கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2007.10-12

Page 1
శివత
இலங்கை இந்து
காலாண்டிதழ்
 

థ్రో

Page 2
இரத்மலானை வி( பிறந்ததின வைட
- . |-:: | ) ( ) : : ( )|-| -----| || || || ...·, ()|- |-||||)s', );·|-|-|- , .----|----- ,- ||||||||||||- |-|-| 「 」 「」. W || || || |-|-| 「
「:확!”,
를: 를활
一
 
 
 


Page 3
源
ခီဖားဖား
சிவயப் பஞ்சபுராணங்கள் தேவாரம்
-திருச்சிற்றம்பயம்பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையிள
ாறைகழல் சிலம் பார்க்கச் சுண்ண மாதரித் தாடுவர் பாடுவ
ாகந்தொறு மிடு பிச்சைக் குண்னவாவதோ ரிச்சையி னுழல்பவ
ருயர்தரு மாதோட்டத் தண்ணல் நண்ணுகே தீச்சர படைபவர்க்
கிருவினை படை யாவே
திருவாசகம் நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே யுன்னை ஒலமிட் டலறி
உலகெலாம் தேடியுங் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசிர் அருத்தனே படியே னாதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே! திருவிசைப்பா திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் தனைத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய்
ஆலின்கீ பூழிருந்தஅம் பலவா புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
தொண்டனேன் புனருமா புனரே!
திருப்பல்லாண்டு ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரை நாள் நாராயணனொடு நான் முகன் இரவியும் இந்திரனும் தேரார் விதியில் தேவர் குழாங்கள்
திசையனைத் தும்நி றைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு சுடறு துமே
திருப்புராணம் பண்ணின் பயனாம் நல்லிசையும்
பாவின் பயனா மின்சுவையும் கண்ணின் பயனாம் பெருகொளியுங் கருத்தின் பயனா மெழுத்தஞ்சும் விண்ணின் பயனாம் பொழிமழையும்
வேதப் பயனாம் சைவமும் போல் மண்ணின் பயனா மப்பதியின் வளத்தின்
பெருமை வரம் புடைத்தோ,
=திருச்சிற்றம்பயம்
Ett skytoj
இந்து ஒளி
ཆག་
 

O சிவமயம் اړتيځ
இந்து @ தீபம் -12 lil LTT -
B சர்வசித்து வருடம் கார்த்திகைத் திங்கள் 15 நாள்: Se OI 2200
நாவலர் வழியில்.
எமது நாட்டில் சைவ மறுமலர்ச்சியை ஏற்படுத்திய நாவலர் பெருமானுக்கு இந்த மலரைச் சமர்ப்பணம் செய்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் அகில இலங்கை இந்து மாமன்றமும், அதன் அங்கத்துவ சங்கங்களும் செய்ய வேண்டிய - செய்யக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்கள் பல தடைப்பட்டு நிற்கின்றன. எமது மக்கள் நிம்மதியின்றி அல்லற்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமை மிக விரைவில் மாற ஆண்டவன் அருள் வேண்டி நிற்கிறோம்.
நாவலர் பிறந்த சிவபூமியான யாழ் மண்ணில் புதிய கட்டிடம் அமைத்திருக்கும் மாமன்றம், அங்கே சைவசமய அறிவைப் புகட்டி சைவப் பிரசாரகர் களையும் ஆசிரியர்களையும் உருவாக்கத் திட்டம் தீட்டியுள்ளது. எனினும், நாட்டுநிலைமை காரணமாக இது தாமதித்துள்ளது. சிவபூமி எனும் பெயரில் பல அரிய சேவைகளை ஆற்றும் மாமன்ற உப தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் இத்திட்டத்தை செயற்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறார். நாவலர் வழியில் அவர் எடுக்கும் பணிகளுக்குச் சகலரும் உதவவேண்டும்.
கொழும்பு விவேகானந்த சபை நூறு ஆண்டு களுக்கும் மேலாக கொழும்பு மாநகரில் மட்டுமல்ல, நாடளாவிய ரீதியில் பல சமயப் பணிகளைச் செய்து வரும் எமது அங்கத்துவ நிறுவனமாகும். அதன் முது கெலும்பாக பணியாற்றி வரும் பொதுச் செயலாளரும், மாமன்றத்தின் உபதலைவருமான சிவஞானச் செல்வர் கி. இராஜபுவனிஸ்வரனின் முயற்சியினால் விவேகானந்த சபையின் சமய பாடப் பரீட்சை பாடத் திட்டத்தில் மாமன்ற வெளியீடான "இந்து மக்களுக்கு ஒரு கையேடு” நூலும் சேர்க்கப்பட்டு இளைய சமுதாயத்தின் மத்தியிலே நாவலர் வழியில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இரத்மலானையிலும் மன்னாரிலும் சிறுவர் இல்லங்கள் தொடர்ந்தும் சிறப்பாக நடத்தப்படு கின்றன. மனிதநேயர் கயிலாசபிள்ளை தம்பதியினர், மன்னார் வைத்திய கலாநிதி கதிர்காமநாதன், வைத்திய கலாநிதி அரசக்கோன் ஆகியோர் இவற்றுக் காகப் பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.
இப்படியாக ஒரு சிலராவது, இந்த கஷ்டமான காலகட்டத்திலும் நாவலர் பாதையில் செய்து வரும் சமயப் பணிகளைப் பாராட்டிப் போற்ற வேண்டும். இப்படியான பணிகளை ஆற்ற இன்னும் பலர் தியாக உண்ர்வுடன் முன்வரவேண்டும்.
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 4
B
B
B B
B
9 பஞ்சபுராணங்கள்
9 நாவலரின் வாழ்க்கைச் சுருக்கம்
• உயிர் நலத்திற்கு உழைத்த நாவலர் 9 நாவலர் வகுத்த புதுப்பாதை
9 தமிழகத்திலும் சைவப் பணி 9 நாவலரின் கல்விப் பணி 9 நாவலர் சைவாகமத்தின் காவலர் தற்கால உரைநடையின் தந்தை 9 நாவலரும் தமிழ் மொழியும் 9 தமிழ் செய்த தவம் 9 வலம் வந்த மடவார்கள் நடமாட
அச்சாளர் ஆறுமுகநாவலர் 9 நல்லொழுக்கம்
இறைவனும் இடபமும் 9 எப்போதோ முடிந்த காரியம் உஞான ஞாயிறு நாவலர் பெருமான்
• சிறுவர் ஒளி (சிந்தனைக் கதைகள்) உமாணவர் ஒளி (பெரிய புராணக் கதைகள்)
மங்கையர் ஒளி (குலமகளுக்கு அழகு தன்கொழுநனைப் பேணுதல்) 9 நாவலர் மொழிந்தவை 9 மார்கழி மாத மகிமைகள்
• பூநீகாஞ்சி காமாகூவி அம்பாள் 9 காக்கை கரவா கரைந்துண்ணும்
அர்த்தமுள்ள இந்துமதம் கூறும் அறநெறி 9 மகளிர் இல்லம் வெள்ளிவிழா நிகழ்வு
• Arumuga Navalar உமதுரை சைவ சிந்தாந்த மாநாடு
சர்வசித்து வருடம்
11
12
12
13
15
16
17
18
2O
21
22
 
 

தவமொடு வேள்வி வாழ்க தானமு மறமும் வாழ்க சிவனருளோங்கி மேலாம் சிவநெறி செழித்து வாழ்க பாவமும் பழியும் வீழ்ந்து பரணருள் தன்னா லென்றும் சைவமும் தமிழும் வாழ்க தரணியிலுள்ளோ ருய்ய!
O இந்து ஒளி' அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி இதழ்
கார்த்திகைத் திங்கள் 15" நாள்
O1227 ஆசிரியர் குழு :
பேராசிரியர் அ. சண்முகதாஸ் திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபூனிஸ்வரன்
திரு. த. ботптант бiт
ஒரு பிரதியின் விலை e5UT 30.OO வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 12OOO (தபாற் செலவுதணி)
வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம்
A.C. H.C. Bi'şLû 915, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மீாவத்தைகொழும்பு-2,
இணையத்தளம் : http:/www.hinducongress.org மின்னஞ்சல் : adminG)hinducongress.org தொலைபேசி எண் : 2434990, தொலைநகல் : 2344720
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HNDU OL
Aipasi - Markazhi AL CEY.ON HINDU cрмскEss
1st December 2007 Editorial Board
Prof. A. Shanmugadas Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. D. Manoharan
Price: RS. 30.00 per copy Annual Subscription (inland) Rs. 120.00
(Postage Exclusive) Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (including Postage)
ALL CEYLON HINDU CONIGRESS A-C-H.C. Bldg9115, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Website : http://www.hinducongress, org E-Mail: adminGhinducongress.org Telephone No. 2434990, Fax No. 2344720
Next SSue : Thai - Pankuni expressed in the articles in Hindu Oli سva
are those of the contributors.
2 சர்வசித்து வருடம் ஜப்பசி - மார்கழி

Page 5
缀筠°步@ ஒள்-நாவலர் பூரீலழரீ ஆறுமு
வாழ்க்கை வரல
ጵእ $ ܡܨܘܦܗ2
S-რა-2 Sud
முநீலழுநீ ஆறுமுக நாவலர் சித்திரபானு வருடம் மார்கழி மாதம் 5 ஆம் திகதி (18.12.1822) புதன்கிழமை பிறந்தார். தந்தையார் பெயர் ப. கந்தப்பிள்ளை. தாயார் பெயர் சிவகாமியார்.
இவர் ஐந்தாவது வயதில் நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடமும் நல்லூர் வேலாயுத முதலியாரிடமும் ஆரம்பக் கல்வியைக் கற்றார். 1834ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் யாழ். வெஸ்லியன் மிஷன் கல்லூரியில் (பின்னர் மத்திய கல்லூரி என அழைக்கப்பட்டது) ஆங்கிலக் கல்வி கற்கத் தொடங்கினார். அதேவேளையில் இருபாலை நெ. சேனாதிராய முதலியார், நல்லூர் ம. சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் தமிழ் கற்றார். 1841ஆம் ஆண்டில் யாழ். வெஸ்லியன் மிஷன் கல்லூரியில் தமிழ், ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார்.
நாவலர் 1847 மார்கழி மாதத்தில் வண்ணை வைத் தீசுவரன் கோயில் வசந்த மண்டபத்திலே சமயச் சொற் பொழிவு செய்ய ஆரம்பித்தார். அவரது வேதாகம மொழி பெயர்ப்பை ஒப்புவிப்பதற்காக பேர்சிவல் பாதிரியாருடன் 1848ஆம் ஆண்டு முதலாவது இந்தியப் பிரயாணத்தை மேற்கொண்டார். அதே ஆண்டு ஆவணி மாதத்தில் யாழ். oIodorooor IrfrLuodoroooooorusildo Goofofgas ITF offiliful IIT சாலையை ஸ்தாபித்தார். 1948 புரட்டாதி மாதத்தில் வெஸ்லியன் மிஷன் கல்லூரியின் ஆசிரியர் பதவியி லிருந்து விலகிக் கொண்டார்.
1849ஆம் ஆண்டு ஆடி மாதம் அச்சியந்திரம் வாங்கு வதற்காக இரண்டாவது இந்தியப் பிரயாணத்தை மேற் கொண்டார். அந்த வேளையில்தான் திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
7 ஒதண்ணிலவு மலர்ந்தசடைச் சிவடெ எண்ணிலவு பரசமய லிருள்விடியரீ நாவலன பஆைலைகை மண்ணிலவுநல்லைவிருநாவலனா
e
சீரடிகள் ஆலேஜர் ஒ: ഉണ്ണfകെ9தவிப்பயணு ஸ்மாண்டமிழ்
6) J/ பார்செய்ததவப்பயனு மொன்றாகி பேர்செய்தநாவலனாயலுதரித்த ஒ அன்னநடை விடியினடை யழகுநடை
- நவாலியூர் பன்னுழுது புலவிடஞ் செய்யுனை சோமசுந்தரப்புலவர் வின்னருடை விழங்குநடை வசனநை மன்னுமருள்நாவலன்றன் னழியர
இந்து ஒளி
 

நினைவுச் சிறப்gதழ்ஜி க நாவலரின்
ாற்றுச் சுருக்கம் 姿だ ఃణీ
1854ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மூன்றாவது இந்தியப் பிரயாணத்தை மேற்கொண்டார். தொடர்ந்து1858ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் நான்காவது இந்தியப் பிரயாணத்தை மேற் கொண்டார். அப்போது சென்னையில் வித்தியாதுபாலன அச்சியந்திரசாலையை ஸ்தாபித்தார். சென்னையில் தங்கி யிருந்த காலத்தில், சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியா சாலையை நிறுவுவதற்கான ஒரு வேண்டுகோளை விடுத்தி ருந்தார். 1862 பங்குனி மாதம் யாழ்ப்பாணம் திரும்பிய ஆறுமுக நாவலர், அதே ஆண்டு வைகாசி, ஆடி மாதங்களில் வண்ணை சைவ வித்தியாசாலையிலும் பருத்தித்துறை சித்தி விநாயகர் கோயிலிலும், சிதம்பரத்தில் சைவ வித்தியாசாலை நிறுவுவதற்காக சைவ அன்பர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சைவ அன்பர்களிடமிருந்து நிதியுதவிகள் கிடைத்தன.
1864ஆம் ஆண்டு தை மாதத்தில் ஐந்தாவது இந்தியப் பிரயாணத்தை மேற்கொண்டார். அதே ஆண்டு ஐப்பசி மாதத்தில் சிதம்பரத்தில் சைவ வித்தியாசாலையை ஸ்தாபித்தார். ஆறு வருட காலத்தின் பின், 1870 மாசி மாதம் யாழ்ப்பாணம் திரும்பினார். 1872ஆம் ஆண்டில் யாழ். வண்ணார் பண்ணையில் சைவ ஆங்கில வித்தியா சாலையையும், கோப்பாய் புலோலி ஆகிய இடங்களில் சைவப்பிரகாச வித்தியாசாலையையும் நிறுவினார்.
ஆறுமுக நாவலரின் சமய, சமூக கல்விப் பணிகள் சிறப்பாகத் தொடர்ந்தன. சமயச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தார். 1879 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசையின் போது நிகழ்த்திய நாவலரின் சொற்பொழிவே, இவரது இறுதி நிகழ்வாக அமைந்திருந்தது. சிறிதுகால ககயினத்தின் பின்னர், 1879 மார்கழி (டிசம்பர்) 5ம் திகதியன்று (கார்த்திகைத்திங்கள் 21ஆம் நாள்)மக நட்சத்திரத்தில் இறையடி சேர்ந்தார்.
ருமா னருள்சைவிச் சேவல்கூவி ཛོད༽ ற்றினொள் வயங்கும் மேலுப் ܓܪܡܐܪܝܬܐ
ஞ் செழுஞ்சுடரை வணக்கஞ் செய்விாம். {్య"
தவிப்பயனும் திருவார்நல்லை 望 செய்தவப்பயனுமேருத வேல் A. خير நல்லறிஞர் பரவி யூேத்தும் བ། - / தனும்பெருமை பேணிவாழ்வோம்.
ட பயின்ற மிழ்ப் பாவை யாட்கு ட யெனப்பயிர்
O j லுைத்த வாசான் ல் லொழுக்குநடை வாழி வாழி!
وبعد
வூைந்தெழுத்துப் பணில மார்ப்ப ਨ,
யல்லஹீென விகற்றி யந்நாட்
Šრჯჯ.» , ,
சர்வசித்து வருடம்

Page 6
C
உயிர் நலத்திற்கு ်ဖၿ.C முநீலழுநீ கயிலை சுப்பிரமணிய தேசிக
உலகில் தமக்கென வாழாது பிறர்க்கெனவே வாழ்வோர் ஒரு சிலரே. இந்த வரிசையில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் ஒருவராவார். தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர், தமது ஒப்புரவாண்மையால் பிறரது உடல் நலத்திற்கு உழைப்பவரும், உயிர் நலத்திற்கு உழைப்பவரும் என இரு திறத்தினராய் இருப்பர். அவருள் ஆறுமுக நாவலர் பிறரது உயிர்நலத்திற்கு உழைப்பதிலேயே தமது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.
உயிர் நலத்திற்கு முதலாவது வேண்டப்படுவது கல்வி. தமிழ் மக்களிடையே இத்தகைய கல்வி வளர்வதற்குத் தம் வாழ்நாள் முழுவதும் நாவலர் செய்த நற்பணிகள் பல. இளஞ் சிறார்கள் திருத்தமான தமிழ்க் கல்வியை எளிதிற் பெறுவதற்குத் தமிழ் மொழியில் உரைநடைப் பாடப் புத்தகத்தை வகுப்பு முறையாக முதலிலே தோற்றுவித்தவர் ஆறுமுக நாவலரே. அதனுடன் இலக்கணச் சுருக்கமும் எழுதி வெளியிட்டார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய சிறுநீதிநூல்கட்கு உரை எழுதினார். நடுத்தர கல்வியாளர்க்கு உதவுமாறு நன்னூற்குக் காண்டிகை உரை பரீட்சை வினாக்களுடன் எழுதி, இறுதியில் இலக்கண அப்பியாசங்கள் பலவற்றைத் தந்தார். இவற்றிற்கெல்லாம் தாம் ஆக்கியோராய் இருந்ததன்றியும், பதிப்பாசிரியரும் தாமேயாய் இருந்து இவை பிழையற்ற தூய பதிப்பாக வெளிவரச் செய்தமை இவரது அரும்பணிகளுட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பள்ளிச் சிறார்கள் முதற் பெரும்புலவர் வரையுள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் முதற் பாலபாடம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலாக திருக்குறள், கந்த புராணம், பெரிய புராணம் வரை சிறந்த பதிப்பாக நாவலர் வெளியிட்ட தமிழ் நூல்கள் பல.
நாவலர் தாள் இல்
பூமணக்கும் பொழில்மணக்கும் புன்தநல்லூர்தான் Uாமணக்க உரைமணக்கப் பகர்சைவி நெறிமணக் தேமணக்குந்தமிழணங்கு செய்தபெருந்- ჯoზUu நாமணக்க அஆதரித்தநாவலன்தாள் இறைஞ்சுது ஒதால்லறங்கள் சிறந்தோங்குத் தூயதொண்டு ெ இல்லறத்தை விரும்பாமல் இடர்மிக்க துறவென்னு வல்லறத்தை மேற்கொண்டு வாழ்வினையே உலு பல்லறங்கள் பொலிதித்த பண்கினனைப் போற்று பண்நெறிகள் வளர்கின்ற பாருலகில் தமிழர்தம்
E. மிளிர்சைவம் தோற்றமிழந்து இப்
ன்நெறிகள் சிலவற்றாற் ტh_დu மீண்டுமதை முன்னெறியாய்நிலைநிறுத்த முயன்றோனை வாழ்
ང། - பண்டிதர் க.
(இந்து ஒளி

)
5 ஞானசம்பந்த பரமாசாரிய ඇතImmædir}_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂ්)
உழைத்த நாவலர்
“நாவலர் பதிப்பு” என்றாலே “தூய பதிப்பு” என்னும் எண்ணம் தமிழுலகத்தில் நிலைத்த ஒன்றாகி விட்டது. நாவலரது இத்தமிழ்ப்பணி இல்லையாயின் தமிழ் நூல்கள் பல ஏட்டளவில் இருந்து மறைந்துவிட்டிருக்கும்.
தமிழ்ப் பணியைக் காட்டிலும், சைவப் பணியே நாவலரது உள்ளத்திற் பெரிதும் வேரூன்றி இருந்ததும் அவரது பெருமைக்குச் சிறந்த காரணமாய் அமைந்ததும் ஆகும். பெரிய புராணத்திற்கு அவர் எழுதியுள்ள சூசனம் ஒன்றே அவரது சிறந்த சைவப் பணிக்குப் போதியதொன்று. மற்றும் சைவ சமய நெறி உரை, கோயிற் புராண உரை முதலியவை குறிப்பிடத்தக்கன. இவரது முதற் சைவ வினாவிடை, இரண்டாம் சைவ வினாவிடைகள் இளமையிலேயே மக்களைச் சைவ சமய உணர்வுடையவர்களாகச் செய்யவேண்டும் என்னும் கருத்துடன் எழுதப்பட்டவை என்றாலும், அவைகள் முதியோரும் கற்றுப் பயனடையும் வகையிலும் விளங்குகின்றன. மக்களை இளமையிலேயே நல்வழிப்படுத்தற்கு இவர் தமது பாலபாடத்தில் எழுதியுள்ள நீதி வாக்கியங்கள் கண்டு மகிழ்தற்குரியன. இளஞ் சிறார்களை சைவ சமயப் பற்றும், அறிவும் உடையவராக்குதற் பொருட்டு இவர் தில்லையில் சைவப் பிரகாச வித்தியாசாலை என்னும் பாடசாலையை நிறுவி நடத்தினமை இவரது சைவசமய ஆக்க வேலைகளுள்ளே தலையாயது.
ஆறுமுக நாவலர் அவர்கள் தாம் பிறந்த நாடாகிய ஈழத்தைக் காட்டிலும் தமிழ் நாட்டிற்கே பெரிதும் நலம் புரிந்து வாழ்ந்தார். அதனால் அந்நாட்டவரைவிடத் தமிழ் நாட்டவரே அவரை என்றும் மறவாது போற்றுதற்குரியவர். ஆயினும், அவர் பிறந்த நாட்டினர் சிறப்பாக யாழ்ப்பாணத்து மக்கள் அவரிடம் பேரன்பு கொண்டு அவர் வழி நிற்றல் இயல்பே.
h -ས་པ།༽
சய்யவெண்ணி yბ
ந்தஸ்த்துப் ഉD
குேலுந்த
}த்துதுமே பொ. இரத்தினம் س//
4. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 7
*အရှေ့
நாவலர் வகுத் సీలలలలలలలలలలఆలఆఆ பேராசிரியர் க
தம்மைச் சமயகுரவர்கட்கு ஒப்பிடுதல் சிறிதும் பொருந்தா தென்றும், அவர்களது அடிப்பொடிக்குள்ள மகத்துவத்தில் ஆயிரத்திலொன்றுதானும் தமக்கு இல்லையென்றும் நாவலர் பணிவடக்கத்துடன் கூறியுள்ள போதும், நாவரைப்பற்றி எழுதிய பலர் அவரை ஐந்தாம் குரவர் என்றே வருணித்திருக்கின்றனர். முன் வந்த சமய குரவர்கள் புறச்சமயங்களைச் சாடித் தஞ்சமயத்தை நிலைநாட்டினர். அவரோடு ஐவராமென்ன, பரசமய கோளரியாக விளங்கியவர் நாவலர் என்பது யாவருமறிந்ததொன்றே.
தனது காலத்துக் கேற்றவை எவை என்பதனையும், இன்றியமையாதன எவை என்பதையும் சிந்தித்துத் தெளிந்து அவற்றைச் செயற்படுத்தியமையே நாவலரது சிறப்புக்கும் தனித்துவத்துக்கும் அடிப்படையாகும். அதாவது நாவலரின் தற்கால உணர்வே அவரை அவரது சமகாலத்தவர் பலரினின்று வேறுபடுத்தித் தனிச்சிறப்புடையராய்க் காட்டுகின்றது. நாவலர் வரலாற்றுப் பெருமகன். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆவசியகமாயிருந்த சிற்சில கருமங்களை நிறைவேற்றியவர். நன்கு ஆற்றப்பட்ட அக் கருமங்கள் பிறருக்கு ஆதர்சமாக அமைந்தன. அவையே புதுப்பாதை காட்டும் புதுப்பணிகளாயும் அமைந்தன.
பிறர் நலம் என்ற மகோன்னதமான இலட்சியத்துக்குத் தம்மை அர்ப்பணித்ததே நாவலர் காட்டிய புதுப் பாதைக்கு வித்தாகும். இவ்வித்திலிருந்து விரிந்தனவாக ஐந்து முதன் முயற்சிகளைக் குறிப்பிடலாம். 1. தமிழிலே முதன் முதலாகப் பிரசங்கம் செய்தார். 2. தமிழிலே கட்டுரை என்பது முதலில் இவரால் நல்ல முறையில்
எழுதப்பட்டது. 3. தமிழில் எழுந்த பாடநூல்களுக்கு இவரே வழிகாட்டி, 4. வசன நடையிற் குறியீட்டு முறையை முதன் முதலிற் புகுத்தினார். 5. சைவ - ஆங்கில பாடசாலையை முதன் முதல் ஆரம்பித்தவர்.
மேற்கூறிய ஐந்து முயற்சிகளும் நாவலருக்கு முன்னர் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறவேண்டியதில்லை. ஆயினும், தமிழ் -சைவம் என்ற கோட்பாட்டிற்குள் இவற்றைப் பழுதறச் செய்து முடித்தவர் நாவலரே. ஏறத்தாழ 1820ஆம் ஆண்ட ளவிலிருந்தே, சென்னைக் கல்விச் சங்கம் சில தமிழ் நூல்களையும் வெளியிட்டு வந்தது. சென்னையில் அக் காலத்திற் புகழுடன் விளங்கிய வித்துவான் சிதம்பர பண்டாரம்,தாண்டவராயமுதலியார், சிவக்கொழுந்து தேசிகர் முதலிய இயற்றமிழ்ப் போதனாசிரியர்கள் இச்சங்கத்து முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளைக்காரத் துரைமாரின் கருத்துக்கிணங்கச் சில பழைய தமிழ் நூல்களைப் புதுப்பித்தும், சில ஆங்கில நூல்களை மொழி பெயர்த்தும் வெளி யிட்டனர். ஆனால், நாவலரே தமிழ் மாணவருக்கு ஏற்ற புதிய பால பாடங்களை எழுதினார். இது பற்றி அக் காலத்திற் சென்னையில் வெளிவந்த Native Public Opinion என்னும் ஆங்கிலப் பத்திரிகை மதிப்புரையாகக் கூறியுள்ளது மனங்கொளத்தக்கது:
இந்த அறிஞர் எழுதிய பாலபாடங்களைத் தவறாது இங்குள்ள வித்தியாசாலைகளில் உபயோகித்தல் வேண்டுமென்று நாம் திடமாகச் சொல்லுவோம்; இச் சென்னையிலுள்ள வித்தியா சங்கத்தார் வெளியிடும் வசன பாட புத்தகங்களைக் காட்டிலும் நாவலர்பாலபாடங்கள் எவ்வாற்றானும் சிறந்தவையாகும் வித்திய சங்கத்தார் வெளியிட்ட புத்தகங்களை நாவலரவர்கள் எழுதிய பாலபாடங்களோடு ஒப்பிட நினைத்தமைதானும் தவறெனலாம்.”
(இந்து ஒளி

x
5 goшш06085
රැකහිතoIrèrLiâ] ඥා ෂඥ_9ඥ_පෙ_ෂඥ_ෂඥ ඊඥ_ෂඥ_ෂඥ_ථඥ_ඊළු_ථඥ_ථඥා පඥා පඥා ප්)
மாணவரின் மனவளர்ச்சியையும் கல்வி வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு 'சுதேசியத் தேவைகளை நிறைவேற்ற நாவலர் பாலபாடங்களை எழுதியதன் தருக்கரீதியான முடிவே அவர் எழுதி வெளியிட்ட இலங்கைப் பூமிசாஸ்திரம். அவர் எழுதத் தொடங்கியிருந்த தமிழ், ஆங்கிலம்-தமிழ், வடமொழி-தமிழ் அகராதிகளும் இத்தகைய கல்வித் தேவையினால் உந்தப் பெற்றனவே.
உரைநடையை எழுதியதிலும் நூல்களைப் பதிப்பித்ததிலும் நாவலருக்கு முன்னோடிகள் பலரிருந்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் நாவலருக்கும் நோக்கு நிலையில் வேறுபாடுண்டு. ஐம்பெரும் புது முயற்சிகள் எமது சமுதாயத்துக்கு மிகவும் வேண்டற்பாலனவாயிருந்த நற்சாதனைகளாயமைந்தன. ஆதீனங் களோடு சமயமும், சமஸ்தானங்களோடு புலமையும் முடங்கிக் கிடந்த சூழ்நிலையில் இவையிரண்டையும் பரந்துபட்ட மக்களுக்கு உடைமையாக்க முனைந்தமையே நாவலரது தலையாய புதுமுயற்சியாகும்.
நாவலர் புதிதாகச் செய்த முயற்சிகள் அவரது பெரு நோக்கத்துக்கு ஏதுக்களாகவே கருதப்பட்டன என்பது நினைவில் நிறுத்த வேண்டியது. இவற்றின் மூலம் 'சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையே” தன்னை இருபது வருட காலம் இரவும் பகலும் தொண்டாற்றச் செய்தது என்று “சைவசமயிகளுக்கு விக்கியாபனம்” (1868) என்னும் கட்டுரையில் எழுதியுள்ளார். பேராசை மட்டும் இருந்தாற் போதுமோ? வழிவகைகளும் காணல் வேண்டுமன்றோ! இவற்றைத் தனது எதிர்க்கட்சியினரிடமிருந்தே பெருமளவிற்குப் பெற்றுத் தமதாக்கிக் கொண்டார். “நாமும் ஏன் அந்தப் பாதிரிமார்கள் போலக் கிளம்பி நமது சைவசமயத்தைப் பரப்பலாகாது?’ என்ற கேள்வி நாவலருக்கு உதித்தது.
மேலைநாட்டுக் கல்வி - கலாசார ஆதிக்கத்தின் பண்பையும், பயனையும் நாவலர் கண்டு தனித்து நின்று, சமர் புரிந்தார். காலமும் இடமும் நோக்கி எதிரியின் பூாணங்களுக்குப் பதிற்பாணங்கள் சமைத்தமையே அவரது வரலாற்றுப் பணியின் இரகசியமாகும். இதனை எத்துணை அழுத்திக் கூறினும் தகும்.
இவ்வுண்மையினையே தனக்கேயுரிய நடையிற் பின்வருமாறு கூறியுள்ளார் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
“உண்மையை நோக்குமிடத்துப் பதினான்கு வருடக் கிறிஸ்தவ சூழலே நாவலரை நமக்குத் தந்தது. ஆபிரிக்க தேசமே காந்தியை மகாத்மா ஆக்கியது. பதினான்கு வருடக் கிறிஸ்தவ சூழல் அமையாதிருந்தால் ஆறுமுக நாவலர் என்றொருவர் யாழ்ப்பாணத்தில் இல்லை.”
தனது காலத்துச் சின்னஞ் சிறியது மனிதரிலிருந்து வேறுபட்டுப் புதுமையில் அடிபட்டுப் போகாமலும், பழமையில் அமிழ்ந்து போகாமலும் இரண்டையும் தரம் பிரித்து இனங்கண்டு புதுவழி கண்டமையாலேயே, “தத்துவ விசாரணி” பத்திராதிபர், “சென்னை முதல் ஈழமீறாகவுள்ள இத்தமிழ் நாட்டு வித்துவான்களில் தமக்கிணை இல்லாதவர்” என்று நாவலரை வருணித்தார். சி. வை. தாமோதரம் பிள்ளை தமது சேனாவரைய விளம்பரத்திலே (1868) நாவலரவர்கள் “தமிழ் நாட்டு வித்துவான்களில் தமக்கிணையில்லாதவர்”என்று விசேடித்தமை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்றே தோன்றுகிறது.
5. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி

Page 8
ଦ୍ବିତ୍ : நாவலரது இ%
6NaF. GBooroon
நாவலரது இலக்கணப் பணி, அவரது கல்விப் பணியின் ஒரு கூறாகும்; அவரது கல்விப் பணியே தமிழ்ப் பணியுமாகும்; இப்பணியோ அவரது சைவப்பணியின் கூறாகும். ஆகவே, நாவலரது இலக்கணப் பணியை ஆராயுமிடத்து, அதனை இந்தச் சார்பில் வைத்து நோக்குதல் இன்றியமையாதது. இல்லையேல், அதனை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளல் இயலாது. நாவலர் புதுமையாக ஒன்றை நாட்ட முயன்றவரல்லர். தொன்று தொட்டு வந்த சைவத்தை நிலை நாட்டுவதே அவரது குறிக்கோள். சைவத்தை நிலைநாட்ட முயன்ற போது, அதனோடு ஒருங்கியன்ற தமிழையும் தமிழர் கல்வி முறையையும் அவர் நிலைநாட்ட வேண்டியவரானார். நம்மவர் தொன்மையை மறந்து, அன்னிய நாகரிகத்தில் அழுந்திய காலத்தே அவர் தோன்றியவராதலாற் பழமையைப் பாதுகாப்பது அவரது கடமையாயிற்று. காலத்தை யொட்டி அவர் சில புதுமைகளைப் புகுத்தியுள்ளார் என்பதையும் நாம் மறத்தலாகாது. அவ்வாறு அவர் புகுத்திய புதுமை, நமது மரபுச் செல்வம் இயல்பாக வளர்ந்து வருங்காலத்து நிலை பெறுவதற்கு வழிவகுத்து விட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலே தோன்றிய நாவலர் இந்த இலக்கணச் செல்வத்தையே மரபுச் சொத்தாகப் பெற்றவர். நாவலர் பலவகையிலும் மாதவச் சிவஞான முனிவரை யொத்தவர். சிவஞான முனிவரது இலக்கண இலக்கிய தருக்க சைவசித்தாந்த அறிவையெல்லாம் அவர் அப்படியே எஞ்சாது பெற்றிருந்தாரெனல் மிகையாகாது. பதினெட்டாம் நூற்றாண்டிலே சிவஞான முனிவர் எவ்வாறு தன்னிகரில்லாது திகழ்ந்தாரோ, அவ்வாறே பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவலரும் திகழ்ந்தார். திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் விரும்பியவாறு நாவலர் சிவஞான முனிவரது தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தியையும் பாயிரவிருத்தியையும் இலக்கணவிளக்கச் சூறாவளியையும் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து வெளியிட்டார். அவ்வாறே இலக்கணக் கொத்துரை, தருக்கசங்கிரகம், அன்னம் பட்டியம், பிரயோகவிவேகம் ஆகிய நூல்களையும் அவர்
இந்து ஒளி - நாவலர் நினைவுச் சிறப்பிதழில் வெளியா கொழும்பு - முரீலழுநீ ஆறுமுக நாவலர் சபையினால் நன்றியுடன் பெற்று உயிர் நலத்திற்கு உழைத்த நாவலர் தற்கால உரைநடையின் தந்தை நாவலரும் தமிழ் மொழியும் தமிழகத்திலும் சைவப் பணியாற்றிய நாவலர் நாவலர் வகுத்த புதுப்பாதை நாவலர் சைவாகமத்தின் காவலர் நாவலர் சீரடிகள் வாழி
(இந்து ஒளி ---
 
 

