கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக மதங்கள்

Page 1


Page 2
பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி வரலாற்று ஏட்டிலே காவியம் படைத்த கள் அன்னை, அதிபர் கலாவல்லி ஆறு தாசன் அவர்களே!
கல்விக் களஞ்சியமாக, கலைக்ே லாக, எங்கள் கல்லூரியை உயர்த் பெருந்தகையே!
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டு தன்னலமற்ற சேவை செய்து "அன் யர் என்பும் உரியர் பிறர்க்கு” என் புனித வாக்குக்கு இலக்கியமாகத் திகழ் வரும் எங்கள் தலைவியே!
தாங்கள் ஓய்வு பெற்று மணிவி காணும் இச்சந்தர்ப்பத்தில் தங்கள் ந சியை என்றும் நாடி நின்று எமது புக்காணிக்கையாக இம்மலரினைத்தா உள்ளத் தாம்ரைக்குச் சமர்ப்பணஞ்
RGBgb.
- உப-அதிபர், ஆசிரிய மகளிர் கல்லூரி மாணவர் - பெற்றே பண்டத்தரிப்பு பழைய மாணவர் 22.07.1986 நலன் விரும்பிகள், நண்
 

シ6 を & Q へびさ瀏變**:* 變變變變* |-影)鹦} •',密热心预赛幻炎*办遴· - 怒∞瓣慈 圈c * 《)► 3- |×·
懿乡
%子) 澱漩 、、
M §§§ 必 &
∞∞∞ 怒 玲玲珑9&弘 ∞ 學校3%%%%%%%;"~ ) ,
§§§§ §3o

Page 3
@
60s ID
பேரறி ஞர்களின்
வெளியீடு :
திருமதி. கலாவல்லி ஆறுமுக ஓய்வு பெறும் அதிபர் அவர்கள் பணிநலம் பாராட்டு விழாச் சபை மகளிர் கல்லூரி பண்டத்தரிப்பு.
1986

ட்டுரைத் தொகுப்பு
தாசன்

Page 4
பொருளடக்கம்
1.
2.
0.
11.
12,
13.
Singhgaumrufu
ஆசியுரை :
(1) நல்லை, ஆதீன. முதல்வர் பூரீலறி (
(ii) கலாநிதி, மகாகணம் D. . அம்பல தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்ட
அணிந்துரை : பேராசிரியர், கலாநிதி, ! துணை வேந்தர் யாழ்ப்ட
மக்களும் கதகளுக்ஸ்அறிமுடிரை: பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப்
இந்து சமயம் - சில பொதுக் கருத்துக்க திரு. வி. சிவசாமி, M. A. தலைவர், சம்ஸ்கிருதத் துறை, யாழ்ப்பு
சைவம் : புலவர் கா. வேல்முருகன் B.
பகுதி முதல்வர், தமிழ்த்துை
வைணவம் : திரு. க. சொக்கலிங்கம் (
அதிங்ர், கோண்டாவில்
பெளத்த மதம் : கலாநிதி சி. க. சிற்ற தலைவர், வரலாற்றுற்
கத்தோலிக்க மதம் : திரு. சாமுவேல்
புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவம் :
திரு. எஸ். ஜெயநேசன் M. A. B. D.
துணை முதல்வர், யாழ்ப்பாணக் கல்லூ
இஸ்லாம் (சாந்தி வழி) :
ஜனுப். M. S. அப்துல் றஹீம் B. A. L யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்.
உலக மதங்களின் ஒருமைப்பாடு :
கலாநிதி. ப. கோபாலகிருஷ்ணன் தலைவர் இந்து நாகரிகத்துறை, யாழ்ப்
சமணம் : திரு. க. உமாமகேஸ்வரன்
eOOOekuekkOeeOeOsOOLOLOkOOLLOOLO0O0OOLOLOL00O0Os
அச்சுப்பதிவு : கு. வி. அச்சகம், 386

சோமசுந்தர பரமாசாரிய ஸ்வாமிகள்,
வாணர் அவர்கள், ான ஆதீன அத்தியட்சகர்
சு. வித்தியானந்தன் ாணப் பல்கலைக்கழகம்.
பல்கலைக் கழகம்
கள் :
ffT6öör பல்கலைக்கழகம்,
O. L. ற, மகளிர் கல்லூரி, பண்டத்தரிப்பு.
g|Tsassii) M. A. இந்து மகாவிந்தியாலயம்.
ம்பலம்
றுத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பெனடிக்ற் ஆசிரியர்
Dip - in - Ed.
unts60Ti, Li கலைக்கழ கம்,
|fflଞ , மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்:

Page 5
சிலாவல் ஆ 9/3)Jj 1972.
 


Page 6


Page 7
கடவுட்பற்று சமய நம்பிக்கை ரீதியில் வளர்ந்து வந்துள்ளன. நாகரிக் இயல் சிறப்படையவும் சமயங்கள் பெ நினிடையே போட் டி களும் பூசல் உண்மையே. ஒரு காலத்திலேற்பட்ட றினிடையே சம நோக்கை ஏற்படுத்தி ச சமய சிந்தனையாளர் பலர் ஒவ்வொரு
‘உள்ளது ஒருபொருள்; அதை பாதைகளின் மாறுபாடு பகைமையை பொருளன்று. எல்லா மதக்கோட்பா உண்மைப் பொருளைப் பற்றிப் பே மதமும் மற்றென்றுடன் முட்டிமோதிப் ாேண்டுமில்லை. தமிழகத்தை, பல்வேறு மரச் சோலையாகவே தமிழ் மக்களுள் மணிமேகலையில் வரும் ‘சமயக் கணக் பகுதி வலியுறுத்தும். அவ்வழிகாட்டுத சமயங்களுள் முதன்மைய எனக் க மதங்கள் என்னும் தலைப்பில் ஒரு தனி
இன்றைய சூழ்நிலையில் சமய
அடிப்படையில் ஒன்றுபட்டு வாழும்
அமைதியை இழந்து தவிக்கும் நம் சமய உண்மைகளும், நம்பிக்கைகளும், இவற்றை விளக்கும் வகையில் சமயங் என்பவற்றை எல்லாம் எடுத்துரைக்கு டும் என விரும் பி னே ம். அத்துட நம் கல்லூரி அதிபர், திருமதி. கல்ாவல் போது அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்படு இருக்கவேண்டும் எனவும் விரும்பினுேம்
இம் முயற்சிக்கு அதிபர் திரு மாணவர் ஒன்றியத்தினரும் ஆக்கமும் கமைய பேரறிஞர்கள் பலர் உலகமத கட்டுரைகள் வழங்கிய அப்பெருந்தை உரித்தாகும்.
இந்நூல் சிறப்புற வாழ்த்துரை முதல்வர், பூரீலழரீசோமசுந்தர தேசிக { தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பா டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர் பைப் பணிவுடன் தெரிவிக்கின்ருேம்.

என்பன பண்டு தொட்டே உலகளாவிய கம், பண்பாடு என்பன ஓங்கவும், மனித ரும் பங்காற்றியுள்ளன. எனினும் அவற் }களும் ஏற்பட்டன என்பது வரலாற்று மதப்பூசல்கள் மத் தி யிலும் அவற் மரச ஒருமைப்பாட்டைக் கட்டி எழுப்பிய
மதத்திலும் இருந்திருக்கின்றர்கள்.
அடையப் பல வழிகள் உண்டு, என்பர். வளர்க்க ஏதுவாயிற்று அன்றி மூலப் டுகளும் மனம் வாக்குக் கடந்த அந்த சுகின்றனவேயன்றி வேறில்லை. எந்த ஒரு போரிட வேண்டுமெனக் கூறுவதாக மதங்களும் ஒருங்கிணைந்து வளரும் பன் பெரும்பாலானேர் கருதினர். இதனை கர் தம் திறம்கேட்ட காதை" என்னும் லில் உந்தப்பெற்ற நாம், பழம் பெரும் ருதும் சிலவற்றைத் தொகுத்து உலக
நூலாக வெளியிட விரும்பினுேம்,
வேறுபாடுகளைக் கடந்து இனவுணர்வு
நிலையே வேண்டப்படுகின்றது. மற்றும் மக்களுக்கு ஒழுக்க நெறி புகட்டவல்ல
பத்தி நெறியும் தேவைப்படுகின்றன. பகளின் தோற்றம், வளர்ச்சி, தத்துவங்கள் ம் சுருக்க நூலாக இஃது அமைய வேண். -ன் இந்நூல் நம்மையெல்லாம் ஆளாக்கிய லி ஆறுமுகதாசன் அவர்கள் ஓய்வு பெறும் ம் எங்கள் அன்புக் காணிக்கை மலராக
ه !
மதி. மு. சுப்பிரமணியம் அவர்களும்
ஊக்கமும் அளித்தனர். நம் விருப்பத்திற் 5ங்கள் பற்றிய கட்டுரைகளை நல்கினர். கயோர்க்கு எங்கள் உளமார்ந்த நன்றி
வழங்கிய அருளாளர், நல்லை ஆதீன ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கும் ணம் ஆதீன அத்தியட்சகர் மகாகனம் * அவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றி
击

Page 8
மிகக் குறுகிய காலத்தில் இந்நூ பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்த களுக்கு எங்கள் இதயம் கலந்த நன்
அச்சுத்தாள்களைக் குறைந்த வ ஆனந்தன் B. A.I.P கட்டுரைகள் கந்தசாமி, பல சிரமங்கள் மத்திய பண்டிதர் திரு. க. மயில்வாகனன், !
இராசரத்தினம் அவர்களுக்கும் எங்க
வண்ண அட்டைப்பட ஓவிய முத்துக்குமாரசாமி சர்மா அவர் : பல்லாற்ருனும் உதவிய திரு. சி. மன
இந்நூலை அழகுற அச்சிட்டு உ யாளர் திரு. கு. வி. அமிர்தலிங்கதுரை களுக்கும் உளமார்ந்த நன்றியைத்
இலவசமாக அட்டைப்படத்தை அ4
நிறுவனத்தினர்க்கும் எங்கள் இதயங்க
மகளிர் கல்லூரி. பண்டத்தரிப்பு.
1-10-86

ஆக்குரிய அரிய முகவுரையை நல்கிய யாழ்ப் ர், பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர் றியறிதலைச் சமர்ப்பிக்கின்ருேம்.
விலையில் பெற்று உதவிய திரு. ந. கருணை படி எடுத்து உதவிய செல்வி, சாந்தினி பில் அச்சுப்படிகளை ஒப்புநோக்கி உதவிய திரு. வ. தவராசா B. A. குரும்பசிட்டி ள் நன்றி உரித்தாகும். S -
ம் வரைந்துதவிய சுழிபுரம் சங்கீதபூஷணம் களின் புதல்வன் செந்திற்குமரனுக்கும், விரிவண்ணனுக்கும் நன்றி.
தவிய யாழ்ப்பாணம் கு. வி அச்சக உரிமை அவர்களுக்கும் ஏனைய அச்சக உதவியாளர் தெரிவிப்பதில் உவ்கை அடைகின்ருேம்: pகுற அச்சிட்டு உதவிய மெய்கண்டான். கலந்த நன்றி.
M இங்ஙனம் கா. வேல்முருகன் - சி. நடராசர
விழாச் சபையினர் சார்பில்

Page 9
குரு
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முத
ஆறிலஜீ சோமசுந்தர பரமாசாரிய வழங்கிய
ஆசியுரை
திருமதி கலாவல்லி ஆறுமுகத கல்லூரி அதிபராகப் பணியாற்றி அ! கட்டி எழுப்பியுள்ளார். மாதர் கல்: இவர்களது பணிநலம் பாராட்டு விழா உலக மதங்கள் என்னும் கட்டுரைத்தொ குரியனவாகும். "கற்ருரைக் கற்ருரே கா. திருமதி கலாவல்லி அவர்கள்மேல் மக் காட்டுகின்றன.
பெறுதற்கரிய மானிடப்பிறப்டை நிலை முக்தியேயாகும். நதிகள் பலவாயி அதே போல் மதக்கொள்கைகள் பல எல்லா மதங்களின் அடிப்படை இலட் களாக இருந்தாலும் மற்றைய மதங்க கொள்ள வேண்டும்.
அப்பொழுது ஆன்மீக விசாரம் சிறந்த கட்டுரைகளைக்கொண்டு உலக கிறது.
அன்பர்களின் இந்நற்பணியை நிறைவுற இறையருளைச் சிந்தித்து எம
ஓம் சாந்தி! சா
ஹீலறி
தல்லூர் -0-86

பாதம்
ல்வர்
ஸ்வாமிகள்
ாசன் அவர்கள் பண்டத்தரிப்பு மகளிர் க்கல்லூரியைப் புகழ்மணக்கும் வகையில் வி நலம் பேணிக்காத்து வந்துள்ளார். நிகழவிருப்பதும் அதனேடு தொடர்பாக குப்பு நூல் வெளிவருவதும் பாராட்டிற் முறுவர்" என்பதற்கிணங்க இந்நிகழ்ச்சிகள் கள் மனதில் பதிந்துறையும் பேரன்பைக்
எடுத்த நாம் அடையவேண்டிய இறுதி பினும் சங்கமமாவது சமுத்திரத்திலேதான். வாயினும் முக்தி இன்பம் பெறுவதே சியம். நாம் எம் மதத்தைச் சார்ந்தவர் ளின் உண்மைத் தத்துவங்களை அறிந்து
ஒரளவு பூரணமாகும். இதற்கமையச் மதங்கள்" என்னும் நூல் வெளிவரு
மெச்சுகிருேம். இவ்விழா செவ்வனே து உளமார்ந்த ஆசிகளை வழங்குகிருேம்.
ந்தி! சாந்தி!
சோமசுந்தர பரமாசாரிய ஸ்வாமிகள்

Page 10
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன அத்தியட்சகர்
கலாநிதி மகாகனம் டேவிற் ஜெ வழங்கிய
ஆசியுரை
உலகத்தில் தோன்றிய சகல ந தோன்றின என்பது வரலாறு தெ விசுவாசம், வழிபாட்டு முறை என் ஆக்கி அமைப்பதற்கு காரணமாயிரு அறிவதற்கு அவற்றின் மதங்களையு இன்றியமையாததாகும். இப்படியா எடுக்கப்படும் எல்லா எத்தனங்களும்
தமிழ் மக்களின் சரித்திரத்திலு மதம், கிறிஸ்தவ மதம், பெளத்த பங்கை எடுத்திருக்கின்றன என்பதை உட்பொருளையும் தனிச் சிறப்புகளையு ஆழமாக அறிவது நங்கடமையாகும். எத்தனிக்கின்றது. இப்போது கால மாநாடுகள், பல்வேறு ம த த் த லை சிந்தனை வெளிப்பாடுகள் எல்லாம் ஏற்படுத்த உதவுகின்றன. அவ்வகைய முயற்சி இப்படியே மேலும் வளர் நூல்கள் பல, தமிழ் மொழியில் தே
பல்வேறு நோக்கில் பயன்ட தோன்றக் காரணமாய் இருப்பவர் 1 அதிபர் திருமதி கலாவல்லி ஆறுமுக கல்லூரி மேன்மையுறப் பயன் கருதா தலைவியைப் பாராட்டுகின்ருேம். வா
இனிய முறையில் பல அரிய அமைப்பில் தந்த பேராசிரியர்களுக் வெளியிட்ட அதிபர் திருமதி. கலாவி விழாச் சபையினருக்கும் எம் பாராட
எல்லோரும் இன்புற்று நீடு நல்லாசியை வேண்டுவோமாக.
பேராயர் இல்லம், வட்டுக்கோட்டை 1-0-86
W1

ஜயரத்தினம் அம்பலவாணர் அவர்கள்
ாகரிகங்களும் மதங்களின் அடிப்படையிலே ளி வா க் கும் உண்மை. மத நம்பிக்கை, பன, மனிதனின் வாழ்க்கை முழுவதையும் நக்கின்றன. ஒரு சாகியத்தை, சமூகத்தை ம் கொள்கைகளையும் புரிந்துகொள்வது ன சகல மத அறிவைப் பெருக்குவதற்கு
மெச்சப்படவேண்டும்.
றும் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் இந்து மதம், இஸ்லாமிய மதம் யாவும் பெரும் நாம் அறிவோம். எனவே இம் மதங்களின் ம் தமிழ் மக்களாகிய நாம் ஆராய்ந்து இச்சிறு நூல் அப்படியான அறிவை வளர்க்க த்துக் காலம் நடைபெறும் சகல சமய வர் கள் ஒன்றுகூடல், அவர்களின் சமய வேற்றுமையில் ஒற்றுமையைப் பெரிதும் பிலே இந்நூலும் அமைந்திருக்கின்றது. இம் ந்து விரிவான சர்வ மத ஒப்பியல் ஆய்வு ான்ற வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.
டும் ‘உலக மதம்" என்னும் இந்நூல் 1ண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி முன்னுள் தாசன் ஆவர். பல்லாண்டு காலம் அக் து பணிபுரிந்த தூய்மை உள்ளம் கொண்ட ழ்த்துகின்ருேம்.
5ருத்துக்களைப் பிழிந்தெடுத்துக் கட்டுரை தம், அறிஞர் பெருமக்களுக்கும், நூலை ல்லி ஆறுமுகதாசன் பணிநலம் பாராட்டு டும் வாழ்த்தும் உரித்தாகுக.
ாழவும், நூல் சிறக்கவும் இறைவனின்
டி. ஜே. அம்பலவாணர்

Page 11
அணிந்துரை
Guy துலே
உலகச் சமயங்களிற் சைவம், வைண (ருேமன் கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந் பட்டு வந்திருக்கின்றன. வைதிக சமயங்கள களாக முதலிலிருந்து வந்தபோதும், சங்க சில ஆண்டுகளாகத் தமிழகத்திற் செல்வா தொண்டினுலும், ஆழ்வார்களின் பணிகளிஞ நூற்ருண்டிற்குப் பின் குறைந்து அருகிப் படைத்த இலக்கண நூல்களும் இலக்கியங் இடத்தை ஓரளவு வலியுறுத்துகின்றன. அ தழுவிக் கொண்டமையும் அவற்றின் மறை களுள் ஒரு பகுதியினர் பலகாலமாகப் பெள றுச் சான்றுகள் உள.
இஸ்லாமியர் பதினன்காம் நூற்றண்டில் லாமிய மதமும் தமிழரிடையே பரவியது. தைச் சார்ந்த தமிழ் மக்கள் பலர் உள ஐரோப்பியர் வருகையினலே கத்தோலிக்கப் தமிழரிடையே பரவிற்று. தமிழ் பேசும் ப தமிழிற் பல இலக்கண இலக்கிய நூல்கள்
இவ்வாறு தமிழர் பின்பற்றும் சமயங்க போதிப்பதை அவதானிக்கலாம். கடவுளின் காணுதலே சமயம். இறைவன் உலகின் உ அப்பாலும் தனித்து நிற்கும் தன்மை உை கின்றது. உலகை இறைவனுகக் காண்பதா என்று போற்றுவதும், அந்த மெய்ந்நெறி அன்பால் நோக்கி அவ்வன்பிலே ஆண்டவளை
பிற சமயங்களும் இந்த அடிப்படை இன்புற்றிருப்பதையே எல்லாச்சமயங்களும் சமயப் பெரியார்கள் தாம் துன்பமுற்றுப் மாணிக்கவாசகரும் பிறரும் பெற்ற அல்லே இன்று சைவத்தை வாழவைக்கின்றது. ஆ வைணவத்தை வளர்க்கின்றது. மெக்காவு லுற்ற முகமது (ஸல்) அவர்களின் மூச்சே இல் சிலுவை ஏறிக் குருதி சிந்தி வதைபட்ட ஆ இன்று கிறிஸ்தவமாய் உருப்பெற்று ஓங்கி 6 உற்ற அரசையும், தங்கச் சிலைபோன்ற ம நீக்கத்திற்கு வழிகாண விழைந்த அந்தப்

ாசிரியர், கலாநிதி. சு. வித்தியானந்தன்,
னவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வம், சமணம், பெளத்தம், கிறித் த வம் தம் ), இஸ்லாம் ஆகியன தமிழராற் பேணப் ாகிய சைவமும் வைணவமும் தமிழரின் மதங் காலத்துக்குப்பின் சமணமும், பெளத்தமும் ாக்குப் பெற்றிருந்தன. சைவ நாயன்மாரின் அலும் இச்சமயங்களின் செல்வாக்கு பத்தாம்
போனபோதும், அச்சமயத்தவர் தமிழிற் களும் தமிழர் வாழ்வில் அவை பெற்றிருந்த ச்சமயங்களின் சிறப்பியல்புகளை இந்துசமயம் வுக்கு ஒரு காரணமாகும். ஈழத்திலே தமிழர் ாத்தத்தைப் பின்பற்றி வந்தமைக்கு வரலாற்
லிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து'இஸ்
தமிழகத்திலும் ஈழத்திலும் இஸ்லாம் மதத்
ர். அவர்களின் தாய்மொழி தமிழாகும்.
ம் புரொட்டஸ்தாந்தம் ஆகிய கிறித்தவமும்
க்கள் பலர் கிறிஸ்தவராக விளங்குவதோடு
படைத்துள்ளனர்.
ள் யாவும் பல அடிப்படைத் தத்துவங்களைப் தன்மையை யாரிடத்திலும் எதனிடத்திலும் .யிர்களில் ஒன்ருய் இலங்கி இருந்து அதற்கு டயவன் என்பதை இந்துமதம் உணர்த்து லும், உலகத்தொண்டே உற்றவன் தொண்டு யே உலகத்தைத் தன்னைப்போல ஒத் து னக் காண்பதுவும்தான் சமயம்.
உயில் அமைக்கப்பட்டவையே எல்லோரும் வற்புறுத்துகின்றன. இதற்காகவே பல பிறர் இன்பமுற வாழ்ந்தனர், அப்பரும் ல, அந்த அல்லலிடைப் பிறந்த அமைதியே, பூழ்வாரிற் சிலர் அடைந்த துன்பமே இன்று ம் மதினுவும் ஒடி ஆடி இடர்பட்டு அல்ல ன்னும் இஸ்லாமிய மதத்தை வளர்க்கின்றது. அந்த அன்பு நிலையே, யேசுவின் இரத்தமே, பருகின்றது. பெற்ற பெருஞ் செல்வத்தையும், ங்கையையும் துறந்து, காடு சென்று துன்ப போதி நிழலில் பொன்னுர் ஒளி, இன்று
♥ጵ፧

Page 12
பெளத்தத்தை வாழவைக்கின்றது. இப்படி களது அன்பு வாழ்வே அச்சமயங்களை வா கென வாழும் வாழ்வையே இச்சமயங்கள்
+ R * 0 8 .'யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகழு அருளும் அன்பும் அறனும் மூன் உருள் இணர்க் கடம்பின் ஒலித
என்ற பரிபாடற்பாட்டு இதனை உணர்த்துகி சமயங்கள் வற்புறுத்துகின்றன. சைவசமயம்
**தென்னடுடைய சிவனே போற்றி : எந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி
என்ற மணிமொழி உலகத்திற்கெல்லாம் இ சிவனென வழங்கப்படுகிறனென்பதை வில் கோவடிகள், தாம் சமணத்தைச் சார்ந்தவ பற்றிக் கூறும்போதும், பிற சமயத் தெய்வங் சேர்ந்த சமய வாதியோ என்று எண்ணும்ட
'நாராயணு என்னு நா என்ன நாவே என எண்ண வேண்டியுள்ளது. குன்றக் குரல் எனக் கருதவேண்டியுள்ளது. "பிறவாயாக்கை இவ்வாறு சமரசம் காண்பதே சமயம். எ தன்னைப் போலப் பிறரிடம் அன்பு கூர்க” 6 உன்னையும் மற்றவனையும் வேறு என்று க சமரசம் அரும்பும். ‘தீதும் நன்றும் பிறர்தர இதனை வலியுறுத்துகின்றது. எச் சமயத்:ே என்பது ஒளவையின் வாக்கு. எல்லாச் சட தன ; எல்லாச் சமயங்களும் ஒன்றே என்ற கொள்ளும். தீது ஒழிய நன்மை செய் என கின்றன ?
"பொய்யா நாவதணுல் புகழ்வார்கள் மெய்யே நின்றெரியும் விளக்கொத்த
"பொய்யனத்தையும் விட்டவர் புத் மையின் மேன்மையைக் கூறிச் சென்றனர்.
‘வஞ்ச மின்றி வணங்குமின் வைகலு வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற"
'தன்னில் ஆசறு சித்தமு மின்றித் தவமு யன்றுஅவ மாயின பேசிப் பின்னல் ஆர்ச்சடைக் கட்டிஎன் பண் பெரிதும் நீந்துவ தரிது.”* என்று சுந்தரரும் தூய உள்ளம் தேவை" எ
▼yiii

யே பிறசமயங்களும், இவ்வறப் பெரியோர் ழவைக்கின்றது. தனக்கென வாழாப் பிறர்க் வற்புறுத்தின.
ம் அல்ல நின்பால்
றும்
ா ரோயே"
lன்றது. ஒன்றிய உணர்வு வாழ்க்கையையே சமரசத்தை நன்கு விளக்கிக் காட்டுகின்றது.
i » V
|றைவனுயிருக்கின்ற அவனே தென்னுட்டிற் ாக்குகின்றது. சிலப்பதிகாரம் பாடிய இளங் ராயிருந்த போதும், பிற சம யங் களை ப் களை வாழ்த்தும்போதும் அவ்வச்சமயத்தைச் டி பாடுகின்ருர்,
" என்று பாடும்போது அவர் ஓர் ஆழ்வாரோ வையைப் பார்க்கும்போது குமரன் அடியாரோ ப் பெரியோன்’ எனச் சிவனை ஏத்துகின்றர். ல்லாவகையிலும் ஒன்றி வாழ்வதே சமரசம். என்ற யேசுவின் மொழி இதற்கு வழிகாட்டும். ருதாது ஒத்து நோக்கின் அந்த உள்ளத்திற் வாரா" என்ற பழந்தமிழ்ப் பாட்டானது தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல்" மயங்களும் அன்பின் அடிப்படையில் அமைந் தத்துவ நெறியிலே தான் சமரசம் கால் ன்பதை சமயங்கள் எவ்வாறு வற்புறுத்து
மனத்துள்ளே தேவர்பிரான்" என்று சுந்தரரும்,
தியுள் மெய்யனை என்று அப்பரும் வாய்
ம் ,
என்று அப்பரும்,
ரித்தால்
‘ன்பதை விளக்கியுள்ளார்கள்.

Page 13
பாவை நோன்பாலே அரங்கனை அ சிறப்பதற்குக் காரணமாக அமைய வேண் செழிக்க வேண்டுமென்று உணர்ந்தார் : தீ "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்முட் ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கய6
என்ற அவரின் பாடல் நாட்டை வாழ்விப்பை
தீது ஒழிய நன்மை செய்வதைச் சமண பின்வருமாறு கூறுகிருர்.
'தன்உயிர் தான்பரிந் தோம்பு மாறு மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுே இன்னுயிர்க் கிறைவனுய் இன்ப மூர் பொன்னுயிராய்ப் பிறந்து உய்ந்து
மணிமேகலை சிறந்த பெளத்த நூல். அத6
“மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் உண்டி கொடுத்தோர் உயிர்கொடு
நன்ம்ை செய்யும் நிலையில் நிற்பது இது.
எடுத்துக் காட்டினர். ‘துயரப்படுகிறவர் ட பிறரை நேசி" என்ற உயர்ந்த நோக்கை
போன்று முகமது (ஸல்) அவர்களின் வாழ் முடிகிறது. உலகம் உய்யவேண்டுமென்ற உ நன்மை செய்ய வேண்டுமென்று வற்புறுத்தி ஊர்விட்டு ஊர் ஓடினர் - தமக்காக அல்ல
இத்தகைய உயரிய கொள்கைகளை - துவத்தைப் பேணும் முறைகளை - எல்லோ வாழ்க்கையைக் கொண்டவையே உலகத், வர்களாக இருப்பினும், ஏனைய சமயங்கள் சமயங்களுக்குமிடையே காணப்படும் ஒருை நடத்துவதற்கு உறுதுணையாகும். அந்த ே பயன்படுமென எதிர்பார்க்கின்ருேம். அத் நூலுக்கு அரிய கருத்துக்கள் செறிந்த கட்டு கின்ருேம்.
**யாதும் ஊரே
5-9-86

டைந்த ஆண்டாள், தம் தனி இன்பம் தலை டுவது உலகின்பம் என்று கண்டார். நாடு ங்கு அகல வேண்டுமென்று செப்பினுர்.
மாரிபெய்து b உகள”
了。
ஆசிரியர் திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியிற்
போல்
மல் த்தியாய்ப் போகுமே?
ன் ஆசிரியர்
கெல்லாம் த்தோரே என்று கூறுகின்றர். தீதொழிந்து யேசுக்கிறிஸ்துவும் இவ்வுண்மையை உலகிற்கு பாக்கியவான்கள்" என்ருர். "உன்னைப்போலப் உடையதே கிறித்தவம். யேசுவின் வாழ்க்கை வும் மக்கள் பொருட்டு வாடிய வாழ்வாகவே ண்மைக்கு உழைத்த முகமது (ஸல்) தீதொழிய ய முகமது (ஸல்) நாடுவிட்டு நாடு நடந்தார்; - உலகம் உய்வதற்காக,
சமரசத்தை வளர்க்கும் வழிகளை - சகோதரத் ரும் இன்புற்றிருக்கும் நிலையை - அன்பின் வழி துச் சமயங்கள். நாம் எம்மதத்தைச் சார்ந்த ரின் கொள்கைகளை, தத்துவங்களை, எல்லாச் மப் பாட்டினை அறிந்து கொள்வது நல்வாழ்வு பகையில் "உலத மதங்கள் என்ற இந்நூல் தகைய நூலை வெளியிடுவோரையும், அந் ரைகள் வழங்கிய பெரியார்களையும் பாராட்டு
யாவரும் கேளிர்"
சு. வித்தியானந்தன்.

Page 14
மலர்க் குழு :
திருமதி. மு. சுப்பிரமணியம், B. திருமதி. க. செல்வக்குணச்சந்தி திரு. செ. சண்முகநாதன், B.S திரு. ந. கருணை ஆனந்தன், B திரு. நா. க. பத்மநாதன் திருமதி. டொறின் அம்பிகாபதி திருமதி. சுகிர்தம் முத்துராசா திரு. சாமுவேல் பெனடிக்ற் செல்வி. பிரதீபா சிவபாக்கியநாத
மலர் ஆசிரியர் :
புலவர். திரு. கா. வேல்முருகன் திரு. சி. நடராசா, B. A. Dip-ir

A. Dip-in-Ed. (52ualif) Jóir, B. A.
C.
A. J. P.
B. O. L. լ-Ed.

Page 15
மக்களும் மதங்களு
மதம் எப்படித் தோன்றியது என்ப தற்கு மக்கள் வெவ்வேழுன விளக்கங்களே கொடுப்பார்கள். மதவாதிகள் உடனே தத்தம் ம த த் தோற்றத்தைப் பற்றிய நம்பிக்கையையோ, ஐதீகத்  ைத யோ வரலாற்றுச் செய்தியையோ எடுத்துக் கூறத்தொடங்கிவிடுவர். உலகிலே இன்று பிரசித்திபெற்று விளங்கும் மதங்களான கிறித்தவம், இஸ்லாம், பெளத்தம், இந்து மதம் என்ற நான்கினையும் ஆராய்வதன் மூலம், மதத்தோற்றத்தை விளக்கிவிடலா மென்று வேறுசிலர் கருதுவர் . பிரசித்தி பெற்ற மதம் என்று கூறும்போது, பெருந் தொகையான மக்கள் பின்பற்றும் மத மென்றே பொருள் கொள்ளவே ண் டும். பெருந்தொகையான மக்கள் பின்பற்று வதனல்மட்டும் ஒரு மதம் உயர்ந்ததோ, சிறந்ததோ ஆகிவிடாது. மதவுணர்ச்சி யுள்ளவர்கள் தத்தம் மதமே உயர்ந்த தென்று பொதுவாகக்கருதுகிருர்கள். தீவிர மதவுணர்ச்சியுள்ளவர்கள் பிற சமயத்தவர் களைப் பொறுத்துக்கொள்ளவோ, மதிக் கவோ தயங்குகிருர்கள்.
உலகிலே தோன்றிய மதங்கள் எத்தனை என்பதற்கு எவரும் கணக்குக் காட்ட விய லாது. மதம் என்ற சொல்லுக்குக் குறுகிய வரைவிலக்கணம் கொடுத்தால் மட்டுமே, மானிடவரலாற்றையும் மானிடவியலையும் தொல்லியலையும் ஆதாரமாகக் கொண்டு மதங்களைக் கணக்கிடலாம். இத் தனை மதங்கள் தோன்றிய நிலையிலே, நான்கு மதங்கள் மட்டும் உலக மதங்களாக மாறி பமை வரலாற்றின் வி சித் திர மென் றே கொள்ள வேண்டும். அழிந்து விட்ட மதங் களோடும் / அழிந்துகொண்டிருக்கும் மதங் களோடும் ஒப்பிடும் போது, இன்றும் செல்வாக்கோடு விளங்கும் மதங்கள் தாம் "உண்மையான மதங்கள்’ என்று கூறிவிட

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தலைவர் தமிழ்த்துறை, 像 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
முடியாது. காலரீதியிலும் இடரீதியிலும் மதமில்லாத மக்கள்குலம் என்று கூறத் தக்கதாக, ஒன்றும் இதுவரை தெரியவர வில்லை. ஒவ்வொரு மதமும் ஒருவராலோ, ஒருசிலராலோ தொடக்கப்பட்டதுதான். மக்களிடையே நிலவிய பிற மதங்களை அழித்தோ, இணைத்தோதான் , மதங்கள் பரவத்தொடங்கின. மதங்களின் உண்மை களை ஒப்பிட்டும் மதிப்பிட்டும் தாரதம்மி யங்களை உணர்ந்ததனல் மட்டுமே, மக்கள் மதம் மாறினரெனக்கொள்ள முடியாது"
தமிழர்களின் சமயவரலாற்றை எடுத் துக்கொண்டால், அதை எங்கே தொடங்கு வது என்ற வின எழுகிறது. இந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் தென்னிந்தி யர்களின் முன்னேர்களான தி ரா வி டர் என்ற கருத்து இன்று பொதுவாக வற்பு றுத்தப்பட்டு வருகிறது . இந்துவெளிச் சாசனங்கள் இன்னும் திருப்திகரமாக வாசிக் கப்படாமையால், இன்றும் சிறு கருத்து வேறுபாடு காணப்படுகிறது. சிவ வணக்கம் சக்தி வணக்கம் உட்பட இந்து சமயத்தின் சில கூறுகள் இந்துவெளி நாகரிக காலத்தி லேயே உருப்பெற்று விட்டன வென்ற கருத்து தொல்லியலாளரால் முன்வைக்கப் பட்டுள்ளது. ஆரியர் படையெடுப்பினுலே இந்துநாகரிகம் அழிந்த பின்பு, இந்திய ஆரி யரிடையே வேத இலக்கியங்கள் தோன்று கின்றன. ஆரியர் வழிபாட்டு முறைகள் மட்டுமன்றி, இந்துவெளி வழிபாட்டு முறை களும் வேத இலக்கியங்களில் இடம்பெற்றுள் ளன. வேத இலக்கியங்கள் தோன்றத் தொடங்கிய காலம் கி.மு. 1500 வரை என்பது இன்றைய ஆராய்ச்சியாளரின்
(Լpւգ-6ւլ.
தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களின் மிகப்பழைய இலக்கியங்கள், சாசனங்கள்,

Page 16
துணிபு. தமிழர்களுக்குப் பிரத்தியேகமான சில தெய்வங்களும் சில வழிபாட்டுமுறை களும் அத்தொடக்க காலத்திலேயே காணப் பட்டபோதும் வட இந்தியச் சமயங்கள் சில, தமிழ் நாட்டிலே கால்கொண்டுவிட் டமைக்கும் சான்றுகள் கிடைத்துள்ளன, தமிழ்நாட்டுக்கு முதலிலே வந்த வட இந் தியச் சமயங்கள் பெளத்தமும் சமணமுமாக இருக்கலாமென்பது அறிஞர் சிலர் கருத்து. வேதவேள்வியை அடிப்படை வழிபாடாகக் கொண்ட பிராமணர்களின் இந்துமதத்துக்கு எதிரான கிளர்ச்சி இயக்கங்களாகத் தோன் றியவை பெளத்தம், சமணம். ஆசீவகம் என்பனவாம். இம்மூன்று சமயங்களிலே, உலகமதமாக வளர்ந்தது பெளத்தம் மட் டுமே. கி.மு மூன்ரும் நூற்ருண்டிலே. அசோ கச் சக்கரவர்த்தி பெளத்தசமயப் பிரசாரத் துக்காக பெளத்த குருமாரைப் பல நாடுகளுக்கும் அனுப்பிய தோடு பெளத்தம் உலகமதம் என்ற நிலைக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. ஏறத்தாழ அதே காலத் திலே, சமணசமயப் பிரசாரகர்களும் பத்திர பாகு தலைமையிலே கருநாடகத்துக்கு வந்து விட்டதாகவும். அங்கிருந்து தமிழ்நாட்டுக் கும் புறப்பட்டதாகவும் தெரியவருகிறது. சங்ககாலத் தமிழ்மன்னர்களின் அரசவை களிலும் நகரங்களிலும் பிராமணர் ஒரளவு செல்வாக்கோடு விளங்கியமைக்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன.
பெரிய போராட்டம் எதுவுமின்றி சில நூற்றண்டுகள் காலம் நான்கு சமயங்களும் த்மிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வந்திருக்கின்றன. பிராமணர் சமுதாயத்தில் உயர் மட்டத்தினரோடு தொடர்பு கொண்டு வேள்விகளை இயற்றி வந்தனர். தம் முடைய தெய்வங்கள் சிலவற்றையும் வழி பாட்டு முறைகள் சிலவற்றையும் தமிழ் நாட்டாருக்குப் பிரத்தியேகமான தெய்வங் களுடனும் வழிபாட்டு முறைகளோடும். இணைத்து, ‘இணைப்பு, மூலம் புதிய இந்து மதத்தை வளர்த்து வந்தனர். அகிம்சையை முதல் அறமாகக் கொண்ட சைனர்கள் துறவிகள் என்று பொருள்படும் சமணர்கள்
2
 

என்ற பெயராலேயே தமிழ்நாட்டிலே வழங் ' கப்பட்டனர். பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக் கூடாதென்ற நிலையிலே, தன்னை ஒறுத்துக் கொள்ளலாமென்பது சமணர் சித்தாந்தம். ஒருவர் அறியாத நிலையிலே கூட கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களுக் குத் தானும் துன்பம் இழைக்கக் கூடா தென்ற கருத்தினரான சமணர் தம் வாழ்க் கையிலே தீவிரமான கட்டுப் பாடுகளைக் கடைப் பிடித்தனர். புலாலுண்ணுமை சமண சமயத்தவர் ஒவ்வொருவரும் கடைப்பிடித் தொழுக வேண்டிய கட்டுப்பாடாக இருந் தது. சங்ககால இலக்கியங்களிலே புலாலு ண்ணுமை போற்றப்பட்டதற்குச் சான்றில்லை சங்கமருவிய கால அறநூல்களிலே, சமண மதச் செல்வாக்கினுலே, புலாலுண்ணுமை திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. கட்டுப்பாடான ஒழுக்கங்களாலே உயர் வடையலாமென்ற கருத்துடைய சமணம் தமிழர் சிந்தனை வரலாற்றிலே "அறநெறிக் காலம்’ ஒன்று தோன்றுவதற்கு மிகவும் முக்கியமான உந்துசக்தியென்பதை மறுப் பதற்கில்லை.
சமணத் துறவிகளிலே சிலர் பெரியபடிப் பாளிகளாக இருந்துள்ளனர். இடைக்காலத் தமிழின் பல துறை வளர்ச்சிக்குச் சமணர் ஆற்றியஅளவு பங்களிப்பினை வேறு எச் சமயத்தவரும் ஆற்றவில்லையென்று துணிந்து கூறலாம். இலக்கணம் நிகண்டு என்னும் துறைகளிலே அவர்களின் பங்களிப்பு மொழி யாராய்ச்சிப்புலத்திலே அவர்களுக்கிருந்த ஈடுபாட்டினைக் காட்டும். வடமொழி மர பைத்தழுவிக் காவியம் இயற்றியும் விருத்தப் பாவைக் காவிய நூலாக்கத்துக்குக்கையாண் டும் வழிகாட்டியவர்கள் சம ணர் க ளே. "சமணத் தமிழிலக்கிய வரலாறு' என்னும் நூலிலே பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி சுந்தரஞர் சமண சமயத்தவர்களுடைய பல துறைப்பட்ட இலக்கியப் பணிகளை எடுத்து விளக்கியுள்ளார்.
ஆசீவக மதத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசர் சமணமதத் தாபகராகிய மகா வீரரோடு சமகாலத்தவரெனவும் சிலகாலம் மகாவீரரோடு உடனுறைந்தவரெனவும் கூறப்படுகிறது. விதி அல்லது ஊழின் வலி

Page 17
மையை மீறவே முடியாதென்பது ஆசீவ கத்தின்அடிப்படைச் சித்தாந்தம். சிவஞான சித்தியார் ஆசீவகமதத்தின் கொள்கையை ன்டுத்துக்கூறி மறுத்துள்ளது. இடைக்காலத் தமிழ்ச் சாசனங்களிலே காணப்படும் தொ Lர்களான "ஆசீவகக் கர்சு" "ஆசீவகக் காணிக்கை" என்பன அச்சமயத்தார் மீது விதிக்கப்பட்டிருந்த ஒருவகை வரியைச் சுட்டு வதாக விளக்கப்படுகிறது. **விதியை வெல் லமுடியாது’ என்ற முதுமொழி ஆசீவகர் செல்வாக்கினலேயே வந்திருக்க வேண்டு மென்று கருதப்படுகின்றது. சிலப்பதிகாரம் நிலைநாட்ட்வந்த மூன்று உண்மைகளுள் ஒன் முக, ஊழ்வினை உருத்து வந்தூட்டும்" என் பதைச் சிலப்பதிகாரப் பதிகம் கூறிச் செல் கிறது, சிலப்பதிகாரக் கதையே ஆசீவக தத்துவத்துக்கேற்பப் புனையப்பட்டுள்ளதென கேரளப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவர் க. சுப்பிரமணியம் "பெருங்கதை யின் சமயப்பின்னணி என்ற நூலிலே வாதிப்பது சிந்தனையைக் கிளறுகிறது.
உலகியல் வாழ்க்கைக்கும் தீவிர துற வுக்கும் இடைப்பட்ட ** நடு வழி ** யே பெளத்தத்தின் போதனையெனப்படுகிறது. உலகவாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததா கக் காணும் பெளத்தம், துன்ப நிவிர்த்திக்கு வழிசொல்கிறது. தருமவழியிலே நிற்பதால் தீவினையொழியுமென்றும் தீவினையொழிந் தால், பிறவியற்றுப் போகுமென்றும், பிறவி யற்றுப்போனுல் விடுதலையென்று பொருள் படும் நிர்வாணநிலை கிடைக்குமென்றும் பெளத்தம் போதிக்கிறது. பிற உயிர்களின் துன்பத்தைக் குறைக்கும்சமூகசேவைகளிலே பெளத்த குருமாரும் குரத்திகளும் பெரும் ஈடுபாடு காட்டியதை மணிமேகலையிலிருந்து அறியலாம். சமணர், ஆசீவகர் என்போரின் வழிபாட்டிடங்களைப்போல பெளத்தர்களின் வழிபாட்டிடங்ளும்" பள்ளி என்றுபெயர்பெற் றன. மக்களைச்சீர்திருத்தவும் மதமாற்றம் செய்யவும் கல்வி அவசியமென்றுணர்ந்து, தங்கள் வழிபாட்டிடங்களை இந்த மூன்று சமயப்பிரிவினரும் பள்ளிக்கூடங்களாக்கினர். சம்யதத்துவத்தையும் தருக்கத்தையும் சிறப் பாகப் பேணிவந்த பெளத்தர் “பட்டிமன் றங்கள்" அமைத்துப் பிற சமயத்தினரை வாதுக்கழைத்து, வெற்றிகொண்டு, தம்ம தத்தைப் பரப்புவதிலே அக்கறைகாட்டி

