கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2002.07-09

Page 1
அகில இலங்கை இந்த மாமன்றம்
A. லாண்டிதழ்
 

Quarters of II (eason 7(inct G marea a

Page 2
H
ாற்ற விருந்ததந்திருந்தர்வசித்தாந்தப் iஇரத்தி:பாபதி அவர்களுக்குமான்ந்த்
-S.
இத்தின் சபாபதி அவர்கள்
இசவசித்தாந்தப் E"
பேருரையாற்றுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 

|
:47 விசவசித்தாந்த்ப்போசிரியர்: இரத்தின்ாபதி அவர்களுக்கு ாளுமன்ந்துப்பின்ர்திருவிஆந்ேதசங்கரி Griff*Iem||||||||||||||
போர்த்திக்கொவிக்கிறார் M
I
மாமன்றத்துண்த்தின்வர் திரு.சி.தனபாந்ா:சித்தாந்தப் போசிரியர்வே இரத்தினசபாபதி அவர்களுக்கு மர்மான் அணிவிக்கிறார்.

Page 3
2. á8ovuouvuó
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம் தேவாரம் என்னபுண்ணியம்செய்தனைநெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னை நீபுரிநல்வினைப் பயனிடை முழுமணித்தரளங்கள்
மன்னுகாவிரிசூழ்திருவலஞ்சுழிவாணனை வாயாரப் பண்ணியாதரித்தேத்தியும் பாடியும் வழிபடுமதனாலே.
திருவாசகம் பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறுதீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தையெழுந்ததோர் தேனே
திருப்பெருந்துறையுறை சிவனே யாருற வெனக்கிங் காரயலுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதி
திருவிசைப்பா
இடர் கெடுத்தென்னை ஆண்டு கொண்டென்னுள்
இருட் பிழம்பற வெறிந்தெழுந்த சுடர் மணிவிளக்கின் உள்ளொளி விளங்கும்
தூய நற்சோதியுட் சோதி அடல் விடைப் பாகா அம்பலக் கூத்தா அயனொடு மாலறியாமைப் படரொளிபரப்பிப் பரந்து நின்றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.
திருப்பல்லாண்டு
சேலுங் கயலும் திளைக்கும் கண்ணால்
இளங்கொங்கையில் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்
குமென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலுமயனுமறியா நெறி
தந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்து நின்
றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
மார்பாரப்பொழிகண்ணிர்மழைவாருந்திருவடிவும் மதுரவாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்மாலைகளும் செம்பொற்றாளே சார்வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவீதிப்பணிசெய்து பணிந்தேத்திப்பரவிச்செல்வார்.
திருச்சிற்றம்பலம்
ܥ (இந்து ஒளி (

தீபம் - 6 சித்திரபானு வருடம் புரட்டாதி 25ம் நாள்
O 2002
Jig, JIDT60I 96)IDS 60)66)ID (ST606016T6t
நமது நாட்டின் சில பகுதிகளில் கேட்டுக் கொண்டிருந்த அதிர்வுகளும் அவலக்குரல்களும் தணிந்ததொரு சூழ்நிலையில் போர் மேகங்கள் கலைந்து, சமாதான மேகக் கூட்டங்கள் சூழ்ந்த நிலையிலே நிம்மதி தரும் அமைதிக்கான பாதையை எதிர்நோக்கி நமது மக்கள் காத்திருக்கும் காலப் பகுதி இது.
இன்னல் மிகுந்த காலகட்டத்தில் செய்த இறை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை என்பதை சமகால நிகழ்வுகள் சொல்லி வருகின்றன. எனினும் இன்னும் எத்தனையோ மைல்கற்களைத் தாண்டவேண்டி இருக்கின்றது. எனவே எங்களின் பிரார்த்தனை தொடர வேண்டும்.
இறைவனை வழிபாடு செய்வதற்கு அமைதியான சூழ்நிலையும் அமைதியான மனநிலையும் தேவை. ஆனால் கடந்த இருள் சூழ்ந்த நாட்களில் தமிழ்ப் பகுதிகளிலுள்ள பல ஆலயங்கள் மூடப்பட்டும், சில சேதமடைந்த நிலையிலும் பூஜைகள் இல்லாத நிலையிலும் இருந்து வந்துள்ளன என்பது துயரமான வரலாற்று நிகழ்வுகள்.
அதிகாலையிலே ஆலய மணியோசை காதுகளில் ஒலிக்க இறைவன் திருநாமத்தை உச்சரித்து தங்கள் அன்றாடக் கருமங்களை அவன் திருவருள் கொண்டு ஆரம்பிக்கும் இந்துப் பெருமக்கள் அதன்மூலம் ஆத்ம திருப்தி பெறுகிறார்கள்.
இவ்வகையான தெய்வீக நிகழ்வுகள் அற்றுப் போயிருந்த பல பகுதிகளில் மீண்டும் ஆலயங்கள் புனரமைக்கப்பட்டும், திருத்தப்பட்டும், பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகத் தொடங்கி யிருப்பது எதிர்காலத்திற்கான நல்ல சகுனமாகவே அமைகிறது.
இது விடயத்தில் மாமன்றமும் தனது முழுமையான கவனத்தைச் செலுத்துகிறது. தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் அனைவரும் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பி தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து தங்கள் இடங்களிலுள்ள ஆலயங்களிலேயே இறைவழிபாடு செய்து இன்புற்றிருக்க வேண்டும் என்பதே மாமன்றத்தின் பெருவிருப்பம் என்பதுடன், நல்ல தீர்வுடனான நிரந்தரமான அமைதிச் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இறுதியாக, இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டே யாகவேண்டும். பெரியார்திரு.இ.நமசிவாயம் அவர்கள்தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப் பணிச்சபை பாடல் பெற்ற திருத்தலத்தின் மேன்மையை மீண்டும் நிலை நாட்டும் வகையில் புனருத்தாரண வேலைகளைத் துரிதமாகச் செய்துவருகின்றது. அவர்களின்திட்டப்படிதைமாதத்தில் மகாகும்பாபிஷேகம் நடத்தசகல இந்து மக்களும் உதவிபுரிய வேண்டும். திருக்கேதீஸ்வரம் ஒரு புனித இந்து பூமியாக மாற்றியமைக்க இன்னும் பலகோடி ரூபா பணஉதவி தேவைப்படுகிறது.
அடுத்தது களுத்துறையிலும் ஏனைய சிறைகளிலும் வாடும் எங்கள் சகோதரங்களின் நிலை குறித்து மாமன்றம் தன்னாலான முயற்சிகளை எடுத்துவருகின்றது. எனினும் இன்னும் சிலர் பயங்கரவாதச் சட்டத்தின் பயங்கரப் பிடியில் தத்தளிக்கின்றனர். அச் சட்டம் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவேண்டும். அரசியல் கைதிகள் என நாமமிடப்பட்ட எங்கள் சகோதரங்கள் தாமதமின்றி விடுதலைசெய்யப்படவேண்டும். அதற்காகவும் பிரார்த்திப்போமாக.
D சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 4
வாக்க A Մ/ [óმ
魏鏞慈 குமாரசாமி ே
சக்தி வழிபாடு மிகத் தொன்மையானது.
சக்தியை நாயகியாகக் கொண்டு நடைபெறுவது நவராத்திரி விழா. துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்னும் முப்பெருந் தேவியர்களை நோக்கிப் பூசை, வழிபாடு, விரதம் அனுட்டித்தல், விழாவெடுத்தல் என்பன நவராத்திரி காலங்களில் நிகழ்த்தப்படுகின்றன. சகல உலகங்களையும் படைத்து, அவற்றையெல்லாம் இயக்கிக் காத்து வருகின்ற மாபெருஞ் சக்தியை, மகாசக்தி என்றும் ஆதிபராசக்தி என்றும் நம் முன்னோர்கள் கொண்டு அச் சக்தியைப் பயபக்தியோடு வழிபட்டு வரலாயினர். சக்திதத்துவத்தைச் சாக்தம் என்று அழைக்கின்றனர். சாக்தம் அறு வகைச் சமயங்களுள்
ஒன்றாகவும் வகுக்கப்பட்டுள்ளது. சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம் என்பன ஏனையவை. இந்து சமயம் கொண்டுள்ள ஆறு உட்பிரிவுகளாகவே அவற்றை ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார். சாக்தம் ஒரு காலத்தில் பாரததேசம் முழுவதிலும் தனித்துத் தனிநெறியாக விளங்கியது. அதன் சுவடுகள் சிற்சில பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. ஆயினும் பின்னர் மற்றைய நெறிகளுடன் கலந்து சமய வேறுபாடின்றி சக்தியையும் வழிபாடு செய்தல் முறை ஏற்பட்டு விட்டது. (சிவனின் தேவியாகவும், விஷ்ணுவின் சகோதரியாகவும், விநாயகன், முருகன் ஆகியோரின் தாயாகவும் பராசக்தி விளங்கும் போது வைதீக சமயங்களுக்கிடையே பேதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டது). தற்காலத்தில் புறச்சமயிகளும் கலந்து கொள்ளுமளவிற்கு நவராத்திரி விழா தேசிய விழாவாகி வருகின்றது. கோயில்கள், வீடுகள், பொது மன்றங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள், வேலைத் தலங்கள். கலாநிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களிலும் இன, மத, மொழி வேறுபாடின்றி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. நாட்டின் பல்லின, பலமொழி, பல்சமய மக்களிடையே ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டினையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தக் கூடிய சிறந்த ஊடகமாக நம் நாட்டில் நவராத்திரி விழா அமைவது மகிழ்ச்சிக்குரியது.
சக்தி என்றாலே ஆற்றல், வல்லமை, வலு, உந்துவிசை என்றுதான் பொருள் கொள்கின்றோம். இந்த வகையில் நோக்கும் போது, சக்தியின்றேல் எவருக்குமே வாழ்வில்லை, இயக்கமில்லை, என்ற நிலை வந்து விடுகின்றது. சக்தியை வேண்டி நிற்பவர்கள் இவர்கள்; சக்தியை வேண்டி நில்லாதவர் மற்றையோர் என்று குறிப்பிடுவதற்கில்லை. எல்லோருக்கும் சக்தி வேண்டியதே, என்பதே உண்மைநிலை. சைவ மக்கள், எல்லாவகைத்
( இந்து ஒளி ܓ
 
 

7/நன்கும் umó7
தோற்றத்திற்கும், இயக்கத்திற்கும், அவற்றின் வாழ்விற்கும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ள மகா சக்திக்குத் தெய்வ வடிவம் கொடுத்து மிக உயர்ந்த நிலையினை வழங்கி, விழாவெடுத்து, வழிபாடு செய்வதில் மனத்திருப்தி பெற்று வருகின்றனர். நவராத்திரி விழாவும் மகாசக்தியைப் பல்வேறு தெய்வ வடிவங்களில் கண்டு களித்து, வணங்கி வழிபட்டு, அழகு அலங்காரங்கள் செய்து, பக்தி செலுத்தி, கலைகளைச் சமர்ப்பித்து ஆராதிப்பதாகவே அமைகின்றது. இத் தெய்வீக விழாக்களையும், சடங்கு சம்பிரதாயங்களையும், பக்தியும் அழகும் சொட்டும் வண்ணம், பெருஞ் செலவு செய்து உலகியல் கண்ணோட்டத்தில் செய்து பார்ப்பதில் எத்துணை ஆனந்தமும் மனநிறைவும் அடைகின்றார்கள் என்பது அதில் ஈடுபாடுகொண்டு திளைத்தவர்களுக்குத்தான் புரியும். அகிலாண்ட நாயகியாகிய அம்பிகை விருப்பு வெறுப்பு அற்றவள், அளவிடமுடியாதவள், ஆத்மாவாக இருப்பவள். முதற் காரணமான சக்தி, சகல பிரும்மாண்டங்களையும் ஈன்ற தாய்; கருணைக் கடல்; ஞான உருவினள், பிரும்மானந்த வடிவினள், அத்தகைய சிறப்புக்களை உடைய அன்னையை, மூவுலகங் காப்பவளை, அபிராமவல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, பரம ஈஸ்வரியை, புவன ஈஸ்வரியை நாங்கள் பணிந்து வழிபடுவதும், விழாக்கள் எடுப்பதும் நமது மகிழ்ச்சிக்காகவும் உய்விற்காகவுமே ஆகும்.
மனிதர்களுக்கு இயல்பாகவே ஒரு வேட்கை இருந்து வருகின்றது. அது என்னவெனில், சகல வல்லமைகளும் பொருந்திய கடவுளர்களை, உலகியல் கண்ணோட்டத்தில் வைத்து அவர்களுக்குப் பிறந்த தினம், பூப்பு நீராட்டல், திருமணம் மற்றும் பல்வேறு சடங்குகள், விழாக்கள் ஆகியவற்றை மனிதர்களுக்குச் செய்யுமாப்போல நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என்பதேயாகும். மேலும் உலகியல் விடயங்கள் ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாகவும் அதிபதிகளாகவும் தெய்வங்களை நியமிக்கும் பாங்கும் மக்களிடையே இருந்து வந்துள்ளது. இந்த வகையிலேயே வீரத்திற்குத் துர்க்கையையும், செல்வத்திற்கு இலக்குமியையும், கல்விக்குச் சரஸ்வதியையும் பொறுப்பாளர்களாகவும் அதிபதி களாகவும் கொள்கின்றனர். இம்மூவரும் ஆதிபராசக்தியின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றனர். நவராத்திரி விழாவின் போது, துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு, முறையே முதல் மூன்று நாட்களும், நடு மூன்று நாட்களும், இறுதி மூன்று நாட்களும் விழா எடுக்கின்றனர். பக்தியுடன் அழகு அலங்காரங்கள் கொலுவைத்தல் கலை நிகழ்ச்சிகள், சுவையான உணவுகள் என்பன முக்கிய இடம்பெறுகின்றன. இவற்றிற்காகப் பணம், பொருள், காலம், சக்தி என்பன செலவுசெய்யப்படுகின்றன.
2) சித்திரபானு வருடம் ஆடி-புரட்டாதி)

Page 5
இவற்றை வீண் செயல்கள் என்றோ கேளிக்கைகள், களியாட்ட்ங்கள் என்றோ கூறுவதற்கில்லை. விளங்கிக் கொள்ள முடியாத இறைவனின் தத்துவங்களுக்கு, மனிதர்கள் தம்மால் இயன்ற வரைக்கும் அவற்றை உருவகப்படுத்தி, தமது அறிவிற்கெட்டிய வகையில், உலகியல் பார்வையில் விளக்கங்களைக் காண முயலும் கருமங்களாகவே அவை உள்ளன. மேலும் இவற்றிற்குரிய பிரதிபலன்களை இவற்றை நடத்துபவர்கள் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அம்பிகையின் கடைக் கண்பார்வை மட்டும் கிடைத்து விட்டாலே சகல ஐசுவரியங்களும் பெறப்பட்டுவிடும் எனும் அசையாத நம்பிக்கையும் மக்களிடம் நன்கு வேரூன்றியுள்ளது. மக்கள் ஒருவித இனம் புரியாத சுகத்தையும் மன நிறைவையும் அடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை. சிற்றின்ப சுகமாம் இருப்பினும், மனிதன் ஈற்றில் அடைய விரும்பும் பேரின்ப சுகத்திற்கு அவை வழிவகுக்கின்றன. எனவே நவராத்திரி விழாக்கள், மக்கள் மனங்களைப் பண்படுத்தி, வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர் கொள்ளச் செய்வதற்கும், “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்ற நிலைக்கு அவர்களை இட்டுச் செல்வதற்கும்; மண்ணில் தெய்வங்களின் அருள் பெற்று நல்ல வண்ணம் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஒளியை மக்கள் பெற்றுக் கொள்ளச் செய்வதற்கும் பெரிதும் உதவுகின்றன. எமது காலத்தில் இத்தகைய சைவப் பண்பாடு போற்றி வளர்க்கப்பட வேண்டியதும், பேணப்பட்டு அடுத்த சந்ததியினருக்கு வழங்கப்பட வேண்டியதும் நமது கடமையாகும். பாடசாலைகளில் நவராத்திரி விழாவினைக் கொண்டாடுவதன் மூலம் இக் குறிக்கோளை நன்கு அடைய முடியும். சைவப் பண்பாடு மாணவர்களிடம் வளர்க்கும் பொறுப்பினைப் பாடசாலைகள் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆண்டுதோறும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற அமாவாசையை அடுத்து முதலாவது நாள் பிரதமை தொடக்கம் நவமி ஈறாக உள்ள ஒன்பது நாட்கள் நவராத்திரி காலம் ஆகும். பத்தாம் நாள் தசமித் திதி, விஜயதசமி எனப்படும். விரதம் அனுட்டிப்பவர்கள் நவராத்திரி தொடங்குவதற்கு முதல் நாள் அமாவாசையன்று ஒரு நேரம் மட்டும் உணவுண்டு, தொடங்கிய நாளிலிருந்து எட்டு நாட்கள், பழம் அல்லது இளநீர் அல்லது பால் இரவில் அருந்தி மகாநவமியன்று முழுநாளும் உபவாசம் இருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று உணவு உட்கொண்டு பாரணம் செய்வர். இவ்வாறு மேற்கொள்ள இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு நேர உணவுண்டு, நவமியில் உபவாசம் இருந்து மறுநாள் தசமியில் உணவுட்கொண்டு விரதத்தை நிறைவு செய்வர். குறிப்பாகக் கல்வி கற்கின்ற மாணவர்கள் இவ்விரதத்தை அனுட்டிப்பதால் நல்ல பயனை அடைவர். விரத நாட்களில் அகத்துய்மை, புறத்தூய்மையுடையராய் கடவுள் சிந்தையுடன் வாழப்பழகிக் கொள்ளுதல் வேண்டும். தூய எண்ணங்கள், பண்பான பேச்சு நற்செய்கைகள் மூலம் தம்மை ஒரு சிறந்த மானுடன் ஆக்கிக் கொள்வது விரதத்தின் நோக்கம். இன்னொரு முக்கியமான அம்சம் நவராத்திரிக்கொலு வைத்தல் ஆகும். இது ஒர் அழகு அம்சம். நவராத்திரி விழாவில் அழகு ஆராதிக்கப்படுகின்றது. எல்லாமே ஒழுங்காக
(இந்து ஒளி

இருக்கும்போது அங்கு அழகு மிளிர்கிறது. பேரழகும் பேரெழிலுமாக காட்சி தருகின்ற அம்பிகையைக் கொலு பீடத்தின் நடுவில் வைத்து, சூழவும் அழகுப் பொம்மைகளையும் தெய்வச் சிலைகளையும், மற்றும் பொருட்களையும், ஒழுங்காக அடுக்கி வைத்து அழகு செய்து வழிபாடு செய்வர். மாலைவேளையில் அண்டை அயலார்களையும் அழைத்து அவல், கடலை, பலகாரங்கள், சுவை உணவுகள், பழங்கள் ஆகியவற்றை அம்பாளுக்கு நிவேதித்து, ஆடல் பாடல் நிகழ்த்தி வழிபடுவர்.
கிருஷ்ணன் நவராத்திரியின் முதல் நாள் கைடவன், மது என்னும் இரு அசுரர்களைக் கொன்றான். அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டி வைத்தமையைக் குறிப்பதாக நவராத்திரி நோன்பும், அதன் நினைவாகக் கொலுவில் பொம்மைகளை வைத்து அழகு செய்வதும் நடைபெறுவதாகக் கூறுவர்.
நவராத்திரி என்றும், தேவிபூசை என்றும், வான் விழா என்றும், ஆயுத பூசை என்றும், மகாநவமி நோன்பு என்றும் பற்பல பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. நவராத்திரி இறுதி நாளன்று புத்தகங்கள், பென்சில் பேனாக்கள், வீணை முதலிய இசைக் கருவிகள், மற்றும் கலையோடு தொடர்பான பொருட்கள் யாவற்றையும் பூசையில் வைத்து சரஸ்வதியை வழிபடுவர். அடுத்த நாள்தசமியன்று காலையில் இவற்றை எடுத்துப்படித்தும் எழுதியும், இசைக்கருவிகளை மீட்டியும் நாள் வேலையைத் தொடங்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. விஜய தசமியிலன்று பிள்ளைகளுக்கு ஏடு எழுதுதல் அல்லது வித்தியாரம்பம் செய்து வைக்கப்படுகின்றது. இதை ஒரு சடங்காகவே அன்று நிறைவேற்றுவர். நவராத்திரிகாலங்களில் அம்பாளைக்கும்பத்தில் பூஜிப்பர். பத்தாம் நாள் தசமியில் அன்று கும்பத்தை எடுத்து அதனுள் உள்ள நீரை ஓர் புனித இடத்தில் சேர்ப்பர். இதனைக் கும்பச்சரிவு என்பர். நவதானியங்கள் விதைக்கப்பட்டு அதன் மேலேயே கும்பத்தை வைப்பது வழக்கம். நவதானியங்கள் பத்தாம் நாட் காலையில் நன்கு முளைவிட்ட நிலையில் இருக்கும் இம் முளைகள் சூடுவதற்காக வழிபடுபவர்களுக்கு வழங்கப்படும்.
பத்தாம் நாள் மகாநோன்பு முடிவடைகின்றது. இதனை மானம்பு என்று திரித்துக் கூறுவர். கோயில்களில் வன்னி, வாழைவெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
அம்பாள் எழுந்தருளி வீதி வலம் வந்து, வாழைமரம் வெட்டும் வழக்கம் இருந்து வருகிறது. விஜயதசமியில் அம்பு போடுதல் என்று இதனைக் கூறுகின்றனர். மடமையின் உருவான மகிஷாசுரனை அம்பாள் அழித்த, வெற்றித்திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அறியாமையை அகற்றிய இந்த நன்நாளில் அறிவை, நாடிச் செல்லும் முதல்நிலையாக வித்தியாரம்பம் செய்தல் எத்துணை பொருத்தமான செயல் என்பதும் உணர்த்தற்பாலது.
அன்னையின் துர்க்கை வடிவம் எம்மிடமுள்ள அசுரக் குணங்களையும், விலங்கு மனத்தினையும், அரக்கத் தன்மைகளையும் அகற்றி எம்மைச் சாத்வீகம் நிறைந்த மனிதர்களாக்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழ்விக்கிறது. துர்க்கை தரும் வீரம் பாவங்களை விலக்குவதும்இந்த்
3) சித்திரபாத்திடும் ஆடி - புரட்டாதி)

Page 6
வேண்டிய துணிவினைத்தருகிறது. மகாலட்சுமி வடிவம் மனித வாழ்வில் ஒழிக்கப்படவேண்டிய வறுமையை அழிப்பதற்கு செல்வத்தை நமக்கு வழங்கி எம்மை வாழ்விக்கிறது. ஈதல் அறம் என்பதை உணர்ந்து செல்வத்தைப் பெற்று பிறரின் வறுமையையும் போக்கும்போதுதான் அன்னை மகாலட்சுமி மனம் மகிழ்கிறாள். சரஸ்வதி வடிவம், மனித வாழ்வில் இடம் பெறக்கூடாத அறியாமையை அகற்றி அறிவொளி ஏற்றி மக்களை வாழ்வாங்கு வாழ வழிவகுக்கிறது.
வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றும் மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை. வாழ்க்கையில் இம்மூன்றையும் அடைவது அதன் குறிக்கோள். இம்மூன்றினதும் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மனிதனில் நிகழும் போதுதான் அவன் பூரணத்துவம் பெற்ற முழுமனிதனாக, நிறைமனிதனாக இன்னும் சொல்லப்போனால் ஆளுமை நிறைந்த மனிதனாக ஆக்கம் பெறுகின்றான். வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சி மாத்திரம் ஒருவனைச் செம்மையான நிறை மனிதன் ஆக்கிவிடமாட்டா என்பது சைவ சமயக் கொள்கை. வீரத்தின் பெருவளர்ச்சியும், செல்வத்தின்
சரஸ்வதி துதி
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள் நின்றொளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாலை இருப்பிடங் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடிவாகிடப் பெற்றாள்.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - துTய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் இங்கு வாராது இடர்
சகலகலா வல்லியே சகல மான வர்க்கும் சகல பேறுகளும் தந்தருள் வாய்
கலைமகள் கடவுளே தண் தமிழ்த் தெய்வமே
சரஸ்வதியம்மையே சரணம் சரணம் சரணப்
(இந்து ஒளி (
 

பெருவிருத்தியும், கல்வியின் மிகைப் பெருக்கமும் விலங்கு இயல்பு கொண்ட மனிதன் ஒருவனில் ஏற்படுமாக இருந்தால், விளைவு நன்மையாக இருக்கமாட்டாது; மாறாக மனிதகுல நாசத்திற்கே வழிவகுப்பதாக அமையும். எனவேதான் சைவ சமயம் தெய்வங்களோடு வீரம் செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் பொருத்திக் காட்டுகிறது. வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் தெய்வத் திருவருளினால் கிடைக்கப் பெற்றமையை மனிதர்கள் உணர்வதாலும், அதற்காகத் தெய்வங்களுக்கு நன்றி தெரிவிப்பதாலும் ஏற்படுகின்ற நன்மை யாதெனில் வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பிரயோகிக்கும் போதும் பயன்படுத்தும் போதும், இறைவனை நினைத்து ஆற்றப்படும் கருமங்கள் நிச்சயம் கைகூடுவதோடு நல்ல விளைவுகளையும் தருகின்றன. எனவேதான், வீரம், செல்வம், கல்வி என்பவற்றின் வளர்ச்சி, இறை சிந்தனையில் அடிப்படையில், திருவருட் பேறாக தூய்மையின் வடிவமாக மனிதர்களில் ஏற்பட வேண்டுமென்று சைவ சமயம் வலியுறுத்துகிறது. இந்த வகையில் எழுந்ததுதான் நவராத்திரி வழிபாடும், விரதமும், விழாவும் ஆகும்.
மலரின் மேவு திருவே - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன் நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவழிக்கும் விழியும் கலகலவென்ற மொழியும் - தெய்வக்
களி துலங்கு நகையும் இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்
கமல மேவும் திருவே - நின்மேல்
காதலாகி நின்றேன் குமரி நின்னை இங்கே - பெற்றோர்
கோடியின்பம் உற்றார் அமரர் போல வாழ்வேன் - என் மேல்
அன்பு கொள்வை யாயின் இமய வெற்பின் மோத - நின்மேல் இசைகள் பாடி வாழ்வேன்
உலகம் புரக்கும் பெருமான் தன்
உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி உவகை அளிக்கும் பேரின்ப
உருவே எல்லாம் உடையாளே திலகம் செறிவாள் நுதற் கரும்பே
தேனே கனிந்த செழுங் கனியே தெவிட்டா தன்பர் உளத்துள்ளே
தித்தித் தெழும் ஓர் தெள்ளமுதே.
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 7
ஒரு நேர்முகம் நடுை F
էհեՈh նթԱn tFհ
சென்னைப் பல்கலைக்
கழகத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியராகப் பதினாறு வருடங்களுக்கு மேல் பணியாற்றி இளைப்பாறிய முனைவர் வை இரத்தினசபாபதி அவர்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அழைப்பில் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு வந்திருந்தார்.
வருடந்தோறும் நடைபெற்றுவரும், மாமன்றத்தின் தலைவராகவிருந்து அரும்பணியாற்றி மறைந்த அமரர் வே பாலசுப்பிரமணியம் நினைவுப் பேருரைத் தொடரில், அன்னார் அமரத்துவம் எய்திய பத்தாண்டு நிறைவு நிகழ்விலே சிறப்புப் பேருரையாற்றுவதற்காகவே சைவ சித்தாந்தப் பேராசிரியர் அழைக்கப்பட்டிருந்தார். . A
கொழும்பில் பல இடங்களிலும் மஸ்கெலியா, பலாங்கொடை ஆகிய மலையகப் பகுதிகளிலும் தனது அறிவுக் கடலிலிருந்து பல அரிய முத்துக்களை அள்ளித் தெளித்திருந்தார். இன்று வாழ்கின்ற சைவ சித்தாந்தப் பேரறிஞர்களுள் முன்வரிசையில் வைத்து மதித்துப் போற்றப்படும் ஒருவராக விளங்கும் முனைவர் வை. இரத்தினசபாபதி அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோது பொழிந்த கருத்துக்கள் சிலவற்றை இந்து ஒளிபெருமகிழ்ச்சியுடன் தருகிறது.
கேள்வி: தாங்கள் உரையாற்றும்போது இறை வணக்கம் கூறி, குருவையும் வணங்கியே தங்கள் உரைகளை ஆரம்பிக்கிறீர்கள். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என விளக்க முடியுமா?
பதில்: மாதா பிதா குரு தெய்வம். எங்களுக்கு அறிவைத் தந்து வளர்த்த குருவை நாங்கள் மறக்கக் கூடாது. திருப்பாதிரிப்புலியூரிலுள்ள ஞானியார் மடாலயத்தில் இளமைக் கல்வி பயின்ற நான், தவத்திரு ஞானியார் அடிகளின் நேர்முக மாணவன். இவரே என் குரு. அவரை எப்போதும் நினைந்து வணங்குகிறேன்.
கேள்வி: தங்கள் சொற்பொழிவுகளில் பூரீலறுநீ ஆறுமுகநாவலரை அடிக்கடி நினைவு கூருகிறீர்கள். அதன் காரணம் யாது?
பதில்: யாழ்ப்பாணம் பூநீலழரீ ஆறுமுகநாவலர் தந்த சைவ வினாவிடை, பாலபாடம் என்பவையே நான் படித்த முதற் புத்தகங்கள். அவரைப் போல சைவத்தையும் தமிழையும் வசன நடையில் தெளிவாக யாரும் எழுதவில்லை. அவரும் எனக்கு ஒரு குரு. அவர் பிறந்து வாழ்ந்த நாட்டிற்கு வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
(இந்து ஒளி
 

