கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பக்தி நெறியும் பண்பாட்டுக் கோலங்களும் (சிறப்பு மலர் - ஆய்வரங்கு 2007)

Page 1


Page 2
ஆய்வரங்
பக்தி நெறியும் பண்பா
மத அலுவல்கள், ஒழுக்க இந்துசமய, கலாசார அலு
විශේෂ ස
සමිමන්ත්‍රණය
e»zõ65 825cos ess, esc
pco55) coOgo eo eseÈ చెg లైు జంజ్దాక్ష35
芋L、 SOUV/
SEMINAR
'THE PATH OF DEVOTION AND
Ministry of Religious Affair Department of Hindu Relig
29 June - (1
 

o) loo le
■”。 it கொழும்பு தமிழ்ச்
g5 - 2007
ட்டுக் கோலங்களும்
5 மேம்பாட்டு அமைச்சு வல்கள் திணைக்களம்
BOGDÓ)êD
5 - 2 OO7
සීකaනික එළිදැක්වීම’
c 2523) eSotos) occi
చాల్చి ఇgఆరీరాత్రిలేటేర్చలి
To r.
GNR
- 2007
CULTURAL EFFLORESCENCE"
's and Moral Upliftment ious And Cultural Affairs
July 2007

Page 3


Page 4
92 ள் ര് 46, Oppppppg
சி இலங்கையிற் பல்லவர் கலாசr
(a U6566f 6606UUnsoof (8ass
ஈ பல்லவர்காலத் தமிழகம்
* பல்லவர்-பாண்டியர்
( Jബൈഖf 66ണ്
ஈ கொற்றவைத்த
ca upstupadfor
తో 6606జీ
తో U66

"[[Juბ
யில்களும் சிற்பங்களும்
Uண்Uாட்டுக் கோலங்கள்
காலச் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்
6f
நரசமங்கலம் குடைவரைகள்
கருவூலங்கள்
வர்-பாண்டிய கால நடனம்
1ல்லவர் கால சமய நிலை

Page 5


Page 6
හින්දු ආගමික හා සංස්කෘතික இந்துசமய, கலாசார அலு Department of Hindu Relig
අධඤඤෂක පොදු
பணிப்பாளர் *2552643 பொது >2552641
Director General
පෙමිල් ee8 gebeba
மின் அஞ்சல் indudroyahoo.com இணையதளம் hindude
E-mail Website
248, 1/1, ගාලූ පාර, කොළඹ - 4, 248, 111, sites 6
வெளியீ
இந்துசமய கலாசார அலுவல்கள் தி இற்றைவரை, ஆய்வரங்குகளை நடத்தி வரு நடைபெறும் இவ்வாய்வரங்குகளில் இலங்ை அறிஞர்களும் கலந்து கொண்டு தமது பங்கள் ஆய்வரங்குகள் தமிழிலக்கியம், இந்துசமய ஆய்வரங்குகளாக அமையப் பெற்றுள்ளன. விடயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய் படிக்கப்பட்ட கட்டுரைகள் யாவும் நூல் வடிவில் இந்து சமயம், இந்து நாகரீகம், தமிழ் இலக்
உயர்வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பயன்ட
இவ்வருடம் நடைபெறும் "பக்தி நெறி கருப்பொருளில் அமைந்த இவ்வாய்வரங்கு ப மூலம் பல்லவர் காலத்தின் தாற்பரியத்தை தன்மையை உணர்ந்து கொள்ளவும், வாய்ப்பு வேண்டும். ஏனெனில் இத்தகைய ஆய்வரங்கி
கூடிய நன்மைகளைப் பெறுவர்.
சங்க மருவிய காலப் பிற்பகுதியில் முழுமையான வளர்ச்சி பல்லவர் காலத்திலேே
தன்மையை உணர்ந்து கொள்ளும் வகையி
இவ்வாய்வரங்குகளை நடத்துவதற்கு, வழிகாட்டல் மிகவும் இன்றியமையாத
 

) කටයුතු දෙපාර්තමේන්තුව வல்கள் திணைக்களம் ious and Cultural Affairs
ಜ ඔබේ අංකය பக்ஸ் }2552625 உமது இல. Fax: You No
මගේ අංකය 07 ot.gov.lk எனது இல.
My No. தி. கொழும்பு-4 248, 1 f1, Galle Road, Colombo-4.
ட்டுரை
ணைக்களம் 1992ஆம் ஆண்டு தொடங்கி }வதை யாவரும் அறிவர். வருடம் தோறும் கை அறிஞர்களும், இந்திய தமிழ் நாட்டு ரிப்பை வழங்கி வந்துள்ளனர். இதுவரை 14 ம் உள்ளிட்ட கருப்பொருள்களை கொண்ட
இவ்வாய்வரங்குகள் மூலம், பலதரப்பட்ட ப்பு ஏற்பட்டுள்ளதுடன் இவ்வாய்வரங்குகளில் ல் வெளிக் கொணரப்பட்டுள்ளன. இந்நூல்கள் கியம் என்பவைகளை பாடமாகக் கொண்ட
ாடுடைய நூல்களாக அமைவு பெற்றுள்ளன.
றியும் பண்பாட்டுக் கோலங்களும்" எனும் மிகவும் பயன்மிக்கதாகும். இவ்வாய்வரங்கின்
அறிந்து கொள்ளவும், அக்கால சூழலின் கிட்டியுள்ளதையிட்டு, மனமகிழ்ச்சி கொள்ள னால் உயர் வகுப்பில் பயிலும் மாணவர்கள்
தோற்றம் பெற்ற பக்தி இலக்கியத்தின் யே பரிணாமம் பெற்றது. இத்தகைய வளர்ச்சி ல் இவ்வாய்வரங்கு அமையும்.
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் து. அத்துடன் இலங்கைப் பல்கலைக்

Page 7
கழகங்களிலிருந்தும், உதவிகளும், ஒத்த உதவியினால் இவ்வாய்வரங்கை வெ கிட்டியுள்ளதையிட்டு மனம் மகிழ்கின்றேன்.
ஆய்வரங்கு வருடம் தோறும் நடத்துவ மதவிவகார ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு, அ அவர்களுக்கும் அமைச்சின் செயலாளர் திரு
கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
வருடம் தோறும் திணைக்களத்தின் ぜ?男T இவ்வாய்வரங்குகளை நடத்தி வருவது குறிப் புரியும் அனைத்து உத்தியோகஸ்தர்களையும் காலத் தேவைக்கேற்ப இத்தகைய ஆய்வ
பயன்மிக்கதாக அமையும்.
அதனால் உயர் கல்வி வாய்ப்பினைப் நல்ல கருவூலமாக மிளிரும். இன்றைய கழகங்களிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் , படிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அ திணைக்களத்தின் சார்பாகவும் நன்றியைக் சு உங்கள் உதவிகளும் ஒத்தாசைகளும் தொடரே வெற்றிகரமாக அமையும் என்பதில் ஐயமில்

ாசைகளும் கிடைத்துள்ளன. இவர்களின்
ற்றிகரமாக நடாத்துவதற்கு வாய்ப்பு
பதற்கு எமக்கு பக்கபலமாக இருந்துவரும் மைச்சர் மாண்புமிகு பண்டு பண்டாரநாயக்க
பி. கொடித்துவக்கு, அவர்களுக்கும் நன்றி
ாய்ச்சிப் பிரிவே, திட்டமிட்டு ஒழுங்கமைத்து, பிடத்தக்கது. இவ்வாராய்ச்சிப்பிரிவில் கடமை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். இன்றைய ரங்குகள் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும்
பெறும் அனைத்து மட்ட மாணவர்களுக்கும்
ஆய்வரங்கில் இலங்கைப் பல்கலைக் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கட்டுரை புனைவருக்கும் அமைச்சின் சார்பாகவும் றிக் கொள்வதுடன் இனிவரும் காலத்திலும், வண்டும் அதனால் திட்டமிட்ட ஆய்வரங்குகள்
ܐܫw
சாந்தி நாவுக்கரசன்
|606Ն),
பணிப்பாளர்,

Page 8
ආගමික කටයුතු හා සදා மத அலுவல்கள், ஒழுக் MINISTRY OF RELIGIOUS AFF
ဦ:[®' } వివి My No. Your No
ME
I have the pleasure of sending this me released by the Department of Hindu Rel session of the annual Research Seminal
This Department conducts Research S Culture and Tamil Literature. The Schola submit research papers at these seminal by the Department regularly.
Such research Seminars and public teachers, students of universities and ot the fields.
As Minister in charge of Religious Af
LSL SLLLL LLLLLLLeLLeL sesS ssLs00S T sssS TS 000S TTTL MT абсове czteż
re
gwasantais y 94-1-2690896 *} 94-11-269
Fax

bഠ b Gാം. க மேம்பாட்டு அமைச்சு AIRS AND MORALUPLIFTMENT
Gs 'දිනය இல. திகதி
Date
SSAGE
ssage offelicitation for the souvenir to be igious and Cultural Affairs at the inaugural [。2007.
essions themes related to Hinduism, Hindu ars from India and Sri Lankan Universities rs. These papers are edited and published
:ations are very much beneficial to the hers who are keen to gather knowledge on
fairs I wish all the success for the Seminar.
یہ مماثل // 0 // // Pandu Bandaranaike Minister of Religious Affairs
PANDU BANDARANAIKE (M.P.)
Minister of Religious Affairs
Dg, Gast(gib 07, foxii.13 T 1 No. 115, Wijerama Mawatha, Colombo 07, Sri Lanka.
ලේකම් 0897 செயலாளர் 94-1-2690736
Secretary

Page 9
இலங்கையிற் பல்
பேராசிரியர் சி.
பல்லவர் ஆட்சிக்காலத்திலே தென்னிந்தி யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. வாணிபம், மொழி, எழுத்து முறை, சமய வழிபாடுகள், கட்டடம், சிற்பம் என்னுந் துறைகளிலே குறிப்பிடத்தக்க அளவிலே பல்லவரின் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான மரபு வழியான வாணிபத் தொடர்புகள் அக்காலத்திலே மேலும் விருத்திபெற்றன. இலங்கையின் கரையோரப் பட்டினங்களிலும் தலை நகரான அநுராதபுரத்திலும் பிற உள்ளூர்ப் பட்டினங்களிலும் தமிழகத்தி லிருந்தும் வந்த வணிகரும் வணிக கணத்த வரும் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். மணிக்கிராமம், நான்கு நாடு என்னும் வணிக கணங்களைப் பற்றிய விவரங்கள் இலங்கைச் சாசனங்களிலே காணப்படுகின்றன. நான்கு நாட்டாரும் செட்டிகள் பலரும் அநுராத புரத்திலே நிலை கொண்டிருந்தனர். பதுளை மாவட்டத்திலுள்ள ஹோப்பிட்டிகம என்னும் இடத்திலே மணிக்கிராமத்தாரின் குடியிருப் புகள் அமைந்திருந்தமையுங் கவனித்தற் குரியதாகும்.
வாணிபத்தின் மூலமாகவே பல்லவ கலாசாரத்தின் அம்சங்கள் பெரும்பாலும் இலங்கையை அடைந்தன. வணிகர் தங்களது குடியிருப்புகளிலும் விற்பனை நிலையங் களுக்குச் சமீபத்திலும் கோயில் களை அமைத்தனர். அவர்களாற் சைவக் கோயில் களும் பெளத்தக் கோயில் களும் இலங்கையில் ஆதரிக்கப் பெற்றன. பல்லவரின் ஆட்சியின் கீழ் அமைந்த
தொண்டைமண்டலம், சோழமண்டலம்

லவர் கலாசாரம்
பத்மநாதன்
ஆகியவற்றிலே பல்லவர் கலைப் பாணியிற் கோயில்கள் அமைக்கப்பட்டன. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளிற் தென்னிந்தியக் கட்டடக் கலைப்பாணியாகிய திராவிட கலைப்பாணி அதற்கெனச் சிறப்பாகவுரிய அம்சங்களோடு வளர்ச்சி அடைந்திருந்தது. அதன் அம்சங்களை கொண்ட கோயில்கள் இலங்கையிலே அமைக்கப்பட்டன. அதன் காரணமாக இந் நாட்டில் முதன் முதலாகக் கற்றளியான கோயில்கள் தோன்றலாயின. மண்டளியான கோயில்களிலும் பல்லவர் கலைப்பணியின் சில அம்சங்கள் இடம்பெற்றன. தமிழகத்தி லிருந்துஞ் சென்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலே தங்கியிருந்த வணிகர் அங்கே கோயில்களை அமைப்பதற்குக் கட்டடக் கலைஞர்களையுஞ் சிற்பக் கலைஞர்களையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் மூலமாகப் பல்லவரின் கலாசார அம்சங்கள் பல இலங்கையிலே பிரதிபலித்தன. சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சியின் செல்வாக்கு இலங்கையிலும் ஏற்பட்டது. அதே போல காஞ்சிபுரம் முதலிய நகரங்களில் அமைந்திருந்த பெளத்த சமய நிறுவனங்களும் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் சிலவற்றோடு தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தன.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளிலே
பல்லவர்களுக்கும் இலங்கை அரசர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. அநுராதபுரத்திலே தமிழ்ப் படைகளின் தலைவனான பொத்தகுட்டனின் செல்வாக்கு மேலோங்கியிருந்ந காலத்தில் அரசனின் பகைமையைத் தேடிக் கொண்ட மாணவர்மன் என்னும் பிரதானி காஞ்சி புரத்துக்குப் போய்ப் பல்லவரிடம் புகலிடம்

Page 10
பெற்றான். மாமல்லனாகிய நரசிம்மவர்மனின் ஆதரவுடன் அங்கு வாழ்ந்த காலத்தில் அவன் பல்லவரின் படையிலே சேர்ந்து அதில் உயர் பதவியும் பெற்றிருந்தான். வாதாபிச் சாளுக்கியர் படையெடுத்து வந்த சமயத்திலே பல்லவ அரசனுக்குப் போரிலே உதவி புரிந்தான். அப்போரிலே பல்லவ மன்னன் வெற்றி பெற முடிந்தது. அதன் பயனாகத் தனது இராசதானியிலே வெற்றி விழா கொண்டாடிய பொழுது மாணவர்மனைப் பாராட்டிக் கெளரவித்தான்.
காஞ்சிபுரத்திலே பல்லவ அரசனோடு வாழ்ந்து, அவனது நல்லெண்ணத்தைப் பெற்றுவிட்டதால், மாணவர்மன் தனது இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. அவன் அரசபதவியைப் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக மாமல்லன் ஒரு பெரும் படையை அவனோடு அனுப்பி வைத்தான். பல்லவ சைனியம் கடல் கடந்து சென்று இலங்கையை அடைந்தது. அங்கு அது தலைநகரை நோக்கிச் சென்றதும் அங்கிருந்து அரசன் ஓடிவிட்டான். மானவர்மன் அநுராதபுரத்தைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அரசனைப் பின் தொடர்ந்தான். அத் தருணத்திலே மாமல்லன் நோயினாற் பீடிக்கப் பட்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்ததும் பல்லவரின் சேனை இலங்கையினின்றுந் திரும்பிச் சென்றது. அரசன் பொட்டகுத் தனுடைய ஆதரவுடன் மீண்டும் அதிகாரம் பெற்றான். எனவே, மானவர்மன் நாட்டைவிட்டு ஓட நேர்ந்தது.
மானவர்மன் மீண்டும் காஞ்சி புரத்திலே நெடுங்காலந் தங்கியிருந்தான். இறுதியில் மாமல்லன் வழங்கிய படைத்துணையோடு மானவர்மன் அநுராதபுரத்தில் ஆட்சியைக்

கைப்பற்றிவிட்டான். அவன் ஆட்சி பெற்றதால் இலங்கைக்கும் பல்லவ அரசருக்கும் இடையில் அமைந்த தொடர்புகள் மேலும் வலுவடைந்தன. இலங்கையில் ஏற்பட்ட பல்லவரின் செல்வாக்கைப் பொறுத்த வரையிற் கிரந்த எழுத்துகள் சாசன வழக்கிலே இடம் பெற்றமை ஒரு பிரதான அம்சமாகும். ஆறாம் நூற்றாண்டு முதலாகப் பல சாசனங்கள் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டன. பெரும்பாலும் சமஸ்கிருதச் சாசனங்களே கிரந்த எழுத்துக் களில் அமைந்துள்ளன. கிரந்த எழுத்து முறை பல்லவர் காலத்திலே தொண்டை மண்டலத்திற் சமஸ்கிருத மொழியை எழுத உருவாக்கப் பட்டதாகும். அது இலங்கையில் மட்டுமன்றி சுவர்ணபூமி என்று சொல்லப்படுந் தென் கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருந்தது. இலங்கையிலே மிகிந்தலை, திரியாய், குச்சவேலி, சீகிரியா முதலான இடங்களிலே கிரந்த எழுத்துக்களில் அமைந்த சாசனங்கள் காணப்படுகின்றன. மிகிந்தலையிலே அம் பத்தல சேதியத்திற்கு அண்மையிலே கிரந்த எழுத்துக்களில் அமைந்த சாசனம் ஒன்று காணப் படுகின்றது. அதன் முடிவிலே திரிகாய ஸ்தோத்திரம் காணப்படுகின்றது. அது மகாயான மரபிற் புத்தர் பெருமானுக்கு உரியவை என்று கொள்ளப்படும். நிர்மாண காயம், தர்மகாயம், சம்போககாயம் என்பவற்றைப் போற்றிப் புகழுகின்றது:
திரியாய்க் கல்வெட்டு கிரிகண்ட சேதியம் திரபுஸ்க, வல்லிக என்னும் வணிகர்குலத் தலைவர்களினால் அமைக்கப் பட்டமை பற்றி வர்ணிக்கின்றது. அதிலே காணப்படும் எழுத்துக் கள் முதலாம் பரமேஸ்வரவர்மனின் (660-680) கூரம் செப் பேடுகளில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. இரண்டு சாசனங்களிலும்

Page 11
க, த, ப, ய, ர, வ முதலிய எழுத்துக்கள் ஒரே விதமாகவே அமைந்திருக்கின்றன. குச்ச வேலிக் கல்வெட்டிலும் இவ்வாறான அம்சங்கள் உள்ளன. அதுவும் மகாயானச் சார்புடைய சமஸ்கிருதச் சாசனமாகும்.8 சீகிரியாவிலே சுவரோவியங்களுக்குக் கீழே பல சாசனங்கள் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. அவற்றிலொன்று சமஸ் கிருத மொழி வாசகமாகும். ஏனையவை சிங்கள மொழிச் சாசனங்களாகும். சிங்கள வரிவடிவங்கள் குறிப்பிடத்தக்க அளவிலே கிரந்த மொழியின் செல் வாக் கைப் பிரதிபலிக்கின்றன. அவற்றிற் பல கிரந்த எழுத்துக்களை மூலமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருத மொழியிலே வரும் அக்ஷரங்கள் குறிக்கும் ஒலி அமைப்புக்களை எல்லாம் பிரதிபலிக்கும் வரிவடிவங்கள் சிங்கள மொழி வழக்கிலும் எட்டாம் நூற்றாண்டு முதலாக வழங்கி வந்தன. முற்காலத்துச் சாசனங்களிற் காணப்படாத பல எழுத்துகள் உருவாக்கப்பட்டன. சமஸ்கிருத மொழியின் செல்வாக்கின் விளைவாகச் சிங்கள மொழி வழக்கிற் சமஸ்கிருதச் சொற்கள் கூடுதலாக இடம் பெற்றன.
திராவிடக் கலைப்பாணியின் செல்வாக்கு
இலங்கையிலுள்ள இந்துக் கோயில் களின் கட்டட அமைப்பு முறைகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. அநுராதபுர காலத்துக் கோயில் களைப் பற்றிய விவரங்களும் அரிதாகவே கிடைத்துள்ளன. அக்காலத்துக் கோயில்கள் பெரும்பாலும் மண்டளிகளாகவே அமைந் திருந்தன. அதனால் அவை காலப்போக்கில் அழிந்து விட்டன. திருக்கேதீஸ்வரம், திருக்கோ
ணேஸ்வரம் போன்ற தலங்களில்

அமைந்திருந்த கற்றளிகளும் பறங்கியரின் ஆட்சிக்காலத்தில் இடித்து அழிக்கப்பட்டு விட்டன.
அநுராதபுரத்தின் வடபகுதியிலே, தமிழர் வாழ்ந்த சில பகுதிகள் மட்டுமே புராதனமான சைவக் கோயில்களின் அழிபாடுகள் தொல் பொருள் அகழ்வுகளின் போது காணப் பட்டன. எலி லாமாக ஐந்து கோயில்களின் அழிபாடுகள் அந்தப் பகுதியிற் காணப்பட்டன. அமைப்பில் அவை எல்லாம் ஒரே விதமானவை: அளவிற் சிறியவை. கர்ப்பக்கிருகம், அந்தராளம், அர்த்த மண்டபம் என்னும் பகுதிகள் அவற்றிலே காணப்பட்டன.
அக் கோயில் கள் யாவும் செங் கல்லினால் அமைக்கப்பட்டவை. அவற்றின் அத்திபாரங்களும் செங் கல்லினாற் கட்டப் பெற்றிருந்தன. சுவர்களுக்கு ஆதாரமாகக் கற்றுாண்கள் பயன்படுத்தப்பட்டன. கூரைப் பகுதிகள் மரத்தால் அமைக்கப் பட்டவை. அவை முற்றாக அழிந்துவிட்டன. கோயில்களின் சமீபத்திலே அமைந்திருந்த வீடுகள் விசாலமானவையாகவும் பல அறைகள் பொருந்தியனவாகவுங் காணப் பட்டன. அவை கல்லினாலமைந்த இரு படைகளைக் கொணி ட, உயரமான அடித் தளங்களின் மேல் அமைக் கப் பட்டிருந்தன."
தென்னிந்திய கலைப் பாணியின் செல்வாக்கு பெளத்த சமயம் தொடர்பான கோயில் களிற் கணிசமான அளவிலே ஏற்பட்டிருந்தது. சிங் கள மரபிலே கோயில்களையுஞ் சமயச் சார்புடைய பிற கட்டடங்களையும் அமைப்பதற்கு மூன்று வகையான கட்டடப் பொருட்களைப் பயன்
படுத்தினார்கள். பொதுவாக அடித்

Page 12
தளங்களையும் அத்திபாரங்களையும் கல்லினால் அமைத்தனர். அவற்றின் மேலமைந்த சுவர்ப்பாகங்கள் செங் கல்லினால் அமைக்கப்படும். மரம், ஒடு என்பவற்றினாற் கூரைகள் அமைக்கப்படும். அத்தகைய கட்டடங்கள் சிலவற்றின் வடிவமைப்பிலே இந்துக் கோயில்களின் அம்சங்கள் சில இடம் பெற்றுள்ளன. எனவே கலப்புப் பொருட்களால் அமைக்கப்பெற்ற கட்டடங்களில் ஒரு சில அம்சங்களில் மட்டுமே தென்னிந்தியக் கட்டடக் கலையின் செல்வாக்கினை அவதானிக்க முடிகின்றது. இவ்விடயந் தொடர்பாக சேனக பண்டாரநாயக்க மேல்வருமாறு கூறுகிறார்:
ஒடுகளினால் வேயப்பட்ட வட்ட வடிவமான கூரைகள் பொருந்திய கட்டடங்கள் உணர்மையில் இலங்கையிலோ வேறு தேசத்திலோ காணப்படவில்லை. நான்கு பக்கங்களைக் கொண்ட, சரிவான கூரையமைப்பு அநுராதபுர காலத்துக் கட்டடங்களின் பொதுவான அம்சமா யிருந்தது என்று கொள்வதற்கான குறிப்பிடத் தக்களவு சான்றுகள் உள்ளன. இந்தியாவிலும் இலங்கை யிலுமுள்ள கட்டட அமைப்புக்களுக் கிடையிலான பொதுப் பணி புகளைப் பொறுத்த வரையில், அவற்றின் மூலங்களை இந்தியாவிலுள்ள புராதனமான பெளத்த கோயில் வடிவங்களிலன்றிக் கேரளத்திலுள்ள வட்ட வடிவமான, கூம்பிய கூரைகள் பொருந்திய பூரீகோயில் அமைப்பிலே கண்டு கொள்ளலாம். அது பொதுவான இந்தியக் கட்டடக் கலை மரபில் அடங்காத ஒன்றாகும். ஆனாலும்

பூரீகோயில் வடிவத்திலே இந்தியாவின் புராதனமான கட்டுமான முறைகள் இன்று வரை பேணப்பட்டு வந்துள்ளன. பூரீகோயிலின் கூரை வட்டமான வடிவமுங் கூம்பிய தோற்றமும் கொண்டதாகும். சில சமயங்களில் அதன் கூரை இரு தளங்களைக் கொண்டிருக்கும். பூரீகோயிலின் வடிவமைப்பு வட்ட தாகே என்னும் வகைக்குரிய சிங்கள மரபிலுள்ள கட்டடத்திற்கு பொருத்த மானதாகும்."
அநுராதபுர காலத்து வட்ட வடிவில் அமைந்த கோயில் கள் கேரளத்து பூரீகோயில் களை முனி மாதிரியாகக் கொண்டவை என்பதைச் சேனக பண்டார நாயக்க குறிப்பிடுகின்றார். மற்றுமொரு அம்சத்திலும் கேரளத்து பூரீ கோயில் அமைப்பிற்கும் இலங்கையிற் காணப்பட்ட கட்டட வகையொன்றுக்கும் இடையிலே ஒற்றுமை காணப்படுகின்றது. செங்கல், மரம் ஆகியன கொண்டு ஒரு காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் காலப் போக்கில் இரு தேசங்களிலும் முழுமை யாகச் செங்கல் லினால் அமைக் கப்பட்டன. இலங்கையிலே பொத் குல் விஹாரை முதலான சேதியகரங்கள் அத்தகை யனவாகும். அதே போன்றவொரு மாற்றம் கேரளத்துச் யூரீ கோயில்களிலும் ஏற்பட்டுள்ளது. புராதனமான பூரீ கோயில்கள் பொதுவாகக் கலப்புப் பொருட்களாற் கட்டப் பெற்றவை. ஆயினும் வல்யந்தியாதிச்ச புரத்திலுள்ள பூரீகோயில் முற்றிலும் செங்கல் வேலைப் பாடாகும். இலங்கையில் கந்தகுடி, கெடிகே என்னும் வகைகளைச் சேர்ந்த படிமாக
ரங்களிலும் இத்தகைய வேறுபாடுகளைக்

Page 13
காணலாம். கந்தகுடி என்பது கலப்புப் பொருட்களால் அமைந்தது. கெடிகே முழுமையும் செங்கல்லினா லானது முற்றாகச் செங்கல்லினால் அமைக்கப்பட்ட கட்டட ங்களிலே திராவிட கலைப் பாணியின் சாயல்கள் படிந்திருக்கின்றமையும் குறிப்பிடத்த க்கவோர் அம்சமாகும்.
நாலந்தா கெடிகே
முற்றிலும் கல்லால் அமைக்கப் பெற்ற கட்டடங்களிலே திராவிட கலைப் பாணியின் செல்வாக்குத் தெளிவாகத் தெரிகின்றது. கோயில்களைக் கற்றளிகளாக அமைக்கும் முறை சிங்கள கட்டடக்கலை மரபிற்கு அன்னியமானது என்பதால் அது திராவிடக் கலைப் பாணியின் செல்வாக் கினால் ஏற்பட்டதாகும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. அநுராதபுர காலத்துப் பெளத்த சமயந் தொடர்பான கட்டடங்களில் நாலந்தா கெடிகே, தெவிநுவரவிலுள்ள உபுல்வன் கோயிலான கல்கே ஆகியன மட்டுமே கற்றளிகளாகும். சே. பரணவிதான நாலந்த கெடிகே பற்றி மேல் வருமாறு கூறுவார்:
இலங்கையில் முற்றிலும் கல்லினால் அமைக்கப்பட்ட கட்டடங் களில் நாலந்தாவிலுள்ள கெடிகே காலத்தால் மிகவும் முற்பட்டதாகும். அது பல்லவர் கலைப் பாணியில் அமைந்துள்ளது. எனவே அதன் காலம் எட்டாம் நூற்றாண்டாகும். அது தாந்திரீகச் சாயல் படிந்த மகாயான வழிபாட்டிற்குரிய கட்டடமாகும். இதன் வரலாறு பற்றி எதுவுந் தெரிய வில்லை. அதன் பெயரும் மக்களின் நினைவிலிருந்தும் காலப் போக்கில் மறைந்து விட்டது."
5

நாலந்தா கெடிகே அதன் கட்டட அமைப் பின் எல்லா அம்சங்களிலும் தென்னிந்தியக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது என்பது பற்றி நுண்கலை வரலாற்று ஆசிரியர்களிடையிற் கருத் தொற்றுமை உண்டு அதன் கட்டடம் முழுவதும் கருங்கல் வேலைப்பாடாகும். அதன் கூரையில் அமைந்துள்ள சிகரம் வண்டிக் கூடாரம் போன்ற சாலைச் சிகரமாகும். சிகரத்தின் தென்புறப் பகுதியும், அதன் கவாக்ஷமும், சாலைச் சிகரத்தின் ஒரு சிறிய பகுதியும் மட்டுமே கட்டடத்தில் எஞ்சியுள்ளன. மற்றைய கவாக்ஷத்தின் துண்டங்கள் கட்டடத்தின் சுற்றாடலில் வீழ்ந்துகிடந்தன.
கோயில் பல தடவைகளாகப் புதிப் பிக்கப் பெற்ற பொழுதிலும், அடித்தளங் களைப் பொறுத்தவரையிலே அதன் வடிவம் மாற்றம் பெறாது இருந்துள்ளது. காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலிற் காணப்படும் மகேந்திரவர்மேஸ்வரத்தி லுள்ள சாலைச் சிகரத்து கவா கூடிங் களும் நாலந்தா கெடிகேயிலுள்ள தென்புறத்து கவாக்ஷமும் ஒரே விதமானவை என்பதை எச்.சி.பி.வெல் சுட்டிக் காட்டியுள்ளார்.'
கற்றளியான நாலந்தா கெடிகே கர்ப்பக்கிருகம், மண்டபம் என்னும் இரு பிரதான பகுதிகளைக் கொண்டிருந்தது. அவற்றுக்கிடையிலே அந்தராளம் அமைந் திருந்தமைக்கான அறிகுறிகள் காணப் படவில்லை. அக்கோயில் 3' 8” உயரமான அதிஷ்டானத்தில் அமைந்துள்ளது. அதிஷ் டானத்தில் மூன்று படைகள் உள்ளன. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றி 7 அகலமான திருச் சுற்று அதிஷ்டானப் பகுதியில் அமைந்திருந்தது. முற்பக்கத்தில் அது

Page 14
மண்டபத்தின் பகுதியாக விளங்கியது. கர்ப்பக் கிருகத்தினுள்ளே அமைந்திருந்த மூலவர் படிமம் மறைந்துவிட்டது. இந்நாட்களில் வேறொரு படிமத்தை அங்கு வைத்துள்ளனர்.
கர்ப்பக்கிருகம் தோற்றத்தில் விமானம் போன்றது. அது அமைப்பிற் சதுரமானது. அதன் கூரை பல்லவர் கோயில்களைப் போலத் தளங்களையும் சிகரத்தையும் பெற்றுள்ளது. முதலாவது தளத்தின் அரமியச் சுவர்கள் பத்து அடி உயரமானவை. இரண்டாவது தளம் அதனிலுஞ் சிறியது. அரமியச் சுவர்களில் அரைத் தூண்களும் குதிரை லாடம் போன்ற கோலமான கூடுகளும் தெரிகின்றன. தளங்களுக்கு இடையிலே வெளிப்புறத்திற் கபோத வரிசைகள் அமைந்துள்ளன. கோயிலின் மேற்பகுதி யிலுள்ள தளங்களும் அவற்றிலே காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளும் பல்லவரின் விமான தளங்களில் உள்ள வற்றைப் போன்றவை. அதுவும், குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ளவற்றைப் போன்றன வாகும். சிகரம் சாலாசிகரம் போன்ற அமைப்பாகும். வடிவமைப்பில் அது அநுராதபுர காலத்துப் பெளத்த கட்டடக்கலை மரபிற்கு அன்னியமானது. மாமல்ல புரத்துக் கலைப் பாணியின் செல் வாக் கினைப் பிரதிபலிப்பது. அது காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த மகேந்திரவர்மேஸ்வரத்தில் உள்ளதைப் போன்றதெனச் சில கலா விமர்சகர்கள் முன்பு கூறியுள்ளனர். சிகரத்தின் தெற்கிலும் வடக்கிலும் அமைந்த கட்டுமானங்கள் திராவிட சிகரங்களின் கவாசுடித்தைப் போன்றவை. நடுவில் ஆசனக் கோலத்தில் அமைந்த ஒருவரின் உருவமும், அதற்கு மேலாக, இரு பக்கங்களிலும் பறந்து செல்லும் வித்யாதரரின்

உருவங்களுந் தெரிகின்றன. கர்ப்பக்கிருகம் அமைந்துள்ள அதிஷ்டானப் பகுதியில் குதிரை லாடம் போலமைந்த கூடுகள் குடையப் பட்டுள்ளன. அவற்றுட் சில வற்றிலே மனிதத்தலை வடிவங்களும் வேறு சிலவற்றிலே தூபியின் சிற்றுரு வங்களுங் காணப்படுகின்றன.
கர்ப்பக்கிருகம், மண்டபம் என்பவற் றுக்கிடையில் அர்த்த மண்டபம் அமைந் திருந்தமைக்கான அறிகுறிகள் காணப் படவில்லை. மண்டபத்தின் நடுவில் இரு தூண் வரிசைகள் காணப்படுகின்றன. தூண்கள் எல்லாம் சிற்பங்கள் பெறாத வெற்றுத் தூண்களாகும். அவை நான்முகத் தூண்கள். தூண் வரிசைகளின் நடுவே மூலஸ்தானத்தை நோக்கிச் செல்லும் வழியுண்டு. மேலும் இரு தூண் வரிசைகள் மண்டபத்தில் உள்ளன. அவை ஓரங்களிலே மண்டபச் சுவர்களை ஒட்டி அமைந்துள்ளன. மண்டபத்தின் கூரை முற்றாகச் சிதைந்து மறைந்துவிட்டது. அது கற் பாளங்களினால் அமைந்த தட்டையான கூரையாக உருவாக்கப் பட்டிருந்ததென்று அனுமானித்துக் கொள்ளலாம்.
கோயிலை வர்ணித்தவர்கள் முக மண்டபம் ஒன்றினைப் பற்றிப் பேசு கின்றார்கள் கட்டடத்தின் வாயிற்புறத்தில் அமைந்திருக்கக் கூடியதும் அளவிற் சிறியதுமான முன்றிலையே அவர்கள் முகப்பு மண்டபம் என்று கருதினார்கள் போலும். ஆலய வாசற்கதவின் மேலமைந்த தோரணத்தின் நடுவிலே கஜல கூழ்மியின் சிற்றுருவம் செதுக்கப் பட்டுள்ளது. வழமை போல முகப்பிலே அரைவட்டக் கல் நிலத்திலே பதிக்கப் பட்டுள்ளது. அதனைக் கடந்ததும், மூன்று படிகளைத் தாண்டி உள்ளே செல்ல முடியும். கீழ்ப்படியிலே இணைக் கணங்கள்

Page 15
மூன்றின் சிறிய உருவங்கள் செதுக்கப்
பட்டுள்ளன.
அநுராதபுர காலத்துப் பெளத்த கோயில்களில் நாலந்தா கெடிகே மட்டுமே முற்றிலும் கல்லினால் அமைக்கப்பட்ட கட்டடமாகும். கட்டடத்தின் வடிவமைப்பு, அலங்கார வேலைப்பாடுகள் என்பனவும் தனித்துவமானவை என்பதுங் குறிப்பிடற் குரியதாகும். இலங்கையில் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட திராவிட கலைப் பாணியின் செல் வாக்கினைப் பிரதிபலிக்கும் கோயிலாக அது விளங்கு கின்றது. இன்னொரு வகையில் நோக்குமிடத்து அது தமிழகத்திலும் இலங்கையிலும் நிலவிய பெளத்த நிறுவனங்களுக் கிடையில் ஏற்பட்ட நெருங்கிய தொடர்புகளைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சின்னமாகவும் கொள்ளத் தக் கதாகும் . ஆதிகாலத்திலே மகா விகாரையில் உண்டான சங்கபேதமும், சங்கத்தாரிடையே பரவிய மகாயானம் தொடர்பான சிந்தனைகளும் அந்தத் தொடர்புகளை அடிப் படையாகக் கொண்டவை. காஞ்சிபுரத்திலே, பல்லவர் காலத்திற் பல பெளத்த நிறுவனங்கள் அமைந்திருந்தன. அங்குள்ள சில பெளத்த கோயில்கள் சைவ, வைணவக் கோயில் களைப் போலக் கற்றளிகளாக அமைக்கப் பட்டன என்றும் , அவை பல்லவர் கலைப்பாணியில் அமைந்தனவென்றும் கருதுவதற்கு இடமுண்டு. அவ்வாறாகிற் காஞ்சிபுரத்திலுள்ள பெளத்த கோயி லொன்றை முன்மாதிரியாகக் கொண்டு நாலாந்தா கெடிகே அமைக்கப்பட்ட தென்றும் கருதலாம். அதனால் இரு தேசங்களுக்கு முரிய கலாசார மரபுகள் சேர்க்கை பெறுகின்ற

பாரம்பரியமொன்றின் சின்னமாக நாலந்தா கெடிகே கொள்ளத்தக்கதாகும்.
தேனுவரைக் கோயில்
அநுராதபுர காலத்திலே கற்றளியாக அமைக்கப்பட்ட மற்றொரு பெளத்த சமயச் சார்புடைய கோயில் தெவிநுவரவில் அமைந் திருக்கும் கல்கே என்பதாகும். அது உபுல்வன் கோயிலாகுமென்று பலராலும் நம்பப் படுகின்றது. அதனைப் பற்றி சே பரணவிதான மேல்வருமாறு கூறுவார்:
அயல் நாடான தமிழ் நாட்டில் ஏழாம் நூற்றாண்டு வரை இலங்கையிற் போலக் கட்டடங்களை மரத்தினால் அமைப்பதே வழமையாகும். அதன் பின்பு கல்லினாற் கட்டடங்களை அமைக்கத் தொடங்கினார்கள். அதன் விளைவாக இலங்கையிலும் சில கட்டடங்கள் முழுமையுங் கல்லினால் அமைக்கப்பட்டன. இலங்கையின் தென் கரையிலுள்ள தெவுந்தரவிலே உபுல்வனை வழிபடுவதற்கென்று அமைக்கப் பெற்ற கோயிலிலே சிங்கள மரபிலுள்ள மரவேலைப் பாடான கட்டுமானம் கற்றளியாக மாறிவிட்டது.?
கல்கே மிதமான அளவுடைய கட்டட மாகும். அதிலே கர்ப்பக்கிருகம், மண்டபம் என்னும் பகுதிகள் உள்ளன. அவற்றுக் கிடையில் அந்தராளம் போன்ற அமைப்புக் காணப்படவில்லை. கர்ப்பக்கிருகம் வெளிப் புறத்தில் 16 அடி நீளமும் அகலமுங் கொண்ட சதுரமான அமைப்பாகும். மண்டபம் 149” நீளமும் 10 3” அகலமுங் கொண்டுள்ளது. இரண்டு பகுதிகளும் ஒரே கட்டடம் போல

Page 16
அமைந்துள்ளமை குறிப்பிடற்குரியது. திராவிட கலைப்பாணியில் அமைந்துள்ள கோயில் களிற் காணப்படுவதைப் போன்ற அதிஷ்டானம் அதில் அமைந்திருக்கவில்லை. அதன்பீடம் உயரங் குறைந்த இருதள அமைப்பாகும்.
கல்கேயிலுள்ள சுவர்கள் 7’ உயர மானவை, அவற்றிலே மாடக் குழிகளோ சிற்பங்களோ அமைக்கப்படவில்லை. அவற்றில் இடையிடையே அரைத் தூண்கள் காணப் படுகின்றன. கட்டடத்தின் கூரை தட்டையானது. அது கற்பாளங்களால் மூடப்பட்டுள்ளது. செங்கற்களினால் அமைக்கப்பட்ட சிகரமொன்று கர்ப்பக் கிருகத்தின் மேல் அமைந்திருந்த தென்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுங் கிடைக் கவில்லை.
இரண்டு அம்சங்களில் மட்டுமே கல்கே பல்லவர் காலத்துத் திராவிடக் கலைப் பாணிக் குரிய கோயில்களை ஒத்திருக்கின்றது. அது கற்றளியாக அமைந்திருக்கின்றது. அதில் கர்ப்பக்கிருகம், மண்டபம் என்னும் பகுதிகள் அமைந்திருக்கின்றன. அதன் வடிவமைப்பு, கட்டுமான வேலைப்பாடுகள், அலங்காரங்கள் என்பவற்றைப் பொறுத்தவரையில் கல்கே மரபுவழியான சிங்கள கட்டடக் கலைப் பாரம் பரியத்துடன் எந்த விதமான தொடர்பினையுங் கொண்டிருக்கவில்லை. பரணவிதான கூறு வதைப் போல சிங்கள பாரம்பரியத்திலுள்ள மரத்தினால் அமைந்த கட்டடங்களை முன் மாதிரியாகக் கொண்டு அது அமைக்கப் பட்டதென்றும் கொள்ள முடியாது. அதற்கு முன் மாதிரியாக அமைந்த உதாரணங்கள் என்று கொள்ளக் கூடிய எந்தவொரு கட்டடமும் இலங்கையிற் காணப்படவில்லை.
இந்துக் கோயிலொன்றுக்குரிய
வடிவமைப்பினை அடிப்படையாகக் கொண்டு

உபுல்வன் கோயிலைத் தெவிநுவரவில் அமைத்துள்ளனர் என்றே கருத முடிகின்றது. சில அம்சங்களில் அது குப்தர் கலைப் பாணிக்குரிய கோயில்களை ஒத்திருக்கின்றது. தட்டையான கூரையுடன் அமைந்த கர்ப்பக் கிருகம் மண்டபத் தோடு இணைக் கப் பட்டிருத்தல் ஆகிய பிரதான அம்சங்கள் சாஞ்சி முதலான இடங்களிலுள்ள ஆதியான குப்தர் காலக் கோயில்களிலுங் காணப்படுகின்றன. எனவே, சிங்களக் கட்டடக் கலைப் பாரம் பரியத்துக்கு அன்னியமானதென்று கொள்ளப் படும் உபுல்வன் கோயில் இந்து சமயத் தொடர்பான இந்தியக் கட்டடக் கலை மரபிலுள்ள கோயிலமைப்பு ஒன்றினை முன் மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்று கருதலாம். அதனைப் பின்பற்றி வேறு கோயில்கள் இலங்கையில் அமைக்கப் பட்டிருந்தன என்று கொள்வதற்கான எந்த விதமான சான்றுகளும் இதுவரை கிடைக்க வில்லை.
தெவிநுவர கடல்வழியான சர்வதேச வாணிபத்தில் ஒரு தரிப்பு நிலையமாக விளங்கியதால், வாணிபத்தின் மூலமாக ஏற்பட்ட கலாசாரச் செல்வாக்கினைப் பிரதி பலிக்கும் ஒரு தொல்பொருட் சின்னமாகவும் உபுல்வன் கோயில் நோக்கற்பாலது. இந்திய வணிகரோடு கூடி வந்த கட்டடக் கலைஞர்கள் அதனை நிர்மாணித்திருத்தல் கூடும். அது பெளத்த சமயச் சார்புடைய வழிபாட்டுக்குரிய கோயில் என்பதால், தமிழகத்திலோ கலிங்கத்திலோ ஆந்திரதேசத்திலோ பெளத்த நிறுவனங்களுக்கிடையே காணப்பட்ட தேவ கோட்டம் ஒன்றை முன்மாதிரியாகக் கொண்டு அது அமைந்திருப்பதற்கான சாத்தியங்களும் உண்டு. எனவே கல்கே தொடர்பாக நாம் அறிந்தவை மிகவும் சொற்பமானவை. அறியப்பட வேண்டியவை பெருமளவி

Page 17
லானவை. புராதன சமய வரலாறு, கலாசாரப் பரிவர்த்தனை என்னும் விடயங்களைப் பொறுத்த வரையில் கல்கே மிக முக்கியத் துவம் வாய்ந்த ஒரு தொல்பொருட் சின்ன மாகும்.
இசுருமுனியாச் சிற்பங்கள்
இலங்கையிலுள்ள புராதனமான சிற்பங் களில் இசுருமுனியாவிலுள்ளவை கலா விமர்சகர் பலரின் பாராட்டுக்களைப் பெற்ற சிறப்புடையவை. அங்கே மூன்று பிராதான மான சிற்பங்கள் கற்பாறைகளிற் செதுக்கப் பட்டுள்ளன. அவற்றிலொன்று ஆசனக் கோலமான தனிமனித வடிவமாகும். அதன் கலைப்பண்பும் இணையில்லாத அழகும் காண்போட்ை பெரிதும் கவர்ந்துவிடுகின்றன. இன்னொன்று, தடாகமொன்றில் இறங்கி நிற்கும் யானைக் கூட்டம் ஒன்றின் காட்சி பற்றியது. அங்குள்ள மூன்றாவது சிற்பம் காதலரின் கோலமானது. அதனை உமா மகேஸ்வரரின் தோற்றம் என்று சிலர் கொள்வர்.
இசுருமுனியாச் சிற்பங்கள் அநுராதபுர காலத்திற்குரியவை. அவை ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் உருவாக்கப் பெற்றவை என்பதில் அறிஞரிடையே கருத்தொற்றுமை உண்டு. அவற்றிலே தமிழகத்துப் பல்லவர் கலைப்பாணியின் செல்வாக்கு அழுத்தம் பெற்றுள்ளது.
ஐயனாரின் வடிவம்
இசுருமு னியாவிலுள்ள மனித வடிவமான சிற்பத்தை முற்காலங்களிற் பலரும் பலவிதமாக விளக்கியுள்ளனர். “குதிரையும் மனிதனும்” என்று வர்ணிப்பது நெடுங்கால வழக்கமாகும். அது போர் வீரன் ஒருவரின்

கோலமாய் அமைந்ததென்று சிலர் சிந்திக்க லாயினர்.
இசுருமுனியாவிலுள்ள சிற்பத்தை ஆனந்த குமாரசுவாமி மேல்வருமாறு வர்ணிக் கின்றார்:
அநுராதபுரத்திலே இசுருமுனியா விஹாரை என்று இந்நாட்களிலே சொல்லப்படும் இடத்திலே, பெருங்கற் பாறையொன்றின் பகுதி நிலத்தின் மேலே தெரிகின்றது. பிளவுண்ட அப் பாறையின் முன்புறத்திலே செயற்கை முறையில் அமைந்த சிறிய குளமுண்டு. அந்தப்பாறை ஏழாம் நூற்றாண்டில், மாமல்ல புரத்திலுள்ள கங்காவதாரம் போன்று சிறிய அளவிலே செதுக்கப்பட்டுள்ளது. பாறையில் ஆசனக் கோலமான வடிவமொன்று அமைந்துள்ளது. அதன் அருகிலே குதிரையின் உருவம் தெரிகிறது. அது கபில முனிவரின் உருவம் போலத் தெரி கின்றது. அது தூய்மையான பல்லவர் கலைப்பாணியில் அமைந்திருக் கின்றது. இலங்கை யிலுள்ள மிகவும் சிறந்த சிற்பங்களில் அதுவும் ஒன்றாகும்.'
இசுருமுனியாவிலே, குதிரை சகித மாகக் காணப்படும் வடிவம் இராமா யணத்திலே, பால காண்டத்தில் வர்ணிக்கப்படும் கபில முனிவரின் வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது ஆனந்த குமாரசாமியின் கருத்தாகும்.
இந்தியக் கலைகளின் விமர்சகர்களில் ஒருவரான வின்சென்ற் ஸ்மித் என்பாரும்

Page 18
அக்கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் சிறப்புக்களைக் குறித்து அவர் மேல்வருமாறு புகழ்ந்துரைக்கின்றார்:
இந்தியாவிலும் இலங்கையிலும் உருவாக்கப்பட்ட தலைசிறந்த கலை வடிவங்களில் இதுவும் ஒன்றாகு மெனக் கருதுகின்றேன். அதன் கோலம் சாந்தமானது தோற்றம் கம்பீர மானது. உருவம் அமைந்துள்ள கோலம் கடினமானதெனினும் அது மிகுந்த திறமையோடும் ஒப்பில்லாத எளிமையுடனும் அமைக்கப்பட் டுள்ளது."
அக் கினி, பர்ஜன் ய ஆகிய தேவர்களை அடையாளபூர்வமாக உணர்த்தும் வகையில் இசுரு முனியாச் சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது.
என்ற விநோதமான கருத்தைச் சேனரத் பரணவிதான முன்வைத்துள்ளார். ஆனால் இதனைப் பிரபலமான கலாவிமர்சகர் எவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. அச்சிற்பத்தின் வடிவமைப்பினை நன்கு ஆராய்ந்த பின்பே அதனை அடையாளங் காண முடியும். அதன் அம்சங்கள் மேல் வருமாறு அமைந்துள்ளன.
உருவம் ஆசனக் கோலத்தில் அமைந் துள்ளது. அந்தக் கோலம் மகாராஜலீலாசனம் எனப்படும். எதுவிதமான பீடமுமின்றித் தரையிலே அமர்ந்திருக்கும் கோலத்தில் அது செதுக்கப்பட்டுள்ளது. இடக்கால் உண்ணோக்கி மடித்து நிலத்தில் வைக்கப்பட்ட நிலையிலே தெரிகின்றது. வலக்கால் மடித்துப் பாதம் நிலத்தை ஊன்றிய நிலையிலே காணப் படுகின்றது. இடக்கை தரையில் ஊன்றிய

கோலத்திலும், வலக்கை முழங்காலிற் படிந்த நிலையில் நீட்டிய கோலத்திலுந் தெரிகின்றன. முகம் சுந்தரக் கோலமானது. கண்கள் தூரநோக்கினைப் பிரதிபலிக்கின்றன. புருவங்கள் வில் போல வளைந்த வடிவ மானவை. மூக்கு மெலிந்து நீண்ட அமைப் பினைக் கொண்டுள்ளது. தலைமேல் மகுடம் எதுவுங் காணப்படவில்லை. கேசம் சடா பாரமாக அமைந்திருக்கின்றது. அது தலைக்கு மேலும் கீழும் விரிசடை போன்ற தாழ் சடையாகத் தெரிகின்றது.
இடுப்பைச் சுற்றிக் கட்டிய மென்மை யான சிறிய வஸ்திரத்தின் அடையாளம் தெரிகின்றது. தோள் வலையம், கைவளை, கழுத்து மாலைகள் போன்ற ஆபரணங்கள் உருவத்தில் அமைந்துள்ளன. அவற்றோடு உயவீதம் என்னும் முப்புரி நூலும் தெரிகின்றது. வலப்பக்கத்திலே குதிரையின் முகம் அழகாக அமைந்திருக்கின்றது. வலக்கை சவுக்கினைப் பிடித்துள்ள கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுட் பல பிரதானமான அம்சங்கள் வேறு பல சிற்பங்களிலுங் காணப்படுகின்றன. ஆண்டியகல என்னும் இடத்திலுள்ளதும் கற்பாறையிலே குடையப்பட்டதுமான சிற்பம் இதனைப் போன்றதென்றும், கபில முனிவரின் உருவமாய் அமைந்ததென்றும் முன்பு ஹோகார்ட் (Horcart) குறிப்பிட்டார். ஆனால் அதன் வேலைப்பாடுகள் முற்றுப் பெறவில்லை. இரு சிற்பங்களும் ஆசனக் கோலத்தில் ஒரே விதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆண்டியகலவிற் காணப்படும் சிற்பத்திலும் பல்லவர் கலைப்பாணியின் சாயல்கள் படிந்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
அம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகத்துப் பேராசிரியராக விளங்கியவரும் தென்னாசிய

Page 19
கலைகள் பற்றிய நிபுணத்துவம் காரணமாக உலகப் புகழ் பெற்றவருமான லொனாஹ ஸன்டீலியூ அம்மையாரின் முயற்சிகளின் பயனாக இசுருமுனியா சிற்பம் பற்றிப் புதிய சிந்தனைகள் ஏற்படலாயின. இசுருமுனி யாவிலுள்ள மனிதவடிவமான சிற்பம் ஐயனாரின் வடிவமென்ற கருத்தை முதன் முதலாக அவர் முன்வைத்தார். அவர் தனது கருத்துக்கு அழுத்தங் கொடுக்கும் வண்ண மாகக் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் காணப் படும் பல புராதனமான ஐயனார் வடிவங் களின் பிலதிமாலசுஷணங்களை உதாரணமாகக்
கொண்டார்.19
கர்நாடகத்திலே துங்கபத்திரை ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஆலம்பூர் என்னுங் கிராமத்தில் விஸ்வ பிரம்மா கோயில் ஒன்றுள்ளது. அதில் இசுருமுனியாவிலுள்ள சிற்பத்தைப் போன்ற படிமம் ஒன்றுண்டு. இரண்டு வடிவங்களின் பிரதிமாலசுஷணங் களும் ஒரே விதமானவை. ஆலம்பூர் சிற்பம் ஆசனக் கோலமானது. அதுவும் மகாராஜ லீலாசனம் என்ற வகையில் அமைந்துள்ளது. அதன் கால்களின் அமைப்பு இசுருமுனியாச் சிற்பத்தில் உள்ளதைப் போல அமைந்திருக் கின்றது. அதன் சடாபாரமும் விரிசடையான தாழ்சடையாகும். அப்படிமத்தின் இடப் பக்கத்திற் குதிரை முகம் தெரிகின்றது. ஆலம்பூரிலுள்ள சிற்பம் ஐயனாரின் வடிவ மாகும். அதனால் இசுருமுனியாவிலுள்ள சிற்பத்தையும் ஐயனாரின் உருவமெனக் கொள்வது மிகவும் பொருத்தமானதாகும்."
தமிழகத்தில் ஐயனாரின் படிமங்கள் பல்லவர் காலம் முதலாகக்கிடைக்கின்றன. வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள எசலம் என்னும் ஊரிலே பல்லவர் காலத்துக்குரிய ஐயனாரின்
11

படிமமொன்று காணப்படுகின்றது. அதன் அம்சங்களும், ஆலம்பூர், இசுருமுனியா ஆகிய இடங்களிற் காணப்படும் வடிவங்களில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. சோழர் காலத்துப் படிமங்களிற் சில புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முதலாம் இராஜராஜன் காலத்தில் உருவாக்கப்பட்ட படிமமொன்று திருப்பத்தூரிலே காணப்படு கின்றது. அதில் ஐயனார் இளமைக் கோலத் துடன் சுருண்ட நீளமான கேசங்கள் அமைந்த சடாபாரத்துடனும் விளங்குகின்றார். எசலத்தி லுள்ள படிமத்திற் போலவே கால்கள் அமைந்திருக்கின்றன. ஆயினும் அதிலே கைகளில் ஒன்று படைக்கலம் ஏந்திய கோலத் துடன் அமைந்துள்ளது. கண்ணபுரத்திலும் ஐயனாரின் புராதனமான படிமங் காணப்படு கின்றது. அது சோழர் காலத்துக்கு முற்பட்டது போலத் தெரிகின்றது. அந்தப் படிமத்திலுள்ள கரமொன்றிலே சவுக் கினி உருவந் தெரிகின்றது."
காஞ்சிபுரத்திலுள்ள ஐயனாரின் படிம மொன்றிலே ஒரு கால் மடித்து ஆசனத்தில் வைக்கப்பட்ட நிலையிற் காணப்படுகின்றது. மற்றக் கால் உயர்த்தியும் முழங்கால் மட்டத்திலே கீழ்ணோக்கிய வண்ணமாக மடித்துப் பாதம் ஆசனத்தில் ஊன்றிய நிலையிலும் அமைந்திருக்கின்றது. கால்களின் அமைப்பு ஆலம்பூர், எசலம், இசுருமுனியா ஆகிய இடங்களிலுள்ள உருவங்களிற் போலவே காணப்படுகின்றது. அதன் தலையில் உயரமாக மகுடம் அமைந்திருக் கின்றமை ஒரு புதிய அம்சமாகும். ஆசனத்தின் வலப்பக்கத்தில் ஐயனாரின் வாகனமாகிய குதிரையின் உருவம் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலே காணப்படும் 17ஆம் நூற்றாண்டுக்குரிய

Page 20
ஐயனாரின் உலோகப் படிமத்திலும் இசுரு முனியாச் சிற்பத்தின் அம்சங்கள் அமைந்திருக் கின்றமையும் கவனித்தற் குரியதாகும்.
ஐயனார் வழிபாடு மிகவும் புராதன மானது. அது ஆரம்பத்தில் வைதீகத் தொடர் பற்றதாகும். அது தென்னிந்தியாவிலே துங்க பத்திரை நதிக்குத் தெற்கிலுள்ள பகுதிகளில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஐயனாரை ஐயப்பன், சாத்தன், ஹரிஹர புத்திரன் என்னும் பெயர்களாற் குறிப்பிடுவது வழக்கம் சாத்தன், ஐயனார் என்னும் பெயர்கள் தமிழர் சமுதாயத்திலே புராதன காலம் முதலாக வழங்கி வந்தமைக்குச் சங்க நூல்களிற் சான்றுகள் காணப்படுகின்றன. இலங்கையிலே பல்லவர் காலமளவில் ஐயனார் வழிபாடு நிலவி யமைக்கு இசுரு முனியாச் சிற்பம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். நுவரகலாவிய பிரதேசத்தில் 20ஆம் நூற்றாண்டு வரை ஐயனார் வழிபாடு சிங்கள மக்களிடையிலே காணப்பட்டது. அவர்கள் ஐயனாரை ஐயனக என்ற பெயராற் குறிப்பிட்டனர். இலங்கையின் வடபகுதி களிலும் கிழக்குப் பகுதிகளிலும் ஐயனார் வழிபாடு சைவர்களிடையே இன்றுங் காணப் படுகின்றது.
கிராமிய வழிபாட்டிற் சிறப்பிடம் பெற்றிருந்த ஐயனாரை ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் வைதீக வழிபாட்டு மரபுடன் இணைத்துவிட்டனர். அதன் பயனாகவே ஐயனாரைச் சிவகுமாரனாகக் கொள்ள லாயினர். ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதான பிராஹ்மண புராணத்தில் ஐயனாரின் உற்பத்தி பற்றிய கதை காணப்படுகின்றது. மகாவிஷ்ணு மோகினி வடிவமாகிச் சிவனோடு கூடியதால் ஐயனார் உற்பவித்தார் என்றும் அதனால்
12

அவருக்கு ஹரிஹரபுத்திரன் என்னும் நாமம் உண்டாகியதென்றும் அதிலே கதை சொல்லப் படுகின்றது. சைவம், வைணவம் ஆகிய சமயநெறிகள் இரண்டிலும் ஐயனார் வழிபாடு இணைந்து விட்டமையினை ஜனரஞ்சகமான முறையில் விளக்கும் கதையாகவே இது கொள்ளத்தக்கதாகும். காலப் போக்கில் ஐயனாரின் படிமங்களை ஆலயங்களிலே தாபனம் பண்ணி வழிபடும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. ஆகமப் பிரகாரமான சிற்பசாஸ்திர நூல்களில் ஐயனார் படிமத்தின் பிரதிமா லக்ஷணங்கள் வர்ணிக்கப்படுகின்றன. மூன்பு கவனித்தவாறு காலப்போக்கில் அவற்றிலே புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டன.
பொதுவாக ஐயனாரை இளமை பொருந்திய காவற்கடவுளாகக் கொள்வது வழமை. ஐயனாரின் கோயில்கள் குளம், வயல், வனம், மலை ஆகியவற்றின் எல்லைப் புறத்தில் வைக்கப்படும். வயல் களையும், புனம், தோட்டம் போன்ற வற்றையும் ஐயனார் காவல் புரிவதாகக் கருதினார்கள். குதிரையும், யானையும் ஐயனாரின் வாகனங்களாகக் கொள்ளப்படும். இசுருமுனியாவிலுள்ள சிற்பத்திற்கு ஐயனார் பற்றிய சிந்தனைகளும் ஐதீகங்களும் சாலப் பொருந்துவனவாகும்.
அந்தச் சிற்பம் அநுராதபுரத்திலுள்ள பெருங்குளமான திஸ்ஸவாவியின் அணைக் கட்டின் சமீபமாக அமைந்திருக் கின்றது. அது உயரமான நிலத்திற் கற்பாறையிலே செதுக்கப் பட்டுள்ளது. அதனாற் காவற் கடவுளின் படிமமாக அதனை அமைத்துள்ளனரென்று கருதமுடிகின்றது. அதன் அம்சங்கள் எல்லாம் ஐயனாரின் சிற்பங்களில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. உருவத்தின் ஒரு புறத்திலே குதிரை முகம் அமைந்துள்ளமை

Page 21
அது ஐயனாரின் வடிவமாகும் என்பதை உறுதி செய்கின்றது. ஐயனார் வழிபாடு இலங்கை யிலே புராதனமானதென்றும் பல்லவரின் செல்வாக்கு ஏற்பட்டமையின் விளைவாக அநுராதபுரத்திலே ஐயனாரின் கோலத் தைப் பெளராணிக வர்ணனைகளுக்கும் சிற்ப சாஸ்திர விதிகளுக்கும் ஏற்புடைய வண்ணமாக உருவாக்கினார்கள் என்றும் கருத முடிகின்றது.
தடாகத்தில் நிற்கும் யானைகள்
ஐயனாரின் வடிவம் அமைந்துள்ள கற்பாறையின் ஒரு பக்கத்திலே, இயல்பாக அமைந்துள்ள பாறைப்பிளவின் இரு பக்கங் களிலும் தடாகமொன்றில் நிற்கும் யானை களின் காட்சி சிற்பமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. பாறைப்பிளவின் இடப்பக்கத்தில் நான்கு யானைகளின் உருவங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பெரிய யானைகளின் வடிவங்களாகும். அவ்விரண்டினுள் ஒன்று கொம்மன் யானை: மற்றையது பெண் யானையின் வடிவம் போலத் தெரிகின்றது. அவற்றுக்கு முன்னால் யானைக் கன்றுகள் இரண்டின் காட்சி காணப்படுகின்றது. வலப் பக்கத்திலே பெரிய வேழம் ஒன்றின் உருவந் தெரிகின்றது. குளத்து நீரை முகந்து கொள் வதற்கு ஏற்றவாறு அது துதிக்கையினை மேலே உயர்த்திய கோலத்திற் காணப் படுகின்றது. அதன் கால்களின் அடிப்பாகங்கள் நீரில் அமிழ்த்தியுள்ள வகையிலே தெரியுமாறு உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்துச் சிற்பங்களை உதாரண ாகக் கொண்டு இசுருமுனியாச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது ஆனந்த குமாரசுவாமி, லொஹை ஸன்டீலியூ ஆகிய மேதைகளின் கருத்தாகும். மாமல்லபுரத்துக் கற்பாறை மிகவும் விசாலமானது. அதன்

இயல்பான தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தத்துவ விளக்கமாக, அங்கே கவர்ச்சி மிக்கதான புராணக்கதை ஒன்றினை ஆதாரமாகக் கொண்டு அற்புதக் கோலமான சிற்பமொன்றை வடிவமைத் துள்ளனர். ஒப்பீட்டு அடிப்படையில் நோக்குமிடத்து இசுரு முனியாச் சிற்பம் மிகவும் சிறியது. கங்கையின் உற்பத்தியினையோ பக்திப் பிரவாகத் தினாற் சீவராசிகளின் மனோபாவங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களையோ அவை பிரதிபலிக்க வில்லை.
கற்பாறையின் மேலே அமர்ந்திருக்கும் நிலையிற் காணப்படும் ஐயனாரின் கோலத் திற்கும் தடாகத்திலே தங்கி நிற்கும் கோலத்தி லுள்ள யானைகளின் காட்சிக்கும் ஏதோ விதமான தொடர்பு இருந்திருக்கலாம். யானையை ஐயனாரின் வாகனமாகக் கொள்வது மரபாகும். தடாகத்திலே இறங்கி நிற்கும் யானைக் கூட்டத்தைக் கவனித்த வண்ணமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் ஐயனாரின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது என்று கருதலாம்.
இசுருமுனியாவிலுள்ள யானைகள் இறங்கி நிற்கும் தடாகம் போன்ற காட்சி யொன்று திசவாவியின் அணைக்கட்டுக்குச் சமீபத்திலுள்ள சிறு குளமொன்றின் அண்மையிற் காணப்படும் பாறைச் சரிவிலே செதுக்கப் பெற்றுள்ளது. அக்காட்சியிலே தாமரைச் செடிகளும் மீன்களும் நிறைந்துள்ள தடாகத்திலே யானைகள் நிற்கும் கோலம் தெரிகின்றது. இரு சிற்பங்களும் ஒரே கலைப் பாணியின் அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. அத்துடன் அவை ஒரே காலத்துக்குரியன வாதல் வேண்டும். வடமத்திய மாகாணத்திலே, கட்டுப்பிலான என்னுமூரிலே, ஆற்றோரத்தில்

Page 22
யானை ஒன்றின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அது இசுருமுனியாவிலும் திசவாவிக் கரை யிலும் காணப்படும் யானைகளைப் போல வடிவமைக் கப்பட்டுள்ளது. ஆயினும், அவற்றைக் காட்டிலும் மிகுந்த கலை வனப் புடன் அது விளங்குகின்றது. இலங்கையில் ஏற்பட்டிருந்த மாமல்லபுரக் கலைப்பாணியின் செல்வாக்கிற்கு அதுவும் ஒரு உதாரணமாகும்.
காதலர் வடிவான சிற்பம்
இசுருமுனியாவிலுள்ள மற்றுமொரு சிற்பம் ஆணும் பெண்ணும் அணைந்து கூடியிருக்கும் உருவமாகும். இதனை யொத்த வேறெந்த வடிவமும் இதுவரை இலங்கையிற் காணப்படவில்லை. அதிற் குப்தர் கலைப் பாணியின் சாயல்கள் படிந்துள்ளன என்று பரணவிதான முதலியோர் கருதுவர். அது நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தென்றும் பரணவிதான கொள்வார். ஆயினும் ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்று கொள்வதந்கான தகுந்த காரணம் எதுவும் இல்லை. அது சாலியகுமாரன், அசோகமாலா ஆகியோரின் வடிவம் என்பது பரண விதானவின் கருத்தாகும்." அநுராத செனவிரத்ன முதலிய கலாசார விமர்சகர் சிலர் அச்சிற்பம் சிவன், பார்வதி ஆகியோரின் வடிவங்களைக் குறிக்கும் என்பர். இரு வடிவங்களிலுங் காணப்படும் அங்கல கூடிணங்கள் கட்டழகு வாய்ந்த மனிதரின் கோலங்களைப் போன்றவை. வடிவங்கள் இரண்டும் ஆசனக் கோலமானவை. ஆசனம் நீள்சதுர வடிவங் கொண்டது. தெய்வப் படிமங்கள் அமைந்திருக்கும் பீடம் போல அவை காணப்படவில்லை. இருவரது கண்களும் மூடிய கோலத்தில் அமைந் துள்ளன. ஆணின் இடக்கரம் பெண்ணை அணைத்த கோலமாய் அமைந்துள்ளது.

வலக்கரம் கடக முத்திரையில் அமைந்துள்ளது. பெண்ணுருவத்தின் வலக்கரம் கடகஹஸ்தமாக அமைந்துள்ளது. இடக் கரம் ஆசனத்தில் ஊன்றிய கோலத்தில் அமைந்திருக்கின்றது. சிவ சின்னங்களான சூலம், மான், மழு, உருத்திராக்கம் போன்றவற்றின் உருவங்கள் சிற்பத்திலே காணப்படவில்லை. கங்கை, நிலவு, கபாலம், பாம்பு ஆகியவற்றின் வடிவங் களும் ஆணுருவத்தின் சடைமேலே தெரிய வில்லை. எனவே இந்தச் சிற்பத்தை உமாமகேஸ்வரரின் வடிவமென்று உறுதியாகக் கொள்ள முடியவில்லை. வலக்கரங்கள் முத்திரைக் கோலமாய் அமைந்திருப்பதும், ஆணுருவின் பின்புறத்தே பிரபா மண்டலத்தின் வடிவம் அமைந்திருப்பதும் சிற்பத்திற் காணப்படும் உருவங்கள் தெய் வாம்சம் கொண்டவர்களின் கோல மானவை என்ற கருத்துக்கு ஏதுவாகின்றன.
இதுவரை கவனித்தவற்றின் அடிப் படையிலே ஆறாம் நூற்றாண்டு முதலாகப் பல்லவரின் செல்வாக்கு கணிசமான அளவில் ஏற்பட்டிருந்ததென்று கருதலாம். பல்லவ-கிரந்த எழுத்துக்களிலே பல சாசனங்கள் எழுதப் பட்டுள்ளன. அவை மகாயானச் சார்புடைய சமஸ்கிருத மொழிச் சாசனங்களாக அமைந் துள்ளன. சிங்கள மொழிக் கல்வெட்டுகளிலும் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத மொழியின் செல்வாக்கின் காரணமாகச் சிங்கள மொழியிலே புதிய எழுத்துக்கள் வழக்கில் வந்தன. சமஸ்கிருத மொழியில் உள்ளவற்றைப் போன்ற எல்லா ஒலி வடிவங்களையும் குறிப்பதற்கேற்ற வகையிலே எழுத்துக்கள் சீரமைக்கப்பட்டன. மேலும், சிங்கள மொழிக்குரிய வரிவடிவ வளர்ச்சியிற் கிரந்த எழுத்துக்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவிலே ஏற்பட்டது.

Page 23
பெளத்த சமய நிறுவனங்கள் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் என்பவற்றின் மூலமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. அதனால் மகாயான சம்பிரதாயத்திலே அபிவிருத் திகள் ஏற்பட்டன. சைவ சமயத்தைப் பொறுத்த வரையிற் பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இலங்கையில் ஏற்பட்டது. திராவிட கலைப் பாணியின் செல்வாக்கு கட்டட, சிற்பக் கலைகளிற் பிரதிபலித்தது. அநுராதபுரத்து மண்டளிகளான சைவக் கோயில்கள் யாவும் வடிவமைப் பரிலே திராவிடக் கலைப்
அடிக்குறிப்புகளும் விளக்கவுரைகளும்
O.
O2.
03.
O7.
கா.இந்திரபாலா, “அநுராதபுரத்திலுள்ள நான்கு இந்திரபாலா, பேராதனை 1968, pp. 31-35; K Anuradhapura”, Epigraphia Tamilica Ed. K pp. 1-5; H.C.P. Bell, Archaeological Surv Government Printer, Colombo; South Indian
மானவர்மன் அரசகுலத்தைச் சேர்ந்த கஸ்பன் சங்கமானனின் மகளைத் திருமணஞ் செய்து அதனைப்பற்றி ஒற்றர்கள் மூலமாக அரசனாகிய ஹ இலங்கையிலிருந்தும் வெளியேறி, நாவலந்தீவின் ஆதரவினைப் பெற்றான். மகாவம்சம் 47 : 2 .
மகாவம்சம் 47 : 6 - 40
மகாவம்சம் 47 : 41 - 60
S. Paranavitana, "Tiriyay Rock inscription Paranavitana, London, 1943, p. 152.
S. Paranavitana, "Kuccaveli Rock Inscription - 161
S. Paranavitana, "Tiriyay Rock Inscription",
15

பாணியிலுள்ள கோயில்களை முன்மாதிரி யாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பல்லவர் கலைப்பாணி ஏற்படுத்திய செல்வாக்கின் விளைவாக இலங்கையிலே கற்றளிகளை அமைத்தார்கள். கற்றளியான நாலந்தா கெடிகே காஞ்சிபுரத்திலுள்ள மகேந்திரவர் மேஸ்வரத்தின் அம்சங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளமை குறிப்பிடற் குரியது. சிற்பக் கலைவளர்ச்சியிற் பல்லவர் கலைப்பாணி ஏற்படுத்தியிருந்த செல்வாக்கிற்கு இசுருமுனியாச் சிற்பங்கள் சிறந்த எடுத்துக்
காட்டாகும்.
நாட்டார் கல்வெட்டு" சிந்தனை பதிப்பாசிரியர் கா. ... indrapala "two inscriptions from "Hindu Ruins" ... Indrapala Jaffna Archaeological Society, 1974, ey of ceylon Annual Report. (ASCAR) for 1893 Inscriptions Vol. 4 Ed. Krishna Sastri, No. 1405
என்பவனின் மகனாவன், அவன் மலயராஜ என்னும் கொண்டு உத்தரதேசத்திலே மறைந்து வாழ்ந்தான். }த்தடாத்தன் அறிந்து கொண்டான் அதனால் மாணவர்மன் னை அடைந்து, அங்கே அரசனாகிய நரசிம்மவர்மனின்
5
I”, Epigraphia Zeylanica (EZ), Vol. 4, Ed. S.
', EZ, Vol. 3, (1928 - 1933) London, 1933, pp. 158
EZ, Vol. 4, p. 152.

Page 24
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
8.
9.
H.C.P. Bell, ASCAR, 1893, pp. 4-5
Senaka Bandaranayake, Sinhalese Monas
S. Paranavitana, "Civilization of the Period: F History of Ceylon, Volumel, Part1. Ed-S.
401
Senaka Bandaranayake, Sinhalese Monas
S. Paranavitana, "Civilization of the Peric Ceylon, History of Ceylon, p. 401
Ananda K. Coomaraswamy, History of Indi
Vincent A, Smith, A History of Fine Art lin Ilir pp. 148 - 149
J.E.L. Van Lohuizen de leeuw, "Rock - Cut S ஆசியத் தொல்பொருளியல் மாநாட்டில் ஏறக்
கட்டுரை. படிவம் 18 பக்கங்கள்
மேலது
மேலது
C. W. Nicholas And S. Paranavitana, A Co lombo, 1961, p. 180
மேலது
(இக்கட்டுரை இந்துகலாசார அலுவல்கள் திை என்ற நூலிலிருந்து பெறப்பட்டது)

tic Architecture, E. J. Brill, Leiden, 1971, p. 154
teligion, Literature and Art", University of Ceylon,
Paranavitana University Press, Colombo, 1959, p.
tic Architecture, pp. 351 - 352
pd: Religion, Literature and Art”, University of
an and Indonesian Art, London, 1927, p. 162
dia and Ceylon, Clerendon Press, Oxford, 1930,
Sculptures at Isurumuni". GlassI(plb fai) b60LGupp குறைய முப்பது வருடங்களுக்கு முன் சமர்ப்பித்த
Incise History of Ceylon, University Press, Co
ணக்கள வெளியீடான "இலங்கையில் இந்துசமயம்"
5

Page 25
பல்லவர் கலைப்பாணி கே
Lਘ P.
கோயில்களும் கட்டுமான முறைகளும்
கோயிற் கட்டுமான முறைகளும் சிற்பங்களும் சாஸ்திர விதிகளை ஆதாரமாகக் கொண்டவை. சிற்ப சாஸ்திரம், ஆகமம் என்னும் வகைகளைச் சேர்ந்த நூல்களிற் சொல்லப்படும் விதிகளுக்கமையக் கோயில் களும் அவற்றிலுள்ள சிற்பங்களும் அமைக்கப் படும். நாகரம், வேஸரம், திராவிடம் என்னும் மூன்று வகையான கோயிற் கட்டுமான முறைகளைப் பற்றிச் சிற்ப நூல்கள் கூறும் அவற்றின் சிகரம் முறையே நாற்கோண மாகவும், வட்ட மாகவும், எண்கோணமாகவும் அமைந'திருக்குமென்று அந்நூல்கள் கூறும்.
நாகரம், வேஸரம், திராவிடம் ஆகிய மூன்று வகைகளும் பிராந்திய மரபுகளை மூலமாகக் கொண்டு விருத்தி பெற்றவை என்ற கருத்தும் சில சிற்பசாஸ்திர நூல்களிற் காணப் படுகின்றது. இமயம் முதல் விந்தியம் வரை யான பரந்த நிலப்பகுதியில் அமைந்துள்ள கோயில்கள் நாகரம் எனப்படும்?
தக்கிணத்துக் கோயில்கள் வேஸரம் என்னும் வகைக்குரியன. அவை கதம்ப நாகர கட்டட முறையினையும் வாதாபிச் சாளுக்கியர் காலத்துக் கட்டடக் கலை முறையினையும் மூலமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றவை. அவற்றிலே நாகரம், திராவிடம் ஆகியவற்றின் அம்சங்கள் கலப்புற்றுள்ளன. ஐகொளே, பட்டதகல், எல்லோரா ஆகிய தலங்களில் அமைந்துள்ள கோயில்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கோயில்கள் திராவிட கலைப்பாணியில் அமைந்தனவாகும்.

ாயில்களும் சிற்பங்களும்
பத்மநாதன்
கலிங்கத்துக் கலைப்பாணி என்னும் வகை யொன்றினைப் பற்றி மத்திய காலத்துச் சாசனங்களிற் குறிப்புண்டு. அது நாகரத்தின் ஒரு பிரிவாகும். திராவிட கலைப்பாணியில் நான்கு வகையான கோயிலமைப்புகள் உள்ளன. அவை மண்டளி, குடபோகம், மலைதளி, கற்றளி என்பனவாகும். தமிழகத்துக் கோயில்களில் மண்டளிகளே மிகப் புராதனமானவை. களிமண், செங்கல் என்பவற்றால் அமைக்கப்படும் கோயில்கள் மண்டளி எனப்படும் பத்தாம் நூற்றாண்டு வரை மிகப் பெரும்பாலான சைவ, வைணவக் கோயில்கள் மண்டளிகளாகவே அமைந் திருந்தன.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளிற் சைவசமய குரவர்களின் பாடல் பெற்ற கோயில்களிற் பெரும்பாலானவை செங்கற் கோயில்களாகும்.
1. குடபோகங்கள்
குகைகளைக் குடைந்து அமைக்கப் படும் கோயில்கள் குடபோகம் என்றும் குடை வரை என்றுஞ் சொல்லப்படும். குடபோக முறை தக்கிணப் பிரதேசத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். குடபோகங் களான சமண, பெளத்தக் கோயில்களும் சைவ, வைணவக் கோயில்களும் அஜந்தா, பாஜா, எல்லோரா, வாதாபி முதலிய இடங்களில் உள்ளன. அவற்றிலே சில அளவில் மிகப் பெரியனவாகும். வரலாற்றுச் சிறப்புடைய வனப்புமிக்க சிற்பங்களும் ஒவியங் களும் அவற்றிலுள்ளன.
தமிழகத்திலே குடபோக முறையின் வளர்ச்சி தொண்டைநாடு, பாண்டிநாடு

Page 26
ஆகியவற்றில் ஏககாலத்தில் ஏற்பட்டது. பாண்டி நாட்டில் பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் குடபோகம் தமிழ்நாட்டுக் குடபோகங்கள் எல்லாவற்றிலும் மிகப் புராதன மானது. அது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாகியுள்ளது.
கோயிற் கட்டடக்கலை பற்றி ஆராய்ந்த ஆரம்பகால ஆராய்ச்சி யாளர்கள் தென் தமிழ்நாட்டுக் குடபோகங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பல்லவர்களின் ஆதிக் கத்தின் கீழமைந்த பகுதிகளிலுள்ள குடபோகங் களையே அவர்கள் அறிந்திருந்தனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கூறிய கருத்துக்கள் நிலை பெற்று விட்டன. பல்லவ மன்னனாகிய மகேந்திர வர்மனின் காலத்துக்கு முன்பே தமிழகத்திற் குடபோகங்களை அமைக்கும் முறை ஆரம்ப மாகிவிட்டது. ஆயினும், திராவிட கலைப் பாணியின் வளர்ச்சியிற் பல்லவரின் குட போகங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன என்பது மறுக்கமுடியாத வொன்றாகும்.
குடபோகம், மலைதளி, கற்றளி என்னும் மூன்று வகையான கோயில்கள் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்டன. பல்லவர் தொடக்கத்திலே குடபோகங்களை அமைத்தனர். பெரும்பாலான குடபோகங்கள் முதலாம் மகேந்திரவர்மன் (600-630), மாமல்லனாகிய முதலாம் நரசிம்மவர்மன் (630-668) ஆகியோரின் காலங்களுக்குரியவை. பல்லவர்கள் நான்காம் நூற்றாண்டு முதலாகக் காஞ்சிபுரத்தைக் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். தொண்டைநாடும் தெலுங்கு தேசத்தின் பகுதியான வேங்கிநாடும் அவர்களின் இராச்சியத்தில் இணைந்திருந்தன.
18

பல்லவரிற் சிலர் தெலுங்கு தேசத்திற் கோயில்களை அமைத்தமை பற்றி அவர்களின் பட்டயங்கள் குறிப்பிடுகின்றன. தக்கிணத்தி லிருந்தும் குறிப்பாகத் தெலுங்கு தேசத்தி லிருந்தும் ஏற்பட்ட செல்வாக்கின் பயனாகப் பல்லவரின் ஆட்சியிற் குடபோகங்களை அமைக்கும் முறை தொண்டைநாட்டில் ஏற்பட்டதென்று கருதலாம்.
குடைவரைக் கோயில்கள்
தொண்டை நாட்டில் முதன்முதலாக மகேந்திரவர்மனே குடைவரைக் கோயில் களை அமைப்பித்தான். மண்டகபட்டு என்னுமூரிலுள்ள கோயிலே அவனால் அமைக்கப்பட்ட முதலாவது குடைவரைக் கோயிலாகும். அதிலே மேல்வரும் சமஸ்கிருத மொழியிலமைந்த சாசனங் காணப்படுகின்றது: 1. ஏதத் அநிஷ்டகம் அத்ருமம் - அலோ 2. கம் - அசுதம் விசித்ர சித்தேந 3. நிர்மாயிதந் - ந்குபேண பிரமே 4. ஸ்வர விஷ்ணு - லகூழிதாயதனம்"
“பிரமா, ஈஸ்வரன், விஷ்ணு என்போருக்கு உரியதான லகூழிதாயதனம் என்னும் இந்தக் கோயில் செங்கல், மரம், உலோகம், சுதை என்பன இல்லாது விசித்திர சித்தன் என்னும் அரசனால் அமைக்கப் பட்டுள்ளது”.
மண்டகப்பட்டுக் கோயில் லகூரிதா யதனம் என்னும் பெயர் கொண்டது: அது விசித்திரசித்தன் என்னும் அரசனின் திருப்பணி யானது. அது குடைவரையாக அமைக்கப் பட்டமையாற் புதுமையான கட்டட அமைப் பாகும் என்ற விவரங்கள் சாசனத்தில் அடங்கியுள்ளன. மேலும் செங்கல், மரம்,

Page 27
உலோகம், சுதை என்பவற்றைக் கொண்டு கலப்புக் கட்டடங்களாக ஆலயங்களை அமைத்துக் கொள்வது முன்னைய நாட்டு வழமை என்பதையும் அதனால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. மகேந்திரவர்மன் வேறும் பல குடைவரைகளை அமைத்தான். தமிழகத்தில் மட்டுமன்றிப் பரத கண்டம் முழுவதிலும் மிகக் கூடிய அளவிலான குடைவரைகளை அமைத்த அரசன் என்ற வகையிலே இந்தியக் கட்டடக் கலை வரலாற்றில் அவனுக்குச் சிறப்பிடம் உண்டு.
குடபோகங்களின் பொதுப் பண்புகள்
மகேந்திரவர்மன் காலத்துக் குட போகங்கள் அளவிற் சிறியவை. கட்டடம் சதுரமாகவோ நீள்சதுரமாகவோ காணப்படும். பொதுவாக, அவற்றில் இரண்டு தூண் வரிசைகள் அமைந்திருக்கும். முதலாவது தூண்வரிசை கட்டடத்தின் முகப்பில் அமைந் திருக்கும். அதன் நடுவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூண்கள் காணப்படும் ஓரங் களிற் சுவர்களை ஒட்டிய வண்ணமாக ஒவ் வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அரைத்தூண் இடம்பெறும் தூண்களும் அரைத்தூண்களும் ஒரேவிதமான அமைப்புக் கொண்டவை. முன்புறத்திலுள்ள தூண்வரிசைக்கு நேராக இன்னொரு தூண் வரிசை மண்டபத்தின் நடுவில் அமைந்திருக்கும் கட்டடத்தின் முகப்பு மண்டபம், அர்த்த மண்டபம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கும் விதத்திலே அத்துாண்வரிசை அமைந்திருக்கும்.
மகேந்திரவர்மனின் காலத்துக் கோயில் களிலுள்ள தூண்கள் சராசரி 7 அடி உயரங் கொண்டவை. தூண்களின் மேற்பகுதியும் அடிப்பகுதியும் இரண்டு அடி நீளமான சதுரங்களாயிருக்கும். தூண்களின் நடுப்பகுதி
1.

