கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2005.01-03

Page 1
லங்கை இந்து மாமன்றம்
காலாண்டிதழ்
 


Page 2
பொன்விழா ஆரம்ப வைபவி
I I
III MMMM H |TT
III I M I I III IIIIIIII|| IIIIIIIIIIIIIIII TM M T
WHIM I IW IIIIIIIIIIII III". I IIIIIIIIIII||
III III III" I 版 I IIII||I||I||I||I||I||I||I||
IIT III I | |||||||||
|||||||||||||| HTI VIII I
II"대
|||||||||TTI
 

நிகழ்வுகள் - 04.02.2005
III
IIIIIIIIIIIIII||

Page 3
உ ” சிவமயம்
பஞ்சபுரானங்கள்
- திருச்சிற்றம்பலம் -
தேவாரம்
(சுந்தரமூர்த்திநாயனார் அருளியது) பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப் பின்னை யென் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை இன்ன தன்மை யனென்றறி யொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை அன்னம் வைகும் வயல் பழனத்தணி
ஆரூரானை மறக்கலு மாமே.
திருவாசகம் (மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது) இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று தின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை சென்று சென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்று நீ அல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற் பாரே.
திருவிசைப்பா
(கருவூர்த் தேவர் அருளியது) நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
திருப்பல்லாண்டு (சேந்தனார் அருளியது) மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போய கலப் பொன்னின் செய்மண் டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்ன நடை மடவாளுமை கோண்டியோ
முக் கருள் புரிந்து பின்னைப் பிறவிய றுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் (சேக்கிழார் அருளியது) திருவாளன் திருநீறு திலகவதி யாரளிப்பப் பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றங் குருவார அணிந்துதமக் குற்றவிடத் துய்யுநெறி திருவாராய்த் தம்முன்பு வந்தார்பின் தாம்வந்தார்.
-திருச்சிற்றம்பலம் -
s
EASARisi
இந்து ஒளி ـــــــــــ
 

தீபம் - 9 சுடர் - 2
தாரண வருடம் மாசித் திங்கள் 24 நாள் O8.03.2005
மாமன்றத்திள் பனரி வெற்றிகரமாகத் தொடர்கிறது
சிமயப் பணிகளில் மட்டுமல்ல சமூகப்பணிகளிலும் மற்றுமுழுதான பங்களிப்புடன் செயலாற்றிவரும் அகில இலங்கை இந்து மாமன்றம் தனது வளர்ச்சிப் பாதையில் 2ற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக - ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்வதன் மூலம் - பொன்விழா 5ாணுகிறது.
தலைநகரிலே தனித்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக இயங்கிவரும் மாமன்றத்திற்கு ஒரு வரலாற்றுப் பாரம்பரியமும் பெருமையும் உண்டு. அகில இலங்கை ரீதியாக சேவையை விஸ்தரித்து செயலாற்றிவரும் 0ாமன்றம், கடந்த காலங்களில் வடக்கு கிழக்குப் பகுதி மக்களுக்கு பெருமளவு உதவும் வகையில் பணியாற்றி வந்துள்ளது.
கடந்த கால போர் அனர்த்தங்களினால் பெற்றோரை இழந்த பிள்ளைகள், மாமன்றத்தின் நிர்வாகத்திலுள்ள இரத்மலானை மாணவர் விடுதியில் தங்கியிருந்து, தங்கள் கல்வியைத் தொடரும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மாமன்றம் செய்துள்ளது. 1998 மார்ச் 15ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த மாணவர் விடுதி, இம்மாதம் ஏழு வருடங்களை நிறைவு செய்து கொள்ளுகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் மட்டக்களப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதி மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை மாமன்றம் அனுப்பிவைத்தது.
இந்த வகையில் மாமன்றத்தின் இன்னொரு பெரும் சேவையாக, ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு நிவாரண நிதியுதவி வழங்கும் ஒரு சிறப்புத் திட்டத்தையும் மாமன்றம் ஆரம்பித்துள்ளது.
சைவமக்கள் சமயப் பண்பாட்டு விழுமியங்களைப் பேணி சமய ஆசாரங்களை முறைப்படி அனுசரித்து சமய சமூகக் கடமைகளை தடையின்றி செவ்வனே நிறைவேற்றும் வகையிலான சைவத் தொண்டர்களாக, அவர்களை உருவாக்கும் பெருநோக்குடன் மாமன்றத்தால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சிவதொண்டர் அணி ஊடான சேவையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
மாமன்றத்தின் இத்தகைய சமய சமூகப்பணிகள் மேலும் சிறப்புடன் வளர்ந்து வருவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் பேருதவியும் தொடர்ந்தும் எமக்குத் தேவையாகவே இருக்கின்றன.
மாமன்றப் பணிகளில் உதவிவரும் - உதவ விருக்கும் அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தாரன வருடம் தை - பங்குனி)

Page 4
அகில இலங்கை இந்: சிவதொண்டர் அணி
மேற்படி பயிற்சிப் பட்டறை எதிர்வரும் 2005 ஏப்ரல் 1 திகதி தொடக்கம் 7ம் திகதி வரை) இரத்மலானை இந் செய்யப்பட்டுள்ளன.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் சிவதொன் வசதிகளுடன் போக்குவரத்துக்கான செலவுகளும் (பேருந்
சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறைக்கு, ஒலி சிவதொண்டர்களைத் தெரிவுசெய்து பயிற்சி வழங்கப்படும். சி 20 வயதிற்கு மேற்பட்ட இந்து இளைஞர்களும் யுவதிகளு எதிர்வரும் 2005 மார்ச் 15ம் திகதிக்கு முன்பதாக பொதுச் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2. என்ற மு விண்ணப்பப் படிவங்களை பின்வரும் இடங்களிலிருந்து
நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியம் பண்டாரவளை பூரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்
சிவதொண்டர் அண
விண்ணப்
முழுப் பெயர் :
(Uρδουίδ -
ԹՖT60603ւյժ 96)։ .....................................
வயது :
கல்வித் தராதரம் :
அங்கத்துவம் வகிக்கும் சமய நிறுவனத்தின்/சங்கத்தின் (
சமய தீட்சை பெற்றவரா? ஆம்/இல்லை
மேற்படி சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறை ெ ஏற்றுக்கொள்வேன்.
மேற் குறிப்பிட்ட திரு/திருமதி/செல்வி .
மேற்படி சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறையில் என்பதனை உறுதிப்படுத்துகின்றேன்.
உறுதிப்படுத்துபவரின் பெயர் : திகதி
(இந்து ஒளி

து மாமன்றம் நட தும் பயிற்சிப் பட்டறை
7ம், 18ம், 19ம், 20ம். (பார்த்திப வருடம் சித்திரை மாதம் 4ம் துக் கல்லூரி மண்டபத்தில் நடத்துவதற்கு ஒழுங்குகள்
ண்டர்களுக்கு பயிற்சிக் காலத்தின்போது தங்குமிடம், உணவு து/புகையிரதக் கட்டணம்) வழங்கப்படும்.
ப்வொரு பிரதேசங்களிலிருந்தும் ஐந்துக்கு மேற்படாத சிவ தொண்டர் அணியில் இணைந்து சேவை செய்யவிரும்பும் ம் மட்டும் அதற்குரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்று செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம் 91/5, சேர் ழகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம். பெற்றுக் கொள்ளலாம்.
5. மஸ்கெலியா இந்து மாமன்றம் 6. கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமம் 7. கொக்கட்டிச்சோலை கதிரொளி இல்லம்
இந்து மாமன்றம் ரி பயிற்சிப் பட்டறை பப் படிவம்
கையொப்பம்
தாரன வருடம் தை - பங்குணி)

Page 5
ሠI°ሣቌnnሠ
சிவத்தமிழ்ச் தங்கம்மா
(கடந்த ஜனவரி மாதம் 7% திகதியன்று அகை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சொற்பொழிவுகள்” என்ற நூலில் வெளியாகி செய்வதில் “இந்து ஒளி” பெருமகிழ்ச்சி அடைகி
“நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன்னமுதமுமாய்த்தித்திக்குஞ்சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே”
பிறவிப்பிணி தீர்க்கும் பெருவாசகமாகிய திருவாசகத்தைச் சைவ உலகுக்கு அளித்தவர் மணிவாசகர். அவருடைய தூய இருதயக்கமலத்திலே இருந்து வெளிப்பட்ட சொற்களாகிய மணிகளை அன்பாகிய கயிற்றிற் கோத்து இறைவனுக்கு அழுதழுது சாத்தி அதன் பொருள் அவனே என்று காட்டி அவனடிக்கீழ் நீங்காப் பேரின்பம் பெற்றவர் அவர். தேனாய் அவருக்கு இனித்தான் இறைவன். அந்த இன்ப உயிர்ப்பை வாய்மடுத்த அடிகளின் பாடல்கள், அவற்றை ஒதுகின்ற ஒவ்வொருவருக்கும் தேனாய் இனித்தன. அத்தகைய சுவைமிக்க திருவாசகப் பாடல்களை ஐம்பத்தாறு பதிகங்களாய் அமைத்துள்ளனர். அவற்றுள் முதலாவது பதிகம் சிவபுராணம் என்பது. திருவாசகம் அடைவிக்கும் நெறி இரண்டு, முதலாவது நாதன் நாமம் போற்றுதல். இரண்டாவது நாதன் தாள் போற்றுதல். இவற்றைக் கொண்டே சிவபுராணம் தொடங்குகிறது.
சிவபுராணம்
சிவபுராணம் என்றால் சிவனது அநாதிமுறைமையான பழமை என்பது பொருளாகும். இறைவன் பழையதிற் பழையவன்; புதியதிற் புதியவன். இதனை அடிகளே திருவெம்பாவையில்
“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே’ என்றும்.
"பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும்அப் பெற்றியனே’ என்றும் அருளியுள்ளார். திருவாசகம் குருவருள் விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துக் காட்டுவதாகும். பக்குவமுள்ள ஆன்மாக்களுக்கு இறைவன் குருவடிவில் வந்து ஆட்கொள்ளுவான் என்பது சைவசித்தாந்தம். திருவாசகத்தின் முழுப்பொருளும் திருவைந்தெழுத்து விளக்கமேயாகும். திருவாசகம் திருவைந்தெழுத்தைக் கொண்டு தொடங்கித் திருவைந்தெழுத்தின் அடக்கமான ஓங்காரத்தைக்கொண்டு முடிகிறது. ஓங்காரத்து உட்பொருளை “ஐயன் எனக்கருளியவாறார்பெறுவார் அச்சோவே” என்று முடிவிலே அச்சோப்பதி கத்திற் பாடியுள்ளார்.
திருவைந்தெழுத்து
“நமசிவாய வாழ்க’ என்று தொடங்குகின்ற தொடக்கம் எல்லாப் பொருளையும் அவனடிக்கீழ் அடக்குகின்ற அடக்கமாக
(இந்து ஒளி
 

ானம்
செல்வி கலாநிதி அப்பாக்குட்டி
>வ எண்பது நிறைவுபெற்ற சிவத்தமிழ்ச் செல்வி ளை வாழ்த்திப் போற்றும் வகையில் 'பத்துச் யிருக்கும் அவரது கட்டுரையொன்றை பிரசுரம் ன்றது.)
அமைந்துள்ளது. ஏனென்றால், இவற்றுக்குள் அடங்காதது எதுவும் இருக்க முடியாது. அண்டங்கள், அறியாமை, சிவபரம்பொருள், திருவருள், உயிர்கள் என்பவற்றை முறையே “நமசிவாய' என்னும் ஐந்தெழுத்தும் விளக்குகிறது. திருவாசகத்தின் முழுப்பொருளும் திருவைந்தெழுத்தின் விளக்கமும் திருவடிப்பேறும் ஆகும். இதனையே முதலடிகளில், “நமசிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க’ என்பதால் விளக்குகிறார்.
UITufilly LDUL
ஒரு நூலின் தொடக்கத்தில் வாழ்த்து, வணக்கம், அவையடக்கம், நூற்பெயர், நூற்பயன் என்பன கூறுவது மரபு. மணிவாசகப் பெருமான் இதனைச் சிவபுராணத்திலே விளக்கிப் பாடியுள்ளார். இதனைத் திருவாசகத்துக்கு ஒரு முன்னுரையென்று கூறினால் அது மிகையாகாது. முதலிலே வாழ்த்துக்கள் கூறித் தொடங்குவதைக் கவனிப்போம். ஞானாசிரியர்கள் அறுவகை வாழ்த்துக்கூறி ஆன்ம கோடிகளை உய்விக்க விரும்பினர். ‘வாழ்க அந்தணர் என்று தொடங்கிப் பாடி வைகையிலே ஏட்டினையிட்ட ஞானசம்பந்தரும் 'வான்முகில் வழாது பெய்க' என்று பாடி வாழ்த்திய கச்சியப்பரும் 'நமசிவாய வாழ்க’ என்று வாழ்த்திய மணிவாசகரும் ஞானப்பெருமக்களே. 'நமசிவாய வாழ்க என்று பஞ்சாட்சரத்தை வாழ்த்தி, நாதன்றாள் வாழ்க’ என்று உருவத் திருமேனியை வாழ்த்தி, இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் றாள் வாழ்க’ என்று அருவத் திருமேனியை வாழ்த்தி 'கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க’ என்று குருவடியை வாழ்த்தி 'ஆகம மாகிநின் றண்ணிப் பான் றாள்வாழ்க’ என்று சாத்திரங்களை வாழ்த்தி, 'ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க’ என்று ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் பெருமானை வாழ்த்தி,
'நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் றாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் றாள்வாழக ஏக னனேக னரிறைவனடி வாழ்க’ என அறுவகை வாழ்த்துக் கூறுகிறார். அடுத்து ஐந்து வகை வெற்றி கூறுகிறார்.
வெற்றி
புறத்திலே நாம் காணுகின்ற வெற்றியிலும் பார்க்க அகத்திலே வெற்றியைக்காண முயலவேண்டும். ஐம்புலன்களை அடக்கி வெற்றி கொள்வதுதான் சமய வாழ்வு வாழ்வார்க்கு வேண்டியவை. அப்பரடிகள் அகத்திலே வெற்றிகண்ட அருளாளர் அவர்,
தாரண வருடம் தை - பங்குணி)

Page 6
"புள்ளுவர் ஐவர் கன்வர் புனத்திட்ைப் புகுந்து நின்று துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார்” என்று பாடி ஐம்புலன்கள் செய்யும் தீங்குகளை எடுத்துக் காட்டி அவற்றை வெற்றி பெறவேண்டுமானால்,
"முக்கண்ணான் பாத நிழல் உள்ளிடைப் புகுந்து நின்று அங்கு உணர்வினால் எய்யலாமே” என வெற்றிபெறும் மார்க்கத்தையும் விளக்குகின்றார். ஐவகை வெற்றி முக்கியம் என்பதை அடிகளும் சிவபுராணத்திலே,
“வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க” எனக் காட்டுகின்றார். உலகியலுக்குள் இன்பந்துய்க்க நாடும் அந்த ஒட்டத்தை அடக்கித் திசை திருப்பி ஆட்கொண்ட தன்மையை இங்கே முதலடியாலும், வினை காரணமாக வருகின்ற பிறவியைக் கட்டறுக்கும் தன்மையை அடுத்த அடியாலும், அடியவர்களல்லாதார்க்குப் பாலில் வெண்ணெய்போல் மறைந்துநிற்கும் தன்மையை அடுத்த அடிகளாலும் விளக்கி அருளுகின்றார். இந்த ஐந்து வெற்றிகளும் புன்னெறி யதனிற் செல்லும் போக்கை விலக்கி நன்னெறியைக் காட்டுவதாகும்.
போற்றி
அறுபகை செற்று ஐம்புலனை அடக்கி வழிபடுவார்க்கு உதவுவனவாகிய போற்றிகளை எட்டுவகையாகக் காட்டுகின்றார். அட்டவீரட்டம் புரிந்த பெருமானுக்கு எட்டு நாண்மலர் கொண்டு வழிபடுவதியல்பு. அவை எட்டும் போற்றிகளாக வெளிவருகின்றன. எண்குணத்தானை எட்டுமுறை போற்றி செய்து துதிக்கின்றார். ஈசனடி போற்றி என்பது தொடக்கம் இவை அமைந்துள்ளன.
“ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி” என்பதாகும்.
குரு தரிசனம்
வாழ்த்தும் வெற்றியும் போற்றியும் கூறிய அடிகள், இறைவன் குருவடியாக வந்து தன்னை ஆட்கொண்டதிறனை நினைந்து போற்றுகின்றார். ‘சிவனவன் என் சிந்தையுள் நின்ற வதனால் என்பதால் இறைவன் சகலர்க்குப் பக்குவமுறைமை கண்டு குருவடிவாக வந்து அருள்புரியும் திறத்தால் தனக்கும் அப்பேறு கிடைத்ததெனக் காட்டி, ‘சிவன்’ என்பதால் இறைவனைக் குறித்தும் 'அவன்’ என்பதால் குருமூர்த்தியைக் குறித்தும் பாடியருளினார். நூற்பயனையும் நூற்பெயரையும் அவையடக் கத்தையும் அடுத்துக் காணலாம். சிவபுராணந் தன்னை' என்பது நூற்பெயராகும். முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான் என்பது நூற்பயனாகும். 'பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்” என்பதும், அவனருளாலே அவன்றாள் வணங்கி உரைப்பேன்’ என்பது அவையடக்கமாகும்.
(இந்து ஒளி

திருவாசகத்தின் முகவுரைபோன்று பிறவியின் இழிவையும் இறைவனின் பெருமையையும் அடியவர்களுக்கு அருள்புரியுந் திறனையும் அடியார்கள் இறைவனை வேண்டிநிற்குந் திறனையுங் காட்டிச் சிவபுராணத்தை முடிக்கின்றார். வினையின் காரமாகப் பிறந்து பிறந்து உழலுகின்ற உயிரானது கொடிய இருளாகிய ஆணவத்திலும் அறம், பாவமென்னும் இருவினைக் கயிற்றினாலும் கட்டப்பட்டு புறத்தே தோலால் போர்த்து அகத்தே புழு முதலிய அழுக்குகளைச் சொரியும் ஒன்பது வாயில்கொண்ட குடிலாக அமைந்த உடம்பினை எடுக்கிறது. மானுடப் பிறவியை எடுத்த பின்பும் நேரிய வழியிற் செல்ல விடாது தடுத்து விலக்கி விடுகின்றன மலங்கள். இதனால் அறியாமையில் உழன்று நிற்கும் உயிர் ஏதோ தவப்பயனாலும் முன்பிறவிகளில் ஈட்டிய நல்வினை வசத்தாலும் இறைவனைக் குருவாகப் பெற்று உய்யும் நெறியை அடைகிறது. ஆன்மாவின் குறிக்கோள் இறைவன் திருவடியை அடைதலாகும். இதனைச் சிறப்பாக விளக்குகிறார்.
“எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்” என்பதாகும்.
பதி இலக்கணம்
பசு, பாசங்களைப் பற்றிக் கூறிய அடிகள், சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கையில் நின்று பதி இலக்கணத்தைக் காட்டுகிறது.
“ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே' என்பதால் இறைவனுடைய சொரூப நிலையும் தடத்த நிலையும் கூறப்படுகிறது. தடத்தத்தில் இறைவன் இறங்கிவருவது அடியவர்களுடைய பிறந்த பிறப்பைஅறுப்பதற்காகவாம் என்பதை நாமறிய உணர்த்துகிறார்.
“நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' என்பதைப் பன்முறை நாம் படித்துப்படித்து இன்பம் அடைய வேண்டும். இறைவன் தாய்க்கருணை உடையவன்; தாயினும் நல்ல தலைவன்; பால் நினைந்துTட்டும் தாயினும் சாலப்பரிவுடையவன். எங்கள் பிழை பொறுப்பதில் அவன் தாய். எங்கள் பணிகளை ஏற்றுக்கொள்வதில் அவன் தாய். அருள் சொரிவதில் ஈடிணையற்ற எமது அன்னையாக நின்று கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல்போல எமக்கு இரங்குகின்றான் இறைவன்.
இத்தன்மையில் தயவுகாட்டும் இறைவனிடம் அடிகள் கேட்கும் வரங்களைக் கவனிப்போம்.
வேண்டும் பரிசு
“வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா” என்பது அவ்வரமாகும். அடிகள்
மாத்திரமல்ல, ஆண்டவன் நெறியைப் பற்றிநிற்கும் நாம்
ஒவ்வொருவரும் கேட்கும் வரம் இதுவே. ‘அரனே அரனே' என்று
4. தாரன வருடம் தை - பங்குணி)

Page 7
ஆரற்றி அரற்றிக் கேட்கவேண்டும். எந்த நிலையில் நின்று கேட்கவேண்டும் என்றால், பொய்கெட்டு மெய்யான நிலையில் நின்று கேட்க வேண்டும். அப்படிக் கேட்போமானால் எம்பெருமான் ாமக்கு மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராத நெறியைத் தந்தருளுவான். இதனால், கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அவிழ்ந்துவிடும்; வீடுபேறு என்ற பெருநிலை வாய்த்துவிடும் என ஆன்மாவின் குறிக்கோளில் நிறுத்துகிறார்.
பாட்டின் பயன்
இறுதியாக, இத்தகைய பாட்டினைப் பாடி இறைவனை வணங்குபவர்க்குக் கிடைக்கும் பெரும் பயன் விளக்கப்படுகிறது.
“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் மேத்தப் பணிந்து” பொருளுணர்ந்து சொல்லுவார் எழுவாயாகவும், செல்வர் சிவபுரத்திலுள்ளார் பயனிலையாகவும் அமைந்துள்ளன. சிவனடியார்களாற் போற்றப்படுவது ஒரு பேறு; சிவனடிக்கீழ்ச் சென்றடைவது மற்றைய பேறாகும்.
07.01.2005) அகவை எண்பதில் சில
191719órupň 6ITý
"தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார் தோன்றலில் தோன்றாமை நன்று" என்றார் வள்ளுவர். அத்தகைய நிலையில் தோன்றி இவ்வுலகில் போற்றுதற்கரிய பெரும்பணி செய்து வருபவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
"மானிடராகப் பிறத்தல் அரிது” என்பது ஒளவையார் வாக்கு. இத்தகைய சிறப்பிற்கு அமையத் தோன்றியவர் அவர். ஒர் ஆசிரியையாகப் பணியை ஆரம்பித்து ஒரு சமய அறிஞராக - சொற்பொழிவாளராக - சமயப் பிரசாரகராக மட்டுமல்ல, பின்னாளில் ஆலய அறங் காவலராக இறைபணியாற்றிவரும் அம்மையாரின் பணிகள் காலத்தால் மறக்கப்படமுடியாதவை.
நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் அம்மையாரின் பணி பாராட்டிப் போற்றப்படுகிறது. தெல்லிப்பளையில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு துர்க்காதேவி ஆலயத்தை புனரமைத்து அதன் நிர்வாகப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருவதுடன் நின்றுவிடாது. ஆலயப் பணிகளுடன் இணைந்தவகையில் சமூக நலப் பணிகளையும் முன்னெடுத்துச் செல்லும் அவரது சிறப்பான சேவை பலராலும் நன்றியுடன் போற்றப்படுகிறது. அத்துடன் அவரது சமய சமூகப் பணிகள் அவரை தெய்வீக ரீதியில் உயர்த்திச் செல்வதுடன், ஏனையோரும் பின்பற்றக்கூடிய விதத்தில் உதாரண தொண்டராகவும் திகழ்கிறார் என்பதையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முகாமைப் பேரவையின் கெளரவ உறுப்பினர்களுள் ஒருவரான இவர்,
இந்து ஒளி

“கட்டறுத் தெனையாண்டு கண்ணார நீறு
இட்ட அன்ப ரோடு யாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை, ஏற்றினை
எட்டினோ டிரண்டும் அறியேனையே’ என்றார் இன்னோரிடத்தில். பாட்டின் பொருளுணர்தல் என்பது மெய்ப்பொருளை அறிதல் என்பதாகும். அந்தப் பொருளே சிவமென்னும் செம்பொருளாகும்.
எனவே, திருவாசகத்தின் முழு அடக்கமும், சிவபுராணமே என்பதையும், சைவசித்தாந்த அடிப்படையில் ஆன்மா இறைவனை அடையும் நெறியை இப்பகுதி விளக்கி நிற்கின்றது என்பதையும், இதனைப் பொருளுணர்ந்து பாடிப்பரவுவோர் பிறவாத இன்பப் பேரின்ப வீட்டினை அடைவர் என்பதையும் முழுப்பொருளாக அறியவைப்பது சிவபுராணம். இதனை நாடோறும் காலை மாலை ஒதிப்பயனடைவோமாக.
“தொல்லை இரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவா சகமென்னுந் தேன்’
வத்தமிழ்ச் செல்வி த்துகிறது
மாமன்றத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையிலும் அங்கத்தவராகவிருந்து மாமன்ற வளர்ச்சிக்கு அரும் பணியாற்றி வருவதையும் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
ஆலய அறங்காவலராக - சமயப் பிரசாரகராக - சமூக நலப் பணியாளராக - ஒரு ஆன்மீக படைப்பாளராகத் திகழும் சர்வ வல்லமை பொருத்தியவராகக் குறிப்பிடத்தக்க ஒருவராக ஈழத்தில் மதித்துப் போற்றப்படக் கூடியவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் என்பதை பெருமையுடன் சொல்லலாம். அம்மையாரின் சமயச் சொற்பொழிவுகள், எழுத்தாக்கங்கள் என்பன நூலுருவிலும், ஒலித் தட்டு வடிவத்திலும் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியனவாகும்.
"வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் அருங்குறளை நினைவில் கொள்ளுவதுடன், கடந்த ஜனவரி மாதம் 7ம் திகதியன்று தனது வாழ்க்கைப் பயணத்தில் எண்பதாவது அகவையினை அடைந்துள்ள சிவத்தமிழ்ச் செல்வியின் இறைபணியும் மக்கள் சேவையும் மேலும் சிறப்புடன் வளரவேண்டும் என்பதுடன், இறையருள் துணைகொண்டு ஆரோக்கியமான சுகநலத்துடன் அவர் நீண்ட காலம் வாழ்ந்து அரும்பணியாற்ற வேண்டும் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
கந்தையா நீலகண்டன் பொதுச்செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
தாரன வருடம் தை - பங்குணி)

Page 8
மக்கள் பணியில்
6)UTéré5jg அகில இலங்கை
கந்தையா பொருள்
இலங்கை வாழ் இந்து மக்களின் உச்ச நிறுவனமாகஇந்நாட்டில் உள்ள இந்து மத நிறுவனங்களினது கூட்டமைப்பாக - ஐய வருடம் தைத்திங்கள் 22ம் நாள் 1955 பெப்ருவரி 06 அன்று உதயமான அகில இலங்கை இந்து மாமன்றம் தன் சேவையின் ஐந்து தசாப்தங்களைப் பூர்த்தி செய்து கொண்டு இவ்வருடம் தைத்திங்கள் 22 2005 பெப்ருவரி 04 அன்று பொன் விழா ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் மாணிக்க விநாயகப் பெருமானை வழிபட்டுக் கொண்டுதான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மாமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதே திருத்தலத்தில் 04-02-2005 அன்று மாலை 430 மணி முதல் அபிடேகம் ஆரம்பமாகி தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பூசைவழிபாடு நடந்து ஐம்பது மங்கள் தீபங்கள் ஏற்றி விநாயகப் பெருமானின் திருவருளுடன் பொன் விழா ஆண்டு நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளோம்.
இறை பணிநிற்க - இது மாமன்றத்தின் இலட்சியம் அந்த இலட்சியத்திற்கினங்க இந்நாட்டில் சமயப் பணிகள் பலவும் மக்கள் துயர்துடைக்கும் மக்கள் சேவையையும் மகேசுவரன் பூசையாக ஏற்றி நடத்தி வருகின்றோம். அதேசமயம் இந்நாட்டு இந்து மக்களின் குரலாக வாங்களின் உடன் பிறப்புகள் பல வேதனைகளையும் சோதனைகளையும் எதிர் நோக்கியவேளையில் அவர்களின் பிரச்சினைகள்ை உரியவர்களுக்கும் உலகத்திற்கும் எடுத்துச் சொல்வி வந்திருக்கின்றோம். இந்நாட்டின் இந்துமக்கள் தமிழ் பேகம் மக்களாக தமிழினத்தைச் சார்ந்தவர்களாக அரசியல் தாக்கங்கள் பலவற்றை எதிர் நோக்கி வந்திருக்கின்றனர். அந்தக் கட்டங்களிலும் அரசியல் சார்பின்றி இவர்களின் சார்பில் குரல் கொடுக்கவும் மாமன்றம் தயங்கவில்லை. சர்வகட்சி மகாநாட்டில் கொழும்பு இந்து பிரஜைகள் குழுவின் அங்கமாக வெளிநாட்டுத் தூதரகங்களுடனான் சந்திப்புகளில் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் அரசியற் தீர்வே சமாதானத்திற்கு ஒரு வழியென எடுத்துரைத்திருக்கிறோம். மாமன்றத்தின் கருத்துக்களை யொட்டித் தமிழ்ப் பத்திரிகைகள் தலையங்கங்களும் ஆசிரிய கருத்துரைகளும் எழுதியிருக்கின்றன. வெளிநாட்டு LIDITLD) ਮਸ਼ਸ਼ (ਸੁਤ செய்திகளுக்கும் முக்கியத்துவம் தந்திருக்கின்றன.
மாமன்றத்திற்கு அரசினால் நீண்ட காலக் குத்தகையில் மற்ற மதத்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது போல கொழும்பு மாநகரில் கிடைத்த காணியில் தலைமையகம் அமைப்பது பல காரணங்களுக்காகத் தாமதமான்ாலும் 1990 அக்டோபர்
இந்து ஒளி

= ط طط لطط لطط أط طه طه الله علم بلد
2ா காணும்
இந்து மாமன்றம்
நீலகண்டன்
சபரவாளர்
முதல் எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளால் - Lt.
5ਹੰਸੁੰਯੋ ਕੋ-L கட்டிட வேலைகள் சுமார் ஐந்தரை ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு -03 05. 1996 இல் தலைமையகத்தின் ஐந்தாம் மாடியில் பூந் சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜபு பெருமான் எழுந்தருளி மகா கும்பாபிஷேகத்துடன் திருவருள் பாலிக்க ஆரம்பித்தார். தலைநகரில் இந்துக்களின் தலைமையகக் கட்டிடம் எழும்பவில்லையே என அங்கபொய்த்துக் கொண்டிருந்த இந்துமக்களுக்கு இந்த நிகழ்வு நிம்மதியைத் தந்தது.
YK S Y S L T Y u OO OOO S T S Y uS uu வெள்ளிக்கிழமை தோறும் நண்பகல் 1230 மணிக்கு பூசைவழிபாடு நடக்கின்றது. வருடந்தோறும் பூரீ சிவகாமி அம்பாள் சமேதே பூரீ நடராஜப் பெருமானுக்கு ஆறு அபிடேகங்களும் மற்றும் பூநீ ஆறுமுநாவலர் தினம் சுவாமி விபுலானந்தர் தினம் நால்வர் குருபூசைகள் வருடந்தோறும் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. தைப்பொங்கல் வழிபாடு சரஸ்வதி பூசை போன்ற வழிபாடுகளும் ஒழுங்காக நடக்கின்றன,
இரத்மலானை கொழும்பு இந்துக்கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் 18 பேர்ச் காணியைக் கொள்வனவு செய்து இந்துக் கல்லூரியில் அமைத்த விடுதிகளையை விஸ்தரித்து பெண்பிள்ளைகளுக்கும் வயோதிபர்களுக்கும் விடுதிகள் அந்தச் "சக்தி இல்லத்தில்" நிறுவி நடத்திவருகின்றோம் அதற்கு அண்மையில் இருக்கும் முதலாவது ஒழுங்கையில் அமெரிக்காவில் வசிக்கும் திரு திருமதி செல்வரத்தினம் தம்பதியினர் மாமன்றச் சமூகப் பணிகளுக்கென்றே சுமார் 10 பேர்ச் காணியை நல்ல வீடு ஒன்றுடன் நன் கொடையாக வழங்கியிருக்கின்றனர். அந்தச் "செல்வா இல்லத்தில்" இளம் சமுதாயத்திற்கு தொழில் வழிகாட்டல் பயிற்சியளிக்க இருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு கிட்டிய ஒழுங்கை ஒன்றில் 27 1/2 பேர் விஸ்தீரணமான காணியை வெளிநாட்டுக்குச் சென்ற திருமதி பேரம்பலம் அம்மையார் மாமன்றத்திற்கு நன்கொடையாகத் தந்திருக்கின்றார். அந்தக் காணியில் சமயபிரசாரகர் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்க விரும்புகிறோம்.
தலைமையகக்கட்டிடம் பூரத்தியான 1986ம் ஆண்டு முதல் மாமன்றத்தின் காலாண்டிதழான "இந்து ஒளி" இந்து மக்களுக்கு - குறிப்பாக உயர்வகுப்புகளில் கல்விகற்கும் மானவர்களுக்கு பயன்படும் வகையிலான பல கட்டுரைகளையும் ஏனைய ஆக்கங்களையும் கொண்டதாக ஒழுங்காக வெளியிட்டு வரப்படுகின்றது. ஓர் இந்து சமய
தாரன வருடம் தை- பங்குணி)