១ចំG600K Lie00f
లిరdioయింDఆల_9_9______9_అలల అలల వీ
பரிசோதித்து வெளியிட்டார். இவை யாவும் இவருடைய இலக்கணப் பயிற்சி வன்மையைக் காட்டும். பழந்தமிழ் நூல்களைத் தேடி ஆய்ந்து பதிப்பித்தவர்களுள் முன்னோடியாய் விளங்கிய சி. வை. தாமோதரம்பிள்ளை, தொல்காப்பியச் சேனாவரையத்தை அச்சேற்ற விரும்பி, அதனைப் பரிசோதித்துத் தருவதற்கு நாவலரையே நாடினாரென்றால், நாவலரின் இலக்கணப் புலமைக்கு வேறு சான்று தேவையில்லை.
நாவலரின் கல்வித் திட்டத்திலே, இளைஞர்களுக்கு அறிவு வழங்குவதே முதலிடம் பெற்றது. ஏனைய புலவரெல்லாம் கற்றோர்க்கு நூல் எழுதுவதிலே காலங் கழிக்க, நாவலர் இளைஞர்களுக்குக் கல்வியூட்டுவதிலே நாட்டங்கொண்டிருந்தார். சைவத்தை நிலைநாட்ட வேண்டுமாயின், தமிழை வளர்க்க வேண்டுமாயின், வழிவழிவந்த அறிவுச் செல்வத்தைக் காக்க வேண்டுமாயின், தமிழ் இளைஞர் தகுந்த சூழலிலே கல்விகற்க வாய்ப்புச் செய்துதர வேண்டியது இன்றியமையாதெனக் கண்டார் நாவலர். ஆதலால், கல்வி கற்கும் மாணவர்களுக்கு வேண்டிய இலக்கண இலக்கிய நூல்களை இயற்றுவதிலே நாவலர் முனைந்துநின்றார். சேனாவரையத்தையேனும் நன்னூல் விருத்தியுரையையேனும் இளஞ்சிறார்க்குக் கற்பித்தல் இயலாது. அந்த உயர்ந்த இலக்கணங்களைப் பின்னர் கற்றுத் தேறுவதற்கு இளஞ்சிறார்க்கு அடிப்படை இலக்கண அறிவு வேண்டும். ஆதலாலே ஆறுமுக நாவலர் இலக்கண வினாவிடை இலக்கணச் சுருக்கம், நன்னூற் காண்டிகையுரை என்னும் மும்மணிகளை உரைநடையில் எழுதினார். இவை ஒவ்வொன்றும் ஒன்றி னொன்று உயர்ந்தவையாய், இளைஞர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் பான்மையில் அமைந்துள்ளன.
தொன்றுதொட்டு வந்த தமிழ் இலக்கண மரபைப் பாது காத்தமையும், காலத்துக்கேற்ப புதிய வழக்குகளை ஏற்று மொழி வளர்ச்சிக்கு நெறி வகுத்தமையும், கல்வி பயிலும் மாணவர் களிடையே இலக்கண அறிவு பரவுதற்கு வழி வகுத்தமையுமே ஆறுமுகநாவலர் தமிழ் இலக்கணத்துக்குச் செய்த பெருந் தொண்டாகுமென்பது பெறப்படும்.
ாடு
கியிருக்கும் பின்வரும் விஷயங்கள் 1969ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாவலர் மாநாடு விழா மலரிலிருந்து க் கொள்ளப்பட்டது.
ஞான ஞாயிறு நாவலர் பெருமான் நாவலரது இலக்கணப் பணி அச்சாளர் ஆறுமுக நாவலர் நாவலரின் கல்விப் பணி தமிழ் செய்த தவம் நாவலர் தாள் இறைஞ்சுதும் Arumuga Navalar
, சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 9
စူ၈ အရှေ့အနေ အရှေ့** အရှေ့အနေအရှေ့ဇု ́ தமிழகத்திலும் சைவப்
Fழத்திலே தமிழும் சைவமும் வாழ அவதரித்தவர் ஆறுமுக நாவலர் என்றே பொதுவாகப் பேசப்படுகின்றது. தமிழகத்திற்கு ஆறுமுக நாவலர் ஆற்றிய தொண்டு அவ்வளவு சிறப்பாகக் கணிக்கப்படுவதில்லை. மொழி பெயர்ப்புக்கலையிலே ஈழத்தவர் தலை சிறந்தவர் என்பதனையும், யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்பதனையும் பைபிள் மொழி பெயர்ப்பு மூலம் நிலை நாட்டி ஈழத்திற்குப் பெரும் புகழ் தேடிக் கொடுத்தது நாவலர் செய்த முதற் றொண்டாகும். ஆறுமுக நாவலர் முதன் முதல் தமிழகத்திற்குச் சென்றது பைபிள் மொழி பெயர்ப்பை அரங்கேற்றுவதற்காகும். அப்போது பார்சிவற் பாதிரியார் அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றிருந்தார். இவர்கள் சென்னை பட்டணம் சேர்ந்தபோது அங்குள்ள மிஷனரிமார், யாழ்ப்பாணத்திலே தமிழ்க் கல்வி குறைவானதென்றும், செந்தமிழ் பேசுவோர் அரியர் என்றும், யாழ்ப்பாணத் தமிழ்ப்பண்டிதராலே திருத்தப்பட்ட பைபிள் தமிழகத்துப் பண்டிதர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவர்கள் பிழையில்லையென்றும் வசனநடை நன்றாயிருக்கிறதென்றும் சொல்வார்களாயின் அச்சிற் பதிப்பிக்கலாமென்றும் நிபந்தனை யிட்டனர். இதற்கு நாவலர் இணங்கவே, அக்காலத்திற் சென்னையிற் சிறந்த வித்துவானாயிருந்த மகாலிங்க ஐயரிடம் மொழிபெயர்ப்பு பார்வைக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர் பைபிள் முழுவதனையும் படித்து, அதிற் பிழையில்லை என்றும், வசனநடை தெளிவாகச் சிறப்புற அமைந்திருக்கின்றதென்றும், அச்சிடு வதற்கு மிகுந்த தகுதியுடையதென்றும், யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்றும் பாராட்டினார். இந்த அரங்கேற்றத்தின் மூலம் ஈழத்துத் தமிழருக்குத் தமிழகத்தில் மதிப்பு ஏற்பட்டது.
அவரது இரண்டாவது தமிழகப் பிரயாணம் 1849 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அச்சுக்கூடம் வாங்கப் போனவரை ஆறுமுகநாவலராக்கியது அப்பிரயாணம். தமிழ் நாட்டிற் சைவப் பிரசங்கம் செய்து சைவப் பயிரை வளர்க்கவும், சைவ ஆதீனங் களைச் சைவப் பணியும் தமிழ்ப் பணியும் செய்யத் தூண்டவும் அப் பிரயாணம் வழிகோலிற்று. கல்வி கற்கும் பிள்ளைகளுக்குக் கருவி நூலுணர்ச்சியும் சமய நூலுணர்ச்சியும் ஊட்டத்தக்க நூல்களை அச்சிடுவதற்கு அச்சியந்திரத்தைக் கொண்டு வருவதற்கு 1849ஆம் ஆண்டு ஆடி மாதம் சென்னை பட்டணம் சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார். அங்கே யிருக்கும் பொழுது பண்டார சந்நிதிகளும் தமிழ் வித்துவான்களும் தமிழ் இலக்கண இலக்கியத்திலும் சைவ சித்தாந்த சாத்திரத்திலும் தமக்கு இருந்த ஐயங்களுக்கு விளக்கங் கேட்டுத் தம்மறிவை விருத்தி செய்து கொண்டனர். அவரது ஆற்றலைக் கண்டு வியந்த இரண்டாவது சந்நிதானமாகிய மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நாவலர்' என்ற பட்டத்தை வழங்கினார்.
ஆறுமுகநாவலர் மூன்றாவது தடவை தமிழகத்திற்குப் பிரயாணமானது, சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொள்வதற்கு. இது 1854 ஆம் ஆண்டில் அவரது 32ஆம் வயதில் நடைபெற்றது. அதன் பின் 1858 ஆம் ஆண்டில் தமது 36வது வயதில் பெரிய நூல்களைப் பதித்தற்குச் சென்னைக்குச் சென்றார். போகும் வழியிற் பல தலங்களை வணங்கி, திருவாவடுதுறை ஆதீனத்தை
(இந்து ஒளி

பணியாற்றிய நாவலர்
அடைந்தார். அங்கு சிலகாலம் தங்கியிருந்து பிரசங்கங்கள் செய்து கொண்டும் புராணப் பொருள் சொல்லிக் கொடுத்தும் பாராட்டுப் பெற்றார். பின்பு தருமபுர ஆதீனத்திலும் சிலநாள் சைவப் பிரசங்கங்கள் செய்தார்.
இவ்வாறு ஆதீனங்களில் சைவப் பிரசாரம் செய்து சென்னை பட்டணம் அடைந்து 1859 ஆம் ஆண்டில் திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரு நூல்களையும் பரிசோதித்து அவர் மாணவராகிய சதாசிவம்பிள்ளை பேராலே வெளியிட்டார். அவ்வாண்டில் வேறு பல நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார். நாவலர் நூல்களை அழகுற எவ்விதப் பிழையுமின்றிப் பதிப்பிப் பதைக் கண்ட இராமநாதபுரச் சமஸ்தானத்துப் பொன்னுச்சாமித் தேவர் நாவலரைச் சந்தித்து, சில நூல்களைத் தம் செலவில் அச்சிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அவ்வேண்டு கோளுக்கிணங்கித் திருக்குறள் பரிமேலழகர் உரை 1860 ஐப்பசியிலும், திருக்கோவையார் உரையும், தருக்கசங்கிரகம், அன்னம் பட்டீயமும் 1861 வைகாசியிலும் வெளிவந்தன. அம் மூன்று நூல்களுக்கும் திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், அவர் மாணவர் தியாகராச செட்டியாரை உள்ளிட்டவர்களும் சிறப்புப் பாயிரம் செய்தனர். மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமது சிறப்புப் பாயிர இறுதியிற் “கற்றுணர் புலவருட்களிக்கும் முற்றுணர் ஆறுமுக நாவலனே” என்று பாராட்டுகிறார். தியாகராசச் செட்டியார் தாம் சொல்லிய சிறப்புப் பாயிரத்தில் “என்னுள்ளங் குடிகொண்டு இருக்கு முன்னுசீராறுமுக நாவலனே” என்று மதிப்பளிக்கின்றார்.
எனவே தாம் தமிழகத்திலே தங்கிய மூன்றரை ஆண்டு காலத்திலே தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ் மொழியினையும் சமயத்தையும் வளர்த்துத் தமிழகத்தாரைத் தமக்குக் கடமைப்பாடு உடையவராக்கினார். நாவலர் பதிப்புக்கு மகிமை ஏற்பட்டது. பிற்காலத்திலே உ. வே. சாமிநாதையருக்கு ஆறுமுக நாவலரின் பதிப்புக்கள் வழிகாட்டின.
நாவலர் சென்னையில் நூல்களை வெளியிட்டுக் கொண்டி ருந்த அக்காலத்தில் அவரின் தொண்டினுக்கு மதிப்பு அளிக்குமுகமாக சைவ ஆதீனங்கள் யாவும் அவரை அழைத்துப் பெரிய உபசாரங்கள் செய்தன. திருமயிலாப்பூரிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்துச் சின்னப்பட்டமாகிய ஆறுமுக தேசிகர் நாவலரைத் தம் மடத்திற்கு அழைத்து அவரது இலக்கண இலக்கியத் திறமையையும் சித்தாந்த நூலுணர்ச்சியையுங் கண்டு தாம் அணிந்திருந்த உருத்திர சஞ்சியத்தை ஞாபகப் பொருட்டாக அளித்துச் சிறப்புச் செய்தார். அதன் பின் திருவாவடுதுறை ஆதீனத்தில் சில காலம் தங்கி, அங்கும் உபசரிக்கப்பட்டார். அதன்பின் திருநாகைக் காரோணத்துக்கு வந்தார். அங்கும் சைவப் பிரசங்கஞ் செய்து உபசரிக்கப்பட்டார்.
தமிழ் நாட்டிலும் சைவப்பிரகாச வித்தியாசாலைகள் நிறுவ வேண்டுமென விரும்பினார். அதற்கிணங்க முதலிற் சிதம்பரத்தில் ஒரு வித்தியாசாலை நிறுவ எண்ணினார். அதன் பொருட்டுப் பலநாட் சிந்தனை செய்து தனது திட்டங்களை விளக்கி, நிறைவேற்ற வேண்டிய வழிகளையும் தெரிவித்து, அறிக்கை
ఎ6 ఎు
) )
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 10
வெளியிட்டார். ஆனால் சிதம்பரத்திற் கல்வி நிலையம் நிறுவத் தமிழகத்திற் பணம் சேரவில்லை. இந்நிலையில் ஈழநாடு, தமிழகத்திற்குக் கைகொடுத்துதவியது. பணம் திரட்டுவதற்கு 1862ஆம் ஆண்டு பங்குனி மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்.
யாழ்ப்பாணத்திலே தாம் நிறுவிய வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிலே சபை கூட்டிச் சிதம்பர வித்தியாசாலை நிறுவுவது பற்றி விரித்துக் கூறினார். அப்போது அங்கு வந்திருந்த பலர் தங்களால் இயன்ற பொருளுதவி செய்தார்கள். தொடர்ந்து பருத்தித்துறை சித்திவிநாயகர் கோயிலிலே இது பற்றிப் பிரசங்கம் செய்தார். அங்குள்ளவர்களும் தம்மால் இயன்ற பண உதவி செய்தனர். அத்துடன் பருத்தித் துறையிலும் புலோலியிலுமுள்ள வர்த்தகர் சிலர் சிதம்பர வித்தியாசாலை நடத்துவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தனர். சிதம்பரத்தில் வித்தியாசாலை தொடங்கும் ஆயத்தங்களுடன் தமது 41வது வயதில், 1864ஆம் ஆண்டில், தமது ஐந்தாவது இந்தியப் பிரயாணத்தைத் தொடங்கினார். சேதுஸ்நானம் செய்து கொண்டு மதுரைக்குப் போகும் வழியில் இராமநாதபுரத்துக்குப் போய், அங்குள்ள திருவாவடுதுறை மடத்திலே தங்கினார். அங்கு பொன்னுச்சாமித் தேவரின் மரியாதைகளைப் பெற்று மதுரைக்குச் சென்றார். அங்கு மீனாட்சி அம்மை சன்னிதானத்திலே அத்தலத்தின் பெருமையையும், சொக்கலிங்க மூர்த்தியின் பெருமையையும், சைவ சித்தாந்தத்தின் உயர்வையும் விரித்துப் பிரசங்கித்தார். நாவலருக்கு வீயூதிப் பிரசாதத்தைக் கையிற் கொடுத்துப் பரிவட்டத்தைத் தலையிலே கட்டி ஒரு மாலையைத் தோளிலிட்டு வாழ்த்தினர். பின்பு அங்குள்ள மடத்திற் சிலநாட்கள் பிரசங்கஞ் செய்து வரிசை பெற்றுத் திருவண்ணாமலை ஆதீனத்திற்கு வந்தார். அங்கு நாவலரைப் பல்லக்கில் ஏற்றி வரிசைகளுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தனர். அங்கிருந்து திருப்பெருந்துறைக்குச் சென்று சைவப் பிரசங்கஞ் செய்தார். அங்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவரான இராமசாமிப் பிள்ளையின் திருவிளையாடற் புராணத்திலும், வன்றொண்டர் செட்டியார் நன்னூல் விருத்தி உரையிலும் பாடங் கேட்டுக் கொண்டனர்.
திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டுப் பலதலங்களுக்குஞ் சென்று கும்பகோணம் வந்தபோது, திருவாவடுதுறைச் சுப்பிரமணியதேசிகர் மடத்துக்கு அழைத்து உபசரித்தனர். அங்கு பிரசங்கம் செய்துகொண்டிருக்குங் காலத்தே மீனாட்சி
7
இந்து ஒளி - விலை/ ச
அண்மைக்காலத்தில் அச்சுத்தாள் விலையேற்றம், அச்சுக் கூலி
“இந்து ஒளி”காலாண்டிதழின் விலையிலும் சிறிதுமாற்றத்தைக்கொ அச்சுக் கூவியாக பிரதியொன்றுக்கு ரூபா 48= வரை செலவாகிறது நன்மை கருதி மிகவும் குறைந்த விலையிலேயே “இந்து ஒளி' வெளியீட்டிலிருந்து “இந்து ஒளி” தனிப் பிரதியின் விலை 30/= ரூ தபால் மூலமாகப்பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஒருவருடத்திற்கு தபாற் செலவாக மேலதிகமான கட்டணமொன்றையும் செலுத்தவேண்
இந்தப் புதிய விலை சந்தா கட்டணம் என்பன இந்து ஒளிசந்தாப்பணத்தை காசோலை அல்லது காசுக்கட்டளைமூலமாக அ \ளுமன்றம் (All Ceylon Hindu Congress) என்றும், பணம் பெறும் இடம்
இந்து ஒளி

சுந்தரம்பிள்ளையும் பல தம்பிரான்மாரும்வித்துவான்களும் அவரிடம் சென்று சித்தாந்த நூல்களிலும் இலக்கண இலக்கியங்களிலும் தமக்குள்ள சந்தேகங்களைப் போக்கினர். மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் நாவலரிடம் பாடம் கேட்டதுமன்றி, அவரைத் தெய்வம் போலப் போற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகநாவலர் திருவாவடுதுறையிலிருந்து சிதம்பரத்துக்குச் சென்று சிதம்பர வித்தியாசாலையை நிறுவுவதிற் பெரிதும் முயன்றார். 1864ஆம் ஆண்டு ஐப்பசியில் வித்தியாசாலை தொடங்கிற்று. தில்லைவாழந்தணர்கள், மற்றைப் பிராமணர்கள், ஈசானசாரியர்கள் முதலிய யாவரின் பிள்ளைகளும் அங்கு கற்றனர். ஆறுமுகநாவலர் சில ஆண்டுகள் சிதம்பரத்திலும் சென்னையிலும் தங்கினார். அப்பொழுது நமசிவாயத் தம்பிரான் உட்பட பலர் அவரிடம் பாடங்கேட்டனர். சென்னையிலே தமது இருப்பிடத்தில் வாரந்தோறும் சைவப்பிரசங்கம் செய்து வந்தார். பக்கத்திலுள்ள இடங்களிலும் பிரசங்கம் செய்தார். திருத்தொண்டைநாட்டுப் பதி புண்ணிய பரிபாலன சபைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுப் பிரபலம் பெற்ற இரு பிரசங்கங்கள் நிகழ்த்தினார்.
நாவலர் சென்னையிலிருந்த காலத்தில் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். மூன்றாம் பாலபாடம் நல்ல முறையில் வெளிவந்தது. கந்த புராண வசனம், திருவிளையாடற் புராணம், பெரிய புராண சூசனம் முதலியவற்றை அச்சிற்பதிப்பித்து வந்தார். இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கணக் கொத்து ஆகியவற்றை சுப்பிரமணிய தேசிகரது கட்டளைப்படி பரிசோதித்து வெளியிட்டார். சி. வை. தாமோதரம்பிள்ளை சேனாவரையத்தை நாவலரைக் கொண்டு பரிசோதிப்பித்து 1868இல் வெளியிட்டார்.
இவ்வாறு தமிழகத்திலே யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்று நிலைநாட்டியும், நாவலர் என்ற பட்டத்தைப் பெற்றும், சைவப் பிரசங்கமாரி பொழிந்து சைவப் பயிரை வளர்த்தும், சைவ ஆதீனங்களிற் பலருக்குச் சமய அறிவும் தமிழறிவும் ஊட்டியும், அவ்வாதீனங்களைச் சைவப் பணியிலும் தமிழ்த் தொண்டிலும் வழிநடத்தியும், சிவநிந்தனையையும் போலிக் கொள்கைகளையும் நீக்கியும், சிதம்பரச் சைவவித்தியாசாலை மூலம் தமிழ்க் கல்வியைச் சமய அடிப்படையில் வளர்த்தும், நாவலர் பதிப்பு என்று எவரும் மதிப்புக் கொடுக்கக் கூடிய முறையில் நீல்களை பிரசுரித்தும் தமிழகத்தை ஈழநாட்டிற்குக் கடமைப்படுத்தியிருக்கின்றார் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர்.
ཛོད་༽
*ந்தா கட்டணம் மாற்றம் மி உயர்வு அஞ்சல் கட்டணம் அதிகரிப்புபோன்ற காரணங்களினால் ண்டுவரவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. “இந்து ஒளி”சஞ்சிகையின் . எனினும், இந்துப்பெருமக்களின் குறிப்பாக இந்து மாணவர்களின் 'யை விநியோகம் செய்து வருகிறோம். அந்தவகையில் கடந்த தபாவாகும். வருடாந்த சந்தா செலுத்தி “இந்து ஒளி சஞ்சிகையை ரிய நான்கு வெளியீடுகளுக்கான (30/= x4)120/= ரூபா பணத்துடன், iண்டியிருக்கிறது.
தீபம் 1, சுடர் 04 வெளியீட்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. னுப்பிவைக்கலாம். பணம்பெறுபவர் பெயர்: அகில இலங்கை இந்து ) : கொழும்பு (Colombo) என்றும் எழுதப்படவேண்டும். گرے
8. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 11
※***************** Irama,
நாவலரின் ச * වෛද්‍යෝර්ජ් ඊ. ඊ. ඊ. ඊ. ඊ. ඊ. ඊ. ඊ. ඊ.ඊජෙ. බෝime
திண்ணைப் பள்ளிக்கூடம்
நாவலர் அவர்கள் தோன்றிய காலத்தில் யாழ்ப்பாணத்திலும், தமிழ் நாட்டிலும் ஆரம்பக் கல்வியைப் பெறுவதற்குத் திண்ணைப் பள்ளிக் கூடங்களுக்கே பிள்ளைகள் சென்றனர். இத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் ஆசிரியர் வீட்டுத் திண்ணை களிலேயே நடைபெறும். ஆசிரியர் ஒருவரே இருப்பார். அவருக்கு உதவியாக அவரிடம் கற்கும் மேல் வகுப்பு மாணவர் கீழ் வகுப்பு மாணவர்களுக்குப்பாடஞ் சொல்லிக் கொடுப்பர். காலத்துக்கேற்ப நாவலர் அவர்களும் தமது ஆரம்பக் கல்வியைச் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் நடாத்திய திண்ணைப் பள்ளிக்கூடத்திற் பெற்றார். அங்கு தமிழ் நெடுங்கணக்கு, எண்சுவடி, நீதி நூல்கள், நிகண்டு முதலியவற்றைக் கற்றார்.
தமிழ் இலக்கண இலக்கியப் பயிற்சி
நாவலர் அவர்கள் காலத்தில் தமிழ் இலக்கண இலக்கியங் களையும், சமய நூல்களையும் கற்க விரும்பினோர் சிறந்த தமிழ் வித்துவான்களையடைந்து குரு சீட முறையில் கல்வி கற்று வந்தனர். அக்காலத்தில் வித்துவான்கள் இருக்கும் இடங்களே தமிழ்க் கல்லூரிகளாக விளங்கின. கல்வியில் அதிகம் ஊக்கம் காட்டிய நாவலர் அவர்களை, சரவணமுத்துப் புலவரிடத்தும், சேனாதிராய முதலியாரிடத்தும் படிப்பதற்கு இவர்களுடைய தமையன்மார் ஒழுங்கு செய்தனர். ஆனால், இவ்வித்துவான்கள் நாவலர் அவர்களுடைய கல்விப் பசியைத் தீர்க்கக்கூடிய நிலையி லிருக்கவில்லை. பெரும்பாலும் தாமாகவே அனேக நூல்களைக் கற்றுக் கொண்டார். உயர்தரக் கல்வியைத் தமிழிற் பெறுவதற்குத் தாம்பட்ட கஷ்டங்களே, பிற்காலத்தில் தகுதிவாய்ந்த மாணவரைச் சேர்த்து இலவசமாகக் கற்பிக்க இவரை ஊக்கியிருக்க வேண்டும். வண. பார்சிவல் அதிபராகவிருந்த காலத்தில்தான் நாவலர் அவர்கள் மத்திய கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். அங்கு கற்று மேல் வகுப்புக்கு வந்ததும், கீழ் வகுப்பு மாணவருக்கு ஆங்கிலமும், மேல்வகுப்பு மாணவருக்குத் தமிழும் கற்பித்து வந்தார். 1841ல் பார்சிவல் இவர்களைத் தமது தமிழ்ப் பண்டிதராக நியமனஞ் செய்தார். பண்டிதராகவிருந்து பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவி செய்தார். மத்திய கல்லூரியில் மாணவனா கவும், ஆசிரியராகவும், பண்டிதராகவும் பதினான்கு ஆண்டுகள் வரையிற் கழித்தார். இக்காலத்தில் மிஷனரிமார் சைவப் பிள்ளைகளைக் கிறீஸ்தவராக்குவதற்குச் செய்த சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஆவன செய்ய விரதம் பூண்டார்.
மாணவருக்கு வகுப்பு நடத்துதல்
வண. பார்சிவலுக்குத் தமிழ்ப் பண்டிதராகவிருந்து கொண்டே 1846ம் ஆண்டு தொடக்கம் தக்க மாணவரைச் சேர்த்து இரவிலும், காலையிலும் இலவசமாகக் கல்வி கற்பித்து வந்தார். இப்படிப் படித்தவரிற் பலர் பிற்காலத்தில் அளப்பரிய தொண்டாற்றினர். இவர்களுள் சதாசிவம்பிள்ளை, ஆறுமுகம்பிள்ளை, பொன்னம்பல பிள்ளை, செந்தில்நாதையர் என்பவர்கள் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள். சதாசிவம்பிள்ளை நாவலர்
இந்து ஒளி

ல்விப் பணி
බාහLmඇෆ්r}°_ෂඥ_ඳෙ_9ඥ_ඳේ_ෂඥ_9ළු_පංඥ_ඳෙ_9ළු_පංඥා ෂඥ වෛ_ෂඥ_වල_පෙ ඊළු_දී)
அவர்களைப்போல் நைட்டிகப்பிரமச்சாரியாகவிருந்து, அவர்களின் தர்மத்தை நெடுங்காலம் பரிபாலித்து வந்தவர். ஆறுமுகம்பிள்ளை பின்னர் ஆறுமுகத்தம்பிரானாகிப் பெரிய புராணத்துக்குச் சிறந்த உரை கண்டவர். பொன்னம்பலபிள்ளை நாவலர் அவர்களின் மருகன். இவர் வித்துவ சிரோமணியாக விளங்கி, புராணங்களுக்கு உரை சொல்வதிலும், மாணவருக்குப்பாடஞ் சொல்வதிலும் தமக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாராய் நாவலர் அவர்களது மாணவ பரம்பரையை விருத்தி செய்தவர். செந்தில்நாதையர் பிற்காலத்தில் காசிவாசி செந்தில்நாதையர் என அழைக்கப்பட்டு தமிழ், வடமொழி இரண்டையும் துறைபோகக் கற்று நீலகண்ட பாஷியத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு, “தேவாரம் வேதசாரம்” முதலிய நூல்களை எழுதியவர்.
சைவப்பிரகாச வித்தியாசாலைகளைத்தாபித்தல் மிஷனரிமார் தங்கள் பள்ளிக்கூடங்களில் மறு பாடங்களோடு, சமயத்தை ஒரு முக்கிய பாடமாகக் கற்பித்து வருவதைக் கண்ட நாவலர் அவர்கள் சமய அடிப்படையில் வித்தியாசாலைகளை ஸ்தாபிக்க நிச்சயித்தனர். 1848ம் ஆண்டில் முதல் சைவப்பிரகாச வித்தியாசாலை வண்ணைச் சிவன் கோயில் முன்பாகவுள்ள ஒரு வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர்தான் இவ் வித்தியா சாலைக்கென நிரந்தரமான நிலமும் கட்டடமும் ஏற்பட்டன. ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லாததால் வீடுதோறும் பிடியரிசி தண்டி, அதனை விற்றுச் சம்பளம் கொடுத்துவிட்டார். பின்னர் சேர்க்கும் கூலிக்கும் சேர்ந்த அரிசி காணாதபடியால் பிடியரிசி சேர்ப்பதும் நின்றுவிட்டது. ஆசிரிய ராகக் கடமையாற்றிய சதாசிவம்பிள்ளை போன்றோர். இவர் களுடைய மாணவராயிருந்தபடியால் நெடுங்காலம் சம்பளம் வாங்காது கல்வி கற்பித்து வந்தனர். எவ்வளவு பண நெருக்கடி இருந்தபோதிலும் மாணவரிடமிருந்து பணம் வாங்கியது கிடையாது. இப்படியிருக்கும் காலத்தில் பாடசாலைக்கென இரு கடைகளை வாங்க விரும்பினர். கையில் பணமில்லாதபடியால் மன மிக நொந்து இறைவனை வேண்டினார். இறைவனருளால் கொழும்பிலிருந்த தனவந்தரும், சேர். பொன்னம்பலம் இராம நாதனின் மாமனாருமான நன்னித்தம்பி முதலியார் அவர்கள் பண உதவி செய்ய முன் வந்தார். அவர்கள் உதவிய பணத்தைக் கொண்டு இரு கடைகளும் வாங்கப்பட்டன.
அக்காலத்து அரசாங்கம் கிறீஸ்த மத சார்புடையதாக விருந்தபடியால் இவ்வித்தியாசாலைக்கு இருபது வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்தினரிடமிருந்து பண உதவி கிடைக்கவில்லை. பல இன்னல்களிருந்த போதிலும் தாம் ஏற்படுத்திய வித்தியா சாலைகளை முறையாக நிர்வாகம் செய்து வந்தார். ஆண்டு தோறும் வித்தியாசாலைகளைப் பற்றிய அறிக்கையை (வரவு செலவுக் கணக்கு உட்பட) வெளியிட்டதோடு, தக்காரைக் கொண்டு மாணவர்களைப் பரீட்சித்து வந்தார். எக்கருமத்தைச் செய்தாலும் “செய்வன திருந்தச் செய்” என்னும் முதுமொழியை இலட்சியமாக வைத்துச் செயலாற்றினார்.
9. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 12
வண்ணார்பண்ணை சைவ வித்தியாசாலையைத் தொடர்ந்து கொழும்புத்துறை, கோப்பாய், பருத்தித்துறை, ஏழாலை முதலியவிடங்களில் வித்தியாசாலைகள் தோன்றின.
நாவலரின் கல்விப்பணியாழ்ப்பாணத்தோடு அமையவில்லை. சைவர்களுக்குச் சீவநாடியாக விளங்கும் சிதம்பரத்திலும் ஒரு சைவ வித்தியாசாலையை 1864ம் ஆண்டில் நிறுவினார். இவ்வித்தியாசாலையை நிறுவுவதற்குப் பணம் உதவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்களே என்பதை நாம் மறக்கலாகாது.
சைவாங்கில வித்தியாசாலையைத் தொடங்குதல் மெதடிஸ்ற்மிஷனரிமார் கில்னர் கல்லூரி என்னும் ஓர் ஆங்கில பாடசாலையை வண்ணார்பண்ணையில் நடாத்தி வந்தனர். அதில் கல்வி கற்ற மாணவர்கள் சம்பளம் கட்டிப் படித்து வந்தனர். இப்படிச் சம்பளம் கட்டிப் படித்தவர்களிற் பலர் சைவப் பிள்ளைகள். இவர்கள் அங்கு படித்துவரும் பொழுது 1871ம் ஆண்டில் அக்கல்லூரி அதிபர் சைவப் பிள்ளைகளைத் திருநீறு அணிந்துகொண்டு வரக்கூடா தெனக் கட்டளையிட்டார். திருநீற்றை அழிக்கும்படி உத்தரவிட்டார். அப்படி அழிக்க விரும்பாத பிள்ளைகளைப் பாடசாலையை விட்டு வெளியேறும்படி கூறினார்.
இக்கல்லூரியிலிருந்து வெளியேறிய பிள்ளைகளின் பெற்றோர் நாவலர் அவர்களை அணுகி, தம் பிள்ளைகளின் கல்விக்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்யும்படி வேண்டினர். இதன் விளைவாக சைவாங்கில வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வித்தியாசாலை நான்கு வருடங்கள் நடாத்தப்பட்டும் கிறீஸ்தவ பாதிரிமாரின் எதிர்ப்பினால் அரசாங்க உதவி கிடைக்கவில்லை. இவ்வித்தியாசாலைக்கு அரசினர் அங்கீகாரம் இல்லாதபடியால் மாணவர் தொகை வரவரக் குறையத் தொடங்கியது. இக்காரணங் களினால் இவ்வித்தியாசாலை 1874ல் மூடப்பட்டது. ஆனால் இம்முயற்சி வீண்போகவில்லை. பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தோன்றுவதற்கு இது முன்னோடியாக விருந்தது.
பாடப் புத்தகங்கள் வெளியிடுதல்
வித்தியாசாலைகளை ஆரம்பித்த பின் அவ்வித்தியாசாலை களில் உபயோகிப்பதற்கேற்ற பாடப்புத்தகங்கள் இல்லாமை கண்டு அக்குறையை நிவிர்த்தி செய்ய முன்வந்தார். வகுப்புக்கும் வயதுக்கும் ஏற்ற முறையில் மூன்று பாலபாடங்களை எழுதி வெளியிட்டார். கடுஞ் சந்திகளைப் பிரித்தும், குறியீடுகளை உபயோகித்தும் முதன் முதலில் நூல்களை வெளியிட்டவர் இவரே. கீழ்வகுப்புகளில் உபயோகிக்கப்பட்ட ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலியவற்றுக்கு உரையும் அவராலேயே எழுதப்பட்டன. இலக்கணத்தை எளிதிற்போதிப்பதற்கு உதவியாக இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம் முதலியவற்றையும் வெளி யிட்டார். சைவ சமயத்தைப் போதிப்பதற்கு இரண்டு சைவ வினா விடைகள் இவரால் எழுதப்பட்டன. இந்த இரு சைவ வினாவிடை களையும் நான்காம் பால பாடத்தையும் ஒருவன் செவ்வனே கற்பானேயாகில் அவன் வாழ்க்கைக்கு வேண்டிய சமய உண்மைகளை அறிந்துகொள்வான்.
நாவலர் அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றி நூற்றுக் கணக்கான சைவ வித்தியாசாலைகளும், இந்துக் கல்லூரிகளும் தோன்றிச் சைவத்துக்கும் தமிழுக்கும் அருந் தொண்டாற்றி வருகின்றன.
(இந்து ஒளி

