கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1990.11

Page 1
CET
இந்துசமய, கலாசார அலுவல்
கொழும்பு றி பொன்னம்பலவ
ண்ணமெலாம் வையகத்தி
 
 

]]
கள் திணைக்கள வெளியீடு
ாணேசுவர ஆலய கோபுரம்
ல் கோபுரமாய் எழுந்திடுக

Page 2
பிரார்த்த
எழில்கொஞ்சும் இயற்கை வளங்கள் திருநாடு. சிவனொளி மலையும், மகாவ கூறும் புண்ணிய சொத்துக்கன். இந்த முறைகள் ஓங்க, வன்பும் வஞ்சப் பணி நிை இலங்கை என்ற எங்கள் நாடு உலகிற்கே திகழ்ந்திருக்கும்.
ஆனால் உண்மையோ அத்தனை திக்குகள் தோறும் அழுகுரல்கள் எதிெ உயிர்களை இழந்தோம். உடைமைகனை
வாழ்ந்த வீடு, உறவு, சுற்றம் அன் நாமத்தோடு அங்குமிங்கும் அலைபாய்ந்ே கின. கனத்த இதயங்களின் பாரங்களை
னோம். ஆற்றுவதறியாது அரற்றினோம்
இன்று விரக்தி மட்டுமே எஞ்சி நிற யுகமாகக் கழிகின்றது. பெருகுகின்ற கன் கைகள் இரண்டையும் கூப்பி வணங்குவர் எனவே அனைவரும் இணைந்து எங்கள் இறைஞ்சுவதையே பணியாக ஏற்றிருக்கில்
எல்லாம் வல்ல இறைவனே! எம: அருள்புரியுமாறு தாழ்மையோடு பிரார்த் தாங்கிக்+ொள்ளும் மனவலிமையை எமக் காயங்கள் கொஞ்சங் கொஞ்சமா கி ஆறு
அங்கங்கு அகதிகளாகத் தத்தளிக் இல்லங்களிலே நிறைவோடு வாழும் நான கள் போதும் ஆதலின், இந்த மண்ணி நாளை ஆக்கி அருளுக.
தெய்வமே தினர், திக்கற்றோர், மழை பொழிவதாக, கனிந்த நெஞ்சே யாதொன்றுமில்லை எனப் பணிகின்ற நாட்டுக!
ஒன்றே குலமும் ஒருவி நன்றே நினைமின் நப சென்றே புகுங்கதி யி நின்றே நிலைபெற நீ

னைகள்
செறிந்த அழகிய பூமி இந்த இலங்கைத் லி நதியும் பேதமிலாத பெருமையைக் மண்ணிலே அன்புணர்வு பொங்சு அற மயும் நீங்கி நாம் வாழ்ந்திருப்போமாயின் ஆன்மீக ஒளியைப் பரப்பும் திருநாடாகத்
இனிப்பாக இல்லை. திசைகள் எங்கும், ராவித்தன. அவலங்கள் அலைமோதின. ப் பறிகொடுத்தோம்.
■
1னத்தும் இழந்து அகதிகள் என்ற புதிய தாம் துன்பங்கள் எல்லையில்லாமல் பெரு இறக்கி வைக்க சுமைதாங்கிகளைத் தேடி
ற்கிறது. பொழுதெல்லாம் புகவிடம் தேடி னணி மடைதிறந்து பாய்கிறது. வெற்றுக் தைத் தவிர வேறு வழிகள் தெரியவில்லை. இதயங்களை வெறுமை செய்துகொண்டு ன்றோம்.
து உளமார்ந்த பிரார்த்தனைகளை ஏற்று ந்திக்கின்றோம். நிரந்தர இழப்பு நினைத் குத் தந்தருள்க. நெஞ்சிலே பட்டுவிட்ட வதாக,
கும் நாம், நிம்மதியாக எமது ஊர்களிலே இளக்காட்டி அருள்க. இதுவரை பட்டபாடு லே அனைவரும் அகமகிழ்வுடன் வாழும்
துயருறுவோர் அனைவர்க்கும் நின் அருள் ாடும், கண்ணிரோடும் எம் செயலாவது எமக்கு வாழ்வு காட்டுக. நன்மைகள்
னே தேவனும், மனில்லை நாணுமே ல்லைநூஞ் சித்தத்து ர்நினைந் துய்மினே.
திருமந்திரம் )

Page 3
இந்து சமய, கலாசார
மலர் 1 * பிரமோதுரத வருடம், கா
6T 600T
இந்துசமயக் கலாசார அலுவல்கள்
தினைக்கள வெளியீடான "கோபுரம்" இதழ் மாத வெளியீடாக புதிய வடிவி தும், கனமான செய்திகளைச் சுமந்து
கொண்டும் வெளிவருகின்றது.
இலங்கையில் இந்துசமயமும், தமிழ் அலுவல்கள் துறையும் சிறந்து பரிணமிக்க இந்துசமய கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, முனைப்பான பல செயற்பாடுகளை ஈடேற்றி வருகின்றது. ஆலயங்களைப் புனித நிலையங்களாகப் போற்றி வேத கிரியைகளுக்கும், பூஜை புனஸ்காரங்களுக்கும் மேலான முக்கியத் இவம் அளிக்கும் அதேவேளை, சமுதாய தோக்கிலே ஆலயங்களை நோக்கவும் வாழ் வின் ஒவ்வொரு அம்சத்தோடும் ஆல் பத்தை இணைத்துக் காணவும் முன்ைப் புடன் செயலாற்றுகின்றது. ஒருபுறம், பல் வாயிரம் ஆண்டுகளாக நாம் பேணிக்காத்து வரும் எமது பாரம்பரியக் கலைகளையும் மதப்பண்புகளையும் போற்றுவது. LI] ፬l! புறம் நடைமுறை வாழ்வுக்கொத்த புனித சித்தனைகளை வளர்ப்பதன் மூலம் தனி மனித வாழ்வும் சமூக வாழ்வும் மேம்பாட LLUEF; # ப் வது. இவ்வெண்னக் கருவை அடித்தனமாகக் கொண்டே எமது
 
 
 
 
 
 

திணைக்கள வெளியீடு
ார்த்திகை மாதம் 1990 * இதழ்: 8
600 D
இந்துசமயத் திணைக்சளமும், தமிழ் அலு வல்கள் பிரிவும் பணியாற்றுகின்றன. எமது செயற்பாடுகள் அனைத்தினதும் ஊக்கியா கவும், வழிகாட்டியாகவும் மாண்புமிகு அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் நிகழ்கின்றார்கள். -ސ"
திணைக்களத்தின் பல்வேறு செயல் களையும், சிந்தனைகளையும் கருக்கட்டும் கையேடாக ஒவ்வொரு மாதமும் கோபு ரம் இதழை வெளியிட முன்வந்தோம். உயர்ந்த எண்ணங்களின் உருவக வெளிப் பாடாக எழுகின்ற கோபுரம், தினைக் களத்தின் செய்தி நீளோடு ஆக்கபூர்வமான கட்டுரைகளையும் தாங்கிவரும். கோபுரம் ஒவ்வொரு இந்துவின் கவன தி  ைத யும் ஈர்க்க வேண்டும் என்பதே எமது பேரவா. அதனால் தாமும், மதமும், நாடும், உல கும் நலம் பெற்றுப்ய வேண்டும் என்பது எமது பிரார்த்தனை.
திண்ணிய நெஞ்சத்தோடும், தெளிந்த நல்லறிவோடும், நல்லன எண்ணவும் எண் னிய முடியவும், வல்லமை நல்குமாறு பேரருளும், பெருங்கருணையும் மிக்க தெய் வத்தை இறைஞ்சுகின்றோம்.

Page 4
யோகர் சுவாமிகளி
='if(
நீயே உனக்கு நண்பனும் படிைவ தும்,
கைவிரல்களைப் போலத் தனித்து இருந்துகொள்ளல் வேண்டும். தேவை
யான நேரம் கூடிக்கொள்ளலாம்.
ஞானத்தினாற் சற்குணங்களும், அச் சற்குணங்களினால் ஞானமும் திடT கமும் தாமரையும் போல நன்றாய் வளரும்,
ஒழுக்கமாக இருந்துகொள். எல்லாம் சரியாக நடைபெறும். ஒழுக்கமே உயர்வைத் தரும்.
ஒருவனைக் கூடாதவன் என்று நினைக் கும் நினைவே, நினைப்பவனுக்கு நஞ் சாகும்.
கடவுளை நெடுக நினைக்க முடி யாது. ஆனால் தருணம் கிடைத்த வுடன் விடக்கூடாது.
கான்சி அ தி க ம பாக வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? யத்தை ஒருநாளாவது கூட்ட முடி யுமோ? உள்ளபொழுது தான தரு மங்களைச் செய்யுங்கள்.
மற்றவர்களுக்கு உதவ வேண்டின் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய். உன்னால் வேறென்ன செய்ய முடியும்? யாவும் அவன் செயல். இதுவே உத்தமமான உண்மையா
கும.
அலைகள் அடிக்கினும் மீன்கள் ஓடி விட்டனவா? அதுபோல் திTமும் உலு கிற்தான் வாழ வேண்டும்.

ஏர்
அருள்மொழிகள்
3.
13.
ld.
芷品。
ஒன்றையே பல்பேர் பல மாதிரியாய்ச் சொல்லியிருக்கிறார்கள். பைைதயும் படிக்கப் படிக்க மனம் விரியும். ஒடுங் *"து. ஒடுங்கின இடந்தான் ஆறுது வைக் கொடுக்கும்.
பூகம்பம் கெடுதிசெய்தால் நாம் திருப் பிக் கெடுதி செய்கிறோமா? பேரா மல் இருப்போம். அதேபோல் அவ ரவர் வேலையைப்பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் கடவுளே.
சிவபக்தி மாத்திரந்தான் மனித னைப் பாக்கியவானாக்கும். மற்றவை யனைத்தும் பிரயோசனமற்றவை. ஆகையால் இடைவிடாமல் சிவத்தி யானம் பண்ணு.
இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத் துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானம் செய்க.
நாங்கள் எங்கள் சிறுபைக் குணத்தி ஒTTஜ் இயல்பிழந்து தருமவழியி னின்று தவறுகிறோம். இவறுதல் நீங் கித் திடமுண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும்.
கத்தரிக் கன்றுகளை நாட்டினால் கத் தரிக்காய்களையே பெறலாம். நன்" மையை விதைத்தால் நன்மையை அறுவடை செய்வாய், தீமையை. விதைத்தால் தீமையையே நீ அறு வடை செய்வாய்,

