கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2005.04-06

Page 1
Quarterly of AI Ceylon Hindu Cong
 


Page 2
சிவதொண்டர் அன ஆரம்பநாள் நிகழ்
Hiirii
கயிலாசபிள்ளை மங்கள விளக்கேற்றுகிறார் மாமன்றத் தலைவர் திரு வி சுயிலாசபிள்ளை, வைத்திய கலாநிதி மு கதிர்காமநாதன், கம்பவாரிதி இ.ஜெயராஜ் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், சமய விவகாரக் குழுத் தலைவர் திரு. க இராஜபுபளிஸ்வரன், குழுச் செயலாளர் திரு மு சொக்கவிங்கம், மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினர்கள் திருமதி ச. முருகானந்தன், திருமதி வ தவயோகராஜா
I I < ୯
 
 

เกิ பயிற்சிப் பட்டறை D6 (20.04.2005)
III
III
M
I TT|||||| நல்லை ஆதீன முதல்வர் ஆசியுரை வழங்குகிறார் அருகே சும்பவாரிதி இ. ஜெயராஜ் செஞ்சொற் செவ்வர் ஆறு திருமுருகன், சுவாமிஜி ஆத்மகனானந்தா மகராஜ்
IIIIIIIIII, ܓܬ
பவாரிதி இ ஜெயராஜ் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன்,
மன்மதராஜன் உரையாற்றுகிறார்கள்
பிற்சித் தொண்டர்களும்

Page 3
é aviou tó
பஞ்சபுராணங்கள் -திருச்சிற்றம்பலம்
தேவாரம்
(திருநாவுக்கரசர் அருளியது) மெய்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப் பொய்மையாங் களையை வாங்கிப்
பொறையெனு நீரைப் பாய்ச்சித் தம்மையு நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்பராகிற்
சிவகதி விளையு மன்றே
திருவாசகம் (மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது) சோதியாய்த் தோன்று முருவமே யருவா மொருவனே சொல்லுதற் கரிய வாதியே நடுவே யந்தமே பந்த
மறுக்குமா னந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே.
திருவிசைப்பா
(சேதிராயர் அருளியது) சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச் சால நானயற் சார்வதி னாளிவள் வேலை யார்விட முண்டுகந் தீரென்று மால தாகுமென் வாணுதலே
திருப்பல்லாண்டு (சேந்தனார் அருளியது) சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெறாத அறிவுபெற்றேன் பெற்ற
தார்பெறு வார் உலகில் ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக் காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறு துமே.
பெரியபுராணம் (சேக்கிழார் சுவாமிகள் அருளியது) ஞாலம் உய்ய நாம் உய்ய
நம்பி சைவ நன்னெறியின் சீலம் உய்யத் திருத்தொண்டத்
தொகை முன்பாடச் செழுமறைகள் ஓலமிடவும் உணர் வரியார்
அடியா ருடனும் உளதென்றால் ஆலம் அமுது செய்தபிரான்
அடியார் பெருமை அறிந்தாரார்.
- திருச்சிற்றம்பலம் -

சிவமயம்
இந்து ஒளி
தீபம் - 9 &Lff – 3
பார்த்திப வருடம் ஆணித் திங்கள் 31° நாள் 15 07, 2005
வளரட்டும் எம் பணிகள் இந்நாட்டு இந்து மக்களின் உச்ச நிறுவனமாக - இந்து நிறுவனங்களினதும் இந்து ஆலய அறக்கட்டளைகளினதும் கூட்டமைப்பாக-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்நிறுவப்பட்ட அகில இலங்கைஇந்துமாமன்றத்தின்பொன்விழாஆண்டுஇது.கடந்தஇரு தசாப்தங்களுக்கு மேலாக சொல்லொண்ணா வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஈடுகொடுத்து வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு எம்மாலான பணிகளையாற்றி வருவதில் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வந்திருக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து பெரும் நிதியுதவிபெறும்ஒர்அரசசார்பற்றநிறுவனத்தின்நிலையில்நாங்கள் இல்லை. இருந்தும் எமது ஆற்றலுக்கு ஏற்ப - சில சமயங்களில் அதற்கப்பால் கூடமுடியும் மட்டும் எம்மாலானதைச் செய்தி ருக்கின்றோம்-செய்துகொண்டு இருக்கிறோம்-செய்துவருவோம் என்பதனை அடக்கத்துடன் கூறிவைப்பதில் நிம்மதிகாண்கின்றோம். யுத்த அனர்த்தங்களினால் வெள்ளம், கடற்கோள் போன்ற இயற்கைச்சீற்றங்களினால்எமதுமக்களுக்குஏற்பட்டதுன்பங்களை ஒரளவேனும் குறைப்பதற்கு எம்மாலான நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம்-தொடர்ந்தும் செய்துவருகிறோம். வசதியற்ற இளம்பிள்ளைகளுக்கும்,முதியோருக்கும் விடுதிகளில் ஆதரவு நல்கி வருகிறோம்.ஆன்மிகக்கருத்தரங்குகள்,கல்விக்கருத்தரங்குகள்,எமது மக்களை வழிநடத்தவல்லபிரசுரங்கள், மக்களுக்கு சேவையாற்றும் சிவதொண்டர் அணி முதலியவை எமது சேவைகளில் குறிப்பிடற்பாலது.
பொன்விழா ஆண்டிலும் மக்களுக்குபயன்தரவல்ல பணிகளை ஆற்றுவதுடன், அவை எதிர்காலத்திலும் தொடர்ந்தும் எமது மக்களுக்குஉதவும்வகையில்அமையவேண்டும்எனவிரும்புகிறோம். அந்த வகையில்பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய"இலங்கையில் இந்து சமயம்” முதலாம் பகுதி பொன்விழா வெளியீடாக வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலும் வெளியிலும் இருக்கின்ற அறிஞர்களின் அறிவையும், அனுபவத்தையும் பொக்கிஷப்படுத்தி எதிர்காலசந்ததிக்குஉதவும்வகையில் ஜூலை15ம்16ம்17ம் திகதிகளில் பாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் இந்து மாநாடு நடத்தப்படுகின்றது. அதேபோன்று கிழக்கிலும் மலையகத்திலும் கொழும்பிலும் இந்து மாநாடுகள் நடத்தப்பட்டு, அம்மாநாடுகளில் வாசிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளை ஒரு பொன்விழா தொகுப்பாக வெளியிடஇருக்கின்றோம்.
மனிதநேயத்தின் உதவியுடன் யாழ்.மக்களுக்குஒர் அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்க இருக்கின்றோம்.நல்லூரில் திருமதி பேரம்பலம் அம்மாநன்கொடையாகத் தந்த காணியில் ஒரு சமயப் பிரசாரகர் பயிற்சிநிலையமும் ஆராய்ச்சிநிலையமும் அமையக்கூடிய கட்டிட )மான்றைக் கட்ட ஆரம்பித்திருக்கிறோம். கிழக்கில் “சுவாமி பிபுலானந்தர் வயோதிய இல்லம்”அமைக்க உதவியிருக்கிறோம். இப்போது அங்கே சுனாமியால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஜோர்ஜ் ஸ்ருவட் கம்பெனியின் ஆதரவுடன் ஒரு விடுதி அமைக்க ஒழுங்கு செய்து வருகிறோம். மன்னாரில் பல பணிகளை ஆரம்பித்திருக்கிறோம்.மலையகத்திலும் எமதுபணிதொடர்கிறது.
(தொடர்ச்சி2ம்பக்கம்)
--───མས་སུ་ས་གནས་སམ་ பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 4
இந்தச் சுடரில் .
இந்து மாநாடு
நிகழ்ச்சிநிரல் அருளாசிச்செய்தி வாழ்த்துச் செய்தி ஆசிச் செய்தி/வாழ்த்துச்செய்தி வாழ்த்துப்பா/வாழ்த்துச் செய்தி
நந்திக் கொடி
சிவ சின்னங்கள்
ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி இலங்கையில் இந்து சமயம்
கட்டுரைப் போட்டி
சேவை மனப்பான்மையை வளர்க்கும்.
பேச்சுப் போட்டி
முருகனின் பணப்பை
பெரிய புராணக் கதைகள்
தாய்க்குப் பின் தாரம் இலங்கையில் ஆதீனம் அமைத்த.
சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறை
ஆனந்த தாண்டவம்
பிறைசூடிய பிஞ்ஞகன்
வேலாயுதபிள்ளை நினைவுப் பேருரை
இலங்கையில் இந்து சமயம்
சிவராத்திரி நிகழ்வுகள்
பார்த்திப வருடம் ஆடி - புரட்டாதி
14
15
20
21
25
29
35
37
39
40
(இந்து ஒளி
 

இந்து ஒளி
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பார்த்திய வருடம் சித்திரை-ஆனி இதழ் ஆணித் திங்கள் 31" நாள் 15 O 72 OO 5
ஒரு பிரதியின் விலை ரூபா 20.00 வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 80.00 வருடாந்தச் சந்தா (வெளிநாடு US 6L6aosi 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் A.C.H.C. 5 yLh 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 02, இலங்கை. இணையத்தளம் : http:ll WWW hinduCongress.org மின்னஞ்சல் : admin (hinduCongress.Org தொலைபேசி எண் : 2434990 தொலைநகல் : 2344720
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள ఫ్లో)
தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI Sithirai - Aani ALL CEYLON HINDU CONGRESS 15th JULY 2005
Price: RS. 20.00 per copy Annual Subscription (inland) Rs. 80.00 Annual Subscription (Foregin) U. S. $ 10.00 (including Postage)
ALL CEYLON HINDU CONGRESS
A.C.H.C. Bldg. 91/5, Sri Chittampalam A. Gardiner Mawatha, Colombo - 02, Sri Lanka.
Website : http:// WWW .hinduCongress.org E-Mail : admin OhinduCongress.org Telephone No : 2434990 Fax No. 2344720
Next issue: AADI-PURADDATHY
Views expressed in the articles in Hindu Oli arethose of the contributors -ܥ
வளரட்டும்எம்பணி-(தொடர்ச்சி)
போர் அனர்த்தங்களினால் எங்கள் மக்கள் துயருற்றிருந்த வேளையிலே அவர்களது இன்னல்களை இந்த நாட்டில் இருக்கின்ற அனைவருக்கும் மட்டுமல்ல, பாரெல்லாம் எடுத்துக்கூறி அகில இலங்கை இந்து மாமன்றம் இலங்கை இந்து மக்களின் குரலாக ஒலிக்கத் தவறவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தயங்காமல் எங்கள் மக்களுக்காக என்றும் குரல் கொடுத்துக் கொண்டேயிருப்போம்.
எமது பொன்விழா ஆண்டிலும் மேலும் பல பணிகளையும் மக்களுக்கு ஆற்றி “மக்கள் சேவையே மகேஸ்வரன் பூசை” என்பதனை மறவாது அவ்வழி நின்று இறை பணியாற்றுகிறோம். எங்கள் இலட்சிய மான “இறைபணி நிற்க” என்பதனை மறவாது, அந்த வழியில் நின்று நாங்கள் தொண்டாற்றுவோம்.
2 பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 5
3S3
% 处从Y份俗俗然勉次及
XX) M VM
然 W 例 2.
) h
(AN (A அகில இலங்கை 6
l O O ணம் தேசிய
C
参
ബ്രീ 8 இந்நாட்டின் இந்துமத நிறுவனங்களினதும், ஆல ( மக்களுக்கான ஓர் உச்ச நிறுவனமாக - ஜய வருடம் ை செய்துவைக்கப்பட்ட அகில இலங்கை இந்து மாமன்றம்
மாமன்றப் பொன்விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வு பகுதிகளில் பிராந்திய ரீதியாக இந்து மாநாடுகளை ஏற்பா
(அந்தவகையில் முதலாவது பிராந்திய இந்து மாநா [وهو ووه
வ) மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மாமன்றத்துடன் யாழ்ப்பா மாநாட்டை நடத்துகிறது. பெருவிழாவாக அமையவிரு கல்வியியற் கல்லூரி வளாகத்தில் 2005 ஜூலை 1: ஆரம்பமாகிறது.
இந்த ஆரம்ப நிகழ்வில் இந்துப் பெருமக்கள் அனை மாமன்றத்தின் விருப்பமாகும்.
இந்து மாநாட்டில் இலங்கையில் இந்து சமய வரலா கல்வியியல் சார்ந்த அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைக பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், யாழ்ப்பாண மாவட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள்.
ஜூலை 16ம் திகதி சனிக்கிழமையும் 17ம் திகதி ஞாயி கட்டுரைகள் வாசிக்கப்படவிருக்கிறது. முன்பதிவுசெய்து கொள்வர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இந்து மாநாட்டின் சிற மாமன்றம் கெளரவிக்கிறது. தெல்லிப்பளை பூரீதுர்க்க சமயப்பணிகளுடன் சமூக நலப் பணிகளையும் செய் அப்பாக்குட்டி அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் ந தேவஸ்தானத்தின் அறங்காவலரான அருட்கவி சீ. வின S தெய்வீக அருள்பெற்ற கவிஞருமாவார். அவர் ஏராளமான
தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெருமகனார்.
ஆன்மிக சமய சமூகப் பணிகளில் தங்களை மு
செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களைய இலங்கை இந்து மாமன்றம் பாராட்டி வாழ்த்திக் கெளர b0000 மாமன்றத்தின் காலாண்டிதழான “இந்து ஒள
சிறப்பிதழாக வெளியிடுவதில் மாமன்றம் பெருமையடை
இந்து ஒளி யாழ். இந்து ம
WAWAWAWAWAWAWAWAWINIAWAWAWAWIANVIAVAN
(இந்து ஒளி

SWSOOXXXXXXXXXY
VN VAN (0)
\ 心你 V V (VV 2 (N
WW (WN G 8. N
རྩི་མྱི་ཕྱི་༦༤༤༦རྙི་ཉུ་བྱ་》
*றப்பொன்விழாவையொட்டி ZA N
நந்து மாமன்றமும் ல்வியியற் கல்லூரியும் நடத்தும்
D/7/ნ/7Qჩ
ய அறங்காவலர்களினதும் கூட்டமைப்பாக - இந்து த மாதம் 22 நாளன்று (06.02.1955) அங்குரார்ப்பணம் இவ்வருடம் பொன்விழா காணுகிறது.
களுள் ஒன்றாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் டு செய்து நடத்துவதற்கு மாமன்றம் தீர்மானித்துள்ளது. டு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுகிறது என்பது ணம் தேசிய கல்வியியற் கல்லூரியும் இணைந்து இந்து க்கும் இந்து மாநாடு கோப்பாயிலுள்ள, யாழ். தேசிய " திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு
g
வரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதே
று, பண்பாடு, வழிபாடு, வாழ்வியல், மெய்யியல், கலை, ள் படிக்கப்பட்டு ஆராயப்படவிருக்கிற்து. யாழ்ப்பாண த்தைச் சேர்ந்த சமய அறிஞர்களும், ஆய்வாளர்களும்
ற்றுக்கிழமையும் நடைபெறும் செயலமர்வுகளில் ஆய்வுக் கொண்ட பேராளர்கள் மட்டும் செயலமர்வுகளில் கலந்து
]ப்பு அம்சமாக இரு மூத்த ஆன்மிக சமய அறிஞர்களை
ாதேவி தேவஸ்தானத்தின் அறங்காவலராகவிருந்து
துவரும் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா
ன்கு அறியும். அளவெட்டி பூரீநாகவரத நாராயணர்
ாாசித்தம்பி அவர்கள் ஒய்வுபெற்ற ஆசிரியர் மட்டுமல்ல
T அருட்கவிதைகளைப் பாடியுள்ளார். சமயப் பணியிலும் E
முற்றுமுழுதாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள சிவத்தமிழ்ச் ம், அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்களையும் அகில விப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றது. ரி” சித்திரை - ஆனி இதழை, யாழ். இந்து மாநாட்டு கின்றது.
Y2Vjy
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 6
zLeeeLeseeeeLeeeeeLkeeeeLseeeLeeeeeLeLseeeLeeTS ක්‍රීඝ්‍රර්‍ක්‍ෂා န္တိဒ္ဒိ၊
落签 鰲 ဖြုံဒွိဒ္ဓိန္တိဒ္ဓိဖြုံ
S.
சிவ இந்து zܡܹz<ܢzܐܝ>ܡܢ ஆரம்ப நிகழ்வு - நிகழ்ச் X as s $ பிற்பகல் இ 3.00 : யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஜ்":
*ෂුණී மரீவித்தக விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடு
3.30 : மங்கள விளக்கேற்றுதல் 3.40 : இறை வணக்கம் 3.45 வரவேற்புரை
கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் (பீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) 3,50 : ஆசியுரை
சிவழி ஜ. மகேஸ்வரக்குருக்கள் (இந்துமத குருபீடாதிபதி) 4.00 : ஆசியுரை
பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிக
நல்லை ஆதீன முதல்வர்) 4.10 : ஆசியுரை
சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் (தலைவர், இராமகிருஷ்ண மிஷன்,கொழும்பு) 20 தலைமையுரை
திரு. வி. கயிலாசபிள்ளை (தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்) 4.30 தொடக்கவுரை 3 சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
4.40 : வாழ்த்துரை
அருட்கவி சி. விநாசித்தம்பீ
கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம், கொழும்பு 02.
Free f : 0 33.990.
LGGL LLL SLLee00 LeeeL S SLLLLLLG G LLLSS SLLLLLS LEGee eeSSSSSL0LGGLGGGLLLLSSeLSLLLYeSYAeEGLLLLLLLS
భ VN ~~
Տ ଔର୍ଜି ଶିବଲିଙ୍ଗ, அகில இலங்கை இந்து மாமன்றமும் யாழ். தே
இந்து மாநாடு 18.07.2005 காலை 9.00-10.30:சிறப்பு அமர்வு
§§ அமர்வு-1 வழிபாட்டு நோக்கில் శిష్ట அமர்வு-2 வாழ்வியல் நோக்கில்
வழிபாட்டு நோக்கில் வாழ்வியல் நோக்கில்
வழிபாட்டு நோக்கில் வாழ்வியல் நோக்கில்
భళ * భ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

懿
JJJJrYAMG0LLLLL0kkL స్టేక్లబ్తో
இதி Dujih 茨筠
ழாநாடு சி நிரல் - 15.07.2005
பிற்பகல் 4.50 : வாழ்த்துரை
நீதியரசர் திரு. சி. வி. விக்னேஸ்வரன்
(இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர்) 8.00 : வாழ்த்துரை
திரு. கே. கணேஷ் (யாழ்.அரச அதிபர்) 5.10 : வாழ்த்துரை
கலாநிதி சு. மோகனதாஸ் (உப வேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) 5.20 : வாழ்த்துரை
கம்பவாரிதி இ. ஜெயராஜ் 5.30 : மாநாட்டின் நோக்கம்" - விளக்க உரை
செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் 5.45 : மாநாட்டின் அறிமுகவுரை
பேராசிரியர் அ. சண்முகதாஸ் 6.00 : கெளரவிப்பு நிகழ்வு 6.15 : “இந்து ஒளி சிறப்பிதழ் வெளியீடு 6.0 : சிறப்புரை
‘என்றும் நிலைக்கும் எம் சமயம்" பேராசிரியர் சோ. ந. கந்தசாமி (முதுநிலை தமிழ் பேராசிரியர்-தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) (சிறப்புநிலை பேராசிரியர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்) 7.15 : நன்றியுரை
திரு. கந்தையா நீலகண்டன்
(பொதுச் செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம்} கலை நிகழ்ச்சிகள் இந்து மாநாடு ஆரம்ப வைபவம் நிறைவு
ாண்டு இரவி
திருநாவுக்கரசு கமலநாதன் பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய்.
*SAVO Z at a SK
Sana 冢
யாட்டி
மன்றப் பொன்விழாவைெ
சிய கல்வியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் 3
செயலமர்வுகள்
17.07.2005 காலை 9.00-10.30:சிறப்பு அமர்வு
அமர்வு-7 வரலாற்று நோக்கில் அமர்வு -8 மெய்யியல், விஞ்ஞான நோக்கில் 8 黎
அமர்வு-ச்-வரலாற்றுநோக்கில் E. அமர்வு-10 கலை, கல்வியியல் நோக்கில்
முன்பதிவு செய்து கொண்ட பேராளர்கள் மட்டும்
செயலமர்வுகளில் கலந்து கொள்வர். 浔
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 7
ਵੱਡੂ
நல்லை திரு
பூனிலழறீ சோமசுந்த
SOI.
அகில இலங்கை இந்து மான்ற யாழ்ப்பாணத்தில் தேசியக் கல்வியியற் கல்லூரியுடன், மகிழ்ச்சியடைகின்றோம். ஈழத்து இந்து சமய வரலாறு நாட்களுக்கு பல சிந்தனையான கருத்துக்களை வெ சமய மக்களுக்கு மனநிறைவு தருகின்றது. இந்து
பூர்த்திசெய்யும் வகையில் கொழும்பு நகரை தலைமைப் முழுவதிலும் உள்ள அனைத்து இந்துக்களையும் ஒ முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியைத் தருகின்றது. இ தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது. இம் மாநா கல்விச் சமூகத்திற்கு நிறைவான பணியை வழங்க நடைபெறுவது கல்வி வளர்ச்சிக்கு மேலும் பயனுள்ள கலந்து கொண்டுபயன்பெறுக
அகில இலங்கை இந்து மாமல் மற்றும் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இந்து மாற இலங்கையில் இந்து சமய வரலாறு, பண்பாடு, வழி கல்வியியல் போன்ற விடயங்களின் அடிப்படையில் எனவும் அறிகிறோம். மனித ஒழுக்கமும், பண்பாடும்ப சூழலில், இத்தகைய கருத்தரங்கு அதற்கான மாற்று ம
இம்மாநாடு வெற்றியுடன் அமைய இறையருள் இலங்கை இந்து மாமன்றத்தின் பணிகள் மென்மேலும்
 
 
 
 

দিল্লী ଅଞ୍ଷ୍ମା ஒருானசம்பந்தர் ஆதீன முதல்வர்
தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ாமிகள் அவர்களின்
6maf3 6l35
த்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவையொட்டி இணைந்து இந்து மாநாடு ஒன்றை நடாத்துவதையிட்டு எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்று ரிப்படுத்துமுகமாக மாநாடு அமைந்திருப்பது இந்து சமய மக்களின் குரலாக மக்களின் தேவைகளை பீடமாகக் கொண்ட இந்து மாமன்றம் இன்று இலங்கை ன்றிணைத்து பல சிந்தனையான செயற்பாடுகளை இந்தவகையில் இந்து மாநாடு யாழ்ப்பாண மக்களுக்கு ட்டை நடத்தும் தேசிய கல்வியியற் கல்லூரி இன்று கிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் மாநாடு ாதாக அமைகின்றது. இம் மாநாட்டில் அனைவரும்
ராமகிருஷ்ண மிஷன் தலைவர்
கனானந்தா மகராஜ் அவர்களின்
ழ்த்துச் செய்தி
1றத்தின் பொன் விழாவையொட்டி எதிர்வரும் 15, 16 ாடு ஒன்று நடக்க இருக்கிறதெனவும். இம் மாநாட்டில் பாடு வாழ்வியல், மெய்யியல், விஞ்ஞானம், கலை, ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு ஆராயப்படும் ரிய சவாலை எதிர்நோக்கியுள்ள இன்றைய உலகியல் ருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ளப் பிரார்த்திப்பதோடு, பொன்விழா காணும் அகில சிறப்பெய்த வாழ்த்துகிறோம்.
பார்த்திய வருடம் சித்திரை- ஆனி)

Page 8
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி, நயினை பூரீ நாகபூஷண: சுதுமலை பூணு புவனேஸ்வரி அம்பாள் தே
"கிரியாகலாய முக்தா
சிவபூணூர் ச. மஹேஸ்வரக் குருக்
ஆசிச் செய்
சைவ சமயத்திற்கும் சைவத்திற்கும் பெரும் செய்து பொன்விழாக்காணும் அகில இலங்கை இ கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்து மக்களுக்கென தனித்து சேவை செய்து வரும் இந்து ஆற்றிவரும் தொண்டுகள் போற்றப்படவேண்டும். குற கலை, கலாசாரம், பண்பாடு போன்ற பல ஆக்கத்தொ மிகவும் பெருமைக்குரிய ஒரு விடயமாகும். மேலும் மாணவர் உள்ளத்தில் சிறு வயதில் பதிய வைக்கு அவர்களுடைய வாழ்நாட்கள் சிறப்பாக அமையும் எ நடைபெற எல்லாம் வல்ல தில்லைக்கூத்தர் திருவ நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் கூறுவதில் டெ
தெல்லிப்பளை பூரீ ஆர்க்காதேவி தேவஸ் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்க
அவர்களின்
வாழ்த்துச் செ)
அகில இலங்கை இந்து மாமன்றம், கோப்ட கல்லூரியுடன் இணைந்து நடத்த இருக்கும் இந்து மகா என்பதைத் தொனிப் பொருளாகக் கொண்டது. இந்து ஒரு சொல்லாகும். மொகஞ்சதாரோ, கரப்பா காலத்திலே எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்கள் இம் மதத்தை ஆ என்பவற்றை தன்னகத்தே இணைத்துக் கொண்டது இந் நோக்கும் பொழுது கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வி அமைகின்றன. இராமாயண காலத்தில் இராவன கோணேஸ்வரத் தேவாரத்தில் இடம் பெற்றதும் கு மண்டோதரிக்கு பேரருள் இன்பமளித்த பெருமான் எ6 இத்தகைய வரலாற்றுப் பழமைமிக்க சிவத்தலங்கள் யாழ்ப்பாணத்திலும் நயினாதீவு, கீரிமலை, மாவிட்ட * நிற்கின்றன. ! ஆகவே யாழ் குடாநாட்டில் இந்து மகாநாடு ஒ பேருவகை அடைகின்றோம். அத்துடன் மகாநாட்டை யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியையும் அகில இலங் வாழ்த்தி அமைகின்றேன்.
. - , - =======
 
 
 

LIII
அம்பாள் தேவஸ்தான ஆதினகுரு. வஸ்தான பிரதமகுரு,
IDsof”
கள் அவர்களின்
தி
தொண்டாற்றி கடந்த ஐம்பது ஆண்டுகள் சேவை ந்து மாமன்றம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் து மாநாடு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழ் து மாமன்றம் சைவ சமயத்திற்கும் சைவமக்களுக்கும் பிப்பாக மாணவ உலகத்திற்கு வேண்டிய அறிவுரைகள் குப்புகளை மாணவர் மத்தியில் வெளியிடப்படுவதும் ஆன்மீக வளர்ச்சிகளுக்கான பல ஆய்வுகளையும் நம் நோக்கில் மாணவர்களது சமயப்பற்று வளர்ந்து ன்பதில் ஐயமில்லை. எனவே இவ்விழா மிக சிறப்பாக படிகளை மனதில் பிரார்த்தித்து எனது மனமார்ந்த பரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
தானத்தின் தலைவர் ம்மா அப்பாக்குட்டி
ឃុំស្រ្ដី
ாய் யாழ். தேசிய கல்வியியற் நாடு இலங்கையில் இந்து சமயம்
என்ற சொல் தெய்வீகத்தோடு இணை நது வழங்கும் யே இந்தியாவில் இந்து மதம் பரவியிருந்தது. தொடர்ந்து
ஆதரித்து வந்தனர். அன்பு, சகிப்புத் தன்மை, தெய்வீகம் து மதமாகும். இம் மதத்தின் பூர்வீகத்தை இலங்கையில் பரம் என்ற தேவாரம் பெற்ற திருத்தலங்கள் சான்றாக ானுடைய ஆட்சியும் அவனுடைய பெருமையும் றிப்பிடத்தக்கதாகும். மேலும் இராவணன் மனைவி ன்று திருக்கேதீஸ்வரப் பெருமான் குறிப்பிடப்படுகிறார். ளைத் தன்னகத்தே கொண்டது ஈழத் திருநாடாகும். புரம், நல்லூர் என்பன வரலாற்று சிறப்போடு காட்டி
ஒன்று 15.07.2005ல் ஆரம்பமாக இருப்பது குறித்து நாம் ச் சிறந்த முறையில் நடாத்துவதற்கு முன்னின்று உதவும் 1கை இந்து மாமன்றத்தையும் மனம், மொழி, மெய்களால்
பார்த்திப வருடம் சித்திரை-ஆ=

Page 9
நீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம் நாகேளப்வரம், அளவெட்டி (இலங்கை)
Dr.அருட்கவி சி. விநாசித்தம்பி M.
அவர்களின்
6) TP355L JLJIf
அளவிலா அளவாகி அம்பலத்தில் ஆடுகின்ற பரம்பொருள்வாய் மலர்ந்த தெய்வ
ஒளிபரப்பும் வேதங்கள் ஆக மங்கள் ஒதுபுரா னங்கதிரு முறைகள் சொல்லும்
தெளிவதனை உலகெலாம் செறியவைக்கும் திகழ் உலக இந்துமா மன்றத்தாரின்
உளமகிழும் ஐம்பதாம் ஆண்டுப் பூர்த்தி
உயர்விழா மலைவிளக்காய் வாழிவாழி
இன்பநலம் புரிஅகில இலங்கை இந்து எழில்மண்றம் செயும்பணியால் சைவமக்கள் பொன்பெருகி சுகம்பெருகி புனிதநீற்றுப் புகழ்பெருகி ஐந்தெழுத்தின் ஞானம் பொங்கி அன்புநெறி அகிம்சைநெறி பெருகி வாழ்வில் அருண்பெருகி ஐம்பானாண் டுயர்வு பெற்றார் மின்பொலிசெஞ் சடையானின் அருளால் இன்னும் மேருவெனப் பணியாற்றி மண்றம் வாழி
வளங்காட்டும் நல்லகில இலங்கை இந்து மாமன்றம், யாழ் தேசியக் கலைக் கல்லூரி உனங்காட்டும் ஒருமித்துத் தரும் மாநாடு உணர்வுடைய தமிழ்மக்கள் மணஞ் செழிக்க தனங்காட்டும் சமயதத் துவங்கள் ஓங்க தவங்காட்டும் சாத்வீக வாழ்வு பொங்க இளங்கோட்டு மதியழகன் கருணையாலே எல்லோர்க்கும் வழிகாட்டி வாழி வாழி
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி திரு. திரு
-- - ug: வாழ்த்துச் ெ சமயத் துறையில் மட்டுமல்ல சமூக நலன் மற்றும் கல்வி இலங்கை இந்து மாமன்றம் ஐம்பது ஆண்டுகளை நிறை இவ்வேளையில் மாமன்றத்தின் பணி இப்பொழுது நாட்டி ருக்கிறது என்பது சிறப்புக்குரியது. மாமன்றத்தின் பொன்ன இந்து மாநாடு தொடரில் முதலாவது மாநாடு யாழ்ப்பான கொள்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
மாநாட்டில் முன்வைக்கப்படும் அறிவுசார் கருத்து: மாணவர்களால் நாட்டின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் ெ யாழ் இந்து மாநாடு வெற்றிகரமாக அமையவேண்டு எங்களுடன் இணைந்து முழுமையான ஒத்துழைப்பை வ;
 
