கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறநெறிக் களஞ்சியம் 2003

Page 1


Page 2


Page 3

பூரீ சிவகாமிகந்தரி அம்பாள் துணை
தொகுப்பு செஞ்சொற்செல்வர்
ஆறு-திருமுருகன்
வெளியீடு
இணுவில் சைவத் திருநெறிக்கழகம் O5.O.2OO3

Page 4

ii. iii. iv.
vi.
vii.
பொருளடக்கம்
முன்னுரை
வெளியீட்டுரை
ஆசியுரை
வாழ்த்துரைகள்
சரஸ்வதி துதி இணுவைச் சிவகாமி அம்பாள் கீர்த்தனைகள். கட்டுரைகள் 1. ஆடலும் அறிகையும் தமிழர் பண்பாடும். 2. சிவநெறியும்அறநெறியும். 3. சைவத்தின் அறத்துறைகள். 4. ஆகம முறையில் திருக்கோயில். 5. அறநெறி வாழ்வு. 6. ஈழநாடும் விநாயகள் வழிபாடும். 7. மெய்ப்பொருள் கண்டார் வழி. 8. அறஞ்செய்ய விரும்பு. 9. அபிவிருத்தியும் அறநெறியும்.
17.
18.
19.
20.
21.
. இணுவில் ஒரு பண்பாட்டு ஊற்று.
ரீலறி ஆறுமுகநாவலரின் சித்தப்படி.
அவனே நான் மாதா பிதா குரு தெய்வம்.
வருங்கால சமுதாயத்தை வல்ல அறநெறிக்கல்வி.
அறநெறிப்போதனையின் அவசியம். இந்துசமுதாய வாழ்வினை நெறிப்படுத்தலில் அறநெறிப்பாடசாலை பெறும் இடம். திருவாசகம் காட்டும் பக்திநெறி. தெய்வ சாந்நித்தியம். இணுவில் சிவகாமி அறநெறிப் பாடசாலை. அறநெறிப் பாடசாலைகள். இந்துக் கோயில்களின் சமயப் பணிகள்.
viii. 56örgólu 6ODJ
viii xvi
O1
28
38
46
50
54
59
65
71
74
7ך
80 86
92
96
102
107
110
12
116
120

Page 5

(pdb6)6OJ
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் " செஞ்சொற் பெருவாக்கும் பிடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலாற் கூப்புவார் தம்கை
எல்லாம்வல்ல அன்னை சிவகாமியின் அருளாட்சியின் கீழ் இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தின் ஆதரவில் இயங்கும் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் ஆறாம் ஆண்டு நிறைவை யொட்டி அறநெறிக் களஞ்சியம் என்னும் மலரை நாம் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
இம்மலரை வெளியிடும் இவ்வேளையில் சிவகாமி அறநெறிப் பாடசாலையை ஆரம்பிக்கவும் வளர்ச்சியடையவும் மிகுந்த ஆக்கமும் ஊக்கமும் நல்லாசியும் தந்து இன்று அமரர்களாகியும் எம்மை நெறிப்படுத்தும் சிறப்புக்குரியவர்களான நால்வர் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டியவர்களாவர்.
சிவபூமியாகிய இறைபக்தி மலிந்த எங்களுரில் தோன்றிய சிவகாமசுந்தரி என்ற இயற்பெயர் கொண்டவர். அன்னை சிவகாமியின் அருள்பெற்றுத் தன் திருவாக்கினால் துயர்நிறைந்து வருவோருக்கு மிக எளிதான முறையில் கோரிக்கைகளுக்கு தக்கநிலை காண்பித்தவர். இதனால் பலராலும் சாத்திரம்மா என அழைக்கப்பட்டவர். அன்னை
தனது பணியென உணர்ந்து இல்லங்கள் தோறும் சென்று "பிடியரிசி” பெற்றுச் சிறுகச் சேர்த்துப் பெரிய திருப்பணிகளைச் செய்தார். சிவகாமி அன்னையின் கருவறை தொடக்கம் மகாமண்டபம், வானுயர் கோபுரம், மணிமண்டபம் வரையுள்ள நிர்மாண்ப்பணியை நிறைவேற்றினார். தனது தள்ளாத வயதிலும் தான் ஒருத்தியாக நின்று இப்பணிகளை நிறைவேற்றிய மூதாட்டி தன் சேவையால் என்றும் நினைவுகூரப்படுகிறார்.

Page 6
தற்போது இவ் அறநெறிப்பாடசாலை இயங்கும் அன்னதான மண்டபம் அமைக்க நல்ல சுபவேளை கேட்டபோது இக்கட்டிடம் அமைந்த இடத்தில் நல்ல தக்க கல்விமான்கள் உபதேசம் செய்யவும், பல சிறுவர்கள் கூடிக்குலாவிக் கல்வி பயிலவும் அன்னை சிவகாமியின் அருள் கிடைக்குமெனவும் யாவற்றையும் நிறை வேற்றுமாறு ஆசி கூறினார்.
அடுத்து அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் நாவலர் பரம்பரையை நினைவுகூரும் வகையில் புராணபடனம் செய்தல், கந்த புராணம், பெரியபுராணம், திருக்குறள், திருமந்திரம் ஆகிய அரிய நூல்களுக்கு வாராந்த வகுப்புகள் மூலம் விளக்கவுரைகள் வழங்கி இணுவிலில் ஆன்மீக தீபத்தை ஏற்றியதுடன் தமது சமூக, சமயத் தொண்டினால் பல ஆன்மீகத்தாபம் உடையோரை தம்பால் ஈர்த்து வழி நடாத்தியவர்கள் மதிப்பிற்குரிய திருவாளர் சபா ஆனந்தர் (B.O.L) அவர்களும், திருவாளர் மாணிக்கம் ஆனந்தம் அவர்களும் ஆவர். இவர்கள் இவ்விடத்தில் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
திரு. சபா ஆனந்தர் அவர்கள் சமூகத்தொண்டு செய்யும் போது நல்ல பயனுள்ள கருத்துக்களையும் அவ்வப்போது வெளியிடத் தவறுவதில்லை. அந்த வகையில் அன்னதான மண்டபத்திற்கு அத்திபாரம் இடும்போது "இது அன்னசாலை மட்டுமன்றி அறநெறிச் சாலையாகவும் ஆன்மீகத் தொண்டு புரியும் இடமாகவும் சமய வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் வகையில் இங்கு அறநெறி வகுப்புகளும் அரங்கேற வேண்டும்” என்று ஆலோசனை கூறி ஆசியும் வளங்கினார்.
திரு மாணிக்கம் ஆனந்தர் அவர்கள் மேற்கூறிய கருத்துகளுடன் நில்லாது 1995 இல் இதே மண்டபத்தில் சைவசமய வகுப்புகளை ஆறு மாதங்கள் நடாத்தியதுடன் கலை நிகழ்ச்சி களையும் நடாத்தி அதில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில் களையும் வழங்கி முன்மாதிரியாக எமக்கு வழிகாட்டியதோடு இவ்
ii

அறநெறிப் பாடசாலையை உருவாக்குவாதற்கு அத்திபாரமிட்டுத் தந்தார். அந்த வகையில் மேற்கூறிய இருவரையும் இவ்விடத்தில் நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தனது பதவிக்குரிய பணிகளுடன் மட்டும் நில்லாது இந்து சமய வழிபாடும், சமயப்பணிகளும், பண்பாடும் யாழ்ப்பாணத்தில் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு பணியாற்றிய முன்னாள் வலிதெற்குப் பிரதேச செயலரும், இந்து சமயப் பேரவையின் முன்னாள் உபதலைவரும், முன்னாள் இந்து சமய கலாசார உதவிப் பணிப்பாளருமான மதிப்புக்குரிய அமரர் திரு.ஆமகாலிங்கம் அவர்கள் எங்கள் பகுதியில் அறநெறிப் பாடசாலை ஒன்று நிறுவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன் 1997 ஆம் ஆண்டு சிவகாமி அறநெறிப்பாடசாலை என்ற பெயரில் ஆரம்பித்து இதற்கென ஒரு தொகுதி தளபாடங்களையும் வழங்கி இப்பாடசாலை செயற்படுவதற்குப் பெரிதும் காரணகர்த்தாவாகவும் இருந்த இவரை இவ்விடத்தில் நினைவுகூர்வதில் நாம் பெரும் நிறைவடைகிறோம்.
மேற்கூறிய அமரர்கள் விதைத்த வித்துக்களினால் எமது அறநெறிப் பாடசாலை வள்வதால் இன்று 51 பிள்ளைகள் இங்கு அறநெறிக்கல்வி, திருமுறை ஓதல், நடனம், சங்கீதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறுகின்றனர். அத்துடன் அன்னை சிவகாமியின் ஆலயம் பெருக்குதல், மகோற்சவ காலத்தில் வெளிவீதியில் பஜனை பாடுதல், ஆசாரத்துடன் கிரமவழிபாடு செய்தல் போன்றவற்றையும் இம் மாணவர்கள் மேற்கொள்கின்றனர். இவர்களது நன்மை கருதி நாயன்மார் குருபூசைத் தினங்கள், நவராத்திரி பூசை, திருவாசக முற்றோதல், திருவாசகவிழா, மகோற்சவ காலத்தில் தொடர் சொற்பொழிவும், சமயபாடப் பரீட்சை வைத்துப் பரிசில் வழங்கல் போன்ற அரிய நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
iii

Page 7
இப்பாடசாலை வளர்ச்சியின் பெறுபேறாக 21 கல்விமான்கள் அறிஞர்களின் பண்பான கட்டுரைகளையும், அன்னை சிவகாமியின் ஆலயப் பெருமைகளை மகாவித்துவான் பிரம்மரீ ந. வீரமணி ஐயர் அவர்களால் இயற்றப்பட்ட 51 கீர்த்தனைகளையும் உள்ளடக்கிய ஆன்மீக - அறநெறி நூலான "அறநெறிக் களஞ்சியம்" என்னும் மலர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களால் தொகுக்கப்பட்டு எங்கள் சைவத் திருநெறிக் கழகத்தின் கன்னி முயற்சியாக வெளிவருகிறது. மேற்கூறிய நான்கு அமரர்களுக்கும் இம்மலரைப் பாதகாணிக்கையாகச் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகின்றோம்.
OSO2O3 இணுவில்
சைவத் திருநெறிக் கழகத்தினர்
i'w

L சிவமயம்
வெளியீட்டுரை
இணுவில் சைவத் திருநெறிக் கழகத்தின் அருந்தொண்டு போற்றுதற்குரியது. சீர்நெறியை எம் சிறார்களுக்கு வழங்க சைவ திருநெறிக்கழகம் பல பணிகளைத் தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது. அவ்வகையில் அறச்சிந்தனைகளையும், ஆன்மீகக் கருத்துக் களையும் இணுவைத் திருவூர் சைவமரபின் மாண்பையும் இளைய தலைமுறை அறிவதற்கு ஏதுவாக "அறநெறிக் களஞ்சியம்" என்ற இந்நூல் வெளியிடப் பெறுகிறது. இணுவில் சைவத் திருநெறிக் கழகத்தின் ஆற்றுப் படுத்தலில் நடைபெற்றுவரும் சிவகாமி அறநெறிப் பாடசாலையின் ஆறாவது ஆண்டு நிறைவு ஞாபகமாக இம்மலர் அரங்கேறுவது சிறப்பம்சமாகும். இணுவில் அருள்மிகு சிவகாமி அம்பாள் திருக்கோயில் இணுவை மக்களின் தாய்த் திருக் கோயிலாகும். இத் திருக்கோயில் மணியோசை கேட்டு எம் திருவூர் விடிவது இயற்கை அற்புதமான அம்பாளின் தெய்வீகச் சூழல் அறநெறியாலும் கல்விக் கூடம் வளர்க்கப்படுவது பாராட்டுதற்கு உரியது. கல்விகளிற் பெரிய கற்றறிவாளர்களின் கருத்துக்களையும், ஆன்மிகச் சிந்தனையாளர்களின் அறக்கருத்துக்களையும் உள்ளடக்கி
வெளிவரும் இம்மலர் எமது சமகாலத்தின் வளர்ச்சிக்கு உதவும்
என்பதில் ஐயமில்லை. மகா வித்துவான் கவிமாமணி வீரமணிஜயர்
முதல் மாணவன் தமிழ்மாறன் வரை எழுதிய ஆக்கங்கள் இம்மலரில்
இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பருவத்தவர்களின்
படைப்பாக "அறநெறிக்களஞ்சியம்’ உங்கள் கைகளுக்கு W

Page 8
அர்ப்பணமாகிறது. இம்மலர் பிரகாசிப்பதற்கு வேர்போல் மறைவாய் நின்று செயற்பட்டவர் இளைப்பாறிய கிராம அலுவலர் உயர் பண்பாளர் திரு.சிவலிங்கம் ஐயா அவர்கள். அவர்களின் அயராத பணி என்றும் நன்றிக்குரியது. இம்மலரை கணனி முறையில் பதிப்புச்செய்து உதவிய இணுைவில் கியோகாஸ் பிறிண்ரேர்ஸ் நிறுவனத்தாருக்கும், இளைய தலைமுறையினருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். இம்மலரை தொகுத்து வழங்கும் பேற்றினைப் பெரும் பேறாகக் கருதி இறைவனைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
செஞ்சொற்செல்வர்
ஆறு. திருமுருகன்
vi

இணுவில் சிவகாமி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவழுதி சாம்பசிவ சோமசபேசக்குருக்கள் அவர்கள் வழங்கிய
ஆசியுரை
எல்லாம் வல்ல இணுவில் சிவகாமி அம்மன் திருவருளால் நாட்டில் சமயபக்தி மேலோங்க வேண்டிய நேரத்தில் அன்னையின் வாசலில் அமைந்துள்ள அன்னசாலையிலே இணுவில் சைவத் திருநெறிக்கழகம் என்னும் சமய நிறுவனம் சிறார்களுக்குரிய அறிவு மேலும் வளர்வதற்காக ஓர் அறநெறிப்பாடசாலையை தொடங்கி கடந்த ஆறு ஆண்டுகளாக நல்ல தொண்டாற்றி வருகிறது. இப்பாடசாலையில் அறநெறிக்கல்வி, திருமுறை ஒதல் ஆகியவற்றை அநேக சிறுபிள்ளைகள் தொடர்ந்து கற்று வருகின்றனர். இப் பாடசாலையின் ஆறாவது நிறைவு விழாவில் சைவத் திருநெறிக்கழகத் தொண்டர்களின் பெருமுயற்சியால் வெளியிடப்படும் "அறநெறிக் களஞ்சியம்" சிறாருக்கு மட்டுமன்றி சமய அறிவை நாடும் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க அம்பிகையின் அருளால் பல சிறப்புக்களையும் பெற நல்லாசி கூறி வாழ்த்துகின்றேன்.
பிரதம சிவாச்சாரியார் சிவழி சாம்பசிவ சோமசபேசக் குருக்கள் சிவகாமி அம்மன் கோவில்
இணுவில்.
vii

Page 9
இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தால் வெளியிடப்படும் “அறநெறிக் களஞ்சியம்” நூல்வெளியீட்டு விழா
வாழததுரை
பண்பாட்டினாலும், சமய ஒழுக்கத்தினாலும் சிறந்து விளங்கும் இடம் இணுவில் பதியாகும். அருள் நிறைந்த ஆலயங் களும் ஒருசேர அமைந்த கிராமமும் இதுவேயாகும். இத்தகைய கிராமத்தின் சமய, சமூகப் பணிகளை மேம்பாடடையச் செய்பவர் களாக இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தினர் விளங்குகின்றனர். இம்மன்றத்தினர் ஆற்றும் அளப்பரிய பணிகளை நான் நன்கு அறிவேன். சமயத்தோடு சமூகத்தையும் இணைத்து இவர்கள் ஆற்றிவரும் சேவை அளப்பரியது. இப்பணிகளின் ஒரு அங்கமாக அமைவதே சிவகாமி அறநெறிப் பாடசாலை ஆகும். இப் பாடசாலையில் மாணவர்களுக்கு சமய அறக் கருத்துக்கள் போதிக்கப்பட்டு சமய ஒழுக்கத்துடன் வாழ வழிகாட்டப் படுகின்றது. இத்தகைய பணிகளின் ஒரு கட்டமாக அமைவதே "அறநெறிக் களஞ்சியம்” என்னும் நூலின் வெளியீடுமாகும். இந்நூல் ஆன்மீகம் சார்ந்த அறநெறிக் கருத்துக்களைக் கொண்ட இருபத்தொரு கட்டுரைகளுடன் வெளிவர இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். இந்நூலை நல்ல முறையில் தொகுத்த செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களையும், இணுவில் சைவத் திருநெறிக் கழகத்தினரையும் வாழ்த்தி ஆசிகூறி அமைகின்றேன்.
கலாநிதி செல்வி, தங்கம்மா அப்பாக்குட்டி சமாதான நீதிபதி தலைவர் பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை, இலங்கை.
viii

இந்துசமய, கலாசார அலுவல்கள் அமைச்சின் பளிப்பாளர் திருமதி சாங்ரீ நாவுக்கரசன் அவர்கள் வழங்கிய
வாழ்த்துச் செய்தி
இணுவில் சைவத் திருநெறிக்கழகத்தின் அனுசரணையோடு நடாத்தப்படும் சிவகாமி அறநெறிப் பாடசாலையின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு எனது வாழ்த்துக்களை அளிப்பதில் மிக்க மகிழ்வடைகின்றேன்.
இப்பாடசாலையின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டு உதவி புரிந்த இருபத்தொரு சான்றோர்களின் கட்டுரைகளைத் தாங்கியதாக இம்மலர் வெளியிடப்படுகின்றமை மிகவும் சிறப்புக்கு உரியதாகும்.
அறநெறிப்பாடசாலைகளே இளைய இந்து சமுதாயத்திற்கு உரிய வழியினைக் காட்டும் அமைப்புக்களாக விளங்குவன. இங்கு பயிலும் சிறார்கள் சமய உண்மைகளை அறிந்து கொள் வதோடு மட்டுமன்றி பக்தி உணர்வும், ஆன்மீக ஈடுபாடும் மிக்கவர் களாகத் திகழ்வார்கள் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
இந் நோக்கத்தைக் கருத்திற்கொண்டே, அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்காக பல செயற்திட்டங்களை எமது திணைக்களம் செயற்படுத்தி வருகின்றது. ஆசிரியர்களுக்கு மாவட்ட ரீதியில் பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்துதல், மாணவர்களுக்கு உசாத்துணை நூல்கள் வழங்குதல், சிறந்த பாடசாலைகளுக்கு இசைக்கருவிகளை வழங்குதல் என்பன குறிப்பிடத்தக்க சில செயற்பாடுகளாகும்.
அவ் வகையில் இணுவில் சைவத் திருநெறிக்கழகம், மிகச் சிறந்த முறையில் ஆறு ஆண்டுகள் சிவகாமி அறநெறிப்
ix

Page 10
பாடசாலையை நடத்தி வருவது அறிந்து மிக்க மகிழ்வடை கின்றேன். கழகத்தினரின் முயற்சியில் இப்பணி மென்மேலும் சிறக்க எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கழக அனுசரணையாளரும் சமயச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் இம்மலரைத் தொகுத்து வழங்குவது போற்றத்தக்க பணியாகும்.
85LD55 க்கும், மலர்ச் பினருக்கும் எனது ட்டுக்கள் உரியன.
சாந்திநாவுக்கரசன் J60tfuTGIrir இந்துசயம கலாசார அலுவல்கள் திணைக்களம்

இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் இடதவிப் பணிப்பாளர் (யாழ் பிராந்திய அலுவலகம்) சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் அவர்கள் விடுக்கும்
வாழ்த்துச் செய்தி
ஒரு மனிதனுடைய வாழ்வு முழுமை பெறுவதற்கு உடற்பலம், மனோபலம், ஆத்மபலம் ஆகிய மூன்று வகையான பலமும் இருக்க வேண்டியது அவசியமாகும். நல்ல காரியங்கள் பலவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் ஆற்றுவதற்கு உடல் ஆரோக்கியம் உள்ளதாக இருக்க வேண்டும் "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்றே தமிழ் மந்திரமாகிய திருமந்திரமும் குறிப்பிடுகின்றது. எடுத்த காரியங்களை இனிதே நிறை வேற்றுவதற்கு தளர்வறியா மனம் வேண்டும். "தூயவை துணிந்த போது பழிவந்து தொடர்வதில்லை” என்ற வாக்கியத்திற்கு அமைய மனதில் சரியென்று நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கு ஏற்ற மனோபலம் வேண்டும். ஆனால் தனியே உடற்பலம் மாத்திரம் இருந்தால் அது மிருக பலமாக மாறிவிடும். மனோபலம் மிக்கவர்கள் நினைத்ததை முடிப்பவன் நான் என்ற நினைப்போடு நல்லதோ, கெட்டதோ, சரியோ, பிழையோ சில காரியங்களைச் செய்து முடிப்பதை நாம் உலகியல் வாழ்க்கையில் காண்கிறோம். நம்முடைய உடற்பலமும், மனோபலமும் சரியாக இயங்குவதற்கு ஆத்மபலம் மிகவும் அவசியமாகும்.
இறைவனுடைய திருவருள் இல்லாவிட்டால் எக்காரியமும் சரியாக சிந்திக்காது இறையருளைப் பெறுவதற்கு மனிதனது அகமும், புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் தூய்மையுள்ள இடத்தில் தான் தெய்வம் வாசம் செய்யும் என்றே நமது புராணங்களும் கூறுகின்றன. சிவனடியார்கள் அகமும், புறமும் தூய்மையுடையவர்கள் என்பதை
xi

Page 11
'மாசிலாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறும் போல் உள்ளும் புனிதர்கள்”
எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
அறம் அல்லது தர்மம் தான் மனித வாழ்வுக்கு அடிப்படை ஆகும். "தர்மத்தை காத்தவனை அது காக்கும் கொன்றவனை அது கொல்லும்” என்றே இந்து தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவ்ரும் அறவிழுமியங்களைப் பேணி வாழவேண்டும். முன்னைய காலத்தில் குடும்பங்களில் இருந்த மூத்த அங்கத்தவர்கள் தமது அடுத்த சந்ததியினருக்கு அற விழுமியங்களை போதித்தார்கள். சேமய, சமூக ஸ்தாபனங்கள்
வந்தன
இணுவில் சைவத் திருநெறிக்கழகம் அறநெறிப் பாடசாலையை மிகச் சிறப்பான முறையில் நடாத்தி மாணவர்களை நற்பிரஜைகளாக மாற்றுவதற்காக பெருமுயற்சி எடுத்து வருகின்றது. இந் நிறுவனத்தினர் "அறநெறிக் களஞ்சியம்” என்ற ஆன்மீக நூல் ஒன்றை வெளியிட இருக்கின்றார்கள்.
இணுவில் பதியிலே இருந்து அருளாட்சி புரியும் அன்னை சிவகாமியின் அருள் சைவத் திருநெறிக் கழகத்தினருக்கு பூரணமாக கிடைக்க வேண்டும் என்று அம்பிகையின் பாதார விந்தங்களைப் பணிந்து அனைவருக்கும் வாழ்த்துக்கூறி அமைகின்றேன். . . . . . .
AŘg Fou விவகார அலுவல்கள் அமைச்சு,
யாழ்ப்பாணம்.
xii

இடடுவில் பிரதேச செயலக கலாசார இடத்தியோகத்தர் பி.சந்தியவாணி அவர்கள் வழங்கிய
வாழ்த்துச் செய்தி
இணுவில் சைவத் திருநெறிக்கழகம் வெளியிடும் "அறநெறிக் களஞ்சியம்” என்னும் ஆன்மீக அறநெறி தழுவிய நூலை வெளியிடுவதையிட்டும் அதற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதிலும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்நூலில் இருபத்தொரு அறிஞர் பெருமக்களின் கட்டுரைகள் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரிய விடயமாகும்.
குறிப்பாக இக்கட்டுரைகளை அழகு தமிழில் தொகுத்து வழங்கியுள்ள செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் ஐயாவின் பணி போற்றுதற்குரியதாகும்.
இன்றைய இளஞ்சமுதாயத்தினருக்கு சமயநெறியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் அறநெறிப் பாடசாலைகளுள் சிவகாமி அம்மன் அறநெறிப்பாடசாலை ஒருபடி மேலே சென்று "அறநெறிக் களஞ்சியம்” என்னும் ஆன்மீக நூலை வெளியிடுவது இன்றைய நிலையில் மிகவும் அவசியமானதொன்றாகும். இந்நூல் இளம் சமுதாயத்தினரிடையே ஒழுக்கத்தையும், சமய நெறியிலான வாழ்வையும் எமது பண்பாட்டு விழுமியத்தையும் மேன்மையுற வைக்கும் என்பது திண்ணம்.
இத்தகைய சிறப்பான பணியினை மேற்கொண்டிருக்கும் இணுவில் சைவத் திருநெறிக்கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியே.
செல்வி பிசத்தியவாணி கலாசார உத்தியோகத்தர் பிரதேச செலயகம், உடுவில். xiii

Page 12
சரஸ்வதி துதி
ந்தகத் துள் வில் அமர்ந்திக வாழ்ே வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி முத்தின் குடை உடை யாளே மூவுலகுந்தொழுது ரத்துஞ் செய்புக் கவித்த முனையாய் செங்வரிஓடிய கணினாய் தக்கோலத்தின்றும் வாயாய் சரஸ்வதிஎண்றும் திருவே எக்காணமும் உன்னைத் தொழுவேன் இயல் இசை நாடகம் என்றும் முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்து என் சித்தந்தனில் நீ இருந்து திருவருள் செய்திருவாயே
xiv
 

(l)
MOM Mesuth
)
இணுவைச் fGöITLměřiliğif 9Hsh UITGI கீர்த்தனைகள்
இயற்றியவர் : இணுவில்
மஹாவித்துவான் பிரம்மபூர் வீரமணி ஐயர் J.P
அவர்கள் றி சிவகாமிசுந்தரி அம்பாள் துணை ஆனைமுகன் அன்னையே சரணம்
ராகம்: கம்பீரநாட்டை தாளம்: ஆதி
பல்லவி
ஆனைமுகன் அன்னையே - அருள்வாய்
மோனைத் தமிழ்அழகி முத்துச் சிவகாமி
அனுபல்லவி தேனைப் பொழியுமலர்ச் சோலைப் பதிறுேவை வானை யளாவும் கோயில் வாழும் அம்பிகையே
சரணம் நெக்குநெக் குருகிநான் நின்னையே பாடஅருள் அக்குரு பரனுக்கு அயில்கொடுத்த தேவி! திக்குவே றில்லையம்மா தீன தயாபரியே பக்குவ மார்க்கம்காட்டும் பராபரையே தாயே!

Page 13
(2)
(3)
அறநெறிக் களஞ்சியம்
பதமருள்வாப் சிவகாமி
ராகம்: கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி
பதமருள்வாய் சிவகாமி - தாயே
பரம சிவன்மருவும் பார்வதி அபிராமி
அனுபல்லவி நிதமுனை வேண்டினேன் நித்திய கல்யாணி வதியும் இனுவைநகள் வாலினி சூலபாணி
சரணம் தாயே நின்கழல் தஞ்சமெனப் பணிந்தேன் நீயே அருள்வாயே நீலாய தாகூதியம்மா
மாயே மனோன்மணி மாதங்கி சிவகாமி
சேயே னெனக்கருள்வாய் ஜெகதீஸ் வரிஅம்மா
பக்தித் தமிழ்பாடச் சொக்கினாள் சிவகாமி
ராகம்: திலங் தாளம்: ஆதி பல்லவி
இனிக்க இனிக்கச் சிரித்தாள் - சிவகாமி பனித்திடத் தமிழ்ப்பாடல் பக்தியுடன் இசைக்க
அனுபல்லவி மனக்கவலை தீர்க்கும் மஹேஸ்வரி சிவகாமி கனிகுலுங் கும்சோலைக் கவின்னுெ வைப்பதியில்
சரணம் பக்தித் தமிழ்பாடச் சொக்கினாள் சிவகாமி சக்திசாம் பவிகெளரி சித்தம் மகிழ்ந்துநின்றாள் வித்தகள் வாழ் இனுவை விளங்கிட அருள் செய்தாள் அத்தி முகன்குமரன் அரணை அணைத்து அன்னை
(02

இரங்கியருள்வாள் எங்கள் தாய்
(4) ராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி
பல்லவி இரங்கி யருள்வாள் எங்கள்தாய் - அன்பு சுரந்திடும் சிவகாம சுந்தரி பதம்பாட
அனுபல்லவி கரந்தனில் அபயமும் வரதமொடு இணுவை அமர்ந்திடும் அருள்அன்னை அபிராமி பதம்மேவ
சரணம் அகிலாண்ட நாயகி ஆனந்த பைரவி மகிடா சூரனை வதம் செய்த ஆங்காரி பகிராண்ட பார்வதி பார்கவி ஓங்காரி முகிலாண்ட வண்ணனாம் முகுந்தன் ஸகோதரி
ஆயகலைகளெல்லாம் அள்ளித் தருவாள் (5) ராகம்: பீம்பிளாஸ் தாளம்: ஆதி
பல்லவி தாயவள் தாமரைப் பதம்பாடு - மனமே மாயவன் சோதரி மாதங்கி சிவகாமித்
அனுபல்லவி நேயமுடன் இனுவை நிரஞ்ஜனி யைப்பணிய ஆயகலைகள் எல்லாம் அள்ளித் தருவாள் தேவி
சரணம் னுெவை நகரில் வாழும் சிவகாம சுங்கரி இசையில் உருகிடுவாள் இன்பமெல் லாம்தருவாள் அணுவிலும் தானிருப்பாள் அண்டத்தி லும் இருப்பாள் ஆதி பராசக்தி அன்னை சிவகாமிக்
di Sindsub

Page 14
(6)
(7)
செந்தமிழ்ப் பாடலுக்குச் சிந்தை உருகிடுவாள் ராகம்: பெஹாக் தாளம்: ஆதி
பல்லவி செந்தமிழப் பாடலுக்குச் சிந்தை உருகிடுவாள் சுந்தரி சிவகாமி சுபமங்க ளம்அருள்வாள்
அனுபல்லவி பைந்தமிழ் இன்னிசைவாழ் பதினுேவையில் அன்னை வந்தமர்ந் தேஎமக்கு வரமெல்லாம் தந்திடுவாள்
சரணம் அன்னை சிவகாமி அருள்விழி நீர்சொரிய கன்னல் தமிழிசையில் களித்தருள் வாள்தேவி வண்ண வடிவழகி மின்னல் இடையழகி மன்னும் ஏழிசைத்தமிழ் வளர்னுேவைச் சுந்தரி
நவமான இணுவையின் நாயகி ராகம்: தோடி தாளம்: ஆதி பல்லவி பவசாக ரம்நீக்கும் பார்வதி நல்கினுவைச் சிவகாமி பதம் பாடுவாய் - மனமே
அனுபல்லவி தவமான செந்தமிழ்த் தலமாம்ஏ பூழிசைவளர் நவமான இணுவையின் நாயகி அபிராமி
சரணம் அருள்சுதந் தோடிடும் அங்கயற் கண்ணியவள் திருவடி பாடியே தினம்துதிப் பாய்மனமே திருதிகழ் இணுவையின் சிவகாம சுந்தf திருவருள் புரிகுவள் தீனதயாபரி
அறநெறிக் களஞ்சியம்

(8)
(9)
அறநெறிக் களஞ்சியம்
சிவகாம கந்தரித் தாயே ராகம்: பரகேழரீ தாளம்: ஆதி
பல்லவி பரராஜ செகராஜப் பதிக்கண பதிபோற்றும் சிவகாம சுந்தரித் தாயே - சரணம்
அனுபல்லவி கரமாடும் வேல்முருகன் காரைக்கா லின்சிவனும் அரவாடும் திருமேனி அம்பிகை உனைஏத்த
சரணம் மஞ்சத்தடி முருகன் கொஞ்சி யணைக்கும் தாயே நஞ்சணி கண்டன்விஸ்வ நாதன் மகிழும் மாயே கஞ்சனை வதம் செய்த கண்ணன்சோ தரிநியே தஞ்சம் அருள் இனுவைத் தலம்அமர்ந் தருள்வாயே
வந்தெனக்கருள் தரும் கெளரி ராகம்: ரஞ்சனி தாளம்: ரூபகம்
பல்லவி சுந்தரி நிரந்தரி சுகுணவதி சிவகாமி
அனுபல்லவி
சுந்தரி துரந்தரி அகிலலோக நாயகி
சரணம் உந்தன் பதமே உறுதுணையென உலகினிலே சரணடைந்தேன் வந்தெனக்கருள் வழங்கிடும் தாயே செந்தமிழ் இசை செழிக்கும் இணுவைச்

Page 15
அருள் சிந்து பைரவி (lo) ராகம்: ஸிந்துபைரவி தாளம்: ஆதி
பல்லவி அருள்சிந்து பைரவி அழகான சைந்தவி இருள்நீக்கும் சுந்தரி சிவகாம சுந்தரி
அனுபல்லவி திருவோங்கும் இணுவையில் திகழும் நிரந்தரி பொருளோங்கும் புலவர்சூழ் புரந்தரி துரந்தரி
சரணம் ஏழிசை வித்தகள் எழுத்தறி வித்தவள் மேழி செலுத்துபவர் வாழிசொல் லிப்பாட வரங்களும் நல்கிடும் வாராகி நீயல்லவோ காளி திரிசூலி காமாகூஜி மீனாகூஜி கருணை புரிந்தாதரி சூழினுவை வளர் சுமங்கலி சிவகாம சுந்தரி பதம் அருள்வாய்
ஏனோ இந்த மெளனம் தாயே (11) ராகம்: சுபபந்துவராளி தாளம்: ஆதி
பல்லவி அழைப்பதுன் செவிகளில் விழவில்லையா? - தாயே அம்மாஅம் மாஎன்றே இம்மாநி லத்தில்சேயேன்
அனுபல்லவி
குழைந்திடும் நெஞ்சம்விம்மி குமுறிக் குமுறி நொந்து இளைக்கும் இதயம்உன்னை இறைஞ்சுதல் கேட்கலையோ?
சரணம் பெற்றமணம் பித்தென்பது பொய்யுரை யாகலாமோ? உற்றவொரு மாதாநீயே உணர்வாயே நானேசேயே கற்றவர்வாழ் இனுவையிலே கவின்கோயில் கொண்ட தேவி! இத்தரையில் நியேகதி ஏனோ இந்த மெளனம் தாயே!
அறநெறிக் களஞ்சியம் =