Page 5
திருவாசகத்தில் திருப்பொற் சுண்னம் என்பது அ ழ கான ஒரு சிறுபகுதி. இரு பது பாடல்கள் கொண்டது. சுண்ணம், அதாவது நீராடும் போது உடம்பில் பூசி ஏற்ற மஞ்சனப் பொடி, சென்னைப் பரிபாஷையில் நலங்கு மாவு) இடிக்கிற பெண்கள் கூற்றாக, மாணிக்க வாசக சுவாமிகள் இப்பகுதியைப் LT I. பிருக்கிறார்.
டன் கணக்காகச் சவர்க்காரக் கட்டி கள், தேய்த்து முழுகுவதற்சென்று உற் பத்தியாகி விநியோகமாகிற இந்தக் காலத் திவ் சுட மஞ்சனப்பொடி வழக்கத்தை விட்டு மறையவில்லை. சவர்க்காரம் வழிக் கத்துக்கு வருமுன் ஆடவரும் பெண்டிரும் உடம்பிலுள்ள அழுக்கைப் போ க்கு ம் பொருட்டுச் சுண்ணம் தேய்த்து முழுகி வந் =ார்கள். பயறு முதலான சில தானியங் =ளை அரைத்து மாவாக்கி அம்மாவுடன் வாசனைப் பொருட்கள் சிவ வ ற் றை க் கலந்து இடித்துச் சுண்னம் கூட்டி வந்தார் கள். இச்சுண்ணம் ஒரு பேடென்ட்" சரத் கன் று; அவரவர் வீட்டில் பெண்களே இதைத் தயாரித்து வந்தார்கள்
எந்த வேலையும் செய்வதில், முன் னெல்லாம் இன்பம் இருந்தது. நாசரிக முதிர்ச்சியின் பயனாய் இன்று வேலை என் நாவ் இழிவானது என்ற உணர்ச்சி படித்து கூட்டத்தாரிடையே மிகுதியாகியுள்ளது. அணி துவைத்தல் பாத்திரம் துலுக்குதல் முதலிய சாமானியமான அன்றாட gg வல்களை அவரவர் செய்து கொள்வது அகெளரவம் என்ற அபிப்பிராயம் இன் நேய வாழ்க்கை முறைக்கு அடிப்படை
= ;
 

யாகி விட்டது. ஆனால் கொஞ்சநாளைக்கு முன் நிலைமை இப்படி இருக்கவில்லை. தம் தம் வேலைகளைத் தாமே செய்து கொள்வதில் எல்லா மக்களும்-ஆடவரும் பெண்டிரும், முதியவரும், இளைஞரும், செல்வரும், வறியவரும் ஓர் இன்பத்தையே சுண்டார்கள். இத்தகைய சா மா வி ய வேலைகளில் சுண்ணம் இடித்தல் ஒன்று. பெரிய மனிதர்கள், என்பவர்கள் வீட்டில் கூட பெண் க ன் சுண்ணமிடிப்பார்கள். வேலைக்காரர் முதலியோரை ரவிச்செய்து வைக்கிற சுண்ணத்தில் யாருக்கும் திருப்தி புண்டாவதில்லை.
வேலையே இன்பமளித்தது என்பது ஒரு புறமிருக்க, அவ்வின்பத்தைப் பெருக் கவும் வழியிருந்தது. சுண் ண மி டிக் கும் போது ஒரு பெண் மட்டும் தனியே இடிப் பதில்லை. இரண்டு மூன்று வீடுகளிலுள்ள ĜLJ GIGT s ன்று கூடி எல்லோருக்கும் வேண்டியிருக்கும் சுண்ணத்தைச்சேர்ந்தாற் போல் இடித்துக் கொள்வார்கள். பெண் கள் பலர் சேர்ந்தால், ஒரே உற்சாகமும் கும்மாளமுமாய்த் தான் இருக்கும். இவ் வுற்சாகமானது, வெறும் வம்புப் பேச்சாய் வெளிப்படாமல், TT -T L I_r 포
வெளிப்படும்.
பாட்டினால் சிறந்த பயனும் உண்டு. உலக்கை எடுத்து நெடுநேரம் உர வில் சுண்னமிடிக்கும்போது வேலையில் சற்று நேரமானதும் சோர்வு தோன்று தலுங் கூடும். ஆனால் பலர் கூடிப் பாடும் போது நெடுநேரமானாலுங்கூடச் சோர்வு தோன்றுவதில்லை. இவ்வாறு வேலையில்

Page 6
உள்ள இன்பத்தால் பிறந்த பாட்டு, வேலை யில் வரும் சோர்வைப் போக்கவும் உதவு கிறது.
மாணிக்கவாசக சுவாமிகள், ஆனந்த மான தமது ஆன்ம அனுபவங்களையெல் லாம் மாணிக்கம் போன்ற பாடல்சளாய்ப் பொழிந்துகொண்டே பல தலங்களையும் வழிபட்டு வரும்போது, ஆங்காங்கு பெண் கள் மேற்கூறியவாறு இன்பமாய் வேலை செய்ததையும், தங்களை மறந்து பாடல் பாடியதையும் கண்டாரி, வேலை செய்து கொண்டே அவர்கள் பாடிய பாடல்கள் தமது கருத்தையெல்லாம் வெளி யி - ச் சிறந்த கருவியாக அமைதல் கூடுமென் பதையும் அவர் உணர்ந்தார். அவ்விதமே சென்ற இடந்தோறும் பெண்கள் விளை யாட்டையும் வேலையையும் ஒட்டிய பாட வாகவே தம் அனுபவம் அவ்வளவையும் பாடி வந்தார். இவ்வாறு அவர் பாடிய பல பாடல்களின் திருப்பொற்கண்முைம்
ஒன்று.
கடவுள் என்ற தத்துவத்தைக் கண்ட மனிதன், தனக்கு விருப்பமானவற்றையெல் லாம் கடவுளுக்கு அர்ப்பணம் செய்து வந் தான். அந்தக் கடவுளுக்கு உருவம் அமைத்த போது, தன் போன்ற மனித உருவத்தையே அதற்கும் தந்தான். தனக்கு விருப்பமான உடை, உண்வு, அணிகலன், பூ நீர் முழுக்கு, சாந்து முதலியவற்றையெல்லாம் கடவுளுக்கே கொடுத்தான். இதன் பய னாக கடவுளுக்குக் கோயில், திருவுருவம், வழிபாட்டுக் கிரமம், திருவிழாக்கள் முத வியனவெல்லாம் தோன்றலாயின.
சுண்னமும் இதற்கு விதிவிலக்கன்று: மக்கள் இடித்து உபயோகிக்கிற சுண்ணத் தைக் கடவுளுக்கே உரியதாக்கிவிட்டார் மானிக்கவாசகர். அவர் பாடவில், பெண் கள் சுண்னமிடிக்கிறார்கள். ஆப் பெண்கள் யாவரும் ஐயன் அணி தில்லை வாணன்

திருவருளில்ே தோய்ந்தவர்கள். ஆதியும் அந்தமும் ஆய அச்சேவகன் நாமங்கள் பாடிப் பாடி அவன் ஏழை அடியோமை ஆண்டு கொண்ட நலந்தனைப் பாடி நின் றாடி பாடி அவன் நீராடுவதற்குச் சுண்ண மிடிக்கிறார்கள். அவனுக்குரிய சுண்ண மென்றால், அது வெறுஞ் சுண்னமல்ல, பொற்கண்ணமுமாகிவிடுகிறது.
உண்மையான பக்தியும் ஆனந்த அணு பவமும் காரணைமாக, மானிக்கவாசகர், எந்நேரமும் எந்த நிலையிலும் இறை வனுடைய பெருங்கருணையாகிய அருள் வெள்ளத்திலே ஒன்றி நிற்கிறார். - au ருடைய பேரனுபவத்தை அறியாத உலகத் தார் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்: அவரோ நாட்டாருக்கு அவ்வணுப வம் உண்டாகவில்லுையே என்ற இரக்கமும் அறியாது தம்மைப் பித்தனென்கிறார்களே என்ற எண்ணமும், மேலிட்டுச் சிரிக்கிறார்.
மாணிக்கவாசகருடைய பேரின்ப அணு பவ நிலைக்கு மட்டுமல்ல, சாமானிய உலக வாழ்க்கைக்குமே இது பொருந்துவதாகும். ஒரே நோக்கத்தைக் கொண்டு அதற்காகவே வாழ்பவர்களை உலகம் பித்தரென்று கூறிச் சிரிக்கத்தான் சிரிக்கிறது. இப்படிச் சிரிக்கிற உலகைக் கண்டு அவரும் சிரிக் காமல் என்ன செய்வது?
பெண்கள் சுண்னமிடிக்கிற சூழ்நிலை யில் கலந்துவிட்ட மாணிக்கவாசகர் இந் தச் சிரிப்பையும் ஒரு பாடலில் வெளிப் படுத்துகிறார். எல்வாப் பாடல்களையும் குறிப்பிட முடியாவிட்டாலும், இவ்வொரு பாடலை மட்டும் இங்கே குறிப்பிடலாம்.
இறைவனுக்கென்று பெண்கள் சுண்ண மிடிக்கிறார்கள். இடிக்கும்போது, பல்பெண் கள் கூடியுள்ளிமையால் எங்கும் இத் தொண் டர்களின் ஆரவாரமாயிருக்கிறது. இவர் கள் அணிந்துள்ள அணிகலன்கள் ஒன்றோ டொன்று மோதி ஒலி செய்கின்றன.
குடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப
தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப
ஆர்ப்ப

Page 7
நாடவர் தந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை பங்கினன் எங்கள் பராமரனுக்கு ஆடக மாமலை அன்ன கோவுக்கு
ஆடப் பொற் சுண்ணம் இடித்தும்
நாமே.
இந்தவிதமாகப் பெண்கள் ஒருவரோ டொருவர் பேசிக்கொண்டு ஆனந்தமாய்ப் பாடிச் சுண்னமிடிக்கிறார்கள் என்ற பொரு ளில் மாணிக்கவாசகர் திருப்பொற் சுண் ண்ம் பாடியிருக்கிறார்.
ஆனால், சைவ மக்கள் சமூகத்தில் இப் பாட்டை எப்படி உபயோகிப்பார்கள் என் பது அவருக்குத் தெரியாது. ஆனந்த வெளியீட்டுக்கான இப்பாட்டைத் தமிழ் நாட்டில் சில பகுதிகளில் துக்கத்துக்கென்றே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சென்னை தஞ்சை முதலிய பல இடங்களில், சைவம் முற்றிப்போன வீடுகளில், யாரேனும் இறந்துபோனால் அப்போது பிரேதத்தை நீராட்ட வேண்டிப் பொடி இடிக்கும்போது இப் பாட்டைப் பாடுகிறார்கள். இதில் எவ் விதப் பொருத்தமும் காணப்படவில்லை அல்லாமலும் இப்பாட்டு சீக் கத்துக்கென்றே ஏற்பட்டது. மரணம் தவிர மற்றச் சமயங் களில் இதைப் பாடக்கூடாது. சாதாரண காலத்தில் இதைப் பாடவே கூடாது என்ற கருத்து பழுத்த சைவக் குடும்பங்களில் காணப்படுகிறது. என்ன விபரீதம்
திருவாசகத்தில் திருப்பொற் சுண்ணம் என்னும் பதிசத்துக்கு 'ஆனந்த மனோ லயம்" என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டுள் ளது. இப்படியிருக்க, இப் பாட்டு துக்கத் துக்குத்தான் என்ற எண்ணம் எப்படித் தான் வந்ததோ தெரியவில்லை. உயிர் பிரிகிற தருணத்தில் அயலில் இருப்போர் திருவாசசம் படிப்பது என்ற ஒரு பழக்கம் வழங்கி வருகிறது. அந்த அளவுக்கு அது நல்லதுதான். ஆயினும், வாழ்கிற கால மெல்லாம் எப்படியேனும் வாழலாம். சாகிற காலத்தில் மட்டும் "சங்கரா சங்கரா" என்றால் போதும் என்ற கொள்கையை யொட்டியது தான் இது. இது எப்படி
- -