లిసీక SAALLLLLAALLeL qeeLLLLL LLLLCLLeeLLLLL LL LLLLLLCLLTLqLL LeATTMMq
O நாவலர் சைவாகமத்தின் காவலர்
மாந்தள் மேன்யானை
tpങ്ങfള ug് னானைத் தீந்தமிழ் ஹாலினானைச்
செUமணிக் கையி னானைக் கரந்தமின்சாரம் &Uroš
கவர்ந்திருந் தோற்றத்தானை ஏந்திசை பரலி னானை
என்னுளே வணங்கி னேனே.
வூரம்பெறு ஹாக்கி னானை
வஞ்சமில் வநஞ்சி னானை உரம்பெறு மேன் யானை
உயர்சிவ சமயம் வாழ நிரலிேய பணிசெய்தானை
நீள்தவ வேள்வியானைப் பரம்பொருட் பற்றி னானைப் பற்றினார் பற்றற் ராரே
நாவலர் அவரே யாஹிார்
நமதுசை வாக மத்தின் காவலர் அவரே; இன்பக்
கன்தமிழ் அழுதம் ஊறும் பாஹிலர் அவரே; எங்கள்
பைந்தமிழ் உலகை யாளும் கோவலர் அவரே வெற்றி
கொட்டுக முரச மிங்கே !
- கவியோகி சுத்தானந்த பாரதியார் ില്ക്കി
elഞ്ഞL) படத்தில்
முநீலழுநீஆறுமுகநாவலர் திருவுருவப்படத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் அன்றைய, இன்றைய முகப்புப் படங்களும்“இந்து ஒளி' சஞ்சிகையின் அட்டையை
அலங்கரிக்கின்றன.
10 : சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 13
தற்கால உரைநடையின்
நாவலர் செய்துள்ள தமிழ்ப் பணிகளுள் காலத்துக்கு ஏற்ற வகையிலே தமிழ் உரை நடையை வளரச் செய்வதற்கு அவர் கையாண்ட வழிவகைகள் பாராட்டற்குரியவை. நாவலரது உரை நடையிற் காணப்படும் சிறப்பியல்புகளை நன்கு ஆராய்ந் தறிந்தவர்கள் அவரை, தற்கால உரைநடையின் தந்தை' என்றும்,
வசனநடை கைவந்த வல்லாளர் என்றும் பாராட்டியுள்ளனர்.
மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் தமிழ் உரைநடை ஒரு சாதனமாக அமைதல் வேண்டும் எனக் கொண்டு நாவலர் பொது மக்களைச் சமயநூற் பயிற்சியும் அறிவும் உடையவர்களாக ஆக்குதற்பொருட்டு, அவர்களுக்கு ஏற்ற வலுப் பொருந்திய ஒரு நடையினை உருவாக்கத் துணிந்தார்.
மக்களின் அறிவு விருத்திக்கு ஏற்ற ஒரு கருவியாக உரை நடையை அமைப்பதற்கு நாவலர் மேற்கொண்ட வழிவகைதான் அவரை நாம் தற்கால உரைநடையின் தந்தை' என்று பாராட்டுதற்கு ஏதுவாகின்றது. நடையிலே கடின சந்திகளை நீக்குதற் பொருட்டும், ஒத்திசையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துதற் பொருட்டும் ஏகாரத்தையும் பிற இடைச்சொற்களையும் இடையிடையே பெய்து வாக்கியங்களை இலகுபடுத்தியதோடு, எச்சங்களைப் பெய்து வாக்கியங்களை நீட்டிச் செல்லும் வழக்கிற்கு மாறாக, எச்சங்களை முற்றாக்கிச் சிறுச் சிறு வாக்கியங்களை அமைத்தும், தரிப்பிசைக் குறிமுதலிய ஆங்கிலமொழிக் குறியீட்டு முறைகளைத் தக்கவாறு உபயோகித்தும், தமிழ் உரைநடை வரலாற்றிலே ஒரு புதிய திருப்பத்தை நாவலர் ஏற்படுத்தினார் எனலாம். இதற்கு ஓர் உதாரணமாக நாவலர் எழுதிய பாலபாடம் இரண்டாம் புத்தகத்திலுள்ள முதல் வாக்கியத்தைக் கூறலாம். அது வருமாறு:
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டே, ஆம்.”
இந்த வாக்கியம் அந்நூலின் முதற்பதிப்பிலுள்ளவாறு தரப் பட்டுள்ளது. பொருட்டாம் என்னும் சொற்றொடர் பேச்சு வழக்கில் ஒரு பொருளையும் எழுத்து வழக்கில் இன்னொரு பொருளையும் குறிப்பதால், தாம் கருதிய பொருளைக் குறித்தற் பொருட்டு அதனை இரு சொற்களாக ஏகாரம் பெய்தும் தரிப்பிசைக் குறியிட்டும் எழுதியுள்ளார். இதேபோல, வாக்கியங்களைப் பொருள் எளிதிற் புலப்படுமாறு அமைத்தற்கு நாவலர் மேற்கொண்ட வழி வகைகள் பலவற்றை அவர் நூல்களிலும் கட்டுரைகளிலும் காணலாம். இவ்வாறு சில உபாயங்களை மேற்கொண்டு வசனங் களை அமைத்துக் காட்டியதனால் தமிழுரை நடை வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை நாவலர் ஏற்படுத்தினார் எனலாம்.
பொதுமக்கள் அறிவு விருத்திக்கு ஏற்ற ஒரு கருவியாகத் தமிழில் உரைநடை அமைதல் வேண்டும் என்பதை மனத்திற் கொண்டு தற்கால உரைநடைக்கு வழிவகுத்துத் தமிழ்ப்பணிபுரிந்த நாவலர், தம் காலத்தில் வாழ்ந்த இராமலிங்க சுவாமிகள் முதலானோர் போன்று நீண்ட வாக்கியங்களை அமைத்து எழுதுவதையும் கைவிடவில்லை என்பதைத் திருவிளையாடற் புராண வசனத்திலே, புராண வரலாறு கூறுமிடத்திலே முதல் வாக்கியமாக அமைந்துள்ள நித்தியராய், வியாபகராய். எனத் தொடங்கி அளவிறந்த பெருங்கருணையோடு வீற்றிருந்தருளுவர்
இந்து ஒளி
 

என முடியும் ஏறக் குறைய இருநூறு சொற்களாலாய வாக்கியத்தைக் கொண்டு அறியலாம். இத்தகைய பொருட் செறிவும், ஒத்திசைச் சிறப்பும், ஆற்றொழுக்கான போக்கும், தெரிந்தெடுத்து அமைத்த சொற்களும் பொருந்திய வாக்கியங்களை அவர் எழுதியிருத்தலை நோக்கும் பொழுது, கல்வியறிவுடையோர் மனங்கொள்ளக்கூடிய வகையிலே எப்பொருளையும் வசன நடையில் அமைத்தெழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது என்பதைத் தெளிவாகக் காணலாம். அவர் இயற்றிய பெரிய புராண சூசனமும் சில கண்டனக் கட்டுரைகளும் அவர் ‘வசன நடை கைவந்த வல்லாளர் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
பல்துறை வல்லுநர் நாவலர்
இலக்கியங்களிலும் வல்லவர். இலக்கணங்களிலும் வல்லவர். நீதிநூல்களிலும் வல்லவர். நியாயநூல்களிலும் வல்லவர். சைவசித்தாந்த சாத்திரங்களிலும் வல்லவர்.
சைவாகமங்களிலும் வல்லவர்.
சைவாகமப் பெருமையைச் சாதித்துப் போதித்தலிலும் வல்லவர். 9 கலை பயில்வோருளங்கொளக் கற்பிக்குஞ்செயலிலும்
வல்லவர். 9 உலகியல்களைப் பலதலையின்றி உணர்த்தலிலும்
வல்லவர். 9 செந்தமிழ் நூல்களைத் திருத்தியச்சிடுஞ் செயலிலும்
6666. 9 செந்தமிழ் வாக்கியங்களைச் சிறப்புறத் தொடுத்து
வரையுஞ் செயலிலும் வல்லவர். சைவப் பிரசங்கத்திலும் வல்லவர். புராணப் பிரசங்கத்திலும் வல்லவர். கசட்டு நெறிகளை மறுத்தெழுதுங் கண்டனங்களிலும்
666)6) T.
செய்யுளியற்றுந் திறத்திலும் வல்லவர்.
- சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர்
(தமிழ்ப்புலவர் சரித்திரம்"என்றநூலிலிருந்து)
இறைநம்பிக்கை இல்லாதவனுக்கு எதுவுமே இல்லை. ஆண்டவன் வழிபாடு அறியாமையைப் போக்கும். எல்லாவற்றையும் வெல்வது ஞானமே!
குறைய வேண்டியது பாஹிம், நிறைய வேண்டியது புண்ணியம்.
11 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 14
தமிழ்த் தாய் செய்த நல்லூழால் தோன்றினார் யாழ்ப் பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர். அவரால் தமிழ்மொழி பெற்ற மிகப் பெரிய வளர்ச்சி, உரைநடை வளர்ச்சி என்று கூறுவது பெரிதும் உண்மையாகும்.
‘வசன நடை கைவந்த வல்லாளராக நாவலர் விளங்கினார். தமிழ்மொழி கவிதைக் கலை உயர்வுடன் உரைநடைச் சிறப்பும் ஓங்கித் திகழ்தல் வேண்டும் என்பது இச்சான்றோரின் கருத்து ஆகும். தமிழ் உரை நடையின் தந்தை என்று வல்லோர் இவரைப் போற்றலாயினர். இவர் எழுதிய நடை செந்தமிழ் நடையாகும். எளிமையும் இனிமையும் தவழ இவர் எழுதினார்; உரைநடையிலும் செம்மை தோன்ற, உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலும் என்று காட்டினார். ஆங்கில மொழியிற் சிறப்புற்று விளங்கும் குறியீட்டு இலக்கணத்தை, நாவலர் தமிழுக்குக் கொண்டு வந்து பொருத் தினார்; இதனால், உரைநடை எழுதுவோனும் உணர்ச்சியைப் பயில்வோனும் இனிது பெறமுடிந்தது. கிறித்தவர் வேதமான விவிலியநூலைத் தமிழில் மொழிபெயர்த்த இப்பெருந்தகையாளர், தமிழ் எண்களையே அதிற் கையாண்டு தம்முடைய தமிழ்ப்பற்றை உரிய இடத்து ஓங்கச் செய்துள்ளார்.
வினாவிடை வடிவில் (Catechism) தமிழ் இலக்கணத்தையும், சைவசமய உண்மைகளையும் இவர் படைத்தார். மாணவர்கள் எளிதில் மொழியின் நுட்பங்களையும், சமயத்தின் சால்புகளையும் விளங்கிக் கொள்வதற்கு இம்முறை பெரிதும் துணை புரியலா யிற்று. இவற்றை மனப்பாடம் செய்து பழகுதற்கு இம்முறை பெரிய வாய்ப்பாயிற்று. சைவசமய வினாவிடையும், இலக்கண வினா விடையும் இவ்வாறு பேரிடம் பெற்றுப் பிறங்குவனவாயின. தேவை எனத் தாம் கருதுமிடங்களில், இவர் வடசொற்களையும் விரவி யெழுதினார். ஆயினும் இவ்வாட்சி அளவிற்குறையே என்பது உற்று நோக்கி உணரத் தக்கதாகும்.
பழமையும் பெருமையும் உடைய திருவாவடுதுறை ஆதீனம் நாவலரது பேச்சுத் திறனையும், அதனால் தமிழ்மொழி பெற்று வரும் பெரும்பலனையும் கண்டு வியந்துநாவலர்' என்ற பட்டத்தை அவர்க்கு நல்கி அரும்புகழ் கொண்டது. ஆதலின் புதிய தமிழின் இருகூறுகளாகிய புத்தகத்துறை, மேடைத்துறை ஆகிய இருபெருந் துறைகளிலும் ஈடும் எடுப்புமற்ற பணிபல செய்து உயர்ந்தார் நாவலர். மேலைநாட்டு மொழியினிடத்துப் பெரு விருப்பம் கொண்டு மக்கள் ஓடிய காலத்தே தமிழ்ப் பாடசாலை களைச் சிதம்பரத்திலும் யாழ்ப்பாணத்திலும் நாவலர் நிறுவியது குறிப் பிடத்தக்க மற்றொரு மொழிப் பணியாகும். இளஞ்சிறார் உள்ளங் களிலேயே தமிழ் மொழியின் எளிமைப் பண்பும் இனிமை பண்பும் பதியுமானால், எதிர்கால மன்பதையில், மொழிகாக்கப் பெறும் என்பது நாவலர் கொண்டிருந்த நன்னினைவு என்று கூறலாம். கல்வி பற்றியும் தாய்மொழி பற்றியும் இவ்வரும் புலவர் கொண்டி ருந்த கருத்துக்கள் மிக விழுமியன. அவை பற்பல ஆண்டுகள் சிந்தித்துச் சிந்தித்துக் கண்ட ஆய்வு முடிவுகளாகவே தோற்று கின்றன. அவற்றை இக்காலக் கல்வியாளர் கருத்திற் கொண்டு திட்டம் வகுத்திடுவரேல் பெரும்பயன் விளையும் என்பது உறுதி.
தமிழ்மொழி நாவலரால் பெற்ற நலங்கள் எண்ணற்றவை. தமிழ் இலக்கிய வரலாற்றில், புதிய உரைநடையாக்கத்தில் நாவலர்
(இந்து ஒளி
 

பெற்றுள்ள இடம் இமயம் போன்றது. ஆதலின் “நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே” என்று பேரறிஞர் சி. வை. தாமோதரனார் கேட்ட கேள்வி புனைந்துரை வகையாற் பாடப்பட்டதன்று; முற்றிலும் உண்மை என்றே கொள்ளத்தக்கதாகும்.
வித்துவான் வி.சீ. கந்தையா
தமிழ்ப் பேரறிஞர்களான ஆறுமுகநாவலர் பெருமான், சி. வை.தாமோதரம்பிள்ளை, இலக்கிய கலாநிதி உவே.சாமிநாதையர் ஆகிய மூவரும் பிற்காலத்தே தமிழ் வளர்த்த பெருமக்களுள் முதன்மை பெற்றவர்கள். அம் மூவருள்ளும் ஆறுமுகநாவலர் தனிச் சிறப்புக் கொண்டு திகழ்கின்றார்.
தமிழில் உரைநடையினைத் தோற்றுவித்து, செய்யுள்மயமாகப் பொதுமக்கள் கைக்கு எட்டாது கிடந்த தமிழ் நூல்களை மக்கள் வாழ்வினோடு பிணையும் நிலைக்கு நெகிழ்வித்து, தருக்க ரீதியிலான பொருள் பொதிந்த கண்டனங்களைத் தமிழ் உரை நடையில் ஆக்கி, தமிழ் அச்சகங்களை நிறுவி, மேடைப்பேச்சினை எவரும் நினைக்கவே முடியாதிருந்த சூழ்நிலையைத் தகர்த் தெறிந்த முதல்வராகி, தமிழ் மேடைகளிலும் சைவமேடைகளிலும் செஞ்சொற் கொண்டலாய் முழங்கி, சமகாலத்து அறிஞர்களுக் கெல்லாம் உயர்ந்தோர் எல்லைக் கல்லாகவும், பிற்காலத் தமிழ் அறிஞர், தமிழ்த் தொண்டர் முதலான யாவரது சிறப்புகளையும் அளவிடுதற்கோர் உரைகல்லாகவும் வாழ்ந்த நாவலர் பெருமான், தமிழ்மொழியைக் காலத்தோடொட்டிக் கவடுவைக்கத்தக்க புதுமொழியாக்கிப் புதுவளமும், புதுப்பொலிவும் நல்கி அதனைக் காத்தவரென்றால், அது தமிழ் செய்த தவத்தின் பயனால் விளைந்த ஒன்று என்றே கொள்ளல் வேண்டும்.
தமிழ் செய்த தவம் ஆறுமுக நாவலர் பெருமானைத் தக்க காலத்திலே தோற்றுவித்தது. ஈழம் செய்த தவம் யாழ்ப்பாணத்து நல்லைநகரை அன்னாரது பிறப்புக்கு நிலைக்களனாக்கிற்று.
நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேற் சொல்லுதமிழ் எங்கே சுருதி எங்கே - எல்லவரும் ஏத்து புராணாகமங்கள் எங்கே பிரசங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை”
-சி.வை. தாமோதரம்பிள்ளை
வேவருமான் ஆன்மாக்களுக்காக அருள்ச்செய்த முதனூல்கள் வூேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாகும். வூேத சிவாகமங்கள்ல் ஆதிக்கப்பட்டவை புண்ணியங்கள். கடவுளை வழிபடுதல்,தாய் தகப்பன் உUரத்தியாயர் குரு ழுதலாகிய பெரியோர்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்நன்றி அறிதல் 6T druadoséu புண்ணியங்களாகும்.
-நாவலர் பெருமான்
12 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 15
“வலம் வந்த மடவா
செல்வி. செல்வ அ விரிவுை தமிழ்த் துறை, யாழ்.
5Tலத்தின் தேவைகள் உணர்ந்து செயற்பட்டவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சிலர் காலத்தினால் உந்தப்பட்டு ஒவ்வோர் துறையில் புதுப்பாதை வகுத்துள்ளனர். இவர்களின் தடம் பற்றி ஓர் மரபும் உருவாகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி ஐம்பத்தேழு ஆண்டுகள் சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலரின் வரலாறு இக்கருத்தை மேலும் விளக்கம் பெறவைக்கின்றது. தாம் வாழ்ந்த காலத்தில் சைவத்திற்கும், தமிழுக்கும் ஏற்பட்ட ஆபத்தைக் களைவதற்கு தம் வாழ்வையே அர்ப்பணித்தவர். சமயப் பணி, கல்விப் பணி, சமூகப் பணி, இலக்கியப் பணி, பதிப்புப் பணி என அரும்பெரும் பணிகள் ஆற்றியமை இவரது தனித்துவத்திற்கு அடிப்படையாகும்.
தம் ஆட்சியுள்ள பிரதேசங்களில் தமது சமயமாகிய கிறிஸ்தவத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கிறிஸ்தவ பாதிரிமார்கள் சமயப் பணியை உயிர் நாடியாகப் போற்றினர். தமது சமயத்தைப் பரப்புவதற்கு சுதேசிகளைக் கவரக் கூடிய பல வழிவகைகளைப் பாதிரிமார்கள் கையாண்டனர். இதனால் சமூகத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறும் சூழ்நிலை உருவாகியது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தை விட ஆங்கிலேயர் காலத்திலேயே தீவிர மதமாற்றம் நிகழ்ந்துள்ளது.
"பறங்கியர், ஒல்லாந்தர் காலத்திலே சைவசமயத்திற்கு வந்த வருத்தம் சிரங்கு வருத்தம் போன்றது. அது வெளித்தோல் வருத்தம் உள்ளுற சமயம் உயிரைப் பற்றி நின்றது. ஆங்கிலேயர் காலத்திலே சமயத்திற்கு வந்த வருத்தம் காச வருத்தம் போன்ற உயிரைக் கொல்லுகின்ற வருத்தம்” என்னும் பண்டிதமணியின் கருத்து இதனை உறுதிப்படுத்து கின்றது. நாவலர், கிறிஸ்தவர்களோடு பழகும் வாய்ப்பைப் பெற்றி ருந்ததால் அவர்களின் தந்திரங்களை அநுபவ வாயிலாக உணர்ந்திருந்தார். கிறிஸ்தவப் பாதிரிமார் சமயத்தைப் பரப்பு வதற்குக் கையாண்ட வழிவகைகளை நாவலர் சைவசமயத்தை நிலை நிறுத்துவதற்குக் கையாண்டார். கிறிஸ்தவ சமயம் சைவத்தை நிலை குலைக்கக் கூடிய சூழ்நிலையிலும் சைவத்தைக் காத்த பணியினை மேற்கொண்ட காரணத்தால் நாவலரை, “சைவத்தின் காவலர்”, “சமயத்தின் விடிவெள்ளி” “சமய மறுமலர்ச்சியின் தந்தை” எனப் பலவாறு அழைக்கின்றனர். சைவத்தைக் காத்து வளர்த்த சமய குரவர் நால்வரின் வரிசையில் ஐந்தாவது குரவராக நாவலர் கொள்ளப்படுகின்றார்.
சைவசமயத்தை நலியாது பாதுகாத்த நாவலர், கிறிஸ்தவர்கள் சைவ சமயத்திலும், சமயம் சார்ந்த நடைமுறைகளிலும் சுட்டிக் காட்டிய குறைபாடுகளைச் சீர்திருத்த முனைந்தார். இந்திய நாட்டில் சமய சீர்திருத்த இயக்கங்களான ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், இராமகிருஷ்ண மிஷன் போன்ற நிறுவனங்களின் நோக்கங்களைப் போன்று நாவலரும் தமது சமய சீர்திருத்தச் சிந்தனைகளை முன்வைத்தார். ஆகம முறைப்படி கோயில்
இந்து ஒளி
 
 
 

f35GT tSLLDTL.....” 2
ம்பிகை நடராஜா யாளர் பல்கலைக்கழகம்
அமைத்தல் வேண்டும், கோயிற் கிரியைகளை ஆகம விதிப்படி நடாத்துதல், தனியாருக்குச் சொந்தமான ஆலயங்களைப் பொது நிர்வாக அமைப்புக்குள் கொண்டு வருதல், ஆலயங்களில் பலியிடல், பொதுமகளிர் நடனங்கள், களியாட்ட நிகழ்வுகள் நடைபெறுதலை விலக்குதல் வேண்டும், ஆலயங்கள் வணிக நிலையங்களாக மாறக் கூடாது எனச் சீர்திருத்தக் கொள்கைகளை எடுத்துக் கூறினார்.
தமிழகத்தில் கோயில்களை மையமாகக் கொண்டு நுண்கலைகள் வளர்ச்சி அடைந்தன. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நெருக்கமான உறவுத் தொடர்புகள் இருந்து வருகின்றன. தமிழகத்துக் கோயிலமைப்பு, நிர்வாக முறை, பூசனை முறை, கலை மரபுகள் யாழ்ப்பாணத்திலும் அறிமுகமாகிச் செல்வாக்குப் பெற்றன. கோயில்களில் சங்கீதம், நடனம், வாத்தியம் ஆகிய மூன்றிற்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டது. நித்திய, நைமித்திய, விசேட பூசைகளின் போது கலைகள் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டன. கோயில்களில் திருமுறைகளை ஒதும் “திருவாசகப் புலவன்” பற்றியும், நடனமாடும் "ஆலாத்திப் பெண்கள்” பற்றியும், “வாத்தியக் கலைஞர்கள்” பற்றியும் கோணேசர் கல்வெட்டு சான்று பகருகின்றது. மேலும் இறைவனுக்கு ஆடல் நிவேதனம் அளிக்கும் ஆலாத்திப் பெண்களின் தூய்மை பேணப்பட வேண்டிய முக்கியத்துவம் பற்றியும், அதற்கு மாசு நேரிடுமிடத்துத் தரக்கூடிய தண்டனைகளையும் விவரித்துள்ளது.
இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சியின் போது இந்து சமய வழிபாட்டு முறைகளும், கோயிற் கலைகளும் நலிவை எதிர் நோக்கின. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சமய நெகிழ்ச்சியால் இந்து சமய வழிபாடு, கலைகளும் புத்துயிர் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பிரபுத்துவ வகுப்பினரால் கோயிற் கலைகளை மீளவும் வளர்த்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இக்கால கட்டத்தில்தான் ஆறுமுக நாவலர் சைவ சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் முனைப்பாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தார்.
ஆகம முறையில் அமைந்த கோயில் வழிபாட்டினையும், கலை களையும் நாவலர் வலியுறுத்தி இருந்தார். இசைக் கலையில் இயல்பான அறிவு கைவரப் பெற்றவர். திருமுறைகளை பண்ணோடு ஒதுவதில் ஈடுபாடு கொண்டவர். கோயில்களில் சைவத் திருமுறைகள் பண்ணோடு இசைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்திலிருந்து தேவார ஒதுவார்களை வரவழைத்து இங்குள்ளவர்களும் அதனைக் கற்றுப் பயன்பெறும் வகையில் பணி செய்தார். கதிர்காமக் கந்தன் மீது இவர் பாடிய கீர்த்தனைகள் இசையில் இவருக்கிருந்த ஈடுபாட்டையும், பயிற்சியையும் காட்டுகின்றன. நடனக் கலையில் இவருக்கு ஈடுபாடு இருந்தாலும் சமகாலத் தேவதாசிகள் சீர்கெட்ட ஒழுக்க வாழ்க்கையைப் பின்பற்றியதால் கோயில்களில் ஆடப்படும் தேவதாசி நடனமுறையை வன்மையாகக் கண்டித்தார்.
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 16
தமிழருக்குரியதான சாஸ்திரீய நடனக் கலையான பரத நாட்டியம் நீண்ட காலப் பாரம்பரியம் கொண்டது. அதனுடைய வடிவமும் பெயர்களும் காலந்தோறும் மாற்றமடைந்து வந்துள்ளன. தொன்மையான பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங் களில் கலைமரபுகள் இடம் பெற்றமைக்குச் சான்றுகளுண்டு. பாணன், பாடினி, கூத்தன், விறலி, பொருநன் என்னும் தொழில் முறைக் கலைஞர்களும், சமய வழிபாட்டுடன் தொடர்புபட்ட நிலையில் குரவை, துணங்கை, வேலன் வெறியாடல் கலைகளை வெளிப்படுத்தும் வேலன் (முருகன் அருள் கைவரப் பெற்று வேலைக் கையில் கொண்டு ஆடுபவன்), தேவராட்டி (தெய்வம் ஏறப் பெற்று ஆடுபவள்) எனும் பூசாரிக் கலைஞர்களும் கலைகளை வெளிப்படுத்தினர். சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்கள் மிக்க வளர்ச்சி அடைந்த செந்நெறிக் கலைக்குரியன. அரங்கத்தில் ஆடப் பெற்ற மாதவியின் ஆடல் முறைகள் சமயச் சார்புடையன. சிவபெருமான் ஆடிய கொடுகொட்டியும் பாண்டுரங்கமும், கொற்றவை ஆடிய மரக்கால், முருகன் ஆடிய குடைக் கூத்தும், துடியும் கண்ணன் ஆடிய அல்லியமும் மற்கூத்தும் சமயச் சார்பான நடனங்கள்.
பல்லவர் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் விளைவாக வைதிக சமயங்கள் மறுமலர்ச்சி அடைந்தன. நிரந்தரமாக அமைக்கப்பட்ட கோயில்களில் இசையும், நடனமும் இறைவனை நிவேதிப்பதற்குரிய நுண்கலைகளாக விளங்கின. கோயில்களில் நடைபெறும் கிரியைகளின்போது ஆடல் நிவேதனம் செய்வதற்குத் தேவரடியார்கள் (இறைவனுக்குக் கலைப் பணி செய்வதற்காகத் தம்மை அர்ப்பணித்த கலைஞர்) கோயில்களில் நியமிக்கப்பட்டனர். நாயன்மார்கள், ஆழ்வார் பாடல்களில் தேவரடியார்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. எடுத்துக் காட்டாக திருஞான சம்பந்தரின் திருவையாற்றுப் பதிகத்திலே வரும -
“ollowLió ongigs LDL62/Taifø56ir LBLLOITL
முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில் பார்க்குந் திருவையாறே.”
என்னும் பகுதியினைச் சுட்டிக் காட்டலாம். சோழப் பெருமன்னர் காலத்திலும் தஞ்சைப் பொருவுடையார் கோயிலில் நானூறு தேவரடியார்களை நியமித்து மானியங்கள் வழங்கப்பட்ட செய்தி களைக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறியலாம். விஜயநகர நாயக்கர் காலத்திலும் தேவரடியார்கள் கலைப் பணியும், சமூகப் பணியும் ஆற்றி வந்தனர். முஸ்லிம்களின் படையெடுப்பால் வைதீக சமயக் கோயில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் கோயிற் கலைகளும் கலைஞர்களும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டது. தேவரடியார்களின் வாழ்க்கை வசதிகளுக்கு மானியங்கள் வழங்கப்படாத நிலையில் பிரபுக்களின் போகப் பொருளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் நிலவிய சமூகச் சீர்கேடுகள் இறை அர்ப்பணிப்புடன் ஆற்றப்பட்டு வந்த கலைகளில் களங்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக அறிவுடை யவர்களும், ஒழுக்கத்தை வற்புறுத்தியோரும் தேவரடியார் முறையை ஒதுக்கி வைத்தனர்.
இத்தகையதொரு நிலையினை பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலும் அவதானிக்க முடிகின்றது. ஆன்மீக நோக்கத்துடன் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்ட நடனக் கலையின் தூய்மை கேள்விக்குள்ளாகியது. நடனமாதர்கள் கோயில் என்ற பண்பாட்டுச் சூழலில் இருந்து விலகி பிரபுக்களின் போகப் பொருளாகி பொது வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்து ஒளி

“தேவரடியார்” என அழைக்கப்பட்ட கெளரவ நிலை மாறி “தேவதாசியர்”, “சதிர்க்காரிகள்”, “சின்னமேளக்காரி” எனக் கீழ்த்தரமாக அழைக்கப்பட்டனர். இன்றைய காலத்திலும் ஒழுக்கமற்ற பெண்ணைச் “சின்னமேளக்காரி” என அங்கதமாக அழைக்கும் மரபுண்டு. நீண்ட காலமாக ஆன்மீக உணர்வினை வளர்ப்பதற்குப் பயன்பட்ட நடனக் கலை மட்டமான இரசனை உணர்வுடையதாய் வக்கிர உணர்வினைத்தூண்டுவதாய்களியாட்ட நிகழ்வாக மாற்றமுற்றது. பக்தி உணர்வைப் புறக்கணித்து காம உணர்வினைத் தூண்டும் சின்னமேள நடனத்துக்கு எதிராக நாவலர் குரல் கொடுக்கத் தொடங்கினார். கோயில்களில் நடைபெற்ற சின்னமேள நடனத்தால் தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் சீர் குலைவுக்குள்ளானதை நாவலர் தனது பிரசுரங்களில் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக் காட்டாக அவரின் பிரசுரத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து நோக்கலாம்.
"மாணாக்கர்கள் இராத்திரியிலே திருவிழா திருவிழா என்றோடிச் சனக்கூட்டத்திலே நெருக்குண்டு தள்ளுண்டு அடியுண்டு நுழைந்து தாசிகளுடைய நாட்டிய கீதங்களைப் பார்த்துங் கேட்டுங் கெட்ட வார்த்தைகளுங் கெட்ட செய்கை களும் பழகிக் கொண்டதும், அவர்கள் இராப்பாடமும் இழந்து இருபது இருபத்தைந்து நாழிகைவரையும் நித்திரையும் இழந்து மற்ற நாட் பள்ளிக் கூடங்களிலே பாடம் ஒப்பியாது பிந்தியுந் தூங்கி விழுந்துங் கல்வியை இழந்தும்.”
(நல்லூர் கந்தசுவாமி கோயிற் பிரசுரம்) சமூகத்தில் மலிவான இரசனை உடைய தாசியர் நடனத்தால் ஒழுக்கம் கெடுவது மட்டுமல்லாமல் பொருளிழப்பு, குடும்பக் குலைவு, பால் வினை நோய்கள் ஏற்படுவதையும் நாவலர் காட்டியுள்ளார்.
"அநேகர் தாசிகளை அடுத்துத் தங்கள் கைப் பொருளும் இழந்து முதுசொமும் இழந்து தங்கள் மனைவியர்கள் கொண்டு வந்த சீதனமும் இழந்து தங்கள் சாதியாசார சமயாசாரங்களும் இழந்து தாங்கள் கற்ற கல்வியும் இழந்து அலைந்து திரிவதும் அவர்களுள்ளே பலர் வெட்டை கிரந்தி அரையாப்புப் பகந்தரம் இலிங்கப்புற்றுச் சலரோக முதலிய பெருங்கொடு வியாதிகளினாலே பிடிக்கப்பட்டும் வைத்தியர் களிடத்தே பலமுறை அலைந்து பொருள் செலவிட்டு மருந்து வாங்கிப் புசித்தவிடத்துங் காமப் பற்றினாலே திரும்பத் திரும்பப் பத்தியங் கெடுத்தும்.”
(நல்லூர் கந்தசுவாமி கோயிற் பிரசுரம்)
நாவலருடைய பிரசாரங்கள் யாழ்ப்பாணக் கோயில்களிலும்,
விழாக்களிலும் ஆடப்பட்ட 'சின்னமேளம்' என அழைக்கப்பட்ட தாசியர் நடனத்தைக் கட்டுப்படுத்த உதவின. குடும்பச் சிதைவுக்கும், சமூகச் சீரழிவுக்குக் காரணமான பரத்தமையைக் கண்டிக்க முயன்ற நாவலர் ஆடவரைக் கவருவதற்காக பயன்படுத்தப்பட்ட நடனக் கலையையும் வெறுத்து ஒதுக்கினார். தாசியர் நடனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தாலும் இறை அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட ஆடற்கலைக்கு எதிரானவர் அல்ல என்பதை அவரின் பிரசுரம் வாயிலாக அறியலாம்.
"உருத்திர கணிகையர் வியபிசாரம் மதுமாமிசப் பகடினம்
முதலிய பாதகங்களின்றி சிவவேடம் பூண்டு சிவபக்தியிற்
சிறந்தவர்களென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன.”
(சுப்பிரபோதம்)
14 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 17
கிறிஸ்தவ சமயப் பரம்பலுக்கு எதிரர்க சைவ சமயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்ய வேண்டிய காலத்தில் இருந்தவர் ஆறுமுக நாவலர். கிறிஸ்தவர்கள் சுட்டிய குறைகளைக் களைய முயன்றாரேயொழிய தூய்மையான நடனக் கலையை மீளவும் கட்டியெழுப்புவதற்கு முயற்சி செய்யவில்லை. இதற்கு அன்றைய காலச் சூழ்நிலையே காரணமெனலாம்.
யாழ்ப்பாணச் சமய நிலையிலே நாவலர் கூறிய கருத்துக்கள் இன்றைய கால கட்டத்தில் இந்த மண்ணுக்கு நாவலரின் தேவையை வலியுறுத்தி நிற்பதை உணர்ந்து கொள்ளலாம்.
@6 6 - 66 66 6 - 66 6 6 6 6 - 66 6 66 6 அச்சாளர் ஆ
సీలలలలలాలు மெய்கண்டான் ந
19ழத்தின் இந்து சமுதாயம் என்னும் தேரின் இரு சக்கரங்களான சமயத்துக்கும் தமிழுக்கும் அச்சாக விளங்கிய ஆறுமுக நாவலர், பின்னர் அச்சாளராகவும் பரிணமித்தார்
தாம் மேற்கொண்ட சமயப் பணிக்கும், தமிழ்ப் பணிக்கும் இரண்டு சாதனங்கள் இன்றியமையாதன எனக் கண்டார். ஒன்று கல்விக் கூடம்; மற்றொன்று அச்சுக்கூடம்.
கல்விப் பணிக்குப் புத்தகங்கள் தேவைப்பட்டன. அந்தக் காலத்தில் சைவ சமயக் கொள்கைகளையும், வாழ்க்கை நெறி முறைகளையும் போதிக்கும் நல்ல நூல்கள் கிடைக்கவில்லை. கிடைத்த புத்தகங்கள் அச்சுப் பிழைகள் மலிந்தவையாகவும், நச்சுக் கருத்துக்கள் நிறைந்தனவாகவும் காணப்பட்டன.
நல்ல நூல்களைத் தாமே செய்யவேண்டிய தவிர்க்க முடியாத நிலை நாவலர் பெருமானுக்கு ஏற்பட்டது. அதனால், அவர் நூலாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் மாறினார்.
அந்த நேரத்தில் அச்சுக்கூடங்கள் எல்லாம் ஐரோப்பியரான மிஷனரியினர் கையிலேதான் இருந்தன. கல்விக் கூடங்களும் அவர்கள் கையிலேயே இருந்தன.
இந்த நிலையில், தமக்கே பாதகமான காரியத்தை மிஷனரிமார் செய்வார்களா? நாவலரின் நூல்களை அவர்கள் அச்சிட்டுக் கொடுப்பார்களா?
தாமே அச்சுக்கூடம் நிறுவவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்தார் ஆறுமுக நாவலர். முதலில் யாழ்ப்பாணத்தில் ஒரு அச்சுக்கூடத்தை அமைத்தார். அதைத் தொடர்ந்து சென்னை பட்டினத்தில் இரண்டாவது அச்சுக் கூடத்தை நிறுவினார். அச்சுக்கூடத்துக்கு வித்தியாநூபாலன யந்திரசாலை என்று அர்த்தத்தோடு பெயரிட்டார்.
யாழ்ப்பாணத்தில், ஏன், இலங்கையில் என்று கூடச் சொல்லலாம், முதன் முதலாக அச்சுக்கூடம் அமைத்த ஐரோப்பியர் அல்லாத ஒருவர் ஆறுமுக நாவலர்தான்!
நாவலர் மேற்கொண்ட சமயப் பிரசாரத்துக்கும் அவருக்கு ஒர் அச்சகம் இன்றியமையாததாயிற்று. கிறிஸ்தவ
எப்படிக் கொழுந்து லிட்டெரியும் ஏநருப்பு இறகுகளை ஒநருப்பு எல்லாக் கர்மங்களையும் சாம்பலாக்கிலிடுகிறது.
ஞானத்தீயில் சுகம், துக்கம், அவற்றுக்குக் காரணமா அழிந்துவிடும்.
(இந்து ஒளி