னர். பெளத்த காவியங்களான மணிமேசு லையும் குண்டலகேசியும் இப்போக்கினுக்குச் சான்றுகள். வீரசோழியம் பெளத் தர் இயற்றிய இலக்கணநூலாகும். தமிழ்நாட் டிலே பெளத்தம் சமணமளவு செல்வாக் குப் ப்ெருதபோதும் ஆசீவகத்திலும் கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தது. இலங்கை யிலே தமிழர்களுள் ஒருசாரார்” நீண்ட காலமாகப் பெளத்தத்தைப் பின்பற்றி வந்த தற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டிலே நிலவிய இந்தச் சம யங்கள் யாவும் ஒன்று திரண்ட நிலையி லேயே இன்றைய இந்துமதம் காணப்படுகிற தென ஒரு பார்வையிலே ' புலப் படுகிறது. இந்துமதம் என்பதை ஒருவரையறைக்குள் அடக்குவது மிகச்சிரமமானது. பிராமணி யம் என்றபேர் இந்துமதத்துக்கு ஒருகாலத் திலே வழங்கியதுண்டு. பெளராணிகம், வைதீகம் என்ற பேர்களும் வழங்கியதுண்டு. இன்று இந்துமதம் என்பது இவையாவற். றையும் கடந்தது. வேதத்தையும் பிராமணர் களையும் வருணுச்சிரம தருமத்தையும் ஏற். றுக் கொள்ளாத வீரசைவர்களும் இந்துக் களாகவே கணிக்கப்படுகின்றனர். இந்திய மண்ணிலே தோன்றிய மதமே இந்து, மத மெனக் கொண்டால், பெளத் தம், இந்துமதத்திலே ஒருகூருகக் கணிக்கப்படுவ தில்லையென்பதை அவதானிக்கவேண்டும். சீக்கிய மதம் இந்துமதத்திலே, ஒரு கூரு கக்கணிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமையினலேயே, ஆயுதம் ஏந்திப்போ ராடுவதாகச் சீக்கியத் தீவிரவாதிகள் கூறு கின்றனர்.
இடைக்காலத்துத் தமிழ் நாட்டிலே, வைதீகநெறிசைவம், வைணவம் என்று இரு பிரிவுகளாக இயங்கியது. இவையொவ் வொன்றும் தனித்தனியே அவைதிக நெறி களை எதிர்த்துப் போராடின. பெளத்தமும் ஆசீவகமும் தமிழ்நாட்டு மண்ணிலிருந்து முற்ருக மறைந்தன. சமணம் தமிழ்நாட் டில் இல்லை என்று சொல்லமுடியாத அள. வுக்கு ஏதோ வாழ்ந்துகொண்டிருக்கிறது. அவைதிக மதங்களைப் பின்பற்றியோர் மதம்மாறியபோது, தம்முடைய சமயக் கருத்துகள் அனைத்தையும் துறந்துவிட வில்லை. அவைதிக சமயத்தார் : இயற்றிய
R

Page 18
நூல்க்ள் யாவும் மறையவுமில்லை. அதனுலே தான் இன்றைய இந்து மதம் இந்திய
அவைதிக சமயக் கருத்துக்களையும் தமிழ ருக்கே சிறப்பாக உரிய தெய்வங்கள், வழிபாட்டுமுறைகளையும் ஒருங்கு இணைத்து
உருவானதாகக் காணப்படுகிறது.இத்தகைய வளர்ச்சியினலே, 'இந்தவிடயத்திலே இந்து மதத்தின் நிலையென்ன "" என்று ஒருவர் கேட்டால், எல்லா இந்துக்களும் உடன் படக்கூடிய விடையாக எதுவும் கூறுவது சுல LILBS)6) .
உலகமதங்களிலே இரண்டு இந்தியாவிலே தோன்ற, ஏனைய இரண்டும் மத்தியகிழக் கிலே தோன்றின. கிறித்தவம், இஸ்லாம் என்ற இரண்டினுள் இஸ்லாமே தமிழ்நாட் டிற்கு முதலிலே வந்து சேர்ந்த தா கக் கொள்ளலாம். அராபிய வணிகர்கள் தமிழ் நாட்டோடு நீண்டகாலமாக வணிகம் செய்து வந்துள்ளனர். கி.பி. ஆரும் நூற் முண்டிலே, இஸ்லாம் மதம் தோன்றியதும் அராபியர் வெகுவேகமாக முன்னேறினர். பேரரசு அமைத்துக்கொண்ட அ ரா பியர் வணிகத் தை அதிகரித்துக்கொண்டனர். அராபிய வணிகர் தூர இடங்களுக்கு அரா பியப் பெண்களைக் கூட்டிச் செல்லவில்லை. அவர்களுட்சிலர் அவ்வந்நாட்டுப் பெண்களை மணம் முடித்துக் குடும்பம் நடத்தினர். இத்தகைய குடும்பங்களே தொடக்ககாலத் தமிழ்நாட்டு இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும். கி.பி. பதினன்காம் நூற்ருண் டிலிருந்து பதினெட்டாம் நூற்ருண்டுவரை, தமிழ்நாட்டிலே இடையிடையே இஸ்லாமி யர் படையெடுப்புகளும் ஆட்சியும் ஏற்பட் டன. இந்துக்கள் பலமுறை பலவித இன் . னல்களுக்காளாகினர். அச்சந்தர்ப்பங்களி லும் சிலர் இஸ்லாமைத் தழுவிக்கொண்ட gt.
ஸ் லா மின் அடிப்படைக்கொள்கை உலக சகோதரத்துவமாகும். மானிடர் யாவரும் ஒருகுலமென்பதை இஸ்லாமளவு வற்புறுத்தும் மதம் வேறு எதுவுமில்லை. இஸ்லாமை ஏற்றுக்கொண்டோர் யாவரும் ஓரினம் என்ற அடிப்படையிலேயே, இஸ் லாமியர் அல்லது முஸ்லிம்கள் என்பது ஓரினப் பெயராக விளங்குகிறது. இந்து
-4.

சமூகத்திலே ஒடுக்கப்பட்டோராக இருந் தோர்களிலும் ஒரு பகுதியினர் இஸ்லா மைத் தழுவியிருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்து இஸ்லாமியர் இன்றும் 'இஸ் லாமானவர்கள்" என்று குறிப்பிடப்படுகி ருர்களென்று அறியப்படுகிறது. கடத்த ஐந்நூருண்டுகள் காலமாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியம் வளர்ந்துகொண்டு வருகி றது . இலங்கையிலே தமிழ்பேசுவோர்க ளிலே, காற்பங்குக்கும் அதிகமானுேர் இஸ் லாமியராக உள்ளனர். தமிழ்நாட்டு முஸ் லிம்கள் தமிழ் உணர்ச் சி உள்ளோராகக் காணப்படுகின்றனர். இஸ்லாமியத் தமி ழாராய்ச்சி மாநாடுகள் பல நடந்துள்ளன. அம்மாநாடுகள், ** இஸ்லாம் எங்கள்வழி, தமிழ் எங்கள்மொழி" என்ற பேரொலியை எழுப்பியுள்ளன.
ஐரோப்பியர் வரு கை யோ டேயே, கிறீத்தவம் தமிழ் நாட்டிலே காலூன்றிய தென்பது வரலாற்ருசிரியர்களின் பொது வான கருத்து. கிறித்தவம் அதன் தொடக்க காலத்திலேயே தென்னிந்தியா வுக்குத் "தோமாஸ்" என்றஞானியால் கொண்டுவரப்பட்டு விட்டதென்று சிலர் வாதிப்பர். கேரளத்திலே சீரியக்கிறித்தவர் என்போர் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வரு கின்றனர். ஐரோப்பியருடைய கிறித்தவத்தி லும் கத்தோலிக்கம் புரொட்டஸ்தாந்து மதம் என்று இரண்டு பெரும் பிரிவுகளுள் போர்த்துக்கேயர் தமிழ்நாட்டிலும்இலங்கை யிலும் கத்தோலிக்கத்தை அறிமுகஞ்செய்து வைத்தனர். போர்த்துக்கேயர் இலங்கைத் தமிழரின் பாரம்பரிய தமிழகத்தை ஆட்சி புரிந்தபோது இந்துக்கள் துன்புறுத்தல்களுக் குள்ளாகினர். தமிழ் நாட்டிலே போர்த்துக் கேயரின் ஆட்சி ஏற்படாத போதிலும் செல் வாக்கு இருந்தது.தமிழர்களிடையேகத்தோ லிக்க மதபோதகர் பிரசாரம் மேற்கொண் டிருந்தனர். தமிழர்களுள் ஒருசாரார் கத்தோலிக்கத்தைத் தழுவினர். பரவர்கள் முஸ்லிம்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளா கியபோது கத்தோலிக்கத்துக்கான மதமாற் றத்தை நிபந்தனையாகவைத்துப் போர்த் துக்கேயர் அபயகரம் நீட்டினர். தமிழ் நாட்டிலே கன்னியாகுமரி, திருநெல்வேலி

Page 19
மாவட்டங்களின் கரையோரங்களில் வாழ் ந்தவர்களும் இலங்கையின் வட மேற்குக் கரையில் வாழ்ந்தவர்களுமான பரவர் சமூ கம் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்டது. இந்துசமூகத்திலே நலிவடைந்த பிரிவினராக இருந்தவர்களுள் ஒருசாராரும் கத்தோலிக் கத்தைத் தழுவினர். தமிழ் நாட்டின் சில பகுதிகளிலே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரெஞ்சுக்காரர் கத்தோலிக்கராக இருந்து வந்ததஞல், கத்தோலிக்கம் அப்பகுதிகளிலே ஒரளவு பரவியது. கிறித்தவம் அன்பை அடிப்படை யாகக் கொண்ட மதம். ஒவ் வொருவரும் தன்னைப் போலப் பிறரையும் நேசிக்கவேண்டும் என்பது கிறித்த வத்தின் எதிர்பார்ப்பு. கத்தோலிக்கர் சமூக சேவை களிலும் முன்னின்று உழைப்பது வழக்கம். கத்தோலிக்கம் பரவியதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.
கிறித்தவம் என்பது சிறப்புப் பெயராக புரொட்டஸ்தாந்து மதப் பிரிவினரை க் குறிப்பதற்கும் வழங்குகிறது. இலங்கை ஆட்சியாளர்களிலே ஒல்லாந்தரும் ஆங்கி லேயரும் புரொட்டஸ்தாந்து மதப்பிரிவின ராவர்.தமிழ் நாட்டிலும் ஆங்கிலேயர்ஆட்சி நிலவியது. ஆங்கிலேயர் சமயப்பொறுமை யுடையோராக விளங்கியபோதும் கிறித்த வருக்கு முன்னுரிமை வழங்கினர். அமெரிக் காவிலும் பிரித்தானியாவிலுமிருந்து பெருந் தொகையான மதபோதகர்கள் வந்து தமிழர்களிடையே கிறித்தவப் பிரசாரஞ் செய்தனர். கல்வித் துறையிலே அவர்கள் விசேட கவனஞ்செலுத்தினர். அரச உத்தி யோகம் பெறுவதற்கும் வாழ்க் கையிலே பொதுவாக முன்னேறுவதற்கும் ஆங்கிலக் கல்வி தேவைப்பட்டதனல், அப்பாடசாலை களைத் தாபித்து நடத்திய மத போதகர் கள் மதமாற்றத்துக்கு ஆங்கிலக் கல்வியை ஒருசாதனமாகப் பயன் படுத்தினர். இந்து மதத்தையும் கத்தோலிக்கத்தையும் கண் டித்து இவர்கள் தீவிர பிரசாராத்தில் ஈடுபட் டனர், தமிழ்நாட்டுக்கு அச்சியந்திரம் வந்து சேர்ந்து விட்டதனுல் மத கண் டனங்கள் துண்டுப் பிரசுரங்களாகவும் நூல் களாகவும் வெளிவந்தன. கத்தோலிக்கரும் இந்துமதத்
O.

தினரும் கண்டனங்களுக்குப் பதிலாகக் கண் டனங்கள் எழுதத் தொடங்கியதால், கண் டன இலக்கியம் தமிழிலே சிறப்பாக வளர்ந் தது. வைதிக மார்க்கத்தையும் பிராமண ரையும் கண்டிக்கத்தொடங்கிய கத்தோலிக் கரும் கிறீத்தவரும் திராவிடருடைய தனித் துவத்தையும் தொன்மையையும் பண்பாட் டுச் சிறப்பையும் வலியுறுத்தும் அறிஞர்கள் சிலரைத் தந்துள்ளனர்.ஆங்கிலக் கல்வியின் ஒரு கூருக அறிவியற் கல்வியையும் வழங் கிய கிறித்தவம் தமிழ் நாட்டிலே பகுத் தறிவு வாதம் வளர்வதற்கும் உதவியுள்ளது. திராவிட இனவாதம், பகுத்தறிவு வாதம் என்பன சணுதன தர்மமான இந்துமதத்தை தா க் கி வருவதா ல் தமிழ் நாட்டிலே கிறித்தவ மதமாற்றம் இன்றும் ஓரளவு நிகழ்கிறது. சனத்தொக்ை எண்ணிக்கையி லும் செல்வாக்கிலும். தமிழ் நாட்டிலே கிறித்தவம் இஸ்லாத்தை முந்தி நிற்கிறது.
இந்து மதத்தோடும் பெளத்தத்தோ டும் ஒப்பிடும் போது, கிறித்தவமும் இஸ் லாமும் ஒரு அடிப்படைவேறுபாடுடையன. இந்திய மதங்கள் அகிம்சையைப் பற்றிப் பேசும் போது, எல்லாவகை உயிர்களையும் சேர்த்தே நோக்குகின்றன மர்னிடரையும் பிற உயிர்வர்க்கங்களையும் வேறு படுத்திப் பார்ப்பதில்லை. கிறித்தவமும் இஸ்லாமும் மானிடத்துக்குத் தனிச்சிறப்பு வழங்குகின் றன. பிற உயிர் வர்க்கங்களும் உயிர்இல்லாத வைகளும் மானிடர்களுக்காகவே படைக் கப்பட்டுள்ளன வென்பது அச்சமயங்களின் நம்பிக்கை. இன்றைய உலகிலே உலகமதங் கள் நான்குக்கு மிடையிலான போட்டி அர்த்தமற்றதாகப் பலருக்குத் தோன்றுகி றது. பெரும்பாலோருக்குச் சமய ஈடுபாடு குறைந்து வருகிறது. மார்க்சீய சித்தாந்தம் பொருளியல் முதல்வாதத்தை வலியுறுத்திச் சமய நம்பிக்கையை வேரறுத்து வருகிறது. வலுவுள்ள, ஆழமான, வேகமாகப் பரவு கிற சித்தாந்தம் என்ற முறையிலே பார்க் கும் போது, இது ஒரு புதிய மதமாகக் கணிக் கப்பட்டாலும் ஆச்சிரியப் படுவதற்
ਪੋਟੋ.... ।
- O

Page 20
ந்துசமயம் - சில ே
உலகில் இன்று நிலவும் பல்வேறு சம யங்களிலே காலத்தால் முந்திய தொன்மை யும், சிறப்பும் கொண்டிலங்குவது இந்து சமயமாகும். இதன் தோற்றம் வரலாற் றுக்கு முற்பட்டதாகும். அதன் சிறப்பியல் புகள் பலவற்வறை வரலாற்றுரீதியிலும் கூறமுடியும். 'முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய்ப் பின்னப்புது மைக்கும் பேர்த்து ம ப் பெற்றியாளுப் இலங்கும் இறைவன் போலவே இதுவும் திகழ்கின்றது.
இதன் பழையபெயர் சநாதனதர்மம். *சநாதன எனில் மிகப்பழைய, என்று முள்ள எனப் பொருள்படும். வேதங்களிலே வரும் பிரதான சொற்களின் வரலாற்றினை ஆய்ந்து கூறும் நிருக்த ஆசிரியரான, யாஷ்கர் என் பவர் *சநாதன்' எனில், என்றும் புதுமை வாய்ந்தது’ என்பர். எனவே இந்து சம யம் என்றும் புதுமையுடனும் புதுப்பொலிவு டனும் விளங்கும் மதம் என்பதில் ஐயமில்லை. "தர்மம்' என்ற சொல்லுக்குப் பலகருத் துக்கள் இருப்பினும், அதன் வேர்ச்சொற் கருத்து முக்கியமானது. இச்சொல் 'த்ரு' (Thr) எனும் வினையடியாக வந்தது. ‘இது நிலைபெறுதல்", "தாங்குதல்" எனப் பல பொருள்படும். எல்லாவற்றையும் தாங்கி நெறிப்படுத்துவது என இதற்குப் பொருள் கொள்ளலாம். அதாவது, உலகனைத்தினை யும் தொன்றுதொட்டுத் தாங்கி நின்று நெறிப்படுத்திவரும் மிகப்பழைய மார்க்கம் இது எனலாம்.
இந்து சமயம் என்ற பெயர் இதற்கு மேனட்டார் இட்ட Hinduism' 67grth பதத்திலிருந்து வந்ததாகும். இந்து எனும் பெயர் சிந்து எனும் நதியின் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும். சிந்து எனும் பதம்
 

பொதுக்கருத்துக்கள்
திரு. வி. சிவசாமி, M. A. தலைவர், சம்ஸ்கிருதத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:
பாரசீகம், கிரேக்கம் முதலிய மொழிகளிலே. மாற்றமடைந்து ஆங்கிலத்திலே ஹிந்து ( Hindu ) எனவும், இதுள்ள நாட்டினை இந்தியா என வும் வழங்கப்படலாயின.
குறிப்பாக, வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இந்துசமயப் பிரிவுகள் யாவும்
'ஹிந்டுபிஷம்" என அழைக்கப்படலாயின. ஆனல், பரந்த கருத்திலே, இந்தியாவிலே
நிலவுகின்ற எல்லாச் சமயங்களையும் குறிக்
கும். இந்தியாவின் பழைய பெயர் பாரத வர்ஷம். அதுபோல இந்து சமயத்தின்
பழைய பெயர் "சநாதனதர்மம்’.
மேலும், வேதங்களையொட்டிய வைதிக மரபினை ஏற்றுக் கொண்டயாவரும் ஆஸ் திகர் எனப்படுவர். கடவுளில் நம்பிக்கை யில்லாவிடினும் வாழையடி வாழையாக நிலவிவரும் மரபினை ஏற்றுக்கொள்ளுவோர் யாவரும் ஆஸ்திகரே. மாருக, இம்மரபினை ஏற்றுக் கொள்ளாதோர் நாஸ்திகர் எனக் கருதப்படுவர் என்பதும் ஈண்டுக் குறிப் பிடற்பாலது.
வரலாற்று ரீதியிலே நோக்கும் போது இந்து சம ய ஊற்றுக்கள் இந்தியாவின் பழைய கற்கால, புதிய கற்கால நாகரிகங் களிலும், அவற்றைத் தொடர்ந்து ஏற் பட்ட இரும்புக்காலத்திலும் உருவாகி யவை. குறிப்பாகச் சுமார் 5000 ஆண்டு களுக்கு முற்பட்ட சிந்துசமவெளி நாகரி கமும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வேதகால நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. பிற்கால இந்துசமயத்தில்ே நிலவிவந்துள்ள அடிப்படை அமிசங்கள் இவற்றிலே ஏற் கனவே ஏதோ வடிவில் வந்துவிட்டன. எவ் வாருயினும், இவ்விரு பெரும்நாகரிகங் களின் அடிப்படையிலும், பிற்கால இந்து
-சமயம் வளர்ச்சியடைந்தது.

Page 21
பழமைமிக்க இந்து மதம் ஒருபெரிய ஆலமரம் அல்லது ஆறுபோன்றது. தன் னகத்தே பல கிளைகளையும் பலரக அளவிலே கொண்டுள்ளது. யாவருக்கும் நன்மை யளிப்பது. என்றும் வளர்ந்து கொண்டிருப் யது. மனித சுதந்திரத்திற்கு முதன்மையளிப் பது. எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே காலம் தோறும் இதன்பால் பல ஃபிரிவுகள்ஏற்பட்டு இதனை வளம்படுத்தி வந் துள்ளன.எனினும் அடிப்படையிலே பிரிவு களனைத்திற்குமிடையில் ஒற்றுமை யுண்டு. காலத்தால் முந்திய இருக்கு வேதம் இக்கருத் தினை * ஏகம் சத் விப்ரா பஹீதா வதந்தி" அதாவது உண்மைப் பொருள் ஒன்றே ஞானிகள் இதனைப் பலவாறு கூறுவர் எனப்பகரும். இதற்குப் பிந்தியகால சாந் தோக்கிய உபநிடதமும் உண்மைப் பொருள் (பரம்பொருள்) இரண்டன்று ஒன்றே ஒன்று, எனவலியுறுத்தும். இது போன்ற கருத்துத் தொடர்ந்து பிற்காலத்து நூல்கள் பல வற்றிலும் வந்துள்ளது. இன்றும் நடை முறையில் மக்கள் பல தெய்வங்களை வழிப் பாட்டாலும், அவர்களளைவருக்கும். ஒரே தெய்வம் என்ற கருத்தே முன்வைக்கப்படு கின்றது. இதற்கேற்ப ஒருபுறத்திலே உயர்ந்த சமய, தத்துவக்கருத்துக்கள், வேதங்கள், ஆகமங்கள், தந்திரங்கள் முதலியவற்றின் அடிப்படையில் எடுத்துரைக்கப்படுகின்றன. அதே வேளையில் சாதாரண வழிபாட்டு முறைகளும் மரபு வழியாக மக்கள்மத்தி யில் நிலவுவதைக் காணலாம். இந்நு சம யத்தின் உண்மை நிலையினை நன்கு புரிந்து கொள்ளாத மேனுட்டறிஞரும், அவர்களைப் பின்பற்றும் கீழ்நாட்டறிஞரும் கூறுவது போல, இந்துசமயத்திலே பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, என்றவகை யில் வழிபாடோ, தெய்வங்களோ இருப் பதாகக் கொள்ளுவதற்குத்தக்க சான்றுகள் இல்லை. வேதாகம முறைப்படி சிவபிரான், சக்தி, பிள்ளையார், முருகன், திருமால் முதலிய தெய்வங்களை வழிபடுவோருக்கும் கிராமங்களிலே, சூலம், வேல் போன்ற புனித குறியீடுகளையோ, சிலைகளையோ வைத்து முற்குறிப்பிட்ட தெய்வங்களைய்ன்றி பைரவர், வீரபத்திரர், அநுமார், ஐயனர் போன்ற தெய்வங்களை வழிபடுவோருக்கு

மிடையிலே கடவுள் - வழிபடுவோன் என்ற நிலையிலே வேறுபாடில்லை. முற்குறிப்பிட்ட வர்களுக்குக் குறிப்பிட்ட தெய்வங்கள் எவ் வாறு முழுமுதற் கடவுளோ, அவ்வாறே பிற் குறிப்பிட்டவர்களுக்கும், குறிப்பிட்ட தெய்வங்கள் பெரும்தெய்வங்களே. மேலும் குறிப்பிட்ட தெய்வங்களைத் தத்தம் இஷ்ட தெய்வங்களாகக் கொள்ளுவோர் மற்றைய தெய்வங்களையும் பொதுவாக வழிபடும் மரபு உண்டு. எனவே பெரியதெய்வம், சிறிய தெய்வம் என்ற பாகுபாடு நடைமுறை யிலுள்ள வழிபாட்டில் இல்லை என்பது உறுதி. வேதகாலம் தொட்டு நிலவி வரும் பிரதான ஒர் அமிசம் யாதெனில், குறிப்பிட்ட நேரத்திலே குறிப்பிட் ட தெய்வம் பிரபல்யமாகக் கொள்ளப்படு தலாகும். மேலும், இஷ்ட தெய்வவழிபாடு ஒரு சிறப்பியல்பாகும். ஒவ்வொருவரும் தத் தம் ஆத்மீக அநுபவத்திற்கும், விருப்பத் திற்குமேற்றவாறு வசதிப்படி, விரும்பும் தெய்வத்தினை வணங்கலாம். வழிபாட்டு முறையிலே கட்டாயப்படுத்தல் இல்லை. எனவே, எவரும் விரும்பியவாறு வழி படலாம்.
இறைவனைப் பெரிய கோவில்களில் வழிபடலாம்; சிறிய கோவில்களில் வழி படலாம்; சிறு கொட்டிலமைத்து வழி படலாம்; மரத்தடியிலே சூலம் போன்ற இலச்சினையொன்றை வைத்து வழிபடலாம்; வீட்டிலே வழிபடலாம்; மலர் தூவி வழி படலாம்; தூபதீபம் காட்டி வழிபடலாம்; வேள்வி மூலம் வழிபடலாம்; இறைவனின் திருநாமங்களையும், தோத்திரங்களையும் பாடிவழிபடலாம்; அங்கப் பிரதிட்டை, கரகம், காவடி முதலியவற்றின் மூலம் வழிபடலாம்; பல திருப்பணிகள் மூலம் வழிபடலாம்; மேலாக, உள்ளமே கோயி லாக உள்நிற்கும் இறைவனை உள்ளத்திலே தியானித்து ஏத்தலாம். இவ்வாறு இறை வனைப் பலவாறு, பல்வேறு நிலைகளிலே வழிபடலாம்; அவரவர் பாவனைகளுக்கும், மனநிலைகளுக்கும் ஏற்ப வழிபடலாம். இத் தகைய முறைகளிலே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை நெறி
களும் வருவது கண்கூடு.

Page 22
இந்துசமயக் கட்டுக்கோப்பினுள் அல் லது உள்வட்டத்திலே வழிபாட்டு முறைச் சுதந்திரம் நிலவுவது போலவே, மற்றைய சமயங்களைப் பொறுத்தவரையிலும் சமய சகிப்புத்தன்மை மேலான இடம் பெற் றுள்ளது. ‘மனிதர்கள் என்னை எவ்வெவ் வழிகளில் நின்று வழிபட்டாலும், அவர்கள் என்னையே வணங்குகிருர்கள்’ எனவும், மற்றைய தெய்வங்களை வழிபடுவோரும் என்னையே வழிபடுகிருர்கள்’’ எனவும் பூரீ கிருஷ்ணபகவான் கீதையிலும், 'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகஞர் தாம்வரு வார்’ எனச் சிவஞானசித்தியாரும் கூறி யிருப்பவை மனங்கொளற்பாலன. இத் தகைய பரந்த அடிப்படையிலான சமய சமரசம், இந்தியாவில் எழுந்த ஏனையசமயங் களைப் பொறுத்தமட்டிலுமன்றி வெளிநாடு களிலே தோன்றிய சமயங்களைப் பொறுத்த மட்டிலும் பின்பற்றப்பட்டன. மேலும், அவதாரக் கோட்பாடு இக்கருத்தினை நன்கு வெளிப்படுத்துகின்றது. "ஒரே இறைவன் உலகின் நன்மைக்காகக் காலந் தோறும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பெயர் களில் அவதரிக்கிருர்’ என்ற பரந்த கருத் தில் எச்சமயமும் அடங்கிவிடுகின்றதன்ருே? எத்தகைய சமயப் பூசலுக்குமிங்கு இட LÉgi2h).
இவ்வாறு பல்வேறுபட்டசமயக் கருத் துக்களுக்கும் மதிப்பளித்துச் சர்வசமய சமரசம் பேசும் இந்து சமயம், இவற்றி லுள்ள நல்ல அமிசங்களைத் தன்னகத்தே கொள்ளவும் தவறவில்லை. **நல்ல சிந்தனை கள் எமக்கு எத்திசையிலிருந்தும் வருவ தாக’ என இருக்கு வேதம் கூறும் கருத்து இன்றுவரை இந்து ச ம ய த் தி ல் இடம் பெற்றுவருவதைக் காணலாம். இந்து சமயத்தின் நீண்டகால வரலாற்றில் இக் கருத்துக்குப் பல எடுத்துக்காட்டுக்கள் உள. ஒரு வ ன் த ன து கருத்துக்களுக்குப் போலவே மற்றவர்களுடைய கருத்துக் களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பது இந்து சமயத்தின் அடிப்படை அமிச மொன்ருகும்.

இந்துசமயத்துக்கெனத் தனியான ஸ்தா பகரோ, நிறுவனங்களோ பரந்த அடிப்படை யிலே பொதுவாக இருக்கவில்லை. ஞானி கள், அறிஞர்கள் அநுபூதிமான்கள் முதலி யோர் கூறி யு ள் ள கருத்து க் களின் தொகுப்பே இந்துசமயத்திற் பெரிய அள விற்காணப்படுகிறது. இதிற்கூறப்படும் கட வுள் பற்றிய கருத்துக்களும், மறைஞான மும், ஆத்மாநுபவமும், பிறவும் மரபுவழி யாக நீண்டகாலமாகப் போற்றிப்பேணி வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இம்மரபிற்கு அல்லது பாரம்பரியத்துக்குப் பங்கம் அல்லது இடையூறு ஏற்பட்டகாலங்களில் மஹாத் மாக்களும் , ஆன்மீக வீரரும் தோன்றிக் காலத்தின் நெருக்கடிகளைத் தீர்த்துச் சநா தன மரபுதொடர்ந்து நிலவச் செய்துள்ள னர். இந்த வரிசையிலே வேதகால இருஷி கள், உபநிடத சிந்தனையாளர், வியாசர், வான்மீகி, சிறீகிருஷ்ணர், சைவநாயன்மார், வைஷ்ணவ ஆழ்வார்கள், சங்கரர், ராமா னுஜர், இடைக்கால வடஇந்திய ஞானிக ளான ஞானேஸ்வரர், துகாராம், சைதன் யர், துளசிதாசர் போன்ருேர், தற்காலத் திய ராஜாராம்மோகன்ராய், சுவாமி தயா னந்த சரஸ்வதி, பூஞரீராமகிருஷ்ண பரமஹம் ஸர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், ர ம ண ம க ர் ஷி, மகாத்மாகாந்தியடிகள் போன்ருேரும் வேறுபலரும் இடம்பெறுவர். உலகிலுள்ள பிறசமயங்களிலே மதகுருமார் செய்து வந்த திருப்பணிகளை இங்கு சமய ஞானிகளும், துறவிகளுமே கூடுதலாகச் செய்துவந்துள்ளனர். இவர்கள் மறைஞான ரீதியில் ஆத்மீக அநுபவம் பெற்றிருந்த னர். சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ள வர்கள் மத்தியில் மட்டுமன்றிக் கீழ்மட் டத்தில் உள்ளவர் மத்தியிலும் இவர்கள் நடமாடி இந்துமதம் மக்கள்மதம் என்பதை எடுத்துக்காட்டி வந்துள்ளனர். இங்கு சம -யக்கருத்துக்கள் எவர்மீதும் திணிக்கப்பட வில்லை. ஞானிகளைப் பின்பற்றியே மக்கள் தத்தம் அநுபவதிலைக்கேற்பச் சமயாதுஷ் டானங்களைப் பொதுவாகக் கைக்கொண்ட
னர்.
இந்து சமூக நெறி பற்றிய விளக்கத் தினை வர்ணுஸ்ரம தர்மத்திலே பார்க்கலாம்.

Page 23
இதன்படி மக்கள் முதலிலே தொழி லின் அடிப்படையிலும், நிற அடிப்படையி லும் பிராமணர், சத்திரியர், வைஷ்யர், சூத்திரர் என நான்கு பிரிவாக வகுக்கப் பட்டனர். ஆனல் பின் சத்துவம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் அடிப்படை யில் இவற்றிற்கு விளக்கம் பகவத்கீதை போன்ற நூல்களில் அளிக்கப்பட்டது. இது போலவே, தனிமனிதன் வாழ்வும், பிரமச் சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நி யாஸம் எனநான்கு பிரிவுகளாக ஒன்றன் பின் ஒன்று பின்பற்றப்படுவனவாகப் lugமுறையில் வகுக்கப்பட்டது. ஆகவே, சமூ கத்திலே வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்நாளில் செய்யவேண்டிய கட மைகள் வரையறை செய்யப்பட்டன. இம் முறையிலே சில குறைகளிருப்பினும் ஒரு கால்கட்டத்திலே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவிற்று. இன்று காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் ஏற் பட்டுவிட்டன.
இந்து சமய வரலாற்றின நோக்கும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய இலட்சி யங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காக வலியுறுத்தப் பட்டன. முதலில் அறம், பொருள், இன்பம் என மூன்றும் திரிவர்க்கம், முப்பால் என வலியுறுத்தப் பட்டன. இக்கருத்தினை வேதங்கள் , தர்ம சாஸ்திரங்களில் மட்டுமன்றித் திருக்குறளி லும் காணலாம். மனிதன் இவ்வுலக வாழ் விலே செய்ய வேண்டிய, தேட வேண்டிய இலட்சியங்களும், மறுவுலக நன்மைக்கான இலட்சியங்களு மிதில் அடங்கி யிருப்பதைக்
SIGISÖGÜ.
மேலும் இந்து மதமும், தத்துவமும் ஒன்றிணைந்து ஒன்றிற்கு ஒன்று உறுதுணை மாகவும், ஒன்றையொன்று பூரணப்படுத்தி
- C

வந்தமையினையும் குறிப் பிடலாம். மேலை நாட்டிலே சமயம் தத்துவம் வேறு வேருக வளர்ந்தன. ஆனல் இந்தியாவில் அப்படி யன்று வேதங்க డిగా அடிப்படையாகக் கொண்டு எழுந்த அகச்சமயங்களான, கான பத்தியம், சைவம், சாக்தம், கெளமாரம், வைஷ்ணவம், செளரம் ஆகிய ஆறும் சாங் கியம், யோகம், நியாயம்,வைசேடிகம்,மீமாம் சம், வேதாந்தம் ஆகிய ஆறு தர்சனங்க ளும் குறிப்பிடற்பாலன. இடைக்காலத்திலே தோன்றிய பெரிய தத்துவ மேதையும், சமய ஞானியுமாகிய சங்கராச்சாரியார் மேற்குறிப்பிட்ட ஆறு சமயப்பிரிவுகளுக்கும் புதுமெருகூட்டி ஷேண்மதஸ்தாபகர்’ எனச் சிறப்புப் பெற்ருர், வேதாந்தத்தை நிலைநாட் டினர். தமது கருத்துக்களை நிலைநாட்டுவி தற்கு இந்தியா அடங்கலும் திக்கு விஜயம் செய்து எதிரிகளை வென்று இத்தியாவின் ஐந்து கோணங்களிலும் ஐந்து மடங்களை நிறுவினர். அவை இன்றும் தொடர்ந்து நிலவுகின்றன. எடுத்துக்காட்டாகக் காஞ்சி யிலுள்ள காமகோடி பீடத்தினைக் குறிப்பிட லாம். இவருக்குப்பின் ராமாநுஜர் விசிட் டாத் துவைத தத்துவத்தினையும், மத்துவர் துவைதத்தினையும் நிலைநாட்டினர். மெய் கண்டார், அருள்நந்தி சிவாச்சாரியர் போன் ருேர் சைவ சித்தாந்தினை உருவாக்கி வளர்த்தனர்.
ஆகவே பொதுவாக நோக்கும் போது இந்துசமயம் அநாதியானது. கால தேசவர்த் தமானங்களுக்கு அப்பாற்பட்ட சநாததர்ம மாகும். அதன் நீண்டகால வரலாற்றிலே பல்வேறு பேராபத்துக்களையும் துணிச்சலு டன் வெற்றிகரமாகத் தாண்டி இன்றும்கிறப் புடன் இயங்குகிறது. இதன் பலமும் பல வீனமும் நிறுவனரீதியி லிது இயங்காமை யிலே தங்கியுள்ள தெனக்கருதப்படுகிறது.
D -

Page 24
சைவம்
சிவம் - சைவம்
“சைவம் சிவ சம்பந்தமுடையது. இஃது, இந்து சமயம் என்னும் பெரும் பரப்பின் ஒரு பகுதியாகவும், அறுவகை (சண் ) மதங்களுள் முதலாவதாகவும் விளங்குகிறது. சிவமே சைவத்தின் முதற் பரம்பொருள் ஆவார். &
*3дөнub என்னும் சொல், செம்மை என் ஆம் பண்படியாகப் பிறந்தது. "செம்மை" என்பதற்கு அன்பு, மங்கலம், சிறப்பு, உயர்வு என்ற பல பொருள்களுண்டு. *பிறப்ப்ென்னும் பேதைமை நீங்கச் சிறப் பென்னும் செம்பொருள் காண்ப தறிவு”*
)8 - மெய்யுணர்தல்( ۔ . . . . என்பது வள்ளுவர் வாக்கு.
இத்திருக்குறள் சிவத்தோடு சைவத்திற் குள்ள ெ தாடர்பைச்சுட்டுவதாக மட்டுமன்றி சிவனின் ஒப்பற்ற இயல்பையும் எடுத்துக் கூறுகிறது. “செம்பொருள் காண்பது அறிவு என்பதற்கு, “வீட்டிற்கு ( ஆன்மா வின் இறுதி இலட்சியமாகிய முத்திப்பேறு) நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் *ாண்பதே ஒருவர்க்கு மெய் உணர் வாவது” எனப் பரிமேலழகர் பொருள் *ண்டார். மேலும் தம் சிறப்புரையில், "தோற்றக் கேடுகள் இ ன்  ைம யின் நித்தியமாய், நோன்மையாய், தன்னை ஒன்றும் கலத்தல் இன்மையின் தூய் தாய்த், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி அதனைச் செம்பொருள்' என்ருர் எனக் குறிப்பிடுவது செம்மேனிப் பெம்மானின் எண்குணங்களை உள்ளடக்கிய விளக்கமே என்பது தெற்றெனப்புலப்படும். “செம் மையே. ஆய சிவபதம் அளித்த செல்வமே'
O

புலவர். கா. வேல்முருகன், B.O..
பகுதி முதல்வர், தமிழ்த்துறை,
மகளிர் கல்லூரி, பண்டத்தரிப்பு.
என்பது மாணிக்கவாசகர் வாக்கு. செம் மையைச் சிவப்பு என்போம். ‘முகம் கோபத்தால் சிவந்தது, என்று சிவப்பு நிறத்தைக் கோபத்திற்குக் கூறுவோம். தொல்காப்பியரும், “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’ எனச் சூத்திரம் செய் தார். இதற்கொப்ப 'திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும்", வேதம் கூறும் உருத்திரனும் காணப்படுவர். உருத்திரம் - கோபம், செம்மையே சிவமாய், அச்சிவமே சைவமாய்த் திகழும் பெற்றியை ஈண்டுக் கூறியவற்ருல் அறியலாம்.
சைவத்தின் தொன்மை
உலக மதங்களுள் தொன்மை மிக்க ஒன்ரூகத் திகழ்வது சைவம். சக்தியைப் பரம்பொருளாகக் கொள்ளும் சாக்தமும், கணபதியை முதற் பொருளாகக் கொள்ளும் காணுபத்தியமும், குன்றெறிந்த குமரனுக் குரிய கெளமாரமும் சூரியனுக்குரிய செள ரமும், இன்று பெருமளவில் சைவத்துடன் ஒன்றி இணைந்து விட்டன. வைணவம் சைவத்துடன் அடிப்படையில் வேறுபட்டும் ஒன்றுபட்டும் விளங்குகிறது.
மத ஆய்வாளர் சைவத்தின் ஆதி அறிவரிய வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மை நிலையை ஒப்புக்கொள்வர். அஃது ஆரியர் வருகைக்கு முற்பட்டது. மொகஞ்சதாரோ சிந்து வெளி அகழ்வா ராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற இலிங்கங்கள், நடராசர் சிலை, தாய்த்தெய்வ உருவம், யோகியின் முத்திரை முதலான பல பொருள்கள் சைவத்தின் மிகப்பழைய செல்வாக்கு நிலையை எடுத்துக் காட்டும். பாரதத்தின் பல பாகங்களிலும் சைவ நெறியாளர் மிகுதியும் காணப்படுவர். சிவனுக்குரிய பழ ம் பெ ரும் திருக்

Page 25
கோயில்கள், மேற்கு இமாலயப் பகுதியி லிருந்து அமர்நாத், கேதாரிநாத், நேபாளத்தில் பசுபதிநாத் முதலாகத் தொடங்கி காசி, அவந்திகை, உஜ்ஜயினி, சோமநாத், பரீசைலம் என வடக்கிலிருந்து வந்து தெற்கே காஞ்சி, சிதம்பரம், மதுரை, இராமேசுவரம், கன்னியாகுமரி முதலாகப் பல நூற்றுக் கணக்கில் ஆங்காங்கு காணப் படுகின்றன. இவை மட்டுமன்றி இலங்கை சிேதலாம் தென்கிழக்காசிய நாடுகள் பல வற்றுள்ளும் எண்ணற்ற சிவாலயங்கள் இருக்க க் காண்கிருேம். காலத்துக்குக் காலம் கண்டெடுக்கப் பட்ட அகழ்வுச் சான்றுகளும், புராதன பேராலயங்களும், கால வெள்ளத்தால் அழியாத கலைப்பொக் கிஷங்களும், மக்களின் சமய மரபு நெறி களும், சைவத்தின் பழைமையைப் பறை சாற்ற வல்லன. இதற்குத் துணையாக இலக்கியச் சான்றுகளும் ஏராளம் உண்டு.
வேதம், ஆகமம் என்னும் இரண்டு திருநூல்களையுமே சைவம் முதற் பிரமாண நூலாகக் கொண்டுள்ளது. இவை வர லாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மக்கள் கைக்கொண்ட சமய வாழ்வைச் சீராக்கி உயர்நிலைப்படுத்திக் கூறும் சமய இலக்சி யங்கள் என்பதைவிட "புனித சமயத்திரு நூல்கள்' என்று கொள்வதையே வைதி கச் சைவர் பெரிதும் விரும்புவர். இவை சைவத்திற்குப் போலவே ஏனைய இந்து சமயங்களுக்கும் உரியவை. இவை சிந்து வெளிப் பண்பாட்டுக்கு முற்பட்டவை எனவும், பிற்பட்டவை எனவும் கூறுவர். கி. மு. 1500 க்குப் பிற்பட்டவை அல்ல என்பது அறிஞர் கருத்து. ஆனல் வேதங்கள் மனிதரால் ஆக்கப்படாதவை என்ற பொருளில் அவை "அபெளருஷேபம்" என்று ம், சிவனுல் அருளப்பட்டவை என்றும், கால ஆய்விற்கு அப்பாற்பட்டவை என்றும் தீவிர சைவர் கூறுவர்.
வேதங்களிற் காணப்படும் மந்திரங் களும் கிரியைகளும் ஏனைய வைதீக சமயங் களுக்கு அடிப்படையாக இருத்தல் போலவே சைவத்துக்கும் இருக்கின்றன. வே தம் கூறும் உருத்திரனே சிவன் எனப் பெயர் பெற்ருன் என்பர். இருக்கு வேத காலத்து

ஞானிகள் உருத்திரனை ‘பிஷக்தமன்" ( வைத்திய நாதன் ) எனப் போற்றினர். ‘ருத்திரன்’ என்ற சொல் ‘பாவத்தையும் துன்பத்தையும் ஒட்டுபவன்’ என்ற பொரு ளுடைய சொல்லில் இருந்து பிறந்ததெனச் *சாயனர்" என்னும் வேத விமரிசகர் கூறுவர். யசுர்வேதத்தில் "பசூனம்பதி" என்ற தொடர் உயிர்களுக் கெல்லாம் தலைவனுக விளங்கும் சிவனையே குறிக்கும். பவன், சர்வன், பசு பதி, சம்பு, சங்கரன், சிவன், சிவதரன் எனும் சொற்கள் யசுர் வேதத்தில் காணப் படும். - ருத்திரனே ஒரே கடவுள் என்றும், அவனே ஐந்தொழில் முதலாம் அனைத்தை பும் செய்து, தோற்றத்திற்கும் ஒடுக்கத் திற்கும் இருப்பிடமாகின்ருன் என்றும் சுவேதாஸ்வர உபநிடதம் உரைக்கும். வேத காலத்தை அடுத்துவரும் புராண இதிகாசகாலம் சைவத்தின் தொன்மையை எடுத்துக்காட்டும் அடுத்தசான்ருகும். இரா மிாயணத்தில் வரும் சிவதனுசு, இராமனின் இலிங்கப்பிரதிஷ்டை, சிவபூசை பற்றிய செய் திகள் முக்கியமானவை. மகாபாரதத்தில் உபமன்யு முனிவரால் கிருஷ்ணன் சிவயோ கம் பற்றி உபதேசிக்கப்படுகின்ருன். அருச் சுனன் சிவனை நோக்கித் தவம் செய்து பாக பதாஸ்திரம் பெறுகின்றன். இவை இதி காச காலச் சிவவழிபாட்டை உணர்த்தும். இவற்றுடன் புராணங்களுள் பெரும் பாலன சிவ சம்பந்தமுடையனவாகும்.
வடமொழி நூல்களுக்கு இணையாகத் தமிழில் விளங்குவன தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களுமாம். தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சிவனின் சக்தி பாக விளங்கும் கொற்றவையும், அவன் திருக்கு ம ர னகிய முருகனும், ஏனைய வேதக் கடவுளரான வருணன் இந்திரன் முதலியோரும் குறிப்பிடப்படுகின்றனர். சங்க நூல்களாகிய எட்டுத்தொகை, பத்துப் பாட்டு க் களி ல் “நீல மணி மிடற்று ஒருவன்,'' பிறவா யாக்கைப் பெரியோன்", “நுதல் விழிநாட்டத் திறைவன்” என்ற பல பெயர்களாற் சிவன் குறிப்பிடப் படுகிறன். திருக்குறள் முதலாம் நூல் களிலும், சங்கம் மருவிய காலத்தினவாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் மணிமேகலை
11.