யேனும் போகட்டும்; திருவாசகத் துள் ஓரங்கம் என்ற முறையில் திரு ப்பொற் சுண்ணத்தையும் படிப்பது பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் இதற்கென்று விசேஷப் பொருள் கற்பித்து, அசுபத்துக் கென்றே இதை ஒதுக்கி வை த்திருப்பது பெரிதும் தவறான வழக்கம்.
ஆனந்தமும் துக்கமும் ஒன்றுதான்என்று காண்கின்ற பக்குவம் வந்த பரம ஞானிகள் வேண்டுமானால் இவ்விதம் கொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரையில், சில இடங் சளில் இன்று வழங்கும் மேற்கூறிய GÌÇä கம் நிச்சயம் மாறவேண்டும். இவ்விதம் அசுபத்துக்கென்றே இப்பாடலை ஒதுக்தி வைத்தது அறியாமையால் நேர்ந்த விபரீத மாகும். அறியாமை ஒழியவேண்டியது தானே? இதன் பொருளை யாரேனும் உணர்ந்திருந்தால் அவர்கள் இப்படி இதற் குச் சந்தர்ப்பம் கற்பித்திருக்கமாட்டார் է: ElT :
ஆனந்தமான பெண்கள் பா ட்டையும் ஆட்டத்தையும் கண்டு களித்த மாணிக்க வாசகர், தம் பாட்டுக்கு இப்படியோர் உப யோகம் ஏற்படுமென்று கருதியிருக்கமாட் டார். இந்த மாதிரிப் பாடுவதை நிறுத்தச் செய்வது தமிழ் மக்கள் கடன். மற்றப்படி இதை எப்போதும் ஆடவரும் பெண்களும் குழந்தைகளும் ஆனந்தமாய்ப் L'll egy Lலாம். பாடசாலை தோறும் பயிலலாம்.
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணி கொண்ட வண்ணமும் பாடிப்
பாடித் தேடுமின் எம்பெருமானைத் தேடிச்
சித்தம் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின்.
என்று அடிகள் கூறியவாறு எந்தச் சமயத் திலும் யார் தாம் பாடக்கூடாது? தேடக் கூடாது? ஆடக்கூடாது?
* மு. அருணாசலம் எழுதிய திருவாசகம் சில ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எனும் நூலி லிருந்து. (சிதம்பரம் சைவசித்தாந்த மகா சமாஜ அறுபதாண்டு நிறைவுவிழா மலர்).

Page 8
திணைக்கள
மரநடுகையும், சூழல் பாதுகாப்பும்
சூழல் பாதுகாப்பும் இயற்கையின் சம நிலையைப் பேணலும் இன்று E JTTT விய வகையில் ஓர் இயக்கமாகப் பரிண மித்துள்ளன. இது கைத்தொழில் வளர்ச் சியின் விளைவாக எழும் சூழலின் பாதிப் புக்களையும், மனிதனின் பொருளாசை, கட் டுப்பாடற்ற நுகர்வு நாட்டம் (Consumerism), ஆகியவற்றின் தீய விளைவுகளை பும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. இது ஓர் நவீன இயக்கமாயினும் இந்து மதச் சிந்தனை மரபில் காணப்படும் சூழல் பாதுகாப்பு இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய கருத்துக்கள் புதிய சிந்தனைகளுக்கு வளமூட்டுவனவாகும்.
சிங்கப்பாடல்கள், முருகனை, இயற்கை எழில்கொழிக்கும் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக வருணிக்கின்றன. இவன் "குறிஞ்சிக்கிழவோன்' "குறிஞ்சி ஆண்ட வர்" என்று போற்றப்பட்டான். இன்றும் வேம்பு "சக்தி" தெய்வத்தின் - மரமாகப் போற்றப்படுகிறது. பராசக்தியை "காடு கிழாள்", "கண்ணமர் செவ்வி' என இலக் கியங்கள் கூறும்.
இயற்கையை இறைவனின் பாகமாக வம் உறைவிடமாகவும் காணும் இந்து மதத்தத்துவத்திற்கு இயற்கையை அழிப் பதும் மாசுபடுத்துவதும் ஒவ்வாத கருத் துக்கின.
மத்திய சுற்றாடல் அதிகார சபை யால் மேற்கொள்ளப்பட்ட தேசிய மர நடுகைத் திட்டத்துடன் ஒன்றிணைந்து இந்து ஆலயங்கள் தோறும் பயன்தரும்

G ச் செய்திகள்
மரக்கன்றுகளும் பூமரங்களும் நாட்டப்பட்
-ன. மரநடுகை ஆரம்ப வைபவம் பிரதாயபூர்வமாக கண்டி கட்டுக்கலை விநாயகர் ஆலயத்தில் செஞ்சந்தன மரக் கன்று நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப் பட்டது. நாட்டின் பிற ஆலயங்களிலும் தொடர்ந்து இப்பணி மேற்கொள்ளப்பட் டது. இவ் வைபவங்கள் இந்துமதச் சிந் தனை மரபில் காணப்படும் இயற்கையைப் பேணும் கருத்துக்கள் மக்கள் -மனதில் ஆழப்பதியவைத்தலை நோக்கமாகக்கொண் டிருந்தன.
* இந்துமதத் தத்துவங்களையும், ஆன் மீக நெறிகளையும் கருப்பொருளாகக் கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் பேருரைகள் மாதமிருமுறை திணைக் சு 3ள த் த ர ல் நடாத்தப்படுகின்றன. துறைபோன அறிஞர்களின் புலம்ை யும், அநுபவமும் மிக்க பேருரைகள் இதுவரை இருபத்திரண்டு நிகழ்த்தப் பட்டுள்ளன. திணைக்களம் தற்போது இவற்றை நூல் வடிவாக்கும் முயற் சியை மேற்கொண்டுள்ளது. அத்து டன் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள் இவை, ஒலிப்பதிவு நாடாக்களாக விநி யோகிக்கப்படுவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படுகின்றன.
15. 09, 20 அன்று இலங்கைக் காப் புறுதிக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் திரு. சபாரத்தின முதலி யார் எழுதிய "இந்துசமயத்தின் இன்றி யமையாமை" என்னும் ஆங்கில நூலின் வெளியீடு நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமை வகித்த இந் நிகழ்ச்சிக்கு மேல்மாகாண சபை ஆளு

Page 9
நர் மாண்புமிகு எஸ். சர்வானந்தா முதன்மை விருந்தினராஃக் கலந்து கொண்டார். இந்துசமயத் திணைக் களத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு. வி. என். சிவராஜா அவர்கள் 'இந்துமதத்தின் முக்கிய சிறப்புக்கள்" என்னும் தொணிப்பொருளில் ஆங்கி லத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தினைக்சனம் 26, 09. 1990 அன்று மாலை, இலங்கை காப்புறுதிக் கூட் டுத்தாபன கேட்போர் கூடத்தில் நவ ராத்திரி விழாவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச் சிக்கு இந்தியத் தூதுவர் மேன்மை தங்கிய என். என். ஜா அவர்சளும், பூரிமதி ஜா அவர்களும் பிரதம விருந் தினர்களாகக் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகர் திரு. பிரட்மன் வீரக் கோன், பேராசிரியர் சி. சூரியகுமா ரன், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத் தாபன பொது முகாமையாளர் எஸ்.ஜி. உடலமத்த ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாகக் கலந்துகொண்டனர். நவராத்திரி பற்றிய ஆங்கில சொற் பொழிவுகள், மதுரை ஆர். முரளி தரன் ஆர். மணிமேகலை ஆகியோ ரின் பரதநாட்டியம், முத்தேவியருக் கும் கவிதை சமர்ப்பணம், புல்லாங் குழல், வீணை இசைநிகழ்ச்சி என்பன சிறப்பு நிகழ்ச்சிகளாக அமைந்திருந் தன. இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்
கள் தலைமை தாங்கினார்.
தரமான திரைப்பட இரசனையை வளர்க்கும் நோக்குடன் "திரைப்பட வட்டம்" எனும் அமைப்பினை ஒக் டோபர் 19 ஆம் திகதி காப்புறுதிக் கூட்டுத்தாபன சேட்போர் கூடத்தில்
- .

திணைக்களம் ஆரம்பித்து வைத்தது. அமைச்சர் பி. பி.தேவராஜ் அவர் கள் தலைமை வகித்த இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட ஆர்வலர்கள், எழுத்தாளர் சுள், கலா ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்வட்டம் ஆரம்ப 1ாசு முக்கிய கர்த்தாவான நினைக் களப் பணிப்பாளர் திரு. க. சண்முக லிங்கம் திரை இரசனை’ பற்றி விளக் கிப் பேசினார். நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதியின் பரிசு பெற்ற, பTலு: மகேந்திராவின் வீடு' எனும் திரைப் படம் ஒளிபரப்பப்பட்டது. தமிழ்க் கலைத்துறைப் பங்களிப்பிற் சிறந்த முயற்சி எனவே இதனைக் குறிப்பிட வேண்டும்.
உலக சிறுவர் தினத்தைக் கொண்டா டும் (Lp&# [[fr: #F5, 27.1 Q... = 1990 அன்று சிறுவர் பராமரிப்பு, இன்னடத்தைத் திணைக்கள ஆனையாளரின் அது சரணையுடன், மேல்மாகாண அற நெறிப் பாடசாலை மானவர்கள் டையே "சிறுவர் உரிமைகளும், கட மைகளும் பொறுப்புக்களும்" எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. இப் போட்டி ஏனைய மாகாணங்களுக்கும் விரிவு படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக் நிதி
திணைக்களத்தின் அனுசரணையோடு, கொழும்பு -02, கியூ வீதியில் அமைந் துள்ள, அருள்மிகு பூரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் "கார்த்திகை தீபம்" விளக்கீடு வைபவம் எதிர்வரும் 01.12.1990 இரவு நடைபெறுவதற் கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
28. 12. 90ஆம் திகதி வைகுந்த ஏகா தசி விழாவை, பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலய யாகசாலைப் புண் னிய பூமியில் சிறப்பாக நடாத்த திணைக்களம் ஆயத்தங்களை மேற் கொள்கிறது.

Page 10
அமைச்சர் பி. பி. ே சொற்பொழி
"இந்து மாகடலை அமைதி மண்டல மாக்க வேண்டுமென்பது 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் இலங்கை முன் வைத்த கோரிக்கை ஆகும். இக்கோ ரிக்கை ஐ. நா. சபையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. வல் லரசுகளின் தலைவர்கள் இதற்கு முடிவுகாண வேண்டும். இப்பிராந்தி பத்தில் பதற்றம் நீங்கி, அமைதிநிலவ வைப்பது வல்லரசுகளின் தலைவர் களது பொறுப்பாகும்." 29, 09 90 இல் உல்லாச கிராமிய தொழிற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில், வீரகேசரி சிரேஷ்ட உதவி ஆசிரியர் கன. சுபாஷ் சந்திரபோவின் "இந் துமா கடல் அமைதி மண்டலம்"
நூல் வெளியீட்டு விழாவின் போது,
"யதார்த்த பூர்வமான மனிதவாழ் வில் கண்ட நிகழ்வுகள் அவலங்கள் என்பவற்றை எழுத்து ஓவியமாக வடித்தவர் என். எஸ். எம்.ராமையா. மலையக சமுதாயத்திலே புரட்சிகள் உண்டுபண்ண அவர் கதை எழுதிய தாகத் தெரியவில்லை". 23:09, 90இல் மலையக எழுத் தா ன ர் மன்ற ம் இலங்கை முற்போக்கு சங்கம், மலை யக கலை இலக்கிய பேரவை என்பன இணைந்து, கொழும்பு மெயின் வீதி முஸ்லிம் வாலிப முன்னணி மன்றத் தில் ஒழுங்கு செய்திருந்த அமரர் இராமையா அஞ்சலிக் கூட்டத்தில்,
* "இந்துக்கள் இயற்கையை அரவ னைத்து மீறாது வாழ்ந்தார்கள்.