எண்கோணமாயிருக்கும். சதுரமான பகுதி களிலே தாமரைமலர் வடிவங்கள் அமைந் திருக்கும். காலப்போக்கிலே தூண்களின் மேற்பாகத்திற் போதிகை, உத்திரம் என்னும் அம்சங்கள் இடம்பெற்றன. போதிகை தரங்க மற்றதாய் அமைந்திருக்கும்.
ஆரம்பகாலக் குடைவரைகளிற் கரு வறைகள் பின்சுவரிற் குடையப்பட்டிருக்கும், மண்டகபட்டு, குரங்கணில் முட்டம், மாமண்டூர் ஆகிய விடங்களில் மூன்று கருவறைகள் அமைந்திருக்கின்றன. பல்லாவரத்திலே ஐந்து கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அக் காரணத்தால் அங்குள்ள கோயில் இந் நாட்களிற் பஞ்சபாண்டவர் கோயில் என்றுஞ் சொல்லப்படுகின்றது. மூன்று கருவறைகள் அமைந்த கோயில் கள் மணி டகபட்டு ஆலயத்தைப் போல சிவன், பிரமா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபடுவதற்குரிய கோயில்களாகும். பல்லாவரம், மாமண்டூர் ஆகியவற்றிலுள்ள குடபோகங்களிற் கரு வறையின் அடியில் அதிஷ்டானம் போன்ற அமைப்புக் காணப்படுகின்றது. மாமண்டூரி லுள்ள உருத்திரவாலீஸ்வரம் என்னும் ஆலயத்தில் அதிஷ்டானப் பகுதிகளாக ஜகதி, குமுதம் , கணிடம் , கம்பம் என்பன அமைந்திருக்கின்றன."
குடைவரையின் முகப்பிலும் சில சமயங்களிற் கருவறையின் வாயிற் புறங் களிலும் துவாரபாலகரின் உருவங்கள் காணப்படும். மாமண்டூரிலுள்ள உருத்திர வாலீஸ்வரம் அத்தகைய குடபோகங்களில் ஒன்றாகும். அங்குள்ள மூன்று கருவறை வாயில்களிலும் வாயிற்காவலரின் சிற்பங்கள் உள்ளன. தெற்குக் கருவறையின் வாயிற் காவலரின் உருவங்கள் முனிவர்களின்

Page 28
கோலத்திலே சடையுந் தாடியும் அமைந்து காணப்படுகின்றன. அவர்கள் வஸ்திரம் அணிந்த கோலத்திலும் கைகளிலே தாமரை மலர்களை ஏந்திய நிலையிலுங் காணப்படு கின்றனர். உருவங்கள் திரிபங்கமானவை. பத்திர குண்டலங்களும் முப்புரி நூலும் அவற்றிலே தெரிகின்றன. துவாரபாலகரின் தோற்றத்தின் அடிப்படையில் அவை அமைந் துள்ள கருவறை பிரமதேவனின் பள்ளியாக அமைக்கப்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. வடக்கிலுள்ள வாயிற்காவலரின் உருவங்கள் சற்று வேறுபட்ட கோலத்தில் அமைந்துள்ளன. உருவங்கள் ஸ்தானகக் கோலத்திலே திரிபங்கமாக அமைந்துள்ளன. அவற்றிலே பத்திர குண்டலங்களும் முப்புரி நூலுங் காணப்படுகின்றன. அவற்றின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அவை அமைந்துள்ள கருவறை விஷ்ணுவின் திருப்பள்ளியாக அமைக்கப்பட்டதென்று கருதலாம்.
சில புதிய அம்சங்கள்
மகேந்திரவர்மன் காலத்துக் குடபோகங் களில் வல்லம், தளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களிலுள்ளவை வளர்ச்சி பொருந்திய நிலையிற் காணப்படு கின்றன. கடவுட் படிமங்கள் அமைந்திருப்பது அவற்றின் சிறப்பம்சமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்துச் செங்கற்பட்டுக் கோட்டத்திலே வல்லம் என்னும் ஊரிலே தாழ்வான மலைப் பகுதி ஒன்றில் மகேந்திரவர்மன் காலத்துக்குரிய மூன்று சிறிய குடபோகங்கள் உள்ளன. அவற்றிலே பெரியதான வசந்தீஸ்வரம் என்னும் ஆலயம் மகேந்திரவர்மனின் காலத்துச் சிற்றரச னாகிய வசந்தப் பிரியன் என்பவனின்

மகனாகிய கந்தசேனனின் திருப்பணியாகும். அதிலுள்ள சாசனத்தில் மகேந்திரவர்மனின் விருதுப் பெயர்களான சத்துருமல்லன், குணபரன் என்பவை குறிப்பிடப்படுகின்றன. வசந்தீஸ் வரத்திலுள்ள வாயிற் காவலரின் உருவங்கள் முன்னைய காலத்துக் கோயில்களில் உள்ளவற்றைக் காட்டிலும் சிறிது வேறுபட்டனவாகும். வாயிற் காவலரின் ஆடை அலங்காரங்கள் ஒரே மாதிரியானவை. இருவரதும் வாய்களின் இருபுறங்களிலுங் கொம்பு போன்ற கோரைப் பற்கள் காணப் படுகின்றன. தென்புறத் துவாரபாலகரின் வலக்கை இடுப்பில் ஊன்றிய கோலத்திலும், இடக்கை கதாயுதத்திலே படிந்துள்ள கோலத் திலும் அமைந்துள்ளன. அவர்கள் தங்கள் கால்களில் ஒன்றைக் குறுக்காக வைத்து நின்று கொண்டு கருவறையின் வாயிற்படிகளை நோக்கிய வண்ணமாக உள்ளனர். சடை, கிரீட மகுடம், பத்திர குண்டலம் என்பன அணி கலன்காக அமைந்துள்ளன."
கோயிலின் வெளியே, பாறையிற் சில கோட்டங்கள் குடையப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றிலே சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள சதுர்புஜ விநாயகரின் வடிவம் வனப்பு மிகுந்த கோலத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் வடபுறத்திலுள்ள கோட்டமொன்றில் ஜேஷ்டா தேவியின் உருவம் சிதைவுற்ற நிலையிற் காணப்படுகின்றது.
வல்லத்தில் இரண்டாவது குடபோகம் வசந்தீஸ்வரத்தின் அருகிலே, அதற்குச் சற்றுக் கீழே அமைந்திருக்கின்றது. அது அளவில் மிகவுஞ் சிறியது. முகப்பிலே சுவர்களை யொட்டி இரு அரைத்தூண்கள் மட்டுமே காணப்படுகின்றன. கருவறையின் வெளியே வாயிற்படியின் இரு பக்கங்களிலுந் துவார

Page 29
பாலகர் உருவங்கள் அமைந்துள்ளன. கருவறையில் வள்ளி நாயகி, தேவயானை சமேதராகிய சுப்பிரமணிய தேவரின் படிமம் அமைந்திருக்கின்றது. குடபோகத்திலுள்ள மகேந்திரவர்மன் காலத்துக் கல்வெட்டு அதனைத் தேவகுலம் எனக் குறிப்பிடுகின்றது." வல்லத்திலுள்ள மூன்றாவது குடபோகம் திருமால் கோட்டமாகும். பேரரைசருமகள் கொம்மை தேவகுலம் என்னும் மொழித் தொடர் அதன் முகப்பிலுள்ள சாசனத்திற் காணப்படுகின்றது. அக்குடபோகமும் சுப்பிர மணியர் கோட்டத்தைப் போல அளவிற் சிறியதாகும். இரண்டு அரைத்துாண்கள் மட்டுமே அதன் முகப்பில் அமைந்திருக் கின்றன. கருவறை வாயிலின் இரு பக்கங் களிலும் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. அவை கருவறையின் வாயிலை நோக்காது நேரே பார்க்கும் நிலையில் அமைக்கப் பட்டுள்ளன. துவாரபாலகரின் ஸ்தானகக் கோலம் வளைவிலாத நேராக நிமிர்ந்த வடிவமாகும். முப்புரி நூலினை மார்பினில் அணிந்து, கையினை இடுப்பினில் ஊன்றிய கோலத்தில் இருவருங் காணப்படுகின்றனர்.
கருவறையிலே யூரீதேவி பூதேவி சமேதரான விஷ்ணுவின் படிமக் கோலம் அமைந்திருக்கின்றது. முன்மண்டபத்தின் வடக்குச் சுவரிலே ஸ்தானகக் கோலமான துர்க்கையின் உருவம் உள்ளது. அதில் நான்கு கரங்கள் காணப்படுகின்றன. மார்பினிற் கச்சவடமும் காதுகளிற் பத்திர குண்டலங்களுங் காணப்படுகின்றன.'
Oesigong
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலுள்ள மகேந்திரவாடியில் அமைந்
21

துள்ள குடபோகம் மகேந்திரவர்மன் காலத் திருப்பணியாகும். அது நில மட்டத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள சாசனத்தில் அது மகேந்திர விஷ்ணு கிருஹம் எனக் குறிப்பிடப் படுகின்றது. ஆரம்ப காலத்துக் குடபோகங் களிலுள்ள அம்சங்கள் எல்லாம் இதிற் காணப்படு கின்றன. மகேந்திரவர்மனின் காலத்துச் சாசனம் கோயிலிற் காணப்படு கின்றது. முராரி கோயிலான மகேந்திர விஷ்ணு கிருஹம் மகேந்திரபுரத்திலே, மகேந்திர தடாகத்தின் கரையிலே, மக்கள் கண்டுகளிப்பதற்காகக் குணபரனால் அமைக்கப்பட்டதென்று அச் சாசனங்களிற் குறிப்பிடப்படுகின்றது. கருவறையின் முன் புறத்தில் அதிஷ்டானமும் அரைவட்டப் படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. உபானம், கண்டம், பட்டிகை என்னும் படைகள் அதிஷ் டானத்தில் உள்ளன. கருவறை வாயிலின் இருபக்கங்களிலும் துவார பாலகர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ?
சத்துருமல்லேஸ்வரம் என்னுங் குட போகம் விழுப்புரம் மாவட்டத்துச் செஞ்சி வட்டத்திலுள்ள தளவானூரில் அமைந்திருக் கின்றது. அங்கே மூன்று சாசனங்கள் காணப்படுகின்றன. அவற்றிலே கோயிலின் பெயரும் அதனை உருவாக்கிய அரசனாகிய சத்துரு மல்லனின் பெயருங் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆலயத்தின் முன்பகுதியில் வேலைப்பாடுகள் அமைந்த அதிஷ்டானமும் கபோத நுழைவாயிலும் உள்ளன. கபோத நுழைவாயிலிற் காணப்படும் மகர தோரணம், பிரஸ்தாரம் ஆகியவற்றின் காரணமாக ஆலயம் வனப்புமிக்க கோலத்துடன் விளங்குகின்றது. -

Page 30
லலிதாங்குர பல்லவேஸ்வரம்
சிராமலையில் அமைந்துள்ள லலி தாங்குர பல்லவேஸ்வரம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட குடபோகங்களில் மிக முக்கிய மானதாகும். அதன் வேலைப்பாடுகள் சில குடபோக அமைப்பில் ஏற்பட்ட சில புதிய மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன. அக் கோயிலின் முன்புறத்தில் அதிஷ்டானம் போன்ற அமைப்பும் படிகளுங் காணப் படுகின்றன. மண்டபத்தின் முகப்பில் நான்கு தூண்களும், அதன் நடுவே நான்கு தூண் களும் அமைக்கப்பட்டுள்ளன. வாயிற்புறத்திலே துவாரபாலகரின் உருவங்கள் காணப்படு கின்றன.
தூண்களிலும் வேறிடங்களிலும் மீனுரு வங்களும் யானையின் வடிவங்களும் அமைந் துள்ளமை சிராமலைக் கோயிலின் சிறப்பம்ச மாகும். கருவறைக்கு நேரெதிராக மண்ட பத்தின் மேற்குப் புறத்திலுள்ள அரைத் தூண்களுக்கு நடுவிலுள்ள சுவரில் வனப்பு மிக்க கோலத்திற் சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. போதிகையில் வட்டங்களுக் குள்ளே தாமரை மலர்களைக் கொண்ட அதிஷ்டானம் அமைந்துள்ளது. அதன் மேல மைந்துள்ள பகுதியிற் பூதகணங்கள் சமேதரான கங்காதரரின் வடிவம் அமைந்திருக் கின்றது. கங்கை, முனிவர், வித்யாதரர், தேவதைகள் ஆகியோரின் சிற்பங்கள் வனப்புமிக்க கோலத்துடன் விளங்குகின்றன. ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்கள் கோயிலைப் பற்றிய சில விவரங்களைக் கவிநயத்துடன் வர்ணிக்கின்றன. அவற்றிலே சங்கீர்ணஜாதி, அவனிபாஜனனி, சித்திரகாரப் புலி, லலிதாங்குரன், குணபரன், லகூரிதன், மத்தவிலாசன் முதலிய விருதுப் பெயர்கள்

2
காணப்படுகின்றன. அவை அனைத்தும் மகேந்திரவர்மனுக்குரியவை."
மாமல்லபுரத்துக் குடபோகங்கள்
மாமல்லன் என்னும் நரசிம்மவர்மனாலும் அவனுக்குப் பின் வந்த அரசர் காலங்களிலும் மாமல்லபுரத்திலும் வேறு சில ஊர்களிலுங் குடபோகங்கள் அமைக்கப்பட்டன. மாமல்ல புரத்தில் மட்டும் எல்லாமாகப் பத்துக் குட போகங்கள் உள்ளன. கோனேரி மண்டபம், மகாவராக விஷ்ணுகிருகம், வராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், மும்மூர்த்தி மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம், இராமானுஜ மண்டபம், யாளி மண்டபம் முதலானவை அங்குள்ளன. மாமல்ல புரத்துக் குடபோகங்களிற் சில அளவிற் பெரியன வாகும். அங்குள்ள குட போகங்கள் சிலவற்றின் வேலைப்பாடுகள் முற்றுப்பெறாத நிலையிற் காணப்படுகின்றன.
வேலைப்பாட்டில் மாமல்லபுரத்துக் குடபோகங்கள் மகேந்திரவர்மனின் காலத்துக் கோயில்களைக் காட்டிலும் முன்னேற்ற மானவை. அளவுப் பிரமாணங்களிலும் அவற்றுட் சில சற்றுப் பெரியன வாகக் காணப் படுகின்றன. பொதுவாக அவை 25 அடி நீளமும் 25 அடி அகலமும் 15-20 அடி உயரமுங் கொண்டவை. அவற்றின் தூண்கள் சராசரி 9 அடி உயரமானவை. மாமல்லன் அமைப்பித்த குடைவரைகளில் முகப்பின் மேற்பகுதியிற் கபோத வரிசை காணப்படும். அதன் மேலே சாலை, கூடு என்பனவும் அமைந்திருக்கும். கபோத வரிசையின் மேல் பூதகண வரிசையோ வியாள வரிசையோ அமைக்கப்படவில்லை. கற்றளி விமானங்
களுக்கு முன்னோடியான அமைப்பினை

Page 31
உருவாக்கும் முறையின் ஆரம்ப நிலை யினையும் மாமல்லன் பாணியிலமைந்த குடபோகங்களிற் காண முடிகின்றது. திரிமூர்த்தி குடைவரை அதற்குச் சிறந்ததொரு உதாரண மாகும்."
தூண்களின் அமைப்பினைப் பொறுத்த வரையில் மாமல்லன் பாணியிற் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள மையினை அவதானிக்க முடிகின்றது. அவனது காலம் முதலாகக் கட்டடங்களில் அமைந்திருக்கும் தூண்கள் யாளித் தூண்களாகி விடுகின்றன. அவற்றின் அடிப்பாகத்திலே பின்னங் கால் களை மடித்தும் முன்னங்கால்களை நேராக நிலத்தில் ஊன்றிய கம்பீரமான கோலத்திலும் அமைந்திருக்கும் சிங்க உருவங்கள் காணப் படும். யாளித் தூண் மாமல்லன் காலம் முதலாகப் பல்லவர் கலைப்பாணியின் சிறப்பம்சமாகி விடுகின்றது. அவற்றிலே கலசம், தாடி, கண்டம், கும்பம், பத்மம் ஆகிய அம்சங்கள் அமைக்கப்பட்டிருப்பதாற் தூண்கள் மிகுந்த வனப்புடன் அமைந்துள்ளன.
மாமல்லபுரத்துக் குடபோகங்களில் அருங் கலைவிநோதமான சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வராகாவதாரம், வாமன அவதாரம், சூரியன், துர்க்கை, கஜலகூழ்மி என்போரின் படிமங்கள் மிகுந்த வனப்புக் கொண்டவை. மகிஷாசுர மண்டபம் என்னுங் கோயிலிற் காணப்படும் மகிஷமர்த்தினியின் சிற்பமும் மகாவிஷ்ணு அனந்தசயனமாக அமைந்திருக்கும் வண்ணமும் அற்புதக் கோலமானவை.
கோனேரி மண்டபம்
மாமல்லபுரத்திலுள்ள பிரதானமான குட போகங்களின் பொதுவம்சங்களையும் அவை

ஒவ்வொன்றுக்குமுரிய சிறப்புகளையும் அறிந்து கொள்வதற்கு அவற்றைப் பற்றிய விவரங்களைச் சுருக்கமாக இங்கு குறிப் பிடுவது அவசியமாகும். கோனேரி மண்டபம் என்னுங் குடபோகம் மல்லையின் மேற்குச் சரிவிலே கோனேரி என்னும் ஏரிக்கு எதிரில் அமைந்துள்ளது. அதில் ஐந்து கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குடவரையின் முகப்பின் மேலே கபோதகம், பிரஸ்தரம், சாலைவரி, சாலாசிகரம், அல்பநாசிகம் முதலிய அம்சங்கள் தோரண வளைவு போன்ற கோலத்தில் அமைந்திருக்கின்றன." முகப்பில் நான்கு தூண்களும் இரு பக்கச் சுவர்களை ஒட்டி இரு அரைத் தூண்களும் காணப்படுகின்றன. தூண்களின் அமைப்பு வழமையானது: அரைத் தூண்கள் சதுரமானவை. முகப்பு மண்டபத்திற்கப்பால் வரிசையாக அமைந்துள்ள தூண்களும் அவ்வண்ணமானவை. ஆயினும் இரண்டாவது வரிசையிலுள்ள தூண்கள் வட்டவடிவில் அமைந்துள்ளன. அவற்றின் மேற்பாகத்திற் கலசம், கும்பம் ஆகியன பொருந்திய பத்மபந்தம் பதினாறு பக்கங்களை உடைய தாகச் செதுக்கப் பட்டுள்ளது “இவ்வமைப் புக்கள் மகேந்திரன் கலைப் பாணியிலிருந்து சிறிது சிறிதாக மாமல்லன் கலைப்பாணிக்கு மாறிவரும் நிலையைக் காட்டுகின்றன”."
அர்த்த மண்டபப் பகுதியின் பின்புறச் சுவரில் வரிசையாக ஐந்து கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன் றிலும் அதிஷ்டானமும் வேலைப்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கரு வறையின் வாயில் அமைப்பும் விமானம் போல் விளங்குகின்றது. கால்கள், கூடுகள் என்பவற்றைத் தாங்கி நிற்கும் யாளி

Page 32
வடிவங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கருவறைகளின் வாயிற் புறங்களிலே துவார பாலகரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவிலுள்ள கருவறையின் முன்பமைந்த வாயிற் காவலரின் தோற்றம் அரசரின் கோலம் போன்றது.
வராக மண்டபம்
கணேசரதத்திற்குப் போகும் வழியி லுள்ள வராக மண்டபம் நுட்பமான வேலைப் பாடுகள் அமைந்த குடபோகமாகும். அதன் முன்புறத்தில் அதிஷ்டானமும் அதன் நடுவே கைப்பிடிகளோடு கூடிய மூன்று படிகளும் உள்ளன. கைபிடி யாளியின் வாயிலிருந்து வளைவாக வரும் சுருள் அல்லது துதிக்கை போன்ற அமைப்பில் உள்ளது. முகப்பிலுள்ள தூண்கள் இரண்டும் யாளித் தூண்களாகும். இரண்டடிச் சதுரமான தாமரைப்பீடத்தில் அமைந்திருக்கும் சிங்கம் முன்னங்கால்களை நேராக நிலத்தில் ஊன்றிய கோலத்திலும் பின்னங்கால்களை மடித்து அமர்ந்த நிலை யிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. யாளியின் மேல் எண்கோண வடிவிலே தூண் அமைந் துள்ளது. சுவர்களை ஒட்டியுள்ள அரைத் தூண்களும் அத்தகையனவாகும். அவற்றின் மேலே அகன்ற போதிகை, உத்திரம் என்பன காணப்படுகின்றன. கருவறையின் முன்பாக உத்திரப் பகுதியிற் பூதகண வரிசை காணப்படு கின்றது.
வடக்குச் சுவரிலே வராக அவதாரம் பற்றிய புராணக் கதை சிற்பக் கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது. பூலோகமானது பேரூ ழியில் ஆழ்கடலில் அமிழ்ந்த வேளையில், திருமால் வராகமாகி அதனை மீட்ட செயலை அற்புதக் கோலமான சிற்பமாக இங்கு அமைத்துள்ளனர். பூவராகமூர்த்தியின் வடிவத்

திலமைந்த நான்கு கரங்களில் இரண்டு சங்கு, சக்கரம் என்பவற்றைத் தாங்கியுள்ளன. கீழிரு கரங்களும் நிலமகளைத் தூக்கி வலப் பக்கத்திலே தாங்குங் கோலத்தில் அமைக்கப் பட்டுள்ளன. வராகமூர்த்தியின் வலது கால் ஆதிசேஷனை மிதிக்கும் கோலத்தில் அமைந் துள்ளது. ஒரு புறத்தில் ஆதிசேஷனின் மனைவி திருமாலை வணங்குங் கோலம் தெரிகின்றது. இந்த அதிசயமான சாதனை யைக் கண்டு பேருவகையுடன் தோன்றும் கோலத்திற் சிவபெருமானின் வடிவம் செதுக்கப் பெற்றுள்ளது. சிவனின் முன்பு யாழின் உருவந் தெரிகின்றது. சூரியன், பிரமன், நாரதர் ஆகியோரும் பூவராகரின் சாதனையைத் தரிசிக்கின்றனர்.
உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமர் ஆகியோரின் வடிவங்கள் தென்புறச் சுவரில் அமைந்துள்ளன. பெருமாளின் காலடியிற் சுக்கிராச்சாரியார், மாவலிச்சக்கரவர்த்தி முதலா னோர் காணப்படுகின்றனர். திருவிக்கிரமனின் இருபக்கங்களிலும் சூரிய சந்திரர் காணப் படுகின்றனர். பின்புறச் சுவரின் வடப்பக்கத்துக் கோட்டத்தில் யானைகள் அபிஷேகம் செய் கின்ற கஜலகூழ்மியின் உருவமும் தென் பக்கத்துக் கோட்டத்தில் துர்க்கையின் வடிவமுங் காணப்படுகின்றன. துர்க்கையின் மேலே சிங்கமும் கலைமானுந் தெரிகின்றன. “எருமைத் தலைமீது நிற்கும் துர்க்கையின் இருமரு ங்கிலும் மறவர் இருவர் வாளேந்தி நிற்கின்றனர். அவர்களில் ஒருவர் தனது தலையை வாளால் அரிந்து தேவியின் காலடியில் பலியாகத் தருகின்றார்”.
மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
அதிற் காணப்படும் உன்னதமான சிற்பங்களின் காரணமாக மகிஷாசுர மர்த்தனி

Page 33
மண்டபம் மாமல்லபுரத்துக் குடபோகங்களில் மிகுந்த சிறப்புடையதாக விளங்குகின்றது. அதன் முகப்பில் நான்கு தூண்களும் சுவர்களை ஒட்டி இரண்டு அரைத் தூண்களும் உள்ளன. அரைத்துாண்கள் நாற்கோண வடிவில் அமைந்துள்ளன. அவற்றின் மேற் பகுதியிலே தாமரை, கும்பம், பத்மம் ஆகியன அமைந்துள்ளன.
இக்குடைவரைக் கோயிலில் மூன்று கருவறைகள் உள்ளன. நடுவிலுள்ள கருவறையின் முன்பு, தளவானூர் கோயிலிற் காணப்படுவது போன்ற, சிறிய அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அக்கரு வறையின் பின்புறச் சுவரிற் சோமஸ்கந்த வடிவம் காணப்படு கின்றது.
பிரமன், திருமால் ஆகியோரின் உருவங்கள் அதன் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. வலப்பக்கத்திலே சண்டே சானுக்கிரக மூர்த்தியின் வடிவங் காணப்படு கின்றது. கருவறைகளின் முன்புறத்திலே துவாரபாலகரின் உருவங்கள் காணப்படு கின்றன.
மண்டபத்தின் வடக்குச் சுவரில் மகிஷா மர்த்தினியின் வடிவம் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. வில், வாள், கேடயம், சங்கு, சக்கரம் முதலியவற்றை ஏந்திய கோலத்தில் எட்டுக் கரங்களுடன் துர்க்கையின் வடிவம் அமைந்துள்ளது. அருகிலே வாள், கேடயம் என்பவற்றை ஏந்திய கோலத்திற் பூதகணங்களின் உருவங்கள் தெரிகின்றன. துர்க்கையின் வடிவத்துக்கு மேலே, பின் புறத்தில் வாள், கேடயம் ஆகிய வற்றை ஏந்திய இருவரின் உருவங்களும் சாமரை விசும் இருவரின் உருவங்களும் காணப்படு கின்றன. எதிரிலே கதையினை ஓங்கிய கோலத்தில் மகிஷாசுரனது வடிவம் காணப்படு
25

கின்றது. உக்கிரமான போரிலே மகிஷாசுரன் பட்டு மடிவது நுட்பமான முறையிலே இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் தென்புறச் சுவரிலே திருமாலின் அனந்தசயனக் கோலம் அழகுற அமைந்துள்ளது. பாம்பணை பள்ளியிற் சயனக் கோலமாக அமைந்திருக்கும் பெருமாளின் பாதத்தின் அருகே அஞ்சலிக் கோலத்திலே பூதேவியின் வடிவம் அமைந்துள்ளது. அத்துடன் அங்கே தேவர்களின் உருவங்களும் அசுரர் இருவரின் உருவங்களுந் தெரிகின்றன. மகுடம், குண்டலம், உபவீதம் என்பன திருமாலின் அணிகலன்களாக அமைந் துள்ளன. திருமாலின் வலது கரம் தலையைத் தாங்கிய கோலத்திலும் இடதுகரம் முழந்தாளிற் படிந்துள்ள நிலையிலுங் காணப்படுகின்றன. திருமாலின் வடிவம் சாந்த சொரூபமானது."
மும்முர்த்தியின் குடைவரைக் கோயில்
மும்முர்த்தி குடைவரை என்று சொல்லப் படும் குடபோகம் மாமல்ல புரத்தின் வடக்கிலே மலையின் மேற்குப் பகுதியில் அமைந் துள்ளது. அதில் மூன்று கருவறைகள் மட்டுமே அமைந்துள்ளன. வழமையாக அமைக்கப்படும் முக மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியன அங்கு உருவாக்கப்படவில்லை. கருவறையில் அதிஷ்டானமும் படிக்கட்டுகளும் அமைந்திருக் கின்றன. அதன் முன்புற முகட்டில் ஒரு தள விமானம் போன்ற அமைப்புக் காணப் படுகின்றது. நடுவிலுள்ள கருவறையிலே ஸ்தானகக் கோலத்திலும் சமபங்க நிலையிலும் அமைந்துள்ள சிவபெருமானின் உருவம் அமைந்துள்ளது. அதிலுள்ள நான்கு கரங்களில் மேலே அமைந்துள்ளவை மழு, அக்கமாலை என்பவற்றை ஏந்திய வண்ணமாய் உள்ளன.

Page 34
கீழேயுள்ள கரங்கள் அபயம், கடி என்னும் முத்திரைகளிற் காணப்படுகின்றன. தெற்கி லுள்ள கருவறையின் பின்புறச் சுவரிலே திருமாலின் வடிவம் காணப்படுகின்றது. அது சமபங்க நிலையிலே ஸ்தானகக் கோல மாயுள்ளது. மேலுள்ள இரு கரங்களும் சங்கு, சக்கரம் என்பவற்றை ஏந்திய கோலமானவை கீழ் வலக்கரம் அபயகரமாய் அமைந்துள்ளது. நான்காவது கரம் தொடையிற் படிந்த கோல மானது உருவத்தின் இரு பக்கங்களிலும் மேலே பறக்குங் கணங்களின் வடிவங்கள் தெரிகின்றன. கீழே, இருபுறமும் அடியார்கள் இருவர் இருக்கும் காட்சி தெரிகின்றது.
வடபுறத்துக் கருவறையில் அமைந் துள்ள கடவுட் படிமம் ஸ்தானகக் கோல மானது, அது நான்கு கரங்கள் பொருந்தியது. அக்கமாலை, உபவிதம், சன்னவீரம் என்னும் அணிகலன்கள் உருவத்தில் அமைந்துள்ளன. மேலுள்ள கரங்களில் அக்கமாலை, தாமரை மலர் என்பவற்றின் உருவங்கள் தெரிகின்றன. கீழ்க்கரங்களில் ஒன்று அபயகரமாகும். மற்றைய கரம் தொடையினிற் படிந்த கோலமாய் அமைந்துள்ளது. சன்னவீரம் அமைந்திருப்பதால் இதனைச் சுப்பிரமணிய தேவரின் படிமமென்று சிலர் கருதுவர். ஆயினும், அதனைப் பிரமதேவனின் வடிவமென்றுங் கொள்ளலாம். அவ்வாறாயின் மும்மூர்த்தி குடபோகம் என்னும் பெயர் அதற்கு இயல்பாகவே உரியதான காரணப் பெயராகலாம்.? சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளை வழிபடுவதற்கென்று குடைவரைகளை அமைப்பது பல்லவர்கால வழமை என்பதும் இங்கு கவனித்தற் குரியதாகும்.

பஞ்சபாண்டவர் மண்டபம்
மாமல்லபுரத்துப் பெரும் பாறைச் சிற்பத்திற்கு தெற்கில் அமைந்துள்ள குடைவரை பஞ்சபாண்டவ மண்டபம் என்னும் பெயரால் வழங்கும். அதனைக் கிருஷ்ண மண்டபம் என்றுஞ் சொல்வர். முற்றுப் பெறாத அக்குடைவரை பெரிய கோயிலாக அமை வதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. அதன் முகப்பில் ஆறு தூண்களும் ஓரங்களில் அவற்றைப் போன்ற இரண்டு அரைத் தூண்களும் உள்ளன. அவை யாவும் யாளித் தூண்கள். அவற்றின் மேலே போதிகை, குதிரை வீரரின் சிற்பங்கள், உத்திரம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடற் குரியது. மண்டப முகப்பின் மேல் சாலைகள், கூடுகள் போன்ற அமைப்புகள் செதுக்கப் பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மற்றுமொரு வரிசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடியிலே சிம்ம வடிவங்களைப் பெறாத அத் தூண்கள் எண்முகத் தூண்களாக அமைந் துள்ளன. இக்குடைவரையிற் காணப்படும் ஆயர் பாடிக் காட்சிகளாக அமைந்த சிற்பங்கள் அற்புதக் கோலமானவை. கிருஷ்ணாவதாரம் பற்றிய புராணக் கதைகளை விளக்குமாற் போல் அமைந்த சிற்பங்கள் சமகாலத்துத் தென்னாட்டு ஆயர்களின் தோற்றங்களையும் ஆனிரைகளின் அங்கலக்ஷணங்களையும் உயிரோட்டமுள்ள வகையிலும் ஒப்புயர்வற்ற முறையிலுஞ் சித்திரிக்கின்றன?
பரமேஸ்வர விஷ்னு கிருஹம்
மகாவராக மண்டபம் என்று சொல்லப் படும் பரமேஸ்வர விஷ்ணு கிருஹம் மாமல்ல புரத்து மலைப்பகுதியின் வடக்கு மூலையில் அமைந்திருக்கின்றது. அதனை ஆதிவராகக் குடைவரை என்றுஞ் சொல்வர். வனப்பு மிக்க சிற்பங்கள் பலவற்றைக் கொண்ட இக்குடை வரையின் அமைப்பில் முன்னேற்றமான

Page 35
அம்சங்கள் சில காணப்படுகின்றன. சிறு கோயில் போன்ற அமைப்பொன்று மண்ட பத்தின் மேலே வனப்புமிக்க கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் முகப் பிலே சிற்ப வேலைப்பாடுகள் அழகு மிக்க கோலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. கபோதம், நாசிகை, கூடு, சாலை முதலியவற்றோடு கோபுர வடிவங்களும் செதுக்கப் பட்டுள்ளன. முகப்பில் மேற்கு நோக்கிய நான்கு யாளித் தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. சுவரோடு பொருந்திய இரு அணைவுத் துாண்களும் யாளித் தூண்களாகும். அவற்றிலொன்று தெற்கு நோக்கியது. மற்றது வடக்கு நோக்கியது. மண்டபத்தின் நடுவில் வழமைக்கு மாறாக இரு வட்டத் தூண்கள் மட்டுமே உள்ளன. அவற்றுக்கு நேராகச் சுவரோடு பொருந்திய அரைத் தூண்கள் பக்கத்துக்கு ஒன்றாக அமைந்துள்ளன.
அதிஷ்டானம் போன்ற அமைப்பின் மேலே கருவறை உருவாக்கப்பட்டுள்ளது. அரைத் தூண்களை ஒத்த கால்களும் உத்திரம் போன்ற அமைப்புகளுங் காணப்படுகின்றன. கருவறையின் முன்பு, இரு பக்கங்களிலும், வாயிற் காவலர் வடிவங்கள் காணப் படுகின்றன. கரு வறையில் வராகமூர்த்தியின் கதைச் சிற்பம் உள்ளது.
வடக்குச் சுவரில் மூன்று கோட்டங்கள் அமைந்துள்ளன. நான்கு கரங்கள் பொருந்திய மகாவிஷ்ணுவின் ஸ்தானகக் கோலம் நடுக் கோட்டத்தில் அமைந்திருக்கின்றது. அதன் கீழே ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொருவராக அடியார்கள் இருவர் முழங்காலை நிலத்தில் ஊன்றிய நிலையிற் காணப்படுகின்றனர்.
27

அதன் வடக்குப் புறத்தில் ஆதிசேஷனின் உருவம் நாகக் குடையோடும் மலர் ஏந்திய கோலத்திலுங் காணப்படுகின்றது. தென்புறச் சுவரின் நடுக்கோட்டத்தில் ஹரிஹரனின் ஸ்தானகக் கோலம் அமைந்துள்ளது. அதன் இடப்பக்கம் ஈஸ்வரனின் அம்சமானது. வலப் பக்கம் பெருமாளின் அம்சமானது இறைவனை அடியார்கள். இருவர் அருகில் நின்று வணங்கும் கோலம் தெரிகின்றது.
இவற்றையடுத்து இரு பக்கங்களிலுள்ள சுவர்களிலும் அளவிற் பெரியனவான சிற்பங்கள் காணப் படுகின்றன. வடக்குப் புறத்தில், வராக மண்டபத்தில் உள்ளதைப் போன்று, கஜலக்ஷமியின் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. திருமகளின் பாதங்கள் தாமரை மலர் மேல் ஊன்றிய கோலத்தில் உள்ளன. தேவர்களும் யானைகளும் இரு புறத்திலும் நின்ற வண்ணம் திருமகளை அபிஷேகம் பண்ணும் காட்சி மிகுந்த வனப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் எதிர்ப்புறத்திலே தெற்குச் சுவரிலே மகிஷமர்த்தினியின் போர்க் கோலம் வடிக்கப்பட்டுள்ளது. அம்மனின் கோலம் ரெளத்திர பாவமானது. எட்டுக் கரங்கள் பொருந்தியது; கரங்கள் படைக்கலங்கள் ஏந்திய கோலமானவை. அம்மனின் வடிவம் மகிஷாசுரனின் தலைமேலே காலூன்றிய நிலையிற் காணப்படுகின்றது. மேலே வலப் பக்கத்திற் சிங்க உருவமும் இடப்பக்கத்திலே மானின் தலையுந் தெரிகின்றன. அடியார்கள் இருவர் முழங்காலைத் தரையில் ஊன்றிய கோலத்திலே இறைவியை வணங்கும் காட்சியுந் தெரிகின்றது.
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அரசன் ஒருவனின் உருவம் வடக்குச் சுவரிலே

Page 36
உருவாக்கப்பட்டுள்ளது. இரு புறத்திலும் வஸ்திராபரணதாரிகளான தேவியர் இருவரின் வடிவங்கள் உள்ளன. மேலே, உத்திரத்திலுள்ள சாசனத்திற் சிம்மவிஷ்ணு என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது. அதன் எதிர்ப் புறத்திலே தெற்குச் சுவரிலே, வேறொரு அரசனின் உருவம் நின்ற கோலத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. நின்ற நிலையில் வலது கையினாற் கருவறையினைச் சுட்டிக்காட்டும் பாவனையில் உருவம் அமைந்துள்ளது. அரசனின் கையைப்பிடித்த கோலத்தில் இடப் பக்கத்திலே தேவி ஒருத்தியின் வடிவங் காணப்படுகின்றது. அவளுக்கு அருகிலே அமைந்துள்ள பெண்ணின் வடிவம் மற்றொரு தேவியினைக் குறிப்பதாகலாம். அச்சிற்பங் களுக்கு மேலே எழுதப்பட்டுள்ள சாசனத்தில் மகேந்திரவர்மன் என்னும் பெயர் காணப்படு கின்றது?
மகா மண்டபத்தின் வடக்குச் சுவரிலே கங்காதரரின் வடிவம் நான்கு கரங்கள் பொருந்திய வண்ணமாக அமைக்கப் பட்டுள்ளது. தெற்குச் சுவரில் ஸ்தானகக் கோலத்திலும் சமபங்க நிலையிலும் தாமரை மலர் மேல் அமைந்த பிரமனின் உருவம் காணப்படுகின்றது. நான்முகனின் முகங்களில் மூன்று மட்டுமே தெரியக்கூடிய விதத்தில் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இராமானுஜ மண்டபம்
பரமேஸ்வரவர்மனின் காலத்துக்குரிய தான இராமானுஜ மண்டபம் மகிஷாசுர மர்த்தினி குடபோகத்திற்கு அப்பால், மலைப் பாறையின் கிழக்குப் பக்கத்தில் அமைந்திருக் கின்றது. நீள் சதுரமான அம்மண்டபத்தின் முன்புறத்தில் இரண்டு தூண்களும் ஓரங்களில் இரண்டு அணைவுத் தூண்களும் உள்ளன.

மூன்று கருவறைகள் பின்புறச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் முன்புறத்தில் அதிஷ்டானம், போதிகை, உத்திரம் போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன. யானை முகங் கொண்ட பூத கணமொன்றும் நந்தி முகங்கொண்ட பூத கணமொன்றும் உத்திரங் களிடையில் அமைந்துள்ள வடிவங்களிலே காணப்படுகின்றன.
சோமஸ்கந்தரின் வடிவம் கருவறையின் உட்புறச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ளது. குடைகள் பெற்ற முருகனுடன் அம்மையும் அப்பரும் வீற்றிருக்கும் கோலம் தெரிகின்றது. ஆதியில் இம்மண்டபம் சிவன் கோயிலாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் உருத்திரனைப் புகழ்ந்துரைக்கும் பல்லவர் காலச் சாசன மொன்று காணப்பட்டுள்ளது. இம்மண்ட பத்திலுள்ள பெரும்பாலான சிற்பங்கள் சிதைந்துவிட்டன.
2. மலைதளிகள்
பல்லவர் காலக் கட்டடக்கலை வளர்ச் சியின் இரண்டாவது கட்டத்தை மலை தளிகளிற் காணலாம். மலைகளை மேலிருந்து கீழாக வெட்டியும் செதுக்கியும் அமைக்கப் படுபவை மலைதளிகளாகும். மாமல்லபுரத்தில் இரதம் என்று சொல்லப்படும் ஒன்பது மலைதளிகள் உள்ளன. அவை மாமல்லன் காலம் முதலாகப் பரமேஸ்வரவர்மனின் ஆட்சி முடியும் வரையுள்ள காலத்தில் அமைக்கப் பெற்றவை. திரெளபதி (பிடாரி), அர்ச் சுனன், வீமன், தர்மராசர், (நகுல) சகாதேவர் என்போரின் பெயர்களால் வழங்குந் தளிகள் தெற்கிலும் கணேசரதம், வடக்குப் பிடாரித்தளி, வலையான் குட்டை என்னுந் தளிகள் அவற்றுக்கு வடக்கிலும் இரு தொகுதிகளாக அமைந்துள்ளன.

Page 37
மாமல்லபுரத்து மலைதளிகள் அளவுப் பிரமாணங்களிலும் கட்டு மானத்திலும் வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. அவற்றள் மிகப் பெரிய தளியான அவனி பாஜன பல்லவேஸ்வரம் என்னும் தருமராசர் தளி 42 அடி நீளமும் 32 அடி அகலமும் 40 அடி உயரமுங் கொண்ட மிதமான அள வுடைய விமான மாகும்.* மிகச் சிறியதான திரெளபதி ரதம் என்னும் பிடாரிதளி ஒரு சிறிய கோட்டம் போல அமைக்கப்பட்டுள்ளது. தரும ராசர் தளி முத்தள விமானமாகும். கொற்றவை தளியும் வீம தளியும் ஒருதள விமானங்கள், ഞ്ഞങ്ങuങ്ങഖ இருதள விமானங்களாய் அமைந் துள்ளன. வலையான் குட்டைத் தளியும் வடக்குப் பிடாரி தளியும் நாகர விமானங்கள், அருச்சுன தளி, தருமராசர்தளி, தெற்குப் பிடாரி தளி என்பவை கலப்புத் திராவிட விமானங்கள், வீம தளியும் கணேசர் தளியும் தூய சாலை விமானங்கள், நகுல சகாதேவர் தளி
தூங்கானைமாட விமானமாகும்."
மாமல்லபுரத்து மலைதளிகள் பல வற்றில் அதிஷ்டானம் அமைக்கப்பட வில்லை. அங்குள்ள ஆறு விமானங்கள் அத்தகையன வாகும். அருச்சுனத்தளி, கொற்றவைத்தளி ஆகிய இரண்டும் ஒரே துணைத் தளத்தின் மேலும் ஒரேவிதமான தாங்கு தளத்துடனும் அமைக்கப்பட்டுள்ளன. தருமராசர் தளி கபோதபந்த தாங்குதளத்துடன் அமைக்கப் பட்டுள்ளது. கணேசர் தளி, அருச்சுன தளி, வலை யான்குட்டைத் தளி, பிடாரி தளிகள் ஆகியவற்றில் முகமண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. தருமராசர் தளி, நகுல சகாதேவர் தனி ஆகியவற்றில் முன்றில்கள் உருவாகி யுள்ளன.*

ஏழு மலைத்தளிகளில் அரைத் தூண்கள் பொருந்திய சுவரமைப்புகள் காணப்படு கின்றன. தருமராசர் தளி, வீமதளி ஆகிய வற்றில் அவை காணப்படவில்லை. கொற் றவை தளியிலும் வடக்குப் பிடாரி தளியிலும் மகர தோரணங்கள் அமைந்துள்ள கோட்டங்கள் சுவர்களிற் குடையப்பட்டுள்ளன. கொற் றவைத் தளிக் கோட்டங்களில் மகிஷாசுர மர்த்தினியின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிடாரி தளிக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. அருச்சுன தளியின் சுவர் பக்கத் திற்கு மூன்று பிதுக்கங்களைப் பெற்றுள்ளது. பிதுக்கம், ஒடுக்கம் ஆகிய இரண்டிலும் கோட்டங்கள் குடையப்பட்டுள்ளன. கணேச ரதத்திலும் இதே போன்ற அமைப்புகள் காணப் படுகின்றன.*
தருமராசர் தளி, வீமதளி ஆகிய வற்றின் பின்னாற் கருவறையை வலம் வருவதற்கான சுற்றுப் பாதைகள் வெட்டப் பட்டு, வேலைப்பாடுகள் நிறைவு பெறாத நிலையில் உள்ளன. எல்லாத் தளிகளினதும் கூரை யுறுப்புக்கள் ஒரே மாதிரியானவை. ஆயினும் அலங்கார வேலைப்பாடுகளில் அவற்றிடையே வேற்றுமைகள் காணப்படுகின்றன. அர்ச்சுன தளி, கொற்றவை தளி ஆகியவற்றின் வலபியிற் பூதமாலை அமைந்துள்ளது. கணேசர் தளியில் முன்மண்டபத்து வலபியில் மட்டுமே பூதமாலை தெரிகின்றது. தருமராசர் தளியிற் கணதோரணமும் வலையான் குட்டைத் தளியில் அம்சமாலையும் உள்ளன?
அருச்சுன தளி, கொற்றவைத் தளி, நகுல சகாதேவர் தளி, கணேச தளி ஆகிய வற்றில் மட்டுமே ஆதிதளக் கருவறை அமைந் துள்ளது. அம்மனதும் அடியார்களதும் கணங்களதும் உருவங்கள் கொற்றவைத்தளிக் கருவறையிற் காணப்படுகின்றன. தளிகளின்

Page 38
ஆதிதள அமைப்புகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. வீமதளியின் ஆரச்சுவர்ப் பகுதி ஒவ்வொன்றிலும் இவ்விரு பஞ்சரங்கள் அமைந்துள்ளன. தர்மராசர் தளியின் முகமண்டப ஆரத்திற் பஞ்சரங்களும் கர்ண சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எல்லாத் தளிகளிலும் முகமண்டப ஆரம் ஆதிதள ஆரத்தோடு இணைக்கப் பட்டுள்ளது. கணேசர் தளியில் ஆதிதள மேற்கு ஆரம் சாலை களின்றிக் காட்டப்பட்டுள்ளது.*
தருமராசர் தளியிலும் கணேசர் தளியிலும் இரண்டாந் தள அரமியச் சுவர்கள் பிதுக்கங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. தரும ராசர் தளியின் பிதுக்க ஒடுக்கங்களிற் சிற்பங்களோடு கூடிய கோட்டங்கள் உள்ளன. பிடாரித் தளிகளின் சுவர்களிலுள்ள கர்ண பத்திகளிற் சிற்பங்கள் அடங்கிய கோட்டங்கள் உள்ளன. அவற்றின் சாலைப் பத்திக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. அருச்சுன தளியும் இவ்வண்ணமானது. நகுல சகாதேவ தளியின் கீழ்த்தளச் சுவர்களிலும் அரமியச் சுவர்களிலும் நான்முக அரைத் தூண்கள் கோட்டங்களின்றி அமைக்கப் பட்டுள்ளன. வலையான் குட்டைத் தளி நீங்கலான எல்லாத் தளிகளிலும் வலபி அமைந்துள்ளது. வலபிகளிற் சில, அம்ச மாலையும் வேறு சில பூதமாலையுங் கொண்டுள்ளன; இன்னுஞ் சில வெறுமையாக உள்ளன.
இரண்டாம் தள ஆரம் வடக்குப் பிடாரித் தளி தவிர ஏனைய இருதளத் தளி களில் இடம் பெற்றுள்ளது. வலையன் குட்டைத் தளி, தருமராசர் தளி போன்ற வற்றில் இது நான்கு அங்க ஆரமாகவும், தெற்குப் பிடாரித் தளி,
3(

அர்ச்சுன தளி, நகுல சகாதேவர் தளி, கணேசர் தளி ஆகியவற்றில் மூன்றங்க ஆரமாகவும் அமைந்துள்ளது. நகுல சகாதேவர் தளியில் இவ் ஆரத்தின் தென்பகுதியிற் கர்ண கூடங்களுக்கு இடைப்பட்ட நிலையிற் சாலை களுக்கு மாற்றாகப் பஞ்சரங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இப்பஞ் சரங்களும் கூடங்கள் போலவே வேதிகை யிலுள்ளன. கணேசர் தளியின் தென், வடப் பக்கங்களில் இரண்டாம் தள ஆரம் இடைச் சாலைகளின் றிக் கூடங்கள் மட்டுமே பெற்றமைந்துள்ளது. 29
கொற்றவைத் தளி நீங்கலாகவுள்ள மலைதளிகள் எல்லாவற்றிலும் கிரீவம் அமைக்கப்பட்டுள்ளது. மிக உயர்ந்த கீரிவம் வீம தளியிலும் கணேசர் தளியிலுங் காணப்படு கின்றன. கழுத்துப் பகுதியான கிரீவம் நாகரத் தளிகளில் நான்முகமாவும் திராவிட தளிகளில் எண்முகமாவும் ஒரே அளவுகளில் அமைந் திருக்கும். சாலைத் தளிகளில் கிரீவத்தின் முகங்கள் இருவேறு அளவுகளில் அமைந் திருக்கும். வேதிகை ஒரங்களில் நான்முக அரைத்துாண்கள் ஒட்டிய சுவர்ப்பகுதி, வாஜனம், வலபி என்பவற்றைக் கொண் டிருக்கும். கிரீவத்தின் வலபியில் நகுல சகாதேவர் தளியில் மட்டுமே அம்சமாலை காணப்படுகின்றது. தருமராசர் தளி, பிடாரி தளிகள் என்பவற்றிலே பூதமாலை அமைக்கப் பட்டுள்ளது.
சிகரம்
நாகரம், திராவிடம், சாலை, தூங்கானை
என்னும் வடிவங்களிற் பல்லவர்களின் மலை
தளிச் சிகரங்கள் அமைந்திருக்கின்றன.

Page 39
தருமராசர் தளி, அருச்சுன தளி, தெற்குப் பிடாரி தளி என்பவற்றின் சிகரம் திராவிடமாகும் வீமதளி, கணேசர் தளி என்பவை சாலை சிகரத்துடன் காணப்படுகின்றன. நகுல சகா தேவ தளியில் சிகரம் தூங்கானை மாடமாக விளங்குகின்றது. சிகரம், கிரீவம் ஆகிய இரண்டையும் உட்படுத்தி நாசிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாகர, திராவிட சிகரங்களின் நாசிகைகள் ஒரே விதமானவை. அவற்றிலே செவ்வகக் கீழ்ப்பட்டி, தலைப்போடு கூடிய வளை வான மேற்கூரை என்பன அமைந்துள்ளன. நாசிகைகளின் தலைப்பும் வளைவான மேற் கூரையும் கொடிக் கருக்குகள், பூப்பதக்கங்கள். இலைப் பின்னல் போன்ற பலவகையான அலங்காரங்களைப் பெற்றுள்ளன?
சாலை துTங்கானை மாடத் தளி நாசிகைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. தூங்கானை மாடத்திற் பின்புறம் ஒரு பெரு நாசிகையும் பக்கப் பகுதிகளிற் கிழக்கிலும் மேற்கிலும் இரு நாசிகைகளும் காட்டப் பட்டுள்ளன. கிழக்கு மேற்குப் பெரு நாசிகை களின் இருபுறத்தும் இரு சிறு நாசிகைகள், சற்றுத் தள்ளிய நிலையில் வெட்டப்பட்டுள்ளன. இந்நாசிகைகள் அனைத்துமே கீழுள்ள செவ்வகப் பகுதியில் அணைவு அரைத் தூண்களையும் இடைப்பட்ட சுவர்ப் பகுதி யையும் பெற்றுள்ளன. கணேச தளியின் சிறு நாசிகைகள் இதே அமைப்புடன் வேதிகைப் பகுதியும் கொண்டுள்ளன. இத்தளியின் பெரு நாசிகை பஞ்சரம் கபோதமும் கிரீவமும் பெற்று அமைந்துள்ளது. கணேசத் தளி, நாசிகைத் தலைப்புகள் பிற நாசிகைகளில் இருப்பது போலல்லாது சூலத்தலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வீம தளியின் அனைத்து நாசிகைகளும் கீழ்ப்பகுதியில் அரைத்தூண்கள்
31

அணைந்த சுவரும் சுவரில் கோட்டமும் கொண்டுள்ளன. கோட்டங்கள் பலவற்றிலே சிற்பங்கள் அமைந்துள்ளன. கிரீவ நாசிகை களைப் பொறுத்தவரையில் பல்லவர் காலத்தில் அவை முதன் முதலாக வீமதளியில் இடம்பெற்றன. அதன் பெரு நாசிகைகள் கபோதம், பூமிதேசம், கிரீவம் என்பவற்றுடன் பஞ்சரங்கள் போல விளங்குகின்றன."
தூங்கானை விமானமாகிய நகுல - சகாதேவர் தளி தமிழகத்தின் முதலாவது தூய திராவிட விமானம் என்ற வகையிற் சிறப்பிடம் பெறுகின்றது. அதன் கிரீவததிலும் சிகரத்தின் எல்லாப் பகுதிகளிலும் தூண்கள் அமைக்கப்
பட்டுள்ளன.
வேசர விமானம் போலமைந்த கணேச தளியின் வடக்கு, தெற்கு முகங்கள் அலங் கரிக்கப்பட்ட முகப் பட்டியோடு கூடிய நீள் வட்டக் குழிவு கொண்டுள்ளன. அக்குழிவின் மேற் பகுதியிலே தாவு யாளிகளோடு கூடிய மதலைத் தோரணங்கள் அமைந்துள்ளன. நடுவிலே வேசரமான சிறிய விமானமொன்று வடிவமைக்கப் பெற்றுள்ளது. வீம தளிச் சிகரத்தின் வட, தென் குழிவுகளும் முகப்பட்டி மதலைத் தோரணங் கொண்டுள்ளன. குழிவு களின் நடுவில் நாகர தளமும் வேசர சிகரமும் கொண்ட கலப்பு விமானங்கள் செதுக்கப்
UL66T60T.'
3. கற்றளிகள்
கற்றளிகளோடு திராவிடமான கட்டு மானத்தில் ஒரு புதிய சகாப்தம் தோன்றியது. திராவிட கலைப்பாணியின் வரலாற்றின் உன்னதமான வளர்ச்சிக் கட்டம் அவற்றோடு ஆரம்பமாகியதென்று கருதலாம். மிக உயர்ந்த விமானங்கள், அலங்கார வேலைப்பாடுகள்

Page 40
பொருந்திய மண்டபங்கள், மிக விசாலமான சுற்றுப் பிராகாரங்கள் முதலிய அம்சங்களோடு கூடிய மிகப் பெருங் கோயில் களை அமைத்துக்கொள்ள முடிந்தது. ராஜ சிம்மனின் காலத்திலே (695-722) கற்றளிகளைக் கட்டும் வழக்கம் தொடங்கியது. அவனது காலத்துக் கட்டடங்கள் மாமல்லபுரம், பனைமலை, காஞ்சி புரம் ஆகிய ஊர்களிற் காணப்படுகின்றன. அவற்றிலே சில சிறு தளிகள் வேறு சில பெருங்கோயில்கள்.
உலக்னேஸ்வரம், முகுந்த நாயனார் கோயில்
மாமல்லபுரத்து உலக்ணேஸ்வரம், முகுந்த நாயனார் கோயில் என்பனவும் காஞ்சிபுரத்து இறவாதான் ஈஸ்வரம், பிறவாதான ஈஸ்வரம், மகேந்திர வர்மேஸ்வரம் ஆகியனவும் திருக்கழுக் குன்றத்து வேத கிரீஸ்வரம் என்னுங் கோயிலும் ராஜசிம்மன் காலத்துச் சிறு தளிகளாகும். மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில்களும் பனைமலைக் கோயிலும் காஞ்சியிலுள்ள ராஜசிம்மேஸ் வரமும் அவனது காலத்துப் பெருங் கோயில் களாகும். .
சிறு தளிகளில் உலக்ணேஸ்வரம் ஒரு தள விமானமும் சிறு முக மண்டபமுங் கொண்ட கோயிலாகும். அதன் கீழ்ப் பாகத்தில் உபானம், அதிஷ்டானம் என்னும் பகுதிகள் அமைந்துள்ளன. இறையகத்தின் ஒவ்வொரு பக்கச் சுவரிலும் சிற்பங்கள் அமைந்துள்ள ஆழமான கோட்டங்கள் அமைந்திருக்கின்றன. க்வர்த் திருப்பம் ஒவ்வொன்றிலும் தாவுசிம்மத் தூண் அமைந்திருக்கின்றது. தாவுசிம்மத் தூண்களுக்கும் சுவரின் நடுவிலமைந்த கோட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பஞ்சரங்கள் காணப்படுகின்றன. கோட்டத்தின்

ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு பஞ்சரம் உள்ளது. பஞ்சரங்களுக்கேற்ப அதிஷ்டானம் பிதுக்கம் பெற்றுள்ளது. அதிஷ்டானத்திலிருந்து கபோதம் வரை அமைந்துள்ள பஞ்சரங்கள் நிஷ்கராந்த பஞ்சரங்கள் எனப்படும். பஞ்சரங்கள் ஒவ்வொன்றிலும் சிற்பங்கள் அமைந்துள்ளன. இவ்வகையான பஞ்சரங்கள் முகமண்டபத்து மேற்குச் சுவரிலுங் காணப்படு கின்றன. பல்லவர் காலத் தளிகளில் உலக் ணேஸ்வரம், காஞ்சிபுரத்து மகேந்திரவர் மேஸ்வரம் ஆகியவற்றில் மட்டும் திஷ்கராத்த பஞ்சரங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.*
இருதள திராவிட விமானமாகிய முகுந்த நாயனார் கோயிலின் கட்டுமானம் உலக்ணேஸ் வரத்தைப் போன்றதாகும். அதன் கர்ப்பகிருகச் சுவரிலே சோமாஸ் கந்த வடிவம் செதுக்கப் பெற்றுள்ளது. வீமத்தளியிற் போல அதன் ஆரச்சுவரில் இரட்டை நாசிக் கோட்டங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் தளத்து அரமியச் சுவர்களின் நடுவிற் கோட்டமும் அதனிரு பக்கங்களிலும் பஞ்சரங்களும்
அமைந்துள்ளன.
இறவாதான் ஈஸ்வரம்
ஒருதள விமானமாகிய இறவாதான் ஈஸ்வரம் பாதபந்த அதிஷ்டானம் பெற்றுள்ளது. அதன் ஆதிதளச் சுவர்களின் ஒரங்களிலே தாவுயாளித் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுவரும் இரண்டு சதுர வடிவமான தூண்களால் மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரத் தூண்களுக்கும் சதுரத் தூண் களுக்கும் இடையிலுள்ள கர்ணபத்திகளிற் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை
வாயிற்காவலர் சிற்பங்களுடன் விளங்கு

Page 41
கின்றன. “வாயிற் காவலர் சிற்பங்களுக்கு மேல் இக்கோட்டம் தடுக்கப்பட்டு மேலும் ஒரு சிற்பம் பெற்றுள்ளமை செதுக்குத் தளிகளிற் காணப்படாத புதிய உத்தியாகும். நான்முகத் தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப் பகுதி, சாலைப் பத்தியில் கோட்டம் பெற்று அணைவுத் தூண்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இதன் இரு புறத்தும் உள்ள சுவர்ப் பகுதிகளும் புறத்திற்கொரு கோட்டம் பெற்றுச் சிற்பங்களைக் கொண்டுள்ளன”*
இறவாதான் ஈஸ்வரத்தில் மகர தோர ணங்கள் சிறப்புற்று விளங்குகின்றன. அவை விரிவாகவும் மிகுந்த வனப்புடனும் செதுக்கப் பட்டுள்ளன. அவற்றின் நெற்றிக் குழிவுச் சிற்பங்கள் செம்மையாக அமைக்கப் பட்டுள்ளன. ஆதிதள உறுப்பு களான கூடம், சாலை என்பன ஆறங்க அமைப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாந்தள அரமியக் கபோதம் வரை நீளும் ஆறங்க ஆரமானது ராஜசிம்மன் காலத்திலே கோயிற் கட்டுமானங்களில் ஏற்பட்ட புதுமையாகும். இரண்டாந்தள அரமியத்திற் சுவர்ப் பஞ்சரங்கள் அமைந்துள்ளன. பெருநாசிகைகளிற் சிற்பங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத் தக்கவொரு அம்சமாகும்.
மாமல்லபுரத்துக் கற்றளிகள்
மாமல்லபுரத்திலே, கடற்கரையிலுள்ள கோயில் வளாகத்திலே மூன்று கோயில்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பது மிக அண்மைக் காலத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி களினாலே தெளிவாகியுள்ளது. அவற்றுள் ஆதியான கோயில் நடுவில் அமைந்திருக்கும் தரபதி சிம்ம விஷ்ணு கிருகம் என்பதாகும். அது கருவறையும் முக மண்டபமுங் கொண்ட

மண்டபத் தளியாக அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதி குடை வரையாகும்; மற்றப் பகுதி கட்டுமானமாகும். பாதபந்த அதிஷ டானத்துடன் அமைந்துள்ள அதன் இறை யகத்தில் மகாவிஷ்ணுவின் சயனக் கோலம் அமைந்திருக்கின்றது. அதனால் இக்கோயில் ஜல சயனம் என்னும் பெயரால் வழங்கியது.
நரசிம்ம விஷ்ணு கிருகத்தின் கிழக்கில் அமைந்திருப்பது நான்குதள விமானமாகிய கூடித்திரிய சிம்மேஸ்வரம், முத்தள விமான மான ராஜசிம்மேஸ்வரம் மேற்கில் அமைந் துள்ளது. இம் மூன்று தளிகளும் பிராகாரம் ஒன்றின் நடுவில் அமைந்திருந்தன. பிராகாரச் சுவர்கள் சிதைவுற்ற நிலையிற் காணப் படுகின்றன. மேற்கில் அமைந்திருந்த கோபுர வாசலின் அழிபாடுகள் இன்றுங் காணப் படுகின்றன. ராஜசிமேஸ்வரத்தின் முன் புறத்திலே அமைந்திருந்த மண்டபங்களின் அடித் தளங்கள் தெரிகின்றன.
ராஜசிம்மேஸ்வரம், கூடித்திரிய சிம் மேஸ்வரம் ஆகிய இரண்டும் பத்மபந்தத் தளத்தின் மேல் அமைந்த திராவிட விமானங் களாகும். கட்டுமானத்தில் இருதளிகளும் ஒரே மாதிரியானவை. இரண்டும் முதலாவது தளத்திலும் மேற்றளத்திலும் ஆரமின்றி அமைக்கப்பட்டவை. ராஜசிம்மேஸ்வரத்தின் கிழக்குச் சுவர் நரபதிசிம்ம விஷ்ணுகிருகத்தின் மேற்குச் சுவராகும். கூடித்திரிய சிம்மேஸ் வரத்தின் ஆதிதளக் கூரைமேல் நான்கு மூலைகளிலும் அமர்ந்திருக்கும் நிலையிற் சிங்க வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சிம்மேஸ்வரங்களினதும் மேற்றளக் கூரையின் மேற் சங்கூதும் கணங்கள் உள்ளன. கூடித்திரிய சிம்மேஸ் வரத்தின் இரண்டாம் தள ஆரத்திலுள்ள பஞ்சரங்களின் மேலுள்ள

Page 42
வளைவுக் கூடுகளிற் சிற்பங்கள் காணப்படு கின்றன. அதே போல, ஆரச்சாலைகளின் அல்பநாசிகைகளிலும் சிற்பங்கள் அமைந் துள்ளன. ஆரநாசிகை கூடுகளிலே காளைத் தலைகளுக்குப் பதிலாக கந்தருவத் தலை களும் வேறு வடிவங்களும் இடம் பெற்றுள்ளன.
மாமல்லபுரத்துச் சிம்மேஸ்வரங்கள் ஒவ்வொன்றினதும் பிற்கவரிலே சோமாஸ் கந்தரின் வடிவம் வனப்பு மிகுந்த கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாரா லிங்கம் ஒன்றும் கூடித்திரிய சிம்மேஸ் வரத்திற் கூடுதலாகக் காணப்படுகின்றது. கூடித்திரிய சிம்மேஸ் வரத்தைச் சுற்றிப் பிராகாரம் ஒன்றுள்ளது. அதன் சுவரின் உட்புறத்திலே அலங்கார வேலைப்பாடான சிற்பங்கள் அமைக்கப் பட்டிருந்தன. சுற்றுமதிலின் வெளியே வெறுமையான கோட்டங்கள் காணப்படு கின்றன.*
மாமல்லபுரத்து விமானங்கள் இரண்டும் மிகுந்த வனப்புடன் அமைந் துள்ளன. சில அம்சங்களில் அவற்றின் சிறப்பினை வேறு விமானங்களிற் காண முடியவில்லை. மேற்றளங்கள் ஆரமின்றி, அகலங் குறைந்தும் போதிய உயரங் கொண்டும் பொருத்தமான அளவுடைய இடைவெளிகளோடும் அமைந் துள்ளன. கிரீவம் குறைந்த சுற்றளவும், கூடிய உயரமுங் கொண்டுள்ளமையால் விமானம் கூம்பிய வடிவத்தோடும் வனப்புமிக்க கோலத் துடனும் விளங்குகின்றது.
பனைமலைக் கோயில்
கலப்புத் திராவிட விமானமான பனை
மலைக் கோயில் ராஜசிம்ம பல்லவன்
காலத்தில் அமைக்கப்பெற்ற தளிகளில்

ஒன்றாகும் அது நாகர தளங்களையும் திராவிட கிரீவ சிகரத்தையுங் கொண்டுள்ளது. இக் கோயிலின் கட்டுமானம் முன்னைய கோயில மைப்புக் களிலிருந்து வேறுபட்டதாகும் அதன் ஆதி தளச் சாலைப்பகுதிகள் கர்ணபகுதி களிலிருந்து விடுபட்டு நாற்புறத்தும் பிதுக்கமாகி யுள்ளன. தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் அவை தனித் திருமுன்களாய் அமைந்துள்ளன. இச்சாலைப் பகுதி கிழக்கிலே கர்ப்பக் கிருகத்துக்கு முன் சிறு மண்டபம் போல் அமைந்துள்ளது. அதன் சுவர்களில் பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் சிற்பங்கள் அமைந் திருக்கின்றன. அந்தப் பகுதி ஓர் அர்த்த மண்டபம் போலக் காட்சியளிக்கின்றது. ஆலயத்தின் அதிஷ்டானத்திலுள்ள ஜகதி மாமல்லபுரத்துச் சிம்மேஸ் வரங்களிற் போலப் பெருந் தாமரையாக விளங்குகின்றது. கண்டப் பகுதியின் திருப்புமுனைகளில் யானைத் தலை வடிவங்கள் காணப்டுகின்றன.
பனைமலைக் கோயிலின் சாலைத் திருமுன்களின் சுவர்களில் மகர தோரணங்கள் பொருந்திய வெற்றுக் கோட்டங்கள் அமைந் திருக்கின்றன. திரு முன்களின் கூரைகளின் மேல் ஆர உறுப்புகளாக ஆறங்கச் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இரண்டாம் தளத்திலுள்ள அரமியத்துச் சாலைப் பகுதிகள் பிதுக்கம் பெற்றுள்ளன. அவற்றின் மேல் வேதிகையற்ற ஆரம் அமைந்துள்ளது. இறையகத்தில் மூலவராக இலிங்கம் அமைந் துள்ளது. சோமாஸ் கந்தரின் வடிவம் பின் சுவரில் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்துப் பெரிய கற்றளி
பல்லவர் காலக் கலையின் உன்னத
மான கோலத்தைக் காஞ்சிபுரத்திலுள்ள
கைலாசநாதர் கோயிலிற் காணலாம். அது

Page 43
ராஜசிம்மேஸ்வரம் என்னும் பெயரால் வழங்கியது. சாசனங்கள் சில அதனைப் பெரிய கற்றளி என்றும் குறிப்பிடுகின்றன. பனைமலைக் கோயிலின் விரிவாக்கமான காஞ்சிபுரத்துப் பெரியகோயில் மாமல்ல புரத்துச் சிம்மேஸ்வரங்களைக் காட்டிலும் அளவிற் பெரியது. வனப்பில் மிகவும் முன்னே ற்றமானது. அதன் சிறப்புகளை இரா.கலைக் கோவன் மேல்வருமாறு வர்ணிக்கின்றார்.
காஞ்சிபுரம் ராஜசிம்மேஸ்வரம் பல்லவர் காலத்தெழுந்த முதற் சாந்தார விமானம், தமிழ் நாட்டின் இரண்டு அங்கலாயங்களுள் முதலாவது முதன் மையானது. திருச்சுற்று முழுவதும் இருதள விமானங்களாற் சூழப்பெற்ற ஒரே விமானம் பல்லவர் காலத்தெழுந்த இரண்டு நாற்றள விமானங்களுள் முதலாவது முதன்மையானது. பல்லவர் தளிகளிலே அதிக அளவிற் சிற்பங் களைக் கொண்டமைந்த ஒரே கோயில், பல சைவ இறைக் கோலங்கள் முதன் முதலாக ராஜசிம்மேஸ்வரத்திலே தான் முகம் காட்டுகின்றன. சுவர்ப் பிரிப்பு, சுவரிற் கோட்ட அமைப்பு, கோட்ட ங்களின் உட்பகுப்பு, அலங்களிப்பு, தோர ணங்கள் எனப் பல்லவர் காலத் திறம் உச்சத்தில் மிளிரும் இடம் ராஜசிம் மேஸ்வரம், கற்றளியின் முன் கற்றளியுடன் இணைக்கப் படாமல் முழுமையான அளவில் மண்டப மொன்று காணப்படுவதும் ராஜசிம் மேஸ்வரத்திலே தான். பல்வேறு வடிவங்களிற் கிரந்த எழுத்துக்களிற் கல்வெட்டுகள் காணப்படும் ஒரே கோயில் இதுதான். வரலாற்றுப் பின்னணியோடு கூடிய கட்டட, சிற்ப,
35

ஒவிய, இலக்கியஞ் சார்ந்த விரிவான கள ஆய்வுகள் தமிழ் நாட்டுக் கலை வரலாற்றில் இத்தளியின் சரியான இருப்பிடத்தை நிர்ணயிக்க உதவும்.*
கட்டுமானத்தில் அங்காலயமான ராஜசிம்மேஸ்வரத்தின் சாலைப்பகுதிகளும் கர்ண பத்திகளும் பிதுக்கமாகி, விமானத்தின் துணைத்திருமுன்களாய் அமைந்துள்ளன. நடுவிலமைந்த விமானத்தைச் சுற்றி, அதனை ஒட்டி அரவணைத்த கோலத்தில் ஏழு ஏகதள விமானங்கள் உருவாகியுள்ளன. கிழக்குச் சாலைப்பத்தி கருவறையின் முகமண்டபம் போல அமைந்துள்ளது. நடுவிலுள்ள விமானத்தின் அதிஷ்டானமும் கூரை யுறுப்புகளும் தொடர்பறாது துணை விமானங்களை அரவணைத்துக் கொள்வதால் ஆலயத்தின் புறத் தோற்றம் வனப்பு மிகுந்த கோலத்துடன் விளங்குகின்றது."
விமானத்தின் அதிஷ்டானமும் அதன் துணைத் தளமான உபானமும் கருங்கல்லால் அமைந்தவை. கோயிலின் ஏனைய பாகங்கள் மணற்கல்லால் ஆனவை. அதிஷ்டானத்தின் ஜகதி சிறப்பான அம்சங்களைப் பெற்றுள்ளது. அதன் நடுப்பகுதியிலே கணவடிவங்கள் காணப்படுகின்றன. முகப்பிலும் மேற் பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் விளிம்புகள் உள்ளன. அதன் திருப்பு முனைகளில் யானை முகங்களும் கண்டபாதங்களில் யானை முகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
விமானங்களின் சுவர்ப்பகுதிகள் எண்கோணத் தாவுயாளித் தூண்களால் அணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள கோட்டங்கள் சதுரத் தூண்களால் அரவணை க்கப்பட்டுள்ளன. கோட்டங்கள் எல்லாவற்றிலும்

Page 44
வனப்பு மிக்க சிற்பங்கள் அமைந்துள்ளன. ஏகதள விமானங்கள் யாவும் ஆறங்க ஆர உறுப்புக்களைக் கொண்டுள்ளன. நடுவில மைந்த விமானத்தின் கருவறையைச் சுற்றி இரு சுவர்களும் அவற்றிற்கிடையே சுற்று வழியுங்காணப்படுகின்றன. சுவர்களுக்கு இடைப்பட்ட சுற்றுவழியின் கூரைப்பகுதி பலகைக் கற்களால் மூடப்பட்டுள்ளது. கருவறையில் லிங்கமும் அதன் பின் சுவரிலே சோமாஸ்கந்த வடிவமுங் காணப்படுகின்றன. ஏகதள விமான ஆர உறுப்புக்கள் பெரு விமானத்தின் ஆரத் தோடு இணைந்து கொள்ளும் வண்ணமாக இடைப்பட்ட பகுதிகளிற் சாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
நான்கு தளங்கள் கொண்ட நடுவிலுள்ள விமானத்தின் இரண்டாம், மூன்றாம் தளங்களில் மேலும் ஆரங்கள் அமைந்துள்ளன. இரண்டாம் தள ஆரத்திற் பஞ்சரங்கள் காணப்படுகின்றன. கோயிற் கட்டுமானங்களைப் பொறுத்த வரையில் அது ஒரு புதுமையாகும். நான்காம் தளத்தின் மேல் நந்தி உருவங்கள் அமைந்துள்ளன. கிரீவமும் சிகரமும் திராவிடமாய் அமைந்துள்ளன. பெரு நாசிகைகளிற் கிழக்கிலே சிவபெருமான் தெற்கிலே தகூழிணா மூர்த்தி, மேற்கிலே விஷ்ணு, வடக்கிற் பிரமன் என்ற வண்ணமாகக் கடவுட் படிமங்கள் அமைந்துள்ளன. துணை விமானங்கள் அனைத்திலும் அளவிற் பெரிய, வனப்புமிக்க படிமங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
விமானத்தின் முன்னால் அமைந்துள்ள ராஜசிம்ம மண்டபத்திலே, மேற்கிலுள்ளதைத் தவிர்ந்த அதன் பக்கங்களிலே, முகப்புகள் அமைந்துள்ளன. அம்முகப்புகளின் ஒவ்வொரு திசையிலும் இவ்விரு சதுரத்தூண்கள் காணப்
3.

படுகின்றன. அவற்றிலே சுவர்களை ஒட்டிய இவ் விரு அரைத் துாணி களும் இடம் பெற்றுள்ளன. அரைத்தூண்கள் அணைந்த கோட்டங்களிலே கடவுட் படிமங்களும் வாயிற்காவலர் வடிவங்களும் உள்ளன."
சாந்தார விமானம், மண்டபம், சுற்றாலை, பரிவாரதேவர் கோட்டங்கள், நந்திபீடம், கொடித்தம்பம், கோபுரம், பிரகாரம் ஆகிய தென்னிந்தியக் கோயிலமைப்பின் பிரதான அம்சங்கள் யாவும் பெரிய கற்றளியில் உள்ளமை குறிப்பிடற்குரியது. ராஜசிம்மேஸ்வரத்தின் கோபுர வாசலோடு பொருந்தியுள்ள கட்டடம் மகேந்திரவர்ம ஈஸ்வரம் என்பதாகும். அது மூன்றாம் மகேந்திர வர்மனால் அமைக்கப் பெற்றது. ராஜசிம் மேஸ்வரத்தின் திருச்சுற்றாலையிலே பிராகாரச் சுவரோடு அணைந்த வண்ணமாக 58 சிறு விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிலே சில திராவிட விமானங்களாக அமைந்தவை. வேறு சில சாலை விமானங்கள் அவற்றில் வனப்புமிக்க சிற்பங்களும் ஒவியங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் சைவ புராணங்களிலே சொல்லப்படும் கதைகளையும் சமய தத்துவங்களையும் விளக்கும் பான்மையில் அமைந்தவை. இந்து கலாசாரத்தின் அம்சங்களை அடையாள பூர்வமாகவும் கலைவனப்புடனும் பிரதிபலிக்கும் நிறுவனமாக ராஜசிம்மேஸ்வரம் அதன் நிர்மாணகாரனால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி மீது படையெடுத்துச் சென்ற சாளுக்கிய வேந்தன் இரண்டாம் விக்கிரமா தித்தனைக் கைலாசநாதர் கோயில் பொதுங் கவர்ந்தது. அதன் மண்டபத்திலுள்ள கன்னட மொழிக் கல்வெட்டு வாதாபி வேந்தன் கோயி லுக்குச் செய்த சிறப்புக்களை வர்ணிக்கின்றது.

