we to do"? "Keep wide awake, Anand".
Why the sadhu's attitude towards woman kind was unpleasant, unwholesome, unhealthy and revengeful, is enigma to non-Buddhists.
༄༽
மனிதன் மனிதனாய்த் திகழ உடல் வலிமை, மன வலிமை, அறிவாற்றல், பொருளாதார வலிமை, சமூகச் சிந்தனை, ஆன்மீகப் பலம் ஆகிய அனைத்தும் தேவைப்படுகிறது.
ஒரு செடி வளர்கிறது. அது வளரும்போது அதன் இலைகளை சில கால்நடைகள் தின்று விடுகின்றன. இருந்தாலும், வலிமையோடு வளர்ந்து, அந்தச் செடி மரமாகி, மீண்டும் கால்நடைகளுக்கு உணவையும், நிழலையும் தருகிறது. அதுபோலவே மனிதனிடமும், தனக்குத் தீங்கிழைப்பவர்களையும் மன்னித்து, அவர்களுக்கும் நன்மை செய்கின்ற மனப்பாங்கு வளர வேண்டும். இதுவே உண்மையான மனித நேயம்.
மனிதனிடம் அன்பும், பண்பும் இருந்ததால் இறைவன் எந்தத் தயக்கமும் இல்லாமல், அவனிடம் தங்குகின்றான். அவனை உலகம் தெய்வமாக மதிக்கிறது.
விஸ்வயோகி விஸ்வம்ஜி
நன்றி:ஞானபூமி)
1) விஷனவருடம் தை - பங்குனி )

Page 33
மாமன்றத்தின் அஞ்சலி
நினைவலைகள் அமரர் ம. நாகரத்தின
மாமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினர்களு கடந்த ஜனவரி 22ம் திகதியன்று காலமானார் என்பதை தெரிவித்தரக் கொள்கின்றது.
ஜனவரி 27ம் திகதி மாலை மாமன்றத் தலைை நடைபெற்ற முகாமைப் பேரவைக் கூட்டத்தின் போது அமர செலுத்தப்பட்டதுடன் அனுதாபத் தீர்மானமும் நிறைவேற்
அன்னாரின் மறைவையொட்டி மாமன்றப் பொதுச்6
பிரசுரம் செய்கிறது.
"என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே”
என்னும் வாக்கிற்கேற்ப வாழ்ந்து, அந்த வாழ்வில்
இன்பம் கண்டு, இந்நாட்டில் சைவசமயம் வளர உழைத்து, எங்கள் உள்ளங்களில் போற்றத்தகு இனியவராகத் திகழ்ந்த நாகரத்தினம் ஐயாவின் இழப்பு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு
சட்டதரணியாக அமரருக்கு அறிமுகமானவன் நான். அகில இலங்கை இந்து மாமன்றப்பொதுச் செயலாளராக இருந்த திரு. சச்சிதானந்தசிவம் திடீரென மறைந்த சில நாட்களின் பின், என்னை நீதிமன்றத்தில் சந்தித்த திரு. நாகரத்தினம், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் பதவியை நான் ஏற்கவேண்டும் என்று அன்புடன் நிர்ப்பந்தித்ததுஇன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றது. உடன் சம்மதிக்க முடியாதிருந்தும், அப்பதவியை நான் ஏற்றபின், எப்பொழுதும் எனக்கு என் பணிகளில் ஊக்கமும் உற்சாகமும் தந்த ஒரு பெரியார் அவர்.
கொழும்பு விவேகானந்த சபையின் பணிகளுக்கு அவர் தன்னை அர்ப்பணித்து நின்றார். சபையின் குழுத் தலைவர் உட்பட பல பதவிகளை அந்த நிறுவனத்தில் வகித்த பெருமை அவருக்கு உண்டு. தேவாரப் பண்ணிசை மன்றத் தலைவராகப் பல ஆண்டுகள் தனது வாழ்வுடன் ஒன்றிவிட்ட அவர், பண்ணிசையைப் பரப்ப அயராது உழைத்தார். வெளிநாடுகளில்
ལྔ། སྒྲ་གང་དང་གཏུགས་
இந்து மக்களுக்குத் தேவையான பயனுள் விலை ரூ
(தபாற் செல
விபரங்
அகில இலங்கை
ദ്ര 

Page 34
இந்தச் சுடரில் .
Ά பஞ்ச புரானங்கள்
2. சிவராத்திரி மகிமை
7 நடராஜர் வடிவமும் அதன் தத்துவமும்
兔
அன்னை சாரதாதேவியார்
13. αν சங்கரரின் வரலாறும் சாதனைகளும் t
15 சைவசித்தாந்த சாத்திரங்களில் Lé
Λ6. மனிதர் பிறவியும் வேண்டுவதே
18. உலகம் அமைதி காணவேண்டும்
19 இறைவனின் நாமம்
27 பெரிய புராணக் கதைகள்
23. திருவிளையாடற் புரானக் கதைகள்
24 விசேட தினங்களும் விரத நாட்களும்
25 பக்தி மனம் கமழும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
26, afossa, to/i4,477
27 ஆலயங்களும் நடனமும்
29. Thiru Gnana Sambanthar the Hindu Saint
31. Religion and Woman
32. மாமன்றத்தின் அஞ்சலி
 
 

ஒரு பிரதியின்விலை ፳፰ 2000 வருடாந்தசந்தா 8008 வெளிநாட்டுவருடாந்தச்சந்தா GNU Imai 1000
அகில இலங்கை இந்து மாமன்றம் A. C. H. C. g. g. in சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை
கொழும்பு 2 இலங்கை,
: http://www.hinducongress.org 434990, தொலைநகல் 344720
2
HNDU OLI
- Thai - Pankuni ALL CEYLON HINDU CONGRESS
犯 12 MARCH 2002 Editoria Board:
Pulavar A. Thirunavukarasu
Mr. Kandiah Neelakandan
Mr. K. Rajapuvaneeswaran
Mr. M. Pavalakanthan
Mr. D. Manoharan
Mr. G. Partheepan
Price Rš 20.00per copy Annual Subscriptio RS 8000 Foreign Subscription U. S. S 1 000 (including Postage)
ALL CEYLON HINDU CONGRESS,
※* A. C. H. C. Bldg. 9115, Sir Cittampalam A. Gardiner Mawatha Colombo - 2 Sri B anka Website: http://www.hinducongress.org Telephone No. 434990, Fax No 344720.
PRINTED BYUNIEARTS (PVT) LTD., COLOM 80 13. TEL: 330195.