Page 26
முதலாம் காவியங்களிலும் சிவனைச் சுட்டும் பெயர்களும், சில புராண நிகழ்ச்சிகளும் காணப்படுகின்றன. "அஷ்ட மூர்த்தி" பற்றி காளிதாசனும், சீத்தலைச் சாத்த ஞ) ரு ம் கூறியுள்ளனர். கி.பி. 3ஆம் நூற்ருண்டின் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி “சைவ. சித்தாந்தம்" என்ற பகுதியில் அறியப்
Gib. W
இதுவரை கூறியவற்ருலும், கி. Փ. இரண்டாம் நூற் ரு ண்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தமது பாஷ்யத்தில் சிவன், ஸ்கந்தன், விசாகன் ஆதியோர் பூசிக்கப்பட்டனர் என்ற செய்தி  ையக் கூறுவதிலிருந்தும், சிந்து வெளி காலத்தி லிருந்து கி. பி. 3ஆம் நூற்ருண்டுவரை, "சைவம்" வட நாட்டிலும், டெக்கானிலும், தென்னுட்டிலும் சிறப்புற்றிருந்த வகையினை வரலாற்று ரீதியாகப் பேரறிஞர் பண்டர்கர் போன் ருே ர் வெளிப்படுத்துவதிலிருந்தும் சைவத்தின் பழம் பெரும் தொன்மையை உணரலாம்.
இத்தகு பெருமை வாய்ந்த சைவம் ஈழத்திற் காணப்படுவது போல, வேறு பாடற்ற ஒன்று எனச் சிலர் எண்ணுவ துண்டு ஆனல் பாரத நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியாலும், தத்துவ ஞானிகளின் வேறுபட்ட சிந்தனைகளாலும், அரசியல் சமூக பொருளாதாரப் பின்னணிகளாலும் சைவத்தில் சில உட்பிரிவுகள் தோன்ற லாயின. அவை "சைவ சித்தாந்தம், காஷ் மீர சைவம், வீர சைவம் என்பனவாம். அவை அடிப்படையில் சிறிது வேறு படினும் சிவ பரத்துவத்தை ஏற் று க் கொள்வனவே.
வீர சைவம்
வீர சைவம் என்பது வீரர்களுடைய சைவம், அல்லது வீரத்தன்மை உடைய சைவம் என்று பொருள்படும் மிகப்பழங் காலத்திலே தோன்றிய இச்சமயம் கி.பி 2ேஆம் நூற்ருண்டுக்குரியவர் எனக் கருதப் படும் பசவர் என்பவராற் கன்னடப்பகுதி யிற் பரப்பப்பட்டு அங்கிருந்து ஆந்திரம்
தமிழ்நாடு முதலிய இடங்களுக்குப் பரவி யது என்பர். வீர சைவ வணக்கத்தில்
12

இலிங்கமே முதலிடம் பெறும், இவர்கள் தமது மேனியில் இலிங்கத்தை அணிந்திருப் பர். இதன் காரணமாக இதற்கு இலின் ாதம் என்ற மற்ருெரு பெயருமுண்டு.
வீர சைவத் துறையில் நான்கு துணை ள்ே கொடுக்கப் பெறுகின்றன. அவை ஞானம், செயல், பக்தி, பாவனை என்பன. இந்நான்கும் ஒன்ருேடு ஒன்று இணைந்தும், ஈடு செய்தும், நிறைவு செய்தும் துணை புரிகின்றன. வீரசைவம் வேதங்களைவிட ஆகமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின் றது. மற்றும் புராணங்களை இஃது ஏற்றுக் கொள்வதுடன், கன்னடத்து ஞானிகளின் உபதேசங்களையும், தமிழ்ச் சிவனடியார் களின் கோட்பாடுகளையும் ஒப்புக்கொள் ளும். திருமந்திரத்தில் வீர சைவம் பற்றிய விளக்கங்கள் காணப்படும்.பிரபு லிங்க லீலை தமிழில் வீர சைவம் பற்றிய தலைசிறந்த நூல் என்பர்.
இதன் த த் துவம் சக்கி விசிஷ்டாத்து தைம் என அழைக்கப்படும். இது சக்தி வினதும், சிவனதும் ஒன்றுபட்ட தன்மை யைக் குறிக்கும். இறைவனும், ஆன்மாவும் பிரிக்கமுடியாத ஒருமைப்பாடு உடையன என்பது இதன் கொள்கை. பரமசிவனே உலகத் தோற்றத்திற்குக் கா ர ண், ன் படைத்தற்ருெழிலால் அவன் எம்மாற்ற மும் பெறுவதில்லை. இதற்குக் காரணம் அவனுடன் பின்னமின்றிக் கலந்த சக்தியின் தொழிற்பாடே. இதனலேயே படைப்பு நிகழ்கின்றது. அது போல ஆன்மாவும் சிவனின் ஒருபகுதி. அது சிவனிலிருந்து வெளிப் பட்டு மீண்டும் அவனிடமே ஐக்கியம் அடைகின்றது என இது கொள் ளும். இதன் கண் சைவ சித்தாந்தம் போல நிறைந்த தத்துவ இயல்புகள் உண்டு என்பதைப் பேராசிரியர் திரு. வை. இரத்தினசபாவதி அவர்கள் தம் வீர சைவல் என்ற ஆய்வு நூலில் விளக்கியுள் ளார்.
வீரசைவத்திற் "குரு, சங்கம, லிங்க" வழிபாடு சிறப்பிடம் பெறும். குரு, ஆன் மீக விடுதலைக்கு வழிவகுப்பவன். சங்கமம் அவன் அருள் பெற்ற அடியார் கூட்டம், இலிங்கம் - சிவம் ஆன்மாவின் இலட்சியம்,

Page 27
சிவத்துடன் இரண்டறக் கலந்து அத்துவித நிலையில் வீடு பேறு அடைதல் என்பதே இதன் தலையாய கோட்பாடு. இச் சமயத் தார் அஷ்டவர்ணம் எனப்படும் எட்டு விதி களைக் கைக் கொள்ளுவர். இவற்றுள் குரு லிங்க சங்கமத்தை ஏற்றல், திருநீறு உருத் திராட்சம் அண்தல், சிவனடியார் பூசை பஞ்சாட்சர மந்திர செபம் என்பன அடங்கும். இவற்றின் மூலம் ஆன்ம ஈடேற்றம் உண்டு என்பது இவர்களது நம்பிக்கை.
காச்மீர சைவம்
இந்தியாவின் வடபால் விளங்கும் காச்மீரத்தைத் தாயகமாகக் கொண்டதே காச்மீர சைவம். இது கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த வகருப்தர் பேணி வளர்த்தி மத மா கும். கி. பி. 8ஆம் நூற்ருண்டுக்கு முன்பு கா ச் மீ ரத் தில் சைவமும் பெளத்தமும் பின்பற்றப்பட்டு வந்தன. எனினும் பண்டு தொட்டு பல தெய்வ வழிபாடு இருந்ததெனவும், அர்த்தநாரீஸ்வரரான சிவனே அவ்வழி பாடுகளில் முதன்மை பெற்ருர் எனவும் அறியவருகின்றது. குமரிபைட்டர் போன்ற வர்களின் செயலால் எட்டாம் நூற் ருண்டிற் பெளத்தம் அங்கு நிலைகுலையத் தொடங்க ஆதிசங்கரர் காஷ்மீரப்பகுதிக்கு விஜயம் செய்து சைவத்துக்கு ஆங்கு ஒரு புதுத் திருப்பத்தைத் தந்தார் என ப் பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன் கூறு
s
த்ரிக சாஸ்திரம் என்பதே இத்தத்துவக் கொள்கைக்குரிய பெயராகும். த்ரிகள் என்பது மூன்று எனப்பொருள்படும். அவை "சிவன், சக்தி, அணு, (உயிர் ) அல்லது பதி, பசு, பாசம் என்ற முப் பொருள் அல்லது பரை, அபரை, பராபரை என்ற சக்திகள் அல்லது அபேதம், பேதா பேதம், பேதம் என்ற நிலைகள் பற்றியவை ளைப்பலவாறு விளக்கம் கூறப்படுகின்றது.
சைவ சித்தாந்தத்துக்குத் திருக்கை ாயம் ஆரம்ப நிலையாவது போலவே இங்கும் அமைகிறது. சிவபிரான் கைலா

சத்திலே துர்வாகரை அழைத்துச் சைவ சாத்திரங்களைப் பரப்புமாறு பணிக்க அம். முனிவர் மானசிகமாக மூன்று புத்திரர்
களைத் தோற்றுவித்தார் எனவும், அவர்
களுள் திரிமம்பகர் அபேத சைவ சாத்
திரத்தையும், அமர்த் தகர் பேத சைவ
சாத்திரத்தையும்,யூனிநாதர்பேதாபேத சைவ
சாத்திரத்தையும் பரப்பும்படி பணிக்கப்
பட்டனர் எனவும் ஒரு வரலாறு உண்டு.
இவற்றுள் திரியம் பகர் பரப்பிய அபேத
சைவமே த்ரிகம் எனப்படும் அத்வைத சைவம்
என்று கூறப்படுகின்றது.
ஆகம சாஸ்திரம், ஸ்பந்த சாஸ்திரம், பிரத்ய பிஜ்ஞா சாஸ்திரம் என்னும் நூல்கள் இத் தரிசனத்தை விளக்குவனவாம். இவற்றையடுத்து சிவசூத்திரம் என்னும் முதனூலை சிவபிரான் வசுகுப்த்ருக்கு அரு ளினர் என்பர். வசுகுப்தர் ள் முதிய தெனவும், கல்லடர் எழுதியதெனவும் இரு வேறு கருத்துக்களுக்கு இடந்தரும் ஸ்பந்த சூத்திரங்கள் இத்தத்துவ நெறியை விள்க் குவது குறிப்பிடத்தக்கது. இவையன்றி இத்தத்துவங்களை விளக்கும் தோத்திர நூல்களும் உள்ளன. அவற்றுள் உக்பவர் ஆக்கிய சிவ ஸ்கோத்திராவளி, சிறப் புடையது. சைவத்தின் எல்லா அமிசங் களையும் கொண்ட முறையில் அபிநவகுப்தர் எழுதிய தந்திரலோகம், பரமார்த்தசாரம், கேஷமராஜர் தந்த பிரதிய பிஜ்ஞ்ாஹிருதயம் என்பன விளங்குகின்றன.
காஷ்மீர சைவதத்துவம் சிவன், சக்தி, உயிர், பிரபஞ்சம் என்பவற்றைக் கொண் டுள்ளது. சிவன் சக்தியிலிருந்து பிரிக்கப் படாதவன். அவன் ‘காத்தும் படைத்தும், கரந்தும்" விளையாடுகின்ருன். அவன் சக்தி யால் தோன்றிய உலகு அவனின்றும் வேறுபட்டதன்று. மாயையினல் இந்த அண்ட சராசரங்கள் அவனின்றும் வேருக்க் காட்சி தருகின்றன. அவனுடைய பிரிவோ எல்லாத் தத்துவங்களும். w
*சிவனும் அவனது சக்திகளும், கதிர வனும், அவனது கதிர்களும் போல்வன”, *எப்படி ஒரே வண்ணமற்ற படிகக்கல் அந் தத்த வண்ணத்தை உடையதாகத் தோன்றி

Page 28
*னலும் 'அம்மாற்றம் அவ்வுப்ாதிகளையே சார்ந்தன. ’, ‘சந்திரன், ஒடுகின்ற புனித கங்கையில் ஒடுவது போலவும், தேங்கி நிற்கின்ற அழுக்கு நிறைந்த குட்டையில் நிலைத்திருப்பது போலவும் தோன்றினலும், சந்திரனுக்கு இயல்பான ஸ்வரூபத்தில் எந்த வித மாறுபாடும் இல்லை" இவை போன்ற பல விளக்கங்கள் சிவன் பற்றிக் கூறும். இவை போலவே சக்தி, சீவாத்மா, பந்தம், மே 1ா ட்ச ம் பற்றிய பல்லாய்வுக்குரிய தத்துவ சிந்தனை களைக் காச்மீர சைவத்தில் காணலாம்.
தென்னுட்டுச் சைவம் - சைவ சித்தாந்தம்
தென்னுட்டில் நிலவும் சைவம், சைவ சித்தாந்தம் எனப்படும். இது தமிழகத்திலும் ஈழத்திலும் ஏனைய உலக நாடுகள் . சில வற்றிலும் பல கோடிக்கனககான மக்களால் பின்பற்றப்படுகிறது. சைவத்தின் உட் பிரிவுகளில் இஃது மிக ஏற்றம் பெற்று விளங்குகிறது.
சிவனே பரம் பொருள் என்பது சைவ சித்தாந்தத்தின் உயிரான கொள்கை. வேதங்களும் ஆகமங்களும் இதன் பிரமாண நூல்கள். வேதம் பொது எனவும் ஆகமம் சிறப்பு எனவும் கொள்ளப்படும். இறைவன் அருள் பெற்ற மெய்யடியாரால் பாடப் பெற்ற திருமுறைகள் பன்னிரண்டும், சைவ சித்தாந்தத்தை நெறிப்படுத்தும் மெய் கண்டசாத்திர நூல்கள் பதின்னன்கும் சைவசித்தாந்தத்தின் இரு கண்கள் போல விளங்கும். தமிழில் எழுந்த புராணங்களிற் கச்சியப்ப சிவாசாரியாரின் கந்தப்புராணம் சிறப்பிடம் பெறும். தத்துவ உலகி ற் செழிப்புற்றுத் தளர்வின்றித் தழைத்து நிற்பது இதுவே. ஆழமானவையும் மிக நுண்ணியனவுமாகிய உலகளாவிய கோட் பாடுகளைக் கொண்டு விளங்குவதும் இதுவே. இதனலன்ருே 'பல்லவப் பேரரசின் மாமன்னவருள் ஒருவனுகிய இராஜசிம்மன் தன்னைச் 'சைவசித்தாந்தி’ எனப் பிரகடனஞ், செய்தான். மேனுட்டிலிருந்து வேற்று மதம் பரப்ப வந்தோரும் தம்மைச் சைவசித்தாந் தத்துடன் பின்னிப்பிணைத்தனர்.இவர்களுட்
la

கனல்போப், கெளடி" என்போர் குறிப்பிடத் தக்கவர்கள். சைவசித்தாந்தம், இந்தியச் சிந் தனைகளதும் உணர்வினதும் சிகரம் என்பர் கெளடி. இத்தகு சைவசித்தாந்தம் கூறும் உட்பொருளைச் சிறிது நோக்குவோம்.
சங்ககாலத்துக்கு முற்பட்டே தமிழ கத்தில் சைவம் வேரூன்றி வளர்ந்த வர லாற்றை முன்பு கண்டோம். அக்காலம் தொட்டே இச்சித்தாந்த சைவம் பாலினுள் வெண்ணெய் போல சுடர்விட ஆரம் பித்தது. தமிழ் மக்கள் வேத ஆகமங்களைப் பண்டு தொட்டுப் போற்றி வந்தனர். அதஞலேயே திருமூலர் “வேதமோடாகமம் மெய்யம் இறைவன்நூல்" என விரித்தார். இதனை வழி மொழிதல் போல
* வேதநூல் சைவருால் என்றிரண் டே
நூல்கள்.
வேறுரைக்கும் நூல்இவற்றின் விரித்த
நூல்கள்
ஆதி நூல் அநாதிஅமலன் தருநூல்
இரண்டும்
ஆரணறுால் பொது சைவம் அருஞ்சிறப்பு
நூலாம்"
சித்தியார் - 8:2:5
என அருணந்தி சிவம் அழுத்திக் கூறியுள் ளார். வேதம் சிவபிரான் செய்த நூல் என்பது சைவத்தின் நம்பிக்கை, "வேதம் ஒதி வெண்ணுால் பூண்டு வெைைள எருதேறி, வேத நாயகனே போற்றி, மறையின் பொருளான வனே --, அண்டர் தமக்கு ஆகம மொழியும் எம் மாதியை, ஆகமம் ஆகிநின்று அண்ணிப் பான்’ என வரூஉம் சமய குரவர்களின் திருவாக்குக்கள் வேத ஆகமங்களின் தூய் மையையும், அவை இறைவனல் அருளப் பட்டவை என்பதையும், வலியுறுத்தும்.
சித்தாந்தத்தின் தோற் றத் தி ற்கு ஆகமம் பெரும் பங்களிப்பு நல்குவதாலேயே அதனைச் சிறப்பு நூல் என்ருர், வேதம் வேதாந்தத்திற்கு சிறப்பங்கமாக அமைவது போல் என்க. தென் ன க சித்தாந்த வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவன பன்னி ரண்டு திருமுறைகள் பதினன்கு மெய்கண்ட சாத்திரங்கள், என்பன.

Page 29
மெய்கண்ட சாத்திரத்தில், சிவஞான, போதம் கிவஞான சித்தியார் (சுபக்கம் பரபக் -கம்) சித்தாந்த அட்டகம் திருமுறைகளுள் திரு மந்திரம் என்பன விசேடமாகக் குறிப்பிடத் தக்கன. சைவசித்தாந்த தத்துவம் தோற் றியது திருக்கைலாயத்தில் எனக் கூறப்படு கின்றது.
ழரீ க்ண்ட உருத்திரர் திருக்கைலையில் திருநந்தி தேவர் என்பாருக்கு முதன் முதல் உபதேசித்தார் என்றும், அவர் வழியே அகச் சந்தான முறையில் சத்தியஞான தரிசனி மாணவர் பரஞ்சோதியார் சுவேத வனப் பெருமாளுக்கு உபதேசித்துத் தம் குருவின் பெயரைத் தூய தமிழில், மெய் கண்டார் என அமைத்து அவருக்குத் திரு நாமமாக இட் டார் என்றும், அவர் வழியே அருணற்தினார், மறைஞானசம்பந்தர், உமாபதினெம் எனச் சந்தான பரம்ப ரை தோன்றிச் சைவ சித்தாந்த தத்துவத்தை வளர்த்தது என்று ம், அதனூடாகத் திருவாடுதுறை முதலிய ஆதீனங்களும் பிறவும் வளர்த்து வருகின்றன என்றும் கூறுவர்.
சித்தாந்தம் கூறும் முப்பொருள்
சைவ சித்தாந்தத்தின் தோற்றமும் விரிவுமாக அமைவன ‘பதி, பசு, பாசம்’ எனும் சொற்களே. இவற்றைச் சுருக்க மாக **முப்பொருள்' என்ற வார்த் தையில் அடக்கிவிடுவர். பதி இறைவன்; ப்சு ஆன்மா பாசம் - தளை அல்லது கட்டு எனப்படும்.
oS :
சிவன் இவனே பரம்பொருள், எழுத் துக்களுக்கு 'அ' கரம் முதலாவதாகி, ஒலிஇயல் அடிப்படையில் ஏனைய எழுத் துக்களுடன் கலந்து இருப்பது போல இவன் முதல்வனுகி ஒன்ருய் உடனுய் வேருகி அண்ட சராசரங்கள் அனைத்திலும் பிரிந் தும் பிரிப்பின்றியும் இருக்கின்ருன். எண் குணத்தான்,அருவம், உருவம், அருவுருவம் எனும் பல மூர்த்த பேதங்கள் உடைய வன். எரியுறு நீர் போலச் சக்தியிலிருந்து வேறுபடாதவன். ஐந்தொழிலைச் செய்பவன்

ஆன்மாக்களுக்கு சுகத்தை அளிப்பவன், இவனில் இருந்தே முப்பத்தாறு தத்துவங் களும் தோன்றி அவனுள் அடங்கும்.
5
ஆன்மா அல்லது உயிர்கள். இவை எண்ணில்லாதவை. அாநதியானவை, மலங் களால் கட்டுப்பட்டவை, சகலர், பிரளயா கலர், விஞ்ஞா ன கலர் என முத்திறப் பட்டவை
Dargrifio) :
இது தளை அல்லது கட்டு பந்தம் எனப்படும். ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களும் இதிலடங்கும். மலம் ஆன்மாவைப் பற்றி யு ள் ளது. பிறவிப் பிணிக்குக் காரணமாய் ஞானத்தை தடுத்து நிற்பது. ஒவ்வொரு மலமும் தனி விளக்கம் பெறும்.
ஆணவம் !
இருளிலும், கொடியது அநாதியானது, நெல்லின் உமிபோல ஆன்மாவுடன் பற்றி நிற்பது. நான் எனதுஎன்னும் செருக்கையும் அறியாமையையும் ஆன்மாவுக்கு நல்கி சிவத்தை மறைத்து உலகியல் இன்பத்தைக் காட்டுவது.
கன்மம் :
இது வினை அல்லது செயல் எனப்படும். நல்வினை, தீவினை, பற்றற்றவினை, வெறு வினை எனப் பகுக்கப்படும். கன்மமே மறு பிறப்புக்குக் காரணம், இதன் பயன் புண்ணியம், பாவம் எனப்படும்.
D
மாயை இதுவே பிரபஞ்ச உற்பத்திக்கு, முதற்காரணம். இது அறியும் தோற்ற மற்றது. பொறி புலன்களுக்கு எட்டாதது. அழிவற்றதாய் என்றுமுள்ளது. இதிலிருந் தே முப்பத்தாறு தத்துவங்களும் வெளி வருகின்றன. இது சுத்தமாயை, அசுத்த மாயை சுத்தாசுத்த மாயை என மூன்று வகைப்படும். தனு கரண புவன போகங்களை" இறைவன் இம்மாமையிலிருந்தே தோற்று விக்கின்ருன்.
சித்தாந்தம், திரோதான சக்தி, திரு. வருட் சக்தி, குரு எண்வகைத் தீட்சை

Page 30
வகைகள், திருவைந்தெழுத்து, இருவினை யொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம், பேரின்ப முத்தி என்றெல்லாம் மிகவிரிவாக எடுத்துக் கூறும். பேரின்ப முத்தி பெறும் ஆன்மா ஒன்றென்றும் இரண்டென்றும் சொல்ல முடியாத நிலையில் சிவத்துடன் ஒன்றுபட்டு அத்துவித ஆனந்த வெள் ளத்தில் மூழ்கும் என்பது சைவ சித்தாந் தத்தின் இறுதி நிலை.
ஆகம அடிப்படையில் சைவசித்தாந்தம் ஆன்மாவின் இறுதி இலட்சியமான முத்திப் பேற்றுக்கு நான்கு வழிகள் அல்லது படி முறைகளை விதிக்கும். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாதங்கள். அவற்றைச்சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என ஒன்றை நான்காக்கிக் பதின ருகவும் கூறுவர்.
சரியை என்பது சரீரத்தால் செய்யும் சிவதொண்டுகள், ஆலயம் தூய்மை செய் தல், திருநந்தவனம் அமைத்தல், முதலாம் பணிகள் இதிலடங்கும். ஆண்டான், அடிமை உறவிலிருந்து செய்யப்படுதலின் தாசமார்க் கம் எனப்படும். இதன் முத்திப்பேறு இறை வன் உலகத்தில் இருத்தலாய சாலோகம், இதற்கு உவமானம். அரும்பு. திருநாவுக் கர்சர் இவ்வழி நின்று பேறு பெற்றவர்.
கிரியை : திருஞான சம்பந்தர் பேறு பெற்ற இந்நெறி சற்புத்திர மார்க்கம் எனப்படும். மகன், தந்தை உறவில் நின்று விசேட தீக்கை பெற்று, இறைவனுக்கு மணமலர், தூபம், தீபம், மஞ்சனம் அமுது முதலியன கொண்டு நிகழ்த்தும் பூசை வகைகள் இதிலடங்கும். இறைவன் அருகில் அணுகுதல் என்னும் சிவசாமீப் பியமுத்தி இதன் பேருகும். மலர் இதற்கு உவமையாகும்.
யோகம் : தோழமை உறவில் நின்று சகமார்க்க வழியில் செய்யும் தொண்டு. சுந்தரமூர்த்தி நாயனர் இவ்வழி நின்றவர். இதன்பயன் இறைவனின் வடிவம் பெறுத லாம். இது_இறைதியானத்தையும் இறை வன அகத்தில் வழிபடுதலையும் குறிக்கும்.
I6

அட்டாங்க யோக நிலைகளைத் தொடர்பு றுத்தலுமுண்டு, காய் இதற்குவமை.
ஞானம் : சன் மார்க்க நெறியில் நாயகன் - நாயகி உறவில் நின்று செய்யும் தொண்டு. முதல் மூன்று படிகளாலும் பெறும் முதிர்ந்த நிலையே ஞானம் அல்லது அறிவு நெறி ஆகும். இவ்வழி நின்றவர் மாணிக்க வாசகர். கனி இதற்குவமை யாகும். இறைவனேடு ஒன்றுபடும் சாயுச் சியமுத்தி ஆன்மாவின் இறுதி நிலையாகும். அதாவது ஆன்மா சிவத்தன்மை பெற்றுச் சிவமாகிவிடும் அத்துவிதக் கலப்பு.
சைவம் கூறும் குரு, லிங்க, சங்கம வழி பாடும் நோக்கற்பாலது. குருவையும், இலிங் கத்தையும், அடியவர்களையும் வழிபட்டு முத்திப் பேறுபெற்ற மூவகைச் சிவனடி யார் சரிதைகளையே பெரியபுராணம் செப்பும். எடுத்துக் காட்டாக குருவருளால் முத்தி பெற்றவர் அப்பூதியடிகனயனர். சிவலிங்க வழிபாட்டில் முத்திபெற்றவர் கண்ணப்பநாயனர். சங்கம வழிபாட்டால் முத்தி பெற்றவர் சிறுத்தொண்டர் o GomTh
இதுவரை சைவ சமயம் என்ற பிரிவுள் அதன் தோற்றம், தொன்மை, வளர்ச்சி, உட்பிரிவுகள், அவை உணர்த் தும் தத்துவக் கோட்பாடுகள் என்பனி மிகமிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. சைவ சமய த த் துவ நெறி, விரிவும், சிறப்பும், திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. வானிலும் உயர்ந்தது; நீரிலும் ஆழ்ந்தது; அதன் ஆற்றலை அளவிட்டுக் கூற (Ա)ւգயாது. உயர்ந்த மதம் என்ற அடிப் படையில் அது மனித குலத்துக்கு சமய, சமூகபொருளாதார ரீதியாக அளித்த பங் களிப்பினை மிகச் சுருக்கமாக ஆராய்வது அவசியம்.
வாழ்வியல் வழியில் சைவத்தின் பங்களிப்பு:
மனித சமுதாயத்தின் பண்பட்ட
வாழ்க்கைக்கு ஏனைய மதங்கள் என்ன பங்களிப்பினை நல்கினவோ, அவற்றுக்குக்

Page 31
குன்ருதவகையில்- சைவமும் வழங்கியுள் னது. மனிதனின் பண்பு உயர்வதற்குத் திருக்கோயில் வழிபாடும், சமயச் சடங்கு களும், விரதங்களும் உதவுகின்றன. இவற் அளே திருக்கோயிலே, ஆன்மிக ஒருமைப் பாட்டினதும், சமுதாய வளர்ச்சியினதும் இதயமாக விளங்குகின்றது. இதனுலேயே, திருக்கோயில் இல்லாத ஊர், ஊரல்ல அடவி காடே என்றும், கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் அடியார்களும், ஆன்றேர்களும் கூறிப்போ யினர்.
திருக்கோயில்கள் மனித உடலுறுப் படிப்படையில் ஆகம விதிக் கேற்ப அமை கின்றன. ஊனுடம்பாலயம்" என்பர் திரு மூலர் கருவறைமுதல் கோபுர வாசல் விரை அமையும் மண்டபங்கள் கட்டடக் கலையின் உயர்வைக் காட்டும். திருக்கோயில் கட்டடத் தளவரிசைகள், தூண்க ள் சுவர்கள், விமானங்கள், கோபுரங்கள் எங்கணும் பொலிகின்ற சிற்பங்களும், சுவர்களிலும் மண்டப விதானங்களிலும் காணப்படும் ஒவியங்களும் ஆலயத்தைக் கலைக் கூட மாக மாற்றுகின்றன. சிற் பங்களும் ஒவியங்களும் இறைவனின் மூர்த் தங்களையும், இதிகாச புராணக் கதை களையும், மெய்யடியார்களின் அற்புதங்கள் வாழ்க்கை வரலாறுகளையும், சித்திரிப்பதன் மூலம் அமைதியற்ற மனித உள்ளங்களை அமைதிப்படுத்தி இறையுணர்வில் ஈடுபடுத் துகின்றன. மேலும் ஆலயங்கள் விக்கிரக இயலை வளர்க்கவும். இறைவனின் பேரருட் திறன் முதலாம் சமயக் கோட்பாடுகளை சா தா ர ண மக்களும் அறிந்து பக்தி நெறிப்படவும் வழிவகுக்கின்றன.
நித்திய நைமித்திய, காமிய நிஷ்காமிய பூசைகள், விழாக்கள் என்பன சிவபரம் பொருளை மக்கள் சென்று வழிபட உதவும். இலிங்கம், நந்தி, பலிபீடம், கொடிமரம், கொடிச்சீலை, தருப்பைக்கயிறு என்பன முப்பொருளைத் தத்துவார்த்த ரீதியில் உணர்த்தும். அமைதியற்ற புலன்க ள் ஆலயத்து மணி, மேளம், தாளம், நாதசுரம், சங்கு, த்ாரை, தம்பட்டம் முதலாம் வாத்
3 -سسه

தியங்களால் ஒருமிைப்பட்டு இறை உணர் வோடு ஒன்றும். இதன் மூலம் விக்கிர வழிபாடு, யந்திர வழிபாடு, மந்திர வழி பாடு என்பன சிறப்படைகின்ിങ്ങ് • ഭൂിഞ്ഞഖ சிறப்படைவதன் மூலம் வான் முகில் வழாது. பெய்ய, மலிவளம் சுரக்க மன்னன், கோன் முறை அரசு செய்ய, குறைவிலாது உயிர் கள் வாழுமெனச் சமய நம்பிக்கை மிக்க சைவர் நம்புகின்றனர். இதனுலே சமூகத்தில் அமைதியான போக்கும், அதற்குரிய சூழ் நிலையும் உருவாகிறது.
சைவக் கோயிலில் கொடியேற்ற விழா முதல் தீர்த்தோற்சவ விழா வரை நடை பெறும் விழாக்கள் இறைவனின் பஞ்ச கிருத் தியங்களை வெளிப்படுத்துமென எனத் தத்து வம் கூறினும் மக்கள் அவ்விழாக்களில் ஒன்று படுதல் மூலம் உடன்பிறப்பு, தோழமை, முதலாம் சமரச உறவுகள் தோன்றிச் சமூ கத்தை வளம்படுத்தலையும் காண்கின்ருேம்.
சிவாலயங்கள் பக்தி வழிபாட்டு நெறிக் கும், சிற்பம், இசை, நடனம், ஒவியம் Cupg5 லிய நுண்கலைத் துறைகளும் வளர்ச்சி அடை தற்கும் உரிய இடமாக மட்டும் விளங்க வில்லை. சுந்தரர் மீது சிவனுல் தொடுக் கப்பட்ட வழக்கை விசாரிக்க எழுந்த நீதி மன்று போலவும், சமயவாதம் நிகழ்த்தும் பட்டிமன்று போலவும், சேக்கிழார், பெரியபுராணம் சிதம்பரத்தில் அரங்கேற். றிய புலவர் பெருமக்களின் பேரவை போலவும், இசை நடன வல்லாரின் இனிய நிகழ்ச்சிகளை நயக்கும் நடுவண் இடங்களா கவும். மற்றும் மன்னனையும், மக்களையும் இணைக்கும் பேரிடமாகவும், போர், அற்ஞ் செயல் முதலாம் அரசரின் மெய்க்கீர்த் திகளைக் கல்வெட்டு உருவில் உரைக்கும்" வரலாற்று மேடையாகவும், இன்னும் பற் பல ஆக்கப் பணிகளுக்குரிய இடமாகவும்" விளங்கின. இதனலன்றே பல்லவ, சோழ, பாண்டிய நாயக்க மன்னர்கள் பார்போற் றும் சிவப்பேராலயங்களைத் தமிழ் நாட்டில்" அமைத்தனர். புறநாட்டினரையும் கவரும் கலைத் தெய்வமாக விளங்கும் நடராசர், தக்ஷணுமூர்த்தி பிக்ஷாடனர் மு த லா ம் மூர்த்தங்களையும், திருவிளையாடல்களுக் குரியஅட்ட மூர்த்தங்களையும் அமைத்தனர்.
17.

Page 32
குரு வழிபாடும், அடியார் வழிபாடும் சமூகத்தில் ஒழுக்க இயலை ஏற்படுத்தின. கருவே பரப்பிரமம் என்னும் கருத்தும் வ்ழிபாடும் குரு சீடபரம்பரையை உயர்த் ஆவது மட்டுமன்றி கல்வி உலவில் நற் சிந்தனையை வளர்க்கவும் உதவுகின்றன. இதே போல அடியாரைப் போற்றும் சங்கம வழிபாடு பெரியாரைத் துணைகொள்ளல் சான்றேர் வழி நிற்றல் என்னும் இன் றைய இளம் தலைமுறைக்கு வேண்டிய பண்பட்ட சூழ்நிலையை உருவாக்க உதவு கின்றது.
கிராமிய - வழிபாடு
சைவத்தினூடாக, பைரவர் வழிபாடு "சித்தில் சிறப்புற்று வருவது குறிப்பிடத் தக்கது. பெரியதம்பிரான், வீரபத்திரர் பேச்கி യാഭ് , കഒrഞ്ഞുക வழிபாடுகளும் குறிப் பிடத்தக்கன. இங்கு மிருக பலியிடுதல், புலால் உணவு படைத்தல் போன்ற சைவத் திற்கு முரண்பட்ட மூடநம்பிக்கை உள்ள செயல்கள் உள்ளன. ஆனல் அவை இன்று இல்லை, என்னும் படியாக அருகிவருவது சைவமக்களின் சாதனை என்றே gift) வேண்டும்.
சமய விழாக்களின் பயன் :
வேத ஆகம நெறி நின்று இந்து சமயம் கூறும் சமயச்சடங்குகள், சைவ மக்களின் இல்லத்தையே சமயச் சார் புடைய ஒன்ருக மாற்ற வல்லன. தொட் டிலிலிருந்து சுடுகாடு மட்டும் மனித வாழ் வில் நடைபெறும் ஆசௌசம் கழித்தல், குழந் தையைத் தொட்டிலில் இடுதல், ப்ொன் பூணுதல், பூப்புநீராட்டல், திருமணவிழா முதலிய எல்லா மங்கல நிகழ்ச்சிகளும், அபரக் கிரியைகளான பிற சடங் குகளும் சைவத்தின் பேரால் மக்களை மன நிறைவு அடையச் செய்கின்றன. மக்கள் சுற்றஞ்சூழ இருத்தலையும், ஊர்மக்களைஒன்று படுத்துதலையும், பகைமையைப் போ க்கு தலையும், பிரிந்தவரைக் கூட்டுதலையும் சமூக வளர்ச்சித் திட்டங்கள். போலச் செயற்படுத்த வல்லனவாக இச்சமயச் சடங்குகள் விளங்குகின்றன.
8

“தென் புலத்தார் தெய்வம் விருந் தொக்கல் தான் என்று ஐம் புலத்தாறு.
ஒம்பல் தலை'
என்ற வள்ளுவர் கூற்று, இல்ல்றத்தார் ஒம்பும் சடங்குகளையும் அவற்றை ஒம்புதல் இன்றியமையாதது என்பதனையும் வலியு றுத்தக் காண்கிருேம். குடும்ப சமுதாயம் ஒன்றுபட்டு வாழ்கின்றது. மனிதஇயல் சைவத்தின் மூலம் மேம்படுகிறது.
சைவ மதம் கூறும் சிவ விரதங்கள் உடலை ஓம்பவும் உள்ளத்தை உறுதிபெறச் செய்யவும் உதவுகின்றன. கன்மம் மறு பிறப்பு என்ற சைவத்தின் கோட்பாட்டி னல் மக்களிடையே பாவம், புண்ணியம், நரகம், மோட்சம் என்ற உணர்வு தலைப்
படலால் அஃதும் அறவாழ்வுக்கு வழி
வகுக்கின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக விளங்கு வது சைவசமய இலக்கியங்களே. அவை, தத்துவம், தோத்திரம் என்ற இரு பிரிவில் அடங்குவன. இயற்கை எழில் வழியாகவும், புராணக் கருத்துக்கள் ஊடாகவும் அவை எல்லாம் சிவ பரத்துவத்தையும் சைவத் தின் உயிராய அன்பு - அருள் மார்க்கங்க ளையும், வலியுறுத்தும். தேவார திரு வாசகத் திருமுறைகள் இசையமுதமாய் பெருக்கெடுப்பதுடன் நாயகன் - நாயகி உறவு முறையில் சிவத்தையும், ஆன்மா வையும் அகப்பொருள் துறையில் இணைக் கவும் காண்கின்ருேம். இந்த அன்பு நிலை நம்முள்ளத்தை தொடுவதாகும். திருமந் திரம் தந்த திருமூலர்.
**அன்பு சிவம் இரண்டென்பர்'
அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்’, என அன்பையும், சிவத்தையும் ஒன்று படுத்திச் சிவத்துக்கு அன்பை இடமாக்கும் திறனே திறன். அன்புக்கு எதிரான கொலை யையும், புலால் உட்கொள்வதையும், சைவம் ஒன்றே முற்ருக மறுக்கும் வுகை யில் அமைந்திருப்பதை, மரக்கறி உண வைச் சைவ உணவென்றும், ιΗ ου π. ல்

Page 33
உண்ணுதவரைச் சைவர் என்றும் கூறும் மரபொன்ருற் காண்கிருேமல்லவா?
ఒ65 ஒருமைப்பாடு :
நாயன்மார்களும் அருளாளர்களும் உயர்வு, தாழ்வு எனும் சாதிபேதங்களைச் சாடினர். பஞ்சம் நீக்கி மக்கள் பசி போக் கினர். இறையுணர்வாம் மெய்யுணர்வை எல்லாத்துறைகளிலும் புகுத்தினர். மக்கள் பயன்."பெறவல்ல அருளமுதச் சொல்லோ வியங்களை ஆக்கினர். அவை வற்ருத வள மூட்டும் பக்தி ஆருக நாடெங்கும் பாய்ந் தோட வழிவகுத்தனர். இத் தெய்வத் திரு முறைகள்' உலகத்துக்கு அளித்த ஒப்பற்ற கொடை தெய்வீக ஒருமைப்பாடே.
இன்று நிலை குலைந்து தடுமாறும் அனைத்தும் உலகப்பிரச்சனைகளுக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கத் தமிழ்ச் சான்றேன் பூங்குன்றன் நெறிநின்று ஒருமை என்னும் வழிகாட்டும் அடியார் சிறப்பே சிறப்பு. ஒேைற குலம் ஒருவனே தேவன்.என்னும் திருமூலர் வாக்கும் உலகம் உவப்ப என்னும் நக்கீரரின் கூற்றும் தென் ஞடுடைய சிவனே போற்றி எந்நட்ைடவர்க்கும் இறைவா போற்றி என்னும் மாணிக்க வாச கரின் திருவாசகமும் உலகெல்லாம் உணர்த் தேர்துகற் கரியவன் என்னும் சேக்கிழாரின் செஞ்சொல்லும், சைவம் காட்டும் உலக ஒருமைப்பா ட்டின் சிகரங்கள்ாம். -
மும்மையும் தரும் சைவம் :
மண்ணுலகத்தினிற்பிறவி மாசறளண்ணிய பொருளெல்லாம் எளிதில் முற்றுற' என்பது
1. இந்திய சமய தத்துவம் : டாக்டர், T. பாட நூல் தீ 2. வீர சைவம் பேராசிரியர். வை. இரத் டாக்டர். S. இராதாகிரு நிறுவனம் - சென்னைப் ப
3. காச்மீர. சைவம் : 'பேராசிரியர் பெ. திரு
- . முன்னைய நிறுவன ெ
4. சைவசமயம் : (ஒர் அறிமுகம்) டாக்டர்

