கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2002.04-06

Page 1
காலாண்டிதழ்
|bgs (OT (060TD LO
அகில இலங்கை இ
 
 

匾 ծքի
ଗ]]
/f/l 62etylo un 27Óiraala (Zoraggress

Page 2
“சக்தி இல்லம்’ திற
— RTS- E
இரத்மலானை இ ந்து
க் கல்லூரி வளவில் ،وهو و அமைந்துள்ள பூணூர் கற்பக விநாயகர் ၈။ အ၈ ஆலயத்தில் பூஜை வழிபாடு செப்பப் .ולaונ படுகின்றது.
ALL DELIA HILLI, Balti:” |
வணக்கத்திற்குரிய சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்களை திரு. ந. மன்மதராஜன் மாலை அணிவித்து வரவேற்கிறார்.
 
 
 
 
 
 
 
 

இல்லம்" திறப்பு விழாவில் கலந்து கொள்ள க தந்திருந்தவர்கள் பான்ட் வாத்தியம் சகிதம் த்துவரப்படுகின்றார்கள்.
வணக்கத்திற்குரிய சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்களால் "சக்தி இல்லம்" பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்படுகிறது.
மாமன்றப் பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜா மங்கள விளக்கேற்றுகிறார்.

Page 3
2. சிவமயம்
IIGhJ l]]T600Ilhlb6Í திருச்சிற்றம்பலம் தேவாரம்
ஆலந்தா னுகந்து அமுது செய்தானை ஆதியை
அமரர் தொழுதேத்துஞ் சீலந்தான் பெரிது முடையானைச்
சிந்திப்பா ரவர் சிந்தையுள்ளானை ஏலவார் குழலாளுமை நங்கை
என்று மேத்தி வழிபடப் பெற்ற காலகாலனைக் கம்பனெம்மானைக்
காணக் கண்ணடியேன் பெற்றவாறே.
5(56)ITJöl
கேட்டாருமறியாதான் கேடொன்றில்லான்
கிளையிலான் கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டாதன வெல்லாம் காட்டிப் பின்னும்
கேளாதன வெல்லாம் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம் பெருமான் செய்திட்ட விச்தைதானே
திருவிசைப்பா
களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள முளையா மதிசூடி மூவாயிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம் நின்னாடரங்கே.
திருப்பல்லாண்டு நிட்டையிலா உடல்நீத்து என்னையாண்ட
நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவன் அடியாரைச் சீராட்டும்
திறங்களுமே சிந்தித்து அட்டமூர்த்திக்கு என் அகம் நெகவூறும்
அமிர்தினுக்கு ஆலநிழல் பட்டனுக்கு என்னைத் தன்பாற் படுத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
ßhÜIIUI600Ils
தண்ணளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது மண்ணவர் கண்மழைபொழிந்தார் வானவர் பூமழைபொழிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங்கப் பெருமான்
صـ திருச்சிற்றம்பலம் -ܥ
(இந்து ஒளி

தீபம் - 6 á፡[ Lá –3 சித்திரபானு வருடம் ஆணி 8ம் நாள்
22 O6. 2002
மTமன்றத்தின் சமூகப்பணி நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த அமைதியற்ற தொரு சூழ்நிலை தற்காலிகமாக தணிந்த நிலையில் - இப்பொழுது நிரந்தர சமாதானத்திற்கும் அமைதிக்குமானபாதையைநோக்கியபயணத்திற்கான முன்னெடுப்புகள் செய்யப்பட்டுவரும் வேளையில், கடந்த கால நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன்களைக் கவனித்து வருவதில் பொதுநல நிறுவனங்கள் பல ஈடுபட்டிருக்கின்றன.
யுத்த நிலைமைகள் பல இளம் சிறார்களை அனாதைகளாக்கி யிருப்பதை அனைவரும் அறிவர். பெற்றோர்களை, உற்றார் உறவினர்களை இழந்ததால் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் சிறுபிள்ளைகள்பாதிக்கப்பட்டதுபோலவே,முதியோர்களும்பலவகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முதியோர்களைப் பொறுத்தவரையில் குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்களை இழந்திருப்பதன் காரணமாகவோ,போர்காலச்சூழலால் பிள்ளைகள் புலம்பெயர்ந்து வெளி நாடுகளுக்குச் சென்றதன் காரணமாகவோ,சொந்தவீடுகளை இழந்து இடம்பெயர்ந்து இருப்பதன் காரணமாகவோ, அல்லது விவசாயம் போன்ற தொழில்முயற்சிகளில் ஈடுபட்டிருந்தஇடங்களைவிட்டுவெளியேறியதினால் ஏற்பட்டவசதியற்ற நிலையினாலோபாதிப்புகள்ஏற்பட்டிருக்கவாய்ப்புகள் உண்டு
மேலைநாடுகளில் முதியோர்களை மூத்த பிரஜைகளாக மதித்து அவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை அந்நாட்டு அரசாங்கமே வழங்கி வருவது போன்ற நிலைமைகள் இலங்கையில் இல்லை. எனவேதான் இங்குள்ள பொதுநல நிறுவனங்கள் மனிதாபிமானிகளின்ஆதரவுடன்முதியோர்நலம்பேணும்நிலையங்களை நடத்திவருகின்றன.
இந்தநிலையில்தான் எமது மாமன்றமும் தனது சமயப்பணிகளுக்கு மேலாக, சமூகப் பணிகளிலும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியது. இந்த வரிசையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இரத்மலானையிலுள்ளகொழும்புஇந்துக்கல்லூரியில் மாமன்றத்தினால் நாற்பது மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டஇலவசவிடுதிபடிப்படியாக வளர்ச்சிபெற்று இன்று நூறு மாணவர்களை வைத்துப் பராமரிக்கும் நிலையில் உயர்ந்திருக்கிறது.
இப்பொழுது பாதிக்கப்பட்டஇளம்சிறார்களானமாணவிகளுக்காக இலவச விடுதியொன்றும் முதியோர்களுக்கான பராமரிப்பு இல்லமொன்றும் "சக்தி இல்லம்" என்றபெயரில் எமது மாமன்றத்தினால் இரத்மலானையில் அமைக்கப்பட்டு, இம்மாதம் 9ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
மாமன்றத்தின்இத்தகைய சமூகநலப்பணிக்குமனிதநேயநிதியமும், சில பொதுநலநிறுவனங்களும் தனிப்பட்ட அன்பர்களும் அவ்வப்போது வழங்கிவரும் பேராதரவு, அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு துணைபுரிகிறதுஎன்றே சொல்லவேண்டும்.
இன்றைய தற்காலிக அமைதி நிலையைத் தொடர்ந்து நாட்டில் சுபீட்சமானதொருஎதிர்காலம்தோன்றவேண்டும்என்ற அனைவரினதும் எதிர்பார்ப்புகளுடன்மாமன்றமும் ஒன்றிணைந்து,தனது சமூகப்பணியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றது.
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 4
ஒரு கோக்கு
கோலாகலமாக நடந்ே திறப்பு
હlદ્વીo இலங்கை இந்து மாமன்றம் தனது சமயப்பணிகளுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளின் தொடரில் இரத்மலானையில் அமைக்கப்பட்ட “சக்தி இல்லம்’ (சிறுபருவத்திலுள்ள மாணவிகளுக்கான இலவச விடுதியும், முதியோர் இல்லமும்) இம்மாதம் 9ம் திகதி (09.06.2002) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய சுவாமி ஆத்மகணானந்தாஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அன்றைய தினம் காலை 10.00 மணியளவில், இரத்மலானை இந்துக் கல்லூரி வளவில் அமைந்திருக்கும் பூரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடந்த சிறப்புப் பூஜையைத் தொடர்ந்து வைபவத்திற்கு வருகை தந்திருந்த பிரமுகர்கள் அனைவரும் ஆலயத்திலிருந்து பான்ட் வாத்தியம் சகிதம் “சக்தி இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
நாடாவை வெட்டி திறந்து வைத்தல், மங்கள விளக்கேற்றல் ஆகிய சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏனைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் ஆரம்பமான மேற்படி வைபவத்தில், சுவாமி ஆத்மகனானந்தாஜி ஆசியுரை வழங்கும்போது.
“இறைவனுடைய படைப்பிலே மனிதன் உயர்ந்த இடத்தைப் பெறுகிறான். ஆகவே மனிதனில் இருக்கக்கூடிய இறைவனை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தக் காலகட்டத்தில் அவனுக்குச் செய்யவேண்டிய முக்கிய பணிகள் பல இருக்கின்றன. அந்த வகையில் அகில இலங்கை இந்து மாமன்றம், இந்த நாட்டிலிருக்கும் இந்து சமய அமைப்புகளுக்கு ஒரு முன்னோடியான வழிகாட்டியாக கடந்த சில ஆண்டுகளாகவே நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் தைரியத்தோடும் மக்கள் சேவையாக ஆற்றிவரும் இத்தகைய பணிகள் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தையும் தூண்டுதலையும், புதிய சிந்தனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அவசியமானதொரு கால கட்டத்திலே இத்தகைய சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆலயத்திலே இருக்கக் கூடிய இறைவனை ஆலயத்திற்கு வெளியேயும் மக்களாகவே கண்டு, அவர்களுக்கு சேவையாற்றுவதன் மூலம் ஆலயத்திற்குள் இருக்கும் இறைவன் மக்களை மூலமாகவே வழிபடப் படுகின்றான். ஆதரவு இல்லாமல் எங்கெங்கோ இருந்த குழந்தைகளை அழைத்துவந்து அன்போடு பராமரிக்கும்பொழுது அதுதான் இறைவனுக்குச் செய்யும் மிகச் சிறந்த வழிபாடாக உள்ளது. புதிய பாதையில் மக்களை வழி நடத்திச் செல்லும் இந்து மாமன்றத்தின் செயற்பாடு உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என்று சொன்னார்.

தறிய “சக்தி இல்லம்’
மேற்படி வைபவத்தில் கலந்து கொண்ட தெஹிவல - கல்கிசை மாநகரசபை முதல்வர் திரு. சனசிறி அமரதுங்க பேசும்போதுநான் மாநகரசபை முதல்வராகப் பதவியேற்றபின்னர் இந்து சமய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுவது இதுவே முதற்தடவையாகும். இன்றைய சமூகத்தில் வயோதிபர்களுக்கு உதவி செய்வது மிகவும் குறைவாகவே இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படியான ஒரு காலகட்டத்திலே இதுபெரும் சேவையாகும். இதனுடன் இணைந்து வசதியற்ற குழந்தைகளைப் பராமரித்து அவர்கள் கல்வி கற்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதன் மூலமும் இந்து மாமன்றத்தின் முன்னேற்றகரமான பணி போற்றத்தக்கது” என்றார்.
உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. சி. வி. விக்னேஸ்வரன் பேசும் போது “எங்களுடைய சூழலும் காலத்தின் மாற்றங்களும் குழந்தைகளை அநாதரவாக்கியிருப்பதுடன் முதியோர்களும் பராமரிப்பு அற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவேதான் இன்றைய வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்றவாறு, தங்களைச் சூழ்ந்திருக்கும் சிறுவர் முதல் வயோதிபர் வரையிலான ஒவ்வொருவரையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் இந்து மாமன்றம் நல்ல கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றது. மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பதற்கிணங்க எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாங்கள் நன்மைகளைச் செய்யும்போது அது இறைவனுக்குச் செய்யும் தொண்டாக அமைகிறது. அந்த வகையில் இந்த “சக்தி இல்லம்’ அன்பு இல்லமாக மிளிர்ந்து குழந்தைகளுக்கும் வயோதிபர்களுக்கும் நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றே இறைவனை இறைஞ்சுகின்றோம்” என்று தெரிவித்தார்.
சாரதா சமித்தி தலைவி செல்வி கணபதிப்பிள்ளை தனது வாழ்த்துரையில் 'நாம் ஒருவருக்கு ஒரு பொருளை கொடுக்கின்றபோது, கொடுப்பவரைவிட வாங்குபவரே உயர்ந்தவர் என்று சுவாமிஜிசொல்லுவார். இதனாலே கொடுக்கின்றவர்களுக்கு அதாவது அந்த தர்ம கைங்கரியத்தை செய்பவர்களுக்கு, அதனைப் பெற்றுக் கொள்வோர் வாய்ப்புக் கொடுக்கிறார்கள். இப்படியான ஒரு வாய்ப்பை ஆண்டவன் நமக்குத் தந்தானே என்று மகிழ்ச்சியடைந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற இல்லங்கள் பல தோன்றி சிறப்பான முறையில் சேவையாற்றுவது அவசியமாகும். அதற்கு முக்கியமாக பொருளுதவியை விட ஆளணி உதவியும் தேவை. தங்கள் பொழுதை வீணடித்துக் கொண்டிருப்பவர்கள் ஆண்டவன் ஒருவாய்ப்புத் தந்திருக்கிறான் என நினைத்து இந்தப் பணியில்
சித்திரபானு வருடம் சித்திரை - ஆணி)

Page 5
இணைய வேண்டும். பணியிலே நமது மனம் சென்றால் உடலைப் பற்றிய சிந்தனை வராது. உடல் நலத்தை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். திருமூலர் சொல்லியிருப்பதைப் போல மக்களுக்குச் சேவை செய்யும் போது அது மகேஸ்வரனுக்குச் சேருகிறது. சிறுவர்கள், முதியோர்களைப் பராமரிக்கும் இத்தகைய இல்லங்களும் சிறந்த ஆலயங்களே. இவற்றை நல்ல முறையில் கவனித்து வளர்ப்பதற்கு தனிமனிதரோ சபையோ போதாது. பொதுமக்களின் ஆதரவு நிறையத் தேவை. இப்படியான நல்ல கைங்கரியங்களின் ஊடாக இந்து மாமன்றத்தின் செயற்பாடுகள் இப்போது திருப்திகரமான வகையில் நடந்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது” என்றார்
கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. எஸ். தில்லைநடராஜா உரையாற்றும்போது “தமிழ் சமூகத்திற்கு அரும்பணியாற்றிவரும் இந்து மாமன்றம், வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் பலர் இன்னல்களுக்கு மத்தியில் திண்டாடிய பொழுது இங்கிருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி அவர்களுக்கு உதவியிருந்தமை என்றென்றும் போற்றப்படவேண்டியது. அத்தகைய பணியில் இன்னொரு பகுதியாகவே சக்தி இல்லம் அமைந்திருக்கிறது. நிதிவளம், மனிதவளம் குறைவாக இருந்தாலும் நம்பிக்கையுடன் அனைவரும் ஒன்று சேர்ந்தால் , இன்னமும் எங்கள் சமுதாயத்தின் பல தேவைகளை நிறைவேற்றலாம்” என்றார். . .
(COS2UGN(Cdశా?COS(శాx3F)
நல்லை ஆதீனத்
அகில இலங்கைஇந்து மாமன்றம் பல நலன்வி ஆதீனத்திற்கு அன்பளிப்பா
Q_2OSCOK32XSCDQ>2XS C>Q-2XSCOK - 2)
இந்து ஒளி :
 
 

மட்டக்களப்பு கல்லடி, புதுமுகத்துவாரம் பூரீதேவி ஆச்சிரமம் பூரீமத் சுவாமி சண்முகானந்தாஜி, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் திரு. க. கணேசலிங்கம், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலய தர்மகர்த்தா திரு. எஸ். சுப்பிரமணிய செட்டியார், இந்து வித்தியா விருத்திச் சங்கத் தலைவர் திரு. மகாலிங்கசிவம் மாமன்ற பிரதிச் செயலாளரும் இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபருமான திரு. ந. மன்மதராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் நன்றியுரை வழங்கும்போது"இந்து மாமன்றம் வடக்கு கிழக்குப்பகுதிகளிலும்பலபணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதனை இன்னும் விஸ்தரிக்க விருக்கிறோம். மனிதநேய நிதியம் என்ற அமைப்பும் எங்களுடன் இணைந்து அத்தகைய சமூகப் பணிக்கு பெரிதும் உதவிவருகிறது. யாழ் மாவட்டத்திலே நல்லூரில் 2 % பரப்பு காணி கிடைத்துள்ளது. அதில் நல்ல பணிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை” என்று தெரிவித்தார்.
“சக்தி இல்லம்’ திறப்பு விழாவின் இறுதியில் அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது.
(தொகுப்பு : அ. கனகசூரியர்)
திற்கு அன்பளிப்பு
$ம்பிகளின் உதவியுடன்நல்லூர்திருஞானசம்பந்தர்
வழங்கிய மோட்டார்வாகனம்.

Page 6
புரான தத்துவங்க
க. தங் பிஏ(ெ
இந்துசமய விளக்கம்
இந்து சமயம் (சைவ சமயம்) ஆழ்ந்த தத்துவங்களைக் கொண்டிருந்த போதும் அதில் உள்ள புராணக் கதைகளும் அவற்றின் அடிப்படையில் எழுந்த சமய அனுஷ்டானங்களும், அத்தத்துவங்கள் வெளிப்படையாக தெரியாமல் மறைந்துள்ளன. உண்மையில் இந்து சமயம் இயற்கையோடு இயைந்த, பெளதீக அடிப்படையில் அமைந்த விஞ்ஞான ரீதியான தத்துவங்களைக் கொண்டது. இத்தத்துவங்கள் நான்கு வேதங்களிலும் அவற்றின் சாரமான உபநிஷத்துக்களிலும் அடங்கியுள்ளன. ஆனால் இவை சாதாரண மக்களுக்குப் புரியாது என்பதால், பிற்காலத்தில் புராணங்களும் இதிகாசங்களும் தோன்றின.
இப்புராணங்களின் அடிப்படையில், கோயில் திருவிழாக்களும், பூனை புணஸ்காரங்களும், உற்சவங்களும், விரத அனுஷ்டானங்களும் எழுந்தன. இவை பாமர மக்களை வெகுவாகக் கவர்கின்றன. அவர்களைப் பக்தி மார்க்கத்தில் இட்டுச் செல்கின்றன.
அதனால் போட்டிபோட்டுக்கொண்டு திருவிழாக்களையும் பிற உற்சவங்களையும் சைவாலயங்களில் செய்கின்றனர். இவ்வாறு வெறும் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் ஈடுபாடு கொள்வதால் அவற்றின் பின்னணியில் உள்ள தத்துவங்களை மக்கள் புரிந்துகொள்வதில்லை.
இத்திருவிழாக்களும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் எப்படி உருவாகின்றன? ஏன் உருவாகின, இவற்றினால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதைப் பெரும்பாலானோர் தெரிந்து கொள்வதில்லை. அவற்றை அறிந்து கொண்டால் இந்து சமயத்தின் ஆழமான தத்துவங்களும் சமய அனுஷ்டானங்களின் உட்பொருளும் தெற்றென விளங்கும்.
பண்டிகைகளும் விரதங்களும்
சமய விழாக்களைப் போலவே இந்துக்கள் அனுஷ்டிக்கும் பண்டிகைகளும் விரதங்களும் உட்பொருள் பொதிந்தவை. இவ்வகையில், தைப்பொங்கல், தைப்பூசம், சித்திரைப் புதுவருடம், தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி, கெளரிவிரதம், கார்த்திகைவிரதம், கந்தசஷ்டி விரதம், விநாயக சஷ்டி விரதம் முதலியன மிகவும் அர்த்தமுள்ளவைகளாகும். அவற்றின் பயன்பாடுகளும் அளப்பரியனவாகும்,
தைப்பொங்கல் என்பது உழவர் திருநாள். நமக்கு உணவளித்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள். வயலில் நமக்கு உதவிய மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வைபவம் அது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பொருள் பொதிந்த வாசகம்.
 
 
 

5ளும் விரதங்களும்
கேஸ்வரி 5ால்)சிறப்பு
அவ்வாறே சித்திரைப் புதுவருடம், பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினனானே என்பதற்கேற்ப, அறுவடையின் பின் புது நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வைபவம் . தீபாவளி என்பது தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருக விழையும் வைபவம். நவராத்திரி விழா, கல்வி, செல்வம், வீரம் வேண்டிப் பிரார்த்திக்கும் வைபவம். சிவராத்திரி என்பது சிவனை இரவு முழுவதும் வேண்டுதல் செய்யும் பிரார்த்தனை
முறை.
இவ்வாறே கெளரி விரதம், கார்த்திகை விரதம், கந்தஷஷ்டி விரதம், விநாயக சஷ்டி விரதம் முதலியன ஒவ்வொரு தெய்வமூர்த்தத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் விரதங்களாகும். இவ் விரதங்கள் வைராக்கியத்தையும், மன உறுதியையும் ஏகாக்கிர சிந்தையையும் வளர்க்கும் தவம் என்று சொல்லலாம். முற்காலத்தில் யோகிகளும், ஞானிகளும் மேற்கொண்ட தவத்தைப் போலவே இக் காலத்தில், விரதங்கள் பயன்படுகின்றன. இவ்வகையில் கந்தஷஷ்டி விரதம் மற்றெல்லா விரதங்களையும் விடக்கடுமையானதும், வைராக்கியமுடையது மாகும். இதிலிருந்தே இவ்விரதத்தின் முக்கியத்துவத்தை ஒரளவு புரிந்துகொள்ளலாம்.
இந்து சமய தத்துவங்கள், வேத உபநிடதக் கருத்துக்கள்
இறைவனின் திருவிளையாடல்களைத் தொகுத்துக் கூறுவதே புராணங்கள். இத்திருவிளையாடல்கள் யாவும் இந்து சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்களைப் பாமர மக்களும் எளிதாக விளங்கிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உருவக்கதைகள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
இருக்கு, யசுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களும் இந்து சமய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளன. ஆனால் இவற்றை பாமர மக்கள் எவரும் விளங்கிக் கொள்ளமுடியாது என முன்னர் கூறினோம். இந்த நான்கு வேதங்களின் சாரம் உபநிஷத்துக்களில் இடம்பெறுகின்றன. இவற்றையும் பாமர மக்கள் இலகுவில் விளங்கிக்கொள்ளமுடியாது என்பதையும் பார்த்தோம்.
எனவேதான் இவற்றின் உட்பொருளை உள்ளடக்கியதாக புராணங்கள் தோன்றின. இப்புராணங்கள் செம்பொருள், குறிப்புப்பொருள் ஆகியவற்றைக் கொண்டவை. செம்பொருள் என்பது இப்புராணங்களில் வெளிப்படையாகச் சொல்லப்படும் கதை என்றும், குறிப்புக் பொருள் என்பது அக்கதையினூடே பொதிந்துள்ள தத்துவங்களை உணர்த்துவது என்றும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
4 స్ల சித்திரானு வருடம் சித்திரை ஆன்)

Page 7
உதாரணமாக, நெருப்பும் அதனூடே விரவி நிற்கும் சூடும் போல இரண்டறக்கலந்து நிற்பது திருவருட்சக்தி. புராணங்கள் இதை சிவன் சக்தி எனக்கூறும். இந்த இணைப்பைத் திருமணமாக உருவகித்து, சிவன், சக்தி ஆகியோரை கணவன், மனைவி எனக்கூறும் பெற்றோரின் ஆற்றல் பிள்ளைகள் மூலம் வெளிப்படுவது நாம் அறிந்ததே. இவ்வாறே திருவருட் சக்தியின் செயற்பாடுகளை, கணபதி, முருகன் என உருவகித்து அவர்களை இறைவனின் குழந்தைகள் எனப் புராணங்கள் கூறுகின்றன.
முருக வணக்கம்
தமிழர் பண்பாடு வளர்ச்சி பெற்ற காலம் முதல் முருக வணக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சங்க கால இலக்கியமான பரிபாடலில் "ஸ்கந்த” என முருகன் குறிப்பிடப்படுகிறான். ஐந்திணைகளுள் குறிஞ்சித்திணை முருகனுக்குரியதாகிறது. குறிஞ்சிக்குமரன் என முருகன் அழைக்கப்படுகிறான். நாம் வாழும் இன்றைய கலியுகத்துக்குரிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறான்.
கச்சியப்பரின் கந்தபுராணமும், நக்கீரரின் திருமுருகாற்றுப் படையும் அவன் புகழ் கூறுகின்றன. அருநகிரிநாதரின் திருப்புகழ், திருவகுப்பு, கந்தரலங்காரம், கந்தரனுபூதி முதலிய அத்தனை நூல்களும் முருகனையே பாடுகின்றன. முருக தத்துவம் ஆழமானது. /
அண்டமெங்கும் உள்ள உயிர்கள், இறைவனிடமிருந்தே வந்தவை. அந்த உயிர்கள் அனைத்தும் மீண்டும் இறைவனையே சென்றடைகின்றன. அத்தகைய உயிர்களின் மும்மலப்பிணிகளை நீக்கி, அவ்வுயிர்களை ஆட்கொள்ளும் பொருட்டே இறைவன் எண்ணற்ற திருவிளையாடல்களை மேற்கொள்கிறான். இத் திருவிளையாடல்களைத் தொகுத்துக்கூறுவன புராணங்கள். இவ்வகையில் கந்தபுராணம் மிக முக்கியமானது.
கந்தபுராணம் முருக மூர்த்தமான இறைவனின் திருவிளையாடல்களைத் தொகுத்துக் கூறுகின்றது. அதன் அடிப்படையில் எழுந்ததுதான் கந்தசஷ்டிவிரதமும், சூரன்போர் உற்சவமும், அதனோடு இணைந்த அனுஷ்டானங்களும். இவற்றைப் பின்னால் பார்ப்போம்.
இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானே, முருகனாகவும், கணபதியாகவும், பிரம்மனாகவும், விஷ்ணுவாகவும், உருத்திரமூர்த்தியாகவும் தோன்றுகிறான் என்பதை வேதாந்தமும், சித்தாந்தமும் தெளிவாக விளக்கியுள்ளன. எனவே முருகன் வேறு, சிவன் வேறு, ஏனைய தெய்வ மூர்த்தங்கள் வேறு என்ற மயக்கம் நமக்கு ஒருபோதும் இருக்கக்கூடாது.
முருக தத்துவம்
"அருவமும் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய' முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் இவ்வாறு கூறியுள்ளார். உருவமற்ற இறைவன்,
 

