கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2008.04-06

Page 1
%:
 


Page 2
சிவத்தமிழ்ச் செல்வியின் வா
击 த்தோர் சவத்தின் போ 'துர்க்கா புஷ்கரணி”
தந்தாறசவத 5;
தீர்த்தக்கேணி அருகே.
W
INKAN
W W
W
திறப்பு விழா நிகழ்வொன்றின்போது தெல்லிப்பன ெ
மகா கும்பாபிஷேக நிகழ்வின்போது (1997)
 
 
 
 
 
 
 
 
 

வில் - நிகழ்வின் நினைவுகள்
ஞானவித்தகர் அருட்கவி g. விநாசித்தம்பி அவர்களுடன் து'" '
திருமுருக கிருபானந்த வாரியாருடன்
上 W
A II/ %3A%
 ைஅரவணைத்து வளர்த்த ழ இந்து இளைஞர் சங்கத்தின் பிள்ளைகளுள் ஒருவரான பள்ளிவிழாவின்போது செல்வி வி வடிவாம்பிகையுடன்
t
|ီမူ T
சிவத்தமிழ்ச் செல்வி ஆய்வு நூலகம்

Page 3
mw\/w\/w\/\/w\/\/\/w\/w\/w\/\/w\/\^)
塑_ சிவமயம்
பஞ்சபுராணங்கள்
தேவாரம்
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
*
t
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினு மனத்தும் மருவிநின் றகலா
LOITGoioTsfloorňr &SITodoTLIGo G36Lr நோயினும் பிணியுந் தொழி லம்பால்
நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த (8a:SIT600TLDIT Ins60o6ouILoñig6 g5Ir(8y!
திருவாசகம்
அரசனே அன்பர்க் கடியனே லுடைய
அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கணியப் புகுந்துநின்றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே உரையுனர் விறந்துநின் றுணர்வதோ ருணர்வே
யானுனை யுரைக்குமா றுணர்த்தே
திருவிசைப்பா வரம்புரி வாளை மிளிர்மடுக் கமலம்
கரும்பொடு மாந்துமே திகள்சேர் பரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப் பழனம்கழி பெரும்பற்றப் புலியூர்ச் சிரம்புணர் முடிவா னவரடி முறையா லிறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே!
திருப்பல்லாண்டு சேலுங் கயலும் திளைக்கும் கண்ணாரிளங்
கொங்கையிற் செங் குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்குமென்று
புண்ணியர் போற் றிசைப்ப மாலும் அயனும் அறியாநெறி தந்து வந்தென் மனத் தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின்றானுக்கே
பல்லாண்டு கூறு துமே!
திருப்புராணம் அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவரும் தெருளில் நீரிது செப்புதற் காமெனின் வெருளில் மெய்ம்மொழி வான் நிழல் கூறிய பொருளின் னாகுமெனப் புகல்வா மன்றே!
G
R
-திருச்சிற்றம்பலம்
SÈ
ந்
ஒ
ளி

O5, O7, 2008
தாயை இழந்து தவிக்கும்
பிள்ளைகள் நாம்
இந்நாட்டில் சைவ மறுமலர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, யாழ் மண்ணில் வேதனைகளும் சோதனைகளும் மிக்க கால கட்டத்திலும் குண்டுத் தாக்குதல்களையும், இடப் பெயர்வுகளையும் எதிர்கொண்டு - தான் அரவணைத்து வளர்த்த பிள்ளைகளையும், பராமரித்து வந்த வயோதிபர்களையும் பாதுகாத்து அரிய பணி செய்துவந்த தாயை இழந்து நிற்கிறோம்.
இந்து மாமன்றம் பொன்விழாவையொட்டி யாழ் மண்ணில் இந்து மாநாடு நடத்த திட்டமிட்ட வேளையில், அம்மாவை அணுகி ஆசிபெற்றோம். மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்த வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தோம். நல்ல முயற்சி எனத் தட்டிக் கொடுத்து ஆதரவும், ஊக்கமும் தந்தார். 2005 ஜூலை மாதம் எதிர் நீச்சல்களுக்கு மத்தியிலும் துணிந்து, இந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி
வைத்தோம்.
சைவ உலகின் தாயாக - எல்லோருக்கும் வழி காட்டியாக திகழ்ந்துவந்த எங்கள் அன்னையை தெய்வத்தின் உருவாகவே கண்டோம். எனவேதான் யாழ் இந்து மாநாடடில அம்மாவை “தெய்வத் திருமகள்’ எனப் போற்றி, பட்டம் வழங்கிக் கெளரவித்து மாமன்றம் பெருமை தேடிக் கொண்டது.
இன்று நாங்கள் அம்மாவை இழந்த அனாதைகளாகி விட்டோம். அன்னையின் மறைவு ஏற்படுத்தியிருக்கும் பெரும் வெற்றிடம் எப்போது நிரப்பப்படும்?
பரீலபரீ ஆறுமுகநாவலருக்குப் பின்னர், சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் நாவலர் பெருமானின் வழியில் நின்று சைவத் தமிழ்ப் பணியைத் தொடர்ந்து மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர். எங்களுக்குத் தங்கமான தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா போன்ற பலர் இன்றும் எதிர்காலத்திலும் தேவை. இந்துப் பெருமக்கள் அம்மா காட்டிய வழியில் பணியாற்ற முன்வரவேண்டும். அதுவே நாங்கள் அம்மாவுக்குச் செலுத்தும் உன்னத அஞ்சலியாகும்.
மாமன்றத்தின் காலாண்டிதழான “இந்து ஒளி”யை தெய்வத் திருமகளின் நினைவு அஞ்சலி சிறப்பிதழாக வெளியிட்டு அன்னையைப் போற்றி நிற்கிறோம்.
சர்வதாரி வருடம் சித்திரை - ఆరon}

Page 4
சர்வதாரி வருடம் ஆனிமாதம் முதலாம் நாளன்று (15.06.2008) ஞாயிறு நண்பகல் 12.15 மணியளவில் சிவபதமடைந்த அன்னை தெய்வத்திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களின் தொகுப்பாகவே இவ்விதழ் மலர்ந்துள்ளது.
வழமையான விடயங்கள் அடுத்த இதழில் வெளிவரும் என்பதை 'இந்து ஒளி"யின் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தண்ணருள் வரம் படைத்த தங்கம்மா அப்பாக்குட்டி * புண்ணிய நெறியில் நின்று புதுக்கிய நினது கோயில்
எண்ணிய கருணை பொங்கி இனி இடர் ஏதுமின்றிக் கண்ணினாற் காப்பாயம்மா கழலிணை போற்றி போற்றி.
- அருட்கவி சீ. விநாசித்தம்பி (மகாகும்பாபிஷேக சிறப்புமலர்-1997)
அடுத்த சுடர் சர்வதாரி வருடம் ஆடி - புரட்டாதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலைமகள் மணாளனான்தன் மலரடி நீடுவாழ்க அலைகடல் விடமதுண்ட அண்ணல்தம் அடியார் வாழ்க கலைபல கற்றுத் தேர்ந்து காசினிதன்னி லுள்ளேர் இலமெனு மின்னல் நீங்கி இன்புற்று நீடு வாழ்க!
இந்து ஒளி
அகில இலங்கைஇந்து மாமன்றத்தின் சர்வதாரி வருடம் சித்திரை - ஆனி இதழ் ஆளித்திங்கள் 21" நாள்
OO72OOB ஆசிரியர் குழு
பேராசிரியர் அ. சண்முகதாஸ் திரு. கந்தையா நீலகண்டன்
ly 5, இராஜபுதுனீஸ்வரன்
திரு. த. னகரன்
ஒரு பிரதியின் விலை ரூபா 3OOO வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 12OOO
(தபாற் செலவு தனி) வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம்
A.C. H.C. கட்டிடம் 915,சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தைகொழும்பு-2, இலங்கை, இணையத்தளம் : http:/www.hinducongress.org மின்னஞ்சல் : hinducongress @gmail.com தொலைபேசி எண் : 2434990, தொலைநகல் : 2344720
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI
Sithirai - Aani ALL CEYLON HINDU CONGRESS 5th July 2008 Editorial Board:
Prof. A. Shanmugadas Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. D. Manoharan
ܢܠ
Price: RS. 30.00 per copy Annual Subscription (Inland) Rs. 120.00
(Postage Exclusive) Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (Including Postage)
A CEYLON HINDU CONGRESS A.C.H.C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Website : http://www.hinducongress, org E-Mail: hinducongress @gmail.com Telephone No.: 2434990, Fax No. 2344720 Next SSue :
Aadi - Puraddathy
Views expressed in the articles in Hindu Oli are those of the contributors.

Page 5
தெய்வத் திருமகர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட் சிவபதமடைந்த அன்னையின் பணியைப் போ
“இந்து ஒளி" சிறப்பிதழை அருள்மிகு துர்க்காதேவியி
兹爱总*婆总端效登轰磁臀率寮登澄空蕊壁端蛟翠感激盛遂数必整爱**翠盛数翠翠察激翠豪效总 அகில இலங்கை இந்து மாமன்றம் தெய்வத் அவர்களது மறைவையொட்டி ஊடகங்க
சைவத் தமிழ் உலகிற்கு அளப்பரிய பணியாற்றிவந்த முதுபெரும் இறைபணியாளரான சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த வருத்தமடைகிறது.
நீண்டகாலமாகவே தெல்லிப்பழை ழரீ துர்க்காதேவி வேவஸ்தானத்தின் தலைவராகப் பணியாற்றிவந் திருப்பதுடன், அதனுடன் இணைந்த வகையிலான சமூகப் பணிகளின் ஊடாகவும் யாழ் மண்ணில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமை அம்மையாரைச் சாரும். இதனால் நம்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் வாழும் இந்து மக்கள் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டும் போற்றப்பட்டும் வந்தவர் என்பதை சிறப்பாகச் சொல்லலாம்.
数激僚袭激侬篮冷燃燃器燃激激 剝淡凝漆黨燈蕊蕊%優靈蕊喙羽
தெய்வத் திருப்பணிக்காகவே தன்ை
6. &suoloo தலைவர்,அகில இலங்
சைவத்தமிழ் உலகம் போற்றும் தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை நான் வெளிநாட்டிலிருந்தபோது கேள்வியுற்று அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
முற்றுமுழுதாக தெய்வத் திருப்பணிக்காகவே தன்னை அர்ப்பணித்த அம்மையார் அவர். நீண்டகாலமாகவே பூரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சபைத் தலைவராகவிருந்து ஆலய அறப்பணியுடன் இணைந்த வகையிலான சமூகநல கல்விப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றவர். இதன் ஊடாக சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
அன்னையின் உயர்ந்த சேவையைப் போற்றும் வகையில் அகில இலங்கை இந்து மாமன்றம் இரு தடவைகள் அவரைப் பாராட்டிக் கெளரவித்துள்ளது. 1973ம் ஆண்டு கொழும்பில் வைத்து “சிவஞான வித்தகர்” என்ற பட்டத்தை வழங்கியிருந்தது. மாமன்றத்தின் பொன்விழாவையொட்டி 2005ம் ஆண்டு ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்திய
(இந்து ஒளி
 

சிவத்தமிழ்ச் செல்வி டி நினைவு அஞ்சலி சிறப்பிதழ் ற்றிக் கெளரவிக்கும் வகையில் மலர்ந்திருக்கும்
ன் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வணங்கி நிற்கிறோம்
濠 Yi was aw শ্ৰীঃ প্রশ্ট স্থিাৎ 效 曾赠岑黎警器激数整黎路整数臀 திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி 5ளுக்கு விடுத்திருந்த அனுதாபச் செய்தி
அகில இலங்கை இந்து மாமன்ற முகாமைப் பேரவையின் கெளரவ உறுப்பினரான அம்மையார் துணைத் தலைவராகவும், பின்னர் மாமன்ற அறங்காவலர் சபையிலும் இணைந்திருந்து மாமன்றத்தின் செயற்பாடுகளுக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைநின்றவர். மாமன்றம், பொன்விழாவையொட்டி 2005ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடத்திய இந்து மாநாட்டின்போது “தெய்வத் திருமகள்’ என்ற பட்டத்தை வழங்கி இவரைக் கெளரவித்திருந்தது.
அம்மையாரின் மறைவு இந்து மக்களுக்கு பேரிழப்பாகும். இவரது மறைவுக்கு மாமன்றம் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், ஆத்மா சாந்தியடைய அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கின்றது.
Ñኦ W፩ ww: wę aw ಭ: ಸ'*** ೩s # 蠍燃豪茲潔$茲發熔密姆密斑密
ன அர்ப்பணித்த தெய்வத் திருமகள்
Filoiroor, பகை இந்து மாமன்றம்
இந்து மாநாட்டின் போது அன்னைக்கு "தெய்வத் திருமகள்” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தோம். இதற்கும் மேலாக, மாமன்றத்தின் மற்றுமொரு கெளரவமாக காலாண்டிதழான “இந்து ஒளி' சஞ்சிகையை தெய்வத் திருமகள் நினைவு அஞ்சலி சிறப்பிதழாக வெளியிடுவதில் மனநிறைவு கொள்கிறோம். காலத்தால் மறக்கப்படமுடியாத அன்னையின் காத்திரமான பணிகள் இந்து மக்கள் அனைவராலும் என்றென்றும் நினைத்துப் போற்றப்பட வேண்டும் என்பதற்காக, அவரைப் பற்றிய பல்வேறு விடயங்களின் தொகுப்பாக “இந்து ஒளி’யின் இந்த சிறப்பிதழ் அமைந்துள்ளது.
தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு மாமன்றத்தின் சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்துவதுடன், இவரது ஆத்ம சாந்திக்காக அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 6
kirkkykykkisksiksäski
திருமகன்காைநிதிதங்கம்
-------
ஞானத்தெளிவு மிக்க
முநீர்ப்பநி சோமசுந்தர தேசிக நா நல்ஃைப் திருஞானசம்பர்
இகில உலகமும் அறிந்த சைவசமயத்தின் தலைமகள்
சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இறைபடி சேர்ந்த செய்தி கேட்டு பிரார்த்திக்க வேண்டியது எம் கடமையாகும். சொல்லாலும், செயலாலும் தன் வாழ்வை சைவ சமய மறுமலர்ச்சிக்காக அர்ப்பணித்த பெருமாட்டி, எங்கள் குருநாதர், அவர்கள் மீது மிகுந்த மரியாதையுடையவர். எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டிய முன்னோடி. எங்கள் ஆதீன வளர்ச்சியில் மிகவும் அக்கறையோடு செயற்பட்டவர், சமய அறிவும், ஞானத்தெளிவும் மிக்க தெய்வீகப் பிராட்டி,
எவ்விடர்வரினும் அஞ்சாது நின்று ஆன்மிக நெறிவளர்த்த பெருந்தகை. போர்ச் சூழலில் ஆதரவற்ற சிறுமிகளை அரவணைத்து நிழல்கொடுத்த தாய். இவர் வாழ்வால் நாம் பெருமை கொண்டோம். காலத்துக்கு ஏற்ற காரியங்களைச்
சேவித்தலும் சேவையும் என்பதை உணர்த்
(நீதியரசர் கூவி
இளைப்பாறிய உய அம்மையார் எனக்கு அறிமுகமானது மல்லாகம் நீதிபதியாகக் கடமையாற்றிய காலத்தில், அவரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியன என்னைக் கவர்ந்தன. துர்க்கை அம்மன் மீது அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இறும்பூது எய்தச் செய்தது. கிடைக்கும் பணத்தைத் தகுதியுடையவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும் என்பதில் அவர் கண்ணுங் கருத்துமாக இருந்ததைக் கண்டு பூரிப்படைந்தேன். வெளிநாடுகளில் யாரேனும் "ஒரு நல்ல காரியத்திற்குப் பணம் அனுப்ப வேண்டும்; அதை ஏற்று உரியதைச் செய்வீர்களா?” என்று கேட்டால் அம்மாவின் பெயரை அல்லது கவாமிஜிவனாநந்தாவின் பெயரையும் விலாசத்தையுங் கொடுத்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள், நிட்சயமாகத் தகுதி உடையவர்களுக்கு உங்கள் பணம் போய்க் கிடைக்கும் என்பேன்.
அம்மையார் ஆ3ர்கள் ஆலயத்தின் பணிகளை அகல விரித்து பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு சேவித்தலும் சேவையும் சேர்ந்தே செல்ல வேண்டும் என்ற தத்துவத்தை எமக்கு உணர்த்திச் சென்றுள்ளார். சமுதாயத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக ஆலயங்கள் துலங்க வேண்டும் என்ற கொள்கையில் அவர் ஜனறியிருந்தார்.
அவர் நெறிப்படுத்தலின் கீழ் துர்க்கை அம்மன் ஆலபம் சமுதாயத்தின் பல்வேறுபட்ட மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிழல் கொடுத்து அரவணைத்து வந்துள்ளது.
இந்து ஒளி 獸
 
 
 

LALYLALALkAuALLLLLLL இரத்து:நின் இஞ்சீவிசிதர்வித
-------
தெய்வீகப் பெருமாட்டி ཡོད
னசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தர் ஆதீன தரு முதல்வர்
செய்து எமது மக்களை நெறிப்படுத்தினார். அம்மையாரது தூபவாழ்வு மக்களின் நம்பிக்கைக்குரிய ஆத்மாவாக அவனா மிளிரச் செய்தது. சர்வதேசம் முழுவதும் இவரது குரலுக்கு பதிப்புண்டு என்பதை யாவரும் அறிவர்.
ஆலயங்களின் அறங்காவலர்கள் அனைவருக்கும் எவ்வாறு ஆலயத்தை நிர்வாகிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக துர்க்காதேவி தேவஸ்தானத்தை நிர்வகித்துக் காட்டினார். நல்லூர்க் கந்தன் திருவீதியிலும் அடிபவர்களுக்கு உதவும்பொருட்டு துர்க்கா மணிமண்டபத்தை உருவாக்கி வழிப்படுத்தினார். பெரிய புராணம் பேசிய சிவநெறித் தொண்டர்க்கீடாக எம்மண்ணில் இப்பெருமாட்டியிள் திருநெறிவாழ்வியுமலர்ந்தது. தெய்வீகப் பணிசெய்த அன்னையின் ஆத்மா ஆறுதல் பெற அனைவரும் பிரார்த்திப்போம்.
சேர்ந்திருக்க வேண்டும் திய அம்மையார்
நீதிமன்ற நிதியாசர்)
உண்டியல் என்ற சொல் பணமாற்றுச் சீட்டைக் குறிக்கும். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறுவது உண்டியல், இறைவனுக்கு உண்டியலில் பணம் போட்டால் அவன் நாங்கள் கேட்கும் வரமருள்வான் என்பது எங்கள் நம்பிக்கை அம்மையார் அவர்கள் உண்டியலில் கிடைப்பது உலகத்தாரை உய்விப்பதற்கே என்று கூறி சமூகப் பணிகளில் ஆலயங்கள் முன்னிற்க வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்திச் சென்றுள்ளார். கோயிலுக்கு கிடைக்கும் பணம் அனைத்தும் முறையாகக் கனக்கில் வைக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகக் காாாக இருந்ததை நான் அவதானித்திருக்கின்றேன். அதே போல்த் தான் பிழையான நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ கோயில் நன்கொடைகள் போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்பதிலுங் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அம்மையாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு அவர் தமிழுக்கும் சைவத்திற்கும் எங்கள் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. இறைவன் ஆணைப்படி அம்மையார் கூட அவன் தாள் சேர வேண்டும் என்பதுதாள் நிதி
அவர் வழியில் நாமும் செல்ல எம்மால் இயலுமானவற்றை $1ங்கள் வாழ்க்கைக் காலத்தில் நாமும் இயற்ற இறைவன் எங்கள் எல்லோருக்கும் அருள் புரிவானாக! அம்மையார் ஆத்மா அன்னையின் அருளோடு கலப்பதாக!
آلیس
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 7
sdasdasdasdesde sesde sesde sleded 5ங்கம்மா ஆர்.
"Golden Mother"
Rishi ThoIII Disciple of Gurudeva Sivayu Suhr Amma Thanga IIlma Appakutti's passing is a great loss for the Tamil Saiva Community.
One of the most outstanding Sri Lankan Tamil Hindu leaders, Amma's non-political and Teligious selfless contributions in the areas of social service and education never ceased even during these difficult times of Sri Lankan war. Hertirelcss efforts on behalfof women and children were her Inission, and the establish Illent oftemple philanthropy was solely due to Amma's spirit and involvellent.
As a young man growing up in Jaffna during the 1970's and 1980's, I had the privilege of attending many of AIllina's spiritual lectures. Even at a young age, her example of social service and philanthropy was a catalyst for my own emerging ideals.
After I left Jaffna to serve my guru, the late Gurudewa Siwaya Subramuniyaswamigal of Kauai Aadheena in Hawaii, USA, I kept in touch with Amma on a regular basis. Gurudeva had a great love and respect for her and she always invited him to her Sri Thurgai Amman Temple whenever hc visited Sri Lanka.
Over the past few years I had the opportunity to travel to Sri Lanka and I always included a visit to Sri Thurgai Amman Temple to spend time with her. The highlight of all my visits came in August 2007.
While spending two Weeks in Jaffna I was asked by Kauai A ad heela II personally present the prestigious "Hindu Relaissance Award to A I TITTa.
This award is given each year by Kauai Aadheena III of Hawaii, USA and Hinduism Today, the
W இந்து ஒளி
 
 
 
 

YLL LLSLLALAAAAALLALALALLTLCLTLLHLLLT க்கு: நினைவு அஞ்சலி சிறப்பிதழ்
of Saivite Tamils
dunathan Trini II ni iyi Swara igal FMaTwaii, USA.
internationally celebrated Hindu Renaissance Magazine. Amma was chosen to receive this international recognition for her contributions toward the Tamil Hindu community in Sri Lanka and the Sri Lankan Hindu Diaspora.
On August 13, 2007, it was with great honor that I presented Amma the Hindu Renaissance Award plaqueata ceremony infront of the Sri Thurgai Ammal) Temple in Thellippalai, Jaffna.
A few days latter was my last meeting with Willina. WheI1 l atteInded the Kodiyetta Im Flag Raisi Il g ceremonies of the Nallur Murugan Temple. During this annual festival the Sri Thurga Mani Mandapam feeds hundreds of people. There I was seated next to All IIla at lunch. Even at 83 years old and needing assistance to Walk, Anna was there to personally oversee the feeding.
I will fondly remember Amma Thangan ma Appakuttias a vibrant woman filled with the spirit of Saivism. Even though Amma has left the physical world, I am sure she continues her mission from the Inner World. In Tamil, Thangamma means "golden mother". Indeed, Аппа Тhangamma Appakuti is a soul who had fulfilled her dhar Illa a IId lived Lip to her
|1:1||1::
R5i TOCUTCCT) handing over to Amm ThangdrmC) Appakutti the Hindu R:ToiSSOrl Ce AW'Or Ci plogue in front of the Sri Thurgo i Amman Temple in ThellippCalci, Jaffnd on August 13th, 2007. Also in the pohoto is Sri A TU Thirumurugon a Well known SCivite le C. Cler i Sri LOnkC).
أمير
சர்வதாயி வருடம் சித்திரை - ஆளி)

Page 8
kkkkkkkko இதைக்கத்திருமகன்காைஜிதங்கம்
சிவநெறி காத்துநின்ற அன்ன
திருமதி சமந்தி பணிப்பாளர், இந்துசமய கலாச்
“என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற தாரக மந்திரத்தை அடிநாதமாகக் கொண்டு தனது இறுதி மூச்சுவனா அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்து மறைந்தவர் எமது அன்னை,
சைவமும், தமிழும் தமது கண்களாகப் போற்றி ஆன்மீகப் பணிசெய்த சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் இனிய குரல்வளமும், ஆற்றொழுக்கான பேச்சும் எம்மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. ஆன்மீகப் பிரசாரத்தில் தனக்கென ஓர் இடத்தினைப் பிடித்துக்கொண்டவர் இவர்.
தெல்லிப்பழையில் சிறிய கட்டடத்தில் அமைந்திருந்த துர்க்கையம்மன் திருக்கோயிலைப் பெருந்தேவஸ்தானமாக மாற்றியமைத்த பெருமையும் அவரைச் சார்ந்ததாகும். இவ்வாலயத்தின் தலைவராக மட்டுமன்றி எம்நாட்டு மக்களின் மதிப்பிற்கும், நம்பிக்கைக்கும் உரியவராகவும், கற்றோர் போற்றி மதிக்கும் தெய்வத் திருமகளாகவும், யாவர்க்கும் அன்னையாகவும் திகழ்ந்த சிறந்த தலைவியாவார்.
எந்த இடரினினும் மனம் தளராத அஞ்சாமை உடையவராகவும், தான் பிறந்த மண்ணுக்கும், தனது சகோதர சகோதரிகளான தமிழ் மக்களுக்கும் இடையறாது யாவரும் வியக்கும் வண்ணம் பணியாற்றியவர் என்று கூறினால் மிகையாகாது.
இவ்வாலயத்தின் நிர்வாகியாகவிருந்து ஆலயத்தின் மூலம் பல சமூகப்பணிகளோடு வேத பாடசாலை, பண்ணினச வகுப்புகள், ஆதரவற்ற சிறுமிகளுக்காக உயர் அந்தஸ்தைக் கொடுத்த துர்க்கா இல்லம், ஏழைச் சிறுவர்களுக்கு வழங்கி வருகின்ற புலமைப் பரிசில்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்திசெய்தல், யாழ் பல்கலைக்கழகத்திற்கு செய்யும் உதவிகள், சிறந்த நூலகம், பல அரிய சிவத்தமிழ் நூல்களை அச்சுவாகனம் ஏற்றி வெளியிட்டமை என்று இவரது பணிகள் ஏராளம் ஏராளம்
சைவ சமயத்தின் நிகழ்
చిత5grj tւնlւյlմ: Լւր:
இலங்கையில் சமூக சேவகியாகத் திகழ்ந்த தங்கம்மா
அப்பாக்குட்டி மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன்.
சைவசமயத்தின் நிகழ்கால மறுமலர்ச்சித் தாயாக விளங்கிய ஆன்மீக அன்னை கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
இந்து ஒளி
 
 

kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
ஆர்பாக்த:தின்ை? அஞ்சனிசித்
னை தங்கம்மா அப்பாக்குட்டி
நாவுக்கரசன், - Fாா அலுவல்கள் திணைக்களம்
எவருமே தனித்து நின்று செய்யத் தயங்கும் வேலைகளைத் தனியாகவே நின்று திறம்படச் செயலாற்றிய பெருமைக்கும் உரியவர். ஆன்மீகச் சேவைகளுக்கு மத்தியில் ஆதரவற்ற குழந்தைகளை அரவனைத்து அவர்களுக்கெல்லாம் அன்னையாய் விளங்கி அவர்களின் துயர் துடைத்த அவரது தியாக மனப்பான்மை பாவரது மனங்களிலும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. அவரது அயராத முயற்சியால் 1986 ஆம் ஆண்டு துர்க்காபுரம் மகளிர் இலத்திற்கான இரு மாடிக்கட்டம் திறந்து வைக்கப்பட்டது.
சாதாரணமாகப் பெண்கள் மேடையேறிப் பேசுவதற்கு தயக்கம் காட்டிய காலகட்டத்தில் தனது இனிய குரல் வளத்தால் ஆன்மீகப் பிரசங்கங்களில் தனக்கெனத் தனியான ஒரு இடத்தைப் பெற்றிருந்தார். இவரது பேச்சுத் திறமையையும், ஆன்மீகப் பணியையும் பாராட்டி மதுரை ஆதீனம் “செஞ்சொற் செம்மணி' என்ற பட்டத்தை வழங்கியிருந்தது. மேலும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் “சிவத்தமிழ்ச்செல்வி' என்ற பட்டமும், அகில இலங்கை இந்துமாமன்றம்"சிவஞானவித்தகர்'தெய்வத்திருமகள்' ஆகிய பட்டங்களையும், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் "துர்க்கா துரந்தரி” என்ற பட்டமும் வழங்கி கெளரவித்தது. 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கி அவரது சேவையைப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்க தொன்றாகும்,
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது இறுதிக்காலம் வரை எந்தவித பிரதிஉபகாரமும் எதிர்பாராது சைவத்திற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டுகள் காலத்தால் அழியாதவை அன்னை அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை செவ்வனே தொடர்வதுதான் அவருக்கு நாம் செய்யும் அாப்பெரிய கைமாறாக அமையும்
கால மறுமலர்ச்சித் தாய்
1. கருணாநிதி
நவமைச்சர்
'தமிழ்ப் பண்டிதை' என்று ஈழத் தமிழர்களால் அழைக்கப்பட்ட தங்கம்மா அப்பாக்குட்டி முறைப்படி தமிழ் கற்று ஆசிரியையாக இருந்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர்.
நூலகம் ஒன்றைத் தொடங்கி சிறந்த நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தவர். அவரது பிரிவால் வாடும் தமிழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
أليس
s சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 9
காலம் தந்த
பேராசிரியர் அ. துணைத் தலைவர், அகில
‘தெய்வத் திருமகள்' கலாநிதி துர்க்கா துரந்தரி சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்துக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. அம்மாவினுடைய பணிகளை வியந்து பாராட்டி வருபவர்கள் இந்து மாமன்றத்தினர். இந்து மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெற்றபோது ‘தெய்வத் திருமகள் என்னும் பட்டத்தினை மிகுந்த விருப்புடனும் பணிவுடனும் இந்து மாமன்றம் அன்னைக்கு வழங்கி மகிழ்ந்து பெருமைபெற்றது. சமயப்பணி எப்படிச் செய்யவேண்டும், சமூகப்பணி எப்படி ஆற்றவேண்டும், கோயில் நிர்வாகத்தினை எப்படி நடத்தவேண்டும் என்பவற்றை எமக்கு எடுத்துக் கூறுவதாக வாழ்ந்தவர் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள். அவருடைய கோயிற் பணி சமூகத்தோடு இணைந்திருக்கும் தன்மை ஒரு கலாநிதி ஆய்வுக்கே இட்டுச்சென்றுள்ளது. தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கனுடைய ஆய்வினையே இங்கு குறிப்பிடுகிறேன். தன்னுடைய தங்கக் குரலாலே உலகமெல்லாம் சென்று சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியபோது அவரில் உலகத்துப் பெரியவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பும் நம்பிக்கையும் துர்க்காதேவி கோயிலை நோக்கிப் பெருந்தொகையான பணமும் அடியார் கூட்டமும் வந்து சேர உதவின. அப்பணத்தினை எவ்வாறு செலவழிக்க வேண்டுமென அன்னை மேற்கொண்ட உயர் நிர்வாகம் உலகப் புகழ் பெற்றது. சிவத்தமிழ்ச் செல்வி அம்மா எங்களுக்குக் காலம் தந்த கைவிளக்கு. அந்தக்
அம்மாவின் பிரிவு நிரப்
'அம்மா அம்மா எம் தாயே! ஆறுதல் தந்தெமைக் காப்பாயே என்ற பாடலை அடியவர்களும், அம்மா வளர்த்த பிள்ளைகளும் கண்ணிர்மல்கப் பாடிய வண்ணமாக வலம்வர தெல்லிப்பழை கட்டுப்பிட்டி மயானத்தில் அக்கினிச்சுவாலையோடு அம்மாவை விட்டுவந்த காட்சி அகத்தை வருத்துகிறது. ஆலய வீதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. திருமுறை மடத்துக்கு முன்னால் அம்மா தினமும் அமரும் கதிரை அம்மாவின் வருகைக்காக காத்திருக்கிறது. யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைக் கூடத்தில் என்னுடன் கதைத்த இறுதி வார்த்தைகள் இதயத்தை வருத்துகிறது. என்செய்வோம்! மேடையில் பேசும் தத்துவங்கள் அனுபூதியாகின்ற போது எம்மை நாம் உணரமுடிகிறது.
எனது சிறுபராயம் முதல் என் தாய், தந்தை கை பிடித்து வணங்கச் செய்த நடமாடும் தெய்வம் அம்மா. இறுதி மூச்சுள்ளவரை தன் பிள்ளையாக வளர்த்தெடுத்த தெய்வம். கடந்த பதின்நான்கு ஆண்டுகளாக எனது மதிய உணவைத் தானே பரிமாறி சிறுபாலகனாகப் பராமரித்தார். இன்றைய எனது வளர்ச்சிக்கு வாழும் வழிகாட்டிய எனது உத்தமகுரு. உலகம்
(இந்து ஒளி
 