(12)
(13)
Anand dates full =
அரிமாவின் மீதமரும் அரிமாயன் சோதரி ராகம்: கௌரிமனோகரி தாளம்: ஆதி
பல்லவி சிவகாம சுந்தரி அபிராமி அந்தரி பதமே பணிவாய் மனமே இனுவைவளர்
அனுபல்லவி புவிமீதில் கலைஞானம் பொருள்மேவும் தனபாக்யம் அமுதூறும் தமிழ்பாட அள்ளிஅள் விரித்தருவாள்
சரணம் அரிமாவின் மீதமரும் அரிமாயன் சோதரி திரிசூல நவகாளி திரிபுர சுந்தரி பரிவோடு சிவகாமி பதம்பாடி நீதுதி சிவகெளரி மனோஹரி சேவடி யேகதி
மயிலாடும் பதியினுவை மன்னிடும் ஈஸ்வரி ராகம்: காம்போதி தாளம்: ஆதி
பல்லவி கயிலாய வாஹனத்தில் ஒயிலாக அமர்ந்தருள் கயல்விழி சிவகாமி கழலடி கள்சரணம்
அனுபல்லவி
மயிலாடும் பதியினுவை மன்னிடும் மகேஸ்வரி
சயிலேத் திரன்பரவும் சாமுண்டி ஆதரி
சரணம் முன்னம் இராவணன் முகிழ்ந்தெடுக்க மலையை வன்ன வடிவழகி வளைத்தனை ஈசனை கன்ன லிசைபாடி கரவீணை கோன்பாட அன்னவ னுக்கேஅருள் அபயமளி த்த தேவி

Page 16
(14)
(15)
அறநெறிக் களஞ்சியம்
பன்னக பூஷணி ராகம்: பிருந்தாவனசாரங்க தாளம்: ரூபகம்
பல்லவி நல்லபரம் பணிந்திடும் நாகேஸ்வரி தாயே வல்ல அபிராமி வாராகி சிவகாமி
அனுபல்லவி மெல்லிசை தவழ்ந்திடும் நல்லிசைச் செல்வமலி மல்லிகைச் சோலைமணம் மலரும் இனுவை யிலே
சரணம் பன்னக பூஷணி பாப விமோசனி கன்னலின் தமிழ்பாட கனிந்திடும் சிவகாமி உன்னடி யேதஞ்சம் உலகினில் ஆதரி இன்னமு தானநகள் இணுவைத் தலம்வளரும்
மகிடாதுரனை மர்த்தனம் செய்தவள் ராகம்: தேஷ் தாளம்: ஆதி பல்லவி அற்புதக் காட்சி தந்தாள் - அன்னை பொற்புறு புரவியில் பொலிந்தமர்ந் தேஉமை
அனுபல்லவி கற்பனைக் கெட்டாத கவின்நிறை தேசுடன் முற்பவத் தின்புண்யம் முகிழ்ந்ததே எனப்பாட
சரணம் மகிடாசூரனை மர்த்தனம் செய்தவள் அகிலாண்டேஸ்வரி அன்னை சிவகாமி திகிலூட்டும் படிபாய்ந்து தீயனாம் அசுரனை பகிராண்ட நாயகி வதம்செய்தே வாளுடன்

(16)
(7)
சிற்கேறிக் களஞ்சியம்
கற்பூர ஒளியினிலே ராகம்: கல்யாணவசந்தம் தாளம்: ஆதி
பல்லவி கற்பூர ஒளியினிலே காட்சி தந்தாள் அன்னை பொற்பூரும் அருள்முகம் பொலியப்பக் தர்கனிய
அனுபல்லவி விற்பூணும் விழிநுதலில் விளங்கிடும் பேரருள் வெற்பேழும் துதித்திட வியன்பதி இனுவையில்
சரணம் ஜோதிஸ்வ ரூபிணி ஆதி பரமேஸ்வரி மேதினியில் இணுவை மேவும் சிவகாமி வேதங்கள் போற்றிடும் விசாலாகூஜி காமாகூ மாதவன் சோதரி மன்னிடும் இணுவையில்
பாவலர் போற்றிடும் பராயரை ராகம்: ஷண்முகப்பிரியா தாளம்: ஆதி
பல்லவி
பாவலர் போற்றிடும் பராபரையே - அருள்
நாவலர் போற்றிடும் நல்லினுவை வளர்
அனுபல்லவி தேவரெல் லாம்துதிக்கும் தேவநா யகிதாயே ஆவலாய் உன்னடி அருளுவாய் துணை நீயே
சரணம் ஏழிசை வித்தகள் எழிலுடன் வாழ்பதி மேழிச்செல் வம்நிறை மேவும் இணுவையில் காமி சிவகாமி காளி அபிராமி நீலி திரிசூலி நிழல்தரும் மாரி

Page 17
(18)
(19)
அறநெறிக் களஞ்சியம்
புலவனுக் கருளிய பூரணி ராகம்: காமால் தாளம்: ஆதி
பல்லவி புலவனுக் கருளிய பூரணி - சிவகாமி உலகில் வஞ்சனையினால் உழன்ற சின்னத்தம்பிப்
அனுபல்லவி பலகலைகள் மிளிரும் பாவலர் பாட்டிசைக்கும் நிலவும் இசை பெருகும் நிறைகலை இணுவையில்
சரணம் சிறைசென்ற புலவனும் சிவகாமியைப் பாட நிறைவரம் அருளியே சிறைவாசம் மீட்டனள் அறநெறி வழுவாது அடியவர்க் கருளுவார் குறையிலா வரம் தரும் சிவகாமி அபிராமி
பிடிஅரிசி எடுத்தே பெருங்கோயில் கட்டினாள் ராகம்: Rம்மேந்திரமத்யமம் தாளம்: ஆதி
பல்லவி பிடிஅரிசி எடுத்தே பெருங்கோயில் தனை அமைத்த பிராட்டி சாத்திரம்மாவுக்கே - பேறுதந்தாள் சிவகாமி
அனுபல்லவி அடியவளாக உண்மை அன்பு கொண்டு பூஜித்தாள் நெடிய கோபுரக் கோயில் இனுவையிலே அமைத்தாள்
சரணம் கருவறை முதல் வாசல் கோபுரம் எழுப்பினாள் பெருமணி மண்டபம் பொலிகல்லினால் சமைத்தாள் திருப்பொலியும் குடமுழுக்கதும் ஆட்டினாள் திருப்பணிச் சாத்திரம்மா சிவகாமசுந்தரிக்கே

வண்ணவண்ண மலர் பூக்கும் பூஞ்சோலை (20) ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி
பல்லவி வண்ணவண்ணமலர் பூக்கும் பூஞ்சோலை - அது வள இனுவைச் சிவகாமி கோயில் வீதிச் சாலை
அனுபல்லவி எண்ணமெல்லாம் எழிலிசிவகாமி பதம் நினைந்து கொய்து பண்ணும் பூமாலையாக்கி பரைசிவையின் பதம்சூட்ட
சரணம் மல்லிகை முல்லையொடு மலர்ச் செவ்வந்தி செவ்வரத்தை மெல்லிய பாரிஜாதம் மேவிடு பொன் நொச்சிகளும் செவ்வலரி நீலோற்பவம் செவ்வந்தி செங்கழு நீர் செவ்விய மலர்கள் பூக்கும் சிவகாமி பாதம் சேர்க்கும்
அன்னபூரணி சிவகாமி (2) ராகம்: சிவரஞ்ஜனி தாளம்: ஆதி
பல்லவி அன்ன பூரணிசிவ காமி அன்னை பாலிக்கும் அன்னதான மண்டபம் அழகுறும் இணுவையிலே
அனுபல்லவி நன்னகள் இணுவையூர் நாடி வருவோர்க்கு அன்னமிட்டு உபசாரம் அடியார்கள் ஆற்றிட
சரணம் பசிப்பிணி நீக்கிட பர்வதம் போல் அன்னமலை ருசிநிறை கறிவகை குழம்பு ரசம் பாயாசம் தசவித உண்டிகள் தந்தே ஏழை மக்களின் பசிதீர அன்னம் நல்கும் பராபரை அருட்கோயிலில்
சிறிதெறிக் களஞ்சியம் = = G11)

Page 18
இணுவையூர் சைவத் திருநெறிக் கழகம் (22) ராகம்: பெலஹரி தாளம்: ஆதி
பல்லவி வையகத்தில் இணுவையூர் சைவத்திருநெறிக் கழகம் வழங்கும் சேவையில் சைவம் விளங்கிடுமே
அனுபல்லவி தெய்வ நெறியான மேன்மைச் சைவநிதி விளங்க வைத்தே உய்யுநெறி காட்டிடுமே உயர் தெய்வ பக்தி நல்கி
சரணம் அறநெறிப் பாடசாலை சைவநெறி வளர்க்கும் திருமுறை பண்ணிசைகள் தெய்வீக மணம் கமழும் குருகுல மூலம் கீதம் வாத்தியம் நிர்த்தியம் கொழிக்கும் பிரகாசம் தரும் பிஞ்சுக் குழந்தைக் கல்வியூட்டி
நல்லவை பலித்திடும் (23) ராகம்: ஹம்சத்வனி தாளம்: ஆதி
பல்லவி மாணிக்க பைரவன் மகிழ்ந்தமர்ந்தான் - இனுவையில் ஆணிப்பொன் அம்பலவன் அம்மைசிவகாமி வாழ்த்த
அனுபல்லவி வேணிப்பிறைசூடி விறல் நடராஜன் ஆடக் கோணிக் குழைந்து நின்றே நானும் பத்ர காளியுடன்
சரணம் வில்வ மர இலைகள் வீழ்ந்து பதம் சேர வல்ல பத்ரகாளி வாசலில் பக்தர் தொழ கல்வி கலைப் பாடசாலை கவின் பெருகி ஓங்க நல்லவை பலித்திட நல்லாசி அளித்திட
அறநெறிக் களஞ்சியம்

(24)
(D)
இணுவில் சிவகாம சுந்தரி சனசமூக நிலையம் ராகம்: பிருந்தாவசாரங்கா தாளம்: ஆதி
பல்லவி நல்ல சமூக சேவை நாடிச் செய்ய அருள் தந்தாள் வல்ல சிங்க வாஹினி வளமார் சிவகாமி
அனுபல்லவி செல்வமென மக்கள் போற்றும் சனசமூக நிலையம் நல்ல நல்ல பணிகளை நாளும் புரிந்திட அன்னை
சரணம் சிவகாம சுந்தரி சனசமூக நிலையம் புவனியில் பெருஞ்சேவை புரிந்து வழிகாட்டும் அவனியில் இணுவையில் அழகுறு கலைப்பணி தவநிறை கல்விப்பணி சமயப்பணி புரிந்தே
மாசி மலுேறாத் ஸ்வம் ராகம்: பந்துவராளி தாளம்: ஆதி
பல்லவி மாசி மஹோத்ஜவத் திருவிழா - எங்கள் மாதாசிவகாமி அருளும் பெருவிழா ஒருவிழா
அனுபல்லவி
ஆசி தந்தே அன்பினொடு ஆனந்தமாய் வாழ்வுதந்தே தேசுநிறை சிவகாமி திருவுலா வலம் வருவாள்
சரணம் வானுயரக் கொடி ஏறித் தெய்வீகம் காட்டும் தேனினும் இனித்திடும் தேவாரப் பண் கேட்கும் வேனில் பங்குனி உத்திரம் விரும்பித் தீர்த்த மாடும்
தானித் யரக்ராஜன் கானத்தமிழ் பாடும்
A sub

Page 19
பக்திப் பிர்வாகம் (26) ராகம்: மாயாமாளவகொளை தாளம்: ஆதி
பல்லவி பக்திப் பிரவாகம் வெள்ளம் பாயும் இணுவையில் சித்தி நல்கும் சிவகாம சுந்தரி மஹோத்ஸவத்தில்
அனுபல்லவி எத்திசையும் சிவகாம சுந்தரி பாடல் கேட்கும் வித்தகள் இசையெழுப்பும் வேய்ங்குழல் இசையொலிக்கும்
சரணம் காவடி கோடி கோடி கானம் பாடி ஆடும் பூவடி போற்றிப் பக்தர் பிரதிஸ்டை வலம் வரும் சேவடி பாடி அன்பர் சிரம் மேல் கரம் குவிக்கும் பாவடியார்கள் பாடிப் பரவச நீர் வழியும்
கலையழகு ததும்பும் வாகனம் (27) ராகம்: பீம்பிளாஸ் தாளம்: ஆதி
பல்லவி கலையழகு ததும்பும் பலவாகனம் - இணுவை தலைவி சிவகாமி பவனிவரும் மோஹனம்
அனுபல்லவி நிலையின்பமானது கலையின்பமே யன்றோ அலையருள் அழகி சிவகாமி உலாவினில்
சரணம் விநாயகள் முருகனும் வள்ளிதேவ குஞ்சரி அநாதர கூடிகியான அன்னையோடு வருவார் கனவிதுவோ அன்றேல் நனவிது தானோ மனோநிலை கொண்ட பக்தர் மகிழ்ச்சி யுறும் தெய்வ
அறநெறிக் களஞ்சியம் C1

திருமஞ்சத் தினிலேறி வந்தாள் (28) ராகம்: ரேவதி தாளம்: ஆதி
பல்லவி திருமஞ்சம் தனிலேறி வந்தாள் - சிவகாமி அருள் அள்ளி அன்பருக்கு ஆனந்த மாகத் தந்தாள்
அனுபல்லவி பெரும் பக்தி கொண்டு இளம் பிராயமா ணவர் கூடி அரும் பொருள் தேடியே ஆக்கித் தந்த கலைச் செல்வி
சரணம் கலையழகு பொலியும் கவினழகு மலியும் விலையிலா பக்தியொடு வாலிபரும் தந்தமஞ்சம் அலையருள் அழகியாம் அன்னை சிவகாமி பலகலை வாழ்கினுவை பதிக்கோயில் வீதியிலே
நடமாடும் கோபுரமோ (29) ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி
பல்லவி நடமாடும் கோபுரம் போல் நளினச் சப் பறம்இருக்கும் வடமிழுக்கும் பக்தருக்கு வளமான அருள் கிடைக்கும்
அனுபல்லவி படமாடும் பணியணியும் பரைசிவகாமி அன்னை இடபாருடராய் வந்தே இனுவினில் பவனிவரும்
சரணம் வண்ணச் சிறு கோபுரங்கள் வாய்த்த திருச் சப்பறத்தில் கண்ணைக் கவரும் வர்ணம் கவர்ச்சியாய் பக்திதரும் எண்ண இனித்திடுமே எழிற் சிவகாமி அம்மை நண்ணும் இணுவைக் கோயில் நல்வீதி வருகையிலே
அறநெறிக் களஞ்சியம் = G15)

Page 20
பதி இணுவையிலே (30) ராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
பல்லவி தபஜெபத் யான விரதமும் பக்தியுடன் புவனியில் புரிவார் சிவகாமியின் பக்தர்
அனுபல்லவி சிவசின்னங்கள் தரித்தே சிவகாமி பதம்துதித்தே பவனிவந்தே தொழுவார் பதினுேவை யூரிலே
சரணம் கற்பூரச் சட்டி ஏந்தி காவடிகள் ஆடி சிற்பரை சிவகாமிக்கே செம்மலர் கொய்தே கொணர்வர் பொற்பதம் பாடிப் பணிவார் பூங்கோயில் வீதிசுற்றி அற்புதஞ்சேர் பக்தியுடன் அங்கப் பிரதிஸ்டை செய்வார்
முந்தானையைக் கரம்பற்றி வருவார் (31) ராகம்: ஷண்முகப்பிரியா தாளம்: ஆதி
பல்லவி முந்தானையைக் கரம் பற்றி வருவார் - வீதியில் கந்தன் கணபதியும் எம்தாய் சிவகாமி யின்
அனுபல்லவி GasbgöTuD60]á5 &Jgög;T6ð áfalsmá Gæ6ð6DuDT8 வந்தாறுமுகனையும் வாரணனையும் வருட
சரணம் பாசம் மிகுந்த அன்னை பால் பழம்மோ தகம் கொடுப்பாள் பச்சை மயில் வாகனர்க்கு பரந்த ஞான வேல் தருவாள் நேசமுடன் கணேசமுரு கேசனோடு சிவகாமி பூசனை புரியும் பக்தர் புடைசூழ இணுவையிலே
அறநெறிக் களஞ்சியம்

வித்தகக் கலைவூர் கடி விளங்கும் ரதமும் செய்தார் (32) ராகம்: ஹம்ஸாநாதி தாளம்: ஆதி
பல்லவி பக்திப் பாடல் பாடும் பக்தன் தியாக ராஜா சித்தம் குளிர்ந் தாரம்பித்தான் சித்திரத் தேரும் செய்ய
அனுபல்லவி வித்தகக் கலைஞர் கூடி விளங்கும் ரதமும் செய்தார் புத்தம் புதுத் தேரிலே வலமும் வந்தாள்
சரணம் தேரின் வாகு மாலைகளும் தேவி புகழ்பாடி ஆட பேரின்ப ஒலிகள் மீட்கும் தேவியின் மணிகளும் ஆட ஊரின் பக்தர் கூடி வடம் ஒற்றுமையாய் இழுத்தாட பாரின் திசைதோறும் பக்தர் பதம்பாடித் துள்ளி ஆட
தேர் தீர்த்தத் திருவிழாவில் காவடிகள் கோடி 09) ராகம்: ஸிந்துபைரவி தாளம்: ஆதி
பல்லவி தேர் தீர்த்தத் திருவிழாவில் காவடிகள் கோடி சி நிறைந்த சிவகாமிமுன் ஆடிடுவார் பாடி
அனுபல்லவி கார் குழலி சிவகாமி களிப்பாள் மனம்குளிர பார் உலகில் பக்தருக்குப் பலன் அளிப்பாள் மிளிர
சரணம் செடில் ஆடுவார் பரவசமாகி படி படியாய் பசும்பால் ஏந்த ஆடிடுவார் காவடி அடி அழித்து மாதரினம் அன்பாய் வழிபடுவார் கோடி மிடியகற்றும் சிவகாமி வரந்தருவாள் அருள்கூடி
Y dutb =

Page 21
கண்கொள்ளாக் காவடிகள் கூட்டம் (34) ராகம்: ஆரபி தாளம்: ஆதி
பல்லவி கண்கொள்ளாக் காவடிகள் கூட்டம் - இணுவை மண்கண்ட தெய்வமான மாதாசிவ காமி நாட்டம்
அனுபல்லவி பண்கண்ட பாடல் பாடி பல்லப்பர் கோயிலிலே எண்ணற்ற காவடிகள் எழிற் கோலம் இணுவை நாடி
சரணம் காற்சதங்கை கச்சிதம்சேர் தாளநடை ஜதி கொஞ்சும் கவின் நிறைந்த காவடிகள் மயிற்தோகை ஆடல் மிஞ்சும் பாற்குடங்கள் தலையிலேந்தி பாவையர்கள் சுமந்து வரும் பரவசம் சேர் காட்சிசீவ காமியன்னை பக்தி யூட்டும்
தேரிலிருந்து சிவகாமி இறங்கி வந்தாள் (35) ராகம்: சுபபந்துவராளி தாளம்: ஆதி
பல்லவி தேரிலிருந்து சிவகாமி இறங்கி வந்தாள் - இணுவை ஊரிலங்கு அருட்காட்சி அள்ளித் தந்தாள்
அனுபல்லவி பாரிலங்கும் பச்சை வடமடிசார் கட்டி மார்பில் பச்சை வடைமாலை அன்னை சூட்டி
சரணம் அசைந்தசைந்து அன்னையவள் வரும் போது அரோஹராத் திருவொலியும் அதிர வைக்கும் இசைந்த வெள்ளிப் பத்மாசனம் இணைந்து ஆடிட இனிய அருள் தந்து எம்மை இரகூஜித்தாண்டிட
அறநெறிக் களஞ்சியம் Erapa G

ஆடிப்பூரம் அன்னை ருதுவான விழா (36) ராகம்: ஹமீர்கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி சிவகாமி ருதுவான நேரம் - அது தவமான திருமாத ஆடிப் பூரம்
அனுபல்லவி பவம்திர்க்கும் சிவகாமி பருவமுமானாள் புவி மீது சிவகாமி பெரியவளானாள்
சரணம் நிறைநாழி வைத்துப் பக்தர் கொண்டாடுவார் நெஞ்சம் மகிழ் வெய்தியவர் கொண்டாடுவார் குறையேதும் இல்லாத குமரியானாள் கொஞ்சு தமிழ் இணுவையிலே கோலாகலத் திருவிழாவாம்
சிவகாமியே துர்க்கை லஷ்மி சரஸ்வதி (37) ராகம்: சரஸ்வதி தாளம்: ஆதிதிஸ்ரம்
பல்லவி அன்னை துர்க்கையாகச் சிவகாமி காட்சி தந்தாள் மன்னும் நவராத்திரியின் முன்மூன்று தினத்தில் தேவி
அனுபல்லவி
மின்னும் வாள்சூலமேந்தி மிளிர்சிங்க வாகனத்தில் முன்னர் மகிடாசூரனை முனிந்த கொன்ற சிவகாமி
சரணம் செம்பட்டு சேலைமடி கட்டிச் சிவகாமி வந்தாள் செந்திருவாம் லக்குமியே நடுமூன்று தினத்தில் நின்றாள் கும்பிட்டு அடியார்தொழ கோதை சரஸ்வதியாய் வந்தாள் கோடாகோடி கல்விகலை ஞானம் தந்தாள் இனுவையிலே
di Sargáfuub =

Page 22
வாள் எடுத்து வீசி அந்த மஜநிஷ வாழை சரித்தனள்
(38) ராகம்: நாட்டை தாளம்: ஆதிதிஸ்ரம் பல்லவி சீறிப்பாயும் பெண்புரவி ஏறி எங்கள் சிவகாமி வீறு கொண்டு மஹிஷனையே வதைக்க வந்தாள் ஆறுமுகன் இணுவைக் கந்தன் வீதியிலே வாழையிலே மா அசுரன் மகிஷனவன் ஒளித்திருந்தான்.
ஏழுலகம் நடுநடுங்க ஏறும்வெண் புரவிபாய வாளும் கையிலேந்தியவள் வீசி வந்தாள் வாழிசீவ காமியம்மை வாழி வாழி வாழியென்றே கோஷமிட்டே அன்னைபக்தர் குதூகலித்தே ஆர்ப்பரித்தார்.
போர்ப்பறைகள் முழங்கிடவே போரின்வேக உச்சமுன் ஆர்ப்பரித்தே எக்காளத் தொனிகள் செய்தாள் கூர்ப்பாணம் செலுத்தினளே கோதை சிவகாமியம்மை கொடில வாழைக்குள் மகிஷன் நடுநடுங்கிப் பதைத்தனனே.
வாள் எடுத்து வீசிஅந்த மகிஷவாழை சரித்தனளே ஏழ்திசைகள் முழங்கியவே எக்காளம் தொனித்ததுவே சூழ்அடியார் துள்ளவே சிவகாமி வீரம்கொண்டே வேழமொடு அநுமன்காளி வியந்து கூத்தும் ஆடினரே.
தீமைதனை அழித்தாள்.அன்னை தீயவரை வதைத்தனளே நாமெல்லோரும் நலமுடனே வாழஆசி தந்தனளே பூமியிலே இணுவைச்சிவ காமியம்மை இருக்கிறாள் பூம்பதமே துதித்தவளின் ஆம்பல்வழி அருள்பெறுவோம்.
அறநெறிக் களஞ்சியம்

மோலுறன லாவண்ய சுகுமாரி (9) ராகம்: மோஹனம் தாளம்: ஆதி
பல்லவி மோஹன லாவண்ய சுகுமாரி - இணுவை கோவில் வளரும் அன்னை சிவகாம சுந்தரி
அனுபல்லவி வாஹனச் சிங்கமேறி வலம் வருவாய் - மாதா நாக படவணிகள் சூடிடுவாள் தேவி
சரணம் சரணம் சரணம் என்று சந்ததம் பக்தர் பாட வரமெல்லாம் அருளி வாழ்வும் தருவாள் - அன்னை கரமலர் அபயமும் வரதமேந்தும் அன்னை புர இனுவை வளரும் புரந்தரி நிரந்தரி
திருவிளக்குப் பூஜை (AO ராகம்: கல்யாணி தாளம்: ஆதிதிஸ்ரம் கண்ணிகள் 1. குத்து விளக்குகள் பட்டுடுத்தி அதில்
குங்குமப் பொட்டிட்டு நெய்யும் பெய்து சித்தம் மகிழ்ந்திட தீபமேற்றிப் பெண்கள்
பூரீ திய பூஜைகள் செய்வாரடி
2. மார்பில் பசும் பொன்னின் மாங்கல்யமும் ஆட
மாண்புறு சுமங்கலியர் கூடி ஆர்வமுடன் தீப பூஜை செய்திடும்
அற்புத அழகைப் பாருங்கடி
3, நல்லினுவை சிவகாமியம்மன் கோயில் நாற்புற உட்பிர காரந்தனில் மல்லிகை முல்லையின பூக்கள் கொண்டுமே
மங்கள தீபம் பூஜிப்பாரடி
றிக் களஞ்சியம் (21)

Page 23
4. வெற்றிலை பாக்கும் பழமும் கள்க்கண்டுடன்
வேண்டும் பசும்பால் நைவேத்தி யங்கள் சுற்றிலும் வைத்துச் சுமங்கலியர் கூடி
பூரீதிய பூஜைகள் செய்வாரடி
5. மங்கையரும் புதுப்பாவாடை தாவணி
மலர் மாலை தலையில் சூடிடுவார் மங்கள நாயகன் மாதா அருள் செய்ய குங்கும அர்ச்சனை செய்வாரடி
6. மங்கள வாத்தியம் கொட்டுமடி அந்த
மாங்கல்யம் நிலைத்திட தீபழஜை பொங்கிடும் பக்தியாய் செய்வாரடி
பூஜை சிவகாமி ஏற்பாளடி
7. தீர்க்க சுமங்கலி யாய்இன்ப மங்களத்
திருவருள் சிவகாமி அருள்வாளடி ஆர்க்கும் சிலம்பொலி செய்து சிவகாமி
ஆங்கு வந்தான ந்தம் தருவாளடி
தங்கரதப் பவனி (41) JTöb: 3 TLDT தாளம்: ஆதி
பல்லவி தங்கரதப் பவனி வந்தாள் - சிவகாமி தரணி உய்திட அருள் தந்திடவே நவகோணத்
அனுபல்லவி மங்களம் சேர்நல்ல மாண்பு நிறை வாழ்வு எங்கும் எல்லோர்க்கும் இன்பமாக அருள
சரணம் ஹோம குண்ட யாக மந்திரம் ஜொலிக்கும் சோபன அபிஷேகம் ஆராதனை பலிக்கும் நாம கோடி மந்த்ர அர்ச்சனைகள் நிகழும் க்ஷேமமுற ஆசிநல்கும்.
அறநெறிக் களஞ்சியம்

திருவெம்பாவை
(42) ராகம்: பூபாளம் தாளம்: ஆதி
(43)
பல்லவி வைகறைப் போதினில் பூபாளம் ஒலிக்கும் செய்யமணி நாதம் சேர்ந்தினைந்தே இசைக்கும்
அனுபல்லவி வையகத்தில் நல்லினுவை வளங்களும் நகரிசெழிககும் தையல் சிவகாம சுந்தரி அருள் கொழிக்கும்
சரணம் திருப்பள்ளி எழுச்சிப் பாடல் உருக்கிப் பக்தி பெருககும் இருநிலந்தனில் பக்தர் இருள்வினை தனைக் கருக்கும் திருவெம்பாவைப் பாடல் திருப்பொலிய இருக்கும் பெரும்பக்தி வெள்ளம் பாய்ந்து பரவசம் தந்துருக்கும்.
திருத்தொண்டு ராகம்: பெஹாக் தாளம்: ஆதி
பல்லவி திருவடியார்களின் கூt.ம் இறுவடியல பெருமாட்டி சிவகாமி பெருங்கே.யி', 'தொண்டில் நாட்டம்
அனுபல்லவி குருவடிவாகி நின்ற கோதை சிவகாமியம்மை அருள்வடி வானஞானம் அளளிக் கொடுத்த அன்புத்
சரணம் சின்னஞ்சிறு பாலர் முதல் விருத்கள்கள் கூடி வண்ணக் கோபுரக் கோயில் வளமாக்கும் தொண்டு செய்வர் அன்னையவள் சிவகாமி அருளை அள்6ரி* தருவாள் ஆனந்த இணுவையிலே மோனம் தவழும் பக்தித்
அறநெறிக் களஞ்சியம் SSSS SSS S SSSSS (23)

Page 24
பக்தி பஜனை
(44) ராகம்: தேஷ் தாளம்: ஆதி
(45)
பல்லவி இனுவைச் சிவகாமி சுந்தரியின் கோயில் இனிய பக்தர் பாடுவார் இருந்தே கோபுர வாயில்
அனுபல்லவி இணையிலா செந்தமிழ் இசையும் தாளம் ஏந்தி மனமொரு மித்தே எங்கள் மாதாவின் அருள்மாந்தி
சரணம் அபிராமி அந்தாதி அடியார் பஜனை செய்வார் சிவகாமிப் பாடல் கேட்டு செழும் பக்தர் வாழ்வில் உயர்வார் தவமான பஜனையிலே தாயின் அன்பு காண்பார் சிவகாம சுந்தரி செந்தமிழ் மாலை பூண்பாள்
ஏழிசை வாழ்ந்திடும் இணுவை ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி பல்லவி
ஏழிசை வாழ்ந்திடும் இணுவையம் பதியிலே மேழி கல்வி வீரர் செல்வம் மேவித்தந்தாள் - சிவகாமி
அனுபல்லவி சூழியத்தினில் பக்தி சோபனங்கள் தந்திடுவாள் வாழி சொல்லிக் கீதம் பாட வளம் தர வந்திடுவாள்
சரணம் சரணம் சிவாகம சுந்தரி என்றே பக்தி தரணியில் செய்பவர்க்கு தந்திடுவாள் முத்தி வரமருளி வாழ்வில் அருள்வாள் மங்கள சித்தி புரந்தரி நிரந்தரி துரந்தரி சிவகாமி

(46)
erjrIrbiú LJL Li GSLmr6o ராகம்: துர்க்கா தாளம்: ஆதி பல்லவி அருளெல்லாம் அள்ளித் தந்தாள் சிவகாமி பொருள் புரிந்தே தமிழில் போற்றிப் புகழ்பாட
அனுபல்லவி திருவந்தாதியாம் தமிழ் அபிராமி அந்தாதியை இருநிலத்திற்குத் தந்த அபிராமிப் பட்டர் போல
சரணம் பாடிடப் பாடிட பக்தி வெள்ளம் பெருகும் நாடியே மெய்சிலிர்த்து நமது மனம் உருகும் கூடியே பாடிடக் கண்ணில் நீர் பெருகும் ஆடுவார் பாடுவார் அகமதியில் திருமலியும்
85ecifiJ morg5r
(47) ராகம்: சுபபந்துவராளி தாளம்: ஆதி
பல்லவி பெற்றதாயின் பாசம் உற்ற சிவகாமி இற்றரையில் கண்கண்ட இனிய மாதாவன்றோ
அனுபல்லவி
நற்றமிழ் பாலமுதம் நாளும் எமக்கு ஊட்டி பற்றுடன் பாசம் வைத்த பசுந்தமிழ்த் தாயல்லவோ
சரணம் தாயினது அன்பிற்குத் தரணியில் ஈடுண்டோ சேயின் நலிவு கண்டே செகத்தில் இரங்கிடுவாள் ஆயகலை ஞானம் அள்ளி அள்ளித் தருவாள் தூயவள் நல்லினுவைச் சிவகாம சுந்தரி
நெறிக் களஞ்சியம்

Page 25
(48)
(49)
அறநெறிக் களஞ்சியம்
எனக்கென்ன குறையிருக்கு? ராகம்: சரஸ்வதி தாளம்: ஆதி
பல்லவி எனக்கென்ன குறையிருக்கு - இணுவையில் மனக்குறை நீக்கும் எந்தன் மாதா இருக்கும் போது
அனுபல்லவி தினக்கவலை தீர்க்கும் தேவி சிவகாமி வளைக் கரத்தால் வருடியருள் தரும்போது
சரணம் தாயவள் பாசத்திற்கு தரணியில் ஈடுமுண்டோ சேயிவனைக் காததிடுவாள் சிவகாமி தாயும் வாழ்வில் தூயதமிழ் இணுவையில் துலங்கும் சிவகாமி ஆய கலை ஞானந்தனை அள்ளித் தருவாளன்றோ
அன்னையின் அருள் ராகம்: ரஞ்ஜனி தாளம்: ஆதி
பல்லவி அன்னையின் அன்பிருக்க அருளும் நிறைந்திருக்க 616ö6MG600 6lsÉ&ElhäG Bananauð átasmf
அனுபல்லவி
முன்னைக் கவி காளிதாஸன் மிளிரும் கல்வி வேண்ட
நன்னயம் சேர் கவித்துவத்தை நல்கிய சிவகாமி
சரணம் அம்மா என அழைத்தால் அம்மென்றும் வந்திடுவாள் அருளை அள்ளி அள்ளி ஆனந்தம் தந்திடுவாள் இம்மாநிலத்தினிலே இனுவையம் பதியினிலே இனிய கோவில் கொண்ட எழிலி சிவகாமி