சோதிப்பிழம்பை மேனியாக்கி கருணை நிறைந்த ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்டு முருகனாகத் தோன்றினான்! எதற்காக? உலகத்தை உய்விப்பதற்காக!
இந்த ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் எதைக் குறிக்கின்றன. சுவாமி சித்பவானந்தர் இதற்கொரு வித்தியாசமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மனிதன் உலக இன்பத்தைத் துய்ப்பதற்குக் காரணமாக இருப்பது 5 கர்மேந் திரியங்களும் 5 ஞானேந்திரியங்களும். அதாவது ஐம் பொறிகளும் அவற்றினூடே வெளிப்படும் ஐம்புலன்களுமாகும். இவை ஐந்தும் ஆறாவது புலனான மனத்தோடு தொடர்புபட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. இந்த சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் என்பன, சுவை இன்பம், காட்சி இன்பம், ஸ்பர்ச இன்பம், ஓசை இன்பம், வாச இன்பம் முதலியவற்றைத் தருகின்றன. இவற்றுக்கு ஆதாரமானது ஆறாவது புலனாகிய மனம் என்பது.
முருகனின் ஆறு முகங்களும் இந்த ஆறு புலன்களைக் குறிப்பதாகவும், இவை இந்தப் பிரபஞ்சத்தின் வியாபகமாகவும் கொள்ளப்படுகின்றன. அவற்றை அடக்கிவைப்பது ஞானசக்தி. அதைக் குறிப்பது முருகனுடைய வேல். இதையே அறுபடை வீடு (இன்பம்) எனவும் கொள்வர்.
இவ்வாறே முருகனுடைய 12 னிககளுக்கும் தத்துவ விளக்கம் உள்ளது. முருகனின் ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதம் இருக்கின்றது. அவை ஒவ்வொன்றும் ஒரு சக்தியைக் குறிக்கின்றன. இந்த அண்டம் முழுவதையும் அடக்கிய ஆற்றல் உள்ளவன் முருகன் என்பதை அக்கரங்கள் பன்னிரண்டும் குறிப்பிடுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எங்கும் நிறைந்தவன்; எல்லாம் அறிந்தவன்; எல்லாம் வல்லவன் என்ற இறைத்துவத்தையே முருகனின் ஆறுமுகங்களும் கரங்கள் பன்னிரண்டும் குறிக்கின்றன. சிவசொரூபம் , சக்தி சொரூபம் ஆகிய இரண்டும் சேர்ந்து அமையப் பெற்றவன் சிவசுப்பிரமணியனான முருகன். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகிய மூன்றும் அவனுள் அடங்கும்.
கந்தபுராணமும் அதன் தத்துவங்களும்
கச்சியப்பசிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம், முருகனாகத் தோற்றும் இறைவனின் திருவிளையாடல்களைக் கூறுகின்றது. அசுரர்களின் கொடுமைகளிலிருந்து தேவர்களை காப்பாற்ற இறைவன் முருகனைத் தோற்றுவித்தார். முருகன் ஆறுமுகம், பன்னிரண்டு கைகளும் உடையவன். திணைப்புன வள்ளியைக் காதல் செய்து மணந்தவன், சூரனுடன் போர் செய்து அவனை ஆட்கொண்டபின் தெய்வானையை மணந்தவன் என்பது கந்தபுராணம் கூறும் கதை.
இதன் தத்துவம் என்ன?
இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் வழிமுறைகளையே இக் கதை விளக்குகின்றது. வள்ளி திருமணம் என்பது பக்குவப்படாத உயிர்களை இறைவன் தானே வலிந்து ஆட்கொள்ளும் முறையைக் குறிக்கும். சூரன் போர் என்பது உயிர்களை வருத்தும் பந்தங்களிலிருந்து அவர்களை
* சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 8
விடுவிப்பதைக் குறிக்கும். தெய்வானை திருமணம் என்பது பக்குவமடைந்த உயிர்கள் இறைவனைத் தேடிச் சென்று அவனுடன் இரண்டறக் கலப்பதைக்குறிக்கும்.
இதையே வேறு வகையில் கூறும் போது வள்ளியை இறைவனின் இச்சா சத்தியின் உருவமாகவும், தெய்வானையே கிரியா சக்தியின் உருவகமாகவும் முருகனின் வேலைஞான சக்தியின் உருவகமாகவும் கூறுவர்.
சூரன் போரில் இடம் பெறும் சூரன், தாரகன், சிங்கன் ஆகியோர் உயிர்களின் தெய்வாம்சத்தை மூடி மறைந்துள்ள மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பதைக் குறிக்கும். முருகன் ஆறுநாட்கள் நடாத்தும் போர் என்பது, இம் மும் மலங்களின் வெளிப்பாடான காம, குரோத, லோப, மோக, மதமாற்சரியம் என்னும் ஆறுதுர்க்குணங்களையும் வெற்றி கொள்வதைக் குறிக்கும். இவ்வாறு உயிர்கள் அதாவது ஆன்மாக்கள் விடுவிக்கப்பட்டுத் தெய்வீகநிலை அடைந்ததும் அவை இறைவனுடன் இரண்டறக் கலக்கின்றன. இந்நிலையை அடைவதற்கு உயிர்களுக்கு மன உறுதி, வைராக்கியம், ஏகாத்திரசிந்தை முதலியன அவசியம். இதையே விரதங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
முருக விரதங்களும் கந்தசஷ்டி விரதமும்
முருகனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் மூன்று விரதங்கள் முக்கியமானவை. அவை கார்த்திகை விரதம், சுக்கிரவார விரதம், கந்தசஷ்டி விரதம் என்பவை ஆகும். இவற்றுள் முதலிடம் பெறுவது கந்தசஷ்டி விரதமாகும்.
ஐப்பசித் தீபாவளி அமாவாசையை அடுத்துவரும் பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறுநாட்கள் கந்தசஷ்டி விரத நாட்களும் முருக பக்தர்கள் இந்த ஆறுநாட்களும் முழுப்பட்டினியாக (உண்ணாவிரதம்) இருப்பர். முதல் நாள் அதிகாலை நீராடி தூய ஆடை அணிந்து முருகன் ஆலயம் சென்று, அங்கேயே ஆறு நாட்களும், தண்ணிர் கூட அருந்தாது உபவாசம் இருந்து முருக வழிபாடு செய்வர். முதல் நாளில் ஐயர்முன் அமர்ந்து சங்கல்பம் செய்து, காப்புக் கட்டி தர்ப்பை அணிந்து விரதத்தை ஆரம்பித்து, ஆறாம் நாள் அவற்றை ஐயரிடம் ஒப்படைத்து, ஏழாம் நாள் அதிகாலை நீராடி பாரணை பூசை செய்து ஆகாரம் உட்கொள்வர்.
விரத நாட்களில் தினமும் ஆலயத்தில் கந்தபுராணம் படனம் நடக்கும். அதாவது ஒருவர் கந்தபுராணத்தை ஒவ்வொரு செய்யுளாக வாசிக்க, மற்றொருவர் அதன் பொருள் சொல்வர். பக்தர்கள் அவற்றைச் செவிமடுப்பர்.
ஆறாம் நாள் ஆலயத்தில் சூரன் போர் உற்சவம் நடக்கும். நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் முருகப் பெருமான் சூரனை வதம் செய்து அவனை வேலும் மயிலுமாக ஏற்றுக்கொள்வர். ஆறுநாளும் உபவாசம் இருக்கமுடியாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை ஒரு பழம், அல்லது ஒரு இளநீர், அல்லது ஒரு
* நல்லது என்றும் அல்லது என்றும் எதுவுமில்லை;நம் ஷே
 

கிளாஸ் பால், அல்லது ஒருவேளை உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பர். ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே இவ்விரதத்தை அனுஷ்டிப்பர். விரதகாரர்கள் உணவு உட்கொள்ளாவிட்டாலும் தமது அன்றாட அலுவலகக் கடமைகளையும், வீட்டுக் கடமைகளையும் ஒழுங்காகச் செய்வது ஆச்சரியம் அளிக்கும். இந்த விரத அனுஷ்டானத்தைக் கந்தபுராணம் பின்வருமாறு கூறும்.
“வெற்பொடும் அவுனன் தன்னை வீட்டியதனிவேற் செங்கை அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாரும் சொற்படுதுலையின் திங்கட் சுக்கில பட்டசந் தன்னில் முற்பகலாதியாக முவிரு வைகல் நோற்றார்.
(கந்தவிரதப் படலம்) : 20
கந்தபுராண கலாசாரம்
புராணக் கதைகளில் பொதிந்துள்ள தத்துவங்கள் புரியாமல், அவற்றை மூடநம்பிக்கைகள் என்று சொல்வோரும், பகுத்தறிவுக்கொவ்வாத பல தெய்வங்களைக் கொண்டது இந்து சமயம் என்று சொல்வோரும் இன்றும் நம்மிடையே உள்ளனர். இவர்கள் சமய தத்துவங்களைச் சரியாக அறிந்திருக்காத காரணத்தால் பிற சமயத்தவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிக்கத் தெரியாமலும் இருக்கின்றனர். இத்தகைய அறிவிலிகளுக்கு ஒரு நூற்றாண்டு முன்பே நமது சுவாமி விவேகானந்தர் சரியான விளக்கம் அளித்துள்ளார்.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் (1893) சிக்காகோவில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் உலக சமயங்களுள் உன்னதமானது இந்துசமயமே என்பதை ஆணித்தரமாக - பிற சமயத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறுவினார்.
அதுமட்டுமல்ல, அம் மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நாட்டவர்களின் வேண்டுகோள்களுக்கமைய மேல் நாடுகளில் பிரசங்கமாரி பொழிந்த சுவாமி விவேகானந்தர் “புராணங்களும், இதிகாசங்களும்தான் இந்துக்களைப் பன்னெடும் காலமாக, தலைமுறை தலைமுறையாக தர்மநெறியில் வழிநடாத்தி வருகின்றது என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்.
அத்தகைய புராணங்களுள் தலையாயது கந்தபுராணம் எனலாம். கந்தபுராணம் ஆண்டு தோறும் ஆலயங்களில் இடம்பெற்று கந்தபுராண கலாசாரம் என்ற ஒரு மரபையே தோற்றுவித்துள்ளது. இந்தக் கந்தபுராண கலாசாரத்தின் மூலம் மக்கள் கலியுக வரதனான கந்தனிடம் பக்திபூண்டு ஆண்டுதோறும், கந்தசஷ்டி விரதம் அனுஷ்டித்து, பக்திமார்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் மூலம் தம்மை எதிர்கொள்ளும் துன்ப துயரங்களுக்கு மத்தியில் மன அமைதி பெறுகின்றனர். இதுவே புராண தத்துவங்கள் நமக்குப் போதிக்கும் அர்த்தமுள்ள போதனைகளாகும்.
நினைப்பைப்பொறுத்துத்தான் எதுவும் அப்படி ஆகின்றது.
க்ஸ்பியர்.
சித்திரபானு வருடம் சித்திரை:ஆணி)

Page 9
கொழு
ζω)))))))
எட்டுத்திக்கும் அருள்பரப்பிஏற்றிட மட்டில்லா பேருவகை வழங்குகின் ஒட்டிவிடுதிமைகளை ஒளிரச்செய் அட்டன்மாநகரமர்ந்த மாணிக்கப்ப
மலைசூழ்ந்த மாநிலத்தில் குன்றினி அலைமோதும் மனங்களிலே ஆறு நிலைகுலையாநிம்மதிக்கு உன்து தலைதாழ்த்திவணங்குகின்றோம்
எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்திய வழித்துணையாயிருந்தெமக்கு ந இழிநிலையைப் போக்கிவிடுஇன்ட விழிமலர்ந்து நிற்பவனே மாணிக்கட்
சலித்து நிற்போர்மனங்களிலே நம் கிலிகொண்டுதுவண்டு நிற்போர்து வலிந்து வரும் துன்ப நிலை அகற். நலிவில்லாநலமளிக்கும் மாணிக்க
நன்மைகள் பெருகிடவும் நானிலத் உண்மையெங்கும் ஓங்கிடவும் உள 62udGöIGoudu/GiroTib 6245/1Goór G)JGoove: அன்பைப் பெருக்கியெமை ஆட் ெ
வீதிவலம் வந்துநலம் அருளுகின் நாதியில்லை என்ற நிலை எமக் கெ ஆதிசிவன்பெற்றமகன்அருகினிே கதிநியே கருணைசெய்து ஆட்கெ,
 
 
 
 

மாணிக்கப் MGIIu IIÍ
னோகரன் மாபதி ம்புத்துறை
uğuru/r a56456opG007GNu/TGrif” ற தலைமகனே வாய் நன்மைகளை firgognus GT
லே குடி கொண்டாய் தலைத் தருவோனே ணையே வேண்டுமuய்யா மாணிக்கப் பிள்ளையாரே
பிலே அமர்ந்தவனே ல்ல வழிகாட்டிடய்யா
நிலை தந்துவிடு 7 Longogau/7Gr
பிக்கை ஒளிநீயே யர்போக்கிஅருள்வோனே றிவழிகாட்டிடுவாய் 7 и ЛойсорбтилтGт
தோர்மகிழ்ந்திடவும் ரெல்லாம் செழித்திடவும் அடிபணிந்தோம் உந்தனையே B/IGir(Gn5öðuo/IcJafÉ4,ÚUýbirgognu ITGI
ரதிருமகனே ன்றும் இல்லையையா
ஸ்நீயிருக்க 7Giron/Tufvud/Goofiasty forgognuszGT
§
s
英粽 --F
ரயானு வருடம் சித்திரை ஆணி

Page 10
GBTD Ö6)shus
கே. ஈஸ்வர ஸ்தாபகர் தமிழர் நற்ப
உலகில் ஆதியும் அந்தமும் இல்லா மதம் இந்துமதம். இந்து சமயம் சைவம், சாக்தம், வைணவம், காணபக்தியம், கெளமாரம், செளரம் ஆகிய ஆறு பிரிவுகளைக் கொண்டது. அவற்றின் முழுமுதற் கடவுள்களாக முறையே சிவன், சக்தி, திருமால், விநாயகர், முருகன், சூரியன் ஆகியோர் விளங்குகின்றனர். இவர்களுக்கெல்லாம் முதன்மையானவராக விளங்குபவர் சிவன்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
சிவன் முடிவான மெய்ப்பொருளாக விளங்குபவன். அசையும், மற்றும் அசையா பொருள்கள் அனைத்திலும் உறைபவன் அவனே. ஒப்பாரும் மிக்காரும் இல்லா அறிவுமயமான சிவனிடமிருந்தே இவ்வுலகம் தோன்றுகின்றது.
சர்க்கரையிலிருந்து பல்வகையான இனிப்புப் பண்டங்களை தயாரித்த போதும் அவை அனைத்திலும் சர்க்கரை இருப்பது போல இவ்வுலகத்திலுள்ள அனைத்திலும் சிவன் இருக்கின்றான்.
சிவன் இன்றி சக்தி இல்லை. சக்தி இன்றி சிவன் இல்லை' என்பதால் நாம் இருவரில் எவரை வணங்கினாலும் இருவரது அருளையும் பெறலாம்.
தேவர்களும் அவுணர்களும் திருப்பாற்கடலை கடையும் போது திருமால் ஆமையாகி மந்தர மலையைச் சமுத்திரத்துள் நிறுத்திக் காத்தார். இதனால் திருமாலுக்கு அகந்தை ஏற்பட்டு உழக்கியபோது உயிர்களுக்கு அழிவு உண்டாக தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள். சிவன் விநாயகர் மூலம் ஆமையின் கொட்டத்தை அடக்கியபின் திருமால் அகங்காரம் அடங்க காஞ்சி நகரம் சென்று சிவபூஜை செய்தார்.
திருமாலே சிவபூஜை செய்து சிவனின் திருவருளைப் பெற்றுய்திருக்கையில், விநாயகர், முருகன், சூரியன் ஆகிய தெய்வங்களை முழுமுதற் கடவுளாகக் கொண்ட எமக்கும் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட திருவருள் கூடி அருள்பாலித்தது எமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமே
ஒர் ஆலயத்தின் கோபுரத்தைக் கடந்து உட்சென்றால் நம் கண்முன்னே தோன்றுவது பலிபீடம். அதனைச் சார்ந்திருப்பது கொடி கம்பம். கொடி கம்பம், பலிபீடம் என்பன மனித உடலில் அமைந்துள்ள முள்ளம் தண்டினையும் இன விருத்தி உறுப்பான
 
 

ல் ஏறிய சிவருந்தி
லிங்கம் J. P. , தலைவர் 1ணிமன்றம்.
அரச மையத்தினையும் குறிக்கும். அடுத்திருப்பது மூல மூர்த்திக்குரிய வாகனம். அது ஆன்மாவைக் குறிக்கும். இது உடலின் நெஞ்சினை குறிக்கும். ஆன்மா உட்புறமாக இறைவனையே நோக்குகின்றது.
நமக்கு உயர் அதிகாரி ஒருவரிடம் காரியமாக வேண்டுமெனில் அந்த உயர் அதிகாரியை சந்திப்பதற்கு முதலில் வாயிற் காவலனிடம் கையைக் காலைப் பிடித்தோ, காசைக் கொடுத்தோ அனுமதி பெறவேண்டும். அவனது அனுமதி கிடைத்தால்தான் நாம் உள்ளே செல்ல முடியும். நம் காரியத்தை சாதிக்க முடியும். அதுபோலத்தான் சிவனை வணங்க வேண்டுமெனில், முதலில் நந்தி தேவரை வணங்கி அவரின் அனுமதியைப் பெறவேண்டும்.
ஆலயத்தில் அசையாவண்ணம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் சிவ நந்தியை அகிலமெங்கும் கொடியாக அசையச் செய்து சிவனின் திருவருளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்துக் கொண்டிருக்கும் பெருமை கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத் தலைவர் சின்னத்துரை தனபாலா அவர்களையே சாரும்.
கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் என ஈஸ்வரங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்ட இலங்கையை சிவபூமி என கூறிய திருமூலர், எருது, ஏறு விடை, இடபம் என அழைக்கப்படுகின்ற நந்தியை சிவனே என்று குறிப்பிடுகின்றனர்.
சிவன் அர்த்த நாரீஸ்வரராக அருள்பாலிப்பதால், சிவநந்தியை சிவநந்தினி என்று அழைப்பதிலும் தவறெதுவும் ஏற்படவாய்ப்பில்லை. சிவனை வணங்குகின்ற இந்துக்கள் அனைவரும் சிவநந்தினி கொடியை ஏற்றிப் போற்றி வணங்குவதிலும் பிழையேதும் இல்லை.
சிவன் சந்நிதானத்தில் இறைவனுக்கு நேரே அமர்ந்து அருள் புரிபவர் நந்திதேவர். இடபமாகிய நந்தி சிவபெருமானின் வாகனமாகவும் விளங்குகின்றது. சிவாலயங்களுக்குள் நுழைந்ததும் முதலில் நம் கண்களில் தென்படுபவர் நந்திதேவர். சிவனுக்குரிய நந்தி வாகனம் ஆலயத்தின் மூலமூர்த்தியாகிய சிவனேயே நோக்கியவண்ணம் வீற்றிருக்கும். இந்த வாகனம் ஜிவ ஆத்மாவை குறிப்பதால் சிவனை சென்றடைய வேண்டும் என்பதே ஜிவ ஆத்மாவின் குறிக்கோளாகும்.
மனிதனாகப் பிறந்தவனின் குறிக்கோளாக அமையவேண்டியது இறைவனின் திருவடியை அடைவதேயாகும். ஆலயத்தை வலம் வருகின்ற ஒருவன் வாகனத்தையும் அதனைச் சூழவுள்ள பரிவார மூர்த்திகளையும் சுற்றிய வண்ணமே வலம் வருகின்றான்.

Page 11
தமிழர்கள் தொன்றுதொட்டு தெய்வத்தன்மையோடு போற்றிய மிருகம் எருது ஒன்றேயாகும். சைவ சமயத்தில் முக்கிய இடத்தைப் பெறுவது எருது. இதற்குக் காரணம் அது சிவபெருமானின் வாகனம் ஆகியதேயாகும்.
திருமுறைகளிலும் புராண இதிகாசங்களிலும் சிவபெருமான் எருதேறி, ஏறுர்ந்தான் எனத் தொழப்படுவதைக் காணலாம். எருதின் முக்கியத்துவம் விவசாயிகளால் முன்பு நன்கு உணரப்பட்டுள்ளது. இதனால் சைவ மக்களிடையே எருது போற்றுதலுக்கும் வணக்கத்துக்குமுரிய தெய்வமாக விளங்குகின்றது.
தைப்பொங்கலோடு நடத்தப்படுகின்ற மாட்டுப்பொங்கலும் எருதுவின் உடலில் தேவர்கள் இருப்பதாகக் கருதுவதும் எருது இந்து மக்களிடையே பெற்றுள்ள மதிப்பை காட்டுவதாகும்.
ஏறுரர்ந்த கதையினை விளக்கப் பல புராண கதைகள் உள்ளன. ஊழி காலத்தில் உலகோடு தானும் அழியநேருமோ என அஞ்சி சிவனைத் தஞ்சம் அடைந்தார் அறக்கடவுள். சிவன் அவரை ஏற்று வாகனம் ஆக்கிக்கொண்டார் எனக்கூறப்படுவது அவற்றுள் ஒற்றாகும்.
அப்பனை நந்தியை ஆரா அமுதனை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின், ஏத்தினால் அப்பரி சீசன் அருள் பெறலாமே.
நீதியின் மீதே இறைவன் வீற்றிருப்பான். “இறைவன் வடிவே நீதிதான்” என்கிறது தேவாரம், நீதியே நெற்றிக் கண்ணுடையதோர் நெருப்பே என்பது அப்பர் வாக்கு.
எருது வாகனம் நீதியின் சின்னமாகக் கருதப்படுகிறது. சைவசமயம் இவ்வாறு கருதியே அதனை சிவனின் வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
சிவனை எருது வாகனத்தின் மீது எழுந்தருளப் பண்ணி, எல்லோரும் காணும் விதத்தில் ஊர்வலமாய் வீதிவலம் வரச் செய்வார்கள். இதற்குக் காரணம் என்ன? மக்கள் நீதியின் முக்கியத்துவத்தை உணரவேண்டும் என்பதற்காகத்தான்.
நீதியுள்ளார் நெஞ்சமே இறைவன் விரும்பி வரும்
வாகனமாகும்.
தமிழகத்திலுள்ள மிகவும் பிரபல்யமான தலங்களில் ஒன்று ஐயாறு. இத்தலத்தை 'நந்தி அருள் பெற்ற நன்னகர்’ என சேக்கிழார் வர்ணித்துப் பாடியுள்ளார். வடலாறு, விண்ணாறு, குடமுருட்டி, காவேரி ஆகிய ஐந்தாறுகளும் பாய்கின்ற காரணத்தினால் ஐயாறு என்னும் பெயர் உருவாகியதென்று கூறுவார்கள்.
gN రోత్రాగోత్రారోత్రారోత్రాగోత్రాగోత్రారోత్రారోత్రా6 SS محصےح
ЦjШ
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சிறப்பு உ N
மாமன்றத்தின் துணைச் செயலாளர்களுள் ஒருவ
総ー '\\< പ്രല്ലേല്ക്കു
 

சூரிய புட்கரணி, சந்திர புட்கரணி, கங்கை, பாலாறு, நந்தி தீர்த்தம் எனும் ஐந்து தெய்வீக நதிகளும் கலப்பதால் ஐயாறு என்று பெயர் தோன்றியது என்பது ஒரு ஐதீகம்.
இந்திரன், இலக்குமி, வாலி, நந்திதேவர் ஆகியோர் இவ் ஐயாறாதனில் வழிபட்டு பேறுபெற்றனர். இதனை சம்பந்தர் பாடிய “எண்ணிய தேவர் இந்திரன் வழிபட” என்னும் பதிகத்தின்மூலம் அறிந்துகொள்ளலாம்.
சீலாத முனிவருக்கு திருமகனாய் அவதரித்த நந்திதேவர் சுயசாதேவி என்பவனை மணமுடித்து இவ் ஐயாரப்பரை வணங்கி பேறுபெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. திருவையாற்றிலே நடைபெறுகின்ற திருவிழாக்களிலே நந்திதேவர் திருமண திருவிழா மிகவும் விசேடமானது. பங்குனி மாதத்தில் நடைபெறும் இத்திருவிழாவின் போது அம்மை அப்பனை ஒரு வெட்டிவேர் பல்லாக்கிலும் நந்திதேவரை வேறு ஒரு பல்லாக்கிலும் எழுந்தருளிவித்து திருமழபாடிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வர். அங்கு நந்திதேவரின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இவ்வுற்சவம் முடிந்ததும் பல்லாக்குகளுடன் கூடிய திருமேனிகளை இரவிலே திருவையாற்றுக்கு எடுத்துச் செல்வர். திருவையாற்றில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாவை சித்திரை பெருந்திருவிழா என்றும் பிரமோற்சவம் என்றும் அழைப்பர். இத்திருவிழாவின் முடிவிலே அம்மை, அப்பரை கண்ணாடி பல்லக்கிலும் நந்திதேவரை வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்வர். அறியாமை இருளில் முழ்கி மெய்ப்பொருளை உணராதிருக்கும் மக்களுக்கு மெய்ப்பொருளை உணர்த்தவும் பூரண நிலை அடையவும் கொடிகவி பாடி ஏற்ற முடியாதிருந்த கொடியை ஏற்றியவர் உமாபதி சிவம்.
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்றே மேலிடில் ஒன்று ஒளிக்கும் எனினும் இருள் அடராது உன் உயிர்க்குயிராய் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனும் திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினேன்.
நான்கு கொடிகவி பாடல்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது கொடி கவியை பாடும்போதே கொடி தானாக கம்பத்தின் உச்சிக்குச் சென்று விரிந்து பறக்க நந்தியின் சொரூபத்தில் சிவன் திருவருள் பாலித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
நாமும் இந்துமத விழாக்களின்போதும் ஆலய உற்சவங்களின் போதும் கொடி கவி பாடி இடர்களைக் களையும் இடபக் கொடியை ஏற்றி இந்து மதத்தின் வெற்றியை உலகறியச் செய்வோம்.
றுப்பினர்களுள் ஒருவரான திரு. கு. பார்த்தீபன் ராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
റ്റ്ലAAAAAAAA. പ്രി(്
சித்திரபானு வருட்ம் சித்திரை ஆணி

Page 12
முரீசங்கரரின் அத்ை
கி. புண்ணி B. A. Dipin)
தத்துவக் கோட்பாடுகள்
பூரீ சங்கரர் இந்து சமயப் பிரமான நூல்களில் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்துவதில் முதன்மையானவராக இருந்தார். குறிப்பாக பிரஸ்தான திரயங்களில் கூறப்பட்ட அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டு புதிய தத்துவக் கருத்துக்களை உருவாக்கினார். வேதாந்தம் என்றால் சங்கரர், சங்கரர் என்றால் வேதாந்தம் எனும் அளவிற்கு இவர் முதன்மை பெற்றிருந்தார்.
பிரம்மம், ஆன்மா, உலகம், மாயை, அவித்தை என்பவற்றினூடாக இவர் தனது அத்வைதக் கோட்பாட்டினை வெளிப்படுத்தினார். இதற்கு விவர்த்தவாதம், கனவுலகவாதம், பிரதிவிம்ப வாதம், அவச்சேத வாதம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டார்.
உபநிடத அடிப்படை
"வேதாந்தம்” எனும் சொல் வேதத்தில் “அந்தம்” எனும் பொருளைத் தருகிறது. “அந்தம்” எனும் சொல் "கடைசி” என்ற பொருளிலும் “சாரம்” அல்லது "உட்பொருள்” என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. வேதத்தின் அந்தமாக உள்ள உபநிடதங்கள் நாம ரூப பேதமற்ற பரம்பொருள் ஒன்றினையே பேசுகின்றன. அப்பரம்பொருளை அவை “பிரமம்” என்ற சொல்லால் குறிக்கின்றன.
இருக்கு வேதத்தில் “எகம்சத் விப்ரா பகுதா வதந்தி” என அமைந்த பாடல்வரி"ஞானிகள் பலவாறாகக் கூறும். உள்பொருள் ஒன்றே" எனும் பொருளைத் தருகிறது. இக் கருத்தையே உபநிடத மகாவாக்கியங்களான “தத்துவமஸி’, ‘அகம் பிரமாஸ்மி” (நீ அதுவாக இருக்கிறாய், நானே அது) என்பனவும் வலியுறுத்தி நிற்கின்றன.
உபநிடத காலத்தில் கடவுளைப் பற்றியும், கடவுளை அடையும் முறை பற்றியும் எழுந்த விசாரணைகளின் பயனாகவே இந்துமதப் பிரிவுகளுக்கு அடிப்படையாக உள்ள தத்துவ சிந்தனைகள் யாவும் தோற்றம் பெற்றன. வேதங்களினதும் உபநிடதங்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதங்கள் எழுச்சி பெற்றன. வேதாந்தச் சிந்தனைகளும் தோற்றம் பெற்றன. இவ் வேதாந்தங்களில் சங்கரரின் அத்வைதம், இராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்துவரின் துவைதம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
அத்வைதமானது பிரஸ்தான திரயங்களில் உபநிடதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தசோபநிடதங்களுக்குச் சங்கரர் உரை எழுதியுள்ளார். உபநிடதங்களில் பல்வேறு முரண்பாடுகளும் கருத்துத் தெளிவின்மையும் காணப்பட்டது. இதனால் உபநிடதக் கருத்துக்களைத் தொகுத்து வரையறை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இம் முயற்சியில் முதன் முதலில் ஈடுபட்டவர் பாதராயணர் ஆவார். இவர் ஆக்கிய நூலின்
 

