கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2002.10-12

Page 1
அகில இலங்கை இந்து மாமன்றம் காலாண்டிதழ்
Quarterly of CA1 (2egson 26iraala (2ongress
 
 
 
 

| –... À·

Page 2
சிவகீர்த்தி மாலை - பர
07.12.2002 சனிக்கிழமை மாலை பம்பலப்பிட்ட திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிக்கு ஆதரவாக தனஞ்சயன் தம்பதிகளின் சிவகீர்த்தி மா6ை
நந்தனார் நாட்டிய நிகழ்வு
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி அகில இலங்கை இந்து மா மன்றத் திருக்கேதீச்சா திருப்பணிச் சபைத் தலைவர் திரு. இ. நமசிவாயம்
 
 
 

த நாட்டிய நிகழ்வுகள். டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற
சென்னை பரத கலாஞ்சலி நிலையம் வழங்கிய
பாத நாட்டிய நி
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தாணி திரு. கனகநாயகம்
cir அவர்களுக்கு திருப்பணிச் சபைத் தீப்பிப்ரவர் திரு. இ.நமசிவாயம் மாலை அணிவித்துக் கென விக்கிறார்.
ப பிரதம விருந்தினர் திரு. க. ககோஸ்வான்,
தலைவர், திரு. வி. கபிலாசபிள்ளை, 'திருப்பணிச்சபைத் துணைச் செயலாளர் புலவர் அ. திருநாவுக்காசு.

Page 3
2 4laonputó
பஞ்ச புரானங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம் (அப்பர் சுவாமிகள் அருளியது)
உடம்பெனுமனையகத்துள்
உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் யட்டி
யுயிரெனுந் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால்
எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை
கழலடி காண லாமே.
திருவாசகம் (மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது) சோதியாய்த் தோன்று முருவமேயருவா
மொருவனே சொல்லுதற் கரிய வாதியே நடுவேயந்தமே பந்த
மறுக்குமானந்தமா கடலே தீதிலாநன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந்துறையுறை சிவனே யாதுநீபோவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே.
திருவிசைப்பா (வேணாட்டடிகள் அருளியது) மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும் கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான் மிகக் கலங்கி அண்ண்ாவோ என்றண்ணாந்தலமந்து விளித்தாலும் நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
திருப்பல்லாண்டு (சேந்தனார் அருளியது) மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்துவம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங் கடந்தபொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்என்றே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் (சேக்கிழார் சுவாமிகள் அருளியது) எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம்விரும்பும் உண்மையாவது பூசனையென உரைத்தருள அண்ணலார்தமை அர்ச்சனை புரியஆதரித்தாள் பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.
திருச்சிற்றம்பலம்
ܢ
(இந்து ஒளி

தீபம் - 7 சுடர் - 1 ஆ
சித்திரபானு வருடம் uDITistas 6tib நாள் 2 2.2002
பொழுது விடிகிறது
1011மன்றத் தலைமையகம் பூர்த்தியான நாளிலிருந்து மக்கள் சேவையாக மேற்கொண்டுவரும் சமயத் தொண்டின் ஒர் அம்சமாகக் காலாண்டிதழாக வெளிவரும் "இந்து ஒளி" அதன் வளர்ச்சிப் பாதையில் ஆறு வருடங்களை நிறைவுசெய்து கொண்டு, ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை மாமன்றம் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
ஏழாவது ஆண்டின் முதலாவது தீபச்சுடர் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதன் மூலம் எங்கள் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றோம். "இந்து ஒளி' சஞ்சிகைக்கான தரமான ஆக்கங்களை வழங்கி வரும் அறிஞர்கள், மாணவர்கள் உட்பட சஞ்சிகையின் சிறப்பான வளர்ச்சிக்காகப் பலவகையிலும் துணை புரிந்துவரும் அன்பர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இது மார்கழி மாதம். தேவர்களுக்கு விடியற் காலைப் பொழுது. இருள் நீங்கி நல்லதொரு காலைப் பொழுதாகத்தை மாதம் உதயமாவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாட்டின் கடந்த கால இருள் சூழ்ந்த காலப் பகுதியை இலகுவில் மறந்துவிட முடியாது. துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் மக்களின் அவலக் குரல்களும் ஒன்றிணைந்த துயரமான நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளாகி இருக்கின்றன. கடந்த வருட மார்கழித்திருவெம்பாவைக் காலத்தின்போது நமது நாட்டின் அரசியல் வானில் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமொன்றின் ஒளியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சமாதான முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் பெருமளவு முன்னேற்றம் காணப்பட்ட நிலையில்-தற்காலிகமான அமைதியான சூழ்நிலையில் - இவ்வருடத் திருவெம்பாவை உற்சவமும் வந்து விட்டது.
விடியற் காலையான மார்கழி மாத நடுப்பகுதியில் உதயமாகும் புதியதொரு ஆங்கில வருடமும், அதனைத் தொடர்ந்து மலரும் தைத் திங்களும், நாட்டின் கடந்த கால துயர நிகழ்வுகளுக்குப் பிராயச்சித்தமாக நிரந்தரமானதொரு அமைதி நிலையுடன் சேர்ந்த சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த புதியதொரு சகாப்தத்தை உருவாக்கும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
கடந்த காலங்களில் நாட்டில் சேதமடைந்தும் பூஜைகள் இன்றியும் மூடப்பட்டிருந்த பல இந்து ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு இறைவழிபாடுகள் நடந்து வரும் இக்கால நிகழ்வுகள், எதிர்காலத்திற்கான நல்ல சகுனமாகவே அமைகின்றன.
வரலாற்றுப் பெருமை வாய்ந்ததும் பாடல் பெற்றதுமான திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனருத்தாரண வேலைகளும் இன்று துரிதமாக நடைபெற்று வருவதை இங்கு சிறப்பாகக் குறிப்பிடலாம்.
மாமன்றத்தின் அங்கத்துவ சங்கங்களுள் ஒன்றான திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் ஆக்க பூர்வமான பணிகளுக்கு மாமன்றமும் முழுமையான ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கி வருகின்றது.
“தை பிறந்தால் வழிபிறக்கும்” என்பதற்கு அமைய விடியற் கான்லப் பொழுதான மார்கழியைத் தொடர்ந்து அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சிபொங்கபூரீசிவகாமி அம்பாள் சமேதரீநடராஜப் பெருமான் திருவருள் புரிவாராக.
D சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 4
ඡtණිuqui ඡමi sit bib6
குமாரசாமி
சிவம் சோதியாகக் காட்சியளித்த இடம் திருவண்ணாமலை என்னும் தலம் ஆகும். சோதி என்பது அக்கினியின் தோற்றம் நிலம், நீர்,தீ,காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களின் சேர்க்கையே இந்த உலகம்.
நிலம் தீநீர்வளிவிசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்.” என்று தொல்காப்பியம் உலகம் பற்றிக் கூறுகிறது. இந்த உலகம் போன்றே நம்முடைய உடலும் பஞ்ச பூதங்களின் கலப்பினால் உண்டாகியது. இதனாலேயே அண்டம் போன்றதே பிண்டமும் என்று நூல்கள் கூறுகின்றன. அண்டம் என்பது உலகம், பிண்டம் என்பது உடல். இவ்வாறே, இவ்வைந்து பூதங்களுக்கும் உரிய ஐந்து நுண்ணிய குணங்கள் இவை யென்பதையும் நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர். சுவை என்னும் குணம் நீருக்கும்; ஒளி, நெருப்புக்கும்; ஊறு அல்லது பரிசம் வாயுவுக்கும்; ஒசை ஆகாயத்திற்கும்; நாற்றம் நிலத்திற்கும் உரியன என்று கொள்ளப்படுகிறது.
இந்த உலகத்தையும் நமது உடல்களையும் தம் கலப்பினால் உருவாக்கிய பஞ்ச பூதங்கள் வழிபாட்டிற்கு உரியனவாக விளங்கின. ஒவ்வொன்றிற்கும் தலங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இப் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் உரிய கோயில்களில் நம் ஜீவன், பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட உடலோடு இணைந்து வணங்கும்போது ஆனந்தம் பெறுகின்றது. இந்த வகையில் சிதம்பரம் ஆகாயத் தலமாகவும், திருக்காளத்தி வாயுத் தலமாகவும்; திருவண்ணாமலை நெருப்புக்குரிய தலமாகவும்; திருவானைக்கா நீருக்குரிய தலமாகவும்; காஞ்சியும் திருவாரூரும் நிலம் என்பதற்குரிய தலமாகவும் கொள்ளப்படுகின்றன. பஞ்ச பூதத் தலங்களில் கருவறையில் இறைவனின் அருவுருவத் திருமேனியாக உள்ள சிவலிங்கமே காணப்படுகின்றது.
எல்லாப் பொருள்களிலும் அக்கினி மையமாகவும்; எல்லாப் பொருள்களுக்கும் அக்கினி ஆதாரமாகவும் உள்ளமை பற்றி எல்லா நூல்களும் கூறுகின்றன. பரம்பொருள் ஆகிய சிவமும், அக்கினிப் பிழம்பாக, சோதி வடிவாக, சுடராகக் கருதப்பட்டு வழிபாடு செய்யப்படுவதும் இக்கருத்தில்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒளி என்னும் குணம் நெருப்பினுடையது. ஒளியில் இருள் அகன்று விடுகிறது. ஞான ஒளியில் அஞ்ஞான இருள் நீங்கி விடுகின்றது. அகந்தை எரிந்து
(இந்து ஒளி
 
 
 

ந்தமுமில்லா நம் Géné
சோமசுந்தரம்
பொசுங்கி விடுகின்றது. சோதி வழிபாடு, ஒளி வணக்கம் என்பது இதுவேதான்.
அத்தகைய ஒளியை, சோதியை, கடரை, சிவமாக வழிபடுகின்ற திருவண்ணாமலைத் தலத்திலேயே திருவெம்பாவை மாணிக்கவாசக சுவாமிகளால் அருளப் பெற்றது.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை .לל என்று திருவெம்பாவை முதற்பாடல் இறைவனைக் குறிப்பிடுகிறது. பரம்பொருளைப் பரஞ்சோதியாக, சிவத்தை, சிவசோதியாகத் திருவண்ணாமலையில் கண்டு பாடுகின்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் சிவஞான ஒளி வடிவினன். அருட் பெருஞ் சோதி. அது காலம் முதலிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அதற்குத் தொடக்கமுமில்லை; முடிவுமில்லை. அதுவே சிவம், சாந்தம், ஒளி, அழகு, ஆனந்தம், கருணை, நீதி அனைத்தும் ஆகும். அந்த'ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் ஜோதி"யாக விளங்குகின்ற சிவம் என்னும் செம்பொருள்தான், “முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப்பெற்றியனே" என்றுமாணிக்கவாசகர்திருவெம்பாவைப் பாடல் வாயிலாக அறிவிக்கின்றார்.
பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் என்றும் சிவப்பிரகாசமாய் விளங்குகின்ற சிவத்தைத் தலைவராகக் கொண்ட நமக்கு ஒரு குறையுமில்லை; ஒரு பொல்லாப்புமில்லை; ஒரு துன்பமும் இல்லை; ஒரு தொல்லையுமில்லை.
சோதிலிங்கமாகத் திருவண்ணாமலையில் வீற்றி ருக்கின்ற அண்ணலை, இறைவனை, சிவத்தை நம் எம் தலைவராகப் பெற்றுள்ளமை எம் பாக்கியம்; நம் தவத்தின் பயன். இலிங்கமாகிய சோதி, ஆவுடையாராகிய சக்தியில் தோன்றி நிலைத்து நிற்பதை உணரலாம். அதனால் “சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்” என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறான். இதனை “பேதை ஒருபால், திருமேனி ஒன்றல்லன்” என்று திருவெம்பாவையில் இத் தலத்தைக் குறித்து மாணிக்கவாசகர் பாடுகிறார். இறைவன், அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்கும் திருவண்ணாமலைத் தலத்தில் திருவெம்பாவையை மாணிக்க வாசக சுவாமிகள் பாடியருளியமை எத்துணைச் சிறப்பு வாய்ந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆனால் நாமோ, "வன்னெஞ்சப்பேதையர் போல் வாளா” கிடக்கின்றோம். தூக்கத்திலே காலத்தைக் கடத்துகின்றோம். துயில் செய்து பொழுதை அவமாக்குகின்றோம். அப்படிப்பட்ட எம்மை மாணிக்கவாசகப் பெருந்தகை நோக்கி, “உத்தமமான
2) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 5
மனிதப் பிறவியை எடுத்த மக்காள், மிக்க புனிதமான மார்கழி மாதத்துவைகறையில், படுக்கையில்படுத்து, கண்ணைத்துயின்று, காலத்தை வீணாக்காது, நித்திரை விட்டெழுந்து, நீராடி, திருநீறு அணிந்து, திருக்கோயில் போந்து, திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாடி, பக்திப் பரவசத்துடன் இறைவனை, வழிபாடு செய்யுங்கள். இருள் நீங்கப் பெற்றுச் சிவஞான ஒளிபெறுவீர்கள்" என்றுமொழிகின்றார். மாணிக்கவாசகர் சொற்கேட்டு மார்கழியில் அதிகாலையில் திருவெம்பாவை ஒதி, இறைவன் அருள் பெற்று வாழ்க்கையில் எல்லா நலன்களையும் அடைந்து இன்புற்று வாழ உறுதி பூணுவோம்.
மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகம் கல்லையும் கரைக்கும் கனிவுடையது. நெஞ்சம் கல்லாக இருப்பினும் நெகிழ வைத்து உருக்கும் தன்மையது. வன்னெஞ்சை நன்னெஞ்சாக மாற்றும் அற்புத ஆற்றல் படைத்தது. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்றொரு வாசகம் உண்டு.
"வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில், இங்கு நானடைதல் வியப்பன்றே” என்று திருவாசகத்தின் சிறப்பினை இராமலிங்க வள்ளலார் பேசுகின்றார்.
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு.திருவாசகம் எட்டாந் திருமுறையாகும். பஞ்ச புராணம் பாராயணம் செய்யும்போது தேவாரத்தை அடுத்துத் திருவாசகம் ஒதப்படுகிறது. சைவர்களின் தோத்திர நூலாகத் திருவாசகம் விளங்குகிறது. திருவாசகம் என்னும் தேன், பருகப் பருக, அறியாமை அகலும் அல்லல்கள், தொல்லைகள் நீங்கும்; சிவானந்தம் சித்திக்கும்.
சாதாரண தேன், தான் கெட்டுப்போகாததோடு, தன்னில் போட்டு வைத்த பண்டத்தையும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தன்மையது. திருவாசகமும்தான் என்றும் சிரஞ்சீவியாக வாழ்வது மட்டுமன்றி அதனை மெய்யன்போடு ஒதி வருவோரையும் சிரஞ்சீவியாக வாழ்விக்கும் திறனுடையது.
"தொல்லையிரும்பிறவிச்சூழுந்தளைநீக்கி அல்லல் அறுத்து ஆனந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னுந் தேன்." என்பது பாடல்.
பூக்களிலிருந்து எடுக்கப் பெற்ற தேன், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவது போல, திருவாசகத் தேன் உயிருக்கு ஒப்பற்ற ஆரோக்கியத்தை நல்குகின்றது.
தில்லையிலே மாணிக்கவாசகர் திருவாசகத்தைக் கூற, அருகிருந்து, தமது திருக்கரத்தால் எழுதியவர் வேதங்களையும் ஆகமங்களையும் உணர்த்திய திருச்சிற்றம்பலமுடையான் என்றால் திருவாசகத்தின் பெருமையை உரைப்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ !
திருவாசகத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. மாதங்களுள் சிறந்தது மார்கழியாகும். தேவர்களுக்கு மார்கழி
(இந்து ஒளி

மாதம் முழுவதும் விடியற் காலை. பிரம்ம முகூர்த்தமும் அவர்களுக்கு அக்காலப்பகுதியே என்பர். மார்கழி மாதத்தில் மற்றைய திருமுறைகளையெல்லாம் திருக்காப்பிட்டு வைத்துவிட்டு, திருவாசத்தை மாத்திரமே ஒதுகின்ற வழக்கம் மரபுவழியாக வந்து கொண்டிருக்கிறது. திருவாசகத்திலே ஒரு சிறந்த பகுதி திருவெம்பாவை. இது மார்கழியில் விடாது தொடர்ந்து அதிகாலையில் ஒதப்பட வேண்டிய சிறப்பையுடையது.
திருவாசகம் முழுவதையும் தம் கைப்பட எழுதி முடித்த பின்னர், தில்லைப் பொன்னம்பலவாணர், மாணிக்கவாசகப் பெருமானை நோக்கி என்ன கேட்டார். தெரியுமா? "அன்பரே, பாவை பாடிய வாயினால், கோவை பாடும்” என்று திருவாய் மலர்ந்தருளினார். இங்கு “பாவை’ என்று கூத்தர்பிரான் குறிப்பிட்டது திருவெம்பாவையை ஆகும். இறைவன் இவ்வாறு மொழிந்ததிலிருந்து, திருவெம்பாவையின் ஒப்பு உயர்வு அற்ற பெருமை விளங்குகின்றது.
மார்கழி மாதம் சிவ வழிபாட்டிற்கும் விஷ்ணு வழிபாட்டிற்கும் மிகச் சிறந்த மாதம். சிவபெருமானுக்கு திருவெம்பாவைத் திருவிழாவும், மகாவிஷ்ணுவிற்கு வைகுண்ட ஏகாதசித் திருவிழாவும் நடைபெறுவது மார்கழியில்தான். பெண்களால் பாவை நோன்பு மார்கழியில்தான் அனுட்டிக்கப் படுகிறது. சூடிக்கொடுத்த நாச்சியார் பூரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை, விஷ்ணு ஆலயங்களில் மார்கழியில்தான் அதிகாலையில் ஒதப்படுகின்றது. பிள்ளையார் சஷ்டி விரதமும் மார்கழி மாதத்திலேயே இடம் பெறுகின்றது. மார்கழி மாதம் முழுவதும், தினந் தோறும் அதிகாலையில் வீட்டு முற்றத்தைப் பெருக்கி, சாணத்தினால் மெழுகி, அழகிய கோலம் போட்டு, பிள்ளையார் பிடித்துவைத்து, அறுகம்புல் குற்றி,பூசினிப்பூவைத்து வழிபாடு செய்யும் வழக்கம் சைவ மக்களிடையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. கண்ணனும் கீதையில், அருச்சுனனை விழித்து “ மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்கிறான். மார்கழியில் வைகறையில் செய்கின்ற இறைவழிபாட்டிற்கு நிகராக வேறெதுவுமில்லையாகும்.
மார்கழியில் விடியற் காலத்தில் உமையம்மையுடன் கூடிய சிவபெருமானை ஒருநாள் மெய்யன்போடு பூசிப்பார்களாயின், அந்த ஒரு நாள் பூசைக்கு, மற்றைய நாட்களில் கோடி நாட்கள் நடத்தும் பூசைகள் அனைத்துமே ஈடாகாது என்று சிவாகமம் கூறுகின்றது. மார்கழியில் சிவதீட்சை பெறுவதும் உவப்பானது என்பர்.
மார்கழிமாதம் வைகறையில் செய்கின்ற சிவவழிபாட்டின் போது. ஆசாரசீலராய், முதலில் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடி, இறைவனைத்துயிலெழுப்பி, அதன்பின்னர் திருவெம்பாவைப் பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் பாராயணம் செய்தலே மரபு ஆகும். கோவில்களில் மாத்திரமின்றி ஊரிலுள்ள வீதிகள், தெருக்கள் தோறும் அதிகாலையில் அடியார்கள் சேர்ந்து சங்கு, சேமக்கலம், மணி, மத்தளம் என்பன ஒலிக்க திருவெம்பாவைப் பாடல்களைப்பாடிச்செல்லும் காட்சிபக்திப்பிரவாகமாக இருக்கும். குளிர் கூதிர் மிகுந்த மார்கழி விடியற் காலையில், கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காது, விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப் பொருளைக் கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்து உள்ளம்நெக்குருகவழிபாடுசெய்து சிவனருள் பெற்றுஇக, பர சுகங்களை அடைந்து உய்வுபெறுவோமாக.
3) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 6
ருெடந் தோறும் மார்கழி மாதம் பூரணையும்
திருவாதிரையும் சேர்ந்து வரும் காலம் திருவாதிரையாகும். இதில் திருவாதிரை பிரதானம். ஏனென்றால் அந்த நட்சத்திரமே சிவபெருமானுக்கு உரியது. இத்தினத்தில் சிதம்பரத்தில் மிக மிக விசேடமான உற்சவமும் அபிஷேகமும் நடக்கும்.
இதற்கு முன்னுள்ள பத்து நாட்களும் திருவெம்பாவை ஒதுவார்கள். மார்கழி மாதம் முழுதுமே விஷேட காலமாகக் கணிக்கப்படும். கோயில்களிலும், வீட்டு வாயில்களிலும் அழகிய பலவகையான சித்திரக் கோலங்கள் அமைத்து, கோமயத்தால் மார்கழிப் பிள்ளையார் என்று விநாயகரை வைத்துப் பூக்கள் சூடி வழிபடுவார்கள். சிலர் ஒன்பது நாளும் ஒரு பொழுது உண்டு விரதம் இருந்து திருவாதிரையில் உபவாசமாய் இருந்தும் அனுஷ்டிப்பர்.
தேவர்களுடைய காலக் கணக்கின்படிஇம்மாதம் பிரம்ம முகூர்த்தமாகும். நமக்கும் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்குமுன் ஐந்து நாழிகை இரண்டு மணித்தியால காலமும் அந்த முகூர்த்த காலமாகும். அதாவது உஷாக்காலம் என்பது. இக்காலத்தில் நித்திரை விட்டு எழுந்து காலைக்கடன்கள் கழித்து, நீர்ஆடி, அனுட்டானம் முடித்து, கடவுள் வழிபாடு செபம், தியானம் ஆதிய செய்ய வேண்டும் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. இதனால் தேகமும், மனமும், அனேக நன்மைகளை அடைகின்றன.
இக்காலத்தில் சத்துவகுணம் மேலோங்கி விளங்கும். கரியமல வாயு குறைந்து, பிராண வாயுவின் வன்மை மிகுந்தும் (ஓசோன்) என்னும் சஞ்சீவிக் காற்று நிலை ஏற்பட்டும் இருக்கும் என்பர். இக்காலமே தியானம், பூசை வழிபாடு, படிப்பு, சிந்தித்தல் முதலிய நற்காரியங்கள் வசப்படுவதற்கு இயற்கை அன்னை உதவும் நேரமாகும்.
இந்த நுட்பங்களை நம் முன்னோர் அறிந்தே, சூரிய உதயத்துக்கு முன் நித்திரை விட்டெழுதலை வற்புறுத்திக் கடைப்பிடித்து வருகின்றனர். தினமும் பிரம்ம முகூர்த்தம் நமக்கிருப்பது போலவே, தேவர்களுக்கும் உண்டு.
மிகப்பழைய காலம் இருந்து மார்கழி நீராடல் கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறதைச் சங்க இலக்கியங்கள், நிகண்டுகளிலிருந்து தெரியலாம். இதைப் பாவை நோன்பு என்பர். பெரும்பாலும் கன்னிப் பெண்களே, தங்களின் எதிர்கால வாழ்க்கையின் சிறப்பு நோக்கி காத்தியாயினி என்னும் சக்தியை மார்கழி மாதம் முழுவதும் வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.
-O-34
மகிழ்ச்சி எல்லா நோய்கை
மகிழ்ச்சியாக வாழ முற்பட்டா
(
C
 
 

சிறப்பாக மார்கழித் தி ரு வா தி  ைர க் கு முன்னுள்ள பத்து நாளும், கோயில்கள், வீடுகள் முதலிய இடங்களில் திருவெம்பாவை படித்தலும், திருவாதவூரடிகள் புராணம் படித்தலும், இறைவனை வேண்டுதலும் செய்து வருகின்றனர். நடேசப் பெருமானுக்கே மூர்த்திகளில் விசேடங்கள் யாவும் சிறப்பாய் செய்கின்றனர். மார்கழி மாதம் முழுவதும் திருவாசகமே பெரும்பாலும் வீடுகளில் ஒதுகின்றனர்.
ழரீமத் மாணிக்கவாசக சுவாமிகள், சிதம்பர தரிசனத்துக்குப்போகும்போது திருவண்ணாமலையிற் தங்கினார். அவர் தங்கின காலம் திருவெம்பாவைக்காலம். அண்ணாமலையில் உள்ள பெண்கள், விடியற் சாமம் எழுந்து வீடுகள் தோறும் சென்று, மற்றைய கன்னிமார்களையும் எழுப்பி, ஆடிப்பாடி நீராடிச் சென்ற காட்சியைக் கண்டார். அவர்கள் பாடியதாகவே திருவெம்பாவை பாடினார். ஞானமும் தத்துவார்த்தமும் நிரம்ப அப்பதிகத்தில் அமைந்துள்ளன.
பூரீ நடேசப் பெருமானும் அந்தணர் வடிவாய் மாணிக்கவாசகப் பெருமானிடம் வந்து, திருவாசகம் முழுவதையும் பாடக்கேட்டு எழுதிய பின் 'பாவை பாடிய வாயால் கோவை பாடு” என்று கேட்டதிலிருந்தே அதன் அருமை விளங்கும். “எம்பாவாய்” என்று பாடல்கள் முடிகிற படியால் அது சக்தி வழிபாடு என்பதும் தெரியவருகிறது. இவ்வழிபாட்டால் நாட்டுக்கு நீர் வளம் முதலிய பல செல்வங்கள் உண்டாவதுடன், மக்களுக்கும் மிக மேலான நன்மைகள் உண்டாகின்றன. ஆதலால் சைவ மக்களாகிய நாம் சைவச் சிறார்களை ஊக்கப்படுத்தி இனி வரும் இக்காலத்தில் விடியற் காலை நாலு மணிக்கே அவர்களின் கடமைகளை முடிப்பித்து சங்கு, சேமக்கலம், வாத்தியக்கருவி முதலியவற்றுடன் எங்கள் கிராமங்களை ஊர்வலமாய் வந்து ஆடிப்பாடி, கோவில்களில் சென்று பூசை தரிசித்து தெய்வ வழிபாடுகளைச் செய்விக்க ஒவ்வொரு பெற்றோரும் முன்வருவோமாக. சைவ மக்கள் வீடுகள் எல்லாம் பொலிந்து சிறந்து விளங்க, நம் உலகமே மேலோங்கும்.
நன்றி: சிவதொண்டன்
K»C-3o ாயும் தீர்க்கும் வியத்தகு மருந்து. p வாழ்க்கையில் துன்பமே இல்லை. ஸ்கின்)
D சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி)

