கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆய்வரங்குச் சிறப்புமலர் 1997

Page 1
ஆய்வரங்குச்
1997 அக்டோபர் 12 கொழும்பில் ந இந்து சமய ஆய்வரங் தொகுக்கப்பட்ட சி
s.
te இந்து சமய கலாசார அலுவ
கொழும்பு, இல
 
 
 

− சிறப்புமலர்
3ம் திகதிகளில் டைபெற்ற கினை யொட்டித் றப்பு மலர்.
1ல்கள் திணைக்களம் Uங்கை,

Page 2


Page 3
ஆய்வரங்கு
இந்துசமய கலாசார அ 1997 அக்டோபர் கொழும்பு இராமகிருஷ்ண இந்து சமய ஆய் தொகுக்கப்ப
திரு. எஸ். தெ உதவிப்பணிப்பாள திரு. ம. சண்
தகவல் அ
s
ഠിഖങf இந்து சமய கலாசார அ;
98. வோட்
கொழும் இலங்
 

ச் சிறப்புமலர்
அலுவல்கள் திணைக்களம்
12,13ம் திகதிகளில் மிஷன் மண்டபத்தில் நடத்திய வரங்கினையொட்டி ட்ட சிறப்புமலர்.
தய்வநாயகம் ார் ( ஆராய்ச்சி) முகநாதன் புலுவலர்
24895
|யீடு:
லுவல்கள் திணைக்களம் பிளேஸ்,
)L - 07
6恋)凸。

Page 4


Page 5
இராமகிருஷ்ண மிஷன் இ
றுநீமத் சுவாமி ஆத்
வாழ்த்து
இந்து சமய கலாசார அலுவல்கள் தி: திகதிகளில், இந்து ஆய்வரங்கு ஒன மகிழ்ச்சியடைகிறோம்.
பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை குறித்த ஆய்வரங்கு ஒன்று இத்தினங்க: விழா அடிப்படையில், இயல், இசை, நாட பெற உள்ளன.
இந்த ஆய்வரங்கு சிறப்புற அமை!
இதனைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செ திணைக்களத்தினருக்கு எமது நல்வாழ்த்
இராம.

Nலங்கைக்கிளையின் தலைவர்
மகனாநந்தா அவர்களின்
துச் செய்தி
ணைக்களம் எதிர்வரும் ஒக்டோபர் 12,13ம் ாறை நடத்த உள்ளது என அறிந்து
இந்து சமயத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைக் ளில் நடைபெற உள்ளது . தவிர, முத்தமிழ் க நிகழ்ச்சிகளும் இத்தருணத்தில் இடம்
ய இறையருளைப் பிரார்த்திக்கி றோம். ய்துள்ள இந்துசமய கலாசார அலுவல்கள் துக்களும், பாராட்டுதல்களும் உரித்தாகுக!
சுவாமி ஆத்மகனாநந்தா தலைவர்
கிருஷ்ணமிஷன் ( இலங்கைக்கிளை)
கொழும்பு.

Page 6
MESSAC
HON. LAKSHM. THE HON. MINISTER OF CULTU AND MINISTER FO)
I an very glad to send my felicita occasion of the Seminar on "Hinduism Department of Hindu Religious and Cu
The theme of "the growth of Hinc the 13th Century" involves a very signi Hinduism and Tamil has a deep rooted numerous religious literature and hymns made it to be praised as "Bhakthi Langu
Such Research presentations are research activities. I am happy to note th Lankan Scholars in this Seminar. The academicians from the Jaffna University ship in the present context will help understanding among all.
The Department of Hindu Religio its programme according to the Set plan.
will be a real success and prove benefic

E FROM
AN JAYAKODY RAL AND RELIGIO US AFFAIRS ' BUDIDHA SASANA.
tions to the Souvenir published on the and Hindu Culture" organised by th tural Affairs.
uism in Tamilnad and Sri Lanka upto icantera in the history of Hindu Culture. tradition and entwined in growth. The written in Tamil during this period had
age.
thought provoking and leads to further e participation of both Tamilnad and Sri ; participation of several lecturers and deserves special praise. Such relationpromote closer relationship and better
as and Cultural Affairs is implementing I wish that this Seminar organised too
all to many.
HON. LAKSHMAN JAYAKODY THE HON. MINISTER OF CULTURAL AND RELIGIOUS AFFAIRS AND MINISTER FOR BUIDIDHA SASANA.

Page 7
புத்தசாசன
கலாசார சமய அலுவ
மாண்புமிகு லக்ஷமன்
வாழதது
இந்துசமய, கலாசார அலுவல்க
இந்துசமயக் கருத்தரங்கினை ஒட்டி ( வாழ்த்துக்களை அளிப்பதில் மிக்க மகிழ்
"தமிழகத்திலும், இலங்கையிலும் பதின்மூ சமய வளர்ச்சி”என்ற இக்கருத்தரங்கி வரலாற்றுக் காலத்தைப் பற்றிய சிந்த6ை
இந்துசமயமும், தமிழும் மிக நீண்
பின்னிப் பிணைந்து வளர்ந்து வருவன.
பக்தி நூல்களும், தேவார, திருப்பாசுரங் போற்றக் காரணமாயின.
எனவே இத்தகைய ஆய்வுகள் ே வல்லன. புதிய புதிய ஆய்வுகளுக்கு தமிழகத்தையும், இலங்கையையும் சேர்ந் மகிழ்கின்றேன்.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந் இந்த ஆய்வுக் கருத்தரங்கில் ஆய்வுரை விடயமாகும்.
இத்தகைய தொடர்புகள் இன்ை இவை நம் அனைவரிடமும் உறவையும்.
இந்துசமய கலாசார அலுவல்கள் மிகச் சிறப்பாக ஆற்றிவருகின்றது. அந் முறையில் அமைந்து பயன்தர வேண்டுெ

அமைச்சரும், பல்கள் அமைச்சருமான
ஜயக்கொடி அவர்களின்
ச் செய்தி
ள் திணைக்களம் ஏற்பாடு செய்கின்ற வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு எனது வடை கின்றேன்.
pன்றாம் நூற்றாண்டுவரை ஏற்பட்ட இந்து ன் ஆய்வுப்பொருள், மிகவும் பரந்த ஒரு னக்கு வழி வகுக்கின்றது.
டகாலப் பாரம்பரியம் மிக்கவை. இரண்டும் தமிழில் காணப்படும் பெருந்தொகையான களும் இம் மொழியை, பக்திமொழி என
மலும் சிந்தனைத் தெளிவை உண்டாக்க வழிப்படுத்துவன. இந்த ஆய்வரங்கிற்கு த அறிஞர்கள் கலந்து கொள்வதை அறிந்து
ந்த பல அறிஞர்களும், விரிவுரையாளர்களும் கள் சமர்ப்பிக்கவுள்ளமை பாராட்டிற்குரிய
றய நிலையில் மிகவும் அவசியமானவை. புரிந்துணர்வையும் ஏற்படுத்த உதவுவன.
திணைக்களம், திட்டமிடும் பணிகளை த வகையில், இந்த ஆய்வரங்கும் சிறந்த மென வாழ்த்துகிறேன்.
லக்ஷ்மன் ஜயக்கொடி
புத்தசாசன அமைச்சரும், கலாசார சமய அலுவல்கள் அமைச்சரும்.

Page 8
கால்நடை அபிவிரு அடித்தளவமை மாண்புமிகு செளமியமூர்த்
ஆசிச்
இந்து சமய, கலாசார அலுவல்கள் ஒன்றினை ஏற்பாடு செய்வது அறிந்து மக்
இந்த ஆய்வரங்கு, 13ம் நூற்றாண்( ஏற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சியைப் பற்
இந்துசமயம் மிகவும் தொன் அழைக்கப்படுவது. ஆயிரக் கணக்கா முனிவர்களாலும், ரிஷிகளாலும் இந்து மத
சமயத்தைப் போன்றே தமிழும், மி சிறப்பான வரலாறு உண்டு. தமிழிலுள்ள செழுமை சேர்த்துள்ளன.
இலங்கையையும், தமிழகத்தையும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில்
இந்து சமயத்தையும், தமிழையும் ப அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
இத்தகைய சிறப்பான பணிகளை மே அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்களை

த்தி மற்றும் தோட்ட ப்பு அமைச்சர் தி தொண்டமான் அவர்களின்
செய்தி
திணைக்களம் இந்து சமய ஆய்வரங்கு கிழ்ச்சியடைகிறேனர்.
றி வரை தமிழகத்திலும், இலங்கையிலும் றி ஆராய்ச்சி செய்கின்றது.
மையானது; சநாதன தர்மம் என ான ஆண்டுகளுக்கு முன் பிருந்தே தம் போற்றப்பட்டு வந்துள்ளது.
கெவும் பழமையான மொழி: தமிழுக்கு சமய நூல்கள். தமிழ் மொழிக்கு மேலும்
சேர்ந்த அறிஞர்கள், இந்த ஆய்வரங்கிற் சிந்திக்கவுள்ளமை பாராட்டிற்குரியது.
ற்றிய இந்த ஆய்வரங்கு மிகச் சிறப்பாக
ற்கொள்கின்ற இந்துசமயத்திணைக்கள த் தெரிவிக்கின்றேன்.
செள. தொண்டமான்
* கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட அடித்தளவமைப்பு அமைச்சர்.

Page 9
MESSA
HON. PROF. A DEPUTY M CULTURAL AND F
I am glad to note that the Dept. of organised a Seminar on the Renaissanc Tamilnad and Sri Lanka up to the 13t Religious Affairs will do everything Culture in all its aspects.
Apart from reviewing our past new ideas regarding both the language
It is very encouraging to note that are to participate in this Seminar. A discussion under various titles coverin
I wish to congratulate Prof. Path and wish all Success to the Departmen in conducting this Seminar well.

GE FROM
.V. SURAVVEERA (NISTERFOR RELIGIOUS AFFAIRS
Hindu Religious and Cultural Affairs had 'e of Hinduism and Hindu Culture both in n Century. The Ministry of Cultural and possible to foster Hinduism and Hindu
history, such Seminars help to bring forth
and the religion.
scholars of both Tamilnad and Sri Lanka Also I am told that this Seminar covers g a very long period of history.
manathan for having planned this Seminar t of Hindu Religious and Cultural Affairs
Prof. A.V... Suraweera, Deputy Minister for Cultural & Religious Affairs.

Page 10
J,6oTJFITJJ JJFIDULI 9gyp6DI கெளரவ பேராசிரியர் ஏ.
ஆசிச்6
பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை த இந்து சமய மறுமலர்ச்சி பற்றிய ஆய்வு அலுவல்கள் திணைக்களம் ஒழுங்கு ெ இந்து சமயத்தையும், இந்து கலாசார உதவிகளை வழங்க கலாசார, சமய அலு
எமது மொழி, மதம் என்பன பற்றி பு இத்தகைய ஆய்வரங்குகள் மிகவும் அவச வரலாறுகளை நாம் மீட்டிப் பார்த்துக் கெ
இந்த அரங்கில் தமிழக, இலங்கை அ ஆய்வுத் தலைப்பிற்கு பொருத்தமான விட பல்வேறு தலைப்புகளில் இவர்களின் ஆய்
ஆய்வரங்கின் சிறப்பிற்கு உரிய ஆ
பத்மநாதன் அவர்களையும், சிறப்பான முன
மேற்கொள்கின்ற இந்துசமய கலி பாராட்டுகின்றேன்.
6

ல்கள் பிரதி அமைச்சர்
வி. சுரவீர அவர்களின்
செய்தி
மிழகத்திலும், இலங்கையிலும் ஏற்பட்ட ரங்கொன்றினை இந்துசமய கலாசார சய்வதறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். த்தையும், மேம்படுத்து வதற்கு இயன்ற
வல்கள் அமைச்சு முன்னிற்கின்றது.
திய சிந்தனைகளை மேற்கொள்வதற்கு சியமானவை. இதன் மூலம் எமது பழைய ாள்ள முடியும்.
றிஞர்கள் கலந்துகொள்கின்றமை இந்த யம். நீண்டவொரு காலப் பகுதியைப் பற்றி வுகள் அமைவதாக அறிகின்றேன்.
லோசனைகளை வழங்கிய பேராசிரியர் றையில் திட்டமிட்டு இந்த ஆய்வரங்கினை ாசாரத் திணைக் களத்தினையும்,
ஏ. வி. சுரவீர. பிரதியமைச்சர் . சார சமய அலுவல்கள் அமைச்சு.

Page 11
கலாசார சமய அலுவல்கள் அ இந்துசமய கலாசார அ பதில்பணி
திருமதி.ஆர்.கைல
வாழ்த்
இந்து சமய கலாசார அலுவல்
கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து இலக்கிய ஆய்வு தொடர்பான கருத்த
இந்த ஆண்டு " பதின்மூன்ற இலங்கையிலும் ஏற்பட்ட இந்து ஆய்வுக்கருத்தரங்கு திணைக்களத்தா
இக்கருப்பொருள், மிகவும் நீண்ட வளர்ச்சிப் போக்கினைப் பற்றிய சிந்த தமிழ்மொழியும், சமயமும் இரண்டறச் இலக்கிய, தத்துவப் பெறுமானங்களை
இவ்வாய்வரங்கிற் தமிழக அறிஞ மகிழ்வுதருகின்ற விடயமாகும். அத்துடே தமது பரிபூரண ஒத்துழைப்பினைத் த சமர்ப் பிக்கவுள்ளமை வரவேற்பிற்குரிய
இக்கருத்ரதங்கினை ஒழுங்குசெ என்பவற்றை தந்து தவியதோடு, முழு பல்கலைக்கழக மானியங்கள் ஆ வரலாற்றுத்துறை பேராசிரியருமான சி. நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். மிகe எமது செயற்பாடுகளுக்காக அவர் எப்
இந்த ஆய்வரங்கினை ஒழுங்குெ திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவி திரு. எஸ். குமார் வடிவேல் ஆகியே கூரததககன.

மைச்சின் மேலதிக செயலாளரும் லுவல்கள் திணைக்களத்தின் பபாளருமான, ாசநாதன் அவர்களின்
துச்செய்தி
கள் திணைக்களம் வருடாந்தம் ஆய்வுக் நடாத்தி வருகின்றது. இதுவரை தமிழியல், ரங்குகள் நடைபெற்றுள்ளன.
ாம் நூற்றாண்டுவரை தமிழகத்திலும், சமய வளர்ச்சி” எனும் பொருளில் ல் ஒழுங்கு செய்யபட்டுள்ளது.
தொரு காலப்பகுதியில் ஏற்பட்ட இந்து சமய னையை ஏற்படுத்துவதாக அமைகின்றது. 5 கலந்து வளர்ந்த காலத்தையும், அதன் யும் இத்தலைப்பு உள்ளடக்கியுள்ளது.
5ர்கள் மூவர் கலந்து கொள்வது மிகவும் ன், யாழ்ப்பாணப்பல்கலைக்கழக அறிஞர்கள், ந்து இந்த அரங்கில் ஆய்வுக்கட்டுரைகள்
அம்சமாகும்.
ப்வதற்கு ஆலோசனைகள், நெறிப்படுத்தல் மையான தமது பங்களிப்பையும் தருகின்ற ணைக் குழுவின் பிரதித் தலைவரும், பத்மநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பும் பொறுப்புமிக்க பணியில் இருந்தபோதும் போதும் ஆதரவு நல்கிவருகின்றார்.
சய்வதில் திணைக்கள பிரதிப்பணிப்பாளர், பணிப்பாளர்கள், திரு. வீ. விக்கிரமராஜா, ார் அளித்து வரும் உதவிகள் நினைவு
7

Page 12
இந்த அரங்கு சிறப்புற அமைய வே: செயற்படுகின்ற திணைக்கள ஆராய் திரு.எஸ்.தெய்வநாயகம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாய்வரங்கினை ஒட்டி தொ விடயங்களைத் தாங்கி அமைகின்றது எe
இவ்வாய்வரங்கிற்கென ஒன்று கூடிய
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் எனது நல்லாசிகள் உரியன.
ᏧᏌᏏ6Ꮩ)I Ꭲ
இந்து சம

ண்டுமென மிகப்பொறுப்பான முறையில் ச்சிப் பகுதியின் உதவிப்பணிப்பாளர் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத்
ாகுக்கப்பட்ட இந்நூல் பயன்மிகுந்த ன நான் கருதுகின்றேன்.
புள்ள அறிஞர்கள் அனைவருக்கும் எனது கின்றேன். அமர்வுகள் சிறப்புற அமைய
மதி.ஆர். கைலாசநாதன் மேலதிக செயலாளர்,
சார சமய அலுவல்கள் அமைச்சு.
பதில் பணிப்பாளர்,
ய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

Page 13
பேராதனைப் பல்கலை. பேராசிரியரும், பல்கலைக்கழக
உபதலை
பேராசிரியர் சி. ப
ஆசிச்
இந்து சமய கலாசார அலுவல்கள் கருத்தரங்குகளையும், ஆராய்ச்சி மாந நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளது கருத்தரங்குகள் யாவும் தமிழ் மொ சமபந்தமானவை.
1982 ஆம் வருடத்தில் நடைபெற்ற இராசதுரை அவர்கள் அமைச்சராக இ இந்து சமய, கலாசார அலுவல்கள் அன தமிழ்த்துறை தொடர்பான ஆய்வுகள் செ அமைச்சராக இருந்தபோது மேற்கொள்
இத்திணைக்களம் இந்து சமயம் ெ என்னும் மலரையும் வெளியிட்டு வருகின் வெளியிடும் பொறுப்பினை துணிகரமாக மத்தியிலும் அப்பணியினை அது நிறைே கோயில்கள் வரலாறு, இலங்கையில் உ மீளப் பதிப்பித்தல் ஆகிய திட்டங்களையும்
இந்து சமயம், இந்து கலாசாரம் ே தேசிய மட்டத்திலான முதலாவது ஆ தமிழகத்திலும் இலங்கையிலும் 13 ஆம் !

க்கழக வரவாற்றுத்து றைப் மானியங்கள் ஆணைக்குழுவின் வருமாகிய
த்மநாதன் அவர்களின்
செய்தி
T திணைக்களம் ஆண்டுதோறு ம் பல ாடுகளையும்,சாஹித்திய விழா போன்ற . இதுவரை நடைபெற்ற ஆராய்ச்சிக் ழி, இலக்கியம், கலாசாரம் என்பன
உலக இந்து மாநாடு, கெளரவ செ. இருந்த காலத்திலே பிரதேச அபிவிருத்தி மைச்சினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும் sளரவ பி.பி தேவராஜ் அவர்கள் இராஜாங்க ளப்பட்டவை.
தாடர்பாகப் பல நூல்களையும், பண்பாடு றது. இந்து கலைக்களஞ்சியம்’ ஒன்றினை மேற்கொண்டு பல வசதியீனங்களுக்கு வற்றி வருகின்றது. இலங்கையின் இந்துக் ருவாகிய பிரதானமான தமிழ் நூல்களை இத்திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.
தொடர்பாக இத்திணைக்களம் நடாத்தும்
ராய்ச்சி மாநாடு இதுவேயாகும். இது
நூற்றாண்டுவரை ஏற்பட்ட சைவ, வைணவ

Page 14
சமயங்களைப் பற்றியதாகும். தமிழக இலங்கையில் இந்து சமயம் பரவியது . எ கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற இந்து சமயம்,இந்து கலாசாரம் என்பன பற் தேவையாகும். 1997 ஒக்ரோபர் 12-13 தி இவ்விடயந் தொடர்பாகப் புதிய சிந்தe எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாய்வரங்கிலே ஆராயப்படும் கட் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள
ஆராய்ச்சிப் புலமையும், சமயாபிமா6 கலந்து கொள்ளுகின்றமை இம்மாநாட்டி
எல்லாம் செம்மையாக நிறைவேறி, ந உயிராகவும் அமைந்து எம்மை இயக்கும்
1(

த்தினுTடாகவே பெரும்பான்மையும் னவே இலங்கையில் விருத்தி பெற்ற இந்து றியும் புரிந்து கொள்வதற்குத் தமிழகத்து றிய தெளிவான விளக்கம் இன்றியமையாத கதிகளில் நடைபெறும் ஆய்வரங்கில் னைகள் மலர்வதற்கு ஏதுவாகும் என
டுரைகள், உரிய மாற்றங்களோடு இந்து த்தினால் வெளியிடப்படும்.
னமும் மிக்க தென்னிந்திய அறிஞர்கள் ன் சிறப்பம்சமாகும்.
ன்மைகள் பல கிடைக்கக் குருவாகவும் ) சற்குருநாதன் அருள் புரிவாராக.
சி.பத்மநாதன் உபதலைவர், பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழு.