இலங்கை இந்து மாமன்றம்
கைவிளக்குடன் நாம் காலம் காலமாக வாழலாம்; அது எங்களுக்கு வழிகாட்டிச் செல்லும்.
1995இல் எம் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றபொழுது இவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும்படி அம்மா அகில இலங்கை இந்து மாமன்றத்தினைக் கேட்டுக்கொண்டபோது உடனடியாக மாமன்றத்தினர் பலவகையான உதவிகளை அனுப்பிவைத்தனர். சுனாமியால் பாதிப்படைந்தோருக்கு மாமன்றம் உதவியபோது அன்னையினுடைய ஆலோசனையும் பெறப்பட்டது.
அன்னையின் இழப்பு ஈடுசெய்யமுடியாததொன்று என்பதை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலர் திரு. கந்தையா நீலகண்டன் பத்திரிகைக்கு வழங்கிய இரங்கற் செய்தியிலே குறிப்பிட்டுள்ளார். அன்னையின் இறுதி நிகழ்விலே கலந்துகொள்ளக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கு இந்து மாமன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் பலர் முயற்சி செய்தனர். ஆனால் விமானச் சீட்டுக்கள் பெறமுடியவில்லை. இந்நிலையில் மாமன்றத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவரான என்னை மாமன்றத்தின் சார்பில் இரங்கல் உரை ஆற்றும்படி திரு. நீலகண்டன் கேட்டுக்கொண்டார். இந்து மாமன்றத்துக்கு ஆலோசனைகள் வழங்கியும் ஆசி வழங்கியும் வந்தவர் அன்னை அவர்கள். அத்தெய்வத் திருமகள் துர்க்கை அம்பாளுடைய தாமரைத் திருவடிகளிலே அமைதி பெற்று இன்புறவேண்டுமென இந்து மாமன்றத்தின் சார்பில் இறைவனை வேண்டுகிறேன்.
பமுடியாத இடைவெளி
ர் ஆறு. திருமுருகன்
போற்றும் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் பிரிவு உலகை வருத்துகிறது என, வரும் ஒவ்வொரு நாள் விளம்பரமும் கண்டு அழுகிறோம். நிரப்பமுடியாத இடைவெளி.
அம்மாவின் அறிவுக்கு, ஆளுமைக்கு, அஞ்சாமைக்கு, அழகுக்கு நிகர் யார்? கல்லில் சிலை வடித்து, ஒவியத்தில் வரைந்து இனி நாம் காணும் அம்மா பேசப்போவதில்லை. தம்பி சாப்பிட்டு இருங்கோ என்று சொல்லப்போவதில்லை. மேடையில் இன்று என்ன நடந்தது என்று கேட்டு என் வர்ணனையை ரசித்துக் கேட்க தன் மேடை அனுபவத்தைப் பகிர தினமும் அம்மாவும் நானும் நடத்திய சம்பாஷணை ஒய்ந்து விட்டது.
எங்கள் இனிய தெய்வம் காட்டிய வழியில் அவரது பணிகளை ஒன்றுபட்டு செய்வோம் என்ற உறுதியோடு, அம்மா நேசித்த, அம்மாவை நேசித்த அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிடும் இச்சிறப்பு மலருக்கு எனது இனிய நன்றிகளைக் கூறி, அம்மாவை நேசித்த அனைவரும் அவரது நிழலில் வாழ்ந்த எம்மை என்றும் காத்திட வேண்டி அமைகிறேன்.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 10
நிறைந்த ஆளுமையுடன் கலாநிதி குமாரசு
சேக்கிழார் பெருமான் நமக்களித்த அரும் பெருஞ் செல்வம் திருத்தொண்டர் பெரியபுராணம் ஆகும். அறுபத்து மூன்று மெய்யடியார்களின் தொண்டுத் திறத்தை உலகிற்கு எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ள வரலாற்று நூல் அது, என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று நூல் ஆகப் பெரிய புராணம் விளங்குவதால், அதில் அடங்கியுள்ள சம்பவங்கள், நிகழ்வுகள், உள்ளீடுகள் யாவும் உண்மையில் நிகழ்ந்தவைகளேயாகும். இலக்கியச் சுவைக்காக ஆங்காங்கே கற்பனைகள் இடம் பெற்றிருப்பினும் பாத்திரங்களும் செய்திகளும் கற்பனைகள் அல்ல. பெரியபுராணத்தின் பிழிந்த சாரம், “தொண்டு” என்னும் ஆன்மிக விழுமியம். “தொண்டு”புரிபவர் தொண்டர் எனப்படுவர். “தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்பது சைவத்தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் ஆக அமைகின்றது.
பெரிய புராணத்தைக் காதலித்து ஓதி உணர்ந்ததுடன், உணர்ந்து கொண்ட ‘தொண்டு’ எனும் ஆன்மிக விழுமியப் பண்பினைத் தமது வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தும் காட்டியவர், நாவலர் பெருமான். நாவலருக்குப்பின், சைவத்துக்கும் தமிழுக்கும் நல்லதொரு காவலராகவும், மானுடத்தின் ஒப்புரவாளராகவும், சமயத்தையும் சமூகத்தையும் வேறு வேறாகக் காணாது, அவற்றை ஒன்றாகக் காண்பதே காட்சி என்ற கோட்பாட்டினைச் செயற்பாடாக்கிக் காட்டிய செயல் வீரர் ஆகவும் விளங்கியவர், நம் கண்முன்னே வாழ்ந்து இறைபதம் எய்திய சிவத்தமிழ்ச் செல்வி, துர்க்காதுரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள். சமயத்தொண்டும் சமூகத் தொண்டும் பிரிக்கமுடியாதவை; அவை ஒன்றுடன் ஒன்று இணைந்தும் கலந்து மருவியும் இருப்பதே சைவநீதி என்றுணரப் பெற்றவர் அம்மையார். பெரியபுராணத்தில் அவருக்கிருந்த பக்தியும் ஈடுபாடுமே இதற்குக் காரணமாயிருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.
அன்பு நெறியாக விளங்கும் சைவநெறியானது, செயல்நெறியாக மலர்ச்சி பெறும்போது, தொண்டு நெறியாகப் பரணமிக்கிறது. சிவத்தமிழ்ச் செல்வியாரின் ஆசிரியப் பணி, சைவசமயப்பணி, தமிழ்ப்பணி, நூலாக்கப்பணி, ஆலய பரிபால பணி, சமூகப் பணி என விரிந்து செல்லும் அத்துணை பணிகளும் தொண்டு என்ற அடிப்படையில் நிகழ்த்தப்பட்டமையினாலேயே, அவையனைத்தும் ஆன்மிகம் நோக்கியவையாகவும் அதேவேளை மானுடம் தழுவியவையாகவும் எல்லோரையும் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன.
சிறந்த தொண்டராக மேன்மைபெறுபவரே, ஒப்பற்ற தலைவராக ஏற்றம் பெறுவதற்குத் தகைமையும் அருகதையும் உடையவர் என்று கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சிவத்தமிழ்ச் செல்வியாரின் தலைமைத்துவச் சிறப்பு போற்றுதற்குரியது.
தெல்லிப்பழை ழரீ துர்க்காதேவி தேவஸ்தான அறங்காவற் சபையின் தலைவராக 1977ஆம் ஆண்டு முதல் இறைவனடிசேரும்
இந்து ஒளி
 

计
மிசோமசுந்தரம்)
வரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அரும்பெருஞ் சேவையாற்றிப் பெருமை பெற்றவர் துர்க்காதுரந்தரி அம்மையார். தோன்றாத் துணையாக பூரீ துர்க்காதேவி அம்பாள், தெல்லிப்பழையில் அமர்ந்து அருளாட்சி புரிய, துர்க்கா துரந்தரி அம்மையார் தோன்றும் துணையாக, பேசும் தெய்வமாக அங்கு எமக்கெல்லாம் விளங்கினார். எந்த நேரத்தில் சென்று, அம்மையாரிடம் தம் வேண்டுகோள்களையோ குறைகளையோ எடுத்துக் கூறினாலும், அவர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று, அன்புடன் அளவளாவி, தகுந்த ஆலோசனைகளையும் பரிகாரங்களையும் வழங்கி, அவர்களின் துயர்களை துடைத்து, அதில் மகிழ்ச்சி கொள்ளும் பண்பினர் ஆகத் திகழ்ந்தவர்.
ஆலய பரிபாலனம் எவ்வாறு அமையவேண்டும்; ஆலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்தியக் கிரியைகள், பூசைகள் வழிபாடுகள் எப்படி அமையவேண்டும்; வழிபாடு செய்ய வருகின்ற அடியார்களின் ஒழுக்கலாறு, நடை, உடை, பாவனை எந்த அளவிற்கு சைவத் தமிழ்ப் பண்பாடு பேணுவதாக இருக்க வேண்டும் போன்ற விடயங்களில் சிரத்தையோடு சிந்தித்துக் கருத்துச் செலுத்தி அவற்றை ஓர் ஒழுங்கின் கீழ் கொண்டு வந்து, நடைமுறையில் செயல்படுத்திக் காட்டியவர். அந்த வகையில், ஏனைய ஆலயங்களிலும் அவற்றை முறையாகப் பேணுவதற்கு ஒர் உந்து சக்தியாகவும் விளங்கினார்.
ஆலயம் என்பது ஒர் இறைவழிபாட்டுத் தலம் மாத்திரமன்று: மக்களின் வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் மேம்படுத்தி, மண்ணில் நல்ல வண்ணம் வாழவும்; ஒழுக்க, பண்பாட்டு விழுமியங்களை வாழ்க்கையில் பேணி மனிதப் பண்புகளுடன் மனிதராக வாழவும், மக்களை நெறிப்படுத்திஉதவும் சமூக கேந்திர நிலையமாகவும் ஆலயம் விளங்க வேண்டும் என்பதில் அம்மையார் உறுதியாக இருந்தார். சமயம், சமூகம் இரண்டையும் அவர் தமது இரு கண்களாகப் பேணிவந்தார். அவரின் அறப்பணிகள் இதற்கு சான்று பகர்கின்றன. துர்க்காபுரம் மகளிர் இல்லம், முதிய மகளிர் இல்லம், மருத்துவமனைகளுக்கான அறக்கட்டளை நிதியம், மாணவர் புலமைப்பரிசில் நிதியம், அன்னதானப் பணிகள் என அறப்பணிகள் பலவாக விரிகின்றன. அருள் ஒளி மாதாந்த சமயச் சஞ்சிகை மூலம் வாசகரின் அறிவுக் கண்கள் திறக்கப்பெற்று வருகின்றன. சிவத்தமிழ் செல்வி ஆய்வு நூலகம் அறிவைத் தேடி வருவோருக்கு அறிவுப் பசியைத் தீர்க்க வல்லதாக உள்ளது. அம்மையாரின் அருளுரைகள் அமுதம், நூல்கள் சஞ்சீவி; அவைகள் ஏற்றமுற வாழ்விக்கும் அருமருந்தாக விளங்குகின்றன. சமய, சமூக ரீதியாகப் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு அன்னையின் பங்களிப்பு அளப்பரியது.
போதனையும் சாதனையும்; அறிவும் செயலும்; பழமையில் பற்றும் புதுமையில் நாட்டமும், ஆன்மிகமும் உலகியல் பண்பாடும் நிறைந்த ஆளுமையுடன் எல்லோர்க்கும் அன்னையாக விளங்கிய சிவத்தமிழ்ச் செல்வி அம்மையார் இன்று தெய்வமாகிவிட்டார். வணங்குவோம்; அவர்காட்டிய வழியில் நடக்க உறுதி பூணுவோம்.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 11
தங்கம்மா காலம்
(பேராசிரியர் σΤοήo. சிவலிங்கராஜா)
ஆறுமுக நாவலரின் ஆளுமையை உன்னுடைய ஆற்றுப் படையாக அனுதினமும் காத்தவள் நீ, சோழமன்னர் காலச் சமயச் சரித்திரத்தை ஈழமண்ணில் மீண்டும் எழுதியதோர் பெருமாட்டி தேவார முதலிகளின் திருப்பாடல் யாவையுமே நாவாரப் பாடி நம்மையெல்லாம் ஈர்த்தனையே வாழத் துடித்து வறுமை தனிலுழன்று ஏழ்மை நிலையில் ஏதுமற்று வாடியதோர் குஞ்சுகளைக் கூட்டிக் கோயில் அறம்காத்த நெஞ்சம் ஒருநாளும் நெருப்பிடையே வேகாது முற்றிப் பழுத்த முதுமையினாலே உடலம் வற்றித் தம்வாழ்வு வளம்குன்றி உயிர்ப்புக்காய்டு) பற்றிப் படரப் பாதை தெரியாமல் உற்ற பிணியோடு உறவின்றி நின்றவரைக் கொடுத்துத் தூக்கிக் கலக்கம் கலைவித்து மெய்யாய் நிழலளித்த மேன்மை மிகு ஆல்விருட்சம் தான தருமம் தரமறிந்து செய்து தமிழ் ஞானம் தனை வளர்த்த தங்கம்மா இன்னார் இனியர் இவர்பெரியர் அவர்சிறியர் என்னாது எல்லோரும் உன்சந்நிதியில் ஒன்றாவர் சொன்ன சொல்லு மாறாமல், ஏதிலர்க்கு
b6öT60LD u6D 6&tigibbgub - செய்தவற்றைச் சொல்லித் திரியாமல் உய்தி வழியில் ஒருமனமாய் நின்றவள் நீ - சீலம் தருமம் செய்நேர்த்தியாவுக்கும் பாலம் அமைத்த பலம் உந்தன் வாழ்வியலாம் தேரூர்ந்து உந்தன் திருஉடலம் செல்கையிலே ஊர்திரண்டு நின்று உகுத்தகண்ணிர் தான் உலகில் எப்படிநீ வாழ்ந்தாய் என்பதற்குச் சாட்சியம்மா. ஈழத்துச் சைவத் தமிழுலகின் சரித்திரத்தை ஆராய்வோர் தங்கம்மா காலம்" எனத் தனியே ஓர் இயல் வகுப்பர்.
 
 

சொல்ல மூடியாத சோகமது சூழ்கிறதே!
வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம்,
காரைக்காலம்மை தொடக்கிவைத்த சைவநெறி
பேருக்காயன்றிப் பெற்றிபெறக் காத்தனையே வேருக்கு நீரிறைத்து வெற்றிபல பெற்றுப்
பாருக்காய் வாழ்த்த பசுந்தமிழே யாருக்கும் வகை சொல்லும் வல்லபத்தால்
யாழ் மண்ணில் நிமிர்ந்தனையே ஊருக்காயன்றி உலகப்புகழ் படைத்தாய்
உளறுகிறோம் தாயேயுன்றன் நினைவுகளால்
கல்வி கலை ஞானம் கருதரிய அறப்பணிகள் எல்லையிலா விழுமியங்கள் அனைத்தும் உரிமையதாய் வல்லமையின் சிகரமென வழி நடத்தி வந்தனையே! சொல்ல முடியாத சோகமது சூழ்கிறதே!
ஆசிரியப் பணி புரிந்தாய் அரியபல தத்துவங்கள் பேசிப்புகழ் படைத்தாய் புண்ணியத்தின் புண்ணியமாய் வீசி ஒளிவிளக்காய் விகசித்தாய் உலகத்தார் ஆசியளித்தார் அவனியிலே அமர்ந்து கொண்டாய்!
சைவத்தின் கண்ணாய்ச் சமூகம் உனைப் போற்ற உய்வையுலகுக்குக் காட்டி நின்றாய் உன்னதமாய் மெய்வருத்தம் பாராது பணிசெய்த பெருமாட்டி வையமதில் மதிப்பார்ந்த தங்கம் அப்பாக்குட்டி
சிவச்சேவை தனைப்புரிந்த செல்வியே போற்றி! போற்றி! தவக்கோல மேன்மையதன் தனித்துவம் போற்றி! போற்றி! புகழ்ச்சேவை பல புரிந்த பொன்மனச் செல்வி போற்றி! அறக்கோல அம்மையே அமர்ந்தனை அடிகள் போற்றி!
தெல்லிப்பழை பூரீ துர்க்காதேவி தேவஸ்தான அன்னதான மண்டபத்தின் முகப்புத் தோற்றம்
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 12
விஸ்வநார வேதாகம வி
தெல்லிநகர் துர்க்காதேவியின் பேரருளால் உலகெங்கும்
அன்னையின் அடியவர்கள் துர்க்கை அம்பாள் கோவிலை கட்டி வழிபடுவதற்கு மூலகாரணமான ஆணிவேராகத் திகழ்ந்த அம்மா (தங்கம்மா அப்பாக்குட்டி) இன்று எம் மத்தியில் இல்லையென்பது இதயத்தைப் பிழிகின்றது.
நல்லாசிரியையாய் அருள் பெருக்கும் இனிய பேச்சாளராய், தன்னிகரில்லாத் தலைவராய், அனைத்து மக்களிடமும் அன்பும் கண்டிப்பும் நிறைந்த அம்மாவாய் பதிதர்மம், பசுதர்மம் இரண்டையும் சமன் செய்து சீர் தூக்கும் தர்ம கர்த்தாவாய் துர்க்கை அடியவர்க்கு நடமாடும் தெய்வமாய் வாழ்ந்து வானுறையும் தெய்வமாய் ஆகிய அன்னை துர்க்கா துரந்தரி, தெய்வத்திருமகள்,
சாதனை நாயகி
(திருமதி வசந்தாவைத்தியநாதன்)
உலகில் பிறந்த பலரும் வாழ்க்கை நீரோட்டத்தில் துரும்புகளாக அடித்துச் செல்லப்படுகின்றார்கள். ஒருசிலரே எதிர் நீச்சலிட்டு சாதனைகளை உடைமைகளாக்கிக் கொள்கின்றனர். அந்த ஒரு சிலரில் துர்க்கா துரந்தரி சிறப்பிடம் பெறுகிறார்.
யாழ்ப்பாணத்தில் நடுத்தர சைவக் குடும்பத்தில் தோன்றி, ஆசிரியப் பணி புரிந்து, ஆன்மிகத்தில் தன்னை உயர்த்திக் கொண்டவர். ஆலய அறங்காவலர்களாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அந்நிலையை உடைத்தெறிந்து ஒரு பெண்ணால் ஆண்களை விடவும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்த சாதனை நாயகி.
'துர்க்கா துரந்தரி” என்றால் துர்க்கை எனும் பாரத்தைச்
சுமப்பவள் என்பது பொருள். உண்மையாகவே ஆலயத்திலுள்ள அம்பிகையைத் தனது ஆத்மாவில் சுமந்தவள். ஆலயத்திற்கு மக்கள் செல்லுவதை மாற்றி, மக்களிடம் ஆலயத்தைக் கொண்டுவந்த திறமையான நிர்வாகி. தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம் என்றவுடனேயே பொருட்களை அள்ளி வழங்கப் போட்டி போடும் மக்களைக் காண்கிறோம். காரணம் தங்கள் உதவிதக்க விதத்தில் பயன்படுத்தப்படும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே.
சொல்லையும், செயலையும் ஒன்றாக்கி வாழ்ந்தவர் தங்கம்மா. தனது ஆளுமை மிக்க பேச்சினால் மக்களின் மனங்களில் நிறைந்தது போலத் தனது தூய தொண்டினாலும் மக்களின் இதயங்களை வென்றவர்.
நாவலர் பெருமானுக்குப்பிறகு உயிர்த்துடிப்புள்ள சகாப்தத்தை உருவாக்கியவர் சிவத்தமிழ்ச் செல்வி ஆண்டுகள் பல கடந்தாலும் அவரது புகழ் அழியாது நிலை நிற்கும். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாதென்பதும் உறுதி.
இந்து ஒளி
 

TruIotor æstuam த்யாபூஷணம்
சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அவர்கள் தெல்லிநகர்ப் பதியின் பெருமைக்கு பெருமையானவர். என்னையும், வையத்து முந்தி இருத்திய பெருமை அம்மாவையே சேரும். பூரீ துர்க்கா வேதாகம பாடசாலையை ஆரம்பித்து அதன் அதிபர், ஆசிரியராக பணியாற்றவைத்த பெருமை இன்றும் உலகெங்கும் சிவப்பணியில் உள்ள அப்பாடசாலை மாணவர்களால் அறியப்படும்.
கோவில் பெருவிழாக்களையெல்லாம் நெறிப்படுத்தும்
பணியினைத் தந்தும் தனது மணிவிழா, வைரவிழா, எண்பதாவது விழாக்களில் எல்லாம் என்னை முன்னிருத்தி பெருமைப்படுத்திய மனித தெய்வம், இன்று மேலுலகம் சென்றது காலத்தின் கட்டாயம். வையத்துள் வ்ாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
rGiồrLr மணிவிளக்கு
கல்லில் செம்பில் கடவுளைக் காண்பவர் காவி தண்டு கமண்டலம் பூண்பவர் செல்வம் கொண்டு பரம்பொருளுக்குத்தாம்
செய்யும் பாவத்திற் பங்கு கொடுப்பவர் சொல்லி னால்சமயப் பணி செய்வதால்
தூக்கி இந்தச் சமூகத்தை நிறுத்த நாம் வல்லர் என்றுமார் தட்டுவோர் தம்மிடை
வந்தனை எங்கள் மாதவப் பேறென!
அன்னை துர்க்கைதன் ஆலயத் தேற்றிய
அரிய தூண்டா மணிவிளக் காயினை நின்னுழைப்பினால் தொண்டினால் நேர்மையால்
நிமிர்ந்த திந்தத் தமிழினம் ; தாயென உன்னை ஏற்றுத் தலைமையைத் தந்தது
உச்சி மேல் வைத்துப் போற்றி உவந்தது பொன்மனத்தினாய் போயினை என்பது
பொய் எம் நெஞ்சினில் என்றும் இருக்கிறாய்!
போர்சிதைத்த இப் பூமியை விட்டு நீ
போக எண்ணிலை; பிறந்து வளர்ந்ததம் ஊர் தொலைத்து இன்னுயிரொரு கைப்பிடித்து
ஒடி வந்தவர்க் காறுதல் தந்தனை சோர்விலாய், உனை மூப்புவந் தெய்தவும்
சுடர்ந்தனை பசும் பொன்னென, தூயை நீ! ஆருளர் தங்கம்மா எங்கள் அன்னைபோல்
ஆ. நம் நாடு வறுமை அடைந்ததே
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 13
மறுமலர்ச்சியை ஏற்படுத் சைவத் தமிழ் உலகின்
கந்தையா நீலி பொதுச் செயலாளர், அகில இ
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சொற்பொழிவுப்பணி எழுத்துப்பணி முதல் ஆலய அறங்காவல் பணி, குழந்தைகளுக்கும் முதியோருக்கும் வாழ்வளிக்கும் மக்கள் பணி என்பவைகளை சிறப்பாகச் செய்து எம் மண்ணில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தெய்வத் திருமகள் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்னும் கிராமத்தில் 1925 ஆம் ஆண்டு தை மாதம் 07 ஆம் நாள் பிறந்த சிவத்தமிழ்ச்செல்வி அவர்கள் மல்லாகத்தில் அமெரிக்க மிசன் பாடசாலையிலும், விசாலாட்சி வித்தியாலயத்திலும், அளவெட்டி சதானந்தா வித்தியாலயத்திலும் தொடக்கக் கல்வியை கற்றார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலே இடைநிலைக் கல்வி பயின்று 1941 முதல் 1944 வரை இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய “பண்டிதர்” தேர்விலும், சைவ சித்தாந்த சமாஜம் நடத்திய “சைவப்புலவர்” தேர்விலும் வெற்றி பெற்றார். பண்டிதையாகவும் சைவப்புலவராகவும் திகழ்ந்த சிவத்தமிழ்ச் செல்வி 1946 முதல் மட்டக்களப்பு சென்ற். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையிலும், 1949 முதல் கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையிலும், பின்பு அளவெட்டி சதானந்தா வித்தியாலயத்திலும் 1964 முதல் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் ஆசிரியப்பணி செய்துள்ளார்.
சிவத்தமிழ்ச் செல்வியின் சொற்பொழிவுப் பணி அவருடைய அறிவுத்திறனையும் புலமையினையும் வெளிப்படுத்தியது. சைவ இலக்கியம், சைவ சித்தாந்தம், சமய ஒழுக்கம் முதலாகப் பல விடயங்கள் பற்றி இவர் யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல இடங்களிலும் சொற்பெருக்காற்றினார். எளிமையான தமிழ், இனிமையான குரல் எல்லோரையும் வசீகரித்தன. ஒவ்வொரு சைவத் தமிழ் வீட்டிலும் “தங்கம்மா’ என்னும் பெயர் இடம்பெறலாயிற்று. “தங்கம்மா அப்பாக்குட்டியிடம் படிக்கப் போகிறேன்’ என்று கூறும் அளவிற்கு அவருடைய சொற்பொழிவுப் பணி அமைந்தது. சிதம்பரத்தில் உள்ள உயர் பாடசாலை ஒன்றிலே அவர் ஆற்றிய உரை தமிழகமெங்கும் அவருடைய பெயர் விளங்கக் காலாயிற்று. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே அவர் பேசிய பொழுது தலைமை வகித்த பேராசிரியர் சோ.சுப்பிரமணியப்பிள்ளை பின்வருமாறு கூறினார்:
“இங்கே பேசியவர் ஈழத்துத் தங்கம். ஈழத்துத் தங்கம் என்றால் மிகுந்த மதிப்புடையது. 22 கரட் பெறுமதியுடையது. நம்பிக்கைக்குரியது. இந்தத் தங்கத்தின் விளக்கத்தை நீங்களும் கண்டீர்கள்’.
இவ்வாறு தமிழகத்திலே அறிமுகம் பெற்ற சிவத்தமிழ்ச்செல்வி மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் ஆகிய நாடுகளில் சொற்பெருக்காற்றி பலருடைய ஆதரவினையும், கெளரவங்களையும் பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டுக்கு ஈழத்திலிருந்து அறிஞர்களை
இந்து ஒளி
 

திய ஆன்மீக அன்னை TG)IJGDTsbDIJbTUIf
0கண்டன், இலங்கை இந்து மாமன்றம்
அழைப்பது வழக்கம். சிவத்தமிழ்ச் செல்வியின் ஆசிரியர் ழரீ சுந்தரராஜா அய்யங்கார், பண்டிதர் நாகலிங்கம், சேர் கந்தையா வைத்தியநாதன் என்னும் வரிசையில் சிவத்தமிழ்ச் செல்வியின் பெயரும் சேருகின்றது.
நாவலர் பெருமானுக்குப் பின் யாழ் மண்ணிலிருந்து பாரெல்லாம் சமயப் பிரசாரம் செய்த பெருமைக்குரியவர் கலாநிதி தங்கம்மா அம்மையார். அவரின் பிரசாரப் பணிகளைப் பலரும் பலவழிகளில் போற்றிக் கெளரவித்தனர். 1957 இல் தாயாரையும் 1960இல் தந்தையையும் இழந்த அவர் சென்னை சைவ சித்தாந்த சமாஜம் நடாத்திய சைவப் புலவர் பரீட்சையில் 1958இல் சித்தி பெற்றார். 1965இல் தமிழ்நாடு சிதம்பரத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். துர்க்காதேவி தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகமும் அதே ஆண்டில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. 1966இல் மதுரை ஆதீனத்தில் “செஞ்சொற் செம்மணி’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 1970 இல் ஈழத்துச் சிதம்பரத்தில் “சிவத்தமிழ்ச் செல்வி’ என்ற பட்டமும் பொன்னாடை பதக்கமும் பெற்றார். 1971ம், 1972ம், 1974ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூருக்குச் சொற்பொழிவுப் பயணம் செய்த அவருக்கு அங்கு “திருவாசகக் கொண்டல்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. 1973இல் தென்னிந்தியாவில் திருவிடைமருதூரில் நடைபெற்ற திருமுறைக் கருத்தரங்குக்குத் தலைமை தாங்கினார். சிவத்தமிழ்ச் செல்விக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பில் “சிவஞான வித்தகர்” என்ற பட்டம் வழங்கி பெருமை தேடிக்கொண்டது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் “துர்க்கா துரந்தரி” என்ற பட்டத்தினையும் வழங்கியது. 1980இல் தமிழ் நாடு ஆரணியில் மங்கையர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
1985இல் மணிவிழா நிகழ்வு இடம் பெற்றது. மணிவிழாவையொட்டி சிவத்தமிழ இன்பம், சிவத்தமிழ்ச் செல்வம், சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகிய மூன்று நூல்களும் வெளியீடு செய்யப்பட்டன. 1987இல் இலண்டன் பயணம் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி “இலண்டனில் ஏழுவாரம்” நூல் வெளியீடும் இடம்பெற்றது. 1991இல் “கலாசூரி” என்ற பட்டத்தை அம்மையாருக்கு அரசு வழங்கியது. 2000இல் சிவத்தமிழ்ச்செல்வி அம்மாவின் பவளவிழா மலர் வெளியீடு இடம்பெற்றது. 2001இல் “பெண் மைக்கும் இணையுண்டோ” நூல் அவரினால் வெளியிடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தினால் 04.10.1998 இல் கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
இருபத்தியேழு சொற்பொழிவுகள், பத்துச் சொற்பொழிவுகள், கந்தபுராணச் சொற்பொழிவுகள் என எட்டு நூல்களுக்கு இவர் ஆசிரியர். இவற்றுள் கந்தபுராணச் சொற்பொழிவுகள் 1978 இல் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. சமய இதழ்களிலும் கோயில் மலர்களிலும் பத்திரிகைகளிலும் பெருந்தொகையா கட்டுரைகள் எழுதியுள்ளார்.
சர்வதாரி வருட்ம் சித்திரை - ஆணி)

Page 14
தெல்லிப்பழையில் சிறிதாக இருந்த ஒரு கோயில் பாரெல்லாம் போற்றப்படும் பெரும் திருத்தலமாக வளர்வதற்குக் காலாயிருந்தவர் சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள். ஆசிரியராகவும், சமய பிரசாரகாரர் ஆகவும் இருந்த அவருடைய செல்வாக்கு தெல்லிப்பழையில் இளைஞரும் முதியோரும் ஒருங்கிணைந்த ஒரு பெரிய தொண்டர் சபை உருவாகக் காலாயிற்று. தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் வானளாவ எழும்பியது. இந்த அன்னையினுடைய ஆளுமை அந்த ஆலயத்தின் வளர்ச்சியுடன் சமூக வளர்ச்சியையும் சேர்ப்பதற்கு வழிகாட்டிற்று. ஆலய அறங்காவற்பணியுடன் சிறுவர், முதியோர் நிறைவாழ்வுப் பணியும் இணைந்தன. தேவி உறையும் ஆலயம் மக்கள் சேவை செய்யும் நிறுவனமாக எப்படி அமையும் என்பதற்குத் தெல்லிப்பழை தேவஸ்தானமும் அதன் அரவணைப்பிலேயுள்ள துர்க்காபுர இல்லங்கள் எல்லாம் சான்றுகளாக அமைகின்றன.
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் திருப்பணிச் சபை அங்கத்தவராக 1961இல் சேர்ந்தார். 1965இல் அத்திருத்தலத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 1966இல் துர்க்காதேவி தேவஸ்தான தனாதிகாரியாகப் பதவி ஏற்றார். 1977இல் துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபைத் தலைவர் பதவியை ஏற்ற அவரின் தலைமையில் 20.01.1977இல் சித்திரத்தேர் திருப்பணி வேலை ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் முதன் முதலாக அம்பாள் சித்திரத்தேரில் பவனி வந்தார். துர்க்காதேவி ஆலய மகாகும்பாபிஷேகம் 17.04.1981 அன்று நடந்தது. 1982இல் அவர் “துர்க்கா புஷ்கரணி” தீர்த்தக்குளப் பிரதிஷ்டையும் செய்வித்து சைவப்பெண் குழந்தைகளுக்கு துர்க்காபுரம் மகளிர் இல்லமும் அமைத்தார். 1986இல் ‘துர்க்காபுரம் மகளிர் இல்லம்’ இரண்டு மாடிக் கட்டடம் அவரின் முயற்சியால் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 1992இல் யுத்த அனர்த்தம் காரணமாக மகளிர் இல்லப் பிள்ளைகளோடு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெயர்ந்து அவர்களுடன் தங்கியிருந்தார். 1993 இல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தில் குண்டு வீச்சுக்களும் அனர்த்தங்களும் ஏற்பட்ட துயரச்சம்பவம் இடம்பெற்றது. அந்நிகழ்வு தெய்வத் திருமகளுக்கு ஏற்படுத்திய மன அழுத்தம் நாம் எலலோரும் அறிந்ததே. 1994இல் அவர் தன் பிறந்தநாள் அறநிதியத்தின் சார்பில் அறிஞர்களைக் கெளரவிக்க ஆரம்பித்தார். 1995இல் கைதடிச் சைவச் சிறுவர் இல்லத்திலும், உசன் கந்தசாமி கோயில் வளாகத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் நிலைமை ஏற்பட்டது. 1996இல் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியில் மீண்டும் வந்து தங்கினார். துர்க்காதேவி தேவஸ்தான மூன்றாவது மகா கும்பாபிஷேகம் 07.09.1997இல் இடம்பெற்றது. சிவத்தமிழ்ச் செல்வி சைவத் தமிழ் ஆய்வு நூலகம் உயர்நிதிமன்ற நீதியரசர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 07.01.2002ல் திறந்துவைக்கப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்காபுர அம்மன் தேவஸ்தான புண்ணிய பூமியிலிருந்து பாரெல்லாம் ஆன்மீக ஒளி பரப்பிய ஞான விளக்கு அணைந்து விட்டது. எனினும் அவர் எங்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் ஏற்றிவைத்த அந்த ஆன்மீகச் சுடர் என்றும் தொடர்ந்தும் ஒளிவீசும். அம்மையார் பூதவுடல் மறைந்துவிட்டாலும் அந்த புனித அன்னை எங்கள் இதயங்களிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் தொடர்ந்து வாழ்வார், வாழ்ந்து எங்களை வழிகாட்டி வருவார்.
தெய்வத்திருமகள் ஓர் ஆன்மீகப் பரம்பரையை உருவாக்கி வளர்த்து விட்டிருக்கிறார். அகில இலங்கை இந்து மாமன்ற உப
இந்து ஒளி
 

தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அந்தப் பரம்பரையின் தளபதியாக தொடர்ந்து மக்கள் பணியை வளர்த்தெடுப்பதற்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார் தாயார் தங்கம்மா.
எங்கள் சமூகத்திலே ஒரு சாதாரண ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய ஒருவர் கல்வி கேள்விகளிலே வல்லவராகவும், ஆலயப் பணியையும், சமூகப் பணியையும் இணைத்து உலகளாவிய புகழ் பெற்றவராகவும், தனக்குப் பின்னே இப்பணியைச் செய்ய ஒரு பரம்பரையையே உருவாக்கியவராகவும், சமயத்தொண்டுக்கும். சமூகத் தொண்டுக்கும் சைவ இலக்கிய சாஸ்திர சொற்பொழிவுத் தொண்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவராகவும் விளங்கிய சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவித்தது. அது அம்மாவுக்கு கிடைத்த கெளரவம் என்று சொல்வதிலும் பார்க்க யாழ் பல்கலைக்கழகம் தனக்கு ஒரு மகிமையைத் தேடிக் கொண்டது என்பதே பொருந்தும். அமெரிக்கா ஹாவாய் பூரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005ம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை வழங்கி கெளரவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்காவிலிருந்து இங்குவந்த வணக்கத்திற்குரிய தொண்டுநாதன் சுவாமிகள் அன்னையை நேரிலே தரிசித்து கெளரவச் சின்னத்தை வழங்கிக் கெளரவித்தமையும் குறிப்பிடத்தக்கது. இவர் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவராகவும். பின்னர் இறுதிமூச்சுவரை அறங்காவலர்சபை உறுப்பினராகவு மிருந்து மாமன்றத்திற்கு கெளரவம் தந்துகொண்டிருந்தார்.
அகில இலங்கை இந்து மாமன் றம் தனது பொன்விழாவையொட்டி “தெய்வத் திருமகள்’ என்ற பட்டத்தை வழங்கி அன்னையை கெளரவித்து பெருமைகண்டது. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி இலங்கை இந்துசமய வரலாற்றின் ஒரு பெரிய அத்தியாயம். பூரீலழரீ ஆறுமுகநாவலர் பெருமான் காட்டிய வழியில் யாழ் மண்ணிலிருந்து அவர் ஒரு புரட்சியை (இல்லை! வெறும் புரட்சியில்லை) ஒரு பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். மாமன்றப் பொன்விழாவையொட்டி அகில இலங்கை இந்துமாமன்றம் 2005 யூலையில் இந்து மாநாடு நடாத்தத் திட்டமிட்டது. 2005 ஜனவரியில் யாழ் பல்கலைக்கழக சமூகம், பெரியோர்கள். அறிஞர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி யாழ் மண்ணில் இந்து சமயத்திற்குப் பெருமை தேடித்தந்த இருவரைக் கெளரவிக்க விரும்புவதாக அங்கே விதந்துரைப்புக்களைக் கோரியபோது சகலரும் ஒருமனதாக சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியினதும், ஞானவித்தகர் அருட்கவி விநாசித்தம்பியினதும் பெயரையும் மட்டுமே முன்வைத்தனர். அதன்படி மாநாட்டில், மாநாட்டை ஆரம்பித்துவைக்க அழைக்கப்பட்டு உரை நிகழ்த்திய அன்னையைத் "தெய்வத் திருமகள்’ எனப் போற்றிப் பாராட்டிக் கெளரவித்தோம். அப்பட்டத்தை அளிக்கும் வேளையில் அவரை சம்பிரதாயமாக அறிமுகம் செய்து நெறிப்படுத்தும் அரிய பொன்னான சந்தர்ப்பம் சிறியேனுக்குக் கிடைத்தது ஆண்டவனருளே. எந்தவொரு பட்டமும் வேண்டாம் என மறுத்து நின்ற எங்கள் தாய், யாழ் மண்ணில் மாமன்றம் பொன்விழா மாநாடு நடாத்துகின்றபோது எமது பட்டத்தை ஏற்று மாமன்றத்தைக் கெளரவிக்க வேண்டும் என்று அன்புடன் மன்றாடி நின்றோம். அந்த அன்பு வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்ட மகிழ்வான கணப்பொழுது என்றும் எமது மனத்திரையில் இருந்து அழியமாட்டாது.
2 சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 15
2005 ஜூலை 15ஆம் திகதியன்று யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற அந்த இந்து மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிவத்தமிழ்ச்செல்வி, தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் நிகழ்த்திய தொடக்கவுரையில் கூறியிருந்தார்:-
“எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்ய விரும்ப வேண்டும். அந்த தர்மம் சைவத்திலே கூறப்பட்ட ஒரு ஒழுக்கம். தர்மம் தலை காக்கும் என்பது எங்களுடைய தாரக மந்திரம். அறஞ் செய்ய விரும்பு என்று சொன்னார் ஒளவையார். நீ செய்யாவிட்டாலும் கவலையில்லை, செய்ய வேண்டும் என விரும்பு என்று சொன்னார். அந்த விருப்பத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நல்ல தகுதிவாய்ந்த சமயம் எங்கள் சமயமாகும். இந்த சைவ சமயத்திலே பிறந்த பெருமை எங்களுக்குண்டு. அந்த வாழ்வை நாங்கள் மாசுபடச்செய்யக்கூடாது. இப்பொழுது மாசுபடச் செய்கிறார்கள் என்ற ஒரு கூற்றை அங்கும் இங்கும் பார்க்கிறோம், கேட்கிறோம். அந்த மாசு உண்மையிலேயே ஏற்படுத்தப்படக் கூடாது. நாங்கள் மாசுக்களைக் களைந்து நல்லனவற்றைச் செய்யக்கூடியதான ஒரு வாய்ப்பை உள்ளத்திலே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய வளர்ச்சி என்றால், அது தனிமனிதனின் வளர்ச்சி அல்ல. நாட்டின் வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சி. நான் வளர்ந்து, மக்களையும் வளர வாய்ப்பளிக்க வேண்டும். மக்களையும் வளர வாய்ப்பளிப்பது என்றால் சமூகப் பணியை நாங்கள் உயிராக மதிக்க வேண்டும். சமூகப் பணி செய்து ஈதல் அறம் தீவினை விட்டீட்டல் பொருள், எஞ்ஞான்றும் காதல் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம். அதனை நினைந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகைப் பயனையும் அனுபவிக்க வேண்டிய நிலையிலே முடிவான பயனுக்கு எம்மை இழுத்துச் செல்கின்ற வீட்டின்பத்திற்கு எங்களை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த உலகம்தான் எங்களுக்கு இடம் தந்திருக்கிறது. இங்கிருந்துதான் நாங்கள் எங்களை தகுதியுள்ளவர்கள் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
‘நான் இப்போது மோட்சத்திற்குப் போக விரும்பவில்லை. எத்தனை பிறவி எடுத்தாலும் மக்களுக்கு தொண்டு செய்யத்தான் விரும்புகிறேன்’ என்றார் சுவாமி விவேகானந்தர். அந்தக் கூற்றிலே எத்தனையோ உண்மை இருக்கிறது. நாங்கள் மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் அதன் பயனை இறைவன் எங்களுக்குத் தருவான்’
இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிவத்தமிழ்ச்செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகத்தை 2002இல் தெல்லிப்பழையில் திறந்துவைத்தபோது கூறினார்:
“தமிழும் சைவமும் இன்று போதிய அளவு பேணப்படாது இருப்பது எங்கள் துர்ரதிர்ஷ்டமாகும். பேணப்படாது விட்டிருந்தாலும் பாதகமில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் தமிழுக்கும் சைவத்திற்கும் அழுக்கும் இடர்பாடும் தரப்பட்டுள்ளன. யாழ் நூலக எரிப்பு, திருக்கோயில்கள் கேட்பாரற்றுக் கிடக்குந் துர்நிலை, நனையும் ஆடுகளைக் கண்டு கதறி அழும் ஓநாய்க் கூட்டங்களின் அட்டகாசம் என்பன இவற்றுள் சில. அவற்றைவிட போரானது பெண்களையும், குழந்தைகளையும் வயோதிபர்களையும் வெகுவாக வாட்டி வதைத்து இம்சித்துள்ளது. தமிழ் மொழிக்கும் சமய அறிவுக்கும், சமய
(இந்து ஒளி 13
 

வாழ்விற்கும், சமூக வாழ்விற்கும் பெருத்த இடர்பாடு ஏற்பட்டிருக்கும் அண்மைக் காலத்தில் எங்களுக்கெல்லாம் திலகவதியார் போன்று எம்மை சைவத்தின்பால் ஈர்க்கவும், எம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிவத்தமிழ்ச்செல்வியார் அரும்பாடுபட்டு வந்துள்ளார். இடர்பட்ட இம் மக்கள் சேவையே இறைவனின் சேவை என்ற பண்டைய பண்பாட்டின் வழிநின்று பல அருஞ்சேவைகளை அண்மைக்காலமாகச் செய்துவருகின்றார்’ m
தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமகன் சைவ சித்தாந்த கலாநிதி, இலக்கிய கல்ாநிதி டி.என்.இராமச்சந்திரன் பின்வருமாறு போற்றி ஏற்றிய பெருமைக்குரியவர் எமது அம்மையார்.
“சைவச் செல்வியார் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்களை நான் பெரிய புராணப் பெண்மணிகளில் ஒருவராகவே காண்கிறேன். திருமுறையும் மெய்கண்ட சாஸ்திரமும் அவருடைய மூச்சுக்காற்று. எம் இறைக்கும் சைவ அடியார்களுக்கும் பணி செய்யவே அவருக்கு கருவி காரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இச் சூழலிலும் இறைபணி இயற்றிவரும் இவருக்கு நீண்ட ஆரோக்கியமும் மங்களகரமுமான வாழ்வைவையும் அம்மையப்பர் அருளவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்’.
தெய்வத் திருமகளைப் போற்றிடப் புலவர் ம.பார்வதிநாதசிவம் அவர்கள் பாடிய பாடலிலிருந்து சில வரிகள் இதோ.
“எது தர்மம் எது தர்மம் என அறியும் ஆர்வத்தோர் தங்கட் கெல்லாம் இது தர்மம் இது தர்மம் எனத் தமது
சொற்பொழிவால் வாழ் வாற்காட்டிப் பொது வாழ்வில் தனி வாழ்வில் தர்மத்தை
என்றென்றும் விளக்கி நிற்கும் அதி உயர்ந்த சிந்தனை சேர் சிவத்தமிழின்
செல்வி புகழ் வாழ்க நீடே'
இப்போது அமரத்துவம் அடைந்துவிட்ட பேராசிரியர் பிரம்மழரீ, கா.கைலாசநாதக்குருக்கள், அம்மையாரின் கந்தபுராணச் சொற்பொழிவுகள் தொகுப்பு நூலுக்கு வழங்கிய கருத்துரையில்,
* இவ்வுரைகளின் ஆசிரியரைத் தமிழ் கூறும் நல்லுலகம் சிறப்பாகச் சைவ உலகம் நன்கு அறியும். இவர் பெரிதும் பேச்சுத் திறமை படைத்தவர். சைவ சாஸ்திரங்களில் துறை தேய்ந்தவர். சைவ ஒழுக்கத்தையும் பெரிதும் பேணி நிற்பவர். சைவத் தொண்டொன்றே இலட்சியமாக “என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பது குறிக்கோளாகச் சைவத் தொண்டிற்கே தம்மை அர்ப்பணித்துச் சைவ வாழ்வு வாழ்ந்து வருபவர். தம்மிடம் சிறந்து விளங்கும் சொற்செல்வத்தை இறைவன் புகழ் பரப்புவதற்காகவே செலவு செய்பவர். சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் செய்துவரும் இத்திருத்தொண்டின் தரம் அளப்பரியது” என்கிறார்.
தலங்கம ஜெயந்திரபுரத்தில் இந்து ஆன்மீக ஒளிபரப்பி அமரத்துவம் அடைந்துவிட்ட சமய மஞ்சரி ஆசிரியர் உயர் திரு.க.இராமச்சந்திரா துர்க்கா துரந்தரியைப் பற்றி குறிப்பிடுகையில் கூறியிருந்தார்.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 16
s
‘. தமிழ்ப் பெண்ணினம் சிறக்க வாழ்ந்த சைவ மங்கையர் திலகம். அன்னாருக்குச் சில ஆதீனங்களும் சங்கங்களும் சமய நிலையங்களும் பல பட்டங்களைச் சூட்டிப் பாராட்டியுள்ளன. எம்மைப் பொறுத்தமட்டில் அம்மையாரை பூரீ துர்க்கா துரந்தரி என அழைப்பதுடன் பூரண திருப்பியடைகிறோம். அன்னாரின் வாழ்க்கை அத்தேவியின் கையிற்கே அர்ப்பணிக்கப்பட்டிருப்பதை உள்ளுணர்வில் தெரிந்துகொண்ட காரணத்தால் இப்படி வரைகிறோம்.”
மேற்கூறியவண்ணம் சகலரும் போற்றி வணங்கிய - எங்கள் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய - ஓர் ஆன்மீக அன்னை அருளொளியாக ஒளிபரப்பி எங்களுக்கு வழிகாட்டி மிளிர்ந்தார். அவர் ஒரு வரலாற்று நாயகி. அந்த ஒளி விளக்கு 1506.2008 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அணைந்துவிட்டது. இருளில் தவிக்கும் அனாதைகள் நாங்கள். வேதனைகளும் சோதனைகளும் வாட்டும் ஒரு சகாப்தத்தில் இது எங்களுக்கு ஒரு பேரிடி. 一令一令一令一令一伞一令一夺一伞一令一令一令一令一令一伞一令一令一令一令一令一令一●
ஆன்மீகப் பாதைக்கு
திருமதி கெளர்
சிரியர் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் என்றாலே எம்
கண்களின் முன் நிற்பவர் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்தான்.
அன்னையவர்களைப்பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரை நான் நேரில் சந்திக்கவில்லை என்ற குறை எம் மனதில் நீண்டகாலமாக இருந்தது. 2003ம் ஆண்டு துர்க்கை அம்மன் ஆலயத்துக்குச் சென்ற போது எப்படியும் அன்னையவர்களைச் சந்திக்க வேண்டும் என அம்மனை மனதார வேண்டிக் கொண்டேன். நல்ல எண்ணங்கள் உடன் நிறைவேறும் என்பதுபோல அன்று அவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கிடைத்தது. அன்பான ஒரு தாயாராக அவரைக் கண்டேன். அடக்கமான புன்சிரிப்பைக் கண்டு ஆனந்தப்பட்டேன். மகிழ்ச்சியுடன் பெற்ற பிள்ளைகளை வரவேற்பது போல எம்மை அன்புடன் வரவேற்று தன்னருகிலேயே அமரும்படி பணித்தார். என் கணவரிடம் அச்சக வேலைகளைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தார்.
நான் தொகுத்த பக்திப் பூக்கள் - ஆஞ்சநேயர் வழிபாடு, திருவிளக்குப் பூஜை புத்தகங்களை அவரிடம் கொடுத்து, எனது மூன்றாவது தொகுப்பாகிய இராகு காலப் பூஜை தொகுப்புக்கு உங்கள் ஆசி வேண்டும் என்றபோது, என்னைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு, பிள்ளைக்கு தாயின் ஆசி என்றைக்குமே உண்டு எனக் கூறி அந்த இரு நூல்களையும் எடுத்துப் பார்த்தார். என்னுடைய சிறு முயற்சிதான் அது என்ன சொல்லப் போகிறாரோ எனப் பயந்த என்னிடம் முகம் மலர அருமையான தொகுப்பு நிறையப்புத்தகங்கள் வாசித்திருப்பீர்கள் போல் இருக்கு. இப்படி எளிய நடையில் எழுதினால்தான் மக்கள் மனதில் பதியும், நிறைய எழுதுங்கள்’ என அன்புடன் கட்டளையிட்டார். அவருடைய அன்பான உபசரிப்பில் ஆசிச்
இந்து ஒளி
 

இப்பேரிழப்பினை பொறுக்க மனமில்லை. எங்களுக்கு சக்தி இல்லை.
יין
"ஆண்டவா எங்களைக் காப்பாற்று நிற்கின்றோம்.
என ஏங்கிப் பிரார்த்தித்து
வடக்கை குண்டு மழைகளும் கொடும் யுத்தமும் உலுக்கிக் கலக்கியபோதும் தான் வளர்த்துவரும் பிள்ளைகளை உயிரிலும் மேலாக நினைத்து தன் உயிரை துச்சமென மதித்துக் காட்பாற்றினார். பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து அவர்களை வாழவைக்க நேரிட்டபோதும் மனத்துணிவுடன் செயலாற்றிய துணிவுமிக்க பெருமாட்டி அவர். “மக்கள் சேவையே மகேஸ்வரன் பூசை” என்ற புனித வாக்கிற்கு வடக்கில் உண்மையில் உயிர் தந்தார், சிவத் தமிழ்ச்செல்வி. அந்த வழியில் ஏனைய ஆலய தர்மகர்த்தாக்களும் இந்து நிறுவனங்களும், தொண்டாற்ற வேண்டும். ஒரு சிலர் அந்த வழியில் நின்றாலும் அது போதாது. இன்னும் அப்பணி வளரவேண்டும். அதுவே அன்னையாருக்கு நாங்கள் செலுத்தும் உன்னத அஞ்சலியாக அமையும்.
வழிகாட்டிய அன்னை
விமலேந்திரன் பக்திப்பூக்கள்
செய்தி எழுதி தாருங்கள் என கேட்பதைக் கூட மறந்து திரும்பிவிட்டேன்.
கொழும்பு திரும்பிய எனக்கு - நான்கு நாட்கள் கழித்து ஒரு தபால் உறையை ஒருவர் கொண்டு வந்து தந்தார். பிரித்துப்பார்த்த நான் உண்மையில் திகைத்துப் போய்விட்டேன். காரணம் நான் கேட்க எண்ணிய ஆசிச் செய்தியை அருமையாக எழுதி அனுப்பியிருந்தார். துர்க்கை அம்மனின் 'இராகு காலப் பூஜை நூலுக்கு, அம்மனே அன்னை வடிவில் ஆசிச் செய்தி அனுப்பியதைப் போல் இருந்தது.
அவர் மறைந்துவிட்ட இந்த நேரத்தில் இதையெல்லாம் நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. என்னுடைய நூலாகிய பக்திப்பூக்கள் சிறிய தொகுப்பு நானும் சிறியவள்தான். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எழுதித்தாருங்கள் என நான் கேட்காமலே ஒரிரு நாட்களில் அனுப்பிவைத்த அன்னையின் அன்பை வேறு யாரிடம் நான் காணப் போகிறேன்? தலை கவிழ்ந்து நிற்கும் ஆலயமணியின் ஒசை வெகுதூரம் கேட்பதுபோல, அடக்கமாக வாழ்ந்த அன்னையின் மகத்தான ஆன்மீகத் தொண்டு உலகமெலாம் பரவி நிற்கிறது. ஆலயத்தில் - பிள்ளைகளிடம் அவர்காட்டும் தாய்மை உணர்வு பாசம், பரிவு, கண்டிப்பு அனைத்தையும் கண்டபோது, மன அழுக்குகள் நீங்கி உள்ளம் தூய்மைபெற அவரின் பங்களிப்பு யாரும் செய்யாத ஒன்று என உணர்ந்து கொண்டேன். ஏழைக்கு செய்யும் தொண்டு, தெய்வத்துக்கு செய்யும் தொண்டல்லவா? ஆன்மீகப் பாதையில் அந்தக் குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள் எனப் புரிந்து கொண்டேன். தம்மை வளர்த்த அந்த அன்புத் தாய்க்கு அவர் காட்டிய அந்த ஆன்மீகப் பாதையில் சென்று அவர் பெயர்நிலைக்க வாழ்ந்து காட்ட வேண்டும் அவர் காட்டிய பணி தொடர வேண்டும் கண்ணிர் மல்க பக்திப் பூக்களை அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்! 14 சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 17
சிவஞானச் செல்வர்க கெளரவ பொதுச் செயல
அன்பே வடிவமானவன் சிவபெருமான். அன்பு இன்றேல் உலகமே இல்லை. அன்பை வளர்ப்போர் இறைவன் அருள் பெறுவர். இதைத் திருமூலர் கீழ்வருமாறு கூறுகின்றார்.
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
- திருமந்திரம் -
“அன்பே சிவம்” என்பதை பலர் அறியாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்புதான் சிவம் என்பதை யாவரும் அறிந்துவிட்டால் அவர்களே அன்புருவான சிவமாய் வாழ்ந்திருப்பார்கள். இதற்கேற்ப உலகம் உய்வதற்கும், அறம் காப்பதற்கும் உதித்தவர் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி. தன் வாழ்வையே அர்ப்பணித்த தெய்வப்பிறவி என்று கூறலாம். அன்னாரை சிவத்தமிழ்ச்செல்வி என்று அழைப்பது எத்துணை பொருத்தமாகும் என்பதை சைவ மக்கள் நன்கு உணர்வர். தெல்லிப்பழையூரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பணிகளுக்குத் தன்னை பூரணமாக அர்ப்பணித்ததோடு, தாய்மொழியான செந்தமிழையும் வளர்த்து, சைவ சமயப் பணிகளையும், சமூகப் பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி வந்தார். அவர் மேலும் பல அறக்கொடைகளை வழங்கியும் அறிஞர்கள், அந்தணர்களை கெளரவித்தும் அல்லாமல் கல்வி சம்பந்தமான செயற்பாடுகளுக்கு நன்கொடைகளையும் வழங்கி வந்தார். ஒரு சமயம் ஒர் அறக்கொடை வழங்கல் வைபவத்தில் சொற்பொழிவாற்றுகின்ற பொழுது “அறக்கொடை வழங்கல் வைபவம் ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 7ஆம் திகதி சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை தனக்கு பூரணமாக உள்ளது” என குறிப்பிட்டதை இங்கு நினைவூட்டுவது பொருத்தம். அம்மையார் அவர்கள் “சமூகத்தின் பெரும் சொத்துக்கள் இளையவர்கள். இன்றைய இளைய தலைமுறை சிரமதானப் பணிகளில் ஈடுபடும் ஆர்வம், சமய விழாக்களை நடாத்தும் ஆர்வம் அருகிவருவது கவலைக்கிடமாகும். இவர்களை நன்னெறிப்படுத்துவதற்கு சமய அமைப்புக்கள் உன்னதமாக செயற்படுவது அவசியமாகும்” என்று அடிக்கடி கூறிவருவார்கள். மேலும் இளைய தலைமுறையினரின் கட்டுப்பாடு, ஒழுக்கம், சமூக உணர்வு குறைந்து போகிறமையை வேதனையோடு வெளிப்படுத்தினார்.
அன்னை சிவத்தமிழ்ச்செல்வி உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்ற செய்தி கொழும்பை அடைந்தபோது அம்மா நலம் பெற வேண்டும் என்று எமது அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கெளரவ பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் எம்மிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவித்தார். அத்தருணமே அன்னையார் விரைவில் சுகம் பெற வேண்டும் என்று கோயில்களிலும், சமய சங்கங்களிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தோம். குறிப்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரார்த்தனை மண்டபத்திலே அமைந்திருக்கும் பூரீ சிவகாமி அம்பாள் சமேத பூரீ
(இந்து ஒளி
 

ன்னை சிவத்த
※
ກ. செல்வி
இராஜபுவனிஸ்வரன் ளர், விவேகானந்த சபை
நடராஜப் பெருமானுக்கு பூசையும், பிரார்த்தனையும் செய்தோம். அம்மா அவர்கள் பூரண நலத்துடன் நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.
அடுத்து எமக்கு கிடைத்த செய்தியின் பிரகாரம் அவர்கள் சுகம் பெற்று ஆலய சூழலுக்கு வந்து மீண்டும் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். இதற்குக் காரணம் அவர்களின் தூய வாழ்க்கை, அவர்களுக்காக பிரார்த்தனை செய்த உயர்ந்த உள்ளங்கள் என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் படைத்தல் தொழிலைச் செய்யும் எல்லாம் வல்ல சிவபெருமான் ஒழித்தல் செயலையும் காலம் வரும்போது செய்வார் என்ற கூற்றுக்கிணங்க சிவத்தமிழ்ச் செல்வி சிவபதம் அடைந்துவிட்டார் என்ற செய்தியினை ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று மதியவேளையிலே எம்மைத் திடுக்கிடும்படி கெளரவ பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் தொலைபேசியிலே எமக்கு அறியத் தந்தார். அச்சந்தர்ப்பத்தில் அன்னையின் மறைவு உலகத் தமிழ் மக்கள் அனைவரையுமே வேதனையில் ஆழ்த்தப் போவதுமல்லாமல் அவர்கள் வளர்த்து வந்து சிறார்களின் நிலை, முதியோர்களின் நிலை, திக்கற்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளின் நிலை எல்லாம் எமது மனக்கண் முன் தோன்றியது.
ஆண்டவன் ஒரு உயிரை எடுத்துக்கொண்டு இன்னுமொரு உயிரை உலகத்துக்கு அளிப்பது வழமையாகும். எனவே அம்மையார் அவர்கள் நிதமும் தொழுதுகொண்டு வந்த துர்க்கை அம்பாள் கண்டிப்பாக ஓர் வழியை காட்டுவாள் என்ற நம்பிக்கையோடு விவேகானந்த சபையின் அனுதாபச் செய்தியை எழுத முயன்றேன். பத்திரிகைகளுக்கு விடுத்திருந்த அந்தச் செய்தியை கீழே தருகிறோம்.
அம்மையார் அவர்கள் கொழும்புவிவேகானந்த சபையுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். கடந்த தசாப்தங்களுக்கு மேலாக எமது சபையின் காப்பாளராக இருந்து வந்திருக்கிறார்கள். இவரது சைவப் பணி குறிப்பாக ஆத்மிக சொற்பொழிவுகள் எமது சபையின் மேடையில்தான் ஆரம்பித்ததாக அடிக்கடி அவர்கள் குறிப்பிடுவதை நாம் கேட்டிருக்கின்றோம். சைவத் திருமுறைகளில் ஆளுமை கொண்டவர்கள் சபை ஆண்டுதோறும் நடத்தி வருகின்ற திருமுறை விழாக்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது வழமையாக இருந்தது. அவரது குரல் வளம், அன்னார் திருமுறைகளை தாம் பேசுகின்ற பேச்சில் மேற்கோள்காட்டி திறம்பட ஒதுகின்ற சிறப்பு அவரையே சாரும். அவர் சிறந்த ஓர் சைவ சமய சொற்பொழிவாளர். இவரது பேச்சுவன்மையை உலகவாழ் சைவ மக்கள் போற்றுவார்கள். அதுமாத்திரமல்ல தமிழர்கள் வாழுகின்ற நாடெல்லாம் சென்று சொற்பெருக்காற்றி வருவார்கள். இவரைப் பாராட்டும் வகையில் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம் 'கலாநிதி பட்டத்தை வழங்கியது. அவர் கொழும்பில் பாத்திமா கல்லூரியின் ஆசிரியராக கடமை புரிகின்ற காலத்தில் விவேகானந்த சபைக்கு அடிக்கடி வருவதுமல்லாமல் எமது அகில இலங்கை சைவசமய
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 18
பாடப் பரீட்சைக்கும் உதவியுள்ளார்கள். அவரது பதினான்காவது வயதில் சபை நடத்துகின்ற சைவ சமய பாடப் பரீட்சையில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிக் கொண்டார்கள். சபையின் நூற்றாண்டு விழா யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது அவரினாலேயே அமைக்கப்பட்ட நல்லூரில் அமைந்துள்ள மண்டபத்திலே தாமே தலைமை தாங்கி நடத்தி வைத்த பெருமை அவரைச் சாரும். அன்று சமயக் குழந்தைகள் அத்தனையும் சைவசமய பாடப் பரீட்சையில் தோற்ற வேண்டும், சித்தியெய்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலே அவர்களாற்றி வந்த தொண்டை ஈடுசெய்வதற்கு எவராலும் முடியாது. எல்லோருக்கும் அன்னையாகவும் எல்லோருக்குமே வாழ்க்கையின் வழி காட்டியாகவும் இருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சமும் கொடுத்து வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நெறி சைவ சமய நாயன்மார்களை பின்பற்றியதாகவே அமைந்துள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைவதற்கு உலக
தாங்கம்மா நினைவையினித் தாயாள் துர்க்கை தாள்தருமே!
சி.சிவசரவணபவன் (சிற்பி)
சுக்கா னில்லாக் கலம்போலே சுழலும் பாலர் முதியவரைத் துர்க்கா புரமும் ஆலயமும் துடுப்பா யுதவும் கேந்திரமாய் எக்கா லத்தும் இலங்கிடவே எண்ணிப் பணிகள் பலபுரிந்த தக்காள் தங்கம் மாவென்றே தாரணியென்றும் உனைப்போற்றும்!
உய்யும் வழிகள் ஒன்றுமிலார் உண்மை யாக நலம்பெறவே செய்யும் பணியைத் திட்டமிட்டே சீராய் என்றுஞ் செய்துவந்தாய் தெய்வப் பணியே திருப்பணியாய் தீனர்க் காற்றும் பணியுமதே வையத்துள்ளோர் நெஞ்சினிலே வாழும் வழியைக் காட்டிவிட்டாய்!
உன்கையினிலே பணம்கொடுத்தல் உறுதிப் பணியை உருவாக்கும் அன்பிற் கேங்கும் அகதிகளை அநாதை ஆதரவற்றோரை துன்பந் துயராற் துடிப்போரைத் தொட்டுத் தூக்கிச் சுகம்செய்வாய் அன்னை தங்கம் மாவென்றே அழைப்போர் உலகிற் பலகோடி
சொல்லாற் பலவா யிரஞ்சேர்த்தே சுகமாய்ச் சாதனை பலவாக்கி நல்லார் என்பார் இவரென்றே நாடும் ஏடும் நயந்துரைக்க எல்லார் இதயங்க களிலென்றும் ஏற்றம் பெற்றே இருப்பவளே இல்லை நீயில் உலகினிலே என்பார் இல்லை, உண்மையம்மா!
தங்கம் மாவென்றாற்சைவப் பணியும் தமிழும் நினைவுவரும் தங்கம்மாவென்றாற்பெண்மைச் சிறப்பும் உயர்வும் நினைவுவரும் தங்கம் மாவென்றால்நீதி நேர்மை ஒழுக்கம் நினைவுவரும் தங்கம் மாவின் நினைவையினித் தாயாள் துர்க்கை தாள் தருமே
இந்து ஒளி
 

சைவ மக்களின் பிரார்த்தனை இருக்கும் என்பதில் ஐயமும் இல்லை. கண்டிப்பாக அவர் வழியில் தொடர்ந்து கடமைகளை சிறப்புற நடத்துவதற்கு எல்லாம் வல்ல துர்க்காதேவி வழிகாட்டுவாராக.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் அன்னையாரைப்பற்றி ஒர் கட்டுரை பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அவருடைய கருத்துக்கள் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளன. குறிப்பாக இந்து மதப் பண்பாட்டில் இரு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று இந்துக்களால் வழிபடப்படும் ஒரு பெண் தெய்வத்தின் வழிபாடு பற்றியது. மற்றையது யாழ்ப்பாண பிரதேசத்தின் கோயில் முகாமையின் மாற்றத்தைப் பற்றியும் இவை காத்தின் போக்கை உணர்த்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இக் கருத்து முற்றிலும் உண்மையானது என்பதை உணரமுடிகிறது.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சிவபதம் எய்தியுள்ளார்கள். அவர்களின் ஆத்மா மறைந்தாலும் அவர்களின் புகழ் என்றும் உலகில் வாழும்.
தெய்வ அருள் பெற்றுத் திகழ்ந்தனையே திகைக்கின்றோம்!
கவிஞர் குமாரவேலு சரவணபவானந்தன் கோட்டக் கல்விப்பணிப்பாளர், வேலணைக் கோட்டம்.
தவம் பெற்றுத் தெல்லிநகர் தந்த தங்கம் அப்பாக்குட்டி சிவம் பெற்றுச் சிவத்திருவாய்ச் சிவச் செல்வியானாய் நவம் நவமாய் நன்கு தமிழ் செய்து நனி சிறக்க பவம் அகற்றும் பண்புடனே பவனி வந்தாய்!
சைவம் தழைத்தோங்கச் சார்ந்து தமிழ் குழைத்து வையம் உய்யவென வான்முட்டப் புகழ்படைத்தாய் தெய்வ அருள் கிடைத்துத் தேன்குழைத்துத் தீந்தமிழால் உய்ய வழி சமைத்தாய் உத்தமியே சிவத்தமிழே
ஆலயங்கள் தோறும் அறப்பணிகள் தான் வளர கோலமிகு சைவத் திருநீற்றின் ஒளி விளக்காய் சீலமிகு அறக்கொடைகள் சிந்தைதனில் விதைத்து மேலானபணி செய்த மேன்மைமிகு துரந்தரியே!
ஆதரவுதானற்ற அன்புக் குழந்தைகளை யரவணைத்து பேராதரவு தந்து பேணி அன்னையில்லம் பிறர் வியக்க நேரான பாதையினில் நேர்த்தியுடன் நிதம் போற்றத் தாயாக நின்ற தயாபரியே! கலாநிதியே!
சைவம் தமிழிரண்டும் சார்ந்து கண்ணிரண்டாய் மெய்யில் நீற்றழகும் மேன்மையுறு தவக்கோலம் கையில் திருமுறைகள் புராணங்கள் சாத்திரங்கள் தெய்வ அருள்பெற்றுத் திகழ்ந்தனையே திகைக்கின்றோம்
s சர்வதாரி வருடம் சித்திரை -
த Q5

Page 19
சிவனுடன் கலந்த
A வைத்திய கலாநிதி. தலைவர், இந்து ஆலயங்களின்
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தமிழுக்கும் சைவத்துக்கும்,சமூகப்பணிகளுக்கும் அர்ப்பணித்து ஒரு துறவியாக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது பேச்சாலும் எழுத்தாலும் சைவத்தை வாழ்வித்த துர்க்கா துரந்தரி, துர்க்கை அம்மன் கோவிலின் அறங்காவல் சபை தலைவியாகவிருந்து பெண் தெய் வழிபாட்டை யாழ்ப்பாண மண்ணில் நிலைபெறச் செய்தவர். சமூகத்தொண்டும் சைவ வாழ்வே, என எம் சைவ சமயத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தவர். ஆலயப் பணியை கிரியைகள், சடங்குகள் என்பதோடு மட்டும் நிறுத்தாமல் அதற்கு அப்பால் சென்று கோவில் ஒரு சமுதாயக் கூடமாக விளங்க வேண்டும் என்ற மகத்தான கொள்கைக்கு உயிர் கொடுத்து, குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் வாழ்வளிக்கும் ஒரு நற்பணியை இந்த மண்ணில் நிறுவியவர். ஒலைக்கொட்டிலாகவிருந்த துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தை அழகிய திருக்குளத்துடனும், இராஜ கோபுரத்துடனும் கூடிய தேவியுறையும் ஆலயமாக உலகமெல்லாம் போற்றப்படும் திருத்தலமாக வளர்த்தெடுத்தவர். 25 வருடங்களுக்கு முன்பு ஒன்பது குழந்தைகளுடன் ஆரம்பித்த துர்க்கை அம்மன் இல்லம் இது வரை காலமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு வாழ்வளித்து இன்று நூற்றுக்கணக்கான பிள்ளைகளுடன் இருமாடிக் கட்டிடமாக பரிணமித்துள்ளது. இந்த 25 வருடகால கொடும்யுத்தத்தின் மத்தியிலும் இந்தக் குழந்தைகளை உயிரினும் மேலாக நினைத்து காக்கவென்று இராமநாதன் கல்லூரி விடுதிச்சாலைக்கு இடம்பெயர்ந்து அதன்பின் கைதடி சிறுவர் இல்லத்திலும், உசன் கந்தசாமி கோவில் வளாகத்திலும் தங்கவைத்து காப்பாற்றி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் அருளினால், மீண்டும் அவரின் காலடிக்கே சென்று, கோவிலையும் புனரமைத்து பிள்ளைகளையும் பராமரித்த தெய்வத்தாய்.
சிவத்தமிழ்ச் செல்வியின் மன “சிவத்தமிழ் ஆரA3
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்களின் மணிவிழா 1985ம் ஆண்டில் நடைபெற்றது. இது தொடர்பான செயற்பாடுகளுக்காக அப்போது யாழ். பல்கலைக்கழக பதிவாளராகவிருந்த திரு. வே. ந. சிவராசா தலைமையில் மணிவிழாச் சபையொன்று அமைக்கப்பட்டிருந்தது.
சிவத்தமிழ்ச் செல்வியின் மணிவிழாவில் மணி மகுடமாகக் குறிப்பிடக் கூடியதாக சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிவத்தமிழ் இன்பம், சிவத்தமிழ்ச் செல்வம் ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. அறிஞர் பெருமக்களது கட்டுரைகள் அடங்கியதாக “சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்” என்ற பெயரில் வெளிவந்திருந்த நூலில் சிவத்தமிழ்ச் செல்வியின் கட்டுரையுடன் சேர்த்து மொத்தமாக 26 கட்டுரைகள் அடங்கியுள்ளன.
(இந்து ஒளி
 