Page 45
சாளுக்கியரின் பிரதானமான நகரங்களில் ஒன்றான பட்டதகல்லில் அமைந்த விருபாக்ஷர் ஆலயம் அமைப்பிலும் வேலைப்பாட்டிலும் காஞ்சிபுரத்துப் பெரிய கற்றளியினை ஒத்திருக்கின்றது. சிற்ப சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம், சங்கீதம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பல்லவர் அவற்றின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் ஆதரவு புரிந்தனர். பல்லவர் காலத்து நுண் கலைகளின் உன்னதமான வளர்ச்சிக் கோலத்தைப் பிரதிபலிக்கும் ஆலயமாகப் பெரிய கற்றளி விளங்குகின்றது. அதன் முதன்மை விமானத்திலும் துணை விமானங்களிலும் சுற்றாலை விமானங்களிலும் கவர்ச்சி மிக்க சிற்பங்களும் ஓவியங்களும் வடிவமை க்கப்பட்டன.
“பல்வேறு அளவிலான சிற்பங்கள் ராஜசிம்மேஸ்வரத்தில் இடம்பெற்றுள்ளன. ஜகதியில் காணப்படும் பூதவரி, கோட்டங் களையொட்டிச் சுவர்ப் பிரிப்புக்களுக்குள் செதுக்கப்பட்டிருக்கும் தொடர்புடைய சிற்றுருவச் சிற்பங்கள் ஒருவகை. பல்லவத் தளிகளுள் ராஜசிம் மேசுவர ஜகதியில் காணப்படுவது போல் தெளிவான தீர்க்கமான பூதகணங்களை வேறெங்கும் காணமுடிவ தில்லை. இங்குள்ள கணங்கள் அனைத்தும் பல்வேறு செயற்பாடுகளில் சித்திரிக்க ப்பட்டுள்ளன. அக்காலத்து வழக்கிலிருந்த போர்க் கருவிகளையும் ஆடற் கோலங்க ளையும் பல்வேறு விதமான மெய்ப்பா டுகளையும் இச்சிற்ப வரியிற் காணமு டிகிறது”.*
சைவ சமயம் சார்ந்த சிந்தனை களைப் பிரதிபலிக்கும் திருவுருவங்கள் பல முதன் முதலாகப் பெரிய கற்றளியிலே தோன்று கின்றன. கஜசம்கார மூர்த்தி, கிராதார்ச்சுனர்,

பிரம்ம சிரச்சேத மூர்த்தி, கலியாணசுந்தரர், கெளரி பிரசாதர், உமாகேஸ்வரர், வைரவர், பிரம்ம - இந்திர - காம அனுக்கிரக மூர்த்திகள் முதலானோரின் வடிவங்கள் குறிப்பிடத்த க்கவை. கணேசரின் வடிவம் கோட்டச் சிற்பமாக அமைந்துள்ளது. அதனருகிலே மலரேந்திய கோலத்திற் போற்றுகின்ற அடியார்களின் உருவங்கள் தெரிகின்றன. ஜேஷ்டா தேவியின் உருவமும் முதன் முதலாக இங்குதான் காணப்படுகின்றது."
ராஜசிம்மேஸ்வரத்தில் இசை வாணரின் உருவங்கள் அமைந்துள்ளமை குறிப்பிட ற்குரிய ஒன்றாகும். கின்னரர், இசைப் பாணர், குழல், முழவு, வீணை முதலியவற்றைக் கைகளில் ஏந்தியுள்ள கலைஞர் போன்றோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழல், முழவு முதலிய கருவிகளின் வடிவங்கள் தமிழகத்துச் சிற்பக்கலை வரலாற்றில் முதன்முதலாகப் பெரிய கற்றளியிலேதான் காணப்படுகின்றன. ஒரு முக முழவுகள், இரட்டை முழவுகள், குட முழவுகள் என மூன்று வகையான முழவுகள் சிற்பக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல 6 605UT60T வீணைகளின் வடிவங்களும் ராஜசிம்மேஸ்வரத்தில் உள்ளன."
நாயன் மார்களின் பாடல்களில் வர்ணிக்கப்படும் கடவுளின் பலவகையான கோலங்கள் பெரிய கற்றளியில் வனப்பு மிகுந்த சிற்பங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளன. அங்கு சிவனது நடனக் கோலங்களான விருச்சிகம், ஊர்த்வஜானு, குஞ்சிதம், அர்த்த ஸ்வஸ்திகம் முதலிய கரணங்களில் அமைந்த நடனக் கோலங்கள் பலவற்றைக் காணலாம். ஊர்த்துவ தாண்டவக் கோலம் ஆலயத்தின் தென் புறத்திலுள்ள

Page 46
துணை விமானம் ஒன்றிலே மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலக் கோயில்களிற் காணப்படும் ஊர்த்துவ தாண்டவக் கோலங்களில் இதுவே மிகச் சிறப்பானது. ஆடலுக்கு ஒத்திசைவாகக் கணங்கள் குடமுழவு, சிரட்டை, கின்னரி ஆகியவற்றை ஒலிக்கின்றனர். ஆனந்த நடனம் புரியும் சிவனின் இடப்பக்கத்திலே, அந்தக் காட்சியைக் கண்டு வியப்புடன் களிக்கும் உமா தேவியாரின் வடிவம் அமைந்துள்ளது. “ஆடலின் உத்வேகத்தில் இறைவனின் அத்தனை கைகளும் இயக்கத்தில் உள்ளன. இடைக்கட்டும் அதன் முடிச்சுத் தொங்கல்களும் அலைபாய்கின்றன. சில கைகள் கருவிக ளேந்தியும், சில கைகள் முத்திரைகள் காட்டியும் ஆடற் பொருளுணர்த்த, வலக்கால் மார்பின் முன்னாக நெடிதுயர்ந்து பாதத்தை வலப்புறமாகத் திருப்பியுள்ளது"
சிவபெருமானின் குஞ்சித நடனக் கோலத்தை விளக்கும் நான்கு சிற்பங்கள்
கர்ப்பக் கிருகத்துச் சுவர்களில் உள்ளன.
குஞ்சித நடனக் கோலத்தில் வலக்கரமும் காலும் வளைந்து குஞ்சிதமாயிருக்கும். இடக்கரமும் காலும் உத்தானமாய் உயர்த்திய கோலத்தில் இருக்கும். இந்த வடிவத்திற் சிவனுக்கு எட்டுக் கரங்கள் உள்ளன. வலப்பக்கத்து மேற்கரம் அரவின் வாலைப் பிடித்த வண்ணமானது. இரண்டாவது கரம் டமருகம் ஏந்தியுள்ளது. மூன்றாவது கரம் அபிநயஹஸ்தமாக வளைந்துள்ளது. நான்காவது கரம் குஞ்சிதமாய் உள்ளது. இடப்புறத்து மேற்கரம் அக்கினி குண்டத்தை ஏந்தி யுள்ளது. இரண்டாவது கரம் பற்றியுள்ள உருவத்தை அடையாளங் காணமுடிய வில்லை. மூன்றாவது கரம் திரிபதாகமானது.
38

நான்காவது கரம் நேராக உயர்ந்து ஜடாமகுடத்தின் முடியைத் தொடுகின்றது. திரிசூலம், பரசு ஆகிய சின்னங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
சிவனுடைய தாண்டவக் கோலம் பதுமயிடத்தில் அமைந்துள்ளது. சிவனுக்குக் கீழே மூன்று கணங்கள் ஆர்ப்பரித்து ஆடும் காட்சி தெரிகின்றது. இடப் பக்கத்திலுள்ள மாடத்திற் பார்வதியின் ஆசனக் கோலம் அமைந்துள்ளது. மாடத்தின் கீழ் நந்தியின் வடிவமுண்டு. வலப்புறத்து மாடத்தில் நடனக் கோலம் ஒன்று காணப்படுகின்றது. அதன் கீழே குழல், புல்லாங்குழல் ஆகியவற்றை வாசிக்கின்ற கோலத்திலுள்ள கணங்கள் இரண்டின் உருவங்கள் உள்ளன. மகேந்திர வர்மனால் அமைக்கப்பட்ட மகேந்திர வர்மேஸ்வரத்தில், அந்தராளத்தின் தெற்குச் சுவரிற் சிவனின் குஞ்சித நடனக் கோலம் மிகுந்த வனப் புடன் அமைந்துள்ளது. இப்படிமங்களில் அசைந்தாடும் ஆடையும் ஆரம், வளையல், தோள்வலயம் போன்ற ஆபரணங்களும் உருவங்களும் அழ கூட்டும் வண்ணமாக அமைக்கப் பட்டுள்ளன.
பெரிய கற்றளியின் கர்ப்பகிருகத்தின் பின் புறச் சுவரிற் சிவனின் உருவம் லலாடதிலகம் என்னும் நடனத்தை ஆடும் கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது காலொன்றைத் தூக்கி விருச்சிக வடிவில் வளைத்து, விரல் நெற்றியிலே திலகம் இடுமாப்போல் முட்டும் வகையில் ஆடப்படும் கடினமான நடனமாகும். இந்தக் கோலத்திற் சிவனுடைய இடது கால் வளைவு பெறாது, நிலத்தை ஊன்றிய நிலையில் உள்ளது. உருவத்தில் எட்டுக் கரங்கள் உள்ளன. வலப்புறத்து மேற் கரத்தில் அக்ஷமாலை உண்டு. இருகரங்கள் பதாகை போல

Page 47
அமைந்துள்ளன. நான்காவது கரம் வாளைப் பிடித்த வண்ணமாய் உள்ளது. இடது பக்கத்து மேற்கரம் வலயத்தை ஏந்தியுள்ளது. இரண்டாவது கரத்தில் அக்கினி குண்டந் தெரிகின்றது. மூன்றாவது கரம் பாசம் ஏந்திய கோலமானது. நான்காவது கரம் அருகினிலே நின்றாடும் நந்தியின் தலைமேல் ஊன்றிய
வண்ணமானது.*
மாதங்கேஸ்வரம், முக்தேஸ்வரம்
கட்டுமானத்தைப் பொறுத்தவரையிற் காஞ்சிபுரத்து மாதங்கேஸ்வரம், முக்தேஸ் வரம் என்பவற்றிடையே பிரதானமான அம்சங்களில் பொதுப் பண்புகள் காணப்படுகின்றன. மாதங் கேஸ்வரம் ராஜசிம்மனின் காலத்துத் திருப்பணியாகும். முக்தேஸ்வரம் காலத்தாற் பிற்பட்டது. அது இரண்டாம் நந்திவர்மனின் காலத்தில் அமைக்கப்பட்டது. அவை இரண்டும் மேற்கு நோக்கிய கோயில்கள், முத்தள விமானங்களோடு கூடியவை. அவை இரண்டும் முகப்புடன் கூடிய முக மண்டபமும் கலப்பான வேசர விமானமுங் கொண்டவை. இரண்டும் உபானம், அதிஷ்டானம் என்பவ ற்றோடு அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றின் விமானத்திலும் மண்டபத்திலும் சிற்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. முக மண்டபத்தின் உட்சுவர்களிலுஞ் சிற்பங்கள் பல காணப்படுகின்றன. இக்கோயில்களின் ஆதி தள, இரண்டாந்தள ஆரங்களிற் பஞ்சரங்கள் அமைக்கப்படவில்லை.
மாமல்லபுரத்து கணேசர் ரதத்தில் உள்ளவாறு போல முக்தேஸ் வரத்து முகமண்டபத்திற் செவ்வக ஸ்படிதங்கள் அமைந்துள்ளன. விமானத்தின் இரண் டாந்தள ஆரச்சுவரிலும் இவ்வாறான ஸ்படிதங்கள் உள்ளன. இரண்டாந்தள அரமியத்திற்

சுவர்ப்பஞ்சரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதங் கேஸ் வரத்தில் இவ் விதமான அமைப்புகள் காணப்படவில்லை. கிரீவ வேதிகையின் நான்கு மூலைகளிலும் நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு கோயில்களின் விமானங்களிலுள்ள பெரு நாசிகைகளிற் கடவுட் படிமங்கள் அமைந் துள்ளன."
பரமேஸ்வர விண்ணகரம்
பல்லவர் கலைப்பாணியின் வளர்ச் சியின் இறுதியான கட்டத்தைப் பரமேஸ்வர விண்ணகரம் என்னுங் காஞ்சி புரத்து வைகுந்தப் பெருமாள் கோயிலிற் காணலாம். பல்லவர் காலத்துக் கோயில் களில் அதுவே மிகப் பெரியதாகும். அது 90 அடி நீளமும் அகலமுங் கொண்ட சதுரமான அமைப்பாகும். அதன் விமானதளம் 47 அடிச் சதுரமாகும். அது 60 அடி உயரமானது. இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் கோயிலான பரமேஸ்வர விண்ணகரத்தின் பிரதான பாகங்கள் பொருத்தமான வகையிலும் கலைவனப்புப் பொலிந்த வண்ணமாகவும் இணைக்கப்பட்டுள்ளன.*
இக்கோயில் விமானம், முக மண்டபம், பிரதசுஷிண பாதை, திருச்சுற்று மாளிகை, சுற்றுமதில், கோபுரம் முதலிய பதிகளோடு அமைந்த பேரமைப்பாகும். இக்கோயில் விமானம் நான்கு தளங்களோடு அமைந்து ள்ளது. விமான தளம் ஒவ்வொன்றின் நடுவிலே தேவகோட்டங்களும் அவற்றைச் சுற்றி வலம் வரும் பாதைகளும் உள்ளன. முதல் மூன்று தளங்களில் முறையே விஷ்ணுவின் ஸ்தானக, ஆசன, சயனக் கோலங்கள் வடிவமைக்க ப்பட்டுள்ளன. நான்காவது வெற்றுத்தளமாகும். அதன் மேல் திராவிடமான கிரீவமும் சிகரமும் அமைந்துள்ளன."

Page 48
ஆதிதளமான கருவறையைச் சுற்றி மூன்று சுவர்கள் அமைந்துள்ளன. வெளிச் சுவர் ஆதிதளத்துடன் முடிகின்றது. இடைச் சுவர் இரண்டாந் தளத்து வெளிச்சுவராக வளர்ந்து அடித்தளத்துடன் முடிகின்றது. உட்சுவர் மூன்றாந் தளக் கருவறையின் புறச்சுவராக உயர்ந்து அடித்தளத்துடன் நிறைவு பெறுகி ன்றது. முதலாந்தள ஆரம் வெளிச்சுவர்க் கூரை மேல் அமர, இரண்டாந்தள ஆரம் இடைச் சுவர்க் கூரை மேல் அமைந்துள்ளது. மூன்றாந் தள ஆரம் உட் சுவர்க் கூரை மேல் அமைந்துள்ளது.
ஆதிதளம் அதிஷ்டானத்திலிருந்து கூரை வரை பிதுக்கங்களைக் கொண்டுள்ளது. நடுவிலுள்ள அகலமான பிதுக்கம் பத்ரசாலைப் பிதுக்கமாகி ஆறங்க சாலையை ஆர உறுப்பாகக் கொண்டுள்ளது. பத்ரசாலைப் பத்திக்கும் கர்ணபத்திக்கும் இடைப்பட்ட சுவர்ப் பகுதியிற் சுவர்ப் பஞ்சரங்கள் பக்கத்திற்கு இரண்டாக அமைந்துள்ளன. அவற்றின் நடுவிலே கோட்டம் காணப்படுகின்றது. முதலாவது தள ஆரம் பத்ரசாலை, பக்கச் சாலைகள், கர்ண கூடங்கள் என்பவற்றோடு அமைந்துள்ளது. இரண்டாம் தளத்திலுள்ள நான்கு பிதுக்கங்களும் அரைத் தூண் களால் அணைக்கப்பட்டுள்ளன. நான்கு பிதுக்க ங்களிலும் சிற்பங்களோடு கூடிய கோட்டங்கள் உள்ளன. அவற்றின் ஆரமாக இரண்டு சாலைகளும் கர்ண கூடங்களும் அமைந்து ள்ளன. மூன்றாம் தளம் அரைத் தூண்கள் அணைந்துள்ள மூன்று வெற்றுப் பிதுக்க ங்களைக் கொண்டுள்ளது. அதன் ஆரம் கூடங்களும் சாலையுமாக அமைந்துள்ளது. நான்காவது தளத்தில் நடுக் கோட்டமும் சுவர்ப்பஞ்சரங்களும் அமைந்துள்ளன. கிரீவ

வேதிகையிற் சிம்மங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன.
திருச்சுற்று மாளிகையின் முகப்பில் நான்கு திசைகளிலும் சிம்மத்துாண்கள் அமைந்துள்ளன. அதன் சுவரின் உட்புறத்தில் பல்லவர் வரலாறு தொடர்பான ஐதீகங்கள் சிற்பக் கோலத்திற் காட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. தமக்கு வேண்டி யவாறு பத்திகள் பிரித்துச் சுவர்ப்பகுதியைச் சதுரங்களாகவும் செவ்வகங்களாகவும் வரையறை செய்து பல்லவரின் வம்சாவ ளியினையும் சமகாலத்துச் சம்பவங்களையும் சிற்பக் கோலத்தில் வடிவமைத்துள்ளனர். சிற்பக் காட்சிகளை விளக்கும் வகையிற் சுருக்கமான வாசகங்கள் சாசனங்களாக எழுதப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். அரசமரமொன்றின் வரலாற்றம்சங்களை ஒரு தொடர்கதையாகச் சிற்பக் கோலத்தில் பரதகண்டம் முழுவதிலும் வேறெங்குமே காணமுடியாது.
தென்னிந்தியக் கலைவரலாற்றைப் பொறுத்தவரையிற் பரமேஸ்வர விண்ண கரம் பல சிறப்பம்சங்களின் நிலைக்களமாக விளங்குகின்றது. பிற்காலத் தென்னிந்தியக் கோயில்களிற் சிறப்பம்சமாக விளங்கும் திருச் சுற்று மாளிகை அதிலே தான் முதன்முதலாக இடம்பெறுகின்றது. முத்தளக் கருவறையும் முதன் முதலாக அதிலே அமைக்கப்பட்டுள்ளது. திருமாலின் பல வகையான திருக்கோலங்களும் முதன் முதலாக அதிலே சிற்பக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலே காணப்படும் மிகப் பழமையான மானிட குஞ்சிதக் கரணம் இவ்வாலயத்திற் காணப் படுகின்றது. அர்த்த மண்டபத் தூணொன்றின் மாலைத் தொங்கலிற் பெண்ணொருவர் ஆடும்

Page 49
குஞ்சிதக் கரணம் சிற்பக் கோலத்தில் அமைந்துள்ளது.
உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில்
புராதன காலத்துப் பிரமதேசங்களிற் சிறப்புமிக்கதான உத்தரமேரூரில் அமைந்துள்ள சுந்தரவரதப் பெருமாள் கோயில் நந்திவர்மன் கலைப்பாணியிலுள்ள கோயில்களிற் குறிப் பிடத்தக்கவொன்றாகும். அது காஞ்சிபுரத்து வைகுந்தப் பெருமாள் கோயிலைப் போன்ற முத்தளக் கருவறை கொண்ட கட்டுமானமாகும். ராஜசிம்மன் காலத்துப் பளைமலைக் கோயிலிற் போலத் தெற்கிலும் வடக்கிலும் மேற்கிலுமுள்ள அதன் பத்ரசாலைப் பகுதி களிலே துணை விமானங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
பரமேஸ் வரப் பெருந்தச் சனால் நிர்மாணஞ் செய்யப்பட்ட சுந்தரவரதப் பெருமாள் கோயில் கருங்கல், செங்கல், சுதை என்பன கொண்டு உருவாக்கப்பட்ட கலப்புக் கட்டுமானமாகும். அதன் உபான, அதிஷ்டானப் பகுதிகள் கருங்கல் வேலைப் பாடாகும். துணைத்தளத் திருப்பங்களில் அமர்ந்த வண்ணம் ஒரு காலை உயர்த்திய கோலத்திற் காணப்படும் சிம்ம வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. திருப்பங்களிலுள்ள ஜகதி மகாபத்மமாகி முனைப்புகளிற் சக்கரவாகப் பறவைகளின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. குமுதம் இப்பகுதியிலே தாமரை இதழ்களால் அரவணைக்கப்பட்ட கடகாவிருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலயச் சுவர்களின் அணைவுத் தூண்கள் நான்முகமானவை. ஆறங்கமான ஆரத்துக்கும் இரண்டாந் தள அரமியத்திற்கும் இடையில் வலம் வரும் வழி காணப்படு

கின்றது. ஆதி தளம் போல் இரண்டாந் தள அரமியம் வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளிற் பிதுக்கமும், கிழக்கிலே முகமண்டபமுங் கொண்டுள்ளது. மூன்றாந் தளத்திலே திருமாலின் சயனக் கோலம் அமைந்துள்ளது. அத்தளத்தின் மேல் வேசர கிரீவமும் சிகரமும் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பட்ரூர்க் கைலாசநாதர் கோயில் திருப்பட்ரூர்க் கைலாசநாதர் கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பல்லவர் காலச் சாந்தார விமானமாகும். விமானத்தின் பிரதசுஷிண பாதையைச் சுற்றிச் சுவர் அமைந் திருக்கின்றது. சாந்தார விமானத்தின் ஆதி தளமான கர்ப்பக் கிருகமும் அதன் மேலமைந்த மூன்று தளங்களும் நாகரமாயுள்ளன. கிரீவமும் சிகரமும் திராவிடமானவை. ஆதிதளச் சுவர் களில் ஒவ்வொன்றும் ஐந்து பிதுக்கங்களைக் கொண்டுள்ளது. ஒரங்களிலுள்ள கர்ண பத்திகளும் நடுவிலுள்ள பெருஞ்சாலைப் பத்திகளும் இடையிலுள்ள சாலைப்பத்திகளும் கோட்டங்களைக் கொண்டுள்ளன. சதுர வடி விலமைந்த தூண்கள் அவற்றை அரவணைத்த வண்ணமாயுள்ளன. முதலாந் தளத்து ஆறங்க ஆரமானது இடைவழி ஏற்படக் கூடிய வகையில் இரண்டாந் தள அரமியத்திலிருந்து விலகி அமைந்திருக்கின்றது.
கோயிலைப் போல தாமரை வரி அணைவு கொண்ட கடகாவிருத்தமான குமுதம் கொண்டுள்ளது. ஆலயச் சுவர்களில் அழகிய சிற்பங்கள் அடங்கிய கோட்டங்கள் உள்ளன. அவற்றின் ஓரங்களில் வேலைப் பாடுகள் பொருந்திய சதுரமான அணைவுத் தூண்கள் இடம்பெற்றுள்ளன. கூரையில்

Page 50
வலபியிற் பூதகண வரி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தின் தென் கோட்டத்திற் கணேசரின் படிமமும் வட கோட்டத்திலே துர்க்கையின் படிமமும் காணப்படுகின்றன."
திருத்தணி வீரட்டானேஸ்வரம் பிற்பட்ட பல்லவர் காலக் கோயில்களிற் தலை சிறந்ததாகும். அது நம்பியப்பி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. அதன் நடுவிலமைந்த சாந்தார விமானத்தின் மூன்று பக்கங்களிற் துணை விமானங்கள் உள்ளன. கோயில் விமானம் தூங்கானை மாடம் போன்றது. கருவறையும் அர்த்த மண்டபமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வெளிப்புறக் கோட்டங்களிற் கணபதி, தகூரிணாமூர்த்தி, விஷ்ணு, பிரமன் துர்க்கை ஆகியோரின் படிமங்கள் உள்ளன. அங்குள்ள மண்டப மொன்றில் வைக்கப்பட்டுள்ள தொல்பொருட் சின்னங்களான சப்த மாதரின் சிலைகள் ஆதியான கோயிலமைப்பிற் பரிவார தேவர் கோட்டங்கள் இருந்தமைக்கான அடையாளங் களாகும். பல்லவர் காலக் கலைப்பாணிக்கும். சோழர் காலக் கலைப்பாணிக்கும் இடை யிலமைந்த நெருங்கிய தொடர்பினை திருத் தணி வீரட்டானேஸ்வரம் மூலம் ஓரளவிற்குப் புரிந்து கொள்ளலாம். ஆதித்த சோழன் காலத்துத் திருப்பணியான திருக்கழுங் குன்றத்துத் திருமூலட்டானம் உடையார் கோயில் திருத்தணிக் கோயிலைப் போல அமைந்துள்ளமை குறிப்பிடற்குரியது."
கங்காவதரணம்
பல்லவர் காலக் கலைவரலாறு பற்றிய இவ்வத்தியாயத்தை மாமல்ல புரத்துப் பாறைச் சிற்பங்கள் தொடர்பான விளக்கத்துடன் முடிவு செய்வது பொருத்தமானதாகும். அச்சிற்பங்கள்

2
நிகரற்றனவாகும். அவற்றுக்கு நிகரான வேறு சிற்பங்களைப் பரத கண்டத்திலே காண முடிய வில்லை. விசாலமான பாறையொன்றிலே, விரிவான கதை யொன்றினை, அற்புதமான கோலத்திலே வடிவமைக்கும் முயற்சி வேறெங்காவது மேற்கொள்ளப்பட்ட வரலா றில்லை. அதனாலே மாமல்லபுரத்துச் சிற்பங்கள் உலகளாவிய ரீதியில் கலா விமர்சகர்களாற் போற்றிப் புகழப்படுகின்றன. கங்காவ தரணம் பற்றிய சிற்பத்தை உலக சின்னமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
மாமல்லபுரத்திலே, கடற்கரைக்குச் சமீபத்திலே, மலைதளிகளான இரதங்கள் அமைந்திருக்கும் தலத்தின் எதிர்ப்புறத்திலே கால் மை நீளமும் 100 அடி உயரமுங் கொண்ட கற்பாறை உண்டு. அதன் நடுவிலே இயற்கையாக ஏற்பட்ட பிளவொன்று காணப் படுகின்றது. பாறையின் தோற்றத்தை அவதானித்த கலைஞர்கள் மகத்தான தத்துவ மொன்றை அடிப்படையாகக் கொண்ட புராணக் கதையொன்றினைச் சிற்பக் கோலமாக வடிவமைத்துள்ளனர். அவர்களின் கற்பனா சக்தியினாலும் கலைத்திறனாலும் புராதனமான கதையொன்று சிற்பக் கோலத்திலே தத்துவ விளக்கம் பெற்றது. அவர்கள் பழமையிற் புதுமை செய்தனர். சமகாலத் தேசவழக்கமான பண்பாட்டுக் கோலங்களும் இச் சிற்பங்களிலே தரிசனமாகின. பேசப் பெரிதும் இனியானைப் பற்றித் தமிழாகரனாகிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தனும் செஞ்சொற் கவிதைக் கோமான் நாவுக்கரையனும் தமிழ் வேதம் அருளிய ஆழ்வார்களும் பாடிய தேமதுரமான தமிழிசைப் பாடல்களைக் கேட்ட திராவிட தேசத்தவர் பரவசமானார்கள் பக்திப் பிரவாகம் பெருவெள்ளமாகித் தமிழகத்திலும் அதற்கப்

Page 51
பாலும் பரவியது. மாமல்லபுரத்துச் சிற்பங்கள் அக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. அவற் றிலே பக்தி நெறியின் அடையாளங்கள் ஆழமாகப் பதிந்துள்ளன.
அச்சிற்பங்கள் கிராதார்ஜுனியம் என்னும் காவியத்தில் விளக்கப்படும் அர்ச்சுனனின் தவம் என்பதன் விளக்கமானவை என்று அறிஞர் சிலர் கொண்டனர். வேறு சிலர் அது புராணங்களிலும் மகாபாரதத்திலும் வர்ணிக்கப் படும் கங்காவதரணத்தின் காட்சி யானது என்று கொள்வர். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் இரண்டு கதைகளையும் விளக்கும் பான்மையில் அமைந்துள்ளவை என்ற கருத்தும் உண்டு. கு.சேதுராமன் மேல்வருமாறு எழுதுகின்றார்.
இப்பிளவுக்குப் பக்கத்தில், அதன் வலது பக்கத்தில், ஒருவர் தன் ஒரு காலில் நின்று கொண்டு மற்றொரு காலை மடக்கி, இரு கைகளை மேலே தூக்கியவாறு தவமிருக்கின்றார். அவர் தவத்தின் ஆழத்தை அவரது நீண்ட தாடியே காட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். அவருக்கு வலது பக்கம் சிவபெருமான் ஆயுதம் தாங்கி யுள்ளார். அர்ச்சுனனுக்குக் கொடுக் கப்படக் கூடிய பாசுப தாஸ்திரம் தங்கியுள்ளார் என்பது சரியெனில், இது அர்ச்சுனன் தபசு தவம் செய்து கொண்டிருப்பவரின் இடது பக்கத்தில் பிளவில், கங்கை இறங்கி வருகின்ற தெனில் அது பகீரதர் தவம், ஆனால் இங்கு இரண்டுமே பிணைந்திருக்கின்ற காரணத்தால் இங்கு இரு பொருளும் ஒன்றிலேயே காட்டப்பட்டிருப்பதைக்
காணலாம்.?

கங்காவதரணம் பகீரதப் பிரயத் தனத்தின் விளைவானது என்பது புராணக் கதை. முன்னொரு காலத்தில் நிலவுலகில் மழை வீழ்ச்சி இல்லாதமையால் வரட்சி ஏற்பட்டது. அது நெடுங்காலம் நிலை பெற்ற தால் உயிர்கள் துன்பசாகரத்திலே தவித்தன. அவர்களின் துன்பத்தைப் போக்கும் நோக்கத்தோடு பகீரதன் சிவபெருமானை வேண்டித் தவம் புரிந்தான். கடவுளின் கருணையினால் இறைவரின் நிலாவேணியி லிருந்தும் கங்கை பூலோகத்தை நோக்கிப் பாய்ந்தது. கற்பாறையில் அமைந்துள்ள நீருலக மகளிரான நாகினிகளின் உருவங்கள் ஆகாயத்திலிருந்தும் இறங்கி, கங்கை நிலவுலகிலே பாய்கின்றமையைக் குறிப்பன
வாகும்.
மாமல்லபுரத்துக் கற்பாறையின் நடு விலே ஒரு பிளவு காணப்படுகின்றது. அதனை ஆற்றுப்படுகையாகக் கலைஞர் கொண்டனர். அப்பிளவின் இரு பக்கங்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவையாவும் பிளவை நோக்கிய கோலத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளன. சிற்பங்களில் வானவர் உலகமும் பூலோகமும் பாதாளமும் இணைந்து விடு கின்றன. அவை கங்கை மூலமாக இணைந்து விடுகின்றன. அங்கே கடவுட் படிமங்களும் தேவரின் உருவங்களும் அமைந்துள்ளன. மனிதர், முனிவர், அடியார்கள் முதலியோரின் உருவங்கள் உள்ளன. நாகர், கின்னரர் போன்றோரின் வடிவங்களுந் தெரிகின்றன. யானை, மான், குரங்கு, மாடு முதலியனவுங் காணப்படுகின்றன. மூவுலகத்தவரும் உணர்வு களால் இணைந்த நிலையிலே அமைந் திருக்குமாப்போற் காணப்படுகின்றனர்.

Page 52
இப்பாறையின் மேற்பகுதி விண்ணு லகம் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அங்கு சிவபெருமான், சூரிய - சந்திரர், தேவர்கள் ஆகியோரின் கோலங்கள் தெரிகின்றன. அதன் கீழ்ப்பகுதியில் பூவுலகக் காட்சி தெரிகின்றது. திராவிட விமானமான கோயிலின் உருவங் காணப்படுகின்றது. அதில் விஷ்ணுவின் வடிவம் தெரிகின்றது. அதன் அருகில் ஆச்சிரமம் ஒன்றும் தவம் புரியும் ஒருவரின் உருவமுந் தெரிகின்றன. ஆற்றோரத்திலே நடந்து செல்லும் முனிவர்களும் நீரினைக் குடங்களில் எடுத்துச் செல்வோரின் கோலங் களும் தெரிகின்றன.
விலங்குகளின் வடிவங்கள் மிகுந்த கலைவனப்புடனும் உயிரோட்டத்துடனும் விளங்குகின்றன. ஆற்றுப்படுகையினை நோக்கி யானைக் கூட்டமொன்று செல்லுங் காட்சி தெரிகின்றது. முன்னாற் பெரு வேழ மொன்று செல்லும் வடிவம் தெரிகின்றது. அதன் தோற்றம் கம்பீரமானது. அழகு பொலிந்தது. அதன் பின்னே பிடிகளும் குட்டி யானைகளுஞ் செல்கின்றன. மான்களில்
அடிக்குறிப்புகளும் விளக்கவுரைகளும்
1. இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களுட
2.
கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு,
மேலது. ப. 14
இக்குடைவரையிலுள்ளதும் ஆறாம் நூற்றாண்டுச் எருக்காட்டூர்கோன் பெருந்தச்சன் என்பவனைக் உருவமாக கற்பக விநாயகர் என்ற திருநாமத்து அற்புதமான கலைத்திறனுடன் குடைவரையின் முக மடக்கியவாறு பத்மாசனம் போன்ற நிலையில் வலப்பக்கமாக வைத்து வலம்புரி விநாயகராக செவியுடன் காட்சியளிக்கின்றார்”. இக்குடை வை
ஒட்டி அரைத்துாண்களும் உள்ளன. தூண்கள்
சதுரமானவை, அவற்றின் நடுப்பகுதி எண்முகமா வடிவங்கள் உள்ளன. கருவறையிலே தாய்ப்பாறை இக்குடைவரையில் கல்யாணசுந்தரர், இலிங்கோத்
44

ஒன்று தனது பின்னங்கால் குழம்பினால் முகத்தைத் தடவுங் காட்சி மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. குரங்குகளின் இயல்பு களும் மிகவுஞ் சிறப்பான வகையிற் சித்தரிக் கப்பட்டுள்ளன. அவற்றிலொன்று மற்றொன்றின் தலை மயிரை வாரிப் பேனை எடுத்து வாயிற் போடுங் காட்சி மிகவுஞ் சிறப்பாக வடிவமைக் கப்பட்டுள்ளது.
இந்து சமய மரபிலுள்ள பெளராணிக மான தத்துவமொன்று மாமல்ல புரத்திலே சிற்பக் கோலத்தில் விளங்குகின்றது. பிரபஞ்சம் அனைத்தும் ஒன்றானது என்னும் தத்துவமும் அது கருணைக் கடவுளாகிய பரமசிவத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குவது என்னும் கருத்தும் இச் சிற்பக் கோலத்தில் அடங்கியுள்ளன. அதிலே வயப்பட்டு உயிர்கள் எல்லாம் இயற்பகை மறந்து, அமைதி கொணி டு, பரமானந்த நிலையை எய்திவிடுகின்றன. உலகியல் நோக்கில் நீரின்றி அமையாது உலகு என்னும் கருத்தும் அவற்றினால் வலியுறுத்தப்படுகின்றதெனக் கருதலாம்.
b பதிப்பாசிரியர் சி. பத்மநாதன், இந்து சமய, 2001, é5, 12-13.
குரிய வடிவங்களில் எழுதப் பெற்றதுமான சாசனம் குறிப்பிடுகின்றது. “இக்குடைவரையில் மிகப்பெரிய |டன் அமைந்துள்ள விநாயகர் உருவத்தினை மிக ப்பில் உருவாக்கியுள்ளனர். தனது இரு கால்களையும் ) அமைந்துள்ள இவ்விநாயகர் துதிக்கையினை முப்புரிநூல் அற்று உதரபந்தம் பெற்று விரிந்த ரயின் முகப்பில் மூன்று தூண்களும் பக்கச்சுவரை அவற்றின் மேற் பகுதியிலும் கீழ்ப் பகுதியிலும் னது. சதுரமான பகுதிகளிலே தாமரை இதழ்களின் யிற் குடைந்த இலிங்கம் மூலவராக அமைந்துள்ளது. பவர் ஆகியோரின் வடிவங்களும் உள்ளன.

Page 53
சு. இராசவேல், அ.கி சேஷாத்திரி, தமிழ் நாட்டுக் சென்னை, 2000, பக். 112 - 113
இரா. கலைக்கோவன், “பல்லவர் காலக் கட்டடக் க கொழும்பு, 2001, ப.51
ச.இராசவேல், அ.கி.சேஷாத்திரி, தமிழ் நாட்டுக்
மேலது. ப. 28 மேலது. ப. 27 மேலது. ப. 35 மேலது. ப. 36 மேலது. ப. 37 மேலது. ப. 38 மேலது. ப. 39-40 மேலது. ப. 43 மேலது. ப. 48 GuD6ogs. Ll. 15 மேலது. ப. 71-73 மேலது. ப. 73 மேலது. ப. 76 மேலது. ப. 79
மேலது. ப. 80-81
மேலது. ப. 83-84 மேலது. ப. 85.88
K.A. Nilakanta Sastri, A History of south India (Th
இரா. கலைக்கோவன், “பல்லவர் காலக் கட்டடக் சிற்பங்களும், பதிப்பாசிரியர் சி. பத்மநாதன் ! கொழும்பு, 2001, ப.58
மேலது. மேலது. மேலது. மேலது. மேலது. மேலது.
மேலது.
மேலது.
U. 59
J. 60
68
68-69
70

குடைவரைக் கோயில்கள் பண்பாட்டு வெளியீட்டகம்,
லை”, இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும்
குடைவரைக் கோயில்கள், பக், 22,25, 31 - 32
hird Edition), Madras: Oxford University Press, 1966
கலை" (பக். 53-83), இந்து கலாசாரம் கோயில்களும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்

Page 54
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
மேலது. ப. 71
மேலது. ப. 72-73
76
LJ
L
மேலது. ப. 77-78 மேலது. ப
L
மேலது. ப. 77-78
இரா. கலைக்கோவன், “பல்லவர் காலச் சிற்பக் சிற்பங்களும், பதிப்பாசிரியர் சி பத்மநாதன் இந்து 2001, Lu.98
மேலது. ப. 98-99
மேலது.
மேலது. ப. 100-101
S.Minakshi, Administration and Social Life unde
மேலது சி. பத்மநாதன், “காஞ்சிபுரம் கைலாசநாத பிரதம பதிப்பாசிரியர். சி. பத்மநாதன் ,இந்து ச 1998, LJ. 10-14
Gupatogji Minakshi, Administration and Social Life
இரா. கலைக்கோவன், “பல்லவர் காலக் கட்டடக் U.76
K.A. Nilakanta Sastri, A History of south India
இரா. கலைக்கோவன், “பல்லவர் காலக் கட்டடக்
78-79
மேலது. ப. 79-80 மேலது. ப. 81-82 மேலது. ப. 80-81 மேலது. ப. 81
கு. சேதுராமன், தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டுக் பதிப்பு 1997), 2001 பக். 144-145
(இக்கட்டுரை இந்துகலாசார அலுவல்கள் திணை நூலிலிருந்து பெறப்பட்டது)

கலை” (பக். 85-117), இந்து கலாசாரம் கோயில்களும் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு,
rthe Pallavas, University of Madras, p. 193 ர் கோயில்” இந்துக் கலைக் களஞ்சியம் தொகுதிIV, மய, கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு,
under the Pallavas
கலை” இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும்,
கலை” இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும்,
கலை வரலாறு J. J. பப்ளிகேஷன்ஸ், மதுரை (முதல்
க்கள வெளியீடான "இலங்கையில் இந்துசமயம்" என்ற

Page 55
பல்லவர்காலத் தமிழகம்:
கால வரையறை
சோழப் பேரரசரின் காலத்திற்கு முற்பட்ட தான தமிழக வரலாற்றைக் காலவரை யறைப்படி வகுத்துக் கொள்வதிற் சில பிரச்சினைகள் உள்ளன. மன்னர் குலங்களின் ஆட்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றிலுள்ள காலப் பிரிவுகளை வரையறை செய்வது நெடுங்கால வழக்கமாகும். ஆனால், வரலாற்றை அவ்வாறு நோக்குவது எந்தள விற்குப் பொருத்தமானது என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு உரியதாகிவிட்டது. சமூதாய அமைப்பிலுள்ள பிரதான அம்சங் களையும் பண்பாட்டுக் கோலங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரலாற்றிலே காலவரையறை செய்வது கூடுதலான பொருத்தமுடைய ஒன்றாகும். ஆயினும், தமிழக வரலாற்றைப் பொறுத்தவரையில் வரலாற்றாய்வாளர்களாலும் விமர்சகர் களினாலும் இதுவரை இதனைச் சரியாக அமைத்துக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் சமுதாயவமைப்பிலும் பண் பாட்டுக் கோலங்களிலும் காலங்காலமாக ஏற்பட்ட மாற்றங்களை ஆழமாகவும் தெளி வாகவும் இதுவரை எவராலும் விளக்க முடியவில்லை.
பண்டைய தமிழகம் பற்றிய வரலாற்று மூலங்கள் பலவகைப்பட்டவை. இலக்கியம், தொல்பொருட் சின்னங்கள், சாசனங்கள் ஆகிய பிரதான வகைகளில் அவை அடங்கும். அவை எல்லா வற்றிலுமுள்ள விவரங்களைச் சேர்த்து, ஆராய்ந்து அறிவியல் நோக்கில் விளக்குவது இலகுவான காரியமன்று. உதாரணமாக
இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அது

பண்பாட்டுக் கோலங்கள்
பத்மநாதன்
மிகப் பரந்தவொன்றாகும். தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மூன்று பிரதான மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் உள்ளன. அவற்றுள்ளும் பெரும் பாலானவை சமயச் சார்புடையவை. அவை சைவம், வைணவம், சமணம், பெளத்தம் ஆகிய சமய நெறிகளைச் சார்ந்தனவாய் உள்ளன. அவை அனைத்திலும் காணப்படும் விவரங்களை ஒருங்கு சேர்த்துப் பார்க்காத விடத்துத் தமிழகச் சமய நிலை களைப் பற்றிப் பேசுவது ஒருதலைப் பட்சமானதாகவே அமைந்துவிடும். மூன்று வேறான மொழிகளில் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. தமிழ் நூல்களிற் காணப்பெறாத முக்கியமான வரலாற்று விவரங்கள் சில சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளில் எழுதப்பெற்ற நூல்களிலே
காணப்படுகின்றன.
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய வற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள் என்பவற்றைப் புரிந்து கொள்வதைப் பொறுத்தவரையிலும் சாசனங்களைப் பற்றிய அறிவு இன்றியமையாத ஒன்றாகும். உதாரண மாக, தொல்காப்பியத்தை எடுத்துக் கொண் டால் எழுத்துகள் பற்றி அதிலே சொல்லப்படும் சில பிரதானமான விடயங்களைச் சாசனச் சான்றுகளின் மூலமே புரிந்து கொள்ளலாம். அப்பெருநூலின் காலநிர்ணயத்திற்கும் சாசன வியலில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகள் உறுதுணையாகின்றன.
இலக்கியங்களை மட்டும் அடிப்படை யாகக் கொண்டு சமய நிலைகள் வழிபாட்டு முறைகள், பண்பாட்டு மரபுகள் முதலியன பற்றி உறுதியாக எதனையுங் கூறவியலாது. சாசனங்களிலுள்ள விவரங்களையும் தொல்

Page 56
பொருட் சின்னங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலக்கியக் குறிப்புகளை நோக்கு மிடத்து அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பல்லவர் காலத்தைப் பொறுத்த வரையில் வரலாற்று மூலங்கள் மிகுந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலம் வரை தமிழிலக்கிய வரலாற் றாசிரியர்களும் விமர்சகர்களும் இலக்கியத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டே தமிழகச் சமுதாய அமைப்பினையும் பண்பாட்டுக் கோலங்களையும் புரிந்து கொள்ளவும் விமர்சிக் கவும் தலைப்பட்டுள்ளனர். நவீன காலத்த வர்கள் சிலர் இருபதாம் நூற்றாண்டிலே செல்வாக்குப் பெற்ற அரசியற் சிந்தனை களின் அடிப்படையிலும் பண்டைய தமிழகச் சமுதாய நிலைகளை விளக்க முற்பட்டுள்ளனர். வித்துவ பூர்வமாகச் சிந்திப்பதற்குப் பயிற்சி பெறாத வாசகர் வட்டத்திற்குச் சில சமயங்களில் இத்தகைய விமர்சனங்கள் திருப்தி அளித்தன வாயினும் விடயங்கள் தொடர்பாக அவற்றின் விளைவாகத் தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
“பல்லவர் காலம்’ தமிழக வரலாற்றில் மிகவும் நீண்டவொரு காலப் பகுதியாகும். அது சமுதாய அமைப்பிலும் பண்பாட்டு வளர்ச்சிகளிலும் பல பிரதானமான மாற்றங்கள் ஏற்பட்ட காலப் பகுதியாகும். பல்லவர் காலச் சமுதாய நிலைகளைப் புரிந்து கொள்ளாத விடத்துத் தமிழரின் கலாசார பாரம்பரியங் களையும் சமூக வழமை களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்நாட்களில் இலங்கையிலுள்ள மாணவர்களும் கல்லூரி ஆசிரியர்களும் பல்லவர் காலம் பற்றிக் கொண்டிருக்கும் விளக்கம் தமிழிலக்கிய வரலாற்றின் மூலம் ஏற்பட்ட ஒன்றாகும். குறிப் பாகச் சொல்வதானால் அவை பேராசிரியர்
வி. செல்வநாயகம் எழுதிய தமிழ் இலக்கிய
48

வரலாற்றை ஆதாரமாகக் கொண்டவை. அந்நூல் முதன் முதலாக வெளிவந்த பின் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்டன? அதன் முதலாவது பதிப்பு ஒரு சுருக்க வரலாறாகவே வெளிவந்தது. பின்வந்த பதிப்புகளில் அது சிறிது விரிவாக்கம் பெற்றது.
தமிழிலக்கிய வரலாற்றை ஒரு கால வரையறையின் அடிப்படையில் முதன் முதலாக எழுதிய சிறப்பு அதன் ஆசிரியரைச் சேர்ந்ததாகும். சோழப் பேரரசரின் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் நூல்களைச் சங்ககாலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம் என்பவற்றுக்கு உரியனவாக வி. செல்வ நாயகம் வகைப்படுத்தியுள்ளார். அவரது கால வரையறைப்படி சங்க காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையான நான்கு நூற்றாண்டு களைக் கொண்டது. சங்கமருவிய காலம் அதற்குப் பிற்பட்ட மூன்று நூற்றாண்டுகளை உள்ளடக்கிய காலப் பகுதியாகும். கிபி ஏழாம் நூற் றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் முடிபு வரையுள்ளது பல்லவர் காலம்.
இந்தக்கால வரையறையைப் பொறுத்த வரையில் சில பிரச்சினைகளுண்டு. அவற்றி லொன்று சங்க காலம் என்ற வர்ணனை பற்றியதாகும். எட்டுத் தொகை நூல்களும் பத்துப்பாட்டு நூல்களும் சங்ககால நூல் களாகக் கொள்ளப்படுகின்றன. அந்நூல்களிற் பெரும்பாலானவை கி.பி. நான்காம் நூற் றாண்டுக்கு முற்பட்டவை என்பதில் ஐயமில்லை. ஆனால், சங்கம் என வழங்கிய புலவர் கழகமொன்று அமைந் திருந்த மைக்கான சான்றுகள் அந்நூல்களிற் காணப் படவில்லை. காலத்தால் அவற்றுக்கு மிகவும் பிற்பட்டதான இறையனார் களவியலுரை யிலேயே முதன் முதலாகச் சங்கம் பற்றிய

Page 57
கதை வருகின்றது. அந்தக் கதையும் புராணக் கதை போன்றது. உண்மைக்குப் புறம்பான செய்திகளே அதில் இடம்பெறுகின்றன. எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல் எதனிலும் சங்கம் பற்றிய தெளிவான குறிப்பில்லை. அந்நூற்றாண்டு முதலாகவே சங்கம் நிறுவித் தமிழ் ஆய்ந்தமை முற்காலப் பாண்டியர்களின் அருஞ் சாதனைகளில் ஒன்றென அவர்களின் பட்டயங்கள் கூறும். எனவே, சங்கம் என்பது பற்றிப் போசுவதில் அர்த்தமில்லை. ஆதார மில்லாத ஒன்றைப் பற்றிப் பேசிக் கொள்வது பெருமைக் குரியதன்று. இதுபலருக்கு உணர்ச்சி பூர்வமான விடயமாகலாம். ஆனால், வித்துவப் புலமையில் முடிபுகள் உறுதியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டன வாகவே அமையும். சங்ககாலம் என்பதற்குப் பதிலாக வேறொரு வர்ணனையைப் பயன் படுத்தல் வேண்டும் சிலர் இக்காலப் பகுதியை மூவேந்தர் காலம் என்பர். இயற்கை நெறிக் காலம் என்பது வேறொன்று.
சங்க காலம் என்ற ஒரு காலம் இல்லாத விடத்துச் சங்கமருவிய காலத்தைப் பற்றிய பேச்சுக்கு இடமில்லை. பல்லவர் காலத்துக்கு முற்பட்ட காலத்தை வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் காலம் என்பர். ஆனால், களப்பிர மன்னருள் அச்சுத விக்கிராந்தன் என்ற அரசனைப் பற்றி மட்டுமே தெளிவான குறிப் புண்டு. புத்த தத்தர் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிய விநய வினிச்சயம் என்னும் நூலில் அவனைப் பற்றிச் சொல்லப்படுகின்றது. கி.பி. 500ஆம் ஆண்டளவிலே எழுதப் பெற்ற பூலாங்குறிச்சி சாசனங்களிலே குறிப்பிடப்படும் சேந்தன் என்னும் பெயருடைய மன்னர் இருவரும் களப்பிரராதல் வேண்டும் என்பது வரலாற்று அறிஞரான எ. சுப்பராயலுவின் கருத்தாகும். அச்சாசனங்களிலே குறிப்பிடப்

படும் மன்னர்கள் பலம் மிக்கவர்கள். பாண்டி நாடு, கொங்கு தேசம் என்பவற்றிலுள்ள பகுதிகளில் அதிகாரஞ் செலுத்தியவர்கள். நான்காம் நூற்றாண்டிலே சோழரும் பாண்டி யரும் தத்தம் நாடுகளில் அதிகாரம் இழந்தனர். தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரத்திலே பல்லவரின் ஆதிக்கம் ஏற்பட்டது. காஞ்சி புரத்திலே திரையரின் ஆட்சி எவ்வாறு மறைந்தது? பல்லவர் எவ்வாறு அங்கு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர்? என்னும் வினாக்களுக்கு உறுதியான விடைகளைக் காணமுடியவில்லை.
இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கி.பி. 600-900 ஆகிய காலப் பகுதியைப் பல்லவர் காலம் எனக் கொள்வர். ஆயினும், பல்லவரின் ஆட்சி தொண்டை நாட்டில் ஆறாம் நூற் றாண்டுக்கு நெடுங் காலத்திற்கு முன் ஏற்பட்டு விட்டது. குப்தப் பேரரசனாகிய சமுத்திரகுப்தன் நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலே தகூழிணாயத்தின் மீது படையெடுத்துச் சென்ற பொழுது காஞ்சியிற் பல்லவனாகிய விஷ்ணு கோபன் அரசனாகவிருந்தான். அவனுக்கு முற்பட்ட பல்லவ மன்னர் பலரின் பெயர்கள் பல்லவர்களின் பட்டயங்களிற் காணப்படு கின்றன. எனவே, மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிற் காஞ்சியிலே பல்லவரின் ஆட்சி ஆரம்ப மாகிவிட்டதென்று கருதலாம். இதன் அடிப்படையிலே தென்னிந்திய வரலாறு பற்றிய காலவரையறையை மீள்பரிசீலனை செய்வது அவசியமாகின்றது.
பல்லவரின் ஆட்சிக் காலம் ஏறக் குறைய ஆறு நூற்றாண்டுகளை உள்ளடக்கிய தாகும். அதனை முதலாம் மகேந்திர வர்மனுக்கு முற்பட்ட காலப்பகுதி, அதற்குப் பிற்பட்ட காலப் பகுதி என இரு பிரிவுகளாக

Page 58
வகுத்து நோக்குவது பொருத்தமானது. முதலாவது காலப் பகுதியிலே பல்லவர்கள் தொண்டை நாட்டையும் கிருஷ்ணாநதி வரை பரந்துள்ள ஆந்திரர்பிரதேசங்களையும் ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில் அவர்கள் வழங்கிய நன்கொடைகள் பற்றிய பட்டயங்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கிடைத்துள்ளன. அவை பிரமதேயங்கள், தேவகுலம் என்று சொல்லப் படும் கோயில்கள் என்பன பற்றியனவாகும். காலத்தால் மிக முற்பட்ட சாசனங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டன. அதற்குப் பின்னுள்ள காலகட்டத்திலே பட்டயங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதினார்கள். தமிழ்மொழி வழங்காத நிலப்பகுதிகளிலுள்ள நிறுவனங்களைப் பற்றியன என்பதால் அப்பட்டயங்கள் அம்மொழிகளில் எழுதப் பட்டன. சாசன வழக்கினைப் பொறுத்த வரையிலும் சமகாலத்திலே தக்கிணத்தில் அதுவே வழமையாகும். இதனைப்புரிந்து கொள்ளாத முற்காலத்து வரலாற்றாசிரியர் சிலர் பல்லவர் வடதேசத்து உற்பத்தி உடையவர்கள் என்றும் அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தவர்கள் என்றுங் கருதியமைக்கான சான்றுகள் கிடைக்க வில்லை. காடவர்கோன் என்றும் தொண்டையர் கோன் என்றும் அவர்களைக் குறிப்பிடுவது நெடுங்கால வழமையாகும்.
பல்லவர் காலத்தின் முதலாவது கட்டமாகிய மூன்று நூற்றாண்டுகளிலும் தமிழக அரசியல் நிலையிற் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. சோழநாட்டிற் சோழரின் ஆட்சி மறைந்தது. அதே போலத் தென்தமிழ் நாட்டிலும் பாண்டியர் ஆதிகாரம் இழந்தனர். அந்நாடுகளிற் களப்பிரரின் ஆதிக்கம் ஏற்பட்டது. அவர்களின் வம்சவரலாறு பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

சாளுக்கியர், பல்லவர், பாண்டியர் ஆகி யோரின் சாசனங்களிற் களப்பிரரை வெற்றி கொண்டமை சிறப்புமிகு சாதனை யாகச் சொல்லப்படுவதால் களப்பிரர் ஒரு கால கட்டத்தில் மிகுந்த வலிமை பெற்றிருந் தனர் என்பதில் ஐயமில்லை. ஏழாம் நூற்றாண்டில் அவர்களின் ஆதிக்கம் ஒழிந்தது. பாண்டிய வம்சம் கடுங்கோனின் காலத்தில் மீண்டும் அதிகாரம் பெற்றது. சோழநாட்டிற் சிம்ம விஷ்ணுவின் காலத்திலே (575 - 600) பல்லவரின் ஆதிக்கம் பரவத் தொடங்கியது. மகேந்திரவர்மனின் காலத்திலே காவிரிக் கரைவரை பல்லவரின் மேலாதிக்கம் ஏற்பட் டிருந்தது. அதேகாலத்திலே பல்லவர் வசமிருந்த வேங்கி மண்டலத்தை சாளுக்கிய மன்னனாகிய புலிகேசி கைப்பற்றிக் கொண்டான்.
பல்லவர் ஆட்சிக் காலத்துப் பிற்பகுதி யான மூன்று நூற்றாண்டுகளிலும் தெற்கிலே பாண்டியரின் ஆதிக்கம் ஏற்பட்டிருந்தது. பாண்டிய மன்னர் கொங்கு தேசம், வேணாடு, ஆய்குலத்தவர் வசமான ஒய்மாநாடு என்ப வற்றின் மேலும் மேலாதிக்கம் பெற்றிருந்தனர். காவிரியின் தென்கரை வரையான சோழநாடும் பாண்டியர் வசமாகியது. தஞ்சாவூர், திருச் சிராப்பள்ளி, புதுக்கோட்டை முதலிய மாவட்டங் களைச் சேர்ந்த பகுதிகளை ஆட்சி புரிந்த முத்தரையர் ஆரம்பத்திலே பல்லவரின் மேலாதிக்கத்தினுள் அடங்கியிருந்தனர். பின் னொரு காலகட்டத்தில் வரகுண பாண்டியன், மாறன் சடையன் என்போரின் காலங்களில் முத்தரையர் பாண்டியர் பக்கஞ் சார்ந்திருக்க நேர்ந்தது.
பல்லவர் காலத்துத் தமிழகத்தின் சமூக - பண்பாட்டு நிலைகளைப் பற்றிப் பேசுமிடத்து

Page 59
பாண்டியரைப் பற்றியும் அவர்களின் ஆட்சியில் அடங்கி பகுதிகளைப் பற்றியுங் கவனித்தல் வேண்டும்.
அந்த ஆறு நூற்றாண்டுகளிலும் தமிழகச் சமுதாயத்திலே பெருமாற்றங்கள் ஏற்பட்டன. விவசாயம், குடிசைக் கைத் தொழில்கள் வாணிபம் ஆகிய வற்றிலே அதிக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. குளங்களைப் பற்றியும் கால்வாய்களைப் பற்றியும் சாசனக் குறிப்புகள் கிடைக்கின்றன. விளை நிலங்களும் குடிகளும் பெருகி வந்தமைக்கு அது ஒரு அறிகுறியாகலாம். முல்லைநிலப் பகுதிகளிலே காடுகள் பல அழிக்கப் பெற்று அவற்றிலே வயல் நிலங்களும் தோப்புகளும் குடியிருப்பு களும் மேலதிகமாக உருவாக்கப்பட்டன. அருவா நாடு, அருவா வடதலை என்று முற் காலங்களில் வர்ணிக்கப் பெற்ற பகுதிகளில் உற்பத்தியும் சனப்பெருக்கமும் குறிப்பிடத்தக்க அளவிலே விருத்தி பெற்றன. தமிழகத்திலே தொண்டை நாடு, நடு நாடு என்பன அத்தகைய மாற்றங்களினால் முதன்மை பெற்றன. தொண்டைமான் இளந்திரையனது காலத் திலே சிறப்புற்றிருந்த காஞ்சி நகரம் அதற்குப் பின் பெருநகரமாகியது. பருத்தி, பட்டாடைகள், எண்ணெய், தானியம், வெல்லம் முதலிய பொருட்களின் பரிவர்த்தனை நிலையமாக அது பெருவளர்ச்சி கண்டது. அங்கே மாநகரம் என்னும் பெருவணிக நகரம் உருவாகியது. மாநகரமான காஞ்சிபுரத்து வணிகர் தமிழ கத்தின் பல பகுதிகளோடும் அதற்கப்பால் அமைந்துள்ள தேசங்களோடும் வாணிபத்தின் காரணமாகத் தொடர்பு கொண்டிருந்தனர். காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு பலம் மிகுந்த இராச்சியமொன்றைப் பல்ல வரால் அமைத்துக் கொள்ள முடிந்தது.
51

தமிழகத்தின் பிரதான துறைமுகப் பட்டினம் என்ற நிலையைக் காவிரிப்பூம் பட்டினம் இழந்துவிட்டது. அதனிடத்தை மாமல்லபுரம் பெற்றது. காஞ்சிபுரத்தைப் போன்று மாமல்லபுரமும் பெருவணிக நகர மாகி மாநகரமாகியது. சொர்ணபூமி, சீனம் ஆகியவற்றிலிருந்து சந்தனம், அகில், கற்பூரம் முதலிய வாசனைப் பொருட்களையும் பட்டு வகைகளையும் உலோகப் பொருட்களையும் வணிகர் கப்பல்களில் ஏற்றி வந்தனர். வங்கம், கலிங்கம், மலையாளம், ஈழம் ஆகிய தேசங்களிலிருந்தும் வணிகக் கப்பல்கள் அங்கு சென்றன. சோழநாட்டுத் துறை முகங்களில் நாகபட்டினம் முதன்மை பெற்றது.
கல்வி முறை, சிந்தனை, வழிபாடு போன்றவற்றைப் பொறுத்தவரையிற் பெரு மாற்றங்கள் ஏற்பட்டன. இக்காலப் பகுதியிலே தமிழகம் இந்திய துணைக் கண்டத்தின் பொதுமையான கலாசார நீரோட்டத்தில் இணைந்து விட்டது. கிறிஸ்து சகாப்தத்தின் முற்பட்ட காலம் முதலாகச் சமணமும் வைதீகச் சமய நெறிகளும் காலுான்றிவிட்டன. காலப்போக்கில் அவற்றின் செல்வாக்கு மேலோங்கியது. மன்னரும் பெருவணிகர்களும் வைதீகச் சடங்குகளிலும் வேள்விகளிலும் விருப்புக் கொண்டனர். முடியாட்சியை நிலைப் படுத்துவதற்கு மன்னர்கள் வேதியரையும் வைதீக கருமங்களையும் பயன்படுத்தினார்கள் ஆதிகாலப் பாண்டியரில் ஒருவனான முது குடுமிப் பெருவழுதியாக சாலைகளை அமைப் பித்தான். அவன் வேதம் வல்ல பிராமணருக்கு வேள்விக்குடி என்னும் ஊரைப் பிரமதேயமாக வழங்கினான். இராஜசூயம் என்னும் வேள்வி யினைச் செய்தமையால் பெருநற்கிள்ளி என்னுஞ் சோழனை இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று குறிப்பிட்டனர்.

Page 60
பல்லவரின் ஆட்சி காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட காலம் முதலாக மன்னர்கள் பொதுவாக வைதீகச் சடங்குகளைச் செய்வித்தனர். அரண் மனைக் கலாசாரம் வைதீக கலாசாரமாகியது. அரசரின் வழமைகளை வேளிர் குலத்தவரும் பெருவணிகரும் பின்பற்றினர். சமஸ்கிருத மொழி நூல்களிலே சொல்லப்படும் வாழ்க்கை நெறியினையும் சடங்குகளையும் பின்பற்றுவது தமிழகத்து மேலோர் குழாம்களிற் பொது வழக்காகியது.
வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வல்ல வேதியருக்கும் மன்னருக்கும் இடையிலே நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. மன்னரின் ஆதரவிற் பிரமதேயங்கள் பலவாகிப் பெருகின. அவற்றிலே வேதங்களையும் சாஸ்திரங் களையும் இலக்கண, இலக்கிய நூல்களையும் போதிக்கும் சாலைகளும் கல்லூரிகளும் ஏற்படுத்தப்பட்டன. சமஸ்கிருத மொழி, இலக்கியம் ஆகியவற்றின் செல்வாக்கு மிகுந் தளவில் ஏற்பட்டது. வைதீகப் பிராமணர் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ஆனாற் சமண, பெளத்த முனிவர்களிற் பலர் அவற்றோடு மேலதிகமாகப் பிராகிருத மொழியிலுந் தேர்ச்சி பெற்றிருந்தனர். சம்ஸ்கிருதம், பிராகிருதம் ஆகியவற்றின் செல்வாக்கின் காரணமாகத் தமிழ் வளம் பெற்று விருத்தியடைந்தது. சமய சிந்தன்ை, உலகியல், கலைகள், ஆட்சி முறை முதலியன தொடர்பான நுட்பமான விடயங் களை விளக்கவல்ல ஆற்றல் பொருந்திய சொல்வளங் கொண்ட மொழியாக அது விருத்தி பெற்றது. பரதகண்டத்திலுள்ள பிற தேசங்களோடும் கடல் கடந்த தேசங்களோடும் தொடர்பு கொள்வத்ற்குச் சமஸ்கிருத மொழி பயன்பட்டது. அம்மொழியினை எழுது வதற்குத் தொண்டை நாட்டில் ஒரு புதிய
52

எழுத்து முறையை உருவாக்கினார்கள். அது பல்லவகிரந்தம் எனப்படும். தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் அதனைத் தென்கிழக்காசிய நாடுகளில் அறிமுகஞ் செய்தனர். அது அங்கு பல நூற்றாண்டுகளாக வழங்கி வந்தது. மாமல்லபுரம் போன்ற துறைமுகப் பட்டினங்கள் மூலமாகப் பல்லவர் காலத்திலே தமிழகத்தில் விருத்தி பெற்ற கலாசாரத்தின் அம்சங்கள் தென்கிழக்காசிய நாடுகளை அடைந்தன. கட்டடக்கலை, சிற்பக்கலை, வழிபாட்டு முறைகள், இலக்கிய மரபுகள் என்பவை அவற்றிற் குறிப்பிடத்தக்கவை. காம்போஜம், சம்பா, சாவகம் ஆகியவற்றிலுள்ள இராச்சி யங்களிற் பல்லவர்களதும் பாண்டி யர்களதும் அரசியல் மரபுகள் ஓரளவிற்குப் பின்பற்ற ப்பட்டன.
முடியாட்சியும் நிர்வாக முறையும்
தமிழகத்தில் ஒரு ஒழுங்கான நிர்வாக முறை பல்லவர்களால் முதல் முதலாக உருவாக்கப்பட்டது. அரசின் தோற்றமும் நகரங்களின் வளர்ச்சியும் தென்னிந்தியாவிலே பெருங்கற் பண்பாட்டின் அம்சங்களாகும். பத்துப்பாட்டு நூல்களிலும் தொகை நூல் களிலும் அவற்றின் பரிணாம வளர்ச்சியினைக் கண்டுகொள்ளலாம். பண்டைய தமிழகத்திலே பல சிற்றரசுகள் உருவாகியிருந்தன. அவை பாலை தவிர்ந்த நால்வகை நிலங்களிலும் பரந்து காணப்பட்டன. கோ, கோன், வேள் என்னும் பட்டங்கள் அவற்றின் தலைவர் களுக்கு உரியனவாகும். அவர்களின் பதவி களும் பரம்பரை உரிமையின் வழிப்பட்டன வாகும். அவர்களிற் சோழர், பாண்டியர், சேரர் ஆகிய குலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அரசருக்குரிய சின்னங்களையும் இலச்சினை களையும் கொண்டிருந்தனர். அவர்களை

Page 61
முடியுடை வேந்தர் என்று சொல்வது மரபு. அந்த மரபும் எப்பொழுது ஆரம்பமாகியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொல் காப்பியம் அவர்களைப் பற்றியும் குறுநில மன்னரைப் பற்றியுங் கூறும் கொடி, குடை, கடிகாரம், முரசம், குலச் சின்னம் ஆகியன அரச சின்னங்களாக அமைந்திருந்தன. பல்லவர் காலத்திற்கும் முன்பு மூவேந்தர்கள் மட்டுமன்றி மலையமான்களும் அதிக மான்களும் நாணயங்களை வெளியிட்டனர். ஆயினும், மூவேந்தரின் ஆள்புலங்கள் எவ்வாறு அமைந்திருந்தன? அவர்கள் குடிகள் மீது எத்தகைய அதிகாரஞ் செலுத்தினார்கள்? குடிகளுக்கும் அவர்களுக்கும் இடையே எத்தகைய உறவுகள் ஏற்பட்டிருந்தன? இவ்வாறான வினாக்களுக்குத் தெளிவான விளக்கஞ் சொல்ல முடியாது. இலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில் அவர்கள் இராசதானிகளை அமைத்திருந்தார்கள் என்பதையும், சுங்க வரிகளையும் வாணிப வரிகளையும் சேர்ப்பதில் ஈடுபாடு கொண் டிருந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது. அவர்களாற் படைகளை வைத்திருக்க முடிந்தது. அவர்கள் புரிந்த போர்கள் எல்லாம் உள்நாட்டுப் போர்களாகவே காணப்பட்டன. வேளிர்களோடும் குறுநில மன்னர்களோடும் இடையறாத போர்களை மேற்கொண்டனர். அயலி லுள்ள “நாடு’களைத் தாக்கி மந்தைகளையும் வேறு செல்வங்களையும் கவர்ந்து கொள்வதிற் காலத்தைக் கழித்தனர். இராச்சியங்களை உருவாக்கு வதில் அவர்கள் பல பிரயத்தனங்களை மேற்கொண்ட பொழுதும் அவர்களின் வீரப் பிரதாபங் களினால் இராச்சியங்களின் அபிவிருத்தி முன்னேற்றங் கண்டிருக்கக் கூடுமெனினும் அது பூரணமாகவில்லை. தமிழகத்துச்

சமுதாயப் பிரிவுகளிடையே வேற்றுமைகள் வலுப்பெற்றிருந்தன. அவை பிராந்திய அடிப்படையில் அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்திலே சமுதாயச் சேர்க்கையானது அடிமட்டத்தில் ஏற்பட்டு வந்தது. அது உற்பத்தி முறை, பண்டமாற்று முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இனவுறவு களும் குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவம் பெற்றிருந்தன. அவ்வாறான சூழ்நிலையில் நாடு என்ற உணர்வே ஏற்படக்கூடியதாக இருந்தது. நாடுகள் நூற்றுக்கணக்கானவை. நாட்டுத் தலைவனாகிய கோன் குடிகளின் உணர்ச்சி பூர்வமான ஆதரவைப் பெற்றிருந் தான். முடிமன்னரின் இராசதானி நாடு களிலுள்ள குடிகளைப் பொறுத்த வரையில் மிகத் தூரத்திலுள்ள ஒன்று அன்னியமான தென்றும் கொள்ளப்படக் கூடியது. வேளிர் களிற் சிலர் நாடுகளிற் சிலவற்றை வசப்படுத்தி அவற்றின் மேல் ஆதிக்கம் பெற்றிருந்தனர்.
முடிமன்னராலும் வரையறையான நிர்வாக ஒழுங்குகளையும் எல்லை களையுங் கொண்ட இராச்சியங்களை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. பல்லவரின் ஆட்சி ஏற்பட்டதோடு இந்நிலை மாறிவிடுகின்றது.
புதிய சிந்தனைகளின் மூலமாக முடி யாட்சி தொடர்பான கோட்பாடுகள் அழுத்தம் பெற்றன. அரசனுக்கும் குடிகளுக்கும் இடை யிலான பரஸ்பரத் தொடர்புகள், கடமைகள் என்பன அவற்றில் வலியுறுத்தப்பட்டன. அர்த்தசாஸ்திரம், தர்மசாஸ்திரம் ஆகிய வற்றிலுள்ள சிந்தனைகளின் சாயல்கள் அவற்றிலே படிந்துள்ளன. இராச்சியம் முழு வதற்கும் உரியதும் மன்னனை நாயகனாகக் கொண்டதுமான பரிபாலன முறையொன் றினைப் பல்லவரின் சாசனங்கள் பிரதி
பலிக்கின்றன. நீதி, நீதி பரிபாலனம்

Page 62
என்பவற்றை நிலைப்படுத்துவது மன்னனின் தலையாய கடன் என்பது வலியுறுத்தப்பட்டது. சிலப்பதிகாரம் மூலமாக இதனைத் தெட்டத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. சமகாலத் தமிழகத்திலே ஏற்பட்டிருந்த அரசியல் வழக்கத்தினையும் சிந்தனைகளையும் திருக்குறள் பிரதிபலிக்கின்றது என்று கொள்ள
6) TD.
இயற்கை எல்லைகளைக் கொண்ட நாடுகளை இராச்சியமாக இணைத்துக் கொள் வதற்குப் புதிய சிந்தனைகளும் கோட்பாடு களும் ஏதுவாயிருந்தன. நாட்டுத் தலை வனாகிய கோன் முடிமன்னனுக்குப் பணிந்து, அவனோடு இணைந்து, தனது நலன்களைக் காத்துச் செயற்படுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகியது. பல்லவர்கள் புரிந்த போர்கள் பெரும் பான்மையும் அயல்நாட்டு மன்னர் களுக்கு எதிரானவை. அவை சாளுக்கியர், இராஷ்டிரகூடர், பாண்டியர் முதலியோருக்கு எதிரானவை. அவை நீண்ட காலப் போர்கள். பகைவர்களும் பெருவலி படைத்தவர்கள். ஆயினும் பல்லவர் ஆறு நூற்றாண்டுகளாக அதிகாரஞ் செலுத்த முடிந்தது. இராச்சிய எல்லைகளுக்குள்ளே வேளிர், கோன் போன்ற குறுநில மன்னர்கள் பல தடவைகளாகக் கிளர்ச்சிகள் புரிந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இராச்சிய பரிபாலனத்தில் உயர் பதவிகளைப் பெற்றுச் சாமத்தராகி விடுகின் றனர். இத்தகைய நில முதலாம் பாண்டியப் பேரரசிலும் ஏற்பட்டிருந்தது.
சமய பண்பாட்டு நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் முடியாட்சியும் இராச்சியமும் விருத்தி பெறுவதற்கு ஏதுவாயிருந்தன. பிரமதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம், நகரம் என்னும் அமைப்புகள் இக்காலத்திலே

உருவாக்கப்பட்டன. அவை மன்னரின் ஆதர வுடன் உருவாக்கப்பட்டவை. சுதந்திரமாக இயங்கியவை. செல்வமுஞ், செல்வாக்கும் பலமுங் கொண்ட அவ்வமைப்புகள் மன்னரின் செல்வாக்கும், அதிகாரமும் மேலோங்குவதற்கு ஏதுவாயிருந்தன. அதனை நன்குணர்ந்த மன்னர்கள் அவற்றை அமைத்துக் கொள்வதில் ஆர்வங் கொண்டனர்.
என ரிைறைந்த மிரமதேயமும் எண்ணிறைந்த தேவதானமும்
எணர்ணிறைந்த பள்ளிச் சந்தமும் எத்திசையு மினிதியற்றி என்னும் தொடர்கள் சின்னமனூர் சாசனத்திலே காணப்படுகின்றன.
பிரமதேயம், தேவதானம், நகரம், பள்ளிச் சந்தம் என்பன பலவாகிப் பெருகி விருத்தி பெற்றதால் இனவுறவுகளை அடிப்படையாகக் கொண்ட புராதனமான சமுதாயக் கட்டமைப் புகள் சீர்குலைந்தன. கோயில், சமணப்பள்ளி, பிரமதேயம், நகரம் என்பனவற்றை அடிப்படை யாகக் கொண்டு சேவைகள் மறுசீராக்கம் பெற்றன. இவை அனைத்துடனும் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்த வணிக கணங்கள் செல்வமும் படைபலமுங் கொண்டிருந்த மையால் நாடுகளில் அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றனர். இராசதானிகளின் அதிகாரம் மேலோங்குவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகியிருந்தது.
மன்னரும் வைதீகச் சடங்குகளும்
பல்லவர்களதும் பாண்டியர்களதும் அரசியற் கோட்பாடுகளையும் இலட்சியங் களையும் அவர்களின் பட்டயங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். பல்லவர்களின் செப்பேடுகளிற் சமஸ்கிருத மொழியிலும்

Page 63
தமிழிலும் எழுதப்பட்டுள்ள பகுதிகள் உள்ளன. தமிழ்ப் பகுதியானது மன்னனால் வழங்கப் பெற்ற தானம் பற்றிய தாயிருக்கும். சமஸ் கிருதப் பகுதி வம்சோற்பத்தி, வம்சாவளி என்பன பற்றியதாகும். அது பிரசஸ்தி போல் அமைந்திருக்கும். வித்துவப் புலமை கொண்ட கவிஞரால் இலக்கிய நடையில் எழுதப் பட்டிருக்கும். பிரசஸ்தியிலுள்ள வம்சோற்பத்தி பற்றிய விவரங்கள் பெளராணிகமானவை. பல்லவர்கள் அஸ்வத்தாமனின் வழிவந்த பிரம்மகூடித் திரியர்களென்று சொல்லப் படுகின்றது. இக்கதை புராணங்களிலுள்ள வம்சாவளிப் பகுதிகளை முன்மாதிரியாகக் கொண்டு புனையப்பட்டது. வேந்தர் குலத்தவரைச் கூடித்திரியர் என்று கொள்ள முடிவதாற் பல்லவரும் கூடித்திரியர் என்று கருதப் பட்டனர். தொண்டை நாட்டில் அதிகாரஞ் செலுத்திய அரசர் குலமொன்றைச் சேர்ந்தவர்கள் பிராமண குலமொன்றுடன் கலப்புற்றிருத்தல் கூடும். அவர்கள் பிரம்ம கூடித்திரியர் என்ற கருத்து அதனால் ஏற்பட்ட ஒன்றாகலாம்.
ஆரம்பகாலப் பல்லவர்கள் வைதீக நூல் களிலே கூறப்படும் சடங்குகளையும் வேள்வி
களையும் விமரிசையாகக் கொண்டாடினார்கள்
பல்லவரைப் பொறுத்தவரையில் ஆட்சி யுரிமை பரம்பரை வழியானது தந்தைக்குப் பின் அரசுரிமை மூத்த மகனுக்குரியதாகும். இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இறந்தபின் நாட்டிலே அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியது. அத்தருணத்திலே காஞ்சி புரத்துக் கடிகையாரும் நகரத்தாரும் உயரதி காரிகளும் பல்லவ வம்சத்துக் கிளைமரபினைச் சேர்ந்த ஹிரணியவர்மனிடஞ் சென்று முறைப்பாடு செய்து, அவனுடைய இளைய

மகனை அழைத்துச் சென்று அரசனாக முடிசூட்டினார்கள். வேத விதிப்படி அபி ஷேகஞ் செய்யப்பட்ட ஒருவனே அரசனாகி அவனியை ஆளமுடியுமென்று மனுதர்ம சாஸ்திரம் போன்ற நூல்கள் கூறும். அதற் கிணங்கப் பல்லவர்கள் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின்பு அரசனுக்குரிய அதிகாரங் களைப் பெற்றார்கள். இளவரசன் ஒருவனை அபிஷேகஞ் செய்யுமிடத்து அவனுக்கு அபிஷேகநாமம் என்னும் பட்டப்பெயரைச் சூட்டுவது வழமை. பெருங்கோயில்களின் நிர்மாணகாரனாகிய ராஜசிங்கன் நரசிம்ம வர்மன் என்னும் பட்டப்பெயரைக் கொண்டி ருந்தான். பின்பு, ஹிரண்யவர்மனின் மகனாகிய இளைஞனைக் காஞ்சிபுரத்திலே அரசனாக்கிய பொழுது அவனுக்கு நந்தி வர்மன் என்னும் பட்டப்பெயரைச் சூட்டி னார்கள். "நந்திவர்மன் என்று அபிஷேகஞ் செய்து” என அவனைப் பற்றி வரும் சாசனத் தொடரால் இதனை அறிய முடிகின்றது
பல்லவ மன்னர்கள் தங்களைச் சக்கர வர்த்திகளாகவே கருதினார்கள். அதியரையர்க் குரியனவான மகாராஜாதி ராஜ, தர்ம மகாராஜ, தர்ம மகாராஜதிராஜ என்னும் பட்டங்களை அவர்கள் கொண்டிருந்தனர். மன்னர்கள் விருதுப் பெயர்களைச் சூடிக் கொள்வது மகேந்திரவர்மன் காலம் முதல் வழமையாகியது. அரசனொருவனின் தகை மைகள், குணநலன்கள், ஆற்றல், வீரம், சாதனைகள் என்பவற்றைப் புலப்படுத்தும் வகையில் அவனுடைய விருதுப் பெயர்கள் அமைந்திருக்கும். குணபரன், சத்துருமல்லன், சைத்யாகாரி, லசுழிதன், சித்திரகாரப்புலி, மத்தவிலாசன், சங்கீர்ண ஜாதி, லலிதாங்குரன் என்பன, முதலாம் மகேந்திரவர்மனின் விருதுப் பெயர்களாகும். ராஜசிம்மனின் 150 விருதுப்

Page 64
மத்தவிலாசன், சங்கீர்ண ஜாதி, லலிதாங்குரன் என்பன, முதலாம் மகேந்திரவர்மனின் விருதுப் பெயர்களாகும். ராஜசிம்மனின் 150 விருதுப் பெயர்கள் காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலில் எழுதப்பட்டுள்ளன. பாண்டிய மன்னர்களும் விருதுப் பெயர்களைக் கொண்டி ருந்தனர். பராந்தகன் நெடுஞ்சடையன் மநூபமன், கீதகின்னரன் என்னும் விருதுப் பெயர்களுக்கு உரியவன் என்பதை வேள்விக் குடி செப்பேடுகள் மூலம் அறியமுடிகின்றது?
காளையின் உருவத்தைப் பல்லவர்கள் தங்கள் அரச சின்னமாகக் கொண்டிருந்தனர். வலது பக்கம் நோக்கி, அமர்ந்த காளையின் வடிவம் அவர்களின் ஆவணங்களிலும் நாணயங்களிலும் கொடிகளிலும் பொறிக்கப் பட்டிருக்கும். பல்லவரின் சாசனங்கள் சில அவர்களின் விருஷப லாஞ்சனத்தைக் குறிப்பிடுகின்றன. அரசனின் ஆவணத்தை விடைமண் பொறி ஒலை என நந்திக் கலம்பகம் குறிப்பிடுகின்றது. படைத் தளங் களிலே தங்கியிருந்த காலங்களிற் பல்லவர் வழங்கிய பட்டயங்களிற் சிம்ம உருவம் பொறிக்கப்பட்டுள்ளமை கவனித்தற் குரிய தாகும். மன்னர்கள் உலாப் போன சமயங்களிலும் படைகள் போருக்குச் சென்ற நேரத்திலும் விடைக் கொடியை ஏந்திச் சென்றனர். “விடை வேற்கொடி வேற்படை முன் உயர்த்த” தானை பற்றியும் நந்திக் கலம்பகம் குறிப்பிடுகின்றது"
பல்லவர் செம்பு, வெள்ளி, பொன் ஆகிய உலோகங்களில் நாணயங்களை வெளி யிட்டுள்ளனர். பொற்காசுகள் மிக அரிதாகவே கிடைத்துள்ளன. பெரும் பாலான காசுகளிற் காளையின் உருவமும் பூரீபர அல்லது யூரீநிதி என்னும் சொல்லுங் காணப்படும். சில சமயங்
56

களிலே காளையின் இடத்திற் சிம்ம உருவங் காணப்படும். யானை, குதிரை, மீன், சுவஸ்திகம், சங்கு, சக்கரம் போன்றவற்றின் உருவங்களும் காசுகள் சிலவற்றிலே காணப்படும். பல்லவரின் காசுகள் பல இலங்கையின் வடபகுதியிற் கணிசமான அளவிலே கிடைத்துள்ளன. பல்லவரின் இராச்சியத்தோடு நெருங்கிய வாணிபத் தொடர்புகளை இலங்கை கொண்டிருந் தமைக்கு அவை சான்றுகளாய் உள்ளன.
கட்வாங்கமும் பல்லவரின் அரச சின்னங் களில் ஒன்றாகும். காளையைப் போலக் கட்வாங்கமும் சைவசமய சின்னமாகும். மகேந்திரவர்மன் காலம் முதலாகப் பல்லவரிற் பலர் சைவ சமயத்தில் மிகுந்த அபிமானங் கொண்டிருந்தனர். கட்வாங்கம் எனப்படுவது கபாலவடிவம் அமைந்த தலையுடைய தண்டமாகும்.” கட்வாங் கத்தை ஏந்தி யிருப்பதாற் சிவபெருமானைக் கட்வாங்கன் என்றும் கட்வாங்கதர என்றும் வர்ணிப்பர். நந்திவர்மனை அரசனாக முடிசூட்டியபொழுது அவனுக்குக் கட்வாங்கம் முதலான அரச சின்னங்களை அமைச்சர்களும் நகரத்தாரும் கடிகையாரும் வழங்கினார்கள்." கடுமுக வாத்தியம் என்னும் இசைக் கருவியும் சமுத்திரகோஷம் என்னும் பேரிகையும் பல்லவரின் சேனைகள் பவனி சென்றபொழுது இசைக்கப்பட்டன.
வேதமார்க்கத்தையும் வடமொழி நூல் களையும் போற்றுவதிற் பாண்டியர்கள் பல்ல வருக்கு நிகரானவர்கள். மேலதிகமாக அவர்கள் தமிழ் மொழியினையும் தமிழ்ப் புலவர் களையும் போற்றினார்களென்றும் அவர்களின் சாசனங்கள் புகழ்ந்துரைக்கின்றன. பாண்டி நாட்டிலே சைவம், வைணவம், சமணம்

Page 65
ஆகிய முச் சமயங்களும் மன்னரின் ஆதரவினைப் பெற்றிருந்தன. பாண்டியரிற் சிலர் சைவராயிருந்தனர். வேறு சிலர் வைணவராயிருந்தனர்.' திருச்செந்தூர்ச் சாசனம் வரகுணவர்மனைச் சுப்பிரமணிய பட்டாரகர் உடையாரின் அடியார் என வர்ணிக்கின்றது.? அவன் சோழநாட்டிலும் தொண்டை நாட்டிலுந் தங்கியிருந்த காலத்திலே பாண்டிநாட்டிலும் சோழ நாட்டிலும் அமைந்திருந்த சைவ, வைணவக் கோயில்களுக்கு மிகுந்தளவிலே தானங்களை வழங்கினான்.
பாண்டியரின் பட்டயங்களிற் சமஸ்கிருத மொழியிலும் தமிழ் மொழியிலும் எழுதப்பட்ட வாசகங்கள் இணைந்திருக்கும். இவை இரண்டும் பிரசஸ்தி போல அமைந்தவை. சமஸ்கிருத வாசகத்தின் ஆரம்பப் பகுதியில் பிரமன், திருமால், சிவன் ஆகியோரைப் பற்றிய துதிப் பாடல்கள் அமைந்திருக்கும். பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்களில் மும்மூர்த்திகளின் பிரதிமைகளைத் தாபனஞ் செய்வதற்கான வகையிலே கருவறைகள் அமைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடற் குரியதாகும்.
பாண்டியரின் பட்டயங்களிலுள்ள மெய்க் கிர்த்திகளில் ஆதிகாலம் முதலாக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் பெயர்கள் அனைத்தும் இடம்பெறவில்லை. காலக்கிரம வரிசையிலும் அவை சொல்லப்படவில்லை. பிரபலமான மன்னர் பலரின் பெயர்கள் சொல்லப் படுகின்றன. அவர்களைப் பற்றிய விவரங்களும் பெளராணிகமானவை. புராதன காலத்து மன்னர்களின் சாதனைகளென்று மேல் வருவன சொல்லப்படுகின்றன.
1. கடலைக் கடந்து அமிர்தம் கொண்டமை.
57

2. இமயத்தில் இணைக்கயல் வடிவத்தை
எழுதியமை.
3. இந்திரனின் மாலையைக் கவர்ந்து
பட்டமாலையாக அணிந்து கொண்டமை.
4. இந்திரனின் முடியோடு வளையை
உடைத்தமை
5. பாரதப் போரிலே கெளரவரை வெற்றி
கொண்டமை.?
பாண்டிய மன்னர்களைப் பற்றிய மரபுவழியான ஐதீகங்கள் சிலவற்றைத் தளவாய்ப்புரச் சாசனம் மேல் வருமாறு வர்ணிக்கின்றது.
ஒருங்கு முன்னாள் மடிவித்த
சிறுமேனி உயர்தவத்தோன்
மடலவிழ் பூ மலயத்த
மாமுனி புரோகிதனாகக்
கடல்கடந்த அமிர்த கொணர்டும்
கயலிணை வடவரை பொறித்தம்
ஹரிஹயன தாரம் பூண்டு
மவன்முடியொடு வளையுடைத்தம்
விரிகடலை வேலின் மீட்டும்
தேவாசுரஞ் செருவென்றும்
அகத்தியனொடு தமிழாய்ந்ததும்.
கயல்பாய் கடல்போலக்
குளம்பலவின் கரையுயரியும்
மன்னெதிரா வகைவென்று
தென்மதரா புரஞ்செய்தும்

Page 66
அங்கதனி லருந்தமிழ் நற்சங்கம்
இரீஇத் தமிழ் வளர்த்தம்
ஆறுபல தலைகண்டும்
அமரராலயம் பல செய்தம்
எண்ணிறந்த பிரமதேயமும்
எண்ணிறந்த தேவதானமும்
எண்ணிறந்த தடாகங்களும்
இருநிலத் தியற்றுவித்தம்
நின்றபெரும் புகழாலும்
நிதிவழங்கு கொடையாலும்
வென்றிபோர்த் திருவாலும்
வேல்வேந்தரில் மேம்பட்ட
கதிரார்கடுஞ் சுடரிலைவேல்
கலிப்பகை கண்டருள் கண்டன்
மதராபுர பரமேஸ்வரன். 4.
பாண்டிய மன்னர்கள் வரைவிலாத சிறப்புடையவர்கள், பராக்கிரமத்தினால் வெற்றித் திருமகளைத் தம்வசமாக்கியவர்கள், புஜபல பராக்கிரமத்தினால் நிலவுலகிலும் வானுலகிலும் புகழ் படைத்தவர்கள், இமயத்தில் இணைக்கயல் எழுதியவர்கள், இந்திரனது மாலையை தம் பட்டமாலையாக அணிந்தவர்கள், மலயத்து மாமுனி அகத்தி யனைப் புரோகிதனாகக் கொண்டவர்கள், மதுரை மாநகரை நிர்மாணித்து அகத்திய னோடு அங்கிருந்து தமிழ் ஆய்ந்தவர்கள், மதுரையிலே சங்கம் நிறுவியவர்கள், ஆற்றங் கரைகளிலே ஆலயங்கள் பல அமைத்
58

தவர்கள், அளவிலாத பிரமதேயங்களையும், தேவதானங் களையும், பள்ளிச் சந்தங்களையும் உருவாக்கியவர்கள், விசாலமான தடாகங் களை நாட்டிலே நிர்மாணித்தவர்கள் என்றவாறு அவர்களைப் பற்றிய ஐதீகங்களும் விவரங்களும் பிரசஸ்தி வடிவிலான அவர் களின் பட்டயங்களில் வர்ணிக்கப்படுகின்றன. களப்பிரரிடமிருந்து ஆட்சி யுரிமை யினைக் கைப்பற்றிக் கொண்ட பாண்டிய மன்னர்கள் அர்த்தசாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரம் போன்ற நூல்கள் விளக்கும் முறைகளைத் தமது அரசியல் நெறியாகக் கொண்டனர். ஜடிலவர் மனாகிய பராந்தகனின் பூரீவரமங்கலச் செப்பேட்டு வாசகத்திலுள்ள மேல்வரும் தொடர்கள் குறிப்பிடத்தக்கவை:
மணிமாடக் கூடல்புக்கு
மலர்மகளொடு வீற்றிருந்த மநுதர்சித மார்க்கத்தினால்
குருசரிதம் கொண்டாடிக்
கண்டகசோதனை தான்செய்து
கடன்ஞாலம் முழுதளிக்கும் பாண்டியநாதன் பணிடிதவத்ஸலன்
வீரபுரோகண் விக்கிரமபாகரன்
பராந்தகன் பரமவைஷ்ணவன் தானாகி
நின்றிலங்கும் மணிநீள்முடி
நிலமன்னன் நெடுங்சடையற்கு.*
மனுநெறி அரசர்க்குரிய நெறியாகப் பாண்டிய மன்னர்களாலும் அவர்களின் அவைக்களப் புலவர்களினாலும் போற்றப் பட்டது என்பதற்கு ஆதாரமாக இது போன்ற சாசனக் குறிப்புகள் பல உள்ளன. கண்டக சோதனை தான் செய்து எனச் செப்பேட்டில்

Page 67
வரும் தொடர் மிக முக்கியத் துவங் கொண்ட தாகும். அது கெளடில்ய அர்த்த சாஸ்திரத்தின் செல்வாக்கினை உணர்த்துவதாகும். கண்டக சோதனா என்பது அதியுயர் நீதிமன்றங்களில் ஒரு வகையானதென்று அர்த்தசாஸ்திரங் கூறும். அது மன்னனால் நிறுவப்படுவது; அவனால் நியமிக்கப்படும் அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டது; மன்னனுடைய அதிகாரத்தை இராச்சியத்திலே நிலைநாட்டு வதற்கு ஏதுவான சாதனமாக அமையக் கூடியது; பாண்டியன் கண்டகசோதனை செய்தானென்று சாசனங் குறிப்பிடுவதனால் நீதிபரிபாலனத்தைப் பொறுத்தவரையிலே பாண்டியரின் நிர்வாக முறையில் அர்த்த சாஸ்திரத்தின் செல்வாக்கு ஏற்பட்டிருந்த தென்று கொள்ளலாம்.
மணிமுடியும் பட்டமாலையும் பாண்டிய மன்னரின் பிரதானமான அணி கலன்களாகும். பாண்டியரின் வழமைப்படி இளவரசன் ஒருவன் முடிசூடிக் கொள்வதன் மூலம் அரச பதவி பெற்றான். அது தொன்மைக் காலம் முதலாக நிலவிவந்த வழமையாகும். பாண்டிய மன்னர்கள் அணிந்த பட்டமாலை இந்திரனிட மிருந்து கிடைத்தது என்ற ஐதீகம் நெடுங் காலமாக நிலை பெற்றது. மணிமுடியும், பட்ட மாலையும் குலதானமாகக் கொள்ளப் பட்டன. தம் முன்னோர்களிடமிருந்து பெற்ற அவ்விரு அணிகலன்களையும் தலைமுறை தலைமுறை யாகப் பாண்டிய மன்னர், பாதுகாத்து வந்தனர். பாண்டிநாட்டில், மதுரையிலே, அரச பதவி பெறுவதற்கு வேண்டிய இன்றியமையாத சின்னங் களாகப் பிற்காலத்திலே அவை கருதப் பட்டன.
இணைக்கயல் வடிவம் பாண்டியரின் குலச் சின்னமாகும். அதனால், தென்ன வனை

மீனவன் எனவும் குறிப்பிடுவது வழமை. சில சாசனங்கள் அவனை மீனகேதனன் என வர்ணிக்கின்றன. பாண்டியரின் கொடிகளில் மீனுருவம் வரையப்பட்டிருக்கும். அரச முத்திரைகளிலும் நாணயங்களிலும் இணைக் கயல்களின் வடிவம் அமைந்திருக்கும். காளை, குதிரை, சுவஸ்திகம் முதலியவற்றின் உருவங் களும் சில சமயங்களிற் பாண்டியரின் நாண யங்களிற் காணப்படும்.
நிர்வாகப் பிரிவுகள் கோட்டம்
பிற்காலப் பல்லவரின் சாசனங்களிற் கோட்டம், நாடு, ஊர் என்னும் பிரிவுகள் குறிப்பிடப்படுகின்றன. கோட்டம் என்னும் பிரிவு தொண்டை நாட்டுக்குச் சிறப்பான தாகும். கோட்டம் என்பதன் உற்பத்தி மிகவும் புராதன மானது. அது பல்லவரின் ஆட்சிக்கும் முற்பட்ட தென்று சிலர் கொள்வர். எயிற் கோட்டம், பல்குன்றக் கோட்டம், ஊற்றுக்காட்டுக் கோட்டம், புலியூர்க் கோட்டம், வெண்குன்ற கோட்டம், மணவிற் கோட்டம் முதலிய 24 கோட்டங்கள் தொண்டை நாட்டில் இருந்தன." அதற்கு நிகரான பிரிவைச் சோழ, பாண்டிய நாடுகளிற் கூற்றம் என்றனர். கோட்டம் ஒவ்வொன்றிலும் நாடு என்னும் பிரிவுகள் சில அடங்கியிருந்தன. கோட்டம், நாடு என்ப வற்றுக்கு நிகரான ஆந்திர தேசத்திலுள்ள பிரிவுகளை முற்காலப் பல்லவரின் சாசனங்கள் முறையே விஷய, ராவர்ட்ர என்னும் பெயர்களாற் குறிப்பிடுகின்றன.
நாடு
நாடு என்ற பிரிவுகள் தமிழகம் முழு வதிலும் அமைந்திருந்தன. அவை மிகவும் பழமையானவை. இராச்சியங்கள் தோன்று வதற்கு முற்பட்ட காலங்களில் உருவானவை.