Page 7
ቃu9ùC} c9ሐF றோயல் கல்லு ॐ
உலகத்தில் உள்ள மதங்கள் எல்லாம் மனிதனை மனுசனாக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டவை. மனிதன் நீசனாகினால் அவனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லை. இத்தகைய முயற்சியில் தோன்றிய மூத்தமதங்களில் சைவமும் ஒன்று நாம் சைவசமயத்தவர்களாகப்பிறந்ததை எண்ணிப் பெருமைப்பட வேண்டும். ஏனெனில் மூத்த உலக நாகரிகம் என்று சொல்லப்படும் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் நாங்கள். இன்று உலகத்துக்கு நற்புத்தி போதிக்க நினைக்கும் ஐரோப்பியர்கட்கும், அமெரிக்கர்கட்கும் முன்பு எம்மதத்தவர் உலக நாகரிகத்தின் உச்சநிலையில் வாழ்ந்தனர் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு.
'சைவர்'என்றால் ஒன்றுமில்லாமை என்று பொருள்படும். 'சைவர்'தான் தொடக்கமும் முடிவும் என்று குறிப்பிடுவாரும் உளர். சய (-)வின் முடிவாகவும் சக (+) வின் தொடக்கமாகவும் அமைவது சைவர். இந்த எண்கணித வாய்ப்பாட்டு முறைதான் சைவமும், சைவம், மனிதன் ஒன்றுமில்லாதவன் என்ற நிலைக்கு எப்போது வருகின்றானோ அப்போதுதான் மனுஈசன் ஆகிறான் என்கிறது. “செத்தாரைப் போலத்திரி” என்ற வேதவாக்கின் உட்பொருள் அதுதான். இறைவன் எம்மைப் படைத்தமை எம் விதிவழிச் செயற்பாடாகும். முன்வினையின் அறுவடை இப்பிறவியில் நடைபெறுகிறது. நன்நிலத்தில் விதைத்தவன், நற்கருமங்கள் செய்தவன் இப்பிறவியில் நன்நிலையில் இருக்கின்றான். தீயராய், தீமையின் இருப்பிடமாய் இருந்தவன் இப்பிறப்பில் துன்பத்தில் அழுந்துகின்றான். இதனாற்தான் கணிகன் பூங்குன்றனார் சொல்லும் போது "தீதும் நன்றும் பிறர்தரவராது" என்றார்.
இப்பிறவியின் செயல்கள் இனி எடுக்க இருக்கும் பிறவியின் விளைபுலம். இங்கு நாம் விதைப்பதைத்தான் மறு பிறப்பில் நாம் அறுவடைசெய்ய இருக்கிறோம். இது பலரால் உணரப்படாதது. “காயமே பொய் காற்றடைத்த பை'என்றெல்லாம் சொல்லியாகிவிட்டது. “காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே” என்று பட்டினத்தார் பாடி முடித்து விட்டார். "ஆடி அடங்கும் வாழ்க்கை ஆறடி நிலம்தான் சொந்தமடா” என்று சொல்லி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மனித நேயம் வளரவில்லை. இவ்வுலக மாய வாழ்வில் சிக்கி ஆசாபாசத்தில் அகப்பட்டு பண்பெனப்படுவதை பணத்துக்கு வாங்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இத்தகைய கருத்துகள் பிரயோசனமற்றவை போல் தெரியும்.
ஆழமாகச் சிந்தித்தால் மூடநம்பிக்கைகள் என்று நாம் புறக்கணித்துவிட்டுச் செல்லும் எமது பண்டைப் பெருமைகள் எண்ணற்றவை என்பதை அறிதல் வேண்டும். எமது பண்டைப் பெருமைகளை எமது சொந்தமான கண்டுபிடிப்புகளை இன்று
(இந்து ஒளி (
 
 

வுத் தலைவர் தூரி, கொழும்பு
திப்பிள்ளை
*" } } ー ぶ
மேற்கத்தையவன் விஞ்ஞானம் என்ற போர்வையில் சொல்லும் போது வான் முட்ட வாய் பிழந்து ஆகா, ஆகா'என்று கேட்கின்றோம். இதுவெல்லாம் எமது சைவநெறியில் பண்டுதொட்டு இருந்து வந்தது என்றால் எம்மவரே சிரிக்கின்ற கோரநிலையை அடைந்துவிட்டோம். ஏனெனில் எம்மீது எமக்கு நம்மிக்கையில்லை. நாமா இப்படி இருந்தோம் என்று எண்ணமுடியாத அளவிற்கு பற்றில் வந்தது துன்பத்தில், பாழ்ங்கிணற்றின் அடியில் நின்று பார்க்கும் எமக்கு எல்லாமே வியப்புத்தான்.
இன்று மேற்கத்தைய வைத்தியம் என்றும் சொல்கிறார்கள். யாருக்கு யார் வைத்தியம் சொல்லித்தருகிறார்கள். சிவனுக்கு வைத்தியநாதன், வைத்தீஸ்வரன் என்று எல்லாம் பெயர்கள் உண்டு. முன்பு எல்லாமே இறைவன் பெயரால் சொல்லப்பட்டது. ஏனெனில் மதத்தின் பெயரால் சொல்லப்படாத எதிலும் நம்பிக்கை இருக்காத காலம். இன்று விஞ்ஞானத்தின் பெயரால் மேலைத்தேயங்கள் சொன்னாற்தான் ஏற்றுக்கொள்ளும் நிலையைப் போல் அன்று மதத்தின் பெயராற்தான் எதையும் செய்ய வேண்டும். தீராத பெரு நோய்கள் வந்தபோது சிறந்த மருத்துவ வசதியால் அவற்றைக் குணமாக்கிய சித்த ஆயுள் வேதம் எமது சொந்த மருத்துவமாகும். இன்று'எயிட்ஸ்என்று எண்ணற்ற புதுநோய்கள். அன்று'ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்பட்டதால் பண்புடையர் உலகில் பண்புக்குறைவால் ஏற்படும் நோய்கள் அருகியே இருந்தன. நாம் பல நூறு ஆண்டுகளாக ஓமத்திரவத்தை எமது குழந்தைகட்கு யாருமே சொல்லாமல் கொடுத்து வருகிறோம். அது மந்தம், அஜீரணம் போன்றவற்றைக் குறைத்தது. குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் சுகமாக்கி விடுவது. இந்த ஒமத்திரவத்திற்கு இப்போது அமெரிக்க சுகாதாரப்பணியகம் சிபார்சு செய்துள்ளது என்று விளம்பரம் செய்விக்கும் நிலையிலுள்ள கோரப் புத்திக்காரர்கள் நாங்கள். அமெரிக்கா கண்டத்தை அமெரிக்க வெஸ்புக்கியி கண்டுபிடிக்கமுன் அதிசிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்த மேன்மை மிகு சைவநீதியின் சொந்தக்காரர்கள் என்பதை மறந்து விட்டதால் ஏற்பட்ட நிலை.
விண்வெளிப்பரப்பிலே செயற்கைக் கோள்களில் நின்று புவியின் நிலையை அவதானித்து எமக்கு எண்ணற்ற அறிவியல் கருத்துகளை வழங்குகிறார்களாம் மேற்கத்தையவர்கள். கந்தபுராணம் எங்கள் புராணச் சிறப்பிலக்கியம். அந்தகந்த புராணத்திலே சூரபத்மன் என்பவன் வருகிறான். முருகன் சூரபத்மனோடு போராடும் போது பஞ்சலோகத்தினாலான கோள்களில் நின்று முருகனை எதிர்த்ததாக ஒரு காட்சி. அதுதான் இன்றைய செயற்கைக் கோள்கள். இச்செயற்கைக் கோள்களும் பஞ்சலோகத்தால் ஆனவைதான். எமது கந்த புராணத்தையும், கந்தரலங்காரத்தையும் கந்தர் அனுபூதியையும் படிக்கத் தவறிய எமக்கு மேற்கத்தையவர் நாகரீகம் மேலாகத்தானே தெரியும். அதில் வியப்பில்லையே.
5) சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி D

Page 8
தமிழும் சைவமும் பிரிக்க முடியாதவை. ஆங்கிலமோகம் எம்மை ஆட்கொண்டு விட்டது. வீட்டிலே அன்னை தன் குழந்தையை ஆங்கிலமயப்படுத்த படாதபாடுபடுகிறாள். தன் சொந்தத்தமிழில் தூய கலாசாரத்தின் விழுமியத்தில் பண்டைப் பெருமை ஒன்று பாழ்பட்டு போய் கிடக்கிறதே என்பதை எவருமே சிந்திக்கிறார்கள் இல்லை. அதிமேதாவித்தனத்தினாலும், அடங்காதபுத்தியாலும் அற்பன்கள் எல்லாம் தாமே அறிவாளி என்று எண்ணிப் பிதற்றும் காலம். பேராசிரியர்கள் என்போரும் சொற்களுக்கும், தெரியாத பதங்களுக்காகவுமே தான் பிரச்சனைப்படுகிறார்கள். மாதவியின் கற்பிலும் கண்ணகியின் கற்பிலும் புனிதத்தைத் தேடி அதில் உயர்வைக் காட்டிவிட்டால் போதுமென்ற பெருமை அவர்கட்கு. எமது சொந்த நூலான திருக்குறள் எம்மிடம் இருந்து அழிந்து போகிறதே? யார் கவலைப்பட்டார்கள். ஒளவை என்ற மூதாட்டியின் அருந்தமிழ்ப் பாடல்கள் எம் சின்னக் குழந்தைகளின் செல்லநடையோடு நடைபயிலவில்லையே? யாருக்குக் கவலை?
ஆலயங்கள் 'ஆ' என்ற ஆத்மாவை லயிக்கச் செய்கின்ற இடங்கள் என்பதற்கு மாறாக ஆத்மாவை அலைக்கழிக்கும் இடங்களாக மாறிக் கொண்டு வருகின்றன. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதை யார் சிந்திக்கிறார்கள்? கோவில்களுக்குப் போய் கொடிய பிணியகற்றும் நிலை இன்று இல்லை. கோவில்கள் கொடிய பிணிதேடும் நிலையங்களாக உருவாகி வருகிறது என்பதைக் கண்டும் கேட்பாரற்ற நிலை நாதியற்ற நிலையல்லவா?
விண்வெளி ஆராய்வுகள் நடைபெறுகின்றன. ஆம்ஸ்ரொங்கைப் பற்றிப் பாட்டுப்பாடி ஓடிவிளையாடும் நிலையில் நாம் இருக்கின்றோம். எவ்வளவு கேவலம்? எமது இலக்கியங்களிலே புவியின் மேல் ஏழு உலகம், கீழ் ஏழு உலகம் என்று பதினான்கு உலகங்களையும் கட்டியாண்டவன் என்று பதினான்கு உலகம் பற்றிப் பேசப்படுகிறதே. இன்று 9 கோள்களை மட்டும்தான் கண்டுபிடித்து இருக்கின்றது நவீன விஞ்ஞானம். ஆனால் எமது பண்டைப் பெருமை மிகு மதமோ பதினான்கு கோள்களைப் பற்றிச் சொல்லியுள்ளது.
ஆயுதங்களை உற்பத்தி செய்தலிலும் விற்பனை செய்தலிலும் அமைதியான நாடுகளில் யுத்தங்களைத்தூண்டி அணுவாயுத வாய்க்குள் உலகத்தைக் கொண்டு வந்திருக்கும் அமெரிக்கா உலகப் பொலிஸ்காரன், எனவும் சண்டித்தனக்காரர் எனவும் குறிப்பிட்டு எழுதி கேட்கும் நாடுகளாக நாங்கள் சைவர்களாக இருந்தபோது உலகுக்கே போரின் வடிவங்களைக் கற்றுக் கொடுத்தவர்கள், போர்வியூகம், போர்முறை, போர்மீதி என்பன எல்லாம் எமக்கு சொந்தமானவை. நாகக்கணை என்பது பற்றி மகாபாரதத்திலே பேசப்படுகிறது. குறிப்பிட்ட இலக்கை தாக்கும் அன்றேல் மீண்டும் வந்து ஏவிய இடத்தில் நிலை கொள்ளும். மிகச்சக்தி வாய்ந்தது. கர்ணன் என்ற மாவீரனிடம் அது இருந்தது. இந்த நாகக்கணையைத்தான் அமெரிக்கா இப்போது ஆராய்கின்றது. அதன் பாதி ஆய்வுதான் வெற்றியடைந்துள்ளது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவின் இலக்குப்பிழைத்தால் தன் இலக்குப்பிழைத்ததை கணணி அறைக்கு அறிவிக்கும் நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும்
(இந்து ஒளி

விட்ட இடத்திற்கு திரும்பவரும் முறை ஆய்வு செய்யப்படுகிறது. எமது தாய்நாடுகளில் இருந்து திருடிச்சென்ற சூத்திரங்கள் (Formula) இன்று மேலைத்தேய நாகரிகத்தின் சொந்தங்களாக மாறிவருகின்றது. நாம் கையில் இருந்ததை விட்டுவிட்டு இப்போ எங்கிருந்தோ வரும் கண்டுபிடிப்புக்களை வாயாரப் புகழும் விற்பன்னர்களாகி விட்டோம்.
எமது மதங்கள் கட்டுப்பாட்டோடு இருந்தன. சைவன் என்றால் நேர்மையானவன், நீதியானவன், ஒழுக்கமானவன், வஞ்சகமற்றவன், துன்பமில்லாதவன். இந்நிலமை இல்லாது போயிற்று. எம்மிடம் உள்ள தூயகுணங்களும் இல்லாது போகப் போக எமது நிலை படிப்படியாக சீர்குலைந்து செல்கிறது. இவை சீர்திருத்தப்பட வேண்டும். எமக்கு என்றொரு சிறந்த கலாசாரப்பண்பாட்டு விழுமியங்களைத் தந்த சைவநிதியை மீண்டும் பொலிவுறச் செய்தல் இன்றைய இளம் தலைமுறைக்கு விடப்பட்டு இருக்கும். சவாலாகக் கொண்டு செயலாற்றுங்கள்.
இன்னும் வேண்கும் கி. குருபரன் (மருத்துவட்டம் கொழும்பு)
மாசுஅற்ற மனது வேண்டும் - நீ
மருந்துப் பொருளாய் அமைய வேண்டும் தூசுதுகளில் இருக்கும் இறைவ, நம
துன்பம் நீக்கும் வழியும் வேண்டும்.
கர்வமற்ற அறிவு வேண்டும்
கடவுள் உனைநான் அறிய வேண்டும் சர்வ உலகத் தலைவன் உனது
தயவு அருளாய்த் தருதல் வேண்டும்
ஏழ்மை இங்கு ஒழிய வேண்டும்
இகத்தில் இந்து எழுச்சி வேண்டும் தாழ்வு - ஏற்றம் நீங்கி இரண்டும்
சமனாய் ஆக்கும் முனிவன் வேண்டும்.
மதுரை ஆண்ட மழவ, ஈழ
மண்ணில் மீண்டும் வந்து அருளும் குதிரை வணிகம் செய்த சிவனே - இதய குறைகள் ஒழிய வருதல் நலமே!
உயிர்கள் யாவும் உனையே அடையும்
உண்மை துலக்க ஒளியாம் வரணும் - பாச
கயிறை அறுத்துன் காலின் அருகில் காலம் முழுதும் காத்து வரணும்.
★ Yr k
சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 9
ஏ. எஸ் சற்குணராஜா ஆசிரியர், சீ.சீ தமிழ் மகாவித்தியாலயம், புவக்பிட்டி,
து?
ஒரு தேசத்தின் ஓர் சமுதாயத்தின் அறிவியல் வளர்ச்சி, சமயப்பாங்கு,
ఏసీ வாழ்க்கைமுறை, பொருளியல் வளர்ச்சி, S Ky ஆட்சி முறை, சமுதாய அமைப்பு போன்றவற்றை பிரதிபலிப்பது
அந்நாட்டின் கட்டடக்கலை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
is a
இந்திய கட்டடங்களின் அடிப்படை
sferiuli-4arraio ஆன்மீகத்தின் வெளிப்பாடே. அந்த TËsë TË GJ5Tö6ëg5sit மெய்ப்பொருளின் re
எதிரொலியே இந்தியா எங்கெனும் எழுந்துள்ள கோயில்கள் ஆகும். மண்ணால், மரத்தால், செங்கற்களால், பாறைக்குடை வரையாய், கருங்கல்லால் அமைக்கப்பட்டாலும் அதில் புதைந்துள்ளது ஒரே தத்துவம்தான்.
மேலைத்தேயத்தவரின் கலைத்துவத்தையும், இந்தியத்தவரின் கலைத்துவத்தையும் ஒப்பிடும்போது இந்தியரின் உயர்ந்த தத்துவத்திற்கும், சமய உணர்விற்கும் முன்னால் மேலைத்தேயத்தவர் தலைகுனிய வேண்டியவராவர். இப்படிக் கூறுகின்றார். ஜப்பானிய கலையாராய்ச்சி அறிஞர் ஒகாகூரா.
இந்த வகையில் ஆன்மீகத்தின் வெளிப்பாடாய், கலைகளின் நிலைகளனாய் எழுந்த இந்துக் கோயில்கள் இந்துக்களின் பக்தி உணர்வையும் பறைசாற்றி நிற்கின்றன.
கோயில்களின் அமைப்பு இலக்கணத்தை எடுத்துக் கூறுவதற்கென்றே காசியபகம், மானசாரம், மயமதம் போன்ற நூல்கள் பிறந்துள்ளன ஆதிகாலத்தில் பலவகையான கோயில்களை அமைத்துள்ளார்கள் அப்பர்சுவாமிகள் தேவாரம் என்றும் இதற்கு ஆதாரமாகின்றது.
பெருக்காறு சடைக்கனிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் கரக்கோயில் கழபொழில்சூழ் ஞாழிற் கோயில் கருப்பறியில் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேந்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்சித் தீவினைகள் திரும் அன்றோ!
கல்லால் அமைக்கப்பட்ட வட்டமான சிகரத்தையுடையது கரக்கோயில். தற்போது காணப்படாத குங்கும மரத்தினால் கட்டப்பட்ட ஞாழற் கோயில். வட்டச்சிகரமும் கர்ணக்கூடும் கொண்டமைந்த முல்லைபடர்ந்த கொகுடிக் கோயில். பழைய கோயில்களை புதுபிக்கும்போது தற்காலிகமாக மூலவரை வைத்து
(இந்து ஒளி
 

வரையான அடுக் கடுக்கான சிகரத்தையுடைய மணிக்கோயில், யானையின் முதுகுபோன்ற கூரை அமைப்புடைய ஆலக்கோயில் ஆனக்கோயில் (உதாரணம் திருவானைக்கா), ஊரின் நடுவே அமைந்த சிவன் கோயிலை நடுநாயமாக கொண்டு அவ்வூரில் சுத்திலும் அமைந்துள்ள திரு முற்றம் எனப்படும் கோயில்களையும் சேர்த்து திருக்கோயில் இவை வட இந்தியாவில் விஜயம், சிறியோகம், சிறிவிலாசம், கந்தகாந்தம், சிறிகரம், ஹஸ்தியிருஷ்டம், கேசரம் எனப்படும். இவை தவிர குன்றின் மேலுள்ள கோயில்களிற்கு அடிவாரத்தில் அமைக்கப்பட்டது தாழக்கோயில், மரத்தடியில் நின்று மண்டியிட்டு வணங்கிட திருவடியார் சமைத்தது கரக்கோயில், நாற்புறமும் சிறுகோயில் நடுவினிலே மூலவரின் முதற்கோயில், அது பஞ்சாயதனக்கோயில், மலையைக் குடைந்து மன்னர்கள் அமைத்த குகைக் கோயில், செங்கல்லால் மாடிகட்டி பல்லவர்கள் அமைத்த பல மாடக்கோயில், கற்களை அடுக்கி கண்கவர கட்டி நிற்கும் கற்கோயில், மறைந்த மன்னர்கள் துறந்த ஞானிகள் புதைத்த இடத்தில் புதிதாய் அமைக்கும் கல்லறைக்கோயில்
இப்படிப்பலவகையால் எழுந்த கோயில்கள் கட்டட அமைப்பு தோற்றம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து நாகரம், வேசரம், திராவிடம் என மூன்று வகைப்படுத்தலாம். இந்தியாவின் நருமதை ஆற்றிற்கு வடக்கே நாகரவகை, தக்கணத்தில் வேசர வகை தெற்கே தமிழர், சாளுக்கியர், ஒய்சாளர் கோயில்கள் திராவிடவகை நாகரவகைக்கோயில்கள் அடிமுதல் முடிவரை சதுரத் தன்மையும் நேராக எழுந்து நிற்பது போன்ற தோற்றத்தையும் உடையன. கருவறைக்கு முன்னால் பெரிய கற்றுரண்களின் மேல் மண்டபம் அமைப்பதும், அம்மண்டபத்திலிருந்து முன்வாசலிற்கு செல்லும் பாதை அமைப்பதும் இவ்வகைக் கோயில்களின் சிறப்பம்சம். கருவறை, இடைநாளிகை, முன்மண்டபம், நுழைவாசல் போன்றவை காணப்படும். கி. பி. 7ம் நூற்றாண்டின் பின்பு நாகரவகைக் கோயில்களின் உயர்ந்த அடுக்கடுக்காக அமைக்கப்பட்டு உச்சியின் விமானம், சிகரம் அமைக்கப்பட்டு மாடி போன்ற தோற்றம் உடையதாக காணப்படுகின்றது. கோபுரமானது விமானத்தின் தன்மை கொண்டதாக கீழிருந்து மேலாக அடுக்கடுக்காக குவிந்துசெல்லும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
வேசர வகையில் கருவறை, முகமண்டபம், முன்மண்டபம் மட்டும் காணப்படும். வட்டவடிவமான
7) சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி)

Page 10
தோற்றத்தையும் ஒன்றிற்கு மேற்பட்ட கருவறைகளையும், நூதனமான சிகரத்தையும் கொண்டது.
திராவிடவகை கோயில்கள் வட இந்திய கோயில்களைவிட தோற்றத்தில் வேறுபட்டதே தவிர கருத்து, அமைப்பிலும் ஒத்தது. கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம், போன்றவற்றைக் கொண்டு மிக விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. கோபுரமானது பிரதான வாசலின் மேலாக விமான அமைப்பினின்று வேறுபட்டதாக அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறான கோயில்களின் பிரதான பகுதியான கர்ப்பக்கிரகம், கோபுரம், தூண்கள் போன்றவவையே மிகச்சிறந்த நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பக்கிரகமானது கீழிருந்து மேலாக உபபீடம், அதிஸ்ட்டானம்,பாதவர்க்கம்,பிரஸ்தளம், விமானம், தூபி அல்லது முடி ஆகிய பகுதிகளை உடையது.
உபபீடமானது நிலத்துடன் தொடுகையுறும் பகுதி இது கட்டடத்தின் உயரத்தை அதிகரிக்க உதவும் உபபீடத்தின் மேல் அமைந்திருப்பது அதிஸ்ட்டானம் இது வடிவத்தைப் பெறுத்து பாதபந்த அதிஷ்டானம், பத்மபந்த என இருவகைப்படும் உபானம், யகதி, குமுதம், பத்மம், சுந்தரி, வாஜனம், பட்டிகை ஆகிய உபபகுதியைக் கொண்டது. அதிஸ்ட்டானத்தின் மேலாக அமைந்தது கால்பகுதி எனப்படும் பாதவர்க்கம். இதில் அரைத்தூண்கள். கோட்டங்கள், மகரதோரணங்கள் உட்பட திக்குகளிற்கேற்ப தெய்வ உருவங்கள்,சோடனைகள் காணப்படும். பாதவர்க்கத்தின் மேலமைந்த அறையை மூடி நிற்பதுபோன்ற பகுதி பிரஸ்தளம். இதனை தோள், மஞ்சம், தபோதகம் எனவும் அழைப்பர் பிரஸ்தளத்தின் மேலுள்ள கோளவடிவமான அல்லது சதுரவடிவமான அல்லது எண்கோண வடிவமான பகுதி விமானம் ஆகும். இதில் நான்கு திசைகளிலும் நான்கு தெய்வ உருவங்கள், கர்ணகூடு போன்றவற்றைக் கொண்டிருக்கும். விமானம் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குகளாகவும் அமைக்கப்படும். பல்வேறு பருமன், அளவுகளை அடிப்படையாக வைத்துசக்தி மூல விமானம், இளங் கோயில் விமானம், தூங்கானை மாடவிமானம் போன்ற பிரிவுகள் உள்ளன. சிகரம் அல்லது முடி அல்லது குடமானது உலோகத்தாலானது.
கோபுரமானது பிரதான வாயிலின்மேல் அமைக்கப்படும் சிற்ப வேலைப்பாடு கொண்ட பகுதியாகும். ஆரம்பகாலங்களில் இது விமானத்தை விட உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்லவர் காலத்தின் பின்பே விமானத்தை விட உயரமாக அமைக்கப்பட்டாலும் விஜயநகர நாயக்க காலத்திலேயே சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. (கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே 180 அடிவரை உயரமான சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இதனால் இராயர் கோபுரங்கள் எனப்பட்டன. பின்பு மருவி இராஜகோபுரமாகி விட்டது)
(இந்து ஒளி
 

கோபுரத்தில் அங்கு வீற்றிருக்கும் இறைவனின் பல்வேறு சம்பவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கும்.
தூண்களின் அடிப்பகுதி, நடுப்பகுதி, மேற்பகுதி ஆகியவற்றில் தனித்தனியான சிறந்த செதுக்கல்கள் காணப்படும். இதில் பாரத்தை தாங்குவதற்காக அமைக்கப்பட்டமேற்பகுதியானது போதிகையாகும். ஆரம்பத்தில் சாதாரண கட்டையாக இருந்த போதிகை நாளடைவில் வெவ்வேறு வடிவங்களாக்கப்பட்டு ஒவ்வொரு அரச பரம்பரையினரிற்கும் தனித்தனியான அடையாளங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இவற்றில் பூப்போதிகையானது லவங்கம், தாமம், நாணுதல், மதலை, பூமுனை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. தூணின் நடுப்பகுதியில் முனை, இதழ், கும்பம், குடம், தாடி, காசம், நாகபந்தம், பட்டை, கால் ஆகிய அலங்காரச் செதுக்கல்கள் உள்ளன. வடஇந்தியத்தூணில் சாஜா, சிரம், தேகி, தலைப்பு, பரணி, ஸ்தம்பம், கேவாலம், கும்பம் ஆகிய பகுதிகள் உள்ளன. வட இந்திய போதிகைகளை விட தென் இந்திய போதிகைகள் கலையம்சம் மிக்கவை.
திராவிடர் தூண் போதிகை வளர்ச்சி
மதுரை நாயக்கர்
குறிப்பு :- மானாசார சில்ப சாஸ்த்திரத்தில் 12 நிலையுள்ள விமானத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அர்த்தசாஸ்த்திரத்தில் குமாரி எனப்படும் போர்த் தேவதைக்கு கட்டப்பட்ட கோயில் பல அடுக்குகள் 92. 6) L- விமானங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரும் பிராமசால சுத்தம் என்னும் உரையிலும் அம்பத்த என்னும் உரையிலும் கோயிலின் அமைப்பு பற்றியும் விமானத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
(தொடரும்)
s) சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி )

Page 11
திருவைந்தெ ஜூ சைவசித்தார்
புலவர் விசாலி 49N\N
ஒரும் வேதாந்தமென்ற உச்சியில் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்த சாரங் கொண்ட சைவ சித்தாந்தம்
என்பார் குமரகுருபர சுவாமிகள். பழைய வெண்பா வொன்று சைவ சித்தாங்கள் பற்றி
உந்திகளிறு உயர் போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்த அருட் பண்புவினா போற்றிக் கொடி பாசமிலா நெஞ்விடு உண்மைநெறி சங்கற்பம் முற்று
என்று கூறுகின்றது. சைவ சித்தாந்த நூல்களாவன திருவுந்தியார், திருக் களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், திருவருட்பயன், போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சவிடு தூது, உண்மை நெறிவிளக்கம் என்று கூறப்படுகின்ற பதினான்கு நூல்களாகும்.
சைவ சித்தாந்தமும் வேதங்களும் எம்பெருமானின் கண்களாக இருப்பினும் சைவ சித்தாந்தம் சைவசமயிகளின் உயிரென்று கூற வேண்டும். சைவ சித்தாந்தம் பதினான்கும் பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மைகளைக் கூறி, பதியாகிய இறைவனிடம் பசுவாகிய ஆன்மாவைச் சேரவிடாது தடுப்பது பாசமாகும். அப்பாசத்தை விட்டுவிலகி பசுபதியிடம் ஒன்றவைப்பது திருவைந்தெழுத்தாகும். அதனால் நாம் இத் திருவைந்தெழுத்துப் பற்றிச் சைவசித்தாந்தம் கூறுபவற்றைத் தெரிந்து கொள்வோம்.
சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் காலத்தால் முந்தியது திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் எனினும் சைவ சித்தாந்த பதினான்கு சாஸ்த்திரங்களில் முதல் நூலாக மெய்கண்ட தேவரருளிய சிவஞான போதம் என்று ஆன்றோர்கள் வகுத்துள்ளனர். சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், திருவருட்பயன் என்று பின்னே வரும் நூல்கள் வழிநூல்களாக ஆன்றோர் வகுத்துள்ளனர்.
ஆக சிவஞான போத நூலைப் படிக்கு முன் அல்லது அறியுமுன், மெய்கண்ட தேவரின் சிஷ்யர்கள் சிவஞான போதத்திற்கு வழி நூலாகவும் சார்பு நூல்களாகவும் இருக்கின்ற சாஸ்திர நூலைக் கற்றபின் சிவஞானபோதம் இலகுவில் விளங்கும் என்பது ஆன்றோர் துணிபாகும்.
திருவைந்தெழுத்தின் உண்மைகளைச் சைவ சித்தாந்தங்கள் யாது கூறுகின்றன என்பனவற்றைச் சித்தாந்த நூல்கள் மூலம் அறிவோம்.
உண்மையில் உலகில் தோன்றிய, தோன்றுகின்ற தோன்றும் பொருட்கள் என்றோ ஒருநாள் அழியும் என்றால், எழுத்துக்களும் அழிந்துதான் ஆக வேண்டும். ஆகையால்
(இந்து ஒளி (
 