புராணவாக்கு. பிறப்பெடுத்ததன் நோக்கம் இறைவனை அடைதல்ே என நாவலர் கூறிய கரு த் தி ன் நிறைவைச் சைவம் நமக்கு வழங்கக் காண்கிருேம்.
மண்ணுலகத்தினிற் பிறவி மாசற என் தால் மறுமைக்குரிய இன்பத்தையும், எண்ணிய பொருளெல்லாம் எளிதின்முற்று என்பதாவி, இம்மைக்குரிய இன்பத்தையும், வீட்டின்பத்தையும் ஒருங்கு சேர அளிக்கும் பான்மையை சைவத்தே அன்றி வேறு எங்கே காணமுடியும்? s
சைவ சித்தாந்தத்தின் உயர்தனிச் செம்மை இலக்கியமாக விளங்குவது கந்த
புராண காவியம். இதனை அருளிய கச்சி யப்ப சிவாச்சாரியார்,
இந்திர ராகிப் பார்மேல் இன்பமுற் றினிது மேவிச் சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதி அதனிற் சேர்வர் அந்தமில் அவுனர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்
வேற். கந்தவேள் புராணம் தன்னைக் காதலித் தோது வோரே
என்று கூறிய திருவருட் பாடல் உள்ளம் தொறும் உவகை அளிக்கவல்லது. இவ் வுலகிலேயே ஒவ்வொரு மனிதனும் இந்தி ரஞகி எல்லா இன்பமும் பெற்று, மறுமைக் குரிய சிவகதியும் அடைவார் என அவர் அறுதியிட்டுக் கூறுவது 'சைவத்தின் செம் மையையும் உயர்த்த கோட்பாடு தத்துவ நெறிகளையும், விண்மு கட்டில் விளங்க வைத்தல் போலாம்.
M. P. மகாதேவன், தமிழ் நாடு அரசு நிறுவன் வெளியீடு.
;தினசபாபதி, பொன்விழா வெளியீடு. ஷ்ணன், மெய்வுணர்வு- மேல்நிலைக் கல்வி ால்கலைக்கழகம். நஞானசம்பந்தன்,
வளியீடு.
. ப. அருணுசலம்.
19

Page 34
வைணவம்
திரு
(அதிபர்
விட் டு ணு வைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் சமயமே வைணவம் எனப் பெயர் பெறும். வேதங்களில் இடம் பெற்ற முதன்மையான தெய்வங்களுள் விட் டுனுவும் ஒருவன். விட்டுணு என்ற பெயர் எங்கும் யாவிலும் நிறைந்த வன் எனப் பொருள்படும். நாராயணன் என்ற பெயரே வேதபாசுரங்களிலே பெரும்பாலும் வழங் கியது.* நாரா + அயனன் என்ற இருசொற் களின் சேர்க்கையே * நாராயணன் ' என்ற பதமாகும். * நாரா " என்பதற்குத் தோன் றுதல் எனவும் " அயனன் ' என்பதற்கு அமர்ந்திருப்பவன் எனவும் பொருள் கொள் வர். * ஐம்பூதங்களாலான சேதன அசே தனப் பொருள்களைத் தோற்றுவித்து, அவற் றினுள்ளே அந்தர்யாமியாய் அமர்ந்திருப்ப வன்" என்பதே இதற்குப் பொருள். உபநிட தங்களிலே ' பிரமம் " என்றும் * ஆன்மன் என்றும் குறிக்கப்படும் பரம்பொருள் விட் டுனுவே என வைணவர் கொள்வர்.
சண்மதங்களிலே வைணவத்தின் இடம்
சநாதனமானதும் தத்துவம், வழிபாடு, ஒழுக்கம் ஆகிய மூன்று அமிசங்களையும் குறைவறத் தன்னுள் அடக்கியதும் வேதங் களை முதனுரல்களாக ஏற்றுக் கொண்டது மான இந்துசமயம் ஒன்றே உள்ள பொருள் அறிவாளர்கள் அதனைப் பல பெயர்களால் வழங்குவர் " என்ற இருக்குவேத மகாவாக் கியத்தை அடிப்படையாகக் கொண்டு, பரம் பொருளை அழைத்து வழிபடும் பெயர்களுக்
* நாராயணன் என்ற பதத்திற்கு "நீரி துண்டு. ஆதியில் சிருட்டிப் பொருள்கள் பாடு இன்றிக் கிடந்தனவென்றும் அவற் விட்டுணு தொடக்கினன் எனவும் அதனல் கூறுவர்.
20

க. சொக்கலிங்கம் (சொக்கன்) M. A. கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம்)
கேற்பச் சிறப்பாக ஆறுகூறுகளாய்ப் பிரிந் துள்ளது. இதனுல் வைதிக சமயங்களைச் சண்மதங்கள் (சட் என்ற சொல்லின் திரி பாகிய சண் என்பதற்குப் பொருள் ஆறு என்பதாகும். ) எனவும் அழைப்பதுண்டு. சிவனே பரம் பொருள் எனக்கொள்ளும் சைவம், விட்டுணுவைப் பரம் பொருளாகக் கருதும் வைணவம், சத்தியை முழுமுதலாக வணங்கும் சாக்தம், கணபதியை முழுமுத லாய் வரிக்கும் காணபத்தியம், குமரனைப் பரம்பொருளாய் வழுத்தும் கெளமாரம், சூரியனுக்கு முத ன் மை வழங்கு ம் * செளரம் ’ ஆகிய ஆறுமே சண்மதங் கள் எனப்படும். கி. பி. எட்டாம் நூற்ருண் டிலே வாழ்ந்தவராகக் கொள்ளப்படும் பூgசங்கராச்சாரியரே இச்சண்மதங்களை மீட்டும் நிறுவியவர் ( பிரதிஸ்தாபகர் ) என்று அறிகின்ருேம்.
இவற்றுள்ளே சாக்தமும் காணபத் தியமும் கெளமாரமும் செளரமும் இந்தியா வின் பிரதேச மதங்களாகவே பெரும்பாலும் விளங்குகின்றன. அன்றியும் சாக்தம், கான பத்தியம், கெளமாரம், செளரம் என்பன சைவத்தினுள்ளே அடக்கப்பட்டும் விட்டன. செளரமாகிய சூரிய வழிபாடு வைணவத் திலும் இடம் பெறுகின்றது. ஆக, இந்தியா விற்குரிய தேசீய மதங்களாகவும் உல களாவிய பிரசித்தி வாய்ந்தவையாகவும் சைவமும் வைணவமுமே இன்று நில வி வருகின்றன, என்று கொள் வ தி லே தவறில்லை.
ல் கிடப்போன்" எனவும் பொருள் கொள்வ ாவும் நீர்போல ஒன்றாய் அடையாள வேறு றை இயக்கியும் வேருக்கியும் சிருட்டிகளை அவன் நாராயணன் எனப்பட்டான் எனவும்

Page 35
-சைவமும் வைணவமும்
சிவனும் விட்டுணுவும் மைத்துன உற வினர் எனப் புராணங்கள் வாயிலாகவும் சிவனுடைய சத்தியே விட்டுணு எனச் சைவ தத்துவ வாயிலாகவும் தெரியவருகின் றன. ஒரு காலத்திலே சைவமும் வைண வமும் ஒன்றுபட்டு இணைந்தும், இன்னுெரு காலத்திலே ஒன்றுடன் ஒன்று முரணியும் நிலவியமைக்குச் சான்றுகள் உண்டு. எனி னும் விட்டுணுவின் லீலைகளைப் பலபட விரித்துரைக்கும் இராமாயணம், பாரதம் ஆகிய இதிகாசங்கள் சைவர், வைணவர் என்ற வேறுபாடின்றி இருசாராராலும் இன்றுவரை உவந்து ஏற்றுச் சுவைக்கப்பட்டு வருகின்றமையை நாம் மறந்துவிடலாகாது.
தமிழர் போற்றிய திருமால்
* திருமால் ' என்றும் மாயோன் " என்றும் பெயர் வழங்கிப் பழந் தமிழர் போற்றிய தெய்வம் விட்டுணுவே. ‘திருமால் என்பது தெய்வத்தன்மை பொருந்திய பெரி யோன் " என்ருே, திருவாகிய இலக்குமி யோடு கூடிய பெரியோன் " எ ன் ருே பொருள்படும். மாயோன் என்பதற்கு மாமைநிறம் (மாநிறம் ) அமைந்தவன் என்பது பொருள். தமிழர் வகுத்த நான்கு நிலங்களுள் ஒன்ருகிய காடும் காடுசார்ந்த துமாகிய முல்லை நிலத்துத் தெய்வமாக மாயோன் கொள்ளப்பட்டான்.
மாயோன் மேறு காறை உலகமும்
என்பது தொல்காப்பியம். அகநானூறு என்ற சங்கநூலிலே 'சிவனும் திருமாலும் ஒருருவமாய் இணைந்து கோலங்காட்டுவது போலச் செக்கர் வானமும் நீலக்கடலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விளங்குகின் றன’’ என்று புலவர் ஒருவர் வருணித்தல் காணலாம். இவ்வருணனை விட்டுணுவுக்கும் சிவனுக்கும் இடையே சமத்துவம் காண மேற்கொண்ட முயற்சி போலும் ( அக நானூறு 300). புறநானூற்றில் ‘ஆலமர் கடவுள்" (புறம் - 198) எனத் திரு மால் குறிக்கப்படுவான். 'பிறரை வருத் தி அச்சம் தருவோராகிய அரக்கர்கள் ஒருகால் சூரியனைக் கவர்ந்து சென்று ஒளித் த

பொழுது, உலகினை இருள் மூடிக்கொண் டது. மக்கள் துயருற்றனர். அவர்களின் துயர் போக்க, வலிமையும் அஞ்சன நிறமும் கொண்ட கண்ணன் (விட்டுணு) அரக்கரை அழித்துச் சூரியனை விடுவித்து உலகின் இரு ளைப் போக்கினன்' என்ற செய்தி காணப் படுகிறது. (புறம் 198) பெரும்பாணுற்றுப் படையிலே "பாம்பணைப் பள்ளி அமர்ந் தோன்’ என விட்டுணு குறிக்கப்படுகின் முன். கலித்தொகையிலே 'பாம்பை அணை யாகவும் சக்கரத்தை ஆ யு த மா கவு ம் கொண்டவன்’ என அவனைப் போற்றுவர். பரிபாடலில் எட்டுப்பாடல்கள் திருமாலைப் பரவுவனவாய் அமைந்தவை. திருமாலின் லீலைகள் அருட்செயல்கள், அவனைப் பரவு வார் அடையும் பயன், பா டி யோரின் வேண்டுதல்கள் என்பன அமைந்து ஸ் ள தோடு, சிவனுடனும் முருகனுடனும் ஒன்று பட்டவணுகத் திருமாலைக் கருதி வழிபடுவ னவாயும் இப்பாடல்கள் விளங்குகின்றன.
ஐந்தலை உயரிய அணங்குடை
அருந்திறல் மைந்தடை ஒருவனும் மடங்கலும் நீ
“ஐந்துதலைகளை உடையவனும் தெய்வத் தன்மையும் அரியதிறலும் தி ண் மையும் கொண்டவனுமாகிய ஒப்பற்ற சிவனும் அவன் மைந்தணுகிய அரியேறு ஒத்த முரு கனும் நீயே" என்பது இதன்பொருள்.
ஆன ல் இந்த ச் சமத்துவநோக்குக் காலப் போக்கில் கைவிடப்பட்டுச் சைவர் சிவபெருமானை ஏற்றியும் விட்டுணுவைத் தாழ்த்தியும், வைணவர் இதற்கு மாருக விட்டுணுவை ஏற்றியும் சிவனத் தாழ்த்தியும் தம்முள்ளே முரண்பட்டமைக்குச் சமயகுர வர்களின் தே வார திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாசுரங்களிலும் பெரு மளவு சான்றுகள் உள்ளன. சிவாலயங் களிலே விட்டுணுவைப் பரிவார தெய்வங் களுள் அடக்கி வழிபாடு செய்யும் வழக்கத் தினைக் காணலாம். விட்டுணு ஆலயங்களில் சிவனுக்கோ மற்றைக் கடவுளர்க்கோ இடம்
2I
3

Page 36
இல்லை." “அரியும் சிவனும் ஒண்ணு அறி யாதவர் வாயில் மண்ணு' என்னும் பழ மொழி, சைவ் வைணவ ஒற்றுமைக்கு மேற் கொள்ளப்ப்ட்ட முயற்சிகளின் வெளிப்பாடு என்றே கொள்ளக் கிடக்கிறது. சிவனுக்கும் விட்டுணுவுக்கும் ஒரே ஆலயத்தில் சந்நிதி கள் அமைத்தமையும் இவ்வொருமைப் பாட்டு முயற்சியின் மற்ருெரு வெளிப்பாடே. கச்சியேகம்பம் (நிலாத்துண்டப்பெருமாள்), சிதம்பரம் ( கோவிந்தராசப் பெருமாள்), திருநெல்வேலி (நெல்லைக்கோவிந்தர்), திருச் செந்தூர் (அரங்கநாதன்), திருப்புத்தூர் (இலட்சுமி நாராயணன்), பழனம் (வேணு கோபாலர்), திருநாவலூர் ( வரதராசர்), பவானி (ஆதிகேசவப் பெருமாள்) என்பன இக்கூற்றிற்கு எடுத்துக் காட்டுக்களாகும்.
விட்டுணுவின் திருநாமங்களும் அவைகுறிக்கும் தத்துவப் பொருளும்
ஆதிதேவன், ஆதிமூலம் என்ற திரு நாமங்கள் எல்லாத் தேவர்களுக்கும் முத லும் முதன்மையுமான தேவன் எனவும் எல்லாவற்றிற்கும் மூல மா யு ள்ள பரம் பொருள் எனவும் பொருள் தருகின்றன. பத்மநாபன் என்ற திருநாமம் தாமரை மலர் போன்ற கொப்பூழை உடையவன் எனப்பொருள்படும். சிருட்டிதேவனுகிய பிர மன் இந்த நாபிக் கமலத்திலே தோன்றி, யாவற்றையும் படைத்தான் எ ன்னும் பொழுது ‘மூல மாய் நின்றதாமோர் மூர்த்தி விட்டுணுவே என்ற பொருள் தானகவே பெறப்படுகின்றது. ஜக்ம் என் பது உலகம். இதற்கு அரங்கம் என்ற வேருெரு பெயரும் உண்டு. ஆகவே 'ஜகந் நாதன்' " அரங்கநாதன் ‘* ன்'ன்பன உலகின் மூலப்பொருள், தலைவன் என்ற கருத் தினைத் தருவனவாகும். இவ்வாறு விட்டுணு வுக்கு, அமைந்த, ஒவ்வொரு திருநாமமும் அவனது மூலமாம் தன்மையையும் பரம் பொருட்டன்மைய்ையும் புலப் படுத்தவே அமைத்துக் கொள்ளப்பட்ட்வை என்பது தெரிகின்றது. சிவ சகஸ்ரநாமம்போன்றே
* இப்ப்ொது முடிவிற்கு விதிவிலக்கு விட்டுணு தலங்களிலே சிவபெருமானுக்கும்
名2

விஷ்ணுசகஸ்ர நாம மும் விட்டுணுவுக்கு 1008 நாமங்கள் கூறிவழிபட அமைந்த தாகும்.
அகவுயிர்க்கு அமுதே போற்றி, மாய்ச் சகடம் உதைத்தாய் போற்றி, ஞானச் சுடரே போற்றி, சொல்லுளாய் போற்றி, உடையாய் போற்றி, உத்தமா போற்றி அதிர்குரல் சங்கத்(து) அழகா போற்றி, கதியே போற்றி, கரிய்ாய் போற்றி, குறளாய் போற்றி, குருமணி போற்றி, மறையாய் போற்றி, மாதவா போற்றி, அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி, சிந்தனைக்(கு) இனியாய் போற்றி.
என விட்டுணுவை விளித்தழைக்கும் நாமம் ஒவ்வொன்றும் அவனது பெருங்குண இயல்புகளைத் தெளிவாகப் புலப்படுத்து கின்றது.
விட்டுணுவின் மூர்த்தங்கள்
விட்டுணு கோயில் களி ல் அவனின் கோலங்கள் நிற்பன, இருப்பன, கிடப்பன ஆகிய மூ வ  ைகயா க அமைக்கப் பட்டுள்ளதைக் காணலாம். இவை யோக, போக, வீர, ஆபிசாரிக என நான்கு வகை மூர்த்தங்களாக வகை செய்யப்படும். யோக மூர்த்தம் யோகிகளுக்கும், போக மூர்த்தம் போகிகளுக்கும், வீர மூர்த்தம் வீரர்களுக் கும், ஆபிசாரிக மூர்த்தம் அரசர்களுக்கும் வணங்குவதற்கு என அமைந்தவையாகும். வேறுவகையிற் சொல்வதர்ஞர்ல்-வாழ்க்கை யின் எந்த நிலையில் நிற்பவர்களுக்கும் அவரவர் விருப்பிற்கு ஏற்பு வழிபடற்கென இவை அமைக்கப்ப்ட்டுள்ளன.
விட்டுணுவின் திருமேனிகள்
'நாராயணனே முடிவான பரம் பொருள். அவனே மிக்குயர்ந்த பேருண்மை’ எனவும், ‘எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவனும், கடவுளர்க்கெல்லாம் மேலான கடவுளும் ஆகிய அவனை வணங்குவோம்’ எனவும்வேதங்களிலே புக்ழப்படும் விட்டுணு,
க்களாக 'அன்பில், வித்துவக்கோடு என்னும்
சந்நிதிகள் உள்ளன.

Page 37
நிர்க்குணப்பிரமமாக (குணங்கடந்த, குணங் களற்ற நிலை) வும், தன்னை வணங்கும் அடி பவர்களுக்காகச் சகுணப் பிரமமாகவும் விளங்குகின்ருன்.
நிர்க்குணப் பிரம நிலையில் அவனைத் தரிசிக்கவோ, அவன் அருளை அநுபவிக்கவோ இயலாது. எனவே ஞானிகள் உட்பட வைணவ அடியார்கள் அனைவரும் சகுணப் பிரம நிலையிலே அவனை வழிபட்டுப் பேரா னந்தமடைதலையே வி ைழ கின்ற ன ர். சகுனப் பிரமநிலை ஐந்து வகையான திரு மேனிகளாக வகுக்கப்படும். அவையாவன:
1. பரம் : யாவையும் கடந்த நிலையில் வை குண் டத் தி லே பூஜீதேவி, பூதேவி, நீலதேவி தனக்குப் பணி வி  ைட புரிய அமர்ந்தருளும் பேரானந்தத் திருமேனி.
2. வியூகம் : பாற்கடலிலே அனந்த ஞகிய ஆதிசேடனிலே பள்ளி கொண் டு படைத்தல், காத்தல், அழித்தல், சம்சார பந்தத்திலிருந்து கரையேற்றல் ஆகிய நான்கு தொழில்களையும் முறையே பிரத்தி யும்னன், அதிருத்தன், சங்கர்ஷனன், வாசு தேவன் ஆகிய நால்வகைத் திருமேனிகள் கொண்டு நடாத்துதல்.
3. வியாவம் : அ வ தா ர த் திரு மேனிகள் இதனுள் அடங்கும். -
4. அந்தர்யாமி படைக்கப்பட்ட சீவ ராசிகள் யாவினுள்ளும் தோன்ருத் துணை யாய் நின்று அருள்பாலிக்கும் திருமேனி.
5. அரிச்சம் : ஆலயங்களில் விக்கிரக வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் திரு மேனிகள்.
விட்டுணுவின் திருக்கோலத் தத்துவம்
(i) நீலவண்ண நெடிய திருமேனி:
நிறமில்லாத (நிர்க்குன) நீர், கடலாக விரி யுமிடத்து நீலமாகக் காட்சி தரும். காண முடியாத பரவெளி ஆகாயமாய் விரிகை யிலும் அதன் நிறம் நீலமே. எனவே யாவை யும் கடந்து எங்கும் "நிறைந்துள்ள பரம் பொருளாகிய விட்டுனுவும் நெடியோனுக வும் நீல நிறமுடையோனுவும் சித்திரிக்கப் படுகின்றன்.

(i) இடது திருக்கரத்தில் ஏந்திய சக்கு: சங்கினை ஊதுகையில் எழும் ஒசை பிரணவ மாகிய ஓங்காரமாகும். இயற்கை முழுவதும் இயங்குவதால் உண்டாகும் ஒசையே ஓங்காரம். சங்கை இயக்குவதால் ஓங்கார ஓசை உண்டாக உலகம் இயங்குகிறது. எனவே விட்டுணு ஒங்கார வடிவினன் என்பது சங்கின் மூலம் புலணுகிறது.
(iii) avg திருக்கரத்தில் ஏந்திய சக்கரம் : சக்கரம் ஏந்திய கையணுதலால் சக்கரபாணி எனத் திருநாமம் பெற்ற விட்டுணு, தருமத்தின் அறிகுறியான அந்தக் கருவியைக்கொண்டு அண்டசராசரங் களின் தருமத்திற்கெல்லாம் தான் காவலன் என்பதையும், தருமம் தவறி அதருமம் மேலோங்குகையில் தருமமே அதனை அழிக் கும் என்பதையும் உணர்த்துகின்றன்.
(iv) மற்றிரு கரங்களும் ஏந்திய கதா யுதமும், தாமரை மலரும் : உயிர்களைத் தனது அருளினலே வீடு பேற்றிற்கு ப் பக்குவப்படுத்தும் விட்டுணு, அவ்வாறு அவை பக்குவம் அடைவதற்காய் வல் லியல்பு, மெல்லியல்பு என்ற இருவகை இயல்புகளையும் கொள்கின்ருன்; வல்லியல்பு காரணமாக உயிர்களைப் பேதித்து வளர்த் தெடுக்கக் கதாயுதமும், போதித்தும் அருள் பாலித்தும் வளர்த்தெடுக்கத் தாமரையும் குறிகளாகக் கொள்கின்றன்.
(w) திருமேனியிற் பொலியும் பேரழகு; என்றும் மாருததும் ஒரே நிலையானதும் பற்றறுத்ததுமான பரம்பொருள் அழியாத தெய்வப்பேரழகு வாய்ந்தும் பொலியும் என்பதைக் காட்ட விட்டுணு பேரழகளுக" அழியா அழகுடையவனுகக் காட்சி தருகின் முன், புன்முறுவல் மாருத பவள வாயும் தாமரை விழிகளும் சிவந்த திருக்கரங்களும் திருப்பாதங்களும் விட்டுணுவின் தெய்விகப் பேரழகினைப் புலப்படுத்த அமைந்தன வாகும். பட்டுப் பீதாம்பர தாரியாய், சர்வா பரண பூஷிதனுய்க் கெளத் துவ மணி அணிந்து செல்வநாயகனுய் அவன் விளங்கித் தோன்றுவான்.
23

Page 38
(wi) திருவாழ்மார்பன்: வி ட் டு ணு உயிர்களைக் காக்கும் கடவுள். உயிர்களுக்கு உறுதியளிப்பன அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்குமாகும். இந்நான்கையும் விட்டுணுவின் இதயக்கமலத்தில் எழுந் தருளியிருக்கும் "மலரின் மேவு திரு' வாகிய சத்தி வழங்குவதையே இலட்சுமி சமேத ஞக விளங்கித் தோன்றுவது புலப்படுத்து கிறது.
வைணவத்தின் தத்துவ நோக்கு
அது நீ ஆகி ன் ரு ய்" “ஒன்றே உள்ள பொருள்", "நான் பிரமம் ஆகின் றேன்", "அது நீ " (தத்துவம் அஸி, ஏகம் சத், அஹம் பிரமாஸ்மி, தத் சத்) என் பன வேதத்தின் ஞான காண்டமாகிய உப நிடதங்களில் வரும் மகாவாக்கியங்களாகும். இவற்றின் விரிவான விளக்கங்கள் கருத் தளவில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை யான சிந்தனைகள் தோன்றக் காரணமாயின. இச்சிந்தனைகளைத் தொகுத்து ஒருமைவாத அடிப்படையில் விளக்கம் தரமுற்பட்ட தத்துவநூல் வாதராயனர் எழுதிய பிரம சூத்திரமாகும். இதற்கு விரிவான வியாக் கியானம் செய்து பேருரைகள் (மஹா பாஷ்யங்கள் ) எழுதியோருட் பூரீசங்கராச் சாரியர், பூரீராமானுஜர், மத்துவர், நீல கண்ட சிவாசாரியர் ஆகியோர் முதன்மை யானவர்.
பூரீசங்கராச்சாரியர் உள்ளது ஒன்றே அது பிரமமே " என்ற அடிப்படையில் தமது ஆய்வினை மேற்கொண்டார். நிர்க் குணப்பிரமம் மாயை காரணமாக ஈசுவர்ன் என்ற சகுணப் பிரமநிலைக்கு இறங்குகின்றது என்றும், அவித்தை காரணமாகப் பல வாகிய உயிர்களாய்த் தோற்றுகின்றது என்றும், மாயையும் அவித்தையும் மறைய ஏகமாகிய பிரமம் மட்டுமே தோன்றும் என்றும், இரண்டற்ற ஒருமை நிலையாகிய * கேவலாத்துவிதம் " - உயர்நிலை - அதுவே என்றும் பல்வேறு எடுத்துக்காட்டுக்கள், அநுமானங்கள் வாயிலாக அவர் நிறுவியுள் ளார். சங்கர வேதாந்தம் என்றும் ஏகான் மவாதம் என்றும் மாயாவாதம் என்றும்
24

இத்தத்துவ நோக்கு அழைக்கப்படுகின்றது. ஒன்று வேருென்முகத் தோற்றுவதாகிய விவர்த்தவாதமே இவரின் விளக்கத்திற்கு அடிப்படை. சண்மத பிரதித்தாபகர் எனி னும் சங்கரரின் வேதாந்த தத்துவம் சைவத்தையே அடிநிலையாகக் கொண்டது.
சங்கரருக்கு இரண்டு நூற்ருண்டுகள் பிற்பட்டவர் எனக் கொள்ளப்படும் ( கி. பி. 1000) பூரீராமானுஜர் வைணவர். இவர் பிரமத்தை விட்டுணு எனவே கொள்கின் ருர். சங்கரர் பிரமத்தை மட்டும், உள் பொருள் எனக் கொள்ள, பூரீராமனுஜர் பிரமம், உயிர், உலகம் மூன்று ம் உள் பொருள்கள் என நிறுவ முற்படுகின்ருர், பிரமம் உயிர். ஜீவன்களும் உலகமும் அதன் உடல். அஃதாவது பிரமம் சரீரியாகவும் ஜீவன்களும் உலகமும் சரீரமாகவும் உள் ளன. ஒன்றை ஒன்று பிரிந்து இயங் குவதில்லை. இவ்வகையில் இராமானுஜர் பரிணுமவாதியாவர். இவரின் கருத்துப்படி உலகையும் உயிர்களையும் அந்தர்யாமியாய் நின்று இயக்குபவன் விட்டுணுவாகிய பிரமம். உடலை உயிர் இயக்க உயிருள் உயிராய் நின்று உயிரை இயக்குவது பிரமம் என்பது இ ரா மா னு ஜரின் முடிவு. " உள்ள பொருள் ஒன்றே " என் பதற்கு இவர் கொண்ட பொருள் " சுதந் திரமாய் உள்ள பொருள் பிரமம் ஒன்றே. அதற்குக் கட்டுண்டு அதனல் இயக்கப்படுவன பலவாகிய உயிர்கள், உலகம் " என்பதே. எனினும் சரீர சரீரி சம்பந்தத்தால் இவை இரண்டாகவோ பலவாகவோ வேறுபட்டு நின்று இயங்காது ஒன்ருல் இயக்கப்பட்டு ஒன்ருகவே இயங்கு, கின்றன. என்பதும் இராமானுஜரின் முடிவு. உலகும் உயிர்களும் விசேடணங்கள். இவ் விசேடணங்களைத் தன்னகத்தே கொண்ட விசேடியமே பிரமம். ஆக விசேடனங்களும் விசேடியமும் ஒன்றிணைந்து பிரிக்கமுடியாத வாறு ஒன்று போல விளங்குவதே (அப்" பிரதக்சித்தி), பூரீராமானுஜரின் ஒருமைக் கோட்பாடு. இதனை விசிட்டாத்துவிதம் என்பர். இவ்வாறு பிரமத்தை உயர்த்தி உயிரின் இயக்கத்திற்கு அதனை இன்றி யமையாததாய் ஆக்கியதன் மூலம், இரா' மானுஜர் தமது தத்துவத்திலே பத்திக்கும்

Page 39
தாராளமாக இடம் அளித்துள்ளமை குறிப் பிடத்தக்கதாகும். பூரீராமானுஜர் பிரம சூத்திரத்துக்கு எழுதிய பேருரை பூரீபாஷ் பம் என வழங்கும்.
இராமானுஜருக்குப் பின்வந்த மத்துவர் இராமானுஜரைப்போல இறைவனுக்கும் உயிர் உலகிற்கும் பிரிக்கமுடியாத உறவைக் கற்பிக்கவில்லை. அவை இரண்டும் என்றும் வேறு வேருனவையே என்பது மத்துவரின் முடிவு. இவை மட்டுமல்ல, சடமாகிய உலகமும் இவற்றிலும் வேறனதே எனவும் அவர் கொள்வார். பொருள்கள் வேறு வேறு எனப் பிரிக்கப்படுவதற்கு அவற்றி னிடையே உள்ள வித்தியாசங்கள் எடுத்துக் காட்டப்படல் வேண்டும். மத்துவர் இம் மூன்றற்கும் உள்ள வித்தியாசங்களை ஐந்து வகைப் பேதங்களாக வகுத்துக் காட்டுவர். ஈசுவரனுக்கும் சீவனுக்குமுள்ள பேதம் முத லாவதாகும். இது "சீவேசுவர பேதம்’ எனப் படும். அடுத்தது சீவன்களுக்கிடையிலே காணப்படும் பேதம். இது 'சீவபரஸ்பர பேதம்". மூன்ருவதாகச் சீவன்களுக்கும் சடமாகிய உலகிற்குமுள்ள பேதம். இது *சீவசட பேதம்’ ஆகும். நான்காவதாகச் சடங்களுக்கிடையிலே காணப்படும் பேதம். இது "சடபரஸ்பர பேதம்". ஐந்தாவது ஈசு வரனுக்கும் சடத்துக்கும் இடையேயான *சடேஸ்வர பேதம்’.
இவ்வாறு பேதங்கற்பித்த மத்துவர், வாயு புத்திரனுகிய அனு மான் மூலம் உயிர்கள் ஈசுவரனைச் சென்று அடைவதே முத்தியென்றும் ஆணுல் இந்த முத்தி சகல ஆன்மாக்களுக்கும் கிட்டாது என்றும் சில ஆன் மா க் கள் எக்காலத்திலுமே முத்தி அடையா என்றும் க்கூறுவர். இவரின் வேதாந்த தத்துவம் துவிதம் (இரண்டாந் தன்மை ) எனப்படும். மத்துவரும் வைணவ ராதலின் இவர் குறிக்கும் ஈசுவரனும் விட்டுணுவேயாவன். இராமானுஜருடைய தத்துவத்திலே பத்திக் கலப்புக் காணப் படுவதுபோல மத்துவரின் தத்துவத்திலும் பத்திக்கு இட முண் டா யினும், சில ஆன்மாக்கள் முத்தி அடையா என்ற இவரின் கருத்து, பத்தி வைராக்கியத்திலே தளர்ச்சி யுண்டாக்கக் கூடியதாகும். இம்முடிவுக்கு
- 4

இவர் வரக் கிறிஸ்தவ சமயச் செல்வாக்குக் காரணம் ன்னக் கூறப்படுவதுமுண்டு.
நீலகண்ட சிவாசாரியார் சைவ சித் தாந்த நோக்கிலே பிரம சூத்திரத்திற்கு மகாபாடியம் எழுதியவராவர். சில வகை களிலே பூgராமானுஜருடைய தத்துவக் கோட்பாடு, சைவ சித்தாந்தத்தோடு ஒத்துச்செல்வது உண்மையே. (இறை, உலகு, உயிர் என்ற முப்பொருள்களும் உண்மை எனக்கொள்வதிலும் காட்சி, கருதல், நூல் ஆகிய முப்பிரமாணங்களை ஏற்பதிலும், வேத உபநிடதங்களோடு புரா னங்கள் ஆக மங்களை ப் பிரமாண நூல்களாகக் கொள்வதிலும் இறைவனையே முழுமுதற் பொருளாகக் கொள்வதிலும் ஒற்றுமை யுண்டு.) ஆனல் அத்துவித முத்திநிலையில் இருசாராருக்கும் மிகப்பெரிய முரண்பாடு காணப்படுகின்றது. இராமானுஜருக்குப் பின்வந்த தெலுங்கரான நிம்பர்க்கர் அத்து விதத்தையும் துவிதத்தையும் இணைத்து *அத்துவித துவித தத்துவத்தை உருவாக், கினர்.
வைணவத்தின் பிரமான நூல்கள்.
சைவம் முதலிய மறறைச் சமயங்கள் போலவே வைணவமும் வேதங்களையும் உபநிடத ங் களை யும் முதனூல்களாகக் கொண்டிருப்பது முன்னரே கூறப்பட்டது. சைவத்திற்கு இருபத்தெட்டு ஆகமங்கள் உள்ளதுபோல  ைவணவ தி ற்கு இரண்டு ஆகமங்கள் பிரமான நூல்களாக உள்ளன. முனிவர்கள் பலர் ஐந்து இராத்திரிகளிலே உபதேசித்த பாஞ்சராத்திர ஆகமமும் விகனசர் என்பவர் உபதேசித்த வைகானச ஆகமமுமே அவை. சமய தத்துவம், வழி பாட்டு முறைமை, கிரியைகள், கோயில் அமைப்பு, விக்கிரக அமைப்பு என்ற யாவும் இவ்வாகமங்களிலே விரிவாகப் பேசப்படும்.
விட்டுணுவின் மகத்துவங்களையும் அவர் அடியார்களுக்கு அருளிய திறங்களையும் அடியார் பெருமைகளையும் எடுத்துரைப்பன, பிரமாண நூல்களாய்க் கொள்ளப்படாத போதிலும், இவையும் வைணவ சமய வளர்ச்சிக்கு உதவியன என்ற வகையில் வியாசர் யாத்த புராணங்களும் குறிப்பிடத்
25.

Page 40
தக்கனவே. பதினெண் புரா ண ங் களி ல் கருடம், வராகம், நாரதீயம், வைணவம், பாகவதம், வாமனம் ஆகிய ஆறும் விட்டுணு புராணங்களாகும்.
தத்துவ நூலாகவும் வாழ்க்  ைக நெறியை வகுத்துக் கூறுவதாகவும், கர்ம யோகத்தை முதன்மைப்படுத்திச் செயல் புரியத் தூண்டுவதாகவும் விளங்கும் பகவத் கீதை வைணவர்க்கே சிறப்பு நூலாயினும் எல்லா மதத்தவரும் பொது நூலாகக் கொண்டு படித்துப் பெரும்பயன் அடைய உதவுவதுமாகும். இது மகாபாரதத்தில் வீட்டும பர்வத்தில் பதினெட்டு அத்தியாயங் களில் விரித்துக் கூறப்பட்டுள்ளது.
வைணவத்தின் உட்பிரிவுகள்.
வைணவ சமயத்தின் உட் பிரிவுகள் மூன்று. கிருஷ்ண சைதன்யம், நிம்பர்க்க வைணவம், வல்லபம் என்பனவே அவை. சைதன்யர், நிம்பர்க்கர், வல்லபர் என்ற வைணவ அருளாளர்களின் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன. இவற்றை விடத் தமிழ் நாட்டில் வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளும் காணப்படுகின்றன. வடகலை என்பது வடமொழி வேதசாத் திரங்களையே பிரமாணங்களாகக் கொண்டு ஒழுகுபவர்களைக் கொண்ட பிரிவு. தென்கலை என்பது தமிழ் நாட்டு ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் போற்றி அவற்றின் வழிநடப்போரைக் கொண்ட பிரிவு. விட் டுணுவின் திருவடிகள் இரண்டையும் தவிர உயிர்கட்கு வேறு கதியில்லை என்பதைக் குறியீடாகக் காட்ட அவனின் திருவடிகளைப் போல இடும் நாமத்திலும் வடகலையார் தென்கலையார்களுக்கிடையே வேறுபாடு காணப்படும்.
வைணவ பத்தி நெறி
"நான்' 'எனது' என்னும் அகப் பற்று (அகங்காரம் ), புறப்பற்றுக்களை (மமகாரம்) ஒழித்து, தனது வலியில்லா நிலையினை உணர்ந்து இறைவனின் பாதார விந்தங்களைச் சரணுகதி அடையும் தன்னி ழப்பு நிலையே பத்திக்கு வித்தாகும். அதுவே முத்திக்கு வழியுமாகும். தன்னை மறந்து
26

தலைவன்தாள் பற்றி அவனிலேயே பித்துக் கொள்ளும் இன்ப அன்பினை வைணவர் **பிரபத்தி" என அழைப்பர்.
இவ்வாறு அவனிலே பிரபத்தி பண்ணு வோரை மூவகையாகப் பிரிக்கலாம்.
1. சாமானிய மக்கள் - சடசம்பந்தத் தால் அறியாமைமிக்கு, சத்தியற்றவர்க ளாய், இறையினை அடையும் சாதனைகளில் ப ழ க முடி யா து இறைவனிடம் தம் பாரத்தை ஒப்புவிப்பவர்கள்.
2. ஆசாரியர்கள் - ஆன்மாவின் உண் மைநிலை இறைவனுக்கு வசமாயிருத்தலே என உணர்ந்தும், ஞானத்தைப் பெறும் முயற்சியில் சாதனைத்திறன் பெற்றிருந்தும், இறை வனின் திருவுருவ தரிசனத்திலே மாருக்காதல் பூண்டு வேறு கதியின்றி இறை வனிடம் தம்மை ஒப்புவிப்பவர்கள்."
3. ஆழ்வார்கள் - பகவானை நினைந்த உடனேயே பேரன்புமிக்கவர்களாய் அப்பே ரன்பால் உணர்ச்சி மிகுதியாக, யோகசாத னைகளில் ஈடுபடமுடியாத அசத்திநிலையில் அவனைத் தஞ்சமாகப் பற்றிக் கிடப்பவர்
இம்மூவகையாரதும் பொதுத்தன்மை யாதெனில் 'நான் செய்கிறேன்' என்ற தன்னுணர்வின்றி எப்பொழுதும் "நான்" என்பதை ஒழிக்க முயலும் முயற்சியே. இவ் வாறு முயல்கையில் இத்தகையோருக் காக எளியணுகிக் கீழிறங்கிவந்து தன்முயற் சியால் பகவான் இவர்களைத் தன் அடிக ளிலே சேர்த்துக் கொள்கிருன். அஃதாவது முத்திக்குச் சா த னம் இறைவனேயாக வேறுசாதனம் வேண்டாத நிலேயே பிரபத் தியாகும்.
பிரபத்தி பற்றிய பின்வரும் கூற்று உளங்கொள்ளத்தக்கது. ‘பி ர பத் தி யில் உபாயமும் (வழியும்) அதனுல் அடையப் படும் உபேயமும் (முடிவும்) ஒன்ருகின்றன. வேறு சாதனங்களைக் கொண்டு இறைவனை உபேயமாகப் பற்றுவார் சிலர். இறைவனை உபாயமாகக் கொண்டும் தமக்குவேண்டும் உலக இன்பம் முதலாக முத்தியின்பம் ஈரு

Page 41
கவுள்ள பலவகை இஷ்டங்களையும் உபேயங் களாகக் கொண்டும் அவற்றைப் பெறுவார் சிலருளர். ஆனல் பிரபன்னரோ (பிரபத்தி செய்பவர்களோ) இறைவனையே உபாயமா கப் பெறுவர். இப்பிரபத்தி நெறி யில் முயற்சி செய்பவனும் இறைவன். முயற்சி யின் பயனை அடைபவனும் அவனே. இறை வன் தனக்கும் ஜீவனுக்குமுள்ள உறவை நினைந்து, தனது உடைமையாகிய ஜீவன் பிற விப் பெருங்கட லில் அமிழ்ந்து கிடப்பதைப் பொருது தானே முயன்று அவற்றை வெளியேற்றித் தானே இன்புறு கிருன் ; ஜீவன் தன்னைக் கருவியாகவே நினைக் கி ன் ரு ன் இறைவனல் ஆட்டு விக்கப்படும் ஒரு கரு வியாயினும் தான் அறிவுடையவனுதலில், ஆட்டு விக்கப்படுவதை உணர்ந்து இறைவனது மகிழ்ச்சிக்கென்றே தன்னை அமைத் துக் கொண்டு இன்ப்மடைகிருன். (இவ்விடத் தில் சைவசித்தாந்தம் குறிக்கும் மர்க்கட சம்பந்தம் (குரங்கு - குட்டி தொடர்பு) மார்ச்சார சம்பந்தம் (பூனை-குட்டி சம்பந் தம் ) என் பவற்றை ஒப்புநோக்கலாம். (அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" -மாணிக்கவாசகசுவாமிகள்)
பத்தியின் முதிர்ச்சியிலேயே பிரபத்தி உண்டாகும் என்பது வைணவத்தின் முடிவு. இந்தப் பிரபத்திநிலையிலே ஒருவன் செய்ய வேண்டுவன பின்வருமாறு :-
i. சிர வணல் : பத்திசிரத்தையோடு புராணம் முதலியவற்றைக் கேட்டல்.
i. கீர்த்தனம் : பத்தி த து ம் பப் பகவானைப் பாடுதலும், புகழ் கூறுதலும். i. ஸ்மாணம் : இறைவன் நாமத்தை ஒதுதலும், அவனது ரூபத்தையும் குணங்க ளையும் இடைவிடாது நினைத்தலும்.
iv. பாதஸேவனம் - குருவின் பாதங்க ளில் தொண்டு பூணல்.
v. அர்ச்சனம் - இறைவனது திரு வடி வங்களுக்குப் பூசை செய்தல்.
wi. வந்தனம் - தெய்வங்கள், குரு. சாதுக்கள், அடியார்கள் (பாகவதர்கள்), நல்லோர் ஆகியோரை வணங்குதல்.

wi. ஆத்ம நிவேதனம் - ஆத்மாவை இறைவனிடம் ஒப்புவித்தல்.
இவற்றேடு கூடிப் பாடுதலாகிய பஜ னையும் மந்திரம் செபித்தலாகிய உபாசன யும் (**ஓம் நாமோ நாராயணுய - அட் டாட்சரமந்திரம்) செய்தலும் பத்தர்களின் இடைவிடாப் பணிகளாகும்.
பகவானை ஆண்டானுகவும் தன்னை அடியவனுகவும் பாவனைபண்ணும் தாஸ்ய பாவம், அவனைத் தந்தை அல்லது மகனுகப் பாவிக்கும் வாத்ஸல்யபாவம், நண்பனுகக் கொள்ளும் ஸ்க்ய பாவம், அவனைத் தலைவனு கவும் தன்னைத் தலைவியாகவும் கற்பிக்கும் மதுரபாவம் என்னும் பாவனைகளும் பத்தி முதிர்ச்சியின் வெளிப்பாடுகளே.
இவ்வாறு பத்திநெறியிலே அதிதீவிர பக்குவம் அடைந்த பாகவதனில் (அடியவ னில் ) பின்வரும் குணவியல்புகள் காணப் UGtb:
1. உலகியலில் லா ப நட் டங்களை ப்
பொருட்படுத்தாமை. 2. உலகியலிலே காலத்தைப் போக்காது எந்நேரமும் சாதனையில் ஈடுபடல். 3. உலகப் பற்றின்மை. 4. புகழ்ப்பற்றின்மையும் தன்னைத் தாழ்த்,
தலும். பகவான் கருணைபுரிவான் எ ன் பதில் உறுதியான நம்பிக்கை. 6. இறைவனே டு கலப் பதில் பெரு,
வேட்கை. 7. இறைநாமத்தை ஒதுவதில் பேரவா. 8. அவனது கல்யாண குணங்களை எடுத்
துரைத்தலில் பெருவிருப்பு. 9. இறைவனது லீலைகள் நடந்த புனிதத் தலங்களில் தா னும் வாழ் வ தி ற், பேராசை.
5
அவதாரக் கோட்பாடு
**நல்லோரைக் கா க் கவும் கொடி
யோரை அழிக்கவும் தருமத்தை நிலைநாட்
டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்?*
3.