5O)
மங்கள நாயகி ராகம்: மத்யமாவதி தாளம்: ஆதி பல்லவி மங்கள நாயகி மகிழ்ந்தருள்வாள் - சிவகாமி பொங்கிடும் இன்பமெல்லாம் பூரணி அவள் தருவாள்
அனுபல்லவி சங்குசக்ர தாரி ரீதரனின் சோதரி எங்குறை தீர்க்க வந்த எழிலி சிவகாமி
சரணம் சுபமங்களம் தருவாள் சுந்தரி சிவகாமி அவனியில் எம்மனத்தில் ஆனந்தம் அள்ளித் தருவாள் பவனி புகழ் இனுவைப்புரி வாழும் சிவகாமி பவனி வரும் போது பாலித்தருள் தருவாள்
மங்களம் ராகம்: சுருட்டி தாளம்: ஆதி
பல்லவி மங்களம் பாடிடுவோம் - என்றும் எங்கள் அன்பின் அன்னை எழிலி சிவகாமிக்கு
அனுபல்லவி சங்கரன் நடராஜர்க்கும் சாரங்கன் லஷமிக்கும் ஐங்கரன் பைரவர்க்கும் ஆறுமுகன் மாதருக்கும்
சரணம்
நல்லினுவைப் பக்தருக்கும் தொண்டருக்கும் நாடிப் பூஜை செய்யும் பக்திப் பூசுரர்க்கும் கலைஞருக்கும் வல்லமை அருளும் பத்ரகாளியம்மை வீரபத்ரர் வாழ்வினில் எல்லோருக்கும் வளம் நிறைந்த மங்களம்
சுபம்
நெறிக் களஞ்சியம் =

Page 26
ஆடலும் அறிகையும் தமிழர் பணிபாடும்
இனக் குழுமங்களை இனம் காணத்தக்க சிறப்பார்ந்த கூறுகளுள் ஒன்றாக விளங்கும் ஆடல்கள் பண்பாட்டின் ஆதாரங் களை வெளிப்படுத்தும் குறியீட்டுப் பாங்குடையதாகவும், எதிர்பார்ப்புக்களை முன்னெடுக்கும் இலட்சியப் பாங்குடையதாகவும் விளங்குகிறது. பண்பாட்டை அறிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் பங்கீடு செய்து பகிர்ந்து கொள்வதற்கும் குறித்த பண்பாட்டுக்குரிய ஆடல்கள் அழகியல் வடிவங்களாகவும் ஆற்றுகை வடிவங்களாகவும் அமைகின்றன. பண்பாட்டின் அடி ஆதாரங்களுள் விளங்கும் விழுமியங்களை (Values) அறிந்து கொள்வதற்கும் கையளிப்பதற்கும் ஆடல்கள் பயன்படுகின்றன.
பண்பாடு என்பது அடிப்படையில் அறிகையை (Cognition) ஆதாரமாகக் கொண்டது. அறிகை என்பது பல்வேறு தளங்களில் இடையுறவு கொண்டதும், சிக்கலானதும் தொடர்ந்து வளர்ச்சியுறும் பண்பினதாகவும் இருக்கும். அறிகையால் ஆடலும், ஆடலால் அறிகையும் இடைவின்ன கொள்ளல் பூர்வீக பண்பாட்டு இயக்கங்களில் விசை கொண்டிருந்தன.
தமிழர் அழகியற் சிந்தனைகளும், கலையாக்கங்களும், ஆடலும் சமூகக் கட்டமைப்பு, சமூகப்படிமலர்ச்சி (SocialEvolutuion) முதலியவற்றை அடியொற்றிய ஆக்கங்களாக அமைந்துள்ளன. தமிழர் தம் அழகியல் ஆற்றுகையில் அறிகை, எழுச்சி, உடலியக்கம் முதலாம் ஆட்சிகளை (Domain) வளர்க்கவும், வலுப்படுத்தவும் வல்ல ஆற்றுகைச் சாதனமாக ஆடற்கலை
 

விளங்கிற்று. அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், முதலாம் தொன்மையான நூலாக்கங்களும் அவற்றைத் தொடர்ந்து எழுந்த காவியங்களும் கூத்து நூலும், இலக்கண நூல்களும் சமய இலக்கியங்களும், தமிழர் பண்பாட்டில் வாழ்வியலோடு இணைந்த ஆடற்கலை வளத்தினைப் பலவாறு விளக்குகின்றன.
தொன்மையான வாழ்க்கை முறையில் இயற்கையை விளங்க முயற்சித்தலும் அறியாப் பொருட்களை அறியத் துணிதலும், மாயவித்தைகள் வாயிலாக, சடங்குகள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட வேளை ஆடலின் சிறப்பு உணரப்படலாயிற்று. மனித உடலியக்கமும், வேண்டுதற்கேற்றபடியான அசைவுகளும், நாளாந்த நடைமுறை வாழ்விலும் நாளாந்த அறிகை வாழ்விலும் (Cognitive Life) முக்கியத்துவம் பெற, மனித அசைவுகளோடு இணைந்த ஆடல் வாழ்வியலோடு இணைந்த பிரயோகமாயிற்று.
உடலசைவுகளும் அவற்றோடிணைந்த செயற்பாடுகளும் சூழலைத் தன்மயமாக்கிக் (Assimilation) கொள்வதற்கும், புதிய அனுபவங்களை உள்வாங்கி மூளையின் அறிகை அமைப்பில் தன் அமைவாக்கலை (Accommodation) ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஆடல்கள் துணைபுரிகின்றன.
உடலசைவுகளே சூழலை விளக்குவதற்குரிய அடிப்படை விளங்குதலை அறிகை ஊடகவியலாளர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழர் மரபில் பாணர், பொருநர், பாடினியர், ஆடுனர், விறலியம், கோடியர், வயிரியர், கூத்தர் முதலியோர் ஆடல் ஆற்றுகையுடன் தொடர்புடையோராய் விளங்கினர். ஆடலின் உலக நிலவரங்களை ஆராயும் பொழுது தமிழகத்துக்கும் உலக
அெறநெறிக் களஞ்சியம்

Page 27
நாடுகளின் தொன்மையான நடன இயல்புகளுக்குமிடையே பல்வேறு ஒப்புமைகளைக் காணமுடியும். சமூக சடங்குகளுக்கும் ஆடலுக்கும் இடையேயுள்ள தொடர்புகள், சமயத்துக்கும் நடனத்துக்கும் இடையேயுள்ள தொடர்புகள், தொன்மங்களுக்கும் ஆடலுக்கும் இடையேயுள்ள தொடர்புகள் முதலியவை தமிழகத்தில் மட்டுமன்றி உலகளாவிய முறையிலே காணப்படும் பொதுப் பண்புகளாகும்.
இந்நிலையில் ஆடல்கள் உலக மாந்தர் அனைவருக்கும் உரிய பொதுவான உடல் மொழியாக வளர்ந்தெழுதலையும் மனங்கொள்ள வேண்டியுள்ளது.
ஆடல் என்பது இலக்குள்ள அறிகையைக் கொண்ட உடல் மொழியை அடிப்படையாகக் கொள்கின்றது. உடல் மொழியில் உடல்சார் குறியீடுகள் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. இயற்கை சார்ந்த அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட குறியீடுகள் (Natural Symbols), ஒவ்வொருவரும் தத்தமது பட்டறிவின் வாயிலாக உருவாக்கும் குறியீடுகள் (Private Symbols), சமூக மரபுகள் வழியாக உருவாக்கப்படும் குறியீடுகள் (Traditional Symbols) முதலியவை ஆடல் ஆக்கங்களிலே பயன்படுத்தப்படுகின்றன. "ஆடற் கூத்தினோடவிநயந் தெரிவோர்” என்ற மணிமேகலைச் செய்தி தமிழகப் பின்புலத்தில் குறியீடுகள் பற்றிய அறிகையைப் புலப்படுத்துகின்றது. குறியீடுகளின் வளர்ச்சி அறிகைக் கோலங்களின் மேம்பாட்டினைப் புலப்படுத்தும்.
எளிமையான குறியீடுகளில் இருந்து சிக்கலான குறியீடுகள் தமிழர் ஆடல் மரபுகளில் வளர்ச்சியுற்றமையைப் பின்னர் 85T600T6OTib.
அறநெறிக் களஞ்சியம் LSLSLSLSLSLSSSLSSSMSSSLSLSLSLSLSLSLSLSLSLSLSL

i rí பூர்வீக வாழ்வில் வரன்முறை சாராத (NonFomal) கல்விச் செயற்பாடுகளுடன் இணைந்த ஆடலானது, பண்பாட்டு வளர்ச்சியோடு வரன்முறையான கல்விச் செயற்பாடுகளுடன் தழுவி வளரும் போக்கினைச் சிலம்பு தெளிவாகக் காட்டுகின்றது. நட்டுவனார் பல்வகை ஆடல் வகைகளும் அறிந்திருத்தல் வேண்டும் என வரன் முறைக் கல்வியில் வற்புறுத்தப்படுகின்றது. இதன் விரிவினை பின்வந்த அடியார்க்கு நல்லார் பின்வருமாறு விளக்குகின்றார்.
(1) மாயவனாடும் அல்லி
(2) விடையேனாடும் கொட்டி (3) ஆறுமுகன் ஆடும் குடை (4) குன்றெடுத்தோன் ஆடும் குடை
(5) முக்கண்ணன் ஆடும் பாண்டரங்க
(6) நெடியோன் ஆடும் மல்லாடல் (7) வேல்முருகன் ஆடும் துடியாடல்
(8) அயிராணி ஆடும் கடையம்
(9) காமன் ஆடும் பேடு (10) துர்க்கை ஆடும் மரக்கல் (11) திருமகள் ஆடும் பாவைக் கூத்து
முதலியவை நட்டுவனாரால் அறிந்திருக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூர்வீக அறிகைச் செயற்பாட்டில் தொன்மங்கள் (Myths) சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றன. மனிதரின் பிறப்பு, இறப்பு முதலாம் மர்மங்களைத் துருவுதல், பிரபஞ்சத்தின் இயக்கங்களைத் தேடுதல், ஐம்பொறிகளின் கடந்த உணவுகளின் இருப்புப் பற்றிய

Page 28
ஊகங்களை முன்னெடுத்தல் முதலியவற்றில் தொன்மங்கள் சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றன. நம்பிக்கை கலந்த பழைமையின் அழியா நினைவுகள் தொன்மக் கதைகளிலே உட்பொதிந்துள்ளன. கலையாக்கத்துக்கும் ஆடலாக்கத்துக்குமுரிய பல்வகைக் கருவூலங்கள் தொன்மங்களிலே காணப்படுகின்றன.
தமிழகத்தில் வளர்ச்சிபெற்ற ஆடல்களை நோக்கும் பொழுது, சடங்குகள், தொன்மங்கள், ஆடல்கள் என்பவற்றுக்கிடையே பல நிலைகளிலே தொடர்புகள் காணப்படுதல் தெளிவாகத் தெரிகின்றது. உலகப் பரப்பில் இவ்வகையான தொடர்புகளை மானியவியலாளர் தெளிவாக விளக்கியுள்ளனர்.
சமூகத்தின் பிரதான பண்பாக அமைவது அதன்படி மலர்ச்சியின் (Evolution) போது சிக்கலாகும் தன்மை மேலோங்கலாகும். சங்ககால இலக்கியங்களையும் சிலம்பு, மணிமேகலை முதலியவற்றையும் ஒப்புநோக்கும் பொழுது, சமூக வளர்ச்சியினுடே நிகழ்ந்த தொழில் சார்ந்த குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கலாகும் தன்மைகளைக் காணலாம். சமூகம் சிக்கலாகும் பொழுது கலைவடிவங்களும், கலைவடிவங்களில் உள்ளமைந்த கூறுகளும் சிக்கலாகிச் செல்லும். புதிது புதிதாகத் தோன்றும் தொழிற் பிரிவுகள் தமிழக ஆடல் ஆக்கங்களிலும் வேறுபாடுகளைத் தோற்றுவித்த இயல்புகளைக் காணலாம். வேத்தியல், பொதுவியல் என்றவாறு ஆடல் இருவகையாகப் பிரிந்தது. தெய்வத்தின் முன் ஆடும் மார்க்கமும்; மன்றங்களில் ஆடும் "தேசியம்” என்ற பாகுபாடுகள் முகிழ்த்தன.
அரசருக்காக ஆடும் வேத்தியல் அகமென்றும், பிறருக்கு ஆடுதல் புறம் என்றும் பிரிக்கப்படும் நிலையும் காணப்பட்டது. சாந்தி, விநோதம் என்ற அகக்கூத்து இரு வகையாயிற்று. விநோதக் கூத்து ஏழு வகையாகப் பாகுபடுத்தப்பட்டது. அவையாவன,
அறநெறிக் களஞ்சியம் G32)

(1) குரவைக் கூத்து (ஒன்பதன்மர் கூத்து) (2) கழாய்க் கூத்து (கலியாட்டம்) (3) குடக் கூத்து (கரகம்)
(4) கரணம் (உடல் மடக்கு)
(5) பாவைக் கூத்து
(6) வசைக் கூத்து (விதூடக் கூத்து)
(7) வெறியகட்டு (சாமியாட்டம்)
சாந்திக் கூத்து பின்வருமாறு அமையும். (1) அபிநயக் கூத்து (கதை தழுவா ஆடல்)
(2) நாடகக் கூத்து (கதை தழுவி வரும் ஆடல்) (3) மெயக் கூத்து (அகப்பொழுள் தழுவிய ஆடல்) (4) சாக்கம் (தெளிந்தாடல்)
சமூக வளர்ச்சியின் போது சமூக நிரலாக்கம் (SocialHierarchy) வலுப் பெறுதலும் சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் என்ற துருவப்பாடு தோன்றுதலும் இயல்பு. இந்நிலையில் ஒரு சாராரைப் புகழ்பாடும் துதிக் கூத்தும், இன்னொரு சாராரை இழித்துரைக்கும் நிந்தைக் கூத்து அல்லது இழிக் கூத்தும் என்ற வகையிலே தமிழக ஆடற் கோலங்கள் துருவநிலை பெற்று வளர்ந்து வந்தமையைக் காணமுடியும்.
சமூக நிரலாக்கத்தின் வளர்ச்சியும், சுரண்டற் கோலங்களின் வளர்ச்சியும், ஆடலில் ஆண் பெண் வேறுபாடுகளைத் தோற்றுவித்தன. வலிமையும் எழுச்சியும் தழுவிய வகையில் ஆண்கள் ஆடும் தாண்டவமும், மென்மையும், நெகிழ்ச்சியும் கொண்டவாறு பெண்கள் ஆடும் லாஸ்யமும் வளரலாயின.
ஆடலுக்கும் தொன்மங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு களுக்கும், ஆடலுக்கும் வழிபாட்டுக்கும் இடையேயுள்ள தொடப் D,
ஆடலுக்கும் இசைக் கட்டமைப்புகளுக்குமிடையில் உள்ள
"அறநெறிக் களஞ்சியம் G33)

Page 29
தொடர்புகளும் தமிழகச் சமூக வளர்ச்சியோடு மேலும் பன்மையடையத் தொடங்கின. தொன்மங்கள் வழியாகவும் சமூக பண்பாட்டு நம்பிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைக்குரிய அறவொழுக்கம் வலியுறுத்தி நின்றன.
இவ்வாறான வளர்ச்சிகளோடு தமிழ் இசைப்பாடல்களில் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பின்வரும் எடுத்துக் காட்டுக்களைக் கூறலாம். அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், கந்துகவர், காக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில், குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, கோரிப்பாட்டு, சங்கு, சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திக்காப்பு, தெள்ளேனம், தோணோக்கம், நிலைவரி, நையாண்டி, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுண்ணம், மயங்குதினைநிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு என்றவாறு பாடல்களிலும், இசைக் கோப்புகளிலும் பன்முகப்பாங்குகள் வளரலாயின.
அதாவது ஆடல்களில் பன்முகப்பாங்குகள் ஏற்பட்ட வேளை இசையிலும் பன்முகப்பாங்குகள் ஏற்பட்ட உள்ளார்ந்த தொடர்புகளைத் தெளிவாகக் காணமுடியும்.
தமிழர்களுடைய நடன வெளிப்பாடுகள் ஆராயும் பொழுது se60)6)I Qh6higBILD086OT GAsful ugibU066ğ5g5Jub 8660)6\»uUIT85 LDi"G6ub (Art Of Execution) அமையவில்லை. ஆக்க மலர்ச்சியோடு சமூக நிபந்தனைப்பாடுகளும் அவற்றுடன் தொடர்புபட்டு நின்றன. நடனங்கள் அண்மையங்களுடன் (Proxemics) இணைந்து வளர்ந்தன. கல்விக்கவி நிலை, பண்பாட்டுச் சூழல், வாழ்க்கை நெருக்குவாரங்கள்,

உளவியற்கவி நிலை முதலியவற்றால் அண்மையங்கள் உருவாக்கப்படுகின்றன. இருத்தலையும் (Beinf) பிரதிநிதித்துவப் படுத்தலையும் (Representation) நடனமாடியோர் அண்மையங்களுடன் தொடர்புபடுத்தி வெளிப்படுத்தினர்.
உயர்ந்த தெய்வீக இலக்குகளை இருத்தலாக்கி தெய்வீகக் கற்பனைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடுதல் பக்திநெறிக் காலத்திலே வளர்ச்சியுற்றது. ஆடலின்போது உடலை விக்கிரகப் பண்பினதாக்கும் மரபும் பக்திநெறிக் காலத்திலே காணப்பட்டது. இறை சார்ந்த கற்பனைகள் காட்சி வடிவாக்கப்படுதல் “விக்கிரகப் பண்பு” என்று கூறப்படும்.
பக்திநெறிக் காலத்தில் இறைபக்தியோடிணைந்த மனவெழுச்சி களின் ஆற்றுமை மேலும் கூர்ப்பு அடையத் தொடங்கியது. உடல் மொழியால் பக்தி சார்ந்த மனவெழுச்சிகளை வெளியிடுதலும் பக்திக்கு அனுசரணையாக நுண்சமிக்ஞை முறைமைகளை (Micro Gestoral System) வளர்த்தலும் காணப்பட்டன.
"குனித்த புருவம்” என்ற தொடர் ஒன்றே நுண்சமிக்ஞை முறைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பக்தியோடிணைந்த இயல்பு நிலைப்புத்தாக்க நடனங்கள் சைவ நாயன்மார்களது பாடல்களிலே பரவலாகக் காணப்படுகின்றன.
தெய்வீக இலக்குகளை உள்ளடக்கிய ஆடல்களில் மூன்று தெளிவான படிநிலைகளைக் காணமுடியும். (l) s (56IITdsgjib fgbgbb (Will to Form) (2) S. 6th6ITLI3 g560B6 (Will to Content) (3) sibgp606i55T607 djb25lb (Will to Perform)
பிறநெறிக் களஞ்சியம் = G35)

Page 30
தமிழகத்தில் நிகழ்ந்த பக்திச் செயற்பாடுகள் ஆடலுக்கென திட்டவட்டமான கருத்தியலை (Ideology) வகுத்தன. பக்திக் கருத்தியல் தழுவிய ஆடல் தெய்வீக நிறைவுகொண்ட உணர்வுகளை அனுபவிக்கும் ஆடலாக வளர்ச்சியுற்றது. உயர்ந்த உண்மையை நோக்கிய தேடலே இன்றைய பரதத்தின் உன்னத இலக்காகக் கொள்ளப்படுகின்றது.
சமூக ஆதாரங்களுக்கும் ஆடல்களுக்குமுள்ள தொடர்புகள் ஆடல்மொழியாகிய கூர்ப்படைந்த முத்திரைகளினாலும் வெளிப்படும் பூர்வீக வேட்டையாடற் சமூகத்திலும், குலக்குழு வாழ்விலும் குலக்குறிகள் (Totem) வாழ்வியலுடனும், உணர்வுகளுடனும், கலையாக்கங்களுடனும் இணைந்திருந்தன. குலக்குறிகளை உடலில் வரைதலும், அவற்றைப் பாவனை செய்து ஆடலும் சிறப்புப் பெற்றிருந்தன. மந்தை மேய்ப்புப் பொருளாதாரத்தில் பசுக்களும் அவற்றோடிணைந்த செயற்பாடுகளும் குறியீடுகளாக்கப்பட்டன. காராம்பசு போன்ற புனித எண்ணக்கருவும் வளரலாயிற்று. பசுவை அன்னையாக, தெய்வமாக எண்ணிக் குறியீடு கொண்டு ஆடலும் வளர்ச்சியுற்றது. பயிர்த்தொழிலுடன் நிலமானிய சமூகவமைப்பு வளர்ச்சியடைய நிலமகள், நீர்மகள், மழைக்கடவுள், தானியக்கடவுள் போன்றவாறான பயிர்வளத் தெய்வங்களோடிணைந்த முத்திரைகள் ஆடலில் எடுத்தாளப்பட்டன.
ஒற்றைக்கை முத்திரை தமிழ் ஆடல்மரபில் பிண்டி (வடமொழி
அஸம்யுக்தம்) எனவும் இரண்டு கைகளையும் பயன்படுத்தும்
முத்திரைகள் இயற்றல் பிணையல் (வடமொழி - ஸம்யுக்தம்) எனவும் அழைக்கப்படலாயிற்று.
உயிரினங்களின் கூப்பில் பாதுகாப்பிலும், சூழலுடன் நிகழ்ந்த போராட்டங்களிலும், பொருளுற்பத்தியிலும் அதிக பயன்பாடு கொண்ட உறுப்பாக கைகள் மலர்ச்சியுற்றது. மொழி தவிர்ந்த குறியீட்டுத்
அறநெறிக் களஞ்சியம்

தொடர்பாடலில் கைகளே முதன்மை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆடலில் கைகளின் பயன்பாடு அதிக தொடர்பாடல் முக்கியத்துவத்தைக் கொண்டு வளர்ந்ததை குறிப்பிடத்தக்கது.
பட்டறிவை வளம்படுத்துதல், விசாலித்தல், கருத்தேற்றம் செய்தல், பண்பாட்டைக் கையளித்ல் முதலாம் அறிகைப் பிணிகளில், தமிழக ஆடல்கள் ஒன்றிணைந்து செயற்பாடு கொண்ட வளர்ச்சியைத் தெளிவாக அறியலாம். சமூகம் படிமலர்ச்சி கொள்ளும்போது பண்பாட்டிலும் அறிகை முறைமைகளிலும், ஆடலிலும் மாற்றங்கள் ஏற்பட்ட பாங்குகளைத் தமிழகக் க்லைவரலாறு தெளிவுபடுத்துகின்றது.
OUCIS
Gordon JDi Renzo, Human Social Behaviour, Holt, Rinehart Winşton, London, 1990, pp95 - 97.
Jeannine Auboyer, Daily Life InAncient India, Punchiram Manoharlal P Publishers PVT Ltd, New Delhi, 1994 pp 147 - 155
Lewis Spence, Myth and Ritual in Dance, Game and Rhyme, Watts and Co., London 1997 pp -27-37
Nirmala Ramachandran, "Classical Dance of Ancient Tamils' IATR Conference 1966 Vol:2 pp 380 - 381
Frazer, Golden Bough, Vol: I p.374
Mrinalini Sarabhai, The Sacred Dance of India Bharatiya Vidya Bhavan, Bombay 1979, P. 11
அறநெறிக் களஞ்சியம்

Page 31
சிவநெறியும் அறநெறியும்
சீர்த்தி பெற்றோங்கும் வீரராகவன் பரிசில் கொண்ட பூமி வீணாகாணமென்னும் யாழ்மண், அதன் வடகோடியில் வலிதெற்கில் அமைந்த மருதநிலப்பூமி இணுவையூர். அரசன் பரராசசேகரன் அறநெறி தழைத்தோங்க ஆலயம் அமைத்த மண். சித்திக்கு வித்தாகும் சித்திவிநாயகன் குடிகொண்ட பூமியில் சீரிய சிந்தனை - தெய்வ நற்சிந்தனை - பார்மேல் அழியா கல்வியின் தேடல் - ஆயநற்கலையில் ஆற்றல் யாவும் இனிதுறமலிந்தன. இந்த வரலாற்றுப் பெருமையை வலியுறுத்தி அறநெறிப் பாடசாலை ஒன்றினை நிறுவி நற்பணியாற்றும் உங்களை நெஞ்சார வாழ்த்துதல்
என் கண்ணியக் கடமையாகும்.
“தேடுகல்வி யிலாத தொருரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் கேடுதிர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழயிவை கண்டிர்”
என உபாயம் கூறும் பாரதி ஈழத்துத் திருவாரூர் என விதந்துரைக்கும் இணுவையம் பதியைக் காணின் நெஞ்சம் தழைப்பான். காரணம் கற்றவர் மலிந்த பூமி முக்கனிச் சாறெனத் தித்திக்கும் இசைபடர் இணுவை. அறநெறி வழுவாது தூய வெண்ணிறு துதைந்த மேனியும் இறைநெறி வழுவாச் சீர்த்தியும் உடையயோர் வாழ்ந்த இடம் அது.
“அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்”
 

என்ற திறத்தினையுடைய அறங்காப்போர் நிறைந்த பூமி எழுமையும் சீர்மல்கும் கல்வியை அறநெறியூடு வளர்க்க முன்வந்திருக்கும் உங்கள் பணி எங்கள் மண்ணுக்கு அணி செய்கிறது. கோமயம் கொண்டு நிலமகளைத் தூய்மை செய்து தேடிய கல்வியை எண்ணிப் பார்க்கிறேன். பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் என்பது ஒளவை பொன்மொழி. அந்த நல்முயற்சியால் வடமாநிலத்தின் கல்விப் பணிக்கு அணி செய்தமையை எண்ணி உவகை கொள்கின்றேன். எம்போன்ற வல்லாரை இந்தமண் பிரசவிக்க வேண்டும். சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மண்ணிலே வரலாறு கண்ட பெருமை பெறு பூமியிலே மாசற்ற பிறவியாக வேண்டும். “செம்புலப் பெயர் நீர் போல” அம்புவியை ஆளும் தகமை பெறவேண்டும்.
“நீறில்லா நெற்றி பாழ் - கோயில் இல்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்” இவையெல்லாம் எம் ஊரவர்க்கு வேண்டா மொழி. ஆலய மணியோசை ஆர்ப்ப ஆர்ப்ப, வேத புராண ஒலி செவியை நிரப்ப, தேவார இசை நெஞ்சை நிரப்ப, மந்திர ஒலி புந்திக்கு புத்துயிர் நீட்ட பொலிவோடு என்னவர் வாழ வகை செய்யும் நல்லவர்களைப் பாராட்டுகின்றேன். வரலாற்றுப்புகழ் மென்மேலும் ஒளிகால உழைக்கும் உங்கள் உதவும் கரங்களை உமையவள் அருளால் உயர்த்தும் ஒளியாகட்டும். நஞ்சுறையா நெஞ்சுப் பிஞ்சுகள் நல்லவராய் பயனுள்ள அர்த்தமுள்ள வாழ்வுபெற அறநெறிப் பாடசாலைகள் தழைத்தோங்கட்டும்.
றநெறிக் களஞ்சியம் LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSSLLLLLL

Page 32
சைவத்தின் அறத்தறைகள்
"சமயம்’ எனக் குறிப்பிடுமிடத்து நடத்தையையும் அறிவினையும் விரிவான முறையிலே அது உள்பொருளாக சுட்டி நிற்கின்றது. இத்தகைய அறிவினைப் பெறுவதற்கே "ஒழுக்கம்” என்ற பாதையில் செயல்புரிய ஆரம்பிக்கின்றோம். ஆனால் "அறம்” என்பதனை இவ்வாறு மட்டும் கருதுவது கடினம். "இறைவனை ஆதாரமாகக் கொள்வது சமயம், மனிதனை ஆதாரமாகக் கொள்வது அறம்” எனக் கொண்டால் மனிதன் தனது நடத்தைகட்காக அறத்தினால் கண்காணிக்கப்படுகின்றான் என்பது அர்த்தமாகும். வேதகால ‘ரிதம்” என்னும் பிரபஞ்ச அறம் அல்லது இயற்கை ஒழுங்குக் கோட்பாடும் இந்த சிந்தனையினையே புலப்படுத்துகின்றது.
அற ஒழுங்கு பற்றி விளக்குமிடத்து "நன்னெறிகள்” ஒருபோதும் அறியமுடியாதவற்றினை உபதேசிப்பதில்லை. இறைவனிடம் நம்பிக்கையற்றவனை "நாஸ்திகன்” எனப் புராதன சமயம் கூறியது. ஆனால் “தன்னம்பிக்கை” அற்றவனையே "நாஸ்திகன்” என நவீன இந்துமதம் குறிப்பிடுகின்றது. “நூல்களை விதம்விதமாக விளக்குவதும், சொற்களை மாற்றி மாற்றி உச்சரிப்பதும், உரை செய்வதும் அறிவாளிகளது இன்பத்திற்கே உதவும், ஆத்ம விடுதலைக்கு உதவாது” என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனை இலக்கிய இன்பமுடையார்க்கு மிகவும் பொருத்தமானதே. அற ஒழுக்க விதிகட்கமைய நடவாது போனால் கடமைகளைக் கைவிட்டுவிட்டோம் என்றே அர்த்தமாகும். இவை பற்றித் தெளிவாக விளக்கக் கூடியது சமய ஒழுங்காகத்தான் இருக்கமுடியும். ஏனெனில், தனி ஒரு சமயத்திற்கு அல்லது தருமத்திற்கு அல்லது இறைமைக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை விளக்கக்கூடியது சமயம் ஒன்றுதான். அதனால் அறத்தின்
அறநெறிக் களஞ்சியம்
 

மேலாண்மையை விளங்கிக் கொள்ளும் ஒரு பகுதியே ஒழுக்க -வியலாக அமைகின்றது.
“பண்டு நால்வருக்கறமுரைத் தருளிப் பல்லுலகினில் உயிர்வாழ்க்கை.”
என நாயன்மார் காட்டிய அறவிழுமியம் ஒழுக்கத்திலேதான் நிலைபெறுகின்றது.
சித்தாந்த சைவநெறியானது நடைமுறையில் தன்னை ஒரு சமய மார்க்கமாகவும், செயல் வழியிலே அறஒழுக்க விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அறிவுத்துறையிலே தன்னை சைவ சித்தாந்த தத்துவமாகவும் நிலைபெறச் செய்துள்ளது எனலாம். சைவம் - அன்புநெறி, அது சிவம். அந்த அன்பு அறத்திற்குக் கட்டுப்பட்டு செயலாற்றும் ஆற்றல் சக்தி வாய்ந்தது. அதன் அறத்துறைகளைச் சிவஞானசித்தியார் பின்வருமாறு வகைப் படுத்தும்.
“ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சிலம் வழுக்கிலாத் தவம் தானம் வந்தித்தல் வணங்கல் வாய்மை இழுக்கிலான் அறங்களானால் இரங்குவான் பணியறம்”
என இத்தகைய அறப்பண்புகளை ஒருவன் வாழ்வில் கடைப் பிடிப்பானேயானால் அவனுக்கு இரங்கி அன்பு செய்வது
இறைவனுக்குரியதொரு அறமாகும் என்பது இவற்றினால் தெற்றெனப்
புலப்படும்.
ஆகையினால் “மேன்மைகொள் சைவநிதியிலே’ மிகு சைவத்துறை விளங்கவும் நான்மறை அறங்கள் ஓங்கவும்
அறநெறிக் களஞ்சியம்

Page 33
திருமுறைகளிலும் சைவத்தின் ஒழுக்கத்துறைகள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. அவற்றினை "ஸ்மிருதிகள் சொன்ன வழி மூன்றும் புக்கும் ஆச்சிரமங்கள் அவையடைந்து அருந்தவங்கள் புரிந்தும் சிறப்புடைப் புராணங்கள் உணர்த்தும் வேத சிரப்பொருளை மிகத் தெளிந்தும் சென்றார் சைவத் திறத்தடைவர் அதில் சரியை, கிரியை, யோகம் செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்” என்பது சிந்தாந்த நூல்கள் ஒரு சைவ மார்க்கத்தில் நிற்பவர்க்கு - நிற்க விழைபவர்க்கு சைவம் காட்டும் அறவழிப் பாதையாகும். எனவே சைவ நான்மார்க்கங்கள்தான் சாதாரண மனிதர்கள் பின்பற்றுவதற்கேற்ற பாதை எனத் தெரிந்து நாயன்மார் அதனை வாழ்ந்து காட்டினர்.
மனம் போன போக்கிலே வாழாது குறித்த ஒரு ஒழுங்கு நிலையில் தன்னை செலுத்துதல் "நடத்தை” (Conduct) எனப்படும். அவ்வாறு நடந்து செல்வதற்கு ஒரு பாதை - வழி வேண்டும். அதுவே சைவத்தின் அறத்துறைகளாக, நாற்பாதமாக - நால்வகை வழிகளாக விளக்கப்பட்டுள்ளன. அதனை,
“. சங்கரனையடையும் மார்க்கம் நான்கவை சரியை கிரியை யோகம் என நவிற்றுவதும் செய்வர் பின் ஞானத்தால் திருவடியைச் சேர்வர்.”
எனச் சித்தியார் வழிப்படுத்தியுள்ளது. இதன் பலா பலன்களைத் திருமந்திரம்,
“சார்ந்த மெய்ஞானத்தோர் தானவனாயினேர் சேர்ந்தவெண் யோகத் தோர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அர்ச்சனை தப்பாதோர் நேர்ந்தே சரியையே நீள்நிலத்தோரோ”
என நால்வகை நெறிகளின் தாற்பரியத்தினை விளக்கியுள்ளது.
அறநெறிக் களஞ்சியம்