 

*
அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் 蠶
திரு. வி. கயிலாசபிள்ளை அவர்களின்
வாழ்த்துச் செய்தி
泷
பொன்விழா காணும் ே அகில இலங்கை இந்து மாமன்றம் யாழ்ப்பாணத்தில் சமயப் பணிகளுடன் சமூகப் பணிகளை ஆரம்பித் திருப்பதுடன், ஆராய்ச்சிக் கட்டு ரைகள் சமர்ப்பிக்கப படுகின்ற அறிவுபூர்வமான இந்து மாநாட்டினை நடத்துகிறது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி இதில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். யாழ்ப்பான பல்கலைக்கழக சமூகமும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இந்து அறிஞர்களும் இம் மாநாட்டில் தங்கள் அனுபவரீதியான அறிவினைப் பகிர்ந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. இம் மாநாட்டில் பங்குபற்றுபவர்களுள் பெரும்பாலானவர்கள் இலங்கையின் பல பகுதிகளிலுமிருந்து வந்து ஆசிரியப் பயிற்சி பெறுகின்ற மாணவர்களாவர். இம்மாநாட்டின் பயனாக அவர்கள் பெறுகின்ற அறிவு இலங்கையின் பல பாகங்களையும் சென்றடையும் என்பதுடன் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் எதிர்கால சந்ததியினருக்கும் பயனுள்ள ஒரு பொக்கிசமாகவும் அமையும்.
இந்து மாநாடு சிறப்பாக நடந்தேற ஒத்துழைப்பு வழங்கிவரும் அனைவருக்கும் மாமன்றத்தின் சார்பில் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
நாவுக்கரசு கமலநாதன் அவர்களின்
== சப்தி த் துறைகளில் சேவையாற்றிவரும் அகில புசெய்வதன் மூலம் பொன்விழா காணும் ஆ ன் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டி விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பிராந்திய த்தில் நடத்தப்படுவதுடன் அதில் நாங்களும் இணைந்து
கள் அனைத்தும் அதில் பங்குகொள்ளும் எங்கள் ஆசிரிய ல்லப்படும்.
என வாழ்த்துவதுடன், இந்துப் பெருமக்கள் அனைவரும் 2ங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
膏可 பார்த்திப வருடம் சித்திரை=ஆனி)

Page 10
சைவ சமயத நந்திக்
தன்னையூர். ராம். தேவ இலண்ட
சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் சிவபெருமான். அப்பெருமானின் திருமேனியையும், அன்னை பராசக்தியையும் தாங்கி நிற்பவர் திருநந்தி தேவர். அந்தக் காட்சியை வர்ணிக்கின்றார் ஞானசம்பந்தர் தன்னுடைய முதல் தேவார பதிகத்திலே - “தோடுடைய செவியன் “விடை’ ஏறியோர்” இங்கு “விடை’ என்பது நந்தி தேவரையே ) குறிப்பிடுவதாகும். இடபம், எருது, விருத்தி போன்ற நாமங்களும் திருநந்தி தேவரையே குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாவின் நிலையே திருநந்தி தேவராகும். தன்நிலையை வாகன ரூபமாகவும், கொடிச் சீலை வடிவிலும் மனித ஆன்மாக்களுக்கும் மற்றும் ஜீவராசிகட்கும் தருகின்ற தருமதேவதை வடிவமே “திருநந்தி தேவர். இதன் உட்பொருள் யாதெனின் மனிதன் தாழ்ந்த நிலையிலே இருந்தாலும் (வாகன ரூப வடிவம்) உயர்நிலையிலே இருந்தாலும் (கம்பீரமாக பறக்கும் நந்திக்கொடிச் சீலை வடிவம்) நல்லொழுக்க நிலையிலே இறை சிந்தனையை கொண்டு வாழ வேண்டும் என்பதை எடுத்தியம்புகிறது. எப்படி இதை உணர முடியும் எனில் கைலை மலைக்கு செல்லுகின்ற தேவர்கள் நந்தி பெருமானின் அனுமதி பெற்றே உட்செல்லவேண்டும். அதே போல் ஆலயத்தினுள் செல்லுகின்ற பக்தர்கள் நந்தி வாகன வழிபாடு முடித்தே இறை வழிபாட்டை மேற்கொள்ளுகின்றோம். வாகனமாக நந்தி குறிப்பிடுவது ஆன்மாவை. உடம்பு இயங்குகின்றது உயிரால். உயிர் இயங்குவது சிவனின் அருளால், பிறப்பும், இறப்பும் இறைவன்
“நந்திக் கொடி ஏற்றுவோம் மேன்மை கொள் சைவநிதி ബ്രശ്നമ്മ
மாமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினரும், விடுதிகள் கயிலாசபிள்ளை அவர்களுக்கு கொழும்பு கம்பன் கழகம் இவ்வருட ஒளி' அவரைப் பாராட்டி வாழ்த்துகிறது.
கொழும்பு கம்பன் கழகம் வருடந்தோறும் ஏற்பாடு செய்து ந தன்னலம் கருதாது சேவையாற்றி வரும் சாதனையாளர் ஒருவருச் வகையில் இவ்வருடம் திருமதி அபிராமிகயிலாசபிள்ளை பெருமையு இது தொடர்பாக கொழும்பு கம்பன் கழகம் வெளியிட்டிருந் இணைந்து பணியாற்றுவதோடு, பல தொண்டு நிறுவனங்களை உயர் பணியாய் செய்து வருகின்ற பெண்மணி இவர். தியாக மன தன்னலமற்று பல சமுதாயப் பணிகளை ஆற்றிவருகின்ற இவருக் சாதனையாளர்களுக்கான உலகளாவிய விருதாகிய கம்பன் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர் சமயத் துறையில் ஆற்றிவரும் பணியும் சிறப்பாகப் பே தொடர்ந்து, உயர்வான நிலையைப் பெறவேண்டும் என “இந்து ஒ
(இந்து ஒளி w 置
 

த்துவ ஞானம் 6lфтр
லோகேஸ்வரக்குருக்கள் ன் சிவன் கோவில்)
கையில் உள்ள சூட்சுமமாகும். எனவே இந்த ஆன்மா அழியாத தன்மையை கொண்டதாகும். அது நாம் செய்யும் பாவ, புண்ணிய பலாபலன்களுக்கு ஏற்ப பிறப்பு கொள்ளுகின்றது. வாழ்வில் நாம் செய்கின்ற புண்ணியங்கள் அனைத்தும் தர்மத்தின் அம்சம்.
அந்த தரும தேவதை வடிவமாய் அமைகின்றவர், திருநந்திதேவர், கொடிச்சீலையின் தோற்ற அமைப்பு உயிர்தோற்ற ஒழுக்க நெறியைக் குறிக்கும். அந்தக் கொடிச்சீலையில் அமைந்த திருநந்தி தேவர் உருவமும் “ஆன்மா” என்கின்ற நிலையில் அமைகின்றது. இதில் கொடிக்கம்பத்தை பார்க்கும் நந்தியின் உருவமும் ஆன்மா இறை ஐக்கியம் பெறுவதையும், கொடியின் நுனிப்பாகத்தை பார்க்கின்ற நந்தி உருவம் ஆன்மா இறை ஐக்கிய நிலையில் பக்குவப்பட்ட தன்மையையும் எடுத்து இயம்புகின்றது. இப்படியாக சைவசமய தத்துவ ஞானமாய் நந்திக் கொடி அமைகின்றது. இவை எமது ஆலயங்கள், பாடசாலை, அறநெறி நிலையங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். சிவதொண்டின் சீரிய தொண்டாய் இந்த நந்திக் கொடிகளை உலகெங்கும் உள்ள சைவசமயம் சார்ந்த அனைத்து இடங்களுக்கும் கொடுத்து வருகின்ற “சிவநெறிச் செம்மல்" அன்பர் திரு. சின்னத்துரை தனபாலா, (சமாதான நீதவான்) அவர்களின் இத்தொண்டு சிறக்க ஆசிகள் கூறி அவருக்கு அரன் அம்பிகை திருவருள் பூரணமாக கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
நம் சமயம் போற்றுவோம்” விளங்குக உலகமெல்லாம்.
Zத்துகிறது/
முதியோர் இல்லக் குழுவின் செயலாளருமான திருமதி அபிராமி ம் கம்பன் புகழ் விருது வழங்கி கெளரவித்திருப்பதையிட்டு “இந்து
டத்தும் கம்பன் விழாவின் போது, தமிழினத்தின் உயர்ச்சிக்காக $கு கம்பன் புகழ் விருதை வழங்கி கெளரவிப்பது வழக்கம். அந்த ம் சிறப்பும் வாய்ந்த அந்த உயர் விருதைப் பெற்றுக்கொண்டுள்ளார். த செய்திக் குறிப்பொன்றில் “சமூக நிறுவனங்கள் பலவற்றில் அமைத்து ஆதரவற்ற பலரையும் காக்கின்ற அறப்பணியை தன் ாப்பான்மையோடும், கருணையோடும் இலைமறைகாயாய் நின்று கு இந்நாட்டின் தமிழ் மக்கள் சார்பாக கொழும்பு கம்பன் கழகம் புகழ் விருதினை வழங்கி கெளரவித்து மகிழ்கிறது” என்று
ாற்றத்தக்கது. இவரது சமய, சமூகப் பணிகள் மேலும் சிறப்பாகத் ஒளி' வாழ்த்துகிறது.
பார்த்திய வருடம் சித்திரை- ஆணி)

Page 11
ଥfରା ଥfdre
கலாநிதி குமாரசாம δ. (சிறப்பு:உறுப்பினர், அகில இலங்கைஇ தலைவர், கொழும்பு الكلاليخ؟
0ெசிவம், சிவ சம்பந்தமுடையது. சிவம் அன்பு சம்பந்தமுடையது. அன்பே சிவம், சைவ நெறி சிவநெறியாக - அன்புநெறியாக விளங்குகிறது. மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு இருந்து வரும் சமயம், சைவசமயம். சிவபெருமான், அதன் முழுமுதற் கடவுள். கடவுள் உண்டு என்பதில் உறுதியாக இருப்பது சைவசமயம்.
சமயம், மனித வாழ்விலிருந்து பிரித்துவிடமுடியாது. சமயங் கலந்த, ஆன்மீகம் இணைந்த உலகியல் வாழ்வை வேண்டி நிற்பது சைவநெறி.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” - திருக்குறள்.
வாழ்வாங்கு வாழ்தல் என்பது சைவநெறி நின்று வாழும் பொதே சாத்தியமாகிறது.
சைவநெறியானது அன்பு, நீதி, நல்லொழுக்கம், பண்பாடு, மனிதநேயம், பிணக்குகள் வேற்றுமைகள் கடந்த விழுமிய நிலை, என்பவற்றைத் தழுவியதாக அமைகின்றது. எனவே “வாழ்வாங்கு வாழ்தல்”என்பதில் சைவம் முனைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
“என் கடன் பணிசெய்து கிடப்பதே” - அப்பர் வாக்கு. பணிசெய்தல், பிறர்நலம் பேணல், தொண்டு செய்தல், சேவைசெய்தல், பகுத்துண்ணல், பல்லுயிரோம்புதல் - இவை வையத்துள் வாழ்வாங்கு வாழும் இலட்சணங்கள் எனச் சைவம் கூறும்.
“தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற ஒளவையாரின் வாக்கு சைவமரபு ஆகிவிட்டது.
சைவப்பண்பாடு, தொண்டுப் பண்பாடாகச் சேக்கிழார் பெரியபுராணம் மூலம் காண்பித்திருப்பது நோக்கற்பாலது.
தொண்டு என்பது கைம்மாறு கருதாதும், எதிர்பாராதும், பயன் கிடைக்கும்போது ஏற்க மறுக்கும் உறுதியும் கொண்டு, செய்யும் பணியாகும். மனத்தூய்மை, மொழித்தூய்மை, செயல்தூய்மை என்பவற்றுடன் செய்யும் சேவை, தொண்டு எனச் சைவம் கூறும்.
சைவர்கள் இருவகையினராக உள்ளனர். (1). உபாயச் சைவம் சார்ந்தவர்கள். (2). உண்மைச் சைவம் சார்ந்தவர்கள்.
உபாயச் சைவம் சார்ந்தவர்கள் பிறப்புரிமையை மாத்திரம் அதற்குரிய தகுதிப்பாடாகக் கொண்டவர்கள்.
உண்மைச் சைவம் சார்ந்தவர்கள் பிறப்புரிமையுடன் அக ஒழுக்கம், புற ஒழுக்கம் உள்ளிட்ட அநுட்டானம், அனுபவம், சாதனை என்னும் தகுதிப்பாடுகளைக் கொண்டவர்கள்.
உபாயச் சைவர்கள் உண்மைச் சைவர்களாக வளர்ச்சி பெறவேண்டியது அவசியமாகும்.
இந்து ஒளி
o
 

Tifleboit
சோமசுந்தரம் ந்துமாமன்றமுகாமைப்பேரவை தமிழ்ச்சங்கம்)
உண்மைச் சைவத்துக்குரிய மகிமைகளையும்
தகுதிப்பாடுகளையும் அறிந்திருப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடித்தும், செயற்படுத்தியும் வாழும்போதுதான் நாம் உண்மைச் சைவர்கள் ஆவோம்.
உண்மைச் சைவர்கள் ஆக, நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டியது எமது தார்மிகக் கடமையாகும்.
உபாயச் சைவம் எமது பிறப்புரிமை. அது, உண்மைச் சைவத்தை நோக்கி நகருவதற்கு வேண்டியவற்றை நாம் அனுட்டிக்குந் தகுதியை எமக்கு வழங்குகிறது.
உண்மைச் சைவர்களாக நாம் உயர்வதற்கு எம்மால் மேற்கொள்ளப்படக் கூடிய நடைமுறைகள், ஒழுக்கங்கள், சைவப் பயிற்சிகள், சாதனைகள் என்பவற்றைச் சைவம் வகுத்துத் தந்துள்ளது. 99
“சிவத்தோடு சம்பந்தப்பட்டுள்ளவனே உண்மைச் சைவன் “அன்பே சிவம்” "நீதியே சிவம்” “உண்மையே சிவம்” “செம்மையே சிவம்” “அழகே சிவம்” ‘நன்மையே சிவம்”, “தூய்மையே சிவம்”
எனவே உண்மைச் சைவன் அன்பு, நீதி, உண்மை, செம்மை, அழகு, நன்மை, தூய்மை என்பவற்றுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறான்.
ஒரு சிறந்த சைவசமயி சமம்- கடவுளிடம் கருத்தைச் செலுத்துதல்; தமம்- புலன்களை அடக்குதல்; திதிஷைதுன்பங்களைப் பொறுத்தல், தைரியம் - நாவை அடக்குதல்; தானம்- எவரிடமும் பகைகொள்ளாமலும் பிறர் தன்னைக் கண்டு அஞ்சச் செய்யாமலும் இருத்தல்; தவம் - ஆசையை விட்டு விடுதல்; வீரம்- ஆசாபாசங்களை வெல்லுதல்; சத்தியம்பரம்பொருளைக் கண்டு மகிழ்தல்,
உண்மைச் சைவன் கொல்லா அறம், புலால் உண்ணாமை, பொய்யாமை, வெஃகாமை, பிறன்மனை விழையாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, வரைவின் மகளிர் விழையாமை ஆகிய விரதங்களைக் காப்பவன், மன அடக்கம், புலனடக்கம் இரண்டையும் இரு கண்களாகப் போற்றுபவன்.
உண்மைச் சைவன் இயம நியமங்களைப் பேணுவதில் கண்ணுங் கருத்துமாயிருப்பான்.
இயமம் என்பதில் அடங்குபவை : அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, தொடர்பின்மை, நாணம், வெளவாமை, கடவுள் நம்பிக்கை, பிரமச்சரியம், மெளனம், உறுதி, சகிப்பு, அஞ்சாமை என்பன.
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 12
நியமம் என்பதில் அடங்குபவை: அகப்புறத்தூய்மை, ஜெபம், தவம், அக்கினிகாரியம், சிரத்தை, விருந்தினரைப் பேணல், கடவுள் வழிபாடு, தலயாத்திரை, பரோபகாரம், மனத்திருப்தி, என்பன.
உண்மைச் சைவன் என்பவன் கொண்டிருக்கும் இலட்சணங்களை நாவலர் பெருமான் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்.
“சுத்த சாட்குண்ணிய பரிபூரணராகிய பரமபதி சிவபெருமானே என்று துணிந்தவர்களாய், கொலை, களவு, கள்ளுணல்,புலாலுணல்,பிறன்மனை விழைதல், வரைவின் மகளிர் விழைதல், பொய்ச்சான்றுரைத்தல் முதலிய பாவங்கள் இல்லாதவர்களாய்; இரக்கம், வாய்மை, கொடை முதலிய புண்ணியங்களை உடையர்களாய், குருலக்கணங் குறைவற அமைந்த சைவாசாரியரை அடைந்து சிவ தீட்சை பெற்றுக் கொண்டவர்களாய், விபூதி, ருத்திராகூடிதாரணம், சந்தியா வந்தனம், பூரீபஞ்சாட்சர ஜபம், சிவத்தியானம், சிவாலயசேவை, சிவலிங்க பூசை, குருவாக்கிய பரிபாலனம், மாகேசுரபூசை, முதலியனவற்றைச் சிவாகம விதிப்படி மெய்யன்போடு செய்பவர் களாய் உள்ளவர்களே சைவர்கள் எனச்சொல்லப்படுவார்கள். (பெரியபுராணம் - வசனம் - நாவலர் பெருமான் முகவுரை)
சைவ சாதனங்கள் (சிவசின்னங்கள்)
சைவர்கள் அவசியமாகத் தரிக்கவேண்டியவை விபூதியும் உருத்திராட்சமும்; ஓத வேண்டியவை திருவைந்தெழுத்தும் திருமுறைப் பாடல்களும், செய்ய வேண்டியவை கடவுள் வழிபாடு, பூரீ பஞ்சாட்சர செபம், தியானம், திருத்தொண்டுகள், பிறர்நலனோம்பல்; பேணவேண்டியவை சைவ ஒழுக்கம், பண்பாடு, சைவ ஆசாரம், சைவ விழுமியங்கள் என்பனவாகும். இவை சிவனைக் குறிப்பதால் சைவ சாதனங்கள் சின்னங்கள், அடையாளங்கள், குறியீடுகள் ஆக விளங்குகின்றன.
இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ மனிதர்க்கு உதவுபவை சைவசாதனங்கள்.
“எமக்கு இந்தச் சரீரம் கிடைத்தது கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்”
-நாவலர் வாக்கு சைவர்களின் இறுதி இலக்கு முத்தி- விடுதலை- மீண்டும் பிறவாமை - மரணமிலாப் பெருவாழ்வு- இறைவனடி சேர்தல்;
இந்த உடலோடு வாழுங்காலத்தில், பிறவியின் நோக்கத்தை நினைவுபடுத்துபவை, அதனை அடைவதற்கு எம்மை நெறிப்படுத்துபவை, வையத்தில் எம்மை வாழ்வாங்கு வாழ்விப்பவை, பரமபதியாகிய சிவபெருமானை ஒரு கணமேனும் மறவாதிருக்க அனுசரணையாக விளங்குபவை சிவசின்னங்கள் - சைவசாதனங்கள் ஆகும்.
இதிலிருந்து சிவசின்னங்கள் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது உணரற்பாலது.
சிவனைக் குறித்துநிற்பதால் சிவசின்னங்கள் வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியவை. கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, கெளரவம், போற்றுதல், பூசித்தல் என்பன அனைத்தும் சிவசின்னங்களுக்கும் வழங்கப் படவேண்டும். சிவம் வேறு, சிவசின்னங்கள் வேறு எனக் கொள்ளப்படல் ஆகாது.
இந்து ஒளி

சிவசின்னங்களைத் துர்ப்பிரயோகம் செய்தல் சிவசின்னங்களைத் தரித்துக் கொண்டு, அவற்றைப் போர்வையாக்கி, அதனுள் மறைந்து நின்று அல்லவை புரிதல் என்பன மா பாதகங்கள்- சிவத்துரோகம் ஆகும்.
சிவ தொண்டர் சிவசின்னங்களை அணிதல் அவசியமாகும்; அணிந்த பின் அவற்றிற்கு மாசு ஏற்படாது ஒழுகுதல், அவற்றைப் பாதுகாத்தல் அத்தியாவசியமாகும் என்பது ஒவ்வொருவரும் சிரத்தையோடு கருத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.
விபூதி - திருநீறு
சிவ வழிபாடு செய்யும் சைவ சமயிகளாலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதியும் உருத்திராட்சமுமாம். இவைகளைத் தரியாது, செய்யும் சிவபுண்ணியங்கள் சிறிதும் பயன்படாவாம். -நாவலர் பெருமான்.
அருவமாக உள்ள சிவத்தை நமக்கு அறிவுறுத்தி உணர்த்துவது விபூதி எனும் சிவசின்னம் (சின்னம்- உருவம்)
பசுவின் சாணத்தை நெருப்பிலிட்டுச் சுடுதலால் உண்டாவது திருநீறு. அது வெள்ளை நிறமுடையது. வெண்மை பொருந்திய திருநீறு எமது உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
“மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்." என்கிறது வள்ளுவம். மாசு = குற்றம், அழுக்காறு, அவா, சினம், கெட்ட எண்ணங்கள் என்பன மனமாசுகள். மாசுகள், கள்ளங்கபடமற்ற தூய உள்ளமே வெள்ளை உள்ளம். தூய உள்ளத்தில் இறைவன் உறைகின்றான். வெள்ளை நிறத் திருநீறு - தூய உள்ளத்தின் - சிவனின் சின்னம் ஆகிறது.
“பசுக்களாகிய எங்களுடைய பாசங்கள் (மலங்கள்) சிவபெருமானது திருவருளாகிய ஞானநெருப்பினால் நீறாக்கப்படுதலைத் திருநீறு குறிக்கிறது”
-சைவ போதம் இரண்டாம் புத்தகம் திருநீறு ஆனது எம்மைப் பற்றியுள்ள மலங்களையும் அவற்றை நீக்கவல்ல சிவபெருமானையும் எமது நினைவிற்குக் கொண்டுவருகிறது.
நாம் எம்மைப் பற்றியுள்ள ஆசாபாசங்களை விட்டு எம்மைக் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் எங்கள் மலங்களை நீக்கியருளுவார் என்றும், கடவுளை வழிபடல் வேண்டும் என்றும் நினைக்கத் திருநீறு எம்மைத் தூண்டுகிறது.
எனவே, திருநீறு ஆனது எம்மை உணரவும் கடவுளை நினைப்பிக்கவும் ஏதுவாகிறது.
விபூதி என்ற சொல்லின் பொருள் மேலான செல்வம் என்பதாகும். அமாநுஷிக ஆற்றல் என்றும் சொல்லப்படுகிறது.
விபூதி, சிவனின் கருணையாகிய பராசக்தியின் வடிவம் என நூல்கள் கூறுகின்றன. எனவே விபூதி எமக்கு உயர் பெருங்கொடையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருநீறு அணிகிறோம் என்றால் சிவபெருமானுடைய சிவசக்தியை அணிகிறோம் என்பது அதன்பொருள். சிவசக்தியே எல்லாவித இயக்கத்திற்கும் காரணம்.
திருநீறு அணியப்பெறும் உறுப்புக்கள், சிவசக்தியின் உறைவிடமாகின்றன. அதனால் அவை தூய்மை பெறுகின்றன.
o பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 13
நெற்றி சிந்தனைகளின் இடம், நெஞ்சு உணர்வுகளின் இடம், தாம் நெற்றியிலும் நெஞ்சிலும் திருநீறு அணிவதால் சிந்தனைகளும் உணர்வுகளும் நல்லனவாகவும் ஆக்கபூர்வமான வையாகவும் எழுவதற்கு ஏதுவாகின்றன. தவறான எண்ணங்களும் நாட்டங்களும், விரோத மற்றும் குரோத உணர்ச்சிகளும் நம்மில் தோன்றாமல் தடுக்கப்படும்.
எங்கள் சமயாசாரியர் நால்வரும் திருநீற்றின் மகிமையைப் போற்றிப் பாடியுள்ளனர். திருநீறு மந்திரமாகவும் அழகைத் தருவதாகவும், வேதத்தில் விளம்பப்பட்டுள்ளதாகவும், ஆகமப்பொருளாகவும், வெந்துயர் தீர்க்கும் ஆற்றலுள்ளதாகவும் முத்தியைத் தரவல்லதாகவும், ஞானத்தை வழங்க வல்லதாகவும், நோய்களைத் தீர்க்க வல்லதாகவும், சத்தியமானதாகவும் உள்ளது என்று திருநீற்றுப் பதிகங்களில் கூறப்பட்டுள்ளது.
வேதங்கள், ஆகமங்கள், புராண இதிகாசங்கள், பன்னிரு திருமுறைகள், மெய்கண்டசாத்திரங்கள் என்பவற்றால் திருநீறு மகிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. திருக்கோயிலில் நடைபெறும் நித்திய நைமித்தியக் கிரியைகள், பூசை வழிபாடுகள் ஏனைய பூர்வ, அபரக்கிரியைகள் யாவற்றிலும் திருநீறு முக்கிய இடம் பெறுகிறது. சேக்கிழார் பெரியபுராணம், திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து, அவர்கள் திருநீற்றின் மகிமையை விளங்க வைத்து உயர்ந்தவர்கள் என்கிறது. மெய்ப்பொருள் நாயனார் ஏநாதிநாத நாயனார், சேரமான்பெருமானாயனார் போன்றவர்கள் திருநீற்றைச் சிவமாகப் போற்றிச் சிவகதி அடைந்தவர்கள். W
திருநாவுக்கரசரின் சூலை நோயைத் தீர்த்தது திலகவதியார் வழங்கிய திருநீறு. பாண்டியன் நெடுமாறனின் வெப்பு நோயையும் கூனையும் நீக்கியது திருஞானசம்பந்தர் வழங்கிய திருநீறு.
“நீரில்லா நெற்றி பாழ்' - ஒளவையார் "திருநீறிட்டார் கெட்டார்” -திருநீறு இட்டு யார் கெட்டார்?’ என்று பிரித்து வாசித்தால் உள்பொருள் விளங்கும். எவரும் கெடவில்லை என்பது விடையாகும்.
விபூதியை வடக்குமுகமாகவேனும், கிழக்கு முகமாக வேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும். விபூதி நிலத்திலே சிந்தா வண்ண்ம் அண்ணார்ந்து “சிவ சிவ” என்று சொல்லித் தமது வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் தரித்தல் வேண்டும். தற்செயலாக விபூதி நிலத்திலே சிந்தினால், சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தி செய்தல் வேண்டும். சிந்திய விபூதியைக் காலால் மிதித்தல் ஆகாது. நடந்து கொண்டு ஆயினும் கிடந்து கொண்டு ஆயினும் கதிரை முதலியவற்றில் இருந்து கொண்டு ஆயினும் விபூதி அணிதல் ஆகாது. விபூதியை உத்தூளனமாகவும், திரிபுண்டரமாகவும் தரிக்கலாம். உத்தூளனமாவது பரவிப்பூசுதல் ஆகும். திருபுண்டரமாவது நடுவிரல் மூன்றினாலும் மூன்று குறியாகத் தரித்தல் ஆகும். உத்தூளனமாக விபூதியை எவரும் அணியலாம். சமய தீட்சை பெற்றவர்கள் மாத்திரமே விபூதியைத் திரிபுண்டரமாகத் தரிக்கலாம்.
இந்து ஒளி