Page 42
என்பது, ப க வான் பகவத்கீதையிலே கூறியதோர் கூற்று. அவதாரம் என்பது கீழிறங்கல் எனப் பொருள்படும். உயிர்கள் மீது கொண்ட பேரருள் காரணமாக விட் டுணு உலகிலே அவதரிக்கின்றன் என்பது வைணவரின் உறுதியான நம்பிக்கை. அவ னின் அவதாரங்கள் எல்லாமாகப் பத்து என்பதும் அவற்றுள் ஒன்பது அவதாரங் கள் நிகழ்ந்து முடிந்தன என்பதும் இறுதி அவதாரம் நிகழவுள்ளது என்பதும் வைண வர் கொண்ட கருத்தாகும். மச்சம் (மீன்), கூர்மம் (ஆமை), வராகம் (பன்றி), நரசிம் மம் (உடல் மனிதஉரு, தலை சிங்கஉரு), வாமனன் (குள்ளன்), பரசுராமன், பல ராமன், இராமன், கிருஷ்ணன் என்பன இதுவரை விட்டுணு எடுத்த அவதாரங்க ளாகும். ** கல்கி** என்னும் அவதார ம் இனி எடுக்கவுள்ள அவதாரம். நீர்வாழ் உயிரியிலிருந்து தொடங்கிப் படிப்படியான வளர்ச்சிநிலையில் தெய்வ நிலைவரை இந்த அவதாரங்கள் பரிணுமம் அடைந்து செல் வது குறிப்பிடத்தக்கதாகும். ஒ வ் வோ ரீர் அவதாரமும் தேவர்கள் மானிடர் ஆகியோ ரின் இடர்களைப் போக்கவே எழுந்தவை GTG! புலப்படுத்த வரலாறுகளும் உள்ளன. இவற்றுள் இராமாவதாரமும் கிருஷ்ணுவ தாரமுமே அடியார்களின் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்தவையாகும். ஆலயங்களில் இவ்விரு அவதாரத் திருமேனிகளும் சிேதன்மை பெற்று வழிபாட்டிற்கு உரியன Gufruit விளங்குவதோடு இராமாயணம், பார தம் ஆகிய பேரிதிகாசங்களும் தோன்ற வழி வகுத் தன. பல்லாயிரக்கணக்கான தோத்திரப் பாசுரங்களும் பா ட ல் களும் இராமனையும் கிருஷ்ணனையும் துதிப்பன வாக, இந்தியாவின் எல்லா மொழிகளிலும் தோன்றியுள்ளமையும் தோன்றிக்கொண்டி ருப்பதும் குறிப்பிடத்தக்கன.
இங்கு அவதாரங்கள் பத்து எனக்குறிக் கப்பட்ட போதிலும் புரா ன மரபு ப்படி அவை கணக்இல் அடங்காத பல எ ன் ற கருத்தும் நிலவுகின்றது. இருடிகள், மனுக் கள், தேவர்கள், மனுவின் புத்திரர்கள் 4ாவரும் விட்டுணுவின் அம்சங்களே என்று கொள்ளும் பொழுது அவதாரங்கள் அள விறந்தனவாகின்றன.
23

இவ்வகையில் அவதாரங்களை மூவகை யாகப் பிரித்தும் நோக்கலாம். அவதாரம், ஆவேசம், அம்சம் என்பனவே அவை. கட வுளின் முழு வல்லமையுடனும் தோற்றுவன அவதாரங்களாகும். தற்காலிகமாகத் தன் சத்தியினை இறைவன் ஓர் உருவிலே புகுத்தி நோக்கம் முடிந்ததும் மீட்டுக் கொள்வது ஆவேசமாகும். நரசிம்மம், வாமனன் முத லியன ஆவேசத்துள் அடங்கும். கடவுளின் கருவிகளாய் உள்ள தும் அவ்வப்போது தோன்றித் துட்டநிக்கிரக சிட்டபரிபால னம் செய்வதும் அம்சமாகும். சங்கு, சக்கரம் என்பவற்றின் தோற்றமே 'அம்சம்' எனப் படும்.
விட்டுணுவின் ஆலயங்கள்
தமிழகத்தில் விட்டுணுவின் ஆலயங்க ளுக்குப் பொதுப் பெயர் 'விண்ணகரங்கள்’ என்பது. சமயகுரவர்கள் பாடி யதா லே *பாடல்பெற்ற தலங்கள்’’ எனப்போற்றப் படும் சிவாலயங்கள் போல, ஆழ்வார்கள் பன்னிருவராலும் பாடப்பட்ட விட்டுணுத் தலங்கள் எழுபதாகும். இவற்றை 'மங் களா சாசனம் பெற்ற பதிகள்’’ என அழைப் பது வைணவமரபு. சோழநாட்டில் நாற்ப தும், பாண்டிநாட்டில் பதினெட்டும் சேர நாட்டில் பதின்மூன்றும், தொண்டைநாட் டில் பதினன்கும், வடநாட்டில் பன்னிரண் டும் நடுநாட்டில் இரண்டுமாக அ மை ந் துள்ள நூற் றெட் டு வைணவத் தலங்க ளிலே முப்பத்தெட்டே மங்களா சாசனம் பெருதவை.
இலங்கையிலே வைணவர் என்று குறித்துச் சொல்லக்கூடிய நிலை இல்லா விடினும், வைணவம், சைவம் போன்று தனித்ததோர் சமயமாகக் கடைப்பிடிக்கப் படாவிடினும் விட்டுணு ஆலயங்கள் சில இருப்பதும் சைவர்களும் அங்குச் சென்று வழிபடுவதும் சிறப்பித்துச் சொல்ல வேண் டியனவாகும். யாழ்ப்பாணத்தில் வண்ணுர் பண்ணையிலுள்ள பூரீவேங்கடேசவரதராசப் பெருமாள் கோயில், வல்லிபுரத்தில் அமைந்த, வல்லிபுர ஆழ்வார் கோயில், பொன்னலையிலே திகழ்கின்ற வரதராசப் பெருமாள் கோயில் என்பன குறிப்பிடத்

Page 43
தக்கவை. இவற்றைவிடக் கொழும்பு,
திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் சிறுச்சிறு விட்டுணு
ஆலயங்கள் உள்ளன. சில சிவாலயங்
களிலும் சில முருகனலயங்களிலும்
விட்டுணு பரிவாரதெய்வமாக எழுந்தருளி
யிருப்பதும் இலங்கையிலே காணத்தக்கது.
இங்குச் சைவ வைணவ வேறுபாடு கவனத்திற்குள்ளாவதில்லை.
வைணவ பத்தி இயக்கம்
திருமாலின் பத்தியிலே ஆழ்பவர்களை ஆழ்வார்கள் என்ற சிறப்புப் பெயரால் தமிழில் அழைப்பதும் பகவான் மீது பத்திப் பித்துக் கொண்டு பாடித்திரியும் தொண்டர்களை பாகவதர்கள் என்று வடமொழியில் குறிப்பதும் வழக்கம். திருமாலின்மீது பத்தியானது வெள்ளமாகப் பெருகி ஓடிய காலம் பல்லவர்காலமாகும். சங்ககாலத்திலேயே ( கி. பி 100 - 300) திருமாலை மாயோன் என்ற பெயரில் வழிபட்டமையை முன்னர்க்கண்டோம். சங்கமருவிய காலத்தின் ( கி. பி. 300 - 600) இறுதிப் பகுதியில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவாழ்வார்கள் தோன்றித் திருமால்மீது அந்தாதியாகிய பிரபந்தம் பாடி அவன் மீது பத்தி கொள்ளத் தமிழ்மக்களைத் துர ண் டி விட் டனர். இத்தூண்டுதலின் உச்ச கட்ட த் தினை நாம் பல்லவர் காலத்திலே ( கி. பி 600 - 900) தெளிவாகக் காண் கி ன் ருே ம். பெரி யாழ் வார், ஆண்டாள், குலசேகராழ்வார், தொண் டரடிப்பொடியாழ்வார், திருமங்கை யாழ்வார், திருமழிசையாழ்வார், நம் மாழ்வார், திருப்பாணுழிவார், மதுரகவி யாழ்வார் ஆகிய ஒன்பதின்மர் தோன்றித் தமது பத்திப்பாசுரங்களின் உணர்ச்சிப் பிரவாகத்திலே தமிழ்நாட்டின் வைணவ மக்களைத் திளைக்கவைத்தனர். சைவசமய குரவர்கள் போலவே பரசமய கண்டனம் வாயிலாகவும், ஆலயவழிபாடு, அடியார் வழிபாடு வாயிலாகவும் வைணவபத்தி

நெறியைப் பத்தி இயக்கமாக வளர்த்தனர்; தமிழுக்கு வளத்தையும் தமிழிசைக்கு வனப்பையும், தமிழ்க் கலைகளுக்கு உயிரையும் ஊட்டினர். தமிழின் பத்தி இலக்கியத்திற்கு ஆழ்வார்களின் பங்களிப்பு, சமானியமானதன்று. நம்பியாண்டார்நம்பி தேவார திருவாசகங்கள் முதலியவற்றைத் திருமுறைகளாகத் தொகுத்துத் தந்தது போல, நாதமுனிகள் என்ற வைணவப் Gourfu unrri ஆழ்வார்களின் பாசுரங்களை * நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ' என்ற பெயரில் தொகுத்துத் தந்துள்ளார்.
விசிட்டாத்துவித தத்துவத்தை உரு வாக்கிய பூரீராமானுஜர், வடநாடு சென்று தம் தத்துவத்தோடு பத்தி நெறியையும் அங்குப் பரப்பித் தம் வழியிலே ஒரு பாகவத பரம்பரையினை உருவாக்கிய காலத்தி லிருந்து, வடநாட்டிலே பத்தி இயக்கம் வீறு கொண்டு எழுவதாயிற்று. இராமாநந்தர், கபீர்தாசர், சைதன்னியர், ஜெயதேவர், துளசிதாசர், துக்காராம், மீராபாய் முத லான பரம பாகவதர்கள் வட நாட்டின் பல பகுதிகளிலும் தோன்றிச் சமஸ்கிருதத் திலும், தமது தாய் மொ ழி களி லும் விட்டுணுமீது பத்திப்பாடல்களைப் பெருந் தொகையாய் இயற்றியும் பத்தி மார்க் கத்தை ம க் களி  ைடயே தமது தூய அன்பு வாழ்க்கை முறையினல் பரப்பியும் பெரும்பணி புரிந்தனர். இதனை விபுலாநந்த அடிகள் * தென்னுட்டில் ஊற்றெடுத்த அன்புப்பெருக்கு வடநாட்டிற் பரவிய வரன் முறை என்ற தமது கட்டு ரை யிலே மிக விரிவாக விளக்கியுள்ளார். வடநாட்டுப் பத்தி இயக்கத்தைப் பாகவத இயக்கம் எனவும் இவ்வியக்கத்தின் முன்னணியில் நின்றேரின் பாடல்களைப் பாகவத இலக் கியம் எனவும் அழைப்பது மரபு.
இவ்வாறு பழைமையும், தத்துவச் செழுமையும், பத்திப் பிரவாகமும் கவர்ச்சி யும் பொருந்தி இந்து சமயத்தின் உயிர்த் துடிப்பு வாய்ந்த கூறு களு ஸ் ஒன்முக வைணவம் நிலைத்து வாழ்கின்றது.
29

Page 44
ஆதார 1. SANKARA AND SHAN MATA - 2. இந்திய தத்துவ ஞானம் - (முதற்பதிப்
3. இலக்கியக் கட்டுரைகள் - 1973 (கல்வி
விபுலாநந்த அடிகள்.
4. பரிபாடல் சொற்பொழிவுகள் - Rer
கழகம், சென்னை.
5. திரு அருள் மொழி - 1969 பூரீராமகிரு 6. The vedanta Kesari — 1961 Sri Ra
7. புகழ் மணக்கும் வைணவத் தலங்கள்,
கேஷன்ஸ், சென்னை.
8. ஆழ்கடலான் - சிங்கை ஆழியான் - 1
O-C
கீதைப் பேருரைகளிலிருந்து.
கர்மயோகியின் காரியத்தினுல் இன் சமூகத்திற்கு அது ஒர் எடுத்துக்காட்டாக மோசடியும் நீங்க உதவுகிறது. ஞானி எதுவு பார்த்து பிறரும் கைகட்டிச் சும்மாவிருக்கத் இதனல் வேஷமும் ஆடம்பரமும் வளரும். எல்லோரும் மாலை வழிபாடு செய்யப் ே குதிரைகளை அவிழ்த்துவிட்டு, அவைகளுக்கு உடலைத் தேய்த்து, உடலிலுள்ள உண்ணிகை உலகிற்கு காட்டும் வழி இது.
கர்மயோகி தன் காரியத்தைப் பிற காரியமே அவனது கடவுள் வழிபாடும் பூஜை குதிரைகளுக்கு உடம்பைத் தேய்த்துவிட்டுத் எச்சில் இலைகளை அள்ளுகிறர் காட்டில் மி இக்கடவுளைப் பின்பற்றி ஒருவர் தோட்டே பவராகவும், ஒருவர் வியாபாரியாகவும், ஒரு யாகவும் காரியம் செய்துகொண்டே முக்தி
30

நூல்கள் 96.9 M. L. J. Press, Private Ltd, Madras.
பு) 1960 கி. லக்ஷமணன் M. A.
வெளியீட்டுத் திணைக் கள رف உயர்திரு.
rint 1981, சைவ சித்தாந்த நூற்பதிபுக்
ஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை.
makrishna Math, Mylapore, Madras.
புலவர் சி. முத்துப்பிள்ளை, பைலட் பப்ளிக்
983, சுன்னகம், வேலழகன் வெளியீடு.
D-O
னும் ஒரு சிறந்த பயனும் விளைகிறது.
அமைகிறது. சமூகத்திலிருந்து டம்பமும் ம் செய்யாது உட்கார்ந்துவிட்டால் அவனைப் 3 தொடங்குவர். இத்தகைய நிலை கொடிது. மகாபாரத யுத்தத்தில் பொழுது சாய்ந்ததும். பாய்விடவும், கிருஷ்ணபகவான் ரதத்தின் தத் தண்ணீர் காட்டி, கொள்ளு வைத்து, ள அகற்றுகிறன். கர்மயோகியாம் கண்ணன்
ரைவிடச் சிறப்பாகச் செய்வான். ஏனெனில், நியமங்களுமாகும். கர்மயோகிகளின் கடவுள்;
தீனி வைக்கிருர். ராஜசூய யாகத்தில் டு மேய்க்கப் போகிருர் கர்மயோகியாம் வலை செய்பவராகவும், ஒருவர் நெல் குற்று வர் நாவிதராக்வும், இன்னெருவர் சக்கிலி' பெற்றிருக்கிருர்கள்.

Page 45
பெளத்த மதம்
4.
கி. மு. 6 ஆம் நூ ற் ரு ண் டு உலக வரலாற்றில் கால சா ரத் துறையில் ஒருவித விழிப்புணர்ச்சி அலை மோதிய காலமாக அமைகின்றது. கிரேக் கத்தில் சோக்கிரற்றீசும், சீனவில் கொன் பியூசசும், இந்தியாவில் மகாவீரர், புத்தர் போன்ற மகான்களும் தோன்றி அன்றைய சமூகத்தில் புதிய சிந்தனைச் சுடர்களைப் பரப்பினர். இந்தியாவில் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் (கி. மு 566 இல்) தோன்றிய புத்தரின் போதனைகள் அன்றைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி இன்றைய காலகட்டத்திற்கும். மிகமிகப் பொருத்தமான ெதான்ருகவே காணப்படு கின்றது எனலாம். புத்தர் இந்துக் குடும் பத்தில் பிறந்து, இராசபோகங்கள் பல வற்றை அநுபவிக்கும் வாய்ப்பும் பெற்ற வர். அத்துடன் அக்கால சமூகத்தில் பிரா மணர் ஆதிக்கம் தலைதூக்கிய காலகட் டத்தில் புத்தரின் வகுப்பினராகிய சத்தி ரியர், தமது ஆதிக்கத்தை அரசியல், பொரு ளாதார, கலாசாரத் துறைகளில் முன் 1ணிலைப் படுத்திச் செயற்பட்ட காலம்கூட. இந்து மதமோவெனில் பல் வகைஊழல்கள் மத்தியிலே தத்தளித்த காலமாகவும் புத்தர் காலம் விளங்கியது. பிராமண குலத்த வரால் முன் னிலை ப் படுத்தப்பட்ட இம் மதத்தில் ஆண்டவனின் அநுக்கிர கத்தை அடைவதற்குக் காட்டப்பட்ட மார்க்கம், செலவுகள் நிறைந்த கிரியை களும், சடங்குகளும், வேள் விகளும் நிறைந்த ஒன்ருகத் திகழ்ந்தது. இதனல் மக்கள் மத்தியில், மக்களுக்கு நிலையான நிம்மதியைத் தருவதற்கு உருவாகிய மதம், ஒரு சுமையான பொருளாக, தெளிவான சிந்தனைன்யக் கொடாத ஒன்
ருகத் திகழ்ந்தது. இதனல் திசை தெரி யாது சென்று கொண்டிருத்த இந்து

கலாநிதி. சி. க. சிற்றம்பலம் தலைவர் - வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
மதத்தில் காணப்பட்ட ஒழுங்கீனங்களைக் களையும் அதே நேரத்தில் செலவீனமற்ற ஒரு ஒழுக்க நெறியை மக்கள் முன்வைக்க வேண்டுமென்ற தேவையும் அக்காலத்தி லிருந்தது. இதனுல் புத்த மதத்தைச் சமயம் என்று கூறுவதற்குப் பதிலாக, ஒழுக்கத்தைப் போதிக்கும் ஒரு வாழ்க்கை நெறி என்று கூடக் கூறிவிடலாம். இம் மதபோதனைகளைப் புத்தர் தான் போதித் தாலும் கூட, இகவாழ்க்கையில் நன்ருக வாழும் முறைகளை அவர், தான் பெற்ற அநுபவ வாயிலாக எடுத்துச் சொன்னரே தவிர, பரத்தைப் பற்றிய சிந்தனையில் மக்களை நாட்டம் கொள்ளும்படி தூண்ட வில்லை. அவரின் நெறியில் தனி ஒரு வனின் கையில் தான் அவனது முன்னேற் றமும் தாழ்வும் உண்டு என்பதும், அவன் தலைவிதியை இன் னெ ரு வர் நிர்ணயிக்க இயலாது என்பதும், தனி ஒருவனின் மனதில் ஏற்படும் மாற்றம் காலக்கிரமத்தில் முழுச் சமுதாயத்தையுமே மாற்றிச் சீர்படுத்திவிடும் என்பதும் விர விக்காணப்படுகின்றன.
இதனல் தனிமனிதனின் வாழ்க்கை பற்றி, தான் த வ க் கோ லம் கொண்ட நாளிலிருந்து அலசி ஆராய்ந்தார். மனிதன் வாழும் உலகிற்கு மூன்று இலக்கணங்களைக் கொடுத்தார். உலகு துன்பம் நிறைந்தது, நிலையில்லாதது, உயிரில்லாதது என் பனவே இவர் கொடுத்த விளக்கங்களாகும். இவற்றைச் சரியாக விளங்கிக் கொள்ள நான்குவகை உண்மைகளையும், எட்டுவித வழிவகைகளையும் எடுத்தியம்பினர். இந் நான்கு வகை உண்மைகளாவன: உலகம் துன்பமயமானது; இத் துன் பத்தி ற் கான காரணத்தைக் கண்டறிதல் அவசிய மாகின்றது பின் ன ர் துன்பத்தை
3.

Page 46
அறுத்தெறிவதற்கு பாடுபடுதலும் அவசிய மாகின்றது. இறுதியாகத் துன்பத்தை அறுப் பதற்கான ஒரு சீரிய வழியைக் கண்டு பிடித்தலாகும். இவைதான் பெளத்தம் போதிக்கும் நான்கு பேருண்மைகளாகும்.
இந்நான்கு பேருண்மைகளைக் கூறிய புத்தர் துன்பத்தை அறுப்பதற்கான சீரிய வழியை சிற்றின்ப அநுபவத்தை நாடு வதனலோ அன்றித் தன்னைத்தானே வருத் திக் கொள்வதினலோ அடைய முடியா தெனக் கூறி இவை இரண்டுக்கும் நடுவழி யாக அமைந்துள்ள எண்வகை மார்க்கங் களின் மூலமே அடையலாமெனவும் கூறி னர். இதனுல் புத்தர் போதனைகளை நடு வழிப்போதனைகள் (Middle Path) 6Tairgy பெயர் பெற்றன. புத்தர் காட்டிய எண் வகை மார்க்கங்களாவன: நல்ல நோக்கம், நல்ல ஆசை, உண்மைபேசுதல்,நல்நடத்தை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கவனம் நற்சிந்தனை ஆகியவையாகும். இதனற் பொதுவாக மக்கள் வாழ்க்கையில் இயல் பாகக் காணப்படும் துன்பத்தை அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள அவாவை அறுப்பதின் மூலம் வெற்றிபெற்று ஒழுக் கத்தின் வழுவாத நல்வாழ்க்கையை நடாத் துவதன் மூலம் ஒருவன் வீடு பேற்றை (நிர் வாணத்தை) அடையலாம் என்ருர். இந்து மதத்தில் காணப்படும் கர்மம், மறுபிறப்பு ஊழ்வினை, பாவ புண்ணியம் போன்ற கருத் துக்களும் பெளத்தத்தில் உண்டு. இச் சந்தர்ப்பத்தில் புத்தர் பிறந்து, ஞானம் பெற்று வீடு பேறடைந்த தினமாகிய "வெசாக்** தினம் இந்துக்களுக்குப் புனித மான நாளாகிய வைகாசி விசாகத்தில் வருவதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. விசா கத்தில் தான் ஸ்கந்தன் உதயம் பெற்றன். புத்தர் கூட விஷ்ணுவினது பத்து அவதா ரங்களில் ஒன்ருக இந்துக்களால் மதிக்கப் படுகின்ருர் .
புத்தர் காட்டிய வழி சமூகத்தில் எல்லா மட்டத்தினரின் மனப்பக்குவநிலைக் கேற்ற விதத்தில் அமைந்திருந்தமை இதன் மற்ருெரு சிறப்பமிசம் ஆகும். சாதாரண இல்லறத்தாருக்கும், இவ் இல்லறத்தாரில்
32

சற்று உயர்நிலையில் முதிர் ச் சி பெற் ருேருக்கும் துறவிகளுக்குமென இப்போ தனைகள் கோடிட்டுக் காட்டப்பட்டன. சாதாரணமாக இல் ல றத் தா ர் பஞ்ச சீலங்களை அல்லது ஐந்து ஒழுக்கங்களை அநுசரித்தாற் போதும். அவையாவன: எவ்வுயிர்க்கும் தீ  ைம செய்யாதிருத்தல், களவு செயலைத் தவிர்த்தல், கற்புவழிநின்று சிற்றின்பத்தைத் துய்த்தல், உண்மை பேசுதல், மதுபானத்தை விலக்கல். இல்லறத் தாரில் முதிர்ச்சி பெற்றேர் தமது முதிர்ச்சிக் கேற்ப மேற்கூறிய ஐவகை ஒழுக்கங்களோடு மேலும் மூன்றைச் சேர்த்து "அஷ்டசீலம், அல்லது எட்டு ஒழுக்க நெறிகளைக் கடைப் பிடிக்கும் வண்ணம் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இம் மூன்று மேலதிக ஒழுக்கங்க ளாவன: இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணுதல், பூ, சந்தனம்போன்ற வாசனைப் பொருள் களை நுகர்தலைத் தவிர்த்தல், பஞ்சணை போன்ற வசதிக%ள நீக்கித் தரையில் பா யில் துயிலல் என் பனவாம். இவற்றேடுதுறவிகளுக்கு மேலும் இரண்டு சீலங்களைச் சேர்த்து தசசீலம் என்னும் பத்து ஒழுக்கங்களை அறிவுறுத்தி யுள்ளார். அவையிரண்டும் துறவிகள் இசை நாடகம் போன்ற ஐம்புலன்களுக்கு மகிழ் வைத்தரும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல், பொன், வெள்ளி நாணயங்களைத் தொடா திருத்தல் என்பனவாகும். பிக்குவானவர் தசசீலங்களின் வழி ஒழுகும்போது ஆசையை அறுத்து உலகியலை வெறுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட் டு கி ன் றது. இத்தகைய வாய்ப்பு அவரைச் சமாதிநிலைக்கு இட்டுச் செல்லும். இச் சமா தி நிலையிற் கூட நிரந் தரமாக மேற்கூறிய ஆசைகள் அகலா, நிரந்தரமாக மேற்கூறிய ஆசைகள் அகன்ற பேரின்ப நிலை, ஞானநிலையிற்ருன் கிட்டும்.
பெளத்தத்தின் அச்சாணியாக மும் மணிகள் திகழ்கின்றன, அவை யாவன புத்தபிரான், அவர் போதித்த அற நெறி, சங்கம் எ ன் ப ைவ ய |ா கும். புத்தரின் போதனைகளைத் தமது அன்ருட வாழ்க்கையிற் சாதனைகளாக்கும் பணி இம்மதக் குருமார்களாகிய பிக்குகளிடம் தான் விடப்பட்டது. ஒரு வருடத்தில்

Page 47
எட்டுமாதங்களுக்கு நிரந்தரமாக ஓரி டத்தில் தங்காது மக்களைத் தேடி அறப் போதனைகளைப் போதித்து, எஞ்சிய நான்கு மாதங்களில் அஃதாவது மழைக்காலத் திற்ருன் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்கி தர்மம் பற்றி ஆராயவும், தமது சரி பிழைகளை அலசவும் இவர்கள் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மிகவும் எளிமையான வாழ்வே இவர்களது இலட்சியமாகும். உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறங்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமன்றி ஏனையவற்றுள்ளும் எளிமையாக வாழ்ந்து உயர்ந்த சீலங்களைக் கடைப்பிடிக்குமாறு இவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெண் களும் பெளத்த சங்கத்தில் இடம் பெற் றுள்ளனர். இவர்கள் வாழ்வதற்கெனத் தனியான வசிப்பிடங்களும் உண்டு.
சாதாரணமாகப் பெளத்தர்கள் தமது ஆன்ம ஈடேற்றத்திற்காக மேற்கூறிய மும் மணிகளை இறுகப் பிடித்தல் அவசியமா கின்றது. இவற்றைச் சிக்கெனப் பிடித்து, பஞ்ச சீலங்களின் வழி ஒழுகுதலும் அவசிய மாகின்றது. பெளத்தம் ஒருவன் பிறப்பால் அன்றி ஒழுக்கத்தாலே உயர்ந்தவன்
ஆகின்றன் எனப் போதிக்கின்றது. இதனல் சாதியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற கோட்பாட்டுக்கே பெளத்தத்தில் இ ட மில்லாவிட்டாலும் கூட, நிஜவாழ்வில் பெளத்தர்களால் மட்டுமன்றி, பெளத்த சங்கத்தினரால் இந்நெறி கடைப்பிடிக்கப் படுகின்றதா என்பது கேள்விக்குரிய விடயமாக விளங்குகின்றது. சாதிப்பாகு பாட்டைக் கண்டித்த புத்தர், தாம் ஏற்படுத்திய அமைப்பில் அதனைப் புக அனுமதிக்காவிட்டாலும் கூட சா தி க் கெதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இவ்வாறேதான் மிருகபலி, வேள்வி ஆகியனவற்றையும் கண்டித்தார். இதனல் தலைசிறந்த அகிம்சாமூர்த்தி யாகப் புத்தர் விளங்குகின்ருர் என்ருல் அது பிழையாகாது. எவ்வாரு யினும் இன்றைய உலகில் புத்த மதம் செல்வாக் குடன் விளங்கும் ஈழம் தென் கிழக்காகிய நாடுகளில் இரத்தக்களரி நடைபெறுவதை நோக்கும் போது புத்தரின் கருத்துக்கள்
- 5

ஏட்டளவில் மட்டும்தான் இந்நாடுகளில் காணப்படுகின்றன எனவும், உண்மையிலே மக்கள் மனதை மாற்றவில்லை என்றும். எண்ணத் தூண்டுகின்றது. சுருங்க க் கூறின் மன்னுயிரெல்லாம் த ன் னு யிர் போல மதிக்கும் ஒர் ஒழுக்க நெறியே பெளத்த மதமெனலாம்.
பெளத்தம் இந்தியாவில் தோன்றி ணு,லும் இன்று அது உலக மதங்களில் ஒன்ருகிவிட்டது. ஆனல் அதே இந்தி யாவில் இன்று பெளத்தம் வீழ்ச்சி அடைந்து விட்டது. புத்தர் தமது எண்பதாவது வயதில் வீடு பே ரு கிய பரிநிர்வாணத்தை அடைந்தார். இருபத் தொன்பது வயதிலே துறவு பூண்ட இவர் ஆறு ஆண்டுகள் மேற்கொண்ட கடுந் தவத்தினுல், புத்தகயாவில் அரச மரத் தடியில் ஞான ஒளியைப் பெற்ருர், புத்தர் என்ருல் ஞான ஒளியைப் பெற்றவர் எனப் பொருள்படும். இவரின் இயற்பெயர் சித் தார்த்தர் என்பதாகும். ததாதர் என் பதும் இவருக்களிக்கப்பட்ட இன்னெரு. பெயராகும். இதுவும் உண்மையை அறிந் தவர் எனப் பொருள் தந்து நிற்கின்றது. இவரது இன்னெரு பெயராகிய சாக்தர் என்பது சகலகலாவல்லுநர் எனப்பொருள் தருகின்றது. எவ்வாரு யினும் 45 ஆண்டுகள் மக்கள் மத்தியிலே புத்தர் தமது போதனைகளைப் பரப்பினர். இவரது முதற் போதனை இவரது ஐந்து சகாக் களுக்குக் காசிக்கு அருகிலுள்ள சர்ணுத்தில் மான் பூங்காவினுள் அருளப்பட்டது. இது தான் தர்ம சாஸ்திர பரிவர்தன சூத்த மாகும்.
புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததும், அக்காலத்தில் வட இந்தியாவின் தலைநகர மாகிய ராஜகிருகத்தில் மகா கபிசப்ப என்ற குருவானவர் தலைமையில் 500 பெளத்த குருமார் கூடினர். இதுதான் பெளத்த மதத்தின் முதற் சங்கமாகும். இதில் பெளத்த போதனைகள் இரு பிரி வாகப் பிரிக்கப்பட்டன. ஒன்று தர்ம போதனைகள், மற்றது விநய போதனைகள் அல்லது வாழ்வில் அனுஷ்டிக்க வேண்டிய
33.

Page 48
நெறிவகைகள். இக்குருமாரே தேரவாதிகள் என அழைக்கப்பட்டனர். தேரவாதிகள் என்ருல் முதிய பிக்குகளால் அளிக்கப் பட்டவை எனப் பொருள்படும். பிற் காலத்தில் மகாயானம் என்ற பிரிவும் பெளத்தத்தில் தோன்றியது. இச் சங் கத்தின் பின்னர், சமயத்தில் ஏற்பட்ட சலசலப்புக்களைக் களைய இரண்டாவது பெளத்த சங்கம் இந்தியாவில் வைசா லியில் சில நூற்ருண்டுகளின் பின்னர் தடைபெற்றது. மூ ன் ரு வது சங்கம் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் பாடலி புத்திரத்தில் கூடியது. இச்சங்கமே இத் தியாவின் ஏனைய பகுதிகளுக்கு மட்டு மின்றி வெளி உலகுக்கும் பெளத்தத்தைப் பர்ப்பும் முயற்சிகளை மேற்கொண்டது. பெளத்தம் இத்தியாவில் இன்று அழித் தாலும் கூட இந்நாடுகளில் அது வாழ்த்து கொண்டிருக்கின்றது.
ஈழத்தில் தேவனம்பிய தீசன் காலத்திற் பெளத்தம் கால் வைத்தது. அப்போது இங்கு நிலவிய மதம் இந்து மதமே. பெளத்தம் இந்து மதத்தை அழிக்கவில்லை. மாருக இந்து அனுஷ்டானங்களைத் தன்னு, டன் இணைத்தது. இதற்கு ஒருசில உதார ணங்களைக் கூறலாம்.
பெளத்தர்கள் கடவுளில் நம்பிக்கை அற்றவர்கள். எனினும் சாதாரணமாகச் சிங்கள மக்கள் இந்துக் கடவுளரை வழிபடு கின்றதோடு பெளத்த ஆலயங்களிலும் அவற்றின் வழிபா ட் டை அங்கீகரித் துள்ளனர். புதுவருடப்பிறப்பு இந்துக் களுக்கும், பெளத்தர்களுக்கும் பொதுவான நாளாகும். இவ்வாறே தான் கண்டியில் தன்டப்ெறும் ஈழத்துப் பெளத்தர்களது தேசீய விழாவான கண்டிப் பெரகரா கூட, முன்பொருகால் இந்துக்களின் விழாவா கவே இருந்தது. கீர்த்தி பரீ இராஜசிங்கன் காலத்திற்ருன் ( கி.பி 1747 - 1780) இவ் இந்து விழாவிற் பெளத்த சின் னம் உலாவுக்கு வந்தது. காலகதியில் இது பெளத்தரின் பெருவிழாவாகவே மாறியது. எனினும் பெளத்த தந்தம் விழாவிற் கலக்க முன்னர் இவ் விழாவில் விஷ்ணு,
4 -

ஸ்கந்தன், நாதன் (சிவன்) பத்தினி (அம்பிகை) ஆகிய தெய்வங்களே முக்கிய பங்கெடுத்தனர். இன்று இவ்விழாவில் இவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண் டாலும் கூட முக்கியத்துவம் தந்த தாது விற்கே அளிக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சி ஒன்றே, எவ்வாறு பூர்வீக இந்துக்கள் பெளத்தர்களாக மாறினர் என்பதை எடுத்தியம்புவதோடு, பெளத்தம் இம் மாற்றம் பெற்ற பின்னர் படிப்படியாகத் தனது செல்வாக்கை இந்து மதமீது திணித்ததையும் எடுத்துக் காட்டுகின்றது. பெரகரா என்பது "வீதிஉலா' என்ப தனேயே குறித்து நிற்கின்றது.
பெளத்தமதம் இன்று சர்வதேச மத மாகி விட்டது. எனவே இது ஒரு மொழி மட்டும் பேசுவோர்க்குரிய மதமன்று. சிங்கள மக்களைப் போல் தமிழ் மக்களும் ஒரு கால் பெளத்தர்களாக இருந்ததற் கான சான்றுகள் உள. தமிழகத்தில் நாயன் மார்களும், ஆழ்வார்களும் ஏற்படுத்திய பக்தி இயக்கம் தான் அங்கு பெளத்தத்தை நிலை கொள்ளாது தடுத்தது. தமிழ்நாட்டில் பெளத் தம் நிலைபெற்றிருந்ததற்கான இலக்கிய, கல்வெட்டு, கட்டிடச்சான்றுகள்
6. மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி, நீலகேசி போன்ற நூல்களில் பெளத்த கோட்பாடுகள் பேசப்படுகின்றன. தமிழகத்தின் மிகப்பழைய கல்வெட்டுக்க ளான பிராமிக்கல்வெட்டுக்களில் பெளத்தம் பற்றிய குறிப்புண்டு. தமிழ் நாட்டிலுள்ள காஞ்சி புர ம், காவேரிப்பூம்பட்டினம், நாகபட்டினம் ஆகியவற்றில் பெளத்த வழி பாடுகள் உள. ஈழத்துப் பெளத்த குருமார் இவ்விடங்களோடு கொண் டி ருந்த தொடர்பினை மகாவம்சம் உரைக்கின்றது.
ஈழத்திலுள்ள மிகப் பழைய கல் வெட்டுக்களானபிராமிக் கல்வெட்டுக்களி லும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பெளத் தர்களாக வாழ்ந்ததற்கான தடயங்கள் உள. இங்கு ஆட்சி செய்த தமிழ் மன்னர் களிற் சிலர் பெளத்தர்களாக விளங்கியதை சூளவம்சம் கூறுகின்றது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் அநுராதபுரத்தில்

Page 49
மட்டுமன்றி கதிர்காமத்திலும் உள. இவர் களில் ஒருவர் - புத்ததாஸ் - புத்தரின் அடிமை எனவும் தம்மை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காலம் கி.பி 5 ஆம் நூற்ருண்டாகும்.
ஈழத்தில் இற்றை வரை நூற்றைம் பதிற்குமதிகமான தமிழ்க் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவை தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலும் பிறமாவட் டங்களிலும் உள்ளன. இக் கல் வெட்டுக் களில் கணிசமானவை திருக்கோணமலை மாவட்டத்திலுள்ளவை. இங்கே சோழர் காலத்தில் 'இராஜராஜ பெரும் பள்ளி' என்ற பெளத்த விகாரை சோழ மன்னர் களால் போஷிக்கப்பட்டதை இக் கல் வெட்டுக்கள் உணர்த்துகின்றன. அதுமட்டு மின்றி திரி யாயில் சோழ தமிழ் இராணுவப் பிரிவாகிய வேளைக்காரப் படையினரின் தலைவனகிய கணபதியால் பெளத்த விகாரை போஷிக்கப்பட்டதற் கான கல்வெட்டுச் சான்றுமுள.சோழரின் பின் பொலநறுவையில் ஆட்சி செய்த முதலாவது விஜயபாகு காலத்தில் பெளத் தர்களின் புனித ப் பொருளாகிய தந்த தாதுவைப் பாது காக் கும் பணி சோழ இராணுப் பிரிவாகிய வேளைகாரப் படை யிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
-(
*காஞ்சிமாநகர் பெளத்தப் பேரற பெற்றிருந்தது என்பதில் ஐயமில்லை. உல்க தியான பெளத்தம் காஞ்சிநகர் கண்டதே பேரும் புகழும் பெற்று விளங்குவதான ( அந்த நாடுகளில் இதை நிலைநாட்டியவர் காஞ்சியரசரின் பிள்ளைகளில் ஒருவரான வில் மேலும் வளர்த்தவர், நரசிங்க வன்ம்ட இவர் பெயர் வச்சிர போதி (166 --7ت தலைவராக விளங்கினர்".

அநுராதபுரத்திலுள்ள கி.பி 8ஆம் 9 ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு வ ர லா ற் று முக்கியத்துவம் வாய்ந்தது. இக் கல்வெட்டில் “நான்கு நாட்டார்" எனப்பட்ட தமிழ் வணிகர் அமைத்த பெளத்த பள்ளியாகிய மாக்கோதைப் பள்ளி குறிப்பிடப்படு கின்றது. ஈழத்திற் கிடைத்த மிகப்பழைய கல்வெட்டாக இது இருப்பதோடு, இப் பழைய கல்வெட்டுக்கூட வெண்பாவில் அமைந்திருந்ததால் அப்பா வை க் குறிப் பிடுவது அவசியமாகின்றது: அஃதாவது.
போதி நிழலமர்ந்த புண்ணியன்போ
லெவ்வுயிர்க்குந் தீதில் அருள்சுரக்குஞ் சிந்தையான்-ஆதி வருதன்மம் குன்ருத மாதவன் மாக்கோகை, ஒருதர்ம பால னுளன்
இதுவரை கூறியவற்ருற் பெளத்த பாரம்பரியம் சிங்கள மக்களின் பாரம் பரியம் மட்டுமன்று என்பது புலனுகின்றது அல்லவா? இதனல் வட கிழக்கு மாகாணங் களிலே தமிழரின் பாரம்பரிய பிரதேசத்தில் காணப்படும் பெளத்த வழிபாடுகளைச் சிங்கள மக்களின் வழிபாடுகள் எனச்சிலர் கூறுவது விதண்டாவாதம் ஆகும்.
Ο
நிஞர்களது அறிவுக் களஞ்சியமாகப் பேர் ம் போற்றும் சென் பெளத்தம் அல்லது யாம். சீனுவிலும் அதனைவிட ஜப்பானிலும் இது, பெளத்தமதப் பெரும் பிரிவேயாம், அங்குக் கி.பி. 6 ஆம் நூற்ருண்டில் சென்ற போதி தருமராவர். இந்த மதத்தினைச் சீன ல்லவன் காலத்தவரான மற்ருெரு தமிழர். 0) இவரும் காஞ்சியில் பெளத்தர்களின்
- தெ. பொ. மீ.