Page 9
ஆராய்ச்சி இதழ் வெளியிடவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்து மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு உதவும் வகையில், மக்கள் தங்களின் மத தத்துவங்களை விளங்கி அறிந்து கிரியைகளின் நோக்கங்களையும் கருத்துக்களையும் அறிந்துணர்ந்து வாழும் வகையில் இந்துமக்களுக்கு ஒரு கையேட்டினை மாமன்றம் வெளியிட்டது. இதன் பிரதிகள் எல் லாம் விநியோகித்துமுடிந்த காரணத்தால் மறுபிரசுரம் செய்ய ஒழுங்குகள் நடக்கின்றன. தலைமையகக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டபோது மாமன்றம் இந் நாட்டின் இந்துசமயவரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டுவைத்தது. அது ஒரு வரலாற்றுப் பதிவேடாகப் பலராலும் போற்றப்பட்டது. பொன் விழாமலர் ஒன்றினை வெளியிடவும் ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. மலையத்திலும் பின்தங்கிய பல இடங்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பயிற்சி பெற்ற பூசகர் இல்லாத குறை நிலவுகின்றது. எனினும் பக்தியுடன் பூசை செய்பவர்கள் தங்களுக்கு ஒரு வழிபாட்டுமலர் தொகுப்பு இருந்தால் தமிழில் இறைவனுக்கு புகழ்பாடி அர்ச்சனை செய்யலாம் என விடுத்த வேண்டுகோளையடுத்து சிவ வழிபாட்டு மலர் ஒன்றினை மாமன்றம் வெளியிட்டுள்ளது. இப் பிரசுரம் இலவசமாக வழங்கப் பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. திருக்கேதீச்சர வரலாறு, சைவப் பெரியார் சிவபாத சுந்தரனார் எழுதிய சைவத்தின் மகிமை, சைவப் பெரியார் ஆ. குணநாயகம் எழுதிய "புதுமைக்கும் வழி காட்டும் சைவசமயம்" சமயக்கட்டுரைகளின் தொகுப்பு முதலியவற்றை மாமன்றம் வெளியிட்டுவைத்திருக்கின்றது. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பஞ்சபுராணங்களும் அறிவுரைகளும் கொண்ட அப்பியாசப் புத்தங்களை அச்சிட்டு வசதியற்ற மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் வழங்கி வருகின்றோம் . மலையகத்தின் பலபகுதிகளில் அப்பியாசப் புத்தகங்களின் விநியோக நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடற்பாலது.
திருக்கேதீச்சர மகாகும் பாபிஷேகத்தை ஒட்டி வெளியிடப்பட்ட கும்பாபிஷேக மலரின் வெளியீட்டுச் செலவை மாமன்றம் பொறுப்பேற்றது. இந்துமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகாகும்பாபிஷேகம் நிறைவேறியது இந்நாட்டு இந்து மக்களின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
நாடளாவிய ரீதியில் மாமன்றம் அறநெறிக் கருத்தரங்குகளையும், சமய தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றது. மலையகத்தில் மற்றும் பின் தங்கிய இடங்களிலும் இப்படியான கருத்தரங்குகள் நடத்தவேண்டிய அவசியத்தை உணர்ந்து இம் முயற்சியை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்து சமயமக்களை மக்கள் பணியில் மேலும் ஈடுபடுத்த வழிவகுக்கும் திட்டங்கள் தீட்டி ஆரம்பமுயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் கிளிநொச்சியிலும் மன்னாரிலும் நடந்த அற நெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சிகள் உண்மையில் அப்பிரதேசங்களில் சமய எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்தன.
இந்து ஒளி

ბურ01, 2005 அன்று நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மடத்தில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் இந்து சமயப் பெரியார்களையும் நல்லூர் ஆதீன முதல்வர் முன்னிலையில் சந்தித்து அங்கு மாமன்றம் செய்யவேண்டிய பணிகளைப் பற்றிக் கலந்துரையாடினோம். அங்கே மாமன்றம் எடுக்க விருக்கும் செயற்திட்டங்கள் பற்றி விரைவில் அறிவிப்போம்.
நாட்டில் பல பகுதிகளில் மாமன் றம் பலவித கருத்தரங்குகளை - குறிப்பாக க. பொ. த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக இந்து நாகரிகம் பாடத்திற்கான பயிலரங்குகளை நடத்திவருகின்றது. மாமன்றக் கல்விக் குழுவின் முயற்சியாக இந்து நாகரிகத்திற்கான பாடப்புத்தகம் ஒன்றும் விரைவில் வெளியிட Lp Tup Gó pô திட்டமிட்டிருக்கின்றது.
காலத்துக்காலம் தமிழ்பேசும் ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழ் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய இடங்களுக்கும் மாமன்றம் எடுத்துக்கூறி வந்திருக்கின்றது.
மாமன்றத்தில் நூலகம் ஒன்றை விருத்தி செய்யவும் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி விடுதிகளை ஆரம்பித்து சிறப்புற நிர்வகித்துவரும் மாமன்றம் வசதியற்ற பல மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க ஆண்டவன் அருள் தந்திருக்கின்றான் என்றே கூற வேண்டும். மட்டக்களப்பில் பூரீ விபுலானந்தர் இல்லத்தை எமது
அங்கத்துவ சங்கமான மட்டக்களப்பு இந்து வாலிபர் சங்கம்
அனைத்து முதியவர்களைப் பேண நாம் கை கொடுத்து உதவினோம். அதேவண்ணம் மன்னாரில் பூரீ சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி விடுதிக்கும் ஆதரவு வழங்கினோம். கிளிநொச்சியில் மகாதேவ ஆச்சிரமத்தில் ஒரு மண்டபம் கட்ட உதவிகளும், யோகர் சுவாமி திருவடி நிலைய முதியோர் இல்லம் (கிளிநொச்சி), முல்லைத்தீவு இனிய வாழ்வு இல்லம், கொக்கட்டிச் சோலை கதிரொளி சிறுவர் இல்லம்
நல்லை ஆதீனம், மகா பூரீ வித்தியாபீடம் போன்ற நிறுவனங்களுக்கும். பின் தங்கிய இடங்களில் அமைந்த சில இந்து ஆலயங்களுக்கும் எம்மாலான உதவிகளை வழங்கியிருக்கின்றோம்.
இலண்டன் பூரீ கனகதுர்க்கையம்மன் ஆலயத்தினரின் நிதி ஆதரவுடன் மன்னாரில் எமது அங்கத்துவ சங்கமான மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்துடன் இணைந்து ஒரு சிறுவர் பாதுகாப்பகத்தைச் சமீபத்தில் நிறுவியதுடன் அதே ஆதரவுடனும் இணைப்புடனும் மன்னாரில் தையல் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும் ஒழுங்குகள் செய்திருக்கிறோம். மன்னாரில் முருகன் கோவிலைச் சூழ்ந்து வாழும் இந்துக் குடும்பங்கள் தங்கள் தொழிலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது பூரீ இலண்டன் கனகதுரக்கை அம்மன் ஆலய ஆதரவுடன் மாமன்றம் ஒரு இறங்கு துறையை வாங்கி மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்துடன் இணைந்து தேவையான ஒழுங்குகளைச் செய்திருக்கின்றோம்.
தாரன வருடம் தை - பங்குணி)

Page 10
வடகிழக்கில் யுத்தம் காரணமாக சொந்த நாட்டில் மக்கள் அகதிகளாகிய துர்ப் பாக்கிய சூழ்நிலையிலும் மலையகத்திலும், களுத்துறை போன்ற இடங்களிலும் மக்கள் வெள்ளத்தினால் அகதிகளான போதும். சமீபத்தில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் அம்பாறை (கல்முனை), மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் அல்லலுற்ற அகதிகளுக்கு கொழும்பு மாநகரில் சேர்த்ததும் மாமன்றம் கொள்வனவு செய்ததுமான நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பிவைத்தோம். சில இடங்களில் எமது மாமன்ற அங்கத்தவர்கள் நேரடியாகச் சென்று இக் கடமையில் ஈடுபட்டனர். குடும்பங்கள் அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பிய போது மனித மனிதநேயத்தின் ஆதரவுடன் சமையல் பாத்திரங்கள் வழங்க ஒழுங்கு செய்தோம். மேலும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்களும் வழங்கினோம். பிள்ளைகளைப் பராமரிக்கும் திட்டம் ஒன்றையும் அறிவித்திருக்கின்றோம்.
மருத்துவ உதவி அவசியம் தேவைப்பட்ட இரு இருதய நோயாளிகளுக்கு உதவியும் பாடசாலை மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் ஒழுங்குகளும் செய்திருக்கின்றோம்.
இந்நாட்டில் இந்துமன்றங்களின் கூட்டமைப்பான எமது மாமன்றத்தின் உறுப்பாண்மை கொண்ட பல இந்து
(9Aமன்றச் செய்தி )
அண்மைக்கால அனர்த்தங்கள
IDITIDdrp55
கிடந்த வருடம் 2004 டிசெம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மட்டக்களப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு மாமன்றத்தின் அங்கத்துவ சங்கமான மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் விடுத்த அவசர வேண்டுகோளை ஏற்று, மாமன்றம் அரிசி, மா, சீனி, பருப்பு போன்ற பொருட்களுடன் குழந்தைகளுக்கான பால்மா வகைகளையும் ஒரு லொறியில் அங்கு அனுப்பிவைத்திருந்தது. இது தொடர்பாக மாமன்றம் விடுத்த வேண்டுகோளின்படி மாமன்றத் தலைமையகம் விவேகானந்த சபை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் ஆகிய இடங்களில் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட உணவுப் பொருட்களுடன், மாமன்றம் கொள்வனவு செய்த உணவுப் பொருட்களும் மட்டக்களப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதன் பின்னர், டிசெம்பர் 26ம் திகதியன்று ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாமன்றம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுதொடர்பாக மாமன்றத்தின் அவசர வேண்டுகோளை ஏற்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த நிவாரணப் பொருள்கள் மற்றும் நன்கொடைகளாகக் கிடைத்த பணத்திலிருந்தும், மாமன்றத்தின் நிதியிலிருந்தும் வாங்கிய நிவாரணப் பொருட்கள் என்பனவற்றை கிளிநொச்சி, யாழ்ப்பாணம் (வடமராட்சி பகுதி) அம்பாறை (திருக்கோவில் , கல்முனை பகுதிகள்) மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்களுக்கு மாமன்றத்தினால் வெளியிடப்பட்ட அப்பியாசப் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.
(இந்து ஒளி

நிறுவனங்களும் தாங்கள் சொந்தப் பாணியில் நாட்டின் பல பாகங்களிலும் பல பணிகளைச் செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
அகில இலங்கை இந்து மாமன்றம் ஐம்பது ஆண்டுகள் பூர்த்தி செய்து பொன் விழாக்காணும் சமயத்தில் நாட்டில் இருக்கும் நிலைமை எங்களை எந்த வித விழாக்களையும் எடுக்கும் மனப்பாங்கில் வைக்கவில்லை. அதற்குப்பதிலாக நாங்கள் செய்து வரும் மக்கள் சேவை இன்னும் அவர்களுக்குத் தேவை. அதுவே நாங்கள் ஆண்டவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும் என்பதனை உணர்ந்து இன்னும் பல திட்டங்களுடன் எமது மக்கள் பணி தொடர ஆண்டவனருள் வேண்டி நிற்கின்றோம்.
இத்தருணத்தில் மாமன்றத்தின் பணிகள் சிலவற்றை நினைவு கூர்ந்திருக்கிறேன். இன்னும் பல விடங்களைச் சொல்லலாம். ஆனால் இந்தக் கட்டுரையில் அவற்றுக்கு இடம் போதாது. மாமன்றச் சேவைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் பலர். அவர்களை ஒவ்வொருவராக பெயர் குறிப்பிட்டு நினைவுகூரவும் இந்தப் படைப்பில் இடம் இல்லை. ஒருசிலரைக் குறிப்பிட்டு மற்றவர்களை மறக்கவும் முடியாது. எனினும் அவர்கள் எல்லோரையும் மறவாது நன்றிக் கடனுடன் நினைவு கூர்ந்து மாமன்றத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துகின்றோம்.
ரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ன் சேவைகள்
நிவாரண லொறிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றடைவதில் பாதுகாப்பான போக்குவரத்து ஒத்துழைப்பும் ஆதரவும் தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. இரா. சம்பந்தன் திரு. மாவை சேனாதிராஜா, திரு. ந. ரவிராஜ் ஆகியோருக்கு மாமன்றம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது.
பருத்தித்துறை மந்திகை வைத்திய சாலையின் அவசிய தேவைகளை அறிந்து. மாமன்றம் வழங்கிய மருந்துப் பொருட்களையும் படுக்கை விரிப்புகளையும் தனது வாகனத்தில் எடுத்துச் சென்று அங்கு கையளித்திருந்த திரு. மாவை சேனாதிராஜா அவர்களின் உதவியையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.
கடல்கோள் அனர்த்த நிவாரணம் தொடர்பாக மாமன்றம் விடுத்த வேண்டுகோளையடுத்து பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் உணவுப் பொருட்கள், உடுதுணிகள் போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய பொதுமக்களின் உணர்வுமிகு ஆதரவையும் உள்நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் நிதியுதவி மற்றும் உடுதுணிகளை வழங்கிய அன்பர்களது பேருதவிகளையும், கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் ஆலயம், ஆகில இலங்கை கம்பன் கழகம் போன்ற நிறுவனங்கள் தந்த ஆதரவையும், ஒத்துழைப்பையும் அகில இலங்கை இந்து மாமன்றம் மெச்சிப் போற்றுகிறது.
வெளிநாடுகளிலிருந்து கிடைத்த ஏராளமான உடுதுணிகள் வகைகளை பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு மாமன்றம் இப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறது.
s தாரன வருடம் தை - பங்குணி)

Page 11
குமாரசாமி ே
“சிவன் ஒடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவன் ஒடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்து அன்று பொன் ஒளிமின்னும் தவளம் சடை முடித் தாமரை யானே.” (திருமந்திரம்-5)
சிவம் ஆகிய பரம்பொருள் ஒன்றே முழுமையானது. அதுவே முழுதும் உண்மை. உண்மை ஒன்றேயாகும். அந்த “ஒன்று அவன் தானே” என்பது உறுதி. அவன் “ஒருவனே தேவன்.” அத்தேவன் சிவன். உண்மை, நன்மை, அழகு, தூய்மை, தெளிவு, ஒளி, அருள், கருணை, அன்பு ஆகியன அவன் பண்புகள். சிவனைப் பக்தி செய்தல் என்றால் சிவனின் பண்புகளை வாழ்க்கையில் பேணுதல் ஆகும். சிவத்தொண்டு எனின் சைவப் பண்புகளைச் செயற்பாடுகளாக நடைமுறைப்படுத்துதல் எனலாம். சிவநிந்தை என்றால் சிவப்பண்புகளை உதாசீனஞ் செய்தலும், வாழ்க்கையில் அவற்றை மேற்கொள்ளாது விடுதலும் ஆகும்.
இவ்வுலகில், எண்ணிக்கையில் மக்கள் பலர்; ஆனால், “ஒன்றே குலம்’ அதுவே மனிதகுலம். இந்த ஒருமைப்பாட்டுணர்வை மனிதன் அடையும் போது 'மானுடன்’ ஆகின்றான். மானுடப் பண்புகளை மதிப்பவன் பேணுபவன், வாழ்வில் கடைப்பிடிப்பவன் எவனோ, அவன் மானுடன்.
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் . 多罗 - (2704)
“ஒன்று அவன்தானே. – (፬)
“சிவன் ஒடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை’- (5)
"அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவம் . - (270) இவற்றின் கருத்தை உணர்ந்தவன், தெளிந்தவன், அதன்படி நடந்தவன், நடப்பவன் எவனோ, அவன் மானுடன்.
சிவத்தின் “கருத்தறியாது கழிந்த காலம்”, அவக்காலம்; தவக்கலாம் அன்று. சிவத்தின் கருத்து என்னவெனில் அன்பு, உண்மை, நன்மை, அழகு. தூய்மை, அருள் என்பனவாம். அவற்றை அறிந்தவர்களே சிவத்தை உணர்ந்தவர்கள். அவர்களே மானுடர்; மனிதரில் சிறந்தவர்கள்.
மனித வடிவம் பெற்றதனால் மட்டும் மனிதனாகிவிட முடியாது. கணிதத் தன்மைகளையும், மனிதலட்சணங்களையும் பெற்றிருத்தல் வேண்டும். மனிதர்கள் மானுடம் பெற்று மானுடர் ஆதல் வேண்டும்; அதற்குச் சிவத்தை நாடவேண்டும். சிவத்தின் பொருளை அறிய வேண்டும். சிவத்தின் கருத்தை உணர்ந்தபின் அதன்படி ஒழுகுதல்
இந்து ஒளி g
 

R&? Sai
தWனே’ 7ங்/அல் சிவில்
சாமசுந்தரம்
வேண்டும். மானுடத்தை அதிட்டித்து நிற்பதே சிவம் - உண்மை. மானுடத்தை எய்தியோர். சிவத்துடன் கலந்தவர் ஆவர். அதையே முத்தி அல்லது விடுதலை என்று குறிப்பிடலாம். மானுடத்திற்குப்புறம்பானவற்றில் இருந்து விடுதலை பெறுதலும் முத்திதான்.
ஆயினும், இந்த முத்தியை, மானுடத்திற்குப்புறம்பானவற்றின் சிறையிலிருந்து பெறும் விடுதலையை, சிவத்தை, சிவத்தின் கருத்தை, மானுடத்தை நாடுபவர்கள், வழிபாடு செய்பவர்கள் எத்தனை பேர் இன்று நம்மில் உள்ளனர்? திருமூலர் காலத்திலேயே அவை மக்களிடையே காணப்படவில்லை என்றால், தற்கால நிலையைச் சொல்லவா வேண்டும்.
“என்னால் தொழப்படும் எம்மிறை மற்றவன் தன்னால் தொழப்படுவார் இல்லை தானே” (9) என்பதிலிருந்து இதனை உணர முடிகிறது.
எம் இறை சிவம். அது உண்மை. திருமூலனாகிய என்னால் அது வழிபாடு செய்யப்படுகின்றது. ஆனால் சிவத்தை - உண்மையை - நீதியை உபாசிப்பவர்கள், வழிபாடு செய்பவர்கள், நாடி அடையவர்கள் உலகில் யாருமே இல்லாமல் போய்விட்டார்களே என்று கூறி ஏங்குகிறார் திருமூலர்.
இந்த நிலைப்பாடுதான், திருமூலரைத் தென்னாட்டிற்கு எழுந்தருளச் செய்ததும், சீல அங்க வேதத்தை ஆகமத்தைத் தமிழில் திருமந்திரம் ஆக அவர் செப்பியதும் ஆகும். அப்பொழுது திருமூலர் மாத்திரம் சிவத்தை உண்மையைத் தெளிந்து மேற்கொண்டு, முடிவில்லாத இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். ஏனையோர் அவ்வாறு சிவத்தை - உண்மையை உணர்ந்து கொள்ள முடியாதிருந்தனர்.
“நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றிநின்ற மறைப் பொருள் சொல்லிடின் ஊன் பற்றிநின்ற உணர்வுறுமந்திரந் தான் பற்றப்பற்றத் தலைப்படுந்தானே.” (85) எனவே இந்தப் பரந்த பூமியிலுள்ள எல்லா மனிதர்களும், உண்மையை உணர்ந்து இன்பத்தை அனுபவிக்கச் செய்ய வேண்டும்; தான் மட்டும் அனுபவித்தால் போதாது; தன்னைப் போலப் பிறரும் இன்பத்தை பெறுதல் வேண்டும் எனத் திருமூலர் எண்ணினர்.
மனிதர்கள் வழிகாட்டுநர் இன்றித் தவித்தவேளை, தக்க தருணத்தில், நன்னெறிப் படுத்தி, அவர்களை வாழ்விக்க கருதி, அதற்காகத் “தமிழ் செய்ய”- தமிழை உணர்த்த - தமிழ் நெறியில் ஆற்றுப்படுத்தத் திருமூலர் மேலிருந்து கீழ் நோக்கி வந்துள்ளார். இது ஒர் அற்புத நிகழ்வு. கீழிருந்தோரை மேனிலைக்கு -
தாரன வருடம் தை - பங்குணி)

Page 12
சிவநிலைக்கு - தமிழ் நிலைக்கு - அன்பு நிலைக்கு உயர்த்துதலே இவ்வருகையின் நோக்கம்.
“என்னைநன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே” – (8፲) என்கிறார் திருமூலர். உடல், உள, ஆத்ம நலன்களுடன் இறைவன் திருமூலரை நன்றாகப் படைத்தது, சிவம் ஆகிய அன்பினை - உண்மையை - நீதியை - தமிழை உலகத்தவர் அறியச் செய்வதற்கும் வாழ்வில் மேற்கொண்டு ஒழுகச் செய்வதற்கும் ஆகும். தமிழின் கருத்தை உணர்ந்து தமிழ் செய்தவர் திருமூலர். அகத்தியர், திருமூலரின் நண்பர். இந்த உலகம் முன்பும் - திருமூலருக்கு முன்பும் - நடுவு நில்லாது சரிந்தது மக்கள் உண்மையைப் புறக்கணித்து, நீதியுடன் இணையாது, மனித தர்மத்துடன் ஒட்டி வாழாது, மானுடம் தவிர்த்து வாழ்ந்து வந்தனர். அப்பொழுது மக்களை விழிப்புறச் செய்து, மானுடத்தை நிலைநாட்டி, நடுவுநிலையை - சமநிலையை எற்படுத்துமாறு அகத்தியர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ் தெரியாத அகத்தியருக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
அகத்தியர் தென்தமிழ் நாட்டிற்கு வந்தார்; பொதிகையில் அமர்ந்தார்; தென்றலின் இதத்தையும், தமிழ் இலக்கியத்தின் இனிமையையும் அதிகமாகவே மாந்தினார்; சுவைத்தார்; திளைத்தார். தமிழ் மொழி இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்தார். அதுவே அகத்தியம் எனும் நூல் தொல்காப்பியர் முதலிய மாணவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கிய இலக்கணம் கற்பித்தார். தமிழ்ச் சங்கங்களில் புலவராகவும் வீ ற்றிருந்தார். தமிழ் மொழியை ஆய்ந்தார். மேலும், உடல் நோய்களைத் தீர்க்க, மருத்துவ வாகட நூல்களும் செய்தார். எனினும் தாம் வந்த நோக்கத்தை மறந்தார் அகத்தியர். அதனால் உலகம் தொடர்ந்து சரிந்து கொண்டேயிருந்தது.
அகத்தியர் இலக்கிய இலக்கணங்களைச் செய்தார். தமிழை ஒரு மொழியாக மட்டும் எண்ணி அதனை அணுகினார். தமிழ் மொழியை ஆய்ந்தார்; அதனால் தமிழை ஆராயவில்லை; தமிழ் என்பதன் கருத்தை முழுமையாக உணர்ந்தாரில்லை. அவ்வாறே மனிதனின் உடல் கூறுகளை மாத்திரம் நுணுகி ஆராய்ந்தார். அதன் விளைவு மருத்துவ வாகட நூல்கள் தோன்றியமை. மனிதனை வெறுமனே சடமாகவும், சடலமாகவும் நோக்கினார்; ஆராய்ந்தார். மனிதன், உடல் மாத்திரமன்று; அவனுள் ஆத்மாவும் உண்டு என எண்ணி அதனை ஆராயத் தவறிவிட்டார், அகத்தியர். தமிழ்' என்பதை ஒரு மொழியாகவும், அது அறிவைப் பரிவர்த்தனை செய்வதற்காகவும் உள்ளது என்ற நிலைப்பாட்டில் அகத்தியர் தமிழின் உடலைக் கண்டார்; அதன் உயிரை ஆராய்ந்தாரில்லை. அவ்வாறே, மனிதனின் உடலையே மனிதன் என நோக்கினார். அவனின் உயிரை அணுகினாரில்லை. விளைவு, தமிழ் மொழி விருத்திபெற்றது; “தமிழ்” வளர்ச்சி பெறவில்லை. மனிதனின் உடல் நோய்கள் நீங்கப் பெற்றன; உயிர்க்குறு நோய் நீங்கப் பெறவில்லை. எனவே, உலகமாந்தர்கள் நடுவு நில்லாது, சமநிலையில் இல்லாது, உலகம் பழித்தவற்றை
அருள்வழியில் வாழ்ந்தால்இருள்
(சுவாமி கம
(இந்து ஒளி

ஒழிக்காது, உலகநீதியுடன் ஒழுகாது, மானுடம் தழுவாது, சிவத்தை - அன்பை - தமிழை அதன் கருத்தறிந்து வாழ்க்கையில் போற்றாது தொடர்ந்து வாழ்ந்தனர்.
இந்த நிலையில், மக்கள் - ஆன்மகோடிகள் மேய்ப்பாரின்றி - வழிகாட்டுவாரின்றி தென் தமிழ் நாட்டில் தவிக்கின்ற, தளர்கின்ற அவலநிலை மாலாங்கர் என்பவரால், திருமூலருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
திருநந்தி தேவரைக் குருவாகக் கொண்டு, நந்தி வழிகாட்ட யோகநித்திரையில் ஆழ்ந்து இன்பத்தில் திளைத்திருந்த திருமூலர் பேரம்பலமாம் கைலாய மலையிலிருந்து சிற்றம்பலமாகிய சிதம்பரத்தை நோக்கி, சிவத்தைத் தமிழ் செய்ய வந்தார்.
'நந்தி வழிகாட்ட நானிருந்தேனே' (68) என்றபடி திருவாடுதுறையில் அமர்ந்துவிட்டார் திருமூலர்.
திருமூலர், அகத்தியரைப் போலன்றி, உலகியலையும் ஆன்மிகத்தையும் இணையச் செய்தார்; உடலையும் உயிரையும் சேர்த்துப் பார்த்தார். தமிழ் மூவாயிரம் செய்தார். அதன் மூலம் தமிழில் இருந்து களவு போன அன்பை - சிவத்தை - உண்மையை மீட்டெடுத்தார். அன்பு, சிவம், உண்மை என்பன நுதலியது தமிழ். அன்பு, சிவம், உண்மை அகன்ற நிலையில் தமிழ், தமிழ் ஆக முடியாது. திருமூலர் தமிழ் செய்வதற்காக இறைவனால் படைக்கப்பட்டார். அவர் தமிழ் செய்தார். திருமந்திரம் தோன்றியது. வந்த நோக்கமும் முழுமையாக நிறைவுபெற்றது. இறைவர் முழுமைத்துவமானவர்; தமிழ் முழுமைத்துவமானது; திருமந்திரம் முழுமைத்துவமானது. சிவம், தமிழ், அன்பு, என்பன ஒன்றையொன்று நுதலியது. திருமந்திரம் இம்மூன்றைம் தழுவியது. வெறும் எழுத்தினாலே சொற்கூட்டங்களினாலே என்ன பிரயோசனம். உயிர் நீங்கிய உடம்பு எதற்கு? மனிதர்களை வாழ்வாங்கு வாழ்விக்குமா? இல்லை. அத்தகைய இலக்கண, இலக்கியங்களால் உலகம் சரிந்து நிற்பதைத் தடுக்க முடியவில்லையே. காரணம், அவற்றில் சிவம் - உண்மை - அன்பு இன்மையே.
திருமூலர் செய்த தமிழ் உலகை வாழ்விக்கும் சிவத்தமிழ் - உண்மைத் தமிழ் - அன்புத் தமிழ் உலகம் சரியாது அதனைச் சமநிலையில், நடுவு - நிலையில் வைத்திருக்கச் செய்யும் தமிழ்,
மனிதன் தமிழன் ஆகவேண்டும்; மனிதரைத் தமிழர் ஆக்கும் பணியே திருமூலர் பணியாகவிருந்தது. மனிதர்கள் தமிழர்கள் ஆகும் போதுதான், உலகம் நடுவு நிற்கும்; நீதியுடன் ஒழுகும் ; மனிததர்மத்துடன் ஒட்டி வாழும் ; மானுடம் தழைக்கும்; இயற்கையுடன் இணையும்.
இவ்வுலகில் உள்ள எவரும், எப்பருவத்திலும், எக்காலத்திலும் தமிழர் ஆகமுடியும் என்பது திருமூலர் முடிவு. திருமூலர், திருமந்திரம் நடைமுறை வாழ்க்கைத் தத்துவ நூல் ஆகின்றது. பூமியில் உள்ள எல்லாமக்களையும் விழிப்புணர்வுக்கு ஆற்றுப்படுத்தி, நடுவு நிலையை - சமநிலையை ஏற்படுத்தியவர் திருமூலர். அவர் தமிழ் செய்தார்; தம்பணியை நிறைவு செய்தார்.
வழிநீங்கிப்பேரின்பம் பெறமுடியும். ாத்மானந்தர்)
o தாரண வருடம் தை - பங்குனி)