 
 
 

ாட்சி மாதாஜி
திருவைந்தெழுத்தும் அழியுமா என்ற சந்தேகம் உண்டாகின்றதல்லவா? திருவைந்தெழுத்து எம்பெரு மானாகிய சிவபெருமானின் நடராசர் தத்துவத்தை விளக்கி நிற்பதாகும். இறைவன் எப்போதும் அழியாத நித்தியப் பொருளாகையால், அவ்வெழுத்துக்கள் மட்டும் அழியா. சிறப்பாக இறைவனைக் குறிக்கின்ற எழுத்துக்கள் அழிவதே இல்லை. பொருள்களைச் சுட்டி நிற்கின்ற சொல்லையுடைய எழுத்துக்கள் அழிந்து விடும்.
திருவுந்தியார்
அஞ்சே அஞ்சாக அறிவே அறிவாகத் துஞ்சாது உணர்ந்திருந்து உந்திபற துய்ய பொருளிதென்று உந்திபற”
எனத் திருவுந்தியாரில் பத்தாவது செய்யுளாகும். திருவுந்தியாரின் ஆசிரியர் உய்ய வந்த நாயனாராகும். ஆன்மாவானது இறைவனைப் பற்றுக் கோடாகப் பிடிக்க வேண்டின் திருவைந்தெழுத்தின் உண்மையை உணர்ந்து அதனையே அறிவாகக் கொண்டு சோம்பலின்றி ஓதி வரல் வேண்டும். அந்தத் திருவைந் தெழுத்தே சிவபெருமானின் நடராசா வடிவமாகும்.
'நமச்சிவாய வாழ்க" என்பது தூல பஞ்சாட் சரமாகும். “சிவாயநம எனப் பெற்றேன்” என்பது சூக்கும பஞ்சாட்சரமாகும். சிகரம் இறைவனையும், வகரம் சக்தியை அல்லது திருவருளையும், யகரம் ஆன்மாவையும், நகரம் திரோதான சக்தியையும் மகரம் மலங்களையும் குறிக்கும். உயிர்கள் மலவாதனை நீங்கித் திருவருளைப் பெறுவதற்கு இத்திருவைந்தெழுத்தே உதவுவதாகும். இதனைத் துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைதல் வேண்டும். எனத் திருஞான சம்பந்தரும் இதனது பயன் சிவகதியே எனத் திருநாவுக்கரசரும், இதனை இடையறாது ஒதிய பயிற்சியால், நற்றவா நான் உன்னை மறக்கினும் சொல்லு "நா நமச்சி வாயவே” என்று, சுந்தரரும் பாடியுள்ளார்கள்.
திருவைந்தெழுத்து இறைவனது திருநாமம் என்பதை அப்பர் சுவாமிகள் “திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் என்று பாடுவதனாலும், “எண்ணிலேன் உன் திருநாமத்தைந் தெழுத்து ஐந்தும் என் ஏழைமை யதனாலே" என்று பாடுவதன் மூலம் அறியக் கிடக்கின்றது. மேலும் சிதம்பரத்திலுள்ள தில்லைக் கூத்தன் திருவைந் தெழுத்தின் வடிவமாகவே உள்ளான். இதனை விளக்க
சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி)

Page 12
சேர்க்க துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு அங்கிநகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான்”
இவ்வாறு உண்மை விளக்கம் கூறுகின்றது.
ിക്കുന്നു.sഖി
இனி உமாபதி சிவாச்சாரியார் பாடிய கொடிக் கவியில் திருவைந்தெழுத்தைப் பற்றி
அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும் கூசாமற் காட்டக் கொடி’
அதாவது, சிவாயநம எனும் திருவைந்தெழுத்துக் களையும், ஒம் நமசிவாய எனும் ஆறு எழுத்துக்களையும், ஒம் ஆம் ஒளம் சிவாய நம எனும் எட்டெழுத்துக்களையும், ஒம் சிவாய எனும் நால் எழுத்துக்களையும் முறையாக எண்ணி அதன் பயனாகப் பிஞ்செழுத்தாம் வகரமாகிய திருவருட் சக்தியையும், மேலான பெருவெழுத்தாம் சிகரமாகிய சிவத்தையும் தன்னுடைய மனத்தகத்து வைப்பின் அதன் விளைவால் பேசும் எழுத்தாகிய வகரமாம் அருட் சக்தி தன்னுடன் பேசா எழுத்தாகிய சிகரமாகிய சிவத்தையும் மிக எளிதாக உயிரின் கண் பதிவிக்கும். அவ்வாறு பதிவிப்பதற்காக இக்கொடியைக் கட்டுவன் என்பதாம்.
திருவைந்தெழுத்துக்கள் மூன்று வகைப்படும். ஒன்று தூல பஞ்சாட்சரம். இது 'நமசிவாய' என்பது இரண்டாவது சூக்குமபஞ்சாட்சரம். இது'சிவாயநம என்பது மூன்றாவது அதி சூக்கும பஞ்சாட்சரம். சிவசிவ என்பது திருவைந் தெழுத்துக்களில் சிகரம் சிவத்தையும், வகரம் அருளையும், யகரம் உயிரையும், நகரம் மறைப்புச் சக்தியையும், மகரம் மலத்தையும் குறிப்பனவாகும். நகரத்தை முன்வைத்து ஒதின் இம்மைப் பயனும், சிகரத்தை ஒதின் வீட்டின்பமும் கிடைக்கும், ஒரு மருங்கு ஞான நடனமும் (சிவ) பிறிதொரு மருங்கு ஊன நடனமும், (நம) நிற்ப இடையில் உயிர் (ய) நிற்கின்றது. இவ்வுயிர் ஊன நடனத்தை விடுத்து ஞான நடனத்தில் திளைத்தல் வேண்டும் என்பதே உட்கருத்தாகும். இதனைத் திருவருட்பயன் முதலிய ஞான நூல்களில் காணலாம்.
திருவருட்பயன்
சைவ சித்தாந்த நூல்களில் திருவருட்பயனும் ஒன்றாகும். இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார். அவர் திருவைந் தெழுத்துப் பற்றிக் கூறுவதாவது:
திருவைந்தெழுத்தின் தன்மைகள், அதனைத் தியானம் செய்வதால் அடையும் பலாபலன்களையும் மிகவும் துல்லியமாகப் பத்துக் குறட்பாக்களில் விளக்கியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
(இந்து ஒளி

அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின் பொருள்நூல் தெரியப்புகின்"
அதாவது இறைவனால் அருளிச் செய்யப்பட்ட ஆகம நூல்களும், வேதங்களும் மற்றும் உள்ள ஞானசாத்திரங்களும் ஆராய்ந்து பார்க்குமிடத்துத் திருவைந்தெழுத்தின் உண்மை நன்கு விளங்கும். வேதாகமங்கள், சாத்திர நூல்கள் அனைத்தும் திருவைந்தெழுத்தின் உண்மையையே விளக்கி உறுதிப்படுத்திக் கூறுவனவாகும்.
அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் - அஞ்செழுத்தே ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம் மோனந்த மாம்முத்தியும்" வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே”
என்பவை மூலம் அறியக்கிடக்கின்றது. இறைசக்திபாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத்துள்."
ஓங்காரத்துள் சிவம், சக்தி, மலம், அழகு மிக்க மறைப்பாற்றல், உயிர் ஆகிய இவை பொருந்தி நிற்கும். அதாவது 'சிவாயநம என்னும் ஐந்தெழுத்தினுள் சிகரம் இறைவனையும், வகரம் சக்தியையும், யகரம் உயிரையும், நகரம் திரோதன சக்தி (மறைப்பாற்றல்) யையும், மகரம் மலத்தையும் குறிக்கும்.
ஓங்காரம் என்பதே பிரணவமாகும். அது அகர, உகர, மகரம் ஆகிய மூன்றும் கூடிய தென்பர். திருவைந்தெழுத்தில் (சிவாயநம) என்பதில் நகரம் வகரத்துள்ளும், மகரம் யகரத்துள்ளும் அடங்கச் “சிவாய" என நிற்கும். இம் மூன்றினுள் சிவத்தைக் குறிக்கும் சிகரமும், அருளைக் குறிக்கும் வகரமும் அகரத்துள் அடங்கும். உயிரைக் குறிக்கும் யகரம் உகரத்துள் அடங்கும். மலத்தைக் குறிக்கும் எழுத்தாக மகரம் நிற்கும். இங்ங்ணம் ஓங்காரத்துள் (அ + உ + ம்) திருவைந்தெழுத்து அடங்கி நிற்கின்றது. மறைப்பாற்றல் (திரோதன சக்தி) உயிர்க்கு மல பரிபாகம் ஏற்படும் போது அதனை இறைவனது திருவடியில் செலுத்திக் அதற்கு முற்றுணர்வைக் கொடுக்க வல்லதாகும் ஆதலின் இதனை "எழில் மாயை' என்றார்.
"ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம் ஞான நடம்தான்நடுவே நாடு"
அதாவது "சிவாய நம” என்னும் திருவைந்தெழுத்தில் யகரமே (உயிர்) இடையில் நிற்பதாகும். அதற்கு ஒரு மருங்கில் சிகரமும், வகரமும் உள.பிறிதொருமருங்கில் நகரமும், மகரமும் உள. உயிரானதுமறைப்பாற்றலால் மறைக்கப்பட்டுமலத்துடன் இயைந்து நிற்கும் நிலையை ஊனநடனம் என்றும், திருவருளால் சிவத்துடன் இயைந்து நிற்கும் நிலையை ஞான நடனம் என்றும் கூறுவர்.
பிறப்பில் உழன்று நிற்கும் நிலை ஊன நடனமாகும். உயிரானது சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் தன்மையது. அதனால் அந்த உயிர் உலக போகம் என்னும் ஊன நடனத்தினின்றும் நீங்கி ஞான நடனத்துடன் வாழ வேண்டும் என்பதே இறைவனது பெருங்கருணையாகும்.
0
சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 13
"விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம் பெரியவினைதீரப் பெறும்'
அதாவது மகரமும், நகரமும், யகரமாகிய உயிரைப் பொருந்த அது உலகியற் பொருள்களைப் பற்றிக் பொண்டு பிரிய இயலாதவாறு தடை செய்கின்றன. உயிர் அம்மலப்பிணி நீங்கிச் சிகரமாகிய சிவத்தைப் பெறும் என்பதாம்.
ஆன்மாவிடம் காணப்படும் ம, ந யவ்வை (ஆன்மாவை) மேவி அதாவது கூடுதலாகி விரிய அவை அவற்றினின்றும் ஆன்மாவை தங்களில் நின்று மீள விடமாட்டாது. அந்தத் தீவினை நீங்க ஆன்மா கூடுதல் வேண்டும்.
மாலார்திரோத மலமுதலாய் மாறுமோ மேலாக மீளாவிடின்”
அதாவது அந்நகர மகரங்கள் இரண்டினையும் கீழாக்கி சிகர வகரங்களை மேலாக்கிச் சிவாய நம என்று ஒதினன்றி மயக்கத்தைப் பொருந்திய திரோதானமும் மலமுமாகிய நகரம் மகரம் ஆகிய இரண்டினையும் முதற் கண்ணே வைத்து நமசிவாய வென்று ஒதின் மும்மலமும் நீங்குமோ? நீங்காது. இதனால் பேரின்ப வீடு எய்துவார்க்குச் சிகரத்தை முன்வைத்து ஒதும் திருவைந்தெழுத்தே உரியது என்பது புலப்படுகின்றது.
ஆராதி ஆதாரம் அந்தோ அது மீண்டு பாராது மேலோதும் பற்று"
அதாவது சிகரத்தை முன்வைத்து ஒதும் திருவைந்தெழுத்தினையே தமக்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும். அதுவே தியானத்திற்கு உரியதுமாகும். அதுவே ஏனைய உலகியற் பொருள்களிற் செல்லும் பற்றுள்ளத்தைச் செல்லாது வல்லதாகும். இவ்வருமையெல்லாம் அமைந்த சிகர முதலான திருவைந்தெழுத்தினை ஒதாது, நகரத்தை முன்னே வைத்து ஒதும் பற்றுள்ளம் எதற்கு? அந்தோ! இதுவே ஒதத்தக்கதாகும் என்பதாம்.
அந்தோ! என்பது சிகர முதலாக வைத்து ஒதும் திருவைந்தெழுத்தின் அருமை இதுவாகவும், அதனை ஒதாது இருப்பது வருந்தத் தக்கது என்னும் இரக்கம் தோன்ற நின்றது.
'சிவமுதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம் இதுநீஒதும் படி?
அதாவது சிகரத்தை முதலாக வைத்து ஒதும் திருவைந்தெழுத்தை ஒதின் அதுவே பிறவிப் பிணியை நீக்க வல்ல மருந்தாகும். முத்தியை விரும்புவோர் ஒதும் முறைமையும் இதுவாகும்.
படி என்பது முறைமை
வாசியருளியவ்வை வாழ்விக்கும் மற்றதுவே ஆசில் உருவமாம் அங்கு"
(இந்து ஒளி

அதாவது வகரமாகிய திருவருள் யகரமாகிய உயிரைச் சிகரமாகிய சிவத்தை அடையப் பண்ணி, அதனைப் பேரின்பத்தில் திளைக்கச் செய்யும். அத்திருவருள் சிவத்தின் உருவமாகும் என்பதாகும்.
"மாய நட்டோரையும் மாயாமலமெனும் மாதரையும் விய விட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம் தாயுடன் சென்று பின்தாதையைக் கூடிப்பின் தாயை மறந்து ஏயுமதே நிட்டை என்றார் எழிற் கச்சி ஏகம்பனே’
என்பது பட்டினத்தார் பாடல். ஆசில்நவா நாப்பண் அடையாதருளினால் வாசியிடை நிற்கை வழக்கு"
அதாவது குற்றம் தீர்ந்த நகரத்திற்கும், திருவருளாகிய வகரத்திற்கும் நடுவில் நில்லாது திருவருளினால் திருவருட்கும் சிவத்திற்கும் இடையில் நிற்பதே முறைமையாகும். இந்த உண்மைகளைக் குருவின் மூலம் அறிதல் வேண்டும்.
சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம், சிவஞானபோதம், சிவஞான சித்தியாரின் சார்பு நூல் என்று கூறுவர். சிவப்பிரகாசத்தை இயற்றியவர் அருணந்தி சிவாச்சாரியார். இவரும் முன்னைய நூல்களிற் கண்டவாறு திருவைந்தெழுத்தின் பெருமை பற்றிக் கூறியுள்ளார். எனினும் முன்கூறப்பட்ட நூல்கள் யாவும் இந்நூலின் வழி நூலாகும். எனவே முதன் நூலாகிய சிவஞானபோதம், வழிநூலாகிய சிவஞான சித்தியார் சார்பு நூலாகிய சிவப்பிரகாச நூல்களில் கூறப்பட்ட திருவைந்தெழுத்தினைச் சார்ந்தே அந்நூல்களும் கூறப்பட்டனவாகும்.
திருவைந்தெழுந்தினைப் பற்றிச் சிவப்பிரகாசம் கூறுவதாவது
திருவைந்தெழுத்தில் ஆன்மாத்திரேதம் ஆக அருள்சூழ் தரநடுநின்றது ஒன்றாம் தன்மையின்யின் தொன்மையாகி வரும்மந மிகுதியாலே வாசியில் ஆசையின்றிக் கருவழிச் சுழலும் மாறும் காதலர்க்கு ஒதலாமே”
அதாவது திரு எழுத்தில் ஐந்தில் உயிர், மறைப் பாற்றல் ஆணவம் ஆகிய இரண்டற்கு முன்னும், அருள், சிவம் ஆகிய இரண்டற்கும் பின்னுமாகச் சூழ நடுவில் உள்ளது. அவ்வாறு இடைநிற்கும் உயிர்தான் சார்ந்த வகையால் ஒன்றாயிருக்கும் தன்மை பெறுகின்றது. பண்டு தொட்டு வரும் ஆணவம் மறைப்பு ஆகிய இவற்றின் மேலிட் டால் உலகியற் பொருள்களில் அழுந்தி அருளிலும் சிவத்திலும் விருப்பம் இன்றிக், கருவழிப்பட்டுப்பிறந்து இறந்து வருந்தும் கருவழிப்பட விருப்பமின்றி இறையருள் வழிப்பட விரும்புவோர்க்குச் சூக்குமஐந்தெழுத்தாகிய திருவைந்தெழுத்தை அருளலாம்.
“சிவாய நம” என்பது சூக்கும பஞ்சாட்சரம் எனப்படும். இதனுள் சிகரம் சிவப்பரம்பொருளையும் வகரம் அருளையும், பகரம் உயிரையும், நகரம் மறைப்பாற்றலையும், மகரம் ஆணவ மலத்தையும்
D சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 14
குறித்து நிற்கும். இவற்றால் இடையில் நிற்கும் உயிர் சிவத்தொடு பொருந்திய வழி அருள் வயப்படும். மலத்தொடு பொருந்தியவழிக் கருவயப்பட்டு நிற்கும். அதாவது மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுக்கும் என்பதாகும்.
சார்ந்ததன் என்பதை பலநிறம் கொண்ட பொருட்களைப் படிகக் கிண்ணத்தில் இடும்போது வெண்மையான படிகம் தன்னைச் சார்ந்த பொருளின் நிறத்தைக் காட்டுவதுபோல, ஆன்மாவானது சிவத்தையும் சக்தியையும் (சி.வ) என்பதைச் சாரும்போது சிவத்தன்மையும், மறைப்பாற்றல் ஆணவமலத்துடன் சேரும் போது பிறவிக் கடலிற் தள்ளப்படும் தன்மையையும் பெறும் என்பதாகும்.
ஆசறுதிரோதம் மேவாது அகலுமா சிவ'முன்னாக ஒசைகொள் அதனின்நம்மேல் ஒழித்தஅருள் ஓங்கும்மீள வாசியை அருளும் மாய மற்றது பற்றா உற்று அங்கு ஈசனில் ஏகமாகும் இது திருவைந்தெழுத்தினிடே"
அதாவது, ஆணவமும் அதனொடு கூடிநிற்கும் மறைப்பாற்றலும் பொருந்தாது நீங்குமாறு சிகர வகரங்களே முன்னாக வைத்து ஒதப்பெறும் திருவைந்தெழுத்தை எண்ணு வாயாக (சிந்திப்பாயாக) அவ்வாறு எண்ணினால் நகரமாகிய மறைப்பாற்றல், அதன் பின்னுள்ள மகரமாகிய ஆணவ மலத்தை ஒழித்து அருளாற்றலாய் விளங்கும். பின் வகாரமாகிய அவ்வருளாற்றல் சிகரமாகிய சிவபரம்பொருளை அடைவிக்கும். அருளுணர்வு மிகுந்த உயிர் அவ்வருளையே பற்றுக் கோடாகக் கொண்டு அதனுள் அடங்கி அதுவேயாய் சிவபரம் பொருளில் ஒன்றுபடும். இதுவே திருவைந்தெழுத்தின் பயனாகும்.
சிவஞானசித்தியார் ペ இதனை அருளியவர் அருணந்தி சிவாச்சாரியார். இவர் சிவஞான போத ஆசிரியர் மெய்கண்ட தேவரின் முதல் மாணவர். சிவஞான போதம் என்னும் நூலுக்கு வழி நூலாக சிவஞான சித்தியார் அருணந்தி சிவாச்சாரியால் அருளப்பட்டதாகும். இவர் திருவைந்தெழுத்தின் உண்மையும் பெருமையும் விளக்கு முகத்தான். பாசஞானம், பசு ஞானம் பதி ஞானம் இலக்கணங் களையும் சிவோகம் பாவனை களையும் ஞானநீட்டை அடையும் உபாயங்களையும் அருளினார். அவைகளை நாம் சிவஞான சித்தியாரில் பார்ப்போம்.
அருணந்தி சிவாச்சாரியார் திருவைந்தெழுத்தின் பெருமைகளை மிகமிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் விரிவாகவும் சாதனைகள் மூலம் விளக்கியுள்ளார். அப்படியே நாம் அதனை இங்கு எழுதிவிட முடியாது. அவ்வளவு விரிவான செய்திகளை அடக்கியுள்ளது. மெய்கண்ட சாஸ்திரங்களில் சிவஞானபோதமும் சிவஞானசித்தியாரும் மிகமிக ஆழமாக திருவைந்தெழுத்தை விவரித்துள்ளது.இதனை ஞானகுருமூலமே நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். அதனால் நாம் ஓரளவு மேலோட்டமாக அவதானிப்போம்.
(இந்து ஒளி

அருணந்தி சிவாச்சாரியார் சிவஞான சித்தியாரில் திருவைந்தெழுத்தின் பெருமைகளையும் அற்புதங்களையும் அருளியபின் திருவைந்தெழுத்தின் சாதனைகளை 299 - 302 அதிகரணங்கள் மூலம் விளக்கியுள்ளார்.
299ம் பாடல் சிவஞானசித்தியார் 9ம் சூத்திரம் 3ம் அதிகரணத்தில் திருவைந்தெழுத்துப் பற்றி மிகவும் விரிவாக
அஞ்செழுத்தா லான்மாவையரனுடைய பரிசு
மரனுருவம் அஞ்செழுத்தாலமைந்தமையுமறிந்திட் டஞ்செழுத்தாலங்ககர நியாசம் பண்ணி
ஆன்மாவினஞ்செழுத்தாலிதயத் தர்ச்சித் தஞ்செழுத்தாற் குண்டலியினனலை யோம்பி
அனைவரிய கோதண்ட மடைத்தருளின் வழிநின் நஞ்செழுத்தை விதிப்படியுச்சரிக்க மதியருக்க
னனையரவம் போற்றோன்று மான்மாவிலரனே
அருளியுள்ளார் இப்பகுதிகளின் விரிவாக்கங்களை சிவஞான சித்தியாரிற் பார்க்க.
சிவஞானபோதம்
சைவசித்தாந்த நூல்களின் முதல் நூலாகும். இதனை
அருளியவர் மெய்கண்ட தேவராகும். இவர் திருவைந்தெழுத்தைச்
சாதனைகளுடனே விளங்கவும் விரிவாகவும், அருள்பொங்கிவடிய
அருளியுள்ளார். இதனை
"ஊனக்கண் பாச முனராப்பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
யுராத்துனைத் தேர்த்தெனப் பாச மொருவத்
தண்ணிழலாம் பதிவிதி யென்னும் ஐஞ்தெழுத்தே"
என அருளியுள்ளார். இதற்கு மாதவச் சிவஞான முனிவர் அவர்கள் சிவஞான பாடியம் அருளியுள்ளார் (அவற்றைச் சிவஞான போதத்தில் பார்க்க) இதனை மூன்று அறிகரணங்களால் விளக்கியுள்ளார். இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பானது.
பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் அறியப்படாத இறைவனை, அவ்விறைவனது ஞானக் கண்ணாலே தன்னறிவின் கண் ஆராய்ந்தறிதல் வேண்டும். அப்பதி ஞானத்தைப் பெறுமாறு யாங்ங்னமெனின் நில முதல் நாதமீறாகிய பாசக் கூட்டம் நின்றுழி நில்லாது பரந்த திரித கண் அதி வேகமுடைய பேய்த்தேரின் இயல்பிற்றாய்க் கழிறென்றறிந்து நீங்கவே அப்பதி ஞானம் பிறவித் துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். அங்ங்ணம் விளங்கிய ஞானத்தால் நேயத்தைக் கண்ட காட்சி கலியாமைப் பொருட்டு அப்பொருள் பயக்கும் திருவைந் தெழுத்து அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும் என்பதாகும்.
உலகில் காணப்படும் பொருள் யாவும் பொய். அதனால் அவைகளை நினைந்து நினைந்து ஏங்கி ஏங்கி மனம் புண்ணாகாது இறைவனுக்கே அடிமையாகி திருவைந்தெழுத்தை முக்கரண சுத்தியுடன் தியானம் ஜெபம் ஓமம் யாகம் ஞான பூசை
2 சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 15
முதலியவற்றைச் செய்தலே முடிந்த முடிபாகும். அதனை எவ்வாறெல்லாம் திருவைந்தெழுத்தின் உச்சரித்துச் சிவ கைங்கரியங்களை யாற்ற வேண்டும் என்பதைப் பாடியம் எழுதிய மாதவச் சிவஞான யோகிகள் மூன்றாம் அதிகரணத்தில்
அஞ்செழுத்தாலுள்ள மரனுடைமை கண்டரனை யஞ்செழுத்தாலர்ச்சித்தியத்தி - லஞ்செழுத்தாற் குண்டலியற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கி லண்டனாஞ் சேடனா மங்கு
என அருளியுள்ளார்.
இச்செய்யுளின் பிண்டப் பொருளாவது, ஆன்மா சிவனுக்கு அடிமையாதலை ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறைமையில் வைத்துக் கண்டு தன்னுடம்பின் அகத்தே இதய நாபி புருவம் நடு என்னும் மூன்றனையும் முறையே பூசைத்தானம் ஒமத்தானம் தியானத்தானமாகக் கருதிக் கொண்டு புறம்பே ஞானபூசை செய்யும் முறைப்படி இதயகமலத்திற் சிவனே அவ்வைந்தெழுத்தி லமைந்த திருமேனியில் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்னும் அட்ட புட்பங் கொண்டு அவ்வைந்தெழுத்தாற் பூசை செய்து குண்டலித் தானமாகிய நாபியில் ஞானவனலை எழுப்பி அதன் கண்
பேராசிரியர் என் இசைத்துறை, அண்ணாமலை தமிழ்
திமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களுக்குப் பின், பல்லவர்கள் தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் காலத்தேதான் நாயன்மார்கள் தோன்றிப் பக்தி இலக்கியமாகிய தேவாரப் பாடல்களை அருளிச்செய்தனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இலக்கிய காலம் ஒரு குறிப்பிடத்தக்க காலப் பகுதியாகும். பல்லவர் காலத்தேதான் சிற்பம், இசை, ஓவியம், நடனம் போன்ற கலைகள் சிறப்புற்று விளங்கின.
பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்க மன்னனாக விளங்கியவன் மூன்றாம் நந்தி வர்மனாவான். இவன் மிகுந்த சைவப்பற்றுக்கொண்டவன். இவன் தமிழின் மீதும் மிகுந்த காதல் கொண்டு தமிழையும் சைவத்தையும் தனது இரு கண்ணெனப் போற்றி வளர்த்தான். இவன் காலத்தில் இவர்கள் கொடியாகக் காளை உருவம் பொறித்த கொடி விளங்கிற்று. இதுவே நந்திக் கொடியாகும். இம் மன்னனின் சிறப்புக்களை நந்திக் கலம்பகம் என்னும் நூல் சிறப்பாக விளக்குகின்றது. நந்தி சைவர்களின் சின்னமாகும். நந்திக் கொடி ஒவ்வொரு ஆலயத்திலும்
SeZLLLLLLLYSeYLLLLLZeeOZLLLLYZeLLLLLLeeeLLLLLLLLZ (இந்து ஒளி C
 
 
 