'த்தாந்த தத்துவத் DāF5FrbniboğL bir
D LDbbbfijI brfßhi bir
கேள்வி:
சைவ சமயம் என்றால் .. ?
பதில்: "சிவன் என்னும் நாமம் தனக்கே உரிய செம்மேனி எம்மான்’ என்றும், “சிவன் என்னும் ஒசையல்லதறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே"என்றும் அப்பர் அடிகளால் உணர்ந்து ஒதப்பெற்ற செம்பொருளாம் சிவத்துடன் சம்பந்தமாகும் திருவுடைச் சமயமே சைவ சமயம்.
கேள்வி: சைவ சமயத்தைச் சார்ந்த பல பிரிவுகள் இன்றும் வழக்கில் உள்ளனவா? பதில்: சைவ சமயம் சார்ந்த பிரிவுகள் பலவாயிருப்பதும், தென் தமிழ்நாட்டு மக்களால் அறிவதற்குரியதாகவும், அடைந்து அனுபவித்தற் குரியதாகவும் வழக்கிலுள்ளன. இப்பெரு நெறியானது சைவ சித்தாந்தச் செந்நெறியே.
கேள்வி:
சைவ சமயத்தின் அனுபவ நிலை.?
பதில்:
அவனேதானே ஆகிய அந்நெறி'என்று இதனை எடுத்துக்கூறிய மெய்கண்டார் இந்நெறியின் அனுபவ நிலையை "ஏகன் ஆகி இறைபணிநிற்றல்"என்று எடுத்துக்காட்டிச் சிறப்பித்தார்.
கேள்வி: சைவசித்தாந்தப்பெருநெறி எனத் தாங்கள் அடிக்கடி குறிப்பிடுவதுபதில்: w வேதங்களின் உயிரோட்டமாக அமைந்துள்ள மகாவாக்கியங்களை ஏற்றுக் கொண்டு அனுபவப் பொருளை வழங்கியும் ஆகமங்களை உடன்கொண்டு அமைக்கப்பெற்ற அனுபவக் கருவூலங்களின் தொகையாக விளங்குவதே சைவ சித்தாந்தப் பெருநெறி. இது சம்பந்தப்பட்டதாக உங்கள் நாட்டைச் சேர்ந்த வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த சட்டத்தரணியும், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவருமான திரு. இ. நமசிவாயம் அவர்கள் எழுதிய "சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிகங்களும்-ஒரு விஞ்ஞான நோக்கு”என்ற அருமையான நூலை இளம் சமுதாயம் படித்து உணரவேண்டும்.
கேள்வி:
தத்துவத்தின் தனித்துவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
பதில்: தத்துவம் என்பது எந்தவொரு நிகழ்ச்சியையும் காரண காரியத்தோடு தெளிவாக அறிந்து கொள்ளுவது. பொருளை உண்மைத் தன்மையுடன் அறிந்து கொள்ளல். அறிவு பலருக்கும்
5) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 8
பலவிதமாகக் காணப்படுகின்றது. அறிவில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதுபோல, அணுகுமுறையிலும் வித்தியாசம் காணப்படுகின்றது. ஆகவே, அறிவின் வளர்ச்சியைக் கண்டு கொள்வது தத்துவம். எது சரியான அறிவு, எது பிழையான அறிவு என்பதைத் தத்துவம் காணமுயற்சிக்கிறது.
கேள்வி: உலக தத்துவத்தைக் கற்றுக் கொள்ளும்போது சைவ சித்தாந்தக் கோட்பாட்டோடு முரண்படவில்லையா?
பதில்: முரண்பாடு இல்லை. வேறுபாடு காணப்பட்டது. முரண்பாடு வேறு, வேறுபாடு வேறு. ஆணும் பெண்ணும் முரண்பாடு இல்லை, வேறுபாடுதான். முரண்பாடு ஒன்றை ஒன்று அழித்துவிடும். அறிவாராட்சியின் மூலம் உலக சிந்தனையாளர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். ஆனால், எமது தத்துவம் அனுபவத்திலிருந்து வருகிறது. எமது முன்னோர் அருளாளர்களாக இருந்தார்கள். அவர்கள் உணர்ந்தவற்றை நாம் காண்கிறோம்.
கேள்வி: சைவ சமய தத்துவங்கள் இளம் சமுதாயத்திற்கு எவ்வகையில் உதவுகின்றன?
பதில்: இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்தச் சைவ சமய தத்துவங்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக இளம் சமுதாயத்தினர் மத்தியில் சைவ சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் இறை தத்துவத்தை வெளிக்கொணர முடியும். உலகின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, இளம் சமுதாயத்தினரும் தம்மை மாற்றி அமைத்துக் கொள்ளுகின்றனர். இவ்வாறு எமது மதத்தின் தத்துவங்களையும் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அவர்களது மத்தியில் புகுத்துவதன் மூலம் நல்லதோர் புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும்.
கேள்வி: இளம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, பொதுவாக அனைவருமே சைவ சித்தாந்தத்தில் தெளிவுபெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சொல்வீர்களா? பதில்: சைவ சித்தாந்தத்தில் தனிமனித ஈடேற்றத்திற்குரிய வழிமுறைகள் பலவற்றை எடுத்தியம்பியுள்ள போதிலும், இதற்குள் காணப்படும் பல விடயங்களின் உட்பொருள்கள் குறித்து, இன்றைய சமுதாயத்தினர் அறியாதவர்களாகவே உள்ளனர்.
எந்தவொரு செயற்பாடும் காரண காரியமின்றி இடம்பெறாது. நாம் எந்தச் செயற்பாட்டை எடுத்துக் கொண்டாலும், அதற்கு ஒரு காரணம் உண்டு என்பதனையே தெளிவு படுத்துகின்றோம். அத்துடன் எந்தவொரு செயற்பாட்டையும் காரண காரியத்துடன் தெரிந்து கொள்ள முற்பட்டால்தான் அது நீடித்து நிலைத்தவொன்றாக இருக்கும்.
ஒரு மாணவன், ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை எவ்வித சந்தேகங்களுமின்றி காரண காரியங்களுடன் தெரிந்து கொள்ள முற்படும் போதுதான் குறித்த பாடம் தொடர்பான தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்கிறான். இதைப் போன்றுதான் சைவ
(இந்து ஒளி

சித்தாந்தம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுறக் கற்றுக் கொள்ளும்போது வாழ்வியலின் தத்துவத்தை அவன் விளங்கிக் கொள்கிறான்.
"எண்ணம் போல வாழ்க்கை மனம் போல மாங்கல்யம் 99. என்றதோர் பழமொழி உண்டு. இதன் மூலம் என்றும் நல்லதையே நினைத்தால், நல்லதே நடக்கும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. ஒரு பொருளை அடையவேண்டும் என்ற குறிக்கோளுடன் விடாப்பிடியுடன் செயற்படும்போது நினைத்த பொருள் கிடைக்கும் என்பதையே நாம் வெளிப்படையாகக் காண்கின்றோம்.
மேலும், உலக தத்துவத்தில் கடவுள் ஆன்மாக்களைத் தன்னிடம் அழைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், சைவ சித்தாந்தத்தில் ஆண்டவன் எம்முள்ளே இருக்கின்றான் என்று கூறப்படுகின்றது. உங்களுக்கு உள்ளேயிருக்கின்ற பரம் பொருளாகவே அது அமைந்துள்ளது.
கேள்வி: ஒம் என்ற பிரணவ மந்திரத்தைப் பற்றிச் சொல்வீர்களா?
பதில்: ஒம் சொல்லாத எந்த விஷயமும் செயற்பாட்டுக்கு வராது. ஒளியைத் தரும் ஜெனரேட்டர் தானாக இயங்க மாட்டாது. இயங்குவதற்கு ஒரு கருவி இருக்கிறது. அதுபோலவே “ஓம்’ எனும் பிரணவ மந்திரம். அதைச் சொன்னால் எந்தவொரு விஷயமும் ஆற்றல் பெறும். அதற்கொரு மகத்துவம் உண்டு.
கேள்வி: பல வாழ்க்கை நடைமுறைகள் உண்டு. அவற்றுள் ஒன்று பற்றிக் கேட்க விரும்புகின்றேன். திருமணத்தின்போது மணமக்களை அறுகு, அரிசி போட்டு ஆசீர்வதிக்கும் நடைமுறை பற்றிச் சொல்வீர்களாக?
பதில்: மணமக்களை அரிசி மட்டுமல்ல நெல் போட்டும் ஆசீர்வதிக்க வேண்டும். வாழை இலை மீது கும்பம் வைக்கும் பொழுது நெல்லைப் போட்டு, அதன்மேல் அரிசியையும் போட்டு அதன் மேலே கும்பம் வைக்கும் வழக்கமும் உண்டு. மணமக்கள் வாழ்க்கையிலே நெல்லைப் போல விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்காகவே அவ்விதம் செய்யப்படுகிறது. உமியை நீக்கினால் அரிசியைப் பெறுகிறோமல்லவா? இது தவிர, அரிசியைச் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். சமையல் என்றால் பக்குவப்படுதல் என்று பொருள். சமையல் பாத்திரத்திலுள்ள ஓர் அரிசியை எடுத்து அழுத்திப் பார்த்துவிட்டு வெந்து போய் விட்டது என்று சொல்கிறோம். அரிசியின் உள்ளே தடிப்பாகவும் வெளியே அவிந்தும் இருந்தால் இன்னும் வேகவில்லை என்கிறோம். உள்ளே தடிப்பாக இருப்பதுதான் பரம்பொருள். அதனைத் தன்னுள்ளே வைத்துக் கொண்டு மேலே மூடிக் கொண்டு இருப்பது அரிசி. அதுவே ஆன்மா. உள்ளே இருக்கின்ற பரம்பொருளாகிய இறைவனும், அவனை மூடியுள்ள ஆன்மாவும் சமைத்தல் மூலம் பக்குவப்படுதல் என்ற வகையில் இரண்டறக் கலப்பதுபோல மணமக்களுடைய வாழ்க்கை இருக்க வேண்டும். நெல்லாக இருக்கும்பொழுது இணைபிரியாது வாழ வேண்டும். வேற்றுமை வரக்கூடாது; இரண்டு பேருமே இணைந்து ஒருவரோடு ஒருவர்
3)
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 9
விட்டுக் கொடுத்து வாழ்தல் வேண்டும்-இதற்கு இலக்கணம்தான் அரிசி. நெல்லாக இணைதல், அரிசியாகப் பக்குவப்படுதல் என்பதே தத்துவம்.
அருள் அனுபவம் பெற்றவர்களாலும், வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள், வாழ்க்கை இதுதான் என்று புரிந்து கொண்டவர்கள், வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர்கள்,
வயதில் மூத்தவர்கள் - என்போர்களாலும் ஆசீர்வாதம் வழங்கப்படுவதில் தனித்துவம் இருக்கிறது.
கேள்வி:
அறுகரிசி போடும் முறை பலவாறு வேறுபடுகிறது. எது சரியான முறை?
பதில்: இறைவனை வணங்கும் பொழுது முதலில் முடியைப் பார்க்கக் கூடாது. முதலில் நம்மைக் காக்கும் திருவடியைப் பார்த்துவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று முடியில் நின்று, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கித் திருவடிக்கு வரவேண்டும். இப்படி மூன்றுமுறை பார்த்தல் வேண்டும். இறைவனை எப்படிப் பார்த்து ஆனந்திக்கிறோமோ அதுபோலவே மணமக்களையும் கருதி ஆசீர்வதிக்கும் முறையே இதுவாகும்.
கேள்வி: தேவாரம் பாடி முடிந்ததும் அரஹர நம பார்பதி பதயே என்று ஏன் சொல்லுகிறோம்? . M
பதில்: அரஹர என்பது என்னுடைய ஆன்மாவில் இருக்கின்ற அழுக்குககளை அரித்து அரித்து நீக்குபவன் என்று அர்த்தம். நமஹ சொல்லுக்கு வணக்கம் என்றும் பொருள். இறைவியில்லாத இறைவனில்லை. உமையொருபாகன் என்று சொல்லப்படுவதுண்டு.
G) () () () () () () () () G) () () () () () () () () () () () (
O நவராத்தி
அம்பிகை பராசக்தியானவள் இவ்வொன்பது நாட்களிலும் ஒன்பது ரூபம் தாங்கி, ஒன்பது மண்டலங்களுக்கும் குறைகளை விலக்கிகூேடிமத்தை அளிக்கச் சிம்மாசனமேறிக் கொலு வீற்றிருப்பதை நவராத்திரி வைபவமாகக் கொண்டாடுகிறோம். பத்தாவது நாளில் விஜயதசமியன்று அசுரனைக் கொன்று வெற்றி கொண்டாடுகிறோம். இதேமாதிரிஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்பது துவாரங்கள் உள. சக்தியின் அணுக்கிரகத்தாலேயே நவத்துவாரங்களும் பயனுள்ளதாகின்றன. சக்தியும் நவசக்தியாகிப் பிரதிபலித்துக் கண், காது, மூக்கு, முதலியவை மூலமாக மனிதர்களைத் தங்கள் வேலைகளைப்பார்க்கும்படி செய்கிறது. நவ சக்திகளில் ஏதேனும் ஒன்று குறைந்துவிட்டாலும் அதனால் மனிதன் பாதிக்கப்படுகிறான். தும்மல், விக்கல் முதலியன இக்குறைவின் அறிகுறிகளே. நவசக்திகளும் செவ்வனவே வேலை செய்தால்தான் மனிதன் நோயற்றுவாழமுடியும். விஜயதசமியன்றுபத்தாவது நாளை வெற்றி நாளாகக் கொண்டாடுகிறோம். அதேமாதிரி மனிதனுக்குப் பத்தாவது துவாரமாகிய கபாலம் இருக்கிறது. இவ்வொன்பது துவாரங்களையும் விட்டு வெற்றிக்காகப் பத்தாவது துவாரத்தின் வழியாகத்தான் வந்த இடத்தைச் சேருவதே வெற்றி இது குழந்தை
LLLLL LL LL LLL LLLL c L c L (இந்து ஒளி (

பார்வதியின் கணவன். என்னுடைய ஆன்மாவில் இருக்கின்ற அழுக்கை அழிப்பவனும் பார்வதிக்குக் கணவனாக இருப்பவனுமான இறைவனுக்கு வணக்கம் சொல்கிறேன் என்பதற்காகவே அப்படிச் சொல்கிறோம்.
கேள்வி: நிறைவாக, இன்றைய இளைஞர்களுக்குத் தாங்கள் தரும் அறிவுரை.
பதில்: காலம் மாறுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது தொலைபேசி கிடையாது. என் மகன் பிறந்த பின் தொலைபேசியுடன் வளர்ந்தான். இப்போது என் பேரன் கணனியுடன் வாழ்கிறான். விஞ்ஞான ரீதியாக இவை நன்மைதரும் மாற்றங்கள். ஆனால் அவை எங்கள் வெளிப்புற வாழ்க்கை வசதியை உயர்த்துகின்றன. எமக்குள் இருக்கும் பரம்பொருளை நினைந்து எங்களை உண்மையில் வளர்ப்பது, உயர்த்துவது சமயம்.
திரு. நமசிவாயம் ஐயா அவர்களின் வழியில் சைவ சித்தாந்தத்தை அறிந்து தெளிந்தவர்கள் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவங்களை இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இது காலத்தின் தேவை. சைவ சித்தாந்தத்தின் பொருளை இளம் சமுதாயம் அறிந்து தெளிந்து பயன்பெற வேண்டும்.
(சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் வை. இரத்தினசபாபதி அவர்களின் அறிவுக் கடலிலிருந்து இன்னும் பல முத்துக்கள் குவிந்தன. தொடர்ந்து வரும் இந்து ஒளி” சஞ்சிகையில் அவை பிரசுரமாகும்.)
Ꭷ © ᎶᎧ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ © © © © © ©
திரி மகிமை
பிறந்தவுடன் தலையில் லேசாக மூடப் ஆ பட்டிருப்பதும் நாம் அறிந்ததே.
நமது நாட்டிலே சக்திக் குத்தான் அதிக மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப் / பட்டிருக்கிறது. “அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்" என்பதுமுதுமொழி. மற்றும் பூசையில் அபீதகுசாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் என்று அம்பிகைக்கு முதல் இடம் தரப்பட்டுள்ளது. சாதாரணமாக நடைமுறையில் எதையாவது கேட்டால் வீட்டில் அம்மா என்ன சொல்லுகிறாள் என்று கேட்பது சகசம். பொதுவாகத் தாயின் சேவைக்கு ஈடு செய்வது கடினம். தாய் தன் செளக்கியங்கள் அனைத்தையும் குழந்தைக்காகக் குறைத்துக் கொள்வது கண்கூடு.
இத்தகைய பெருமை பெற்றவள் தாய். தாயாகப் போற்றப்படும் அன்னை பராசக்தியை நவராத்திரிநாளிலே போற்றித் துதிப்போமாக.
(ஆதாரம் : சிவதொண்டன்)
3Ꭷ Ꮚ Ꮚ Ꮚ Ꮚ © Ꮚ Ꮚ Ꮚ Ꮚ © © © © © Ꮚ Ꮚ Ꮚ © © © ©
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி (ד.

Page 10
கடந்த ரிசப்டம்பர் 72ம் திகதியன்ற கொழு சட்ட மாணவர்இந்து மகாசபையின் நக் பிரதம அதிதியாகக் கலந்து 67காண் க. வி. விக்னேஸ்வரன் ஆற்றிய 2.60/7.
நக்கீரம் 2002 மலர் வெளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் கலாசூரி திரு. சிவகுருநாதன் அவர்கள் தலைவராகப் பணியாற்றும் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடக்கும் இக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இங்கு மூன்று சட்டத் தலைமுறைகள் சங்கமமாகி உள்ளன இன்று. 1971ம் ஆண்டில் முதன்முதலில் சட்டக் கல்லூரியில் தமிழில் நான் சட்டம் பயிற்றுவிக்கும் போது என் மாணவ சிரோண்மணிகளில் வயதில் கூடியவராக, ஏன் என்னிலும் வயது முதிர்ந்தவராக, சமுதாயத்தில் நற்கீர்த்தி பெற்றவராக, எல்லோர் நன்மதிப்பையும் பெற்றிருந்த மாணவர் அன்றைய தினகரன் பத்திரிகை ஆசிரியர். அவர்தான் இன்றைய கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர். அவரின் தற்கால மாணவர்கள்தான் இன்று நக்கீரம் வெளியிடுகிறார்கள். ஆகவே மூன்று சட்டத் தலைமுறைகள் முன்னின்று நடத்தும் ஒரு முகப்பு விழாவாக இவ்விழா அமைகிறது.
இத்தனை பெருமையாக இவ்விழா நடந்தாலும் சட்டக் கல்லூரியில் தமிழ் பேசும் சட்ட மாணவர்கள் என்று கூறக் கூடியவர்கள் மிகச் சிலரே. அதுவும் இந்து மாணவர்களை விரல் விட்டே எண்ணி விடலாம். தமிழ்ப் பேசும் மாணவர்கள், இந்து மாணவர்கள், குறைவாக இன்று சட்டக் கல்லூரியில் சேர்வதன் காரணிகளை அறிந்து கூடிய மாணவ மாணவிகள் சேர ஆவன செய்ய வேண்டும் என்று நான் நக்கீர ஆசியுரையில் கேட்டுள்ளேன். தமிழ்ச் சங்கம் கூட இது பற்றி ஆராய வேண்டும். உயர்தர பொதுத் தராதரப் பெறுபேறுகளின்படி நல்ல முறையில் சித்தி அடைந்தவர்கள் கூடச் சட்டக் கல்லூரி புகுமுகப் பரீட்சையில் போதிய புள்ளிகள் பெறாதுவிட ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா என்று நாங்கள் ஆராய வேண்டும். மும்மொழிப் பரீட்சை ஆனதால் புள்ளிகள் கொடுக்கும் முறையில் மூவிதப் பரீட்சை நடத்துனர்களுக்கும் இடையில் வேற்றுமைகள் இருக்கின்றதா என்று அவதானிக்க வேண்டி வரும். அவ்வேற்றுமைகளைக் களைந்து சமநிலைக்குக் கொண்டு வர ஏதேனும் செய்ய வேண்டுமா என்று ஆராய வேண்டியிருக்கும். புகுமுகத் தேர்வுப் பரீட்சைக் கேள்விகளுக்குத் தமிழ் பேசும்
இந்து ஒளி (
 

துவம் வாழ்ந்த
துமதம்
கீரம் - 2002 மலர் 67வரிையிட்டு விழாவில் ட உயர் நீதிமன்ற நீதியரசர் 67களரவ
மாணவர்கள் போதியவாறு விடையிறுக்கிறார்களா, அவர்களின் அறிவு மற்ற மாணவர்களின் அறிவிற்கு ஒப்பாக அமைய அவர்களுக்குப் போதிய பயிற்சி கிடைத்ததா என்பதெல்லாம் ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
மேலும் இதுகாறும் போரின் நிமித்தம் மாணவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து வரப் பயப்பட்டார்கள். சட்டத்தரணிகளாகச் சித்தி அடைந்தாலும் தத்தமது இடங்களில் சட்டத் தொழிலில் ஈடுபட முடியுமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது ஏங்கினார்கள். ஆனால் இன்று நிலைமை வேறுபடத் தொடங்கியுள்ளது. வடக்கு, கிழக்கில் போதிய சட்டத்தரணிகள் இல்லாத குறை ஏற்பட்டுள்ளது. அதை நிவிர்த்தி செய்யத் தமிழ் மாணவ மாணவிகள் முன்வர வேண்டும்.
நான் சட்ட மாணவனாக இருந்த காலத்தில் அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன் இந்து மாணவர்கள் கணிசமான தொகையாகச் சட்டக் கல்லூரியில் இருந்தார்கள். நான் சட்டக் கல்லூரிச் சகல மாணவர் சங்கத் தலைவராக இருந்த காலத்தில்தான் இந்து மகாசபை முதன் முதலில் தொடக்கி வைக்கப் பெற்றது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு, ஆர்வமிக்க இந்து மாணவர் தொகை அன்று இருந்தது. அன்றைய நிலைமை வேறு. இன்றைய நிலைமை வேறு. வருங்காலத்தில் வடக்கு, கிழக்கு மாணவ மாணவியர்க்குத் தமிழில் சட்டம் கற்கக் கூடிய ஒரு சட்டக் கல்லூரி அல்லது சட்டபீடம் வடக்கு, கிழக்கில் அமைக்க வேண்டிய நிலைமை வெகு விரைவில் வரும் என நம்புகிறேன்.
இந்து மாணவர்கள் குறைவாகச் சட்டக் கல்லூரியில் சேர்வதால் இந்து மதத்தின் தாக்கம் இன்று உலக சமுதாயத்திலும் குறைவடைந்து விட்டது என்று கொள்ளல் ஆகாது. 1998ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் பெல்ஜியத்திலும் பிரான்சிலும் முறையே நடந்த இந்து மகாநாடுகள் சிலவற்றிற்குச் சென்றிருந்தேன். மேலை நாட்டவர்கள் எந்த அளவுக்கு எங்கள் மதத்தை நன்கறிந்து கிரமப்படி பூஜைகள், அபிஷேகங்கள், பஜனைகள் நடத்தி வருகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டேன். அதன் பின் 2000மாம் ஆண்டு இங்கிலாந்தில் தமிழில் நடந்த இந்து மதத்தவர் கூடலில் கலந்து கொண்டேன். தமிழர்கள் தமிழை மறந்தாலும் தங்கள் மதங்களை மறக்கவில்லை என்பதை
8) சித்திரபானு வருடம் ஆடி - புரட் டாதி)

Page 11
அங்கு நான் அறிந்து கொண்டேன். முக்கியமாகத் தமிழ் தெரியாத இளம் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் என்னிடம் இந்து மதம் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டதில் இருந்து அவர்களுக்குத் தமிழ் அறிவு குறைந்துள்ளதே தவிர சமய அறிவும் இந்து மதம் பற்றி அறிய ஆர்வமும் நிறைய இருப்பதைக் கண்டு கொண்டேன். வெகு விரைவில் இந்து மதம் உலகளாவிய ரீதியில் நிலைபெறப் போகின்றது என்று எனக்குள் நான் நினைத்துக் கொண்டேன்.
அதெப்படி ஒரு சில இங்கிலாந்து நாட்டு மாணவ மாணவியரின் கருத்துக்களை அறிந்ததும் இந்து மதம் உலகளாவிய ரீதியில் நிலைபெறப் போகின்றது என்று கற்பனை செய்து விட்டீர்கள் என்று நீங்கள் கேட்கக் கூடும். அந்த மாணவ மாணவியர் கிறிஸ்தவ மதத்தை நன்றாக அறிந்தவர்கள். பைபிளில் அடங்கியவை அவர்களுக்குப் பொதுவாகத் தெரிந்திருந்தது. அதே நேரத்தில் இன்று நடைமுறையில் இருக்கும் கிறிஸ்தவ மதங்கள் கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைப் போதிப்பன அல்ல என்றும் அறிந்திருந்தார்கள். உண்மையை இன்னும் கிறிஸ்தவர்கள் தேடுகிறார்கள்; ஆகவே நாங்கள் எங்கள் மதத்தின் உண்மையை அவர்களுக்கு உணர்த்தலாம் என்ற எண்ணம் அம்மாணவ மாணவியரிடம் நிலைத்திருந்ததைக் கண்டேன். ஐரோப்பிய கண்டத்தில் நான் சந்தித்த ஐரோப்பியர்களிடமும் அதே ஒரு நிலை இருப்பதைக் கண்டேன். இந்து மதக் கோயில்களுக்கு வெள்ளையர்கள் பலர் செல்வதைக் கண்டேன். வழிபடுவதைக் கண்டேன். இன்று மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான அரசியல் நிலையினை அவதானித்தேன். அதனால்தான் கூறுகிறேன், பல காரணங்களுக்காக இந்து மதம் உலகளாவிய ரீதியில் நிலை பெறப்போவது நிச்சயம் என்று நான் கூறும் காரணங்களை நீங்கள் ஏற்பீர்களோ தெரியாது. உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி ஏற்ற நாள் தொடக்கம் நான் சர்ச்சைக்குரியவனாக ஆகிக் கொண்டிருக்கிறேன். இது நக்கீர மலர் வெளியீடு என்பதால் சர்ச்சைக்குரியதைக் கூற உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன். என் மனதில் பட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலாவதாக மத்திய கிழக்கில் தோன்றிய மதங்கள் இரண்டும் இன்று போட்டி போட்டுக் கொண்டு ஒன்றையொன்று விழுங்கக் காத்திருக்கின்றன. கடைசியாக வந்து உலகில் நிலைத்திருக்கும் இஸ்லாமிய மதம் அடிப்படையில் அன்பினைப் போதித்தாலும் அடிதடியில் இறங்கவும் பின் நிற்பதில்லை. பலாத்காரத்தின் மூலம்,பலப்பிரயோகத்தின் மூலமே இஸ்லாமிய மதம் மத்திய கிழக்கிற்கு வெளியில் நிலை பெற்றது. இப்பொழுது பயங்கரவாதம் கூட ஆயுதமாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதம் பல சமயச் சண்டைகளை நூற்றாண்டு காலமாகச் சந்தித்த மதம். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் துப்பாக்கி ஒரு கையில் பைபிள் மறுகையில் கொண்டு வந்தே தமதுமதத்தைப் பரப்பினார்கள். அம்மதமும் அடிப்படையில் அன்பில் திளைத்த ஒருவரின் பெயரைச் சொல்லி ஏற்பட்டாலும் காலக்கிரமத்தில் அகந்தை உருவே எடுத்திருக்கிறது. அகந்தையில் அகப்படும் ஒவ்வொருவரும் அடிபட்டே ஆக வேண்டும் என்று ஒரு
(இந்து ஒளி