Page 13
கணபதி த திஸ்சோக
§ ඝණ්ෂුණී
"மாசி மாதத் அபர பக்கச் சதுர்த்தேசி ஆசியருளு லிங்கோற்பவமாகும் - அன்று மால் தேவர் மாந்தர் வணங்கி வழிபட்டு மேல் வரங்கள் பெற்றார் இனிது’
“இந்த சரீரம் நமக்கு கிடைத்தது இறைவனை வணங்கி முக்தி இன்பத்தை பெறும் பொருட்டேயாம்” என்கிறார் ஆறுமுக நாவலர். கடவுளை எப்பொழுதும் நினைக்கும் வசதி இல்லாத காரணத்தினால் குறித்த சில தினங்களிலாவது கடவுளை வணங்க வேண்டும் என சைவசமயம் கூறுகிறது. அத்தகைய நாட்களே விரத நாட்கள் ஆகும். இந்த நாட்களில் விஷேட வழிபாடு செய்தல் சிறந்த புண்ணியமாகும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இவ்வுண்மையை அனுசரித்தே விரத நாட்களில் ஆலயங்களில் விஷேட பூசைகளும், விழாக்களும் நடைபெற்று வருகின்றன. விரதம் நோன்பு, உபவாசம், சங்கற்பம், தவம் என்பன ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சொற்களாகும். “காப்பது விரதம்” என்று ஆத்திசூடியிலும் “நோன்பென்பது கொன்று தின்னாமை” என்று கொன்றைவேந்தனிலும் ஒளவையார் பாடியுள்ளார். உயிர்களுக்குத் தீங்கு செய்யாமற் பாதுகாப்பதே விரதம். ஒர் உயிரைக் கொன்று அதன் ஊணை உண்ணாமல் இருப்பது நோன்பு
விரதம் என்கின்ற சொல்லின் பெயர் வரக்காரணத்தை ஆராய்ந்தால் இது நன்கு புலனாகும். “சங்கற்பத்துடன் செய்கின்ற காரியமும், புண்ணிய செயல்களும் விரதம் எனப்படும்” என்று வடமொழி அகராதி கூறும். இங்கு சங்கற்பம் என்பது மனம், வாக்கு, காயத்தை தூய்மையாக வைத்திருத்தல் ஆகும்.
விரதம் பற்றி ஆறுமுகநாவலர் கூறும் இடத்து மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினாலும் கடவுளை மெய் அன்போடு விஷேசமாக வழிபடுதல் விரதமாகும் என்றார். இவ்விரதத்தினால் அகப்புறத் தூய்மைகள் உண்டாகிறது. மேலும் இவற்றின் ஊடாக மன ஒடுக்கத்தை உண்டு பண்ணி சிவனை அடைவதற்கு ஏற்றவகையில் அனுட்டித்தல் வேண்டும். இவ்விரதங்களை சிவவிரதம், சக்தி விரதம், விநாயகர் விரதம், முருக விரதம் எனக் கூறலாம்.
இவற்றுள் சிவனது பெருமை கூறி சிவனுக்காக அனுட்டிப்பது சிவவிரதம் ஆகும். இச்சிவவிரதங்கள் ஒன்பது உள்ளன என ஆறுமுகநாவலர் இரண்டாம் வினாவிடை என்னும் நூலில் எடுத்துரைக்கிறார். அவை முறையே சோமவாரவிரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதாரவிரதம், கலியாண சுந்தர விரதம், சூழவிரதம், இடப விரதம், பிரதோஷ விரதம் என்பன அந்த 9 விரதங்கள் ஆகும்.
(இந்து ஒளி
 

*************శోత్కశజ్ఞశ్రీ*
Töbllfl
னலட்சுமி ), சிலாபம்
懿懿畿密懿尊挚辜 இவற்றுள் எல்லா விரதங்களையும் விட பன்மடங்கு சிறந்தது சிவராத்திரி விரதமாகும். இச்சிவராத்திரி விரதத்தின் மகிமை சொல்லில் அடங்காது. சிவபெருமானுக்குரிய விரதங்களுள் சிவராத்திரி விரதம் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை காலமாகிய அபரபட்சத்தில் பதினான்காம் நாள் இரவு சதுர்த்தஷி கூடிய தினமாக அமைகிறது. சிவராத்திரி என்றால் சிவன் இராத்திரி எனப்பொருள்படும். அதாவது சிவபெருமானுக்குரிய இராத்திரி சிவபெருமானுக்கு அன்னியந்த (மிகவும்) பிரியமுள்ள இராத்திரி. அதனையே சிவராத்திரி எனக்கூறலாம். இதனால் இது மகாசிவராத்திரி எனக் கூறப்படும்.
இவ்விரதம் பற்றி மரபுக் கதைகள் பல கூறுகின்றன. அதாவது புராணங்கள் பழையதைக் கூறினாலும் அவை உண்மையையே கூறுகின்றன. அதுமட்டுமன்றி புராணங்கள் மனிதன் ஒவ்வொருவனும் கடைப்பிடிக்க வேண்டிய பல பண்பாட்டு அம்சங்களை கதைவழியே கூறுகின்றன. அந்த வகையில் இச்சிவராத்திரி விரதம் தோன்றியவரலாறு, அதை கடைபிடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்பவற்றை சான்றாதாரங்களுடன் ஒப்புவிக்கின்றன. அது மட்டுமன்றி புராணங்களில் கூறியவற்றையே நாம் 21ம் நூற்றாண்டிலும் கடைப்பிடித்து வாழுகின்றோம். அப்படியான இச்சிவராத்திரி விரதம் தோன்றிய வரலாற்றை பற்றியும் புராணங்கள் கூறுவதை நோக்குவோம்.
ஒரு காலத்தில் படைத்தல் கடவுளாகிய பிரம்மாவும், காத்தல் கடவுளாகிய விஷ்ணுவும், தாமே உயர்ந்த பிரமம் என அகந்தை கொண்டு வாதிட்டு கலகம் செய்தனர். அப்பொழுது பரப்பிரமமாகிய சிவபெருமான் அவர்களது அகந்தையை போக்கும் முகமாக அவர்கள் இருவருக்கும் மத்தியிலே அடியும், முடியும், அறிய முடியாதவாறு ஒரு சோதிப் பிளம்பாக தோன்றினார். இவ்வாறு சிவன் சோதிப்பிளம்பாக தோன்றிய இரவே “மகா சிவராத்திரி” தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை சற்று விரிவாக நோக்கினால் ஆயிரம் சதுர் யுகங் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒரு பகல், அப்பகல் காலம் கழிந்து இரவு வந்தபோது பிரம்மாநித்திரை செய்தார். அப்போது சூரிய, சந்திரர் முதலிய கிரகங்களும் முப்பது முக்கோடி தேவர்களும் பூலோகமும் அழிந்தன. மேலோகத்திலுள்ள முனிவர்கள் சனலோகத்தை அடைந்தனர். நாற்றிசைக் கடல்களும் பொங்கி எழுந்து உமாதேவியார் தவஞ்செய்கின்ற காஞ்சிப் பதிமுதல் ஏனைய ஸ்தலங்களையும் விழுங்கி சப்த பாதங்களாயும் மூடி தேவலோகத்தையும் அழித்தன. s
அப்போது விஷ்ணு சிவஸ்மரனை செய்து கொண்டு ஒர் ஆலிலையின் மீது குழந்தை வடிவாய் நித்திரை செய்தார். அதனைக் கண்ட முனிவர்கள் துதி செய்தார்கள். அறிதுயில் நீங்க எழுந்த விஷ்ணு பூவுலகு பாதாளத்தில் ஆழ்ந்ததைக் கண்டு ஒரு பன்றியின் உருவு கொண்டு பாதாளத்தில் சென்று அப்பூமியை தன்
தாரண வருடம் தை - பங்குனி)

Page 14
கொம்பினால் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து முன்போல நிலை நிறுத்தினார்.
அந்த நான்கு ஆயிரம் சதுர்யுகம் கழிய பிரம்மனுக்குப் பகல் பொழுதாகியது. பிரம்மா நித்திரை விட்டெழுந்து பண்டுபோல் சிருஷ்டித்தொழில் செய்ய திருவுள்ளம் பற்றினான். சமுத்திரங்கள் யாவும் முன்னின்ற பாங்கடைந்தன. விஷ்ணு நான் கொம்பினாலே பூமியை எடுத்து நிலை நிறுத்தினோம் என்று நினைத்து அகந்தையுற்று பாற்கடலில் சேஷசயனத்தின் மீது அறிதுயில் செய்தார்.
அப்போது பிரம்மா தேவர்கள், அசுரர்கள், மற்றைய ஜீவராசிகள் அனைத்தையும் படைத்து அவரவர்களுக்குரிய ஸ்தானங்களைக் கொடுத்து, சிருஷ்டித் தொழிலை மிகப்பெரியதென்று எண்ணி இறுமாந்து என்னைவிட வேறு கடவுள் இல்லை என்றெழுந்தார். நான் உறங்கும்போது உயிர்கள் யாவும் இறக்கும். நான் விழித்தபோது உயிர்கள் யாவும் இயங்கும். ஆகவே அனைத்துக்கும் மூலகாரணம் நானே. எனவே “நானே பரப்பிரம்மம்” என்று இறுமாந்தார்.
மேலும் பிரம்மன் தான் சிருஷ்டித்தவைகளைப் பார்த்து ஆணவம் கொண்டு பாற்கடலில் துயிலும் விஷ்ணுவைச் சென்றடைந்து அவர் மார்பிலே தாக்கி எழும்பு என்றெழுப்பினார். விஷ்ணு எழுந்ததும் நீ யார்? என்றார். நான் பிரம்மா, அதற்கு விஷ்ணு “நான் உனது பிதா நீ எனது மைந்தன் எனது உந்திக்கமலத்திலிருந்தன்றோ நீ தோன்றினாய்’ என்றார்.
உனது உந்திக் கமலத்தில் யானுதித்த உண்மையினை நீ உணராமல் எனது பிதா என்றாய். நீ தூணிடை நரசிம்மமாகத் தோன்றியதால் உன்னை விட தூணுக்கும் பெருமையுண்டோ? என வினாவ அதே போல உனக்கென்ன பெருமையிருக்கிறது எனது மகன் பிருகு முனிவன் கொடுத்த சாபத்திலேயே நீ பத்துப் பிறவிகளை எடுத்தாய் அவற்றைப் படைத்தவன் நான் அன்றோ? இவ்வாறு பிரம்மா கூறியதும்.
விஷ்ணு கோபித்து என்னைப் படைத்ததாகப் பெருமைப்படும் நீ பரமன் கிள்ளிய உன் தலையை இன்னமும் படைக்கவில்லை. அப்படியான நீ என்னை எப்படி படைக்க முடியும். எனவே நானே உனது பிதா, என்னிலும் பெரியவன் இல்லை. சங்கரனின் பாதி நான். பரமனும் பொருளும் நான் என்று பலவாறு புகழ்ந்தார் விஷ்ணு.
பிரம்மா கோபித்து நாமிருவரும் போர்புரிவோம் வென்றவரே பெரியவர் என்றபடி போர் புரிந்தார்கள். அப்போது இருவருக்கும் மத்தியில் பெரும் ஜோதி ஒன்று தோன்றியது. அதனுள் இருந்து அசரீரி வாக்குக் கேட்டது. பிரம்மா விஷ்ணுக்களே நீவீர் இருவரும் ஏன் வீணாகச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். இந்த ஜோதியினுடைய அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கிறீர்களோ அவர் தான் உம்மில் பெரியவர். இப்படியாக பிரம்மா அன்னப்பட்ஷி வடிவம் கொண்டு முடியைக் காண மேலே பறந்தார். விஷ்ணுவோ அடியைக் காண பன்றி அவதாரம் கொண்டு பூமியின் அடியை தோண்டிக் கொண்டு சென்றார். இருவரும் களைத்து விட்டார்கள். அடியையும் காணவில்லை, முடியையும் காண முடியவில்லை.
அப்பொழுது மேலேயிருந்த தாழம்பூவும், முருக்கம் பூவும் கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த பிரம்மன்
(வள்
கருணை உள்ளத்தோடு நன்னெறியில் நடப்டே
(இந்து ஒளி

நில்லுங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் எனக் கேட்க நாங்கள் உச்சியிலிருந்து வருகிறோம் என்று கூறின மலர்கள். அப்போது பிரம்மா நீங்கள் எனக்காக ஒர் பொய்ச்சாட்சி சொல்ல வேண்டும். நீங்கள் கீழே நிற்கும் விஷ்ணுவிடம் நான் முடியை பார்த்ததாகச் சொல்ல வேண்டும் எனக் கேட்க மலர்களும் பொய்ச்சாட்சி கூறின. அப்போது பிரம்மா பெருமையினால் பூரித்தார். நான் தான் பெரியவன் என கோஷித்தார். அந்த நேரம் சிவன் தனது சொரூபத்தைக் காட்டி பிரம்மாவே நீர் பொய் சொன்னதால் உமக்கு கோவிலும் இல்லை. பொய்சாட்சி சொன்னதனால் முருக்கம் பூ தாழம்பூவுக்கும் நீங்கள் பூஜைக்கு உதவாத மலர்களாக கடவது என்று சாபமிட்டார்.
விஷ்ணுவே உண்மையுரைத்ததனால் உமக்கு கோவிலும், காக்கும் தொழிலும் தந்தோம் என்று அனுக்கிரகம் செய்தார். இறைவன் அடிமுடி இல்லாத சோதிப் பிழம்பாகிஸ்தானு வடிவாய் “லிங்கோற்பவராய்” உற்பவித்த காலம் சிவராத்திரி காலமாகும். எனவே சிவனுடைய பூசைக்கு உகந்த காலம் லிங்கோற்பவ காலமாகும்.
இவ்விரதத்தை அனுட்டிக்க விரும்புவோர்கள் ஆசாரசீலம் உடையவராக இருத்தல் வேண்டும். அதாவது முதல் நாள் த்ரியோதஷி திதியிலே ஒரு வேளை உண்டு சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து சிவத்தியானத்தில் இருந்து இறை புகழ் கேட்டு நான்கு ஜாமமும் துயில் நீத்து சிவாலய தரிசனம் கைக்கொள்ள வேண்டும். இத்தினத்தன்று நித்திரை முழித்தல் அவசியம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி அன்று லிங்கோற்பவ மூர்த்திக்கும் மிகவும் ஒழுங்கான முறையில் அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் அதற்குரிய பொருட்களில் நடைபெற வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. முதல் ஜாமத்தில் பஞ்ச கெளவியத்தினால் அபிஷேகம் செய்து சந்தனக் குழம்புச்சாத்தி வில்வம், தாமரை போன்றவற்றினால் அர்ச்சித்து பயித்தம் பருப்பினால் நிவேதித்து வழிபடலாம். இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகித்து அகில் குழம்புச்சாத்தி தாமரை, துளசி போன்றவற்றினால் அர்ச்சித்து பாயசம் படைத்து வழிபடலாம். மூன்றாம் ஜாமத்தில் தேனினால் அபிஷேகம் செய்து பச்சை கற்பூர சுண்ணம்சாந்தி வில்வம், செண்பக மலர் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடலாம். நான்காம் ஜாமத்தில் கருப்பஞ்சாற்றால் அபிஷேகம் செய்து குங்குமம் சாத்தி வில்வம், நந்தியாவர்த்தனம் கொண்டு அர்ச்சித்து சுத்த அன்னம் படைத்து பூசிக்கலாம். நான்கு ஜாம பூசைகளுக்கும் வில்வப்பத்திரம் முக்கியமானது. சிவ பூசை செய்ய இயலாதவர்கள் பூரீபஞ்சாத்திர செபமும் சிவபுராணமும் ஒதுவதோடு நான்கு ஜாமமும் சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும்.
உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், நீர் உண்டேனும் நான்கு ஜாமமும் நித்திரை விழிக்க இயலாதவர்கள் இலிங்கோற்சவ காலத்திலாவது நித்திரையை ஒழித்தல் வேண்டும். இலிங்கோற்பவ காலம் என்பது இரவு 11.30 - 12-15 வரையுள்ள காலம் ஆகும். இலிங்கோற்பவ மூர்த்தம் என்பது 64 மூர்த்தங்களில் ஒன்றாகும். விதிப்படி விரதமிருந்து மனதை நிலைப்படுத்தி சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து பயன் பெறுவோம்.
ாரின் திருவார்த்தைகள் வேதத்திற்குநிகரானவை
Touri)
2 தாரன வருடம் தை - பங்குனி)

Page 15
இந்துக்களின் புராத அகுள் குர்கா
கி. புண்ண விரிவுை மட்டக்களப்பு
“மனிதனில் இயல்பாக அமைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி ஆகும்” அதாவது மக்களின் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் இயற்கைப் பேறுகளை வெளிக்கொணர்தலையே இது குறித்து நிற்கிறது. ஏனைய கல்வியை விட சமயக் கல்வி ஒன்றினால்தான் மேற்குறிப்பிட்ட எல்லாப் பேறுகளையும் வெளிக் கொணர முடியும். அதாவது கல்வி வாழ்வின் இறுதி நோக்கத்தை அடைய உதவும் இலட்சியக் கல்வியாக அமைய வேண்டும். மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்க வேண்டிய விழுமியங்களைக் கூறுவதே சமயக் கல்வியாகும்.
ஒரு இந்து கல்வி கற்பது தெய்வ பக்தியுடன் தமது தெய்வத்தை வழிபடுவதற்கும் தனி வாழ்விலும் குடும்ப வாழ்விலும் அறநெறியைக் கடைப்பிடிப்பதற்காகவும் சமயப் பிரமாண நூல்கள் கூறும் அறங்களைப் பேணவும் சமய நீதியைக் கடைப்பிடிக்கவும் அறவழியில் பொருளாதார முயற்சிகளில் ஈடுபடவும் ஆகும்.
“கல்விக்கழகு கசடற மொழிதல்” என்பது முதுமொழி அதாவது ஒருவன் தான் கற்ற கல்விக்கு அழகு, தவறு இல்லாமல் பிறருக்குத் தான் கற்றதைக் கற்பித்தலாகும் என்பது பொருள். நற்றாமரைக் கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போற் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை உவக்கும் பினம் எனும் செய்யுளின்படி குளத்தில் உள்ள தாமரையை அன்னப்பறவை அடைந்தாற் போல, கற்றவர்களை கற்றவர்களே விரும்புவர். சுடுகாட்டிற் காக்கை பிணத்தை விரும்புவது போல கற்று அறியாத மூடர்களை மூடர்களே விரும்புவர் எனப்படுகிறது. இன்று வளர்ச்சி பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப அறிவினால் கூட ஏற்படவிருக்கும் இயற்கை அனர்த்தங்கள் எதிர் கூறமுடியாதுள்ளது. இன்றைய புதிய கண்டுபிடிப்புகள் பற்றி சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் ஞானிகள் கூறிச் சென்றுள்ளனர். அதர்வ வேதத்தின் உட்பிரிவான ஆயுர்வேதத்தை அடிப்படையாக வைத்தே பல புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக அன்றைய ஞானிகளால் முன்வைக்கப்பட்ட யோகாசனப் பயிற்சி முறைகள் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தை மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்துள்ளது.
இன்றைய உளவியல் மருத்துவர்கள் தியானத்தையே பிரதான பரிகார முறையாகக் கைக் கொள்கின்றனர். தனுர் வேதத்தைப் பின்பற்றி பல நவீன யுத்த தளபாடங்கள் ஏவுகணைகள் இன்றைய வல்லரசுகளால் உருவாக்கப்படுகின்றன. அன்றைய அர்த்த சாஸ்திரத்தையே இன்று பல அரசியல் ஞானிகள் தம் அரசியல் வாழ்க்கையில் பின்பற்றுகின்றனர். விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த கல்வியறிவு பல முன்னேற்றங்களை உலகில் ஏற்படுத்திய
இந்து ஒளி
 
 

Yy y LyLyyy ky ky LLL Okyt yyOSLykOykykykykyOyyOyyky yO ykyyy bU bilobil pblInput)
O PLITijô
ரியமூர்த்தி
ரயாளர், கல்விக்கல்லூரி
போதும் மனிதனின் அமைதி, நிம்மதி, இன்பம் போன்ற வாழ்வியல் அடிப்படைகளை அள்ளிச் சென்று விட்டது.
இவ்வுயர்ந்த அறிவினை மனிதன் இன்று ஆக்கத்தை விட அழிவுக்கே பயன்படுத்துகின்றான். எது எவ்வாறெனினும் இன்றைய விஞ்ஞானக் கொள்கை எந்தளவுக்கு உயர்ந்து சென்றாலும் அதன் அடித்தளம் புராதன இந்துக் கல்வியை அடியொற்றியதாகவேயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
புராதன இந்து சமயத்தவர்கள் தாமும் பிறரும் நல் வாழ்க்கை வாழ்வதற்குரிய கல்வி அமைப்பினையே உருவாக்கியிருந்தனர். அத்துடன் அக்காலத்தில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் புருடார்த்தங்களையும் அனுபவித்து இறுதியில் இறைவனை அடைதலே கல்வியின் நோக்கமாகக் கருதப்பட்டது.
வேத காலக் கல்வி
சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் ஆரியர் இந்தியாவில் குடியேறினர். அவர்கள் வரும்போது விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் அறிந்திருந்தார்கள். அத்துடன் பல தெய்வ வழிபாடுள்ளவர்களாகவும் காணப்பட்டனர். தெய்வங்களுக்காக யாகங்களையும் செய்தனர். இவ் யாகங்களில் தெய்வங்களைப் பல்வேறு வழிகளில் துதித்துப் பாடினார்கள். இவைகளை உள்ளடக்கிய வேதம் இருக்கு வேதமாகும்.
பின் யாகங்களில் பாடும் துதிப் பாடல்களை இணைத்து புதிதாக யசூர் வேதமும் உருவாக்கப்பட்டது. அதன் பின் “ஹோத்திரி” என்பவரால் பாடப்பட்ட துதிப் பாடல்களை ஒன்றிணைத்து சாம வேதம் உருவாக்கப்பட்டது. இன்னும் சில காலங்களில் மந்திரங்கள், செய்வினை, சூனியம், வசியம் போன்றவற்றை உள்ளடக்கிய அதர்வ வேதம் தோற்றம் பெற்றது. இந்நான்கு வேதங்களுமே அக்காலத்தில் கல்வி என அழைக்கப்பட்டன.
இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள்
e பிராமணர்
6 சத்திரியர்
e வைசியர் என்னும் மூன்று குலத்தவர்களாக இருந்தனர் ஆரியர் அல்லாதவர்கள் சூத்திரர்கள் எனப்பட்டனர். இவ்வாறு இந்து சமய சமுதாயத்தில் நான்கு குலத்தவர்கள் காணப்பட்டனர். இந்நான்கு குலங்களிலும், ஆரியர்களுக்கு மட்டுமே கல்விக்கான உரிமை வழங்கப்பட்டிருந்தது. இம்மூன்று குலத்தவர்களுக்கும் வெவ்வேறான கற்பித்தல் முறைகள் இருந்தன.
வேத காலத்தில் சமயக் கல்வி போதிக்கும் சில அமைப்புக்கள் இருந்திருக்கின்றன. இந்துக்களுக்கு சமய அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதே இவ்வமைப்புக்களின் நோக்கமாக
தாரன வருடம் தை - பங்குணி)

Page 16
இருந்தன. இவை பர்ணசாலைகள் எனப்படும். இவற்றிலே துறவிகளும், அந்தணர்களும் கூடியிருந்து சமய ஆசாரங்களைப் பின்பற்றி முன் மாதிரியான வாழ்க்கை நடத்தியதோடு கல்வி போதித்தும் வந்தனர். மாணாக்கர் குருகுல வாசம் செய்து கல்வி கற்றனர். பிரசித்தி பெற்ற வடமொழிக் கவிகளாகிய வான்மீகி, வியாச முனிவர் போன்றோர் இத்தகைய அமைப்புக்களின் தலைவர்களாக இருந்தனர். இவ்வமைப்புக்கள் சமண பெளத்த காலங்களுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
வேத காலத்தில் கற்றல் ஆரம்பிக்க முன்னர் அக்கினி பூசை நடத்தும் நடைமுறை இருந்தது. அத்துடன் அக் காலத்தில் கற்றல் இரகசியமானதொன்றாகவே கணிக்கப்பட்டது. “ஓம்’ என்ற சுப பதத்துடனேயே கற்றல் ஆரம்பமானது. மின்னல், இடி முழக்கம் உள்ள நேரங்களில் பாடம் நடாத்தப்பட்டது. தினமும் சுமார் 12 பாடங்கள் கற்பிக்கப்பட்டன. கல்வி முடிவடையும் போதும் ஒரு விசேட பூசை நடாத்தப்பட்டது.
பிராமணர்கள் குறைந்தது ஒரு வேதத்தையாவது கற்று முடித்திருத்தல் வேண்டும். சத்திரியர்களுக்கு அடிப்படைப் பாடங்களுடன் அம்புக்கலை , யுத்தப் பயிற்சி, யானை ஏற்றம், குதிரை ஏற்றம், சட்டக்கலை, தர்ம சாத்திரங்கள் என்பன கற்பிக்கப்பட்டன.
வைசியர்கள் அடிப்படைப் பாடங்களுடன் 64 கலைகளையும் கற்க வேண்டும். பெரும்பாலும் 64 கலைகளில் சிலவற்றைப் பெற்றோர்களிடமே கற்றுக் கொள்ள வேண்டும். சூத்திரர்களுக்கு பிராமணர்களிடம் கல்வி பெற்றுக் கொள்வதற்கு உரிமை இல்லை. இவர்கள் தமது லெளகீக வாழ்க்கைக்கான கல்வியை உயிர் வாழ்வதற்காக தம் வளர்ந்தோர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
குருவின் அணுக்கிரகத்தால் ஞானம் கிடைக்கும் என சாந்தோக்கிய உபநிடதத்தில் "ஆசார்யவான் புருஷோ வேத”எனக் கூறப்பட்டுள்ளது. ஆசாரியானைப் பெற்றவன் ஞானத்தை அடைகின்றான் என்பது அதன் பொருளாகும். வேத காலத்தில் குரு குலக் கல்வியே இடம்பெற்றது. இக் காலத்தில் ரிஷிகளின் ஆச்சிரமத்திலேயே கல்வி போதிக்கப்பட்டது. செவி வழிக் கல்வியாகவே இது காணப்பட்டது. இருக்கு வேத “பிரமச்சரிய சூக்தம்” இது பற்றிக் கூறுகின்றது. குரு அல்லது தந்தையே கற்பித்தனர். பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது.
அடுத்ததாக வேதத்தின் முடிந்த முடிவாகவும் வேதத்தின் உட்பொருளை விளக்குவதாயும் வேதத்தின் சாராம்சமாயும் விளங்குகின்ற உபநிடதங்கள் குருசீட கல்வி முறையிலேயே வளர்ச்சியடைந்தன எனலாம். உபநிடதம் என்ற சொல்லை எடுத்தால் அது வட மொழியில் “உபநிஷத்” எனப்படுகின்றது. உபநிஷத் என்றால் நெருங்கிக் கீழ் இருத்தல் எனப் பொருள்படும். எனவே, குருவிற்கண்மையிலிருந்து சிரத்தையுடனும் பயபக்தியுடனும் சீடர்கள் அறிவைப் பெற்றுள்ளனர் எனலாம். அதிலும் சீடர்கள் குருவினுடைய வீட்டிற்குச் சென்று வேதக் கல்வியைப் பெற்று வந்தார்கள் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.
நால் வேதங்களும் அவற்றுக்குரிய நால்வகை இலக்கியங்களாக மந்திரங்கள், பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் ஆகியனவுமே வேதக் கல்வி எனப்படுகின்றது. வேதங்களைப் போதிக்கும் போது உபநிடதங்களைக் குரு
(இந்து ஒளி

இறுதியிலேயே போதிப்பார். அதாவது மந்திரங்கள், பிராமணங்கள், ஆரணியங்கள் ஆகியவற்றைக் கற்று அதன் மூலம் பக்குவமடைந்த மாணவர்களுக்கே உபநிடதம் போதிக்கப்பட்டது. உலகப் பற்றைத் துறந்து மெய்யுணர்வு பெற்ற ஞானியரை வேண்டி அவர் வாயிலாகவே சீடர்கள் ஞானத்தைப் பெற்றனர். குருவை மகேஸ்வரனாகவே கருத வேண்டுமென உபநிடதம் கூறி நிற்கின்றது. உபநிடத காலத்தில் கல்வி குருசீட பாரம்பரியத்துக்கமைவாகக் குருவின் வீட்டில் வதிவிட முறையிலேயே வழங்கப்பட்டது. இதில் சீடன் குருவைத் தெய்வமாக மதித்தான். குரு சீடனைத் தனது பிள்ளையாகக் கருதிக் கல்வி வழங்கி நல்வழிப்படுத்தினார். சீடன் கல்வியைப் பூர்த்தி செய்தபின் தன் குருவுக்குப் பொருத்தமான குரு தட்சணை வழங்குதல் அவனது முக்கியமான கடனாக இருந்தது. பெண் குழந்தைகளுக்குரிய கல்வியை வழங்குதல் குடும்பத்தின் பொறுப்பாக இருந்தது. தொழில் கல்வி அனுபவங்களினூடாகவே வழங்கப்பட்டது.
உபநிடதக் கல்வியில் பிரமம், ஆன்மா, உலகம் பற்றிய விசாரணையே இடம்பெறுகிறது. மேலும் வேதக் கல்வியில் வேதாங்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை சமய, தத்துவ, அறிவியல் தேவைகளை நிறைவுசெய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். அவையாவன -
o சிட்சை - வேதங்களின் எழுத்து, சொல் ஆகியவற்றின்
உச்சரிப்பு முறையை விளக்குவது. e வியாகரணம் - வேதங்களின் எழுத்து, சொல், பொருள்
ஆகியவற்றின் இலக்கணங்களை விளக்குவது.
• நிருத்தம் - வேதங்களின் சொற் பொருளை விளக்குவது. இது பாஷா சாத்திரம் எனப்படுகிறது. 0 சோதிடம் - வேத கருமங்களை ஆற்றுவதற்குரிய காலச் சிறப்புகளை, அதாவது திதி, வாரம், நட்சத்திரம், பூரணை, அமாவாசை முதலியவற்றை விளக்குவது. e கற்பம் - வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை ஆற்றிப்
பயன் கொள்ளற்குரிய வழியினை விளக்குவது. சு சந்தோவிசிதி-வேத மந்திரங்களுக்கென சிறப்பாய் அமைந்த
சந்தங்களைப் பற்றி விளக்குவது.
வேத காலத்தில் பெண் குழந்தைகளுக்குரிய கல்வியை வழங்குதல் குடும்பத்தின் பொறுப்பாக இருந்தது. தொழில்கல்வி அனுபவங்களினூடாகவே வழங்கப்பட்டது. எந்தவித முறைசார் அடிப்படையிலிலுமின்றி குருவிரும்பும் எந்நேரமும் போதனையில் ஈடுபட்டார்.
புராதன இந்துக் கல்விக் கலைத்திட்டத்தில் உள்ளடங்கியிருந்த பாடங்களாக தாய்மொழி, வடமொழி, பிறமொழிகள், இலக்கியம், இலக்கணம், நிகண்டு, தத்துவம், சமயவிலக்கியங்கள், தருக்கம், நீதி நூல்கள், கிரியைகள், கணித நூல்கள். சோதிடம், இசை,நடனம், ஒவியம், சிற்பம், கட்டிடக்கலை, படைக்கல்வி போன்றவை உள்ளடங்கியிருந்தன.
புராதன கால கற்பித்தல் முறைகளாக மனனம் செய்தல், வினாவிடை முறை, கலந்துரையாடல் முறை, உரை விளக்க முறை, புராண படனம், கதாப்பிரசங்கம், வில்லுப்பாட்டு, நடிப்பு, விவாதம், செய்முறை, உரையாடல் போன்றவை அமைந்திருந்தன.
14 தாரன வருடம் தை - பங்குனி)