திருவைந்தெழுத்தாலே விந்து தானத் தமிழ்தமாகிய நெய்யை சுழுமுனைநாடி இடைநாடி ஆகிய சுருக்குச் சுருவங்களால் ஒமஞ் செய்து, விந்துதானமாகிய புருவ நடுவில் சிகார வகார யகாரங்கள் முறையே தற்பதப் பொருளும் துவம்பதப் பொருளும் அசிபதப் பொருளுமாம் முறைமையின் அவ்வஞ்செழுத்தாற் சிவோகம் பாவனை செய்யின் அப்பொழுதே அங்ங்ணம் விளங்கித் தோன்றும் முதல்வனுக்குச் சேடசேடிய பாவத்தால் ஆகற் பாலதாகிய அடிமையாம் என்க.
தொடர்ந்து மாதவ சிவஞான யோகிகள்,
இந்துவிற் பானுவில் ராகுவைக் கண்டாங்குச் சிந்தையிற் காணிற் சிவன்கண்ணா - முந்தலே காட்டாக்கிற் தோன்றிக் களல்சேரிரும்பென்ன வாட்டானா மோதஞ் செழுத்து
என்றும் மண்முத னாளமலர் வித்தை கலாரூப மெண்ணிய வீசர் சதாசிவமு -நன்னிற் கலையுருவாநாதமாஞ் சத்தியதன் கண்ணா நிலையதிலா மச்சிவன்றாள் நேர்”
என்றும் அருளியுள்ளார்.
. கே. சிவபாலன் ப் பல்கலைக் கழகம், சிதம்பரம்
நாடு.
இல்லங்களிலும் இருப்பது சிறப்பாகும். நந்திக் கொடி இருக்கும் இடத்தில் சிவபெருமானே எழுந்தருளி அருள் புரிவார். நந்தியின் சிறப்பைப்பற்றிபத்தாம் திருமுறையாகிய திருமூலர் இயற்றிய திரு மந்திரத்தில் ஒன்பது பாடல்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
இவற்றில் ஒரு பாடல் வருமாறு,
நந்தியருளாலே மூலனை நாடிப் பின் நந்தியருளாலே சதாசிவன் ஆயினேன் གང་ நந்தியருளால் மெய் ஞானத்தை நண்ணினேன் நந்தியருளாலே நானிருந்தேனே
- திருமூலர் -
இவ்வகைச் சிறப்புமிக்க நந்திக் கொடியை, பாரெங்கணும் பறக்க விடும் பணியில் தன்னை ஈடுபடுத்தி சிவம் பெருக்கும் செம்மலாக விளங்கும் திரு தனபாலா அவர்களின் சிவப் பணி சிறக்க, எல்லாம் வல்ல ஆடல் வல்லானை இறைஞ்சுவோமாக
SeLLLLLLeeeLLLLLLLLYeSOLLLLeeeLLLLLLLLZYeLLLLLLLS
3. சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி

Page 16
త్ర aGYa ളo 22S V
ren אSפי দ্বাগতম مور G : Ο ές
=" হ১ে৯ Iss
அனுராதபுர G00ി) ബ7
கதிரேச
மனுநீதிதவறாது எல்லாளன் அ மாநிலத்தின் துயர்போக்க வேல் புனித நகர் திட்டத்தால் புலம் ெ புகழ் மணக்கும் எதிர்காலம் கா
S
கதிரேசன் கோயில் கொண்ட அ கவலைகளைக் களைந்திடவே இனியெமக்குத் துன்பமில்லை இன்பத்தமிழ் முழங்கிவிட வழி
S
வடமத்திய மாகாணத் தலைநக வழித்துணையாயிருந் தெமக்கு நம்பியவன் திருவடியை நாடித் நல்வாழ்வு வாழ வழி செய்திடுவ
I
N
R
துன்பங்கள் நாம் சுமக்க கதிரே தூயதமிழ் மீட்சிபெற அன்னவ குரபத்மன் மமதையினைத் துல் சூழவரும் கொடுவினைகள் த(
N
I
மூத்த சிவன் அரசாண்ட பெருை முத்தமிழும் வாழ்ந்த தென்ற வ ஆதிசிவன் இளமகனார் ஆற்றg ஆதரிப்பான் காத்திடுவான் உறு
R
颐
ei.e. ei et
(இந்து ஒளி C
S
 
 

避
W
பூண்ட மண்ணில் ) கொண்டான் கதிரேசன் பயர்ந்த கந்தனவன் ட்டிடுவான் நம்பிடுவோம் NY
அனுராதபுர நகரில்
வேல் கொண்டான் திருமுருகன் வந்துவிட்டான் தூயனவன் செய்வான் நம்பிடுவோம்
கரில் அமர்ந்த குகன்
நல்லவழிகாட்டிடுவான் தொழுதுநின்றால் வான்நம்பிடுவோம்
சனும் சுமந்தான் னே வழியமைப்பான்
டைத்தெறிந்த எம்பெருமான்
டுத்தருள்வான் நம்பிடுவோம்
NOM
மை கொண்ட பூமியிலே S
ரலாற்றை நிலைக்கச் செய்வான் னுடை எம்பெருமான் பதியுடன் நம்பிடுவோம்.
S.
த.மனோகரன் "d costus'
கொழும்புத்துறை
BESE *PE* +[Relas
4) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 17
வடமொழி இலக்கியமான வேதங்கள், ஆகமங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது வைதீக மதங்களாகும். இதில் பல உபபிரிவுகள்ாகிய பாசுபதம், வாமம், பைரவம், மகாவர்த்தம், காளாமுகம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. சிவனையே பரம்பொருளாகக் கொள்ளப்படும் சைவ சமயத்தில் தோன்றிய உப பிரிவுகளாகவே வீரசைவம் கொள்ளப்படுகின்றது. சில அறிஞர்கள் பாசுபதம் முதலிய ஐந்து மதப்பிரிவின் கூட்டிணைப்பே வீரசைவம் என்று குறிப்பிடுவர்.
சிவனது திருவிளையாடல்களுள் “வீரம் செறிந்த” எட்டு திருவிளையாடல் இடம் பெற்ற தலங்களை அட்ட வீரட்டானத் தலங்கள்" என்றுஅழைப்பர். இதன் மூலம்"வீர" என்ற அடைமொழி சேர்க்கப்பட்டுவீரசைவ்ம் என்றும் வி-விகற்பம்,ர-ரகிதம், என்று பொருள் கொண்டு மாறுபாடுகளை நீக்கிய சமயம் என்றும், விஞானம், ர - ரமித்தல் (விளைத்தல்) சிவஜிவர்களின் இணைப்பைத் தெரிவிக்கும் ஞானத்தில் தன்னை மகிழ்வித்துக் கொண்டவன் என்றும், சிவபக்தியில் வீரர்கள் வீரசைவர் என்றும் மேலும், சாதிக் கொடுமைகள், மூடப்பழக்க வழக்கங்கள் யாவற்றையும் எதிர்த்து அழிக்க முற்படுபவர்களையும் வீர சைவர் என்றும் பலவாறாக கூறப்படுகின்றது.
வீர சைவமானது கர்நாடகத்திலும்,தெலுங்கு நாட்டிலுமே முதலில் தோன்றி வளர்ந்தது. இம் மதப்பிரிவை கல்யாணியில் ஆட்சி புரிந்த அரசனான பிஜ்ஜாலனுடைய (கி. பி. 156) அரச சபையில் முதல் அமைச்சராயிருந்த பசவரே"வீர சைவத்தை நிறுவியவர் என்று கொள்வது மரபு. ஆனாலும், வீரசைவமானது மிகப்பழமையான சமயம் என்றும், அது சிவனது ஐந்து முகங்களில் இருந்து தோன்றிய ஐந்து முனிவர்களாகிய எகோ ராமர், பண்டிதாராதியர், ரேவணர், மருனர், விஸ்வாராதியர் முதலிய பஞ்சாசாரியர்களால் வீர சைவம் நிறுவப்பட்டதென்று வீரசைவ மரபுக்கதைகள் கூறுகின்றன. ஆகவே, பசவர் வீரசைவத்தை மீள நிறுவியவர் என்று கொள்வது பொருத்தமாகும்.
வீரசைவத்தை"இலிங்காயுதம்'என்றும் அச்சமயத்தைப் பின்பற்றுவோரை "இலிங்காயுதர்” என்றும் அழைக்கும் மரபு உண்டு. வீர்சைவ ஆடவர், மகளிர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லிங்கத்தை சிறிய வெள்ளிப் பேழையிலோ அல்லது மரப்பேழையிலோ பாதுகாப்பாக வைத்து தமது கழுத்தில் தொங்க விடுவது பொதுவழக்கமாகும். அத்தோடு, கோயிலில் எழுந்தருளச் செய்துள்ள இலிங்கங்களை வீரசைவர் வழிபடக் கூடாது என்றும், அந்த இலிங்கங்களுக்கு ஏதாவது ஊறு நிகழுமாயின் வீரசைவன் தனக்கோ தனது உயிருக்கோ தீங்கு வருமெனக் கருதாமல் வன்முறையை உபயோகித்தேனும் அந்த சம்பவத்தை தவிர்த்துக்
(இந்து ஒளி
 

7 баб 45йарағаоб
B. A., Dip in Edu லோசகர் பட்டிருப்பு வலயம்
கொள்ள வேண்டும் என்று வீரசைவ நூலான சித்தாந்த சிகாமணி கூறுகின்றது. ஆதலால், லிங்கத்தையும், லிங்க வழிபாட்டையும் மிக இறுக்கமாகப் பின்பற்றுவதால் லிங்காயுதர் என்று அழைப்பது பொருத்தமானது.
கி.பி 12ஆம் நூற்றாண்டில் சமணமும், வைஷ்ணவமும் உயர்வடைந்திருந்தது. சைவசமயமானது வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அக்காலத்தில் கன்னட மாநிலத்தில் தோன்றிய பசவர் வர்ணாச்சிரம முறைகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்காக குறைந்த காலத்தில் புரட்சிகரமாகத் தாக்கினார். அவரது வீரம், நிறைந்த சைவக் கருத்துக்கள் இக் காலத்துக்கு ஏற்றது என்று அந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர். முதலமைச்சரான வசபரது கொள்க்ைகள் நாளடைவில் பிரபலமானது. அவரது வீரம் நிறைந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. வர்ணாச்சிரம முறைகள் வீணாக உருவாக்கிய கட்டுக்கோப்புக்கள் தகர்த்து எறியப்பட்டன. எல்லோரும் சமத்துவம் உடையவர்கள் தான் என்ற புதிய சித்தாந்தம் உதயமானது. வசபர் முதல் அமைச்சராக இருந்த காரணத்தால் அவரது புதிய பக்தியின்பால் இறை இன்பம் காணமக்கள் பல்கிப் பெருகினர். இதனால் கன்னட மாநிலத்தில் பெருமளவு வேரூன்றி படிப்படியாக அங்கிருந்து தமிழகம், மத்திய பிரதேசம், வடமாநிலங்களிலும் விரிவடைந்து சென்றது. கூடவே ஈழத்திலும் காலப்போக்கில் செல்வாக்குப்பெற்றுவளர்ச்சியடைந்தது. இவ்வாறுவீரசைவம் ஒரு மதமாக மக்களால் பின்பற்றப்பட்டது.
“வீரம்” என்னும் ஆகமத்தில் கூறப்பட்டுள்ள சைவ நெறியே வீரசைவம் என்பர். ஆகமநூலை வீராகமம் எனவும் அழைக்கும் மரபு உண்டு. அத்தோடு சிவாகமத்திலுள்ள இருபத்தெட்டிலும் இறுதிப்பகுதியில் வீரசைவக் கொள்கைகளையும், சடங்குகளையும் கூறுவதால் வீர சைவம் என்பது சைவசமயத்தின் ஓர் அமிசம் என்றும் விளக்கலாம். அத்தோடு, பஞ்சாசாரிகளால் முதலில் தாபிக்கப்பட்டதால் இது யுகங்கள் தோறும் பின்பற்றப் படுவதால் சனாதனத்துவம் உடையதாகவும், வேத நெறியைத் தழுவி இருப்பதால் சிறந்த முக்கியத்துவமுடையதாகவும் விளங்குகின்றது.
வீரசைவத்தின் கோட்பாடுகளை நோக்கும் போது வர்ணாச்சிரம தர்ம கோட்பாடுகளை முற்றாக நிராகரிக்கின்றது. அத்தோடு, பிராமணர்களுக்குரிய சிறப்புரிமைகளையும் ஏற்றுக் கொள்ளவதில்லை. உடம்பில் அணியப்பட்டுள்ள லிங்கமானது எப்பொழுதும் உடம்பில் இருப்பதால் உடம்பிலுள்ள மாசுக்கள் லிங்கத்தால் எரிக்கப்பட்டுவிடும் என்பது இச்சமய நம்பிக்கையாகும். இதனால் ஏனைய வேற்றுமைகளையும், பிறப்பு
5) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 18
இறப்பு, பிறரைத் தீண்டுதல், பெண்களின் மாதவிலக்கு ஆகிய தீட்டுக்களை இச்சமயம் ஏற்பதில்லை.
பரம்பொருளாக சிவனைத் தவிர வேறு தெய்வத்தை மறுக்கின்ற தீவிர பக்தியே வீர சைவத்தின் தலையான கோட்பாடாகும். ஆடம்பரமான சடங்கு முறைகளைப் பின்பற்றுவதில்லை. முக்கியமான சடங்காக குழந்தை பிறந்ததும் குரு செய்யும் லிங்க தீட்சை முக்கியமானதாகக் கொள்ளப்படும். ஒருவர் லிங்கத்தை தனது உடம்பிலே அணிந்த பின்பே வீரசைவர் ஆகமுடியும் என்பது மரபு.
விதவைகளது மறுமண உரிமையை வீரசைவர் ஏற்றுக்கொள்வர். கணவன் இறந்ததும் மனைவி உடன் கட்டை ஏறுதலோ அன்றி, ஒதுக்கும் மரபோ பின்பற்றாமல் விதவை விரும்பினால் மற்றுமொரு வாழ்க்கைத் துணையைத் தேடிப் பெறலாம். எவ்வித ஏற்றத்தாழ்வும் கிடையாது.
பல்லவர் காலத்திலும் அதற்குச் சற்று முன்பும் சிவபக்தியை மேலோங்க வைத்த அறுபத்திமூன்று நாயன்மார்களையும் ஏற்றுக்கொள்வர். அவர்களைப் “புராதனராகக்” கொள்ளும் மரபும் உடையது. பக்தியை அடிப்படையாக கொண்ட இம் மதமானது திருநீறு, இலிங்கம் என்பவற்றை தமது சிவசின்னங்களாக கொள்வர்.
வீரசைவத்தில் மூன்றுநெறி முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை ஐவகை ஒழுக்கங்கள் எனப்படும் - பஞ்சாசாரம், எண்வகைக் காப்பு எனப்படும் - அட்டாவரணம், அறுகவகை இணைப்பு எனப்படும் - சடுத்தலம் என்பனவாகும்.
1. பஞ்சாசாரம்
வீரசைவர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடு களும் இல்லாது எல்லோரும் ஒரே குடும்பம் போல வாழ்வதற்கான நெறிமுறைகளைக் காட்டுவதே பஞ்சாசாரம் எனப்படும். இது இலிங்காசாரம், சதாசாரம், சிவாசாரம், பிருத்தியாசாரம், கணாசாரம் எனும் ஐவகை உண்டு இதில் இலிங்காசாரம் என்பது குருவானவர் அநுக்கிரகித்து தந்த இலிங்கத்தை எப்பொழுதும் அணிந்து மூன்று காலத்திலும் பக்தியுடன் வணங்குதல். சதாசாரம் என்பது - இவ் உலகில் வாழ்வதற்கு ஏதாவது ஒரு தொழிலைத் தெரிவுசெய்து அதனை அறத்தின் வழியில் கைக் கொண்டு தரும வழியில் உழைக்கும் செல்வத்தை தனக்கும், ஏழைகளுக்கும் பயன்படும் வண்ணம் செலவு செய்வதோடு; எந்த உயிருக்கும் துன்பம் செய்யாது வாழுதலாகும். சிவாசாரம் என்பது - இலிங்கங்கள் அணிந்துள்ள வீரசைவ சிவனடியார்களுடன் எவ்வித வேறுபாடுகளுமின்றி எல்லோரும் சிவனது வடிவங்கள் என்று உணர்ந்து நல்ல ஒழுக்கம் உள்ளவராக வாழ்வதாகும். பிருத்தியாசாரம் என்பது - சிவனிடத்திலும், சிவனடியார் களிடத்திலும் பக்தியுடையவராக இருந்து கொண்டு சமுதாயத்திற்கு நன்மை செய்து வாழ்வது. கணாசாரம் என்பது, வீரசைவத்தைப் பின்பற்றுவோர் தனி அறத்தையும், பொது அறத்தையும் பின்பற்றும் போது வீரசைவத்தினுடைய நெறி பிறழாமல் இரண்டையும் ஒற்றுமையுடன் பேணிப் பாதுகாத்து வாழ்வதாகும்.
(இந்து ஒளி

2. அஷ்டாவரணம்
ஆன்மாவை அவித்தை (மாயை) யிலிருந்து பாதுகாத்து முத்தியின்பம் பெறுவதற்காக இட்டுச் செல்லும் எட்டுக் கோட்பாடுகளாகும். அவை குரு, இலிங்கம், சங்கமம்,பாதோதகம், பிரசாதம், விபூதி, உருத்திராக்கம், மந்திரம் என்பனவாகும். குரு என்பவர் சீடனிடம் உள்ள மலங்களை நயனதிட்சையினால் நீக்குவார். இலிங்கம் என்பது - ஆன்மாக் களும், உலகமும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்கும் காரணமான லிங்கம் மலநாசம் செய்து ஆன்மாக்களுக்கு நலன்களை உருவாக்கும் என்பதாகும். சங்கமம் என்பது சிவனடியார் கூட்டத்தை குறிக்கும். இவர்கள் உலக விசாரத்தை விட்டதால் சிவ சீவ ஐக்கியத்தை அறிவிக்கும் ஞானமூர்த்திகளாவர். பாதோதகம் என்பது - குரு, இலிங்க, சங்கமர்களின் திருவடிகளை நீராட்டிய நீரே(தீர்த்தம்) பாதோதகம் எனப்படும். வீரசைவக் கோட்பாட்டின்படி பாததீர்த்தத்தை பேணி அருந்துவதன் மூலம் ஆன்ம சாந்தி பெறுவர். பிரசாதம் என்பது குரு, இலிங்கம், சங்கமர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவையாகும். விபூதி என்பது சுத்தமான பசுவின் சாணத்திலிருந்து பெறப்படுவது. தீராத நோய்களைத் தீர்க்கும் சக்தி உண்டு. உருத்திராக்கம் என்பது சிவசின்னங்களில் ஒன்றாக கொள்ளப்படுவதால் உருத்திரனாகிய சிவனது கண் என்பர். மந்திரம் என்பது மனதுக்கு உறுதியைத் தருவதாகும். பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதால் நோய் நீக்கமும், மனஉறுதியையும், சிவபக்தியையும் வளர்க்கும். மந்திரம் பொதுவாக நினைப்பவனைக் காப்பது ஆகும்.
3. சடுத்தலம்
சீவாத்மா சிவபரம் பொருளுடன் இணைதல் சடுத்தலம் எனப்படும். இதில் உள்ள ஆறுபடி முறைகளை ஒன்றன் பின் ஒன்றாக சாதகர்கள் கடந்து சென்றால் முத்தி இன்பம் கிடைக்கும். என்பது வீரசைவக் கோட்பாடாகும். சிவ பரம்பொருளுடன் இணைவதை வீரசைவநெறி என்றும் அழைக்கும் மரபு உண்டு. ஆன்மாவானது ஐவகை ஒழுக்கங்களால் வெற்றியீட்டி, எண்வகைக் காப்பால் தூய்மை பெற்று இறைவனோடு இணைவதை சடுத்தலநெறிஎன்பர்.இதுபக்திதலம், மகேசத் தலம், பிரசாதி தலம்,பிரான லிங்கத்தலம், சரணத்தலம், ஐக்கியத்தலம் எனும் ஆறுமாகும். பக்திமூலம் உணர்ச்சி நிரம்பிய மெய்யுணர்வு பெறுதல் பக்தித்தலம் எனவும், ஆன்மா சிவனுடன் இணைவதற்கு முயற்சிசெய்வது மகேசத்தலம் எனவும், இறைவனுடன் சேர்வதற்கு ஆன்மாவும், அறிவும் தொழிற்படுதல் பிரசாதித்ததலம் எனவும், ஆன்மாவின் இயற்கை உணர்வு அதிகமாகி அதை உள்ளத்திலே நினைத்து மகிழ்தல் பிராணலிங்கத் தலம் எனவும், ஆன்மாவின் செயல்கள் இறைவனோடு சேருவதற்கு நிலையாகுதல் சரணத்தலம் எனவும், ஆன்மாவானது சிவனுடன் ஒன்று பட்டு முத்தியின்பம் பெறுதல் ஐக்கியத்தலம் எனவும் கொள்ளப்படுகின்றது. இதில் பக்தித்தலத்திலும், மகேசத் தலத்திலும் நிற்பவர்கள் சிவபக்தர் எனவும், பிரசாதித் தலத்திலும்,
சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி )

Page 19
பிராணலிங்கத் தலத்திலும் நிற்பவர்கள் புலன்களை அடக்கிய சிவனடியார்கள் எனவும், சரணத்தலத்திலும்,ஐக்கியத்தலத்திலும் நிற்பவர்கள் அஞ்ஞான இருளை அகற்றும் நல்லாசான்களாகிய குருவாகவும் கொள்ளப்படுவர்.
வீரசைவ நூல்கள்
வீரசைவம் பற்றி தமிழில் விரிவாக கூறும் நூல்கள் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய பிரபுலிங்க லீலை, சித்தாந்த சிகாமணி, என்ற இரு நூல்களும் முக்கியமானவை. மேலும் வசவ புராணம் இதன் ஆசிரியர் யார் என்பதில் ஐயம் உண்டு. வடமொழியிலே சிவயோகி சிவாசாரியாரின் வீரசைவ சித்தாந்த சிகாமணி, மொக்கய்யா மாயிதேவரின் அனுபவ சூத்திரம், இலிங்கோபநிஷதம் என்பவற்றைக் குறிப்பிடலாம். வீரசைவம் பற்றி தேவாரத் திருமுறைகளில் குறிப்பாக
SeZLLLLLLZSeZLLLLLLZYeZLLLLLLYSeZLLLLLLYYLLLLLLL
6)JDDTUUGÖDGT
ஆலயத் :ே
இலங்கையில் சிறப்புப் பெற்ற பல இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயமும் இவற்றுள் ஒன்றாகும். இவ்வாலயமானது வயல் வெளிகளாலும், நீர் நிலைகளாலும் சூழப்பெற்று உயர்ந்த கோபுரத்தைத் தன்னகத்தே கொண்டு மக்களின் உள்ளங்களைக் கவரும் வகையில் காட்சி அளிக்கின்றது. இக்கிராமத்தில் வற்றாத நீர்ச் சுனைகள் காணப்படுவதால் வற்றாப்பளை என்றுபெயர் வரலாயிற்று. இதனை விட இக்கிராமத்திற்குப் பத்தினித் தெய்வமாகிய கண்ணகி பத்தாவது பதியாக வந்துறைந்த படியினால் பத்தாம் பளை என்று அழைக்கப்பட்டு பின்பு அது மருவி வற்றாப்பளை என வழங்கலாயிற்று என்றும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது. கண்ணகி அம்மனின் தோற்றம் பற்றிச் சங்க மருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் எனும் நூல் எடுத்தியம்புகின்றது. இன் நூலானது ஏறத்தாழ ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், ஆய்வாளர்களின் கருத்துப்படி இந் நூல் எழுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாலயம் தோன்றிவிட்டது எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு புராதன சிறப்புப் பெற்ற இவ்வாலயமானது தோற்றுவிக்கப்பட்ட வரலாறானது மிகவும் சுவாரஸ்யமானது. இவ்வாலயத்தைச் சுற்றி வாழும் மக்கள் அதிகளவு பசு நிரைகளை வளர்த்து வந்தனர். இவற்றைச் சிறுவர்கள் கொண்டு சென்று புற்றரைகளில் மேய்ப்பது வழக்கம். இதே போன்று ஒரு நாள்
(இந்து ஒளி
 
 

திருவாசகத்திலும், திருமந்திரத்தில் ஏழாம் தந்திரத்திலும் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.
வீரசைவத்தினர் மடம் நிறுவி சமயத்தை வளர்ப்பதுண்டு. அந்தவகையில் முக்கிய மடங்களாக புதுவையை அடுத்த பொம்மை புரத்திலுள்ள திருக்கோவலூர் ஞானியர் மடமும், திருக்குடந்தையிலுள்ள பெரிய மடமும், மேலும் கன்னட மாநிலத்தில், பெங்களூரிலும், மைசூரிலும், வீரசைவ மடங்களுண்டு.
இவ்வாறாக வீரசைவம் வைதீக மரபில் முக்கியத்துவம் பெற்ற மதமாக விளங்குகின்றது. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்புப் பகுதிகளில் வீரசைவ மரபைப் பின்பற்றுவோர் வாழ்ந்து வருகின்றனர். வீரசைவம் பல முன்னேற்றமான சீர்திருத்தக் கருத்துக்கள் இருந்த போதும் அவை மக்களால் தெளிவாக அறியப்படாமல் இருப்பது விசனத்துக்குரியது.
- E-lifetitilletti-E-
diodoTGOOTGO.g., glufuo65T தாற்றமும் வளர்ச்சியும்
செல்வி ஆ. அனுராதா கிளிநொச்சி
மாடுகளைத் தரிசு நிலங்களில் மேய விட்டு விட்டு அவர்கள் மர நிழலின் கீழ் சிறு தடிகளாலும் இலை குழைகளினாலும் கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு அவர்களால் வழிபடப்பட்ட விளையாட்டுத் தெய்வத்திற்குப் படைப்பதற்காக பாற்புக்கை சமைத்தனர். அப்பொழுது வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி அங்கு வந்தாள். அம் மூதாட்டியை அவர்கள் வரவேற்று உபசரித்தனர். அம் மூதாட்டி அங்கு காணப்பட்ட வேப்பம் குற்றி ஒன்றில் அமர்ந்து சிறுவர்களுடன் உரையாடிய வண்ணம் இருந்தாள். அப்பொழுது அச்சிறுவர்கள் நீங்கள் யார் என்று கேட்டதற்கு தான் சோழ நாட்டவள் என்றும் கதிர்காமம் செல்வதற்காக இங்கு வந்ததாகவும் கூறிச் சிறுவர்களே நீங்கள் இவ்வாறு கோயில் அமைத்து வழிபடுவதற்கு காரணம் என்ன என்று மூதாட்டி கேட்டபோது தாம் அதனை விளையாட்டாகவே செய்து வருகின்றோம் எனப் பதில் கூறினார்கள். அதற்கு அம் மூதாட்டி நீங்கள் விளக்கேற்றி உங்கள் பூசையை ஆரம்பியுங்கள் என்று கூற அவர்கள் விளக்கேற்றுவதற்கு நெய் ஏதும் இல்லை என்று கூறினர். அதற்கு அவள் அருகில் உள்ள கடல்நீரை எடுத்து விளக்கில் இட்டு எரியுங்கள் என்று பதில் அளித்தாள். இதனை விளையாட்டாக எண்ணிய சிறுவர்கள் அக்கடல் நீரை விளக்கில் விட்டு எரித்த போது தீபம் பிரகாசமாக ஒளிர்ந்தது. அச்சமயம் அங்கிருந்த மூதாட்டியும் மறைந்து விட்டாள். இதனை கண்ணுற்ற சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அப்போது தீய ஒளியில் கண்ணகி தன் உருவத்தை வெளிப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் இன்னாளில் கடல்நீரில் விளக்கேற்றித்தன்னை வழிபட்டுவந்தால்
17) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 20
توابع معنی تعمنبع
O . Un sitntigné told Lüol! 9ILDU
ஆ. சின்னத்தம்பி நி6
மாமன்றத்தின் பொதுச் செயலாளராகவும், தை உறுப்பினராகவும் பதவிகள் வகித்து இந்து சமயத்திற்கு அரு அமரர் ஆ. சின்னத்தம்பி அவர்களின் முதலாவது நினை6 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மாமன்றம் நடைபெற்றது. * இந்த நிகழ்வில் “கந்தசஷ்டியின் மகி இ2 கு. சோமசுந்தரக் குருக்கள் பேருரையாற்றினார். * நிகழ்வின் இறுதியில் அமரர் சின்னத்த சீ சி. குணசிங்கம் அவர்களது ஏற்பாட்டில் அனைவ
சகல செளபாக்கியங்களும் அளிப்பேன் என்றும் திருவாய் மலர்ந்தாள். இவற்றைக்கண்டு அதிசயித்த சிறுவர்கள் தமது வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை எடுத்தியம்பினர். இவற்றைக் கேட்ட பெரியார்கள் இதன் உண்மைத் தன்மையை அறிவதற்காக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு மூதாட்டியைத் தேடியபோது அவளை எங்கும் காணமுடியவில்லை. ஆனால் உப்பு நீரில் ஏற்றியதீபம் சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்தது. அத்துடன் அம் மூதாட்டி அமர்ந்திருந்த பட்ட வேப்ப மரம் துளிர்த்து வளர்ந்திருந்தது. இதனைக் கண்ட பெரியார்கள் சிறுவர்கள் கூறியது உண்மை என்பதை அறிந்து கொண்டனர். அந்நாள் வைகாசி விசாகப் பூரணையாதலினால் இனி ஒவ்வொரு வருடமும் இதே நாள் இக் கண்ணகிக்குப் பொங்கல் செய்து வழிபட வேண்டும் என்று முடிவெடுத்தனர். இன்று வரை இப்பொங்கல் வைபவம் நடை பெற்று வருகின்றது. இச் சிறுவர்களின் விளையாட்டுக் கோயில் நிஜமான கோயிலாக மாறியது.
இத்துணை சிறப்புடைய இவ்வாலயத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவர்கள் கரையோரங்களை கைப்பற்றி ஆண்ட சமயம் முல்லைத்தீவையும் ஆட்சி செய்தனர். அப்போது முல்லைத்தீவை ஆட்சி புரிந்த நெவில் என்ற போர்த்துக்கேய அதிகாரி வற்றாப்பளை கோயிலையும் அதன் மகிமையையும் கேள்வியுற்றிருந்தான். ஆனாலும் தமது மதத்தை பரப்புவதற்காக இந்து ஆலயங்கள் பலவற்றை இடித்து அழித்து வந்தனர். இவ்வாறு ஒரு நாள் குதிரைகளில் பல போர்த்துக்கேய வீரர்கள் இவ்வாலயத்திற்கு வந்து பூசாரியிடம் இக் கண்ணகித் தெய்வம் மகிமையானது என்றால் இத் தெய்வத்தைக் கொண்டு அற்புதம் செய்து காட்டு அல்லாவிடில் உனது தலையையும் வெட்டி இவ்வாலயத்தையும் தரைமட்டமாக அழித்து விடுவோம் என்று சூளுரைத்தனர். அப்பொழுது ஒருகணம் தயங்கிய அப்பூசாரி கண்ணகி அம்மனைத்தியானித்து அவ் அம்மன் அருளால் மனசில் ஒரு எண்ணம் தோன்றவே அதன்படி தனது கையில் இருந்த பிரம்பால் தனக்கு அருகில் உள்ள காய் நிறைந்த பனிச்சை மரத்திற்கு மூன்று தடவைகள் அடித்தார். அப்போது பறங்கி அதிகாரியையும் அவனுடன் வந்த படையினரையும் காயப்படுத்துமாறு பனிச்சை மரம் பேரிரைச்சலுடன் ஆடியசைந்து காய்களை வீசி எறிந்தது. இக்காய் எறியில் சிலர் தப்பினாலும் அவர்களை அம்மை நோய் பீடித்தது. இதற்கு இக்கண்ணகித் தெய்வமே காரணம் என அறிந்து தமது நோய் தீருவதற்காக
(இந்து ஒளி (
 