வைத சிந்தனைகள்
யமூர்த்தி du. M. Ed
பெயர் பிரமசூத்திரமாகும். ஆனால் பிரமசூத்திரமும் உபநிடதங்களுக்குத் தெளிவான விளக்கம் கூறவில்லை. அது மிகச் சுருங்கிய வடிவில் சூத்திரமாகவே காணப்பட்டது. இதனால் சங்கரர் பிரமசூத்திரத்திற்கு உபநிடதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் எழுத முனைந்தார்.
அத்வைத சிந்தனைகள்
வேதாந்தக் கோட்பாடுகளில் சங்கரரின் அத்வைத வேதாந்தமே ஒருமைவாதத்தில் முதன்மையானதாகும். சங்கரரின் குருவான கோவிந்த பாதர், அத்வைத விளக்கம் பெறகாரணக் காரணர் ஆவார். 'ஏகம் ஏது அத்துவிதீயம்” என்ற சொல்லே "அத்துவிதம்” என வடசொல்லாகத் தமிழிலே வழங்குகிறது. அயம் ஆத்ம பிரம”(இந்த ஆன்மா பிரமம்) எனும் யாக்ஞவல்கியர் கூற்றும் “தத்துவம் அஸி’ (அது நீயே) எனும் உத்தாலகரின் கூற்றும் சங்கரர் அத்வைதத்திற்கு அடிப்படைகளாகும்.
Dih
அத்வைதம் கூறும் பிரமம், ஆன்மா, உலகம் ஆகிய முப் பொருள்களிலும் பிரமமே முதன்மையாது. அது மாத்திரமே உண்மைப் பொருள். ஏனையவை யாவும் அதன் தோற்றங்கள் எனப்படுகிறது. சங்கரர் நிர்க்குணப் பிரமத்திற்கே முதன்மையளிக்கிறார். இப்பிரமம் பாரமார்த்திகமானது. ஆதியும் அந்தமுமானது. ‘எங்கும் வியாபித்திருப்பது. சொற்பதங்கடந்த சோதியாக உள்ளது. பிரமமே உண்மையானது. உலகம் பொய்யானது. ஜிவர்கள் பிரமமேயன்றி வேறானவை அல்ல என்கிறார்.
பூரீவல்லபர் பூரீ சங்கரரின் அத்துவிதத்தை கேவலாத்துவிதம் என்றார். ஏகான்மவாதம் என்ற பெயரும் இதனாலே அத்வைதத்திற்கு ஏற்பட்டது எனலாம். அத்வைதமானது முப்பொருள்களின் வேற்றுமை புலக்காட்சிக்கு உரியதேயன்றி உண்மையானதல்ல. பிரமம் ஒன்றே அஞ்ஞானத்தின் காரணமாகப் பல்வகைப் பொருட்களாகக் காட்சியளிக்கிறது. அவித்தை ஆகிய அஞ்ஞானத்தினின்று விடுதலை பெறும்போது பிரமமே எங்கும் பரந்திருக்கும் பரிபூரணப் பொருளாகும் எனப்படுகிறது. பிரமத்திற்கு பிராதிபாஷிகம், வியாவகாரிகம், பாரமார்த்திகம் எனும் நிலைகள் உண்டு எனக் கூறுவதோடு அவற்றையும் சங்கரர் வர்ணிக்கிறார்.
ஆன்மா
சங்கர வேதாந்தத்தில் ஆன்மா தனிப்பொருளாகவும் பிரமப் பொருளாகவும் அமைந்து காணப்படுகிறது. அநாதியான ஆன்மாவிற்கும் பிரமத்திற்குமிடையேயுள்ள வேறுபாடு தற்காலிகமானது. அவித்தை பிரமத்தை மறைக்கும்போது அது ஆன்மாவாகவும் ஆன்மாவிடமிருந்து அவித்தை நீங்கும்போது அது பிரமமாகவும் ஆகிறது. ஆன்மா அவித்தையிலிருந்து விடுபடுதலே முத்தியாகும்.
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 13
ஆன்மாவின் தன்மையை விளக்க வினைப்பயன், மறுபிறப்பு எனும் கோட்பாடுகளும் கையாளப்படுகின்றன. சங்கரர் ஆன்மாக்களைப் பற்றிக் கூறும்போது "ஒரேயொரு மூலப் பொருளாயுள்ள பிரமமே பல சீவன்களாகின்றது என்கிறார். பன்மையைச் சங்கரர் ஏற்றுக்கொள்ளாததால் அதனை மறுத்து ஒருமையை நிலைநாட்டுவதே அவரது குறிக்கோளாகும். பிரமமும் சீவன்களும் அடிப்படையில் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக பிரமத்தைப் பரமாத்மா எனவும் ஆத்மாக்களை சீவாத்மா எனவும் இவர் வழங்குகிறார்.
பரமாத்மா சீவாத்மாவாகத் தோன்றுவதில் அத்வைதவாதிகள் பின்வரும் உவமை மூலம் விளக்குகின்றனர். ஒரு வெண்ணிறப்பூவை செந்நிறக் கண்ணாடி ஒன்றினால் பார்க்கும் போது வெண்ணிறப் பூ செந்நிறப் பூவாகத் தெரிகிறது. இங்கு பூ ஒன்று இயல்பு மட்டுமே வித்தியாசப்படுகிறது. இதற்குக் காரணம் செந்நிறக் கண்ணாடியாகும். இதைப் போலவே பரமாத்மாவே சீவாத்மாவாகத் தோன்றுகிறது. ஆனால் இயல்பு மாறுபட்டுத் தோன்றுகிறது. இதற்குக் காரணம் அவித்தை. பரமாத்மா அவித்தையின் காரணமாகவே சீவாத்மாவாகத் தோன்றுகிறது என்பதே அத்வைதவாதிகளின் கோட்பாடாகும்.
பிரதி விம்ப வாதம்
ஏகான்ம வேதாந்தத்தை விளக்குவதற்கு சங்கர
வேதாந்திகள் பிரதிவிம்பத்தை முன்வைக்கின்றனர். ஒன்றின் விம்பம் பல இடங்களில் பிரதிபலிப்பதே பிரதிவிம்ப வாதமாகும். உதாரணமாகச் சந்திரனின் பிரதிவிம்பம் பூமியிலுள்ள பல்வேறு நீர் நிலைகளில் காட்சியளிப்பதைக் குறிப்பிடலாம். ஆனால் இச்சந்திரன்களுள் எதுவுமே உண்மைச் சந்திரன்களல்ல. உண்மையானது வானிலிருக்கும் சந்திரனே ஆகும்.
இது போலவே உள்பொருளாகிய பிரமம் அவித்தையின் பாற்படும் போது சீவன்களாகிறது. தெளிந்த நீரில் விழும் சந்திரனின் பிரதிவிம்பம் தெளிவாக இருக்கும். கலங்கிய நீரில் விழும் சந்திரனின் பிரதிவிம்பம் கலங்கியிருக்கும். இதைப் போலவே ஒவ்வொரு ஆன்மாவையும் பற்றி நிற்கும் அவித்தையின் இயல்பிற்கேற்ப ஆன்மாக்களின் இயல்பு வேறுபடும். நீர் நிலைகள் முழுவதையும் இல்லாமல் செய்தால் சந்திரன் உண்டு என்பது புலனாகும். அந்த ஒன்றுதான் பரமான்மாவாகிய பிரமம் என்பதையே இது குறித்து நிற்கிறது. 'சீவன் சீவனாக இருக்கும் போது சீவனும் பிரமமும் ஒன்றல்ல. சீவனின் சீவத்துவம் நீங்கிய நிலையிலேயே அதுவும் பிரம்மமும் ஒன்று என்பதே அத்வைத வேதாந்திகளின் ஆன்மக் கோட்பாடு ஆகும்.
அவச்சேத வாதம்
சீவனின் சீவத்துவம் நீங்குகின்ற நிலையை வேதாந்திகள் அவச்சேத வாதத்தின் மூலமும் நிரூபிப்பர். “ஒரு ஆன்மா பாதிக்கப்பட்டு பல ஆன்மாக்களாகத் தோற்றமளிப்பதையே அவச்சேத வாதம் குறித்து நிற்கிறது. உதாரணமாகப் பூமியில் வியாபித்துள்ள பரந்தவெளி அடைப்புக்களாலும்,தடுப்புக்களாலும் தனித்தனிக் கூறுகளாகப் பிரிகிறது. ஒரு அறையை நிரப்பும் வெளி அறையின் வடிவத்தையும் குடம் முதலிய பாத்திரங்களையும் நிரப்பும் வெளி அப்பாத்திரங்களின் வடிவத்தையும் கொண்டு நிற்பது போல் ஒரு பிரமம் பல ஆன்மாக்களாகத் தோன்றி நிற்கிறது. குடத்திற்கு உள்ளே உள்ள வெளியும் குடத்திற்கு
 

வெளியேயுள்ள வெளியும் ஒன்றுதான். ஆனால் தற்காலிகமான தடுப்பினால் அது வெவ்வேறாகின்றது. இதேபோலவே ஒன்றான பிரமமும் அவித்தை காரணமாகப் பல ஆன்மாக்களாகத் தோன்றுகிறது. தடுப்பினை நீக்கிவிட்டால் எல்லாம் ஒரு வெளியாக ஆவதைப் போல பந்திக்கப்பட்ட ஆன்மாவும் தன்னைப் பந்தித்து நிற்கும் அவித்தையை உணர்ந்து முத்தி நிலையில் பரமான்மாவாகவே ஆகின்றது.
உலகம்
முப்பொருள்களிலும் கண்களால் காணக்கூடியது உலகமே. அத்வைத வேதாந்திகள் உலகம் ஒரு பொய்த் தோற்றம் நமது அறியாமையால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதுகிறோம் என்கின்றனர். உபநிடதங்களில் கூறப்படும் மூலப்பொருள் ஒன்றே என்ற கருத்தை நிலை நிறுத்த முற்பட்ட சங்கரரும் பிரமம் மட்டுமே உண்மை. அதற்கு வேறாக உலகம் என்ற ஒரு பொருள் இல்லை என்கிறார். பிரமம் உலகமாக மாறுவதாகத் தோன்றுகிறதே ஒழிய உண்மையில் பிரமத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுவதில்லை என்கிறார். இதனை "ஜகன் மித்யா” எனக் குறிப்பிடுகிறார். உலகம் பொய்த் தோற்றம் என்பதைச் சங்கரர் விவர்த்தவாதத்தின் மூலம் விபரித்துக் கூறுகிறார்.
விவர்த்த வாதம்
ஒரு பொருள் மற்றொன்றாக மாறாமல் இருந்தபடியே மாறிவிட்டதாகத் தோன்றுவதே விவர்த்தவாதம் ஆகும். உதாரணமாக கயிறு பாம்பாகத் தோன்றுவது போது பிரமம் உலகமாகக் காட்சியளிக்கிறது என்கிறார். உலகம் ஒரு மாயையான தோற்றமே எனக் கூறும் சங்கரரது விவர்த்தவாதம் ஒரு விசித்திரமான வாதமாகவே உள்ளது. இதன்படி காரணமாகிய கயிறு உண்மை. காரியமாகிய பாம்பு பொய். காரணமாகிய பிரமம் உண்மை. அப்பிரமத்தின் தோற்றமாகிய உலகம் பொய் என்பதே சங்கரரின் கூற்றாகும்.
வேதாந்திகள் உலகம் தோற்றம் எனக் கூறும்போது உலகம் அறவே இல்லாத பொருள் எனக் கூறவில்லை. அதேவேளை உள்ள பொருள் எனவும் கூறவில்லை. உலகம் பிரமத்தைப் போல் “சத்தும்” (என்றுமே உள்ள பொருள்) அல்ல. முயற்கொம்பு போல் “அசத்தும்’ (ஒரு காலத்திலும் இல்லாத பொருள்) அல்ல. அதனாலே உலகை ஒரு தனிப் பிரிவாக்கி அது “சத்அசத்” (இரண்டுமல்ல) என்பதை உணர்த்த அதனைச் ‘சதசத்” இலக்கணம் என்பர்.
வேதாந்திகள் மெய்ப் பொருளுக்கு மூவகை நிலைகளைக் குறிப்பிடுகின்றனர். அவையாவன:-
1. பிராதிபாஷிகம்
2. வியாவகாரிகம்
3. பாரமர்த்திகம்
கனவுலகும், திரிபுக் காட்சிகளும் பிராதிபாஷிக
நிலையாகும். நனவுலகம் வியாவகாரிகம் ஆகும்.
பிராதிபாஷிகத்தைப் பொய்யென எமக்கு உணர்த்துவது வியாவகாரிக நிலையாகும். வியாவகாரிக நிலையைக் கடந்த நிலை பாரமார்த்திக நிலையாகும். இந்நிலையே உண்மையை உணரும் நிலையாகும். அதாவது கயிற்றைப் பாம்பாகக் காணாது கயிறாகவே காணும் நிலை வரை பிராதிபாஷிக நிலை உண்மையோ அதைப்போல பாரமார்த்திக நிலையை அடையும் வரை வியாவகாரிக நிலை உலகும் உண்மையாகும்.
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 14
“எல்லையில்லாத ஒன்றை எல்லைப்படுத்துவதும் உருவமில்லாத உன்றை உருவகிப்பதும் மாயை ஆகும். அத்வைத வேதாந்தத்தில் மாயை முதன்மை பெறுவதால் அது மாயாவாதம் எனவும் அழைக்கப்படுகிறது. மாயை என்பது சிற்றறிவிற்கு விளங்காதது. அதாவது பிரமத்திற்கும் உலகு உயிர்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு எமது சிற்றறிவிற்கு விளங்காதது என்பதை மாயை என்ற சொல் விளக்குகிறது. சகுணப்பிரமம், ஈஸ்வரன் ஆகிய கோட்பாடுகளை உருவாக்குவது மாயை ஆகும். பிரமத்தின் பரிபூரணத்துவம் குறையத் தொடங்கும் நிலையிலேதான் மாயை இடம் பெறுகிறது. மாயையோடு சேர்ந்த பிரமத்தையே ஈஸ்வரன் என வேதாந்திகள் அழைக்கின்றனர். இம் மாயைக்கு “ஆவரணம்” எனும் உள்ளதை மறைக்கும் இயல்பும் விசேஷபம் எனும் இல்லாததைத் தோற்றுவிக்கும் இயல்பும் உண்டு. மாயை ஆவரண சக்தியினால் பிரமத்தை மறைத்து விஷேஷ சக்தியால் உலகத்தைத் தோற்றுவிக்கிறது. இம் மாயை பிரமத்திலேயே தோன்றி பிரமத்தையே மறைக்கிறது. இம் மாயையைச் சொல்லால் விபரிக்க முடியாது என்பதால் “அநிர்வசனியம்” என்ற சிறப்புப் பெயர் இதற்கு உண்டு.
அவித்தை
பிரமத்தைச் சீவர்களாக்குவது அவித்தை ஆகும். பிரமத்திலேயே தோன்றி பிரமம் சீவர்களாகத் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பது அவித்தை ஆகும். வித்தை என்றால் அறிவு எனும் பொருளையும் அவித்தை என்றால் அறியாமை என்ற பொருனையும் தரும். அவித்தையாலேயே ஒரு பரமாத்மா பல சீவாத்மாக்களாகத் தெரிகிறது. அவித்தையாகிய அஞ்ஞானத்தினாலேயே சீவன் தன்னைப் பிரமத்திலிருந்து வேறுபட்டதாக எண்ணுகிறது.
முத்தி
பந்தபாசங்களிலிருந்து விடுபட்டு பிறவிப் பிணியிலிருந்தும், அறியாமையிலிருந்தும் நீங்குதலே முத்தியாகும். அத்வைத வேதாந்த தத்துவத்தில் பிரமத்தை அடைவதே மோட்சம் எனப்படுகிறது. இதனை அடைய ஞானமே வழியாகும் எனச் சங்கரர் கூறுகிறார். ஞானம் என்பது உள்ளுணர்வான, நேரடியான அநுபவ அறிவாகும். அறநிலையிலும், அறிவு நிலையிலும், உணர்ச்சி நிலையிலும் ஒருவன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுவதன் மூலம் இவ் ஞான நிலையை அடைய முடியும்.
நிலையானதையும், நிலையற்றவைகளையும் பிரித்துணர்தல். தன்னலக் காரியங்களிலிருந்து விடுபடுதல். நம்பிக்கை, மனஅமைதி, தன்னடக்கம். துறவு மேற்கொள்ளல், பொறுமை, மன ஒருமைப்பாடு. வீடு பேறடைய அதிக விருப்பமுடையதாக இருத்தல். ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஞான நிலையை அடைய முடியும். அது தவிர * சிரவனம் - வேதாந்த நூல்களைக் கற்றல் அவற்றின்
கருத்துக்களை அநுபூதிமான்களிடமிருந்து அறிந்து கொள்ளல்.
※
※
* ஒருவனைப் புத்திசாலியாக மட்டுமில்லாமல், கு - காஞ்சி
 

* மனனம் - சிரவனத்தின் மூலம் பெற்ற இறுதி உண்மைகளைச் சிந்தனை செய்தல் அல்லது தியானித்தல்.
* நித்தியாசனம் - ஆள் நிலைத் தியானம்
என்பவற்றின் மூலம் ஒரு ஆன்மா ஞான நிலையை அடைகிறது. இதன் மூலம் தன்மைப் பிரமமாகவே உணர்ந்து கொள்கிறது. இதுவே முத்தி நிலையாகும்.
அத்வைதமும் விசிட்பத்வைதமும்
பிரமம், ஆன்மா, உலகம் பற்றிச் சங்கரரும் இராமானுஜரும் ஆராய்ந்த போதும் இருவரினது கோட்பாடுகளிலும் சில வேறுபாடுகள் கருத்துவேற்றுமைகள் காணப்படுகின்றன. சங்கரர் பிரமம் மாத்திரமே உண்மை என இராமனுஜர் முப்பொருள்களும் உண்மை என்கிறார். சங்கரர் பிரதிவிம்ப வாதம், அவச்சேத வாதம், விவர்த்த வாதம் என்பவற்றை முன்வைக்க இராமானுஜர் பரிணாம வாதம், சரீர சரீரி சம்பத்த வாதம் என்பவற்றை முன்வைக்கிறார். முத்திக்கு வழி ஞானமே எனச் சங்கரர் கூற இராமானுஜர் பிரபக்தி மார்க்கத்தைக் காட்டுகிறார்.
அத்வைதமும் சைவசித்தாந்தமும்
விசிட்டாத்வைதத்தைப் போல் முப்பொருள்களும் உண்மை எனச் சைவ சித்தாந்தம் கூற பிரமம் மாத்திரமே உண்மை என அத்வைதம் கூறுகிறது. இதனால் அத்வைத வாதிகள் ஏகான்ம வாதிகள் என்றும் சைவசித்தாந்திகள் பன்மைவாதிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
உலகப் படைப்பிற்கு முதற்காரணம் மாயை என்றும் நிமித்தகாரணம் இறைவன் என்றும் சைவ சித்தாந்திகள் கூற, உலகிற்கு நிமித்த காரணமும் பிரமம், முதற்காரணமும் பிரமம் என அத்வைத வாதிகள் கூறுகின்றனர். ஆன்மா உள்பொருள் எண்ணிறைந்தவை. நித்தியமானவை, சார்ந்ததன் வண்ணமாகும். பண்புடையவை எனச் சைவ சித்தாந்திகள் கூற ஒரு பரமான்மா பல ஜீவான்மாக்களாகத் தோன்றுகிறதே தவிர உண்மையில் ஆன்மா இல்லை என அத்வைதவாதிகள் கூறுகின்றனர்.
அத்வைதம்பிரஸ்தான திரவியங்களுக்கு முதன்மையளிக்க சைவ சித்தாந்தம் ஆகமங்களுக்குச் சிறப்பளிக்கிறது. அத்வைதத்தை கேவலாத்துவிதம் என்றால் சைவ சித்தாந்தத்தைச் சுத்தாத்துவிதம் எனலாம். சங்கரர் மாயையை தோற்றம் எனக் கூற சித்தாந்திகள் உலக சிருஷ்டிக்கும் ஒடுக்கத்திற்கும் காரணம் மாயை என்கிறார்கள். முத்தி நிலையில் அத்வைதம் அத்துவித முத்தியைக் கூறும் அதே வேளை சைவ சித்தாந்தம் தாடலை நிலையை வெளிப்படுத்துகிறது.
எனவே சங்கரரின் அத்வைதம் இந்து தத்துவ ஞானத்தில் சிறப்பிடம் பெறுகிறது எனக் கூறும் அதே வேளை முப்பத்திரண்டு வருடங்கள் மாத்திரம் வாழ்ந்த சங்கரர் சாதித்த சாதனைகள் எண்ணிலடங்காதவையாகும்.
பெரியவர்
னசாவியாகவும் ஆக்க வேண்டியதே குருவின் ཚན་ཚངས་པ)
திேர்பானு வரும் சித்திரை:ஆணி

Page 15
பல்லவர் கால
மு. நடேசானந்தன ஆசிரிய ஆலோசக
பல்லவர் காலமானது கி. பி. 550 தொடக்கம் கி.பி. 900 ஆண்டு காலப்பகுதியென பொதுவாக வரையறுத்துக் கொள்ளலாம். இக்காலத்தில் நாயன்மார்களினதும், ஆழ்வார்களினதும், இடையறாத இறைபக்தியும், வைதீக மதத்தை வளர்க்க வேண்டும் என்ற அயராத முயற்சியும், பல்லவ மன்னர்களது வைதீக மத மற்றும், ஈடுபாடும் அவர்களது கலாவினோத மனப்பாங்கும், பல்லவ காலத்தில் வைதீக மதங்கள் தீவிர வளர்ச்சி ஏற்பட்டன. இதன் விளைவால் கூடவே கலைகளும் வளரத் தொடங்கின. அக்கலைகளில் குறிப்பாக கட்டடம், சிற்பம், ஒவியம், இசை, நாட்டியம் எனக் கூறிக் கொள்ளலாம். கட்டிடக்கலை தவிர ஏனைய கலைகள் வளர்வதற்கு அடிப்படையாக அமைவது கட்டடக்கலையே ஆகும். ஆதலால், பல்லவ காலக் கட்டடக்கலை பற்றி இங்கு நோக்குவ்ோம்.
பல்லவ காலக் கட்டடக்கலையை நான்கு கால கட்டக் பிரிவுகளாகப் பிரித்து நோக்குவதுண்டு.
1. மகேந்திரவர்மன் காலக் கட்டடக்கலைப் பாணி. 2. மாமல்லன் காலக் கட்டடக்கலைப் பாணி. 3. இராஜசிம்மன் காலக் கட்டடக்கலைப் பாணி.
4. நந்திவர்தமன் காலக் கட்டடக்கலைப் பாணி.
மகேந்திரவர்மன் காலக் கட்டடக்கலை
(கி. பி. 600-650 வரை)
பல்லவ காலத்தில் தமிழகத்தில் குடவரைக் கட்டடக் கலையை ஆரம்பித்து வைத்த பெருமை அரசக் கலைஞனான முதலாம் மகேந்திரவர்மனையே சாரும். இக்காலத்தில் உருவாக்கப்பட்ட குடவரைக் கோயில்களின் சாசனப் பொறிப்புக்கள் அதனை மெய்ப்பிக்கின்றன. தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் இடத்திலுள்ள குடவரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுப் பொறிப்பானது “செங்கல், சுண்ணாம்பு, மரம் என்பவற்றைப் பயன்படுத்தாது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுளர்க்கு இந்தக் கோயிலை விசித்திரசித்தன் உருவாக்கினான்’ என அச்செய்தி தெரிவிக்கின்றது.
மகேந்திரவர்மன் பெரும் பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்களையும், தூண்களையுடைய மண்டபங்களையும்
உருவாக்கினான். இவனது கால கட்டடக்கலையானது
மலைகளைக் குடைந்து குகைக் கோயில்களை (குடவரை)
அமைப்பதாகும். இது அளவிலே சிறியனவாக அமைக்கப்பட்டன.
 

is 65LLé856UD6)
B. A. Dip. in Edu. பட்டிருப்பு/வலயம்
சிறிய இறையகமும், (கருப்பகிரகம்) தூண்களையுடைய சிறிய மண்டபமுமே இக்காலக் கட்டடக் கலையாகும். சில குடவரைக் கோயில்கள் தூண்களையுடைய மண்டபங்களாகவே காணப்படுகின்றன. மலைகளைக் குடைந்து கோவில்களை உருவாக்கியதால் மகேந்திர வர்மனை “சேத்தகாரி” எனும் பெயரைப் பெற்றான். அத்தோடு, விசித்திர சித்தன், மத்தவிலாசன், சங்கீர்ண ஜாதி, மகேந்திர விக்கிரமன், குணபரன், சித்திரக்காரப் புலி எனப் பலவிருதுப் பெயர்கள் அவன் அமைத்த குடவரைக் கோவில் சாசனங்களில் காணப்படுகின்றன.
மகேந்திரவர்மனின் குடவரைக் கோவில்கள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், சீயமங்களம், மாமண்டூர், மண்டகக்கட்டு முதலிய இடங்களிலே இக் கோயில்கள் காணப்படுகின்றன.
முதலாம் நரசிம்ம பல்லவன் கட்டடக்கலை
(S. L. 650-700 660 J)
மாமல்லன் என அழைக்கப்படும் இம் மன்னன் முதலாம்
மகேந்திரவர்மனின் மகனாகும். இவனால் அமைக்கப்பட்ட கோயில்கள் இக்காலப் பிரிவுக்குள் வைத்து நோக்கப்படும். இம் மன்னனது கோயில் அமைப்பு முறையானது இரு வகையாக இடம் பெற்றுள்ளன. ஒன்று தந்தையைப் பின்பற்றி அமைத்த குடவரைக் கோயில்கள், இரண்டாவதாக ஒற்றைக் கல் கோயில்கள். இதனை இரதக் கோயில்கள் என்றும் அழைப்பதுண்டு.
குடவரைக் கோயில்கள் அவனது தந்தை அமைத்ததை விடவும் சிறந்த கலைக் கூடமாகவே இக்காலக் குடவரைக் கோயிலை அடையாளப்படுத்தலாம். திரிமூர்த்தி மண்டபம், வராக மண்டபம், ஆதி வராக மண்டபம், மகிஷாசுர மர்த்தினி மண்டபம் போன்ற பல குகை மண்டபங்களை அமைத்துத் தனக்கும் தனது தந்தைக்கும் அழியாப் புகழைச் சேர்த்தான்.
இம் மண்டபங்கள் பொதுவாக 7 அடி உயரமுள்ள தூண்சிரைகள் காணப்படுகின்றன. இதன் மேற்புறமும், அடிப்புறமும் சதுர வடிவமைப்பையும், நடுப்பகுதி எண்கோண அமைப்பையும் கொண்டது. மேற்பகுதியில் கும்பமும், தாமரை மொட்டும் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் அடியில் சிங்கங்கள் இடம் பிடிக்கும் போது தூண்களின் பாரத்தைச் சிங்கங்கள் தாங்கிக் கொள்வது போல் அமைக்கப்பட்டிருப்பது சிறந்த கலைநயப்பின் வெளிப்பாடு எனலாம். கோயில்களில் புராணக் கதைகளும் சிற்பங்களாகச்
செதுக்கப்பட்டுள்ளன.

Page 16
திரிமூர்த்தி மண்டபத்தில் மூன்று கர்ப்பக்கிரகமுடைய மண்டபமாகும். இங்கு திருமால், சிவன், பிரம்மா போன்ற தெய்வங்கள் காணப்படுகின்றன. திருமாலின் பாதத்தடியில் இருவர் உட்கார்ந்து பணிவிடை செய்வது போலும் செதுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக உள்ளது. சிவனது உருவச் சிலையுள்ள கர்ப்பக்கிரகத்தில் துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றனர். இம்மண்டபத்தை ஒட்டினாற் போல் மகிடாசுரமர்த்தனி மண்டபம் உண்டு. கலையின் மிகச் சிறந்தது இதுவாகும். தாவிக் குதிக்கின்ற சிங்கத்தின் மீது அமர்ந்துள்ள துர்க்கை எருமைத் தலையுள்ள மகிடாசுரனைத் தாக்குகின்றாள். அவன் அதனைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்குகின்றான். இறைசக்தியானது தீமையை அழிப்பதைக் காட்டுவதாக இச் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறாகத் திருச்சிராப்பள்ளி, மாமல்லபுரம், மண்டகக்கட்டு முதலிய பல இடங்களில் இருந்த மலைகளைக் கலைக்கூடங்களாக மாற்றிய பெருமை முதலாம் நரசிம்ம பல்லலவனையே சாரும்.
நரசிம்ம பல்லவனது மற்றுமொரு புதியதொரு கட்டடக்கலைப் படைப்பே இரதக் கோயிலாகும். மாமல்லபுரத்தில் ஒரே இடத்திலுள்ள ஐந்து ஒற்றைக் கல் கோயில்களையும் பாண்டவ ரதங்கள்’ என அழைக்கப்படுகின்றன. அவை துரோபதை ரதம், அருச்சுன ரதம், பீமரதம், சகாதேவரதம், தர்மராஜரதம் என்பனவாகும். இந்த ஒற்றைக் கோயில்கள் பொதுவாகத் தனிப் பாறைகளை எடுத்து அதனை ஆலயமாகச் செதுக்கிக் குடைவதாகும். இதனால் இரத அமைப்பையுடைய ஆலயங்களில் பெரிய மண்டபங்களோ, தூண்நிரைகளோ இல்லாது வெறுமனே இறையகம் மாத்திரம் அமைக்கப்படுவதாகும். இதனால், இவ் அமைப்பானது இரதம் போல் காணப்படுவதால் இரதக் கோயில் என்றும்அழைக்கப்படுகின்றது.
பொதுவாக இந்த இரதக் கோயிலானது 42 அடி நீளமும் 35 அடி அகலமும் 40 அடி உயரமும் கொண்டது. அதன் அடித்தளத்தில் சிங்கம், யானை முதலிய மிருகங்கள் வருவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து ரதங்களும் அமைப்பிலும், தோற்றத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. துரோபதை ரதமும், அர்ச்சுன ரதமும் எளிய குடிசை போன்ற அமைப்புடையது. அருச்சுன ரதம் இரு மாடியைக் கொண்டது. அதில் எண்முகச் சிகரம், அர்த்த மண்டபம் என்பன உண்டு. பீமரதம் நீள் சதுரமான விமானம் காணப்படுகின்றது. கருவறையை வலம் வருவதற்கான சுற்று வழியும் உண்டு. பாண்டவ ரதங்களுள் தர்மராஜ ரதமே மிகவும் கம்பீரமானது. மூன்று மாடி விமான வடிவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு கருவறை உண்டு. இரண்டாம், மூன்றாம் மாடியில் சிறந்த சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரதத்தில் அதனை உருவாக்கிய அரசனது விருதுப் பெயர்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பல காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றன. சகாதேவ ரதத்தில் முன் முகப்பு மண்டபமும் உண்டு. இவை தவிர ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள சாளுவன் குப்தத்தில் இன்னும் ஐந்து ரதக் கோயில்கள்
 

காணப்படுகின்றன. ஒன்றையொன்று நெருங்கி நிற்கின்ற பிடாரி ரதங்கள், அதற்குத் தெற்கே உள்ள வலையன் குட்டைரதம் என்பனவும் கங்கையின் வருகைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கல் கோயிலாகிய கணேசரதம், மகிஷமர்த்தனியின் கோயிலுக்கு எதிரிலுள்ள பாறையில் இன்னும் ஓர் கோயில் செதுக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. ஆதலால், மாமல்லபுரப் பகுதியில் பத்து ரதக் கோயில் நரசிம்ம மன்னனது காலத்தில் உருவாகியுள்ளன எனக் கூறமுடியும்.
இராஜசிம்மன் கட்டடக்கலை
(கி. பி. 700-800 வரை)
இம்மன்னனது கட்டடக் கலையின் விசேட அமைப்பு கற்றளி முறையாகும். குடவரைக் கோயிலில் இருந்து இரதக் கோயிலுக்கு மாற்றமடைந்து பின்பு கற்களைச் சீராகப் பொழிந்தெடுத்து ஒன்றின் மேல் வைத்து கட்டுகின்ற கட்டுமானக் கட்டடக் கலையே இராஜசிம்ம பல்லவனது கலை மரபாகும். இக் காலத்திற்கு உரியதாகக் கொள்ளப்படும் கோயில்கள் ஆறு இருக்கின்றன. மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், ஈஸ்வரன் கோயில், முகுந்தன் கோயில், தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள பனை மலைக் கோயில், காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப் பெருமாள் கோயில் என்பனவாகும். இக் கோயில்கள் அனைத்தும் கற்றளிக் கோயில்களே.
இந்த ஆறு கோயில்களில் முதன் முதலாக மாமல்லபுரக் கடற்கரைக் கோயிலே கட்டப்பட்டது. பாதுகாப்பற்ற திறந்த வெளியில் நிற்கின்ற இக்கோயிலில் கடல் நீரிலிருந்து வரும் உப்புக்காற்றாலும், காற்றில் வரும் மணலாலும் இன்னும் சிதைந்து போகாது பல்லவகாலக் கட்டுமான வேலையின் உறுதிப்பாட்டையும், கலை விநோதங்களையும் உலகிற்குப் பறைசாற்றுவதுபோல் நிமிர்ந்து நிற்கின்றது. இக் கோயிலை ஜலசயனம் எனவும் தற்போது அழைக்கின்றனர்.
நரசிங்க மன்னனால் கட்டப்பட்ட மாமல்லபுரக் கடற்கரைக் கோயிலைக் காட்டிலும் இராஜசிம்மனால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயில் அளவிற் பெரியது. கலை வனப்பிலும் முன்னேற்றமானது. கைலாசநாதர் கோயிலைக் காஞ்சிபுரத்துப் பெரிய கற்றளி எனப் பிற்காலச் சாசனங்கள் வர்ணிக்கின்றன. அடித்தளம் கருங்கல்லினால் அமைக்கப்பட்டது. தென்னிந்தியத் திராவிடக் கட்டடக் கலையின் பிரதான அம்சங்களான விமானம், மண்டபங்கள், பரிவாரத் தேவர் கோட்டம், சுற்றாலை, கோபுரம், பிரகாரம் ஆகியன யாவும் இக்கோயிலில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருவறையில் 16 பட்டை கொண்ட இலிங்கம் உள்ளது. கருப்பகிரகத்தைச் சுற்றி வருவதற்கு பாதை அமைப்பும் உண்டு. மாமல்லபுரத்து தர்மராச ரதத்தை முன்மாதிரியாகக் கொண்ட விமானமும் கர்ப்பக்கிரகமும் உள்ளது. கர்ப்பக்கிரகத்தின் கிழக்குப் பக்கம் தவிர்ந்த ஏனைய மூன்று திசைகளிலும் உள்ள பக்கச் சுவர்களின் நடுவிலும் தேவகோட்டங்கள் இணைந்திருப்பது இக் கோயிலின் சிறப்பம்சமாகும். விமானமானது பல தள அமைப்பும் அது உண்ணோக்கிய சரிவுடன் மேலே ஓங்கியெழும் பாங்கில் மிகுந்த கலைவனப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. நாற்சதுர வடிவிலான
ஐ சித்திரபானு வருடம் #శ్రీar#శ్రీడో)