Page 17
கற்பித்தலும் ஒரு குறிப்பிட்ட இடமென்றில்லாமல் எல்லா இடங்களிலும் இடம்பெற்றன. உதாரணமாக ஆசிரியர் வீட்டுத் திண்ணை, அவர் வீட்டுப் பூங்கா, அம்பலங்கள், வெளிகள், ஆதீன மண்டபங்கள், ஆலய மண்டபங்கள், கடிகை ஸ்தானங்கள், பாடசாலைகள், துறவியர் மடங்கள், அவர்கள் வாழும் குகைகள் போன்றவற்றிலெல்லாம் இடம் பெற்றன. அக்காலத்தில் குரு விரும்பும் நோபெல்லாம் கற்பித்தமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும். வாய்மொழி ரீதியாகவும் செய்முறை ரீதியாகவும் இக்காலத்தில் கணிப்பீடு இடம்பெற்றது. மாணவர்கள் வெளிப்படுத்தும் திறனுக்கேற்ப பட்டங்கள் வழங்கப்பட்டன. ஆஸ்தானகவி, அவைக்களப் புலவர் குலகுரு கவிச்சக்கரவர்த்தி எனப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன.
புரான, இதிகாச காலங்களில் குரு குலக் கல்வி மேலும் சிறப்புப் பெற்றிருந்தது. வசிட்டர், விசுவாமித்திரர், துரோனர், கிருஷ்ணன் போன்றோர் ஆசிரியர்களாகவும் இராமன், இலக்குமணன், பஞ்ச பாண்டவர்கள், ஏகலைவன் போன்றோர் சீடர்களாகவும் இருந்தனர்.
புராதன காலத்தில் LITITE:T இதிகாசங்கள் ஆச்சிரமங்களிலேயே போதிக்கப்பட்டன. காசி போன்ற இடங்களில் இக்கல்வி நிலையங்கள் கானப்பட்டன. ஆச்சிரமங்களில் உபநிடதங்கள், வேதாங்கங்கள் மட்டுமன்றி சிற்ப சாத்திரம், நாட்டியம், பஞ்ச தந்திரக் கதைகள், கீதா உபதேசம் முதலியனவும் கற்பிக்கப்பட்டன. முத்தியனுபவத்தை வாழ்க்கையில் சுவைத்து அறிந்த பக்குவமடைந்த ஒருவரே குருவாக இருக்கத் தகுதி பெற்றவராக இருந்தார்.
வர்ணாச்சிரம தர்மம்
பிராமணர்கள் பிராமணர்கள் வேதங்கள் அனைத்தையும் ஒதியுணர்வதுடன் நீதி நூற் பயிற்சி, படைக்கலங்களைப் பற்றிய நூற் பயிற்சி பெறுதல் வேண்டும். அத்துடன் அவற்றைத் தம் சீடர்களுக்குப் போதித்தலும் வேண்டும்.
க சத்திரியர்கள்
இராஜ குமாரர்களுக்கு அரண்மனையிலேயே கல்வி போதிக்கப்பட்டது. அரசர்க்கு நீதி நூல் அறிவின் முக்கியவதுவத்தினை சுக்கிரநீதி எடுத்து விளக்குகிறது. மேலும் ஆசிரியன் மாணாக்கர்களுக்கு நல்ல கல்வியைப் பயில்வித்து இதோபதேசஞ் செய்தல் போல் அரசன் தன் குடிகளுக்குக் கல்வியைக் கொடுத்து நன்னெறியைப் போதிப்பவனாகின்றான் என சுக்கிரநீதி கூறி நிற்கிறது.
பிரமச்சரிய ஒழுக்கம் கல்வி கற்பதற்குரிய வாழ்க்கை நிலையாக பிரமச்சரிய நிலையே காட்டப்படுகிறது. அதாவது கல்வி தொடங்கும் காலம் ஏடு தொடங்குதலில் இருந்து திருமண வயதுவரை நீடித்தல் ஏற்புடையதாகும். ஏனைய மூன்று நிலைகளான கிருகஸ்தம், வானப்பிரகஸ்தம், சந்நியாசம் ஆகிய மூன்று வாழ்வியல் படி நிலைகளைக் கடப்பதற்குரிய பயிற்சிகள் கல்வினூடாக இப்பருவத்தில் வழங்கப்பட்டது. அப் பயிற்சிகளாக புலக்கட்டுப்பாடு, தியானம், யோகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கல்வியின் சிறப்புப் பற்றி சுக்கிர நீதி எடுத்துக் காட்டும் போது "கல்விப் பொருளொன்றே எப்பொருளினும் மிகச்
(இந்து ஒளி

சிறந்ததாகும். மற்றைப்பொருளெல்லாம் அக் கல்வியை மூலமாகக் கொண்டு உண்டாகுவனவாகும்' எனப்படுகிறது. அத்துடன் கனந்தோறும் சிறிது சிறிதாகவேனும் கல்வியை ஈட்டல் வேண்டும் எனப்படுகிறது. அத்துடன் ஒருவன் கல்விச் செல்வங்களை ஈட்டும் போது தன் வாழ் நாள் நீடித்திருப்பதாகக் கருதி ஈட்ட வேண்டும் எனப்படுகிறது.
த கிருகஸ்த நிலை
சுக்கிர நிதியில் முதலில் குலத்தையும் அதன் பின் கல்வியையும் அதன் பின் பருவத்தையும் அதன் பின் ஒழுக்கத்தையும் அதன் பின் பொருளையும் அதன் பின் உருவத்தையும் அதன் பின் இடத்தையும் ஆராய்ந்தறிந்து பின்னர் பெண்ணை மணஞ் செய்து கொடுத்தல் வேண்டும் எனப்படுகிறது. அத்துடன் புதல்வனுடைய கல்வி வளர்ச்சியின் பொருட்டும் அவன் வாழ்க்கையின் பொருட்டும் முயற்சியை மேற்கொள்பவனும் எப்பொழுதும் புதல்வனை நல்லன கூறி நன்னெறிப்படுத்துபவனும் கடன் எச்சமில்லாதவனும் ஆகிய தந்தை புதல்வனுக்கு இன்பஞ் செய்பவனாவான் எனப்படுகிறது.
வட இந்தியாவில் புராதன இந்துக் கல்வி
வட இந்தியாவில் தோன்றிய இந்து மதம் சார்பான பேரரசுகள் இந்துக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றன. அந்த வகையில் நோக்கும் போது சுங்கர், குசானர், குப்தர் முதலிய அரச வம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சுங்க அரசர்கள் கிரியை முறைகளைப் பரப்புவதற்கென்று தக்க சீலம் என்னும் இடத்தில் குருகுலக் கல்லூரியொன்றை அமைத்தனரென்று அறிய முடிகிறது. இக்கால கட்டத்திலேயேமனுதர்ம சாத்திரமும் வேதாந்த சூத்திரமும் மீமாம்சை எனும் தரிசனமும் தோற்றுவிக்கப்பட்டுக் குரு குலக் கல்வி நிலையங்களின் மூலம் பரப்பப்பட்டது.
மேலும் குப்த அரசனான அரிசனின் காலத்தில் இந்து குருகுலக் கல்விமுறை நிறுவனரீதியில் நாலந்தா எனும் இடத்தில் அமைக்கப்பட்டது. இங்கு வடமொழி போதிக்கப்பட்டதுடன் வேதங்கள் பிராமணங்கள் என்பனவும் போதிக்கப்பட்டன.
தென் இந்தியாவில் புராதன இந்துக் கல்வி து சங்கமருவியகாலம்
சங்கமருவிய காலத்திலே சமண, பெளத்த துறவிகள் பள்ளி அமைத்து அங்கு தங்கியிருந்து சமயப் பணியாற்றினர். இப்பள்ளிகளே இத் துறவிகளின் உறைவிடம், இப்பள்ளிகளில், வழிபாட்டு நிலையங்கள், போதனா மண்டபங்கள், நூல் நிலையங்கள் போன்றன அமைக்கப்பட்டன. துறவற வாழ்க்கையை மேற்கொண்ட சங்கத்தவர் தத்தம் மதக் கோட்பாடுகளைப் போதிப்பதோடு அவற்றைச் சார்ந்த கல்வியினையும் முறையாகப் போதித்து வந்தனர். அவர்களோடு துறவிகளான பல்வேறு பராயங்களிலுமுள்ள மானக்கரும் வாழ்ந்து வந்தனர். இத்தகைய பள்ளிகளுட் பிரசித்தி பெற்ற சில பிரதான கல்வி நிலையங்களாக வளர்ச்சி பெற்று நாட்டிற் பல இடங்களிற் செல்வாக்குப் பெற்றன.
பல்லவர் காலம் பல்லவர் காலத்தில் தோன்றிய சில மடங்கள் சமயக் கல்வியையும் ஒழுக்கக் கல்வியையும் அளித்தன. இவ்வொவ்வொரு மடத்திலும் ஒவ்வொரு குருநாதர் இருந்தார். தாரண வருடம் தை- பங்குணி)

Page 18
இம்மடங்கள் துறவிகளுக்குத் , தங்குமிடமாகவும் திக்கற்றவர்களுக்குப் புகலிடமாகவும் மட்டுமன்றி அடியார்க்கு அறிவுரை போதிக்கும் சமயப் பள்ளிகளாகவும் மாணாக்கருக்கு உண்டியும் உறையுளும் கொடுத்துக் கல்வி போதிக்கும் இடமாகவும் தொழிற்பட்டது. 0 சோழர் காலம்
சோழர் காலத்தில் கோயில்கள் மக்களுக்குக் கல்வி அறிவூட்டும் கல்விக் கூடங்களாகத் தொழிற்பட்டன. வித்தியாரம்பம் ஆலயங்களிலேயே இடம் பெற்றன. போதனா வகுப்புக்கள் ஆலயங்களிலேயே நடாத்தப்பட்டன. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், திருமுறை, சோதிடம், மருத்துவம், சம்பந்தமான கல்வி இம் மண்டபங்களிலேயே கற்பிக்கப்பட்டன. அத்துடன் பிரமதேயங்கள் இக் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. பிரமதேயங்கள் எனப்படுவது வேதங்களில் புலமை பெற்ற அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அவர்களுக்குரிய நிலங்கள் ஒரே இடத்திலேயே செறிவாக்கப்பட்டன.
இவை பிரமதேயம் எனும் தனிப்பட்ட கிராமமாக அழைக்கப்பட்டது. இவை நால் வேதங்களையும் ஒதுகின்ற ஒதவிக்கின்ற அந்தணர்களுக்கு அரசனால் நன் கொடையாக வழங்கப்பட்டதால் சதுர்வேதி மங்கலம் எனவும் அக்கிரகாரங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இதில் வாழ்ந்த பிராமணர்கள் வேதப் பயிற்சிக் கல்விக்கு உதவி செய்தனர்.
கோயில்களிலுள்ள கடிகை ஸ்தானங்களில் வியாகரண மண்டபங்களில் கல்வி போதிக்கப்பட்டது. நிருத்த மண்டபங்களில் கலைகள் போதிப்பட்டன. மகாபாரதம் ஒதுவார்க்கும் தேவார ஆசிரியர்களுக்கும் மருத்துவ நூல் போதிப்பவர்களுக்கும் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
9 நாயக்கர் காலம்
நாயக்கர் காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த ஆதீனங்களில் சைவ சித்தாந்த போதனைகள் இடம்பெற்றன. இக்காலத்தில் பொது மக்களின் கல்வியிலும் மன்னர்கள் கருத்துச் செலுத்தினர். கோயில்களிலும் மடங்களிலும் பண்டைய முறையிலும் அஃதாவது குரு சீட முறையிற் கல்வி கற்பிக்கப்பட்டது. சோதிடம், மருத்துவம், வானசாஸ்திரம் முதலிய துறைகளும் போதிக்கப்பட்டன. மதுரையிற் பத்தாயிரம் மாணவர்களுக்கு மேலானவர்கள் அக் காலத்திற் கல்வி பயின்றனர் என்று கி.பி. 1610இல் அங்கு சென்ற நோபிலி என்னுங் கிறிஸ்தவ பாதிரியார் கூறியுள்ளார். ஆதீனங்களில் கற்ற சிறந்த கல்விமான்கள் ஆதீன வித்துவான்களாக நியமிக்கப்படுவர். வேறு அறிஞர்களுக்குப் பட்டமளித்துச் சிறப்புச் செய்வதும் மரபு உதாரணமாகத் திருவாவடுதுறையாதீனம் ஆறுமுக நாவலருக்கு நாவலர் என்ற பட்டமளித்துச் சிறப்புச் செய்தது. இலங்கையில் புராதன இந்துக் கல்வி
இலங்கையின் கல்வி நீண்ட கால வரலாற்றையுடையது. தொல் பொருளியல் சான்றுகளும் ஆவண சான்றுகளும் எமது சமுதாயத்தில் ஆசிரியர் அல்லது குரு மிகவும் பக்தியுடன் மதிக்கப்பட்ட பக்தியுடன் வணங்கப்பட்ட ஒருவர் என்று கூறுகின்றன. ஆரியர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததன் காரணமாக பண்டைய கல்வி முறைமையில் இந்தியப் பாரம்பரியங்கள் பல இடம்பெற்றன. அதாவது புராதன காலத்தில் இலங்கையில் இருந்த
(இந்து ஒளி

கல்வி நிலையங்கள் இந்தியாவிற் காணப்பட்ட பண்டைய கல்வி நிலையங்களுக்கு நிகரானவையாக விளங்கின.
வேத இலக்கியங்களின்படி “திசாபாமோக ஆசாரி” என அழைக்கப்பட்ட ஆசிரியரிடம் மாணவன் வந்து அவருடனே தன் கட்டிளமைப் பருவம் வரை வாழ்ந்து வந்தான். ஆசிரியரே பெற்றோரின் பங்கையும் ஏற்றார். கற்று முடியும் வரை அவருடனே வாழ்ந்த பின்னர் அவரை விட்டகன்றான். மகன் தன் தகப்பனுக்கு பின் அவரது வேலையை ஏற்றான் என்பதற்கு சான்றுகள் உள்ளன. தன் வாழ்நாளில் தகப்பன் தன் மகனுக்கு பயிற்சியளித்ததால் பின்னர் மகன் தன் தகப்பன் ஏற்ற அதே பொறுப்புக்களை ஏற்க முடிந்தது. இளம் வயதினருக்கு கற்பிக்கும் ஒருவருக்கு கற்பித்தல் பற்றிய ஏதாவதொரு பயிற்சி அளிக்கப்பட்டது என்பது பற்றிய முதல் குறிப்பு இதுவாகும்.
பெளத்த இலக்கியங்களும் அரசனுக்கு ஆலோசனை களாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட்ட புரோகித பிராமணியர் பற்றிக் கூறுகின்றது. பண்டுகாய கதை இதை நன்கு புலப்படுத்துகிறது. கி. மு. 237இல் பெளத்தம் இலங்கையில் அறிமுகமானபோது பிராமணியம் படிப்படியாக மறைந்ததால் கற்பிக்கும் பொறுப்பை பெளத்த குருமார் ஏற்றனர். திசாபாமோக ஆசாரியாரை மையமாகக் கொண்டிருந்த கல்வியானது. இப்போது பெளத்த குருமாரையும் மடாலயத்தையும் மையமாகக் கொண்டது. இலங்கையில் வசித்த பிராமணர்கள் வேதக் கல்வி புகட்ட அமைந்த கல்வி முறைமை பற்றி வம்சகதா, ரசவாகினி, சிஹலவத்துப்பகரணய போன்ற பண்டைய வரலாற்றுப் பதிவேடுகள் மூலம் அறிய முடிகிறது. பிராமணர்கள் நிர்வகித்த இக் கல்வி நிலையங்களில் இளவரசர்களும், உயர் குடும்பப் பிள்ளைகளுக்கும் கல்வி புகட்டப்பட்டது. இக்குருகுலக் கல்வி முறையில் சமஸ்கிருதம், வைத்திய விஞ்ஞானம், விவசாயம், பல்வேறு கைப்பணிகள் என்பன பாடங்களாக இடம்பெற்றன. புத்தள மாவட்டத்தில் பிச்சண்டியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில் பிராமணனாகிய “கெளபூதி” தேவநம்பியதீசனின் ஆசிரியனாக இருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் திவெல என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் “கபில” எனும் ஆசிரியனின் புத்திரனாகப் “பகதேவ” என்றவன் விளிக்கப்பட்டுள்ளான். இக் கல்வெட்டு கபில என்பவனது ஆசிரியத் தொழில் பற்றிக் குறிப்பிடுவதுடன் அவன் பிராமண குலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் உறுதி செய்கிறது. இலங்கையில் இந்தியாவில் உள்ளது போலச் சாதிப் பாகுபாடு கடுமையாக இல்லாவிட்டாலும் சாதியமைப்பு அக்காலக் கல்வியமைப்பில் தாக்கம் விளைவித்தது. பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பு தாழ் நிலையில் காணப்பட்டது. எனினும் நடனம், ஒவியம் போன்ற பாடங்களில் அவர்கள் உயர் சிறப்புத் தொழிற் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.
தற்கால நவீன கல்விச் சீர்திருத்தத்தை எடுத்துக் கொண்டால் புராதன இந்துக் கல்வியமைப்பின் மீள் நிர்மாணமாகவே அது காணப்படுகிறது. உதாரணமாக 1997ம் ஆண்டு புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நோக்குவோமானால் இதில் தேசிய கல்வி ஆணைக்குழு எமது கல்விக் கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இப்பாரி மாற்றத்தின் பிரதான கூறுகளாக அமைவன
g தாரன வருடம் தை - பங்குனி)

Page 19
ம வாழ்க்கை நீடித்த கல்வி 0 சுய புரிந்துணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தல்  ைமனித விழுமியங்களை வற்புறுத்திப் பயிற்றுதல்  ைதனியாளின் உடல், உள விருத்தியில் சமநிலை வளர்ச்சியை
ஊக்கப்படுத்துதல். க சமூக வியாபார நோக்குகளின் தீய விளைவுகளைலிருந்து
வளரும் பிள்ளையைப் பாதுகாத்தல். என்பனவாகும். இக்கூறுகளே புராதன இந்துக் கல்வியின் அடிப்படையாக இருந்தன என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும். மேற் காட்டப்பட்ட விடயங்களை சாத்தியமாக்குவதனால் அதற்குச் சமயக் கல்வியே பொருத்தமானதாகும். ஏனெனில் இங்கு அடிப்படையாக இருப்பது விழுமியக் கல்வியாகும். விழுமியங்களை முறையாகப் பேணத் துணை நிற்பது சமயம் சார்ந்த கல்வியாகும். இத்தகைய கல்வியைக் கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் என இராமகிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தில் இந்து மதக்
முன்னெடுத்துச் செல்கி
GG
7ேமது சமயத்தையும், மண்ணையும், மொழியையும்
காப்பதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவதோடு ஈழத்திலே இந்து மதக் கட்டமைப்பை செவ்வனே வழி நடத்திச் செல்லும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பணிகளுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும்” என நல்லை ஆதீன முதல்வர் குரு மகா சன்னிதானம் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் ஆலயத்தில் தலைவர் வி. கயிலாசபிள்ளை தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கிய நல்லை ஆதீன முதல்வர் தொடர்ந்து தமதுரையில்;
“இந்நாட்டிலுள்ள ஏனைய மதங்களை கட்டமைத்து வழி நடத்திச் செல்ல பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இந்து மதத்தின், சைவ சமயத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதிய நிறுவனங்கள் இல்லையென்பது மன வேதனைக்குரியது. இக்குறைபாட்டினை நிவர்த்திக்கும் முகமாக தோன்றிய இந்து மாமன்றம் இன்று மிகச் சிறப்பான சமூக, சமய சேவைகளைச் செய்வதில் முன்னணியில் திகழ்கின்றது.
சைவத்தையும், தமிழையும் பாதுகாக்க கொழும்பில் தலைமையகத்தைக் கொண்டு இலங்கை மட்டுமல்லாது உலகமெல்லாம் இந்து சமயத்தின் தொன்மையை வளர்க்க அரும் பணியாற்றிவரும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளமை சாதாரண செயலன்று.
இந்த பொன்விழா ஆண்டில் இந்து மாமன்றம் மேலும் பல புதிய நல்ல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்நாட்டில் ஏனைய மத மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை இந்து சமயத்தவரும் அனுபவிக்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
(இந்து ஒளி 1.

"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” எனும் வள்ளுவர் கூற்றுப்படி கற்பதுடன் மாத்திரம் நின்று விடாமல் அதன்படி நின்றொழுகும் போதுதான் எதிர்பார்த்த கல்வி இலக்கினை எட்ட முடியும். புராதன இந்துக் கல்வி குறிக்கோள்களாகக் காட்டப்பட்ட விடயங்கள் யாவற்றையும் தற்காலத்தில் மேலை நாடுகள் தமது சொந்தக் கல்விக் குறிக்கோள்களாக உள்வாங்கிவிட இந்துக்கள் யாவற்றையும் விலக்கிவிட்டு மேலை நாடுகளில் வழக்கொழிந்து வெறுத்தொதுக்கப்பட்ட விடயங்களை உள்வாங்கி சீரழிந்து நிற்கின்றது. எனவே பாடசாலையில் சமயம் கற்பிக்கும் ஆசிரியர்கள் புராதன இந்துக் கல்வியின் சிறப்புப் பற்றிய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுதல் அவசியமானதாகும். உண்மையிலேயே அன்று ஆசிரியர் முதன்மை பெற்றிருந்தார் இன்று மாணவன் முதன்மை பெற்றுள்ளான்.
கட்டமைப்பை சிறப்பாக றது இந்து மாமன்றம்
இந்து மதம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நாம் அறிவோம். எத்தனை துன்பங்கள் இடையூறுகள் வந்தாலும் எமது சமயத்தின் பாரம்பரியத்தினைக் கட்டிக்காப்பதற்கு நாம் ஒருபோதும் பின்னிற்கக் கூடாது. இந்து மத வைபவங்களில் கட்டாயம் நந்திக் கொடி ஏற்றப்படல் வேண்டும்.
அகில இலங்கை இந்து மாமன்றமும் அதனுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களும் ஒன்றிணைந்து அண்மையில் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்துள்ளன.
இதைத் தவிர, நீண்ட கால அடிப்படையான பல திட்டங்களையும் மாமன்றம் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. இப்பணிகள் மென்மேலும் சிறப்புற வேண்டுமென்பதே எமது பிரார்த்தனை ஆகும்.
இந்நாட்டில் அல்லல்படும் அனைவரும் சுதந்திர மிக்கவர்களாக சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ வழிவகை கிட்டவும் தமிழருடைய வாழ்வும் வளமும் பிரகாசிக்கவும் இறைவன் அருள் புரிவாராக” எனத் தெரிவித்தார்.
விழாவில் ஐம்பது ஆண்டுகளை நினைவு கூருமுகமாக ஐம்பது மங்கள விளக்குகள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாமன்றத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணை புரிந்த பத்துப் பேருக்கு கெளரவமளிக்கப்பட்டதுடன் பொன்விழா காணும் மாமன்றத்திற்கு நல்லை ஆதீன முதல்வரால் நினைவுக் கேடயமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் இந்து மாமன்றப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்கள், ஆலயக் குருமார்கள், பிற இந்து மன்றங்களின் முக்கியஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையினர் கலந்து கொண்டனர்.
(தினக்குரல் செய்தி. 07.02.2005)
தாரண வருடம் தை - பங்குனி) −

Page 20
விழ்க அந்தணர் வானவர் ஆவினும் வீழ்க தன்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரண் நாமமே குழ்க வையகம் முந்துயர் தீர்க்கவே இத்திருப்பாடல் நம்மெல்லோருக்கும் தெரிந்த பாடல். இப்பாடலிலே என்ன கூறப்பட்டுள்ளது என்பதை ஆழமாகச் சிந்திப்பது அவசியமாகின்றது.
வாழ்க அந்தணர் என்று முதலிலே வாழ்த்தப்படுகின்றது. அந்தணர் என்போர் ஒரு சாதியினரா? பிறப்பால் அந்தணர் ஆக முடியுமா? நிச்சயமாக இல்லை. தெய்வப்புலவர் திருவள்ளுவர் அந்தணர் என்பவர்கள் யார்? அந்தணர்களாகத் தகுதி பெற்றவர்கள் யார் என்பதை வரையறுத்து தெளிவாகக் கூறியுள்ளார்.
ஆம், வள்ளுவர் கூறுகின்றார் அந்தணர் என்போர் அறவோர் - மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால் அதாவது அந்தணர் என்று கூறப்படுபவர்கள். உயர் குடிப் பிறப்பால் அல்ல உயர்ந்த குணங்களால் நிரம்பப்பட்டவர்கள். தீமைகளை களைந்து நன்மைகளை சிந்திப்பவர்கள். நல்லனவற்றையே நோக்காகக் கொண்டவர்கள். நல்லனவற்றையே செய்பவர்கள். இவர்கள் மற்றவர்களுக்குத் துன்பம் செய்ய மாட்டார்கள். கருணை நிறைந்தவர்கள். பண்பாக நடப்பவர்களாக இருப்பார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர்களாக இருப்பார்கள். தானும் வாழ்ந்து மற்றவர்களும் வாழ வழிவிட்டு வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள்.
இதுவே அந்தணர் என்று கூறப்படுபவர்களுக்கான வரையறை. செய்யும் தொழிலால் அல்ல. சிந்தனை வளத்தால் தான் ஒருவர் அந்தணர் ஆகமுடியும் என்ற எமது முதுமொழிகளை நாம் உணர வேண்டும். இதனை நாம் உணர்ந்து கொள்ளாவிட்டால் செம்மறி ஆட்டுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?
நல்லனவற்றையே சிந்தையிலே சிந்தித்து அதன்படி நடக்கும் உயரிய குணங்கள் கொண்ட அந்தணர்கள் வாழவேண்டும் என்று வாழ்த்துவோம். அடுத்து வானவர் அதாவது தேவர்கள் வாழ்க என்று வாழ்த்துவோம். தொடர்ந்து ஆவினம் அதாவது உலகிலுள்ள சகல உயிரினங்களும் வாழ்க என்று வாழ்த்துவோம். மனிதகுலம் மட்டுமல்ல ஏனைய சகல உயிரினங்களும் நலமாக வாழ வாழ்த்துவோம். இது இந்து சமயத்தவர் ஒவ்வொருவரதும் பண்பாக அமையவேண்டும். இதுவே இந்துவின் பண்பு.
இத்தோடு வாழ்த்தை நாம் நிறுத்தி விடலாமா? இல்லை தொடர வேண்டும். வீழ்க தண்புனல் அதாவது மழை பொழிய வேண்டும். மழைபொழிந்தால் தான் பூமி செழிக்கும், பயிர்கள் வளரும். பஞ்சம் நீங்கும், உலக உயிர்கள் யாவும் வளத்துடன் வாழும். எனவே மழைபொழிய வேண்டும் என்று வாழ்த்தி வணங்குவோம்.
வேந்தனும் ஓங்குக. வேந்தன் அதாவது அரசு சிறப்பாக உயர வேண்டும். தர்மத்தின் வழிநின்று அரசாட்சி நடைபெறவேண்டும். தர்ம வழியில் அரசாட்சி நடைபெற்றால் நாடு செழிக்கும். மக்கள்
(இந்து ஒளி
 

வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். அதனால், தர்மவழிநின்று குடிமக்களைப் பாதுகாத்து, அவர்களின் நலனைக் கவனிக்கும் அரசாட்சி நிலைக்கட்டும் என்று இறைவனை நோக்கி வேண்டுதல் செய்வோம். இது இந்துவின் கடமை.
ஆழ்க தீயதெல்லாம். ஆம் துன்பம், துயரங்களைத் தரும் ஈனச் செயல்கள் எல்லாம் அழியட்டும். தீமைகள் தரும் நோக்கங்கள், சிந்தனைகள், செயற்பாடுகள் யாவும் கூண்டோடு அழிந்து விட்டால் உலகில் துன்பம் ஏது? துயரம் ஏது?
எனவே, இறைவனை நோக்கிய எமது பிரார்த்தனைகளில் தீயவை என்று கொள்ளப்படும் சகலதும் மறைந்து விடவேண்டும் என்று பிரார்த்திப்போம்.
இறுதியாக எதனைக் கேட்க வேண்டும்? உலகம் முழுவதும் எம்பெருமானாகிய அன்பும், அருளும் நிறைந்த அரனாகிய சிவனின் திருநாமம் நிறையவேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். அன்பு என்றால் சிவம். சிவம் என்றால் அன்பு. அதேபோல் சிவன் என்றால் அன்புள்ளவன். அன்பு நிறைந்தவன் அன்பு நிறைந்த அன்பன் சிவனாவான். அன்பு உலகமெல்லாம் பரவிவிட்டால் போட்டி இருக்காது. பொறாமை இருக்காது. சண்டை சச்சரவுகள் இருக்காது. ஏன் மனிதனை மனிதன் கொன்றொழிக்கும் போர்களே இருக்காது. அமைதியான, நிம்மதியான, ரம்மியமான உலகை உருவாக்க நமது சமயத்தின் மூல மந்திரமான அன்பு உலகம் முழுவதும் வியாபிக்கவேண்டும்.
இவ்வாறு அந்தணர்கள் என்ற தகைமை பெற்ற நல்லவர்கள் நிறைய வேண்டும். தேவர்களும், உயிரினங்களும் வாழவேண்டும். மழைபொழிய வேண்டும். நல்லாட்சி செய்யும் அரசு உயர்ந்தோங்க வேண்டும். தீமைகள் எல்லாம் இல்லாதொழிய வேண்டும். எம்பெருமான், அன்புருவான சிவனின் திருநாமம் உலகமெங்கும் வியாபித்து அருள்வழங்க வேண்டும்.
இவ்வாறு நடைபெறும்போது வையகத்தை வாட்டிவதைக்கும் துயரங்கள் யாவும் அகன்றுவிடும். உலக உயிரினங்கள் நல்வாழ்வு வாழ நிம்மதியாகத் தமது வாழ் நாளைக் கொண்டு செல்ல இந்து சமயத்தின் அடிநாதமாகிய அன்புவழி, அறவழி வழிகாட்டி நிற்கின்றது என்பதை நாம் மனதிலிருத்திப் பெருமிதம் கொள்ள வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்ற நமது செந்தமிழால் இறைவனைப் போற்றும் இந்து எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று உலகிலுள்ள சகலமக்களுக்கும் இறையருள் கிட்டட்டும் என்று வேண்டுதல் செய்கின்றான். அத்தோடு விடுவானா அன்பு நெறி நிற்கும் இந்து? இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க என்று உலககெங்கும் மகிழ்ச்சி நிலவ சகலரும் நல்வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவதில் பெருமையும், உயர்வும் காண்கின்றான்.
பேதமில்லா பெருவாழ்வை இறைவனிடம் கேட்கும் இந்துவின் சிந்தனைத் தெளிவு உலகரங்கில் இந்து சமயத்தின் சிறப்புக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
1s தாரன வருடம் தை - பங்குனி)

Page 21
ஜெயபவான
ಫ್ಲಿ gశిgశీల్డ్రకిక్మికి
ஆசிரியை, இந்துக் ச
திருவுருவங்கள் இறைவனை நினைவு கூர்ந்து மனதாற் கிரகிப்பதற்கு துணை நிற்பதோடு, அவன் பெருமையினை எமக்கு ஓரளவு உணர்த்தும் கருவிகளாகவும் அமைகின்றன. ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அவனதுபெருமையையும் எமது சிறுமையினையும் உணர்த்தி நிற்கின்றது. இவ்வகையில் சிவனது திருக்கோலங்கள் அறுபத்து நான்கு ஆகும். இவை இறைவனது அருட் பெருஞ் செயலையும் எல்லையற்ற கருணைத் திறத்தையும் இயல்புலதாய் விளங்குகின்றன.
குணம், குறிகளற்ற இறைவன் ஆன்மாக்கள் மீது கொண்ட பெருங்கருணையினால் உருவத்திருமேனி தாங்குகிறான். எனவே இத்திருமேனிகள் சாந்தமும் கருணையும் நிரம்பிய திருமேனிகளாகவும், தவறிழைக்கும் தீயோரைத் தண்டித்து அவர்களை நல்வழிப்படுத்த உக்கிர வடிவங்களையும் தாங்கியுள்ளான். இத்தகைய திருமேனிகளில் இருபத்தைந்து சிவமூர்த்தங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
சிவமூர்த்தங்களில் முதன்மையாகத் திகழ்வது நடராஜ வடிவமாகும். இறைவனை நிருத்த மூர்த்தியாக வைத்து வழிபடும் மரபு பாரத தேசம் எங்கும் பரவியுள்ளது. இறைவனை ஆடும் திருக்கோலத்தில் காட்டுவது இவ்வடிவமாகும். “அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது” என்றும் தத்துவத்தை புலப்படுத்துவதாய் இம் மூர்த்தம் அமைந்துள்ளது. ஐந்தொழில்களையும் இத்தோற்றம் காட்டி நிற்கும் சிறப்பினையுடையது. நடராஜ வடிவத்தின் பிரதிமாலட்சணத்தை நோக்கும் போது, நடராஜ மூர்த்தியின் முன் இடது கை தண்டாக நீண்டு உடம்பைச் சாரும் வண்ணம் திரும்பி முன்னர் சிறிது வளைந்து தொங்கும். பின் பக்கத்தில் உள்ள இடது கை அக்கினியை ஏந்தி நிற்கும். முன் பக்கத்தில் இருக்கும் வலது கை அபயகரமாக விளங்குகிறது. பின் வலது கையில் உடுக்கை காணப்படுகின்றது. வலது கால் அபஸ்மார புருஷன் மீது சிறிது வளைத்தவாறு ஊன்றப் பெற்றிருக்கும். இடது கால் வலது கால் பக்கமாக குறுக்கே மடித்து அதைத் தாண்டி விரல்கள் கீழே தொங்கியவாறு அமைந்திருக்கும். சிவபிரானது தலையில் சடாமகுடம் விளங்கும். அதனை மலர்மாலை, எருக்கம் பூ பாம்பு, மண்டையோடு, பிறைச் சந்திரன் முதலியன அழகு செய்கின்றன. பூனூல் உடலை அழகுபடுத்துகின்றது. நடுவிரல் தவிர்ந்த ஏனைய விரல்களில் மோதிரங்கள் விளங்குகின்றன. கால்களிலே சதங்கைகள் அழகு செய்கின்றன. முகத்திலே சாந்தம் தவழும் புன்னகை இழையோடுகின்றது. இம்மூர்த்தி புலித் தோலாடை அணிந்திருப்பார். முயலகனின் தலை சிவனின் வலப்பக்கத்திலும் கால்கள் இடப்பக்கத்திலும் இருக்கும் வண்ணம் அமைக்கப்படும். நடராஜரின் இடப்பக்கத்திலே பார்வதி விளங்குவார்.
(இந்து ஒளி M-8-4)-
 