 
 

T னைவுப் பேருரை
லவராகவும், அறங்காவலர் சபை
ம்பணியாற்றி அமரத்துவமடைந்த புப் பேருரை கடந்த ஒக்டோபர் 27ம் பிரார்த்தனை மண்டபத்தில்
மை’ எனும் பொருளில் சிவழீ
ம்பி அவர்களின் நினைவாக, அவரது புதல்வன் கலாநிதி ருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது.
محصہ
நேர்த்திவைத்து நோய் நீங்கியவுடன் நேர்த்திக் கடனையும் முடித்து அவ்வாலயத்திற்கு வெகுமதிகளும் அளித்தனர். அந்தப் பனிச்சைமரம் அன்றிலிருந்து ஒரு காயும் காய்க்காமல் இருப்பது சிறப்பம்சமாகும்.
இவ்வாலயத்தில் பத்ததி மரபுப்படியே வழிபாடுகள் ஆரம்ப காலத்தில் நடைபெற்று வந்தது. இதனைப் பக்த ஞானி என்பவரே இங்கு அறிமுகப்படுத்தினார். இப் பெரியார் முத்தியடைந்ததும் அவருக்கு முள்ளியவளையில் கோயில் அமைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து இப்பகுதியில் வன்னியர்களது ஆதிக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கு ஆகம முறைப்படி பூசை செய்வதற்காகத் தென்னைமரவாடி என்னும் பகுதியில் இருந்து பிராமணர்கள் அழைக்கப்பட்டனர். இக் காலப்பகுதியில் தான் இவ்வாலயத்திற்கே உரியதான பாக்குத் தெண்டல், தீபம் ஏற்றுவதற்கு கடல்நீர் எடுத்தல் என்பன காட்டா விநாயகர் ஆலயத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது. கதிர்காம யாத்திரை செல்பவர்கள் இவ்வாலய விழா முடிந்த பிற்பாடு இங்கிருந்தே செல்வார்கள். இவ்வாறு சிறப்புடைய இவ்வாலயமானது 1956ம் ஆண்டு சிறு தூபியுடன் அமைந்த ஆலயத்தில் பிரதிட்டை செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவ்வாலயம் தான் வன்னிப் பகுதியில் முதல் முதல் அமைந்த இராஜகோபுரம் என்னும் சிறப்பினைப்பெறுகின்றது. இதனைவிட திருமஞ்சம், சிறுதெய்வம், உள்வீதி, வெளிவீதி என்பனவும் அமைக்கப்பட்டன. இவ்வாறு சிறப்புடன் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் இவ்வாலயத்திற்கு 1982ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு 1989லும் கும்பாபிஷேகக் கிரியை நடந்தேறியது. இதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டுப் பகுதியில் இவ் அம்மனுக்கு மஞ்சம் அமைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். பங்குனித் திங்கள் அன்று இம் மஞ்சமானது இழுக்கப்படுகின்றது.
இங்கு ராஜ கோபுரத்தில் அம்மனின் வரலாற்று சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதனைவிட இவ்வாலய உட்கவர்களில் கண்ணகியின் தோற்றம் மிக அழகான ஒவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஆலய மேற்குப்பகுதியில் உள்ள வாயிலின் இரு மருங்கும் துவார பாலகிகளின் தோற்றம் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிள்ளையார், வைரவர்,நாகதம்பிரான், சண்டேஸ்வரர் என்பன பரிவாரமூர்த்திகளாகக் காணப்படுகின்றன. இங்கு பங்குனித் திங்கள் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி என்பன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
8) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 21
கீல்விப் பொதுத் தராதர உயர்தரம் முதல், கலைமுதற் தேர்வு, கலை இறுதித் தேர்வுகளுக்கு இந்து நாகரிகத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் இந்து மெய்யியலைப் பற்றி விளங்கிக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு இந்து மெய்யியல் கோட்பாடுகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளைப் புரிந்து கொள்ளாமை ஒரு காரணமாக இருந்த போதிலும் இவற்றிற்கிடையே ஒரே விடயத்தில் பல்வேறுபட்ட முரண்பாடான கருத்துக்கள் இருப்பதுவும் முக்கியமான காரணமெனக் கொள்ளலாம்.
இந்து மெய்யியலைக் கற்கும் மாணவர்கள் பிரஸ்தான திரயங்களாகிய உய நிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் இந்து தத்துவக் கோட்பாடுகள் அனைத்திற்கும் மூலமாக உள்ள உபநிடதம் பற்றி விசேடமாகத் தெரிந்திருத்தல் அவசியமானதாகும். வேதாந்தம், வேதசிரசு என மரபுவழியாக வழங்கி வரும் உபநிடதங்கள் வேத இலக்கியங்களின் சாரமாகத் திகழ்வதைக் காணலாம். இவ் உபநிடதங்கள் தோன்றிய காலம் கி. மு. 800 ஆண்டுகள் எனக் கணிப்பிடக்கூடியதாகவுள்ளது. வேதத்தின் ஞான காண்டப் பகுதியில் அடங்கியதாகவும் வேதத்தின் இறுதிப் பகுதியாகவுமுள்ள இவ் உபநிடதங்கள் குருகுலக் கல்விமுறையின் மூலமாக இருப்பதைக் காணலாம்.
உபநிடதம் எனும் சொல் “உபநிஷத்” எனும் வடமொழியிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றது. “உபநிஷத்” எனும் சொல் குருசீட உரையாடலையே குறித்து நிற்கிறது அதாவது மறைபொருள் கோட்பாட்டை அறிய விளையும் ஒருவர் குருவை நாடி அவரோடு தங்கியிருந்து பெற்றுக் கொண்ட சிந்தனைகளே உபநிடதங்களாக வளர்ந்தன எனலாம்.
பிரஸ்தான திரயங்களுள்ளேயே சிறப்பானதாகக் கருதப்படும் உபநிடதங்கள் 108 என்பது மரபு, அவற்றில் 10 உபநிடதங்களே சிறப்பானதாக் கொள்ளப்படுகிறது. அவையாவன ஈச, கேன, கடபிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரிய, பிருகதாரணிய, சாந்தோக்ய என்பனவாகும். இவற்றிற்கு ஆதிசங்கரர் உரை எழுதியமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய உபநிடத உரையாடல்கள் உத்தாலகர்சுவேதகேது, யமன் நசிகேதன், ஞாக்கியவல்கியர் - கார்க்கி, பிரஜாபதி இந்திரன் ஆகியோரிடையே இடம் பெறுவதை காணலாம். இவை அனைத்திலும் பிரமம், ஆன்மா உலகம், கர்மம், மறுபிறப்பு, இறப்பு, இறப்பின் பின் உள்ள ஆன்மாவின் நிலை பற்றிய கருத்துக்களே கூறப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் யாவும் வேதங்களில் பொதிந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக வேதங்களில் குறிப்பிடப்படும் “பிரஜாபதி” எனும்
(இந்து ஒளி
 

(ZZVTYSS
SMP ரியமூர்த்தி 王懿 ip in Edu.)
முழுமுதற் கடவுளே உபநிடதங்களில் “பிரமம்” எனும் கோட்பாடாக விருத்தி பெறுகின்றது. அதேபோல வேதத்தில் யம சூக்தத்தில் கன்மம் - மறுபிறப்புப் பற்றிக் கூறப்படுகிறது. இக்கருத்து கட உபநிடதத்தில் யமன் நசிகேதன் ஆகியோருக்கிடையிலான உரையாடலாக விரிவுபடுத்திக் கூறப்படுகிறது. இருக்கு வேதத்தில் காணப்படும் “ஏகம்சத்” எனும் அதாவது “உண்மைப்பொருள் ஒன்றே" எனும் கோட்பாடு சாந்தோக்ய உபநிடதத்தில் காணப்படும் தத்துவம் அஸ்மி, அகம் பிரமம் அஸ்மி, சோகம் அஸ்மி எனும் மகாவாக்கியங்கள் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
பிரமம் பற்றி உபநிடதச் சிந்தனையாளர்கள் குறிப்பிடும் போது அது அநாதியானது, அந்தமற்றது, அழிவற்றது, பரிபூரணமானது, பிரிக்க முடியாதது, மிக நுண்ணியது, கற்பனைக்கும், வர்ணனைக்கும் அடங்காதது, ஆண், பெண் வேறுபாடுகளைக் கடந்தது, வழிபட வேண்டியது, உலகை இயக்குவது, சத்தியம், ஞானம், அநந்தம் ஆகிய இயல்புகளையுடையது, பிரமமே அனைத்திற்கும் பிறப்பிடம் என்றே குறிப்பிடுகின்றனர். பிரமத்தை ஒருவன் தனது அறிவினால் அறிய முற்படுவதாவது ஒரு வண்டி தன் சக்கரத்தைத் தானே உருட்டிப் பார்ப்பது போலவும் ஒருவன் தன் தோளில் தானே ஏறி நிற்பது போலவும் போன்றது எனக் குறிப்பிடுவதிலிருந்து பிரமத்தின் தன்மையை உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. பிரமம் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதது. பிரமம் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதது என்பதை உபநிடத சிந்தனையாளர்கள் விபரிக்கும்போது"இது அன்று"இது அன்று'(நேதி,நேதி) என்று கூறியே விபரிப்பதைக் காணலாம். அதாவது பிரமம் எதனைப் போன்றதாக இல்லை எனக் கூறலாமேயொழிய எதுவாகவுள்ளது என விளங்க வைப்பது கடினமானதாகும்.
மேலும் பிருகதாரணிய உப நிடதத்தில் சுட்டப்படும் நிர்க்குண பிரமமானது மாயையோடு சேராததாகவும், பரிபூரணமானதாகவும் குணமற்றதாகவும், தத்துவ ரீதியானதாகவும், ஞானியர்களால் போற்றப்படுவதாகவும் இருக்கும். இப்பிரமமானது ஆலம் விதைபோல் நுண்ணியது எனவும் நீரில், உப்புக் கரைந்திருப்பது போல் வியாபகமானது எனவும் உபநிடத உரையாடல்கள் சுட்டி நிற்கின்றன.
அதேவேளை சாந்தோக்ய உபநிடதம் கூறும் சகுணப் பிரமமானது குணங்களோடு கூடியதாகவும் மாயையோடு சேர்ந்ததாகவும் உள்ளது. வேதங்களில் குறிப்பிடப்படும் பன்மைக் கோட்பாடு உபநிடதங்களில் நிர்க்குண, சகுணப் பிரமக் கோட்பாடாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
ஆன்மா பற்றி உபநிடதம் குறிப்பிடும் போது ஆன்மா உடலை இயக்கும் சக்தி என்கிறது. பிரமத்தின் இயல்புகள் அனைத்தும் ஆன்மாவின் இயல்புகளாகவே உபநிடதங்களில்
9) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி D

Page 22
குறிப்பிடப்பட்டுள்ளன. ஆன்மாவானது நித்தியமானது, அழிவற்றது. இந்த ஆன்மா வண்டியிற் கட்டப்பட்ட குதிரை போலச் சரீரத்தில் கட்டுப்பட்டு நிற்பது. ஆனால் சரீரத்தினின்று வேறானது. அது இந்திரியங்களினின்றும் வேறானது காரணங்களைக் கருவியாகக் கொண்டு செயற்படுவது. அது தன்னில் தானே பரமானந்தம் அடையவல்லது. "அகம்பிரமாஸ்மி" “சர்வம்கலு இதம் பிரமா” என்ற மகாவாக்கியங்கள் இதையே வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஆன்மாவானது உடலினுள்ளே பல கோசங்களால் மூடப்பட்டுள்ளது என்றும் அக்கோசங்கள் அனைத்தையும் கடந்து ஆன்மா மிக நுண்ணிய சக்தியாக விளங்குகிறது எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆன்மாவின் இலட்சியம்தன்னைப்பிரமமாகக் காண்பதேயாகும் எனப்படுகிறது. உபநிடத மகா வாக்கியங்களாகத் தத்துவம் அளி (நீ அதுவாக இருக்கிறாய்) அகம் பிரமாஸ்மி (நானே அது) என்பன காணப்படுகின்றன. இவை ஆன்மா, பிரமம் ஆகிய இரண்டும் ஒன்றெனவே குறிப்பிடுகின்றன. ஆன்மாக்கள் தமது அவத்தையிலிருந்து விடுபட்டுப் பிரமத்துடன் இணைவதற்கு “தியானம்’ சிறந்த கருவி என்பது முண்டக உபநிடதத்தில் கூறப்படுகிறது. அத்துடன் முத்திநிலையில் ஆன்மாக்களிடையே பேதமில்லை என்பதும் பரமான்மா ஒன்றே உண்மை என்பதும் உபநிடத சிந்தனையில் எடுத்துக் காட்டப்படுகிறது. இவை யாவும் பிரமம், ஆன்மா ஆகிய இரண்டும் இருவேறுபட்டனவாகக் கொள்ளப்பட்டாலும் அவை குறிப்பிட்ட நிலையில் ஒன்றாகி விடுகின்றன என்பதைப் புலப்படுத்தப்படுகிறது. ஆன்மாக்கள் தம்மைப் பிரமம் எனஉணர்வதற்கு ஒழுக்கவியல் வாழ்க்கை அவசியம் என்பதுவும் உபநிடதங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.
உபநிடதங்களில் உலகமானது பொய்யானதாகவே காட்டப்படுகின்றது. வினைப்பயனைப் பற்றி உபநிடதங்கள் குறிப்பிடும்போது வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கேற்பவே மறுபிறப்பு அமைகிறது என்கிறது. மேலும் எண்ணங்களுக்கேற்பச் சிந்தனைகளும் சிந்தனைகளுக்கேற்ப தீர்மானங்களும், தீர்மானங்களுக்கேற்ப செயல்களும் நிகழ்வதாகவும் அச்செயல்களுக்கேற்பவே பயன்கிட்டுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. நல்வினை தீவினை என்னும் பாகுபாடும் அவற்றிற்கேற்ப பலாபலன்களும் ஒருவரை இம்மையிலும் மறுமையிலும சேருகின்றன எனவும் உப நிடதங்கள் விளக்கி நிற்கின்றன.
உபநிடதங்களில் காணப்படும் பிரமம், g, GötLOT என்பவற்றிற்கிடையேயான முரண்பாடான கருத்துக்கள் பிற்காலத்தில் பல்வேறுபட்ட தத்துவக் கோட்பாடுகள் ܗܝ தோன்றுவதற்கு வழிவகுத்தன எனலாம். உபநிடதக் கோட்பாடுகளை மேலும் சிறிய சூத்திரங்களால் விபரிப்பதற்காகவே பிரஸ்தான திரயங்களில் ஒன்றாகிய பிரமசூத்திரம் தோன்றியது. இது நான்கு அத்தியாயங்களைக் கொண்டதாகும். இந் நான்கு அத்தியாயங்களும் பிரமம் ஒன்றே உண்மை” என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன உபநிடதங்களுக்கும் வேதாந்தக் கோட்பாடுகளுக்குமிடையிலான இணைப்புப் பாலமாகவே பிரம சூத்திரம் விளங்குகிறது.
பிரஸ்தானதிரயங்களில் ஒன்றாகவும்,உபநிடதசாரமாகவும் விளங்கும் மற்றுமொரு நூல் பகவத்கீதை எனலாம். பாகவதக் கோட்பாடுகளை வேதாந்தத்துடன் சேர்த்துச் சொல்லும்
>இந்து ஒளி
(

கோட்பாடாகவே பகவத்கீதை காணப்படுகிறது. இதுவும் கிருஷ்ணனுக்கும் அருச்சுனனுக்கும் இடையிலான குரு-சீட உரையாடலாகவே காணப்படுகிறது. பக்தி நெறியை ஆதாரமாகக் கொண்ட இந்நூல் பக்தி, கர்மம், யோகம், ஞானம் எனும் நான்கு மார்க்கங்களை ஒப்பு நோக்கில் விபரித்துச் சமயப் பொது நெறியைக் காட்டி நிற்கிறது என்பது வலியுறுத்தப்படுகிறது. பகவத்கீதை ஆறாம் அத்தியாயம்30ம்பாடலில்"என்னை எல்லா இடத்திலும், இப்பிரபஞ்சம் முழுவதையும் என்னிடத்திலும் எவன் காண்கிறானோ அவனும் நானும் ஒன்றே" எனக் கூறப்படுகிறது. அத்துடன் கீதையில் “விஷ்ணுவே பிரமம்” எனக் குறிப்பிடப்படுவதும் ஒரு கடவுட் கோட்பாட்டை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. பகவத்கீதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பகவத்கீதை எனும் உபநிஷத்” எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து பகவத்கீதையும் உபநிடதத்திற்கு எழுந்த விளக்க நூலே என்பதை மறுக்கமுடியாது. இப் பகவத்கீதைக்குச் சங்கரர், இராமானுஜர் போன்ற மேதாவிகள் பாடியங்கள் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தோன்றிய வைதீக, அவைதீகக் கோட்பாடுகள் அனைத்தும் மூல இலக்கியமாக உபநிடதங்களைக் கொள்வதைக் காணலாம். இவ் அடிப்படையில் சங்கர இராமானுஜ, மத்துவ வேதாந்தங்கள் உபநிடதத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையே என்பதை வலியுறுத்திக் கூறமுடியும்.
அத்வைதக் கோட்பாட்டை நிறுவிய சங்கரர் கி. பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இவரது கோட்பாடு இந்து மெய்யியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அத்வைதம் என்பது பிரமத்தின் இருமையற்ற நிலையையும் ஆன்மா பரமத்திலிருந்து வேறானதல்ல என்பதையும் உலகத்தின் உண்மையற்ற நிலையையும் விளக்கி நிற்கிறது. சங்கரர் பிரமம் மட்டுமே உண்மை பிரமத்திற்கு வேறாக உலகம் என ஒரு பொருளுமில்லை. பிரமம் உலகமாக மாறுவதாக காணப்படுகிறதே ஒழிய உண்மையில் பிரமத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுவதில்லை என்கிறார். இக் கருத்தை விவர்த்த வாத மூலம் இவர் நிரூபித்துக்காட்டுகின்றார். அதாவது கயிறு பாம்பாகத் தோன்றுவது போல் பிரமம் உலகமாக தோன்றுவதாகக் குறிப்பிடுகின்றார்.
காரணமாகிய பிரமம் உண்மை; காரியமாகிய உலகம் தோற்றம் என்பதே இவரது வாதமாகும். சங்கர வேதாந்திகள் உலகத்தைச் சதசத்திலட்சணமாகவே கொள்கின்றனர். விவர்த்த வாதத்துடன் தொடர்புபட்டதாகவே பிரதி பிம்ப வாதம் அவச்சேத வாதம் என்பன அத்வைத வேதாந்திகளால் உருவாக்கப்பட்டன இவையும் இறைவன் மட்டுமே உண்மை, உயிர்களும் உலகமும் பொய்த்தோற்றம் என்பதையே வலியுறுத்துகின்றன. பிரமத்திற்கு பிராதிபாஷிகம், வியாபகாரிகம், பாரமார்த்திகம் எனும் நிலைகள் உண்டு என்று சங்கரர் குறிப்பிடுவதுடன் நிர்க்குணபிரமம் பற்றியே சங்கரர் எடுத்து விளக்குவது அவதானிக்கப்பட வேண்டிய உண்மையாகும்.
சங்கர வேதாந்தத்தில் மாயை முக்கிய இடம் வகிக்கிறது. அத்வைதம் மாயா வாதம் என அழைக்கப்படுவதையும் காணலாம். எல்லையில்லாத ஒன்றை எல்லைப்படுத்துவதும் உருவமில்லாத ஒன்றை உருவகிப்பதும் மாயை ஆகும். மாயை தனக்கிருக்கும் ஆவரண சக்தியினால் மெய்ப்பொருளாகிய பிரமத்தை மறைக்கிறது. விஷேஷய சக்தியினால் உலகத்தைத் தோற்றுவிக்கிறது.
சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 23
அத்வைத வாதிகள் பிரமத்தை சீவர்களாக்குவது அவித்தை என்கின்றனர். அவித்தை என்றால் அறியாமை எனும் பொருளை தரும். ஒரு பரமாத்மா பல சீவாத்மாக்களாகத் தோற்றமளிப்பதற்குக் காரணம் இவ் அவித்தையே என்கின்றனர். ஆன்மாக்கள் அவித்தையிலிருந்து விடுபட்டால் பிரமஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அத்வைத வாதிகள் குறிப்பிடுகின்றனர். ஆன்மாவும் பிரமமும் ஒன்று எனும் உணர்வைப் பெறுவதை அல்லது பிரமத்தை அடைவதே மோட்சம் எனச் சங்கரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையை அடைய ஞானமே வழி எனச் சங்கரர் கூறுகிறார். சங்கரர் குறிப்பிடும் முத்தி விதேக முத்தியாகும். முத்தி நிலையை அடையச் சிரவணம், மனனம், நித்தியாசனம் என்பன விதிகளாகக் காட்டப்படுகின்றது.
பிரஸ்தான திரயங்களை மூலமாகக் கொள்ளும் பிறிதொரு கோட்பாடே இராமனுஜரின் விஷ்ட்டாத்வைதமாகும். இராமானுஜர் கி. பி. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். விஷிட்டாத்வைதம் சகுனிப்பிரமநிலையை எடுத்து விளக்குகிறது. இது வேதாந்தத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் இடைப்பட்ட ஒரு கோட்பாடாகவே கருதப்படுகிறது. அதாவது விஷிட்டாத்வைதம் இறைவன் ஆன்மா, உலகம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆன்மாக்கள் பலவாயினும் அவ் ஆன்மாக்கள் அனைத்தையும் தன் உடலாகக் கொண்டு ஆன்மாக்களுகெல்லாம் ஆன்மாவாய் நிற்கும் பரமான்மா ஒன்று என்பதும் இதில் எடுத்துக் காட்டப்படுகிறது. இராமானுஜரது அத்வைதத்தில் உலகும் உண்டு உயிர்களும் உண்டு. ஆனால் அவை பிரமத்திற்கு விசேஷணங்கள் பிரமம், விசேஷியம் இந்த இரண்டும் சேர்ந்த விசிஷ்டமே பரம்பொருள் என இராமானுஜர் குறிப்பிடுகிறார். உலகமும் உண்மை, உயிர்களும் உண்மை எனக் கொள்வதால் இராமானுஜர் மெய்மைவாதியாகவும், பன்மைவாதியாகவும் கருதப்படுகிறார்.
இராமானுஜர் பிரமம், உயிர், உலகம் இவை மூன்றும் உள்பொருள் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இது உடலுக்கும் உயிருக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. இங்கு ஈஸ்வரன் மட்டுமே சுதந்திரமுள்ளவனவாகக் காட்டப்படுகின்றான். இராமானுஜர் இதை மேலும் விளக்க "அப்பிரதசித்தி” எனும் இரண்டறக் கலந்த தன்மையைக் காட்டுகிறார். அதாவது பழமும் சுவையும் போல இறைவன், உயிர், உலகம் ஆகிய மூன்றும் இரண்டறக் கலந்திருப்பதை இது காட்டுகிறது. எனினும் ஒவ்வொரு ஆன்மாவும் பிரமத்தை உணர்ந்து கொள்ள தர்ம பூத ஞானத்தை (பிரமம், ஆன்மா ஒருங்கிணைந்த தன்மை) பெற வேண்டும் என இராமானுஜர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு ஆன்மாவின் இலட்சியமும் பரமபதம் எனும் பூரீவைகுந்தத்தை அடைவதே என இராமானுஜர் குறிப்பிடுகிறார். இதற்கு அவர் சரணாகதி மார்க்கமாகிய பிரபக்தி மார்க்கத்தையே வழியாகக் காட்டுகிறார்.
பிரஸ்தான திரயத்தையே மத்துவரும் தனது துவைதக் கோட்பாட்டிற்கு மூலமாகக் கொள்கிறார். இவரது கோட்பாடும் பன்மைக் கோட்பாடு தான் என்ற போதிலும் பிரமம், ஆன்மா, பிரபஞ்சம் ஆகிய மூன்றும் வெவ்வேறானவை தனித் தன்மையுடையவை என்கிறார். மூன்று பொருட்களிடையேயும் ஐவகைப்பேதங்களை எடுத்துக் காட்டுகிறார். அவையாவன சீவ
இயற்கையில் அல்லற்படுவதற்கு இயற்கையை வென்று அல்லலை
(ஒரு
(
 