“சைவ சமயிகளே! உங்கள் கோயில்களிலே பொது மகளிருடைய நடன சங்கீத வான விளையாட்டு முதலியவைகளை ஒழித்து விடுங்கள். நிருவானத்தையும் காமத்தையும் வளர்த்தற்கு ஏதுவாயுமுள்ள பிரதிமைகளையும் படங்களையும் அமைப்பியா தொழியுங்கள். கோயில்களிலே சைவப் பிரசங்கம், வேத பாராயணம், தேவார திருவாசக பாராயணம் முதலியவைகளைச் செய்யுங்கள். உங்கள் குடும்பத்தோடு நியமமாகப் போய்ச் சைவப் பிரசங்கங்கள் கேளுங்கள்'
e eOO OOO OO OOO OO OeO Oe OOO OO Oe OOO OO Oe Oe Oe OO OeO OeO Oe Oe OO OeO றுமூக நாவலர்
T. &y556OTEFI Iris |e_ථඥ_9ළු_පංඥා පඥා පඥා පඥා පථ_ෂඥ_ෂඥ_ෂඥ_9ළු_පල වල බ්‍රි
மிஷனரிமார்கள் அச்சகம் வைத்துத் தமது சமய நூல்களைச் சிறு சிறு வெளியீடுகளாகப் பிரசுரித்து மக்களிடையே இலவசமாக விநியோகித்து வந்தார்கள். அழகாக அச்சிடப்பட்ட கிறிஸ்தவப் புத்தகங்களும் சுவிசேஷங்களும் புதுக் கவர்ச்சியை அளித்தன.
அச்செழுத்தைப் படிக்கும் ஆர்வத்தாலேயே பலர் அந்நிய சமய நூல்களையும், சஞ்சிகைகளையும், விரும்பிய படித்தார்கள். இந்தப் போக்கிற்கு ஈடுகொடுப்பதானால் தமிழ் இலக்கியங்களையும் சைவசமய நூல்களையும் அழகாக அச்செழுத்தில் பொறித்துப் பரப்பவேண்டியது அவசியமாயிற்று.
பிற சமயத்தவர் கையில் அச்சுக்கூட வசதி இருந்தமை யினால், அவர்கள் சைவ சமயத்தைத் தாக்கியும் எழுத வாய்ப்புப் பெற்றவர்களானார்கள்.
இந்தக் தாக்கத்துக்கு மறுதாக்கம் அளிக்க, நாவலர் பெருமானுக்கும் அச்சுப் பொறியின் பக்கத்துணை மிக மிக அவசியமாயிற்று.
மேலே கூறப்பட்ட காரணங்களை முன்னிட்டு ஆறுமுக நாவலர் தாமும் ஒரு அச்சாளர் ஆனார். இவர் தமது தொழிலிற் காட்டிய சீரும், சிறப்பும், திறமையும் பொறுப்புணர்ச்சியும் அச்சகத்தார் அனைவரும் பின்பற்றுவதற்கு ஏற்றவையாகும்.
நாவலர் காலத்துக்கு முன்பு தமிழ் நூல்கள் பெரும்பாலும் இந்தியாவிலேதான் பதிப்பிக்கப்பட்டன. அவை எல்லாம் அச்சுப் பிழைகள் மலிந்தனவாக அச்சிடப்பட்டன. நாவலர் வெளியிட்ட நூல்கள் அச்சுச் சுத்தமாகவும், பிழையின்றியும் பதிப்பிக்கப்பட்டன. “நாவலர் பதிப்பு” ஈழத்திலும் தமிழகத்திலும் பெயரும், புகழும், மதிப்பும் பெறலாயிற்று.
சைவத்தையும் தமிழையும் வளர்த்தது போலவே அச்சுக் கலையையும் வளர்த்தவர் ஆறுமுக நாவலர். இலங்கையில், தமிழ் மக்களிடையே அச்சுத் தொழிலுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடி யாகவும் அவர் விளங்குகிறார். அவரைப் பின்பற்றி அச்சகம் அமைத்தோர் பலர்; அச்சுத்தொழிலில் ஈடுபட்டோர் மிகப் பலர்.
* சாம்பலாகச் செய்கிறதோ, அதேபோன்று ஞானம் என்கிற
ன அஜித்யை, அகங்காரம், லிருப்பு, வெறுப்பு முதலியனவும்
பகலுத்கீதை
15 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 18
స్టోర్వీస్ట్రో
நாவலர் காட்டிய பாதையில் -
3. நல்லெ శ్లో 6orroIovioToOofu III
நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களை எம் முன்னோர்கள் அழகாக கூறி வந்துள்ளனர். அவர்கள் கூறிய வற்றை படிப்பது மட்டுமல்ல, அதை கவனத்தில் எடுத்து அதன்படி நடப்பதே சிறப்பு நல்லொழுக்கங்களை கடைப்பிடித்து வாழ ஆரம்பித்தால் இப்பிறவி மட்டுமல்ல ஏழேழு பிறவிகளுக்கும் அப்பழக்க வழக்கங்கள் எம்முடனே கூட வரும்.
எந்த மக்களும் எச்சமயத்தவரும் ஒழுகும் விதத்தில் நாவலர் கூறிய ஒழுக்க நெறிகள் அற்புதமானவை. இலகு நடையில் எழுதப் பட்ட அவர் கருத்துக்களை இயன்ற மட்டும் திரட்டி எடுத்துள்ளேன்! இயன்றவரை அவற்றை கடைப்பிடிப்போமானால் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக வாழலாம். முதலில் நாம் மனதில் பதியவைக்க வேண்டியது ஒன்றுதான் கடவுளும், புண்ணிய பாவமும், சுவர்க்க நரகமும், மறுபிறப்பும் முத்தியும் உண்டு என்ற உண்மையை ஒருபோதும் மறக்கக் கூடாது. ஒருயிர்க்கும் சிறிதாவது தீங்கு நினைக்கலாகாது. யார் எமக்கு துரோகம் செய்தாலும் அச்சிந்தனை எம்மனதில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். பொறுத்தற்கரிய கோபமும் துன்பமும் வந்தால் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும்.
பிறர் லாபம் கருதாது செய்த நன்றியை என்றுமே மறக்கக் கூடாது. வஞ்சனையை எம் மனதிலிருந்து அகற்றி வாழப் பழக வேண்டும். காணாதவிடத்து பிறரை இகழ்ந்து பேசுதல், விளையாட்டுக்கு பொய் கூறுதல், நல்லொழுக்கமாகாது. நம்பிக்கையின் நிமித்தம் ஒருவர் கூறியதை அடுத்தவருக்கு கூறுவதும் ஒழுக்கக் கேடான செயலாகும். ஒருவரிடத்தில் குற்றம் குறை இருப்பின் தனித்த இடத்தில் அவரை சந்தித்து அதனையும் அதனால் வரும் கேட்டையும் அவருக்கு கூறி அவரை நல்வழிப்படுத்த வேண்டும். அவருக்கு அது பிரியமாய் இருப்பினும் அது அவருடைய நன்மை காரணமாக இருக்குமாயின் அதை அவசியமாக சொல்லி உணர வைக்க வேண்டும்.
தனக்கு மந்திரங்களையோ, சாத்திரங்களையோ உபதேசிக்கும் குருவை அன்போடு வழிபடல் வேண்டும். குருவை வழிபடாமல் செய்த வித்தை சித்தி பெறாது. கிரியை, ஞானம் என்னும் இரண்டிலும் ஞானம் சிறந்தது போல, கிரியா குரு, ஞான குரு என்னும் இருவருள்ளும் ஞானகுரு சிறந்தவன். அதிகமாக வேனும் அற்பமாகவேனும் ஆன்மா உய்யும் வழிக்கு உரியதை அறிவித்தவரையும் குருவென்றே நினைத்தல் வேண்டும். சமயச் சடங்கு செய்பவரும் ஆசாரியர்தான்.
வயசினாலும், கல்வியினாலும் ஒழுக்கத்தினாலும் முதிர்ந்த பெரியவர்கள் யார் வந்தாலும் சிறியவன் இருக்கை விட்டு
திருக்கோலில்ல் அபிஷேகம்,நிவூேதனம் முதலியவைநடக்கும் பொழுது தரிசனம் செய்தல் ஆகாது.திருக் கோயில்ல் ୭fforts முடிந்தவுடன், சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்5ட்டு மூன்று முறை கைகொட்டி சிவூதரிசனம் பலத்தைத் தரும் பொருட்டுப் ஏரார்த்தத்தல் வேண்டும்.
நாவலர் பெருமான்
(இந்து ஒளி

0SYzSLLLLSS SLTLYLJS aLS SKLYYYS SLLLLLSLYLLLS SSLeLeeLL YLeLSi ASAeLLLLLLeeS S0eeYekeSiS SS0eALALeLekeSqiS SeL0 SYzKJSJLaKYLJJSYLaLYSSSLYLSLSJEELESYLLLLLJYLSYLS 8. 意超雰* * ** ফ্রকাশ ፵፡፲፰ ̆  ̆፬s፲፰* *፧ጃsኾ: అ* **
S。 W VV e VJ (göISÜSUD
எழும்பாதிருந்தால் அது ஒழுக்கத்துக் கேடாகும். அவர்களுக் குரிய மரியாதையை தரும் ஒருவனுக்கு ஆயுள், கல்வி, கீர்த்தி, பலம் நன்கு அபிவிருத்தியாகும் என்பதை வலியுறுத்துகிறார் நாவலர்.
சிறு பராயம் முதல் நற்பழக்க வழக்கங்களை பழகுவதற்கு பெற்றோரும் முக்கியஸ்தர்களாக இருக்க வேண்டும். நாவலரவர்களின் கருத்துக்களை பின்பற்றுவதில் பெரியோர்கள் முன்மாதிரியாகத் திகழவேண்டும்.
இரண்டு தெய்வ விம்பத்துக்கு நடுவிலும், பிராமணர் முதலிய பெரியோர் பலருக்கு நடுவிலும் ஊடறுத்து போகலாகாது. ஒருவருக்கு விளக்குக்கும் நடுவிலும் போகக் கூடாது.
பெரியோர் நித்திரை செய்யும்போது அவர்களை எழுப்பக் கூடாது. தாம் உடுத்த ஆடை காற்றினால் அசைந்து பிறர் மேல் படும்படி அணியக் கூடாது. பலர் நடுவே நின்று வஸ்திரத்தை உதறக் கூடாது. பிறர் எழுந்து போகத் தொடங்கும் போது பின்னே நின்று அழைப்பதும், தும்முதல், எங்கே போகின்றீர் என கேட்பதும் கூடாது. அவருக்கு யாதாயினும் சொல்ல வேண்டுமாயின் விரைந்து சென்று அவர் பக்கத்தில் நின்று சொல்ல வேண்டும். எதிர் முகமாக நின்றும் எதுவும் கூறக் கூடாது.
பிறரைப் பார்த்து நீர் நன்றாக இருக்கிறீர் என கூறக்கூடாது. அவர் புசித்த உணவுகளையும் கேட்டல் கூடாது. பெரியோர்கள் வயோதிபர், சுமை சுமப்போர், நோயாளர், பிள்ளைகள், பசுக்கள், பெண்கள் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு வழிகொடுத்து விலகிப் போக வேண்டும்.
பிறர் இரகசியம் பேசும்போது அதை கேட்கக் கூடாது. இருவர் இருந்து பேசும் போது அனுமதியின்றி இடையில் போகக் கூடாது. பிறர் பேசும் போது கதவு முதலியவைகளின் பக்கத்தில் நிற்கக் கூடாது.
பற்கடித்தல், நகங்கடித்தல் கூடாது. வாயை மூடாமல் கொட்டாவி விடுதல், பெருமூச்சு விடுதல், இருமுதல் ஆகாது. இரைச்சலிட்டு சிரித்தல், காரணமின்றி சிரித்தல், தலை சொறிதல், கூடாது. துணையின்றி தனித்தோ, இன்னார் என அறியாத ஒருவருடனோ வழிநடத்தல் கூடாது.
மிக விழித்திருத்தல், மிகத் தூங்கல், மிக இருத்தல், மிக நிற்றல், மிக நடத்தல், மிகப்படுத்தல், மிக வருந்தல், மிகப் பேசுதல் இவையெல்லாம் நன்மையல்ல.
நாவலர் பெருமானின் இந்த நல்லொழுக்க வழிமுறைகளை இயன்றவரை பின்பற்றுவோமானால் நிச்சயமாக சிறந்த ஒரு மனிதனாக பிறர் போற்ற வாழலாம்.
உலகத்துக்கு கருத்தா சிவபெருமான். இவர் என்றும் உள்ளவர்; எங்கும்நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர். ஆன்மாக்களுக்காக படைத்தல், கருத்தல், அஜித்தல் என்றும் முத்தொழில்களைச் செய்கிறார்.
-நாவலர் பெருமான் இன்பங்களுக்கெல்லாம் பெரிய இன்பம் இறை வழிபாடே
16 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 19
இறைவனு
திருவளர்திரு காசிவாசி முத்துக்கும
அதிபர் காசித்திருமடம்
டெலகில் வாழும் மக்களின் செல்வச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாகத் திகழ்வது வாகனம் அல்லது ஊர்தியாகும். செல்வன் கழல் ஏத்தும் செல்வமே செல்வமாகவுடையோர் சிவிகையில் செல்வது நோக்கத்தக்கது. சிவிகையில் செல்லும் நிலைமை முற்பிறவியில் அறம் செய்வதற்கே கிட்டும் என்பதை,
"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” என்ற குறளில் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பண்டைய நாளில் புலவர்களைப் புரவலர்கள் சிவிகையில் ஏற்றிச் சிறப்பித்தார்கள். திருநெல்வாயில் அரத்துறைப் பொருமான் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச்சிவிகை அளித்ததும் நாம் இறைவனின் கருணையை உணரச் சான்றாகின்றது.
உலகம் முழுவதையும் தன்னகத்தாகக் கொண்ட இறைவன் இடபத்தின் மீது ஏறுவதை,
"கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவா எனக்கரிய இயம்பேடி’ என்ற வாதவூரரின் வாய்மைமொழி உணர்த்தி நிற்கின்றது.
இறைவன் தனக்கு எனத்தனியாக ஒரு காளை வாகனம் கொள்ளாது உமையுடன் சேர்ந்தே சென்று துன்புறுகின்றான் என்று அடியவர்கள் வருந்துவதை,
தமக்கென்றுமின்பணி செய்திருப்பேமுக்குத்தாமொருநாள் எமக்கென்று சொன்னால் இரங்குங்கொ லாம்;
இணையாதும் இன்றிச் சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப தொன்று
தொண்டைக்கணிவாய் உமைக்கென்று தேடிப் பெறாதுடனேகொண்ட உத்தமரே” என்ற அடிகளில் காரைக்கால் அம்மை அமுதமொழிகள் விளக்கி நிற்கின்றன.
ஒரு பிரளயத்தில் தரும தேவதை அழிவிற்கு அஞ்சி சிவபெருமானைச் சரணடைய, இறைவன் தருமதேவதையை விடையாகக் கொண்டார். திரிபுரம் எரிக்கச் சென்ற காலத்தில் பூமி முதலியவற்றால் ஆன தேர் அச்சு முறிந்துபோக அவ்விடத்தில் திருமால் இடப வடிவம் கொண்டு இறைவனைத் தாங்கினார்.
இவ்விரு நிகழ்ச்சிகளும் சிவபெருமானின் விடையினை இரண்டு வகையாக நமக்குக் காட்டுகின்றது. போர்க்களத்தில் வந்த விடை திருமால் விடை (அ) மால் விடை என்றும், பிரளயத்தில் தருமதேவதை உருமாரியதை அருள்விடை (அ) தருமவிடை என்றும் குறிப்பிடப்படுகிறது.
திருமாலுக்கு புருடோத்தமன்' என்ற பெயர் உண்டு தத்துவக் கொள்கையில் உயிர், புருடன் என்னும் பெயரால் குறிக்கப்படும். எனவே புருடோத்தமன் என்பது ‘உயிர்களுள் சிறந்தவன்’ எனப் பொருள் தருவதாகும். சிவபெருமான் மால்விடை ஊர்தல், “உயிர் களைத் தன்வழி நடத்தும் தலைவன்’ என்னும் உண்மையையே
(இந்து ஒளி
 

ம் இடபமும்
ார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் நிருப்பணத்தாள் ஆதீனம்
உணர்த்துவதாகும். சிவபெருமான் அறவிடை ஊர்தல் அறத்திற்குத் தலைவனாய், உலக நலன் பொருட்டு அதனை நன்கு நடத்தும் முதல்வனைக் குறிக்கும். விடையை அறம் என்னாது அறக்கடவுள் என்பதனால் அதுவும் ஒர் உயிரே என்பது அறியப்படும்.
இவ்விரு விடையையும் (தருமவிடை, மால்விடை) நோக்கும் போது மால்விடை பெத்தான்மாக்களையும், அறவிடை முத்தான்மாக்களையும் குறிப்பிடுவனவாக அமையும். இறைவன் அவ்வவ் ஆன்மாவின் பக்குவத்திற்கு ஏற்ப அருளிப்பாடு செய்கின்றான்.
சிவபெருமானுடைய இடபம் இரு வகையாய் அமைந்திருத்தலை உற்றுநோக்கினால் விளங்கும். சிவபெருமானைத்திரும்பிநோக்காது தன்கண் சென்றவாறு நேரே நோக்கியிருப்பது ஒரு வகை. இதனை போர்விடை என்பர். இது சிவனை உள்நோக்கி உணராத பெத்தான்மாக்களைக் குறிக்கும். சிவனையே நோக்கியிருப்பது மற்றொருவகை. இது அறவிடை என்பர். புற உலகை நோக்காது அகத்தே இறைவனை நோக்கும் முத்தான்மாக்களைக் குறிக்கும்.
சிவனையே நோக்கி நிற்கின்ற இடபம் இந்த அறவிடையே. முக்தி பெற்றோர் சிவமேயாவர் என்றும் கருத்தினால் சிவனுக்கு உரிய நந்தி’ என்னும் பெயர் இந்த அறவிடைக்கு வழங்கப்படுகின்றது.
நந்தியம்பெருமான் சிவத்தலங்களில் சிலவற்றில் சிறப்புற்று அமைந்துள்ளது. நந்தியம்பெருமானின் தோற்றம் திருவையாறு. நந்தித் திருமணத்தலம் - திருமழபாடி, இறைவனை நோக்காது திரும்பி இருக்கின்ற தலம் திருத்தூங்கானைமாடம், இறைவன் சன்னதி விட்டு நீங்கி இருக்கின்ற தலம் பட்டிச்சரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி.
ஒவ்வொருவரும் தாம் விரும்புகின்ற ஒரு பொருளைத் தனக்கு அடையாளமாகப் பயன்படுத்துவர். அவ்வகையில் சிவபெருமான் தான் விரும்பி ஏறுகின்ற இடபத்தினைத் தனது கொடியில் (தருமத்தினைக்) கொண்டுள்ளார்.
இறைவனின் வடிவத்தினையும், கருணையையும் உணர்த்தும் சாதனங்களுள் இடபக் கொடியும் ஒன்றாகும். அத்தகைய கொடி யினை ஏற்று அதன்வழி இறை சிந்தனையை மக்களிடம் நிலைப் படுத்தும் பணியினை மேற்கொண்டு செயலாற்றும் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தின் பணிகள், சங்கரன் அருள் பெற செந்தில் கந்தன் கருணையை நினைந்து வாழ்த்துகின்றோம்.
வாங்கருமாதவவடிவாஞ் சிலாதமுனி
மகவாகி வளர்ந்தெட் டாண்டிற் பாங்குறுமா தவம் புரிந்து பரணுருநித் தியத்துவமும் பண்பாற் பெற்றே யோங்கயில்வன் சுரிகைபிரம் புழைமநம்
மீசனுவந்துதவச் செங்கை தாங்கிநெடுந் தடங்கயிலை காத்தருணந்
தீசர்பதந் தலைமேற் கொள்வாம்
- கடம்பவன புராணம்.
7 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 20
( எப்போதோ மு ミエ சைவநன்மணி g  சைவ அறிஞரும், நூலாசிரியரும், ஆன்மீக எழுத்த அவர்கள் அண்மையில் கனடாவில் சிவபதமடை “யோக சுவாமிகள் அருளியநான்கு மகாவாக்கிய வி எடுக்கப்பட்ட இந்தக் கட்டுரையை இந்து ஒளி மறு
உலகில் முதன் முதலாகச் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு கலம் உள்ள “அமீபா” எனப்படும் சீவராசிகளிலிருந்து கூர்ப்பு எய்தி மனித இனமாக வளர்ந்தது வரை சகல உயிரினங்களும் அருட்சக்தி கொண்டு சுயமாக முன்னேறும்படியே வாய்ப்புப் பெற்றுள்ளன. உயிர்களிடம் அருட்சக்தியானது படைக்கப்பட்ட பொழுதே இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. மக்களும் அவ்வாறே திருவருள் கொண்டு பிறக்கிறார்கள். அது எப்போதோ முடிந்த காரியம். என்றைக்குச் சிவ கிருபை வருமோ? என நாம் ஏங்கிப்பாடி அலற வேண்டியதில்லை. வேத நாயகன் வேண்டுதல் வேண்டாமையினான் என்பதை இவ்வாக்கியம் எடுத்துக் காட்டுகிறது. திருவருளை வேண்டியஸ்தல தீர்த்தயாத்திரை செய்து நாம் அலைதல் தேவையில்லை.
மக்களிடம் பிறக்கும்பொழுதே அமையப்பெற்ற திருவருளானது மேகங்களால் மறைக்கப்பட்டுள்ள சூரியனைப் போல மறைந் துள்ளது. அதேபோல எமது இதயத்தில் உள்ள அருள் ஒளி பந்த பாசத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது. அது பிரகாசமாகப் புலப் படவேண்டுமானால் பாசத்திரையை நீக்கம் செய்தல் அவசியமாகும். “எப்போதோ முடிந்த காரியம்” என்னும் உபதேசத்திலிருந்து நாம் கிரகித்து உணரக்கூடியது யாதெனின், எம்மிடம் மறைந்துள்ள அருட்சக்தியை வெளிக்கொண்டு வருதல் வேண்டுமாயின் பாசநீக்கம் செய்தலே சிறந்த சாதனை என்பதாகும்.
பாச நீக்கத்தின் பொருட்டுச் செய்யவேண்டிய நான்கு முக்கியமான சாதனைகள் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்பனவாகும். அவற்றை யோகிகள் பக்தியோகம், கர்ம யோகம், ராஜயோகம், ஞானயோகம் எனக்கூறுவர். சிவனடியார்கள் அவற்றைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என வர்ணிப்பார்கள். எப்படி இருந்த போதும் இந்த நான்கு சாதனா நெறிமுறைகளையும் அனுசரித்துள்ளனவாக நான்கு மகாவாக்கியங்களும் இருப்பதை நாம் கிரகித்துத் தெளிந்துகொள்ளலாம்.
கேட்டல் சாதனை
எப்போதோ முடிந்ததென்னும் இலக்கியத்துக்கு இலக்கணமாக அமைந்ததே கேட்டல் எனப்படும் சாதனையாகும். இந்தக் கேட்டற்சாதனையை மறுசாதனைகளைப்போல இரண்டு நெறிகளில் நாம் அனுட்டிக்கலாம். ஒன்று உபாய நெறி; மற்றது சத்திய நெறியாகும்.
உபாய நெறி என்பது உலக நன்மைக்காகப் பலன் கருதிச் செய்யப்படுவதாகும். சத்திய நெறியானது, ஆத்மீக விடுதலையின் பொருட்டுப் பலன் கருதாது செய்யப்படும் சாதனையாகும்.
உபாய நெறி, பாசிக்குளத்தில் கல்லெறிதல்போலும், பசித் தவன் புசித்தல் போலும் தற்காலிகமான பேற்றைக் கொடுப்பதாகும். அது மன இந்திரிய விழிப்பு நிலையில் கேட்டலாகும். அதன் மூலம் சுட்டறிவையும் பணம், புகழ், பட்டம் முதலியவற்றையும் சம்பாதிக் கலாம். அவை ஆத்மீக விடுதலைக்குப்பதிலாகப்பாசப்பிணைப்பை அதிகரிப்பனவாகும். யோக சுவாமிகள், சத்திய நெறியில்
இந்து ஒளி

டிந்த காரியம்
நா. செல்லப்பா
ாளருமான சைவநன்மணி கலாநிதி நா. செல்லப்பா ந்தார். அன்னாருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ளக்கமும், சரித்திரமும்” என்ற இவரது நூலிலிருந்து பிரசுரம் செய்கிறது.
இம்மியளவும் தவறாது நின்றே இறைபணி ஆற்றினார். அவர் சகல சீவராசிகளிடமும் அன்பின் பொருட்டே அன்பு செலுத்தினார். அநேகமான துறவிகளைப்போல் அவர் அன்பில் வாணிபம் செய்யததில்லை. எப்போதோ முடிந்த காரியம் என்பதைத் தெளிந்தால் நாம் இறைவனுடன் வர்த்தக ரீதியில் தொடர்பு கொள்ள எவ்வகையிலும் எத்தனிக்கவேண்டியதில்லை.
புறப்பூசை என்பது யாது?
உபாய நெறி அனுட்டானங்களைப் பொதுவாக புறப்பூசை எனக்கூறுவர். சத்தியநெறிச் சாதனைகளை அகப்பூசை அல்லது அந்தர்யாக பூசை என விளக்குவர். இவ்விருபூசைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் உபநிடதச் சுலோகம் ஒன்றை இங்கு நினைவு கூர விரும்புகிறோம்.
"பிரதமா பிரதிமா பூஜா,
ஜெபஸ் தோத்திரம் மத்தியமா
உத்தமா மானஸிபூஜா
சோகம் பூஜோத்த மோத்தமா.”
இச்சுலோகத்தில் சாதகர்கள் ஆரம்ப கட்டத்தில் செய்யும் புறப்பூசையாகிய விக்கிரக வழிபாட்டை அதமமானதென்றும், செபதோத்திரம் செய்து வழிபடுதலை மத்திமமாதென்றும், அகப் பூசையை உத்தமமானதென்றும், சிவோகம் பாவனை எனப்படும் சோகம் பூஜனையை உத்தமத்திலும் உத்தமமானதென்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. W
இந்நான்கு படிமுறைக் கிரமத்தில் பூசை செய்து ஆத்ம ஈடேற்றம் பெறவிரும்பும் சாதகர்கள் ஆரம்பப் படியிலேயே நின்று கொண்டு படியேற்றம் பெற்றுவிட்டதாகத் தற்பெருமை கூறினாற் போதாது.
படியேற்றம் என்பது ஒரு படியைவிட்டு மறுபடிக்கு ஏறுதலாகும். ஒரே படியில் என்றும் நிற்றல் ஒருபோதும் படியேற்றமாகாது.
மனித இனம் உலகில் தோன்றி 25 இலட்சம் ஆண்டு வரை ஆகின்றதென விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இத்தனை காலமாகப் பெரும்பான்மையான மக்கள் படியேற்றம் பெற்றதாகப் புலப்படவில்லை. ஆத்மீக முன்னேற்றத்தில் ஆரம்பப்படியில் நின்று கொண்டு சமய முன்னேற்றம் அடைந்துவிட்டாதாகப் பெருமைப்படுவதிற் பிரயோசனமில்லை.
படியில் அசையாது நிற்கும் அபிமானத்தை விடாதவரைக்கும் படியேற்றம் பெறுதல் பகற்கனவாகும். சுருக்கமாகச் சொல்வதாயின் படிகள் யாவற்றையும் தாண்டினாற்றான் குறித்த இடத்தை நாம் அடையமுடியும். படியில் நிற்றல் யாத்திரை முடிவு ஆகாது.
சிவயோகம் பாவனைப் பூசை
எப்போதோ முடிந்த காரியம் என்னும் மகாவாக்கியத்தின் மறை பொருளை நாம் வழுவற உணர்தல் யோக சுவாமிகள் முக்கியமாக
சர்வசித்து வருடம் ஜப்பசி - மார்கழி)

Page 21
அனுட்டித்த சிவோகம் பாவனைப் பூசையை நாமும் அனுசரிப் பதற்கு அவசியமாகும். மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய ஒரு திருவாசகம் சிவோகம் பாவனை செய்வதற்கு உத்தம வழி காட்டியாக உள்ளது. எப்போதோ முடிந்த காரியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. அது, “இறைவனே! நீ என் உடலிடங் கொண்டாய் இனி உன்னை என்னிரக்கேனே' என்பதாகும்.
இறைவன் எம் உடலிற்குடிகொண்டு உயிருக்கு உயிராகவும் அறிவுக்கு அறிவாகவும் உள்ளான். அது எப்போதோ முடிந்த காரியம். எனவே நாம் அவனிடம் காணிக்கை வைத்துப் பேரம்பேசி அது இது என யாது இரக்கவேண்டியுள்ளது? அவனை மறைத்துள்ள திரைச்சேலையை நீக்கினால் மட்டும் போதும்.
கோயிலிற்கூட விக்கிரகத்தை மறைத்துத் திரைச்சேலை இடப்பட்டுள்ளது. விக்கிரகத்தைத் தரிசிப்பதாயின், திரைச் சேலையை நீக்கியே ஆகுதல்வேண்டும்.
அதேபோல எம் இதயத்திலுள்ள இறைவனை மறைத்துள்ள பாசத்திரையை நாம் நீக்குதல் வேண்டும். அதுவே நாம் செய்ய வேண்டிய சிறந்த சாதனையாகும். பண்டமோ பொருளோ பணமோ கொடுத்து நேர்த்திக்கடன் வைத்துக் கோயிலில் பிறரைக் கொண்டு செய்விக்கப்படும் பூசை இரத்தற்பூசையாகும். அதை மணிவாசகப் பெருமான் கண்டிப்பாக நிராகரிக்கிறார்.
யோக சுவாமிகள் அருளிய எப்போதோ முடிந்த காரியம் என்னும் உபதேசம் திருவருளானது எம்மிடம் ஏற்கெனவே அமைந்திருக்கும் போது அதைப்பெறுவதற்குப் புறப்பூசைகள் வேண்டு வதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. அவர் சிவோகம் பாவனை செய்வதிலேயே கூடுதலாக ஈடுபட்டிருந்தார்.
வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய் இல்லையே என அழுதல் பேதைமையாகும். தன்னிடம் உள்ள கஸ்தூரியின் நறு மணம் எங்கிருந்து வருகின்றதென்பதை உணராத கஸ்தூரிமான் அதைத்தேடிப் புறஉலகில் அலைகிறதாம்! அதேபோல நாம் அலைதல் அடுக்குமா? அடுக்காதென்பதை எப்போதோ முடிந்த காரியம் விளக்குகிறது.
தாசன் என்பது பரதந்திரம்
இலக்கிய உலகில் இன்று தாசன் என்னும் சொல் மலிவாக அடிபட்டு வருகிறது. தாசன்மார்களுக்குக் குறைவில்லை. கம்ப தாசன், பாரதிதாசன், கண்ணதாசன், காளிதாசன் எனப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. தாசன் என்பது பரதந்திரனை யாகும். பரதந்திரன் பிறரில் தங்கியிருக்கும் அடிமையாவான். அடியார்கள் அடிமைகள் அல்லர். அவர்கள் சுதந்திர புருஷர்களாவர்.
பொறிவழி ஒடுபவன் பரதந்திர னாவான்; இறைவழி மிளிர்பவன் சுதந்திர னாவான் யோக சுவாமிகள் இறைவழி மிளிர்ந்தவராவர். தன்னிடம் எப்போதோ முடிந்த காரியமாக மறைந்திருந்த அருளொளியைப் பாச நீக்கத்தால் மிளிரப்பெற்ற மகானவர். அவர் காட்டிய வழி இறைவழியேயன்றிப் பரதந்திரவழியல்ல. அவர் எவரையும் பரதந்திரராகத் தன் மீது தங்கி இருந்து தன்னுடைய அடிகளை வழிபட்டு ஆத்ம விடுதலை பெற முயற்சிக்கும்படி கூறவில்லை. ஒருவரையும் அவர் தனக்குத் தாசனாக இருக்கும்படி வேண்டியதில்லை. இறைவனையே அவர்இரட்சகராக வழிபட்டார். அதுவும் அவனே தானாகிய அத்துவைத நெறிநின்று - அது எப்போதோ முடிந்த காரியம் எனத் தெளிந்து வழிபட்டார்.
எனவே சிவனடியார்கள் எவரும் யோக சுவாமிகளுடைய அடிகளை வழிபட வேண்டியதில்லை. அவர்காட்டிய இறை வழியைச் சுதந்திரமாக அனுசரித்தலே சிறந்த சாதனையாகம்.
(இந்து ஒளி