Page 15
இந்து சமய கலாசார அ பிரதிப்பை
திருமதி சாந்தி நா
b{
இந்துசமய கலாசார அலுவல்கள் தி முறையில் ஆய்வரங்குகளை ஏற்படுத் தமிழ்மொழியியல், இலக்கியத் திறனாய் அரங்கியல் தொடர்பான ஆய்வரங்குகள்
திணைக்களம் ஏற்படுத்திநடத்தியுள் இலங்கை அறிஞர்களும் கலந்து கொ6 வெளிப்படுத்தத்தக்க களமாக இந்த அரா சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரை திணைக்களம் மேற்கொண்டு வருகின்
இந்த ஆண்டு பதின்மூன்றாம் இலங்கையிலும் ஏற்பட்ட இந்துமத வ அமைந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தலைப்புகளில் ஆய்வுகளைச் சம வரவேற்பிற்குரியதாகும்.
இவ்வாய்வரங்கின் மூலம், இந்து சம உணர்ந்து கொள்ள முடியும் என நட கடமைகளில் ஈடுபட்டுழைத்த அனைவரு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகுக.
“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் என்பதற்கிணங்க ஆய்வரங்கின் பயன் இறையருளை வேண்டி எனது நல்லாசி
இந்து சமய

லுவல்கள் திணைக்களத்தின் offiLITGIT if வுக்கரசன் அவர்களின்
ல்லாசி ணைக்களம், ஒவ்வொரு வருடமும் சிறந்த தி வருகின்றது. கடந்த ஆண்டுகளில் வு, தமிழ் நாட்டார் வழக்காற்றியல், தமிழ் T நடைபெற்றுள்ளன.
ள ஆய்வரங்குகளில் தமிழக அறிஞர்களும், ண்டுள்ளனர். அறிஞர்களின் ஆய்வுகளை வ்குகள் அமைந்துள்ளன. இவ்வரங்குகளில் களை நூலுருவாக்கும் பணிகளையும் Og)].
நூற்றாண்டுவரை தமிழகத்திலும், ளர்ச்சி " யைப் பற்றியதாக ஆய்வரங்கு 5 மூன்று தமிழ்ப் பேராசிரியர்களும், நமது களும் , விரிவுரையாளர்களும் பல்வேறு ர்ப்பிக்க இசைந்து ஸ்ளமை மிகுந்த
I வளர்ச்சி யின் தாற்பரியத்தை ஓரளவாவது ம்புகின்றேன். ஆய்வரங்கு தொடர்பான }க்கும், கலந்து கொண்ட அறிஞர்களுக்கும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” Tபாடுகள், அனைவருக்கும் கிடைத்திட களைத் தெரிவித்துக் கொள்கின்றேனர்.
திருமதி சாந்தி நாவுக்கரசன். பிரதிப்பணிப்பாளர் ப கலாசார அலுவல்கள் திணைக்களம்.
11

Page 16
இந்து சமய கலாசார அலுவல் பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு.எ
ஆசிச்
இந்து சமயத்தின் தொன்மையையு நடத்தப்படும் ஆய்வரங்கு இது. கடந்த கால திணைக்களம், மொழி, இலக்கியம் தெ இந்து சமயத்தைப் பற்றி ஆராயும் முதல் ,
தமிழகத்திலும் இலங்கையிலும் 13ஆம் நு வளர்ச்சி என்பதே இதன் கருப்பொருளாகு இலங்கையில் பிரதிபலித்து, உத்வேகம் தமிழகத்தை விட இந்து சமய வளர்ச் மிகையாகாது. தேவாரம் பிறந்த இடம் த ஆதீனங்களும், சமயத்தையும், தமிழை நிலையைக் கடைப்பிடித்து இந்து சமயம்
இந்த ஆய்வரங்கு, முழுமையாக இர் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் எவ்வாறு, இருந்தது, அதன் வளர்ச்சி எத்தகைய என்பதை ஆராயும் நோக்கம் கொண்டது. பல அறிஞர்கள், இவ்வாய்வரங்கில் கல மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. கழகத்திலிருந்து பல ஆய்வாளர்கள் முன்வந்திருப்பது, மிகவும் வரவேற்கத்தக்
இத்தகைய ஆய்வரங்குகள் காலத் சமயத்தின் தாற்பரியத்தை மக்கள் உன் ஏற்படுத்திட இந்து சமய கலாசார ஆ முயற்சிகளை மேற்கொள்கின்றது. அதற் கிடைக்க இறையருளை வேண்டி கொள்கின்றேன்.

கள் திணைக்களத்தின் உதவிப் Siu) தெய்வநாயகம் அவர்களின்
செய்தி
ம், வரலாறுகளையும் ஆராயும் நோக்கில் 1ங்களில் இந்துசமய கலாசார அலுவல்கள் ாடர்பான ஆய்வரங்குகளை நடத்தியது, ஆய்வரங்கு இதுவென்று கூறலாம்.
நூற்றாண்டு வரை ஏற்பட்ட இந்து சமய நம். தமிழகத்தில் ஏற்பட்ட சமய எழுச்சியே
பெற்றது. இன்று இலங்கையில் தான் சி மேலோங்கி வருகின்றது என்றால் மிழகம். அந்த இடத்தில், ஆலயங்களும், பும் வளர்த்தன. இலங்கையிலும் இதே வளர்ச்சி கண்டது.
}துசமயத்தை ஆராய முற்படாவிட்டாலும், இந்து சமயத்தின் வளர்ச்சி மேலோங்கி துறைகளில் படிந்து, மக்களை ஈர்த்தது. தமிழகத்தையும் இலங்கையையும் சேர்ந்த ந்து கொண்டு கட்டுரை படிக்கவிருப்பது
குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்
இவ்வாய்வரங்கிலே கட்டுரை படிக்க க தொன்று.
துக்கு காலம் நிகழ்த்தப் பட்டு, நமது இந்து ாணரக் கூடிய வகையில் சந்தர்ப்பங்களை, அலுவல்கள் திணைக்களம் முடிந்தளவு ]கு அனைவரது ஒத்துழைப்பும் என்றும் எனது நல்லாசிகளைத் தெரிவித்துக்
எஸ்.தெய்வநாயகம்
உதவிப்பணிப்பாளர்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

Page 17
(அை
இந்துசமய
இராமகிருஷ்ண ଗsnt
953LTUri 1
1
மு.ப 9.00 மணி முத
த6 திருமதி இராஜெ மேலதிகச் செயல
B6VITEFT) ELDu | .
மாண்புமிகு ல புத்தசாசன அ சமய அலுவல்
> .ெ
ழரீமத் சுவாமி தலைவர், இராமகிரு சிறப்பு வ
கெளரவ பேரா கலாசார சமய அலு பேராசிரிய பிரதித் தலைவர், பல்கலைக்
பேராசிரியர் தமிழ்த்துறை, புது கலாநிதி எ6 தலைவர், தமிழ்த்துறை, தட இவ்வாய்வரங்கில் கலந்து சிறப்பிக்குப
திருமதி இல, 98, வோட் பிளேஸ், பதில் பணி கொழும்பு - 07 இந்துசம
29.09. 1997

ழப்பிதழ் )
ஆய்வரங்கு
ண மிஷன் மண்டபம், ழும்பு - 06
2 - ஞாயிற்றுக்கிழமை
- திங்கட்கிழமை
3
ல், பி. ப 5.00 மணி வரை
Ծ)67)66)Լ0 : |லட்சுமி கைலாசநாதன் ாளர் (இந்து விவகாரம்) அலுவல்கள் அமைச்சு.
ரதம அதிதி : கூழ்மன் ஜயக்கொடி மைச்சரும், கலாசார 0கள் அமைச்சரும். களரவ அதிதி: லி ஆத்மகனாநந்தா நஷ்ண மிஷன், கொழும்பு. பிருந்தினர்கள் சிரியர் ஏ. வி. சுரவீர லுவல்கள் பிரதி அமைச்சர் ர் சி. பத்மநாதன் கழக மானியங்கள் ஆணைக்குழு அ. பாண்டுரங்கன் |வைப் பல்கலைக்கழகம் ஸ். என். கந்தசாமி மிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 0ாறு தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
இ. கைலாசநாதன் ரிப்பாளர், ய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
13

Page 18
நிகழ்ச்
இந்துசமய இடம் - இராமகிரு காலம் 12,13ம் திக அக்டோபர் நேரம் (p. LJ 9.00
கருப்ெ தமிழகத்திலும், இலங்கையிலும் பதின்
இந்து சமய
தொடக்க வைபவம் மு.ப. 9.00 மங்கள விளக்கேற்றல் 9.05 வேதாத்யயனம்
சிவழீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் 9-10 திருமுறை ஒதல்
பண்ணிசைப் பாவலர் திரு.பி.வி.இராமன் 9.15 வரவேற்புரை
திருமதி சாந்தி நாவுக்கரசன் பிரதிப்பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 9.25 அருளுரை
பூரீமத் சுவாமி ஆத்மகனானந்தா தலைவர், இராமகிருஷ்ணமிஷன், கொழும்பு. 9.35 தலைமையுரை
திருமதி இராஜலெட்சுமி கைலாசநாதன் மேலதிகச் செயலாளர் (இந்து விவகாரம்), கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு . 9.50 தொடக்கவுரை
பேராசிரியர் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். பிரதித்தலைவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கொழும்பு. 10.10- சிறப்பு விருந்தினர் உரை 10.30- பிரதம விருந்தினர் உரை 10.45- நன்றியுரை
திரு.எஸ். தெய்வநாயகம் உதவிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
10.55- தேநீர் இடைவேளை
14

Réချဲ့ நிரல்
ஆய்வரங்கு -1997 ஷ்ண மிஷன் மண்டபம்
திகள்,
1997
பாருள்
மூன்றாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட
வளர்ச்சி
முதலாம் அமர்வு
(p. i. 11.00
f1.15一
35
11.55
தலைமை-பேராசிரியர் சி. பத்மநாதன் துணைத்தலைவர், இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.
தலைமையுரை ஈழத்துப் பிராமண குலங்களும் அக்கிரகாரங்களும் பேராசிரியர் சி. க.சிற்றம்பலம், தலைவர், வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம். முருக வழிபாடு :தோற்றமும் வளர்ச்சியும் பேராசிரியர் வி.சிவசாமி, தலைவர், சமஸ்கிருதத்துறை, யாழ். பலகலைககழகம.
கருத்துரை
இரண்டாம் அமர்வு
தலைமை
12. O0
12. 20
2. 40
ص- {0 0 ه 1
5
பேராசிரியர் புலவர் செ.இராசு கல்வெட்டியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
திவ்விய பிரபந்தங்கள் GuIJmflfluit
அ. சண்முகதாஸ் கலைப்பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம். இந்துக்களின்வாழ்வியலில் ஒழுக்கத்தின் பெறுமானங்கள் செல்வி சுகந்தினி பொன்னம்பலம், விரிவுரையாளர், இந்து நாகரீகத்துறை, யாழ். பல்கலைக்கழகம், கருத்துரை மதிய உணவு இடைவேளை

Page 19
மூன்றாம் அமர்வு
தலைமை -
ճl. ս. 2.00
2. 20
2, 40
3.00
3.5-
பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் தலைவர், இந்து நாகரீகத்துறை, யாழ். பல்கலைக்கழகம். தலைமையுரை 'வன்னியில் கண்ணகை வழிபாடு ஒரு மறுமதிப்பீடு
திரு. ம.இரகுநாதன் சிரேஷ்ட விரிவுரையாளர்,தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். 'திருமுறையும் -திருக்குறளும் கலாநிதி எஸ்.என். கந்தசாமி, தலைவர், தமிழ்த்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். கருத்துரை
தேநீர் இடைவேளை.
நான்காம் அமர்வு
தலைமை
3.30
3.50
4.10
4. 30
4. 45
பேராசிரியர் அ.பாண்டுரங்கன் தமிழ்த்துறை, புதுவைப் பலகலைககழகம.
தலைமையுரை, சைவசித்தாந்த தத்துவம் திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒர் ஆய்வு திருமதி ஏ.என்.கிருஷ்ணவேணி, நுண்கலைத்துறை, யாழ்,
'பல்கலைக்கழகம்.
‘இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்களின் செல்வாக்கு” பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன், தலைவர், இந்து நாகரிகத்துறை யாழ், பல்கலைக்கழகம்.
கருத்துரை
திருமுறை ஒதல் அருள் மொழியரசி திருமதி. வசந்தா வைத்தியநாதன்.
இரண்டாம் நாள்
மு.ப. 9.00- மங்கள விளக்கேற்றல்
905- திருமுறை ஒதல் 9.10- வரவேற்புரை
திரு.வீ. விக்கிரமராஜா, உதவிப்பணிப்பாளர் (நிர்வாகம்), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
ஐந்தாம் அமர்வு தலைமை- பேராசிரியர் சி. தில்லைநாதன்,
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 9.25- தமிழின் முதலாவது பக்தியுகமும்,
சைவசித்தாந்தத்தின் பிறப்பும் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, தலைவர், மெய்யியல்துறை, யாழ்.

15
9. 45
0.05
10.25
حیی 40 10
பல்கலைக்கழகம். 'திருமுருகாற்றுப்படை சித்தரிக்கும் முருகன் அறிமுகம்’ திரு.மா.வேதநாதன் முதுநிலை விரிவுரையாளர், இந்து நாகரீகத்துறை, யாழ் பல்கலைக்கழகம். வழக்கொழிந்து போன சைவமரபு பாசுபதம்-ஒர் ஆய்வு கீதாமணி கமலேந்திரன், உதவி விரிவுரையாளர், மெய்யியல்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
கருத்துரை தேநீர் இடைவேளை
ஆறாம் அமர்வு
தலைமை
100
俳。20一
11。4Q
مصد 90) . 12
12. 20
பேராசிரியர் வி.சிவசாமி, தலைவர், சமஸ்கிருதத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
தலைமையுரை ‘உபயவேதாந்தம்: தோற்றமும் வளர்ச்சியும்’ பேராசிரியர் அ.பாண்டுரங்கன் தமிழ்த்துறை, புதுவைப் பல்கலைக்கழகம். "பழம் தமிழ் இலக்கியங்களிற் காணும் சைவத்தின் மூலக் கூறுகள்" திருமதி கலைவாணி இராமநாதன் சிரேஷ்ட விரிவுரையாளர், இந்து நாகரீகத் துறை, யாழ்பல்கலைக்கழகம். நாயன்மார் பாசுரங்களில் வேதம் திருமதி விஜயலெட்சுமி சிவச்சந்திரன் விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம்.
கருத்துரை
ஏழாம் அமர்வு
தலைமை
12. 40
00
1. 20
1. 40
1.50
கலாநிதி எஸ்.என். கந்தசாமி தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தலைமையுரை இந்துமதச் சிந்தனையில் சேக்கிழாரும் கம்பரும் பேராசிரியர் நா. சுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவர், யாழ். பல்கலைக்கழகம். காரைக்கால் அம்மையார் புராணம் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் வருகை விரிவுரையாளர், கக்குயின் பல்கலைக்கழகம், டோக்கியோ, ஜப்பான். கருத்துரை மதிய உணவு இடை வேளை

Page 20
எட்டாம் அமர்வு
தலைமை
பேராசிரியர் அ.சண்முகதாஸ் கலைப்பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம். தலைமையுரை பக்தி இயக்கமும் திருஞான சம்பந்தரும்
திரு.கி. விசாகரூபன் விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம். சித்தாந்தத்தில் உவமானம்- மெய்கண்ட சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டதொரு பார்வை திரு.க.சிவானந்தமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியல் துறையாழ். பல்கலைக்கழகம். UFT606) JDJ
திரு.க.இரகுபரன் விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம். கருத்துரை
தேநீர் இடைவேளை
米米

米米
ஒன்பதாம் அமர்வு தலைமை
. 45
- 20
سه 40 .
.00
... 30
பேராசிரியர் சி. க.சிற்றம்பலம் தலைவர், வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம். தலைமையுரை சுந்தரர் தேவாரப் பதிகங்களூடாகப் புலப்படும் அவரது ஆளுமை கலாநிதி எஸ். சிவலிங்கராஜா முதுநிலை விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம். *கதிர்காம முருகன்: ஒரு சமூக மானுடவியல் தரிசனம்’ என். சண்முகலிங்கன் முதுநிலை விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம். கருத்துரை
தொகுப்புரை பேராசிரியர் சி. பத்மநாதன் திருமுறை ஒதல்
நன்றியுரை திரு.குமார் வடிவேல் உதவிப் பணிப்பாளர்(இந்து விவகாரம்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,

Page 21
உலகமாதேவிச்
தமிழ்நாட்டுச் செங்கற் பட்டு மாவட்டத்துக் காஞ்சிபுரம் தாலுகாவிள்ள மணிமங்கலம் என்னும் ஊரானது பல்லவர்காலமுதலாகச் சிறப்புற்றி ருந்தது. இரண்டாம் புலி கேசியின் காலத்திலே தொண்டை நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற சாளுக்கியரின் சேனைகளைப் பல்லவ அரசனாகிய நரசிம்மவர்மன் (630668)மணிமங்கலம், சூரமாரம், பெருவன நல்லூர் என்னு மூர்களிலே தோற்கடித்துத் துரத்தினான் என்பதைப் பல்லவரின் ஆவணங்கள் மூலமாக அறியமுடிகின்றது.
சோழப்பேரரசர் காலத்திலே அது தன்கூந் என்னும் வகையினைச் சேர்ந்த வளமிகு நல்லூராக விளங்கியது. செல்வச் செழிப்பும், வித்தியா விருத்தியும் வாய்க்கப்பெற்ற மணிமங்கலம் சமஸ் கிருத மொழியில் இரத்தினக் கிராமம், இரத்தினாக்கிரகாரம் என்னும் பெயர் களால் வழங்கியது. உலகமா தேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் சிறப்புப்பெயர் முதலாம் இராசராசனின் காலத்திலே அதற்கு உரியதாகியது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ச் செங் காட்டுக் கோட்டத்து தன் கூற்று மணிமங்கலமான உலகமாதேவிச் சதுர் வேதிமங்கலம்' என அதனை இராச ராசன் காலத்துச் சாசனங்கள் வர்ணிக்கின்றன.
முதலாம் இராசா திராசனின் ஆட்சியில் (1018-1054) இராஜசூளாமணி ச் சதுர் வேதிமங்கலம் என்பது மணிமங்க லத்தின் சிறப்புப்பெயராகியது. முதலாங் குலோத்துங்க சோழனின் காலத்து கல்வெட்டுக்களிலே அது 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க்கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத் துTர் நாட்டு மணிமங்கலமான பாண்டியனை இருமடிவென்கண்ட சோழ