గ్దశికి
(d (d ക
ரி சிவகுமார் w ல்லூரி, கொழும்பு-4
அழகுக் கலை சிறந்த பொலியக் கண்குளிரும் காட்சி நல்கும் நடராஜத் திருவுருவம் கண்களுக்குப் பெருவிருந்தாக அமைகின்றது. இத்திருமேனி தீய எண்ணங்களை அகற்றி, நல்லெண்ணங்களைத் தோற்றுவிப்பது, மனச்சாந்தியை ஏற்படுத்துவது. நான் என்னும் செருக்கைக் கெடவைப்பது. இத்திருமேனி அழகினை அப்பர் பெருமான் “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்.” என்னும் தேவாரப் பாடல் மூலம் எடுத்து இயம்புகின்றார்.
இறைவனைப் பல நிலைகளில் வைத்து வழிபடும் மரபு சைவ சமயத்தில் சிறப்பு வாய்ந்ததொன்றாகும். இறைவன் தாயாகவும், தந்தையாகவும், ஒப்பரிய மாமனும், மாமி ஆகவும் விளங்குபவன். அவன் ஞான குருவாகவும் திகழ்கின்றான். சச்சிதானந்தனான இறைவன் ஞான வடிவினனாய் நின்று அறிவு பரப்பும் திருவுருவமே தட்சணாமூர்த்தம் ஆகும். இத்திருவுருவம் சிவாலயங்களின் கருவறையில் தெற்குப் பக்கத்தே அமைந்திருக்கும். வெளிச் சுவரில் உள்ள மாடத்தில் தென்முகமாக நிறுவப்பட்டிருக்கும்.
தட்சணாமூர்த்தம் பல்வகை நுண்ணறிவினை உணர்த்துவதாக உள்ளது. இவற்றுள் சிறப்பாக யோகம். சங்கீதம் என்னும் இரு பெருங்கலைகளைக் குறிப்பிடலாம். யோக நெறி நின்றும், சங்கீத சாதனையால் நாதோபாசனை மேற்கொண்டும் நற்கதி பெறலாம். கலைகளைப் பயிலும் தொடக்க நிலையில் இம் மூர்த்தியை உபாசிப்பர்.
மேலும் தட்சணாமூர்த்தி யோகம், புகட்டுபவராகவும், வீணை மீட்டு நுண்கலை பயிற்றுபவராயும், ஞானம் பிறப்பிப்பவராயும், சாத்திரங்களை அறிவுறுத்துபவராகவும் இம் மூர்த்தி சித்திரிக்கப்படுகின்றார். இக்காரணம் பற்றியே நான்கு பேதங்களை முக்கியமாகக் குறிப்பிடுவர். யோக தட்சணாமூர்த்தி, வீணா தட்சணாமூர்த்தி, ஞான தட்சணாமூர்த்தி, வியாக்கியான தட்சணாமூர்த்தி என்பவையே இப்பேதங்கள் ஆகும். ஆலயங்களிலே பெரும்பாலும் வியாக்கியான தட்சணாமூர்த்தியின் வடிவம் நிறுவப்பட்டிருத்தலைக் காணலாம்.
வியாக்கியான தட்சணா மூர்த்தி இமயமலையில் கல்லால மரத்தின் கீழ் புலித்தோலால் மூடப்பட்ட இருக்கையின் மீது அமர்ந்த பாவனையில் தோற்றம் பெறுவார். இவரைப் பத்மாசனத்தில் வீற்றிருப்பதாக சித்தரிப்பதும் உண்டு. வலது கால் கீழே தொங்கும். இடது கால் மடிந்து வலது தொடையின் மீது பொருந்தும். இதனை வீராசனம் என்பர். கீழே தொங்கும் கால் அபஸ்மார புருஷனை மிதித்த வண்ணம் இருக்கும். முன் உள்ள வலக்கை சின்முத்திரையைக் காட்டி நிற்கும். இடது பக்கத்தில் உள்ள முன்கை வரதகரமாக விளங்குகின்றது. பின் பக்கத்தில் உள்ள
p தாரண வருடம் தை - பங்குணி)

Page 22
வலது கை அட்ச மாலையையும் இடதுகை அக்கினி அல்லது சர்ப்பத்தையும் தாங்கி நிற்கும். உடல் சிறிது வளைவுமின்றி அமைந்திருக்கும்.
இம்மூர்த்தியின் தலையில் சடை பல கோலங்களில் புனையப்பட்டிருக்கும். இது சடாபந்தமாகவோ, சடா மகுடமாகவோ அமையலாம். சடையில் ஊமத்தம் பூ விளங்கும். தலையின் மீது இடப்பக்கத்தில் பாம்பு, சிறுமணி முதலியன இடம்பெறும். வலது பக்கத்திலே கபாலமும் பிறையும் தலை நடுவில் கங்கையும் தோற்றமளிப்பாள்.
சில மூர்த்தங்களுள் பிட்சாடன வடிவம் முக்கியம் வாய்ந்ததாகும். இறைவன் பிச்சைக்காரனாக வேடந்தாங்கி திகம்பரானாய் தாருகாவனத்து ரிஷிகளின் செருக்கினை அடக்கிய வடிவமே இதுவாகும். பிட்சாடன வடிவிலே எழுந்தருளிய இறைவனின் பெருமையை அறியாதவரான தாருகாவனத்து ரிஷிகள் அபிசார வேள்வித் தீயிலிருந்து பல பொருள்களைத் தோற்றுவித்து இறைவனை மாய்க்க ஏவினர். இறுதியில் தமது தவறினை உணர்ந்து லிங்கம் நிறுவிப் பூசித்தனர். இத்திருமேனியானது பாம்புகளை அணிந்து கரங்களில் கோடரியையும், சூலத்தையும் தாங்கி நிற்கும் நிலையில் அமைந்திருக்கும். மேலும் பக்கங்களில் மானும் அபஸ்மார புருஷனும் காணப்படுகின்றன. காரணாகமத்தின்படி மூன்று கண்களும் நான்கு கரங்களும் சாந்தமான முகமும் செம்பட்டை மயிரும் நன்கு திரண்ட உடற்கட்டும் கொண்டதாய் அமைந்திருக்கும். காதிலே குண்டலங்கள் விளங்குகின்றன. பாம்பை பூணுாலாகவும், அரைநாண் ஆகவும் அணிந்திருப்பார். கால்களில் காலணிகள் காணப்படும். ஒரு கையில் உடுக்கையும் மற்றையதில் புல்லும், சூலமும், கபாலமும் ஏனைய இரு கரங்களிலும் விளங்குகையில் ஏந்தி நிற்கும். புல்லை வாயால் பெறும் நிலையில் மான் அருகில் நிற்றல் வேண்டும். திகம்பர வடிவில் பிட்சாடனமூர்த்தி பத்மாசனத்தின் மீது தோற்றமளிப்பார்.
இறைவனது மூவகைத் திருமேனிகளான அருவம், உருவம், அருவுருவம் ஆகிய திருமேனிகளில் இலிங்கத் திருமேனி அருவுருவத் திருமேனி வகையைச் சேர்ந்ததாகும். இது உருவத்திற்கு வேண்டிய கைகால் முதலிய உறுப்புகள் இல்லாமையால் அருவமாகியும் கண்ணால் பார்க்கும் பொழுதும் கையாற் தொடும் பொழுதும் உணரத்தக்கதால் உருவமாகியும் இரு நிலைகளும் விரபப் பெற்ற வடிவமாகும். இத்திருமேனி சிவனுக்கு மட்டுமே சிறப்பாக உரியது.
லிங்கம் எனும் சமஸ்கிருதச் சொல்லின் பொருள் அடையாளம் ஆகும். சிவனைக் குறிக்கும் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம் ஆகும். லிங்கங்கள் மண்ணாலும், உலோகத்தாலும், இரத்தினத்தாலும், மரத்தாலும், கல்லாலும் அமைக்கப்படுகின்றன. சிவாலயங்களின் கருவறையில் அமைந்திருக்கும் திருமேனி சிவலிங்கத் திருமேனியாகும்.
லிங்கம் பீடத்தின் மேல் நிறுவப்படும் இதனைப் பிண்டிகை என அழைப்பர். இப்பீடம் சதுர வடிவாகவோ வட்ட வடிவாகவோ அமைந்திருக்கும். பூசை செய்யும் பாகத்திலிருந்து வெளியே நீண்டிருக்கும் பகுதியை நாளம் என அழைப்பர். இது பீடத்திலிருந்து தொடங்கி வெளியே நீண்டு நிற்கும்.
(இந்து ஒளி

அபிஷேகிக்கும் நீர் வெளியே செல்வதற்கு இது வழியாக அமைந்துள்ளது.
சிவபிரான் பிரம்ம விட்டுணுக்களது கர்வம் அடக்கிய திருக்கோலமே லிங்கோற்பவ மூர்த்தமாகும். எல்லாச் சிவாலயங்களிலும் இந்திருவுருவம் நிறுவப்பட்டிருத்தலைக் காணலாம். கருவறையின் மேற்குப் பக்கத்தின் சுவரின் புறத்தே அமைக்கப்பட்ட மாடத்தில் இவ்விக்கிரகம் நிறுவப்பட்டிருக்கும்.'" லிங்கோற்பவரின் இருமருங்கிலும் பிரமாவும் விஷ்ணுவும் கூப்பிய கரங்களுடன் நிறுவப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதெனினும் சில இடங்களில் மட்டும் இத்தகைய கோலத்தினைக் காண முடிகிறது. முதலிலே இலிங்கத்தை உருவாக்கிய பின் அதை நான்கு பங்குகளாகப் பிரித்து மேலே ஒரு பங்கும் கீழே ஒரு பங்கும் நீக்கி நடுவில் இரு பங்குகளை எடுத்துக் கொள்ளல் வேண்டும். இலிங்கத்தின் முற் பக்கத்தில் இவ்விரு பங்குகளும் உள்ளடக்கக் கூடியவாறு அண்ட வடிவினதாகக் கீறி வகுத்தல் வேண்டும். இதன் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் பிறை போன்றது. வளைந்திருக்கும் இதன் நடுவே சிவனின் உருவம் அமைந்திருக்கும். இத்திருவுருவத்தின் நான்கு கரங்கள் காணப்படும். நெற்றியில் இருந்து முழந்தாள் வரை உள்ள பகுதி மட்டுமே வெளியில் தெரியும். முன்னர் விளங்கும் இருகரங்களும் அபயகரமாகவும் வரதகரமாகவும் அமைந்துள்ளன. குண்டலம், ஆரம், கேயூரம், முத்துமாலை ஆகிய அணிகலன்கள் திருவுருவத்தை அலங்கரித்து நிற்கின்றன. விக்கிரகத்தில் மூர்த்தியின் வலது பக்கத்திலே மேலே பறக்கும் நிலையில் அன்னமும், இடது பக்கத்தில் கீழே நிலத்தை அகழ்ந்து நிற்கும் பாவனையில் பன்றியும் சித்தரிக்கப்படுவதுண்டு.
இறைவன் பிறைசூடி நிற்கும் நிலையைச் சிறப்பாக உணர்த்துவது சந்திரசேகர மூர்த்தமாகும். சிவபெருமானிடத்திற் கோபங்கொண்ட தாருகாவனத்து ரிஷிகள் அபிசார வேள்வி நிகழ்த்தி பல பொருள்களைத் தோற்றுவித்தனர். பாம்புகள், மான், மழு, அபஸ்மரா புருஷனான முயலகன், மாடு, சிங்கம் முதலிய பொருட்கள் வரிசையாக வேள்வித் தீயில் தோன்றின. தோன்றிய இப்பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சிவனைத் தாக்கும்படி ஏவப்பட்டது. இறைவன், இவர்கள் ஏவிய மழுவையும் மானையும் ஏற்று இருகரங்களிலும் அழகு பொலியத் தாங்கி நின்றார். பாம்புகள் அணிகலன் ஆயின. அபஸ்மார புருஷனைத் தமது காலின் கீழ் கிடத்தினார். யானையையும் சிங்கத்தையும் கொன்று அவற்றின் தோல்களை உரித்து ஆடைகளாகப் புனைந்தார். மண்டையோடும் பிறைச் சந்திரனும் தலை அணிகளாயின. இவ்வாறாக சுப்ரபேத ஆகமம் இறைவன் சந்திரசேகர மூர்த்தம் ஆனமைக்கு விளக்கம் கொடுக்கின்றது.
மேலும் சந்திரசேகர மூர்த்தியின் தோற்றங்கள் மூன்று வகைப்படும். இவை கேவல மூர்த்தி, உமாசகிதமூர்த்தி, ஆலிங்கன மூர்த்தி என்பனவாகும். நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் கேவல மூர்த்தியின் முன் வலக்கை அபய முத்திரையையும், முன் இடக்கை வரத முத்திரையையும் காட்டி நிற்கும். மற்றைய வலக்கையில் மழுவும் இடக்கையில் மானும் விளங்குவன. இம்மூர்த்தியின் உடல் வளைவு சிறிதுமின்றி சமநிலையில் அமைந்திருக்கும். சடாமுடி புனைந்த தலைக்கோலம் உருவிற்கு தனியழகு கொடுக்கும். முத்துமாலை, இரத்தினமாலை, பதக்கம், 20 தாரன வருடம் தை - பங்குனி)
ふ。

Page 23
பூனூல், உதரபந்தனம், கேயூரம், கடகம் முதலியன இத்திருவுருவை அலங்கரிக்கும் அணிகலன்களாகும். இம் மூர்த்தியை தனிப்பீடத்திலோ ஒரே பீடத்திலோ உமையுடன் நிறுவும்போது உமாசகித மூர்த்தி எனக் கூறுவர். தேவியை ஒரு இடது கரத்தினால் தழுவிய நிலையில் உருவாக்கும் பொழுது ஆலிங்கனமூர்த்தி என அழைக்கப்படுகின்றது. உமாசகித மூர்த்தியே பெரும்பான்மையாக இந்தியாவிலும், இலங்கையிலும், உள்ள ஆலயங்களில் நிறுவப்பட்டுள்ளது. இம்மூர்த்தம் நின்ற திருக்கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றது.
தேர்த்திருவிழா முதலிய உற்சவங்களில் வீதிஉலாக் கொண்டு எழுந்தருளும் மூர்த்தங்களுள் முக்கியமானது சோமாஸ்கந்த மூர்த்தமாகும். இறைவன் உமையுடனும் கந்தனுடனும் ஒருங்கு வீற்றிருக்கும் திருவுருவம் இதுவாகும். இங்கு சிவன் சுகாசன மூர்த்தியாக விளங்குவார். இது சுகமாக வீற்றிருக்கும் நிலையாகும். அவன் அமர்ந்திருக்கும் ஆசனம் பத்ர பீடம் எனப்படும். இடதுகால் மடிந்து முழந்தாள்வரை நீண்டு ஆசனத்தில் கிடக்கும். வலது கால் ஆசனத்தின் கீழ் தொங்கிய வண்ணம் இருக்கும். பின் உள்ள வலது கையில் பரசு விளங்கும். பின் உள்ள இடது கையில் மான் விளங்குகிறது. மற்றைய வலது கை அபயகரமாகவும் நான்காவது கை வரதகரமாகவும் விளங்குகிறது. தலை சடா மகுடம் புனைந்த திருக்கோலத்தில் காணப்படுகின்றது. ஊமத்தம் மலரும் பிறையும் சடையில் சூடப்பட்டிருக்கும். பாம்பு வடிவமான சங்கணங்கள் கைகளை அழகு செய்கின்றன.
உமை சிவனுக்கு இடதுபக்கத்திலே வீற்றிருப்பாள். இவளது, வலக்கரம் தாமரையை ஏந்தும். இடது கை ஆசனத்தைத் தொட்டவாறு அமைந்திருக்கும். தலை சுரண்ட மகுடம் புனைந்த நிலையில் விளங்கும். இடது கால் கீழே தொங்க வலது கால் மடிந்தவாறு ஆசனத்தில் பொருந்திக் கிடக்கும். தேவியின் வலது கை உற்பலத்தைத் தாங்கியும் இடது கை வரதகரமாகவும் இருக்கலாம். அமர்ந்த நிலையில் விளங்கும் தேவியின் விக்கிரகம் சிவனது தோளளவிற்கு உயர்ந்து இருத்தல் வேண்டும்.
கந்தனின் உருவம் அம்மையினதும் அப்பனதும் உருவங்களின் நடுவில் அமைந்திருக்கும். இவ்வுருவம் நின்ற நிலையிலாவது அமர்ந்த நிலையிலாவது காணப்படும். சில இடங்களில் உமையின் மடிமீது அமர்ந்திருப்பது போலும். கூத்தாடும் பாவனையிலும் கந்தனின் திருவுருவம் அமைக்கப்படுவதுண்டு. ஒரு முகமும் இரு கண்களும் இருகால்களும் சுரண்ட மகுடமும் மகர குண்டலமும் இவன் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. சன்னவீரமும் அரைச்சலங்கையும் இடையை அழகு செய்கின்றன. கைகளில் காப்பு அணிவதுடன் வலது கரத்தில் தாமரையேந்தி நிற்பான். இடது கரம் தொங்கி நிற்கும். இத்திருமேனியானது இச்சா சக்தியையும் கிரியா சக்தியையும் ஞானசக்தி ஆகிய கந்தனையும் செயற்படுத்தி பஞ்சகிருத்தியங்களையும் லீலையாகப் புரிந்து நிற்கும் நிலையினை உணர்த்துகின்றது.
கருணையே வடிவமான இறைவன் பயங்கரமான கோலம் கொண்ட தருணங்களும் இருக்கின்றன. பிரமன் ஐந்து முகங்களைக் கொண்டு விளங்கிய காலத்தில் தானும் பரமனே என இறுமாப்பும் கொண்டிருந்தான். அவனது இறுமாப்பினை அடக்க சிவன் எடுத்த உக்கிர வடிவமே பைரவ மூர்த்தமாகும்.
(இந்து ஒளி 2.

பெருந் தொந்தி உருண்ட கண்கள் இருகடைவாய்களிலும் கோரப்பற்கள் அகன்ற மூக்குத் துவாரங்கள், கபாலமாலை பாம்பினாலான அணிகலன் யானைத் தோலாடை ஆகியன பைரவ மூர்த்தியில் நாம் காணும் அம்சங்கள் . ஆடை எதுவுமற்ற நிலையிலே இவர் பெரும்பாலும் சித்திரிக்கப்படுவார். அறுபத்து நான்கு வேறுபட்ட நிலைகளில் இவரது திருவுருவம் அமைக்கப்பெறுகின்றது. அவற்றுள்அசிதாங்க பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீவுன பைரவர், சம்ஹார பைரவர் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும்.
தக்கனது வேள்வியை அழித்து வருமாறு இறைவன் வீரபத்திரரை ஏவிய வரலாற்றினை உணர்த்துவதாக அமைந்துள்ள மூர்த்தமே வீரபத்திர மூர்த்தமாகும். பைரவரைப் போன்று வீரபத்திரரையும் சிவனின் மைந்தனாகக் கருதும் வழக்கம் உண்டு. வீரபத்திர மூர்த்தியை நான்கு திருக்கரங்களுடன் உருவாக்குவர். மூன்று கண்கள் நெற்றியிலே விளங்கும். தலையைச் சுற்றி அக்கினிச் சுவாலை வீசியவாறு ஒளிபரப்பிப் பரந்து கிடக்கும். தலைமயிர் அமைந்திருக்கும் நிலையும் பயங்கரத்தை மேலும் அதிகரிக்கும். பளபளக்கும் பற்கள், மணிகள், மண்டை ஓடுகள் பாம்பினால் அமைந்த பூணுால், சதங்கை முதலியனவும் பயமூட்டுவனவாய் அமைந்து விளங்குகின்றன.
தொடை வரையுள்ள காற்சட்டையே இம் மூர்த்தியின் ஆடை இது ஊருக்கஞ்சாமை எனப்படும். இறைவன் இந்நிலையில் கட்கம், கேடம், பிண்டி, கபாலம் ஆகிய நான்கினையும் ஏந்தி நிற்பன. பறியலூரில் உள்ள திருத்தலத்தில் தக்கன் வேள்வியை அழித்த சம்பவம் ஆண்டுதோறும் நினைவு கூறப்படுகின்றது.
பூரீதத்துவநிதி என்னும் சிற்ப நூல் நான்கு கைகளும் மூன்று கண்களும் பயங்கரமான கோரப் பற்களும் உடைய உருவத்தைக் குறிப்பிடுகின்றன. இடது கையில் வில்லும் கதையும் விளங்குகின்றன. வலது கையில் கத்தியும் பாணமும் இருக்கின்றன. கபால மான்ல கழுத்தை அலங்கரிக்கும். காலில் மிதியடிகள் பூண்ட நிலை இங்கு காட்டப்படும். பக்கத்தில் பத்ரகாளியை நிறுவுவர். ஆட்டுத்தலை தாங்கி கூப்பிய கரங்களுடன் தக்கனும் பக்கத்தில் இடம் பெறுவான்.
நெருப்பு வீசுஞ் சடையும் முக்கண்ணும் வக்கிரதந்தமும், மணி கலந்த கபால மாலையும், பாம்பாலான பூணுாலும் கட்கம், கேடகம், பாணம், வில்லு தாங்கிய நான்கு கரங்களும் கனைக்காலில் கிண்கிணியும் காலில் மிதியடியும் முழந்தாள்வரை காற்சட்டையும் கொண்டு பயங்கரம் விளைவிக்கும் தோற்றத்துடன் வீரபத்திரமூர்த்தியை உருவாக்குதல் வேண்டும் என காரணாகமம் கூறுகின்றது.
இத்திருவுருவங்கள் தனித்தனிக் கோயில்கள் பெற்று பெருந் தெய்வங்களாகவும் பரிவார தெய்வங்களாகவும் விளங்குகின்றன. அரசனது மாளிகையில் அவனைச் சூழ்ந்து பணியாளர் நிற்பதை ஒத்தது. இறைவனைச் சூழ்ந்து பரிவார தெய்வங்கள் இடம்பெற்று விளங்குவது. எனவே பரிசனங்களை நிகர்ப்பனவாக பரிவார தெய்வங்கள் விளங்குகின்றன. சிவனது மூர்த்தி பேதங்கள் நவரத்தினங்கள் கோயில் வாயிலில் காவல்புரியும் துவாரபாலகர்கள், நந்தி முதலியனவும் பரிவார தெய்வங்கள் ஆகும்.
சைவசமயம், ஏனைய ஐந்து சமயப்பிரிவுகளான காணபத்தியம், கௌமாரம், செளரம், சாக்தம், வைணவம் ஆகிய
தாரன வருடம் தை - பங்குனி)

Page 24
சமயங்களை உள்ளடக்கி அத் தெய்வங்களைத் தமது பரிவார தெய்வங்களாகக் கொள்கின்றது.
இவ்வகையில் சிவாலய வழிபாட்டில் திருநந்தி தேவருக்கு முக்கிய இடம் உண்டு. பூசைக்குரிய நந்திதேவர் இறைவன் சந்நிதானத்தில் இறைவனுக்கு நேரே அமர்ந்திருக்க காண்கின்றோம். நந்தியின் உருவம் இடபத்தின் உருவத்தை ஒத்ததாகும். சிவன் சந்நிதியில் அமர்ந்து காவல்புரிவது நந்தியின் பணி, தேவர்கள் இறைவனைக் காணத் திருக்கைலாயம் சென்ற வேளையில் நந்தியின் அனுமதி பெற்றே உள்ளே நுழைந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இதனைப் போலவே திருக்கோவிலிலும் நந்தி தேவரின் அனுமதி பெற்றே உள்ளே நுழைதல் வேண்டும் எனும்மரபு காணப்படுகிறது. கணங்களுக்குத் தலைவன் ஆகவும் இவர் விளங்குகின்றார். நந்தியில்லாத சிவாலயம் சிவாலயமாகாது.
அடுத்து பரிவார தெய்வங்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் சண்டேஸ்வரர். சிவாகம முறைப்படி அமையும் திருக்கோயில்களில் விநாயகருக்குரிய முக்கியத்துவம் சண்டேஸ்வரருக்கும் உண்டு. கிரியைகள் தொடங்கும் போது விநாயகரை வழிபடுதல் அவசியம். அது போன்று சிவபூசையின் இறுதியில் சண்டேஸ்வரரை வழிபடுதல் வேண்டும். இவ்வாறு வழிபடாது விடின் சிவபூசை நிறைவு பெறாது என்பர். சிவபூசை முடிந்ததும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள்களான சிவநிர்மாலியம் சண்டேஸ்வரரிடம் சமர்ப்பிக்கப்படும். இவரது திருவுருவம் கருவறையை அடுத்து மிகவும் நெருங்கி இடம்பெற்றுள்ள சிறு தனிக் கோயில் ஒன்றில் இடம்பெறும். இதன் வாயில் கருவறையை நோக்கியவாறு இருக்கும். இது இறைவனை மிகவும் நெருங்கியிருந்து சிவபூசையில் ஈடுபடுத்தலையே சுட்டுகின்றது. எம்பிரான் சண்டேசுவரருக்கு அருளுங் கோலம் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தியாக உருப்பெற்று அறுபத்து நான்கு திருவுருவங்களுள் ஒன்றாய் விளங்குகின்றது.
சூரிய, சந்திரர்கள் மகா மண்டபத்திலோ அல்லது அதற்கு வெளியே உள்ள மண்டபத்தின் வாயிலின் இருபக்கங்களிலோ பரிவார தெய்வங்களாக இடம்பெறுவர். இவர்கள் இருவரது விக்கிரகங்களும் இறைவனை நோக்கியவாறே நிறுவப்படும். தினந்தோறும் பகலில் நிகழும் பூசை சூரிய பூசையுடனும் இரவில் நிகழ்வது சந்திர பூசையுடனும் தொடங்கும்.
0wன்றச்செய்தி
பொன்விழா ஆரட்
1011மன்றப் பொன்விழா ஆண்டின் நிகழ்வுகள் கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் ஆரம்பமானது.
இதன் தொடக்க நிகழ்வாக மாணிக்க விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேகமும், பூசை வழிபாடும் அதனைத் தொடர்ந்து ஐம்பது மங்கள தீபங்கள் ஏற்றும் வைபவமும் நடைபெற்றது.
இதன் பின்னர், மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமையில் ஆரம்பமான சிறப்பு வைபவத்தின்போது, நல்லை
(இந்து ஒளி

பரிவார தெய்வங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது எனப் பெயர்பெற்ற நவக்கிரகங்களும் முக்கியம் பெறுகின்றன. பெருந் தெய்வங்களுடன் தொடர்புபடுத்தும் போது இக்கிரகங்களின் நிலையும் உயர்ந்து விளங்குகின்றன. புராணங்கள் செவ்வாயை முருகனாகவும் புதனை நாராயணனாகவும் தொடர்புபடுத்துகின்றன.
சக்தியின் அம்சங்கள் காளி, துர்க்கை என்பன பதிவார தெய்வங்களாகவும் அமைவதுண்டு. காளி கரிய நிறத்தினை உடையவளாதலால் இப்பெயரினைப் பெற்றாள். அரக்கர் பலரை இவள் அழித்தொழிந்த வைபவத்தினை புராணங்கள் விபரிக்கின்றன. ஆன்மாக்களை உய்ய இவ்வரக்கர்களை அழித்த வேளை அவள் கொண்ட கோலம் பெரும் அச்சம் விளைவிக்கும் தோற்றம் வாய்ந்தது. இவள் அச்சந்தரும் படைக் கலங்களை ஏந்தி நிற்பன் பார்ப்போர் நடுங்கும் சிங்கத்தினை ஊர்தியாகக் கொண்டவள். மிகுந்த ஆற்றல் படைத்தவள் எனவும் புராணங்கள் சித்திரிக்கின்றன.
சைவ வழிபாட்டில் சிவனடியார்களுக்கும் இடமுண்டு. செயற்கரிய செய்த இப் பெரியார்களின் வரலாறு கூறும் நூல் பெரியபுராணம் ஆகும். நடராஜர் சந்நிதியில் இவர்களுக்கு ஆலயம் நிறுவி நித்திய நைமித்திய வழிபாடு நிகழும் இவர்களது குருபூசைத் தினங்களுக்குத் திருவிழா நிகழ்த்துதல் மரபாக அமைந்துள்ளது.
இவை தவிர இந்திரன் அக்கினி, வருணன், வாயு, குபேரன், முதலிய திற்குப்பாலகர்களும் சிவனது பரிவார தெய்வங்களாக விளங்குகின்றன. சிவபூசை நிகழும் போதெல்லாம் இப் பரிவார தெய்வங்களையும், பூசிப்பது இன்றியமையாதது. பிரமாண்டமான சிவாலயம் முழுவதும் சிவமயமானது. தேவாலயத்தின் ஒல்வொரு உறுப்புக்கும் அதிதெய்வம் உண்டு. இப்பரிவார தெய்வங்களின் பூசையில் பிரயோகம் பெறும் தியான சுலோகங்கள் இவர்களது தோற்றத்தினை வருணிக்கின்றன. இவை அர்ச்சிப்பவர் அவர்களை மனக்கண்ணால் கண்டு வழிபட பெரிதும் துணை நிற்கின்றன. ஆகவே திருக்கோவில் வழிபாட்டிலே திருவுருவங்கள் வகிக்கும் உன்னதமான பங்கினையும், அவை உணர்த்தும் அரிய தத்துவங்களையும் அறிந்து உய்தி பெறுவோமாக.
bய பூசை வழிபாடு
ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் ஆசியுரை வழங்கினார்.
ஆதீன முதல்வர் மாமன்றத்திற்கு பொன்விழா சிறப்பு விருதையும், மாமன்றத்தின் வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றிய பத்துப் பேருக்கு சால்வை அணிவித்து ஆசியையும் வழங்கிக் கெளரவித்தார்.
வைபவத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் போசனம் வழங்கப்பட்டது.
2 தாரன வருடம் தை - பங்குனி)