சோகம் என்பது வேதாகம மந்திரம்
சிவனடியின் மறைபொருள் சுத்த சக்தியாகும். சிவனடியை வழிபடும் அடியார்கள் சுத்த சக்தி பெறுவார்கள். திருவடிவழிபாடு அந்தர்யாக பூசையைக் குறிப்பிடுவதாகும். அது மானிட குருமார் களின் காலடிக்குப் புறப்பூசை செய்வதன்று. சுத்தசக்தியும் ஆத்மாவும் அத்துவிதமான ஒருமைப்பாடுள்ளனவாகும். இதைத் தெள்ளத் தெளிய உணர்ந்த யோக சுவாமிகள் தமது நற்சிந்தனை நூலில்,
"அவனே நானென்று சொல்லித் தியானம் செய்தினமும் ஆசை எல்லாம் ஒழியும் ஈனருள் பொழியும் sy என எமக்கு உபதேசித்துள்ளார்.
அவனே நானென்று சொல்லித் தியானிப்பதற்குரிய வேதாகம மந்திரம் 'சோகம்' என்பதாகும். இப்பதம் சோ என்றும் அகம் என்றும் பகுக்கக்கூடியதாகும் - “சோ”அவனையும்,'அகம் நான் எனும் ஆத்மாவையும் குறிப்பதாகும்.
இந்த மந்திர உச்சாடன செப தியானம் சிவோகம் பாவனையாகும். அது மனவிருத்தியை நீக்குவதற்குரியதாகும். அதை ஒதும்போது பக்திசிரத்தையும் தூய நம்பிக்கையும் அசையாது இருந்தாற்போதும். எவ்விதமான மனக்கற்பனையோ அல்லது கருத்து விளக்கமோ கொடுத்தல் சிவோகம் பாவனைக்குப் பங்கம் விளைவிப்பதாகும். அதில் தாசன் - எஜமான் அடிமுடி என்னும் இருமைவகை எண்ணங்களுக்கு இடமில்லை. தாள் - தலை, (அடி - முடி) எனப்படும் பாகுபாடின்றி தாடலையாகிய தனிப்பதமாகவே அது விளங்கும்.
இறைவன் தண்டனை வழங்குகிறாரா?
இறைவன் சகல உயிர்களுக்கும் சமமாகவே சூரியனைப் போல, அருள்பாலிக்கிறார். சமஅருள் பாலிப்பு என்பது எப்போதோ முடிந்த என்றும் தொடர்ந்துவரும் காரியமாகும். ஆனால் மக்களிடையே புலப்படும் திருவருட்பொலிவு சமமாக இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் யார்? என்பது எமது மனச்சார்பற்ற ஆய்வுக்கும் உண்மைத் தெளிவுக்கும் உரியதாகும். இறைவனுடைய படைப்புத் தொழில் இயற்கை நியதியில் கூர்ப்பு எனப்படும் பரிணாமக் கிரகத்தில் அமைந்திருப்பதாகப் புலப்படுகிறது, அதில் உயிர்கள் சுயமாகவே முன்னேறக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. அது எப்போதோ முடிந்த காரியம். இங்ங்ணம் சுயசக்தியைப் பெற்ற உயிரினங்களின் செயற்பாட்டில் இறைவன் தலையிடுவதில்லை. கூர்ப்புக் கிரமத்தில் மனிதநிலை அடைந்த உயிர்கள் பகுத்தறிவைப் பெற்றன. பகுத்தறிவென்பது மனத்தின் ஆக்கமாகும். அது சிந்தனைத் தொகுப்பினால் உருவாக்கப்படுவதாகும்.
பகுத்தறிவு இருமைவகை உடையதாகும். அது எவ்வளவு முதிர்ச்சி அடைந்தாலும் இருமைவகை நீங்கப்பெறுவதில்லை. பகுத்தறிவு முதிர்ச்சி அடைந்த மனிதனிடம்தான் கூடுதலான இருமைவகை உணர்ச்சிகள் உருவாகின்றன. அதனால் அவன் இறைவனிடமும் சமநிலையற்ற இருமைவகை வேறுபாடு உள்ளதெனக் கற்பனை செய்கிறான். கற்பனைத் திறமையாலும் கவித்துவச் சிறப்பாலும் கடவுளுக்கும், அசுரத்தன்மை கூடுதலாக உள்ள மனிதனுக்கும் போர் நிகழ்வதாகப் புராண இதிகாசங்களைப் படைக்கிறான். நல்லவர்களுக்கு அருளும் பொருட்டுக் கடவுள் துஷ்டநிற்கிரக சிஷ்டபரிபாலனம் செய்கிறார் என்னும் கொள்கையைப் பரப்புகின்றான்.
இது ஒரு கொள்கையேயன்றிப் பூரணமான சத்தியம் அல்ல. இக்கொள்கையாளர்கள்தாம் கடவுள் நல்லவர்களுக்குச்
19 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 22
சன்மானமும் தீயவர்களுக்குத் தண்டனையும் வழங்குகிறார் என நம்புகின்றனர். இக்கொள்கையை சங்கத்தமிழ் நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சான்றோர்கள் மறுத்து, “நன்றும் தீதும் பிறர்தர வாரா” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர், நன்மையும் தீமையும் இருமைவகையுடைய மனிதமணத்தால் சிருஷ்டிக்கப் படுவனவாகும். அவை இறைவனுடைய சிருஷ்டி அல்ல. அவை இரண்டும் ஒரே நாணயமாகிய மனத்தின் இருபக்கங்களாகும். நன்மையிலும் தீமை உண்டு. தீமையிலும் நன்மை உண்டு. சான்றோர்கள் இவை இரண்டையும் சமமாகக் கருதி இவற்றிலிருந்து விடுதலை பெறுதலே மோட்சம் எனக் கொண்டனர்.
உண்மை இவ்வாறாக இருக்கக் கடவுள் சகல உயிர்களுக்கும் சமமாகக் கருணை காட்டாது நல்லவர்களுக்குச் சன்மானமும், தீயவர்களுக்குத் தண்டனையும் கொடுத்து வேறுபாடு காட்டுகிறார் என்ற மூடக் கொள்கையை நாம் சத்தியம் என ஏற்றல் எங்ங்ணம் அடுக்கும்?
மெய்யுணர்தற்குத் தேவை புனிதமான அறம்
இயற்கைப் பரிணாம முன்னேற்றம் மூளைசாலிகளான பகுத்தறிவாளருடன் முடிவடைந்துவிடுவதாகப் புலப்படவில்லை. பகுத்தறிவுக்கு அப்பாலுள்ள தெய்வீக விவேகப் படைப்புச் சக்தியை முழுமையாக மனிதன் மலரப் பெறுவதுடன் தான் அது முற்றுப் பெறுவதாகத் தெரிகிறது.
உலகில் நன்மைக்கும் தீமைக்கும் அறத்துக்கும் மறத்துக்கும் தீராத போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. எந்த ஒரு அவதாரபுருஷனும் போராட்டம் நடத்தி நிரந்தரமாக நன்மையையோ அல்லது அறத்தையோ நிலைநிறுத்தியதாகப் புலப்படவில்லை. மனிதனிடம் இருமைவகை மனம் விருத்தியடைந்து கொண்டி ருக்கும் வரை இந்த எதிர்ப்புச்சக்திகளின் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதை வழுவற உணர்ந்த சைவ சித்தாந்திகள் இராப்பகல் அற்ற இடத்தே அறிதுயில் கொண்டு இருவினை கெடும் போதுதான் மனிதனிடம் தெய்வீகமான விவேகப் படைப்புச்சக்தி அல்லது மெய்யுணர்தல் சுயமாகவே உள்ளிருந்து மலரும் எனக் கண்டறிந்துள்ளனர்.
மெய்யுணர்தல் பெறுவதற்கு எவ்விதமான அகப்போராட்டமோ அல்லது புறப்போராட்டமோ தேவை இல்லை. அதற்கு வேண்டியது மனச்சார்புணர்ந்து, அச்சார்பு கெட ஒழுகி ஈண்டு இருமைவகை தெளிந்து புனிதமான அறம் பூண்டு வாழுதலாகும்.
புனிதமான அறமும், நன்மையும் மனவிருத்தியினால் ஆக்கப்படும் மறத்துக்கும், தீமைக்கும் எதிரான சார்புநிலையில் உருவாகுவன அல்ல. தனியான - எதிர்ப்புச் சக்தி இல்லாத அறமும், நன்மையும் பேரின்பமும் இருக்கவே இருக்கின்றன. அவற்றை மனவிருத்தியால் உருவாக்க முடியாது. அவற்றை நாம் பூரணமாகச் சுட்டறிவால் அறியோம் என்பது யோக சுவாமிகள் அருளிய இரண்டாவது மகாவாக்கியமாகும்.
விதியை நிலத்திலே சிந்தாவண்ணம் அண்ணந்து, சிவ சிவ என்று சொல்லி, வலக்கைலின் நடுவிரல் மூன்றினாலும், வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு @మారిణు தரித்தல் வேண்டும். நடந்துகொண்டு லிதிதரீத்தல் ஆகாது.
-நாவலர் பெருமான்
இந்து ஒளி

ye OOO OO OOO OeO OOO OO OOO Oe eO OO Oe OOO OO Oe eee ஞான ஞாயிறு நாவலர்
C C Op
6hш95oяғөбr
(அசித்தாந்தப் பேராசிரியர் ச. தண்டபாணி தேசிகர்}}
இலங்கையிற் தோன்றிய ஞானஞாயிறு பூரீலழரீ ஆறுமுக நாவலர் அவர்கள்! ஞாயிறு, தோன்றிய இடத்திற்கு மட்டும் ஒளியைத் தருவதன்று. உலகம் எங்கும் ஒளியையும் வெப்பத்தையும் தந்து வளர்ச்சியையும் அளிக்கும். அதுபோலவே இந்த ஞானஞாயிறும் இலங்கையில் நல்லூரிலே தோன்றினாலும் தமிழகம் எங்கும் ஒளியை வீசிற்று. வெப்பத்தைத் தந்தது. ஞானப் பயிரை வளர்த்தது.
இந்த ஞானஞாயிறு உச்சிவானத்தையடைந்த காலத்திலே திருவாவடுதுறை ஆதீனத்திலே அக்காலத்தே ஞானவரசு செலுத்திய பூரீலழரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் அவர்களும், இளைய பட்டத்து அருங்கலை விநோதர் அம்பலவாண தேசிகர் அவர்களும் நாவலர் என்ற பட்டத்தைச் சூட்டிப் போற்றிப் புகழ்ந்து சிவப்பணிக்கே ஆளாக்கினார்கள்.
சிவஞான ஞாயிற்றுச் சிந்தனை முழுவதும் தாய் நாட்டையும் சேய் நாட்டையும் திருத்திச் சிவப் பணி ஒன்றிலேயே ஈடுபடுத்தவேண்டும் என்பதாகும். தமிழகத்திலே, கல்வியிலும், சமய ஒழுக்கங்களிலும் திருக் கோயில் வழிபாட்டு முறைகளிலும் இருந்த குறைபாடுகள் இவர்கள் ஞானக் கண்ணிற்கு முதலிற்றோன்றின. இவற்றை எப்படித் திருத்தலாம் என்ற ஆய்வுள்ளம் இவர்களை அரித்து வந்தது. கல்வி முறையை மாற்றி அமைத்துச் சிறுவர் சிறுமியர்கள் உள்ளத்திலேயே சிவநெறியைப் பரப்பவேண்டும் என்று எண்ணினார்கள்.
அதற்காகத் தில்லையிலும், வண்ணார்பண்ணையிலும் சைவப் பிரகாச வித்தியாசாலைகளை அமைத்தார்கள். அவற்றில், இளமை தொட்டே தம்மிடம் பயின்று நல்லொழுக்கம், நற்சிந்தனை, தன்னலத் தியாகம் இவற்றைப் பெற்ற ஆசிரியர்களை நியமித் தார்கள். ஆசிரியரும் அவர்கள் போதனையும் நன்கமைந்தாலும், போதிக்கத்தக்க பாடப் புத்தகங்கள் இல்லாத குறை புலனாயிற்று. அதற்காக முதற் பாலபாடம், இரண்டாம் பால பாடம், நான்காம் பாலபாடம் என்ற மூன்று புத்தகங்களை எழுதினார்கள். அவற்றையே தம் பாடசாலைகளில் பாடமாக அமைத்துப் படிப்பிக்கச் செய்தார்கள். புத்தகங்களால் விளையும் நன்மையையறிந்த ஏனைய பிற பாடசாலைகளும் இப்பாடங்களை யமைத்து முன்னேறின. பாலபாடங்களில் முதற் பாடம் கடவுள்; இரண்டாம் பாடம் ஆன்மா, இப்படியாகச் சிவபரத்துவமும், தத்துவ ஆராய்ச்சியும், சமய ஒழுக்கங்களும், குருலிங்க சங்கம இயல்புகளும் முறையாக மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப எளிய இனிய தமிழ் நடையில் எழுதப் பெற்றவை. மேலும், அரிதின் அறியக்கூடிய ஆகம சாரங்களும், புராண வரலாறுகளும் வசன வடிவாக வெளிவந்தன. அவற்றையே வகுப்பிற்குத் தகப் பாடங்களாகப் படிப்பித்து வந்தார்கள். அதனால், ஒரு கல்லில் இரு மாங்காய் விழுந்ததுபோல, இலக்கணக் குறைபாடில்லாத எளிய இனிய தமிழ் நடையும் வளர்ந்தது. கூடவே சமயக் கருத்துக்களும் வளர்ந்தன.
பொருளின் பயன்தான,தருமம் ஆகும். தருமத்தினால்தான்நற்திஅடையமுடியும்.
20 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 23
இது சிறுவர்களுக்கான சிறப்பு இங்கு தருகிறோம். பெற்றோ படித்துக் காட்டி அதன் தத்து5
சிந்த6
மெய்ம்மை ஒரு ஊரில் முருகன், கிருஷ்ணன் என இரு சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் விடியற்காலையில் இரண்டு சிறுவர் களும் சந்தைக்குப் போய் தங்களுடைய சிறிய கடைகளில் தாங்கள் கொண்டுபோன பொருள்களைப் பரப்பிவைத்து, விற்கிறதற்காக உட்கார்ந்தார்கள். ஒரு கடையில் பழங்களும் காய்கறிகளும், மற்றொன்றில் தேங்காயும் வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சிறுவர்களிடத்தும் பலபேர் பொருள்கள் வாங்கிக் கொண்டு போனார்கள்.
முருகனுடைய கடையில் எல்லாம் விற்றுக் கடைசியாய் ஒரு பெரிய முலாம்பழம் மாத்திரம் இருந்தது. ஒரு பெரிய மனிதர் வந்து, கையை அந்த முலாம் பழத்தின் மேல் வைத்து, “எவ்வளவு பெரிய முலாம்பழம். இதற்கு என்ன விலை சொல்லுகிறாய் தம்பி?” என்று கேட்டார்.
“இந்த முலாம்பழம் ஒன்றுதான் என்னிடத்தில் மிகுந்தது; இது நல்லபழம்போல் தோன்றினாலும் இதில்கொஞ்சம் பழுது இருக்கின்றது ஐயா” என்று சொல்லி அந்தச் சிறுவன் அந்தப் பழத்தை மறுபுறம் திருப்பிக் காட்டினான்.
“ஆம் ஆம் பழுது இருக்கின்றது எனக்கு அதுவேண்டாம்” என்று சொல்லி, அந்தப் பெரிய மனிதர் அந்தச் சிறுவனுடைய அழகிய வஞ்சகமில்லாத முகத்தைப் பார்த்து, “உன்னுடைய பழத்திலுள்ள பழுதை, வாங்க வருபவர்களுக்குக் காட்டுவது விற்கவந்த உனக்கு ஆகுமா?” என்று கேட்டார்.
“பொய் சொல்வதைப் பார்க்கிலும் இது நல்லது, ஐயா” என்று அந்தச் சிறுவன் பணிவுடன் சொன்னான். “நீ சொன்னது சரி தம்பி ஒருபோதும் அதை மறவாதே; நான் உன்னுடைய கடையை இனி மறவேன்” என்று சொல்லி, அந்தப் பெரிய மனிதர் கிருஷ்ணன் கடை முகமாகத் திரும்பி, “இது என்ன நல்ல பழத்தேங்காயா?” என்று கேட்டார். "ஆம், ஐயா, நல்ல பழக்காய், நேற்றுத்தான் பிடுங்கினது, நான்தான் உரித்தேன்” என்று கிருஷ்ணன் மறுமொழிசொன்னான். அந்தப் பெரிய மனிதர் அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனார்.
“முருகா, நீ என்ன பெரிய மூடன்! முலாம்பழத்திலுள்ள பழுதை அந்த மனிதனுக்குக் காட்டுகிறதாநீசொன்ன உண்மைக்காக அந்தப் பழத்தை இனி வீட்டுக்குக் கொண்டுபோ, அல்லது எங்கேயாவது எறிந்துவிடு. அந்த முட்டுக்காயை வாங்கிக் கொண்டு போகின்றாரே, அவர் அதைப் பற்றி என்ன அறிந்து விட்டார்? நல்ல பழக்காய்கள் விற்ற விலைக்கே அதையும் விற்றேன். அந்தமுலாம்பழத்தை ஒன்றும் பாராமல் வாங்கிக் கொண்டு போயிருப்பார்.
“கிருஷ்ணா, எனக்கு இன்று காலையில் கிடைத்த காசைப் போல இரண்டு பங்கு காசுதான் வந்தாலும் நான் ஒரு பொய் சொல்லவும் மாட்டேன், பொய்யாய் நடக்கவும் மாட்டேன். அல்லாமல் இது கடைசியிலே எனக்குத்தான் நயம்; எனக்கு ஒரு வழக்கக்காரர் அகப்பட்டார்; உனக்கொருவர் போய்விட்டார்.”
(இந்து ஒளி 獸
 
 
 

ப்பகுதி. சிறுவர் சிந்தனைக்கதைகள் சிலவற்றை ார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இக்கதைகளைப் வத்தை விளக்குவது கடன்.
னைக் கதைகள்
அது அப்படியே நடந்தது; மறுநாள் அந்தப் பெரிய மனிதர் தனக்கு வேண்டிய பழங்களையும் காய்கறிகளையும் எல்லாம் முருகனிடத்திலேயே வாங்கினார்; கிருஷ்ணனுடைய கடையில் ஒன்றுமே வாங்கவில்லை. இந்த விதமாகவே அந்த வருஷம் கழிந்தது. முருகனிடத்தில் எப்போதும் நல்ல பொருள் வாங்கலாம் என்று கண்டு கொண்டு அவர் அவனுடைய கடைக்கே எப்போதும் போவார்; சிலவேளை அவனிடத்தில் "மறுவருஷம் நீ என்ன செய்யப்போகிறாய்” என்று விசாரிப்பார். ܝ
மறுவருஷம் அந்தப் பெரிய மனிதருடைய பண்டகசாலையில் ஒரு நம்பிக்கையான சிறுவன் வேண்டியிருந்தது; அவர் முருகனைப் பார்க்கிலும் வேறொருவன் அகப்படான் என்று நினைத்து, முருகனுக்கே அந்த வேலையைக் கொடுத்தார். அவன் தன் எசமானுக்குத் தன்னிடத்தில் மேலும் மேலும் நல்ல எண்ணம் வரும்படி நடந்து, ஒவ்வொரு உத்தியோகமாக உயர்ந்து, கடைசியில் எசமானோடு வர்த்தகத்தில் ஒரு பங்காளி ஆயினான்.
(உண்மைபேசுவது எவ்வளவுதூரம் உயர்வைத்தருகிறது என்பதை எடுத்துக் காட்டும் இந்தக் கதை ஆறுமுக நாவலரின் இரண்டாம் பாலபாடத்தில் வெளிவந்துள்ளது)
Up Up Up
பொறுமையே சிறந்தது
ஒரு குரு தன் சீடர்களிடம் பொறுமையின் சிறப்பைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். “பொறுமையால் சாதிக்க முடியாதது எதுவுமே கிடையாது” என்றார் குரு. அவரை மடக்க நினைத்தான் சீடன் ஒருவன்.
“அதெப்படி குருவே! பொறுமையாக இருப்பதன் மூலம் ஒருவனால் சல்லடையில் நீரை நிரப்ப முடியுமா?’ என்று திமிருடன் கேட்டான் சீடன்.
அதற்கு குரு “நிச்சயமாக முடியும் அந்த நீர் உறைந்து பனிக்கட்டியாகும் வரை பொறுமையாக இருந்தால் அதுவும் சாத்தியமாகும்” என்றார்.
குருவின் விளக்கத்தைக் கேட்டு சீடன் தெளிவு பெற்றான்.
(நன்றி பக்தி)
2 suI&IIGOLÍ LílyIIIigöøøoor
“பெருங் கருணைக் கடவுளே சென்ற ప్రTF586ు தேவரீர் அடியேனைக் கருத்தருளினதின்நிழ்த்தம், தேவீரை அடியேன் துதிக்கிறேன். இந்தப் பகல்லும் அடியேனைக் கருத்தருளும். அடியேன் பாஹிங்கள் செய்யாவிண்ணம், அடியேனைத் தடுத்து ஆட் கொண்டருளும். அடியேன் முன் படித்த Uாடங்களும், இன்ப் படிக்கும் பாடங்களும், அடியேன் மனசிலே ஏந்தநாளும் தங்கும்படி அருள் செய்யும்.”
நாவலரின் முதலாம் பால பாடத்தில்ருந்து)
1. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 24
இது மாணவர்களுக்கான இம்முறை இடம்பெறுகின் மிருந்து எதிர்பார்க்கப்படுகிற
( பெரியபுராண
சிவநெறி காத்த செம்மல்
சிமயம் தெய்வ அருளுக்கு வழிகாட்டுவதோடு நல்ல ஒழுக்கத்தையும் வாழ்வையும் தருவது. எனவேதான் முற்காலத்தில் மன்னர்களும், மதிநல அமைச்சர்களும் மற்றுமுள்ள பெரியோர்களும் சமயத்தைப் பேணிக் காத்தார்கள். இத்தகைய பெருமக்களில் அமைச்சர் குலச்சிறை நாயனாரும் ஒருவர்.
செந்தமிழ் வளர்த்த திருநாடு பாண்டியநாடு. இந்நாட்டில் செழுமையான சிறந்த ஊர் மணமேற்குடி என்பது. இங்கு குலச்சிறைநாயனார் என்ற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானிடம் சிந்தை செலுத்தியவர். அவரது அடியார்கள் எக்குலத்தவர் ஆயினும் வேற்றுமை கருதாது அவர்களுக்கு வேண்டும் தொண்டுகள் செய்து வருவார். அதையே தம் வாழ்வின் பெரும் பேறாகக் கருதினார். இதனாலேயே சுந்தரமூர்த்தி நாயனாரும் இவரை ‘பெருநம்பி’ எனச் சிறப்பித்திருக்க வேண்டும்
இவர் மதுரை மாநகரை ஆண்ட மன்னன் சீர் நெடுமாறனிடம் முதன்மை அமைச்சராக இருந்து மக்கள் நலனைக் கருத்தாகப் பேணி வந்தார். சைவ சமயத்துக்குப் பிற சமயத்தினரால் இன்னல் நேர்ந்தபோது இவர் திருஞானசம்பந்தப் பெருமானை அழைத்து வந்து அத்துயரை அகற்றியவர். சைவத்தைப் பேணுவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த அரசியார் பாண்டிமாதேவிக்கு பக்க உதவியாளராக இருந்து தொண்டுகள் செய்து வந்தார். இவர் அமைச்சராக நீண்டகாலம் பணிபுரிந்து நாடெங்கும் சைவத்தை தழைக்க வைத்து இறைவன் திருவடி சேர்ந்தார்,
நாட்டு நலனைக் காக்க அரசர்களுக்குத் துணையாக இருந்த அமைச்சர்கள், சமயத்தைப் பேணுவதிலும் கருத்துக் கொண்டி ருந்ததைக் குலச்சிறை நாயனார் வரலாறு காட்டுகிறது.
é97oy 6 DJI7 Ií)/Tigig5oadoor
“மகா தேவரே! அடியேன் செய்த பாஹிங்களை எல்லாம் பொறுத்தருளும். இந்த இரருத்திரிலிலே அடியேனைக் கருத்தருளும். அடியேன் தேவரீரை அறிந்து, தேவீருக்குப் பயந்து, தேவரீர்மேல் அன்பு லுைத்துத் ஆதவfரைத் துதித்து, வணங்கும்படி செய்தருளும். அடியேன், இறக்கும் பொழுது, தேவீரை மறவாத தியானத்துடனே, தேவரீருடைய பதத்திலே சேரும்படி அருள் செய்யும்.
நாவலரின் முதலாம் பால பாடத்திலிருந்து)
இந்து ஒளி
 
 
 

பக்கம். வழமைபோல பெரிய புராணக் கதைகள் றன. இது போன்ற விஷயங்கள் மாணவர்களிட து.
க் கதைகள் )
குரு அருளை நாடிச்
சென்றவர்
சிறப்பு மிக்கது மழலை நாடு. இதன் தலைநகர் பெருமழலை என்பது. இது செழிப்பு மிக்கது. மாவும் தென்னையும் எங்கும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இங்குள்ள மக்கள் சிவபெருமானிடம் பக்திகொண்டவர்களாதலால் இவர்கள் மேனியெல்லாம் திருநீற்றின் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.
பெருமிழலைக் குறும்பர் என்பவர் இந்நகரின் தலைவர் ஆவர். இவர் சிவபெருமானை வழிபடும் நெறியினர். சிவனடியார்களிடம் இவர் பேரன்பு கொண்டிருந்தார். அவர்கள் குறிப்பறிந்து வேண்டியன கொடுத்து உதவி வருவார். அவர்களைப் பசி தீரப் புசிக்க வைத்து அதில் பெருமகிழ்ச்சி கொள்வார்.
இவர் வாழ்ந்த காலத்திலேதான் சுந்தரமூர்த்தி கவாமிகள் திருத்தொண்டத் தொகையைப் பாடினார். பெருமிழலைக் குறும்பர் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் பேரன்பைக் கொண்டிருந்தார். அவரையே நெஞ்சத்தில் நினைத்து வழிபட்டு வந்தார். இதன் பயனால் இவருக்கு அஷ்டசித்திகளும் கைகூடின. தூய்மையான அன்புணர்வில் மேலும் மேலும் தோயப் பெற்ற இவர் இடையறாது அஞ்செழுத்தை ஒதி யோகப் பயிற்சியில் முதிர்ச்சி பெற்று விளங்கினார்.
திருவஞ்சைக்களத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அங்கு எழுந்தருளியுள்ள இறைவரைத் தொழுது திருப்பதிகம் பாடினார். தமக்கு வடகயிலை வாழ்வைத் தர இறைவனார் திருவுள்ளம் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.
யோகத்தில் ஈடுபட்டுத் தம் குருநாதர் சுந்தரர் திருவடிகளை நினைந்து வணங்கிக் கொண்டிருந்த பெருமிழலைக் குறும்பருக்கு, சுந்தரர்பெருமான் கயிலை செல்ல இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. 'என் நெஞ்சகத்தே கோயில் கொண்ட என் குருநாதர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கயிலை செல்ல, அடியேன் அவரைப் பிரிந்து வாழ்வேனா? மணி இழந்த கண்ணால் பெறுகின்ற பயன் தான் என்ன?’ என்று மனத்துள் எண்ணியவராய், பெருமிழலைக் குறும்பர் யோகத்தில் மூழ்கி ஒளிவடிவில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முன்னர் வடகயிலை அடைந்தார்.
அடியார்கள் நினைத்ததைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு விளக்குவதை அறிகிறோமல்லவா?
ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரம் அணிந்து லிதிதரீத்துக் கொண்டு திருக்கோயில் செல்ல வேண்டும். திருக் கோயிலை சமீபத்தவுடன் தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து இரண்டு கைகளையுஞ் சிரசிலே குறித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு
உள்ளே பேருதல் வேண்டும்.
-நாவலர் வருமாத்து
2. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 25
குலம தன் கொழு
(கலாநிதி
பெண்களைப் பற்றிய கருத்துக்கள் காலத்திற்குக் காலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பாடப்பட்டதாகக் கருதப்படும் சங்கப் பாடல்கள் தொடக்கம் இன்றைய உரை நடை இலக்கியம் வரை இச்செயற்பாடு தொடர்கிறது. 19ஆம் நூற்றாண்டில் உரைநடை இலக்கியம் மேலைநாட்டார் வருகையினால் சிறப்புப்பெற்றது. அவ்வேளையில் ஆங்கில மொழியும் மேலைத்தேய பண்பாடும் தமிழர் பண்பாட்டில் பெருமளவு செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கின. தமிழர் பண்பாடு மாற்றமுறலாயிற்று. இம் மாற்றத்தைத் தடுப்பதற்கு பலர் பெருமுயற்சி செய்துள்ளனர். ஈழத்தில் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஆறுமுக நாவலர் முன்னோடியாக விளங்குகின்றார்.
நாவலர் காலம் 1822-1879 வரையாகும். பன்னிரண்டாம் வயதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்று உத்தியோகம் பெறும் நோக்குடன் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலச் சமூகச்சூழல் அவரை அந்நிலைக்கு ஆளாக்கிற்று. பிறப்புச் சூழலும் வளர்ப்புச் சூழலும் சைவமும் தமிழுமாக இருந்த போதும் எதிர்காலத்தை வளமுள்ளதாக்க ஆங்கிலப் பயிற்சியும் மதமாற்றமும் வேண்டப்பட்டன. பதின்நான்கு ஆண்டுக் கல்விச் சூழலில் நாவலர் சிந்தனை தெளிவு பெற்றது. மதமாற்றம்' எனும் செயற்பாட்டின் பின்விளைவுகளை எண்ணிப் பார்த்தார். அவர் உள்ளத்தில் இயல்பாக இருந்த கடவுள் பற்றிய சிந்தனையை எல்லோரிடமும் எடுத்து இயம்பும் பணியை மேற்கொண்டார். அவரின் சிந்தனைத் தெளிவை வருமாறு கூறியுள்ளார்.
மங்கையர் ஒளி
"குழந்தைப் பருவந்தொட்டே உன் உள்ளத்தில் வசித்து வரும் தெய்வத்துக் கூடாகவே கடவுள் உனக்கு வேண்டுவதை நல்குவார். உலக விருத்திப் பொருட்டு உள்ளத்தில் வைத்திருந்த தெய்வத்தை மாற்றி மற்றொரு தெய்வத்திற்கு உள்ளத்தை இடம்செய்வது பெண்ணொருத்திதன் கணவனை மாற்றி மற்றொருவனை மனதில் இருத்துவது போலாகும் கணவனை மாற்றிப் பழகுபவள் விலைமகள் ஆகின்றாள். அவ்வாறே தெய்வத்தை மாற்றிப்பழகுபவன் கடவுள் இல்லை’ என்கின்றநாஸ்திகத்துக்கே ஆளாவன். நாழியரிசிக்கே நாம்’ என்பதாய் அவன் வாழ்க்கை பாழ்பட்டுப்போம்”
இங்கு தம்முடைய மதமாற்றம் பற்றிய கருத்தைத் தெளிவாக்க நாவலர் காட்டும் உவமை சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. கணவனை மாற்றி இன்னொரு ஆடவணை மனத்தில் இருத்தும் பெண்போலத் தன் மத நம்பிக்கையை மாற்றுபவர் இருப்பதாக விளக்குகிறார். சைவ மதம் நிலைத்திருந்த சூழலில் கிறிஸ்தவ மதம் வருகை தந்தபோதுமக்கள் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கூறவந்த நாவலர் அதனை உணர்வு பூர்வமாக விளங்க வைக்க எண்ணினார். அதனால் மக்கள் வாழ்வியலில் உறுதியாக நிற்க
(இந்து ஒளி 2
 
 
 

LMeOeM eMeLMeM eOM eO eO eM eMeOMeOeOM eM eMeCMeC esMeM eCMeeO T e
களுக்கு அழகு ழநனைப் பேணுதல்
Lo(360TT6örinofl சண்முகதாஸ்)
வேண்டிய ஒரு நிலையைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். சைவசமய வாழ்வியலில் ஒழுக்கம் அடிப்படையாக அமைந்திருந்தது. குறிப் பாகக் குடும்பநிலையில் ஒழுக்கம் பெரிதும் பேணப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதிலும் சிறப்பாகப் பெண்ணுடைய ஒழுக்கம் பேணப்படவேண்டும் என்பது வரையறையாக இருந்தது. இம்மரபான சிந்தனையை நாவலர் கிறிஸ்தவ மதத்தை விரும்பி மதம் மாறிச் செல்வோரின் மனநிலையை விளக்க எடுத்தாண்டமை அவருடைய நுண்ணறிவுத் திறத்தினைப் புலப்படுத்துகின்றது.
தமிழர் வாழ்வியலில் 'திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்காகக் கருதப்படுகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் இச் சடங்கின் மூலம் பலர் முன்னிலையில் இணைக்கப்பட்டு குடும்ப வாழ்க்கையை ஏற்றுக்கொள்கின்றனர். ஆண்மீது பெண்ணும் பெண்மீது ஆணும் நம்பிக்கை கொண்டு ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்வதாக உறுதிமொழி செய்து அதனை உள்ளத்திலும் இருத்திக்கொள்கிறார்கள். எனினும் இவ்வுறுதி மொழியை ஆண்கள் பேணாமையால் சமூகத்தில் பரந்தமை என்னும் ஒழுக்கம் ஏற்படலாயிற்று. அதற்கு சமூகமும் அங்கீகாரம் வழங்கியதை பல இலக்கியச் சான்றுகள் காட்டுகின்றன. அற நீதி நூல்களும் இவ்வொழுக்கம் கடியப்பட வேண்டுமென வற்புறுத்தி யுள்ளன. பிறர்மனை நயவாமை என ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வொழுக்க நிலை இன்றியமையாததெனக் குறிப்பிட்டுள்ளன. நாவலர் வாழ்ந்த காலத்தில் மேலைத்தேயப் பண்பாடும் ஆங்கிலக் கல்வியும் கிறிஸ்தவ மதமும் பரவியதால் இவ்வொழுக்க நிலையைத் தளரச் செய்யும் வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியிருந்தது. ஆண்களின் மரபான நடை, உடை, பாவனை, பேச்சு என்பன நாகரிகமாய்த் தோற்றின. அத்தோற்றம் பெண்களின் உள்ளத்து உரத்தையும் அழியச் செய்யக்கூடும். புதிய மதக்கருத்துக்களும் செயற்பாடும் ஆண்களைக் கவர்ந்தமையாலும் மரபான தொழில்நிலைகளில் வெறுப்பு ஏற்பட்டதாலும் 'உத்தியோகம் புருஷலட்சணம்' என்ற புதிய கருத்துத் தோன்றி வளர்ச்சியடைந்தமையாலும் பெண்களின் சிந்தனையிலும் உள்ளூர மாற்றம் ஏற்படுவதை நாவலர் கவனித்தார். கணவனை மாற்றி மற்றொருவனை மனதில் இருத்த ஆண்களின் புதிய வேடப்புனையும் காரணமாக அமையக்கூடும். பெண்ணின் உள்ளத்தில் தன் கணவனைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கவேண்டும் என்ற முன்னோரது வரையறையும் நாவலரது இப்புதிய சிந்தனைக்கு அணையாய் நின்றது.
இதனை நாவலருடைய 'கற்பு’ என்னும் கட்டுரை மிகத் தெளிவாய் உணர்த்துகின்றது. 1949ஆம் ஆண்டு நாவலர் எழுதிய பாலபாடம் நான்காம்புத்தகத்தில் 40 கட்டுரைகள் அமைந்துள்ளன. மாணவர்களின் அறிவு நிலையான வாசிப்புக்கு உகந்த பல விடயங்களைக் கட்டுரையாகக் கொடுத்துள்ளார். சமூக நிலையில் பேணப்படவேண்டிய பல விடயங்களைத் தொகுத்துக் காட்டி
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 26
யுள்ளார். அவற்றுள் இரண்டு கட்டுரைகளில் நாவலர் ஒழுக்கப் பேணலை வற்புறுத்த எண்ணியதைப் புலப்படுத்தியுள்ளார். கற்பு வியபிசாரம் என்னும் இரு கட்டுரைகளும் இவ்வகையில் இன்று நாவலருடைய சமூக நோக்கையறிய உதவுகின்றன. பிறபண்பாடு தமிழர் வாழ்வியலைச் சிதைக்கும் என்பதை நன்கறிந்த நாவலர் தமிழரிடையே இருந்த ஒழுக்கப்பிறழ்வைச் சுட்டிக்காட்ட விரும்பினார். அதனை இளந்தலைமுறைகள் அறியவேண்டிச் சிறு கட்டுரை வடிவிலே பாடப்புத்தகத்தில் இணைத்துவிட்டார். இன்று இவ்விரு கட்டுரைகனையும் மீள வாசிக்கும்போது நாவலரின் நயமான வழிகாட்டலையும் நாம் உணர முடியும்.
வியபிசாரம்' என்னும் கட்டுரை ஒரு சிறிய கட்டுரையாகும். நாவலருடைய மொழிநடை இக்கட்டுரையில் வாசகர் தரங்கருதி இலகுவாக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் அமைப்பு தலைப்பினை நன்கு விளக்கும் நிலையில் ஏழு பந்திகளாக அமைக்கப் பட்டுள்ளன. பொருள் விளக்கநிலையில் கட்டுரையின் தலைப்பு வட மொழியிலிருப்பதால் தெளிவுபடுத்த ஏற்ற மொழிநடையைக் கையாண்டுள்ளார். மேலும் மாணவருடைய பாடநூல் என்ற வகையில் சில மேலதிக விடயங்களையும் கூறவேண்டியுளது. வியபிசாரம்' என்பதை வருமாறு விளக்குகிறார்.
"வியபிசாரமாவது காமமயக்கத்தினாலே தன் மனை யாளல்லாத மற்றைய பெண்களை விரும்புதல், மற்றைய பெண்கள் என்பது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப்பெண்களையும் பிறன் மனையாளை விரும்பு வோரிடத்தே தருமமும் புகழும் சிநேகமும் பெருமையுமாகிய நான்கும் அடையாவாம். அவரிடத்தே குடிபுகுவன பாவமும் பழியும் பகையும் அச்சமுமாகிய நான்குமாம். ஒருவன் தன் மனையாளைப் பிறன் விரும்புதலை அறியும் பொழுது தன் மனம் படுந்துயரத்தைச் சிந்திப்பானாயின் தான் பிறன் மனையாளை விரும்புவானா விரும்பானே!”
(UTGoum Lth 4:11.16) விளக்கிய பின்னர், பிறன் மனையாளை விரும்பாத ஆண்மையே பேராண்மை எனக்கூறி அத்தகைய ஆண்மையின் சிறப்புக்களை வரிசைப்படுத்திக் காட்டுகிறார். அடுத்து வியபிசாரத்திலிடுபடத் தூண்டும் காரணங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். அதனைத் தடுத்தற்குரிய வழிகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். அது எவற்றுக்கெல்லாம் காரணமாகும் என்ப தையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். ஆண்களின் ஒழுக்கச் சீர்கேட்டைக் களைவதில் நாவலர் அக்கறை கொண்டிருந்த மையால் மாணவப்பருவத்திலேயே அதுபற்றி அறியவைக்க முயன்றுள்ளார். கட்டுரையின் நிறைவுப்பகுதியில் வியபிசாரம் செய்தவர் இறப்புக்குப்பின்னர் அடையப் போகும் துன்பங்களையும் எடுத்துக்கூறியுள்ளார்.
'கற்பு’ என்னும் கட்டுரையில் பெண்களுக்கு அது ஏன் அவசியம் என விளக்குகிறார். நாவலர் காலத்தில் கற்புப் பற்றிய கருத்து எவ்வாறிருந்தது என்பதை வருமாறு கட்டுரையின் முதற்பகுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்.
“பெண்களுக்குக் கற்பாவது விவாகஞ் செய்யுமுன் பிதாமாதாக்களாலும் விவாகஞ் செய்தபின் கணவனாலும் கற்பிக்கப்பட்டபடியே நீதிவழுவாமல் ஒழுகுதலாகும். பெண்கள் இளமைப் பருவத்திலே பிதாவினாலும், யெளவனத்திலே கணவனாலும் மூப்பிலே புத்திரனாலும் காக்கத்தக்கவர். ஆகையால் ஒரு போதும் சுவாதீனரல்லர்”
(UITsourTLth 4:4.97)
(இந்து ஒளி