சதுர்வேதிமங்கலம்
பேராசிரியர் சி. பத்மநாதன்
சதுர்வேதிமங்கலம்' என்று குறிப்பிடப்பட்டது. எனவே குலோத்துங்க சோழனின் காலத்திலே அது புதியவொரு சிறப்புப் பெயரினைப் பெற்ற தோடு மாகணுார் நாட்டிலிருந்து நீக்கப் பெற்று அதற்கருகி
லமைந்த குன்றத்துTர் நாட்டுடன்
இணைக்கப் பெற்றது என்பது தெளிவா கின்றது. குன்றத்தூர் நாடு பிறிதொரு வளநாடாகிய புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்ததாகும். மூன்றாம் இராசராசன் காலம் (1216-1256) முதலாக அதனை கிராமசிகாமணிச் சதுர் வேதிமங்கலம் என்று குறிப்பிட்டா ர்கள். இப் பெயரானது பல நூற்றாண்டு களுக்கு. நிலைபெறலா யிற்று.
மணிமங்கலத்திலுள்ள கோயில்களிலே சோழராட்சியிலும், பாண்டிய ராட்சிக் காலத்திலும் விஜயநகரப் பேரரசர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாசனங்கள்
பலவுள்ளன. அவற்றுட் பெரும்பாலானவை
17
சோழப்பேரரசர் காலத்துக்குரியவை என்பது குறிப்பிட த்தக்கது. இவற்றின் மூலம் மணிமங்கலத்து மகாசபை, ஆலயங்கள், தேவதானங்கள், திருப்பணிகள் முதலிய வற்றைப் பற்றிப் பல செய்திகளைப் பெறமுடிகின்றது. மணிமங்கல த்திலே வண்துவாராபதி, திருவாய்பாடி, வைகுண்ட பெருமான் என்னும் வைணவக்கோயில் களும், தர்மீஸ்வரம், கைலாசநாதர் கோயில் என்னும் சிவாலயங்களும் அமீைந்திருந்தன.
மாகனூர்குளத்தூர், புல்வாய்ப் பாண் குளத்துTர், பேரூர், பழுவூர், இராயூர், குண்டூர், அரணைப்புறம் ஆத்தனஞ்சேரி அமண் பாக்கம் ஆகிய சிற்றுார்கள் மணிமங்கலமான சதுர் வேதிமங்கலத்தைச் சேர்ந்தனவாகும். இவற்றுள் மாகனூர் , புல் வாய்ப்பான் குளத்துTர் என்பன

Page 22
மேற்பிடாகை என்றும் பேரூர், அமண்பாக்கம் ஆகியன தென்பிடாகை என்றும் வர்ணிக்கப் பட்டுள்ளன. புத்தேரி, பெரியபுத்தேரி, நக்கம் புத்தேரி, அரைச் சங்குட்டம் சுண்டிலேரி என்னும் நீர்நிலைகள் மணிமங்கலத்திலிருந்தன. இவற்றிலிருந்து வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனஞ் செய்வதற்கான வசதிகள் நன்கமைக்கப் பட்டிருந்தன. வாய்க்கால், தூம்பு,கால், கண்ணாறு முதலிய நீர்ப்பாசனத் துறையோடு தொடர்பான சொற்கள் மணிமங்கலத்துச் சாசனங்களிலே மிகுந்து காணப்படுகின்றன.
கருணாகர வாய்க் கால், ஜயங் கொண்ட சோழவாய்க்கால், தலை - அணை வாய்க்கால், மனையறுதி வாய்க் கால், பாரதவாய்க்கால், பாவை துரைவாய்க்கால் என்பன அங்கிருந்த வாய்க்கால்களாகும். “இவ்வூர்ப் பெருந்துTம் பின்றும் போன பெருங்கால்’ என்ற தொடரானது பல ஆவணங்களிலே வருகின்றது. குளக்கட்டில மைந்த நீர்பாயும் வாசரைலயே தூம்பு என்றும் பெருந்துTம்பு என்றும் குறிப்பிட்டனர் எனக் கருதலாம். வாய்க்காலைப் பெருங்கால் என்றும் வழங்கினர் . வாய்க்காலின் கிளை களைக் கால் என்றும் அவற்றின் சிறுகிளைகளைக் கண்ணாறு என்றும் குறிப்பிட்டனர்.
சோழப்பேரரசர் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் மணிமங்கலத்திலிருந்த வழிகள் சிலவற்றின் QUUri 56ît கல்வெட்டுக்களிலே காணப்படுகின்றன. ஆலவதி, அரிவான் வதி, பெருவதி, பெருநல்வதி, கன்னரவதி, பனங்காட்டு ஏரிவதி என்பவை அவற்றுட் குறிப்பிடத்தக் கனவாகும். பனங் காட்டு ஏரிவதி நாலாந்தெரு என்னுஞ் சாசனத் தொடரானது வதிகள் ஒவ்வொன்றி லிருந்தும் கிளைகளாகச் சென்ற தெருக்கள் பலவிருந்தன என்பதை உணர்த்துகின்றது.
மணிமங்கலத்திலுள்ள நிலங்கள் தோட்டம், வயல் என்னுமிரு வகைகளு க்குரியனவாயிருந்தன. மத்திய காலத்திலே

அங்கு அடைக்காய் மிகுதியான அளவிலே உற்பத்தியாகியது. குறிப்பிடத்தக்க அளவிலான நிலங்கள் கமுகத் தோட்டங்களாயிருந்தன. திருவிடை யாட்டம், அர்ச்சனபோகம், அமாவாசைப் புறம், மடப்புறம், சிவபிரா மணக்காணி, திருநாமத்துக்காணி, தச்சக்காணிஜிவிதம் ஊர் பொது முதலிய வகைகளுக்குரிய நிலங்கள் ஆங்கு காணப்பட்டன. இவற்றைவிடத் தனியார் வசமான நிலங்களுமிருந்தன. நிலங்களை உரிமையாளர் விலைக்கு விற்றுக் கொள்ளவும் முடிந்தது. நிலவகைகள், அவற்றின் உரிமையாளர், அவர்கள் செலுத்த வேண்டிய கடமைகள், நிலங்களின் எல்லைகள் ஆகியன பற்றிய விபரங்கள் அடங்கிய பொத்தகங்கள் ஊர்ச்சபையாரிட மிருந்தன. நிலங்களைப் பற்றிய எல்லா விதமான நடவடிக்கை களுக்கும் சபையாரின் அனுமதியைப் பெற்று க் கொள்ள வேண்டுமென்பது நியதி. அவ்வூரிலுள்ள நிலங்களிலே குறிப்பிடத்தக்க அளவிலானவை கோயில்கள் வசமாயி ருந்தன.
கோயில்கள்
சோழர் காலத்திலிருந்த கோயில்க ளுள் ஒன்றானதர் மீஸ்வரம் என்னும் சிவாலயமானது இனறுவரை அதே பெயருடன் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலே தானத்தார், திருவுண் ணாழிகையார், தனியிலார் என்னும் மூன்று பிரிவினரும் அமைக்கப் பெற்றிருந்த கோயில் விவகாரங்களைக் கவனித்து வந்தனர். மூன்றாங் குலோத்துங்க சோழனின் (1178-1218) 29 ஆவது ஆட்சியாண்டிற் செங்காட்டுக் கோட்டத்துப் பெருங்குன்றம் என்னும் ஊரிலுள்ளவனாகிய கண்ணந்தை குப்பன்
என் பான் தர் மீஸ் வரம் உடையார்
கோயிலுக்குச் சந்திவிளக்கு இரண்டினைத் தானஞ் செய்தான். அவற்றை நாள்தோறும் எரிப்பதற்குப் பழங்காசு இரண்டும். நான்கு பசுக்களும் திருவண்ணாழிகையாரிடம் ஒப்படைக் கப்பட்டன.

Page 23
மூன்றாம்இராசராசசோழனுடைய(12161256) 18ஆவது ஆட்சியாண்டிலே மணிமங் கலத்து மகாசபைக் கணக்கனான பஞ்சநதி லசஷ்மணன் மலைக்கினிய நின்றான் பெரிய பிள்ளையான பிரம்பப் பிரியனும் அவனுடைய தம் பியான ஆகரமல்லி தேவனும் காலைச் சந்தி விளக்கு இரண்டினை இக்கோயிலுக்குத்தானம் பண்ணினார்கள். கோயிற் சிவப்பிராமணக் காணியுடைய கெளத மன் அம்பலக் கூத்தபட்டனும், காஸ்யபன் கங்காதரப்பட்டனும் காஸ்யபன் திருச்சிற்றம் பல பட்டனும், செம்பொன் இரண்டினைப் பெற்று க் கொண்டு விளக்கெரிப்பதாகச் சம் மதித்துத் சிலாசாசனஞ் செய்து கொடுத்தனர்.
சடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய (1251-1268) 14ஆவது ஆட்சியாண்டிலே தளியிலாரான பெண்கள் பரம்பரை முறையாகக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் தானத்தார் வரையறை செய்தமை பற்றி ஒரு சாசனங் குறிப்பிடுகின்றது. விஜயநகரப் பேரரசனின் காலத்தில், அச்சுதராயரின் ஆட்சியில், உருதோற்காரி வருஷத்திலே, தர்மீஸ்வர முடையார் கோயிலில், மார்கழி மாதத் திருப்பள்ளி எழுச்சி விழாவினைக் குறித்து,
‘ஐஞ்நூற்று நாற்பது சபையும் மூன்று கோயில் தானத்தாரும், திருப்பணிப்பிள்ளை அதிகாரியார் மல்லுநாயக்கரும் மணிமங்கல முடையவர்களும் ஏற்பாடு ஒன்றினைச் செய்தனர். அதன் பிரகாரம் வகை அதிகாரியர், சபையார், தானத்தார், மணிமங்கலமுடையார் ஆகியோர் முறையே 1,2,2,1, என்ற படியாகச் சிறப்புச் செய்தல் வேண்டும். வெள்ளாளர். கைக்கோளர், தேவரடியார், தலையாரிகள், எண்ணை வாணியர், மலையான் தாங்கல் ஆகியோர் முறையே 1,2,3,1,1,1, என்ற படியாகச் சிறப்புச் செய்தல் வேண்டும்.
திருக்கைலாசமுடையார் கோயிலுக்கு இராச ராசன் காலத்திலே செய்த

திருப்பணிகளைக் கூறும் சாசனம் சிதைவுற்றள்ளபடியால் அவற்றைப் பற்றி எதனையும் அறிந்துகொள்ள (Uplgul வில்லை. விக்கிரம சோழனின் 5வது ஆட்சியாண்டிலே காராம் பிச்செட்டு சீரிளங்கோ சகஸ்ரன், இராயூர் திருவேங்கட கிரமவித்தன் ஆகியோர் வசமாயிருந்த நிலங்கள் மணிமங் கலத்துச் சபையாரினாலே திருக்கை
லாசமுடையோர் கோயிலுக்குத் தானமாகக்
9
கொடுக் கப்பட்டன. பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நீலகங்கரையன் என்னும் பிரதானி மணிமங்கலத்திலுள்ள பல தனித் தேவதானம் என்னும் வரிசையிலுள்ள 12 வேலி நிலத்திற்குமான ஆயம், காசு கடமை, பொன்வரி, வெட்டி, செக்குக் கடமை, தறிக் கடமை, பூரீ காரியப் பேறு முதலான இறை கடமைகளைத் தர்மீஸ்வரம்,திருக்கைலாச முடையோர் கோயில் ஆகிய விரண்டினதும் திருப்பணிக்கென விட்டிருந்தான்.
விஜயநகரப் பேரரசரின் காலத்திலே தர்மீஸ்வ்ரத்திற்போல திருக்கை லாசநாதர் கோயிலும் மார் கழித் திங்களிலே திருப்பள்ளியெழுச்சி விழா கொண்டாடப் பெற்றது. திருப் பணிப்பிள்ளை அதிகாரியார் மல்லுநாயக் கரும் அஞ்றுாற்று நாற்பது சபையும் தானத்தாரும் மணிமங்கலம் உடையானும் கூடி வகை அதிகாரியார் சபையார் .தானத்தார் ஆகியோர் முறையே 1,1.2 என்ற படியாகச் சிறப்புச் செய்வதென்று தீர்மானித்த மையினை ஒரு சாசனங் குறிப்பிடுகின்றது. அச்சுத்தேவமகாராயரின் காலத்தில், சாலிவாகன சகாப்தம் 1449 (கி. பி.1527) விரோதி வருஷத்திலே கைலாசநாதர் கோயில் தொடர்பாக அறக்கட்டளையொன்று ஏற்படுத்தப்பட்டது. இம்மடி தொராத்த சிந்தையதேவமகாராயர் என்னும் பிரதானிதன் குமாரன் பேராலும் , அதிகாரி நரசையர் பேராலும் பூசையும், திருப்பணியும் நடாத்துவதற்கென 120 காசும் மணிமங்கலத்துச் சூலக் கல்லுக்கு வடக்கிலுள்ள முகட்டுவரி, காம்பறை காலை

Page 24
என்பவற்றிலுள்ள 500 குழிநிலமும் தானமாகக் கொடுத்தான். பாண் டி ராசாக்கள் சந்தான பரம்பரையினரே இவ் வறக்கட்டளையை நடப்பிக்க வேண்டு மென்றும் விதிக்கப்பட்டது.
சாலிவாகன சகாப்தம் 1452 இலே (1530) மணிமங்கலத்துக் கைலாசநாதர் கோயிலி லுள்ள நரசையர் மண்டபம், தர்மீஸ்வரத்துச் சிந்தம இராஜாவின் LD600TLUb, வண்டுவாராவதி எப்பெருமான் பாடிவேட்டை மண்டபம் வீற்றிருந்த பெருமாள் கோயிற் குமாரவசப்பர் மண்டபம் ஆகியன இம்மடி தொராத்த சிந்தையதேவ மகாராயரின் ஆணை யால் வேயப்பட்டன. அத்துடன், கங்குளத்திற்கு மேற்கிலிருந்து கங்காராஜா வின் மணடபம்வரை வீதியின் இருமருங்கி லும் மரங்களை நடுவித்து மண்டபத்தின் முன்பு தோப்பு உண்டாக்கி மரங்களைப் பயிரிடுவதற்கு சந்தனகுப்பத்து ஊரவருக்குக் கட்டளை இடப்பட்டது. வஸவப்பர் வர்த்தனை, நரசையர் வர்த்தனை, கரணிக்கர் வர்த்தனை, முதலான வர்த்தனைக்கெனச் செலுத்தும் 24 பணம் காசினையும் தாங்களே எடுத்துக் கொண்டு நான்கு மண்டபங்களுக்கு முரிய சாலைப்புறங்களில் இவ்வூரவரே தோப்புச் செய்ய வேண்டுமென்றும் பணிக்கப்பட்டனர். இத்தர்மத்தைப் பாண்டிராசாக்கள் சந்தான பரம்பரையினரே நடத்துவிக்க வேண்டு மென்றும் விதிக்கப்பட்டது.
வண்டுவாராபதி எனச் சோழப் பேரரசர் காலத்தில் வழங்கிய விண் ண கரம் இந்நாட்களில் இராஜகோபாலசாமி கோயில் எனக்குறிப்பிடப்படுகின்றது. மணி மங்கலத்திலுள்ள சாசனங்களிற் பெரும் பாலானவை இக்கோயிலிற் காணப்படு கின்றன. பெருமளவிலான நிலங்கள் வண்டுவாராபதி ஆலயத்தின் வசமாயி ருந்தன. மணிமங்கலத்துச் சபையார் இராசராசனது 6வது ஆண் டிலே 4,600 குழி நிலத்தை இறையிலியாகக் கோயிலுக்கு விற்றுக்கொடுத்தார்கள். அந்நிலம் அளவிலே
صبر

சமமான இரு பிரிவுகளாயிருந்தது. அவற்றுளொன்று மேற்கிலே கலிச் சங் காலையும், கிழக்கிலே மாகாணுரையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது . தெற்கிலே பெரியபுத் தேரியும் வடக்கிலே குளத்துTரும் அதன் எல்லைகளாயிருந்தன. மற்றைய 2,000 குழி நிலத்தில் வடக்கிலும், தெற்கிலும் முறையே ஏரிகரை, மண்ணிக்கால் என்பன எல்லைகளா யிருந்தன. மேற்கிலும், கிழக்கிலும் முறையே அமண்பாக்கம் குடுப்பிடு பாடகம் என்பன எல்லைகளாயிருந்தன.
முதலாம் இராசா திராசனின் காலத்திலே (1018-1054) மணிமங்கலத்துச் g 60) Juu T Ť 1 OO காசுகனத்தைக் கோயிலாரிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டு அதற்குரிய பொலிவட்டிக்கு ஈடாக 2,200 குழி நிலத்தை இறைகரத்து ட்டாகத் துவாராபதியான பூரீ காமக்கோடி விண்ணகரத்துக்குக் கொடுத்தனர். 8 பிரிவுகளாயிருந்த அந்நிலத்தின் விபரங்கள் மேல்வரு வனவாகும்.
பெருநல்வதிக்கு வடக்கு, பாதிரிக்கழனி மேலைக்காலுக்குக் கிழக்கு -100 குழி.
பாதிக்கழனி நடுவிற்காலுக்கு மேற்கு - 200 குழி.
பெருநல்வதிக்குத் தெற்கு, ஆலை மேட்டில் மனையறுதி வாய்க்கா லுக்கு
கிழக்கு -180 குழி.
ஆலைமேட்டில் நந்தாவனத் தோட்டக் காலுக்கு மேற்கு -400 குழி
இக்காலுக்கு கிழக்கு -200 குழி. தெத்திரிய மரத்தின் மேலைக்காலுக்கு மேற்கு -300 குழி.
சுண்டிலேரிவதிக்குக் கிழக்கு -400 குழி.
பாணவத்துறை வாய்க்காலுக்கு வடக்கு திருவயோத்திதேவர் நிலம் 250 குழிக்கு

Page 25
கிழக்கு -200 குழி.
சபையார் மட்டுமன்றி மணிமங்க லத்திலே நிலவுரிமையுடைய தனியார் சிலரும் கோயிலுக்கு நிலங்களைத் தானம் பண்ணியிருந்தனர். சேனாதிப திகள் ஜயங்கொண்ட சோழ பிரம்மாதிராயரின் தாயாரான காமக்கவ்வையார் இரண்டாம் இராசேந்திரனின் ( 1051 - 1063) நாலாவது
ஆண் டிலே வண்டு 6.J TIJ TUgl விண்ணகரத்துக்குத் தன் வசமாயிருந்த நிலத்தைத் தானம் U600T 600f6OT Tri.
தென் பிடாகை அமண் பாக்கத்திலுள்ள அந்நிலத்தின் எல்லைகளாவன: கிழக்கில் மண்ணிக்கால்; தெற்கில் மண்ணிக் கால்; வடக்கில் பழுவூர் நக்கம்புத்தேரிக்கரை; மேற்கில் அரைசங்குட்டம் கங் காசி யென்னும் புலம்.
வீரராசேந்திரனின் ஆட்சியில் (10631076) 5 ஆவது ஆண்டில் மணிமங்கலத்திலே ஜீவிதம் பெற்றிருந்தவரான சேனாதிபதிகள் ஜயங்கொண்ட சோழ பிரம்மாதிராயர் கமுகந்தோட்ட மொன்றும் விளைநிலமும் என 4,450 குழி நிலத்தைக் கோயிலுக்கு அர்ச்சனா போகமாகக் கொடுத்தார். இந்நிலம் முழுவதும் முன்பு அவருடைய தகப்பனார் ஜயசிங்ககுலாந்தக பிரம்ம ராயரான் மஞ்சிப்பையனார் சபையாரிட மிருந்து விலை கொடுத்து வாங்கிய நிலமாகும். 250 குழி அளவினதான கமுகந் தோட்டம் பெருந்துTம்பினின்றும் போன பெருங்காலுக்குக் கிழக்கிலும் பாரத வாய்க்காலு க்கு வடக் கிலும், அமைந்தி ருந்தது. மிகுதியான 2,200 குழி நிலத்தின் நான்கெல்லைகளாவன:-
மேற்கிலே பெரியேரிகரை, வடக்கிலே கொரஞ்சி உருத்திர கிரம வித்தன் தோட்டம்; கிழக்கிலே பெருவதி; தெற்கிலே பனையந்தஞ் சேரித்துTம் புக்கல்.
இராஜேந்திர சோழ வளநாட்டு அம்பத்துTர் நாட்டு நுளம் பியாற்று, நுளம் பியாற்றுக் கிழான் வேளான் பேராயிரமுடையானான தண் டக

நாடுடையான் முதலாங் குலோத்துங்க சோழனின் (1070-1122) 48 ஆவது ஆண்டிலே,1050 குழி நிலத்தை வண்டுவாராவதி விண் னகரத்துக்கு அமாவாசிப்புறமாகத் தானம் பண்ணினான். ஆலயத்திலே அமாவாசை தோறும் விழாவெடுத்தற்கென இந்நிலம்
கொடுக்கப்பட்டது. பல கூறுகளாகவுள்ள
இந்நிலம் பலரிடமிருந்து விலைக்கு
வாங்கியபின் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டது. அதன் விபரங்கள் மேல்வருமாறு உள்ளன.
குண்டூர் தோணயக் கிரமவித்தன் பக்கல் ஆலைமேட்டில் விலைகொண்ட நிலம் -125 குழி.
மணிமங்கலத்து மத்தியஸ் தனி உறப்போந்தன், அவனது தம் பிமார் ஆகியோரிமிருந்து வாங்கிய நிலம்-115 குழி.
இராயூர் திருப்பொரிக்கிரமவித்தன் பக்கல் விலைகொண்ட,திருப்பாதிரிக் கழனி மேலைக்காலுக்குக் கிழக்கிலுள்ள நிலம் -12 (3) குழி.
இராயூர் விஷ்ணு திருவேங்கட கிரமவித்தன் பக்கல் விலைகொண்ட நிலம் -117 குழி.
ஐயக்கி வண்டுவாராபதிப்பிச்சர் பக்கல் விலைகொண்ட நிலம் -110 குழி.
இராயூர் யக்ஞநாராயண கிரமவித்தன். பக்கல் விலைகொண்ட நிலம் - 127 குழி.
வீரவலி திருவரங்கமுடையான் சகஸ் ரன் பக்கல் விலைகொண்ட ஆலவதிக்கு வடக்கு 2ஆம் கண்ணாற்றிலுள்ள நிலம் -120 குழி.
இர்ாயூரன் நந்தி கிரமவித்தன் பக்கல் விலைகொண்ட ஆலவதி மூன்றாங் கண்ணாற்றிகொக்கஜயவுள்ள நிலம் 108
குழி.