இறைவனின் ஆற்றல் சக்தி இரண்டு வகையில் தொழிற் படுவதாக சித்தாந்தம் கூறும். ஒன்று செயல் (Action) மற்றது அறிவு (Knowledge) ஒரு தொழிலைச் செயற்படுத்துவது கிரியாசக்தி. அத் தொழில் தொடர்பான அறிவினை வழங்குவது ஞானசக்தி (Theory andPractica). இவற்றிலே செயல்வழியினை சைவம் சரியா, கிரியா மார்க்கம் எனவும், அறிவு வழியினை யோக ஞானமார்க்கம் எனவும் விளக்கும். இவற்றினை வேத வழியில் சிந்தித்தால் முன்னதை கரும காண்டத்திற்கும் பின்னதை ஞான காண்டத்திற்கும் ஒப்பிடலாம். சைவம் கூறும் நால்வகை வழித்துறைகளில் மொத்தம் பதினாறு படிநிலைகள் உள்ளன. சரியையிற் சரியா முதல் சரியையில் ஞானமீறாக ஞானத்தில் சரியை, ஞானத்தில் ஞானம் என அவை விரிந்து அறத்துறைகளில் மக்கள் வாழ்வினை நெறிப் படுத்திச் செல்லத் துணை நிற்பவையாகும்.
இவற்றிலே குரு, லிங்க, சங்கம வழிபாடு ஒன்பது வகைகளான தீட்சாமுறைகள், யாவும் அடங்குவதுடன் அவை யோகமார்க்கம், ஞானமார்க்கமாக உயர்வடையும்போது சரியை, கிரியைத் தொண்டுகளும் அவற்றிற்கேற்ப பரிமாணம் பெற்று உயர்கின்றன. அகத்துறையில் பயிற்சி பெற்று சாதனை செய்வோர் பிறர்துயர் கண்டு உதவுதல், முதியோர்களைப் பராமரித்தல், பெற்றோர்களை அரவணைத்தல், ஆதரவற்ற சிறுவர் நலன்களைக் கவனித்தல், இலவசக் கல்வியளித்தல், பொருளுதவி வழங்கல், வைத்தியசாலையில் ஆதரவற்ற நோயாளரைப் பராமரிக்க உதவி வழங்கல், சீதனக் கொடுமையால் வாழ்விழந்தோருக்கு வாழ்வு கொடுத்தல், ஊனமுற்றோரை ஆதரித்தல் போன்ற சமூக சேவைகளைப் பணிகளால் தமது ஞான சாதனைகளை அன்பின் பரவலாக்கத்தினால் முதிர்ச்சி அடையச் செய்வதே ஞானசாதனை எனலாம். "அன்பின் வழியது உயர்நிலை” என்பதும், "சைவம் என்றால் சிவம், சிவம் என்றால் அன்பு" எனவும் பேசுவதுடன்
அறநெறிக் களஞ்சியம்

Page 34
மட்டும் நின்றுவிடாது அவற்றினைச் செயல்வழி சாதனைக்குக் கொண்டு வந்தால் அதுவே சரியா, கிரியா மார்க்கத்தின் நோக்கத்தை (p(960)LDuj60)Luué Gafujub.
"ஞானம் என்பது பொய், தவறு முதலிய குற்றங்களினின்றும் நீங்கிய அறிவாகும் அதனையடைந்தவர்க்கே என்றுமுள்ள சிவஞானமாகிய வீடுபேறு சித்திக்கும் ”
என பெளவுகராகமமும் தெளிவுபடுத்தியது.
அறநெறிகளைப் பயின்று பயிற்றுவித்து, போதனை செய்வது மட்டுமன்றி அதனைப் பயின்றோர் மேல்வரும் நெறிகளில் ஒரு வழியினைக் கடைப்பிடித்தும் சாதனை படைக்கலாம். இவற்றினைச் சரியா, கிரியா மார்க்கத்தில் வாழ்ந்த தேவாரகால நாயன்மார்களும் மெய்யடியார்களும் வாழ்ந்து காட்டிச் சென்றனர்.
'நன்னெறிக்குய்ப்பது நமசிவாயவே” “நமசிவாயவே நன்னெறி காட்டுமே” “புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விடுத்து
நன்னெறி யதணிற்சென்று நவையறுகாட்சி நல்கி மேலாம்”
என எமது சமயச் சான்றோர்கள் சொல்லிச் சென்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக எதுவும் செய்ய வசதி வளங்கள் இல்லையென்றாலும் தமது தினசரி கடமைகளை வீட்டிலும், வெளியிலும் தத்தம் தொழில் புரியுமிடங்களிலும் முறைப்படி ஆற்றி வந்தாலே தினந்தோறும் இறைவனை வழிபடுவதற்குச் சமமாகும்
என்பதனை பகவத்கீதையும், “யோக கர்மாசூ கெளசல்யாம்”
அறநெறிக் களஞ்சியம்

என்றவாறு ‘கடமையே வழிபாடு” (work is Worship) என ஆமோதிக்கின்றது.
இத்தகைய வழியில் அறத்துறைகளைப் பேணி தொடரப் போகும் வாழ்வை வலிமையும் வளமும் அறவழிப்பட்ட சமயவாழ்வின் இலக்காக
“வையகமும் துயர்தீர்கவே”
நெறிக் களஞ்சியம் =

Page 35
ஆகம முறையில் திருக்கோவில் அமைப்பு
க.தேவராஜா
) Ii. lpí b, j, , , ) f { li b ) , bls bli
இந்து மதத்தில் இறைவனது நிலைகள் சொரூபநிலை, தடத்த நிலை என இருவகைப்படும். சொரூபம் என்பது மனம், வாக்கு, காயம் என்பவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையாகும். தடத்தம் என்பது மனம், வாக்கு, காயங்களுக்கு உட்பட்டனவாக இறைவன் நின்று அருள்புரிவதைக் குறிக்கின்றது. உருவத்திருமேனியுடன் விளங்கும் ஆலய அமைப்பானது மனிதனது உடம்பின் அமைப்பை ஒத்ததாக அமைந்துள்ளது. தூலம், சூக்குமம், காரணம் என்பவற்றை விளக்க மூன்று விதிகளும், பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையை விளக்கக் கொடிமரம், நந்தி, பலிபீடம் என்பனவும், தூலலிங்கமாகக் கோபுரமும் மனிதனது உள்ளமாகக் கள்ப்பக்கிரகமும், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், விசுத்தி, ஆஞ்ஞை, அனாகதம் ஆகிய ஆறு ஆதாரங்களை குறிப்பதாகக் கொடிமரம் தொடக்கம் மூலஸ்தானம் வரையுள்ள பகுதிகளும் அமைந்துள்ளன. பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமே கோவில் ஆகும். கற்ப சாஸ்திரங்களில் ஆலயம், தேவஸ்தானம், தேவாலயம், பிரசாதம் முதலிய பல பெயர்கள் கோவிலைக் குறிக்கும் சொற்களாக வருகின்றன. பொதுவாக கோவில் உலகமாகிய கோவில், கற்கோவில், மனக்கோவில் அமைப்பில் மட்டுமே மேற்குறிப்பிட்ட அம்சங்களைக் காணமுடியும்.
தூல உலகில் வாழும் மனதைச் சூக்கும உலகில் அருட் சக்திகளுடன் இணைக்கும் இடங்களாக ஆலயங்கள் அமைந்துள்ளன. ஆலயங்களில் இருக்கும் விக்கிரகங்கள்தான் இறைவன் என நினைக்கக்கூடாது. அவற்றின் ஊடே விளக்கும் மெய்ப்பொருள்தான் இறைவன் என்பதை உணர்ந்து கொள்ள
 

வேண்டும். மரத்தினால் ஒரு அழகிய யானை உருவாக்கப்பட்டது. இந்த யானை மரத்தைத் தவிர வேறோர் இடத்திலிருந்து வந்ததல்ல. எனினும் யானையின் அமைப்பை நோக்கும் போது மரத்தைப் பற்றிய சிந்தனை ஏற்படுவதில்லை. என்ன மரத்தால் இது செய்யப்பட்டது என்று நோக்கும்போது யானையைப் பற்றிய சிந்தனை மறைந்து போகின்றது. இதே போன்று எல்லாம் இறைமயமாய் விளக்கும்போது உலகத்தோற்றம் உண்டாவது இல்லை.
ஆனால் உலகம் தோன்றும்போது இறைவன் விளங்குவது இல்லை. எனவே திருக்கோவில் அமைப்பில் வெறும் கல்தான் காட்சி தருகின்றது என எண்ணாமல் அதனுள் மறைந்து நிற்கும் இறைவனது உண்மை நிலையினை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். சிவாலயங்கள் யாவும் வேத சிவாகமங்களில் விதித்த முறைப்படி அமைந்தவை. இவற்றின் தத்துவ உண்மைகளை உணர்ந்து கொள்வது இன்றியமையாதது. ஒரு பசுவின் உடல் முழுவதும் செறிந்துள்ள குருதியானது பக்குவம் அடைந்து பாலாகும்போது அதனைப் பெறுவதற்கு முலைகள் பயன் படுவதைப் போல உலகெங்கும் பரந்து விளங்கும் இறைவன் ஆன்ம ஈடேற்றம் கருதி கருணை மேலீட்டினால் உருவம் தாங்கி எழுந்தருளி இருக்கும் இடம் கோவில் ஆகும். நாட்டின் முக்கியமான அம்சமாக கோவில் விளங்குவதைக் கருத்திற்கொண்டே "கோவில் இல்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்” என்று ஆன்றோர் வாக்கு அமைந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்கள் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு வந்துள்ளன.
ኣ ஆரம்பத்தில் கள்ப்பக்கிருகம், மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்ட தனிக்கோவில் அமைப்பு முறையே காணப்பட்டது. பின்னர் கள்ப்பக்கிருகத்தையும், மகாமண்டபத்தையும் இணைக்கும் வகையில் அர்த்த மண்டபமும், மகாமண்டபத்தைத் தொடர்ந்து நிருத்த மண்டபமும், ஸ்தம்ப மண்டபமும் அமைக்கப்பட்டன. அத்துடன் பிரதான கோவிலைச் சுற்றி நாற்புறமும் துணைக் கோவில்களையும்,
ாபுரங்களையும், மண்டபங்களையும், விதிகளையும் அமைக்கும்

Page 36
முறை வளர்ச்சியடைந்தது. சிறப்பாக தென்னிந்தியாவில் சோழப் பெருமன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில் மேற் கூறப்பட்ட அம்சங்களையும் காணமுடிகின்றது. கோவில் அமைப்பு விரிவடைந்ததைத் தொடர்ந்து கட்டடம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகள் வளர்ச்சி அடைந்ததுடன் இசை, நடனம் ஆகிய கலைகளும் வளர்ச்சி அடைந்தன.
ஆகமமுறை அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்துக் கோவில் ஒன்றினுள் சென்று அங்குள்ள அமைப்பினை கூர்ந்து அவதானிக்கும் போது அங்கு பல உறுப்புக்கள் இருப்பதை அவதானிக்கலாம். மூல விக்கிரகம் அமைந்துள்ள இடம் மூலஸ்தானம் அல்லது கள்ப்பக் கிருகம் என அழைக்கப்படுகின்றது. இதன் வாயில் பெரும்பாலும் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்திருக்கும். மூன்று பக்கமும் சுவரால் அடைக்கப்பட்டிருக்கும். இச் சுவர்களில் கூடுகளில் கடவுளரது விக்கிரகங்கள் காணப்படும். தெற்குப்புறச் சுவரில் அமைந்துள்ள கூட்டில் தெட்சணாமூர்த்தியும், மேற்குப்புறச் சுவரில் அமைந்துள்ள கூட்டில் இலிங்கோற்பவ மூர்த்தியும், வடக்குப்புறச் சுவரில் அமைந்துள்ள கூட்டில் கோமுகையின் உருவமும் காணப்படும். கர்ப்பக்கிருகத்தின் மீது கூம்பு வடிவில் அமைக்கப்படுவது ஸ்தூபியாகும். இதன் உச்சியில் கலசங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
கர்ப்பக்கிருகத்தின் முன்னால் அமைந்துள்ள விசாலமான மண்டபம், மகாமண்டபம் என அழைக்கப்படும். மகா மண்டபத்தையும் கள்ப்பக்கிருகத்தையும் இணைக்கும் வகையில் நடுவே அமைந்துள்ள ஒடுக்கமாக மண்டபம் அர்த்தமண்டபம் ஆகும். மகாமண்டபத்தின் வடக்குப் புறத்தில் சக்திக்குரிய கள்ப்பக்கிருகமும் அர்த்த மண்டபமும் அமைந்திருக்கும். மகா மண்டபத்தின் கிழக்குப் புறத்தே தூண்கள் வரிசையாக அமைந்துள்ள நிருத்தமண்டபமும் அமைந்திருக்கும். நிருத்த மண்டபத்தின் வடக்குப்புறச் சுவரில் நடராஜ மூர்த்திக்குரிய ஆலயம் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். நிருத்த மண்டபத்தை அடுத்து
அறநெறிக் களஞ்சியம்

ஸ்தம்பமண்டபம் அமைந்திருக்கும். இதில் முறையே மூலாதார விநாயகள், கொடிமரம், பலிபீடம், நந்தி காணப்படும்.
பிரதான இக்கோவிலைச் சுற்றி நாற்புறமும் துணைக் கோவில்களும், கோபுரங்களும், மண்டபமும் அமைந்திருக்கும். பிரதான கோவிலுக்கும் துணைக் கோவிலுக்கும் இடையே உள்ள பகுதி பிரகாரம் அல்லது வீதி என அழைக்கப்படும். கோபுர வாயிலைக் கடந்து வலப்புறமாகச் செல்லும் போது தென்கிழக்கு மூலையில் கிணறும் அதை அடுத்து யாகசாலையும் அமைந்திருப்பதைக் காணலாம். தெற்குப்புறச் சுவரில் முறையே சமயக்குரவர் ஆலயம், களஞ்சிய அறை, சக்தி கோபுரம், சந்தான குரவர் ஆலயம், வாகன சாலை என்பன அமைந்திருக்கும். மேற்குப் பகுதியில் பிரதான கள்ப்பக்கிரகத்தின் வலப்புறமாக முறையே விநாயகர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் ஆலயமும், இடப்புறமாக பிச்சாடனர், மகாவிஷ்ணு, சுப்பிரமணியர் ஆலயங்களும் அமைந்திருக்கும். வடக்குப்புறச் சுவரில் பள்ளியறையும் வசந்த மண்டமும் காணப்படும்.
வடகிழக்கு மூலையில் ஆகமநுால் நிலையமும் அதனை அடுத்து யாகசாலை, வைரவர் ஆலயம், மணிக்கூட்டுக் கோபுரம் என்பன அமைந்திருக்கும். அடுத்து இராஜகோபுரம் பிரதான வாயிலில் அமைந்திருக்கும். இராஜகோபுரத்தின் உட்புறத்தில் இருமருங்கிலும் மூலவிக்கிரகத்தை நோக்கிய வண்ணம் சூரிய சந்திரருக்குரிய ஆலயங்கள் அமைந்திருக்கும் பிரதான கள்ப்பக் கிரகத்தை நோக்கியவாறு சண்டேசுவரர் ஆலயமும் அதன் வடக்கே நவக்கிரக ஆலயமும் காணப்படும். ஒவ்வொரு கோவிலுக்கும் முர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய விசேடங்கள் அமைந்து இருப்பது இன்றியமையாதது.
ஆகம அடிப்படையில் அமைந்துள்ள கோவில்களிலேயே மேற்கூறப்பட்ட அம்சங்கள் முழுவதையும் காணமுடியும். குறிப்பாக சிவாலயங்களில் இவற்றை அவதானிக்க முடியும்.
அறநெறிக் களஞ்சியம்

Page 37
அறநெறி வாழ்வு என்பது அறத்தின் வழி அமையும் வாழ்வு ஆகும். உலகின் மக்களாயினார் பெறுவதற்குரியன அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு ஆகும். வீடு என்பது அற நெறியில் பெறப்படுதற்கு உரியது. ஆதலாலும் பொருளும் இன்பமும் இவ்வுலக வாழ்வொடு அமைவன ஆதலாலும் அறம் உயிரொடு தொடர்ந்து எப்பிறப்பிலும் தொடர்வதாலும் இவற்றின் முதற்கண் அறத்தினை வைத்துள்ளனர்.
அறம் என்பது பலபொருள் தரும் ஒரு சொல். ஈதல், அறம், தீவினை விட்டு ஈட்டல் பொருள் என்றும் பாடலில் அறம் என்பது ஈதல் என்னும் பொருளில் வந்துள்ளது. இதனிலும் மேலாக அறம் என்பது கடமை, நீதி என்பவற்றை உணர்த்துகின்றது. இதனாலேயே திருவள்ளுவர் திருக்குறள் அறத்துப்பாலில் இன்சொற் கூறல், அன்புடமை, அடக்கமுடமை, நடுவுநிலமை, பொறையுடமை, ஒழுக்கமுடமை, வாய்மை, கொல்லாமை, கள்ளாமை, பயனில் கூறாமை, இன்னா செய்யாமை, செய்ந்நன்றி அறிதல் முதலிவற்றை அறங்களாகக் கூறியுள்ளனர். ஈகை அறத்தை ஈற்றில் கூறியுள்ளார்.
அறம் என்பது மனு முதலிய நூல்களுள் விகுத்தன செய்தலும், விலக்கியன விடுதலும் என இந்நூற்கு உரை எழுதிய பரிமேலழகள் எழுதியுள்ளார். அறநெறிச்சாரம் என்னும் நூலில் மெய்ம்மை, பொறையுடைமை, தவம், அடக்கமுடைமை, நடுவு நிலைமை, பற்றொன்றின்மை, உறுதியான நோன்பு, பெருந்தன்மை முதலியவற்றைச் செய்வதற்கு உரிய அறங்களாகக் கூறியுள்ளது.
இந்நூல்கள் கூறியவற்றுள் பலவற்றையேனும், சிலவற்றையேனும் அன்றேல் ஒன்றையேனும் ஒருவர் அறமாக மேற்கொள்ளலாம். “பொய்யாமை பொய்யாமை ஆற்றில் அறம்
அறநெறிக் களஞ்சியம்
 

பிறசெய்யாமை நன்று” எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது. அரிச்சந்திரன் என்னும் அரசன் வாய்மை ஒன்றையே தனக்கு உரிய அறமாகப் போற்றிப் பெரும்புகழ் பெற்றான். "ஒல்லும் வகையால் அறவினை ஒவாது செல்லும் வாயெல்லாம் செயல்” இதனைத் திருக்குறள் வலியுறுத்துகிறது.
ஈகை என்னும் அறத்தினைத்தான் அறமாகப் போற்றிய கள்ணன் போர்க்களத்தில் உயிர் இழக்கும் நிலையில் இருந்த அவனை அருச்சுணனது அம்புகள் அணுகாதபடி அவனது அறம் பாதுகாத்தது எனப் பாரதநூல் கூறுகிறது. இதிலிருந்து அறம் ஒருவரை எந்நிலையிலும் பாதுகாக்கும் என்பது புலனாகிறது.
அறம் செய்தற்குப் பொருள் வேண்டிய ஒன்றன்று. மனம் இருந்தால் அதுவே இன்றியமையாதது. மனம் பற்றுக்கோடாக வைத்து அறஞ்செய்தல் பூசலார்நாயனார் மனத்தினால் திருக் கோயில் அமைத்ததைப் போன்றது. இவரது திருக்கோயிலுக்கு இறைவன் எழுந்தருளினான் எனத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. அறம் செய்யினும் மனம் தூய்மையாக இருத்தல் வேண்டும். “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறம்” எனத் திருக்குறள் கூறுகிறது. இல்லறத்தவர்க்குத் துறவியரும் துறவியர்க்கு இல்லறத்தவரும் துணையாதலும் அறமாகும் என அறநெறிச்சாரம் என்னும் நூல் கூறுகிறது.
அறநெறி வாழ்வை இளமைக்கண் தொடங்குதல் வேண்டும். "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்னும் ஒளவையார் திருவாக்கு இதனை வலியுறுத்தும். இளமையிற் தொடங்கும் அறநெறி வாழ்வு பசுமரத்து ஆணிபோல நிலைத்து உயிர்க்கு உறுதி பயப்பதாகும். இளமையில் பிள்ளைகளிடத்தில் அறநெறி வாழ்வைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வளர்த்தல் வேண்டும். பிள்ளைகளுக்குக் கல்வியூட்டல் மட்டுமே தம்கடமை எனப் பெரும்பாலான பெற்றோர் நினைக்கின்றனர். அறநெறி வாழ்வில்
அறநெறிக் களஞ்சியம் G51)

Page 38
பிள்ளைகளை வழிப்படுத்தப் பெரும்பாலான பெற்றோர் விரும்புவது இல்லை. இதனால் பிள்ளைகளுக்குப் பெற்றோர் தீமை செய்கிறவர் ஆவர்.
பண்டையில் உடலோம்பும் வாழ்விலும் உயிரோம்பும் வாழ்வே மேலானதென மக்கள் எண்ணினர். அதனால் உயிரோம்பும் சமய வாழ்வும் சமய நம்பிக்கையும் உள்ளவர்களாக மக்கள் இருந்தனர். இன்று நவீன கல்வி முறையினாலும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளிலும் மக்களில் பலர் சமய நம்பிக்கையையும் சமய வாழ்வும் இல்லாதவராக உள்ளனர். ஆகவே முன்னைய சமய வாழ்விற்கு ஈடாக அவ்வாழ்வு தரும் பயன்களைத் தரவல்ல அறநெறி வாழ்வு இன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இவ் அறநெறி வாழ்வின் இன்னொரு சிறப்பு இவ் அறநெறி வாழ்வுக்குச் சமயவேறுபாடு இல்லை. இது எல்லாச் சமயங் களுக்கும் பொதுவாகவே உள்ளது. சமய, இனவேறுபாடுகள் இல்லாமல் மக்களிடையேயும் நாடுகளிடையேயும் ஒருமைப்பாட்டை வளர்க்க இவ் அறநநெறி வாழ்வு உதவுகிறது. இல்வாழ்வை நடைமுறைப் படுத்துவதும் எளிது. அதிக பொருட் செலவுகளும் கிரியை முறைகளும் இதில் இல்லை. இதன் பல்லினப் பயன் கருதியே கலாசார அமைச்சு எல்லாப் பிரதேசங்களிலும் மாணவர்களிடத்தில் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை நடைமுறைப் படுத்துவதற்கு ஊர்கள் தோறும் சமூக சமய அமைப்புக்கள் பணி செய்கின்றன.
இதனை ஊக்குவித்தற்குச் சமய கலாசார அமைச்சு ஒழுங்குகளை வகுத்துள்ளது. வாரந்தோறும் இதற்கான வகுப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அறநெறி வாழ்வைப் பரப்புதற்குத் தமிழிலே நீதி நூல்கள் பல உள்ளன. தமிழிலே உள்ள எண்ணிக்கை மிக்க நீதி நூல்கள் உலகில் ஏனைய மொழிகளில் உள்ளன.
அறநெறிக் களஞ்சியம் G52)

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், குறுந்தொகை போன்ற இவற்றுள் சில இளம் வயதினருக்காக உள்ளன. திருக்குறள், நாலடியார் போன்றவை வளர்ந்தவர்களுக்காக உள்ளன. ஆகவே அனைத்து வயதினரும் அனைத்துத் தொழில்புரிபவர்களும் அறநெறி வாழ்வு வாழ்வதற்கு உரியவர்கள். ஆகவே இம்மை மறுமைப் பயன்களைப் பெறுதற்கும் மக்கள் நிலையில் இருந்து தெய்வ உயர்நிலை பெறுதற்கும் அனைவருக்கும் அறநெறி வாழ்வு ஒன்றே உரியது ஆகும்.
அறநெறிக் களஞ்சியம் G53)

Page 39
ஈழநாடும் விநாயகர் வழிபாடும்
செஞ்சொற் செல்வர் ஆறு,திருமுருகன்
I jiit I lolli.
விநாயகர் வழிபாட்டின் தொண்மை.
உலகில் நிலைத்து நிற்கும் மதங்களில் மிகத் தொன்மையான மதம் இந்துமதம். மேலைத்தேய ஆய்வாளர்கள் இக்கருத்தினை பல நூல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்துமதத் தெய்வங்களில் விநாயகரை பல இனமக்களும் பல்வேறு நாடுகளில் காலங்காலமாகப் போற்றி வழிபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இலங்கையிலும் பொதுவாக இந்துக்கள் தமது முதல் வணக்கத் தெய்வமாக விநாயகரை முற்காலத்தில் வழிபட்டு வந்தனர் என்பதற்கு பல சான்றுகள் காணப்படுகின்றன. தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் புராதன விநாயகர் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாவா, பாலித்தீவு, போர்ணியோ, தென்னாபிரிக்கா, தாய்லாந்து, திபெத், பர்மா, இந்தோனோசியா, சீனம், யப்பான் போன்ற நாடுகளில் வாழும் ஆதிக்குடி மக்களிடம் இன்றும் விநாயகர் வழிபாடு நடைமுறையில் இருப்பது குறிப்பிடத் தககது.
இந்துக்களின் புனித பூமியாகிய பாரததேசத்தில் வட நாட்டில் தொன்றுதொட்டு விநாயக வழிபாடும் நிலவியுள்ளது. முதல் நூல் எனப் போற்றப்படும் வேதத்தில் பிரகஸ்பதி விநாயகரைக் குறிக்கும் எனச் சிலர் கருத்துக் கூறியுள்ளனர் என்பதற்கு ஆதி இலக்கியங்கள் சான்று கூறுகின்றன. தென்னக வரலாற்றில் விநாயக வழிபாடு கி.பி 6ம் நூற்றாண்டில் பிரபல்யமடைந்து இருந்ததென்று பண்டக்கார் என்ற இந்திய அறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கணபதியை முதன்மைத் தெய்வமாக தனித்துவ அறநெறிக் களஞ்சியம் G54)
 

நிலையில் வழிபடும் காணபத்தியர் இன்று மகாராஜ்ர மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
கி.மு எழுந்த பதினெண்புராணங்களில் (வடமொழிப் புராணங்களில்) விநாயகரது சிறப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வட மொழியில் எழுந்த உபபுராணமாகிய "பார்கவபுராணம்” விநாயகள் வரலாற்றினையும் மேன்மையையும் எடுத்துக் கூறுகின்றது. தமிழில் எழுந்த புராணங்கள் விநாயகருக்கு காப்புச்செய்யுள் பாடி முதன்மைப்படுத்தியுள்ளன. கச்சியப்பமுனிவர் சோழர்காலத்தில் "பார்கவபுராணம்” என்ற வடமொழிப் புராணத்தை மூலமாகக் கொண்டு தமிழில் விநாயகள் புராணம் என்ற புராணத்தைப் படைத்தமை சிறப்பம்சமாகும். திருச்சிராப் பள்ளியில் உச்சிமலைக் கற்பாறையில் மிகப் பழைமை வாய்ந்த கணபதி ஆலயம் அமைந்திருப்பதும் பல்லவர்காலச் சிற்பங்கள், குப்தர்காலச் சிற்பங்கள் விநாயகரை உருவ நிலையில் ஆலயங்களில் பூஜித்தமைக்கான புராதன சான்றுகளாக வரலாற்று ஆய்வாளர் கொள்கின்றனர்.
இந்துக்களின் தத்துவ நூல்களிலும் குறிப்பாகப் பின்வந்த உபநிடதங்களிலும் விநாயகர் பற்றிய செய்திகள் காணப் படுகின்றன. சைவசித்தாந்த சாஸ்திர நூல்களிலும் கணபதி வழிபாடு எடுத்துரைக்கப் பட்டுள்ளது. வியத்தகு இந்தியா என்ற வரலாற்று நூலில் ALபசாம் என்ற அறிஞர் கணபதி வழிபாட்டுத் தொன்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்துப்படி ஆரியருக்கு முன்னிருந்த தொல்குடிகளின் யானைக் கடவுளே தொடர்ந்து கணபதியாய் நிலைபெற்றுள்ளது எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவரது கருத்து யாதெனில் இந்து மதத்தவரின் கடவுள்களில் விக்கினேஸ்வரர் பண்பும் மாண்பும் பெற்று மதிக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடுவது நோக்கற்பாலது. சைவ சமயத்தவர்களும் வைணவ சமயத்தவர்களும் தங்கள் ஆகமம்சார் வழிபாட்டு மரபில் விநாயகருக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வந்துள்லுத்
அறநெறிக் களஞ்சியம் se4Abdulleai G55)

Page 40
விநாயகர் வழிபாடும் யாழ்ப்பாணமும்.
சிவபூமி எனத் திருமூலர் சுவாமிகளால் போற்றப்பட்ட ஈழநாட்டின் இருதயமாக விளங்குவது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தில் பல நூறுவருட பழமை வாய்ந்த வழிபாடாக விநாயகள் வழிபாடு நிலவிவருகின்றது. விநாயகருக்குத் தனிக் கோயிலும் ஏனைய தலங்களில் விநாயகருக்கு பரிவாரக் கோயிலும், ஸ்தம்ப மண்டபத்தில் விநாயகரை வரவேற்புத் தெய்வமாக இருத்துகின்ற பாரம்பரியமும் யாழ்ப்பாணத்தின் தொன்மைப் பண்பாடாக விளங்கி வருகிறது. மேலும் எச்சுப காரியங்களிலும் பசுவின் சாணியில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து கருத்தில் கொள்வதும், மார்கழி மாதத்தில் இல்லங்கள் தோறும் கோலமிட்டு விநாயகரை 31 நாட்கள் பிடித்து வைக்கும் வழக்கமும் யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய விநாயகள் வழிபாட்டு அம்சமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கேயர் இலங்கையை 1505ம் ஆண்டு கைப் பற்றுவதற்கு முன்பு சைவசமயமும் சிவாலய எழுச்சியும் ஈழநாட்டின் மிகவும் எழுச்சி பெற்று விளங்கியமையை வரலாறுகள் விளக்கி நிற்கின்றன. அன்னியர் வருகைக்கு முன்பு ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மன்னர்கள் கட்டிய பெரிய விநாயகர் கோயில்கள் இருந்தன என்பதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், வாய்மொழி மரபுச் சான்றுகள் சான்றுகளாகவுள்ளன. சோழநாட்டு அரசிளங்குமரி மாருதப்புரவீகவல்லி குதிரை முகம் மாறும் பொருட்டு கீரிமலை “கண்டகி” தீர்த்தத்தில் நீராட வருகைதந்து தீராத நோய்மாறி நலம் பெற்றதற்காக பல பெருங்கோயில்கள் அவளது ஞாபகமாக கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மட்டுமன்றி அளவெட்டி கும்பளவளைப் பிள்ளையார் கோயில், வறுத்தலை பிள்ளையார், கொல்லங்கலட்டிப் பிள்ளையார், பெருமாக்கடவைப் பிள்ளையார் போன்ற விநாயகர் தலங்கள் அரசிளங்குமாரி காலத்தில் எழுந்தவை எனவும் அவை பின் போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்டது எனவும் கூறப்
அறநெறிக் களஞ்சியம்

படுகின்றது. 1109 இல் சோழகுலோத்துங்கனின் இலங்கைப் படையெடுப்பில் கருணாகரத் தொண்டமான் வதியுங் காலத்தில் கரணவாய், வெள்ளப்பரவை ஆகிய இடங்களிலுள்ள உப்பை மரக்கலங்களில் ஏற்றிச் செல்வதற்காகத் தொண்டைமானாற்றை வெட்டுவித்தவன் எனக்கூறப்படும் கருணாகர மன்னன் இணுவில் உரும்பிராய் கிராம எல்லையில் கருணாகரப்பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்தான் என அங்குள்ள கல்வெட்டு சான்று கூறுகின்றது.
கி.பி. 1475ல் சிங்கைப்பரராஜசேகரன் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது நல்லூர் நகரத்தின் நான்கு புறங்களிலும் பெருங் கோயில்களைக் கட்டுவித்தான். கிழக்குத் திசையில் வெய்யிலுகந்த பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்தான். இக்கோயிலும் முற் காலத்தில் மிகப் பிரசித்தமான கோயிலாக விளங்கியுள்ளது.
சிங்கைப் பரராசசேகரனின் மைத்துனனும் மந்திரியுமான அரசகேசரி நல்லூர் ராசவீதியால் குதிரை வண்டியில் போகும் போது நீர்வேலியில் குதிரை திசைமாறி வேகம் கொண்டு ஓர் குளத்தை நோக்கிச் சென்றதாகவும் அவ்விடத்தில் தனது நேர்த்தியாக அரசகேசரி மிகப்பெரிய விநாயகள் கோயிலைக் கட்டியதாகவும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இத்திருக்கோயில் இன்று நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகிறது.
இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் என இன்று அழைக்கப்படும் விநாயகள் கோயிலை தமிழ்வேந்தன் பரராசசேகரன் கட்டிப்பேணினான் என்றும் அன்னியர் வருகையால் அத்தலம் முற்றாக அழிந்து பின் அருகில் இருந்த தீர்த்தக்கேணியிலும் மடத்திலும் பிள்ளையாரை மக்கள் பூசித்து வந்ததால் மடத்துவாசல் பிள்ளையார் என இக்கோயில் அழைக்கப்பட்டு வந்ததாகவும் இத்திருக்கோயில் பற்றிய வரலாற்று நூல்
அறநெறிக் களஞ்சியம்

Page 41
குறிப்பிடுகின்றது. பரராஜசேகர மன்னனின் சகோதரன் செகராச சேகரனால் கட்டப்பட்ட கோயில் அன்னியரால் அழிக்கப்பட்டதாகக் கூறி இன்றும் இணுவிலில் செகராசசேகரப் பிள்ளையார் கோயில் என்ற நாமத்துடன் கோயிலுள்ளது.
ஈழத்து புராதன சிவாலயங்களிலும் ஏனைய முருகள் தலங்களிலும் விநாயக வழிபாடு சிறப்புற்று விளங்கியுள்ளது. கீரிமலைப் பகுதியில் கடற்கரை எல்லையில் நிலத்தின்கீழ் மிகப் பழைய விநாயகர் விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
அறநெறிக் களஞ்சியம்