Page 50
கத்தோலிக்க மதம்
-sis
கிறீஸ்து - இறைமக்கள்
கத்தோலிக்கம் எனில் பொதுவான, எல்லா இனத்தவருக்கும் உரிய எனப் பொருள்படும். இறைவனல் எல்லோருக்கும் உரியதாக உண்டாக்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் வரலாற்றை முதலில் நோக்கு வோம்.
உலக உருவாக்கம்
இயற்கை அழகு நிறைந்த இந்த இனிய உலகை இறைவன் தமது வல்லமையால் உண்டாக்கினர். பின்தம் உருவில் மனிதனை உருவாக்கினர். தம் சொந்த வாழ்வை அவனுக்கு அளித்தார். இறைவனுக்கே உரிய அறிவு, சுதந்திரம், முடிவில்லாவாழ்வு ஆகிய வல்லமைகளையும் தந்தார். தாம் அவனது தந்தையாகவும், அவன் தனது மகனுகவும் என்றும் உரையாடி, உறவாடி இன்புற்றிருப்பது இ ைற வனின் அன்புத் திட்டம்.
மனிதனின் வீழ்ச்சி
உலகம் என்ற அந்த இன்பப்பூங்காவில் ஆடிப்பாடி, அகமகிழ்ந்து, தந்தையாம் இறைவன் வழிச்செல்ல வேண்டிய மனிதன் *ந்தோ! தன் சுதந்திரத்தை தவருன வழிச்செலுத்தினன். ஆறறிவை அறவழியி லிருந்து மாற்றினன். அருள் வாழ்விலிருந்து விலகிச்சென்றன். பாவத்தால் தத்தை மகன் உறவு பிரிந்தது. ம னி த ன் இறை பின்பத்தின் உரிமை யை இழந்தான். இறைவனின் அன்புத்திட்டத்தைப் புறக்க ணித்ததால் மனிதன் துன்பம், வேதனை மரணத்துக்கு அடிமையானுன். மோட்ச பேரின்பத்தையும் இழந்தான்.
6

திரு. சாமுவேல் பெனடிக்ற் ஆசிரியர் s
இறைவனின் இரக்கம்
தன்னிடமிருந்து விலகிச்சென்ற மனி கனத் தள்ளி விடுவதைத் தந்தையாம் இறைவன் விரும்பவில்லை. இரக்கத்துடன் அவரை நோ க் கிஞர். அவனது அவல நிலையை அனுதாபத்துடன் சிந்தித்தார். அவனை மீண்டும் தம்வழியில், அறவழியில் அழைத்து வருவதே அவரது மீட்புத் திட்டம்.
மனிதன் வளர்த்தான். அவனது குலம் பல்கிப்பெருகியது. அவனது சுதந்திரமும் *றிவும், அளவுக்கு அதிகமாகத் தொழி லாற்றத் தொடங்கின. அவற்ருல் பெரு மிதம் கொண்ட மனி தன் தன்விருப்பம் போல் இயங்கினன். பாவம் வளர்ந்தது, அக்கிரமங்கள் அதிகரித்தன. அவற்றுக் குரிய தண்டனைகளும் தொடர்ந்தன.
அடிமை அகற்றுதல்
பாவத்துக்கு அடிமையான மனிதனை இறைவனின் நிறையன்பு தொடர்ந்தது. மக்களிலிருந்து தெரிந்தெடுத்த தலைவர் களினல் (குல முது வர் கள்) இறைவன் அவர்களை நடத்தினர். (உ+ம் (நோவா. ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு) . எகிப்து தாட்டின் அடிமைத் தனையிலிருந்து விடுதலை வீரன் மோயீசன் மூலம் தம் மக்களை விடு வித்தார்.
வல்லபமிக்க கடவுள் மனிதனேடு சீனய் மலையில் செய்த உடன்படிக்கையில் தந்தை மகன் உறவை மீண்டும் வலியுறுத்தினர். மனிதகுலம் இறை வழியில் வாழ வழி வகுத்துப் பத்துக்கட்டளைகளும் தந்தார். இக்கட்டளைகளுள் முதல் மூன்றும் இறை வனுடன் மனிதன் கொள்ளும் தெய்வீக உறவும் வழிபாடும் பற்றியவை. ஏனைய கட்டளைகள் ஏழும், மனிதன் மனிதனுடன்

Page 51
கொள்ளவேண்டிய அன்பும், உறவும் பண்பும் ஆகும்.
இறைவனின் அன்  ைப மனிதகுலம் மதிக்கவில்லை. அழிவுப்பாதையில் சென்ற, மனிதனை இறைவனும் வெறுத்தொதுக்க வில்லை. அரசர்கள், நீதிபதிகள், இறைவாக் கினர்களை மக்களிடையே தெரிந்தெடுத்து
அவர்கள் மூலம் அறியாமையால் அலைக் கழிந்த தம் மக்களுக்கு அறிவுரையும், ஆலோசனையும், ஆதரவும் வழங்க இறைவன் தவறவில்லை.
எதிர்பார்க்கப்பட்ட மீட்பர்
இறைவன் மனிதனேடு செய்த உடன் படிக்கைகளிலும், கொடுத்த வாக்குறுதி களிலும் * மீட்ப ர் ஒருவர் இறை மக்களுக்கு விடுதலை அளிக்க வருவார்* என்ற தலையாய செய்தி வற்புறுத்தப் பட்டுள்ளது. இறைமக்கள் இம்மீட்பரை (மெசியா) நீண்ட நாட்களாக ஆவலோடு நம்பிக்கையோடு எதிர் பார்த்திருந்தனர்.
"தாவீதின் மரபில் பிறக்கும் மீட்பர் ஒருவரால் இறைவனின் மீட்புத்திட்டம் செயற்படும்" என கி.மு. எ ட் டாம் நூற்ருண்டில் வாழ்ந்த ஆமோஸ், இசை யாஸ் போன்ற இறைவாக்கினர்கள் எடுத் துரைத்தனர். ‘இறைவனின் மெசியாமூலம் நீதியும், சமாதானமும், நிறைவளமும் உடைய அரசு உருவாகும்’ என நாத் தானின் இறைவாக்கு கூறுகிறது.
Af
எனினும் இறைமக்கள் மண்ணரசு பற்றிச் சிந்தித்தார்களேயன்றி மீட்பர் நிறுவவுள்ள இறையரசு பற்றிக் கருத்தில் கொள்ளவேயில்லை.
மீட்பரின் முன்னுேடி
இறுதியாக வந்த இறைவாக்கினரான அருளப்பர், பழைய புதிய உடன்படிக் கைகளை இணைப்பவராஞர். கிறிஸ்தவர் களின் திருநூலான 'பைபிள் ‘உலகம் உரு வானது முதல் இறைவாக்கினர் அருளப்பர் வரையிலான காலத்தைப் பழைய ஏற்பாடு” என அழைக்கிறது.

அருளப்பர் ஏனைய இன்றவர்க்கினரிலி ருந்து மாறு பட்டுப் பணியாற்றினர், மீட்டரான கிறீஸ்துவின் வருகையை மக்களுக்கு அறிவிப்பவராய் அவர்வழியை ஆயத்தம் செய்பவராய் விளங்கினர்
தண்ணீரால் திருமுழுக்கு அளித்த தால் ‘ஸ்நாபகர் என்றும் ‘திருமுழுக்கு அருளப்பர்’ என்றும் அழைக்கப்பட்டார்க் அவர் அதிகாரத்துடன் போதித்தார். அநீதி களைக் கண்டித்தார். புதிய சமுதாயக் கொள்கைகளை வலியுறுத்தினர்.
எனவே, அருளப்பரே எதிர் பார்க்கப் பட்ட மெசியா எனப்பலர் எண்ணினர். இது கண்டு அருளப்பர் தாழ்ச்சிமிக்கவராக “என்னைவிட வல்லவர் ஒருவர் வருகின்ருர் அவரது பாதணிகளின் வாரை அவிழ்க் கவும் தகுதியில்லாதவன் நான்' எனக்
கூறினுர்.
மனித மையம்
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்கள் இறைவனை மையமாகக் கொண்டு வாழ்ந் தனர். பழைய ஏற்பாட்டின் நிறைவாக்க மான புதிய ஏற்பாட்டிலோ மனிதனே மையப்பொருளாகின்றன். மனிதனைத்தேடி இறைவன் வருவதை இங்கு காண்கிருேம். காலத்துக்குக் கால ம் குலமு துவர்கள், அரசர்கள், இறைவாக்கினர் மூலம் மக்க ளோடு உரையாடி, உறவாடிய இறைவன் இறுதியில் தனது ஏககுமாரனைய்ே அனுப்பத் திருவுளங்கொண்டார்.
இரண்டாவது ஏவை
வரவிருக்கும் மீட் பர் siglprafprinth தாவீது குலத்திலே பிறப்பார் என எண் ணப்பட்டது. எனவே அவ்வழிவந்த பெண் மணிகள் மெசியாவின் அன்னையாகும் பேறு தங்களுக்குக் கிட்டவேண்டுமென ஏங்கித் தவித்தனர். தமது புதல்வனின் தாயாக, பாவ மாசின்றி அவதரித்த, நற்பண்புகள் நிறைந்த ஒரு குணவதியை இறைவன் தெரிந்தெடுத்தார். அக் கன்னி கையின் பெயர் மரியாள்,
导7

Page 52
முதற்பெண்ணுகும் ஏவாள், முதல் மனிதன் ஆதாமுடன் சேர்ந்து இறைவனின் திட்டத்தைப் புறக்கணித்தாள். அதனல் மனிதகுல வீழ்ச்சியை, உலகின் அடிமைத் தளையுை உருவாக்கியவள் ஆணுள்.
இரண்டாவது ஏவாளான மரியாள், இறைவனின் திட்டத்துக்கு அடிபணிந்தாள். தன் கன்னிமையையும் இறைவனுக்கே அர்ப்பணித்தாள். அதனல் உலக மீட்புக்கு வழிவகுத்தவள் ஆணுள்.
மீட்பரின் வருகை
இறைவார்த்தை கரு ஆகியது. இறை வனின் ஆவி மரியாள் மேல் நிழலிட்டது. கன்னிமரியாள் கருத்தரித்தாள். மரியா ளுக்கு விவாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சூசை செப்தியறிந்து சிந்தை நொந்தார். வானதூதரால் இறை சித்தத்தையறிந்து சிந்தை தெளிந்தார். காலம் நெருங்கியது. . கணக்கெடுப்புக்காக பெத்லகேம் சென்ற சூசையும் மரியாளும், தங்க இடமின்றி மாடடையும் குகையொன்றில் தங்கினர். அங்கு இறைவனின் திருமகன் - எதிர்பார்க் கப்பட்ட மீட்பர் - மெசியா பிறந்தார். அவரே இயேசுக்கிறீஸ்து.
பெத்லகேம் என்ற சிறுகிராமத்தில் பிறந்து, எளிமை, தாழ்மை என்ற கிறிஸ் த்வப் பண்பாடுகளைப் பகிரங்கப்படுத்திய இறை மகன், கிறீஸ்து, நசரேத் என்ற கிரா மத்தில் அதிக ம் அறியப்படாதவராக வாழ்ந்தார். முப்பதாமாண்டில் தந்தையின் இறைவனின், பணியைச் செய்ய (விடுதலைப் பணி)ப் புறப்பட்டார்.
நோன்பும் சோதனையும்
இயேசு திருமுழுக்கு அருளப்பர் கை யால் திருமுழுக்குப் (ஞானஸ் நானம் ) பெற்றர். இறைவனின் ஆவி அவர்மேல் புருவடிவில் இறங்கினர். "நீரே என் அன்பு மகன், உம்மில் நான் அகமகிழ் கிறேன்' என்ற பிதாவின் குரல் வானத்" திலிருந்து வெளிப்பட்டது. பிதா, சுதன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளின் ஐக்கியத்துவம் இங்கு வெளிப்பட்டது.
ó8

இயேசு நாற்பது நாட்கள் உண்ணு விரத நோன்பு அனுசரித்தார். சாத்தான் இப்புதியவரைச் சந்தேகத்துடன் பார்த் தான். மூவித சோதனைகளால் அவரை மதிப்பீடு செய்தான். உணவை, உலக சுகபோகங்களை, பெரும்புகழ்க் கீர்த்தியைக் காட்டி இறைமகனைத் தன்வழியில் கடத்த முயன்ருன். சோதனைகளை வென்ற கிறீஸ்து தம்விடுதலைப் பணியைத் தொடங்கினர்.
விடுதலைப் பணி
“எளியோர்க்கு நற்செய்தி சொல் லவும், சிறைப்பட்டோர் விடு த லை பெறுவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவும் அவர் என்னை அனுப்பினர்" (லூக் 4 : 18 - 19) என்ற வார்த்தைகளால் பகிரங்கப் பணியைத் தொடங்கிய கிறீஸ்து தம்பணியின் குறிக் கோளை - விடுதலையை - இங்கு சுட்டிக் காட்டுகிருர்,
கிறிஸ்துவின் ஒவ்வொரு சொல்லும் செயலும் விடுதலைக்கு வித்திடுவதிலும், இறையரசைப் பரப்புவதிலும் உறு துணையாய் விளங்கின என்பதை புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்காஸ், அருளப்பர் ஆகிய நற்செய்தி எழுத் தாளர்கள் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றனர். இவர்களுள் மத்தேயு, அருளப்பர் என்போர் குருகுலமுறையில் இயேசுவின் சீடராயிருந்தவர்கள். மாற்குவும், லூக் காவும் இயேசுவின் சீடர்களது நண்பர்கள்.
இயேசுவின் போதனைகள்
இறைவனின் த ந் தைக் குரிய அன்பையும், பராமரிப்பையும், அவர்தரும் விடுதலை வாழ்வையும் இயேசு வெளிப் படுத்தினர். பாரம்பரியங்கட்கும் பழம் பெருமைகட்கும் சாவுமனி அடித்தார். அநீதியைப் பகிரங்கமாகக் கண்டித்தார். பெரிய மனிதர்களின் அற்பத்தனங் களையும், போலிவேடங்களையும் பகிரங்கப்

Page 53
இறைவனின் அன்பை, இரக்கத்தை, இறையரசின் தன்மையை உவமைகளால் (கதைகளால்) விளக்கினுர், இறையரசு பெறுவதற்குரிய நிபந்தனைகளை மலைப் பொழிவு மூலம் நன்கு எடுத்துக்காட்டினர். கிறீஸ்தவ மதிப்பீடுகளைப் பறைசாற்றும் இயேசுவின் மலைப்பொழிவு உலகப் பேரறி ஞர்களினதும் சிந்தனையாளரினதும் பாராட்டைப்பெற்றுளது. அகிம்சாமூர்த்தி மகாத்மா காந்தியும் மலைப்பொழிவைத் தம் தியான உரையாகக் கொண்டார் என்பது தெரிந்ததே.
இயேசுவின் புதுமைகள்
இறைமகன் இயேசு க் கிறிஸ் து மக்கள்பால்கொண்ட அன்பாலும், தீயசக்தி களிலிருந்து இறைவன் இறைமக்களை விடு விக்கிருர் என்பதை அறிவுறுத்தவும், தம் தெய்வீகத்தை நிரூபிக்கவும் புதுமைகளைச் செய்தார்.
அவரது புதுமைகளை இயற்கையை வெல்லும் சக்தி, நோய்களைக் குண மாக்கும் சக்தி, மரணத்தை வெல்லும் சக்தி, சாத்தானை வெல்லும் சக்தி என நான்கு வகையாக்கலாம்.
கிறிஸ்துவின் மீட்புப்பணி - விடுதலைப் பணி அவரது புதுமைகளினல் g) கோணங்களில் அறிவிக்கப்பட்டது.
இயேசுவின் வாழ்க்கை
கிறீஸ்து ஒரு சமுதாயப் புரட்சி யாளன். சொல்லில் மட்டுமல்ல, செய லிலும் அதை நிரூபித்தார். ஏ  ைழ க ளோடும் பாட்டாளி மக்களோடும் உறவு கொண்டார். தமக்கென வாழாது கிரா மங்கள்தோறும் கால்நடையாகச் சென்று பணி செய்தார். சமூக அமைப்புகளினுல் புறக்கணிக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் அனைவரோடும் தொடர்பு கொண்டார்.
"நீதிமான்களையல்லாது பாவிகளையே தேடிவந்தேன். நோயுற்றேருக்கே மருத் துவன் தேவை" என்ற அவரது கூற்றுகள் இக்கருத்தை வலியுறுத்தின.

கடவுளின் பெயரால் மக்கள் மத்தியில் வேற்றுமைகளை வளர்த்த அமைப்பு களையும், அர்த்தமற்றதும் அன்புக்கு மாரு னதுமான சட்டங்களையும் தேவையை நோக்கி எதிர்க்கவும் மீறவும் இயேசு பின் வாங்கவில்லை.
இயேசுவின் மரணம்
இயேசுவின் புரட்சிகரமான போதனை களும் அவரது சாதனைகளும் மக்களிடையே மதிப் பும் செல்வாக்கும் பெற்றன. அவரைப் பின்தொடர்வோர் தொகை நாளுக்குநாள் அதிகரித்தது. அரசியல் வாதிகளும் ஆன்மீக அந்தஸ்தில் வாழ்ந்த வர்களும் தமது வெளிவேடம் அம்பலமாகி வருவதை உணர்ந்தனர். தக்கநடவடிக்கை எடுத்தனர்.
தேசத்துரோகியாக, மதத்துரோகி யாக, இராஜ துரோகியாக இயேசுவைக் குற்றஞ்சாட்டினர். சித் திரவ  ைத யும் சிலுவை மரணமும் தந்தனர்.
இயேசு தம்மரணத்தால் 2- ) is மீட்புக்கு விடுதலைக்கு வழிவகுத்தார். தன் நண்பனுக்காக உயிரைத்தியாகம் செய்வதே அன்புசெய்தலின் உச்சக்கட்டம் எ ன் ப ைத உலகத்தாருக்காக s) uri கொடுத்து நிரூபித்தார்.
இயேசுவின் பணி தொடர்கிறது
இயேசு தாம்கூறியபடி, மரித்து அடக் கப்பட்ட மூன்ரும்நாள் உயிர்த்தெழுந்தார். புனிதசின்னப்பர் கூறுகின்ருர் "கிறீஸ்து உயிர்த்தெழுாதிருப்பின் எமது விசுவாசம், வீண்"*
உயிர்த்தெழுந்தபின் கிறீஸ்து நாற்பது நாட்க ள் இவ்வுலகிலிருந்தார். மூன் ருண்டுகள் தம்முடனிருந்து பயிற்சி பெற்ற சீடர்களை "அப்போஸ்தலர்’ ஆக்கினர். (அப்போஸ்தலர் அனுப்பப்படுபவர்) தமது பணியை அவர்களிடம் ஒப்படைத்தார். தாம்நிறுவும் சத்திய திருச்சபையின் தலை மைத்துவத்தைச் சீடர்களுள் ஒருவரான இராயப்பருக்கு அளித்தார். "இராயப்பா,
39

Page 54
உன்பெயர் பாறிை, இப்பாறையின்மேல் என்திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா" (மத்தேயு 16:18)
கிறிஸ்து தாம் விண்ணுலகெய்தியபின் தூயஆவியை அனுப்புவதாக வாக்களித் தார். உலகு உள்ளவரை தாம் உரு வாக்கிய திருச்சபையுடனிருப்பதாகக் கூறி விண்ணுலகடைந்தார்.
திருச்சபையின் பிறப்பு
கிறிஸ்துவின் மரணத்தால் அவரைப் பின் தொடர்ந்தோர் சிதறுண்டனர். வெளியே செல்ல அஞ்சிய சீடர்கள், அறையொன்றில் செபித்திருக்க இறைவனின் ஆவி அவர்கள் மேல் இறங்கி அவர்களைத் திடப்படுத் தியது. திடங்கொண்ட அப்போஸ்தலர்கள் பண்டிகைக்காக ஜெருசலேமில் வந்து கூடிய மக்களிடையே சென்றனர்.
இராயப்பர் அஞ்சாநெஞ்சுடன் கிறீஸ் துவின் நற்செய்தியை விளக்கினர். அத்தி னத்தில் மூவாயிரம்பேர் திருமுழுக்குப் பெற்று இறைமக்களாயினர். சத் தி ய (கத்தோலிக்க) திருச்சபையும் ஆரம்பமா கியது.
வளர்ச்சி
அப்போஸ்தலர்கள் பல்வேறு நாடு கட்கும் சென்று கிறீஸ்துவின் நற்செய்தியைவிடுதலை தரும் இறையரசின் தன்மையைப் போதித்தனர். கிறீஸ்துவின் வா க் குக் கிணங்க எல்லா இனத்தாரையும் இறை மக்களாக்கினர். எனவே அது கத்தோலிக்க திருச்சபை எனப்படுகிறது. ருேமை நகரில் தலைமைப்பீடத்தைக் கொண்டிருப்பதால் ருேமன் கத்தோலிக்க திருச்சபை என அழைக்கப்படுகிறது.
நிர்வாகம்
திருச்சபையின் முதல் தலைவரான இராயப்பரைத் தொடர்ந்து இடையீ டின்றித் தலைவர் கள் தெரியப்பட்டு, கத்தோலிக்கமதம் ஆளுகை செய்யப்படு கிறது. திருச்சபைத் தலைவர் பாப்பரசர்
40

என அழைக்கப்படுகிருர், இன்று போலாந்து நாட்டைச் சேர்ந்த 2ஆம் அருள் சின்னப்பர் பாப்பரசராக உள்ளார். w
அப்போஸ்தலர் என்ற வரிசை பின்னர் ஆயர் என மாற்றம் பெற்றது. ஒவ்வொரு ஆயரும் ஒரு மறைமாவட்டத்துக்குப் பொறுப்பானவர்கள். ஒரு மறை மாவட்டம் 16) பங்குகளாகப் பிரிக்கப்பட்டுளது. ஒவ்வொரு பங்கும் ஒரு குருவால் (பங்குத் தந்தை) நிர்வகிக்கப்படுகிறது. ஆயர்களின் தலைவரே பாப்பரசர்.
நிர்வாகம் சம் பத் த மா க பாப்பர சருக்கும் ஆயர்கட்குமிடையில் கர்தினுல் என்ற வரிசை உண்டு. திருச்சபைத் தலைமை யகத்தில் பல்வேறு தினேக்களங்களின் அமைச்சர்களாக சில கர்தினுல்களும், தத்தம் நாடுகளில் பாப்பரசரின் பிரதிநிதி களாகப் பல கர்தினல்களும் பணியாற்று கின்றனர். ஒரு தமிழர், ஒரு சிங்களவர் உட்பட எல்லா இனத்தோரும் கர்தினல் சபையில் அங்கம் வகிக்கின்றனர். பாப்பர சரைத் தெரிவு செய்பவர்கள் கர்தினுல் மாரே.
பிரிவும் பிளவும்
கொள்கை வேறுபாடு, சுய த லம், நிர்வாகத் தவறுகள் என்பன மத்திய காலத்தில் திருச்சபையை அலைக்கழித்தன. கொள்கை வேறுபாடு காரணமாக புரட்சிக் குரல் எழுப்பியவர்களுள் மாட்டின் லூதர், கல்வின் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். திருமறைத்தலைவர்கட்கும். இப்புரட்சிவாதி கட்குமிடையே சமரசம் உண்டாகாத காரணத்தால் பிரிவு உண்டாயது. புரட்சி வாதிகள் பிரிந்து சென்று வேறு சபைகளை நிறுவினர். ஒரே குடும்பமாக உரையாடி, உறவாடி கொள்கைகளை அலசி ஆராய்ந்து விட்டுக்கொடுத்து சமரசம் ஏற்படும் நிலை உண்டாகாதது வருந்தத்தக்கது.
தொடர்ந்தும் திருச்சபையில் பிளவுகள், பிரிவினைகள் உண்டாயின. இன்று கிறீஸ் துவை வழிபடும், அவரது போதனைகளைப் பின்தொடரும் சபைகள் பல உண்டு.

Page 55
ஆயர் சங்கங்கள்
எனினும் சத்திய (கத்தோலிக்க) திருச் சபை சிதறவில்லை. காலத்துக்குக் காலம் ஆயர்கள் அனைவரும் வத்திக்கானில் (ருேம்) ஒருங்கு கூடி பாப்பரசரின் தலைமையில் இறையரசின் நடைமுறைகளை திருச் சபையின் சட்டங்களை, வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து தவறுகளைத் திருத்தி விடுதலைதரும் இறையரசைப் பரப்ப ஆவன செய்து வருகின்றனர். 1962ஆம் 1963ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 2ஆம் வத்திக் கான் சங்கம் கத்தோலிக்க மதத்தில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி யுள்ளது.
கிறிஸ்தவ ஒன்றிப்பு
ஆண்டவர் கிறீஸ்து நிறுவிய திருச் சபை ஒன்றே. துவக்க காலத்திலிருந்தே இந்த ஒரே திருச் சபையில் பிளவுகள் தோன்றியிருக்கின்றன. "எல்லாரும் ஒன்ரு யிருப்பார்களாக" (அரு 17:2) என்று பிரார்த்தித்த கிறீஸ்துவின் உள்ளத்துக்கு முரண்பாடாகவும், உலகுக்கு இடறலா கவும் இது அ  ைம வது டன் நற்செய்திப் போதனைக்கும் இடையூருகின்றது.
இப்பிளவுகள் பற்றிக் கத்தோலிக்கரும் கவலையற்று இருக்கவில்லை. பலகாலமாக தை 18 முதல் 25 வரை கிறீஸ்தவ ஒன்றிப்பு வாரம் நடாத்தி ஒன்றிப்புக்காகச் செபித்து வந்துள்ளனர். 13ஆம் சிங்கராயர் காலத் தி லிருந்து ஒவ்வொரு பாப்பரசர்களும் கிறீஸ்தவ ஒன்றிப்பில் அக்கறை காட்டி வந்துள்ளனர்.
ஆழும் சின்னப்ப பாப்பரசர், கீழைத் தேச சபையின் தலைவர் அத்தன கோரசை சந்தித்து, கிறீஸ்தவ ஒன்றிப்பியக்கத்தில் ஒரு திருப்பத்தை உருவாக்கினர். 2 ஆம் வத்திக்கான் சங்கத்தில் “எவ்வகையிலேனும் நாங்கள் ( கத்தோலிக்கர் ) இப்பிரிவினை கட்குக் காரணமாய் இருந்திருந்தால் தாழ் மையுடன் இறைவனிடம் மன்னிப்பையும், எங்களால் புண்பட்ட எங்கள் சகோதரரின் பொறுத்தலையும் கோருகிருேம் " " (1963
aumu 6

புரட்டாதி 29) என்று வெளிப்படையாகக் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று திருச்சபைத் தலைமையகத்தில் கிறீஸ்தவ ஒன்றிப்புக்காக ஒரு செயலகம் பணியாற்றி வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. -
ஏனைய மதங்களோடு GSa-frt
இன்று மக்களினம் நாளுக்குநாள் நெருங்கி ஒன்றுபட்டுவருகிறது. இன்றைய இளந்தலைமுறையானது உலகில் பரவிவரும் நாசிஸ்த, பாசிஸ்த, கம்மியூனிஸ்த கொள்கை களின் கவர்ச்சியால் 'இழுக்கப்படுகின்றது. இன்றைய அரசியல், பொருளாதார, சமூக, சீர்கேடுகளும் கடவுளில்லாக் கொள்கைகளை மக்களினம் கட்டி த் தழுவ க் காரணமா கின்றன.
இந் நிலையில் உலகமதங்களிடையே ஒன்றிப்பும் ஐக்கியமும் வேண்டும் என்ற கருத்தை கத்தோலிக்கமும் வரவேற்றுளது. தனது விசுவாச உண்மைகட்குப் பங்க மில்லாத வகையில் ஏனைய மதங்களோடு நட்புறவு கொண்டு நாட்டுக்கும் சமுதாயத் துக்கும் நற்பணியாற்றுவதில் கத்தோலிக்கம் என்றுமே பின்னடைந்ததில்லை.
இறையரசின் அமிசங்கள்
கத்தோலிக்க மதம், கிறீஸ்து இறை மக்களைக்கொண்டது. இறையரசின் அங் கத்தவர்களான இறைமக்கள் கிறீஸ்துவில், கிறீஸ்துவாக, கிறீஸ்துவை வாழவேண்டி யவர்கள், வாழ்ந்து காட்டவேண்டிய் வர்கள். கத்தோலிக்க மதத்தின் போதனை இதுவே.
இறையரசின் அங்கத்தவர்கள் கிறிஸ்து தம் வாழ்வில் கடைப்பிடித்த மூன்று அமி சத்திட்டத்தை அனுசரிக்க வேண்டிய வர்கள். அவை சுதந்திரம், அன்புறவு, நீதி என்பன.
கிறிஸ்து சுதந்திரமாக வாழ்ந்தார். நாம் பல்வேறு அடிமைத்தளைகளால் அமுக் கப்படுகிருேம். செல்வம், செல்வாக்கு;
4.

Page 56
அதிகாரம், ஆணவம், சுயநலம், சம்பிர தாயம் என்பன எம்மை ஆட்கொள்ளும் அடிமைத்தனங்களுள் சில. எம்மை முழுமை யாக விடுதலை செய்ய இறைவனில் முழு நம்பிக்கையுடன் எம் சுயநலமனைத்தையும் துறந்து வாழும் நிலை உண்டாகவேண்டும்.
கிறிஸ்து சுதந்திரமாக அயலவனுடன் அன்புறவு கொண்டார். அன்பு செய்வதற் காக எம்மையே நாம் அர்ப்பணித்தல் வேண்டும். நாம்பெற்ற சுதந்திரம், எம் சுயநலத்துக்காகவல்ல, பொதுநலத்துக்கே முழுமையாகப் பயன்படுதல் வேண்டும்.
அன்புறவு முழுமையாக இரு க் கு மிடத்தில் நீதி பிரகாசிக்கும். அநீதி எவ் வுருவில், எந்நிலையில் தொழிற்படினும் அவற்றைக் கண்டும் காளுதவராக இருக்க முடியாது. கிறீஸ்து அ நீதி  ைய முழு மூச்சுடன் எதிர்த்தார். அதன்பரிசாக சித்திரவதையும் சிலுவை மர ண மும் கிடைத்தபோதும் அவர் அஞ்சவில்லை.
OC
பொன்ெ
* உன் கண்தான் உன் உடலுக்கு விளக்கு
முழுவதும் ஒளியுள்ளதாய் இருக்கும். * கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கள்
நம் கண்ணுக்கு வியப்பே. பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப் கவலை கொள்ளும். அன்றன்றைய தொ
மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோ நான் சொல்வதைக் கேட்டு உணர்ந்து மாசுபடுத்துவதில்லை. வாயிலிருந்து வெ
* உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உ

றீேஸ்தவனின் பணி
கத்தோலிக்க மதத்தில் அங்க ம் வகிக்கும் ஒவ்வொருவனும் ஒரு கிறிஸ்துவே. பிறர் அவனில் கிறீஸ்துவைக் கான வேண்டும். புளிக்காரம் இடப்படும் மா முழுவதும் புளிப்புக்குணம் பெறுகிறது. உண்மைக் கிறீஸ்தவன் ஒரு புளிக்காரமே. அவனைச்சுற்றியுள்ளவர்கள் அவனது குண நற்செயல்களால் மாற்றம் பெற்று இறை யரசில் இணைவார்கள். இது மதமாற்றம் அல்ல மனமாற்றம்.
கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கிறீஸ் துவைப் பிரதிபலிப்பவஞக அயலவனுக் காகத் தன்னையே முற்ருக அர்ப்பணித்த வணுக வாழவேண்டும். இதுவே இறைய்ரசு த ரும் 90. GjerGol Du Jin Gor இன்பவாழ்வு. இதுவே கத்தோலிக்கத்தின் தலையாய தத் துவம் ஆகும்.
கிறிஸ்தவன் கிறிஸ்துவாக, இறை
வனுக்கும் நாட்டுக்கும் உக ந் த வ ஞ க
வாழ்ந்து முடிவில்லாப் பேரின்பம் துய்ப் பதே இறையரசின் இலட்சியமாகும்.
DO
மாழிகள்
; உன் கண் தெளிவாயிருந்தால் உன் உடல்
(மத் 6:22) லாய் அமைந்தது. ஆண்டவர் செயல் இது,
(மாற். 12:10, 11) டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே
(6pré5 6:3I ) டாதீர்கள். நாளைய தினம் தன்னைப் பற்றிக் ல்லை அன்றன்றைக்குப் போதும்.
( மத். 6:34) புற்றவருக்கே தேவை. (மத். 9:32) காள்ளுங்கள் வாய்க்குள் நுழைவது மனிதனை ரிவருவதே மனிதனை மாசுபடுத்தும்.
(மத். 15:11) ன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக.
(மாற்: 12:31) தொகுப்பு : சகோ. அ. ருெபேட்

Page 57
புரட்டஸ்தாந்துக் கிறி
சொல்லும் பொருளும்
புரட்டஸ்தாந்துத் திருச்சபை என்பது இன்று பொதுவாக ரோமன் கத்தோலிக்கம் அல்லாத (Non RC)திருச்சபைகளைக்குறித்து நிற்கின்றது. "புரட்டஸ்ட்" (Protest) என் முல் எதிர்ப்பு. எனவே ரோமன் கத்தோலிக்க சமயத்தை எதிர்த்துத் தோன்றியமையால் அப்பெயர் அக்கிறிஸ்தவப் பிரிவுக்கு வந்து விட்டதெனச் சிலர் தவருக முடிவு கட்டி விடுகின்றனர். ஆனற் **புரட்டஸ்தாந்து' என்பதன் சொற்பிறப்பை ஆராய்ந்தால் "ஆணையிடுதல்’ என்ற கருத்தே முதலில் இருந்ததென்பது தெளிவாகும். சாமுவேல் ஜோன்சன் தாம் தொகுத்த ஆங்கில அகராதியில் Protestation என்ற சொல் லுக்கு "நான் ஒரு கருத்தையோ, உண்மை யையோ, சங்கற்பத்தையோ,பக்தி சிரத்தை யுடன் ஆணையிட்டுக் கூறுகின்றேன்' என்று வரைவிலக்கணம் கூறிஞர்.
பதினரும் நூற்றண்டில் பாப்பரசரைத் தலைவராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த ஜேர்மன் கிறிஸ் தவத் தலைவர்கள் முதன் முதலாக இப்ப தத்தைப் பயன்படுத்தினர். ஜேர்மன் கிறிஸ்தவத் தலைவர்களுக்கும் கத்தோலிக்க திருச்சபைக்குமிடையில் சமரச உடன் பாடுகான 1529 இல் "ஸ்பியேர்' 'பேரரசு மன்றம் கூடியது. ரோமன் கத்தோலிக்க ஆயர் களைப் பெரும் பான்மையாகக் கொண்ட இம்மன்றத்தில் ஜேர்மன் கிறிஸ் தவர்கள், தமது கருத்தைச், சங்கற்பத்தை, நெறியை உறுதியாகக் கூறினர். இந்த உறுதிமொழியே (Protestation) பின்னர் பிரிந்த சபைகளுக்குரிய காரணப்பெயராகி விட்டது.
இயேசு கிறிஸ்து
கிறிஸ்த சமயத்தின் அடிப்படையான உண்மை இயேசு கிறிஸ்துவே. அவர் இறை

ஸ்தவம்
திரு. எஸ். ஜெபநேசன், M A., B.D. (துணை முதல்வர், யாழ்ப்பாணக் கல்லூரி)
வனின் அவதாரம். ஆனல் வைணவ சமயம் குறிப்பிடும் அவதாரத்தை விட இயேசு பெருமானின் அவதாரம் வேறு பட்டது. இயேசு, ஜுலியஸ் ஒசரின் மருமி கஞகிய அகஸ்து சீசர் ரோம பேரரசை ஆட்சி செய்த காலத் தி ல் இஸ்ராயேல் தேசத்தில் பிறந்தார். இவர் இறைவனின் பூரண வெளிப்படுத்தல். அதாவது இவ்வு லகில் கடவுளை மனிதர் எவ்வளவு slau வேண்டுமோ அவ்வளவாகக் க டவுளை மனிதருக்கு காண்பித்தார். w
இயேசுபிரானின் அவதாரம் எவ்வாறு வைணவம் குறிப்பிடும் ‘அவதாரத்’தை விட வேறுபட்டது என்பதனைப் புரிந்து கொள்ளல் அவசியமாகின்றது. கிருஷ்ணன், பிரம்மம் அல்லது முழுமுதற் கடவுளின் அவதார மல்ல. நிர்க்குண பிரம்மத்தின் ஆளுமைத் தோற்றமாகிய விஷ்ணுவின் அவதாரம் மட்டுமே. மனுவுருக்கொண்ட அனுதி இறைவனே கிறிஸ்து. இதனலே தான் இயேசுவை "அவதாரம் என்று குறிப்பிடாமல் “இறைமைந்தன்' என்பர்.
வருகையின் நோக்கம்
அனதி கடவுள் பூவுலகத்திற்குவந்ததன் காரணம் தமது மக்கள் மீது கொண்ட அன்பேயாகும். உ ல கத்து மக்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்ட வர்கள். உரிமையும் (Free will) soir உணர்ச்சியுமுள்ள மக் களைப் படைத் து அவர்கள் தம்மோடு அன்புடன் வாழ்ந்து தமது சித்தத்தைச் செய்து தமது பிள்ளைகளாக வாழ விடுவதே கடவுளின் நோக்கமாக விருந்தது. ஆனல் மனிதன் கடவுளின் கட்டளைகளை மீறினன். பாவம் உலகத்திற்குள் வந்தது. பாவத்திற்குள் வீழ்ந்துவிட்ட மனிதனை நீதியும் தூய்மையும் சாவாமையும் கொண்டவணுக நிலைநிறுத்த
43

Page 58
இறைவன் விரும் பினர். எனவேதான் மன்னுருவான இறைவன் ‘மணந்திரும் புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக் கின்றது; காணும ற் போனதைத் தேட வந்தேன், என்று அழைப்பு விடுத்தார். கடவுள் அரு ளும் மன்னிப்பை எடுத்துக் கூறினர். கடவுளின் தியாக அன்பைத் தமது போதனையினுலும், சாதனையினலும் தாம் it ill-l lit(), Lopra08Tub என்பனவற்றினலும் வெளிப்படுத்தினர். தமது உயிர் அேநகருக்கு விமோசனத்தை ஏற்படுத் தும் என்ருர். இதனல் இயேசு பிரானின் மரணத்தைக் குற்ற நிவாரண பலியா கவும், கடவுள் மனிதரைத் தம் மோ டு ஒப்புரவாக்கும் செயலாகவும் கிறிஸ்தவங் கொள்கின்றது.
இயேசு மரண த் தி லிருந்து உயிர்த் தெழுந்தார். எனவே இறைவனின் அவதாரம் அவருடைய மரணத்தோடு முற்றுப் பெருமல் சதாகாலமும் செயலாக்க முடையதாகத் தி கழ்கின் றது. இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின் அவருடைய அடியார்களில் ஒருவரான பவுல் என்பார் பின்வருமாறு எழுதினர்.
“கிறிஸ்துவின் இரத்தத்தினுல் நீதிமான் களாகத் தீர்க்கப்பட்டிருக்கக், கோபாக் கினைக்கு நீங்கலாக விசுவாசிகள் அவரால் இரட்சிக்கப்படுவது அதிக நிச் ச யம்** ரோ. 5 , g :
நீதிமான்கள் முக்தி அல்லது நித்திய ஜீவன் அடைவார்கள். அது சம்பூரணமான வ்ாழ்வு. அது இப்போதே இங்கே தொடங்கி மறுமையில் முற்றுப் பெறுவது: அதன் தன்மை சொல்லுதற்கரியது. ஆனல் இறை வனுடைய செயல்கள் அவருடைய வாக் குறுதிகளை விட மேன்மையானவையாகவே உள்ளன என்பது கிறிஸ்தவத்தின் அடிப் guas) - 15th 3605. (Theology of Hope)
தூய ஆவி x
இயேசுபிரான் தமது மரணத்திற்கு முன்னர் தூய ஆவி யைப் பற்றித் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். இதனைத் தேற்றரவாளன் என்று விளக்கினர். இயேசு வின் மானிட வாழ்க்கைக்குப் பின்னர்
مج4ی۔

சீடர்கள் மத்தி யிலும் திருச்சபையிலும் அதிக வல்லமை காணப்பட்டது. இந்த வல்லமைக்கு இயேசுபிரான் தமக்கு அருளு வதாகக் கூறிய தூய ஆவிதான் காரணம் என்று நம்பினர்கள். இதனைக் கிறிஸ்துவின் ஆவியென்றும் கடவுளின் ஆவியென்றும் அழைத்தார்கள். தூயஆவி மானிடருக்குள் செயற்படும் கடவுள் என்றும் உள்ளத்திலே குடி கொண்ட கிறிஸ்து என்று கொள்ளப் படுகின்றது.
திரித்துவம்
அனுதி கட்வுள், இயேசுபிரான், தூய ஆவி என்ற நிகழ்வுகள் திரித்துவக் கொள் கைக்கு வழிசமைத்தன. திரித்துவம் என்பது மூன்ருகும். எனவே பல இந்திய கிறிஸ்தவ அறிஞர்கள் **மும் மூர்த் தி, **சச்சிதா னந்தம், என்ற இந்துக் கோட்பாடுகளுடன் கிறிஸ்தவ கடவுட் கொள்கையை இணைக்க முயன்றனர். ஆனல் கிறிஸ்தவம் இறைவன் ஒருவனே என்ப தி ல் உறுதியாகவுள்ளது. புனித அகுஸ்தீனர் அனுதி கடவுளை நேசிக் கிறவரென்றும், இயேசுபிரான நேசிக்கப் பட்டவரென்றும், துர ய ஆவி யை நேசம் என்றும் விளங்கி ஞர். வேறு சிலர் இக் கடவுட் கொள்கையை ஐஸ்கட்டி, தண்ணிர் நீராவி, போன்ற உவமானங்களால் விளக்க முனைவர்.திரித்துவக் கொள்கையின் எழுச்சிக்கு, கடவுள் தம்மை மக்களுக்குக் காட்டிக் கொள்ள மேற்கொண்ட சிறப்பு வெளிப்பாடுகளும், பொது வெளிப்பாடு களுமே காரணமாகும்.
திருச்சபையின் பிரிவு
இயேசு பிரானின் பூவுலக வாழ்க் கைக்குப் பின்னர் கிறிஸ்தவ சமயம் ஐந்து தலங்களை அடிப்படையாகக் கொண் டு வளர்ந்தது. அவை ரோமாபுரி, எருசலேம், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா, கொன்ஸ்தாந்தி நோபிள் என்பவையாகும். ரோமாபுரியில் இருந்த தலைமைப்பீடம் தம்மீது பரிபாலனம் செய்வதனை விரும் பாத எருசலேம், அந்தியோக்கியா, அலெக் சாந்திரியா, கொன்ஸ் தாந்தி நோபிள் பீடத்தலைவர்கள், சிறிது சிறிதாக மேற்கு ஐரோப்பிய சபையிலிருந்து விலகிச் செல்ல

Page 59
முற்பட்டனர். இந்தப் பிரிவு 1054இல் வலுப் பெற்று நிரந்தரமானதாகி விட் டது. இப்படிப் பிரிந்தவர்களே இன்று கிரேக்க Goal gas Golu (Greek Orthodox Church) என்று அழைக்கப்படுகின்றனர். இச் சபைகள் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்தியதரைப் பிரதேசங் களிலும் காணப்படுகின்றன, இவர்களைக் கத்தோலிக்கர் என்ருே புரட்டஸ்தாந்தவ ரென்ருே எவருங் கூறத்துணியார்.
புரட்டஸ்தாந்து இயக்கம்
புரட்டஸ்தாந்து இயக்கம் ரோமா புரியைத் தலைமைப் பீடமாகக் கொண்ட மேற்கு ஐரோப்பிய திருச்சபையில் ஏற் பட்ட நிகழ்ச்சியாகும். ஜேர்மனியில் வாழ்ந்த மார்ட்டின் லூதர் (1483-1546) இதன் தளபதியென்றும் பிரான்ஸ் தேசத் தவரான ஜோன் கல்வின் (1509 - 1564) இதன் சிந்தனைச் சிற்பியென்றும் கூறுவர். ஆணுல் பதிஞரும் பதினேழாம் நூற்றண்டு களில் வேறு பல சிந்தனையாளர்களும் ஆட்சித்தலைவர்களும் இவ் வியக் கத் தி ல் சேர்ந்து கொண்டனர். லூதர் இனம், கல்வின் இனம், சுவிங்ளி இனம், அங்ளிக் கன் இனம் என்பவை பதினரும் நூற் ருண்டில் எழுந்த முக்கியமான புரட்டஸ் தாந்து சபைகளாகும். வெவ்வேறு புரட் டஸ்தாந்து திருச்சபைகள் வெவ்வேறு விடயங்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும் மூன்று அடிப்படைகளை அவையாவும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
(அ) விசுவாசத்தினுல் மட்டு மே
ஒருவன் நற்கதி அடையமுடியும் (Justification by Faith ) 95talis finaou கிரியை என்பனவல்ல, பக்தியோகமே ஒருவனுக்கு மீட்பைக் கொண்டு வரு மென்பர். இயேசு பெருமான் எனது குற்ற நிவாரண பலி என்ற உணர்வே இந்தப் பக்தி யோகத்தின் சாரமாகும். ஆகவே ஒருவனிடத்தில் நற்கிரியைகள் இந்தப் பக்தியுணர்விஞலேயே வருகின்றன. கிரியை களிஞல் ஒருவன் நீதிமான் ஆவதில்லை.
ஆணுல் விசுவாசத்தினுல் ஒருவன் நற்கதி யடைந்து விட்டால், இயல் பா க வே