Page 25
இலங்கையில் இ
திருமதி நித்தியகலா கிரு5 நீர்கொழும்பு விஜயரத்தி
2லகில் மிகத் தொன்மையானதும், சமயங்களுக்கெல்லாம் தாய்ச்சமயம் எனப் போற்றப்படுவதும், “சனாதன தருமம்” எனச் சிறப்பிக்கப்படுவதுமான இந்துமதமானது. “சிவபூமி” எனத் திருமூலரால் சிறப்பித்துக் கூறப்பட்ட இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே நிலைபெற்று வளர்ச்சியுற்றிருந்தது. இவ்வரலாற்று நிகழ்வுகளை இன்று அறிந்து கொள்ள ஆதாரமாக விளங்குபவை புராண இதிகாசங்கள், வரலாற்று இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், புதை பொருட்சான்றுகள், அழியாக்கட்டிடங்கள், பிற்கால வரலாற்று ஆசிரியர் குறிப்புக்கள் என்பனவாகும்.
மேற்கூறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் இந்துப் பாரம்பரியங்களை புராதனக் காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்து நோக்கி அறிந்து கொள்ளலாம்.
முதலில் புராதனம் எனக் கருத்துக் கொள்ளப்படும் பழமையான காலத்திலே இலங்கையில் இந்து மதம் இருந்த நிலைப்பாட்டை அறிவதற்கு ஐதீகக் கதைகளில் ஒன்றாகிய இராமாயணம் பெரிதும் உதவியளித்ததைக் காணமுடிகிறது. இந்த இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை வேந்தனான இராவணன் சிறந்த சிவபக்தன் என்பதும் இலிங்க பூஜை ஆற்றுபவன் என்பதும், இலிங்கத்தை அணிபவன் என்பதும் சைவக்கிரியைகளை ஆற்றுபவன் என்பதும் இராவணனோடு தொடர்புபட்ட முக்கிய விடயங்களாகும்.
இதனைவிட இராமனின் மனைவியாகிய சீதையை இராவணன் இலங்கையில் சிறைவைத்தமையும், அவளை மீட்க வந்த இராமன் இராவணனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றமையும் இதனால் இராமனுக்கு “பிரம்மஹத்திதோஷத்தை” நீக்க அவர் திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய தலங்களிலே இலிங்கதானம் செய்து மீண்டமையும் இராமாயணத்தில் குறிப்பிட்டு இருக்கக் காண்கிறோம். இன்று வரை இராவணன் வாழ்ந்த காலம் வரையறுக்கப்படவில்லை. எனவே வரையறை கூற முடியாத பழமையான காலத்திலேயே இலங்கையில் இந்துமதம் சிறப்புடன் பேணப்பட்டதாக அறியமுடிகிறது.
அவ்வாறே மேலும் ஒரு இதிகாச காப்பியமாகிய மகாபாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இல்லையாயினும் அருச்சுனன் பற்றி மகாபாரதம் தந்திருக்கும் ஒரு தகவலை நினைவு கூறும் அவசியமுண்டு. இந்தியாவின் தென்னாட்டு யாத்திரையை மேற்கொண்ட அருச்சுனன் இலங்கைக்கும் வருகை தந்து திருத்தலங்களைத் தரிசித்து சென்றதாகவும் செல்லும்போது இங்கிருந்த ஒரு நாக கன்னிகையைத் திருமணம் செய்து கொண்டு சென்றதாகவும் மகாபாரதம் சான்று பகர்கின்றது. எனவே மகாபாரதம், இராமாயணம் எனும் ஐதீகக் கதைகளின் அடிப்படையில் நோக்குகின்றபோது "ஈழத்திலே வரையறை கூறமுடியாத காலத்து தொன்மை சிறப்புடையதாக இந்துமதம் விளங்கிற்று” எனக் கருதமுடிகிறது.
(இந்து ஒளி

M O O O
ந்துமத வளர்ச்சி
y 600TU (Tío (B.A.Dip.in. Edu.) ாம் இந்து மத்திய கல்லூரி
இலங்கையின் பூர்வீக மதமாகவும் சிறப்புப்பெற்று விளங்கிய மதம் இந்துமதம் என்பதற்கு இலங்கையின் வரலாற்று நூல்களாகிய மகாவம்சம், தடாவம்சம், வைபவமாலை என்பன பல்வேறு ஆதாரங்களை எமக்கு விளக்குகின்றன. இலங்கையின் பூர்வீகக் குடிகள் பற்றி கூறியுள்ள மகாவம்சம் இயக்கர், நாகர், வேடர் என்பவரே பூர்வீகக் குடிகள் என்றும் இவர்கள் இலிங்க வழிபாடு நாக வழிபாடு, இயற்கை வழிபாடு என்பவற்றை மேற்கொண்டு இருந்தனர் எனக் கூறி இருக்கின்ற கருத்தினால் இம்மூவகை வழிபாடுகளும் இந்துமதம் சார்ந்த வழிபாடு ஆதலால் ஈழத்தில் பூர்வீகமதம் இந்துமதம் என கருத்திற்கொள்ள முடிகிறது.
இதைவிட மகாவம்சம் தரும் மற்றுமொரு சான்றாக இலங்கையில் வந்து இறங்கிய விஜயனுடன் “உபதிஸ்ஸ” எனும் பிராமணனும் வந்ததாகவும், அவன் ஈழத்தின் ஐந்து பஞ்ச ஈச்சரங்களையும் வழிபட்டதாகவும் காணப்படுகிறது. அதுமட்டுமன்றி பழமையான காலத்திற்கு உரியவையாக மீட்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் மன்னர்களின் பெயர்களுக்கு முன்னோ, பின்னோ “சிவ” எனும் அடைமொழி காணப்படுகிறது. (உ+ம்) மூத்தசிவ, சிவதேவர எனவும் மகாவம்சம் மேலும் கூறுகின்றது.
இவைமட்டுமல்லாது இலங்கையின் புதைபொருளியல் நாயகமான “பரண விதாரண”ஈழத்தில் பல பிரதான இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்து மீட்டெடுத்த புதைபொருட்கள் காலத்தால் முந்தியவை இந்துமத நிகழ்வுகளே எனவும் கருத்துக் கூறி உள்ளமையைக் கொண்டு இலங்கையில் பெருந் தொகையினரால் இம்மதம் பேணப்பட்டு வந்ததை ஊகித்து அறிய முடிகிறது.
இவ்வாறு பேணப்பட்டு வந்த இந்துமதத்திலே, பெளத்தமதத்தின் தோற்றம் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதைச் சற்று விரிவாகப் பார்க்குமிடத்து,
கி.மு. 2ம் நூற்றாண்டளவில் தேவநம்பியதீசன் இலங்கையை ஆட்சி புரிந்த காலத்திலேயே பெளத்தம் ஈழத்திற்கு வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வருகை பற்றிக் கூற வந்த மகாவம்சம் தேவநம்பியதீசன் காலத்திலே இந்தியாவை ஆண்ட பெளத்த மதத்தினனாகிய அசோக மன்னன் தனது மகன் மகிந்தனிடம் பரிசுப் பொருட்களைக் கொடுத்து தீசனிடம் அனுப்பியதாகவும் அவனை கெளரவித்த தீசன் மக்கள் முன்னிலையில் அவனைப் பிரசங்கமாற்றும் படி பணித்ததாகவும், மகிந்தன் அறம், ஆசாரம், ஒழுக்கம் என்பவற்றைக் கொண்ட சொற்பொழிவினை ஆற்றினான் எனவும் இது மக்களுக்குப் பெரும் விருப்பைத் தந்ததாகவும் கூறுகின்றது. அவ்வாறே மன்னனும் மக்களும் பெளத்த மதத்தைத் தழுவியதாக அறிய முடிகிறது.
எனவே தற்செயலாகவோ திட்டமிட்டோ பெளத்தம் இலங்கையில் வருகைதந்தமையை அறிய முடிகிறது. மதம் மாறிய தீசன் மக்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கினான் எனவும் அறிய முடிகிறது. அத்துடன் தீசனுக்குப் பின் வந்த மன்னர்கள்
தாரண வருடம் தை - பங்குனி)

Page 26
பெளத்தர்களாகக் காணப்பட்டதுடன் அதனை வளர்க்கும் நோக்கில் பெளத்த ஆலயங்கள், பெளத்த சங்கங்கள் என்பவற்றை உருவாக்கினர்.
எனவே கி.மு. 2 - கி. பி. 6ம் நூற்றாண்டு வரையில் வரலாற்றில் பெளத்தத்தின் செல்வாக்கே மேலோங்கிக் காணப்பட்டது எனலாம். ஆனால் இந்து மதம் முழுமையாக அழிவு பெறவில்லை ஆயினும் இந்துமத்தின் நலிவுநிலை இக்காலத்திலே இருந்தது என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு நலிவுற்றுக் காணப்பட்ட இந்துமதமானது 6ம் நூற்றாண்டின் பின் இலங்கைக்கு வருகை புரிந்த இந்திய மன்னர்களால் மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ச்சியடைந்தது.
அந்த வகையில் இலங்கைக்கு வருகை தந்த பல்லவ மன்னர்கள் ஈழத்தின் மத்திய பிரதேசப் பரப்பை கைப்பற்றி பெளத்த மன்னர்களை விரட்டியடித்து பெளத்த மையஸ்தானமாக விளங்கிய அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சியை மேற்கொண்டனர். அனுராதபுர ஆட்சிக்காலத்திலே இந்துமத நிலையை அறிய தென்னிந்திய இலக்கியங்கள், சிதைந்த கட்டிடங்கள். கல்வெட்டுக்கள், புதைபொருட்கள் வாயிலாகக் கிடைத்த விக்கிரக சிற்ப வடிவங்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு நோக்கலாம்.
அவ்வாறே இலங்கையின் இந்துமத வரலாற்றிலே “தமிழகத்தின் பொற்காலம்’ எனச் சிறப்பிக்கப்படும் சோழ மன்னர்களது ஆட்சிக் காலமும், வருகையும் சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அதாவது இலங்கையின் பெரும்பாலான பிரதேசப் பரப்பினை தமக்குரியதாக்கிக் கொண்டு சோழர்கள் பொலநறுவையை இராசதானியாக்கி ஆட்சி புரிந்தனர். இவர்களுள் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரன் தலைமையில் இலங்கைக்கு வந்த படையெடுப்பானது பெளத்த செல்வாக்கைக் கலைத்து பெளத்த மன்னர்களை வலுவிழக்கவும் பெளத்த ஸ்தாபனங்களைச் செயலிழக்கவும் வைத்து இந்து மதத்தை நிலைக்க வைக்க முற்பட்ட பெருமை சோழர்களுக்கே உரியது.
அந்தவகையில் பெளத்தத்தின் மற்றுமொரு மையஸ்தானமாகிய பொலநறுவையை இராசதானியாக்கியது மட்டுமல்லாமல் அதற்கு "ஜனநாதமங்களம்” எனப் பெயர் சூட்டி அங்கு இந்தியக் குடியேற்றங்களையும் ஏற்படுத்தியதாகவும் அறிய முடிகிறது. சோழர் ஆட்சியின் நிறைவாய் இராஜேந்திரன் அமைத்த "வானவன்மாதேவி ஈஸ்வரம்” எனும் ஆலயம் சோழரின் சமயப் பணிக்குச் சிகரம் வைத்தாற் போன்று விளங்கியது என வரலாறு மேலும் சான்று பகர்கின்றது.
ஈழத்து இந்துமத வரலாற்றிலே பெளத்த வருகையை அடுத்து 19ம் நூற்றாண்டு காலத்திலே கிறிஸ்தவ மதத்தின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததோர் நிகழ்வாகும். ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டு காலம் ஐரோப்பிய ஆட்சியின் அகோரப்பிடியில் எமது இலங்கைத் திருநாடு பட்ட இன்னல்களின் வரலாறு நாமனைவரும் அறிவோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழத்திற்குப் பெருந்தொகையாய் வருகை தந்த கிறிஸ்தவ பாதிரிமார்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புதலைத் தம் தலையாய பணியாய் எண்ணினர், மக்களின் குறைபாட்டினை உணர்ந்து அவற்றுக்கான சலுகைகளை அரச உதவியுடன் வழங்க முன்வந்தனர். கூடுதலான உடல் உழைப்பை மேற்கொண்டும்
இந்து ஒளி

குறைந்த ஊதியத்தைப் பெறுவோர்க்கு அரசாங்க உத்தியோகம் தருவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. மக்களின் பலவீனத்தைத் தமக்கு பலமாக இவ்வரசு எடுத்துக் கொண்டது. மட்டுமன்றி இவை சாத்தியப்பட ஆங்கிலக் கல்வி அவசியம், கிறிஸ்தவ மதமாற்றம் அவசியம் எனவும் உணர்த்தப்பட்டது. எனவே ஆங்கிலக் கல்வியைக் கற்கும் மாணவ சமுதாயம் கிறிஸ்தவர்களாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பெருந்தொகையான மாணவர்கள் உத்தியோக வாய்ப்புக் காரணமாக கிறிஸ்தவர்களாக மாறினர்.
இவ்வாறான காலகட்டத்திலே மக்கள் கிறிஸ்தவ மதத்தை நாடிச் சென்ற வேளையிலே ஈழத்தின் இன ஞாயிறு என வந்துதித்தார் பூரீலழரீ ஆறுமுக நாவலர். இந்திய மன்னர் வருகையால் செழிப்புற்றிருந்த இந்துமதம் தளர்ச்சியடைந்த சூழலிலே இந்து மதத்தை அழிவிலிருந்து பாதுகாக்க இந்து மதத்திலே எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கிலே தனிப்பட்ட ஒருவராக தன்னை முழுமையாக சமயசேவைக்கு அர்ப்பணிக்க முன்வந்த ஒருவராக ஆறுமுகநாவலர் எழுச்சி பெற்றதைக் காண்கிறோம். தமது நாவண்மை மூலம் சைவப்பிரசங்கங்களைச் செய்தும், பாடசாலைகளைத் தாபித்தும், நூல்களை எழுதியும் வெளியிட்டும் அவர் செய்த சமய, சமூகப் பணிகள் அளப்பரியன. நாவலர் தோன்றியிராவிடில் எமது சைவசமயமே அற்றுப் போய் இருந்திருக்கும் என்றே கொள்ளல் வேண்டும். இதனையே சி. வை. தாமோதரம்பிள்ள “நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்” எனக் கூறி தெளிவு படுத்தியுள்ளார்.
இங்ங்ணமாக எழுந்த ஆறுமுக நாவலர் ஆற்றிய நிறைவான சமய சேவை இதன் விளைவாக இந்து சமயம் மீண்டு மறுமலர்ச்சி அடைந்தது. இவரால் ஏற்பட்ட சமயமறுமலர்ச்சி என்பன இக்காலத்தை சிறப்புக்குரிய காலமாக அமைத்தது. இவ்வாறு இலங்கையில் இந்துமதம் வளர்ச்சியடைந்து இன்றுவரைத் தன் நிறைவான பாரம்பரியங்களைச் சற்றும் இழக்காமல் தலைநிமிர்ந்து நிலைத்திருக்கின்றது. இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க எமது இந்து மதத்தைப் போற்றுதலும் பேணுதலும் இந்துக்களாகிய எமது தலையாய கடமையாகும்.
மாமன்றத்தின் அஞ்சலி
Iமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினர்களுள் ஒருவரான திரு. வி. நடராஜா அவர்களின் மறைவையிட்டு மாமன்றம் ஆழ்ந்த வருத்தமடைகிறது. மாமன்றத்தின் அங்கத்துவ நிறுவனமான வடகொழும்பு இந்து பரிபாலன சங்கத்தின் பேராளர்களுள் ஒருவராக மாமன்ற முகாமைப் பேரவையில் இணைந்து சிறப்பாகச் செயலாற்றி வந்தவர். ஆசிரியராகவும் பின்னாளில் அதிபராகவும் இருந்து கல்விப் பணியாற்றிய அதேவேளையில் சமயச் சமூகப் பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டவர். அன்னாரது மறைவுக்காக அவரது குடும்பத்தினருக்கு மாமன்றம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
24 தாரன வருடம் தை - பங்குனி)

Page 27
இது சிறுவர்களுக்கான சிறப் தருகிறோம். ப்ெற்றோர்கள் காட்டி அதன் தத்துவத்தை வி
இரு சமயம் சங்கரசிம்மன் என்பவன் சாகேநாட்டை ஆண்டு
வந்தான். அவன் ஒரு சிவ பக்தன். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டவன்.
ஒரு முறை அவனுக்குக் கடுமையான வயிற்றுவலி கண்டதும் எவ்வளவோ வைத்தியர்கள் வைத்தியம் செய்தும் அவன் நோய் குணமாகவில்லை.
சங்கரசிம்மன் வயிற்று வலியினால் பெரிதும் துன்பப்பட்டு வந்தான்.
வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பார்த்துவிட்டதாகவும், இனி கடவுள்தான் அரசனின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.
இனி வைத்தியர்களை நம்பிப் பயனில்லை என்று கண்ட சங்கரசிம்மன் இறைவனை வேண்டிக் கொண்டான்.
“சிவபெருமானே, என்னுடைய வயிற்று வலியைக் குணப்படுத்தி விட்டால் தங்கள் கோயிலுக்கு அருகே ஒரு குளம் வெட்டுகிறேன். அந்தக் குளம் பூராவும் பசும் பாலாக நிரப்பி வைக்கிறேன்” என்று வேண்டிக் கொண்டான் சங்கரசிம்மன்.
இந்த வேண்டுகோளுக்குப் பிறகு படிப்படியாக சங்கரசிம்மனின் நோய் குணமாகத் தொடங்கியது. சில மாதங்களுக்குள் சங்கரசிம்மன் பூரண குணம் அடைந்தான்.
'சிவபிரானின் அருளால் தான் தன் நோய் குணமாகியது என்று நம்பினான் சங்கரசிம்மன்.
நோய் குணமானதும் சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் புதிய குளம் ஒன்றை வெட்டச் செய்தான்.
குளம் வெட்டி முடிந்ததும் ஐயாயிரம் பசுக்களிலிருந்து கறந்த பாலைக் குடம் குடமாகக் குளத்தில் கொட்டச் செய்தான் சங்கரசிம்மன்.
குளத்தில் பாலைக் கொட்டக் கொட்ட உடனுக்குடன் அது வறண்டு வந்தது. முடிவில் ஒரு துளி பால் கூடக் குளத்தில் தங்கவில்லை. இதனைக் கண்ட சங்கரசிம்மன் கவலையடைந்தான்.
ஊரில் உள்ள எல்லாப் பசுக்களிலிருந்தும் பால் கறந்து வந்து குளத்தில் கொட்டுமாறு கூறினான்.
சேவகர்கள் ஊர் மக்களிடமிருந்த பசுக்களிலிருந்து பால் கறந்து வந்து குளத்தில் கொட்டினர்.
அப்பொழுதும் குளம் நிரம்பவில்லை. குளம் வறண்டு போய்ப் பொட்டலாகக் காட்சியளித்தது.
சங்கரசிம்மன் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களும் நாள்தோறும் தாங்கள் கறக்கும் பாலைக் கொண்டு வந்து குளத்தில் கொட்டிவிட வேண்டும் என்று உத்தரவிட்டான்.
எப்படியாவது அவனுக்குக் குளம் நிரம்பிவிட வேண்டும் என்று ஆவல்.
(இந்து ஒளி
 
 

புப் பகுதி. குறள்நெறிக் கதை ஒன்றினை இங்கு ங்கள் பிள்ளைகளுக்கு இக்கதையைப் படித்துக் ளக்குவது கடன்.
ால் குளம்
அதிகாரிகளும், சேவகர்களும் அரசனின் ஆணைப்படி ஊரிலுள்ளவர்கள் நடக்கிறார்களா என்று கண்காணித்து
*
வந்தனர். கறக்கும் பால் முழுவதையும் கொண்டுவந்து கொட்டாதவர்களுக்குக் கடுமையான தண்டனை அளித்தனர்.
இதற்குப் பயந்து கொண்டு குடிமக்கள் அனைவரும் தங்கள் பசுக்களில் கறக்கும் பாலை அப்படியே கொண்டு வந்து குளத்தில் கொட்டலாயினார்.
இதன் காரணமாகப் பச்சிளங் குழந்தைகள் பால் இல்லாமல் துடித்து இறந்தன. வயதானவர்களும் நோயாளிகளும் குடிக்கப் பால் கிடைக்காமல் அவதியுற்று மாண்டனர்.
இதைப் பற்றியெல்லாம் சங்கரசிம்மன் கவலைப்படவில்லை. அவனுக்குக் குளம் பூராவும் பாலால் நிரம்பிவிட வேண்டும் என்று ஒரே வெறி. ஆனால் பாவம், நாள் தோறும் குடம் குடமாகப் பாலைக் கொட்டியும் கூட அந்தக் குளத்தில் ஒரு சொட்டுப் பால் கூட நிற்கவில்லை.
ஒரு நாள் சேவகர்களில் ஒருவன் மக்கள் ஒழுங்காகத் தங்களுடைய பசுக்களிலிருந்து கறந்த பாலைக் கொண்டு வந்து கொட்டுகிறார்களா என்று சோதனை செய்து கொண்டிருந்தான். அச்சமயத்தில் ஒரு பெண்மணி தனது வீட்டில் உள்ள பசுவிலிருந்து பாலைக் கறந்துகொண்டு வெளியே செல்வதற்காகக் கிளம்பினாள். அவள் கிளம்பும் போது நோய் வாய்ப்பட்டிருந்த அவளுடைய குழந்தை அழுதது. குழந்தை பாலுக்காகத் தான் அழுகிறது என்பதை அந்தத் தாய் தெரிந்து கொண்டாள். அதன் பிறகு அவளால் வெளியே செல்ல முடியவில்லை. 'வந்தது வரட்டும் என்ற துணிவில் தன்னுடைய சிறு குவளையில் இருந்த பாலில் பாதியை எடுத்துக் குழந்தைக்குப் புகட்டினாள். பின்னர் மீதிப் பாலுடன் குளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
இவையனைத்தையும் பார்த்த சேவகன் உடனடியாக அந்தப் பெண்மணியைக் கைது செய்து கொண்டு போய் அரசரின் முன்னிலையில் நிறுத்த வேண்டுமென்று நினைத்தான்.
'அவசரப்பட்டு இப்பொழுதே ஏன் இந்தப் பெண்மணியைக் கைது செய்ய வேண்டும்? குளத்தில் பாலைக் கொட்டிய பிறகு இந்தப் பெண்மணியைக் கைது செய்வோம்’ என்று நினைத்தவனாக அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான் சேவகன்.
குளத்திற்குச் செல்லும் வழியில் பிச்சைக்காரன் ஒருவன் அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா தாயே, மகாலட்சுமி பசி காதை அடைக்கிறது. ஏதாவது இருந்தால் கொடேன்” என்று கெஞ்சிக் கேட்டான்.
அந்தப் பிச்சைக்காரனின் நிலையைக் கண்டதும் அந்தப் பெண்மணியின் உள்ளம் பாகாய் உருகியது.
தாரன வருடம் óg5 - பங்குனி)

Page 28
சற்றும் யோசிக்காமல் தன் குவளையிலிருந்த பாலில் சிறிதளவு அவனுக்குக் கொடுத்தாள்.
அதைக் குடித்ததும், “தாயே, பசியினால் போய்க் கொண்டிருக்கிற உயிரை இழுத்து நிறுத்திக் காப்பாற்றினாய் நீ நன்றாக இருக்க வேண்டும்” என்று அந்தப் பெண்மணியை வாழ்த்தினான் பிச்சைக்காரன்.
இதையும் அந்தச் சேவகன் பார்த்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச தூரம் சென்றதும் ஒட்டி உலர்ந்த நாய் ஒன்று அந்தப் பெண்மணியின் அருகே வந்து அவள் காலை நக்கத் தொடங்கியது. அந்தப் பெண்மணியின் கரத்திலிருந்த பால் குவளையின் மீது தாவித் தாவிக் குதித்தது.
இதைக் கண்ட அந்தப் பெண்மணி மிச்சமிருந்த பாலை அப்படியே அந்த நாய்க்கு வைத்து விட்டாள்.
நாய் பாலைச் சுவைத்துக் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் தனது வாலை ஆட்டிக் கொண்டு அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது.
இந்தக் காட்சியையும் அந்தச் சேவகன் பார்த்துக் கொண்டிருந்தான்.
முடிவில் குளத்தை அடைந்த அந்தப் பெண்மணி தான் கொண்டு வந்திருந்த குவளையைக் குளத்தில் கவிழ்த்தாள். அதிலிருந்து ஒரே ஒரு சொட்டுப் பால் குளத்தில் விழுந்தது.
கேட்பவருக்குப் பிரியமாக இல்லாவிடில் உண்மையைச்
சொல்லக்கூடாது என்பார்கள்.
கேட்பவனுக்குப் பிடிக்காத உண்மையைச் சொல்வதில் சிலருக்கு அலாதி பிரியம் உண்டு.
ஆன்ம நெறியில் முன்னேறியவர்கள், அவ்விதம் சொல்லமாட்டார்கள். அதை இழுக்கு என்று நினைப்பார்கள்.
ஒரு அரசர் இருந்தார். அவர் சபைக்கு ஒரு சோதிடன் ஆரூடம் சொல்ல வந்தான்.
“அரசே! தங்கள் உறவினர்கள் எல்லோரும் தங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள். நீங்கள், அவர்களுக்கு ஈமக்கிரியைகளைச் செய்ய வேண்டி வரும்” என்றான்.
அரசருக்கு அவன் சொல் பிடிக்கவில்லை. எதுவும் கொடுக்காமல் விரட்டி விட்டார். ar
ஒருவாரம் கழித்து, இன்னொரு சோதிடர் வந்தார். இந்த சோதிடருக்கு முந்தைய சோதிடர் சொன்ன ஆரூடமும், அதனால்
(இந்து ஒளி
 
 

அடுத்த கணம் குபுகுபு வென்று பால் பொங்கிக் குளம் பூராவும் நிரம்பி வழிந்தது.
இதைப் பார்த்த சேவகன் ஒடோடிச் சென்று அரசரிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தான்.
சங்கரசிம்மன் குளத்தருகே வந்து பார்த்தான். குளம் பாற்கடல் போல் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த சங்கரசிம்மன், “இறைவா நானும் குடம் குடமாக நாள்தோறும் எவ்வளவோ பாலை இதில் கொட்டி விட்டேன். அப்படியிருந்தும் அனைத்தும் பயனற்றுப் போய்விட்டது. முடிவில் இந்தப் பெண்மணி ஊற்றிய ஒரு சொட்டுப் பாலால் தானா இந்தக் குளம் நிரம்ப வேண்டும்? ” என்று இறைவனைப் பார்த்துக் கேட்டான்.
“சங்கரசிம்மா இந்தப் பெண்மணி ஊற்றிய ஒரு சொட்டுப் பால் தான் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நீ கொடுமைகள் பல புரிந்து குடம் குடமாகப் பாலைக் கொட்டினாய். அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. அன்பான உள்ளத்துடள் எனக்கு ஒரு துளி தந்தாலும் அதுவே எனக்குக் கடலுக்குச் சமம். இனியாவது ஏழை எளிய மக்களை வருத்தி என்னைத் திருப்தி செய்ய நினைக்காதே! ஏழை எளியவர்களின் உள்ளத்தில் தான் நான் குடி கொண்டிருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் நானும் மகிழ்வேன்” என்றார் கடவுள்.
அன்று முதல் சங்கரசிம்மன் ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்வதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டான்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
v
//த்தைதன *
அவருக்கு ஏற்பட்ட அவமானம் தெரியும். முந்தைய சோதிடர் கூறியது முற்றிலும் உண்மை என்பதும் தெரியும். அதனால், என்ன செய்வது என்று யோசித்து சமயோசிதமாக, “அரசே! தங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு! உங்கள் உறவினர்கள் எல்லோரையும் விட நீங்கள்தான் நீடு வாழ்வீர்கள்!” என்றார்.
அரசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சோதிடருக்கு நிறைய பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தார்
சோதிடர் சொன்னதன் உட்பொருளை யோசித்தால், முதல் சோதிடர் கூறியதையே இரண்டாவது சோதிடரும் கூறியிருக்கிறார் என்று தெரியவரும், ஆனால் அதை வேறுவிதத்தில் சொன்னதால், அரசருக்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
உண்மையை, பிறர் மனசில் குத்தும்படி சொல்லக்கூடாது. அதே வார்த்தைகளை இதமாகச் சொல்வதற்கு வழி உண்டு!
26. தாரன வருடம் தை - பங்குனி)

Page 29
இது மாணவர்களுக்கான 2 LL'-UL- uDIT 6oor6)Jï85Grbö(5 இது போன்ற விஷயங்கள்
You ១
தேடிவந்ததெய்வம்
இறைவன் திருக்காட்சியைக் கண் குளிரக் கண்டு, அவர் திருவுளத்தின்படி பாடல்கள் பாடும் வாய்ப்புப் பெற்றவர் ஆரூரர் என்னும் சுந்தரர் என்பதை அறிவோம். இவர் பல திருத்தலங்கள் சென்று இறைவனைப் பாடி வழிபட்டு வந்தார். இவருக்குத் தில்லையிலே கோயில் கொண்டுள்ள நடராசப் பெருமானை வழிபடும் ஆர்வம் மிகுந்தது. எனவே தில்லைப்பதியை நோக்கி நடைகொண்டார். தென்பெண்ணையாற்றைக் கடந்து, திருவதிகை என்னும் திருப்பதியின் அருகே வந்து சேர்ந்தார்.
இத்திருவதிகை திருநாவுக்கரசு நாயனார் என்னும் அருள் பெருமானால் இறைவனை வழிபட்ட இடம். எனவே இந்த இடத்தைத் தமது கால்களால் மிதிப்பது தக்கதல்ல என எண்ணிய சுந்தரர், வெளிப்பகுதியில் நின்றே இறைவனை வணங்கினார். நேரமும் இருட்டியது. எனவே இங்குள்ள ‘சித்தவடம் என்னும் மடத்தில் தம்மோடு வந்த அடியார்களுடன் அன்றிரவுப்பொழுதைக் கழிக்கலானார்.
நடு இரவுப் பொழுது, சுந்தரர் துயின்று கொண்டிருந்தார். இவருடைய முடியின்மீது தம் கால் படும்படியாக யாரோ ஒருவர் அங்கே படுத்திருந்தார். விழித்தெழுந்த ஆரூரர், அவ்வாறு செய்தது யார் எனப் பார்த்தார். வயது முதிர்ந்த ஒரு அந்தணர், அவரே இச்செயலைச் செய்திருந்தார். அவரைப் பார்த்து ஆரூரர், "ஐயா, இது என்ன செயல்?” என்று கேட்டார்.
அந்தக் கிழ அந்தணரும் தமது செயலுக்கு வருந்தியவர் போல், "ஆம், தவறு நடந்து விட்டது. நான் வயதானவனல்லவா? அதனால் ஏற்பட்ட பிழை” என்று சொல்லிக் கொண்டார்.
சுந்தரர் முதியவரின் மொழிகளை உண்மையென நம்பினார். முதுமைக் காலத்தில் உடல் தளர்ச்சியாலும், நினைவு மறதியாலும் தவறுகள் ஏற்படுதல் இயல்பல்லவா? இதையே சுந்தரரும் நினைத்தார். அந்த முதிய அந்தணரிடம் அவர் எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. வயதான பருவத்தில் அவர் சோர்வு நீங்கத் துயில் கொள்ளட்டும். நாம் சற்று அப்பால் சென்று படுத்துக் கொள்வோம்' என்று ஆரூரர் எண்ணியவராய் மற்றொரு பக்கம் சென்று படுத்தார்.
சற்று நேரம் கழிந்தது. மீண்டும் அம் முதியவர் ஆரூரர், படுத்திருந்த இடத்தில் இதையே செய்தார். ஆரூரரால் இதைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. முதியவர் வேண்டுமென்றே இதைச் செய்கிறார் என நினைத்தார். ஆரூரருக்குச் சினம் பொங்கியது. அந்த முதியவரைப் பார்த்துப் படபடப்புடன், “என்ன ஐயா இது? மீண்டும் மீண்டும் என்னை இவ்வாறு மிதிக்கின்றீர்கள், நீங்கள் யார்?’ என வினாவினார்.
புன்முறுவல் இழைத்தார் முதியவர். அவர் ஆரூரரைப் பார்த்து, “என்னை உனக்குத் தெரியவில்லையா?” என்று திருப்பிக் கேட்டார்.
இந்து ஒளி 2
 