மெய்ப்பொருள் கண்டார் வழி
சைவப்புலவர், சிந்தாந்த பண்டிதர்
மு. திருஞானசம்பந்தபிள்ளை (iள் அதிர் இறுவில் மத்தி இெI)
இறைவன், உயிர், உலகு என்பன சைவசமயம் உணர்த்தும் உண்மைப் பொருள்கள். இவற்றைப் பதி, பசு, பாசம் என்றும் கூறுவர்.
இறைவன் அறிவே வடிவாக குணங்குறி கடந்த தத்துவா தினனாக உள்ளான். எனினும் அருளாளர்கள் அவ் இறைவனைச் சிற்றறிவுடைய உயிர்கள் சேர்ந்து இன்புறுவதற்கு வேண்டிய மார்க்கங்களை அருளியுள்ளான்.
உயிர்கள் பிறந்து இறக்கின்றன. அவ்வுயிர்கள் தத்தமது வினைக்கீடாக வரும் தநு, கரண, புவன, போகங்களைப் பெற்று வினையை அனுபவித்துக் கழிக்கின்றன. வினை முற்றும் அனுபவித்துத் தொலைய வீடுபேறு - விடுதலை உயிர்க்குக் கிட்டுகிறது.
உயிர் உலகில் பல உடம்புகள் பெற்று வாழ்கின்றது. மனிதப் பிறவி மாண்புடையது. ஐயறிவுடன் ஆறறிவாகிய பகுத்தறிவையும் பெற்றவர்கள் நாம்.
ஆறறிவு என்பது வழியை அறிகின்ற அறிவு. நாம் செல்ல வேண்டிய ஆறு - வழி எது என உணர்த்தும் அறிவே பகுத்திறிவு. பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. நன்மை, தீமை இரண்டினையும் ஆராய்ந்து, நன்மையை நாடித் தீமையை விலக்கி ஒழுகுவதே பகுத்தறிவுள்ளார் பெற்ற பயன்,
அறநெறிக் களஞ்சியம்

Page 42
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ நன்றின் பால் உய்ப்பது அறிவு
(குறள் : அறிவுடமை)
வாழ்வில் எவ்வுயிரும் இன்பத்தை விரும்பித் துன்பத்தை நீக்க முயல்கின்றது. இன்பம் எவ்வழியால் கிடைக்கும், அதனை நாம் எப்படி அடையலாம் என்று அறநூல்களும், ஆன்றோர்களும் கூறியும், வாழ்ந்தும் காட்டியுள்ளனர்.
இன்பம் அனுபவிக்க விழைந்த உயிர் அதனை நாடிப் போகின்றது. இன்பம் என நினைத்துத் துன்பத்துள் மேலும் விழுந்தெழும்புகின்றது. நிலையான இன்பத்தை நாடாது நிலையற்ற இன்பத்தை மெய்யென்று நினைத்து அதனுள் அமிழ்ந்தி அழிகின்றது. வாழ்நாளை வீணாகக் கழிக்கின்றது.
உலக இன்பம் அடைவதற்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது பொய்யாமொழி. இப்பொருளைப் பெற்றால் இன்பம் தேடிவரும். ஆயின் பொருளைத் தேடிய முறையினால் இன்பத்திற்குப் பதில் துன்பமும் ஏற்படலாம்.
பொருள் திதற்ற வழியிலே தேடப்பட வேண்டும். திதின்றி வந்த பொருளே இன்பத்தைத் தரும்.
அறன் ஈனும், இன்பமும் ஈனும் திறன் அறிந்து தீதுஇன்றி வந்த பொருள்
(குறள் : பொருள் செயல்வகை)
பொருள் கிடைத்தவுடன் அதனை நாம் குவித்து வைத்திருப்பதனால் நம்மை இன்பஞ் சூழாது. அப்பொருளை நாம் மாத்திரம் உபயோகித்தாலும் இன்பம் கிடையாது. நம்மைச் சேர்ந்தார்க்கும், சூழ்ந்தார்க்கும் பாடறிந்து பயன்படுத்தும் போதுதான் அச்செல்வத்தால் பெற்ற பயன் நமக்கு ஏற்படும்.
அறநெறிக் களஞ்சியம் un

எனவே தீதற்ற வழியில் தேடிய பொருளைப் பிறர்க்கும் பயன்படுத்தும் வழியில் - அறத்தில் செலவிட்டு நாமும் இன்பம் அடைந்து பிறரையும் இன்புறுத்தலாம்.
திறனறிந்து திதற்ற வழியில் தேடப்பட்ட பொருளினால் அறமும் இன்பமும் கிடைத்தாலும் உயிர்க்கு மேலும் வேண்டியது ஒன்றுண்டு. உயிர் இவ்வுலக இன்பத்துள் திழைத்துச் சலித்து விடுகின்றது. அது விடுதலையை வேண்டி விழையும். காரணம் இவ்வுலக இன்பங்கள் யாவும் நிலையில்லாதனவாய் இருக்கின் றமையே. நிலையான பேரின்பத்தை அடைந்தாலே உயிர்க்கு விடுதலை கிடைக்கின்றது. உவப்பிலா ஆனந்தத்தை அடைய உயிர் முயல வேண்டும்.
உண்மையை உணர்வதற்கு அறிவு வேண்டும். இவ்வறிவு
சிற்றறிவு, பேரறிவு என இருவகைப்படும். தத்துவ அறிவு - நூலறிவு யாவும் சிற்றறிவே. இதனையே நாம் கல்வி என்றழைக்கின்றோம்.
இக்கல்வியறிவு பரந்து கிடக்கின்றது. மணிவாசகள் "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்” என்றார்.
கற்கவேண்டிய நூல்களைக் கசடறக்கற்று அதற்குத் தக்கவாறு நிற்பதே ஒழுங்கு. கற்கவேண்டிய நூல்கள் எம்மைச் சூழ அளவிலாது இருக்கின்றன. அவற்றை முழுதுங் கற்க எம் வாழ்நாள் போதாது. எனவேதான் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நூல்கள் இவையெனப் பெரியோர் சுட்டிய நூல்களையாவது நாம் கற்க வேண்டும்.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, திருக்குறள் போன்ற அரிய பல நூல்களைக் கற்குமாறு நம்முன்னோர்
வலியுறுத்தினர்.
இவ்வகை நூல்களைக் கற்போமாயின் நாம் வாழ்வின் குறிக்கோளை அடைந்துவிடலாம்.
அறநெறிக் களஞ்சியம்

Page 43
எம்மைச் சூழ்ந்துள்ள யாவற்றிலும் நாம் ஒருவித தொடர்பு வைத்துள்ளோம். இத்தொடர்பினாலேயே நாம் மக்கள் என்றும், மனைவி என்றும், சுற்றம் என்றும், சூழல் என்றும், நாடு என்றும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இத்தொடர்பு - பற்று - அன்பு எனப்படும். இவ் அன்பு எம்மிடையே தோன்றியதற்குக் காரணம் எம்மிடம் உள்ள அறிவின் பயனேயாகும். அறிவாகிய கல்வி எம்மிடம் இவ் அன்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பினால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். அன்பினாலேயே உலகம் நடைபெறு கின்றது, நின்று நிலவுகின்றது என்று கூறின் அது மிகையாகாது.
கற்றதனால் அறிவு - சிற்றறிவு ஏற்பட அதனால் நாம் தொடர்புகளை ஏற்படுத்தி, அத் தொடர்புகளைத் தொடர்ச்சியாக நீட்டிக்கொண்டே போகின்றோம். அன்பினாலேயே தாய், தந்தையரை, உற்றார், உறவினர்களை, நண்பர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்கின்றோம்.
அவர்களிடம் அன்பு கொண்டமையினாலேயே அவர்களைப் பிரியும் போது துன்புறுகின்றோம். துன்பநிக்கம் வேண்டிய நாம் பின்னும் இவ் அன்பு காரணமாகத் துன்பத்தையே அடைகின்றோம்.
அப்படியாயின் இவ் அன்பு கொள்வது திதா? என்ற கேள்வி எழும். அல்ல அல்ல அன்பு தீதினைத் தரவில்லை. அன்பு கொண்ட முறைதான் துயரத்துள் செலுத்தியது.
அன்பு கொள்ளவேண்டிய முறையை விட்டுவிட்டுப் பற்றைக் கூட்டிக்கொண்டதால் நாம் துன்பம் அடைந்தோம்.
நிலையான பொருளில் அன்பு செலுத்தாது நிலையற்ற
பொருள்களில் அன்பு செலுத்தியமையால் நிலையற்ற அன்பும் இன்பமும் எமக்கு வந்தன.
நிலையான மெய்ப்பொருளில் அன்புசெலுத்தி வந்தால் அவ் அன்பு நிலையான பேரின்பத்தைத் தரும்.
அறநெறிக் களஞ்சியம் dipun

இவ் அறிவுதான் பேரறிவு எனப்படும். மெஞ்ஞானம் சிவஞானம் - பரஞானம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுவது இப்பேரறிவே.
இச்சிவஞானம் இல்லாத சிற்றறிவு அறிவாகாது. அவர்கள் கற்றும் கல்லாதவர்களே. அவர்கள் பற்றுள் அமிழ்ந்தித் துன்புறுவார்களே.
கற்றறிந்து நிலையான பொருளில் அன்பு வைத்தவர் பேரின்பம் அடைவர். தம்வழியுணர்ந்து தவவழி செல்வர். இதனையே திருமூலர்
கற்றுஞ் சிவஞான மில்லாக் கலதிகள் சுற்றமும் வீடார்துரிசறார் முடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலார் கற்றன் பினிற்போர் கணக்கறிந்தார்களே
(திருமந்திரம்)
என்று கூறியுள்ளார்.
தெய்வப்புலவர் ஆகிய திருவள்ளுவர்
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்
என்று கூறியதன் மூலம் கற்றதன் பயன் "வாலறிவன்” என்றழைக்கப்படும் இறைவன் திருத்தாளை . திருவருளை உணர்ந்து வழிப்பட்டு, அயராது நீங்காது அதில் நிலைப்பட்டிருத்தலே என்பது நம் அனைவராலும் உணரத்தக்கது.
இனி இச்சிவஞானமாகிய மெய்யறிவு பெறுவதற்குரிய வழி யாது என ஆராய்வோமாயின் அதற்கும் எம்மவர் படிமுறையே வழிகாட்டியுள்ளனர். தாம் வாழ்ந்து காட்டி, அச்சிவஞானம் பெற்ற சீலராகத் திகழ்ந்தனர்.
அறநெறிக் களஞ்சியம்

Page 44
மலையுச்சியை அடைவானொருவன் அடிவாரத்திலிருந்து படிவழி மேற்செல்வது போல சிவஞானம் பெறுவானும் சரியை, கிரியை, யோகம் என்னும் படிமுறை செல்லவேண்டும். வழிப் படுவோர் தத்தம்வழி நின்று ஈற்றில் ஞானத்தை அடைவர்.
இந் நான்கு மார்க்கமும் நன்னெறி ஒழுகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகள் ஆகியோர் முறையே அந்நான்கு மார்க்கத்திலும் நின்று வாழ்ந்து காட்டி, நிலையான இன்பத்தை தாமும் அடைந்து, நாமும் அந் நிலையான இன்பமடைய வழி காட்டியுள்ளனர்.
நாமும் அந் நால்வர் காட்டிய வழியே வழிச்செல்கை நம் கடனாம்.
“நால்வர் பொற்றாள் எம்முயிர்த்துணையே’
அறநெறிக் களஞ்சியம்

அறஞ்செய விரும்பு
ஒளவைப் பிராட்டியாரை அவரது சிறப்பு நோக்கி "உலக அன்னை” என்று அழைப்பார்கள். இந்த உலகம் நன்கு வாழும் பொருட்டு அறிவுரைகள் பலவற்றைக் கூறிவைத்தார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலானவை ஒளவையார் செய்த நூல்களில் மிகவும் முக்கியமானவை.
ஆத்திசூடி என்ற நூலின் காப்புச் செய்யுள் பின்வருமாறு
“ஆத்தி சூடிய யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியோமே”
என்பதாகும்.
"திருவாத்திப் பூமாலையைத் தரிப்பவராகிய சிவபெருமான் பெரிதும் விரும்பிய பிள்ளையாகிய விநாயகக் கடவுளை நாம் துதித்துத் துதித்து வணங்குவோம்" என்பதே காப்புச் செய்யுளின் பொருள்.
நீதிமயமான இந்நூலில் முதலாவது தர்ம வார்த்தை
“அறஞ்செய விரும்பு”
என்பதாகும்.
"உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே' என்பார்கள். உயிர் எழுத்துப் பன்னிரண்டும், மெய்யெழுத்துப் பதினெட்டுமாக முப்பது முதலெழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்களும் மேற்குறித்த முப்பது எழுத்துக்களின் விரிவேயாகும். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள
அெறநெறிக் களஞ்சியம்

Page 45
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்களுக்கும் முதல் எழுத்தாகவும் ஏனைய எழுத்துக்களோடு கலந்தும் இருப்பதும் அகரம் (அ).
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”
என்பார் திருவள்ளுவதேவர். உலகப் பொதுமறை என்று கொண்டாடப்படுகின்ற திருக்குறளை ஆக்கித் தந்த திருவள்ளுவதேவர் முதலாவது திருக்குறளில் முதலாவது வரியில் முதலாவது சொல்லில் முதலாவது எழுத்தாக அகரத்தையே (அ) கொண்டார்.
சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் ஒன்றான திருவருட் பயனைத் தந்தவராகிய உமாபதி சிவாச்சாரியார் அவர்கள்,
“அகர உயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கு நிறைந்து”
என்கின்றார்.
அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்தாகவும், ஏனைய எழுத்துக்களோடு கலந்துமிருப்பது போல, இறைவன் நாம் காணுகின்ற இந்த உலகத்துக்கு முதல்வராகவும் உலகிலுள்ள உயிர்களோடு கலந்தும் இருக்கின்றார் என்பதே கருத்து.
“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் . 99
என்கின்றார் அமரகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள். அவ்வாறு விதந்து பேசப்படும் தமிழ்மொழியின் மூலனழுத்து அகரம் (அ) என்பதே முடிந்த முடியாகும்.
அறநெறிக் களஞ்சியம் LSSSLSSSMSSSMSSSSSLLLL

எனவேதான் ஒளவைப் பிராட்டியாரும் ஆத்திசூடி என்கின்ற நூலில் மகுட வாசகமாக "அறஞ்செய விரும்பு’ என்றார். தொடர்ந்து அவர் கூறியிருக்கின்றார்.
ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல் எண்ணெழுத் திகழேல் ஏற்ப திகழ்ச்சி ஐய மிட்டுண் ஒப்புர வொழுகு ஒதுவ தொழியேல் ஒளவியம் பேசேல் அஃகஞ் சுருங்கேல்
முதலான அறிவுரைகள் யாவும் அறத்தை மையமாகக் கொண்ட அமிர்த வாசகங்களே.
கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலான நூல்களிற் காணப்படும் செய்யுள்கள் மூலம் அறஞ்சார்ந்த நீதிக் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார் ஒளவையார்.
உலக நீதி என்ற நூலின் ஆசிரியர் உலக நாதனார்
ஆவர். குறித்த நூலின் செய்யுள்களும் நீதியை நிலைநிறுத்தி மக்களை நல்வழிப்படுத்த மிகவும் உதவுகின்றன.
“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
அறநெறிக் களஞ்சியம்

Page 46
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் செஞ்சே”
குறித்த பாடலின் ஒவ்வொரு வரியும் உலகள்களுக்குரிய உபதேசமாகவே இருக்கின்றது.
“அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல்”
என்கின்றார் வெற்றிவேற்கை ஆசிரியர் அதிவீரராம பாண்டியனார். குறித்த தொடர்
“கற்க கசடறக் கற்பவை கற்பின் நிற்க அதற்குத் தக”
ன்கில் h QBibi95Tes O ... O
நன்னெறி ஆசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள் கூற்றும் உற்று
“நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார் செயுங் கேண்மை ஆகாதே.”
நல்லவர்கள் நட்பு வளர்ந்து கொண்டே போகும். நல்லவர்கள் அல்லாதவர்கள் நட்பு ஆகாது. இதுவும் நல்லதொரு உபதேசமே. தெய்வப் புலவர் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில்
“அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னுாங்கில்லை கேடு”
என்ற குறளின் வாயிலாக அறத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார்.
அறநெறிக் களஞ்சியம்

“இராமன் முடிசூடக் கூடாது, பரதனே முடிசூட வேண்டும் அதுவே உனக்கு மேன்மை” என்று கைகேகியை நோக்கிக் கூறுகின்றாள் கூனியம்மா. இராமன் மீது மறுவிலாத அன்பு பூண்டவள் கைகேயி. அவள் கூனியை நோக்கி,
“எனக்கு நல்லையுமில்லை என்மகன் பரதன் தனக்கு நல்லையுமில்லை தருமமே நோக்கில் 2-60d55 só60Gouqudó606o.................. 99
என்று கடிந்துரைக்கின்றாள். தருமமே நோக்கில் so என்ற தொடர் அர்த்தபுஷ்டி வாய்ந்தது. தருமம் செய்தல் என்றால் அறம் செய்தல். அறவழியில் இருந்து தவறிய காரணத்தினால் இராவணன் பட்டபாடுகளை இராமாயணம் எடுத்துக் &ng LD.
கிருஷ்ணர் முதலான பெரியவர்கள் கூறிய அறிவுரை களைக் கேளாமல் ஆசையின் வலைப்பட்டு நின்றார்கள் துரியோதனன் ஆகியோர். துரியோதனனுக்கு ஏற்பட்ட அழிவினை எடுத்துச் செப்புகின்றது பாரதம்.
“நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடி.”
என்பது மணிவாசகம்.
இந்த உலகம் நன்னெறியால் வாழவேண்டும் என்ற நோக்கில் சிவபெருமானே ஆலின் கீழிருந்து நான்கு மறைகளது உட்பொருளை - தருமத்தை - உண்மையை சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தார். உபதேசம் நல்ல பயனைக் கொடுத்தது என்பது யாவரும் அறிந்தது.
“தருமம் என்று ஒரு பொருள் உளது” சூரன், சிங்கன், தாரகன் முதலானவர்களுக்கு அவரது தந்தையாரான கரிச்
(அறநெறிக் களஞ்சியம் =ங்==

Page 47
தர்மோபதேசஞ் செய்தார். அந்த உபதேசம் சூரன்பாற் பலிக்க வில்லை. திநெறிப் படர்ந்ததினால் ஏற்பட்ட துயர சம்பவங்களை கந்தபுராணத்தின் வாயிலாக எடுத்துச் சொல்லுகின்றார் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்.
திருமுறைகள், புராணங்கள், சாஸ்திரங்கள், நாவலர் பெருமானின் சைவ வினாவிடைகள், பாலபாடங்கள், சைவப்பெரியாரின் சைவபோதங்கள் முதலான நூல்கள் அற வழியே - வாழ்க்கை வழி - நல்வழி என்று கூறுகின்றன.
இற்றைக்கு கால் நூற்றாண்டு முன் வாழ்ந்தவர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களைப் பாடசாலைகளிலும், வீடுகளிலும் கற்று நல்லொழுக்கம் உடையவர்களாக வாழ்ந்தார்கள். அறம் நீதி பற்றிய விளக்கம் அப்போது பரவலாக இருந்தது.
அரசு பாடசாலைகளைச் சுவீகரித்த காரணத்தினால் கல்வி நிலையில் - பாடத்திட்டங்களில் பலவித மாற்றங்கள் ஏற்படலாயின. சமயம் சார்ந்த நூல்கள், நீதி சார்ந்த நூல்கள் பாடத்திட்டங்களில் இடம்பெற முடியாத ஒரு நிலை ஏற்படலாயிற்று. இப்பொழுது பல்கலைக்கழகம் செல்கின்றவர்கள் கூட நீதிநூல்களைக் காணாத ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள். மாணவர்களைக் குறைகூற முடியாது. அரசு வகுத்த பாடத்திட்டமே காரணமாகும்.
இப்பொழுது கிராமந்தோறும் அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றன. குறித்த அறநெறிப் பாடசாலைகளில் சமயம், 5TLDb, நீதிசார்ந்த கதைகளையும், செய்யுள்கைளையும் படிப்பிப்பதற்குச் சங்கங்கள், சபைகள் ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்களிைேடயே சமயத்தில் உற்சாகம் உண்டாக வாய்ப்புண்டு. நாட்டில் அறம், தர்மம், நீதி என்ப நிலைப்பதற்கும் வழிபிறக்கும்.

தனிநபர் ஒருவர் பொருளாதார கலாச்சார அறநெறித்
துறைகள் சார்ந்த வளர்ச்சியினையே அபிவிருத்தி என்பர். இவ்விதம் தனிநபர் வளர்ச்சியினுடாக சமூகத்தின் அபிவிருத்தி நாட்டின் அபிவிருத்தி ஏற்படுகின்றன.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணக்
கலாச்சாரத்தைக் கந்தபுராண கலாச்சாரமென வர்ணித்தார். அத்தகைய கலாச்சாரப் பின்னணி இன்று அருகிக்கொண்டு போகிறது. அதற்குரிய காரணங்களாவன.
(1) (2)
(3)
(4) (5) (6)
(7)
(8)
(9) (10)
அமைதியற்ற அரசியல் சூழ்நிலை. கடந்த 20 ஆண்டுகளாக நிலவிய போர்ச்சூழல் காரணமாக ஆலயங்கள் அழிந்து காணப்பட்டன. தற்காலத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் சூழல்கள் அழிக்கப் படுகின்றன. கனிய வளங்கள் கரைந்து செல்கின்றன. பொதுஜன தொடர்பு சாதனங்களின் நவீன போக்கு. திரைப்படங்களின் தாக்கம். முயற்சிகள் அனைத்திலும் இலாபநோக்கு மிதமிஞ்சிக் காணப்படுகின்றன. உற்பத்தி நோக்கமற்ற நுகர்வுகல்வி. அன்னிய நாடுகளை நோக்கிய குடிப்பெயர்வு. வெளிநாட்டுப் பணத்தின் மோகம். ஆரம்பக்கல்வியை பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கல்.
இவை அனைத்தும் எமது மக்களில் சமய நோக்கமான
சிந்தனைகளை மழுங்கடிக்கின்றன. மேலும் பாடசாலையில் சமயக் அறநெறிக் களஞ்சியம்

Page 48
கல்விக்கு இரண்டு பாடவேளைதான் ஒதுக்கப்படுகின்றது. இந்நிலை மாணவர்கள் மத்தியில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கின்றது. மேலும் பிள்ளைகளுக்கு இன்று ஆலயங்கள் செல்வதற்கு பாடசாலை இணைப் பாடவிதானச் செயற்பாடுகள், போட்டிகள், தனியார் நிறுவனங்கள் போன்றன தடையாக இருக்கின்றன. அபிவிருத்திக்கு அறநெறி சிந்தனையும் அவசியம். அன்பு, கருணை, தர்மம், பொறுமை, கடின உழைப்பு, தூய்மை, மெருகுணர்வு, தியானம், மெய்ப்பொருளை அடையும் எண்ணம் போன்ற சிந்தனைகள் வருங்கால சமூகத்தினருக்கு அவசியம். எனவேதான் மாணவர்கள் சமய ஒழுக்க திறன்கள் பெறவேண்டும் என புதிய கல்விச் சீர்திருத்தங்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இளமையிலேயே மேற்கூறிய சிந்தனைகளை வளர்க்க அறநெறிப் பாடசாலைகள் நிறுவப்பட்டு செயற்படுகின்றன. வையத்து வாழ்வாங்கு வாழ சமயஅறிவு அவசியம் சமய அனுமானங்கள் பக்தி, ஒழுங்கு என்பன அத்தியாவசிய மானதாகும். நல்லவற்றைப் பேசி, நல்லவற்றை நாடி, நல்லவற்றைச் செய்ய அறநெறிப் பாடசாலைகள் பெரிதும் தொண்டாற்றுகின்றன. கொன்றைவேந்தன், ஆத்திசூடி, நல்வழி, நன்னெறி, திருக்குறள், பாடசாலை, சமய பாட விதானம் போன்ற பாட உள்ளடக்கங்கள் போதிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். இது சம்பந்தமான பயிற்சிகள், தியானங்கள், போட்டிகள், மனனம் செய்தல் போன்ற பல்வேறு முறைகளுடாக அறநெறிக் கோட்பாடுகளை இப்பாடசாலைகள் செயற்படுத்தி வருகின்றன.
மனித அபிமானமுள்ள சத்தியம் தவறாத நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இப்பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

சிவத்தியானம் செய் சிவமே நாமெனல் மெய் அதனை அறிந்து உய் இழந்ததும் ஒன்றுமில்லை ஆதாயமாகப் பெற்றதும் ஒன்றுமில்லை
பெரியோர்கள் எமக்குக் காட்டிய வழிகளைச் சிறார்களுக்குக் காட்டி வாழ்க்கையின் குறிக்கோள்களை அடைய அவர்களை நல்வழிப்படுத்துவதே அறநெறிப்பாடசாலையின் நோக்கம் ஆகும். இத்தகைய ஒழுங்குமுறை வாழ்க்கையின் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மாணவர்களைப் பயிற்றுவிக்கின்றன. ஆகவே பெற்றோர் சமய நெறியாளர்கள் அதிக முக்கியத்துவத்தையும் ஒத்துழைப்பையும் கொடுத்து அவை சிறப்படைய பாடுபடவேண்டும்.
அறநெறிக் களஞ்சியம்

Page 49
இணுவில் ஒரு பண்பாட்டு
ஊற்
கந்தையா நிகணேசன்
இணையில் - இணையில்லாதது எனும் கருத்தில் தனது பெயரைப் பெற்றுக்கொண்ட இணுவில் திருப்பதி இணையற்ற பண்புகளைக் கல்வி, கலை பாரம்பரியங்களைக் கொண்டு மிளிர் கின்றது. செம்பாட்டு மண்ணைக் கொண்ட வளம்மிக்க இவ்வூர் நிலத்தடி நீர்நிலைகளைக் கொண்டு திகழ்கின்றது.
நாற்புறமும் கோயில்களால் சூழப்பட்டு எக்காலத்திலும் மூன்று வேளைகளும் மணியோசை எத்திக்கும் கேட்கும். மாடுகளின் குளம்பொலிகள் மனதை நிறைக்கும். பக்தர்களின் பாராயணங்கள் செவிக்குணவாகும். சிவாச்சாரியார்கள் மத்திரத்துளி பக்தியுணர்வைக் காட்டும். ஊரெங்கும் பரந்து வாழும் இசையாயளர் பயிற்சியிசையும் பாட்டிசையும் கலைமணம் கமழவைக்கும்.
கிழக்கெல்லையில் தோட்டப்புறத்தில் கருணாகரப் பிள்ளையாரும் கூடவே காரைக்கால் மரச்சோலைகளிடை சிவனும் பார்வதியும், இணுவைச் சிதம்பரவளவில் சிவகாமியம்மையும் எழுந்தருளி அருள் மழை பொழிகின்றார்கள். வடக்கெல்லையில் மருதனார்மடம் பல்லப்ப வயிரவரும், மேற்கில் இணுவைக் கந்தசாமியாரும், செகராசசேகரப் பிள்ளையாரும், தெற்கிலே பரராசசேகரப் பிள்ளையாரும், மத்தியிலே மஞ்சத்தடி வாழ் முருகனும், விஷ்ணு பெருமானும் மக்களுக்கு அருள் பாலிக்கும் தெய்வங்களாக வீற்றிருக்கின்றார்கள். மேலும் கிராமிய வழிபாட்டுத் தெய்வங்களான இளந்தாரியார், அண்ணமார், காளியம்மன் முதலிய தெய்வங்களும் மக்களைக் காத்து வருகின்றார்கள். அறநெறிக் களஞ்சியம் =ண=ண=

கோயில்களின் இருப்புகளுக்கு பிரதிபலிப்பாக மக்களின் வாழ்வும் இறைவாழ்வாக அமைகிறது. கமக்காரர்களையே பெரிதும் கொண்டிருக்கும் இப்பூமி இன்று கல்விமான்களையும், வியாபாரி களையும் மற்றும் வெளிநாட்டு தொழில்புரிவோரையும் பெற்று வளம்மிக்க ஊராக இலங்குகிறது.
இணுவிலுக்குப் பெருமை சேர்ப்பவர்கள் கல்விமான்களும், கலைஞர்களும் ஆவர். நாதஸ்வர இசையிலிருந்து நாடகம், கூத்து என கலைஞர் வரிசை நீளும். பண்டிதர்கள் முதல் நவீன கல்வியாளர்கள் வரை கல்விமான்கள் பட்டியல் தொடரும். இவற்றோடு புகழ்மிக்க சித்த வைத்தியமும் நவீன வைத்தியமும் இணுவிலின் பெருமையைக் கூறும்.
சிற்பக்கலையின் பெருமை பேசும் திருமஞ்சம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் காணப்படுகிறது. இரண்டாவது பெரிய தேராக இணுவில் சிவகாமி அம்மன் தேர் கூறப்படுகிறது. இக்கோவிலில் காணப்படும் குதிரை, சிங்க வாகனங்கள் மகிஷாசூரன் என்பன தத்ரூபமாக திருநெல்வேலி சிற்பாசாரியார் ஆறுமுகம் என்பவரால் வடிவமைக்கப்பட்டவை. அத்துடன் இக் கோவிலில் அண்மையில் இளஞ்சந்ததியினரின் அனுசரணையுடன் ஆறுமுகம் சீவரத்தினம் அவர்களால் வடிவமைக்கப்பட்ட நடமாடும் கோபுரம் என வர்ணிக்கப்படும் உயர்ந்த சப்பறமும், மஞ்சமும் அமைந்துள்ளது. இக்கோவிலில் இடம்பெறும் நவராத்திரிகால மகிஷாசூரன் போர் என்றும் மறக்கமுடியாத காட்சிகள். அப்பாள் பாயும் சிங்கத்தில் வாளுடனும், வில் அம்புகளுடனும் எழுந்தருளும் காட்சியும்; ஒன்பது தலைகளுடன் மாறி மாறி வந்து அட்டகாசம் புரியும் சூரனின் கோலமும் ஈற்றில் தலையும் வெட்டப்பட்டு குடல் கிழிக்கப்பட்டு சுழன்று சுழன்று செல்லும் கோலமும் மனதில் பரவசப்படுத்தும் காட்சிகள். கூடவே சிங்கத்தின் வாயில் சூரனின் குடலும், காலடியில் சூரனின் துடிக்கும் தலையும் சூரனின் வயிற்றுள் தோன்றும் சிவலிங்கமும் நாடக பாணியில் அமைந்த
அறநெறிக் களஞ்சியம் ஊ

Page 50
காட்சிகள், மறுநாள் இரவு இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அப்பாள் வாழைவெட்டுக்காக வீதியுலா வரும் கலையம்சம் கொண்ட வெள்ளைக் குதிரை அமைந்த கோலம் பரவசம்கொள்ள வைக்கும். மானம் பூ ஊர்வலத்தில் பங்கு கொள்ளும் வேடதாரிகளின் ஆட்டம் சிறுவர்களுக்கு மட்டுமா உற்சாகம் தரும்.
மார்கழி வந்துவிட்டால் மழைக்குளிரோடு திருவெம்பாவைப் பாடலும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளும் சுற்றியுள்ள சூழலை நிறைத்துவிடும். அதேகோயில் வீதியில் ஆடப்பட்ட வள்ளி திருமணக் காட்சிகள் மனதில் மீளத் தோற்றம் பெறும். மார்கழி ஆதிரை நாளில் சிவகாமியம்மை சமேத நடராசப்பெருமான் திாத்தமாடி ஆடிய ஆட்டம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இதே ஆட்டம் பங்குனி மாத மகோற்சவத் திருவிழாவில் தேருக்கு எழுந்தருளும் அம்பாளின் ஆட்டத்திற்கு இணையானது என்றால் மிகையாகாது.
இணுவில் கோயிற் சூழலில் கலையும், கல்வியும் பின்னிப் பிணைய மக்களின் வாழ்வும் அறநெறிகளுடன் இணைந்து செல்லும் சிறப்பு அலாதியானது. இணுவில் சைவத் திருநெறிக் கழகத்தின் அனுசரணையினால் இயங்கும் சிவகாமி அறநெறிப் பாடசாலையின் சமய கலை கலாச்சார சேவை இவ்வூர் மக்களின் வாழ்வியலைச் சிறப்புற வழிநடாத்துகிறது. இணுவில் சின்னத்தம்பிப் புலவர் முதல் ஏரம்புசுப்பையா, தெட்சணாமூர்த்தி வரை, இன்றைய வீரமணிஐயர் முதல் பேராசிரியர் சபா ஜெயராசா வரை எமது கல்வி கலைப் பாரம்பரியங்கள் தக்கவைக்கும் ஆளுமைகள் என்றால் மிகையாகாது. மேலும் எமது ஊரின் சிறப்புக்களைப் பேணும் மனித ஆளுமைகள் தோன்ற எமது சமய பாரம்பரியம் வழிவகுக்கட்டும். மக்கள் வாழ்வு பொலிந்து சிறக்கட்டும்.
அறநெறிக் களஞ்சியம்

ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டிய இணுைவை பெரியோர்கள்
காரைக்கால் சாமியார் பெரிய சன்னாசிபார்

Page 51

நீலநீ ஆறுமுகநாவலர் சித்தத்தின்படி
கல்வியினால் மனிதருக்கு அதிக பயன் கிடைக்கின்ற இன்பமும், ஆற்றலும், துணிவும், அறிவும், பொறுமையும், பண்பும் என்று இன்னோரன்ன பல நற்குணங்கள் கல்வியினால் கிடைக்கப் பெறும் கல்வியாளன் ஒருவன் தன்னிடம் உள்ள தீயகுணங்களைச் சிறிது சிறிதாக அகற்றி நற்குணங்களைப் பொருந்திக் கொள்வான். மேலும் தீய குணங்கள் தன்னை அணுகாதவாறு பார்த்துக் கொள்வான். திருவள்ளுவர் கூறியவாறு உலகில் பிறந்து வாழ்கின்ற மனித குலத்திற்கும் ஏனைய எந்தெந்த உயிர்வர்க்கமெல்லாம் உண்டோ அத்தனைக்கும் தீமையின்றி வாழ கல்வியாளன் பழகிக் கொள்வான்.
பிறர் ஒருவர் தனக்கு எது செய்யக்கூடாது என்று ஒருவன் விரும்புகின்றானோ அதை தான் மற்றவருக்குச் செய்யாமல் இருக்கப் பழகுதல், கள்ளங்கபடமற்ற நேரிய தெளிந்த வார்த்தைகளை வாயினால் பேசுதல் இளமைக்காலத்திலேயே தான் கற்கவேண்டிய கல்வியைக் கற்றுத்தெளிதல், கடவுள் ஒருவனை எக்காலத்திலும் தனது சிந்தையால் துணிந்து மறவாமல் இருத்தல், சினங்கொண்ட வார்த்தைகளைப் பேசாமலும், மற்றவருடைய சினத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் இவ்வாறு கல்வியைப் பற்றிய விதப்புரைகளையும் சிறப்புக்களையும் பலவாறாக நாங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இளமையில் கல்வி கற்றுப் பெற்றோர்களைப் பேணி உடன் பிறந்தோர், அயலவர் யாவரையும் மதித்துக் கடவுளை எந்நாளும்
அறநெறிக் களஞ்சியம்

Page 52
வழிபட்டுச் சான்றோர் என உலகத்தில் போற்றப்பட்டவர்களது
நெறியைத் தழுவித்தானும் செல்லுதல் கல்வியாளன் ஒருவனுக்கு உண்டான பண்பாகும். அதுவே அவனுக்கு உயர்வையும் தரும்.
கல்வி கற்றவன் பெறும் பயன்களின் இன்னொன்று இனிய சொற்களைப் பேசுதலும் அச்சொற்களைக் கேட்போர் மகிழும்போது தானும் அதனால் மகிழ்வுறுதலுமாம். எக்காலத்தும் கல்வியினால் ஒருவன் துன்பமடையமாட்டான்.
வருவாய்க்குத் தக்கபடி வாழ்வை அமைத்து இல்லறத்தில் தன்னுடன் கூடியவளுக்கு அன்புகாட்டி அவளும் தானும் இயன்ற தவமியற்றி இல்வாழ்வும் பண்புநெறி பிறழாமலும் வாழ்வு நடாத்திக் கொள்ளுதல் கல்வியாளனின் இயல்பாகும்.
பெண்களும் கற்புநெறி அழகைத் தருவது போல, கல்வியின் பயனாக வாழ்பவனுக்கு இரக்கமும் அன்பும் நின்று நிலைக்கும் அதுவே அழகாகும்.
கல்வி உயர்ச்சி உடையவரையே உலகம் சான்றோர் என்ற வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. அந்த உயர்ச்சி உடையவர்களே மேன்மக்கள் எனப்படுவர்.
கல்வியாளன் அல்லது மேன்மக்கள் எனக் கூறப்படுவோர் உலக வாழ்விலுண்டாகிய செல்வம், அதிகாரம் என்பவற்றுக்கு அழிவு வரும் என்று உணர்ந்து அவற்றையே உலகப்புகழ் எனக் கருதிக் கொள்ளாமல் அடங்கியே வாழ்ந்தவர்கள்.
பிறருக்கு வரும் துன்பம் கண்டபோதே தன்துன்பம் போல எண்ணி இரங்குதல் அவனது இயல்பாகும். விருந்து பார்த்து, சுற்றம் பார்த்து அவர்களுடன் கூடவேயிருந்து உண்டு மகிழ்தலும் அப்படி உண்ணும் உணவில் தன்னுடன் கூடவே வாழும் வாயில்லா ஜீவன்களையும் அவை பசிபோக்கி உண்ணுதலும் கல்வியாளன் ஒருவனுக்கு உண்டாகும் இயல்பாகும்.