Page 68
பல நூற்றுக்கணக்கான நாடுகள் மத்திய காலத் தமிழகத்திலே காணப்பட்டன. நாடுகளின் எல்லைகள் ஆறு, சிற்றாறு, ஓடை, குளம், கால் வாயப் , வனம் , மலையடிவாரம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்பட்டிருந்தன. அவற்றின் சமூக வாழ்க்கையிற் பந்தங்கள், இன உறவு களையும் உற்பத்தி முறைகளையும் அடிப்படை யாகக் கொண்டிருந்தன. நாடுகளில் வயல் களும், புனங்களும், வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் குடியிருப்புக்களைச் சூழ்ந் திருந்தன. நாட்டுத் தலைவன் கோ எனவும் கோன் எனவும் அழைக்கப்பட்டான். வேளாண்மை விருத்தியடைந்திருந்த நாடுகளில் உழவர்களை உறுப்பினராகக் கொண்ட மன்றங்கள் அமைந்திருந்தன. நாட்டின் பரிபாலனம் தொடர்பான பொது விடயங்களை அவை கவனித்தன. அவற்றின் ஆளுங் கணத்தாரை நாட்டார் என்றனர். முடியாட்சி முறையும் இராச்சியங்களும் அபிவிருத்தியடைந்த காலத்தில் நாடுகளின் மரபுவழியான பரிபாலன முறையிலே மாற்றங்கள் ஏற்பட்டன. பரம்பரை அடிப்படையில் அதிகாரஞ் செலுத்திய கோன் என்னும் நாட்டுத் தலைவர்கள் இராச்சிய பரிபாலனத்திலே பதவிகளைப் பெற்று அரசருக்கு அனுசரனையான அதிகாரிகளாயினர். அவர் களுக்கு நிலமானியங்கள் கிடைத்தன. அதே சமயம் நாடுகளில் அவர்களுக்கு மரபு வழியாக இருந்து வந்த அதிகாரங்கள் முடிமன்னர் வசமாகிவிட்டன. நாட்டிலுள்ள ஆளுங் கணமான நாட்டாருடன் நெருங்கிய தொடர்பு களை மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். நில மானியங்களைப் பற்றிய ஏற்பாடுகளில் நாட்டாரும் பங்குகொள்ளும் வழக்கம் ஏற்பட்

டிருந்தது. நாட்டு வழமைகளை அனுசரிப்பதன் மூலமாக நாட்டாரின் சம்மதத்துடன் மன்னர்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்டிக் கொள்ள முடிந்தது. அரசரின் ஆணைகளை நிறைவேற்றுவதில் நாட்டார் ஈடுபாடு கொண்டனர். “ஆளுவ அரசர் விண்ணப் பத்தால் சாளுக்கிய அரசர் ஆணத்தியாகப் பணித்தோம் நாட்டாரும் ஊராரும் ஆள் வாரும்” என்னும் குறிப்பு நெல்லூர் மாவட்டத் திலுள்ள சாசனமொன்றிலே காணப்படு கின்றது." சாளுக்கிய அரசரின் கட்டளைப் பிரகாரமாக நாட்டாரும் ஊராரும் ஆள்வாரும் கூட்டமாகக் கூடிச் சுப்பிரமணிய பட்டாரகர் கோயிலுக்கு 15 கழஞ்சு பொன் தானமாகக் கொடுக்க முடிபு செய்தனர். பிரம்மதேயம் உருவாக்குவதைப் பற்றி கோனோலை நாட்டாருக்கு அனுப்பப்பட்டதாகக் காசாக் குடி பட்டயம் கூறும். ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நாட்டாருங் காணி க என்னுந் தொடர் அதிலுள்ளமை கவனித்தற்குரியது." கொடு கொள்ளி என்னும் ஊரைப் பிராமணன் ஒருவனுக்குப் பிரமதேயமாகக் கொடுக்குமாறு நாட்டாருக்கு மன்னன் கட்டளை வழங்கினான். அரசனுடைய கோனோலை கிடைத்த பின்பு நாட்டார் முன்புள்ள காணியாளரையும் உடமைக் காரரையும் நீக்கி, எல்லைகளிற் பிடி சூழ்ந்து கள்ளியுங் கல்லும் நாட்டிப் பிரம தேயமாக வகை செய்து கொடுத்தனர். திரு முகம் கண்டு நாட்டோம் நாட்டு வியவன் சொல்லிய எல்லை போய் படாகை வலம் செய்து கல்லும் கள்ளியும் நாட்டிக் கொடுத்தது என்ற குறிப்புச் சாசனத்திற் காணப்படுகின்றது. சோழநாட்டு தென் கரையூர் நாட்டு நாட்டார் காண்க என்னும் வாசகம் தண்டன் தோட்டம் சாசனத்திற் காணப்படு கின்றது. நிலதானங்கள் பற்றிய ஏற்பாடுகள் இரு மட்டங்களில் மேற்கொள்ளப் Lu L L 60T. அரணி மனையிலிருந்து

Page 69
மன்னனது கட்டளை திருமுகமாக நாட்டாருக்கு அனுப்பப் பட்டது. அதனை ஒப்புக்கொண்டதும், நாட்டார் திருமுக ஒலைப்படி தானமாகக் கொடுக்க வேண்டிய நிலத்தை வரையறை செய்து, எல்லையிட்டு, அதனைப் பற்றிய விவரங்களைத் தங்கள் வசமான புத்தகங்களில் எழுதியபின் அதன் பிரதியை மன்னனின் அதிகாரிகளிடம் வழங்குவார்கள். அது அற வோலை என்று சொல்லப்படும். பூமிதானம் பற்றிய வாசகம் சாசனமாக எழுதப்படுமிடத்து அதில் அரசனது கோனோலையும் நாட்டார் எழுதிய அறவோலையும் சேர்ந்திருக்கும். இது பிற்காலத்திலே ஆனைமங்கலச் செப்பேடுகள் போன்ற ஆவணங்கள் வாயிலாகத் தெளிவா கின்றது. “நாட்டார்க்கு விட்ட திருமுகம் நாட்டார் தொழுது தலைக்கு வைத் தெல்லை போய்க் கல்லும் கள்ளியும் நாட்டி படாகை வலஞ் செய்து நாட்டார் விடுத்த அறையோலைப்படி..” என்னுஞ் சொற்றொடர் பல்லவமன்னனின் பட்டத்தாள்
மங்கலம் பட்டயத்திற் காணப்படுகின்றது."
பாண்டி நாட்டிலும் நில தானங்கள் தொடர்பான ஏற்பாடுகளில் நாட்டார் தொடர்பு கொண்டிருந்தனர். மதுரதர நல்லூரை அந்தணர்க்குரிய பிரமதேயமாகப் புனரமைத்த பொழுது ஆசிநாட்டு நாட்டாரும் நெச்சுரநாட்டு தாட்டாரும் உடனாகி நின்று எல்லை காட்டப் பிடி சூழ்ந்தது என்று தளவாய்ப்புர சாசனங் குறிப்பிடுகின்றது? நாட்டார் தங்கள் பொறுப்பு களை நிறைவேற்றுவதற்குக் குடிகளிடமிருந்து வரிகளையும் சேவைகளையும் பெற்றனர். நாடாள்வான் என்னுந் நாட்டுத் தலைவர்களைப் பற்றிய சாசனக் குறிப்புகள் உண்டு. நாட்டுக் கணக்கு, நாட்டு வியவன் என்போரைப் பற்றிச் சில சமயங்களிற் சொல்லப்படுகின்றது.

ஊர், பிரமதேயம், நகரங்
அண்மைக்காலம் வரையும் வரலாற்றிர் சிரியர்கள் புராதன கால வரலாற்றை நோக்கும் பொழுது, அரசியலமைப்புகளையும் சமுதாய அமைப்புக்களையும் ஒரு மத்தியமயமான ஆட்சி முறையினை அடிப்படையாகக் கொண்டு அவை இயங்கின என்ற கோட் பாட்டின் வரையறைக்குள் நின்று பார்த்தனர். தேசிய வாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் பழமை வாதிகளுக்கும் அது இதமான வொன் றாகக் காணப்பட்டது. சமூக விஞ்ஞானத்தின் பரிமாணங்கள் வித்துவப் புலமையால் விரி வடைந்தமையாலும், அன்னிய தேசத்தவர்கள் தென்னிந்திய சமுதாய அமைப்பினைப் பற்றிப் பெருமளவில் ஆராயத்தொடங்கியதனாலும், புதிய சிந்தனைகளின் அடிப்படையில் வரலாற்றை ஆராய்கின்ற இளந்தலை முறையினர் தமிழகத்திலே உருவாகியதன் விளைவாகவும் வரலாறு தொடர்பான ஆராய்ச்சிகளிற் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முடிமன்னர்களை வரலாற்றிலிருந்து ஓரங்கட்டிவிட முடியாதெனினும், சமூக பண்பாட்டு வளர்ச்சிகளையும் வரலாற்றின் விருத்திகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அடிமட்டத்தி லுள்ள சமூகப் பிரிவுகள், நிறுவனங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேல்நோக்கிச் செல்வதே பொருத்தமான அணுகுமுறை யாகும். புராதன காலத்தில் மிகப் பெரும் பாலான மக்கள் இராசதானிகளிலும் நகரங் களிலுமன்றிக் கிராமங்களிலேயே வாழ்ந்தனர். பல்லவர் காலத்து இலக்கியமும் பெரும் பாலான சாசனங்களும் தொல் பொருட் சின்னங்களும் பிரதிபலிக்கும் சிந்தனைகளும் பண்பாட்டுக் கோலங்களும் நாட்டார் வழக் குடன் தொடர்பு கொண்டனவாகும்.

Page 70
முடிமன்னர்களின் அதிகாரங்களும் ஆதிக்கமும் நாட்டு வழமைகளுக்கு ஏற்ப அமைந்தனவாகும். தமிழகத்திலே ஆதிகாலம் முதலாக மக்கள் ஒன்று கூடித்தங்கள் விவகாரங்களை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழமை ஏற்பட்டிருந்தது. காலப்போக்கிலே ஊர்கள் தோறும் பொது விவகாரங்கள் பற்றி ஆராய்ந்து பரிபாலனம் புரிகின்ற சபைகள் உருவாகின. அவற்றை ஊர் என்றும் ஊரார் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஊர்கள் சமூக அமைப்பின் தன்மைகளுக்கு ஏற்ப வேறுபட்டிருந்தன. மத்திய காலத்தில் அவற்றை ஊர், பிரமதேயம், நகரம் என மூன்று வகையினவாகப் பாகுபாடு செய்தனர். நிர்வாகந் தொடர்பான ஆவணங்களில் அந்தப் பாகுபாடு ஒழுங்காகப் பின்பற்றப்பட்டது. மத்திய காலத்தில் ஒவ்வொரு நாட்டுப் பிரிவிலும் இம் மூன்று வகையான ஊர்கள் காணப்பட்டன. வேளான் வகைக் குரிய நிலங்கள் கூடுதலாக அமைந்திருந்த ஊர்கள் ஊர் எனப்பட்டன. அங்குள்ள நிலக்கிழார்கள் ஊர் சபையின் ஆளுங் கணத்திலே உறுப்பினராய் இருந்தனர்.
பிராமணர்கள் மானியமாகப் பெற்றிருந்த நிலப் பங்குகள் கூடுதலாக விருந்த ஊர்கள் பிரமதேயங்களாகும். அவை அரசரால் உருவாக்கப்பட்டவை. வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் கிரியைகளிலும் வல்ல பிராமணருக்குப் பிரமதேயங்கள் அமைத்துக் கொடுக்கப் பட்டன. அரசனின் அதிகாரிகளும் சேவகர்களும் அவற்றுட் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. அங்குள்ள குடி யானவர்களிடமிருந்தும் நிலங்களிலிருந்தும் அரசனுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை களும் கடமைகளும் பிரமதேயக் கிழவருக்கு
ஒப்படைக்கப்பட்டன. பிரமதேயச் சபைகளிலும்

அவற்றால் உருவாக்கப்படும் நிறைவேற்றுக் குழுக்களான வாரியங்களிலும் தகுதி வாய்ந்த பிராமணரே அங்கத்தவராயிருந்தனர். வணிகர் கணங்கள் அதிகாரம் பெற்றிருந்த ஊர்கள் நகரம் என்னும் பொதுப்பெயரால் வழங்கி வந்தன. அவர்கள் அரசரிடமிருந்து குறிப்பிட்ட ஒரு தலத்தினையும் அங்குள்ள மக்களையும் ஆட்சி புரிவதற்கு அதிகாரம் பெற்றிருந்தனர். பிரமதேயங்களைப் போலன்றி நகரங்கள் குடியானவர்களிடமிருந்து இறைகடமை களைப் பெற்று, அவற்றை அரசனுக்கு ஒப்படைக்க வேண்டும்.
இதுவரை கிடைத்துள்ள ஆவணங்கள் குறிப்பிடும் தமிழகத்துப் பிரமதேயங்களில் வேள்விக்குடி என்பதே மிகவும் புராதனமாகும்.
நாயன்மார்களும் ஆழ்வார்களும்
புராதன காலம் முதலாகத் தமிழகத்தில் நிலைபெற்று வந்த சைவமும் வைணவமும் பல்லவர் காலத்திலே மக்கள் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய பெருநெறிகளாக வளர்ச்சியடைந்தன. பல்லவர் காலத்திற் பக்தி மார்க்கத்தை ஆதாரமாகக் கொண்டு அவை வளர்ச்சி பெற்றன. அவற்றின் மூலமாகப் பரத கண்டத்துக் கலாசார நீரோட்டத்திலே தமிழகம் இணைந்துவிட்டது. நாயன்மார்களும் ஆழ்வார் களும் வேதங்களை மூலமாகக் கொண்டனர். அதனால் அவர்கள் உருவாக்கிய சமய நெறிகள் வைதீக சமயங்களாகக் கொள்ளப் பட்டன. சைவசமயம் வேத சாரமானது. அது ஆகம நெறிப்பட்டது என்ற கருத்து தேவாரப் பதிகங்களில் வலியுறுத்தப்படுகின்றது. சைவம் சார்ந்த மகாபுராணங்களின் செல்வாக்கையும் தேவார திருவாகங்கள் பிரதிபலிக்கின்றன. வடஇந்தியாவில் வளர்ச்சி பெற்ற பாகவத

Page 71
சமயத்தின் செல்வாக்கினை ஆழ்வார் பாசுரங் களில் அவதானிக்க முடிகின்றது. பாசுவத புராணம், ஹரிவம்சம், மகாபாரதம் போன்ற வற்றிலே இடம்பெறும் கதைகளும் கருத்துக் களும் ஆழ்வார் பாசுரங்களில் மிகுந்தளவிலே காணப்படுகின்றன. அக்கதைகளும் பாமரர் மத்தியிலும் பரவிப் பொதுவழக்காகிவிட்டதாற் பக்திப் பாடல்கள் பொதுமக்களைப் பெரிதுங் கவர்ந்தன. ஒப்புநோக்கில் அவதானிக்குமிடத்து இந்திய துணைக் கண்டத்தில் ஏற்பட்ட சமய பண்பாட்டு மறுமலர்ச்சியொன்றின் பிரதிபலிப் பாகவே தமிழ் நாட்டுப் பக்தி இயக்கம் தென் படுகின்றது. அது பல்லவர் செல்வாக்குப் பரவி யிருந்த தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலும் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
சைமரபிலுள்ள பக்தி இயக்கத்தின் முதல்வரான காரைக்காலம்மையார் காவிரிப் பூம்பட்டினத்தவர் என்பது ஐதீகம். அப்பட்டினத் திலுள்ள பல்லவனிச்சரம் என்னும் தலம் பற்றிய தேவாரப் பதிகமுண்டு முதலாழ்வார்கள் நால் வரும் தொண்டை நாட்டவர். அவர்கள் காஞ்சி புரம், மாமல்லபுரம் ஆகிய நகரங்களிலுள்ள வைணவத் தலங்களோடு நெருங்கிய தொடர்பு களைக் கொண்டிருந்தனர். ஏழாம் நூற்றாண் டிலே பக்திநெறி தமிழகத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தரும் நாவுக்கரசரான அப்பரும் செய்த பணிகளின் மூலமாகச் சைவசமயம் தமிழகத்திலே பேரெழுச்சி பெற்றது. அது தமிழோடும் தமிழகத்தோடும் இணை பிரியாத அம்சமாகிவிட்டது. வைதீக மரபினையும் ஆகம நெறியினையும் ஆதார மாகக் கொண்ட நாயன்மார் சமயஞானமும் ஆன்மீக அனுபவமும் சமூக வேறுபாடு களுக்கு அப்பாலானவை, சாதிபேதங் கடந்தவை, எல்லோருக்கும் பொதுவானவை
63

என்ற சிந்தனையை வளர்த்தனர். சித்தத்தைச் சிவன்பால் வைத்தோரான சிவனடியார்களே எல்லோரிலும் மேலானவர்கள் என்பது அவர் களின் சிந்தனையாகும் பக்தி நெறியில் மன்னு யிர்கள் எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. சீவராசிகள் அனைத்துமே ஒன்றுகூடி விடுகின்றன. மண்ணுலகமே வானவர் உலகமாகிவிடுகின்றது. பெறற்கரிதான பேரின்ப நிலை பக்தியின் மூலம் இவ்வுலகிலே அடையக்கூடிய ஒன்றாகி விடுகின்றது.
வேதங்களையும் உபநிடதங்களையும் வைதீகக் கல்வி பயின்ற வித்தியா விருத்தர் களே புரிந்து கொள்ள முடியும். அவற்றிலுள்ள நுட்பமான கருத்துக்களையும் தத்துவங் களையும் தெளிவாகவும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணமாகவும் தமிழில் விளக்கிய சிறப்பு நாயன்மாருக்கு உரியதாகும். அவர் களின் பாடல்களிற் காணப்படும் முப்பொருள் விளக்கம் கல்வி ஞானத்தையும் ஆன்மீக அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது. “தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றான் நவீன காலத்துப் புலவ னொருவன். தேவாரப் பாசுரங்கள் மூலம் தமிழ் அமுதினும் இனிதாகியது. தமிழாகரனாகிய சம்பந்தப் பிள்ளையார் பதிகம் பாடும் சமயங் களில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவரோடு கூடியிருந்து யாழ் வாசித்தார் என்பது ஐதீகம். திருஞானசம்பந்தருடைய பாடல்களைக் கேட்ட வர்கள் அவற்றைத் தேவகானமாகக் கொண்டனர். அவற்றாற் கவரப்பெற்ற திராவிட தேசத்தவர் சைவ சமயத்துடன் உணர்ச்சி பூர்வமாக இணைந்துவிட்டனர்.
தமிழிசைப் பண்களுக்குத் தேவாரப் பாடல்கள் மூலமானவை. அவற்றுள்ளும் திருஞானசம்பந்தரின் பாடல்கள் தனிச்

Page 72
சிறப்புடையவை. தமிழிலக்கிய நடையினைப் பொதுமக்களுக்குரிய நடையாக்கிய சிறப்பும் நாயன்மார்களுக்கு உரியதாகும். பத்துப்பாட்டு நூல்களையும் பாண்டித்தியம் பெற்றவர்களே புரிந்துகொள்ள முடியும். அதுவும் உரை நூல்களின் உதவியுடன் மட்டும் அவற்றை அவர்களாற் புரிந்துகொள்ள முடியும் அதனால் தமிழிலக்கிய நடை வழக்கற்று போகும் நிலை யொன்று பல்லவர் காலத்தில் உருவாகி விட்டது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே தோன்றிய நாயன்மார்கள் இலக்கியத்திற்குப் புதிய வடிவங் கொடுத்தனர். அவர்களின் நடை பேச்சு வழக்கோடு தொடர்புடையது. இலகுவில் எல்லோராலும் பொருள் உணர்ந்து கொள்ளக் கூடியது மிகுந்த கவர்ச்சி பொருந்தியது. பெரும்பாலும் விருத்தப்பாவில் அமைந்தது. திருஞானசம்பந்தர் இருப்பத்திரண்டு வகைப் பண்களிற் புதுப்புது விருத்த வகைகளை உண்டாக்கினார். அவற்றுட் பல இன்றும் வழக்கி லுள்ளன. நாலடிமேல் வைப்பு, ஈரடி மேல் வைப்பு முதலிய பாடல் வகைகளையும், மாலைமாற்று, மொழிமாற்று, ஏகபாதம், எழு கூற்றிருக்கை. சக்கரமாற்று, கோமூத்திரி, யமகம் முதலிய சொல்லணிச் சித்திர கவி களையும் அவர் கையாண்டுள்ளார். அவரை விருத்தப்பாப் புரவலர் என்றும் சித்திரக் கவி களின் தந்தையென்றும் குறிப்பிடலாம்.
தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தங்களும் தலங்கள் மீது பாடப் பட்டவை. தலச்சிறப்பு, அதன் இயற்கை வளங்களாகிய பழனம், வயல், ஆறு, குளம், வனம், புனம், புள்ளினம், விலங்குகள், விருட்சங்கள், தோப்புகள் என்பன பற்றிய வர்ணனைகள் அவற்றிலுண்டு. தலங்கள் பற்றி வழங்கிய புராணக் கதைகள் சுருக்கமாக அவற்றிலே
64

குறிப்பிடப்படுகின்றன. கோயிலிற் பள்ளி கொண்டுள்ள உடையாரைப் பற்றிய வர்ண னைகள் குறிப்பிடத்தக்கவை. படிமக்கலை வரலாற்றை ஆராய்வதற்கான கருவூலங்களாக அவை அமைகின்றன. கோயில் வழிபாட்டு முறைகள், வழிபாட்டில் இடம்பெறும் உப சாரங்கள், ஆலயத் தொழும்புகள், சுற்றாடல் களிலுள்ள குடியிருப்புகள் போன்றனவும் அவற்றிலே சில சமயங்களிற் குறிப்பிடப் படுகின்றன.
பக்தி நெறியானது உலக வாழ்க்கை யோடு ஒட்டிய நெறியாக, இயற்கை நெறி யாகத் திருப்பதிகங்களிலே காணப்படுகின்றது. அதனால் அது வலுப்பெற்று மேலோங்கித் திராவிட தேசத்தவரின் பொதுநெறியாகியது.
கோயில்களும் வழிபாடும்
பல்லவர் காலத்துக் கோயில்களைப் பற்றியும் அவற்றிலே நடைபெற்ற வழிபாடு களைப் பற்றியும் சாசனங்கள் மூலமாகவும் திருப்பதிகங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ள லாம். சாசனக் குறிப்புகளை வரலாற் றாசிரியர்கள் சிலர் ஆராய்ந்து அவற்றிலுள்ள சில விவரங்களை வெளியிட்டுள்ளனர். ஆயினும், திருமுறைகளிலும் திவ்விய பிரபந் தங்களிலும் அடங்கியுள்ள பாடல்கள் இவ் விடயந் தொடர்பாக விவரமாக ஆராயப் படவில்லை. பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை ஆராய் வதற்குப் பொறுமையும் மனோ பக்குவமும் தேவைப் படுகின்றன. இந் நாட்களில் அந்தப் பண்புகள் அரிதாகிவிட்டன.
பல்லவர் காலத்திலே பல நூற்றுக் கணக்கான கோயில்கள் அமைந்திருந்தன. ஏறக்குறைய நானூறு ஈஸ்வரங்கள் நாயன்

Page 73
மார்களின் பாடல்களைப் பெற்றுள்ளன. அவை பெரும்பாலும் தொண்டை நாடு, சோழ நாடு, நடுநாடு என்பவற்றிலுள்ள தலங்களாகும். ஆழ்வார்கள் நூறு விண்ணகரங்களைப் போற்றிப் பாடியுள்ளனர். அவை பாண்டி நாடு, சோழநாடு, தொண்டைநாடு ஆகியவற்றிலே
பரந்து காணப்பட்டன.
பாடல்பெற்ற திருத்தலங்கள் புராதன மானவை. அவை பெரும்பாலும் செங் கல்லினால் அமைக்கப்பட்டதளிகளாகும். அவை பிற்காலத்திலே கற்றளிகளாகப் புனரமைக்கப்பட்ட பொழுது அவற்றில் இருந்திருக்கக் கூடிய சில சாசனங்கள் பல மறைந்துவிட்டன. கோயில்கள் சிலவற்றின் சுற்றுப் புறங்களில் வணிக நகரங்களும் பிரம தேயங்களும் வித்தியாபீடங்களும் அமைந் திருந்தமை பற்றித் திருப்பதிகங்கள் மூலமாக அறிய முடிகின்றது. ஆகம முறையிலான வழிபாடு பொதுவழமையாகிவிட்ட தென்பதைத் திருப்பதிகங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. சைவக் கோயில்களிலும் வைணவக் கோயில் களிலும் மூலஸ்தானத்தில் வைதீகப்பிராமணர் ஆராதனைகளைச் செய்தனர். பெருந் தொகையான அடியார்கள் கோயில்களுக்குச் சென்று இறைவரை வழிபட்டனர். அவர்கள் அங்கு நாட்டார் வழமைப்படியும் வழிபாடு களைச் செய்தனர். கோயில்களில் வழிபாட்டு நேரங்களிலும் விழாக் காலங்களிலும் ஆடல், LITL-6) போன்ற உபசாரங்கள் நடைபெற்றன.
சில விடயங்களிலே கோயில்களோடு பந்தமாகியிருந்த கணிகையர் அப்பணி களைச் செய்தனர். யாழ், குழல், வீணை, முழவு, மொந்தை, தாளம், சச்சரி முதலான இசைக் கருவிகள் ஆலயங்களில் இசைக் கப்பட்டன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் திருப்பதிகங்

களிற் காணப்படுவதோடு அவற்றின் உருவங் களும் வாத்தியகாரரின் பிரதிமைகளும் சிற்பக் கோலத்திலே ஆலயங்கள் பலவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரசரும், பிரதானிகளும், செல்வர் களும் பிறரும் வழங்கிய தானங்களை ஆதாரமாகக் கொண்டே ஆலயங்கள் இயங்கி வந்தன. தானங்களும் பல வகைப்படும். ஊர்கள், விளைநிலங்கள், தோப்புகள் முதலானவற்றை அரசர்கள் பூமிதானமாகக் கோயில்களுக்குக் கொடுத் தார்கள். சில சமயங்களிலே குறிப்பிட்ட சில ஊர்களிலோ நிலங்களிலோ அரசருக்குக் கிடைக்க வேண்டிய இறை கடமைகள் ஆலயங்களுக்கு உரியனவாக எழுதிக் கொடுக்கப்பட்டன. ஆபரணங்கள், பொன், வெள்ளி காசு முதலி யனவும் சில சமயங்களில் ஆலயங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுவதுண்டு. குடியானவர்களும் அரசர், பிரதானிகள் போன்றோரும் மூலஸ்தானத்திலே குறிப்பிட்ட தினங்களிலே ஆராதனை செய்வதற்கும், சந்நிதானத்திலே விளக் கெரிப்பதற்கும், சிவ யோகிகளுக்கும் அடியார்களுக்கும் அன்ன தானமிடுவதற்கும் அறக்கட்டளைகள் ஏற்படுத் தப்பட்டிருந்தன. சொத்துடமைகளைப் பராமரிப் பதற்கென்று சில நிர்வாக ஒழுங்குகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
கோயிலிற் கடமை புரியும் எல்லோ ரையும் கோயிற் பரிவாரம் என்றும் தளிப் பரிவாரம் என்றுஞ் சொல்வது வழக்கம். அர்ச்சகர் முதலாகப் பூமாலை கட்டுவோர் வரையுள்ள எல்லோரும் அதில் அடங்குவர். தனிப் பரிவாரத்தாரின் எண்ணிக்கை ஆலயத்தின் சொத்துடமைகள், வருமானங்கள் கோயிற் கருமங்கள் என்பவற்றைப்

Page 74
பொறுத்திருக்கும். அரசர், அரசமாதேவிகள், சாமந்தர் முதலியோர் கட்டுவித்த கோயில்கள் பெருமளவிலான தானங்களைப் பெற்றிருந்தன. ஆந்திர தேசத்திலே, குண்டுர் மாவட்டத்தில் முதலாம் மகேந்திரவர்மன் கட்டுவித்த கபோதிஸ் வரம் அத்தகைய வொரு கோயிலாகும். அங்கு ஆலயப் பணிகள் புரிந்த கன்னிகையர்களைக் கண்காணிப்பதற்கு 12 அத்யக்ஷகர் நியமிக்கப் பட்டிருந்தனர்.
மூலஸ்தானத்திலே மூலவருக்குப் பிரா மணர் ஆராதனை செய்தனர். அர்ச்சகரை ஆச்சாரியார், சிவப்பிராமணர், சிவாச்சாரியார் எனப் பலவாறு சொல்வது வழக்கம். வைணவ கோயில்களிற் பூசை செய்வோரைப்பட்டர் என்று சொல்வதுண்டு. உத்தரமேரூரிலுள்ள பூரீ கோவர்த்தன சுவாமி கோயிலில் ஆராதனை பண்ணும் பூரீதர பட்டரைப் பற்றிக்கம்பவர்மன் காலத்துக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சைவக் கோயில்களில் ஆராதனை செய்த பிராமணரைச் சில சமயங்களிற் குலங்கிழார் என்றனர். தேவகுலம் என்று சொல்லப்படும் ஆலயத்திலே ஆராதனை செய்வோரை மரியாதையின் நிமித்தம் அவ்வாறு சொல்வ துண்டு. சில கோயில்களில் அர்ச்சகர் பலர் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒவ் வொரு வரும் தத்தமக்குரிய முறைக்காலத்தில் ஆராதனை செய்வர். ஆலயத்தில் ஆராதனை பண்ணும் உரிமை சில கோயில்களைப் பொறுத்தவரையிற் பாரம்பரியமான உரிமை யாகவிருந்தது சகோதரர் பலர் ஒரு கோயிலிற் கடமை புரிந்தமை பற்றியுஞ் சாசனக் குறிப் புண்டு. முக்தேஸ்வரத்திலே பிராமணர் மூவர் இருந்தனர். அவர்களைப் பற்றிய சாசனக் குறிப்பு மேல்வருமாறுள்ளது.
இந்நிலத்தால் தன் நகரம் ஊர் வரிந்த
66

தெல்லாம் தத்தசிவனுக்கும் தர் மகண்ணருக்கும் ஆனந்த சிவனுக்கும், இவர்கள் மக்கள் மக்களே அர்ச்சனை செய்து உண்ணப் பணித்துக் கொடுத் தேன்.
அர்ச்சகர் நியமனம் பற்றிய இக்குறிப் பினால் அந்த நியமனமானது குறிப்பிட்ட பிரா மணர் மூவருக்குமன்றி அவர்களின் சந்தான த்தில் உள்ளவர்களுக்கும் உரிமையானது என்பது தெளிவாகின்றது. அர்ச்சகர்களுக்குச் சீவிதமாக அர்ச்சனாபோகம் என்னும் நன்கொடை வழங்கப் பெற்றது. உத்தர மேரூர் சாசனமொன்றிலே நந்திவர்மன் காலத்து அர்ச்சனாபோகம் ஒன்றினைப் பற்றிச் சபையார் அமைத்த விதிகள் பற்றிச் சொல்லப்படுகின்றது. வேதபாராயணம் செய்யத்தக்க ஆசாரசீலரான பிராமணரையே அர்ச்சகராக நியமித்தனர்.
பிராமணர் கோயில்களில் அர்ச்சனை செய்வதோடு வேறு கடமைகளிலும் ஈடு பட்டனர். மண்டபத்துக்கு நீர்வார்த்து விளக் கேற்றுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் மண்டபத்தில் வேதம் ஒதுதல், மகாபாரதம் படித்தல் முதலிய பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். கூரம் செப்பேடுகள், தண்டன் தோட்டம் செப்பேடுகள் ஆகியவற்றில் இவற் றைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்குத் தனித்தனியாக நிலப்பங்குகள் வழங்கப்பட்டன. முதலாம் பரமேஸ்வர வர்மனின் காலத்திற் கூரம் கோயிலிற் பிராமணர் இருவர் அர்ச்சகராக இருந்தனர். அவர்களே கோயிலை நிர்வாகஞ் செய்தனர். கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்ட நிலம் 25 பங்கு களைக் கொண்டிருந்தது. அவற்றில் மூன்று பங்குகள் அர்ச்சனைக்குரியவை. மண்டபத்தில் நீர் வார்த்து விளக்கெரிப்பதற்கு

Page 75
ஒரு பங்கு வழங்கப்பட்டது மகாபாரதம் ஒதுவானுக்கு ஒரு பங்கு கொடுக்கப்பட்டது. தண்டன் தோட்டம் செப்பேடுகளிலுள்ள சாசனத் திலும் மகாபாரதம் படிப்பவனுக்கு வழங்கப் பட்ட நிலப்பங்கு பற்றிக் கூறப்படுகின்றது.
காஞ்சிபுரத்திலுள்ள முக்தேஸ் வரத்துக் கோயிற் பரிவாரத்திலே அர்ச்சகர், தட்டளி கொட்டுவார், உருத்திர கணிகையர், மந்திராச் சாரியார், விளக்கும் தவசிகள் என ஐந்து வகையினரைப் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. கர்ப்பகிருகத்தில் நிவேதனஞ் செய்து ஆரா தனை பண்ணும் வேளைகளில் உலோகத் தகடுகளில் உருவாக்கப்பட்ட கருவிகளை ஒலிப்பவர்கள் தட்டளி கொட்டுவார் எனப் பட்டனர். திருப்பலி கொட்டுவார் என்றும் பூரீ பலி கொட்டுவார் என்றும் அவர்களைக் குறிப்
அடிக்குறிப்புகளும் விளக்கவுரைகளும்
1. சைவசமயந் தொடர்பான இலக்கியம் திருமுறைக
பத்தாம் திருமுறையாகிய திருமந்திரமும் பதினே காலத்தனவாகும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தினுட் திருத்தலங்கள், வழிபாட்டு நெறி, கடவுட் கோட்பாடு, ப
புத்தகோஷர், புத்ததத்தர் முதலாயினோர் பாளி மெ பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் சில முக்கியம பெளத்தம் பற்றியும் பரசமயக் கோட்பாடுகள் பற உள்ளன. இக்காலத்திற்கு உரியதான சிலப்பதிகா பண்பாட்டுக் கருவூலமாக விளங்குகின்றது.
இராமநாதபுர மாவட்டத்துப் பூலாங்குறிச்சி என்னுமிட மூன்று சாசனங்கள் பாண்டிநாட்டின் புராதன கால வ கொண்டுள்ளன. சில பகுதிகளிற் சிதைவடைந்துள்ள அவற்றிலுள்ள ஆண்டு பற்றிய குறிப்பை (190) ஆதார என்ற கருத்தை இரா. நாகசாமி வெளியிட்டார். அன வாதமாகும். ஆயினும் இச்சாசனங்கள் கிபி 500ஆ
பொருத்தமானது என்பார் எ. சுப்பராயலு.

பிடுவதுண்டு முக்தேஸ்வரத்தில் 32 உருத்திர கணிகையர் சேவை புரிந்தனர். அவர்களை அடிகள்மார் என்றும் கணிகையர் என்றுஞ் சொல்வதுண்டு. அர்ச்சகர்களை விட மந்திராச் சாரியார் என்றவொரு வகைப் பிராமணர் கோயில்களிலே கடமை புரிந்தனர். வேத மந்திரங்களை ஒதுவது அவர்களின் கடமை யாகும். அத்தகைய பிராமணர் ஐவர் காஞ்சி யிலுள்ள முக்தேஸ்வரத்திலே கடமை புரிந் தனர். ஆலயம் அதன் சுற்றாடல், பாத்திரங்கள், விளக்குகள் முதலியவற்றைச் சுத்தம் பண்ணுவது விளக்கும் தவசிகள் என்போரின் கடமையாகும். ஆலய தர்மங்களைக் கவனிப்பதற்கென்று அமிர்த கணம் என்னும் வாரியத்தை ஊர்ச் சபையார் நியமித் திருந்தனர்.
ளில் அடங்கிவிடுகின்றது. முதலேழு திருமுறைகளும் ராந் திருமுறையிலுள்ள பகுதிகள் சிலவும் பல்லவர் பல பகுதிகள் அக்காலத்திற்குரியனவாகும் அவற்றிலே க்தி ஆகிய விடயங்களே முதனிலைப்படுத்தப்படுகின்றன.
ாழியில் எழுதிய நூல்களிலே பெளத்த விவகாரங்கள் ான செய்திகள் காணப் படுகின்றன. மணிமேகலையில் ]றியும் அறிந்து கொள்வதற்கு ஏதுவான குறிப்புகள் ரம் வேறொரு வகையான நூலாகும். அது தமிழகப்
த்திலே 22 வருடங்களுக்கு முன் கண்டு அறியப்பெற்ற ரலாற்றைப் பொறுத்தவரையில் மிகுந்த முக்கியத்துவங் இச்சாசனங்கள் பழைய வட்டெழுத்துச் சாசனங்களாகும் மாகக் கொண்டு அவை மூன்றாம் நூற்றாண்டுக்குரியவை வ சக வருடத்தை குறிப்பிடுகின்றன என்பது அவரின்
பூம் ஆண்டளவில் எழுதப்பட்டவை என்று கொள்வதே

Page 76
10.
.
2.
அவற்றுள் முதலாவது சாசனம் வேள் மருகன் என்ப அமைப்பித்த மூன்று கோயில்கள் பற்றிக் குறிப்பி வேள்கூறு என்னும் பிரிவிலுள்ள பச்சேரிச்சில் மை கூற்றத்து விளமரு என்னுமிடத்திலுள்ள தேவகுலம் மற் வடக்கிலுள்ள தாபதப் பள்ளியிலுள்ள வாசுதேவனா தேவ குலங்கள் வைதீக சமயச் சார்புடையவை. க ஆகிய நெறிகள் இரண்டிற்கும் ஆதரவு வழங்கியை கோயில்களுக்கு அத்திசோசத்தார், உள்மனையார், ! பாண்டங்கர், சேவுகர், விருமச்சாரிகள், தருமிகள் எ களுக்கும் பொறுப்பேற்க வேண்டுமென்பது அரசனி மூன்றாவது சாசனம் பிரமதேயக் கிழவரைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. சேந்தன், கூற்றன், சேந்தன் என்னு குறிப்பிடுகின்றன. அவர்கள் பாண்டிநாடு, கொங்கு அபிவிருத்தியில் ஒரு பிரதானமான கட்டத்தைக் குறிக்கு கொள்ள முடிகின்றது.
பாண்டியர் செப்பேடுகள் பத்து. உலகத் தமிழாராய்
C,Minakshi, Administration and Social Life Underth
Ibid., p.39
பாண்டியர் செப்பேடுகள் பத்து ப. 41
C.Minakshi, Administration and Social Life Under the
Ibid.
C, Minakshi, Administration and Social Life Underth
மேலது
பூரீவரமங்கலச் சாசனம் ஜடிலவர்மனாகிய நெடுஞ்சை பேரூரிலே திருமாலுக்குக் “குன்றம் அன்னதோர் பாண்டியர் செப்பேடுகள் பத்து பக், 51, 55, 59, 6
வரகுண மகாராசனைத் திருச்செந்தூர்ச் சாசனம் “உ என வர்ணிக்கின்றது. திருச்செந்தூர் கோயிலின் செலவினங்களுக்காக 1400 நிறைகுறையாப் பழங்க தேயம், ஊர், நகரம் என்னும் பல அமைப்புக்களிடம் பெற்றுக் கொண்டவர்கள் வட்டிக்குப் பெறுமதியான டெ
உடன்பட்டனர். அறக்கட்டளை பற்றிய விவரங்கள் ே
68

பனின் மகனாகிய கடலகப் பெரும்படைத் தலைவன் கின்றது. அவற்றுளொன்று ஒல்லையூர்க் கூற்றத்து )யிலுள்ள தேவ குலம், இன்னொன்று முத்தூற்றுக் றொன்று மதுரையிலுள்ள உலவியத்தான் குளத்துக்கு r கோட்டம். அது சமணப் பள்ளியிலுள்ள கோட்டம். லகப் பெரும்படைத் தலைவன், சமணம், வைதீகம் ம குறிப்பிடற்குரியது. ால்வகைத் திணையார் என்போர் பொறுப்பேற்றனர். ன்போர் கோயில் வழிபாடுகளுக்கும் அறக்கட்டளை ன் ஆணை.
காராண்மை, பிரமதேயக் கிழமை என்பன பற்றியுங் ம் மதுரை மன்னர் இருவரைப் பற்றி இச்சாசனங்கள் ஆகியவற்றில் அதிகாரம் பெற்றிருந்தனர். அரசின் நம் சாசனங்களாகப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளைக்
*சி நிறுவனம், சென்னை 1999.ப.170
e Pallavas, University of Madras, Madras.
Palavas.
e PallavaS. P43
-யனைப் பரம வைஷ்ணவன் என்றும் காஞ்சிவாய்ப் கோயில்" அமைத்தவனென்றும் வர்ணிக்கின்றது. 5
டையார் அடியாராயின வரகுணமாராயர் போத்தர்” வந்தங்களுக்கும் திருவிழாக்களுக்கும் வேண்டும் சு தானமாக அரசரால் வழங்கப்பட்டது. அது பிரம பகுந்து முதலிருப்பாக வழங்கப்பட்டது. காசினைப் ருள்களைக் கோயிலுக்குக் கிரமமாகக் கொடுப்பதற்கு
)ல்வருவனவாகும்.

Page 77
ஊர் பெற்றுக்
குடநாட்டுக் கொற்றையூரார் 96
குடநாட்டு நல்லூர் ஊரார் 6
குடநாட்டுச் சாலியத்து ஊரார் 24
வழுதிவளநாட்டுப் பிரமதேயம் வரகுண மங்கலத்துச் சபையார்
இந்நாட்டுத் தேவதானப் பிரமதேயம்
யம்பக மங்கலம் ர(ண)விலி மங்கலத்துச் சபையார் 32
இந்நாட்டுக் கெங்கை மங்காத்தாப்படும் ஆலம் பட்டத்து ஊரார்
6
இந்நாட்டு மானவீர பட்டினத்து நகரத்தார் 12
சிரிவல்லப வளநாட்டுப் பிரமதேயம் கட்டாறை மங்கலத்துச் சபையார் 96
பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழார 6,87
மேலது பக். 102 - 103, 105 - 106
மேலது ப. 59
C.Minakshi, Administration and Social Life Under
மேலது
மேலது
மேலது
பாண்டியர் செப்பேடுகள் பத்து, ப, 128
(இக்கட்டுரை இந்துசமய, கலாசார அலுவல்கள் த என்ற நூலிலிருந்து பெறப்பட்டது)

கொண்ட
5
கோயிலுக்கு ஒப்படைக்க
வேண்டியவை தினமும் நான்கு போதைக்கு 16 நாழி CHಳಿ மார்கழித் திருவாதிரை, மாசிமகம், வைகாசி விசாகம் நாள்களில் இருமடங்கு
நாள்தோறும் (1) நெய் 1 நாழி உரி (2) தயிர் 6 நாழி (3) வாழைப்பழம் 16 (4) சர்க்கரை 4 பலம் (5) கறி அமிர்து 40 பலம் (6) காயம் 1 உழக்கு 1 செவிடு
(1) சிறுபயற்றுப் பருப்பு 2 நாழி (2) வெற்றிலை 3 பற்று (3) அடைக்காய் 56
(1) நெய் 2 நாழி உரி +
1 உழக்கு
(1) 4 நாழி பால்
(1) (36m5ir 8
நறும்பூ 10 நாழி
சிறு பயறு, மஞ்சள், பாவாடை, கூறை
ாய்ச்சி நிறுவனம், சென்னை (மறுபதிப்பு), 1999, பக்.
the Pallavas.
திணைக்கள வெளியீடான "இலங்கையில் இந்துசமயம்"
59

Page 78
பல்லவர் - பா6 செப்பேடுகளும் ச
முனைவர்: நட6
பல்லவர் செப்பேடுகளின் பிரிவுகள்:
தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர் காலம் இடம் பெறுகிறது. இக்காலம் கி. பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 9 ஆம் நூற்றண்டு வரை எனலாம். பல்லவர்களை, அவர்கள் வெளியிட்டுள்ள செப்பேடுகளில் காணப்படுகின்ற மொழியைக் கருத்திற் கொண்டு மூன்று வகையாகப் பிரிப்பர் வரலாற்றாசிரியர்கள. பிராகிருத மொழியைச் செப்பேடுகளில் கையாண்ட பல்லவர்கள் என்றும், சமஸ்கிருத மொழியைக் கையாணி ட பல லவர்கள் என்றும் , சமஸ்கிருதத்தையும், தமிழையும் கலந்து கையாண்ட பல்லவர்கள் என்றும் அவர்களைக் கூறுவர். பிராகிருத மொழியையும், சமஸ்கிருத மொழியையும் தங்களது செப்பேடுகளில் கையாண்ட பல்லவர்கள் கி. பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தோராவர். சமஸ்கி ருதத்தையும், தமிழையும் செப்பேடுகளில் கையாண்ட பல்லவ மன்னர்கள் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 9 ஆம் நூற்றா ண்டு வரை ஆண்டிருக்கின்றனர்.
செப்பேடும் மொழியும்:
பிராகிருத மொழியில் வெளியிட்ட செப்பேடுகள் மூன்று கிடைத்துள்ளன. இவைகளில் மிகவும் பழமையானது மயிதவோலு செப்பேடு, மற்ற இரண்டு ஹிரஹடகல்லி, குணபதேயம் ஆகிய செப்பேடுகள் ஆகும். இந்த மூன்று செப்பேடுகளுள்ளும் மயிதவோலு செப்பேடு மட்டும்தான் முழுவதுமாகப் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. மற்ற

ண்டியர் காலச் கல்வெட்டுகளும்
ன காசிநாதன்
இரண்டு செப்பேடுகளிலும் பிற்பகுதியில் உள்ள மங்கல வாசகம் சமஸ்கிருத மொழியில் எழுதப்ப ட்டுள்ளது.
முழுவதும் சமஸ்கிருத மொழியில் எழுதப் பெற்ற செப்பேடுகள் மொத்தம் 17 உள்ளன. முற்பகுதியில் சமஸ்கிருதமும், பிற்பகுதியில் தமிழும் கலந்து எழுதப்பெற்ற செப்பேடுகள் 9 கிடைத்திருக்கின்றன.
பிராகிருத மொழிச் செப்பேடுகள் :
பிராகிருத மொழியில் உள்ள மூன்று செப்பேடுகளுமே சிவஸ்கந்தவர் மனைச் சேர்ந்தவை என்று ஒரு சாரார் கருதுகின்றனர். திரு. டி. என். சுப்பிரமணியம் அவர்கள் பிராகிருத மொழியில் உள்ள குணபதேயச் செப்பேட்டை பிற்காலத்தில் ஆண்ட வேறொரு ஸ்கந்தவர்மன் காலத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறார். அவர் அவ்வாறு கருதுவதற்கு அச் செப்பேட்டின் பிற்பகுதியில் சமஸ்கிருத மொழி கையாளப்பட்டிருப்பதும், எழுத்தமைப்பில் வளர்ச்சியேற்பட்டிருப்பதும் காரணங்களாகும் என்று கூறுகிறார்.
இம்மூன்று செப்பேடுகளுமே பல்லவர் களுடைய காலத்தைக் கணிப்பதற்கு உதவுப வனவாக அமையவில்லை. மயிதவோலு செப்பேடு வெளியிடும் போது சிவஸ்கந் தவர்மன் யுவமஹாராஜனாக இருந்தான் என்பதும், காஞ்சிபுரத்திலிருந்து அச்செப் பேட்டை வெளியிட்டான் என்பதும், பாரத்வாஜ கோத் ரத்தில் பிறந்தவன் என்பதும் பெறப்படுகிறது. அச் சாசனம் தான்ய கட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கு வெளியிட் டுள்ள கட்டளையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

Page 79
ஹிரஹடஹல்லிச் செப்பேடு சிவஸ்கந்த வர்மனை ராஜாதி ராஜன் என்றும், பாரத்வாஜ கோத்ரத்தில் பிறந்தவன் என்றும், அக்னிஷ் டோம, வாஜபேய, அச்வமேத யாகங்களைச் செய்தவன் என்றும் தெரிவிக்கிறது. சிவஸ்கந்தவர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு தன்னுடைய அதிகாரிகளுக்குக் கட்டளை இடுவதாக அமைந்திருக்கிறது.
குணபதேயச் செப்பேடு விஜயஸ் கந்தவர்ம மஹாராஜாவின் காலத்தில் யுவமஹாராஜன் யூரீ விஜயபுத்தவர்மனின் மனைவியும், அங்குரன் என்று முடியும் பெயரைக் கொண்ட ஒருவரின் தாயுமான சாருதேவி நிலக்கொடை அளித்ததாகத் தெரிகிறது.
இம்மூன்று செப்பேடுகளும் அவைகளை வெளியிட்ட மன்னர்களின் சிறப்பையோ அல்லது அவர்களின் முன்னோர்களின் சிறப்பையோ தெரிவிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில் நிலவிய ஒரு சில அரசியல், சமுதாய சூழ்நிலைகளைக் கூறுகின்றன.
பிராகிருதச் செப்பேடுகளின் எழுத்து:
இம்மூன்று செப்பேடுகளும், ஒரளவு வளர்ச்சியுற்ற பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் நாகார்ஜ"னகொண்டாவில் காணப்படும் எழுத்துக்களைப் பெரும்பாலும் ஒத்துள்ளன என்று கூறுவர்.
மயிதவோலுச் செப்பேட்டையும், ஹரிஹடஹல் லிச் செப் பேட்டையும் வெளியிட்ட மன்னன் ஒருவனே என்றும் அவன் சிவஸ் கந்தவர்மன்தான் என்றும் அறுதியிடுவர். குணபதேயச் செப்பேட்டில் குறிக்கப்பெறும் விஜயஸ்கந்தவர்மனும், சிவஸ்கந்தவர்மனும்

ஒருவன்தான் என்பர் ஒருசாரர். திரு. டி. என். சுப்பிரமணியம் அவர்கள் குணபதேயச் செப்பேட்டில் உள்ள எழுத்தமைதியைக் கருத்திற் கொண்டு விஜயஸ்கந்தவர்மன், சிவஸ்கந்தவர்மனின்றும் வேறானவன் என்றும், அவன் பிற்காலத்தில் ஆட்சி செய்தவனாக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திரு. டி. சி. சர்க்கார், இவ்விஜயஸ்கந்தவர் மனும், முதலாம் ஓங்கோடுச் செப்பேட்டில் குறிக்கப்படும் ஸ்கந்தவர்மனும் ஒருவனாக இருக்கலாம் என்று கருதுகிறார்.
மஞ்சிக்கல்லுக் கல்வெட்டு:
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத் திலுள்ள மஞ்சிக் கல்லு என்னுமிடத்திலிருந்து பிராகிருத மொழியிலுள்ள சிம்மவர்மனின் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதுவும் ஓரளவு வளர்ச்சியுற்ற பிராமி எழுத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இக்கல்வெட்டின் காலம் கி. பி. 4 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அவ்வாறெனில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டளவில் சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சி செய்திருக்கிறான் என்பது உறுதியாகிறது. மற்ற செப்பேடுகளில் குறிக்கப் பெறும் அரச பரம்பரைகளைப் பார்க்கையில் இவ்வளவு முந்தைய காலத்தில் சிம்மவர்மன் என்பவன் இருந்ததாகக் காணமுடியவில்லை. எனவே, இச்சிம்மவர்மன், பல்லவர்களிலே வேறு கிளையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று திரு. டி. என். சுப்பிரமண்யம் கருதினார். ஆனால் திரு. டி.சி. சர்க்கார் என்னும் கல்வெட்டறிஞர், இச் சிம்மவர்மன், மயிதவோலு, ஹிரஹடஹல்லி செப்பேடுகளை வெளியிட்ட சிவஸ்கந்த வர்மனின் தந்தையாக இருக்கலாம் எள்று கூறுகிறார்.

Page 80
சமஸ்கிருத மொழிச் செப்பேடுகள்:
சமீபத்தில் கிடைத்துள்ள சிக்மகலூர்
செப்பேடும் சமஸ் கிருத மொழியைக்
கையாண்ட பல்லவர்கள் காலத்தில் வெளியிட ப்பட்டவையாகும். சமஸ்கிருத மொழிச் செப்பேடுகளில் காணப்பெறும் எழுத்து வடிவம் சிலவற்றில் வளர்ச்சியடைந்த பிராமி எழுத்தாகவும், பலவற்றில் பல்லவகிரந்த எழுத்தாகவும் காணப்படுகின்றன.
வீரவர்மனின் மகனான விஜயஸ் கந்தவர்மனைச் சேர்ந்ததாக ஒரு செப்பே ட்டையும் (ஓங்கோடு) விஜயஸ் கந்தவர்மனின் மகனான சிம்மவர்மனைச் சேர்ந்ததாக மூன்று செப்பேடுகளையும் (வசந்தம் நெடுங்கராயம், உருவப்பள்ளி) யுவமஹராஜா விஷ்ணுகோ பவர்மனின் மகனான சிம்மவர்மனைச் சார்ந்ததாக ஆறு செப்பேடுகளையும் (தர்சி, சிக்மகலூர், பீகிரம், மாங்களுர், விழவெட்டி, ஓங்கோடு), பிற்காலத்தைச் சார்ந்ததாக மூன்று செப்பேடுகளையும் (சுரா, சேந்தலூர், ஹொஸ்க்கோட்டை) கூறலாம்.
இச்செப்பேடுகளில் பெரும்பாலான வற்றில் செப்பேட்டை வெளியிட்ட மன்னனது பெயரையும், அவனது தந்தை, பாட்டன், கொள்ளுப் பாட்டன் ஆகியோர்களுடைய பெயர்களையும் காணமுடிகின்றது. ஆதலால் ஓரளவுக்குப் பல்லவர்களின் பரம்பரையை உணரமுடிகிறது. மேலும் அரசியல், சமூதாயச் சூழ்நிலைகளைப் பற்றி ஓரளவு விரிவாகப் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் நிலவிய நாட்டுப் பிரிவு, அரசியல் அதிகாரிகள், பொருட்களுக்கும், மற்றவற்றுக்கும் விதிக்கப் பட்டிருந்த வரி வகைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.
7.

ஆரியமும், தமிழும் அமைந்த செப்பேடுகள்:
சமஸ்கிருதத்தில் முற்பகுதியும், தமிழில் பிற்பகுதியும் கலந்து எழுதப் பெற்ற செப்பேடுகள் கி. பி. 5 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கிடைக்கின்றன. இவைகளில் மிகவும் பழமையானது சிம்மவர்மன் காலத்திய பள்ளங்கோயில் செப்பேடு. இதற்கடுத்து முதலாம் பரமேஸ்வரவர்மனின் கூரம் செப்பேட்டைக் கூற வேண்டும். அடுத்து நந்திவர்மப் பல்லவ மன்னனின் காலத்தில் வெளியிடப்பட்ட காசாக்குடி, புல்லூர், தண்டந்தோட்டம், கொற்றங்குடி ஆகியவை களையும், மூன்றாம் நந்திவர்மனின் காலத்தில் வெளியிடப்பட்ட வேலூர் பாளையம் செப்பேட் டையும் கூறலாம். முதலாம் பரமேஸ்வர வர்மனின் உன்னகுரவயம் செப்பேடும், இரண்டாம் நரசிம்மனின் ரேயூருச் செப்பேடும், நந்தி வர்மப் பல்லவ மன்னனின் உதயேந்திரம் செப்பேடும். சமஸ்கிருதத்தில் மட்டும் எழுதப் பெற்றிருந்த போதிலும், அவை மேற்கூறிய மற்ற சமஸ்கிருத தமிழ்ச் செப்பேடுகளின் காலத்தைச் சார்ந்தவை என்ற காரணத்தினால் அவற்றையும் இங்கு குறிப்பிட வேண்டியு ள்ளது. ஸ்கந்த சிஷயனின் ராயக்கோட்டைச் செப்பேடு. சமஸ்கிருதம், தமிழ் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த ஸ்கந்த சிஷயன் யாரென்று இன்னும் முடிவாகவில்லை. திரு. டி என். சுப்பிரமணியம் அவர்கள் இவன் சித்ரமாயன் காலத்திலிருந்த வேறொரு பல்லவனாக இருக்கலாம் என்று கூறிப் போந்தார். பல்லவர் செப்பேடும், இலக்கியமும்:
மேற்குறிப்பிட்ட சமஸ்கிருதம் - தமிழ் மொழிகளால் எழுதப் பெற்றுள்ள செப் பேடுகளால் தான் பல லவர்களின் வரலாற்றைத் தெள்ளத் தெளிவாக அறிய

Page 81
முடிகிறது. சிம்மவர்மன் காலம் முதல் தொடர்ச் சியாகப் பல்லவர்களின் பரம் பரையை நன்றாக அறுதியிட்டுக் கூறக்கூடிய செய்தி களை இச்செப்பேடுகளின் சமஸ்கிருதப் பகுதி தெரிவிக்கின்றன. மூன்றாம் நந்திவர்மனின் வேலூர் பாளையச் செப்பேடு பல்லவ வம்சத்தின் வரன்முறையைக் கூறுகையில் "அசோக வர்மன் போன்ற மன்னர்களுக்குப் பிறகு அந்த வம்சத்திலே காலபர்த்துரு பிறந்தான். அவன் மகன் சூதபல்லவன், அவனுக்குப் பிறந்தவன் வீரச்கூர்ச்சன். அவன் நாக ராஜன் மகளுடைய கைத்தலத்தோடு அரசையும் பற்றினான்” 33. என்று தெரிவிக்கிறது. இந்த செய்தியும் தமிழி லக்கியங்களிலே காணப்படும் “சோழ அரசனான கிள்ளி நாகலோகம் சென்று நாகக் கன்னிகை ஒருத்தியை மணந்து, சிறிது காலம் அங்கேயே வாழ்ந்தான். அவள் தனக்குப் பிறந்த பிள்ளைக்குத் தொண்டைக் கொடி ஒன்றை அடையாளமாகக் காட்டி, அவனை தந்தை யான சோழ அரசனிடம் சேர்ப்பிப்ப தற்குக் கப்பல் மூலம் அனுப்பி வைத்தாள். நடுக் கடலில் கப்பல் மூழ்கியதால் கரை சேர்ந்த அந்தக் குழந்தையைத் தொண்டைக் கொடியின் அடையாளம் கொண்டு சோழ மன்னனி எடுத்து வளர்த்துத் தன் இராச்சியத்தின் ஒரு பகுதிக்கு அரசனாக முடி சூட்டி வைத்ததான்” என்ற செய்தியும் ஒத்து வருவதை எடுத்துக் காட்டாகக் கொண்டு பல்லவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஒருசாரார் கூறுவர். கல்வெட்டுக்கள் பற்றி விவரிக்கும் இடத்தில் இது பற்றி
விரிவாக காணலாம்.
செப்பேடு கிடைத்த பகுதிகள் :
பிராகிருத மொழியில் உள்ள செப்பேடுகள் மூன்றும், மஞ்சிக்கல்லு தூண் கல்வெட்டும் தமிழகத்துக்கு வடக்கேயுள்ள

ஆந்திர, கர்நாடகப் பகுதியிலேயேகிடைத் திருக்கின்றன. ஆனால் இந்தச் செப் பேடுகள் அனைத்தும் அரசன் காஞ்சி புரத்திலிருந்தே ஆணையிட்டான் என்று தெரிவிக்கின்றன. ஆகவே, இச்செப் பேடுகள் ஆந்திர, கர்நாடகப் பகுதியில் கிடைப்பதற்குக் காரணம். அவை, கொடையைப் பெற்றுக் கொண்டோர்கள் வைத்திருந்த செப்பேட்டுப் பிரதிகளாக இருக்கலாம். இதிலிருந்து ஒன்று புரிகிறது. அதாவது சிம்மவர்மன், சிவஸ்கந்தவர்மன் ஆகியவர்களின் ஆட்சிப் பகுதியில் ஆந்திரம், கர்நாடகப் பகுதிகளில் சில பகுதிகள் அடங்கியிருந்தன என்பதாகும்.
சமஸ்கிருத மொழியில் கிடைத்துள்ள பெரும்பாலான செப்பேடுகளும் ஆந்திரப் பகுதியிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் திரு. ஆராவமுதன் என்பவர் காஞ்சிபுரம் என்னும் ஊர் ஆந்திரப் பகுதியில் காணப்படும் ஊராகும் என்றும், அங்குதான் முற்காலப் பல்லவர்கள் தங்கி யிருந்து ஆணைகளை வெளியிட்டார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார். ஆனால் இக்கருத்து ஏற்புடையதாக யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. முற்காலப் பல்லவர்கள் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் தென் பகுதி யையும், தொண்டை மண்டலத்தையும் ஆண்டி ருந்தவர்களாகக் கருதப்படல் வேண்டும்.
தமிழ் எழுத்தில் எழுதக் காரணம் :
முற்பகுதியில் சமஸ்கிருதத்திலும், பிற்பகுதியில் தமிழ் மொழியிலும் எழுதப் பெற்ற செப்பேடுகள் அனைத்தும் தமிழகத் திலேயே கிடைத்துள்ளன. பல்லவர்களது ஆட்சி எல்லை தமிழகத்தின் தெற்குப் பக்கத்துக்கு விரிவடைய, விரிவடைய செப்புப் பட்டயங்களில் தமிழ் மொழியில் கொடை பற்றிய செய்தியை எழுத வேண்டுவது இன்றி யமையாததாயிருக்கும் போன்று தெரிகிறது.

Page 82
செப்பேடுகளில் சில வேறுபாடுகள் :
தமிழ் நாட்டில் கிடைத்துள்ள பல்லவர் செப்பேடுகளுக்கும், ஆந்திர, கர்நாடகப் பகுதியில் கிடைத்துள்ள செப்பேடுகளுக்கும் சில வகையில் வேறுபாடுகள் காண முடிகின்றன. ஆந்திரப் பகுதியிலே கிடைக் கின்ற சாசனங்கள் கொடை அளித்த மன்னனையும் சேர்த்து நான்கு தலை முறையினரைத்தான் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள செப்பேடுகளில் கொடையளித்த மன்னனையும், அவனது முன்னோர்களையும், புராண பரம்பரையையும் கூறப்பட்டிருக்கும்.
செப்பேடுகளின் முத்திரைகளிலும் சில வேறபாடுகளைக் காணக் கூடும். ஆந்திரப் பகுதியில் கிடைத்துள்ள செப்பேடுகளின் முத்திரைகளில் உருவங்கள் காணப்படு வதில்லை. நந்தியைத் தவிர பிறைச் சந்திரன், சூரியன் அல்லது நட்சத்திரம், யூரீவத்ஸம் போன்ற உருவம் பெரும்பாலும் காணப்படும். பெரும் பாலனவற்றில் கொடையளித்த மன்னனின் பெயர் எழுதப்பட்டிராது. அவ்வாறு எழுதப் பெற்றிருந்தாலும் முத்திரையின் நடுவில் ஒரு வரியில் அரசனின் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் கிடைத்துள்ள செப்பேடுகளின் முத்திரை களில் படுத்திருக்கும் நந்தியின் உருவத்தோடு எண்மங்கலப் பொருட்களின் உருவங்களும், சூரியர், சந்திரர் உருவங்களும் புடைப்புச் சித்திரங்களாகக் காணப்படும். அவ்வுருவ ங்களைச் சுற்றி விளிம்பின் உட்புறமாக அரசனின் முத்திரை வாசகம் ஒரு வரியில் எழுதப் பெற்றிருக்கும்.
இவ்வாறு சில வேறுபாடுகளைக் கண்டுணர்ந்த திரு. டி. என். சுப்பிரமணியம் அவர்கள் ஆந்திரப் பகுதியில் கிடைத் துள்ள

செப்பேடுகளைப் பற்றி கீழ் வருமாறு குறித்துள்ளார். ஜிதம் பகவதா என்று ஆரம்பித்து தானத்தை வழங்கிய அரசனுடைய முப்பாட்டன், பாட்டன், தந்தை ஆகிய மூவரையும் சேர்த்து நான்கு தலைமுறை களைப் பற்றியே கொடுக்கப் பட்டிருக்கும். அவர்களுடைய புகழும், ஒரே முறையில் குறிப்பிட்ட சில சொற்றொடர் கொண்டு அமைந்திருக்கும். கடைசியிலே காணும் பல சுருதி சுலோகங்களைத் தவிர மற்றப் பகுதி உரைநடையாகவே காணப்படும். அதை நோக்கினால், முன்னதாகவே அமைக்கப்பட்ட ஒரு வாசகத்தில் சந்தர்ப் பத்தையொட்டி அரச னுடைய பெயரையும், அவன் முன்னோர்க ளுடைய பெயரையும் அந்தந்த இடங்களில் இட்டு நிரப்பி அதைப் பூர்த்தி செய்து எழுதப்பட்டது என்பது தெளிவாக விளங்கும்.
செப்பேடுகள் யார் யாருக்கு அளிக்கப்பட்டன :
இதுவரையில் கிடைத்துள்ள பல்லவர் செப்பேடுகளில் 20 செப்பேடுகள் பிராமணர்க ளுக்குப் பிரமதேயமாக நிலம் அளித்த செய்தியையும், இரண்டு செப்பேடுகள் சமணக் கோயில்களுக்கும் பள்ளிச் சந்தமாக நிலக்கொடை அளித்ததையும், இரண்டு செப்பேடுகள் சிவன் கோயில் எடுப்பித்து, தேவதானமாக நிலக்கொடை அளிக்கப் பெற்றதையும் இரண்டு செப்பேடுகள் விஷ்ணு கோயிலுக்குத் தேவபோகமாக நிலக்கொடை அளிக்கப் பெற்ற செய்தியையும், ஒரு செப்பேடு வாகூரில் அமையப் பெற்றிருந்த வித்யா ஸ்தானத்துக்கு வித்யா போகம் (கல்விக் கொடை) தரப்பெற்ற செய்தியையும் தெரிவிக்கின்றன.

Page 83
செப்பேடுகள், யாரால், எதற்கு வெளியிடப்பட்டன?
இச்செப்பேடுகள் அரசர்கள் தம்முடைய ஆயுள், தர்மம், வெற்றி ஆகியவை சிறந்து விளங்க அவர்கள் அளித்த கொடையைப் பற்றியும், அரசர்களின் முக்கிய அதிகாரிகளின் வேண்டு தலுக்கிணங்க, அரசர்கள் அளித்த கொடையைப் பற்றியும் தெரிவிப்பதாகவே உள்ளன. இதிலிருந்து முற்காலத்தில் அரசர்கள் நேரிடையாகத் தங்கள் ஆணையின் மூலம் அளித்த கொடை களைத்தான் செப்புப் பட்டயங்களில் எழுதினார்கள் போன்று தெரிகிறது. காசாக்குடிச் செப்பேட்டில் தமிழ்ப் பகுதியில் “கோனோலை” என்று காணப்ப டுகிறது. ஆகவே அது அரசன் ஆணையைத் தாங்கிய ஒலையின் பிரதி என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இதையேதான் விஷ்ணு புராணம் என்னும் நூலும் கூறுவதாகத் தெரிகிறது. அதாவது “அரசன் பிராமணர்களுக்கு நிலத்தைக் கொடையாக அளிக்க வேண்டும். செப்பேட்டில் அரசனது முத்திரை பதிப்பிக்கப் பெற்றிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லைகள், பரப்பு ஆகியவை தரப் பெற்றிருக்க வேண்டும். அரசனது முன்னோர்களைப் பற்றி எழுதப் பெற்றிருக்க வேண்டும்”, என்று கூறுகிறது. தமிழ் நாட்டில் காணக் கூடிய சில கல்வெட்டுக்களில் “செம்பிலும் சிலையிலும் வெட்டுவித்துக் கொள்க’ என்று அரசன் அளித்த கொடை யைக் குறிக்குமிடத்தில் காணமுடிகிறது.
கொடை பற்றிக் கூறும் பகுதி
விஷ்ணு புராணத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள விதிகளை நன்கு கடைப் பிடித்து எழுதியுள்ள செப்பேடுகள் இந்தியாவிலேயே

தமிழகத்தில்தான் அதிகமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள பல்லவர்களின் செப் பேடுகளில் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு பகுதிகள் உள்ளன என்று முன்னரே குறிப்பிட ப்பட்டது. இருப்பினும், தமிழ்ப் பகுதியில்தான் கொடையைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. தமிழ்ப் பகுதியை முன்னர் எழுதிக் கொண்டு பின் அதையொட்டி சமஸ்கிருதப் பகுதி தனியாக இயற்றப்பட்டிருக்கலாம் போன்று தெரிகிறது.
ஸமஸ்கிருதப் பகுதி அமைப்பு முறை
ஸமஸ்கிருதப் பகுதி கடவுள் வாழ்த் தோடு ஆரம்பித்து கொடை அளிப்பவரின் குலத் தோற்றம், முன்னோர்களின் பட்டியல், அவர்களது வீரச் செயல்கள் ஆகியவற்றைத் தந்து விட்டு, கொடை அளிப்பவனின் சிறப்பு, அவனது இருப்பிடம் , ஆட்சியாண்டு, ஆகியவற்றைக் கூறி, கொடை பெறுபவனின் இருப்பிடம், அவனது குலம், கோத்திரம் ஆகியவை தெரிவித்து கொடையளிக்கப்பட்ட பொருளை விவரிக்கும் தன்மையில் அமைந்திருக்கும். இப்பகுதியின் உதவியால் தான் மன்னனின் பரம் பரையையும், அவர்கள் காலத்தில் ஆண்ட மன்னர்களையும், அவர்கள் புரிந்த போர்ச் செயல்கள், அவர்கள் செய்த அறக் கொடைகள் ஆகியவற்றையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஸமஸ்கிருதப் பகுதியின் சிறப்பு
இப்பகுதியில் மன்னர்கள் பல தெய்வங்களோடு ஒப்பிட்டுப் பேசப்படுவர். அவ்வாறு பேசப்படும் போது மன்னர் களுடைய குணநலன்களையும், மன்னர் களின் தேவியர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேவிமார்கள் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற செய்திகளையும் புரிந்து கொள்ளலாம்.

Page 84
தமிழப் பகுதியின் தன்மை
தமிழ்ப் பகுதியில் எந்த மன்னன் கொடை அளிக்கிறானோ அவனைக் குறிப்பிட்டு, அவனது இத்தனாவது ஆட்சி ஆண்டில், இந்தப் பகுதியில் அடங்கிய இந்த ஊர், இந்த பகுதியைச் சேர்ந்த இன்னாருக்குக் கொடை அளிக் கப்படுகிறது என்று குறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு கொடைய ளிக்கப் பெற்றது நிலமாக இருப்பின் அரச னுக்குச் செலுத்தப்பட வேண்டிய எல்லாவித வரிகளிலிருந்தும் விலக்குப் பெற்றதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அத்தோடு அந்நிலத் துக்கு எந்த வாய்க்காலின் மூலம் நீர் பாய்ச்சப் பெறுதல் வேண்டும் என்பதும் தெரிவிக்கப் பெற்றிருக்கும். ஆந்திரப் பகுதியில் கிடைத்துள்ள பல்லவர் செப்பேடுகளில் தமிழ்ப் பகுதி காணப்படவில்லை. ஆதலால் கொடைய ளிக்கப் பெற்ற நிலத்தின் எல்லை அவைகளில் தரப்பட வில்லை.
காலம் கூறும் முறை
ஆந்திரப் பகுதிகளில் கிடைத்துள்ள செப்பேடுகளில் ஆண்டு குறிப்பிட்டவுடன், அச்செப்பேடு எந்த பருவத்தில் வெளியிடப் பட்டது என்பதைத் தெரிவிக்க வேனிற் காலம், மழைக்காலம், பனிக்காலம் ஆகியவற்றுள் ஒரு காலம் தரப்பட்டிருக்கிறது. இத்தகைய முறை தமிழ்ப் பகுதிகளில் கிடைத்துள்ள செப்பே டுகளில் காணமுடியவில்லை.
செப்பேடுகளில் அதிகக் கவனம்
அரசனது ஆணையைத் தாங்கி வெளிவருவதால் செப்பேடுகள் மிகவும் கவனத்துடன் வெளியிடப்பட்டன போன்று தோன்றுகிறது. மயிதவோலு, ஹரஹட ஹல்லி

ஆகிய ஊர்களிலிருந்து கிடைக்கப்பெற்ற செப்பேடுகளின் ஆரம்பத்தில் "த்ருஷ்டம்” என்று ஒரு சொல் காணப்படுகிறது. இச்சொல்லுக்குச் ‘சரி பார்க்கப்பட்டது என்று பொருள் கொள்கிறனர். அவ்வாறாயின் மன்னன் வெளியிட்ட ஒவ்வொரு செப்பேடும் நன்கு ஒப்பிட்டுச் சரி பார்க்கப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டது என்பது தெளிவாகிறது.
செப்பேட்டில் மங்கலச் சொற்கள் :
மயித வோலு, ஹரிஹடஹல் லி, குணபதேயச் செப்பேடுகள் ‘சித்தம்' என்ற மங்கலச் சொல்லைக் குறித்துவிட்டு மற்ற செய்தியைத் தெரிவிக்கின்றன. சித்தம் என்றால் ‘காரியத்தில் வெற்றி கிட்டட்டும்’ என்று பொருள். இந்தச் சொல் காத்யாயனம் காலத்தில் வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. இந்தச் செப்பேடுகளுக்குக் காலத்தால் பிந்தியதான சமஸ்கிருதச் செப்பேடுகளில் 'ஜிதம் பகவதா’ என்ற சொல் லோடு ‘ஸ்வஸ்தியூரீ என்ற மங்கலச் சொல் காணப்ப டுகின்றது. ஸ்வஸ்தியூரீ என்ற சொல்லுக்கு மங்களம் உண்டாகட்டும் என்று பொருள் கூறப்பட்டு வருகிறது. இதைவிட மிகப் பொருத்தமான சொல் 'அருளிச் செயல்' என்ற சொல் தமிழ்க் கல்வெட்டுக்களில் காண முடிகிறது. வேலூர்பாளையம் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில் ’ஸ்வஸ்தியூரீ நமஸ்ஸிவாய' என்ற மங்கலச் சொல் காணப்படுவது இந்த ஒரு செப்பேட்டில் தானாகும். இச் செப் பேடுகளின் தமிழ்ப் பகுதி பெரும்பாலும் ‘கோவிசைய' என்றே ஆரம்பமாகின்றன. ராயக் கோட்டை, புல்லூர் செப்பேடுகளில் ‘ஸ்வஸ்தியூரீ கோவிசைய' என்று ஆரம்பிக்

Page 85
கப்படுகிறது. காசாக்குடிச் செப்பேட்டின் தமிழ்ப் பகுதி 'கோன் ஓலை’ என்று ஆரம்பமாகிறது. இம்முறை பிற்காலத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் “சோழகோன் ஓலை’ என்று காணப்படுகிறது.
பாண்டியர் காலச் செப்பேடுகள்
இதுவரையில் பாண்டிய மன்னர் களைச் சார்ந்ததாகக் கிடைத்துள்ள செப்பேடுகள் ஆறு ஆகும். இந்த ஆறு செப்பேடுகளும் பாண்டிய நாட்டுப் பகுதியிலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்று செப்பேடு (வேள்விக்குடி, சீவாமங்கலம், சின்னமனூர் சிறிய செப்பேடு) ஐடிலவர்மன் பராந்தக நெடுஞ் சடையனுடைய காலத்தை யும், ஒன்று (தளவாய்புரம்) பராந்தக வீரநா ராயண னுடைய காலத்தையும், ஒன்று (சின்ன மனூர் பெரிய செப்பேடு) இராஜசிம்மன் காலத்தையும், ஒன்று (சிவகாசி) வீரபாண்டி யனின் காலத்தையும் சேர்ந்ததாகும்.
ஆரியமும், தமிழும்
இச் செப்பேடுகள் அனைத்திலும் முற்பகுதி சமஸ்கிருதத்திலும், பிற்பகுதி தமிழிலும் உள்ளன. சமஸ்கிருதப் பகுதி கிரந்த எழுத்திலும், தமிழ்ப் பகுதி வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. பல்லவர் செப்பேடுகளைப் போலவே சமஸ்கிருதப் பகுதியில் கடவுள் வாழ்த்தும், பாண்டியர் குலம் தோன்றிய முறையும் கொடை அளித் தோனுடைய முன்னோர் களின் வரன் முறையும், கொடை அளித்த வனின் சிறப்பும், கொடையைப் பற்றிய சிறு குறிப்பும் காணப்படும். தமிழ்ப் பகுதியில் பல்லவர் செப்பேடுகளுக்கும், பாண்டியர்

செப்பேடுகளுக்கும் வேறுபாடு உணர முடிகிறது.
தமிழ்ப் பகுதியில் மங்கலச் சொல்
56T6))
பாண்டியர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதி எந்தவித மங்கலச் சொல்லும் இல்லாமல் தொடங்குகின்றது. இச் செப்பேடுகளின் சமஸ்கிருதப் பகுதியில் கொடை அளிக்கும் முன்னோர்களைக் குறிப்பது போன்றே தமிழ்ப் AO பகுதியிலும் குறிக்கப் பெற்றிருப்பது பல்லவர் செப்பேடுகளில் காணமுடியாத ஒன்றாகும். பாண்டியர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் ஒவ்வொரு மன்னனுடைய வெற்றிச் சிறப்புக்களும் விரிவான முறையில் தரப்பட் டுள்ளன. இவைதான் பிற்காலத்தில் ஆண்ட சோழ மன்னர்களின் மெய்க் கீர்த்திப் பகுதிகளுக்கு உதாரணங்களாக அமைந்தி ருத்தல் வேண்டும்.
ஆண்டு குறிப்பிடும் முறை
தமிழ்ப் பகுதியில் கொடை அளிக்கும் மன்னனின் ஆண்டு குறிப்பிடப்படும் முறையும் புதுமையாக உள்ளது. தளவாயப் புரச் செப்பேட்டில் “தன் செங்கோல் யாண்டு நாற்பதின்மேல் மூன்றோடீர் யாண்டில்” என்று கூறப் பட்டுள்ளது. சின்னமனூர்ப் பெரிய செப்பேடு “ராஜ்யவர்ஷம் இரண்டாவத னெதிர் பதினான்காம் யாண்டில்” என்று குறிக்கிறது.
தமிழ்ப் பகுதி தரும் விளக்கம்
பாண்டியர் செப்பேடுகளின் தமிழ்ப்
பகுதியில் அரசன் அக்கொடையை அளிக்கும்
போது எங்கு தங்கியிருத்தான், யார் வேண்ட

Page 86
அக் கொடை அளிக்கப்பட்டது. யார் ஆணத்தியாக இருந்தான், பிடியை நடத்திச் சென்றவர் யார், தமிழ்ப் பகுதியைப் பாடிய கவிஞர் யார், அதைச் செப்பேட்டில் எழுதிய கொல்லன் யார் போன்ற செய்திகள்
தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
கவிதை நடை
இத்தமிழ்ப் பகுதி பெரும்பாலும் கவிதை நடையிலேயே காணப்படுகிறது. இப்பகு தியைப் பாடிய கவிஞன் நிலக் கொடை போன்றவை அளிக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டிருக்கிறான். வேள்விக்குடிச் செப்பேட்டில் தமிழ்ப் பகுதியைப் பாடியவன் “இப்பரஸ்ஸ்தி பாடின சேனாதிபதி ஏனாதி ஆஇன சாத்தஞ் சாத்தற்கு” என வரும் தொடரால் சாத்தஞ் சாத்தன் என்பது அறியப்படுகிறது. அத்தோடு அவனுக்கு “மூன்று கூற்றாருமாய்த் தங்களோ டொத்த நான்கு படாகாரங் கொடுத்தார்” என்ற செய்தியும் புலனாகிறது. தளவாய்புரச் செப்பேடு சீரிய செழும்பணி இதற்குச் செப்பேடு ஆரியம் விராய்த் தமிழ் தொடுத்த மதியோராக” தேர் மிகுமாக் கடற்றானைத் தென்னவர் கோன் திருவருளாற் சீர் மிகு செப்பேட்டுக்குச் செந்தமிழ்ப் பாத்தொடை செய்தோன் அத்புதமெனும் பாழிக்கண் அவர்சடைமுடி அரன்வேண்ட நற்பரசு நிர்மித்தவனளிர் சடைமேலலங்னகல் பெற்ற மாமுனி மநுவழி வந்தோன் பாமரு பண்டித தாஸன் பொன்வரன்றி மணிவரன்றி அகில்வரன்றிக் கரையொரு புனற் றென் வைய்கை வளநாடன் செழுங்குண்டுர் நகர்த் தோன்றல் பாண்டித் தமிழாபரண னென்னும் பலசிறப்பும் பெயரெய்திய பாண்டி மாராயப் பெருங் கொல்லனாகிய சீரிவல்லவன்” என்று
78

கூறுகிறது. இவனுக்கு இறையிலியாக நிலம் அளிக்கப்பட்ட செய்தியும் தெரியவருகிறது.
பிரஸஸ்தி, பிரஸஸ்தி சேசுஷும்
செப் பேடுகளில் சமஸ் கிருதப் பகுதியின்பிரஸஸ்திக்குத்தான் “பிரஸஸ்தி” என்றும், தமிழ்ப் பகுதியின் பிரஸஸ்திக்குப் “பிரஸஸ் திசேஷம்” என்றும் பெயர் வழங்கியிருக்கிறது. தளவாய்ப் புரச் செப்பேட்டில் பிரஸஸ்தியை இயற்றியவன் “றுவல்லப மங்கலத்தில் வசிப்பவனும், வாக்காளனுமான மாதவிகவி” என்றும்: பிரஸஸ் திசேஷத்தை இயற்றியவன் பாணி டியத் ரமிடர்களுக்கு அலங்கார மானவனும், கருமார் கூட்டத்தில் முக்கியனும் சிவபாத தாமரையைத் தியானிப்பவனுமான கவி என்றும் கூறப்பட்டுள்ளது. இவனையே தமிழ்ப்பகுதி “பாண்டித் தமிழாபரணர் என்னும் பல சிறப்பும் பெயரெய்திய பாண்டிமாராய்ப் பெருங்கொல்லனாகிய சிரீவல்லன்” என்று தெரியப்படுத்துகிறது.
பிரஸஸ்தி பாடியவர்கள்
சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டின் பிரஸஸ்தியை கலைகளனைத்தும் கற்ற வனும், அடக்கம், நீதி இவற்றின் பிறப்பிட முமான விஷ்ணு என்பவரின் முன்தோன்றலும் மதுரகுணனின் நண்பனுமான வாசு தேவன் என்பவன் இயற்றிருக்கிறான். சிவசாகிச் செப் பேட்டின் பிரஸஸ்தியை நல்ல கவிதைக்கு இருப்பிட மாணவனும், பிருகஸ்பதி போன்றவ னுமான ரவி என்பவனின் பேரனும், சாத்திர ரீதியான புகழ்மிக்க விஷ்ணுத்ராதர் என்பவர் புத்திரனும், அந்தம் என்ற கிராமத்தில்

Page 87
பிறந்தவனும், இந்த அரசனுக்குத் தர்மோ பதேசம் செய்யும் குருவுமான பார்த்திவகேஸரி என்ற கவி இயற்றினான் என்று பெறப்ப டுகின்றது.
செப்பேட்டை எழுதியவர்கள்
இச்செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் அவற்றை எழுதிய கொல்லர்களின் பெயரும் காணப்படுகிறது. வேள்விக்குடிச் செப்பேட்டை யுத்தகேசரிப் பெரும் பணைகாரன் என்பவனும் சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டைப் பாண்டிப் பெரும் பணைகாரன் மகன் அரிகேசரி என்பவனும் தளவாய்புரச் செப்பேட்டை “இச்சானத் திற்குச் செழுந்தமிழ்ப் பாடினோன் தந்தை நிருபசேகரப் பெருங்கொல்லன் நிறை புகழ்நக்கன்” என்பானும் எழுதியுள்ளனர். யூரீவரமங்கலச் செப்பேட்டை எழுதியவனும் சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டை எழுதிய வனும் ஒருவனாகக் காணப்படுவதால் இரண்டு செப்பேடுகளும் பராந்த நெடுஞ் சடையனைச் சேர்ந்தவை என்பது ஐயமறப் புலனாகிறது. பெரும்பணைகாரன் என்பதற்குப் பெரிய கொல்லு பட்டறையை உடைய கொல்லன்
என்று பொருள் கொள்ளலாம்.
சமஸ்கிருதப் பகுதியில் சில புதுமை
இச் செப்பேடுகளில் தளவாய் புரச் செப்பேடு, சின்னமனூர் பெரிய செப்பேடு, சிவகாசிச் செப்பேடு ஆகியவற்றில் சமஸ்கிருதப் பகுதியிலும் யாருக்குக் கொடை யளிக்கப்பட்டது. கொடையளிக்கப் பட்ட நிலம் எங்கு அமைந்துள்ளது, யார் யார் அதிகாரி களாக இருந்தார்கள் என்ற செய்திகள் தரப்பட்டுள்ளன. இது பல்லவர் செப்பேடுகளில் சமஸ்கிருதப் பகுதியில் காணமுடியாதவை.