Page 17
அதன் தளங்களில் மாடங்களும் புராணக் கதையை விளக்கும் சிற்பங்களும் சிகரத்தின் மேலே தூபியும் உண்டு.
திருச்சுற்றாலையைச் சுற்றி 58 சிறிய தேவகோட்டங்கள் உள்ளன. சுற்றாலையின் சுவர்களிலே சோமாஸ்கந்தர், அரசகுலத்தவரின் ஒவியந் தீட்டப்பட்டுள்ளன. கர்ப்பக் கிரகத்திலும் பரிகாரத் தேவர் கோட்டங்களிலும் சிவனின் தாண்டவக் கோலங்கள் நாட்டிய சாஸ்திர பிரமாணங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது மற்றுமோர் சிறப்பம்சமாகும்.
காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப் பெருமாள் கோயிலே பல்லவகாலக் கட்டடக்கலையின் மிக முதிர்ச்சி பெற்ற படைப்பு எனத் துணிந்து கூறலாம். அது கைலாசநாதர் கோயிலைக் காட்டிலும் ஓரளவு பெரியது. சுற்றாலை மண்டபம், கருவறை, முகமண்டபம் என்பன அக் கோயிலின் முக்கிய உறுப்புக்களாகும். கருவறை ஏறக்குறைய90 அடி நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட சதுர வடிவில் அமைந்தது. கோயிலை வலம் வருவதற்கேற்ற திறந்த வழியும், சுற்றாலை மண்டபமும் உள்ளது. சுற்றாலை மண்டபத்தில் சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ள தூண் வரிசையும், பல்லவ அரச மரபினரது முக்கிய நிகழ்ச்சியைக் கூறும் செய்திகள் பொறிக்கப்பட்ட சிற்பங்களும் இருக்கின்றன. முக மண்டபம் கருவறையைப் போல சதுர வடிவானது. கருவறையின் மேலுள்ள விமானம் சதுர வடிவிலானது. அதனது உயரமானது தரை மட்டத்திலிருந்து 60 அடி உயரம் கொண்டது. விமானமானது நான்கு மாடிகளையும் கொண்டுள்ளது. அதைச் சுற்றிலும் நடைவழியும் உள்ளது. விமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் பார்ப்போரைக் கவர்வதாகவும் உள்ளது. ஆலயத்திலே பிரகாரத்தின் உட்புறத்திலே திருச்சுற்றமானது கூடங்கள் பொருந்திய சாலைகளும் காணப்படுகின்றன. சாலை நெடுகிலும் யாழித்தூண் நிரைகளும் உண்டு. தூணின் பாரத்தை யாழி தாங்குவது போல் மிகத் தத்துருவமாக சிற்பி தன் கை வினைத் திறனைக் காட்டியுள்ளான்.
உண்மையிலே பல்லவ கால கட்டடக்கலையிலும் கலை வேலைப்பாடுகளிலும் மிக உயர்ந்த வளர்ச்சிக் காலம் இராஜ சிம்மனது ஆட்சிக் காலம் எனக் கூறலாம்.
/
அமரர் வே. க
அகில இலங்கை இந்து மாமன்றத் சங்கத்தின் முன்னாள் தலைவரும காலமானார் என்பதை மாமன்றம் ,
இந்து வித்தியா விருத்திச் சங்கத் அமரர் கணபதிப்பிள்ளை அவர்க
இன்னல்களால் மிகவும் மனம் புனர்வாழ்வுக் கழகம் போன்ற ஆற்றிவந்திருப்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம். தன்னுடன் வழிகாட்டிநின்ற நல்ல தலைவர் என்று சொல்லலாம்.
 
 

நந்திவர்மன் கட்டடக்கலை
இம் மன்னனது கட்டடக்கலைப் பிரிவானது கி. பி. 800 - கி. பி. 900 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்த ஆலயங்களைக் குறிக்கும். பொதுவாக இப்பிரிவுக்குள் இடம் பெறும் ஆலயங்கள் பெரும்பாலானவை அளவிலே சிறியவை. கலைப் பண்புகளைப் பொறுத்த வரையில் இராஜ சிம்மனைக் காட்டிலும் வளர்ச்சி பெற்றது என்று கூறமுடியாது. இப் பிரிவுக்குள் இடம் பெறும் கோயில்கள் காஞ்சியிலுள்ள முத்தீஸ்வரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில், செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள ஒரகடத்திலுள்ள வாடாமல்லீஸ்வரர் கோயில், திருத்தணியிலுள்ள வீரட்டானேஸ்வரர் கோயில், ரேணிகுண்டாவுக்கு அருகில் உள்ள குடிமல்லத்தில் பரசுராமேஸ்வரர் கோயிலும் ஆகும். இவற்றுள் காஞ்சியிலுள்ள முக்தீஸ்வரர், மதங்கேஸ்வரர் கோயில்கள் முதலில் கட்டப்பட்டவை எனக் கருதலாம். அவற்றின் நுழைவாயிலில் இரு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் முக மண்டபம் இருக்கின்றது. இப் பிரிவைச் சேர்ந்த ஏனைய நான்கு கோயில்களும் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளன. அவை மாமல்லபுரத்திலுள்ள சகாதேவ ரதத்தை முன் மாதிரியாகக் கொண்டது. ஆடம்பரமற்ற இக்கோயில்கள் கட்டப்பட்டபோது பல்லவ ஆதிக்கம் அல்லது ஆட்சியானது இறங்குகின்ற காலமாக இருந்திருக்க வேண்டும்.
இவ்வாறாகப் பல்லவ காலக் கட்டடக் கலையானது முதலாம் மகேந்திரவர்மனால் ஆரம்பிக்கப்பட்ட குடவரைக் கோயிலில் தொடங்கி அவனது மகன் முதலாம் நரசிம்ம பல்லவனது காலத்தில் குடவரைக் கோயில், ரதக் கோயிலாகவும், சிற்ப வேலைப்பாட்டுடன் வளர்ச்சி பெற்று இராஜசிம்மனது காலக் கோயில்கள் அளவில் பெரியதோடு, சிற்ப, ஒவியகலை வனப்பிலும் முதிர்ச்சி பெற்று முழுமை பெற்ற காலமாக மாற அதற்குப் பின்பு நந்திவர்மனது ஆட்சிக் கால ஆலயம் மிகச் சிறிய கோயிலாகும். கலைப் படைப்புக்கள் குறைந்ததாகவும் அவதானிக்க முடிந்தது.
ணபதிப்பிள்ளை அவர்களுக்கு மாமன்றத்தின் அஞ்சலி
தின் முகாமைப் பேரவை உறுப்பினரும், இந்து வித்தியா விருத்திச் ான திரு. வே. கணபதிப்பிள்ளை கடந்த ஏப்ரல் 17ம் திகதியன்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
தின் மூலம் அமைதியாகப் பல அரிய பணிகளைச் செய்த பெருமை ருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நொந்திருந்த அவர், குடியியல் உரிமைகள் இயக்கம், தமிழர் Iல இயக்கங்கள் மூலம் தமிழ்மக்களுக்குப் பல சேவைகளை சேவையாற்றியவர்களுக்கு நல்லதொரு கலங்கரை விளக்காக
لر
5 சித்திரபானு வருடம் சித்திரை - ஆணி)

Page 18
வீரசைவத்தின்தோ
அதன் கொள்கைக்
6)ტr. ც5)0 Uრr %۷/262gیویی نی%42ژی/اری
உலகில் காணப்படும் பல்வேறு சமயங்களில் இந்து சமயம் தொன்மையும், பெருமையும் கொண்ட சமயமாக விளங்குகின்றது. இதனால் சனாதன தர்மம் என்னும் சிறப்புப் பெயரையும் இந்து சமயம் கொண்டுள்ளது. வைசம், வைணவம், காணபத்தேயம், கெளமாரம், சாக்தம், செளரம் என்னும் அறுவகைச்சமயப் பிரிவுகளை இந்து சமயம் கொண்டிருப்பது போல சைவசமயமும் ஆறுவகையான சமயப்பிரிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவையாவன.
1. பாசுபத சைவம் 4. சிவ அத்வைதம் 2. காஷ்மீர சைவம் 5. சுத்தத்வைத சைவ சித்தாந்தம் 3. கோரநாத் சைவம் 6. வீரசைவம் என்பனவையாகும்.
இவ்வறுவகைச் சமயப்பிரிவுகளில் வீரசைவத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி, கொள்கைக் கோட்பாடுகள் என்பன பற்றி ஆய்வு செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
வீரசைவம் என்பது வீராகமம் என்னும் சிவாகமக் கொள்கையைப் பின்பற்றித் தோற்றம் பெற்ற ஓர் சமயப் பிரிவாகும். முப்புரம் எரித்து எம்பெருமானை “வீரசிவம்” என புகழ்ந்து போற்றும் மரபு சைவர்களிடையே காணப்படுகின்றது. குன்றாத பக்தியும், குலையாத உறுதியும் கொள்கையாய்க் கொண்ட சைவசமயத்தில் “வீர” என்னும் அடைமொழியைச் சேர்த்து "வீரசைவம்” என்னும் சமயம் தோற்றம் பெற்றது. வீரசைவம் சிவாகமங்களில் ஒன்றான வாதுளாகமத்தையும் ஏற்றுக்கொள்வதனால் இச்சமயம் சிவாகம அடிப்படையில் அமைந்த சமயம் என்பது தெளிவாகின்றது. ஆனாலும் சைவசமயத்திலிருந்து வேறுபடும் வகையிலான சில சிறப்பியல்புகளை உடையதென்று காரணத்தாலும் வீரசைவம் என சிறப்பித்துக் கூறப்படுகிறது. சைவசமயக் கொள்கையையும் வீர சைவக் கொள்கையையும் வேறுபடுத்துவதற்காகவே 'வீர' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டிருக்கிறது. "வீர" என்னுஞ் சொல் வி+ர எனப் பிரித்து “வி” என்பது வித்தை எனவும் “ர” என்பது ரமித்தல் (திளைத்தல்) என்பதையும் பொருள்படுத்தி இவ்வடைமொழி சிவ சீவ ஐக்கிய வித்தையில் திளைக்கின்ற சைவம் வீரசைவம் என்ற பொருளை உணர்த்தி நிற்கின்றது. வீரசைவர்கள் சிவபெருமானை மிகவுயர்ந்த கடவுளாகக் கொள்வதனாற் சிவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். எனவே உறுதியான சைவர்கள் என்ற பொருளிலும் இவர்களுக்கு வீரசைவர் என்னும் பெயர் வழங்குகின்றது. வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்தில் அணிந்து கொள்ளும் வழக்கத்தையுடையவர்களாகையால் இலிங்காயதர் எனவும் கூறப்பட்டனர்.
 

ற்றம், வளர்ச்சியும் 5 கோட்பாடுகளும்
56it. (B.A.) W് ശ്രീ ഗബ്ബണു്.
வீர சைவத்தை ஆதியில் தோற்றுவித்த ஆசாரியர்கள் ஐவராவர். அவர்களைப் "பஞ்சாசாரியர்கள்” எனக் கூறுவர். இரேணுகாசாரியர், மருளாராத்திரியர், ஏகோராமராத்திரியர், பண்டிதராத்திரியர், விஸ்வாராத்திரியர் எனும் ஐந்து ஆசாரியர்களும் பரமசிவத்தின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றி வீர சைவத்தை வளர்த்தும் பல்வேறு இடங்களில் வீரசைவ மடங்களை நிறுவினர் என்ற மரவுவழி செய்தியும் நிலவுகின்றது. கி.பி 12ம் நூற்றாண்டில் வைண்வமும், சமணமும் உயர்வடைந்து சைவசமயம் வீழ்ச்சியடைந்து காணப்பட்ட போது பிச்சல கலசூரி (கி.பி 1156 - கி.பி 1170) யின் அமைச்சரான பசவர் என்பவரே வீரசைவத்தை மீள நிறுவியவராகப் போற்றப்படுகின்றார். வைணவ, சமண சமயத்தின் வளர்ச்சி சைவத்தின் பெருமையை மறைத்திருந்த வேளை பசவர் தொன்று தொட்டு இந்து மதத்தில் பின்பற்றப்பட்டு சிவலிங்க வழிபாடு தவிர்ந்த ஏனைய விக்கிரக வழிபாடுகளைக் கண்டித்தார். இவர் வேதங்களையும், பிராமண வகுப்பினரின் ஆதிக்கத்தையும் மறுத்து புதியதொரு குரு மரபினரைத் தோற்றுவித்தார். இவர்கள் சங்கமர் எனப் பெயர் பெற்றனர். பசவர் வேத வேள்விகள் பயனற்றவை எனக் கூறியதோடு விதவைகள் மறுமணம் செய்யும் உரிமையையும் பெண்கள் உட்பட இம் மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சமவுரிமையையும் வழங்கினார். பசவ தேவரின் வீரம் நிறைந்த சைவக் கொள்கை கர்நாடக மாநிலத்திலிருந்த மக்களைக் கவர்ந்தமையினால் பசவரின் வீரக் கொள்கையைப் பின்பற்றி தாமும் வீரசைவர்கள் ஆயினர். இதன் காரணமாக வீரசைவம் புத்துயிர் பெற்று இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் பரவத்தொடங்கியது.
வீரசைவம் இந்தியா முழுவதும் பரவியுள்ள போதும் ஐதராபாத், மைசூர் ஆகிய மாநிலங்களில் இம்மதத்தினர் பெருமளவில் வாழ்கின்றனர். தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் கும்பகோணம், மதுரை, காஞ்சி, திருப்பரங்குன்றம், சென்னை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் வீர சைவ மடங்கள் காணப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை விபீஷணன் காலந்தொட்டு வீரசைவம் நிலைபெற்று வந்துள்ளது. இவ்வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வீரசைவ மரபினர் வாழ்கின்றனர். இவர்கள் ஆசாரசீலராய் வாழ்ந்தமையால் திருக்கோணேச்சரத்திலுள்ள மலைக் கோயிலுக்கு வீரசைவர் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மட்டக்களப்பில் அக்கரைப்பற்று, பழுகாமம், களுவாஞ்சிக்குடி, தம்பிலுவில், தம்பட்டை ஆகிய ஊர்களிலும், யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை ஐயனார்

Page 19
கோயிலடி, பெருமாள் கோயிலடிப் பகுதிகள், இணுவில், கோண்டாவில், உரும்பிராய், கன்னாகம், மானிப்பாய், மல்லாகம், அளவெட்டி, கொடிகாமம், கிளிநொச்சி ஆகிய ஊர்களிலும் வீரசைவ பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
வீர சைவம் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய தமிழ் நூல்களாக இரண்டு நூல்கள் விளங்குகின்றன. அவை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய பிரபுலிங்க லீலை, சித்தாந்த சிகாமணி என்பனவாகும். வடமொழியில் வசவபுராணம், சிவயோக சிவாச்சாரியாரின் வீர சைவ சித்தாந்த சிகாமணி, மொக்கய்யா மாயிதேவரின் அனுபவசூத்திரம், இலிங்கோபநிஷதம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
வீரசைவத்தின் கொள்கைக் கோட்பாடுகள்.
இலிங்காயதர் சிவலிங்கத்தை உடம்பில் அணிந்து கொள்வதன் மூலம் உடம்பிலுள்ள எல்லா மாசுக்களும் எரிக்கப்பட்டு விடும் என்பது இச்சமயத்தவரின் நம்பிக்கையாகும். இந் நம்பிக்கையின் விளைவாக இவர்கள் சாதிவேற்றுமை, பால்வேற்றுமை என்பனவற்றைப் பாராட்டுவதில்லை. அத்துடன் பிறப்பு, இறப்பு, பிறரைத் தீண்டுதல், எச்சில் உணவுகளை உண்ணல், பெண்களின் மாதவிலக்கு எனும் ஐவகைத் தீட்டுக்களும் இவர்களுக்கில்லையென வீரசைவர்கள் கருதுகின்றனர்.
வீர சைவர்களின் கொள்கைகளில் அஷ்டாவரணம் பஞ்சாசாரம், சடுத்தலம் எனும் மூன்று கொள்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அஷ்டாவரணம் என்பது எட்டு ஆவரணம் அல்லது எட்டு கவசம், எண்வகைக் காப்பு அல்லது கோட்டை எனவும் குறிப்பிடுவர். அவையாவன.
1. குரு 5. பிரசாதம்
2. இலிங்கம் 6. விபூதி
3. சங்கமம் 7. உருத்திராட்சம் 4. பாதோதகம் 8. மந்திரம்
என்பனவையாகும்.
குரு :- குரு என்பது கு+ரு எனப் பிரிந்து “கு”
என்பது பாசம் என்றும் “ரு” என்பது நீக்குதல் எனவும் பொருள்பட்டு இறைவடிவான குரு பாசத்தை நீக்குபவர் என பொருள்படுகின்றது.
இலிங்கம் :- இலிங்கம் என்பது லி+கம் எனப் பிரிந்து “லி” என்பது ஒடுங்குதல் என்றும் “கம்” என்பது தோன்றுதல் எனவும் பொருள்பட்டு ஆன்மாக்களும் உலகங்களும் ஒடுங்கவும் தோன்றவும் காரணமான உண்மைப் பொருளை உணர்த்தும் வடிவமாகும். இது ஆன்மாவைப் பீடித்துள்ள மல பந்தங்களை ஒடுக்கி நலன்களைத் தோற்றுவிக்கும் எனப் பொருள்படும்.
 

சங்கமம் :- சங்கமம் என்பது சிவனடியார் கூட்டத்தைக் குறிக்கும்
பாதோதகம் :- இது குரு, இலிங்க சங்கமர்களின் திருவடிகளை நீராட்டிய புனித தீர்த்தமாகும். இதனை வீரசைவர்கள் அருந்துவதன் மூலம் ஆன்ம சாந்தி பெறமுடியும் 6T6可 கருதுகின்றனர்.
பிரசாதம் - பிரசாதம் என்பது குரு, இலிங்க சங்கமருக்கு அர்ப்பணம் செய்யப்பெற்றவை அனைத்தும் பிரசாதம் ஆகும். வீரசைவர்கள் ஒவ்வொருவரும் தாம் உபயோகிக்கும் எப்பொருளையும் குரு, இலிங்க, சங்கமருக்கு அர்ப்பணம் செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும் என்ற கொள்கையையுடையவர்கள்.
விபூதி - சுத்தமான பசுவின் சாணத்தையும் நீறாக்கி மந்திரப்பூர்வமாக எடுக்கப்பெற்ற திருநீறே விபூதியாகும்.
உருத்திராக்கம் :- இதனை அக்கமணி எனவும் கூறிவர். உலக உயிர்களின் துன்பத்தைக் கண்டு இறைவன் உகுத்து கண்ணிரே உருத்திராக்கம் அல்லது அக்கமணி என கருதுவர்.
மந்திரம் :- மந்திரம் என்பது மனதுக்கு உறுதியைத் தருவது எனப்பொருள்படும். இதனை உச்சரிப்பதனால் தீராத நோய்களும் தீர்ந்து மனதுக்கு உறுதியும், தியானத்துக்கு உதவியும் நல்கி சிவபக்தியை ஏற்படுத்துவது என கருதுவர்.
மேற் கூறப்பட்ட அஷ்டாவரணத்தில் குரு, இலிங்க, சங்கமம் ஆகிய மூன்றும் வழிபாட்டிற்குரியனவாகவும் விபூதி, உருத்திராக்கம், மந்திரம் ஆகிய மூன்றும் வழிபாட்டுக்கு பயன்படுபவையாகவும், பாதோதகம், பிரசாதம் ஆகிய இரண்டும் வழிபாட்டின் பயன்களாகவும் கொள்வர்.
பஞ்சாசாரம்
பஞ்சாசாரம் என்பது வீர சைவர்களின் மூவகை நெறிமுறைகளில் முக்கியமானதாகும். இது ஐந்து வகையான நெறிகளைக் கொண்டதாகும். இவை வீரசைவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைப் போல வாழ வழிகாட்டும் நெறிமுறைகளாகும். அவையாவன.
1. இலிங்காசாரம் 4. பிருத்தியாசாரம் 2. சதாசாரம் 5. கனாசாரம் 3. சிவாசாரம்
என்பனவாகும்.

Page 20
இலிங்காசாரம் :- இது இலிங்கத்தை அணிந்து கொண்டு அதனை ஒவ்வொரு நாளும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வேளைகளில் வணங்குதலாகும்.
சதாசாரம் :- ஏதாயினும் தொழில் ஒன்றை மேற்கொண்டு அறவழியில் நிற்றலாகும்.
சிவாசாரம் :- இலிங்காயதர் தமக்குள் வேறுபாடின்றி உடன்
உண்ணலும் மணஞ் செய்தலுமாகும்.
பிருத்தியாசாரம் :- இது கடவுளுக்கும் அடியார்களுக்கும்
பணிவுடையோராய் இருத்தலாகும்.
கணாசாரம் :- தனி அறத்தையும் பொது அறத்தையும் வீரசைவ நெறி பிறழாமல் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்தலாகும்.
அமரர் திருமதி விசா
D
அகில இலங்கை இந்துமாமன்ற மகளிர் இந்து மன்ற காப்பாளருமா6 திகதியன்று காலமானார் என்ப கொள்ளுகின்றது.
கொழும்பு, மகளிர் இந்து மன்றத் வளர்ச்சிக்கும் அவர் பல வகையிலும் உதவிகளையும் ஒத்துழை பங்களிப்பு சிறப்பாகப் போற்றத்தக்கது.
IDBT (fa)IT
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மகா கி 12ம் திகதியன்று மாமன்றத் தலைமையகப் பிரார்த்தன
அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் க இரவு நான்கு சாமமும் விஷேட பூசைகளும், நள் நிகழ்ச்சிகளாக சமயச் சொற்பொழிவு, பண்ணிசை மாணவர்கள் வழங்கிய கூட்டுப்பிரார்த்தனை பக்திப் அம்சங்களாக இடம்பெற்றன.
மாமன்றத்தின் காலாண்டிதழான “இந்து ஒ வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சடுத்தலம்
சடுத்தலம் என்பது சீவான்மா சிவம் பரம்பொருளுடன் இணைதலைக் குறிக்கும். இதனை வீரசைவநெறி எனவும் பொதுவாகக் கூறுவர். வீர சைவர்களின் தலைசிறந்த குறிக்கோள் இலிங்காங்க சம்பன்னராக சிவஐக்கியமாதலைக் குறிக்கும். அதனை அடையும் முறையே சடுத்தளம் எனவும் கூறுவர்.
சடுத்தலத்தை அடைவதற்கு பக்தித்தலம் மகேசத்தலம், பிரசாதித்தலம், பிராணலிங்கத்தலம், சரணத்தலம், ஐக்கியத்தலம் என்னும் ஆறுவகையான நிலைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கடந்து சென்றால் இறுதியில் மோட்ச நிலையை அடையலாம் என்பது வீரசைவர்களின் நம்பிக்கையாகும்.
உசாத்துணை நூல்கள்:-
1. வீரசைவ மரபியல் - சோ.பரமசாமி 2. இந்துசமய மறுமலர்ச்சி - இந்துசமய ஆசிரியர் கல்விப்
(கி.பி.1336 - கி.பி 1736) பாடநெறி மொடியூல்
༄༽ ாலாம்பாள் அரியகுட்டி அவர்களுக்கு
மன்றத்தின் அஞ்சலி
த்தின் முன்னாள் முகாமைப் பேரவை உறுப்பினரும், கொழும்பு
ன திருமதி விசாலாம்பாள் அரியகுட்டி கடந்த மே மாதம் 26ம் தை மாமன்றம் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்
திற்கு மட்டுமன்றி, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ப்பையும் வழங்கி வந்திருப்பதன் மூலம் சமயத்துறையில் அவரது
சிவராத்திரி பூசையும் வழிபாடும் கடந்த மார்ச் னை மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது.
ாயங்காலப் பூசையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. ளிரவு இலிங்கோற்பவ கால அபிஷேகமும், சிறப்பு மற்றும் இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன சிறப்பு
ரி” மகாசிவராத்திரி சிறப்பிதழும் அன்றைய தினம்

Page 21
பிரார்த்தனை ஒன்று சைவப்புலவர் “கவிமணி
நாச்சிமார் யாழ்ப்
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒள்வையார். பெறுதற்கரிய பிறவிமானிடப்பிறவி. ஆகவே இந்தப் பிறவி எடுத்து நாங்கள் அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்தவராகிய இறைவனை நாளும் பொழுதும் தவறாமல் நினைக்க வேண்டும். அவனது நாமத்தை இடையறாது உச்சரிக்க வேண்டும்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த ப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"
ஆகவே இறைநாமத்தை இடைவிடாது உச்சரிப்பதற்கு நாமபஜனை செய்வதே சிறந்த வழியாகும். சிவநர்ம பஜனை மூலம் மனத்தை ஒருவழிப்படுத்தி சிவ சிந்தனையுடன் இருப்பதற்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மன ஒருமைப்பாட்டுக்கு இதைவிட வேறு நல்ல வழிகிடையாது. கூட்டுப் பிரார்த்தனை ஒன்றினாலேயே குரங்கு மனத்தை அடக்கமுடியும்.
சைவ மக்களாகிய நாம் அனைவரும் சிவதீட்சை பெற்றுக் கொள்ளுதல் அவசியம். தீட்சை கேட்காதவர் சைவசமயி அல்லர். சிவ சின்னமாகிய திருநீற்றை அணிவதற்கும் தகுதிப்பாடு வேண்டும். அதாவது அருகதை உரிமை இருந்தால்தான் நாம் விபூதியை அணிவதற்கு உரித்துடையவர்களாக ஆவோம். எனவே நாம் நிச்சயமாக சிவதீட்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு முகவரி இருந்தால்தான் கடிதம் எழுதினால் அது அவருக்குக் கிடைக்கும். முகவரி இல்லாதவருக்குக் கடிதம் எழுதிப் பயனில்லை. ஏனெனில் அது அவரது கைக்குக்கிடைக்காது. அதே போல் சைவமக்களாகிய எமக்கு முகவரி போன்றது சமயதீட்சை,
சைவத்தின் மேற் சமயமில்லை என்பார்கள் நம்முன்னோர். ஆகவே சைவ சமயத்தில் பிறந்தவர்களாகிய நாங்கள் பாக்கியசாலிகள். இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காகவே நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
* அன்பின் நிலைபெற்ற ஒருவரது முன்னி - (பதஞ்சலிே
 
 