செய்யும் தொழிலில் கடமை, கருத்து என்பன தாழாமை கல்வியானுக்காகும். அத்தன்மை அவனது முகமலர்ச்சியிலும் அன்பு வார்த்தையிலும் காட்டிநிற்கும்.
தமக்குத் தீங்குசெய்தவர்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்பவர்கள் சான்றோர். சான்றோர் எனப்படுவோர் கல்வியினால் பூரண பயனடைவர். உலக உயிர்கள் அவரைக் கைகூப்பி மனமார வணங்குவர். ஈசுரஞானம் பெற்றிருப்பர் அவர். இவ்வுலகில் என்றும் நிலைத்திருப்பர். இறைவனுக்கு அடுத்து இவ்வுலக ஜீவன்களால் என்றும் நிலைத்துப் போற்றப்படுவர் என்பது திண்ணம்.
அறநெறிக் களஞ்சியம்

Page 53
assor(soy J5s,6i.................
குழந்தைகள் தெய்வீகமானவர்கள். அவர்களது மனதிலே நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தூய்மையானவர்கள். கீறல் விழாத இதயத்திரை அவர்களுடையது. அங்கு விழுவது எல்லாம் துலக்கமாகப் பதிவாகிவிடும். பள்ளிக் கூடங்கள் தான் அவர்களது பதிவுக்கான களங்களாகும். அவர்களது திரையில் தெய்வ நினைவு ஆழமாகப் பதிவு செய்யப்பட வேண்டியது. தெய்வம் எத்தகையது? எட்டமுடியாத உயர்ந்த கற்பனைப் பொருளோ, கனவுப் பொருளோ அல்ல தெய்வம். எட்டக்கூடிய எளிய நனவுப் பொருளே தெய்வம்.
இதைத்தான் யோகர் சுவாமிகள் "அவனே நான் என்று சொல்லித் தியானம் செய்வாய் தினமும்” என்று அன்புக் கட்டளை விடுகிறார். தியானம் என்பது தொடர்ந்து நினைப்பது. அவ்வாறு தியானித்தால் "ஆசையெல்லாம் ஒழியும், ஈசன் அருள் பொழியும்” என்கிறார் யோகர்.
குழந்தைகள் கபடம் இல்லாதவர்கள். கண்ணால் காண்பதை கைப்பிடிக்க எண்ணுவார்கள். ஆனால் கைப்பிடிக்க முடியாவிடில் மறந்துபோய் விடுவார்கள்; ஆனால் சஞ்சலப்பட மாட்டார்கள். அவர்களது ஆசை பந்தமல்ல. நாம்தான் அந்த ஆசைகளுக்கு தூபம் இடுகிறோம். காட்டுத்தியாக வளர்த்து, அதிலே அவர்களைப் பொசுக்கிவிடுகிறோம்.
கண்காணாத, காணமுடியாத ஈசனிடத்து அவர்களை ஆசைப்படும்படி செய்வது எவ்வாறு? இதுதான் நம்முன் நிற்கும் கேள்வி.
 

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” அரிவரியில சொல்லித் தந்தார்கள். அன்னையின் அன்பு பிதாவின் ஒறுப்பு குழந்தைகளால் மறக்கமுடியாதது. தாயையும் தந்தையையும் மறந்து அவர்களால் வாழமுடியாது. அந்த இடம் நல்ல உவப்பான இடம். உவப்பான தாயையும் தந்தையையும் ஈசனாக நினைக்க வைப்பது கஷ்டமான காரியமா?
கேளடா மகனே! கேட்பதெல்லாம் தரும் தெய்வமடா கேள். கேள். மகனே என்றுதானே தியானம் சொல்கிறோம். பிள்ளைகளும் கேட்டுக்கேட்டு ஊர்க் கோயில் வீதியை வலம் வருகிறார்கள்தானே. கேட்பது கிடைத்தால் தெய்வம் உண்டு என்ற நம்பிக்கை வட்டத்தில் வீழ்ந்துவிடுகிறார்கள். அந்த நம்பிக்கை உண்டான பின்பு "கேட்கத் தகுந்ததை மட்டும் கேள்” என்று எம்மால் வரம்பிட முடிவதில்லையே? நாங்கள் ஆசைத் தீயை அவர்கள் இதயத்தில் மூட்டலாமா? எது கேட்கத் தகுந்தது? எது கேட்கத் தகாதது என்று வகைப்படுத்திக் காட்டுவதுதான் அறக்கல்வி. நல்லதை நினை; நல்லதை விரும்பு, நல்லதையே செய் என்று பழக்கப்படுத்துவதுதான் நல்ல பண்பு. மனநிறைவை குழந்தைகள் பெற உதவும். மதிமயக்கம் விளையாது இதனால் மனிதனாவது மட்டுமல்ல தெய்வமாக அவர்களை ஆக்கலாம்.
தெய்வத்தின் இயல்பு என்ன? அன்பு, கருணை, பரோபகாரம். இவை உனது குணங்களாக வேண்டும் என்று எண்ணு. "அன்புடையார் எல்லாம் உடையார் அன்றோ’ அந்த அன்பை, எல்லாம் உடைமையாகப் பெரும் வழியைத் தெய்வத்திடம் எதிர்பார்த்து வேண்டிநிற்கும் பக்தர்கள் அல்லவா இந்த மனிதர்கள். அன்புள்ள அப்பா, அம்மாவைத்தானே அனுதினம் காண்கிறோம். அவர்களது அன்புப் பிச்சைதானே நாம்பெற்ற இந்த வாழ்வு. அவர்கள் தந்தது கஞ்சியென்றாலும் எம்மை வாழவைத்தது. பாற்சோறுதான் பசிதீர்க்கும் என்று நாம் எண்ணியதில்லையே. உப்பில்லாக் கஞ்சியும் உலர்ந்து ஒட்டிய வயிற்றுக்கு உவப்பாக
அறநெறிக் களஞ்சியம்

Page 54
இருந்ததல்லவா? உன் கண்ணை இமை காக்க மறந்தாலும் உனது நல்வாழ்வை ஒருபோதும் காக்க மறவாத காவலர்களான தாய் தந்தையை அவர்களது அன்பை உன் இதயத்திலே எண்ணிக்கொள். இந்த நினைவு உன்னை தெய்வ நிலைக்கு அழைத்துச் செல்லும். இதைத்தானே நமது வேதங்கள் முதலாவது UT6)UTLLDIT855 g55560T.
நீயோ இதை மறந்துவிட்டாய். அபிஷேகங்கள், ஆராதனைகள், ஆகுதிகள், அக்னிஹோமங்கள் இவற்றுக்காக ஆயிரமாயிரம் பணத்தை வாரியிறைத்துவிட்டு, நீதொட்டதெல்லாம் சாம்பராகும் பஸ்மாசுரன் கேட்ட வார்த்தையல்லவா கேட்க நினைக்கிறாய்? இது உண்மையிலே தவமாகுமா? இதுதான் உனது இன்றைய சமய வழிபாடானது எவ்வாறு?
பணப்போதை தலைக்கேறியது. போதைவஸ்துவை மூலதனமாக்கிச் சேர்த்த பணத்திலே போதை தரும் மகாமண்டபங் களையும் கருப்பக் கிரகங்களையும் நிர்மாணித்துவிட்டு நீங்காத கள்வத்துடன் நிமிர்ந்து பார்க்கிறாய். நிம்மதி நீ பெறமுடியவில்லை. நீ பஸ்மாசுரனுடைய மனதைப் பெற்றுவிட்டாய். நீ காணும் பஸ்மாசுரர்களுக்கு பாமாலை சூட்டி, பூமாலை புனைந்து அவர்களே விடிவு தரும். பகலவன் என்று பாராயணம் செய்கிறாய்.
நெற்றியிலே திருநீறு நெஞ்சத்திலே நீறுபூத்த கனல் நெருப்பு நினைப்பதெல்லாம் பிறரை வருத்தும் மன எண்ணம். எப்படி நீ சாந்தியைப் பெறமுடியும். எப்படி உன்னால் இந்த உலகிற்கு சாந்தி சாத்தியமாகும்.
உன் குழந்தையை கருணையுள்ளவனாக வளர்க்க விரும்புகிறாயா? நீ உன்னை அவனாக எண்ணு. அவன் குழந்தை. களங்கமில்லாத பசுமையான தெய்வ அம்சம் அவன். அந்த தெய்வ அம்சத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கு. நீ

உன்னைத் தெய்வமாக்க விரும்பு விரும்புவான் இங்கே அவன் என்பது உனது குழந்தையாகவும் இருக்கலாம். தெய்வமாகவும் இருக்கலாம்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. ஏன் தெரியுமா? குற்றங்களை மறக்கும் மனம் குழந்தைக்கு உண்டு. தெய்வத்திற்கு மனமே இல்லை.
நீ வரலாறு பேசுகிறாய். வரலாற்றில் கடந்தகாலத் தவறுகள் என்ற குப்பையைக் கிளறுகிறாய். பழைய நாற்றத்தைக் கிளறி அந்தத் துர்நாற்றத்தைப் பரப்பி அதனூடாக நீ வாழ விரும்புகிறாய். இது வாழ்வாகாது. ஆகவே ஒன்று செய் தெய்வத்தை எண்ணு. அத்தெய்வமும் நீயும் ஒன்றென எண்ணு நீ வாழ்வாய். உலகம் வாழும் உன்னைப் பிடித்த சோகத்தினாலே தானே குழம்புகிறாய்? சோ + அகம் என்பது அவன் + நான். அவனே நான். இங்கே அவன் என்பது எமை ஆளும் ஈசன், எல்லாம் அவன் செயலன்றோ? அவனின்றி அணுவும் அசையாது என்று பாலபாடத்தில் படித்த நீ “எல்லாம் அவன் செயல்” என்பதை மறந்து, எல்லாம் வன்செயலாக எண்ணியது சரியா? "கோல் எடுத்தவன் கோலால் மாளுவான்” என்று திரும்பத் திரும்பப் படித்த நீ ஏன் கோல் எடுத்தாய்? கோமாளி ஆனாய்?
தெய்வத்தை நினைத்து கைகூப்பும்போது தெய்வத்தின் கருணையை அல்லவா எண்ணிக் கைகுவித்தாய். ஆசை அறுந்த மனதைக்கேட்டு சங்கரிப்பது உனது பணி அல்ல. அது சங்கரனுடையது. நீ சங்காரி ஆகிவிடாதே. நீ சங்கரனைப் போலி சஞ்சலம் தீர்ந்த இதயத்தனாக உன்னை உயர்த்து. "அச்சம் தவிர் ஆண்மை தவறேல்" இதுவும் உனது பள்ளிப்பாடந்தானே.
“அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும்போதும் பஞ்சாட்சரத்தை நெஞ்சில்துஞ்சாமலே ஜெபி”
- யோகர் சுவாமிகள் .

Page 55
பஞ்சாட்சரம் என்ன தெரியுமா. நமசிவாய வாழ்க - அன்பு வாழ்க. அன்பு வாழ்ந்தால் எல்லாம் வாழும். உயிரினங்கள், புல், பூண்டு, கல், வீடு, கட்டிடங்கள், மாடிகள், மண்டபங்கள், கோயில்கள், பள்ளிகள் அறச்சாலைகள் அனைத்தும் வாழும்.
அன்பை நீ மறந்தாய். இதனால் பலரது வாழும் உரிமையை மறுத்துவிட்டாய். நீயே சூரசங்காரியும் சங்காரி என்ற நினைவு உனக்குள். இதனால் அனைத்தையும் சங்கரிக்கும் ஆவேசம். அதனால் அனைத்தையும் சங்கரித்து விட்டாய். பிரளயம் உலக அழிவு - இதற்கு நீயே காரணம் என்று எண்ணி உரிமைகோர விரும்புகிறாய். உன்னால் இந்த உலகை மீண்டும் படைக்க முடியுமா? முடியாது. அவனே படைத்தவன், அவனே காப்பவன், அவனே அழிப்பவன் படைக்கவும் காக்கவும் முடிந்தவரைதான் அழிக்கவும் முடியும். இதுதான் உலக உண்மை.
ஆக்கி எவையும் அழித்து ஆசுடன் அடக்கும் அவனே இந்த உலகத்திற்கு பொக்கிசம். அவனிடமுள்ள அன்பே இதற்குக் காரணம். அவனிடமுள்ள அன்பை எண்ணிப்பார் அவனது சாந்தம், அடக்கம், கருணை, மலர்ச்சி இவைகளை நீ பெற முயற்சிப்பாய்.
முற்றம் நிறையப் பூஞ்செடிகள்; பூமியிலே கொடிய வரட்சி. முற்றத்துக் கிணற்றிலே நிறைந்த குளிர்நீர். அந்த நீரை அள்ளி அள்ளிப் பூஞ்செடிகள் மீது வாரி இறை. பூக்கள் மலரட்டும் என்று நினை. பூக்கவில்லையே என்று பூஞ்செடிகளைப் பிய்த்து எறியும் மனோபாவம் வேண்டாம். பூக்கும் வரை அதன் பசுமையான இலைகளைப் பார்த்து மகிழ். ஒருநாள் அவை பூக்கத்தான் போகின்றன. அதைப் பார்த்து நீ ஆனந்தக் கண்ணிரால் அச்செடிகளை நனைக்கத் தான் போகின்றாய்.
வாடிய பயிருக்கு வான் மழையாக மாறுவதுதானே "அவனே நான் என்ற சிந்தனை தண்ணீர் விட்டாய், வளர்த்தாய்;
அறநெறிக் களஞ்சியம்

பூக்கவில்லை என்ற கவலைக் கண்ணிரால் கருக்க எண்ணாதே. பூக்கள் மலர்ந்தபின் நீ விடும் ஆனந்தக் கண்ணி அப்பூக்களுக்குப் பசுமை தரும் பணி நீராகும். நீ பூக்குமுன் ஆற்றாமையால் அழுதால், அக்கண்ணி அப்பூஞ்செடிகளைக் கருகச் செய்துவிடும்.
என்ன பசுமையான உலகம். படைத்தவன் அவன். நீ அதன் பாதுகாவலன். வேலி பயிரை மேயும் வேதனை வேண்டாதது. நான் அதைச் செய்யமாட்டேன். இது சத்தியம். நானே அவன். அவனே நான். இதைச் சொன்னதால் யோகர் தெய்வமாகிவிட்டார். நீ உன்னை யோகராக, அல்லது அவரது தொண்டராக நினை. அவனே நான். என்று நீள நினை மற்றவரையும் நினைக்கத் தூண்டு.
இது யோகர் வாழ்ந்த மண். ஒவ்வொரு மண் துகளிலும் தெய்வீகம் உண்டு என்பதை மறவாதே. இந்த மண்ணில் பிறந்து, தவழ்ந்து வாழ்ந்த உனக்கு தெய்வீகும் என்ன பஞ்சமா? யோகரைத் தொலைக்க எம்மால் முடியாது. எல்லாம் அவன் செயலே. அவனே. நான். நீ கடவுளடா. எழும்பு. நிமிர்ந்து நட.
அறநெறிக் களஞ்சியம் =

Page 56
மாதா பிதா குரு தெய்வம்
மூ.சிவலிங்கம்
ஒர்வுபெற்ற ேெவை அலுவலர் Gli IT)In1 Illi, v f`5)I biIf 9)I[)(,,b,5III II . j ip)) ol,
மாதா பிதா குரு தெய்வம் என்பது எமது வாழ்வில் ஒரு வரிசைக் கிரமமாக ஒன்றில் ஆரம்பமாக இறுதியில் நிறைவு பெறுகிறது. ஒரு குழந்தையின் பிறப்பு மாதா பிதா முன்செய்த பாவ புண்ணியங்களுக்கு அமையவே அமைகிறது. மாதா ஒரு குழந்தையை உலகுக்கு அறிமுகம் செய்கிறாள். பல தியாகங் களைச் செய்தது ஒரு குழந்தையை ஆளாக்கிப் பிள்ளையின் பிதாவுக்கு அறிமுகம் செய்கிறாள். மாதா பிதா இருவரும் சேர்ந்து இப்பிள்ளையைப் போதிய உடல் வளர்ச்சியும், தன்னை அறியவும் தலைப்படும் வரை பேணிப் பாதுகாக்கின்றனர். இதே காலத்தில் அவனின் எதிர்கால முன்னேற்றம் கண்டு நற்பழக்கத்தையும், நல்ல பாங்கான குணங்களையும் அன்புடன் ஆதரிக்கின்றனர்.
பிதா தன் பிள்ளையின் கல்வி மேம்பாட்டுக்காக ஓர் ஆசிரியரிடம் ஒப்படைக்கிறார். நல்லாசிரியர் ஒருவரின் பண்பாலும் அரவணைப்பாலும் இவன் கல்வியிலும் நல்லொழுக்கத்திலும் நல்ல பண்பாட்டிலும் சிறந்த சான்றோனாகிப் பல பட்டம், பதவிகள் பெற்று வாழ்க்கைக் கல்வி மூலம் சிறப்படைவதுடன் குடும்பப் பாரங்களையும் பொறுப்பேற்கிறான்.
இன்றைய சூழலில் வெகுசிலர் இல்லறவாழ்வில் சற்றுவிலகி ஞான அறிவுபெற முனைகின்றனர். இவரது மேலோங்கிய ஞானம் பெறத்துடிக்கும் போக்கில் ஒரு ஞான குருவை நாடுகிறார். பக்தி மார்க்கத்தையும் இறையுணர்வு கூடிய ஞான மார்க்கத்தையும் ஒரு ஞானகுரு மூலமே அடைகிறான். ஒரு ஞான குருவைப் பின்பற்றுபவன் தனது சகல சுகபோகங்களையும்
 

விட்டு குருவின் சீடனாக இணைகிறான். சிறந்த சீடன் தனது திறமையால் பகவான் இராமகிருஷ்ணரின் பெருமையை உலகறியச் செய்த சுவாமி விவேகானந்தரைப் போலக் குருவின் பெருமையை மேம்படுத்தித் தானும் நல்லொழுக்கம் பணி, நற்பண்பு, குருபக்தி போன்ற பல சிறப்புக்களையும் எடுத்துக் காட்டுவான்.
குருவின் கருணையால் மனித வாழ்வில் நல்லவை கெட்டவைகளை நன்கு உணர்ந்து பக்தி, யோகம், தெய்வீக மார்க்கம் ஆகிய நிலைகளில் நல்ல முன்னேற்றம் கண்ட சிறந்த ஆசான் ஆகிறார். இதனால் இவரது கருணை உள்ளங்கொண்ட குரு சீடனின் பக்குவ நிலைக்கேற்பத் தன்னை அறியச்செய்து இறைவனை அடையும் மார்க்கத்தையும் காட்டுவதால் இவரைத் தெய்வத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட பக்திநெறியாளர் தெய்வ உணர்வை அனுபவிக்கத் தொடங்கும்போது அவரிடம் அன்பு, பக்தி, கருணை, பொறுமை போன்ற அரிய குணங்கள் தோன்றுகின்றன. இதே மார்க்கத்தை நாடும் பெரியார்களில் ஏற்படும் மாற்றங்களால் சிலர் சித்தர்களாகவும் பிரகாசித்தனர். இறைபதம் அடைய விரும்பும் தவசீலர் சித்து விளையாட்டில் சிக்கமாட்டார்கள். இறைபதத்தையே தஞ்சமடையும் நோக்குடையோர் முத்தர்களாகவே விரும்புவர். இவர்கள் இறைசேவையிலும் தெய்வ சன்னிதானங்கள், சமயப் பற்றுடைய தொண்டர் குழாத்துடன் இணைந்து தேவசேவை செய்வதையே பேறாகக் கருதுவர். இறைவனைப் பாடிப் பரவசம் அடைவதிலும் இறைவனிடம் இரந்து வாங்குவதை ஏனையவர்களுக்கு வழங்குவதையே இன்பமாகக் கருதுவர். இப்படி இறைவனை நிழல்போல தொடரும் பக்தர்களை இறைவன் மேலும் அவர்களுக்குப் பக்தி மார்க்கத்தை ஊட்டி அவர்களை ஆட்கொண்டார்.
சீர்காழி என்ற ஊரில் வாழ்ந்த சிவபாதவிருதயர் என்ற அந்தணர் நியமந் தவறாது கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்லும் போது தனது 3 வயது நிரம்பிய பாலகன் திருஞானசம்பந்தரையும் அழைத்துச் சென்று நீராடும் நீரோடையின்
அறநெறிக் களஞ்சியம் =

Page 57
கரையில் இருக்கச் செய்து தான் நீராடினார். நீரில் மறைந்தபோது தகப்பனைக் காணாத பாலகன் பயந்து அம்மே அப்பா என்று அழுதர் உலக மாதாவாகிய உமாதேவியார் பாலகனின் அழுகுரலை அணுகிச்சென்று இறைவனுடன் அழுத பிள்ளைக்கு ஞானமாகிய தனது திருமுலைப்பாலைக் கொடுத்து ஆட்கொண்டார். ஞானம் பெற்ற பிள்ளை தந்தைக்கு யார் தன்னை ஆட்கொண்டனரெனத் திருப்பதிகம் மூலம் தெரிவித்தார். இறைவனிடம் பக்தியுடன் பல பாடல்களைப் பாடிய இவர் பல அற்புதங்களைச் செய்து இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.
சைவவேளான் குடும்பத்தில் பிறந்த திருநாவுக்கரசர் திடமான மதப்பற்றுக் குன்றித் தடுமாறிச் சமண மதத்தில் வீழ்ந்தார். இது கண்ட இவரது சகோதரி சிவபெருமானை வேண்டித் தன் சகோதரனைத் தடுத்தாட்கொள்ளுமாறு விண்ணப்பித்தார். இறைவன் இவருக்குச் சூலை நோயைக் கொடுத்து மிக வருந்த்ச் செய்து தடுத்து ஆட்கொண்டார். திருநாவுக்கரசரை நோயிலிருந்து விடுவித்து தன்னை அறியச்செய்து ஞானமார்க்கத்தை அடையச் செய்தார். முதய நிலையிலிருந்த திருநாவுக் கரசரை தாளாத இறையன்புடனும் திடமான பக்தியுடனும் இறைவனை வேண்டிப் பல திருப்பதிகங்கள்ை பாடியும் ஆலயங்களில் திருத்தொண்டுகள் செய்தும் பல அற்புதங்களைச் செய்தார். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இவர் சிறந்த உறுதியான சிவபக்தர் தூயபக்தி கொண்ட இவள் இறைவன் திருவடி சேர்ந்தார்.
சுந்தரர் முற்தொடர்பில் இப்பூமியில் அவதரித்துத் திருமணம் செய்யும் மணமேடையில் வீற்றிருக்கும்போது வயோதிப பிராமண வேடத்தில் வந்த இறைவன் சுந்தரர் தன் அடிமை என்ற ஒலை கொடுத்துத் தடுத்தாட்கொண்டார். பலவிதமாகவும் வாதாடியும் இறைவன் இவரை மணஞ்செய்யவிடாது தடுத்துத் தன்னைத் தெரியப்படுத்தியபின் தன்மீது பாடும் வண்ணம் பித்தா என்று அடியெடுத்துக் கொடுத்து மறைந்தார். சுந்தரர் தன்னையும் அன்பே
அறநெறிக் களஞ்சியம்

இறைவனையும் நன்கு அறிந்த ஞானநிலையில் பல பதிகங்கள் பாடியும் பல அற்புதங்களும் செய்தார். இவரது இறைவன் பாலுள்ள பக்தியும் ஈடிணையற்றது.
அரச சபையில் மந்திரிப் பதவி வகித்த மாணிக்கவாசகள் இறைவனால் கவரப்பட்ட தொடரில் அரசநிதியில் அரசனின் கட்டளைப்படி குதிரை வாங்கச் சென்றார். திருப்பெருந்துறையில் குருவடிவாய் இருந்த இறைவனின் கவர்ச்சி இவரை காந்தம் போல இழுத்தது. தன்னை மறந்து, கடமையை மறந்து எல்லா வற்றையும் இறைவனாகிய குருவிடம் விட்டுத் தஞ்சமடைந்தார். அரசபணம் தெய்வ சேவைக்கு விரையமானது. தன்னை மறந்த நிலையில் அரசனின் பல கொடுமைகளையும் சகித்தர். இறைவனிடம் திருவடி தீட்சை வைக்குமாறு விண்ணப்பித்தார். ஒரு இரவு இவர் படுத்திருந்த இடத்தில் இறைவன் தன் காலை இவரது தலைமேல் வைத்து ஆட்கொண்டார். பின் இவர் பல திருவாசகம் என்னும் தேனை இறைவன் மீது சொரிந்தார். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்ட மாணிக்கவாசகள் என்புருகும்படி பாடிய திருவாசகம் மிக அற்புதமானது. திருவாசகம் அளவிறந்த பக்தியின் வடிவமாகும். எவரையும் உருகச் செய்யும் தன்மையினால் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது திருவாக்கு பக்தி என்னும் தேனால் குழைக்கப்பட்டது. திருவாசகம் எட்டாவது திருமுறையாகும்.
காடே தஞ்சமென வாழ்ந்த கல்வி ஞானம் ஏதுமில்லாத திண்ணன் எனும் வேடன் காட்டிலேயுள்ள திருக்காளத்தீஸ்வரன் கோவிலில் தன்னந்தனியே உதவிகளேதுமின்றி இருந்த சிலை வடிவான இறைவனுக்கு அவனருளாலே காவல் புரிவதும், தன் குலத்தொழில் செய்வதுமாக இருந்தார். இறைவன் பசியால் தவிப்பார் என்று பக்திமேலிட்டால் தனது வாயால் ருசித்துப் பதம்பார்த்த இறைச்சியைத் தினமும் படைத்து வந்தார். இறைவனுக்குப் பூசை செய்யும் பூசகள் காலையில் வந்து பார்த்த
அறநெறிக் களஞ்சியம்

Page 58
போது கோயில் இறைச்சியினால் அசிங்கப்பட்டிருப்பதைக் கண்டு இடத்தைச் சுத்தஞ் செய்துவிட்டு இறைவனிடம் முறையிட இறைவன் தனது திருவிளையாடலையும் திண்ணனின் பக்தியையும் மறைந்திருந்து பார்க்கவும் தெரிவித்தார். மறுநாள் வழமைபோலத் திண்ணன் வாயினுள் அபிசேக நீரும் தன் தலையிலும் செவியிலும் அர்ச்சனை மலரும் கையில் இறைச்சியும் கொண்டு வரும்போது சிலைவடிவான இறைவனின் ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வடிந்ததைக் கண்டு பதைத்தான். தன் அம்பினால் தனது ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து இறைவன் மீது அப்பியதும் இரத்தம் வடியவில்லை. சிறிது நேரத்தில் மறுகண்ணிலிருந்து இரத்தம் வடிந்தது திண்ணன் தன் காலால் இறைவனின் கண்ணில் அடையாளம் வைத்தபடி தனது மறுகண்ணையும் தோண்ட முற்பட்டபோது இறைவன் “நில்லு கண்ணப்ப' என்று கூறித் தன்னை வெளிப்படுத்தினார். இயற்கை ஞான அறிவில்லாதவன் களங்கமற்ற தனது பக்தியால் செய்த செயல் பக்தியின் உச்ச நிலையை வெளிப்படுத்தியது.
தினமொரு சிவனடியார்க்கு அழுதுட்டித் தானும் உண்ணும் வழக்கமுடைய சிறுதொண்டநாயனார் ஒருநாள் அடியாரைத் தேடி அலைந்து இறைவனாகிய சிவனடியார் கொடுத்த நிபந்தனைக்கு அமையத் தன் ஒரேயொரு பாலகனைத் தாயார் அன்போடு பிடிக்கத் தந்தை பிள்ளையை வாளால் அரிந்து கறிசமைத்து அமுதூட்ட முற்பண்டபோது இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு மனைவி, மகனுடன் முத்தியடைந்தார். இவரது ஈடிணையற்ற பக்தி எந்தப் பந்த பாசங்களையும் விஞ்சியது என்றால் மிகையாகாது.
மேற்கூறிய ஆறு மெய்யடியார்களில் மாணிக்கவாசகள் இறைவனாகிய குருவினால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், கண்ணப்பர், சிறுதொண்ட o ஆகியவர்கள் குருவின் உதவிகளே இன்றி நேரடியாகவே தெய்வத்தால் தடுத்தாட் கொள்ளப்பட்டவர்கள்.
அறநெறிக் களஞ்சியம்

வடிவமான மாதா, அறமே வடிவமான பிதா, குரு அனைவரையும் கடந்தவரும், அருள்வடிவமான தெய்வம் யாவரும் ஒருவனின் வாழ்வில் மிக இன்றியமையாத பேறுகளாகும்.
எனவே எவ்வுயிர்களிடத்தும் அன்பு, பரிவு, பாசம், கருணை ஆகிய நாற்குணங்களைப் பேணி அறவழியில் நடக்கவேண்டும். எங்களை ஆளாக்கி இறுதிப் பயணம் வரை பேணியவர்களான மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரை நன்கு மதித்து நன்றியறிதலுடன் ஏற்றிப்போற்றிப், போற்றிப் பணிந்து யாவர்க்கும் முன் உதாரணமாக வாழ்வோமாக.