தவராஜ் அவர்களின் வுத் துளிகள்
வழிபட்டார்கள். ஆலயத்தலங்கள் தோறும் தலவிருட்சங்கள் வழிபாட் டிற்குரியனவாகின. இயற்கை மூலிகை களினால் நோயைக் குணமாக்குவது கூட நாம் இணைந்து வாழ்வதை உணர்த்துகின்றது. வே று பா டு களி டையே அழகாகத் தெரியும் இயற் கையை புரிந்துகொண்டால் இன்ப மாக வாழலாம். அவரவர் இனப் பண் பாடுகளைக்கூட பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளலாம்"
01, 10. 90இல் ஆட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலய வளவில் மரக் கன்று நடும் வைபவத்திற் கலந்து கொண்டபோது,
"நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பூர்வீகத்தைக்கொண்ட மலையக மக்கள் தமிழகத்திலிருந்து இங்கு வந்தபோதே தம் மு டன் கொணர்ந்த பாரம்பரியக் கலைகளை இன்றும் பேணி வருகின்றனர். அவற் றுள் ஒன்றான பொன்னர்சங்கர் என்ற அரசகுமாரர்களைப் பற்றிய கூத்து,
அவர்களின் சாகசங்கள், போர்.இராஜ தந்திரம் போன்றவற்றை உணர்ச்சிபூர் வமாக எடுத்துக்காட்டுகின்றது. த் தகைய கலைகள் அருகிவிடாதவாறு அடுத்த தலைமுறைக்கும் நாம் கைய எரிக்க வேண்டும்."
02. 10, 90இல் கொஸ்லாந்தை மீரிய
பெத்த மாமுனி ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூசைகளின்போது.

Page 11
"சாதி மத இன வேறுபாடுகளுக்கப் பால் இறைவனையே ஜோதியாகக் கண்டு. அன்பையும் கருணையையும் போதித்தவர் இராமலிங்க வள்ள லார், வrடிய பயிரைக் கண்டுகூட வாடி னார். ஜீவகாருண்ணியத்தை போதித்தார். மனித சமத்துவத்தை உணர்த்தும், சமரச சன் மTர்க் த யோகத்தை உலகி ற் சு வித் தார்" 05, 10, 90இல் டொறிங்டன் Աքնի ன்ே ஆலயத்தில் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் ஒழுங்கு செய் திருந்த இராமலிங்க வள்ளலார் பிறந்த தின விழாவின்போது,
'சென்ற தீபாவளி நாளிலும் இத் தீபாவளி நாளிலும் உங்க ளு டன் கலந்து உறவாடக் கிடைத்தமை மட் டில்லா மகிழ்ச்சியைத் தருகின்றது.
புததக ! இப்பகுதியில் பல்வேறு துறைசார்ந்த, நூல்களை அவ்வப்போது அறிமுகப் படுத் வும் சிந்தனையும் விசாலிக்கும் என்பதன்
1ற்றி அறிந்தும், இவற்றைக் கற்றும் பய திலே பிறந்து சமரச சன்மார்க்கமெனும் பெருஞ்ஜோதி திருவருட்பிரகாச வள்ள்லா செய்கின்றோம்.
1. சமயம் கடந்த நெறி
எழுதியவர்-தகடூரான் வெளியீடு- தேன்தமிழ்ப்
இந்நூல், சமயங்களுக்கு அப்பால் ,பே தைக் காண விரும்பிய வள்ளலாரின் தத்
墨, அருட் பெருஞ்ஜோதி அட் எழுதியவர்- சரவணானந்
வெளியீடு- இராமலிங்கர்
இந்நூல், வள்ளலார் கூறும் மரணமி ஆன்மீக அதுபவத்தை விளக்குகின்றது.

உலகம்
தமிழ் மொழி, இந்துசமய தத்துவ ஆகின்றோம்_பயிலப்பயில எமது அறி ால் ஆர்வமிக்கோர் இந்நூல்களைப் 'ன் பெறலாம். இம்முறை தமிழகத் அன்பு நெறியைப் பரப்பிய அருட் rர் பற்றிய இரு நூல்களை அறிமுகம்
பதிப்பகம், சேலம், தமிழ்நாடு.
ாட்டியும் பூசலுமற்ற மனித குலத் துவங்களை விளக்குகிறது.
டகிம்
ET
பணி மன்றம், சென்னை,
1ாப் பெருவாழ்வு எனும் ஆழமான
தீமைகள் தொலைந்து, நன்மைகள், வளர வழிசெய்த நாளாக தீபாவளி யின் தத்துவத்தை நாம் உணர்கின் றோம்.
மனிதனுக்கு வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருகின்றன. (நல்லவைகளுக்கும், தீயவை கிளுக்கும் ஒரு எல்லைக்கோடு உண்டு. ரோதத் தின் விளிம்பிலேயே தத்துவங்களும் காவியங்களும் தோன்றின. தெரிந்தோ தெரியாமலோ குற்றங்களைச் செய்து கைதிகளாகிவிட்ட உங் களிலும் திற மைமிக்கவர்கள் உள்ளனர். அத்த கைய திறமைகள் இறைவனின்கொடை என்றே கொள்ள வேண்டும்" தீபா வனித் திருநாளில், வெளிக்கடைக் சிறைச்சாலை இந்துக்கைதிகள் ஒழுங்கு செய்திருந்த தீபாவளி பூசையில் கலந்துகொண்டு பேசும்போது

Page 12
தாவரம் (
செப்டெம்பர் மாதம் 17ம் திகதியிலிருந்து
றினை மத்திய சூழல் அதிகார சபை ஒரு சமய, கல்ாசார அலுவல்கள் இராஜாங்க தோறும் தலவிருட்சங்களையும் நந்தவன களை மேற்கொண்டுள்ளது. அது தொட
இயற்கையின் விநோதங்களையும். பிர பஞ்சத்தின் பரப்பையும் போற்றி இயற் கையையே தெய்வமாக வழிபட்டது இந்து மதம், ஆயிரமாயிரம் ஆண்டுகால இந்து மத வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்ததாக அமைந்திருந்தது. இயற் கையை வியந்து, ரசித்து இறை இன்பம் துய்த்தோர் எபது முன்னோர்கள்.
அதிலும் தாவர இராச்சியம், மனித வாழ்வுடன் பின்விப் பினைந்திருப்பதை யும் பல்வேறு வழிகளில் இன்றியமையாத தாக இருப்பதையும் நாம் மறுக் முடியாது. உணவாக, வீடு கட்டும் துனைப் பொரு எாாக, மருந்து மூலிகையாக தெய்வீக அம் சம் மிக்க மலர்சனாக தாவரப்பாகங்கள் விளங்குகின்றன.
இந்துமதம் தாவரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது. தாவரங் களை இறைவனோடு ஒப்பிட்டு பேசுகின் றன எமது பழம் புராணங்கள். மூர்த்தி, தலம் தீர்த்தம் என்பவற்றோடு, தவ விருட்சங்களாக மரங்களும் மகிமை பெற் றன. இன்றும் தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களிலும் பல்வேறின மரங்கள் தல விருட்சங்களாக இருப்பதை நாம் அவ தா விக்கலாம். இவற்றை இந்துக்கள் வழி பட்டனர், வலம்வந்தனர். வில்வமும், வேம் பும், பாதிரியும், சந்தனமும் மனதுக்கும் உடலுக்கும் நோய்போக்கி ஆன்மசக்தியை வளர்ப்பனவாக அமைந்தன.
செடிகளும், கொடிகளும், மரங்களும்
தந்த அழகுமலர்கள் இறைபாதத்திற்கு அர்ப்பணமாகின. இவற்றுளெல்லாம் துளசி

போற்றுதும்
நாடளாவிய ரீதியில் மர நடுகை இயக்கமொன் பூங்கு செய்துள்ளது. இதனையொட்டி, இந்து
அமைச்சு மிகப் பெரும் அளவில் ஆலயங்கள்
ங்களையும் அமைக்க முனைப்பான ஏற்பாடு
ர்பாக இக் கட்டுரை வெளியாகின்றது.
H.
இன்னும் பெருமை பெற்றது. புனிதமான ஒரு செடியாக மாடம் அமைத்து வழிபடு மளவு தெய்வீகம் பெற்றது. பூக்களின் தறு மணமும், மென்மையும் பூஜைச்குரியன வாகின.
எனவே ஆலயங்களை நிலையங்களா கக் கொண்டு அழகிய நந்தவனங்கள் தோன் நின. ஆலயந் தொழுவதோடு ஆலய நந்த வனத்தையும் தொழுவது சாலவும் நன் ரெனப் பாரம்பரியம் பேணப்பட்டது,
இவை அனைத்திற்கும் மேலாக ஆயுர் வேதம் எனப்படும் மூலிகை மருத்துவம், மனதுக்கும் உடலுக்கும் புதிய தென்பை அளித்து நோயற்ற தன்மையை உருவாக் வதில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக முதன்மை பெற்றது. ஞானதிருஷ்டி மிக் ஆன்மீக ஞானிகளின் உள்ளார்ந்த அ வின் பயனாகப் பெறப்பட்ட இம் மருத் வம் உலகில் நீண்டகாலப் பாரம்பரியத்ை உடையது. இன்று அபிவிருத்தி அை கின்ற ஒரு விஞ்ஞானமாகவும் அமை துள்ளது.
ஐம்பூதங்களான நீர், நிலம், வாயு அக்கினி, ஆகாயம் ஆகியவற்றால் ஐ. வாவதான மூன்று தோஷங்களே ஆயு வேதத்தில் முக்கியமாகக் கருதப்படுகின் றன. வாயுவினால் உருவாகும் வாதமும் நீரினாலும் நெருப்பினாலும் உருவாகு பித்தமும், நீரினாலும், நிலத்தினாலு உருவாகும் கபமுமே அவை. இம் மூன் தோஷங்களுக்கும் ஒவ்வொரு மனிதரிலு வெவ்வேறு அளவில் வேறுபடுகின்ற இத் தோஷங்களோடு தாவர மூலிகைகளு தொடர்பு கொள்கின்றன.