தான் பிராணனுக்கு ஆதாரம்
?" இராசையா பரீதரன் கோவிலடி, பாணம்,
நிலைபெறுமாறெண்ணுதியேல் நெஞ்சேநீவா நித்தலுமெம்பிரானுடைய கோயில்புக்கு புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திபுகழ்ந்துபாழ தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாழ
சங்கரா சயபோற்றி போற்றி யென்னும் அலை புனல் சேர் செஞ்சடையெம்மாதியென்றும்
ஆருராவென்றன்றே அலறாநில்லே”
என்ற தேவாரப் பதிகத்தில் அப்பர் பெருமான் திருத்தொண்டுகள் பற்றிக் குறிப்பிடுகின்றார். உழவாரத் தொண்டின் மூலம் தமது உள்ளத்தின் தெளிவை உணர்த்தியவர் நாவுக்கரசர் பெருமான். அவருடைய உளப்பக்குவ நிலையை அறியவே இறைவன் புற்களுக்கிடையே பொன்னும் மணியும் நவரத்தினமும் வ்ரச்செய்தார். ஒடும் செம்பொன்னும் ஒன்றாக நோக்கும் நிலையிலிருந்த அப்பரடிகள் புற்களுடன் சேர்த்துப் பொன்னையும் மணியையும் வீசி எறிந்து விட்டார். அந்தப் பரிபக்குவ நிலை மகத்தானது.
இறைநாம மகிமையையும் இறை தொண்டின் சிறப்பையும் எடுத்தியம்புதல் கஷ்டமான ஒன்று. இந்தப் பஜனையின் மூலமே நாம் ஆன்ம ஈடேற்றத்தை அடையமுடியும். சேர்ந்து பாடுவதன் சிறப்பே அதுதான். கூட்டுப்பிரார்த்தனை மிக விசேடம் வாய்ந்தது. ஒரு கையைத் தட்டி ஓசைவராது. இருகைகளையும் தட்டினால் தான் ஒசை பிறக்கும். ஆகவே பலர் ஒன்று சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்து பஜனை பாடுவதன் மூலம் மிக ஆனந்தம் கிடைக்கும். செய்து பாருங்கள். எவ்வளவுதூரம் இதில் உண்மை இருக்கிறதென்று பிரார்த்தனை ஒன்றின் மூலமே பிராணனுக்கு ஆதாரம் தேடமுடியும்.
“அவனருளாலே அவன்தாள் வணங்கி என்றபடி அவனது நாமபஜனை பாடுவதற்கும் அவனுடைய அருளே வேண்டும். இறை நாமத்தை பக்தியுடன் பாடி முத்தியின்பத்துக்கு வழிதேடவேண்டும். ஆண்டவன் அருளைப் பெறுவதற்கு அவனையே பணிந்து கூட்டுவழிபாடு மூலம் நாட்டு நலனை நாடி, எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதல்லால் வேறொன்றறியேன் பராபரமே” என்று சகலமக்களும் சந்தோஷமாக வாழ, இன்புற்றிருக்க வழிவகைகளைத் தேடுவோமாக.
ரலயில் பகையுணர்வுகள் ஒழிந்து விடுகின்றன. பாக சூத்திரம்)
சிக்தியானு வருடம் சித்திரை - ஆணி)

Page 22
திருமதி. உ.
யா/கோப்பாய் கி
இந்து மதம் ஆன்மாக்களின் உயர் குறிக்கோள் மோட்சம் என்றே கூறுகின்றன. மோட்சம் என்றால் விடுதலை அல்லது விடுபடுதல் என்பது கருத்தாகும். எனவே ஆன்மா பிறவியினின்றும் விடுபடுதல் மோட்சம் ஆகும். இம்மோட்சம் மறுமையிலேயே ஒருவருக்குக் கிட்டக் கூடியது. இத்தகைய மறுமைபற்றி அழுத்திப் பேசினாலும் இந்துமதம் இம்மை இன்பங்களுக்கும் இடம் கொடுக்கிறது என்பதை விளக்கும் வகையில் புருடார்ந்தக் கோட்பாடு விளக்குகின்றது. இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். இந்நான்கினுள்ளும் இறுதியாகக் கூறப்பட்டது மோட்சமே ஆகும். இதுவே ஆன்மாக்களின் உயர் குறிக்கோளாகும். இதனை அடைவதற்குரிய வழியாக அறம், பொருள், இன்பம், என்ற மூன்றும் அமைந்துள்ளன என்பதை நோக்கும் போது இந்து மதம் மறுமைபற்றி அழுத்திப் பேசினாலும் இம்மை இன்பங்களுக்கும் தனியிடம் வகுத்துள்ளது.
இல்வாழ்க்கை நிலையிலே இந்து ஒருவன் அனுட்டிக்க வேண்டிய சகல விதமான அறங்களையும் இந்து மதம் கூறுகிறது. அறம் என்பதை எடுத்துக் கொண்டால் மனு முதலிய அறநூல்களில் விதித்த கடமைகளைச் செய்தலும் விலக்கியவற்றை ஒழித்தலுமாகும்.
இந்து ஒருவன் இவ்வாழ்க்கை நிலையில் ஆற்றவேண்டிய ஐம்பெரும் வேள்விகளை ஒழுங்காகச் செய்தலும் அறத்தின்பாற் பட்டனவாகும். அவை பிரமயாகம் வேதங்களை ஒதிப் பிரமத்தை வழிபடுதலாகும். தேவயாகம் வேள்வித்தீயில் நெய்சொரிந்து
தேவர்களை வழிபடுதலாகும். பிதிர்யாகம் நீர்க்கடன் செய்தலாகும். மானுடயாகம் விருந்தோம்பும் முறையால் மனிதரைப் பேணுதலாகும். பூதயாகம் விலங்குகள் பறவைகள்
ஆகியவற்றுக்குத் தானியங்கள் உணவுகள் கொடுத்து எல்லா உயிர்களையும் பேணுதலாகும். இவ்வாறு இல்வாழ்வான் ஒருவன் தினந்தோறும் இவ்வறங்களை அனுட்டித்து இம்மைப் பலன்களைப் பெறுவதுடன் அது அவன் மறுமையடைவதற்கும் வழியாக அமைகிறது. இல்வாழ்க்கையை ஒருவன் அறத்தின் வழியே செலுத்துவானாயின் அவன் அதற்குப்புறமாகிய நெறியிற் போய்ப் பெறும் பயன் யாது உளது.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போய்ப் பெறுவது எவன்” என்று வள்ளுவர் கூறுகிறார்.
* வாய்மையைக் கடைப்பிடித்தால் வேறு எந்:
- வள்
 
 

பங்களுக்குத் வகுத்துள்ள இந்து மதம்
ரேந்திரகுமார் ரிஸ்தவக் கல்லூரி
இவ்வாறு இல்வாழ்க்கைக்கு அறங்களையும் அனுட்டிப்பதோடு இல்வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை ஈட்டவும் அறத்தின் வழியில் ஈட்ட வேண்டும் என கூறப்படுகிறது. “அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு எனக் கூறப்படுகிறது. இந்து மதம் சரியான வழியில் பொருளை ஈட்டி அறத்தின் வழியே அதனைப் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டுமெனக் கூறுகிறது"
பழியஞ்சிப் பார்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்று மில்" என்று வள்ளுவர் விளக்குகிறார். அதாவது பொருள் செய்யுங்கால் பாவத்திற்கு அஞ்சிப் பொருனை ஈட்டி அப்பொருளை இயல்புடைய மூவர்க்கும் தென்புலத்தான் போன்ற நால்வர்க்கும்” படைத்து தானும் உண்ணுதலை உடையவனாயின் அவன் சந்ததி உலகத்தில் இறத்தலில்லை என்று கூறப்படுகின்றது.
அடுத்து இந்து மதம் ஒருவன் அறத்தின் வழியில் இன்பத்தையும் அனுபவித்தல் வேண்டும் எனக் கூறுகிறது. ஒருவன் மனைவி மக்களுடன் கூடி அறவழியில் நின்று இன்பத்தை அனுபவிக்க வேண்டும். வாற்சயாயனர் எழுதிய காமசூத்திரம் காமக்கலையை நன்கு விளக்குகிறது. இவ்வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்கும் இன்பம் பற்றி திருவள்ளுவர் காமத்துப் பால் என்னும் பகுதியில் கூறுகிறார்.
“ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் கூடியார் பெற்ற பயன்” அதாவது புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும் அதனை அளவறிந்து நீக்குதலும் அதன்பின் நிகழ்வதாகிய புணர்ச்சியும் காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்து மதம் இல்வாழ்க்கைக்கும் இன்மை இன்பங்களுக்கும் தனியிடம் வகுத்துள்ளது எனக் கூறலாம். இவையே மறுமை பற்றிய மோட்சத்துக்கும் அடிப்படையாகும். அதாவது இறைவனோடு ஒன்றிவிடுகிற நிலையே மோட்சமாகும்.
இந்து மதம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்ததுடன் வீடுபேறடைவதற்குரிய வழிகளையும் கூறியுள்ளது. இல்வாழ்வானைப் பொறுத்தமட்டில் இம்மூன்றும் நிறைவான வாழ்வு வாழ உதவுவதுடன் மறுமை இன்பமாகிய மோட்சத்தையடையவும் காரணமாகின்றது.
அறத்தையும் செய்யவேண்டிய அவசியமில்லை. ரூவர்.
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 23
திருக்கே
Vath A \--
“ UMTUGö GnaopaoØTuuli uavuav Fáfangsuuri
எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவர்.அமரர்கள் வேண்ட நஞ்
சுண்டிருள்கண்டத்தர் ஈடமாவது இருங்கடற்கரையினில்
எழில் திகழ் மாதோட்டம் கேடிலாத கேதீச்சரம் கைதொழுதெழக் கெடுமிடர்வினைதானே”
எமது ஈழவள நாட்டின் இருகண்களாக திருக்கோணேஸ்வர ஆலயமும், திருக்கேதீஸ்வர ஆலயமும் விளங்குகின்றன. மேலும் கீழ் மாகாணத்தின் காவற் தெய்வமாகத் திருக்கோணேஸ்வரமும், வடமாகாணத்தின் காவற் தெய்வமாகத் திருக்கேதீச்சரமும் இருக்கின்றன. இதைவிட ஈழத்தின் பல இடங்களிலும் சிவன் கோவில்கள் உண்டு. விரல்விட்டு ஒருசில சிவன் கோவில்களை எண்ணிவிடலாம், சில கோவில்கள் மண்ணினுட் மறைந்தும் சில கோவில்கள் பாழடைந்தும் உள்ளன. இலங்கையை முன்பு ஒருகாலத்தில் சிவ பூமியென அழைத்து வந்தனர்.
திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளாலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் பாடல் பெற்ற தலமாகத் திருக்கேதீச்சரமும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப் பெற்ற தலமாகத் திருக்கோணேச்சரமும் இருக்கின்றன.
திருக்கேதீச்சர ஆலயம் வேதகாலத்திற்கு முந்தியது இந்து தேவர்களால் அமைக்கப் பெற்றது. அமரலோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு மண்ணுலகில் சிவனாலயம் தேவையாவென வினா எழக்கூடும். இதற்கு விடையாக மணிவாசகப்பெருமான் திருவாசகத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பதிகத்தில்
“புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம் அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின்அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே’ என அருளியுள்ளார். ஒருகாலத்தில் தேவர்கள் சாவா மருந்தாகிய தேவாமிர்தம் உண்ண விரும்பினார்கள். தேவர்களும் அசுரர்களும் மகாமேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். மலை, கடலின் அடியிற் பொறுக்காது, திருமால் கூர்ம வடிவமாக (ஆமை வடிவமாக) அவதாரம் எடுத்து பாற்கடலின் அடியில் படுத்து
புலவர் விசா6
(இந்து ஒளி
 

திச்சரம்
ாட்சி மாதாஜி
மலையைத் தன் ஒட்டில் தாங்கினார். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தார்கள், வாசுகி வேதனை தாங்காது நஞ்சைக் கக்கியது. அது தேவர்களைத் துரத்தத் தேவர்கள் கையிலயங்கிரிக்கு ஒடிச் சென்று சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்தார்கள். சிவபெருமான் அந்த நஞ்சை உட்கொள்ள உமாதேவி கண்டத்தைக் கையால் பிடித்தார். நஞ்சு கண்டத்தில் நின்றமையால், சிவபெருமான் திருநீலகண்டன் என்னும் நாமம் பெற்றார்.
மீண்டும் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் போது, காமதேனு, மகாலட்சுமி குடமுனி போன்ற பொருட்கள் வெளிவந்தன. முடிவில் தேவாமிர்தம் வெளிவந்தது. இந்த அமிர்தத்தில் அசுரர்கட்குப் பங்கு கொடுக்கத் திருமால் விரும்பவில்லை. இதனால் அவர் மோகினி வடிவம் கொண்டார். அசுரர் தேவாமிர்தம் உண்ணும் விருப்பத்தை விட்டு மோகினியை அடைய விரும்பினார்கள். இதனால் அசுரர்களிடையே யுத்தம் மூண்டது. ஒருவரோடு ஒருவர் பொருதி இறந்தார்கள். முடிவில் ஒர் அசுரன் எஞ்சினான். அவன் இரகசியமாகத் தேவர்கள் கூடியிருந்த இடத்திற்குச் சென்று சூரிய சந்திரனுக்கிடையில் நின்று கை நீட்டித் திருமாலாகிய மோகினியிடம் அமிர்தம் பெற்றதைச் சூரியன் சந்திரன் கண்சாடை காட்டினர். உடனே மோகினி அசுரனை இரண்டாக அகப்பையால் வெட்டினாள். அசுரன் இராகு கேது என்னும் இரண்டு பாம்புகளாகி, தேவர்கள் மாந்தையில் கட்டிய சிவன் கோவிலுக்கு வந்து பாலாவியில் நீராடி ஆகம விதிப்படி முக்கரண சுத்தியுடன் தவம் இருந்து முத்தியடைந்தமையால் அக்கோயில் திருக்கேதீச்சரமென அழைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் பக்தர்கள், நோயாளர்கள் பக்தியுடன் இக்கோயிலுக்கு வந்து பாலாவியில் நீராடி முக்கரண சுத்தியுடன் வலம் வந்து வணங்கித் தமதுபாவம் பழிகளைத் தொலைத்தார்கள் என்பதைத் திருக்கேதீச்சரத் தேவாரங்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.
இவ்வாலயம் மன்னார் மாவட்டத்தின் மாதோட்ட நகரில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் அதாவது சோழர் காலத்தில் மாந்தை பெரிய நகரமாகவும் காணப்பட்டதால் இஃது, 'மணிவாசகப் பெருமான் பாண்டிய நாட்டிலிருந்து ஆரிய தேசத்துக் குதிரைவாங்கத் திருப்பெருந்துறைக்குச் சென்றார். அத்திருப்பெருந்துறை போல மாந்தை நகரமும் துறைமுகமும் காணப்பட்டதாம். சன நெருசல் வெளிநாட்டு உள்நாட்டு விலைபேசும் பொருட்கள், ஒலிகள் காணப்பட்டதாம்.
இவ்வாலயத்தின் நாற்புறத்திலும் வான் தோயும் கோபுரங்கள், மக்களை வாவென்று அழைப்பதுபோல வீணைக்கொடிகள் தோரணங்கள் வாழைகள் காணப்பட்டனவாம். மாட மாடிகள் பெருவீதிகள் சிறுவீதிகள்யாவும் காணப்பட்டதாம். அந்தளவு அழகாக அக்காலத்தில் “திருக்கேதீச்சரம்”
காணப்பட்டது.

Page 24
காலங்கள் ஓடியது சிங்களவரின் ஆட்சிக் காலத்தில் 1505ம் ஆண்டென நினைக்கின்றேன். அந்நியர் வியாபார நோக்கமாக 1717 வரை வந்தார்கள். போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் இந்த மூவினமக்களும் தத்தம் காலத்தில் வியாபாரத்தோடு தமது பண்பாடு முதலியனவற்றை மக்களுக்குத் திணித்து தமது மதங்களைப் பரப்பினர். இந்து ஆலயங்களைத் தரைமட்டமாக்கிய பரிதாப வரலாறு பாரதம் போன்றது. அந்நியரால் தரைமட்டமாக்கப்பட்ட ஆலயங்களில் திருக்கேதீச்சர ஆலயம் முதன்மையானது.
ஆங்கிலேயூர் காலத்தில் நமது ஐந்தாம் குரவரென அழைக்கப்படுகின்ற பூநீலழரீ ஆறுமுக நாவலர் பெருமான் யாழ்ப்பாணத்து நல்லூரில் அவதாரம் செய்தார். அவர்கள், “மாந்தையில் தேன்பொந்து ஒன்று மறைந்துள்ளது” என்றருளினார். அதுபோல யாழ்ப்பாணச் சித்தர் வரிசையில் அவதாரம் செய்த தவத்திரு சிவயோக சுவாமிகளும் திருவாய் மலர்ந்தார். அந்தக் காலத்தில் கொழும்புகொச்சிக்கடையில் சைவ மரபில் வந்த சிவபக்தர் மாதோட்டம் சென்று சிறு சிவன் கோவில் அமைத்தார். வேதாகம விதிப்படி பூசை முதலியன நிகழ்ந்தன. கோயிலின் உட்பிரகாத்தில் காணப்படுகின்ற மகாசிவலிங்கம் வேதகாலம் தொட்டு இருந்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மறைக்கப்பட்டுபின் புதைபொருளாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்காலம் தொடக்கம் இலங்கைவாழ் சைவப் பெருமக்கள் மகாசிவராத்திரிக்குத் திருக்கேதீச்சரம் செல்வது நிகழ்ந்து வந்தது.
ஆலயம் புனருத்தாரணம் செய்யத் திருப்பணிச்சபை தீர்மானிக்கப்பட்டது. அக்காலம் தொடக்கம் இக்காலம் வரை இருந்து வந்த திருப்பணிச் சபையாரின் முழுப்பேரின் பெயர்கள் எமக்கு அறிய முடியவில்லை. 1964ம் ஆண்டு தொடக்கம் அடியேன் திருக்கேதீச்சரத்துடன் நெருங்கி வணங்கி வர திருவாசகமடம் பொற்பாலமாக அமைந்தது. 1964ம் ஆண்டு தொடக்கம் 91ம் ஆண்டுவரை திருக்கேதீச்சரம் உண்மையாவே சிவபுரம் போன்று காணப்பட்டது எனலாம்.
சூழவர யாத்திரீகர் மடங்கள், அந்தணர்க்கான குருகுலங்கள் காணப்பட்டன. வடக்குவீதியில் நந்தவனம் அந்தணரின் மனைகள் கோயில் அறங்காப்போர் செயலாளர்களின் மனைகள் பல காணப்பட்டன. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவாரப் பதிகம் போன்று ஆலயம் எழிலும் அருள்வெள்ளச் சாகரமும் மிகுந்து காணப்பட்டது.
மான் கூட்டம், பசுக்கூட்டம், மயில்களில் ஆட்டம் மந்திகளின் சேட்டைகள் யாவும் கண்கொள்ளாக் காட்சியாகும். 1974ம் ஆண்டு என நினைக்கின்றேன் ஆலயம் புதுப்பித்து
மகாகும்பாபிஷேகம் நிகழ்ந்தது. அதன்பின் பக்த
ی
* விதைக்கப்பட்ட விதை கற்களையும், மண்ணை அதைப் போலவே நமக்குக் கடினமான சூழ் தயங்காமல் தாங்
ஒர்
 

யாத்திரீகர்களின் கூட்டமும் அதிகரித்தன. திருவாசக மடத்தில் திருவெம்பாவைக் காலத்தில் திருவாசகம் விழாநிகழ்வது வழக்கம் அதனைத்தவத்திரு சரவணமுத்துச் சுவாமிகள் நிகழ்த்திவந்தார். இந்தியாவிலிருந்து போச்சாளர்கள் வருவார்கள். இலங்கையின் பலபாகங்களில் இருந்தும் பேச்சாளர்கள், வயலின் இசை வாசிப்போர் வருவார்கள். அடியேனும் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களும் பாக்கியமும் கிடைத்தன. கடைசி மூன்று நாளும் சிவபூசை மகாநாடு நிகழ்ந்தது. மகேஸ்வரபூசைகளும் இருந்தன. இரத்தினச் சுருக்கமாகக் கூறின் பக்தர்களுக்கு ஆத்மா சாந்தி ஆன்மா ஈடேற்றம் முதலிய நற்பதவிகளை வாரி வழங்கியது அக்காலத் திருக்கேதீச்சரம் எனலாம்.
திருக்கேதீச்சரம் பற்றித் தல புராணமாகப் பாடத்தொடங்கினால் அதன் அற்புதச் செயற்பாடுகள் மணற்கேணிபோலப் பெருகும். அதனால் இத்துடன் நிறுத்தி, இன்று காணப்படும் திருக்கேதீச்சரம் பற்றிச் சிறிது சிந்திப்போம். 1991 ம் ஆண்டு தொடக்கம் இனக்கெடுபிடி காரணமாக அடியேன் திருக்கேதீச்சரம் போக முடியவில்லை. அப்படிப் பல பக்தர்கள் திருக்கேதீச்சரசுவாமியைத் தரிசிக்க முடியாமல் இருந்தது. தெய்வத்தின் அருளால் 11, 03. 2002ம் ஆண்டு திருக்கேதீச்சரம் செல்லும் வாய்ப்பை இலங்கைவாழ் சைவ அடியார்களுக்கு இந்து கலாசார அமைச்சு ஏற்படுத்தியது. பல அடியார்கள் பக்தி தாகத்துடன் கடல் மடை திறந்ததுபோல அலை அலையாக வந்தார்கள்.
ஆலயத்தின் சூழ் நிலைகள், சுற்றாடல், கிராமங்களின் சூழ்நிலைகள் பெரிதும் தாங்கமுடியாத கவலையைத் தந்தது. சைவப் பெரும் தொண்டர்கள் தத்தம் உயிர்களைப் பணயம் வைத்து ஆலயச் சுற்றாடல்களை நவீன இயந்திரங்கள், மண்வெட்டி முதலியவற்றால் சுத்தம் செய்து, யாத்திரீகர்களுக்கு அவசிய தேவைகளுக்குரிய வசதிகளைச் செய்துள்ளார்கள் என்று அவதானிக்க முடிந்தது. எனினும் பற்றைக் காடுகள் முற்றாக நீக்கப்படவில்லை. சூழ இருந்த மடங்கள் தரைமட்டமாகக் காணமுடிந்தது. கோயிலின் பசுக்கூட்டங்கள் எதுவுமே காணப்படவில்லை. அதுபோல மயிற்கூட்டங்கள், மான் கூட்டங்கள், பூங்காவணம், மரச் சோலைகள், குடிமனைகள் முற்றாக அழிக்கப்பட்டுக் காணப்பட்டன.
ஆலயம் என்பது மக்களின் உயிர்போன்றது. மீண்டும் எமது பாடல் பெற்ற தலமாகிய திருக்கேதீச்சரம் புதுப்பொலிவுடன் காணப்பட ஒவ்வொரு சைவ மக்களும் பேருதவி செய்ய வேண்டும். பேச்சும் மூச்சும் ஆலய சம்பந்தமாகவே இருக்க வேண்டும்.
ஆதி காலத்தில் அரசர்கள் மக்கள் ஆலயங்கள் அமைத்து அதன் மூலம் கலாசாரம் பேணி வந்தார்கள் என்பதைப் பண்டைத் தமிழர் வரலாறு கூறுகின்ற தல்லவா. எனவே மீண்டும் ஆலயம் புதுப்பொலிவு பெற முயல்வோமாக.
பும் துளைத்துக் கொண்டு எப்படி வெளிப்படுகிறதோ, நிலை பிறரால் ஏற்படுத்தப்படும்போது, அதை நாம் கிக் கொள்ள வேண்டும்.
அறிஞர் ノ
12 శ్లో சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 25
4
அகில இலங்கை இந்து ம செயலாளரும் கொழும்பு சைவமு எல்லோராலும் செல்லமாக அழைக்சு காலமானார் என்பதை மாமன்றம் ஆ அவரது மறைவையொட்டி ஒளி"இங்கு பிரசுரம் செய்கிறது.
நேசத்துரி கண்ணிர்
|h
*
-
பார் போற்றும் பாங்கு வாழ்ந்தாய் பாலசுப்பி பாதியிலே உன் உயி: இறை பணிச் செம்மல இந்து மாமன்றத்தின் உறுப்பினரானிர்! இந்து மாமன்றத்தின் usu usoof cyfó5śG39/ சிவ தொண்ட்ர் அணி குழுவையும் முன்னின்
g s
* 6
e
&
د
森
kܚܝ%
s
சைவமும்தமிழும் காச் خفي 窃ー சைவ முன்னேற்றச் ச 疑 தற்போதைய தலைவ
சங்கத்தின் சங்க நாத afsurucib G5u65?cu6)ésé c Jø"Ởc 9Đ6ờfG8ør^
அருள் மிகு சிவசுப்பிர அறங்காவலருடன் ே அருள் மிகு சிவசுப்பிர தங்கத் தேர்தனை அ6 நீராற்றிய அறப்பணி: இறைபணியின் இருட் காலதேவன் கரம்பிடி தளராத உம்சேவை த பிரிவுகள் எல்லாம் இ இருப்பினும் இது தே7 தோன்றவில்லை என் சான்று பகரவில்லை! இவ்வுலகமே நிலைய அவ்வுலகில் நிலையா இந்துக்கு நீர் ஆற்றிய எமை விட்டுக் கானக எம் நினைவுகள் என் தோழமை கொள்ளும் அன்பின் அமரரே! உ சாந்தி அடைய வேண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ
ாமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினரும் துணைச் $2 னேற்றச் சங்கத்தின் தலைவருமான “மணிமாஸ்டர்" என 艺会 ப்படும் திரு.க.பாலசுப்பிரமணியம் கடந்தஏப்ரல் 15ம் திகதிதான்று
ழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றது. { மாமன்றம் வெளியிட்டிருந்த அஞ்சலி செய்தியை,"இந்து గుత
60606) 66
அஞ்சலி !
560c GScussoTou 2 ao6oof°acu or :( ரைப் பறித்தானோ காலன் ாய் வந்துதித்து முகாமைப் பேரவை
துணைச் செயலாளராய்
பும் சமய விவகாரக் று நடத்தினிரே!
g5CO
ாங்கத்தின்
60TT60T adu
த்தைச் டை, லண்டன் யாவும்
மணிய ஆலயத்துக்கு சர்ந்து அறப் பணி புரிந்தீரே! மணியர் வலம்வரத் மைக்க அரும்பாடு பட்டீரே! யை மறப்பதற்கு இல்லையே! ப்பிடமே - உம்மைக்
ததாலும
டுமாறுமா? யற்கையின் இயல்பு தான் ாற்றதாவோ
றோ சரித்திரம்
ற்றது எனின்
னது ஏது - அது
அரும் சேவைதான் த்துக் காலனுடன் நீர் சென்றாலும் றும் உமைத்தொட்டுத்
οதுஆத்மா டி நிற்கின்றது
O e . . (ඩී. அகில இலங்கை இந்து மாமன்றம்:
രത്യെറ്
ይጁ° Ÿ(comm...ooom.o፡
eঙ* e

Page 26
இது சிறுவர்களுக்கான சிற ஒன்றினை இங்கு தருகிறோ இக்கதையைப் படித்துக் காட்
ULUgo)J GT
ரTம சாஸ்திரி ஒரு மகா பண்டிதர். சாஸ்திரங்கள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். மிகத் திறமையாக வாதங்கள் புரிவதிலும் வல்லவராக இருந்தார்.
இந்தச் சிறிய தலையில் எப்படி இவ்வளவு அறிவுத்திறன் இருக்கக்கூடும் என்று அந்தக் கிராமத்துப் பாமர மக்கள் அதிசயித்தனர். ராம சாஸ்திரிக்குத் தன் அறிவுத் திறனில் அளவிற்கு மீறிய கர்வமும் இருந்தது. ஒரு நாள் ஆற்றின் ம று க  ைர யி ல் 3 அமைந்துள்ள ஒரு *, சிற்றுாரில் வாதப் 2. போர் ஒன்று நடை * * , பெற இருந்தது. *தி வெற்றி பெற்ற வருக்குப் பெரும் பரிசு வழங்கப்படும் என்று அறிவித் திருந்தார் கள் . அ த ன ர ல் வாதத்தில் கலந்துகொள்ள பண்டிதர் விரும்பினார். எனவே படகுத்துறைக்கு வந்து சேர்ந்தார். ஒடக்காரனைக் கூப்பிட்டார். வெகுநேரம் அவனோடு வாதாடி 25 பைசாவுக்கு ஒடக்காரனைச் சம்மதிக்க வைத்துப் பின் ஒடத்தில் ஏறி அமர்ந்தார்.
ஒடத்தில் பயணம் செய்பவர் அவர் ஒருவர்தான். பொழுதைக் கழிக்க வேண்டுமே என்பதற்காக ஓடக்காரனோடு பேச்சுக் கொடுக்கலானார். பல சாஸ்திரங்களைத் தான் கற்றது பற்றிப் பெருமை பேசினார். கற்றோர் பலரை வாதத்தில் தான் வெற்றி கொண்டதைக் கூறினார். ‘அன்பனே! எவ்வளவு சாஸ்திரங்களைப் படிக்க முடியுமோ அவ்வளவையும் படித்தறிவது தான் நம் வாழ்வின் குறிக்கோளாகும் என்று கூறிவிட்டு, பிறகு ஒடக்காரனைப் பார்த்து, 'என்னென்ன சாஸ்திரங்களை நீ கற்றிருக்கிறாய்? என்று கேட்டார்.
மிக பணிவுடன் ஒடக்காரன் தான் கல்வியறிவு இல்லாதவன் என்றும், ஆனால் தினமும் இறைவனை வழிபட்டு வருவதாகவும் கூறினான்.
அது போதாது, வேதங்களைப் படித்திருக்கிறாயா? என்று கேட்டார் பண்டிதர். அப்படி ஒரு பெயரைக் கூடத் தான் கேட்டதில்லை என்று கூறினான் ஒடக்காரன்.
'அப்படியானால் நீ உன் வாழ்நாளில் கால் பகுதியை வீணடித்துவிட்டாய். வேத விற்பன்னர் ஆவதற்கு நான் பத்து வருடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. போகட்டும், பகவத்கீதையாவது படித்திருக்கிறாயா?’ என்று பண்டிதர் கேட்க, ஒடக்காரன் வெட்கமடைந்து தலையைத் தொங்கப்போட்ட
 
 
 