விபூதி மூன்று குறியாகத் (திரிபுண்டரம்) தரிக்கும் பொழுது குறிகள் வளையாமலும், இடையறாமலும், ஒன்றையொன்று முட்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி அளவாக இருக்கும்படியும் அமையவேண்டும். சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாழ்கள், புயங்கள், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலாப்புறங்கள், முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடத்தும் முக்குறிகள் தரிக்கலாம். நெற்றியில் இரண்டு கடைப்புருவ எல்லை நீளமும், மார்பிலும் புயங்களிலும் ஆறு ஆறு அங்குல நீளமும், மற்றைய தானங்களில் ஒவ்வோர் அங்குல நீளமுமாக குறிகள் தரிக்க வேண்டும். காலை, நண்பகல், மாலையிலும், நித்திரைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், பல்துலக்கிக் கால் முகங்கழுவிய பின்னும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசை வழிபாட்டிற்கு முன்னும் பின்னும், மலசலமோசனஞ் செய்து கால்கழுவிய பின்னும் விபூதி அவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும். சிவாச்சாரியார், பெரியோர், சிவனடியார், முதலியோர் இடமிருந்து விபூதி பிரசாதங்களைப் பெறும் அவர்களை வணங்கி, இரண்டு கைகளையும் நீட்டி, பணிவோடு வாங்கல் வேண்டும். தரிக்கும் போது முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும். தீட்சை பெற்றவர்கள் சைவானுட்டான விதிப்படி திருநீறு அணிதல் அதில் சிவசக்தி பிரசன்னமாவதற்கு உதவுகின்றது. முக்குறிகள் முறையே கிரியாசக்தி, இச்சாசக்தி, ஞானசக்திகளைக் குறிக்கும். இச்சக்திகள் பராசக்தியின் அம்சங்கள். எனவே திருநீற்றை உரிய அநுட்டான விதிப்படி சரியான, உட்பொருள் விளக்க உணர்வுடன் நாம் அணிந்து வந்தால் நமக்குள்ள இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, மூன்றும் தூய்மையுற்று உயர்நிலை பெறும். எம்மில் நல்லவற்றில் விருப்பம்; நல்ல செயல்களில் ஈடுபாடு; நல்ல அறிவு, ஞானம் என்பன விருத்தியாகும். தவறான எண்ணங்கள் தோன்றாமலும் பேச்சாகவோ, செயலாகவோ அவை வெளிப்படாமல் தடுக்கப்படும். நாம் சிவசக்தியுடன் இருக்கும் போது, நமது மனம், மொழி, மெய் யாவும் தூய்மையான உணர்வுகள், பேச்சுக்கள், செயல்களுக்கு மட்டுமே இடமளிப்பதாயிருக்கும் என்பது உறுதி.
சிவபெருமான் சிவலிங்கத்தில் எழுந்தருளியிருப்பது போல, பராசக்தி திருநீற்றில் எழுந்தருளியிருக்கிறது. திருநீற்றிற்கு உடல் உளப்பிணிகள் தீர்க்கும் ஆற்றல் உண்டு. மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆக உள்ளது. தீட்சை பெறாதவர் “சிவ சிவ” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு திருநீறு அணிவர். தீட்சை பெற்றவர்கள் திருவைந்தெழுத்தை உச்சரிப்பர். சந்தியாவந்தனம் செய்யும் போது அதற்குரிய மந்திரத்தைச் சொல்லித் திருநீறு தரிப்பர். மந்திர நியாசம் செய்தல் மூலம் திருநீறு தெய்வ சாந்நித்தியம் பெறுகிறது. அணிபவர்க்கு மாத்திரமன்றி அணிந்தவர்களைக் காண்பவர்களுக்கு திருவருள் கிட்டுகின்றது. எனவேதான், பூச இனியது காண இனியது, பேச இனியது, எண்ண இனியது, திருநீறு என தோத்திரங்கள் இயம்புகின்றன. திருநீறு இக பரசுகம்
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 14
தருவதால் பெருஞ் செல்வம் என்றும், பாக்கியம் என்றும், தத்துவம் என்றும் முத்திக்குத் துணையானதென்றும் சொல்லப்படுகிறது. திருநீறு கொண்டு திருவைந்தெழுத்தோதி, மந்திரங்கள் நியாசித்துப் பார்வைபார்த்து உடல் நோய்கள், மனநோய்கள், கண்ணுாறு- நாவூறு மற்றும் சஞ்சலங்கள் நீக்கப்படுவதை நாம் காண்கிறோம். திருநீறு தரித்தும் திருநீறு எடுத்துக் கொண்டும் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. இரவில் இறைவனை நினைந்து திருநீறு பூசி, திருமுறை பாராயணஞ் செய்து, திருவைந்தெழுத்து மந்திரம் ஒதிப் படுக்கைக்குச் சென்றால் நிம்மதியான நித்திரை வரும், கெட்ட கனவுகள் தோன்றமாட்டா, அச்சம் பயவுணர்வுகள் தோன்றா, அடிக்கடி தூக்கம் கலையாது. இன்று தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் தூக்க மாத்திரைகளை நாடுகின்றனர். இதன் பக்க விளைவு படுமோசமானது. அவர்கள் திருநீற்றின் துணையை நாடினால் நன்மைபெறுவர். நோய் பயம், திருடர் பயம், மரணபயம், துஷ்டர்பயம், விபத்துக்கள் பயம், கெட்ட தேவதைகள் பயம் யாவற்றிலிருந்தும் நீங்கி; மகிழ்ச்சி, அமைதி, திருப்தி, நிம்மதி, தைரியம், ஆரோக்கியம், உளவலிமை ஆகியவற்றை தரவல்லது திருநீறும் திருவைந் தெழுத்தும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அநுபூதிமான்கள் எமக்குக் காட்டிய வழி இதுவாகும். இவை மூடநம்பிக்கைகள் அல்ல, நன்னம்பிக்கைகள் ஆகும்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கி ஞானம் பெறுவதைக் குறிப்பதாக, வலது கை நடு மூன்று விரல்களால் பூசும் முக்குறிகள் உள்ளன. மும்மலங்களையும் ஞானமாகிய நெருப்பாற் சுட்டெரித்துத் தூய நிலையை ஆன்மா அடைவதே மனிதவாழ்வின் பெரும் பயன் என்பதை
நினைவூட்டுவதாக திருநீறு அணிதல் நினைவூட்டுகிறது.
உருத்திராக்ஷம்- (உருத்திராக்கம்)
உருத்திரன்- சிவன்; அக்கம்-கண் உருத்திராக்கம் என்பதன் பொருள், உருத்திரனின் கண் என்பதாகும்.
ஆன்மாக்கள் பாசங்களின் பிணைப்பினால் அனுபவிக்குந் துன்பங்களைக் குறித்து சிவபெருமான் இரங்குகின்றார். அவரின் கருணை அவரது திருக்கண்களிலிருந்து சொரிந்த வண்ணம் உள்ளது. அந்தக் கருணையை இரக்கத்தைக் குறிப்பது உருத்திராக்கம். உருத்திராக்கத்தைக் காணும் பொழுதெல்லாம் சிவபெருமானுடைய கருணை என எண்ணி அதை வணங்க வேண்டும்.
திரிபுரத்து அசுரர்கள் தேவர்களை வருத்த, துன்பங்களைத் தாங்கவொண்ணாது, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்பொழுது சிவபெருமானின் மூன்று கண்களினின்றும் பொழிந்த கருணை நீரினின்றும் தோன்றிய மணியே உருத்திராக்கம் எனவும் கூறப்படுகிறது.
உருத்திராக்கம் சிவபெருமானின் அளப்பருங் கருணைக்கும் பேரிரக்கத்திற்கும் அடையாளமாக விளங்குகின்றது. அந்த வகையில் உருத்திராக்கம் சிவசின்னமாக மிளிர்கின்றது. இறைவனின் கருணையை நினைவூட்டும் சாதனமாக உள்ளது.
(இந்து ஒளி í?

சிவனடியார்கள் பஞ்சாட்சரசெபம் செய்யும்போது, அம்மந்திரத்தை 108 முறை எண்ணுவதற்கு உருத்திராக்கமாலை உதவுகிறது. சைவர்களின் பாதுகாப்புக் கவசம்- இரட்சை ஆகவும் உருத்திராக்கம் விளங்குகிறது.
ஒரு முகம் தொடங்கி பதினாறு முகங்கள் வரை கொண்ட உருத்திராக்க மணிகள் உண்டு, வெண்ணிறம் பொன்னிறம், கபில நிறம், கருநிறம் ஆகிய நிறங்களில் உருத்திராக்க மணிகள் காணப்படுகின்றன. ஒரே இன மணிகளாலான உருத்திராக்க மாலைகளே அணியத்தக்கன.
கண்டிகை, அக்குமணி, கண்மணி, சிவமணி, தாழ்வடம் என்பன உருத்திராக்கத்தின் மறுபெயர்கள். வேறு கீழ்த்தரமான பெயர் கொண்டு அழைத்தோ தகுதியற்றவர்கள் அணிந்தோ உருத்திராக்கத்தை கொச்சைப்படுத்துதல் சிவத்துரோகம் ஆகும். முறையாக உருத்திராக்கம் அணிந்து சிவபெருமானிடம் பக்தி பூண்டு ஒழுகும் சிவனடியார்களுக்கு இம்மையில் எல்லாவித நலன்களும், மறுமையில் இறைவன் திருவடியினைச் சேர்ந்து பேரின்பமும் பிறப்பு, இறப்பு அற்ற பெருவாழ்வும் பெற்று மகிழ்வர். உருத்திராக்கமாலை, சிரசு, மார்பு, தோள்கள், கைகள் ஆகியவற்றில் அணிதல் வேண்டும்.
சைவர்கள் சிவலிங்க பூசை, சிவத்தியானம், சிவாலய தரிசனம், சந்தியாவந்தனம், பஞ்சாட்சரசெபம், சிவபுராணம் படித்தல், கேட்டல், புராணபடனம் ஆகியன செய்யும் பொழுது உருத்திராக்கமாலை அணிதல் உத்தமம். திருக்கோயிலில் நித்திய நைமித்தியப் பூசைகள், கிரியைகள், ஆராதனைகளை நடத்தி வைக்கும் சிவாச்சாரியர்கள்; மற்றும் குருமார்கள், சிவனடியார்கள், சைவ ஆசாரங்களை மேற்கொள்வோர் ஆகியோர் உருத்திராக்கம் தரிக்கத் தகுதிபெற்றோர் ஆவர்.
மச்சமாமிசம் புசிப்போர், மது அருந்துவோர், மற்றும் கொலை, களவு, காமம், பொய்யுரைத்தல், கபடம் புரிவோர் உருத்திராக்கத்தைத் தரித்தல் ஆகாது. உருத்திராக்கத்தைப் புறவேடமாகக் கொண்டு பிறரை ஏமாற்றுவோர், அல்லவை செய்தொழுகுவோர் மாபாதகர்கள். அவர் மீளாத் துன்பத்தில் அமிழ்ந்துவர்.
உருத்திராக்கம் தரிப்பவர்கள் மனம், மொழி, மெய்யினால் சிவபக்தி உடையவராய், சிவத்தொண்டுகள் புரிபவராய்; தூயராய் இருத்தல் அவசியமாகும்.
திருவைந்தெழுத்து - பஞ்சாட்சரம்- பஞ்சாக்ஷரம்
"காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பதும் வேத நான்கினும் மெய்பொருளாவது நாத னாம நமச்சிவாயவே” எனத் திருஞானசம்பந்தப் பெருமான் திருவைந்தெழுத்தின் மகிமையைப் பற்றிப் பாடியுள்ளார். சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் நமச்சிவாயப் பதிகங்கள் பாடியுள்ளனர்.
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க’ எனச் சிவபுராணம் முதலடியில் மாணிக்கவாசகர் திருவைந்தெழுத்தை வாழ்த்துகிறார். “சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லை. என்று உறுதியாக மொழிகிறார் ஒளவைப் பிராட்டியார்.
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 15
கடவுளைத் தியானஞ் செய்வதற்கு, மந்திரத் தியானம் மிக ஏற்றது என்பர். சிவபெருமானைத் தியானிப்பதற்குரிய சிவமந்திரம் பூரீ பஞ்சாக்ஷரம் - திருவைந்தெழுத்து எனப்படுகிறது.
சமய தீட்சை பெற்றவர்களே பஞ்சாட்சர மந்திரத்தை ஒதவும் தியானிக்கவும் உரித்துடையவர்கள். சைவ சமயிகள் அனைவரும் பஞ்சாட்சர மந்திரம் செபம் செய்தல் வேண்டும் என்பது விதி. அதனால், சைவர்கள் சமயதீட்சை பெற வேண்டியதன் அவசியம் தெளிவாகிறது.
சைவ அனுட்டானம் பெற்றவர்கள் பஞ்சாட்சர மந்திரம் ஒதி விபூதி தரிக்கின்றனர். எங்கள் நாக்கு பஞ்சாட்சரத்தை ஒலிக்கும் போது தூய்மை பெறுகிறது. அதனால் நாவினால் தூய வார்த்தைகள் பேச ஏதுவாகிறது.
“நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே” - (தேவாரம்) நா பாதுகாக்கப்படவேண்டியது அவசியம். நமச்சிவாய மந்திரம் பாதுகாப்புக் கவசமாகின்றது.
சைவர்கள் அகத்தேயும் புறத்தேயும் சிவசின்னங்களைத் தாங்குபவர்கள். புறத்தே அணியப்படும் சிவசின்னங்கள் விபூதியும் உருத்திராக்கமும் ஆகும். அகத்திற்கு அணியாக விளங்குவது பஞ்சாட்சரம். இம்மந்திரத்தை மனத்தினுள் தியானிப்பதால் மனம் தூய்மை பெறுகின்றது. மனந்துய்மையானால், சொல், செயல் யாவுமே தூய்மை பெற்றுவிடும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பது அறம் என்கிறார் வள்ளுவப் பெருமான்.
சிவசின்னங்கள் அகப்புறத் தூய்மை இன்றியமையாதன. “நற்றுணையாவது நமச்சிவாயவே’ (அப்பர் வாக்கு). அப்பர் அடிகளின் வரலாறு இதனை நிரூபிக்கின்றது.
வாழ்வில் துன்பங்களையும் அச்சங்களையும் போக்கவும் இன்பங்களையும் அமைதியையும் பெருக்கவும், ஐந்தெழுத்து மந்திரம் நற்றுணையாக அமைகிறது.
பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர்வதற்கும் திருவைந்தெழுத்து நற்றுணையாகின்றது.
"நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே” “நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.” "பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே” 'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நாநமசிவாயவே” என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் நம்பிக்கை. எமது நா அந்த அளவிற்குத் திருவைந்தெழுத்தை ஒதுவதில் பரிச்சயம் பெற்றிருத்தல் வேண்டும்.
“திருநீறுமிட்டுக் கையுந் தொழப்பண்ணி ஐந்தெழுத்தோதவும் கற்பியுமே” என்று நாவுக்கரசர் இறைவனுக்கு விண்ணப்பிக்கிறார்.
திருவைந்தெழுத்தையும் சிவனின் திருத்தாள்களையும் சேர்த்தே வழுத்துவது மணிவாசகர் காட்டும் நெறி.
திருவைந்தெழுத்து சைவத்தின் மூலமந்திரம் - சிவமூலமந்திரம்.
திருவைந்தெழுத்தை முறையாக ஓதிவருவோர்க்குப் பாசங்களின் சார்பு பலவீனமடைந்து சிவச்சார்பு பலம் அடையும்.
(இந்து ஒளி

மந்திரம் என்பதன் பொருள் நினைப்பவரைக் காப்பது என்பதாகும். மந்திரம் செபிப்பதற்குரியது, ஜெபித்தல் என்பதற்கான தமிழ்க்கருத்து நீள நினைத்தல் ஆகும். மந்திரம் செபம் செய்யும் போது குறித்த கடவுளை நினைத்து , மனம் ஒன்றித்துச் செபித்தல் வேண்டும். மனத்தை அலையவிட்டு வெறுமனே சொல்லைச் செபித்தல் ஆகாது.
மந்திரத்தை குருமுகமாகவே பெற்று அவர்காட்டும் முறையில் செபித்தல் வேண்டும். குருவை இறைவனாகவே வணங்குதல் சைவமரபு. “குருவே சிவம் எனக்கூறினன் நந்தி” - திருமூலர். குரு உபதேசம் தீகூைடி எனப்படும். தீ=கொடுத்தல், கூைடி: கெடுத்தல், வினைகளைக்கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது தீகூைடியின் பயன். குரு உபதேசம் பெற்றே திருவைந்தெழுத்து மந்திரம் ஜெபித்தல் முறையாகும்.
சமய தீட்சை மாத்திரம் பெற்றவர்கள் 'நமசிவாய' எனும் மந்திரத்தையும் அதனுடன் விசேட தீட்சையும் பெற்றவர்கள் சிவாயநம என்ற மந்திரத்தையும் செபம் செய்தல் முறையாகும். சைவத் தோத்திர, சாத்திர நூல்கள் பஞ்சாட்சரத்தின் மகிமையை விளக்கியுள்ளன.
தேவார முதலிகள் மூவரும் நமச்சிவாயத் திருப்பதிகங்கள் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் அத்துடன் பஞ்சாட்சரத் திருப்பதிகம் ஒன்றும் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் திருவாசகம் பாடத்தொடங்கும் போதே ‘நமச்சிவாய வாழ்க’ என்றே தொடங்குகிறார்.
மெய்கண்டசாத்திர நூல்கள் பஞ்சாட்சரத்தின் சொரூபத்தை விளக்குகின்றன.
சி - சிவம் , வ = பராசக்தி (திருவருட்சக்தி) ய - ஆன்மா ந = மறைப்பாற்றலாகிய திரோதான சக் ம - மலம் (பாசக் கட்டுக்கள்) ஓம் எனும் பிரணவ மந்திரம் ஐந்தெழுத்தின் சுருங்கிய வடிவம். பஞ்சாட்சரம் இருவகைப்படும்:
(1). ஸமஷ்டி பஞ்சாட்சரம் - ஒம் (2). வ்யஷ்டி பஞ்சாட்சரம் ஐந்து வகைப்படும்.
1. ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவாய
2. சூக்கும பஞ்சாட்சரம் - சிவயநம
3. காரண பஞ்சாட்சரம் - சிவய சிவ
4. மகா காரண பஞ்சாட்சரம் - சிவ சிவ
5. மகா மனு - ઈી
Փfգճյ6ՓՄ
வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை நீக்கிச் சுகம் பெற மூன்று வழிகள் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன, மணி, மந்திரம், ஒளடதம்.
சைவசமயம், மணி என்பது உருத்திராக்க மணி என்றும், மந்திரம் என்பது திருவைந்தெழுத்து மந்திரம் என்றும் ஒளடதம் என்பது திருநீறு என்றும் கூறுகிறது.
சிவசின்னங்கள் சிவபெருமானை நினைவூட்டுவதுடன், இக பர சுகங்களையும் அளிக்கவல்லன; பிறவித் துன்பங்களை நீக்கி, சிவபெருமானின் திருவடிகளை நாம் அடைந்து முத்தியின்பம் பெற ஏதுவாகின்றன என்பதை உணர்வோமாக.
பார்த்திய வருடம் சித்திரை- ஆணி)

Page 16
அகில இலங் பொன்விழா ஆரா
அகில இலங்கை இந்து மாமன்றம் பொன் போட்டியொன்றை வீரகேசரி நாளிதழின் அ ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பட்டதாரி அனைவரும் கலந்துகொள்ளலாம். (பாடசாலை மாணவர்களுக்கு இதில் கலந்துகொள்ள முடியாத).
பின்வரும் தலைப்புகளில் ஏதாவத ஒன்றைத் தெரிவு செய்த கட்
I. சமுதாய முன்னேற்றத்தில் கோயில்களின் பங்கு 2. இந்த சமயமும் சமுதாய சீர்திருத்தமும்,
3. இலங்கையில் இந்த சமய நிறுவனங்களும் ச 4. இருபதாம் நாற்றாண்டில் இந்தசமய வளர்ச்சியி 5. இந்த மக்களிடையே மதமாற்றமும் அதனைத்
ஒருவர் ஒரு தலைப்பில் மட்டுமே கட்டுரையை எழுதமுடியும். ை வேண்டும். தட்டச்சு செய்யப்பட்டு முடியுமானால் கணணி தட்டு மேற்படாதவகையில் கட்டுரை அமையவேண்டும்.
போட்டிக்காக அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்கனவே பத்திரிை தெரியவருமானால், அவை எதவித அறிவித்தலுமின்றி போட்டியில்
உசாத் தணைகள், ஆதாரங்கள் அடிப்படையில் கட்டுரைகள்
(I) நால்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த 8 ஆண்டறிக்கைகள் (3) கள ஆய்வு
கட்டுரைகள் தெளிவான நடையிலும், வித்துவபூர்வமான வசை நடையில் எழுதப்படவேண்டும்.
பரிசு விபரம் : . .
负 g போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்
பதக்கம் பரிசில்களாக வழங்கப்படும். அத்துடன் மாமன்றப் பெ கட்டுரைகளையும் வெளியிட மாமன்றம் ஒழுங்கு செய்யலாம். போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரைகளை மாமன்றத்தின்
போட்டிக்குரிய கட்டுரைகளை 2005, 09. 30ம் திகதிக்கு முன் பெயர், வயது, தொழில் போன்ற விபரங்களையும் எழுதி, கட்டு செயலாளர், அகில இலங்கை இந்த மாமன்றம், 9/5 சேர்.
முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
கட்டுரைப்போட்டி சம்பந்தமான கடிதத் தொடர் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
குறிப்பு - போட்டி மு
(இந்து ஒளி
 

கை இந்து மாமன்றம் ாய்ச்சிக் கட்டுரைப் போட்டி
விழாவையொட்டி ஆராய்ச்சிக் கட்டுரைப்
1ணுசரணையுடன் ஏற்பாடு செய்த நடத்தகிறத. இந்தப் போட்டியில் கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட தனியான கட்டுரைப் போட்டியொன்று நடத்தப்படுவதால் அவர்கள்
டுரையை எழுத வேண்டும்.
முக சேவைகளும்.
ல் இந்நாட்டவரின் பங்கு. தவிர்ப்பதற்கான வழிவகைகளும்.
கயெழுத்தப் பிரதியானால் பதினைந்த புல்ஸ்காப் தாளில் எழுதப்பட (disc) உடன் அனுப்பினால் வரவேற்கப்படும். 4000 சொற்களுக்கு
ககளில், சஞ்சிகைகளில் அல்லத நூல்களில் வெளிவந்திருப்பதாகத் மிருந்த நிராகரிக்கப்படும்.
எழுதப்படவேண்டும். ஆதாரங்களாகக் கொள்ளப்படுபவை :
கட்டுரைகள் (2) சமய நிறுவனங்களின் ஆவணங்கள்,
யிலும் அமைய வேண்டும். எல்லோரும் படித்து விளங்கக்கூடிய
களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப்
ன்விழா மலரிலும் பரிசுபெறும் கட்டுரைகளையும் ஏனைய தரமான தரமான கட்டுரை எழுதியவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அனுமதியின்றி எவ்வகையிலும் பிரசுரம் செய்தலாகாதது.
பதாக கிடைக்கும் வகையில், தனியானதொரு தாளில் தமது முழுப் ரைகள் தமத சொந்த ஆக்கம் என்பதையும் உறுதிப்படுத்தி பொதுச் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை கொழும்பு - 02. என்ற
கள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.
Pழவு திகதி 30.09.2005
t பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 17
“இலங்கையில் ஆங்கில, சிங்கள மொழிகளில் வெ
(மாமன்றப் பொன்விழாவையொட்டி 2005.03.19ம் திக
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் “இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் திரு சி. வி. விக்னேஸ்
செல்லுஞ் செல்லாததற்குச் செட்டியார் இருக்கிறார் என்று கூறுவார்கள். எந்தப் பணத்தையோ, நகையையோ செட்டியாரிடங் காட்டினால் அதன் பெறுமதியின் உண்மை தெரியவரும் என்பது தான் அதன் அர்த்தம் என்று நினைக்கிறேன். அதேபோல் சட்டம், சமயம், சமூகவியல் பற்றிய நூல்களை வெளியிட என்னை நாடி வந்தவர்கள் இப்பொழுது சரித்திரத்தையுஞ் சேர்த்துவிட்டார்கள். செட்டியார் என்று நினைத்தார்களோ தெரியாது. ஆனால் “மனுசன் சும்மாதானே இருக்கிறார். 450 பக்கங்களையும் படித்து விட்டு ஒரு வெளியீட்டுரை அளிக்கமுடியாதா என்ன” என்ற பாணியில் நூலின் கைப்பிரதியை பத்து நாட்களுக்கு முன் அனுப்பி வைத்தார்கள். நுலை முழுமையாக வாசித்தேனோ இல்லையோ பேராசிரியரின் வித்துவப் புலமையையும் அறிவாற்றலையுங் கணிக்க இக்கட்டுப்பாடு வழி அமைத்துக் கொடுத்தது என்று தான் கூறவேண்டும்.
புராண, இதிகாச, வேற்று இலக்கிய, மேலும் வெறுமையான வரலாற்று நூல்களில் இருந்து நாங்கள் எங்கள் பாரம்பரியத்தைக் கணிப்பது ஒரு விதம் என்றால் பேராசிரியர் போன்றவர்களின் சரித்திரப் படைப்புக்கள் வேறொரு கண்ணோட்டத்தில் இருந்து உருவாக்கப்படுகின்றன என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு விதத்தில், நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்திற்கும் நவீனமுறையிலான சரித்திரத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதை அவதானிக்கலாம். நிரூபித்தல் என்பது இரு திறத்தாருக்கும் பொதுவான தொன்று. எந்த ஒரு நிகழ்வும் சாட்சியங்களால் நிரூபிக்கப்படவேண்டும் என்று சட்டத்தில் காணப்பட்டால் எதற்குஞ் சரித்திர சான்றினைத் தேடுவது விஞ்ஞானபூர்வமான சரித்திரத் துறையின் ஒரு முக்கிய நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. ஆகவே தான் ஒவ்வொரு முடிவையும் முன் வைக்கும் போதும் அவற்றிற்கான சான்றுகளின் பெறுமதிகளை ஆராய்ந்து பார்த்து கருத்து வெளியிடுவது உண்மையான சரித்திர ஆசிரியர்களின் ஒரு இலட்சணமாக இருந்து வருகிறது. இதைப் பேராசிரியர் பத்மநாதனின் படைப்பிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. மூலநூல்கள், தொல்பொருட்சின்னங்கள், சாசனங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் அடிப்படையிலேயே கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிபூர்வமான முடிவுகளுக்கு அவர் இடங் கொடுக்கவில்லை. ஆய்வுகூட விஞ்ஞானி ஆராய்ச்சியின் முடிவில் கருத்து வெளியிடுவது போன்று ஆதாரங்களை முன்னிறுத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
இந்து ஒளி

O 9 9 6553IDUID ளிவந்தால் பயனுள்ளதாக இருக்கும்
யன்று மாமன்றத் தலைமையகத்தில் வெளியிடப்பட்ட யில் இந்து சமயம்” என்ற நூலுக்கு ஒய்வு பெற்ற ஸ்வரன் அவர்கள் நிகழ்த்திய வெளியீட்டுரை)
அவற்றுள் எங்கள் ஆர்வத்தைத் திருப்திப்படுத்தும் சில முக்கிய விடயங்களை இவ் வெளியீட்டுரையில் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் என்று எண்ணுகிறேன். நூலைப் பற்றிய ஆய்வுரை பேராசிரியர் சுசீந்திரராஜா அவர்களாலும், மதிப்புரை பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களாலும் ஆற்றப்பட இருப்பதால் இந்த வெளியீட்டுரையில் நூலில் காணும் சில முக்கிய கருத்துக்களை மட்டும் உங்களுக்கு எடுத்தியம்பலாம் என்று நினைக்கிறேன்.
கி. பி. 3ம் நூற்றாண்டில் தர்ம அசோகன் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காலத்தில் இலங்கையில் பெளத்த சமயம் பரப்பப்படுவதற்கு முன்னரே சைவசமயம் இங்கு காணப்பட்டது என்ற கருத்து முதலாவது கருத்தாகும். மிகப்பழமையான பிராமிச் சாசனங்களில் “சிவ” என்ற பெயர் கொண்ட பலர் பற்றிக் குறிப்புக்கள் காணப்படுவதை இதற்கொரு சான்றாக எடுத்தியம்பி உள்ளார். சிவிகசாலை என்னும் சிவலிங்கத்தைத் தாபித்து வழிபடும் கோட்டம், சொத்திசாலை என்னும் பிராமணர்கள் வேதம் ஓத அமைக்கப்பட்ட சாலை ஆகியவை பண்டுகாபயன் காலந் தொட்டு அநுராதபுர நகரத்தில் அமைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டுகாபயன் காலத்தின் பின்னர் தேவநம்பியதீசன் காலத்தில் தான் பெளத்தமதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வணிகத் தொடர்புகள் பெளத்தம் இலங்கைக்கு வரமுன்பே தென்இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்து வந்ததையும் குறிப்பிட்டுள்ளார். திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம் போன்ற சைவஸ்தலங்கள் பண்டு தொடக்கம் நிலைபெற்று வந்ததையும் ஆராய்ந்துள்ளார். பெளத்தம் பற்றிக் கூறும் மகாவம்சம் சுருக்கமாகவே இந்து சமயத் தொடர்புகள் பற்றிக் குறிப்பிட்டாலும் அது ஒரு மூலநூலாக ஏற்கப்பட்டு இந்து சமய விரவல் பற்றி ஆராய மகாவம்சம் வழிகோலியுள்ளது. சாசனக் குறிப்புகளும் நாணயங்களிற் காணப்படும் சின்னங்களும் ஆதிகாலத்தில், அதாவது பெளத்தம் வரமுன்பே, சைவம் இலங்கையில் பரவி இருந்தமைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. அறுபதுக்கும் மேலான பிராமிச் சாசனங்களும் “சிவ” என்னும் பெயர் காணப்படுவதை விட பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய மட்பாண்டத் துண்டங்களிலே சிவ சின்னமாகிய திரிசூலம் காணப்படுவதால் சிவனை வழிபட்ட வழக்கம் அப்பொழுதே இருந்ததை அது ருசுப்படுத்துகின்றது. வழிபாட்டு முறைகள் பற்றிய சான்றுகளைக் கொண்டும் புராதன இந்துமத வழிபாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவுரை காலம்
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 18
இலங்கையின் இந்து சமய வளர்ச்சிக்குச் சோழராட்சியே பிரதான மூலமாக இருந்தது என்ற கொள்கையை மாற்ற மேற்படி நிரூபணங்கள் உதவி புரிந்துள்ளன.
அடுத்து பேராசிரியர் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியது இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பாகச் சில நூல்கள் இருப்பினும் அவையாவும் 16ம் நூற்றாண்டுக்குப் பின்னரே எழுதப்பட்டவை என்பதால் அவற்றில் காணப்படும் பழஞ்சரித்திர விபரங்களை அவர் ஏற்கத் தயங்கியுள்ளமை, அவை புராணக்கதைகள் போல் அமைந்துள்ளன என்று கூறுகிறார். உதாரணமாக யாழ்ப்பாண வைபவமாலையிலே விஜயராசன் சிவாலயங்களை அமைத்தமை பற்றிச் சொல்லப்படும் கதை ஆதாரமற்ற ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பூரீ தகூழிண கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசல புராணம் ஆகியன கூட இதுவரை காலமும் எவராலும் ஆழமாக ஆராயப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆலய வழமைகள் பற்றிய அனுபவங்களும், வரலாற்று உணர்வும், ஊகிக்கக் கூடிய கற்பனாசக்தியும் கொண்டவர்களால்தான் மேற்படி நூல்களைத் தகுந்த ஆதாரமாகக் கொள்ள முடியாத நிலையில் பேராசிரியர் தொல்பொருட் சின்னங்களையே அடிப்படை ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்று கூறி அதே நேரம் அநுராதபுரம், பொலநறுவை போன்ற புராதன நகரங்களில் நடைபெற்ற, நடைபெறுகின்ற அகழ்வுகளைப் பற்றி ஆண்டறிக்கைகள் தற்காலங்களில் எழுதப் படாமை பற்றியும், புதிதாகக் கிடைக்கின்ற சின்னங்கள் பெரும்பாலும் அருங்காட்சி அகங்களிலே பார்வைக்கு வைக்கப்படுவதில்லை என்பதையும் அவற்றின் படிவங்களையும் விவரங்களையும் அறிய எத்துணை சிரமங்களை அனுபவிக்க நேரிடுகின்றது என்பதையுங் கூறி அங்கலாய்த்துள்ளார்.
அதே நேரம் கடந்த 30 வருட காலங்களில் அகழ்வுகளாலும் ஆராய்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும்
கூறியுள்ளார். பிரபல சாசனவியலாளரான செனரத் பரணவிதாரண அவர்களால் முற்றாகச் சிதைந்து விட்டது என்று ஒதுக்கிவைக்கப்பட்ட விக்கிரமசலா மேகபுரத்து
வீரக்கொடியோரின் வணிககணத்தவர் சாசனம் தற்பொழுது மீட்கப்பட்டு புதுமுத்தா என்ற இடம் ஒரு வணிக நகரமாக இருந்தமை உறுதியாக்கப்பட்டுள்ளது என்பதை இம் முன்னேற்றத்தின் ஒரு கட்டமாக விபரித்துள்ளார்.
மூன்றாவதாக மகாவம்சம் போன்ற மூலங்கள் இதுவரை காலமும் தமிழர் பாரம்பரியத்தையும் இந்துமத விரவலையும் அறியப் போதுமான அளவு பாவிக்கப்படவில்லை, ஆராயப்படவில்லை என்ற கருத்தாகும்.
இலங்கையின் கிழக்குக் கரையிலுள்ள மூன்று சிவாலயங்களைப் பற்றி மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது. கோகர்ணம் என்று அழைக்கப்பட்ட திரிகோணமலைக் கோவில், மற்றொன்று ஏரகாவில்ல என்ற இடத்தில் இருந்த கோயில், அதாவது எருவில் என்ற பெயரின் பாளிவடிவமே ஏரகாவில்ல என்று சொல்லப்படுகிறது. எருவில் மட்டக்களப்பு போரதீவுக்கு அருகாமையில் உள்ளது. மூன்றாவது சிவாலயம் கலந்த என்ற பிராமணர்களுடைய ஊரில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று தலங்களிலும் இந்து மதத் தேவாலயங்கள்
(இந்து ஒளி