Page 26
காராம் பிச் செட்டு நாணமாலை கிரமவித்தன் பக்கல் விலைகொண்ட அரிவாள்வதிக்குக் கிழக்கே முதலாங் கண்ணாற்றிலுள்ள நிலம் -115 குழி.
முதலாங்குலோத்துங்க சோழனின் 48 ஆவது ஆண்டில் மணிமங்கலத்து வீரவலித் திருவரங்முடையான் சஹஸ்ரன் ன்னபான் இராயூர் தாமோதரக்கிரமவித்தன் குண்டூர் சந்திரதேவ கிரமவித்தன் என்போரிட மிருந்து 266 குழிவிளை நிலத்தை விலைகொடுத்து வாங்கி வண்டுவாரவதி ஆலயத்துக்குத்தானம் பண்ணினான். நாள் தோறும் திருப்பலி அமுது செய்வதற்கென நிலதானஞ் செய்யப்பட்டது. அந்நிலமானது ஆலைமேட்டு மனையறுதி வாய்க்காலுக்கு கிழக்கிலிருந்தது. கிழக்கிலே மூன்றாங் கண்ணாறு, தெற்கிலே கிழக்கு நோக்கிப் போனதால், மேற்கிலே இரண் டாங் கண்ணாறு, வடக்கிலே பெருநல்வதி ஆகிய நான் கெல்லை களினுள் அந்நிலம் அமைந்திருந்தது.
விக்கிரமசோழனின் (1118- 1136) ஆம் ஆண்டில் மணிமங்கலத்துச் சபையார் புளங்கோட்டமான இராஜேந்திர சோழ வளநாட்டு அம்பத்துTர் நாட்டு நுளம் பியாற்றுக் கிழான் கேசவன் பேராயிரமுடையானான தண் டக நாடுடையானுக்கு 1,500 குழி விளைநிலத்தை விற்றுக் கொடுத்து நிலவிலையா வணம் ” செய்தனர். பேசாயிரமுடையான் அந்நிலத்தின் வண்டுவாராவதி விண்ண கரத்திற்குத் தானம் பண்ணினான். மாதந்தோறும் உரோகிணித்திரு நாளன்று நடைபெறும் விழாவிலே எழுந்தருளுகின்ற பெருமானை மஞ்சனமாட்டி, திருமுற்றலில் அமுது படைக்க வேண்டும் என்பது நிலதானத்தோடு கூடிய அறக்கட்டளை யாகும். இந்நிலமானது மேற்கிலே மடுவினையும், தெற்கிலே மாகணுTர் எல்லையினையும், கிழக்கிலே கருங்கழி னையும், வடக்கிலே இடையன் காட்டுக் குளத்தையும் எல்லையாகக் கொண்டிருந்தது.

22
இரண் டாங் குலோத்துங்களின் ஆட்சிக்காலத்திலே (1133-1150) 8ஆம் ஆண்டிலே, சபையார் முன் புதாம் திருவிடையாட்டமாக வண்டுவாரா வதி கோயிலுக்குக் கொடுத்த இரு நிலங்களை இறையிலி நிலங்களாக வகைசெய்தனர். கோயிற்ழநீகாரியஞ் செய்வானும், பூரீ வைஷ்ணவக் கண்காணியும் விடுத்த வேண்டுகோளின் பலனாகவே திருவிடை யாட்டமான இரு நிலங்களும் இறை விழித்துக் கொடுக்கப்பட்டன. அவற்றி லொன்று சாஹணை மாதவ பட்டனி டமிருந்து பொன் கொடுத்து வாங்கப்பெற்றதும் ஆலை மேட்டு மனையறுதி வாய்க்காலுக்குக் கிழக்கே இரண்டாங் கண்ணாற்றிலுள்ள துமான 210 குழி நிலமாகும். மற்றையது 1693-4 குழி 2மா 11 காணி அளவினைக் கொண்ட தோட்ட நிலமாகும். அது விக்கிரம சோழனின் 13 ஆவது ஆண்டிலே வீரவலி உய்யக் கொண்டான் பட்டர் முதலானோரிடமிருந்து விலை கொடுத்து வாங்கித் திருவிடையா ட்டமாகக் கொடுக்கப்பட்டது. அதன் எல்லைகளாவன: மேற்கிலே பெருந்தூம் பின்றும் வடக்கு நோக்கிப் போன பெருங்கால், தெற்கிலே இரண் டாங் கண்ணாற்றுத் திருவிடை யாட்டம், கிழக்கிலே ஆலவதி, வடக்கிலே கிழக்குக் கண்ணாறு.
மூன்றாம் இராசரானின் (1216-1256) 8வது ஆண்டிலே ஊற்றுக் காட்டுத் தோட்டத்து ஊற்றுக் காட்டு நாட்டு ஊற்றுக்காடான அழகிய சோழ நல்லூர் மங்கலங்கிழான் வேளானான மலைக் கினிய நின்றான் 612 1/2 குழி நிலத்தை வண்டுவா ராவதிப் பெருமாளுக்கு நாள்தோறும் நானாழி அரிசி வீதமாக சிறுகாலைச் சந்திக்கு முன்பாகத்திருமந்திர ப்ோனகஞ்செய்வதற்கெனக் கொடுத்தான். நான்கு பிரிவுகளாயுள்ள அந் நிலத்தின் விபரம் பொத்தகப்படி மேல்வருமாறிருந்தது.
மண்மங்கலத்து மாதவபட்டனிடமி ருந்து வாங்கிய நிலம் 205 1/2 குழி; முன்பு

Page 27
அது காக்கம் பிரால் கருணாகர பட்டனிடமிருந்து மாதவபட்டன் வாங்கியது. காக்கம்பிரால் சீராம சீரிளங்கோ என்னும் நிலமானது ஆலவதிக்கு வடக்கே, பெருந்துாம்பினின்று போன பெருவாய்க் காலுக்கு கிழக்கே இரண்டாங் கண்ணாற்றி லிருந்தது.
ஆலவதிக்கு வடக்கு நாலாங்கண் ணாயுற்று காக்கம்பிரால் சீராம சீரிளங் கோக்குழி -217.
அதன் கிழக்கேயுள்ள நிலம் 109 குழி. இதற்கு வடக்கிலும், சாஹணை பட்டரையன் புலத்திற்குத் தெற்கிலுமு ள்ளதும், திருவேங்கட பட்டனிடமிருந்து மாதவபட்டன் வாங்கியதுமான நிலம் -30
குழி.
மூன்றாங் குலோத்துங்க சோழனு டைய (1178 - 1218) 12 ஆவது ஆண்டிலே ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டு கீழ் மாங் காட்டு நாட்டு திருச் சுரத்துக் கண்ணப்பன் துTசி ஆதிநாயகன் நீலகங்கரையன் வன்னியநாயனான உத்தம நிதிக் கண்ணப்பன் என்னும் பிரதானி கோயிலுக்கு 600 குழிநிலத்தைத் தானமாகக் கொடுத்தான். திருவாய் குலத்து எப்பெருமானுக்கு நாள்தோறும் நானாழி அரிசியாலே திருப்போனகம் அமுது படைப்பதற்கென நிலம் கொடுக்கப்பட்டது. உறப்போந்தானான் அலங்காரப்பட்டி என்னும் அந்நிலம் மத்தியஸ்தன் மணிமங்கல முடையான் வானவாரீசன், மகாலுனப் La fuj 6ỞT, மணிமங்கலமுடையான் சீராமதேவன் ஆகியோரிடமிருந்து விலை கொடுத்து வன்னியநாயனால் வாங்கப்பெற்றது. அதன் எல்லைகள் மேல் வாருவனவாகும்: மேற்கிலே ஆலைமேட்டு மனையறுதி வாய்க்கால்: தெற்கிலே முதற் கண்ணாற்றுத் தெற்குக் கண்ணிக்கால்; கிழக்கிலே இக்கோயிலுக் குரிய திருவிடையாட்டம்; வடக்கிலே பெருங்கால்.

குலோத்துங்கனின் 28 ஆவது ஆண்டிலே,திருச்சுரக்கண்ணப்பன் பஞ்சநதி நீலகங்கரையர் வண்டு வாரா பதியில் விளக்கெரிப்பதற்கு அறக் கட்டளை ஒன்றினை ஏற்படுத்தியிருந்தான். அதற்கென 7காசு, 7மா பணம் நிலைப் பொலியூடாகக் கொடுக்கப் பெற்றது. அதனைப்பெற்றுக்கொண்ட ழரீ வைஷ்ணவக் கண்காணி அரட்ட
முக்கிதாசனும் நடுவிற்கோயிற்
திருவடிபிடிக்கும் பூரீ தரபட்டனும் நாலு விளக்கு நாள் தோறும் எரிப்பதற்கு
ஒப்புக்கொண்டனர். மூன்றாம்
23
இராசராசனின் 13ஆம் ஆண்டிலே இராயூர் அருளாளபட்டனும், மத்துவலிச் சீரழங்கோ பட்டனும், மிஞ்சூர் பெருமான் அடியாள் விளங்க வந்தாரும், பெருங்குன்றத்துக் கண்ணந்தைகுப்பனும் விளக்கெரிப்பதற் கெனக் கோயிற் பண்டாரத்திலே காசு கொடுத்தார்கள். நன்கொடைகளுக்குத் தானத்தார் பொறுப்பேற்றனர்.
மூன்றாம் இராசராசனின் 18 ஆவது ஆண்டிலே குண்டூவாசியும் வாதுள கோத்திரத்துச் சகலாகம விற்பன்னருமான கிருஷ னகுரிபட்டர் விண்ணகரத்தில் எரிப்பதற்கு இரண்டு விளக்கினையும் இரு கழஞ்சு செம்பொன்னையுந் தானமாகக் கொடுத்தார். கோயிலிலே திரு வாரதனை செய்கின்ற பூரீ ராமபட்டனும், அவர் தம்பியாகிய வீற்றிருந்தான் பட்டனும் இத்தர்மத்துக்குப் பொறுப்பேற்றனர்.
இராசராசனின் ஆட்சியிலே, 18 ஆவது வருஷத்தில், வண்டுவாரா பதியிலுள்ள அபிஷேக மண்டபத்துக் கிழக்குபுறத்துப் புலிமுகச் சோபானம் புதிதாக அமைக்கப் பெற்றது. அது மணிமங்கலமுடையான் பஞ்சநெதி இலகூழ்மணனான மலைக்கினிய நின்றான் பிரம்மப்பிரியன் பெரிய பிள்ளையும் அவன் தம்பி ஆகமல்லதேவனும் வழங்கிய பொன்கொண்டு செய்யப்பெற்ற திருப்பணி யாகும்.

Page 28
யாகும்.
திருவாயப் பாடி எனப் புராதன காலத்திலே வைகுண்டப்பெருமான் கோயில் என்னும் பெயரால் வழங்குகின்றது. அதுசோழப் பேரரசர் காலத்துச் சாசனங்களிலே திருவாய் பாடிக் கிருஷ்ணப்பர் கோயிலென்றும் வர்ணிக்கப் பட்டுள்ளது. மணிமங்கலத்து மகாசபையா னது முதலாம் இராசரானின் 15 ஆவது ஆண்டில், ஒருநாட் பகல் வேளையில், கோயிற்புறமாகவுள்ள தண்ணிர்ப் பந்தலிற் கூட்டமாகக் குறைவறக் கூடியிருந்து திருவாய் பாடிக் கிருஷ்ணப்பெருமானுக்கு நாள்தோறும் படிநாட் பெருமானும் ஒரு . நு ந்தா விளக்கும் கரணப்பெருமக்கள்
வைத்தல் வேண்டும் என்று பணித்தனர்.
இத்தர்மத்தை ழரீ காரியஞ்செய்வோரின் கண்காணி ப் பிலே நிறைவேற்ற வேண்டுமென்றும் விதித்தனர். அத்துடன் மகாசபையானது அச் சந்தர்ப்பத்திலே கோயில்வச மாகவிருந்த சில நிலங்களைப் பற்றிய விபரங்களையும் ஆராய்ந்தது மேல் வருவன அந்நிலங்கள் பற்றிய விபரங்களாகும்: கோயிலார் விலைக்கு வாங்கியதும் பாதிரிக் கழனிமேலைக் காலின் கீழ்ச்சிறகிலுள்ளதுமான இறைநிலம் -100 குழி, பனங் காட்டு ஏரிவதியின் மேல் சிறகு சாணுTரமாத் தெருமான் சோமையா ஜியாரிடமிருந்து வாங்கிய இறைநிலம் 100 குழி.
தென் பிடானக ஆத்தனஞ்சேரி கருணாகர வாய்க் கால் . ற்று கன்ன ரவதிக்குக் கிழக்கு மூன்றாங் சதுரத்து ஸாஹணை ஆதிச் சகுமார கிரம வித்தன் பக்கல் கோயிலார் வாங்கியுள்ள இறைநிலம் 100 குழி.
நாலாஞ் சதிரத்து பத்தங்கி இளைகுமா ரதோன கிரமவித்தன் பக்கல் கோயிலார் விலை கொண்டுடைய நிலம் 400 குழி.
முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சியில் (1012-1044) 5ஆவது ஆண்டில்
2

மணிமங்கலத்துச் சீரடி கண்ணன் மகனான ஏழுகிளை சிங்க மன்றாடி திருவாய்பாடிக் கிருஷ்னப் பெருமாளுக்கு நுந்தா விளக்கொன்றினை எரிப்பதற்கு 90 ஆடுகளைத் தானஞ்செய்தான். அவனும், மக்களும், மருமக்களும், அவர்களின் பரம்பரையாரும் நாள் தோறும் ஒருழக்கு என்ற வகையாக நெய் ஆட்டுவதாக ஒப்புக்கொண்டனர். கோயிலுக்குத் தானம் பண்ணின ஆடுகளை அவர்களே பொறுப்பேற்றனர். கோயிலிற் பூரீகாரியஞ் செய்யும் கணப்பெருமக்கள் இத்தர் மத்தை நடத்துவிக்கும் பொறுப்பினை மேற்கொண்டனர்.
பாண்டியப் பேரரசரன் மாறவர்மன் குலசேகரனின் காலத்திலே (1268 - 1310) திருவாய்பாடிக் கோயிலைச் சேர்ந்த மடமொன்றிருந்தது. மடபதி பிள்ளையான பெருமாள்தாதர்க்கு இறையிலிமடப்புறமாக 1,500 குழி தோட்டநிலம் கொடுக்கப்பட்டது. அந்நிலம் கிள்ளையார் நீலகங்கரையர் என்னும் பிரதானியின் பண்ணையிலுள் ளதாகும். நீலகங்கரையனின் கட்டளைப் பிரகாரம் மணிமங்கலத்துச் சபையார் அந்நிலத்தை இறையிலி மடப்புறமாக வனச் செய்து கொடுத்தனர். மடப்புறமாகிய நிலத்தின் ஒரு பகுதியான 800 குழி ஆலவதிக்குத் தெற்கு மூன்றாங்
கண்ணாற்றிலுள்ள தோட்ட நிலமாகும்.
சுந்தரபாண்டியனுடைய ஆட்சிக் காலத்தில் இளைபெருமாள் என்னும் Լյr 60ծI tջ եւ : இளவரசனொருவனின் ஆணையின் படி நாராயணன் என்னும் பெயரால் வழங்கிய 16 அடிக்கோலின் சரியான அளவினைக்காட்டும் உருவம் திருவாய்ப்பாடிக் கோயிற் சுவரோன்றிலே பொறிக்கப்பட்டது. புலியூர்க் கோட்டத்துப் பிரதானியான வாணராயதேவர் என்னும் பிரதானி விண்ணப்பஞ் செய்தமையால் இளையபெருமாளினால் இக்கட்டளை பிறப்பிக் கப் பெற்றது என் பதுங் குறிப்பிடக்குரியதாகும்.