ப்புப் பகுதி. பூனிராம கிருஷ்ணரின் நீதிக்கதை ம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டி அதன் தத்துவத்தை விளக்குவது கடன்.
5IT «ԳկքlԵւկ
வண்ணம், 'ஐயா! கீதையைப் பற்றி நான் ஒன்றும் அறியேன்” என்றான்.
பண்டிதர் நமுட்டுச் சிரிப்புடன், அப்படியானால் உன் வாழ்க்கையில் பாதி நாட்களை வீணாக்கிவிட்டாய் என்றார்.
சில நிமிடங்கள் சென்றன. பண்டிதர் மீண்டும் ஒடக்காரனைப் பார்த்து 'சரி, ராமாயணம், மகாபாரதம் இவற்றையாவது படித்திருக்கிறாயா?’ என்று கேட்டார். ஒடக்காரன் பதிலே பேசவில்லை.
அப்பா! உனக்காக நான் வருத்தப்படுகிறேன். நீ உன் வாழ்வின் முக்கால் பகுதியை வீணாக்கி விட்டாய். எஞ்சியுள்ள கால்பகுதி காலத்திலாவது ஏதாவது தெய்வீக விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்' என்றார் பண்டிதர். ஒடக்காரன் வருத்தத்தோடு காணப்பட்டான்.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது புயல் வீசத் தொடங்கியது. படகு புயற்காற்றில் கவிழ்ந்து விடுவது போல் ஆடியது. ஒடக்காரன் பண்டிதரை நோக்கி இரு கைகளையும் குவித்து வணங்கி, 'ஐயா! இந்தப் படகிலிருந்து நாம் வெளியேறி விட வேண்டும். உங்களுக்கு நீந்தத் தெரியுமல்லவா? என்று கேட்டான்.
பண்டிதருக்குத் தூக்கிவாரிப்போட்டது. 'இல்லை, என்னால் சிறிதுகூட நீந்த முடியாது. நீச்சல் கற்றுக் கொள்ள எனக்கு நேரமே இருக்கவில்லை' என்றார்.
"ஐயா! உங்களுக்கு நீச்சல் தெரிந்தால்தான் இப்போது உங்களை நீங்கள் காப்பாற்றி கொள்ள முடியும். உன்னதமான நூல்களைக் கற்காமலே என் வாழ்வின் முக்கால் பகுதியை வீணடித்து விட்டேன் என்பது உண்மைதான். எனக்கு நீந்த மட்டுமே தெரியும். இது இப்போது என் உயிரைக் காப்பாற்றும். நீச்சல் உங்களுக்குத் தெரியாது என்பது பரிதாபத்திற்குரியதே. உங்கள் வாழ்நாள் முழுவதையுமே வீணடித்துக் கொண்டு விட்டீர்களே' என்றான் ஒடக்காரன்.
வாழ்க்கைக்குப் பயன்படுவது தான் கல்வி. ஆடம்பரத்திற்கு உதவுவது கல்வியே அல்ல. உண்மையான கல்வி பணிவினைத் தோற்றுவிக்குமே தவிர ஆணவத்தைத் தராது.
த்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 27
இது மாணவர்களுக்கான கதைகள் go-lu- DT6 அலங்கரிக்கும். இதுபோன்
பொரியபுரா
epÎjj hTTUI60TTTİ
பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வைசியர் குலத்தில்
மூர்த்தி நாயனார் தோன்றினார். இவர் தினந்தோறும் சோமசுந்தரக் கடவுளுக்கு சந்தனக்காப்பு இடுதற்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்து வந்தார். இது நிற்க,
கருநாடக தேசத்து அரசன் பாண்டியனை வென்று அவன் நாட்டைக் கவர்ந்தான். அவன் சமண சமயத்தைத் தழுவுபவன். அதனால் பாண்டி நாட்டு மக்களையும் சமண சமயத்துக்கு அடங்கி நடக்குமாறு செய்ய எண்ணினான். மூர்த்தி நாயனாரையும் அவ் வழியில் திருப்ப எண்ணி, நாயனார் சந்தனக் கட்டைகள் வாங்கும் கடைகளில் சந்தனக் கட்டைகள் கொடுக்காதிருக்குமாறு கட்டளையிட்டான். அதனால் மூர்த்தி நாயனார் மிகவும் துன்பப்பட்டார். சந்தனக் கட்டை எங்கும் கிடைக்காமையால் அவர் ஆலயத்திற்குச் சென்று இறைவனாரை வணங்கி, "அண்ணலே, தாங்கள் அணிதற்கு வேண்டிய சந்தனக் கட்டைக்கு முட்டு வந்தாலும், அதனைத் தேய்க்கும் கைக்கு முட்டு இல்லை” என்று கூறி ஒரு சந்தனக்கல்லில் தமது முழங்கையை வைத்து, எலும்பினுள் இருக்கும் துவாரம் திறந்து, மூளை ஒழுகும் வரையில் உரைத்தார். அவ்வளவில் சிவபிரான் காட்சி தந்து அன்பனே, நீ இவ்வாறு செய்தல் வேண்டாம். உனக்குத் துன்பம் விளைவித்தவன் விரைவில் இறப்பான். நீயே இந்த நாட்டின் அரசனாக இருந்து, சைவ சமயத்தை வளர்த்து முடிவில் நம் உலகை அடைவாயாக’ என்று கூறியருளினார்.
அந்நிலையில் சந்தனம் உறைத்த கை வளர்ந்தது. மறுநாள் மன்னனும் மாண்டான். அமைச்சர்கள் அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களையெல்லாம் செய்து முடித்தனர். அரசனுக்கு மைந்தன் இல்லாமையால், நல்ல அரசனைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி ஏவினர். அந்த யானையோ சொக்கநாதர் சந்நிதியில் இருந்த மூர்த்தி நாயனாரைத் தேர்ந்தெடுத்துத் தன் முடிமீது வைத்துக் கொண்டது. எனவே மூர்த்தி நாயனார் மதுரையின் அரசரானார். அவரது ஆணைப்படியே அமைச்சர்கள் விபூதி, உருத்திராட்சம் முதலியவற்றையே அவரது திருமுடியில் அணிவித்தனர்.
இவ்வாறு மூர்த்தி நாயனார் நெடுங்காலம் அரசாண்டு முக்தி அடைந்தார்.
 
 

பக்கம். இதில் சமய வரலாறு மற்றும் புராணக் ணவர்களுக்குப் பயனுள்ள பல விஷயங்கள் ற விஷயங்களை மாணவர்களும் எழுதியனுப்பலாம்.
ணக் கதைகள்
j5C55TT606IT (ëLITT6)ITTT 5TuI60ITIf
GFITழ வளநாட்டில் ஆதனூர் என்னும் ஒரு சிற்றுார் உண்டு. அங்கு புலயர் குலத்தில் நந்தனார் அவதரித்தார். அவர் சிவபக்தி மிகுந்தவராய்ச் சிவாலயங்களில் உள்ள பேரிகை, முழவு, யாழ் முதலிய கருவிகளுக்கு வேண்டிய தோல், வார், நரம்பு, கோரோசனம் முதலியவைகளை உதவி வந்தார். அவர் பல சிவாலயங்களையும் வழிபட்டுத் திருப்புன்கூரை அடைந்தார். அங்கு இறைவனை நேரில் தரிசிக்க எண்ணினார். சிவபெருமான் தமக்கு எதிரில் இருந்து நந்தியை விலக்கி அவருக்குக் காட்சியளித்தருளினார்.
இவ்வாறு நந்தனார்க்கு ஈசனார் காட்சி கொடுத்தருளிய செய்தியை,
"சீர்ஏறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில் நேரேகும் பிடவேண்டும்
எனநினைந்தார்க்கு அதுநேர்வார் கார்ஏறும் எயில்புன்கூர்க்
கண்ணுதலார் திருமுன்பு போர்ஏற்றை விலங்கஅருள்
புரிந்தருளிப் புலப்படுத்தார்!”
(கார் - மேகம். எயில் - மதில், கண்ணுதலார் - சிவபிரான். ஏற்றை - நந்தியை) என்னும் பெரிய புராணச் செய்யுள் கூறுகிறது.
நந்தனார் சிதம்பரத்திலே உள்ள நடராசப்பெருமானை வழிபட எண்ணி, “நாளை போவேன், நாளை போவேன்” என்று கூறி வந்ததால் அவருக்குத் திருநாளைப் போவார் என்று பெயர் வந்தது. பல நாட்களுக்குப் பின் நந்தனார் தில்லையை அடைந்து கோயிலின் உள்ளே செல்லாமல் எல்லையை வலம் செய்து கொண்டு இருந்தார். அச்சமயத்தில் நடராசப் பெருமான் அவர் கனவில் தோன்றி, “நீ நெருப்பில் மூழ்கி நம்மை வந்து அடைவாயாக’ என்று திருவாய் மலர்ந்தருளினார், தில்லைவாழ் அந்தணர்களுக்கும் நந்தனார் வரும் செய்தியைத் தெரிவித்துத் தீ வளர்த்து அந்தணர்கள் நந்தனாரிடம் சென்று தெரிவித்தனர். நந்தனார் தீயை வலம் வந்து உள்ளே புகுந்து முனிவர் உருக்கொண்ட வேதியராக வெளிவந்து தோன்றினார். பின்னர் நந்தனார் இறைவனை வழிபட்டு அவர்தம் மலரடிகளைத் தொழுது கொண்டிருக்கும் இன்ப நிலையை அடைந்தார்.
சித்திரபானு வரும் சித்திரை ஆணி

Page 28
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
இவர் தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் ஏகாலியர் குலத்தில் அவதரித்தார். இவர் சிவனடியார்களின் குறிப்பின்படி அவர்களுக்கு ஆடை முதலியவைகளை அழுக்கு நீக்கி உதவுவார்.
ஒருநாள் சிவபெருமான் ஒரு கிழவர் உருவத்தில் அழுக்கடைந்த ஆடையோடு வந்தார். நாயனார் அவரை எதிர்கொண்டு பணிந்து “உம்முடைய கந்தையைக் கொடுத்தால் அடியேன் அழுக்கு நீங்கிக் கொடுப்பேன்’ என்றார். கிழவர் கந்தை ஒன்றை அவரிடம் கொடுத்து, “கந்தையானாலும் குளிருக்கு ஆதரவானது. பொழுது போவதற்குள் இதனை அழுக்கு நீக்கித் தரவேண்டும்” என்று கூறினார். நாயனார் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டு அதை வாங்கி வெள்ளாவியில் வைத்து மீண்டும் கசக்கத் தொடங்கினார். அச்சமயம் வானம் இருண்டது; மழை பெய்தது. அதனால் நாயனார் தமது வாக்கு தவறும் எனவும், முதியோர் குளிரால் வருந்துவார் எனவும் கருதி தாம் ஆடை துவைக்கும் கருங்கல் பாறையில் தமது தலையை மோதத் துணிந்தார். உடனே சிவபெருமான் அந்தப் பாறையில் தோன்றிய திருக்கரத்தால் நாயனாரின் தலையைப் பிடித்து. "அன்பனே, உன் அடியார் பக்தியை மூன்று உலகிலும் பரவுமாறு செய்தோம். இனி நீ நம் உலகை வந்தடைக” என்று திருவாய்மலர்ந்தார். நாயனார் எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் திருக்கயிலை மலையை அடைந்தார்.
J6ð0IGL_J6) JJ hTTUII6OITTĪ
திருச்சேய்ஞலூர் என்பது சோழநாட்டைச் சார்ந்த ஒரு மூதூராகும். அங்கு காசிய கோத்திரத்தில் எச்சதத்தன் என்பவருக்கும் பவித்திரை என்பவருக்கும் விசாரசருமர் மகனாக உதித்தார். அவர் இளமையிலேயே சிவபக்தி நிறைந்து வேதம் முதலியன கற்று வித்தகராக விளங்கினார்.
ஒரு சமயம் இடைய்ன் ஒருவன் தன்மீது பாயவந்த பசுவினைக் கோலால் அடித்தான். அதுகண்டு விசாரசருமர் மனம் வருந்தி அவனை இனி பசு மேய்க்காமல் இருக்கக் கட்டளையிட்டார். அவ்வூரார் அனுமதி பெற்றுத் தாமே அப்பசுக்களை மேய்த்து வந்தார். விசாரசருமர் பசுக்களிடம் மிகவும் அன்பு பூண்டு முன்னிலும் சீராட்டிப் பாராட்டிப் பசுக்களை மேய்த்து வந்தார். பசுக்களும் தம் கன்றுகளை மறந்து விசாரசருமரை விட்டு நீங்காமல் அன்பு நிறைந்தனவாய் தாமே பால் சொரியலாயின. அதனைக் கண்ட விசாரசருமர் அந்தப் பாலால் சிவபூசை செய்ய எண்ணி ஒர் ஆத்தி மரத்தின் கீழ் மணலால் சிவலிங்கம் ஒன்றைச் செய்தார். அதனைச் சுற்றித் திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் மண்ணினாலேயே அமைத்தார்.
* உடலைக் காட்டிலும் மனம் பலமிக்கது. மன
பிறப்பிடம் மனமாகும். மனதில் உதிக்கும் தீய என
ஆசைகளுக்கு நம்மை
- சுவாமி பூரீ
 

இவர் நல்ல மலர்களைப் பறித்து பசுக்கள் சொரிந்த பாலைக் குடங்களில் ஏந்திச் சிவபூசை செய்து வந்தார். இவ்வாறு விசாரசருமர் நடத்தி வந்தும் பசுக்களுக்குரியவர்களுக்குப் பால் குறைவின்றி இருந்தது. இதைக் கண்ட ஒருவன் விசாரசருமர் பாலைக் கறந்து வீணாக மணலில் ஊற்றி விளையாடுகிறார் என்று ஊரில் உள்ளாரிடம் கோள் கூறினார். ஊரார் எச்சதத்தனிடம் கூறினார். விசாரசருமரின் தந்தையாகிய எச்சதத்தன் அவர்கள் பேச்சை நம்பவில்லை. தன் மகன் செயலைத் தானே நேரில் கண்டறிய விரும்பினான். அருகிலிருந்த குரா மரத்தின்மீது ஏறி ஒளிந்துகொண்டிருந்தான். விசாரசருமர் வழக்கம்போல் பாற்குடங்களை எடுத்துச் சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டினார்.
தன் மகனாரின் செயலைக் கண்ட எச்சதத்தன் மரத்தினின்று இறங்கி ஆத்திரத்தோடு ஓடிவந்தான். கையிலிருந்த கோலால் விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடித்தான்; வாயில் வந்தவாறு அவரை வைதான். அப்பொழுதும் அவர் எழுந்திராமை கண்டு அவன் அங்கு இருந்த பாற்குடங்களைக் காலினால் இடறிச்சிந்தினான். அதனால் சீற்றம் கொண்ட விசாரசருமர் அருகிலிருந்த கோலை எடுத்தார். அக்கோல் அவருக்கு மழுப்படையாக மாறிற்று. அதனால் தம் தந்தையின் உதைத்த காலை அவர் துண்டாக்கி வீழ்த்தினார். எச்சதத்தன் தரையில் விழுந்து இறந்தான். விசாரசருமர் மீண்டும் சிவ பூசையில் ஈடுபட்டார்.
விசாரசருமரின் பூசைக்கு மகிழ்ந்து சிவபெருமான் உமா தேவியாரோடு விடையின் மீதேறி வந்து காட்சியளித்தார். அவர் விசாரசருமரைத் தம் திருக்கரங்களால் எடுத்து “எமக்காக உன் தந்தையின் கால்களை வெட்டிக் கொன்றாய். இனி யாமே உனக்குத் தந்தையானோம்” என்று கூறி அவருக்கு தாம் உண்ட பரிகலம், உடுக்கும் உடை, சூடும் மாலை, அணிகலங்கள் முதலியவற்றைக் கொடுத்து திருத்தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கி சண்டீசப் பதவியை அளித்தருளினார். தம் சடை முடியிலிருந்த கொன்றை மலர் மாலையை அவருக்குச் சூட்டினார். இச் செய்தியை,
"அண்டர் பிரானுந் தொண்டர்தமக்(கு)
அதிப பின7ாக்கி அனைத்துநாம் உண்ட கலமும் உடுப்பனவும்
குடு வனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற்றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்’ என்னும் பெரிய புராணப் பாடல் புலப்படுத்துகிறது.
எச்சதத்தன் சண்டேசுவரரால் தண்டிக்கப்பட்டதால் திருக் கைலாயத்தை அடையும் பேறு பெற்றான்.
மே உடலைத் தோற்றுவிக்கிறது. எண்ணங்களின் ண்ணங்கள் மனதின் வலிமையைச் சுரண்டுகின்றன. அடிமையாக்குகின்றன.
கண்டானந்தர்.
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி

Page 29
யானை எய்த படலம்
விக்கிரம பாண்டியன் புறச் சமயங்களை நீக்கிச் சைவ சமயப் பயிரை வளர்த்து வந்தான். அவன் இவ்வாறு இருக்கும் நாளில் காஞ்சி நகரத்தில் சோழ மன்னன் ஒருவன் சமண நெறியினின்று பாண்டியனைப் பகைத்தான். அவன் பாண்டியனை நேரில் எதிர்க்க அஞ்சி அஞ்சனம், கிரவுஞ்சம், கோவர்த்தனம், திரிகூடம், அத்திவெற்பு, சையம், ஏமகூடம், விந்தம் என்னும் எட்டு மலைகளிலும் வாழும் சமண குரவர்கள் எண்ணாயிரவரையும் தன்பால் அழைத்தான். அவன் அவர்களைப் பார்த்து, நீங்கள் அபிசார யாகம் செய்து பாண்டியனைக் கொல்வீராயின் உங்களுக்கு எனது நாட்டில் பாதியைத் தருவேன்' என்றான்.
அரசன் விருப்பப்படியே சமண முனிவர்கள் செய்த கொடிய வேள்வித் தீயினால் அருகே இருந்த சோலைகளும், நந்தவனங்களும் காடுகளும் கருகித் தீய்ந்தன. ஓடைகளும் குளங்களும் நீர் வற்றின. அவர்கள் செய்த வேள்விக் குண்டத்திலிருந்து எமனைப் போன்ற ஒரு பெரிய மத யானை எழுந்தது. சமணர்கள் அதனை விக்கிரம பாண்டியனைக் கொன்று வருமாறு ஏவினர். அந்த யானை தான் செல்லும் வழியெல்லாம் தீமைகள் புரிந்து கொண்டே சென்றது. மதயானையின் வருகையைக் கேட்ட பாண்டியன் மனம் கலங்கித் திருக்கோயிலை அடைந்து சோமசுந்தரக் கடவுளை வணங்கி, தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினான். அப்போது பாண்டியனே! நாம் ஒரு வில் வீரனாகி உன் பகைவர் விட்ட யானையைக் கொல்வோம். அதற்கு முன்னர் இந்நகரின் கிழக்கில் ஒர் அட்டாலை (பரண் வடிவமாகச் செய்த மண்டபம்) அமைப்பாயாக’ என்று அசரீரி எழுந்தது.
இறைவன் கட்டளைப்படியே பதினறு தூண்கள் அமைந்த மண்டபத்தை அரசன் கட்டினான். சோமசுந்தரப் பெருமான் காளைப் பருவம் உடைய வேட்டுவ வீரனாகத் தோன்றி யானையை எதிர்பார்த்தபடியே அட்டாலை மண்டபத்தில் நின்றிருந்தார். மதயானை ஐந்து கூப்பிடு தூரத்தில் வருவதைப் பார்த்த அவர், தம் கையிலிருந்த வில்லை வளைத்தார்; நாணைப் பூட்டினார்; விரலினால் தெறித்துச் சிங்கநாதம் காட்டினார்; நரசிங்கபாணத்தை அதன் மீது ஏவினார். அந்தக் கணை விரைவாகச் சென்று மேகம்போல் முழக்கம் செய்து வந்த யானையின் மத்தகத்தைக் கிழித்தது. யானையும் தரையில் வீழ்ந்து இறந்தது.
பாண்டியனின் வீரர்கள் யானையுடன் வந்த சமணர்களை அடித்துப் புடைத்து அவமானம் செய்து ஒட்டினர். விக்கிரம பாண்டியன் வில் வீரன் திருவடிகளை வணங்கி, ‘எம்பெருமானே தாங்கள் இங்கேயே இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்று வேண்டினான். சிவபெருமானும் அதற்கு இசைவு தந்தார். பாண்டியன் அவரை வழிபட்டு வரும் நாளில் இராஜசேகரன் என்னும் மைந்தனைப் பெற்று அன்புற்று இன்புற்று வாழ்ந்து
(இந்து ஒளி
 

GIIu JIIL-i கதைகள்
வந்தான். சிவபெருமான் யானைமீது தொடுத்த அம்பு நரசிங்க ரூபமாக எழுந்தருளியது. உரோமச முனிவரும் பிரகலாதனும் அதனை வழிபட்டு நற்பேறு பெற்றனர்.
விருத்த குமாரபாலரான படலம்
விக்கிரம பாண்டியன் காலத்தில் விரூபாக்கன் என்னும் அந்தணனும், அவன் மனைவியாகிய சுபவிரதையும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு நெடுநாட்களாக மகப்பேறு இல்லாமல் இறைவன் திருவருளால் கெளரி என்னும் பெண் குழந்தை பிறந்தது. கெளரி ஐந்து வயதிலிருந்தே பிறவிப் பயனை நீக்க வல்ல உமாதேவியாரது மந்திரத்தை ஒதி வந்தாள்.
கெளரிக்கு எட்டு வயதாகும்போதும் ஒரு வைணவ பிரமசாரி அங்கே வந்து பிச்சை கேட்டான். அவனே தன் பெண்ணுக்குத் தகுந்த கணவன் என்று எண்ணிய விரூபாக்கன், குலம், கோத்திரம் ஒன்றும் பாராமல் இவளை அவனுக்குத் தானம் செய்து விட்டான். அதுகேட்டுப் பெற்ற தாயும் சுற்றத்தாரும் பெரிதும் வருந்தினார்கள். வைணவ அந்தணன் புது மனையாளுடன் தன் இல்லம் அடைந்தான். சிவவேடமும் சிவசிந்தையும் உடைய கெளரியைக் கண்டு அவன் பெற்றோர்கள் ஆத்திரம் கொண்டார்கள்; அவளைத் தனியே ஒதுக்கி வைத்துக் குடும்பம் நடத்தினார்கள். ஒருநாள் அவர்கள் கெளரியை வீட்டில் அடைத்துவிட்டு, அயலூரில் நடக்கும் ஒரு திருமணத்துக்குச் சென்றனர். வீட்டில் தங்கிய கெளரி சிவபெருமானின் திருவருள் குறித்துப் பலவாறு சிந்தித்து வருந்திக் கொண்டிருந்தாள்.
"சிவனடியார்க்(கு) அன்பிலாச் சிந்தையே
இரும்(பு) ஏவல் செய்து நாளும் அவனடியார் திறந்தொழுக ஆக்கையே
மரம் செவிகண் ஆதிஐந்தும் பவனடியா ரிடைச் செலுத்தாப் படிவமே
பாவை மறைபாவுஞ் சைவ தவநெறியல் லாநெறியே பவநெறியென்
றளியளாய்த் தளர்வாள் பின்னும்”
(அடியார் திறத்து - சிவனடியாரிடத்தில். பவனடியார் - சிவனடியார். பாவை - பொம்மை. பவநெறி - பிறவிக்கு காரணமாகிய நெறி)
எனைத்துயிர்க்கும் உறுதிஇக பரம்என்ப;
அவைகொடுப்பான் எல்லாந் தானாய் அனைத்துயிர்க்கும் உயிராகும் அரன்என்ப;
அவன்அறிவார்க்(கு) அங்கம் வாக்கு மனத்துறுமெய்ப் பத்திவழி வருமென்ப;
அப்பத்தி வழிநிற் பார்க்கு வினைதுயர்த்தீர்த் திடவெடுத்த வடிவென்ய (து)
அவனடியார் வேடம் அன்றோ!'
7 స్త్యశః § சித்திரபாறு வருடம் சித்திரை - ஆனி)

Page 30
(எனைத்துயிர்க்கும் - எல்லா உயிர்க்கும். இகம் - இப்பிறவியில். பரம் - மறுமை இன்பம். அங்கம் - உடல்.) என்றெல்லாம் அவள் புலம்பினாள் என்று பரஞ்சோதி முனிவர்
அப்போது சிவபெருமான் வயது முதிர்ந்த ஒர் அந்தணர் வடிவங் கொண்டு விபூதியும் உருத்திராக்க மாலையும் அணிந்து கெளரியின் வீட்டை அடைந்தார். கெளரி அவரைக் கண்டு வணங்கினாள். அவர் அருளால் கெளரி பூட்டைத் தொட்டதும் திறந்து கொண்டது. அவள் சமையலறைக்குச் சென்று சமையல் செய்து அடியாரை அமுது செய்வித்தாள்.
அமுது செய்தவுடன் வேதியர் விருத்தப் பவம் நீங்கிக் காளைப் பருவம் அடைந்தார். அதுகண்டு கெளரி கதிகலங்கி ஒரு புறத்தே ஒதுங்கி நின்றாள். அந்நேரத்தில் அயலூர் சென்ற வைணவர்களும் திரும்பி வந்து வீட்டில் புகுந்தார்கள். அதற்குள் காளை வடிவினராக இருந்தவர் கைக்குழந்தையாகி மாறி ஆடையின் மேல் கிடந்து அழுதுகொண்டு இருந்தார். கெளரியின் மாமி ஆத்திரங்கொண்டு, 'இந்தக் குழந்தை ஏது?’ என்று கேட்டாள். அதற்குக் கெளரி, தத்தனுடைய மனைவி இங்கு வந்து இந்தக் குழந்தையைச் சிறிது நேரம் பார்த்துக் கொள் என வைத்துவிட்டுப் போனாள்’ என்றாள். மாமனும் மாமியும் கடுங் கோபங் கொண்டு ஒரு சைவனுடைய குழந்தைமீது அன்பு கொண்ட நீ எமக்கு ஆகாய்" என்று அவளைக் குழந்தையோடு வீட்டைவிட்டுத் துரத்தினார்கள். கெளரி வீதியில் நின்று, தாயில்லாக் குழந்தை முகங்கண்டு தளர்ந்து உருகி, உமாதேவியாருடைய மந்திரத்தை உச்சரித்தாள். உடனே அக்குழந்தை ஆகாயத்தில் சென்று இடப வாகனத்தின் மேல் இருத்தலை அவள் கண்டாள். பின்பு சிவபிரானார் அவளை உமாதேவியின் உருவமாக்கி, தேவர்கள் மலர்மாரி பொழிய இடப வாகனத்தின்மீது ஏற்றிக் கொண்டு ஆகாயத்தில் எழுந்தருளினார்.
கான் மாறியாடின படலம்
விக்கிரம பாண்டியன் தன் மகனாகிய இராஜசேகரனுக்கு முடிசூட்டி விட்டுச் சிவபதவியை அடைந்தான். இராஜசேகரன் சிவபெருமான் வெள்ளியம்பலத்தில் ஆனந்த வடிவமாய்ச் செய்யும் நடனத்தில் அன்பு மிகுதியுடையவனாதலால், பரதக் கலை ஒழித்து மற்ற அறுபத்துமூன்று கலைகளையும் கற்று வல்லவனானான். அக் காலத்தில் சோழ மன்னனாக இருந்த கரிகாலனுடைய அரண்மனைப் புலவன் ஒருவன் வந்து பாண்டியனைப் பார்த்து, ‘எங்கள் கரிகால் மன்னன் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றவன். நீ பரதக் கலையில் பயிற்சி இல்லாதவன்' என்றான். அதனால் வருந்திய பாண்டியன் பரத நூலையும் குற்றமறப் பயிலலானான்.
பரதம் பயிலும்போது, தனக்கு உடல் வலி உண்டாவதை அறிந்த பாண்டியன், இறைவனுக்கும் இவ்வாறு திருவடிகள் துன்பம் அடையுமே என்று கவலை அடைந்தான். ஒருநாள் சிவராத்திரியில் அவன் திருக்கோயிலை அடைந்து,
( உள்ளத்திலும், சொல்லிலும் செயலிலும் சத்திய
- மகாத்
 

வெள்ளியம்பலத் திருக்கூத்தைக் கண்டு தரிசித்துக் கண்ணிர் சோர இறைவனை நோக்கி, ‘எம்பெருமானே, நின்ற திருவடியை எடுத்து வீசி, எடுத்த திருவடியைக் கீழே ஊன்றி, அடியேன் காணும்படி மாறியாட வேண்டும். இல்லையேல் அடியேன் இறந்துபடுவேன்’ என வேண்டினான். உடனே சிவபெருமான் அவன் அன்புக்கு இரங்கி இடப் பாதத்தைத் தரையில் ஊன்றி, வலப்பாதத்தை எடுத்து வீசி மாறியாடிக் காட்டினார். பாண்டியன் அது கண்டு இன்பக் கடலில் மூழ்கி, அன்பு வடிவமாய் நின்று வாயார மனமார ஆசனாரைத் துதிக்கலானான்.
பாண்டியன் அப்பொழுது செய்த துதிகளைப் பரஞ்சோதி முனிவர்,
"பெரியாய் சரணம்! சிறியாய் சரணம் ! கரியா கியஅங்கனனே சரணம் !
அறியாய் எளியாய் அடிமா றிநடம் புரிவாய் சரணம் புனிதா சரணம்!”
(பெரியாய் - பெரிய பொருள்களில் பெரியவனே. சரணம் - அடைக்கலம். கரியாகிய - சாட்சியாயுள்ள. அங்கணனே - அழகிய கண்களை உடையவனே. புனிதா - தூயவனே.)
நதியா டியசெஞ் சடையாய் ! நகைவெண் மதியாய் மதியாதவர்தம் மதியிற் பதியாய் ! பதினெண் கணமும் பரவுந் துதியாய் சரணம் !சுடரே சரணம்!” (நதியாடிய - கங்கை விளையாடும். பதியாய் - பொருந்தாதவனே. பரவும் - துதிக்கும்.)
பழையாய் ! புதிதாய் சரணம் ! பணிலக் குழையாய் சரணம் 1 கொடுவெண் மழுவாள் உழையாய் சரணம் 1உருகாதவர்பால் விழையாய் சரணம்! விகிர்தா சரணம்!” (பணிலம் குழையாய் - சங்கக் குழை உடையவனே. விகிர்தா - வேறுபாடு உடையவனே.)
இருளாய் வெளியாய் சரணம் எனையும்
பொருளா கநினைந் துபுரந்தரன்மால்
தெருளாதநடந் தெரிவித் தெனையாள்
அருளாய் சரணம் ! அழகா சரணம்!”
(புரந்தரன் - இந்திரன். தெருளாத - அறியாத) என்று பாடியுள்ளார்.
இவ்வாறு துதித்து வணங்கிய பாண்டியன் இந்த நடனத்தை எல்லோரும் பார்க்கும்படி எப்போதும் இருந்தருள வேண்டும் என்று ஈசனை வேண்டினான். சிவபெருமானும் அதற்கு இணங்கினார். அன்று முதல் அடிமாறிய திருக்கோலத்தினராகவே அங்கு ஈசனார் எழுந்தருளியுள்ளார்.
மா காந்தி,
ம் நிலைத்துள்ளவனை எவராலும் வெல்ல முடியாது.