இருந்தனவென்றும் அவை பெளத்த சாசனத்திற்குத் தடையாக இருந்தன என்றும் மகாவம்சத்தின் உரைநூலான வம்சத்தப்பகாசினி என்ற நூல் கூறுகிறது. அதே போன்று அநுராதபுர காலத்து இந்துக் கோயில்களின் அழிபாடுகள் போதியளவிற் கிடையாத போதும் பெளத்த மதச் சார்புடைய கட்டடங்களிலே தென்னிந்தியக் கட்டடக் கலையின் செல்வாக்கினை அவதானிக்கக்கூடியதாய் இருப்பதை வைத்து, தமிழக, கேரள கலைப்பாணிகளின் செல்வாக்கு எவ்வளவு தூரம் பண்டைய காலத்தில் பரவியிருந்தது என்பதை ஆராய்ந்து காட்டி உள்ளார். மேலும் அநுராதபுரம், பொலநறுவை, கண்டி, மாத்தளை, குருநாகல், புத்தளம், அம்பாறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களிலே எந்த அளவுக்கு பிராமணர் நிலை கொண்டிருந்தனர் என்பதை வைத்தும் இந்துசமய விரவலையும் பரவலையும் முன்னிறுத்தியுள்ளார். அரசரோடு பிராமணர்களுக்கு இருந்த நெருக்கமான தொடர்புகள் அரசர்கள் மீது இந்து மதக் கோட்பாட்டுத் தாக்கங்கள் எந்த அளவிற்கு இருந்தன என்பதை வெளிக்காட்டுவதாக எடுத்துக் காட்டியுள்ளார்.
அடுத்து, நூலில் காணப்படும் கால விபரங்களை ஆராய்வோம். காலவரையறையின்படி வரலாற்றை நிர்ணயிப்பது சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று பேராசிரியர் கருத்து வெளியிட்டுள்ளார். சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம் என்று தமிழிலக்கிய வரலாற்றை காலவரையறையின் அடிப்படையில் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் பிரித்துக் காட்டியதை சரித்திர ஆய்வுகளுக்கு முரணான ஒரு அப்பியாசம் என்று பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். அதாவது கி. பி. நான்காம் நூற்றாண்டு வரையானநான்கு நூற்றாண்டு காலத்தை சங்ககாலம் என்றும், அதன் பின் வந்த மூன்று நூற்றாண்டு காலத்தை சங்கம் மருவிய காலம் என்றும், கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவு வரை பல்லவர் காலம் என்றும் பிரித்தமை போதிய சரித்திரச் சான்றுகள் இல்லாது முன்வைக்கப்பட்ட பிரிவினை என்று கருத்துத் தெரிவித்துள்ளார். சங்கம் என வழங்கப்பட்ட புலவர் கழகமொன்று அக்கால கட்டங்களில் அமைந்திருந்தமைக்கான சான்றுகள் எட்டுத் தொகை பத்துப்பாட்டு போன்ற நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்களில் காணப்படவில்லை என்று கூறியுள்ளார். காலத்தால் மிகவும் பிற்பட்டதான இறையனார் களவியலுரையிலேயே முதன் முதலாகச் சங்கம் பற்றிய கதை வருகிறது என்று கூறி சரித்திர வலுவினை அவ்வாறு கூறியிருக்கும் விடயங்களுக்குக் கொடுக்க முடியாது என்றும் கூறி எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல் எதனிலும் சங்கம் பற்றிய தெளிவான குறிப்புகள் காணப்படவில்லையாதலால் சங்ககாலம் என்றொரு காலத்தை வரலாற்றுப் பின்னணியில் உட்புகுத்துவது தவறு என்றும் கூறியுள்ளார். சாதாரண தமிழ் மக்கள் சங்ககாலங்களின் அடிப்படையில் தமிழர் வரலாற்றை இதுவரை காலமும் நோக்கியதை குழிதோண்டிப் புதைக்கப் பேராசிரியர் பிரயத்தனம் எடுத்துள்ள்ார் என்றால் மிகையாகாது. இதுவரை காலமும் இலக்கண நூலாகிய தொல் காப்பியத்தின் காலம் கி. மு. 4ம் நூற்றாண்டு என்றும், இலக்கியம் தோன்றிய பின்னரே இலக்கணம் எழுவது மரபாக
6. பார்த்திய வருடம் சித்திரை-ஆணி)

Page 19
இருந்தபடியால் தொல்காப்பியத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் தோன்றிவிட்டன என்றும், தொல்காப்பியம் மட்டுமன்றி அதற்கு முன்னர் வழக்கில் இருந்ததாக நம்பப்பட்ட அகத்தியம் பற்றிய குறிப்புகள், பின்னர் கடல் கோள்களால் முதலிரு சங்கங்களும் அழிக்கப்பட்டதான மரபுவழிச் செய்திகள் இவற்றை வைத்து குறைந்தது கி. மு. 500ம் ஆண்டளவில், அதாவது விஜயன் இலங்கைக்கு வரமுன் இவ்விலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். இவையாவும் சரித்திர வலு அற்ற செய்திகள் என்று பேராசிரியர் மறைமுகமாகச் சாடியுள்ளார்.
சரித்திர நோக்கு ஆய்வுமுறையில் விஞ்ஞான ரீதியாக அமைவது சாலச் சிறந்தது. நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லாது வெறுமனே இலக்கிய அடிப்படையில் சரித்திர நிகழ்வுகளைக் குறிப்பிட்டு மக்கள் மனதில் தவறான விபரங்களை, எண்ணங்களை நிலை நிறுத்துவது ஒரு பாரிய தவறு என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர். ஆனால் ஒன்றை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். உற்ற நிரூபணங்கள் இல்லையேல் சரித்திர நிகழ்வுகளை தொழில் ரீதியாக வெளியிடமாட்டோம் என்பது எல்லா இன பேராசிரியர்களினாலும் ஏற்று ஒழுகவேண்டிய ஒரு சாலச்சிறந்த விஞ்ஞான பூர்வமான குறிக்கோள். ஆனால் ஒரு சாரார் இந்தக் குறிக்கோளைப் பின்பற்ற இன்னொரு சாரார் வெறும் உணர்ச்சி பூர்வமான தகவல்களை சரித்திர நிகழ்வுகள் என்று வெளியிடும் போது மக்கள் மனதில் குழப்பம் ஏற்படுகிறது.
உதாரணமாக கலாநிதி இந்திரபாலா அவர்களின் இலங்கைத் தமிழரின் நிரந்தர வதிவிடங்கள் பற்றிய ஆய்வுக் கூற்று ஒன்றை வைத்து 11ம் நூற்றாண்டில்தான் தமிழர்கள் இந்த நாட்டுக்கு வந்தார்கள் என்று ஒரு பெரும்பான்மை இன அறிஞர் ஆணித்தரமாக சில காலங்களுக்கு முன் எடுத்துரைத்தார். தமிழர்களின் உரித்துக்கள் பறிபோனதைப் பற்றி உயர்நீதிமன்ற அமர்வின் போது நான் கூறியவற்றை மறுக்கவே அவ்வாறு அவர் கூறினார். கலாநிதி இந்திரபாலாவின் காலத்தில் கிடைத்த சரித்திர சான்றுகளை வைத்து அவர் அவ்வாறு தமிழர்களின் நிரந்தர வதிவிடங்கள் பற்றிஎழுதியிருக்கக்கூடும். ஆனால் அவர் எழுதி 40 அல்லது 50 வருடங்களின் பின்னரும் அதாவது போதுமான அகழ்வாய்வுத் தகவல்கள் கிடைத்த பின்னரும் அதே வெளியீடு சில அரசியல் காரணங்களுக்காக ஒரு பெரும்பான்மையின இன வாதியால் பாவிக்கப்பட்டதை நாங்கள் அவதானிக்க வேண்டும். அவர் கூறியதை எந்தவொரு சரித்திர ஆசிரியரும் மறுத்து செய்தி வெளியிடவில்லை. உணர்ச்சி பூர்வமாகச் சரித்திர நிகழ்வுகளை வெளியிடுபவர்களைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாததால் அவர்கள் தங்கள் தங்கள் குறிக்கோள்களில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களும் அண்மையில் குடியேறிய வந்தேறு குடிகளே என்ற கருத்தை முன்வைக்கின் றார்கள். இதனால் உண்மை நிலை பாதிக்கப்படுகிறது. அதற்காகப் பேராசிரியரை விஞ்ஞான ரீதியான நிலைப்பாட்டில் இருந்து பிறழ வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் முடியுமெனில் புதிதாகச் சான்றுகள், நிரூபணங்கள் வெளிவரும் போது அவற்றை மக்களுக்கு உடனுக்குடனேயே வெளிப்படுத்த ஏதாவது ஒரு செயற் குழுவை, செயற்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சரித்திரம், சட்டம், சமூகவியல் போன்றவற்றில்
இந்து ஒளி -கொழும்பு சம்
w

ஆராய்ச்சியின் பயனாய் வெளிவரும் நவீன கருத்துக்களை மக்களுக்குக் காலத்துக்குக் காலம் வெளிப்படுத்த அவ்வந்தத் துறைகளில் உயர் நிலை பெற்றவர்களின் ஒரு குழாம் நிரந்தரமாக இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும். சிறிய கையேடுகள் மூலமாகவேனும், கேள்வி-பதில் மூலமாகவேனும் காலத்திற்குக் காலம் புதிய ஆராய்ச்சியின் பெறுபேறுகளை மக்களுக்கு உணர்த்திக் காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகைகளில் தவறாக உணர்ச்சி பூர்வமாக அத்துடன் உண்மைக்குப் புறம்பாகத் தகவல்களை வெளியிடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் தவறுகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் விட்டால் மேற்படி நபர்களின் கருத்துக்களே உண்மை என்று பொது மக்கள் ஏற்கும் நிலை வந்துவிடும். ஆய்வுகளின் பெறுபேறுகளுக்கும் அறிவை நாடி நிற்கும் மக்களுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். இல்லையேல் உண்மை திரிபுபட இடம் அளித்து விடுவோம்.
உதாரணமாக ஒரு கிழமைக்கு முன் ஜனஹண்ட நிகழ்ச்சி சிங்களத்தில் நடக்கக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு புத்தபிக்கு சரித்திர ரீதியான உண்மை என்று பின்வருமாறு கூறினார். 1815ம் ஆண்டில் ப்றவுண்றிக் கவர்னராக இருந்த போது இலங்கையில் பெரும்பான்மை இனத்தையும் சிறுபான்மை இனங்களையும் பிரிக்க ஆவன செய்து கொண்டிருக்கிறேன் என்று இங்கிலாந்தில் உள்ள தனது சிரேஷ்ட அலுவலர்களுக்கு எழுதி யிருந்தாராம். அதன் அடிப்படையில்தான் சிறுபான்மை இன நபர்களுக்கு அளவுக்கு மிஞ்சிய சலுகைகள் கல்வி புகட்டலிலும் தொழில் புரிதலிலுங் கொடுத்து சிங்கள இனத்துக்கு எதிராக ஆங்கிலேயரும் தமிழர்களுஞ் சேர்ந்து சதி செய்து விட்டார்கள் என்றார். மறைமுகமாக இராமநாதன், அருணாசலம் சகோதரர்களை
அவர் சாடினார். ஆனால் மேற்படி சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் படிக்கவில்லை. கொழும்பில்தான் படித்தார்கள். 6) தரப்பட்ட சிங்கள, இஸ்லாமிய, பறங்கி
இனத்தவர்களுடன்தான் அவர்கள் கல்வி கற்றார்கள். அவர்களின் கல்வி புகட்டலில் அல்லது தொழில் புரிதலில் எங்கு ஆங்கிலேயர்-தமிழர் சதி ஏற்பட்டது என்று புரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சிங்களத் தமிழ் உறவுகள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இவற்றை மறுத்து உடனுக்குடன் பதில் இறுக்கக்கூடிய ஒரு தமிழர் சார்பான குழு செயற்பட இருக்கின்றன. சிங்களத் தமிழ் உறவுகள் இதனால் பாதிக்கப் படுகின்றன. இவற்றை மறுத்து உடனுக்குடன் பதில் இறுக்கக் கூடிய ஒரு தமிழர் சார்பான குழு செயற்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் விஞ்ஞான பூர்வமாக பேராசிரியர் போன்றவர்கள் கருத்துக்களைப் பொறுப்புடன் வெளியிட்டுக் கொண்டிருக்க மேற்படி புத்தபிக்கு போன்ற பொறுப்பற்ற நபர்கள் உணர்ச்சி பூர்வமான ஆனால் சரித்திர வலுஅற்ற தகவல்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அடுத்து பேராசிரியரின் நூலின் ஒழுங்கமைப்பை அவதானிப்போம். இந்நூலானது ஆதிகாலம் முதல் பொல நறுவைக் காலம் முடிவு வரையில் இலங்கையில் இந்து சமய வளர்ச்சி எவ்வாறு அமைந்தது என்பதை ஆராய்கிறது. 6 பிரிவுகளும் 19 அத்தியாயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.
er பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 20
முதலாம் பிரிவு ஆதி அநுராதபுர காலம் பற்றியும், இரண்டாம் பிரிவு பிந்திய அநுராதபுர காலம் பற்றியும் அதாவது கிட்டத்தட்ட பல்லவர் காலம் பற்றியும், மூன்றாம் பிரிவு சோழராட்சிக் காலம் பற்றியும் நான்காம், ஐந்தாம், ஆறாம் பிரிவுகள் பொலநறுவைக்கால அரச திருப்பணிகள், வணிக கலாசாரம், கோயில்கள் ஆகியவற்றைப் பற்றி முறையே கூறுவனவாகவும் அமைந்துள்ளன. பேராசிரியர் மன்னர் குலங்களின் ஆட்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு காலப் பிரிவுகளை வரையறை செய்யவில்லை. அவ்வாறு செய்வது பொருத்தமல்ல என்ற கூறி சமுதாய அமைப்பிலுள்ள பிரதான அம்சங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் அடிப்படையாக வைத்தே வரலாற்றுக் காலவரையறை செய்தல் வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் சமுதாய அமைப்பிலும் பண்பாட்டுக் கோலங்களிலும் காலங்காலமாக ஏற்பட்ட மாற்றங்கள் ஆழமாகவும் தெளிவாகவும் இதுவரை எவராலும் விளக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். ஆகவே தமிழக வரலாறு ஒரு ஸ்திரமான முறையில் வகுத்துக் காட்டப்படவில்லை என்றே முடிவு கொள்ள வேண்டியிருக்கிறது. ஆதி அநுராதபுர காலம், பிந்திய அநுராதபுர காலம், சோழராட்சிக் காலம், பொலநறுவைக் காலம் ஆகியன கிட்டத்தட்ட எவ்வெந்தக் காலகட்டத்தினுள் அமைந்தன என்பது இந்நூலில் எடுத்து இயம்பப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் மேற்படி காலகட்ட சமூக பண்பாட்டு வளர்ச்சிகள் பற்றி கிடைத்தற்கரிதான சான்றுகளைத் தேடித் தந்துள்ளார் பேராசிரியர். அவற்றைவிட கோயிற் கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றியும் தகவல்கள் தந்துள்ளார். இந்து சமயம் பற்றி ஒரு குறுகிய நோக்கில் பார்க்காது இந்து கலாசாரம், இந்நாட்டின் வரலாறு, தென்னிந்தியப் பண்பாட்டு வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு, இலங்கைத் தமிழர்களின் வரலாறு பற்றியும் தகவல்கள் தந்துள்ளார்கள்.
ஆனால் பாரம்பரியமாக நாங்கள் ஏற்றக்கொண்ட பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பேராசிரியர். விஞ்ஞானத்திலும் மருத்துவத்திலும் இதுதான் கடைசிநிலை என்றொன்றில்லை. இன்று உண்மை என்று விஞ்ஞானம் கூறுவதை நாளை யாரோ ஒருவர் தூக்கி எறிந்துவிடத் தலைப்படுவார். இது தான் மருத்துவத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்று இன்று கூறும் மருந்தை நாளை ஏதோ சில காரணங்களுக்காக முற்றாகக் கைவிட்டு விடுவார்கள். பேராசிரியரின் கருத்துக்களை வாசிக்கும் போது இப்படிப்பட்ட விஞ்ஞான, மருத்துவ சூழல் தான் நினைவிற்கு வந்தது. பலவருடகாலம் நாங்கள் கேள்வி இல்லாமல் ஏற்றவற்றை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.
உதாரணமாக நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே என் தந்தையார் திருகோணமலைக் கோட்டையின் வாசலில் இருந்த கல்வெட்டு வாசகங்களை எனக்கு எடுத்துரைப்பார். அது பின்வருமாறு -
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிடிக்கவே - மன்னாகேள் பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் போனபின் மானே வடுகாய் விடும். இதுதான் அவர் குறிப்பிட்ட வாசகம்.
(இந்து ஒளி

அதாவது குளக்கோட்டனின் திருப்பணியால் உருவாகிய கோட்டத்தை பறங்கியர் முதலில் பிடிப்பார்கள். பின்னர் பூனைக் கண்ணர், செங்கண்ணர், புகைக்கண்ணர் ஆகியோர் வந்து போனபின் வடுகரின் ஆட்சிக்கு உட்பட்டுவிடும் என்று அப்பொழுது என் தந்தையார் கூறி பூனைக்கண்ணர், செங்கண்ணர், புகைக்கண்ணர் ஆகியோர் முறையே டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரைக் குறிக்கும் என்றுகூறி, வடுகர் என்றால் தெலுங்கர் என்றும், ஆனால் இங்கு வடக்கில் இருந்து வருபவர்களைக் குறிக்கும் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். ஏமியன்ஸ் சமாதான உடன்பாட்டின் பின் ஒரு சில காலம் பிரெஞ்சுக்காரர் எங்களை ஆண்டார்கள் என்பதையும் கூறிவைத்தார்.
ஆனால் அந்த வினோதக் கல்வெட்டு வாசகம் பற்றிய உணர்வுபூர்வமான எண்ணங்களை அப்படியே வேரோடு தூக்கி எறிந்து விட்டார் பேராசிரியர். தமது நூலின் மூலமாக, இந்த உலகில் கண் பார்க்கும் வெளிப்படையான உருவமாற்றங்களை சகித்துக் கொள்ளலாம். ஆனால் எண்ணங்களில் வலுப்பெற்றிருக்கும் கருத்துக்களை அவ்வளவு இலகுவில் தூக்கி எறியமுடியாது. என்றாலும் பேராசிரியர் தமது கருத்தை வெளியிடத் தந்திருக்கும் காரணங்கள் யோசிக்கப் பாலன. அதாவது கல்வெட்டில் குறிப்பிட்ட வாசகம் காணப்படவில்லை என்றும் சில தொடர்பற்ற எழுத்துக்களேஇடம் பெற்றதாகவும் முதலியார் இராசநாயகம் தான் கல்வெட்டில் சிதைந்து, வெட்டப்பட்டிருக்கும் எழுத்துக்களை முன்வைத்து திருத்திய வாசகம் ஒன்றினை ஏற்படுத்தினார் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தத் திருத்திய வாசகம் எந்த அளவுக்கு எற்றுக்கொள்ளப்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் காலத்தால் முற்பட்டவொரு தீர்க்கதரிசனத்தின் வாசகந்தான் இந்தக் கல்வெட்டு என்று கொள்ள இடமில்லை என்றும் பேராசிரியர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பல்லவர் கலாசாரம் பற்றி ஆராய்கையில் திராவிடக் கலைப் பாணியின் செல்வாக்கு எந்த அளவுக்கு ஊடுறுவி நின்றுள்ளது என்பதைப் பேராசிரியர் வெளிப்படுத்தி உள்ளார். நாலந்த கெடிகே பற்றிக் கூறும் போது இலங்கையில் 7ம், 8ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட திராவிட கலைப்பாணியின் செல்வாக்கினைப் பிரதிபலிக்கும் கோயிலாக அது விளங்குகிறது என்கிறார். அத்துடன் தமிழகத்திலும் இலங்கையிலும் நிலவிய பெளத்த நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்டநெருங்கிய தொடர்புகளைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சின்னமாகவும் நாலந்த கெடிகேயைக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். காஞ்சிபுரத்திலுள்ள பெளத்த கோயிலொன்றை முன்மாதிரியாகக் கொண்டே நாலந்த கெடிகே அமைக்கப்பட்டதென்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெவிநுவர கல்கே, அனுராதபுரத்தில் இருக்கும் இசுருமுனிய சிற்பங்கள் போன்றவற்றிலும் திராவிட கலைப்பாணியின் செல்வாக்கு எந்த அளவுக்கு பிரதிபலிக்கின்றது என்பதையும் பேராசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். இப்பேர்ப்பட்ட திராவிட செல்வாக்கின் பிரதிபலிப்பை அடியோடு மறுத்துக் கூறவென்றே பெரும்பான்மை இன மக்களிடையே பலர் முளைத்துள்ளார்கள். விஜயன் குவேனியை விட்டு விட்டு இந்தியாவில் திருமணம் செய்து
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 21
கொண்ட பெண் மதுரையைச் சேர்ந்த்வள் அல்ல. வட நாட்டின் மதுராவைச் சேர்ந்தவள் என்றெல்லலாம் கட்டுரைகள் எழுதுகிறார்கள். பண்டைய காலந்தொட்டு சிங்களவர், தமிழர், பெளத்தர்கள், இந்துக்கள் ஆகியோர் சுமூகமான முறையில் மதம் சம்பந்தமாகவும் கலை சம்பந்தமாகவும் தொடர்புகள் வைத்திருந்தார்கள் என்ற உண்மை நிலையைப் புறக்கணித்து எலியும் பூனையும் போல இரு இனத்தவரும் முன்பிருந்தே முரண்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற கருத்தே சிங்கள மக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர் போன்றோரின் நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்து மேற்படி கலை, கலாசார, பண்பாட்டு, ஒற்றுமை நிலைகளை அவை வலியுறுத்தினால் மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கும். எவ்வாறு குளக்கோட்ட்ன் கல்வெட்டு வாசகம் ஒரு திருத்திய வாசகம் என்று கூறி எங்களின் பல வருடகால எண்ணங்களை ஆட்டங்காண வைத்தாரோ அதே போல் சிங்கள மக்களின் பலகால வைரிய எண்ணங்களை அப்புறப்படுத்த பேராசிரியரின் நூல் சிங்களத்திலும் வெளிவந்தால் அதுநன்மை பயக்கும் என்று கருதுகிறேன். உணர்ச்சிக்கு இடங் கொடுக்காத அவரின் நூல் நல்ல வரவேற்பைச் சிங்கள மக்களிடையே பெறும் என்று நம்புகிறேன். ஏதாவது அரசாங்க சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்தக் கைங்கரியத்தில் ஈடுபடலாம்.
பல்லவர் காலச் செல்வாக்கைப் போலவே சோழர் காலத்
தாக்கங்களையும் ஆராய்ந்துள்ளார் பேராசிரியர். திருகோணமலை, கந்தளாய், பதவியா போன்ற இடங்களில் சோழராட்சிக்கால தொல்பொருட் சின்னங்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று கூறி அவற்றை விவரித்துள்ளார். இந்த மூன்று இடங்களிலும் இந்து கலாச்சார நிலையங்கள் வளர்ச்சி பெற்றிருந்தன என்று கூறுகிறார்.
குளக்கோட்டன் பற்றிக் கூறுகையில் குளம்,கோயில் ஆகிய இரண்டையும் அமைத்துப் பிரசித்தி பெற்ற மன்னனுக்குரிய சிறப்புப் பெயரே குளக்கோட்டன் என்று கருத்துத் தெரிவிக்கிறார். வரராமதேவன் மகன் குளக்கோட்டன் செய்த திருப்பணிகளை கைலாச புராணம் வர்ணிப்பதை எடுத்தியம்பி அந்தப் புராணத்தின் வரிகளையே நூலில் தந்துள்ளார். கோகர்ணம் என்ற கோணேசர் கோயில், கந்தளாய்க் குளம் ஆகியவை குளக்கோட்டனால் திருத்தி அமைக்கப்பட்டதை எடுத்தியம்புகிறார் பேராசிரியர். குளக்கோட்டனைப் பற்றி ஐதீகங்கள் இலங்கைத் தமிழரிடையே நூற்றாண்டு காலமாக நிலைபெற்று வருகின்றன. அவற்றைப் பேராசிரியர் உணர்ச்சி பூர்வமான சரித்திர பெறுமதியற்ற ஐதீகங்கள் என்று அடையாளம் கண்டு தமது வாதங்களையும் முடிவுகளையும் முன்வைத்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்போர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பேராசிரியர் வெளிக்கொண்டு வந்துள்ள வர்ணப்படங்களுடன் இந்த நூலைப் படித்து, விளங்கி, மேலும் தமிழ் மாணவர்கள் கூடிய ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். அப்பேர்ப்பட்ட ஆராய்ச்சியினால் பேராசிரியருக்கு நற்பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டு இந்த வெளியீட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
(இந்து ஒளி 1

முருகன் cold DeLab
கலாநிதிஅருட்கவி சீ. விநாசித்தம்பி
சந்நிதி முருகன்
பொன்னென மண்ணென மிகுமாசை
புன்னெறி பின்னிய மதியேனை மின்னெனு மிந்நில உறவேக
விண்ணுறு தண்ணளி புரிவாயே நன்னெறி முன்னிய குருநாதா
நண்ணிய புண்ணிய வடிவோனே தன்னிலை யுன்னுணர் வருள்வோனே
சந்நிதி மன்னிய பெருமாளே.
மாவைக் கந்தன்
மூலத்தை யுணராம லலைமேவும்
மோகத்தி னுருவான வினையாலே காலத்தை யவமாக ஒழியாதே
காதற்க ழலையோத அருள்வாயே வேலைக்கு வடிவேலை விடுவோனே
வேதத்தி னுரைகூறு முருகோனே மாலுக்கு நயமான மருகோனே
மாவிட்ட புரமேவும் பெருமாளே
நல்லூர்க் கந்தன்
பஞ்சக் கொடுமையி லஞ்சிப் பிறர்தமை இரவாதே
பண்பற்றவருயர் சொந்தத் தினரென மதியாதே தஞ்சத் துணையென நின்பொற் கழலடி மறவாதே
சங்கத் தமிழிசை யன்பிற் புனைபணி அருள்வாயே நெஞ்சைக் கிளறிய மஞ்சுக் கிரிதரன் மருகோனே
நிந்தைச் செயலினர் வந்தித் திடுபணி இகழ்வோனே நஞ்சைப் பருகிய செம்பொற் சடையினர் புதல்வோனே நம்பற் குளமகிழ் நல்லைப் பதிவளர் பெருமாளே
(நன்றி : தெய்வீக அருட்புகழ்)
محصہ
பார்த்திய வருடம் சித்திரை- ஆணி)

Page 22
Sasi அகில இலங் பொன்விழா
is : அகில இலங்கை இந்த மாமன்றம் பொன்விழ தினக்குரல் நாளிதழின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த நடத்
1b uffa - தரம் ே 2ம் பிரிவு - தரம் 9 ம்ே பிரிவு - தரம் 12
ஒருவர் ஒரு பிரிவில் மட்டுமே பங்குபற்ற முடியும். கட்டுரைகள் கட்டுரைகளை தாளின் ஒரு பக்கத்தில் தெளிவாக எழுதியிருப்பத பாடசாலை, வகுப்பு, கையொப்பம் போன்ற விபரங்களையும் மூ பாடசாலை அதிபரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டும் அனுப்பிவைத்
போட்டிக்காக அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்கனவே பத்திரிை தெரியவருமானால், அவை எதவித அறிவித்தலுமின்றி போட்டி கட்டுரைகளை எழுதியவர்களை நேரில் அழைத்த ஓர் எழுத்தப் ப மாமன்றம் தீர்மானித்தள்ளத.
ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கட்டுரைத் தலைப்புகள் பின்வருமாறு
1ம் பிரிவு - ஆலயவழிபாடு (200 2ib fa - பல திருவுருவங்களி:
ம்ே பிரிவு - புராணங்கள் தரும்
பரிசு விபரம் :
ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்க பதக்கம் பரிசில்களாக வழங்கப்படும். அத்தடன் மாமன்றப் பொ: கட்டுரைகளையும் வெளியிட மாமன்றம் ஒழுங்கு செய்யலாம். த
போட்டிக்குரிய கட்டுரைகளை 2005. 08, 15ம் திகதிக்கு முன் 91/5 சேர். சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை கொழும்பு
கட்டுரைப்போட்டி சம்பந்தமான கடிதத் தொடர்பு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
(அனுசரணை
குறிப்பு - போட்டி மு
(இந்து ஒளி
 
 

கை இந்து மாமன்றம் ா கட்டுரைப் போட்டி
ாவையொட்டி பாடசாலை மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகளை தகிறத. இந்தப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.
முதல் 8 வரை முதல் 11 வரை
முதல் 13 வரை
தமிழ்மொழியிலேயே எழுதப்படவேண்டும். சகல போட்டியாளரும் டன் தமது முழுப் பெயர், முகவரி, பிறந்த திகதி, கல்வி கற்கும் குறிப்பிட்டு, கட்டுரை எழுதிய மாணவனின் சொந்த ஆக்கமென தல் வேண்டும்.
கயில் சஞ்சிகையில் அல்லத நால்களில் வெளிவந்திருப்பதாகத் பிலிருந்து நிராகரிக்கப்படும். முதற் தெரிவில் தேர்ந்தெடுக்கப்படும் ரீட்சை மூலம் அவர்களின் ஆக்கத்திறனை மேலும் பரீட்சிப்பதற்கும்
அமைகின்றன.
- 250 சொற்கள்) ல் நாம் வணங்கும் இறைவன் ஒருவனே
(300 - 350 சொற்கள்)
படிப்பினைகள் (400 - 500 சொற்கள்)
ளூக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் ன்விழா மலரிலும் பரிசுபெறும் கட்டுரைகளையும் ஏனைய தரமான ரமான கட்டுரை எழுதியவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
பதாக பொதுச் செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம், - 02. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
கள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.
: தினக்குரல்)
ழவு திகதி 15.08.2005
20 பார்த்திப வருடம் சித்திரை-ஆணி)