 

p. கதிர்காமநாதன், ஒன்றியம், மன்னார் மாவட்டம்)
ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியோர் என்ற அத்தனைபேரையும் அரவணைக்கும் துர்க்கை அம்மன் இல்லம். இலக்கியங்களை வெளியிடுவதற்கான ஓர் அச்சகம், சைவ நூல்களைக் கொண்ட ஒரு பெரிய நூலகம் - இவையெல்லாம் இவருடைய சாதனைகள். இவருடன் கூட இருந்தவர்களால் தெய்வத்தாயின் பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக ஆக்க நிறுவப்பட்டதே அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை பின்தங்கிய வைத்தியசாலைக் கட்டிடங்களைப் புனரமைத்தும், வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களை அன்பளிப்புச் செய்தும், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியும், சிறந்த சைவநுால்களை வெளியிட்டும், சைவ அறிஞர்களைப் பாராட்டுவது போன்ற நற்பணிகளையும் ஆற்றி வருகின்றது.
துர்க்கா துரந்தரி தாயார் அவர்கள் மீளாமயக்கத்தில் இருந்த காலத்தில் அவருக்கு தெய் ஆசி வேண்டி மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினால் பதினொரு ஆலயங்களில் கூட்டுப் பிார்த்தனைகளும், விசேட அபிசேகப் பூசைகளும் நடாத்தப்பட்டன. ஒரு கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது. சிவத்தமிழ்ச் செல்வி அமரராகி விட்ட நிலையில் 22.06.2008 ஞாயிறு காலை பெருந்தொகையான சைவமக்கள் பங்குபெற ஒரு இரங்கல் கூட்டமொன்று மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
மனித ஆற்றலுக்கு அப்பால் சிவபக்தியாக மட்டும் நில்லாமல் சிவனாகவே நின்று அன்னை செய்த சாதனைகளை உலகமே இன்று வியந்து பாராட்டுகிறது.
ளிவிழாவில் ஒரு மணிமகுடம்
O 99 ச்சிக் கட்டுரைகள்
இந்த கட்டுரைத் தொகுப்பு நூலின் வெளியீட்டுரையில் மணிவிழாச் சபைத் தலைவர் திரு.வே.ந. சிவராசா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“இம் மணிவிழாவின் ஓரங்கமாக அமைந்ததே “ஆராய்ச்சிக் கட்டுரைகள்” என்ற தொகுப்பு நூல் வெளியீடாகும். மணிவிழா நாயகி சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் விருப்பத்தையேற்றுப் பல பேரறிஞர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று இந்நூலாக வெளியிடுகிறோம். பல்கலைக்கழக மாணவரும், சைவசமய ஆராய்ச்சி வல்லுநரும், திருக்கோயில்களை நெறிப்படுத்துபவர்களும் படித்துப் பயின்று பயனடையக்கூடியதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.”
இந்த கட்டுரைத் தொகுப்பு நூல் காத்திரமானதாக அமைந்திருப்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி}

Page 20
சிவத்தமிழ் தந்த 6
முத்தையாகத் செயலாளர்,உலக பிரதிச் செயலாளர், அகில
‘ன்ெனை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே” என்றார் திருமூலர். தமிழுக்கும் சைவத்திற்கும் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு தன் செஞ்சொற் செம்மணிக் குரலால் சிவத்தமிழ் பெருமைகளையும் சமய விழுமியங்களையும் ஈழம் முழுவதும் மட்டுமன்றி கடல் கடந்தும் அருள்மொழி வழங்கிவந்த தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய மறைவுச் செய்தி கேட்டு துயருறும் சைவத்தமிழ் கூறும் நல்லுலகுடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றமும் அன்னையின் ஆத்மா சாந்திபெற கனந்த நெஞ்சுடன் கண்ணிர் வடிக்கின்றது, கைதொழுது பிரார்த்திக்கின்றது.
பிறப்பு
1925 ஜனவரி 07ம் திகதி மிருகசீரிட நட்சத்திரமும் இட இராசியும் சேர்ந்த புண்ணிய நாளில் தெல்லிப்பழையில் அப்பாக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வியாக தங்கம்மா எனும் பெயருடன் பிறந்து தமிழர் அனைவர்க்கும் அன்னையாய்த் திகழ்ந்தவர் இவர். தனது 84 வயது வரை தன்வாழ்வை அறப்பணிகளுக்கென்றே அர்ப்பணித்து 2008 ஜூன் 15ம் நாள் இறைவன் திருவடி சேரும்வரை ஓயாது உழைத்தவர்.
கல்வி
மல்லாகம் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி சுன்னாகம் இராமநாதன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பண்டிதர் தேர்வில் சித்தியடைந்து பண்டிதராகி சென்னை சைவசித்தாந்த மகாசமாச சைவப்புலவர் தேர்வில் சித்தியடைந்து சைவப்புலவராகித் தனது ஆசிரியப் பணியால் பல்லாயிரம் மாணவர்களை மேல்நிலைக்கு வழிப்படுத்தினார்.
கல்விப் பணி
மட்டக்களப்பு வின்சன் மகளிர் கல்லூரியிலும், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் ஆசிரியப்பணி செய்ததன் மூலம் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சைவசமய வேறுபாடின்றி முச்சமய மாணவர்களுக்கும் அவர் செய்த கல்விப் பணியால் நன்றியுடன் உயர்ந்து நிற்கும் அவரது மாணவ பரம்பரையை இன்றும் காணலாம்.
பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி வளர்ந்தோருக்கும் கல்வி புகட்டியவர். மல்லாகம் பண்டித மாணவர்கள் கழகத்தில் ஆசிரியராகவிருந்து கற்பித்துப் பல பண்டிதர்களையும் சைவப் புலவர்களையும் உருவாக்கி மரபு கல்விப் பணியும செய்த பெருமை இவருக்குண்டு.
இந்து ஒளி
 
 
 
 

தய்வத் திருமகள்
சைவப்பேரவை, இலங்கை இந்து மாமன்றம்
பேச்சுத்திறம்
தன்னுடைய பேச்சுதிறத்தால் வையத்தைப் பாலித்த பெருமை சொல்லில் அடங்காது. செந்தமிழ் அமிழ்தத்தில் சைவத்தைக் குழைத்தெடுத்துத் தித்திக்கத்தித்திக்கத் தேனமுதாய்த் தருவதிலே இவருக்கு நிகர் இவரேதான். அழகிய செந்தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்து அற்புதமான இசையுடன் கூடிய இனிய குரலில் அவர் பேசுவதை ஒருமுறை கேட்டவர் பின்னர் கேளாதிரார்.
வள்ளுவர் கூறிய,
"கேட்டார்ப்பிணிக்கும்தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற குறளுக்கு முழுப்பொருத்தமான, இலக்கியமாகத் திகழ்ந்தவர். ஏறக்குறைய 65 ஆண்டுகாலம் சிவத்தமிழால் இத்தேசத்தை வாழவைத்தவர்.
ஈழத்தின் எல்லாத்திக்குகளிலும் ஒலித்த இவர் குரல் 1965இல் சென்னை சைவசித்தாந்த மகா சமாசம் சிதம்பரத்தில் நடத்திய வைரவிழாவில் முதன் முதலாகக் கடல் கடந்து ஒலித்தது. அங்கு இவர் சொற்பொழிவைக் கேட்டு மெய்மறந்த பேரறிஞர்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கு அழைத்துப் பேச வைத்துக் கெளரவித்துப் போற்றினர்.
யாழ்ப்பாணச் செந்தமிழும், நாவலர் பெருமான் ஊட்டிய சைவ உணர்வும் சிவத்தமிழ்ச் செல்வியின் நாவில் சரஸ்வதியை நடனமிட வைத்தன. அதனால் மீண்டும் மீண்டும் தமிழ் நாட்டுச் சைவாதீனங்களும், மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் தீவு, இலண்டன் முதலிய நாடுகளில் உள்ளவர்களும் இவரை அழைத்துத் தத்தம் நாடுகளில் பேசவைத்துப் போற்றிப் பாராட்டிக் கெளரவித்தனர். இவரது தேனிசை கலந்த செந்தமிழ்ப் பேச்சில் பிறசமயத்தவர்கள் கூடத் தம்மை மறந்து மகிழ்ந்து பாராட்டிய செய்திகள் பலப்பல.
ஆலயப் பணி
அறுபதுகளில் பற்றைக்காடடர்ந்து கிடந்த தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பணியில் இவரை இணைத்தனர். முதலில் துர்க்கா தேவஸ்தானச் செயலாளராயும், பின்னர் தலைவராயும் இறையடி சேரும்வரை ஏறக்குறைய ஐம்பது ஆண்டு காலம் பணியால் துர்க்கையம்மனின் நடமாடும் கோலமாய்த் துர்க்காதுரந்தரியென உலகம் போற்றியதென்றால் அவரின் பணியைச் சொல்லில் வடிக்க முடியுமோ?
கோயில் சூழல் துர்க்காபுரமானது, கோயில் புதிய வடிவில் கம்பீரமாக எழுந்தது. இராஜகோபுரம் தென்னாட்டுச் சிற்பிகளால் தெய்வீக அழகுடன் எழுந்தது. துர்க்கா புஷ்கரணி எனும் அழகிய தீர்த்தக் கேணி, கல்யாண மண்டபங்கள், மகளிர் இல்லம், அன்னையர் இல்லம், சிவத்தமிழ் ஆய்வு நூலகம், நால்வர் மடம் சரஸ்வதி கோயில், கோகுலம், அன்னதான மண்டபங்கள் என
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி

Page 21
செய்த அரும்பணிகள் துர்க்கையின் அருள் வடிவில் தோற்றம் பெற்றன. நல்லூரில் கூடத் துர்க்கா மணிமண்டபம் எழுந்ததென்றால் அன்னை சிவத்தமிழ்ச் செல்வியின் திருப்பணியை அளவிட முடியாதே. ஆதரவற்ற பெண்குழந்தைகளையும், அன்னையர்களையும் ஆதரித்து அரவணைத்து அவர்களைச் சைவத்தமிழ்ப் பண்பாட்டின் ஊற்றுக்கண்களாக உருவாக்கிய சாதனை உலகு வியக்கத்தக்கதே.
பிறந்தநாள் அறநிதியம்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் துர்க்கையின் பணிக்கு அர்ப்பணித்த அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் தன்பொருள் கொண்டு தனது பிறந்த நாள் அறநிதியத்தை ஆரம்பித்தார்கள். ஆண்டுதோறும் ஜனவரி 07 ஆம் நாள் அறக்கொடை விழாவாக நடைபெறும். இதில் புதுமை என்னவென்றால் தன்னை யாரும் கெளரவிக்க விடாமல் தானே தக்காரைக் கெளரவிப்பதுதான். அவர் கேளாமலே உலகின் பல பாகங்களிலிருந்தும் அறநிதியத்துக்கு நிதி வந்து சேர்ந்து அவர் அறநிதியம் பேராறாகப் பெருகியது.
வந்த அறநிதியம் கொண்டு ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் புலமைப்பரிசில், பாடசாலைகளுக்கு கல்வி வளநிதியம், நலிவுற்றோர்க்கு நல்லுதவி, சிவத்தமிழ் நூல் வெளியீடுகள், சான்றோர், அந்தணர்களைக் கெளரவித்தல் என அறப்பணிகள் பல்கிப் பெருகின.
போர் அனர்த்தங்களால் நலிவுற்றிருந்த யாழ். அரசினர் வைத்தியசாலைக்குச் சளி எடுக்கும் இயந்திரம், இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நிதியுதவிகளைப் பல இலட்சங்கள் பெறுமதியில் வழங்கினார். யாழ். பல்கலைக்கழகக் கல்விக்கே அறக்கொடை அளித்தாரென்றால் அவர் அறக்கொடையை அளவிட முடியுமா?
தான் இல்லாக் காலத்திலும் இந்த அறக்கொடை தளராமல் நடக்க வேண்டுமெனப் பல இலட்சங்களை வைப்பு நிதியாக வைத்துள்ள அன்னை, இறந்தும் இறவா அறக்கொடைச் செல்வி எனப் போற்றுதல் பொருந்தும் அன்றோ!
கெளரவங்கள் . பட்டங்கள்
“செயற்கரிய செய்வர் பெரியர்” என்ற பொன்மொழிக்குப் பொன்னான உதாரணமாகத் திகழ்ந்த அன்னையை அரசும், சைவ
நல்லூர் ஆண்டுதோறும் ஆடிமாதம் பிறந்துவிட்டால் நல்லைக் கர் உலகெங்கும் பரந்து வாழும் யாழ்ப்பாண சைவ மக்கள் கரங்கு முத்தர்களும் சித்தர்களும் ஞானிகளும் ஒரே முகமாக ஆடிப்பாடி போக முடியாவிட்டால் கவலைப்படாதே, வெளிவீதியிலே பரப் கிடைக்கும் என்று திருவாய் மலர்ந்தவர் கொழும்புத்துறை யோ
அதில் மிகையொன்றுமில்லை.
(இந்து ஒளி
 

தமிழ்த் திருத்தொண்டு நிறுவனங்களும் பட்டங்கள் பரிசுகள் வழங்கிக் கெளரவித்தன.
1966இல் மதுரை திருஞான சம்பந்தர் ஆதீனம் “செஞ்சொற் செம்மணி’ எனவும், 1970இல் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானத்தினர் “சிவத்தமிழ்ச் செல்வி’ எனவும், 1973இல் அகில இலங்கை இந்து மாமன்றம் “சிவஞான வித்தகர்” எனவும், துர்க்கா தேவஸ்தானம்"துர்க்கா துரந்தரி”எனவும், இலங்கை அரசு “சமாதான நீதவான்”, “கலாசூரி” எனவும், 1998இல் இவையெல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் “கலாநிதி" பட்டமும், அகில இலங்கை இந்து மாமன்றப் பொன்விழாவில் “தெய்வத் திருமகள்” எனும் பட்டமும் வழங்கப்பட்டு இன்னும் பல நிறுவனங்களால் கெளரவிக்கப்பட்டு பெருமைபெற்றதுடன் அகில இலங்கை இந்து மாமன்றம், விவேகானந்த சபை, உலக சைவப்பேரவை போன்ற அமைப்புக்கள் அம்மையாரை போஷகராகப் போற்றி வந்தன. தெய்வத்துக்குச் சூட்டப்பட்ட மாலையும் வணங்கப்படும் பெருமை பெறுவது போன்று அம்மையார்க்குச் சூட்டப்பட்ட பட்டங்களும் பெருமை பெற்றன.
நூல் வெளியீடு
அன்னையின் பேரால் அரும்பெரும் நூல்கள் பல அவரது மணிவிழா மலராகவும், பவளவிழா மலராகவும் அமுதவிழா, அறக்கொடை விழாக்களின் நினைவாகவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் சிவத்தமிழ் இன்பம், சிவத்தமிழ்ச் செல்வம், சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், இலண்டனில் ஏழுவாரம், வாழும் வழி, நளவெண்பா மீள்பதிப்பு எனப்பட்டியல் நீண்டு கொண்டேபோகும்.
சிவத்தமிழ் ஆய்வு நூலகம்
அன்னையவர்கள் ஒரு நடமாடும் நூலகமாக நம்முன் வாழ்ந்தவர். அறிவுப் பசிதீர்க்கத் தன்னை நாடிவருவோர்க்கு அறிவுப் பொக்கிஷத்தை அள்ளி வழங்கியவர்கள். தான் இல்லாத காலத்திலும் தன்னைத் தேடிவருவோர்குறைதீர்க்க நடுவூர்ப்பழுத்த நன்மரம் போலச் சிவத்தமிழ் ஆய்வு நூலகத்தை எல்லா வசதிகளும் கொண்ட எழிலான கோலத்தில் அள்ள அள்ளக் குறையாத அறிவுச் சுரங்கமென நின்று பயன்பெற வைத்துச் சென்றுள்ளார்.
அன்னை காட்டிய அறப்பணியில் துளியேனும் நாமும் செய்து பிறவிப்பயன் பெறுவோமாக.
க் கந்தன் "ঞ্ছ
விடும்.
தனுடைய மகோற்சவ நினைப்பு சைவ மக்களுக்கு வந்து
வித்து வரம்வேண்டி நிற்கும் தெய்வம் நல்லூர் கந்தப்பெருமான். நிற்பது இவ்வாலயத்தின் மகத்துவமாகும். “நீ ஆலயத்துக்குள்ளே இருக்கும் மணலிலே உருண்டு விட்டு வா; உனக்கு எல்லாம் கர் சுவாமிகள் ஆவர். சுவாமிகளின் அபிமான ஷேத்திரம் நல்லூர்
- சிவத்தமிழ்ச்செல்வி (அருள் ஒளி-ஆடி 2006)
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 22
இ****த்த்க் TA எதர்வுத் திருக்கர் அாைநிதி தங்கம்
“என் கடன் பணி செய்து இலட்சியத்துடன் வாழ் (விடைக்கொடிச் செல்வ
"என் கட்ன் பணி செய்து கிடப்பதே' என்ற உயரிய இலட்சியத்துக்கு அமைய வாழ்ந்து அமரத்துவம் அடைந்த கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சைவத் தமிழ்த் தொண்டுக்கே தமது வாழ்வை அர்ப்பணித்தவர். அன்னை சிவத்தமிழ்ச்செல்வி அவர்களால் உருவாக்கப்பட்ட துர்க்கா மகளிர் இல்லம், சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், துர்க்காதேவி மணி மண்டபம் ஆகியன அவரது மகத்தான சேவையை எடுத்து இயம்புகின்றன.
அன்னையின் சமயப் பணி, சமூகப் பணி, கல்விப் பணி என்பன காலத்தால் என்றும் அழியாதவை. தெல்லிப்பழை அருள் மிகு பூரீ துர்க்காதேவி தேஸ்தானத்தின் மூலம் அரும் பெரும் தெய்வப் பணிகளை ஆற்றியதுடன் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை ஸ்தாபித்து அதனைத் தமது இறுதி மூச்சு வரை திறம்பட நிர்வகித்து வந்தததன் மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ளார்.
கடந்த காலங்களில் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் அரவனைத்து வைத்திருந்த அனாதைப் பிள்ளைகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதவாறு அவர்களை இராமநாதன் கல்லூரி விடுதிச் சாலையிலும், பின்னர் இடப்பெயர்வு வந்தபோது உசன் கந்தசுவாமி கோயில் பரிபாலகர் இல்லத்திலும் மகளிர் இல்லத்தை நடத்திப் பிள்ளைகள் குறைவின்றி வாழ சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள் வந்தபோதும் மனந்தளராது "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற தாரக மந்திரத்தை இறுதி மூச்சுவரை கடைப்பிடித்து வாழ்ந்துமக்களின் மனதைக் கவர்ந்தவர் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி மக்கள் நலன் சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டு அவர்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு உறுதுணையாக விளங்கினார். சமயத் தொண்டுகள் ஊடாக சமுதாயப் பணிகள் பலவற்றை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு குறிப்பாக சைவப் பெருமக்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். அனாதைப் பிள்ளைகளைப் பொறுப்பெடுத்து அவர்களை அரவனைத்து
இருபது ஆண்டுகள் -
நிறைவின்போது 2002) starrior சிவத்தமிழ் செல்வியுடன் இல்லப் பிள்ளைகளும் இல்லத்தின் அலுவலகப் பணியாளர்களும்
இந்து ஒளி
 
 

YLTLTLLLLLLLLYLLL LLTLATSLL LLLLLLTTLTLTLTTu uuALALTuTuA AuA LLTLLLLLLL ா அக்பர்க்குட்டி நினைவு அஞ்சவி சிரச்சிதழ்
கிடப்பதே' என்ற உயரிய ந்த சிவத்தமிழ்ச் செல்வி
சின்னத்துரை தனபாலா
வாழ்வு அளித்ததன் மூலம் சமுதாயப் பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து முன் மாதிரியாகத் திகழ்ந்தார். பன்னிரண்டு பிள்ளைகளோடு ஆரம்பிக்கப்பட்ட துர்க்காபுரம் மகளிர் இல்லம் அன்னை சிவத்தமிழ்ச்செல்வியின் அயராத சேவையினால் இன்று அவ்வில்லம் துரித வளர்ச்சி கண்டுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் தமது வாழ்வு, தமது குடும்பம் தமது உற்றார் உறவினர் குடும்பம் என்ற சிந்தனையின்றி "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்ற உயரிய இலட்சியத்துடன் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து பல சமூகப் பணிகளிள் ஆற்றியுள்ளமை பெரிதும் போற்றத்தக்கது. நெருக்கடிமிக்க சூழ் நிலைகளிலும் கூடத் தமது சமய, சமூகப் பணிகளைக் கைவிடாது மனத் துணிவுடனும் உற்சாகத்துடனும் திறம்படச் செய்து மக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர். எவ்வித பிரதியுபகாரங்களையும் எதிர்பாராது அரும்பெரும் சேவையாற்றிய சிவத்தமிழ்ச் செல்வியின் திருநாமம் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
தெல்லிப்பழையில் சிறிதாக இருந்த துர்க்கை அம்மன் ஆலயத்தைப் பாரெல்லாம் போற்றும் வண்ணம் அழகிய கோபுரத்துடன் சிறந்து விளங்கும் திருத்தலமாக அமைத்து ஆலய அறங்காவற் பணியையும் பொறுப்பேற்று திறம்பட நிர்வகித்து வந்த பெருமை சிவத்தமிழ்ச் செல்வியையே சாரும். இவர் கலாசா மேம்பாட்டுக்கும் தனது துணிகரமான பங்களிப்பை வழங்கியவர் நந்திக்கொடிகளைப் பரப்பும் எனது பணிக்கும் ஆதரவையும் ஒத்துழைப்பும், ஊக்கத்தையும் தந்தவர் என்பதையும் சிறப்பாகக் சொல்லலாம்,
சமய சமூகப்பணிகளுக்காகத் தமது வாழ்வையே அர்ப்பளித்து வாழ்ந்து பாரெல்லாம் ஆன்மீக ஒளிபரப்பிய சிவத்தமிழ்ச் செல்வி அமரத்துவம் அடைந்துவிட்டபோதிலும் சைவப் பெருமக்களது இதயங்களில் அவர் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
20 சர்வதாரி வருடம் சித்திரை - ஆண்

Page 23
kkkkkkkkkkkkkkkkk
kikkkrkkhkkákskákshkkkkhk
2த்துத் திரு காைழிகிதங்கம்மா அப்
திரும்
பொன்மை
இணுவைக அறங்காவலர், லண்டன் பூரீக
ஒளவையார், காரைக்கால் அம்மையார், திலகவதியார் ஆகிய பெருமக்களைப்பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் பார்த்ததில்லை. ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர் ஆகியோரையும் அறிந்திருக்கிறோம்.ஆனால் கண்டதில்லை.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களைப் பார்த்திருக்கின்றோம். பழகியிருக்கின்றோம். ‘துர்க்கா துரந்தரி’ அம்மாவின் காலத்தில் நாங்கள் வாழக்கொடுத்துவைத்தம்ை பெரும்பாக்கியமே. அம்மா சைவசமயசீலராகவே தனது தொண்டைஆரம்பித்தார். ஆழ்ந்த சமயவாதியாக பரிணமித்த அவரை நாங்கள் சமூகசேவகியாகவும் தரிசித்திருக்கிறோம். நாயன்மார்கள் வரலாற்றையும் அருளாளர்களின் அருட்டுணர்வையும் (inspiration) மிகவும் உள்வாங்கிக்கொண்ட அம்மா இப்படித்தான் வாழவேண்டுமென்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். அதன் விளைவாக ‘தங்கம்மா’ என்ற இவரது இயற்பெயர் இவரது மனதை பொன்மணமாகப் புடமிட்டது. அங்கம் தங்கமாகியதால் சிவத்தமிழ்ச் செல்வியாகிய அன்னை காலம் முழுவதும் பொன் மனச் செல் வியாகவே வாழ்ந்தார். சைவசமயம் கற்றுக்கொடுத்தவற்றை அம்மா திருப்பணியாக்கினார். திருப்பணி இவரை அறப்பணிக்கு அழைத்துச் சென்றது. திருப்பணி, அறப்பணி இரண்டும் சேர்ந்து பொதுப்பணிக்கு இவரை உயர்த்தி வைத்தது. ஆத்மீகவாதி என்ற எல்லைக்கு அப்பாற் சென்று, சமூகத்தை இவர் அரவணைத்தார்.
இதனால்தான் பல்கோடி மனங்களில் இவர் நிரந்தரமாக குடிகொண்டார்.அம்மா கண்ட சமூகத்தில் சாதி, சமய பேதமில்லை. ஏழை / பணக்காரன் என்ற பிரிவே இல்லை. மாறாக இவரது சமூகத்தில் அன்பு, அகிம்சை, அரவணைப்பு, ஒற்றுமை , ஈதல் ஆகிய பூமரங்களே பூத்துக்குலுங்கின.
செல்வி அவர்கள் சாதாரண மானுடர் அல்லர். தெய்வீகம் நிறைந்த அதிமானுடனே இவர். இதனால்தான் இவரைத் தெய்வத் திருமகள் என்று அழைத்தார்கள். பெற்றோர் உற்றோர் யாருமற்று, வாழ்க்கையே வறுமையும், வெறுமையுமாகித் தவித்த அகதிகளை தனது அதிதிகளாக அம்மா ஏற்றுக்கொண்டு, அன்பும், ஆதரவும் காட்டினார். துர்க்கா மகளிர் இல்லத்தில் அம்மாவின் கரம்பட்டு வளர்ந்த பிள்ளைகள் பற்பலராவர். "யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி, யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே' என்ற திருமூலரின் கருத்தை தனது மூலதனமாக அம்மா கைக்கொண்ட படியால்தான், வறியவர்கள் உண்பதறகு அம்மா அள்ளிக் கொடுத்தார்.
‘என்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க ...” என்ற மணிவாசகரின் திருவாசகத்தை உள்வாங்கிய அம்மா, மனிதர்களை மகேசனாகக் கண்டு சேவை செய்தார். கடவுட் தத்துவத்தைப்பற்றிக் கூறிய சுவாமி விவேகானந்தர் ‘பிரபஞ்சத்தலைவரும் , பிரபஞ்சத்தைப் படைத்து காத்து அழிப்பவருமான முழுமுதற்கடவுள் ஒரு நிகுணத்தத்துவம் அந்த தத்துவத்தின் உருவத்தோற்றங்களாகிய
(இந்து ஒளி
 
 
 
 
 

ாக துர்க்கை அம்மன் ஆலயம்
நீங்கள், நான், பூனை எல்லாம் கருணைக்கடவுள்.’ என்று கூறியிருப்பது அம்மாவின் கருணையை எடுத்துக் காட்டுகிறது.
இந்திய இராணுவம, இலங்கை இராணுவம் ஆகியவற்றின் கெடுபிடிகள் ஏற்பட்ட காலத்தில் தன்னிடம் அடைக்கலம் புகுந்த அனாதைப் பிள்ளைகளை கோழிக்குஞ்சுகளை இறக்கைகளில் அடைக்கும் தாய்ப்பறவையாகப் பாதுகாத்தார்.யாழ்ப்பாணத்தில் இடப்பெயர்வுக்காலத்தில், பூனை குட்டிகளைக்காவிச் செல்வதுபோல் காவிச்சென்று, மகளின் பலரைக் காட்பாற்றியும் பணிசெய்திருக்கிறார். இதனால் வெறிபிடித்த ஓநாய்களின் கொடுஞ்செயல் அங்கு தவிர்க்கப்பட்டது. போர்க்கால சூழ்நிலைகளில், சிறிதும் மனம் தளராது மக்கள் துயர் துடைக்க விடாமுயற்சியுடன் அயராது உழைத்தார்.
1925ல் அவதாரம் செய்த அம்மா இராமநாதன் கல்லூரியில் ஆசிரிய பயிற்சி பெற்று தனது இருபதுவயதில் மட்டக்களப்பு சிசிலியா பாடசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியையாக நியமனம் பெற்றார். தனது இருபத்துநான்காம் வயதில் கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியையாகக் கடமையாற்றினார். இதனால் கிறிஸ்தவ , இஸ்லாம் மக்களுடன் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. தனது 27வது வயதில் பாலபண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த இவர், பண்டிதையாகி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி என அழைக்கப்பட்டார். தனது முப்பத்தொன்பதாவது வயதில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு இடம்மாறினார். காரைநகள் ஈழத்துச் சிதம்பரம் இவருக்கு ‘சிவத்தமிழ்ச் செல்வி’ என்ற பட்டத்தை வழங்கியது. இவருக்கு கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியதன் மூலம் யாழ். பல்கலைக்கழகம் தன்னை பெருமைப்படுத்திக்கொண்டது.
அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் மீளவும் இவரை சந்திக்கும் பேறு கிடைத்தது. லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்துடன் இவருக்கு நெருங்கிய பிணைப்பு இருந்தது. கனகதுர்க்கை அம்மன் ஆலய அடியாரின் நன்கொடையை அம்மாவின் பொதுப்பணிக்கு அனுப்பிவைத்தபோது, அவர் கூறிய வார்த்தைகள் இப்போதும் எதிரொலிக்கின்றது. துர்க்கை அம்மன் தேவஸ்தானத்துக்கு லண்டன் தமிழ் அனாதை அறக்கட்டளையும் , வேறு லண்டன் தமிழ் அமைப்புகளும் பலரும் உதவிக்கரம் நீட்டுவதாகவும் , தங்கள் பொதுப்பணிக்கு தாராளமாகப் பணம் கிடைப்பதாகவும் அம்மா குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவர் கூறிய கருத்து அவரைப்பற்றிய ஆளுமையை மேலும் அதிகரிக்கச் செய்தது. இனிமேல் பணஉதவி செய்வதாயின் அங்குள்ள வேறு இல்லங்களுக்கு உதவிசெய்யுமாறு குறிப்பிட்டிருந்த அம்மா , சிலவற்றின் பெயர்களைக் கூட சிபார்சும் செய்திருந்தார். 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற அம்மாவின் கருத்து எம்மை பிரமிப்படையவைத்தது. 1991ல் லண்டன் சிறீகனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை அங்குரார்ப்பண தினத்தில் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் இருந்து அம்மா அவர்கள் அனுப்பிவைத்த பிரசாதம் அன்றைய தினமே எங்களுக்குத் தபாலில் கிடைத்தமையானது, இறையருளின்
1. சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 24
திருவிளையாடலே ஆகும். அம்மாவின் ஆசியும் , துர்க்காவின் கடைக்கண்பார்வையும் கனகதுர்க்காவின் சமய, சமூகப்பணிகள் முளைவிடுவதற்கு வித்துக்களாகக் கிடைத்தமை பெரும் பேறேயாகும்.
அம்மா அவர்களால் எழுதப்பட்ட “லண்டனில் ஏழுநாட்கள்’ என்ற நூல் , அவரது மதிநுட்பத்தைச் சுட்டி நிற்கிறது. தெல்லிப்பழையில் பலர் பிறந்து, பல சேவைகளைச் செய்திருப்பினும், முக்கியமாக இரண்டு பெருமக்களால் அவ்வூர் மிகவும் பெருமை அடைந்துள்ளது. ஒருவர் தந்தை செல்வா.
அம்மா எங்க
6hrooofl of 6. நுண்கலைமாணி
துர்க்காபுரம் மகளிர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டபோது, அன்றை ஒருவர்தான் செல்வி வி. வடிவாம்பிகை. அன்னையின் அர அடைந்து பல்கலைக்கழக பட்டம் பெற்று, இப்பொழுது ( ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அன்னையின் பிரிவ இதயம் இவ்வாறு பேசுகிறது.
அம்மா, அம்மா என்று உங்கள் செல்லப்பிள்ளைகளாகிய நாம் கதறிக் கதறி, துடியாய்த் துடித்து, தேம்பித் தேம்பி அழ எம்மை விட்டு எங்கு சென்றீர் அம்மா? வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது எமக்கெல்லாம் ஐஸ்கிறீமும், சொக்லெட்டும் கொடுக்கச் சொல்லியும், என்ர குஞ்சுகள் என்னைப் பார்ப்பதற்கு கஷ்டப்பட்டு வரவேண்டாம். நான் வந்து பார்ப்பேன்’ என்றும் கூறிய நீங்கள் இன்று பாராமுகமாக சென்றுவிட்டீர்களே அம்மா! நீங்கள் சாப்பிடும்போது பிள்ளைகளுக்கு என்ன சாப்பாடு? பள்ளி சென்றார்களா? பஜனை பாடினார்களா? என்றெல்லாம் எம் சிந்தனையுடனே இருந்தீர்களே அம்மா. நாம் சாப்பிட்டாலும் 'அம்மா தாரேன் ஒருக்கா பிடி’ என்று அரவணைத்தீர்களே. காலையில் நாம் வணக்கம் அம்மா’ என்று சொல்ல இப்போது உங்களைத் தேடுகின்றோம் அம்மா.
புதுவருடம், தீபாவளி, பிறந்தநாள் வந்தால் எங்களுக்கு புத்தாடை அணிவித்து ஒவ்வொருவராக அழகு பார்த்து ரசிப்பதை நாமே ரசிப்போமம்மா! எங்களை பல போட்டிகளில் வெற்றி மேல் வெற்றி பெறவைத்து பல பரிசில்களையும், பதக்கங்களையும், பணத்தையும் பெற்று, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரி ஆகி எம்மை உத்தியோகம் பார்க்க வைத்த எமது தெய்வமே
ஒரு முழுமையான குடும்பத்தை நிர்வகிக்கக் கூடிய ஆற்றலையும், அறிவையும் எமக்கு ஊட்டி உயரிய பெரியோருடன் பழக வைத்த எங்கள் தங்கமே! அது மட்டுமா? பூப்புனித நீராட்டு விழாவை, திருமண வைபவங்களைச் செய்து வைத்தும், பின் பேரப்பிளைகளின் மழலை மொழிகளைக் கேட்டும் எம்மை மகிழ்வித்த தன்மையை மறக்க முடியுமா?
(இந்து ஒளி
 