ஏன், பாண்டியன் செப்பேடுகளான வேள்வி க்குடிச் செப்பேடு, பூரிவரமங்கலச் செப்பேடு, சின்னமனூர் சிறிய செப்பேடு ஆகியவற்றில் கூட காணமுடியவில்லை. ஆகவே சமஸ்கி ருதப் பகுதியில் கொடை அளிக்கப்பட்ட நிலம் பற்றிய செய்தி சேர்க்கப்பட்டது கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து என்று கொள்ளலாம்.
இலக்கியச் செய்திக்குச் செப்பேட்டுச் சான்று
இச்செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் சங்ககாலப் பாணி டியர்கள் ஓரிருவர் குறிக்கப்படுகின்றனர். அத்தோடு அவர்களின் சிறப்பும் புகழப்பட்டுள்ளது. “கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்ட்யாதிராஜன்” என்று வேள்விக்குடிச் செப்பேடு பாண்டிய மன்னன் மதுகுடுமிப் பெருவழுதியைக் குறிக்கின்றது. சின்னமனூர் சிறிய செப்பேடு பாண்டிய மன்னருள் ஒருவன் “ஓராயிரம் க்ருது செய்தான்” என்று தெரிவிக்கிறது. இச்செய்தி பாண்டியன் முதுகுடுமி வேள்வி செய்ததைத் தெரிவிப் பதாகவே கருத வேண்டியுள்ளது. சங்க இலக்கியங்களுள் ஒன்றான மதுரைக் காஞ்சி முதுகுடுமி பெருவழுதியை “பல் சாலை முதுகுடுமி” என்று பகர்கிறது சாலை என்பது வேள்விச்சாலை ஆகும். எனவே, இலக்கியம் வாயிலாகக் கேள்விப் பட்ட செய்தி செப்பேட்டு வாயிலாகவும், உறுதிப்படுத்தப்படுகிறது. அத்தோடு செப்பேடும் உண்மையான நிகழ்ச்சி யைத் தெளிவுறுத்துகிறது என்பது தீர்மானிக்க ப்படுகிறது.
ஆலங்கானத்து அமர்
பாண்டியர்களின் முன்னோர் சிறப்புக் களைக் கூறுமிடத்தில் ‘ஆலங்கானத்

Page 88
தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்" என்று தளவாய்புரச் செப்பேடும், “தலை ஆலங்கானத்திற் றன்னொக்குமிரு வேந் தரைக் கொலை வாளிற் றலைது மித்துக் குறைத் தலையின் கூத்தொழித்தும்" என்று சின்ன மனுநூர் பெரிய செப்பேடும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றி பேசுகின்றன.
அருந்தமிழ் நற்சங்கம்
மதுரை மாநகர் ஏற்படுத்தப்பட்டதும் அங்கு சங்கம் அமைக்கப் பெற்றிருந்ததும், அச்சங்கத்தில் மாபாரதம் தமிழ்ப்படுத்தப் பட்டதும் “தென் மதுராபுரஞ் செய்தும் அங்கதனில் லருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்” என்று தளவாய்புரச் செப்பேடும்: “மஹா பாரதத் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று சின்னமனூர் பெரிய செப்பேடும் புலப்படுத்துகின்றன மதுரையில் சங்கம் அமைக்கப்பட்டிருந்தது. என்று கூறப்பட்டு வந்த இலக்கியச் செய்திகள் நிரூபிக்கப்படுகின்றன.
மதுரைக் காஞ்சியும், தளவாய்புரச் செப்பேடும்
தளவாய்புரச் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியைப் பாடிய, “பாண்டித் தமிழாபரண னென்னும் பல சிறப்புப் பெயரெய்திய பாண்டிமாராயப் பெருங்கொல்லனாகிய சிரீவல்லவன்’ பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியைச் சுவைத்துச் சுவைத்துப் படித்திருப்பான் போல் தோன்றுகிறது. தமிழ்ப் பகுதியின் தொடக்கமே மதுரைக் காஞ்சியின் தொடக்கவரியாகிய “ஓங்குதிரை வியன் பரப்பில்” என்று ஆரம்பமாகிறது. இப் பகுதியின் இறுதி வரிகளிலும், மதுரைக் காஞ்சியின் முத்திரையை உணரமுடிகிறது.

பகல் செய்யும் வெண்ஞாயிறும், இரவுச் செய்யும் வெண் திங்களும்
கொடை அளிக்கின்றவன், தான் அளிக்கின்ற அக் கொடை “சந்திராதித்ய வரை” நிலை பெற்றிருக்கும் என்று கூறி அளிப்ப துதான் வழக்கமாகக் கல்வெட்டுக்களில் காண முடிகிறது. அதையே கூறவந்த இக்கவிஞன் “சந்திராதித்யவரை” என்ற அச்சொல்லுக்கு பதிலாகத் தம் மனதில் அலை மோதிக் கொண்டிருந்த மதுரைக் காஞ்சியின் வரிகளாகிய “பகற் செய்யும் வெண்ஞாயிறும் இரவுச் செய்யும் வெண்திங்களும்” என்ற பகுதியை அப்படியே 'பகல்செய்யும் பருதி ஞாயிறும் இரவுச் செய்யும் பனிமதிஉம் ஞாலமும் உளவளவும்” என்று தந்திருக்கிறான். எனவே அவன் தன்னைத் “தமிழாபரணன்" என்று கூறிக் கொள்வது பொருத்தமுடை யதுதான் என்பதைச் சொல்லாமல் சொல்லி
விடுகிறான்.
ஆரியம் விராய்த் தமிழ்
இத்தமிழ்ப் பகுதியில் ஆங்காங்கே வடமொழிச் சொற்கள் வருமிடங்களிலெல்லாம் கிரந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதைத் தளவாய்புரச் செப்பேடு “ஆரியம் விராய்த் தமிழ்” என்று கூறிச் செல்கிறது. இவ்வாறு எழுதுவது மிகவும் சிறந்தது என்று கருதப்பட்டது போன்று காணப்படுகிறது. இம்முறை தான் பிற்காலத்தில் (விஜயநகர் காலத்தில்) மணிப் பிரவாள நடை என்று வழங்கி வந்தது போலும்!

Page 89
பல்லவர் செப்பேடுகளில் தமிழ்ப் பகுதயில் பிரஸ் ஸ்த பகுதி இருந்திருந்தால்
பாண்டியர் செப்பேடுகளில் காணப் படுவது போன்று பல்லவர் செப்பேடுகளிலும், “ப்ரஸஸ்திஸேஷம்" பகுதி (தமிழ்ப் ப்ரஸஸ்தி) இருந்திருந்தால் பல்லவர்களைப் பற்றிய தெளிந்த வரலாறு கிடைத்திருக்கும். பல்லவர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதி தேர்ச்சி பெற்ற புலவர் களால் இயற்றப்படவில்லை. காரணம், புலவர்கள் எழுதுமளவுக்கு செய்திகள் தமிழ்ப் பகுதியில் சேர்க்கப்படவில்லை. தமிழ்ப் பகுதி சாதாரணமாகக் கொடை அளிக்கப்பட்ட நிலத்தையும், அதன் எல்லைகளையும், யார்
யாருக்கு எவ்வளவு பங்கு என்ற விவர

த்தையும் தெரிவிப் பனவாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் செப்பேடுகளின் சமஸ்கிருதப் பகுதி சிறந்த கவிஞர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. ஆகவேதான் அப் பகுதியில் பல்லவர்களின் பரம்பரையை ஓரளவு தெரிந்து கொள்ள ஏதுவாகிறது. பல்லவர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில், பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுவது போன்ற தமிழ்ப் பிரஸஸ்தி பகுதி சேர்க்கப்பட்டிருந்தால், பல்லவர்கள் யார், அவர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள உறவு என்ன, இலக்கியங்களில் கூறப்படும் கதைகளுக்கும், அவர்களுக்கும் உண்மை யிலே தொடர்பு உண்டா என்ற கேள்விக ளுக்கும் சிறந்த விளக்கம் கிடைத்திருக்கும்.

Page 90
பல்லவ
முனைவர்
களப்பிர மன்னர்களை அடுத்துத் தமிழகத்தின் வடபகுதியில் பல்லவ மன்னர்கள் சிறந்த நிர்வாகம் செய்யத் தலைப்பட்டி ருக்கின்றனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டி லிருந்து அவர்கள் காலத்தியச் செப்புப்பட்ட யங்கள் கிடைத்துள்ளன. ஆனால் கிபி ஆறாம் நூற்றாண்டிலிருந்து தான் அவர்களது செப்புப்பட்டயங்களில் ஒரு பகுதியைத் தமிழ் எழுத்தில் காண முடிகிறது. இவற்றைக் கொண்டு பார்க்கையில் இப்பல்லவ மன்னர்கள் ஆந்திரப் பகுதியில் இருந்துதான் அதாவது நாகார்ஜுனகொண்டா, அமராவதிப் பகுதியில் இருந்துதான் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.
ஆனால் தமிழ் இலக்கியம் தொண்டைமான் இளந்திரையன் என்பான் காஞ்சிபுரத்தினைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்திலேயே ஆட்சி செய்திருக்கிறான் என்று குறிப்பிடுகிறது. அத் தொண்ட மான்களுக்கும், பல்லவர் களுக்கும் தொடர்பு உண்டா என்பது ஐயப்பாடாக இருக்கிறது. ஆனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு மேற்பட்ட பல்லவர் காலத்துச் செப்புப் பட்டயங் களிலே தங்களுடைய முன்னோர்கள் பற்றிக் குறிப்பிடுகையில், பல்லவக் கொடியால் சுற்றிக் கடலில் கரை சேர்ந்த ஒரு குழந்தையைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதற்கும் தொண்டை மான் இளந்திரையன் கதைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் முற்காலத்திய பல்லவர்களுக்கும் தமிழகத்துத் தொணி டைமான் இளந் திரையனுக்கும் நேரிடைத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் யாதும் கிடைக்கப் பெறவில்லை. ஆதலால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி ஆறாம் நூற்றாண்டு

காசுகள்
டன காசிநாதன்
வரை ஆட்சி செய்த பல்லவர்கள் பெரும் பாலும் ஆந்திரப் பகுதியிலிருந்து வந்தவர்க ளாகவே கருத முடிகிறது. ஏனெனில் அவர்கள் வெளியிட்ட செப்புப் பட்டயங்களில் குறிப்பிடும் கொடையளிக்கப் பெற்ற இடங்கள் கூட ஆந்திரப் பகுதியில் உள்ளவையாகத்தான் காணப்படுகின்றன. கி.பி ஆறாம் நூற்றா ண்டுக்குப் பிறகு ஆட்சி செய்த பல்லவர்கள் தமிழகப் பண்பாட்டோடு ஒன்றிவிட்ட காரணத்தால் செப்புப் பட்டயங்களில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள். தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எல்லாம் தூய தமிழ் மொழியிலும், வட்டெழுத்திலும் காணப் படுகின்றன. ஆனால் அதே காலத்தில் கோயில்களில் காணப்படும் கல் வெட்டுக்கள் சமஸ்கிருதத்திலும், கிரந்த எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆதலால் அவர்களது அரசு மொழியாகச் சமஸ்கிருதம் தான் இருந்திருக்கும் போன்று தெரிகிறது. அதே நேரத்தில் தமிழ்மொழியையும் அவர்கள் புறக்கணிக்கவில்லை என்பது உணரற்பாலது. அவர்கள் ஆட்சி செய்த கி. பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய தமிழ் இலக்கியங்களும் சிறந்த வளர்ச்சி பெற்றிருந்தன. குறிப்பாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த காலமும் இந்தக் காலமேயாகும். அவர்களால் பாடப்பெற்ற தேவாரத் திருப்பதிகங்கள் அனைத்தும் தூய தமிழில் பொருள் செறிவு மிக்கதாக எழுதப்பட்டுள்ளன. எனவே அவர்கள் தமிழுக்கும் உயர்வு கொடுத்து அதனையும் ஊக்குவித் திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் புலனாகிறது.
அவர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளாக இது வரை சில காசுகளே கிடைத்தி ருக்கின்றன.

Page 91
சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லவர் காலக் காசுகள் மிகவும் குறைந்த அளவிலேயே தெரிய வந்திருந்தன. டாக்டர் ஹ"ல் ஷ என்பவரால் படித்து வெளியுலகுக்குத் தெரிவிக்கப்பட்ட ரீபர, ரீநிதி, மானபுர என்று எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ள காசுகள், அவற்றுள் முக்கியமானவை. பூரீபர என்பது மகேந்தி ரவர்மப் பல்லவனின் பட்டப் பெயராகும் பூரீநிதி என்பது இராஜசிம்மனின் பட்டப்பெயர். “மானபரன்" தெள்ளாறெறிந்த நந்திவர்மனாகிய மூன்றாம் நந்திவர்மனின் பட்டப்பெயர். ஆதலால் கி. பி. ஆறாம்-ஏழாம் நூற்றாண் டுகளில் ஆட்சி செய்த மகேந்திர வர்மன் எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இராஜசிம்மன், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் காலக் காசுகள் கிடைத்துள்ளன.
பல்லவர் காலத்திய வேறு சில காசுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு புறம் காளை, மற்றொரு புறம் இரண்டு பாய் மரங்களோடு கூடிய கப்பல் உருவங்களையும்,
சிலவற்றில் ஸ்வஸ்திகா, விளக்கு, சக்கரம்,
வில், மீன், குடை, சைத்யம், குதிரை, சிம்மம், சங்கு, குடம், வேலியினுள் மரம் ஆகிய உருவங்களில் யாதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதும் காணப்பெறும். இக்காசுகள் செம்பு அல்லது வெள்ளியினால் மட்டுமே உருவாக்கப் பெற்றவை. கிழக்காசிய நாடுகளில் இந்திய நாட்டின் பண்பாட்டு மற்றும் வர்த்தகத் தொடர்பை ஆய்வதற்காக டாக்டர் நொபுரு கராஷிமா தலைமையில் தாய்லாந்து சென்ற குழுவினர் தமிழ்நாட்டைச் சார்ந்த இரு காசுகளை அங்கு கண்டறிந்தனர். ஒன்று சங்க காலச் சோழர் காசு, மற்றொன்று பல்லவர்
83

காலக் காசு. பல்லவர் காசு 1.5 சென்டிமீட்டர் விட்டம் உடையது. இக்காசில் முன்பக்கத்தில் நிற்கும் காளை உருவமும் பின்பக்கம் இரு பாய் மரங்களையுடைய கப்பல் உருவமும் காணப்படுகின்றன. இக்காசில் எழுத்துக்கள் யாதும் இல்லை.
அண்மைக் காலங்களில் அகழ்வாய்வின் மூலமும், எதிர்பாராக் கண்டுபிடிப்புக்கள் மூலமும் பல்லவர் காலத்திய சில புது வகையான காசுகளும் வெளிப்படுத்தப்பட் டுள்ளன. இவற்றுள் மிகப் பழமையானவை ஒரு புறம் நிற்கும் காளை உருவமும், மற்றொரு புறம் குடமும், வேலியினுள் மரமும் உடைய காசுகளாகும். இவை ஈயத்தால்
செய்யப் பெற்றவை.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை 1970க்கும் 1976க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் மேற்கொண்ட அகழாய்வு மூலம் முற்காலப் பல்லவர் காலத்தில் காசு வார்ப்புக் கருவிகள் மூன்றினைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசு தொல் பொருளியல் துறையின் தென்வட்டம் காஞ்சிபுரத்தில் 1962இல் நடத்திய அகழாய் வில் எட்டு ஈயக் காசுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இக்காசுகளில் ஒருபுறம் திமிலுடன் கூடிய நிற்கும் காளை உருவமும் காளைக்கு மேற்பகுதியில் யூரீவத்ஸம் அல்லது நந்திபாதமும் பின்புறம் தாமரை மலர் அல்லது யாதோ ஒரு குறியீடும் காணப்படுகின்றன. இக்காசுகளின் காலம் கிபி ஐந்தாம்-ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். அண்மையில் தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை சென்னையின் ஒரு பகுதியாகவுள்ள

Page 92
திருவான்மியூரில் பல்லவர்கால ஈயக்காசு ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இக் காசிலும் ஒருபுறம் திமிலுடன் கூடிய நிற்கும் காளை உருவமும், மறுபுறம் வேலியினுள் மரமும் காணப்படுகின்றன. இதன் காலமும் கி.பி. ஐந்தாம்-ஆறாம் நூற்றாண்டாகக் கருதப்ப டுகிறது."
எழுத்துக்களோடு கூடிய வேறு சில பல்லவர் காலக் காசுகளும் தெரிய வந்துள்ளன. ஒரு வகைக் காசில் வட என்றும், மற்றொரு வகையில் லசுரித' என்றும், மற்றொரு வகையில்
பரமேஸ்வர என்றும் எழுதப் பெற்றுள்ளன. முதல் வகையைச் சார்ந்த காசு ஒன்றை அண்மையில் தொல் பொருள் ஆய்வுத்துறை கரூரில் திரு அர்ச்சுனன், காப்பாட்சியர் உதவியால் கண்டு பிடித்து ள்ளது? இவ்வகைக் காசு கி. பி. எட்டாம் நூற்றண்டைச் சார்ந்தது. இக்காசு வெள்ளியால் செய்யப்பெற்றது. இவ் வகையைச் சார்ந்த செம்பினால் செய்யப் பெற்ற காசு ஒன்றைப் பற்றிய செய்தி 17-11-89இல் தினமணியில் வெளிவந்துள்ளது.19 தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ள காசில் முன்பக்கம் வடபு என்று கிரந்த எழுத்திலும், நிற்கும் காளை உருவமும், பின்பக்கம் சங்கு உருவமும் காணப்படுகின்றன.'
லசுழித என்று எழுதப் பெற்றுள்ள காசு முதலாம் மகேந்திரவர்மன் காலத்தையும் பரமேஸ்வர என்று பொறிக்கப் பெற்றுள்ள காசு பரமேஸ்வரவர்மன் காலத்தையும் சார்ந்தவையாகும்.
சிம்ம உருவம் ஒரு பக்கமும், சங்கு உருவம் மறுபக்கமும் உள்ள காசுகள் சில
84

பல்லவர் காலத்தவை என்று தினமலர் ஆசிரியர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தியால் கூறப்பட்டுள்ளது.? சிம்ம உருவம் பொறிக்கப் பெற்ற காசுகள் பல்லவக் காலத்தவை யல்லவென்றும் விஷ்ணு குண்டின் வம்சத்தைச் சேர்ந்தவை என்றும் டாக்டர் நாகசாமி கூறியுள்ளார். ஆனால்
திருஞானசம்பந்தம், பல்லவர்களுக்குக் கொடியாக விடையும் சிம்மமும் இருந்தது என்று கூறி சான்றாக இலக்கியப் பாடல்க ளையும் எடுத்துக்காட்டியுள்ளார்."
“விடை மண்பொறியோலை விடேல் விடுகு”
(நந்திக்கலம்பகம், பாடல் 13)
“மல் கு வெண் குடைப் பல்லவர் கோளரி”
(நந்திக்கலம்பகம், பாடல் 59)
பல்லவ மன்னர்கள் சிம்மவர்மன், நரசிம்மன், இராஜசிம்மன் என்று பெயர்களைத் தாங்கியிருப்பதுவும் அவர்கள் சிம்மத்தையும், கொடியில் பொறித்திருப்பார்கள் என்று ஊகிப் பதற்கு உறுதுணை புரிகிறது. ஆனாலும் சிம்ம உருவம் உள்ள காசுகளில் பல்லவ மன்னர்களின் பெயரோ அல்லது பட்டப் பெயரோ கிடைக்காத வரை உறுதியாகச் சொல்ல முடியாது.
பல்லவர் காலக் கல்வெட்டுக்களில் காணம், கழஞ்சு, காசு, பழங்காசு, பொன், பணம் ஆகியவை குறிக்கப்படுகின்றன. கழஞ்சு ஒரு நாணயமாக இல்லாமல் பொன்கட்டியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் காணம் நாணயமாக வழங்கியிருக்கிறது. காசு, பழங்காசு என்பவைகளும் தங்க நாணயங்கள்
என்று டாக்டர் சண்முகம் கூறியுள்ளார்."

Page 93
பல்லவர் காலக் காசுகள் பெரும்பாலும் செம்பு, வெள்ளி, ஈயம் ஆகியவற்றால் செய்யப் பெற்றவையே பெரும்பாலும் கிடைத்துள்ளன. இவர்கள் காலத்திய தங்க நாணயங்கள் இரண்டு கிடைத்துள்ளதாகத் திருஞான சம்பந்தம் தம் நூலில் வெளியிட்டுள்ளார்." மேலும் இவர்கள் காலத்தியக் காசுகள் பெரும் பாலும் வட்ட வடிவிலேயே அமைந்திருக் கின்றன.
அண்மையில் மகேந்திரவர்மன் காலத்தி யக் காசு ஒன்று கண்டறியப்பட்டு இருக்கிறது." இக்காசு வெள்ளியால் செய்யப் பெற்று முன்பக்கம் நந்தி நின்ற நிலையிலும் அதன் மேல் பகுதியில் “பகாபிடுகு” என்று பல்லவர் காலத் தமிழ் எழுத்திலும் எழுதப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் கால்கள் உடைய சக்கரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பகாபி
அடிக்குறிப்புகளும் விளக்கவுரைகளும்
l.
Sir T. Desikachari, South Indian Coins (Reprint 19
2. Dr.P. Shanmugam, Two Coins of Tamil Origin from
3. Dr. K. V. Raman and Dr. P. Shanmugam, Pallava Co
V, pp. 77-80
4. Indian Archaeology - a review 1962-63p, 12 PLXX
5. இக்காசைப் பள்ளி தலைமை ஆசிரியை சாந் தெரிவித்தார். 17-8-89 இந்து நாளிதழில் செய்தி
6. Natana, Kasinathan, Art Panorama of Tamils pp.4
7. R. Krishnamurthy, Coins of Pallava King Mahend
Coins - A Study p. 126
8. K.A. Thirugnanasambandam, Kanchi Pallava Co
9. Natana. Kasinathan Achievements of Archaeolog
Ip. VII;

டுகு, லளிதாங்குரன் என்பவை முதலாம் மகேந் திரவர்மனின் பட்டப் பெயர்களாகும். மேலும் அபராஜிதவர்மன் காலத்திய காசைக் கண்டுபிடித்துள்ளதாக கணேசன் ஒரு கட்டுரை படித்துள்ளார்."
இவர்களது காசுகளில் காணப்பெறும் காளை, சங்கு, சக்கரம், கப்பல் உருவங்களைக் கொண்டு பல்லவர்கள் சைவம், வைணவம் ஆகிய சமயங்களை ஒருசேர ஆதரித்தவர்கள் என்பதும் கடல் வாணிபம் மேற் கொண்டி ருந்தனர் என்பதும் தெளிவாகப் புரிகிறது. மேலும் நண்டு, சிம்மம், மீன், வில்உருவங்கள் இராசிகளைக் குறிப்பதாக இருக்கலாம் என்று கொள்ளப்படுகிறது? சைத்யம், வேலியினுள் மரம் போன்ற உருவங்கள் இவர்கள் பெளத்த மதத்தையும் ஆதரித்தனர் என்பதைக் காட்டு கின்றன.
84) p.35:Tamil Coins - a study, p. 126
Thailand, S.S.I.C., Vol.VI, pp. 95-96
in Moulds from Kanchipuram Excavations, S.S.I.C. Vol.
CXIX-B
தா கண்டறிந்து தொல்பொருள் ஆய்வுத்துறைக்குத்
வெளிவந்துள்ளது.
7-49
ra varman I (580-630A.D): Dr. R. Nagaswamy. “Tamil
in p. 9
y Department in five years from 1989-1993, Annexure

Page 94
0.
.
2.
13.
4.
15.
16.
7.
18.
19.
Alakkudi Arumugam Sitaraman, article in Dinamal
K. Damodaran, "Karur coins' paper presented in th held at Thanjavur in the year 1991.
R. Krishnamurthy, Pallava coins with lion symbol
Dr. R. Nagaswamy, Tamil coins-a study p. 126(198
K.A. Thirugnanasambandam, op.cit P. 7
Natana. Kasinathan "Use of currency as gleanec
nadu Numismatic Conference: Art Panorama of T
P. Shanmugam, Some aspects of monetary system p. 102
Thirugnanasambandam, op.cit PI. No.I and 2 pag
Alakkudi Arumugam Sitaraman, “Avanam” Vol.IN
T. Ganesan, "A Rare Copper Coin of Pallava Kin
Dr. R. Nagaswamy, op.cit.P. 124
(இக்கட்டுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன விெ பெறப்பட்டது)
8(

ar dated 17-11-89
e first annual conference of South Indian Numismatics
1)
from pallava inscriptions' article presented in Tamil
amils pp. 47-49
of the Pallavas, Studies in South Indian coins Vol. III
e.88
V, P. 88.
g Aparajitavarman”
பளியீடான "தமிழர் காசு இயல்" என்னும் நூலிலிருந்து

Page 95
கொற்றன
அர. அகிலா - இரா
பஞ்சபாண்டவர் ரதங்கள் என்று மக்களால் அழைக்கப்படும் பல்லவர் கால ஒருகல் தளிகள் ஐந்தும் மாமல்லபுரத்தின் தென்புறத்தே உள்ளன. இவற்றுள் முதல் நான்கும் “ஒரே வரிசையில் மேற்குப் பார்வையாக அமைய, ஐந்தாம் தளி தெற்குப் பார்வையாகத் தனித்துக் காட்டப்பட்டுள்ளது. மேற்கு நோக்கியுள்ள நான்கு தளிகளுள் முதலிரண்டும் ஒரே குன்றிலிருந்து செதுக்கப் பட்டிருப்பதால் பொதுவான தளத்தின் மீது காணப்படுகின்றன. இத்தளத்தின் கீழ் மணல் வெளிக்கு மேலாகத் துணைத்தளமொன்றின் கண்டப்பகுதியும் வாஜனமும் மட்டுமே பார்வைக்குக் கிடைக்கின்றன. கண்டப்பகுதி, மேற்கிலும் தெற்கிலும் சிம்ம மற்றும் யானை முகச் செதுக்கல்கள் இடையிட்ட பாதங்களோடு அமைந்துள்ளது. வடக்குக் கண்டப்பகுதி நிறைவடையாப் பணியாய் நிற்கிறது. கிழக்குத் தளப்பரப்பு முறையாக அமையவில்லை. முதல் பாதியில் ஒழுங்கற்றுக் காணப்படும் இத்தளப்பகுதி, தென்பாதியில் முழுவதுமாய்ச் சிதைக்கப்பட்டுள்ளது. அதனால் துணைத்தள
அமைப்பை இங்கு காணக்கூடவில்லை.
தளப் பரப்பில் நிற்கும் இரண்டு தளிகளுள் முதல் தளி ஒருதள விமானமாய் அமைந்துள்ளது. கொற்றவைக்காய் அர்ப் பணிக்கப்பட்டிருந்த போதும், இத்தளியை திரெளபதி ரதம் என்று தவறாக அழைப் பதிலேயே அனைவரும் மகிழ்கின்றனர். மணல் வெளியிலிருந்து தளப்பரப்பை அடையத் துணைத்தளத்தை ஊடறுத்தாற் போல் மேற்கில் மூன்று படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. கருவறை வாயிலுக்கு நேரே அமைந்திருக்கும்
87

வைத்தளி
1. கலைக்கோவன்
இப்படிகளின் இரு புறத்தும் பிடிச்சுவர்கள் உள்ளன. இவற்றின் தலைப்பில் பாறைப்பகுதி சற்று பிதுக்கமாக விடப்பட்டுள்ளது.
கொற்றவைத் தளியின் தாங்குதளம் பாதபந்தமாகக் காட்டப்பட்டுள்ளது. ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளின் தழுவலில் பாதங்களோடு கூடிய சிறிய அளவிலான கண்டம், மேலே பட்டிகை என்றமைந்துள்ள இத்தாங்குதளம், சில இடங்களில் முழுமை பெறாமலும் சில இடங்களில் சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றது. ஜகதியின் கீழ், தளி முழுமைக்குமாய்க் காட்டப்பட்டுள்ள உபான வரியும், கிழக்குப்புறத்தின் தென்கோடியில் சிதைக்கப்பட்டுள்ளது. பட்டிகைக்கு மேலாகச் சற்று உள்ளடங்கி இடம் பெற்றுள்ள துணைக் கம்பிலிருந்து சுவர் அமைந்துள்ளது. இச் சுவரின் நடுவே வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய முப்புறத்தும் கோட்டங்களும் மேற்கில் வாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டங் களில் கொற்றவையின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இக்கோட்டங்களும் வாயிலும் பக்கத்திற்கொன்றாகக் கொண்டுள்ள அணை வுத்துாண்கள் நான்முக அரைத்துரண்களாய் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவர்த்ணதிருப் பங்களில் பக்கத்திற்கு இரண்டாக எட்டு
நான்முக அரைத் தூண்கள் காணப்படுகின்றன.
கோட்ட அணைவு அரைத்தூண்கள் கீழிருந்து மேலாகப் பாதம், உடல், மாலைத்தொங்கல், கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை என்னும் உறுப்புகளைப் பெற்றமைந்துள்ளன. துணைக் கம்பிலிருந்து எழும் இவை கோட்டத்திற்குச் சற்று மேலே

Page 96
முடிகின்றன. இவற்றின் பலகைகள் மேல் நிற்பது போல சுவர்ப்பகுதியில் பக்கத்திற் கொன்றாக இரு மகரங்கள் காட்டப் பட்டுள்ளன. இம் மகரங்களின் விரிந்த தோகைகள் அரைத்தூண்களின் இருபுறத்தும் அடர்த்தியாகப் பரவி இறங்குமாறு செதுக்கப் பட்டுள்ளன. இம்மகரங்களுக்கு இடையிலுள்ள பகுதியின் நடுவே மேலும் இரு சிறிய மகரத்தலைகள். இவற்றின் வாய்களிலிருந்து வெளிப்படும் கொடிக் கருக்குகள். பலகை மகரங்களின் அங்காத்த வாய்களில் முடியுமாறு இணைக்கப்பட்டுள்ளன. பலகை மகரங்களின் முதுகுகளின் மேல் வீரர்கள் அமர்ந்துள்ளனர். இவ்வீரர்கள் ஒரு கையை மகரத்தலை மீது இருத்திய படி, மற்றொரு கையை உயர்த்தி யுள்ளனர்.
கோட்டத்தின் மேல்விளிம்பையொட்டி அதன் மையப்பகுதியில் சிறு தூண் போன்ற அமைப்பொன்று காட்டப்பட்டுள்ளது. இதன் பலகைப் பகுதியின் நடுவில்தான் மைய மகர இணையும் அதன் மேலான பூரிமப்பகுதியும் செதுக்கப் பட்டுள்ளன. இப்பலகைப் பகுதியின் மேற்பரப்பு, பக்கங்களில் நீண்டு, அணைவு அரைத் தூண்களின் பலகைகளோடு இணைந் துள்ளது. கிழக்குக் கோட்டப் பகுதியில் மட்டும் இந்நீட்டலில் பக்கத்திதற் கொன்றாக இரு அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் உள்ளன. வழக்கமாக இவ்வளைவுகளுக்குள் காட்டப்
படும் குழிந்த பகுதிகள் (கூடு) இங்கில்லை.
சுவர்த் திருப்பங்களிலுள்ள நான்முக அரைத்துTண்களும் கோட்ட அணைவுத் தூண்கள் போலவே உறுப்புகள் கொண்டு துணைக் கம்பிலிருந்து எழுந்தாலும், அளவில் சற்றுப் பெரியனவாய் அமைந்துள்ளன. பலகைக்கு மேலே இவற்றிற்கு வீரகண்டமும்

போதிகைகளும் காட்டப்பட்டுள்ளன. போதிகை களின் கீழ்க்கைகள் வளைந்து, மேற்கைகளாகி உத்திரம் தொடுகின்றன. இக்கைகளுள் சில தரங்கம் கொண்டும் சில வெறுமையாகவும் உள்ளன. சுவர்களிலுள்ள மகர தோரணங் களின் உச்சிப்பகுதிகளும் இவ்வுத்திரம் தொட்டவாறு அமைந்துள்ளன. உத்திரத்தை யடுத்து வாஜனமும் வலபியும் காட்டப் பட்டுள்ளன. வலபியில் நாற்புறமும் பூதவரி செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கமும் ஒன்பது பூதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டு நந்தியையும் தக்கனையும் சுட்டுவ னவாய் உள்ளன.
தெற்குவரியில் ஐந்து கணங்களின் முகங்கள் சிதைந்துள்ளன. வடக்கில் எட்டுக் கணங்கள் வடிவமைக்கப்பட்டிருக்க, ஒரு கணத்திற்கான கற்பகுதி அப்படியே விடப் பட்டுள்ளது. வடிவமைக்கப்பட்ட எட்டும் முழுமையடையவில்லை. மேற்கிலும் ஒன்று, வடிவம் பெறாமலுள்ளது. கிழக்கிலுள்ள கணவரி முழுமையடைந்திருந்தாலும் சிறப் பிற்குரிய அமைப்பில் இல்லை. ஒவ் வொரு கணத்திற்கிடையிலும் நன்கு இடை வெளி விட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த வரிமா னத்தில், பூதங்கள் மிக எளிமையான தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளன.
பூதவரிக்கு மேலாகக் கூரை காட்டப் பட்டிருந்தாலும் அதன் முன்னிழுப்பாய் அமையும் கபோதம் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக மேலே அமைக்கப்பட்டுள்ள சிகரத்தின் பக்கச் சுவர்கள் நாற்புறமும் நன்கு சரிந்து இறங்குமாறு செய்யப்பட்டுள்ளன. இந்த இறக்கத்தைத் தாங்குவது போல் வலபியின் மேற்பகுதியிலிருந்து நாற்புறமும் இரும்புப்
பட்டைகள் போலக் கற்பட்டைகள் காட்டப்

Page 97
பட்டுள்ளன. வழக்கமாகக் கொடுங்கைக்குக் காட்டப்படும் இப்பட்டைகள், இங்குச் சிகர இறக்கத்திற்கும் காட்டப்பட்டிருப்பதை இத் தளியின் மாறுபட்ட அமைப்புக் கூறுகளுள் ஒன்றாகக் கொள்ளலாம்.
கூரைக்கு மேல் வழக்கமாக அமையும் கிரீவப்பகுதி இத்தளியில் காட்டப்படவில்லை. அதற்குப் பதிலாகப் பெரிய அளவிலான நாகர சிகரம் அமைக்கப்பட்டுள்ளது. குடிசையின் மேற்கூரை போல வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிகரத்தின் பக்கப்பகுதிகள் கூரை மட்டத் திற்கும் கீழிறங்கிய நிலையில் நாற்புறமும் நீட்டப்பட்டிருப்பது புதுமையான அமைப்பு முறையாகும். இந்த நீட்டலே தளிக்குக் கபோதப் பயன் பாட்டைத் தந்துவிடுவதாலோ என்னவோ, இங்குக் கபோதம் அமைக்கப் படவில்லை.
சிகரத்தின் நாற்புறமும் கீழ்ப்பகுதி மூலைகளில் பக்கத்திற்கு இரண்டெனப் படர்ந்து பெருகிக் காட்சி தரும் கருக்கணிகள், சரிவின் விளிம்புகளையொட்டி மேலேறித் தூபித்தளத்தில் முடிகின்றன. சதுரமாக அமைந்துள்ள இத்தூபித்தளம் தூபியின்றி வெறுமையாக உள்ளது. துணைத் தள மேற்பரப்பின் வடமேற்கு மூலையில் தற்போது காணப்படும் தூபிக்குடம், இங்கு வைக்கப் படுவதற்காகத் துணைத்தளப் பகுதிப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதென்றும் அது இன்றளவும் அங்கிருந்து பிரித்தெடுக்கப் படாமல் காட்சியளிப்பதாகவும் கூ.ரா. சீனிவாசன் தம் கட்டுரையொன்றில் கூறி யிருக்கிறார். ஆனால், தாம் இப்பகுதியை ஆராய்ந்தபோது துணைத்தளப் படிக்கட் டுகளுக்குக் கீழ்ப்பகுதியில் இந்தத் தூபிக்குடம் இருந்ததாக லாங்ஹர்ஸ்ட் தம்முடைய ஆய்வு

நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தளியோடு பிறந்த தூபிக்குடமா அல்லது தனித்தூபி சிதைவுறப் பின்னாளில் வந்தவர்கள் செய்தமைத்த தூபிக்குடமா என்பதையும், தன் தளத்தில் இல்லாமல் இது தரைக்கு வந்து விட்ட காரணத்தையும் அறியக்கூடவில்லை.
இத்தளி, ஒருதள விமானத்திற்குரிய ஆறு அங்கங்களில் நான்கை மட்டுமே பெற்றிருப்பதாகவும் பிரஸ்தரம், கிரீவம் என்னும் இரு அங்கங்கள் இத்தளியில் இடம்பெற வில்லையென்றும் தம் கட்டுரையொன்றின் முதற் பந்தியில் கூறும் கூரா. சீனிவாசன். மூன்றாம் பத்தியில் இதன் பிரஸ்தரம் பூதமாலையுடன் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்." இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. பிரஸ்தரம் என்ற சொல்லுக்கு 'entablature consisting of mouldings over walls and pillars. viz, uttira (beam), vajana, valabhi, kapota, alinga nad antari' 676öig), 35 lb (5/TGoao/T6öig573apG8ulu விளக்கம் தந்துள்ளார் கூரா. சீனிவாசன். இவர் கூரையுறுப்புகளாகக் குறிப்பிடுவனவற்றுள் அந்தரி, ஆலிங்கம் என்பவை தளமுடிவைக் காட்டுவை. இவை பூமிதேசத்தின் உறுப்புகள் பிரஸ்தரம் சார்ந்தவையல்ல. இவை தவிர்ந்த ஏனைய நான்கு உறுப்புகளுள் உத்திரம், வாஜனம், வலபி ஆகிய மூன்று உறுப்புகளும் கொற்றவைத் தளியில் உள்ளன. இவை இவர் சொல்வது போலவே சுவர்களின் மீதும் திருப்பத் தூண்களின் மீதுமாய் அமர்ந் துள்ளன. கபோதம் மட்டுமே காட்டப் படவில்லை. கபோதம் என்பது கூரையல்ல. அது கூரையின் முன்னிழுப்பு அதனால் கபோதம் அமையவில்லையென்பதால்
கூரையே இல்லை என்று பொருள்கொள்வது

Page 98
சரியல்ல. கொற்றவைத்தளியில் கூரையுறுப்பு களோடு கூரை அமைந்திருப்தைக் கருவறை வாயில் உட்புறம் நோக்குவார் யாரும் கண்டு
தெளியலாம்.
கூரா. சீனிவாசன் சொல்லியிருப்பது போல் இத்தளியில் கிரீவம் காட்டப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் தட்டையான கூரைக்கு மேலாகப் பரந்து விரியும் சிகரத்தைப் பார்க்கும்போது இரண்டிற்கும் இடையில் உள்ள காணமுடியா இடைவெளியைக் கிரீவ மாகக் கொள்வதில் தவறில்லையென்றெ தோன்றுகிறது. விமானங்களில் தள அடுக்குகள் காட்டும்போது, ஆதிதளத்திற்கு மேலுள்ள தளங்களுக்குத் தளத்திற்குரிய மூன்று அடிப்படை உறுப்புகளுள் ஒன்றான தாங்கு தளத்தைக் காட்டுவதில்லை. அதனாலேயே அவற்றைத் தளமெனக் கொள்ளாமல் இருப்பதுமில்லை. அதுபோலவே கிரீவம் வெளிக்குத் தெரியாமல் இருப்பதாலேயே கிரீவம் இல்லையென்று கொள்வதினும், கூரைக்கும் சிகரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் கிரீவம் மறைந்திருப்பதாகக் கொள்வதில் பிழையிருக்க முடியாது. எனவே, கொற்றவைத் தளியை ஐந்தங்க விமானம் என்பதைவிட ஆறங்க விமானமாகக் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
இத்தளியின் முன்புறத்தே சுவர் நடுவே அமைந்துள்ள வாயிலை அடையத் தளப்பரப்பி லிருந்து மூன்று படிகள் காட்டப்பட்டுள்ளன. மேற்குத் தாங்கு தளத்தை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள இப்படிகளின் இருபுறமும் பிடிச்சுவர் உள்ளது. இப்படிகளுள், கீழ்ப்படி உபானத்தின் தொடர்ச்சியாக நிலாக்கல் வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது. 87 செ. மீ.
9(

அகலமும், 201மீ உயரமும் உள்ள வாயிலின் இருபுறமும் கோட்ட அணைவுத்தூண்கள் போன்று, அதே உறுப்புகளுடன் அமைந்த நான்முக அரைத்துரண்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றின் மீதும் மகர தோரணம், இதனால் இந்நுழைவாயில் தோரண வாயிலாகச் சிறப்புப் பெறுகிறது. மகேந்திரப் பல்லவரின் குடைவரைகளுள் ஒன்றாகக் கருதப்படும் தளவானூர் சத்ருமல்லேசுவரமே. இது போன்ற தோரணவாயிலைப் பெற்ற முதற் கற்கோயி லாகும். ஒற்றைக்கல் தளிகளுள் கொற்றவைத் தளியே தோரண நுழைவாயில் கொண்டுள்ள ஒரே தளி எனலாம்.
வாயிலணைவுத் தூண்களின் பலகை, வாயில் மேல் நீண்டுள்ளது. இப்பலகையின் நடுவிலும், கோட்டங்களின் மேல் காணப்படும் சிறிய அளவிலான தூணமைப்புப் காணப் படுகிறது. இத்தூண் பலகையின் மீதே மகரதோரணத்தின் சிறிய மகரங்கள் அமர்ந் துள்ளன. இப்பலகையின் கீழே நன்கு வரையறுக்கப்பட்டுள்ள வாயில் மேல் நிலையில், இருபுறத்தும் துளைகள் காணப் படுகின்றன. கீழே வாயிலின் தரைப்பகுதியில் அது போன்ற துளைகள் ஏதுமில்லை. நுழைவாயிலின் இருபுறத்தும் உள்ள சுவர்ப்பகுதிகளில் பக்கத்திற்கொன்றாக இரண்டு கோட்டங்கள் அகலப்பட்டுள்ளன. வலக்கோட்டம் 1.47மீ உயரமும், 59செமீ அகலமும் கொண்டிருக்க, இடக்கோட்டம் 1.48மீ உயரமும், 60செ.மீ அகலமும் கொண்டமைந்துள்ளது. இக்கோட்டங்களில் வாயிற்காப்போராய் நின்ற கோலத்தில் காவற் பெண்டுகள் காட்டப்பட்டுள்ளனர். தமிழகக் கலை வரலாற்றில் காவற் பெண்டுகள் இடம்பெறும் ஒரே ஒற்றைக்கல் தளி இதுதான்.

Page 99
மாமல்லபுரத்திலுள்ள கொடிக்கால் மண்டபம் கொற்றவைக் காய் அர்ப்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். மேற்குப் பார்த்த இதன் கருவறை வாயிலின் இருபுறமும் உள்ள கோட்டங்களில் காவற் பெண்டுகள் காட்டப் பெற்றுள்ளனர். இதுவே வாயிற் காவலராய்க் கருவறை நுழைவாயிற் கோட்டங்களில் பெண்கள் இடம்பெற்ற முதலிடம் எனலாம். மகாவராகர் குடைவரையின் கொற்றவைச் சிற்பத் தொகுதியிலும் இது போன்ற காவற் பெண்டுகள் காட்டப்பட்டுள்ளனர் என்றாலும் அத்தொகுதி இறைத் திருமுன்னாய் உருவகிக்கப்பட்டதே தவிர, தனித்ததொரு கருவறையாய் உருப் பெறவில்லையென்பது இங்கு எண்ணத்தக்கது. கொற்றவைத் தொகுதியில் காவற்பெண்டுகள் இடம்பெறும் முதலிடமாக மகாவராகர் குடைவரையின் கொற்றவைத் திருமுன்னைக் கொள்ளலாம். இம் மூன்றிடங்கள் தவிர வேறெந்தப் பல்லவக் கொற்றவைத் தொகுதிகளிலும் காவற் பெண்டுகள் காட்டப்படவில்லை யென்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
கருவறையின் உட்புறத்தே பின்சுவரில் கொற்றவை தேவியின் சிற்பத்தொகுதி காணப் படுகிறது. ஏனைய சுவர்கள் வெறுமையாக உள்ளன. இச்சுவர்களின் மேலே கூரையை யொட்டி வாஜனமொன்று நாற்புறத்தும் ஒடுகிறது. கருவறைப் பின்சுவரையொட்டி தரையிலிருந்து 44செ.மீ. உயரத்திற்குப் பாதபந்தத் தாங்குதளமொன்று காட்டப் பட்டுள்ளது. ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகள் தழுவிய பாதங்களோடு கூடிய கண்டம், பட்டிகை என அமைந்துள்ள இத்தாங்குதளத்தின் மீது நடுநாயகமாகக் கொற்றவைதேவி தாமரை மலரின் மீது நின்ற

கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரது இருபுறத்தும் கீழே அடியவர்களும் மேலே கணங்களும் சிற்பங்களாகக் காட்டப்
பட்டுள்ளனர்.
சிற்பங்கள்
1. கோட்டக் கொற்றவைகள்
தளியின் முப்புறக் கோட்டங்களிலும் கொற்றவைச் சிற்பங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றுள் கிழக்குக் கோட்டச் சிற்பமே முழுமை பெற்றுள்ளது. இங்குக் கொற்றவை மகிடாசுரமர்த்தனியாகக் காட்டப் பட்டுள்ளார். மகிடனை வென்று, வதம் முடித்து, அந்த மகிடனின் தலை மீதே வெற்றிப் பெருமிதத்தோடு நிற்குமிந்தக் கோலம், அழகு பொலிந்த திருக்கோலமாகும். கோட்டத்தின் கீழே மகிடத்தலை காட்டப்பட்டுள்ளது. தலையின் மீது தேவியின் திருப்பாதங்கள் சமமாக வைக்கப்பட்டுள்ளன. கணுக்கால்களில் தாள்செறிகள் சமபங்கத்தில் நிற்கும் தேவியின் வல முன்கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன்கை கடி அஸ்தமாக உள்ளது. பின்கைகளில் வலப்புறம் எறி நிலைச் சக்கரமும் இடப்புறம் சங்கும் இடம் பெற்றுள்ளன. கரண்ட மகுடமும், செவிகளில் பனையோலைக் குண்டலங்களும், மேற்கை களில் கங்கணங்களும், கீழ்க்கைகளில் வளைகளும் கொண்டிலங்கும் அம்மையின் மார்பகங்கள் கச்சொன்றால் மறைக்கப் பட்டுள்ளன. கழுத்தில் தொங்கும் அணிகலன் இக்கச்சின் மேற்பகுதியைத் தொட்டபடி மார்பில் புரள்கிறது. இடுப்பாடையின் முடிச் சுகள் பக்கவாட்டில் தொங்க, முன் வளையத் தொங்கல் கனமானதாய்க் காட்சியளிக்கிறது. அம்மையின் இடக்கை இதன் மீதே அமர்ந் துள்ளது.

Page 100
தெற்குக் கோட்டத்தில் உள்ள கொற்ற வைச் சிற்பம் கணுக்கால் வரையே வடிவமைக் கப்பட்டுள்ளது. கீழுள்ள பகுதி பாறையாக விடப்பட்டுள்ளது. அதற்குக் கீழுள்ள பாறைப்பகுதி மகிடத் தலையைச் செதுக்குத வற்காக விடப்பட்டது போல் அமைந்துள்ளதால் இக் கோலத்தையும் மகிடாசுரமர்த்தனி வடிவமாகவே கொள்ளலாம். அம்மையின் வலக்கையும் பின் கைகளும் முழுமை யடையாத நிலையில், இடக்கை மட்டும் கடி அஸ்தமாகக் காட்டப்பட்டுள்ளது.
வடகோட்டத்துக் கொற்றவையும் மகிடா சுரமர்த்தனிதான். இவரது முன்கை களுள் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை கடி அஸ்தமாய் இடுப்பில் உள்ளது. பின்கைகளில் வலப்புறம் எறிநிலைச் சக்கரமும் இடப்புறம் சங்கும் காட்டப்பட்டுள்ளன. இரு செவிகளிலும் பனையோலைக் குண்டலங்கள். இடுப்பாடை, பக்கவாட்டு முடிச்சுகளுடன் காட்டப்பட்டுள்ளது. மார்பில் கச்சணிந்துள்ள இவ்வம்மையின் கழுத்தணிப் பதக்கம் அக்கச்சின் மேற்பரப்பைத் தொட்டவாறு உள்ளது. கால்களின் கீழ்ப்பகுதியும் மகிடத் தலையும் உருவாக்கப்படா நிலையில் பாறையாகவே விடப்பட்டுள்ளன.
2. கருவறைத் தொகுதி
1.42மீ அகலமும் 1.57மீ உயரமும் உள்ள கருவறைச் சிற்பத் தொகுதியில் நடுநாயகமாகப் பேருருவினராய் 1.36மீ. உயரத்திற்குக் கொற்றவை தேவி காட்சி தருகிறார். பட்டிகையின் மேற்பரப்பின் நடுப்பகுதியில் வடிக்கப்பட்டுள்ள தாமரை மலர்த் தளத்தின் மீது தன் இரு திருவடி களையும் இருத்திச் சமபங்கத்தில் நிற்கும்
9,

தேவியின் வல முன்கையில் சிதைந்த மலர். வலப் பின்கையில் எறிநிலைச் சக்கரம். அம்மையின் இடப் பின்கை முழுவதுமாய்த் தகர்த்து அகற்றப்பட்டுள்ளது. இட முன்கை ஊரு அஸ்தமாய் உள்ளது. தாள்களில் தாள்செறியும், கைகளின் மேற்பகுதிகளில் கங்கணங்களும், கீழ்ப்பகுதிகளில் கைப் பட்டைகளும் அணிந்துள்ள தேவியின் செவிகளில் காணப்படும் பேரளவிலான பனையோலைக் குண்டலங்களுள் இடச்செவிக் குண்டலம் சிதைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் பதக்கத்தோடு கூடிய சிறிய கழுத்தணி ஒன்றும் சற்று இறங்கிய மணிமாலையொன்றும் காட்டப்பட்டுள்ளன. இம்மணிமாலையின் பதக்கம் கச்சின் நடுப்பகுதியில் தொங்கலாகக் காட்டப்பட்டுள்ளது. அளவான அழகிய மார்பகங்களின் நடுப்பகுதியை சிறு பட்டை போலமைந்த கச்சு மறைத்துள்ளது. இடையில் கனமான முன்வளைவுத் தொங்கல்களோடு கூடிய ஆடை, இவற்றின் பக்கவாட்டு முடிச்சுகள் அழகிய மடிப்புகளுடன் கீழே தாமரை வரை தொங்குகின்றன. தேவியின் இடக்கை இந்த முன் தொங்கல்களின் மீதே இருத்தப்பட்டுள்ளது. தலையை அணி செய்யும் கரண்ட மகுடத்தின் முன் முகப்பும் பக்க முகப்புகளும் நன்கு அலங்கரிக்கப் பட்டுள்ளன. நெற்றியில் நெற்றிப்பட்டம். அழகும், அருளும் பொலிய அமைக்கப் பட்டுள்ள இச்சிற்பம் தொடக்கக் காலப் பல்லவக் கொற்றவைகளுள் குறிப்பிடத்தக்க சிற்பமாகும்.
அம்மையின் வலப்புறத்தும் இடப்பு றத்தும் மேற்பகுதியில் கணங்களும் கீழ்ப்பகுதியில் அடியவர்களும் காட்டப் பட்டுள்ளனர். அடியவர்கள் தளத்தின் மீதிருக்கக் கணங்கள் வானத்தில் உலவு

Page 101
வனவாய்க் காட்டப்பட்டுள்ளன. புடைத்த வயிறும் , உருணி டையான முகமும் , குட்டையான தோற்றமும் கொண்டுள்ள இக்கணங்கள் பக்கத்திற்கு இரண்டென வடிக்கப்பட்டுள்ளன. பனை யோலைக் குண்டலங்களுடன் காட்சி தரும் வலப்புறக் கணங்களில் கொற்றவைக்கு அருகிலுள்ள முதற் கணம் வலக்கையை இடுப்பில் வைத்து இடக்கையால் இறைவியைப் போற்ற, முப்புரிநூல் அணிந்து மீசையோடு காட்சிதரும் இரண்டாம் கணம் வலக்கையில் கொடுவாளும் இடக்கையில் கேடயமுமாய்ப் போருக்குத் தயாராவது போல் நிற்கிறது. இவ்விரு கணங்களுக்குமே உதரபந்தமும் கழுத்தில் பட்டையான அணிகலனும் காட்டப்பட்டுள்ளன. இடப்புறக் கணங்களுள் முதல் கணத்தின் வலக்கை சிதைக்கப்பட்டுள்ளது. இடக்கை மடக்கிய நிலையில் வயிற்றருகே காட்டப் பட்டுள்ளது. இதன் செவிகளில் கனமான பனையோலைக் குண்டலங்கள். முப்புரிநூலும் உதரபந்தமும் கொண்டுள்ள இதன் இடக் கையில் வளை, கழுத்தில் பட்டையான அணி, சடைகளை முடிந்து மகுடமாக்கியுள்ள இதன் வலக்கால் மடித்த நிலையில் இருக்க, இடக்கால் இரண்டாம் கணத்தின் வலப் பாதத்திற்குப் பின்னால் முழங்கால்வரை காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் கணத்தின் கொடுவாள் பற்றிய இடக்கை மட்டுமே பார்வைக்குக் கிடைக்கிறது. வலக்கை முதற் கணத்தின் பின்புறமிருப்பதாகக் கொள்ளலாம். நன்கு வளர்ந்த மீசையும், முழங்காலுக்கு மேல் வரையிலான இடுப்பாடையுமாய்க் காட்சிதரும் இப்பூதத்தின் ஆடைமுடிச்சுகள் வயிற்றுக்குக் கீழே தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் காட்டப்பட்டுள்ளன. நீள வளர்ந்துள்ள இதன் செவிகளில் குண்டலங்கள்,

இதன் எளிய மகுடம் தலைப்பட்டியுடன் அமைந்துள்ளது.
கீழே கொற்றவையின் இருபுறத்தும் உள்ள ஆடவர் சிற்பங்கள் இடுப்பாடையுடன் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் காட்டப் பட்டுள்ளன. வலப் புறமுள்ள அடியவர் இடக்கையால் தலைமுடியைப் பிடித்தபடி வலக்கைக் கத்தியால் தம் கழுத்தை அறுத்துக் கொள்கிறார். முகம் பக்கவாட்டில் திரும்பி யுள்ளது. வலச்செவியில் பனையோலைக் குண்டலமிருக்க இடச்செவி நீள் செவியாய்க் காட்டப்பட்டுள்ளது. சங்க இலக்கியப் புறத் திணைச் சிந்தனைகளின் படப்பிடிப்பாய் அமைந்துள்ள இது போன்ற மற்றொரு தலைப்பலிச் சிற்பம் வராகர் குடை வரையி லுள்ள கொற்றவைத் தொகுதியில் காணப் படுகிறது. சிங்கவரத்திலும் மகாவராகர் குடைவரையிலும் உள்ள கொற்றவைத் தொகுதிகளில் காணப்படும் அடியவர்கள், சதை கிழித்துக் குருதிப்பலி தருபவர்களாகவே காட்டப்பட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது. எனவே தலைப்பலிச் சிற்பம் இடம்பெறும் முதலிடங்களாகக் கொற்றவைத் தளியையும் வராகர் குடைவரையையும் கொள்வதில்
தடையிருக்க முடியாது.
இடப்புறம் இருப்பவர் கரண்டமசூடம் அணிந்துள்ளார். நன்கு மடித்த துணியை முப்புரிநூலென அணிந்துள்ள இவரது நீள் செவிகள் வெறுமையாக உள்ளன. கைகளின் கீழ்ப்பகுதி உடைந்துள்ளதால் இவை எந்த அமைதியில் இருந்தன என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை. இக்கைகளின் அமைப்பு கொண்டு பார்க்கும்போது இவை வணக்க முத்திரையிலோ அல்லது பூத்துாவல் நிலையிலோ இருந்ததாக ஊகிக்கலாம்.

Page 102
3. காவற்பெண்டுகள்
வாயிலின் இருபுறத்தும் உள்ள காவற் பெண்டுகள் நின்ற கோலத்தில் அழகு பொலியக் காட்சி தருகின்றனர். இருவருமே வளர்ந்த சடைகளை அழகாய் முடிந்து மகுடமாக்கியுள்ளனர். ஒரு செவியில் பனையோலைச் சுருளும் நீள வளர்த்த மற்றொரு செவியில் பூட்டுக் குண்டல முமாய் இருவளைவுக் கோலத்தில் நிற்கும் இவர்தம் இளமார்புகளைக் கச்சொன்று மறைக்க முயல்கிறது. இருவருக்குமே முடிச்சுகள் பக்கவாட்டில் தொங்கும்படி இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஆடை இடப்புறத்தாருக்கு மட்டும் வளைவுத் தொங்கலொன்றும் முன்புறத்தே கனமாய்க் காட்டப்பட்டுள்ளது. இருவருமே காவற் பெண்டுளுக்குரிய கம்பீரத்துடன் காட்சியளித்தாலும் வலப் பெண்ணின் கம்பீரப் பார்வையில், பெருமிதக் கலப்பையும் காண முடிகிறது. கோட்டத் தளத்தின் மீது நிறுத்தப் பட்டுள்ள பெருங்கேடயத்தின் மீது தாங்கலாக நிறுத்தியுள்ள வலக்கையில் ஓங்கிய கொடு வாள், இடக்கை ஊரு அஸ்தமாய்த் தொடை மீது இருத்தப்பட்டுள்ளது. இடப்புறத்தார் போல் இவரது காற்பகுதிகள் திருத்தமாய் வடி வமைக்கப் பெறாத போதும் இடப்பாதம் பார்சுவ மாகவும் வலப்பாதம் சமமாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.
இடப்பெண் கோட்டத்தளவு உயர்ந்த வில்லொன்றை வலக்கையால் எளிதாகப் பிடித்த நிலையில் , இடக் கையைத் தொடையின் மீது ஊன்றி ஸ்வஸ்திகக் காலமைப்பில் காட்சிதருகிறார். வலக்காலை முழங்காலளவில் மடக்கி, வலப்பாதத்தை இடப்பாதத்தின் பின்னால் அக்ரதலசஞ் சாரமாய் நிறுத்தியுள்ள இவரது கணுக்

கால்களில் தாள்செறிகள், கழுத்தில் மெல்லிய அணியுடன் இருக்கும் இவர் முதுகுப்புறத்தே இருபுறமும் அம்புக் கூடுகள் இரண்டும் இருவிதமான அமைப்பிலுள்ளன. இடப்புறம் உள்ள வட்டமான கூட்டிலிருந்து இப் பெண்ணின் மகுடத்தையொட்டி அம்பொன்று காட்டப்பட்டுள்ளது.
கொடிக்கால் மண்டபத்திலும் மகா வராகர் குடைவரையிலும் காணப்படும் காவற்பெண்டுகள், தோற்ற அமைப்பிலும் போர்க் கருவிகளைக் கொண்டிருக்கும் பாங்கிலும் இவர்களிடமிருந்து சற்றே வேறு பட்டுள்ளனர். காதணிகள், தலைக் கோலம், ஆடையமைப்பு போன்றவை இம்மூன்றிடத்துக் காவற்பெண்டுகளுக்கும் ஒன்று போலவே அமைந்திருந்தாலும் நிற்கும் நிலையில் மாற்றம் உள்ளது. தொல்காப்பியர்க்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வரும் கொற்றவை வழிபாடு, பல்லவர் காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தமைக்கு இத்திருக்கோயிலும், அவ்வழிபாட்டின் மீது ஏற்பட்ட வைதிக சமயக் கொள்கைகளின் தாக்கத்திற்கு, இக்கோயிலின் கோட்டங்களில் இடம்பெற்றுள்ள மகிடாசுரமர்த்தனி வடிவங் களும் சிறந்த சான்றுகளாகும். தமிழ்நாட்டில் கொற்றவைத் தெய்வத்திற்காக அமைந்த காலத்தால் முற்பட்ட கற்கோயிலாக இத் தளியைக் கொள்ளலாம். இன்று தமிழ்நாட்டில் வழிபாட்டிலிருக்கும் அனைத்துப் பெண் தெய்வங்களுள் பழமையான தெய்வமும் கொற்றவையே என்பது இலக்கிய மற்றும் சிற்பச் சான்றுகளால் தெளிவாகிறது. அதனால்தானோ என்னவோ இவ்வம்மைக்குப் "பழையோள்" என்ற பெயரையும் இலக்கி யங்கள் தந்து மகிழ்ந்துள்ளன.

Page 103
அடிகுறிப்புகள்
1.
K.R. Srinivasan, Encyclopaedia of Indian Desa, Ameriacan Institute of Indian Studie:
A.H. Longhurst, Pallava Architecture, part I this book was published in 1928)
K.R. Srinivasan, op.cit., p.31 965 5(55 தம்முடைய கட்டுரையொன்றில் வெளியி
கி. பூரீதரன். சி. முனுசாமி, வே. இராமன் முதல் தொகுதி, தமிழ்நாடு அரசு தொல்
K.R. Srinivasan, op.cit., p.31.
K. R. Sriniwasan, Temple of South India, Na

emple Architecture, South India Lower Dravids , 1983, p. 37
, Cosmo Publication, 1982, p. 16, (First Edition of
தை வே. இராமன். கி. பூரீதரன் உள்ளிட்டோர் ட்டுள்ளனர்.
, “கோயிலும் குடியிருப்பும், தமிழர் நாகரிகம், பொருள் ஆய்வுத்துறை 1994, ப.7
tional Book Trust, India 1985, p. 213
5

Page 104
மாமண்டூர் நரசமங்க
மு. நளினி - இரா.
காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ் சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது மாமண்டூர். செங்கற்பட்டு மதுராந்தகம் சாலையிலுள்ள மாமண்டூரிலிருந்து பிரித்தறியப்படுவதற்காக இதைத் தூசி மாமண்டூர் என்று ஊரார் அழைக்கிறார்கள். இந்த மாமண்டூரில் சிவன் கோயிலொன்றும், பெருமாள் கோயிலொன்றும் பெருவழிப் பாதையின் வல, இடப்புறங்களில் அமைந்துள்ளன. பழங்கோயில்களான இவை இரண்டும் இன்றிருக்கும் நிலை பரிதாப
கரமானது.
மாமண்டூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நரசமங்கலம். பெரு வழிப் பாதையின் இடப்புறத்தே நடப் பட்டிருக்கும் ஊர்ப்பெயர் சொல்லும் கல்லுக்கு மேற்கில் பிரியும் மண்சாலை ஊருக்குள் நுழைந்ததும் இரண்டாகப் பிரிகிறது. இடப்புறப் பிரிவு வயல்களைச் சுற்றிக் கொண்டு குன்றுகளை நோக்கிப் போகிறது. இந்தக் குன்றுகளில் தான் பல்லவர்களின் குடை வரைகள் இடம் பெற்றுள்ளன.
சரிந்தும் உயர்ந்தும் ஆங்காங்கே தரையைத் தொட்டுச் சமநிலை எய்தியும் நீண்டு கிடக்கும் இக்குன்றுத் தொடரின் பெரும் பகுதி நரச மங்கலத்தின் பின்புறமே உள்ள தென்றாலும் இதன் வட பகுதியை மாமண்டூர் எல்லைக்குள் வருவாய்த் துறைப் பதிவுகள் இணைத்துக் கொண்டுள்ளன. இந்த வட பகுதியில் தான் கிழக்கு முகமாக இரண்டு குடைவரைகள் குடையப்பட்டுள்ளன. இவற்றை மாமண்டூர் குடை வரைகள் என்று அழைக் கலாம்.
9(

லம் குடைவரைகள்
கலைக்கோவன்
தென் பகுதியில் குன்று ஓரிடத்தில் நன்கு உயர்ந்து பின் முழுவதுமாய்ச் சரிந்து தரைநிலையைத் தொட்டுத் தொடர்ந்து மீண்டும் ஒரு எழுச்சியைப் பெற்றுத் தொடர்கிறது. இந்த இரண்டு எழுச்சிப் பகுதிகளிலும் இரண்டு குடைவரைகள் குடையப்பட்டுள்ளன. முதல் எழுச்சியில் அமைந்துள்ள குடைவரை அளவில் மிகப் பெரியது. இக் குடைவரை அமைந்திருக்கும் குன்றுப் பகுதியின் உச்சியில் ஒரு கட்டுமானக் கோயிலும் அதற்குச் சற்றுத் தள்ளி வடபுறத்தே சிறிய அளவிலான மற்றொரு கட்டுமானக் கோயிலும் உள்ளன. இக்கட்டுமானக் கோயில்களை அடையக் குன்றின் சுவரில் வெட்டியமைத்த படிக்கட்டுகள் உதவுகின்றன.
தென் வடலாக எழுந்து நிற்கும் இக்குன்றுத் தொடரின் பின் புறத்தே பரந்து விரிந்து கிடக்கிறது சித்ரமேகத் தடாகம். முதலாம் மகேந்திரவர்மரால் உருவாக்கப் பட்ட இப் பேரேரி பின்னாளில் கி.பி. 1638 இல் வெங்கடப்ப நாயக்கரால் அவர் தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாக விரிவு செய்யப்பட்டுச் சென்ன சாகரம் என்று பெயரிடப்பட்டதையும் கிழக்கில் குன்றை யொட்டி மேலும் கரை நீட்டிக்கப்பெற்று வலுப்படுத்தப்பட்டதையும் சாகரக் கரையில் சாதனைப் பட்டயங்களாய் நிற்கும் முப்பெரும் கல்வெட்டுப் பாறைகள் பெருமையோடு எடுத்தோதுகின்றன. மிகப்பெரிய மதகுகள் இவ்வேரியின் நீரைச் சுற்றுப் பக்கங்களிலுள்ள சிற்றுார்களுக்குப் பாய்ச்சிப் பசுமைப் புரட்சி செய்து வந்தது ஒரு காலம். பல ஆண்டு களுக்குப் பிறகு சென்ற ஆண்டு, கொட்டிய மழையில் நிரம்பிக் கடல் போல் ஏரி அலை

Page 105
வீசித்தளும்பியதாக உள்ளூர் வாசிகள் மகிழ்ந்து கூறினர். ஆனால் இப்போது ஏரி வறண்டு கிடக்கிறது. சில பகுதிகளில் நாற்று நட்டிருக்கிறார்கள். ஓரிடத்தில் செங்கல் சூளை, புன்செய்ப் பயிர்களை விளைவித்துக் கொண்டு கடலை மூட்டைகளுடன் ஊரார் காலக் கணிவை எதிர்நோக்கியுள்ளனர்.
மேற்கிலிருந்து கிழக்காக ஒடும் ஓர் ஒடையே மாமண்டூர் குடை வரைகளை நரசமங்கலக் குடைவரைகளிலிருந்து பிரிக் கின்றது. இந்நாளைய வருவாய்த் துறைப் பதிவுகள் இக்குடைவரைகளை இரண்டு ஊர்களுக்காய்ப் பங்கிட்டுப் பிரித்தாலும் அந்நாளில் இவை அனைத்துமே நரசிங்க மங்கலத்துக்குள் அடைக்கலமாகியிருந்ததை முதலிரண்டு குடைவரைகளிலுள்ள கல்வெட்டு களும், மலைமேற் கோயிலில் உள்ள கல்வெட்டுகளும் தெளிவாக்குகின்றன. இருந்த போதும் அறிஞர்கள் இக்குடை வரைகளைப் பற்றி எழுதும் போது ஏனோ இவை அனைத்தையுமே மாமண்டூர்க் குடைவரைகள் என்றே பெயரிட்டிருக் கின்றார்கள்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஒரு படி மேலே போய்க் காஞ்சிபுரம் பற்றிய தன்னுடைய சுற்றுலாத்துறை வெளியீட்டில் இக்குடைவரைகள் இடம் பெற்றிருக்கும் மாமண்டூர், செங்கல்பட்டுக்கு அருகில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிழையைச் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பலரிடம் எடுத்துக் கூறியும் யாரும் கவலைப்படவில்லை. திருத்தமும் இதுநாள்வரை செய்யப்படவில்லை.
மாமண்டுர், நரசமங்கலம் குடைவரைகள் பல வகைகளில் சிறப்புடையவை. பல்லவப்
பாண்டியர் குடைவரைகளில் ஒரே மலைத்

தொடரில் தொடந்தாற் போல் அடுத்தடுத்து நான்கு குடைவரைகள் அமையப்பெற்றுள்ள ஒரே இடமாக இப்பகுதியைக் கொள்ளலாம். இந்நான்கு குடைவரைகளும் ஏறத்தாழ சமகாலத்தவை என்றாலும் அமைப்பு முறையில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. இவற்றுள் மூன்று வழிபாட்டில் இருந்தவை. ஒன்று முழுமையடையாமல் அரை குறையாக நின்றுபோன பணி நான்கில் முதலாவதில் மட்டும் தான் ஒரு கருவறை. இரண்டாவதிலும் நான்காவதிலும் மூன்று கருவறைகள், மூன்றாம் குடைவரையோ ஒன்பது கருவறைகளுடன் தமிழகத்தின் தனித்ததொரு அதிசயமாய் நிற்கிறது. இந்தக் குடைவரையின் அமைப்பே அலாதி பல்லவர் கை வண்ணத்தில் எழுந்த இந்த நான்கையும் கட்டடம், சிற்பம், கல்வெட்டு என்ற தலைப்புகளின் கீழ் விரிவாகப் பார்ப்பதே சால்புடையது.
கட்டட அமைப்பு
இங்குள்ள நான்கு குடைவரைகளுமே நன்கு திட்டமிடப்பட்டுத் தேர்ந்தெடுத்த பாறை களில் குடையப்பட்டுள்ளன. பொதுவாகப் பல்லவர் குடைவரைகளில் காணப்படும் அனைத்து அடிப்படை உறுப்புகளையும் இக்குடைவரைகள் பெற்றுள்ளன என்றாலும்
வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
முதற் குடைவரை
தொடரின் வடகோடிப் பாறைச் சரிவின் கீழ்ப்பகுதியில் கிழக்கு நோக்கிய நிலையில் நிலமட்டத்திலிருந்து 121 மீட்டர் உயரத்தில் வெட்டப்பட்டுள்ள முதற் குடைவரையை அடையப் பிற்காலப் படியமைப்பொன்று உதவுகிறது. பாறைச்சரிவு செங்குத்தாக இருப்பதால் குடைவரை முகப் புக்கு

Page 106
முன்னுள்ள தரை அளவில் சிறியதாய் அமைந்துள்ளது. தென்புறம் 86 செ.மீ. அகலத்திலிருக்கும் இத்தரை வடபுறம் செல்லச் செல்லக் குறுகி 55 செ.மீ அளவில் நிற்கிறது. இதன் தென்வடல் நீளம் 5.98 மீட்டர்.
குடைவரையின் முகப்பு இரண்டு முழுத்துாண்களும் இரண்டு அரைத்துாண் களும் கொண்டுள்ளது. பக்கங்களில் அமையப் பெற்றுள்ள அரைத்தூண்கள் பிரம்மகாந்தத் துாண்களாய் அமைய, இடையிலுள்ள முழுத்துரண்கள் தொடக்கக் காலத்திற்கே உரிய சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் உருவாகியுள்ளன, கீழ்ச்சதுரம் மேற்சதுரத்தை விட இரு மடங்கு பெரியதாகக் காட்டப் பட்டுள்ளது. மேற்கு முகத்தில் இதன் உயரம் 79 செ.மீ அகலம் கீழ்ப்பகுதியில் 65 செ.மீ. ஆகவும் மேற்பகுதியில் 60 செ.மீ ஆகவும் உள்ளது. மேற்சதுரத்தின் உயரம் 40 செ.மீ. சதுரங்களுக்கு இடையிலுள்ள கட்டின் உயரம் 68 செ.மீ
முழுத்தூண்களின் சதுரங்களில் மேற்கு முகத்தைத் தவிர ஏனைய பகுதிகளில் தாமரைப் பதக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கீழ்ச்சதுரங்களில் முழுமையாகக் காணப்படும் இப்பதக்கங்கள் மேற்சதுரங்களில் முக் காலளவே உள்ளன. இது மேற்சதுரம் அளவில் குறைந்து போனதால் ஏற்பட்ட நிலை போலும், கீழ்ப்பதக்கங்கள் மகேந்திரவாடி குடை வரைத் தூண்களில் இருப்பது போல் சதுரங்களுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளன. இச்சதுரங்களின் உட்புற மூலைகளில், பதக்கத்தையும் சதுரத்தையும் இணைப்பது போன்ற அழகிய கொடி வேலைகள் காட்டப்பட்டுள்ளன. திருச்சிராப் பள்ளி, தளவானூர், மகேந்திரவாடி என்று பல

பல்லவக் குடைவரைகளில் தாமரைப் பதக்கங்கள் இடம் பெற்றிருந்தபோதும், மாமண்டூரில் உள்ள நான்கு குடை வரைகளில் முதலாவதில் மட்டுமே இவை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அரைத் துாணிகளின் வட, தென் முகங்களின் கீழ்ப்பகுதியில் முழுப் பதக்கங் களும் மேற்பகுதியில் முக்கால் பதக்கங்களும் காட்டப்பட்டுள்ளன. கிழக்கு முகங்களில் மேலொன்றும் கீழொன்றுமாக அரைப் பதக்கங்கள் உள்ளன. முழுத்துாண்களைப் போலவே மேற்கு முகங்களில் பதக்கங்கள் வெட்டப்படவில்லை.
இந்த அரைத்துாண் களையொட்டி வெளிப்புறத்தே வெட்டப்பட்டுள்ள பக்கச் சுவர்கள் நன்கு பொளியப்பட்டுச் சீரமைக்கப் பட்டுள்ளன. மேலிருந்து கீழே இவை அகலப்படுவதைப் பார்வையால் உணரலாம். இச்சுவர்களின் கீழ்ப்பகுதி முகப்புக்கு முன்னுள்ள தரையோடு முடிகின்றது. தென் சுவரின் கீழ்ப்பகுதியில் ஒரு வரியிலமைந்த கிரந்தக் கல்வெட்டு ஒன்று மிகவும் பொரிந்து படிக்கவியலா நிலையிலே காணப்படுகிறது. இது ராகமொன்றின் ஸ்வர பேதங்களைக் குறிப்பதாகலாம் என்று அறிஞர் திரு. கூரா. சீனிவாசன் குறிப்பிட்டிருக்கிறார்."
தூண்களின் உச்சியிலிருந்து பக்க வாட்டில் கிளைத்தெழும் போதிகைகள் எளிமை யானவை. இவற்றின் கீழ்க்கைகள் மேற் கைகளை விடச் சற்று நீளமானவை. இக்கீழ்க்கைகள் இலேசான வளைவுடன் மேற்கைகளாகி உத்திரத்தைத் தாங்கு கின்றன.
வழக்கமான பல்லவர் குடைவரை உத்திரங்
களை விடச் சற்று அளவில் சிறுத்துக் காணப்படும் இவ்வுத்திரத்தின் மேல் பிதுக்கமாக

Page 107
வாஜனம் ஒன்று தென்வடலாகக் குடை வரையின் முழு நீளத்திற்கும் ஓடுகிறது. வாஜனத்திற்கு மேலே வடிவமைக்கப்படாத கபோதமாகப் பாறைச்சரிவின் மேற்புறம் கூரையாகியுள்ளது.
தூண்கள் அமர்ந்துள்ள முகப்பின் அகலம் 62செ.மீ. இந்தத் தூண்கள் பல இடங்களில் சிதைந்துள்ளன. குறிப்பாக வடக்குத் தூணின் கீழ்ச்சதுரமும் கட்டும் பெருமளவு சிதைந்துள்ளன. தாமரைப் பதக்கங்களும் பல இடங்களில் சேதப்படுத்தப் பட்டுள்ளன. முகப்பிற்குப்பின் அமைந்துள்ள முகமண்டபத்தின் தென் வடல்' அளவு 6.27 மீட்டர். இதன் அகலம் வடபுறத்தே 1.63 மீட்டர், தென் புறத்தே 1.59 மீட்டர், இம்மண்டபத்தின் தரை யமைப்பும் முகப்பின் தரையமைப்பும் ஒரே மட்டத்தில் உள்ளன. இதன் கூரையை ஒட்டி நான்கு புறமும் வாஜனம் காட்டப் பட்டுள்ளது.
முகமண்டபத்தின் தென்புறச் சுவரில் முதலாம் மகேந்திரவர்மருடையதாகக் கருதப் படும் கிரந்தக் கல்வெட்டொன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பின்சுவரின் மையப் பகுதியில் குடையப்பட்டுள்ள கருவறை முகமண்டபத்திற்குள் பிதுக்கமாகக் காட்டப்பட்டுள்ளது. இப்பிதுக்கம் பின்சுவரி லிருந்து தென்புறத்தே 20செ.மீ அளவிலும் வடபுறத்தே 23.5 செ.மீ. அளவிலுமாய் முன்னோக்கி அமைந்துள்ளது. கருவறையின் தாங்குதளம் பாதபந்த அமைப்புடன், 61 செ.மீ உயரத்திற்கு ஜகதி, எண் பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை, மேற் கம்பு என்னும் உறுப்புக்களை வரிசையாகக் கொண்டு விளங்குகிறது." கண்டத்தில்
அரைத்துரண்களின் பாதங்கள் காட்டப்பட்

டுள்ளன. கம்பின் மீதெழும் சுவர்ப்பகுதியின் கிழக்கு முகத்தில் நான்கு அரைத்தூண்கள் உள்ளன. இவற்றுள் இரண்டு, கருவறை வாயிலையொட்டிப் பக்கதிற்கொன்றாக அமைய, ஏனைய இரண்டு கிழக்குச் சுவரின் வட, தென் திருப்பங்களில் பக்கத்திற்கொன்றாக அமைந்துள்ளன.
எளிய பிரம்மகாந்த தூண்களாக உரு வாக்கப்பட்டுள்ள இந்த அரைத் தூண்கள் போதிகைகளின்றி நேரடியாக உத்திரத்தில் முடிகின்றன. உத்திரமும் அதையடுத்து அமைந் திருக்கும் வாஜனம், வலபி ஆகியனவும் சிறிய அளவினவாக வடிக்கப்பட்டிருக்கக் கபோதம், கூடுகளோ அலங்கரிப்போ இல்லாமல் எளிய நிலையில் உள்ளது. இம்மேல்நிலை அமைப்புகள் அனைத்தும் கருவறை வெளிச்சுவரின் முப்புறத்தேயும் காட்டப்பட்டுள்ளன. உள்மண்டபக் கூரையை ஒட்டி ஒடும் வாஜனம் பின் சுவரில் கருவறைப் பிதுக்கத்தின் இருபுறமும் முடிகிறது.
கருவறை முன் சுவரின் மையப் பகுதியில் 75 செ.மீ அகலத்தில் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதள உறுப்புக்கள் இவ்வாயிலுக்கு இடம் விட்டு நின்று விடுகின் றன. முகமண்டபத் தரையமைப் பிலிருந்து
கருவறைக்குள் நுழைய இரண்டு படிகள்
உள்ளன. முதற்படி சந்திர கல்லாக அரைநிலா வடிவத்தில், தாங்குதள உறுப்பான ஜகதியின் பாதி உயரத்திற்குக் காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் படி ஜகதியின் எஞ்சிய உயரத்திற்கு அமைந்து வாயிலின் கீழ்நிலை யாகியுள்ளது. அரைத்துரண்களின் மேலோடும் உத்திரம் வாயிலின் மேல்நிலையாக, அதன் மீது வாஜனம், வலபி போன்ற பிற உறுப்புகள் தொடர்கின்றன.