அவனிடத்தில் தற்கிரியைகள் தோன்றும். நல்லமரம் நல்ல , கனியைத்தருகின்றது. புண்ணியம் முத்திப் பேற்றின் அடையாள மேயாகும்.
(ஆ) கிறீஸ்தவ திரு மறையான பைபிளே சகல இறை உண்மைகளுக்கும் ஒரே ஆதாரமாக விளங்குகின்றது. திருச் சபையில் வளர்ந்த மரபுகளுக்கும் பாரம் பரியங்களுக்கும் திருமறையின் அதிகாரம் கிடையாது.
(இ) சகல விசுவாசிகளும் ஆசாரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (Priestho0ல் of all believers) g)git . G(5 LD5C5C5 மட்டுமன்றிச் சகல கிறீஸ்தவர்களுமே திருச்சபையின் ஆசாரியர்களாக இருக்கின் றனர் என்பதனை வலியுறுத்துகின்றது.
புரட்டஸ்தாந்து சபைகளின் கருத்துக் களுக்கு அதன் அடிப்படை எண்ணப் பாங்கே காரணமாகும். புரட்டஸ்தாந் தியின் சமயநிலையை, நிலை க் குத் து (Vertical) எனலாம். இறைவனுக்கும் தனக்கு மிடையில் நேர்வழித் தொடர்பு கொள்ளமுடியும் என்பது அவன் அடிப் படை நம்பிக்கை. இது கிடைக்கூறு (Horizontal) நிலைக்கு முரணுனது. திருச் சபை என்ற விரிந்தகன்ற அமைப்பின் செயற்பாடுகளுக்கும் சடங்குகளுக்கும் அமிழ்ந்து போகாமலும் கடவுளுடன் நேரடித்தொடர்பு கொள்ளலாம் என்ற எண்ணமே இந்த நிலைக்குத்து மனப்பான் மையின் வெளிப்பாடாகும்:
புரட்டஸ்தாந்து சபையின் பிரிவுகள்
புரட்டஸ்தாந்து சபை க ளின் இரண்டாவது அடிப்படை நம்பிக்கையான திருமறையே சகல இறை உண்மைகளுக்கும் ஒரே ஆதாரம் என்ற கருத்து அச்சபையில் பலவித உட்பிரிவுகள் தோன்றுவதற்கு வழி வகுத்துவிட்டது. கத்தோலிக்க திருச்சபை யார் இறையியல் உண்மைகளை விளக்கும் அதிகாரம், பாப்பரசரைத் தலைவராகக் கொண்ட திருச்சபைக்கே உண்டென்பர்.
45

Page 60
புரட்டஸ்தாந்து வாதிகள் பைபிளை இறை உண்மைகளின் ஒரே ஆதார மா க க் கொண்டமையால், பல சீர்திருத்தவாதி களும் ஆராய்ச்சியாளர்களும் பைபிள் உண்மைகளுக்கு வேறுபட்ட விளக்கங்களைக் கூற முற் பட்ட னர். இதனுலேதான் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தில் பல உட் பிரிவுகள் தோன்றியுள்ளன.
இங்கிலாந்தில் மெதடிஸ் த சபை பப்டிஸ்ற் சபை, கொங்ஹிகேஷனல் சபை என்பவை அங்ளிக்கன் சபையிலிருந்து பிரிந்தவை. இவைகள் யாவும் மிஷனரி சங்கங்களை அமைத்துப் பிற நாடுகளில் மதப்பிரசாரம் செய்தன. கொங்ஹிகேஷனல் திருச்சபையாரில் ஒரு பகுதியினர் பின்னர் அமெரிக்காவிற்குப் பு ைட பெயர்ந்து வாழ்ந்தனர். அவ்வணியைச் சேர்ந்த சிலரே 1816 ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றவந்தனர். இதன லே தான்
O
இறைவழிபாட்டு நூலிலிருந்து.
எங்கள் நிமித்தமாகத் துக்கத்தையும் அருள்நிறைந்த ஆண்டவரே, நாங்களும் எல் உம்மைப் பின்பற்ற உமது ஆவியை அருளு தூண்டி நாங்களும் துன்பப்படுவோருக்கு உ தலையும் சுகத்தையும் கொடுக்கவும் பாரம் ஏழைகள் அந்தரித்தவர்களில் உம்மையே க மென்று பணிவாய் வேண்டுகிருேம். ஆமெ6
46

அவர்கள் அமெரிக்கன் மிஷன் எ ன்று அழைக்கப்பட்டனர்.
தற்காலத்தில் நூற் று க் கணக் கான புரட்டஸ்தாந்து இயக்கங்கள் உலகின் பல பாகங்களிலும் உதயமாகின்றன. யேகோ வாவின் சா ட் சி, பெந்தேகோஸ்து, அசெம்ளி ஒப் கோட், ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் எ ன் பன முக்கிய மானவை.
இலங்கையிலே பழம்பெரும் புரட்டஸ் தாந்து சபைகளான டச்சு கல்வின் சமயம், அங்ளிக்கன், மெதடிஸ்ற், அமெரிக்கன் Lóla Gör (C. S. ) Luuüg-Găvið ஆகியவற் நிடையே பொதுவாக இணக்கம் காணப் படுகின்றது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இவற்றை ஒரே அமைப்பிற்குள் கொண்டுவரவும் முயற்சி மேற்கொள்ளப் lull-s.
-O
தரித்திரத்தையும், மரணத்தையும், சகித்த பலா இரக்கங்களிலும் தன்னல மறுப்பிலும் ம். உமது மட்டற்ற அன்பினுல் எங்களைத் தவவும், வறியோர் திக்கற்ருேருக்கு ஆறு சுமக்கிறவர்களின் பாடுகளில் பங்குபற்றவும், ாணவும் எங்களுக்குக் கிருபை கூர்ந்தருளு ፬ ̇ •

Page 61
இஸ்லாம் (சாந்தி 6
goof. M
சேவைக்கா யாழ் வை:
மதங்கள் அனைத்தும் மக்களை நல் வழிப்படுத்துவதையே தமது இலக்காகக்
கொண்டுள்ளன. காலத்துக்குக் காலம் சில சுயநலவாதிகள் மதங்களைத் தமது சொந்தச் சுரண் டல் நலன்களுக்குப்
பயன்படுத்தித் தவருகப் பிரயோகிக்கும் போதுதான் ஏனைய மதங்களுடன் மோதல்கள் உருவாகியிருக்கின்றன என் பதற்கு வரலாறே சான்ருகும், இஸ்லாம் எந்த மதத்தையும் வெறுப்பதுமில்லை. எந்த இனத்தார் மீதும் பகைமை கொள்வது மில்லை. மாருக மனித சமுதா யம் தொடங்கிய காலமுதலாக நிலவி வருகின்ற அனைத்து மதங்களையும் அது கெளரவிக் கின்றது.
இஸ்லாம் என்ற அறபுப் பதத்துக்குச் சாந்தி என்பது பொருள். முற்றிலும் இறைவனுக்கு அடிமைப்பட்டிருத்தல், வழி படுதல் என்றும் இப்பதம் பொருள் தரும். இஸ்லாம் மூதாதையர் வழிவந்த உடைமை யல்ல. அதன் கொள்கைகளை யார் யாரெல்லாம் பின்பற்றுகின்ருர்களோ அவர்களுக்கெல்லாம் உரிமையானது அது.
தோற்றம்
மனித வரலாற்றில் இஸ்லாத்தை ஸ்தாபித்தவர் முஹம்மத் (ஸல்) என்று தான் அநேகர் தவருகப் புரிந்து கொண்டி ருக்கிருரர்கள். இறைவனுக்கு முன்னே மனிதன் முழுமையாக அ டி பணி த ல் வேண்டும் என்ற ஒரே வழிமுறையைத் தான் தொடக் க காலத்திலிருந்து இறைவன் வழங்கினுன் என்பதை இறை மறையாம் திருமறை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. நூஹ் (அலை) நோவா - இப்ருஹீம் (அலை) ஏப்ரகாம் - மூஸா (அலை) மோஸஸ் - ஈசா (அலை) யேசு - ஆகியோரும்

பழி)
. S oggiate patib, B. A. Dip-in-Eds லக் கல்வி ஆலோசகர் (சமூகவியல்) த்தீஸ்வர வித்தியாலயம்.
ஏனைய இறை தூதர்களும் உலகின் பல்வேறு. பகு தி களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஒரே நெறியினைத்தான் அவர்கள் எல் லோரும் போதித்தார்கள். இதே சங்கிலித் தொடரில் இறுதியாக வந்த தூ த ரே முஹம்மத் (ஸல்) அவர்கள். எனவே, இஸ்லாம் காலத்தால் பிந்தியமதம் என்ற கூற்றுத் தவறனது. பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்களின் இடைச் செருகல்கள் - சுயகருத்துப் புகுத்தல்கள் - மூலக் கொள்கையினைக் கறைப்படுத்திவிட்ட தளுல் அவை பாவற்றையும் களைந்து, மூல தெறியான இஸ்லாத்தைத் தூய்மையான மூலவடிவில் வழங்கும் பணியைத் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.
இஸ்லாம் என்ருல் நிறைவான சாந்தியி லிருத்தல், நற்குனங்கள் நிறைந்து நேர் 69). It is வாழ்வதற்கு 2 law at Dunds உழைத்தல் என்பதே பொருள். இஸ்லாமிய வாழ்க்கை முறை எல்லாக் காலங்களுக்கும் எல்லா இனத்தாருக்கும் பொருத்தமான முறையில் அமைந்துள்ளன. குழப்பமான மறைமுகமான விடயங்கள் எதுவும் அதில் இல்லை. இஸ்லாம் மார்க்கத்தின் விரிந்த நோக்கமும் அதன் தரும சிந்தனையும் வேண்டுமென்றே மதவெறி பி டி த் த சிலரால் மறைக்கப்பட்டு விட்டன.
திருமறையின் 5 ஆம் அத்தியாயத் திலும், வேறு நூறு வசனங்களிலும் ஒரு விடயம் தெளிவாக எடுத்துக் கூறப்படு* கின்றது. மோட்சம் என்பது, முஹம்மது நபியைப் பின்பற்றுவோருக்கு Lot-Gh ஒதுக்கி வைக்கப்படவில்லை என்று நிரூ பிக்கப்பட்டுள்ளது.
**மெய்யாகவே விசுவாசிகளும் (முஸ்லிம் களும்) யூதர்களும், கிறிஸ்தவர்களும்,
47

Page 62
ஸாபிகளும், எவர் இறைவன் மீதும் இறுதி நாளின் மீதும் விசுவாசம் கொண்டு, நற். செயலும் செய்கின்றர்களோ அவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடம் சன்மானம் உண்டு. அவர்களுக்கு அச்சமும் துக்கமும் இல்லை." - ( மாயிதா 5 : 69)
இஸ்லாம் ஒரு மதம்மட்டுமன்று. அது ஒரு வாழ்க்கை முறையுமாகும். ஒரு சில சடங்குகளைச் செய்து விடுவதனல் ஒரு வன் முஸ்லிம் ஆகிவிடமுடியாது. வாழ்வின் அனைத்துத் துறையிலும் (அரசியல் பொருளாதாரம், சமூகவாழ்வு, குடும்ப வாழ்வு) அது விரவியுள்ளது.
ஆண்டவனின் பாதையில் அனைவரும் சமமானவர்களே! மனிதகுலம் முழுவ தையும், அகில உ ல கங்களை யும் இயற்கையின் ஒரே அரசாகவும், அ  ைத ஒரே நோக்குள்ளதாகவும் இஸ்லாம் கருது கின்றது. இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்த ஒருவனுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவனுக்கும் இடையில் எவ்வித வேறுபாடுமில்லை. இஸ்லாம் எவரையும் தீண்டாதவன் என்று ஒதுக்கி விடுவதில்லை. நிறமும், மொழியும், இரத்தமும் காரண மாக யாரையும் உயர்ந்தவன் தாழ்ந்தவ்ன் என்று பிரிப்பதற்கு இஸ்லாம் இடம் தருவ தில்லை.
அடிப்படைக் கொள்கைகள்
1, மனித சமுதாயம் முழுமையும் ஒரே இனம். மனிதகுலம் முழுமைக்கும் ஒரு பொதுவான இயற்கையுண்டு. இப் பிரபஞ்சம் அனைத்தும் இயங்குவது, ஒரே சட்ட்த்துக்கமையவே! பூமியும், அதி லுள்ளவை அனைத்தும் மனிதனுக்கு நலன் புரியப் படைக்கப்பட்டவைகளே. ஆண்டவ ஞகிய மூலப் பரம்பொருளின் சட்டத்துக்கு மனிதன் கீழ்ப்படிந்து நடக்கும் போது அவனுக்கு உயர்வு இருக்கிறது. சன்மானம் பெறுவதிலும், தண்டனை பெறுவதிலும் எல்லா மனிதர்களும் சமமானவர்களே!
2. உலகம் தோன்றிய கால முதலாக வந்துள்ள அனைத்து நபி மார்களும் ஒரே பொதுவான சகோதரத்துவத்தின் அங்கத்
48

தினர்களே, அத்துடன் ஒரே தூதையே அவர்கள் கெர்ண்டும் வந்தனர்.
3. முற்கால நபிமார்களையும், வேதங் களையும் போற்றி அவர்கள் கொண்டு வந்த உண்மையில் நம்பிக்கை கொள்வதும் கடமையாகும்.
4. எல்லா மதத்தாருடைய வணக்க ஸ்தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றில் ஒவ்வொருவரும் தத்தம் முறைப்படி வணங்குவதற்கு உரிமை இருக்க வேண்டும்.
5. மக்களுக்கான பணியைச் செய்தலே வாழ்க்கையின் மிக மேலான குறிக்கோ ளாகும்.
6. தேவையாளர், வறு மை யாளர், கடன்பட்டோர் ஆகியோருக்கு உதவி செய்தல், அடிமைகளை விடுதலை செய் வித்தல், ஒவ்வோர் ஆண்டிலும் தனது சொத்தில் நாற்பதில் ஒரு பங்கை ஏழை வரியாகக் கொடுத்தல், ஒவ்வொரு முஸ்லி மினதும் க ட  ைம யா கும். இதுதான் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் சட்டத் தொகுப்பும் அடிப்படைக் கொள்கைகளு. மாகும்.
சமய நம்பிக்கைகளும் செயற்பாடும்
1. இந்தப் பிரபஞ்சத்தையும் உலகத்தின் அனைத்துப் பொருள்களையும் படைத்தவன், பரிபாலிப்பவன், உருவமற்ற அநாதியான சக்தி - ஆண்டவன் - என்று நம்புதல் முதலாவது நம்பிக்கை ஆகும். அந்த ஆண்டவனை முஸ்லிம்கள் அல்லாஹ் என அழைக்கின்றனர். அவன் ஒருவன். இணை, , துணை இல்லாதவன். பெற்றேரும் இல்லை. பிள் ளை களும் இல்லை. ஆணுமல்லன். பெண்ணுமல்லன். தனித்தவன், நிலையா னவன், உருவம் இல்லாதவன், ஐயறிவுக, ளால் அறிய முடியாதவன், கருணையாளன், அன்பானவன்: எ ன்றும் உலகத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமானவன் என்று மனத்தாற் பரிபூரணமாக நம்பிச் செயற்படுதல் முதலாவது சமய நம்பிக்கை யாகும்.

Page 63
2. மலக்குகள் என்னும் தேவதூதர்கள் அல்லாஹ் விடமிருந்து வருகின்ற கட்டளை களுக்கு முற்றிலும் அடிபணிபவர்கள். தத்தமக்குச் சாட்டப்பட்ட பணி களை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ் இட மிருந்து நபிமார்களுக்குத் தூது கொண்டு வருபவரும் இவர்களுள் ஒருவரே. இவர்கள் ஆண்களுமல்லர், பெண்களுமல்லர் என்றும் நம்புதல்.
3. உலகம் படைக்கப்பட்ட கால மு த லா க த்ன்னல் படைக்கப்பட்ட மனிதனை நல்வழியில் நடத்த லட்சக்கணக் கான நபி மார் களை முன்மாதிரியாக அனுப்பி அவர்களுக் கெல்லாம், காலத்திற் கேற்ற கட்டளைகளையும் வேதங்களையும் அனுப்பி வைத்தான் அல்லாஹ். அவ்வாறு வந்த அத்தனை வேதங்களையும் நம்புதலும் அனைத்து வேதக் கருத்துக்களினது திரட் டாக இறுதியில் வந்த திருக்குர்ஆனைப் பூரணமாக நம்பி செயற்படுத்தலும் அடுத்த நம்பிக்கையாகும். ஏனைய வேதங்களைப் போல எவ்விதமான மாற்றம், செருகுதல் என்பன எதுவுமின்றி இன்று வரை உலகம் எதிர் நோக்கியிருக்கின்ற அனைத்துப் பிரச் சனைகளுக்கும் தீர்வு தரவல்லதாகவும் இருக்கின்றது.
4. நபிமார்களை நம்பி அவர்கள் க்ாட்டிய முன் மாதிரிகளைப் பின் பற்றி ஒழுகுதற்கு மனிதர்களை நல்வழிப்படுத்தும், மனித சிரேட்டர்களை அந்த மனிதர்க ளிடம் இருந்து தான் அல்லாஹ் தெரிந் தெடுத்தான். அவர்களும் சா தா ர ன மனிதனின் ஆசாபாச உணர்வுகளை நன் குணர்ந்து வாழ வழிகாட்டினர்.
5. உலகிலுள்ள அனைத்துச் சிருட்டி களும் முற்ருக அழிக்கப்படும் ஒரு நாள் வரும். அந்த நாளின் பின் அனைவரும் எழுப்பப்பட்டு விசாரணை ஒன்று நடை பெற்று அவ்விசாரணையின் பின்னர் உரிய கூலி வழங்கப்படும் என நம்புதல்.
6. நமது செயல்கள் யாவும் நம் எண்ணப்படி நடப்ப தி ல் லை . நமது நாட்டமும் கூட அவ்வாறே அனைத்து
7 سلسے

எண்ணங்கள். செயல்கள், நிகழ்வுகள்
ஆகியவற்றுக்கும் க r ர ன மா ன வ ன் அல்லாஹ்வே என நம்புவதும் இஸ்லாமி யரின் நம்பிக்கையின் ஓர் அமிசமாகும். இந்த அடிப்படையிலே தான் முஸ்லிம் ஒருவனின் செயற்பாடும் அமைந்திருக்கும். அவன் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப் பட்டு நடப்பான். தன்னைப் படைத்து வாழ்வளித்த இறைவனுக்கு நன்றியாகத் தினமும் ஐந்துவேளை தொழுவான்கு ஏழை களின் ப சித் துயர் அறியவும் பிறர் அறியாது உள்ளார்ந்த ரீதியாக இறைவனை உணர்ந்து அடிபணிந்து தனது சகல உடல் இச்சைகளான பசி, தாகம், மோகம் ஆகியவற்றைத் துறந்து ஒரு மாதம் நோன்பு நோற்பான். சமுதாய அமைப்பில் ஏற்பட்டு விட்ட இல்லாமையை அடியோடு இல்லை எனும் படியாகத் தனது சொத்தில் உழைப்பில் 1/40 ஐ ஏழைவரியாகக் கொடுப் பான். நிற, இன, மொழி, வர்க்க, தேசீய உணர்வுகளுக்கப்பால் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்ருகத் திரளும் மக்காவுக்கு வாழ்வில் ஒரு முறை சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுவான்.
சகோதரத்துவம்
இஸ்லாமியன் ஒருவனுக்கு மற்றைய வர்கள் எ ல் லே ரா ரும் சகோதரர்களே! அன்ருட வாழ்வில் தொழுகையின் போது பணக்காரனும், ஏழையும், எஜமானனும், வேலைக்காரனும் எத்தகைய வேறு பாடு மின்றி இறைவன் முன் நிற் கி ரு ர் கள். அல்லாஹ்வின் பார்வையில் அனைவரும் சமமே. தொழுகை சிறந்த உளப் பயிற்சி யாகவும், உடற் பயிற்சியாகவும் மாறு கின்றது. அழுக்குடன் இருப்பது தான் மனித வாழ்வின் அடையாளம் என்று கருதிய உலகத்துக்கு உடலும், உடையும், இடமும் சுத்தமாக வைத்திருக்கும் பழக் கத்தைத் தொழுகை ஏற்படுத் தி யது. இஸ்லாத்தில் தர்மம் செய்தல், விதவை, அநாதை, உதவியற்ற ஏழை ஆகியோரை ஆதரித்தல் என்பன மதக் கடமைகளாக்கப் பட்டுள்ளன. எல்லா மனிதர்களும் ஒரே தாய் தந்தையரின் சந்ததிகளே. நிறம், இனம், குலம், நாடு, மொழி, கலாசாரம்,
49.

Page 64
தொழில் இவைகாரணமாக ஏற்றத்தாழ்வு உண்டு என்ற கருத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இறைவன் இடம் திசை போன்ற கட்டுப்பாடுகளை விட்டுத்தூய்மை யானவனுய் இருந்தும், தொழுகையில் புனித மக்காவிலுள்ள கஃபா என்னும் இறையில்லத்தை முன்னேக்கியேமுஸ்லிம்கள் தொழுகின்ருர்கள். இறை யில் லமான கஃபா, உலக ளா விய சகோதரத்துவக் கொள்கையை ஏற்றிருக்கும். முஸ்லிம்கள் எனும் இலட்சிய சமுதாயத்தின் கேந்திர மாகவும் அச்சாணியாகவும் திகழவேண்டும். உலகளாவிய ஒருமைப்பாடு தோன்ற அது வழிவகுக்கின்றது.
சமூக அமைப்பு
மனித இனம் என்பது ஆண், பெண் இரு பாலாரையும் குறிக்கும். பெண்பாவத் தின் வடிவமல்லள். வெறுத்து ஒதுக்கத் தக்கவளோ தீண்டத்தகாதவளோ அல்லள், இஸ்லாம் துறவறத்தை எதிர்க்கின்றது. திருமணம் மனிதனின் இயற்கைத்தேவை. எனவே, இல்லற நெறியை விட்டுப்பிறழ்ந்து செல்வது மனித இயற்கையையே எதிர்த்துக் கலகம் புரிவதற்கு ஒப்பானது என இஸ்லாம் கருதுகின்றது. திருமணத்தினுல் ஆண், பெண் இருபாலாரினதும் ஒழுக்கம் பாதுகாக் கப்படுகின்றது. இதனுல் குழந்தைகளுக்குத் தாய் தந்தையரின் பராமரிப்பும், கண்கா ணிப்பும், பாதுகாப்பும், ஒழுக்கப் பயிற் சியும் கிட்டுகின்றன. V.
நெருங்கிய உறவினர் தவிர்ந்த எவ ரையும் துணையாகத் தெரிந் தெடுக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. கணவனும், மனைவியும் மனமொத்து oմn էք (1pւգաn:5 சர்ந்தப்பத்தில் கணவனே, மனைவியோ தமது சொந்த விருப்பின் பேரில் பிரிந்து செல்லும் உரிமையை வழங்குகிறது. இவ் வாறே இருவரும் இரண்டாவது முறையாக வறு எவரையேனும் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கின்றது. விதவை உயிருடன் வாழவும் இரண்டாவதுதிருமணம் செய்து கொள்ளவும் கூட இஸ்லாம் அனும திக்கின்றது. விதவைகளுக்கு வாழ்வளிப் ஃதை இஸ்லாம் நற்செயலாகவே கருது
50

கிறது. இவ்வாறு விதவைகள் மறுமணத் தால் விதவைகளின் அநாதைக் குழந்தை கள் புகலிடம் பெறுகின்றன; அவள் வாயி லாக சமூகத்தில்தீயநடத்தை பரவுவதையும் இஸ்லாம் தடுக்கின்றது. சில குறிப்பிட்ட நிலைமைகளில் மட்டும் ஒன்றுக்கு மேற் பட்ட பெண் களை மணம் செய்து கொள்ள அனுமதிக்கும் இஸ்லாம் அவர் களிடையே நீதி செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. மணபந்தமின்றி ஆண் பெண் இரு பா லா ரும் சுதந்திரமாகப் பாலியல் உறவில் ஈடுபடுவதை இஸ்லாம் தடை செய்கின்றது; கடுமையான தண்டனை அளிக்கின்றது. w
எவனவது ஒரு மனிதனுக்குத் தீங்கி ழைக்கப்பட்டால் தீங்கிழைக்கப்பட்டவன் மன்னித்தாலன்றி இறைவன் மன்னிக்க மாட்டான் என்று வலியுறுத்துவதன் மூலம் தனி மனித உரிமை எவ்வளவு தூரம் மதிக் கப்படுகிறது என்பது புலணுகும். இறை வனுக்கு மாறு செய்வது தவிர்ந்த பெற் ருேரின் பிற கட்டளைகள் அனைத்துக்கும் முற்றிலும் பணிந்து நடக்கும்படி திருமறை கட்டளையிடுகின்றது.
அண்டை வீட்டார். நண்பர்கள் ஆகி யோரின் உரிமைகள் அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், விதவை கள், அநாதைகள் ஏ  ைழ எளியவர்கள் தேவையுள்ளவர்கள், பிரயாணிகள் என மனிதர்கள் அனைவரதும் உரிமைகளையும் நிறைவேற்றுவது மு ஸ் லி ம் ஒருவரின் கடைமையாகும். "நீங்கள் பூமியில் இருப் போர் மீது கருணைகாட்டுங்கள் வானத்தி லிருப்பவன் (இறைவன்) உங்கள் மீது கருணை காட்டுவான்’’. -(நபிமொழி)
பொருளாதாரம் :
மக்களிடையே திறமை களிலும், ஆற்றல்களிலும், வேறுபாடும் ஏற்ற த் தாழ்வுகளும் நிலவுகின்றன. இதனுல் அவர்களிடையே இயற்கையாகவே பொரு ளாதார ஏற்றத் தாழ்வுகள் காணப்படு கின்றன. இந்த இயல்பான ஏற்ற த் தாழ்வினுல் வெறுப்புணர்வும், ப  ைக மையும், அநீதியும் ஏற்படாமலிருக்க

Page 65
இஸ்லாம் பல கட்டுப்பாடுகளையும், விதி முறைகளையும் ஏற்படுத்துகின்றது. எனவே நீதியும் சமநிலையும் மிக்க சமூக பொரு ளாதார அமைப்பை நிலைநாட்டுகிறது. எடுத்துக் காட்டாக "சக்காத் (ஏழைவரி) *உஷ்ரு" ஆகியவற்றை இஸ்லாம் கட்டாய மாக்கியுள்ளது. செல்வநிலையினல் கர்வம் கொள்வதையும், இல் லா  ைம யா ல் ஆசைக்குப் பலியாவதையும் இஸ்லாம் தடுக் கிறது. பொருளாதார அமைப்பை வட்டி, லஞ்சம் அளவை நிறுவையில் குறைப்பு, மோசடி, ஏமாற்று, பித்தலாட்டம், சதி, சுரண்டல், பதுக்கல், வீண்விரயம் முதலிய தீமைகளை மாசுபடுத்தாவண்ணம் இஸ்லாம் தூய்மைப்படுத்துகின்றது. எந்தத் தொழில் முறைகளால் தனிமனிதனின் அ ல் ல து சமூகத்தின் ஒழுக்கம் சீர் கெட வாய்ப்பு உள்ளதோ, நாட்டின் செல்வம், வளம் ஒரு சிலரின் கரங்களில் குவிந்து விட வாய்ப்பளிக்கிறதோ அவற்றையெல்லாம் இஸ்லாம் தடை செய்து விடுகிறது.
அரசியல்
இறைவனே இப்பிரபஞ்சத்தின் ஆட்சி யாளன். அவனே சட்டம் இயற்றுபவன். மனிதன் சர்வ அதிகாரங்களும் கொண்ட ஆட்சியாளன் அல்லன். ஆட்சியிலிருக்கும் பிரதி நிதியும் இறைசட்டத்திற்குக் கட்டுப்
பட்டவரே.
O-(
*ஆவே றுருவின ஆயினு பால்வே றுருவின அல்ல ஒருதன்மைத் தாகும் அ உருவு பலகொளல் ஈங்கு
O
பல்வேறு இடங்களில் நின்றும் ஓடிவரினும் அவை ஒரே கடலில் போ பாட்டால் மக்கள் பற்றும் மார்க்கங் உனது பொற்பாத கமலங்களையே அை

நீதித்துறைச் சுதந்திரம் இஸ்லாமிய அரசியலின் இன்றியமையாத அமிச மாகும். மேலும் இஸ்லாமிய அமைப்பில் நீதிமன்றமும் இறைச் சட்டத்திற்கு கட்டுப் பட்டதே. ஆட்சியமைப்பை நடத்திச் செல்ல ஒழுக்கமும் நீதி நேர்மையும் இறையச்சமும் கொண்ட இறைவனின் நல்லடியார்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இஸ்லாத்தில் மன்னராட்சி முறையோ சர் வாதிகாரமோ கிடையாது. அறிஞர் பெரு, மக்களின் ஆலோசனைகளின் படி நடத்தப் படும் ஆட்சி, அநீதியை அகற்றி, நீதியை நிலைநாட்டி, நன்மைகளைப் பரப்பி தீமைகளை வேரறுக்கும்.
ஏ  ைழ கள் பலவீனர்களைப் பாது காத்தல், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல், மக்களின் உயிர் உடைமை' மானம் மரியாதை, ஆகியவற்றைக் காத் தல் என்பன இஸ்லாமிய அர சி ன் பொறுப்பாகும்.
சுருங்கக் கூறின் ஒரே இறைவனின் மீதும் எல்லா இறை தூதர்கள் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள் வதும் இறைவனுக்கும், இறை தூதருக்கும் உள்ளத் தூய்மையுடன் அடிபணிந்து நடப் பதும்தான் இஸ்லாம் ஆகும்.
O-O
ம் ஆபயந்த வாம் - பால்போல் றநெறி ஆபோல்
- நாலடியார்
O-O
புறப்படும் நதிகள் வெவ்வேறு வழியே ய்ச் சங்கமமாவதுபோல், அபிருசி வேறு கள் வேறுபடினும் அவர்கள் முடிவிலே னகின்றனர். - இருடிகள்

Page 66
உலக மதங்களின் ஒ
மனிதன் தோன்றிய காலந்தொட்டே சமயமும் இருந்து வருகின்றது. மனித வர லாற்றிலே காலங்காலமாக மனிதன், தனது வாழ்க்கைத் தத்துவத்தைப்பற்றியும், அதன் முக்கியத்துவத்தினைப்பற்றியும் இடையருது சிந்தித்து வந்துள்ளான். தனக்கும் அப்பால் ஒரு சக்தி இயங்கி வருவதை அவன் பூரண மாக நம்பியதன் விளைவாகவே ச ம ய உணர்வுகள் பரிணமிக்கத் தொடங்கின. இவ் வாறு பண்டுதொட்டு மனித இனத்தின் சிந்தனையில் சமயம் ஓர் இன்றியமையாத இடத்தைப் பெற்றுவந்துள்ளது. இதன் அடிப்படையில் சமயம் மனிதனது வாழ் வாகவே அமைந்து விடுவதோ டன் றி அ வ ன து ஆன்மாவுக்கு ஒளியாகவும் பாதைக்குத் தீபமாகவும் விளங்குகின்றது. மனிதன் அடைய முயலும் உள்பொருள் (Reality) பற்றிய அறிவை உறுதிப்படுத்து வதும், அவனை ஆன்மிக வாழ்வில் (p(pald பெறச்செய்வதும் சமயத்தின் பணியென அறிஞர் கருதுவர். சமயமாவது மனிதர்கள் அறிவு விளக்கம்பெற்று உறுதி யெய் தி, இன்பவாழ்வு அடைதற்குச் சாதகமாயுள் >ளது எனவும் விளக்கம் தரப்படுகின்றது.
தீர்க்கதரிசிகளும் இறைவனடியார்களும் சமயம், வாழ்வின் பகுதியன்று; அது வாழ் வின் முழுமை என விளக்கியுள்ளனர். ஒருமைப்பாடுபற்றிய உள்ளுணர்வே சமய அனுபவத்தின் உச்சக்கட்டமாக அமைகின் றது. தனிமனிதனுக்கும், சார்பற்ற பரம் பொருளுக்கும் இடையேயுள்ள தடைகளைத் தாண்டி வருவதிலேயே சிறந்த மறைஞானி யின் வெற்றி அடங்கியிருக்கின்றது. மறை ஞானியின் நிலையில் எத்தகைய வேறுபாடு மின்றி நாம் பரம்பொருளோடு ஒன்ருய் விடு கின்ருேம். அத்துடன் நாம் ஒன்றன தன்மை பற்றிய உணர்வும் நமக்கு இருக்கின்றது.
お2

ருமைப்பாடு
கலாநிதி. பி. கோபாலகிருஷ்ணன் தலைவர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இதுவே இட வேறுபாட்டாலும் இன வேறு பாட்டாலும் மாறு படா ம ல் என்றும் நிலைத்துவாழும் வெற்றியுடன்கூடிய மறை ஞான மரபாகும். சமய Sy னு பவ மும் தத்துவ உணர்வும் கலந்த ஒர் உயர்ந்த அனுபவமே மறைஞான அனுபவமாகும். மறைஞானியின் நிலை பிரமாண அதீத நிலை. அதாவது எத்தகைய பிரமாணங்களோ கட்டுப்பாடுகளோ அவனைப் பாதிப்பதில்லை. காலம், இடம், மதம், சாதி, இனம் போன்ற எத்தகைய வேறுபாடுகளும் அற்று மனிதகுல மேம்பாட்டுக்கெனத் தன்னை அர்ப் பணித்த ஒரு நிலையாகும். இந்நிலையில் - அதாவது மனிதகுல மேம்பாட்டுக்கென அர்ப்பணிக்கும் நிலையிலேயே, உலகில் உள்ள அனைத்து மதங்களும் தம்முள் ஒற்றுமையுற்று விளங்குகின்றன.
இந்துமதக் கொள்கையிலும், ளேட் டோவின் புதிய கொள்கையிலும், சூஃபிசக் கொள்கையிலும், கிறித்துவ மறைஞானக் கொள்கையிலும் திரும்பத் திரும்ப இதே குறிப்பு வருவதை அவதானிக்கலாம், இது, மறைஞானிகளுடைய கூற்றுக்களிலெல்லாம், நிலையான ஒரே தன்மை இழையோடி நிற்பதைக் காட்டுகின்றது.
சிறந்த உலக சமயங்கள் அனைத்தும் தத்துவ ரீதியில் பொதுமைக்குணம் வாய்ந் தவை. அவற்றுட் சில சமய குரவர்களால் தோற்றுவிக்கப்பட்டவை. மற்றவை பெரும் பாலாரான மெய்யறிவாளர்களுக்கு உய்த் துணர்த்தப்பட்டவையே! இந்துசமயம் தனி மனிதனுல் நிறுவப்பட்ட ஒன்றன்று. பழங் காலஞானிகளின் பணி, ஏனைய சமயங்களில் போலன்றி, வேறுவிதமாக அமைகின்றது. அத்தகைய ஞானிகள், சமய உண்மைகளை,
மனித கு லத்திற்கு எடுத்துச்செல்லும்

Page 67
வாய்க்கால்களாகவே பயன்பட்டனர். என லாம். சமயங்களிற் பல, மனிதனுள் உறை யும் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டுள் ளன. இவற்றுள் ஒன்ருவது எல்லா மனித ராலும் தழுவப்படவில்லை. எனினும் மணி தனை முழுமை பெறச் செய்வதிலேயே உலக சமயங்களின் ஒருமைப்பாடு அடங்கியுள்ளது. ஒவ்வொரு சமயத்திற்கும் முறையான சடங்குகள் உண்டு. அவை அவ்வச் சமயத் தைப் பின்பற்றும் மனிதரது உள்ளத்திலே சமய உணர்வையும், சமய அனுபவத்தினையும் வளர்ப்பன. மனிதன் அறநெறியில் முழுமை பெறுவதற்கு வேண்டிய அறிவியற் கோட் பாடுகளை ஒவ்வொரு சமயமும் தன்னளவிற் கொண்டு விளங்குகின்றது. அவை ஆன்மிகப் பிரயாணியை இறைவணுகிய இலட்சியத்தை நோக்கி நடத்திச் செல்லும் வழியையோ வழிகளையோ உடையனவாயிருக்கின்றன.
விஞ்ஞானத்தின் பயனுய் ஏற்பட்ட தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியாலும் தொழில் நுட்பவியலின் மேம்பாட்டினுலும் உலகம் மிகவும் சுருங்கிய நிலையில் அனைவோ ராலும் எளிதில் அணுகக்கூடியதொன்ருக அமைகின்றது. விஞ்ஞான வளர்ச்சியினல் மனிதன் இயற்கை சக்திகளை வெற்றிகொண் டுள்ளான். ஒரு பொறியை அழுத்துவதன் மூலம் உலகின் மூன்றில் இரண்டு பகுதியை அழித்துவிடும் ஆற்றல் பெற்றுள்ளான். அழிக்கும் ஆற்றல் இன்று எவரும் அஞ்சும் அளவுக்கு மனிதனது கைகளில் உள்ளது. உலக ஒற்றுமை இன்று உடனடித் தேவை யானதொன்ருகவுள்ளது. உலகியல் பொரு ளாதார அரசியல் அமைப்புகளின் அடிப் படையில் உலகின் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உண்மை யில் இத் த  ைகய உலகியல் ரீதியான ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமாயின் மக்களது சிந்தனையில் உளவியல் ரீதியான ஒற்றுமை ஏற்படுதல் வேண்டும். அத்துடன் ஆன்மிக ஒருமைப்பாடு மிகவும் தேவைப் படுகின்றது. இதற்குச் சமயங்களின் பங்கு இன்றியமையாது வேண்டப்படுகின்றது. நாளாந்தம் வருகின்ற புதிய சவால்களுக்கு முகம் கொடுக் க க் கூடி யதும் மக்களை ஒற்றுமை வளையத்தினுள் கொண்டுவரக்

கூடியதுமான சமயமே இன்றைய தேவை. மனிதனது துயர்களைத் துடைப்பதற்கும் சமூக இன்னல்களைக் களைவதற்கும் துணை புரிய வேண்டும். சமயம்இன்றைய நவீன யுக மனிதனை எவ்வகையிலும் திருத்திப்படுத்து வதொன்முக அமையாது. வேற்றுமைகளை உருவாக்கும் கொள்கைகளைக் கொண்ட சமயம் ஒருமைப்பாட்டுக்குப் பொருத்த மற்றதாகும். உலக சமயங்களின் ஊடே காணப்படும் ஒரு  ைம ப் பா டு உலக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வித்திட வல்லது. உலகமே ஆற்றல் வாய்ந்த புதிய தொகு வாழ்க்கைக்குரிய களம்; அனைத்து சமயங்களும் அனுபவபூர்வமானவை என்ற காரணத்தால் அவற்றின் ஒருமைப்பாடு நற்பயனை அளிக்கவல்லது என்பது டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் போன்ற மேதை களின் கருத்தாகும்.
சிந்துவெளி நாகரிக அகழ்வுகளினின்றும் வெளிக்கொணரப்பட்ட சிவனது வடிவம் அக்கால மக்களது உள்ளார்ந்த நிலையின் மேம்பாட்டுக்குத் துணை செய்திருக்க வேண் டும். அக்கால மக்களின் ஆன்மிகஉணர்வைப் புரிந்துகொள்ள இத்தகைய சின்னங்கள் துணைபுரிய வல்லன. உபநிடதங்கள் பிரம வித்தையை அல்லது ஆத்ம வித்தையை அறிதல் வேண்டும் என வற்புறுத்துகின் றன. மனிதன் தனது புலன்களை வெளி விடயங்களில் ஈடுபடுத்துவதனுல் தனது உள ரீதியா ன தொடர்பினை அறுத்துவிடு கின்ருன் எனவும் தன்னையே இழந்தவனுக உள்ளான் என்றும் கடோபநிடதம் கூறு கின்றது. அவனது ஆன்மா வெளி விடயங் களிலும் உடைமைகளிலும் அதிகாரத் திலும் மாத்திரமே ஈடுபடவல்லது. மனிதன் ஆன்மிகத்திற்கான நேர்வழியைக் காண விழைவானகில் அவன் தனது புலன்களை உள்நோக்கிய நிலையில் வைத் திருக் க வேண்டும். ஆன்மா இழந்த அந்த உயர் பேரின் பத் தை அடைய இதுவே வழி. ஜைனன் ஒருவன் தன்னைத்தானே வென்ற வன் எனக் கருதப்படுகின்றன். அவன் மகா வீரன் எனப்படுகின்றன். உள்ளத்தின் எதிரி களை எதிர்த்து வென்றவனவான். புத்தர் ஒருவரின் சிந்தணுசக்தியைப் பயன்படுத்தி தெளிவாக கருத்துக்களைச் சமர்ப்பிப்பதன்
53

Page 68
மூலம் தமது கருத்துக் களை புரிந்து கொள்ளச் செய்தார். ஒருவனது தருமத் தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளச் செய்து அவருக்கு இறுதியான நிருவாண சுகத்தை அடையத்தகுந்த சூழ்நிலையை அமைப்பதில் புத்த பகவான் ஒரு சிறந்த ஆசா ன க விளங்கினர். புத்த மதமானது மனிதனைப் பற்றிய பூரண ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆத் மிகமான மனுேதத்துவமான ஒழுக்கமொன் ருகும். அது ஒரு வாழ்க்கை மார்க்கமாகும். மனிதனின் ஆத்மிகத்தையும் ஒழுக்கத்தை யும் வளர்க்க, மனதைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வளர்க்க வேண்டிய அறி வைப் பெறுவதற்கும் நிர்வாணம் என்ற இறுதி எல்லையை வெல்லுவதற்கும் அது வழி காட்டுகின்றது. பாவத்தை விலக்கி புண் ணியங்களைச் செய்து மனதைத் தூய்மைப் படுத்தும் வழியை அது கற்பிக்கின்றது. கற்றல், கற்றுக்கொண்டவாறு நடத்தல், பயன் பெறுதல் என்ற மூன்று லட்சணங் களும் புத்த மதத்தில் உள்ளன. கற்றல் பற்றி பெளத்தம் கூறும் இக்கருத்து கற்றல் பற்றி வள்ளுவர் கூறும் கருத்தோடு இயை புடையதாகத் தென்படுகின்றது. "இருளி லிருந்து ஒளிக்கு இட்டுச் செல்வாயாக" என்ற பிருகதாரண்ய உபநிடதக் கருத் தோடும் இது உடன்படுகின்றது.
புத்த நூலாகிய தம்மபதம் கூறும் சில சிந்தனைகள் இந்துக்களின் பிரஸ்தானத் திரயத்தில் ஒன்ருகிய பகவத்கீதை தரும் உபதேசங்களுடன் உடன்பாடு கொள்ளு கின்றன. "நன்கு வேயப்படாத வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதுபோல நன்கு பயிற்றப் படாத மனத்துள் ஆசைகள் புகுந்து விடு கின்றன என்றும் 'ஓயாத ஊக்கத்தினு லும் விழிப்பினுலும் ஆர்வத்தினலும் புல னடக்கத்தினுலும் அறிஞன் வெள்ளத்தில் மூழ்கிவிடாத தீவைத் தனதாக்கிக் கொள் கின்றன்’ என்றும் "இரவு நீண்டது கண் துயின்றவனுக்கு ஒரு யோசனை நெடு ந் துாரம் களைப்புற்றவனுக்கு நல்லறத்தைத் தெரிந்து கொள்ளாதவனுக்கு பிறப்பிறப்பா, கிய சம்சாரம் நீண்டது" என்றும் தம்ம பதம் கூறும் கருத்துக்கள் கீதையோடு ஒப் பிடத்தக்கன. “நெருப்பானது புகையின
あ4。

லும், கண்ணுடி அழுக்கினுலும் சிசு கருப் பையினுலும் மூடப்பட்டிருப்பது போன்று ஞானம் ஆசையினுல் மூடப்பட்டிருக்கின் றது' எனவும் சி ரத் தை யு ைட ய வ ன் ஞானத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவன், புல ன் களை வென்ற வன் ஞானத்தைப் பெறுகின்றன். ஞானத்தைப் பெற்று விரைவில் மேலாம் சாந்தியடை கின்றன். எனவும் 'பெரும் முயற்சியுடைய யோகி பாபங்களற்றுப் புனிதவானாய், பல பிறவிகளிற் பக்குவமடைந்து பரகதியைப் பெறுகின்றன்; எனவும் கீதை தரும் சிந்த னைகள் பெளத்த சிந்தனைகளோடு ஒப்பிடத் தக்கனவாகவுள்ளன. தன்னைத் தூய்மைப் படுத்துவதில் சிரத்தையுடையவனுக இருத் தல் வேண்டும் என்ற கொள்கையில் இவ் விருமதங்களும் உடன்பாடு கொள்கின்றன. அத்துடன் மனிதனிடத்தே உள்ள அவித் தையாகிய அறியாமையை நீக்கி வித்தை யாகிய போரறிவு பெறவேண்டுமென வற் புறுத்துகின்றன. சமயம் என்பது வெறு மனே சமயசாஸ்திரங்களைக் கற்பதினலோ அன்றி, சமயக் கிரியைகளை ஆற்றுவதனுலோ நிறைவுபெறுவதில்லை. உண்மையில் அது அனுபவ பூர்வமான ஆத்மிக நாட்டமா கும். சாதனைகள் மூலமே அது அடையப் படத்தக்கதாகும். சமயத்தினல் மனிதனது வாழ்வு நிறைவு பெற்று, அதன் மூலம் பெறப்படும் அனுபவத்தினுல் அவனது வாழ்வின் ஒவ்வொரு அமி சமும் உயர் நிலையையடைவதற்கு வழி பிறக்கின்றது. எனவே உலகில் உள்ள அனைத்து சமயங்க ளின் நோக்கம் மனித னது நிலையையும் உணர்வுகளையும் உயர் நிலையடையச் செய் வதாகும். மனிதன் என்றும் குறைவுள்ள வனே. எனவே நற்குணங்கள் அவன் மூலம் வெளிக்கிளம்புவதற்கேற்ற வகையில் சம யம் உறுதுணையாக அமைதல் வேண்டும். தமது சாதனைகளால் நிறைவு பெற்றவர் கள் மனிதகுல மேம்பாட்டுக்குத் தலைமை யேற்கும் தகைமை பெறுகின்றனர். மனிதர் களுக்கு உதாரணபுருடர்களாய் விளங்குப வர்கள். இவர்களை மகான்கள் எனவும் அனுபூதி நெறியாளர் என்றும் ஞானிகள். என்றும் போற்றுவர்.