அடுத்தவர் எங்கள் பொன்மனச்செல்வி. இந்த இரண்டு முத்துக்களும் உலகத் தமிழருக்குக் கிடைத்த பெரும் சொத்தாகும். “கடவுள் ஈழத்தமிழரைக் காக்க வேண்டும்’ என்ற தந்தை சென்ற வழியிலேயே, எங்கள் அம்மாவும் இறப்பைத்தழுவிச் சென்றமை அதிசயிக்கவைக்கிறது. இவர்கள் பயணித்த பாதைகள் வேறு வேறாக இருப்பினும், பயணம் செய்த நோக்கம் மக்கள்சேவையே 535D
எங்கள் அம்மா ஒரு தெய்வத்திருமகளே. அம்மாவின் நாமம்
எமக்கு ஒரு திருமந்திரமாகும்.
1ள் தங்கம்
கலாவித்தகர்
பதினம் இணைந்துகொண்ட ஒன்பது பெண் குழந்தைகளில் வணைப்பிலும், ஆதரவிலும் வளர்ந்து கல்வியில் உயர்நிலை கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இசை ால் துயருறும் மகளிர் இல்லப் பிள்ளைகள் சார்பாக இவரது
கடும் போர்ச் சூழலில் உங்களுடனேயே எம்மைக் கூட்டிச் சென்று நாம் பயந்து விடக்கூடாது என்ற காரணத்தால் எம்முடனேயே நித்திரை செய்து குறையொன்றுமில்லாமல் இனிதாய் வாழவைத்த எங்கள் அம்மாவே
உத்தியோகம் காரணமாக வெளியில் சென்ற பிள்ளைகள் நெஞ்சை அடைக்கும் துயரைச் சுமந்து பல திசைகளிலுமிருந்து ஓடோடி வந்து தேம்பித் தேம்பி அழுத குரல் உங்களுக்கு கேட்கலையோ அம்மா? எம் யோசனையுடன்தான் இறுதிவாரங்களில் உறக்கம் கொண்டீரோ? அம்மா உங்கள் திருமுகத்தைக் காண ஆசையுடன் இருக்கிறோம். எம்மையும் நாடு போற்ற வைத்த மங்கையர்க்கு தனியரசி எங்கள் தெய்வத் தாயே! நாம் உங்கள் பிள்ளைகள் என நினைக்கும் போது பெருமைப்படுகின்றோம்.
ஆறுமுகநாவலர் வழியில் சைவப் பணி, தமிழ்ப் பணி, தெய்வப் பணி, கல்விப் பணி, சமூகப் பணி எனப் பல அறப்பணிகளாற்றிய அன்னையே! உலகில் எங்கெங்கு சைவமும், தமிழும் வாழுகின்றதோ அங்கெல்லாம் அம்மா நீங்கள் உயிர்த் துடிப்புடன் இருப்பீர்கள்.
எம்மிடம் உள்ள ஆற்றல்களை இனங்கண்டு உலகறிய வைத்த பெருமை உங்களுக்கே உரிய தத்துவம் அம்மா. நாம் நோய்வாய்ப்பட்டு அழுதால் வருத்தம் மாறி விடும். என்ர செல்வங்களே அழக்கூட்ாது' என இனி சொல்வதற்கு யார் இருக்கின்றார்கள்?
அம்மா நீங்கள் வளர்த்தெடுத்த பிள்ளைகளை நீண்ட நாட்களுக்குப்பின் கண்டால் சந்தோசப்பட்டுபிள்ளை உன்னுடன்
22
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 25
YTTTLKKYTTTLTLkLuKYLTTLLLLYTKuLLLTLT தெய்வத் திருமகன் கலாநிதி தங்கம்மா அப்து படம் எடுக்க வேண்டும் என்று நினைச்சனான் என்று செல்லமாக சொன்னதெல்லாம் எம்மை விட்டுச் செல்வதற்காகத்தானா? கொழும்பில் உத்தியோகம் பார்க்கும் உங்கள் பிள்ளைக்கு இனி யார் 'சத்து மா செய்து அனுப்புவார்?
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் எம்மைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து பின் அரவனைத்து ஆறுதல் தரும் தாயை இனி எப்போ காண்போம்?
நீங்கள் சுகத்துடன் வருவீர்கள் என்றுதான் அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியில் நாங்கள் காத்திருந்தோம். வைத்தியர்கள் உங்களிடம் விஞ்ஞான ரீதியான சிகிச்சையை நாம் செய்கின்றோம், மெய்ஞானப்படி நீங்கள் கூறுவது என்ன? என்று கேட்டபோது நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று கூறிவிட்டு, இப்போது எங்குதான் சென்றிரோ?
நன்றியுடன் உங்கள் வழியில் நிற்போம். உங்கள் ஆத்ம சக்தியும், துர்க்கை அம்பாளின் அருளும் வழிநடத்த மேலும் நாம் மேன்மை அடைவோம் அம்மா. அம்மா! அம்மா! எம் தாயே ஆறுதல் தந்து எமைக் காப்பாயே, எங்கள் தெய்வத் தாயே! உங்கள் ஆத்மா சாந்தியடைந்து எல்லாம் வல்ல துர்க்கை அம்பாளுடன் இணையப் பிரார்த்திக்கின்றோம்.
மாமன்றத்தின் நன்றி
"இந்து ஒளி'யின் தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டிநினைவுச் சிறப்பிதழுக்காக பல நிழற்படங்களை தந்துதவிய மல்லாகம் கிருபா போட்டோ நிறுவனத்தின் உரிமையாளர் திரு. கா. கிருபாகரன் அவர்களுக்கும், அன்னையின் இறுதிச் சடங்கு தொடர்பான நிழற்படங்களை யாழ்ப்பானத்திலிருந்து அனுப்பி உதவிய செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், மாமன்ற யாழ் பணிமனை அலுவலர் திரு. வி. ஜெயசிங்கம் ஆகியோருக்கும் மாமன்றம் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
"அன்னையது அறப்பணியின் அடையாளச் சின்னம்
என்றென்றும் இதயத்தில் மறையாது எண்ணம்'
துர்க்காபுரம் மகளிர் இல்லம்
இந்து ஒளி
 

நீத்த்க்க்2 க்குபடி நினைவு அஞ்சலி சிறப்பிதழ் 蠶)
நிலமதனில் துர்க்கையென"
நின்ற அன்னை
( கம்பவாரிதி LTਈ
உலகனைத்தும் நிழல் செய்து நின்ற அன்னை
ஓங்காரத் துள்ளொளியில் அடங்கிப் SLUITEJTTET திலகமெனத் தமிழ்மண்ணில் திகழ்ந்த அன்னை
தெய்வதமாம் நிலைபெற்று உயர்ந்து போனாள் பலர்போற்றத் தொண்டதனால் உயர்ந்த அன்னை
பார்விட்டு விண்னோக்கிப் பறந்து போனாள் நிலமதனில் துர்க்கையென நின்ற அன்னை
நெஞ்சங்கள் துடிதுடிக்க நீறாய்ப் போனாள்.
அன்னையளாம் துர்க்கையவள் அடியின் நீழல்
அமர்ந்துபெருந் தொண்டாற்றி உலகம் போற்ற தன்னை நினையாதிந்தத் தரணி மீதில்
தவித்திட்ட அனைவர்க்கும் தாயேயாகி விண்ணைநிகர் அருளதனால் விளங்குகின்ற
விறான தொண்டுபல ஆக்கிநின்ற பொன்னைநிகர் தாயவளும் போற்றி நின்ற
புகலரிதாம் துர்க்கையடி சார்ந்துபோனாள்.
சிவத்தமிழின் செல்வியென உலகம் போற்ற
செம்மைமிகு சைவத்தின் பெருமை காத்தாள் தவத்திலுயர் துறவியெனத் தக்கோர் போற்ற
தனித்தவளும் அருளோடு தரணி காத்தாள் பவத்தில் உயர் அறங்களெலாம் தேங்கி நிற்க
பாவத்தின் சுமை குறைத்துப் பண்பு காத்தாள் அவமதனின் நிழல்கூட மற்றோர் தம்மை
அணுகாது துனைசெய்து அன்பு காத்தாள்.
பண்புதையாய்த் தமிழ்கற்றுப் பலரும் போற்ற பண்பான மாணவரை ஆக்கித் தந்து தொண்டதனால் ஆசிரியப் பணியிலோங்கி
துலங்குகிற அறிவதனாற் பெருமை கொண்டாள் தண்டமிழில் சொற்பெருக்கை ஆற்றி நல்ல
தையல் இவள் தமிழ்போல வருமோ? என்று கண்டவரும் கேட்டவரும் கைகள் கூப்பி
கடவுளென வனங்கிடவே உயர்வு கொண்டாள்.
கலாநிதியாம் விருதளித்துக் கற்றோர் தாமும்
கைகூப்பி உலண்மதித்த காட்சி என்னே! நிலாவிலுமோர் மறுவுண்டு. நிந்தன் வாழ்வில் நிழலாயும் மறுவில்லா நேர்மை என்னே! உலாவிந்தம் துர்க்கையையும் காத்துநின்ற
ஓய்வில்லா உனதுழைப்பின் பெருமை என்னே! இலாதின்று போனாலும் தாயே! உன்னை
எப்போதும் இத்தேசம் மறவாதன்னாய்
23. சப்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 26
சிவத்தமிழ்ச் செல்வியின் இறுதி
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும், யாழ். பல் இரங்கலுரை நிகழ்த்துகிறார்கள். அருகே நிகழ்வை நெறிப்
பாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் ஆண்டகை அஞ்சலி செலுத்துகிறார்.
அன்னையினது துறப்பணியின் நெடும் பயனம் நிறைவுபெற்றுவிட்ட இறுதி
இந்து ஒளி
 
 
 
 
 
 

நிச் சடங்குநிகழ்வு (1.06.2008)
ரிவிக்ாஜா அவர்கள்
匡 பாழ்மேல் நீதிமன்ற ஆணையாளர் ஆ
இரங்கலுரை நிகழ்த்துகிறார்.
கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்களும், படுத்திய செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள்.
ரீ துர்க்காதேவி தேவஸ்தான அலுவலர் திரு. கா.சிவபாலன் மலர்மாவை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.
黜韋豎刁彗
தால் அக்கினியுடன் சங்கமமாவதற்காக மயானத்தை நோக்கிச் செல்லும்
' LILLJEITTLs,
சர்வதாரி வருடம் சித்திரை - ஆவி

Page 27
LET US FOLLO
General S
Kandiah Net
All Ceylon Hin
We have lost a great guru and guide of outstanding and unique caliber.
She created a religious renaissance from Tellippallai and her life is a chapter to be written in gold letters in the history of Hindus by Thevathirumagal Sivathamilz Selvi Dr. Thangammah Appacutty, who was a Hindu Spiritual Leader in Jaffna helping the needy children and elderly people and teaching the religious values and morals not only to Jaffna people but to all the Hindus worldwide, passed away at the age of 83 on 15 June 2008 (Sunday) at l2.15 noon.
The Tamil Devotional Classic Puranam or “The Great Epic' by Sekkirzhaar is the saga of the sixty three Nayanars or Servitors of the Lord, who not only lived for Him but adored Him in delightfully distinct ways. In that lineage Sri La Sri Arumuga Navalar who has been recognised by all the Sri Lankans and the Government as one of the national heroes is regarded as the sixty fourth Nayanar. Sri Lanka and Jaffna in particular starved for several years without a successor to that great Nayanar. This vacuum was filled by a great lady, who has been a mother to all of us. That was Thirumagal Sivathamilz Selvi Dr. Thangammah
Appacutty.
Professor Dr. T. N. Ramachandran, a renowned authority on Saiva Sitthanthan in Tamil Nadu once said in his tribute that he hailed Dr. Thangamma Appacutty as a lady of “Periya Puranam”. It is not only her knowledge but her yeoman dedicated service that acquired for her that praise. Dr. Thangammah was given several tiles and honours including the titles of Sivagnana Viththagar at the 25th anniversary of All Ceylon Hindu Congress, Theiva Thirumagal at the Golden Jubilee of All Ceylon Hindu Congress, Honorary Doctorate by the University of Jaffna and “Kalasuri” by the Government of Sri Lanka, the Global Award for the best service by a Hindu by the Hawaii Shri.Subramania Swamigal Ashram,
USA.
“Theiva Thirumagal” was a title bestowed on her by All Ceylon Hindu Congress (Federation of Hindu Religious Associations and Trusts) when it held a Hindu Religious Conference in July 2005 to commemorate its Golden Jubilee. “Theivam' means the God, “Thiru”
(இந்து ஒளி
 

RTUAL LEADER W HERPATH
lakandan, Cretary, du Congress
means sacred, magal means daughter. Yes, she was really a divine daughter who came to be born in Jaffna in 1925 and remain as a servant to the mankind. She dedicated her life to serve the others.
The trials and tribulations she cheerfully underwent particularly in the nineties and the incredible sacrifices she made in the service to the mankind in the name of Sakthi take our breath away. Looking at her life history is to inhale the air of sanctity and blessedness.
Having commenced her career as a teacher in Batticaloa, moving to Colombo and thereafter settling in her own village Tellippallai, this unique Divine Daughter led the reconstruction of the famous Amman Kovil, Tellippallai. Durga Amman Kovil is one of the well known places of worship for Hindus. She did not just remain as a glorified trustee of a Temple but instead she went round the world and lectured on teachings of our religion and spread the message that the service to the mankind is a real prayer to His Almighty. She created a laudable renaissance by spearheading a social service movement from the Temple to help the needy children and the elderly people in numerous ways.
It is the innovation brought in by Siva Thamilz Selvito our society. Her goal was to serve the needy people as part of her worship to His Almighty and she succeeded in that and set an example for all of us.
The first lesson we the Hindus learn from our religion is that Love is God (Anbe Sivam). Loving His Almighty should be only for the Love's sake and not for any reward. Saint Thirumoolar has sung in Thirumanthiram that Love and God are the same. Sir Pon. Arunachalam has given (as follows) in English those words of wisdom:-
"The ignorant call Love
and Siva two different objects No one knows that Love
and Siva are both the same If one knows that Love is Siva one will abide in grace the form of Love and Siva."
The archaeological studies of Hindu Temples in Tamil Nadu established that the community life was built around the Kovils. Even the cities came to be built in that way. Educational, Cultural and Social services originated from
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 28
the Kovils. The best example thereof is Madurai Meenatchi Amman temple.
Our Thanga Amma (meaning “Golden Mother) gave life to that concept in Tellippallai. Her services were an example and eye opener for our people. Hindus all over the world appreciated her services.
Thus, she created a new history by propagating the moral and ideals of our religion not only through her teachings but by her service.
“It is said that all good things are material to those who know their duty and walk the path of perfect
good.
- (Translation of Thirukkural981).
Her life is a good interpretation of this Kural.
She was the indispensable Mother to our children in the time of crisis. She did not run away from the problems she faced in Jaffna due to the unfortunate situation. When Tellippallai was affected by the war she moved with her homes’ children and elders and gave them shelter in
தாங்க) அம்மா என்றழைக்க இனி யாருமில்லையே
தந்தை செல்வா நற்பணிமன்றம் கொழும்பு
அம்மா என்றழைக்க யாருமில்லையே இந்த அவனியிலே பாசம் பரிவு பக்தி காட்டி அமைதி நற்சீலம் காத்த அம்மா அநாதைகள் ஆன எமக்கு அன்பு ஊட்டி வளர்த்த சிவத்தமிழ்ச் செல்வியே துர்க்கையின் கருணையில் எமக்கு வாழ்வளித்த அன்னையே மழலைகளின் அன்னையாக அவனியில் தமிழொடு சைவம் தளைத்திட பணி செய்த தியாகச் செல்வியே அன்புப் பால் ஊட்டிட யாருமில்லையே அறிவுப் பணி செய்ய மண்ணில் யாருளரோ ஆடலரசன் அடியில் அமைதிப் பேரின்பம் துய்க்கவே மண் நீங்கி விண் சென்றனையோ தங்கமான அம்மாவே தரணியில் உங்கள் சேவையால் மலர்ந்தோம், மகிழ்ந்தோம் எமைக் கண்ணில் கரையவிட்டு காலமெல்லாம் அழவிட்டு செல்ல மனம் வந்ததோ? - இனி அம்மா என்றழைக்க யாருமில்லையே!
(ஆக்கம்மாவை சோமசுந்தரம்
இந்து ஒளி
 

various places. Her courage and determination is admirable. One of her children who was brought up by Mrs. Thamilz Selvi in her young days in one of her homes cried and said Mrs. Thamilz Slevi looked after her and her children as if they were her own children and she cried. Even I could not resist the tears that came to my eyes. She has really created a vacuum in our Society.
Our Thanga Amma rose to be a courageous leader of our community and taught all of us that our religion is not meant only for temple worship but also for service to the others who are also the children of our God and we can pray to the God through such service too.
The noble path shown by our divine mother should penetrate into our society and its culture and remain and take our society further and further on that path.
Our Thanga Amma rose to be a courageous leader of our community and taught all of us that our religion is not meant only for temple worship but also for service to the others who are also the children of our God and we can pray to the God through such service too.
நவராத்திரி
சமயம் என்பது மனிதனுடைய அன்றாட வாழ்க்கை அலுவல்களிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒரு சிறந்த மார்க்கமாகும். இது இம்மை, மறுமை, வீடு மூன்றுக்கும் வழிகாட்டும். மனிதனுடைய புற வாழ்வுக்கு ஊணும் உடையும் உறையுளும் தேவையாவது போல் அகவாழ்வுக்கு வழிபாடு தேவையாகும். இவ்வழிபாட்டைப் பலவகையில் வேறுவேறு காலங்களில் நடாத்தி வருகின்ற மரபு பல நூற்றாண்டு காலமாகப் பேணப்பட்டு வருகிறது. சிவனைக் குறித்துச் சிவராத்திரியும், சக்தியைக் குறித்து நவராத்திரியும், முருகனைக் குறித்துக் கந்த சஷ்டியும், விநாயகனைக் குறித்து சதுர்த்தியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் நவராத்திரி தினங்கள் சிறப்பான தேவி வழிபாட்டு நாட்களாகும். இந்நாட்களில் உலக மாதாவாகிய பராசக்தியை வேறுவேறு வடிவங்களில் வைத்து துர்க்கையாகவும், இலக்குமியாகவும், சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.
- சிவத்தமிழ்ச்செல்வி (அருள் ஒளி-புரட்டாதி2005
26 சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 29
தீரம் மிக்க திருப்பணியாளர்
வனஜாதவயோகராஜா தலைவி, கொழும்புமகளிர் இந்து மன்றம்,
"மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் பாடலுக்கேற்ப மாதவம் செய்து மங்கையாகப் பிறந்து தன் ஒழுக்கத்தால் தலைமைத்துவத்தால், அர்ப்பணிப்பான சேவைகளினால் மங்கையர்க்கே அரசியாக, எடுத்துக்காட்டாக
வாழ்ந்து மறைந்த அம்மையாரின் மறைவு மங்கையர்க்கு மட்டுமல்ல, சைவ உலகிற்கே - தமிழ் கூறும் நல்லுலகிற்கே - அளப்பரிய இழப்பாகும்.
பனைக்கூடல் மத்தியிலே அமைதியாக மூர்த்தங் கொண்டிருந்த துர்க்காதேவியின் சாநித்தியத்தை, அருட்டிறனைத் தான் அனுபவித்தது மாத்திரமன்றி, அம்பாளின் மாட்சிமிகு அருளாட்சியை உலகறியச் செய்ய ஆலயக் கட்டிடப்பணி, நித்திய நைமித்திய பூஜைகள், சாஸ்திரோக்தமான கிரியைகள், உற்சவங்கள், வழிபாடுகள் என்பவற்றை பக்திபரவசத்துடன் அர்த்தமுள்ளவையாகப் பல பெரியோர்களது உதவியுடன் நிறைவேற்றிவைத்த சிறப்பு, அருட்திறன் பெற்ற அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி ஒருவரால்தான் முடியும்
நாவலர் பெருமானின் அடியொற்றி சைவத்தையும் தமிழையும் நன்கு கற்று அவ்விதிகளின்படியொழுகி, மன்பதையையும் அவ்வழியில் இட்டுச்சென்ற தெய்வத் திருமகளின் பணி தீரம் மிக்கதே சமயப்பணி, சமூகப் பணி, கல்விப் பணி எனத் துர்க்கை அம்பாளின் துணையோடு அன்னை ஆற்றிய அறப்பணிகள் என்றும் நாம் நினைவுகொள்ளத்தக்கவையே பக்தி உள்ளத்தால், ஒழுக்க சீலத்தால், நம்மவரை மட்டுமல்ல, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் எனப் பல நாட்டுமக்களையும் கவர்ந்த அம்மையார் பெற்ற பட்டங்களும், கெளரவங்களும் அனந்தம் அனந்தம்
'சித்தாந்த ஞானசாசரம்', 'செஞ்சொற் கொண்டல் திருமுறைச் செல்வி 'செஞ்சொற்செம்மணி சைவதரிசி ஆகிய 'சிவத் தமிழ்ச் செல்வியினுடைய வாழ்க்கை மங்கையராகிய எமக்கு மட்டுமல்ல இம்மண்ணுலகில் வாழும் யாவருக்குமே ஒரு முன்மாதிரி. அவர் பாதையில் நாமும் அடி எடுத்து வைப்பதே இம் மங்கையர்க்கரசிக்கு நாம் ஆற்றும் நன்றியும் நற்பிரார்த்தனையும் ஆகும்.
நன்மைக்கும் தீமைக்கும் இடையே எப்போதும் போட்டியிருந் நன்மைதான் வெற்றியடையும் என்பதை எல்லோரும் உணர்வ நல்லவற்றையே நினைக்க வேண்டும்; நல்லவற்றையே பேச
(இந்து ஒளி
 

மாதர் கு0ெ மாணிக்கம்
கா. தில்லைநாதன் 纽 th
லைவர், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க
பெண்குலத்திற்கே பெருமை தரக்கூடிய மாதர்குல மாணிக்கமாகத் திகழ்ந்தவர் துர்க்கா துரந்தரி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அவர்களின் மறைவு இந்துக்களுக்கு ஓர் பேரிழப்பு ஆகும்.
“உலகமெல்லாம் உணர்ந்து ஒதற்கரியவன்” என்றும் “ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனாக” விளங்கும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கி, வந்தித்து, சிந்தித்து செயல்படுவதே சைவ சமயம். இப்படிப்பட்ட ஒர் அருமையான சமயத்தில் பிறந்து பூமியில் வாழுகின்ற மனித இனம் ஒரு புனிதமான பன்டப்பு. அந்தப் புனிதம் நிறைந்த மனிதப் பிறவி எடுத்த நாங்கள் ஒவ்வொருவரும்பாக்கியசாலிகள். “அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது’ என்ற ஒளவையின் வாக்கின்படி வாழ்ந்து காட்டியவர் நம் அன்னை செல்விதங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாகும்.
மல்லாகத்தை பிறப்பிடமாகக் கொண்டு சாதாரண குடும்பத்தில் 1925ம் ஆண்டு தை மாதம் 7ம் திகதி இப்புவியில் அவதரித்தார். இவர் சைவத்திற்கும் தமிழிற்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியது. இவர் சிறந்த பேச்சாளராகவும் சிறந்த ஆசிரியராகவும் பணி ஆற்றினார். அவரின் பேச்சாற்றல் சமுதாயத்திலுள்ள மக்களை ஆன்மீக ரீதியில் ஈர்த்தது. அவரின் பேச்சால் இலங்கையில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற நாடுகளிலும் ஒலித்தது. எப்போதும் உண்மை பேசும் உத்தமியாக வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், ழரீராம கிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் சத்தியமே ஜெயம் என்று வாழ்ந்தவர்கள். அவர்கள் வகுத்த பாதையில் வாழ்ந்து காட்டியவர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். பல பட்டங்களைப் பெற்ற இவர் தன்னை இறை பணிக்கே செல்வியாகவே இருந்து அர்ப்பணித்தார். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய சபையின் தலைவராக இருந்து பல நற்பணிகளைப் புரிந்தார். அவரின் நிர்வாகத் திறமை ஓர் எடுத்துக்காட்டாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கின்படி அனாதைக் குழந்தைகளுக்கும் விதவைப் பெண்களுக்கும் அன்புக் கரம் நீட்டி பராமரித்து வந்தார். அம்மையாரின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும். அவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரின் ஒளி இன்றும் - என்றும் சைவத் தமிழ் மக்கள் மத்தியில் பிரகாசித்துக்கொண்டே இருக்கும்.
ர். ஆனபடியால் நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ என்றும் வண்டும்; நல்லவற்றையே நாடவேண்டும்.
- சிவத்தமிழ்ச்செல்வி (அருள் ஒளி - புரட்டாதி 2007)
து கொண்டே இருக்கும் ஆனால் அப்போட்டியில்
7.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 30
(SIGpIronfusat கல
G3a5IITaf66.onr Lu
ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டிலே முக்கிய பகுதி சைவத் தமிழ்ப் பண்பாடாகும். ஈழத்தின் வரலாற்றின் ஆரம்ப காலந் தொட்டே இப் பண்பாட்டின் கூறுகள் தோற்றம் பெற்று வளர்ந்து வந்துள்ளன. இவற்றின் வரலாறு விரிவான ஆய்வுக்குரியது. அத்தகைய ஆய்விலே வரலாற்றை வழிநடத்திய மாமனிதர்களின் பங்களிப்புத் தொடர்பான மதிப்பீடும் ஒரு கூறாக அமையும் என்பார் பேரறிஞர் சு. வித்தியானந்தன் அவர்கள்.
இத்தகைய மாமனிதர்களில் நமது தலைமுறை சார்ந்து வாழ்ந்தவர்களில் சிவத்தமிழ்ச் செல்வி, துர்க்கா துரந்தரி, கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் முதன்மை இடத்தில் இருப்பார் என்பது குறித்து யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.
தமது தொடக்க காலப் பணியைச் சிறந்த சைவ சமயச் சொற்பொழிவாளராகத் தொடங்கிய அம்மாவை இடைக்காலத்தில் பத்திரிகைகள் “நாவலருக்குப் பின் தங்கம்மா’ என விதந்துரைத்தன. ஆயினும் அவரது வாழ்வின் பிற்பகுதி பலவேறா அற, சமூகப் பணிகளாலேயே பெருமை பெறுகிறது. தாம் வாழ்ந்த மண்ணின் கல்வி வளர்ச்சிக்காகவும், வைத்திய சேவை விருத்திக்காகவும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதற்காகவும் அள்ளி அள்ளிக் கொடுத்த அவரது வலது கையின் செயற்பாடுகள் அனைத்தையும் அவரது இடது கை முழுமையாக அறியுமோ என்பது சந்தேகம்.
இந்தப் பணிகளை எல்லாம் அவர் ஆற்றுவதற்குப் பின்னணியாக அமைந்தது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம். அதன் அறங்காவல் குழுவின் தலைமையை அவர் ஏற்ற நாள் முதல் தெல்லிப்பழை என்ற ஊரே பெருமை பெறத் தொடங்கியது. “பெண்களால் நிர்வாகத்தை மிகத் திறம்பட ஆற்ற முடியும்” என்பதை எமது மண்ணில் நிரூபித்த செழுமையும் தெய்வீகமும் நிறைந்த பெண் அவர். அம்மா இன்று நீங்கள் எம்முடன் இல்லை. ஆரோக்கியமான முதுமைக்கு வாழும் மாதிரி வேண்டுமா? எண்பது வயதுக்கு மேலும் எத்தனை அருஞ்செயல்கள் என்று தெல்லிப்பழைக்கு வந்து எங்கள் அம்மாவைப் பாருங்கள்” என்று இனிச் சொல்ல முடியாது என்பதை நம்ப முடியவில்லை.
தைப்ெ
உலையும் பொங்க, உலகமும் பொங்க எமது உள்ளமும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யக் கிடைத்த ஒரு போற்றக் கிடைத்த ஒரு புண்ணிய நாள்.
தைப்பொங்கல் என்றால் நம் நாட்டின் பழம்பெரும் விழா என்ப முகமாகவே தைபிறந்தால் வழி பிறக்கும் என்று பேசிக்கொள்கிறே இந்நாட்டு உழைப்பாளிகள் அனைவருக்கும் சிறப்பாக உழவர்களு
(இந்து ஒளி
 

ந்த பெரு விளக்கு
கேந்திரன்
“சமயம், சமூக சேவை, பக்தி, தர்மம், பிரசங்கம், கோயில், அறம், திருவிழா, கல்வி, பெண்கள் பிரச்சினை, என்று இணைய முடியாதிருந்த புள்ளிகளை எல்லாம் இணைத்துக் கோலம் போட்டவர் நீங்கள்” என 2005ம் ஆண்டு யான் கூறிய நினைவு. இனிமேல் யாரம்மா இப்படி ஒரு அழகான பயனுள்ள கோலத்தைப் போடக் கூடியவர்?
“ஆயிரம் விளக்குகளால் நாள்தோறும் பொலியும் அன்னை துர்க்கா ஆலயத்தில் தூண்டா விளக்காய்ப் பொலிவது தாங்கள் தான் தாயே” என்று அடிக்கடி பேசுவோமே! அந்த விளக்கு எங்கே அம்மா போய்விட்டது?
தெய்வ தச்சன் செய்தது போலச் செம்மை செதுக்கி அடுக்கிய சூழலில் தங்கள் தரிசனம் காண வருவோமே! அந்தத் தரிசனத்தைக் காண இனி நாம் தேவ உலகுக்கா வரவேண்டும்?
“உயிர்களைப் பக்குவப்படுத்தி முத்தியை வழங்கும் நிலையில் இறைவன் முதலில் எடுக்கும் வடிவம் தாய் வடிவமாகும்” என்பது உங்கள் கூற்று. உங்கள் கூற்றுக்கான இலக்கிய பாத்திரமாய் நீங்களே நடமாடினீர்கள். இனிமேல்.?
சைவம் காத்த மங்கையர் வரிசையிலே காரைக்கால் அம்மையார், திலகவதியார்,மங்கையர்க்கரசியார், பெரிய குந்தவை தேவியார் என்று நீளும் பட்டியலில் தங்கம்மா அப்பாக்குட்டி என்ற பெயர் சேர்ந்து வரலாற்றில் நிலைக்கும்.
"சிகரமாய் எழுந்திம் மண்ணிலே நின்றாய் சிவத்தமிழ்ச் செல்வியே வாழி' என்று கவிஞர் சோ. ப அவர்கள் ஒருமுறை அம்மாவை வாழ்த்தினார்.
சிகரங்கள் சாய்வதில்லை. அவர் பேரொளியில் கலந்து
விட்டாலும் சிகரத்தின் நிழல் எமக்குத் தொடர்ந்து ஆறுதல் தரும் என நம்புவோம். அதற்காகத் துர்க்காதேவியைப் பிரார்த்திப்போம்.
பாங்கல்
உவகையினால் பொங்குகிற திருநாள் தைப்பொங்கல் ஆகும். திருநாள். எம்மையெல்லாம் வாழவைக்கின்ற சூரிய பகவானைப்
அனைவரும் அறிந்ததே. தைமாதப் பிறப்பைப் போற்றி வரவேற்கும்
ாம். அந்த வழி தனி மனிதனுக்கு மட்டும் உய்வுகாட்டும் வழியன்று.
க்கும் உவகையூட்டும் ஒரு வழியாகும்.
- சிவத்தமிழ்ச்செல்வி (அருள் ஒளி - தை 2006)
28 சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 31
kikkkkkkkrkkskíkkkkskík
தெய்வத்துள் ஒருவராய் இடம்
lh A GhajiraorL 5.5a5IDIDIr
த. மனோகரன்
தாய்மையின் திருவுருவாய் வலம் வந்த தங்கம்மா தூயபணி செய்து நிலைத்து விட்டார் இப்புவியில் ஆய்ந்து அவர் செய்த அறப்பணிகள் என்றென்றும் மையமாய் இருந்து ஒளிபரப்பும் இப்புவியில்!
இல்வாழ்வில் இணைந்து செல்வம் பெறாவிடினும் அல்லல் அகற்றும் நற்பணியால் பிள்ளைகள் சூழ அன்னையென்று போற்றும் அரும்பேறு பெற்றுவிட்டார் இன்னும் என்ன வேண்டும் அவர் பெருமை சாற்றிவிட
தாய்மையைப் போற்றும் உயர்பண்பு நம்மாண்பு தூய்மையாய் வாழ்ந்த அன்னையர்கள் எம் சொந்தம் அறமுரைத்த ஒளவையும், ஆண்டாளும், திலகவதியும் பெற்ற பெரு நிலைக்கு உரித்தானார் தங்கம்மா!
அந்தரித்து நின்ற அவல நிலை அகற்றி அரவணைத்து தந்து விட்டார் ஆறுதலை, தடுத்து விட்டார் துன்பங்களை வளமான வாழ்வுக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தி மங்கையர்கள் வாழ வழிவகுத்துப் பெருமைகொண்டார்!
துன்பங்கள் போக்கி, துயர்களைந்து காத்தருளும் துர்க்கை அன்னை தேவிக்கு தொண்டுபல செய்ததனால் தெல்லிப்பழையின் பெருமை திக்கெல்லாம் பரவிவிட தெய்வீகப்பணி செய்து புகழ் பெற்றார் நம் அன்னை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்படைந்து தெய்வத்துள் ஒருவராய் இடம் கொண்டார் நம் அம்மா தங்கம்மா அப்பாக்குட்டி அருள்வாழ்வின் வழி நின்று தரணியிலே தலை நிமிர அவர் வழியைப் பின் தொடர்வோம்!
ஞானம் என்னும் விளக்கை முன்வைத்து நாம் வாழ்க்கையை அகவிருளையும் நம்மாற் கடக்கமுடியும். ஞானம் என்பது இறை
மனித வாழ்க்கையிலே மன அமைதி, மனச்சாந்தி என்னும் மனச்சாந்தியளிக்கா. மன அமைதியைப் பெறுவதற்குக் கடவுளி
(இந்து ஒளி
 