Page 23
சேவை மனப்பான்ன @@5 ଏ
2005.04.24ம் திகதியன்று இரத்மலானை, கொ சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறை நிறைவு நி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மாண்பு
வில்லா மதங்களும் தமக்கே உரித்தான விதிமுறைகளை அடுக்கி வைத்திருக்கின்றன. ஆனால் இந்து மதம் விதிமுறைகளைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் அவரவர் கடமைகளையும் வகுத்துச் சொல்கின்றது. தனிமையில் இருப்பதை, தன்னை உணர்வதை, தன்னை அறிவதன் மூலம் கடவுளை அறிவதை மிகமிக விளக்கமாகச் சொல்கிறது எம் மதம். இப்படித் தன்னை உணர்ந்த மனம்தான் மற்றவர்களுக்காக நாம் எதைச் செய்யவேண்டுமென்பதை எமக்கு உணர்த்துகின்றது.
மக்களுக்குத் தொண்டு செய்யும் எமது கடமையில் இளம் சமுதாயத்தை ஈடுபடுத்தவேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு “சிவதொண்டர் அணியை”உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் முகமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் நடாத்தப்படும் இப்பயிற்சிப் பட்டறையில் எத்தனையோ அறிஞர்கள் பெரியோர்கள் கலந்து எமது சமயத்தின் பாரம்பரியத்துக்கே உரித்தான பல தலைப்புக்களில் விளக்கங்களையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி புள்ளார்கள். இவ்வகையான ஒரு பயிற்சிப் பட்டறை எமது இளம் சந்ததியினருக்கு ஆன்மீக வளர்ச்சியையும் உள வளர்ச்சியையும் வட்டுமன்றி நிச்சயமாக சேவை மனப்பான்மையையும் வளர்த்தெடுக்கக்கூடிய ஒரு களமாகவும் அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. பாலில் கலந்துவிட்ட தண்ணிரைப்பிரிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இளமையில் கற்றுக்கொண்ட பழக்க வழக்கங்களை மறப்பது. ஆகையினாலேதான் அறநெறியில் ஒழுகச் செய்யும் நற்பழக்க வழக்கங்களை, பண்பு உடையவனாக வாழும் நல்வழியை, ஆற்றலை, ஆளுமையை, இளமையிலேயே எமது இளம் சமுதாயத்தினருக்கு கற்றுக்கொடுப்பது இன்றியமையாதது. இவற்றை மனதில் கொண்டு இந்து மாமன்றத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இவ் அரிய பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியது; போற்றப்பட வேண்டியது. எமது தமிழ்க் கலாச்சாரம் தனித்துவமிக்கதாக அடையாளப்படுத்தப்பட வேண்டுமாயின் இத்தகைய ‘பயிற்சிப் பட்டறைகள்” எமது சமுதாயத்திற்கு கட்டாயமானதொன்றென்றே கருதுகின்றன. ஒரு
4/5.76%f/
மாமன்றம் யாழ்ப்பாணத்தில் கட்டிடம் ஒன்றை அமைக்கவிருக்கி ம்ே திகதியன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர், மாமன்றத் தலைவர் நீலகண்டன், விடுதிகள் முதியோர் இல்லக் குழுச் செயலாளர் திருட எஸ். அருளானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திருமதி பேரம்பலம் அவர்கள் கட்டிடம் நிறுவப்படவிருக்கிறது. இம் மண்டபத்தில் சமயப் பிரசாரகர்
இந்து ஒளி 21

மையை வளர்க்கும் 56ITD
ழம்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடந்த கழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மிகு நீதியரசர் க. பூரீபவன் நிகழ்த்திய உரை
இந்து மதத்தைச் சார்ந்தவனுடைய வாழ்விலே எவையெவையெல்லாம் அவனை மனிதனாக முன்னேற்றுவதற்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றனவோ, எவற்றையெல்லாம் அவன் தன் வாழ்விலே கடைப்பிடிக்க வேண்டுமோ அத்தனை விடயங்களும் இந்தப் பயிற்சிப் பட்டறையின் “நிகழ்ச்சி நிரலிலே’ சேர்க்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. இந்த “நிகழ்ச்சி நிரலில்” பார்க்கும் போது ஒரு விடயம் எனது மனதிலே தோன்றுகிறது.
பரமேஸ்வரக் கடவுளான சிவபெருமான் பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளினாலும் தொழப்படுபவன். உமாதேவியருக்கு கணவனாக, விநாயகருக்கும் முருகனுக்கும் தந்தையாக, சுந்தரருக்கும் குபேரனுக்கும் நண்பனாக, தட்சனுக்கு மருமகனாக வேறு வேறு வடிவங்களிலே அவரவர்க்கு ஏற்றால் போல் எவ்விதம் காட்சி கொடுக்கின்றாரோ அதேபோன்று தான் இந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானஅகில இலங்கை இந்து மாமன்றமும் அவரவரின் தேவையறிந்து காலமறிந்து தனது செயற்பாடுகளை வகுத்துள்ளது. எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் இப்பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்த மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு மீண்டும் என் உளம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
நம்பிக்கை, நியாயம் போன்ற தர்மத்தின் பாதையிலே நாம் செல்லும்போது எந்த இடர் எம்மிடையே தோன்றிடினும் அது எளிதாக மறைந்துவிடும் என்பது யதார்த்த பூர்வமான உண்மை. ஒவ்வொரு உயிரும் ஏதோவொரு குறிக்கோளுடன்தான் பிறக்கின்றது. அந்தக் குறிக்கோள் என்னவென்று தெரியாவிட்டாலும் அதை நிறைவேற்றிக்கொடுக்க இறைவன் நம்முடன் கூடவே இருந்துகொண்டுதான் இருக்கின்றான். அந்தவகையில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நற்பணியானது மேன்மேலும் சிறக்க, அது தன் குறிக்கோளை எவ்வித தடங்கலுமின்றி நிறைவேற்றி ஓர் அறிவுசார்ந்த, பண்பாடுமிக்க, தமிழ்ச் சமூகத்தை உருவாக்க இறைவனின் நல்லாசிகள் என்றென்றும் கிடைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
றது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த ஜூன் மாதம்
திரு. வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் திரு. கந்தையா தி அ. கயிலாசபிள்ளை, கட்டிடக் குழுத் தலைவர் திரு. எஸ். ரி.
மாமன்றத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய காணியிலேயே புதிய பயிற்சி நிலையமும், ஆராய்ச்சி நிலையமும் அமையவிருக்கிறது.
اص
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 24
C கில இ லாங் ططططلحطاطططط
群
பொன்விழா
அகில"இலங்கை இந்து மாமன்றம் பொன்விழாவையொட்டி ( நாளிதழின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த நடத்தகிறத. பின்
(1) யாழ்ப்பாண மாவட்டம், (2) கிளிநொச்சி - முல்லை (3) மன்னார் மாவட்டம், (4) மட்டக்களப்பு ~ அம்பாை (5) திருகோணமலை மாவட்டம்
(6) மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மா
வலயங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகப் போட்டிகள் நடத்த வலயத்தில் இருந்து போதிய விண்ணப்பங்கள் கிடைக்காதுவிட்
போட்டிகள் நடைபெறும்.
பின்வரும் பிரிவுகளாக பேச்சுப் போட்டி நடத்தப்படும்.
1ம் பிரிவு - தரம் 8 முதல் 8 வரை (5 நிமிடப் பேச் 2ம் பிரிவு - தரம் 9 முதல் 11 வரை (7 நிமிடப் பேச் ம்ே பிரிவு - தரம் 12 முதல் 13 வரை (10 நிமிடப் பே
போட்டிக்குரிய தலைப்புகள் பின்வருமாறு அமைகின்றன.
1id Lafay : 5
2ம் பிரிவு : இறைபணி நிற்க இலங்கையில் பாடல்பெற்ற தலங்கள் ஆலய வழிபாடு நவராத்திரியின் மகிமை சிவராத்திரியின் சிறப்பு சைவத்தின்மேல் சமயம் வேறில்லை
2ம், 3ம் பிரிவுகளில் கலந்தகொள்ளுபவர்கள் போட்டி ஆரம்பமாவ கொடுக்கப்பட்டுள்ள ஐந்த தலைப்புகளில், திருவுளச்சீட்டு மூல இருக்க வேண்டும்.
நாடாளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இட பதக்கம், வெண்கலப் பதக்கம் பரிசில்களாக வழங்கப்படும். பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் முழுப் கையொப்பம் போன்ற விபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவமெ பொதுச் செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பு - 02. என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். பேச்சுப் போட்டிக்குரிய முடிவு திகதி : 2005. 08, 15 போட்டி நேரம், இடம் போன்ற விபரங்கள் தனித்தனியாக அறிவிக்கப்படும் பேச்சுய் போட்டி சம்பந்தமான கடிதத் தொடர்புகள் குழுவின் தீர்ப்பே இறுதியானது. இவ்விதிகளை
குறிப்பு - போட்டி மு
(இந்து ஒளி
 
 
 
 

கை இந்து மாமன்றம் பேச்சுப் போட்டிகள்
பாடசாலை மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகளை தினக்குரல் வரும் ஆறு வலயங்களில் இந்தப் போட்டி நடைபெறும்.
த்தீவு மாவட்டங்கள், ற மாவட்டங்கள்,
கானம், மலையகத்தில் ஏனைய இடங்கள்.
ப்பட்டு நாடாளாவிய ரீதியில் இறுதிப் போட்டி இடம் பெறும். ஒரு டால் இன்னும் ஒரு வலயத்தடன் அவ்வலயம் சேர்க்கப்பட்டு
Fai) Fasi) ச்சு)
சிவ சின்னங்கள்.
ம்ே பிரிவு : திருமுறைகளின் சிறப்பு இந்துமதமும் எதிர் காலமும் ஆறுமுகநாவலர் காட்டிய பாதையில். சுவாமி விபுலானந்தரின் சமயப் பணிகள் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பதாக அந்தந்தப் பிரிவுகளில் ம் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்றைப் பற்றி பேசுவதற்கு ஆயத்தமாக
ங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப்
பெயர், முகவரி, பிறந்த திகதி, கல்வி கற்கும் பாடசாலை, வகுப்பு, ான்றை தயார் செய்த பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு, , இல. 9/5 சேர். சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை,
க்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு போட்டி நடைபெறும் திகதி, b
எதுவும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. நடுவர் மாற்றும் உரிமை மாமன்றத்திற்கு என்றும் உண்டு.
pழவு திகதி 15.08.2005
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 25
இது சிறுவர்களுக்கான சிறப்புப் பகுதி. குறள்நெறி தருகிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளு காட்டி அதன் தத்துவத்தை விளக்குவது கடன்.
முருகனின் பணப்
இர் ஊரில் முருகன் என்றொரு விவசாயி இருந்தான். முருகன் மிகவும் நல்லவன். கடும் உழைப்பாளி, சிறிது நேரம் கூடச் கம்மா இருக்கமாட்டான். எந்நேரமும் விவசாய வேலைகளிலேயே மனதை ஈடுபடுத்திக் கொண்டிருப்பான். மற்றவர் நிலங்களில் விளையும் விளைச்சலைவிட அவன் நிலத்தில் நல்ல மகசூல் கிடைத்து வந்தது.
முருகன் தன் குடும்பச் செலவுகள் போக மிச்சமுள்ள பணத்தைச் சேமித்து வரலானான். சிறிது காலம் சென்றது. அவனிடம் ஆயிரம் பொற்காசுகள் சேர்ந்தன. ஒருவருக்கும் தெரியாமல் பொற்காசுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தான் முருகன்.
ஒருநாள் அவனுடைய மாமனார் இறந்து விட்டதாக முருகனுக்குச் செய்தி வந்தது. முருகனுடைய மனைவி தன் தந்தையார் இறந்து விட்டதற்காக மிகவும் வருந்தினாள். உடனே கிளம்ப வேண்டுமென்று கணவனிடம் அடம் பிடித்தாள்.
முருகனும் மனைவியினுடைய சொல்லைத் தட்ட முடியாமல் மாமனார் ஊர் செல்வதற்காகத் தயாரானான். போகும்போதுதான் சேமித்து வைத்திருந்த பொற்காசுகளைத் தன்னுடன் எடுத்துச் செல்ல அஞ்சினான். வீட்டில் வைத்துச் செல்லவும் பயந்தான். எனவே, தன்னிடமிருந்த பொற்காசுகளை ஒரு துணிப்பையில் போட்டு அவ்வூரில் பெரும் பணக்காரரான வேலாயுதம் என்பவரிடம் சென்றான்.
“அய்யா, என்னுடைய மாமனார் திடீரென்று இறந்து விட்டார். எனவே, நான் உடனடியாக என் மாமனார் ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பையில் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன. இதை என்னுடன் எடுத்துச் செல்லப் பயமாயிருக்கிறது. தாங்கள் இதைப் பத்திரமாக வைத்திருந்து நான் திரும்பி வந்ததும் தர வேண்டும்” என்றான் முருகன்.
“அதற்கென்ன! வைத்துவிட்டுப் போ, உன்னுடைய பணப்பையை இதோ இந்த இரும்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டி வைக்கிறேன். இதை ஒருவராலும் உடைக்க முடியாது. இந்தப் பெட்டகத்தின் சாவி இருக்குமிடம் எனக்கும் என் மனைவிக்கும் தான் தெரியும். எனவே, உன்னுடைய பொருள் பத்திரமாக இருக்கும். பயமில்லாமல் சென்று வா’ என்று கூறினார் வேலாயுதம்.
முருகன் தன்னுடைய பணப்பையை வேலாயுதத்திடம் கொடுத்துவிட்டுச் சென்றான். வேலாயுதம் அந்தப் பணப்பையை வாங்கி இரும்புப் பெட்டகத்தில் பத்திரப்படுத்தி வைத்தார்.
முருகன் சென்ற பிறகு, “நாமும் எவ்வளவோ காலமாக விவசாயம் செய்து வருகின்றோம். விவசாயத்தில் நமக்கு அதிக இலாபம் கிடைப்பதில்லை! ஆனால், இந்த முருகன் இதற்குள் ஆயிரம் பொற்காசுகள் சேர்த்து விட்டானே! இவனை இப்படியே
இந்து ஒளி கொருவர் " 23

க் கதை ஒன்றினை இங்கு கு இக்கதையைப் படித்துக்
விட்டு வைத்தால் இன்னும் கொஞ்ச நாள் சென்று நமது நிலங்களையே விலைக்குக் கேட்டான். எனவே இதை வளரவிடக் கூடாது” என்று தீர்மானித்துக் கொண்டார் வேலாயுதம்
முருகனின் மாமனரின் காரியங்கள் முடிந்த பிறகு உடனடியாக அவனால் ஊருக்குக் புறப்பட முடியவில்லை. எனெனில் அவனுடைய மைத்துனன்மார்கள் சொத்து விஷயமாகத் தங்களுக்குள் பூசலிட்டுக் கொண்டார்கள். இம்மாதிரியான நேரத்தில் அவர்களை அப்படியே விட்டுவிட்டுவர முருகனின் மனம் ஒப்பவில்லை. கொஞ்சகாலம் அங்கிருந்து அவர்களுடைய பூசலை ஒருவாறு தீர்த்து வைத்து ஒழுங்கான முறையில் அவர்களுக்குப் பாகப்பிரிவினையும் செய்து வைத்தான் முருகன். அதன் பிறகு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பினர் முருகன் தம்பதியினர்.
ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக வேலாயுதம் வீட்டிற்குச் சென்றான் முருகன்.
வாப்பா முருகா! எப்பொழுது ஊரிலிருந்து திரும்பிவந்தாய்? உன் மாமனார் காரியங்கள் எல்லாம் ஒழுங்காக முடிந்ததா?’ என்று முருகனை வரவேற்றார் வேலாயுதம்.
“எல்லாம் நல்லபடியாக முடிந்ததுங்க. மைத்துனர்கள் விவகாரம் கொஞ்சம் இருந்தது. அதை முடித்துவிட்டு வருவதற்குத் தாமதமாகி விட்டது” என்றான் முருகன்.
அதன் பிறகு கொஞ்சநேரம் வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்த முருகன் பணப்பையைப் பற்றி வேலாயுதத்திடம் கவனப்படுத்தினான்.
“பணப்பையா? என்ன கனவு கினவு கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா? இல்லை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டுத் தவறுதலாக என்னிடம் கேட்கிறாயா?” என்று சற்று கடுமையாகவே கேட்டார் வேலாயுதம். இதைக் கேட்டதும் முருகன் திடுக்கிட்டுப் போய்விட்டான்.
“கொஞ்சம் நன்றாகக் கவனம் செய்து பாருங்கள். ஊருக்குப் போகும்போது உங்களிடம் கொண்டு வந்து பணப்பையைக் கொடுத்தேன். நீங்கள் அதை வாங்கி இருப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டினீர்கள்” என்றான் முருகன்.
“நல்ல வேடிக்கையாக இருக்கிறதே! இன்னும் கொஞ்ச நேரம் சென்றால் இருப்புப் பெட்டகத்தில் உள்ள பணம் பூராவும் உன்னுடையதுதான் என்றுஉரிமைகொண்டாடுவாய்போலிருக்கிறதே மரியாதையாக வெளியே போகிறாயா? இல்லை, வேலைக்காரனைக் கூப்பிட வேண்டுமா?” என்று உருமினார் வேலாயுதம்
முருகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மன வருத்தத்துடன் வேலாயுதத்தின் வீட்டை விட்டு வெளியேவந்தான். நரே அவ்வூர் நீதிபதியிடம் சென்றான். அவரிடம் தன் வழக்கை ாடுத்துரைத்தான் முருகன்.
பார்த்திய வருடம் சித்திரை- ஆணி)

Page 26
எல்லாவற்றையும் மிக உன்னிப்பாகக் கேட்ட நீதிபதி, “முருகா, நீ பணப்பையை அவரிடம் கொடுக்கும்போது வேறு யாராவது உடன் இருந்தார்களா?” என்று முருகனைப் பார்த்துக் கேட்டார். “வேறு யாரும் இல்லைங்க. அவருடைய மனைவிதான் அங்கு இருந்தாங்க. அதுவும் தவிர அவர் இரும்புப் பெட்டகத்தின் சாவி இருக்குமிடம் தனக்கும் தன் மனைவிக்கும் மட்டும்தான் தெரியும் என்று கூறினார்” என்றான் முருகன்.
“அதுசரி முருகா, இதை மட்டும் வைத்துக் கொண்டு அவரை எப்படி விசாரணை செய்ய முடியும்? அவருடைய மனைவி தன் கணவன் பக்கம்தானே சாட்சியம் சொல்லுவார். இதைத் தவிர வேறு சாட்சிகள் எவரும் இல்லையா?” என்று முருகனைப் பார்த்துக் கேட்டார்.
“இதைத் தவிர வேறு யாரும் சாட்சிகள் இல்லைங்க” என்று வருத்தத்துடன் கூறினான் முருகன்.
“சரி, நீ போய் வா 1 நான் வேலாயுதத்தைக் கூப்பிட்டு விசாரிக்கிறேன்” என்றார் நீதிபதி
வேலாயுதம் வந்தார். “நீர் தானே வேலாயுதம் என்பது?”என்று அவரைப்பார்த்துக் கேட்டார் நீதிபதி
“ஆம் அய்யா”என்றுநடுங்கும் குரலில் கூறினார் வேலாயுதம். “உம்மீது ஒரு குற்றச்சாட்டுவந்திருக்கிறது”என்றார் நீதிபதி. “என் மீதா? நான் ஒரு வம்புதும்புக்கும்போக மாட்டேனுங்க” என்றார் வேலாயுதம்.
“அது சரி முருகன் என்பவர் உம்மீது ஒரு குற்றச்சாட்டு கொடுத்திருக்கிறார். அவர் உம்மிடம் ஆயிரம் பொற்காசுகள் கொடுத்து வைத்திருந்தாராம். திரும்பக் கேட்கும் போது நீர் வாங்கவே இல்லையென்று கூறிவிட்டிராமே!” என்றார் நீதிபதி.
“இது அபாண்டப் பொய் அய்யா! நான் ஒரு பாவமும் அறியேன்” என்றார் வேலாயுதம்,
F
சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கிடைத்தது. மிகவும் நன்றி.
தவிர்க்க முடியாத காரணங்களினால் மேற்படி வைபவத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. மேற்படி நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
களுத்துறை சிறைச்சாலைக் கைதிகளுக்கு புதுவருடத்திற்கென மாமன்றம் அனுப்பிவைத்த உடைகள் உரிய நேரத்தில் கிடைத்து புதுவருடத்தைச் சிறப்பாகக் கொண்டாடியதாகத் தெரிவித்தார்கள்.
மாமன்றத்தின் பணி தொடர வாழ்த்துகிறேன்.
க. தங்கேஸ்வரி பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்புமாவட்டம்
-ܥ
(இந்து ஒளி
 

“பணப்பையைக் கொடுக்கும் போது உமது மனைவிகூட உடன் இருந்ததாகக் கூறியிருக்கிறாரே!” என்றார் நீதிபதி
“பொய் அய்யா! என் மனைவியை வேண்டுமானால் வரவழைத்தது விசாரித்துப் பாருங்கள்” என்றார் வேலாயுதம்,
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் சொல்கிறபடி உமது மனைவி பேருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள்” என்று கூறிய நீதிபதி கடிதத்தின் வாசகத்தைக் கூற ஆரம்பித்தார்.
“இந்தக் கடிதம் கொண்டு வருபவரிடம் இருப்புப் பெட்டியிலுள்ள முருகனின் பணப்பையைக் கொடுத்தனுப்பவும்” என்று கடிதம் எழுதச் சொன்னார் நீதிபதி.
“இல்லாத பணப்பைக்குக் கடிதம் எதற்கு அய்யா?” என்றார் வேலாயுதம்.
“இருக்கிறதா இல்லையா என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்; மரியாதையாகக் கடிதத்தை எழுதிக் கொடும்” என்று கோபத்துடன் கூறினார் நீதிபதி.
நீதிபதி கூறியவாறு வேலாயுதம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். சற்றுநேரத்திற்கெல்லாம் வேலாயுதத்தின் வீட்டிலிருந்து திரும்பிய வேலைக்காரன் முருகனின் பணப்பையுடன் நீதிபதியின் வீட்டுக்கு வந்தான்.
இதைக்கண்ட வேலாயுதம் இனி தனது பொய் நெடுநேரம் நிலைக்காது என்று உணர்ந்து நீதிபதியின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, "அய்யா, தெரியாத்தனமாகத் தவறு செய்து விட்டேன். முருகனின் பணப்பை என்னிடம் தான் இருக்கிறது. அதைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டிக் கொண்டார்.
நீதிபதி பணப்பையை வாங்கி முருகனுக்குத் தந்ததுடன் நில்லாமல் வேலாயுதத்தையும் எச்சரித்து அனுப்பினார்.
முருகன் தனது பணப்பையை வாங்கிக் கொடுத்ததற்காக நீதிபதியை வாழ்த்தியவாறே வீட்டிற்குச் சென்றான்.
"தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சேதன்னைச் சுடும்.”
சிவ தொண்டர் அணிப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளை எமது சமுதாயத்தின் சிவதொண்டர்களாக்கி பல்வேறுபட்ட பயிற்சிகளை வழங்கி எங்களை ஊக்குவித்து நல்லதொரு பணியை செய்ததற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தினருக்கு எனது நல்லாசிகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இப்பயிற்சிப் பட்டறையில் பல பெரியோர்களை வரவழைத்து எங்களுக்காக கருத்துக்களையும் பாடத்திட்டங்களையும் கற்பித்து நல்வழிகளைக் காட்டினீர்கள்
அதுபோன்றே வருகை தந்த எல்லோருக்கும் தங்குவதற்கு இருப்பிடத்தையும், உணவுகளையும் தந்து நல்லன்போடு உபசரித்து மாமன்றத்தினருக்கும் உறுப்பினர்களுக்கும் இரத்மலானை - கொழும்பு இந்துக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் “சக்தி இல்லம்’ விடுதியின் பொறுப்பாளர் - இவர்கள் அனைவருக்கும் மஸ்கெலியா இந்து மாமன்றத்தின் சார்பாக மென்மேலும் இப்பணி சிறப்பாகத் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். சிவதொண்டன் எம். சரவணபவன் பூரீமுத்துமாரிஅம்மன் ஆலயம்பால்காமம் தோட்டம் மஸ்கெலியா.
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 27
இது மாணவர்களுக்கான பக்கம். இதில் öFLou J 6).JPGom உட்பட மாணவர்களுக்குப் பயனுள்ள பல விஷய இது போன்ற விஷயங்கள் மாணவர்களிடமிருந்து
பெரிய புராணக் கதைகள்
பசிக்குதவும் பண்ட
UIண்டி நாட்டிலுள்ள வளம் மிகுந்த ஊர்களில் இளையான்குடி குறிப்பிடத்தக்கது. இவ்வூரில் வேளாளர்குலத்தில் மாறனார் என்றொருவர் வாழ்ந்து வந்தார். ஊரைக் கொண்டு இவரை இளையான்குடி மாறனார் என்று அழைப்பார்கள்.
இவர் தில்லை நடராஜப் பெருமான் திருவடி மறவாச் சிந்தையர், கனிந்த பண்பினர், உழவுத் தொழிலையே தமக்குற்ற தொழிலாகக் கொண்டு உழைத்து வந்தார். உழைப்பு வீண்போகாதல்லவா? அதன் பயனால் இவரிடம் செல்வம் மிகுந்தது; செழிப்பு நிறைந்தது. வாழ்வை மகிழ்ச்சியாக நடத்தி வந்தார்.
இறைவனது அடியார்களிடம் இவருக்கு மட்டற்ற அன்பு இருந்தது. அவர்களிடம் காட்டும் அன்பு ஆண்டவனிடம் காட்டும் அன்புக்கு ஒப்பான தல்லவா! எனவே மாறனார் தமக்கு வாய்த்த செல்வத்தை அடியார்களுக்குப் பயன்படுத்துதலே அச்செல்வத்தால் பெற்ற பயன் எனக் கருதினார். இறைவன் திரு அடியார்களைக் கண்டால் இன்சொல் மொழிந்து, தம் இல்லம் அழைத்து வருவார். தக்க ஆசனத்தில் வீற்றிருக்க வைத்து, அவர்கள் திருவடிகளை விளக்கி மலர் தூவி வணங்குவார். அறுசுவை கொண்ட நான்கு வகை உணவுகளை அவர்களுக்கு அமுதமாகப் படைத்து மகிழ்வார். மாறனாரின் இக்கனிவுப் பண்பு ஊரெல்லாம் பரவியது. இறைவன் அடியார்கள் நாள் தோறும் அவர் இல்லம் நாடி வந்து பசிப்பிணியைத் தீர்த்துக் கொள்வாராயினர். இவ்வாறு வாழ்ந்து வந்த மாறனார் வாழ்வில் ஒரு சமயம் வளம் குன்றலாயிற்று. வாழ்வு என்பது எப்போதும் ஒரு நிலையில் செல்லாதல்லவா? செழுமையும் வறட்சியும் அதில் ஏற்படுதல் இயல்புதானே தமது வாழ்வில் வளம் சுருங்கிய போது மாறனார்
தம் மனம் சுருங்காமல் அடியார்களுக்கு அன்னம் பாலித்து வந்தார். இப்பணியில் தம்மிடமுள்ள பொருள்கள் அனைத்தும் தீர்ந்து போகவே கடனும்பட்டார். இந்நிலையிலும் அவர் அடியார்களுக்கு உணவளிப்பதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். M
ஒரு நாள் இரவு மழை விடாது பெய்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே வெள்ளப் பெருக்கு, கருங்கும்மென்ற இருள். மாறனாரும் கதவை அடைத்து உள்ளே துயிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்! அப்போது கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. விரைவாகச் சென்று கதவைத் திறந்தார் மாறனார். மழையில் நனைந்து வந்த சிவயோகியார் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட மாறனார், முகம் மலர்ந்து, இன்னுரை கூறி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். உடனே அவருக்கு வேறு உடை கொடுத்து அவரது மேனியின் ஈரம் மாற்றி அணியச் செய்தார்.
இந்து ஒளி