Page 13
தாவரங்கள் சூரிய சக்தியை எமது நட்ட துக்குள் பாய்ச்சுகின்றன. இச் சக்தி எமது ஆன்மாவுக்கு புகுத்தப்படுகின்றது. தாவரங் களினூடாக சூரிய சக்திக்கும் எமது ஆன்மா வுக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகின்றது. ஒரு மூலிகை அல்லது தாவரத்தின் முறை யான பயனைத் தெரிந்துகொண்டால் அதி விருந்தும் முழுமையான சக்தியை நாம் பெற்றுக்கொள்ளலாம். பவன் தெரிந்து பயன்படுத்தப்படு. தாவரங்கள் எமது நரம்புத் தொகுதிக்கு வலிமை ஊட்டுகின் நன. இங்கினம் தாவரத்திற்கு ஒரு தூய் மைத் தன்மையையும் தெய்வீகத்தன் மையையும் அளிக்கும்போது முழு இயற்கை யோடும் ந1 ம் தொடர்புகொள்கிறோம். இயற்கை அன்னையை தெய்வமாக வணங்கு கின்றோம். அதன்பின் எமக்கு சக்தி:ளட்டி வாழ்விக்கின்ற தாவரங்கள் எமக்கு மந் திரங்கள் போல அமைந்து இயற்கையின் சக்தி சொரூபத்தை உணர்த்தி நிற்கின்றன.
இதனாலேயே பல நூற்றாண்டுகளாக நாவரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. எமது முன் னோர்கள் தாவரங்களை பூஜைக்குரியவை பாக பயன்படுத்தியதையும் நாம் நினைவு கூரலாம். ஏனெனில் எமது உடலின் ஒவ் வொரு இழையத்தோடும் இத் தாவர சக்தி தொடர்புகொண்டு அதன் பயனை அளிக் கிறதென்பதை நாம் மறுக்கமுடியவில்லை. அஷ்டமாசித்திகளைப் பெற்ற சித்தர் பெரு மக்கள் தாவரப்பாகங்களிலிருந்து நோய் தீர்க்கும் மருந்துகளை ஆங்கிவைத்தனர். அவை வேதியம், குரணம். கஷாயம், தைலம், குளிசை என்றெல்லாம் பெயர் பெற்றன. தாவரப் பாகங்களான இபை, பூ, கனி, பட்டை, வேர், தண்டு, சாறு, தேன், அனைத்துமே குறித்த நோய் நளை குணப்படுத்தும் எனக் கண்டறிந்தனர் எமது சித்தர்கள்.
தாவர உணவையே எமது மனச்சாந் திக்குரிய உணவாக எமது முன்னோர் வலி புறுத்தினர். ரஜோ. தமோ, சத்வ குணங் களில் இறைவனை வழுத்தும் தன்மை நிறைந்த் சாத்வீக புருஷர்களாக ஆக்கும் தன்மை தாவர உணவிற்கே உண்டென் பது புராதன காலத்திலிருந்தே எண்ணப் பட்டு வந்த ஒரு கருத்தாகும். இன்றும் பல நாடுகளில் பல விஞ்ஞானிகள் இக் கருத்தை ஏற்பதையும் நாம் கருத்திற் கொள்ளலாம்;
-

இவ்வாறு தாவரப் பயன்களை பல வாறு, பல்வேறு நோக்குகளில் நாம் ஆய்வு செய்யக்கூடும். எமது வாழ்வின் ஒவ்வொரு சுணமும் தாவரத்தோடும், இயற்கை யோடுமே நாம் ஊடாடுகின்றோம்.
நீண்ட நெடுங்காலமாக இயற்கையை அழிக்கும் செயலை நாம் மேற்கொண்ட தால் வயல்வெளிகள், மணற்பரப்பாக, மாறி வரண்டுவிட்டன. இப்போது எமது அறியாமையிலிருந்து விழித்துக்கொள்வோ மாக, சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் தாவர உலகின் தாற்பரியத்தை நாம் புரிந்து கொள்ளலாம். இன்னும் தாவர இராச் சியத்தின் அளவிலா அற்புதங்களை நாம் அறியவேண்டும். தாவரங்களை நாம் போற் றிப் பேண வேண்டும். அந்த இயற்கையின் அழகுணர்விலும் எம்மை வாழ்விக்கும் கிருணையுணர்விலும் நம்மை பறிகொடுக்க வேண்டும். எமது எதிர்கால சமுதாயம், மனிதகுலம் நன்மை பெற்றுய்யுமாறு இன்றே நாம் இயங்க வேண்டிவர்களாக உள்ளோம்.
மரம் நடுதலையும், நந்தவனங்கள் உரு வாக்குவதையும் எமது கட்டாயக் கடப் பாடாக மேற்கொள்வோமாக. எம்மைச் சூழவுள்ள இயற்கை வரண்ட பாலையாக இல்லாமல் பூத்துக் குலுங்கும் சோலையாக இருக்கட்டும். வானம் பொய்க்காது பொழி யட்டும். பூமி வளம் கிக்கதாகட்டும். எம் மாலான பங்களிப்பாக மரமும் பயிரும் வளர்ப்போம். ஆலயங்கள் தோறும் தல விருட்சங்கள் தழைக்கட்டும். பூமாலை புனைந்து இறைவனைப் புகழ்ந்து ஏத்த பூவனங்கள் பூக்கட்டும். நோய் பிணி தீர்க் கும் மூலிகைகள் முளைக்கட்டும். தேனா லும் தினையாலும் தெம்பு கிடைக் கட்டும். தென்னையும், பனையும், மாவும், பலா வும் பெருகிப் பெரும் பயன் தரட்டும். இன்று தொடங்கும் இயக்கம், இட்ை நின்று விடாது என்றும் வளரட்டும் இயற்கை யோடு இணைந்து வாழும் இன்ப உலகை இனியாவது ஆக்குவோமாக,
ம, சண்முகநாதன்,

Page 14
மாதம் ஒரு ஆலயம் :
கொழும்பு மாந ழறி பொன்னம்பலவ
இலங்கைத் திருநாட்டில் சிவன் உறை யும் திருத்தலங்கள் பலவுண்டு. கொழும்பு மாநகரிலே சைவத்தின்முழுமுதற்பொருளை உணர்த்தி நிற்கும் சிவத்தலத்தில் கொழும்பு பூரீ பொன்னம் பலவாணேஸ்வரர் ஆலயம் முதன்மை வகிக்கின்றது. இலங்கையிலே கொழும்பு மாநகரை அணி செய்யும் தனிப் பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆலயமாக இது விளங்குகின்றது. தமிழகத்தில் பண்டைத் தமிழ் மன்னர்களால் எழுப்பப்பட்ட பெருங் சுற் கோயில்களைப் போன்று சாலத்தால் அழியாத வரலாறு படைக்கும் பாணியில் இலங்கையில் அதுவும் தலைநகரானகொழும் பில் முழுச்சு முழுக்க கருங்கல்லால் எழுப் பப்பட்ட சைவத் திருக்கோயில் இதுவாகும். சருங்கல்லிற் பொதிந்த சிற்பங்கள் நிறைந்த துண்கள் கோயிலின் உள்ளே கண்ணைக் கவரும் விதத்தில் அழகுபடுத்தப்பட்டுள் என். மூலஸ்தானம் கருங்கல்லால் கட்டப் பட்டிருக்கும் அதே வேளை உட்பிரகாரம் வரை கருங்கல்லாலே தளம்போட்டு மூடப் பட்டுள்ளது.
பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆவ யத்தை கொழும்பு மாநகரிலே உருவாக்கிய பெருமை நமது நாட்டு பெருமக்களில் ஒரு வரும், சைவ அபிமானியும் தேசிய வீரரு மான சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களையே சாரும். தென்னகத்திலே பண்டைய பல்லவ சோழ மன்னர்கள் கட் பர ய சருங்கோயில்களையும் பொலனறுவை மயில் சானப்படும் சோழர் காலத்து கருங் கோயில்களையும் பார்த்ததன் விளைவாக கற்கோயில் ஒன்று எழுப்பவேண்டும், அது அம் கொழும்பு மாநகரிலே அது தலை நிமிர்ந்து நிற்கவேண்டும் என்ற பேராவல் கொண்டிவராக இருந்தார் இராமநாதன். இவரது ' எண்ணத்திற்கு ஆதரவு கொடுக்க யாரும் முன்வரவில்லை.
பண்டைய அரசர்கள் பல தலைமுறை களில் கட்டிய சுருங்கோயில்போல் தல்ை நகரில் கட்ட நினைப்பது மடமைத்தனம் என்று எண்ணி நகையாடியவர்களை நாம்

கர் கொச்சிக்கடை ாணேஸ்வரர் ஆலயம்
புடைக்கும் வகையில் தன் எண்னத்தில் கண்ணாயிருந்து இப் பெரும் பணியை தொட ங்கின Tr*.
தென் இந்தியா சென்று கோயில் சுட் டிடக் கலையில் கைதேர்ந்த சிற்பக் கலை ஞர்களை அழைத்து வந்தார். ஆலயத்திற்கு தேவையான கருங்கற்கள் வெயாங்கொண்ட் யில் இரு ந் து கொண்டுவரப்பட்டன. 1907ஆம் ஆண்டு கருங்கல் வேலை ஆரம்ப மாகியது. தொடர்ந்து ஐந்து வருடங்கள் நடைபெற்ற திருப்பணி வேலைகள் 1912ஆம் ஆண்டு முற்றுப்பெற்றது. சிப்போதே இரு பது லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஏற் பட்டது. இராமநாதன் அவர்கள் இத் திருப்பனரியை தாமே நின்று மேற்பார்ன் செய்ததோடு சிற்பிகளின் பரணியை, அவர் கள் சிவன்மேல் செலுத்தும் அன்புக்கு உரி தாக்கி செலவையோ சிரமத்தையோ பாராது உழைத்ததன் பலனாக இன்று சிறந்ததொரு கற்கோயில் எமக்கு கின்டக்க ம்ெ தலைநகரில் சிவனாலயம் ஒன்று உரு வாகவும் சேர், இராமநாதன் அவர்கள் ஆற் றிய பணியை ஒரு நாளும் மறக்கமுடியாது.
கற்கோயில் எழுவதற்கு முன்பே இங்கு ஒரு கோயில் இருந்தது. இதைக் கட்டிய வர் இராமநாதன் அவர்களுடைய தந்தை யான பொன்னம்பல முதலியாராவார் 1837ஆம் ஆண்டு கோயிலில் கும்பாபிஷேகம் நடாத்தி வைத்தவரும் இவரே. சிறந்த சைவரும், செல்வருமான முதலியார் சைவத் துக்கு நிலையான பணிகள் செய்ய விரும் பினார். அக் காலத்தில் கொழு ம் பில் வாழ்ந்த சைவ மக்களுக்கு முறையான சோயில் இல்லாத குறையை உணர்ந்தார். சிவன் கோயில் ஒன்று கட்டும் எண்ணம் சிந்தையிற் குடிகொண்டது. இறைவன் சித் தம் எப்படியோ என எண்ணிய அவர் மன தில் இறைவன் கனவில் தோன்றி மாதுளம் பழம் ஒன்று கொடுத்ததாகவும் அதை அவர் உடைத்து பார்த்தபோது சிவன் - உமை உருவம் காணப்பட்டதாகவும் அதன் பின்னரே கோயில் கட்டும் ஆர்வம் தடுக்க முடியாத ஆர்வமாக உருவாகியது. இதன் காரணமாக கொச்சிக்கடை பகுதியில் ஐந்து