Page 108
கருவறையின் உட்புற உயரம் 195 மீட்டர், இதன் தரையமைப்பு இரண்டாம் படியின் மேற்பரப்பை விடச் சற்றுத் தாழ அமைந்துள்ளது. தரையும் கூரையும் சுவர் களும் வெறுமையாக உள்ள இக்கரு வறையின் தென்வடல் உள்ளளவு 1.67 மீட்டராகும். பக்கச் சுவர்கள் 1.31 மீட்டர் அளவினவாக உள்ளன. கருவறையின் பின் சுவரையொட்டி அதன் முழு நீளத்திற்கும் 39 செ.மீ உயரத்தில் மேடையொன்று அமைக்கப் பட்டுள்ளது. இம்மேடையின் நடுவே 17 செ.மீ ஆழத்திற்கு 39 செ.மீ பக்கமுள்ள சதுரமான பள்ளமொன்று வெட்டப்பட்டுள்ளது. பின்சுவரி லிருந்து 7 செ.மீ. தள்ளி வெட்டப்பட்டுள்ள இப்பள்ளம் கருவறையில் நிறுவப்பட்டிருந்த இறைத்திருமேனியின் அடிப்பகுதியைப் பொருத்துவதற்காக உருவாக் கப் பட்டிருக்கலாம்.
கருவறையிலிருந்து நீர் வெளியேறு வதற்காக வெட்டப்பட்டுள்ள கால் இரண்டாம் படியில் தொடங்கிச் சந்திரக்கல்லின் இடப் புறத்தே இறங்கி முகமண்டபத்தின் தரையில் 2.74 மீட்டர் நீளத்திற்கு ஓடி முகப்புக்கு முன்னுள்ள தரையில் முடிகிறது.
இக்குடைவரையின் கட்டட உறுப்பு களுள் பல, பெரும் சிதைவுக்கு ஆளாகி யுள்ளன. கருவறை வாஜனம் கிழக்கு முகத்தின் வடபுறத்தேயும் கபோதம் வடபகுதி யிலும் சிதைக்கப்பட்டுள்ளன. முகமண்டப வாஜனமும் பல இடங்களில் சிதைந்து காணப்படுகிறது. முகமண்டபப் பின்சுவர் சில இடங்களில் செதில் செதிலாகப் பிளந்துள்ளது. பின்சுவரின் தென் பகுதியிலும், முகப்புத் தூண்கள் மற்றும் உத்திரம் ஆகியவற்றின் கிழக்கு முகத்திலும் இலேசான சுதை மற்றும்
10

வண்ணப் பூச்சுகளின் எச்சங்களை இன்றும் காணமுடிகிறது. சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணங்களில் காணப்படும் இவ்வண்ணப் பூச்சுகள் தோரண அலங்காரத்தை நினைவூட்டு கின்றன. இவை இக்குடைவரை வழிபாட்டில் இருந்தபோது பூசப்பெற்றவையாக இருக்
கலாம்.
இரண்டாம் குடைவரை
இரண்டாம் குடைவரை முதற் குடை வரையின் தென்புறத்தே சற்றுத் தள்ளி அதே பாறைச்சரிவின் கிழக்கு முகத்தில் நிலமட்டத் திற்குச் சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் குன்றின் சரிவு செங்குத்தாக இல்லாமல் நன்றாக முன்னோக்கி இறங்கி யிருப்பதால் முகப்புக்கு முன்னுள்ள தரை பேரளவினதாகக் கிடைத்துள்ளது. இத்தரை யமைப்பு நிலமட்டத்திலிருந்து சற்று உயர்ந்து இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் அடுக்கு அகலமானதொரு நடை போலக் கரடுமுரடாகக் காட்சி யளிக்கிறது. தென்வடலாக 8.50 மீட்டர் நீளமும் கிழக்கு மேற்காக 1.77 மீட்டர் அகலமும் கொண்டமைந்துள்ள இந்த முதலடுக்கிலிருந்து 13 செ.மீ. உயரத்தில் வெட்டப்பட்டுள்ள இரண்டாம் அடுக்கு தென்வடலாக 8.59 மீட்டர் நீளமும் கிழக்கு மேற்காக 56 செ.மீ அகலமும் கொண்டமைந்துள்ளது. முதல் அடுக்கைவிட இரண்டாம் அடுக்கின் தரையமைப்பு நன்றாகப் பொளியப்பட்டுச் சமப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டடுக்குத் தரையமைப்பின் இரு பக்கங்களிலும் பாறைச்சரிவுகளே சுவர்களாக் கப்பட்டுள்ளன. சரிவின் இயல்பையொட்டி இச்சுவர்களின் மேற்பகுதியை விட கீழ்ப்பகுதி மிக அகலமாக உள்ளது. தென்புறத்தே 1.70 மீட்டர் அகலமும் வடபுறத்தே 190 மீட்டர்

Page 109
அகலமும் கொண்டுள்ள இப்பக்கச் சுவர்கள் மலையிலுள்ள அதிரண சண்டேசுவரம் குடை வரைச் சுவர்களுடன் ஒப்பிடுமளவு அகன்றிருந் தாலும், அவற்றைப் போல் சீராக்கப்படாது கரடு முரடாகவே விடப்பட்டுள்ளன.
முன்தரையின் இரண்டாம் அடுக்கி லிருந்து 7 செ.மீ உயரத்தில் அமைந்துள்ள முகப்பில் 15 செ.மீ. உள் தள்ளி நான்கு தூண்கள் எழுகின்றன. மையத் தூண்கள் இரண்டும் முழுத் தூண்களாகவும் பக்கத் தூண்கள் அரைத் தூண்களாகவும் உள்ள இம்முகப்பின் தென்வடல் நீளம் 6.87 மீட்டர். அகலம் 88 செ.மீ. மையத்துரண்கள் வழக்கம் போலச் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலும், பக்க அரைத் தூண்கள் பிரம்மகாந்தமாகவும் காட்டப்பட்டுள்ளன. முதற் குடை வரையைப் போலவே மையத் தூண்களின் கீழ்ச்சதுரம் மேற்சதுரத்தை விட அளவில் பெரியதாக இருந்தாலும் வேறு பாடுகள் முதற் குடைவரை அளவுக்கு இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. மேற் சதுரத்தின் தலைப்பிலிருந்து கிளைக்கும் போதிகைகளின் கீழ்க்கைகளைவிட மேற்கைகள் நீளமாக உள்ளன. கீழ்க்கைகள் மேற்கை களாகத் திரும்பும் இடத்தில் முதற் குடை வரையைப் போல் அல்லாமல் விரி கோணத்தில் திரும்புகின்றன. போதிகைகளின் மேல் அமர்ந்துள்ள உத்திரம் வழக்கமான பல்லவர் முறையில் போதிகையின் கனத்திற்குக் காட்டப்பட்டுள்ளது. உத்திரத்தின் மீது பிதுக்கமாக தென்வடலாக ஒடும் வாஜனம்' முகப்பின் முழு நீளத்திற்கும் காட்டப்பட்டுள்ளது. குடையப்பட்ட பாறையின் அகன்ற மேற்புறம் சமன் செய்யப்பட்டு வடிவமைக்கப்படாத கபோதமாகக் காட்டப் பட்டுள்ளது. பொதுவாக முழுத் தூண்களோடு
10

ஒப்பிடும்போது அளவில் சிறுத்துக் காணப்படும் அரைத்துரண்களின் கிழக்குப் பக்கங்கள் இங்கு முழுத் தூண்களைவிட அளவில் பெரியனவாய் நன்கு அகன்று காட்சியளிக்கின்றன. இவற்றின் அகலம் வடபுறத்தே 1.12 மீட்டர், தென்புறத்தே 1.15 மீட்டர்.
உத்திரம், தூண்களின் மேற் சதுரங்கள், போதிகைகள் ஆகியவற்றில் முதற் குடைவரை போலவே சுண்ண மற்றும் வண்ணப் பூச்சுகளின் எச்சங்கள் காணக்கிடக்கின்றன. பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் தோரணம் போல் காட்டப்பட்டிருக்கும் இவ்வண்ண வரைவுகள் இக்குடைவரை வழிபாட்டில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட வையாகலாம்.
முகப்பையடுத்துள்ள மண்டபம் அதன் நடுப்பகுதியிலுள்ள தூண் வரிசையால் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ் விரண்டாம் வரிசைத் தூண்களுக்கும் முகப்புத் தூண்களுக்கும் இடையிலுள்ள மண்டபப் பகுதியை முகமண்டபமென்றும், இரண்டாம் வரிசைத் தூண்களுக்குப் பின்னுள்ள பகுதியை உள் மண்டபமென்றும் அழைக்கலாம்.
முகப்பையடுத்துள்ள முகமண்டபம் தென்வடலாக 6.87 மீட்டர் நீளத்திற்கும் கிழக்கு மேற்காக 1.31 மீட்டர் அகலத்திற்குமாய்ப் பரவியுள்ளது. நன்கு பொளியப்பட்டு வழவழப்பாக்கப்பட்டுள்ள முக மண்டபத்தின் தரையும் முகப்புத் தரையும் ஒரே மட்டத்தில் உள்ளன. முகமண்டபத்தின் தென் சுவரும் கூரையும் வெறுமையாக உள்ளன. வட சுவரில் முதலாம் இராசராசரின் கல்வெட்டு உள்ளது. உத்திரத்தின் மேல், பிதுக்கமாக ஒடும் வாஜனம் முகமண்டபக் கூரையின் நாற்புறமும் காட்டப்பட்டுள்ளது.

Page 110
நன்கு செதுக்கி வழவழப்பாக்கப் பட்டுள்ள உள்மண்டபத்தின் தரை, முகமண்டபத் தரையமைப்பிலிருந்து 11 செ.மீ உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. முகப்பிலுள்ளாற் போலவே இங்கும் மையப்பகுதியில் இரு முழுதுாண் களும் பக்கங்களில் இரு அரைத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. தரையின் விளிம்பி லிருந்து சற்று உட்தள்ளி எழும் இத்தூண்கள் அமைப்பில் முகப்புத் தூண்களைப் பெரிதும் ஒத்துள்ளன. உத்திரத்தின் மேல் காட்டப் பட்டிருக்கும் வாஜனம் உள் மண்டபத்தின் பக்கச் சுவர்களின் மேலும் கூரையையொட்டி ஒடுகிறது. உள்மண்டபத்தின் கூரையும் வடபுறச் சுவரும் வெறுமையாக உள்ளன. தென்புறச் சுவரில் பரகேசரிவர்மரின் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது."
உள்மண்டபத்தின் பின்சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. இவற்றின் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாதபந்த அமைப்பிலான தாங்குதளம் காட்டப்பட்டுள்ளது. ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை, மேற் கம்பு" என்றமைந்துள்ள இத்தாங்குதளத்தின் கீழ்ப்பகுதியையொட்டி மைய, வடகருவறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள் மண்டபத்தரை இலேசாக உயர்ந்து உபானம் போல் காட்சியளிக்கிறது. பாதபந்தத் தாங்குதளத்தின் மேற்கம்பைத் தழுவியெழும் கருவறை முன்சுவரில் அரைத் தூண்களும் ஆழமற்ற கோட்டங்களும் காட்டப் பட்டுள்ளன. இக் கோட்டங்கள் ஒவ்வொரு கருவறை வாயிலின் இருபுறத்தேயும், பக்கத்திற்கொன்றென வெட்டப்பட்டுள்ளன. கோட்டங்களுக்கு அணைப்பாகவும், கருவறை வாயிலையொட்டியும் பிரம்மகாந்த அரைத்
10

தூண்கள் அமைந்துள்ளன. இத்தூண்களின் பாதங்கள் தாங்குதளக் கண்டப் பகுதியில் தொடங்குகின்றன. தென்வடலாக இத்தூண் களில் நான்காவதும் ஏழாவதும் சற்று அகல மாயிருக்க ஏனையவை ஒரே அளவினவாக உள்ளன. இவ் அரைத்தூண்களின் உச்சியில் காணப்படும் போதிகைகளின் கீழ்க்கைகள் மேற்கைகளைவிடப் பெரியன. இப்போதி கைகள் சென்றிணையும் உத்திரம் அளவில் சிறியதாக உள்ளது. உத்திரத்தின் மேல் சிறிய அளவிலான வாஜனமும் வலபியும் பின்சுவர் முழுவதுமாய் ஒடுகின்றன. இவற்றின் மேல் நன்கு வடிவமைக்கப்பட்ட வளைவான
கூடுகளற்ற கபோதம் காட்டப்பட்டுள்ளது.
கருவறை வாயில்களையடைய உள் மண்டபத் தரையிலிருந்து மூன்று கருவறை களுக்கும் படிகள் கட்டப்பட்டுள்ளன. வட, தென்கருவறை வாயில்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று படிகள் உள்ளன. கீழ்ப்படி அரை நிலா வடிவத்தில் இருக்க, மேற்படி வாயிலின் கீழ் நிலையாய் அமைந்துள்ளது. இப்படிக் கட்டுகளின் இருபுறத்தேயும் யானைத் துதிக்கை போன்ற பக்கச் சுவர். நடுக் கருவறைக்கு இரண்டு படிகளே உள்ளன. கீழ்ப்படி இருந்து அழிந்தமைக்கான சான்றுகூட இல்லை.
ஒவ்வொரு கருவறை வாயிலையும் பக்கத்திற்கொருவராக இரண்டு வாயில் காப்போர் இவர்களுக்காகவே அமைக்கப் பட்டிருக்கும் ஆழமற்ற கோட்டங்களில் நின்றபடி காவல் செய்கின்றனர். கால் கடுக்க நிற்கும் இவர்களின் பாதங்களுக்காகவே பட்டிகை மீது மேற் கம்பை ஊடறுத்து அளவான சிறு தளம் வெட்டியிருக்கிறார்கள். இந்தப் பாதந்தாங்கித் தள அமைப்பு' மையக்

Page 111
கருவறையின் இடக்காவலருக்கும் வட கருவறையின் வலக்காவலருக்கும் பட்டிகைச் சிதைவு காரணமாகத் தற்போது இல்லாம
லிருக்கிறது. வட கருவறையின் இடக்காவலர்
பட்டிகையின் மீதே பாதம் வைத்துத் தனித் தாள்தாங்கியின்றி நிற்கிறார்.
உள்மண்டபத் தரையிலிருந்து 58 செ.மீ உயரத்தில் அமைந்துள்ள இக்கருவறைகளின் உட்சுவர்களும் கூரைகளும் வெறுமையாக உள்ளன. வட, தென் கருவறைகளின் தரை, அவற்றின் வாயில் கீழ் நிலையைவிட முறையே 4 மற்றும் 6.5 செ.மீ. தாழ்வாக உள்ளன. மையக் கருவறையின் தரையமைப்பு கீழ்நிலையின் மட்டத்தில் அமைந்துள்ளது. உத்திரமே மேல்நிலையாக அமைந்துள்ளது.
தென் கருவறை வாயிலின் அகலம் 66 செ.மீ. கருவறையின் உட்பகுதி ஒரு மீட்டர் பக்கம் கொண்டு 1.67 மீட்டர் உயரத்திற்குக் குடையப்பட்டுள்ளது. கருவறைப் பின்சுவரை யொட்டிக் காணப்படும் ஆழமான குழி இங்கு நிறுவப்பட்டிருந்த திருமேனியின் கீழ்ப் பகுதியைப் பொருத்துவதற்காக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.
மையக் கருவறையின் வாயில் 66 செ.மீ அகலத்தில் உள்ளது. உட்புறத்தே தென் வடலாக 1.37 மீட்டர் நீளமும் கிழக்கு மேற்காக 1.07 மீட்டர் அகலமும் கொண்டு 1.78 மீட்டர் உயரத்திற்கு அமைந்துள்ள இக்கருவறையின் நடுவில் தரை மீது கிடத்தப்பட்டுள்ள ஒரு சதுரப் பாறையின் மேல் லிங்கத்திருமேனி காட்சியளிக்கிறது. ஆவுடையாரின் கோமுகப் பகுதி உடைந்துள்ளது. பாறைக்குக் கீழே குழி இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்கருவறையின் வாயிலருகே இருபுறமும் சதுரமான குழிகள் கூரையிலும் தரையிலுமாய்
10

வெட்டப்பட்டுள்ளன. மரத்தால் வாயில் நிலை நிறுத்திக் கதவுகள் அமைப்ப தற்காகப் பிற் காலத் தே இக் குழிகள் வெட்டப் பட்டிருக்கலாம். இக்கருவறையிலிருந்து நீர் வெளியேறுவதற்காகப் படிக்கட்டுகளின் வழியே கால் வெட்டியிருக்கிறார்கள். இது உள்மண்டப, முகமண்டப தரைகளில் 444 மீட்டர் நீளத்திற்கு ஓடி முகப்புக்கு முன்னுள்ள தரையில் முடிகிறது.
வடகருவறையின் வாயில்தான் மூன்று வாயில்களிலும் அகலமான வாயிலாக அமைந் துள்ளது. 71 செ.மீ அளவுள்ள இவ்வாயிலின் உட்புறத்தே 1.69மீட்டர் உயரத்திற்கு அமைந்துள்ள கருவறையின் தென்வடல் நீளம் 1.18 மீட்டர் கிழக்கு மேற்காக இதன் அகலம் 93 செ.மீ பின்சுவர் அருகே இறைத்திருமேனி நிறுவலுக்காகச் சதுரமான குழியமைப்பு உள்ளது. இப்போது மையக்கருவறை தவிர ஏனைய இரண்டு கருவறைகளிலும் தெய்வத் திருமேனிகள் இல்லை.
முன்றாம் குடைவரை
வட குன்றுத் தொடரின் தென்பகுதி உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இக்குடை வரையை அடையப் படிக்கட்டுகள் வெட்டப் பட்டுள்ளன. மிகப்பெரிய அளவினதாகத் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட மிகச் சில குடை வரைகளுள் இதுவும் ஒன்றாகும். ஆர்க் காட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் விளாப்பாக்கத்திற்கருகே உள்ள திருப் பாணி மலையில் 18 காணப்படும் முடிவடையாத குடைவரை முன்தோற்றத்திலும் அளவிலும் ஏறத்தாழ இக்குடைவரையை ஒத்துள்ளது.
குன்றின் உச்சியில் நல்ல சரிவான பகுதியைத் தேர்ந்தெடுத்துப் பணி நடந்திருப்ப

Page 112
தால் முகப்புக்கு முன்னால் மிகப் பெரிய தரையமைப்பு கிடைத்திருக்கிறது. கிழக்கு மேற்காக 1.84 மீட்டர் அகலத்திற்கும் தென் வடலாக 14.34 மீட்டர் நீளத்திற்குமாய்ப் பரந்திருக்கும் இத்தரையமைப்பின் தென்புறம் 16.5 செ.மீ அளவுக்கு வடபகுதியை விட உயர்ந்துள்ளது. இப்படி உயர்ந்திருக்கும் பகுதியின் நீளம் 3.94மீட்டராகும். தரை யமைப்பின் பெரும்பகுதி சீராக சமன் செய்யப்பட்டுள்ளது. வடபுறத்தே சிறு பகுதி மட்டும் அரைகுறையாகச் சமன் செய்யப் பட்டுள்ள நிலையில், தரையைச் சமன் செய்ய பல்லவர்காலச் சிற்பிகள் மேற்கொண்ட தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள முடிகிறது. பாறையின் மேற்பரப்பை செதுக்கக் கை யாண்ட அதே முறையைத்தான் தரையைச் செதுக்கவும் கையாண்டு இருக்கின்றார்கள். சிறுசிறு சதுரங்களாகப் பரப்பை வகுத்துக் கொண்டு சதுரங்களைச் சுற்றிலும் உளியால் செதுக்கி தேவையான ஆழத்தைப் பெற்று பின் சதுரங்களை பிளந்தெறிந்து பரப்பை சமன் செய்துக்கொள்ளும் இந்த தொழில்நுட்பமே மாமல்லபுரத்திலும் கையாளப்பட்டிருப்பதைப் புலிப்புதர் மண்டப பாறைகளில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் முயற்சிகளின் சுவடுகள் காட்டும்.
மற்றக் குடைவரைகளிலிருந்து அளவில் மட்டுமல்லாமல் அமைப்பிலும் இக்குடைவரை பெரிதும் வேறுபட்டுள்ளது. பொதுவாகக் குடைவரைகளை அமைப்பதற்குக் பாறையின் ஒரு புறத்தைக் குடைந்து உள் செல்வது மரபு. இப்படிச் செய்யும்போது பாறையின் ஒருபுறம் செதுக்கமைப்பும் மற்ற மூன்று புறங்களும் இயற் கையான அதன் தோற்றமும் பார்வைக்குக் கிடைக்கும். ஆனால் இங்கோ வழக்கத்திற்கு மாறாகப் பாறையின் கிழக்கு மற்றும் தெற்கு முகங்களில் குடைந்திருக்
104

கிறார்கள். கிழக்கு முகக் குடைவு முழுமை யடைந்து குடைவரையின் முன் தோற்றமாக மலர்ந்துள்ளது. தென் முகக் குடைவு என்ன காரணத்தாலோ முழுமையடையாது நிற்கிறது. இப் பகுதியின் முகப்பாக நடுவில் இரண்டு தூண்களும் தென்கிழக்கு மூலையில் ஒரு தூணும் பிரம்மகாந்தமாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் எதையும் முழுத்தூண் என்று சொல்ல முடியாதபடி இவற்றின் மூன்று பக்கங்களே பார்வைக்குக் கிடைக்கின்றன. தென்மேற்கு மூலையில் வடிவம் பெறாது போதிகையை மட்டும் நீட்டியபடி நிற்கும் பாறை மற்றொரு அரைத் துணுக்காக விடப்பட்ட பகுதியாகலாம்.? இதையொட்டிப் பிளக்கப்பட்ட ஆனால் சமன் செய்யப்படாத குன்றின் சரிவு.
முகப்புத் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதிகள் பின்னாலுள்ள பாறைச்சுவர் பிளக்கப் படாமையால் அங்கணங்களாக உருப் பெறாமல் ஆளமான கோட்டங்களாகியுள்ளன. இவற்றுக்கு முன்புறத்தே குறுகிய சமன் செய்யப்படாத தரையமைப்புக் காணப்படு கின்றது. தமிழகத்திலுள்ள பல்லவர் குடை வரைகளுள் முன்புறம் மட்டுமல்லாமல் பக்கப் பகுதியும் குடையப்பட்ட நிலையில் காட்சிதரும் குடைவரை இது ஒன்றுதான்."
குடைவரையின் கிழக்கு முகப்பு, முன்னாலுள்ள தரையைவிட 15 செ.மீ. உயரத்தில் உள்ளது. இந்த உயரம் ஆங்காங்கே வேறுபடுகிறது. வடபகுதியில் உள்ள அரைத்தூணுக்கும் அதையடுத்து உள்ள முழுத்தூணுக்கும் இடைப்பட்ட பகுதியில் முகப்புத் தரை முன் தரையோடு ஐக்கியமாகு மளவிற்குச் சிதைக்கப்பட்டுள்ளது.
இம்முகப்பில் ஐந்து முழுத்தூண்களும் வட, தென் மூலைகளில் பக்கத்திற்கொன்றாக

Page 113
இரண்டு அரைத்துாண்களும் செதுக்கப் பட்டுள்ளன.* தென்புற அரைத்துரண் பிரம்ப காந்தமாக வடபுறத்திலொன்றும் மேற்கி லொன்றுமாகப் போதிகைகளைக் கொண்ட மைந்துள்ளது. இந்த அரைத்தூண் குடை வரையின் கிழக்கு முகத்திற்குத் தென்னெல் லையாகவும், தென் முகத்திற்குக் கிழக்கெல் லையாகவும் அமைந்து மூன்று புறங்கள் முழுமையாய்த் தெரிய மேற்கில் மட்டும் பாதியளவு மறைந்து அரைத்தூணுக் குரிய இலக் கணத்தில் இருந்து மாறுபட்டு முழுத்தூணாகவும் இல்லாமல் விதிவிலக்காக நிற்கிறது.
இதையடுத்து அமைந்துள்ள முழுத் தூண், பணி முழுமையடையாத நிலையில் பிரம்மகாந்தமாக விடப்பட்டுள்ளது. அடுத்துள்ள நான்கு தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றுள் மூன்றாவது முழுமையடையவில்லை. ஒவ் வொரு தூணிலும் மேல், கீழ்ச் சதுரங்கள் பெரும்பாலும் அகலத்தில் ஒரே அளவின வாகவும் அல்லது மிகச் சிறு வேறுபாடுக ளுடனும் இருக்க, உயரம் மட்டும் சற்று முன்பின்னாக அமைந்துள்ளது. ஒரு தூணின் மேற்சதுரத்தைவிடக் கீழ்ச்சதுரம் 12செ.மீ அதிக உயரமுடையதாகக் காட்டப் பட்டுள்ளது. மற்றத் தூண்களில் இந்த உயர வேறுபாடு 10 செ.மீ ஆக உள்ளது. சதுரங்களின் அகல வேறுபாடு மிகை நிலையில் 2செ.மீ ஆக உள்ளது.
இத்தூண்களின் போதிகை அளவுகளில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தபோதும் பல்லவ மரபையொட்டி அமைந்துள்ளன. இவற்றின் கீழ்க்கைகள் நன்றாக வளைந்து மேற்கை களாகி உத்திரத்தைத் தாங்குகின்றன. சில
1

)5
போதிகைகளில் மேற்கையும் சிலவற்றில் கீழ்க்கையும் நீளமாய்க் காட்டப்பட்டுள்ளன.
இம்முழுத்தூண்களையடுத்து அமைந்
துள்ள அரைத்தூண் பிரம்பகாந்தமாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் கிழக்குமுக அகலம் 28 செ.மீ இதையடுத்து மேலிருந்து கீழ்நோக்கி அகன்று வரும் குடைவரையின் பக்கச் சுவர் இதன் நடுப்பகுதி அகலம் 87 செ.மீ இதற்குச் சற்றுத்தள்ளி வடபுறத்தே சரிந்து முன் தள்ளி நிற்கும் குன்று, அரைத்தூண் வரை குடை வரையின் பார்வைக்காக நன்கு பிளக்கப் பட்டுள்ளது. பாளம் பாளமாக உடைத்தெடுக்கப் பட்டிருப்பதால் அடுக்குகளாய்த் தோன்றும் இதன் கீழ்ப்பகுதி முகப்புத் தரையின் முன்னால் மற்றொரு கரடுமுரடான தரை யமைப்பாய் உயர்ந்துள்ளது.
முகப்புத்தூண்களின் மேல் நிற்கும் உத்திரத்தின் மையப்பகுதியிலும் போதிகை களுக்கு இடைப்பட்ட உத்திரப் பகுதியி லுமாய்ப் பத்து சதுரமான துளைகள் வெட்டப் பட்டுள்ளன. இவை குடைவரைக்கு முன் பந்தலிட விரும்பியவர்கள் கம்புகளை நுழைப் பதற்காகப் பிற்காலத்தே தோற்றுவித்தவையாக இருக்கலாம். இந்தத் துளைகள் தென் புறத்தே உள்ள முதலிரு தூண்களின் மேலுள்ள உத்திரத்தில் வெட்டப்படவில்லை. உத்திரத்தின் மேல் பிதுக்கமாக ஒடும் வாஜனமும் இந்தத் தூண்களில் இரண்டாம் தூணின் இடப்புறப் போதிகையோடு நின்றுவிடுகிறது. இத் தூண்கள் முழுமையடையாமையே இதற்குக் காரணமாகலாம்.
வாஜனத்திற்கு மேலே உள்ள பாறைப் பகுதி சமன் செய்யப்பட்ட நிலையில் கபோதப் பயன்பாட்டைத் தருகிறது. இதன் கிழக்கு முகம் எந்த விதமான அலங்கரிப்பு மின்றி பாறை யாகவே விடப்பட்டுள்ளது.

Page 114
வாஜனம், உத்திரம், போதிகைகள் மீது வண்ணப் பூச்சின் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. முதலிரண்டு குடை வரைகளைப் போல் இங்கும் பச்சை, மஞ்சள், சிவப்பு வணிணப் படைகளே தீட்டப் பெற்றுள்ளன. சில தூண்களின் மீது வளைவுக் கோடுகளும் வரையப் பெற்றுள்ளன.
முகப்பையடுத்துள்ள நீளமான மண்டபம் உட்புற வரிசைத் தூண்களால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முகப்புக்கும் இத்தூண் வரிசைக்கும் இடைப்பட்ட பகுதியை முக மண்டபமென்றும் இரண்டாம் வரிசைத் தூண்களிலிருந்து தொடரும் பின் பகுதியை உள்மண்டபமென்றும் அழைக்கலாம். முக மண்டபம் தென்வடலாக 10.78மீட்டர் நீளமும் கிழக்குமேற்காக 2.17மீட்டர் அகலமும் கொண்டமைந்துள்ளது. முகமண்டபத்தின் தரையும் கூரையும் வெறுமையாக உள்ளன. கூரையை ஒட்டிக் கிழக்கிலும் மேற்கிலும் மண்டபத்தின் முழு நீளத்திற்கும் வாஜனம் காட்டப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் தென், வட சுவர்களில் கருவறைகள் குடையப் பட்டுள்ளன? இவ்விரண்டிலுமே இப்போது தெய்வத் திருமேனிகள் இல்லை.
வடபுறத்தே உள்ள கருவறை முகமண்டப, உள்மண்டப அரைத் தூண் களுக்கு இடைப்பட்ட பகுதியில் குடையப் பட்டுள்ளது. முகமண்டபத் தரையிலிருந்து 63 செ.மீ உயரத்தில் அமைந்திருக்கும் இதன் நுழைவாயிலுக்குத் தாங்குதளம் காட்டப் படவில்லை. படிகள் இருந்து அழிக்கப் பட்டிருக்கலாமென்பது போலச் சந்திர கல்லின் சுவடுகள் காணப்படுகின்றன. நுழைவாயிலின் அகலம் 144மீட்டர். கருவறை, கிழக்கு மேற்காக 1.18மீட்டர் அகலமும் தென்வடலாக

1.41 மீட்டர் நீளமும் கொண்டமைக்கப் பட்டுள்ளது. கருவறையின் கூரை மற்றும் பக்கச் சுவர்கள் வெறுமையாக உள்ளன. பின்சுவருக்கு அருகே 17 செ.மீ ஆழத்தில் 62செ.மீ நீளம், 24செ.மீ அகலத்திற்கு ஒரு குழி வெட்டப்பட்டுள்ளது. இறைத்திரு மேனியின் கீழ்ப் பகுதியைப் பெறுவதற்காக இது வெட்டப்பட்டிருக்காலம். கருவறை வாயிலின் இருபுறமும் மேலே கூரையில் இரு சதுரமான துளைகள் காணப்படுகின்றன. இவை வாயில்நிலை அமைக்கக் கருதி வெட்டப்பட்டிருக்கலாம். கருவறையின் முகப்பில் கபோதம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. தென் கருவறை வாயில் முகமண்டபத் தரையிலுள்ள சந்திர கல்லிலிருந்து 46செ.மீ. உயரத்தில் காட்டப்பட்டுள்ளது. தாங்குதளம் பெறாமல் மேற்படிக்கட்டுகள் இன்றி வெறும் சந்திரகல்லை மட்டும் கொண்டு அமைந்துள்ள இதன் வாயில் அகலம் 1.31 மீட்டர் கூரையும் பக்கச் சுவர்களும் வெறுமையாக இருக்கத் தரை சமன் செய்யப்பட்டு வழவழப்பாக்கப் பட்டுள்ளது. கருவறையின் கிழக்குச் சுவர் பாதிக்கு மேல் உடைக்கப்பட்டுத் திறப்பாக உள்ளது. இங்கும் பின்சுவரையொட்டித் தெய்வத் திருமேனியை நிறுத்த ஒரு குழியும், கருவறைக் கூரையில் வாயிலின் இருபுறமும் சதுரக் குழிகளும் காணப்படுகின்றன. கருவறையின் முகப்பில் கூரையே மேல் நிலையாகி உத்திரம் போலச் செயற்படுகிறது. இதன் மேல் வாஜனமும் கபோதமும் அடுத்தடுத்துப் பிதுக்கமாகக் காட்டப் பட்டுள்ளன.? கபோதம் வளைக் கப் பட்டிருந்தாலும் முழுமையான அமைப்பு பெறவில்லை. வட, தென் கருவறைக் கபோதங்களின் மீது முகமண்டபக் கூரையி லோடும் வாஜனம் முடிகிறது.

Page 115
உள்மண்டபத்தின் தொடக்கத்தில், மையப்பகுதியில் நான்கு முழுத் தூண்களும், பக்கங்களில் இரண்டு அரைத்துாண்களும் அமைந்துள்ளன. இவை உள்மண்டபத் தரையமைப்பிலிருந்து 14.5 செ.மீ உட்தள்ளி எழுகின்றன. தென்வடலாக 992 மீட்டர் நீளமும் கிழக்கு மேற்காக 1.79 மீட்டர் அகலமும் கொண்டமைந்துள்ள உள்மண்டபத்தின் தரை, முகமண்டபத் தரையிலிருந்து 11.13 செ.மீ. உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. இம்மண்ட பத்தின் பின்சுவரில் ஐந்து கருவறைகளும் பக்கச் சுவர்களில் இரண்டு கருவறைகளும் குடையப்பட்டுள்ளன. இவையனைத்துமே
தற்போது தெய்வத் திருமேனிகளின்றி உள்ளன.
தென் புறமுள்ள அரைத் துாணி பிரம்மகாந்தமாக 70.5 செ.மீ அகலத்தில் (வடமுகம்) அமைந்துள்ளது. இதன் பின்பகுதி முகமண்படத் தென் கருவறைக்கு மேற்குச் சுவராகவும் , உள் மணி டபத் தென் கருவறைக்குக் கிழக்குச் சுவராகவும் அமைந் துள்ளது. இதையடுத்து அமைந்துள்ள மையத் தூண்கள் நான்கும் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலுள்ளன. இவற்றுள் முதற் தூண் சதுரங்கள் மட்டும் ஏறத்தாழ ஒரே அளவினதாக உள்ளன. ஏனைய மூன்று தூண்களின் கீழ், மேல் சதுரங்கள் பெருமளவு மாறுபடுகின்றன. இத்தூண்களின் போதிகைகள் முகப்புத் தூண்களைப் போலவே வளைந்து அமைந் துள்ளன. போதிகைக் கைகளின் அளவும் நீளமும் தூணுக்குத் தூண் மாறுபடுகின்றன. சிலவற்றில் கீழ்க்கை நீளமாகவும் சிலவற்றில் மேற்கை நீளமாகவும் அமைந்துள்ளன. இக்கைகள் தாங்கும் உத்திரத்தின் கனமும் ஒரே அளவினதாக இல்லை. உத்திரத்தின் மேல் பிதுக்கமாகக் கிழக்கிலும் மேற்கிலும்
வாஜனங்கள் நீட்டப்பட்டுள்ளன. கிழக்கு
1C

வாஜனம் தென்கோடியிலும் மேற்கு வாஜனம் இடையிலும் சிதைந்துள்ளன.
உள் மண்டபக் கூரை வெறுமையாக, ஆங்காங்கே கறையெச்சங்களுடன், சமனற்ற பரப்பு கொண்டமைந்துள்ளது. கருவறை களுக்கு முன் அகன்றும் இடைப்பட்ட பகுதி களில் தூண்கள் அமைந்திருப்பதால் குறுகியும் காணப்படும் தரை நன்றாய்ப் பொளியப்பட்டுச் சமன் செய்யப்பட்டுள்ளது.
கருவறைகளுக்கு முன் மக்கள் நிற்க ஏதுவாக இடமளித்துத் துாணி களைக் கருவறைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைத்திருப்பதும் முகப்புத் தூண்களையும் உள்மண்டபத் தூண்களையும் ஒரே வரிசையில் எடுத்திருப்பதும் சிற்பிகளின் திட்டமிடும் திறனையும் அதைச் செவ்வனே நிறைவேற்றிய பாங்கையும் உணர்த்தவல்லன.
உள்மண்டபத் தரையிலிருந்து 62செ.மீ உயரத்தில் காட்டப்பட்டுள்ள வட சுவர்க் கருவறை வாயிலின் அகலம் 79.5 செ.மீ வாயிலுக்கு இரு பக்கத்திலும் நிலைகள் கட்டியுள்ளனர். கருவறையின் கூரையே இந்நிலைகளின் மேல், தட்டையான சிறு உத்திரம் போல் இழுத்துவிடப்பட்டுள்ளது. இதற்கு மேல் வடிவமைக்கப்பட்ட கபோத வளைவு கருவறையின் சுவர்களும் கூரையும் வெறுமையாக உள்ளன. தரையில் பின்சுவரையொட்டி 55செ.மீ நீளம், 21 செ.மீ அகலம், 15செ.மீ ஆழமுள்ள குழியொன்று தெய்வத்திருமேனியின் நிறுவலுக்காக வெட்டப்பட்டுள்ளது. வாயிலையொட்டி மேலும்
கீழும் பக்கத்திற்கொன்றாக இருபுறமும் சதுரக்
குழிகள்.
தென் கருவறை உள் மண்டபத் தரையிலிருந்து 60செ.மீ உயரத்தில் உள்ளது.

Page 116
இதன் முன் ஒரு படி காட்டப்பட்டுள்ளது.* வட கருவறையைப் போலவே அமைந்துள்ள இதன் வாயில் அகலம் 73செமீ இதன் கிழக்கு நிலை தென்கருவறையைவிட அகலம் குறைந்ததாகச் சிதைந்து காணப்படுகிறது. கருவறைப் பின்சுவரின் அருகே தரையில் உள்ள குழி 64 செ.மீ நீளம், 20 செ.மீ. அகலம், 15 செ.மீ ஆழம் கொண்டமைந் துள்ளது.
பின்சுவர்க் கருவறைகள் பாதபந்தத் தாங்குதளம் கொண்டுள்ளன. 14.5செ.மீ. அகலமுள்ள உபானத்தின் மீது (உபானத்தின் அகலம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது) அமைந்துள்ள இத்தாங்கு தளம் கருவறை வாயில்களுக்கு இடைப்பட்ட சுவரின் கீழ் மட்டும் காட்டப்பட்டுள்ளது. பட்டிகையின் மேல் காட்டப்பட்டுள்ள கம்பு ஒழுங்கின்றி அமைந் துள்ளது.* சுவரில் அரைத்தூண்கள் இல்லாத போதும் கண்டப் பகுதியில் அவற்றிற்கான பாதங்கள் காட்டப்பட்டுள்ளன. சுவரின் உச்சியில் உத்திரம் தென்வடலாகச் சுவரின் முழு நீளத்திற்கும் கருவறைகளின் முகப்பு களையும் அலங்கரித்தபடி ஓடுகிறது. இதன் மேல் ஆங்காங்கே சிதைந்த கபோதம் நன்கு வளைக்கப்பட்டுக் கீழிறக்கப்பட்டுள்ளது. இக்
தெற்கிலிருந்து கிழக்கு மேற்கில்
வடக்காகக் அளவு கருவறை எண்
முதற் கருவறை 1.04 B. இரண்டாம் கருவறை 92 செ.மீ. மூன்றாம் கருவறை 1.02 6. நான்காம் கருவறை 1. 10 LE.
ஐந்தாம் கருவறை 1.00 B.
1C

கபோதத்தின் தொடர்ச்சியே வட, தென் கருவறைகளின் மேல் படர்ந்துள்ளது. முதல் மற்றும் மூன்றாம் கருவறை வாயில்களின் முன்னால் கீழ்மட்டத்தில் சந்திரகல்லும் மேலே ஒரு படியும் காட்டப்பட்டுள்ளன. மற்ற மூன்றிற்கும் சந்திரகல்லின் மேலே இரண்டு படிகள், கடைசி இரண்டு கருவறைகளின் மேற்படிகள் உடைத்துச் சிதைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் இருபுறமும் அணைவாக யானைத் துதிக்கை போன்ற பிடிச்சுவர் உள்ளது. இந்தத் துதிக்கையின் சுருட்டல் சந்திரக்கல்லின் இருபுறமும் அமைந்துள்ளது. இறுதி இரண்டு கருவறைகளின் இருபுறமும் இப்பிடிச்சுவர் முற்றிலுமாய் அழிக்கப் பட்டுள்ளது.*
இக்கருவறைகள் உட்புறத்தே வெறுமை யாக உள்ளன. வாயிலுக்கருகே மேலும் கீழும் சதுரக் குழிகள் வாயில் நிலைகளுக்காகப் பிற்காலத்தில் வெட்டப்பட்டுள்ளன. பின்சுவருக் கருகே நீளமான குழியொன்று ஐந்து குடை வரைகளிலும் வெட்டப்பட்டுள்ளது. முதல் மற்றும் இறுதிக் குடைவரைகளில் மட்டும் இது மிக நீளமாக ஏறத்தாழப் பின் சுவர் அகலத்திற்கு அமைந்துள்ளது? பின்சுவர்க் கருவறைகளின் அளவுகள்.
தென்வடல் உயரம் வாயில் அகலம்
அளவு
1.31 E. 1.66 Liš. 69.5 செ.மீ
95 செ.மீ 1.71 6. 69 செ.மீ
94 செ.மீ 1.65 6. 67.5 செ.மீ
1.13 6. 1.69 E. 69.5 செ.மீ
1.24 LS, 1.66 L6. 69.5 செ.மீ

Page 117
நான்காம் குடைவரை
வட தொடரின் சரிவிற்குப் பிறகு தொடங்கும் தென் தொடரின் முதல் எழுச்சியின் உச்சியில் இக்குடைவரை குடையப்பட் டுள்ளது. நில மட்டத்திலிருந்து குடை வரையை அடைய மூன்றாம் குடைவரையைப் போலவே இதற்கும் மலைப்படிகள் அமைக்கப் பட்டுள்ளன. மற்ற மூன்று குடைவரைகளைப் போல் அல்லாமல் இங்கு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் குடைவரைக்கு முன்னாலுள்ள பாறைத் தளத்தைச் சமப்படுத்திப் பூச்சு தந்து பரந்து விரிந்த தரையமைப்பை உருவாக்கி யிருக்கிறார்கள்.
குடைவரை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சரிவான பாறையில் குடைந்திருப்பதால் முகப்புக்கு முன்னால் அகலமான தரைப்பரப்பு கிடைத்துள்ளது. சீரமைக்கப்பட்டிருந்த போதும் சில இடங்களில் உயர்ந்தும் சில இடங்களில் தாழ்ந்தும் மேடு பள்ளமாகக் காட்சியளிக்கும் இதன் தென்வடல் நீளம் 680 மீட்டர், அகலம் 1.50 மீட்டர்.
முகப் பின் மையத்தில் இரண்டு முழுத்தூண்களும் பக்கங்களில் இரண்டு அரைத் துTணர்களும் உள்ளன. முழுத் தூண்களில் முதல் தூணைச் சதுரம், கட்டு, சதுரமெனப் பிரிக்கும் பணி தொடங்கிய நிலையில் விடப்பட்டுள்ளது.* கீழ்ச்சதுரம் மேற்சதுரத்தைப் போல ஒன்றரை மடங்கு உயரமாக உள்ளது. இரண்டாம் முழுத்தூண் பிரம்மகாந்தமாகவே விடப்பட்டுள்ளது. அரைத் தூண்கள் இரண்டும் வழக்கம் போல் பிரம்மகாந்தமாகவே உள்ளன. போதிகைகள் வளைந்து மேல் நோக்கிச் சென்று உத்திரத்தைத் தொடுகின்றன. தென்புற அரைத்
1.

09
தூணின் போதிகைக்குக் கீழ்க்கையே காட்டப் படாதது போல அத்தினைச் சிறியதாய் வெளிப்பட்டு வளைந்து மேற்கை ஆகியுள்ளது. வடபுற அரைத்தூணின் போதிகைக் கைகள் விரிகோணத்தில் உள்ளன. உத்திரம், வாஜனம் இரண்டுமே சரியாக வடிவமைக்கப்படவில்லை. வாஜனத்திற்கு மேலே கபோதத்திற்குக் கீழே காட்டப்பட்டிருக்கும் பகுதி, வலபியாக உருவாக்க விடப்பட்ட பாறைப் பகுதியாகலாம். முகப்புக் கூரையின் கீழ்ப்பரப்பு சீரமைக்கப் பட்டுக் கபோதமாகக் காட்டப்பட்டுள்ளது.
அரைத்தூண்களை அடுத்த வெளிப் பக்கச் சுவர்கள் பேரளவினவாய் மேலிருந்து கீழே அகலமாக இறங்குகின்றன. இவற்றுள் தென் சுவரின் அகலம் 1.18 மீட்டர், வட சுவரின் அகலம் 122 மீட்டர்.
முகப்புத் தூண்களையடுத்துக் காணப் படும் முகமண்டபம் தென் வடலாக 734 மீட்டர் நீளத்திற்கும் கிழக்கு மேற்காக 77செ.மீ அகலத்திற்குமாய்க் குடையப்பட்டுள்ளது. இதன் தரை, கூரை, பக்கச் சுவர்கள் அனைத்தும் வெறுமையாக இருப்பதுடன் சமனற்ற நிலையில் சற்றுக் கரடு முரடாக உள்ளன. பின்சுவர் நேராக இல்லாமல் சற்று வளைவாகக் குடையப்பட்டுள்ளது. இச்சுவரில் மூன்று கருவறைகள், அவற்றுக்கான படிக் கட்டுகள் உருவாக்கும் பணி திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படாமல் விடப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் நான்கில் இரண்டாம் குடைவரையில் மட்டுமே சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்குடை வரையில் உள்ள மூன்று கருவறைகளுக்கும் ஒவ்வொன்றுக்கும் இருவரென ஆறு

Page 118
காவலர்கள் சுவர்க் கோட்டங்களில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் கருவறை வாயில்களைப் பக்கத்திற்கொரு வராகக் காவல் செய்த வண்ணம் காட்சி தருகின்றனர்.
வாயிற்காவலர்கள்
இவர்களுள் தென் கருவறைக் காவலர்கள் முனிவர்கள். இடைக்கச்சம் வைத்துக் கட்டிய கீழாடை கணுக்கால் வரை நீண்டுள்ளது. இருவருமே நேர் நோக்கி நின்றாலும்? வலப்புறத்தார் இரு வளைவுக் கோலம்" காட்டுகிறார். சடா மகுடமும் மழித்தல் விரும்பாது வளர்த்த நீள் தாடியும் மீசையும் சற்றே நீண்ட அவர்கள் முகத்திற்கு எழிலூட்டு கின்றன. இருவருமே துணியாலான முப்புரி நூல் அணிந்திருந்தாலும் இடப்புறத்தாருக்கு மட்டும் அந்நூல் வலக்கை மேலேறிச் செல்கிறது" இருவரது பாதங்களுக்கும் பாதந் தாங்கிகள் காட்டப்பட்டுள்ளன. வலப் புறத்தார் வலப்பாதத்தைச் சமமாகவும் இடப்பாதத்தைத் திரஸ்ரயமாகவும் கொள்ள, இடப்புறத்தார் இடப்பாதத்தைச் சமமாகவும், வலப்பாதத்தைத் திரஸ்ரயமாகவும் கொண்டுள்ளார். கருவறை நோக்கிய கைகள் மலர் மொட்டு கொண்டிருக்க, வெளிக்கைகள் வலப்புறத் தாருக்கு ஒரு அஸ்தமாகவும் இடப்புறத் தாருக்கு மார்பருகே அமைந்த கடகமாகவும் காட்டப்பட்டுள்ளன. இக்காவல் முனிவர்களைக் கொண்டு இக் கருவறையின் தெய்வம் நான்முகனாக இருக்கலாமென அறிஞர் கூரா. சீனிவாசன் ஊகித்திருப்பதைச்? சரியெனக் கொள்ள முடியவில்லை. மாமல்லையிலுள்ள மும்மூர்த்திக் குடைவரையில் முருகன் கருவறைக்கு முன்னாலும் வாயிற்காப்போராக முனிவர்களே காட்டப்பட்டிருப்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
11

மையக் கருவறையின் காவலர்கள் இருவரும் பூரிமம் பதித்த சடாமகுடர்களாய்க் கட்டுக்குள் அடங்காத சடைக் கற்றைகள் முகத்தின் இருபுறமும் புரிகளாய்த் திரண்டிருக்கப் பெரும் பனையோலைக் குண்டலங்களுடன், உருள் தடிகளின் மீது கைகளைத் தாங்கலாய் நிறுத்திக் கம்பீரமாய்க் காட்சியளிக்கின்றனர். இருவருமே அரை யாடை அணிந்து ஆடையின் முடிச்சுத் தொங்கல்கள் பக்கவாட்டில் நெகிழ, மேற்கை களில் கங்கணங்கள், மணிக்கட்டுகளில் வளைகள், கழுத்தில் அட்டிகை எனப் பல்வகை அணிகள் பூண்டு இருவளைவுக் கோலத்தில் எழிலுறக் காட்சி தருகின்றனர். இருவரின் வெளிக்கைகளும் ஊரு முத்தி ரையில் உள்ளன." இருவரது முப்புரி நூல்களுமே வல மேற்கையின் மீதேறிச் செல்கின்றன. இடக்காவலரின் வலப்பாதம் திரஸ்ரயத்திலிருக்க இடப்பாதம் சமமாக உள்ளது. வலக்காவலர் கால்களை ஸ்வஸ்திக மாக்கியுள்ளார். வலக்காலின் பின்னே இடப்பாதம் உத்கட்டிதத்தில் நிறுத்தப் பட்டுள்ளது. வலப்பாதத்துக்குத் தனித் தாங்கல் காட்டப்பட்டுள்ளது. இவருடைய முகம் கருவறையை நோக்கித் திரும்பியிருக்க இடக்காவலர் சற்றே நேர்ப் பார்வையராய் மலர்ச்சி பொங்க இதழ்களில் நகை நெளிய பட்டிகைச் சிதைவால் பாதங்களிழந்து நிற்கிறார்.
மூன்றாம் கருவறையின் காவலர்கள் முவி வளைவுக் கோலத்தில* நேர்ப் பார்வையினராய் நிற்கின்றனர். இருவரது உட்கைகளும் போற்றி முத்திரையில் இருக்க வெளிக்கைகள் ஊரு அஸ்தமாக உள்ளன. உருண்டு திரண்ட முப்புரி நூல் இவர்தம் மேற்கைகளில் ஏறிப்பின் செல்கிறது. சடைக்

Page 119
கற்றைகளும் பனையோலைக் குண்டலங் களும் மையக் காவலரினும் அளவில் சிறியவை. இவர்களது கிரீட மகுடங்களும் கழுத்தணிகளும் குறிப்பிடத்தக்கவை. மையக் காவலர் போலவே இடுப்பாடை, இருவர் முகங்களும் சற்று நீளமானவை, ஆனால் அழகு குன்றாதவை. வலக் காவலரின் பாதங்கள் பார்சுவத்தில் இருந்திருக்க வேண்டும். பட்டிகைச் சிதைவால் இவர் பாதங்களை இழந்துள்ளார். இடக்காவலர் இரண்டு பாதங்களையும் சற்றே அகன்றார் போல் சமத்திலும் திரஸ்ரயத்திலுமாய் நிறுத்தியுள்ளார்.
இலிங்கத் திருமேனி
இரண்டாம் குடைவரையின் மூன்று கருவறைகளுள் நடுக் கருவறையில் மட்டுமே லிங்க வடிவில் தெய்வத் திருமேனி காணப் படுகிறது. அதிக வேலைப்பாடில்லாத வழவழப் பான லிங்கம் வட்டமான ஆவுடையாரில் பொருத்தப்பட்டுள்ளது. இடப்புறம் அமைந் துள்ள கோமுகம் முற்றிலுமாகச் சிதைந்துள்ளது.
கல்வெட்டுகள்
இங்குள்ள நான்கு குடைவரைகளில் முதலிரண்டில் மட்டுமே கல்வெட்டுகள் கிடைக்கின்றன. முதற் குடைவரையில் முதலாம் மகேந்திரவர்மரின் கிரந்தக் கல்வெட்டும் ஒரு வரியிலமைந்த ஸ்வரக் கல்வெட்டொன்றும் காணப்படுகின்றன. இரண்டாம் குடைவரையில் சோழர்களின் கல்வெட்டுகள் இரண்டு கிடைத்துள்ளன. இவை அனைத்துமே அறிஞர்களால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை.
முதற் குடைவரைக் கல்வெட்டுகள்
இக்குடைவரையில் இரண்டு கல் வெட்டுகள் உள்ளன. ஒன்று முகப்புக்கு
11

முன்னுள்ள தென்பக்கச் சுவரின் கீழ்ப் பகுதியிலும் மற்றொன்று முக மண்டபத்தின் தென் சுவரிலுமாய்க் காணப்படுகின்றன. முதற் கல்வெட்டு ஒரே வரியிலமைந்த சில கிரந்த எழுத்துக்களால் ஆனது. இவ்வெழுத்துக்கள் படிக்க முடியாத அளவுக்குப் பொரிந்துள்ளன. திரு. கூரா. சீனிவாசன் இவற்றை ராக மொன்றின் ஸ்வர பேதங்களாக இருக்கலா மென்று குறித்துள்ளார்."
பதினேழு வரிகளாலான இரண்டாம் கல்வெட்டு முகமண்டபத்தின் தென்புறச் சுவர் முழுமையும் பரவியுள்ளதென்று திரு.கூரா. சீனிவாசன் குறிப்பிடுகிறார்." ஆனால் கல்வெட்டு, சுவரின் மூன்றில் இரு பகுதிகளில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. எழுத்துக்கள் ஒரே அளவினதாகவும், வரிகள் சரியான இடைவெளி விட்டும் கலையுணர்வோடு வெட்டப்பட்டுள்ளன. பதினேழு வரிகள் உள்ள இந்தக் கல்வெட்டில் முதல் எட்டு வரிகளும், பத்து மற்றும் பதினோராம் வரிகளும் படியெடுத்த காலத்திலேயே பெருமளவு சிதைந்திருந்ததைத் தென்னிந்தியக் கல் வெட்டுத் தொகுதியில் வெளியிட்டிருக்கும் மசிப்படியால் அறிய முடிகிறது." இப்போது மேலும் சில எழுத்துக்கள் முறையான பராமரிப்பின்மையால் அடையாளம் தெரியாத படி சிதைந்துவிட்டன.
இக்கல்வெட்டில் மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயர்களான சத்ருமல்லன், நித்ய விநீதன், சத்யசந்தன் என்பன கிடைத்துள்ளன. முதல் வரியில் காணப்படும் கந்தர்வ சாஸ்திரம் இசை நூலைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்." திரு. மயிலை சீனி வேங்கடசாமி இதைக்கொண்டு மகேந்திரவர்மர் கந்தர்வ சாஸ்திரத்தில் வல்லவராக இருந்த தாகக் குறிப்பிடுகிறார்? இதே இசை நூலை

Page 120
அப்பரடிகளும் தம் திருவீழிமிழலைப் பதிகத்தில் குறித்துள்ளமை இங்கு நினைக்கத் தகுந்தது.
"கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி
யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா
னான்காண்”*
இப்பதிகத்திற்கு உரையெழுதிய திரு. சி. அருணை வடிவேலனார் ‘கந்திருவம் இசையிலக்கண நூலைக் குறிப்பதாகக் கூறுகிறார்." அப்பரடிகள் மகேந்திரவர்மரின் சமகாலத்தவர் என்பது பெரும்பாலான வரலாற் றறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ள உண்மை யாகும். இலக்கியத்திற்குக் கல்வெட்டும் கல்வெட்டிற்கு இலக்கியமும் தாங்கலாக நிற்கும் இந்தச் சிறப்பு தமிழ் இலக்கியங்களில் உண்மைத் தன்மையை உணர்த்த வல்லதொரு சான்றாகும்.
இக்கல்வெட்டின் ஒன்பதாம் வரி இசையொலிகளைக் குறிப்பதாகவும் பன்னிரண்டு, பதின்மூன்றாம் வரிகள் இசையில் முன்பு பெற முடியாதிருந்த நிலைகளைப் பெற மகேந்திரவர்மர் கொண்டிருந்த ஆர்வத்தையும், வீணையில் மட்டுமே செய்ய முடிந்த சில ஒலிக்குறிப்புகளை குரலிசையிலும் கொண்டு வரமுடியுமென்று தீர்மானத்தோடும் உற்சாகத் தோடும் செயற்பட்ட தீரத்தையும் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்."
மகேந்திரவர்மர் அவர் காலத்தில் வழங்கி வந்த ஓவிய நூலொன்றிற்குத் தட்சிண சித்திரமென்ற பெயரில் உரையெழுதிய
தகவலையும் இக் கல்வெட்டால் பெற
11

முடிகிறது." இந்த ஓவிய நூலைத்தான் மணிமேகலை ஓவியச் செந் நூலாகக்
குறிக்கிறது போலும்." இந்த ஓவியச்
செந்நூலை அடியார் க்கு நல் லாரும்
சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார்."
மணிமேகலை ஓவியச் செந்நூலைக் குறிப்பது போலவே அதற்கான உரை நூலென்றையும் குறிக்கிறது.
"ஓவியச் செந்நூல் உரைநூல்
கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி
நங்கை"
இந்த உரைநூல் மகேந்திரரால் எழுதப் பட்டதா அல்லது அவருக்கு முன்னரே இருந்த மற்றொரு உரைநூலா என்பதை அறியக்கூட வில்லை. மணிமேகலை குறிப்பது மகேந்திரர் எழுதிய உரைநூலெனில், மணி மேகலையின் காலம் மகேந்திரருக்குப் பிற்பட்டதென்று கொள்ள நேரும்.
இக்கல்வெட்டின் பன்னிரண்டாம் வரியி லுள்ள வர்ண சதுர்த்த' என்ற சொற்கள் ஒவியத்தில் மகேந்திரருக்குள்ள திறமை யையும் ஈடுபாட்டையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்? அதனால் தானோ என்னவோ தம்மைச் சித்திர காரப்புலி என்றழைத்துக் கொள்வதில் மகேந்திரவர்மர் மகிழ்ந்திருக்கிறார்.
மகேந்திரர் இலக்கிய ஈடுபாடுடைய வராகவும் விளங்கியதை இக்கல்வெட்டின் மூன்றாம் வரியிலுள்ள வால்மீகியின் பெயரும், ஆறாம் வரியிலுள்ள வியாசரின் பெயரும் தெளிவாக்குகின்றன? மத்தவிலாசப் பிரகசனம், பகவதஜ்ஜ"கம் என்னும் நூல்களின் பெயர்களும் இக்கல்வெட்டில் குறிக்கப்

Page 121
பட்டுள்ளதால் இவற்றை எழுதியவர் மகேந்திர வர்மரே என்று திரு. டி.வி. மகாலிங்கம் கருதுகிறார்:" இவை இரண்டுமே மிகச்சிறந்த எள்ளல் நாடக நூல்களாகும். இவற்றுள் மத்தவிலாசப் பிரகசனம் 1917 இல் கண்டு பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக மயிலை சீனி வேங்கடசாமி தெரிவிக்கிறார்? இதன் தமிழாக்கம் மத்தவிலாச அங்கதம் என்ற பெயரில் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தால் 1981 இல் வெளியிடப்பட்டுள்ளது?
பதினாறு, பதினேழாம் வரிகளின் திரண்ட பொருள் திருமாலின் சிறந்த அடியாராக மகேந்திரரைக் காட்டுவதாக் கூறும் திரு. கூரா. சீனிவாசன் இக்கல்வெட்டுள்ள குடைவரையின் கட்டுமானம் மகேந்திரவாடி குடைவரையை ஒத்திருப்பதாகக் கூறி இவ்விரண்டு கருத்துக் களின் அடிப்படையில் இது திருமால் கோயிலாக இருந்திருக்கலாமென ஊகிக் கிறார்." ஆனால் திரு. டிவி மகாலிங்கம் எந்தச் சான்றும் தராமல் இக்குடைவரையை மகேந்திர விஷ்ணு கிருஹம் என்ற பெயரிட்டு அழைப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை"
மிக அரிய பல வரலாற்றுத் தகவல் களைத் தரும் இந்தக் கல்வெட்டு பல்லவர் வரலாறு பேசும் நூல்கள் சிலவற்றுள் உரிய இடத்தைப் பெறாமல் போனது வருந்தத் தக்கதாகும்.
இரண்டாம் குடைவரைக் கல்வெட்டுகள்
இக்குடைவரையில் இருந்து இரண்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாம் இராசராசரின் பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு முகமண்டபத்தின் வட சுவரிலும், பரகேசரிவர்மரின் பதினைந்தாம்
ஆட்சியாண்டுக் கல்வெட்டு உள்மண்டபத்தின்

13
தென் சுவரிலும் காணப்படுகின்றன. இரண்டுமே விளக்குக் கொடைகளைப் பற்றிப் பேசு கின்றன. பரகேசரிவர்மரின் கல்வெட்டு* இக்குடைவரைக் கோயிலைச் சித்திர மேகத் தடாகத்தின் கீழ் அமைந்துள்ள நரசிங்க மங்கலத்து வாலீசுவரமென்று அழைக்கிறது. மன்றாடி சாத்தகுட்டி வீரனும் 'ஆதி புசங்கச் செட்டியாரின் மகன் நாட்டடியளும்" ஆளுக்குக் கால் விளக்கென, அரை விளக் கிற்காக நாற்பத்தைந்தரை சாவா மூவாப் பேராடுகளை இக்கோயிலுக்கு வழங்கி யுள்ளனர்.
நாட்டடியளின் தந்தை வாணகப் பாடியைச் சேர்ந்த பெண்ணை வடகரைத் திருவண்ணாமலையைச் சேர்ந்த வணிகராகக் குறிக்கப்படுகிறார். கொடையாக அளிக்கப்பட்ட ஆடுகளால் கிடைக்கும் வருமானம் கொண்டு இக் கோயிலில் பகல் நேரத்தே இந்த அரைவிளக்கு எரிக்கப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இவ்வாடுகளுக்குத் தீங்கு நினைப்பவர், கங்கை முதல் குமரி வரை செய்த பாவமனைத்தும் கொள்வாரென எச்சரிக்கிறது. இக்கல்வெட்டுக்குரிய பரகேசரி வர்மர் உத்தம சோழராகலாம்.
முதலாம் இராசராசரின் மெய்க் கீர்த்தி யோடு விளக்கும் பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு? இக்கோயில் இருக்கும் இடத்தின் அந்நாளைய பெயர்களைப் பட்டியலிடுகிறது. ருத்ர வாலீசுவரமென்று அழைக்கப்படும் இக்குடைவரை காலியூர்க் கோட்டத்துச் சித்திர மேகத் தடாகத்தின் கீழ் திருஎகம்பத்துள் உத்தம சோழ ஈசுவரப் புறத்தின் நரசிங்கமங்கலத்தில் இருப்பதாகக் கல்வெட்டு குறிக்கிறது. பரகேசரி வர்மரின் கல்வெட்டில் இல்லாத மூன்று இடப் பெயர்கள் இக்கல்வெட்டால் நமக்குக் கிடைக்

Page 122
கின்றன. காலியூர்க் கோட்டம் பல கல்வெட்டு களில் இடம் பெற்றுள்ள நாட்டுப் பிரிவாகும். இக்குடைவரை அமைந்துள்ள நரசிங்கமங்கலம் என்னும் சிற்றுார் காலியூர்க் கோட்டம் என்னும் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்ததை இக்கல் வெட்டால் அறிகிறோம். திருரகம்பம், உத்தம சோழ ஈசுவரப்புறம் என்னும் இரு பிரிவுகளும் இப்பகுதியிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள வேறெந்தக் கல்வெட்டுக்களிலும் குறிக்கப் படாமையின் இவை பற்றி மிகுதியாக அறியக் கூடவில்லை. எனினும் கல்வெட்டு சொல்லாட்சி கொண்டு நோக்கும்போது நரசிங்கமங்கலம் உத்தம சோழ ஈசுவரப்புறத்துக்குள் அடங்கிய ஊராகவும், உத்தம சோழ ஈசுவரப்புறம் திருஏகம்பத்துக்குள்ளும் திருஏகம்பம் காலியூர்க் கோட்டத்தின் கீழும் இடம் பெற்றிருந்த நிலைகளை ஊகிக்கலாம்.
தீயங்குடையான்* அம்பனிராமன் நாற்பத்தாறு சாவா மூவாப் பேராடுகளை இக்கோயிலுக்கு வழங்கி, அவைகொண்டு அரைவிளக்கொன்றினை இரவில் எரிக்க ஏற்பாடு செய்த தகவலை இக் கல்வெட்டால் பெறுகிறோம். இக்கல் வெட்டும் ஆடுகளுக்குத் தீங்கு நினைப்பாரைக் கடுமையாக எச்சரிக் கிறது. இந்த எச்சரிக்கைகளை யார் பொருட் படுத்தினார்கள்? பொருட்படுத்தியிருந்தால் இந்தக் குடைவரை இன்று இந்த நிலைக்கு ஆளாகியிருக்குமா?
மலை மேலுள்ள கற்றளிகள்
மூன்றாம் குடைவரை வெட்டப்பட்டுள்ள குன்றின் உச்சியில் ஒரு கற்றளியும் அதன் வடபுறத்தே சற்றுத் தாழ்வான பகுதியில் மற்றொரு கற்றளியும் காணப்படுகின்றன. தாழ்வான பகுதியிலுள்ள கற்றளி முன்
11

மண்டபம், உள் மண்டபம், கருவறை என்ற கட்டுக்கோப்பில் கிழக்கில் வாயில் கொண்டு அமைந்துள்ளது. நான்கு பிற்காலத் தூண் களால் தாங்கப்படும் முன்மண்டபத்தின் நடுவில் பலித்தளமொன்று உள்ளது. இதன் மீது சிறுசிறு யானை வடிவங்கள் - கல்லால் ஆனவை - இருத்தப்பட்டுள்ளன. கரு வறையில் பைரவர் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் சுடர்முடியும் நாய் ஊர்தியுமாய்க் காட்சிதருகிறார். இவரின் பின்கைகள் சேதப்பட்டுள்ளன. முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்பு காட்ட இடக்கை தலையோடு கொண்டுள்ளது. பாதபந்தத் தாங்குதளத்தோடு அமைந்துள்ள இக்கோ யிலின் முன்மண்டபச் சுவரில் கல்வெட்டுத் துணுக்கொன்று சிக்கியுள்ளது.
மலையுச்சியிலுள்ள கோயிலை ஊரார் சிவன் கோயிலென்று அழைக்கிறார்கள்." முகமண்டமும் கருவறையுமாய் அமைந் திருக்கும் கிழக்கு நோக்கிய இக்கோயில் பாதபந்தத் தாங்குதளத்துடன் அமைந்துள்ளது. தாங்குதளத்திற்குக் கீழே சிறு கம்பும் உபானம் மற்றும் துணை உபானமும் காட்டப்பட்டுள்ளன. கருவறையின் வடபுறம் உள்ள சிம்மமுக நீர்வழி திருமுழுக்கு நீரை வெளிக் கொணரு மாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன்னால் நந்தி, பலித்தளம், கொடித்தளம் அமைய அவற்றுக்குப் பின்னால் ஒரு மேடையமைத்துக் கல்லொன்று நாட்டப் பட்டுள்ளது. கருவறையில் சிவபெருமான் லிங்கத் திருமேனியராய் எழுந்தருளியுள்ளார். முகமண்டபத்தின் உட்புறக் கோட்டத்துள் இருக்கும் அம்மன் திருமேனி தெற்கு நோக்கி உள்ளது. முன் கைகள் காப்பு, அருட் குறிப்புகள் காட்டப் பின் கைகளில் மலரும் பாசமும் கொண்டுள்ள அம்மை மிகப் பிற்பட்ட காலத்து நிறுவலாவார்.

Page 123
இக்கோயிலின் தாங்குதளத்தில் மூன்று கல்வெட்டுகள் இருக்கின்றன. ஊரொன்றை விற்பனை செய்த தகவலை முதற் கல்வெட்டும் அந்த விற்பனைத் தொகையைப் பங்கீடு செய்து கொண்ட விவரத்தை இரண்டாம் கல்வெட்டும் எடுத்துரைக்கின்றன. இவ்விரண்டு கல்வெட்டுகளையும் இரண்டு வேறுபட்ட கால கட்டங்களில் படியெடுத்திருக்கும் கல்வெட்டுத் துறையினர் ஒன்றின்" பாடத்தையும், மற்றொன்றின் சுருக்கத்தையும்? பதிப்பித்து இரண்டுமே அரை குறையான கல்வெட்டுகள் என்று அறிவித்துள்ளார். ஆனால் இரண்டுமே முழுமையான கல்வெட்டுகளாகும். துறையினர் இவ்விரண்டின் தொடக்கப் பகுதிகளை மட்டுமே படியெடுத்து வெளியிட்டுள்ளனர். இவற்றின் முழுப் பாடங்களை இதே இதழில் வெளியாகியுள்ள விட்டுப்போன தொடர்ச்சிகள் பகுதியில் காணலாம்.? மூன்றாம் கல்வெட்டு புதிய கல்வெட்டாகும். இதை இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்வெட்டுகள் பகுதியில் பார்க்கலாம். மலை மேலுள்ள இந்தச் சிவன் கோயிலைத்தான் அறிஞர் திரு. கூரா. சீனிவாசன் தவறாகத் திருமனந்தீசுவரர் கோயிலென்று குறிப்பிட்டிருக்கிறார்." திருமனந்தீசுவரர் கோயில் மாமண்டூரில், காஞ்சிபுரம் வந்தவாசிப் பெருவழியின் வலப்புறத்தே உள்ள சிவன் கோயிலாகும். இதை இங்குள்ள சம்புவரையரின் கல்வெட் டொன்று மாந்தீசுவரர் கோயிலென்று அழைக் கிறது.* மாந்தீசுவரர் மக்கள் வழக்கில் மனந்தீசுவரராகிக் கல்வெட்டறிக்கையிலும் அப்பெயராலேயே இடம் பெற்றிருக்கிறார்.
திரு. இல. தியாகராசன் தம்முடைய சம்புவரையர் வரலாறு என்ற நூலில் இத்திருமணந்தீசுவரர் கோயிலைக் குறிப்பிடு
11

கிறார்.8 இக்கோயிலின் தென்புறத் தாங்கு தளத்திலிருந்து கல்விெட்டுத் துறையால் 1923 இல் படியெடுக்கப்பட்ட இராசநாராயண சம்புவராயரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல் வெட்டைத் தம் நூலில் வெளியிட்டுள்ள இவர், இந்த ஒரு கல்வெட்டு தவிர இக்கோயிலில் வேறு கல்வெட்டுகள் இல்லை." என்று கூறி அதன் அடிப்படையில் இக்கோயில் கி.பி. 1344இல் இச்சம்புவராயரின் ஏழாம் ஆட்சி யாண்டில் கட்டப்பட்டதென்று கூறியுள்ளார்.
ஆனால் இக்கட்டுரையாசிரியர்களின் கள ஆய்வின்போது இக்கோயிலின் மேற்குத் தாங்குதளக் குமுதத்தில் முழுநீளக் கல்வெட் டொன்றும் தெற்கு மற்றும் வடக்குத் தாங்கு தளப் பகுதிகளில் துணுக்குக் கல்வெட்டுகள் இரண்டும் கண்டறியப்பட்டன.9 மையக் கோயிலின் வாயிலின் மேல்நிலையாகப் போடப்பட்டுள்ள கல்லிலும் எழுத்துக்கள் உள்ளன. இக்கல்வெட்டுகளுள் இரண்டு பதினோராம் நூற்றாண்டு எழுந்தமைதியில் உள்ளன. இதனைக் கல்வெட்டுகள் இக் கோயிலில் இருந்தும் திரு. இல. தியாகராசன் இக்கோயிலில் சம்புவராயர் கல்வெட்டு தவிர வேறு கல்வெட்டுகளே இல்லை யென்று தம் நூலில் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது. காலத்தால் முற்பட்ட கல்வெட்டுகளின் இருப்பு இக்கோயிலை இராசநாராயண சம்புவரா யருக்கு முற்பட்ட கோயிலாகக் காட்டுவது நினைவு கொள்ளத்தக்கது.
திரு. கூரா.சீனிவாசன் மாமண்டூரில் மண்டுகநாதர் கோயிலென்ற பெயரில் ஒரு கோயில் இருப்பதாகத் தம் நூலில் குறிப்பிட் டுள்ளார்.89 இக் கோயிலின் வடக்குத் தாங்குதளத்திலிருந்து படியெடுக்கப்பட்டதாக முதலாம் இராசராச சோழரின் இருபத்தேழாம்

Page 124
ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றை தென்னி ந்தியக் கல்வெட்டுத் தொகுதி பதினேழில் கல்வெட்டுத்துறை பதிப்பித்துள்ளது." இத் தொகுதியில் இக்கோயில் செய்யாறு வட்டத்து மாமண்டூரில் இருப்பதாகத் தகவலுள்ளது. ஆனால் செய்யாறு வட்டத்திலுள்ள
மாமண்டுரில் மண்டுகநாதர் கோயிலென்ற
பெயரில் ஒரு கோயிலே இல்லையென்று ஊர் மக்களும், திருமாந்தீசுவரர் கோயில் சிவாச் சாரியார், இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார், மலைமேல் கோயில் பூசாரி எம். கிருஷ்ணன் ஆகியோரும் கூறியபோது இக்கட்டுரையாசிரியர்களுக்குப் பெருங் குழப்பம் ஏற்பட்டது. இக்கல்வெட்டு 1904இல் படியெடுக்கப்பட்டுள்ளதாகப் பதினேழாம் தொகுதிக் குறிப்பு கூறியதால் அவ்வாண்டுக் கல்வெட்டறிக்கை ஆராயப் பட்டது. 1905 ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக் கையில் 1904இல் படியெடுக்கப்பட்டதாக 612ஆம் எண்ணிட்டுக் குறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டில் ஆட்சியாண்டு இல்லை." மேலும் இக்கல் வெட்டுள்ள கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாமண்டுரில் இருப்பதாக அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.7 1903 மற்றும் 1904ஆம் ஆண்டுகளில் கல்வெட்டாய் வாளர் திரு. ஹல்ஷ் மற்றும் திரு. வி. வெங்கையா ஆகியோர் அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பியிருக்கும் அறிக்கைகளில் தம்முடைய அடுத்த பயணத்திட்ட அறிக்கைகளை இணைத் துள்ளார். இவ்விரண்டு அறிக்கைகளிலும் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள மாமண்டூர் குறிப்பிடப்பட்டுள்ளது. 1905ஆம் ஆண்டறிக் கையில் திரு. வெங்கோபராவ் பார்த்துப் படியெடுத்த இடங்களுள் ஒன்றாய் ச் செங்கற்பட்டு மாவட்ட மாமுண்டுரைத்
11

திரு. வி. வெங்கையா குறிப்பிட்டுள்ளார்." இந்த அறிக்கையில் தான் 1904ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்ட கல்வெட்டாக மண்டுகநாதர் கோயில் கல்வெட்டு வெளியாகியுள்ளது.
திரு. வி. வெங்கையா காலத்தில் திரு. வெங்கோபராவால் செங்கற்பட்டு மாவட்ட மாமண்டூரிலிருக்கும் மண்டுகநாதர் கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டதே முதலாம் இராசராசரின் மேற்கண்ட கல்வெட்டு." இதைத்தான் 1905 ஆம் ஆண்டறிக்கை 1904 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பட்ட 612ஆம் எண் கல்வெட்டாக வெளியிட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளில் இடம் பெற்றபோது இக் கல்வெட்டுள்ள மண்டுகநாதர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள மாமண்டூரில் இருப்பதாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாகத் தவறுதலாகச் செய்யாறுவட்ட மாமண்டூரில் இருப்பதாகக் குறிப்பிட்டுவிட்டார்கள். கல் வெட்டுத் தொகுதியை மட்டும் பார்த்த திரு. கூரா. சீனிவாசன் இக்கோயில் செய்யாறு வட்ட மாமண்டூரில் இருப்பதாகவே கருதி அதைச் சரிபார்த்துக் கொள்ளாமல் தம் நூலில் குறிப்பிட்டுப் போனார். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி கல்வெட்டு படியெடுத்த காலத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் (1905) இந்தக் கல்வெட்டின் ஆட்சியாண்டு கிடைக்கவில்லை என்று குறிப்பு காட்டி யிருப்பதும் அக்கல்வெட்டின் பாடம் வெளி யிடப்பட்ட தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் (1964) ஆட்சியாண்டு இருபத்தேழு என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் தான். 1905இல் கல்வெட்டைப் படியெடுத் தவர்களுக்குக் கிடைக்காத ஆட்சியாண்டு 1964இல் அப்படியைப் பார்த்துப் பாடமெழுதிப்

Page 125
பதிப்பித்தபோது எப்படிக் கிடைத்ததென்பது வியப்புக்குரியதாகும்.
குடைவரைகளின் காலம்
மாமணி டூர் நரசமங்கலம் குடை வரைகளை ஆய்வு செய்த திரு. கூரா. சீனிவாசன் கல்வெட்டுள்ள முதலிரண்டு குடைவரைகளை மகேந்திரவர்மர் காலத் தனவாகவும் பின்னிரண்டை மாமல்லர் காலத் தனவாகவும் வகைப்பாடு செய்துள்ளார். முதற் குடைவரை முதலாம் மகேந்திரவர்மரின் கல்வெட்டைப் பெற்றிருப்பதால் அதன் கால நிர்ணயம் பற்றி எவ்விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. இரண்டாம், மூன்றாம் குடைவரைகள் மல்லையிலும் பிற இடங்களிலும் காணப்படும் பிற்காலக் குடை வரைகள் போன்று கட்டட வளர்ச்சி நிலை களின் எந்தவொரு பண்பையும் பெற்றிரா மையின், இவற்றையும் தொடக்கக் கால முயற்சிகளாகக் கொள்ளுதலே பொருத்த மாகும். மகேந்திரரும் மாமல்லரும் அடுத் தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களாதலால் மகேந்திரன் பாணி, மாமல்லன் பாணி என்று பிரித்துக் காண்பது இயலக்கூடியதல்ல, அதனால் மாமண்டுர், நரசமங்கலம் குடை
அடிக்கு
1. திரு. கூரா. சீனிவாசனும் திரு. மயிலை சீனி, வே. 676ig (5p35576igiT601j. K.R. Srinivasan, Cave-T New Delhi, 1964, p. 54. LDuSada) af, GoirisisL
2. SII vol. 22. Part I, ins 262-264
3. தி இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் ே
K.R. Srinivasan, Cave-Temples of the Pallavas -
4. திரு. தி இராசமாணிக்கம் ஏழு கருவறைகள் என்று
கோயில்கள். பக். 9
5. கீழ்ச்சதுரங்களின் நான்கு முகங்களிலும் தாமரைட்
1

வரைகளைப் பல்லவப் பேரரசுக் காலத்தின் தொடக்க முயற்சிகளாகக் கொள்வதே சால் புடையது. அவ்வகையில் இவையனைத்தும் முதலாம் மகேந்திரவர்மர் காலத்தில் தொடங்கப்பட்டவையெனக் கொண்டால் அது
தவறாகாது.
ஏற்புக் கோடல்
இக்கட்டுரைக்கான கள ஆய்வுகள் மேற்கொண்டபோது பல்லாற்றானும் துணை நின்று உள்ளன்போடு உதவிய திரு.ச. வேலுசாமி, பேரா. முனைவர், திருமதி தமிழரசி வேலுசாமி குடும்பத்தார், பேரா. மாரா. அரசு, திருமதி சுந்தரி அரசு குடும்பத்தார், காஞ்சிபுரம் சித்தமருத்துவ அறிஞர் மரு. சி. தங்கதுரை குடும்பத்தார், செங்கற்பட்டு வட்ட மாமண்டூர் மலைமேற் கோயில் பூசாரி திரு.எம் கிருஷ்ணன், இந்தியத் தொல் லியல் அளவீட்டுத் துறையின் குடைவரைக் காவலர் திரு.கே. வெங்கடேசன் குடும்பத்தார். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் பேரா. கோ. வேணிதேவி மற்றும் அவர் இல்லத்தார் ஆகியோர்க்கு இக்கட்டுரையாசிரியர்களின் நெஞ்சு நிறைந்த நன்றி என்றும் உரியது.
றிப்புகள்
ங்கடசாமியும் தம் நூல்களில் இவ்வூரை நரசபாளையம்
emple of the Pallavas, Archaeological Survey of India, ாமி, மகேந்திரவர்மன், கழக வெளியீடு, 1959, பக் 70,
கோயில்கள், கழக வெளியீடு, சென்னை, 1989, பக். 9. p. iii
தவறாகக் குறிப்பிட்டுள்ளார். தென்னகக் குடைவரைக்
பதக்கங்கள் இருப்பதாக முதலில் கூறும் திரு. கூ. ரா.
7

Page 126
1.
12.
13.
15.
16.
7.
18.
சீனிவாசன் அதே பந்தியில் ஒரு வரி தள்ளி மேற்கு ( இடம் பெற்றிருப்பதாகக் கூறித் தமக்குத் தாமே மு Ibid, p. 70 திரு. கூரா. சீனிவாசன் இப்பகுதியை அர்த்த மண்ட SII vol. 4, ins 136.
திரு. கூ ரா. சீனிவாசனும், திரு. தி இராசமாணிக்க Cave-Temples of the Pallavas - p. 70; G56ió0785ds
திரு. தி இராசமாணிக்கம் தாங்குதளத்தைப் பற்றி: குமுதம் ஆகியவற்றைக் கொண்ட அதிட்டானம்' என் என்ன பொருள் என்று விளங்கவில்லை. அவர் சொ குமுதத்திற்குக் கீழே வரி, வரிமானம் என்று இரண் குடைவரையில் குமுதத்திற்குக் கீழே ஜகதி மட்டு மேலுள்ள உறுப்புகளைத் தாங்குதளத்திற்குள் சேர்த் இவர் குறிப்பிடுவது போல் குமுதமும் முப்பட்டையு udi. 12. 13
திரு. கூ, ரா. சீனிவாசன் பட்டிகைக்கு மேல் வரு Temples of the Pallavas - p. 70
இது சரியல்ல. பிரதி என்ற சொல் பிரதி வரியில் சுட்டவே பயன்படுத்தப்படுகிறது. மயமதம், முதல்
J35. 173
திரு. கூ. ரா. சீனிவாசன் வாஜனத்தைக் குறிக்கவில்
திரு. கூ. ரா. சீனிவாசன் இதை வலபி என்று குறி என்னும் உறுப்பு வாஜனத்திற்கும் கபோதத்திற்கும் இதற்கும் வாஜனத்திற்கும் வேறுபாடுண்டு வாஜனம் பரப்புடன் அமையும் முதற் குடைவரையில் இதே உ ரா. சீனிவாசன் இந்தக் குடைவரையில் இதை வல! அடுத்த பக்கத்தில் அவரே அது வழக்கமான வலபி 56-57 and 69
SI Vol. 4, ins 137. இக்கல்வெட்டு வடபுறமாக உ இராசமாணிக்கம் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். தெ6
SII vol. 4, ins 138.
திரு. கூ. ரா. சீனிவாசன் இதைப் பிரதி என்று குறி திரு. கூ. ரா. சீனிவாசன் வாஜனத்தைக் குறிக்கவில் திரு. கூ. ரா. சீனிவாசன் இது பற்றித் தகவலேதும்
இக்குடைவரை 9.193 அன்று கள ஆய்வுக்கு உட்படுத் ஆர்க்காட்டிலிருந்து பாண் மலைக்கு வழி கேட்டுச் மலைக்குச் செல்வது சுற்று என்பதோடு, பாதையும்
திரு தி இராசமாணிக்கம் இவற்றை 'இரு தூண்கள் திரு. கூ ரா. சீனிவாசன் இவற்றை முழுத்தூண்களாக (85Tuílabe56í. uš. 10. Cave - Temples of the Pallav
118

கம் தவிரப் பிற முகங்களில் மட்டுமே இப்பதக்கங்கள் raituGilpiti. Cave-Temples of the Pallavas - p. 69
பம் என்று தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். Ibid, p. 69
மும் முப்பட்டைக் குமுதம் என்று குறிப்பிட்டுள்ளனர். குடைவரைக் கோயில்கள் பக். 12-13
குறிப்பிடும் போது ‘வரி, வரிமானம், முப்பட்டைக் று எழுதுகிறார். வரி, வரிமானம் என்ற சொற்களுக்கு ல்லியிருக்கும் வரிசையைப் பார்த்தால் முப்பட்டைக் டு உறுப்புகளைக் குறிப்பது போலுள்ளது. ஆனால் மே உள்ளது. திரு. இராசமாணிக்கம் குமுதத்திற்கு துக் கொள்ளாமல் விட்டது ஏனென்று தெரியவில்லை. டன் இல்லை. தென்னகக் குடைவரைக் கோயில்கள்,
ம் கம்பைப் பிரதி என்று குறிப்பிட்டுள்ளார். Cave
காட்டப்படும் யாளி முகங்களடங்கிய தொகுப்பைச் பாகம், தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீடு, 1966,
b60p6). Cave-Temples of the Pallavas - p. 70.
ப்பிட்டுள்ளார். குடைவரைகளில் பொதுவாக வலபி இடையில்தான் காட்டப்படுகிறது. வடிவமைப்பிலும் கம்பு போல அமைய (சதுரப்பட்டி) வலபி வளைந்த றுப்பை வாஜனம் என்று பெயரிட்டிருக்கும் திரு. கூ பி என்பது பொருந்துவதாக இல்லை. அதனால்தான் போல் இல்லையென்று குறிப்பிட்டிருந்தார். Ibid, pp.
ள்ள அரைத்தூணில் காணப்படுவதாகத் திரு. தி. ர்னகக் குடைவரைக் கோயில்கள், பக். 11.
ILS"Goiaststj. Cave-Temples of the Pallavas - p. 57. 606). Ibid., p. 57.
தரவில்லை. Ibid, pp. 57-58.
தப்பட்டது. இக்குடைவரையைப் பார்க்க விரும்புவோர் செல்வது சிறந்தது. விளாப்பாக்கம் வழியே பாண் சரியில்லை.
மற்றும் இரு அரைத்தூண்கள் என்று குறித்திருப்பதும் கருதியிருப்பதும் சரியல்ல. தென்னகக் குடைவரைக் s. p. 120

Page 127
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
திரு. கூ. ரா. சீனிவாசன் இக்குடைவரையின் அணி LD60iiLL1565.TG) 6, ill Gaitotij. Cave-Temples of அதன் பின்சுவரில் கருவறையின் இருபுறத்தேயும் மண்டபத்தின் தென், வட சுவர்களில் எந்த மாற்ற மண்டபத்திற்குள் நுழைபவர்கள் கருவறையைச் சுற்றி கருவறைக்கு ஓர் உள் திருச்சுற்று கிடைத்திருக்கும் சுவர் குடையப்பட்டுள்ளது. இச்சுவரில் இப்போதிரு முடிவடைந்திருந்தால் மண்டபத்திற்கான இரு தெ6 குடைவரைக்குள் கிழக்கு முகமாக நுழைபவர்கள் தெ உள் நுழைந்திருப்பார்கள். இரண்டு குடைவரைகளிலுமே நோக்கம் திருச்சுற்று அ கையாண்ட முறையும், அமைவிடமும் மாறுபட்டுள் தென்புற அகழ்வு தனித்துவம் பெறுகிறது.
திரு. கூ. ரா. சீனிவாசன் ஏழையுமே முழுத்தூண்கள் ஒரு பகுதியில் வட கோடியில் இருப்பதை அரைத்தூ6 இவரது மாமண்டூர்க் கட்டுரையில் ஆங்காங்கே கான
இவற்றைக் கோட்டங்களென்று திரு. கூ ரா. சீனிவாச Götil sillaC5'jLig erflu6ð6v. Cave - Temples oftl கோயில்கள். பக். 10.
திரு. கூ ரா. சீனிவாசன் இவற்றைக் குறிக்கவில்ை
திரு. கூ. ரா. சீனிவாசன் உள்மண்டபக் கருவறைக் குறிப்பிட்டுள்ளார். 1bid.p. 121.
திரு. கூ. ரா. சீனிவாசன் இக்கம்பைக் குறிக்கவில்ை
திரு. கூ. ரா. சீனிவாசன் அனைத்துப் படிகளுக்கும் 12.
இக்குழிகள் குடைவரையின் அனைத்துக் கரு வெட்டப்பட்டிருப்பதாகத் திரு. கூ. ரா. சீனிவாசன் (
திரு. தி இராசமாணிக்கம் "தூண்களும் அரைத்து பகுக்கப்படவில்லை" என்று தவறாகக் குறித்துள்ள
திரு. கூ. ரா. சீனிவாசன் முனிவர்கள் கருவறை நே PalavaS.p. 58 அதே நூலில் படத்தொகுதியும் கா
திரு. தி இராசமாணிக்கம் இரு சிற்பங்களுமே ச
தென்னகக் குடைவரைக் கோயில்கள். பக். 11.
இருவருக்குமே முப்புரி நூல் வலக்கை மேலேறிச் (fibulids6fai) 9. Luiguitab606). Cave-Temples of th
Ibid.p. 58. திரு. தி. இராசமாணிக்கம் திரு. கூ. ரா கூறியுள்ளார். தென்னகக் குடைவரைக் கோயில்கள்
இவ்வாயிற்காப்போர் திரிபங்க நிலையில் நிற்பதாகத் மேற்படி பக். 117
119

மப்பை மாமல்ல புரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் the Palavas.p. 120 பஞ்ச பாண்டவர் மண்டபத்தில், உள்ள பகுதிகள் மட்டுமே குடையப்பட்டுள்ளன. மும் இல்லை. குடைவு முழுமையடைந்திருந்தால் வலம் வந்திருக்க முடியும் சுருக்கமாகச் சொன்னால் நரசமங்கலக் குடைவரையில் மண்டபத்தின் தென் க்கும் இரண்டு ஆழமான கோட்டங்களும், குடைவு ன்முக வாயில்களாக மாறியிருக்கும், அந்நிலையில் ன்புறமாக வெளியேறி வெளிச்சுற்று வந்து வடபுறமாக
அமைப்பதுதான் என்றாலும், அந்தச் சுற்றை அமைக்கக் ளன. அதனால் தான் நரசமங்கலக் குடைவரையின்
ாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதே பத்தியின் ண் என்றும் குறிப்பிடுகிறார். இதுபோன்ற முரண்பாடுகள் OT LIGdaip607. Cave-Temples of the Pallavas. p. 120 னும் அவரை அடியொட்டி திரு. தி இராசமாணிக்கமும் ne Pallavas. pp. 120-121; Gg56ð60Tatsäs (560DL6J60ogës
6). Cave-Temples of the Pallavas. pp. 118-122.
5ளுக்குப் படிக்கட்டுகள் இல்லையென்று தவறாகக்
D6). Ibid., p. 121.
பிடிச்சுவர் இருப்பதாகக் கூறியிருக்கிறார். 1bid.p.
வறைகளிலும் ஏறத்தாழப் பின்சுவர் நீளத்திற்கு குறித்திருக்கிறார். 1bid.p. 121.
rண்களும் எட்டுப் பட்டையாகவும், சதுரங்களாகவும் ார். தென்னகக் குடைவரைக் கோயில்கள். பக் 10.
Tö5) fili)LigT35 61(pğlu Jairom/Tü. Cave-Temples of the 50ies. Plate No. VI a and b.
மயங்க நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செல்வதாகத் திரு. கூ. ரா. சீனிவாசன் சொல்கிறார். ePallavas. p. 58
சீனிவாசனின் இக்கருத்தைத் தம் கருத்து போலக்
ர், பக். 11.
திரு. தி இராசமாணிக்கம் எழுதியிருப்பது சரியல்ல.