 

சைவத்தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பு
சி. கணேசன், செயலாளர், ஈழத்து திருநெறி தமிழ் மன்றம்
சிெவத்திற்கும், தமிழுக்கும், சமூகத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றி வந்த அரும்பெரும் சைவத்திலகம் தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு அனைத்து சைவத் தமிழுலக மக்களுக்கு ஒர் நிரப்பமுடியாத பேரிழப்பாகும். தன்னை அண்டி வருகின்ற ஏழை மக்களுக்கு வேண்டிய உதவிகளை பிரதிபலன் எதிர்பாராது சிறப்பாகச் செய்த வந்தார்.
“வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்ற பாரதியார் முரசு கொட்டிய பாடலுக்கிணங்க மகளிர் இல்லத்தை அமைத்து ஏழைப் பிள்ளைகள் வாழ வழிவகுத்தார். யுத்த அனர்த்தங்களினால் அங்கிருந்தும் வெளியேற நேரிட்டபோது, மகளிர் இல்லப் பிள்ளைகளை ஒவ்வோர் இடமாக அழைத்துச் சென்று அவர்களுக்கு எவ்வித துயரும் நேராது காத்த பெருமையும் அன்னையையே சாரும்.
“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்ற அறிஞருடைய கூற்றுக் கிணங்க வாழ்ந்து காட்டியவர் அம்மையார் அவர்கள். ஆறுமுகநாவலருக்குப் பின்னர் மதுரை ஆதீனம் அம்மையாருக்கே தங்களது உயர் விருதை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. கோவில்களில் அடியார்கள் நல்லொழுக்கங்களைப் பேண வேண்டும் என்பதில் கண்டிப்பான வழிமுறைகளைச் செயலளவில் செய்யுமாறு கூறி, நடைமுறைப்படுத்தியும் வந்தார்.
அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவானது சைவத்
தமிழ் சமுதாயத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நடாத்திச் சென்றால் எந்த இருளையும் முக்கியமாக எமது வனை அறியும் அறிவு.
- சிவத்தமிழ்ச்செல்வி (அருள் ஒளி - புரட்டாதி 2007)
பேறு கிடைத்தற்கரிய பேறு. செல்வமும் நிதிகளும் மட்டும் ன் கருணாநிதியைப் பெறவேண்டும்.
- சிவத்தமிழ்ச்செல்வி (அருள் ஒளி- கார்த்திகை 2006)
9. சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 32
சைவ உலகின் தன்
சிவநெறிச் செல்வ தலைவர், கனடா சை
நிர்வாக ஆசிரி
சிெவ உலகின் தனிப்பெருந்தலைவி அன்னை துர்க்கா துரந்தரி, இலக்கிய கலாநிதி, சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தமது எண்பத்தி மூன்றாவது அகவையில் 2008 யூன் 15 இல் அமரரானர் என்ற செய்தி அறிந்து, அவர் இறைவன் திருவடியில் பேரின்பம் துய்க்க, சிவபெருமான் திருவருளை வேண்டி வணங்கி வருகிறோம்.
அன்னை அவர்கள் அன்புநெறியில் நின்று ஆசிரியப் பணியும், சைவசமயப் பணியும், செந்தமிழ்ப் பணியும், ஆலயப் பணியும், சமூகப் பணியும் ஆகிய அரும்பணிகளைத் திறம்பட ஆற்றியவர்; தொண்டின் திருவுருவாக விளங்கியவர்.
அன்னை அவர்கள் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் காப்பாளர்களில் ஒருவராகவும், அன்புநெறி சிறப்பு ஆசிரியர்களில் ஒருவராகவும் விளங்கி வந்தவர். மன்றப் பணிகளைப் போற்றிப் பாராட்டி ஊக்கமும் ஆக்கமும் தந்தவர்.
நாவலர் பெருமான் தொடக்கி வைத்த பிரசங்க மரபினை இன்றைய தலைமுறையிலே பேணிவந்தவர் அன்னையார். இனிய சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர், செந்தமிழ் பொழிந்தவர். இவர்தம் சொற்பொழிவுகள் கேட்போரை மெய்மறக்கச் செய்தன. திருமுறைகளிலே தோய்ந்த நெஞ்சினராய் விளங்கியவர். செந்தமிழ் வழக்கினை, திருமுறையின் மாண்பினை, சைவத்தின் திறனை இவர் எடுத்துக் கூறும்போது பெருமித உணர்வு தோன்றும். அத் திறமை காரணமாக பல விருதுகள் வழங்கப்பட்ட சிறப்புடையவர். ஈழநாட்டில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன் ஆதியாம் நாடுகளில் இவர் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பயன் பெற்ற மக்கள் பலர் உளர். இவரைக் குருவாகவும் அன்னையாகவும் போற்றும் பெரியார்கள் உலகெங்கும் பலர் பரந்து உள்ளனர்.
சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் எளிய இனிய தமிழ் நடையில் சுவைபட எழுதும் எழுத்தாற்றலும் நன்கு அமையப் பெற்றவர். பல நூல்களை எழுதி வெளியிட்டவர். 1978இல் இவரின் கந்தபுராணச் சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் அறங்காவற் குழுவின் தலைவராய் விளங்கிய அன்னை அவர்கள், குழுவின் ஒத்துழைப்புடன் ஆற்றிவந்த அறப்பணிகள் சைவசமய வரலாற்றிலே புதிய சாதனைகளாக அமையுஞ் சிறப்புடையவை. ஆலயம் என்பது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமன்று, அது மக்களின் வாழ்வின் சகல துறைகளுடனுந் தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை தெல்லிப்பழை யூரீ துர்க்காதேவி
இந்து ஒளி
 
 
 

kkkkkkkkk
ரிப்பெருந் தலைவி
.தி. விசுவலிங்கம் வசித்தாந்த மன்றம் பர், அன்புநெறி
ஆலயஞ் சான்றாக அமைகின்றது. அது கதியற்றோருக்குப் புகலிடமாகவும், ஏழைகளின் கண்ணிர் துடைக்கும் கருணை இல்லமாகவும் அமைய வேண்டும் என்ற சிந்தனை சிவத்தமிழ்ச் செல்வியின் ஆலய பரிபாலன முறையிற் செயற்படுத்தப்பட்டது. ஆலய வருவாயிற் பல அறப்பணிகள் மேற்கொள்ளப் படுகின்றமையும், துர்க்காபுரம் மகளிர் இல்லம், சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம் போன்றவை நிறுவி நடைபெற்று வருவது இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
அன்னையார் அவர்கள் “ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டும், "நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடும் கோயில் பரமர்க்கங்காமே” என்ற திருமந்திர வாக்கைச் செயலில் நடைமுறைப்படுத்தியும் வந்தவர். அன்னை அவர்களின் முயற்சியினால் தேவஸ்தானத்திற் சைவ சித்தாந்த மாநாடு போன்ற மாநாடுகளும், சைவசமயச் சார்பான பல நூல்கள் வெளியிடலும் நடைபெற்றுள்ளன.
1990இல் சிவத்தமிழ்ச் செல்வி பிறந்த நாள் அறநிதியம் ஆரம்பிக்கப் பெற்றதனை அடுத்து, ஒவ்வோர் ஆண்டும் பல அறக்கொடைகள் செய்யப்பெற்று, அறிஞர்கள் கெளரவிக்கப் படுவதும், வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்புகளுக்கான உபகரணங்கள் அளிக்கப்படுவதும், யாழ் வைத்திய போதனாசாலை, யாழ் பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங்களின் தேவைகளுக்கு அன்பளிப்புகள் செய்வதும், நூல்கள் வெளியிடுவதும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கும், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கும் அறக்கொடை நிதி அளித்தமை போன்ற பல அறப்பணிகள் எல்லாம் “மக்கள் பணியே மகேசன் பணி” என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இச் செயற்பாடு ஏனையோருக்கும் முன்மாதியாக அமைகின்றது.
அன்னை அவர்கள் சைவத்தமிழுலகு செய்த புண்ணியப் பயனாய்த் தோன்றிய திருவருட் செல்வி. சைவத்தமிழ் வரலாற்றிலே தொண்டாற்றிய பெண்மணிகள் வரிசையிலே கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சைவ உலகின் தனிப்பெருந் தலைவியாகப் போற்றப்பட வேண்டிய சிறப்புக்கள் நிறைந்தவர். அன்னை அவர்கள் ஆற்றிய, பன்முகத் தொண்டுகளை சைவ உலகம் பாராட்டிப் போற்றுகின்றது. அவர் சிறந்த அருளாளராக வாழ்ந்து காட்டிய வழிகளைப் பின்பற்றி சைவசமய, தமிழ்ப் பணிகளையும், மனிதநேய சமுதாயப் பணிகளையும் திரிகரணசுத்தியோடு நடைமுறைப்படுத்துவோமாக அவர் முன்னின்று நிறுவிய நிறுவனங்களது அறப்பணிகள் முட்டின்றித் தொடர உதவுவோமாக.
30 சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 33
சிவத்தமிழை அறப்பணியாய்த்
திகழவைத்த தெய்வமகள்
( சைவப்புலவர் சு. செல்லத்துரை D
சிவத்தமிழின் செல்வியேயெம் தேசத்தின் ஒளிவிளக்கே தவப்பேறாய் வந்துதித்த தங்கத் தமிழ்த் தலைவி உவமைசொல முடியாத உலகுபுகழ் பெருந்தாயே சிவபெருமான் திருவடியில் சேவிக்கச் சென்றனையோ!
சைவநெறித் தத்துவத்தைத் தமிழமிழ்தில் குழைத்தேநீ தெய்வ9ருட் திருமொழியில் தேனமுதாய்த் தந்தாயே உய்யுநெறி காட்டுமுன்றன் உபதேசம் கேட்டிந்த வையமெலாம் மகிழ்ந்ததுபோல் வான்மகிழச் சென்றனையோ
செந்தமிழ்நின் திருவாயில் தெய்வமணம் வீசிவர சிந்தையினைப் பறிகொடுத்துத் தித்திக்கக் கேட்டிருந்தோம் அந்தமொழி தன்சபையில் நின்றொலிக்க வேண்டுமென்ற எந்தைசிவன் அழைப்பேற்று எந்தாயே ஏகினையோ
ஆலயங்கள் தர்மத்தின் அச்சாணி எனக்காட்டிச் சீலம்மிக்க அறப்பணிகள் செய்வதுதான் ஆலயத்தின் மேலான பணியென்று மெய்ப்பித்த அருட்தாயே காலத்தை வென்றுசிவன் கழல்மணியாச் சேர்ந்தனையோ
பிறந்தததின அறக்கொடைகள் பேராறாய்ப் பெருகிவர உறங்காவுன் கருணையுள்ளம் உரியஇடம் கண்டறிந்து அறக்கொடைகள் அளவிலதாய் அள்ளியள்ளிச் சொரிந்தகையின் திறங்கான வோசிவனார் சிவலோகம் அழைத்தாரோ!
அன்னையர்க்கும் ஆதுலர்க்கும் ஆதரவில் சிறுமியர்க்கும் அன்னையென வீற்றிருந்து அறம்வளர்த்த மகளிரில்லம் பொன்னான சைவத்தின் பண்பாட்டு விளைநிலமாய் இன்னாட்டில் போலாக்க இறையுலகுக் கேகினையோ!
நடமாடும் நூலகமாய் நம்முன்னே வாழ்ந்த அன்னை திடமான சிவத்தமிழ்ச் செல்வி ஆய்வு நூலகந்தன் இடமாக்கி எழில்ஞானச் சுரபியாய் இங்குவைத்து நடமாடும் சிவனடிக்கே நன்னூலாய்ச் சென்றனையோ!
தேசமெலாம் சிவத்தமிழைச் செழிக்கவைத்த தெய்வமகள் Lurras Lól6oTÜ பெருவாழ்வில் பணிசெய்து பணியென்ற மாசில்லா மாணிக்க மணியேநீ சிவனடியில் தேசுற்று நின்றொளிரச் சிவபுரமே சேர்ந்தனையோ
(இந்து ஒளி
 

நீந்துகவே முத்தியின்ப நீழல்
எங்கள் திருமகளே ஈடிற் கலைமகளே
பொங்கும் புதுப்புனலே பூமகளே - தங்கம்மா என்னும் தவமகளே இன்பச் சிவத்தமிழே என்ன இனிச்செய்வோ மே.
சைவப் பணிகளுடன் சார்ந்த தமிழ்ப்பணிகள் ஐயை அருட்துர்க்கை ஆலயத்தில் - செய்த திருப்பணிகள் மக்கள் நலப்பணிகள் செய்ய இருப்பவர்யார் அந்தோ இனி.
ஊருலகம் நன்மைபெற ஊறிநின்ற ஊரணியே காரைநிலம் கற்றரைகள் காடெல்லாம் - ஏரெனவே சீராய் உழுது பதஞ்செய்து செம்பயிர்தான் வேரிடவே வைத்தாய் விதைத்து.
சொல்லால் எழுத்தால் தொடர்தொண்டால் பண்பாட்டால் வெல்லா மனங்களையும் வென்றன்பு - நல்லாய்ச் சொரிந்த சிவஞான வித்தகியே துர்க்கா துரந்தரியே ஆகினையோ சோதி.
ஒன்றே குலமென்றும் தேவன் ஒருவனென்றும் சென்ற இடங்கள் செலச்சொல்லி - நன்றே பரந்த மனப்பான்மைப் பக்குவத்தைத் துர்க்கா துரந்தரியே காத்தாய் துணிந்து.
கண்ணின் ஒளியே கருத்தின் பெருவிருந்தே பெண்ணின் பெருமைநலப் பேராறே - மண்ணதனில் துர்க்கை வழிபாட்டைத் தூக்கித் துலக்கியபேர் நிற்கும் நிலத்தில் நிலைத்து.
தூய தறவறத்துத் துர்க்கா துரந்தரியே தாயே தமிழர் தலைமகளே - ஆயபுகழ் ஆறுமுக நாவலர்பின் ஆன்ற தமிழ்சைவம் ஏறுபுகழ் எய்தவைத்தா யே.
பாங்கான தெய்வப் பணிகள் பலசெய்த ஓங்கார ஓசை உறங்கியதால் - தாங்காதே ஏந்திச் சுடர்விளக்கை என்றும் வணங்கிடுவோம் நீந்துகவே முத்தியின்ப நீழல்.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 34
நாவலர் வழிநின்று நற்ப
ராதாசிவசுட்
fழத்திரு நாட்டின் வரலாற்றில் சைவத்தையும் தமிழ் மொழியையும் இன்று நாம் இவ்வளவு தூரம் மதிப்பதற்கும் பெருமை கொள்வதற்கும் காரணமாக இருந்தவர் நாவலர் பெருமான். திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் பட்டம் வழங்கி அவரைக் கெளரவித்த பின்புதான் அவரது பெருமை பாரெல்லாம் பரவியது. அதுபோல் சைவத்தையும் நற்றமிழையும் தமது அயராத உழைப்பால் வளர்த்து பெருமை சேர்த்த ‘சொல்வின் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களையும் திருவாவடுதுறை ஆதீனம் கெளரவித்துள்ளது. ஆதீனம் நடத்திய திருமுறை விழாவுக்கு விசேட அழைப்பில் சென்று அங்கு மகளிர் நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கி எமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். அத்தகைய பெருமைக்குரிய சிவத்தமிழ்ச் செல்வி எழுத்திலும் பேச்சிலும் சிறந்த சமய நுண் பொருள்களை உலகிற்கு வழங்கி சமய நெறிநின்று வாழ்ந்து காட்டியவர்.
அம்மையார் பழுத்த தமிழ்ப் புலமையுடன், சித்தாந்த சாஸ்திரப் பேருண்மைகளை ஐயந்திரிபற தெளிவாய்க் கற்றறிந்தொழுகும் பண்பாளராக விளங்கினார். நம் செந்தமிழ் மொழிக்கும் சமய வளர்ச்சிக்கும் நெடுங்காலமாகச் செய்து கொண்டு வந்த அளப்பெரும் தொண்டுகள் பாராட்டுவதற்கும் போற்றுவதற்கும் உரியன. மக்கள் நல்லொழுக்கமுடையவர்களாக வாழ்வதற்கும், வாழ்வின் குறிக்கோளான பேரின்பப் பெரும்பேற்றை அடைவதற்கும் வேண்டுவனவாய நற்றொண்டுகளை ஆற்றிவந்தவர் துர்க்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார்.
சைவசமயம் புதுப்பொலிவு பெறச் செய்தவர்கள் சைவசமய நாயன்மார்கள். அவர்களை நமக்குத் தந்த அன்னை வடிவங்களான மங்கையர்க்கரசியார், திலகவதியார், காரைக்கால் அம்மையார், அன்னை சாரதாபாய், மீராபாய் ஆகியோரைப் போற்றி மேற்கோள் காட்டிச் சிவப்பணியில் திளைத்து எம்மையெல்லாம் சிந்திக்கவைக்கும் வகையில் அருந்தொண்டாற்றியவர். அம்மையார் அவர்களின் பணி நல்லை நகர் நாவலர் பெருமான் வழியில் சென்று சைவத்துக்கும் தமிழுக்கும் அரும்பெரும் சேவையாற்றித் தம்மை இத்தூய வாழ்வுக்கே முழுமையாக அர்ப்பணித்து தவசீலியாக வாழ்ந்திருக்கின்றார். அவர் தமது சமயப் பேச்சுக்களில் எல்லாம் பக்திச்சுவை செறியும் வண்ணம் பெரிய புராணம், திருவாசகம் என்பவற்றில் மேற்கோள்காட்டி உள்ளங்களைக் கவரும் ஆளுமை கொண்டவராக இருந்துள்ளார்.
திவ்வியம் பழுத்த சைவ நீதிக்கும், தெய்வத் தமிழ்மொழிக்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ள தமிழ் மங்கையர் பலரை வரலாறு நமக்குக் காட்டிநிற்கிறது. அத்தொடரில் பக்தி உணர்வில் சிறப்புடன் பரந்த தமிழ்ப்புலமை கொண்டவராய் வாழ்ந்துள்ளார். “சகோதரி அவர்கள் இனிய சொற்பொழிவாளர்; செந்தமிழ் பொழிவினர். இவர்தம் திருவாசகச் சொற்பொழிவுகள் கேட்போரை மெய்ப்பாடுறச் செய்யும். திருமுறைகளில் தோய்ந்த நெஞ்சினர். தமது செந்தமிழ் வழக்கினை, திருமுறையின் மாண்பினை,
(இந்து ஒளி
 

Eயாற்றிய அம்மையார்
SyLoofuuh
சைவத்தின் திறனை இவர் எடுத்துக் கூறும் பொழுது பெருமித உணர்வு தோன்றும். பேச்சைப் போலவே எழுதும் திறனுமுடையவர். பல ஆண்டுகளாகச் செந்தமிழுக்கும், சிவநெறிக்கும் அரிய தொண்டுகள் ஆற்றிய பெருமை அருமைச் சகோதரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு உண்டு” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அன்று கூறியிருந்தார். அவருடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்ற அம்மையார் “தமிழிற்காகத் தொண்டு செய்வது சிறப்புடையது. சமயத்திற்காகச் செய்யும் தொண்டு அதைவிடச் சிறப்புடையது. இரண்டையும் இணைத்துச் செய்கின்ற தொண்டிற்கு இணையான சிறப்பு ஒன்றுமே இல்லை” என்று கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தால் “செஞ்சொற் செம்மணி” என்னும் பட்டத்தைப் பெற்ற அம்மையார், தமிழ்நாடு சிதம்பரத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலும் உரையாற்றிப் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றவர். அன்னாரின் தமிழ்ப் பணியையும் சமூகத் தொண்டையும் பாராட்டி 1970களில் ஈழத்துச் சிதம்பரத்தில் 'சிவத்தமிழ்ச் செல்வி' என்னும் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். அகில இலங்கை இந்து மாமன்றம் 'சிவஞான வித்தகர்' என்னும் பட்டத்தை கொழும்பில் வைத்து வழங்கிச் சிறப்பித்தது. ஈழநாட்டின் தனிப்பெரும் திருக்கோயிலாக விளங்கும் பூரீ துர்க்காதேவி ஆலயத்தை அருளொளி வீசும்படி புனருத்தாரண திருப்பணி செய்த பெருமை தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரையே சாரும். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் அவரின் நற்பணியை மதித்து 'துர்க்கா துரந்தரி என்னும் பட்டத்தை வழங்கியது. சென்ற இடமெல்லாம் சிறப்புச் சேர்த்த அம்மையாருக்குக் கிடைத்த கெளரவங்களும், பட்டங்களும் எண்ணிலடங்காது.
சிவத்தமிழ்ச் செல்வி பல்வகைப் பரிமாணங்களைக் கொண்ட ஒருவராக முகிழ்ந்து நின்றார். சிவனருட் செல்வர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் தேவாரமும், மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையும் சைவ சமயத்தையும் தமிழையும் வளர்த்தன. அத்தகைய அருட்பாக்கள் நம் வாழ்விற்கான இலக்கியங்களாக அமைந்தன. சைவத் திருமுறைகளைப் பாடிய சைவ சமயக் குரவர்களின் வழியில் அன்பு நெறியில் சைவத்துக்கும் தமிழுக்கும் பணியாற்றிய சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் சைவத்தின் சீரிய சிறப்புக்கு தன்னையே அர்ப்பணித்த நிலையில் சமயகுரவர்களில் ஒருவராக முன்னிற்கின்றார். சமய இலக்கிய விடயங்களைப் பற்றி எழுதுவதிலும் அவற்றைப் பற்றி மேடைகளில் பேசுவதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார். பண்டிதராக சைவப்புலவராக வெளிவந்த அம்மையார் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சைவ சித்தாந்தம், திருமுறைகள் உட்பட்ட சமயக்கருத்துக்களின்பால் கொண்ட ஈடுபாடு காரணமாகவும் ஒரு இலக்கியவாதியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
32 சர்வதாரி வருடம் சித்திரை - سانچے{

Page 35
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பலநூல்களைத் தந்த செஞ்சொற் செம்மணி கந்தபுராணச் சொற்பொழிவு என்னும் நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசையும் (1978) பெற்றார். அவரது, 'பெரியபுராண வசனம்', "இலண்டனில் ஏழு வாரம் என்னும் பயணச் சொற்பொழிவு நூலும், “சைவக் கிரியைகளும் விரதங்களும்”, “வாழும் வழி” ஆகிய பயன்தரும் நூல்களையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.
ஆதியில் சிறுகுடிலில் அமர்ந்து அருள்பாலித்த துர்க்காதேவியை மிகப் பெரிய ஆலயத்திற் கொலு வீற்றிருக்கச் செய்து, மஹா கும்பாபிஷேக விழாவெடுத்து, அழகிய துர்க்கா புஷ்கரணி தீர்த்தக்குளப்பிரதிஷ்டை செய்தது மட்டுமன்றி அழகிய சித்திரத்தேர் செய்வித்து, கோயில் வெளிமண்டபங்கள் அமைத்து, இன்னும் இன்னோரன்ன திருப்பணிகள் நடைபெற்றதென்றால் அதற்கெல்லாம் மூலகர்த்தாவாகச் செயற்பட்டு, கோயில் நிர்வாகம் சிறப்பான முறையில் அமைய துணிச்சலுடன் அரும்பாடுபட்டு உழைத்தார். இவற்றுடன் நின்றுவிடாமல் பொதுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி எவருமே எண்ணிடமுடியாத அளவுக்கு மனிதநேயம்கொண்டவராக வாழ்ந்து காட்டியுள்ளார். துர்க்காபுரம் மகளிர் இல்லம் அமைத்து ஆதரவு தேடிவந்தோருக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்து அவர்கள் துன்பத்திலும் இன்பத்திலும் தானும் ஒருபங்காளியாகவே செயற்பட்டார். பிள்ளைகளின் கல்விக்கும், கஷ்டப்பட்ட குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் தாராள மனத்துடன் வேண்டிய நேரங்களில் வேண்டிய உதவிகளை எல்லாம் செய்தார். எல்லோரும் கல்விகற்க வேண்டும் என்பதில் அவர்காட்டிய ஆர்வம் அளவிடமுடியாது. இவருடைய கல்விப் பணியும், சமூகப் பணியும் யாழ்ப்பாணச் சூழலை நோக்கும் போது அபாரமானது. மூத்தோர் வாழ்வதற்கு அன்னையர் இல்லம் வாழ்விடம் அமைத்துக் கொடுத்தமை; அவர்களுக்கான சிறப்பான பராமரிப்பு: அன்பான அரவணைப்பு - இப்படியான பெருந்தொண்டினை செய்து மகிழ்ந்தவர். நோயாளர்களின் துன்பம் போக்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாகப் பணம் வழங்கி தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியவர். யுத்த அனர்த்தம் காரணமாக மகளிர் இல்லப் பிள்ளைகளோடு இடம்பெயர்ந்து தங்கியிருந்து அவர்களுக்கு ஆறுதல் கொடுத்த பெருந்தகையாக மிளிர்ந்தவர். இடம்பெயர்ந்த இந்துக்குருமார் நாற்பத்தொன்பது பேருக்குப் பணமாகவும் பொருளாகவும் அன்பளிப்புகளை வழங்கியவர். நோயாளர்களுக்கு சளி அகற்றும் இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்காக யாழ் வைத்தியசாலைக்கு ஐம்பதினாயிரம் ரூபாவை வழங்கினார். கைதடி முதியோர் இல்லத்திற்கு முப்பதினாயிரம் ரூபாவை வழங்கி தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு புனர்நிர்மாணப் பணியை மேற்கொள்ள நிதியுதவி செய்தார். கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு மருந்துகள் பாவிப்பதற்கு வசதியற்றவர்களுக்கு மருந்துகள் கொள்வனவு செய்து வழங்குவதற்குரிய பணத்தினை அன்பளிப்பாக வழங்கினார்.
(இந்து ஒளி
 

சமூகப் பணியுடன் அவர் மேற்கொண்ட கல்விப் பணி மேலானது; யாழ் பல்கலைக் கழக சைவசித்தாந்த பீடப்பிரிவுக்கு ரூபா ஐம்பதினாயிரம் வழங்கி அப்பீடத்தின் செயற்பாட்டுக்கு தன்னாலான உந்துதலை வழங்கினார். யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு நிதி வழங்கியதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு துறையினதும் வளர்ச்சிக்கும் அவருடை செயற்பாடுகள் உந்து சக்தியாக இருந்துள்ளன. “சிவத்தமிழ்ச்செல்வி ஆய்வு நூலகம்’, ‘அருள்ஒளி மாத இதழ் வெளியீடு, சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்தல் ஆகிய பணிகளை எல்லாம் செயலுருப்பெற வைத்து அவற்றின் மூலம் ஆராய்ச்சிப் பணிகள், எழுத்துப் பணிகள், அச்சுப்பணிகள் என்று அவை விரிந்து நின்றன. மாணவர்களது கல்வியில் அவர் கொண்ட அக்கறை காரணமாகத் தொடர்ந்து பல வருடங்களாக தன்னாலான சேவையைச் செய்து வந்துள்ளார். 2000 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டின் கீழ்வாழும் குடும்பத்தில் மேல்வகுப்பைச் சேர்ந்த 75 மாணவர்களுக்குப் பாடசாலைக் கல்விக்கான உபகரணங்களை வழங்கி அவர்களை ஊக்கிவித்தார். 2001ஆம் ஆண்டு 150 மாணவர்களுக்கும், 2002ஆம் ஆண்டு தென்மராட்சி கல்விவலயப் பிரிவிலுள்ள மாணவர்களின் தெரிவுசெய்யப்பெற்ற 150 மாணவர்களுக்கும், 2003ஆம் ஆண்டு தீவகக் கல்விவலயப் பிரிவில் க.பொ.த.சாதாரண வகுப்பில் தெரிவு செய்யப்பெற்ற 150 மாணவர்களுக்கும், 2004ஆம் ஆண்டு வன்னி மாவட்ட மாணவர்களுக்கும் கல்விக்கான உதவிகளைச் செய்துள்ளார்.
1982இல் சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட அம்மையாருக்கு 1991இல் இலங்கை அரசு 'கலாசூரி' என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. 04.10.1998இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கப் பெற்றமை அவரின் ஆழமான அறிவுக்குப் பொருத்தமானதே. கனடா சைவசித்தாந்த மன்றம் துவிஞோத்தமி என்னும் பட்டத்தை 1999ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்தது.
அம்மையார் இலங்கையில் மட்டுமல்லாது தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமது உபந்நியாசங்கள் மூலமாக சைவத்தின் உன்னத நிலையையும் சைவ சித்தாந்தத் தத்துவக் கருத்துக்களையும் சைவ மக்கள் அறிந்துணரச் செய்தார். பாமரரும் கற்றறியும் வகையில் மிக எளிய நடையில் சைவ நற்சிந்தனைக் கட்டுரைகளையும், ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். நல்லவை செய்து, நற்பணியாற்றி, நானிலம் போற்ற வாழ்ந்து காட்டிய தெய்வத்திருமகள் தெவிட்டாத தமிழுற்று மறைந்த செய்தி மனத்தை வாட்ட, ஏங்கிநிற்கும் உள்ளங்களுக்கு ‘எப்போதோ முடிந்த காரியம்' என்ற யோகர் சுவாமியின் நற்பதத்தைக் கூறி எல்லாம் அவன் செயல்' என்று மனதை ஆற்றுவோம்.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 36
kklkkklklklks faião
பெரியபுராணமும்
தெய்வத் திருமகள் தங்
சிவபதமடைந்த தெய்வத் திருமகள் தங்கம்மா அ வகையில் இந்தக் கட்டுரையை “இந்து ஒளி” ( மலேசியா ஆகிய நாடுகளில் நிகழ்த்திய சமய சொற்பொழிவுகள்” என்ற நூலிலிருந்து நன்றி
'இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்பது ஒளவையாரின் வாக்கு நினைப்பவர் மனம் கோவிலாய்க் கொண்டவன் பெருமான். இதனாலேயே அடியவர்களின் பெருமை ஆண்டவனின் பெருமையிலும் பார்க்க விஞ்சி நிற்கிறது. இத்தகைய பெருமையுடையவர்களைப் பற்றிப் பேசிய புராணம் பெரியபுராணம் என்று போற்றப்படுகிறது. முதற் பதினொரு திருமுறைகளும் இறையின்பத்தின் நிலைமையை எடுத்தோதுவன. ஈற்றிலுள்ள பன்னிரண்டாந் திருமுறை மாத்திரந்தான் இறையின்பத்திற் திளைத்த அடியார்களைப் பற்றிக் கூறுவது. அவர்கள் இறையின்பத்தில் திளைத்தவர்கள்.
“காலையும் மாலையும் கைதொழு வார்மனம் ஆலய மாமே அரநெறியார்க்கே”
என்னும் திருமுறைக்கேற்ப அடியவர்களின் உள்ளமே ஆண்டவனுக்குரிய இடமாகும். இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருந்தாலும் சிறப்பாக வெளிப்பட்டு விளங்குவது சிவனடியார்களிடத்திலேதான் என்று அறிகிறோம். இதனை நீதிவெண்பா என்ற நூல் அழகான முறையில் விளக்குகிறது. வெப்பமானதாகிய சூரியனது கிரணத்தில் நின்றாலும் நிற்கலாம்; அக்கிரணத்தைப் பெற்று வெப்பமாக விளங்கும் மணலின்மேல் நிற்றல் முடியாது. அதே போன்று இறைவனுடைய அருளாற்றலிலும் பார்க்க அவ்வருளைப் பெற்று நிற்கும் அடியவர்களின் அருளாற்றல் வியத்தற்குரியதாகும்.
"ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேசரெதிர்நிற்ப தரிதாமே - தேசுவளர் செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம் தங்குமணல் நிற்பதரிதே தான்.” இவ்வாறு நீதிவெண்பா என்ற நூல் அழகாக விளக்குகிறது. சேக்கிழார் நற்பணி
தோத்திரங்களுக்கும் சாத்திரங்களுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்திலேயே சேக்கிழார் சுவாமிகள் வாழ்ந்தார். மெய்கண்ட சாத்திரங்களுள் முடிமணி போன்று விளங்கும் சிவஞான போதத்தையருளிய மெய்கண்ட தேவநாயனாருக்கு எழுபது வருடம் முந்தி வாழ்ந்தவர் இவர். காலத்தை நோக்கி இவர் ஆற்றிய இந்தச் சேவையினால் சைவத்தமிழுலகம் மூன்று பெரும் பயன்களை அடைந்ததெனலாம். முதலாவது, ஆட்சி பீடத்திலே சைவத்தை ஏற்றிவைத்த பெருமையாகும். இரண்டாவது, நாயன்மார்கள் வரலாற்றை உலகுக்குக் காட்டிய சிறப்பாகும். மூன்றாவது, சைவசித்தாந்தத்துக்கு விளக்கங் கொடுத்த பெருமையாகும். இதனாலேயே சைவசித்தாந்த சாத்திரங்களில் எட்டு நூல்களை
இந்து ஒளி
 
 