Page 59
வருங்கால சமுதாயத்தை நெறிப்படுத்தவல்ல அறநெறிக்கல்வி
இளஞ் சிறார்கள் கள்ளங்கபடமற்றவர்கள். வெள்ளை உள்ளங் கொண்டவர்கள். தந்தையாரின் அறிவுக்கண்ணோட்டத்திலே, அன்னையாரின் அன்புப் பராமரிப்பிலே, உற்றாரின் அரவணைப்பிலே ஆடிப்பாடி மகிழ்ந்து குலாவித்திழைப்பவர்களே இச்சிறார்கள். புகை நுழையாத இடத்திலும் போதனை புகும். எனவே இந்தப் பிஞ்சு உள்ளங்களிலே நல்லனவற்றைச் சொல்லிச் சிந்திக்கவைத்து அவ்வழியிலே அவர்கள் நினைப்பன, சொல்வன, செய்வன தூய்மை யானவையாகவும், பிரதி பலிப்புள்ளனவாகவும் அமைய அடிகோலி வைப்பது கற்றறிந்தோரின் கடமையாகும். வருங்காலச் சமுதாயம் வளங்கொழிக்க, எழில் மிளிர விளக்க வல்லவர்களே இன்றைய சிறுவர்களாகிய மணிப்பூங்கொத்துக்கள். வருங்காலச் சமுதாயம் பலதுறைகளிலும் ஈடிணையின்றி எழில்பெற்று விளங்க ஒளியேற்ற உயிரூட்டிக்காக்கப் போகின்றவர்கள் இன்றைய சிறார்கள். இந்த மனித மாணிக்கங்களை நெறிப்படுத்த ஏற்றதே அறநெறிக்கல்வி. என்கடன்பணி சைவத்திற்கும் தமிழிற்கும் தொண்டு செய்தலே என்ற வற்றாத பெருநோக்குடைய ஆறுமுகநாவலர் அவ்ர்களே பாடசாலைகளிலே சமயக்கல்வி போதிக்க வழிசெய்தவர்கள். அவர்களது வழிகாட்டலில் மலர்ந்ததே இன்றைய அறநெறிக்கல்வி. இந்த அற நெறிக்கல்வி எமது சமுதாயத்திற்கு கிடைத்த பெரும்பேறு என்றே சொல்லவேண்டும். ஒரு சிறுவனுடைய ஒப்புயர்வற்ற வளர்ச்சிக்குப் பெற்றார், உற்றார், சூழல், பாடசாலை, சமூகம், நாடு சிறந்த உறு துணையாக இருக்க வேண்டும். இந்த நிலையிலே ஆராய்வூக்கம் தொழிற்படும் ஐந்தாண்டுப் பிராயம் தொடக்கம் பதினாறாண்டுப் பருவம் வரையுள்ள காலகட்டம் வரை அறநெறிக்கல்வியைக் கட்டாயமாகப் போதிக்க வேண்டும். கற்பவர் உள்ளத்தில் சமய ஆசார சீலங்களோடு சிறந்த சமுதாய இணை
அறநெறிக் களஞ்சியம்
 

வாக்கத்தையும் சீரிய வாழ்க்கை முறையையும் போதிக்கவல்லது அறநெறிக்கல்வி. இதற்கு ஆதாரமாக வேண்டிய கல்வி போதிக்கப் படல் வேண்டும்.
இலங்கையிலே பாடசாலைக் கல்விக்குப் புறம்பாக சமய நிறுவனங்கள் சமய கலாச்சாரக் கல்வியை போதிக்கமுற்பட்டன. இந்த வகையிலே தர்மப்பாடசாலைகள் பெளத்த விகாரைகளிலும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும், அகதியாப் பாடசாலைகள் இஸ்லாமியப் பள்ளிகளிலும் நடாத்தப்பட்டு வந்த வேளையில் இந்து ஆலயங்களும், இந்து சமய நிறுவனங்களும் அறநெறிப் பாடசாலைகளை நடத்தமுற்பட்டன. இன்று நாடளாவிய ரீதியில் அதிகமான அறநெறிப் பாடசாலைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
சமய அறிவுடன் சமய வாழ்விற்கு வழிகாட்டப்படுகிறது. எழுத்தறிவுடன் செயற்பாட்டு முறைகள் மூலம் சமயப் பயிற்சி வழங்கப் படுகிறது. பஜனை, தியானம், அமைதியாக இருத்தல், பண்ணிசை, நாயன்மாருடைய வரலாறுகளைக் கேட்டல், அவர்கள் பாடிய தேவார திருவாசகங்களைப் பக்தியுடன் பாடுதல், குரு பூசைகளை மேற்கொள்ளுதல் என்ற வகையில் ஆரம்ப நிகழ்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த வகையிலே இளஞ்சமுதாயத்தினிடையே அறநெறி உணர்வுகளை சமய ஆசார ஒழுக்க சீலங்களை மேற்கொள்ளல், பெற்றோரையும் பெரியோரையும் மதித்தல், முதியோரைக் கணம் பண்ணுதல், ஆசிரியர் சொற்படி பணிந்து நடத்தல், சமூகத்துடன் இசைந்து இணைந்து வாழுதல், தனக்கும் தன்வீட்டிற்கும் தான் வாழும் சூழலுக்கும் நாட்டிற்கும் பயனுள்ள முன்னோடியான பிரசையாக வாழுதல் வருங்கால சமுதாயத்தை உருவாக்கவல்ல மனிதத்துவம் நிறைந்த பூணை புருசனாக உருவாகுதல் போன்ற நற்பண்புள்ள மக்களை உருவாக்கவல்லது அறநெறிக்கல்வியே.
அறநெறிக் களஞ்சியம்

Page 60
இவ்விதமான நல்லதோர் சமுதாயத்தை உருவாக்கவல்ல அறநெறிக்கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களும் பூரணத்துவம் உடையவராக இருத்தல் வேண்டும். எனவே இவ் ஆசிரியர்கள், (1) சைவசமய அறிவுடையவர்களாகவும் (2) பிறசமயம் கூறும் நற்பண்புகளை மனதார ஏற்பவராகவும் (3) 6086)IsrefITyub S 60)Luj61JT856).jub (4) சமுதாய நலன் விரும்பியவராகவும் (5) அறநெறிக்கல்வியை மாணவர் உள்ளத்திலே இதமாக உணர்த்திச் செயல் வழியிலே அவரைச் செலுத்தக் கூடியவராகவும்
இருத்தல் வேண்டும்.
தற்காலக் கல்வியானது பரீட்சையிலே சித்தியடையவும், வேலைவாய்ப்பைப் பெறவுமே பயன்படுகிறது. இதனாலேதான் கல்வி கற்கும் பருவத்திலே மாணவனுடைய கல்வியானது இந்த மட்டத்திலே நின்றுவிடாது பூரணத்துவமான மனித நிலையை எய்துவதற்கு ஆலயங்களை ஒட்டியும், ஆலயச்சூழலை ஒட்டியும் தள்மப்பாடசாலைகள் அமைந்திருக்கின்றன. கல்வியானது கல்லுதல், தோண்டுதல் என்ற பொருள் தந்து மாணவரது
“உள்ளார்ந்த அனுபவங்களை வெளிக்கொணர்வதே கல்வி’ என்றும், “மனிதனுள் ஆழ்ந்து கிடக்கும் அனுபவத்தை வெளிக்கொணர்வு கல்வி’
- சுவாமி விவேகானந்தர் -
“மனிதரின் உடல், உளம், ஆன்மா ஆகியவற்றின் இயற்கைப் பேறுகளை வெளிக்கொணர்ந்து விளக்கம் பெறச்செய்வதே கல்வி’ - மகாத்மா காந்தி -
என்றும் கல்விச் சிந்தனையாளர் விளக்கம் கூறுகிறார்கள். இந்த உறுதிப்பாட்டை உடையதே அறநெறிக்கல்வி. அறநெறிப் அறநெறிக் களஞ்சியம்

பாடசாலையிலே கற்கும் மாணவர்களுக்கு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் நல்வழி, திருக்குறள், மூதுரை, இனியவை நாற்பது, நாலடியார், சைவ வினாவிடை, கந்தபுராண வசனம், பெரியபுராண வசனம், திருமுறை என்பன போதிக்கப்பட்டு பரீட்சைகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படல் வேண்டும். மேலும். இம்மாணவர்களை தோரணம் பின்னுதல், மாலை கட்டுதல் (சரம், கண்ணி, புஜமாலை, தார்), கோலம்போடுதல், பண்ணிசை, புராணபடனம் செய்தல், கதாப்பிரசங்கம் செய்தல், சமயப்பேச்சுக்கள் செய்தல் என்பவற்றில் தகுதியுள்ளவர்களாக ஆக்கப்படல் வேண்டும். இந்த வகையிலே வலிகாமம் கல்வி வலய உடுவில் கோட்டமானது ஆண்டுதோறும் திருமுறைப்போட்டி நடத்தி விழா கொண்டாடிப் பரிசில் வழங்குவது சிந்திக்கத்தக்கது.
இந்த வகையாக அறநெறிக்கல்வி பூரணத்துவம் பெறும்போது நல்ல மனப்பாங்குடைய சமய ஆசாரங்கள் உடைய ஒழுக்க சீலங்களை உடைய நன்மாணவர்கள் உருவாகி தாமும், தம்சூழலும் நாம்நாடும் பல்துறையிலும் மேம்பட்டு விளங்க நல்ல வழிகாட்டிகளாகி வருங்காலச் சமுதாயத்தின் மூலபுருசர்களாக விளங்க அறநெறிக்கல்வி வழிகாட்டியாக நிற்கும் என்பது உண்மையே.

Page 61
அறநெறிப் போதனையின் அவசியம்
முந்தாளிலே கல்விப் போதனை அறிவேற்றத்தையும் ஆன்ம ஈடேற்றத்தையும் குறியாய்க் கொண்டிருந்தது. அதற்கேற்றவாறே பயிற்றப்பெற்றும் வந்தமை அக்காலக் கல்விமுறையாகும். கால மாற்றமும் அறிவியல் (விஞ்ஞானம்) வளர்ச்சியும் வேகமாக வளர்ந்து வரும் இந்நாளில் முறைசார்ந்த கல்வியிலேயே பிள்ளைகளும் பெற்றோரும் கூடிய கவனம் செலுத்துகின்றனர். அதேவேளையில் முறை சாராக்கல்வி பாராமுகமாகப் பின்னே தள்ளப்படுதல் வேதனைக்குரியது.
பாடசாலையிற் கற்கும் கல்வி குறிப்பிட்ட பாடவிதானங் களுக்கு அமைவாகவே கற்பிக்கப்படுகின்றது. அங்கு கற்கின்ற கல்வி மன நிறைவைத் தராதவிடத்து, தனியார் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் நாடுகின்றனர். குறித்த பாடங்களில் கூடுதலான புள்ளிகளைப் பெற வேண்டும்; பல்கலைக்கழகத்துள் நுழைந்து; பட்டம்பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே பலரும் கற்கின்றனர். இத்தகைய கல்வி மனவளர்ச்சியை மேலோங்கச் செய்கின்றது ஆயின் அறநெறி அறிவு சூனியமாய் விடுகின்றது. அறநெறிக் கல்வியை ஒருபுறம் தள்ளிவிட்டு, உயர்கல்வியைக் கற்ற எவரும் எதிர்பாராதவிதமாக உளத்தாக்கம் ஏற்படும்போது, அதனைத் தாங்கமுடியாது தவிக்கின்றார். அத்துடன் மனநோயுற்றும் உடல் மெலிந்தும் உயிர்காக்க இயலாது போவதும் உண்டு.
இந்நிலையில் நகரப்புறங்களில் வாழும் வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகள் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அழகியற் கலை, நுண்கலை, வாசிப்புக்கலை, விளையாட்டுக்கலை
 

போன்ற துறைகளில் ஈடுபட்டு, அவற்றிலும் தமது ஆற்றலை வளர்க்கின்றனர். அவைபோன்ற முறைசாராக் கல்வியிலும் பிள்ளைகள் கவனம் செலுத்துதல் விரும்பத்தக்கது. அதனால் அவர்களின் உடல் வளமும், உளவளமும் நன்கு விருத்தியாகின்றன. அவற்றின் விளைவாக அறநெறிச் சிந்தனை ஏற்படவும் ஏதுவாகின்றது.
66
“உத்தியோகம் புருஷ இலட்சணம்’ என்றும் “பணம் இருந்தால் பத்தும் செய்யலாம்” என்றும் எண்ணி அறநூல்களைப் பயிலாதும் அறநெறிப் போதனைகளைக் கேளாதும் எங்கோ ஓடிச் செல்வது வாழ்வில் நிரந்தர இன்பத்தைத் தருமென எதிர்பார்க்க இயலாது.
ஒருவர் சான்றோனாக மதிக்கப்பட வேண்டுமாயின் நல்ல அறநூற்கல்வியை அவர் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதே எதனையும் சீர்தூக்கிச் சிந்திக்கும் மனப்பக்குவம் உண்டாகும். குறுகிய இன்பத்துக்கு ஆசைப்பட்டுச் சுயநலமியாய் வாழ்வோர் சமூகத்தில் நற்பெயர் இன்றி இகழ்ச்சிக்கு ஆளாவதும் சாதாரண நிகழ்வாகும்.
உலகில் வாழும் மனிதர் தாமுண்டு; தமது சொந்த வேலை உண்டு என்ற மனப்பாங்குடன் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. உயிருள்ள சீவன்கள் எல்லாம் ஐயறிவுடையன என்பதும் மனிதன் மட்டுமே ஆறறிவுடைய உயிரினம் என்பதும் அறிவியல் கூற்றாகும். அதனாலேயே மனிதன் சிந்தனை செய்யும் ஓர் உயிரினமாவான் என ஆய்வாளர்கள் அழுத்தமாகக் கூறியுளளனர்.
எனவே இம்மை வாழ்வில் பட்டம் பதவிக்கும், பேர் புகழுக்குமாக கல்வியைப் பயிலாது அறநூல்களையும் தக்காரிடம் சென்று கற்க வேண்டும். இவ்விடயத்தைப் பொறுத்தவரையில் பிள்ளைகள் சிறுவராய் இருக்கும் காலத்தில் நல்லறிஞர் நூல்களைப்

Page 62
படிப்பதற்கும் அவர்களது நல்லுரைகளைக் கேட்பதற்கும் ஏற்ற வாய்ப்பினைப் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எந்தச் சூழ்நிலையில் மனித வாழ்வு அமைந்துள்ள போதிலும், பொது நோக்கிலும் சமூகத் தொண்டிலும் ஈடுபடுபவனையே இந்த உலகம் நன்கு மதிக்கும். சமூகப்பற்றும், நாட்டுப்பற்றும் இன்றி வாழும் ஒருவன் உயிர்வாழும் போதும் அவன் உயிரற்ற வனாகவே கருதப்படுகிறான். அவ்வாறானவன் இயற்கை நியதியின் படி உயிர் பிரியும் காலத்திலும் அவனது பிரிவைக்கேட்டு, யாரும் கவலைப் படுவதில்லை. அத்தகைய மனிதனின் வாழ்வில் மரணம் இருமுறை நிகழ்கின்றது என ஆங்கிலக் கவிஞர் ஒருவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
ஆகவே மனிதர் வாழுங் காலத்தில் நல்ல பணிகளைத்தாம் பிறந்த மண்ணுக்கும், தமது மக்களுக்கும் செய்ய வேண்டும். அவற்றுக்கு தூண்டுகோலாய் அமைவது அறநூல் கல்வியும் அறிவுரை
களைக் கேட்டலுமாகும்.
“கற்றிலன் ஆயினும் கேட்க, அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாம் துணை"
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூற்றாகும். ஒற்கத்தின் மனத்தளர்ச்சி வந்தபோது, ஊற்றாம் துணை ஊன்றுகோல் போல் துணையாகும்.
அறநெறிக் களஞ்சியம் = an

இந்த சமுதாய வாழ்வினை நெறிப்படுத்தலில் அறநெறிப் பாடசாலை பெறும் இடம்
சி. சோதிலிங்கம்
ஆசிரியர் / மல்லகர் ம.வி மில்லாம்.
இந்துவாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உன்னதமான வாழ்வு முறையினை மேற்கொள்ளவேண்டும் அதற்கு இன்றியமையாது அமைந்திருப்பவை வருணாச்சிரமக் கோட்பாட்டு முறையாகும். இத்தகைய வாழ்க்கைநெறி முறையில் சமுதாயம் பிரிக்கப் பட்டிருந்தபோதும் அவற்றிடையே பேதமின்றி சமுதாயவாழ்வு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை நிலைநிறுத்தி நிற்பவை அறநெறிப் பாடசாலைகள் இங்கு சமுதாய அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் பேதங்களின்றி ஒன்றிணைந்து வாழ்வதற்கேற்ற வாழ்க்கைநெறி முறைகள் தங்களால் இயன்றமட்டும் வளர்க்கப்பட வேண்டியவையாகும். நன்மை எனப்படுவது ஒரு குலத்துக்கோ, ஓர் இனத்துக்கோ உரிய தனிச்சொத்து அன்று. இந்துசமயத் திருநூல்கள் அறப்பண்புகள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. கீதை கீழே காண்பவற்றை இறைத்தன்மை பொருந்திய பண்புகள் என்று குறிப்பிடுகின்றது. “அபயம், எண்ணத்தூய்மை, அறிவிலும் புத்தியிலும் விடாமுயற்சி, ஈகை, தன்னடக்கம், வேள்விகள் செய்தல், வேதத்தைக் கற்றல், தவம், நேர்மை, அகிம்சை, சத்தியம், கோபமின்மை, பற்றற்ற தன்மை, சாந்தம், அவதூறு பேசுவதை வெறுத்தல், உயிர்களிடம் அன்பு பூண்டு ஒழுகுதல், கவர்ச்சியின்மை, பெருந்தகைமை, தாழ்நிலையாய் இருக்கும் தன்மை, ஆண்மை, பொறுமை, கபடமின்மை, வீண்பெருமையின்மை” என்பவை. இப்பண்புகள் யாவும் ஐம்பேரறப் பண்புகளின் பல்வேறு வடிவத் தோற்றங்களே. ஐம்பேரறப் பண்புகளாவன தூய்மை, தன்னடக்கம், பற்றின்மை, சத்தியம், அகிம்சை என்பன. இவற்றையெல்லாம் இனம், பரம்பரையினரிடம் எடுத்தியம்பி அவற்றைக் கடைப்பித்து வாழ்வதற்கேற்ற வழிமுறைகாட்டி வளம்படுத்தும் நிறுவனமாகக் காணப்படுவது அறநெறிப் பாடசாலைகளாகும்.
அறநெறிக் களஞ்சியம்

Page 63
இவ்வுலக வாழ்வு அதுவும் அறநெறிப்பட்ட வாழ்வில் உள்ளம், உடல் என்ற இரண்டும் தூய்மை பெறவேண்டும். உணவு உட்கொள்ளல், உடை உடுத்தலில் அன்றாடப் பழக்கவழக்கங்களில் மனம் கட்டுப் படுத்தப்படல் வேண்டும். உடலை இறைவனின் திருக்கோயிலாகக் கருதல் வேண்டும். உள்ளம் அதன் கர்ப்பக் கிரகம், உளத்தூய்மை அற்றவர்களுக்கு சுவர்கதவுகள் மூடப்பட்டே இருக்கும். இறைத் தன்மையின் ஒருபகுதி தூய்மையாகும். எண்ணம், சொல், செயல், கபடமின்மை, களங்கமின்மை எண்ணங்களில் இருத்தல் வேண்டும். இப்பண்புகள் கொண்டவர் தன்னடக்கத்தை எளிதாக, அமைதியாகப் பெறஇயலும். ஒவ்வொரு இந்துவும் தரும சிந்தனையோடு தருமத்தை அனுட்டிக்கும்போதுதான் அவன் இந்து ஆகின்றான். பிறர்படும் துன்பத்தைக் கண்டு யார் ஒருவன் மனம் இரங்குகின்றானோ அவனே இந்து என்பது மகாத்மா காந்தியின் கருத்து. மனிதன் படும் துன்பத்தைக் கண்டு மாத்திரமல்ல அகில அண்டங்களிலுமுள்ள எல்லா உயிர்களைக் காணும்போது இத்தகைய உணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த உயிருக்கும் இம்சை செய்யக்கூடாது என்பதே இந்து மதத்தின் அடிநாதம். இத்தகைய சிந்தனைப் போக்குகளை இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் பதித்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கவை அறநெறிப் பாடசாலைகளாகும்.
இவை பயன்நோக்காது சேவையே உயர்நோக்கெனக் கொண்டு செயற்படுபவை. இங்கு கல்வி கற்கும் உள்ளங்களில் இறைசிந்தனை உருவாக்கம், அதற்கேற்ற சாதனம் தேவார திருவாசகப்பாடல். அதனையும் இசைமரபு கொண்டு பாடல் வேண்டும் என்ற எண்ணங்களில் பயிற்சி அளிக்கப்படுவதுடன் ஞான நிலையில் அறிவால் இறைவனை அடையலாம். இதற்கு ஞான நூல்களைக் கற்று அதனை உணர்ந்து இயல்பாகவே மெய்யுணர்வு பெற்று ஞானியாவதுடன் தன்னைத்தானே உணர்வதன் ஊடாகவே எல்லாவற்றுக்கும் மேலான பொருள் இறைவன் என்கின்ற உணர்வு பெறலாம் என்றும், எங்கும் நிறைந்தது பரம்பொருள். அப்பரம் பொருள் இன்றி எதுவும் அசையாது என்பதனையும் நாம் உணர்ந்து
அறநெறிக் களஞ்சியம்

வாழ்வதனூடாக உயர்வு பெறலாம் என்பதனையும் எடுத்துக்காட்டி, வளர்க்கும் இடமாகக் கருதப்படுபவை அறநெறிப் பாடசாலைகளாகும்.
இப்பாடசாலைகள் மனிதவாழ்வின் இலட்சிய நோக்கினை அவற்றின் இன்றியமையாமையினைச் சமூகத்தின் மத்தியில் வலியுறுத்திச் செல்வதுடன் ஆன்மா இவ்வுலக வாழ்வில் இருந்து விடுதலை பெற்று ஈடேற வேண்டுமாயின் பிறஉயிர்களைக் கொல்லாது அவற்றுக்குத் தீங்கு செய்யாது அவற்றில் பாசமோ, மோகமோ, வெறுப்போ அல்லது குரோதமோ கொள்ளாது எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்த வேண்டும் இவற்றை எந்நேரமும் எமக்கு அறிவுறுத்தி ஆன்ம ஈடேற்றத்திற்கும், எம்மை வழிகாட்டிச் செல்லக்கூடிய எளிய சாதனமாக இருப்பது வாழ்வு முறைகளில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியம் தெய்வ பக்தியால் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மனமார பிறருக்கு கஷ்டமேனும் விளைவிக்கக்கூடாது. உலகத்தாருக்கு நன்மை செய்துகொண்டே இருக்க வேண்டும். தன்னுயிரைப் போல் மன்னுயிரை நேசிக்க வேண்டும். உலக பயன்களை விரும்பாமல் நித்திய சுகத்தில் ஆழ்த்திய பின்னரும் தாம் உலகத்தவருக்கு நல்வழிகாட்டும் பொருட்டு புண்ணியச் செயல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறப்படும் இந்து மதத்தவரின் கொள்கைகள் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகவும் செயற்படுவது இவ் அறநெறிப் பாடசாலைகளாகும்.
அறநெறிக் களஞ்சியம்

Page 64
“திருவாசகம் காட்டும்
பக்திநெறி”
“கையாற் தொழுது உன் கழற் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு எய்யாது என் தன் தலைமேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று ஐயா என் தன் வாயால் அரற்றி
அழல் சேர் மெழுகு ஒப்ப ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே’
சைவமும் தமிழும் தழைத்தோங்க வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இறவாப் பேரின்பம் அடைந்த சமய குரவர் நால்வருள் மணிவாசகப் பெருமான் ஞானத்தில் ஞானநெறி நின்று சாயுச்சிய பதவி அடைந்த பெரியாராவார். இறைவன் திருவருளைத் தன்னகத்தே தேக்கி அதன் வழியே ஒழுகிய இப் பெருந்தகையார் தமது தூயங் இருதய கமலத்தில் இருந்து பழுதிலா சொல் மணியினைப் பக்தி செய்து, அன்புமுழுதுமாகிய வடத்தினால் முறை தொடுத்து, அலங்கல் அழுது அழுது இறைவனடி சாத்திய ஞானத்துறவரசர் ஆவார்.
இறைவன் திருவருளைத் தன்னகத்தே தேனாய் வாய்மடுத்த மணிவாசகப் பெருமானார், பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட அறுநூற்று ஐம்பத்தாறு தேன் துளிகளைத் திருவாசகப் பாடல்களாகச் சைவ உலகுக்கு அளித்தமை நாம் பெற்ற பெரும் பேறாகும். பிறவிப் பிணியைத் தீர்க்கவல்ல இப்பெருவாசகம் படிப்போர், கேட்போர் உள்ளத்தை உருக்கவல்லது. ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் அளிக்க வல்லது.
 

"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”
என்பது சான்றோர் முதுமொழி. முதலிலே "நமச்சிவாய வாழ்க’ என்று இறைவன் திருநாமத்தையும், நாதன்தாள் வாழ்க என்று இறைவன் திருவடிகளையும் வாழ்த்துகின்ற முறைமையைச் சிவபுராணத்திற் பாடியருளினார். ஒவ்வொரு சைவ மக்களும் தமது பந்தபாசம் நீங்கி இன்பநிலை அடைவதற்கு இறைவன் நாமமாகிய திருவைந்தெழுத்தைப் பக்தியோடு காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்க ஒதல் வேண்டும். இறைவன் திருவடிகளைப் போற்றித் துதித்தல் வேண்டும். இவ்விரு மார்க்கமும் பக்திநெறியை வளர்க்கும் சாதனமாகும். பக்திநெறியினால் இறைவனைச் சுலபமாக அடைந்து விடலாம் என்பது திருவாசகம் காட்டும் உண்மையாகும். "பக்தி வலையிற் படுவோன் காண்க” என்று தமது இறை அனுபவத்தைத் திருவாசகத்திற் பாடியருளியமை கண்கூடாகும்.
பக்குவம் உள்ள ஆன்மாக்களை இறைவன் குருவடிவில் வலிய வந்து ஆட்கொள்வான் என்பது உமது சைவ சித்தாந்தம் கூறும் முடிந்த முடியாகும். பூர்வ புண்ணியவசத்தினால் அடிகளார் மனம் பக்குவம் அடைந்தது. நாலாம் சத்தினிபாதம் எய்தி அதிதீவிர பக்குவ முதிர்ச்சி அடைந்தது. இப்பெருநிலை அடைந்த பெருமானாரை; இறைவன் திருப்பெருந்துறையிற் குருந்தை மரநிழலில் குருவடிவாக மானிடச் சட்டை தாங்கிவந்து ஆட்கொண்டருளினார்.
“ஐம்புல வேடரில் அயர்ந்தனை வளர்ந்தென
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னிடம் இன்மையின் அரன்கழல் செல்லுமே”
என்பது, சைவ சித்தாந்த முதல் நூலாகிய சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரமாகும். இப்பாடல் குருவருளின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
பரமாச்சாரிய வடிவங்கொண்டு வந்த இறைவன் மாணிக்க வாசகசுவாமிகளை சிவஞானபோதத்தை உபதேசித்து அருளினார்.
அறநெறிக் களஞ்சியம்

Page 65
ஞான உபதேசம் பெற்ற அடிகளர், சிவஞானபோத வாழ்க்கையையே வாழ்ந்து காட்டினார். சிவஞானபோதம் கூறும் முதற் பிரமாணத்தின் படி பிரத்தியட்சமாக இறைவனை நேரே கண்பர். இதனை மணிவாசகப பெருமான் “கோகழி ஆண்ட குருமனிதன்தாள் வாழ்க’ என்று திருவாசகத்தில் வாழ்த்தியமை காணலாம். அடுத்து பதி, பசு, பாச இலக்கணத்தை விளக்கிப் பக்தியுடன் பாடும் பாடல்கள் பல உள. “ஒரு நாமம், ஒரு உருவம் ஒன்றும் இலானுக்கு, ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்பாமோ” என்று இறைவனது அருவத் திருமேனியையையும் “சோதியே, சுடரே, சூளொளி விளக்கே” என்று அருவுருவத் திருமேனி யையும் விளக்கியமை காணலாம். மேலும் “பாசவேர் அறுக்கும் பழம்பொருள்" என்று இறைவன் நிர்மலவஸ்து என்பதையும் ஆன்மாக்களாகிய நாம் உய்தியடைவதற்கு இறைவன் பஞ்சகிருத்திய நடனம் செய்கின்றான் என்பதை, "ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய்” என்னும் அடிளாற் சிவபுராணத்திற் பாடி அருளியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும் இறைவனை அடைய முடியாது. பதி ஞானத்தால் இறைவனை அடைய முடியும். பதி ஞானம் மிக்க மணிவாசகப் பெருமானார் இறைவன் தீது திரிகரண சுத்தியுடன் இடையறா அன்பு செலுத்தினார். இறைவன் திருவடிகளுக்கு மன ஒருமையும், வாய்மையும், தூய்மையுமாகிய அன்பு மலரிட்டு வணங்கினார். விதிப்படி திருவைந்தெழுத்து ஒதி உறைப்பான தியானம் செலுத்தினார். "ஆடகச் சீர்மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் உடையானே” என்றும், "அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே நின்தன்வார் கழற்கு அன்பு நிரந்தரமாய் அருளாய் நின்னை முழுவதுமே” என்றும், பக்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்து அருள் செய்யும் சித்தனே என்றும், இனி என்னே உய்யுமாறு என்று, என்று எண்ணி ஐந்தெழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை, முதல் அந்தமில்லா மல்லற் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே” என்றும் பாடியருளிய திருவாசக அடிகள் பதிஞானத்தில் சிந்தைநாடி, மெய் அன்புடன், இறைபக்தியுடன் இறைநாமம் சொல்லித் தியானிக்கும் பாங்கினை எடுத்தியம்புகின்றன.