Page 128
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
திரு. தி இராசமாணிக்கம் இவற்றைக் கடி முத்தின 12. கடி முத்திரையில் கை இடுப்பில் அமரும் ஊ( வை. கணபதி ஸ்தபதி, சிற்பச் செந்நூல், தொழில் 1978, Luis. 40-41.
இக்காவலர்கள் சமபங்க நிலையில் இருப்பதாகத் தி தென்னகக் குடைவரைக் கோயில்கள். பக். 12.
இக்கைகள் வணக்கத்தைக் குறிப்பதாகத் திரு. தி இர குறிக்கும் முத்திரை அஞ்சலியாகும். அம்முத்திை நிலையில் காட்டப்படும். வை. கணபதி ஸ்தபதி, சி
K.R. Srinivasan, Cave-Temples of the Pallavas. p. கட்டுரையில் திரு. தி இராசமாணிக்கம் குறிப்பிடவி
3.
SII vol. 4, ins 136.
K.R. Srinivasan, Cave-Temples of the Pallavas. p.
SII vol. 4, Plate III, facing p. 12.
T. V. Mahalingam, Kanchipuramin Early South India மயிலை சீனி, வேங்கடசாமி, மகேந்திவர்மன், பக். "
42. மயிலை சீனி, வேங்கடசாமி, மகேந்திரவர்மன்
ஆறாம் திருமுறை, தருமபுர ஆதீனப் பதிப்பு, 196
மேற்படி, பக். 375.
T. V. Mahalingam, Kanchipuram in Early South Indi
இத் தகவலைத் தருமிடத்து அடிக்குறிப்பாகத் தி
குறிப்பிடுகிறார். அக்கட்டுரை இவ்வாசிரியர்களுக்குட் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
T. N. Ramachandran, The Royal Artist Mahandrava
திரு. மயிலை சீனி வேங்கடசாமி தட்சண சித்திரே உரையெழுதியதாகக் குறிப்பிடுகிறார். மகேந்திரவ
மணிமேகலை, சாமிநாதையர் உரை, 1931 காதை
சிலப்பதிகாரம், சாமிநாதையர் உரை, தமிழ்ப் ப6 உரைவிளக்கப்பகுதி, பக், 230
T. V. Mahalingam, Kanchipuramin Early South Indi
Ibid., p74.
Ibid, p.75. திரு. மயிலை சீனி, வேங்கடசாமி ப என்னும் கருத்துடையவர். மகேந்திரவர்மன், பக். 1
மேற்படி, பக். 133.
இ. ஜாண் ஆசீர்வாதம், மத்தவிலாச அங்கதம், கிற
12(

ர என்று குறித்திருப்பது பொருந்தாது. மேற்படி பக். ந முத்திரையில் தான் கை தொடையின் மேலமரும். ) நுட்பக் கல்வி இயக்க வெளியீடு, சென்னை - 25.
ரு தி இராசமாணிக்கம் பிழையாகக் குறிப்பிட்டுள்ளார்.
ாசமாணிக்கம் எழுதியிருப்பது சரியல்ல. வணக்கத்தைக் ரயில் இரு கைகளும் மார்புக்கு நேராகக் கூப்பிய ற்பச் செந்நூல். பக். 42.
70. அடிக்குறிப்பு காண்க. இக்கல்வெட்டைத் தமது ல்லை. தென்னகக் குடைவரைக் கோயில்கள். பக் 9.
70.
in History, Asia Publishing House, Madras, 1968, p. 73. 71-72.
, Luci. 71-72
3, பக். 374,
an History p.73. திரு. டிவி மகாலிங்கம் தம் நூலில் ரு. டி. என். இராமச்சந்திரனின் கட்டுரையொன்றைக் பெருமுயற்சிக்குப் பிறகும் கிடைக்காமல் போனதால்
man I.J. O. R. VII. pp. 235-37.
மன்னும் பெயருள்ள தென்னிந்திய ஓவிய நூலுக்கு
ர்மன். பக். 71-72.
2, வரி 30-31, பக். 22.
ல்கலைக்கழகப் பதிப்பு: 1985, அடியார்க்கு நல்லார்
ian History p. 72.
கவதஜ் ஜூகத்தை எழுதியவர் மகேந்திரவர்மரல்லர் 32 அடிக்குறிப்பு காண்க.
நிஸ்தவ இலக்கியச் சங்க வெளியீடு சென்னை. 1981
)

Page 129
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
K.R. Srinivasan, Cave-Temples of the Pallavas. p.
T. V. Mahalingam, Kanchipuram in Early South Ind
SII vol. 4, Ins. 138.
பதிப்பிக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் பாடத்தில் நாட்ட 138.
Ibid., Ins. 137.
தீயங்குடையான் என்றுதான் கல்வெட்டில் உள்ளது நெடில் மாற்றமும் புள்ளி வைப்பதும் இடமறிந்து போயுள்ளது. தீய்பங்குடையான் என்றால் தீபங்கு மலைமேல் சிவன் கோயிலில் இருந்து இக் கட்டுரை ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் இரண்டு தீய்பங்குடையான் ஐஐ). தீப்பங்குடையான் பெரிய விட்டுப்போன தொடர்ச்சிகள் பகுதியில் காண்க.
நரசமங்கலத்து ஊர்ப் பெரியவர்கள் பலரிடம் நேர்மு அனைவருமே இதைச் சிவன் கோயிலென்றுதான் அ ஊர்ப் பெரியவர் திரு. அருச்சுனன் இருவருமே தா தான் அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இக்கே கல்வெட்டுகளிலும் இக்கோயிலின் பெயர் குறிப்பி
SII vol. 22, Part I, ins. 260,
ARE 171 a of 1939-40,
இவ்விரண்டு கல்வெட்டுகளுள் ஊர் விற்பனை பற்றி அவற்றிற்கு உரியனவாகச் சில கோயில்களின் ெ
உருத்திரவாலீசுவரம்
தென் திருவேங்கடம்
திருத்தவக்குன்றம் இம்மூன்றினுள் உருத்திரவாலீசுவரம் மாமண்
குடைவரையாகும் இதை அக்குடைவரையில் உள்6 கல்வெட்டும் நிறுவுகின்றன. தென் திருவேங்கடம் பெருமாள் கோயிலைக் குடைவரையில் தான் ஒரே ஒரு கருவறை உள் சுவரையொட்டியிருப்பதும், இங்குள்ள மகேந்திரர் கe குறிப்பதாகத் திரு. கூரா, சீனிவாசன் கூறியிருப்பது அழைக்கப்பட்டதாகக் கருதலாம்.
திருத்தவக்குன்றம் சைவ, வைணவச் சார்பின்றி அன ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருப்பதால் இ மேலுள்ள சிவன் கோயிலையோ குறிப்பதாகலாம் கோயில்கள் தவிர சில தெய்வங்களின் பெயர்கள்
1. துர்க்கை
12

71.
ian History p. 71.
டியன் என்று பிழையாகத் தரப்பட்டுள்ளது. Ibid, Ins.
இது தீபங்குடையான் என்றிருக்க வேண்டும். குறில், நாம் செய்ய வேண்டியவை. பகரம் மட்டுமே விட்டுப் குடியைச் சேர்ந்தவன் என்று பொருள். நரசமங்கலம் யாசிரியர்களால் படியெடுக்கப்பட்ட சுந்தர பாண்டியனின் முறை இவ்வூர்ப் பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. )ை. பெருமாள் அழகிய வரதன். இவற்றை இவ்விதழின்
pகம் கண்டும் இக்கோயிலின் பெயர் கிடைக்கவில்லை. அழைக்கிறார்கள். கோயில் பூசாரி திரு. எம் கிருஷ்ணன், வ்கள் நினைவறிந்து இக்கோயில் சிவன் கோயிலென்று ாயிலில் இருந்து இக்கட்டுரையாசிரியர்கள் படியெடுத்த டப்படவில்லை.
ப் பேசும் கல்வெட்டு நிலப்பகுதிகளைக் குறிக்கும்போது பயர்களைப் பட்டியலிடுகிறது.
டூர்ப் பகுதிக்குள் சேர்க்கப்பட்டுள்ள இரண்டாம் ா பரகேசரிவர்மரின் கல்வெட்டும் முதலாம் இராசராசரின்
குறிக்கிறது. இங்குள்ள குடைவரைகளுள் முதலாம் ாளது கருவறையிலுள்ள திருமேனி பெறும் பள்ளம் ல்வெட்டின் இறுதி வரிகள் மறைமுகமாகப் பெருமாளைக் ம் நோக்க இக்குடைவரையே தென் திருவேங்கடமென்று
மந்திருக்கும் பெயராகும் முதலிரண்டு குடைவரைகளும் ப்பெயர் மூன்றாம் குடைவரையையோ அல்லது மலை ).
ளையும் இக்கல்வெட்டு சுட்டுகிறது.

Page 130
64.
65.
66.
67.
68.,
2. படாரி
3. கெத்தவாலப் பிள்ளையார்.
இம்மூன்று தெய்வங்களும் குடைவரைகளிலேயே திருமுன்களைக் கொண்டிருந்தனவா என்பதை அறி
திரு. கூ. ரா. சீனிவாசன் கோயிலின் பெயரைத் தள படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளாக இரண்டைக் கு அவற்றுள் AREof1923 திருமணந்தீசுவரர் கோயிலி வந்தவாசிப் பெருவழியில் மாமண்டூருக்குள் நுழை of 1906, நரசமங்கலம் மலைமேல் கோயிலின் தெ கல்வெட்டுகளுமே இரு வேறு கோயில்களிலிருந்து அந்தத் தகவல்கள் கல்வெட்டறிக்கைகளில் தெள் இரண்டையுமே திருமணந்தீசுவரர் கோயிற் கல்விெ Temples of the Pallavas. p. 120.
இக்கல்வெட்டு 29594 அன்று படித்துப் படியெடுக்க நாயனார் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் கல்வெட்டறிக்கை (420 ழக 1923) இறைவன் பெயன குறிப்பிட்டுள்ளது.
கோ. தங்கவேலு. இல. தியாகராசன், சம்புவரை அறக்கட்டளை வெளியீடு, சென்னை - 600 080,
மேற்படி, பக். 188.
29.594, 10.7.94, 78.94 ஆகிய மூன்று நாட்களு இக்கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன. முதலிரண்டும் இழக்கப்பட்ட காலத்தாற் முற்பட்ட கல்வெட்டுகளி
புதிய கல்வெட்டுகள்
.
இடம் : மையக் கோயில் மகாமண்டப நுழைவாயி காலம் : கி பி பதினோராம் நூற்றாண்டு 1 செவி இடம் : மையக் கோயில் உள் மண்டபத் தெற்கு காலம் : கி. பி. பதினோராம் நூற்றாண்டு. S.
1. மும் இவுர் த
2. தடி நாலும்
3. தந், வைத்
இடம் : மேலது, வடக்குக் குமுதம். காலம் : கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு
1. ப ஜாழுஸ்ல வாக்கத்து 4. ஸதா 2. க் கவராவி திறவாமல 5, ബങ്ങ6
3 ந் . . .
12

இடம் பெற்றிருந்தனவா அல்லது ஊருக்குள் தனித் யக்கூடவில்லை.
பறாகக் குறிப்பிட்டிருப்பதுடன் இக்கோயிலில் இருந்து gó'y îGafpTjj. ARE 420 of 1923 and ARE 260 of 1906. லிருந்து படியெடுக்கப்பட்டது. இக்கோயில் காஞ்சிபுரம் ந்ததும் சாலையின் வலப்புறத்தே உள்ளது. ARE260 ற்குச் சுவரிலிருந்து படியெடுக்கப்பட்டது. இவ்விரண்டு இரு வேறுபட்ட காலங்களில் படியெடுக்கப்பட்டிருந்தும், ரிவாகத் தரப்பட்டிருந்தும், திரு. கூ. ரா. சீனிவாசன் பட்டுகளாய்க் கொண்டமை வியப்பளிக்கிறது. Cave
ப்பட்டது. கல்வெட்டில் இறைவன் திருமாந்தீசுரமுடைய இக்கல்வெட்டின் சுருக்கத்தை வெளியிட்டிருக்கும் ரத் திருமனந்தீசுரமுடைய நாயனார் என்று பிழையாகக்
பர் வரலாறு, கோபால் நாராயணன் நினைவு கல்வி Luis. 188, 409-410.
ம் இக்கோயிலில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு துணுக்குக் கல்வெட்டுகள், இவை திருப்பணியின்போது
ன் சிதறல்களாகலாம்.
லின் மேல் நிலை. கல்வெட்டு தலைகீழாக உள்ளது. பவை பள்ளிகள் பட்டிக்கு கிழக்கு
க் குமுதம்,

Page 131
69.
70.
71.
72.
73.
74.
75.
இடம் : அம்மன் கோயில் கருவறை, மேற்குக் குமு முற்றுப் பெறாமலும் உள்ளது. காலம் : பதினேழாம் நூற்றாண்டு
1. (ஸ்வழு) ஸ்தி (யூரீழு) சார்வரி வரும் புரட்டா காலத்திலே தலயாரி மல்லராகுத்தர் காவல்ப்
2. ..... பற்றி மாகேசுர மடம் நயினார் திருவருள் பண்ணிந (வர்மூ) கெங்கக் கரயிலே (ய் ப்ரஹ
இக்கள ஆய்வுகளின்போது உடனிருந்து உதவிய சீதா பேரா. கோ. வேணிதேவி, அதே துறை சார்ந்த தேர்வு தொல்பொருள் ஆய்வுத்துறையின் தொல்லியல் துணை சிவாச்சாரியார் திரு. வை. சுப்ரமணிய குருக்கள் மற்று ஆகியோரின் அன்பான உதவிகட்கு இக்கட்டுரையாசிரி
K.R. Srinivasan, Cave-Temples of the Pallavas. p. 5
SII vol. 17, Ins. 664.
ARE 62 of 1904.
ARE 1905, Letter from Mr. V. Venkayya to the Chief
ARE 1903, Letter from E. Hultzsch to the Chief Secre Venkayya to the Chief Secretary to Government, p.
ARE 1905, Letter from Mr. V. Venkayya to the Chief
இப்போது இக்கல்வெட்டு மாமண்டூர் தென்பாதியிலு காணுமாறு இல்லை. கல்வெட்டு படியெடுத்த கால இக்கோயிலில் அடி முதல் முடி வரை கட்டடம் பிரி திரு. சிவஞானம் (81) திரு. சிவசாமி (84) ஆகியோ கூறுகின்றனர். திருப் பணியின்போது கல்வெட்டுள்ள ச இதுபோல் பல கோயில்களில் நூற்றுக்கணக்கான பறிகொடுத்திருக்கிறது. 48.94 அன்று இவ்வூரில் பே கோயில் தூண்களிலிருந்து சில புதிய கல்வெட்( கற்பலகையிலிருந்து ஒரு புதிய கல்வெட்டும் க கல்வெட்டுகள் பகுதியில் பார்க்கலாம்.
123

தம் தொடர்ச்சி விடுபட்டும் எழுத்துக்கள் பொரிந்தும்
தி மீ 3 உ ஹஸ்த நக்த்ரமும் - லைய புண்ணிய பெற்று .
பட ஆசந்ராக்கமாக நடக்கவும் இதுக்கு அஹிதம் D)
லட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் நிலை விரிவுரையாளர் பேரா. சீ கீதா, தமிழ்நாடு அரசு ாக் கண்காணிப்பாளர் திரு. அ. அப்துல் மஜீது. கோயில் ம் அவர் புதல்வர்கள் திரு. பரமேசுவரன், திரு. ராஜேஷ் யர்களின் நன்றி உரியது.
4.
Secretary to Government, p. 6.
tary to Government. p.6. ARE 1904, Letter from Mr. V. 16.
Secretary to Government, p. 4, para 6 and p. 6, para 9
ள்ள மண்டுகநாதரென்னும் பீச்சீசுவரர் திருக்கோயிலில் த்திற்குப் பின்னர் இருமுறை திருப்பணிக்கு ஆளான த்து வேலை செய்யப்பட்டதாக ஊர்ப் பெரியவர்கள் ரும் கோயில் சிவாச்சாரியார் மற்றும் அறங்காவலரும் 5ல் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது. கல்வெட்டுகளைத் திருப்பணியாளர்களிடம் இந்த நாடு ற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது மண்டூக நாதர் டுகளும், அருகாமையிலுள்ள மாரியம்மன் கோயில் ண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை இவ்விதழின் புதிய

Page 132
கலைக் க!
முனைவர் செ.
பல்லவர் காலச் சிற்பக்கலைச் செல்வங்கள்
கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவன் மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைவித்துக் கோயில்கள் அமைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவன். முதற் கண் குடைவரைக் கோயிலை மண்டகப்பட்டில் அமைத்தபோது, “செங்கல், மரம், சுண்ணாம்பு, உலோகம் முதலிய பொருள்களில்லாமல் பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் விசித்திரசித்தன் இக்கோயிலை அமைத்தான்” என்று அக் கோயிலில் பொறித் து வைத்துள்ளான். அவனுக்குள்ள விருதுப் பெயர்களுள் ‘விசித்திர சித்தன்' என்பதும் ஒன்று; இதனால் அவனுக்கிருந்த கலை யீடுபாடு இனிது புலனாகும்.
பொதுவாக, மலைப் பாறைகளையே மூலப் பொருளாகக் கொண்டு சிற்பங்களையும் கோயில்களையும் பல்லவர்கள் அமைத்தனர். அவ்வாறு கட்டிய கோயில்கள் மூவகைப்படும். அவை 1. குடைவரைக் கோயில்கள், 2. ஒற்றைக் கற்கோயில்கள், 3. கற்களை அடுக்கிக் கட்டும் கட்டுமானக் கோயில்கள் ஆகும்.
பல்லவர்கள் பலரும் மாமல்லபுரமே யல்லாமல், பிற ஊர்களிலும் சிற்பச் சிறப்புடன் கோயில்களை உருவாக்கியுள்ளனர். மகேந்திர வர்மன் அமைத்த கோயில்களுள், மண்டகப் பட்டில் மும் மூர்த்திகளுக்கும் அமைத்த குடை வரையும், திருச்சி மலையின் கீழ்ப் பகுதியில் ஒரு குடைவரையும், மலைக் கோயில் உட்பகுதியில் கங்காதரர் உள்ளிட்ட ஒரு சன்னிதியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
அவனுக்கு அடுத்து வந்தவன் முதலாம் நரசிம்மவர்மன் எனும் மாமல்லன். மாமல்ல
124

நவூலங்கள்
வைத்தியலிங்கன்
புரத்தில் காணலாகும் குடைவரைக் கோயில் களும் ஒற்றைக் கற்கோயில்களும், அவனால் கட்டப்பட்டவை என்பது பலர் கருத்து. ஆனால், “இக்கருத்து தவறு என இப்போது கண்டு, இவற்றைத் தோற்றுவித்தவன் இரண்டாம் நரசிம்மனாகிய இராசசிம்மன் என்று காட்டப்பட்டுள்ளது.” எனக் கூறுகிறார் டாக்டர் இரா. நாகசாமி. இது ஒரு புறமிருக்க, மாமல்லபுரச் சிற்பக்கலைப் படைப்புக்களைப்
பற்றிச் சிறிது காண்போம்.
மாமல்லபுரம் என்றதுமே இங்குள்ள கல் இரதங்கள் - கல் தேர்கள் நினைவிற்கு வரலாம். 'பஞ்ச பாண்டவர் இரதங்கள்' என அவை கூறப்படினும், பாண்டவர்களுடன் தொடர்புடையவையாகத் தெரியவில்லை. எனினும், உலக நாட்டத்தைப் பெற்று அவை விளங்குகின்றன.
இரதக் கோயில்களுள் தருமராசன் இரதம் பெரியது; 20 அடி உயரமுள்ள இக்கோயில் சில புடைப்புச் சிற்பங்களுடன் உள்ளது. நடுவிலுள்ள மாடப்புரையில் சோமாஸ்கந்தர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
பீம ரதம் நீண்ட சாலையமைப்பில் (நீளம் 45 அடி, அகலம் 25 அடி, உயரம் 26 அடி) உள்ளது. திருமாலுக்கு உரியதாக இருக்கலாம் என்பர்.
அருச்சுன ரதம் என்று அழைக்கப்படும் கோயில் இரு நிலைகளை உடையது. எட்டுப் பட்டைச் சிகரமுடைய இது சிவபிரானுக் குரியதென்பர்.
திரெளபதி ரதம் புல், வைக்கோல்
ஆகியவற்றால் வேயப்பட்ட குடிசை வடிவில் காணப்படுகிறது. கொற்றவைக்கு அமைக்கப்

Page 133
பட்டதாகத் தெரிகிறது. இவை நான்கும் ஒரே குன்றிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.
மாமல்லபுரத்தில் தருமராசன் இரதமும், சகதேவன் இரதமும் உண்டெனினும், சிற்ப வேலைப்பாடு முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. சிற்பக் கலை நோக்கில் சகதேவன் இரதம் தூங்கானை மாட வடிவில் அமைந் துள்ளதாகும் மகிடாசுர மண்டபத்தில் மகிடாசுர மர்த்தனியின் போர்க்கோலக் காட்சி சிற்ப மாட்சியுடையது.
மாமல்லபுரத்தில் இவையல்லாமல் கணேச இரதம் என்ற ஒற்றைக் கற்கோயிலும், பிடாரி இரதங்களும் (இரு கோயில்கள்) வலையன்குட்டை இரதம் என்னும் ஒரு கோயிலும் குன்றைச் செதுக்கியமைத்த கோயில்களாகும்.
மாமல்லபுரத்தில் ‘கடற்கரைக் கோயில் எனும் கட்டுமானக் கோயிலில் விமானம் உயர்ந்து பல அடுக்குகளுடன் கூடியது. இதனையொட்டிய வளர்ச்சியே காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலும் காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயிலும் ஆகும்.
இராசசிம்மனால் கட்டப்பட்ட திருக் கற்றளியாகிய கயிலாசநாதர் கோயில் திருக்கயிலையை நினைவூட்டக்கூடிய கலை வண்ணமாகும் பெரிய விமானமும் சிறு சிறு ஆலயங்களையும் திருச் சுற்றினையும் கொண்டு, அதன் சுவர் முழுவதும் சிவன், உமையம்மை, திருமுருகன், திருமால் முதலிய தெய்வத் திருவுருச் சிற்பங்களைக் கொண்டது.
சிற்பப் படைப்புக்களின் அமைப்பு முறையிலும் கயிலாசநாதர் கோயிலுக்குத் தனித் தன்மையுண்டு, எனினும், அனைத் திற்கும் தொன்மைச் சிறப்புடையதாகக்
12

காஞ்சிக்கு அருகிலுள்ள ‘கூரம்' என்ற இடத்திலுள்ள கட்டிடக் கோயில் என்பது டாக்டர் இரா. நாகசாமியின் கருத்தாகும். கூரம் கோயில் முதலாம் பரமேசுவரன் காலத்தில் எடுக்கப்பட்டதாகும்.
காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயிலின் உட்புறத் திருச்சுற்றுச் சுவர்களை அணி செய்யும் சிற்பங்கள் பல்லவர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளை வரிசையாகக் காட்டி நிற்கின்றன. காஞ்சியில் கயிலாசநாதர் கோயிலும் வைகுண்டப் பெருமாள் கோயிலும் பல்லவர் காலத்தில் அமைந்தமையால், சைவ வைணவ ஒருமைப்பாட்டிற்கு அடையாளங் களாக விளங்குகின்றன. இனி மீண்டும் மாமல்லபுரத்திற்கு வந்து பாறைச் சிற்பங் களைப் பற்றிச் சிறிது காண்போம்.
மாமல்லபுரத்துப் பாறைச் சிற்பங்கள், அக்காலத்தில் சிற்பப் பணிபுரிந்த சிற்பியரின் இயைபுக் கற்பனையையும், படைப்புக் கற்பனையையும், செயல் திறனையும் புலப் படுத்தும் அரிய கலைக் கருவூலங்களாகும்.
இதிகாச புராண நிகழ்ச்சிகளைக் கலை வண்ணத்துடன் மக்களின் பார்வைக்குக் கொணரச் சிற்பியர் தம் திறமை முழுவதையும் பயன்படுத்தியுள்ளனர். நாகர், நாக கன்னியர், தேவர், கந்தருவர், முனிவர், விலங்குகள் முதலிய தொடர்பிலான உருவங்கள் நூற்றைம் பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாறைகள் வாயிலாகச் சிற்ப எழிலுடன் வடிக்கப்பட்டுள்ளன.
பாறைச் சிற்பங்களைப் பார்க்க முற் படுகையில், அருகேயுள்ள பசு மண்டபம் எனும் கிருஷ்ண மண்டபம் தன்னைக் காணுமாறு அழைக்கும் அம்மண்டபத்தில்,

Page 134
கிருஷ்ணன் பசுக் கூட்டங்களையும் ஆயர் களையும் கல் மழை பொழியாதவாறு காக்கும் நோக்கத்தில், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடிக்கும் காட்சியைக் காணலாம். கன்றை நக்கிக் கொண்டிருக்கும் பசுவையும் அந்தப் பசுவிலிருந்து பால் கறக்கும் ஆயனையும் சிற்பமாக வடித்திருத்தலைக் காணலாம். அந்த மண்டபத்தின் அருகில் 96 அடி நீளமும், 43 அடி உயரமும் கொண்ட செங்குத்தான பாறை அழகிய சிற்பக் கோலங்களுடன் காணப்படும்.
வானத்திலிருந்து கங்கையைப் பூமிக்குக் கொண்டு வரப் பகீரதன் ஒற்றைக் காலில் நின்று தவமிருப்பது, கங்கையைக் கொண்டு வருவதுமாகிய நிகழ்ச்சிகள் சிற்பப் படைப்பாகக் காட்டியிருப்பது, இவற்றைக் கண்ணுற்று அருள்புரியும் நோக்கில், பகீர தனுக்கு மேலுள்ள உருவம் சிவனாக அமைவதும் சிந்திக்கத் தக்க எழிற்கோலப் படைப்புகளாகும். பகீரதன் புரியும் தவக் கோலக் காட்சியைச் சிலர், தவறாக அருச்சுனன் தவம் என்பர்.
பகீரதன் தவ முயற்சியால் புனித கங்கை வானிலிருந்து இறங்கி வந்ததும், கங்கையின் இரு புறங்களிலும் தெய்வங்கள். தேவர்கள், கந்தருவர்கள், மக்களுருவங்கள், பாயும் சிங்கங்கள், துள்ளும் மானினங்கள் முதலிய பல உயிரின் உருவங்களும் சிற்பக் கலையில் காட்டப்பட்டிருப்பது, நீரால் தான் அனைத்துயிர்களும் வாழ்கின்றன என்ற உண்மையைப் புலப்படுத்துவதாக உள்ளது.
சுருங்கக் கூறின் வராக மண்டபத்தில் பூமித் தாயைத் தன் கொம்பினால் வெளிக் கொணரும் வராக மூர்த்தி, மகிடாசுர மண்டபத்தில் மகிடாசுரமர்த்தனி, பகீரதன்
12

தவம், அதனையொட்டிய கங்கைக் கரைக் காட்சி, கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடிக்கும் காட்சி, பாறைச் சிற்பத்தில் யானைகள் காட்சி, தனித் தனியே யானையும் சிங்கமும் நிற்கும் காட்சி, பிரமன் முதலிய தேவர் காட்சி, மான்கள், குரங்குகள் முதலியவற்றைச் சித்திரித்திருக்கும் சிற்பக் காட்சி முதலிய பலவும் பல கோணங்களில் மாமல்லபுரத்தைச் சிற்பக் கலைக் கூடமாக ஆக்கியுள்ளன. இவையேயல்லாமல், தல சயனப் பெருமாள் கோயில் மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசம் - மாமல்லபுரத்திற்குச் சிற்பக்கலைப் பெருமையையும் சமயச்
சிறப்பையும் மிகுதிப்படுத்துவதாக உள்ளது.
இது ஒரு புறமிருக்கக் காஞ்சிபுரம் வந்தவாசிச் சாலையில், 10கி.மீ தொலை விலுள்ள குரங்கணில் முட்டம் குடைவரையில் ஏழு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அளவிற்குக் கருவறைகளுடன் கூடிய ஒரே பல்லவர் குடைவரைக் கோயில் இதுதான். ஏழு கருவறைகளுள் மூன்று உள் மண்டபப் பின் சுவரிலும், இரண்டு அதன் பக்கச் சுவர்களிலும் அமைந்துள்ளன. எஞ்சிய இரு கருவறைகள் மகா மண்டபச் சுவர்களில்
குடையப்பட்டுள்ளன.
உள் மண்டபச் சுவரில் குடையப் பட்டுள்ள தென்மேற்குக் கருவறையில் முருகன் சிற்பமொன்று சிதைந்துள்ளது. முருகனின் பின் கைகளில் அக்க மாலையும் குண்டிகையும் உள்ளன முன் கைகளில் காக்கும் முத்திரையும் கடி முத்திரையும் அமைந்துள்ளன. கிழக்கு முகாமாயுள்ள நடுவேயுள்ள கருவறையில் சிதைந்துள்ள சண்டேசுவரர் சிற்பம் காணப்
படுகிறது.

Page 135
ஏழு கருவறைகளுள் மூன்றுக்கு மட்டும் கருவறைக்கு இரண்டென ஆறு வாயிற் காப்போர் சிலைகள் பல்லவர் சிற்பப் பாணியைப் புலப்படுத்தும் வகையில் உள்ளன.
சிற்ப நுணுக்க நோக்கில் பல்லவர் காலச் சிற்பங்களுக்கிடையேயும். பாண்டியர் காலச் சிற்பங்களுக்கிடையேயும், சோழ மன்னர் சிற்பங்களுக்கிடையேயும் மாறுபாடுகளும் வளர்ச்சிக் கூறுகளும் உள்ளன என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நுண்ணிதின் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகைய செய்தி களை விரிக்கிற் பெருகும். எடுத்துக்காட்டாகப் பல்லவர் சிற்பப் பாணியில் ஒரு குறிப்பினைக்
காண்போம்.
பேராசிரியர் தங்கவேலு எழுதுகையில் “சாளுவன் குப்பத்திலுள்ள கொற்றவையின் உருவத்திற்கும் மாமல்லபுரத்திலுள்ள மகிஷா சுரமர்த்தனி குடைவரையில் காணப்படும் கொற்றவையின் உருவத்திற்கும் நிறைந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. அங்குள்ள மகிஷாசுரன் கையில் கதாயுதம் ஏந்தித் தன் பரிவாரங்களுடன் கொற்றவையை எதிர்க் கிறான். கொற்றவைக்கு எட்டுக் கைகள் உள்ளன. பூத கணங்களோடு பெண் பணியாட் களும் காணப்படுகிறார்கள். இருவருக்கும் குடை பிடிக்கப்படுகிறது. சாளுவன் குப்பத்து மகிஷாசுரன் கைகளில் எத்தகைய ஆயுதமு மின்றி ஒடுகிறான். அவனைத் தொடர்ந்து மற்றோர் அசுரனும் ஓடுகிறான். ஆனால், மாமல்லபுரத்திலுள்ள மகிஷாசுரன் தன் பரிவாரங்களுடன் கதாயுதம் ஏந்திக் கொற்ற வையை எதிர்க்கிறான். இது மாமல்லன் பாணியிலும் சாளுவன் குப்பத்துச் சிற்பம் இராசசிம்மன் பாணியிலும் செதுக்கப்பட்டவை" (இந்தியக் கலை வரலாறு I பக். 196) என்று

விளக்குவதை ஓர் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
பல்லவர் காலக் கோயில்களைப் பொறுத்த வரையில் ஒரு சிறப்புக் குறிப்பும் நினைவிற் கொள்ளத் தக்கதே! சமய அருளாளர் அப்பரடிகளால், மனம் மாறிச் சமணத்திலிருந்து சைவம் தழுவிய மகேந்திர வர்மன் சமணப் பாழிகளை இடித்துக் கொணர்ந்த கற்களைக் கொண்டு திருவதி கைக்கு அருகே ஒரு கோயில் கட்டினான். சிவன் கோயிலாகிய அதற்குக் குணபரேச்சுரம் என்று பெயர் வைக்கப்பட்டது. பல்லவர் காலச் சிற்ப நோக்கில் அது காணத்தக்கது.
அதியமான் காலத்துச் சிற்பங்கள்
கொங்கு நாட்டு வட பகுதியினை அதியமான் என்னும் சிற்றரசப் பரம்பரை யினர், தகடுரை (இக்காலத் தருமபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். அதியமான் நெடுமானஞ்சி, தன் காலத்தில் கோயிற் கலையில் ஈடுபட்டிருக்க வேண்டு மென்பது திருக்கோவலூர் வட்டம் ஜம்பை என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டால் தெரிய வரும். சிறப்பாகச் சமணப் பள்ளி ஒன்றைக் கட்டியதாகத் தெரிய வருகிறது.
அதியமான் வழி வந்த அரசர்கள் 8ஆம் நூற்றாண்டில் மீண்டும் கொங்கு நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றதும், நாமக்கல்லில் இரு குடைவரைக் கோயில் களை உண்டாக்கினர். அவர்கள் வைணவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பது அவர்கள் உண்டாக்கிய கோயில்களில் காணலாகும். அரவணைப் பள்ளி கொண்ட பெருமாள், நரசிம்மர் ஆகியோரின் சிற்பங்களால் தெரிய வரும்.

Page 136
நரசிம்மர் குடைவரைக் கோயில் கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது கருவறையில் நரசிம்மர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். “இவருக்கு இரு மருங்கிலும் மேற்பகுதியில் கதிரவன், திங்கள் ஆகியோர் சாமரங்களை ஏந்திய வண்ணம் நிற்கின்றனர். இவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் நான்முகனும் சிவனும் காணப்படு கின்றனர். இவர்களேயல்லாமல் முனிவர் இருவர் சிற்பங்களும் இத்தொகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. இவை சனகன், சனாதனன் ஆகிய இரு முனிவர்களின் சிற்பங்களாக இருத்தல் வேண்டும்” என்று கருதுகிறார் வித்யா தேசிஜியா.
கருவறைக்கு அடுத்த மண்டபத்தின் உட்சுவர்களிலும் பெரிய அளவில் சிற்பங்கள் உள்ளன. இது பற்றி விளக்குகையில், டாக்டர் ஏ. ஏகாம்பரநாதன், “ஒரு புறத்தில் ஆதிசேடன் என்னும் அரவணையின் மீது அமர்ந்த கோலத்திலிருக்கும் வைகுண்டநாதனின் வனப்புமிக்க சிற்பத்தைக் காணலாம். இவருடைய வலக்கால் அரவணையின் மேற்பகுதியில் மடக்கி ஊன்றப் பெற்றிருப் பதாலும், கீழுள்ள இடக்கை தொடையின்மீது ஊன்றப்பட்டிருப்பதாலும், இவருடைய உடலும் தலையும் சற்று வலப்புறம் சாய்ந்தவாறு இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு இரு புறங்களிலும் சிவனும் நான்முகனும் நின்ற கோலத்திலுள்ளனர். மேற்பகுதியின் வலப்புறத்தில் கதிரவனும் இடப் பக்கத்தில் திங்களும் வைகுண்ட நாரா யணனை வாழ்த்தி வணங்கிய வண்ணம் காட்சியளிக்கின்றனர். கீழ்ப் புறத்தில் வழிபடுவோர் இருவர் சிற்பங்களும், அமர்ந்த நிலையிலுள்ள, பால நரசிம்மர் சிற்பம் ஒன்றும்
12:

காணப்படுகின்றன.” என்று விவரிப்பது மிகவும் சிந்திக்கத்தக்கது. இத்தகைய சிற்பங்களைக் கொணர் டு முதன் மைச் சிறப்புநிலை திருமாலுக்கும், கீழ்ப்படிந்த நிலை சிவனுக்கும் பிரமனுக்கும் தரப்பட்டிருப்பதை உய்ந் துணரலாம்.
கருவறையின் இடப் பக்க முன் சுவரில் பூமிதேவியைத் தன் இரு கைகளால் தாங்கி நிற்கும் வராகப் பெருமாளின் சிற்பம் காணப்படுகிறது. பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பூமி தேவி கூப்பிய கைகளுடன் காணப்படுகிறாள். அடுத்துள்ள பகுதியில் வாமன உருவமும் திரிவிக்கிரமனாக நீண்டுயர்ந்த வடிவமும் சிற்ப வடிவில் காணலாம். இந்த அவதாரத் தொடர்பில், மாவலிச் சக்கரவர்த்தி திருமாலுக்கு மூன்றடி நிலம் தாரை வார்த்துக் கொடுக்குங் காட்சியும் சிற்பத்தில் காணலாம். மேலும், வாமனர் திரிவிக்கிரமராக ஓங்கி உலகளந்த செய்தி யினை ஜாம்பவான் வாசித்த வண்ணமும், மற்றொருவர் திருவிக்கிரமனின் வெற்றியைக் குறிக்கும் வகையில் கேடயத்துடன் தலைகுப் புற வீழ்ந்த வண்ணமும் சிற்பத்தில் வடிக்கச் செய்துள்ளதைக் காணலாம்.
அடுத்து அறிதுயில் கொண்ட திரு மாலின் குடைவரைக் கோயிலில் கருவறை, மண்டபம் ஆகிய இரு பகுதிகளிலும் சிற்பச் சிறப்பைக் கண்டு மகிழலாம். “கருவறையுள் ஐந்து தலைகளையுடைய அரவணையில் துயிலும் அண்ணலது எழிலார்ந்த சிற்பம் இடம் பெற்றிருக்கிறது. இவரது காலின் அருகில் மது, கைடபர் என்னும் அரக்கர்கள் அறிதுயில் பெருமானைத் தாக்குவதற்கு விரைந்து வருவதாகக் காணப்படுகின்றனர். திருமாலின் உந்திக் கமலத்து உதித்த நான்முகனும்,

Page 137
தும்புரு, நாரதர் ஆகியோரும் மேற்பகுதி யிலுள்ளனர். இவர்களன்றி ஒரு புறத்தில் சூரியன், சந்திரன் ஆகியோரும், பாம் பணையின் கீழ்ப் பகுதியில் மார்க்கண்டர், வருணன், திருமகள் முதலியோரும், சங்கு, சக்கரம், கதை முதலிய ஆயுத புருடர்களும் அழகுற வீற்றிருக்கின்றனர்.” என விளக்கிச் சொல்கிறார் டாக்டர் ஏ. ஏகாம்பரநாதன்.
மண்டபச் சிற்பங்களைப் பொறுத்த வரையில் நரசிம்மர் குடைவரைக் கோயிலி லுள்ள சிற்பங்களைப் போன்றே பெரும்பாலும் காணப்படுகின்றன. இங்குள்ள நரசிம்மரிடம் மிகுந்த சீற்றத்தினைக் காணமுடியவில்லை.

29
இச்சிற்பத்தின் மேற்பகுதியில் கந்தருவர் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. சங்கர நாராயண மூர்த்தி சிற்ப வடிவில் காணப் படுவதும் குறிப்பிடத்தக்கது. இத்திருமேனியில் மேலுள்ள வலக் கையில் மானையும், இடக்கையில் சங்கினையும், கீழுள்ள வலக்கை பாம்பினைப் பிடித்தவாறும், இடக்கை இடுப்பில் ஊன்றியவாறும் அமைந்துள்ளமை காணத்தக்கது. தெய்வநலச் சூழலை அமைப் பதற்காக நந்தி, கருடன். பார்வதி, திருமகள் முதலிய உருவங்களைச் சிற்பப் படைப்பில்
காட்டியுள்ளமை போற்றத்தக்கது.

Page 138
பல்லவர் - பாண்
GLUTaffuu
தமிழக வரலாற்றிலே பல்லவர் காலம் ஒரு முக்கிய காலமாகும். இவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவிலே காஞ்சியில் ஆதிக்கம் பெற்றுவிட்டாலும், கி.பி. ஆறாம் நூற்றாண்டு இறுதிக் காலப் பகுதியிலாதிக்க மேற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் காலத் துடனேயே இவர்கள் மிகச் சிறப்பான காலம் தொடங்கிற்று. இவனது மரபினர் தொடர்ந்து கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுப் பிற்பகுதிவரை ஆட்சி செய்தனர். இவர்கள் பொதுவாகத் தமிழகத்தின் வடபகுதியிலாட்சி செய்தனர். இதே காலத்திலே தமிழகத்தின் தென் பகுதியிலே பாண்டியர் ஆதிக்கம் நிலவிற்று. இவ்வாறு தமிழகத்திலே இரு பேரரசுகள் உருவாகிப் பல துறைகளிலும் வளர்ச்சி யேற்பட வழிவகுத்தன.
கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முந்திய தமிழகத்தினை நோக்கும் போது சங்க காலத்திலும் (கி.மு. 2 நூ. - கிபி 3 நூ. வரை) தொடர்ந்து ஏற்பட்ட களப்பிரர் காலத்திலும் (கி.பி. 4 - 6ம் நூ. வரை) பல்வேறு கலைகளும் தொடர்ந்து நிலவிவந்த மையினை அவதானிக்கலாம். ஆடலும், பாடலும் தமிழ் மக்களின் வாழ்விலே மிக முக்கியமான ஓரிடத்தைப் பெற்று விளங்கின. தமிழகத்து இசை, நடன மரபுகளிலே இக்காலத்திலே நிலவிய தொடர்ச்சி, அவற்றி லேற்பட்ட வளர்ச்சி மாற்றம் முதலியன பற்றி இந்த இயலிலே கூறப்படும்.
இந்தியாவின் புராதன நாடக, நடன, இசை மரபுகளை ஒருங்கே கூறும் காலத்தால் முந்திய நூல் பரதருடைய நாட்டிய, சாஸ்திரமாகும். இங்கு ‘நாட்டியம்' என்ற சொல் நடனம், இசை (வாய்ப்பாட்டு, வாத்தியம்) ஆகியவற்றுடன் சேர்ந்த
13

டிய கால நடனம் வி. சிவகாமி
நாடகவியலைக் குறிக்கின்றது. பரத என்ற சொல் நடிகன் என்ற பொருளிலும் வரும். ஆகவே நடிகருக்கான கைந்நூல் போலவே நாட்டிய சாஸ்திரம் உருவாக்கப்பட்டதெனக் கருதப்படுகிறது. இந்நூல் இன்றைய வடிவத்தில் ஒரு தனி ஆசிரியருடைய நூலாகவன்றிப் பன்னெடுங்காலமாக நிலவி வரும் நாட்டிய மரபைத் தொகுத்துக் கூறும் நூலாக மிளிர்கின்றது. இது கி.பி. நாலாம் நூற்றாண்டளவில் இன்றைய நிலையினை அடைந்திருக்கலாமென மேனாட்டாய்வாளர் கருதுவர். ஆனால் பொதுவாக கி.மு. 2ம் நூ.
கி.பி. 2ம் நூற்றாண்டுக் கிடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எவ்வாறா யினும் இந்திய சாஸ்திரீய நாட்டியம் பற்றிய முதனூல் என்ற வகையில் அதன் முக்கியத் துவம் குறிப்பிடற்பாலது. இந்நூலைச் சமஸ்கிருத மூல வடிவத்திலே படிக்கும் ஆர்வத்தினாலே மேனாட்டறிஞரான பெரில் LQ. (3er (35 (Beryl De Zoete) FLD6möö)(55ö கற்றார் என அறியப்படுகிறது. இதிலே கூறப்படும் நாட்டிய மரபின் தாக்கம் தமிழகத்திலே சிலப் பதிகாரத்திலேற் பட்டுள்ளதைப் பல அறிஞர் எடுத்துக் காட்டி யுள்ளனர். மேலும் தொடர்ந்து இதன் தாக்கம் இலக்கியம், சமயம் ஆகியனவற்றில் மட்டு மன்றி இசை, சிற்பம், ஒவியம் முதலியன வற்றிலும் நிலவியதைக் காணலாம். -
பல்லவர் - பாணி டியர் காலத் தமிழகத்திலே வைதிக சமய பண்பாட்டுத் துறைகளிலே குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் ஏற்பட்டன. உணர்ச்சி பூர்வமான பக்தி இயக்கம் தமிழகத்திலே கி.பி. ஆறாம் நூற்றாண்டு முடிவிலே காரைக்காலம்மையார் எனும் சைவப்பெருமகளின் திருப்பாடல்களிலும்,

Page 139
முதல் மூன்று ஆழ்வார்களின் திருப்பாசுரங் களிலும் தொடங்கியதெனக் கூறப்படுகிறது. பக்தி எனில் இறைவனிடத்துக் கொண்ட ஆழ்ந்த அன்பு (பரம பிரேம) என நாதரபக்தி சூத்திரம் கூறும். இறைவனிடத்துக் கொண்ட மிக உணர்ச்சிபூர்வமான ஆழ்ந்த அன்பி னையே இவ்வாறு முகிழத் தொடங்கிய சைவ, வைஷ்ணவ திருப்பாடல்கள் புலப்படுத் துகின்றன. தொடர்ந்து தோன்றிய சைவசமய குரவரர் நால் வரும், ஏனைய ஒன்பது ஆழ்வாரும் தத்தம் பக்தியனு பவங்களை எளிமையான, ஆனால் பண்ணோடிசைந்த திருப் பாடல்கள் - தேவாரம், திருவாசகம், திருப்பாசுரங்கள் மூலம் வெளிப்படுத்தினர். இறைவனையே 'பக்தி வலையிற்படுவோன் காண்க” என மணிவாசகர் கூறியுள்ளார். இவ்வாறு நிலவிய பக்தி இயக்கத்திலே ஆடலும், பாடலும் இறைவனை ஏத்தி இகபர நன்மைகள் பெறுவதற்கான சிறந்த சாதனங்களாகக் கருதப்பட்டன. இக்கருத்து,
“பண்ணிமையாலே பாடியும்
ஆடியும்
பயில வல்லார்கள் பரலோகம்
சேர்வரே”
“பண்ணிசை பகர்வார் பற்றறுப்பார்”
“பண்ணியல்பாக பக்திமையாலே
பாடியும் ஆடியும் பயிலவல்லோர்கள் விண்ணவர் விமான கொடுவர ஏறி
வியனுலகாண்டு வீற்றிருப்பரே”
எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரப் பகுதிகளாலும் நன்கு புலப்படும்.
‘இறைவனே இசை, நடனம் ஆகியவ

31
ற்றின் வடிவமாகவும், இக்கலைகளின் உயரிய இலக் காகவும், இவைகளின் பெரிய ஆசானாகவும், இவை மூலம் எளிதில் அடையக்கூடியனவாகவும் விளங்குகிறான். என்ற கருத்தினை மேற்குறிப்பிட்ட சமய ஞானிகள் வலியுறுத்தினர். இசைக்கருவி களைத் தாங்கிய நிலையிலும் இறைவனைக் கண்டனர். சிவபிரான், வீணாதரதஷிணா மூர்த்தியாகவும், டமருக ஹஸ்தனாகவும் (உடுக்கையேந்திய கையானாகவும்) விளங்கு கிறார். கண்ணன் வேணு கோபாலனாக இலங்குகிறான். ‘வீணை தான் அவன் கருவியோ’ என அப்பர் சுவாமிகள் இறைவனை, சிவபெருமானைப் பற்றிக் கூறுகிறார். திருஞானசம்பந்தர் யாழிலும் மிக்க ஞானமுடையவர். திருநீலகண்ட யாழ்ப் பாணரும், திருப்பாணாழ்வாரும் யாழ்மீட்டு, இசைபாடி இறைவனை ஏத்தினர். ‘இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்.” எனப் பலவகை நாதமூலம் இறைவனை அன்பர்கள் ஏத்துதலை மணிவாசகர் குறிப்பிட்டுள்ளார். சங்கீதம் என்பது வாய்ப்பாட்டு, வாத்திய இசை, நடனம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே என்ற கருத்து நாட்டிய சாஸ்திரம் போன்ற நூல்களிலே கூறப்படுகின்றது. பல்லவர், பாண்டியர் காலச் சங்கீதத்திலும் இம்மூன்று அம்சங்களும் பிரபல்யம் பெற்றிருந்தன.
‘இறைவன் இசைவடிவானவன்’, ‘நடன வடிவானவன்” எனும் கருத்துக்களைப் பொறுத்தமட்டில் முக்கியமாகச் சிவபிரானின் நடராஜ வடிவமும், திருமாலின் கண்ணன் வடிவமும் நன்கு குறிப்பிடத்தக்கவை. ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ எனச் சுந்தரர்
சிவபிரானைப் போற்றினார். ‘ஆரியம்

Page 140
தமிழோடிசையானவன்'. 'பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி”, “ஆடிப்பாடி அண்ணா மலை தொழ, ஓடிப்போம் நமதுள்ள வினைகளே’ எனத் திருநாவுக்கரசரும், ‘ஆடலான் பாடலான்’, ‘ஆடல் பாடல் பேணினி”, “பாடல் ஆடல் மிக்கார்” எனத் திருஞானசம்பந்தரும், 'பன்னாளும் பாடி யாடி’, ‘கூடிய இலயஞ்சதி பிழையாமைக் கொடியிடை உமைகாண ஆடிய அழகா” எனச் சுந்தரரும், ‘ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை” என மணிவாசகரும் ‘பாடோமே யெந்தை பெருமானைப்பாடி நின்றாடோமே யாயிரம் பேரானை” எனப் பெரியாழ்வாரும், “ஆடியாடி அகம் குழைந்திசை பாடிப்பாடிக் கண்ணிர் மல்கி” என நம்மாழ்வாரும் கூறியிருப்பவை மனங்கொளற்பாலன.
இறைவனுடைய நடன வடிவங்களில் நடராஜ வடிவம் மிகச்சிறந்ததெனச் சமய தத்துவ அறிஞர்களும், கலை விமர்சகர்களும் கருதுவர். இவ்வடிவத்தின் தோற்றம் மிகப் பழைமைவாய்ந்ததாயினும், இது பற்றிய மிக முழுமையான குறிப்புகள் இக்காலத்திலே தான் தமிழில் வந்துள்ளன. இக்காலத்தியதெனப் பொதுவாகக் கொள்ளப்படும் திருமந்திரத்திலே இறைவன் ஆடற்கரசனாகவும், கூத்தப் பிரானாகவும், அண்டமெங்கும் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்தக் கூத்தனாகவும் வருணிக்கப்படுகிறான்.
இவ் வடிவத்தின் உட்பொருளை ஏற்கனவே குறிப்பிட்டவாறு அவர்
‘அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கிதன்னில் அறையிற்
சங்காரம்
13

அரனுற்றணைப்பில் அருமருந்தி
ரோதாயி அரனடியென்றும் அனுக்கிரகமே” எனச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் பிற்காலத்திய அறிஞர்கள் மேலும் விரித்துக் கூறியுள்ளனர். "சுந்தரக் கூத்தனின்" (சிவபிரானின்) ஆனந்த நடன்ம் திருமூலரை மட்டுமன்றித் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் முதலியோரையும் நன்கு ஈர்த்துள்ளது. ‘குனித்த புருவமும்” எனத் தொடங்கும் நாவுக்கரசரின் தேவாரம் பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
மேலும் சிவபெருமான் ஆடிய சிறப்பான நடனங்களிலே சொக்கம், பாண்ட ரங்கம் ஆகியன பற்றித் திருஞானசம்பந்தர் 'சொக் கமதாடியும் பாடியும்’ எனவும், “பாண்டரங்கவேடம் பயின்றான்”, “பாண்டரங்க எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு சிவ பிரான் பெரிய நடனக்காரனாக நடராஜனாக வருணிக் கப்படுகின்றார். “ஒப்பில்மாநடன மாடவல்லார்”, ‘அருநடமாடினார் உலகிடை’, ‘ஆடலார் மாநடத்தீர்”, “நீடு மாநடமாடவிருப்பனே”, “மாநடம் ஆடும் வித்தகர்” எனத் திருஞான சம்பந்தர் கூறியிருப்பன கவனித்தற்பாலன.
சிவபிரானின் திருநடனம் பற்றிய குறிப்புகள் சிலவற்றில் அக்கால நடனம் சாஸ்திர ரீதியிலானது (செந்நெறிக்கலை ரீதியிலானது (Classical) என்பது தெளிவு. எடுத்துக்காட்டுகளாக “ஆடல் நெறி நின்றான்”, “நட்டம் பயின்றாடும் நல்லூர் பெருமான்", “நடனம் பயில்கின்ற நம்பன்”, “பாடல் ஆடல் பயிலும் பரமரே”, “பாராரு முழவமொந்தை குழலியாழொளி சீராலே பாடலாடல் சிதை

Page 141
வில்லாதோர்’ எனச் சம்பந்தரும், ‘கூடிய இலயம் சதி பிழையாமை, கொடியிடை உமையவள் காண” இறைவன் ஆடினார் எனச் சுந்தரரும் கூறியுள்ளவற்றாலே புலப்படும்.
ஆனந்தக்கூத்தனாகிய சிவபிரானுக்கு எல்லாமே ஆனந்தம் என்பது
“ஆனந்த மாடரங்கானந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தமாக அகில சராசரம் ஆனந்தமானந்தக் கூத்தனுக்கே” எனும் திருமூலரின் திருமந்திரப் பாடலால்
புலனாகும்.
சிவபிரானின் திருநடனத்தில் உள்ள அழகியல் அமிசங்கள், ஆடல்நுட்பத்திறன், நடனத்திலவருக்குள்ள மிகுந்த விருப்பம் முதலியன, ‘அண்ணலார் ஆடுகின்ற அலங் காரமே”, “கணம் ஏத்த ஆடிய அழகனே’, “ஆடலில் லயம் உடையார்’, ‘சீரோடும் பாடலாடல் இலயஞ்சிதையாத கொள்கை’,
0.9%
'ஒத்தறமிதித்து நட்டமிட்ட ஒருவர்”, “மன்னுமா நடமாடியுகப்பன்’, ‘ ஆடலை யுகந்த எம்மடிகள்”, “ பாடலோடாடல் மேவும் அழகினிர்’, ‘நடம்சதிவழி வருவதோர் சதிர் உடையீர்” எனத் திருஞானசம்பந்தரும், ‘குட முழவச்சதிவழியே அனல்கையேந்தி கூத்தாட வல்ல குழகனாகி எனத் திருநாவுக்கரசரும், * கூடிய லயம் சதிபிழையாமை” எனச் சுந்தரரும் “தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்” என மணிவாசகரும் கூறியிருப் பனவற்றிலே நன்கு புலப்படுகின்றன. லயம். சதி, சதிர் முதலிய பதங்கள் நன்கு ஆராயத்தக்கவை. இவை அக்கால நடனம் சாஸ்திர ரீதியானதென்பதை மேலும்

வலியுறுத்துவன. சதிர் எனும் பதம் பிறமொழிச் சொல்லெனப் பொதுவாகக் கருதப்படுவது மீளாய்வுக்குரியது. சதி (ஜதி) யிலிருந்துதான் சதிர் வந்திருக்கலாமோ என ஒருசாரார் கருதுகின்றனர்.
இக்காலத்திய இசை, நடனத்தில் இடம்பெற்ற இசைக் கருவிகள் பற்றி ‘தக்கை தண்ணுமை தாளம் வீணை, தருணிச்சங் கினைச் சல்லரி, கொக் கரை குடமுழ வோடிசை கூடப்பாடி நின்றாடுவர்”, “முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி, சீராவே பாடல் ஆடல் சிதைவில்லாததோர் ஏரார்புரிகாஞ்சி”, “தண்டு உடுக்கை தாளம் தக்கைசார, நடம் பயில்பவர் உறையும் புகார்” எனத் திருஞான சம்பந்தர் கூறியிருப்பன உற்றுநோக்கற்பாலன.
தமிழ்நாட்டிலே நடனத்திற்கான அரங்கு பற்றிய குறிப்புகள் சங்க நூல்களிலும், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் வந்துள்ளன. தேவாரங்களிலும் அரங்கு பற்றிய குறிப்புகளை, “அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாத தோர் கூத்து” எனத் திருநாவுக்கரசரும் “காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண்பாட கவினார்வீத் தேம் தேம் என்று அரங்கேறிச் சேயிழையா நடமாடும் திருவையாறே” "பஞ்சியொடு மெல்லடிப் பணைத்த கொங்கை நுண்ணிடை அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூர், ‘ஆடுவர் காடரங்காக” எனத் திருஞானசம்பந்தரும்,
‘மண்ணார் முழவும் குழலும் இயம்ப, மடவார் நடமாடும் மணியரங்கும்” எனச் சுந்தரரும் பாடியுள்ள தேவாரப் பகுதிகளிலே காணலாம்.

Page 142
இறைவிபாட இறைவன் ஆடுதல் பற்றி “அம்மைபாட ஆடுவரே” “கீதம் உமைபாட. வேத முதல்வன் நின்றாடுமே” எனத் திருஞான சம்பந்தர் கூறியுள்ளமை குறிப்பிடற்பாலது.
அக்கால ஆடலுக்குரிய இசைபற்றிய சில குறிப்புகளும் காணப்படுகின்றன. பண்ணிசைக்கும், நான் மறைக்கும் ஆடப்பட்ட தென்பது.
“பண்ணிசை பாடநின்றா டினானும்”
“பண்ணின்மிசை நின்று பலபாணி யாட
வல்லான்”
‘பண் பொலி நான்மறை பாடியாடி’ சொற்பிரிவிலாத மறைபாடி நடனமாடுவார்” எனத் திருஞாசம்பந்தர் கூறியிருப்பன வற்றால் புலனாகும்.
பல்லவர் - பாண்டியர் காலத்திலேற்பட்ட வைதிக சமய, பண்பாட்டு மலர்ச்சியினாலே கலைகள் நன்கு வளர்வதற்கு மன்னரின் பேராதரவும் குறிப்பிடற்பாலது. அரசர்களிற் பலர் கலை விற்பன்னராகவும் விளங்கினர். எடுத்துக்காட்டாக, முதலாம் மகேந்திரவர்மன் ‘விசித்திரசித்த’, ‘சங்கீர்ண ஜாதி” முதலிய விருதுப் பெயர்கள் தரித்தான். முன்னையது அவனுடைய அருங்கலை உள்ளத்தினைப் பிரதிபலிக்கிறது. பின்னையது அவனுடைய இசை ஈடுபாடு, திறமை ஆகியனவற்றை எடுத்துக்காட்டும் ‘சங்கீர்ண” என்ற தாளவகை யினைப் புதிதாகக் கண்டுபிடித்தமை யாற்றான் இவ்விருதுப் பெயர் தரித்தான் எனக் கொள்ளப் படுகிறது. மேலும் குடுமியாமலை இசைக் கல்வெட்டும் இவனுடைய அதீத இசைப் புலமைக்குதக்க சான்றாகும். மேலுமிவன் எழுதிய மத்தவிலாஸப் பிரஹஸனம் என்ற

நகைச்சுவை நாடகத்திலே, சூத்திரதாரி வாயிலாகச் ‘சங்கீதம் எனது செல்வம்” எனப் பெருமைப்படுகிறான். இந்நாடகத்தின் காப்புச் செய்யுளிலே சிவபிரானின் காபாலிக தாண்ட வத்தின் சிறப்புக் கூறப்படுகிறது. திருமய்யம் இசைக் கல்வெட்டும் அக்கால இசை வளர்ச்சிக்குத்தக்க பிறிதொரு சான்றாகும்.
ராஜசிம்மன் சூடிய விணா வித்தியாதர்” (வீணை மீட்பதில் வித்தியாதரன் - விண்ணுலக இசைவாண்ரில் ஒருவன் போன்றவன்), ‘ஆதோத்ய தும்புரு" (வீணை, முரசு, புல்லாங்குழல், சல்லரி ஆகிய இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதில்) தும்புரு (விண்ணுலக இசை விற்பன்னர் போன்றவன்) ‘வீணாநாரத” (வீணையை நன்கு மீட்பதில் நாரத முனிவர் போன்ற வித்தகர்) முதலிய விருதுப் பெயர்களிலிருந்து அவனுக்கு இசைக்கருவிகளிலிருந்த விருப்பமும், திறனும் புலனாகின்றன.
தமிழகத்திலே கோயிலமைக்கும் வழக்கம் சங்ககாலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டாலும், கற்கோவிலமைக்கும் கலை கி.பி. ஆறாம் நூற்றாண்டளவிலேற்பட்டுவிட்டது. எனினும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்திலேதான் அவ் வழக்கம் பரவலாக ஏற்பட்டது. அவனுடைய மண்டகப்பத்துச் சாசனம் அவன் ஒரு புதிய கலைமரபினைத் தொடங்கினான் எனக் கூறும். இவ்வாறு எழுந்த கற்கோவில்கள் சமய நிலைக்களங்களாக மட்டுமன்றிக் கவின்கலைக் களஞ்சியங்களாகவும், நிலையங்களாகவும் மிளிர்ந்தன.
பல்லவர் காலத்திலே குகைக் கோயில்கள், கற்றளிகள் (தனிப்பாறைக் கல்லில் அமைக்கப்

Page 143
பட்டமை), கற்களை அறுத்து அமைக்கப்பட்ட கோயில்கள் எனப்பலவகை அமைப்புகளைக் கொண்ட கோயில்களிலே இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் நன்கு இடம் பெற்றன. கோயில் வழிபாட்டு முறையிலும், கிரியைகளிலும் இசையும் நடனமும் முக்கிய இடம்பெற்றன. இது பற்றி ஏறக்குறைய சமகாலத்தில் எழுந்த ஆகமங் களிலும், அவற்றின் வழிநூல்களான பத்ததி களிலும் விபரிக்கப்படுகின்றன. இது பற்றிப் பிறிதொரு இயலிலே கூறப்பட்டுள்ளது.
இக்காலத்திலே நடனமாதர்கள் இசை, நடனக்கலைகளிலே மிக்க தேர்ச்சியும், ஈடுபாடும் கொண்டிருந்தனர், இவர்கள் மிக்க அழகுடையவர்களாகவும் தம்மை நன்கு அலங்கரித்தவர்களாகவும் விளங்கினர். இவர் களைப் பற்றி ஏற்கனவே கூறப்பட்டபோதும் மேலும் சிலவற்றைக் குறிப்பிடலாம். இவர்கள் சமகால சைவ நாயன்மார் இயற்றிய தேவாரங்களுக்கும் ஆடினர் என்பது
“பண்ணிசை பாடநின்றாடினானும்
ஞானசம்பந்தன் சொன்ன.
இசைபாடி ஆடிகூடுமவர்"
எனத் திருஞானசம்பந்தர், 'பத்தும்பாடி ஆடுவார் பரமனடியே பணிவரே” எனச் சுந்தரரும் குறிப்பிட்டுள்ளனவற்றாலே புலப் படும். மேலும் இந்நடனமாதர் பற்றி ‘தேனார் மொழியார் திளைத்தங் காடித்திகழும் குடமுக்கில்”
“வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர”
“வேலியின் விரைக்கமல மன்ன முகமாதர் பாலென மிழற்ற நடமாடிபழுவூர்”
‘பண்ணின் நேர் மொழிமங்கை பலர்
13

பாடியாடியவோசை”
'மாடும் முழவதிர மடமாதர் ஆடும் அன்பிலாந்துறை” எனச் சம்பந்தரும்,
‘செந்துவர் வாய்க்கண்ணினை வெண்ண கைத் தேன் மொழியார்
வந்து வலஞ்செய்து மாநடம் ஆட மலிந்த” என நாவுக்கரசரும்,
G
“மையார் தடங்கண்ணியர் ஆடும் துறையும்”
“பண்ணார் மொழிப்பாவையர் ஆடும் துறையும்” எனச் சுந்தரரும் கூறியிருப்பவை நன்கு நோக்கற்பாலன.
ஆடலையும், பாடலையும் குறிப்பிட்ட வேளையிலே குறிப்பிட்டவாறு ஆடுதற்கும், இசைத்தற்கும் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இக்கலைகளிலே மிகத் தேர்ச்சி பெற்ற நடனமாதர் (தேவரடியார்) நியமிக்கப்பட்டனர். இவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என இக்காலத்தில் அழைக்கப் பட்டனர். இக்கால நடனமாதர்களிலே பல திறப்பட்டவர்கள் இருந்தனர். இவர்களில் ஒருசாரார் திருமணம் செய்து வாழ்ந்தனர். பிறிதொரு சாரார் பெரும்பாலும் திருமணம் செய்யாது, ‘நித்திய சுமங்கலி” களாக கோயிலிலுள்ள இறைவனைத் திருமணம் செய்தவர்கள் என்ற வகையில் என்றும் சுமங்கலிகளாக கோயில்களிலே இசை, நடனப்பணி செய்து வந்தனர். இவர்களில் உருத்திரகணிகையர் சிவாலயங்களிலே கலைப்பணி செய்து வந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய இரு மனைவியர்களி லொருவரான பரவையார் உருத்திகணிகையர் குலத்தவரே.

Page 144
கோயில்களிலே பாடியாடிக் கலைப்பணி செய்தோரே தேவரடியார்கள் என அழைக்கப் பட்டனர் எனவும், அரசசபையிலே ஆடியோர் வேறொரு சாரார் எனவும் ஒரு காலகட்டத்தின் பின் இருசாராரும் ஒன்றுபட்டு விட்டனர் எனவும் பிரபல நடனக் கலைஞரும் ஆய்வாளருமாகிய கலாநிதி பத்மா சுப்பிர மணியம் கருதுகிறார்.
கோயில்களிலே கலைப்பணி செய்துவந்த இந்நடனமாதர்களையே தேவாரங்கள் ‘தேனார் மொழியார்”, “பண்ணின் நேர் மொழி மங்கைபலர்”, “சேயிழையார்”, “நன் நடனமாதர்”, “மடவார்”, “மையார் தடங் கண்ணியர்” எனப் பலவாறு சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளமையிலிருந்து அக்காலச் சைவ சமய மரபுகளில் அவர்கள் நன்மதிப்புப் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகும்.
இவர்கள் பரத நாட்டிய சாஸ்திரத்திலே நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது ஏற்கனவே சிவபிரானின் திருநடனம் பற்றிக் குறிப்பிட்ட பகுதிகளினாலும் நன்கு புலப்படும். மேலும் அக் காலப் பக்திப் பாடல்கள் மட்டுமன்றிச் சிற்பங்களும், ஒவியங்களும் இதற்குச் சான்று பகருவன. இவர்கள் சிவ பெருமான், திருமால் முதலிய தெய்வங்கள் ஆடியதாகக் கூறப்படும் நடனங்களை ஆடியும், சமகாலப் பக்திப்பாடல்களைப் பாடி ஆடியும், சமயத் தொடர்புடைய வேறு விடயங்கள் பற்றிப் பாடியாடியும், இறைவனை ஏத்தியும், மக்களைச் சமயத்திலீடுபடுத்தியும் மகிழ்வித்தும் கலைப் பணியும், சமயப்பணியும் ஒருங்கே செய்து வந்தனர் எனலாம்.
இவ்வாறு பல்லவர் காலத்திலே நடன மாதர் கோயில்களுடன் இணைக்கப்பட்டு விளங்கினர். கி. பி. 9ம் நூற்றாண்டிலே
13

காஞ்சியில் ஆட்சிசெய்த இரண்டாம் நந்தி வர்மன் காலத்திய (கி.பி. 710-775) முக்தீஸ்வரக் கோயில் கல்வெட்டின்படி முதலில் 32 அடிகள்மாரும் (நடனமாதரும்), பின்னர் 12 பேரும் சேர்க்கப்பட்டு 44 நடனமாதர் கலைப்பணியும், சமயப்பணியும் செய்தார்கள் என அறியப்படுகின்றது. பெரு நங்கை பொன்னடி, அதிமானிதேவி, குமரடி மாணிக்கதேவி, திகைமனணி குணந்துங்கி, திகைமணி சுத்தி, சிந்தடி குமரடிநங்காடை அணியாதித்தி மூத்தி அவ்வடிவிஞ்சடியாடி, குலக்கொடி அவ்வடி நங்கள் மூதியக்கன் சீதேவி முதலிய பல நடனமாதர் பெயர்கள் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.
தொடர்ந்து சோழப் பெருமன்னர் காலத்திலே கோயில்களிலே பெருந்தொகை யான நடனமாதர் குறிப்பாகத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 400 தேவரடியார் இருந்தனர். அவர்களுடைய பெயர்களும் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. அடுத்த இயலில் இதுபற்றிக் கூறப்படும்.
இக்காலக் கோயில்களிலும் வேறு இடங் களிலும் நடனம் முக்கியமான ஓரிடத்தினை வகித்துவந்தது. சிவபெருமானின் நடன வடிவங்களிலே சைவநாயன்மாரும் சமகாலச் சிற்பிகளும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். நாட்டிய சாஸ்திரம் கூறும் 108 காரணங்கள் (தாண்டவங்கள்) பற்றிய குறிப்பு தேவாரத் திலும் உள்ளது. ‘ஆடினைக் கரணம்” எனத் திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். இதனை நன்கு உறுதிப்படுத்தும் வகையிலே குறிப்பாக காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலிலே தலசம்ஸ்போட, லலாடதிலக, லலித, குஞ்சித முதலிய கரணங்களை (நடன அசைவுகளை)க் காட்டும் நேர்த்தியான சிற்பங்கள் உள்ளன.

Page 145
மேலும் இக்கோயிலில் உள்ள ஓர் அபூர்வ மான நடராஜ வடிவம் நாதாந்த நடன வடிவத்திலிருந்து சற்று வேறுபட்டதாக விளங்குகின்றது.
மேலும் காஞ்சியிலுள்ள வைகுந்தப் பெருமான் ஆலயத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து குழுநடனமாடும் காட்சிகள் சில உள்ளன. ஓரிடத்தில் அரசனும், அரசியும் வீற்றிருக்க அவர்கள் முன்னிலையில் இருபெண்களும் நடுவில் ஓர் ஆடவனுமாக மூவர் நடனமாடுகின்றனர். பிறிதோரிடத்திலே ஒன்பது ஆடவரும் பதினாறு பெண்களும் ஆடும் காட்சியினைக் காணலாம் எனவே இருபாலாரும் ஆடினர். இக்கருத்தினை உறுதிப்படுத்தும் வகையில் ‘கோலவிழா வினரங்கேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்’ எனவரும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பகுதி அமைந்துள்ளது. இருபாலாரும் சேர்ந்து ஆடுதல் பழந்தமிழ் ஆடல் மரபிற்கோ, நாட்டிய சாஸ்திர மரபிற்கோ முரணானதன்று. மேலும் மன்னர் தமது சபையிலே நடனத்திற்கு ஆதரவு அளித்த மையும் மேற்குறிப்பிட்ட சிற்பச்சான்றுகளினாற் புலப்படும்.
நடன சிற்பங்ளிலே சிவபெருமான் தண்டு முனிவருக்கு நடனத்திற்கான காலசைவு களைக் கற்பிப்பதைச் சித்திரிக்கும் சிற்பமும், அவர் பரதமுனிவருக்கு நாட்டியத்தினைக் கற்பிக்கும் காட்சியினைக் காட்டும் சிற்பமும் நன்கு குறிப்பிடற்பாலன. இவை மாமல்ல புரத்திலுள்ளன. இக்காலத்திலே பரதநாட்டிய சாஸ்திர மரபு நன்கு போற்றப்பட்டமைக்கு இவையும் தலைசிறந்த எடுத்துக் காட்டுக் களாகும்.

சித் தன்னவாசலிலுள்ள புகழ் பெற்ற ஒவியங்கள் பல்லவர் காலத்தவை. இவற்றிலே நடன ஒவியங்களும் உள்ளன. இவற்றுட் சில நாட்டிய சாஸ்திரமரபையொட்டியவை. குறிப் பாக இரு நடன மாதர்களைச் சித்திரிக்கும் ஒவியங்கள் கவனித்தற்பாலன. இவற்றிலே கலைஞர்களின் உடம்பின் மேற்பகுதி மட்டுமே உள்ளன. ஒரு நடனமாதின் இடது கை கஜகஸ்த (யானையின் துதிக்கை) நிலை யிலும், வலது உள்ளங்கை சதுர நிலையிலும் உள்ளன. இந்நிலை சிவபிரானின் நாதாந்த நடன (ஆனந்த தாண்டவ) நிலையினை நினைவூட்டுகின்றது. இதுபோன்ற உருவம் சமகாலத் தென் கிழக் காசியாவிலுள்ள ஜாவாவிலே சிற்பத்திலே காணப்படுகின்றது. மற்றைய ஒவியத்திற் காணப்படும் நடன மாதினுடைய இடதுகால் பின்புறமாகச் சரிந்திருக்க, வலது கை விரல்களும், உள்ளங்கையும் மேல்நோக்கியிருக்க, இடது கை கொடி (லதா) போல் நீண்டிருக்கின்றது. இது பரதர் கூறும் லதா விர்ச்சிகம் (தேள்கொடி போல அசைதல்) கரணமாகும். இவ் ஒவியங்கள் சமண சமயத்தவரின் குகைகளிலே காணப்படினும் சமகால நாட்டிய நிலையினை
இவை நன்கு பிரதிபலிக்கின்றன.
முற்பட்ட காலத்தில் போலவே, இக் காலத்திலும் சாந்திக் கூத்துப் போன்ற கூத்துக்கள் தொடர்ந்து நிலவிவந்தன. நடனத்திலே கோலாட்டமும் இடம்பெற்ற மையைக் "கோலோடக் கோல்வளையார் கூத்தாடச் சேயிழையார் நடமாடும் திருவையாறே” எனும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பகுதியினால் அறியலாம்.
நாடகம் பற்றிய குறிப்புகளும் இக் காலத்திய பக்திப் பாடல்களிலே காணப்படு
கின்றன. நாடகம் நடனத்தையும் குறிக்கு

Page 146
மாயினும் இதனை இங்கு ஒரு தனிப்பட்ட கலைவடிவமாகவே கொள்ளலாம். முற் காலத்திலே நாடகம் முற்றிலுமோ, பகுதியாகவோ ஆடப்பட்டும் வந்துள்ளது.
‘நாடகமாக ஆடி மடவார்கள் பாடும் நறையூர்”
‘'நாடகமாடுநர் நள்ளாறுடைய நம் பெருமான்” எனத் திருஞானசம்பந்தரும்
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து” என மாணிக்கவாசகரும் கூறியிருப்பன கவனித்தற்பாலன.
மேலும் முற்காலத்திற் போலவே நாட்டுப் புறக் கூத்துக்களும் இசையும் தொடர்ந்து
13

நிலவிவந்தன. இவற்றின் சாயலை இக்காலச் சைவ, வைணவ பக்திப் பாடல்களிலே
காணலாம்.
இவ்வாறு பலவகையிலும், கோயில் களிலும் அரச சபைகள் முதலியனவற்றிலும் சாஸ்திர ரீதியாகப் பரதநாட்டிய சாஸ்திரத்தை யொட்டியும் நன்கு வளர்த்து வந்த ஆடற்கலை பல்லவர், பாண்டியர் ஆட்சியைத் தொடர்ந்து தமிழகத்திலேற்பட்ட சோழப் பெருமன்னர் காலத்திலே மேலும் சிறப்புற்று விளங்கிற்று. இதன் தாக்கம் கடல் கடந்து இலங்கை,
தென்கிழக்காசிய நாடுகளிலும் ஏற்பட்டது.