Page 29
விஜயநகரப் பேரரசர் அச்சுதராய மகாராயரின் காலத்திலே திருவாய்பாடி ஆழ்வார் கோயிலில் மார்கழி மாதத் திருவிழா குறித்து திருப்பணிப்பிள்ளை அதிகாரியார் மல்லுநாயக்கரும், மகாசபை யாரும் , தானத்தாரும் மணிமங்கல முடையானும் கூடிச் சிறப்புக்கட்டளை ஒன்றினை ஏற்படுத்தினார்கள். அதன் பிரகாரம் மல்லுநாயக்கர், சபையார், தானத்தார், கோயிற்கணக்கப்பிள்ளை, அடியார்கள் என்போர் முறையே 3, 1, 2, 1, 1, என்ற படியாக உபயஞ் செய்ய வேண்டும்.
மணிமங்கலத்தில் வாழ்ந்த பிராமணர் களிற் காஸ்ப கோத்திரத்தைச் சேர்ந்த வர்களும்,வாதுளகோத்திரத்தைச் சேர்ந்த வர்களும் காணப்பட்டனர். காஸ் யப கோத்திரத்தார் சிவப் பிராமணரா யிருந்தனர். ழநீவைஷ்ணவப் பிராமணர் வைகானஸ் சம்பிரதாயத்தைப் பின்பற்றிய வராவர். அக்கிரகத்திலுள்ள குடியிருப்புக்கள் நேரான வதிகளின் நடுவில் அமைந்த சதுரங்களாய் இருந்தன. குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தனியுடைமை யான நிலங்கள் இருந்தன. மணிமங்கலத்திலே பல சாதி மக்களும் வாழ்ந்திருந்தனர் என்பதை மணிமங்கலம் உள்ளுர் பல பட்டடைக் குடிமக்கள் எனவரும் சாசனத் தொடரினால்த் அறியமுடிகின்றது. வெள்ளாளர், கைக்கோளர், எண்ணை வாணியர், மலையான், தங்கல் முதலியோர் அங்குள்ள கோயில் களில் விழாக் காலங்களிற் சிறப்புச் செய்வதற்கு ஏற்பாடாகியிருந்தமையும் இதனை உறுதிப்படுத்துகின்றது. மணிமங்கலத்திலே திருவாய்பாடி என்னும் தலமிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயர் வாழ்ந்தவிடம் ஆய்பாடி என வழங்கியது என்று கருதலாம்.
மணிமங்கலம் தன் கூறு என்று வர்ணிக்கப்படுவதால் அது கூற்றம் என்பதை ஒத்தவொரு வகைப் பிரி வாகவிருந்த தென்றும் சில சிறப்புரிமைகளைப்

பெற்றிருந்த நிர்வாக அமைப்பாக விளங்கியதென்றுங் கருதலாம். சோழப்பெரு மன்னர், காலத்திலே அரசாங்கத்திற்கும் மணிமங்கலத்திற்கு மிடையிலே நெருங்கிய உறவுகளிருந்தன. பொதுவாக எல்லாச் சோழ மன்னர்களின் மெய்கீர்த்திகளும் மணிமங்கலத்துச் சபையாரின் சாகனங் களிலே சேர்க்கப்பட்டுள்ளன. அங்குள்ள அந்தணரிற் சிலர் அரசாங்கத்தில் உயர் பதவிகளைப் பெற்றிருந்தனர் ஜயங்கொண்ட சோழபிரம்மாதிராயார் வீரராசேந்திரனின் ஆட்சிக் காலத்திலே சேனாதிபதிகளாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. அவனுக்கு ஜிவிதமாக மணிமங்கலத்திலே நிலம் கொடுக்கப் பெற்றிருந்தது. அச்சேனாதி பதிகளின் தகப்பனாரான மஞ்சிப்பையனார் அரசாங்க சேவையிலிருந்த பிரம்மாதிராயா வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்திலே சேனாதிபதிகளாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. அவனுக்கு ஜீவிதமா மணி மங்கலத்திலே நிலம் கொடுக்கப் பெற்றிருந்தது . அச்சேனாதிபதிகளின் தகப்பனாரான மஞ்சிப்பையனார் அரசாங்க சேவையிலிருலிந்தவர் என்பது அவருடைய ஜயசிங்ககுலாந்தக பிரம்மராயர் என்னும் சிறப்புப்பெயரால் அறியப்படுகின்றது.
மணிமங்கலத்து மகாசபையானது தர்மஸ்தானத்துப் பெரிய மண்டபத்திலே கூடுவது வழக்கம். சில சமயங்களில் சூழ்நிலைக்கு ஏற்பவேறிடங்களிலும் கூட்டத்தைக் கூட்டினார்கள். முதலாம் இராசராசனது காலத்தில், ஒரு சமயத்திலே திருவாய்பாடிக் கோயிற்புறத்துத் தண்ணிர் பந்தலிலே மகாசபை, பகல் வேளையிலே கூடியது. கரணத்தான், கனக் கன் , மத்தியஸ்தன், வாரியன் முதலிய பதவிகளைக் கொண்டவர்கள் சபைப் பணிகள் பலவற்றை நிறைவேற்றினார்கள்.
முதலாம் இராசராசன், முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் ஆகியோர் காலங்களிலே முறையே அத்தக் கூர் பூரீ மாதவன் மணிமங்கல
25

Page 30
முடையான் வேளான் வேரான், மணிமங்கல முடையான் இலக்குமணன் இராமதேவன் என்போர் மத்தியஸ்தராய் விளங்கினர். மணிமங்க முடையான் ஆனந் தபோதன் வேளான் சராமதேவன், மணிமங்கல முடையயான் ஆளும்பிரான் ஆகியோர் முறையே இரண்டாம் இராச ராசன், மூன்றாம் இராசராசன் ஆகியோரின் காலத்திலே மத்தியஸ்தராயிருந்தனர். இவர்களிற் சிலர் பதவியிலுள்ளவர்கள். அரசாங்கத்தினால் நியமிக்கப்பெற்றனர் என்றும் கருதலாம். உடையான் என்னும் பதவியினைப் பெற்றிருந்தவர்கள் மத்தியஸ் தராய்விளங்கியமையுங் கவனத்திற்குரியது.
இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோரின் காலங்களில் முறையே அலங்காரன். சீராமன், வடுகன், பாசுரன், என்போர் மணிமங்கலத்திலே கரணத்தான் என்னும் பதவியினைப் பெற்றிருந்தனர். பஞ்சநிதி ஆளும் பிரானான மகாஜனப் பிரியன், ஆடவல் லான் சிலவாக்கிய தேவனான உத்தமப் பிரியன், பஞ்சநிதி லக்ஷ மணன் மலைக் கனிய நின்றான் பெரிய 6ft 60) 6TuJT60T பிரம்மப் பிரியன் என் போர் முறையே இரண்டாங் குலோத்துங்க சோழன், மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலங்களிற் கணக்கராயி ருந்தனர். நீலங்கரையர் என்னும் பிரதானியின் கட்டளை ஒன்றினைப் பதிவு செய்கின்ற கல்வெட்டிலே மணிமங்கலத்து வாரியனுங் கரணத்தானுங் கண்டு’ என்னும் தொடர் வருகின்றது. அதனால் வாரியம் நிறைவேற்றுக் குழு மணிமங்கலத்தில் இருந்ததென்பது உணரப்படுகின்றது. ஆயினும், அவ்விதமான குழுக்கள் எத்தனை அங்கு அமைக்கப்பட்டி ருந்தன என்பது தெரியவில்லை. மணிமங் கலத்துச் சாசனங்களிலே கோயில்கள் பற்றிய விடயங்கள் தொடர்பாக வாரியன்’ குறிப்பிடப்படுவதால் அங்குள்ள வாரியமொன்று கோயில்களைப் பற்றிய விடயங்களைக் கவனித்து வந்தது எனலாம்.

26
மணிமங்கலத்துச் சபையார் கோயில் களிடமிருந்து காசினைக் கடனாகப் பெறுவதும், அதற்கு ஈடாக நிலங்களைக் கொடுப்பதும், தம்வசமாயுள்ள நிலங்களைக் குறிப்பிட்ட சில திருப்பணிகளுக்கென தானம் பண்ணுவதும் வழக்கமாயிருந்தது. நிலங்கள் தொடர்பான எல்லா நடவடிக் கைகளும் சபையாரின் கண்காணிப்பி லிருந்தன. நிலங்களைக் கோயில்களுக்கு தானம் செய்வோர் அவற்றை இறையிலியாக வகை செய்வதற்கு குறிப்பிட்டவொரு தொகைப்பணத்தைச் சபையாருக்குக் கொடுக்க வேண்டியி ருந்தது. அரசாங் கந்துக் கிரிய இறை கடமைகளையும் சபையாரே சேர்த்துக் கொடுத்தனர். சோழ மன்னருக்கும் மணிமங்கலத்துச் சபையா ருக்கும் நெருங்கிய தொடர்புகளிருந்த போதிலும் சபையாரின் விவகாரங்களிலே அரசர்கள் தாம் விரும்பியவாறு தலையிட்டமைக்குச் சாசனங்களிலே சான்றில்லை. மணிமங் கலமானது தன்கூற்று என்னும் அதற்குரிய நிலைக்கேற்பச் சுயாட்சியுரிமை கொண்ட உள்ளுர் அமைப்பாக விருந்தது என்பதிற் சிறிதும் ஐயமில்லை.
உலகுய்யவந்தான்
உலகுய்யவந்தான் என்பது முதலாங் குலோத்துங்க சோழனுக்குரிய விருதுப் பெயர்களுள் ஒன்றாகும். உலகம் உய்வதற்காக கருங்கலி நீக்கி மறங்கடிந்து அறம் நிலைநிறுத்து வதற்கென திருமால் நிலவுலகிலே அவதரிப்பான் என பது இந்துசமய மரபாகும். முன்பு இராமனாகி இலங்கையிலே இராவணனைக் கடிந்தவனும் கண்ணனாகிப் பாரதப்போர் முடித்தவனுமாகிய திருமாலே சயதர னாக வந்தவதரித்துள்ளான் என்று கலிங்கத்துப் பரணிபுகழ்ந்துரைக்கின்றது. இக்கருத்தி னையே திருமன்னி விளங்கு மிருகுவனடைய எனத் தொடங்கும்

Page 31
குலோத்துங்கசோழனுடைய மெய்க் கீர்த்தி சுவைநயம் பெற மேல் வருமாறு வர்ணிக்கிறது .
"அருக்க ஆணுதயத்தாசையிலிருக்குங் கமல மனைய நிலமக டன்னை முந்நீர்க் குளித்த வந்நாளாதிக் கேழலாகியெடுத்த திருமால் யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
திகிரியும் புலியுந் திசை தொறும் நடாத்தி”
உய்யவந்தான் என்னும் சிறப்புப் பெயரானது முதலாங்குலோத்துங்கன் (1070 -1122) திருமாலின் அவதாரமாக வந்துள்ளான் என்பதை உணர்த்தலாயிற்று முந்தை முழுதுலகமுய்ய முடிசூடும் ராஜபண்டிதன் என இரண்டாம் இராசராசனும் (1146-1163) அவனுடைய மெய்க் கீர்த்தியிலே வர்ணிக்கப் பெற்று ஸ்ளமை குறிப்பிடத் தக்கதாகும் மூன்றாம் இராசராசனது மெய்க்கீர்த்தியும் அவனை உலகுய்யவந்த பெருமான் என வர்ணிக்கின்றது. உலகுய்யவந்த சோழ வளநாடு என்பது முதலாங் குலோத்துங்கன் காலத்திலே சோழ மண்டலத்திலிருந்த பிரிவுகளுள் ஒன்றாகும். அவனது ஆட்சியிற் காவிரியாற்றுக்கு வடக்கேயிருந்த
N/ N/ 2s 2s

இராசேந்திரசிங்க வளநாடு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவற்றுள், மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும், பயங்கர வளநாடு எனவும் வழங்கப்பட்டன.
குலோத்துங்கனுடைய காலத்திலே உய்யவந்தான் திருவண்ணாமலையன் விஜயவாகு மாசாத்துள நாயன் என்றவொரு பிரதானியிருந்தான். ஆந்திரதேசத்திலே, கோதாவரிக் கரையிலுள்ள நரேந்திர ஈஸ்வரம் என்னுந் தலத்திலே, தீர்த்தக் கரையிலே, பன்மாகேஸ்வரன் என்னும் பெயரால் வழங்கிய மடமொன்றினை அவன் அமைத்தான். அங்கு 15 தவசிகளுக்கு உணவளிப்பதற்கென நிலமும் வழங் கியிருந்தான்.
உலகுய்ய வந்த சோழ சதுர்வேதிமங்கலம் என்னும் பிரம தேயமொன்று தொண்டை மண்டலத்தி லிருந்தது. செங்கற்பட்டுத் தாலுகாவைச் சேர்ந்த மாடம் பாக்கத்திலுள்ளதும் மூன்றாம் இராச ராசனுடைய இரண்டாம் ஆட்சியாண்டுக்குரியதுமான ஆவண மொன்று மாடம் பாக்கமான உலகுய்யவந்த சோழ சதுர்வேதி மங்கலத்தைக் குறிப்பிடுகின்றது.
NV/ N/ e
/N /N
27

Page 32
நாவலர்
தமிழ் இலக்கண வரலாற்றிலே தொல்காப்பிய பரம்பரை, வீரசோழிய பரம்பரை என்றும் தமிழ் இலக்கிய வரலாற்றிலே வள்ளுவர் பரம்பரை, கம்பர் பரம்பரை, சேக்கிழார் பரம்பரை, பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை என்றும், கலைமகள் பரம்பரை, கல்கி பரம்பரை, மணிக்கொடி பரம்பரை என்றும் இனம் பிரித்து முறைப்படுத்தும் திறனாய்வு முயற்சிகள் சில தசாப்தங்களாக அறியப்படுகின்றன.
தன் அடிச்சுவட்டைப் பின்பற்றிவரும் ஒரு பரம்பரையை உருவாக்கிவிடும் சக்தி எல்லோருக்கும் எளிதாக இருக்க முடியும் என்று எதிர்பார்ப்பது தவறு. தன்னிடம் நிரம்பி வழியும் சக்தியால் திறமைசாலி ஒருவர் தனக்குரிய பரம்பரை ஒன்றினை உருவாக்கி விடுவதை நிலவுலகிலே நாம் காணமுடி
கின்றது.
நாவலர் பரம்பரை என்றொரு பரம்பரையினை ஈழத்திலே வகுக்கமுடியும். அப் பரம்பரையினர் என்று சிலரை இனங்கண்டு சுட்டிக்காட்டுவதற்கு முன்பு இத் தொடரால் நாம் எதனைக் குறிப்பிடு கிறோம் என்பதை நோக்குதல் அவசியம்.
கனக. செந்திநாதன் நாவலர் வழிப்பட்ட ஈழத்தின் இலக்கிய பாரம்பரியம் (1) பொருள் முக்கியம் கொண்டது. (2) விஷயத்திற்கேற்ப நடைகொண்டது, (3) கண்டன தர்மம் கொண்டது. (4) ஆரிய - தமிழ் என்ற பேதமற்றது. (5) கேசுவதுபோல எழுதுவது, (6) வரிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பது (7) போலிப் புலமையை வெறுப்பது, (8)தன்நாட்டுணர்ச்சி கொண்டது என்று
2

பரம்பரை
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
தொட்டுக் காட்டியுள்ளார். 1அவர் சுட்டும் பண்புகளிற் சில, முக்கியமானவை யேயாயினும் நாவலர் பரம்பரைக்கென முத்திரையிடக்கூடியன சிலவற்றை அவர் தெளிவாக்காமலே விட்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
நாவலர் பரம்பரையினை நோக்கும் போது இலக்கிய இலக்கண சாத்திர நூற்புலமை கல்விப்பணி, நூல் வெளியீடு, சைவசமய பிரசாரம், பிறமத கண்டனம், பிரசங்க முறை, புராணபடனம், அருட்பாக் (SJ, TL LJ T (6. என்பனவற்றை முக்கியமானவையாக இனங்காட்டமுடியும்.
நாவலர் பரம்பரையினர் என்று கூறும் போது, ஒரே அச்சில் வார்த்த - இம்மியும் வேறுபாடற்ற - எல்லாப் பண்புகளிலும் ஒப்பானவர்களை நாம் கருதக் கூடும். ஆயினும் அவ்வாறு கற்பனை செய்வது நடைமுறைக்குப் பொருந்து வதன்று. பின் வந்தோரின் ஆளுமை, அவர்கள் இயங்கிய சூழலில் அவர்களைப் பாதித்த செல்வாக்குகள். உலகியல் நிலைமைகள் என்பன சில பல வேறுபாடுகளைத் தோற்றுவித்திருக்கும் என்று கூறல் தவறாகாது.
நாவலரவர்களின் முதல் மாணாக் கரிலே சிற்ப்பிடம் அளிக்கப்பெறுபவர் நல்லூர் க. சதாசிவப்பிள்ளை (1910) நாவலரவர்களி டத்திலே எப்போது கல்வி கற்று வந்தாரோ அக்காலந் தொட்டு ஒரு காலத்தும் அவரை விட்டுப்பிரியாதவர் என்றுவே. கனகரத்தின உபாத்தியாயர் அவரைப் போற்றுவர். 2 திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் சதாசிவப்பிள்ளைக்கு நெற்றியிலே விபூதியிட்டு விடும்போது, அவரைச் சக்தி

Page 33
என்றும் நாவலரவர்களைச் சிவம் என்றும் சக்தி இன் றிச் சிவம் ஒன்றும் செய்யமாட்டாது என்று புகழ்ந்ததாகவும் கைலாசபிள்ளை கூறியிருக்கிறார். இக் கூற்றுகள் நாவலரவர்கள் எடுத்த கருமங்களுக்குச் சதாசிவப்பிள்ளை உற்ற துணையாக விளங்கியமையைக் காட்டுவன.
நாவலரவர்கள் முன்னிலையிலும் தாமாகவும் சில நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்த சதாசிவப்பிள்ளை, நாவலரவர்கள் மறைந்த பின்பு, அவர்கள் பரிசோதித்து முடித்து வைத்திருந்த நூல்களை வெளியிட்டதோடு, அவர் முன்பு பதிப்பித்த நூல்களையும் தொடர்ந்து மறுபிரசுரஞ் செய்துவந்துள்ளார். நாவலரவர்களுடன் தொடர்புள்ளசசி.வை.தாமோதரம்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் முதலானோர் நூற் பதிப்புகளுக்கும் சதாசிவப்பிள்ளை உதவியுள்ளார்.
நாவலரவர்களின் சொத்துகளுக்கு ஆதிபத்தியம் பெற்ற சதாசிவப்பிள்ளை, அவருடைய பதிப்புகளை மறுபிரசுரம் செய்த தோடு அமையாது. 96 (560) Lu அச்சகத்தையும் வித்தியா சாலைகளையும் பொறுப்பேற்று நடத்தினார். சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை முதலில் தாமாகவும் பின்பு மானேஜர் மூலமாவும் நடத்தினார். ஆரம்ப முதல் மானேஜர் மூலமாகவே நடாத்தினார்.
நாவலரவர்களைப் போலவே சதாசிவப் பிள்ளையும் நைட்டிக பிரமசாரியாக வாழ்ந்த போதும் அவர்களிடம் காணப்பெறாத இலெளகிகப் பற்று இவரிடம் காணப்படுகின்றது. திரு வி.க. எழுதிய "வித்தியாபிமானிகளுக்கு விக் யாபன நிரசனம்" (1911) எனும் கண்டன நூலிலே அப்பற்றினாலே சதாசிவபிள்ளை செய்த
காரியங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன."
சதாசிவப்பிள்ளை ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் செலவழித்து வீடு வாங்கிக்

கொடுத்தாராம்; வேறொருவருக்கு ரூபா ஆயிரம் கொடுத்தாராம்; இன்னு மொருவருக்குப் பி ஏ. படிக்கப் பொருள் செலவழித்தாராம்: தமையனார் சுப்பிரமணியபிள்ளை புத்திரியுடைய புத்திரர் இருவருக்கும் வயது வந்தபின் தனித்தனி ரூபா ஐந்நூறு கொடுக்கும்படி 1897 இலே பிறப்பித்த உயிலிலே குறிப்பிட்டிருந்தாராம்.
சதாசிவப்பிள்ளை காலத்துச் சிதம்பரம் வித்தியாசாலை நடைமுறை பற்றி அறிய இரு நிகழ்ச்சிகள் உள்ளன. அங்கு முதல் உபாத்தியாயராக இருந்த சுன்னை பூ முருகேச பண்டிதர் வேதனமின்றி உண்ண முடியாது வித்தியாசாலையை விட்டு நீங்கியதும், பின்பு முதலுபாத்தியாயராக விளங்கிய தர்க்க குடார தாலுதாரி வை. திருஞான சம்பந்தபிள்ளை, இரண்டாம் உபாத்தியாயர் கோப்பாய் ச. பொன்னம் பலகிள்ளையுடன் கோபித்துக் கொண்டு வித்தியாசாலையை விட்டு நீங்கியதும் திரு.வி.க எழுதிய நூலிலே குறிப்பிடப்பட்
டுள்ளன.
சம்பந்தநாத முதலியார் முதல் த. கைலாச பிள்ளை வரை வண் னை சைவப்பிரகாச வித்தியாசாலைக்குப் பலர் மானேஜராக இருந்திருக்கின்றனர். சம்பந்தந்ாத முதலியார் வித்தியாசாலை அபிவிருத்தியில் சிரத்தையில்லாதவர் செய்த கலகத்தால் தம் பதவியை வேண்டாம் என்று துறந்தனராம். கைலாசபிள்ளை வித்தியா சாலை விஷயத்தைக் குறித்து ஒருவர் மீது வழக்குத் தொடுத்த கதையும் உண்டு. கைலாசபிள்ளைக்கு முன்பு வண்ணை வித்தியாசாலையும் சதாசிவப்பிள்ளை காலத்தில் சீராக நிர்வகிக்கப்பட வில்லை என்று கருதச் சான்றுகளுள.
சதாசிவப்பிள்ளை நாவலரவர்களின் நூல் வெளியீட்டுப் பணியினைத் தொடர்ந்து நன் முறையிலே நடாத்தியபோதும் அவர் தம் கல்விப் பணியை முறையாகச் செய்தனர் என்று கூறுவதற்குச் சில பல காரணங்கள்
29