கம்மா அப்பாக்குட்டி
ப்பாக்குட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் lவளியிடுகிறது. இது, அம்மையார் சிங்கப்பூர், சொற்பொழிவுகளின் தொகுப்பான 'பத்துச் |டன் எடுக்கப்பட்டது.
ஆக்கிய உமாபதிசிவாச்சாரியார் அவர்கள் சேக்கிழாருக்கு ஒரு தனிப்புராணம் இயற்றினார். மாதவச் சிவஞான சுவாமிகளும் “எங்கள் பாக்கியப் பயன் சேக்கிழார்” என்று போற்றினார். இன்னும்,
"தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கினாற் சொல்ல வல்ல பிரான்’
என்று குறித்தருளினார். நூலின் தோற்றம்
அரசன் அநபாயசோழன் திருமுறை முதலிய நூல்களில் ஈடுபட்டுத் திருவருளைப் பெற்று உய்யாமற் சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களிலே ஈடுபாடு கொண்டு சுவைப்பதைச் சேக்கிழார் உணர்ந்தார். இந்த ஈடுபாட்டை மாற்றவேண்டுமென்று கருதி அரசனுக்குச் சிவகதைகள் பற்றிச் சுருக்கமாக விளக்கினார். இதனால் திருத்தொண்டர்களது வரலாற்றை விரிவாகப் பாடித்தரும்படி அமைச்சராகிய இவரை அரசனே வேண்டிக் கொண்டான். அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு திருத்தொண்டர்களது வரலாற்றை எடுத்துப் பாடுவதில் பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனால் பாடுவதற்குத் தனக்குத் தகுதியுண்டா என்று எண்ணி, ஏங்கி இறைவனை நினைந்தார்.
"ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி’
என்னும் சைவசித்தாந்த விளக்கப்படி இறைவனே தனக்கு உள்நின்று உணர்த்த வேண்டுமென்று நினைத்தார். தில்லையை நோக்கிச் சென்றார். அதன் எல்லையிலே வீழ்ந்து வணங்கினார். திருக்கோயிலில் புகுந்து வலம் வந்து கனகசபையிலே கூத்தப் பெருமானைக் கண்டு வணங்கி ‘எம்பெருமானே! உன்னடியார்களது பெரும்புகழைப்பாட அடியேனுக்கு அடியெடுத்துக் கொடுத்தருளல் வேண்டும்” என்று வணங்கினார். உலகெலாம்
தில்லையம்பலவன் திருவருளால் அப்பொழுது “உலகெலாம்” என்ற பேரொலி அசிரீரியாக எழுந்தது. இதனை அறிந்துகொண்ட தில்லைவாழ்ந்தணர்கள், சேக்கிழாரது திருவருட் பெருமையை வியந்து கூத்தப் பெருமானது திருமாலையைத் திருநீற்றுடன் அவருக்கு அளித்துப் பரிவட்டங்கட்டி வாழ்த்துக்கூறி நின்றார்கள். அவையனைத்தையும் “உலகெலாம்” என்ற அச்சொல்லையே முதலாக் கொண்டு புராணத்தைப் பாடத் தொடங்கினார்.
'உலகெலாமுணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்”
சர்வதாரி வருடம் சித்திரை - ஆவி)

Page 37
klklksklklk
கூத்தப் பெருமான் எடுத்துக் கொடுத்த இந்த உலகெலாம் என்ற தொடரை முதலாகக் கொண்டு பாடிய சேக்கிழார் இறைவனது திருவடியையே அதன் பொருளாகக் கொண்டு முதற் பாடலை பாடி முடித்தார்.
முதற்பாடல்தரும் சித்தாந்த விளக்கம்
உலகு என்பது உயிர்களைக் குறித்து நிற்கிறது. இறைவன் உயிர்களின் சொல்லையும் நினைவையும் கடந்தவன். அதனாலேயே கடவுள் எனப்படுகிறான். பாச ஞானங்களுக்கும் பசு ஞானங்களுக்கும் அப்பாற்பட்டவனாகிய இறைவனை அரியவனாகக் காட்டிய அடிகள், உணர்தல் என்பதால் மனத்தையும், ஒதுதல் என்பதால் வாக்கையும் காட்டி வாக்குமனாதீதன் என்பதை விளக்குகிறார். இது இறைவனுடைய சொரூப நிலையாகும். ஆனால் உணர்வதற்கு அரியவனாயினும் எளியவனாக உருவந்தாங்கி நிற்றலால் இரண்டாவதடியில் “நிலவுலாவிய நீர்மலி வேணியன்” என்கிறார். எனவே இது இறைவனது தடத்த நிலையில் அனந்தசக்தி எனப்படும் அளவில்லாத ஆற்றல்களை உடையவனாய் உயிர்களைப் பஞ்சகிருத்தியம் செய்து உய்விப்பதை விளக்கி “அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்’ என மூன்றாமடியில் அருளுகிறார். "மலர் சிலம்படி” என்பதால் எல்லாப் பொருள்களும் அவனது திருவடியினின்றே தோன்றுவது உணர்த்தப்படுகிறது. பக்குவமுள்ள அன்பர்களின் உள்ளத்திலே மலர்கின்ற சிலம்படி இதுவாகும். நினைத்தல், வாழ்த்தல், வணங்கல் ஆகிய முக்கரண வழிபாட்டையும் சிலம்படிக்குக் கூறித் தொடங்குகிறார். கூத்தப் பெருமான் எடுத்துக் கொடுக்க 'உலகெலாம் என்பதை முதலாகக் கொண்டு தமது வியாபாரத்தை நன்கு செய்தார் என்று மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாடிச் சேக்கிழாரைச் சிறப்பிக்கின்றார். இவ்வாக்கினை முதல், நடு, முடிவு என்னும் மூன்றிடத்திலுஞ் சிறப்பாக அமைத்து முடித்திருக்கிறார். திருஞானசம்பந்தர் இறைவன் அளித்த முத்துச்சிவிகையை ஏற்று அதனை வலம் வந்து வணங்கி அஞ்செழுத்து ஓதி அதன் மீது அமர்ந்தார் என்பதை எடுத்துக்காட்டிய இடத்தில்,
"சோதிமுகத்தின் சிவிகை சூழ் வந்துபார் மீது தாழ்ந்துவெண் ணிற்றொளி போற்றிநின்(று) ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்து) ஒதி ஏறினார் உய்ய உலகெலாம்”
எனப் பாடியுள்ளார். நாலாயிரத்து இருநூற்று எண்பத்தொரு பாடல்களில் ஏறக்குறைய பாதி அளவில் மேற்காட்டிய பாடல் அமைந்து நடுவில் 'உலகெலாம்' என ஒலி கொடுக்கிறது. உலகங்கள் பதினான்கு என்பதற்கேற்ப பெரிய புராணத்திற் பதினான்கு இடங்களில் 'உலகெலாம் என்பது விளங்குகிறது. திருத்தொண்டத் தொகையை அருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் திருவாரூர்ப் பெருமானே அடியெடுத்துக் கொடுத்தார். வகைநூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதிக்கும் திருநாரையூர்ப் பிள்ளையார் அருள் அளித்தார், விரிவுபாடிய சேக்கிழாருக்கும் அம்பலவாணனே அடியெடுத்துக் கொடுத்தார்.
(இந்து ஒளி
 
 

கத்தாத்துவித சைவசித்தாந்தப் புதையல்
சைவத்தின் குலக் கவிஞராகிய சேக்கிழார் சித்தாந்த உண்மைகளைத் தெளிவுபட இந்நூலில் விளக்கியுள்ளார். இவர் காலத்துக்குமுன் சமயாசாரியார்களின் பாடல்களும் திருமந்திரமும் ஞானாமிர்தம் போன்ற சித்தாந்த சாத்திரங்களும் தோன்றியிருந்த போதிலும் சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளையும் சாதனம், பயன் முதலிய இயல்புகளையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாத விளக்கங்களையும் குரு, லிங்க, சங்கம வழிபாட்டு விளக்கங்களையும் மிகச் சிறப்பாக விளக்கிய பெருமை சேக்கிழார் சுவாமிகளுக்கே உண்டு. உயிரின் இயல்புகளையும் பசு, பாச, ஞானங்களின் இயல்புகளையும், பதிஞானத்தின் உயர்வையும், அணைந்தோர் தன்மையையும், அடியார்களின் பெருமையையும், அவர்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்த தன்மையையுந் தெளிவுற விளக்கியுள்ளார்.
இருவகை ஞானம்
திருத்தோணிபுரத்தில் ஞானப்பாலூட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் தவமுதல்வர் சம்பந்தர் ஞானம் பெற்ற தன்மையை விளக்குமிடத்திற் பாடிய,
“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்’ என்ற பாட்டில் விளக்கிய ஞானவாய்மையே சிவஞானசித்தியாரில் அப்படியே அடியொற்றிக் கூறப்படுகிறது.
"கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தலென வீரிரண்டாங் கிளக்கின் ஞானம்’
என்கிறார் அருணந்தசிவம். கேட்டல், சிந்தித்தல் இரண்டும் நூல் பற்றியதாகையால் அபரஞானம் என்றும், தெளிதல், நிற்றல் இரண்டும் நூல் பற்றாததாகையால் பரஞானம் என்றுங் கூறப்படும். உவமையில்லாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞானம் என்றும் பிரித்துச் சேக்கிழார் காட்டியபடியே அருணந்திசிவமும் பிரித்து விளக்கியுள்ளார். திருப்பாசுர விளக்கம்
திருஞானசம்பந்தர் சமணருடன் புனல்வாதஞ் செய்யச் சித்தங்கொண்டு சைவத்தின் பெருமையை உலகிற்குக் காட்டி அருளிய பதிகம் திருப்பாசுரமாகும். இது ஞானபாத முடிவாய்ச் சிவஞானபோதத்தின் விளக்கமாய் அமைந்துள்ளது. முதல் மூன்று பாட்டுக்களும் பொதுவகையிலும், பின்பாட்டுக்கள் சிறப்பு வகையிலும் அமைந்துள்ளன. வாழ்க அந்தணர் என்ற பாட்டின் விளக்கத்தில் சங்காரக் கடவுளாகிய சங்கரனே முதல்வன் என விளக்கி வேள்வி, அர்ச்சனைகள், வழிபாடுகள்யாவும் அவனுக்கே உரியதெனக் காட்டுகிறார்.
"அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்கவென்று இந்தமெய்ம் மொழிப்பயன் உலக மின்புறச் சந்தவேள்விகள்முதற் சங்க ராக்குமுன் வந்த வர்ச்சனை வழிபாடு மன்னவாம்”
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 38
எனக்கூறி அடுத்தபாட்டில் ‘உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம், பெரிய நல்லடையாளங்கள் பேசினர்' என விளக்கி இறைவன் உண்மையன்பர்க்கே காட்சி கொடுப்பான் என்பதையுங் கூறி, பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்த பெருமையையும் விளக்கியுள்ளார். சிவஞானபோதம் எட்டாம் சூத்திரப் பொருளைச் சேக்கிழார் மெய்கண்டாருக்கு முன்னமே கூறிப்போந்தார்.
தம்மையே சிந்தியா வெனுந் தன்மைதான் மெய்ம்மை யாகி விளங்கொளிதாமென இம்மையே நினை வார்தம் இருவினைப் பொய்ம்மை வல்லிருள் போக்குவா ரென்றதாம்’
இவ்வாறு பல சைவத்தாந்தக் கருத்துக்களை எடுத்து விளக்கும் திட்பத்தைத் திருப்பாசுர விளக்கத்திற் காட்டியுள்ளார். மும்மலங்கள் பற்றிய விளக்கம்
சைவசித்தாந்த சாத்திரங்கள் மும்மலங்கள் பற்றி விளக்கி
நிற்கின்றவெனினும் அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக நின்று விளக்கந்தந்தவர் சேக்கிழார். நாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலிலே போடுகிறார்கள். “கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று பதிகம் பாடுகிறார். கல் மிதக்கிறது. தெப்பம் போல் அதன்மேல்
உட்கார்ந்து வருகிறார் நாவரசர். இந்த இடத்திற் சேக்கிழார் அதிசயத்தோடு உணர்ந்த ஒரு உணர்வைத் தருகிறார். இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின், வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட, அருளும் மெய்யஞ்செழுத்து' என்று கூறி வினையாகிய கர்மம், பாசமாகிய மாயை, மலம் எனப்பட்ட ஆணவம் மூன்றையும் இணைத்து பிறவியென்னும் கடலில் தடுமாறும் மக்களைக் கரையேற்றும் சக்தி திருவைந்தெழுத்துக்கு உண்டு என்பதை விளக்கி அத்தகைய ஐந்தெழுத்து திருநாவுக்கரசரை ஒரு கல்லோடு பிணிக்கப்பட்ட போது கரையேற்றாமல் இருக்கமுடியுமா என்கிறார். கண்ணப்பநாயனார் புராணத்தில் இன்னும் சிறப்பாக மும்மல விளக்கத்தைக் காண்கிறோம்.
முன்புதிருக்காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் இன்புறவேதகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றுமற அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ
திருக்காளத்தி அப்பரைத் தரிசித்த மாத்திரத்திலே திண்ணன்ாரிடத்திற் காணப்பட்ட மாற்றங்களைக் கூறுகிறார். யாக்கை தன்பரிசு என்பது மாயையாகும். மும்மலக்கழிவு குறித்துச் சிவச்சார்பு பற்றி நின்றதைக் காட்டுகிறார். அன்புப் பிழம்பாகிய அடியவரின் மலநாசத்தினால் ஏற்பட்ட மாற்றம் இரசவாதத்தால் இரும்ப பொன்னானாற் போன்ற பெருமாற்றமாகும். பேணுதத்துவங்களென்னும் பெருகு, சோபனமேறி ஆணையாம் சிவத்தைச் சாரச் சென்றவர் அவர். இங்கே தத்துவங்களின் படிமுறையினையும் தசகாரியம் எனப்படும் சோபன முறையையுஞ் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார்.
இந்து ஒளி
 

கூன்பாண்டியன் வெப்புநோய் காரணமாக அல்லலுற்ற நேரத்தில் ஞானசம்பந்தர் பாண்டியனுக்குத் திருநீற்றினைப் பூசிப் பதிகம் பாடி வெப்பை நீக்கிய இடத்திலும் இக்குறிப்பு வருகிறது.
‘தென்னவன் மாறன் தானும் சிவபுரத் தலைவர் திண்டிப் பொன்னவில் கொன்றை யார்தம் திருநீறு பூசப் பெற்று முன்னைவல் வினையும் நீங்கி முதல்வனை யறியுந்தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத் துலையென நிற்றலாலே.”
ஞானசம்பந்தரால் நோக்கம் பெற்றவுடனேயும் அவர் நாமம் கேட்டவுடனேயும் திருநீறு பூசப்பட்டுப் பரிசதிட்சை பெற்றவுடனேயும் முன்வினை நீங்கி இறைவனை அறியுந் தன்மையை அடைந்தான் பாண்டியன் எனக் காட்டுகிறார். இளையான் குடிமாறநாயனார் தமது வீட்டுக் கொல்லையில் உள்ள கீரை வகைகளைப் பிடுங்கிச் சிவனடியாருக்குத் திருவமுதுாட்ட நின்ற சமயத்தில்,
"சூழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க”
என்பதால் நாயனாருடைய பாசம், பழிபாவங்கள் அனைத்தையும் வேரோடு களைவது போல அங்கிருந்த குறும்பயிரைக் களைத்தாரெனக் கூறப்பட்டுள்ளது.
உய்வானுளன்
சாக்கியநாயனார் புராணத்தில் மற்றொரு சைவசித்தாந்தக் கருத்தைக் காண்கிறோம். சாக்கியநாயனார் புத்தர்களது அறத்தின் வழியைச் சார்ந்து நல்ல ஞானமடைவதற்குப் பலவழிகளையும் ஆராய்ந்து அச்சமயமுடிவுகளெல்லாம் உண்மைப் பொருளை உணர்த்தவென்றும் ஈற்றில் சிவ நன்னெறியே மெய்ப் பொருளாவதென்றும் உணர்ந்தார். சிவனை அடைவதே உய்யும்வகை என்றும் உணர்ந்து கொண்டார்.
"செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும் மெய்வகையானான்காகும் விதித்தபொருளெனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி யல்லவற்றக் கில்லையென உய்வகையாற் பொருள்சிவனென் றருளாலே உணர்ந்தறிந்தார்"
அதாவது செய்யும் வினை ஒன்று செய்பவனாகிய கருத்தா ஒன்று: அதன் பயன் ஒன்று, அதனைக் கொடுத்து ஊட்டுபவனாகிய முதல்வன் ஒன்று என எண்ணப்படும் நான்குமே உண்மைக் கூறுபாட்டால் துணியப்பட்ட பொருள் எனக் கொண்டு இந்தச் சிறப்பு சைவநெறிக்கே உண்டென்றும் ஏனையவற்றுக்கு இல்லையென்றும் துணிந்து திருவருளால் உண்மைப் பொருள் சிவனெனத் தெளிந்தார் என்பதாம். உமாபதிசிவம், திருவருட் பயனில் இக்கருத்தின் விளக்கமாகவே,
"செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வானுளன்என்றுணர்” எனப் பாடினார்.
(Up lq-6)(60)J
திருமுறைகளின் இறுதியாக விளங்கும் இப்பெரிய புராணமும் சிவஞான போதத்தின் இறுதிச் சூத்திரமும் பொருத்திக் காட்டும் உண்மைப்பொருள் யாதெனில் சிவனடியாரையும் சிவாலயங்களையும் சிவனெனவே கண்டு வழிபடுதல் வேண்டும் என்பதாகும்.
36 | சர்வதாரி வருடம் சித்திரை - sc)

Page 39
sektidkkekskkkskekskkskkk.ktseks
விதம் హ్లా
ಜ್ಞ
&:3:
kitekti 纷
“செம்மலர் நோன்றாள் சேர லொட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரிஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானு மரனெனத் தொழுமே” என்னும் பன்னிரண்டாம் சூத்திரப் பொருளுக்கு இலக்கியமே பெரிய புராணம் என்று கூறினால் அதில் மிகையொன்றுமில்லை. இறைவனுடைய சிவந்த தாமரைமலர்கள் போன்ற திருவடிகளை அடையவிடாது தடுத்து நிற்கும் மலத்தினின்றும் விடுபட்டுச் சிவனடியார்களோடு மருவி மேலும் மயக்கம் நீங்குவதால் சிவனடியார்களின் திருவேடத்தையும் திருக்கோயிலையும் சிவபிரானே எனக் கண்டு தொழுது நிற்பர் என்பது சூத்திரப் பொருளாகும். இத்தகைய நிலையில் சீவன்முத்தர்களாக வாழ்ந்தவர்களே பெரிய புராணம் போற்றும் சிவனடியார்களாவர். இவர்களைப் பற்றி எழுதப்பட்ட இந்நூலுக்கு மாக்கதை' என்று பெயர் குறிக்கிறார் சேக்கிழார்.
"எடுக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவிநீள்முழக் கடக்களிற்றைக் கருத்துளிருத்துவாம்” பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடப்பட்ட இச்சிவனடியார் சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்
சைவ உலகின் ஆன்மி
2Cl6hydge
சைவத்தமிழ் உலகில் சிறப்பாகப்பிரகாசித்துக் கொண்டிருந்த ஆன்மிகச் சுடரொன்று ஜூன் 15ம் திகதியன்று அணைந்து விட்டது. இந்துப் பெருமக்களால் பேரன்போடும் பெருமதிப்போடும் போற்றப்பட்டு வந்த அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களே அந்த ஆன்மிகச் சுடருக்கு உரியவராகும்.
"தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார் தோன்றலில் தோன்றாமை நன்று” என்கிறார் வள்ளுவர். அத்தகைய பெருமைக்குரியவராகத் தோன்றி, இவ்வுலகில் போற்றுதற்குரிய பெரும்பணி செய்து மறைந்தவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
இவர் 1925ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் திகதியன்று பிறந்தார். மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலை, மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை, அளவெட்டி சதானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்று, ஆசிரிய கலாசாலை பயிற்சியின் பின் ஆசிரியரானார். 1946ம் ஆண்டு மட்டக்களப்பு சென். சிசீலியா ஆங்கிலப்பாடசாலையில் ஆசிரிய நியமனம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையிலும், அளவெட்டிசதானந்தா வித்தியாலயத்திலும்,தெல்லிப்பழையூனியன் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
இவர் 1940ம் ஆண்டில் பிரவேச பண்டிதர் பரீட்சையிலும்,1952ம் ஆண்டில் பால பண்டிதர் பரீட்சையிலும், 1953ம் ஆண்டில் பண்டிதர் பரீட்சையிலும் 1958ம் ஆண்டில் சென்னை சைவ சித்தாந்த சமாஜம்
இந்து ஒளி
 
 
 
 

கது 莎 & இத்த
பிறவியிலிருந்து மீளக்கூடிய பெரும் பேறு கிடைக்கும் என்பதையே முதலடியில் 'எடுக்கும் மாக்கதை’ என்பதால் விளக்குகிறார். 'எடுக்கும்' என்பது பிறவிக் கடலிலிருந்து தூக்கி எடுக்கும் என்னும் பொருள் விளக்கத்துக்குரியது. எடுக்கும் மாக்கதை என்று இதனைக் குறிப்பிடுவதால் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமல் உய்தியளிப்பது இந்நூல் என்று புலனாகிறது.
இத்திருவருட் காவியத்தில் எக்கருத்தை எடுத்துக் கொண்டாலும் சைவசித்தாந்த அடிப்படையிலேயே அவை கூறப்பட்டுள்ளன. 'தோடுடைய செவியன்’ என்று ஓங்காரத்தில் தொடங்கி 'உலகெலாம் என மகர ஒற்றில் முடிக்கிறார். இதனால் திருமுறைகளனைத்தும் ஓங்காரத்தின் விரிவாதல் விளங்கும். ஆண்டவன் பெருமையில் தொடங்கி அடியவர்கள் பெருமையில் முடிவதைத் திருமுறைகளின் தொகுப்பிற் காண்கிறோம். திருமுறைகளை எமது உயிராகப் பேணி இறைகளோடு இசைந்த இன்பமும், இன்பத்தோடு இசைந்த வாழ்வும் வாழ்ந்து நற்பயனடைவோமாக.
"என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்”
கச் சுடர் அணைந்தது
நடத்திய சைவப் புலவர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். 1953ம் ஆண்டிலிருந்து பல இடங்களில் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்த ஆரம்பித்தார். 1957ம் 1958ம் ஆண்டுகளில் இலங்கை வானொலியில் மங்கையர்களுக்கான நிகழ்ச்சிகளில் இவரது தொடர் பேச்சுக்கள் ஒலிபரப்பாகி வந்துள்ளதுடன், கொழும்பு மாநகரின் பல பகுதிகளிலும் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இதன் பின்னரும் கூட, இலங்கை வானொலியின் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வந்துள்ளார்.
அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி 1961ம் ஆண்டில் தெல்லிப்பழை ழரீ துர்க்காதேவி ஆலயத்தின் திருப்பணிச் சபை அங்கத்தவராக இணைந்து கொண்டார். 1966ம் ஆண்டில் ஆலய திருப்பணிச் சபையின் பொருளாளராகப் பதவியேற்றார். 1977ம் ஆண்டில் ஆலய நிர்வாக சபைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இவர் மறையும் வரை இப்பதவியிலேயே இருந்தவர். நான்கு தசாப்த காலத்திற்கும் மேலாக ஆலய அறப்பணியுடன் இணைந்து சமூகநல கல்விப் பணியையும் முன்னெடுத்துச் சென்றவர் என்ற பெருமை இவருக்குண்டு.
ஆலயத்தின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும், அதனுடன் இணைந்த பல்வேறுவகையிலான சமூகநல செயற்பாடுகளுக்கும் அன்னையின் சிறப்பான தலைமைத்துவமே காரணமாக இருந்துள்ளது என்பது வரலாற்றுப் பதிவாகும். 1978ம் ஆண்டு ஆலயத்திற்கென புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டமை, 1982ல் "துர்க்கா புஷ்கரணி” தீர்த்தக் கேணி பிரதிஷ்டை,பெண் பிள்ளைகளுக்காக ‘துர்க்காபுரம்
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 40
மகளிர் இல்லம்”ஆரம்பிக்கப்பட்டமை, இந்த மகளிர் இல்லத்திற்காக 1986ல் இரண்டு மாடிக் கட்டிடமொன்றை அமைத்தமை, 1998ல் நல்லூரில் “ழரீதுர்க்காமணிமண்டபம்’தோற்றம் பெற்றமை, 2002ல் துர்க்காபுரத்தில் “சிவத்தமிழ்ச்செல்விசைவத்தமிழ் ஆய்வுநூலகம்” அமைக்கப்பட்டமை உட்பட அன்னையர் இல்லம், அன்ன சத்திரம் என்பனவும் அன்னையின் சிறப்பான அறப்பணிக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இவரது சைவத் தமிழ்ப் பணிக்கு இன்னொரு எடுத்துக்காட்டாக "அருள் ஒளி' மாதாந்த சஞ்சிகையைக் குறிப்பிடலாம். அன்னையின் விருப்பத்தின் பேரில் உதயமான இச்சஞ்சிகை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
சிவத்தமிழ்ச் செல்வியின் சொற்பொழிவுகள் இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தொடர்ந்தன. 1965ம் ஆண்டில் தமிழ்நாடு சிதம்பரத்திலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் சிறப்புரையாற்றியிருக்கிறார். 1971ம் 1972ம் 1973ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். 1973ம் ஆண்டில் தென்னிந்தியா திருவிடை மருதூரில் நடைபெற்ற திருமுறைக் கருத்தரங்கிற்கும், 1980ம் ஆண்டில் தமிழ்நாடு ஆரணியில் நடைபெற்ற மங்கையர் மாநாட்டுக்கும் தலைமை தாங்கியிருக்கிறார். 1982ல் காசி, ரிஷிகேசம் போன்ற புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்துள்ளார். 1987ம் ஆண்டில் இலண்டன் சென்று அங்கு ஏழு வாரங்கள் சொற்பொழிவாற்றியுள்ளார்.
அன்னையின் சைவத்தமிழ்ப் பணிக்காக பல பட்டங்களும் விருதுகளும் அவருக்குக் கிடைத்துள்ளன. 1966ல் மதுரை ஆதீனம் “செஞ்சொற் செம்மணி” என்ற பட்டத்தையும், 1970ல் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானம் “சிவத்தமிழ்ச்செல்வி’ என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்துள்ளன. மலேசியா, சிங்கப்பூர் சொற்பொழிவின்போது “திருவாசகக் கொண்டல்” என்ற பட்டம் கிடைத்தது. 1973ல் அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பில் வைத்து “சிவஞான வித்தகர்” என்ற பட்டத்தையும், தெல்லிப்பழை பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் “துர்க்கா துரந்தரி” என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்தன.
அரசாங்கம் 1982ல் சமாதான நீதவானாக நியமனம் செய்தது. 1991ல் “கலாசூரி’ பட்டம் பெற்றார். 1998ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அன்னைக்கு கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. இது, இவரது பணிக்குக் கிடைத்த அதியுயர் கெளரவமாக அமைகிறது. கொழும்பு கம்பன் கழகம் 2002ம் ஆண்டில் நடத்திய கம்பன் விழாவின் போது இவரது உலகளாவிய சமய, சமூகப் பணியைப் போற்றும் வகையில் “கம்பன் புகழ்” விருது வழங்கிக் கெளரவித்திருந்தது. அகில இலங்கை இந்து மாமன்றம், தனது பொன்விழாவையொட்டி 2005ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடத்திய இந்து மாநாட்டின்போது “தெய்வத் திருமகள்” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. 2007ம் ஆண்டில் சிறந்த ஆன்மிகப்பணியாளருக்கான சர்வதேச விருதொன்றும் இவருக்குக் கிடைத்தது. அமெரிக்கா ஹவாய் மாநிலத்தில் இயங்கும் ஹவாய் சைவ ஆதீனம், உலகளாவிய ரீதியில் ஆன்மிக மறுமலர்ச்சிக்காகத் தொண்டாற்றி வரும் இந்து மதப் பெரியார்களுக்கு வருடந்தோறும் வழங்கிவரும் அதி உயர் விருதே அன்னைக்கும் கிடைத்துள்ளதை சிறப்பாகக் குறிப்பிடலாம். 2007 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வந்திருந்த ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் யாழ்ப்பாணம் சென்றுபூரீதுர்க்காதேவி
(இந்து ஒளி
 

தேவஸ்தானத்தில் வைத்து விருதிைைன அன்னையிடம் நேரடியாகவே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவத்தமிழ்ச் செல்வி அகில இலங்கை இந்து மாமன்ற முகாமைப் பேரவையின் கெளரவ உறுப்பினராகவும், மாமன்ற அறங்காவலர் சபையிலும் இணைந்திருந்து மாமன்றத்தின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் துணைநின்றுள்ளார்.
இவரது சமயச் சொற்பொழிவுகள், எழுத்தாக்கங்கள் என்பன நூலுருவிலும், ஒலித்தட்டு வடிவத்திலும் வெளிவந்திருக்கின்றன. “கந்தபுராணச் சொற்பொழிவுகள்” நூலுக்கு 1978ம் ஆண்டு சாகித்திய மண்டல விருது கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1973ம் ஆண்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் மகோற்சவத்தின்போது இவர் நிகழ்த்திய கந்தபுராணம் பற்றிய தொடர் சொற்பொழிவுகளின் தொகுப்பே 1975ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்படி நூலாக வெளிவந்தது.
அன்னையின் இன்னொரு நூலான “பத்துச் சொற்பொழிவுகள்”1974 ஜனவரி மாதம் முதற் பதிப்பாகவும், இவரது 73வது பிறந்தநாளான 1998 ஜனவரி மாதம் 7ம் திகதியன்று இரண்டாவது பதிப்பாகவும் வெளியாகியது. 1972ம் ஆண்டில் அன்னை அவர்கள் மலேசியாவில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளின் ஒருதொகுதி இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
அன்னையின் பிறந்தநாளையொட்டி 1990ம் ஆண்டில் பிறந்தநாள் அறநிதியம் ஆரம்பிக்கப்பட்டது. வருடந்தோறும் இவரது பிறந்தநாளின்போது இந்த அறநிதியத்திலிருந்து மாணவர்களது கல்விக்காகவும், நோயாளர்களது சிகிச்சைக் காகவும், சமூகசேவை நிறுவனங்களது பராமரிப்புக்காகவும் மற்றும் பொதுநல தேவைகளுக்காகவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னொரு சிறப்பு அம்சமாக பிறந்தநாளின் போது அறநிதியத்தின் சார்பாக நூலொன்றும் வெளியிடப்பட்டு வந்துள்ளது.
6(5 ஆசிரியையாகப் பணியை ஆரம்பித்து. சொற்பொழிவாளராக - ஆன்மிகப் படைப்பாளராக - ஆலய அறங்காவலராக - இறைபணியாளராக - சமூக சேவையாளராக செயலாற்றி வந்த அன்னையின் அரும்பெரும் பணிகள் காலத்தால் மறக்கப்பட முடியாதவை. இவற்றுக்கும் மேலாக மனிதநேயம் மிக்கவராகவும், சமய நெறியின் ஊடான பண்பாட்டுப் பாதுகாவலராகவும் விளங்கியவர். நமது நாட்டில் மட்டுமல்ல, உலகளாவியரீதியிலும் இவரது சேவை பாராட்டிப் போற்றப்படுகிறது. அன்னையின் சமய சமூகப் பணிகள் இவரை ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்திச் சென்றுள்ளதுடன், ஏனையோரும் பின்பற்றக்கூடிய விதத்தில் முன்னுதாரண தொண்டராகவும் திகழ்ந்துள்ளார் என்றும் சிறப்பித்துச் சொல்லலாம்.
யாழ் மாவட்டத்தின் போர்க்காலச் சூழலின்போது இடப்பெயர்வுகளையும், பலவித இன்னல்களையும் சந்தித்தபோதிலும் மனம்தளராது மகளிர் இல்லப் பிள்ளைகளையும், வயோதிபத் தாய்மார்களையும் பராமரித்துப் பாதுகாத்த அன்னையின் துணிகரமான செயல் பலராலும் பாராட்டப்பட்டது மட்டுமன்றி, வரலாற்றுப் பதிவாகியும் இருக்கிறது.
சிவத்தமிழ்ச்செல்வி தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் மறைந்துவிட்டாலும், இந்து மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பது மட்டும் உண்மையாகும்.
38 சர்வதாரி வருடம் சித்திரை - چےgoس{