ஈஸ்வரபேதம், சடஈஸ்வரபேதம், சீவ-சடபேதம், சீவ-பரஸ்பரபேதம்,
சட - பரஸ்பரபேதம் என்பவையாகும். மத்துவரது துவைதக்
கோட்பாடு உபநிடத மகாவாக்கிய சிந்தனைகளிலிருந்து வேறுபட்டுச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆன்மா தனது உள்ளார்ந்த உணர்வை உணர்ந்துகொள்வதையே மத்துவர் முக்கியமாகக் காட்டுகிறார்.
சைவசித்தாந்தக் கோட்பாடுகளிலும் இறைவன் ஆன்மா, உலகம், கன்மவினை, மறுபிறவி, பக்தி, முக்தி ஆகிய விடயங்களே எடுத்து விளக்கப்படுகின்றன. சைவசித்தாந்தம் முப்பொருள் கோட்பாட்டை நிறுவ சற்காரிய வாதத்தை எடுத்துக் காட்டுகிறது. சைவசித்தாந்தம் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் ஆகிய மூவகை ஆன்மாக்கள் பற்றியும் இருவினையொப்பு மலபரிபாகம் என்பவற்றின் இயல்பு பற்றியும் விளக்குகிறது. உபநிடத மகாவாக்கியங்களுக்கேற்பவேசைவசித்தாந்தம் முத்திக்கோட்பாடு பற்றி விளக்குகிறது. இதற்குரிய வழிகளாக சைவ நாற்பாதங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இவைதவிர அறம்,பொருள், இன்பம் ஆச்சிரம தர்மம், குருலிங்க சங்கம வழிபாடுகள் பற்றியும் கூறுகின்றன. இக்கோட்பாடுகள் யாவும் உபநிடதங்களில் காணப்படுகின்றன. அவையாவன ஆன்மா முத்தி பெறுவதற்குப் பற்றை அறுத்தல் இடைவிடாத முயற்சி ஆன்மா தன்னை உணர்தல் ஆகிய அம்சங்களே ஆகும். இதே அம்சங்களையே தரிசனங்களும் எடுத்து விளக்குகின்றன.
எனவே இந்து மெய்யியல் கோட்பாடுகள் அனைத்திற்கும் முலமானவை உபநிடதங்களே என்பதை நாம் தெட்டத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
NNNNNNNNNNNNNNNN
வாழ்த்துப்பா
சைவ சஞ்சிகையே வாழ்க !
ls
pடனே வாழ்கவென
நது மாமன்றமும்
எத ஊழிய்ர்களும்
நாம் மனிதராகப் பிறக்கவில்லை; அகற்றவே பிறந்திருக்கின்றோம். மகான்)
2D
சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி

Page 24
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பது ஒளவையார் கூற்று. மானிடப் பிறவி கிடைத்தற்கரிய ஒரு பிறவி, அதுவும் கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிதிலும் அரிது. எனவே புண்ணியப் பிறவியான மானிடப் பிறவியை எடுத்த நாம் அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்து நடத்தல் அவசியம் சைவ மக்களாகிய நாம் எப்படியும் வாழலாம் என்ற கொள்கையை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரன்முறையை ஏற்படுத்திச் சென்றுள்ளனர் நமது முன்னோர்களும் வழிகாட்டிகளுமான சைவ நாயன்மார்கள். நல்வழியைக் காட்டிய
സ്ഥക്ക് G த்திருப்பதிகங்களிலே மானிடப்பிறவியின்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்ற பாடல் மூலம் திருநாவுக்கரசர் மனிதப் பிறவியின் மகத்துவத்தை அழகாக எடுத்துக் கூறுகின்றார்.
பரங்கருணைத் தடங்கடலாக விளங்குகின்ற பரமேஸ்வரனாக விளங்குகின்ற பரம்பொருளாக விளங்குகின்ற முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் அழகுத் திருக்கோலத்தை அன்பொழுகக் கண்குளிர மனம் மகிழக் காண வேண்டுமாயின் இந்த மனிதப்பிறவி நிச்சயம் வேண்டிய ஒன்றாகும்.
மானிடராகப் பிறப்பதென்பது இலேசான காரியமல்ல. பூமியின் கண் மனிதனாகப் பிறப்பதற்கு மாதவஞ் செய்தல் வேண்டும். பூர்வஜென்மப் புண்ணியம் இருந்தால்தான் மனிதப் பிறவி வாய்க்கும். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்ற மாதிரி நாம் நல்லவற்றை எண்ணி, நல்லவற்றைச் செய்து நல்ல மனத்தோடு வாழ்ந்தோமேயானால் நல்ல பிறவி கிடைக்கும். “புண்ணியமாம் பாவம் போம் போனநாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்” என்பதற்கிணங்க நாம் புண்ணியத்தை அடைவதற்கு நல்லனவற்றைச் செய்தல் வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இறை தொண்டு செய்ய வேண்டும். ஆண்டவனுக்குச் செய்கின்ற திருத்தொண்டு மூலம் நாம் இறைவனை எளிதில் அடையலாம்.
அறிவைத் தந்தையாகவும், திருப்தியைத் தாயாகவு இந்த
(இந்து ஒளி (
 

வியின் மதத்துவமும் 2.767 jazzfugpub
சிவநெறிக் கலாநிதி
லவர் இராசையா பரீதரன் ாழ். நாச்சிமார் கோயிலடி
நிலையான வீட்டின்பத்தை அடைவதற்கு நல்வினை செய்தல் வேண்டும். வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை ஏத்தி ஏத்தித் துதிக்க வேண்டியது நமது தலையாய கடனாகும். தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களையும் துயரங்களையும் இன்னல்களையும் இடுக்கண்களையும் தவிடுபொடியாக்குவதற்கு இறைவனைத்தவிர வேறு யாராலும் முடியாது.
நிலை பெறுமாறெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் மெம்பிரானுடைய கோயில்புக்கு புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாழ்த் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
சங்கரா சயபோற்றி போற்றியென்றும் அலை புனல் சேர் செஞ்சடையெம் மாதியென்றும் "
ஆரூராவென்றன்றே யலறாநில்லே!
என்ற திருத்தாண்டகம் மூலமாக அப்பர் பெருமான் ஆலய திருத்தொண்டுகளை மிக அழகுபடக் கூறுகின்றார். ஒவ்வொரு நாளும் எம்புெருமானுடைய ஆலயத்துக்குச் சென்று அவனுக்குச் செய்ய வேண்டிய திருத்தொண்டுகளைச் செவ்வனே செய்தல் வேண்டும். இறைவனுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆன்ம ஈடேற்றமும் மன நிம்மதியும் கிடைக்கும். இதனை உண்மையில் செய்து அனுபவித்தவர்களே உணரமுடியும்.
இறைநாம ம் கூட்டுப்பிரார்த் O ஆண் fisi 婴 O } கலாம் மன TUITG)
ெ திருவலகிடுதல்,மெழுகுதல்,கழுவுதல்,பூமாலைகட்டுதல்,பண்ஒதுதல், நெய்விளக்கு ஏற்றுதல், குடை, கொடி, ஆலவட்டம், தீவர்த்தி பிடித்தல், மணிஅடித்தல், சங்கு ஊதுதல், சேமக்கலம் அடித்தல், சுவாமிகாவுதல், புராணம் படித்தல், என்று இன்னோரன்ன பலதொண்டுகளைச் செய்வதன் பிலாக நாம் எளிதில் இ
பூவுலகில் மனிதப்பிறவி எடுத்த நாம் அதன் மகத்துவத்தையும் மாண்பினையும் அறிந்து உணர்ந்து உண்மையான சிவதொண்டுகளைப் பக்தியுடன் செய்வதனால் ஆத்ம திருப்தியும் இறைநம்பிக்கையும் ஏற்பட்டு கடவுளின் கிருபா கடாட்சத்துக்குள்ளாகி திருவருளுக்குப்பாத்திரமாகி இம்மைக்கும் மறுமைக்கும் அம்மைக்கும் இன்பவாழ்வுக்கு வழி தேடிக் கொள்வோமாக.
KC-3- ம், சத்தியத்தைச் சகோதரனாகவும் வைத்துக்கொள்
மதம்)
2 சித்திரபானு வருடம் ஐப்பசி மார்கழி)

Page 25
ஆன்மாவிற்கும் பசு என்று ஒரு பெயர் உண்டு. “பச்”
என்ற சொல்லிற்கு கட்டுப்பட்டது என்பது பொருள். ஆத்மாவை மலங்கள் பந்தித்திருக்கின்றன. நாம் வீட்டிலே வளர்க்கும் பசுக்கள் நமக்குக் கட்டுப்பட்டுள்ளன.
மாடு என்ற சொல்லிற்குச் செல்வம் என்றும் பொருள் உண்டு. மக்கள் நாகரீக ஏணியில் அடியெடுத்து வைத்தபோது அவர்கள் அனுபவத்தில் கண்ட முதல் செல்வம் மாடு ஆகும். அதனால் செல்வம் என்னும் பொருளுடையது மாடு என அழைத்தனர். மாடு, பசு என்னும் சொற்கள் ஒரே பொருளுடையனவாயினும் பொருள் தரும் ஆற்றலால் வித்தியாசப்படுவதை நாம் அனுபவத்தில் உணர்கின்றோம்.
“ஆளைப்பார் மாடுபோல்” என்று சொன்னால் உடனே அம்மனிதன் சண்டைக்கு வந்து விடுகின்றான். ஐயோ பாவம்பக போல் இருக்கிறானே என்றால் உள்ளங் குளிர்ந்து எம்மோடு அன்பு கலந்து உறவாடுகின்றான். பசு என்ற சொல் சாந்த குணத்தையும் மாடு என்ற சொல் மாட்டின் சண்டித்தனத்தையும் காட்டுகின்ற சொற்களாக எமது அனுபவத்தில் ஊறி விட்டன.
முற்கால அரசர் பசுவையே பெரிய செல்வமாக மதித்தார்களாகையால் நிரை கவர்தலையே அரசியல் வெற்றியாகவும் நிரை மீட்டலையே பகைவனை வென்றதாகவும் கருதினர். நிரை கவர்தல், நிரை மீட்டல் என்பன பற்றி இலக்கியங்கள் நிறையப் பேசுகின்றன. பசுப்பாலை ஒரு பூரணமான உணவாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளது. அநேக நாடுகளில் குழந்தைகளுக்குத் தாய்மார் தாய்ப்பால் ஊட்டுவதில்லை. அதனால்தான் குழந்தைகளுக்குத் தாயின் மீது அன்பும் இல்லாமற் போகின்றது. இன்று உலகிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிரதான உணவாக இருப்பது பசுவின் பாலாகும். உலகிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே ஒரு செவிலித்தாய் பகவாகும். இந்துக்கள் பசுவின் உயர்வு கருதி அதனைத் தெய்வமாகவே வழிபடுகின்றனர். பசுவின் உடம்பிலே தேவர்கள் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். பசுவிலிருந்து கிடைக்கும்பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய ஐந்தும் சிவபெருமானை நீராட்டும் முக்கிய அபிஷேகத் திரவியங்களாகும். இறந்த மாட்டிலிருந்து எடுக்கும் கோரோசனை விஷேட மருந்தாகப் பயன்படுகின்றது. இறந்த மாட்டின் தோல் மனிதனின் பாதத்தைப் பாதுகாக்கும் செருப்பாகவும் இனிய நாதத்தை எழுப்பும் மேளவாத்தியங்களாகவும் மாறுகின்றன.
(இந்து ஒளி (
 

“ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்” என்பது அப்பர் வாக்கு உலகிலுள்ள எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி
பேதங்களையுடைய ஜீவர்கள் எல்லாம் உண்டு. கழித்த கழிவுப் பொருள் மலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பசுவின் சாணத்தை எவரும் மலம் என்று அழைப்பதில்லை. எங்கள் வீட்டுக் குழந்தை வீட்டினுள் மலங்கழித்து விட்டால் அந்த இடத்தைச் சுத்திகரிப்பது பசுவின் சாணியாகும். சாணத்தில் கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு. அதனால் இந்துக்கள் நாள்தோறும் வீட்டு முற்றத்திற்குச் சாணி தெளிப்பார்கள் சாணி மருந்தாகவும் பயன்படுகின்றது.
பசுவின் பால் இளையோர் முதல் முதியோர்வரை, நோயாளி முதல் ஆரோக்கியவான் வரை எல்லோருக்கும் உணவாகின்றபடியினால் பசுவே எல்லா உயிர்களையும் காப்பாற்றும் தாய்மையாக முதலிடத்தைப் பெறுகின்றது.
உலகம் முழுவதையும் தாங்குபவர் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானைத் தாங்குவது இடபமாகும். இடபத்தின் நான்கு கால்களும் தருமமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. எனவேதான் தருமத்தின் அடிப்படையிலேதான் மக்கள் வாழ்வு நடைபெற வேண்டும் என்பதைச் சிவபெருமான் ஏறியிருக்கும் இடபம் உணர்த்துகின்றது.
பகவுக்கு உணவு கொடுத்தல் பெரிய சிவ புண்ணியமாகக் கருதப்பட்டது. இதனைத் திருமூலர்
“யாவர்க்குமாம் பசுவுக் கொருவாயுறை” என்று குறிப்பிடுகின்றார். பச்சிலையால் சிவபெருமானை அர்ச்சித்தல் எல்லார்க்கும் இயல்வதொன்று. பச்சிலை செம்பைப் பொன்னாக்கும். அதுபோல பச்சிலையால் இறைவனை அர்ச்சித்தல் சிவனைச் சிவனாக்கும். இதேபோன்று பசுக்களுக்கு உணவு கொடுத்தலும் எல்லோராலும் இயலும்.
உலகம் துயர்தீர வேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஒவ்வொரு அரசாங்கமும் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையை ஏற்படுத்தி எல்லாத்துறையிலும் எல்லா நாடுகளும் முன்னேற வேண்டும் என்று பாடுபடுகின்றார்கள். ஆனால் உலகம் முன்னேறியதாகத் தெரியவில்லை. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஞானசம்பந்தப் பெருமான் உலகின் துயர்தீர வழி சொல்லி இருக்கின்றார். பசுக் கூட்டங்கள் வாழ்ந்தால் உலகின் துயர் தீரும் என்று “வாழ்க அந்தணர்” என்ற தேவாரத்திலே கூறியிருக்கின்றார்.
3) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி D

Page 26
முற்காலத்திலே அரசர்கள் போரிடும்போது போரிடும் இடத்திலிருந்து பகக்களை அகற்றிய பின்பே அந்த இடத்தில் போர் செய்ததாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மனிதன் ஆறறிவு படைத்தவன் பசுவினிடமிருந்து ஒரு கோட்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும். பசு மனிதனிடமிருந்து பெற்றுக் கொள்வது குறைவு. மனிதனுக்குக் கொடுப்பது கூட. இதுதான் உண்மையான தியாகமாகும். இதேபோல் மனிதனும் உலகத்தினிடமிருந்து பெற்றுக் கொள்வது குறைவாகவும் உலகத்திற்குத் திருப்பிக் கொடுப்பது கூடுதலாகவும் அமைய வேண்டும்.
பஞ்ச கெளவியம் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்தலைத் தேவாரத் திருமுறைகளிற் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. “அரன் அஞ்சாடும் முடியான் பாலொடான் அஞ்சும் ஆடவல்லானை கண்ணுதற்பெருமான் புனையும்’திருநீறு உண்டாவதற்கு மூலமாகிய கோமயத்தைப் பசுக்கள் தருகின்றன.
மாமன்றத்தினால் வெளியிடப்பு மாமன்றத் தலைமையகத்தி
இந்து மக்களுக்கு ஒரு கையேடு
இந்து மக்களுக்குத் தேவையான பயனுள்ள பல விடயங்களை உள்ளடக்கிய கைநூல். ரூபா 140/= பெறுமதியான இந்த நூலை, இப்பொழுது சலுகை விலையாக ரூபா 100/=க்கு வழங்குகிறோம். (தபாற் செலவு ரூபா 12/50.)
தலைமையகக் கட்டிடப் பூர்த்திச் சிறப்பு மலர்
இலங்கையிலுள்ள திருத்தலங்கள், இலங்கையின் இந்து சமயப் பெரியார்கள், இலங்கையில் இந்துமத வரலாறு, வளர்ச்சி மற்றும் இந்துமத ஸ்தாபனங்களின் பணிகள், இறைவழிபாடு போன்ற விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆன்மீக தத்துவங்கள் அடங்கியதாக வெளிவந்திருக்கிறது.
அனைவருக்கும் பயனுள்ள ஒரு வெளியீடு.
விலை ரூபா 150/= (தபாற்செலவு ரூபா 25/=)
–e4Gs 49ae-e/GS 49ae(இந்து ஒளி (
 

பசுவின் கொம்பினடியில் நாராயணரும் நான்முகனும் வசிக்கின்றனர்; கொம்பின் நுனியில் கோதாவரி முதலிய தீர்த்தங்களும், சராசரமும், சிரத்தில் சிவபெருமானும், நடுநெற்றியில் பார்வதிதேவியும், நாசிநுனியில் முருகவேளும், உள்நாசியில் திசை பாலகர்களும் வாழ்கின்றனர்; செவிகளில் அசுவினி தேவர்களும், கண்களில் சந்திர சூரியரும், பற்களில் வாயுதேவனும், நாவில் வருண பகவானும் வாழ்கின்றனர்; நான்கு கால்களில் அநிலர்களும், முழங்காலில் மருத்துக்களும், குளம்பின் நுனியில் நாக உலகத்தார்களும், குளம்பின் நடுவில் கந்தருவரும், மேற்குளம்பில் தேவமாதரும், முதுகில் உருத்திரரும் வாழ்கிறார்கள்.
இத்தகைய பசு நமது வீட்டில் இருக்குமானால் நமக்கு ஒரு குறையும் வராது. இத்தகைய பசுவை இன்று உலகம் முழுவதிலும் கொன்று ஒழித்துக் கொண்டு வருகிறார்கள். தெய்வமாக வணங்கும் பசுவை கேட்டதெல்லாம் கொடுத்து நம்மை வாழ வைக்கும் காமதேனுவைக் கொலை செய்வதை இந்துக்கள் அனுமதிக்கக் கூடாது.
ہوٹعد<جگےے پحچھ صحeوٹعد<جے پحzھهصوٹe-
பட்டுள்ள பின்வரும் நூல்களை
ல் பெற்றுக் கொள்ளலாம்.
AN ELUCDATION OF THE TRUPPASURAM திருப்பாசுரத்தின் விளக்கம் (ஆங்கில நூல்)
யாழ், சைவபரிபாலன சபையினரால் முன்னர்
வெளியிடப்பட்ட நூலை மாமன்றம் மறுபிரசுரமாக வெளியிட்டுள்ளது.
விலை ரூபா 50/= (தபாற்செலவு 12/50.)
(GLORIES OF SHAIVAISM)
சைவப் பெரியார் எஸ். சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட மேற்படி நூலை மாமன்றம் மறு பதிப்பாக வெளியிட்டுள்ளது.
விலை ரூபா 30/= (தபாற்செலவு ரூபா 12/50.)
மேற்படி நூல்களை தபாலில் பெறவிரும்பு பவர்கள், அதற்குரிய பணத்தை காசோலை அல்லது காசுக் கட்டளை மூலமாக அனுப்பிவைக்கலாம். பணம் பெறுபவர் பெயர்: அகில இலங்கை இந்து மாமன்றம் எனவும் பணம் பெறும் இடம்: கொழும்பு என்றும் குறிப்பிடவேண்டும்.
—ESKS 26Gae9—S4GS F2SRSae9
சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி D

Page 27
இது சிறுவர்களுக்கான சி ஒன்றினை இங்கு தருகி இக்கதையைப் படித்துக் காட்
சூழ்நிை
கோபாலன் ஒர் ஆடுமேய்க்கும் சிறுவன். அவனிடம்
அருமையான ஆட்டு மந்தை இருந்தது. அவன் ஒவ்வொரு நாளும் மேய்ச்சலுக்காக இந்த ஆட்டு மந்தையைக் காட்டுக்கு ஒட்டிச் செல்வான்.
பச்சைப்பசேல் என்ற புல்லையும் தழைகளையும் ஆடுகள் வயிறார மேய்ந்து கொண்டிருக்கும்போது கோபாலன் பக்கத்திலிருந்த ஆற்றின் கரையில் நன்றாக வளர்ந்து நின்ற மரத்தின் வளைந்த ஒரு கிளையில் அமர்ந்து புல்லாங்குழலை வாசிப்பது வழக்கம்.
ஒருநாள் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தபோது, நதிக்கரையின் ஒரமாக ஒரு பெண் சிங்கம், இறந்து கிடப்பதைக் கோபாலன் பார்த்தான். அதன் அருகே அப்போதுதான் . ኦ பிறந்த சிங்கக் குட்டி ஒன்று கிடப்பதையும் மரத்தின் மீதிருந்தபடியே பார்த்தான்.
வேகமாக இறங்கி சிங்கம் கிடந்த இடத்திற்கு ஓடினான். என்ன நடந்திருக்கக் கூடும் என்பதைப் பார்த்த அந்தக் கணத்திலேயே ஊகித்துக் கொண்டான்.
“தாய்ச்சிங்கம் இந்தக் கரையை அடைவதற்காக மறு பக்கத்தில் இருந்து குதித்துப் பின் நீந்தி வந்திருக்கிறது. பாவம், பூரண கர்ப்பிணியாக இருந்ததால் அது குட்டியை ஈன்று விட்டு இறந்து விட்டிருக்கிறது” என்று அறிந்து கொண்டான்.
பெற்ற தாயை இழந்து அனாதையாகக் கிடக்கும் சிங்கக்குட்டி கொள்ளை அழகோடு காணப்பட்டது. அதைத் தூக்கிக் கொண்டு ஆடுகளோடு வீடு வந்து சேர்ந்தான் கோபாலன்.
ஆட்டுப்பாலை அந்தச் சிங்கம் குட்டிக்குப் புகட்டினான். பின் ஆட்டு மந்தைகளுடன் அதைக்
கொண்டுபோய்ச் சேர்த்தான். ஆடுகளுக்குக் கொடுப்பது போலவே பாலையும் புல்லையும் சிங்கக் குட்டிக்கும் கொடுத்து வளர்த்தான்.
அந்தச் சிங்கக்குட்டி நாளடைவில் ஆடுகளுக்கிடையில் ஒர் ஆடு போன்றே வளர்ந்து வந்தது. மற்ற ஆடுகளுடன் அதனையும் புல்வெளிக்கு ஒட்டிச் செல்வான் கோபாலன். ஆடுகளைப் போலவே புல்மேய்வது, ஆட்டுப்பாலைக் குடித்து ஆடுகள் போலவே கத்துவது. இவையெல்லாம் அந்தச் சிங்கக் குட்டிக்கு வழக்கமாயிற்று.
ஒருநாள், எப்போதும் போல் ஆடுகள் ஆற்றங்கரையில்
புல் மேய்ந்து கொண்டிருந்தன. ஏதோ வேலையாக கோபாலன்
(இந்து ஒளி (2.
 
 

>ப்புப் பகுதி. பூநீராமகிருஷ்ணரின் நீதிக் கதை றாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டி அதன் தத்துவத்தை விளக்குவது கடன்.
oயின் வலிமை
தொலைவில் சென்றிருந்தான். அங்கே வந்த ஒரு பெரிய சிங்கம் அந்த ஆடுகளின் மீது பாய்ந்தது. ஆடுகள் பயந்து ஒலமிட்டவாறு திசைக்கு ஒன்றாக ஓடின.
சிங்கக் குட்டியும் ஆடுபோலக் கத்திக்கொண்டு தலைதெறிக் ஓடியது. அந்தச் சிங்கக் குட்டியைக் கண்ட பெரிய சிங்கத்திற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நடுங்கிக் கொண்டு ஓடிய சிங்கக் குட்டியின் மீது பாய்ந்து அதன் கழுத்தைக் கெளவிப் பிடித்துக் கொண்டது.
மாட்டிக் கொண்ட சிங்கக் குட்டி ஆட்டுக் குட்டிபோல் பரிதாபமாகக் கத்திற்று.
‘என்னைப் போல நீயும் சிங்கமாயிற்றே? ஏன் இப்படி
ஆடுமாதிரி கத்துகிறாய்?’ என்று கேட்டது பெரிய சிங்கம்
இந்த வார்த்தையைக் கேட்ட சிங்கக்குட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் ஆடு என்பதை அது உறுதியாக நம்பியது.
குட்டிச் சிங்கம் ஓடாமல் இருக்க வேண்டி பெரிய சிங்கம் அதனைக் கெட்டியாகப் பிடித்து ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்றது. தண்ணிர் அருகே கொண்டுபோய், “இதோ இந்த தண்ணிரில் தெரியும் உன் பிம்பத்தைக் கவனமாகப் பார் நாம் இரண்டு பேரும் ஒரே மாதிரித்தானே இருக்கிறோம்” என்று கேட்டது பெரியசிங்தம்.
சித்திரபானு வருடம் ஐப்பசி * மார்கழி)

Page 28
நீரில் தெரியும் தன் பிம்பத்தையும் சிங்கத்தையும் மாறி மாறிப் பார்த்தது சிங்கக் குட்டி. அதனுடைய உருவம் சற்றுச் சிறிதாக இருந்தது. அவ்வளவுதான் வித்தியாசம். ஆச்சரியத்தோடு பெரிய சிங்கத்தை ஏறெடுத்துப் பார்த்தது.
பெரிய சிங்கம் பெரிதாகக் காடு அதிர ஒருமுறை கர்ஜித்துவிட்டு, “குட்டியைப் பார்த்து,நான் கர்ஜித்ததுமாதிரி நீயும் கர்ஜனை செய்” என்றது.
சிங்கக்குட்டி குரல் எழுப்பிற்று. ஆனால் பாவம், அது ஆடு கத்துவதுபோலத்தான் இருந்தது. மீண்டும் ஒருமுறைகத்திப் பார்த்தது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்றது.
சிறிது சிறிதாக அதன் கர்ஜனை வலுக்கத் தொடங்கியது. முடிவில் பெரிய சிங்கம் போலவே கர்ஜிக்கத் தொடங்கியது.
tiltibi-dipetitiibitibi-Hittie
நில்லவரென்று மற்றவர் சொல்ல வே
ஒவ்வொருவரும் விரும்பவேண்டும். அது உய அம்சமாகும் என்பதை,
“தோன்றிற் புகழொடு தோ தோன்றலிற்றோன்றாமை
எனத் திருவள்ளுவர் கூறுவதிற் "நீநல்ல பிள்ளை” யென்றால் ஆ யென்றால் அது மிகவும் துன் என்னும்போது யாம் மகி வேண்டியதுமான உணர்ச்சிக சொன்னாலு மென்ன என்ற உ6
 
 