Page 34
தடையாயுள்ளன.
நாவலரவர்களின் ஐந்தாம் தமையனார் ஆராய்ச்சி தம் புவின் புதல் வர் த. கைலாசபிள்ளை (1939) சிதம் பரத்தில் சாதாரண வருடம் ஐப்பசி மீ 8 இல் வியோகமடைந்தபோது நல்லை க. சதாசிவபிள்ளைக்கு வயது 84 என்பர். அவ்வாறாயின் அவர் 1826 ஆம் ஆண்டளவிலே பிறந்தவராதல் வேண்டும். நாவலரவர்களிலும் சதாசிவப்பிள்ளை நான்கு 6) JG 5- மளவே இளையவராவர். கைலாசப்பிள்ளை 1855ஆம் ஆண்டளவிலே பிறந்தவரென்பர். எனவே அவர் சதாசிவப் பிள்ளையிலும் 29 வயதும் நாவலரவர்களிலும் 33 வயதும் குறைந்த வராதல் வேண்டும் . நாவலரவர்கள் கைலாசப் பிள்ளைக்கு 24 6) եւ 1Ֆ! நடக்கும்போது வியோகமடைந்துவிட்டார். வித்தியாசாலையில் 1871-1878 கட்டத்திலே ஆசிரியாக விளங்கியிருக்கிறார். கைலாசபிள்ளை பயின்றுள்ளார். அப்போது கைலாசப்பிள்ளையின் வயதுக் கட்டம் 16-23.
நாவலரவர்களின் வாழ்வின் கடைசித் தசாப்தத்திலே கைலாசபிள்ளை அவர் சமுகத்திலே அவருடைய எழுத்து வேலைகளையும் ஏவல் களையும் செய்துவந்தார். இதனால் நாவலர் பரம்பரையிலே செல்வாக்குப் பெற்று விளங்கினார். 1888 இலே சைவசமய பரிபாலன சபை (சைவபரிபாலன சபை) நிறுவப்பட்டபோது கைலாசப் பிள்ளை அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1887 இலே வில்லியம் நெவின் ஸ் (39, Tsipj6555 Native Town High School இந்து உயர்தர பாடசாலையாகி இந்துக் கல்லூரியாக உயர்ந்தது. இக் கலாசாலையின் ஆரம்பக் கட்டத்தில் கைலாசபிள்ளை அங்கு சில காலம் வேதனமின்றிச் சமய பாடம் கற்பித்தார். 1889 இன் கடைக் கூற்றிலே இந்து சாதனம் Hindu Organ 6TSQLD 95) fils) gliSp மாதமிருமுறை பத்திரிகை வெளிவந்தபோது அதன் முதல் தமிழ் ஆசிரியராக விளங்கியவர்

கைலாச பிள்ளை.
நாவலரவர்களின் காலத்திற்குப் பின்பு கைலாசபிள்ளை நாவலர் பரம்பரையிலே ஒரு முக்கியஸ்தராக உயர்ந்துவிட்டர். வித்துவசிரோமணிச.பொன்னம்பலபிள்ளை 1897 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 18ஆந்தேதி வியோகமடைந்ததை அடுத்து, அவர்வகித்த வண்ணை வித்தியாசாலை மனேஜர்க பதவி சதாசிவப்பிள்ளையால் கைலாசபிள்ளைக்கு வழங்கப்பட்டது. கோப்பாய் ச.பொன்னம்பலபிள்ளை நாவலர்வர்களின் சொத்து களுக்குத் தருமபரிபாலகராக ஆதிபத்தியம் 1910 இலே பெற்றபோதும் கைலாசபிள்ளை தொடர்ந்து வண்ணை மானேஜராக விளங்கினார்.
வண்ணை முதலுபாத்தியாயர் மா. வைத்தியலிங்கபிள்ளை 29-9-1902 இலே வியோகமடைந்ததை அடுத்துக் கைலாச பிள்ளை, சுன்னாகம் அ. குமார சுவாமிப் புலவரின் உதவியுடன் வித்தியாசாலையைச் சிறப்பாக நடத்தினார். ஏற்கனவே இருவரும் இணைந்து யாழ்ப்பாணத்திலே தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி,அதன் மூலம் சில தமிழ் வகுப்புகளை நடாத்தியவர்களுள் வண்ணை வித்தியாசாலையில் இவ் விருவரும் தோற்றுவித்த காவிய வகுப்பு அதற்குப் பெருமை தேடிக் கொடுத்ததாகும். மாணாக்கருக்கு உண்டியும், உறையுளும் வழங்கி நடந்தது காவிய வகுப்பு.
நாவலரவர்கள் தனிமனிதனாகச் செய்த சைவப்பிரசாரத்தை நிறுவனரீதியிலே அமைத்துச் செய்யும் முயற்சிகளிலே கைலாசபிள்ளை முன் னின்றவர். சைவாபிமானிகள் சங்கம், சைவசித்தாந்த சபை, சைவ கலா விருத்திச் சங்கம் சைவசித்தாந்த மகா சமாஜம், கிறிஸ்துமத கண்டன சபை முதலிய பல சபைகளின்
தோற்நத்திலே கைலாசபிள்ளைக்கு முக்கிய
30
பங்குண்டு.
கைலாசபிள்ளை ஆறு முகநாவலர்
சரித்திரம் எழுதி அவருடைய துண்டுப்
பிரசுரங்களையும் பாடல் களையும்

Page 35
ஆறு முகநாவலர் பிரபந்தத் திரட்டு எனத் தொகுத்துத்தந்தவர் ; செந்திநாதையரின் கட்டுரைகளை வைதிக சைவ சுத்தாத்து வித சைவ சித்தாந்த சமயம் எனத் தொகுத்து வழங்கியவர்;தம் மரபினரான ஞானப்பிரகாச முனிவரின் சங்கத நூல்களை வெளியிட்டவர்; வசனத்தொடை இலக் கணஞ் செய்தவர்; பால பாடங்கள் எழுதியவர்; துண்டுப்பிரசுரங்கள் பலவற்றை எழுதி வெளியிட்டவர்; ஏனையோர் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டவர்; வேறு சில நூல்களையும் வெளியிட்டவர்.
ஆயினும், இவற்றிலே கைலாச பிள்ளையின் இயல்புகளைத் தெளிவாக எடுத்து ரைப்பன, அவர் எழுதியனவும், பதிப்பித்தனவும்ஆகிய துண்டுப் பிரசுரங் களே எனில் மிகையாகாது. சமகால சமூக சமயதத்து வபோக்குகள் பற்றி அவரது கண்ணோட்டமாகவும் அவற்று க்கு எதிராக அவர் எழுப்பிய கண்டனக் குரலாகவும் அவை காணப்படுகின்றன.
நல்லுTர் க. சதாசிவப் பிள்ளையை அடுத்து நாவலர் பரம்பரையின் முக்கியஸ் தராக விளங்கிய கைலாசபிள்ளை நாவலர் பெருமையைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகளை வன்மையாக எதிர்த்து ம், நாவலர் மரபைப் பேணும் முறையை வளர்த்தும் செயற்பட்ட போதும் . நாவலரவர்களின் அடிப்படை நோக்கு களைக் காலப்போக்கிற்கு ஏற்ப வளர்க்க அவரால் முடியவில்லை. அவரால் சமகால சமூகத்துடன் இணைந்து நின்று செயல்பட முடியாது போயிற்று.
சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர்
(1854 -1922) கைலாசபிள்ளைக்கு ஒரு
வயது மூத்தவராதல் வேண்டும். புலவரவர் கள் 1870 இலே நாவலரவர்களை முதன் முதலாகச் சந்தித்தது முதலாக, அவர்களுடைய காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டவர். தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நாவலரவர்கள் மூலம்

நிவர்த்தி செய்து கொண்டதோடல்லாமல் தம்முடைய படைப்புகளை அவரிடம் காட்டி அவர் அபிப்பிராயத்தைக் கேட்பதிலும் ஆர்வமிக்கவராக விளங்கியவர்.
நாவலரவர்களுடைய மாணாக்கர் பரம்பரையில் நேரடியாக வராதவராயினும் புலவரவர்கள் நாவலர் பரம்பரையின் முக்கியஸ்தருள் ஒருவராகக் கருதப்படுபவர். சிலர் புலவரவர்களுடன் நாவலர் பரம்பரை முடிந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் புலவரவர்கள் செய்த பணிகளாகும்.
வண்ணைச் சைவப் பிரகாச வித்தியாசாலையை நாவலரவர்களுக்குப் பின்பு உயர்ந்த கல்விப்பீடமாக உயர்த்திய பெருமையில் புலவரவர்களுக்கு முக்கிய பங்குண்டு. அங்கு நடைபெற்ற காவிய வகுப்பில் உயிர்நாடியாக விளங்கியவர் புலவரவர்களே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கல்வியின் பல்வேறு துறைகளிலே புலவரவர்கள் தம் காலத்திலே சிறந்து நின்ருர், புலவரவர்கள் பதிகம், ஊஞ்சல், கலிவெண்பா. இரட்டைமணிமாலை, கும்மி முதலிய பல சிறு பிரபந்தங்ளைப் பாடியுள்ளார்; சங்கத்திலிருந்து பாடல்களையும் நூலகளையும் தமிழ்லே பெயர்த்து ப் பாடியுள்ளார்: வசன நூல்யும் தமிழிலே பெயர்த்துப் பாடியுள்ளார்; வசன நூல்களையும் எழுதியுள்ளார்; தமிழ்ப்புலவர் சரித்திரம் வரைந்துள்ளார்: இலக்கியச் சொல்லகராதி தொகுத்துள்ளாா; இரக்கியப் பிழைகளைக் கண்டித்து க் கண்டனம் செய்துள்ளார்; இலக்கணப்பிழைகளைப் பதிப்பித்தும் புத்துரை எழுதியும் இலக்கண சந்திரிகை, வினைப்பகுபதவிளக்கம் முதலிய ஆய்வுகள் செய்தும் வந்தவர்;
இலக்கியகளை உரையுடன் வழங்கியவர்: புலவரவர்கள் 1878-1888 கட்டத்திலே கிறிஸ்துமத கண்டனத்திலே முதல்வராக நின்றவர்; பின்பு அம் முனைப்புக் குறைந்துவிட்டது. புலவரவர்கள் சிறந்த

Page 36
பிரசங்கியாகவும் பேரெடுத்தவர் என்பர். அப்பாக்குட்டி உபாத்தியாயர் எனப்பட்ட புலவரவர்கள். நாவலரவர்களைப் போன்று, தமிழ்படித்த பலரை உருவாக்கிய பெருமை கொண்டவர். கைலாசபிள்ளை புலவரவர்களுக்கு வாய்க்கரிசி இடும்போது, தமிழுக்கு வாய்க்கரிசி இடுவதாகக் கூறி
இட்டனர் என்று கதையுண்டு.
சுன்னை குமாரசுவாமிப் புலவர் ஆரம்பத்தில் சமய பிரசாரத்தில் அக்கறை மிகுந்தவராகவும் பின்பு கல்வி பற்றியே சிந்தனை செய்பவராகவும் காணப்படுதல் நோக்கத்தக்கது.
நாவலரவர்களிடம் சந்தேகநிவிர்த்தி பெற்றவர்களின் ஒருவர் மாதகல் ஏரம்பையர்(1847-1914) நிருவாணதீட்சை பெற்றுச்சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு அப்பூசையைக் கிரமமாகச் செய்துவந்தவர் ஏரம் பையர். கீரிமலை நாவலரவர்களின் தருமப்பொருள் கொண்டு தாபிக்கப்பெற்ற வித்தியா சாலையை அவரே ஆசியராக இருந்து நடத்தினார். பரிபாலன சபையார் நடாத்திய குரு வகுப்பிற்கும் அவரே, தலைமையாசிரியராக விளங்கினார். ஏரம்பையர் செய்யுணுரல்களையும் வசன நூல்களையும் இயற்றியுள்ள போதும் அவருக்குப் பேரேத்துக் கொடுத்தவை அவர் செய்த சைவப் பிரசங்கங்களாம்.
சைவப் பிரசங்கங்களில் வல்லவராகவும் ஆசிரியராகவும் பேரேடுத்த, சிவபூசை செய்து வந்த வேறொருவர் அச்சுவேலி அ. வேன்மயில் வாகனச் செட்டியார் (1865-1912) இவர் நாவலரவர் களிடம். சித்தாந்தம் கேட்டவர் என்பர். நாவலரவர்களின் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையின் முதலுபாத்தியாயராக விளங்கி, திக்கம் சி.செல்லையாபிள்ளை, வதிரி சி.நாகலிங்கம் பிள்ளை முதலானோர் பலருக்குப் பயிற்று வித்தவர் வேன்மயில் வாகனப் புலவர். இவர் தமிழ் நாட்டிலும், கொழும்பிலும் சில வருடங்கள் சைவப்பிரசங்கங்கள் நிகழ்த்தி யுளளTT.

32
நாவலரவர்களின் முதன் மாணா க்கருள் இடம்பெறும் சுவாமிநாதையர். விசுவநாதையர் கந்தசாமிப்பிள்ளை என்போர் விபரங்கள் கிடைக்குமா றில்லை. நல்லூர் க.சதாசிவப்பிள்ளை முதலானோ ருடன் 1846 இலே நாவலரவர் களின் திண்ணைப்பள்ளியிலே பயின்ற இவர்கள் 1848 இலே அவர் வண்ணையிலே தாபித்த சைவப் பிரகாச வித் தியா சாலையில் வேதனமுன்றிப் படிப்பித்து வந்தனர். 1852இலும் இவர்கள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தமை அண்டர்சன் பிரபுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மூலம் புலனா கின்றது. ஆயினும் வே. கனகரத்தின உபாத்தியாயர் ஆசிரியருட் சிலர் நீங்கிவிட்டதாகக் கூறுவதால் 1852க்குப் பின் நீங்கியவர்களுள் இவர்கள் இடம் பெறுகின்றனரோ என்பது தெரியவில்லை.
சுன்னை குமாரசுவாமிப்புலவருக்கு நேரேமுன்பு வண்ணை வித்தியாசரலை முதலுபாத்தியாயராக விளங்கியவர் மா. வைத்தியலு ங்கபிள்ளை வைத்தியலிங்க பிள்ளை 1867 முதல் 1902 வரை முதல் உபாத்தி யாயராக இருந்தனர். இவர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை முதலா னோருட்ன் நாவலவர்களிடம் பயின்றவர்’.
வைத்தியலிங்கபிள்ளைக்கு முன் வண்னை முதல் உபாத்தியாயராக விளங்கியவர் மு. தில்லைநாத பிள்ளை(1867) இவர் நாவலரவர்களிலும் ஒரிரு வயது இளையவர் : சதாசிவப்பிள்ளையிலும் இரண்டு மூன்று வயது மூத்தவர். நாவலரவர்களுடன் மத்திய கல்லூரியில் மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருந்து கிறிஸ்து மதத்தை தழுவுவதாகக் கொடுத்த வாக்கை நாவலரவர்களின் போதனை யில் நின்றவேற்றாது வேலையால் நீக்கப்பெற்ற தில்லைநாதபிள்ளை நாவலரவர்களின் வண்ணை சுக்கிரவாரப் பிரசங்கங்களுக்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டு நபவலரவர்களிடம் உயர் இலக்கண இலக்கியம் பயின்றவர். 1858 முதல் 1867 வரை

Page 37
வண்ணை வித்தியாசாலை முதலுபாத்தி யாயராக விளங்கியவர்.
நிறைவேற்றாது வேலையால் நீக்கப்பெற்றதில்லைநாதபிள்ளை நாவலரவா களின் வண்ணை சுக் கிர வாரட் பிரசங்கங்களுக்கு வேண்டிய ஒழுங்கு களைச் செய்து கொண்டு நாவலரவர் களிடம் உயர் இலக்கண இலக்கியம் பயின்றவர். 1858 முதல் 1867வரை வண்ணை வித்தியாசாலை முதலுபாத்தியராக
விளங்கியவர்.
மட்டுவில் க. வேற்பிள்ளை(1846-1930 நாவலரவர்களுக்கும் மாணவர்:" அவர்கள் சென்னைக்குச் சென்றிருந்த காலத்தும் தாமும் உடன் சென்று அங்கிருந்து கற்றவர்; ஏறக்குறைய 1907 முதல் பல வருடங்களாகச் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராக விளங்கியவர்: முன்பு யாழ்ப்பாணத்திலும் வண்ணை யிலும் பலருக்குப் பாடஞ் சொல்லிய வர்.
வேற் பிள்ளை நல்லவுச் சுடர் கொளுத்தலான சந்திரமௌலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகம் முதலான பல செய்யுள் நூல்களைப் பாடியவர்; வேதானிய புராணம், சிவகாமியம்மை சதகம், ஈச்சுரன் மாலை முதலியன பதிப்பித்தவர். ஆயினும் உரையாசியராகவே வேற் பிள்ளை பேரெடுத்தவர். திருவாதவூரடிகள் புராணம், புலியூரந்தாதி அபிராமி அந்தாதி, கெவுளிநூல் விளக்கம் என்பனவற்றிற்கு வேற் பிள்ளை உரையியற்றியுள்ளார். அத்தோடு சிறந்த புராணப் பிரசங்கியாகவும் கருதப்படுப வர்.
கோவிந்தபிள்ளை எனப்படும் புலோலி வ. குமாரசுவாமிப் புலவர் (1926) நாவலரவர்களிடமும் பயின்றவர் என்பதை அவருடைய நன்னூற் காண்டிகையுரை விளக்கம் மூலம் அறியமுடிகின்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கோப்பாய் யூனியன் பயிற்சிக்கலா

சாலையிலும் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய கோவிந்தபிள்ளை. வில்லி பாரதத்தின் பகுதிக்கு உரை எழுதியபோதும் இலக்க ணக்கொத்தர் என்று சிறப்பி க்கப்பட்டவர்.
நீர்வேலி ச. சிவப்பிரகாச பண்டிதர் (1864 - 1916) சங்கரபண்டிதரின் சிரேஷ்ட புதல்வர்.
சங்கரபண்டிதர் நாவலரவர் களுடன்
33
தோள்கொடுத்து நின்று சைவப்பிரசங்க மும்கிறிஸ்துமத கண்டன மும் செய்தவர். அவர் பிரமோதுரத வருடம் புரட்டாதி மாதம், புதுச்சேரியில் வியோகமடைந்ததை அடுத்து சிவப்பிரகாச பண்டிதர் நாவலரவர்களிடமும் சந்தேக நிவர்த்தி பெற்றவர். வண்ணை சைவப் பிரகாச வித்தியாசா லையில் குமாரசுவாமிப் புலவருக்கு உதவியா சிரியராக விளங்கிய சிவப்பிர காசர், நீர்வேலியில் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவியவர். சிவப்பிரகாசபண்டிதர், திருக்கழி ப்பாலைப் புராணம் முதலிய செய்யுணு ல்கள் பாடியவர். பாலாமிர்தம், பாலபாட நூல்கள் எழுதியவர்; திருச்செந்தூர் புராணவுரை கண்டவர்; சங்கத நூல்களுக்குத் தமிழுரை தந்தவர்; சி.வை.தாமோதரம் பிள்ளைக்கும், வண்ணை சி. சுவாமிநாதபண்டிதருக்கும் நூற் பரிசோதனையிலே உதவியவர்; தந்தையின் நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தவர்.
1846 இலே நாவலரவர்களின் திண்ணைப்பள்ளியிலே சேர்ந்து பயின்று 1848இலே அவர்களுடைய வண்ணைச் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே வேதனமின்றிப் பயிற்றத் தொடங்கிய எழுவரில் ஒருவர். இணுவில் நடராசையர் (1903)ஐயரவர்கள் சித்தாந்த சாத்திரத்திலே வல்லுநர் என்று பேரெடுத்தவர்; ஈழத்தில் மட்டுமன்றித் தமிழ் நாட்டிலும் சிதம்பரம், மதுரை முதலிய இடங்களிலும் பலநாள் வசித்துச் சித்தாந்த சாத்திரம் படிப்பித்தவர்; நாவலரவர்களின் முன்னோரான ஞான ப்பிரகாச சுவாமிகள் சிவஞானசித்தியார் சுபக்கத்திற்குக் கண்ட உரையினைத் திருப்பற்றுாரிலே 1888 இலே தனியே