நியதியுள்ளது. நாம் யாவரும் இறைவனின் குழந்தைகள் என்று கூறாது "நாம் இஸ்லாமியர்”, “நாம் கிறிஸ்தவர்” ஏன் “நாம் இந்துக்கள்” என்று கூடச் சண்டிக்கட்டுக் கட்டிக் கொண்டு நிற்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்தே ஆகவேண்டும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்த காரியங்களை ஈராக்கிலும் செய்யலாம் என்று எண்ணுகிறது. இது பெரும் அழிவில் முடியப் போகிறது. தங்கள் தவறுகளை இரு சாராரும் அறிந்து திருந்தாது போனால் போர் மூள்வது நிச்சயம். அடிப்படையில் இப்போர் பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கும் பாரம்பரிய இஸ்லாமியர்களுக்கும் இடையேதான் நடக்கவிருக்கிறது. இடையில் வந்த இவ்விரு மதங்களும் அன்புநெறியைக் கடைப்பிடிக்காததால் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை நாடும் எவரும் அடிதடியை நாடும் மதங்களை விரும்ப மாட்டார்கள். போரை விரும்பாதவர்கள் அஹிம்சையில் ஊறிய மதங்களையே நாடுகிறார்கள். எனவேதான் இன்று பெளத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் மேலைத்தேயத்தவரிடையே பலத்த வரவேற்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. யோகம், தியானம், அபிஷேகம், மந்திர உச்சாடனம், பஜனை இவை யாவும் மேலைத் தேயத்தவரைக் கவர்ந்துள்ளன. இறை நம்பிக்கை கொண்ட பல கிறிஸ்தவர்கள் வெறுமனே கிறிஸ்தவ ஆலயங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் டாம்பீக உடை அணிந்துசென்று விட்டு வந்து ஒரு ஜட வாழ்க்கையை நடத்துவதை வெறுக்கிறார்கள். இறை தொடர்பிற்கு இறை வந்தனத்திற்கு வேறு வழியில்லையா என்று ஏங்குகிறார்கள்.
இந்துமதம் ஒரே மனோநிலையைக் கொண்டவர்களுக்காக உருவாகவில்லை. பல நூற்றாண்டு காலமாக விருத்தி அடைந்து, பல விதமான ஞானிகளைக் கண்டுள்ளதால் பல தரப்பட்ட மக்களின் மனோநிலையை அறிந்து அதற்கேற்ப அம் மதம் வளர்ந்துள்ளது. ஞானம், பக்தி, கர்மம் என்று சமய மார்க்கங்களைப் பாகுபடுத்திக் கொடுத்தபோது, அறிவில் மயங்கி தர்க்க நியாயப்படி, அறிவின்படி வாழ்க்கையைக் கொண்டு நடத்துவோருக்கு ஞான வழியையும், அன்பின் அரவணைப்பில், உணர்ச்சிகளின் உத்வேகத்தில், வாழ்க்கையைக் கொண்டு நடத்துவோருக்குப் பக்தி வழியையும், அறிவு அல்லது உணர்ச்சிகளின் தாக்கத்தால் அரவணைக்கப்படாதவர்களுக்கு உடல் வழி சேவையை, பணிகளை மையமாகக் கொண்டு கர்ம வழியினையும் வகுத்துக் கொடுத்திருந்தார்கள் ஆதிஞானிகள். இன்றும் அப் பிரிவு ஏற்புடைத்து. பொதுவாகக் கூறுவதானால் ஞானவழியைப் பின்பற்றுகிறது புத்தசமயம். பக்தி வழியில் பிறந்ததே கிறிஸ்தவ சமயம். சமய அனுஷ்டானங்களை முறைப்படி நடத்த வேண்டும் என்றும் கட்டுப்பாட்டுடன் சமயத்தை வகுத்து இன்னின்னதை இப்படிச் செய்ய வேண்டும் என்று கர்ம வழியில் ஈடுபட்டதே இஸ்லாம் எனலாம். இவை எல்லாம் மார்க்கங்கள். இறைவன் அம் மார்க்கங்களுக்கு அப்பால்பட்டவன்; ஆகவே எம் மார்க்கமும் சம்மதமே என்ற கொள்கையை இந்து மதம் கொண்டிருந்தது. அதனால்தான் பிறமதங்கள் இந்திய மண்ணில் வெகுவாக வேரூன்ற முடியுமாய் இருந்தது. ஆனால் வாள்
9) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி )

Page 12
முனையிலுந் துப்பாக்கி முனையிலுந்தான் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் பரப்பப்பட்டன. தாம் உண்மை என்று நினைத்ததே உண்மை. வேறெவருக்கும் உண்மை தெரிந்திருக்கு ஞானமில்லை என்ற கருத்தில், தம்மை எதிர்த்தவர்கள் எல்லோரும் அஞ்ஞானிகள், அறிவற்றவர்கள், அவர்களைக் கரைசேர்க்க தமது மதத்தைக் கட்டாயமாக அவர்களிடையே புகுத்த வேண்டும் என்ற பலாத்காரத்தின் அடிப்படையிலேயே தமது மதங்களைப் பரப்பினார்கள். இவர்கள் இப்பொழுதும் அதையேதான், வேறு ஒரு வழியில் சிலர் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று கூறலாம். பணம், பதவி, கல்வி, அதிகாரம் என்று எதை எதையோ கொடுத்து ஆசைகாட்டி மக்களைத் தமது மதங்களுக்கு இழுப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். மக்களின் அறியாமை, வறுமை இவற்றை மையமாக வைத்தே மதமாற்றம் நடைபெறுகிறது. என் கிறிஸ்தவ இஸ்லாமிய சகோதரர்கள் இங்கு இருப்பதை நான் அறிவேன். அவர்கள் என்னைப் பிழையாகக் கணிக்கக்கூடாது. அன்பிலும் பண்பிலும் உருவாகியதே கிறிஸ்தவமும் இஸ்லாமிய மதமும். இவை இரண்டுமே அடிப்படையாளர்களிடம் அகப்பட்டு இன்று அழிவை நோக்கிச் செல்கின்றன என்றுதான் சொல்ல வருகிறேன். அன்பில் இருந்து விடுபட்டு அகந்தையில் மதம் நிலைபெற்றால் எது நடக்கும் என்றுதான் நான் கூறுகிறேன். கிறிஸ்துவின் போதனைகள்ையும் நபிபெருமானின் போதனைகளையும் விரும்பி சிறு வயதிலிருந்தே ஒரளவுக்கு அறிந்து கொண்டவன் நான். மத ஆசிரியர்கள் யாவரும் அன்பு என்ற ஒரே உண்மையைத்தான் போதித்தார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளாதவன் நான். ஆனால் பலாத்காரத்தின் அடிப்படையில் லெளகீக நன்மைகளில் நிறுவப்பட்டும் அடிப்படையில் எதுவும் பலகாலம் நிலைப்பதில்லை என்ற கருத்திலும் ஐயப்பாடு கொள்ளாதவன் நான். அதனால்தான் கூறுகிறேன், பலாத்காரத்தை நோக்கிச் செல்லும் நாடுகள் அங்குள்ள பெரும்பான்மையினரின் மதங்களால் தடுக்கப்பட முடியாத நிலையில், அழிவையே தேடிக் கொள்வார்கள் என்று. அன்பில் திளைத்த கிறிஸ்தவமும் இஸ்லாமும் அன்பையும் சகோதரத்துவத்தையும், சகல மக்களிடையேயும் கடைப்பிடிக்காத பட்சத்தில், போட்டியில் இறங்கி போரில் ஈடுபட்டால் ஈற்றில் அழிவே வந்தடையும்.
இதைக் கூறுவதன் காரணம் பல மேலைத்தேய மக்களிடையே தமது நடைமுறை மதங்களின் போக்குப் பற்றி ஒரு கசப்புணர்ச்சி இப்பொழுது ஏற்பட்டுள்ளது. உண்மையை நாடும் எவரும் அஹிம்சையையே நாடுவார்கள். அதனால்தான் கூறுகிறேன். அஹிம்சை வழி நிற்கும் பெளத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் இன்று மேலை நாடுகளில் பெருத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்று. இந்தியரும் தமது இந்து மதத்தைப் பரப்ப அடிதடியில் இறங்கி இருந்தால் இன்று இத்தனை இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள். பாகிஸ்தானில் இருக்கும் இஸ்லாமியரின் தொகையளவிற்கு இந்தியாவில் இஸ்லாமியர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. எம்மதமும் சம்மதமே என்ற உயரிய நோக்கின் காரணமாகவே வந்தவர்களையும் அவர்களின் மதங்களையும் இந்தியா வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
(இந்து ஒளி

அடுத்து, நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் இந்து மதக் கோட்பாடுகளுக்கு அனுசரணையாக விளங்குவது இந்து மதத்தை உலக அரங்கில் உயரிய ஒரு ஸ்தானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளின்படி இந்திய, சீன மண்ணில் பிறந்த மதங்களுக்கு இயைபுடையதாகவே உண்மை அமைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று The TaO of Physics 6T 6ôTO BAT666) Dr. Fritjof Capra 6T6TO 56f6OT 6î656T6Iof எடுத்துக் கூறியிருக்கிறார்.
சநாதன தர்மம் என்ற ஞானிகளால் குறிப்பிடப்பட்ட இந்து மதம் என்றென்றுமே உண்மையைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். ஒருமுறை Watch Tower என்ற ஒரு சஞ்சிகையை விற்கவும், முடியுமென்றால் எங்களை மதம் மாற்றும் எண்ணத்துடனும் ஒரு அம்மையார் என் இல்லத்திற்கு வந்தார். எடுத்த எடுப்பிலேயே “நாங்கள் ஒரு இறைவனை மட்டுந்தான் நம்புகிறோம்” என்றார் அந்த அம்மையார். “நாங்களும் அப்படித்தான்” என்றேன். அவர் பிள்ளையார் படத்தை என் வீட்டில் பார்த்து விட்டு “நாங்கள் மிருகங்களை வணங்குவதில்லை” என்றார். “மிருகங்களும் கடவுளின் படைப்பே என்பது எங்கள் கோட்பாடு” என்றேன். “மிருகங்கள் கடவுளின் படைப்புத்தான். ஆனால் நாங்கள் அவற்றை வணங்குவதில்லை” என்றார். “மனிதர்களும் கடவுளின் படைப்புத்தான். ஏன் அவர்களை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்டேன். “மனிதர்களுக்காகத்தான் மிருகங்களை இறைவன் படைத்தார்” என்றார் அம்மையார் “நாங்கள் கொன்று சாப்பிடத்தான் மனிதர்களை இறைவன் படைத்தார் என்று கூறி மிருகங்கள் எங்களை எல்லாம் கொன்று குவித்திருக்கலாம் அல்லவா?’ அதெப்படி நாங்கள் எங்கள் மேம்பட்ட பலத்தின் நிமித்தம் மிருகங்களைக் கொன்று விடுவோமே” என்றார் அம்மையார். “எங்கள் மதத்தில் மிருகங்களைக் கொன்று குவிப்பது பாவமாகக் கருதப்படுகிறது” என்றேன்.
“என்றாலும் உங்களுக்குப் பல தெய்வங்கள். நாங்கள் அப்படி இல்லை” என்றார். “இல்லை ஒரே ஒரு தெய்வம்தான் எங்கள் மதத்தில் உள்ளார். அவரின் சக்தி பல ரூபங்களில் வெளிப்படுகிறது என்ற தத்துவத்தைத்தான் பல ரூபங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் அடிப்படையில் ஒரே ஒரு சக்திதான் இந்த அண்ட சராசரத்தையும் ஆட்டிப் படைக்கின்றது என்பது எங்கள் சித்தாந்தம்” என்றேன். “அதெப்படி? பல கடவுள்களை வணங்கிக் கொண்டு அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார். “ஒரு ஐ. ஜி. பி. இருக்கிறார். பல எஸ். பி. ஏ. எஸ். பி. இருக்கிறார்கள். எஸ். ஐ. பொலிஸ் கொன்ஸ்டபில்கள் கூட இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி இருக்கிறது. அந்தந்தப் பணி செய்ய அந்தந்த அலுவலரிடம் செல்வோம். அதுபோல்தான் சக்தி ஒன்று. அதன் வெளிப்பாடுகள் பல. இதை எங்கள் மதம் எடுத்துரைக்கின்றது என்றேன்”, “ஏன் யானை முகத்தை மனிதருக்குப் போட்டு வணங்குகிறீர்கள்” என்றார். “யானைக்குப் பெரிய தலை. இறைவன் எல்லா அறிவையுந் தன் தலையினுள் அடக்கி வைத்திருப்பதால் சகலமும் அறிந்தவன் இறைவன் என்று எடுத்துக் காட்டி, ஒரு குறியீடு மூலமாக இந்த உண்மையை உணர்த்தி, யானைத் தலையுடைய இறைவனை வணங்குகிறோம்” என்றேன்.
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 13
அடுத்து, தன் மதத்தைப் பற்றிக் கூற எத்தனித்தார் அம்மையார். “உங்கள் மதத்தின் படி கடவுள் ஒரு நாள் இந்த உலகைப் படைத்தார் அல்லவா’ என்றேன். “ஆம்” என்றார். “அவ்வாறு படைக்க முன் என்ன இருந்தது? என்று கேட்டேன். “அது கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார். “இவ்வளவையும் உங்களுக்குச் சொல்லித் தந்த கடவுள் ஏன் அதைக் கூறாமல் விட்டார்?” அம்மையாருக்குக் கோபம் வந்தது. “இல்லை கோபப்படாதீர்கள்! உங்கள் மதத்தை நான் மதிக்கிறேன். யேசு கிறிஸ்துவை வணங்குகிறேன். நான் அந்தோனியார் கோவிலுக்குப் பல தடவை சென்றுள்ளேன். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு. மனிதனின் அறிவு காரண காரிய சம்பந்தத்தின் அடிப்படையில்தான் வேலை செய்கிறது. ஆனால் இறைவன் அதற்கு அப்பாற்பட்டவன். உதாரணமாக இரு சமாந்திரக் கோடுகள் எல்லையற்ற இன்பினிட்டி Infinity யில்த் தான் சந்திக்கும் என்று கூறுகிறோம். இந்த இன்ஃபினிட்டி எங்கு உள்ளது? அதை எப்படி நாங்கள் அறிந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுதும் சுற்றி வந்தாலும் சமாந்திரக் கோடுகள் சேராமல்த்தான் இருக்கும் என்றாலும் அவை infinity யில் சேரும் என்கிறார்கள். எங்கள் அறிவால் எட்டிப் பிடிக்க முடியாத பல கருத்துக்கள் உள்ளன. அதுபோலத்தான் படைத்தலுக்கு முன் என்ன என்பதை எங்கள் அறிவால் எட்டிப்பிடிக்க முடியாது. உலக அறிவு முற்றுப் பெற்றால்தான் அந்த, உள்ளார்ந்த சூட்சும அறிவு கிட்டும். அதனால்தான் எங்கள் சமய இலக்கியம் வேத அந்தம் எனவும், சித்த அந்தம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த Infinity கருத்தை எங்கள் மதம் எப்படிக் குறிப்பிடுகிறது என்றால் தந்தைக்கு மகன் உபதேசம் செய்வதை வைத்து அதை வெளிப்படுத்துகிறது. உலகம் அனைத்தையும் படைத்தவர் சிவபெருமான் என்று கூறிவிட்டு முருகனிடமே படைப்பின் இரகசியத்தை படைப்பிற்கு முன்னைய இரகசியத்தை அவர் கைகட்டி, வாய்பொத்தி அறிந்து கொள்கிறார் என்பதில் இருந்து தந்தைக்கு முன்பே மகன் இருந்தது போல் காட்டி, }SSS-N**NZYZ இமாமன்றச் செய்தி S அமரர் பாலசுப்பிரமணி
SY மாமன்றத்தின் தலைமையகக் கட்டிடத்தை முன்னாள் தலைவர் திரு. வே. பாலசுப்பிரமணியம் ஆண்டுதோறும் நடத்திவரும் நினைவுப் பேருரைத் தெ பூர்த்தியின் சிறப்புப் பேருரை நிகழ்வு கடந்த ஜூலை ம பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக்கழக இளைப்பாறிய முனைவர் வை. இரத்தினசபாபதி அவர்கள் “சைவ சி பேருரையாற்றினார்.
S.参
> மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை 3. மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண் நிகழ்வின் இறுதியில் திருமதி. சாந்தி பாலசு
SY வழங்கப்பட்டது. Øබ්ණිමාණමණීමතණබ්ණිම්බිණිමණිමණිලි
(இந்து ஒளி C

தொடக்கத்திற்கு முன்பே படைப்பின் இரகசியம் இருந்ததாகக் காட்டி, முரணான ஒரு கருத்தால் எல்லையற்ற தன்மையை விவரிக்கிறார்கள் எங்கள் மதத்தில்.
அம்மையார் Watch Tower வாங்க மாட்டீர்களா என்று கடைசியில் கேட்டார். “கட்டாயம் வாங்குகிறேன்” என்று கூறி பணத்தைக் கொடுத்து சஞ்சிகையைப் பெற்றுக் கொண்டேன்.
இந்தக் கதையைக் கூறியதன் காரணம் தொன்மையான எங்கள் மதம் மிகவும் ஆழமானது என்பதை எடுத்துக் காட்டவே. பல திறப்பட்ட அறிவுடைய மக்களையுங் கவருந் தன்மையுடையது இந்த மதம். இன்று கொழும்பில் இருக்கும் இந்துக் கோயில்களுக்குப் படையெடுக்கும் பெளத்தர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமானால் கணிசமான சிங்கள பெளத்த இந்துக்கள் இன்று கொழும்பில் இருக்கிறார்களா என்று கேட்கத் தோன்றும். பெளத்த மதத்தால் அவர்களுக்கு ஏற்படாத ஒரு சாந்தியும் அமைதியும் இந்துக் கோயில்களை வலம் வந்து கும்பிடுவதால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சத்தியசாயி பாபாவின் பஜனைகளில் கலந்து கொள்வோரில் பலர் பெளத்தர்கள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்து மதம் உலகத்தில் மேலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கப் போகிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் அதற்காக நாங்கள் இந்து மதத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்காது இருக்க முடியாது. வாழையடி வாழையாக இந்து மதத்தில் வளர்ந்து வரும் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பங்குத் தொகையையும் கொடுத்துவிட்டே இவ்வுலக வாழ்வை நீக்க வேண்டும். கொடுப்பதில்தான் அது தங்கியிருக்கிறது. அறிவைக் கொடுங்கள், அன்பைக் கொடுங்கள். சிரமத்தைத் தானமாக வழங்குங்கள். பணமிருந்தால்தான தர்மஞ் செய்யுங்கள். கொடுப்பதால் மனம் விரிவடைகிறது. விசாலமான அன்பென்னுஞ் சமுத்திரத்தில் மனம் ஐக்கியமாகிறது. அந்த அன்பில்தான் ஆன்மீகம் பிறக்கிறது.
Nగ్రాన్స్గ్రాస్ఫైర్తిస్ప్రిgNgNగ్రాన్స్టిg్వg్వ
யம் நினைவுப் பேருரை
நிர்மாணிக்க அயராது உழைத்து அமரத்துவமெய்திய அவர்களின் சேவையை நினைவு கூர்ந்து மாமன்றம் ாடரில், அன்னார் அமரத்துவமடைந்த பத்து ஆண்டுகள் ாதம் 14ம் திகதியன்று காலை மாமன்றத் தலைமையகப்
சைவசித்தாந்தப் பேராசிரியர் தத்துவத் தலைக்காவலர் த்தாந்தமும் வாழ்க்கை நெறியும்” என்னும் பொருளில்
தலைமையில் மேற்படி பேருரை வைபவம் நடந்தேறியது. டன் நன்றியுரை வழங்கினார். ப்பிரமணியம் அவர்களின் ஏற்பாட்டில் மதியபோசனம்
డామియోమిసెలామైడాసెసెడావిడమిలోకీ
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 14
LDDLzSmSLLDYZSDBYS
இந்து ச மனித விழு
இரா.நாகலிங்ச
மனித விழுமியங்கள் என்பது நல்ல பண்புகள் நற்குண, நற்செயல்கள் என்பவற்றைக் குறிக்கும். அவை ஒழுக்க விழுமியங்களாக, ஒழுக்காற்று விழுமியங்களாகப் பண்பு விழுமியங்களாக அமையலாம். இவ்விழுமியங்கள் ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் புனிதப்படுத்துவதாகவும் அதேவேளை மற்றவர்களுக்கு உதவுவதாகவும் அமையலாம். தன்னலமற்ற தனிப்பட்ட வாழ்க்கையாகவும் பயனுள்ள பொது வாழ்க்கையாகவும் அமையலாம்.
பெரியோரைக் கணம் பண்ணுதல், தன்னலமற்று வாழ்தல், உண்மை பேசுதல் போன்றவை ஒருவனது தனிப்பட்ட வாழ்வைப் புனிதப்படுத்தும் மனித விழுமியங்களாகும். அவை அறம் செய்தல், பிறர்க்குதவுதல், சமூக சேவை என்பன, சமூக நலத்தின்பாற்பட்ட விழுமியங்களாக அமையும்,
மனித விழுமியங்களுக்கு ஆதாரமாக அமைபவை சமய நெறிக்கருத்துக்களாகும். இவற்றை நாம் எங்கிருந்து பெறுகிறோம். குழந்தையாக இருக்கும்போது தாய் தந்தையரிடமிருந்தும் பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்களிடமிருந்தும் இவை நம் இதயத்தில் பதிகின்றன. எனவே மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற மகத்தான உண்மை முதல் மனித விழுமியம் ஆகிறது. உண்மையில் இவர்களது வாழ்க்கையே ஒருவனுக்கு இதயத்தில் மனித விழுமியங்களின் விதைகளைத் தூவுகின்றது. பிற்கால வாழ்க்கைக்கு அத்திவாரமாக அமைகிறது; எதிர்கால வாழ்க்கையின் திசை காட்டியாக அமைகிறது.
இவ்வாறு மனதில் விழும் நல் விதைகள் கால ஒட்டத்தினூடே, நாம் கற்கும் நூல்களாலும், நம்மோடு பழகும் மனிதர்களாலும் நாம் பெறும் அனுபவங்களாலும், மேலும் செழுமை பெறுகின்றன. இவையே நமது உள்ளத்தில் பண்புகள் வளர்வதற்கான பசளையாக, நீராக, களை நாசினியாக அமைகின்றன என்றால் மிகையாகாது.
அற நூல்களின் தோற்றம்
நமது சமய நூல்கள் எவ்வாறு ஏனைய மத நூல்களைவிட ஏராளமானவையாக, கணக்கற்றவையாக அமைகின்றனவோ, அவ்வாறே நமது இலக்கிய நூல்களும் அறநெறி நூல்களும் அமைகின்றன. ஒரு காலத்தில் நமது சமய நூல்களான பன்னிரு திருமுறைகள் எவ்வாறு தொகுக்கப்பட்டனவோ அவ்வாறே நமது இலக்கிய நூல்களும், அறநெறி நூல்களும் தொகுக்கப்பட்டன.
சங்ககால இலக்கியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை எனத் தொகுக்கப்பட்டுள்ளன. எட்டுத் தொகை நூல்கள் என்பன (1) நற்றிணை, (ii) குறுந்தொகை, (iii) ஐங்குறுநூறு, (iv) பதிற்றுப்பத்து, (v) பரிபாடல், (vi) கலித்தொகை, (vi) அகநானூறு (vi) புறநானூறு.
(இந்து ஒளி (
 

፳¶ፃ9999¶ዓW¶ያዊ¶¶ዋ@¶¶¶ፃ99999 *ԼՈա յ[ւք In
மியங்களும்
ம் (அன்பு மணி)
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் கற்றார்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை
பத்துப்பாட்டு என்பது, (i) திருமுருகாற்றுப்படை, (ii) பொருநராற்றுப்படை, (iii) சிறுபாணாற்றுப்படை, (iv)
பெரும்பாணாற்றுப்படை, (v) முல்லைப்பாட்டு,(Vi) மதுரைக் காஞ்சி, (vi) நெடுநல்வாடை, (vii) குறிஞ்சிப்பாட்டு, (ix) பட்டினப்பாலை, (x) LO606)UG5L.Th.
முந்த பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோல நெடுநல்வாடை, கோல் குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து.
இவ்வாறே சங்க மருவிய காலத்தில், அறநெறி நூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவை (1) திருக்குறள், (i) நாலடியார், (ii) நான்மணிக்கடிகை, (iv) இனியவை நாற்பது, (v) இன்னா நாற்பது, (vi) கார் நாற்பது, (wi) களவழிநாற்பது, (vi) திணைமொழிஐம்பது, (ix) திணைமாலை நூற்றைம்பது, (X) ஐந்திணை ஐம்பது, (xi) ஐந்திணை எழுபது, (xi) திரிகடுகம், (xi) ஆசாரக் கோவை, (xiv) பழமொழி, (XV) சிறுபஞ்சமூலம், (XVi)முதுமொழிக்காஞ்சி, (XVi) ஏலாதி, (xvi) இன்னிலை.
நாலடி நான்மணிநானாற்ப தைந்திணைமுப் பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை காஞ்சியுடனேலாதி யென்பவே கைந்நிலை கீழ்க்கணக்கு”
காப்பியங்கள், புராண, இதிகாசங்கள்
அறநெறிக் கருத்துக்களை நேரடியாகக் கூறாது மறைமுகமாகக் கூறும் ஐம்பெருங் காப்பியங்களும், புராண, இதிகாசங்களும், மனித விழுமியங்களைப் போதிக்கின்றன. அந்த வகையில், ஐம்பெருங் காப்பியங்களான (i) சிலப்பதிகாரம், (ii) மணிமேகலை, (ii) சீவகசிந்தாமணி, (iv) குண்டலகேசி, (V) வளையாபதி என்பனவும்,
இதிகாசங்களான கம்பராமாயணம், மகாபாரதம் என்பனவும் புராணங்களான, கந்தபுராணம், பெரியபுராணம் முதலியனவும் அறநெறிக் கருத்துக்களைப் போதிக்கின்றன. புராணங்கள் சமய நூல்களாக இருந்தபோதும் அதில் வரும் பாத்திரங்கள் மனித விழுமியங்களின் உருவகங்களாக
2)
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 15
அமைகின்றன. அவ்வாறே இதிகாசங்களில் வரும்பாத்திரங்களும் மனித விழுமியங்களின் உருவகங்களாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.
கம்பராமாயணத்தில் ஏகபத்தினி விரதன் ராமன், கற்புக்கணிகலனான சீதை, அன்புத் தம்பி லட்சுமணன், பாசம் நிறைந்த பரதன், நட்புக்கொரு குகன், தோழமைக்கொரு சுக்கிரீவன், பக்திக்கு ஒரு அனுமன், பணிவிடைக்கு ஒரு திரிசடை, வீரத்துக்கு ஒரு இராவணன், தர்மத்துக்கு ஒரு விபீஷணன் என மனித விழுமியங்களின் மறு வடிவமாகவே இப்பாத்திரங்கள் அமைகின்றன. அதேவேளை சத்வ, ரஜ, தமஸ் என்னும் முக் குணங்களின் வெளிப்பாடாகவும் அவை அமைகின்றன.
அவ்வாறே மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் நற்குணங்களின் உருவகங்களாகவும், நூற்றுவரான கெளரவர் துர்க்குணங்களின் உருவகங்களாகவும் படைக்கப்பட்டுள்ளன. கொடைக்கு ஒரு கர்ணன், படைக்கு ஒரு அபிமன்யு எனவும் பாத்திரங்கள் இதில் வருகின்றன. உலக தர்ம நூலாகிய பகவத் கீதை இதில் அடங்கியுள்ளது.
இந்துப் புராணங்களும், இதிகாசங்களும் வெறும் கதைக்காகப் படைக்கப்பட்டிருந்தால் அவை எப்போதோ மறைந்து போயிருக்கும், தர்மநூலாக அவை இருப்பதனால்தான் காலத்தை வென்று அவை நிலைத்து நிற்கின்றன.
33b6(5th 35TILITI356i
பினித விழுமியங்களைப் போதிப்பதில், ஐம்பெருங் காப்பியங்களில் வரும் பாத்திரங்களும் கவனத்திற் கொள்ளத்தக்கவை.
கண்ணகி, கோவலன், மாதவி, கெளந்தியடிகள், மணிமேகலை போன்ற பாத்திரங்களை வெறும் கதாபாத்திரங்களாக மட்டும் கொள்ள முடியாது. இப்பாத்திரங்கள் தத்தம் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகிய மனித விழுமியங்கள், அவர்களை இன்றும் உயிருள்ள மனிதர்களாக வாழ வைக்கின்றன.
பழந்தமிழ் நூல்களில் நூல் எழுதப்பட்டதன் நோக்கம் அதன் பாயிரத்தில் இடம்பெறும். சிலப்பதிகார நூல் எழுதப்பட்டதன் நோக்கம் பின்வருமாறு கூறப்படுகிறது.
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுர உம் குழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் (56-60)
இப்பாடலில் குறிப்பிடப்படும் அறக்கருத்துக்களான -
(i) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது (i) உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் (i) ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுதல். ஆகியன அக்காலத்தும், இக்காலத்தும், எக்காலத்தும்
பொருந்தி நிற்பதைப் பார்க்கிறோம்.
(இந்து ஒளி