Ya
ந்கம். இதில் சமய வரலாறு, மற்றும் புராணக் கதைகள் பயனுள்ள பல விஷயங்கள் அலங்கரிக்கின்றன. மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
புராணக் கதைகள்
‘என்ன இவர் நமக்குத் தெரிந்தவரா? அப்படியானால் யார்? என்ற சிந்தனையுணர்வில் ஆரூரர் நின்று கொண்டிருந்தார். என்ன புதுமை! அடுத்த கணம் அங்கேயிருந்த அந்த முதிய அந்தணரைக் காணவில்லை. இதன் பிறகுதான் சுந்தரருக்கு இறைவரே அந்தணர் வடிவம் தாங்கி வந்திருந்தார் என்பது புரிந்தது. அவரது பேரருளை நினைந்து உருகினார்; அன்புக் கண்ணிர் சுரந்தது.
எல்லோரும் இறைவனைத் தேடிச் சென்று, அவன் அருளைப் பெறுவார்கள். ஆனால் ஆரூரராகிய சுந்தரரைத் தேடி இறைவரே வந்தார். இதற்கு என்ன காரணம்? இறைவர்மீது சுந்தரர் கொண்டிருந்த பக்திதான். இறைவர் அடியவர்களிடம் நீங்காத பேரன்பு கொண்டவரல்லவா! அவர் அன்புக்கும் அருளுக்கும் எல்லையுண்டோ?
இறைவரிடம் நீங்காத நினைவும் பக்தியும் கொண்டவர்கள் அவரால் எப்போதும் நினைக்கப்படுவார்கள் என்பது இந்நிகழ்ச்சியிலிருந்து தெரிகிறதல்லவா?
அடியவரால் அனைவருக்கும் நன்மை
திWவிரி பாய்ந்து வளம் பெருக்கும் சோழ நாட்டிலுள்ள ஊர்களில் திருவாரூர் சிறந்தது என்பது தெரிந்ததே. இவ்வூரின் அருகே உள்ளது குண்டையூர் என்னும் சிற்றுார். இவ்வூரில் பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது பெயர் குண்டையூர்க் கிழவர் என்பதாகும். இவர் தெய்வ பக்தி மிகுந்தவர். சைவ நெறியை மேற்கொண்டொழுகியவர். இவருக்கு ஆரூரராகிய சுந்தரரிடம் அளவு கடந்த அன்பு.
சுந்தரர் பரவையார் என்னும் பெருமாட்டியைத் திருமணம் செய்து இல்லறம் நடத்தி வருகின்ற நாளில் இவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களைக் குண்டையூர்க் கிழவரே அனுப்பி வைத்தார். நாள்தோறும் இவரால் அனுப்பப்படும் நெல், கறிகாய் போன்ற பொருட்கள் பரவையார் திருமாளிகைக்கு வந்து சேரும்.
இவ்வாறு நடந்து வரும் நாளில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவுக்கு வழியற்று வாடித் தவித்தனர். நெருக்கடியான நிலையிலும் குண்டையூர்க் கிழவர் பரவையார் இல்லத்திற்குத் தவறாது உணவுக்கு வேண்டிய பொருட்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இயற்கையோ பெரும்சோதனை செய்து கொண்டிருந்தது. ஒருநாள் பரவையார் இல்லத்திற்கு உணவு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. குண்டையூர்க் கிழவருக்கு இதனால் ஏற்பட்ட வருத்தம் அளவிட முடியாததாய் இருந்தது. இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டதேயென அவர் மிகவும் வேதனையுற்றார். அன்று அவர் உணவே உட்கொள்ளவில்லை. இறைவனை நினைந்து, உள்ளம் உருகியவராய் அன்றிரவு துயில் கொண்டார். அயர்ந்த துயிலில் குண்டையூர்க் கிழவர் அற்புதக் கனவொன்று கண்டார். அக்கனவில் இறைவன் தோன்றி
தாரண வருடம் தை - பங்குனி
CDL-ld Gö

Page 30
அவரிடம், “வருந்த வேண்டாம். ஆரூரற்கு உதவ நெல் வழங்கினோம்” எனக் கூறி மறைந்தார்.
காலையில் கண்விழித்த குண்டையூர்க் கிழவர் இறைவனைத் துதித்த வண்ணம் எழுந்தார். அவர்தாம் கண்ட காட்சியை என்னவென்று சொல்வார்! தம் வீட்டின்முன் நெல் மலைபோல் குவிந்திருப்பதை அவர் கண்டார். அவருக்குத் திகைப்பு ஒர் பக்கம், மகிழ்ச்சி ஒர் பக்கம். இறைவன் பேரருளை நினைந்து ஆனந்தக் கண்ணிர் உகுத்தார்; அவரால் ஆகாததும் உண்டோ என அதிசயித்து நின்றார். இறைவன் அருள் சுரந்து வழங்கிய நெல்லை ஆரூரர் இல்லம் சேர்க்க எண்ணினார். அத்துணைப் பெருங்குவியல் நெல்லை எவ்வாறு கொண்டு சேர்க்க இயலும்? திகைப்புற்று ஏங்கினார். இறுதியில் ஆரூரரிடமே கேட்டு, அவர் கூறும் வழியில் சேர்ப்போம் என முடிவு செய்தவராய் திருவாரூருக்கு வந்தார்.
கனிவுமிக்க குண்டையூர்க் கிழவர் தம்மை நாடி வருவதை ஆரூரர் அறிந்தார். அவர் தான் இறைவன் திருவருள் பெற்றவராயிற்றே! உடனே ஆரூரர் குண்டையூர்க் கிழவரை அழைத்துவர எதிர் சென்றார். ஆரூரரைக் கண்ட குண்டையூர் கிழவர் அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இறைவர் தம் கனவில் தோன்றி அறிவித்ததையும், அதன்படி துயில் நீத்து எழுந்தபோது தாம் கண்ட நெல் குவியலையும் குறித்து ஆரூரரிடம் அறிவித்தார். இதைக் கேட்ட ஆரூரர் “பேரன்புடையீர், பிறையணிந்த பெருமான் உமக்கு நெல் அளித்தாரென்றால் நீர் பெரும்பேறு பெற்றவரே” எனக்கூறி அவரை உபசரித்துப் போற்றினார். உள்ளம் கலந்து உரையாடிக் கொண்டார். இறைவனது அருட்கனிவால் தோன்றிய நெல் மணியைக் காண ஆரூரர் விரும்பியதால் குண்டையூர்க் கிழவரோடு அவரது ஊருக்குச் செல்லலானார். A
அங்கு பெருகிக் குவிந்து கிடக்கும் நெல்லைக் கண்ட ஆரூரர் அதிசயித்துப் போனார். பிறப்பறுக்கும் பெருமானின் பெருங் கருணையை நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்தார். அடியவர் பால் அவர் காட்டும் அருளுக்கு எல்லையுண்டோ?
குண்டையூரில் குவிந்துள்ள நெல்லைத் திருவாரூர் கொண்டு, செல்ல வேண்டுமே! இதற்கு வழி? ஆரூரர் சிந்தித்தார். இதற்கு இறைவரின் அருளையே நாடினார். எனவே அருகேயுள்ள திருக்கோளிலி என்னும் திருத்தலம் சென்று, அங்கு கோயில் கொண்டுள்ள பெருமானைப் பரவி வழிபட்டார். அவரது பாதாரவிந்தத்தை வணங்கித் தொழுதார். நெல்லைத் திருவாரூக்குக் கொண்டு செல்லும் நெறியைத் தெரிவிக்க வேண்டுமென விண்ணப்பம் செய்தார். அடியவர் இரங்கி வேண்டுதலை அருளுதல் இறைவர் இயல்பன்றோ! அந்நேரம் அங்கே ஒரு வான் குரல் எழுந்தது. 'பகல் முடிந்ததும் பரவையார் இல்லத்தோடு, திருவாரூர் எங்குமே நிறைய நெல்லை நம்பூதங்கள் கொண்டு வந்து சேர்க்கும்” என்று அக்குரல் ஒலித்தது. ஆரூரர் கங்கைவார் சடையானின் கருணையை எண்ணியெண்ணி மெய்சிலிர்த்தார். மீண்டும் இறைவரைத் தொழுது திருவாரூர் போய்ச் சேர்ந்தார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. எங்கும் நெற்குவியல்களின் காட்சியே காணப்பட்டது. திருவாரூர்த்தெரு வீதியில்நடந்து போக முடியாத அளவுக்கு நெல். ஆரூரரின் மனைவியார் பரவையாருக்கு இது பெரும் வியப்பை அளித்தது. அவர் பரம்பொருளின் திருவருளை நினைந்து நெஞ்சம் பூரிப்புற்றார். அப்பெருமானை வணங்கி வாழ்த்தினார். மக்களும் இந்த அதிசயக் காட்சியை
(இந்து ஒளி

கண்டு மெய்மறந்து நின்றனர். நெல் கிடையாமல் பசியால் வாடும் பரிதவித்த அம்மக்கள், தெருவீதியெங்கும் இந்த நெல் பெருக்கத்தைக் கண்டதும் களிபொங்கிக் கூத்தாடினர்.
ஆரூரரின் மனைவியாகிய பரவையார் தமக்கே உரின்மப்பட்ட அந்த நெல் குவியல்கள் அனைத்தையும் தாம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஊரிலுள்ள மக்கள் அனைவருக்கும் அது பயன்பட வேண்டும் எனக் கருதினார். உலகிலுள்ள எல்லா உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டவைதாமே அவ்வுயிர்களுக்கு உதவுவது இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதன்றோ? மேலும் பசிப்பிணி என்பது மிகக் கொடிதல்லவா? அப்பிணியை நீக்குவது அறச்செயலுமன்றோ? எனவே கனிவுள்ளமுடைய பரவையார், 'ஒவ்வொருவரும் தம் தம் வீட்டின் முன்னேயுள்ள நெல்லை எடுத்துக் கொள்ளவும் எனப்பறைமுழக்கி அறிவித்தார். ヘ
இச்செய்தியைக் கேட்ட மக்களின் மகிழ்ச்சிக்கு ஒரு எல்லையுமுண்டோ? பட்டினி பசியால் வாடித் தவித்த அவர்கள், பரவையாரையும் ஆரூரரையும் வாயார வாழ்த்தி வணங்கினார்கள். ஆரூரரின் இறையுணர்வுப் பெருக்கத்தையும் ஈடுபாட்டையும் வியந்து புகழ்ந்தார்கள். நல்லார் ஒருவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது போல் ஆரூர்ப் பெருமகனால் அனைவருக்கும் ஏற்பட்ட நன்மையன்றோ இது
பிறை சூடிய பெருமானாகிய சிவனாரிடம் இடையறாத அன்பு கொண்ட அடியார் ஒருவரால் அனைவர்க்கும், நன்மை விளைந்ததை இக்கதை நமக்கு அறிவிக்கின்றது.
சகலமும் ஆன
சகலகலாவல்லி
உலகில் ஆண் தெய்வங்கள் யாவும் சக்தியோடு சேர்ந்திருப்பதையும், பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களில்லாது தனித்திருப்பதையும் காண்கிறோம். இதனால் சக்தியே பிரதானமென்பது புலப்படும்.
பராசக்தியே பிரம்மனிடம் சிருஷ்டி சக்தியாகவும் விஷ்ணுவிடம் ஸிதிதி சக்தியாகவும், உருத்திரனிடம் சம்கார சக்தியாகவும் விளங்குகிறாள்.
சகல ஜஸ்வர்யங்களையும் அளிக்கும் மஹாசக்தி பெண். கல்வி, சங்கீதம், கீர்த்தி, செல்வம், தானியம், வெள்ளி, பூமி, தண்ணிர் முதலான எல்லா அம்சங்களுக்கும் தலைமை தாங்குவன பெண் சக்திகளே.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் குறிக்கோள்களைச் சக்தியின் மூலம் அறிய முடியும். சாத்வீகம், இராசதம், தாமதம் என்பன முக்குணங்கள். இவை அமையப்பெற்ற ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி என்னும் மூவகைத் தோற்றங்களும், பராசக்தி; லட்சுமி, துர்க்கை சரஸ்வதி ஆவர்கள்.
பராசக்தியைத் துர்க்கா ரூபமாக உபாசித்தால் பயநாசம் உண்டாகும். லட்சுமி ரூபமாக உபாசித்தால் செல்வப் பெருக்கு உண்டாகும். சரஸ்வதி ரூபமாக உபாசிக்க கல்விப் பெருக்கு உண்ளடாகும். பார்வதி ரூபமாக உபாசிக்க ஞானப் பெருக்கு உண்டாகும். ஆக சகலமும் ஆனவள் சக்தி சகலகலாவல்லி வித்தகி பராசக்தியே.
(நன்றி ! தீப ஆராதனை)
مجمہ ܐ ܥ
28 தாரன வருடம் தை - பங்குனி)

Page 31
எஸ். சு 11% ஆண்டு, உடுவி
Uக்கள் அனுட்டிக்கும் நியதிச் செயல்கள் கிரியை எனப்படும் கரணம், சடங்கு என்பன கிரியையின் பொருளைத் தருகின்றன. கிரியைகளை ஆலயக் கிரியைகள், வீட்டுக் கிரியைகள் என இருவகைப்படுத்தலாம். பூசைகள், அபிஷேகங்கள், சாந்திகள் ஆலயக் கிரியையிலும் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, உபநயனம், காதுகுத்தல் மற்றும் அந்திமக்கிரியைகள் வீட்டுக் கிரியைகளிலும் அடங்குகின்றன. கிரியையை சிவாகமங்களும் அவற்றைச் சார்ந்த உபாகமங்களும் விரித்துக் கூறுகின்றன.
01 நித்திய கிரியைகள்
தினமும் ஆலயங்களில் நடைபெறும் நியதிச் செயல்கள் நித்திய கிரியைகள் எனப்படும். ஆவாகனம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அருச்சனை, துதி, நிருத்தியம் என்பன ஆலயங்களில் நடைபெறும் நித்திய கிரியைகளின் நியதிகள் ஆகும். ஆலயங்களில் நியதிக்கிரமத்திற்கு இணங்க பன்னிரு காலப் பூசைகள் அல்லது ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. காலை, நண்பகல், மாலை, என்னும் முக்காலம் அல்லது காலை, மாலை, இருவேளை பூசைகள் ஆலயங்களில் நடைமுறையில் காணப்படுகின்றன.
02 ஆறுகாலப் பூசைகள்
உஷக்காலம், காலை, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தசாமம் என்பன ஆறுகாலப் பூசைகள் ஆகும். உஷக்காலப் பூசையை அனந்தற் பூசை எனவும், காலைச் சந்திரப் பூசையை காலைப்பூசை எனவும், உச்சிக்காலப் பூசையை மத்தியானப் பூசை எனவும், சாயரட்சைப் பூசையை மாலைப் பூசை எனவும் இரண்டாங்காலப் பூசையை இரவுப்பூசை எனவும், அர்த்தயாமப் பூசையை சாமப்பூசை எனவும் அழைப்பார்கள்.
(அ) உஷக்காலப் பூசை
சூரியன் உதிக்கும்முன் மூன்றே முக்கால் நாழிகையின் முன்நடைபெறும் பூசை உஷக்காலப் பூசை ஆகும். உஷக்காலப் பூசை செய்யும் அர்ச்சகர் முதலில் தமது அனுஷ்டானங்களை முறைப்படி செய்தல், பின் ஆலயத்தினுள் பள்ளியறைத் திறப்புடன் சம்பிரதாய பூர்வமாக சென்று திருப்பள்ளியெழுச்சி இசைத்தல், பின்னர் இறைவனுக்குச் சாத்தப்பட்ட பூ பூமாலை என்பனவற்றை களைந்து இறைவனை எழுந்தருளச் செய்து பின் கருவறைக்கு எழுந்தருளி வந்திருக்கும் மூர்த்தியில் இருக்கும் இறைவனை உற்சவக் கிரியையில் மூல மூர்த்தியில் சேர்ப்பித்தல் இவ்வாறான அங்கங்களைச் செய்தல் வேண்டும்.
(இந்து ஒளி 2
 

| 9έλωOοιππεύωir
கந்தினி
ல் மகளிர் கல்லூரி.
(ஆ) காலைச்சந்திப் பூசை
சூரியன் உதித்த பின் ஏழரை நாழிகைக்குள் நடைபெறும் பூசை காலைச்சந்திப் பூசை ஆகும். சூரிய பூசை, விநாயக பூசை, பின்பரிவார தெய்வங்களுக்கான பூசை, நித்தியபலி என்பன காலைச்சந்திப் பூசையின் அங்கங்கள் ஆகும்.
(இ) உச்சிக்காலப் பூசை
நண்பகலில் வரிசையாக நடைபெறும் பூசை உச்சிக்காலப் பூசை ஆகும். உச்சிக்காலப் பூசையில் அர்ச்சகர் தமது நித்திய கடமைகளைச் செய்து முடித்த பின் விக்னேஸ்வர பூசை தொடக்கம் நான் அந்த சிவனாக இருக்கிறேன். ஆகவே அர்ச்சகர் தன்னை சிவமாகப் பாவித்தல் என்ற சிவோகம் பாவனை போன்ற பூர்வாங்க கிரியைகளை நிறைவேற்றிய பின் கும்பபூசை செய்து மூலமூர்த்திக்குரிய ஆவரண பூசை செய்து பின் சிவ நிர்மாலியம் எனப்படும் இறைவனுக்கு சாத்தப்பட்ட பூ பூமாலை என்பவற்றை சண்டேஸ்வரனிடம் ஒப்படைத்தல் போன்றன இப்பூசையின் அங்கங்களாகும்.
(ஈ) சாயரட்சைப் பூசை
சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நிகழும் பூசை சாயரட்சைப் பூசை ஆகும். விநாயகர் பூசை நடேசர், அம்பாள் ஆகியோரை முறைப்படி பூசித்தல் என்பன சாயரட்சைப் பூசையின் அம்சங்கள் ஆகும். சாயரட்சைப் பூசையை பிரதோஷ காலப் பூசை எனவும் அழைப்பார்கள்.
(உ) இரண்டாங்காலப் பூசை
மாலைப் பூசையின் பின் மூன்றேமுக்கால் நாழிகையில் திகழவேண்டும் என்பது இரண்டாங்காலப் பூசையின் நியதி ஆகும். இரவுப் பூசை எனப்படும் பிரதோஷ காலத்தின் பின் இரண்டாவதாக நிகழும் பூசையே இரண்டாம் காலப் பூசையாகும். அர்ச்சகர் மாலையில் நீராடித் தூய கோலத்துடன் வந்து முதலில் விநாயகர் பூசை செய்து பின் துவாரபாலகர் பூசை நிகழ்த்தி பஞ்சாவரணபூசை செய்து ஸ்நாபனம் முதல் அருச்சனை வரையுள்ள பூசை வரிசையை நிறைவு செய்து பரிவார தெய்வங்களுக்குரிய நித்தியோற்சவம், நித்திய பலி என்பனவற்றை நிறைவேற்றி சண்டேசுவரர் பூசையை நிறைவேற்றுதல் என்பன இரண்டாங்காலப் பூசையின் கிரமங்கள் ஆகும்.
(ஊ) அர்த்தயாமப் பூசை
இரண்டாங்காலப் பூசையில் இருந்து மூன்றேமுக்கால் நாழிகை எல்லைக்குள் அர்த்தயாமப் பூசை நிகழ வேண்டும் என்பது நியதி ஆகும். முதலில் அபிஷேகம் தொடக்கம் தூப, தாரன வருடம் தை - பங்குனி)

Page 32
தீபாராதனை வரையுள்ள நியதிகளை வரிசையாகச் செய்து பூசை முடிந்தபின் எழுந்தருளி மூர்த்தியைத் தேவியுடன் சிவிகையில் பள்ளியறையில் எழுந்தருளச் செய்து நிவேதனப் பொருள்களைச் சமர்ப்பித்துத் திரையிட்ட பின் வெளியேறல், பின் சண்டேசுவரர் பூசை நிகழ்தல், பின் ஆலயப் பாதுகாப்பை வைரவரிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைத்தல் என்பன அர்த்தசாமப் பூசையின் அம்சங்கள் ஆகும்.
(3) நைமித்திய கிரியைகள்
ஒரு விசேட காரணம் அல்லது நிமித்தத்தை முன்னிட்டு ஒருவார, இருவார. ஒருமாத, சில மாத, ஒரு வருட, பல வருட இடைவெளியின் பின் நிகழும் சம்பிரதாய பூர்வ நியதிச் செயல்கள் நைமித்திய கிரியைகள் எனப்படும்.
சங்கரத்தை பிட்டியம்பதி 1
சந்திரசோ ஆண்டு 10 (யாl ய
VAழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றுார் சங்கரத்தை. அவ்வூரின் மேற்குப் பகுதியில் நெல்வயல்களால் சூழப்பட்ட பிட்டியம்பதி என்னும் புண்ணிய தலத்திலே பத்திரகாளியம்மை வீரபத்திரர் சமேதராக கோயில் கொண்டு அடியார்களுக்கு அருள் பாலித்த வண்ணம் வீற்றிருக்கின்றார்.
தலவிருட்சமாக புளியமரமும், திருக்கோயிலின் முன்பாக திருக்குளமும் உள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம், என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருக்கோயிலின் திருவிழா பத்து நாட்கள் நடைபெற்று பத்தாவது நாளான பங்குனிமாத உத்திர நட்சத்திரத்தில் தேர்த் திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று வருவது வழமையாகும்.
இக்கோயிலுடன் தொடர்புபட்டதாகப் பல கதைகளும் உள்ளன. தலவிருட்சமான புளியமரத்தில் வந்தமரும் கிளிகள் அயலிலுள்ள நெல்வயல்களில் வேளாண்மைக் காலத்தில் வேளாண்மையைச் சேதப்படுத்துவதைக் கண்ணுற்ற முதன்மையினார் என்பவர் தச்சச் தொழிலாளியொருவரை அழைத்து அப்புளிய மரத்தைத்
பினிதன் ஏன் தவறான வழியில் செல்கிறான் என்பதன் உண்மைக் காரணத்தை அடிக்கடி நினைவுக்குத் தந்து கொள்ள வேண்டும். தீய செயல் செய்தவர்களைக் கண்டு சாந்தம் இழக்காமல் அவர்கள் பால் அன்பு பாராட்டவும் மனம் கலங்கும் போதெல்லாம் அமைதியடையவும், இது மிகவும் பயன்படுகின்றது. எந்த வேலையைச் செய்தாலும் எனக்கு பணியாகத்தான் நினைத்துக் கொண்டு செய்யவேண்டும். என்னுள் ஒவ்வொரு வார்த்தையையும் என் தெய்வீகக் குணங்களை இனிது இயம்புவதாக இருக்கும். உள்ளத்தில் நின்றும் சுயநல ஆசைகளை அனைத்தையும் அகற்றி அதனை எனக்கு அர்ப்பணித்துவிடு.
தன்னைத் தான் அடக்கியாளாமல் மனதை அஜாக்கிரதையாக விட்டபோதெல்லாம், பிறப்புடன் வந்திருக்கும் இயற்கை சுபாவத்தின் வேகம் வேலை செய்யும். இயற்கைச் சுபாவம் என்பது
(இந்து ஒளி
இயற்கை
வேலாயுதபிள்
 

ஒருவாரகாலம்: சுக்கிரவாரம், சோமவாரம் இருவாரம் : பிரதோஷ விரதம் மாத ஒருமுறை சதுர்த்தி, மாதப்பிறப்பு சிலமாதங்களுக்குகொருமுறை அபிசேகங்கள் ஒரு ஆண்டில் ஆறு முறை நடைபெறும். வருடமொருமுறை : தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், மகோற்சவம்
:
* 12 வருடங்களுக்கு ஒருமுறை : மகாமகம் * பல வருடங்களுக்கு ஒருமுறை : கும்பாபிஷேகம்
பூர்வகாரணாகமம், உத்தரகாரணாகம நைமித்திய கிரியைகள் பற்றி விரிவான தகவல்களை ஆகமங்கள் தருகின்றன.
ரத்திரகாளியம்மன் கோயில் தி பூணிசக்தி
ாழ்ப்பாணக் கல்லூரி)
தறிக்கும்படி ஏவினார். அதற்கு அவன் மறுப்புத் தெரிவிக்கவே தாமே அதைச் செய்ய முனைந்தார்.
அப்போது அம்மரத்தினடிப் புற்றுக்குள் இருந்த நாகபாம்பு வெளிப்பட்டு அவரைத் துரத்திச் சென்றது. சிறிது தூரம் சென்றதும் நாகபாம்பு தலைதூக்கி ஆடி நிற்பதைக் கண்ட அவர் தம் தவறைப் பொறுத்தருளும்படி தம்முட்பிரார்த்தித்து தமது இருப்பிடம் சென்றார். அன்றிரவே அம்மையார் முதன்மையினார் கனவில் தோன்றி தமக்கு நிழல் அமைத்து வழிபடுமாறு பணித்தார். அடுத்த நாளே அவ்விடத்தில் நிழல் அமைத்து வழிபடத் தொடங்கினார். பலநூற்றாண்டுகள் வயது கொண்ட அப்புளிய மரமே இன்றும் தலவிருட்சமாக விளங்குகின்றது.
அம்பாளின் அற்புத சக்தியால் கவரப்பட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் அருள் நாடி அம்பாளைத் தரிசிக்க வருகின்றனர். அம்மனுக்குப் பொங்கி மடையிடல் இங்கு சிறப்பாக நடைபெற்று வரும் நிகழ்வாக விளங்கி வருகின்றது.
இலங்கையிலே உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களிலே சங்கரத்தை பிட்டியம்பதியில் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் பத்திரகாளியம்மன் திருக்கோயிலும் ஒன்றாக விளங்குகின்றது.
அனைவரையும் வேதனைப்படுத்துகிறது. 9 ĝi] செய்கை ரூபமாக வெளிப்படுகின்றது. இதை ஒருவனிடம் கண்டு நாம் கோபிக்கலாமா? மற்றவர்கள் செயலைக் கண்டு வெறுப்படையும் போதெல்லாம் அவனவன் தத்தம் குறைகளை நினைவுக்குத்தந்து கொள்ள வேண்டும். உன்மனம் சுத்தமாக இருக்கிறதா உன் இயற்கைச் சுபாவம் நமக்கு தெரிந்ததே.
எமது தீமை எமது நன்மை என்று நீ தீர்மானிக்கலாமா என்ற முடிவில் தீயது எது, நன்மை எது என்பது ஆண்டவனுக்கே தான் தெரியும். பின்பு அதன் அமைப்பை அறியாத நாம் தீர்மானிக்க முடியாது. உண்மையான அடக்கத்துடன் அவனவன் தத்தம் வாழ்க்கைக் கடமைகளைச் செய்து கொண்டு போக வேண்டும்.
இவ்வாறு இறைவன் உமக்கு அறிவுரை தந்துள்ளான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
குணங்கள்
ளை குகன்யா
so தாரன வருடம் தை - பங்குனி)

Page 33
ஈழத்துச் சித்தர்
பூரீகரன்
க. பொ. த. (உ. தரம்) 1ம் ஆன
சித்தர்கள் என்பவர்கள் சிவனின் திருவருள் நோக்கினைப் பெற்றவர்கள் ஆவார். சமயம் கடந்த சமரச நன்நிலையில் நிற்போராகிய இச் சித்தர்கள் அணிமா, லகிமா முதலிய அட்டமாசித்திகளும் கைவரப் பெற்றவர்கள். யோகப் பயிற்சியினால் மூச்சடக்கி ஆறு ஆதாரங்களிலும் மனதை நிறுத்திச் சித்தி எய்திய சிறப்பும் இவர்களுக்குண்டு. இச் சித்தர்கள் வரிசையில் பின்வருவோரைக் குறிப்பிடலாம்.
கடையிற் சுவாமி
இலங்கையில் 19ஆ" நுற்றாண்டிற் புகழ் பெற்றுத் திகழ்ந்த சித்தர்களுள் கடையிற் சுவாமியும் ஒருவராவார். யாழ்ப்பாணம் பெரியகடைச் சதுக்கத்தை உறைவிடமாகக் கொண்ட இவர் இந்தியாவிலே கன்னட தேசத்தில் ஒரு நீதிபதியாகக் கடமையாற்றினார். அவ்வேளையில் இவரால் விசாரித்த வழக்கொன்றில் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது “ஒருவரின் உயிரைப் பறிப்பதற்கு உத்தரவு கொடுக்க நான் யார்?’ என்ற கேள்வி இவரது உள்ளத்தில் எழுந்தது. உடனே இவர் தண்டனை வழங்குவதைப் பின்போட்டு அக்கணமே அத்தொழிலையும் ஊரையும் துறந்து சந்நியாசியாகச் சென்றுவிட்டார் என்பது செவிவழிக் கதையாகும்.
கடையிற் சுவாமியின் ஞானகுருவாகிய பூரீநரசிம்ம பாரதியால் கடையிற் சுவாமிக்கு ஞான தீட்சை வழங்கி “முத்தியானந்தர்” எனும் தீட்சாநாமமும் சூட்டப்பட்டது. இவருக்கு பெரியகடைச் சதுக்கமே இருப்பிடமானபடியால் கடையிற் சுவாமி என்ற காரணப் பெயரும் ஏற்பட்டது. ஆனந்தர் என்ற இவருடைய தீட்சா நாமம் குறிப்பது போன்று இவர் முகத்தில் எந்நேரமும் புன்னகை தவழும். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கடையிற் சுவாமிகள் அங்கு ஒரு குரு சீட பரம்பரை தோன்றுவதற்கும் மூலகர்த்தாவாக விளங்கினார். இவருடைய சீடர் செல்லப்பா சுவாமிகளாவார். கடையிற் சுவாமிகள் யாழ்ப்பாணம் நீராவியடியில் தம் இறுதிக் காலத்தைக் கழித்தார். ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு 1891ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் சமாதி நிலை எய்தினார்.
நவநாத சித்தர்
தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் குன்றுத் தொடர் குகையில் தவம் செய்து கொண்டிருக்கும் சித்தர்களில் ஒருவரே நவநாத சித்தராவார். ஒரே நேரத்தில் ஒன்பது இடங்களில் காணப்படுபவர் என்ற கருத்தில் இவருக்கு நவநாத சித்தர் என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. இவர் கிரமமாக மெளன தவம் செய்த பின் சுய உணர்வு பெற்று பசி மிகுந்தால் உணவு யாசிப்பதற்காக மலையடிவாரத்திலுள்ள கிராமங்களுக்குச் செல்வார். அவ்வாறு இவர் உணவுக்காகச் சென்ற கிராமங்களில் கரிகாலி என்ற கிராமும் ஒன்றாகும்.
(இந்து ஒளி
 