Page 147
பல்லவர் கால
சங்கம் மருவிய காலத்திலிருந்து தமிழகம் புதியதோர் சமய நிலைக்குப் புகுந்தது. தமிழ கத்தில் சமணமும் பெளத்தமும் செல்வாக்குப் பெற்றன. இவற்றுள் சமணம் பெருமளவு வெற்றி கண்டது. மன்னர்களின் ஆதரவுடன் சமணர் இருக்கைகளையும் அமண் பள்ளி களையும் வைத்துத் தமிழகத்தின் தென் கோடிவரை பரவினர். கபாலிகம், வேதவாதம் போன்ற சமயப் பிரிவுகளும் சாங்கியம், வைசேடிகம், உலகாயதம் போன்ற தத்துவக்
கோட்பாடுகளும் இங்கே இடம் பெற்றிருந்தன.
FIDGOOTid
கி.பி. 470ல் பூச்சிபாதரின் சீடரான வச்சிரநந்தி முனிவர் மதுரை திராவிட சங்கத்தை நிறுவினார். இந்நிகழ்ச்சி சமணத்தின் வளர்ச்சிக்குச் சான்றாகும். சமணம் தழைப்பதற்கு மேலும் வழி வகுத்தது.
வடாற்காடு மாவட்டத்தில் வள்ளிமலை, பொன்னூர் போன்ற இடங்கள், தென்னாற் காட்டில் பாதிரிப்புலியூர் போன்றவை சமணர் இருக்கைகளாக விளங்கின. சோழமண்டலத்து முத்தரையர் மன்னர்களுள் சிலர் சமணத்தைத் தழுவி ஆதரவு காட்டினர். நாலடியார் முத்தரையர் நாட்டில் தோன்றியவரேயாவர். பல்லவர் நாட்டில் பல இடங்களில் சமணர் இருக்கைகள் இருந்தன. திருக்காட்டுப்பள்ளி, செந்தலை, நாகமலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் போன்ற பல இடங்களில் சமணர் இருக்கைகளும் பள்ளி களும் இருந்தன. காஞ்சி மாநகரும் சமணர் களுக்கு இடமளித்திருந்தது. பல்லவ வேந்தன் சமணத்தைத் தழுவிச் சமணத்தின் ஆதரவாக
13

சமய நிலை
நூலியற்றியுள்ளான் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பாண்டியர் நாட்டில் மதுரையும் மதுரையின் சுற்றுவட்டங்களும் சமணத்தின் கேந்திரமாக விளங்கின. தமிழகத்தின் தென்கோடியில் திருநெல்வேலி மாவட்டத்திலும் அதற்கப்பால் வேணாட்டிலும் சமணம் பரவியிருந்தது. பாணர் டிய மன்னனர் கூனர் பாணர் டியன் சைவத்தைத் தழுவும் வரை சமணத்துக்கு முழு ஆதரவு காட்டினான். கி.பி. 7ம் நூற்றாண்டில் இந்து சமயத்தின் மறுமலர்ச்சியுடன் சமணத்தின் வளர்ச்சி குன்றியது. இந்நூற்றாண்டில் தமிழ கத்துக்கு வருகை தந்திருந்த சீனப்பயணி யுவான்சுவாங் பெளத்தத்தின் வீழ்ச்சியையும் சமணத்தின் செல்வாக்கையும் கண்டார். கி.பி. 8ம் நூற்றாண்டிலும் பாண்டி நாட்டில் பல விடங்களில் சமணர் இருக்கைகள் இருந்தன. இரண்டாம் இராசசிம்மன் காலம்வரை சமணம் முழுமையாக மன்னர் ஆதரவை இழக்க வில்லை. இந்து சமய மறுமலர்ச்சிப் பேராற்ற லால் சமணத்தை எளிதில் பணியவைக்க முடியவில்லை.
சமணப் பெரியார்கள் பிற்காலத்தில் சைத்தியவாசிகள் என்றும் வனவாசிகள் என்றும் இருபிரிவினராகப் பிரிந்தனர். சமணர்கள் கணங்களாகப் பிரிந்து சமயப்
பணியாற்றினர்.
புத்த சமயம்
தமிழகத்தின் தென்பகுதி சமணத்தின் இருக்கையாக விளங்கியபோது தமிழகத்தின் வடபகுதி குறிப்பாகப் பெளத்தத்தின் உறை விடமாக விளங்கியது. பெளத்த விகாரைகளும் கல்வி நிலையங்களும் பெளத்தத்தின் உயிர்நாடியாக விளங்கின. காஞ்சியில் பாலி

Page 148
மொழியும் பெளத்த தத்துவங்களும் ஆராயப் பட்டன. பேரறிஞர்களாகிய தின்னாகர், தர்மபாலர் போன்றவர்களைத் தமிழகம் தந்தது. சீனாவுக்கு அறிஞர்களை அனுப்பும் தகுதியை கிபி 6ம் நூற்றாண்டில் காஞ்சி பெற்றிருந்தது. கி.பி. 527ல் காஞ்சியிலிருந்து போதிதர்மர் சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
காஞ்சியில் பல்லவர்களின் எழுச்சி புத்த சமயத்தின் வீழ்ச்சியைக் குறிக்கின்றது. பல்லவர் நாட்டில் இந்து சமயம் மன்னர் ஆதரவைப் பெற்று முன்னேறியபோது புத்த சமயம் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது என்றாலும் காஞ்சி பெளத்த சமயத்தின் தொடர்பை இழக்கவில்லை. கி.பி. 719ல் சீனாவுக்குச் சென்ற வச்சிரபோதி என்ற பெளத்தப் பெரியார் 8ம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சிக்கு வந்தார். 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காஞ்சியில் பெளத்தர்களைத் தோற்கடிக்கும் வரை பெளத்தம் அங்கே நீடித்தது. கி.பி. 7ஆம் நுாற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சி வந்தபோது பெளத்தம் அங்கே வீழ்ச்சிப் பாதையில் இருந்தது.
காஞ்சி மணி டலத்தில் பெளத்தம் செல்வாக்கை இழந்த பின்னரும் சோழ மண்டலத்தில் தனது செல்வாக்கை நிலை நாட்டிக் கொண்டிருந்தது. போதி மங்கை, பழையாறை, நாகப் பட்டினம் முதலிய இடங்கள் பெளத்தர் விகாரங் களையும் கல்வி நிலையங்களையும் பெற்றுச் சமயப்பணியின் முகாம்களாக விளங்கின. சீனத்துக்கும் பல்லவர் நாட்டிற்கும் நெருங்கிய வாணிபத் தொடர்பிருந்ததால் சீனப் பேரரசரின் வேண்டு கோளின்படி பல்லவ இராசசிம்மன் கிபி 692ல்
14

நாகப்பட்டினத்தில் “சீனப்ப கோடா” என்ற
பெளத்தர் ஆலயத்தை எழுப்பினார்.
கி. பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலிருந்து பத்தி இயக்கப் பேராறுகளின் சுழிகளில் மாட்டிப் பெளத்தம் தத்தளித்தது. இறுதியாக அழிந்தது.
சமயப்பூசல்கள்
தமிழகத்தின் இருண்ட காலத்தில் மாறுபட்ட சமயங்கள் இருந்தன என்றாலும் கி.பி. 6ம் நூற்றாண்டுவரை வெளிப்படையான சமயப் பூசல்கள் தோன்றவில்லை. ஆனால் பல்லவர் ஆட்சியின் வலிமைக்குப்பின் இந்துசமயம் புத்துயிர் பெற்றது. போட்டியும், பூசல்களும் அடக்குமுறைகளும் படிப்படியாகத் தலை தூக்கியுள்ளன.
1. முதலில் சமணர்களுக்கும் பெளத்தர் களுக்கும் உட்போட்டி இருந்தது. ஒருவரை ஒருவர் தூற்றுவது அவர்களின் வழக்கு. மகேந்திரவர்மனின் மத்தவிலாசம் பெளத்தத் துறவிகளைக் கிண்டல் செய்கின்றது. சமணர் களின் நீலகேசி என்ற நூல் பெளத்தர்களையும் பெளத்தர்களின் குண்டலகேசி என்ற நூல்
சமணர்களையும் தாக்கின.
2. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சமண பெளத்தத் துறவிகளைப் போட்டிக்கும் விவாதத்துக்கும் இழுத்தனர். அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் வாழ்க்கை வரலாறு இவற்றை விளக்கும்.
3. சமணத்திலிருந்து சைவத்தில் புகுந்த மகேந்திரவர்ம பல்லவன் திருப்பாதிரிப்புலியூர் சமணப்பள்ளியை இடித்துச் சிவாலயம் எழுப்பினான்.

Page 149
4. பெளத்தர்களைத் துன்புறுத்திய இரண்டாம் நந்திவர்மனைப் புகழ்ந்து பாடிய திருமங்கை ஆழ்வார் நாகப் பட்டினத்துப் பெளத்தர் விகாரத்தைக் கொள்ளையடித்ததை வரலாற்றின் சேமவங்கியில் காணலாம்.
இரண்டாம் நந்திவர்மன் பெளத்தத் துறவிகளைக் கழுமரத்துக்கனுப்பினான். பெளத்தம் தழுவிய மக்களின் உடைமை களைப் பறிமுதல் செய்தான்.
5. மதுரையில் கூனி பாணி டியன் சமணத்தைத் துறந்து சைவனானது. ஞான சம்பந்தருக்குப் பெரும் வெற்றியும் சமணர் களின் துன்பத்தின் துவக்க விழாவுமாகும். மதுரையில் 8000 சமணத் துறவிகள் கழுவேற்றப்பட்டனர் என்ற கதை நினைவு கொள்ளுதற்குரியது. மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபச் சிற்பங்களும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கழுவேற்று விழாவும் இதனை உறுதி செய்கின்றன.
6. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்துச் சிற்பங்களும் காஞ்சிக் கருகில் உள்ள திருவேற்றுார் சிவாலயத்தில் பெளத்தரைக் கழுவேற்றும் காட்சிகளும் சமயக் கொடுமை களைக் காட்டுகின்றன. பழையாறையில் கலகம் நடந்ததைச் சேக்கிழார் காட்டுகின்றார். திருவாரூரில் இத்தகைய கலகம் நடந்ததும் சமணர்கள் துன்புறுத்தப்பட்டதும் சமயப் பூசலுக்குப் பிற சான்றுகளாகும். தண்டியடிகள் நாயனாரின் தலைமையில் அங்கே சமணர் களின் வீடுகள் இடிக்கப்பட்டன. நிலங்கள் பறிக்கப்பட்டன. அவ்விடத்தில் தற்போதைய கமலாலயம் தோற்றம் கொண்டது.
இவை வரலாறு விரும்பாத நிகழ்ச்சிகள்! வரலாற்றுக்கு எதிரான அறைகூவல்கள்!

41
மனிதனின் விலங்குத்தன்மைக்கு விளக்கம் கூறும் நிகழ்ச்சிகள்! வரலாற்றின் எச்சரிக்கை களாக ஏடுகளில் இடம் பெறும் காட்சிகள்.
சைவ, வைணவ, வைதீக சமயங்கள்
சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் சமணமும் பெளத்தமும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்று கண்டோம் சமூக ஒழுக்க நெறிகளும், கல்வித்தொண்டும், சமூகத்தில் வேற்றுமை பாராட்டாமையும், துறவிகளின் அயராத உழைப்பும், அறப்பணியும், தாய் மொழிப் புறக்கணிக்காமையும் இருசமயங் களையும் வளர்த்தன. பரப்பின. பொருத்த மற்ற சமயச் சடங்குகளும் பலிகளடங்கிய வேள்விகளும், பைரவர்களின் நரவேட்டையும் கபாலிகர்களின் இடுகாட்டுத் தொடர்பும் தலையோட்டு அணிகளும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு பாராட்டுதலும் வேற்றுமை பாராட்டு தலும் குருமார்களின் ஆதிக்கமும் சமூகச் சுரண்டல்களும் மரபுவழிச் சமயத்தைப் பல வீனப்படுத்தி இருந்தன.
தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி நிறுவப் பட்டதுடன் வேதியச் சமயம் புத்துயிர் பெற்றது. மறுபிறவியெடுத்தது. வெகுவிரைவில் வெற்றி நடையிட்டது. சைவ வைணவக் கிளைகள் தெளிவாகப் பிரிந்தன. இராசசிம்மன் காலத்துக்குப்பின் கணேசர் வழிபாடும் துவங்கியது.
மன்னர் ஆதரவு
பல்லவ மன்னர்கள் இந்துசமயத்துக்கு ஆதரவளித்தனர். மகா பல்லவர்கள் ஆலயப் பணியில் அயராது ஈடுபட்டனர். ஆலயங் களுக்கும் வைதீகர்களுக்கும் கிராமங்களைத்

Page 150
தானமாக வழங்கினர். கிராமங்களில் சிவாலயங்களும் வைணவ ஆலயங்களும் எழுப்பினர். ஆலயத்தில் பணிபுரியப் பெரியதோர் ஆலயப்பரிவாரத்தை அமர்த்தினர். துப்புரவுக்காரி முதல் ஆட்டக்காரி வரை எண்ணற்றோருக்கு அங்கே வாழ்வு கிட்டியது. கட்டிட நிர்மாணிகளும் (architect) சிற்ப்பிகளும் ஒவியர்களும் பாடகர்களும் பெளராணி கர்களும் புலவர்களும் தத்துவ ஆசிரியர்களும் புரோகிதர்கள் போன்றோர்களும் ஆலயப் பரிவாரத்தில் இடம்பெற்றனர். ஆலயங்கள் கல்வி நிலையமாகவும் பண்பாட்டு நிலைய மாகவும் மிளிர்ந்தன.
மன்னர்களின் அறப்பணியால் ஆலங்களின் எண்ணிக்கை பெருகியது. ஆலய விழாக்களும் திருமேனி ஊர்வலங்களும் மக்களைக் கவர்ந்தன. ஆலயங்களுடன் சமசுகிருதத்தில் வேதக் கல்வியளிக்கும் கடிகைக்கல்வி நிலை யங்களை நிறுவினர். அங்கே வைதீகர் உண்டியும் உறையுளும் பெற்றுப் பயின்றனர். கல்வி நிலையங்கள் வழி வேதங்களின் போதனைகளையும் ஆலயங்களின் மண்ட பங்கள் வழி இதிகாசப் புராணக் கதைகளையும் பரப்பினர்.
இருகிளைகள் - வைணவமும் சைவமும்
பெளத்த சமணசமயங்களின் பழமை யுடையது வைணவம் என்பது R.G. பந்தர்க்கரின் கொள்கை. பத்தி இயக்கத்தால் பிறந்ததே வைணவம் என்றார் கிருஷ்ணசாமி ஐயங்கார்? இராமானுசர் துவக்கியதே வைணவம் எனக் கருதினார் Dr. கால்டு வெல், கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே வைணவமும் சைவமும் தேசிய அளவில் செல்வாக்கு அடைந்துவிட்டன என்கிறார். K. M. பணிக்கர்
14.

காப்பியத் தலைவர்களை விஷ்ணுவின் அவதாரம் என்றனர். கிருஷ ணனை விஷ்ணுவின் அவதாரம் என வழிபடத் தொடங்கினர். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் வாசுதேவர் வழிபாடு நிலவியது. வாசுதேவரைப் பகவானாக வழிபட்ட வழியில் பாகவத சமயம் தோன்றியது. எனவே வைணவத்தின் தோற்றத்துக்கு வாசுதேவர் வழிபாடு அடிப்படையாகியது என்றார் B.V. இராமனுசம் அவர்கள். பாகவத சமயம் தோன்றிப் படிப்படியாக வளர்ந்தது. பின்னர் கீதையின் செல்வாக்கும் குப்தர் காலத்தில் பாகவத புராணத்தின் தோற்றமும் பாகவத சமயத்தின் செல்வாக்கை மேலும் பெருக்கின. தக்கணம் வழி தமிழகத்தில் புகுந்த பாகவத சமயம் பல லவர்கள் எழுச்சியுடன் செல்வாக்கைப் பெற்றது. கிருஷ்ணனில் விஷ்ணுவைக் கண்டவர்கள் படிப்படியாக வைணவர்களானார்கள். இவை ஆய்வாளர் களின் கருத்துக்களாகும்.
சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் பரந்த திராவிடர் மண்டலத்தில் தொல் பழங்காலம் தொட்ட வரலாறுடையன. இயற்கையோடு ஒட்டியன. வானியலை அடிப்படையாகக் கொண்டன. திருமாலை நீருடனும் சிவனை நிலத்துடனும் இணைத்து வழிபட்டனர். வடபுலத்தில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலம் முதல் பெருக்கெடுத்த சமசுகிருத இலக்கியங்கள் திருமால் வழிபாட்டுடன் பாகவதக் கோட்பாடுகளையும் இணைத்துப் பிறப்புக் கொள்கையைப் புகுத்தி (அவதாரம்) வைணவத்துக்கு வலுவூட்டினர். காவுடன் கல்லும் (லிங்கம்) கிணறு மிருந்த விடம் தமிழர்களின் பண்டைய சிவாலயமாக விளங்கியது. சிவனை வழிபட்டோர் பின்னர்

Page 151
பல பிரிவினர் ஆனார்கள். ஆகமவழியில் நின்ற மகேசுவரர்கள், வீரம், வாதுளம் ஆகிய இரு ஆகமங்களை ஏற்ற வீரசைவர்கள், நீறுபூசித் தலையோட்டு மாலையிட்ட கபாலிகர்கள், நீறும் களிமண்ணும் பூசி லிங்கக்குறியிட்டுச் சாத்திரமுறையில் ஈசன் ஞானம் பெற்ற பாசுபதர் என்று பல பிரிவினர் தோன்றலாயினர். பத்தி இயக்கச் சைவர்கள் சிவனை அன்பு வடிவாய்க் கண்டனர்.
தென்புலத்தில் பத்தி இயக்கத்தின் வெற்றி சைவ வைணவ சமயங்களை இரு வழியில் வளர்த்தது. சைவம் வைணவம் என்ற இயக்கங் களை பத்திப் பேராறுகளாகப் பெருக் கெடுத்தன.
பத்தி இயல்கம்
புறச் சமயங்களின் செல்வாக்கை ஒழிக்கவும் இந்து சமயத்தை மீட்கவும், அன்பு வடிவத்தில் இறைவனைக் காட்டித் தொண்டு, தோழமை, யோகம், ஞானம் ஆகியவழிகளில் தெய்வ மணங் கமழுவதும் மக்களின் உள்ளங்களைத் தொடுவதுமான பத்திப்பதிகங்களைத் தமிழில் இசையுடன் பாடி, சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் நடத்திய ஒரு நாடு தழுவிய இயக்கமே பத்தி இயக்கமாகும். இவ் வியத்திற்குத் திருமூலர் காரைக் காலம்மையார் ஆகியவர்களுடைய பணிகள் தோற்றுவாயாக அமைகின்றன.
பெண்மணியர் பங்கு
சமணத்தின் கை ஓங்கி நின்ற காலம் - மகேந்திரவர்ம பல்லவனும் அவனுடைய நாட்டில் நாவுக்கரசரும் சமணர்களாயிருந்தனர். நாவுக்கரசரின் தமக்கை திலகவதியாரின் முயற்சியால் நாவுக்கரசர் மீண்டும் சைவ
14

3.
ரானார். நாவுக்கரசரின் முயற்சியால் மகேந்திர வர்மன் சைவனானான். தொடர்ந்து பல்லவர்
நாட்டில் பத்தி இயக்கம் விறுவிறுப்படைந்தது.
கூன்பாண்டியன் காலத்தில் பாண்டிய நாடு எங்கும் சமணத்தின் கை ஓங்கி நின்றது. மன்னனும் மக்களும் சமணத்தைத் தழுவி நின்றனர். இந்துசமயம் புறக்கணிக்கப் பட்டிருந்தது. ஆலயங்கள் பூசையற்றுக் கிடந்தன. சோழர் குலக்கொழுந்து பாண்டிமா தேவி மங்கையர்க்கரசியார் மன்னன் நிலையறிந்து மனம் வருந்தினள். அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் திருஞான சம்பந்தரை மதுரைக்கு எழுந்தருளச் செய்தனள், கூன்பாண்டியன் சைவத்துக்குத் திருப்பப்பட்டான். அத்துடன் இந்துசமயம் அங்கே உயிர் பெற்றது. மறுமலர்ச்சி இயந்திரம் இயக்கிவிடப்பட்டது. சமணம் ஒடுங்கியது - ஒடுக்கப்பட்டது.
&IDu SJ6)lsi
‘அன்பே சிவம்” என்றனர் சைவர். அப்பர், சம்பந்தர் போன்ற சிவனடியார்கள் பலர் தோன்றினர். ஆடல் பாடலுடன் ஊர் ஊராகச் சென்றனர். திருத்தலங்களை நாடிப் புண்ணியச் செலவுகள் செய்தனர். 63 நாயன்மார்களும் அவர்களுடன் எண்ணற்ற அடியார்களும் தொண்டாற்றினர். இதைப்போன்று வைணவ ஆழி வார்களும் அன் பின் வடிவில் இறைவனைக் காட்டி அன்பு வழியில் மக்களை அணுகினர். தலயாத் திரை செய்தனர். சிவனடியார்களும் திருமாலடியார்களும் தெய்வமணம் கமழும் திருப்பாடல்களை நெஞ்சுருகப்பாடினர். கூட்டம் கூட்டமாகப் பஜனைபாடும் வழக்கம் பெருகியது. நடமாடும் பக்தர்களை வரவேற்று உண்டியளிப்பது

Page 152
பெரும் புண்ணியமாகக் கருதப்பட்டது. பத்தர்கள் பெருகினர். புண்ணியச் செலவுகள் பெருகின. கல்லையும் கனியவைக்கும் இசை மக்களின் உள்ளங்களைத் தொட்டது. சமயகுரவர்கள் மக்களின் மதிப்பையும் மன்னர்களின் ஆதரவையும் பெற்றனர். ஊற்றெடுத்த பத்தி வெள்ளம் பெருக்கெடுத்தது. பத்திப் பேராறுகள் பெருக்கெடுத்தன. புறச்சமயப் பெரியார்கள் விவாதங்களுக்கு இழுக்கப்பட்டனர். தோற்கடிக்கப்பட்டனர்.
சிவனடியார்கள்
பத்திப் பேராற்றில் அன்புத் துடுப்புடன் சமயப் படகோட்டிய பெரியார்கள் சிவனடியார் களாவார்கள். நீறுபூசி, கமண்டலம் ஏந்தி, பத்திப்பாப்பாடி, பிச்சையெடுத்துச் சென்றவர் களுக்குப் பகல் உணவளிப்பது ஆயிரம் கோவிலைக் கட்டுவதைவிடச் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. அவர்களைச் சிவனாகக் கருதிப் பூசனை செய்பவன் நல்வினை யடைவான். நிந்திப்பவன், தீவினைக் கிரையாவான் என்ற நம்பிக்கை படர்ந்து பரவியது. பத்தியில் மூழ்கிக் கல்லையும் கனிய வைக்கும் இனிய பாடல்களைப் பாடி நாடு சுற்றிப் பத்திச் சுவையூட்டும் அறிஞர்களாகவும் தொணி டர்களாகவும் சிவனடியார்கள் விளங்கினர்.
சுந்தரரின் திருத்தொண்டத் தொகைப்படி 63 நாயன்மார்களும் 9 தொகையடியார்களும் இருந்தனர். அப்பர், சம்பந்தருக்கு முன் பதினெழுவரும், அப்பர் காலத்தில் பதினொரு வரும் சுந்தரர் காலத்தில் பதின்மூவரும், அப்பர் காலத்துக்கும் சுந்தரர் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 22 பேரும் வாழ்ந் திருந்தனர். 63 நாயன்மார்களுள் இறவாப்
14.

புகழ்பெற்றவர் திருநாவுக்கரசர் (அப்பர்), ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரேயாவர்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள் நீக்கியார். இவர் அப்பர் என்று அறியப் படுகின்றார். ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே" என்று பாடினார். தொண்டு செய்வதைத் தர்மம் என்றார். அதை மெய்யுணர்வின் ஊன்று கோலாக்கினார். நான் என்ற செருக்கை அறுத்த இப்பெரியார் தீவிர தலயாத் திரையிலீடுபடலானார். தனித்தும் ஞான சம்பந்தருடனும் சிவத் தலங்களுக்குச் சென்று பதிகம் பாடினார். தூய்மை மெய்ஞ்ஞானத்தின் அணி எனக் கொண்டிருந்த அப்பர் கோவில் களின் சுற்றுப்புறங்களில் புல்பூண்டுகளை உழவாரப் படையால் செதுக்குவதற்கும் அலகினால் பெருக்குவதற்கும் தயங்கிய தில்லை. அகத்தூய்மை புறத்தூய்மையாகிய அணிகளால் இந்து சமயத்தைத் தூய்மைப் படுத்த முனைந்தார். ஊர் ஊராகச் சென்று சமயத் தொண்டாற்றும் இயக்கத்தைத் துவக்கியவர் இவரே. முதிர்ந்த வயதிலும் ஊர்ஊராகச் சென்றார். சீர்காழியில் இவரைக் கண்ட ஞானசம்பந்தர் ‘அப்பரே என்றார்.
திருசாவுக் கரசர் (மருள் நீக்கியார்) தென்னாற்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். திருவாமூரில் வாழ்ந்தவர் சைவக் குடும்பத்தில் தோன்றிய நாவுக்கரசருக்கு இளமையில் அறிவுப்பசி எடுத்தது. அறநூற்களைப் பயின்றார். சமண நூற்களைப் பயின்று சமணர்களின் தலைவரானார். பாதிரிப்புலியூர் பள்ளி இவரது இருக்கையாகியது.

Page 153
இவருடைய தமக்கை, திலகவதி அம்மையார், சைவப் பெருந்தகை. மருள்நீக்கி யாரைச் சைவத்துக்குத் திருப்பினார் திலகவதி அம்மையார். மருள்நீக்கியார் திருநாவுக் கரசரானார்.
சமணத்தைத் துறந்து சைவத்தைத் தழுவின நாவுக் கரசர் பல லவர் நாட்டில் தொண்டாற்றினார். பல்லவப்பெருவேந்தன் மகேந்திரவர்ம பல்லவனைச் சமணத்திலிருந்து சைவனாக்கியது இவருடைய பெருஞ் சாதனையும் இந்து சமயத்தின் வெற்றியு மாகும்.
சிவத்தலங்கள் தோறும் சென்று பதிகம்பாடி மக்களைக் கவர்ந்தார். 126 சிவத்தலங்களுக்குச் சென்றார். இவர் பாடல்களை மூன்று திருமுறைகள் ஏந்தி நிற்கின்றன. திருப் பூந்துருத்தியில் மடத்தை எழுப்பி அங்கிருந்து பதிகம் பாடினார். அன்று பழையாறை சமணர்களின் இருக்கை. எனவே பழையாறை வடதளி பூசையற்றுத் தவித்தது. இதனைக் கண்ணுற்ற அப்பர் பொறுக்க முடியா வேதனையடைந்து உண்ணா நோன்பிருந்தார். சமணர் தோற்கடிக்கப்பட்டனர். அங்கே சைவம் மீட்கப்பட்டது.
அப்பரின் வாழ்நாளில் பிற்காலத்தில் திருஞானசம்பந்தரும் சேர்ந்து புண்ணியச் செலவு செய்து பதிகம் பாடினர். திருப்புக லூரில் அப்பர் சிவபதமடைந்தார்.
அப்பர் 49000 பதிகங்கள் பாடியதாகக் கூறப்படுகின்றது. வைதீகர்கள் வேதங்களை வலியுறுத்தியபோது திருவைத்தெழுத்தை வலி யுறுத்தினார் அப்பர். சிவன் 25 தத்துவங் களுக்கும் அப்பாற்பட்டவன் என்றும் சைவ சித்தாந்தம் 96 எனவும் கூறினார். இவருடைய பதிகங்கள் ஆழ்ந்த பத்தியையும் முதிர்ந்த அறிவையும் காட்டுகின்றன. தொண்டு வழியில்
14

சென்ற இவர் 'ஆளுடைய அரசர்” எனப்படு கின்றார்.
திருஞானசம்பந்தர் காலம்
திருஞானசம்பந்தர் காலம் யாது என்பது ஆராய்வதற்குரியது. காலத்தை ஆராய்ந்தோர் மாறுபட்ட கருத்துக்களை அளித்துள்ளனர்.
1. கூன் பாண்டியன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவன் என்றும் அதனடிப் படையில் திருஞானசம்பந்தர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றார் திரு.சி.வை. தாமோதரம் பிள்ளை.'
2. விடம் தீண்டப்பட்ட வணிகன் எழுப்பப் பட்ட சிலப்பதிகாரக் கூற்றினைத் திருவிளை யாடல் கூற்றுடன் இணைத்து இலங்கைக் கயவாகுவுக்கு முன் கிறிஸ்த்து சகத்தின் துவக்கத்தில் வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர் என்றார் குமாரசாமி
3. தேவார ஆசிரியர்களைக் கரிகாலன் காலத்துடன் காட்டினார் ஹீல்" என்பார்.
4. ' சோழ பூருவபட்டயத்தின்’ அடிப்படையில் தேவார ஆசிரியரின் காலம் கிபி 5ஆம் நூற்றாண்டு என்றார் திரு. சைமன் காசிச் செட்டியார்.
5. ஞானசம்பந்தர் காலத்தை ஆராய்ந்த பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள். ஆதிசங்கரரை ஆதாரம் காட்டினார். சங்கரருக்கு முந்தியவர் என்றார். திருஞான சம்பந்தர் கி.பி. 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்றார்.
6. கி.பி. 642ல் ஏற்பட்ட வாதாபி வெற்றிக்குப்பின் பரஞ்சோதியாருக்குச் சீராளன் தோன்றினான். சீராளனின் மூன்றாம் வயதில்

Page 154
ஞானசம்பந்தர் திருச்செங்காட்டாங்குடிக்குச் சென்றார் என்று பெரிய புராணம் காட்டுகின்றது. இது கி.பி. 647 அளவில் நிகழ்ந்திருக்கும். பன்னிருதிருமுறைகளின் வரலாற்றை ஆராய்ந்த வெள்ளைவாரணனார் சீராளன் கி.பி. 644ல் பிறந்தான் என்றும் ஞானசம்பந்தர் கி.பி. 647ல் திருச்செங் காட்டங்குடி சென்று பரஞ்சோதியாரைச் சந்தித்தார் என்றும். அப்போது அவருக்கு வயது 9 என்றும் கி.பி. 638ல் ஞானசம்பந்தர் பிறந்தார் என்றும் துணிந்தார்.
மகேந்திரவர்மனை மதம் மாற்றிய காலகட்டத்தில் அப்பரின் வயோதிப காலத்தில் சம்பந்தர் வாழ்ந்தவர். அவருடன் தலயாத்திரை செய்தவர். சேர்ந்து பதிகம் பாடியவர். இவரை ஆதிசங்கரர் தன்னுடைய செளந்தரிய இலகரி என்ற நூலில் (சமஸ்கிருதம்) திராவிடசிசு என்றார். எனவே இவர் ஆதிசங்கரருக்கு முந்தியவர். நரசிம்மவர்மபல்லவனின் தளபதியாக இருந்த பரஞ்சோதியாருக்குச் சீராளன் தோன்றிய மூன்றாமாண்டில் திருஞானசம்பந்தர் பரஞ்சோதியாரைத் திருச்செங்காட்டாங்குடியில் சந்தித்துள்ளார். கி.பி. 7ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஞானசம்பந்தர் வாழ்ந்தார் என்பதற்கு இவை சான்றுகளாகும்.
வரலாறு
ஞானசம்பந்தர் வரலாற்றுடன் கதைகள் பல கலந்து கிடக்கின்றன. வரலாற்றுத் துணுக்கு களின் துணைகொண்டு வரலாற்றை அறிய வேண்டும்.
சமண, புத்த சமயங்கள் தமிழகத்தில் மேலோங்கி இந்து சமயம் குன்றியிருந்த காலத்தில் தோன்றினார் திருஞானசம்பந்தர்.
14

சீர்காழி இவருடைய பிறப்பிடம் பகவதியம்மை யாரும் சிவபாத இருதயரும் இவரைப் பெற்றதால் பெருமையடைந்தனர். தமிழ் வழக்கின்படி பெயரிட்டு, தொட்டிலில் அமர்த்தி தீருநீற்றுக் காப்பிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர். ஞானசம்பந்தர் இளம் வயதிலேயே ஞானம் பெற்றுப் பதிகம் பாடத் தொடங்கினார். சிறுவனாக இருந்தபோதே தந்தையின் துணையுடன் சிவாலயங்களுக்குச் சென்றார். திருநனிபள்ளி சென்று பதிகம் பாடினார். பின்னர் திருத்தலைச் செங்காடு, தில்லை, திருபெண்ணாகடம் போன்ற பல தலங்களு க்குச் சென்று பதிகம் பாடினார்.
அப்பர் சந்திப்பு
வயது 7 நடக்கும் போது வேதியர் வழக்கின்படி பூணுரல் அணிவிக்கும் சடங்கு நிகழ்ந்தது. இக்காலத்தில் தில்லை வந்திருந்த நாவுக்கரசர் வெண்ணிறு அணிந்த பொன் மேனியராய், குறைந்த கந்தையுடன் சீர்காழி அடைந்தார். முதுமை நிறைந்த நிலையில் பேரன்பின் வடிவமாகத் தோன்றிய நாவுக்கர சரைக்கண்ட ஞானசம்பந்தர் நாவுக்கரசரால் கவரப்பட்டார். தந்தை போலக்கருதி அப்பர் என்றார். சில நாட்கள் அப்பர் அங்கேயே தங்கிவிட்டுத் தம்பயணத்தைத் தொடர்ந்தார்.
மீண்டும் சந்திப்பு
திருப்புகழுரில் அப்பரை மீண்டும் சந்தித்தார். திருவாரூர் திருவாதிரை விழாவைக் கேட்ட சம்பந்தர் “நான் திருவாரூருக்குச் சென்று போற்றி மீண்டும் உம்மைச் சந்திப்பேன்’ என்று கூறி அப்பரின் ஆசிபெற்று, திருவாரூருக்குச் சென்றார். பலதலங்களில் பதிகம் பாடிய வண்ணம் திருவாரூர் அடைந்தார். பதிகம்

Page 155
பாடிப் புகழ்ந்துவிட்டு அப்பரைக் காணத் திருப்புகழுர் திரும்பினார்.
அப்பருடன் பயணம்
திருப்புகழுருக்குச் சென்று முருகநாயனார் மடத்தில் தங்கியிருந்து முருகநாயனார், நாவுக்கரசர், பரஞ்சோதியார் முதலிய பெரியோர்களுடன் தொடர்புகொண்டார். பின்னர் அப்பருடன் கூட்டாகத் தலயாத் திரையைத் தொடர்ந்தார். திருக்கோயிலூர், திருக்கடவூர், திருஆக்கூர் முதலிய தலங்கள் வழி இருவரும் திருவிழிமிழலையை அடைந்தனர். அங்கே இருந்த மடங்களில் தங்கியிருந்தவாறு பல தலங்களுக்குச் சென்று வந்தனர். சீர்காழி அந்தணர் வேண்டிக் கொண்டதன் படி திருவாஞ்சியம் வழி தென்திசைப் பயணம் தொடர்ந்து தலங்கள் பலசென்று பதிகம்பாடி மறைக்காடு புகுந்தனர். அங்கே தங்கியவாறு தலங்கள் பல சென்று வந்தனர்.
மங்கையர்க்கரசியார் தூது
இக்காலத்தில் பாண்டிய நாட்டில் சமணம் தழைத்து நின்றது. எங்கும் சமணர் இருக்கை களும் அமண் பள்ளிகளும் பெருகி இருந்தன. மக்களும் மன்னன் கூன்பாண்டியனும்கூட சமணத்தை ஆதரித்த நிலை, கூண்பாண்டி யனின் மனைவி மங்கையர்க்கரசியார் சோழர்குலவிளக்கும், பாண்டிமாதேவியு மாவார், அவர் கோயில்கள் பூசையற்றுச் சைவம் தவித்ததைக் கண்டு வாடினார். மன்னனின் மனத்தைத் திருப்ப ஞான சம்பந்தரை அழைத்துவரத் தூது அனுப்பினார். சம்பந்தர் அவர்களும் அவ்வழைப்பை ஏற்றார். அப்பரைச் சோழ மண்டலத்தில் அறப்பணிக்கு விட்டுவிட்டுப் பாண்டி நாட்டுக்குச் சென்றார்.
14

சிவத்தலங்களில் பதிகம் பாடியவாறு பல துறவிகளுடன் மதுரையை அடைந்தார். வெப்ப நோயால் வாட்டப்பட்ட மன்னனைக் குணப் படுத்தினார். மன்னனின் பேராதரவைப் பெற்றார். ‘அமணி ஆதரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளம்" என்று பாடியவாறு சமணர்களுடன் விவாதத்தில் வென்றார். சைவம் உயர்வு பெற்றது. வைதீகமும் வேரூன்றியது வேள்விகள் நடைபெற்றன. சமணம் தோல் விப் பாதைக் குத் திருப்பப்பட்டது. சமணப் பெரியார்களைக் கழுமரம் வரவேற்றது.
ஆளுடைய பிள்ளையாகிய ஞானசம்பந்தர் பாண்டி நாட்டில் தல யாத்திரையைத் தொடர்ந்தார். திருநெல்வேலிவரை சென்று அங்கிருந்து, திருகோணமலை, திருகேதீச்சரம் வழி வடதிசை திரும்பினார். கூன்பாண்டியனின் அமைச்சர் குலச்சிறையாரின் பிறப்பிடமாகிய மணமேற்குடி எழுந்தருளினார். திருத்தலங்கள் பல பரவிச் சோழ நாட்டில் காவிரியின் கிளை முள்ளிவாயைத் தாண்டி, பெளத்தர்களின் இருக்கையாகிய போதிமங்கையை அடைந் தார். பெளத்த துறவிகளுடன் வாதில் ஈடுபட்டார். "இடி இடித்து விழுதலாற் புத்தன் தலை உருண்டு வீழ்க” என்று அடியார் ஒருவர் வெகுண்டு பாடியுள்ளார். இதனால் பெளத்த துறவிகள் துன்புறத்தலுக்குள்ளானார்கள் என்பது புலப்படுகின்றது. பெளத்தர்கள் அஞ்சி ஒடும் நிகழ்ச்சிகள் நடந்தன. வாதில் தோற்ற பெளத்தர்கள் சைவர்களானார்கள் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். தலங்கள் சென்றவாறு திருப்பூந்துருத்தி வந்து அப்பரைச் சந்தித்தார். பாண்டிநாட்டு வெற்றியை விவரித்தார். அப்பரிடம் விடைபெற்றுத் திருவையாறு வழி தலங்கள் பல சென்றுவிட்டுச் சீர்காழியில் உள்ள தம் இல்லம் சேர்ந்தார். தாயார் இன்புற எதிர்கொண்டார்.

Page 156
அவருடைய பயணவேகம் தணியவில்லை. தொண்டைநாட்டுத் தலங்கள் காணவேண்டும் என்ற எண்ணம் முறுகி எழுந்தது. தொண்டர் குழாத்தோடு தில்லை, திருவதிகை, திரு வண்ணாமலை வழி வடதிசைப் பயணமானார். திருத்தொண்டர் குழாத்துடன் திருவெற்றுார் சென்று சேர்ந்தார். அங்கிருந்த சமணர்கள் தோற்கடித்து விரட்டப்பட்டனர். பலர் சைவத் துக்குத் திருப்பப்பட்டனர். குரங்கணி முட்டம் வழி காஞ்சியை அடைந்தார். தலங்கள் பல சென்று பதிகம் பாடியவாறு பயணமானார். திருவாலங்காடு வழி திருக்காளத்தி சென்று ‘வானவர்கள் தானங்கள் என்ற திருப்பதிகம் பாடினார். ஒற்றியூர் சென்று தங்கிப் பதிகம் பாடினார். திருமயிலை வணிகரான சிவனேசர் ஒற்றியூர் சென்று, தன்மகளைத் திருமணம் செய்யும்படி வேண்டியதை ஞானசம்பந்தர் ஏற்கவில்லை. பின்னர் திருவான்மியூர், திருக் கழுக்குன்றம் வழியாகப் பல தலங்களில் பதிகம் பாடியவாறு சீர்காழியடைந்தார். அப்பொழுது அவர் வயது 16 என்பர்.
திருமணம்
ஞானசம்பந்தர் திருமணவயது அடைந்த நிலையில் பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தினர். இசைவில்லா மனத்துடன் உட்பட்டார் ஞானசம்பந்தர். திருப்பெருமண நல்லூரில் மணம் பேசி வேத முறைப்படி மங்கல அணிகளுடன் திருக்காப்பு நாணிட்டு நகர்வலம் புரிந்து சுற்றத்தார், அடியார் புடை சூழப் பெருமணநல்லூர் சென்றார். முறைப்படி மணம் நடைபெற்றது. அனைவரும் மணக் கோவிலுக்குச் சென்றனர். ஆனால் எவரும் வீடு திரும்பவில்லை. அனைவரும் எரியும்
14

ஜோதிக்குள் மறைந்தனர் என்ற செய்தி கதைவடிவில் சுழன்றது. ஞானசம்பந்தரின் வேண்டுதலுக்கிணங்கச் சுற்றத்தாருடன் மணமக்களைச் சிவனார் கைலாயத்தில் ஏற்றுக் கொண்டார் என்று கதை கூறுகின்றது. அத்து மீறும் நம்பிக்கையும் ஆராயும் வரலாறும் இங்கே மோதுகின்றன. எதிர்பாராத வினைக் கிரையாயினர் என்று தான் வரலாறு துணியும்
ஞானசம்பந்தர் சிவனை முதல் உருவக் கடவுளாகவும் சோதியாகவும் கண்டார். அவர் பல தலங்கள் சென்று 8000 பாடல்களுக்கு மேல் பாடினார். அவை திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக முதலிடம் பெறு கின்றன. கல்லையும் கனியவைக்கும் பாடல் களில் ஞானசம்பந்தருக்குச் சமணர்களிடத் திலிருந்த வெறுப்புணர்வு, இலை மறை காயாகத் தொனிக்கிறது. தமிழகத்தில் சமணம் மறைவதற்கு இவர் மூலக் கருவியாக விளங்கினார். ஞானமார்க்கத்தில் சென்றவர். சிறு பருவத்தினராய்த் தோன்றியதால் ஆளுடைய பிள்ளை எனப்பட்டார்.
சுந்தரமுர்த்தி நாயனார்
தென்னாற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருநாவலூர் என்னும் திருத்தலத்தில் ஆதி சைவ குலத்தைச் சார்ந்த அர்ச்சகராகிய சடையர் என்பவருக்கும் இசைஞானி யாருக்கும் அருமை மகனாய்த் தோன்றி யருளினார் சுந்தரர் திருமுனைப்பாடி சிற்றரசர் தொடர்பு இவருக்கிருந்தது.
வயது வந்ததும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. மணநாள் அன்று வயதுமுதிர்ந்த ஒருவர் அங்கே தோன்றினார். சுந்தரரின் பாட்டனார் தம்மையும் தம்வழி வருவோரையும் அவருக்கு அடிமைப்படுத்தி ஆளோலை

Page 157
எழுதிக்கொடுத்ததைக் கூறித் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டார்.
சுந்தரர் தவக்கோலம் பூண்டார். சிவனடி யாராகச் சிவத்தலங்களை நாடிப் பதிகம் பாடினார். சாதி வேற்றுமை பாராட்டாத இவர் திருவாரூரில் ஆடல் பாடலில் ஈடுபட்டிருந்த கணிகையர் குலத்து மகள் பரவையார் என்பவரையும் பின்னர் திருவொற்றியூரில் சங்கிலியார் என்பவரையும் மணம் முடித்தார்” இவருக்குப் பார்வை இழந்து மீண்டதாகக் கூறப்படுகின்றது. சேரமான் பெருமாளின் நண்பரான இவர் திருவஞ்சைக்களத்திற்குச் சென்றார். சேரமான் பெருமாளுடன் சிவனடி சேர்ந்தார். அப்பொழுது இவருக்கு வயது 18, என்பர். ஆரூரர் என்றும் ஆளுடைய நம்பி என்றும் சிறப்பித்து அழைக்கப்படும் சுந்தரர் தோழமை வழிநின்று பத்திப்பயிரை அன்பு நீர்ப் பாய்ச்சி வளர்த்தார்.
சுந்தரர் பாடல்கள் அன்பு வழியை வகுத்தன. ஆழ்ந்த பத்திச் சுவை சொட்டும் பதிகங்கள் மக்களைத் துாண்டி இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்குத் துணை புரிந்தன. சுந்தரரின் திருத்தொண்டத் தொகை 63 நாயன் மார்களையும் 9 தொகையடியார்களையும்
காட்டுகின்றன.
தேவாரம்
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று சிவனடியார்களும் சிவன் கோவில்களில் பதிகம் பாடினார்கள். அப்பதிகங்களில் மறைந் தவை போக கிட்டியவை 8000 பாடல்கள், இதைத் தாங்கிய நூல் தேவாரம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பியாவார்.

49
மாணிக்கவாசகர்
இறவாப் புகழ்பெற்ற சிவனடியார்கள் நால்வரில் காலத்தால் பிந்தியவர் மாணிக்க வாசகர். இவர் கி.பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறுவாரும் உளர். சுந்தர மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத்தொகை நூலில் இவர் பெயர், இடம்பெறவில்லை. ஆனால் மாணிக்கவாசகரின் பாடல்களில் வரகுண பாண்டியனின் பெயர் இடம் பெறுகின்றது.
எனவே மாணிக்கவாசகர் வரகுண பாண்டிய மன்னன் காலத்தைச் சார்ந்தவர் எனலாம். இவர் காலம் கி.பி. 9ம் நூற்றாண்டு என்று துணியலாம்.
மதுரையின் அருகாமையில் வாதவூரில் தோன்றிய மாணிக்கவாசகர் திருவாதவூரர் என்று அறியப்பட்டார். இளமைப் பருவத்தி லேயே கூர்ந்த அறிவுடன் சாத்திரங்களைப் பயின்று புகழப்பட்டார். ஆழ்ந்த அறிவும் பண்பும் புகழும் இவரை வரகுண பாண்டி யனின் அமைச்சர் பதவிக்கு உயர்த்தின. திறமை உடையவராகவும் நம்பிக்கைக்குத் தகுந்தவராகவும் விளங்கிய மாணிக்கவாசகரின் உள்ளம் சிவனிடம் மையம் கொண்டது.
‘* உற்றாரை யாண் வேண் டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”
என்ற நிலை உருவானது ‘சிவாயநம என்ற

Page 158
திருவைந்தெழுத்து மந்திரத்துக்குப் பொருள் காணுவதிலும் வீடுபேற்றுக்கு வழிகாணவும் சிந்தை சென்றது.
இந்நிலையில் அமைச்சன் என்ற நிலையில் மன்னனுக்குக் குதிரைகள் வாங்குவதற்காகத் திருப்பெருந்துறைக்குச் சென்றார். அங்கே தவக்கோலத்துடனிருந்த சிவனடியார் ஒரு வரைக் கண்ட மாணிக்கவாசகர் தனது ஐயங்களுக்கு விடைகாணும் முயற்சியில் ஈடுபடலானார். இறுதியில் குதிரைகள் சிலவற்றை வாங்கிவிட்டு மதுரை சென்றார். குதிரைகளோ பயனற்றவை. அவை மன்னனின் சினத்தைத் தூண்டின. மாணிக்கவாசகருக்குத் தண்டனை பரிசாகியது. பதவி இறக்கப்பட்டார்.
மன்னனிடத்து அமைச்சர் பதவியைத் துறந்து இறைவனிடத்துப் பணிக்காகப் புகுந்தார். திருப்பெருந்துறைக்குச் சென்று தன் குருவைச் சந்தித்து அங்கே தங்கினார். தன் குருவின் மறைவுக்குப் பின் சிவத்தலங்களை நாடிப் புண்ணியச் செலவிலீடுபட்டார். தமிழகத்து முக்கிய சிவத்தங்கள் தோறும் சென்று நெஞ்சுருகப் பாடினார். சிதம்பரத்தை அடைந்ததும் அங்கேயே தங்கினார். இலங்கை யிலிருந்து வந்த பெளத்த துறவிகளை விவாதத்தில் தோற்கடித்தார். மேலும் புகழ்பெற்றார். இறுதியில் சிதம்பரத்திலேயே சிவபதம் அடைந்தார்.
திருவாசகம்
மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய பதிகங்களின் தொகுதியே திருவாசகம் அருட்பாவாணர் என்ற நிலையில் அவர் இணையற்றவர் என்பதைத் திருவாசகம் காட்டுகின்றது. 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பர்.

கருத்தால் வடபுலத்து உபநிடதங்களுக்கு இணையான திருவாசகம் அறியாமை இருளி லிருந்து பேரொளிக்கு ஆத்மா படிப்படியாக உயருவதைக் காட்டுகின்றது.
ஆழ்வார்கள் (அல்லது) திருமாலடியார்கள்
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை 12 ஆழ்வார்கள் வாழ்ந் தனர். பாகவத புராணத்தில் திருமாலின் 10 அவதாரங்களைக் கூறித் திருமாலடியார்கள் திராவிட நாட்டில் தாமிரபரணிக் கரையிலும் வைகைக் கரையிலும் காவிரிக் கரையிலும், பாலாற்றின் கரையிலும், பேரியாற்றங் கரையிலும் தோன்றி முக்தியடைவர் என்று காட்டப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங் கரையில் நம்மாழ்வாரும் மதுரகவியும் தோன்றினர். வைகையாற்றங்கரையில் பெரியாழ்வாரும் அவர் புதல்வி ஆண்டாளும் தோன்றினர். பாலாற்றங்கரையில் பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் தோன்றினர். காவிரிக் கரையில் தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருப்பாணாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தோன்றினர். பேரியாற்றங் கரையில் திருவஞ்சைக் களத்தில் குலசேகராழ்வார் தோன்றினார்.
திருமால் பத்தியில் ஆழ்பவர் ஆழ்வார்கள். நாரணர்பால் நெஞ்சையள்ளும் தமிழ்ப் பாக்களை இசையுடன் பாடித் தமிழகத்தில் பத்திவெள்ளம் பெருக்குவித்தனர்.
“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்" (பூததத்தாழ்வார்)

Page 159
அன்பை அகலாகவும் ஆர்வத்தை நெய்யாகவும், பத்தியால் உருகும் மனத்தைத் திரியாகவும் வைத்து நாரணருக்கு ஞானவிளக்கேற்றி ஞானத்தமிழை விரும்பிப் பாடி இயங்கினர். பத்தி இயக்கம் இயங்கியது. ‘மலையிலே போய் நின்றும், நீரின் நடுவே மூழ்கியும், ஐந்து நெருப்புகளின் இடையில் நின்றும் தவம் செய்யத் தேவை இல்லை. கடவுளை உண்மையான அன்புடன் மலர்தூவி வழிபடுதல் போதும்” என்ற பேயாழ்வாரின் திருவாய்மொழி ஆழ்வார்கள் வழிக்கு விளக்கம் கூறுகின்றது. பழைய தீவினைகள் இந்து மதத்தை இழிவாக்கின. ஒழித்தன என்பதை உணர்ந்தனர். கடவுளை அன்புவழியில் அணுகச் செய்தனர். இறைவனிடத்தில் அயராத ஈடுபாட்டைக் கொண்டனர். மக்களிடையே வாழ்ந்து ஒழுக்கத்தை வளர்த்தனர். பாடல்களாலும் பசனைகளாலும் பத்தியைப் பெருக்கினர். சமயத் தொண்டாற்றி வைணவத்தை வளர்த்தனர். வைணவம் பல்லவ நாட்டிலிருந்து சோழ நாட்டில் பரவி பாண்டி நாட்டிலும் மலர்ந்து மணம் வீசியது.
பன்னிரு ஆழி வார்கள் பாடிய பத்திப்பதிகங்கள் சேர்ந்த தொகை நூலே ‘நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்” ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
கல்வியும் இலக்கியமும்
கல்வி
இருண்டகாலம் எனக் கருதப்படும் பெளத்த சமணர் காலத்துக்குப்பின் மூவகைக் கல்வி நிலையங்களைத் தமிழகம் கண்டது. சமணர்கள்
அமண்பள்ளிகளை நடத்தினர். பெளத்தர்களின்

விகாரங்கள் கல்வி நிலையங்களாகவும் ஆய்வகங்களாவும் விளங்கின. இத்தகைய கல்வி நிலையங்களில் சமய இலக்கியங்களும் தத்துவக் கோட்பாடுகளும் தர்க்கம், யோகம் ஆகியவைகளும் கற்பிக்கப்பட்டன. பெண்கள் உள்பட அனைவரும் சேர்க்கப்பட்டனர்.
பல்லவ மன்னர்கள் வேதக்கல்வி நிலையங் களை (கடிகை) நிறுவினர். உண்டியும் உறையுளும் பெற்று மாணவர்கள் கல்வி பயின்றனர். அங்கே வேதம், வேதாங்கம், மீமாம்சை, தத்துவம், நியாயம், தர்மசாஸ்திரம், புராணம், ஆயுர்வேத மருத்துவம் போன்றவை கற்பிக்கப்பட்டன. கடிகைக் கல்லூரி ஒர் உயர்நிலைக் கல்வி நிலையமாக விளங்கியது. வேதக்கல்வி நிலையங்களில் வேதியர் மரபினர்களுக்கு மட்டும் இடமளிக்கப்பட்டது. கடிகைகளில் போர்ப் பயிற்சியுமளிக்கப்பட்டது. வேதியர்களே ஆசிரியர்களாயிருந்தனர். தென்மண்டலத்தில் இக்கல்வி நிலையங்கள் சாலைகள் என்ற பெயரில் இயங்கின.
இலக்கியம்
பல்லவ மன்னர்கள் சமசுகிருத மொழியின் ஆதரவாளர்களாக விளங்கினர். மகாபல்ல வர்கள் சமசுகிருத மொழியில் பட்டயமி யற்றினர். சமசுகிருத மொழியை அவர்கள் ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனர் என்று இவை காட்டுகின்றன. சமசுகிருத மொழியில் புலமை பெற்றவர்கள் பல்லவர்களின் ஆதரவைப் பெற்றனர். எனவே சமசுகிருத இலக்கியத்தின் ஒருபகுதி தென்னகத்தில் படைக்கப்பட்டது. சமசுகிருத மொழியின் செல்வாக்கால் தமிழில் மொழிக் கலப்பு உண்டாக்கப்பட்டது. அதன் விளைவே மணிப்பிரவாள நடையாகும்.

Page 160
சமசுகிருத பட்டயங்களும் இலக்கியமும்
பல்லவர்களின் பட்டயங்கள் புலமை பெற்ற புலவர்களால் வரையப்பட்டன. எனவே அவை இலக்கியச் சுவைபெற்றன. முதலாம் பரமேசுவரவர்மனின் கூரம் பட்டயம் பெருவளநல்லூர் போரினை நயம்பட வருணிக்கின்றது. வருணனைக்கு அது ஒரு விளக்கமாகும். இரண்டாம் நந்திவர்மனுடைய காசக்குடி பட்டயம் பல்லவர் வரலாற்றினை இலக்கியச்சுவையுடன் விளக்குகின்றது. மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர்ப் பாளையப்பட்டயம் அழகிய சமசுகிருத மொழி நடையுடையதாகும்.
பல்லவ மன்னர்களின் அவையில் சமசு
கிருத மொழிப் புலவர்கள் இடம் பெற்றனர்.
எனவே சமசுகிருத இலக்கியப் படைப்பில் அன்று தமிழகம் தயங்கியதில்லை. கிராதார்ச்சுனியம், அவந்தி சுந்தரிகதா, காவிய தரிசனம், தசகுமார சரிதம், மத்தவிலாசப் பிரகசனம் போன்றவை தமிழகத்தில் இக்காலத்தில் படைக்கப்பட்டன. கிபி 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காஞ்சியில் பிராகிருத மொழியில் சர்வநந்தி இயற்றிய லோகவியாபகம் என்ற சமணநூல் பாதிரிப் புலியூர் என்ற இடத்தில்வைத்துச் சமசுகிருத மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பிறமொழி நூற்களைச் சமசுகிருத மொழியில் மொழி பெயர்க்கும் காலகட்டமாகவும்
இக்காலம் விளங்கியது.
தமிழ்
தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில்
15

வைதீகக் கோட்பாடுகளும் சமசுகிருத மொழி ஆதிக்கமும் தமிழகத்தில் புகுந்தன.
1. வைதீகக் கோட்பாடும் நாட்டுச் சைவக்கோட்பாடும் மோதின. திருமூலரின் திருமந்திரம் தோற்றம் கண்டு ஒரு சமரசக் கோட்பாட்டினை (4ம் நூற்றாண்டில்) ஈன்றிருந்தது.
2. சமண, பெளத்த சமயங்களின் தாக்குதலை அப்பர், சம்பந்தர் போன்ற சமய குரவர்கள் ஏற்றனர். கி.பி. 7ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சைவமணம் கமழும் பாடல் களைப் பாடினர்.
3. புறச் சமயங்களின் தாக்குதலால் தூண்படப்பட்ட திருமால் அடியார்கள் 8ம் நூற்றாண்டின் பிற்பகுதிமுதல் தங்கள் சமயத்தை நிலைநாட்டியதன் விளைவால் நம்மாழ்வார் பாடல்கள் திருவாய் மொழி யாகவும் ஏனையோர் பாடல்கள் திருமொழி எனவும் தோற்றம் கொண்டன. ஆழ்வார் பாடல்களை நாதமுனி தொகுத்தார். அத் தொகுதியே நாலாயிரத்திவ்வியப் பிரபந்த
மாகும்.
4. 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுந்தரர் தம் தேவாரப் பாடல்களைப் படைத்தார். மாணிக்கவாசகரின் திருவாசகமும் தமிழுல குக்குக்கிட்டியது.
எனவே இக்கால கட்டத்தில் பக்தி இயக்க மாகிய பேராறுகளின் பெருக்கெடுப்பால் தேவராம், திருவாசகம், நாலாயிரத்திவ்விய பிரபந்தமாகிய பத்தி இலக்கியங்கள் படைக்கப் பெற்றன. அவை அளவாலும் தனித்தன்மை யாலும் மனித வரலாறு இதுகாறும் கண்ட அளவில் இணையற்ற பத்திப் பாடல்களாக உயர்ந்து நிற்கின்றன.

Page 161
5. சைவ, வைணவ சமயங்களின் செல்வாக்கால் சமணமும் பெளத்தமும், பலவீனமடைந்தன. பலவீனத்தின் அறிகுறியாக ஒருவரையொருவர் துாற்றுவதற்கென வளையாபதி, குண்டலகேசி முதலிய நூற்களைப் படைத்தனர்.
6. சமசுகிருதத்தின் அணுகலும் தமிழ் சொற்களைச் சமசுகிருதத்தில் மொழி பெயர்க்கும் முயற்சியும் பெருகியது. தமிழில் வடசொற்கள் கலந்தன. புதிய தமிழ் நடை தோன்றியது. அதுவே மணிப்பிரவாள நடையாகும். அதற்குத் துணையாகக் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி நிகண்டு நூற்களின் காலமாக விளங்கியது சேந்தன் திவாகரம், பிங்கலந்தை நிகண்டு போன்றவை தோன்றின. இவை இலக்கண வரை முறைகளில் மாற்றம் காட்டின. இலக்கண நூற்களிலும் நால்வகைச் சாதிக் கோட்பாடுகள் புகுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சமசுகிருத மொழிப் போக்கினைத் தழுவி யாப்பணி நூற்கள் இயற்றப்பட்டன. இராச சிம்மனின் அவைப்புலவராக விளங்கிக் கதாசாரம், அவந்திசுந்தரிகதை முதலிய நூற்களைப் படைத்த தண்டி ‘காவிய தர்சினி என்ற இலக்கணநூல் இயற்றினார். இதன் வழிநூலே தண்டியலங்காரம்.
இறையனார் அகப்பொருள் உரையும் ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பா
1.

மாலையும், யாப்பருங்கல விருத்தியுரையும் யாப்பருங்கலக் காரிகையும் பல்லவர் காலத்தே தோன்றின.
7. கி.பி. 6ம் நூற்றாண்டு முதல் சிறிது சிறிதாக அந்தாதி, உலா, பரணிபோன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றின. திருத்தொண்டத் தொகையும் சேரமான் பெருமாள் LUTEQUU அந்தாதி, உலா, முதலியவற்றையும் தமிழி லக்கியம் கண்டது.
8. பல்லவர்கட்குட்பட்ட முத்தரையர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர். கிபி 8ஆம் நூற்றாண்டில் பெரும்பிடுகு முத்தரையர் அவையத்துப் புலவர்களாகிய பார்ச்சிவேள் நம்பன் வெண்பாப் பாடல்களும் அநிருத்தன் கட்டளைக்கலித்துறையும் கோட்டாற்று இளம் பெருமானார் பாடல்களும் (சிதைவுற்ற) குவான்காஞ்சன் பாடல்களும் தோன்றின.
9. கி.பி. 9ம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய நந்திக் கலம்பகமும் தெள்ளாற்றுப் போரைக் குறிப்பிடுகின்ற பெருந்தேவனாரின் பாரத வெண்பாவும் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) அன்று) படைக்கப் பெற்றன.
சுருங்கக்கூறின் சமயமோதல்கள் ஒப்பற்ற சமய இலக்கியங்களைத் தந்தன. மொழி மோதல்கள் புதியமொழி நடையையும் நிகண்டு களையும் இலக்கண நூற்களையும் படைக்கச் செய்தன. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் புதுமையும் திருப்பமும் கண்ட காலம் எனலாம்.

Page 162

| ආරාධනාවයි. ಛೀ-2007
ඩී.)මැංග්‍රිෂ්ණ් 1 ඕෂන් භුව "කොළඹී 06
ՃianԱյնմl5լի
ஆய்வரங்கு 2007
பக்தி நெறியும் பனர்பாட்டுக் கோலங்களும் இராமகிருஷன் மிடின் மண்டபம், கொழும்பு 6,
பார்பு போட்டு அடிக்க
:
NNWTATION 过E扈、
HELE KARAKRISHNA LSLS S SS0S SS LS SS LS SS SSSSSSS
ATHLETER NIETH |||||||timent
Heenteerden RisultraATF

Page 163
(యర్రెండవ ఆంటిలేటి
2007-06-29 (esg_EO- 9,30 3o.50 12,30)
ප්‍රීඞාජීය, චීස්, පද්මනාදන් リリ
ජූඩ්ඩ්‍ර ආණ්ඨි?
ගුජ් ඇසීඝ්‍ර ධූණ්ඩාරිත්‍යායක් ආර්‍යෂ්ඪ කථියුණූ ඇමිණී
ඉංග්‍රීෂ්රවණීය ආරාධීන
=පිං ෂිකෝඩ්තුවක්කු, ෂියා
පීල්ඩ්ෆ් ආණ්ඩ් ආටියුතු හා සදාච්ර්‍ප් ඵ්ධීන් අඹිෂ්nපාඨය
ਤੇ , ජීවිද්‍ය අඩිචික්ෂ, පුරාවිද්‍යා දෙපාර්ඩ්ෂීන්ද්‍රිජ් හෂිෂ් සංග්‍රි මිශ්‍රාචීර්ය පී. ගෝපාලනිෂ්නන්
මහාචාර්ය පී. ඕස්දූජාබ්න් ආදායී සූඩි”නී
బొg gట్రా తెలటిరితత్లోరి ෆිදුරයි. ඝාෂිරාප් චීෆෝච් විද්‍යාලය
6)Zá):503}o)
9:30 ==ශ්‍රජාද්රෝ්සල් පහන් දැල්වීම 9.40-=භූන්හි ඕස්
ආඬිණි මුද්‍රාහ්නන් මිය
sLsssS KesssT HH LLessTeLeLLLLL LLLLeAeeL LseLeeLLLssesS B,50 + පිළිගෑනීඝ්‍රඹී ඝර්ෂාෆි
එස්. ෙජ්්‍යයිච්ච්ර්‍ය්ජ් පීඨා
పోరE==
සීෂ්දු ආශ්‍රොමී= E} +ය්+අැසීප කටයුතු දෙපාඨpaඕස්තුව
 
 

10:00
1.15
1.3-
11:45
20
1.35.
11.5 Ա -
1.O.
12.2()
1
-555
இது இது E என்
collah Esdrag-OE විද්‍යුස් විද්‍යෝන්) ශ්‍රීවේය.දු:ඛනිර්‍ර්‍දුන් විය
రక్తికా డారE
අධිපස්ෂ ෆිෂ්දු ආශ්‍රාමීප සංඝ සංස්-ඍණික පැවසූතු දෙපාර්සට්‍රැමීප්තුව
බ්‍රිෂුට්‍රිචිය ඵ්ස් පද්‍රෂිඩ්‍රාදූන්
இந:
ඝාභීjජ්ය් ආර්. ඩීෆාම් 5 අාරච්නීය. ආජාධිතයේ කථිකාච ජී.පී.ඞී.ජූඩැක්කු ළූණූ
ඕල්ඩ්ජ්
o ജC¿ ( Eng &ാg::
:
gటెలో రుటెడాgటే ఇ3లె
area fict ඝාත් එළිදැක්වීම |-
1ਣ
2.206 (EEõi
· හැඳින්වීම
ආච්චීය. ඵ් වේද්‍රාචිත්‍රිජ්
|- ස්තූති තර්jව මුද්‍රව්‍යූෂිංච් ආර්ථිෂ් විය. === Egaరకి
EEEEEE 555టి రీడా ఆgE
52
හීන්දු ආගූෂික හා සංස්කෟතික කටයුතු දෙපාර්තමේන්තුව,
24811
இதுைல் 04,

Page 164
தொடக்க வைபவம்
29.05.2007-வெள்ளிக்கிழமை fg). LI, 9.30 - 12,30)
580ьшали
Eேர்சியத்நாகன்
பிரதம விருந்தினர்
ாண்புமிகுண்டு பண்டாரநாயக்க அவர்கள் மக்அலுவல்களிஅமைச்சர்
நிருவி கொடித்துவக்கு செயலாளர்மத் அலுவல்கள் ஒழுங்க மேம்பாட்டு அமைச்சு
க:நிதி இரா.நாகசாமி
மு:நாட் புவியாளர், நொய்வியந்துவந, தமிழ்நாடு
பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் ஓய்வுநிலைப் பேராசிரியர்
பேராசிரியர் ஜிதுேராமன்
தவைவா, நுண்களை வரலாற்றுந்துறை மதுரகாமராஜர் பங்களுக்கழகம்
彗
நிகழ்ச்சி நிரல்
|| மங்கள விளக்கேற்றம்
1.1 - தேங்ாரம்
விதிபள்ளிருந்தர், அபிவிருதிகி நடத்தியோகந்தர் விக்கமாகங்ாார அலு:கவி நினைக்டி
வரவேற்புர
: நிரந்தும்
நவிப் படிப்பாளர் இந்துமா, காசார riiiiiiiiiiiiiiiiiiuiii iiliiiliiiriiiiiiiIL-LAT Ii
 
 

9. ஆசியுரை
Hர்னான்சந்தரஜந்தர தலைவர்;இராமகிருஷ்னமிடின், இலங்கை
இந்தர் ந்ேசோவூர்யநாதன் தொடக்கவுரை : இந்திந்திநாவுக்கரனார்
| || || ||LETRII. i iiijata i, ஊறு * ya kihishek LLEIL -ே தன்மையுரை
::சிறப்புரை
நேர்ரோசசர்சி
சிங்க்கோமாஜrர்ாது
I-:ோர்த்துவக்கு
Tig
அலுவங்கள் ஒழுங்க் போட்டு ஆந்து |- Iன் பிரகா விருந்தினர் நடது
FillFLPELLLLLuis மிக அலுவங்கள் அமைச்சர்
120 நூாய் வெளியீடு
: இநம்சம்
செங்ககால் இயங்கியதும் சமூகது: மிேநாங்க் கட்டுள்ாங்டிருப்பு) 18 நாய் அறிமுகம்
இந்நிதியே வேந்தரர் கெர்ஜியதுறை தமிழ்நாடு ர்ேரீசோகரர்
கிரிக்கும் பல்கலைக்கழகம் 2. நன்றியுரை
நேதாரர் ஆராய்ச்சி அலுவர் இந்துசமாகாசார அலுவய்கள் நினைக்கார்
இவ் விழாவிற் ங்கிந்து கொவிரு சிறப்பிக்ருமாறு நீங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நோயுத்தரசர்
i Lifli III
ந்ேதுசமய கலாசார அலுவல்கள் நினைக்காம் இட211காவி விதி, ந்ொஜ்பு:

Page 165
29. OES. 2007 - FRIDAY (9.3 CDI AM - 12.30 | PM )
Pryf St Pgth1 TTT THILLEG II
Prifessor Emeritus
Ch. "Grie
Hū. Pildi Bādārāk Minister of Religious Affairs
īss Eir
g3 ஒ46
ਤੇ
Mr. P. Kit. Väkku SeçÇere:LBiry, Ministry of Religious Affairs & Morial Uplif hmet Enli
Prof. R. Nagasa Ty For II let Diriccitar, Dep:Ehti ment of Archaeology, Tiit nil Naidu
Prof. P. Gopalakrish an
EProfessor Emeritus
Frrif. 3. SFH||FFITFr! Head, Depart II hert Lyf Art History
Mădirui Kamaraj University
PROGRAMME
- Lighting the Lil Tıp
|- Recital of Sacred Hyrulls
kfS. EFEFEf MLIFILITFT)
LeLLTLLTL LLLLMTL LMLLllL luS TTTT TTLL ... Welctric Address
MITS. Tiñ eliyanayagami,
Eiir
FTIEĦĦirriH iif Hiiniiiliu Religi Ħajr R, il-'LIFLI Tul ħ i iiiTii
 
 
 

57
- Benediti uS LLLCLS LOLCLLL LL L LLu u L u uu uu SA
Heiill
ZSBLLLLLLL DD LL L LL CC u u S SS uu uu u LLuuu Wicilya ili MT.Wisunt hai Waith ainulatihan
0.15 - III. Hug ITalil Adelrieks
Mrs Shanti-NavLk ka Tasan
Iliriji, LCCuLMLLLLLLLL LL LLLLLLT LLLLTTTTT LL S TTTT S
10,3) - Address by Chi HiTTiTiiiLiini
Prof. S Pathi nijā filiathian
1.45 - Key Note: Address
DT, R. Naga 53 Tiy Prof. P. Gopala krishnallyar
11.2 - Address by Citiest of Honour
MT PL JET LIWAW li, l-, LI
Se IEET
tuuCuu LLL LLTL ZTT L Y S uT S DDD 1135 - Prof. G. SethLHafnan 1.5 - Address by Chief illist
HF: Paroli | E | Idrifiko
'', HiFi ste of Religi.ILL. A. Fiii T. 12 (XI) - Book: La Lirik: hirigi Cefertiliony
Departmental Publications
11 Ragu. Var111111 2 SCIIIIII Precedirgs - M.f.
|2.241 - Intridulcin
Dr. W. Vedasalam Dਧੂਸ਼
| Ai - Wole of Thanks
Mrs. Dayakumari Haifan,
FILII, i čijiet Ekspirit Himali i Heligi ETL 5. i ulti Til hit mit
You are cordially invited to attend the inaugural
cereininy und the prügeedings of the Seminar
SETT TIL FESTI
JIF. 1r
ueS LLLC LLLLLL LL LLLLLLLLS LLtttLL K LLLLLL L T L
148 tilliale Ruggl.
glömibij H.

Page 166
ආරාධනාවයි
සමිමන්ත්‍රණය 2007
භක්ති මාර්ගය සහ සංස්කෘතික එළිදැක්වීම
රාමග්‍රිෂ්ණනා මිෂන් ශාලාව, කොළඹ 06 ආගමික කටයුතු හා සදාචාර වර්ධන අමාත්‍යධාරාංශය හින්දු ආගමික සහ සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව
அழைப்பிதழ்
ஆய்வரங்கு 2007
பக்தி நெறியும் பண்பாட்டுக் கோலங்களும்
Seymnasakaur unangai Lbauhluk, Glasngh- 6.
மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
INVITATION
SEMINAR 2007
“The PAH OF EVOON AND CULTURAL EFFORESCENCE"
RAMAKRISHNAMISSION HALL, COLOMBO - 6 Ministry of Religious Affairs & Moral Upliftment
Department of Hindu Religious & Cultural Affairs
2007.06.29 - 2007.07.01
15.
 

நிகழ்ச்சி நிரல் 29.06.2007 வெள்ளிக்கிழமை
அமர்வு
தமிழக சியலம் வரலாபம்
மழ ஆர
தலைமை பேராசிரியர் சி. பத்மநாதன் (p. 1.30 முற்காலப் பல்லவர்
ಗ್ಧಣ್ಣಿಲಗೆ gnr. massarnruń கமழநாடு பல்லவர் காலத்துச் சாசனங்கள் கலாநிதி வே. வேதாசலம் கமிழ்நாடு 2.20 பல்லவர் காலத்துச் சாசனத்தமிழ்
கலாநிதி வ. மகேனப்வரன் பேராதனை பல்கலைக் கழகம்
அமர்வு
கமிமக சியலும் வரலாறும் தமழ4ஆவரலாறு *******o sugmaffluuiřagm. Amrassmus
ஒரு பல்லவர் காலத்து வரிவடிவங்கள்
கலாநிதிசு. இராஜவேலு தமிழ்நாடு மத்திய கொல்லியற்துறை-சென்னை ஆறு தமிழக வரலாற்றிற் பல்லவர்
கலாநிதி வே. வேதாசலம் இலங்கையிற் பல்லவர் செல்வாக்கு
Grungl. tysigugustið யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அமர்வு தமிழக 醬 வரலாறும்
Cai 350 S50)
* கலாநிதி ஜி. சேதுராமர்
தலைவா,
கலைவரலாற்றுத்துறை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
இலங்கையிற் பல்லவர் கலைப்பாணி அனுராதபுர காலம் பேராசிரியர் சி. பத்மநாதனூர்
4.0 தக்கனத்திற் சைவசமயமும்
தமிழகக் கொடர்புகளும் (தொல்லியல் நோக்கு) Gugiraflrfluit al. Frris, insiasti
5. மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
&sutrális any- இராஜவேலு தமிழ்நாடு

Page 167
Gumbia W 30.06.2007 சனிக்கிழமை
சமயமும் பண்படும் தலைமை கலாநிதி. சி. சாந்துவிங்கம் மு. 8.30 தேவாரம்
திரு. கனகசபாபதி நாகேளப்வரன் ஐ. வைணவம்
கலாநிதி ஜி. சேதுராமன் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
. ቇ፱፱ጨUItb
(gufjirðlíflufi fis. &lgihamitasvti பேராதனைப் பல்கலைக்கழகம்
30 பெளத்தம் f
Guignéfinfluuff 67 Isrü. aśiggsziĝ6EAUTIST யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
டி சைவசமய வரலாறு
Gugnéfinfluñas.fliguñu6ub யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சைவமும் வைணவமும் கலாநிதி வ. மகேளப்வரன் பேராதனைப் பல்கலைக்கழகம்
தேநீர் இடைவேளை
Huers W சமயமும் பண்பாடும் b“09“ðið szugirglifluf sil. &. álshgtöusnö
மு. 1.4 சைவத்திருமுறைகள்
பேராசிரியர் கே. சதாசிவர்ை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி ; சைவசமயமரபில் வேதாகமங்கள் Guigniflsfluijff afl. flausnus) தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு திரு கனகசபாபதி நாகேஸ்வரன் சப்ரகமுவ பல்கலைக்கழகம்
sliaňa Vi திருத்தலங்களும், கலைகளும்
தலைமை கலாநிதி இரா. கறலுக்கோவன்
; திருப்பதி, திருவரங்கம்
பேராசிரியர் ஜி. சேதுராமர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
22 தேவதானங்களும் பள்ளிச் சந்தங்களும்
திருமதி விக்ாேளப்வரிபவநேசன் யாழ்ப்பானப் பல்கலைக்கழகம்
| வேதாரணியம்
கலாநிதியை மகேளப்பைரன் பேராதனைப் பல்கலைக்கழகம்
星。尊辑 மதிய இடைவேளை
15

.50
திருவாலவாய்
பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் பேராதனைப்பல்கலைக்கழகம்
திருவாரூர்
திருமதி சோதிபலர் ரவிந்திரன் பேராதனைப் பல்கலைக்கழகம்
திருக்காளத்தி
கலாநிதி மா. இரகுநாதர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
delubsta Vil
திருத்தலங்களும், கலைகளும்
}
2.3
2.溶镇
.
$.毫镇
...)
பேராசிரியர்அ. சார்முகதாளப் திருவொற்றியூர்
கலாநிதி செல்வரருசிதம் சிவசுப்பிரமணியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருவில்லிப்புத்துர் திரு எனப்துவர்யத் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வைணவத்தலங்கள் (திருக்கண்ணபுரம், திருவாலிநகர், திருஎவ்வளுர்)
as sufrig? &m. Samsussiasm suai பண்ணிசை
கலாநிதிநா. Աp. நவரத்தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
பல்லவர் காலத்தில் நாட்டியக் கலை திருமதி சுகந்திகளிறுநீரளிதரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
solinia Vill
திருமுறைகளும் திவ்வியப்பிரபந்தங்களும்
தலைமை
. .20
..
5.辑维
t:Fugnaflifluyff fræ. aélt;sifjamisrgir பக்தியும் பாவனாயுக்தியும் திருக. இரதபரர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
சித்தர் பாரம்பரியமும் சித்தாந்தக் கோட்பாடும்
கலாநிதி கலைவாணி இராமநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
காரைக்கால் அம்மையார் கலாநிதி மகோர்பாரி சார்முகதானப்
bg
திரு முறி. பிரசாந்தன்
ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

Page 168
01-07-2007 ஞாயிற்றுக் கிழமை
dBuona IX திருமுறைகளும் திவ்வியப் பிரபந்தங்களும்
na Dun Lufttrafinflutti Gas. sgnafluerit p. 8.30 தேவாரம்
8.莓 அப்பர்
திருமதி பவானிமுகுந்தவர்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
9.维辑 கந்தரர்
கலாநிதிதுரை. மனோகரள்
பேராதனைப் பல்கலைக்கழகம் 9. சேரமான் பெருமாள்
கலாநிதி கி. விசாகருபவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் .. முதல் ஆழ்வார் மூவர்
Guigursflufluffés. sauigpasigursprü தகைசார் பேராசிரியூர் 19.00 நம்மாழ்வார் பாசுரங்களில்
வைணவ சம்பிரதாயம் திரு uநீ பிரசாந்தவர்
பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 10.20 சைவ வைணவப்பாகரங்கள் ஓர் ஒப்பீடு
திரு நபதைான்
ஊவாப் பல்கலைக்கழகம் 10.40 தேவாரத்திற் புராணக்கதைகள்
திரு செ.சுதர்சனர்
பேராதனைப் பல்கலைக்கழகம் ..) தேநீர் இடைவேளை
dlhoňa X பல்லவர் காலத்துச் சமூகம் தலைமை கலாநிதி எனப் இராஜவேலு 11.10 பல்லவர் கர்ஸ் வாணிபம்
Guffreflsflurif af. Leitrosjingjari
sarađJust CugTikkaus . பல்லவர் காலத்து ஆட்சி நிர்வாக முறைமை
கலாநிதிஆ. பத்மாவதி -
கல்வெட்டாய்வாளர் (ஓய்வு) 12.10 பக்தி இலக்கியமும் திணைக்கோட்பாடும்
கலாநிதி அம்மணர்கிளிமுருகதானப் கிழக்குப் பல்கலைக்கழகம் 12.0 பக்தி இலக்கியத்தில் அணிகலன்கள்
திருமதி வசந்தா வைத்தியநாதர் 12.50 பல்லவர்கால இலக்கியத்தில் இயற்கை
பேராசிரியர் எனப். சிவலிங்கராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ti Anata
16

O சேரவாதம் செகத்திரே
GuignafInflurif afl. sluinsmargify கிழக்குப் பல்கலைக்கழகம் பல்லவர் இலக்கியங்களில் பெண்கள்
திருமதிநாச்சியார்செல்வநாயகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
áaluofa XI பல்லவகால இலக்கியங்களும் மொழியும்
தலைமை கசியாரிதிதுரை மனோகரர்
. பொருள்யூரபும் இலக்கிய வடிவங்களும்
திரு.க, இரகுபரன் 'தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 240 இலக்கியத்தில் இராவணன்
கலாநிதிதிரு எஸ். யோகராஜா
கிழக்குப் பல்கலைக்கழகம்
影.00 பக்கி இலக்கியத்திற் படிழக்கோலங்கள்
கலாநிதியா. வேததாகுள்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
320 பக்தி இலக்தியங்களில் அறிவியற்சிந்தனைகள்
திரு ச. முகுந்தார்
O கிழக்குப் பல்கலைக்கழகம் 3. udboatsTansaanufaub
திரு 9:### d Madges.it/wit
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
deuoñesa XIII பல்லவகால இலக்கியங்களும் மொழியும்
kaan tutflflufail aflatartil
4.0 பக்தி ரசம்
கலாநிதி கிருவர்ணவேணி தொபேர்ட் காழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையில் பல்லவர்கால čDů மொழிச் செல்வாக்கு திரு கிருவர்ண்ானந்தசர்பர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 10 தேவாரங்களில் சைவசமயக் கோட்பாடுகள்
. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 5.0 ண்ைடாள் w 嘉 க. கிருந்தாகரர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சன வழக்கில் சமஸ்கிருதம் திரு எனப் பத்மநாபசர்மர்
5.30

Page 169

இந்து பண்பாட்டு மரபிலே பக்திநெறி யும் பண்பாட்டுக் கோலங்கள் பற்றியும் விக்கும்போது எமது மனக்கண் முன் வது பல்லவர் காலமாகும். தென்னாட்டில் வர் ஆட்சி நிலவிய காலம் பண்பாட்டு ாற்றில் மிகவும் முக்கியத்துவமுடையது. ாலப் பகுதிக்குரிய பண்பாட்டுக் கோலங்கள் ய ஆய்வுகள் பல்வேறு நிலைகளில் ஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் ணக்களம் வருடந்தோறும் ஒழுங்குசெய்யும் வரங்கு வரிசையில் இவ்வருடம் "பக்தி யும் பண்பாட்டுக் கோலங்களும்" என்ற னிப் பொருளில் ஆய்வரங்கு நடைபெறுவது பும் பொருத்தமானதும் வரவேற்கக்கூடிய ன்றுமாகும். இவ்வாய்வரங்கின் மூலம் விடயம் தொடர்பான புதிய ஆய்வு சிகளுக்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது. ஞர்தம் ஆய்வின் மூலம் பெறப்பட்டுள்ள துக்கள் மூலம் இக்காலத்துப் பண்பாட்டுக் பங்கள் பற்றிய மற்றுமொரு பரிணாமத்தை அறிந்து நயக்கவும் இற்றைவரை பெற்ற ஆய்வுகளை மீள்பரிசீலனை யவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர்
வாழ்நாட் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ers Colombo- 11 Tel: O777244893