Page 69
கிறிஸ்தவ சமயத்திலும் மனித ன் தன்னை புதிய மனிதஞக உருவாக்கும் வகையில் ஈடுபடுதல் வேண்டும் என வற் புறுத்தப்படுகின்றது. எமது உள்ளத்தில் உள்ள நற்குணங்களுக்கேற்பவே எமது செயல்களும் நல்ல செயல்களாக அமைதல் வேண்டும் என்பது அச்சமயத்தின் போதனை யாகும். இயேசு கிறிஸ்து தமது உள் ளத்தை நன்கு அறிந்தவர் என்ற காரணத் தினுல் அனைவராலும் போற்றப்படுகிருர். இவ்வாருக உலகிலுள்ள அனைத்து சமயங் களும் வாழ்க்கையை ஆத்மிக விழிப்புணர் வுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக வற்புறுத்து கின்றன. கடவுள் சத்தியத்திற்கும் சத்திய மானவர். இனமத வேறுபாடின்றி நாம னைவரும் அவரது குழந்தைகள் என்ற நிலைப்பாட்டினைப் பல சமயங்கள் வற்புறுத் கின்றன. கடவுள் பற்றிய உள்ளுணர்வு அனைவரது உள்ளங்களிலும் உள்ளது. அதனை ஆர்வத்துடன் வளர்த்துக் கொள் ளுதல் வேண்டும். மனித இனம் இந்த உயர் உண்மையை நோக்கிச் செல்லும் போது அனைத்து நிலையிலும் சகோதரத்துவ உணர்வு பரிணமிக்கின்றது. இந்து, அல்லது இஸ்லாம் அல்லது பெளத்தம் அல்லது கிறித்தவம் ஆகிய எம்மதத்தினின்று நோக் கினலும் எமது உள்ளத்தில் நேர்மையும் எமது முயற்சியில் ஊக்கமும் இருப்பின் அந்த உயர் நிலையை அடைதல் கூடும். சாந்தி வழியையும் சகோதரத்துவத்தையும் உலகிற்குப் போதிப்பதில் இஸ்லாத்தின் பங்கு அளப்பரியதாக அமைகின்றது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அனைத்துச் சமயங்களிலும் ஆக்கபூர்வமான குழுவினர் சமய மேம்பாட்டுக்கு அயராது உழைத்து வருகின்றனர். பல்வேறு நிறுவ னங்கள் இதற்காகப் பணிபுரிந்து வருகின் றன. நம்பிக்கைக்கான உ ல க நிறுவனம் (World Congress of Faith)- 1936; gld யம் மற்றும் தேவாலய சமாதான சங்கத் தின் மூலம் உலக நட்புரிமை அமைப்பு - World Alliance for Friendship through Religion and Church Peace union ) - 1914, உ ல க சகோதரத்துவம் - World Brotherhood ) - 1950, a a 5

gilis gaol I ( World Spiritual Council ) - 1946, சமய ஆய்வுக்கான சங்கம் (Society for the study of Religions) - 1924 - போன்றவை இவ்வகையிற் குறிப் பிடத்தக்கன.
சமயங்களுக்கிடையிலான பொறையும் விளக்கமும் இந்தியாவைப் பொறுத்தவரை புதிதான தொன்றல்ல. அசோகமன்னன். தனது 12 ஆவது கற்சாசனத்தில் பின்வரு மாறு குறிப்பிடுகின்றன். தான் பின்பற்றும் சமயத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு வ ன் தனது சமயத்தின் பெருமைக்காக ஏனை யோரது சமய நெறிகளை இழித்துரைப்பா ணுயின் அத்தகைய செயலினுல் தனது சம யத்திற்கே பெரும்பாதகத்தை ஏற்படுத்திய வணுவான். எனவே சகிப்புத் தன்மை மிக வும் சிறந்ததாகும். என்ற கருத்து சமயங் களுக்குரிய மதிப்பினை எடுத்துக் காட்டு கின்றது.
மகாத்மாகாந்தி அனைத்துச் சமயங்க ளின் ஒருமைப் பாட்டினைப் பின்வருமாறு வற்புறுத்துகின்ருர், உலகில் உள்ள ஒவ் வொரு ஆணும் பெண்ணும் மிகவும் அன் புடன் சமயங்களின் திருநூல்களை(Scriptures) வாசித்தல் வேண்டும் என்பதை மனதார விரும்புகின்றேன். உலகிலுள்ள சமயங்களைப் பற்றி நட்புரிமையுடன் ஆய்வு செய்தல் புனித கடமைகளுள் ஒன்ருகும்" என்பது மகாத்மா காந்தியின் கருத்தாகும்.
டாக்டர். இராதாகிருஷ்ணன் 'பல் வேறு சமய மரபுகளின் சிறப்பு மிக்க கருத்துக்களை செல்வமாகக் கருதவேண்டும். எமது நாட்டுக்கோ சமயத்திற்கோ மாத். திரமன்றி நாமனைவரும் முழுமனித குல பாரம்பரியத்தினதும் வாரிசுகளாகும் எனக் கூறுகின்ருர் . - இக்கருத்து மேற்கத்தைய சமய வட்டத்திலும் நிலவுகின்றது. மனித குலத்தின் ஆத்மிக வாழ்வுக்கு ஊட்டமளிப் பதாக இருப்பின் உலகில் உள்ள அனைத்துச் சமயங்களையும் நட்புரிமையுடன் நாம் பேணு வதையே எமது உயரிய பணி யா க க் கொள்ளுதல் வேண்டும். ஒன்றையொன்று வளர்ப்பதற்கு இப்பணி நன்கு துணைபுரிவ தாகும். அத்துடன் உலகம் விழை யும்
55.

Page 70
ஆன்ம வலுவையும் இப்பணியின் மூலம் பெறலாம் என்பது டாக்டர் இராதாகிருஷ் ணனின் கருத்தாகும்.
வடஇந்திய பக்தி இயக்கத்தில் கபீர் தாஸ் குறிப்பிடத்தக்கவர். கபீர் தாஸ் ரா ம ப த் த சிரோன்மணியாவார். பெற் ருேர்கள் இன்னுரென்றே தெரியாத ஒரு குழந்தையை ஒரு முஸ்லிம் தம்பதியர் காப் பாற்றி ஆளாக்கினர். இவரது ஆத்மாவில் ராமபத்தி இருந்து வந்தது. சிறுவன், ராமா னந்தர் என்ற பத்தரை அணுகி, தனக்கு ராமதாரகமந்திர உபதேசம் செய்யும்படி வேண்டினன். இவனை ஒரு முஸ்லிம் சிறுவன் என எண்ணி, இவனுக்கு உபதேசம் செய்ய ராமானந்தர் மறுத்தார். சிறுவனே தன் விடா முயற்சியைக் காட்டியதால், ராமா நந்தர், ராமநாம தாரக மந்திர உபதேசம் செய்தார். உப தேசம் பெற்ற கபீர் மேலானதோர் ராமபத்தனுக விளங்கினர். தன் உடை மை களை விற்று ராமபத்தர் களுக்குப் பணிவிடை செய்வதில் கழித்தார். இரு சமயங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு இவர் மூலம் ஏற்ப ட லா யிற் று. இவர் ம  ைற ந் த பொழுது முஸ்லிம்களும் இந் துக்களும் இவர் எங்கள் இனத்தவர்” என்று போட்டி போட்டுக்கொண்டு கெளரவம் அளித்தமை இதற்குச் சிறந்த சான்று.
மதங்களின் ஒற்றுமை பற்றிக் குறிப் பி டு மிடத் து பூரீ இராமகிருஷ்ணர் பின் வருமாறு கூறுகின்றர். எல்லா மார்க் கங்களின் வாயிலாகவும் கடவுளை அடை யலாம். சமயங்கள் அனைத்தும் உண்மை யானவைகளே என்றும், மதக்கொள்கையில் ஒரு சார்புடையவன், பக்குவமடையாதவன். ஞான நெறி யிற் பக்குவமடைந்தவன், சமயங்கள் அனைத்தும் ஒரே குறிக்கு வழி காட்டுகின்றன என் ப  ைத அறிகின்றன் என்றும், ஹிந்து மதம் இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம் ஆகியவைகளையெல்லாம் நான் அனுஷ்டித்துப் பார்த்திருக்கிறேன். அவை யாவும் ஒரே பரம்பொருளிடத்துச் சாதகனை எடுத்துச் செல்கின்றன என்பது எனது அனுபவம். ஆனல் ஒவ்வொரு மார்க்கத்திற்கும் அதனதன் தனி இயல்பு உண்டு எனவும் கூறும் கருத்துக்கள் உலக
よ万6

மதங்க்ளின் சமரசத் 高 ன் மை ை Ամ եւ ւb ஒருமைப்பாட்டினையும் எடுத்துக்காட்டுவன வாக உள்ளன.
பூரீஇ ரா மகிருஷ்ண நல்லியக்கத்தினை நிறுவுவதில் முன்னேடியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்களும் சமயங்களின் ஒருமைப்பாட்டினை வற்புறுத்த வல்லன. 1893 ஆம் ஆண் டு செப்டம்பர் மாதம் சி கா கோ நகரில் சர்வசமய ஆராய்ச்சிப் பெருங்கழகத்தில் செய்த விரி வுரைகள் சமய மேம்பாட்டினை எடுத்துக் கூறுவன. இந்திய நாட்டின் சமய ஒருமைப் பாட்டு உணர்வை வெளி உலகு க் குத் தனது இயக்கத்தின் வாயிலாக வெற்றி கர மாக அறிமுகப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர். தமது சிகாகோ பிரசங் கத்தில், -
* பிறருடைய கொள்கையை வெறுத் தொதுக்சாத பண்பு டை மை அக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுகின்ற பொது நோக்கு என்னுமிரண்டினையும் உலகிற்குக் கற்பித்த சமயத்துக்கு நான் உரியவனெனப் பெருமைபாராட் டுகின்றேன். எல்லாச் சமயங்களையும் அன்பினுேடு நோக்குகின்ற பண்புடைமை யி லே எங்களுக்கு நம்பிக்கையுண்டு. அதுமாத்திரமல்ல நாங்கள் எல்லாச் சமயங்களையும் உண்  ைம மார்க்கங் களென ஏற்றுக் கொள்ளுகிருேம்."
எனக் கூறியவை சம ய ஒருமைப்பாட்டு உணர்வுக்குச் சிறந்த சான்ருகும். அத் துடன் ஒரு மதத்தின் இறைவன் எல்லா மதங்கட்கும் இறை வன வான்’ என்ற
கருத்தும், "ஒரு மதம் உண்  ைம யா ஞ ல்
அப்போது மற்றவையெல்லாம் உண்மை
யாகத்தான் இருக்க வேண்டும். ஆக, இந்து மதம் எனக்கு உடைமையாகும் அளவிற்கு உமக்கும் உடைமையாகும் என்றசீந்தனையும்,
“உங்கட்கு முன்னுல் இந்த வாக்கியத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் : “பொது மக்களது மதத்தைக் கெடுக்காது அவர்களை
உயர்த்தல் என்பதை" - என்ற கூற்றும்
அவரது சர்வ மத ஒருமைப்பாட்டுக்கு நல்ல
உதாரணங்களாகும்:

Page 71
இவ்வகையில் உலகில் இன்று நடை முறையில் உள் ள அனைத்து மதங்களும் தத்தமக்கேயுரிய சிறப்பான வழிமுறைகளைக் கொண்டு விளங்கியபோதும் அனைத்து மதங் களின் இறுதி இலட்சியம் மனிதகுல மேம் பாடாகவே அமைகின்றமை குறிப்பிடத் தக்கது. மனிதனை நிறைமனிதனுக ஆக்க
- C
உதவிய
தமிழ் நூல்கள்
அமரதாச, கே. ஜி. "வெசாக் மலர்" - கலாசார அலுவல் அமைச்சு, கொழும்
சுப்பிரமணியன், ஏ. வி. ஆன்மீக விள கலைஞன் பதிப்பகம், சென்னை, 1980
சுவாமி விவேகானந்தர், சிகாகோ பிர பூரீ ராமகிருஷ்ணமடம், 9 ஆம் பதி. ெ
சுவாமி விவேகானந்தர், எனது வாழ்வு பூரீ ராமகிருஷ்ணமடம், சென்னை, 1956
மகாதேவன், டி. எம். பி - இந்து சமய தமிழாக்கம் : ஞா. இராஜாபகதூர், த
வெங்கட்ராவ், கே. கடவுளைக் கண்டேன் மாருதி பதிப்பகம், சென்னை, 1983
பூரீமத் பகவத் கீதை, தபோவனப் பிர பூரீ ராமகிருஷ்ணர் உபதேச மஞ்ஜரி, பூ திருச்சி, 1976
ஆங்கில நூல்கள்
David Stent, Religions Studies Made
Radhakrishnan, S. Religion and Cultur
Radhakrishnan, S. Our Heritage Orien

முயல்வதே சமயங்களின் உயர் இலட்சியமாக அமைகின்றது. அனைத்துச் சம யங் கள் ஒவ்வொன்றையும் நன்கு புரிந்து ண ரும் பொழுது ஒருவனுக்குத் தான் சார்ந்துள்ள சமயத்தின் உண்மைகளை நன்கு உணரக்
கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.
) -
நூல்கள்
l, 1984
க்கு
சங்கம், சன்னை, 1975
ம் பணியும்
த் தத்துவம் மிழ் வெளியீட்டுக்கழகம், தமிழ்நாடு, 1964.
சுராலயம், திருச்சி, 1966 ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
Simple, Heinemann, London 1983
2 Orient Paperbacks. New Delhi 1968
t Paperbacks New Delhi, 1973
57

Page 72
3FD600TD
YT
**ஜைனம் (சமணம்) பாரத நாட்டி கொடிகளுக்கு உயிர் உண்டு என்ற உ6 ஜைனத்துக்குரியது. ஜைனம் கூறும் அவ்8 கண்டறிந்தது மட்டுமே யான் ஆற்றிய பசி
மரஞ்செடி கொடிகளுக்கு உணர்ச்சி யுண்டென்பதை விஞ்ஞானக் கருவி மூலம் அகிலஉலக விஞ்ஞான (ஜெர்மனி) மகா நாட்டில் விளக்கிக் காட்டிய பாரத விஞ் ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் மிகுந்த தன்னடக்கத்துடன் கூறிய வார்த்தைகள் இவை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இச்சம்பவம் சமணத்தின் உலகளாவிய பெருமையை உணர்த்தி நிற்கிறது.
சமணக்கொள்கைகளைப் பரப்பவெனத் தீர்த்தங்கரர் என்னும் அறவோர் அவ்வப் போது உலகிலே தோன்றுவர் என்பது சமணசமய நம்பிக்கைகளில் ஒன்று. இது . வரை இருபத்துநான்கு தீர்த்தங்கரர் தோன்றியுள்ளனர்; இனிமேலும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் தோன்றுவர் என்பது சமண ஐதிகம். புலன்களையும் கன் மங் களையும் வென்றவர் ஆதலின் தீர்த்தங்க ரர்களை ஜினர் (வென்றவர்) எனல் LDUL. எனவே ஜினரை வழிபடும் மதம் ஜைனம் என வழங்குகிறது.
துறவு நெறி நின்றே வீடு பேற்றினை எய்த முடியும் என வலியுறுத்தும் மதம் ஜைனம் ஆதலின் துறவு எனப் பொருள் தரும் சமணம் (ஸ்ரமணம்) என்ற பெய ரும் ஏற்பட்டுவிட்டது. சமண சமயத்துக்கு ஆருகதம், நிகண்டம், அநேகாந்தவாதம் (ஸியாத்வாதம்) முதலிய பிற பெயர்களும். உண்டு.
பாகவத புராணம், பகவான் விருஷப தேவர் (முதலாவது தீர்த்தங்கரர்) ஜைன. தர்மஸ்தாபகர் என்கிறது. யஜ"ர் வேதம், பகவான் விருஷபதேவர், அ ஜி த நா த ர்
5ど。

திரு. க. உமாமகேஸ்வரன்
ன் பழம்பெருஞ் சமயம், மரம், செடி, ண்மையை உலகுக்குணர்த்திய பெருமை புண்மையை நிரூபிக்கும் கருவி ஒன்றைக் 响。””
(இரண்டாவது தீர்த்தங்கரர்), அரிஷ்ட நேமி (இருபத்திரண்டாவது தீர்த்தங்கரர்) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. என வே ‘வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே ஜைனதர்மம் இருந்ததென்பதிற் சிறிதும் ஐயமில்லை" என டாக்டர் இராதா கிருஷ்ணன் தமது இந்திய தத்துவம் என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார்.
முதன் முதல் எழுதுக்களையும் எழுதுங் க3லயையும் பகவான் விரு ஷபதே வரே தோற்றுவித்தார். பி ரா மி எழுத்துக்களைக் கண்டுபிடித்தவரும் அவரே என வரலாற் றுத்துறைப் பேராசிரியர் என். என். பாசு. இந்தி விசுவகோசா என்னும் நூலிற் கூறு கிருர், வரலாற்ருசிரியர் சிலரோ, பார்சுவ நாதர் (இருபத்து மூன்ருவது தீர்த்தங் கரர்) சமணமதத்தை உண்டாக்கினர். பின்வந்த ஞாதிபுத்திர வர்த்தமான மகா வீரர் (இருபத்து நான்காவது தீர்த்தங் கர ர்) சமணசமயத்தைச் சீர் தி ரு த் தி அமைத்தார் என்று கருதுவர்.
கி. மு ஆரும் நூற்ருண்டு உலக வர லாற்றிலேயே முக்கியமானதொரு நூ ற் முண்டு. உலக மதங்களின் போ க் கில் மாபெரும் மாறுதல்களைத் தோற்றுவித்த பெரியோர் தோன்றிய காலம் , அது. யூத மதத்துக்குப் புத்துயிர் அளித்த இசையா, சீனப்பேரறிஞரான கன்பூசியஸ், லூட்ஸ்" கிரேக்க அறிஞர் ஸோலன் என்போர் இக் காலத்தில் வாழ்ந்தனர். சமணசமயத்தைப் பரப்பிய மகாவீரர் (ஏ. 540-467) வாழ்ந் ததும் இக்காலத்திலேதான். பெளத்தத்தை நிறுவிய கெளதமயுத்தரும் ஆசீவகமதத் தைத் தோற்றுவித்த மற்கலியும் மகாவீரர்

Page 73
காலத்தவரே. மற்கலி மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் இணைந்திருந்தார்; பின் பிரித் தீரர் ஆசீவகமதம் பிறந்தது. பெளத்தம் r சீவகம் ஆகிய மதங்களுக்கு முற்பட்ட மதம் சமணம்.
சமணம் பிற்காலத்தில் முப் பெரும் பிரிவுகளாகப் பிரிந்து விட்டது, சுவேதாம் பரம், திகம்பரம், ஸ்தானகவாசி என் பனவே அவை. வெண்ணிற ஆடை தரிக் கும் சமணத்துறவிகனே சுவேதாம்பர சம ணர் ஆவர். இவர்கள் வழிபாடியற்றும் சீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண் ண்ற ஆடைகளையே அணிவிப்பர்.திகம்பர சமணத்துறவிகள் ஆடை எதுவும் அணிவ தில்லை. இவர்கள் வழிபாடியற்றும் தீர்த் தங்கரர் திருவுருக்களுக்கும் ஆடை உடுத் துவதில்லை. சுவே தாம் பர சம ண ர் போலவோ திகம்பரசமணர் போலவோ ஸ்தானகவாசி சமணர் உருவவழிபாடியற் றுவதில்லை. இவர்கள் சமண ஆகம நூல் கன தீர்த்தங்கரராகவும், அருகளுகவும் பாவனே செய்து வழிபடுவர். சுவேதாம்பர, ஸ்தானகவாசி. சமணர் வட இந்தியாவில் வாழ்கின்றனர். தமிழ்தாட்டில் இன்றும் வாழும் சமணர் திகம்பரசமணரே. திகம் பரசமணர், ஸ் தா ன சுவா சி சமணர், பெண்கள் வீடுபேறெப்த இயலாது. தவமி யற்றிப் பெண்பிறவி நீங்கி அடுத்த பிறவி யிலே ஆணுய்ப்பிறந்துதான் வீடுபேற்றிஜன அடையமுடியும் என் ஹ கொள்கையினர். மல்லி என்ற பெண் அப்பிறவியிலேயே தீர்த்தங்கரராஞர் என்பர் சுவேதாம்பர ‘சமணர், திகம்பர சமணரோ மல்லி தவஞ் செய்து அடுத்த பிறவியில் மல்லிநாதர் என்ற ஆளுகப் பிறந்து வீடெய்தித் தீர்த் தங்கரராஞர் என்பர்.
வேத கால சிந்தனைகளுக்கெதிராகக் கற்பிக்கப்பட்ட பல நாத்திகக் கொள்கை களில் இன்றுவரை இந்தியாவில் எஞ்சிதிற் பது சமணம் ஒன்றே. வேதத்தை அளவை யாக ஏற்க மறுத்தல், வாழ்க்கை பற்றிய துன்பியல் நோக்கு, கடவுள் ஒருவர் உண் டென நம்பாமை என்னும் அமிசங்களிற் சினம் பௌத்தத்தை ஒத்துளது. ஆன்மா,

சட்ம் முதலாம் நிலையர்ன் பொருள்கள்
உண்டென .ஏற்றுக்கொள்வதில் 'பிராமண்க்
கொள்கையை அது ஒத்துளது. எனவே பிராமணக் கொள்கைக்கும், பெளத்தத்துக் கும் சமய சித்தாந்த இடைநிலை (neotogical mean 5TGir Fidorib GTGorg.sgu மதங்கள் என்னும் நூலிற் பேராசிரியர் ஹொப்கின்ஸ் (Prot. Hopkins) கருதுவார்.
இவ்வுலகம் ஆதியும் அந்தமும் அற்றது:
அணுத்திரள்களால் ஆயது. எக்கடவுளா
லும் படைக்கப்படாதது. இயற்கையின் பாற்பட்டது. நிலம், தீ, காற்று, நீர், வெளி ஆகிய ஐத்தின் சேர்க்கையை உடையது. உலகை இரண்டு பெரும் பிரிவாக நோக் *லாம் ஒன்று ஜீவன் (உயிர்) மற்றையது அஜீவன் (உடலும் ஏனைய சடப்பொருள் களும்) என்ற சமணர் கொள்கை அவர்கள் மெய்ம்மை வாதிகள் என்ற உண்மையைத் துலக்கி நிற்கக் காணலாம்.
நம்புலன்களுக்கு விடயமாகும் பெளதி கப் பொருள்கள் அனைத்தையும் அஜீவன் (புற்கலம்) என்பர் சமணர். சேர்ந்து ஒன் முகவும் பின்பிரிந்து பல ஆகவும் வல்லனவே புற்கலங்களாம். சேர்ந்து ஒன்ருன நிலையிற். புற்கலங்களை புலன்களால் நுகர முடியும். ஸ்கந்தங்கள் என்பது இந்நிலையிலான புற் கலங்களையே, உலகில் நாம் கா ணு ம் பொருள்கள் அனைத்தும் ஸ்கந்தங்களே. அண்டம்முழுவதும் சமணர் கருத்துப்படி ஒரு மகாஸ்கந்தமாகும்.
சேர்க்கைப் பொருள்களை மேலும் பிரித்துக் கொண்டே போனுல் இனிப்பிரிக்க (pigtung தனிமூலப்பொருள்கள்ை <9604 ziur லாம். இது புற்கலத்தின் இரண்டாவது நிலை. இங்ஙனம் பெறப்படும். மிகச்சிறிய அணுக் களிலிருந்தே மிகப்பெரிய இவ்வுலகம் உண் டாயிற்றென்பது சம்னர் கருத்து. அணு வாயும் ஸ்கந்தமாயும் உள்ள புற் கலம்மட்டும் உலக உற்பத்திக்குப் போதாதெ னக் கண்ட சமணர் அவற்றேடு ஆகாசம், காலம் என்பன சேரவேண்டும் என்பர். எனவே, இவையிரண்டும் அணுக்களை யொத்த அநாதிதிரவியமென்பது அவர் கொள்கை.

Page 74
சமணர்களின் உயிரியல் ஆராய்ச்சி விளக்கம் விரிவானது; அறிவுக்கு விருந்தாய் அமைவது. புலன்களுக்கேற்ப உயிர்களை அவர்கள். பகுத்தறிந்துள்ளார்கள். புலன் களின் எண்ணிக்கைக்கேற்பவே பகுப் பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாவரங்களுக் கும் உயிர்உண்டு என்பதை முதன்முதலில் அறிவித்தவர்கள் சமண அறவோர்களே! உடல்வேறு உயிர்வேறு என்னுந் தத் துவத்தை அடிப்படையாகக் கொண்டது gFLDG00TLD.
மண்ணை உடலாக உடைய உயிர்கள், நீரை உடலாக உடைய உயிர்கள், நெருப்பை உடலாக உடைய உயிர்கள், காற்றை உடலாக உடைய உயிர்கள், மரஞ்செடி கொடிகளை உடலாக உடைய உயிர்கள் என உயிர்கள் பல திறத்தவை என்பது சம ணரின் கோட்பாடு. எனவே சமணர் பன்மை வாதிகளாகவும் மிளிரக் காண்கின்ருேம். இவைதவிரக் கண்களுக்குப் புலனுகாத உயிர ணுக்கள் பல உள. இவை உணர்ச் சி என்ற புலன் ஒன்றுமட்டும் உடையவை. உயிர்களில் உயர்ந்த இனத்துக்கு ஐவகைப் புலன்கள் உள. மனித இனம் உயிர்வகை களுக்கெல்லாம் தலையாயது. இத்திரியத்தின் உருவம் எனப்படும் மனமெனும் ஆருவது புலனும் படைத்தது மனித இனம் என்பது சமணர் சித்தாந்தம்.
ஆன்மாக்கள் எண்ணிலாதவை. அவை என்ருே ஒரு நாள் தோன்றியவை அல்ல. என்ருே ஒரு நாள் அழிவனவும் அல்ல. உடலோடும் உ ல கோ டு ம் தொடர்புற்ற நிலையில் (வியவகாரிக நிலை) ஆன்மா தன் இயல்பின் நீங்கிப் பேரறிவு கெட்டுச் சிற் ற றிவுற்று அல்லற்படும். சட்சம்பந்தம் இல்லாதபோது ஆன்மாவின் சுய ரூபம் விளங்கித் தோன்றும் அந்த நிலையில் அவை முற்றுண்ர்வும் முடிவிலாற்றலும் 2  ையவை. சாந்தமும் ஞானமுமே அவற்றின் இயல்பான சொரூபம்.
புலன், பொறி அனைத்தும் ஆன்மர் வைச் சிறைப்படுத்தும் தளைகள். இக்கட் டுக்களைக் களைந்து விட்டால் ஆன்மா தன்
$60

இயல்பாகிய சைதன்ய சொரூப் ம் ஆகி விடும். ஆன்மா அடையும் இம் முற் றுணர்வுக்கு - பூரண ஞானத்துக்கு. கேவலக்ஞானம் என்று பெயர்.தன்க்கென வடிவம் ஏதுமில்லாத ஆன் மா தான் எந்த உடலை எடுக்கிறதோ அந்த உடலின் வடிவத்துக்கு ஏற்பப் பருமனும் அளவும் கொள்ளும் என்பது சமணம் தரும் தனித் துவமானதொரு விசித்திர விளக்கமாகும்.
அறை ஒன்றின் நடுவில் வைக் கப் பட்ட விளக்கு கூடிக் குறைதல் ஆகிய மாற்றம் ஏதுமின்றி அறை முழுவதையும் ஒளியாக்குவது போல உயிர் எந்த உடலி லுள்ளதோ அவ்வுடலுக்குத்தகப் பரவி உயிர்ப்பிக்கும் என்பது சமணக் கொள்கை.
சமண அறவோர் அறிவினல் அறியப் படும் செயலை ஐந்து பிரிவுகளாக வகுத்துள் ளனர். ஜம்புலன்களால் அறியும் அறிவு (புலன் அறிவு) மதிஞானம் எனப்படும். நூல் களாற் பெறப்படும் அறிவு (நூலறிவு) சுகுதஞானம் எனப்படும். வெகு தொலை விலுள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் அறியும் அறிவு அவதிக்ஞானம் எனப்படும் பிறர் மனசிலுள்ள உணர்ச்சி களைத் தெரிந்து கூறும் அறிவு மனப்பரியைஞானம் எனப்படும்.
தீர்த்தங்கரர்களும் முனியுங்கவர்களுமே கேவலக் ஞானத்தைப் பெற்றுவிளங்கினர். மூன்ருவது அறிவாகிய அவதிக்ஞானம் புலன்களால் அறியப்படுவதன்று. மனே தத்துவ ஆராய்ச்சியாளர்கள் தூர மனே திருஷ்டி என்னும் இவ்வறிவு ஒவ்வொரு மனித னிடமும் மறைந்து கிடக்கும் ஒர் ஆற்றல் என்றும் கூறுகின்றர்கள். நான்காவதான மனப்பரியை ஞானத் தை அறிவுத்துறை யாராய்ச்சியாளர் **டெலிபதி' என்பர். அருமைமிக்க இவ்வறிவை முற்றுந்துறந்த முனிவர்தம் கடுந்தவத்தாலடைந்து கன் மத்தைத் தொலைத்து வீடுபேற்றினை யடைவர்.
நல்லொழுக்கத்தினுலும், தூய தவத்
தினுலும் மக்கள் பண்பும் அறிவும் பெற் றுயர்ந்து வினையின் நீங்கி வீடுபேற்றினை

Page 75
யடையலாம் என்றும் ஆத்மீகக் கலை யை சமண அறவோர் உலகு க்கு வழங்கியுள் ளனர், இதனல் ஒவ்வொரு மனிதனும் தன்சொத்த முயற்சியாலும் ஒழுக்கத்தாலும் உயர்ச்சியடைய வேண்டும் எ ன் ப ைத த் தெளிவாக்கியுள்ளனர்.
*தன்னைச் சிறுவனுகச் செய்வானுந் தானே தன்னை இறைவனுகச் செய்வானுந் தானே" என் அறநெறிச் சாரம் இதனைப் புலப்ப டுத்தக் காணலாம்.
பகவான் விருஷபதேவர் வகுத்தருளிய அறநெறி இல்லறம் துறவற ம் என இரு வகைப்படும். இவ்விரு அற நெறி களும் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை என்கிறது.
* நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும் நோற்பவர்க்குச் சார்வா கதம்பெருக்கி-காப்புடைக் காழுங் கடுகும்போல் நிற்குங் காக்கின்றி ஆழிசூழ் வைத் தறம் எனவரும் அறநெறிச்சாரம்.
இல்லற இன்பங்களைப் பூரணமாக அனு பவிக்க வேண்டும் என்பதும் பின்னர்த் தலைவனும் தலை வி யும் துறவறத்துக்கான ஒழுக் கங்களை இல்லறத்திலேயே பயில வேண்டுமென்பதும் சமண மதத்தில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. ஈற்றிற் துறவறநெறி நின்றே வீடுபேற்றினை அடைய முடியும்.
இவ் அறநெறிகளை முதன் முதல் உலகுக் கு உரைத்தவர் விருஷபதேவரே என்பது சமணரது நம்பிக்கை. விரு ஷ ப “தேவர் சமயம் அல்லது மதமெனத் தமது அறிவுரைகளைக் கூறவில்லை. அறமென்றே அவற்றைக் குறித்தார். இவரது அறநெறி 'அன்பின் அடிப்படையில் மக்கள் சமுதாயத் துக்கே உரியதாக அமைந்தது.
இல்லறம் மக்கள் உள்ளத்தைப் பண் படுத் த வல்லது. துறவறம் ஆன் மீ க நெறியிற் செலுத்தி வீடுபேறு தரவல்லது. இல்லறத்தைச் செம்மையுற நடத்தியோரே துறவறத்தில் வெற்றிகாண முடியும். இல் லறத்தைப் பண்புடன் ஆற்ருதோர் துற வறத்தை மேற்கொள்ளல் ஆ கா து என விருஷ்பதேவர் எச்சரித்துள்ளார் என்பர்.

நான்கு சாதனங்கள்
இல்லறத்தார் கடைப்பிடிக்க வேண்டி யனவென நான்கு சாதனங்கள் சுட்டப்பட் டுள்ளன. அன்னதானம், அபயதானம், மருந்து தானம், கல்விதானம் என்றநான்கு தானங்களையும் மக்கள் வாழ்க்கை நிலத்திற்கு உதவிபுரியும் வகையில் இல்லறத்தார் மேற் கொள்ளவேண்டும்.
இல்லறத்துக்குரிய 12 அடிப்படைக் கொள்கைகள்
* உயிர்களை அழித்தல் ஆகாது, 2. பொய்பேசுதல் ஆகாது. 3. பிறர் பொருளை அனுமதியின்றி
உபயோகித்தலாகாது. 4. துய்மையாய் இருத்தல் வேண்டும். தம் உடைமைகளை ஒரளவிற்கு வரை பறை செய்துகொள்ளவேண்டும். 6. குறிப்பிட்ட திசைகளிற் குறிப்பிட்ட தூரம் போவதென தா டோறும் உறுதி செய்தல் வேண்டும். 7. பயனற்ற பேச்சையும் செயலையும்
நீக்கல் வேண்டும். பாவச்செயல்களை நினைத்தலும் ஆகாது. 9. அன்ருட உணவு, இன்பம் என்பவற்றை வரையறை செய்துகொள்ளல் வேண் Gh. 10. காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று.
வேளைகளிலும் குறித்த நேரங்களில் வழிபாடியற்ற வேண்டும். 11. சில நாள்களில் உண்ணு நோ ன் பு
இயற்றல் வேண்டும். 12. நாள் தோறும் அறிவு பொருள் என்பவற்றைத் தயார் செய்த ல் வேண்டும்.
மும்மூடங்கள்
நல்லறங்கள் மேற்கொள்ளத் தளமாய் இருப்பவை மூடநம்பிக்கைகள். அவை தேவ
மூடம், உலக மூடம், பாசண்ட மூடம் என மூவகைப்படும்.

Page 76
தேவ மூடம் : தன்னைத்: தெய்வம் வாழ் விக்கும் என அதனை வழிபடல்.
கோபமும் கொடூரமும் வாய்ந்த தெய் வங்கள் உண்டென நம்பி அச்சத்தோடு வழிபடல்.
உலக மூடம் : புண்ணியம் பெறலாம் என மலைமீதேறி வீழ்ந்து இறத்தல். உலகிற் கூறப்படும் பல போலிக் கொள்கைகளை ஆராயாம்ல் நம்பிப்பின்பற்றல்.
பாசண்ட மூடம் : துறவிகளுக்குரிய அற நெறிகளைப் பின்பற்ருமல் தியாகம் அறிவு என்பனவின்றித் தன்னலங் கருதி துறவி வேடம் புனைந்து ஏமாற்றும் போ லித் துறவிகளை வணங்கி வாழ்த்துதல்.
இம்மூன்று மூடங்களின் நீங்கினவனே அறிவுடையோன், அவனே மயக்கமற்ற மாசறு காட்சியினன். அத்தகையோனே நல்லறங்களை உறுதியுடன் கடைப் பிடிப்போன்.
மும்மணிகள்
உலகியல் துறையில் மக்கள் வாழ் க் கையைப் பண்படுத்தியது போன்றே ஆன்மீகத்துறையிலும் - துறவறத்திலும் - சாதனை க்கு இன்றியமையாதனவாகிய நற் சாட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மூன்றுமணிகளை வழங்கியுள்ளார் சமண அறவோர்.
நற்காட்சி ; உண்மைப் பொருளை ஆராய்ந் தறிதல் . . . .
"மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்
எப்பொருளுங் கண்டுணர்ந்தார்"
என அருங்கலச்செப்பு அறைகின்றது.
62

நல்ஞானம் நூற்பொருளில் அறிவைச் செலுத்துதல் நல்ஞானம் எனப்படும்:
நல்லொழுக்கம் : அப் பொருள் வழி ஒழுகுதல் நல்லொழுக்கம் எனப்படும். '
உலகியல் வாழ்க்கை சிறப்புற இல்லற நெறியினை, சமண அறவோர் எவ்வாறு வகுத் தருளினரோ அவ்வாறே ஆன்மீக வளர்ச் சிக்குரிய துறவற நெறிகளையும் ஊழ்வினை பற்றிய விளக்கங்களையும் சியாத்வாதக் கொள்  ைக களை யும் சமன அறவோர் உலகுக்கு மெய்நெறியாக வழங்கியுள்ளனர்.
தமிழ் மொழியை வளம்படுத்தியதிற் சமணருக்கும் பெரும் பங்குண்டு. தொல் காப்பியம், இறையனூரகப்பொருள், புறப் பொருள் வெண்பாமாலை, வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் பிரயோக விவேகம் தவிர்ந்த ஏனைய இலக்கணப் பரப்பெல்லாம் சமணர் இட்ட ιθά σω తాG ய என்பர் தெ. பொ. மீனுகதி
மேனுட்டார் அகராதி தொடங்குமுன் நிகண்டுகளைப் படைத்துதவியோர் சமணர் களே. மணிமேகலை, குண்டலகேசி தவிர்ந்த பழைய காப்பியங்கள் அனைத்தும் சமணர் படைத்தவையே. காப்பிய வழியினை க் கம்பர் முதலியோர்க்குச் செவ்வனே அமைத் துதவிய முன்னுேடிகளும் சமணரே. சமண ரது பூஜீபுராணம் உரைநடைக்காலப் பழைய இலக்கியத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந் துள்ளது. தமிழிலக்கியப் பரப்பில் நன்முத் துக்களாய் ஒளிரும் அறநூல்களிற் பல, சமணர் எழுதியவையே. பல்துறையிலும் தமிழ்ப் பணிபுரிந்த சமணரது அருந் தொண்டை மறத்தல் எளிதன்று.
D --

Page 77


Page 78


Page 79


Page 80
வண்ணமுறும் கட்டிடங்கள் வனப்புவளம் ஊட் அண்ணலவன் அருளாலே கலாவல்லி -R, QUOCUP பண்மகளின் பங்களிப்பை
பாங்குடனே ஓங்கிற கண்ணெதிரே காணுகின்றி கற்பகமாம் திருவ
 
 
 

கலா லயம்
܀ ܘܝܬ .
பலவே ஆக்கி டுவகை கலால யத்தை
ஆக்கித் தந்த க தாசன் எங்கள் பாருக் கோதப் ட - -
ற்கும் மண்ட பத்தைக் காட்சி என்னே க்கு எங்கள் நன்றி!
2.