இவ்வாறே ஏனைய அறநூல்களான திருக்குறள் திரிகடுகம், நாலடியார் போன்றவற்றில் கூறப்படும் அறக் கருத்துக்கள் எக்காலத்துக்கும் ஏற்றவையாக அமைந்து மனித விழுமியங்களை வளர்க்கின்றன.
இளவயதில் விழுமியங்களைப் போதிக்கும் அறநூல்கள்
இளமையிற் கல்வி சிலையில் எழுத்தென்பதற்கிணங்க, இளஞ்சிறார் உள்ளங்களில் மனித விழுமியங்களைப் பதிய வைக்கும் பல தமிழ் நூல்கள் உள்ளன. இவை நீதி நூல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு சில நூல்களின் விபரம் வருமாறு : (i) ஆத்திசூடி, (i) கொன்றை வேந்தன், (i) வாக்குண்டாம், (iv) நல்வழி, (V)உலகநீதி,(Vi) வெற்றிவேற்கை, (wi) நன்னெறி, (Vii) நீதி வெண்பா, (ix) நீதி நெறி விளக்கம், (x) அறநெறிச்சாரம்.
இந்நூல்கள் ஆரம்ப வகுப்பு மாணவர் முதல் மேல் வகுப்பு மாணவர் வரை பயிலத்தக்க வகையில் படிமுறையில் அமைந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். இவை சைவ சித்தாந்த நூல்களான நீதிநூல், உண்மை விளக்கம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதையும் காணலாம். இவற்றில் கூறப்படும் கருத்துக்களும் ஒத்திசைகின்றன.
சங்க மருவிய காலத்தில் சமணர் ஆதிக்கம் ஓங்கியிருந்த காரணத்தால் அழகியல் நூல்கள் நிராகரிக்கப்பட்டு அறநெறி நூல்கள் ஊக்குவிக்கப்பட்டன. அக்காலத்தில் எழுந்த அறநெறி நூல்கள் கீழ்க்கணக்கு நூல்களாக வகுக்கப்பட்டன. ஆனால் மேற்குறித்த நூல்கள் அவ்வாறில்லாமல் தாமாகவே தோன்றின. சமுதாயத்தில் ஒழுக்க நெறி பாலப்பருவத்திலிருந்தே பயிலப்பட வேண்டும் என்ற நன்னோக்குடன் தோன்றின என்பது வெளிப்படை.
ஒளவையார் தந்த அற நெறி நூல்கள்
ஒைெவயார் அருளிச் செய்த நூல்கள், இவ்வகையில் முதலிடம் வகிக்கின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி ஆகிய நூல்கள் ஒளவையார் இயற்றியவை.
ஆத்திசூடியின் முதலாவது பாடலே அம்மா, அப்பாவைப் பற்றியதாக இல்லாமல், அறஞ்செய்ய விரும்பு ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல் எனச் சொல்கிறது. (மொத்தம் 108). கொன்றைவேந்தன் இதே பாணியில் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இல்லறமல்லது நல்லறமன்று எனச் சொல்கிறது. (மொத்தம் 91)
வாக்குண்டாம் (மூதுரை) என்னும் நூலில் முதல் பாடல் நன்றியைப் பற்றிக் கூறுகிறது.
நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங் கொல் என வேண்டாம் - நின்று
தளராவளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தன்லையாலேதான் தருதலால் இவ்வாறு முப்பது பாடல் “வாக்குண்டாம்” நூலில் இடம் பெறுகின்றது.
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 16
“நல்வழி” என்னும் நூலில் முதல்பாடல் - கர்மவினை பற்றிக் கூறுகின்றது.
புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல்’
இவ்வாறு நாற்பது பாடல்கள் நல்வழியில் உள்ளன.
ஒளவையார் வழி வந்த பிற அறநூல்கள்
ஒைெவயார் வழி வந்த பிற அறநூல்கள் வருமாறு:
(i) “உலகநீதி' - உலகநாதர்
(i) வெற்றிவேற்கை-அதிவீரராமபாண்டியன்-புலவர்,அரசர் “ை ை ர்கள் கெளடதம்' என்பர்.
(i) “நன்னெறி" - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
(i) உலகநீதி என்னும் நூல் முதல் பாடல் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடினங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப்புறஞ்சொல்லித்திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
(ii) வெற்றி வேற்கை பின்வருமாறு கூறிச் செல்கிறது.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் கல்விக்கழகு கசடற மொழிதல் செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும் மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை
(ii) நன்னெறியில் நாற்பது பாடல்கள் உள்ளன. நூலின் முதற் பாடல் நல்லோர் உதவி பற்றிக் கூறுகிறது.
"என்று முகமன் இயம்பாதவர் கண்ணும் சென்று பொருள் கொடுப்பர்தீதற்றோர் - துன்று சுவை பூவிற்பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற்குதவும் நயந்து
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிதேனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ஒண் கரும்பு வில்லோன் மலரோ விருப்பு
(இந்து ஒளி

பிற்காலத்து எழுந்த நீதி நூல்கள்
Iதினெண் கீழ்க் கணக்கு நூல்களைப் போலப் பிற்காலத்து எழுந்த நீதி நூல்களுள், நீதி வெண்பா, நீதி நெறி விளக்கம், அறநெறிச்சாரம் என்னும் மூன்று நூல்களும் முக்கியமானவையாகும்.
இவற்றுள், “நீதி வெண்பா” நூறு வெண்பாக்களைக் கொண்டது. இதை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. நூலில் இடம்பெறும் பாடல்களின் வெவ்வேறு தன்மை காரணமாக இது வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
"நீதி விளக்கம்” என்னும் நூல் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமர குருபரரால் இயற்றப்பட்டதென்பர். 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் செய்யுள்கள் சங்கச் செய்யுள்களின் செழுமையுடன், பொருட் செறிவு கொண்டதாக அமைந்துள்ளன.
"அறநெறிச் சாரம்” என்னும் நூல் 226 வெண்பாக்களைக் கொண்டது. முனைப்பாடியார் என்னும் சமணரால் 500 ஆண்டுகட்கு முன்பு இயற்றப்பட்டது. சங்க மருவிய காலத்தில் வாழ்ந்த சமணர்களே அறநூல்கள் தோன்றுவதற்கு மூலகாரணராக அமைந்தனர் என்பதை முன்னர் பார்த்தோம். நாலடியார் என்ற நூலை இயற்றியவர்கள் சமணர்கள். இதே பாணியில் அறநெறிச்சாரம் அமைந்துள்ளது.
இம்மூன்று நூல்களும் பொதுவான நீதி நெறிகளையும் தனிப்பட்டவர்க்குரிய ஒழுக்க நெறிகளையும் வற்புறுத்துகின்றது. நடைமுறை வாழ்க்கையில் இவை கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்பதை மூன்றாவது செய்யுள் வலியுறுத்துகின்றது.
உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவ gi/6Dugigg,60TT 607L LIL60th - L/60TL flitsof நான்மையையும் போலியை நீக்கி சுவை நாட்டல் வான்மையின் மிக்கார் வழக்கு.
திருக்குறள்
சிங்க மருவிய காலத்தில் தோன்றிய கீழ்க்கணக்கு நூல் “திருக்குறள்” இன்று காலத்தை வென்று நிற்கும் உலகப் பொதுமறை எனக் கொள்ளப்படுகிறது. 133 அதிகாரங்களில் அடக்கப்பட்ட 1330 குறள்களில் மனிதன், உலகம், வாழ்க்கை பற்றிய அனைத்துப் பொருள் விளக்கங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. Dr. G. U.போப் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட, உலகின் பலமொழிகளில் இன்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
'திருக்குறள் நூலில் மனித விழுமியங்கள், வாழ்க்கை விழுமியங்கள், சமூக விழுமியங்கள் ஆகிய அனைத்தும் கூறப்பட்டுள்ளன.
இறை வணக்கம், அறவாழ்வு, மனிததர்மம் தொடர்பாக ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்துத் தர்மங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ஒரு சில வருமாறு :
(1) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது. 4) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 17
(i) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். (i) தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும். (iv) இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். (V) மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த தொழித்துவிடின். (vi) வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனைய உயர்வு. (Vi) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டணைக் கல்.
ஏனைய கீழ்க் கணக்கு நூல்கள்
ழ்க் கணக்கு நூல்கள் பதினெட்டில், பதினொன்று நீதி நூல்களாயுள்ளன. இவற்றுள் “திருக்குறள்” தனித்துவமானது. ஏனைய பத்து நூல்களும் திருக்குறளைப் போலவே பல்வேறு தர்மங்களைப் பற்றிக் கூறுகின்றன. அவை திருக்குறள் கருத்துக்களையே எதிரொலிக்கின்றன.
அந்த வகையில் நாலடியார், நான் மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னாநாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, இன்னிலை, கைந்நிலை முதலிய அறநூல்கள், திருக்குறள் கூறும் பல கருத்துக்களை வெவ்வேறு பாணியில் கூறுகின்றன. சில சொற்கள் சொற்றொடர்கள் முதலியன திருக்குறள் சொற்றொடர்களுடன் ஒத்திசைகின்றன.
எவ்வாறாயினும் திருக்குறள்’ நூலில் சகல அறக் கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மேற்குறித்த நூல்கள் திருக்குறளைப் போல உலக முக்கியத்துவம் பெறவில்லை என்பது கண்கூடு.
அறக் கருத்துக்களைப் படிப்பதைவிட அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே முக்கியம் என்பதை நாம் படிக்கும் புராண, இதிகாசங்களில் உள்ள பாத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்தகைய பாத்திரங்களாக நாம் மாற முடியுமா? ஆம் நிச்சயமாக முடியும். அதுவே சத்திய சோதனை ஆகும்.
மனித விழுமியங்களும், மனித வாழ்க்கையும்
பினித விழுமியங்கள் யாவற்றுக்கும் அடிப்படையானது சத்தியம், உண்மை, நேர்மை என்பன அதன் பிரதிபலிப்புகள். இந்த ஒரு விழுமியத்தை நாம் வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே, ஏனைய விழுமியங்கள் யாவும் அதைச் சுற்றி வளமாக வந்து அமைந்து விடும். இதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டியவர் மகாத்மா காந்தி, ‘சத்திய சோதனை' என்ற அவரது சுயசரிதையில் தனது சிறுமைகளையும் சின்னத்தனங்களையும் கூட மறைக்காமல் பகிரங்கப்படுத்தியுள்ளார். அந்தத் துணிச்சலே சத்தியத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுகிறது.
(இந்து ஒளி

இவ்வாறு வாழ்க்கை விழுமியங்களைக் கடைப்பிடிப்போர் தமது வாழ்க்கை அனுபவங்களை, சுயசரிதையாகவும், வாழ்க்கை வரலாறாகவும் வெளியிட்டுள்ளனர். அந்த நூல்கள் நாம் பட்டியல் போட்ட அறநூல்களின் நடைமுறைக் கைநூல்கள் எனக் கூறலாம்.
ஆனால் இவ்வாறு நூல்கள் வெளியிடாத லட்சோப லட்சம் மக்கள் - சாதாரண மக்கள், கிராமப் புறங்களில் வாழும் ஏழை மக்கள் பல விழும்மியங்களை வாழ்க்கையில் கடைப் பிடிக்கிறார்கள். அது பற்றிய பிரக்ஞை இல்லாமல் வாழ்கிறார்கள்.
பட்டணத்தில் உள்ள பலர், அகட விகடம் பண்ணிப் பணம் சேர்ப்பதிலும் படாடோபமான பொய் முகங்களை மாட்டிக் கொள்வதிலும், குறியாக இருப்பதால், மனித விழுமியங்கள் காலின் கீழ் புதைந்து போகின்றன. இத்தகைய ஒரு போலி வாழ்க்கை தேவைப்படாதவர்கள் சத்திய வாழ்க்கை நடாத்துவதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. உண்மை, நேர்மை, சத்தியம் என்று ஒரு மனிதனைக் கெளரவத்துடன் வாழ வைக்கும் தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கெளவும் - தர்மம் மறுபடி வெல்லும்.
சத்திய வாழ்க்கை
மனித விழுமியங்கள் நூற்றுக்கணக்கில் கூறப்படுகின்றன. பொய், களவு, கள், காமம் தவிர்த்தல், தன்னை ஒறுத்தல், பிறர் நலம் பேணுதல், காம, குரோத, மோக மத, மாற்கரியங்களைத் தவிர்த்தல், ஆணவத்தை ஒழித்தல், மக்களுக்கு உதவுதல்,பொறாமை, அழுக்காறுகள், புறங்கூறுதல் முதலியவற்றைத் தவிர்த்தல், பிறர்க்கின்னா செய்யாமை, அகிம்சையைக் கடைப்பிடித்தல், இனியவை கூறல் என விழுமியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் மூன்று வசனத்தில் அடக்கி விடலாம். அவை (i) நல்லதை எண்ணுதல், (i) நல்லதைப் பேசுதல், (i) நல்லதைக் கேட்டல்,
இந்த மூன்று வசனங்களையும் மேலும் சுருக்கி ஒரே வரியில் அடக்கி விடலாம். அதுதான் “மனித நேயத்துடன் வாழ்தல்' அதை மேலும் சுருக்கி ஒரு வார்த்தையில் அடக்கி விடலாம். அதுதான் சத்திய வாழ்க்கை.
சத்திய வாழ்க்கையை மேற்கொள்பவர்கள், சில சத்திய சோதனைகளைச் செய்து பார்க்கலாம்.
(i) இறை நம்பிக்கை (i) பிரதிபலன் கருதாது கடமையைச் செய்தல் (i) முடிந்தவரை சுயநலமற்று வாழ்தல் (iv) பிறர்க்குதவுதல் (V) எண்ணம், சொல், செயல் தூய்மையாதல்.
இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால், நமது வாழ்க்கையில் நன்மைகள் கிட்டுமா? வாழ்க்கை மேம்பாடு அடையுமா? ஆம் நிச்சயமாக அது நடக்கும்.
மேற்படி சத்திய சோதனையை மூன்று மாதம் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். அதன் பிரதி பலன்களைக் கண்முன்னே காண்பீர்கள். அதன்பின் வாழ்நாள் முழுவதிலும் இவற்றைக் கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
சித்திரபானு வருடம்ஆr

Page 18
பல்லவர்கால பு : இலக்கியப் قت نقشهسوسا
தமக்கென வகுத்துக் கொண்ட ஒரு கோட்பாட்டிலே
முழுமையான நம்பிக்கை வைத்து அக்கோட்பாட்டினை நிலை நாட்ட மக்களிடையே பிரசாரம் செய்தல், அக்கோட்பாட்டிற்கு அனுசரணை யான பணிகளை முனைப்புடன் மேற்கொள்ளல். அதற்கு எதிரான சக்திகளை வாதிட்டோ, போராடியோ அடக்கித் தம் வழிக்கொணர்தல், அவ்வாறு முடியாதபோது அவற்றை அழித்தல் என்ற பல்வகை அம்சங்களை உள்ளடக்கிய ஒன்றாகவே ஓர் இயக்கம் உருக்கொள்கிறது. சமூக, அரசியல், மொழி, இன, கலாச்சார அடிப்படைகளில் இயக்கங்கள் தோற்றம் பெறுவதுபோல பல்லவர் காலத்தில் கி.பி. 600 - கி.பி. 900 ஆகிய காலப்பகுதியில் தோற்றம் பெற்ற இயக்கமே பக்தி இயக்கமாகும்.
சங்கமருவிய காலத்தில் தமிழகத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த சமண, பெளத்த சமயங்களின் போதனைகள் ஆர்ம்ப காலங்களில் மக்களை கவர்ந்த போதிலும் காலப்போக்கில் மக்கள் அவற்றின் மீது பின்வரும் காரணங்களினால் வெறுப்பைக் காட்டினர். 01. வாழ்க்கை நிலையாமையை அளவு கடந்து வற்புறுத்தியமை, 02. உலகியல் இன்பங்களை இழிவுடன் ஒதுக்கியமை 03. துறவு நெறியை அளவு கடந்து வற்புறுத்தியமை 04. பெண்ணினத்தை இழிவுபடுத்தியமை 05. சமய வாழ்வையும், உலகியல் வாழ்வையும் ஒன்றோடொன்று
தொடர்பற்ற இரு துருவங்களாகக் கொண்டமை.
இக்கருத்துக்கள் நடைமுறை வாழ்வுக்கு பொருத்த மற்றதாக விளங்கியதன் காரணமாக உலகியல் வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட முயன்ற மக்கள் சமண, பெளத்த மதங்களை பின்பற்றிய போது முன்னரைவிடவும் அதிக துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தனர். இவ்வாறான தொரு சூழ்நிலையின் காரணமாக சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியில் காரைக்கால் அம்மையாரும், ஆழ்வார்கள் மூவராலும் தோற்றுவிக்கப்பட்டதே இக்காலப் பக்தியியக்கமாகும். இது பின் பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் பணிகளால் வலிமை வாய்ந்த இயக்கமாகப் பரிணமித்தது. சமயத்துறை சார்ந்த இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட பக்தி இயக்கம் காலப் போக்கில் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரம், பண்பாடு, கலைகள் முதலிய சகல துறைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டது. பக்தி இயக்கம் பழந்தமிழர் சமய கருத்துக்கள் சிலவற்றையும், வேதத்தை முதன்மையாகக் கொண்ட வைதீக மத கருத்துக்களையும், புராணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெளராணிகக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்ட இயக்கமாகப் பரிணமிக்கலாயிற்று.
(இந்து ஒளி C
 

லூரி, பண்டாரவளை)
பல்லவர், பாண்டியர் பேரரசர் கால முற்பகுதியில் வலிமையும், வீறும் கொண்ட பேரியக்கமாகவும், பொதுமக்கள் இயக்கமாகவும், பக்தி இயக்கமாகவும் பரிணமித்த நிலையிற் சமண சமயத்தைப் பின்பற்றி வந்த பல்லவ, பாண்டிய மன்னர்கள், தேவார முதலிகளுள் இருவரான அப்பர், சம்பந்தர் ஆகியோரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தி இயக்கம் அரசர்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கமாகவே மாறலாயிற்று. சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிய பல்லவர், பாண்டிய மன்னர்கள் சைவ வைணவ சமயங்களுக்கு பெரும் பணிகள் ஆற்றியதோடு அவைதீக மதங்களான சமண, பெளத்த மதங்களுக்கான தமது ஆதரவுகளை நிறுத்தியதுடன் அவை நிலை தளரத் தொடங்கின. பல்லவ, பாண்டிய மன்னர்கள் சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சிக்கு சாதகமான முறையில் உறுதியும், நிலைபேறான தன்மையுடைய கோயிற் கட்டிடங்களை அமைப்பதிலும், அவற்றுக்கு மானியங்களை வழங்குவதிலும் நடனம், சிற்பம், ஒவியம், இசை முதலான கலைகளை வளர்ப்பதிலும் தீவிர ஆர்வம் கொண்டு உழைத்த காரணத்தினால் இத்துறைகள் நன்கு வளர்ச்சியடைந்து சென்றன.
சாதாரண மக்கள் மத்தியில் இறையுண்மையை எடுத்து சொல்வதற்கு எளிய வழியாக பரம்பொருளான சிவபெருமானை ஆடலடிகனாகவும், கல்யாணச் சுந்தரனாகவும், உமா மகேஸ்வரனாகவும், சோமஸ்கந்தனாகவும் பல்வேறு வகையான மூர்த்தங்களில் அழகொழுக அமைத்து வழிபடச் செய்தமையால் அவரவர் தாம் விரும்பிய வடிவில் மனதை பதியவைத்து வழிபடும் வாய்ப்பு ஏற்பட்டது. சமய குரவர் சிவனையே பரம் பொருளாகவும் அடைக்கல இலக்காகவும் கொண்ட காரணத்தினால் வேத காலத்து ஏக தெய்வக் கொள்கை வலுப் பெறலாயிற்று. தவிரவும் விபூதி, உருத்திராக்கம் என்பன சமயச் சின்னங்களாக போற்றப்பட்டன.
ஆலயங்கள் தோறுஞ் சென்று ஆலய வழிபாட்டினை மேற்கொண்ட போது பக்தி கனிந்த திருப்பாடல்களை இசையோடு கலந்து வழங்கியதன் மூலம் தமிழரின் பாரம்பரிய கலைகள் அழிந்து விடாமல் பேணப்பட்டது. மேலும் ஆலயங்களில் சென்று பாடல்கள் பாடியதன் மூலம் இறைமாட்சிமையுடன் தல மகிமை, தலத்தை சூழ்ந்த பிரதேச மகிமை, அழகு என்பவற்றையும் பொருளாக அமைத்து பாடிய உத்தியானது மக்களது உள்ளங்களில் நிலவும் பிரதேச உணர்வைப் பயன் செய்து அவர்களை அவர்களின் ஆலயங்களைப் போற்றவும், பேணவும் வழி செய்தது. மேலும் புராண, இதிகாச கதைகளைப் பக்திப் பாடல்களில் இணைத்ததன் மூலம் சமய நம்பிக்கையும் சமய அறிவும் வழங்கப்பட்டன.
6) சித்திரபானு வருடம் ஆடி - புரட் டாதி)

Page 19
சங்கமருவிய காலத்தில் சிறிய அளவில் மண்ணாலும், மரத்தாலும் கட்டப்பட்ட ஆலயங்கள், பல்லவர் காலத்தில் குடைவரைக் கோயில்களாகவும்,தனிக்கற் கோயிலாகவும் கருங்கற் கோயில்களாகவும் வளர்ச்சி பெற்றன. இதன் மூலம் பழந்தமிழரின் கட்டிடக் கலையும் பேணப்பட்டது. இவ் ஆலயங்களில் கலையழகும், தெய்வீக பேரழகும் ஒன்று சேர பரிணமிப்பனவாகப் படைக்கப்பட்டிருந்த காரணத்தினால் சிற்பக்கலை வளர்ச்சிபெறவும் பக்தி இயக்கம் துணைபுரிந்தன எனலாம்.
இவ்வாறு பல்லவர் காலத்தில் எழுந்த சைவ பக்தி இயக்கமானது தமது அரும் பெரும் பணிகளால் சைவத்தினை மட்டுமன்றி தமிழரின் கலைகள், பண்பாடுகள், மொழி என்பவற்றையும் காத்து நெறிப்படுத்தின எனலாம்.
பல்லவர்கால பக்தி இயக்கங்களின் பண்புகள்
பல்லவர் கால பக்தி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள் சமண, பெளத்த மதத்தினர் செய்த தவறுகளை மனதிற் கொண்டே அவற்றை சீர் செய்யும் வகையில் உலகியல் வாழ்வையும், சமய வாழ்வையும் ஒன்றாக இணைத்தனர். பொதுமக்களால் இலகுவில் பின்பற்ற கூடியதும், நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றதும் உலகியல் வாழ்வுக்கு முரண்பட்ாததுமான கருத்துக்களையும், தத்துவங்களையும் போதித்தனர்.
பெண்களையும், கலைகளையும் இழித்து ஒதுக்கிய சமண, பெளத்த மதத்தினரின் போக்கிற்கு மாறாக பக்தி இயக்க கருத்தாக்கள் பெண்களை தமது வழிபடும் தெய்வங்களின் ஒப்பற்ற சக்திகளாகவும், உலகியல் இன்பம் இறையின் பக்திக்கு வழிவகுக்குமாற்றலையும் காட்டியதுடன் சிவனை ஆடவல்லவனாகவும், இசைப் பிரியனாகவும் கொண்டனர். சமண பெளத்த மதத்தினர் அளவுகடந்த வகையில் வற்புறுத்திய ஊழின் வலிமை, துறவு நெறி என்பவற்றிற்குப் பதிலாக பக்தி இயக்க கருத்தாக்கள் பக்தி நெறியை முதன்மை படுத்தினர். துறவு நெறியினால் பெறும் பயன் யாதுமில்லை எனவும், இறைவன் மீது பக்தி செலுத்துவதன் மூலம் ஊழின் வலிமையையும் வெல்லலாம், நல்வினை தீவினைகளைப் போக்கலாம் இறைவன் திருவடிகளை அடையலாம் எனப் போதித்தனர்.
சங்கமருவிய கால இலக்கியங்கள் அறக் கருத்துக்களையும் துறவு நெறிகளையும் வலியுறுத்த பல்லவர் கால இலக்கியங்கள் இறைவனது பெருமை, புகழ், வல்லமை என்பனவும், இறையடியவர்களது சிறப்பியல்புகளும் பக்தி நெறியும் மேலோங்கி காணப்படுகின்றது.
இக்காலப் பகுதியில் வாழ்ந்த இறையடியார்கள் தமது பக்தி அனுபங்களை தனித்தனிப் பதிகங்களிற் புலப்படுத்திய தோடமையாது பிரபந்த இலக்கியங்களிலே பாத்திரங்களையமைத்து அப்பாத்திரங்களின் மனோபாவங்களை எடுத்துக் கூறும் வகையில் தமது பக்தி அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இக் கால இலக்கியங்களில் பெரும்பான்மையானவை அகத்தினை இலக்கியங்களுக்கு அமைய எழுந்தவையாகும்.
(இந்து ஒளி

சங்ககால அகத்தினை மரபு பல்லவர் கால இலக்கியங்களில் மீண்டும் முக்கிய சில மாற்றங்களுடன் இடம் பெறுவது கவனிக்கத்தக்கது. உலகியலின்பம் இறையின் பக்திக்கு வழிகோலும். உலகியல் வாழ்வில் ஆண், பெண் ஆகியோரிடையே ஏற்படும் காதல் இறையடியார் தொடர்பிற்கு இட்டுச் செல்லும் என்னும் வகையில் கைக்கிளை, பெருந்தினை மரபை தழுவி வந்தவையாக அமைந்துள்ளன.
சங்ககால அகத்தினை மரபு காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பல்லவர் கால பகுதியில் புதிய முறையில் பக்தி பாடல்களில் இடம் பெறுகின்றது எனலாம். தலைவன் தலைவிக்கிடையே உள்ள அன்பை வெளிப்படுத்தவென வகுக்கப்பட்ட அகப்பொருட் துறைகள் யாவும் இறைவனிடம் அடியார் கொண்ட அன்பை புலப்படுத்த ஏற்றவையாக பயன்படுத்தப்பட்டன. சங்ககால உலகியற் காதல் பல்லவர் கால பக்தி பாடல்களில் தெய்வீக காதலாக பரிணமிக்கின்றது.
பல்லவர் கால பக்தி இயக்க பெளராணிகள் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கியமையால் இறைவனின் பெருமை, அருட் செயல்கள், குண சிறப்புக்கள் என்பவற்றையும் செவ்வனே புலப்படுத்துவதற்கு துணையாக வடமொழி புராண, இதிகாசங்களிலுள்ள கதைகளையும் கருத்துக்களையும் அதிகளவு பயன்படுத்தினர். 60) öቻ 6)] நாயன்மாரைவிடவும் வைணவ ஆழ்வார்கள் புராண, இதிகாச கதைகள் சற்று அதிகமாகவே பயன்படுத்தினர். கோசலை தாலாட்டு, தசரதன் புலம்பல், தேவகி புலம்பல், கண்ணனது பால்ய லீலைகள் எனும் நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு ஆழ்வார்கள் தமது பக்தி நிலையை புதிய வடிவில் வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்லவர் காலப் பகுதியில் சமயமானது இலக்கியங்களுடன் மட்டுமன்றி மக்களது நாளாந்த வாழ்வில் சகல நடவடிக்கைகளுடன் பின்னிப் பிணைந்து காணப்பட்டது. பக்தி இயக்கம் பொதுமக்கள் இயக்கமாகப் பரிணமிக்க தொடங்கியதும் அவற்றை மனதிற் கொண்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் மக்களின் மனதை எளிதிற் கவரவும் எளிதிற் புரிந்து கொள்ளவும் ஏற்ற வகையான இசையும், தாளமும் ஒருங்கிணைந்த ஒசை வளமிக்க எளிமையான உணர்ச்சியை பெருக்கமிக்க பாடல்களை பாடினர். பக்தி இயக்கங்களின் தனிச் சிறப்பே அவற்றில் காணப்படும் ஆன்மீக வெளிப்பாடு, உணர்ச்சி பெருக்கு, எளிமை, இனிமை, ஒசை முதலியனவாகும்.
பொது மக்களை மனதிற் கொண்டு பாடப்பட்ட பக்திப்பாடல்களிற் பொதுமக்கள் மத்தியில் வழங்கி வந்த பல நாட்டு பாடல் வகைகளைத் தழுவி பதிகங்களைப் பாடினர். திருவாசகத்திலுள்ள திருவம்மானை, திருச்சாழல், திருப்பொன்னூஞ்சல் முதலியனவும், பெரியாழ்வார் பாடிய "கண்ணன் குழல் வாரக் காக்கை அழைத்தல்" முதலிய பாடல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
பொது மக்களை எளிதிற் கவரும் வகையில் அவர்களது நாளாந்த வாழ்வில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அடியொற்றிய வகையில் புதிய பல இலக்கிய வடிவங்களும் பல்லவர்
7)
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 20
காலத்தில் தோற்றம் பெற்றன. இவ்வகையில் பெரிய திருமடல் , சிறிய திருமடல், திருப்பாவை, திருவெண்பாவை, திருப்பளியெழுச்சி, திருப்பொன்னூஞ்சல், திருவம்மானை, திருசாழத் திருத்தொண்டகம், பிள்ளைத் தமிழ், திருமாலை, திருவந்தாதி, திருவெழுக் கூற்றிருக்கை, திருப்பல்லாண்டு, உலா முதலியன விதந்து கூறத்தக்கனவாகும்.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமது உணர்ச்சி அனுபவங்களை புலப்படுத்த பதிகங்களையே பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். மக்கள் ஒன்று கூடி ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும், திருக்கோவிலை வலம்வரும் போது பாடுவதற்கு ஏற்ற அளவு பொருள் உணர்ச்சி முதலியவற்றை கொண்டிருந்தமை அவற்றின் பெருவழக்கத்திற்கு காரணமாகும்.
நாயன்மார்களினதும், ஆழ்வார்களினதும் பாடல்களில் இறைவன் மீது கொண்ட மெய்யன்பினால் ஏற்பட்ட பக்தி வைராக்கியம் கொழுந்து விட்டு பிரகாசிப்பது இக்காலப் பாடல்களின் சிறப்பாகும். மேலும் இவர்கள் நாம் இறைவன் மீது கொண்டுள்ள அளவு கடந்த பக்தியை வெளிப்படுத்த இறைவனைத் தந்தையாக, ஆண்டானாக, தலைவனாக, காதலனாக, தோழனாக, குழந்தையாகப் பல்வேறு
யாழ்/ கோப்பாய் கி
Iண்டைய இந்துக்களின் அரசியல் நிலைபற்றி அறிந்து கொள்வதற்கு எமக்குக் கிடைத்த மிகப் பழைய நூல் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம்.
இந்நூல் அரசினைக் கட்டி ஆள்வது பற்றியும் போரினைத் திறம்பட நடத்துவது பற்றியும் மிக விரிவான முறையில் விளக்குகிறது. நாட்டுப் பொருளாதாரத்தை ஒழுங்கு செய்வது பற்றியும் கூறுகிறது.
அர்த்த சாஸ்திரம் அரசு பற்றிக் கூறுமிடத்து அதன் அம்சங்களாக அரசன், அமைச்சு, நட்பு,பொருள், படை, அணி, நாடு, பகை என்ற எட்டு அம்சங்களைக் கூறுகிறது. இவ் வர்த்த சாஸ்திரம் அரசனது கடமை பற்றிச் சிறப்பாக விளக்குகிறது. நாட்டைக் காப்பதை முதற் கடமையாகக் கூறுகிறது. புறப்பகையால் உயிருக்கும் பொருளுக்கும் கேடு தேடாமல் நாட்டை ஆளுதல் வேண்டும். களவினைக் கடிந்து அடக்குவதன் மூலம் செல்வந்தர்களை வறியவர்களிடமிருந்து காப்பாற்றுதல் வேண்டும். வலிந்து பொருள் பறித்தல், வருத்துதல் ஆகிய குற்றங்களுக்கும் தண்டனை விதிப்பதன் மூலம் வறியோர்களைச் செல்வந்தர்களிடம் இருந்து காப்பாற்றுதல் வேண்டும். கற்றுத் துறைபோய பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் மானியங்கள் வழங்குவதன் மூலம் சமயத்தையும் பாதுகாத்தல் வேண்டும் என்று கூறுகிறது.
(இந்து ஒளி (
 