நாவலர் காலத்தில் பெண்களின் நிலையையும் இக் கட்டுரையில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். பெண்களுக்கு அறிவூட்டல் பெற்றோராலும் கணவனாலும் நடைபெற்றது. அவளுக்கு ஆணைப்போலக் குருகுலக் கல்விக்கு வாய்ப்பிருக்க வில்லை. அதனால் அவர்களால் சுயமாக இயங்கமுடியவில்லை. கணவனும் புதல்வனும் இல்லாத மனைவியை அவளுடைய கணவ ருடைய பக்கத்தாரே பராமரிப்பர். அவர்கள் இல்லாதபோது அவளுடைய தாயின் பக்கத்தார் பராமரிப்பர். தகப்பன், கணவன், பிள்ளைகள் இல்லாமல் தனித்திருக்க விரும்பும் பெண் பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் வசையை உண்டாக்கிவிடுவாள் என்று கருதப்பட்டது. இதனால் பெற்றோர் பெண்குழந்தைகளின் வளர்ப்பில் தனிக்கவனம் செலுத்தினர். பெண்களுக்குரிய தருமங்க ளெல்லாவற்றுள்ளும் முக்கிய தருமம் பதிவிரதம்' எனக் கருதப்பட்டது. ‘குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்' என்ற பெரியோர் இலக்கையே பெண்களின் கற்பித்தலின் முழுநோக்காக இருந்தது.
பெண்களின் சேவை வீட்டு நிலையிலே வரையறை செய்யப் பட்டிருந்தது என்பதைக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலைநாட்டார் வருகையால் பாடசாலைக் கற்றல் முறைமை தோன்றியது. பெண்கல்விக்கும் வழி செய்யப்பட்டது. ஆனால் பாடசாலைக் கல்வியை விட வீட்டுக் கல்விப் பயிற்சி பெண் களுக்கு இன்றியமையாதது என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. வீடு என்பது மூன்று தலைமுறையினர் ஒருங்கிணைந்து வாழும் இடமாக விளங்கியது. பண்பாட்டுப் பேணலில் பெண்களுக்குப் பெரும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. குழந்தை, கன்னி, மனைவி, தாய், முதுமகள் என்ற பெண்களின் படிமுறை வளர்ச்சி நிலைகள் பண்பாட்டுநிலையில் பல நடைமுறைகளோடு இணைந்திருந்தன. பெண் இலக்கியங்களில் மனைவி இல்லாள் என்ற சொற்களால் பெருமைப்படுத்தப்பட்டி ருந்தாள். அதற்கு முக்கிய தகுதிப்பாடாகக் கற்புக் கருதப்பட்டது. அறநீதிநூல்களும் காவியங்களும் இத்தகுதிப்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளன. புராண இதிகாசக் கதைகளிலும் கற்பு போற்றப்பட்டிருந்தது.
எனவே நாவலர் கற்பு பற்றி கட்டுரை எழுதும்போது இவற்றையெல்லாம் மனங்கொண்டு எழுதியுள்ளார். பெண் மனைவி என்ற நிலையில் செய்யவேண்டிய நாளாந்தக் கடமை களைச் செய்ய வேண்டிய முறைமையையும் விளக்கியுள்ளார். பெண்களுக்குரிய இக்கடமைகளைச் செய்வதற்குரிய பயிற்சியைப் பெற்றோர் அளிக்க வேண்டுமென்பதை வருமாறு கூறியுள்ளார்.
"பிதாமாதாக்கள் பெண்ணுக்குச் சிறுபிராயத்திலேயே கடவுளுடைய குணமகிமைகளையும் புண்ணிய பாவங் களையும் சுவர்க்க நரக பலன்களையும் கடவுளை வழிபடு முறைமையையும் கற்பித்து வீட்டு வேலைகளைப் பழக்கல் வேண்டும்.”
(பாலபாடம் 4:98) கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்கள் இவற்றைப் பயில்வதும் எளிதாகவே இருந்தது. ஒழுங்கு, செம்மை, தூய்மை, பணிவு, அடக்கம், செயல்திறன், வழிபாடு என்னும் கற்கைநெறிகள் வீட்டிலேயே நடைபெற்றன. பெண்ணின் பாரிய கடமை பிறிதொரு குடும்பத்தைப் பராமரிப்பதே என உணர்த்தப்பட்டது. 'இல்லாள் என்ற நிலையில் பெண்ணின் நிர்வாகத்திறன் முக்கிய தகைமையாகக் கருதப்பட்டது. மனையின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் மனைவி என்ற தகுதிப்பாட்டிற்கு பெற்றோரின் கற்பித்தல் மூலம் பெற்ற அறிவே அடித்தளமாக அமைந்தது.
24. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 27
நாவலர் பெண்களின் கல்வி வீட்டுக் க்ல்வியாக இருப்பதே நல்லதெனக் கருதியது அக்காலத்திற்குப் பொருத்தமாயிருந்தது. பெண்ணின் குணப்பண்புகளில் 'பொறுமை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. பெண்டிர்க் கழகெதிர் பேசாதிருத்தல்' என்ற ஆன்றோர் வாக்கு இக்கருத்தை அணிசெய்து நிற்கிறது.
மனைவி இத்தகைய கற்புநிலையிலிருந்து தவறினால் குலங்கெடும் அதனால் யாவுமே கெடும். இதனை மனங்கொண்ட கற்பு’ என்னும் ஒழுக்கநெறி பெண்ணுக்குச் சிறப்பான தகைமையாகக் கொள்ளப்பட்டது. ஆணின் குறைகளைப் பெண் சுட்டிக்காட்டாமல் இயைந்து வாழ்வதே நல்லதென நாவலர் இக்கட்டுரையில் வற்புறுத்தியுள்ளார்.
“மனைவியானவள் தனக்கு ஈசுரசங்கற்பத்தினால் வாய்த்த கணவன் அழகில்லாதவனாயினும் நற்குணமில்லாத வனாயினும் வியாதியாளனாயினும் வயோதிகனாயினும் அவனைச் சிறிதும் அவமதியாது நன்கு மதித்து வழிபடல் வேண்டும். இயன்ற மட்டும் தன் கணவனுக்குக் கோபம் பிறவா வண்ணம் நடக்க முயலவேண்டும் ஒருபோது கோபம் பிறந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு முகமலர்ச்சி காட்டி இன் சொற்களைச் சொல்லி அதனைத் தணித்தல் வேண்டும். ஒருபோது கணவன் அநீதியாகக் கோபித்துக் கண்டித்தாலும் தானும் கோபித்து எதிர்வார்த்தை பேசாது மெளனமாயிருந்து இதமேபேசி அக்கோபத்தை ஆற்றல் வேண்டும்.”
(UITsuum Lth 4:Lu:100) மனைவி என்ற நிலையில் ஆணின் பலவீனங்களை அறிந்து அவன் தீய நெறியில் செல்லாது நன்னெறிப்படுத்தவேண்டியது பெண்ணின் பொறுப்பாகும். அதற்கு அவளது கற்பு நிலையே துணையாக நிற்கும். இது நாவலரது தெளிவான கருத்தாகும்.
நாவலருடைய இவ்விருகட்டுரைகளும் இளந்தலைமுறை யினரை நல்வழிப்படுத்தும் அறிவுரைகளைத் தாங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுச் சிதைவொன்றை ஏற்படுத்த மேனாட்டார் முயன்றபோது நாவலர் அதைத் தடுக்கப்பணிசெய்தார். 'நாவலர் சைவத்தின் காவலர்' என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் அவர் நமது பண்பாட்டின் காவலையும் மேற்கொள்ளப் பணிசெய்தமையையும் அவரெழுதிய பாட நூல்களில் எழுதிய கட்டுரைகள் நன்கு விளக்கி நிற்கின்றன. எதிர்காலத்தில் பண்பாட்டுச் சிதைவுகள் ஏற்படும்போது இளந்தலைமுறைகளை இக்கட்டுரைகளில் உள்ள விடயங்களை மீள் வாசிப்பால் உணரக்கூடும் என்ற தொலை நோக்கும் நாவலருக்கிருந்துள்ளது. நாவலர் காலத்தில் வாய்மொழி மரபாகக் காலங்காலமாக பேணப்பட்டு வந்த கருத்துகளை அச்சுவசதி ஏற்பட்டபோது மீள் வாசிப்புநிலையில் தெளிவான மொழிநடையில் கட்டுரைகளை அமைத்துப் பாடநூல்களை ஆக்கிப் பணிசெய்தார். தற்போது அவருடைய கட்டுரையை எமது காலச் சூழலில் 'மீள் வாசிப்புப் பயிற்றல் செய்யவேண்டியது இன்றியமையாதது. ஆணும் பெண்ணுமான இளந்தலை முறையின் ஒழுக்கச் சீர்கேட்டைக் களைவதற்கு மேலைத்தேய வணிகவயப்பட்ட அறிவுரைகளை விடுத்து நமது மரபு நிலையான பயிற்றல் முறையை நாவலர் வழிநின்று பாடநூல்களில் ஆற்றுவதே சாலச்சிறந்தது.
இறைவன்டம் உங்களை அர்ப்பணித்து விடுங்கள். எல்லாமும் சரியாகிவிடும்.
- முரீ இராமகிருஷ்ணர்
(இந்து ஒளி

(நாவலர் மொழிந்தவை )
GίλιΙΙΩΤΙΩgrπb
திரவியத்தைச் சம்பாதித்தற்கு உரிய தொழில் முயற்சி களுள்ளே வியாபாரம் சிறந்த தொழில். வியாபாரத்துக்குரிய முதல், தன் சொந்த முதலாக இருத்தல் வேண்டும். வட்டிக்கு வாங்கிச் செய்யும் வியாபாரம் தலையெடுக்காது.
வியாபாரத்திற்காக விட்டிருக்கும் முதலையும், இ வட்டியையும் பார்த்து அவைகளுக்குத் தக்கபடி, நியாயமாக : இலாபத்தைச் சம்பாதித்தல் வேண்டும். பிறரைக் கெடுத்துத் தான் இலாபஞ் சம்பாதிக்கும்படி * எண்ணலாகாது. பிறர் பொருளையும் தன் பொருள் போல நினைத்தல் வேண்டும். தான் வியாபாரப் பொருள்களை வாங்குவதற்கு ஒன்றும், பிறருக்கு அவைகளை விற்பதற்கு ஒன்றும் ஆக, வேறு வேறு அளவைகளையும் நிறைகளையும் வைத்திருத்தல் ஆகாது. நெல் முதலாகிய * உணவுக்குரிய பொருள்களை அதிக இலாபத்தைக்
கருதாமல், மலிந்த விலைக்கு விற்கவேண்டும்.
தன்னுடைய வியாபாரப் பொருள்கள் எந்த எந்த இடங்களில் மலிவாக அகப்படும் என்று அறிதலும், தேச சஞ்சாரம் செய்தலும், தேசகால வர்த்தமானங்களை அறிதலும் வியாபாரஞ் செய்பவனுக்குக் கடமையாம். வியாபாரிக்குக் கணக்கு நன்றாய்த் தெரிந்திருக்க * வேண்டியது அவசியம்.
வியாபாரத்தை ஒருவர் தனித்துச் செய்வதிலும் * பார்க்க, பலர் கூடிச் செய்வது உத்தமம். ஆங்கிலேயர் முதலிய பிற சாதியார்கள் பலர்சேர்ந்து வியாபாரஞ் செய்து, மிகுந்த திரவியத்தைச் சம்பாதிக்கிறார்கள். வேளாண்மை, வியாபாரம், கல்விகற்றல் என்னும் இவைகளுக்கு முயற்சியே சிறந்தகருவி.
நமஸ்காரம * திருக்கோயிலில் ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். அட்டாங்க நமஸ்காரமாவது தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயங்களும் நிலத்திலே பொருந்தும்படி * வணங்குதலாகும். பஞ்சாங்க நமஸ்காரமாவது தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவங்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதலாகும். இந்த நமஸ்காரத்தை மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், செய்தல் வேண்டும். * ஒருதரம், இருதரம் செய்தல் குற்றமாகும்.

Page 28
DTfé85 OMT
திருமதி. கெளசலாே ஆரம்ப பிரிவுத கொlவிவேக
Iதங்களில் சிறந்தது மார்கழி மாதம் என்பர். பழங்காலம் முதற்கொண்டே மார்கழி மாதத்தைக் கடவுளை வழிபடுவதற்கான சிறந்த மாதமாகக் கருதி ஒதுக்கப்படுவதால் தான் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் இம்மாதத்தில் நடத்தப்படுவதில்லை.
மாதங்களில் நான் மார்கழி’ என்று கண்ணபிரான் கீதையில் மலர்ந்தருளியுள்ளார். பெளர்ணமியுடன் மிருகசீரிஷம் என்ற நட்சத்திரம் கலக்கும் நாளையே “மார்க்க சீரிஷம்” என்றும் மார்கழி' என்றும் கூறுவர். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலம் எனப்படுவதோடு, மனிதனுக்கு தூய அறிவு தரும் மாதமாகவும் அமைகின்றது.
மார்கழி மாதத்தில் தான் தேவலோகத்தில் பகல் பொழுது தொடங்குகிறது. மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலை நான்கு மணியிலிருந்து ஆறுமணிவரை தெய்வங்கள் விழிக்கும் காலமாகும். அப்போது இல்லங்கள் மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கையர் விடிவதற்கு முன்பாகவே வாசலில் நீர் தெளித்து மாக் கோலம் இடுகின்றனர்.
மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் இம்மாதம் முழுவதும் பகவானை தியானிப்பதும் அவனைப் போற்றிப் புகழ்வதும், அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல செளபாக்கியங்களையும் அளிக்கின்றது. நாம் நம் மனதை தெளிவுபடுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்திய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பூரீ நாராயணனின் நாமங்கள் பன்னிரண்டு. அவை கேசவா, நாராயணர், கோவிந்தா, மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, யூரீதரா, ரிஷிகேஷா, பத்மநாபா, தாமோதரா என்றும் பன்னிரண்டு நாமங்களும் பன்னிரண்டு மாதங்களுக்கு கூறப்படுகின்றன. இதில் கேசவா என்னும் முதல் நாமம் மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழி மாதத்துக்குரியதாக விளங்குகின்றது.
இம்மாதத்தில் பெண்கள் விடியற்காலையில் துயில் எழுந்து வீட்டிற்கு முன்னால் சுத்தமாக மெழுகிக் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது பரங்கிப் பூவை மகுடம் வைத்தாற்போல் அழகுற வைப்பர். அதனை சுற்றி விதம் விதமான வண்ணப் பூக்களைக் கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக அடுக்கி வைப்பர்.
இம் மார்கழி மாதத்தில் தான் மார்கழி திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சஷ்டி விரதம், ஹநுமந்த் ஜெயந்தி விரதம் என்பன சிறப்பாக இடம் பெறுகின்றன. மார்கழி மாதத்தில் பல ஞானியர்கள் தோன்றியுள்ளனர். இத்தகைய சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள இம்மாதமானது நோன் நோற்றலுக்குரிய சிறந்த மாதமாகும்.
மார்கழிபிறந்து விட்டால் இந்து மக்கள் எல்லோர் வீடுகளிலும் வாசலில் மாக்கோலம் காணப்படும். வீடுகள் தோறும் இலட்சுமீகர களைகட்டும்.
(இந்து ஒளி
 
 

மகிமைகள்
வி சிதம்பரேஸ்வரன் லைமை ஆசிரியர் னந்தா கல்லூரி,
மாணிக்கவாசக சுவாமிகளால் பாடப்பட்ட திருவெம்பாவை பாடல்கள் இம்மாதத்தில் வரும் திருவெம்பாவைப் பூசையில் பாடப்படுகின்றன. இம்மாதம் குளிர் நிறைந்த மாதம். அதனையும் பொருட்படுத்தாது மக்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
கோயில்களில் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் அதிகாலையில் இறைவனை துயில் எழுப்பும் பாவனையில் இசைக்கப்படுகின்றன. அதற்கென்று ஓர் விசேட பூசையும் நடைபெறுகின்றது. இவையாவும் இம்மாதத்து சிறப்புக்களேயாகும்.
திருவெம்பாவை இறுதியில் ஆருத்திரா தரிசனம் இடம் பெறுகிறது. அன்று மார்கழி திருவாதிரை நட்சத்திரமாகும். நடராஜப் பெருமானுக்கு விசேட அபிடேக ஆராதனைகள் இடம் பெறும். இது தில்லையில் அதி சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெறுகின்றது. ஆருத்திரா தரிசனம் ஐந்தொழில் மகிமையை உணர்த்துவதாக உள்ளது. ஐந்தொழிலை உணர்த்தும் பொருட்டு ஆலயங்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடந்து வருகின்றது.
பகவான் கிருஸ்ணர் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி, நட்சத்திரங்களில் நான் திருவாதிரை கிரகங்களில் நான் சுக்கிரன்’ என்றார்.
இம்மார்கழி மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி விரதம் இடம் பெறுகின்றது. ஆலயங்களில் சொர்க்க வாசல் கதவு திறக்கப்படுகின்றது.
பகவானுக்கு பிடித்த திதி ஏகாதசி. ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்கிறது. பதினெண்புராணம். ஒரு மாதத்திற்கு இரு ஏகாதசிகள் வீதம் ஆண்டிற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. சுக்ல பட்சத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியையும் சேர்த்தால் வருடத்தில் 25 ஏகாதசி விரதங்கள் வருகின்றன. இருந்தும் மார்கழி மாதத்தில் சுக்கில பட்சத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியே சிறப்புடையதாகும். அடுத்து மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம். இது திருவாதிரை நட்சத்திரத்தில் வருகின்றது. சிவனுக்கு ஆதிரையான் என்று ஒர் திருநாமமும் உண்டு. ஆருத்ரா என்றால் குளிர்ச்சி பொருந்தியது என்பது பொருள். மார்கழி மாதக் குளிரும், எங்கும் எதிலும் குளிர்ச்சியும் நிறைந்திருக்க இறைவனுக்கு நிகழும் அபிடேகமும் இறைவனை குளிரவைக்க இறைவன் உள்ளம் குளிர்ந்து மக்கள் வாழ்வை குளிர வைக்கின்றார்.
நடராஜர் தன் திருநடனக் காட்சியை பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் ஆடிக்காட்டியது இந்த திருவாதிரை நாளில் தான். இத்தகைய மகிமைக்குரியது மார்கழி மாதமேயாகும்.
மார்கழி மாதத்தின் இன்னொரு சிறப்பு விநாயக சஷ்டி விரதமாகும். இவ்விரதமானது கார்த்திகை மாதத்து கிருஸ்ண பட்சப் பிரதமை தொடக்கம் மார்கழி மாதத்து சுக்கில பட்சத்துச் சஷ்டி வரையுள்ள 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இவ்விரதத்தில் 21 இழையிலான நூல் காப்பை விரத ஆரம்பநாளில் ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டுவது வழக்கம். இவ்விரத காலத்தில் பிள்ளையார்
26 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 29
கதை வாசித்தல் இடம் பெறும். அதனை 'வாசிப்பதனாலோ, கேட்பதனாலோ சகல சௌபாக்கியங்களும் கிட்டும் எனலாம். இறுதி நாளான இருபத்தோராவது நாள் நோன்புக் கயிற்றைக் கழற்றிய பின் பாரணை செய்து விரதத்தை முடிப்பர்.
அடுத்து நோக்கில் பூரீ ஹனுமந் ஜெயந்தி. இராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர் இவர் பார்கழி மாதத்து மூல நட்சத்திரம் கூடிய சுப யோக சுப தினத்தில் கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வமாக அவதரித்தார். அஞ்சனையின் மகனாக அவதரித்த அனுமன் உடல் வலிமையும் துணிவிலும் நிகரற்றவர். இவர் பஞ்சமுக ஆஞ்சநேயராக தோற்றம் பெறும் போது நரசிம்மர் முகம், கருடாழ்வார் முகம் வராகர் முகம், ஹயக்ரீவர்முகம் ஆஞ்சநேயர் முகம் என பஞ்சமுக ஆஞ்சநேயராக விளங்குகின்றார்.
இந்துமக்கள் வாழும் இடங்கள் எல்லாம் அங்குள்ள ஆலயங்களில் இந்த மார்கழி மாதம் முழுவதும் விடியற்காலை முதல் தெய்வீக பாசுரங்களும், வேதப் பாடல்களும் ஒலிக்கின்றன.
முந் காஞ்சி காப
தல வரலாறும் காடு
s ിH'|6:fl, {
தலச் சிறப்பு
நகரங்களுக்குள் சிறந்தது காஞ்சி என்று ஒர் பழமொழி பாரதநாடு முழுவதும் வழங்கி வருகிறது. காஞ்சி காமாசுழி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சுழி என்ற வசனம் நமது தென்னாட்டவர் எல்லோருடைய நாவிலும் இளமைப் பருவம் முதலே உலாவிக் கொண்டு வருகிறது. இப்புண்ணிய பூமியாகிய பாரத நாட்டில் மோக்ஷபுரிகளென்று ஏழு மஹா க்ஷேத்திரங்கள் சொல்லப்படுகின்றன. அயோத்தி, மதுரா, ஹரித்துவார். காசி, காஞ்சி, உஜ்ஜயனி துவாரகை என்கிற ஏழு நகரங்களும் தரிசன மாத்திரத்தால் பிராணிகளுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கின்றன என்று
"அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி ஆகிந்திகா
பூரி துாைரவதி சைவ ஸப்தைதே மோக்ஷதாபிகா' எனக் கூறப்பட்டிருக்கின்றது.
இவைகளுக்குள்ளும் நாரீஷரம்பா, காஞ்சி, புஷ்பேழய ஜாதி, புருஷோ விஷ்ணு என்று உலகிலுள்ள சிரேஷ்டமான வஸ்துக்களை நிரூபிக்கும் இடத்தில் நகரங்களுக்குள் பூரீ காஞ்சி நகரத்தையே மிகவும் மேன்மை பொருந்தியதாகக் கொண்டாடு கிறார்கள். இந்நகரில் அநேக புண்ணிய தீர்த்தங்களும், பல தேவதா சன்னிதிகளும் விளங்குகின்றன. விண்ணவர்களில் பலர் இந்நகரத்திற்கு வந்து அவரவர்களுக்குப் பிடித்த பிரியமான ஈசுவரமூர்த்திகளையும் பூநீ பராசக்தியாய்ப் பிரகாசிக்கும் பூநி காமாசுழிதேவியையும் ஆராதித்துத் தங்களுக்கு ஏற்பட்ட
(இந்து ஒளி
 

அதிகாலை வேளையில் பள்ளி எழுச்சி பாடப்படுகின்றன. திருவெம்பாவை காலத்தில் திருவெம்பாவை பாடல்கள் கோயில் களில் பாடப்படுவதுடன், சிறுவர் முதல் பெரியோர் வரை துயில் எழுப்புவதற்காக வீதிதோறும் பாடிக் கொண்டு செல்கின்றனர்.
இந்த மார்கழி மாத நீரில் நீராடுபவர்களுக்கு உள்ளத்தையும் உடலையும் தூய்மைப்படுத்தும் ஒருவித வெப்பமானது நிலவும் என்று மருத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து பகவானை நாம் துதி செய்தால் நமது உடலும் உள்ளமும் தூய்மை அடைவதுடன், அந்தச் சூழலுமே தெய்வீகமணம் கமழும் என்றால் அது மிகையாகாது.
கோயில்களில் அதிகாலை வேளையில் கேட்கும் சங்கொலி, நாதஸ்வரம், மேளம், சேமக்கல ஓசை, தாள ஒசை பாடல் ஓசை என்பன யாவும் கேட்போர் மனதையும் தூய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்தவையாகும். இத்தகைய சிறப்புக்களும் மகத்துவமும் கொண்ட மார்கழி மாதம் போற்றுதற்கு உரியதே.
DT5í 5ibLIT5iT ந்சி நகரின் சிறப்பும்
தேவாரமாமணி ாயகி முத்தையா
கஷ்டங்களைப் போக்கி உத்தமபான் போக்ஷத்தைப் பெற்றிருக்கிறார்கள். காஞ்சி சேக்ஷத்திரம் என்று சொல்லப்படும் இந்தக்ஷேத்திரத்தைப் பிரளயங்கள் உண்டாகும் தோறும் மகாதேவி தனது தேஜோ மயமாகிய பிரகாசத்தினால் அழிவுறாத வண்ணம் காப்பாற்றி வருவதால் இது பிரளயஜித் க்ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.
ருத்திரமூர்த்தி பிரம்மகல்ப பரிபந்தம் சிந்தாமணி என்கிற தந்திரப்படி அம்பிகையை பூஜிக்கச் செய்தார். பாரதத்தின் எழு புண்ணிய சேக்ஷத்திரங் களில் ஒன்றான காஞ்சி மாநகர் மட்டும் தென் இந்தியாவில் உள்ளது. மற்றவை அனைத்தும் வட இந்தியாவில் உள்ளன. அவைகளில் மோட்சத்திற்கு சிறந்தது காஞ்சிபுரம் என்று சொல்லப்படுகிறது. நான்கு புறங்களிலும் நவப்புறங்களைக் கொண்டகாரணத்தால் "தபோ வனம்' என்றும், பிரம்மனால் பாகம் செய்யப்பட்ட இடம் என்று சொல்லப்படுவதால் "பிரம்மசாலை' என்றும், யோகியர்கள் வாழ்ந்ததால் "சத்ய விரதக்ஷேத்திரம்' என்றும், "த்வாதசாந்தாதீத முக்திக்ஷேத்திரம்" எனவும் பல வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பூg காமாசுழி அம்பாள் ஆலயத்தின் சிறப்பு
கச்சி என்றும் காஞ்சிபுரம் என்றும் சொல்லப் படும் இப்புண்ணிய நகரில் பராசக்தியாய் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் உமைக்குக் காமாகூரி என்று பெயர். இதர ஊர்களி லுள்ள எல்லாச் சிவாலயங்களிலும் அம்பாளுக்கு மூலஸ்தான சன்னிதி உண்டு. காஞ்சிபுரத்தில் உள்ள எண்ணிறந்த
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 30
சிவாலயங்களில் எதிலுமே அம்பாள் மூலஸ்தான சன்னிதி கிடையாது. பூரீ காஞ்சிபுரத்தில் அம்பிகை தவக்கோலத்தில் இருப்பதால்தான் அங்குள்ள சிவாலயங்களில் அம்பாள் மூலஸ்தான சன்னிதி இல்லை என்று பெரியோர் கூறுவர்.
காஞ்சியில் உள்ள காமகோட்டத்திற்கு பூரீபுரம், பத்மநாயகம், ஜீவன் முக்திபுரம், காமகோடி என்ற வேறு பெயர்களும் உண்டு. இங்கு சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள், சக்தி ஆலயங்கள், குமார ஆலயங்கள் உள்ளிட்டு நித்ய பூஜைகள் நடக்கும் ஆலயங் கள் சுமார் நூறு வரையில் இக்காலத்தும் இருக்கின்றன. உற்சவ காலங்களில் அநேகமாய் இந்த எல்லா ஆலயங்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகளும் காமாஷி அம்பிகை இருக்கும் காம கோட்டத்தையே வலம் வருகின்றன. இங்குள்ள முக்கிய தேவ ஸ்தானங்களின் பிரதான கோபுரங்களெல்லாம் அநேகமாய், பூரீ அம்பாளுடைய ஆலயத்தை நோக்கியே ஏற்பட்டிருக்கின்றன. இதனால் காஞ்சி நகருக்கே தெய்வீக முறையில் பூரீ காமாகூழி அம்பாள் ஆலயம் கேந்திர ஸ்தானமாய் உத்தேசிக்கப்பட்டிருக்கிற தென்று தெரியவருகிறது.
பூரீகாமாகூஜி அம்பிகையின் ஆலயம் நான்கு அழகிய கோபுரங்களுடன் கூடிய பெரிய மதில்களுடன் விளங்கும். பூரீ அம்பிகையின் கோயில் நகரின் நடுவில் திக்கு நியமத்தில் சற்று சாய்ந்து அநேகமாய்க் கிழக்கு நோக்கி நிற்கின்றது. நான்கு வெளிப்பிரகாரங்களின் அளவு :
கிழக்கு - 388, அடி தெற்கு - 488 1/2 அடி மேற்கு - 440 அடி வடக்கு - 896 அடி ஆலயத்தின் உள் இருக்கும் காயத்ரி மண்டபத்தைச் சுற்றியுள்ள உள் பிரகாரத்தின் அளவு:
கிழக்கு - 70 அடி நீளம் , 13 1/2 அடி அகலம் தெற்கு - 72 அடி நீளம் , 9 அடி அகலம் மேற்கு - 80 அடி நீளம் , 20 அடி அகலம் வடக்கு - 72 அடி நீளம் , 8 1/2 அடி அகலம் பூரீ அம்பாளின் ஆலயத்திலுள்ள கோபுரங்களில் கிழக்கு கோபுரம்தான் மிகவும் பெரியது. சுமார் 90 அடி உயரமும் 60 அடி அகலமும் உள்ளது. கோயிலில் அமைந்திருக்கும் காயத்ரீ மண்டபம் மிகவும் முக்கியமான பாகமாகும். பூரீ காமாகூழி அம்பாளின் மூலஸ்தானமும், சாலிக்கிராம சிலையில் பூரீசக்ரப் ப்ரதிஷ்டையும் பிலாகாசமும் உள்ள கர்ப்பக்கிரகமும், அர்த்த மண்டபமும், மேடை யாயுள்ள காயத்ரீமண்டபத்தை ஆதாரமாய்கொண்டு இருக்கின்றன. காயத்ரீ மண்டபத்திற்கு அப்பெயர் வந்ததற்குக் காரணம் அம்மண்டபத்தில் காயத்ரீமந்திரத்தை அனுசரித்து இருபத்துநான்கு தூண்கள் இருக்கின்றன. அம்பாள் கோயில் ஆதலால் சந்நிதிக்கு எதிரில் நந்திக்குப் பதிலாக ஸிம்மம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கிழக்குக் கோபுர வாயிலுக்கு மேல் புறத்தில் கொட்டகை உத்ஸவ மண்டபமும், கீழ்ப்புறத்தில் சற்று உள்ளடங்கினாற்போல் நூற்றுக்கால் மண்டபமும் அமையப் பெற்றுள்ளன. தென்மேற்கு மூலையில் நவராத்திரிகொலு மண்டபமும், தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளியும் அதற்குச் சற்று வடக்கில் துவஜாரோஹன மண்டபமும் இருக்கின்றன. கிழக்குச் சந்நிதிக்கு எதிரில் துவஜ ஸ்தம்பமும், பலிபீடமும், அதற்குச் சற்று வடமேற்கில் சுக்ரவார மண்டபமும் காணப்படுகின்றன.
காஞ்சியில் ருத்ரகோட்டம், புண்ணிய கோட்டம், காமகோட்டம் என முக்கியமான மூன்று கோட்டங்கள் உள்ளன என்று பண்டைய
(இந்து ஒளி