Page 38
அச்சிட்டவர். திருவாவடுதுறை ஆதீனத்தார் ஞானப்பிரகாசர் உரையினைச் சிவசமவாத வுரையாகக் கொள்ளினும் நாவலர் பரம்பரையினர் அதனைச் சிறப்பாகப் போற்றியமை ஈண்டு மனங்கொளத்தக்கது.
வேலணை வி. கந்தப்பிள்ளை (18401914) நாவலரவர்களிடம் இலக்கண இலக்கியமும் அவர் மாணவர் இணுவில் நடராசையரிடம் சித்தாந்த சாத்திரமும் கற்றவர்; நாவலரவர்களின் கட்டளைப்படி வேலணையிலே தமிழ் வித்தியாசாலை நிறுவி நடத்தியவர். சிவபூசை கிரமமாகச் செய்த கந்தப்பிள்ளை கொழும்பு, யாழ்ப்பாணம், சிதம்பரம் முதலிய இடங்களிலே சைவப் பிரசங்கம் செய்தவர். சைவ சித்தாந்த விடயங்களைத் தெரிவிக்கும்பொருட்டு இவர் வேலணையிலே “சைவ சூக்குமார்த்த போதினி” எனும் பத்திரிகையை நடாத்தியவர். தத்துவப் பிரகாசவுரை யைப் பதிப்பித்த பிள்ளையவர்கள் சிவநெறிப் பிரகாசத்தைப் பரிசோதித்துப் பேரனாரைக் கொண்டு பதிப்பித்தார். தீவுப்பகுதியிலே சைவசமயத்தின் வளர்ச்சிக்குக் காரண மானவர்களிலே கந்தப்பிள்ளை முக்கியமான
6.
குப்பிழான் சி. செந்திநாதையர் (18481924) 1870க்குமேல் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் படிப்பித்துக்கொண்டு நாவலரவர்களிடம் பாடம் கேட்டவர்; அவர் பிரசங்கங்களைக் குறிப்பெழுதிப்படித்தவர். நாவலரவர்கள் வாழ்வின் கடைசித் தசாப்தத்திலே எதிர்நோக்கியகத்தோலிக்க பிரசாரத்தைக் கண்டிக்கப் பேருதவியாக விளங்கியவர் செந்திநாதையர். ஐயரவர்கள் நாவலரவர்களைப் போன்று புராணங்களின் உட்பொருளை விளங்கிப் பிரசங்கமாற்று வதில் சிரத்தைமிக்கவராக விளங்கியவர். தம் வாழ்வின் பிற் காலத்தினைத் தமிழ் நாட்டிலே பெரிதும் கழித்த ஐயரவர்கள் தத்துவ, ஆராய்ச்சியிலே பெரிதும் ஈடுபட்டவர். ஏகான்ம விவாதத்தினை

வச்சிரதண்டம், மகாவுக்கிரக வீரபத்தி ராஸ்திரம் முதலியன கொண்டு தாக்கிய செந்திநாதையர், சிவபரத்துத்தை நாட்டும் முகமாகத் தேவாரம் வேதசாரம்", "சைவ வேதாந்தம் முதலியனவற்றை வெளியிட்டவர். ஐயரவர்களின் சிறந்த பணியாகக் கருதப்படுவது அவருடைய நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப் பாகும். செந்திநாதையர் நா. கதிரைவேற் பிள்ளைக்கு எதிராக வைக்கப்பட்ட மருட்பா வழக்கிலே பிள்ளையவர்களின் கட்சியில் றநின்று அவருக்காகச் சாட்சி கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றத்திலே வித்தியா சாலையும் பின்பு அச்சியந்திர சாலையும் வைத்து நடாத்திய செந்திநாதை யர் கந்தபுராண நவநீதம், தாந்திரிக துண்ட கண்டன கண்டனம், ஞானபோத விளக்கச்சூறாவளி, வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த தத்துவப்படம், வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப்பட வினாவிடை, சிவஞானபோத வசனாலங் காரதீபம், ஞானரத்தினாவளி, பூரீ சீகாழிப் பெரு வாழ்வின் ஜீவகாருண் யமாட்சி, சென்னை ஆரிய்னார் பிரமம் பரப்பிரமமா காத சீவப்பிரமம், திருநீற்றின் உண்மை, சிவலிங்க மகத்துவம், இந்துஜயபேரிகை, சிவனுந் தேவனா என்னுந் தீய நாவுக்கு ஆப்பு, வஜ்ரடங்கம், விவிலியகுற் சிதம், விவிலிய குற்சிதக் குறிப்பு, விவிலிய குற்சித கண்டனதிக்காரம், சாண் கூyத்தி ரியப் பிரசண்டமாருதம் முதலியன வற்றைச் சுயமாக எழுதியதோடு தத்துவ விளக்கத் தைத் தம்முரையுடன் பதிப்பித்தவருமா வர்.
நாவலரவர்கள் வேதத்தைப் பூர்வ பசுஷ்மாகக் கருதும் மரபை ஏற்றுக்கொண்ட போதும் வேதத்துக்குப் பிரசாரகராக அமைந்தாரில் லை. Ourful J T 600T வசனத்திலே நாவலர வர்கள் எழுதியுள்ள வேதவுணர்ச்சி, சைவாக மவுணர்ச்சி, சைவாகமவுணர்ச்சி எனும் விடயங்களை நோக்குவார் அவர்தம் கருத்தைத் தெளி

Page 39
வாக உணர்வர் நாவலரவர்கள் சைவாக
மங்களின் பிரசாரகராகவே காணப்படு கின்றார். சிவாகமவுணர்ச்சியைப் பரப்பவும் சிவாகமநிந்தையைக் கண்டிக்கவும் நாவலரவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வைதிக மாற்றத்திலும் சைவமார்க்கம் ஈழத்திலே தழைத்தோங்கக் காலாயின தென்பதை மறுத்தலளிது. செந்திநாதையரின் "தேவாரம் வேதசாரம்" எனும் நூல் வேதம்,வேதாந்தம், ஆகமம், ஆகமாந்தம், இதிகாசபுராணம் எனபன வற்றிலும் திருமுறைகளிலும் சிவபரத்து வத்தை நாட்டும் ஒற்றுமைகளைக் காட்டுவது. அவருடைய சைவவேதாந்தம் பதினாறு பிரகரணங்களில் சிவபரத்துவத்தை நாட்டும் வேதாந்தச் சான்றுகளைக் காட்டுவது. நாவலர்வர்களின் தீவிரதரம் அவருடைய பரம்பரையிலே கண்ட மாற்றத்தி ற்குச் செந்திநாதையர் சான்றாவர்.
கொக்குவில் குகதாசர் ச.சபாரத்தின முதலியார்(1858-1922) த. கைலாசபிள்ளை யுடன் நாவலரவர்களி டம் கற்றவரென்ப. அரசாங்க உத்தியோகங்கள் பலவற்றை வகித்த சபாரத்தின முதலியார் கொக்குவில், நல்லூர், முனிசுரம், ஒட்டுசுட்ட்ான் முதலிய திருத்தலங்களிலே கோயில் கொண்டுள்ள தெய்வங்கள் மீது பல பாமாலைகளைச் சூடியபோதும் சிறந்த சித்தாந்த அறிஞராகப் பேரெடுத்தவர். இளமையிலேயே 'உதயபானு விலும் பின்பு "இந்துசாதனம்" பத்திரிகையிலும் தத்துவ சம்பந்தமான பல கட்டுரைகள் எழுதியவர். சீவான்மபேதம், ஈச்சுர நிச்சயம், பிரபஞ்ச விசாரம் முதலிய அரிய சமய தத்துவ நூல்களை முதலி யார வர்கள் எழுதியுள்ளார் ஆங்கிலத்திலும; Essentials of Hinduism 6T66T60 to ET606) எழுதியிருக்கிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் சித்தாந்த மாநாடுகளுக்குச் சபாரத்தின முதலியாரைத் தலைமைதாங்கும்படி அழைத்துக் கெளர வித்திருக்கிறர்கள்.

நல்லூர் வை. திருஞான சம்பந்தப் பிள்ளை (1849-1901) நாவலரவர்களுக்கு மருமகனும் மாணவனுமாவர். தாக்க சாத்திர ஆராய்ச்சியிலும் தர்க்கவாதம் செய்வதிலும் ஆர்வம் மிகுந்து தர்க்ககு டா தாலுதாரி என்று பேரெடுத்தவர். நாவலரவர்களுக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலாருக்கும் இடையே உண்டு பட்ட வாதங்களிலே நல்லூர்க்கந்தசுவாமி கோயிற் பிரதிகண்டன வழுஉக்களை வச்சிரகுடாரம் முதலிய கண்டனங்க ளை நாவலரவர்களுக்குச் சார்பாக எழுதியவர். வடகோவை சு. சபாபதி நாவலர் 1878 வரையிலே யாழ்ப்பாணம் மீண்டு நிகழ்த்திய சமயப் பிரசங்கத்திலே அகோரசிவாசாரிய பத்ததியைக் கண்டித்து, அதனைப் பின் பற்றுபவர்கள் சமவாத சைவர்கள் என்று துTவுதித்த காலை, தர்க்ககுடார தாலுதாரி "பத்திராத்திராப் பிரயோக ஏகவசன தீபிகை” எழுதி அவரைக் கண்டித்தார். அக்காலை நாவலரவர்களும் திருவாவடு துறை ஆதீனகர்த்தர் மீது கோபப்பட வேண்டியேற்பட்டது. தர்க்க குடார தாலுதாரி நாவலரவர்களை ஐந்தாம் சைவசமயகுரவர் என்று பாடியும் எழுதியும் துதித்து நாவலரவர்களாற் கண்டிக்கப் பட்டவர், கும்பகோணம் இந்து யூனியன் உயர்தர பாடசாலையில் தமிழ்ப் பண்டிதராகப் பணிசெய்துவிட்டுச் சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையில் முதலுபாத்தியாயராக விளங்கிய தர்க்க குடார தாலுதாரி, கோப்பாய் ச. பொன்னம்பல பிள்ளை யுடன் கோபித்துக் கொண்டு, சிதம்பரம் சொர்க்கபுர மடத்தில் சித்தாந்த வித்தியாசாலை நடாத்தும்காலை வியோகமடைந்தார். வேதாகம நாமவாத தீபிகை, அரிகரதாரதம்மியம், நாராயண பரத்துவ் நிரசனம் தர்க்கா மிர்த மொழிபெயர்ப்பு என்பன பிள்ளைய வர்கள் விட்டுச் சென்றவை.
ஆவரங்கால் சு. நமச்சிவாயப் புலவரும் தர்க்ககுடார தாலுதாரிய வர்கள் போன்று நாவலரவர்களுக்கும். நல்லூர்க் கந்தசுவாமி
35

Page 40
கோயிலாருக்கும் இடையே நிகழ்ந்த வாதங்களில் நாவலர் அவர்கள் பக்கம் நின்று கண்டனங்கள் எழுதியவர். நாவலரவர்கள் மித்தியாவாதநிரசனத்திலே சில இடங்க ளிலே "ஆவரங்கால் தம்பி” என்று குறிப்பிடுவது நல்லதம்பி என வழங்கப் பெற்ற நமச்சிவாயப் புலவரையேயாகும்.நமச்சிவாய ப்புலவர் நாவலரவர்களிடம் பயிறன்மை அறியாதபோதும், அவர்களுடைய மாண வகர் வேற்பிள்ளை உபா த்தியாயரிடம் கற்றவராத லினால் நாவலரவர்களை ஐந்தாம் குரவர் என்று போற்றியவராக அறியப்படுகிறார்.நமச்சிவாயப் புலவர் சங்கீத ஞானம் உடையவராய் பல கீர்த்தனை களைப் பாடியுள்ளார்.
நாவலரவர்களின் அன்புக்குப் பாத்திரமாகி அவரிடமிருந்து இரங்கற் பாமாலையும், வாழ்க்கைச் சரித்திரமும் பெற்றவர் வி. சுப்பிரமணியபிள்ளை (1873) என்பவராவர்.சுப்பிரமணியபிள்ளையின் வியோகத்தையும் அவர் நாவலரவர்க ளின் சீடராய் வண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையில் உபாத்தியாயராய் இருந்ததையும் குறிப்பிடும் வே. கனகரத்தின உபாத்தியாயர் (1882), நாவலரவர்கள் அவருக்குச் சூட்டிய புகழாரத்தைப் பற்றி யாதும் குறிப்பிட வில்லை. நாவலரவர்களின் சொத்துக்கு ஆதிபத்தியம் பெற்ற நல்லூர் க. சதாசிவப்பிள்ளை (1910) அவற்றை வெளியிடவேயில்லை. சி. செல்லையா பிள்ளையின், ஆறுமுக நவலர் அவர்கள் சரித்திரச் சுருக்கம் அவர்கள் இயற்றிய ருளிய தனிப்பாமாலையும் (1914)என்ற நூலிலே சுப்பிரமணியப் பிள்ளை மீது பாடப்பெற்ற இரங்கற் பாக்கள் முதன் முதலாக இடம்பெற்றன. அதன் பின்பு த. கைலாசபிள்ளை தமது “ஆறுமுகநாவலர் சரித்திரம்” என்ற நூலிலே சுப்பிரமணிய பிள்ளை மீது எழுந்த சரித்திரத்தையும் இரங்கற் பாக்களையும் குறிப்பிட்டார். ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டின் முதற் பதிப்பிலே (1921) சரித்திரத்தையும் பாக்களையும் தனியே வெளியிட எண்ணி

யிருப்பதால் பாடல்களை அங்கு சேர்க்கவில்லை என்று கைலாசபிள்ளை கூறுகிறார். திரட்டின் பிந்திய பதிப்புக ளிலேயே பாடல்கள் இடம்பெற்றன:ஆனால் சரித்திரம் வரவே யில்லை.
*சுப்பிரமணிய பிள்ளையின் சரித்திரத்தை வெளியிடுவதுபோற் பாசாங்கு செய்து பல வருடம் மறைத்து வைத்திருந்த பின் அதனைச் சாம்பர் செய்துவிட்டார்கள்”
என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறியிருக்கிறார்". இச் சரித்திரத்தைக் கண்ட பண்டிதமணி யவர்கள், பன்னிரு அத்தியாயம் கொண்ட இந் நூலிலே நாவலரவர்கள் தமது நோக்கங்களையும் நம்பிக்கை களையும் வெட்டவெளிச்சமாகக் கூறி இருப்பதாகக் கருதுவர்.
சுப்பிரமணியபிள்ளை மீது நாவலரவ ர்கள் பாடியுள்ள இரங்கற் பாக்கள் மூலம் நாவலரவர்களின் உள்ளம் தெளிவாகப் புலப்படும். தம் லட்சிய நோக்கற்கேற்ற மாணவனாக் அவர் சுப் பிரமணிய பிள்ளையைக் கருதினார். தம்முடைய ஈமக் கிரியைகளைச் செய்யும் தகுதி அவருக்கே இருந்தது என்றுகூட நாவலர வர்கள் அன்று எண்ணினார். உறவினர் பலர் வாழ்ந்தபோதும் மாணாக்கர் பலர் திகழ்ந்தபோதும் நாவலரவர்கள் தம் கருத்தை அவர்கள் தோளில் வைக்க விரும்பவில்லைப் போலும், 1879இலே சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசையின் போது நாவலரவர்கள்,
"நான் உயிரோடு இருக்கும்போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசார கரைத் தேடிக்கொள்ளுங்கள்.”
என்று கூறல் கவனிக்கத்தக்கது. சுப்பிரமணியபிள்ளையின் வியோக த்தின் பின்பு நாவலரவர்கள் தம் ஈம

Page 41
க் கிரியைகளை நடாத்த உரிமை கொடுத்தது திரு. சு. சபாபதிச் செட்டி யாருக்கு ஆகும். சிதம்பர சுப்பைய செட்டியாரின் மூத்த மகன் சுப்பிர மணியம் செட்டியார்; இளைய மகன் முத்துக்குமாரச் செட்டியார். சிரேட்ட னின் புதல்வனே சபாபதிச் செட்டியார் ; கனிட்டனின் புதல்வன் புகழ்பெற்ற பசுபதிச் செட்டியார். சபாபதிச் செட்டியார் நாவலரவர்களுக்கு ஈமக்கிரியை செய்யும் பேறு பெற்றார்.
பச் சிலைப் பற்று மணியகாரரின் புதல்வரான காசிநாதபிள்ளை இளமை யில் மனையாளை இழந்து, பிரபஞ்ச வாழ்வின் மயக்கம் நீங்கி சிதம்பரம் சென்று. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, முக்கால மும் சுவாமி தரிசனம் செய்து, பூமாலை கட்டிக் கொடுத்தல் முதலிய திருத்தொண்டு களைச் செய்து கொண்டு வாழ்ந்து வருகையில் நாவலரவர்கள் பார்வையிலே அகப்பட்டனர். சிதம்பரத்திலே வித்தி யாசாலையை அமைக்கும் பொறுப்பை நாவலரவர்கள் காசிநாதபிள்ளையிடமே கொடுத்தனர். அவரும் கருமமே கண்ணா யிருந்து நாவலரவர்கள் இட்டபணியை விரைவாக ஒப்பேற்றி முடித்தனர். இதனால் நாவலரவர்கள் வித்தியாசாலையை ஆரம்பித்துவிட்டு, சென்னை சென்றபோது, காசிநாத பிள்ளையை மானேஜராக நியமித்தனர். நாவலரவர்கள். சுக்கில வருடம் (1870) யாழ்ப்பாணம் மீண்டபோது அவருடன் கூடிக்கொண்டு வந்து அவருறைவிடத்திலே அவருக்கு உதவிகளைச் செய்துகொண்டி ருக்கும் காலத்திலே சுரத்தால் பீடிக்கப்பட்டு மறைந்தார். நாவலரவர்கள் அவருடைய அபரக்கியைகள் யாவற்றையும் சிறப்பாக நடப்பித்தனர்.
நாவலர் பரம்ப்ரையில் நாவலரவர்களின் காலத்திலேயே அவருக்கு அடுத்த படியிலே மதிக்கப்பட்டவர் வித்து வசிரோமணி ச.பொன்னம்பலபிள்ளை (1837-1897), பிள்ளையவர்கள் தமிழிலே சிறந்த

வித்துவானாயிருந்து நாவலரவர் களைப் போலக் கைம்மாறு வேண்டாது கல்வி கற்பித்து வந்தவர்; சொல் விற்பணமும் பயன் சொல் வித்தையும் கைவந்தவர். நாவலரவர் களிடம் கற்றவர்களும் தம் கல்வியை வித்துவசிரோமணியவர்களிடம் நிறைவுசெய்ய விரும்பிநின்றனர். சமயவுண் மைகளுக்கு-அவற்றின் விளக்கத்திற்கு நிலைக்களமாக நாவலரவர்கள் கொண்ட புராண படனத்தைக் காவிய இரசனை க்குப் பயன் படுத்தியவர் வித்துவசி ரோமணிய
வர்கள் பத்திச் சுவைக்கு மாமனும் இலக்கியச் சுவைக்கு மருமகனும் என்ற நிலையினை ஒரே காலத்தில் ஈழத்தவர் கண்டு களித்தனர்.
நாவலர் வழியிலே செல்லாவிட்டாலும் அவ் வழியிலே காலெடுத்து, நாவலர் பரம்பரைக் குச் சிறப்புத் தேடியவர் வித்துவசிரோமனிச.பொன்னம்பலபிள்ளை அவர்கள்.
ஆறுமுகத்தம்பிரானும் வடகோவை சு. சபாபதி நாவலரும். நாவலர் மரபினராக ஆரம்பித்துப் பின்பு அப் பரம்பரையினரிட மிருந்து விலகி நின்றவர்கள்.
ஆறுமுகப் பிள்ளை 1846 இலே நாவலரவர்களின் திண்ணைப்பள்ளியிலே பயிலத்தொடங்கி 1848இலே அவர்களுடைய வண்ணை சைவப் பிர காச வித்தியா சாலையிலே ஆசிரியராக விளங்கியவர். பின்பு நாவலரவர்களோடு யாதோ காரணத்தால் முரணி வித்தி யாசாலையை விட்டுநீங்கி,திருவண்ணா மலை சென்றார்". அங்கு காக்ஷாயம் பெற்றுத்தம்பிரானானார். இவரைப் பற்றிய செய்திகள் அதிகம் கிடைக்கு மாறில்லை. ஆயினும் பெரிய புராணத்தின் பெரும்பகுதிக்கும் திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் நாயனார் புராணம், அற்புதத்திரு வந்தாதி, மூத்த நாயனார் இரட்டை மணிமாலை என்பன வற்றிற்கும் உரை கண்ட ஆசிரியராக விளங்குகிறார்.