 

நிலைகளிலும் அடியார்கள் தம்மை அடிமையாகவும், குழந்தையாகவும், தலைவியாகவும், தோழனாகவும் வைத்து நோக்கியுள்ளமை இக்காலப் பாடல்களின் மற்றுமொரு சிறப்பாகும்.
பல்லவர் கால பக்தி இலக்கியங்களில் சமண, பெளத்த மதங்களின் செல்வாக்கின் காரணமாக நிலையாமைக் கருத்துக்கள் கணிசமான அளவிற்கு இடம்பெற்றுள்ளன. ஆனாலும் பெண்களை இழிந்து கூறும் பண்போ, துறவு நெறியை வற்புறுத்தும் பண்போ காணப்படவில்லை. மாறாக பக்தி நெறியையே அதிகளவில் வலியுறுத்தியுள்ளனர்.
இக்காலப் பக்தி இலக்கியங்களில் மற்றொரு சிறப்புப் பண்பும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சமண மதத்தினரையும் அவர்களது போலி வேடங்களையும் தயவு தாட்சண்யமின்றி உக்கிரமாகக் கண்டனம் செய்தமையாகும்.
உசாத்துணைநூல்கள்
இந்துநாகரீகம் பகுதி I (திரு. சொக்கன்) பல்லவர்காலம்- மொடியூலர் - தேசிய கல்விநிறுவகம்
ரேந்திரகுமார் றிெஸ்தவக் கல்லூரி
(క్రిస్తృత్తి
அரசனது நாட்கடமை பற்றி அர்த்த சாஸ்திரத்தில் கூறுமிடத்து உறங்குவதற்கு நாலரை மணிநேரமும் உண்பதற்கும் பொழுது போக்குவதற்கும் மூன்று மணிநேரமும் எஞ்சிய பாகத்தை அரசியற் கருமங்களைச் செய்வதிலும் செலவழித்தல் வேண்டுமெனக் கூறுகிறது. அரசுரிமை பற்றி அர்த்த சாஸ்திரம் கூறுமிடத்து மூத்த மைந்தனுக்கே அரசுரிமை செல்லுதல் வேண்டும் எனக் கூறுகிறது.
இவற்றுடன் இவ் வர்த்த சாஸ்திரம் குற்றங்களுக்குரிய தண்டனைகளைப் பற்றியும் விளக்கிக் கூறுகிறது. இருவர் செய்த போர் காரணமாக புண்பட்டவன் ஏழு நாட்களுக்குள் இறந்து விட்டால் அக்குற்றத்திற்கு கொலைத் தண்டனை வழங்கப்படல் வேண்டும். பொய் வதந்தி பரப்புதல் அரசனது யானை, குதிரை முதலியவற்றைத் திருடுதல் போன்ற குற்றங்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கின்றது. அரசனுக்கெதிராகச் சூழ்ச்சி செய்வோர் பகையரசர்களுக்குத் துணைபோவோர் உயிருடன் தீயிலிட்டு எரிக்கப்படுவர் என்று கூறுகிறது. இவ்வாறு அர்த்த சாத்திரம் அரசியல் நிலை பற்றியும் அரசனுக்குரிய கடமை பற்றியும் குற்றங்கள், தண்டனைகள் பற்றியும் கூறும் நூலாக உள்ளது.
) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 21
60462/1/4/64 இராசைய நாச்சிமார் கோயி
சைவ சமய சின்னமாகிய திருநீறு பிணி நீக்குகின்ற ஓர் அருமருந்தாகும். நெற்றியில் திருநீறு அணிந்திருந்தால் எவ்வித தோஷங்களும் நம்மை வந்து அணுகமாட்டாது. "நீறில்லா நெற்றி பாழ்” என்ற ஒளவையார் கூற்றுப்படி நாம் எந்நேரமும் திருநீற்றை அணிந்திருத்தல் வேண்டும். நீறு என்றால் பாவங்களை நீறாக்குவது என்றே பொருள். ஆகவே தீயவற்றை அழிக்கவல்ல திருநீற்றை நெற்றியிலே அணிந்திருந்தால் பயமே இல்லாது எங்கும் நடமாடலாம் வெற்றி நிச்சயம் கிடைக்கும் .
திருநீற்றுக்கு வீழதி, பஸ்மம், பசிதம் இரட்சை என்றும் பெயர்கள் உண்டு. இந்தத் திருநீற்றை உத்துாளனமாகவும், திரிபுண்டரமாகவும் தரிக்கலாம். உத்துளனம் என்றால் பரவலாகப் பூசுதல்,திரிபுண்டரம் என்றால் நீரில் குழைத்துமூன்று குறிகளாகத் தரித்தல் சமயதீட்சை பெற்றவர்கள் மாத்திரமே மூன்று குறிவைக்கும் உரித்துடையவர். மற்றவருக்குத் தகுதி இல்லை.
திருநாவுக்கரசப் பெருமானின் சூலை நோயையும், பாண்டியனின் வெப்பு நோயையும் நீக்கிய பெருமையையுடையது இந்தத் திருநீறு. அது மட்டுமன்றிச் சைவ நாயன்மார்களது வரலாற்றில் முக்கிய இடத்தையும் வகிக்கும் திருநீறு புனிதமும், மகிமையும், மகத்துவமும் வாய்ந்தது என்பது சொல்லித் தெரிய வைக்க வேண்டியதில்லை. மிகமிக மந்திர சக்தியுடையது நீறு.
வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த அந்தச் சிவபெருமானது திருமேனியெங்கும் பொலிந்து தோன்றுகின்ற திருநீறு புராணங்களிலே பெரிதும் போற்றப்படுகின்றது. மெய்ப்பொருள் நாயனார் திருநாவுக்கரசு நாயனார், அப்பூதியடிகள், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றிலும் விபூதி பின்னிப் பிணைந்து தனக்கெனத் தனி இடம் பிடித்துக் கொண்டுள்ளது என்று கூறின் அது சாலப் பொருந்தும்.
விபூதி என்ற சொல்லின் பொருள் மேலான செல்வம் என்பதாகும். பசுவின் சாணத்தினால் எடுக்கப்பட்டதே திருநீறு. இதனை அணியும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று நிலத்திற் சிந்தாத வண்ணம் அண்ணாந்து “சிவசிவ” என்று சொல்லித்தரித்தல் வேண்டும். எப்போதும், எந்நேரமும், எந்நாளும் விபூதி அணிவதால் இறை சிந்தனை உண்டாகும். அது உடல் வளத்தையும் உளவளத்தையும் உண்டுபண்ணுகின்றது. பூநீலழரீ ஆறுமுகநாவலர் ஆக்கிய நித்திய கரும விதி' என்னும் நூலில்
இணையத்தளத்தில் மாமன்றம்
3. அகில இலங்கைஇந்துமாமன்றத்தைப்பற் S4 காலாண்டிதழான இந்து ஒளி"உட்பட மாமன்ற இணையத்தளத்தின் ஊடாக
இணையத்தள முகவரி:
(இந்து ஒளி
 
 
 
 

வர் கவிமணி ா பூணிதரன்
vlug, MLMIġLÚLVITØTuió
97.N. ZAVZVAZVAVZAVISANANANAN
திருநீற்றின் மகத்துவம் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, திருநீற்றின் புனிதமும் மகத்துவமும் மிகவும் சொல்லி முடியாதது.
சைவ சமயத்தவர்களாகிய நாம் விபூதி அணிவதால் பெருமையை அடைகிறோம். சிவ சின்னம் இறைவனை ஞாபகமூட்டுதல், அவனைப்பணிதல், வணங்குதல் என்பனவற்றை உணர்த்துகின்றது.
குரு, சிவனடியார் பெரியோர் போன்றோரிடமிருந்து பெறும் விபூதி தெய்வீகத் தன்மை பொருந்தியது. அவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள். அத்தகைய தன்மை வாய்ந்தவர்கள் விபூதி தரும் போது அடக்கத்துடன் இடது கையின்மேல் வலது கையை வைத்து இரண்டு கைகளையும் நீட்டி வாங்கி அணிதலே சிறப்புத் தன்மை காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளில் இறை வழிபாட்டுக்கு முன்னும், உணவு உட்கொள்வதற்கு முன்பும், பின்னரும், நித்திரைக்கு போவதற்கு முன்னரும், நீராடியவுடனும் விபூதி அணிதல் சிறந்தது. அத்துடன் சிவபூசை, யாகம், சிறு சமய நிகழ்ச்சிகளில் விபூதி அணிவதால் ஆன்ம ஈடேற்றம் கிடைக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டிலிருந்து வெளியே அலுவல்களுக்குப்புறப்படும்போது நிச்சயமாகத் திருநீறு அணிதல் வேண்டும். மிக முக்கியம். -
திருஞானசம்பந்தப் பெருமான் தமது தேவாரத் திருப்பதிகத்திலே திருநீற்றின் பெருமையை மிகவும் அழகாக, அற்புதமாக எடுத்துக் கூறுகின்றார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே
இது திருநீற்றுப்பதிகம்
எத்தனை பெரிய உண்மையை எவ்வளவு கனகச்சிதமாகக் கூறியிருக்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான். எனவே சைவமக்களாகிய நாம் திருநீற்றின் மகிமையை உணர்ந்து அதனை அணிந்து நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கக்கூடியவகையில் வாழ்ந்து ஆன்ம ஈடேற்றம் பெற வழிவகைகளைத் தேடி சதுர்வித புருஷார்த்தங்களைப் பெற்றுப்வோமாக.
றிய தகவல்கள், அதன் சமய சமூகப் பணிகள் மற்றும் த்தின் வெளியீடாக வந்துள்ள ஏனைய நூல்கள். ப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
www.hinduCongress.org
6
9) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 22
ന്ദ്രങ്ങഖ്യ
"ஏன்டா அலைகிறாய் நான்கு பேர் சொன்னபடி
நடந்தால் உனக்கு இந்தக் கவலை வருமா?” எனப்பலர் பேசுவதை நாம் அனுபவ மூலம் அறிகின்றோம், காண்கின்றோம், கேட்கின்றோம். அந்த நாலுபேர் யார்? அவர்கள் என்ன சொன்னார்கள்? அதை நாம் முதலில் தெரிய வேண்டும்.
இங்கு நாலுபேர் என்று கூறப்பட்டவர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, வர்தவூரர் ஆகியோராவர். அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், அவர்கள் LuTiy. uLU தேவாரம் திருவாசக மூலம் திருவைந்தெழுத்தேயாகும். 'ஓம் நமசிவாய நம’ என்ற திருவைந்தெழுத்தானது வேதங்களின் நடுமணியாகும். ஆன்மாக்களின் இருதயம் போன்றதுமாகும்.
கூறப்பட்ட நால்வரும் திருவைந்தெழுத்தை முடியாகக் கொண்டு, திருஞானசம்பந்தர் முதலான தேவார முதலிகள் மூவரும் திருவாதவூரடிகளும் எம்பெருமானை இன்றியமையாத தோன்றாத் துணையாகப் பாடியதை அவர்களுடைய பதிகங்கள் முழுவதும் தெளிவாகக் காண முடிகிறது.
திருவாசகத்திற்குருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார். அத்தகைய திருவாசகம் திறந்தவுடனே வருவது 'நமச்சிவாய வாழ்க"என்பதாகும். திருவாசகத்தில் கூறப்படுவன யாவும், இந்த "நமசிவாய'என்ற திருவைந்தெழுத்திலே அடங்கி விடுகின்றது. திருவாசகம் திருக்கோவை எனபனவற்றின் பொருள் எம்பெருமானின் தூக்கிய திருவடியெனச் சுட்டிக் காட்டி இரண்டறக் கலந்தார் என்பதை திருவாதவூரடிகள் புராணவாயிலாகக் காணக்கிடக்கின்றது.
திருஞான சம்பந்த நாயனாருக்குப் பூணுால் சடங்கு நடந்த காலத்தில் சுவாமிகள் திருவைந்தெழுத்தின் சிறப்பைக் "காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி’ என்னும் நமசிவாயப் பதிகத்தில் திருவைந்தெழுத்தின் பெருமைகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையின் என்னுவார் தக்க வானவராத்தரு விப்பது நக்கன் நாமம் நமசிவாயவே”
வேதங்கள் நான்கு. இந்த வேதங்களை அருளியவர் எம்பெருமான். எம்பெருமானாலே அருளப்பட்ட வேதங்களும் இறைவனைத் தேடுவதாக மணிவாசகப் பெருமான் அருளினார். அந்த வேதங்களில் நடுமணியாகிய திருவைந்தெழுத்தை நாளும் அக்குமணி அதாவது உருத்திராக்க மணிமாலை கொண்டு தியானித்து ஜெபித்து வருவதால் இயமன் கூட நெருங்கமாட்டான்.
(இந்து ஒளி
 

0ாட்சி மாதாஜி
வானவர் போன்றிருப்பார் என்பதைப் பதிகந்தோறும் சம்பந்தர்
பாடியுள்ளார். இந்த உண்மைகளைச் சிவ மகாபுராணத்தில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்துள்ளார்.
அக்கினி காரியம் நிகழ்த்தி ஆகம வேத விதிப்படி பஞ்சாட்சரம் என்று கூறப்படுகின்ற திருவைந்தெழுத்தை முக்கரண சுத்தியுடன் தியானித்து உருத்திராட்ச மணி கொண்டு ஜெபிக்க வேண்டும் தேவி. உலகில் உள்ள எல்லா மந்திரங்களைவிடத் திருவைந்தெழுத்தே சிறப்பானது. இந்த மந்திரத்திற்கு ஈடாக எந்த மந்திரமும் இல்லை. சிவன் கோவிலில் திருவைந்தெழுத்தின் ஒவ்வோர் எழுத்திற்கும் ஆயிரத்தெட்டு என்ற வகையில் ஒருமைப்பட்ட மனதுடன் ஜெபித்தால் மிகவும் நன்று. சிவமாம் தன்மை பெறலாமெனக் கூறப்பட்டுள்ளது. (சிவ மகா புராணத்தில் இச் செய்தி விரிவாக உள்ளது. சுருங்கக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருஞான சம்பந்த சுவாமிகள் தொடர்ந்து பஞ்சாட்சர திருப்பதிகத்தில்
"துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின்நாள்தொறும் வஞ்சக வாழ்த்த வாழ்த்த வந்தகடற் நஞ்சவு தைத்தன அஞ்செழுத்துமே
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையினுந்துணை அஞ்செழுத்துமே”
என்று திருவைந்தெழுத்தை நின்றும் நடந்தும், கிடந்தும், இருந்தும், இமைப்பொழுதும் மறவாது தியானம் செய்வார் அடையும் ஒப்பற்ற பெறுபேறுகளை பஞ்சாட்சரப் பதிகம் முழுவதும் ஆணித்தரமான உறுதியுடன் பாடியுள்ளார்.
சிறிய கல்லோ பெரிய கல்லோ நீரினுள்ளே போட்டால் அது அமிழ்ந்துவிடும் என்பது கண்கூடு. கொடியவர்களாகிய பல்லவர்கள் அப்பரடிகளை கருங்கல்லுடன் கட்டிக் கடலுள் தள்ளி விட்டனர். அப்பர் உடனே திருவைந்தெழுத்தை நினைந்தார். உடனே நமச்சிவாயத் திருப்பதிகம் பாடினார். கல்லுத் தெப்பமாகியது. கரைசேர்ந்தார் என்பது வரலாறு.
"சொற்றுணை வேதியன்’ என்னும் தேவாரத்தில் "கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று பாடிய அப்பர் அடிகள் நமச்சிவாய மந்திரத்தை வாழ்க்கையில் தாரக மந்திரமாகக் கொண்டால்
ஏற்படுகின்ற நன்மைகளைப் பதிகம் முழுதும் பாடியுள்ளார்.
20 சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 23
இடுக்கண்பட்டிருக்கினும் இரந்தியாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோமல்லோம் அடுக்கற்கிழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே”
இல்லக விளக்கது இருள்கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது.நமச்சி வாயவே”
என்று திருவைந்து எழுத்தினால் ஏற்படுகின்ற அரிய பெரிய செயல்களைப் பதிகம் தோறும் பாடியுள்ளார். தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் தமது வாழ்நாள் முழுதும் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ” எல்லாம், தமக்குத் துணையாகவும் படைக்கலமாகவும் கொண்டவற்றை மனம் கசிந்து உருகி, படைக் கலமாக உன் நாமத் தெழுத்தஞ்சென் நாவிற் கொண்டேன். இடைக்கலம் அல்லேன் ஏழு பிறப்பும் உனக்காட் செய்கின்றேன். துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் து நீறணிந்துன் அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தானே’ எனத் தமது இறை நம்பிக்கையை
வெளிப்படுத்தியுள்ளார். «V
இவ்வாறே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் நமசிவாய மந்திரத்தின் உறுதியான நம்பிக்கையை நமச்சிவாயப் பதிகந்தோறும் உறுதிப் பாட்டுடன் பாடியுள்ளார். “நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சி வாயவே” எனப் பாடியுள்ளார்.
திருவைந்தெழுத்தை இடையீடு இன்றித் துணையாகக் கொண்டால் உண்மையாக நமச்சிவாய மந்திரத்துள் எல்லாம் அடங்கி இருப்பதை அனுபவத்திற் கண்ட அப்பரடிகள் சமணரால் சுண்ணாம்பறையில் விட்டுப் பூட்டிச் சிறை செய்த போது பாடிய “மாசில் வீணையும் மாலை மதியமும்” என்ற பதிகத்தில்
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்நெறிகாட்டுமே”
என்றும் நமச்சி வாயளன் பாருள ரேல் அவர் தமச்சநீங்கத் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே
எனப் பாடுகின்றார்
'நமச்சிவாய' மந்திரம் மனிதனின் இருதயம் போன்றது. மனிதனுக்கு மூளை இல்லாமல் இருந்தால் பைத்தியகாரனாய் சிலகாலம் உயிருடன் வாழ முடியும். ஆனால் இருதயம் இன்றேல் ஒரு நொடிப் பொழுதாயினும் உயிர் வாழ முடியாது. ஆகையால் திருவைந்தெழுத்தின் நாம ஜெப சிந்தனையின்றி மனிதர்கள் மனிதர்கள் போன்று ஆன்மீகம் அடையவே முடியாது. இதனை
(இந்து ஒளி

வடலூர் வள்ளலார் “பெற்றதாயைப் பிள்ளை மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மகவை மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தள்லும், கற்ற நெஞ்ச கலை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள் நின்றோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே” எனப்பாடுகின்றார்.
எங்களுடைய காலத்தில் எங்களுடன் வாழ்ந்தவர்கள் ஈழத்துச் சித்தர் வரிசையில் வந்த தவத்திரு சிவயோக சுவாமிகள் அவர்கள். ஈழமக்கட்கு இறைநம்பிக்கை ஊட்டி ஈழ மக்கள் உறுதியாக வாழவேண்டும் என்பதற்காக நமசிவாய மந்திரத்தின் சிறப்புக்களையும் அதுவே ஆன்மாக்களின் தோன்றாத் துணையும் என வலியுத்தி நற்சிந்தனைப்பாடல்களில் நமச்சிவாயமந்திரத்தின் தோன்றாத் துணையை
'நமச்சி வாயவே நான்மறை ஆகமம் நமச்சி வாயவே மந்திர தந்திரம் நமச்சி வாயவே நம்முடல் உயிர்பொருள் நமச்சி வாயவே நற்றுனையாகுமே
என்றும் தொடர்ந்து துரலபஞ்சாட்சர இயல்புகளைத் துல்லியமாகப் பத்துப் பாடல்களில் விரிவாக ஆராய்ந்து உண்மையறியப் பாடியுள்ளார். தூல பஞ்சாட்சர ஒன்பதாம் பாடலில்
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரானென்று துஞ்சும் பொழுதுன்துணைத்தாள் சரனென்று மஞ்சு தவமும் வடவரை மிதுறை அஞ்சில் இறைவன் அருள்பெறலாகுமே”
அதாவது திருவைந்தெழுத்தின் சிறப்பான ஆராய்வால் அப்பரம்பொருளின் மறையினை நீங்கா நினைவுடைய துயராய்க் கணித்து வாயால் சிவபெருமானே முழுமுதற் பொருளென வாழ்த்தியும் வருவோர் சிவநெறிச் செல்வராவர். அவர்கள் இறக்கும் போது இறைவனே உன் திருவடிகளே துணையென்று அடைக்கலம் புகுவர். இதனால் இவர்கள் மேகம் தவழும் வெள்ளியங்கிரியில் உறையும் திருவைந்தெழுத்தால் பெறப்படும் சிவபெருமானின் திருவருளைப் பெற்று உய்வர்.
திருமூலர் சூக்கும பஞ்சாட்சரத்தில் திருவைந் தெழுத்தின் தத்துவ யதார்த்தங்களை பத்துப் பாடல்களால் தேனுாறும் செந்தமிழால் விளக்கியுள்ளார். அதில் எட்டாம் பாடல் ஒன்பதாம் பாடல்களைப் பார்ப்போம்.
சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவ சிவ வாயுவந் தேர்ந்துள் அடங்கச் சிவ சிவ வாய தெளிவினுள்ளார்கள் சிவ சிவவாகும் திருவருளாமே
என்றும் சிவசிவ என்கிலர்தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதிதானே
என்றும் அருளியுள்ளார்.
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 24
திருவைந் தெழுத்தாகிய பூரீ பஞ்சாட்சரத்தை அதி சூக்கும பஞ்சாட்சரமாக ஐந்து பாடல்களால் மிகவும் நுண்மையாக நுணுக்கமாக விளக்கியுள்ளார். அவற்றில் முதலாவது பாடல்
சிவாயநமவெனச் சித்தம் ஒடுக்கி அவாயம் அறவே யழமையதாக்கிச் சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க ஆனந்த மாமே
அதாவது நின்றும், இருந்தும், கிடந்தும் நடந்தும் என்றும் எப்போதும் சிவாயநம வென்று தமது சித்தத்தினை சிவனுக்காக்கி சிவனார்க்குத் தன் சித்தத்தை உறைவிடமாக்கி நீங்கா நினைவாய் “சிவசிவ” என்று எண்ணிக் கொண்டிருந்தால் மிகப்பாரிய பேரிடர்கள் நீங்கும். இதனால் திருவைந்தெழுத்தின் நுண்மை விளங்கி"சிவசிவ” என்பதாகும் இதனால் திருவடிப்பேறுண்டாகும்.
S2S2S2S2S2S2S2S2 (IIIIMi]] (ଗ
மாமன்றத்தினால் வெளியிட மாமன்றத் தலைமையகத்தி
(இந்து மக்களுக்கு ஒரு கையேடு )
இந்து மக்களுக்குத் தேவையான பயனுள்ள பல விடயங்களை உள்ளடக்கிய கைநூல் ரூபா 140/= பெறுமதியான இந்த நூலை, இப்பொழுது சலுகை விலையாக ரூபா 100/-க்கு வழங்குகிறோம். (தபாற் செலவு ரூபா 10/=)
தலைமையகக் கட்டிடப்பூர்த்தி சிறப்பு மலர்
இலங்கையிலுள்ள திருத்தலங்கள், இலங்கையின் இந்து சமயப் பெரியார்கள், இலங்கையில் இந்துமத வரலாறு, வளர்ச்சி மற்றும் இந்துமத ஸ்தாபனங்களின் பணிகள், இறைவழிபாடு போன்ற விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆன்மீக தத்துவங்கள் அடங்கியதாக வெளிவந்திருக்கிறது.
அனைவருக்கும் பயனுள்ள ஒரு வெளியீடு.
விலை ரூபா 150/= (தபாற்செலவு ரூபா 25/=)
OYOYORYOYOYOYORYORS
அப்பியாசங்கள் ஒன்றை வளர்க்கின்ற அல்லது
உடலானது எலும்பு, நரம்பு, தசை, இரத் தேகாப்பியாசத்தால் பலப்படுத்துகிறோம்.
(இந்து ஒளி

தொடர்ந்தும் நான்காம் ஐந்தாம் பாடல்களில் திருவைந்தெழுத்தின் நுண்மைகளை
நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம் நாயோட்டு மந்திரம்நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி நாயோட்டு மந்திரம் நாமறியோமன்றே”
என்றும்
பழுத்தன ஐந்தும் பழமறையுள்ளே விழித்தங் குறங்கும் வினையறிவாரில்லை எழுத்தறிவோமென்றுரைப்பார்கள் எதிர் எழுத்தை யழுத்தும் எழுத்தறி யாரே”
என்றும் அருளியுள்ளார்.
M%AA%AA%AA%AA%AM%ANYAM வளியிடுகள்)
டப்பட்டுள்ள பின்வரும் நூல்களை தில் பெற்றுக் கொள்ளலாம்.
AN ELUCIDATION OF THE TRUPPASURAM திருப்பாசுரத்தின் விளக்கம். (ஆங்கில நூல்)
யாழ், சைவபரிபாலன சபையினரால் முன்னர் வெளியிடப்பட்ட நூலை மாமன்றம் மறுபிரசுரமாக வெளியிட்டுள்ளது.
விலை ரூபா 50/= (தபாற்செலவு ரூபா 10/=)
GLORIES OF SHAVAISM
சைவப் பெரியார் எஸ். சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட மேற்படி நூலை மாமன்றம் மறு பதிப்பாக வெளியிட்டுள்ளது.
விலை ரூபா 30/= (தபாற்செலவு ரூபா 10/=)
மேற்படி நூல்களை தபாலில் பெறவிரும்பு பவர்கள், அதற்குரிய பணத்தை காசோலை அல்லது காசுக் கட்டளை மூலமாக அனுப்பிவைக்கலாம். பணம் பெறுபவர் பெயர்: அகில இலங்கை இந்து மாமன்றம் எனவும் பணம் பெறும் இடம்: கொழும்பு என்றும் குறிப்பிடவேண்டும்.
(ORYOYORYOYOYOYOYOY
பலப்படுத்துகின்ற சாதனைகளாகும். எங்கள் கம் முதலியவனவற்றால் ஆயது. அதைத்
சிவதொண்டன்
2) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 25
சித்தர்கள் என்போர்
"வேதத்தை அனுபவமூலம் கண்டு ருசித்து வாழ்ந்தவர்கள். சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள். பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து - பிறர் இட்டதை நாய்போல் தின்று, நரிபோல் உழன்று. நங்கையரைத் தாய் போல் நினைந்து, தமர்போல், உறவாடி சேய் போலிருப்பான் உண்மைச் சிவநாமம் உணர்ந்தவரே”
இந்த சித்தர்கள் தாயின் கருணையும் குழந்தையின் உள்ளமும் கொண்டவர்கள். துறவிக்கு வேந்தன் துரும்பு என்றபடி துணிச்சல் கொண்டவர்கள். பசி, நோய், புகழ், பழி, விருப்பு, வெறுப்பு, பகை, நட்பு இவை எல்லாமே ஒப்ப நோக்கும் தெய்வப் பண்பு உடையவர்கள்.
உடலை உருப்பதற்கு துளியும் அசையாத மன உறுதி கொண்டவர்கள். தம்மைத் தாமே கட்டுக்குள் வைத்திருக்கும் தனிப்பேராண்மை இவர்களுக்குண்டு. மேலும் இவர்கள் அட்டமாசித்திகளும் கைவரப் பெற்றவர்கள். ஆனால் நன்மைக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவர்.
சித்தர்கள் உலகெங்கும் உள்ளனர். எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் சித்தர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே அவர்கள் நோக்கு.
சித்தர் நெறி
சித்தர்கள் யாவரும் மனிதநேயம் மிக்கவர்கள். சாதிசமய வேறுபாடுகள் அற்றவர்கள். சமரச சன்மார்க்கத்தை நோக்கமாகக் கொண்டவர்கள். சடங்குகள், சம்பிரதாயங்களை மதியாதவர்கள். மனித வாழ்க்கை நிலையற்றது. மனிதன் தனக்குள் உறையும் இறைவனைக் காண வேண்டும் எனப் போதிப்பவர்கள்.
“கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ எனும் வாழ்க்கை பயனற்றது. எல்லாம்வல்ல எங்கும் நிறைந்த இறைவனை மனமொழி மெய்களால் போற்ற வேண்டும். மனிதர்கள் வாழ வேண்டும். இத்தகையோர் வாழ்வே சிறந்தது. இவையே சித்தர்கள் பின்பற்றிய நெறிகள். இவையே இவர்கள் உலகிற்கு உணர்த்திய நெறிகள். அவர்களுடைய பாடல்கள் குழுஉக்குறி, ஆகவே அமைந்திருக்கும்.
“மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில் தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்? வட்ட வழக்குள்ளே மருவும் சதாசிவத்தை கிட்ட வழிதேட கிருபை செய்வதெக்காலம்? என பத்திரகிரியார் கேட்கிறார். தனக்குள்ளே இருக்கும் இறைவனைத் தரிசிக்க வேண்டியதை அவர் இவ்வாறு கூறுகிறார்.
(இந்து ஒளி (
 