நூல்கள் கூறுகின்றன. ருத்ர கோட்டத்திற்கு ஏகாம்ரேச்வரேரும், புண்ணிய கோட்டத்திற்கு வரதராஜப்பெருமாளும், காம கோட்டத்திற்கு பூரீகாமாகூழி அம்மையும் அதிஷ்டானமூர்த்திகள். அகர முதல் ஹகரம் வரையிலுள்ள மாத்ருகா அக்ஷரங்களின் ஸங்கியை அனுசரித்து இவ்வுலகில் ஐம்பத்தொரு சக்தி பீடங்கள் உண்டென்று காமாகூழி விலாசம் என்னும் நூலில் கூறப்படுகிறது. அவைகளில் முக்கியமானவை மூன்று எனவும், அம்மூன்றும் இப்புண்ணிய பூமியில் த்ரிகோணாகாரமாக விளங்குகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூன்றும் முக்கிய பீடங்களாவன. (1) மத்திய கூடம் எனப்படும் ஜாலந்தரபீடம், இது பஞ்ஞாபில் உள்ள ஜூவாலாமுகி எனும் ஜலந்தர் நகரில் உள்ளது. பிருகு முனிவர் பூஜித்தது. (2) சக்தி கூடம் ஒட்டியான பீடம். இது அஸ்ஸாமில் காமரூபா என்னும் கூேடித்திரத்தில் இருக்கிறது. வியாஸ் முனிவர் பூஜித்தது. (3) வாக்பவ கூடம் என்னும் காமராஜ பீடம். இது காஞ்சி மாநகரில் காமாகூரி அம்பாள் சன்னிதியில் இருக்கிறது. இப்பீடம் ஹயக்ரீவரால் பூஜை செய்யப்பட்டது.
இக்காஞ்சி மண்டலத்தின் எல்லையைக் குறிப்பிடும் பொழுது வடக்கே திருப்பதியில் உள்ள சுவாமி புஷ்கரிணியும், கிழக்கே மஹாபலிபுரத்தில் சமுத்திரம், தெற்கே தென்பெண்ணை நதியும், மேற்கே விரிஞ்சிபுரத்திற்கும் சற்று மேற்கே பாலாற்றை அடுத்துள்ள சிலாஹ்ரதம் என்னும் மடுவும் எல்லைத் தீர்த்தங் களாக கூறப்பட்டுள்ளன. இதற்கு உட்பட்ட நாடு துண்டீர மண்டலம் அல்லது தொண்டை மண்டலம் என்பதும், அதற்குத் தலைநகர் காஞ்சி என்பதும், அக்காஞ்சிக்கு பூரீகாமாகூழி பிரதான தேவதை என்பதும் அநேக நூல்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றன.
சிவகூேடித்திரங்களில் திருவானைக்கா அப்புலிங்க (ஜலம்) க்ஷேத்திரமாகவும், திருவண்ணாமலை தேஜா (அக்னி) லிங்க கூேடித்திரமாகவும், திருக்காளத்தி வாயுலிங்க கூேடித்திரமாகவும், திருச்சிற்றம்பலம் (சிதம்பரம்) ஆகாசலிங்க கூேடித்திரமாகவும், காஞ்சிபுரம் ப்ருதுவி (மண்) லிங்க கூேடித்திரமாகவும் கூறப்படு கின்றன. இவைபோல் வசிஷ்ட முனிவரால் பூரீராமனுக்கு உபதேசிக்கப்பட்ட “சிந்தாமணி” என்னும் தந்திரநூலில் அயோத்திமா நகர் அப்பு பீடமாகவும், இமயமலையில் உள்ள மாயாபுரி (ஹரித்துவரர்) தேஜா பீடமாகவும், காசிமாநகர் வாயுபீடமாகவும், காஞ்சியில் உள்ள காமகோட்டம் ஆகாச பீடமாகவும் கூறப்பட்டு இருக்கின்றன. அதை ஒட்டி மூலஸ்தான காமாகூழி தேவியின் சந்நிதியில் பூமிக்குள் பிலாகாசம் விளங்குகிறது. அப்பிலாகாசமே அம்பிகையின் முக்கிய ஸ்வரூபமாக ஆராதிக்கப்பட்டு வருகிறது.
ழனி பாகவதம்
ஆலயத்தின் மகிமையைக் குறிக்கும் நூல்கள் பல. பூரீசுகப்ரம்மம் பரீகூழித் மஹாராஜாவுக்கு ஏழு நாட்களில் உபதேசித்த பூரீபாகவதத்தில் பூரீபலராமனின் தீர்த்த யாத்திரையைக் குறித்து கூறுமிடத்து காஞ்சி மாநகர் “காமகோடிபுரி” எனச் சொல்லப்பட்டுள்ளது.
பூணீகாமாசுஷி விலாஸம்
இந் நூல் பூரீகாமாகூஜி அம்மையையும் ஆலயத்தையும் பற்றிக் கூறும் லக்ஷமீதந்திரம் என்னும் தந்திர சாஸ்திரத்தின் ஒரு பாகம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதில் பூரீகாமாகூழி அம்மன் கோயிலில் நடக்கவேண்டிய பிரதிஷ்டை பூஜை, உற்சவம் முதலிய கிரியைகளெல்லாம் பூரீ வசிஷ்ட முனிவரால் பூரீராமருக்கு உபதேசிக்கப்பட்ட சிந்தாமணி தந்திரப்ரகாரம் நடத்தப்பட வேண்டியவை என்று கூறப்பட்டுள்ளது.
28 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 31
சங்கர விஜயங்கள்
பூரீ ஆதிசங்கரருடைய சரித்திரத்தைக் கூறும் சங்கர விஜயங்களிலெல்லாம் பூரீ ஆதிசங்கரர் காஞ்சிக்கு வந்து காஞ்சி நகரத்தைப் புதிதாக நிர்மாணித்து, மூன்று கோட்டங்களில் உள்ள பிரதான ஆலயங்களையும் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது. காஞ்சி நகரத்தையும், அதிலும் விசேஷமாகக் காம கோட்டத்தையும் பூரீபராசக்தியின் பூரீசக்ரயந்திரத்தின் கோணத்தை அனுசரித்தே நிருமித்ததாகப் பெரியோர்களுடைய கர்ண பரம்பரையிலும், நூல்களினாலும் தெரியவருகிறது. இன்றைக்கும் பூரீகாமாகூழி அம்மன் ஆலயத்துக்குள் சென்றால், கிழக்கு மேற்கு திக்குக்களே தெரியாமல் போய்விடும். பூரீசக்ர யந்திரரூபமான நிர்மாணமாதலால் எல்லாத் தேவாலயங்களில் உள்ள மூர்த்திகளும், யந்திரத்தின் மத்ய பிந்துஸ்தானமாகியயூரீகாமகோடியையே பிரதசுஷிணம் வருவதாகச் சொல்லுகிறார்கள். விக்வகோசம் என்னும் பதிப்பில் பூரீகாஞ்சியில் காமாகூரி அம்மையின் ஆலயத்தின் ஒரு பாகத்தில் பூரீ ஆதி சங்கரருடைய ஸமாதி இருக்கிறதென்று எழுதப்பட்டிருக்கின்றது.
இதர ஸ்தோத்திரங்களும், நூல்களும்
பூரீஆதிசங்கர பகவத்பாதர்களால் கைலாஸத்திலிருந்து,நந்தி கேச்சுவரனால் அபகரிக்கப்பட்டது போக, கொண்டுவரப்பட்ட பாக்கி மந்திரமயமான சுலோகங்களுடன் பூரீ அம்பாளைப் பற்றிச் சேர்க்கப் பட்டு நூறு செய்யுள்களாக ஆக்கப்பட்ட நூல் ஸெளந்தர்யலஹரி, பூரீ காமாகூழி அம்மன் சன்னிதானத்தில் சங்கரஜயந்தி காலத்தில் பூரீ ஆதி சங்கர மூர்த்தியினால் இந்நூல் படிக்கப்படும் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. பூரீமூககவி என்னும் பிறவி ஊமைக் கவியினால் பூரீ காமாகூழி அம்மையின் பேரில் இயற்றப்பட்டுள்ள ஐநூறு பாக்களிலும் “காஞ்சி” “காமாகூழி” காமகோடி, என்ற முத்திரைகள் விசேஷமாக “கங்கணம்” அதாவது வளையல்களைப் பூண்ட கைகளை யுடையவளாகக் கூறப்பட்டுள்ளாள். கரிகால் சோழனின் திக்விஜயத்தைப் பற்றிய ஒர் வெண்பாவும் கச்சியில் காம கோட்டத்தில் உள்ள அம்பிகையே வளைக்கைச்சி என்று கூறுகிறது.
"கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டக் காவல்
மெச்சியினிதிருக்கு மெய்சாத்தன் - கைசெண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான் செம்பொற் கிரிதிரித்த செண்டு’
(சிலப்பதிகாரம் : அடியார்க்கு நல்லாருளர்) லலிதாஸைவ காமாகூறி காஞ்யாம் வ்யக்திமுபாகதா! ஸரஸ்வதீ ரமா கெளர்ய: தாமே வாத்யாம் உபாஸதே!
கருணையே வடிவானவள் காஞ்சி காமாகூழி என்பதை கிருதயுகத்தில் இரண்டாயிரம் ஸ்லோகங்களினால் துர்வாஸ முனிவரும், த்ரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு ஸ்லோகங்களினால் பரசுராமரும், துவாபரயுகத்தில் ஆயிரம் ஸ்லோகங்களினால் தெளம்ய முனிவரும், கலியுகத்தில் ஐநூறு ஸ்லோகங்களினால் மூலசங்கரரும் போற்றிப் பாடியுள்ளனர்.
காமசுந்தியை நம காமகோடிகாயை
லலிதாத்ரிசத் , காமகோடிநிலயாயை, லலித அஷ்டோத்ரம காம கோடிமஹபத்மா
பீடஸ்தாயை நமோ நமலலிதா ஸஹஸ்ரநாமம்) இவைகளிலிருந்தும் பூரீ காமகோடியான காமாகூழியின் மகிமை நன்கு புலப்படுகின்றது. லலிதோபாக்யாணம் பூரீபர தேவதையின் உபாஸனா மார்க்கங்கள், மகிமை இவைகளைக் கூறும். லலிதோ பாக்யன க்ரந்தத்தில், முதலாவதான “அகஸ்திய
(இந்து ஒளி

ஹிதோபதேச கதனம்’ என்ற அத்தியாயத்தில் கீழ்கண்ட ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
பிராப்தமாஸின் மஹா புண்யம் காஞ்சிநகர மத்புதம்
தத்ரவாரண சைலேந்திரம் ஏகாம்பர நிலயம் சிவம்
காமாகூrம் கலிதோஷக்னிம் ஆபுஜயத் அதாத்மவான்
(ஸ்லோகம் 5.6)
பொருள் :
மஹாபுண்ணிய கூேடித்திரமான அத்யத்புதமான காஞ்சிநகரத்தை அகஸ்தியர் அடைந்தார். அங்கே ஹஸ்திகிரி நாதனையும், வரதராஜப் பெருமாள், சிவனையும் காமாகூழியையும் அகஸ்தியர் பூஜித்தார். இதே லலிதோபாக்யானத்தில் கடைசியான "மந்த்ர ராஜதத்ஸாதனாதி”கதனம் என்ற 34வது அத்தியாயத்தில் கீழ்கண்ட ஸ்லோகம் காணப்படுகிறது.
பண்டாளUர வதாயைஷா ப்ராதுர்பூதாசிதக்னிக மஹாத்ரிபுர எUந்தர்யமூர்த்தி ஸ்தேஜோ விஸ்ரும்பிதா காமாகூரிகி விதாத்ராது ப்ரஸ்துகா லலிதேச்வரி
பொருள் :
பண்டாசுர யுத்தத்திற்காகவே சிதக்னியிலிருந்து இந்தத்தேவி தோன்றினாள். இந்த மஹாத்ரிபுரஸந்தரியினுடைய மூர்த்தியானது தேஜஸ்ஸாலிருந்து கிளம்பியதாகும். இந்த லலிதேச்வரி பிரஹ்மாவினால் காமாகூழியெனத் துதிக்கப்பட்டாள்.
காமாசுஷி அம்மன் ஆலயத்தில் தரிசிக்க வேண்டிய சந்நிதிகள் : ஹயக்ரீவர் (ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் இடது புறம்) அகத்தியர் (ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் வலது புறம்), சிந்துரகணபதி (நுழைவு வாயில் நேர் எதிரில்), பூரீநாக சுப்ரமணியர், ரிஷி கோபுரம், பிரசன்ன கணபதி, விக்னநிவாரண கணபதி, துர்வாமஹரிஷி, பள்ளியறை, இஷ்டசித்தி விநாயகர், பாலசுப்ரமணியர் (மூலவருக்கு நேர் எதிரில்), உத்ஸவ காமாகூழி நின்ற கோலம் (இடது புறம் பூரீ லக்ஷ்மி), துண்டீரமஹாராஜா (உத்ஸவ காமாகூழி சன்னிதியின் நேர் எதிரில்), ஆபத் நிவாரண கணபதி, வள்ளி தேவயானை சமேதசுப்ரமணியர், ராஜசியாமளா (அஷ்டபுஜம் அம்பிகையின் மந்திரி), பங்காரு காமாகூரி (காமகோடி அம்மன் பங்காருகாமாகூறி அம்மன் பாதம், பங்காருகாமாகூழி உத்ஸவம்) பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா, அன்ன பூரணி, சக்தி கணபதி, சிங்காரவேலர், கள்வர் பெருமாள், செளந்தர்ய லக்ஷ்மி, அர்த்த நாரீஸ்வரர், பூரீ காமாகூழிமூலவர், தபஸ் காமாகூரி (அம்பாளுக்கு வலது புறத்தில்), பிலத்வாரம் (தபஸ் காமாகூழிக்கு எதிரில்), பூரீ சக்ரம் (அஷ்டலகூழிமிகள் என்கின்ற வாஸின்யாதி வாக்தேவதைகள். பூரீ சக்கரத்தைச் சுற்றி உள்ளனர், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தது) வராஹி (அம்பிகையின் சேனாபதி), அரூப லெசுஷ்மி, செளபாக்கிய கணபதி, சந்தான ஸ்தம்பம் (நாபி விழுந்த இடம்), சந்தான கணபதி, ஆதிசங்கரர் (சர்வக்ஞ பீடம் ஏறியது) ஐயஸ்தம்பம் (பண்டாசுரனை வென்றதன்நிலை) வரசித்திவிநாயகர், காலபைரவர், மஹிஷாஸுர மர்த்தனி பலிபீடம் த்வஜஸ்தம்பம், பூரீ காசிவிஸ்வநாதர், பஞ்சகங்கை (திருக்குளம்), திருமஞ்சன கணபதி (குளத்தின் கரையில்), அஷ்டபுஜ துர்க்கை, பூத நிக்ரஹக பெருமாள் (நின்றார், இருந்தார், கிடந்தார்).
29 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 32
பூரீ காயத்ரீ மண்டபம் - அம்பாள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ளது. பூரீ காமாகூழி தேவி காயத்ரீ மண்டபத்தின் நடுவில் கொலு வீற்றிருக்கிறாள். காயத்ரீ மண்டபத்தின் இருபத்திநாலு அட்சரங்களை நினைவுபடுத்தும் விதமாக இங்கு இருபத்து நாலு தூண்களும், நான்கு வேதங்களாகக் குறிப்பதாக நான்கு சுவர்களும் உள்ளன. பரதேவதையின் ஆணைக்கேற்ப தேவர்கள் இதனைக் கட்டினர்.
காமகோட்டத்தில் பூரீ காமாகூழி தேவி ஐந்துவிதமாகக் காட்சியளிக்கிறாள். 1. யூரீகாமாகூழிதேவி (மூலவர்), 2. தபஸ் காமாகூழி 3. பங்காருகாமாகூழி என்கிற ஸ்வாண காமாகூழி 4. அஞ்சன காமாகூழி என்கின்ற அரூப லட்சுமி 5. உற்சவ காமாகூரி (உற்சவர் பூரீ காமகோடி காமாகூரி)
தேவியானவள் தேவர்களை துன்புறுத்திய பண்டாசுரன் மற்றும் அரக்கர்களை அழிக்க காஞ்சியில் பிலாகாஸத்தின் மூலமாகத் தோன்றினாள். அசுரர்களின் கொடுமைகளுக்குப் பயந்து தேவர்கள் கிளிகளாக இங்கு வந்து செண்பக மரங்களில் வாழ்ந்தனர். அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற அம்பாளைப் பிரார்த்தித்தனர். அம்பாளும் அவர்களின் பிராத்தனைக்கு மகிழ்ந்து மேருமலையில் இருந்து பிலாகாஸ மார்க்கமாக பூமிக்கு வந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினாள். அன்றைய நாளிலிருந்து பூரீ காமாகூழி தேவி இங்கு காயத்ரீ மண்டபத்தின் நடுவில் எழுந்தருளி உள்ளாள். தேவியானவள் யாராலும் ஸ்தாபிக்கப்படவில்லை. அம்பாள் தேவர்களுக்காக மட்டும் அல்லாமல் நமக்காகவும் இங்கு காட்சி தருகிறாள். இந்தப் புனிதமான தலத்தில் அவள் ஸ்தூல, சூட்சும, காரண, வடிவங்கள் இணைந்து ஒன்றாக விளங்குகின்றாள். ழரீகாமாகூழிதேவி இங்கு பக்தர்களின் பாவங்கள், ஆசைகள், கவலைகள் எல்லாம் ஒழித்து, அவளுடைய பரிபூர்ண கடாகூடித்தால் ரட்சித்துக் கொண்டு இருக்கிறாள்.
கர்ப்பக்கிருகத்தில் தென்கிழக்கு நோக்கி பத்மாசனியாய் முக்கண்ணுடன் கிரீடம் தரித்தும் பாசம், அங்குசம், கரும்புவில், பஞ்சபாணம் இவைகளைத் திருக்கரங்களில் தரித்தவளாயும், சூரிய சந்திரர்களைக் கர்னாபரணமாகத் தரித்தவளாயும் பூரீ மூலகாமாகூழியூரீ இராஜராஜேஸ்வரி ஸ்வரூபமாய் விளங்குகிறாள்.
காமகோடி பீடம் என்கிற பூனிசக்ரம்
பூரீசக்ரம் காயத்ரீ மண்டபத்திற்கு நடுவில் அம்பாளின் எதிரில் உள்ளது. இதில் அம்பாள் சூட்சும ரூபத்தில் விளங்குகிறாள். இந்த பீடத்தில் அஷ்டசக்திகள் உள்ளனர். தேவியானவள் பிலாகாஸத்தில் இருந்து வந்த நாள் முதல் பூரீ சக்கரத்தில் பிரகாசிக்கிறாள். இந்த பூரீ சக்கரத்துடன் கூடிய காமகோடி பீடம் பெரிய ஞானிகள், ரிஷிகள், முனிவர்களால் வணங்கப்பட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. ஈசுவரனே நான்கு யுகங்களில் துர்வாசராக கிருதயுகத்தில் (இரண்டாயிரம் பாக்கள்) பாசுராமராம திரேதாயுதத்தில் (ஆயிரத்து ஐநூறுபாக்கள்) தெளம்யராக துவாபரயுகத்தில் (ஆயிரம்பாக்கள்) மூகாசாரியாக (ஐநூறு பாக்கள்) ஆதிசங்கரராக கலியுகத்தில் அவதரித்து பரதேவதையின் அருளைப்பெற்றார்.
பிலாகாஸம்
இது மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு வலப்புறத்தில் தபஸ் காமாகூழிக்கு எதிரில் உள்ளது. இது புனிதமானது மட்டுமல்லாமல் ரகசியமானதும் கூட.
(இந்து ஒளி

அரூபலட்சுமி
அம்பாளின் இடப்புறத்தில் காயத்ரீ மண்டபத்தில் உள்ளது. வடக்குப் பார்த்த சன்னிதி. பூரீ லக்ஷமி தன்னுடைய அழகைப் பெறத் தவம் செய்கிறாள். லட்சுமியின் அழகைப்பற்றிய கர்வத்தை அறிந்து, மஹாவிஸ்ணு அவளை சபிக்கிறார். அவள் உருவ மில்லாமல் போக வேண்டியதாயிற்று. மகாவிஸ்ணுவின் ஆணைப் படி, மஹாலட்சுமி அரூபலட்சுமியாக காயத்ரீ மண்டபத்திற்கு வந்து அம்பாளை வழிபட்டாள். பூரீ காமாகூஜி பிலாகாஸத்திலிருந்து வந்து மஹாலட்சுமிக்கு காட்சி தந்தாள். அம்பாளின் பக்த கோடிகள் அம்பாளின் பிரஸாதமான குங்குமத்தை அரூபலட்சுமியின் மேல் வைத்து அவளை வணங்கி யவுடன் மஹாலட்சுமியானவள் தன்னுடைய செளந்தர்யத்தை அடைவாள் என்று வரமளித்தாள். இதற்கு எதிரில் சௌபாக்கிய கணபதி உள்ளார்.
வாராஹி
பூரீ காமாகூரி தேவியின் பரிவார தேவதைகளில் ஒன்று அரூபலட்சுமியின் பக்கத்தில் வடக்கு பார்த்து உள்ளது. தேவியின் படைத்தலைமையை ஏற்று நடத்துபவள்.
சந்தான ஸ்தம்பம்
வாராஹி சன்னிதிக்கு எதிரில் உள்ளது. புத்திர பாக்கியத்திற்காகத் தசரதச் சக்கரவர்த்தி தீர்த்த யாத்திரை செய்யும்போது காஞ்சிபுரம் வந்தார். அம்பாளிடம் மக்களைப் பெறுவதற்காக வரம் வேண்டினார். பூரீ காமாகூழி தேவியும் அரசனின் பிரார்த்தனையால் மகிழ்ந்து, அவனுக்குச் சந்தான பாக்கியத்தை அருளினாள். அதனால் அம்பாளின் பக்தர்கள் இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்ணம் செய்து, அம்பாளை வேண்டி புத்திர பாக்கியம் பெறுகின்றனர்.
அர்த்த நாரீஸ்வரர்
காயத்ரீ மண்டபத்தில் அம்பாளுக்கு வலதுபுறமாக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
கள்வர் பெருமாள்- செளந்தர்ய லட்சுமி
ஆழ்வார்களால் மங்கள ஸாஸனம் செய்யப் பெற்ற நூற்றெட்டு வைஷ்ணவத் திருப்பதிகளில் பதினெட்டுத் திருப்பதிகள் காஞ்சிபுரத்தில் இருக்கின்றன. அவைகளில் ஒன்று பூரீ காமாகூரி அம்பாள் கோயிலில் (காயத்ரீ மண்டபத்தில்) உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா ஸாஸனம் செய்யப் பெற்ற பெருமாளுக்குக் "கள்வர் பெருமாள்” என்ற திருநாமம் உண்டு.
மஹாவிஷ்ணுவின் அவதாரமான கள்வர் பெருமாள் சன்னிதி அம்பாளுக்கு வலதுபுறமாக தென்கிழக்கு நோக்கியும், செளந்தர்ய லட்சுமி சன்னிதி தெற்கு நோக்கியும் உள்ளது. கள்வர் உருவில் மஹாவிஷ்ணு இங்கு வந்து தன்னுடைய லட்சுமி தேவி சாப விமோசனம் நிவர்த்தியாகி தன்னுடைய இழந்த அழகைப் பெற்றாளா இல்லையா என்று பார்க்கிறார். மீண்டும் செளந்தர்யத்துடன் இருக்கும் லட்சுமியுடன் புண்ய கோடியில் குடி கொண்டு உள்ளார். /
(இந்தக் கட்டுரையின்மிகுதிப்பகுதி
அடுத்த இதழில் வெளியாகும் தேடிக்குதித்த செல்லுத்தை பாதுகாப்பதில் அல்ல, அதனைநல்ல வழியில் செலவிடுவூதில்தான் ஒருவனுக்கு உண்மையான சுகம் கிடைக்கும்.
(ஞானழி
30 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி

Page 33
காக்கை கரவாச
திருமதி. சந்திரபவானி உதவி விரிவுரையாளர், அழகியற் கலை
சுபதியாகிய சிவன் சீவன்கள் யாவற்றிலும் கலந்தி ருக்கிறான். அதனாலேயே உயிர்களின் தலைவனாக (பசு- உயிர், பதி - தலைவன்) பசுபதி என அழைக்கப்படுகிறான். பறவைகளும் மிருகங்களும் இந்து சமயத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றன. இடபம், சிங்கம், புலி, பசு, ஆடு, நாய் ஆகிய மிருகங்களும், அன்னம், மயில், காகம், கருடன் ஆகிய பறவைகளும், பாம்பு, பெருச்சாளி, ஆகியவையும் கட்வுளரின் வாகனங்களாகப் போற்றப்படுகின்றன. இந்துமதத்தின் “அன்பே சிவம்” எனுங் கருத்து மிக ஆழமாக நோக்கத்தக்கது. யானை, சிலந்தி, எறும்பு, சிட்டுக்குருவி, முத்தி அடைந்தமை பற்றித் திருவிளையாடற் புராணம் பேசும்.
பகவத்கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா மிருகம் பறவைகளின் சிருஷ்டியில் இறைவனைக் காணவேண்டும் என்கிறார். சிவனைப்போல ஈஸ்வரன் என்ற நாமத்தைப் பெற்ற பெருமை சனீஸ்வரருக்கும் உண்டு. சனிபகவானின் வாகனம் காகம்.
“எத்தித் திருடும் அந்தக் காக்கை - அதற்கு இரக்கப்பட வேண்டுமடி பாப்பா” என்றும் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றும் பாரதியாராற் பாடப்பெற்ற காகம் புத்தியுள்ள பறவையாக வர்ணிக்கப்படும். சனீஸ்வரனும் கறுப்பு நிறம். காகமும் கறுப்பு நிறம். “காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு”, “கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா” போன்ற முதுமொழிகள் காக்கையின் கருமைநிறத் தன்மையைக் காட்டிநிற்கின்றன. “காக்கைச் சிறகினிலே நந்தலாலா - உன் கரியநிறம் தோன்றுதடா நந்த லாலா’ என்று பாடிய புலவன் காக்கையின் கரிய நிறத்திலே கண்ணனைக் கண்டான்.
"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீரார்க் கேயுள” எனச் செப்பினான் வள்ளுவன். காகத்திடம் நாம் காணும் சிறந்த குணம் எங்கேயாவது உணவைக் கண்டுவிட்டால் உடனே கரைந்து உறவுக் காகங்களையும் அழைத்தே அவ்வுணவைப் பகிர்ந்துண்ணும். இங்ஙனம் காகத்தைப் போலத் தமக்குக் கிடைத்த செல்வத்தை எவன் பகிர்ந்து வாழ்கிறானோ அவனுக்கே மேலும் மேலும் செல்வம் சேரும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. காகமும் நரியும் தந்திரமுள்ளவை. தந்திரமான நரிதந்திரமுள்ள காக்கையை ஏமாற்றப் பார்க்கிறது என்பதே சிறுவர்கள் படிக்கும் கதை.
காகத்திடம் உள்ள இன்னொரு பண்பு, ஒரு காகம் இறந்தால் அல்லது அடிபட்டு விழுந்துவிட்டால் ஏன் ஒரு இறகைக் கண்டு விட்டால் எல்லாக் காகங்களும் சேர்ந்து கரைவதைக் காணலாம். இனிமையாகப் பாடும் குயில் கூடு கட்டத் தெரியாது காகத்தின் கூட்டில் முட்டையிடுகிறது. காகம் அடைக்காத்துக் குஞ்சு பொரித்தவுடன் குயிற்குஞ்சின் சத்தத்தைக் கேட்டுக் குயிற் குஞ்சைத் துரத்தி விடும் என்பதும் நாமறிந்ததே.
காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல் மாலை குளித்து மனை புகுதல் - சாலவே உற்றா ரோடுண்ணல் உறவாடல் இவ்வைந்தும் கற்றாயோ காக்கைக் குணம்
(இந்து ஒளி
 

கரைந்துண்ணும் \ 業
LlyLmaf ITLôl (B.A. Hons) ، خلی اینکه
7. . ܫ
கள் பல்கலைக்கழகம்,கொழும்பு-0
என்றொரு பழம்பாடல் காக்கையின் ஐந்து வகையான குணம் பற்றிப் பேசுகிறது. சூரிய உதயத்துக்கு முன் காக்கை துயிலெழு கிறது. பிறர் காணக் காக்கையினம் புணர்தல் செய்வதில்லை. எங்கு பறந்து திரிந்தாலும் மாலையிலே குளித்துவிட்டுத்தான் கூடு திரும்புகிறது. தன் உறவினர்களைக் கலந்தே உண்கிறது; உறவாடுகிறது. இப்படியான ஐந்து மேன்மைக் குணங்கள் காகத்திடம் காணப்படுகின்றன. அவற்றை நாமும் கற்க வேண்டும் என்பதே அப்பாடலின் கருத்து. கம்பராமாயணத்தில் வரும் காகம் பற்றிய கதை அருணகிரிநாதரின் திருப்புகழில் பேசப்படும்.
இராமபிரான் சீதாபிராட்டியாருடன் காட்டிலே தங்கியி ருக்கிறார். தேவலோகத்தின் தலைவன் இந்திரன் மகன் சஜந்தன். அவனுக்குச் சீதாபிராட்டியாரின் மேல் அளவு கடந்த காமம். எப்படியாவது அவளின் அவயவத்தை ஒருமுறையாவது தீண்டிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாட்களாக அவனிடம் இருந்தது. எனவே, அவன் காகத்தின் வடிவெடுத்து வந்து சீதையின் கையிலே கொத்தி விடுகிறான். அவள் கையிலிருந்து உதிரம் பெருகுவதைக் கண்டு கோபமடைந்த இராம பிரான் தனது வில்லில் நாணேற்றித் தர்ப்பைப் புல் ஒன்றை காகத்தைக் கொல்ல ஏவுகிறார். அதனாற் பரபரப்பும் பயமும் அடைந்த சீதை காகத்தின் மேல் இரக்கங்கொண்டு அக்காகத்தைக் கொல்லாது அம்பை மீளப் பெறும்படி வேண்டுகிறாள். ஆனால் இராமபிரானால் எய்யப்படும் அம்பு ஏதாவது அழிவை ஏற்படுத்தாது திரும்பவும் இராமரைச் சென்றடையாது. எனவே அம்பு காகத்தின் ஒரு கண்மணியைக் கவர்ந்து விடுகிறது. அன்று தொடக்கம் காகத்துக்கு இரு கண்களிலும் ஒரு மணியே இருக்கிறது. காகம் உணவருந்தும் போது தனது கண்மணியை இடமும் வலமுமாகத் திருப்பிப் பார்ப் பதை இன்றும் காணலாம். இதனையே அருணகிரிநாதர் திருப்புகழில்
பாதி மதிநதிபோதும் அணிசடை நாதர் அருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா காது மொருவிழிகாக முற அருள் மாயனரிதிரு மருகோனே என முருகன் காகத்திற்கு ஒருவிழி அளித்து அருள் செய்த இராமனின் மருகோனே எனப்பாடுவார். காகம் கூடி உறவு கலந்துண்ணும் நற்பண்பு தாயுமானவரையும் கவர்ந்துள்ளது. அவரும், சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பி நிறைவான ஏகஉருவாய் உள்ளது. அதை அனுபவித்து இன்புற்றிட நாம் எடுத்த இந்தத் தேகம் விழுமுன், புசிப்பதற்கு உலகத்தவரே வாருங்கள் என்று தான் அனுபவித்த இறையின்பத்தை மற்றவர்களும் அனுபவிக்க வரும்படி அழைப்பது சிந்தித்தற்குரியது.
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப்
பூரணமாய் ஏகவுருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாரும் செகத்திரே
என அழைக்கிறார்.
1. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 34
திருநாவுக்கரசர் தனக்கு இவ்வுடலைத் தந்து தன்னை ஆட்கொண்டு தன்வினைகள் எல்லாம் நீக்கியருளிய திருவாரூர் இறைவனை நினையாது சிறிது காலம் சமணசமயத்தில் இருந்தமைக்காகக் கவலைப்பட்டு,
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு
என்னையோர் உருவமாக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்த்திட்டு
என்னுள்ளங் கோயிலாக்கி அன்பிருத்தி அடியேனைக் கூழாட் கொண்டு
அருள் செய்த ஆரூரர்தம் முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போனவாறே என்பர். முயல் வெண்மையானது. காக்கையோ கருமையானது. முயல் விரைவாக ஒடும். நாவுக்கரசர் தாம் வெண்மையான சைவ சமயத்திலிருந்து சமணசமயத்துக்குச் சென்று தீய உலக இன்பத்தைத் தேடி ஏமாந்தமையைப் பாடுவார். அகத்தியர் ஆற்றங்கரையில் இருந்து தவமியற்றும் போது அகத்தியரின் கமண்டலத்தில் அடக்கிய நீரை விநாயகர் காகவடிவில் வந்து கவிழ்த்து விடுகிறார். கமண்டலம் மனித உடல்; உள்ளிருக்கும் நீர் ஆத்மசக்தி, ஆன்மா அறியாமையால் இவ்வுடல் நிலையானது என நினைக்கிறது. நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவான தென காக வடிவத்தில் வந்த விநாயகர் நீரைக் கவிழ்த்து விடுகிறார். வெறும் உடம்பில் உள்ள ஆத்மா காவிரியாறு போல நீண்டதுாரம் சென்று கடலை அடைவது போல இறைவனை அடைகிறது.
வல்வினைகள் எம்மை மொய்த்துத் துன்பப்படுத்துகின்றன. இறைவனை நினைக்க விடுவதில்லை. அழுக்கைக் கண்ட காக்கை போல எம்மை மொய்க்கின்றன. இதனை அப்பர் பெருமான் "மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன் வார்த்தையைப் பேச வொட்டா”எனப்பேசுவார்.
காகத்திடம் சில இழிந்த பண்புகளும் காணப்படுகின்றன. மலத்தையும் உண்ணும், இறந்த பிணத்தையும் உண்ணும். நாம் எடுத்திருக்கும் இவ்வுடல் நிலையற்றது. இறந்துபடக்கூடியது. தன் ஆக்கைக்கே இரை தேடி அலமந்து வாழும் காக்கைக்கே இரையாவது இவ்வுடல் என்று பொருள் பட நாவுக்கரசர்,
பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் நாக் கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே” எனக்கூறுகிறார். இவ்வுடல் நிலையாமை பற்றியும், இறந்தவுடலைப் பறவைகளும் மிருகங்களும் உண்பதையும் தாயுமானவர் “காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தி” என்றும், “காக்கை நரி செந்நாய் கழுகொரு நாள் கூடியுண்டு” என்றும் பாடுவார். ஊடல் நிலையாமை பற்றிக் கூறப் போந்த திருமூலர்,
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துரட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே எனத் திருமந்திரத்தில் பாடுவார். எவ்வளவு காகங்கள் ஒன்று கூடி நின்றாலும் அவை ஒரு சிறுகல்லின் முன் நிற்க முடியாது. அதே போல எவ்வளவு கர்மங்களை நாம் முன்பு செய்தாலும் இறைவனின் கருணைப் பிரவாகமான அருளைத் தாகமாய் நாடி நிற்போரின் கர்மங்கள் பறந்தோடி விடுமென்கிறார் தாயுமானவர்.
(இந்து ஒளி

"காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்
நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருனைப்
பிரவாக அருளைத் தாகமாய் நாடினாரை வாதிக்க வல்லதோ” எனக் கேட்கிறார்.
காகம் கரைவதைக் கொண்டு அதன் பலன் பார்க்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே காணப்படுகிறது. இதன் சத்தத்தைக் கொண்டு நல்லோர் வருகையா அல்லது கெட்ட சகுனமா எனக் கணிப்பார்கள். பஞ்சாங்கத்தில் காகம் கரையும் பலன் பார்ப்பார்கள்.
சனீஸ்வரப் பெருமானின் வாகனம் காகம் என்று முன்னர் பார்த்தோம். சனீஸ்வர தோசமுள்ளவர்கள் சனிக்கிழமை விரத மிருந்து எள்ளெண்ணை எரித்து, எள்ளுச்சாதம் நல்லெண்ணை கலந்த உணவைக் காகத்திற்கு வைத்துக் காகத்தை அழைத்து அது உணவுண்ட பின்னர் உணவுண்பது நாம் தொன்று தொட்டுச் செய்து வரும் வழக்கமாகும். சனீஸ்வர கவசத்தில் “சனியனே காகம் ஏறும் தம்பிரானே என்னைத் தொடாதே’ என அடியா ரொருவர் கேட்கிறார். கொழும்பு பொன்னம்பல வாணேஸ்வரம் சிவன் கோவில் முன்வாசலின் சிறிது தூரத்தில் உயரமான ஒரு பீடம்போன்று கட்டி அதன்மேல் ஒரு காக உருவம் வைக்கப் பட்டுள்ளது. புரட்டாதிச் சனிக்கிழமை நாட்களில் அடியார்கள் காக உருவைச் சுற்றி எள்ளெண்ணை எரிப்பதைக் காணலாம்.
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத்,
N ܕ݁ܶܝܕܧ அதோ கூப்பிடு ஏதாலைவில் இளைப்பாற كص இருக்கிறது என்று தெரிந்தால் தலைச்சுமை பாரமாய்த் ஒதரியாது. இளைப்பாறும் இடம் தொலைவில் இருக்கிறது என்று ஏதரியவூந்தால் தலைச் சுமை கணக்க ஆரம்ஜித்துவிடும். உண்மையில் சுமக்கிற பாரம் ஒன்றுதான். என்றாலும், நாம் இளைப்பாற முடியும் என்கிற உணர்வே ஆறுதலையும் உற்சாகத்தையும் தரும். நாம் புதுத்தெம்பு பெற்றவூராஹோம்.
இறைவன்டம் உங்களை அர்ப்பணித்து லிடுங்கள். எல்லாமும் சரியாகிலிடும்.
- முரீ இராமகிருஷ்ணர்
திருக்கோவில்ல் முதலில் லிக்னேஸ்வூரரை தரிசனம் செய்தலின் சிலுலிங்கப் பெருமானையும், உமாதேலியாரையும் தரிசனம் செய்து, லிதி வாங்கித் தரித்துக் கொண்டு, ஆதன்லின் சபாப 9 தட்சணாமூர்த்தி, சோமஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் ઉજીr(Bt. ஜிக்னேஸ்வூரரை தரிசிக்கும்பொழுது முபீடியாகப் 5டித்த இரண்டு கைகள்னாலும் @మారిణు மூன்று முறை குழே, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை விலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்து எழுந்து கும்5டல் வேண்டும்.
- நாலுலர் பெருமான் \ ந
32. சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 35
*) அர்த்தமுள்ள இந்து
னிதன் எப்படியும் வாழலாம் என்பதனை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் எனும் வரையறைக்குள் மனிதனை கோவைப்படுத்திய ஒரு வாழ்க்கைத் தத்துவத்தினை கூறும் ஒரு உன்னத மதம் இந்து மதம் மட்டுமே. இவ்வகையில் அறநெறி எனும் அர்த்தமான நெறியை வாழ்வினூடே புகுத்தி, மனிதனை நெறிதவறாது வாழச் செய்து வீடு பேற்றினையும் அளிக்கும் நெறியாக அறநெறி விளங்குகிறது.
அறம் என்பது தனிச் சொல்லாகும். இதன் பொருளோ சமயம், நேர்மை, ஒழுக்கம், ஞானம், நோன்பு, புனிதம், புண்ணியம், தர்மம், கற்பு, ஈகை போன்ற பல்வேறு விரிந்த பொருளைக் கொண்டது. "சமய நெறி என்பது வாழ்க்கை நெறி. ஏனெனில் வாழ்க்கை அனைத்தும் சமயத்தைப் பற்றியதே” எனும் ஆங்கிலப் பழமொழிக்கமைய வாழ்க்கை வட்டத்துள் வாழும் அனைத்து மக்களும் நல்லொழுக்கமும், சமயமும் சார்ந்த செயல்களைப் புரிந்து, நல்லனவற்றைக் கடைப்பிடித்து, தீயனவற்றை விடுத்து, அறநெறிக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்றே எமது இந்துமதம் வலியுறுத்தி நிற்கிறது.
நெறி தவறி வாழும் ஒருவனை வீடு, சமூகம், நாடு அனைத்துமே விலக்கி தவறவிட்டு விடும். இதற்கமைய ஒருவர் அறநெறி வாழ்வு வாழ்ந்தே தீரவேண்டும். இனி இந்த அறநெறி என்பது யாது என ஆராய்வோம்.
"வினையுயிர் கட்டு வீடு இன்ன விளக்கித் தினையனைத்துந் தீமையன்று ஆகி - நினையுங்கால் புல்லறத்தை தேய்த்துலகி னோடும் பொருந்துவதாம் நல்லறத்தை நாட்டு மிடத்து”(அறநெறிச்சாரம்) அதாவது, முனைப் பாடியார் பாடிய இந்த சாரமானது வினையையும், ஆன்மாவையும், பந்தத்தையும், மோட்சத்தையும் நன்கு உணர்ந்து தினையளவும் தீமை செய்யாது, உயர்ந்ததோர் ஒழுக்கத்தோடு ஒன்றி வாழுதல் என்பதே இதன் பொருளாகும். மேலும் இதில் நல்லறத்துக்கு மாறானதை புல்லறம் அதாவது பாவச் செயல் என கூறி நிற்கிறார். மேலும் அறச் செயல்களாவன யாவை என ஆராய்வோம்.
"மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவமடக்கம் செம்மையொன் றின்மை துறவுடைமை - நன்மை திறம்பா விரதந்தரித்தலோ டின்ன அறம் பத்தும் ஆன்ற குணம்”(அறநெறிச்சாரம்) அதாவது, உண்மை பேசுதல், பொறுமையாயிருத்தல், உயர் வாயிருத்தல், தவமுடைமை, அடக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்க்குதவுதல், அவாவின்மை, நல்லன செய்தல், நல்விரதம் மேற்கொள்ளல் ஆகிய பத்து அறநெறிகளை வலியுறுத்துகிறார்.
இனி இந்த அறநெறியை எப்போது செய்யவேண்டும் என ஆராய்வோம்.
பருவத்தே பயிர் செய்தோமானால் அதுவே உரிய பலனைத் தரும் எனும் முதுமொழிக்கிணங்க இளமையிலிருந்தே அறநெறி
(இந்து ஒளி

தம் கூறும் அறநெறி 从冰
நின்று வாழப் பழக வேண்டும். இதனை அறநெறிச்சாரம் கூறுவதாவது:-
'இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை - எருவட்டி அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய் 外岁 அதாவது, இனியன கூறுதலை விளை நிலமாகவும், ஈகையை வித்தாகவும் கொண்டு, வன் சொல்லாகிய களையை கட்டி, உண்மை பேசுதலாகிய எருவை இட்டு அன்பு எனும் நீரைப் பாய்ச்சி அறமாகிய கதிரை ஈனுவதாகிய ஒப்பற்ற பசிய பயிரை இளம் பருவத்திலேயே செய்வாயாக! என்று கூறி நிற்கிறது.
அடுத்து ஏன் அறநெறி அவசியம் என ஆராய்வோம். “அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெருபயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு’ எனும் நாலடியாரின் பாடலின் மூலம் பெறுவதற்கரிய மானிட மெய்யைப் பெற்ற பயனால் மக்கள் அறத்தையும் மிகுதியாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கரும்பினை பக்குவமாக ஆலையில் வைத்து ஆட்டினவர்க்கு சாறு கிடைப்பது போல மக்களது உடம்பும் மறுமைக்கு வேண்டிய அறமாகிய பயனை மிகவும் கொடுத்து, பின்னர் கரும்பின் சக்கை போல ஒழியும் என கூறுகிறது மட்டுமன்றி திருக்குறள் “அன்றறிவாம் என்னாது”என்பதன் மூலம் அறஞ் செய்தலைப் பின்போடக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. மேலும் அறநெறி நிற்கும்போது அது பயனுடையதாக அமைய வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறது குமரகுருபரரின் செய்யுள் ஒன்று;
"கற்றும் பிறர்க்குரைத்துத்தாம் நில்லார் வாய்ப்படூஉம் வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநிர் நில்லாத தென்னென்று தானுறைப்ப நேர்ந்தொருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல்’ அதாவது, நூல்களைப் படித்து படித்தபடி ஒழுக வேண்டுமென்று அக்கருத்துகளை பிறர்க்கு மட்டும் எடுத்துக்கூறி, கூறியபடிதாம் அவ்வொழுக்கத்தில் நில்லாதவர்கள் கூறும் பயனில்லாத சொல்லுக்கு ஒரு வலிமை உண்டு. அது “நாம் கற்றவாறு ஒழுக வேண்டும் என கூறிய நீர் அவ்வாறு நில்லாதது ஏனோ?” என வெட்கம் உறைக்கும்படி எதிர்த்து ஒருவன் இகழ்ந்து சொல்லாத வழியறிந்து கூறுதலாகும். அதாவது “தாம் கடைப்பிடிக்காது கூறும் அறநெறி பயனற்றதாகும்” என்பதேயாகும். எனவே மேற் கூறிய கருத்துக்களின் மூலம் எமது வாழ்வின் இறுதி இலட்சிய மாகிய முத்தியை அடைவதற்கு அறத்தோடு கூடிய சமய வாழ்வை மேற்கொள்வது அவசியமென்றும், அவ்வாறு அறநெறி நின்று ஒழுகினால் இம்மை, மறுமை இன்பத்தினை அனுபவிக்கலாம் என்பது உறுதி எனவும் கொண்டு அறநெறி நின்று அன்பு சிவன் தாள் அடைவோமாக!
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 36
SMeLeL S0LeSLeLeiSeS0LLMSSLLSeeeeLS0S0LeLSeLeeiSueueLeSLeLeeLeeSiSeSeLeLSMeLeeSiSeueL சிவஞானச் செல்வர் க.இரா; 603F@lis 5ir
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தை சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் அவர்கள் கர்த்தர் 292வது சந்நிதானம் முீலழுநீ அருணகிரிநாத ( காவலர்” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார்கள். அண்மையில் விவேகானந்த சபையின் ஏற்பாட்டில் விவேகானந்த சபையின் உறுப்பினர்களும் மற்றும் சை --N மேற்கொண்டு தென்னிந்தியா சென்றிருந்தபோது, மதுை ܕܡܚܝzܡܝܫܡܝzܡܫܕܡܝzܓܫܕܡܝzܡܫܕܡܝzܐܓܫܕܡܝzܒ݂>*
தெல்லிப்பழை துர்க்க வெள்ளிவ
தெல்லிப்பழையூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தனது சமயப் பணிகளுடன் இணைந்து ஆற்றிவரும் சமூகநலப் பணிகளில் முதன்மையானதாக சொல்லப்படும் அறப்பணி துர்க்காபுரம் மகளிர் இல்லப் பணியாகும். இந்த மகளிர் இல்லம் கடந்த இருபத்தைந்து வருடகால சேவையின் ஊடாக இவ்வாண்டு வெள்ளிவிழா கண்டது. கடந்த மார்ச் மாதத்தில் வெள்ளிவிழா சிறப்பு நிகழ்வுகள் சிவத்தமிழ்ச்செல்வி, தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது தலைமையில் துர்க்காபுரம் மகளிர் இல்ல மண்டபத்தில் நடைபெற்றன. யாழ், அரச அதிபர் திரு. கணேஷ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் வெள்ளிவிழாவையொட்டி, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் காலாண்டிதழான “இந்து ஒளி”தை - பங்குனி இதழை (தீபம் 11- சுடர் 02) வெள்ளிவிழா சிறப்பிதழாக வெளியிட்டிருந்தோம்.
மேற்படிநிகழ்வின்போது தெய்வத்திருமகள் கலாநிதிதங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆற்றிய தலைமையுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம்.
‘எங்கள் வாழ்வும் வளமும் மங்காது காத்த துர்க்கை அம்பாளின் திருவருளை உளமாரப் போற்றுகிறேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லம் எவ்வித குறையுமின்றி நிறைவாகத் திகழ்வதற்கு ஆதரவு வழங்கிய அனைவரையும் இவ்வேளையில் வணங்கு கின்றேன். வெள்ளி விழாக்காணும் எங்கள் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் சீரிய வாழ்வுபெற்று இலங்கையில் மட்டுமல்ல, மேலைத்தேய நாடுகளிலும் இல்லற வாழ்வில் இணைந்து நிறைவாக வாழ்கிறார்கள். இந்நாட்டில் பல்கலைக்கழகம் சென்று உயர்கல்வி கற்று இன்று உயர்நிலையில் பல மாணவர்கள் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மகளிர் இல்லப் பிள்ளைகள் கல்வியில் வல்லவர் களாக, கலைத்துறையில் சாதனையாளர்களாக பல பதக்கங்களைப் பெற்று மகளிர் இல்லத்துக்கு மகுடம் சூட்டி வருவதை யான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டும் என்ற நிலையில்லை அகில உலகமும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் பெருமைகளை அறிந்து எங்களைப் பாராட்டிய வண்ணமாக உள்ளனர்.
எங்கள் இல்லத்துக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை பணத்திலோ, உணவிலோ, உடைகளிலோ தட்டுப்பாடு ஏற்படாமல்
(இந்து ஒளி

LLeLSLS0LeLSLeLeeL S0LeLS0Le S0S0eLYLeeeLLLLSSS0LLLeLSLeSiLS0LeLSLeL LSLS0LM* புவனிஸ்வரன் அவர்களுக்கு பலர் விருது
ஆற்றிவரும் சமயத் தொண்டைப் பாராட்டி மதுரை ஆதீன நீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் “சைவக்
தன் தலைவர் கலாநிதி க. இராமானுஜம் தலைமையிலான வ அன்பர்களும் அடங்கிய குழுவினர் திருத்தல யாத்திரை
ஆதீனத்தில் இந்த கெளரவ நிகழ்வு இடம்பெற்றது.
*ܬܝzܡܝzܡܝܵܡܝzܡܝzܡܝܶܝzܡܝܡܝzܡzܡܵܝzܓ݂ܝܵܡܝzܡܢ
ir 7ū Daboff 66žoŪ விழா நிகழ்வு
அம்பாளின் அருளால் அன்பர்கள் கைகொடுத்து காத்து வருகின்றனர். எங்கள் மண்ணில் இருந்து மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலிருந்து துர்க்காதேவி தேவஸ்தானத்துக்கும், துர்க்காபுரம் மகளிர் இல்லத்துக்கும் பேராதரவு தந்தவண்ணமாக உள்ளனர்.
இன்று மகளிர் இல்ல வெள்ளிவிழாவை நெருக்கடியான சூழ்நிலையில் அடக்கமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கடிதத் தொடர்புகள் யாவும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் பல வெளிநாட்டு அன்பர்களோடு வெள்ளிவிழா சம்பந்தமாக தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலையில் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். வெள்ளிவிழா தொடர்பான நிறைவான மலரை நாம் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் பத்திரிகைகள் எமது வெள்ளிவிழா தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு எம்மை உற்சாகப்படுத்தியுள்ளன.
கொழும்பிலுள்ள அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்கள் அடிக்கடி எம்மோடு தொடர்புகொண்டு எமக்கு பேராதரவு நல்கி வருகிறார்கள். எங்கள் மகளிர் இல்ல வெள்ளிவிழா தொடர்பாக இந்து மாமன்றம் தங்கள் “இந்து ஒளி” இதழை வெள்ளிவிழா சிறப்பிதழாக வெளியிட்டு, விமான மூலம் அவசரமாக இருநூறு சஞ்சிகைகளை இங்கு அனுப்பிவைத் துள்ளார்கள். அவர்கள் எம்மீது கொண்ட அக்கறைக்கு இவ்வேளையில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்று இவ்விழாவில் பல பெரியார்கள் கலந்து கொண்டு இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் இல்லப் பிள்ளைகளை ஆதரித்து உதவியவர்கள், இல்லத்தில் பணி செய்து வழிநடத்துபவர்கள் அனைவரதும் உதவியால் நான் பெருமை பெற்றுள்ளேன். இத்தகைய இல்லங்கள் பல இடங்களில் தோன்றவேண்டும். தாய், தந்தையற்ற பிள்ளைகளின் வாழ்வு மறுமலர்ச்சியடைய அனைவரும் முன்வரவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். இத்தகைய இல்லங்களில் வாழும் பிள்ளைகளுக்கு பூரண கல்வி கொடுக்கப்பட்டு, அவர்கள் சான்றோர்களாக சமூகம் மதிக்கும் பெரியோர்களாக உருவாக்கப்படவேண்டும் என அனைவரையும் உருக்கமாக வேண்டிக்கொள்கிறேன்.
bar
வரும், மாமன்ற சமய விவகாரங்கள் குழுத் தலைவருமான
34 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி

Page 37
yee Te eTOT TOO T OO TeOO OOO TOOOT Te Arumuga
Dr. H. W. TI Formerly Justice of the Court of Apeal,
ෆිෂඥ_ෂඥ_ෂඥ_9ළු_පංඥා ෂඥ_ෂඥ_9
Sri Arumuga Navalar is one of the illustrious sons of Ceylon. His name should be written in golden letters in the annals of Sri Lanka. He was born in an orthodox Hindu family and in his early life imbibed the traditional Hindu culture of the Tamils of that period. He was a voracious reader. He was well versed in English as well as in Sanskirt and read widely in Tamil, his mother tongue. During his period many of the Tamil literary works were written in ola leaves and he started a printing press and brought out many printed works which were not easily accessible to readers in Tamil.
He became a Tamil scholar and his name and fame spread to South India. As a scholar grammarian and an orator he was supreme. The scholars gave him the honorific title "Navalar', which literally means "one who has a powerful tongue' but connotes great scholarship and erudition. Navalar lived at a time when the British had taken over India and Ceylon and the missionaries were trying to destroy the culture of the indigenous people and plant their own. The missionary zeal for prosetelising was so intense that they condemned any culture foreign to theirs as "heathen'. The Tamils have an ancient language and culture and any attempt to destroy them is futile. The Portuguese, Dutch and the English could not destroy Tamil culture. During Navalar's time many Christian converts lost their culture and slavishly imitated the West. The soul of the people is their culture and the attitude of the new converts grieved Navalar.
Navalar renounced the world in early life before worldly pleasures could spoil him and became a Hindu evangelist, and he became the spear head of Hindu renaissance. He founded the Navalar school wrote religious tracts, published many works in Tamil and addressed meetings. The Missionaries in South India as well as in Ceylon found him a tough opponent. They employed renowned scholars to write polemical works
( O
கல்வி ஞானரி
நல்லைவளர் வேள்னரு ளொன்றுதிரண்டே - பண்டை
ஞானரீலை சோர்வடைதல் சீர்பெறநன்றே நல்லைநகராறுமுகநாவலரென்றே - பெயர் நல்கிவரு கல்லிமல் ஞானியவரன்போம்.
- முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி
ܓܠ (இந்து ஒளி

GNavasar
ambiah Q. C Sierra Leone & Puisne Justice of Ceylon. e_ථe_ථඥ_ථඳ_ථe_ථළුවී
condenming Hinduism. Carroll Visuvanathapillai, a great Tamil scholar, was persuaded to write a rejoinder to one of Navalar's works. Visuvanathapillai produced the “Sukra Theepam” in which there was a virulant attack in racy Tamil of the Agamic religion taught by Sri Arumuga Navalar. Later Visuvanathapillai repented and become a Hindu. Navalar brought about a great revival in the study of the Tamil language and the Hindu religion. Navalar extended his activities to South India. In South India he carried on a relentless campaign against Ramalinga Swamigal, whose teachings and writings were not only couched in exquisite language but conveyed the quintessence of Hindu ecclectric thought. Ramalinga Swamy spoke of the unity of all religions. He said that, just as several paths lead a person to the same goal, all religions led the soul to the feet of God. Navalar not only condenmed the teaching of Ramalinga Swamigal but even questioned the Swamy's scholarship.
The followers of Ramalinga Swamigal did not spare Navalar. This intellectual feud which brought unpopularity to Navalar among a section of the Tamil Scholars has been forgotten in modern times. Navalar deserves an honoured place among the Tamil scholars. When the Madras Government erected statutes to commemmorate the names of great Tamil scholars, the Ceylon Tamils were shooked to find that Navalar was forgotten. The late lamented Tamil scholar, Annathurai promised to rectify this significant ommission (This promise was made to the writer at the meeting of the I. A.T. R. held in Madras) but his untimely death has made it difficult to press for the erection of a statute of a great Tamil scholar grammarian revivalistanda savant.
The Tamils of Ceylon and South India owes a deep debt of gratitute for preserving their language and culture and erect fitting monuments to perpetuate his memory in India and Ceylon.
மனந்தான் பெரிஒதன்று நாங்கள் நினைத்தY
கொண்டிருக்கிறோம். ஆந்த மனம் கொண்ட ஆசையோ அதைவிடப் பெரியது. இந்த உலகமே கிடைக்கப் பெற்றாலும், கடலையும் கைப்பற்ற முடியுமா? அங்கேயும் நம் அதிகாரத்தைச் செலுத்த முடியுமா? என்று Uார்க்கும்.
மனதற்றநிலையை அருள்வாய்நீ. ஆசைக்கோரளவில்லையகிலளமலாங் கபீடியாள்னும் கடல் மீதிலே ஆணைசெலவேநினைவர்.
-தாயுமானவர்
//محے
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 38
(350Bl திருக்கைலாய பரம்ப அனைத்துலக சைவசித்த
மதுரையில் 4 ஆவது அ
சைவசித்த
2008 மார்ச் தி (வெள்ளி, ச
சைவத்தின் மேல் சமயம் ! தெய்வத்தின் மேல்தெய்வம்
சைவமும் தமிழும் த
தருமபுர ஆதி மயிலாடுதுறை 000 001,
பேரன்புடையீர்
திருவள்ளுவராண்டு 2039 பங்குனித் திங்க ஞாயிறு ஆகிய நாட்களில் திருக்கைலாய பரம்பன ஆராய்ச்சி நிறுவனம் நடாத்தும் 4-ஆவது அனை சிறப்பாக நிகழ உள்ளமையை மகிழ்ச்சியுடன் தெரி
அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச் ரீலழரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஆண்டில் தொடங்கப்பெற்றது. இந்நிறுவனம் "ஞான கட்டுரைகளையும் பல்வேறு ஆராச்சி நூல்களைய தருமபுரத்திலும், 1986ல் மலேசியாவிலும், 1988ல் மிகச்சிறப்பாக நடாத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ܢܔܠ
இந்து ஓவி
 

ாதம் ரை தருமபுர ஆதீனம் ாந்த ஆராய்ச்சி நிறுவனம்
நடத்தும் னைத்துலக
ாந்த மாநாடு
ங்கள் 21,2223 னி, ஞாயிறு)
வறிலை அதில்சார் சிவமாம் இல்லை என்னும் நான்மறை
ழைத்து இனிது ஓங்குக
னம், தருமபுரம் தமிழ்நாடு, தென் இந்தியா
8,9,10, (2008, மார்ச் 21, 22, 23) வெள்ளி, சனி, ர தருமபுர ஆதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ததுலக சைவ சித்தாந்த மாநாடு மதுரையில் மிகச் வித்துக் கொள்கின்றோம்.
நிறுவனம் தருமையாதினம் 26-குருமகாசந்நிதானம்
சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களால் 1984-ஆம் சம்பந்தம்" எனும் திங்கள் இதழ்மூலம் பல ஆய்வுக் ம் தமிழுலகுக்கு வழங்கிவருகிறது. மேலும் 1984ல் வாரணாசியிலும் சைவ சித்தாந்தக் கருத்தரங்குகளை
لر
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 39
வெளிநாடுகளில் வாழும் சைவ அன்பர்கள் தருமைஆதீன ழறிலழரீ குருமகா சந்நிதானத்தை எழு நின்று சைவப் பாரம்பரியங்களைக் கடைப்பிடி வெளிநாடுகள் செல்வதற்கு முடியாமலுள்ளது. இத மதுரை மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பளித்துள்
சைவ சமயம் காலப் பழமையுடையது. சிந்துவெ ஆய்வு முடிவு.
பாரத நாடு பழம்பெரும் நா( புதல்வர் இந்நினைவினை அ
இந்தியத் திருநாடு மிகப் பழமையான சி உரியதாகும். உலகின் மிகச்சிறந்த ஞானிகளுட இலக்கிய வளங்களைப் பெற்ற பெருமைக்குரியது சமயம் உலகளவில் பரந்து சிறந்துள்ளது. நம் சை வைத்துத் தம் அருட்பாக்களை வழங்கியுள்ளனர். 6 சங்க இலக்கியம், பன்னிருதிருமுறைகள், சித் விளங்குகிறது. இத்தகு பெருமையுடைய பழமை கலாசாரங்களும் தற்பொழுது சிதைவுற்றும் சீர் வருகின்றோம். பாரதநாட்டின் சீர்மைக்குரிய இவர் நாட்டுக் கருத்தரங்காக மலர்கிறது.
மேலும் பழமையான சைவ சமய இலக்கிய சிந்தனைகளும், படைப்புக்களும் பல நிலையில் முழுமையாக ஆராய்ந்து பதிவு செய்திடவும் இ திருமுறைகளில, சாத்திரங்களில், தத்துவங்களில் ஆர்வலர்களும், பேராசிரியர்களும், சான்றோர்களு கட்டுரைகள் வழங்கிச் சிறப்பிக்கவும் அன்புடன் அணி
இம்மாநாட்டில் இந்தியாவிலுள்ள பல திருக்கோயில்கள் ஒன்றியம், மலேசியா மகாமாரி மாமன்றம், கனடா இந்து கலாச்சார மன்றம், ஆ ஸ்தாபனங்களும் மற்றும் மொரீஷியஸ், தென் ஆ
சைவ நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
இம்மாநாட்டில் சைவ ஆதீனங்களின் பூரீலழ அமைச்சர்கள், சிவாச்சாரியார்கள், பல்கலைக் கழ அறங்காவலர்கள் ஆலய நிர்வாகிகள் பலரும், சமய
மாநாட்டிற்கான சிறப்புமலர் ஒன்றும் ெ கட்டுரைகள் அடங்கிய மற்றுமொரு மலரும் வெளி
கருத்தரங்கப் ெ
"வேத, ஆகம, புராண, இதிக சித்தாந்ததாத்திர இலக்கியங்களில் ஆய்
இந்து ஒளி

སྣོད༽
தங்கள் நாடுகளில் நடாத்தும் சைவமாநாடுகளில் ந்தருளுமாறு விண்ணப்பித்து வருகிறார்கள். மரபுவழி 3து வரும் குருமகா சந்நிதானம் அவர்களால் னால் வெளிநாடுகளில் உள்ள சைவ அன்பர்களை
S.
ரி நாகரிகத்திற்கும் முற்பட்டது என்பது வரலாற்று
} - நீர் அதன்
கற்றாதீர்
(என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு)
lவவழிபாட்டிற்கும் பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் ) அருளாளர்களும் வழங்கிய அரிய சைவசமய
இத்தகு பழமையும் பெருமையும் உடைய சைவ வ சமய அருளாளர்களும் "உலகம்" என்பதை முன் சைவ சமயம், வேதமி, ஆகமம், புராணம், இதிகாசம், நாந்த சாத்திரங்களையும் தன்னகத்தே கொண்டு யான இலக்கியங்களும், மரபுகளும், பண்பாட்டுக் குலைந்தும் வரும் காலகட்டத்தில் நாம் இருந்து ற்றைப் புத்தாக்கத்தோடு உயிர்ப்பிக்கும் மரபு வழி
பங்கள் குறித்த வினாக்களும், தர்க்கங்களும், புதிய வளர்ந்து வருகின்றன. அவற்றை முறைப்படுத்தவும் ம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைவசமயத் சிறந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வறிஞர்களும், ம் கலந்து கொள்ளவும் சைவ சமய ஆய்வுக் ழைக்கின்றோம்.
சைவ அமைப்புக்களும், பிரித்தானிய சைவத் அம்மன் தேவஸ்தானம், அகில இலங்கை. இந்து பூஸ்த்ரேலியா சைவ மன்றம் உள்ளிட்ட பல சமய பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள
ரீ குருமகா சந்நிதானங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு கப் பேராசிரியர்கள், சைவ சமய அறிஞர்கள், ஆலய
ஆர்வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். வளியிடப்பட உள்ளது. இது தவிர ஆராய்ச்சிக் பிடப்படும்.
பொதுத் தலைப்பு
ச, சங்க இலக்கிய, திருமுறை,
சைவசித்தாந்தச் செம்பொருள்கள் -
* 繁
வகள .
لري
7 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 40
Sivam:
The International Saiva Sid Orgal The Fourth International Sa
At Ma 2008 March 21, 22, 23 (Fri
On the Fundamental
(Veda, Agama, Purana, Epic, Sanga
Peranbudayeer!
“ThenNadudaya Sivane Portri
We have great pleasure and immense joy to invite
The International Saiva Siddhanda Research Instit “Gurumaha Sannithanam of Dharumapura Adhina in 1984 at Dharmapuram, in 1986 at Malaysia an Saiva community a monthly magazine called research articles is published regularly.
Our ancient religion, Saiva Siddhanta flowered infused with insights on siddha yoga. During the Sundarar pilgrimaged from temple to temple, sing instrumental in successfully defending Saivaism Thereafter, a king's Prime Minister, Manikkava seek and serve Lord Siva. His heart-melting ve experience, divine love and urgent striving for Tr compendium known as Thirumurai, which alon scriptural basis of Saiva Siddhanta in Tamilnadu a
Now, our religious traditions and practices are o Conference is to give life to rejuvenate our Saiv Saiva Siddhantha Philosophy and Thirumurais fro the conference.
Many Heads of Saiva Adhinams, Representative Sivachariyas, Trustees and Administrators of Sai take part in this conference.
A souvenir with the research papers and confi conference and a special souvenir will be released Research papers can be submitted on the the the special souvenir.
ܢܠ
இந்து ஒளி

ཛོད༽
lyam
dhanda Research Institute hises
iva Siddhanda Conference durai
day, Saturday & Sunday)
s of Saiva Siddantha
Literature, Thirumurai and Sastra)
EnNadavarkum Eraivaa Pottri”
you to the above Conference.
ute has been inaugurated by his Holiness the 26" am” in 1984. This institute conducted conferences d in 1988 at Varanasi. For the benefit of the “Gnanasampandham' which contains essays and
in Tamil Nadu as a forceful bhakti movement
7" to 9"", saints Sampanthar, Appar and ing soulfully of Lord Siva's greatness. They were against the threats of Buddhism and Jainism. Sakar, renounced a world of wealth and fame to rses, called Thiruvasagam, are full of visionary Luth. The songs of these four saints are part of the g with the Vedas and Saiva Agamas form the nd Sri Lanka. -
n the verge of deterioration. The motto of this a traditions. We invite scholars and exponents in m all over the world to present research papers at
of Governments, Professors in Saiva Siddhanda, va temples from various parts of the world will
erence proceedings will be published after the on the First day of the conference. me of the conference or on related topics for
گرے
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 41
Please Note:
1. The paper presented must be on Vedam, A
Thirumurai and Sastras. 2. The presentation of papers must be about fi
English. Papers can be presented by anyone who is Articles must be in simple and clear langua Articles received after the due date may no every right to minimize or restructure the a 6. Foreign delegates and outstation participan
during conference days. 7. A pilgrimage tour to teಖ್ಖles including Ma been arranged during 24", 25" & 26" Marc 8. Those interested in submitting papers or w their names or send their papers on or befo 9. Registration fees:
a. Local Delegates Rs. 500/= b.. Li c. Foreign delegates & participants Sl d. The Bank Drafts are to be made to: A/c Name: “International Saiva Sic Bank name: India Bank, Branch: Bank Sort Code: 165, A/c N. e. Please forward your fee and the pap others are requested to send directly International Saiva Siddhantha Resi Dharmapuram, Mayiladuthurai 609
Conference Co-ordinat
Tamil Nadu Dr. M. Thirunavukarasu, Principal Dharmapuram Adhinam Arts College, Dharmapuram, Mayiladuthurai 609 001 Tamilnadu, India, Cell: 00 91 98.43094430 Email: daac(a)rediffmail.com Sri Lanka: Mr. Kandiah Neelakandan Secretary, All Ceylon Hindu Congress 91/5, Sir, Chittampalam A. Gardiner Mawatha, Colombo 02. E-mail: neela(amnlaw.lk Tel:0094-11-2371 100 Fax: 0094-11-2371 1 1/237 122 Australia: Mr. Kanapathippillai Sabanathan Director of Educational Activities, The Saiva Manram Inc. 217 Great Western Highway, Mays Hill, NSW 2145 Tel: 61296427767(H), 61 408432680(M) Email: { HYPERLINK"mailto:sabanathank(agmail.com"
Saiwamum Tamilzh“ ܢܠ

amam, Puranam, Epic, Sangam Literature,
e pages in A4 size paper typed in Tamil or in
terested in the above topics.
e. be entertained. The conference organisers have rticles. s are provided with food and accommodation
lurai, Kumbakonam and Rameswaram etc. has h 2008 for foreign participants. uld like to attend the conference please register e 25" December 2007.
»cal Participants Rs.. 400/= 00.00
hantha Research Institute'
Mayiladuthurai
5: 751442194
pers through your local co-ordinator and the
/ tO : −
earch Institute, Dharmapura Adhinam,
001, Tamil Nadu, S. India.
brs’ Contact Addresses:
Europe & Overseas Mr.IN. Satchithananthan, Federation of Saiva (Hindu) Temples U.K. 49, Ravensbourne Park Crescent, Catford, London SE64YG, Tel./Fax: 0044208 690 0401 Email: nsatchi(a)hotmail.com Canada:
Mr. Siva Chinniah
The President Canada Hindu Cultural Council 41, Misty Hills Trail, Scarborough ON, MIB 6B2, Canada. Phone: 001 416 284 9158 E-mail: sivasinniahGDnetscape.net Malaysia:
Mr. M. Sivakumar Sri Mahamariyamman Koil Devasthanam, Kuala Lumpur,
Malaysia
Te1:00 60 0320785323
m Thazhithu Onguha” لر
சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி)

Page 42
Registrat The Fourth International S
2008 March 21, 22, 23 (F)
1. Full ame:............. • • • • • • • • • • • • • • • • • • • •
2. Educational Qualification:...........
3. Institution name: ......................
4. Contact Address:......................
5. Phone Nol Cell No.: ..................
6. Draft details;...........................
7. Delegate |Participant / National/
8. Title of Research Paper:.............
LLLLLLLL LLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLSLLLLLLLLLLS
Confer
International Saiva Si Dharmapura Adhinam, Dharmapuram, M
ܢܠ
இந்து ஒளி

ion Form aiva Siddhanda Conference
iday, Saturday & Sunday)
SSLLLLLLLLLLLLLLLL LLLLLLLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLL00CLLLLLL
LLLLLLL LLLLLLLLLLLLLL LLLLLLLL00L00LLLL0LLLLLLLLLLLLLL0LL0LL0L
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLL LLLLLLLL0L0LLL0L0LL0L
LLLLLL LLLLLLLL0LLLL0LLLLLLLL0LLLL00L0LLL0LLLLY0LLLLSYZ LLLZLLLLYLLLLL0LLL0LLL0LLL
LLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLSLLLLLSLLLLLLLLLL00L00LLLLLL0
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0L00LL00L
LLLLSLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLYY0LLLLLLLSLLLLLLLLLLL
so . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
SLLLLLL0LLLLY0LLY0LLLLLLLLLL0LLL0LLLLLLLLLLLLLL0LLLLLLL0LLLL00LLLL00LLL000L0
Overseas
SLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL0LLLLLL000LL0L0LL0LLLLLYLLLLLYLLLLLYYLLLLLLLS00LL0LLL
LLLLLL LLLLLL LL LLL LLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLL0LLL0LLL00L000
ence Registrar:
ddhantha Research Institute, Mayiladuthurai609001, Tamil Nadu, S. India.
40 சர்வசித்து வருடம் ஐப்பசி - மார்கழி

Page 43
தில் நவராத்
மாமன்றத்
(21. 10. 2
 
 


Page 44
சிங்கப்பூர் முநீலிசண்பக விநாய சிறப்புமலர் அறிமுக வியூ
பொன்விழா சிறப்பு மலரை சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுத்துறை விரிவுரை តា(Tឆ្នាំ ஒலிபரப்பாளர் திரு. செ. பா. பன்னீர்ச் செல்வம் அவர்களு
வைத்திய கலாநிதி திரு. பிரசாந்தன் நிகழ்ச்
எஸ். ரி. காசிநாதன் சிறப்புரையாற்றுகிறார். தொகுத்து வழங்குகி
12007)
மாமன்றத்தில் தீபாவளி சிறப்பு பூசை (08.1
 
 
 
 
 
 
 

கர் ஆலயத்தில் மாமன்ற பொன்விழா ா நிகழ்வுகள் (6.09.2007)
ரியர் எம். சொர்ணராஜா அவர்கள் அறிமுகம் செய்வதையும் முதலா யாளர் முனைவர் சுப. திண்ணப்பன் அவர்களும் (இரண்டாவது படம்) =
சிகளை ஒதுவார் திரு. முத்துக்குமரன் றார். - குழுவினரின் பண்ணிசை விருந்து,
சைவக் காவலர் விருது
Lon Loairp5 துணைத் தலைவர் சிவஞானச் செல்வா க. இராஜபுவனிஸ்வரன் அவர்களுக்கு மதுரை ஆ
சைவக் காவலர் விருது வழங்கி கெளரவிக்கப்படுள்