று, மற்றும் புராணக் கதைகள்
ாங்கள் அலங்கரிக்கின்றன. எதிர்பார்க்கப்படுகிறது.
ITGITIt
அவரது தோற்றத்தைப் பார்த்த மாறனார், அவர் பசியோடுதான் வந்திருக்க வேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொண்டார். அவரது பசியைப் போக்க வேண்டுமே என்ன செய்வது? வீட்டிலோ எதுவும் இல்லை என்பதையும் அவர் அறிவார். சிவயோகியாருக்கு அன்னம் பாலிக்க வேண்டும் என்றுள்ள ஆர்வம் மாறனாரைத் தம் மனைவியரோடு கலந்தாலோசிக்கத் தூண்டியது.
மனைவியார் அருகே சென்றார். “எப்படியும் சிவயோகியர் பசியை நீக்கவேண்டும். என்ன வழி?” என வினவினார்.
அவ்வம்மையார், தங்களுக்குத் தெரியாததா வீட்டின் நிலை? எதுவும் இல்லையே. அடுத்தவர்களிடம் கேட்கவும் வழியில்லை. நேரமும் நடுஇரவு. எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். எனக்கு ஒரு வழியும் தென்படவில்லையே” என்று கூறிச் சிந்தனையிலாழ்ந்தார்.
திடீரென அவ்வம்மையாருக்கு ஒரு வழி தென்பட்டது. ஆம் அதைத் தவிர வேறு எவ்வழியும் இல்லை. அவ்வாறே செய்ய வேண்டும் எனத் தம்முள் முடிவு செய்து கணவரைப் பார்த்துக் கூறுவார். “நாம் இப்போது எப்படியும் உணவு சமைத்து அடியாருக்கு அளித்தாக வேண்டுமெனில், எனக்கு ஒரு வழி தென்படுகிறது. அதாவது இன்று காலையில் தாங்கள் வயலில் முளைநெல்லை விதைத்தீர்களல்லவா? அதை எடுத்துக் கொண்டு வாருங்கள். எப்படியாவது நான் சமையல் செய்து விடுகிறேன்.”
மனைவியின் இம்மொழிகளைக் கேட்டதும் மாறனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஒர் அளவே இல்லை. சிவனடியாரின் பசிப் பிணியை எப்படியும் தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. மனைவியிட்ம், “இதோ போய் நான் நெல்லைக் கொண்டு வருகிறேன்,” எனக் கூறியவாறு வயலுக்குச் செல்ல ஆயத்தமானார்.
வெளியில் விடாது கடுமழை பெய்து கொண்டிருந்தது. எங்கும் வெள்ளப் பெருக்கு. வானத்தின் மையிருள் உருகி உலகமெங்கும் விரிந்து பரந்தது போல் இருளின் கொடிய ஆட்சி. இந்நிலை கண்டு மாறனார் தயக்கம் கொள்ளவில்லை. தலையில் கூடையொன்றைக் கவிழ்த்தியவாறு அந்த வெள்ளப் பெருக்கினூடே தடம் பிடித்து வயலை நோக்கி நடந்தார்.
அங்கு சென்றதும் மாறனார் கைகளால் நெல்லைச் சேர்த்துக் கூடையை நிரப்பினார். விரைவாக வீட்டை நோக்கி வந்து தாம் கொண்டு வந்த நெல்லை மனைவியார் கையில் ஒப்புவித்தார்.
அந்த அம்மையார் அந்நெல்லோடு சேறு கலந்திருப்பதைப் பார்த்து, அதைக் கழுவித் தூய்மைப்படுத்தினார். அதைப்
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 28
பக்குவமாய்ச் சமையல் செய்ய அடுப்புக்கு விறகு வேண்டுமே! அந்த மழையில் எங்கே போய் விறகெடுப்பது? மாறனார் தம் வீட்டுக் கூரையோடுள்ள கட்டைகளை அறுத்தெடுத்துக் கொடுத்தார். நன்றாகக் காய்ந்திருந்த கட்டைகளல்லவா அவை அவற்றைக் கொண்டு அம்மையார் அடுப்பில் தீ மூட்டினார். கணவர் கொண்டு வந்திருந்த முளை நெல்லை வறுத்துப் பதமாக்கினார். பின்னர் அதைக் குற்றி அரிசியாக்கி உலையிலிட்டு அன்னமாகச் சமைத்தார்.
வெறும் அன்னத்தை உணவாகக் கொடுக்க முடியுமா? அதற்குக் கூட்டாகக் கறி வேண்டுமல்லவா? மாறனாரின் மனைவியார் கணவரைப் பார்த்து, “சோறாகிவிட்டது. கறிக்கு இனி என்ன செய்வது?’ எனக் கேட்டார். உடனே மாறனார் பின் புறமுள்ள தோட்டத்துக்குச் சென்றார். அங்கே பாத்திகளில் தலை நீட்டிக் கொண்டு நின்ற கீரைகளைப் பிடுங்கிக் கொண்டு வந்து மனைவியின் கையில் கொடுத்தார். அவ்வம்மையார் அவற்றைக் கொண்டு பலவிதக் கறிகளாகப் பக்குவம் செய்தார்.
இவ்வாறு உணவு சமைத்த பின்னர் மாறனார் தம் துணைவியுடன் அடியார் துயின்றுகொண்டிருக்கும் இடம் வந்தார். அவரை நோக்கி, “பெருமானே, உணவு சமைக்கப்பட்டுவிட்டது. அமுதுண்ண எழுந்தருள்க’என அழைத்தார்.
மாமன்றச் செய்தி
திரகோணமனையின்ரிவர்
கடந்த டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த் வழங்கப்படுவதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவி அப்பியாசப் புத்தகங்களையும் அங்கு அனுப்பிவைத்திருந்தது
இந்த நிவாரணப் பொருட்கள் மாமன்றத்தின் அங்கத் பேரவையின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக் உபதலைவரும், சமய விவகாரக் குழுத் தலைவருமான திரு.
இது விடயம் தொடர்பாக, திருகோணமலை மாவ திரு. செ. சிவபாதசுந்தரம் பின்வரும் செய்திக் குறிப்பை அ
திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையி ஆலயத்தில் நடைபெற்ற மஞ்சள் நீராடல் திருவிழாவில் “சை செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் அவர்கள் சிறப்புச் சொற்ெ
மறுநாள் 6 திகதியன்று திரு. இராஜபுவனிஸ்வரன் அவ "திருக்கடலூரில் இருந்து திரியாய் வரை” என்ற சேவைத் ே 5.00 மணிக்கு குச்சவெளி பிரதேச செயலகத்தில் பி கலந்துரையாடியதுடன் மூதூர் பிரதேசத்தில் ஆற்றிய அரிய பேரவை சார்பில் திரு. க. இராஜபுவனிஸ்வரன் பொன்னாடை
ஏப்ரல் 12 திகதியன்று மூதூர் நவரெட்ணம் மண்டப சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பாதிக்கப்பட்ட குடும்பா இலங்கை இந்து மாமன்றத்தால் வழங்கப்பட்ட புதிய உடுபு புதிய உடுப்புகள் வழங்கப்பட்டன.
(இந்து ஒளி
 
 

அப்போது நிகழ்ந்த அதிசயத்தை என்னென்று சொல்வது? சிவனடியார் படுத்திருந்த இடத்தில் அவர் எழுந்திருக்கவில்லை. ஆனால் அந்த இடத்திலிருந்து பேரொளியொன்று கிளம்பியது. இதைக் கண்ட மாறனாரும் அவரது துணைவியாரும் திகைத்து மெய் சிலிர்த்து நின்றனர். இறைவரே சிவனடியாராகத் தங்கள் இல்லம் தேடிவந்ததையும், கிட்டுதற்கரிய அவரது திருக்காட்சியே தங்களுக்குக் கிடைத்ததையும் உணர்ந்த அவர்கள், எல்லையில்லாத இன்பம் எய்தி எம்பெருமானை வணங்கித் துதித்தனர்; வாழ்த்திப் புகழ்ந்தனர்.
மதிசூடிய பெருமான் மாறனாரைக் கனவில் நோக்கி, ‘அன்ப, அடியவர்களுக்கு அமுது படைத்த நீயே சிறந்த தொண்டன். நீ உன் மனைவியோடு எம் உலகு வருவாயாக! அங்கு குபேரன், உன் ஏவல் கேட்க நீண்ட இன்பத்தில் நிலைத்து வாழ்வாயாக’ எனக்
கூறி மறைந்தருளினார்.
இளையான்குடி மாறனார் பின்னர் இறைவன் திருவருள்படியே பேரின்ப வாழ்வில் திளைப்பாராயினர்.
பசிக்குதவும் பண்பாளர்களிடம் இறைவன் பேரன்பு கொள்வான் என்பதையும் அவர்களுக்கு நற்பேறுகளை வழங்குவான் என்பதையும் தெரிந்து கொள்கிறோமல்லவா?
த்தத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்கு
பது தடவையாகவும் உடுபுடவைகளையும் மாணவர்களுக்கான
|-
துவ சங்கமான திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் கப்பட்டது. இந்த நிகழ்வில் மாமன்றப் பிரதிநிதியாக மாமன்ற க. இராஜ புவனிஸ்வரன் கலந்து கொண்டார்.
ட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் னுப்பிவைத்துள்ளார்.
ன் உபயமாக 2005. 04, 05 திகதியன்று திருக்கோணஸ்வரர் வ சமயத்தின் இன்றைய நிலை” என்னும் பொருளில் சிவஞானச் பாழிவாற்றினார். களுடன் நாங்களும், சைவப் பேரறிஞர் குழுவினரும் இணைந்து தொலைநோக்கில் எமது பயணத்தை ஆரம்பித்து, அன்று மாலை rதேச செயலாளர் திரு. நடராசா அவர்களை சந்தித்துக் சேவையைப் பாராட்டும் வகையில் அவருக்கு இந்து இளைஞர்
போர்த்திக் கெளரவித்தார்.
த்திலும், பூநகர் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயத்திலும்
பகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு அகில வைகளுடன், இந்து இளைஞர் பேரவையின் அன்பளிப்பாகவும்
26 பார்த்திய வருடம் சித்திரை- ஆணி)

Page 29
இது மங்கையர்களுக்கான பக்கம். இந்தப் களிடமிருந்து ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்க்குப் பின் த
கலாநிதி மனோன்மணி சண்முகத்
šāērunu pā: உலகிலுள்ள சமயநெறிகளில் இந்துசமயநெறி காலத்தால் மிகவும் தொன்மையானது. இந்நெறியைத் தோற்றுவித்தவர் யார் என்பது சமய ஆய்வுகளால் நிறுவப்படாமை, அதனைத் துல்லிய மாகக் காட்டி நிற்கிறது. ஆனால் இந்து சமயம் ஒரு கருத்து நிலையாக அன்றி ஒரு வாழ்வில் நெறியாக இருப்பதை உலகம் முழுவதுமே உணர்ந்துள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பெரிதும் வளர்ச்சி பெற்றநிலையில் மனிதவாழ்க்கை அன்பு நெறியிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும் வேளை இது. மனிதவ்ாழ்வு அவலநிலைக்கு ஆளாகி நிற்கிறது. அதனைத் தீர்ப்பதற்கு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கின்றன. எனினும் அவற்றால் எதிர்பார்த்த பயன் கிடைக்காமையால் மனித வாழ்வை மேம்படுத்த வேறு முயற்சிகளை எல்லோரும் தேடுகின்றனர். இத்தேடல் பின்னோக்கி நகர்ந்த போது இந்துசமயத்தின் நெறிநின்று, முன்னோர் வாழ்வியல் பற்றிய தேடல் தொடர்கின்றது.
இந்து சமயத்தின் நெறி நின்ற அடியார் வாழ்க்கை வரலாறு பெரியபுராணம் என்னும் நூலிலே தொகுக்கப்பட்டுள்ளது. 63 மெய்யடியார்களின் வாழ்வியல் வரலாற்றைப் பெரியபுராணம் அழகு தமிழில் பதிவு செய்துள்ளது. அன்பு நெறிநின்ற வாழ்வியல் பின்வரும் தலைமுறையினர் வாழ்க்கையையும் நெறிப்படுத்தும் எனச் சேக்கிழார் எண்ணினார். காலச் சுழற்சியில் மக்கள் வாழ்வியல் நெறி, இடையூறுகளை எதிர் கொள்ளும் போது அவற்றிலிருந்து மீள்வதற்கு ஒரு பற்றுக்கோடு தேவை. அந்தப் பற்றுக்கோடுதான் இந்துசமயம் காட்டும் வாழ்வியல் நெறியாகும். மனித வாழ்வியலின் அனைத்துத் தடங்களையும் அந்நெறி விரவிநிற்கிறது. எனவே பெரியபுராணம் காட்டும் அன்பு நெறிநின்றோர் வாழ்வியலை ஆழமாக உற்று நோக்கும் போது அது காட்டும் செம்மையான செயற்பாடு மனித வாழ்வியலைச் செம்மைப்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ளமுடிகின்றது. இந்து சமயம் மனிதவாழ்வியலுக்கு இன்றியமையாத பண்புநலன்களை வழிபாட்டு நெறி மூலம் காட்டுகிறது. வழிபாடு என்பது மனிதனின் தனிமுயற்சியாக இன்று கருதப்படுகிறது. ஆனால் அது ஒரு கூட்டுமுயற்சி என்பதைக் கோயில் வழிபாட்டின் மூலம் இந்துசமயம் விளக்கி நிற்கிறது. தலைமுறைக் கையளிப்பு நிலையில் வழிபாடு நடைபெற்றபோது மனிதவாழ்வு விழுமியங்களைக் கொண்டதாக விளங்கியது. அது பயிற்றிய அன்பு நெறி ஆண்டவனை அனைவரும் அறியவைத்தது.
அன்பு நெறி:
அன்பு நெறியை அறிந்தவர் வரலாறு இன்று படிக்கப்பட வேண்டியது. இறைவன் மீது ஆராத அன்பு கொண்ட அடியார்
இந்து ஒளி - 2

பக்கத்திற்கு மங்கையர்
TJTID
நாஸ்
பலர் முன்னே வாழ்ந்தனர். அவர்களுடைய அன்பு நெறி மிக இறுக்கமானது. கோயில் வழிபாடு என்னும் கூட்டுநிலை வழி பாட்டின் முழுமையை உணர்ந்தவரே இந்த அன்பு நெறி நிற்பவராவார். முன்னோர் காட்டிய வழிபாட்டு மரபுகள் பேணப்படாத போது முரண்பாடுகளும் தோன்றுவது இயல்பே. குடும்பநிலையில் கணவனும் மனைவியும் வழிபாட்டு மரபில் ஒன்றாத போது குடும்ப ஒற்றுமை குலைவுபடும். இத்தகைய நிலை இன்று வளர்ச்சியடைந்துள்ளது. கணவனும் மனைவியும் அன்பு நெறியில் ஒன்றிய சிந்தையுடையராக இல்லாவிடின் அங்கு முரண்பாடும் வேற்றுமையுமே தோன்றும். அது மானிட நிலையான அன்புத்தளையைக் கூட அறுத்தெறிந்துவிடும். எனவே அன்பு நெறியைச் செம்மைப்படுத்த முன்னோர்களின் வரலாற்றை மீண்டும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.
அத்தகைய வரலாறுகளில் பெரியபுராணம் பதிவுசெய்துள்ள மங்கையர்க்கரசியாரின் வரலாறு இன்றைய காலகட்டத்தில் ஒரு கலங்கரை விளக்காக நிற்கிறது. பாண்டிநாட்டிலே சைவசமயம் பேணப்படாத நிலை உருவாகி வளர்ச்சி அடைந்த போது அதனைக் காத்துநின்றவர் மங்கையர்க்கரசியார். சிவதர்ம வழியில் நின்று பணிசெய்தவர். அவரைச் சேக்கிழார் தாம் பாடிய பெரியபுராணத்திலே இருவகையாகப் போற்றியுள்ளார். ஞானசம்பந்தருடைய வரலாற்றைப் பாடும்போது முதலில் மங்கையர்க்கரசியின் சமயப்பணியை எடுத்துரைக்கின்றார். பின்னர் அவரையும் அடியார்களில் ஒருவராகத் தனித்துவமாகவும் பாடியுள்ளார்.
"மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர் திருக் குலக்கொழுந்து வளைகைம்மானி செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை நங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே நந்தமிழ்நாடுற்ற இடர் நீங்கித் தங்கள் பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரைப்
போற்றுவார் கழல் எம்மாற் போற்றலாமே.” மங்கையர்க்கரசியார் பெருமையைச் சேக்கிழார் விதந்து பேசுவதற்கு அவர் ஆற்றிய சமயத் தொண்டுதான் காரணம். நாட்டையும் குடிமக்களையும் நன்னெறியிலே செலுத்தவேண்டிய மன்னனின் வாழ்க்கைத்துணைவியாய்பணியாற்றும் மங்கையர்க் கரசியார் வாழ்வில் ஏற்பட்ட இடர் அவரைக் கணவரிடமிருந்து பிரித்தது.
குடும்பம் என்ற உறவு நிலையில் அவர் மன்னனுக்கு மனைவி. ஆனால் தன் கணவன் சைவசமய நெறியைத் துறந்து சமணசமய நெறியைப் பின்பற்றிய போது அவருடைய பணி மனைவி என்ற வரையறையையும் தாண்டி நாட்டுப்பணியாகிற்று. தன்னையும் காத்து தன்னுடைய கணவனையும் பேணி
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 30
சைவசமயத்தையும் பேணி பாண்டி நாட்டையும் காக்கப் பணி செய்ய வேண்டிய வரானார். இடர்கள் மலிந்த வேளையில் சைவநெறியை மீண்டும் பாண்டிநாட்டிலே நிறுவப் பணி செய்த ஞானசம்பந்தரின் பதிகத்தில் மங்கையர்க்கரசியாரின் காலம் உணர்ந்த பணி குறிப்பிடப் பட்டுள்ளது. தலங்கள் பலவற்றை வலம்வந்து பாடிய சம்பந்தர் பாண்டி நாட்டுத்தலங்களை வழிபடச் சென்றபோது அங்கு மன்னனும் மக்களும் மனம்மாறி சமணசமய நெறியிலே சென்றிருந்தனர். ஆனால் பாண்டிய மன்னனின் மந்திரி குலச் சிறையும் மனைவி மங்கையர்க்கரசியும் மனந்தளராது சைவநெறி நின்றது கண்டு சம்பந்தர் வியந்தார். மதுரைக் கோவிலில் தனியாளாக மனமுருகி வழிபட்டு நின்ற மங்கையர்க்கரசியின் கோலம் அவள் குணஇயல்பைக் காட்டச் சம்பந்தர் அவர் தொண்டைப் பாடினார்.
தாய்க்குப் பின் தாரம்' என்ற மூத்தோர் சொல்லறத்தைப் பேணும் மங்கையர்க்கரசி கணவன் பேணும் பிறசமய நெறியிலிருந்து அவனை மீட்க நினைத்த செயல் சம்பந்தரைப் பாடவைத்தது. திருவாலவாய் கோவிலில் மங்கையர்க்கரசி மன உறுதியோடு நாள்தோறும் பரவி நின்ற காட்சி வழிபாடு எல்லா இடர்களையும் தீர்க்கும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துவதாக இருந்தது. எனவே அவள் கோலத்தையும் செயற் பாட்டையும் கணவனை மீண்டும் நன்னெறியிலே செலுத்தப்படும் பாட்டையும் பாடினார். "மங்கையர்க்கரசிவளவர்கோன்பாவைவரிவளைக் கைம்மடமானி பங்கையச் செல்விபாண்டிமாதேவிபணிசெய்துநாள்தொறும் பரவ”
"செய்ய தாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதற் செல்வி பையரவல்குல் பாண்டிமாதேவிநாள்தொறும்பணிந்து இனிது ஏத்த”
"செந்துவர் வாயாள் சேவன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் பந்தனை விரலாள் பாண்டிமாதேவிபணிசெயபாரிடைநிலவும்”
"முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க பத்தியார்கின்றபண்டிமாதேவிபாங்கோடுபணிசெயநின்ற”
“மண்ணெல்லாம்நிகழ்மன்னனாய்மன்னும்மணிமுடிச்சோழன்தன் மகனாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவிபாங்கினாற்பணிசெய்து பரவ” எனச் சம்பந்தர் பதிகத்திலே மங்கையர்க்கரசியாருடைய பணியைப் பிறர் அறியச் செய்தார். ta
குடும்பநிலையிலே பெண்களின் கடமைகள் முடங்கிவிடும் மரபு ஒன்றைச் சம்பந்தர் தன்னுடைய தாயின் பணியிலே கண்டார். தந்தையின் வழிபாட்டுக் கடமைகள் செவ்வனே நிறைவேறத் தாய் செய்த நாளாந்தக் கடமைகள் சம்பந்தர் மனதிலே ஆழமாகப் பதிந்திருந்தன. தோணியப்பரை வழிபட்ட தனது தாயையும் திருவாலவாயனை வழிபடும் பாண்டியனின் தாரத்தையும் மனதுள் ஒப்பிட்டுப் பார்க்கிறார். பிறசமயநெறியின் நிழல் கூடப்படாத தோணிபுரத்தில் சம்பந்தரின் தாய் பகவதி தந்தையுடன் இணைந்து சென்ற அன்புநெறி சம்பந்தரை உருவாக்கியது. வழிபாட்டினால் எதையும் பெறலாம் அசையாத நம்பிக்கையை ஊட்டியிருந்தது. அதே உறுதியான உள்ளத்தோடு மனம் தளராமல் பாண்டியனின் தாரமான மங்கையர்க்கரசி செய்த வழிபாடு சம்பந்தர் மனதைத் தொட்டது. பெண்மையே வழிபாட்டைப் பேணவல்லது என்பதை உணர வைத்தது.
மங்கையர்க்கரசியின் கோவில் வழிபாட்டு மரபு ஒருதனி மரபாகியது. தீயநெறியில் செல்லும் கணவனை நன்னெறிப்படுத்த
(இந்து ஒளி

தெய்வம் உதவும் என்ற கோட்பாட்டை உருவாக்கியது. பாண்டிமாதேவியின் தொடர்ந்த கோவில் வழிபாடு பிறசமயநெறி பரப்பும் இடமாக ஆலவாய் மாறிவிடாமல் தடுத்துநின்றது. மணிமுடிச் சோழன் மகளாகிய மங்கையர்க்கரசி வழிபாட்டு மரபில் வளர்ந்தவள் தன் தாயின் வளர்ப்பு நிலையிலும் சூழலிலும் வழிபாடுதான் வாழ்க்கையின் அடித்தளம் என்பதை நன்கு உணர்ந்தவள். எனவே தாரம் என்ற நிலையில் தன்பணியைத் துணிவோடு தொடர்கிறாள். மங்கையர்க்கரசியாரின் வரலாற்றில் இப்பணி மிகமுக்கியமானது. “பாண்டிய மன்னனின் தாரம்” என்ற நிலையில் தனது கடமையைச் செய்யும் அவருக்கு கோவிலை நாள்தோறும் சென்று வழிபடுவது முக்கிய பணியாக இருந்தது. எல்லாத்திசையினரும் வழிபடும் திருக்கோயில் திருவாலவாய். அதனை வணங்கி தமிழால் இசைமாலை சூட்டி வழிபட வந்த சம்பந்தர் மங்கையர்க்கரசியாரைக் கண்டார். இக்காட்சியைச் சேக்கிழார் பாடும் போது மங்கையர்க்கரசியின் நிலையைத் “தெள்ளுநீர் விழித் தெரிவையார்” எனக் குறிப்பிடுகின்றார். தெரிவை என்றால் 25-31க்கும் இடைப்பட்ட வயதினர் என அகரமுதலி விளக்கம் தருகிறது. எனவே சம்பந்தரை விட மங்கையர்க்கரசியார் வயதில் மூத்தவர். அவருக்குத் தாய் போன்றவர். அந்தத் தாய்மை பாண்டியன் தாரமானதால் துன்புற்று நிற்பது சம்பந்தருக்குத் தெளிவாகத் தெரிந்தது. கணவனும் மனைவியும் ஒன்றாக வழிபடும் மரபு மாறி மங்கையர்க்கரசி தனியாளாக வழிபாடு செய்வது சம்பந்தருக்குத் துன்பந்தந்தது. பெண்மையின் தாய்மை வருந்துவதை அவர் கண்டார். அந்த வருத்தத்தை நீக்க வேண்டுமென உறுதி பூண்டார். குலச்சிறையாரிடம் அவர் கூறியது இதனை உணர்த்துகிறது.
“செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையிர் உமக்கும் நம்பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே” இளவல் சம்பந்தரின் இறை அன்பு மங்கையர்க் கரசிக்கும் குலச்சிறைக்கும் உற்ற துணையாய் நின்றதால் பாண்டியன் பிறசமய நெறியைத் துறந்து மீண்டும் சைவநெறிக்குத் திரும்பினான். அவன் திரும்பியதால் நாடு முழுவதுமே திரும்பியது.
fibünün5UTûl:
இன்று இந்துசமய நெறியின் மேன்மை அறியாதாரை நன்னெறிப்படுத்தும் பணியொன்று எம்முன்னே காத்துக் கிடக்கிறது. மனித வாழ்வியலைச் செம்மைப்படுத்தும் நன்னெறி பற்றிய தெளிவை எல்லாருக்கும் எடுத்துரைக்க வேண்டியது எமது கடமையாகும். குறிப்பாக வீட்டிலும், ஊரிலும், நாட்டிலும் இந்து சமய நெறியை விளக்க வேண்டிய பொறுப்பு மகளிர்க்கே உரியது. குழந்தைப் பருவத்தினர்க்குத் தாயாக நின்று புகட்ட வேண்டி யுள்ளது. வாழ்க்கைத் துணைக்குத் தாரமாகி நின்று ஆற்றுப்படுத்தவேண்டியுள்ளது. வழிபாட்டுக் கடமைகளைக் குடும்பமாகச் செய்ய வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டு ஒரு நன்னெறியைப் பேணக் கோவில் வழிபாடு குடும்பநிலையில் பேணப்பட வேண்டும். குழந்தையும், இளமையும், முதுமையும் இணையக்கூடிய சமநிலையில் உணரக்கூடிய வழிபாட்டின் செல்நெறியைப் பேணுவது இன்று இன்றியமையாதது. பெரிய புராணம் கூறும் வரலாறு வெறும் கட்டுக்கதையல்ல. குடும்ப நிலையில் நன்னெறி வயப்பட்ட வாழ்க்கையின் பதிவுகளே அவற்றை ஆழ்ந்துபடிப்பதன் மூலம் எமக்கான வாழ்வியல் நள் னெறியை நாம் நன்குணரமுடியும். இந்துசமய நெறியின் கானம் கடந்த நிலைத்திருப்பையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
s பார்த்திப வருடம் சித்திரை- ஆவி)

Page 31
இலங்கையில் ஆதீனப் ருமத் சுவாமிநாத தம்பிர
செஞ்சொற் செல்வர் ஆறு திருமு
சித்தாந்த சைவம் மிக மிக தொன்மையானது. அது தொன்மைக்கும் அது பரந்து நிலவிய தன்மைக்கும் சிந்து வெளி நாகரிக ஆராய்ச்சி முடிவுகளும் உறுதியளிக்கின்றன. சைவ நெறியில் மக்கள் வாழ்வதற்கும் அதினின்று விலகியிருப்போருக்கு உய்வு நெறி காட்டுவதற்கும், உறுதுணையாய் இருப்பவை சைவ ஆலயங்கள், சைவப்பள்ளிக்கூடங்கள், சைவ ஆதீனங்கள் என்பன. ஆதீனங்கள் பக்தியை, பண்பை வளர்க்கவும், பள்ளிக் கூடங்கள் அறிவை வளர்க்கவும் பெரிதும் உதவுவன.
முதலாவது ஆலயம் எங்கே எப்போது கட்டப்பட்டது என அறுதியிட்டுக் கூற முடியாது. எனினும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே அது இருந்தது என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர். முதலாவது சைவப் பாடசாலை கல்லால் மர நிழலின் கீழ் நான்கு மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்டது. காலம் எதுவெனக் கணிப்பிட முடியவில்லை. முதலாவது ஆதீனம் பன்னூற்று ஆண்டுகட்கு முன்னர் மதுரையில் தொடங்கப் பெற்ற திருஞான சம்பந்தர் ஆதீனம் ஆகும். இது மங்கையற்கரசியாரின் வேண்டுகோளிற்கு இணங்க திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் மதுரைக்கு எழுந்தருளி வந்து தங்கியிருந்ததும் சமணரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுமான மடத்தில் தொடங்கப்பெற்றது. ஆதீன பரம்பரையில் தற்போது பீடாதிபதியாக அருள் ஆட்சி செய்பவர் 292வது குருமகா சந்நிதானம் ஆவார். மதுரை ஆதீனம் தோன்றிய பின் சைவத்துறை விளங்கும் பொருட்டு அருளாளர்களால் வேறும் பல ஆதீனங்கள் அவ்வப்போது தொடக்கப் பெற்றன. இவற்றுள் திருவாடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம், காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் என்பன சில. தமிழ்நாட்டில் பல்வேறு ஆதீனங்கள் தோன்றிப்பலகாலமாகப் பணி புரிந்து வருகின்றவேயெனினும் தேவாரப்பாடல் பெற்ற திருக்கேதீச்சரம், திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆகிய ஸ்தலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நமது நாட்டில் ஓர் ஆதீனம் இல்லாமை பெருங்குறையாக இருந்தது. சைவத்துக்கும், தமிழுக்கும் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துச் சேவை செய்த நல்லைநகர் பூநீலழநீஆறுமுக நாவலர் அவர்களே இக்குறையை வெளிப்படுத்தி மனம் மிக வருந்தினார்கள்.
ஈழத்துச் சைவ நன்மக்களின் தவப்பயனாக 1966 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தை பூரீமத் சுவாமிநாத தம்பிரான் ஸ்வாமிகள் நிறுவினார்கள். இவர்கள் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் மகா சந்நிதானத்தை குருவாகப் பெற்று மந்திரோபதேச காஷாயமும் வாங்கிக் கொண்டார்கள்.
இந்து ஒளி 2

) அமைத்த
ான் சுவாமிகள்
ருகன்
தம்பிரான் ஸ்வாமிகள் 1977ம் வருடம் ஆவணி மாதக் கார்த்திகை நட்சத்திரத்தில் நல்லை ஆதீனக் குரு முதல்வராக அபிஷேகம் செய்து பூரீலழரீ ஸ்வாமிநாததேசிக ஞான சம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் எனத் திருநாமம் கொண்டார்கள்.
சித்தாந்த வித்தகர் பிரம்மழரீ செந்திநாத ஐயர், இலக்கணப் பேரறிஞர் வித்துவான் கணேச ஐயர் ஆகியோரது பேரனான பிரம்மழரீ செல்லையாக் குருக்கள், கனகாம்பாள் அம்மை ஆகியோருக்கு மகனாக யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் பிறந்தவர் சிவசுப்பிரமணிய ஐயர். இவர் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாசாலையிலும், யாழ். இந்துக் கல்லூரியிலும் கல்விபயின்று தமிழ், ஆங்கிலம், சஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் பயிலும் காலத்தில் அவரது நாட்டம் புகழ் பெற்ற சங்கர சுப்பையர் சுவாமிகளின் இன்னிசை விரிவுரைகளிலேயே சென்றது. இக்கலையில் அந்நாட்களில் தன்னிகரற்று விளங்கிய சுவாமிகள் சைவத்தையும் சைவத் திருமுறைகளையும் யாழ்ப்பாண மக்களின் நெஞ்சில் பதித்தார். இவருடைய பிரசங்கங்கள் எங்கு நடந்தாலும் நிழல் போல் இவரைத் தொடர்ந்து சென்று அனுபவித்து வந்தான் சிறுவன் சிவசுப்பிரமணியன். அவரைப் போல் தானும் கதை செய்ய வேண்டும் என்ற பேரவா சிறுவனைப் பிடித்துக் கொண்டது. சிறுவனின் ஆர்வத்தை அறிந்த சுவாமிகள் தமக்குப் பின் இக் கலையில் புகழ் பெற்று விளங்கக் கூடியவன் என அவர் உள்ளுணர்வு தெரிவித்தமையால் மணி ஐயருக்கு தமது சுருதி வாத்தியத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.
தமது பதினெட்டாவது வயதில் இன்னிசை விரிவுரை நடத்த தொடங்கிய சிவசுப்பிரமணிய ஐயர் நாளடைவில் சுவாமிகளின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகுந்தவர் ஆனார். வண்ணை சி. எஸ். எஸ். மணி ஐயர் என்ற பெயரில் புகழடைந்த இவர் நாடகம், நடனம், ஒவியம் ஆகிய துறைகளில் சிறந்த விற்பன்னராயிருந்தார். தமது முறைப் பெண்ணான யோகாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்று முருகானந்த சர்மா என்பவரைப் புத்திரராகப் பெற்றார். மணி ஐயரின் கதாப்பிரசங்கங்கள் பிரபல்யமடைய அவர் மணியாகவதர் ஆனார். அவரது கதாகலாட்சேபங்கள் இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் பெரிதும் மக்களை கவருவதாயிற்று. கந்தபுராண, பெரியபுராண, திருவிளையாடற்புராண பிரசங்கங்களும் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களின் தொடர் கதாப்பிரசங்கங்களும் பலப்பல முறைகள் செய்துள்ளார். இராமாயணம் தொடர் பிரசங்கம் இருபத்தைந்து முதல் நாற்பது நாள் வரை நீடிக்கும். இதனை 40 தடவைக்கு மேல் செய்துள்ளார். இவரது இன்னிசை
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 32
விரிவுரைகளில் திருமுறைகள், திருப்புகழ், அநுபூதி, அலங்காரம், அபிராமியந்தாதி, பிள்ளைத் தமிழ் ஆகிய எல்லாம் பொங்கி வழியும். தத்துவார்த்த விளக்கம் நிறைந்திருக்கும். பக்திச் சுவை நிறைந்த இவரின் விரிவுரைகள் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீன 291வது குருமகா சந்நிதானமான பூரீலழரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகள் திருவுள்ளத்தில் ஒரு குறிப்பை தோற்றுவித்தது. அதன் பிரகாரம் மணி பாகவதர் 1966ம் ஆண்டில் இல்லற வாழ்வைத் துறந்து சந்நிதானத்திடம் மந்திரோபதேசமும், காஷாயமும் பெற்று குருமகா சந்நிதானம் ஆனார்.
நல்லை ஆதீனம் பொருள் வளம் படைத்ததன்று. ஆயினும் அருள் வளம் நிரம்பவுடையது. பணம் இல்லையெனினும் அங்கு பண்பு நிலவுகிறது. ஆதீன சம்பிரதாயங்களைக் கட்டிக் காத்து வருகின்றது. நல்லை ஆதீன முதல்வர் போன்று சமயப் பிரச்சாரத்துக்காக மன, மொழி, மெய்களால் அரும்பாடுபட்ட ஆதீன கர்த்தரின் ஆதீனப் பணிகள் பெருகிக் கொண்டே வந்தன. ஆதீனத்தில் மூர்த்திகளுக்கு நடைபெறும் நித்திய, நைமித்திய
DITIDGörmoj
“இலங்கையில் இந்து சமயம்" நூல் விவளியீடு
அகில இலங்கை இந்து மாமன்றப் பொன்விழா நினைவாக பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் எழுதிய “இலங்கையில் இந்து சமயம்” நூல் வெளியீடும், அவரது சேவை நலன் பாராட்டு விழாவும் கடந்த மார்ச் மாதம் 19 திகதியன்று மாலை மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் மாமன்றத் தலைவர் திரு. வி கயிலாசபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தின் போது நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களும், இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஆத்மகனானந்தா மகராஜ் அவர்களும் ஆசியுரை வழங்கினார்கள்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் வாழ்த்துரையும் இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நூலின் வெளியீட்டுரையையும், யாழ். பல்கலைக் கழக தகைசார் ஒய்வு நிலைப் பேராசிரியர் சு. சுசீந்திரராஜா ஆய்வுரையையும், கொழும்பு பல்கலைக் கழக கல்விப்பீடப் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் மதிப்புரையையும் வழங்கினார்கள்.
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் நன்றியுரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் இராப்போசனமும் வழங்கப்பட்டது.
(இந்து ஒளி V
 