“பொன்னின் ஒளி போலவெங்கும் பூரணமதாய்
பூவின் மணம் போல, தங்கும் பொற்புடையதாய் மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும் வள்ளலடி வணங்கி நின்று ஆடு பாம்பே' எனப் பாம்பாட்டிச் சித்தர் பாடுகிறார்.
பாம்பை ஆட்டுவித்துப் பாடுவதால் பாம்பாட்டிச் சித்தர் என இவர் பேர் பெறுகிறார். அடிப்படையில் ஆழ்ந்த தத்துவம் கொண்ட இப்பாடல் பாம்பு வடிவமாக உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி ஆன்ம தரிசனம் பெறுவதை இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே, சித்தர் பரம்பரையின் முன்னோடியாக விளங்குகின்றார். அவருக்குப் பின் தோன்றிய பலர் சித்தர்களாக விளங்கியுள்ளனர். சைவ அடியார்கள் பலர் சித்து கைவரப் பெற்றவர்களாக உள்ளனர். திருவிசைப்பா பாடிய கருவூர் தேவர், ஞான நூல்களை இயற்றிய நக்கீரர், கபிலதேவர், பட்டினத்தடிகள் போன்றோரும் சித்தர்களே.
இந்துக்கள் பரம்பரையில் மிக நீண்ட நெடுங்காலமாகவே சித்தர் மரபு தொடர்ந்து வந்திருக்கிறது. V.
சித்தர்கள் பெரும்பாலானவர்கள் தம் இயற்பெயரை இழந்து தாம் வாழ்ந்த இடத்தின் பெயராலே அழைக்கப்பட்டனர். கருவூரார், கொங்கணர், இடைக்காடார் ஆகியோர் இடப்பெயரையே தம் பெயராகக் கொண்டவர்கள். அகப் பேய்ச்சித்தர், குகம்பைச்சித்தர் அழகுண்ணிச் சித்தர், பழனிமுனி கோரக்கர், யூகிமுனி, பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச்சித்தர், கமலமுனி, சட்டைமுனி மச்சமுனி, சுந்தரானந்தர், பத்திரகிரியார் இராமதேவர் என பதினெண் சித்தர்கள் முக்கியமானவர்கள். இந்தப்பதினெட்டு பேரே வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள்.
சித்த வைத்தியத்திற்கு இவர்கள் ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியது. நிகண்டு வைத்திய சிந்தாமணி போன்ற வைத்திய மாந்திரீக முறைகளை ஆக்கியோரும் இச் சித்தர்களே.
சித்தர்கள் பற்றிய விளக்கம்
சித்தர்களின் பாடல்களின் கருத்துக்கள் நாடு, மொழி, இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து சென்று உலகெங்கும் பரவும் ஆற்றல் கொண்டவை. அவற்றில் பட்டினத்தார் பாடல்களுக்கு தனிச் சிறப்புண்டு. பட்டினத்தார் வாக்கு யாராலும் போற்றப்படுவது. உடல், பொருள், ஆவி, சுற்றம் எல்லாமே நிலையற்றவை. உலக இன்பம் நிலையற்றது என இவரது பாடல்கள் பறைசாற்றுகின்றன. வேளைக்கு உணவு உண்பதோ, உடை உடுத்துவதோ, அடுத்த நேர உணவைப்பற்றி சிந்திப்பதோ இவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. கையில் ஒடுகொண்டிருப்பதைக் கூட சிலர்
சித்திரபானு வருடம் ஆடி -- quru 2-362)

Page 26
வெறுத்தனர். உறைவிடம் பற்றியோ மழை, வெயில் பற்றியோ சிந்திக்கவே மாட்டார்கள். இருளோ, ஒளியோ, காடோ, நாடோ கால் போன போக்கிலே போய்க் கொண்டே இருப்பார்கள்.
உலகப் பழக்கவழக்கங்கள், சாதி சமய பிளவுகள், செல்வம், செல்வாக்கு, பதவி, மண், பொன் இவை எல்லாம் சாராத திருவடிவமே சித்தர்கள்.
தொடர்ந்து ஞானப் பயிற்சியிலும் தியானத்திலும் இவர்களுக்கு அட்டமாசித்தி கிடைப்பதாக நம்பப்படுகிறது. அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாம்யம், இசித்துவம், என்பது அட்டமா சித்திகள்.
அணிமா - அணுவளவு உருக்கொள்ளக் கூடிய சக்தி
மகிமா - அதிபலத்துடன் பெருமலை போல் மாறக்கூடிய சக்தி லகிமா - காற்றைப் போல பாவெளியில் பறந்துபோகும் சக்தி கரிமா - தங்கத்தைப் போல் மாற்றுக் குறையா உறுதி பிராப்தி - ஏழு உலகமும் புகுந்து வரக்கூடிய சக்தி
வசித்துவம் - கடவுளரையையும் வேந்தரையும் கட்டுப்படுத்தும் சக்தி பிரகாம்மியம்- இருக்கும் உடலை விட்டுஇன்னோர் உடல் புகும் சக்தி இசித்துவம் - விரும்பியதை விரும்பியவாறு செய்யும் பேராற்றல்.
சித்தர்கள் விக்கிரக வணக்கத்தை வெறுத்தவர்கள் கற்சிலைக்கு அளிக்கும் நமது படையலை விட அன்பின் சின்னம் தான் மானுட வடிவு என்கிறார் சிவவாக்கியார். அறிவிலி அன்பையும் சிவத்தையும் பேதமிட்டுப் பார்க்கிறான் ஆண்டவன் அன்பே உருவானவன். ஆண்டவனை வேறெங்கும் தேட வேண்டியதில்லை. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதோடு எல்லாம் கடந்த ஆண்டவனை வைத்துக் கொண்டு நடக்கும் மத பூசல்களை நையாண்டி செய்வர்.
அறிவிலிகளே உங்களுக்குள்ளே தெய்வம் இருக்கையில் உங்களுக்கு வெளியே புனித தலமும் புண்ணிய தீர்த்தமும் இருக்கிறதா? என்று கேட்கிறார் சிவவாக்கியார்.
"நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுத்தி நின்று முணுமுணென்று
சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லு பேசுமா?
நாதன் உள்ளிருக்கையில்" மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மீன் இருக்கும் நீரலோ மூழ்குவதும் குடிப்பதும் மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மான் உரித்த தோலலோ மார்பு நூல் அணிவதும்
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது"
சித்தர்கள் எமக்கருளிய வைத்திய நூல்கள்-பாடல்கள் சித்தர் நூல்களில் தலை சிறந்தது திருமந்திரம் - இது
திருமூலர் இயற்றியது. சித்த வைத்திய முறையை வகுத்தவர்களில்
தலையாயவர் அகத்தியரே எனப்படுகிறது.
(இந்து ஒளி

காலங்கி நாதரின் மாணவர் போகர். இவர் பழனி மலையிலே வாழ்ந்தவர். யோகம் எழுநூறு, வைத்தியம் ஏழாயிரம் நிகண்டு பதினேழாயிரம். போகர் திருமந்திரம் என்பன் போகரால் இயற்றப் பெற்றன. பழனி மலையில் ஒரு குகைக்குள்ளே சென்ற போகர் இதுவரை திரும்பி வரவில்லை. என்ற ஒரு கதையும் உண்டு. புலிப்பாணி சித்தரும் பழனிமலைச் சாரலில் வாழ்ந்தவர். சிதம்பரம் இருபத்தைந்து, சாவாத்திரட்டு நூறு, பல திரட்டு நூறு, வைத்தியம் ஐந்நூறு முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
அகத்தியரின் மாணவர் எனப்படும் தேரையர் நோய் அணுகாவிதி என்னும் நூலையும் அவரது மாணவர் யூகிமுனி வைத்திய சிந்தாமணியையும் இயற்றி உள்ளனர். தன்வந்திரி என்னும் சித்தர் தன்வந்திரி நிகண்டு, வைத்திய சிந்தாமணி, கலைஞானம் என்பவற்றையும் இயற்றியுள்ளார்.
சித்தர் பாடல்கள் இன்றும் எம்மிடையே புகழ்பெற்று விளங்குகின்றன.
“நாதர் முடி மேலிருக்கும் நாக பாம்பே நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே' என்ற பாடல் பாம்பாட்டிச் சித்தர் பாடலாகும். மருத மலையில் இவருடைய வாழ்க்கைச் சின்னங்கள் இன்றும் காணப் படுகின்றனவாம்.
மனத்தைப்பேயாக கருதி அதற்குப்பெண் உருக்கொடுத்து பாடிய பாடல்கள் அகப்பேய்சித்தரின் அகப்பேய் சித்தர் பாடல் ஆகும். அகப்பேய் என்பது மருவி அகப்பைச்சித்தர் என வழங்குதலும் உண்டு. குதம்பை என்பது "காதணி” இதை அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்தி பாடிய பாடல்கள் குதம்பைச் சித்தர் பாடல்கள் எனப்படும். இவை எளிமையானவையும் ஆழ்ந்த பொருள் கொண்டவையுமாகும். இச்சித்தர்கள் இன்றும் பழனி பகுதிகளில் உள்ள மலையின் அடியில் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் கூட பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். புரட்சிக் கவிஞர் பாரதிகூட தன்னை ஒரு சித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார். "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தனர். அப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்நாட்டில்” என்கிறார்.
பாரதி அறுபத்தாறு என்னும் பாடலில் இங்கிதம் தன்னையும் சித்தர்களில் ஒருவர் எனக்கூறியபாரதி, குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணச்சாமி முதலிய துறவிகளின் சிந்தை பற்றியும் கூறுகிறார்.
இவர்கள் எல்லோருக்குமே முன்பு வாழ்ந்த அகத்தியர், புலதியர், திருநந்திதேவர், போகர் கூட சித்தர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அகத்தியர் பொதிகைமலையில் வாழ்ந்தவர். அகத்தியமாமுனிவர் என்றே அறிகிறோம். ஆனால் அந்த அகத்தியர் கூட ஒரு சித்தரே. பஞ்சலி முனிவர் கூட ஒரு சித்தராகவே அறியப்படுகிறார்.
ஏன் நமது நாட்டில் வாழ்ந்த யோகசுவாமிகள், ஆனைக்குட்டி சுவாமிகள், செல்லப்பா சுவாமி போன்றோரும் சித்தர்களே. சிந்தானைக் குட்டியார் என்றே ஆனைக்குட்டி சித்தர் அழைக்கப்படுகிறார்.
வரலாற்றுப் பெருமை கொண்ட சித்தாண்டி முருகன், திருப்பதியை நிறுவியவரே சித்தாண்டி என்னும் சித்தரே என அறிகிறோம். சித்து - ஆண்டி சித்தாண்டி என இவர் பெயராலே சித்தாண்டி முருகன் ஆலயம் இன்றும் அழைக்கப்படுகிறது.
4)
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 27
இறவாத புகழுடையனவும் மக்கள் வாழ்வை
உயர்த்துவனவுமான பெரும் நூல்களை உலகிற்கு ஆக்கித்தந்து அதன் மூலம் என்றும் வாழும் திறம் பெற்று விட்ட புலவர்கள் ஒருசிலரேயாவர். அவர்களுள் சிறப்புப் பெற்றவர் திருவள்ளுவர். இவர் இயற்றிய நூல் திருக்குறள்.
இவர் சீலத்தில் சிறந்த அறிவாளி. பிறவிக் கவிஞர். தம் வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு குறட்பாக்களை உலகினோர் உய்யும் வண்ணம் எழுதித் தந்துள்ளார். "வள்ளுவன் தன்னையுலகினுக்னே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு இவ்வுண்மையை அமரகவி பாரதியாரே பாடியுள்ளார்.” அந்த உண்மைத்திருவள்ளுவரை உணர வைக்கும் ஒரே ஒரு கருவி அவர் இயற்றிய திருக்குறளாகும். அதனாலேதான் திருக்குறளுக்குத் திருவள்ளுவர் என்ற பெயர் வழங்குவதாயிற்று.
திருக்குறள் உலகிலே வளம்பெற்ற மொழிகளனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதனால் உலகனைத்தும் குறள் ஒலி கேட்கிறது. தமிழ் அன்னையை அழகு படுத்தும் எல்லா இலக்கிய அணிகளிலும் தலை சிறந்து விளங்குவது திருக்குறள். அதுமட்டுமா புலவர்களின் உள்ளம் கவர்ந்த உயர்ந்த நூல் திருக்குறள். திருக்குறள் நன்றும், தீதும் காட்டுதல் மூலம் கொள்ள வேண்டியவற்றை வலியுறுத்தி மக்கள் அறநெறியில் வாழ வழிகாட்டியது. அதனால் அது உலகனைத்தும் பொருந்தும் அறநூல். திருக்குறளுக்கு பல பெயர்கள் உள. உண்மைகளேயன்றி வேறெதனையும் கூறாவியல்பினாற் பொய்யா மொழியென்றும் அறம் பொருள்,காமம் என்னும் முத்திறப்பகுப்புடமையால் முப்பால் என்றும் மனிதனுக்கு நற்கதி காட்டி தெய்வீக நிலைக்குயர்த்தும் பண்புடைமையாலேதெய்வீக நூல் என்றும் அது அழைக்கப்படுகிறது. உலகிலுள்ள நூல்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன தோன்றிய போதே மனத்தை மயக்கி பின்னால் தேடுவாரற்று அழிந்து விடுவன ஒருவகையின. அடுத்தது காலத்தை வெல்லும் தகுதியுடைய சிரஞ்சீவி நூல்கள் அவை. எக்காலத்திலும் இயற்றப்பட்டனவாயினும் அக்காலத்துக்கு மாத்திரமின்றி முக்காலத்துக்கும் உதவி, பயன் தருவன. இவ்வகை நூல்கள் மிகச் சிலவே. அவற்றுள் ஒன்று திருக்குறள்.
உலக இலக்கியச் சோலையில் மணமிக்க மலராக விளங்கும் திருக்குறள் முப்பொருள் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பன. இல்லறத்தார்க்கு வேண்டியன
நம்பிக்கை, அன்பு, பக்தி என்பனவற்றைக் ( வணக்கம். வணக்கத்தால் பண்படுத்திப் பல ஒருவனிடம் நன்றி மறத்தல் என்னும் தீய பழக்
(இந்து ஒளி (2
 

திருக்குறளும்
இல்லறவியலிலும், துறவறத்துக்கு வேண்டியவை துறவறவியலிலும் விளக்கப்படுகின்றது. இவையிரண்டும் சேர்ந்து அறத்துப்பால் ஆகிறது. இல்லறத்தார் இன்பவாழ்வு வாழத்தக்க பாதுகாப்பு வேண்டும். பொருளிட்டும் வழிகள் வேண்டும். ஈட்டிய பொருளை நெறியோடு துய்க்கத் தெரிதல் வேண்டும். இம் மூன்றும் பொருட்பாலில் கூறப்படுகிறது. கணவனும் மனைவியும் இல்லறம் நடத்துகின்றனர். அவர்கள் இருவர்களுக்குமுள்ள அன்புநெறியை காமத்துப்பால் கூறுகிறது.
திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பொருளைப்பற்றிகூறுகிறது. சுருங்கிய சொற்றொடர்களில் விரிந்த பரந்த கருத்து அடங்கியுள்ளது. கல்வியின் பயனை அறிஞர் பலர் தத்தம் நூல்களில் விரித்து விளக்குவதை வள்ளுவர்
"கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர்னனின் என இரு அடிகளில் ஆழ்ந்த கருத்துப்பட கூறியுள்ளார். இதேபோல் மனிதன் ஒழுக்க நெறியுடன் உலகில் வாழ வேண்டுமென்பதை
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும். என ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதித்து கூறியிருக்கிறார். அப்படி ஒழுக்கத்தை உயிரினும் மேலானதென நினைத்து ஒருவன் வாழ்ந்தானாயின்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். என்று அவன் வானுலகத்தின் தெய்வமாக வைத்துமதிக்கப்படுவான் என்கிறார் வள்ளுவர். உதாரணமாக நாம் ஒருவரை உண்மையான பெரியார் யார்? என்று கேட்டால் அவர் அதற்கு கரை காண முடியாத கடலைப் போல சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் அக்கேள்வியை வள்ளுவனிடம் கேட்பின் அவரோ
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்யலாதார்’ திருவள்ளுவர் உலகுக்கு விலைமதிப்பரிய மாணிக்கங்கள் நிறைந்த பேழையொன்றை தந்துள்ளார். அதுவே திருக்குறள். அப்பேழை நூற்றுமுப்பத்திமூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்றுக்கொன்று தரத்திற்கு குறைவுபடாத பத்துவகை மாணிக்கங்களுள்ளன. அவையே ஒவ்வோர் அதிகாரத்துமுள்ள பத்துக் குறள்கள். அவற்றை கற்றுணர்ந்து பயன் கொள்வது உலகின் தலையாய கடன்.
கொண்ட மனப்பகுதியைப் பலப்படுத்துவது ப்படுத்தாது விடுவதாலும் தீய கூட்டுறவாலும் கம் ஏற்படுகின்றது.
சிவத்தொண்டர்
5) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி )

Page 28
இது சிறுவர்களுக்கான சிறப்புப் தருகிறோம். பெற்றோர்கள் தங்கள்
தத்துவத்தை விளக்குவது கடன்
ஒரு கிராமத்தில் சோமன், ராஜன் என்று இரண்டு குடியானவர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் சொந்தமாக இரண்டு, இரண்டு ஏக்கர் சாகுபடி நிலம் அக்கம் பக்கம் இருந்தது.
ஆனால் அவர்கள் இருவரும் இயல்பில் வேறுபட்டவர்களாக இருந்தார்கள். சோமன் கடின உழைப்பாளி. ராஜனோ சோம்பேறி.
ஒரு சமயம் தொடர்ந்து இரண்டு வருடம் மழையே இல்லாமல் போயிற்று பஞ்சம் தலைவிரித்தாடியது; பூமி நீரில்லாமல் கோடுகோடாக வெடித்துப் போயிற்று குடிக்கக்கூட நீரில்லாமல் கால்நடைகளும், கிராமத்து மக்களும் தவியாய்த் தவித்தனர்.
சோமன் ஒரு செயல் வீரன். அவன் தனக்குள்ளே, எப்படியாவது என் வயலுக்கு நான் தண்ணீர் கொண்டு வருவேன். என் வாய்க்கால் வறண்டு போயிருக்கலாம். ஆனால் பக்கத்திலுள்ள ஏதாவது ஒர் ஆற்றோடு இந்த வறண்ட வாய்க்காலை இணைத்து நீர் நிரப்புவேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே ஆற்றைத் தேடி வாய்க்கால் வழியாகவே சென்றான்.
நல்ல நீரோட்டமுள்ள ஒரு ஆற்றினருகே வந்து சேர்ந்தான். உடனே ஆற்றிலிருந்து தன் நிலத்திற்குச் செல்லும் கால்வாயை அப்போதே ஆழமாகத் தோண்ட ஆரம்பித்துவிட்டான். அவன் விடியற்காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பி இருந்தான். நடுப்பகலாகிவிட்டது. இன்னும் வாய்க்கால் வெட்டுவதில் தீவிரமாக இருந்தான். சூரியன் தலைக்குமேல் பொசுக்கிக் கொண்டிருந்தது. வியர்வையால் முழுக்க முழுக்க நனைந்துவிட்டான். ஆனால் சூரியனைப்பற்றியோ வியர்வையைப் பற்றியோ சிறிதும் உணரவில்லை. குளிப்பதைப் பற்றியோ, சாப்பாட்டைப்பற்றியோ கூட அவனுக்கு நினைவில்லை.
இந்து ஒளி (
 
 
 
 
 

பகுதி. மரீராமகிருஷ்ணரின் நீதிக் கதை ஒன்றினை இங்கு ள் பிள்ளைகளுக்கு இக்கதையைப் படித்துக் காட்டி அதன்
பின் இரகசியம்
நேரம் கடந்து போனதால் சோமனின் மனைவி கவலை கொண்டாள். சோமனை அழைத்துவரத் தன் மகளை அனுப்பினாள். தந்தை வேலை-செய்து கொண்டிருந்த இடத்தை வந்தடைந்த அவள், அப்பா மத்தியானம் ஆகிவிட்டது, இன்னும் குளிக்கவோ சாப்பிடவோ இல்லையே, அம்மா உங்களை வீட்டுக்கு வரச் சென்னார்கள். அவசியமானால் சாப்பிட்ட பிறகு வேலை செய்யலாம் என்றார்கள்’ என்று சோமனை வீட்டுக்கு அழைத்தாள். சோமன் சிரித்த முகத்தோடு அந்தச் சிறுமியைப் பார்த்து, மீனா, நான் இந்த வாய்க்காலை வெட்டி முடித்துத் தான் ஆக வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியாக என்னால் சாப்பிட முடியும். என்னைத் தொந்தரவு செய்யாதே, நீ வீட்டிற்குப் போ. நான் இதை முடித்து விட்டு வருகின்றேன்' என்று சொன்னான்.
சிறுமியும் வீட்டிற்குத் திரும்பிப் போய் தன் தாயிடம் அதை அப்படியே சொன்னாள்.
மூன்று மணி ஆகிவிட்டது. இன்னும் சோமன் வந்தபாடில்லை. அவன் மனைவி மிகவும் கவலை கொண்டாள். அவளைத் தேடி, அவளே வாய்க்காலுக்கு வந்துவிட்டாள். 'ஏன் இப்படிக் குளிக்காமல் சாப்பிடாமல் வேலை செய்கிறீர்கள்? சாதம் ஆறிப்போய் விட்டது. எப்போதும் நீங்கள் இப்படித்தான். பிடிவாதக்காரர். எதையுமே அளவுக்கு மீறிச் செய்துவிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்வது ஏன், வேலை இருந்தால் பிறகு வந்து செய்வதுதானே! போகலாம் வாருங்கள்’ என்று பரிவினால் ஏற்பட்ட கோபத்தில் கூறினாள்.
அவ்வளவுதான்! சோமனுக்குக் கோபம் பீறிட்டு வந்தது. மண்வெட்டியைத் v. தலைக்கு மேல் பிடித்துக் இ* கொண்டு அவன், イ。
மூளை இருக்கிறதா? ~ தண்ணீர் இல்லாமல் பயிர் . i எல்லாம் வாடிப்போகிறது. ** கண் தெரியவில்லையா? பயிர் வாடிவிட்டால் குழந்தைகளும் நாமும் எதைச் சாப்பிடுவது? எல்லோரும் பட்டினிகிடந்து சாக வேண்டியதுதான். இங்கிருந்து முதலில் ஒடிப்போய்விடு. எப்படியாவது இன்றைக்குள் வயலுக்குத் தண்ணீர் கொண்டுபோய்ச் சேர்த்தாக வேண்டும். அதற்கு முன் எந்த விஷயத்தையும் பார்க்க மாட்டேன். போ, நீ போய் உன் வேலையைக் கவனி என்று சத்தம் போட்டு திட்டி அவளை விரட்டி விட்டான்.
26) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி )

Page 29
அவள் விக்கித்துப் போனாள். அவன் இப்படி எரிமலையாக வெடிப்பான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மனம் உடைந்தவளாக‘எப்படியோ போங்கள். உங்கள் நன்மைக்குச் சொன்னேன்' என்று சொல்லிக் கண்களில் பொங்கிவரும் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
இரவு மணி பதினொன்று ஆகிவிட்டது. சோமன் இன்னமும் வாய்க்காலை வெட்டிக் கொண்டே இருந்தான். கடைசியாக வாய்க்காலை வயல்வரை வெட்டிவிட்டான். ஒரே வெட்டுத்தான். வரப்பை உடைத்துக் கொண்டு தண்ணிர் வயலினுள் துள்ளிப் பாய்ந்தது. சோமனின் உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.
மகிழ்ச்சியாக உரத்த குரலில் பாடிக்கொண்டே வீட்டிற்குக் கிளம்பினான். வீட்டின் அருகே நெருங்கும் போதே, 'ஏ கமலா குளிக்க எண்ணெய் கொண்டு வா’ என்று கூறிக்கொண்டே குளிப்பதற்குச் சென்றான். குளித்தபின், மனைவி அன்போடு உணவு பரிமாறியிருந்த இலையின் எதிரே அமர்ந்து சுவைத்து உண்ணத் தொடங்கினான். உண்மையிலேயே உன்னைப்போல் சமைக்க யாராலும் முடியாது. கறி மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போடு' என்று கேட்டு வாங்கி வயிறார உண்டான். பின் வெற்றிலைபாக்கு போட்டுக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். சிறிது நேரத்தில் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிப்போனான்.
எந்த முட்டாளும் பணம் அறிவாளிதான் அதைச் சரியான
(ஒர்
(இந்து ஒளி
 
 

சம்பாதிக்க முடியும், ஆனால்
முறையில் செலவு செய்ய முடியும்.
அறிஞர்)
சோமன் வாய்க்கால் வெட்டும் செய்தியைக் கேட்டு ராஜனும் வாய்க்கால் வெட்டத் துவங்கினான். பகல் 12 மணி ஆகி இருக்கும். அவன் மனைவியும் அவனைத் தேடி வந்தாள். அவளும் அவனை வீட்டிற்கு வந்து சாப்பிட்டுப் போகும்படி அழைத்தாள். அவன் 'நீ கூப்பிடும்போது நான் வராமல் இருப்பேனா? என்று சொல்லிமண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு அவள் பின்னால் சென்றான். நன்றாக உண்டு உறங்கினான். நடுப்பகலுக்குப் பிறகு வயலுக்குப் போக அவனுக்குப் பிடிக்கவில்லை. மறுநாள் அவனுக்கு மற்ற அவசியமான காரியங்கள் இருந்தன. இப்படியே பல நாட்கள் கழிந்தும் போய்விட்டது. மிகவும் அவசியமான நேரத்தில் தேவையான நீர் பாய்ச்சாததால் எல்லாப் பயிரும் வாடி வதங்கிப் போயிற்று.
சில நாட்களிலேயே சோமனின் வயலில் பசுமைப் புரட்சி நடந்தது. நெற்கதிர்களின் பாரம் தாங்க முடியாமல் பயிர்கள்
தலைசாய்ந்தன. அந்தப் பகுதியிலேயே சோமனுக்குத்தான் நல்ல விளைச்சல்.
கருதிய காரியம் கைகூடும் வரை சோமன் உறுதியோடு உழைத்தான். வெற்றியும் பெற்றான். ஆனால் ராஜன் பாதியிலேயே முயற்சியைக் கைவிட்டான், வெற்றியும் அவனைக் கைவிட்டு விட்டது.
எந்தக் காரியம் எடுத்தாலும் அயராது உழைக்க வேண்டும். தீவிர வைராக்கியம்,நம்மை இறைவனின் சன்னிதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது.
கடும் உழைப்பே வெற்றியின் இரகசியம்.
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 30
இது மாணவர்களுக்கான பக்கம். இ உட்பட மாணவர்களுக்குப் பயனுள் போன்ற விஷயங்கள் மாணவர்களி
பெரிய புர
திருநாவுக்கரசு சுவாமிகள்.
திருநாவுக்கரசர் சோழ நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையிலுள்ள நடுநாடாகிய திருமுனைப்பாடிநாட்டில் திருவாமூரிலே சைவ வேளாளர் மரபிலே குறுக்கையர் குடியிலே புகழனார், மாதினியார் என்னும் இருவர்க்கும் அருள் நலஞ்சிறந்த அருமைப் புதல்வராக அவதரித்தருளினார். அவருக்கு முற்பிறந்தார் திலகவதியார் என்னும் கற்பரசியாராவார். திருநாவுக்கரசருக்கு அவர்தம் பெற்றோரிட்ட பிள்ளைத் திருநாமம் மருணிக்கியார் என்பது. மருணிக்கியார், அன்பு, அருள், அறம் முதலிய அருங்குணங்கள் வளர வளர்ந்து, கற்கத் தக்க கலைகளைக் கசடறக் கற்றுத் திகழ்ந்தார். அவர்தம் தமக்கையார் மணப்பருவம் அடையவே புகழனாரும் மாதினியாரும் அரசனிடத்தில் சேனாதிபதியாக விளங்கும் கலிப்பகையாருக்கு மணமுடிக்க நிச்சயித்தபின் புகழனார் இறந்தார். உடனே மாதினியாரும் உடன்கட்டை ஏறினார்.
பெற்றோர் பிரிந்த துன்பத்தில் மூழ்கி இருக்கும் சமயத்தில் வெந்த புண்ணில் வேல் புகுவதைப் போன்று அரசனின் ஆணை தாங்கிப் பகைவர்களுடன் போர் புரிய வடநாடு சென்ற கலிப்பகையார் போரில் உயிர் துறந்தார். இச்செய்தியைக் கேட்ட திலகவதியார்,"எனக்கென நிச்சயித்த கணவர் இறந்தார்; ஆதலின் யானும் இறப்பேன்’ எனத் துணிந்து பின்னர் மருணிக்கியார் வேண்டுகோளுக்கிணங்கி உயிருடன் இருந்தனர்.
பின்னர் மருணிக்கியார் பாடலிபுத்திரம் அடைந்து சமண சமயஞ்சார்ந்தார்; அச்சமயநூல்களைக் கற்றுணர்ந்தார்,தருமசேனர் என்னும் பட்டம் பெற்று விளங்கினார். திருவதிகையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்துவரும் திலகவதியார் இதனை அறிந்து மனம் வருந்தினார்; சிவபெருமான்பால் விண்ணப்பித்துக் கொள்ளவே அப்பெருமான் தருமசேனரது வயிற்றில் சூலை நோய் உண்டாக்கினார். தருமசேனரது வயிற்றுச் சூலை நோயைச் சமணர்கள் போக்க முடியாமையால் அவர் யாரும் அறியாமல் ஒரு நள்ளிரவில் தம் தமக்கையார் இருப்பிடமடைந்து அவர் காலில் விழுந்து வணங்கினார். திலகவதியார் திருநீறு கொடுக்கவே அந்நோய் நீங்கிற்று. பின் மருணிக்கியார் சிவபெருமானை வணங்கி அவரருளால் பாடல் பாடும் வன்மை பெற்று அவர்மேல் பதிகம் பாடினார். அப்பொழுது சிவனருளால் “நீ அற்புதமான பதிகத்தைப் பாடியமையால் உனக்கு இனி நாவுக்கரசு என்னும் பெயர் வழங்குக" என அசரீரி தோன்றிற்று. பின்னர் திருநாவுக்கரசர் சிவத்தொண்டு செய்வதிலேயே காலங் கழித்து வந்தனர்.
தருமசேனரின் மதமாற்றத்தையுணர்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அடங்காக் கோபங்கொண்டு அவரைத் தம்பால் அழைத்துச் சுண்ணாம்பு நிரம்பிய நீற்றறையினுள் அடைக்கும்படி சமணர்க்கு ஆணையிட்டனன். அவர்களும் அதனை
இந்து ஒளி - (
 