Page 15
ஏக்கர் காணி வாங்கி இந்தியாவில் இருந்து கோயில் கட்டும் சட்டக் கலை குரை" வரவழைத்து இரண்டு வருடம் ஓயாது ஒழியாது வேலை செய்து அழகிய ஆலயம் ஒன்று உருவாக்கினார். இதுவே ஆரம்பத்தில் உருவான பொன்னம்பல வானேஸ்வரம். மூலத்தானத்தில் மகாலிங் கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தமது இல்லத்தில் தாம் நித்தியம் பூசித்துவந்த பால இயந்திரத்தை அம்மன் சந்நிதியில் அம்மன் திருவுருக்கடியில் பிரதிஷ்டை செய் வித்தார். அவரால் உருவாக்கப்பட்ட சிறு ஆலயம் அவரது மகனான இராமநாதன் அவர்களால் மாபெரும் கோயிலாயிற்று. 1912ஆம் ஆண்டு முடிவுபெற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இவ்வாலயம் பூசை சிறப்பும், வழிபாட் டுச் சிறப்பும் மிகுந்த ஆலயம். தினமும் ஆறு காலப் பூசை தவறாமல் நடைபெறு கின்றது. இலங்கையில் எங்குமில்லாத நித்தி பாக்கினி மகா மண்டபத்திற் காணப்படு வது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். சிதம்பரத்திலும் இது உண்டு. சம்பந்தர் திமதி தேவாரத்தில்:
"கற்றாங்கு எரியோம்பிக் களியை வாராமே
செற்றார் வாழ்தில்லை" என்று கூறுவதில் இருந்து எரியோம்புதல் என்பது நித்தியாக்கினியைக் குறிக்கும். எப் பொழுதும் அக் குண்டத்தில் நெருப்பு இருப் பதனால் நித்திய அக்கினி எனப் பெயர் பெறுகின்றது. இக் கோயிலில் காலை ஒரு மணிக்கும் மாலை ஏழு மணிக்கும் நடை பெறும் பூசைகளில் நித்தியாக்கினி வளர்க் கப்படும். அதன் பின்னர் சுவாமி, அம்பாள் சமேதராசு சிறிய தேர் ஒன்றில் உள்வீதி வலம் வருவார். இது நித்திய உற்சவம் எனப்படும். இவ்வுற்சவம் பூரீ பொன்னம் பலவாணேஸ்வரர்ஆலயத்தில் தினமும் நடை பெறுவது அதன் பெருமையை எடுத்தியம்பு கின்றது.
பிரதோஷ தினங்களில் இங்கு பிரதோஷ உற்சவம் நடைபெறுவதோடு, மாதப்பிறப்பு அன்று சங்கிராந்தித் தீர்த்த விழாவும் ஒவ் வொரு மாதமும்,பெளர்ணமி அன்று பூரீ சக் கர பூசையுடன் இராஜ இராஜேஸ்வரி உத் சவமும் நடைபெறுகின்றன.
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்வாலயத்தின் மகோற்சவம் பங்குனி மாதத்தில் பத்து நாட்கிளுக்கு நடை பெறும் கொழும்பு மாநகரில் இவ்வாலயத் தில் மட்டுமே ஐந்து தேர்கள் இழுக்கப்படு கின்றன. விநாயகர், சோமஸ்கந்தர், அம் பாள், சுப்பிரமணியர், சண்டேசுவரர் ஆகிய மூர்த்திகள் தேர்களில் உலாவருவர். ம்ே பாள் தேரைப் பெண்கள் மட்டுமே இழுத்து வருதல் சிறப்பாக இவ்வாலயத்தில் உண்டு. பங்குனி உத்தரம் அன்று தீர்த்தம் நடை பெறக்கூடியதாக உற்சவங்கள் முன் கூட் டியே தொடங்கி இனிதாக நடைபெற்று நிறைவுபெறுகின்றன. அண்மைக் காலத் தில் தீர்த்தக்கேணி ஒன்றும் உருவாக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடிப்பூசத்துக்கு முந்திய ஒன்பது தினங் களும் பூரீ சிவகாம செளந்தரி அம்பாளுக்கு தினமும் அபிஷேகம், பூசை யந்திர பூசை இலட்சார்ச்சனை, ஓமம், உற்சவம் ஆகி யன இடம்பெற்று இறுதி நாளான ஆடிப் பூரத்தன்று அம்பாளுக்கு திருவுவாவுரு சிறப்பாக நடைபெறுகின்றது. கந்தசஷ்டிக் காலத்தில் தினமும் அபிஷேகம், , a.575F, Isfai பூசை திருவுலா என்பன இடம்பெறுகின் நன. தைப்பூசம், மாசிமகம், மகா சிவ ராத்திரி ஆவணிமூலம், நவராத்திரி திரு வெம்பாவை, நடேசர் அபிஷேக தினங்கள் ஆகியனவும் சிறப்பாக இவ்வாலயத்தில் இடம்பெறுகின்றன. மகாசிவராத்திரி அன்று திருக்கேதீச்சரத்துக்கு அடுத்தபடியாக பக் தர்கள் அதிகம் கூடும் இடமாக இவ்வாலயம்
கழ்கின் டேசர் அபிஷேகத் ଈଶt fff'' ವ್ಹಿ ஃ திரும்ே *C உத்தரமும் தனச் சிறப்புவாய்ந்து உற்சவங் HETIT A. இவ்வாலயத்தில் மிளிர்கின்றன:
இத்தகைய தனித்துவமும் சிறப்பும் கொண்ட ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் சீராக நடைபெறு வதால் உற்சவ காலங்களில் மட்டுமல்லாது ஒவ்வொரு தினமும் பக்தர்கூடம் நிரம்பி வழிவதை காணக்கூடியதாக இருக்கின்றது. வைத்தின் முழுமுதற் பொருள் சிவன் உறை யும் இவ்வாலயம் சென்று எம் இன்னல்கள்; தொல்லைகள் நீங்க அவன் திருப்பாதங் களைத் தொழுவோமா?*
-எஸ், தெய்வநாயகம்.

Page 16
S55. ÄI (GRD
g அங்கு
※、
நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த அகில இலங்கை இந்து மாமன்றக் கட் டிட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. 3.10.90ஆம் திகதி பிற் பகல் 1.30 மணியளவில் சுபமுகூர்த் தத்தில், அடிக்கில் நாட்டப்பட்டது. இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவ ராஜ் உட்பட பல அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் பிரமுகர் சரும் கstந்துகொண்டனர்.
27, 10.90ஆம் திகதி அமைச்சர் பி.பி. தேவராஜ் அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து அகதிகளாக உள் ளோரை கண்டு அளவளாவினார். மட் டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன், சாரதா இல்லம், விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆகியவற்றுக்கும் அமைச்சர் சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.
பாரதிதாசனின் நூ ற் றாண்  ைட யொட்டி, நவம்பர் 10ஆம் திகதி பண் டாரவளையிலும் 11ஆம் திகதி லுணு கலையிலும் பாரதிதாசன் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
கொழும்பு விவேகானந்த சபையின், சைவசமயப் பரீட்சைகள் 04.10.90ஆம் திகதி காலை வட கிழக்கு பகுதிகள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளி லுள்ள 350 பாடசாலைகளில் நடை பெற்றன.
சர்வதேச இந்து இளைஞர் அமைப்புஒக்டோபர் மாதம் 13ஆம் 14ஆம் திகதி களில், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் கருத்தரங்கொன்றிணைநட்ாத் தியது. இதில் கலந்து கொண்ட பிரதி நிதிகள் இந்துக்களின் இன்றைய பிரச் சினைகளை அலசி ஆராய்ந்தனர்.

இ ங்கும் 羲
事
நுவரெலியா இலங்காதீஸ்வரர் ஆ பத்தை விஸ்தரிப்பதற்கான அடிக்கல் 02.11.1990 அன்று அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களால் நாட்டப்பட் டது. இதற்கான செலவு ரூபா 35 லட் சம் ஆகுமென காயத்திரி சித்தர் ஆர். கே. முருகேசு சுவாமிகள் அறி வித்தார். இவ்வாலய வளவில் ஆள் மீகத் தொண்டர் பயிற்சி, மூலிகை பண்னை, சித்த மருத்துவப் பயிற்சி என்பனவும் ஆரம்பிக்கப்படவுள்ளன
திருகோணமலையில், சிவயோக சம ஜம் அமைத்து அருளாட்சி புரியு பூரீமத் கங்காதரானந்தா அவர்களின் பஜனை மாதந்தோறும் முதலாம். மூன் றாம் சனிக்கிழமைகளில் பம்பலப்பிட்டி பிரான்ஸிஸ் மகாதேவா அவெனியூவின் தபால் நிலைய அலுவலர் திரு. கீன சிங்கம் அவர்கள் இல்லத்தில் நை பெறுகிறது.
தீபாவளி நாளான 17.10,90ஆம் திகதி
புதன்கிழமை காலை, வெலிக்கை சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் திபா வளி 458ಳ್ತ56315T ஒழுங்குசெய்து நடாத்தினர். இந்துசமய, சீலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச் சர் பி. பி. தேவராஜ், அமைச்சின் செயலாளர் திரு. கே. சி, வோகேள் விரன், இந்து சமயத் தினைக்கள் பணிப்பாளர் திரு. க. சண்மு கவிங்கம் உதவிப் பணிப்பாளர்கள், திணைக்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த 03.11.190ஆம் திகதி மான ஆறு மணிக்கு பம்பலப்பிட்டி இந்த வித்தியாலயத்தில் திருமூலநாயனார் குருபூசை நடைபெற்றது. இந்துசமயத் தினைக்களத்தின் சார்பில் ஆராய்ச்3 உத்தியோசத்தர் திரு. எஸ். தெய்வ நாயகம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இக் குரு பூஜையை ஈழத்துத் திருநெறித் தமி மன்றம் ஒழுங்கு செய்திருந்தது.

Page 17
ಪ್ಲೆ: S5555.5355
ଅଣ୍ଟ୫ଷ୍ଣୁ இந்து
Š88888888
அமெரிக்கா :
மிகப் பிரமாண்டமான அளவில் இந் தியக் கலைக் கண்காட்சி ஒன்றினை 1991ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் நடாத்துவதற்கான பூர்வாங்க நட வடிக்கைகளை சுவாமி பூஜீமத் பிரேமுக் மகராஜ் மேற்கொண்டு வருகின்றார். இக்கண்காட்சியைப் பார்வையிட பத்து லட்சம் பார்வையாளர்கள் எதிர்பார்க் கப்படுகின்றனர். இக் கண்காட்சியில் நான்கு முழுமையான ஆலயங்களும் உள் ளடக்கப்படுகின்றன. இதற்கு முன் இத்தகைய கண்காட்சிகள், இரண்டு இந்தியாவிலும், ஒன்று இங்கிலாந் திலும் நடைபெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது.
சைவ உணவுப் பிரியர்களை ஊக்கு விப்பதற்காக Giffo (G. (Triexflugu TeĤai) வெஜிடேரியன் டைம்ஸ்" என்ற சஞ் சிகை ஒன்று வெளியிடப்படுகின்றது.
யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் அமெரிக்கச் சீடரான பூரீமத் சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் 1970இல் அமெரிக்காவில் ஹவாய் தீவில் சிவன் ஆலயம் ஒன்றைக் சட்டினார். தற் போது சன்மார்க்க சரனாலயம் என்ற திலையத்திற்காக பதினொரு ஏக்கர் நிலப்பரப்பில் "இறைவன் ஆலயம்" ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கி புள்ளார், முழுக்கவும் கற்களாலேயே அமையவுள்ள இறைவன் ஆலயம் அமெ ரிக்காவின் முதற் கற்கோயிலாக இருக் கும். 2000ஆம் ஆண்டளவில் கோயில் கட்டும் பணிகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது,