பூசைகளைத் தவிர இலவச சமய தீட்சை, விசேட தீட்சை, உபநயனம், திருமணக் கிரியை, வேதபாராயணம், திருமுறைப்பாராயணம், சமயாட வகுப்புக்கள், யோகாசனம் போன்றனவும் மகேசுவரபூசை, மகாநாடுகள், விழாக்கள்,யாத்திரிகர்களை உபசரித்தல் முதலியனவும் ஆதீனப் பணிகளுள் சில.
தொடங்கப்பெற்ற ஆதீனம் தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற பெருவிருப்பு ஸ்வாமிகள் திருவுள்ளத்தில் இருந்ததால் சிறியவர்களும், பெரியவர்களுமான பலரை ஆதீனத்தில் சேர்த்து உணவும், உறையுளும் வழங்கி அவர்களை சிவப்பணியில் ஈடுபடுத்த முயன்றார்கள். சுவாமிகள் தெரிந்தெடுத்த சிறுவன் சுந்தரலிங்கத்தை தமது ஞான பரம்பரைக்கு உகந்தவன் என கண்டு 7.4.1977ல் மந்திரோபதேசம் செய்தார். இவரே இன்றைய ஆதீன முதல்வர். இவர் சிறந்த சிவபக்தர், பண்பாளர், அமைதியாகப் பேசுபவர், பழக இனியவர், பார்வைக்கு எளியவர். இவர் சிவபூசை செய்வதைக் காண்போர் பரவசமடைவர்.
(நன்றி சிவயோகம் (லண்டன்)2001)
வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை நினைவுப் பேருரை
மாமன்றத்தின் பராமரிப்பிலுள்ள இரத்மலானை மாணவர் விடுதியின் ஏழாவது ஆண்டு நிறைவு விழாவும் வைத்திய கலாநிதி க.வேலாயுதபிள்ளை நினைவுப் பேருரையும் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதியன்று காலை இரத்மலானை கொழும்பு இந்து கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் நடந்த மேற்படி நிகழ்வில் இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரி அதிபர் திரு. ந. மன்மதராஜன் வரவேற்புரையையும், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் பூநீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசியுரையையும் வழங்கினார்கள்.
இந்த வைபவத்தில் வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியர் திரு. வி. தேவராஜ் “மக்கள் சேவையில் இந்து நிறுவனங்கள்” என்ற பொருளில் பேருரையாற்றினார்.
மார்ச் மாதத்தில் பிறந்த விடுதிப் பிள்ளைகளுக்கான பிறந்த தின வைபவமும் சிறப்பு அம்சமாக இடம்பெற்றது.
மாமன்ற விடுதிகள் குழுச் செயலாளர் திருமதி. அ. கயிலாசபிள்ளை நன்றியுரை வழங்கினார்.
இரத்மலானை இந்துக் கல்லூரி மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது.
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 33
அகில இலங்கை இந்து
நடத்திய சிவதொண்டர் அணி பயி
அகில இலங்கை இந்து மாமன்றம் கடந்த ஏப்ரல் 20ம் திகதியிலிருந்து 23ம் திகதி வரையிலான நான்கு நாட்கள் இரத்மலானை இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவதொண்டர் அணி பயிற்சிப் பட்டறையொன்றை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது.
பயிற்சிப் பட்டறையில் பங்குபற்ற வந்தவர்களுக்கு முதல் நாளன்று காலை 9.00 மணியளவில் தீட்சை வழங்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு மகளிர் இந்து மன்றத்தினர் நிறைகுடம் வைத்தல், தோரணம் கட்டுதல், கோலம் போடுதல் போன்ற விஷயங்களை விளக்கும் வகையிலான செயற்பயிற்சி அமர்வு ஒன்றை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் தொடக்க நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. இறைவழிபாடு, கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல் என்பவைகளைத் தொடர்ந்து மாமன்ற உபதலைவரும், இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி அதிபருமான திரு. ந. மன்மதராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். “சைவத்தையும் தமிழையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து தொண்டர்களை அழைத்து ஆன்மீகப் பயிற்சிகொடுப்பதன் மூலம், அவர்களது பிரதேசங்களிலும் மாமன்றத்தின் சேவை விஸ்தரிப்பதுடன் சிறந்த சிவதொண்டர்களையும் உருவாக்கும் பணியைச் செய்கிறது” என்றார் திரு. 叶 மன்மதராஜன்.
நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ், "காலத்தின் தேவையை உணர்ந்து மாமன்றத்தினர் இந்தப் பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள். இது ஒரு அவசியமான - ஆனால் கடினமான பணியாகும். தொண்டு என்பது ஒரு வழிபாடு. இறை வழிபாடு நமக்கு இயல்பாக அமைந்ததொன்றாக இருக்கிறது. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய பழக்கமோ பயிற்சியோ நமக்கு குறைவு என்பதாலேயே இந்த சிவதொண்டர் அணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்குச் செய்யக் கூடிய வழிபாடு. இறைவனால் அளிக்கப்பட்ட இந்த வாழ்க்கையின் பயனை நாம் இறைவனுக்கே கொடுக்க வேண்டும். இப்படி ஒருவரையொருவர் ஆதரித்து வாழக்கூடிய நிலைப்பாடு எந்தளவுக்கு அமைகிறதோ, அந்தளவுக்கு இந்த வாழ்க்கையானது எல்லா நலன்களையும் வழங்கும்” என்று குறிப்பிட்டார்.
நல்லை ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது ஆசியுரையின் பொது “நல்ல சிந்தனைகளைக் கொண்டிருக்கும் அகில இலங்கை
இந்து ஒளி

1 IDITIDörpfD +
bjů LIL6))
இந்து மாமன்றம் சமயத்தின் ஊடாக தன்னாலான சிறப்பான பணிகளை இந்த நாட்டுக்குச் செய்து கொண்டிருக்கிறது. ஆறுமுகநாவலரின் எண்ணக் கருவாக இருந்தது இந்த சிவதொண்டர் அணி என்கின்ற முயற்சி. இது நீண்டதொரு வரலாறு. நாவலரின் கனவு இன்று நனவாகிக்கொண்டிருக்கும் சூழ்நிலையை நாம் பார்க்கிறோம். அன்று தனிமனிதனாகவிருந்து நமது நாட்டிலே சமயத்தை நெறிப்படுத்திய ஒரு காலம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததே. எங்கள் சமயத்தினுடைய அடையாளங்களை வெளிப்படுத்துவதுடன், சமய நெறிகாட்டலை மேலெடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் சிவதொண்டர் அணியின் கருத்தாகும். பயிற்சியிலே பெறுகின்ற அனைத்து விஷயங்களையும் நீங்கள் மனதிலே வைத்துக் கொண்டு சேவை செய்வதுடன் கஷ்டமான நேரத்தில் செய்கின்ற தொண்டின் ஊடாக சமயத்தினுடைய சிறப்பையும் வெளிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு அம்சமாக கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் “சிவதொண்டர் அணியின் அவசியமும் கடமையும்” எனும் பொருளில் சிறப்புரையாற்றினார். “இது மிகப் பெரிய முயற்சி. சிவதொண்டர்களாக இந்து மத தொண்டர்களாக ஆகுவது இலகுவான காரியமல்ல. நாங்கள் எங்களுடைய பாரம்பரியங்களையும் பண்பாட்டையும் ஒதுக்கிவைத்துவிட்டு மேலைத்தேய நாகரிகத்திற்கு என்றைக்கு எம்மை அடகுவைத்தோமோ, அன்றைக்கு உண்மை விழுமியங்கள் அத்தனையையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். அந்த உண்மை விழுமியங்களை வெளியில் எடுத்து, அதற்கு உயிர்கொடுக்கின்ற முயற்சிதான் இந்த சிவதொண்டர் அணி என கருதலாம். தமிழ் மரபில் - சைவ மரபில் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதோ என்கிறார் ஒளவையார். தொண்டர்களைப் பற்றி புராணம் பாடியவர் சேக்கிழார். திருத்தொண்டர் புராணம் என்று சிறப்பாகச் சொல்லப்படும் இதற்கு பெரிய புராணம் என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் மூலம் சைவமும் தொண்டர்களை சிவனிலும் மேம்பட்டவராகக் கருதுகிறது என்பது ஒரு சான்று. சைவத்தின் தொண்டர் அணி சைவத்தின் பெருமையைக் காட்டவேண்டும். ஆத்ம பலம்தான் தொண்டர் அணியின் பக்க பலமாக இருக்கவேண்டும். எந்தப் பெரிய எதிர்ப்பையும் ஆத்ம பலத்தினால் தடுத்து நிறுத்தமுடியும்” - இவ்வாறு கம்பவாரிதி இ.ஜெயராஜ் தனது சிறப்புரையின் போது தெரிவித்தார்.
முதல்நாள் நிகழ்வில் “நாவலர் காட்டிய வழியில் சமயப்பணி” எனும் பொருளில் செஞ்சொற் செல்வர் لاال திருமுருகன்அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. அவரது உரையின்போது தெரிவித்த சில கருத்துக்கள் இவ்ை,
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 34
“மதமாற்றம் மட்டுமல்ல சமயத்தைப் பற்றியே சமயத்தவர்கள் அறியாத ஒரு பரிதாப நிலை இன்று வளர்ச்சிபெற்றுவிட்டது. சமய உணர்வு அற்றுப் போகின்ற நிலையிலே வாழுகின்ற போது, சமய உணர்வை ஊட்டுகின்றவர்களாக - தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேதான் இந்து மாமன்றம் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. நாவலர் வழியில் நின்று ஆற்றவேண்டிய உங்கள் தொண்டுக்காக இந்த நாடு காத்திருக்கிறது. நாவலர் சைவத்தைக் காப்பாற்ற வேண்டும், மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வகையில் புரட்சிகரமான சிந்தனைகளைக் கொடுத்து செயற்பட்டவர். கொட்டிலாலான கல்வி போதனை நிலையமொன்றை அமைத்து மாணவர்களுக்கு சமய அறிவைப் புகட்டியவர். கோவில்களிலே சமயப் பிரசாரம் செய்தவர். இதன் மூலம் கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்விகற்று வந்த பலர் நாவலரின் பாடசாலையில் இணைந்து கொண்டனர். சமய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார். நாவலரின் தனி மனித முயற்சி வெற்றி பெற்றது. அன்று சைவத்தைக் காப்பாற்றி அதனை வளர்த்தெடுக்க நாவலர் மேற்கொண்ட பெரும் தொண்டுதான் இன்று நம்நாட்டு புண்ணிய பூமியில் - மீண்டும் சிவபூமி என்கின்ற நினைப்பு மனதிலே வளருவதற்கு காரணமாக இருந்துள்ளது என்பதை சிறப்பாகச் சொல்லலாம்”
மாமன்ற உபதலைவரும், மாமன்ற சமய விவகார விழாக்கள் குழுத் தலைவருமான திரு. க. இராஜபுவனிஸ்வரன் வழங்கிய நிறைவுரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளுடன் முதல்நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
இரண்டாவது நாள் நிகழ்வு ஏப்ரல் 21ம் திகதி காலை 7.00 மணியளவில் திரு. ந. கார்த்திகேயன் வழங்கிய தியானப் பயிற்சியுடன் ஆரம்பமானது. தொடர்ந்து, பூசை வழிபாட்டின் பின்னர், நல்லை ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தலைமையில் அன்றைய காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. சுவாமிகள் தனது தலைமையுரையின் போது, “சமயத்தினுடைய அடையாளத்தை அணிகலங்களால் காட்டிக் கொள்ளலாம். இந்து மதத்திற்கான சில அடையாளங்கள் உண்டு. தொண்டர்களாகிய நீங்கள் இறைவழிபாட்டுக் கருமங்களை அடையாளங்களோடு செய்கின்றபோதுதான், ஏனைய மதங்களோடு நாங்களும் சரிசமமாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தலாம்” என்றார்.
கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் “சிவசின்னங்கள்” என்ற பொருளில் சிறப்புரையாற்றினார். “இந்த உடலோடு வாழுங் காலத்தில், பிறவியின் நோக்கத்தை நினைவுபடுத்துபவை, அதனை அடைவதற்கு எம்மை நெறிப்படுத்துபவை, வையத்தில் எம்மை வாழ்வாங்கு வாழ்விப்பவை, பரமபதியாகிய சிவபெருமானை ஒரு கணமேனும் மறவாதிருக்க அனுசரணையாக விளங்குபவை சிவசின்னங்கள். சைவசாதனங்களான இவை சிவனைக் குறித்து நிற்பதால் வணக்கத்திற்கும் வழிபாட்டுக்கும் உரியவை” என்று குறிப்பிட்டார்.
காலை தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து காலை 10.45 மணியளவில் மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினர் திரு.க.ஜெகதீஸன் தலைமையில் நண்பகல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
(இந்து ஒளி

மதிய போசனத்தை தொடர்ந்து, கொழும்பு மகளிர் இந்து மன்றத்தினரின் செயற்பயிற்சி அமர்வு இடம்பெற்றது. மாலை கட்டுதல், ஆரத்தி எடுத்தல், திருமண ஒழுங்குகள் போன்றவைகளுக்கான விளக்கங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.
அன்றைய தினம் மாலை நிகழ்ச்சியாக பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி தலைமையில் தலைமைத்துவப் பயிற்சி சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கி - சர்வதேச பிரிவின் தலைமை அதிகாரி திரு.எஸ்.இராகவன், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன் ஆகியோர் கருத்துக்கள் வழங்கினர்.
நிறைவு நிகழ்ச்சியாக அறநெறிப் பாடசாலை பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. கொழும்பு விவேகானந்தா கல்லூரி அதிபர் திரு.து.சந்தோஷம் தலைமை வகித்தார். இவர் தனது உரையில் “இக் கருத்தரங்கு மூலம் உங்கள் மனப்பாங்கு, எண்ணங்கள் மாற்றமடைந்து ஒரு நிறைந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். சமயஅறிவை கல்வி ஊடாகவும், செயற்பாடுகளின் ஊடாகவும் போதிக்கும் பொறுப்பு அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுடையது. இது சமூகத்துக்கும் சமயத்துக்கும் ஆற்றும் மிகப்பெரிய தொண்டர் சேவையாகும்” என்றார். இந் நிகழ்வில் கருத்துரை வழங்கிய, பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி ஆசிரியை திருமதி ஜெயபவானி சிவகுமார் “வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை சமய பழக்க வழக்கங்களை ஆரம்பிக்கும் இடமாக அறநெறிப் பாடசாலைகள் இருக்கின்றன” என்று கூறினார்.
தொடர்ந்து கருத்துரை வழங்கிய இந்து சமய அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் பேசும்போது "அறநெறிப் பாடசாலைகளுக்கென்றே தனியான பாடத்திட்டம் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சமய அறிவை மட்டுமல்ல மாணவர்களிடையே ஒழுக்கத்தையும் பண்பையும் வளர்த்து சமுதாயத்திலே அவர்களை நல்லவர்களாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவை இயங்குகின்றன” என்று குறிப்பிட்டார்.
அன்றைய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாலை வெள்ளவத்தை மயூராபதி யூரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் திரு. பொன் வல்லிபுரம் அவர்களின் அழைப்பை ஏற்று பயிற்சித் தொண்டர்கள் தேவஸ்தானத்தின் மாலை நேர வழிபாட்டில் கலந்துகொண்டனர். அன்றைய தினம் இரவு அவர் பயிற்சித் தொண்டர்களுக்கு இரவுப் போசனம் வழங்கிக் கெளரவித்தார்.
மறுநாள் 23ம் திகதியன்று மூன்றாம் நாள் நிகழ்வுகாலை 7.00 மணியளவில் திரு.ந.கார்த்திகேயன் வழங்கிய தியானப் பயிற்சியுடன் ஆரம்பமானது. பூசை வழிபாட்டைத் தொடர்ந்து திரு. பொன் வல்லிபுரம் தலைமையில் காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இவர் தனது தலைமை உரையின் போது “தொண்டு செய்யும்போது ஆர்வம், துணிவு என்பன நெஞ்சில் தோன்ற வேண்டும். இறைவனுக்கு மட்டுமல்ல இறை பக்தர்களுக்கும் தொண்டு செய்வதன் மூலம் ஒருவன் முழுமை பெறுகிறான்” என்று குறிப்பிட்டார்.
வித்துவான் வசந்தா வைத்தியநாதன் “திருவுருவங்கள்” எனும் பொருளில் விளக்கவுரையாற்றினார். அவர் தனது உரையின்
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 35
போது “தொன்மையானதும் முதுமையானதுமான சைவசமயத்திற்கு அனைவரையும் அரவணைக்கும் தன்மை உண்டு. இறைவன் உருவமில்லாதவன் அவனை விக்கிரமாக வணங்குகிறோம்” என்று கூறினார்.
வாகீச கலாநிதிக. நாகேஸ்வரன்,திருமதி. எஸ்.இராமநாதன் ஆகியோர் வழங்கிய “பண்ணிசை” பற்றிய விளக்கம் அன்றைய காலை நிகழ்வின் சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது.
காலை இடைவேளையைத் தொடர்ந்து, மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் தலைமையில் “சிவதொண்டர் அணியும் மக்கள் எதிர்பார்ப்புகளும்” எனும் பொருளில் கருத்தரங்கு ஆரம்பமானது. மாமன்றத்தின் சமய விவகார விழாக்கள் குழுத் தலைவர் திரு.க. இராஜபுவனிஸ்வரன் ஆரம்பவுரை நிகழ்த்தினார். திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் திரு.செ.சிவபாதசுந்தரம், வீரகேசரி செய்தி ஆசிரியர் திரு.இ.பிரபாகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை அறிவிப்பாளர் திரு.முருகேசு ரவீந்திரன், சூரியன் எப்.எம் அறிவிப்பாளர் திரு. செல்வராசா நவநீதன், திரு.ஆறு திருமுருகன் ஆகியோர் இந்தக் கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொண்டு பல ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
மதிய போசனத்தின் பின்னர் மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் தலைமையில் “சிவதொண்டர் அணி இயங்குதல்” பற்றிய விளக்க நிகழ்வு இடம்பெற்றது. சமய விவகார, விழாக்கள் குழுத் தலைவர் திரு.க.இராஜபுவனிஸ்வரன், மாவட்ட, பிராந்திய கிராம ரீதியில் சிவதொண்டர் அணியின் செயற்பாடு,இயக்கம் என்பன பற்றிய முக்கியமான விளக்கங்களை எடுத்துச் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து திரு.க.இராஜபுவனிஸ்வரன், திரு.செ.தி.கனகலிங்கம் ஆகியோர் “திருமண சேவை’ பற்றிய மிகவும் பயனுள்ள விளக்கங்களை வழங்கினார்கள். தொடர்ந்து வைத்திய கலாநிதி. மு. கதிர்காமநாதன் “மருத்துவ சேவையும் முதலுதவியும்” சம்பந்தமாக விளக்கமளித்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளுடன் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
நிறைவு நாளான ஏப்பிரல் 23ம் திகதியன்று காலை நிகழ்ச்சிகள் திரு.ந.கார்த்திகேயன் வழங்கிய தியானப் பயிற்சியுடன் ஆரம்பமானது. பூசை வழிபாட்டைத் தொடர்ந்து மாமன்ற உபதலைவர் திரு. சின்னத்துரை தனபாலா தலைமையில் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் “சைவ நாற்பாதங்கள்” எனும் பொருளில் சிறப்புரையாற்றினார். அவர் “உலகத்திலே ஆன்மாக்களின் தரத்திற்கேற்ப வழிபாடு பிரிக்கப்படுகிறது. அப்படியான ஒரு சமயம் சைவசமயமாகும். அதிலிருந்து வந்தது சைவநாற்பாதம். எப்படி அவரவர் மனநிலை இருக்கிறதோ, அப்படியே கும்பிடப் பழகு என்று வகுத்தவைகள் தான் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாற்பாதங்களாகும்” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து “புராணங்கள் தரும் படிப்பினைகள்” என்ற பொருளில் புராண வித்தகர் மு.தியாகராஜா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தும் போது “புராணங்களில் ஆத்மீகமான சத்துப்
இந்து ஒளி
 

பொருட்கள் செறிந்திருக்கின்றன. இந்தக் காலத்தில் புராணப் படிப்பு குறைந்து வருகிறது. பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம் என்பனவற்றை இறைவனுடைய மூன்று கண்களாகச் சொல்லிப் போற்றுகிறோம்” என்று குறிப்பிட்டார்.
நண்பகல் நிகழ்வு மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினரும், இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி அதிபருமான திரு.ந. மன்மதராஜன் தலைமையில் ஆரம்பமானது.
“எமது சமய மேம்பாட்டுக்கு இளைய சமுதாயத்தின் பங்களிப்பு” எனும் பொருளில் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் சொற்பொழிவாற்றினார். அவர் பேசும்போது “நாட்டில் சைவத்தைக் காப்பாற்றி எங்கள் சமுதாயத்தை ஆற்றுப்படுத்துவதற்கு நல்ல ஆன்மீக தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரு பயிற்சியை இந்து மாமன்றம் வழங்குகின்றது. சமுதாயத்தில் ஒருவர் இலட்சியத்துடன் செயற்படுகின்றாரோ, அவர் அந்த இலட்சியத்தின் இலக்கை சென்றடைவார். இலட்சியமின்றி செய்யும் காரியம் வெற்றியைத் தராது. எமது நாட்டிலே இளைய தலைமுறையினர் சமயத்துக்காக அர்ப்பணிக்கின்ற தன்மை குறைந்து போய்விட்டது.
இந்தியாவில் பல ஆதீனங்கள் உண்டு. அந்த ஆதீன சுவாமிகளுக்குப் பின்னால் பத்து சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் அடுத்த சுவாமிகளாக வருவார். ஆனால் இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு ஆதீனம் நல்லூரில் உண்டு. ஆதீன சுவாமிகளுக்கு அடுத்ததாக இன்னுமொரு சீடன் அவரது ஆச்சிரமத்தில் சேரவில்லை. தனக்குப் பின் ஆதீனத்தை யாரிடம் பொறுப்புக் கொடுப்பது என்பது அவரது கவலையாக உள்ளது. ஆனால் மற்ற மதங்களிலே அடுத்த பதவிக்காக இளைஞர்கள் திரண்டு நிற்கிறார்கள். இங்கு சமயத்துக்காக தங்களை அர்ப்பணிக்கின்றதன்மை இளைஞர்களிடம் அற்றுப்போய்விட்டது. இலட்சிய நோக்கத்தோடு இந்தப் பணிகளுக்கு வருகின்றவர்கள் இல்லை. அவர்கள் துறவறத்துக்குத்தான் வரவேண்டும் என்றில்லை. இல்லற தர்மத்தில் இருந்து கொண்டு இந்தப் பணிகளைச் செய்வதற்கு முடியும்” என்று குறிப்பிட்டார்.
இவரைத் தொடர்ந்து திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களும் திரு.க. இராஜபுவனிஸ்வரன் அவர்களும் “இறுதிக் கிரியைகள்” தொடர்பான காத்திரமான விளக்கங்களை வழங்கினார்கள். S.
மதிய போசனத்தைத் தொடர்ந்து சிவதொண்டர்களின் சேவை ஒழுங்கு பற்றிய கலந்துரையாடலும், எதிர்கால செயற்பாடுகள் பற்றிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிவதொண்டர்கள் வைத்தியசாலைக்கும், சிறைச்சாலைக்கும் சென்று எத்தகைய பணிகளில் ஈடுபடவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டி திரு.க. இராஜபுவனிஸ்வரன் வழங்கிய உரை மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.
வேதாகம வித்தியா பூஷணம் பிரம்மபூரீ விஸ்வ நாராயண சர்மா அவர்கள் வீட்டுப் பூசை பற்றிய விளக்க உரையை வழங்கினார்.
இதன் பின்னர் மாலை 5.00 மணியளவில் இரத்மலானை இந்துக் கல்லூரி மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பூரீகற்பக
பார்த்திய வருடம் சித்திரை- ஆணி)

Page 36
விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூசை வழிபாட்டைத் தொடர்ந்து பிரதம விருந்தினர், பிரமுகர்கள், மாமன்ற அங்கத்தவர்கள், சிவத்தொண்டர், பயிற்சியாளர்கள் உட்பட அனைவரும் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமையில் நிறைவு நிகழ்வு கோலாகலமாக ஆரம்பமானது. மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு க.பூரீபவன் அவர்கள் அடுத்ததாக உரையாற்றினார்.
"இளம் சந்ததியினருக்கு ஆன்மீக வளர்ச்சியையும், உள வளர்ச்சியையும் மட்டுமன்றி நிச்சயமாக சேவை மனப்பான்மையையும் வளர்த்தெடுக்கக் கூடிய ஒரு களமாகவும் இப் பயிற்சிப் பட்டறை அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அறநெறியில் ஒழுகச் செய்யும் நல்ல பழக்க வழக்கங்களை, பண்புடையவனாக வாழும் நல்வழியை, ஆற்றலை, ஆளுமையை இளமையிலேயே எமது சமுதாயத்துக்கு கற்றுக் கொடுப்பது
பொன்விழ
அகில இலங்கை இந்து
மக்களுக்கு வழங்கும் சிவெ
அகில இலங்கை இந்த மாமன்றம் யாழ்ப்பாணக் குடாநாட்டி மாதத்தில் ஆரம்பிக்கவிருப்பதாகவும், இதற்காக சுமார் நாற்பத ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமொன்று கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை இந்த மாமன்றம் ஏற்கனவே ஆரம்பித்து அங்கமாகவே இந்த அம்புலன்ஸ் சேவையும் அமைகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இயங்கும் முன்வந்திருக்கின்றன என்பது சிறப்பான செய்தியாகும்.
கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் மாமன்றத் தலைவ கந்தையா நீலகண்டன் ஆகியோர் நல்லை ஆதீன முதல்வர் முன்னிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள இந்த மத நிறுவன யாழ், குடாநாட்டு மக்களுக்கு ஓர் அம்புலன்ஸ் வாகனம் அ வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமயப் பணிகளில் மட்டுமல்ல சமூக நலப் பணிகளிலும் த இந்த மாமன்றம் இவ்வருடம் ஐம்பது ஆண்டுகளை நிறை6 செய்தியாகும். மாமன்றத்தின் இத்தகைய சிறப்பான புனிதப் பணி சமய நிறுவனங்கள் மற்றும் பொதநல அமைப்புகளையும்
(இந்து ஒளி

இன்றியமையாதன. இவற்றை மனதிலே கொண்டு இந்து மாமன்றத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த அரிய பணி மிகவும் பாராட்டப்படவும், போற்றப்படவும் வேண்டியதாகும். எமது தமிழ்க் கலாசாரம் தனித்தவம் மிக்கதாக அடையாளப்படுத்தப்பட வேண்டுமாயின் இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் எமது சமுதாயத்திற்கு கட்டாயமானதொன்றாகும்” என்று பிரதம விருந்தினர் தமது உரையின்போது குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாமன்ற அறங்காவலர் சபையினதும், முகாமைப் பேரவையினதும் உறுப்பினரும், சிவதொண்டர் அணி பயிற்சிக்கு வித்திட்டவருமான திருச. சரவணமுத்து அவர்களுக்கு மாமன்றத்தினால் “மூத்த சிவதொண்டர்” என்ற சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
சிவதொண்டர் அணி பயிற்சி பெற்றவர்களுக்கு திருமதி பூரீபவன் சான்றிதழ்களை வழங்கினார். மாமன்ற சமய விவகார விழாக்கள் குழுத் தலைவர் திரு.க. இராஜபுவனிஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மறுநாள் 24ம் திகதி காலை பயிற்சித் தொண்டர்கள் மாமன்ற உய செயலாளர் திரு கு. பார்த்தீபன் தலைமையில் பேராதனை குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
ா ஆண்டில்
மாமன்றம் யாழ். மாவட்ட தாண்டர் அம்புலன்ஸ் சேவை
டல் சிவதொண்டர் அம்புலன்ஸ் சேவையை எதிர்வரும் ஆகஸ்ட் லட்சம் ரூபா பெறுமதியான புதிய அம்புலன்ஸ் வாகனமொன்றை செய்யப்பட்டிருப்பதாகவும் மாமன்றப் பொதுச் செயலாளர் திரு.
செயற்படுத்திவரும் சிவதொண்டர் அணி சேவையின் இன்னொரு மாமன்றத்தின் இந்த பெரும் பணிக்கு இலங்கையிலும் மற்றும் மனிதநேய நிதிய அமைப்புகள் உதவியும், ஒத்தழைப்பும் வழங்க
திரு. வி. கயிலாசபிள்ளை, மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. (நீலறி, சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் களின் பிரதிநிதிகளையும், சமயப் பெரியார்களையும் சத்தித்தபோது, வசியம் என்பதனை செஞ்சொற் செல்வர் திரு. ஆறு திருமுருகன்
ாத செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் அகில இலங்கை செய்வதன் மூலம் பொன்விழா காணுகிறது என்பத மகிழ்ச்சியான களின் வளர்ச்சிக்கு தாராளமாக உதவும்படி நலன்விரும்பிகளையும், ாமன்றம் அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றது.
B4 பார்த்திய வருடம் சித்திரை- ஆணி)