Page 31
H']m
என். நஸ்ரியாம
சி
இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். அமிர்தலிங்க ஐயரின் புதல்வராவார். பொன்னி நதி பாயும் சோழ வளநாட்டில் திருக்கடவூர் என்னும் ஊரில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒழுக்கம், கல்வியறிவும், பக்தியும் பொருந்திய அந்தணர் மரபில், ஞானக் கொழுந்தாக தோன்றியவர் அபிராமிபட்டர். மார்க்கண்டேயருக்காக காலனை உதைத்தருளிய வீரம் நிகழ்ந்த வீரட்டானத்தலம். தேவர்கள் அமுத கடத்தை வைத்து எடுக்க முடியாது இறைவனருள் வேண்டி நின்றது கடவூர். இங்கு அமுத கடேசுவருடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்பிகையின் பெயர் அபிராமி.
அபிராமிப் பட்டர் இளம் வயதிலேயே இசைக்கலைகளைக் கற்று தேர்ந்து, அன்னை அபிராமி அம்பிகையை வணங்கித் தொழுது வந்தார். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரால் அபிராமி அம்மை மீது சூட்டப் பெற்றது தான் அபிராமி அந்தாதி. ஆதியிற் காப்பும் அந்தத்தில் நூற்பயனும் கொண்ட அந்தாதியில் இடை நடுவே 100 கட்டளை கலித்துறை பாக்கள் உள்ளன. "
மேலும், அபிராமிபட்டர் அம்மையின் மீது கள்ளவிநாயகர் பதிகம், அமுதகடேசுவரர் பதிகம், காலசங்காரமூர்த்தி பதிகம் எனும் பதிகங்களையும் பாடியுள்ளார். தேவி உபாசனையிற் சிறந்து நின்றதால் இவருக்கு 'அபிராமிப் பட்டர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அர்ச்சித்து பூசிக்கும் உருத்திருமேனியை கண்டு களித்தல் தொடங்கி, ஒளியே வெளியாகித் தன்னை மறந்து கருவி கரணம் கழன்று நிற்கும் ஆனந்த அநுபவம் வரையிலுள்ள நிலைமைகளையெல்லாம் உணர்ந்து பாடப்பட்டது அபிராமி அந்தாதி. அம்பிகையின் திருவுருவ அழகையும், திருமேனிச் சோதியையும், திருநாமங்களையும் வாயாரப் பாடி இன்புறும் பக்தரின் இயல்பு இவ் அந்தாதியில் இருந்து புலப்படுகிறது.
அபிராமிப் பட்டர் சபதம்
அபிராமி அன்னையின் மீது பேரன்பு மிக்கவர் அபிராமி பட்டர். யோகசித்தி பெற்ற இவர் உலகபற்று இல்லாமல் பித்தர் போல் விளங்கினார். இவரை மனம் பேதலித்து அலைபவர் என்றே எல்லோரும் எண்ணி தூற்றினார்கள். “ஏதோ ஒரு துர்த்தேவதையை வணங்குகிறான் பைத்தியம், புத்தி கெட்டு அலைகிறான் கிறுக்கன்” என மக்கள் இவரைவெறுத்தனர்.
அந்த நாளில் தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசையை முன்னிட்டு காவிரிப்பூம்பட்டினத்தில் கடலாடி விட்டுத் திரும்பும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அமுதகடேசரையும், அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்து வந்த சரபோஜி மன்னர், அம்மன் சந்நிதியில் தம்மை மறந்து தியானம் செய்த பட்டரைக்கண்டு பரவசமுற்ற மன்னன் "இவர் யார்?’ என்று சேவகனிடம் கேட்டான். அதற்கு சேவகன் “இவர் ஒரு பித்தர். வேத முறைக்கு விரோதமான வாமாசாரங்களில் ஈடுபடுகிறவர். ஏதோ துர்த்தேவதையை வழிபடுகிறார் உன்மத்தர்” என்றான்.
 
 

îo LI" | ñir
ரஸ்வதி ந்திய கல்லூரி such
ஆயினும் அரசன் மனத்தில் பட்டரின் நினைவு மீண்டும், மீண்டும் வந்தது. தரிசனம் முடிந்து திரும்பும் போது மன்னர் பட்டரிடம் பேச விரும்பினார். பட்டரை நோக்கி அரசன் “பட்டரே! இன்று என்ன திதி?” என்று வினவினார். அம்பிகையின் முழுமதித் தோற்றத்தை தியானத்தில் கண்ட பட்டர் அரசனிடம் “இன்று பெளர்ணமி” என்று கூறிவிட்டார். அதைக்கேட்ட சரபோஜி மன்னன் “சரிதான் மற்றவர்கள் பைத்தியம் என்று சொல்வது உண்மை தான்” என்று எண்ணிக் கொண்டார்.
அரசர் இருப்பிடம் சென்றதும் பட்டர் தியானம் கலைந்து எழுந்தார். நடந்ததை உணர்ந்து வருந்தினார். "அம்பிகையே! நீயே என்னை இந்த பழியில் இருந்து காத்தருள வேண்டும்" என அன்னையிடம் மனமுருகி வேண்டிக்கொண்டார்.
அம்பிகையின் சந்நிதியில் ஆழ ஒரு குழி வெட்டினார். அதில் பெருநெருப்பு மூட்டினார். மேலே ஒரு விட்டம் அமைத்து அதில் 100 ஆரம் கொண்ட உறியை கட்டித் தொங்கவிட்டார். பிறகு அதன் மீது ஏறி உட்கார்ந்து அன்னையை நினைத்து வணங்கினார். "தாயே அரசர் முன்னால் நேர்ந்த இந்த பெரும் பழியைத் துடைத்து எனக்கு பெருமை சேர்ப்பாயாக! இல்லையேல் இந்த உடலை எரியும் நெருப்பில் இடுவேன்! எனக் கூறி உதிக்கின்ற செங்கதிற் உச்சித் திலகம் உணர்வுடையோர். அபிராமி என்றன் விழித் துணையே' என்ற பாடலடியை பாடினார்.
ஒரு பாடல் முடிந்தவுடன் உறியின் ஒரு கயிற்றை அறுத்து வந்தார். 79 வது பாடலின் போது சூரியன் அஸ்த்தமித்தான். இருட்டத் தொடங்கிவிட்டது. பட்டருக்கு அன்னை காட்சியளித்தாள். அன்னை அபிராமி தனது தாடங்கம் ஒன்றைக் கழற்றிவான வீதியில் தவழவிட்டாள். அது முழுநிலவாய், பலகோடி நிலவின் ஒளியோடு வானத்தில் பிரகாசித்தது.
"அப்பனே!உன் கூற்றை மெய்யாக்கி விட்டேன். தொடங்கிய அந்தாதிப் பாடலை முடித்து விடு” என்ற அன்னை அருளினாள். ஆகா, ஆகா அன்னையே உன் சித்தம் என்று கூறி, "கூட்டிய வா என்னைத் தன்னடியாரில்.” என அந்தாதியை தொடர்ந்தார்.
அமாவாசை நாளில் நிலவொளி உலகெங்கும் பரவி நிற்பதைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தார்கள். "அற்புதம், அற்புதம், அபிராமிப் பட்டரின் பெருமையே பெருமை! ஆகா அற்புதம்" என அனைவரும் மகிழ்ந்தனர். கூடாரத்தில் இருந்த அரசன் இச்செய்தியை கேள்வியுற்று “என்ன அற்புதம் பட்டர் கூற்றை அன்னை மெய்யாக்கி விட்டாளே. எங்கே பெருமான் பட்டர்? அழைத்து வாருங்கள் அவரை வேண்டாம் நானே வருகிறேன்” எனக் கூறி விரைந்தார்.
சரபோஜி மன்னன் அபிராமி பட்டர் முன்னே வந்து வணங்கினார். “பட்டர் பெருமானே அன்னையே தங்கள் வாக்கை மெய்ப்பித்துக் காட்டி விட்டாள். என்னைப் பொறுத்த வாழ்த்தியருள வேண்டும்” என வணங்கினார். "எல்லாம் அவள் செயல்! அவள் புகழ் ஓங்குக” என்று பட்டர் அன்னையை வாழ்த்தினார்.
அந்தாதியைப் பாடி முடித்து பட்டருக்கு அரசன் ஏராளமான மானியத்தை வழங்கி “தயை செய்து இவற்றை ஏற்று, தலைமுறை தலைமுறையாய் அநுபவித்து கொள்ள வேண்டும்” என அரசர் பணித்தார்.
9 சித்திரபானு வருடம் சித்திரை - ஆணி)

Page 32
செல்வி ஜமில நுண்கலைப்பீட யாழ். பல்கள்
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்ட சமயம் சைவ சமயமாகும். சிவபெருமானும் அவருடைய சக்திகளும் கதிரவனும் அவனது கதிர்களும் போல்வன. கதிரவனது கதிர்கள் விரியும் போது உலகில் உள்ள பொருள்கள் விளக்கம் பெறுவது போல சிவனுடைய இச்சை முதலிய செயல்கள் தொழிற்படும் போதுதான் பிரபஞ்ச உண்மை புலனாகின்றது. இறைவன் சக்தியில் இருந்து வேறுபட்டவன் அல்லன். சிவனும் சக்தியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வர வடிவில் நின்றும் எக்காலத்தும் பஞ்ச கிருந்தியங்களை செய்து கொண்டே இருப்பார். இறைவன் பல நாமங்களால் அர்ச்சிக்கப்படுகிறார். நடராஜர் ஆடலரசன், கூத்தபிரான் என்ற நாமங்களோடு சைவசமயத்தவர் வழிபடுகின்றனர். இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடத்திலிருந்து அறுபத்தி நான்கு கலைகளும் தோன்றின. அக்கலைகளில் பரதக்கலை சைவசமயத்துடன் நகமும் தசையும் போலவும் பூவும் மணமும் போலவும் இணைந்து காணப்படுகின்றது.
சிவனின் பலவகையான நடனங்களில் மூன்றுவகை முக்கியம் பெறுகின்றது. சிவ பிரதோஷவிரதம் இது சைவ ஆகமப்படி வழிபடப்படுகின்றது. கைலாய மலையிலே மாலைப் பொழுதிலே தெய்வீக பல்லியத்துடன் ஆடிய போது தேவர்கள் இசையமைத்தார்கள். உலகில் அன்னையாகிய பார்வதியை அரியணையில் அமரச் செய்து சிவன் நடனமாடினார். சிவனுடைய பூதகணங்கள் புடை சூழ சிவன் தேவியோடு அடலையில் நடனமாடுவதை “அரண் அங்கி நன்னில் அறையில் சம்ஹலம்' என்பது உண்மை நெறிவிளக்கம். அதாவது ஆன்மாக்களை இளைப்பாற்றும் செயலைக் குறிக்கின்றது. இறைவனுடைய அடுத்த நடனமாகிய நாதாந்த நடனம் தில்லையம்பல பொற்சபையிலே இடம் பெற்றது. சிவனுடைய திருநடனம் பஞ்ச கிருந்தியங்களை அதாவது அவை படைத்தல் காற்றல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். உயிர்களை மேன்மேலும் வினை செய்வதில் அழுத்தி அதன் மூலமாக உயிர்களுக்கு வினையெப்பமும் மலபரிபாகமும் ஏற்படச் செய்கிறது. மும்மலங்களுடன் இருக்கும் ஆன்மாவை அவற்றினிறு பிரித்தெடுத்து அதனை தூய்மையும் ஒளியும் உடையதாக உயர்ந்த பேரின்ப நிலையடையச் செய்வதையும் எடுத்துக் கூறுகின்றது.
மலர்கள் நறுமணம் கமழ்வதும் ஆறு கடலை நாடிச் செல்வதும் எவ்வாறு இயல்பாகவே ஏற்படுகிறதோ அவ்வாறே எமது உள்ளம் இறைவனை ஆவலுடன் நோக்கி வருகின்றது.
 
 

தில் சிவநடனம்
ா இராமசாமி ம் (3ம் வருடம்) )லக்கழகம்.
பக்தி என்பது முயற்சி இன்றி இயல்பாகவே இறைவனை விரும்பி ஆன்மா நாடுதலே உண்மையான பக்தியாகும். இப்பக்தி நிலையிலே ஆன்மா இறைவனை மேலும் விரும்பி நாடுதல் போல இறைவனும் ஆன்மாக்கள் மீதுள்ள பெருங்கருணையால் எழுந்தருளி ஆட்கொள்வார். இறைவனுடைய திருக் கோலத்தை பக்தியடியார்கள் இசையாலும் நடனத்தாலும் பாடியாடி வழிபட்டனர்.
இறைவனின் தோற்றத்தை தரிசித்த காரைக்கால் 9|b60)Loustiff
“காலையே போன்றிலங்கு மேனி கடும் பகலின்’ என்கிறார் திருஞான சம்பந்தர் சிவனது ஐந்தொழில்களும் ஆனந்த நடனத்துடன் நடந்தேறுகின்ற அநுபூதி அனுபத்தை
நட்டப் பெருமானைநாளுநீ தொழுவோமே” என்றும், நாவுக்கரசர்
அன்புக்கினியதோர் சிதம்பரம் தனிலே நடம் புரிந்தருள் அம்பலவாணனே’ என்றும் பாடியிருக்கிறார்கள். முத்துதாண்டவரும் சிவபிரானின் ஆனந்த தாண்டவம் கண்ட போதே உடல்பாக்கியம் பெற்றவர். தாண்டவ தரிசனத்தை ஒரு தடவை பார்த்தாலே துன்பம் எல்லாம் நீங்கும். இதையே
நமக்கினி பயமேது தில்லை நடராஜன் இருக்கும் போது”என்று சொல்லப் பட்டுள்ளது. சிவனின் நடனம் ஆன்ம ஈடேற்றத் திற்காகவே நிகழுகின்றது. இதை இராமலிங்கர்
அன்பரெலாம் தொழ மன்றில் இன்ப நடனம் புரிகின்றார்”என்கிறார். இறைவனின் நடராஜ வடிவமாகிய ஆனந்த தாண்டவம் இடம் பெறும் இடமாகிய சிதம்பரத்தில் காணும் தூக்கிய திருவடியும் உள்ளத்தை நன்கு ஈர்த்துள்ளது.
நடனமாடினார் ஐயனார் நடனமாடினார் நடனமாடினார் தில்லை நாயகம் பொன்னம்பலம் தன்னில்’ என மாரிமுத்தா பிள்ளையும் இறைவனின் திருக்கோலங்களை மனதில் உணர்ச்சிகள் மூலம் சிறப்பாக சிவத்தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் வெளிக்காட்டுகிறார்கள்.
சிவநடனம் எப்பொழுதும் பேரின்ப வீட்டு நிலையை நினைவுபடுத்தும் சிதம்பரத்தில் இறைவன் ஆகாய வடிவில் உள்ளான். இறைவனின் செய்கைகள் ஆடல் அசைவுகளாலும் காணப்படுகின்றது. சிவனின் திருவுருவம் விளக்கும் தத்துவங்களை பார்க்கும் போது இறைவனின் வலது கரம்
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 33
படைத்தலையும், வலது அபயகரம் காத்தலையும், பிறவிப் பிணியில் கிடந்து வருந்தி வந்த உயிர்களுக்கு அபயம் அளிக்கின்றது. இடது திருக்கரத்தில் இருக்கும் நெருப்பு சங்காரத்தை குறிக்கின்றது. அதாவது நமது பாசங்களை அழிப்பதை உணர்த்துகிறது. மோட்சத்தை இடது வரதஹஸ்தம் அளிக்கின்றது. தூக்கிய திருவடி ஆன்மாவிற்கு பரமசாந்தியை தருவதோடு உள்வளைந்து அடிக்கீழ் இருக்கும் உயிர்களுக்கு முத்தி இன்பத்தையும் தருகிறது. இறைவன் ஆணவ மலத்தின் அடையாளம் உயிர்களை அடக்கி அவற்றை வீடு பேறு அடையச் செய்யவும் இறைவன் கழுத்திலிருக்கும் பாம்பணி நாகசக்தி யாவற்றையும் நியமிக்கும் உலகம் தோன்றவும் ஒடுங்கவும் நிமித்த காரணர் நாமே என்பதையும் ஆபரணங்களான தோடும் குழையும் ஆணோடு பெண்ணாய் அமைந்த உலகம் தானே என்பதையும் அவைகாட்டும். படைத்தல் என்பன சிவ சக்தியின் தனித்தன்மை என்பதையும் காட்டுகின்றது.
பரமசிவனின் முத்தொழிலுக்கேற்ப சிவனுக்கு விழிப்புநிலை, கனவுநிலை, உறக்கநிலை என்ற மூன்றும் அமைகின்றன. பாசங்களின் வாசனை தீர்ந்து போகும் போது உயிர் அந்த பூரணத்துவ நிலையை அடைகிறது. அதுவரை பிறவிதோறுஞ் செய்த வினைப்பயனை சுகதுக்க போகங்களை உயிர் அனுபவித்து வருகின்றது. இறைவனுடைய திருமுகம் எல்லை இல்லா அழகினையும் இனிய தண்ணொளியினையும் குறிப்பதோடு, 66 நிறச் சிவந்த திருமேனி தூய்மைப்படுத்தலையும் குறிப்பதோடு, அணிந்திருக்கும் திருநீறு பராசக்தியையும் ஆன்மாக்களின் பந்த பாசங்களின் பற்றுதலையும் அறிவற்ற இயல்பையும் சுட்டும். அங்கவஸ்திரம் உலகில் உள்ள அறுபத்திநான்கு கலைகளாலும் அறியப்படும் பரஞானக்கலையை நான்கு வேதங்களாகின்ற அரை நாணிற் கோத்து அணிந்திருக்கும் நிலையை கூறுவதோடு முக்கண்கள் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பவற்றையும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மும்மூர்த்திகளையும் கூறுகின்றது. உலகத்தின் நாயகனுடைய புன்சிரிப்பு துன்பங்களை தன் புன்முறுவலால் நீக்குகின்றது. சிவன் தெற்கு திசை நோக்கி நடனம் புரிவது தென்தமிழின் மீதும் தென்திசை காற்று மீதும் தெற்கு திசை தலைவனாகிய யமனிடம் உள்ள பயத்தை நீக்குதற்காகவேயாகும்.
அன்பு நெறியே மனிதனை மனிதனாக்கும். இறைவனே உயிர்களின் துன்பத்தை நீக்கி இன்பம் அளிக்கிறான். இறைவன் அன்புருவானவர். சைவ சமயத்தில் சிவ நடனத்தை பதிகங்கள், பாடல்கள் பிரபந்தங்கள் மூலமும் இறைவனின் பெருமைகளுடன் எடுத்து கூறி வந்தனர்.
15.07.2002 (திங்கள்) ஆனி உத்தரம் 21.08.2002 (புதன்) சதுர்த்தசி 20.09.2002 (வெள்ளி) சதுர்த்தசி 21.12.2002 (சனி) திருவாதிரை
(இந்து ஒளி
 

அன்பாகி அம்பலத்தாடும் ஐயா
அம்பலவாணரே நீர் அன்பர்கட்கு அன்பான சாமி” என்று இராமலிங்கர் சிவத்தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் எடுத்துக் கூறுகின்றார். சமய குரவர்களில் மாணிக்க வாசகர் இயற்றிய திருச்சாழல் இது பெண்கள் கை கொட்டி விளையாடுவது ஆகும். இவ்வாறு விளையாடும் போது ஒரு பெண் கேள்வி கேட்பது போலவும் மற்றைய பெண் அதற்கு விடை கூறுவது போலவும் அமைந்துள்ளது. முதலாவது பெண் - தோழி! எல்லோர்க்கும் தலைவனான ஈசன் கிழிந்த துணிகளை கோவணமாக தைத்து உடுத்தியிருப்பதேன்?
இரண்டாவது பெண் - அவர் எளிமையாக நான்கு வேதங்களையே அரை நாணாகவும், நிலைபெற்ற கலைகளில் பொருந்தியிருக்கும் மெய்ப் பொருளையே கோவணமாகவும் அணிந்துள்ளார் என்பதை நீ அறியவில்லையா?
முதலாவது பெண் - தில்லையில் ஆடுகின்ற இறைவன் பெண்ணுக்கு பாதி உடம்பை தந்தாரே அவர் பித்தனல்லவே.
இரண்டாவது பெண் - அடி அசட்டுப் பெண்ணே! பெண்ணுக்குத் தன் உடம்பில் பாதியை அவர் தந்திராவிடின் உலகமே அழிந்திருக்குமே! இதை நீ அறியமாட்டாயா?
பரமேசுரன் ஆடுகின்ற அரங்கம் ஜீவாத்மா. இவ்வரங்கத்திற்கு பற்பல வேடங்கள் புனைந்து ஆடுகின்றார். இறைவன் சிவனும் சக்தியும் நின்று உயிர்களை இயக்காவிடில் உலகமே அழிந்து விடும். இதனையே சிவஞான சித்தியார் “இல்வாழ்க்கை அவனால் வந்த ஆக்கம்” என்றார். மாணிக்கவாசகருடைய இப்பாடல்களை பண்ணுடன் பாடுவதும் வாய்ச் சொல்லால் கேட்பதுவும் சிவனருள் வேண்டி நிற்றலுஞ் சைவ சமயத்தவர்களுடைய தனிப்பெரும் கடமைகளாகும். உலகம் பரமசிவனின் மறுவடிவம் ஆதலால் உலகமும் உண்மைப் பொருள் என்பர். சந்திரன் ஒடுகின்ற நிறைந்த குட்டையில் சலனமற்றிருப்பது போலத் தோன்றினாலும் சந்திரனின் தூய்மையும் இயல்பும் மாறாதிருப்பது போல பரமேசுரன் பல்வேறு பிறவிகளை மேற்கொண்டும் தேவர், மனிதர், குரங்கு, மரம் முதலான உருவங்களை எடுத்தும் சுகதுக்கங்களை நுகர்ந்தும் தன்னுடைய நிலையான இச் சொருபத்தையே கொண்டிருக்கிறார். சிவனே பரனென நம்பி வாழும் மக்களுக்காகவும் உலகத்தின் நன்மைக்காகவும் சுபீட்சத்துக்காகவும் நல் வாழ்வுக்காகவும் என்றென்றும் நடராஜப் பெருமான் ஆடல் புரிந்தருளுகிறார்.
13.07.2002 (சனி) மாணிக்கவாசகர் சுவாமிகள் 14.08.2002 (புதன்) சுந்தரமூர்த்தி நாயனார்.
சித்திரபானு வருடம் சித்திரை - ஆணி)

Page 34
கணேசன்
ക്രീമ0.0) )
ஆற்றலின் ஊற்றுவாய் அன்னையேயென்பது அவனியனைத்துமே அங்கீகரித்த அசைக்கவொண்ணா அறநெறியாம். அன்னை பராசக்தியின் அன்பு வெள்ளம் கங்கு கரையின்றி எங்கும் பாய்ந்தோடும் இயல்புடைத்தது. அன்னையின் அருளால் அவாவுறும் ஆற்றல்கள் அனைத்தையும் அடைந்திட இயலும் என்பது அனுபூதிமான்களின் அனுபவமாகும். பேசாமடந்தையாக மந்தை மேய்த்த பாமரச் சிறுவன் பார் போற்றும் மகாகவி காளிதாசராகப் பரிணமித்தார். அன்னை அளித்த அளப்பரிய ஆற்றலின் விளைவாக முழு இருள் நிலவும் அமாவாசை நாளன்று பூரண சந்திரனை வரவழைத்து, அன்னை அளித்த அரும்பெரும் ஆற்றலை அறிவிலியான அரசனுக்கு அறிவுறுத்தினார் அம்பிகை அடியாரான அபிராமிப்பட்டரவர்கள். இதனாலன்றோ,
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தருந் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சகமில்லா
இனந்தரும் நல்லனவெல்லாந்தரும் அன்பரென்பவர்க்கு
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே” என்றவாறு அவர் அன்னை அளிக்கவல்ல ஆற்றலைப் பாடிப் பரவசமுற்றுள்ளார்.
அன்னை பராசக்தி எல்லாம் வல்லவள். அனைத்து ஆற்றலும் மிக்கவள். இவ்வுலகம் முழுவதும் அன்னையின் ஆற்றலாலேயே இயங்குகின்றது. மேகம் மின்னி இடி இடித்து தாரை தாரையாக மழை பொழிகின்றது. வானளாவி நிற்கும் மலைகளின் வழியே ஆறுகள் வேகமாகப் பாய்ந்தோடி வருகின்றன. அலை மோதி ஆர்ப்பரிக்கும் கடல் கரையுடன் கட்டுண்டு நிற்கின்றது. இத்தகைய இயற்கை நிகழ்வுகள் அனைத்தையும் இயக்கிக் கட்டுப்படுத்தும் பேராற்றல் ஒன்று உண்டல்லவா? அதுவே அகிலாண்டேசுவரியான அன்னையின் அளப்பரிய சக்தியாகும். இவ்வுயரிய உண்மையை உய்த்துணர்ந்தே
கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
"மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே” என்று எங்களுக்குப் போதித்துப் போயுள்ளார்.
அன்பு, தூய்மை, பொறுமை, தன்னலமின்மை,
மன்னிக்கும் சுபாவம் ஆகிய மேன்மையுறு பெண்மைக்
(இந்து ஒளி :
 
 

கும் அள்ளை
sw'4%と சுஜீவன் *ž\Š age vaara
குணங்களில் சிறந்தவள் அன்னை. அன்னையை அணுகக் குழந்தை ஒருபோதும் அஞ்சுவதில்லை. தன்பிள்ளை நன்றே செய்தாலும் தீதே புரிந்தாலும், உயர்நிலை அடைந்தாலும், தாழ்மையுற்றாலும் அன்னையின் அன்பு என்றும் மாறுபடாது. கேளாமலேயே தானே பால் நினைந்தூட்டும் தாயின் அன்புக்கு ஒப்புவமையிலதாமே. இத்துணைக் கரிசனை மிக்க அன்னையவளின் குழந்தைகளாகிய அடியவர்களுக்கு அவர்கள் அவாவுறும் ஆற்றல்களை வாரிவழங்குவது விந்தையல்லவே. இந்த வகையில் மகாகவி பாரதியாற் அன்னை பராசக்தியிடம் விண்ணப்பித்துள்ள ஆற்றல்களைச் சற்றே நோக்குவோமா,
"எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் புண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பணியே போல நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்”
அன்னை பராசக்தியின் அடியவர்களாக மிளிர்ந்து அன்னையிடமிருந்து அளவிறந்த ஆற்றல்களை அள்ளிப் பருகி பெறற்கரும் பெரும்பேறு பெற்றவர்களில் பூரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், மகாகவி காளிதாசர், சுப்பிரமணியபாரதியார், கவிச்சக்கரவர்த்தி கம்பநாடார், அபிராமிப்பட்டர், குமரகுருபரர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர். நாத்திகம் பேசிய பாரதிதாசன் கூட “எங்கெங்கு காணினும் சக்தியடா, அவள் ஏழு கடல் வண்ணமடா” என்று அன்னையின் ஆற்றலை விதந்து தம்மையே மறந்து பாடிப் போயிருப்பதினின்றும் உண்மை புலப்படுகின்றதன்றோ.
ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் குழந்தை தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அன்னையை அணுகுதல் இயல்பின்பாற்பட்டதாமேயாம். அம்பிகை அடியவரான அபிராமிப்பட்டரவர்கள் அன்னை பராசக்தி அள்ளிச் சொரியும் பெரும் பேறுகளெவையெனப்பட்டியல் போட்டு போந்துள்ளமையை
ஈண்டு நினைவூட்டுதல் சாலவும் பொருத்தமுடையதாகும்.
த்திரபானு வருடம் சித்திரை - ஆணி)

Page 35
அகிலத்தில் நோயின்மை கல்வி தனதானியம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லாழ் நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளும் அபிராமி உமையே’ ஆற்றல் அளிக்கும் அன்னையான அருட்சக்திக்கு இயற்றப்படும் வழிபாடே நவராத்திரி விரதமாகும். பூரண மனித வாழ்க்கைக்கு வீரம், செல்வம், கல்வி ஆகிய இன்றியமையா முத்துறைகளிலும் அளவிறந்த ஆற்றல் அத்தியவாசியமானதே. இலைகளில் எவை குன்றினும் வாழ்வின் சமநிலை தழும்ப வாய்ப்புண்டு. இவ்வாற்றல்களை நிறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டியே ஆற்றல் அளிக்கும் அன்னை மலைமகளாகவும், அலைமகளாகவும், கலைமகளாகவும் வழிபடப்படுகின்றாள். கவியரசர் கம்பர் பின்வருமாறு துல்லியமாக விளக்கிக் கவிமழை பொழிந்துள்ளார்.
மாமன்றத் தலைமையகக் கட்டிடத் திறப்பு
2
>ත්‍රි.තිරිකීක්‍ෂිණීතිණිඛිණී
* வலிமையும், ஒழுக்கக் கட்டுப்பாடும், ஆர்வ வலிமையற்றுக் கட்டுப்பாடின்றி, ெ - சுவாமி பூg
 