 
 

இதில் சமய வரலாறு, மற்றும் புராணக் கதைகள் : ாள பல விஷயங்கள் அலங்கரிக்கிறது. இது டமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
O 丁得 ாணக கதைகள
நிறைவேற்றினர். அச்சமயத்தில் நாவரசர் சிவபெருமானைத் தொழுது திருப்பதிகம் பாடினார். அந்த நீற்றறை, அவருக்கு வெம்மையளிக்காது பொய்கைக் கரைபோலக் குளிர்ந்தது. இவ்வாறு ஈசனாரின் இணையடி நீழல் அனுபவம் தமக்கு அந்நீற்றறையில் கிடைத்த பான்மையைத் திருநாவுக்கரசரே,
மாசில் வீணையும் மாலை மதியமும் விசு தென்றலும் வீங்கின வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே”
(மாசு- குற்றம், வீங்கு - பெருமை பொருந்திய, மூசு - மொய்க்கும் அறை - சப்திக்கும். இணை - இரண்டு)
என்னும் தமது தேவாரப் பதிகத்தில் வெளியிட்டுள்ளார். அதுகண்ட அரசன்அவருக்கு நஞ்சு கலந்த பாலுணவை ஊட்ட அவ்வுணவு நஞ்சுண்ட கண்டன் அருளால் அமுதாயிற்று. பின்னர் அரசன் நாவரசரைக் கொல்ல யானைகளை ஏவினன். அவை அவரை வலம் வந்து வணங்கிச் சமணர்களைக் கொல்லத் தொடங்கின.
பின்பு சமணர்கள் நாயனாரைக் கற்றுாணில் கட்டிப் படகிலேற்றிச் சென்று நடுக்கடலில் தள்ளினர். அதுபொழுது நாயனார் சொற்றுணை வேதியன்' எனத் தொடங்கி, “கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே" என்று முடியும் பதிகத்தைப் பாடக் கற்றுரண் தெப்பமாக மிதந்து சென்று நாவரசரைத் திருப்பாதிரிப்புலியூரின் அருகே சேர்த்தது. நாயனார் கரையேறிச் சிவத்தலங்களைத் தரிசித்துக் திருவதிகை eमाpg|Tां.
இவ்வாறு இறைவனின் திருவைந்தெழுத்தை ஒதித் தாம் கரையேறிய பான்மையை அவர்,
கல்லினோடுஎனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்களன் வாக்கினால் செல்லுநீள்வயல் நீலக் குடிஅரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே
(அமண்கையர் - சமணக் கீழோர். அரன் - சிவபிரான். நாமம் - பெயர்) என்னும் தம் திருப்பதிகத்தில் விளக்கியுள்ளார்.
பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் நாவரசரின் பெருமை உணர்ந்து அவரை வணங்கித் தானும் சைவ நெறியை மேற் கொண்டான்; அன்றியும் திருவதிகையில் சிவபெருமானுக்குப் புதியதொரு கோவிலும் கட்டுவித்தான்.
8) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 31
பின்னர் நாவுக்கரசர் பற்பல தலங்கட்குச் சென்று பதிகம் பாடிச் சிதம்பரத்தை அடைந்து நடராசப் பெருமானைத் தொழுது அங்கேயே சில காலம் தங்கியிருந்தார். அச்சமயம் நாயனார் திருஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்று அவரைக் காணச் சீர்காழிக்குச் சென்றார்; எதிர் சென்று தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார். உடனே ஞானசம்பந்தர், அப்பரே எழுந்திரும் என்றார். அதனால் இவருக்கு அப்பர் என்னும் ஒரு பெயரும் வழங்கலாயிற்று.
நாவுக்கரசர் ஞானசம்பந்தருடன் சிலநாள் தங்கிப்பின்னர் அவரிடம் விடைபெற்றுதலயாத்திரை செய்யத்தொடங்கினார். அவர் திங்களூர் வழியே செல்லுகையில் தம்மிடம் பேரன்புடையராய்த் திகழ்ந்த அப்பூதியடிகளின் திருமாளிகையில் எழுந்தருளினார்; அதுசமயம் தமக்கு அழுது படைத்தற் பொருட்டுத் தோட்டத்திற்குச் சென்று வாழைக் குருத்து கொய்கையிற் பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனைப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார். பின்பு அமுது செய்து, பல தலங்களைத் தரிசித்துத் திருவாரூர் சென்று, திருப்புகலூரையடைந்தார். முருக நாயனாருடைய திருமாளிகையில் ஆங்குற்ற ஞானசம்பந்தரோடு தங்கியிருந்தார்.
பின்னர் இரு நாயன்மாரும் திருவீழிமிழலையை அடைந்தனர்; அங்கு பஞ்சமேற்பட்டமையின் கடவுளைத் தொழுது படிக்காசு பெற்றுச் சிவனடியார்களை உண்பித்தனர். அதன்பின் அவ்விருவரும் வேதாரணியத்தை அடைந்தனர். . ஆங்கு நாவுக்கரசர் அத்தலத்தே வேதங்களால் பூசிக்கப்பெற்று மூடியே கிடந்த கோயில் திருக்கதவு திறக்குமாறு பாடினார். பின்பு நாவுக்கரசர் நித்திரை செய்கையில் சிவபெருமான் கனவில் தோன்றி,நாம் வாய்மூரிலிருப்போம், வா'என்று அருள் செய்ய அவர் வேதாரணியத்தினின்றும் செல்லுங்கால் சிவபெருமான் இவருக்குத் தரிசனம் தந்த கோலத்துடன் முன்னால் நடந்து சென்று அருகேயிருந்த ஆலயத்தில் மறைந்தனர். பின்னர் திருஞானசம்பந்தரும் வாய் மூரையடைந்தபோது சிவபெருமான் இருவருக்கும் காட்சியளித்தார்.
நாவரசர் பல தலங்களையும் கண்டு திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியில் பசி தாகங்களால் பெரிதும் அல்லலுற்றுக் களைப்படைந்தனர். அச்சமயத்தில் சிவபெருமான் ஓர் அந்தணர் உருவில் காட்சியளித்துத் தம் பொதிசோற்றைக் கொடுத்து உண்ணச் செய்து அவருடைய களைப்பை நீக்கினார்.
அதன் பின்னர் திருநாவுக்கரசர் வடகயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் கண்டு தொழ விரும்பித் திருக்காளத்தி முதலிய தலங்களைக் கடந்து, பாலை நிலத்தில் சாக மூலபலங்கள் புசித்தலையும் ஒழித்து, இரவும் பகலும் இடைவிடாது நடந்தார். இதனால் அவருடைய திருவடிகள்
சரஸ்வ
“செல்வத்துட் செல்வம் செல்வத்து ளெல்ல7ம்த
சரஸ்வதித்தாய் அறிவுச் செல்வத்தை மொழிகளைக் கேட்பதால் எம்மிடம் பெருகு செய்கிறோம். சரஸ்வதித்தாயை மகிழ்விக்கி இப்பூசை. பூசை செய்தல் தெய்வ வணக்க மு அப்பியாசமாகும்.
(இந்து ஒளி G
 

மணிக்கட்டுகள் வரை தேய்ந்தன. தேய்ந்தும் ஆசை மேலீட்டினால் தம் இரு கைகளையும் ஆதரவாகக் கொண்டு அவர் தாவிச் சென்றார்; அக்கைகளும் மணிக்கட்டுகளும் நைந்து கரைந்து சிதைந்தன. மேலும் ஆசை சிறிதும் குன்றுதலின்றி மேலிட்டமையால் கொடிய பருக்கைக் கற்கள் பொருந்திய வழியில் மார்பினால் நகர்ந்து நகர்ந்து போனார். மார்புத் தசையும் நைந்தது. எலும்புகள் முறியலுற்றன. பின் புரண்டு புரண்டு போனார். அதனால் உடல் முழுமையும் தேய்ந்துவிட நாயனார் கயிலைநாதனிடம் கொண்ட பேரன்பினால் மெல்ல நகருவதற்கு முயன்றும் முடியாமையின் வழியிலே கிடந்தார். இவருடைய பக்திமேம்பாட்டை உணர்ந்த பரமனார் திருவுளங்கொண்டு அவ்விடத்தில் தடாகம் ஒன்றுண்டாக்கி ஒரு முனிவர் வடிவங் கொண்டு அவர்முன் தோன்றி, ‘தேவர்களாலும் அடைதற்கரிய அம்மலை மனிதர்களால் அடைதற்கெளிதோ? இனி நீர் திரும்பி விடுதலே உத்தமம்” என்றார். அதுகேட்ட நாவுக்கரசர், “திருக் கயிலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் திருக்கோலத்தைக் கண்டாலன்றி அநித்தியமாகிய இவ்வுடலைக் கொண்டு திரும்பேன்" என மறுத்தார். சிவபெருமான் அவருடைய துணிவைக் கண்டு மறைந்தருளி விண்ணில் அசரீரியாக நின்று, "நாவுக்கரசா! நீ எழுந்து இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாறு அடைந்து நம்மைக் கயிலாய மலையில் வீற்றிருந்தபடி அத்தலத்தில் கண்டு வணங்கு, என்று பணித்தருளினார். அதன்படியே நாவுக்கரசரும் அத்தடாகத்தில் படிந்து திருவையாற்றையடைந்து அங்கு உமாதேவியோடும் சிவபெருமான் வீற்றிருத்தலைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார்; தேவாரப் பதிகங்கள் பாடினார். பின்னர் சிவபெருமான் மறைந்தருள, நாயனார் மனம் வருந்தித்தேறித் திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு அங்கேயே சிவத்தொண்டுகள் செய்து கொண்டிருந்தார்.
நாவுக்கரசர் பாண்டிய நாட்டையடைந்து குலச் சிறையாரும், பாண்டிமாதேவியாரும் தம்மை வணங்கச் சில நாட்கள் அங்கிருந்து மீண்டும் திருப்புகலூரை அடைந்தார். ஆங்கு உழவாரத் தொண்டு செய்கையில், இவர்தம் வைராக்கியத்தை உலகோர்க்கு உணர்த்தற் பொருட்டுச் சிவபெருமான் உழவாரப் படைதோறும் பொன்னும் நவமணியுமாகத் தோன்றச் செய்தார். நாவரசர் அவை யனைத்தையும் பருக்கைக் கற்களாக எண்ணிக் குளத்திலே எறிந்தார். மேலும் சிவபெருமான் அரம்பையர்களை ஏவி நாயனாரை மயக்குமாறு செய்தார். நாயனார் சிறிதும் மனம் மாறாமல் “பொய்ம்மாயப் பெருங்கடலில்” என்னும் திருத்தாண்டகம் பாடிச் சிவத்தொண்டிலேயே ஈடுபட்டு இருந்தார். பின்னர் தமது எண்பத்தொன்றாவது வயதில் சித்திரைத் திங்கள் சதயத் திருநாளில் நாவுக்கரசர் சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.
5 gÖಯಿಶ*
செவிச்செல்வம் அச்செல்வம் ബൈ’ WS激 தத் தருகிறாள். அச்செல்வம் பெரியோர்களது குகின்றது. யாம் சரஸ்வதித் தாய்க்குப் பூசை றோம் என்னும் பாவனையைக் கொண்டது

Page 32
திருவிை 1st M6NTóh
பழியஞ்சின படலம்
இராஜசேகர பாண்டியன் தன் மகனாகிய குலோத்துங்க பாண்டியனுக்கு முடி சூட்டிவிட்டு சிவபதவி அடைந்தான். அவன் காலத்தில் திருப்புத்தூரிலிருந்து ஒர் அந்தணன் தன் மனைவியோடும் கைக்குழந்தையோடும் மதுரை நோக்கிச் சென்றான். வழியில் ஒர் ஆலமரத்தின் கீழே அவளை இருக்கச் செய்து அவள் தாகத்துக்கு வேண்டிய தண்ணிர் கொண்டு வருவதற்காக அவன் சென்றான். அந்த மரத்தில் சிக்கியிருந்த கூரிய ஒர் அம்பு, காற்று வீசியதால் கீழே விழுந்து, பார்ப்பனியின் வயிற்றில் தைத்து விட்டது. அதனால் அவள் இறந்தாள்.
அது காலையில் வேடன் ஒருவன் நிழல் தேடி அங்கு நின்றிருந்தான். நீர் கொண்டுவந்த அந்தணன் இறந்த மனைவியைக் கண்டு துன்பத்தால் துடித்தான். அருகிலிருந்த வேடனே தன் மனைவியைக் கொன்றான் என்று எண்ணி, அவனை வலிந்து அழைத்துக்கொண்டு குழந்தைய்ையும் பிணத்தையும் தூக்கிக் கொண்டு அரசனிடம் முறையிடச் சென்றான். அவன் கூறியனவற்றைக் கேட்ட அரசன் வேடனைப் பார்த்தான். வேடன்,'அரசே, நான் இளைப்பாறும் பொருட்டு அந்த மரநிழலில் நின்றேன். இவளை நான் கொல்லவும் இல்லை. கொன்றவரைக் காணவும் இல்லை' என்றான். அந்த வேடன் கடுந்தண்டத்துக்கும் அஞ்சாமல், தான் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறுவதைக் கேட்ட மன்னன், சோமசுந்தரக் கடவுளை வணங்கி உண்மையை உணர்த்தியருள வேண்டினான். அப்போது ஆகாயத்தினின்று,பாண்டியனே, இன்று இரவுசெட்டித்தெருவில் நடைபெறும் திருமணத்திற்கு நீயும் அந்தணனும் வந்து பார்த்தால் உண்மை விளங்கும் என்று ஒர் அசரீரி தோன்றியது.
அசரீரி உரையின் உண்மையை உணரும் பொருட்டு அரசனும் அந்தணனும் அவ்வாறே அத்திருமண வீட்டிற்குச் சென்று, ஒரு பக்கத்தில் தங்கி இருந்தார்கள். அப்போது எம தூதுவர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்கும் பேச்சுக்கள் அவர்கள் காதில் விழுந்தன. அவர்களில் ஒருவன் மற்றவனைப் பார்த்து, 'ஒரு வியாதியும் இல்லாத இந்த மணமகன் உயிரை நம் தலைவன் கட்டளைப்படி எவ்வாறு எடுத்துச் செல்வது?’ என்றான். அதற்கு மற்றவன் 'நாம் இன்று பகலில் ஆலமரத்தில் தொத்தியிருந்த அம்பைக் காற்றினால் விழும்படி செய்து பார்ப்பணியின் உயிரைக் கவர்ந்தோமன்றோ? அதுபோலவே இந்தத் திருமண ஆரவாரத்தில் வெளியில் வெருண்டு நின்று பசுவைத் தூண்டிவிட்டு இம்மணமகனை முட்டும்படி செய்து இவன் உயிரைக் கவர்வோம் என்றான்.
அது கேட்ட பாண்டியன் அந்தணனை நோக்கி, இந்த வார்த்தையைக் கேட்டாயா?"என்றான். அதற்கு அந்தணன்,'இவன் இப்படி இறந்தால் என் மனைவியும் அப்படியே இறந்திருப்பாள். என்று தெளிவேன்' என்றான். திருமணம் தொடங்கும்போதே பசு
(இந்து ஒளி
턴
الحك
மாணவர் ஒளி
 
 
 
 
 
 
 
 

ஒன்று வெருண்டு ஓடிவந்து மணமகனை முட்டியது. அதனால் அவன் இறந்தான். இந்தக் காட்சியைப் பரஞ்சோதியார்,
'மணமகனே பிணமகனாய், மணப்பறையே பிணப்பறையாய் அணியிழையார்வாழ்த்தொலிபோய் அழுகையொலியாய்க்கழியக் கனமதனிற் பிறந்திறும்இக் காயத்தின் வரும்பயனை உணர்வுடையார்பெறுவர்(உணர்வு)ஒன்றுமிலார்க்கொன்றுமிலை" (பறை - வாத்தியம். அணியிழையார் - அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்கள். காயத்தின் - உடலின். பயனை - மறுமைப்பயனை. உணர்வுடையார் - அறிவு உள்ளவர்கள்)
என்று பாடிச் சிறந்த அறிவுரையை நமக்குக் கூறியுள்ளார்.
பாண்டியனும் வேதியனும் உள்ளம் தெளிந்து மீண்டனர். அந்தணன் தன் செயலுக்கு வருந்தினான். அரசன் அவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்து, மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியனுப்பினான். வேடனைச் சிறையிலிருந்து நீக்கி, தான் செய்த கொடிய தண்டத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டினான்; அவ்வேடனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து அவனையும் அனுப்பிவிட்டான்; பின்பு திருக்கோயிலை அடைந்து, ‘எம்பெருமானே, அடியேனுக்காகப் பழி அஞ்சும் நாதராக இருந்தீர்’ என்று துதித்து, உலகில் உள்ள உயிர்களுக்கு உயிராக இருந்து அரசியற்றினான்.
மாபாதகம் தீர்த்த படலம்
குலோத்துங்க பாண்டியன் காலத்தில் அவந்திநகரத்தில் ஒர் அந்தணன் இருந்தான். அவன் மனைவி மிகவும் அழகாயிருந்தாள். அவளுக்கு ஒரு கொடிய பாவி மகனாகப் பிறந்தான். அவன் தன் மாதாவைக் கலந்தொழுகும் ஒரு காமப்பித்தன். அவன் செயலை ஒருநாள் அவன் தந்தையே நேரில் கண்டதால் அவரை அவன் மண்வெட்டியால் வெட்டிக் கொன்றான். அன்று இரவு தன் தாயோடு அவன் ஒரு காட்டில் நுழைந்தான். அங்கு அவன் பொருளையும், அவன் தாயையும் கள்வர்கள் கவர்ந்து சென்றனர். அவனைப் பிதுர்கத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதனால் அவன் அமைதியும் உற்சாகமுமின்றி அங்குமிங்கும் அலைந்தான். அவன் பட்ட துன்பங்களுக்கு அளவேயில்லை.
உலகெங்கும் பல நாள் அலைந்து, தனது மாபாதகம் நீங்கும் நாள் அணுகியதால் அவன் மதுரையை அணுகினான். அப்போது சோமசுந்தரக் கடவுள் வேட வடிவம் கொண்டு, வேட்டுவச்சி வடிவுடனிருந்த மீனாட்சியம்மையாரோடு திருக்கோபுரத்தின் பக்கத்தில் சூதாடிக் கொண்டிருந்தார். சிவபெருமான் அவ்விடத்தை நோக்கி வந்த பாதகனைப் பார்த்து உமாதேவியாரை நோக்கி, ‘ஒருவரும் மனத்தால் நினைப்பதற்கும்
30 சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 33
அரிய கொடிய பாவி அதோ வருகிறதைப் பார்’ என்று கூறிக் காமத்தால் உண்டாகும் துன்பங்களை,
“காமமே கொலைகட் கெல்லாம்
காரணம்; கண்ணோடாத காமமே கனவுக் கெல்லாம்
காரணம் கூற்றம் அஞ்சும் காமமே கள்ளுண் டற்கும்
காரணம்; ஆத வாலே காமமே நாக பூமி
கானியாக் கொடுப்ப "தென்றான்”
(கண்ணோடாத - தாட்சண்யமில்லாத. கூற்றம் - இயமன். காணியா - காணியாட்சி ஆக) என்றவாறு எடுத்துரைத்தார்.
சிவபெருமான் திருநோக்கத்தினால் அந்தப் பார்ப்பனின் பாவம் சிறிது நீங்கித் தன்னறிவு தோன்றிற்று. சிவபெருமான் அவன் செய்திகளைக் கேட்டு அப்பாவம் எளிதில் நீங்குமாறு ஒர் உறுதியைக் கூறினார். அவர் அவனைப்பார்த்து,நீகையில்பிச்சை எடுத்து ஒரு பொழுது மட்டும் உண்ண வேண்டும்; சிவனடியார்களுக்குச் சேவை செய்ய வேண்டும்; சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து பசுமையான அறுகம்புல்லைப்பறித்துப் பசுக்களுக்குக் கொடுக்க வேண்டும்; தினந்தோறும் முக்காலத்திலும் திருக்கோயில் புறத்தொட்டித் தீர்த்தத்தில் நீராட வேண்டும்; பின்னர் சிவ பெருமானை நூற்றெட்டு முறை அங்கப் பிரதிட்டை செய்ய வேண்டும். இவ்வழியால்தான் உன் மாபாதகம் நீங்கும்' என்று கூறினார். இங்ங்ணம் கொடிய பாவிகளுக்கும் உய்யும் வகை அருளிய சிவபெருமானை மீனாட்சியம்மையார் வியந்து பாராட்டினார். பின்னர் இருவரும் மறைந்தருளினார்கள். அக்கொடியோன் சிவபெருமான் கூறியவாறே செய்து பேரின்பப் பெருங்கடலில் மூழ்கினான்.
அங்கம் வெட்டின படலம்
குலோத்துங்கன் ஆட்சியில் மதுரையில் வடநாட்டு முதியோன் ஒருவன் மக்களுக்கு வாட் பயிற்சி தந்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் மாணவர்களுள் சித்தன் என்பவன் தன் விதிப்பயனால் அவ்வித்தையை நன்கு பயின்று, தன் ஆசிரியனுக்கு மாறாகத் தானும் ஒரு வித்யாகூடம் ஏற்படுத்தித் தன் ஆசிரியரை விட மிகுந்த செல்வம் பெற்று வந்தான். அவரிடத்தில் கற்கும் மாணவர்களை அவன் தன்பால் வரும்படி மனத்தை மயக்கித்
ஆன்மிக ெ
அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து ஜூலை மாதம் 15ம் திகதியிலிருந்து 19ம் திகதிவை செய்திருந்தது.
இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த சைவசித்தாந்தப் பேராசிரியர் முனைவர் வை. இ வழங்கியிருந்தார்.
தினமும் ஒரு பொருளாக - இறைபணி நி இளைஞர்களின் சிந்தனைக்கு மக்கள் சேவையே தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்.
(இந்து ஒளி

தூண்டினான்; அன்றியும் குருவின் மனைவியையும் கற்பழிக்க முயன்றான். கற்பின் தியாகமாகிய அவ்வம்மையார் சித்தன் செய்த செயலைத் தன் கணவனுக்கு வெளிப்படுத்தாமல் தம் உள்ளத்தே அடக்கி, தம் உயிருக்குயிராகிய சோமசுந்தரக் கடவுளை எண்ணி மனம் உருகினார்.
சோமசுந்தரக் கடவுள் அந்த மூப்படைந்த வாள் ஆசிரியனாக வேடங் கொண்டு சித்தனை அடைந்தார். அவர் அவனைப் பார்த்து, காளையாகிய நீயும் கிழவனாகிய நானும் வாட்போர் புரிந்து நம் வலிமையை அறியலாம். பட்டணத்தின் புறத்திலே நாளை நீ வருவாயாக. நாமும் அவ்விடம் வருவோம் என்று கூறினார். சித்தன் அதற்கு மனமுவந்து உடன்பட்டான்.
மறுநாள் இருவரும் குறித்த இடத்தில் சந்தித்தனர். வாட்போரைக் காண வெள்ளம் போல் மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது. இருவருக்கும் இருபது நாழிகை நேரம் வாட்போர் நடந்தது. பின்னர் சிவபெருமான் எல்லோருக்கும் கேட்குமாறு, "உன் குரு மனைவியை நினைத்த நெஞ்சையும், குறித்துப் பேசிய நாவையும், அவளைத் தொட்ட கையையும், பார்த்த கண்களையும் காப்பாற்றிக் கொள்” என்று கூறிக் கூறி அந்த உறுப்புக்களை எல்லாம் துண்டித்து முடிவில் தலையையும் வெட்டி வீழ்த்திவிட்டு மறைந்தருளினார்.
இச்செயலைப் பரஞ்சோதியார் சுவைப்பட,
"குரத்தியை நினைத்த நெஞ்சைக்
குறித்துரை நாவைத் தொட்ட கரத்தினைப் பார்த்த கண்னைக்
காத்தனை கோடி'என்றென்று) உரைத்துரைத்து) அவற்றுக் கெல்லாம்
உறுமுறை தண்டஞ் செய்து சிரத்தினைத் தடிந்து விட்டிடத்
திருவுரு மறைந்துநின்றான்.”
(குரத்தி - ஆசிரியர் மனைவி. உறுமுறை - தகுந்தபடி, தடிந்து - வெட்டி வீட்டி - வீழ்த்தி) என்று
LJETiguq6T6TITET.
வாட்போரைப் பார்த்திருந்த மாணவர்களுக்குள் சிலர் அங்குதம் ஆசிரியரைக் காணாமல் அவர்தம் இல்லம் சென்றனர். அங்குச் சித்தருடன் போர்புரிந்தவர்தம் ஆசிரியர் அல்லர் என்றும், அஃது சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடல் என்றும் யாவரும் அறிந்து துதித்தனர். அரசன் வாளாசிரியனுக்குப் பலவகைச் சிறப்புக்களைச் செய்தான்.
சொற்பொழிவு
வித்தியா விருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் கடந்த ரை ஆன்மிக சொற்பொழிவுத் தொடரொன்றை ஒழுங்கு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளைப்பாறிய இரத்தினசபாபதி அவர்கள் தொடர் சொற்பொழிவை
售
ற்க, சைவ சித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவங்கள், மகேஸ்வரன் பூசை, மனிதனும் ஆன்மிகமும் என்னும்
3D சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 34
சிவத்தை முழு முதலாகக் கொண்ட சமயம் சைவ சமயமாகும்.
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தான் வருவார்.” என்பது சைவக் கோட்பாடு. இது ‘சிவன் ஒருவனே என்ற தத்துவத்தை விளக்கி நிற்கின்றது. "தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்’ என்று திருமந்திரம் மொழிகின்றது. தமக்கென ஈடிணையற்ற யாவருக்குமான ஒரே தலைவனாகிய சிவபிரானே சைவத்தினதும் முதல்வன். சிவனே பரம்பொருள்; அவனே மெய்ஞ்ஞானம் எனப் போற்றி வாழ்வது சைவ சமயமாகும். தனக்குவமை இல்லாதான்' எனப் போற்றப்படும் சிவபெருமானின் எண்குணங்களில் ஒன்றான பேரருள் உடைமை, அவர் சகல ஜீவராசிகள் மீதும் கொண்டுள்ள அன்பாகிய கருணை வெளிப்பாட்டை உணர்த்தி நிற்கின்றது. ஆகையால்தான் அவ்வேத நாயகனை பசுபதி என அழைக்கின்றோம். 'அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் என்பதற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்து காட்டிய நாயன்மார்களும், அன்பு வழி நின்று அருளுரை வழங்கிய ஆன்மீகத் தலைவர்களும் சைவம் காட்டும் அன்பு நெறிக்கு உதாரண புருஷர்களாகத் திகழ்கின்றனர்.
உயிர்களுக்கு நாம் செய்கின்ற அன்பே இறைவனுக்கு நாம் செய்த அன்புக்கு சமானம் என்பது மூதாதையர் வாக்கு. இதற்கு எடுதுக்காட்டாய்மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாசகத்திற்கிணங்க வாழ்ந்தவர் இளையான்குடிமாற நாயனார். தமக்கு உணவில்லாத போதும் வரும் சிவனடியார்களுக்கெல்லாம் தமது துன்பம் நோக்காது திருவமுது அளித்து வந்தவர். பின் சிவபெருமான் திருவருளால் சிவலோகம் அடைந்தவர். அன்பின் சிறப்பை மேலும் வலியுறுத்துவதாக
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற அடிகள் உள்ளத்திலே அன்புடையவர் தமது உயிரையும் பிறர்க்காய் கொண்டு வாழ வல்லார் எனத் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார். இதற்கு சான்று பகருவதாக மலை வேடராம் கண்ணப்பர் திருக்குடுமித்தேவர் மீது கொண்ட அன்பை “வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு’ என்று இனிமையாகப் பாடி வெளிப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். மரப்பொந்தை விட்டு அகலாத உடும்பு போல தேவரை எப்போதும் விட்டுப் பிரியா கண்ணப்பர், தம் இறைவனுக்காகத் தன்னிரு கண்களையும் அர்ப்பணித்தார். அன்றியும் ஆதியும் அந்தமும் இல்லாதவனே அன்பின் நிமித்தம் தனது உதிரத்தைப் பாலாக்கி, தாயிழந்து ஊணின்றித் தவித்த பன்றிக் குட்டிகளுக்குக் கொடுத்தார். இதிலிருந்து சிவபெருமான் சகல உயிர்களின் மீதும்
(இந்து ஒளி
 