Page 41
சிவத்தமிழ்ச் செல்விக்
அகில இலங்கை இந்து மாமன்றம் தனது பொன் விழாவையொட்டி 2005ம் ஆண்டில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது. அவற்றுள் ஒன்றாக யாழ்ப்பாணத்தில் நடந்த இருநாள் இந்து மாநாட்டைக் குறிப்பிடலாம். 2005 ஜூலை மாதம் 15ம், 17ம் திகதிகளில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் மாமன்றத்தின் இந்து மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது மூத்த ஆன்மீக சமய அறிஞர் பெருமக்கள் இருவர் பட்டமளிக்கப்பட்டு மாமன்றத்தால் கெளரவிக்கப்பட்டார்கள். இவர்களுள் ஒருவர் அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்கள். இவருக்கு “ஞானவித்தகர்” என்ற பட்டத்தை மாமன்றம் வழங்கியிருந்தது. மற்றவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். “தெய்வத் திருமகள்” என்ற பட்டம் வழங்கப்பட்டு சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டார்.
தெய்வத் திருமகள் கலாநிதிதங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் கெளரவம் பெற்ற, மாமன்றத்தின் யாழ் இந்து மாநாட்டின் முதல் நாள் நிகழ்வின்போது தொடக்கவுரை நிகழ்த்தியிருந்தது மறக்கமுடியாத இனிய நிகழ்வாகவே மாமன்றத்தால் இன்றும் நினைத்துப் போற்றப்படுகிறது. “அரும்பணிகள் ஆற்றி ஐம்பது ஆண்டு நிறைவை தங்களுக்குரிய பெருமையாகக் கொண்டாடுகின்ற அகில இலங்கை இந்து மாமன்றம், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டு நிறைவு விழாவொன்றில் என்னைக் கெளரவித்தது. கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலே 'சிவஞான வித்தகர்' என்ற பட்டம் சூட்டப்பட்டு அவர்களுடைய விழாவிலே நான் கெளரவிக்கப்பட்டேன். இத்தகைய மகிமையான கெளரவத்திற்கு அவர்கள் தொடக்கம் தொடங்கி வைத்தார்கள் என்பதை இன்றைக்கும் நினைந்து நினைந்து போற்றுகிறேன்” என்று தனது உரையிலே குறிப்பிட்டிருந்தார் சிவத்தமிழ்ச் செல்வி அன்னை.
இவர் நிகழ்த்திய தொடக்கவுரையை இந்து ஒளி இங்கு முழுமையாகத் தருகிறது.
“எங்களுடைய வாழ்க்கையிலே விழாக்கள் அவசியம், நாங்கள் இருக்கின்ற நிலையை விட்டு இறங்காமல்- விழாமல் இருப்பதற்கு விழாக்கள் தான் காரணம். விழாக்களின் மூலம் நல்ல செய்திகளை அறிகின்றோம்-பேசுகின்றோம்-கேட்கின்றோம். அதன்படி வாழத் துடிக்கின்றோம் இந்தத் துடிப்பு எங்களை நற்பணியாற்ற வைக்கிறது.
"வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி தாழ்வெனும் தன்மையோடு சமயமாம் சைவஞ் சாரும்
ஊழ் பெற அரிது.” என்று பாடினார் அருணந்தி சிவாச்சாரியார். தாழ்வு என்பது பணிவு. அந்தப் பணிவு எம்மை
உயர்த்துகிறது. (இந்து ஒளி
 

j
சிறப்பான கெளரவம்
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற” என்றார் வள்ளுவப் பெருமான். இந்தப் பணிவினால் நாங்கள் உயருகின்றோம். பணிகள் செய்கிறோம். அந்தப் பணிகளை உலகம் போற்றுகிறது. எனவே, இத்தகைய அரும்பணிகள் ஆற்றி, ஐம்பது ஆண்டு நிறைவை தங்களுக்குரிய பெருமையாகக் கொண்டாடுகின்ற அகில இலங்கை இந்து மாமன்றம் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆண்டு நிறைவு விழாவொன்றிலே என்னைக் கெளரவித்தது. கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலே “சிவஞான வித்தகர்” என்ற பட்டம் சூட்டி அவர்களுடைய விழாவிலே நான் கெளரவிக்கப்பட்டேன். இத்தகைய மகிமையான கெளரவத்திற்கு அவர்கள் தொடக்கம் தொடங்கி வைத்தார்கள் என்ப்தை இன்றைக்கும் நினைந்து நினைந்து போற்றுகிறேன். இந்த வகையிலே இன்று ஐம்பதாவது ஆண்டு விழாவிலேயும் தொடக்கவுரை ஆற்றுகின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் தர்மம் செய்ய வேண்டும் - தர்மம் செய்ய விரும்பவேண்டும். அந்த தர்மம் சைவசமயத்திலே கூறப்பட்ட ஒரு ஒழுங்கு. தர்மம் தலைகாக்கும் என்பது எங்களுடைய தாரக மந்திரம். அறஞ்செய விரும்பு என்று சொன்னார் ஒளவையார். நீ செய்யாவிட்டாலும் கவலையில்லை செய்ய வேண்டும் என்று விரும்பு என்று சொன்னார். அந்த விருப்பத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நல்ல தகுதிவாய்ந்த சமயம் எங்கள் சைவசமயமாகும். இந்த சைவசமயத்திலே பிறந்த பெருமை எங்களுக்கு உண்டு. இதன்படி வாழவேண்டிய கடமையும் எங்களுக்கு உண்டு. அந்த வாழ்வை நாங்கள் மாசுபடச் செய்யக்கூடாது. இப்பொழுது சமயத்தை மாசுபடச் செய்கிறார்கள் என்ற ஒரு கூற்றை அங்கும் இங்கும் பார்க்கிறோம், கேட்கிறோம். அந்த மாசு உண்மையிலேயே எங்களால் ஏற்படுத்தப்படக்கூடாது. நாங்கள் மாசுகளைக் களைந்து நல்லனவற்றை செய்யக்கூடியதான ஒரு வாய்ப்பை உள்ளத்திலே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்களைப் பற்றியும் நாங்கள் இங்கு நினைக்கவேண்டியிருக்கிறது. ஒரு சாரார் தங்களுக்கு அது பெருமை என்று நினைக்கிறார்கள். தாங்கள் ஏதோ பகுத்தறிவுவாதிகள் என்று சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று ஒருவர் ஒருமணி நேரம் பிரசங்கம் செய்தாராம். பிரசங்கம் முடிவுக்கு வந்தபோது நேரத்தைப் பார்த்தார். ‘அட கடவுளே! இவ்வளவு நேரமும் பேசி விட்டேனா?’ என்று சொன்னார். தொடங்கினது கடவுள் இல்லை என்பதாக, முடிவிலே கடவுள் இருக்கிறார் என்று வந்துவிட்டது.
ஆகவே, உள்ளத்திலே ஆழ்ந்து கிடக்கின்ற உணர்வு கடவுள் உணர்வு. அதனை எவரும் மறுக்க முடியாது. அந்த உணர்வினால்தான் நாங்கள் வாழுகிறோம். என்ன நிலையிலும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற நினைவு எங்களை உணர்த்து
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 42
கிறது. மக்களை உயர்த்துகிறது-தனிமனிதனை உயர்த்துகிறதுசமூகத்தை உயர்த்துகிறது. அந்த நினைவிலே நாங்கள் பஞ்சமா பாதகங்களை ஒதுக்குகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக தர்மத்தை ஒன்றுகிறோம்.
எங்களுடைய நூல்களிலே சிறந்தநூல் திருவாசகம், உள்ளத்தை உருக்குகின்ற நூல் திருவாசகம். அந்த திருவாச கத்தைப் பாடியவர் சாதாரணமானவர் அல்ல. பாண்டி நாட்டின் முதலமைச்சராகவிருந்த மணிவாசகர். அமைச்சுப் பதவியிலும் பார்க்க ஆண்டிப்பதவி மேலானது என்று நினைத்தார். அவருடைய வாழ்வைப்பற்றி திருவாதவூரடிகள் புராணத்திலே கூறப்படுகிறது.
கூத்தினர் தன்மை வேறு, கோலம் வேறாகுமா? - கூத்தா டுகின்றவன் மேடையில் வந்து கூத்தாடுவான். ஆனால் அவன், கூத்தாடுபவன் தன்மைக்கு உரியவன் அல்ல. கூத்தாடிய அந்த ஒழுக்கத்துக்கு உரியவன் அல்ல. அவன் திருடனாகவும், கூத்தாடுவான், வேறு நிலையிலும் கூத்தாடுவான். ஆனால், அவன் உயர்ந்தவனாகவும் இருப்பான்.
"கூத்தினர் தன்மைவேறு கோலம் வேறுமாகுமாப்போல்
ஈத்தினர்மனத்தினர்முன்போல் நிகழ்த்தினர் வழுதி. ”என்று சொல்லப்படுகிறது. அந்த நீதியை நடத்திய மாணிக்க வாசகர் சுவாமிகளைப் பற்றி திருவாசகத்தின் மூலம் நாங்கள் எல்லோரும் உணர்ந்து கொள்ளுகின்றோம். எங்களது உள்ளத்தை உருக்குகிறது. இந்த தொடக்க உரையிலே திருவாசகத்தை நாங்கள் எல்லோரும் படிக்கவேண்டும் என்பதனை உங்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கு உருகார். படிப்போம், திருவாசகத்துக்கு உருகுவோம். நாட்டை நல்லநிலையில் வைத்திருப்போம். உள்ளத்தை உருக்குகின்ற சக்தியை வைத்து உள்ளத்தை வளர்ப்போம்! உலகத்தை வளர்ப்போம்
என்னுடைய வளர்ச்சி என்றால், அது தனிமனிதனின் வளர்ச்சி அல்ல. நாட்டின் வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சி. நான் வளர்ந்து, மக்களையும் வளர வாய்ப்பளிக்க வேண்டும். மக்களையும் வளர வாய்ப்பளிப்பது என்றால் சமூகப் பணியை நாங்கள் உயிராக மதிக்க வேண்டும். சமூகப் பணிசெய்து ஈதல் அறம் தீவினை விட்டீட்டல் பொருள், எஞ்ஞான்றும் காதல் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம். அதனை நினைந்து இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடு. எனவே நாங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகைப் பயனையும் அனுபவிக்க வேண்டிய நிலையிலே முடிவான பயனுக்கு எம்மை இழுத்துச் செல்கின்ற வீட்டின்பத்துக்கு எங்களை தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த உலகம்தான் எங்களுக்கு இடம் தந்திருக்கிறது. இங்கிருந்துதான் நாங்கள் எங்களை தகுதியுள்ள வர்களாக்கிக் கொள்ள வேண்டும்.
“நான் இப்போது மோட்சத்துக்குப் போக விரும்பவில்லை. எத்தனை பிறவி எடுத்தாலும் மக்களுக்குத்தொண்டுசெய்யத்தான் இந்து ஒளி
 

భళ్లబ్లిళ్ల
ಜ
LagašøEgg
விரும்புகிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். அந்தக் கூற்றிலே எத்தனையோ உண்மை இருக்கிறது. நாங்கள் மக்களுக்குப் பணிசெய்ய வேண்டும். அதன் பயனை இறைவன் எங்களுக்குத் தருவான். அகில இலங்கை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவிலே இந்த நல்ல கருமங்களை யெல்லாம் சமயத்தின் பேரிலே, எங்கள் சைவத்தின் பேரிலே நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்களுடைய வாழ்க்கை போலியானது. எங்கள் வாழ்க்கையை
உண்மை வாழ்க்கையாக்குவது சமயம், சட்டம், சமயம் என்ற இரண்டு சொற்களுள் சமயம் முக்கியமானது. ஆனால் சட்டத்தையும் தவிர்க்க முடியாது. ஒரு தடவை மகாத்மா காந்தி அடிகள் சிறைக்குப் போனார். அவரைப்பார்த்து நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? - “உம்மை சட்டத்தின்படி சிறைக்குள் விடுகின்றேன். ஆனால் சமயத்தின் படிஎன்னுடைய மனநிறைவின் படி உமக்கு சிறையில் போய் இருப்பதற்கு அனுமதி தரவில்லை. ஆனால், சட்டம் அனுமதி தருகின்றது. இந்த சிறையிலிருந்து விடுபடுவீரானால் முதலில் மகிழ்ச்சியடையவன் நான்தான்” என்றார் நீதிபதி
எனவே சட்டம் வேறு, சமயம் வேறு. “உன் மனைவியைப் பிடிக்காது விட்டால் அவளை விட்டுவிட்டு இன்னொரு மனைவியை ஏற்றுக்கொள்” என்று சட்டம் சிலவேளைகளில் சொல்லும், “நீ கைபிடித்த மனைவியை சீவிய காலம் வரையும் பாதுகாத்துக் கொள். அவள்தான் உன் மனைவி” என்று சமயம் சொல்லும். பெரிய புராணத்தில் ஒரு விடயம் வருகிறது. இயற்பகை நாயனார் ஒரு அன்பருக்கு தன் மனைவியைக் கொடுத்துவிட்டார். நீ போய் அவருக்குப் பக்கத்திலே நில் என்று மனைவியிடமும் சொல்லிவிட்டார். நீர் சொல்வதை நான் செய்கிறேன் என்று சொன்ன அந்த அன்புள்ள -கற்புள்ள மனைவியின் கூற்று ஆபத்தில்லை. எல்லாம் நல்லதாக நடந்தது. இறைவனது சோதனை அது. அப்படியான சோதனைகளுக்கு நின்றுபிடித்து வாழக்கூடிய வாய்ப்பை எங்களது சமயம் எங்களுக்குத் தருகிறது. அடியார்கள் எத்தனையோ சோதனைகளுக்கு உட்பட்டார்கள். ஆனால் இறுதியிலே வெற்றியடைந்தார்கள்.
பெரிய புராணத்து அடியவர்களுடைய சோதனைகளை நாங்கள் எல்லோரும் அறிவோம். அவர்கள் அடைந்தது வெற்றி தான். முடிவிலே பட்டது துன்பந்தான் - அவலந்தான். ஆனால் அவலத்தின் மூலம் அவர்கள் நல்லதொரு பெரிய ஆத்மீக வெற்றியைக் கண்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே, சமயம் என்று சொல்லுகின்ற போது - சிறப்பாகச் சைவம் என்று சொல்லுகின்றபோது அன்பு, கருணை என்ற சொற்களை அடக்கிய அந்த அருமையான சமயப் பாதையிலே வாழவேண்டிய நாங்கள் இத்தகைய மாநாடுகளிலே பங்குகொள்ள வேண்டும். மாநாடு நடத்துகின்றவர்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்க வேண்டும். நடக்கின்ற நிகழ்ச்சிகளிலே பங்குகொள்ள வேண்டும். இறைவனை முழுமுதற் பொருளாக நம்பி, எங்களுடைய கருமங்களை ஆற்றவேண்டும்”
o சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 43
தெல்லிப்பழை நீ துர்க்காதே
6ਹੁੰ66) 8 மாமன்றம் வ
மாமன்ற முகாமைப் பேரவையின் உறுப்பினரும்,
மாமன்ற துணைத் தலைவருமான செஞ்சொற் செல்வப்
ஆறு. திருமுருகன் ਮ। தெல்லிப்பழை முந் துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபையின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மாமன்றம் மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், அவருக்கு : இதயபூர்வமான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் 慧 கொள்ளுகின்றது.
கடந்த நான்கு தசாப்த காலத்திற்கும் மேலாக ஆபிய அறப்பணியுடன் இப்பனந்திருந்து ஆலய வளர்ச்சிக்கும், சிறப்புக்கும், அதனுடன் சேர்ந்த பல்வேறு வகையிலான சமூகநல செயற்பாடுகளுக்கும் பெரிதும் காரணமாக விருந்த தேவஸ்தான தலைவர் தெய்வத்திருமகள், துர்க்கா துரந்தரி, கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கே, செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் நியமனம் பெற்றுள்ளார். ஜூன் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தேவஸ்தான நிர்வாக சபையின் விசேட கூட்டத்தில் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிவத்தமிழ்ச் செல்வி அன்னையின் பட்டறையில் வளர்ந்து வந்த தீவிர பிேற பக்தரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இவர், 1993ம் ஆண்டில் சிவத்தமிழ்ச் செல்வி பிறந்தநாள் அறநிதியத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டார். ஆண்டியிருந்து தேவஸ்தான நிர்வாக சபையில் இணைந்து கொண்ட இவர் 2003ம் ஆண்டில் இணைச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். தேவஸ்தானத்தின் மாதாந்த வெளியீடான "அருள் ஒளி' சஞ்சிகையின் ஆசிரியப் பணியையும் இவரே ஏற்றிருந்தார்.
இவர் யாழ் பண்ணில் மாமன்றத்தின் சமய, சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறார். யாழ் சிவபூமி அறக்கட்டளையின் தலைவராகவிருந்து ஆற்றும் சேவைகளும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். கோண்டாவிலில் சிவபூமி பாடசாலை, மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான கல்விக் கூடம், சுழிபுரத்தில் சிவபூமி முதியோர் இல்லம் போன்றவைகளை அமைத்து இங்கு தங்கியிருப்போர் சைவச் சூழலில் வாழுகின்ற நிலையை உருவாக்கி அதனூடாக அளப்பரிய 8 தொண்டினை செய்து வருகிறார்.
பாழ்ப்பாணத்தில் பாஸ்மா மற்றும் உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு நிலவிய வேளையில் அகிஸ் இலங்கை இந்து மாமன்றம் கொழும்பிவிருந்து கப்பலில்
 
 
 
 
 
 

வி தேவஸ்தான தலைவராக று. திருமுருகன் தெரிவு பாழ்த்துகிறது
அங்கு அனுப்பிவைத்த LIITILIDIT பொதிகளை
நோயாளர்களுக்கும், வலுவிழந்தோர்க்கும் மற்றும் நலன்புரி இல்லங்களுக்கும் பங்கிட்டு வழங்கி உதவியிருந்தார்.
மாமன்றம் யாழ்ப்பாணம் - நல்லூரில் நிறுவியிருக்கும் பணிமனையை பராமரிக்கும் பணியிலும் அவர் கொண்டிருக்கும் ஈடுபாடும் பங்களிப்பும் பெரிதும்
இவற்றுடன் யாழ்ப்பான பல்கலைக்கழக பேரவை உறுப்பினராகவும், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆலோசனை சபை உறுப்பினராகவும், பாழ். திருநெல்வேலி விசவ வித்தியா விருத்திச் சங்கத்தின் LLLTTTLL LLLLT S SYLTLLL S KTTTkL LLLLLLTTS TTTeeeTm ஆதீனத்தின் ஆலோசனை சபை உறுப்பினராகவும் மற்றும் யாழ் தடாநாட்டிலுள்ள பல சமய சமூக
蠶
நிறுவனங்களின் காப்பாளராகவும் இருந்து வருகிறார். 影
சமய, பொதுநல சேவைகளுக்கும் மேலதிகமாக 鐵
கல்விப் பணியிலும் இவரது பங்களிப்பு சிறப்பாக 藻 நோக்கத்தக்கது. ஒரு ஆசிரியராகப் பணியை ஆரம்பித்த
இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் முன்னர் துணை அதிபராகவிருந்து, இப்போது அதிபராகக் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களது சமய, சமூக, கல்விப் பணிகள் மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என இறையருள் துணை கொண்டு அகிம் இலங்கை இந்து மாமன்றம் வாழ்த்துகிறது.
மாமன்ற பொன்விழா சிறப்புமaர் வெளியீட்டு நிகழ்வில் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களுக்கு மாமன்றத் தலைவர் திரு வி, கபிலாசபிள்ளை பொன்னாடை போர்த்தி கெளரவிக்கிறார். {}} [[]] [[]] [7]
d

Page 44
ஆண்டாண்டு தொடரும் டு
மாமன்றத் தலைமையகக் கட்டிடத்தைப் பார்க்கும்போது அது வெறுமனே மாமன்றப் பணிகளை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல, கட்டிடம் அமைவதற்கு பேருதவியாகவும் துணையாகவு மிருந்த ஒரு சில வள்ளல் பெருமக்களையும் என்றென்றும் எங்கள் நினைவலைகளில் மீட்டிக் கொண்டேயிருக்கிறது.
இவர்களுள் முதல் வராகக் குறிப்பிடக்கூடியவர் மாமன்றத் தின் முன்னாள் தலைவரான அமரர் வே. பாலசுப் பிரமணியம் அவர்கள் யாழ்ப்பான மாவட்டத்திலுள்ள கரவெட்டி கிராமத்தில் பிறந்த இவர் கரவெட்டி விக்னே எ வராக கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்து கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிலும், பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும், வட்டுக்கோட்டை
: யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்று
பூர்த்தி செய்தார்.
அமரர் பாலசுப் பிரமணியம் கலி லுTரிக் கலவியினை அமரர் வே. பா * முடித்துக்கொண்ட பின்னர் தனியார்
தோற்றம் 妾 நிறுவனங்களில் நிதிதொடர்புடைய O3.09. 1931
3 பதவிகளை வகித்து வந்தார். -
பின்னாளில் அவர் வர்த்தக நிறுவனங்களை அமைத்து ஐ நிர்வகித்து வந்ததன் மூலம் பிரபல தொழில் அதிபராக விளங்கினார். "முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்." என்ற வள்ளுவர் வாக்கிற்கு அமைய உழைப்பால் உயர்ந்த འགྲྭ་བ་ பெருமகன் அவர் தனக்காக - தன் குடும்பத்திற்காக 출 என்றில்லாமல் சமய, சமூக, கல்விப் பணிகளுக்காக * வாரிவழங்கிய அவரது வள்ளன்மை உயர் நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது என்பது மட்டுமல்லாது, அவை காலத்தால் * அழியாதவையுமாகும். அவரது தொழில் நிறுவனங்கள் * ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வசதிகளை
வழங்கிக்கொண்டிருப்பதன் மூலம், அவரது சமூக நலப்பணி மேலும் விஸ்திரனம் பெற்றுள்ளதை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
墨墨些墨墨些墨墨些墨
----------డాకారా-- 亲釜泰
இந்து ஒவி
 
 
 

மரர் பாலாவின் நினைவுகள்
இவரது சமய சமூகப் பணியின் மகுடமாகக் - குறிப்பிடக்கூடியது மாமன்ற தலைமையகக் கட்டிடமாகும். மாமன்றத்திற்கான காணி கிடைத்திருந்தும், அதன் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்படாத வேளையிலேயே மாமன்றத் தலைவராக அவர் பதவியேற்றார். மாமன்றத் திற்கான ஒரு தலைமையகக் கட்டிடம் அமைக்கவேண்டும் என்பதில் அவர் ILLiU, ਮill துணிச்சலான செயற்பாடுகளும் முழு அளவில் வெற்றிபெற்றன. இன்று கொழும்பு மாநகரில் உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றாக விளங்கும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகம், அவரது நினைவை என்றென்றும் மீட்டிக்கொண்டிருக்கிறது GTai LI LLIGDam. au TE பரோபகாரப் பண்பையும் எடுத்துச் சொல்கிறது.
அமரர் பாலசுப்பிரமணியம் 1985ம் ஆண்டு அக்டோபர் திகதியிலிருந்து மறையும் வரை
மாமறைத் தினி தலைவராகப் லசுப்பிரமணியம் பணிபுரிந்தவர். அவர் சிறிது காலம் ԼDՃՃ)յDՃվ சுகநலமற்ற நிலையில் 1992ம் ஆண்டு 15.07. 1992 ஜூலை மாதம் 15ம் திகதி இறைவனடி
சேர்ந்தார்.
திரு பாலசுப்பிரமணியம் அவர்களது சமயப் பற்றுணர்வும். அறப்பணி மற்றும் பொதுநல சேவைகளில் அவரது பங்களிப்பும் சிறப்பாகப் போற்றத்தக்கது.
இவரது சேவையை மதித்துப் போற்றும் வகையில், மாமன்றம் நன்றி மறவாது வருடந்தோறும் இவரது நினைவு நாளில் நினைவுப் பேருரையை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. நினைவுப் பேருரை இவரது மறைளின் பதினாறாவது வருட நிறைவின் நினைவாக இம்மாதம் 17ம் திகதியன்று 拳 (1707.2008 - நோன்மதினம்) பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
--------------- 烹三、于三三、
சித்திரை - ஆணி

Page 45
彎 "LDSPTDörg0öğ5 ఉ ஆன்மிகப் பணிக்கு தன்னை மு பரீமத் சுவாமி தந்
蜘
இந்து மதத் துறவியாகவிருந்து தீவிர ஆன்மிகப் பணியை மேற்கொண்டுவந்த பூரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் மறைவையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த வருத்தமடைகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த வேற்றுமதத்தவரான இவர், இந்து மதத்திள் மீது கொண்ட பற்றுனர்வும் பெருமதிப்பும் காரணமாக இந்து மதத்தில் இணைந்து ஒரு துறவியாகவே தனது சமய சமூகப் பணிகளை ஆரம்பித்தவர். முழுநேர ஆன்மிகப்
LSL S SS S SS SZS S S SS S L L L S L LS L S S S S L S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தீவிரமான இறைபக்திய
மாமன்ற முகாமைப் பேரவையின் றுப்பினரான திரு சி.கந்தசாமி கடந்த மே 2008) மாதத்தில் காலமானார். இவரது மறைவையிட்டு |கில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த ருத்தமடைகிறது. மாமன்றத்தின் அங்கத்துவ சங்கமான சங்கரத்தை அபிவிருத்திச் சங்க கொழும்புக் கிளையின் சார்பில் மாமன்ற முகாமைப் பேரவையில் நீண்டகாலமாகவே உறுப்பினராக இருந்துவரும் இவர், மாமன்றத்தின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிவந்தவர்.
மாமன்ற முகாமைப் பேரவைக் கூட்டங்களுக்கு மட்டுமல்ல
மாமன்றத்தின் சகல வைபவங்களுக்கும் தவறாது வருகை தந்து
臺 喜 書 量 轟 量 轟 藝 轟 量 量 喜 藝 轟 轟 轟 轟 轟 轟 藝 ■ 轟 轟 ■ 量 藝-轟 喜 轟喜-轟-■-轟誓 藝 喜 喜
தெய்வத் திருப்பணிக்காக தன் அமரர் கலாநிதி மா
கடந்தமே (2008) மாதத்தில் காலமான கலாநிதி மாரிமுத்து செட்டியாரின் மறைவையொட்டி மாமன்றம் வெளியிட்டிருந்த அனுதாபச் செய்தி:
"என் கடன் பணி செய்வதே" என்பதற்கு அமைய தன் வாழ்நாளை இறை பணிக்காக அர்ப்பணித்த பெருமகனாகிய கலாநிதி மாரிமுத்து செட்டியாரின் மறைவு சைவ உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். இவரது மறைவையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த வருத்தமடைகிறது.
இவர் மாத்தளை பூநீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலராகவிருந்து ஆற்றிய சேவைகள் பெரிதும் போற்றத்தக்கவை. கடந்த 35 வருடங்களுக்கும் மேலான இவரது
(இந்து ஒளி 属
 
 
 

அஞ்சலி శ్లో ற்று முழுதாக அர்ப்பணித்தவர் : \
,'' بیشت திரதேவா மகராஜ்
E பணியாளராகவிருந்து மத மறுமலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் அவர்
ஆற்றி வந்த சேவைகள் இந்து மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. இந்து மதத்தின் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும், புனிதம் பேணப்படவேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும், அவரது பங்களிப்பும் சிறப்பானது.
சுவாமி தந்திரதேவா மறைந்தாலும், நம்நாட்டு இந்து மக்களின் இதயங்களில் என்றென்றும் விற்றிருப்பார் என்பது மட்டும் உண்பையாகும்.
ாளர் அமரர் சி. கந்தசாமி
கலந்து கொள்வார். இவர் தீவிரமான இறைபக்தியாளராகவும், சமூக சேவையாளராகவும் விளங்கியவர்.
இவர் சின்மயா மிஷன், சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை, கொழும்பு சிவா குடும்பம் போன்ற பல சமய நிறுவனங்களிலும் பங்குகொண்டு சமயத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வந்திருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
அன்னாாது குடும்பத்தினருக்கு மாமன்றம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவரது ஆத்ம சாந்திக்காக பூரீ சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கின்றது.
蓟
SLL S S S S S S S S S S S S S S S
னை அரிப்பணித்த பெருமகன்
ாரிமுத்து செடியார்
ஆன்மிகப் பணியின் ஊடாக பூரீ முத்துமாரியம்மன் ஆலயம் பெற்ற சிறப்பும், வளர்ச்சியும் வரலாற்றுப் பதிவாகியிருக்கின்றன. 1983ம் ஆண்டில் நடந்த வன்செயலின்போது சேதமடைந்த ஆலயத்தை புனரமைப்புச்செய்து, எரிக்கப்பட்ட தேர்களுக்குப் பதிலாக புதிய சித்திரத் தேர்களை உருவாக்குவதில் எடுத்துக்கொண்ட இவரது பெருமுயற்சிகள் என்றென்னும் மறக்கமுடியாதவை. ஆலயப் பணியுடன் இணைந்து அறநெறிப் பாடசாலை, பாலர் பாடசாலை, இலவச தையல் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி வகுப்புக்கள் போன்ற பல சமூகநலப் பணிகளும் சிறப்பாக நடைபெறுவதற்கு பெரிதும் துணையாக இருந்தவர். இதன் காரணமாக இந்துப் பெருமக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்டவர்.
அன்னாரின் மறைவுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவதுடன், இவரது ஆத்ம சாந்திக்காக பூரீ சிவகாமி அம்பாள் சமேத ரீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கின்றது.
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி)

Page 46
மாமன்றத்தின் வபான்விழ
Iமன்றத்தின் பொன்விழாவையொட்டி 2005ம் ஆண்டில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் அனைவருக்குமான ஆய்வுக் கட்டுரைப் போட்டி என்பனவற்றில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக மாமன்றம் மனம் வருந்துகிறது
மேற்படி போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் இம்மாதம் 17 திகதி வியாழக்கிழமையன்று (17.07.2008 - நோன்மதி தினம்) மாலை 5.00 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்
நடைபெறவிருக்கிறது.
பேச்சுப் ழ்ேப்பிரிவு மத்தி முதலாவது பரிசு முதலா செல்வி எஸ். சானுஜா செல்வி LS S SSLSS SLS SSS SSSSLS SS LSL SS விவேகானந்தா மகs வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை மட்ட
மட்டக்களப்பு இரண்டாவது பரிசு இரண்ட செல்வன் ஆர். ஜனகன் செல்வன்
கொழும்புஇ சிவானந்தா தேசிய பாடசாலை பம்ப: கல்லடி - உப்போடை, மட்டக்களப்பு கொ மூன்றாவது பரிசு மூன்றா செல்வன் ஜெய. ஜெயமாருதி செல்வன் லி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், கொக்குவில்
கிளிநொச்சி.
கொ 6F60of oth. Ifjorithinoos சென். யோசப்தமிழ் மகா வித்தியாலயம், மஸ்கெலியா.
கபிடுரை கீழ்ப்பிரிவு மத்தி
முதலாவது பரிசு (pg5Gl) T செல்வி சி. நிஷாந்தி செல்வி ஏ.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி விவேகான சங்கத்தானை, சாவகச்சேரி கொ இரண்ட
இரண்டாவது பரிசு செல்வி ச. நிவேதிகா
செல்வன் யோ
சைவப்பிரகாசமகளிர் கல்லூரி బాప్తి
வவுனியா. O மூன்றாவது பரிசு ಛೀ செல்வன்கே. தனுஷன் சிவசுப் ಆಸಿಯಾಸ್ಟ್ರ Tவித்தியாலயம் பரிசுத்ததி
ஆய்வுக் 5.
முதலாவது பரிசு இரண்டாவது பரி
செல்வி பிரதீபா மகாலிங்கம் செல்வி. மிருநாலினி தங்
வாக்கிறிசா வீதி, கள்ளியந்தீவு 162,தர்மசேன வீதி, திருக்கோவில் -3 856ANGUL, LOLLEGESETLIL,
(இந்து ஒளி

போட்டிகளும் பரிசளிப்பும்
சகல போட்டிகளிலும் முதலாவது பரிசைப் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கமும், இரண்டாவது பரிசைப் பெற்றவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாவது மற்றும் சிறப்புப் பரிசுகளைப்
பெற்றவர்களுக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட விருக்கிறது.
பரிசு பெற்றவர்கள் அனைவரும் 2008.07.17 திகதியன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திற்கு வருகைதரும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
) இது தொடர்பான இவர்களுக்கான அழைப்புக் கடிதங்களும்
தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Gumıtıp LIL flirfesaq
வது பரிசு . அபிராமி
ரிர் மகா வித்தியாலயம், க்களப்பு
ாவது பரிசு ப. அஜந்தன் இந்துக் கல்லூரி uப்பிட்டி,
ழம்பு - 4. வது பரிசு 1. நரேஸ்குமார் இந்துக்கல்லூரி, க்குவில்.
மேற்பிரிவு
முதலாவது பரிசு செல்வன் இரா. டர்வுக கொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி, கொழும்பு- 4. இரண்டாவது பரிசு 6NaF6oofil. aji. LỊ6dIGOTIT வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை DLL56GTUL, மூன்றாவது பரிசு செல்வி எஸ். சசிரேகா
சென். யோசப்தமிழ் மகா வித்தியாலயம் மஸ்கெலியா,
rů Gumolup
шLilrflo! மேற்பிரிவு வது பரிசு முதலாவது பரிசு திவ்யகாயத்திரி செல்வி வித்தியாவழினி எந்தா கல்லூரி சிவசுப்பிரமணியம் rugb-13 ஹட்டன் ஹைலன்ட் மத்திய கல்லூரி ாவது பரிசு DLL6GT. கேஸ்வரன் அஜித் இரண்டாவது பரிசு ந்துக் கல்லூரி செல்வி நிலானி சின்னத்துரை LLUD). உரும்பிராய் இந்துக் கல்லூரி வது பரிசு உரும்பிராய் δοίΠΙΠΤο)ώlσσfl மூன்றாவது பரிசு விரமணியம் செல்வி அபிராமி நல்லதம்பி துவ மத்திய கல்லூரி யாழ். வடமராட்சி இந்துக் கல்லூரி ரெலியா, பருத்தித்துறை. டுரைப் போட்டி
F மூன்றாவது பரிசு சிறப்புப் பரிசு
கராசா திரு. சி. வ. இரத்தினசிங்கம் திரு. எம். ஸ்ராலின்
B34 - 1/1, மாளிகாவத்தை தொடர்மாடி சிவஞானசோதி
கொழும்பு -10, மாஹலகார்பெக்ஸ்
தமிழ் வித்தியாலயம், டிக்கோமா
சர்வதாரி வருடம் சித்திரை - ஆணி

Page 47
இலண்டன் மகா கும்ப
இலண்டன் மாநகரில் பல வருடங்களாக ச திரு. கு. சிதம்பரப்பிள்ளை, வைத்திய கலாநிதி மகேஸ் இலண்டனில் நடைபெற்றபோ
 

பிஷேகம் (22.06.2008)
2008 ஜூன் 22ம் திகதியன்று நடைபெற்ற இலண்டன் சைவமுன்னேற்றச் சங்க பிரார்த்தனை மண்டபத்தில் நீ சிவகாமி அம்பாள் சமேத சிதம்பர ஈஸ்வரப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது நடைபெற்ற மகா கும்பாபிஷேக நிகழ்வு
ாயப் பணியாற்றிவரும் சிரேஷ்ட சட்டத்தரணி வரி தம்பதியினரது சஷ்டியப்த பூர்த்திவிழா அண்மையில் து கெளரவிக்கப்படுகிறார்கள்.

Page 48
ತೌಷ್ರತ್ತನ್ಡನ್ನುತ್ತ ë.
யாழ். பல்கலைக்கழகம் நிதி
 

ஜ
சர்வதேச விருது (2007)
பிறந்தநாளில் 2007)