Page 37
ஆனந்த தாண்
செல்வி சாந்தினி வாமதே (ஆசிரியை, அராலிஇந்துக்கல்லூ
இறைவன் அறுபத்துமூன்று உருவத்திருமேனிகளை தாங்கி ஆன்மாக்களிற்கு அருள் பாலித்த வண்ணம் உள்ளார். அத்திருமேனிகளில் உலக இயக்கத்திற்கு காரணமாக இருக்கும் வடிவமாக விளங்குவது நடராஜர் வடிவமாகும். இறைவனின் இத் திருமேனிசமயதத்துவக் கருத்துக்களையும், கலையம்சங்களையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தில்லை சிதம்பரத்திலே திருப்பாதத்தினை தூக்கிய வண்ணம் உலகினை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் மூலகர்த்தாவாக விளங்குகின்றார். “அவனின்றி ஓரணுவும் அசையாது” என்னும் உண்மையினை இவ்வடிவத்தின் மூலம் உணர்த்தப்படுகின்றது. சைவத்திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள், சாகித்திய கர்த்தாக்களின் பாடல்கள் என்பவற்றில் நடராஜ வடிவத்தின் தோற்றம், தத்துவம், சிறப்பான கலையம்சங்கள் என்பன தெளிவாக எடுத்துக் கூறப்படுகின்றது.
நடராஜர் திருவுருவ வழிபாட்டின் தொன்மை
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளிற்கு முன் காணப்பட்ட மொகஞ்சோதாரோ ஹரப்பா நாகரிகங்களில் உருவச் சிலைகள், சின்னங்கள் என்பவற்றில் நடராஜர் உருவத்தினை ஒத்த உருவச்சிலை கண்டெடுக்கப்பட்டமை இத்திருவுருவ வழிபாட்டின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது. வேத இலக்கியங்கள், இதிஹாசங்கள், புராணங்கள் என்பனவும் நடராஜர் திருவுருவ வழிபாட்டு முறையினை எடுத்துக் கூறுகின்றன. சிறப்பாக குப்தர் காலத்திலும் நடராஜர் சிலை அழகான முறையில் அமைக்கப்பட்டிருந்தமையை வரலாற்று ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன. V
தமிழ் நாட்டின் பல இடங்களில் நடராஜர் சிலை கிடைத்துள்ளது. வெண்கலம், கல், செப்பு, உலோகம் முதலியவற்றில் நடராஜரின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இலக்கிய சான்றுகளான சிலப்பதிகாரம், கலித் தொகை ஆகிய நூல்களிலும் நடராஜர் பற்றிய குறிப்புக்கள் உண்டு. கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப்பாடிய நல்லந்துவனார் சிவபெருமானைக் குறிப்பாக நடராஜராக வர்ணித்துள்ளார். காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் நடராஜப் பெருமானின் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
“இறவாத இன்ப அன்பு வேண்டிப் . அறவா! நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க என்றார்” என அம்மையார் வேண்டி வழிபட்டார் என சேக்கிழார் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலன் உரை செய்த மூவாயிரம் பாடல்களான திருமந்திரத்திலும் நடராஜத் திருவுருவத்தின் சிறப்புகளும், தத்துவ விளக்கங்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன. ஒன்பதாம் தந்திரத்திலே திருக்கூத்து தரிசனம் என்னும் பகுதியில் சிவானந்த
இந்து ஒளி s

L6 D
வன்
தரிசனம், சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்று கூத்தினை வகுத்துள்ளார். இதனை “சிற்பரஞ்சோதி சிவானந்தக் கூத்தினைச். ”என்ற பாடல் எடுத்துக் கூறுகின்றது.
திருமுறைகள், சைவசித்தாந்தங்கள் போன்ற பல சைவ நூல்கள் நடராஜப் பெருமானின் திருவுருவம், ஆனந்த தாண்டவம் பற்றி சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன. சோழப் பெருமன்னர் காலத்திலே மிக நேர்த்தியான நடராஜர் திருவுருவங்கள் வெண்கலத்தில் அமைக்கப்பட்டன. அத்துடன் சோழ மன்னர் சிவன்கோயில்களில் நடராஜருக்கென நிருத்தமண்டபம் என அழைக்கப்படும் மண்டபத்தினையும் அமைத்திருந்தனர்.
காலத்தால் முந்திய நடராஜத் திருவுருவம் சீயமங்கலம் குடை வரைக் கோவில் தூணில் உள்ளதாகும். இதில் நடராஜருக்கு நான்கு திருக்கரங்களும், இரண்டு பக்கங்களிலும் அவரை வணங்கும் இரு பக்தர்கள் உள்ளதாகவும் காணப்படுகின்றது.
நடராஜர் திருவுருவ அமைப்பு
முதன்மையான ஏழு தாண்டவங்களுள்ளும் ஆனந்த தாண்டவ வடிவமே சிறப்பான தாண்டவ வடிவமாகும். திருவுருவ அமைப்புகளின் அளவுப் பிரமாணங்களை ஆகமங்கள் கூறுகின்றன. அம்சுமத்பேத ஆகமம் நடராஜர் திருவுருவம் உத்தமதசம கால அளவிற்கு அமைவாக அமைதல் வேண்டும் என கூறுகின்றது.
மூன்று கண்கள், தலையில் கங்கை, பிறை, கழுத்தில், கைகளில் பாம்பு நான்கு கைகள், தூக்கிய திருவடி அரையில் புலித்தோல், காலின் கீழ் முயலகன் போன்றன நடராஜ திருவுருவத்தின் சிறப்பான சில அம்சங்களாகும். அப்பர் சுவாமிகளின்
"குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமின் சிரிப்பும் ” என்ற பாடலில் நடராஜ திருவுருவம் படம் பிடித்து காட்டப்படுகின்றது. சுந்தரமூர்த்திசுவாமிகள்
"மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே." என்ற பாடலில் கருத்தாடு கரதலத்தில் தமருகமும் எரி அகலுங்கரிய பாம்பும்.” என நடராஜரின் தோற்றத்தினை அழகாக சித்தரித்துள்ளார்.
நடராஜரின் தலையில் சடாமகுடம் விளங்கும். சடாமகுடத்தின் மத்தியில் கங்கை அமைந்திருக்கும். மேலும் மலர் மாலைகள், பாம்பும், மண்டை ஒடு, எருக்கம்பூ இடப்பக்கத்தில் பிறைச்சந்திரன், முதலியனவும் காணப்படும். சடைகள் இருபக்கமும் விரிந்து காணப்படும். முகத்திலே சாந்தமும், புன்சிரிப்பும் காணப்படும். காதில் குண்டலமும் தோடும் விளங்கும். கழுத்தில் பாம்பும் உருத்திராக்கம் மாலைகளும் காணப்படும்.
5. பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 38
நான்கு கைகளிலும் முன் வலது கை அப்பகர கஸ்தமாகவும் பின்வலது கை உடுக்கேந்திய கரமாகவும் விளங்கும், முன் இடது கை டோல கஸ்தமாக உடம்புக்கு குறுக்காக தொங்க விடப்பட்டிருக்கும். இதனை கஜஹஸ்தம் என்றும் அழைப்பர். பின் இடது கை அக்கினி ஏந்திய கரமாக விளங்கும்.
அரையில் புவித்தோலாடையும், பாம்பும் அணிந்திருப்பார். வலது காலை அபஸ்மார புருஷன் மீது சிறிது வளைத்து ஊன்றிக் காணப்படும். இடது கால் வலது கால் தொடையின் பக்கத்திற்கு உயர்த்தி உடம்பு நிமிர்ந்த வண்ணம் நேரே இருக்க வலது கால் குறுக்கே இடது காலை நீட்டி கால் விரல்கள் கீழே தொங்கியவாறு காணப்படும் இப்பாதத்தினை குஞ்சித பாதம் என்றும் அழைப்பர்.
இம் மூர்த்தியின் இடது பக்கத்திலே பார்வதி, சந்திரசேகர மூர்த்தியின் பக்கத்தில் நிற்கும் நிலையில் உள்ள அம்சங்களுடன் விளங்குவார். நடராஜரின் திருவுருவத்தினை சுற்றி திருவாசி அமைந்திருக்கும். இத்திருவாசியின் மேற்பக்கங்களில் அக்கினி சுடர் போன்ற அமைப்பு காணப்படும்.
நடராஜவடிவம் உணர்த்தும் தத்துவம்
நடராஜ திருவுருவத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு அம்சங்களும் ஒவ்வொரு தத்துவக் கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. ஐந்தொழில், ஐம்பூதம், முச்சுடர்கள், திருவைந் தெழுத்து போன்ற பல தத்துவ கருத்துக்கள் இத்திருமேனியில் அடங்குகின்றன. பிரபஞ்ச செயல்கள் யாவற்றிற்கும் மூல காரணமாயுள்ள லயநடனத்தை திருவாசிகுறிக்கின்றது. சக்தியும் சிவமும் சேர்ந்த உலகம் என்பதனை இடப்பாகத்தே விளங்கும் சிவகாமியம்மன் உணர்த்தி நிற்கின்றார்.
நடராஜர் ஐந்தொழில் தத்துவத்தினை குறித்து நிற்கின்றார். உடுக்கேந்திய கரம் படைத்தலையும், தீ ஏந்தியகரம் - அழித்தலையும் அபயவம் கொடுக்கும் கரம் காத்தலையும், தூக்கிய திருவடி அருளையும், முயலகன் மீது ஊன்றியதிருவடி மறைத்தலையும் குறிக்கின்றன. இத்தத்துவத்தினை உண்மை விளக்கம் "தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் . 99 என்றும், திருமந்திரம் “அரன்துடிதோற்றம் அமைத்தல் திதியாம்.” என்றும் கூறுகின்றன.
ஆன்மாக்களிற்காக தனு, கரண, புவன போகங்களை படைத்து அவற்றினை அனுபவிக்கும்படி ஆன்மாக்களை வழிப்படுத்தி அவற்றுள் அமிழ்ந்து போகாமல் காத்து அருள் செய்கின்றார்.
நடராஜரின் கைகள் நான்கும் நான்கு திசைகளை குறித்து நிற்கின்றன. மூன்று கண்களும் சூரியன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுடர்களை குறித்து நிற்கின்றன. புன்முறுவல் - மும்மலத்தால் ஏற்படும் வினையை நீக்குதலையும், பிறைச்சந்திரன் - பேரறிவையும், கழல் - ஆன்மாவின் வினையை நீக்கி வீடுபேறு அளிப்பதனையும், சூலம் - முக்குணங்களையும், மழுபேராற்றலையும், மான் - வேத நாயகன் என்பதனையும், புலித்தோல் - கோபத்தை கட்டுப்படுத்துபவர் என்பதனையும் குறித்து நிற்கின்றன.
நடராஜர் திருவுருவம் திருவைந்தெழுத்தினையே திருமேனியாக கொண்டு விளங்குவதனையும் விளக்குகின்றது. இவ்வுலக வாழ்க்கை இன்பத்திற்காக வேண்டி ஒதப்படும் மந்திரமாகிய நகராதி பஞ்சாட்சரத்தில் ந - திருவடியாகவும்,
(இந்து ஒளி V

ம - திருவயிறாகவும், சி-திருத்தோளாகவும், வ-திருமுகமாகவும், ய - திருவடியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இப்பஞ்சாட் சரத்தினை நூல் பஞ்சாஷ்சரம் என்றும் அழைப்பர்.
அடுத்து சூக்கும பஞ்சாஷ்சரமாகிய சிவராதி மந்திரத்தில் சி - உடுக்கேந்திய கரத்தினையும், வா - வீசிய திருக்கையையும் (கஜகஸ்தம்), ய - அபயவமளிக்கும் கரத்தினையும், ந - நெருப்பேந்தியகரத்தினையும், ம - முயலகன் மீது ஊன்றிய திருவடியினையும் குறித்து நிற்கின்றன. இதனை பின்வரும் திருமந்திரப் பாடல்கள் சித்தரிக்கின்றது. “திருந்து நல்சீ என்று உதறிய கையும் . “மருவும் துடியுடன் மன்னிய வீச்சு . 99
மேலும் நடராஜரின் திருவுருவ அமைப்பு பஞ்சபூதங்களையும் சித்தரிப்பதாக அமைந்துள்ளது என சில அறிஞர் குறிப்பிடுவர்.
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் நடராஜர் தெற்கு நோக்கி ஆடுவதன் காரணம் கூறப்படுகிறது. “சைவசித்தாந்தத்தின் கலை வெளிப்பாடுகளாகவே நடராஜ திருவுருவம் விளங்குகின்றது” என பேராசிரியர் வி. சிவசாமி குறிப்பிட்டுள்ளார்.
கலாயோகி ஆனந்தகுமார சுவாமியவர்கள் நடராஜர் வடிவத் தினை வைத்தே Dance of Siva (சிவநடனம்) எனும் நூலினை எழுதியுள்ளார். அதிலே ஆனந்த தாண்டவத்தின் தோற்றத்தினை, அழகாகவும், ஆழமாகவும் பகுத்து தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் சமயம், விஞ்ஞானம், அழகியல் முதலிய பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட ஒப்பற்ற ஒரு கலைப்படைப்பாக இது மிளிர்கின்றது. இவ்வகையில் ஒரு இலட்சியக் கலையின் ஆக்கம் என்று அழைப்பதிலும் பார்க்க ஆன்மீகக் கண்டுபிடிப்பு எனக்கொள்ளுதல் பொருத்தமானதாகும் எனவும் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அழகுக் கலை பொலியக் சண்குளிரும் காட்சி நல்கும் நடராஜத் திருவுருவம் கண்களுக்கு பெருவிருந்தாய் அமைவது மட்டுமல்ல உள்ளத்தைக் களிப்புறச் செய்வது, ஆனந்த அனுபவத்தை உண்டாக்குவது. மனசாந்தியை எழச் செய்வது, தீய எண்ணங்களை அகற்றி நல்லெண்ணங்களைத் தோற்றுவிப்பது, நானெனும் செருக்கைக் கெட வைப்பது, பேரொளி வீசி இருளகற்றி நல்லறிவு புகட்டிப் பேரானந்தப் பெருவாழ்வாம் வீடு பேற்றை ஈற்றில் அடைவிப்பது இத்திருவுருவம் எனப் பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்களும், “அணுவின் நுண்பகுதியில் ஒன்று சதா ஆடிக் கொண்டிருக்கிறது. அதன் ஆட்டத்தில் மற்ற நுண்நுகங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அது சதா அழித்தலும், புதிய புதிய உருவாக்குதலும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதன் அடிப்படையிலே தான் பிரபஞ்சம் இயங்குகின்றது. இதே விஞ்ஞானக் கொள்கையைத் தான் இந்திய நாட்டுத் தத்துவங்களில் கூறப்படும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் உணர்த்துகிறது. எனத் தாவோ விசிக்ஸ் எனும் நூலிலே கலாநிதி வறிட்ஸ் ஒப்காப்ரோ எனும் மேலைநாட்டுப் பிரபல விஞ்ஞானியும் கூறியிருப்பன நன்கு கவனித்தற்குரியன என பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள் தனது பரதக் கலை என்னும் நூலிலே எடுத்துக் காட்டியுள்ளமை இக்கட்டுரைக்கு பொருந்தும் ஆகையால் இதனை இங்கு தருகின்றேன்.
99
6 பார்த்திய வருடம் சித்திரை -س ஆணி)

Page 39
பிறைகடிய பிஞ்ஞ
திருமதி செல்வநாயகி முத்தை
சிவபெருமானைப் பிறைசூடிய பெருமானாகப் போற்றிப் புகழ்கின்றன திருமுறைகள். தன்னைச் சரணடைந்த பக்தர்களை அழியாமல் காக்கக் கூடிய பரம்பொருள் என்பதை விளக்கக் கூடிய அருள் வரலாறு சிவபெருமான் பிறைசூடிய வரலாறு.
தட்சனுக்கு இருபத்தேழு பெண்கள். அந்தப் பெண்கள் அனைவரையும் திருமணம் செய்துகொண்டான் சந்திரன். அவர்களுன் ரோஹிணியில் அதிக அன்பு காட்டியதால் தன் மாமனின் சாபத்துக்கு ஆளானான் சந்திரன். தினந்தோறும் ஒரு கலையாகத் தேயட்டும் என்று சாபமிட்டான் தட்சன். தினம் ஒரு கலையாகத் தேய்ந்து குறைய சந்திரன் முழுமுதல்வனான சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அந்நிலையில் சந்திரனின் குறையகற்ற சந்திரனைத் தன் தலையில் சூடி “உன் சாபத்துக்கு ஏற்பத்தேய்ந்த நீ இன்று முதல் தினம் கலையாக வளரட்டும்” என்று சாப விமோசனந் தந்தார். எனவேதான் பெளர்ணமி தொடங்கி பதினைந்து நாட்கள் தேய்வதும், அமாவாசைக்குப் பின் பதினைந்து நாட்கள் வளர்வதுமாகச் சந்திரனின் நிலை அமைந்தது என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ள செய்தி.
சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமானைச் சந்திரசேகர் என்று சொல்வார்கள். சந்திரசேகரரின் உருவ அமைப்பினை ஆகமங்களும் சிற்பசாஸ்திரங்களும் மிகச் சிறப்புற விளக்கி இருக்கின்றன. சந்திரசேகர மூர்த்தியைச் சம்பாதகஸ்தானம் அதாவது இரண்டு பாதங்களையும் ஒழுங்காகச் சேர்த்து நிமிர்ந்து நிற்கும் நிலையில் அமைக்க வேண்டும். அபயவரத ஹஸ்த்தங்கள் மானும் மழுவும் ஏந்திய கைகள் உடையவராய் சிருங்கார பாவத்தைக் காட்டுபவராய் பிறைச் சந்திரனை அணிந்த முடியுடையவராய் பத்மபீடத்தில் படைக்கப்பட்டிருப்பார் இடது புறத்தில் தேவியை அமைப்பதும் உண்டு. ஆலயங்கள் பலவற்றுள் சந்திரசேகர் உற்சவத்திருமேனி உண்டு. சந்திரசேகரை வழிபட்டால் சகல வளங்களும் கிடைக்கும்.
(சிவ - பராக்கிரமங்கள்) சிவபெருமான் தான் ஆற்றிய வீரச் செயல்களால் பல அரிய வடிவங்கள் தாங்கி காட்சி தந்தார். 1 அக்னியைத் தாங்கியதால் அக்னிதரர் 2. புலியை உரித்ததால் சார்த்துலஹரர் (புலி உரித்தபரன்) 3. சிங்கத்தை உரித்ததால் சிம்மஹரர் 4. பாம்புகளை அணிந்ததால் புஜங்க பூஷணர் (பாம்பணி நாயகர்) 5.தலைகளை மாலையாக அணிந்ததால் வெண்தலை மாலையார். ல் பூதத்தை அடக்கியதால் பூதவாகனர் வேழம் உரித்தவர் 7. யானையை உரித்துப் போர்த்திக் கொண்டதால் கஜசம்ஹாரர் ேேவத புருஷனாகிய மானைக் கையில் ஏந்தியதால் மருகதாரணர்
இந்து ஒளி 37

(மானேந்தி அப்பர்) என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றார் “சிவபெருமான்” என்கிறது சிவபராக்கிரம்மம் என்ற நூல்
(யார் சிவனடியார் ?)
சிவனடியார்களுக்கு இலக்கணங்கள் உண்டு, கொல்லாமை புலால் உண்ணாமை, கள் அருந்தாமை, பிறன்மனை நயவாமை; வாய்மை, பொறுமை, அடக்கம், தாய் தந்தையரை வழிபடுதல் கொடைத்தன்மை முதலிய நல்ல குணங்கள் பெற்றிருத்தல் சிவனடியாருடைய பொது இலக்கணம். இத்துடன் மூன்று சிறப்பு இலக்கணங்கள் உடையவரே சிறந்த சிவனடியார்.
சிறப்பு இலக்கணங்களில் முதலாவது புறத்திலக்கணம். இது பத்து வகைப்படும். விபூதி, ருத்ராட்சம் முதலான சிவசின்னங்களை விடாது அணிதல், குருவை வழிபடுதல், “சிவனை தோத்திரம் செய்தல்.” சிவநாமங்களை உச்சரித்தல். சிவபூஜைகளைச் செய்தல். சிவபுராணங்கள் கேட்டல், சிவாலயங்களைத் தரிசித்தல், சிவனடியார்கள் இல்லத்தில் மட்டுமே சாப்பிடுதல், சிவனடியார்களுக்கு உணவு அளித்தல் என்பன அவை,
(உடல் இலக்கணம் பத்து) சிவனை நினைக்கும் போதும், பேசும் போதும், வழிபடும்போதும், விம்முதல் நாக்குத் துடித்தல், உதடுகள் துடித்தல் சரீரம் நடுங்குதல், ரோமம் சிலிர்த்தல், குரு வேர்வை அரும்புதல், நா தழு தழுத்தல், ஆனந்தக் கண்ணிர் வடித்தல், வாய் விட்டு அழுதல், பரவசத்தில் அயர்தல் என்பன அவை,
(குழப்பங்கள் கூடாது )
கோயில்களைப் புதுப்பிப்பதாக இருந்தாலும். பூஜைகள் செய்வதாக இருந்தாலும் அந்தக் கோயிலில் முன்பு எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் தொடரவேண்டும் என்பது மிக மிக முக்கியமானது. அடுத்த ஊர்க் கோயிலில் இப்படிச் செய்கிறார்களே . நாமும் அது போலச் செய்யலாமே என்றெல்லாம் நினைத்து நினைத்து மாற்றங்கள் செய்யக் கூடாது பழைய காலத்தில் அந்தக் கோயிலில் எது எது எப்படி இருந்ததோ, நடந்ததோ அது அது அப்படித்தான் இருக்கவேண்டும் நடக்கவேண்டும். குறிப்பாக ஆலயங்களில் பூஜைகள் முறைப்படி தவறாமல் நடக்க வேண்டும். அப்படி நடக்காமல் போனால் மழை வளம் குறையும், களவு மிகும், அரசாட்சியில் பிரச்சனைகள் ஏற்படும். “முன்னவனார் கோயில் பூஜைகள் மூட்டின் மன்னர்க்குத் தீங்குள வாரிவளங்குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி என்னரும் நந்தி எடுத்துரைத்தானே.” என்பது திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்.
பார்த்திய வருடம் சித்திரை - ஆணி)

Page 40
வைத்திய கலாநிதி
நினைவுப் பேருரை நிக
H
h
HAHAHHAAH T I
நிகழ்வின் போது இடமிருந்து வலமாக இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரி அதிபர் திரு ந மன்மதராஜன், மாமன்றப் பிரதித் தலைவர் திரு மா தவயோகராஜா, பாராளுமன்ற உறுப்பினர் திரு ந ரவிராஜ், வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியர் திரு வி தேவராஜ்
திருவி தேவராஜ் நினைவுப் பேருரையாற்றுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலாயுதபிள்ளை ழ்வுகள் (20.03.2005)
நல்லை ஆதீன் முதல்வருக்கு மாமன்றத் தலைவர் பொன்னாடை அணிவிக்கிறார் அருகே மாமன்றப் பிரதித் தலைவர்.
| | | ,
H
I | H
H H
冉 "
■I聞情 TTTTTTTTT I |||||||||||||||||||||||||||||
TIFT |/||
TTF TL | TP 邯s
Fl
■
H T
| H
H
கை தந்திருந்தோர்
3s பார்த்திப வருடம் சித்திரை - ஆணி)

Page 41
  

Page 42
I H "இந்து ஒளி' மகா சிவராத்திரி சிறப்பிதழ் வெளியீட்டிள்போது மாமன்றப் பிரதித் மா. தவயோகராஜா சிறப்புப் பிரதியை வழங்குகிறார் அருகே மாமன்றப் பொது திரு.கந்தையா நீலகண்டன், பொருளாளர் திருவே கந்தசாமி, மாமன்ற நிர்வாக திரு. அ கனகசூரியர் மாமன்ற உபதலைவரும், இரத்மலானை கொழும்பு இந் அதிபருமான திரு ந. மன்மதராஜன்,
III h
சிவராத்திரி வைபவத்தி:
-
LDITIDGórnoj,560 IDBIT வழமைபோல இவ்வருடமும் மாமன்றத் தலைமையகப் பிரார்த் பூசையும் வழிபாடும் சிறப்பாக நடந்தேறியது.
இரவு நான்கு ஜாமமும் பூரீசிவகாமி அம்பாள் சமேத பூரீநப இரத்மலானையிலுள்ள கொழும்பு இந்துக் கல்லூரி ம மாணவிகளினதும் கலை நிகழ்ச்சிகள் அன்றைய சிவராத்திரி ! இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள் "ச என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்றை நடத்தியிருந்தார்கள் பட்டிமன்றத்திற்கு நடுவராகக் கலந்து கொண்டார். இந்துக் ச நடனம், கோலாட்டம் போன்ற அம்சங்களை வழங்கினார்கள். ஆ ஆகியோரின் நெறியாள்கையில் இந்த கலை விருந்து இடம்பெ கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நடன ஆசிரியைக ஆசிரியைகளான திருமதி வடிவாம்பிகை நடராஜன், திருமதி நெறியாள்கையில் மாணவிகள் நாட்டிய விருந்தளித்தார்கள்.
பாலத்துறை பூநீ பாலவிநாயகர் அறநெறிப் பாடசாலை மா வைபவத்தின் போது இடம்பெற்றது. அறநெறிப் பாடசாலை ஆ "இந்து ஒளி' மகா சிவராத்திரி சிறப்பிதழும் அன்றைய தி
(இந்து ஓவி
 
 
 
 
 

T
I | 扈
T||||||||||||||||| III" I Afl. 1||||||||||| IHI. stralii l- இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி FILIFuffEff மாணவிகளது பண்ணிசை நிகழ்ச்சி உதவியாளர் நுக் கல்லூரி
|||||||||||||||||
TITI ଅଳ୍ H
|||||||||||I||I||I||I||I||G|H|I|A|ITA|WIMI TITTEIHIN
TINTITI
''
I H I
ன் பூசை வழிபாட்டின் போது.
சிவராத்திரி வைபவம்
தனை மண்டபத்தில் கடந்த மார்ச் 8ம் திகதியன்று மகா சிவராத்திரி
ாஜப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் செய்யப்பட்டன. னவ மாணவிகளினதும், கொழும்பு விவேகானந்தா கல்லூரி வைபவத்தின் சிறப்பு அம்சங்களாக இடம்பெற்றன. முக மேம்பாட்டுக்கு பெரிதும் பங்களிப்பது அறிவியலா ஆன்மிகமா?" மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் ல்லூரி மாணவிகள் "வள்ளி திருமணம்' நாட்டிய நாடகம், செம்பு சிரியைகளான திருமதி தயாநிதிமோகன், செல்வி கெளரி இராசையா 1றது. ான திருமதி தயாபதி நீலமேகம், திருமதி கஸ்தூரி மாசிலன் சங்கீத கந்தி கதிர்காமசேகரம், திருமதி பவானி ஜெயதரன் ஆகியோரின்
னவ மாணவிகள் வழங்கிய நடன நிகழ்ச்சியும் மாமன்ற சிவராத்திரி சிரியை செல்வி எம். உஷா நிகழ்ச்சியை நெறிப்படுத்தியிருந்தார். னம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பார்த்திய வருடம் சித்திரை-ஆண்

Page 43
சிவதொண்டர் அணி நிறைவுநாள் நிகழ்
॥
VIIII||||||||
黔 திே
IWIWITIM
நாட்டுவதையும் அதற்கான கிரியைகளை ஊரெழு சோவாகீஸ்வரர் மாமன்றத் தலைவர் பொதுச் செயலாளர் முகாமைப் பேரவை உறுப்பி
 
 
 
 

f LIVíbčfů LITL6DM)
வு (23.04.2005)
பன், "மூத்த சிவதொண்டர் திரு. ச. சரவணமுத்து, பரன் உரையாற்றுகிறார்கள்
மாணவர்களது கலை நிகழ்ச்சி
ல் புதிய கட்டிடம்
T 閭
க்கள் நாட்டும் வைபவத்தின் போது நல்லை ஆதீன முதல்வர் அடிக்கல் குருக்கள் நடத்தி வைப்பதையும், அருகே நல்லை ஆதீன முதல்வர், ார் திரு எஸ். ரி. எஸ் அருளானந்தன் ஆகியோரையும் காணலாம்.

Page 44
சிவதொண்டர் அன நிறைவுநாள் நிக
மாமன்ற உறுப்பினர்கள், சிவதொண்டர் அணி பயிற்சியாளர்கள் சகிதம் பிரதம விருந்தினர் மாண்புமிகு க ரீபவன், திருமதி பூரீபவன் ஆகியோர் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
நிறைவுநாள் வைபவத்தின்போது இடமிருந்து வலமாக திருமதி ரீபவன், மாண்புமிகு க ரீபவன், திரு. வி. கயிலாசபிள்ளை திரு கந்தையா நீலகண்டன், திரு ஆறு திருமுருகன்
“மூத்த சிவதொண் ர் என்ற கெளரவம் பெறும் திரு ச. சரவணமுத்து
SAS, shota Ai, gësia SAs Assi si
 
 
 
 
 
 

வி பயிற்சிப் பட்டறை
ழ்வு (23.04.2005)
■
போது
பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு திருமதி ரீபவன் சான்றிதழ் வழங்கு அருகே மாமன்ற சமய விவகாரக் குழுச் செயலாளர் திரு மு.சொக்கள்
wLow (SGayaw s\\SGu (ABNGGaius 25W95.