தன் கர்ஜனையைத் தானே கேட்டதும் அதற்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பெரிய சிங்கத்தோடு சேர்ந்து கர்ஜனை செய்தது சிங்கக்குட்டி.
முழுமையாக அதைச் சிங்கமாக்க வேண்டும் என்று விரும்பியது பெரிய சிங்கம். உடனே பக்கத்தில் பாய்ந்து ஓடிய மானை அடித்துக் கொன்றது. பிறகு அதன் உடலிலிருந்து ஒரு துண்டு மாமிசத்தைச் சிங்கக் குட்டியின் வாயில் திணித்தது.
இதுநாள் வரை புல்லையே மேய்ந்து வந்த சிங்கக் குட்டிக்கு மானின் இறைச்சி மிகுந்த சுவை உடையதாகவே இருந்தது. இறைச்சியை நன்கு சுவைத்து உண்டு விட்டு மகிழ்ச்சிப் பெருக்கால் கர்ஜனை செய்தது.
பிறகு பெரிய சிங்கத்தோடு காட்டிற்குள் பாய்ந்தோடி மறைந்தது.
தன்னுடைய உண்மை இயல்பை மறந்திருந்த இந்த சிங்கக் குட்டியைப் போல்தான் நாமெல்லாம் இருக்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் ஒரு தெய்வக்கனவில் சிறு பொறி, இந்த உண்மையை நாம் உணரவில்லை.
பெரிய ஞானி ஒருவர் நம்மிடையே தோன்றி நம் உண்மை நிலையை சான்றுகளோடு விளக்கி நிலைநாட்டும் போதுதான் இதை உணர்கிறோம். பின்பே நம்மிடம் உள்ள குறைகள் நீங்கி பெருநிலை அடைகிறோம்.
நாம் அந்த ஆட்டுக்குட்டி போல் இருக்கக்கூடாது. நம் சிங்கத் தன்மையில் ஒன்றுபட ஒவ்வொரு நாளும் முயன்று வரவேண்டும்.
(நன்றி. பூரீ இராமகிருஷ்ணரின் நீதிக்கதைகள்)
SZLzzeYYLLLLLLYeLLLLLLYeezLLLLLzeYYLLLLLLSS
KC-3 1ண்டும் என யார்தான் விரும்பாதவர். அப்படி
பர்ந்த இலட்சியத்தைக் கொண்ட வாழ்க்கையின்
ான்றுக அஃதில்லார் நன்று”
காண்கின்றோம். ஒருசிறுபிள்ளையைப் பார்த்து அதுமிகவும் மகிழ்கின்றது. “நீ கூடாத பிள்ளை” புறுகிறது. இவ்வுணர்ச்சிகளை - நல்லவர் ழ்கிறதும், கெட்டவர் என்றால் துன்புற ளை - யாம் வளர்க்கவேண்டும். யாரென்ன ணர்ச்சியை வளர்க்கக்கூடாது.
சிவதொண்டன்
كم
20)
சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 29
இது மாணவர்களுக்கான L உட்பட மாணவர்களுக்கும் இது போன்ற விஷயங்கே
5TT60) d535TT6)b60)IDUITIt
சோழ நாட்டில், காரைக்கால் என்னும் திருநகரில் தனதத்தனார் என்னும் வணிகர் ஒருவர் இருந்தார். அவருக்குப் புனிதவதியார் என்னும் திருமகளார் அவதரித்தார். அவ்வம்மையார் பரமதத்தன் என்னும் வணிகரை மணந்து அன்புற்று இன்புற்று இல்லறம் நடத்தி வந்தார்.
ஒருநாள் பரமதத்தனைத் தொழில் காரணமாகக் காண வந்த சிலர், அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தனர். பரமதத்தன் அவற்றை வீட்டுக்கு அனுப்பினான். புனிதவதியார் அவற்றை வாங்கிப்பத்திரமாக வைத்தார். அச்சமயம் சிவனடியார் ஒருவர் வந்தார். மிகுந்த பசியுடன் வந்த அடியவரைப்புனிதவதியார் முகமலர்ந்து வரவேற்று அன்போடு அமுதிட்டார்; கணவனார் அனுப்பியமாங்கனிகளில் ஒன்றை அவருக்களித்தார். சிவனடியார் வயிறார அமுதுண்டு சென்றார்.
பின்னர், பரமதத்தன் வீட்டுக்கு வந்து உணவருந்தினான். புனிதவதியார் எஞ்சியிருந்த ஒரு மாங்கனியைக் கணவனுக்குப் படைத்தார். அதனை உண்ட பரமதத்தன் அது மிகமிக இனிமையாக இருந்ததால் மற்றொன்றையும் கேட்டான். புனிதவதியார் ஒன்றும் தோன்றாமல் கடவுளை வேண்டி மாங்கனியொன்றினைப் பெற்றுக் கணவனிடம் கொடுத்தார். அக்கனியோ முன் உண்ட கனியைவிடப் பன்மடங்கு இனிமையாக இருப்பதைக் கண்டு அவன் "இது நான் அனுப்பிய பழம் அன்று; இப்பழம் உனக்கு ஏது?” என்று கேட்டான். அம்மையார் அக்கனியின் வரலாற்றைக் கூற, பரமதத்தன் வியப்படைந்து, "அப்படியாயின் மற்றொரு கனியை வரவழை, பார்க்கலாம்” என்றான். அம்மையார் முன்போலவே இறைவனை வேண்டினார். அதிமதுர மாங்கனியொன்று மீண்டும் அவர் கையில் வந்து நின்றது. பரமதத்தன் அதனைக் கையில் வாங்கினான். அது திடீரென்று மறைந்தது. அந்த அற்புதத்தைக் கண்ட பரமதத்தன் அவர் தெய்வப் பிறவியே என எண்ணி, அவருடன் வாழ அஞ்சி வாணிகம் செய்வதற்குச் செல்வானைப் போலக் கடற்கரைப் பட்டினமொன்றை அடைந்து அங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் இயற்றினான்; அவள் வயிற்றில் பிறந்த பெண்ணுக்குப் புனிதவதியென்றே பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தான்.
புனிதவதியாரின் சுற்றத்தார்கள் பரமதத்தன் பாண்டி நாட்டில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரை அங்கு அழைத்துக் கொண்டு சென்றனர். புனிதவதியாரின் வருகையை அறிந்த பரமதத்தன் தன் குடும்பத்துடன் சென்று அவரை வணங்கி வரவேற்றான். அதுகண்ட உறவினர், 'உன் மனைவியை நீ வணங்குவது ஏன்? என்று கேட்டனர். பரமதத்தன் அவர்களைப் பார்த்து, "இவர் மானிடர் அல்லர்; நான் வணங்கும் தெய்வம்;
(இந்து ஒளி (
 

$கம். இதில் சமய வரலாறு, மற்றும் புராணக் கதைகள் பயனுள்ள பல விஷயங்கள் அலங்கரிக்கப்படுகிறது.
மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
ராணக் கதைகள்
நீங்களும் வணங்குங்கள்” என்றான். புனிதவதியார் அச்சொற்களைக் கேட்டவுடன் இறைவனை வணங்கித் தம் கணவனுக்காகத் தாங்கியிருந்த மனித உருவம் நீங்கிப்பேயுருவம் பெற்றார். இச்செய்தியைச் சேக்கிழார்,
ஆனவப் பொழுது மன்றுள்
ஆடுவார் அருளினாலே மேனெறி உணர்வு கூர
வேண்டிற்றே பெறுவார் மெய்யில் ஊனுடை வனப்பை எல்லாம்
உதறினற் புடம்பே யாக வானமும் நிலனும் எல்லாம்
வனங்குபேய் வடிவம் ஆனார்”
(மன்றுள் ஆடுவார் - நடராசப் பெருமான். மேல்நெறி - முத்தி. மெய்யில் - உடம்பில், எற்புடம்பு- எலும்புரு. பேயுரு. வானம் - தேவர், நிலன் - உலக மக்கள்.)
அதன் பின்னர், அம்மையார் பல பிரபந்தங்கள் பாடிச் சிவபெருமானைத் தரிசிக்கத்திருக்கயிலைக்குத் தலையால் நடந்து சென்றார். சிவபெருமான் அவரை, “அம்மையே வா” என்று அழைத்தார். புனிதவதியார் “அப்பா” என்று அலறி அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். பின்னர் அம்மையார் அவரை நோக்க, ‘ஐயனே எக்காலத்தும் மாறாத அன்பு வேண்டும்; இனி உலகில் பிறவாதிருக்கவேண்டும்; பிறந்தாலும் உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும். நீஆடுகின்றபோதுநான் மகிழ்ந்து பாடிக் கொண்டு உன் திருவடி கீழே இருத்தலும் வேண்டும்” என்று வேண்டினார். பின்னர் சிவபெருமானின் கட்டளைப்படி திருவாலங்காட்டிற்குச் சென்று அவருடைய திருநடனம் கண்டு சிவப்பேறு பெற்றார். அவர் சிவபெருமானால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டதால் காரைக்காலம்மையார் என்று வழங்கப் பெற்றார்.
9519356i 5TTL60Ti
அப்பூதியடிகள் சோழ மண்டலத்தில் திங்களூரில் அவதரித்தார்; இவர் அந்தணர் குலத்தைச் சார்ந்தவர்; திருநாவுக்கரசரை நேரில் காணாதவராயினும் அவர்மீது மிகுந்த பக்திபூண்டு அவர் பெயரையே தம் மக்களுக்கும் வைத்திருந்தார். தாம் அமைத்த திருமடம், தண்ணிர்ப் பந்தல், சாலை, குளம் முதலியவைகளுக்கும் திருநாவுக்கரசர் பெயரையே இட்டு வழங்கினார்.
சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி)

Page 30
ஒரு சமயம் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்திருந்தார். அங்கு நாவுக்கரசர் அப்பூதியடிகளாரின் செயல்களை அறிந்து அவரைப் பார்த்து, “உம்முடைய பெயரால் தண்ணீர்ப் பந்தல் முதலியவற்றை வையாமல் வேறொரு பெயரால் வைத்த காரணம் என்ன?’ என்றார். அப்பூதியடிகள் அவரை இன்னா ரென்றறியாதவராய், “சமண சமயத்தினின்று நீங்கிக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கடந்தவர் திருப்பெயரோ வேறொரு பெயர் என்று சொல்லத்தக்கது? திருநாவுக்கரசரின் பெருமையை உணராமல் சிவ வேடந்தாங்கியுள்ள நீர் யார்?’ என்றார்.
அதற்குத் திருநாவுக்கரசர் கூறிய மறுமொழியாகச் சேக்கிழார் பெருமான்,
திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசரவர் பெருமையறிந்துரைசெய்வார் பிறதுறையி னின்றே
அருளுபெருஞ் குலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளுமுனர் வில்லாத
சிறுமையேன் யான்’ என்றார்”
(தெருளு உணர்வு- தெளிவான அறிவு. பிறதுறை-புறச் சமயம், சமண சமயம்) என்று பாடியுள்ளார்.
வந்தவர் நாவரசரே என்பதை நன்கறிந்த அப்பூதியடிகள் இன்பக் கடலில் திளைத்து அவரடிகளில் வீழ்ந்து வணங்கினார்; அவரைத் தம் இல்லத்தில் திருவமுது செய்யுமாறு வேண்டினார். அரசர் அதற்கு இணங்கினார்.
அப்பூதியடிகள் திருநாவுக்கரசருக்கு அன்னம் பரிமாறுவதற்காகத் தம் மகனாகிய மூத்த திருநாவுக்கரசை அனுப்பி
چیچہ کسی چیححب~صحسچے سمجچحصحمحےسےچ کھیجیححب>صحمحسیجیے$ کیخیص
S இக் கலியுகத்திலே மக்கள்.
விட்டார்கள். எது வேண்டுமாயினும் செய் S தலங்களுக்கும் சென்றால் பாவம்
அழுக்குள்ளத்துடன் திருக் கோயில் செ அதிகமாக்கிக் கொள்கின்றான். முன்னிலு புண்ணிய தலங்களும் புண்ணிய தீர்த்த 淤 நிறைந்தவை. புண்ணிய நதியில்லாத, புண்ணிய புருஷர் இருந்தால் அவ்விட செய்பவர் மலிந்த ஒரிடத்திலே நூறு திருக் M தலமாகாது. புண்ணியதலங்களில் வசிப் ஏதாவது பாவம் செய்தால் அதை நீக்குத் 经 செய்தால் அதைப் போக்கல் அரிது; மிக
墅。 -a-34(இந்து ஒளி

வீட்டின்புறத்தில் இருக்கும் வாழை மரத்திலிருந்து இலை பறித்து வருமாறு அனுப்பினார். அச்சிறுவன் வாழையிலை பறிக்கும் போது பாம்பு ஒன்று அவனைத் தீண்டியது. அவன் அரிந்த இலையை ஒடிச் சென்று தந்தையாரிடம் கொடுத்து நடந்ததைக் கூறி விஷம் தலைக்கேற மரணம் அடைந்தான். அப்பூதியடிகள் அவன் உடலை மறைத்து வைத்து திருநாவுக்கரசருக்கு அமுது பரிமாறினார். இத்தகைய அப்பூதியடிகளாரின் செயலைப் பெரிய புராணம்,
தளர்ந்துவிழ் மகனைக் கண்டு
தாயாரும் தந்தை யாரும் உள7ம்பதைத்து உற்று நோக்கி
உதிரம்சோர் வடிவும் மேனி விளங்கிய குறியும் கண்டு
விடத்தினால் விழ்ந்தான் என்று துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுதுசெய்வதற்குச் சூழ்வார்”
(உதிரம் - இரத்தம். வீந்தான் - இறந்தான்) என்று குறிப்பிடுகின்றது.
நாவரசர் உண்பதற்கு முன் யாவருக்கும் திருநீறு அளித்தார். அப்பூதியடிகள் கவலை கொண்டிருத்தலை இறையருளால் உணர்ந்த நாவுக்கரசர் “உங்கள் மூத்த மைந்தன் எங்கே?” என்றார். பெற்றோர்கள் இருவரும் அவரைப் பார்த்து, “பெரியீர், அவன் இப்போது தங்களுக்கு உதவ மாட்டான்” என்றனர். நாவரசர் செய்தியை அறிந்து ஆலயத்துக்குச் சென்று, 'ஒன்றுகொலாம்” என்னும் திருப்பதிகம் பாடினார். பிள்ளை தூங்கி விழிப்பவன் போல் உயிர் பெற்று எழுந்தான். பின்னர் திருநாவுக்கரசர் திருவமுது உண்டு சென்றார். அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் திருவடிகளையே நினைந்து நினைந்து சிவபரம்
பொருளின் திருவடிகளை அடைந்தார்.
ALeSeALALLSAAAAA AALSLYLSLSeALALLSAAAAA qSYLeLSLALLSAAAA LASLSLYLSeALLLLLSAAAAA
மிகவும் தாழ்ந்த நிலையை அடைந்து யலாம். பின்புண்ணியதீர்த்தங்களுக்கும் நீங்கும் என்று கருது கின்றார்கள் ல்பவன் தன் பாவ முட்டையை மேலும் ம் பெரிய பாவியாகி வீடு திரும்புகின்றான். ங்களும் புனிதமானவை; புனித மாதவர் திருக்கோவில் இல்லாத இடத்திலே ஒரு மும் புண்ணிய கூேடித்திரமே. பாவமே கோவில்கள் இருந்தாலும் அது புண்ணிய பதுமிகக் கடினம்; ஏன்? மற்ற இடங்களில் ல் எளிது. புண்ணிய தலங்களில் பாவம் அரிது.
(சுவாமி விவேகானந்தர்)
2
8) சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி D

Page 31
リlなエすrYYYマ − 军津 なr 甄
திருவிளை
5TIOGIDuig, IIL6)
குலோத்துங்க பாண்டியனுக்குப் பின்னர் அனந்தகுண பாண்டியன் என்பவன் பட்டத்துக்கு வந்தான். அவன் திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து (பஞ்சாட்சரம்) என்னும் மூன்றுமே மெய்ப் பொருள்கள் என்று தெளிந்து, அவற்றில் மிகுந்த பக்தியுடையவனாக இருந்தான். அவனால் பாண்டிய நாடெங்கும் சைவ சமய நெறி தழைத்து ஓங்கியது. அதனை உணர்ந்து எண்ணாயிரம் சமணர்களும் பாண்டியனைக் கொல்ல ஒரு காத அளவில் ஒரு யாகம் செய்தார்கள். அந்த யாகக் குண்டத்திலிருந்து தோன்றிய ஒரு கொடிய அரக்கனைப் பாண்டியனையும், மதுரையையும் விழுங்கி வருமாறு ஏவினார்கள்.
அந்த அசுரன் வானத்தையும் தொடுகின்ற ஒரு பெரிய நச்சுப் பாம்பாக வேடங்கொண்டு உலகமெல்லாம் நடுநடுங்குமாறு மதுரையின் மேற்குத் திசையில் வந்து சேர்ந்தான். பாண்டியன் அதனையறிந்து முன்னர் யானையை விட்டவர்களே இப்போது இந்த நாகத்தை அனுப்பி இருக்க வேண்டுமென உணர்ந்து, சோமசுந்தரப் பெருமானைத் தியானித்தான்.
பின்பு, பாண்டிய மன்னன் ஈசனின் அனுமதி பெற்று, மதுரையின் மேற்கு வாயிலை அடைந்து, அந்நாகத்தைப் பார்த்தான். பாம்பாகிய அசுரன் பல்லை அதுக்கி எட்டுத் திக்கும் அதிரும்படி சீறினான். பாண்டிய மன்னன் இறைவனைத் தியானித்துக் கொண்டே அர்த்தசந்திர பாணமொன்றை ஏவி அப்பாம்பைத் துண்டித்தான். அசுரன் இறக்கும்போது ஆலகால வெள்ளம்போல் நஞ்சைக் கக்கினான். அதனால் நகர மக்கள் யாவரும் நிலை தளர்ந்தனர்; தலை தடு மாறினர்; உரை குழறினர். சோமசுந்தரப் பெருமான் பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்கித் தம் சடையில் உள்ள பிறைச்சந்திரனின் அமுதத்தில் சிறிது துளியைச் சிந்தினார். அத்துளி பாலில் உறை ஊற்றப்பட்டதுபோல நகர முழுவதும் பரவி முன் போலவே மதுரை நகரமாக விளங்கும்படி செய்தது.
IDTTUIIIIIIJr60)6DI 6)I6Oġbġjħġb, LIL GDID
அனந்தகுண பாண்டியன், தாம் அனுப்பிய பாம்பைத் துணித்தமை கண்டு, அதன்பின் வந்த சமணர்கள் காற்றினால் தள்ளுண்ட மேகங்கள் போலக் கலங்கி ஓடினார்கள்; பின்னர் எல்லோரும் ஓரிடத்தில் கூடினார்கள்; பாண்டியன் பசுவுக்கு ஊறு செய்ய மாட்டான் என்று எண்ணி முன்போலவே அபிகார யாகம் செய்தார்கள். ஒமகுண்டத்திலிருந்து ஓர் அசுரன் பசு வடிவில் தோன்றினான். அப்பசு இடிபோல் ஆரவாரித்துக் கொண்டு மதுரையை நெருங்கிற்று.
(இந்து ஒளி (
 

غ%ی
邵
ኳ/
− ':*- エリ] - 義Y] fịTA ཏཱ་ཨོཾ་ཚོ(༡ཏུ་རྟ་རྟ་ ༈༈༈༈་ཏེ་(ཧྰུཾ་ཏཱ་ཊ་ཏུ་ཚྭ་རྒྱུ་ཏུ་ཏུ་
LD IIJIIOIö தைகள்
சிவபெருமான் பாண்டியனுக்கு அருள்புரிய விரும்பி தம் இடபத்தை அனுப்பிச் சமணர்கள் விடுத்த பசுவை வென்றுவருமாறு கட்டளையிட்டார். அவ்விடபம் இரு கண்களிலும் நெருப்புப் பொறி பறக்குமாறு புறப்பட்டது. சமணர்கள் எண்ணியபடி அக்காளை, பகவுக்கு இடையூறு ஒன்றும் புரியவில்லை; அது தன் பேரழகினைக் காட்டி நின்றது. அதன் அழகில் மயங்கிய பசு வீரியத்தை விடுத்து விழுந்து மலை வடிவாக நின்றது. இடபம் உலகத்தாருக்குச் சான்றாகத் தன் பருவுடலை அங்கே இடப மலையாக இருத்தி நுண்ணுடலோடு இறைவனை அடைந்தது.
இராமபிரான் இலங்கைக்குச் சென்றபோது இலக்குவன், அநுமன், சுக்கிரீவன் முதலானவர்களோடு இவ்விடய மலையில் தங்கி, அகத்திய முனிவரால் மதுரையின் பெருமையை அறிந்து வழிபட்டார். இராவணனை வென்று திரும்பும்போதும் சேதுவில் சிவலிங்கப் பிரதிட்டை செய்தார். அதனால் பிரமகத்தியிலிருந்து நீங்கி மீண்டும் சோமசுந்தரப் பெருமானை வணங்கி அயோத்தி நகரை அடைந்தார்.
GoLDild5 5TTIQ IL LIL 6Db
அனந்தகுண பாண்டியன் தன் மகனாகிய குலபூடண பாண்டியனுக்குப் பட்டம் கட்டித் தான் சிவபதவியடைந்தான். குல பூடணனுக்குச் சுந்தர சாமந்தன் என்னும் சேனாதிபதி ஒருவன் இருந்தான். அவன் சிவனடியாரையே சிவன் எனக் கருதிவழிபடும் செந்நெறியில் ஒழுகி வந்தான்.
ஒரு சமயம் சேதிராயன் என்னும் வேடர் தலைவன் பாண்டியன் மேல் படையெடுக்கக் கருதினான். அதனையுணர்ந்த பாண்டியன் மேலும் பல சேனைகளைத் திரட்டுமாறு தன் பொன்னறை முழுவதும் திறந்து வைத்தான். சுந்தர சாமந்தன் அச்செல்வம் முழுவதும் சிவனடியார் பொருட்டும் திருக்கோயிலில் திருக்கோபுரம், ஆயிரங்கால் மண்டபம் போன்ற அமைப்புக்கும் செலவழித்து விட்டான். எனினும் சேனை திரட்டுவது போலவே பாவனைகள் புரிந்து வந்தான். பல நாட்களாக ஒலையெழுதப்பட்ட ஊர்களிலிருந்து சேனைகள் ஒன்றும் வரவில்லை. அரசன் தளபதியாகிய சுந்தர சாமந்தனை அழைத்து, நாளை சூரியன் மறைவதற்குள் சேனைகள் எல்லாம் வர வேண்டும் என்றான்.
சுந்தர சாமந்தன் செய்வது இன்னதென்று அறியாமல் சோமசுந்தரப் பெருமானை வேண்டினான். மறுநாள் சேனையுடன் வருவதாக அசரீரி தோன்றியது. மறுநாட்காலையில் சிவபெருமான் சங்குகன்னர் முதலிய முதற்கணங்களும், குண்டோதரர் முதலிய பூதவீரர்களும் சேனைவடிவம் கொண்டு பலவகைப் படைகளாகி,
சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி)

Page 32
தம் இடபத்தையே குதிரையாக்கி, அதன்மேல் ஏறிச் சேவகராய் வந்தார். பாண்டியன் மனமகிழ்ந்தான். சுந்தர சாமந்தன், தன் கைப்பிரம்பால் சுட்டிக் காட்டி, “மன்னர் மன்னரே, இவர்கள் குருநாட்டார்; இவர்கள் கங்க நாட்டார்; இவர்கள் கன்னட நாட்டார்” என எல்லாப் படைகளையும் ஒவ்வொன்றாக மெய்க்காட்டி அறிவித்தான். அச்சேனையில் தொலைவிலிருந்த குதிரைச் சேவகரைப் பார்த்துப் பாண்டியன், இவர் யார்?’ என்றான். சேனாதிபதி, இச்சேனை வெள்ளத்தில் இவரை யார் என்று அறிவது?’ என்றான். பாண்டியன் அந்த ஒற்றைச் சேவகரைத் தன் அருகில் வரவழைத்து, இரத்தினாபரணங்களும் பட்டாடைகளும் அளித்தான். ஒற்றைச் சேவகனாக வந்த சிவபிரான் தம் அன்பனாகிய சுந்தர சாமந்தன் பொருட்டு அவற்றை வாங்கி அணிந்தார்; தம் சுற்றத்தார்களுக்கும் கொடுத்தார்; பின்னர் தம் குதிரையை ஜங்கதி நடத்திக் காட்டிச் சேனை வெள்ளத்தில் நுழைத்தார்.
அச்சமயம் ஒற்றனொருவன் பாண்டியனிடம் ஓடிவந்து, சேதிராயன் வேட்டைக்குச் சென்று புலியால் கொல்லப்பட்டான்' என்று தெரிவித்தான். பாண்டியன் மனமகிழ்ந்து சுந்தர சாமந்தனுக்குப் பலப்பல வரிசைகளையும் தலைமையும் கொடுத்துப் பாராட்டினான். பின்னர் சுந்தர சம்மந்தனை நோக்கி வந்த சேனைகளைஅவரவர் ஊருக்குப் போகுமாறு செலுத்துக என்றான். சிவபெருமான் தம் கணங்களோடு அங்கிருந்தபடியே மறைந்தருளினார். பாண்டியனுக்கு உண்மை புலப்பட்டது. அவன் சுந்தர சாமந்தனைப் பாராட்டினான்; இறைவர் திருவிளையாடலை எண்ணி எண்ணி அன்பு வடிவமானான்.
9) 6)6)ITTd5 dfij 9(56f LI LIL6)b
குலபூடண பாண்டியன் சோமவார விரதம் கொண்டாடியதுபோல் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். அந்தச் செருக்கினால் அவன் தன் நாட்டில் வாழ்ந்த அந்தணர்களை அவமதித்தான். அதனால் மழை வளங்குறைந்தது; பஞ்சம் நிறைந்தது. அவன் நாட்டில் வாழ்ந்திருந்த பிராமணர்கள் ஏழைகள் ஆகி வெளியூர்களுக்கு ஏகினார்கள். நாட்டுக் குடிகள் பசித் துன்பத்தால் பரிதவித்தார்கள்.
அதுகண்ட பாண்டியன் மனம் இரங்கி, பஞ்சத்தைத் தீர்த்தருளுமாறு சோமசுந்தரப் பெருமானை, வேண்டினான். சிவபெருமான் பாண்டியன் கனவில் தோன்றி, மன்னனே! அன்பும் நீதியும் நிறைந்த நின்பால் ஒரு குறையுள்ளது. உன் நாட்டில் யாகம் குன்றியது; வேதமே தமது செங்கோலாகும். வேதமே நமக்கு எல்லாமாகும். வேதங்களுக்கு உறுதியான அந்தணர்களை நீ அவமதித்தாய். அதனால்தான் மழை பெய்யாமல் பஞ்சம் வந்தது. இனி வேதங்களைக் காத்து, அறங்கள் பலவற்றையும் பெருக்கி வாழ்வாயாக. நாம் உனக்கு ஓர் உலவாக்கிழிதருகிறோம். இந்தக் கிழியிலிருந்து எவ்வளவு பொன் எடுத்துச் செலவிட்டாலும் குறையாது. இதனால் உன் நாட்டின் வறுமையை நீக்குவாயாக
நேர்மையான குறிக்கோள், அளவி சலியாத உழைப்பு - இவைே
(69d
 