ÖBondu und EHI II Cand அன்பு நெறி
சாமளை கனகசபாபதி ஆண்டு 10, திருக்குடும்பக் கன்னியர் மடம், கொழும்பு - 04.
அன்புடையவர் என்பது தெட்டத் தெளிவாகின்றது. இதனாலன்றோ இவர் சகல சீவ தயாபரன் என்றும் அன்பினில் விளைந்த ஆரமுது என்றும் புகழுக்குரியவராகின்றார்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”
என்று கூறி இன்புறுகிறார் கலியுகத்தின் முதற் குருவான திருமூலர். அவர் அனைத்து உயிர்களிடத்திலும் கொண்டிருந்த அன்பு, அநாதரவாக நின்ற பசுக்களை அரவணைத்த அவரின் வாழ்க்கை நிகழ்விலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அமைச்சராகப் புகழ்கொண்டு வலம் வந்த திருவாதவூரர்க்கு மரநிழலிலே தியானித்து நின்ற தேவாசிரியரைக் கண்டு பக்திப் பரவசம் மேலிட அவர்மேல் கொண்ட அன்பினால் தம் பதவியைத் துறந்தார். தேனினிய திருவாசகம் பாடினார். அன்பினால் இறைவனுடன் ஐக்கியமானவர் மணிவாசகர்.
"வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளைநிறப்பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல. என்று பாடிய ஈழத்துப் பக்திமான் விபுலானந்த அடிகளார், எல்லோர் உள்ளத்திலும் அன்பெனும் வற்றாத பேரூற்றாய் நிலைக்க வேண்டும் என்பதை உணர்த்த விரும்புவார் போல
உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்று அற்புதமாக சைவத்தின் மெய்க் கருத்தைப் புலப்படுத்துகின்றார். அந்நியர் வருகையால் சைவம் அழிந்து சென்றபோது சைவம் மீது பேரன்பு கொண்ட நாவலர் பெருமான் ‘புலால் உண்ணாதவன் மெய்ச் சைவ சமயி“ என்று அடித்துரைக்கின்றார். இதினின்று சகல ஜீவராசிகளையும் எம் உடன் பிறப்புக்களாய்க் கொண்டு அன்பு நெறி வழுவாது வாழ வேண்டும் என்ற கருத்தைக் கூறுகின்றார் நாவலர். இதேபோன்று அன்பு மார்க்கம் நின்று முத்தி எய்திய சைவப் பெரியார்கள் பலர். அவர்கள் சைவ மதத்திலே ஒழுகி, தம் இறைவன் வழிபற்றி அகத்துறுப்பென நன்னூலாரால் சிறப்பிக்கப்படுகின்ற அன்பு வழியில் வாழ்ந்தெய்தியவர்கள்.
ஒரு முறை வணிகர் மரபில் அவதரித்த இயற்பகைநாயனார் சிவனடியார் மேல் கொண்ட அன்பை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் அடியார் வேடம் பூண்டு அவர் மனைவியாரைத் தம்மிடம் தருமாறு கேட்டார். "எனக்குரிய
32) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 35
பொருட்களெல்லாம் சிவனடியார்க்குரியதே என்று திருவாய் மலர்ந்து தம் காதல் மனையாளை ஈந்தார். இதைக் கண்டு "அன்பனே,செயற்கரியன செய்த தீரனே" என்று ஈசனார் விளித்து, "அன்பர்க்கு இல்லை என்றாது ஈந்த நீ மனைவியுடன் முத்தி அடைவாய்" என்று அருள் கூர்ந்தார்.
ஈஸ்வரனின் அடியவராய், இறைவனிடத்தே மிக்க அன்புடையவராய் விளங்கிய செம்மணச் செல்வியாரிடம் கூலியாகப் பிட்டைப் பெற்று மண் சுமந்த கதை உள்ளத்தை உருக்குவது. இத்தகையதோர் பாக்கியத்தைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்தார் செம்மணச் செல்வி.
இதேபோன்று இறைவனிடத்தே மிகுந்த அன்புகொண்ட பூசலார் அவர் மனத்திலேயே சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மூலஸ்தானம் கோபுரங்களுடனான சிவாலயம் அமைத்து வழிபட்டார். அவர் மனக்கோயிலுக்குப்பிரதிட்டை செய்யும் நாளில் காடவ மன்னனும் தான் அமைத்த கோயிலுக்குப்பிரதிட்டை செய்ய எண்ணியிருந்தான். இதை உணர்ந்த பரம்பொருள் பூசலாரின் மேம்பட்ட அன்பிலே திளைத்து, அவருடைய ஆலயத்திலேயே கோயில் கொண்டருளினார்.
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களில் பாசம் என்பது உலகிலுள்ள அனைத்து ஆன்மாக்களிலும் குடி கொண்டுள்ளது. பற்று எனப்படும். இப்பாசமானது உலகியல் வாழ்வில் எம்மைஈடுபடச் செய்து எமது ஆன்ம ஈடேற்றத்திற்குத் தடையாய் அமைவதுடன், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய நெறிகளுக்கும் எம்மை"இட்டுச் செல்லும். உலகப்பற்றுக்களிலிருந்து நீங்கி, உயிர்களிடத்தே அன்பும் இறைவனிடத்தே பக்தியும் கொண்டு வாழ்ந்தால் உய்வு அடையலாம் என்பது சைவ சமயத்தின் நோக்காகும். இவ்வடிப்படையில் பற்றுப்
சமய வாழ்வு என்பது கோயில்களுக்குச் செல்வதும்
விழாக்கள் கொண்டாடுவதும் என்று பலர் நினைக்கின்றார்கள். இவை சமயத்தோடு சேர்ந்த சில சம்பிரதாயங்கள் மட்டுமே ஆகும். தினமும் நமது எல்லாச் செயல்களும் சமய நம்பிக்கை யுள்ளதாயிருத்தல் வேண்டும்.
காலையில் நித்திரை விட்டெழுவது முதல் இரவு நித்திரைக்குச் செல்லும் வரை கடவுளைப் பணிந்து நடக்க வேண்டும். கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அதை நாம்மறந்து விடக் கூடாது. கடவுளுக்குப் பணிந்து நடந்தால் எப்போதும் நல்ல செயல்களையே செய்ய மனம் எண்ணும். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனம் தீய செயல்களைச் செய்யவும் தயங்காது.
கடவுளுக்குப் பணிந்து நல்ல வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை நாம் பெரியார்கள் என்று
(இந்து ஒளி
 

பாசங்களை வேரோடு களைந்து வீடு பேற்றை அடைந்தவர் காரைக்காலம்மையார். உலக வாழ்வை வெறுத்த இவர் தமது தலையாலே நடந்து கைலாசத்தை அடைந்தார். அங்கு ஒளி பொருந்த வீற்றிருந்த மாதொருபாகரைக் கண்டு அன்புப்பெருக்குத் தெளிந்த நீராய் ஒட“ஜயனே" என்று உணர்ச்சிபொங்க அழைத்தார். பின் பெரும் ஆனந்தப்பரவசத்தால் நான் பாட, நீர் ஆட வேண்டும். அதை நும் திருவடிக்கீழ் இருந்து நான் இரசிக்க வேண்டும்” என வேண்டினார். அப்பக்தையின் பேரன்பைக் கண்டு வியந்த நடராஜப் பெருமான் அவரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.
இவ்வாறு இன்ப ஊற்றாம் அன்பு சைவ சமயத்தோடு எவ்வாறு ஒன்றித் தொடர்பு உடையதாய் விளங்குகின்றதென்பது இதனினின்று தெளிவாகின்றது. ஆனால் இன்றைய சமுதாயத்தில் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பன ஓங்கி நிற்கின்றன. இத்தகைய அஞ்ஞானத்தால் மக்களிடையே அன்பு கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி வருகின்றது. அதனாலேயே பஞ்சமாபாதகங்கள் உலகில் தலைவிரித்தாடுகின்றன. இதை விடுத்து மீண்டுமோர் ஒளிமயமான அன்பு வாழ்க்கையை நாம் கடைப்பிடிப்பதற்கு கடவுள் வழிபாடு, ஞானநூற் கல்வி, தொண்டு செய்தல், குரு வழிபாடு, நல்லோர் சேர்க்கை, நற்செயல்கள் புரிதல் போன்ற சில செயற்பாடுகளை நம்மிடையே வளர்த்துக் கொள்ள வேண்டும். இக்கருமங்களைச் சிரமேற்கொண்டு அன்பு நெறியில் ஒழுகும்போது ஆணவத்தின் வலி குறைந்து, மானுடர் மனித நிலை பெறுவர், வளர்ச்சிபெறுவர், கருணை கைவரப்பெறுவர், தெய்வீகத் தன்மையை அடைவர்.
హీ).
ளின் சமய வாழ்வு
க. கிறிஷாந்தன் 64, யா/அருணோதயா கல்லூரி,
ஓங்குக சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
அளவெட்டி,
மதிக்கின்றோம். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், மகாத்மா காந்தி, யோகர் சுவாமிகள், விபுலானந்தர் போன்றவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து சமய வாழ்வு வாழ்ந்தனர். அதனால் இன்று அவர்களை நாம் போற்றுகின்றோம்.
நாம் நல்ல மனதுடன் கருமம் செய்யும் போது அது நல்லவையாகவே இருக்கும். மற்றவர்கள் மதிப்பார்கள். எல்லோருடனும் அன்புடன் பழகுவதும் சமய வாழ்வுதான்.
அன்பே சிவம் என்று கூறுவதும் அதனால்தான். நாம் சமய வாழ்வு வாழும்போது மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மற்றவர்களுக்கு அன்பு செய்கின்றோம். அன்போடு எல்லோரும் வாழ்ந்தால் எல்லாமே மகிழ்ச்சிக்குரியதாயிருக்கும்.
அதனால் கெட்ட எண்ணங்களை விட்டு நல்ல மனதுடன் சமய வாழ்வு வாழ்வோம். அதுவே இந்துக்களாகிய நாம் பின்பற்ற வேண்டிய சமய வாழ்வாகும்.
3)
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 36
நந்தியெம் ெ நாள்தோறும் (
அப்பனை நந்தியை ஆராஅமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழிமுதல்வனை எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.
'நந்தி” என்ற பதத்திற்கு சந்தோசம் என்று பொருள் பிறரைச் சந்தோசப்படுத்துபவரும் அவரே. நந்திக்கு முன்னால் "ஆ" சேர்த்தால் “ஆனந்தி” வருகிறது. ஆனந்தமயமே நந்தி சந்தோசம் நிலைத்திருப்பதன்று. ஒரு காலத்தில் மறைந்து விடக் கூடியது. ஆனால் ஆனந்தமோ என்றும் நிலைத்திருக்கக் கூடியது.
நந்தி, நம்பன் முதலிய இறைவனின் பெயர்கள் தேவர் என்பதும் நந்தியின் பெயர் தேவர்களுக்குரிய சிறப்பு அமிர்தம், உண்டவர், பொன்னுலகத்தில் உள்ளவர், முதுமை இல்லாதவர், காளைப்பருவமுடையவர், நல்லனவற்றைச் செய்து புகழுடம் புடையவர் என்பதாகும்.
ஆதியிலும் திருநந்திஅநாதியிலும் திருநந்தி வாதனையால் விளையாட வருமிடமும் திருநந்தி தீதிலாத திருநந்திதிகழ் பெருமைதிசைமுகனார் ஒதிடினும் அவர்க்கு வாய் ஒரு கோடி போதாவே
என்று ஞானக்கூத்தர் நந்திப் பெருமான் பெருமையைக் கூறியிருக்கிறார். அவர் நம் பாவம் அறுத்தவர் என்பதை. (செம்பொருளாக மத்திறன் தெரிந்து தம்பல மறுத்த நம் நந்தி வானவன்) எனக் குறிப்பிடப்படுகிறது.
அவதார விளக்கம்
நந்திகேசுவரர் இப்பூவுலகில் அவதரித்துபேறுபெற்றதைப் பற்றி அறிய பஞ்சந்தக்ஷேத்திரம் என்கிற திருவையாறு ஸ்தல புராணத்தை நாட வேண்டும். திருவையாற்றில் சிலாத முனிவர் என்கிற மகா தபஸ்வி பூரீ பஞ்சாஷர சித்தியின் பொருட்டு வந்து தங்கி தூர்வாச மகரிசியின் ஆக்ஞைப்படிகல் பொடிகலை ஆதாரமாகக் கொண்டுழரீஜயேஸ்வரர் சன்னிதியில் அமர்ந்து ஜபம் செய்து மந்திர சித்தியைப் பெற்றார்.
கற்களை ஆதாரமாகக் கொண்டதால் இவருக்கு சிலாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் வசிஸ்ட்டருடைய தங்கையாகிய சாருலகூடிணையை மணந்து சைலாதர் என்கிற புத்திரனைப் பெற்றார். இப்புத்திரன் கிடைத்த வரலாறு பின் வருமாறு.
மகப்பேறின்மையால் வருத்தமுற்று சிலாத முனிவர் ஐயாறப்பனை பூஜித்து வழிபட்டு வந்தார். புத்திரகாமேஷ்டியாகம் செய்யும் படியும் அப்படி யாகம் செய்யும் போது பூமியிலிருந்து புத்திரன் கிடைப்பான் என்றும் அசரீரிவாக்கு கூறியது. அப்படியே பூமியை உழும்போது ஒரு பெட்டி கிடைத்தது. அதை சிலாதர்
(இந்து ஒளி (
 

UCIbLDITOOOOOT
வனங்குவோம்
முத்தையா)
திறந்து பார்த்த போது நான்கு தோள்களும், மூன்று கண்களும் சந்திரனை அணிந்த முடியுடன் கூடிய ஒரு மூர்த்தியை கண்டார். பெட்டியை "மூடித் திற” என்று அசரீரி கேட்டது. அவ்வண்ணமே மூடித்திறந்ததும் ஒரு அழகான குழந்தை அதில் காணப்பட்டது. பெற்றோர் இவருக்கு சைலாதர் என்ற பெயரிட்டு வளர்த்துவந்தனர். இவர் இறைவனை நோக்கி கடுமையான தவம் செய்ததால், பாதிக்கப்பட்ட உடம்பை சீர்ப்படுத்த கங்கை நீர், மேக நீர், பிரமன் கமண்டல நீர், இடபருந்தியின் வாஸ்துரை நீர் என்கிற ஐந்து நீரினால் குளிப்பாட்டப்படவே சைலாதர் உடல் குறைகள் அகன்றன. சைலாதர் ஐயாறப்பனின் உபதேசம் பெற்றுகைலையில் சிவகணங்களுக்குத் தலைவர் பதவியையும் முதல் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும் சைவாச்சாரியார்களில் முதல் குருவாகவும் தன்மையையும் பெற்றார்.
சைலாதர் திருவையாற்றில் சிவனை குறித்து கடும் தவம் இயற்றினார். அவர் இவர் முன் தோன்றி சைலாதர் விரும்பிய படியே சிவானந்தத்தினின்றும் என்றும் விலகாத வரம் அருளி சிவகணங்களுக்கெல்லாம் தலைமையாய் விளங்கும் அதிகாரமும் தந்து பட்டாபிஷேகம் செய்தருளினார். இவருடைய பட்டாபிஷேகத்திற்காகவேபஞ்சநதிகள் வரவழைத்து அப்போதுதான் பரமேஸ்வர சாருப்யந்தையும், ரிஷய முகத்தையும் நந்தி தேவர் என்ற தீக்ஷா நாமத்தையும் இரத்தினப்பிரம்பையும் இறைவன் தேவர்களும் முனிவர்களும் சிவனுக்குள் ஒடுங்கி விடுகின்றன. அந்த நேரத்தில் நந்தி தேவர் மட்டும் சிவபெருமான் திருவருளால் சிவனுக்குள் ஒடுங்காமல் சிவனுக்கு வாகனமாக விளங்குகிறார். ஆகவே தான் பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கும் இறைவனுக்கும் அபிஷேக ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன.
ፈረደረዩሄይ
நந்தி கேஸ்வரரின் சிறப்பு
நந்தி தேவர் ஒப்புமையிலாப் பெருமை நிறைந்தவர். தருமத்தின் வடிவமாய் திகழ்பவர். பஞ்சாட்சரத்தின் வடிவமானவர் இறைவனை சுமந்துசெல்லும் வாகனமாக இருக்கும் சிறப்பினை பெற்றவர். பிரம்மன், திருமால், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்களால் போற்றி துதிக்கப்படுபவர். கைலாய மலையில் பரமேஸ்வரன் உமா தேவியுடன் நவரத்தின பொன்னூஞ்சலில் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு எதிரிலே காட்சிதரும் ரிஷப தேவனின் மூச்சுக் காற்றுபடுவதினால் அந்த ஊஞ்சல் மிக அழகாக ஆடும். அதன் காரணமாகவே சிவபெருமான் சந்நிதிக்கு முன்பாக நந்தி தேவர் காட்சி அளிக்கிறார். ܚܝ
சிவபெருமான் உமையுடன் பேசும் போது நாரதரும் அங்கிருந்தார். உமைக்கும் நாரதருக்கும் நந்தியின் சிறப்பைக் கூறுகிறார். ‘நந்தி தேவன்” பக்தியில் என் போன்றவன் தர்மமே வடிவானவன் “சிவாய நம” என்னும் உருவினன் ஒப்புவமையிலாத நான்கு வேதங்களையும் தன்னுடைய நான்கு பாதங்களாக
34) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 37
உடையவன். உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் என்னை எப்போதும் சுமந்து நிற்கும் வாகனமாகி அருமறைகளும் போற்றும் நற்பண்புகளுடன் கூடிய உருவமுடையவன் என்று சிவபெருமானே நந்தி தேவர் தமக்கு இணையானவர் என விளக்கியருளி யிருப்பதால் ஒவ்வொரு பிரதோசமும் நந்தி தேவரை வழிபட்டு போற்ற வேண்டும். நந்தி என்னும் பெயரில் உள்ளவர்கள் மூவர் அதிகார நந்தி, தரும நந்தி, திருமால் நந்தி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் சிறந்தவர்.
பூவுலகில் வாழ்ந்த காலத்தில் அரிய தவம் செய்த காரணமாக பெரு வாழ்வு பெற்று அதிகாரம் பெற்றவர். அதிகார நந்தி, இவர் சிவகணங்களுக்குத் தலைவராவர். திருமால் நந்தி இவருக்கு அருளினார்.
நந்திகேஸ்வரர் வசிஷ்ட மஹரிசியின் பெளத்திரியும், வியாக்ர பாத முனிவரின் புத்திரியும் உபமன்யன் என்பவரது சகோதரியுமான “சுயம் பிரியை’ என்பவளை மணந்தார். இத்திருமணம் “திருமழப்பாடி என்ற ஸ்தலத்தில் நடைபெற்றதென்றும் இறைவனே இதை முன்னின்று நடத்தி வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. திருமழப்பாடி விருத்தாச்சலம் திருச்சி பாதையில் பன்னிரண்டு மைல் கொள்ளிடக்கரையில் உள்ளது.
இத்தலத்தில் இறைவன் எதிரில் நந்திகேஸ்வரர் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்த நந்தி தேவரின் திருமணம் வெகு கோலாகலத்துடன் பங்குனி மாதத்தில் நடைபெற்றது. திருவையாற்றிலிருந்து “ஐயாறப்பனும் அறம் வளர்த்த நாயகியும் மணமகனான அதிகாரநந்தியுடன் மணப்பெண் வீடான திரு மழப்பாடிக்கு எழுந்தருளியிருக்கின்றார்கள். இந்த மழப்பாடி மணாளரை தரிசனம் செய்யவே ஏராளமான கூட்டம் இவ்விழாவின் போது கூடுகிறது.
பிரதோஷ காலத்தில்
நந்திதேவர் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். சிவபெருமான் திருக்கோயிலில் வாயிலின் முன்புறம் பொற் பிரம்பு ஏந்தியபடி நந்தி தேவர் காவல் புரிகிறார். நந்தி தேவரின் அனுமதியின்றி பிரம்மாதி தேவர்களும், முனிவர்களும் அணிமாதி சித்தர்களும் எம்பெருமானைத் தரிசிக்க திருக்கோயிலுக்குள் செல்ல முடியாது. அவரிடம் உத்தரவு பெற்ற பின்பே செல்ல வேண்டும். சிவாலயங்களுக்கு செல்லும் நாம் முதலில் நந்தி தேவரை வணங்கி அதன் பிறகே எம் பிரானைத் தரிசித்து செல்ல வேண்டும். சிவன் திருக்கோயிலில் காவல் புரியும் நந்தி தேவருக்கு பிரதோஷ காலங்களில் இறைவனுக்கு செய்யப்படும் எல்லா வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.
ஊழிக் காலத்தில் ஏழு கடல்களும் ஒன்றாகி உலகம் அனைத்தும் அதனுள் ஒடுங்கி எல்லாமே இறுதியில் சிவபெருமானுக்குள் அடங்கிவிடும். அனைத்துயிர்களும் பிரம்மாதி தரும தேவதை சிவபெருமானுக்கு ரிஷப வாகனமாகிப் பேறு பெற்றதை உணர்ந்து திருமால் திரிபுர சுகனநத்தின் போது தாமே சிவபெருமானுக்கு விடையாக வாகனமாயினார். இந்த விடைக்கும் வேறானது தரும விடை. இந்த விடையே பிரதோச காலத்தில் பூஜிக்கப்படும் நந்தி தேவர். இறுதிக் காலத்தில் எல்லாமே
* உனது தன்னம்பிக்கை உயரும்போ - ஒர்
(இந்து ஒளி

சிவபெருமானிடத்து ஒடுக்கம் பெறுகின்றன எனச்சாத்திரங்கள் கூறுகின்றன. பிரம்ம விஷ்ணுக்கள் உட்பட ஒருவர் பின் ஒருவராக சிவ பெருமானிடம் ஒடுங்கி மறைவதைக் கண்ட தருமதேவதை தானும் அவ்வாறு மறைந்துவிடக் கூடாதென விரும்பித் தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டது. சிவபெருமானும் அவ்வாறே அதை ஏற்றுக் கொண்டார், அது முதல் தரும விடை சிவபெருமானுக்கு உகந்த வாகனமாக உள்ளது. இதை கந்த புராணம் குறிப்பிடுகிறது.
திருமூலனார் திருமந்திரத்தில் நீடிய(நீத்தல் பசு, பாச நீக்கம்)
நாடிய சைவர்க்கு நந்தியளித்தது.
தருமத்திற்கு என்றுமே அழிவில்லை எனச் சொல்லப் படுவதன் உண்மை தரும தேவதை தரும விடையாய், தரும நந்தியாய் இருந்து தருமத்தை காத்து வருவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். தருமத்தின் சொரூபமான சிவபெருமான் தருமத்தின் வடிவாகிய இடபத்தின் மீது நடனக் காட்சியளித்து பிரதோஷ காலத்தில் “பேரிடபமோடும் நின்று நடனமாடி” எனவும் “எருதுகைத்து அரு நட்டம் ஆடல் பேணும்” எனவும் திருஞானசம்பந்தர் துதிக்கிறார்.
“ஆறுலாஞ் சடையண்ணலைச் சேர்வனேல் ஈறில தென்று முய்ந்திடும் வேனெனத் தேறியே யறத் தெய்வதஞ் செங்கணான் ஏறதாயொ ரெழிலுருக் கொண்டதே'
நலம் நந்தீஸ்வரர்
தஞ்சாவூர் நந்தி (பத்தொன்பது அடி நீளம் எட்டரை அடி அகலம் பன்னிரண்டடி உயரம் ஒரே கல்லில் செதுக்கியது)
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி கவலைகளை என்னாளும் போக்கும் நந்தி கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி
வேந்தன் நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி வியக்க வைக்கும் தஞ்சாவூர் பெரிய நந்தி சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி செவிசாய்த்து அருள் கொடுக்கும் செல்வநந்தி
கும்பிட்ட பக்தர் துயர்நீக்கும் நந்தி குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ் குவிக்க எம்இல்லம் வருக நந்தி
நந்தியெம்பெருமான் தன்னை நாடொறும் வணங்குவோர்க்கு புந்தியில் சேரும் ஞானம் பொலிவுறு செல்வங்கூடும்! சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறு மக்கள் சேர்வர் இந்திர போகம் கிட்டும் இணையிலா வாழ்வு தானே!
து உனது ஆற்றலும் அதற்கேற்ப உயரும். அறிஞர்
35) சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 38
வெங்கடேஸ்வரப் (
மாதவனே, மாமணியே, மலர்மகளி மாநிலத்தில் நல்லருளைப் பரப்பிடு உத்தமனே உன்கருணை உலகினை உறுதுணையாயிருந்திடையா உல
கருணைமிகு பேரருளே, காத்தருளு கந்தனவன் அம்மானே காத்தருள் வந்தவினை போக்கிவிட வரும்வின் சிந்தையைத் திருப்பிவிடு செம்மை
பாற்கடலில் துயிலுகின்ற பார்போற் பாரினிலே காவல் செய்ய தயக்கெ நத்திவரும் உன்னடியார் நல்ல நிை நாயகனே, அன்புருவே வழிகாட்டு
அதர்மங்கள் அழித்தொழிக்க அவ அருளளித்து, ஆதரித்து அரவணை வெஞ்சினத்தின் கொடுமைகளை ( வெற்றித் திருமகனே வந்திடுவாய்
தெகிவளையில் கோயில் கொண்டு தேம்பியழும் உன்னடியார் துயர்கள் நெடுமாலே, நேர்மையனே துயர்க
நெடிதுயர்ந்த உன்னருளால் நெஞ்
 
 

ன் துணையவனே
வாய் பெருமாளே
ாயே காத்துவிட
காளும் திருமாலே.
ம் வல்லோனே வாய் பெருமாளே னைகள் தடுத்துவிட தரும் திருமாலே.
ற்றும் உத்தமனே மன்ன பெருமாளே லபெற்றுவிட
திருமாலே.
தரிக்கும் மேலோனே ாப்பாய் பெருமாளே வேரோடு அகற்றிவிட திருமாலே.
திக்கெல்லாம் அருள்வோனே ளைவாய் பெருமாளே ளைய வந்திடுவாய் Fமெல்லாம் நிறைந்திடட்டும்.
த. மனோகரன்
2 /O/7Z 27'
கொழும்புத்துறை.
ఫిబ్లి
சித்திரபானு வருடம் ஆடி - புரட்டாதி)

Page 39
A
属 I
| " I M
స్థితి
கொவிக்கிறார்.
 

5 ∞ 氏
லு தனது நன்கொடையை ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவர்
LI Iti க ங் EFI |||||||||||||||||||||||||||
தீஸ்வா ஆலயத் திருப்பணிக்காக மலேசிய அமைச்

Page 40
இந்தச் சுடரில் .
f பஞ்ச புராணங்கள்
நவராத்திரி நல்கும் விழுமியங்கள்
る。 சைவ சித்தாந்த தத்துவத் தலைக்காவலருடன்
f2.
16.
78.
79.
20.
23.
26.
26.
28.
3O.
32.
33.
34.
36.
ஒரு சில மணித்துளிகள்
தனித்துவம் வாய்ந்த இந்து மதம்
இந்து சமயமும் மனித விழுமியங்களும்
பல்லவர் கால பக்தி இலக்கியமும் இலக்கியப்
பண்புகளும் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம்
திருநீற்றின் மகத்துவம்
திருவைந்தெழுத்து
சித்தர்கள் வாழ்வும் வழிகாட்டுதலும்
வள்ளுவனும் திருக்குறளும்
வெற்றியின் இரகசியம்
பெரிய புராணக் கதைகள்
திருவிளையாடற் புராணக் கதைகள்
சைவ சமயம் காட் டும் அன்பு நெறி
இந்துக்களின் சமய வாழ்வு
நந்தியெம் பெருமானைநாள்தோறும் வணங்குவோம்
தெகிவளை வெங்கடேஸ்வரப் பெருமாள்
 
 

കിഖണമ (സ്ഥ ക്രികക്രമ കിബസ്ക മമ ബസ്ക ബ്സ്കി സ്ക് (മഞ്ചസ്ഥ ബ് ബ ക്രഖഥമ 11ിഷ്ണ സ്ഥ കണ്ടിട്ടുണ്ണ് ബസ്ഥ
ക്ലിഖിസ്റ്റി ബ്രി(1ിബ് ക്ലബ് സ്കി ബന്ധിക്
ប្រឌិញ ភ្ញាចាf அகில இலங்கை இந்து மாமன்றத் 88 சித்திரபானு வருடம் ஆடி புரடாதி இதழ்
ஒரு பிரதியின் விலை ரூபா 2O.OO வருடாந்த சந்தா 80.00 வெளிநாட்டு வருடாந்தச் சந்தா U S61_sJónosi 10.00 அகில இலங்கை இந்து மாமன்றம் A, C, H. C. கட்டிடம் 91/5 சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2, இலங்கை. இணையத்தளம் : http://www.hinduCongreSS.Org தொலைபேசி எண் : 434990, தொலைநகல்: 344720
இந்து ஒ
வரியில் வெளியிடப்பட்டுள்ள
Aad i - Puraddaathy
ALL CEYLON HINDU CONGRESS 11th OCTOBER 2002
Editorial Board: -
Pulavar A. Thirunavukarasu Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. M. Pavalakanthan Mr. D. Manoharan Mr. G. Partheepan
Price RS. 20.00 per copy Annual Subscription RS. 80.00 Foreign Subscription U. S. S. 10.00
(including Postage)
ALL CEYLON H I N DU CONGRESS, A. C. H. C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha, Colombo - 2, Sri Lanka. Website: http://www.hinducongress.org Telephone No.: 434990, Fax No. : 344720 Next issue Aipasie Markazhi
PRINTED BY UNIE ARTS (PVT) LTD., COLOMBO 13. TEL: 330195.