Shóir As fam fað
சுபாஷினி ாடு, உடுவில் மகளிர் கல்லூரி.
கரிகாலிக் கிராமத்தில் சித்தரை வழிபட்டு வந்தவராகிய பெருமாள் அம்மையாரின் கணவர் இலங்கையில் நாவலப்பிட்டியிலுள்ள குயின்ஸ்பரித் தேயிலைத் தோட்டத்தில் கணக்காய்வாளராகப் பணிபுரிந்தார். கரிகாலியில் வாழ்ந்த காலத்தில் பெருமாள் அம்மையாரிடம் உணவு யாசிப்பதற்காக நவநாத சித்தர் சென்ற போது ஒரு நாள் அம்மையார் “சுவாமி நாங்கள் இலங்கையில் கட்டும் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தவறாமல் வரவேண்டும்” என்று விடுத்த வேண்டுகோளிற்கிணங்கி கும்பாபிஷேக நாளன்று சுவாமி அங்கே வந்தார்.
ஒருமுறை சுவாமியிடம் உத்தரவு பெற்று சிதம்பரம் சென்ற பெருமாள் அம்மையார் அங்கு உள்ள ஞானப்பிரகாசம் என்னும் குளத்தில் தீர்த்தமாடி பின் செபம் செய்வதற்காகச் சுவாமி தமக்குக் கொடுத்த உருத்திராக்க மாலையைத் தேடினார். மாலையை தான் எடுத்துச் செல்லாததை அப்பொழுதுதான் உணர்ந்து உடனே தம் கண்கனை மூடிக்கொண்டு நவநாத சித்தரை மனதில் நினைத்துப் பிரார்த்தித்தார். உடனே அந்த மாலை அற்புதமாய் அவருடைய கையில் வந்து வீழ்ந்தது.
இவ்வாறு பற்பல அற்புதங்களைச் செய்த நவநாத சித்தரின் விருப்பத்தின்படி அவருடைய சமாதி குயின்ஸ்பரித் தேயிலைத் தோட்டத்திலுள்ள முருகன் கோயிலுக்கு அயலில் உள்ளது.
பெரியானைக்குட்டி சுவாமிகள்
கண்டியிலே கடை வீதியிலே சிறு பையனாகச் சுற்றித் திரிந்த பெரியானைக்குட்டி சுவாமிகளை ஒருவர் தமது வீட்டிற்கு வருமாறு அழைத்து அன்பு செய்து வளர்த்து வந்தார். வளர்ப்புத் தந்தையால் வைக்கப்பட்ட பெயரே ஆனைக்குட்டி ஆகும். ஒருநாள் கொல்லைப் பக்கம் சென்ற ஆனைக்குட்டி “அம்மா அம்மா பாம்பு’ என்று சத்தமிட்டார். தாயார் ஓடிவந்து "மகனே எங்கே பாம்பு” என்று கேட்க இவர் எக்காளம் கொட்டிச் சிரிக்கலானார். இவ்வாறு மூன்றாம் தடவையும் சத்தமிட ஒருவரும் வரவில்லை. சிலமணிநேரத்தின் பின் சென்று பார்த்தால் அவரைக் காணவில்லை. ஆனால் அவர் மலங்கழித்த இடத்தில் தங்கக் குவியல் இருப்பதை கண்டு உடனே அதனை எடுத்துப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, குடும்பம் முழுவதும் தேடுதலில் ஈடுபட்டு, ஈற்றில் கண்டி பூரீ கதிரேசன் ஆலயத்தின் படியிலே படுத்திருப்பதைக் கண்டு, வீட்டிற்கு வருமாறு கெஞ்சினார்கள். ஆனால் அவரோ முற்பிறவியில் உங்களுக்கு உழைத்துத் தரவேண்டிய கடன் இருந்தது. அது நிறைவேறிவிட்டது. இப்பொழுது நீங்கள் யாரோ? நான் யாரோ? என்று கூறி மெளனமாக இருந்துவிட்டார். சீவன் முத்தரான ஆனைக்குட்டி சுவாமிகள் கண்டியை விட்டு இந்தியா சென்றார். நவநாத சித்தரும் ஆனைக்குட்டி சுவாமிகளும் ஒருமுறை சாதுக்களோடு புகையிரதம் ஒன்றில் ஏறினார்கள். இதைக் கண்ட புகையிரத நிலைய அதிபர் ஆனைக்குட்டியையும் நவநாத சித்தரையும் தவிர ஏனைய சாதுக்களை இறங்குமாறு கட்டளை
தாரன வருடம் தை - பங்குனி)

Page 34
இட்டபோது எமது சகோதரர்களுக்கு இடமில்லை என்றால் நாமும் போகவில்லை என்று எல்லோரும் இறங்கினார்கள். அதன்பின் புகையிரதம் நகர மறுத்துவிட்டது. சாரதி மற்றும் பெரிய பொறியியலாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் புகையிரதம் நகரவில்லை. இறுதியில் பிரயாணி ஒருவர் சாதுக்களை இறக்கி விட்டதுதான் காரணம் என்று கூறியதைக் கேட்டு உடனே அவர்கள் சாதுக்களைத் தேடிச் சென்று தமது பிழைகளைப் பொறுக்குமாறு வேண்டி சாதுக்களை வீழ்ந்து வணங்கினார்கள். “எப்பொழுதும் சாதுக்களிடம் புகையிரதக் கட்டணம் அறவிடக்கூடாது என்று ஒப்பம் இட்டுக் கொடுக்க சுவாமிகள் அவர்களிடம் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்து, புகையை இழுத்து வெளியே ஊதிய போது நான்கு, ஐந்து மணி நேரமாக அசையாது நின்ற புகையிரதம் நகரத் தொடங்கியது. பெரியானைக்குட்டி சமாதியடையும் காலத்தைச் சித்தானைக் குட்டி சுவாமிகள் அறிந்திருந்தார். அதனால் உரிய காலத்தில் அவரை விட்டு விலகாது அவருடனே இருந்தார். பெரியானைக் குட்டியின் திருவருள்படி அவர் கொழும்பிலேயே சமாதி அடைந்தார்.”
பஞ்சாங்க
செந்தில் குமர
தரம் 9 -யாlபரியோவான்
சைவமக்களின் வாழ்வில் சுபகாரியங்களைச் செய்யத் தொடங்குமுன் கால நேரம் நல்லதாக இருக்கின்றதா என சோதிடமூலம் பார்ப்பது வழக்கமாகும். அதனால் தங்களது காரியங்கள் சிறப்பாக நிறைவேறும் என்பது அவர்களது அனுபவம் மூலம் அறிந்த உண்மை. சுபநேரங்களையும் வேறு பல தகவல்களையும் அறிந்து கொள்வது பற்றிய ஆரம்ப அறிவைப் பெற்றுக் கொள்ளுதல் நன்று.
நல்ல நேரம் கணித்தல், சுபகாரியங்களை நிகழ்த்துவதற்கு ஏற்ற நல்ல நாள் முகூர்த்தவேளை என்பவற்றை அறிதல். ஆலய மகோற்சவங்கள், அலங்கார உற்சவங்கள், அபிஷேக தினங்கள், பண்டிகைகள், விரதங்கள், சிவனடியார், நாயன்மார் ஆகியோரின் குருபூசைத் தினங்கள் முதலிய சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை குறிக்கும் கால, நேரங்களை அறிய உதவுவது பஞ்சாங்கமாகும்.
பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை கொண்ட நூல் ஆகும். அவையாவன நட்சத்திரம், வாரம், திதி, யோகம், கரணம் என்னும் ஐந்து அங்கங்கள் ஆகும். வருடங்கள் அறுபது உள்ளன. பிரபவ முதல் அக்ஷய வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பெயரை கொண்டுள்ளது.
ஒவ்வொரு வாரத்திலும் ஞாயிறு முதல் சனி ஈறாக ஏழு நாட்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அறுபது நாழிகைகளை கொண்டது. அது இருபத்து நான்கு மணித்தியாலயத்திற்கு சமன்.
நாள் என்பது சூரிய உதயத்துடன் ஆரம்பித்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரை தொடர்கிறது. காலை ஆறு மணியில் இருந்து அடுத்த நாட்காலை ஆறுமணி வரையிலான ஒரு பகலையும், ஒரு இரவையும் உள்ளடக்கிய ஒரு காலப் பகுதி ஒரு நாள் ஆகும்.
(இந்து ஒளி
 

சித்தானைக்குட்டி சுவாமிகள்
கோவிந்தசாமி, இராமநாதபுரத்துச் சிற்றரசர் பரம்பரையைச் சேர்ந்த இவருக்கு அரச துறையில் நாட்டம் ஏற்படாததால் இவரின் உள்ளம் துறவறத்தையே நாடியது. அச்சந்தர்ப்பத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளையும் நவநாத சித்தரையும் சந்திக்கும் வாய்ப்பு கோவிந்த சாமிக்குக் கிடைத்தது. பெரியானைக் குட்டி சுவாமிகளும் நவநாத சித்தரும் கோவிந்த சாமியை தமது சீடராக்கி அன்று தொடக்கம் சித்தானைக்குட்டி சுவாமிகள் என அழைக்கப்பட்டார். சித்தானைக்குட்டி சுவாமிகள் ஈழத்தின் பல இடங்களிற்கு யாத்திரை செய்து தமது சித்து விளையாட்டுக்களால் மக்களை, ஆண்டவனை மறவாத அடியார்களாக்கினார். சுவாமி தன்னைத் தரிசிக்க வருபவர்களுக்கு அருளுரை வழங்கினார். தீராத நோயுற்றவர்களை குணப்படுத்தினார். தேடி வரும் அடியார்களை ஆழ்ந்த தியானம் செய்ய வழிப்படுத்தினார். இவ்வாறு சித்தானைக்குட்டி சுவாமிகள் பல உபதேசங்களைச் செய்து வந்தார்.
b பார்த்தல்
ன் ஐங்கரன் கல்லூரி, யாழ்ப்பாணம்.
அச்சுவினி முதல் ரேவதி ஈறாக இருபத்தேழு நட்சத்திரங்கள் உள்ளன. பிரதமை முதல் பெளர்ணமி வரை அல்லது அமாவாசை ஈறாக திதிகள் பதினான்கு ஆகும்.
அமாவாசைக்கு பின்வரும் பிரதமை தொடக்கம் சதுர்த்தசி வரையிலுள்ள பதினான்கு திதிகள் கொண்ட காலப்பகுதி பூர்வபக்கம் அல்லது வளர்பிறை காலம் எனப்படும். பெளர்ணமிக்குப் பின்வரும் பிரதமை தொடக்கம் சதுர்த்தசி வரையிலான பதினான்கு திதிகள் கொண்ட காலப்பகுதி அபரபக்கம் அல்லது தேய்பிறை காலம் எனப்படும். பொதுவாக தேய்பிறை காலத்தில் சுபகாரியங்களைச் செய்வது வழக்கத்தில் இல்லை. பூர்வ பக்கம் (வளர்பிறை காலம்) சுபகாரியங்களுக்கு சிறப்பானது. பூர்வபக்கத்தை சுக்கில பட்சம் என்றும் அபர பட்சத்தை கிருஷ்ண பட்சம் என்றும் கூறுவர்.
அமாவாசை, பெளர்ணமி என்பவை விரத நாட்கள் ஆகும். சிவபதமடைந்த தந்தையின் பொருட்டு அமாவாசை விரதமும், சிவபதமடைந்த தாயின் பொருட்டு பெளர்ணமி விரதமும் பிள்ளைகளால் அனுட்டிக்கப்படுகின்றன.
தைமாதம் முதலாம் திகதியில் இருந்து ஆனி இறுதி வரை உள்ள ஆறு மாதங்கள் உத்தராயணகாலம் எனப்படும். ஆடி முதலாம் திகதியில் இருந்து மார்கழி இறுதிவரை உள்ள ஆறுமாதங்கள் தட்சிணாயகாலம் ஆகும். தைப்பொங்கல் உத்தராயண தொடக்கத்திலும் ஆடிப்பிறப்பு தட்சிணாய காலத் தொடக்கத்திலும் கொண்டாடப்படுகிறது.
ஆலய தரிசனம், பிதுர்வ வழிபாடு என்பவற்றை பெளர்ணமி காலத்தில் மேற்கொள்ளலாம். பெளர்ணமியைப் பூரணை என்றும் கூறுவர். ஒருவர் சிவபதமடைந்த திதியை அறிந்து வைத்து ஆண்டு தோறும் அத்திதியில் அன்னாரின் ஆத்மசாந்தியின் பொருட்டு சிரார்த்தம் செய்வது சைவ சமயக் கடமையாகும்.
2. தாரன வருடம் தை - பங்குனி)

Page 35
வதிகுறைந்த பிள்ை இந்து மாமன்
சிமீபத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பெற்றோர்க பிள்ளைகளுக்கு, மாமன்றம் பராமரிக்கும் விடுதிகளில் அனுமதி மாமன்றம் தைப்பொங்கல் தினத்தன்று அங்குரார்ப்பணம் செய்து
இப்புதிய திட்டத்தின்படி பிள்ளைகள் தாங்கள் இருக்கும் சூழ்நி பெற்றோரிடனோ அல்லது உறவினருடனோ பிள்ளைகள் தொடர்ந்து ஏற்க நலன் விரும்பிகள் ஒழுங்குசெய்யப்படுவர்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் அனர்த்தங்களினால் பாதி சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இது சம்பந்தமான விண்ணப்பப் படிவங்களை மாமன்றத் த8ை இத்திட்டத்தின்படி வசதிகுறைந்த பிள்ளைகளைப் பராமரிக்க இலங்கை இந்து மாமன்றத்துடன் (தொலைபேசி இல: 2434990, ( கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
SSSSSSSSSSSSS
அகில இலங்கை இந்து
பிள்ளைகளைப்
01. (அ) பிள்ளையின் முழுப்பெயர் : .
(ஆ) முழு முகவரி τα ιται இ) வயது
(FE) சமயம் ταπει να αντι
(உ) கற்கும் பாடசாலை ...
02. பெற்றோரின் விபரங்கள் :ས་ས་སས་པས་ས་བབས་ (அ) தந்தையின் இருப்பின்) முழுப்பெயர் : . (SA). Glugl mæmm. (இ) தொழில்
(உ) (1) நிரந்தர முகவரி . . . . . (2) தற்காலிக முகவரி .
(ஊ) தற்போதைய மாதாந்த வருமானம் (எ) தாய் இருப்பின்) முழுப்பெயர் (ஏ) வயது : (ஓ) (1) நிரந்தர முகவரி : "ומחזוויווד (2) தற்காலிக முகவரி :་ས་སས་
(ஒள) தற்போதைய மாதாந்த வருமானம் : . தந்தை அல்லது தாய் காலமாகிவிட்டால் அல்லது சுகயினழு
O3. பிள்ளை பாதுகாவலருடன் இருப்பின்
(அ) பாதுகாவலரின் முழுப்பெயர் : . (ஆ) வயது : (ஈ) (1) நிரந்தர முகவரி wommune (2) தற்காலிக முகவரி "
இந்து ஒளி

ளகளைப் பராமரிக்க
ரத்தின் திட்டம்
ள் இருவரையும் அல்லது ஒரு பெற்றோரை இழந்து பரிதவிக்கும் தருவதுடன் இன்னும் ஒரு திட்டத்தையும் அகில இலங்கை இந்து வைக்கப்பட்டது. லையில் வாழும் வகையில் பராமரிக்கப்படுவர். உயிர்தப்பியிருக்கும் ம் வாழலாம். ஆனால், அப்பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை
க்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்தத் திட்டத்தில்
0மையகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விரும்பும் கருணை உள்ளம் படைத்த நலன் விரும்பிகள் அகில 712723456 தொலைநகல் இல: 2344720) தொடர்பு கொள்ளுமாறு
மாமன்றத்தின் ஆதரவில் பராமரிக்கும் திட்டம்
! :ས་ས་ས...་པས་བསམས་པས་ཟས་ས་ཁམས་ (FF) ououJLô ...
மற்றிருந்தால் முழு விபரங்களையும் ஓர் இணைப்பில் தரவும்
இ) தொழில்
s தாரன வருடம் தை - பங்குணி)

Page 36
04. பிள்ளையின் குடும்ப விபரங்கள்
(சகோதர சகோதரிகள் இருப்பின் பெயர், வயது. ெ
பெயர் வயது 6தாழி
05. குடும்ப பொருளாதார நிலவரம் mammam. (மேற்கூறப்பட்ட தந்தை, தாய், பாதுகாவலருடைய 6 சொந்த வீட்டில் வசிக்கிறீர்களா ? .
06. சுனாமி அனர்த்தத்தினாலா அல்லது யுத்த சூழ்நி
கடிதத் தொடர்புகளுக்கான
பெயர் wriminimum.
முகவரி ...........m.
GT ܫ தொலைபேசி இல . . மேற்படி விபரங்கள் உண்மையானவை என உறு
மாமன்றத்தின் பிள்ளைகளைப் பராமரிக்கும் திட்டத்தின்
திகதி !
மேற்படி விண்ணப்பதாரி எனது முன்னிலையில் ை
திகதி
முகவரி :
பராமரிப்பு நிபந்தனைகள்
இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இப்
பெறப்படும் பணத்திலிருந்து மாதாந்தம் ரூபா. 2000/= பராட பிள்ளையின் உடை புத்தகங்கள் போன்ற தேவைகளுக்கும் பண உதவிகளை எப்படிச் செலவுசெய்தது. பிள்ளையின் வேண்டும். இத் திட்டத்தை பிள்ளையின் நலன்கருதி மாம தினம்வரை இந்த நிதியுதவியை வழங்க முயற்சிக்கப்படு! வாக்குறுதியையோ மாமன்றம் தரவில்லை என்பதைக் கவ
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
தொலைபேசி - 011 2434990 தொலைநகல் - 011 2344720
(இந்து ஒளி
 

ழில்
மாணவராக இருப்பின்
வகுப்பு TFT6)6)
ருமானத்தைத் தவிர்ந்த சொத்துக்கள் பற்றிய விபரங்கள்)
லையினாலா பிள்ளை பாதிக்கப்பட்டது ?
LSLLLLLLLL LLLLLLLLLLLLLLLLL LLLLLLLLL 65"660 |b560 m. திப்படுத்துகிறேன்.
(பத்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளையாயின்)
கிழ் மேற்படி பிள்ளையைப் பராமரிக்க விண்ணப்பிக்கின்றோம்
தந்தை/தாய்/ பாதுகாவலர் கையொப்பம்
கயொப்பம் இட்டார் என உறுதிப்படுத்துகிறேன்.
சமாதான நீதவான்/ கல்லூரி அதிபர்
பிள்ளையைப் பராமரிக்க ஒரு நலன் விரும்பியிடம் இருந்து ரிப்பு பணமாகவும், வருடத்திற்கு ரூபா. 6000/= க்கு மேற்படாது பழங்கப்படும். மாமன்றம் கேட்டுக்கொள்ளும் போது உண்மையில் மன்னேற்றம் பற்றிய சகல விபரங்களையும் காலத்துக்காலம் தர ன்றம் அமுல்படுத்தும். கூடியவரை பிள்ளையின் 17வது பிறந்த . ஆனால் அத்தொடர்ச்சி பற்றி எதுவித உத்தரவாதத்தையோ னிக்கவும்.
அகில இலங்கை இந்து மாமன்றம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 02.
34 தாரண வருடம் தை - பங்குணி)

Page 37
ஆத்மசாத்தி//27த்தனை
ଘଠିଁ ஆலே இடிந்து - Eë: tij, 1ாமர்ந||
A LEFELO HIND 岛憩 蔷
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் ஆசியுரை வழங்குகிறார்
இந்து ஒளி 画
 

திகழ்வுகன் - 01.01.2005
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்திநாவுக்கரசன் அவர்களுக்கு இந்து வித்தியா விருத்திச் சங்கத் தலைவர் திரு. இ. மகாலிங்கசிவம் அவர்கள் மாமன்றத்தின் வெளியீடுகளை வழங்குகிறார். அருகே மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. க. நீலகண்டன்.
தாரன வருடம் தை- பங்குணி)

Page 38
ஆத்மசரத்தி//27த்தை
T----
கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் அருள்மொழிய உரையாற்றுகிறார் வைத்தியநாதன்
மாமன்றச் செய்தி
ஆத்ம சாந்திப்
கிடல் கொந்தளிப்பு அனர்த்தத்தினால் 26.12.2004 இல் மறைந்த மக்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும், அகதிகளாக அல்லல்படும் மக்களின் துயரம் களைய வேண்டியும் இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அகில இலங்கை இந்து மாமன்றமும் அதன் அங்கத்துவ சங்கங்களும் இணைந்து இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் ஆதரவுடன் பிரார்த்தனை வைபவம் ஒன்றை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 01:01, 2005 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 12 மணிவரை நடத்தியிருந்தது.
மாமன்றச் செய்தி
LIITITal):55õi DTD
பிமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமை 24ம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நல்லூர் திரு' இந்து மத நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், இந்து மத பிரழு பணிகளைப்பற்றி கலந்துரையாடினார்கள்.
ஆதரவற்ற பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு உதவி தே6ை ஆதரவற்ற பிள்ளைகள் சார்பானதுமான விண்ணப்பங்களும் ஆ கொள்ளப்பட்டன.
அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன்
(ஒர்.
(இந்து ஒளி
 

சி திருமதி வசந்தா வாகீச கலாநிதி கனகசபாபதி ா உரையாற்றுகிறார் நாகேஸ்வரன் உரையாற்றுகிறார்
பிரார்த்தனை
இப்பிரார்த்தனையில் கலந்துகொள்ளுமாறு சகல இந்து நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இந்துப் பெருமக்களுக்கும் இந்து சமய அலுவல்கள் திணைக்களமும் அகில இலங்கை இந்து மாமன்றமும் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏராளமான இந்துப்பெருமக்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பிரார்த்தனை வைபவ நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவை காலை 10.30
மணிமுதல் 12.30 மணிவரை நேரடியாக அஞ்சல் செய்திருந்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
ன்றப் பிரதிநிதிகள் குழு
பிலான மாமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த ஜனவரி மாதம்
நானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள கர்களையும் சந்தித்து யாழ்ப்பாணத்தில் மாமன்றம் ஆற்றக்கூடிய
யானவர்களினதும், மாமன்ற விடுதியில் அனுமதி பெறவிரும்பும் தீன மண்டபத்தில் மாமன்றத்தினால் 24ம் 25ம் திகதிகளில் ஏற்றுக்
லுறிஞர்)
so தாரண வருடம் தை - பங்குணி)
இந்த உலகத்தில் எதையும் சாதித்து விடுவான்

Page 39
மாமன்றத்தின் நில
ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு
கொள்கலன்களில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் வைக்கப்பட்டிருப்பதையும், அது தொடர்பான பணிகளில் இரத் மாணவர்களும் ஈடுபட்டிருப்பன
சரஸ்வதி மண்டபத்திலிருந்து நிவாரணப்பொருட்களை ஏற்றிக் கொண்டு லொறியொன்று பொத்துவில் பகுதிக்கு புறப்பட ஆயத்தமாகிறது.
மட்டக்களப்பு பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக சாஸ்து சரஸ்வதி மண்டபத்திலிருந்து லொறியில் நிவாரணப் பொருட்
பொருட்கள் ஏற்றப்படுகின்றன.
இந்து ஒளி 匯
 
 
 
 
 
 

வழங்கப்படுவதற்காக மாமன்றத்திற்கு வெளிநாடுகளிலிருந்து
பொருட்கள் கொழும்பிலுள்ள களஞ்சியம் ஒன்றில் மலானை மானவர் விடுதி உதவி மேற்பார்வையாளர்களும், தயும் படங்களில் காணலாம்.
ஏற்றிக் கொண்டு லொறியொன்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் ஆதரவுடன் அம்பாறைக்கு புறப்பட ஆயத்தமாகிறது.
மண்டபத்தில் பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுவதற்காக களை கையளிக்கிறார்கள். புறக்கோட்டையிலிருந்துநிவாரணப்
பொருட்கள் ஏற்றப்படுகின்றன.
巫 II (TCRT (IULLD (10.5 பங்குனி)

Page 40
பொன்விழா ஆரம்ப வைபவ
(இந்து ஒளி
 

- 04.02.2005
(B6156IT
நி
. -| -| *T |-|---- |
| |-
-司W讀。
』
s)
■
தாரண வருடம் தை - பங்குணி)

Page 41
:55
பிள்ளைகளுக்கு அப்பியாசப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன.
 

ல் வழிபாடு (14.01.2005)
தைப்பொங்கல் நிகழ்வில் மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை உரையாயாற்றுகிறார். அருகே மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன், மாமன்றத் துணைத்தலைவர் திரு. சின்னத்துரை தனபாலா, மாமன்ற சமூகநலன் குழு செயலாளர் திரு.மு. கதிர்காமநாதன்
விடுதி மாணவருக்கு பிறந்தநாள் அன்பளிப்பு வழங்கப்படுகிறது.
தாரண வருடம் தை-பங்குனி)

Page 42
- ബZി பிருந்தா
ஏழாலை மே
கிசிவம் சிவன் சம்பந்தப்பட்டது. சிவனை முழுமுதலாகக் கொண்டு வழிபடப்படுவது. இது பன்னெடுங் காலத்திற்கு முன்பே தோற்றம் பெற்றது. இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சிந்து வெளியை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிந்து வெளிகாலம் ஏறத்தாழ கி.மு.3250 - 2750 வரையான காலம் என்று சிந்து வெளி ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இப்பிரதேசம் இந்தியாவில் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள வினா அமுர் ஒப், ஜென்சி, சல்வின், ஐராவதி போன்ற பஞ்சநதிகள் கலக்கும் இடங்களாகிய பஞ்சாப்மாநிலத்திலே அமைந்துள்ளது. இன்று இப்பகுதி பாகிஸ்தானுடன் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
சிந்து வெளி ஆய்வுகள் ஏறத்தாழ 1920களில் ஆரம்பமாகியது. இந்த முயற்சியில் சேர் ஜோன் மார்ஷல், சேர் அலெக்சாந்தர் கன்னிங்காம், சேர் வில்லியம் ஜோன்ஸ், சேர் மோட்டிபார் விவர் சேர் ஜோன் பீரிஸ் ஆகிய அறிஞர்கள் வெவ்வேறு காலங்களில் ஈடுபட்டனர். இந்த ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட புதை பொருட்களே அங்கு நிலவிய சமயங்கள், மற்றும் அக்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிய உதவுகின்றன. இலச்சினைகள் உருவச்சிலைகள், கவ்லால் எலும்புகளாலான உருவங்கள் போன்றன புதைபொருட் சான்றுகளாகும்.
இச்சான்றுகளுள் குறிப்பிடத்தக்கது யோகி போல அமைந்திருக்கும் கொம்புடைக் கடவுளாகும். இதன் வலப்புறத்தும், இடப்புறத்தும் இரு புடைப்புக்கள் கானப்படுகின்றன. அவற்றை இருவேறு முகங்களாகக் கொண்டு அதனை முந்துசிவன் என்று ஜோன் மார்வுல் குறிப்பிடுவது நோக்கத் தகும். அவ்வுருவத்தின் பின்னேயும் இருமுகங்கள் உள்ளதாகக் கொண்டு அதனை ஐந்துமுகம் கொண்ட சிவனைக் குறிக்கும் உருவம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
யோகியின் தலையில் கொம்புகள் காணப்படுகின்றன. கொம்புகளுக்கிடையில் கொடிபோன்ற ஒரு பொருள் வளர்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது திரிசூல வழிபாட்டைக் குறிப்பதாகலாம்.
நாவலர் நினைவு தின "The Elements நூல்களின் வெளியிட்டு விழு
"ोपिापों
மாமன்ற உறுப்பினர்கள்.
(இந்து ஒளி
 

ര് ഗ്ര
து சுன்னாகம்
இந்த யோகி கண்களைப் பாதி மூடிய நிலையில் அமர்ந்திருப்பது தட்சணாமூர்த்தியைக் குறிப்பதாக அறிஞர் கருதுவர். அத்துடன் இவ்வுருவின் அரையில் ஆடையின்றி அம்மணமாய் உள்ளதன்ம்ை சிவனின் நக்கள் எனும் பெயரை நினைவுபடுத்துகின்றது. யோகியின் உருவத்தைச் சூல் எருமை, புவி, யானை, காண்டாமிருகம், மான் என்பன காணப்படுகின்றன. இது உயிர்களின் தலைவனாகிய பசுபதியின் ஆரம்ப நிலையைக் குறிக்கின்றது.
சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுள் கூம்புருவாள் கற்கள் குறிப்பிடத்தக்கவை. அறுநூறுக்கும் மேற்பட்ட சிறியளவிலான கற்களும், பெரியளவிலான கற்களும் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறியளவிலான கற்களில் துளைகள் காணப்படுகின்றன. அவை கைகளிலோ அல்லது கழுத்திலோ தாயத்துக்களாக அணியப்பட்டிருக்கலாம். பெரியளவிலான கற்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆகவே சிவலிங்க வழிபாட்டுக்கான ஆதாரங்கள் சிந்து வெளி காலத்தில் கானப்படுகின்றன எனலாம்.
இது தவிர நடராஜ வடிவத்தின் ஆரம்ப நிலையையும் நாம் சிந்து வெளியில் கானலாம். காலைத் தூக்கி ஆடும் தெய்வம் ஒன்றின் உருவம் அவ்வகையில் குறிப்பிடத்தக்கது. இது நடராஜ வடிவத்தின் தொன்மமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வகையில் தட்சணாமூர்த்தி வழிபாடு, பசுபதி வழிபாடு திரிசூல வழிபாடு, சிவலிங்க வழிபாடு, நடராஜ வழிபாடு, என்பனவற்றின் தொன்மத்தை நாம் சிந்து வெளியில் காணக்கூடியதாயிருப்பினும் எழுத்து வடிவிலான ஆதாரங்கள் எவையும் எமக்குக் கிடைக்கவில்லை. சித்திர வரிவடிவ எழுத்துக்கள் சிந்து வெளியில் கண்டெடுக்கப்படினும் அவ்வெழுத்துக்கள் முழுமையாகப் பொருள் புரியாநிலையில் உள்ளன. அவற்றின் பொருள் புலப்படும் பொழுதில் சிந்து வெளி காலத்திலே நிலவிய சைவ சமயத்தின் தொன்மையை இன்னமும் தெளிவாக அறிந்து கொள்ளக் சுட்டியதாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனலாம்
ம் "சிவவுழிபாடு மலர்”
of Siddhantam'
ா நிகழ்வுகள் (05.12.2004)
மாமன்றப் பொதுச் செயலாளர் உரையாற்றுகிறார்
40 தாரன வருடம் தை பங்குனி)

Page 43
பொன்விழா ஆரம்ப வைபவ
 

நிகழ்வுகள் - 04.02.2005
" .
III III M
IIIIIIIIIIIIIIIII "L
III I

Page 44
இந்தச் சுடரில் .
O1.
O2.
O3.
O6.
O9.
11.
13.
18.
19.
23.
25.
27.
29.
3O.
3O.
31.
32.
33.
35.
4.O.
பஞ்ச புராணங்கள்
சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறை
86 JuJITGOOTib
பொன்விழா காணும் மாமன்றம்
ஒன்று அவன்தானே- அவனே எங்கள் சிவன் சிவராத்திரி
இந்துக்களின் புராதன கல்வி முறையும் அதன் தற்காலப் போக்கும்.
வையத்தின் துயர்தீர சிவன் நாமம் சூழட்டும்
திருவுருவங்கள்
இலங்கையில் இந்துமத வளர்ச்சி
சிறுவர் ஒளி - பால் குளம்
மாணவர் ஒளி - பெரிய புராணக் கதைகள்
ஆலயக் கிரியைகள்
சங்கரத்தை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் கோயில்
இயற்கை குணங்கள்
ஈழத்து சித்தர்கள் வரிசையில்
பஞ்சாங்கம் பார்த்தல்
பிள்ளைகளைப் பராமரிக்கும் திட்டம்
ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள்.
சைவ சமயத்தின் தொன்மை.
PRINTED BY UNIE ARTS (PVT)LTD., COLOMBO - 13. TEL: 2330195
 

لڑائی62DU IT Dg D கழல்கள் வாழ்க கந்தவேள் கருன்ை
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தாரன வருடம் தை - பங்குனி இதழ் மாசித் திங்கள் 24 நாள்
OBO32OD
9, fifu i குழு ே
புலவர் அ. திருநாவுக்கரசு திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபுவனிஸ்வரன் திரு. மு. பவளகாந்தன் திரு. த. மனோகரன் திரு. கு. பார்த்தீபன்
ஒரு பிரதியின் விலை CI5UIT 2O. வருடாந்தச் சந்தா (உள்நாடு) ebUIT 8O. வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 100
அகில இலங்கை இந்து மாமன்றம் AC, H. C. கட்டிடம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2, இலங்கை. இணையத்தளம் : http:/www.hinduCongreSS.Org மின்னஞ்சல் : admin(DhinducongreSS.Org தொலைபேசி எண் : 2434990, தொலைநகல் 2344720
నై 。 ○○。7 óss○。 ○。
്കിഖിബ് ബ് V ഋങ്ങ (3).
NDU O