$ಜ್ಜಿ
90-6)35 LD ಜ್ಞK$ 笠、滨
இந்தியா :
மகாராஷ்டிர மாநிலத்தில் தேனெயில் அமைந்துள்ள கீழைத்தேய கல்வி நிறு வனம்" கடந்த ஏப்ரல் மாதம் "சூழலிய லும் புராதன இந்தியாவும்" எனும் கருத்தரங்கொன்றினை நடாத்தியது. இந்தியாவின் பேரறிஞர்கள் பலர்இதில் கலந்துகொண்டு சூழலையும் வேதகால இந்தியாவையும் தொடர்புபடுத்தி ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப் பித்தனர். கருத்தரங்கின் இறுதியில் "தேனெ தீர்மானம் - 1990' என்ற இயற்கைப் பாதுகாப்புக்கான தீர்மான மும் நிறைவேற்றப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந் துள்ள அயோத்தியை இராமஜனனபூமி யாகக் கருதி ஆலயமொன்றைக் கட்ட இந்து தீவிரவாதிகள் முயன்றனர். இதே வேளை, அங்குள்ள பள்ளிவாச ஒதுக்கு இந்திய அரசு முழுமையான பாது காப்பை அளித்துள்ளது. அயோத்தி விவகாரம் இந்தியாவில் பற்றிஎரிகிறது.
இெேசல்க !
சீசெல்சு நாட்டு இந்துக் கோயில் சங்க மண்டபத்தில் கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இப் பூஜை தொடர்பாக இங்கு வாழும் இந்து மக்களுக்கென மேற்படி சங்கம், கோலப்போட்டி பூமாலை கிட்டும் போட்டி ஆகியவற்றை ஒழுங்குசெய் திருந்தது. நவராத்திரி விழா அன்று. இலங்கை இந்து சமய, கலாசார இரா ஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களின் முன்னாள் இணைப்பதி

Page 18
காரி திரு. எஸ். இரவீந்திரன் அமைச் சர் வழங்கிய இந்துசமய நூற்தொகுதி ஒன்றை சங்கத்திற்கு கையளித்தார். அத்துடன் திரு. இரவீந்திரன் அவர் களின் இன்னிசைப் பாடல்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.சங்க ஆதரவில் ஞாயிறுதோறும் கீதைப் பேருரைகள் இடம்பெறுகின்றன.
மலேசியா :
翰
மலேஷியாவில், மலேஷியா உல்லாசத் துறை அமைச்சின் அனுசரணையோடு ருத்ராதேவி சமாஜத்தின் ஆதரவில் "தெய்வீக பாரம்பரியம்" எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் பரத நாட்டிய போட்டியொன்று கிடந்த
திணைக்கள
ஒலிப்பதிவு நாடா
சிவபூரீ இரா.நீதிராஜ சர்மா அவர்களால்
இயற்றப்பட்டு இசையமைத்துப் பாடப் பட்ட "இராசு யாகங்கள்" எனும் ஒலிப் பதிவு நாடா திணைக்களத்தால் வெளி பிடப்பட்டுள்ளது. இந்நாடாவில் பக்திப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நூல்கள்
கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர் களை ஆசிரியராகக் கொண்டு உல கின் முதலாவது இந்துக் கலைக்களஞ் சியம் திணைக்கள வெளியீடாக வெளி வந்துள்ளது. இந்நூலில் "அ" முதல் "ஈ" வரையுள்ள இந்துசமயச் Triபான சொற்கள் அடங்கியுள்ளன. ஆராய்ச்சி நோக்கில், இந்நூல் ஒரு சாதனையெனவே கொள்ளத்தக்கது.
இந்துமதத்தின் இன்றியமையாமை Essentials of Hinduism gy. Flir
ரத்தினம் முதலியாரால் ஆங்கிலத்தில்

அமெரிக்கா :
围
ஆகஸ்ட் மாதம் நடாத்தப்பட்டது. பரதக்கலையின் பாரம்பரியப் பண் களைப் பேனவே இம் முயற்சி என சமாஜத்தினர் அறிவித்தனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில திலுள்ள வோலவோல சிறையே மி வும் கடுமையும் பாதுகாப்பும் மிக்கது இங்குள்ள கைதிகளுக்கு கூட்டுக்கு ளேயே யோகாசனப் பயிற்சிகள் வழ கப்படுகின்றன. இப் பயிற்சிகளி பின்பு மனம் மிகவும் அமைதியா இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்
T
ஆதாரம் - "இந்து சமயம் இன்று
வெளியீடுகள்
星岛
எழுதப்பட்ட இந்நூல் மறுபிரசுர செய்யப்பட்டிருக்கிறது.
"இந்துமதம் இந்துக்களுக்கும். இந் கள் அல்லாதோருக்கும்' Hindu for Hindus and Non - Hindus. Gugr சிரியர் சீ. சூரியகுமாரன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூ அச்சில் உள்ளது.
'கோனமலை அந்தாதி" பண்டித திரு. ஆர். வடிவேல் அவர்களால் எ தப்பட்ட இந்நூலும் அச்சில் உள்ளது
"பண்பாடு" - பருவ இதழ். பல்கலை கழக கலைப்பட்டதாரி If > சுள், க. பொ. த உயர்தரப் பிரி மானவர்களின் தமிழ், இலக்கிய இ துப் பண்பாட்டுத்துறைகளின் வத்தை நோக்கமாகக்கொண்டு "ப பாடு" எனும் காலாண்டுப் பரு இதழ் திணைக்களத்தால் வெளியி படவுள்ளது. இது ஆய்வுக் கண்ணோ டக் கட்டுரைகளை உள்ளடக்கியதா அமையும்.

Page 19
剑 றுவர் பகுதி !
உள்ளக் கமலத்தி உறைவிடம் கட்டியவ
இறைவன் தூய அன்புக்கு அடிமை போனவன் உள்ளத் தூய்மையுடன் எவர் இறைவனை வழிபடுகிறார்களோ அவர் களை அரவனைத்து அன்பு செலுத்துவதில் அவன் பின் நிற்பது இல்லை. இந்த வகை பில் பூசலார் என்னும் ஏழையின் மனதில் எழுப்பிய கோயிலில் குடிகொண்டு பொன், பொருள் ஏவலில் செறிந்த அரசன் கட் டிய கோயிலுக்கு இரண்டாவது இடம் தந்த கருனை எத்தகையது அன்பு உள் எத்திற்கு ஆட்கொண்ட இறைவனின் அர
வணைப்புத்தான் என்னே!
திருநின்றவூர் என்னும் தலத்திலே பூச லார் எனும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். ஏழையான இவருக்கு வெகு நாட்களாகச் சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டவேண் டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எங் கெங்கோ அலைந்து திரிந்தும், முயன்றும் பொருள் கிடைக்கவில்லை. பொருள் கிடைக்கவில்லையே என்று அவர் மனம் தளரவில்லை. "நான் என்னுடைய இறை வனுக்கு மனத்திலே ஒரு திருக்சோவிலை கட்டுவேன்" என திடசங்கற்பம் பூண்டார். குறித்த நாளில் சுபவேளையில் கோயில் *த்திவாரமிட நினைத்து கல், மண், சுண் ணோம்பு போன்றவைகளைச் சேகரித்து திருப்பணியைத் தொடர்ந்தார். கர்ப்பக் கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கல்யாண மண்டபம், யாக மண்டபம் என்று ஒவ்வொரு மண்டபமாக எழுந்து தாபி இராஜகோபுரம், திருக்குளம், திருத்தேர் அனைத்தும் மனதிலே உருவாகின. யாவும்
- I
 

தில் இறைவனுக்கு
s பூசலார் நாயனார்
பூசலார் மனதில் பரிபூரணமாக முடிவுற்று மிளிர்ந்தபோது கோயில் கும்பாபிஷேகத் திற்கு வேண்டிய நாளையும் தன் மனதில் தியானித்து அதற்கு வேண்டிய பொருட் களையும் ஆயத்தம் செய்தார்.
இந்த வேளையில், பூசலார் மனக் கோயில் கட்டிய நாளில் இருந்து காஞ்சி புரத்தில் காடவர்கோன் என்ற அரசன் ஏராளமான பொருளைச் செலவு செய்து கோயில் சுட்டி பூசலார் மனதில் சுட்டிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் திகதியில் தானும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து ஒழுங்குகளை மேற்கொண் டான். முதல்நாள் இரவு சிவபெருமான் காடவர்கோனின் கனவில்தோன்றி, வெளிப் படையாக கட்டிய ஆலயத்தின் கும்ப" பிஷேகத்தை ஒத்திவைக்கும்படியும் திரு நின்றவூர் பூசலார் கட்டிப கோயிலில் தான் எழுந்தருளப் போவதாகவும் சொன்னார்" அரசன் கண்விழித்து எழுந்து, கனவை நினைத்து, வியந்து பூசலார்கட்டிய கோயில் கும் பாபிஷேசத்திற்கு போவதற்காக பரி வாரங்களுடன் திருநின்றவூர் வந்தான். பூச லார் கட்டிய கோயில் எங்கே என அவ் ஆர் மக்களைக் கேட்டபோது அவர்கள் பூசலார் உள்ளார், அவர் கட்டிய கோயில் எங்களுக்குத் தெரியாது எனக் கூறினர்" அரசன் பூசலாரைக் கண்டு தொழுதான். "நீங்கள் கட்டிய கோயில் எங்கே இருக் கிறது. உங்கள் கோவிலில் கும்பாபிஷேகம் என்று இறைவன் அருளிச் செய்தான். அத என்ால் வந்தேன்" என்றவுடன் பூசலாருக்குப்
-

Page 20
புல்லரித்தது. இறைவனை நினைத்துப் பர வசமானார். "அரசே நான் மனதில் தான் கோயில் கட்டினேன்" எனக் கூறி தான் கட் டிய கோயில் அமைப்பை அரசனுக்கு விளக் கியபோது அரசன் கட்டிய கோயில் அதே அமைப்பில் உருவான  ைத எண்ணி அரசன் அதிசயித்தான். பூசலாரை வீழ்ந்து வணங்கினான். பூசலார் நாயனாருடைய கோயிலின் பெருமையையும் சிவபெரு மானுடைய திருவருளையும் வியந்து போற் றியதோடு பூசலார் கட்டிய கோயில் கும் பாபிஷேகத்தில் கலந்து அவர் ஆசீர்வாதம் பெற்று பிறிதொரு தினத்தில் தான் கட்
இரசனை உணர்வின் ெ
- பேராசிரியர்
"புதுக் கவிஞன் சமுதாய ஊழல்களை யும் பிரச்சனைகளையும், நேரடியாகப் பேசு கிறான். மக்களுக்குப் புரிந்த இலகுவான மொழியில் தெரிந்த உதாரணங்களைக் கொண்டு பாடுகின்றான். காலத்துக்கேற்ற மாறுதல்கள் எப்போதும் தமிழ் இலக் கியத்தில் அனுமதிக்கப்பட்டும், ஆதரிக்கப் பட்டும் வந்தே உள்ளன.
புதுக்கவிதை முன்னோடிகளாக ந. பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா ஆகி யோரைக் குறிப்பிடலாம். இவர்களோடு, ! நா. காமராசன், மு. மேத்தா, அப்துல் ரகுமான் போன்றோரும் புதுக் கவிதைக்கு மெருகூட்டினார்கள். மனிதர்கள் எல்லோ ரும் கவிஞர்களே. ரசிப்பின் மூலம் உணர்ச்சி வசப்படும்போது தன்னை அறியாமல் வெளிவரும் உள்ளத்து ஓசைகளே கவிதை
களாகும்.

1 - ܡܪ̈17.
டிய கோயில் கும்பாபிஷேகத்தை நடாத்தி
மகிழ்ந்தான். နုံ နုံ +ံချွံ ..., ...f့်
பூசலார் தமது மனதிலே ஈசனை எழுந் தருளிச் செய்து நாள் தோறும் வழிபட்டு இறைவனுடன் இரண்டறக் கலந்தார். சிறு வர்களே பார்த்தீர்களா ஏழையானாலும் அன்புக்கு இறைவன் அடிமையாகி ஆட். கொண்ட விதத்தை எனவே அன்பு உள் ளத்தால் ஆண்டவனை எதுவித சலனமும் இன்றி வழிபடும்போது அவன் எம் உள் எாத்தில் குடிகொள்கிறான் என்பதை பூச லார் நாயனாரின் உள்ளன்பு எமக்கு எடுத்
துக் காட்டுகின்றது.
வளிப்பாடே கவிதைகள் !
நவர்ே அலி -
கவிஞர்களின் குறையெனவே கொள்ள வேண்டும்."
பி. பி. தேவராஜ், அல்ஹாஜ் அஸ்வர் ஆகி யோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண் டனர். இந்து சமய திணைக்களத்தின்
செப்திருந்தது.