 

"பெருந்திருவும் சமமங்கையுமாகி என் பேதை நெஞ்சில் இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றி எல்லா உயிர்க்கும் பொருந்திய சூழனந் தரும் இன்ப வேதப்பொருளும் தரும திருந்திய செல்வந்தரும் அழியாப் பெருஞ்சீர்தருமே”
ஆற்றல் எவருக்கும் இன்றியமையாத அணிகலன்; ஆளுமையின் பிறப்பிடம்; அனைவரும் அவாவுறும் விழுமியம். ஆற்றலற்றோர் எதுவுமற்றோர்; ஆற்றலுடையோர் அனைத்துமுடையோர். ஆற்றல் ஒப்புவமையற்றது. இத்தகைய உயர் சிறப்புமிக்க ஆற்றலை அடைய விரும்பாதோரிலரே. ஆகவே,இத்துணை மகிமைசால் ஆற்றலை அள்ளி வழங்கும் அன்னை பராசக்தியை அநுதினமும் இறைஞ்சி ஏற்றிப் புகழ்ந்து பாடி நாங்களனைவரும் நயப்பன நண்ணி நிறைபயன்
எய்துவோமாக.
భ్వ్వాభ్వాభావం )6OTG) 6066
விழாவில் அமரர் க. பாலசுப்பிரமணியம்
ീ
○ 6, స్లోణ్యవ్యవస్వ్యవణ్వ్యవణ్య
மும் உடைய மனமானது நமக்கு நல்ல நண்பன். வறுப்புற்ற மனமே நமது பகைவன்.
கண்டானந்தர்
சித்திரபானு வருடம் சித்திரை - ஆனி)

Page 36
ORIGN OF THE UNIVE
ANCIENT HINDUSAGES DECLARATIOf
S. Ratnarajah, N
SCIENCE
Astronomers and astrophysicists are still continuing their research on cosmology. Will they be able to know the fullness and mystery of the "cluster of galaxies" at any time? They continue to observe many illuminous stars called "Quasers", whose light takes many decades to reach the earth. So when will this research end? Let us think
When we are in the universe; can we think we are outside the universe? How can we see the absoluteness of the universe when we look through a piece of glass (telescope, microscope etc.)? Scientists senses (intellect) feel that they are observing something separate. They forgot that they constitute as an object of this universe.
We are proceeding in the 21st century with the fantastic advancement of material facilities provided by science, which is proceeding with an uncertainty principle without knowing the "TRUTH' and the absoluteness of the Universe. We should break the glass and detach from objects and attach to the Supreme substratum of every object.
THE BIG BANG THEORY
Big Bang Theory is the name given to the scientific idea about the 'origin of the universe'. Scientists namely, George Lemaitone, Robert Wilson and Govind Swaroop, have significantly contributed to this theory. Dr. Weinberg has further refined this and provided this as a standard model. It says that in the beginning all the available cosmic forces were compressed to a small volume and called "Cosmic Egg". The potential energy within made this to burst in a cataclysmic way which has no perfect centre as normal bursts. It occurred everywhere while expanding. Simultaneously it filled the space with matter and was tremendously hotter than the temperature of the hottest star. They say that explosion is continuing and the universe is still expanding. It is the view of their minds fed by the senses. It is not "soul conscious" discriminative intellect which knows which is "TRUTH"

RSE & ITS CREATION
AND RECENT SCIENTIFIC FINDINGS
2wcastle, NSW
The organic molecules are being poured in abundance endlessly. Life evolved in different forms due to "Natural Selection" thrived and others perished. Any form should adapt to the environment - the "Natural Calamities".
FOOD FOR THOUGHT
*k What was the substratum for the "Cosmic Egg" and
where was it hanging?.
k Can creation, sustenance and reabsorption occur
without a base?
k Was there a pre-existing space? Into what did
expansion took place?
k Why didn't science speak about directions and boundaries of expansion? Is it because a cataclysmic expansion by explosion means boundaries and directions cannot be stated by physical vision?
ik What was the purpose of contraction and expansion? If it is creation, why is everything subject to change? Can anyone prevent this withering and death of manifested things?
THINK THINK and THINK
Science provides immense facilities with its 'advanced theories' changing the 'old ones, This appears as an immense gift to the changing world. How can science - a changing process assert the changeless substratum the "TRUTH"? without it nothing can exist.
TRUTH
Now, what is "TRUTH"? We observe and feel that everything is in a constant flux and is subject to change. Anything that changes is not permanent. It has birth and death' and 'origin' and 'end'.
To tell about a change logically, there must be something unchanging - static and ever permanent to compare and contrast. This is the substratum of the TRUTH. It is beyond all normal, 'waking', 'dreaming', and 'deep sleep' states. Senses intellect cannot see it as one cannot see his own eyes. It can be realized only in the fourth Thuriya' state where you are one with it.
శీతrung bugLi#my of )

Page 37
It is nameless, formless, omnipresent, omniscient and omnipotent supreme consciousness. From this, everything evolves, revolves, round it and resolve unto it. This base is "Truth". Sage "Thayumanavar clearly stated the 'omnipresent' nature as Neekam ara niraintha pari poorana anantham' in Tamil. This "TRUTH" is generally called as "GOD" by all.
SPRITUALITY
Religions in General and Hinduism
Generally, Bible, Koran and Buddhist Scriptures state that if one follows these 'code of practices, you will be divine in life. They never proceeded to explain the 'cosmos' and left it as a mystery. Now, Hinduism not only teaches how we should live but also educates the "TRUTH through temples, deities, thevarams, puranas, vedas, agamas and upanishads.
Hinduism is "Vethantham and Saiva Sithantham". It calls the TRUTH as 'BRAHMAN" and 'SHVA'. It is so vast to be conceived by mind. Sages through deities explained the "TRUTH' in parts and to conceive it and worship them as 'God', because it educates even the socially educated scholars about 'SHIVA' and evolve their discriminative knowledge to 'self-realization'. Swami Vivekananda says "Intellectual giants are spiritual kids'.
KANTHA PURANAM and MURUGAN
Sage "Veyasar" wrote eighteen puranas in 'Sanskrit'. One was 'Skanda puranam'. about "Murugan' and its aspects of TRUTH - BRAHMAN. Saint kachiappa Sivachariyar wrote it in Tamil "SHIVA" - the almighty "TRUTH".
Science tell this universe is nothing, but aggregate of atoms with charged particles. Thousands of years ago this fact was declared by Sages. 'SHIVA', the only 'ONE' is beyond all senses perception. He has reduced himself to atoms in projecting this universe. For the mind to conceive it, "Murugan' and his birth explains this very well. The atoms creates heterogeneous forms.
When Shiva's meditation (static state) was disturbed by 'devas" (Positive divine thoughts) to give them a child to protect them from A su ras (negative,
(இந்து ஒளி
 

revengeful ill treating thoughts); the static potential energy revolved by its magnanimous dynamic effect within itself. Shiva who constituted both positive and negative and was "nothing"; appeared as everything in its swirling movement. Saiva Sithanatham declares this fact.
Shiva forms six faces: Eesanam - East; Atho - Down; Vaamanam - West, Akoram - North; Sathyothanan - Up; and Tharpurusam - South. These faces indicate the six side as boundaries and endless directions of the universe. Devas thought Shiva without his consort "parvathy' cannot give them a child to protect them. This is normal but Shiva himself through his wisdom gives Murugan his own atomic form to protect "Devas". No one else can make the negative thoughts divine.
KANTHA PURANAM and SCIENCE
Nothing occurred outside the six sides and directions (endless) because it covers the entire "TRUTH". The absolute 'SHIVA'. All bursts and expansions were within 'SHIVA' There was no pre-existing space. Hinduism clears the difficulties of science. It cannot understand "TRUTH" and will never know it; because it wants material proof. "TRUTH is beyond material proofs. So science in its material research only, will never find "TRUTH" and establish it.
Kantha Puranam states six splints were left out from "Middle eye of wisdom' of each face. These were tremendously warm. Science agrees on this tremendous heat at the 'origin of the Cosmos'.
Shiva, the static base forms a vibratory motion within; that is the meaning of "Release of splints'. Splints are 'atoms', and the motion created 'space'. At first space was formed. The space could not bear the heat of the splints and they were given to the air. As the second step gaseous atmospheric condition evolved. Then wind gave it to fire. As the third step warmth at different temperatures appeared as the third constituent. Due to unbearable heat, splints were taken over by water. So the fourth state was appearance of water, Science says "the tremendous heat at the beginning cooled down to form a molten colloidal mass'. This is water and earth.
த்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 38
Further Kantha Puranam states the splints were left on six lotus flowers in the water pond - Saravana Poikai. It means the colloidal nature at the beginning of universe. Lotus roots to the earth at the depth of the pond. It means 'earth' is formed.
Hinduism declared then the constituents of the universe as (1) space; (2) atmospheric gases; (3) fire; (4) water; and (5) earth. These are the main constituents, known as Pancha Poothankal. Any new finding by science are from these and they are not separate from them. This expansion shows that contraction is also possible.
Expansion: From 'SHIVA". The Universe-Space - AirFire - Water - Earth (dynamic form). Contraction: from "Universe' the 'SHIVA': Earth-Water - Fire - Air - Space - SHIVA' (Static Form).
Science bluntly states that universe will collapse one day and everything will cease to exist. But it neither stated how the expansion occurred in a step - wise method producing its constituents, nor contracts or collapse in a methodical pattern.
The six splints on six lotus flowers were united by "Parvathy, the energy-unmanifested (Sakthi) to manifested energy as Kanthan (Murugan). Unmanifested energy only descends down to manifest every activity here. Kantha Puranam states due to unbearable heat of the splints, Parvathy ran away from shiva. So Shiva is Murugan Himself. It shows the universe absolute form of Shiva and his son Murugan is its constituents 'atoms'. So Shiva is nothing but Murugan.
Kanthan was formed by uniting the six splints by Parvathy, These are manifested energies for the universe and then they link with Shiva. Shiva is energizer and Parvathy is energy.
Kanthan - the atomic manifestation was given to six ladies (Karthikai Penkal) from six sides to be fed and brought up. It is the environment that feeds the organic molecules and sustains it in this universe in
different forms.
 

Hindu sages observed that activities in this universe
like creation, sustenance etc. were in a TRIAD form.
Three and its multiples. So they considered through
their discriminative faulty in 'Nirvikalpa Samathy' that
number "six" suited creative activities. This aspect of
Shiva was named Murugan with six faces, twelve. hands and eighteen eyes.
In ancient days people were not much educated. Sages built temples, had ritual Worships and wrote puranas to attract the common people from Worldly life to at least know about "TRUTH". Even in these scientific days, educated people mostly don't pay much attention for 'self-realization'. People generally think Hinduism as a bundle of nonsense. Because of their material interest spirituality is an unwanted garbage for them. What is the purpose of life? Please ask science. But if they want to know what nonsense is this? Every deity in a temple will tell them an aspect of "Truth" and will realize the 'sense' in it, if they sincerely contemplate on it.
SCIENTIFIC PROOF FOR MURUGAN
Carbon is the most important element to form hydro - carbons. Organic chemistry teaches about organic compounds only now.The subatomic configuration ofcarbon consists of six protons and six neutrons forming the nucleus and six electrons are revolving round it in cycles or orbits. Science now has established that 'carbon' is essential for living molecules.
Sages design of Murugan deity and its sculpture work (visvakarma - sculpture & Artist - Ravi Varma) is six faces - six protons and the nucleus consists of six proton plus six neutrons. ie: twelve hands. Three eyes on each face totally to eighteen. That is the total of carbon atom configuration, comprising six protons, six neutrons and six electrons.
The nucleus is positive in charge due to the presence of protons. The neutrons are chargeless and have atomic weight. This means they are balanced and as such no charge in them. This balance energy is Gnana Sakti and present in (balanced chargeless power) every
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 39
atom of the universe. It means Gnana Sakti - Shiva in its reduced atomic state - Murugan is omnipresent. Murugan deity which indicates the present research in carbon atom and its findings shows this creates life.
CONCLUDING REMARKS
Murugan deity and Kantha Puranam further explains several facts about TRUTH even though in whole it is only an aspect of the magnanimous absolute consciousness - SHIVA. Science in its provision of luxurious facilities to live has neither given peace to mind nor had developed the inner personality of an individual.
Hinduism advises everyone to awake up from normal 'waking, dreaming and deep sleep states' to the fourth 'Thuriyaa' state (Lord Shiva). Lord Shiva's meditative posture declares this and show how one can realize him.
Scientists who are themselves changing proceeds from 'effect to cause'. Where as sages through 'selfrealization' realized the "TRUTH' knows the cause and decleres the effect. They know that Shiva is the cosmic Noumenon and it is the 'static backbone' of its dynamic - phenomenal activity. It is the (unchanging) common denominator for this (universe) kaleidoscopic numerator. It has no circumference and has centres everywhere. This then is the TRUTH - Shiva for anything to compare and contrast in this world and universe.
We as human beings are the highest evolved because discriminative knowledge is not bestowed to other living things. But, mostly even the scientists are using their senses intellect only in objective researches.
இறையருள் துணையுட
"சக்தி இல்லம்" திறப்புவிழா அழைப்பிதழ் கிடை இல்லங்களை அமைத்து சமூகசேவை புரிவது மிகள் பூசையாம்" என்பதற்கிணங்கதாங்கள் ஆற்றிவரும் ட சைவத்தமிழ் மக்கள் மத்தியில் இத்தகைய பணிகள் இ மன்றத்து அனைத்துச் செயல்களுக்கும் இறையருள்ப
 
 
 

Discriminative knowledge is what distinguishes the changeless from the changing, the real from the unreal. It attaches one to the 'soul', the 'self and make one be 'self conscious and realizes the 'self in him and the 'self in all.
This article only deals with the 'origin of life and cosmos'. It is only a brief outline of the facts. It Will enlighten us from the material world and awaken our subtle intellect to 'awareness'. This will make us realize the "purpose of life". Why we are born in this world? Who we are?
Think Think! And Think until we know the 'self which Hinduism explains as 'SHIVA' or "BRAHMAN" where science has not awakened its discriminative knowledge and achieved 'bliss' on that 'state'. Hindu Sages lived and showed to masses the "Purpose of life'. Even now it is taking place.
The conclusion of Hinduism is "Pray, Pray and Pray" until "self-realization" is achieved and ego is cleansed. This will show the 'absoluteness of the universe and unthinkable TRUTH. If we do not make use of the "human body' for this we are subject to unimaginable births and not cessation of birth.
"Forms get deformed to reform, Everything will evolve and revolve until it resolve unto it. That is cessation of birth and no further activity of the mind. It is 'awareness' a balanced state of mind.
Remember "Murugan'. Gnana Sakti is present in every atom of this universe (omnipresent nature) and in us. Prayer is the best method to tranquilize the mind of general masses. "Pray - Pray and Pray and evolve" - "Soul" consciousness.
Aит Saravang-Ba
-ன் மாமன்றப் பணிகள் வளரட்டும்
த்தது. மகிழ்ச்சி! எங்கள் சைவமன்றங்கள் இத்தகைய /ம் வரவேற்கத்தக்கது. “உலக சேவையே உத்தமன் ணிகள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படும் பணியாகும். றைவனால் ஏற்றுக்கொள்ளப்படுபவை ஆகும். ஆகவே ரிபூரணமாகக் கிடைக்கும் என்று கூறி அமைகின்றேன்.
கலாநிதி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி தலைவா
பூரீதுர்க்கா தேவஸ்தானம்,
தெல்லிப்பளை.

Page 40
§Ahl,
N Z
YnS クイ 7
S 1 2 SPECLAL Ki S 2 SPECIAL
そ אי*
PADA YA
(I) KATARAGAMA PADA YATRA IN PROGRESS
Kataragama pada Yatra pilgrims reach Trincomalee First pada yatra since 1983 from Mullaitivu, Jaffna districts.
(Trincimalee, June 5) Sinhalese and foreign devotees as well as ardent Tamil devotees from Jaffna, Mannar, Vavuniya and Trincomalee who assembled in Mullaitivu Districtat Vattappalai Kannaki Amman Pongal festival on 27 May today reached Trincomalee on the first leg of the traditional six-week pada yatra or foot pilgrimage to Kataragama. This year was the time since 1983 that pilgrims could undertake the arduous passage from Mullaitivu to Trincomalee.
Also notable is the presence of Indian pilgrims in this year's Kataragama Pada Yatra for the first time in decades. One is Vallimalai Balananda Sadhu, a highlyregarded exponent of Murugan devotion through Tiruppukal songs of 14th Century poest-saint Arunagirinathar. A former automotive engineer turned minstrel-sannyasi, Sadhu Balananda represesnts a centuries-long tradition of Indian sadhus who have undertaken the Kaiaragama Pada Yatra, including his distinguished predecessor Saint Arunagirinathar and his guru Vallimalai Satchidananda Swanigal who had walked from jaffna to Kataragama singing Tiruppukal verses in 1908.
By unanimous consent, Sadhu Balananda bears the lance or Vel symbol of God Katargama, in this year's pada yatra. Cutting a striking figure with the gleaming Val and his youthful bearing, the 66-year old swami is accompanied by a growing party of devotees. They include Tavatiru lrulaayi Swami Amma of Manamadurai (Rameswaram), veteran pilgrim Patrick Harrigan of the Kataragama Devotees Trust, American Buddhist pilgrim Craig Balsadar and Sinhala Buddhist pillgrims from Maharagama and Kurunegala, as well as Tamil devotees from all over the North and East.
Sri Lanka's ongoing peace process has this year made it possible for devotees to walk to Katatagama from the traditional rendezvous point at Vattappalai (Mullaitivu district). At the same time, the traditional Jaffna to Kataragama Pada Yatra is a powerful symbol
(இந்து ஒளி
 
 
 
 

&TRAGAMA ܓ"(% ല്ല, S
of peace and reconciliation that is welcomed and understood by Sri Lankans of all religious and ethnic backgrounds. The very sight of traditional Pada Yatra Swamis and Swami ammas walking from Vattappalai once again for the first time since 1983 is lifting the hearts and spirits of young and old alike all up and down the North and East of the island especially.
Howerver, even in peace time the Katatagama Pada Yatra remains an arduous trek full of uncertainties for the devotees, who trustin God Kataragama to deliver them to their goal safely, and this year has been no exception. Even after obtaining full clearance from the Sri Lanka Ministry of Defence, the pilgrims faced prolonged delays and questioning from LTTE officials at Puliyankulam and Kilinochi, interrogations by LTTE police inspectors at Vattappalai and further questioning by Sea Tiger cadres at Chemmalai.
Both Government and LTTE security officials alike storingly advise the public to avoid the broad landminestrewn No Man's Land separating the two sides. Faced with the prospect of a 300-kilometre detour via Vavuniya and back to the East Coast, the pilgrims came up with a novel proposal. While already en route from Vattappalai, they contacted both Sri Lanka Defence Ministry and LTTE officials, Proposing to circumvent No Man's Land by fishing boat.
Happily, both sides gave their consent and on31 May the pilgrims' party crossed from LTTE-controlled Chemmalai to Government-controlled Pulmodai by boat. This was the first ever mutually - sanctioned crossing by sea from LTTE territory to Government territory and, as such, is yet another small step in Sri Lanka's the long march back to peace and prosperity.
Having attended the popular Salli Amman Pongal festival nearby, today the Pada Yatra pilgrims reached Trinco town where they worshipped at Koneswaram Kovil and put up at Kandaswami Kovil. Tomorrow they cross Trincomalee Bay by launch to set out on the equally grueling trek via Verugal and Kathiravelito Sitthandiand Mamangam Kovils in Batticaloa District. Their passage will later take them via Pottuvil and Okanda through Yala National Park to reach the Kataragama Sacred City in time for the Esala Festival flag-hoisting on July 10.
38 சித்திரபானு வருடம் சித்திரை - ஆணி)

Page 41
The Kataragama Pada Yatra Sri Lanka's oldest surviving tradition of foot pilgrimage went into abeyance in 1983 with the onset of ethnic conflict. It was revived in 1988 by the Kataragama Devotees Trust, which has annually provided support and encouragement for devotees of all communites and walks of life to experience Kataragama's traditions first hand. Full details about the Pada Yatra may be had at http:// padayatra.org and http:kataragama.org.
NOTE :
Murugan Bhakti Editor Patrick Harrigan is currently doing fieldwork during the Kataragama festival season until late July when he will return to Colombo. Please write to him at editoGkataragama.org, but expect a reply only after the Kataragama season.
(DILDGir) G6
மாமன்றத்தினால் வெளியிட மாமன்றத் தலைமையகத்தி
இந்து மக்களுக்கு ஒரு கையேடு)
இந்து மக்களுக்குத் தேவையான பயனுள்ள பல விடயங்களை உள்ளடக்கிய கைநூல் ரூபா 140/ = பெறுமதியான இந்த நூலை, இப்பொழுது சலுகை விலையாக ரூபா 100/=க்கு வழங்குகிறோம். (தபாற்
செலவு ரூபா 10/-)
(தலைமையகக் கட்டிடப் பூர்த்தி சிறப்பு மலர்)
இலங்கையிலுள்ள திருத்தலங்கள், இலங்கையின் இந்து சமயப் பெரியார்கள், இலங்கையில் இந்துமத வரலாறு, வளர்ச்சி மற்றும் இந்துமத ஸ்தாபனங்களின் பணிகள், இறைவழிபாடு போன்ற விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆன்மீக தத்துவங்கள் அடங்கியதாக வெளிவந்திருக்கிறது.
அனைவருக்கும் பயனுள்ள ஒரு வெளியீடு.
விலை ரூபா 150/= (தபாற்செலவு ரூபா 25/-)
* ஆழ்ந்த சிந்தனைகளாலும், அகத் தூண்
ஒளிந்திருக்கும் மேலான - சுவாமி பூg

(II) MURUGAN BHAKTT NETWORK
CONTINUES TO GROW
Thanks to Murugan Bhakti supporters and an abundance of materials and opportunities, the Murugan Bhakti Network and related Living Heritaga Network have been steadily expanding in 2002
Visitors to www, Murugan.org will notice that the hub of the Network now has a more user-friendly graphic interface with easy Javascript navigation bar throughout the website and across most of the Murugan Bhakti netwotk. Now with a single mouse click you can navigate with ease across hundreds of pages about Skanda - Murugan and his traditions.
Entirely new Murugan Bhakti wenbsites include: http://sthaladhar.org official website of Tiruchendur Sthaladharkal Sabha;and http:Padayatra.org official website of the Katatagama Pada Yatra.
வளியீடுகள்)
ப்பட்டுள்ள பின்வரும் நூல்களை ல்ெ பெற்றுக் கொள்ளலாம்.
ANELUCIDATION OF THE TRUPPASURAM திருப்பாசுரத்தின் விளக்கம். (ஆங்கில நூல்)
யாழ், சைவபரிபாலன சபையினரால் முன்னர் வெளியிடப்பட்ட நூலை மாமன்றம் மறுபிரசுரமாக வெளியிட்டுள்ளது. −
விலை ரூபா 50/= (தபாற்செலவு ரூபா 10/=)
(GLORIES OF SHAIVAISM)
சைவப் பெரியார் எஸ். சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட மேற்படி நூலை மாமன்றம் மறு பதிப்பாக வெளியிட்டுள்ளது.
விலை ரூபா 30/= (தபாற்செலவு ரூபா 10/=)
மேற்படி நூல்களை தபாலில் பெறவிரும்பு பவர்கள், அதற்குரிய பணத்தை காசோலை அல்லது காசுக் கட்டளை மூலமாக அனுப்பிவைக்கலாம். பணம் பெறுபவர் பெயர்: அகில இலங்கை இந்து மாமன்றம் எனவும் பணம் பெறும் இடம்: கொழும்பு என்றும் குறிப்பிடவேண்டும்.
டுதலாலும், மனஒருமைப்பாட்டினாலும், மனிதனிடம் திறமைகள் வெளிப்படும்.
கண்டானந்தர்.
சித்திரபானு வருடம் சித்திரை ஆணி)

Page 42
அகில இலங்கை இந்து மாமன்றத்தி ஏப்ரல் 7ம் திகதியன்று மஸ்கெ மஸ்கெலிபா பூரீசண்முகநாதசுவ
மேற்படிகருத்தரங்கில் மாமன்றத்தின் சார்பில் தி திரு. எஸ். சரவணமுத்து, திரு.கு.பார்: திருமதி வசந்தா வைத்திய
 

ன் சிவதொண்டர் அணியினர் கடந்த லியாவில் நடத்திய கருத்தரங்கு, 翁 ாமி ஆலய வழிபாடு நிகழ்வுகள்.
திரு.க.இராஜபுவனிஸ்வரன், திரு. பி. கருப்பையா, த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாதன் விரிவுரையாற்றினார்.
சித்திரபானு வருடம் சிற்நிரை - ஆணி)

Page 43
“சக்தி இல்லம்’ திற
சக்தி இல்லத்தில் தெஹிவல - கல்கிசை மாநகர சபை முதல்வர் உரையாற்றுகிறார்.
彗、三- 萃 மாணவிகளுக்கான இலவச விடுதியில் அனுமதிக்கப் பட்டவர்களின் பதிவுகளை வணக்கத்திற்குரிய சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்கள் ஆரம்பித்து வைக்கிறார்.
 
 

IL 6Í IDIT 3506)||356ĪT
முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவுகளை வணக்கத்திற்குரிய சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்கள் ஆரம்பித்து வைக்கிறார்.
சக்தி இல்லம் அறையொன்றின் தோற்றம்

Page 44
இந்தச் சுடரில் .
10.
13.
16,
79.
20.
21.
23,
24.
25.
27.
29.
30.
32.
34.
38.
40.
பஞ்ச புராணங்கள்
கோலாகலமாக நடந்தேறிய 'சக்தி இல்லம்"
திறப்பு விழா
புராண தத்துவங்களும் விரதங்களும்
அட்டன் மாணிக்கப் பிள்ளையார்
கொடி கவியில் ஏறிய சிவநந்தி
சங்கரரின் அத்வைத சிந்தனைகள்
I /6iya/42//7 g/T6w45; 5 L'. I L 5 9; 6006w
வீரசைவத்தின் தோற்றம், வளர்ச்சியும் அதன்
கொள்கைக் கோட்பாடுகளும்,
பிரார்த்தனை ஒன்றுதான் பிராணனுக்கு
ஆதாரம்
இம்மை இன்பங்களுக்குத் தனியிடம்
வகுத்துள்ள இந்து மதம்
திருக்கேதீச்சரம்
மணி ஓசை ஓய்ந்தது - கண்ணர் அஞ்சலி
பயனுள்ள அறிவு
பெரிய புராணக் கதைகள்
திருவிளையாடற் புராணக் கதைகள்
அபிராமிப் பட்டர்
சைவ சமயத்தில் சிவ நடனம்
ஆற்றல் அளிக்கும் அன்னை Origin of the Universe & Its Creation Special Kataragama Pada Yatra Issue
மஸ்கெலியா சிவதொண்டர் அணி கருத்தரங்கு
@jyI ରୁଗf ଭିରାରୀfiତ
அலுவலக உதவி
திரு. மு. சின்னையா திரு. அ. கனகசூரியர்
அடுத்த சுடர்
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி

வாழ்த்து
மலைமகள் மணாளனான்தன் மலரடி நீடுவாழ்க அலைகடல் விடமதுண்ட அண்ணல்தம் அடியார் வாழ்க கலைபல கற்றுத் தேர்ந்து காசினிதன்னிலுள்ளோர் இலமெனு மின்னல் நீங்கி இன்புற்று நீடு ாழ்க
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சித்திரபானு வருடம் சித்திரை - ஆனி இதழ் --- ஆனித் திங்கள் 8ம் நாள்
| 22.06, 2002
ஆசிரியர் குழு :
புலவர் அ. திருநாவுக்கரசு திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபுவனரீஸ்வரன் திரு. எம். பவளகாந்தன் திரு. த. மனோகரன் திரு. கு. பார்த்தீபன்
ஒரு பிரதியின் விலை (bUT 2000 வருடாந்த சந்தா sbUT 80.00 வெளிநாட்டு வருடாந்த சந்தா Gu /IG)/f 10.00
91f6) (26) Thl6O) J5 @h J5l ID TID GÖTAOÍ A, C, H. C. கட்டிடம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2, இலங்கை, 26) 3001 U 356Irld : http://www.hinducongress.org தொலைபேசி எண் 434990, தொலைநகல் 344720 [མ་ ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI
Sithirai - Aani ALL CEYLON HINDU CONGRESS 22 JUNE 2002 Editorial Board:
Pulavar A. Thirunavukarasu Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. M. Pavalakanthan
Mr. D. Manoharan Mr. G. Partheepan
Price RS 20.00 per copy Annual Subscription RS 80. OO Foreign Subscription U. S. S 1 O.OO
(Including Postage)
ALLCEYLON HINDU CONGRESS,
A. C. H. C. Bldg. 91/5, Sir Cittampalam A. Gardiner Mawatha, Colombo - 2, Sri Lanka. Website: http://www.hinducongress.org Telephone No. 434990, Fax No. 344720
Next Issue: Aadi - Puraddathy
View's expressed in the articles in Hindu Oli
are those of the contributOrS
i ހަހީޙަތޯއޯ
PRINTED BYUNIEARTS (PVT) Ltd., COLOMBO 13. TEL: 330195.
a