என்று சொல்லி, ஒரு கிழியையும் அவன் பக்கத்தில் வைத்து மறைந்தார்.
பாண்டியன் விழித்தெழுந்து, அந்த உலவாக் கிழியைச் சிவபெருமானாகவே பாவித்துச் சிம்மாசனத்தேற்றி வழிபட்டான்; பின்னர் அதனைப் பொதி நீக்கி எடுத்துப் பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் செலவிட்டான்; அப்பொதியிலிருந்த பொன்னாலே பாண்டியன் சோமசுந்தரரின் விமானம், மீனாட்சியம்மையின் விமானம் முதலியவைகளை அழகாக வேய்ந்தான். பாண்டிய நாட்டில் அளகாபுரிபோல் செல்வம் தழைத்து ஓங்கியது. பலவகை அறிஞர்களும் நாட்டில் நிறைந்து விளங்கினார்கள். பாண்டிய நாடு பண்டுபோல் பலவளம் நிறைந்து விளங்கியது.
6)I6o@TuII6i) 6igib go LIL 6DID
ஒரு சமயம் தாருகா வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் மனைவியருடைய கற்பை அளந்து காட்டச் சிவபெருமான் திருவுளம் கொண்டார். கெளமீனமும், விபூதிப் பூச்சும் உடைய பிட்சாடன வடிவம் கொண்டு அவர் தாருகா வனத்தை அடைந்தார். அவருடைய திருச்சிலம்பொலியும், தமருக ஒலியும் கேட்ட முனிவர்களின் மனைவியர் பிச்சையிடுவதற்காக வெளியே வந்தார்கள். வந்தவர்கள் அவர்தம் பேரழகில் மயங்கினார்கள். காமம் மிகுந்து அவர்களுடைய கூந்தல் சோர, புடவை அவிழ, வளையல் சுழல மெய்ம்மறந்து நின்றார்கள். சிவபெருமான் அவர்களை அவ்வாறே காம மயக்கத்தில் ஆழ்ந்திருக்கச் செய்து மறைந்தருளினார்.
முனிவர்கள் தங்கள் மனைவியரின் நிலைகண்டு, நடந்த நிகழ்ச்சியை அறிந்து அவர்களை மதுரை நகரத்து வைசியப் பெண்களாகப் பிறக்குமாறு சாபம் இட்டனர். அப்பெண்மணிகள், தங்கள் சாபம் எப்போது நீங்குமெனக் கேட்டதற்கு முனிவர்கள், அம்மதுரை நகரில் சோமசுந்தரக் கடவுள் வந்து உங்கள் கைகளைத் தொடும்போது இச்சாபம் நீங்கும் என்று கூறினார்கள்.
முனிவர்களின் சாபம் பலித்தது. அவர்தம் மனைவியர் மதுரை நகரில் வைசியப் பெண்களாய்ப் பிறந்து வளர்ந்து வந்தனர். அவர்களுடைய பெதும்பைப் பருவத்தில் சிவபெருமான் வளையல் விற்கும் வணிகராகி வைசிய வீதிக்குச் சென்றார். வைசியப் பெண்கள் அவர் பேரழகில் மயங்கினார்கள். வணிகர் அவர்கள் கைகளில் வளையல் இட்டுவிட்டு மறைந்தருளினார். மறைந்தவர் யாவரும் காணுமாறு திருக்கோயில் விமானத்து உள்ளொளியாகிய திருவுருவாய்த் தோன்றியருளினார். வளையல் விற்றவர் சோமசுந்தரக் கடவுளே என அறிந்துஅனைவரும் வியந்து மகிழ்ந்து துதித்தனர். சிவபெருமான் திருக்கரம் பட்டதால் வைசியப் பெண்கள் யாவரும் கருக்கொண்டு, வீரமும் தீரமும் வாய்ந்த நன்மக்களைப் பெற்றுச் சில நாள் வாழ்ந்து சிவலோகம் அடைந்தார்கள்.
ற்ற ஊக்கம், தளர்வற்ற நெஞ்சுறுதி,
மனிதனை உயர்த்திச் செல்லும்.
அறிஞர்)
30 சித்திரபானு வருடம் ஐப்பசி - மார்கழி D

Page 33
என். ச நஸ்ரியா மத்திய
திருமால் சீராக பள்ளி கொண்டதால் திருச்சி என்று தற்போது அழைக்கப்படும் இந்த நகரத்தின் இயற்பெயர் திருச்சிராப்பள்ளி எனப்படுகின்றது. ஆழ்வார்கள் மங்களாசனம் செய்துள்ள வைஸ்ணவ திவ்ய தேசங்கள் 108 ஆகும். அதாவது சோழநாட்டிலே 40, பாண்டிய நாடு 18, மலைநாடு 13, நடுநாடு 2, தொண்டைநாடு 22, வடநாடு 12, திருநாடு 1, என திவ்யதேசங்கள் 108 உள்ளன. வைஸ்ணவர்கள் கொண்டாடும் குடமுழுக்கு விழா வரலாற்று புகழ்மிக்கது கும்பாபிஷேக விழா என்றால் பல லட்சக்கணக்கான அடியார் கூடி திருச்சிராப்பள்ளி நகரமே விழாக்கோலம்பூண்டு காணப்படும். அடியார்கள் புடைசூழ நான்கு கருடப்பறவைகள் விமானத்தின் மேல் வட்டமிட்டு பறந்து கொண்டிருந்த வேளையில் “ரெங்கா’ “ரெங்கா’ என்று கோஷங்கள் எழுப்பியவாறு குடமுழுக்கு விழா கண் கொள்ளாக்
காட்சியாக காணப்படும்.
26OuJoJJoong)
பிரம்ம தேவன் திருமாலைக் குறித்து கடும் தவம் புரிந்தபோது திருப்பாற்கடலின் நடுவிலிருந்து ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்தோடு பூரீரெங்க விமானத்துடன் கருடாழ்வார் தாங்கிவர பூரீ ரங்க நாதர் வெளிப்பட்டார். பூரீ வைகுண்டத்தில் உள்ள யாவரும் விமானத்தில் இருக்கக் கண்டார் பிரம்மதேவர் விமானத்துடன் கூடிய பூரீரெங்க நாதரை சத்திய லோகத்தில் வைத்து பூஜைகள் செய்து பிரம்ம தேவர் வழிபட்டு வந்தார்.
இப்பூவுலகில் வந்த மனுகுமாரன் இலட்சுவாகு என்னும் மன்னன் தசரத சக்கரவர்த்திக்கு மூன்று தலை முறைக்கு முந்தியவன். பூநீரெங்க விமானத்துடன் திருவரங்கனை பூவுலகிற்கு கொண்டுவர பிரம்மதேவரை நோக்கி கடும்தவம் புரிந்தான். அவன் தவவலிமையைக்கண்டு வியந்து பிரம்ம தேவனும் விமானத்துடன் திருவரங்கினைக் கொடுக்க அப்பெருமானை அயோத்திக்கு கொணர்ந்த இலட்சுவாகு மன்னன் பூஜைகள் நடத்தி வழிபட்டு வந்தான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட வண்ணம் உள்ள இப் பெருமானே இலட்சுவாகு மன்னன் முதல் சூரிய குலத்தில் அவதரித்த இராமபிரான் வரையில் உள்ள சூரியகுல மன்னரெல்லாம் வழிபட்டு வந்த குலதெய்வம் பூரீரெங்கநாதர் ஆவர்.
திரேதா யுகத்தில் இராமாவதாரம் மேற்கொண்ட திருமால் இராவணாதி அசுரர்களை அழித்து அயோத்தியில்
(இந்து ஒளி (3
 

ரஸ்வதி கல்லூரி, சிலாபம்.
பட்டம் சூட்டிக் கொண்டார். இலங்கையில் இருந்து தன்னுடன் வந்த விபீடணனுக்கு விடைகொடுத்து அனுப்பும் போது தன் முன்னோர்களால் பூஜிக்கப்பட்டு “ப்ரணா வாக்ருதி” என்ற விமானத்துடன் கூடிய பூரீரெங்கநாதப் பெருமானை விபீடணனுக்கு அன்பளிப்பாக கொடுத்து வழியனுப்பி வைத்தார் பூரீராமபிரான், என்று வால்மீகி இராமாயணம் யுத்தகாண்டம் கூறுகின்றது.
முன்பு ஒரு சமயம் "கங்கையைப் போல் காவிரியையும் புனிதப்படுத்துவதற்காக” கூறிய எம்பெருமான் விபீடணனுக்கு சற்றுகளைப்பையும் உண்டாக்க விபீடணன் தன் உள்ளம் கவர்ந்த பெருமானை காவிரிக்கரையில் வைத்தான். தன் உள்ளம் கவர்ந்த இடமானதாலும் காவிரி நதியைப் புனிதப்படுத்தவும் அசைக்கமுடியாத அளவிற்கு விபீடணன் செல்லக் கூடிய தென் திசையில் உள்ள இலங்கையை நோக்கிய வண்ணம் எம்பெருமான் பள்ளி கொண்டார். விபீடணன் அசதி நீங்கி இலங்கைக்கு புறப்படமுன்பூரீரெங்க விமானத்துடன் ரெங்கநாதரை தூக்கமுற்பட அவனால் அசைக்க முடியவில்லை. அவன் அழுதான், அலறினான், பித்துப்பிடித்த நிலையில் ஒலமிட்டான். எம்பெருமானும் தான் இவ்விடத்தில் பள்ளிகொள்ளத்திருவுள்ளம்பற்றியதை தெரிவித்து "நீ செல்ல வேண்டிய இலங்கையை நோக்கியே நான் பள்ளி கொண்டுள்ளேன்” கவலை வேண்டாம். நீயும் இலங்கைபுரியும் உன் நாட்டு மக்களும் சுபீட்சமாக வாழ அருள்புரிகிறேன் என்றும் அருளினார். 1986 ம் ஆண்டு இக்கோயிலின் முற்றுப்பெறாத இராஜகோபுரம் நிறைவு பெற்று இராஜ கோபுரம் குடமுழுக்கு நடைபெற்றது.
திருவரங்கன் பெருமை
உலகம் போற்றும் இராமாயணத்தை கம்பர் இக் கோவிலில் தான் அரங்கேற்றினார். இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம். அழகிய மணவாளன் என்றால் “அழகான மாப்பிள்ளை’ ஆவர் . பூரீ வில்லிப் புத்தூரின் ஆண்டாளையும், உறையூர் கனகவல்லி நாச்சியாரையும் அழகான மாப்பிள்ளை வடிவில் இங்கு ஏற்றுக் கொண்டவர். ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினொரு ஆழ்வார்களின் மங்களா சாசனத்தைப் பெற்ற திவ்விய தேசமே திருவரங்கமாகும். வேறு எந்த திவ்விய தேசத்திற்கும் இப்பெருமையில்லை.
சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி)

Page 34
வைஷ்ணவ வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் இத்திருவரங்கம் ஒரு பாசறையாக விளங்கியது என்றால் மிகையாகாது திராவிட வேதம் எனப்படும் திவ்வியப் பிரபந்தங்கள் இசையோடு இசைத்து முன்செல்ல அதனை செவிமடுத்த வண்ணம் பெருமான் பின்னேவர “தமிழ் முன் செல்லத் திருமால் பின்வர என தமிழ் பிரபஞ்சங்கட்கு முன்னுரிமை வழங்கிய இராமானுஜர் மோட்சம் அடைந்ததும் திருவரங்கனே. அவர் திருமேனியை வசந்த மண்டபத்தில் வைக்குமாறு பணித்தார். இன்றும் அவரது திருமேனியை தரிசிக்கும் இத்தகைய கீர்த்தி வேறு எந்தக் கோயிலிலும் கிடையாது. திருவரங்கத்திலே எல்லாம் பெரியவை. இராமபிரானால் பூஜிக்கப்பட்ட இந்த ரெங்கநாத பெரிய
SeeeLLLLLLeeLZzLLLLeeeLLLLLLLLZeeLLLLLLLSeeeeLLLLSSS
1. 1தெய்வீகத்
伞 -ܐQܡ
மனதில் மலரச்
ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக் கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நீங்கள் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.
ஒவ்வொரு ஜிவான்மாவிலும் தெய்வீகத்தன்மை மறைந்திருக்கின்றது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்வீகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான இலட்சியமாகும். கர்மயோகம், கடவுள் வழிபாடு, மனக்கட்டுப்பாடு, தத்துவ விசாரம் என்னும் இவற்றுள் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, எல்லாவற்றினாலோ செய்து சாதித்துச் சுதந்திரமாய் இரு. தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிரு. தீய சமஸ்காரங்களைத் தலைகாட்டாதபடி அழுத்தி வைப்பதற்கு அது
r -○ー李○* நல்ல வணக்கம் உண்மையாகத் செய்த பெரும் உதவி காரணமாய்த்தோ ஒழுக்கத்தைக் கொடுக்கின்றது. தாய் அவர்கள் மனமுவக்கும் படிக்கு முயல் காண்கின்றோம். கடவுள் எல்லாவற்றிலு என்று நம்பி வாழ்வதில் காணப்படும் பெற்றாரை வணங்கும் மனப்பயிற்சி வணங்கத் தெரியாது.
 
 

பெருமான் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் இத்தலத்தில் உள்ள இராஜகோபுரம் ஆசியாவிலே மிகப் பெரியது. இங்கு எழுந்தருளியுள்ள கருடாழ்வார் மிகப் பெரியவர். தாயார் பூரீரெங்கநாச்சியார் பெரிய பிராட்டியாவார்.
இங்குள்ள வாத்தியத்திற்கு பெரிய மேளம் என்று பெயர். ஆண்டாளை வளர்த்து இங்குள்ள பெருமானுக்கு மணமுடித்து வைத்த ஆழ்வார் பெரியாழ்வார் ஆவார். எனவே இத்தலம் வைஷ்ணவர்களுக்கு மட்டுமன்றி, இந்துக்களுக்கு மட்டுமன்றி, உலக அனைத்து மக்களுக்கும் உரிய சொத்தாக விளங்குகின்றன. ஆண்டாளும் “வையத்து வாழ்வீர்கள்’ என்று வையத்து மாந்தரையெல்லாம் வாழித்து அருள் பாலிக்கின்றார். -
566)|D6)))) செய்யுங்கள் Ry
ஒன்றே ஒன்றுதான்வழி. எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே.
ஏனென்றால், அவன் ஒருவிதப் பழக்க வழக்கங்களின் தொகுப்பாக, குறிப்பிட்ட ஒர் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும்தான் விளங்குகிறான். அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்து விட முடியும். ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால் தான் உருவாகிறது. எனவே, மேலும் மேலும் மேற்கொள்ளும் பழக்கங்களால்தான் ஒழுக்கத்தை மேலும் சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்க முடியும். பிரம்மச்சாரியம் அனுஷ்டிப்பவனுடைய மூளைக்கு அபாரமான ஆற்றலும் அதீதமான மனவலிமையும் உண்டு.
இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும் வகையில் நம்மை நாமே விட்டு வைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்து விட முடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
- சுவாமி விவேகானந்தர்
KC-3 தோன்றுவது நன்றி உணர்ச்சியிற்றான். தாய்தந்தையர் ன்றும் நன்றியுணர்ச்சியே அவர்களிடம் வணக்கமுள்ள தந்தையருடைய சொல்லைத் தட்டாத நடத்தையிலும் ]கின்ற தன்மையிலும் மக்களுடைய வணக்கத்தைக் ம் கலந்திருக்கிறார். கடவுள் எல்லாவற்றையும் தருகிறார் ன்றி உணர்ச்சியே கடவுள் வணக்கமாய் இருக்கிறது. ஒருவரிடம் ஏற்படாவிட்டால், அவருக்கு கடவுளை
(சிவதொண்டன்)
༄།
32 சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 35
كA
LET US GET TOGE
嵩 TO TS ORIG
Thiruketheeswaram is a pre-historic sacred Kovil in Manthoddam situated in the Mannar District about 7 miles north of the Mannar Town, and famous according to the legends as the Kovil where "Kethu Bagavan" worshipped Lord Eeswaram. Hence this holy shrine acquired the name of Thiruketheeswaram.
According to Dr. Paul E. Peiris an erudite scholar and historian, "long before the arrival of Vijaya (6th century B.C.) there was in Lanka five recognized Eeswarams of Siva which claimed and received adoration of all India. These were Thiruketheeswaram near Mahathitha, Munneswaram Thondeswaram, Thirukoneswaram and NaguleSwaram.
The celebrated historian J.W. Bennet wrote (1843):-"At Mantotte the antiquarian will find a field for research in the still extant remains of remote antiquity, amongst which are the vestiges of an immense tank (Giant Tank) and the ruins of a former Hindu City, built of birch. The antiquity of the Hindus, by whom, Ihumbly presume, the island was originally peopled, and their civilization at the remotest period of history, are recognized by all the ancient Eastern Philosophers."
Another well-known historian, Cassie Chetty had this to say:- "Manthoddam was a center of International Trade. Greeks, Romans, Phoenicians, Arabs, Ethiopians, Persians, Chinese, Japanese, Burmese and others vied with each other at various times to monopolise the trade of North Ceylon."
B. J. Perera a reputed historian wrote:- "Although Mahathitha (Mathoddam) is first mentioned in connection with the landing of Vijaya's second wife, a Royal Princess from the Pandyan
(இந்து ஒளி
 

UM
HER AND REBUILD
INAL GLORY
Kingdom, there is no doubt that it was used as a Port by the Tamils long before the Aryan settlement in Ceylon. The existence of the Temple of Thiruketheeswaram, the origin of which is not covered by existing records, is an indication of the antiquity of the Port. Indeed Mahathitta is the only port in the Island which can be called a buried city. Mahathittha was a great port in the early centuries of the Christian era. Next we have the references in the Sangam Literature of the Tamils describing Mahathitta as a great port."
Hugh Neville, another well-known researcher said in 1887 on the illustrious city of Mathoddam as follows:- "A renowned shrine grew into repute there, dedicated to one Supreme God symbolized by a single stone, and in later times restored by Vijaya, a saivaite, after lying long in ruins. The temple was dedicated as Thiru - Kethes - Waram."
This Kovil dedicated to the worship of the Supreme God Siva has been the most venerated temple for centuries. This Temple and the holy waters of the Palavi Tank by its side are venerated in the sacred hymns of the two foremost Saiva Saints, Thirugnana Sampanthar and Suntharar who lived in the 7th and 8th centuries respectively.
This great Temple was completely destroyed by the Portuguese in the 16th century and the very stones of this Temple were used by them to build the Fort at Mannar, the Churches and also the Hammershield Fort at Kayts.
Sri La Sri Arumuga Navalar who was responsible for renaissance of Saivaism in Sri Lanka in the nineteenth century made the Hindus realize that they were duty bound to rebuild this historic temple. Following his appeal made in i872, the
சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 36
exact location of the destroyed temple was traced and a land in extent of about 40 acres was purchased by Nattucoddai Chettiars on 13th December, 1893 at an auction held at Jaffna Kachcheri and some restoration work was done in the early part of the 20th century.
In fact a small temple was re-consecrated on 28th June 1903. The central shrine which exists today was reconstructed and re-consecrated in about 1921 by the Hindu Public servants working in Mannar and it was then that the Talaimannar Railway Line was constructed. It is also said that with the passage of time the management of the Temple passed into the hands of the Nattucoddai Chettiars of Colombo who maintained the Temple for a few years. However it was on 28th October 1948 an intensive agitation resulted in the formation of Thiruketheeswaram Temple Restoration Society which repaired the Temple and had the Mahakumbabhishekam in August 1952.
The reconstruction of the temple reminiscent of the glory of its original position was planned by the Restoration Society with the advice of savants and sthapathys learned in the art of temple construction, according to the shastras and the foundation for it was laid on 28th November, 1953. Nattucoddai Chettiars formally entrusted the Temple to the Thiruketheeswaram Temple Restoration Society on the 14th September, 1956. The Mahakumbabhishekam of the renovated Temple was held on the 31st October 1960. It was the first phase of reconstruction.
Further renovations were done by the Thiruketheeswaram Temple Restoration Society. Another Mahakumbabhishekam was held on the 4th July 1976.
The work for the next phase with granite workfor the second phase commenced at the School of Architecture and Sculpture in Mahamalepuram in South India. While these preparations were in progress the Sri Lanka Army took over the Temple and its environs in August 1990 and continued to occupy the same for several years. Although they have left the Temple premises their occupation of its environs is a cause of concern to the Restoration Society which has been urging the Government to
(இந்து ஒளி

remove the Armed Forces completely from the environs of the Temple and declare the Temple and its environs as a sacred area.
It is in this background that the Thiruketheeswaram Temple Restoration Society representing the Hindus of our country in performance of its noble task and duty has accelerated the restoration work and plans to have the Mahakumbabhiskeham in April/May 2003. Several millions of rupees are required to restore the Temple to its original glory. It is the duty of each and every Hindu to generously assist the Thiruketheeswaram Temple Restoration Society in this task.
We therefore appeal to all of you to join us and perform this noble obligation.
May Thiruketheeswara Peruman bless you all.
THIRUKETHEESWARAM TEMPLE RESTORATION SOCIETY
Donations can be sent to :
(1) The President
Thiruketheeswaram Temple Restoration Society No. 3, Ramakrishna Avenue, Colombo 6, Sri Lanka. - Tel.: 360316
ΟΥ
(2) The Treasurer
Thiruketheeswaram Temple Restoration Society No. 24, Deal Place A, Colombo 3, Sri Lanka. Tel.: 575566
And remittances can be sent to :-
The Society's A/C No. 00210000 3605 at Nations Trust Bank (Kollupitya Branch), Colombo 3. Sri Lanka.
34) சித்திரபானு வருடம் ஐப்பசி-மார்கழி)

Page 37
BU)GET FOR FURTHER TRUKETEE.
Estimated balance costs of works in Temple (insic
"Kalasams"
Flagstaff (Kodi Thampam)
Silver Shield ('Kawasam for Ambal)
"Nagaaparanam for the main deity (Naga ornam
Throne for Somaskanthar
5 Vehicles for deities ("Vahanams") 5. Wheel Chariots for deities ("Sahadais") Lamps, Brass vessels, umbrellas and other greeti
pooja paying obeisance to God (Godapasaram) Bunch bell
2 Silver Shields
Starting Bell
"Valampuri" Conch
Temple office with furniture and facilities
Library and furniture
Construction of Thirugnanasambanthar madam (
* Stage 1 - Structure Rs. 7.5 M کكسر * Rooms - Stage II Rs. 7.5 M ރf
"Palavi" Theertha Tank Renovatio-1
"Palavi" Bathing Hall کسے
Standby Generator-1 *ܗ -
Sivananthazarīkúlam (5 classrooms), study hall,
6 Qassers for Principal and Lecturers 1epairing chariots and costs of chariots
Construction of 100 public toilets
TOTAL
A. ut கல்வியின் குறிக்கோள் புள்ளி பண்பு நெறி அறி
ళ
\ صےر
 
 
 

RESTORATION WORK AT
WARAM TEMPLE
Rs.
e Temple Premises)
1,000,000.00
3,000,000.00
1,000,000.00
1,000,000.00
1,000,000.00 1,000,000.00 300,000.00
ng appliances used to perform
750,000.00
1,500,000.00
100,000.00 500,000.00
75,000.00
200,000.00 3,000,000.00
بحسبھیجے۔ ۔ ۔ ۔ حس۔
3,000,000.00
with toilets)
سمي
--vesz
lormitory, kitchen, dining hall
Rs.
15,000,000.00 2,000,000.00 1,000,000.00 1,500,000.00 15,000,000.00 9,000,000.00 1,000,000.00 1,000,000.00 62,925,000.00
விவர அறிவைப் பெறுவதல்ல;
வைப் பெறுவதே
ஓர் அறிஞர்
) சித்திரபானு வருடம் ஐப்பசி- மார்கழி)

Page 38
BE MINDFUL OF THE GREATE
Sri Lanka is lucky to possess two Siva Temp saints. Saint Thirugnana Sambandamoorthy Nayanar he and Saint Sundaramoorthy Nayanar have su Thiruketheeswaram, situated near Mannar in the No)
Somany new temples keep coming up in dif Hindus of Ceylon not mindful of the greatest of their t to this cause what a big sum would accrue ! If you wo Temple (Thiruketheeswaram) Lord Siva will shower his
Appeal made by
SRI – LASRIARU
THE HINDU REFORMER AND HE WOULD HAVE MADE THE SAME A
Thirumular a powerful Saint & Yog consequences that would befall on the kin the Supreme God continued to remain ( Poojas & festivals.
முன்னவனார் கோயில் மன்னர்க்குத் தீங்குள வ கன்னங் களவு மிகுந்தி என்னரு நந்தி எடுத்துக "If the regular Poojas and festive Supreme God is deterred, evil would befal inevitable calamity to the country by un
there would be looting an robbery & hi Nandi (Lord Siva) who isbeyond our con
We need more than Rs. 62 Please see the b
-○ーニー○*}
ஊருக்கு உை
நலம் ஒங்கிடும போருக்கு நின் உளம் பொங்க
அமைதி மெய்
 

ST OF THE TEMPLES
tes of which laudatory hymns have been sung by our sang in praise of the Lord of Trincomalee, while both ng in praise of the Lord of Thiruketheeswaram. thern province is now in ruins and covered by jungle.
erent parts of Ceylon from time to time. Why are the 2mples ? If every Saivite in Ceylon contributes his mite uld only heed my advice and complete re-building this favours on you, out of the bounty of his infinite grace.
MUGA NAVALAR,
SAVANT IN OCTOBER 1872. PPEAL EVEN TODAY IF HE WAS ALIVE
i in the following Hymn states the ominous g and his subjects if a temple of Lord Siva, desecrated and vandalized without regular
4000&F&56ir Cyp LqLQ-6ör பாரி வளங்குன்றும் டுங் காசினி ரைத்தானே.
als of Lord Siva the Eternal Omnipotent lon the king and his subjects. There would abated large fires pestilence and famines sh crime". These are divine utterances of ceptučxt.
Million for the current stage udget at page 35
- YTTRS
e--— ழத்திடல் யோகம் у прj வருந்துதல் யாகம் றிடும் போதும் 6ు இல்லாத ஞ்ஞானம்
- மகாகவிபாரதி

Page 39
இரத்மலானையிலுள்ள மாணவர் மானவர்களது பிறந்த
|L
அண்மையில் சென்னையிலிருந்து வருை முனைவர் வை. இரத்தினசபாபதி அவர்க பலாங்கொடையிலும் ெ
 
 

இலவச விடுதியில் தங்கியிருக்கும் நாள் வைபவ நிகழ்வுகள்
விடுதிக்குழு கூட்டம்
க தந்திருந்த சைவ சித்தாந்தப் பேராசிரியர் ள் பம்பலப்பிட்டி சாஸ்வதி மண்டபத்திலும், சாற்பொழி
வாற்றுகிறார்.
Alfaias .

Page 40
ィーベエー
,*gsے کہ اگر இந்தச் சுட்ரில்.
01. பஞ்ச புராணங்கள்
02 ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் சோதி
04. மார்கழித் திருவாதிரை திருவெம்பாவைச் சிறப்பு
05. மேன்மை கொள் சைவ நீதி
06 இன்னும் வேண்டும்
07. இந்துக் கோயில் அமைப்பு
09. திருவைந்தெழுத்துப் பற்றிச் சைவ சித்தாந்தம் கூறுவது
13 நந்திக் கொடி
14 அனுராதபுரம் கோயில் கொண்ட கதிரேசன்
15 வைதீக மரபில் வீரசைவம்
17 வற்றாப்பளை கண்ணகை அம்மன்
ஆலயத் தோற்றமும் வளர்ச்சியும் 19 இந்து மெய்யல் 22. மனிதப் வின் மகத்துவமும்
புனிதப்பணியின் புண்ணியமும்
23. பசுவும் நாமும்
25 சூழ்நிலையின் வலிமை
27 பெரிய புராணக் கதைகள் 29. திருவிளையாடற் புராணக் கதைகள் 37. திருச்சிராப்பள்ளி
32 தெய்வீகத்தன்மையை மனதில் மலரச் செய்யுங்கள்
33. Thiruketheeswaram
அலுவலக உதவி:
SlcD. (p. 56T6O)6OTUI திரு. அ. கனகசூரியர்
 
 
 
 

மறையொடு சைவம் வாழ்க மானிலம் செழித்து வாழ்க கறைமிடற் றண்ணலாதம் அடியவர் இனிது வாழ்க பொறையொடு வாய்மை போற்றிப் புவியினரில் மாந்தரெல்லாம் பிறைதவழி சடையினாரி னருளினால் நீடு வாழ்க
xxx
GñHI Ģg Grif
ஆசிரியர் குழு :
புலவர்அதிருநாவுக்கரசு திரு. கந்தையாநிலகண்டன் திரு. க. இராஜபுவனக்ஸ்வரன் திரு. மு. பவளகாந்தன் திரு.த. மனோகரன் திரு.கு. பார்த்திபன்
ஒரு பிரதியின் விலை in 2000
வருடாந்த சந்தா ரூபா 80.00 வெளிநாட்டு வருடாந்தச் சந்தா US 6 (6)si 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் A, C, H. C. கட்டிடம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை,
கொழும்பு - 2) இலங்கை, இணையத்தளம் : http://www.hinduCongreSS.Org தொலைபேசி எண் : 434990, தொலைநகல்: 34472
Aipasi - Markazhi
ALL CEYLON HINDU CONGRESS 21st DECEMBER 2002
Editorial Board:
Pulavar A. ThirunaVukarasu Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. M. Pavalakanthan Mr. D. Manoharan Mr. G. Partheepan
Price RS. 20.00 per copy Annual Subscription RS. 8O.OO Foreign Subscription U. S. S. 10.00
(including Postage)
ALL CEYLON H I N DU CONGRESS, A. C. H. C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha, Colombo - 2, Sri Lanka. Website: http://www.hinducongress.org Teleph 990, Fax No.: 344720
are those of the contributors.
PRINTED BYUNIEARTs (PVT) LTD., CoLoMBo -13. TEL.: 330195