பதிஞானங் கைவரப் பெற்றதும், கானல்நீர் போல் ஆன்மாவை மறைத்த மாயை ஒழுங்கும் ஆன்மா சிவ ஒளியைப் பெறும். இதனை
“ஊனக் கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்
துணைத் தேர்த்தெனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதிவிதி எண்ணும் ஐந்தெழுத்தே”
என்ற சிவஞானபோதச் சாதனை இயல் ஒன்பதாம் சூத்திரம் விளக்குகின்றது.
பதிஞானம் பெற்ற தொண்டர்கள், பக்தர்கள், யோகிகள், சித்தர்கள் ஆகியோரை மணிவாசகப்பெருமான் அணிவகுத்துக் காட்டும் திறம் வியக்கத்தக்கது.
“தொண்டர்காள் தூசிசெல்லிர் பக்தர்காள்
சூழப் போகிர் ஒண்திறல் யோகிகளே பேரணி
உந்திகள் திண்திறற் சித்தர்களே கடைக்
கூழை செல்மின்கள் அண்டர் நாடு ஆள்வோர் நாம்
அல்லற் படை வாராமே”
என்பது திருவாசகம். எமது அகப்பகை, புறப்பகை ஆகிய அல்லற்படை நீங்க இறைபக்தி செய்து மேற்கூறிய சாதனையாளர் களாக நாம் மாறவேண்டும். எல்லாரும் ஒருசேர வணங்கி அல்லற் படையை நீக்கவேண்டும் என்பதை விளக்குகின்றார் பெருமானார்.
நிறைவாகச் சிவமாந் தன்மை பெற்ற ஆன்மா இறைவனோடு ஐக்கியப்பட்டு அவன் சேவடிக்கீழ் நித்திய சுகத்தைப் பெறும் என்பதை காயத்துள் அழுது ஊற, ஊற நீ கண்டு கொள் எனன்று சேய மாமலர்ச் சேவடிக் கண் நம் சென்னி மன்னித் திகழுமே என்றும்,
அறநெறிக் களஞ்சியம்

Page 66
“நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம
எனப் பெற்றேன் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும்
சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம் புகுந்து
அடியேற்கு அருள் செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்து
அன்றே வெறுத்திடவே” என்றும்,
“முத்தி நெறி அறியா முர்க்கரொடு முயல்வேனை பத்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்த மலம் அறிவித்து சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சாவே”
என்றும் பாடியருளிய திருவாசகப் பாடல்கள் நன்கு விளக்கு கின்றன. இதனைச் சிவஞானபோதச் சூத்திரம் பயனியலில்
“காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரண்கழல் செல்லுமே”
என்ற சூத்திரம் உணர்த்துகின்றதென்றால் அதில் மிகை ஒன்றில்லை.
இத்தகைய பக்திநெறி மிக்க திருவாசகத்தைப் பக்தியோடு பொருள் உணர்ந்து, ஒதுவோர் இம்மை மறுமைப் பயன்பெற்று உய்வர் என்பது திண்ணம். இத் திருவாசனத்தின் பொருள் என்ன என்று தில்லையனர் கேட்க "இதன்பொருள் அவனே" என்று கூத்தப் பெருமானைச் சுட்டிக்காட்டித் தன்னுருவம் காட்டாது மறைந்த மாணிக்கவாசக சுவாமிகளின் திருவடிகளை வணங்கிப் பக்திநெறி வளர்ப்போமாக.
அறநெறிக் களஞ்சியம்

தெய்வ சாந்நித்தியம்
“கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது அர்த்தமுள்ளதோர் முதுமொழி. இதிலிருந்து ஆலயத்தின் அவசியமும் அறியவருகின்றது. ஆலயங்களின் சிறப்பானது ஆலயங்களில் இருந்து பிரவாகிக்கின்ற - வெளிப்படுகின்ற தெய்வ சக்தியைப் பெற்றுத் தந்துள்ளது. இச்சக்தி தெய்வ சாந்நித்தியம் எனப்படுகிறது.
சிற்ப சாஸ்திர முறைக்கு ஏற்ப அழகாகவும், அர்த்தம் உள்ளதாகவும், அமைக்கப்படும் சைவாலயங்களில் மூல விக்கிரகத்தின் அளவுக்கு ஏற்ற குறித்ததோர் விகிதாசார அடிப்படையில் கருவறையும் இதேபோல் விகிதாசார அடிப்படையில் ஏனைய மண்டபங்களும் நிர்மாணிக்கப் படுகின்றன.
இவ்வாறாக அமைக்கப்படும் ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரகத்தில் உரிய மந்திரங்களால் வேண்டுதல் செய்வதனாலும் தெய்வசக்தி ஊட்டப்பட்ட கும்பநீரால் அதாவது விக்கிரகத்தில் தெய்வத்தை எழுந்தருளச் செய்கின்றனர். தெய்வ சக்தியைப் பெற்றுவிட்ட மூல விக்கிரகத்துக்கு அடிக்கடி அபிஷேகங்கள் செய்வதாலும், ஓங்கார ஒலியுடனான மந்திர உச்சாடனங்களாலும் தெய்வ சாந்நித்தியம் அதிகரிக்கின்றது.
சைவாலயங்களின் மூலஸ்தானம் குளிர்மையாக இருக்கின்ற போது அங்கு ஓங்கார ஒலி எழுப்பப்படும்போது அங்கிருந்து “எதிரேற்றங்கள்” வெளிப்பட்டு வந்து பக்தர்களின் மீது படிகின்றன. இது உடம்புக்குத் தேவையானது. இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அறநெறிக் களஞ்சியம்

Page 67
இந்த வகையில் பெரும்சக்தி மையங்களாக இருக்கக்கூடிய எமது ஆலயங்களின் தெய்வ சாந்நித்தியமானது மென்மேலும் பெருகுவதற்கு; தூய்மை விதிமுறைகள், கிரியைகள், வேத தோத்திரங்கள், திருமுறைப்பாடல்கள், புராண படனங்கள் ஒதப்படுதல் என்பன காரணிகளாக உள்ளன.
தூய்மையைப் பொறுத்தவரை, எமது ஆலயங்களின்
கொடித் தம்பத்துக்கும், மூலஸ்தானத்துக்கும் இடைப்பட்ட பகுதி மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். இப்பகுதிக்குட் செல்பவர்கள் தூய்மை பேணவேண்டும். இப்பகுதிக்குள் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் தூய்மையானதாக இருக்க வேண்டும். இதனால்தான் அர்ச்சனை செய்விப்பவர்கள்கூட பலிபீடத்தடியில் நின்றே செய்விக்க வேண்டும். மஹா மண்டபத்துட் செல்லலாகாது என்று விதி கூறுகிறது. பக்தர்களால் எடுத்துச் செல்லப்படும் முக்கியமான அர்ச்சனைப் பொருள் மலர்களும், மலர் மாலைகளுமாகும். இவற்றின் தூய்மையைப் பக்தர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ் விடயத்தில் பின்வரும் நான்கு முறைகள் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும். * குளித்து தோய்த்துலர்ந்த ஆடை தரித்து மலர் ஆய்தல்
வேண்டும். * தூய்மையான இடங்களில் உள்ள மரங்களில் பூமியிலிருந்து
3 அடி உயரத்துக்கு மேலுள்ள பூக்களே ஆயப்படவேண்டும். * தூய்மையான இடத்திலிருந்து இறைநாமம் உச்சரித்துக்
கொண்டு மாலை கட்டுதல் வேண்டும்.
அடுத்ததாக விதிமுறைகள் சரியானபடி பின்பற்றப்படுதல் வேண்டும். கிரியைகள் எதுவித குறைபாடுகளுமின்றி நடைபெற வேண்டும். கிரியாமந்திரங்கள் அட்சரசுத்தியோடு ஒதப்படுதல் வேண்டும். வேத தோத்திரங்கள் முறைப்படி ஒதப்படுதல் வேண்டும்.
"வானவன் காண் வானவர்க்கு மேலானான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்.”
அறநெறிக் களஞ்சியம்

என்று அட்டன் சுவரிகள் அருளியுள்ளார். எனவே சமஸ்கிருத தோத்திரங்களும் தமிழ்த் தோத்திரங்களும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை, இறைவனுக்கு உகந்தவை என்பது புலனாகிறது.
தமிழ்த் தோத்திரப் பாடல்கள் எனும்போது பன்னிரு திருமுறைகளே முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவை வேத மந்திரங்களுக்குச் சமமாக மதித்துப் போற்றப்பட வேண்டியன, ஒதப்படவேண்டியன. திருமுறைகளுக்கு உரிய மதிப்பு கொடுபடாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பண்ணோடு ஒதுவதற்குப் பயிலுபவர்கள் குறைவு. பயின்றவர்களைக் கொண்டு ஒதுவித்தல் குறைவு. வருடா வருடம் ஆலயங்களின் பன்னிருதிருமுறை முற்றோதல் நடைபெற வேண்டும்.
திருமுறைகளுக்கு அடுத்து புராணபடனங்கள் பற்றிச் சிந்திப்போமாயின் கந்தபுராண படனமே பல ஆலயங்களில் தற்போது நடைபெற்று வருகின்றது. ஏனைய புராணபடனங்களும் நடைபெற வேண்டும். “பரம்பொருளின் பெரும்புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிறவார்த்தை பேசற்க ஆலயத்துள்’ என்ற அருமையான வார்த்தைக்கு அமைய இறைபுகழே ஆலயத்தில் ஒலிக்க வேண்டும்.
மேற்கூறப்பட்டவற்றை நோக்கும்போது ஆலயத்தின் தெய்வ சாந்நித்தியம் பெருகுவதற்கு அடியவர்களிடமும், ஆலய நிர்வாகத் தினரிடமும், அந்தணர்களிடமும் பாரிய பொறுப்புக்கள் தங்கியுள்ளதை அறியக்கூடியதாகவுள்ளது. ஆலய நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் மிக முக்கியமாகவுள்ளதால் இவற்றைக் கடைப்பிடிக்கத் தக்கதாக சிறு வயதிலிருந்தே பசுமரத்தாணியாக இவர்களது சிந்தனையில் உரிய நற்கருத்துக்களை ஏற்றுதல் எமது தலையாய கடமையாகும். இதனால் அனைத்தும் சிறப்புறும் என்பதில் ஏதும் ஐயுறவில்லை.
அறநெறிக் களஞ்சியம்

Page 68
சிவகாமி அறநெறிப்பாடசாலை
த செல்வரத்தினம் ஓய்வுபெற்ற ஆசிரியர் முன்னார் சிவாமி அரநெறிப்பாடசாலை அதிர்
பிறவிகள் பல. எல்லாப் பிறவிகளிலும் மேலானது மானிடப் பிறவியே. மானிடரிற் சிலர் சிந்தித்து வாழ்கின்றனர். பலர் சிந்திக்காது வாழ்கின்றனர். சிந்திப்பவன் மக்கள் வரிசையில் இடம்பெறுகின்றான். சிந்திக்காதவன் மாக்கள் வரிசையில் இடம்பெறுகின்றான். மக்களில் பலர் பிறந்தோம், வாழ்கின்றோம், நாம் உண்டு, எம் தொழில் உண்டு என்ற எண்ணத்துடன் சுயநல வாதிகளாக வாழ்கின்றனர். சிலர் பிறந்தோம், நாம் மற்றோர்க்கு என்ன செய்தோம், எதைச் செய்யலாம் என்ற நற்சிந்தனையுடன் வாழ்கின்றனர். அவர்களின் அறப்பணியும் சமயப் பணியும்தான் இன்று அறநெறிப்பாடசாலையாக வளர்ச்சி பெற்று விளங்குகிறது.
இசையும் சுவையும் சைவமும் தமிழும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்த ஒளிவீசுகின்ற எம் இணுவை மண். இம் மண்ணில் நாற்புறமும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் வானளாவிய கோபுரங்களுடன் மிளிர்கின்றன. சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்து வரலாறு படைத்த மனன். இவர்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டாக பெரிய சன்னியாசியாரும், காரைக்கால் சாமியாரும் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்துள்ளனர்.
இத்தகைய இயற்கை வனப்புகள் மலிந்த சூழலில் சிவகாமி அம்பாள் அருள்பார்வை சொரிய இப்பாடசாலை ஓங்கி வளர்ந்து வருகின்றது. ஆரம்பத்தில் இப்பாடசாலை இரண்டு மூன்று மாணவர்களுடன் ஆரம்பமாகியது. இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக சைவ திருநெறிக்கழகத் தொண்டர்கள் வீட்டுக்குவீடு சென்று மாணவர்களைக் கூட்டி வந்து இப்பாடசாலையில் சேர்த்து கல்விபயில உதவினர். அவர்களுடைய முயற்சியால் இன்று 40 - 50 பிள்ளைகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை ஊக்குவிப்பதற்காக எத்தனையோ சமய அறிவுப் போட்டிகளை நடாத்துகின்றனர். இன்று அறங்காத்து நிற்கும் செல்வி தங்கம்மா
அறநெறிக் களஞ்சியம்
 
 
 

সূত্র سلسggE
['.'; ܚ .¬- ܘ o: |:|
சைவத்திருநெறிக் கழகம்
ബ51) ജ||50|' ||Lo
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும்

Page 69

மாணவர்கள் காவடியாட்டம் பழகுதல்
_. T -
நடனம் பழகுதல்

Page 70

அப்பாக்குட்டி, ஆறு திருமுருகன் போன்ற சைவப் பெரியார்களை அழைத்துப் போதனைகளை நடாத்துகின்றனர். இதனால் இங்கு கற்கும் மாணவர்கள் அறநெறிக்குட்பட்டு வாழ்கின்றனர்.
இந்து சமய கலாசாரங்கள் நம் பண்டைய பாரம்பரியங்கள் எல்லாம் சீர்குன்றிப்போகும் இக்காலகட்டத்தில் இவ் அறநெறிப் பாடசாலையின் வளர்ச்சி பெரும் துணையாக நிற்கின்றது. இப் பாடசாலை மாணவர்கள் புத்தகக் கல்வியை மட்டுமன்றி வாழ்க்கைக்கு உதவும் கல்வியைப் பெற்று நல்வாழ்வு வாழ வழி காட்டுகிறது. மாணவர் சமயப் பண்பாடுகளை மதித்தல், சமயத்தை மதித்தல், சமயத் தொண்டுகளில் ஈடுபடுதல், பெரியோர்களுக்குப் பணிந்து நடத்தல், தேவாரங்களைப் பிழையற ஒதல் போன்ற உயரிய பண்புகள் போற்றுதற்குரியன.
மேலும் நோக்கும்பொழுது அறத்தைக் காப்பதற்கும் ஆத்மீகத்தை வளர்ப்பதற்கும், சமயாசாரியர்களை நினைவு கூர்வதற்கும் அடிக்கடி விழா எடுக்கின்றனர். மெய்ச் சமயமாகிய சைவத்தை வளர்த்த நாயன்மார்களின் குருபூசைகள் கொண்டாடப் படுகின்றன. இச்செயல்கள் எல்லாம் மாணவர்களை நற்பிரசைகளாக உருவாக்குவதற்கு வழிகாட்டுகின்றன. அறநெறிப்பாடசாலை வழிகாட்டல் மாணவர்களுக்கு தேவையான நற்பண்புகளை வளர்த்து ஊக்குவிக்கின்ற நிலையில் இன்று பூரணத்துவம் பெற்றுள்ளது.
தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை ஆறுவருடங்கள் பூர்த்தியாகிய நிலையிலுள்ள இப்பாடசாலையை நினைவுகூர்வோம். இதன் துரித வளர்ச்சிக்கு அயராது உழைத்த சைவத் திருநெறிக் கழகத்தினருக்கு நன்றி உரித்தாகுக. அவர்களின் வேண்டு கோளுக்கு கடமைப்பட்டு இதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து இவ் அறநெறிப் பாடசாலையின் வரலாற்றை விஸ்தரித்த சொற்பொழிவாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கும் எமது நன்றிக்கடனைத் தெவித்துக் கொள்கின்றோம். சுருங்கக்கூறின் மேலும் இப்பாடசாலை வளர்ச்சிபெற இவர்களுடன் கூட மாணவர்களும், பெற்றோரும், நலன்விரும்பிகளும் தமது பங்களிப்பை உதவி வரலாறு படைக்க வேண்டுமெனக் கேட்டுத் கொள்ளுகிறேன்.
அறநெறிக் களஞ்சியம் (111)

Page 71
இன்றைய சிறுவர்கள் இந்த நாட்டின் நாளைய தலைவர்கள். எமது சமுதாயத்தை கட்டியாழ்வபவர்கள். இவர்களைத் தகுந்த முறையிலே வளர்த்து நற்பண்புகளைக் கொண்ட பிரசைகள் ஆக்குவது எமது சமூகத்தினது பொறுப்பும் கடமையுமாகும்.
சிறுவர்கள் உள்ளத்தில் சமய அறிவு, அறநெறிப் பண்பு என்பவற்றை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை நற்பண்பு கொண்டவர்களாக உருவாக்கமுடியும் என்ற நோக்கோடு ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ் செயற்படும் ஓர் அமைப்பாக அறநெறிப்பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எமது நாட்டிலே இந்துசமயக் கல்வி பாடசாலைகளில் கட்டாய மாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இவற்றுக்கு மேலாக பரீட்சையை நோக்கமாகக் கொண்டல்லாமல் சமயக்கல்வியை வளர்த்தல், நல்லொழுக்கம், நற்பண்புகளை மாணவரிடையே ஏற்படுத்தல், சமய வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்துதல், சமயமும் வாழ்க்கையும் இணைந்தது என்பதனை நடைமுறை, செய்முறைகள் மூலம் பிள்ளைகளுக்குப் போதித்தல், அன்பு, பக்தி, பெற்றோர், பெரியோர் களையும் மதிக்கும் நற்பண்புகளையும் வளர்த்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காகவே அறநெறிப் பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்து ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள் ஆகியன தமது நிருவாகத்தின் கீழ் அறநெறிப் பாடசாலைகளை அமைக்க முடியும். இவ் அறநெறிப் பாடசாலைகள் இந்துசமய அலுவல்கள் கலாசார திணைக்களத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டு இயங்கி
(112)
அறநெறிக் களஞ்சியம்
 

வருதல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும்போது திணைக்களத்தினால் வழங்கப்படும் பல்வேறுபட்ட உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இத்திணைக்களமானது 1986 ஆம் ஆண்டு இந்துசமய கலாசார மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. ஏனைய மதப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற சமய கலாசார கல்வியானது இந்துசமய பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நன்நோக்கோடு 1989 ஆம் ஆண்டு ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள் என்பவற்றின் கீழ் அறநெறிப்பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு ஊக்கிவிக்கப்பட்டது.
அறநெறிப்பாடசாலையில் பாடசாலை மாணவர் மட்டுமன்றி ஏனையோரும் கல்விகற்க முடியும். 5 வயது முதல் 16 வயது வரையுமுள்ள மாணவர்கள் அறநெறிக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சமய அறிவுடன் சமய வாழ்வுக்கும் வழி காட்டப்படுவதோடு பஜனை, தியானம், அமைதியாக ஆசிரியரைப் பணிதல், சமூகத்துக்கு உதவிசெய்தல், தியாக உணர்வு போன்ற நற்பண்புகளை சமயக் கதைகள் மூலமும் அடியார் வரலாறு மூலமும் அறிந்து கொள்வதோடு அவற்றைப் பின்பற்றுதலும் இக்கல்வி முறையின் முக்கிய அம்சமாகும்.
மாணவர்கள் பின்வரும் நான்கு பிரிவுகளுக்கூடாக கல்வி புகட்டப்படுகின்றனர். (அ) பாலர் பிரிவு
2ம், 3ம் ஆண்டுகள்.
(ஆ) கீழ்ப்பிரிவு 4ம், 5ம், 6ம் ஆண்டுகள். (இ) மத்திய பிரிவு 7ம், 8ம், 9ம் ஆண்டுகள். (Hቸ) மேற்பிரிவு 10ம், 11ம் ஆண்டுகள்.
ஒவ்வொரு பிரிவுக்குமுரிய பாடத்திட்டங்களை கலாசார அலுவல்கள் திணைக்களமானது கல்விமான்கள், பெரியோர்கள், அறிஞர்கள் ஆகியோரது ஆலோசனைகளுடன் தயாரித்து அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளது. உசாத்துணை
அறநெறிக் களஞ்சியம் (113)

Page 72
நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான சமய நூல்களும் வெளியிடப்படுவதோடு அவை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப் பட்டுவருகின்றன. அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தினவரவு டாப்பு, ஆசிரியர் குறிப்பேடு ஆகியவற்றை வழங்கி வருவதோடு, பண்ணிசைக் கருவிகளான தாளம் , சுருதிப் பெட்டி, தபேலா போன்றவற்றையும் வழங்கிவருகின்றது. அத்தோடு அறநெறிப் பாடசாலை நூலகங் களுக்குத் தேவையான நூல்களையும் வருடந் தோறும் திணைக்களம் வழங்கி வருகின்றது.
இந்துசமய ஆலயங்கள், ஆலய மண்டபங்களிலும் இந்துசமய நிறுவனங்கள் தமது கலாசார மண்டபங்களிலோ அல்லது வேறு மண்டபங்களிலோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் வகுப்புகளை நடாத்துகின்றன. தொண்டு மனப்பான்மையும், ஒழுக்கமும், இந்து சமய ரீதியான வாழ்வினைக் கடைப் பிடிப்பவர்களாகவும் உள்ள சமயப் போதனையாளர்கள், ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் மேற்கொள்ளப்படுகின்றது. ஆசிரியர்களுக்கு கற்பித்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்குகள், செய்முறைப் பட்டறைகள் என்பவற்றை மாவட்ட ரீதியாக நடத்துவதோடு கையேடுகள், அறிவுரைகள் என்பவற்றையும் வழங்கி வருகின்றது. ஆசிரியர்கள் ஆலய வழிபாடு, திருவிழாக்கள், பண்டிகைகள் என்பவற்றை அவதானிக்கச் செய்வதன் மூலமும் நாடகங்கள், வில்லுப்பாட்டுக்கள், நடனங்கள் என்பவற்றை நடாத்துவதன் மூலமும் அருள்பெற்ற மகான்களின் வரலாறுகளைக் கூறுவதன் மூலமும் மாணவர்களிடையே அறநெறிப் பண்புகளை வளர்த்து வருகின்றனர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமானது அற நெறிப் பாடசாலை மாணவரிடையே சமய அறிவையும், கலாசார விழுமியங்களை விதைக்கும் வகையில் இந்துசமயப் போட்டிகளை நடாத்தி வருகின்றது. பேச்சு, கட்டுரை, பண்ணிசை,
அறநெறிக் களஞ்சியம்

புராணம் ஒதுதல், மாலைகட்டுதல், கோலம் போடுதல் போன்ற போட்டிகளை நடாத்தி வருகின்றது. மாவட்ட ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களை அகில இலங்கை ரீதியில் பங்குபெறச்செய்து பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
அறநெறி முதுநிலைப் பரீட்சை புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அறநெறி கற்பிக்கும் ஆசிரியரும், மேல்வகுப்பு மாணவரும் இப்பரீட்சைக்குத் தோற்றமுடியும். சித்தி பெற்று பெறுமதியான சான்றிதழைப் பெறுவதோடு மட்டுமல்லாது தொழில் வாய்ப்பினைப் பெறுவதற்கு உதவியாகவும் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது இந்துசமயப் பிள்ளைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். மேற்பிரிவு மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தால் சமய வரலாறு, சமய மெய்யியல், சமய இலக்கியம், சமய வாழ்வியல் என்னும் பாடங்களில் பரீட்சை நடாத்தப்படுகின்றது.
இவ்வாறாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள மானது அறநெறிக் கல்வியை வழங்கும் பொருட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையின் பல பாகங்களிலும் அறநெறிப் fT - 8F T 6D 6) 85 65) 6 உருவாக்கப்பட்டுள்ளதோடு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டும் வருகின்றன.
அறநெறிப் பாடசாலைகள் பயன்மிக்க பணிகளை மேற்கொள்ள இந்து நிலையங்கள், ஆலயங்கள், சமயச் சான்றோர்கள் பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டியது இன்றைய தேவையாகும். அறநெறிப் பாடசாலைகளை ஒரு தார்மீகக் கடமையாகக் கருதி செயற்படுவதன் மூலமாகவே அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
அறநெறிக் களஞ்சியம் T. (115)

Page 73
இந்தக் கோயில்களின் சமூகப் பணிகள்
புராதன ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி பொதுமக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் சிறந்த நிறுவனங்களாகவும் செயலாற்றியுள்ளன. ஆலயங்கள் நீதி மன்றங்களாக, மருத்துவமனைகளாக, வங்கிகளாக, நூலகங்களாக, கல்விக்கூடங்களாக, கலைவளர்க்கும் இடங்களாக, அறநெறி பேணும் நிலையங்களாக பல்வேறுபட்ட நிலைகளிலும் நிறைபணி ஆற்றியுள்ளமையை வரலாறு தெளிவாகக் காட்டுகிறது.
ஆலயங்களது சிறந்த நீதிபரிபாலனத்தினை திருவெண்ணெய் நல்லூர் கோயில், திருவாலங்காட்டுக் கோயில் ஆகிய ஆலயங்கள் செய்து வந்தமையை சான்றுகள் உறுதிசெய்கின்றன. இன்றைய நிலைகளில் மக்களது பல பிணிகளையும் போக்கும் மருத்துவ சாலைகள் பல இடங்களிலும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் பண்டைக் காலத்தில் இத்தகைய மருத்துவமனைகள் பல கோயில் களின் ஆதரவிலேயே நடைபெற்று வந்தது. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள முக்கூடல் என்ற ஊரில் ‘வீரசோழன் ஆதுளர்சாலை” இருந்தாகக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் திருவாவடுதுறை கோயில் சார்பிலும் ஒரு மருத்துவமனை சேவையாற்றியமையை அறியமுடிகிறது. கோயில்கள் சார்பில் சித்த மருத்துவ கலைஞர்கள் மருத்துவம் புரிந்து நோய் தீர்த்து வந்தமையும் இங்கு குறிப்பிடத் தககது.
உடல் ஊனமுற்றோர் சேவை இன்று அரசின் சீரிய பணிகளுள் ஒன்றாகும். இப்பணி பண்டைய ஆலயங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தமை கவனிக்கத்தக்கதாகும். விழுப்புரத்துக்கு அருகிலுள்ள திருவாமாத்தூர் கோயிலில் கண்ணிழந்த 18 பேருக்கு
அறநெறிக் களஞ்சியம்
 

உணவு, உறையுள் கொடுத்து கோயில்களில் பதிகம் பாட பயிற்சியளித்து அவ்வேலையில் நியமித்திருந்தனர். இவர்களுக்கு தொண்டு புரியவென இரு ஊழியர்கள் பிரத்தியேகமாக நியமிக்கப் பட்டிருந்தமையையும் கல்வெட்டு சான்றுகள் குறிப்பிடுகின்றன.
நாட்டில் போதிய மழை இல்லாமையாலும் விளைச்சல் இன்மையாலும் பஞ்சநிலை ஏற்படும்போது பஞ்ச நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு கோயில்கள் மக்களுக்குத் தொண்டாற்றி உள்ளன. சிற்றுார்கள் தோறும் அறுவடைக் காலத்தில் நெல் தண்டல் செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தி பஞ்சம் ஏற்படும்போது பொது மக்களுக்கு அவற்றை வழங்கிவந்தமை குறிப்பிடத் தக்கதாகும். கோயில்கள் சார்பாக இப்பணி செய்வோரை "பஞ்சவாரியத்தார்” என்னும் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
வழிபாட்டிற்காகவும், சமூகநல நிகழ்வுகளுக்காகவும் ஆட்சி முறை செயல்களுக்காகவும் மக்கள் திரண்டு கூடும் ஒரு பொது இடமாக கோயில்கள் தொன்றுதொட்டு பயன்பட்டு வந்துள்ளன. உத்தலமேரூர் வைகுந்தப் பெருமாள் கோயில் மேற்குப்புறச் சுவரில் உள்ள வராந்தக சோழன் கல்வெட்டுக்கள் இரண்டில் பொறிக்கப் பட்டுள்ள கருத்து குறிப்பிடத்தக்கது. ஊராட்சிமுறை உறுப்பினர் தெரிவுமுறை அவர்களது தகுதிகள் என்பன தெளிவாக விளக்கம் பெற்றுள்ளமையை காணலாம். வறுமையில் வாடிய ஏழைகளுக்கு கோயில்கள் உதவிகள் புரிந்துள்ளன. ஆலக்குடி என்னும் கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்பிடும் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. கி.பி 1152 இல் சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது கோயில் பண்டாரத்திலிருந்து 1011 களஞ்சு பொன் ஆபரணங்களையும் 464 பலம் நிறையுள்ள வெள்ளிப் பொருட்களையும் கடனாகக் கொடுத்து மக்களைக் காத்த செய்தியை கல்வெட்டு தெளிவுபடுத்துகிறது.
பண்டைய கோயில்களில் கோயில் வேள்வி, கோயில் கணக்கு தானத்தார், மெய்க்காவல், பொற்பண்டாரம், தாளவாத்தியம்
அறநெறிக் களஞ்சியம் 117

Page 74
இசைப்போர், இசைபாடுவோர், குடைபிடிப்போர், நந்தவனம் காப்போர், நாட்டிய மாந்தர் எனப் பலரும் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களுக்குப் பல்வேறுபட்ட வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டிருந்தது. திருமுட்டம் என்னும் கோயிலில் 12 இசை ஆசிரியர்களும் 360 கோயில் ஊழியர்களும் விஜயநகர காலத்தில் நியமனம் பெற்றிருந்தமையை இங்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். செங்கல்பட்டு ஜில்லா பெருநகர் கிராமத்தில் நீண்டகாலமாக நெசவுத் தொழிலாளருக்கு குடியிருப்பு வசதி இல்லாதிருந்தது. இதனால் அவ்வூர் கோயிலில் சம்புவராஜர்கள் காலம் வரை உபயோகிக்கப்படாதிருந்த நிலங்களில் 20 வீடு அமைப்பதற்கு வசதியாக நிலங்களை விற்று உதவி வழங்கப்பட்டது. மானம்பதி கிராமத்தில் வானவ சுந்தர நாயனார் கோயிலுக்குரிய இடங்களை வாடகைச்சீட்டு எழுதி வீடுகளை அமைப்பதற்கு சில கைக்கோளர் களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
தற்காலத்திலும் கோயில்கள் சமுதாய நலப்பொதுப் பணிகளைப் புரிந்து வருகின்றன. சில ஆலயங்களில் வேதாகம பாடசாலைகளும், தேவார பிரபந்த அறநெறிப் பாடசாலைகளும் தோற்றுவிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. ஈழத்திலும் இந்தியாவிலும் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பழனியில் நாதஸ்வரக் கல்லூரியும், பல தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளும், கல்லூரிகளும் தமிழகக் கோயில்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.
ஈழத்து ஆலயங்கள் சமூகநலச் சேவைகளை தற்போதும் தொடர்ந்து வருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் உண்டியல் பணத்தின் மூலம் கிளிநொச்சி குருகுலம், காந்தி இல்லம் என்பன இயங்கி வருகின்றன. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மூலமாக புராதன ஆலயங்கள் ஆற்றிய சமூகப் பணிகளை ஒருங்கே காணக்கூடியதாக உள்ளது. ஏழை
அறநெறிக் களஞ்சியம் "...

அநாதைச் சிறுவர்கள் ஆதரிக்கப்பட்டு கல்வியீட்டப்பட்டு வருகின்றனர். மேலும் பொது வைத்திய சேவை நிதியம், நூலகப்பணி மற்றும் தார்மீக அடிப்படையில் வசதியற்ற பலருக்கும் ஆலய வருமானத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை ஆலய நிர்வாகம் சிறந்தமுறையில் வழங்கி தொண்டாற்றி வருகிறது. இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப பசித்தோர்க்கு உணவும், வசதியற்ற சிறுவர்களுக்கு கல்விப் பணியும், அறபோதனையும் வழங்குவது கோயில்களது முக்கியமான பணி என்றே கூறலாம். ஈழத்தில் பல பாகங்களிலும் இத்தகைய சேவை புரியும் ஆலயங்கள் இருந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தின் அனுசரணையுடன் இயங்கி வருகின்ற அநநெறிப் பாடசாலை தனது பணிகளை அண்மையில் விரிவுபடுத்தி இசை, நடன வகுப்புகள், நூலகசேவை மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை சிறப்பான விடயமாகும். இந்து ஆலயங்கள் பண்டைக் காலத்திலிருந்து சமூகநல சேவைகள் பலவற்றையும் செம்மையாக செய்துவந்துள்ளன. தற்கால ஆலயங்களும் பண்டைய ஆலயப் பணிகளை ஆய்ந்தறிவதன் மூலம் இத்தகைய பணிகளை ஆலயம் சார்பாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதுடன் அதன் மூலம் சமூக ஒற்றுமை மற்றும் சமூக உயர்வுக்கு நிர்வாகத்தினர் வழியமைக்கும் வகையில் செயற் படுவதே சாலச்சிறந்த பணியாகும்.
"என்கடன் பணி செய்து கிடப்பதே"

Page 75
Sdநன்றிகள் பல
இணுவில் சைவத் திருநெறிக்கழகத்தின் ஆதரவில் இயங்கும் சிவகாமி அறநெறிப் பாடசாலையின் ஆறாம் ஆண்டின் நிறைவையொட்டி அறநெறிக்களஞ்சியம் என்னும் மலரினை வெளியிட வேண்டுமென்ற விரும்பம் எமக்குத் தோன்றியது. இவ்விதழை அழகாகவும், நேர்த்தியாகவும்மலர் வெளிவர உதவி செய்தவர்களுக்கு நன்றி கூறாமல் இருக்க முடியாது.
இம்மலருக்கு ஆசிச் செய்திகளையும், வாழ்த்துச் செய்தி களையும், கட்டுரைகளையும் வழங்கி இம்மலர் சிறப்பதற்கு உதவிய சமய, சமூக, கல்வி பணியாற்றும் பெரியோர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
அறநெறிப்பாடசாலையின் ஆரம்பகாலம் தொட்டு இற்றைவரை எங்கள் கழக ஆலோசகராகவும் மட்டுமன்றி சொற்பொழிவுகள், அறிவுரைகள் வழங்கியதோடு இம்மலருக்கு "அறநெறிக் களஞ்சியம்’ என்றும் பெயரிட்டு இம்மலரினைச் சிறப்பாக அமையும் வண்ணம் தொகுத்து வழங்கியவரும் எங்கள் மண்ணுக்குச் சமயத்துறையில் குன்றின் மேல் இட்ட தீபமாக பெருமை தேடித்தந்த செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
எங்கள் சிவகாமியம்மன் கோயில் சிறப்பும் அன்னையின் அற்புதங்களும் அடங்கிய ஐம்பத்தொரு (51) மதுரமான கீர்த்தனைகளைச் சிறப்பாக ஆக்கித் தந்த மகாவித்துவான் பிரம்மழறி ந.வீரமணிஜயா அவர்களுக்கும் நன்றிகள் பல.
எங்கள் அறநெறிப்பாடசாலையின் வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் அவ்வப்போது வேண்டிய தேவைகளைத் துரிதகதியில்
அறநெறிக் களஞ்சியம்

செயற்பட்டு எங்களை உற்சாகப்பட வைத்துச் செயலாற்றிய வலி - தெற்கு கலாசார உத்தியோகத்தர் செல்வி மீ. சத்தியவாணி அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
குறுகிய காலத்தில் கவர்ச்சிகரமான இம்மலரை கணனி முறையில் அச்சேற்றி வேண்டிய கலைநுட்பங்களுடன் வெளிவரச் செய்த கியோகாஸ் நிறுவனத்தினருக்கும் வேண்டியபோதெல்லாம் மலரை உருவாக்கப்பல விடயங்களிலும் உதவியதுடன் ஒப்புநோக்கிய செல்வன் ப.தமிழ்மாறன் அவர்களுக்கும் நன்றிகள்.
பல சிரமங்களுக்கு மத்தியில் தம்மையே அர்ப்பணித்து இவ் அறநெறிப்பாடசாலையைநல்லநிலைக்குவரமாணவர்களை உற்சாகப் படுத்தி கிரமமுறையில் தவறாது வகுப்புகளை நடாத்திய கெளரவ ஆசிரியர்கள் செல்வி. ச.ஐயாத்துரை, செல்வி. வி.விநாயகமுர்த்தி, செல்வி வ. திருஞானமுர்த்தி, செல்வி. ஜெ. பாலநாதன், திரு. ப. தமிழ்மாறன், திருமுறை ஒதுவித்த ஓதுவார் கே.தவராசா அவர்களுக்கும் நன்றிகள்.
இன்று உங்கள் கையில் தவமும் மலருக்கு பல வகையிலும் உதவிய எல்லோர்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் இணுவில் சைவத் திருநெறிக்கழகம், சிவகாமி அறநெறிப் பாடசாலையின் சார்பில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
ந.காசிவேந்தன்
செயலாளர் இணுவில் சைவத் திருநெறிக்கழகம்
அறநெறிக் களஞ்சியம் (121)

Page 76
போசகள்
ஆலோசகர்
தலைவர்
உபதலைவர்
செயலாளர்
LuglafusorTarr
பொருளாளர்
ஏனைய உறுப்பினர்
இணுவில் சைவத் திருநெறிக்கழகம்
திரு. பெ. கனகசபாபதி J.P அவர்கள்
செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகள் அவர்கள்
திரு.
திரு.
திரு.
. இ. தயாபரன்
திரு. திரு.
க. தருமநாயகம்
இ. தயானந்தள்
ந. காசிவேந்தன்
மூ. சிவலிங்கம்
8 முருகையா ந. தவசோதிநாதன் , கே. தவராசா , கு. ரவிச்சந்திரனி க. கணினபிரான் ச. பூமகேஸ்வரன் க. பரமேஸ்வரன் பா, றமேஸ்கணினா
வே. கணேந்திரன் இ. குகானந்தன்
அநறெநிப்பாடசாலைப் பொறுப்பாளர்: திரு. மூ. சிவலிங்கம்
அறநெறிக் களஞ்சியம்
(122)

LLSS இணுவில் - - . சைவத்திருநெறிக்கழகம் சிவகாமி அறநெறிப்பாடசாலை
: u:ԽւTiք -ելr, "" ·hTheVy *Fl్య! lip E., లై,
இணுவில் சைவத்திருநெறிக்கழகத்தினர்
2OO2

Page 77


Page 78


Page 79