Page 21
மஹா மிருத்யுஞ்
மிருத்யுஞ்ஜெய' ஹோமம் இறையரு ளால் கொழும்பு 12இல் கல்சரப் வீதியில் அமைந்துள்ள முத்துக்கிருஷ்ண மிஷனுக்கு சொந்தமான காணியில் கடந்து (4.10.90 வியாழக்கிழமை தொடங்கி மண்டலா பிஷேகமான 48 நாட்கள் நடைபெற்ற இந்த யாகம் 20.11.90 வியாழக்கிழமை புடன் நிறைவுபெற்றது.
சிவபெருமான், விஷ்ணு இவர்களை மையமாக வைத்து நடாத்தப்படும் இவ் யாகத்தின் மூலம் நாட்டில் சாந்தியும் சமா தானமும் நிலைபெறவேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். இந்த இடத்தில் ாகம் நடப்பது முக்கியமானதல்ல. இதனால் ாரிய நன்மைகள் இலங்கை மக்களுக்கு கிடைக்க விருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெ வில், யாகம் முடிந்ததின் பிற்பாடு இக் நாணியில் பெரியதொரு மூலிகை வைத்திய சாலை உருவாக இருப்பது இப்பகுதி மக் =ளுக்கு கிடைக்கும் ஒரு வரப்பிரசாத ாகும். ஏழை மக்களுக்கும் வயது போன வர்களுக்கும் உதவும் எண்னத்துடன் ஆரம் பிக்கப்படவிருக்கும் இவ் வைத்தியசாலை பில் எதிர்வரும் காலத்தில் பலர் பயன் பெறக்கூடிய வாய்ப்பு உருவாக உள்ளது மன மகிழ்ச்சிக்குரியது.
முத்துக்கிருஷ்ண மிஷன் உலகளாவிய தியில் பல சமூக நலன் சேவைகளை நடாத்தி வருகின்றது. இந்தியா, கவிபோர் வியா போன்ற இடங்களில் தலைமைக் காரியாலயங்கள் உண்டு. சுவாமி முத்துக் கிருஷ்ணா தமிழ் நாட்டில் திருந்ெல்வேலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நஜெய ஹோமம்
வள்ளியூரில் வாழ்ந்தவர். மருந்து மூலிகை களைக் கொண்டு குணப்படுத்த முடியாத நோய்களையும் குணப்படுத்தி வெற்றி கண் டார். இந்த மிஷனுக்கு வரும் பக்தர்கள் ஏதோ ஒரு வழியில் தங்கள் நோய்களையும் கவலைகளையும் வெற்றிகண்டவர்களாகவே
அமைகின்றனர்.
முத்துக்கிருஷ்ண மிஷன் கொழும்பு நக சிலும் சிவராத்திரி, நவராத்திரி விழா போன்றவைகளை நடாத்தியதுடன் மேன்கரி நேரமும் சமூகத் தொண்டில் தன்னை ஈடு படுத்திக் கொண்டுள்ளது. ஏழைகளையும், வயதானவர்களையும் பராமரித்து 凸百岳临U உதவிகளையும் நல்கி வருகின்றது. ஒவ் வொரு அமாவாசை தோறும் தங்கள் தொண்டர்கள் கைபட சமைத்த உணவை அவர்கள் மூலம் ஏழைகளுக்கு பரிமாறி வரு வது இதன் விகங்கரி:ங்களில் ஒன்று. இதற்கு வேலையாட்களோ வேறு உதவிகளோ இவர் சுள் பெற்றுக்கொள்வதில்லை. அமாவாசைக் குப் பயன்படுத்தும் அரிசி முத்துக்கிருஷ்ணா தொண்டர்கள் ஒருநாள் சமையலுக்குபயன் படுத்தும் அரிசியில் இருந்து ஒரு பிடி அரிசி வீதம் சேகரித்து அதைக் கொண்டு பெற்ற முழு அரிசியில் அமாவாசை உணவளிப்பு வெற்றிகரமாக ஏழைகளுக்கு வழங்கப்படு கின்றது, என தற்போது பாகத்தின் நடத் துனராக உள்ள திரு. எஸ். மனோசரன் குறிப்பிட்டார். கொழும்பு மாநகரில் முத் துக்கிருஷ்ன மிஷன் நடாத்தும் பணிக் குழு வில் திரு. சண்முகநாயகம் சட்டத்தரணி டாக்டர் பூரீதரன், திரு. அட்சயன், திரு. ஜெயகுமார் சட்டத்தரணி போன்றவர்கள்
9 -

Page 22
அங்கம் வகிப்பது சிறப்பான மேம்பாட்டுக்கு வழிவகுப்பதாகும்.
சமயப்பணிகளையும், சமூகப்பணிகளை
யும் ஒருங்கினைக்கும் நோக்குடன் நடாத் தப்படும் இவ் யாகத்திற்கு பல எதிர்ப்புக்கள் கிடைத்தபோதிலும் மனம் சவியாது தம் சருமமே கண்ணாக நின்று கருமமாற்றி வரும் முத்துக்கிருஷ்ண மிஷனின் பணி
இந்துத் தத்துவத்தி
நமது மதம் என்ன சொல்கிறது என்று தெளிவின்றி இருப்போர்க்காக மிக இலகு வான சில சிந்தனைகள்:-
1. சர்வ வல்லமை மிக்க சர்வ வியாபி
யான முற்றும் உணர்ந்த ஒரு இறை வன் இருக்கிறான்.
2. ஒவ்வொரு உயிரும் இறைவனை நோக் கிய பயணத்தை மேற்கொள்கிறது. அங்ங்ண்ம் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிலையை (Bır.TL'lgFLİ ETöğr
கிறோம்.
3. உயிர்களின் கர்ம வினைகளுக்கேற்ப அவை மீண்டும் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும்.
4. கர்மவினைகள் நல்லுவையோ தியவை
யோ அவை எமது சிந்தனை, சொல், செயல் என்பவற்றால் ஒவ்வொரு கண மும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
3. கர்மவினைகளை முற்றாகத் தொலைக் கும்வரை மறு பிறவிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் என இந்து மதம் தெட்டத் தெளிவாக வலியுறுத்துகின்
நிதி
 

தொடரவும்"நாட்டில் சாந்தியும், சமாதான மும் நிலைக்கவும் வேண்டி இலங்கை மக் கள் பூரண ஆதரவு நல்குவதோடு இந்துக் களாகிய நாம் யாக இடம் சென்று அதில் -
எங்கள் பங்களிப்பையும் செய்தால் இந்து சமய வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் தொண் டாக அதைக் கருத முடியும்.
ன் ஒன்பது மணிகள்
乾。
எமது சிந்தனை, சொல், செயல் என் பவற்றை புனிதப்படுத்திக் கொள் வதற்காகவே கோயிற் பூஜை பாகம், தியானம், யோகம் போன்ற பல்வேறு முறைகளை நாம் மேற்கொள்கின் றோம்.
மனக் கட்டுப்பாடு ஒழுக்கமுள்ள நடத்தை போன்றவற்றோடு ஒரு சற் குருவின் வழிகாட்டலிலே எமது எண்
னங்களை நாம் தூய்மை செய்து, கர்மபலன்களை குறைத்துக் கொள்ள
$Tம்.
அனைத்தும் இறைவனின் படைப்புக் களே. எனவே, பேதம் பாராட்டாது, மனிதர்கள் மீதும் ஏனைய படைப்புக் கள் மீதும் அன்பு செய்யும்போது, நாம் இறைவனுக்குகந்தவர் ஆகிறோம்.
ஒரே உண்மையை பல மதங்களும் பல வாறு உரைக்கின்றன. கருணை உணர் வுடன் பிறருக்கு, நினைப்பாலோ, செயலாலோ தீங்கு செய்யாத எவரும் இறைவனின் அருட்குழந்தைகள் இறை வன் சந்நிதியில் பேதங்கள் எதுவுமே இல்லை.

Page 23

"學)』,『r學的) 學-5T합확 s s* : 황rmw ------「TT
『주역 - 『』 『:/m*(*** シ *「TED니學院, 『명확, 國事的 (M5 & W3 : Arc&. h)
T* ***(* **道學Tri &r그러&T國 Agr: 후 역** ma학gw: 明 : 『シ シ高等學)』 中七는 5명 「こ『量」コ****영rgas-Tw gs.) * 원, 역學的에 的역g Trms획r:w&國 f: 安國學r* Tw&역學的wr Tr역 -T
『學高等學官記 :F다TF :ga} シ シコショコシ
*自唱ng口u坦隨唱了。 也**七日*恩』』員
*_"「* *劑日劑函*T*unā日增******&T** 해宮道w역'TrTra = &# 5國 國事記 역w ......,
|

Page 24
影
ଅଣ୍ଟ
இந்துசமய கலாசார அ
விற்பனைக்
விற்பனைக்குள்ள நூற்பட்
மூவர் தேவாரம் இந்து கலைக்களஞ்சியம் அமுதகலசம் ESSENTIALS OF HINDU இலங்கைத் திருநாட்டின் இந்
அகில உலக இந்து மாநாட்டு
மட்டக்களப்பு மாவட்ட திரு திருகோணமலை மாவட்ட தி BHAGAVAD GITA
முருகவேளின் பன்னிரு திருமு
மதங்கசூளாமணி
STUDIES AND TRANSL ஆரையம்பத் பூரீ பரமநயினா உடப்பு பூரீ அம்பாள் வரலா திருக் கதிர்காம பிள்ளைத்தமி மண்டூர் பிள்ளைத் தமிழ் YOGASWAMY SATGURU YO GASWAMY பரமஹம்சர் கூறிய பக்திக்கள் ஒளவையார் அறிவுச் செல்வ இராமாயணக் குட்டிக்கதைக ஆரையூர்க்கோவை
கோபுரம்
ஆலயமணி
பக்திப் பாடல்களின் ஒலிப்பதி இந் நூல்களை திணைக்களக் கரு
காலை 9.00 மணி முதல் பிற்ப 4ொள்ளலாம்.
※
குமரன் அச்சகம், 20 1, ட

ନିଃଶ୍ୱେ; லுவல்கள் திணைக்கள
கருமபீடம்
டியலும், விலை விபரமும்
650.00
250.00
250.00
ISM 5000 துக் கோயில்கள் 125.00 மலர் 125.00 த்தலங்கள் 25.00 நிருத்தலங்கள் 25 00
- ,丑00。00 மறைகள் 100.00
100.00
ATION 100.00
Tri 5 Gurrus) 50.00
rற்று நூல் 20 00
ழ் 25.00
2500
20.00
P 20.00
தைகள் 15 00 ங்கள் -- 10. 00
00 ,0(T lה
20.00
07.00
07.00
வு நாடாக்கள் 75.00
மபீடத்தில் காரியாலய நாட்களில் கல் 3.00 மணிவரை பெற்றுக்
实※※
ாம் வீதி, கொழும்பு 12.