Page 42
வடகோவை சு. சபாபதி நாவலர் (18451903) நாவலரவர்களிடம் சில நூல்களைக் கேட்டவர் என்பர். சிதம்பரம் சைவப்பிரகாச வித்திசாலையிலே தலைமையாசிரியராக நாவலரால் நியமிக்கப்பேற்ற சபாபதி நாவலர் அவ்விடத்தை விட்டு நீங்கித்திரு வாவடுதுறை ஆதீனத்தை அடைந்து அங்கே கற்று ஆதீன வித்துவானாக விளங்கினார். சபாபதி நாவலரின் ஆதீன சம்பந்தம் அரருடைய செயல்களிலும் ஆக்கங்களிலும் புலனாகின்றது. நாவலரவர் களைப் போன்றும் அவர் பரம்பரையினர் போன்றும் சைவப் பிரசங்கம், பிறமத கண்டனம், அச்சியந்திரசாலை அமைத்தல், பத்திரிகை வெளியிடல் முதலியவற்றிலே ஈடுபட்டிருந்த போதும் ஆதீன சம்பந்தத்தினாலே நாவலர் பரம்பரையினர் போற்றிய ஞானப்பிரகாச முனிவரையும் அகோர சிவாசாரியர் பத்ததியையும் இழிக்கவும், தமிழ்ப்பணியிலே முன்னின்ற சி.வை. தாமோதரம் பிள்ளை யைக் கண்டிக்கவும் சபாபதி நாவலர் முன் வருகிறார். தாமோதரம் பிள்ளை கண்டனங்களை நோக்கும் போது ஆதீனத்தார் போற்றிய பழைமை யான அமிசங்களைச் சபாபதி நாவலர் வற்புறுத்தி நிற்பதைக் காணலாம். சபாபதி நாவலர் ஆதீனப் பிடியில் இருந்து விலகாதவராகவே காணப்படுகிறார்.
நாவலர் பரம்பரையில் இடம்பெறும் அவர் மாணாக்கர்களான சுழிபுரம் திருஞான சம்பந்த உபாத்தியாயர், வண்ணை சி. பொன்னுத்துரை ஐயர், கா, வேலுப்பிள்ளை', வை. விசுவலிங்கம் பிள்ளை', ச. பொன்னம்பல பிள்ளை" என்போர் பற்றி விதந்து கூறமுடியவில்லை. நாவலரவர்களிடம் சேனாவரையம் கேட்ட இணுவில் பொ.அம்பிகைபாக உபாத்தி யாயர் இணுவை யந்தாதி பாடி, வசன சூளாமணி எழுதி, தணிகைப் புராணத்தி ற்குப் பலருக்கு உரைகூறியவர்; சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு உதவியாகவும்

இருந்தவர் வண்ணை வே. கனகரத்தின உபாத்தியாயர் தம் குருவின் சரித்திரத்தை 1882 இலே அச்சிட்டு வெளிப்படுத்தினார்.
நல்லூர் கா. தியாகராசபிள்ளை எனும் நாவலரவர்களின் மாணாக்கர் தாம் நாவலர் பரம்பர்ையிற் சிறப்பிடம் பெறும் மேலைப் புலோலி நா. கதிரைவேற்பிள்ளையின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச் செல்வர் காவியம் பார்வையிட்ட நல்லூர் கத்தோலிக்க மிசியோன் தமிழ்ப் பண்டிதர் கா.தியாகராச பிள்ளையும், சம். பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் தியாகரும் இவரோ என்பது தெரியவில்லை கதிரைவேற்பிள்ளை யின் ஆசிரியர் அண்ணா மலையார் வண்ணம் பாடியிருக்கிறார்.
ஊரெழு சு. சரவணமுத்துப்பிள்ளை 1880இலே வெளியிட்ட "உதயபானு (பின்பு 1881இலே சைவ உதயபானு) என்னும் பத்திரிகை நாவலரவர்களின் எண்ணத்தை ஈடேற்றியதாகும். நாவலரவர்கள் 'உதயபானு'என்னும் பெயரோடு சைவப் பத்திரிகை நடாத்த முயன்று விளம்பரம் விடுத்திருந்தார். சரவணமுத்துப்பிள்ளை இலங்கையிலும், இந்தியாவிலும், சைவப் பிரசங்கங்களும் புராணப் பிரசங்கங்களும் செய்ததோடு சஞ்சிகைகளுக்கு விடய தானமும், கவிதைகளும் வழங்கியவர்.
நாவலர் பரம்பரையிலே சித.மு.பசுபதிச் செட்டியாருக்கு (1856-1906) முக்கிய இடமுண்டு. நாவலர் பெருமானின் எண்ணங்களை - கருத்துக்களைச் - செயற்படுத்த முன்னின்று உழைத்தவ்ர் அவர் சைவ(சமய) பரிபாலனசபை, இந்து உயர்தர பாடசாலை (இந்துக் கல்லூரி), திருக்கேதீச்சரப் புனருத்தாரணம் என்பன வற்றிலே அவர் புரிந்த பணிகளைச் சைவ உலகம் போற்றக் கடமைப்பட்டது. நாவலரவர்களின் போதனைப்படி சைவசார சீலராய் சிவபூஜா துரந்தராய் விளங்கியவர் அவர்.

Page 43
நாவலர் பரம்பரையிலே இருபதாம் நூற்றாண்டிலே சிறப்பிடம் பெறுபவர்கள் மேலைப் புலோலி நா. கதிரைவேற் பிள்ளை, காரைதீவு ச. அருணாசல உபாத்தியாயர், சித்தங்கேணி ஆ. அம்பலவாண நாவலர், வண்ணை சி. சுவாமிநாத பண்டிதர் முதலியோராவர். உப அதிபர் பொ. கைலாசபதியையும் சிலர் இப் பரம்பரையிலே இணைப்பர். புலோலி சு. சிவபாதசுந்தரம் பிள்ளையும் அச்சுவேலி ச. குமாரசாமிக் குருக்களை யும் இப் பரம்பரையிலே இணைத்து நோக்க இடமுண்டு.
மேலைப் புலோலி நா. கதிரை வேற்பிள்ளை(1871-1907) தமிழ்நாடு சென்றிருந்த காலை நாவலர் மரபின் சிறப்பினையும் அம் மரபு அடைந்திருந்த நிலையையும் கண்டுகொண்டனர். நாவலர் மரபுகளை இழிக்க முற்பட்ட வர்களை எதிர்த்துநின்ற கதிரைவேலர்,நாவலராகவே மாறிவிட்டார். நாவலரவர்களின் காலத்திற்குப்பின் ஏற்பட்டிருந்த புதிய சூழலிலும், நாவலரின் சிந்தனைகளைப் போற்றி மன்றேறி அவர் பெருமையை நிலைநாட்டினார். நாவல ரவர்கள் அருட்பா எனப்படுபவையாவை என்று விளித்த வையைவற்புறுத்தி நின்று நாவலரவர்களு க்குப் புகழ் தேடியவர். நாவலர் பெருமானைத் திருஞானசம்பந் த நாயனாரின் அவதாரமாகப் போற்றித் துதித்தவர்.
சித்தங்கேணி ஆ. அம்பலவாண நாவலரும் (-1932) நாவலர் பெருமானைச் சற்குருவாகப் போற்றி, அவர் வாழ்ந்தவாறே வாழ முற்பட்டவர். சிதம்பரத்திலே ஆறுமுக நாவலர் சந்தான ஞானசம்பந்த சுவாமி ஆதீனம் அமைத்தவர். வித்தியாசாலை நிறுவியும், புராணப்பிரசங்கம் செய்தும் நூல்கள் இயற்றியும், பதிப்பித்தும் நாவலர் வழி செல்ல முயன்றவர்.
வண்ணை சி. சுவாமிநாத பண்டிதர் (- 1937) LIJ IT 600 LL-60T D செய்தும், வித்தியாசாலைகள் தாபித்து நடாத்தி யும்,

அச் சுயந்திரம் நிறுவி நூல்களைப் பதிப்பித்தும், நூல்களை இயற்றியும் நாவலர் வழி சென்றவர். கதிரைவேற் பிள்ளைக்கு மருட்பா வழக்கின்போது உதவியாக நின்ற சுவாமிநாத பண்டிதர், தேவாரத் திருமறை, சிவஞான மாபாடி யம் முதலிய பல அரிய பதிப்புகளை வெளி யிட்ட பெருமைக்கு உரியவர்.
காரைதீரை ச. அருணாசல உபாத்தி யாயர் (1864-1940) நாவலருக்கு ப்பின் ஒரேயொரு மனிதர்' என்று த. கைலாசபிள்ளையாலே போற்றப்பட்டவர். சைவப் பள்ளிகளையும், சைவாசிரியர் களையும் உருவாக்கும் முனைப்பிலே நாவலர் வழியே சென்றவர். சைவ வித்தியாவிருத்திச் சங்கம் முதலியன தோன்றுவதற்குக்கால் எடுத்துக் கொடு த்தவர்.
உப அதிபர் பொ. கைலாசபதி மேல்வரும் மேற்கோளில் சுட்டப்படுபவரில் ஒருவர் என்பது மனங்கொளத்தக்கது.
“நாவலர்ஜயாஅவர்களின் நோக்கங் களை என்னிலும் பார்க்கப் பதினாயிரம் மடங்குநன்கு விளங்கின வர்களும், ஐயா அவர்களின் நிலையை உணர்ந்த வர்களும், அவர்களிலே அளவு கடந்த பக்தி பூண்ட வர்களும் இந்த ஈழமண்ட லத்திலே இரண்டே இரண்டு பேர் இருக்கிறார்கள்.”
என்பது பண்டிதமணியவர்களின் கூற்று. கைலாசபதியவர்கள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
புலோலி சு. சிவபாதசுந்தரம் பிள்ளை (1878-1953) நாவலரவர்களின் சரிதத்தை ஆங்கிலத்தில் ஆசைபற்றி அறையலுற்ற தோடு அவரை முன்மாதிரியாகக் கொண்ட சைவபரிபாலனத் திற்கே தம்மை அர்ப்பணித்தவர். சைவசமய உண்மைகளை விளக்கியும் சைவசமய வழிபாட்டிற் புகுந்த
39

Page 44
மாசுகளைத் துடைக்க முயன்றும் பிறமதச் செல்வாக்கைத் தகர்த்தும் தம் மத வளர்ச் சிக்கான வழிதுறைகளில் முன்னின்று பணி புரிந்தவர்.
சிவாகம ஞானிபானு சிவழீ ச. குமாரக்வாமிக் குருக்கள் (1886-1971), சைவ வித்தியாசாலை தாபித்தல், குருகுல பாடசாலை நடாத்தல், சமய நூல்களை முறைப்படி தற்பித்தல், சைவப்பிரசங்கம் செய்வித்தல், புராணபடனம் செய்வித்தல், சமய பத்திரிகை வெளியிடல், சமயநூல்களை 6T(pgষ্টী வேளியிடல் முதலிய செயல்கள் சைவ do-LDU விளர்ச்சிக்கு இன்றியமையா தவை என்று நாவலவர்கள் கூறிவந்தனவ ற்றின் உண்மை உணர்ந்து அடியொற்றிச் செயலாற்றி வந்தவர்.
சுன்னை குமாரசுவாமிப் புலவர் மறைந்தபோது, நாவலர் பரம்பரை அவரோடு முடிந்துவிட்டதாகச் சிலர் கூறினார்கள். நாவலர் பரம்பரையில் அவர் பெற்றிருந்த முக்கியத்துவமே அவ்வாறு கூறுவதற்குக் காரணமாயிருத்தல் வேண்டும். நாவலர் பரம்பரை புலவர வர்களுக்குப் பின்பும் தொடர்ந்து வந்து ள்ளது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வரை அப் பரம்பரை தொடர்ந்து வந்துள்ள தை யாரும் மறுக்கமுடியாது. பண்டி தமனியவர்கள் தான் அப்பரம்பரையின் கடைசிக்கொழுந்து என்று கூறிவிடலா மோ ?
நாவலர் பரம்பரையினரிலே வித்து வசிரோமணி பொன்னம்பலபிள்ளை யின் மாணாக்கரினால் ஆரம்பத்திலே நெறிப்ப டுத்தப்பெற்ற பண்டிதமணிய வர்கள், சுன்னை குமார சுவாமிப்புலவர், மனேஜர் த. கைலாசபிள்ளை ஆகிய இரு நாவலர் பரம்பரையின் முக்கியஸ் தர்களின் செல்வாக்குக்குள்ளே அகப்பட்டுக் கிறிஸ்தவ

சூழலை முற்றக இழந்தநிலையிலே, நாவலர் வழிக்கோர் காவலராக மாறினர். அத்தகைய ஒரு சூழலை அன்று தமிழ் நாடு உருவாக்கி யிருந்தது. கைலாசபிள்ளையும் பண்டித மணியவர்களும் நாவலர் பரம்பரையின் உயிர்ப்பிலே மிக்க அக்கறையுடன் விழித்திருந்தனர்.
நாவலர் மரபுக்கு இடையூறு நீங்கியபோது, நாவலர் சிந்தனையிலே பண்டிதமணியவர்கள் ஈடுபடத் தொடங்கி னார். இக் கட்டத்திலே நாவலர் சித்தாந்தங்கள் புது விளக்கங்க ளோடு வெளிவந்தன. அவ் விளக்க ங்களுக்கும் அவற்றை விளக்கும் முறைக்கும் பண்டிதமணியவர்கள் யாருக்குக் கடமைப்பட்டார் ?
நாவலரவர்களின் வேறுபட்ட மொழி நடைகளும் மொழியாட்சிகளும் மித்தியா வாத நிரசனத்திலும், பாலபாடக் கதை களிலும், அவற்றிற்குரிய முத்திரை யைத் தெளிவாக்கியது போன்று. பண்டித மணியவர்களின் சிந்தனைக் கட்டுரைகளும் தமிழுக்கு வளமுள்ள நடையழகுகளை வழங்கியுள்ளன.
ஆயினும் பண்டிதமணியவர்களின் ஆத்ம சிந்தனை, செந்திநாதையர் வழிச் சென்று, “உப அதிபர்” வழிச் சென்று, ஆத்ம விசாரத்தினை அடைந்தபோது, பண்டித மணியவர்கள் ஒடுக்கத்தையே நாடி
நின்றார்கள்.
நாவலரவர்கள் போல, வித்துவசிரோ மணியவர்கள் போல, சுன்னை குமார சுவாமிப் புலவர் போல, பண்டிதமணி யவர்களும் பல மாணாக்கரை விட்டுச் சென்றுள்ளார். அவர்களால் நாவலர் பரம்பரை எவ்வாறு விளக்கம் பெறும் என்பதைக் காலம் தான் கூறமுடியும்.

Page 45
1.
சான்றுக் குறிப்புகள்:
புதுமை இலக்கியம்: அகில இல ங்கைத் தமிழ் எழுத்தாளர் மகாடநாட்டு மலர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடு, கொழும்பு, 1962.
. வே. கனகரத்தின உபாத்தியாயர்;
பூரீலழரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம், இரண்டாம் பதிப்பு, 1968, பக்.28.
சேற்றுார் அருணாசலக்கவிராயர்:
ஆறுமுகநாவலரவர்கள் சரித்திரம், இரண்டாம் பதிப்பு, 1934, முகவுரை பக். 13.
. வி. க. வித்தியாபிமானிகளுக்கு விக்யாயன நிரசனம், 1911, பக்.24, 34,
52,
. சி. கணேசையர்: ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் 1939, பக் 200.
. சி. கணேசையர்; மேற்படி நூல், பக்.
118,
சி. கணேசையர்: மேற்படி நூல், பக்.
1 11.
漆漆淑
漆
41

8. S. Thananjeyarajasingam: The Edu
Cational Activities of
ហាបទ
Navalar 1974, pp. 17, 2
9. வே. கனகரத்தின உபாத்தியாயர்;
மேற்படி நூல், பக். 25.
10.த. கைலாசபிள்ளை ஆறுமுகநர்வலர்
சரித்திரம், 1919, பக். 13ல்
11. சி. கணேசையர்; மேற்படி நூல், பக்.
9.
12. சி. கணேசையர்: மேற்படி நூல். பக்.
157-158.
13.சி. சீவரத்தினம்:நாவலர் சமயப்பணி,
1962, அணிந்துரை.
14. சி. கணேசையர்: மேற்படி நூல், பக்.
229.
15.வே. கனகரத்தின உபாத்தியாயர்;
மேற்படி நூல், பக். 66,
16. த. கைலாசபிள்ளை; மேற்படி நூல்,
பக், 14.
17.செந்திநாதன், கனக; மூன்றாவது
கண், மேற்படி நூல், பக். 26.
漆球淑

Page 46
கிருஷ்ண
தமிழ்த்து
இந்துக்கள் மத்தியிலே கிருஷ்ண வழிபாடு பிரசித்தி மிக்க ஒன்றாகத் திகழ்கிறது. அவனுக்கென்று அமைந்த ஆலயங்களிலே மட்டுமின்றி ஏனைய தெய்வங்களுக்கான ஆலயங்களிலும் கிருஷ்ண வழிபாடு நிகழ்கிறது. கிருஷ்ண என்றால் கறுத்தவன் என்பது பொருளாகும். பொதுமக்கள் மத்தியிலே செல்வாக்குப் பெற்ற பிராக்கிருத மொழியிலே கிருஷ்ண என்ற சமஸ்கிருதச் சொல் கண்ண என வழங்கப்படுவதாயிற்று. கண்ணம் என்னும் கருந்தெய்வம் ஆழ்வார்களின் பாசுரங்களில் விஸ்தாரமாகப் பாடப்பட்டிருக்கிறான். விஷ்ணு வழிபாடு அல்லது வைணவமதம் நிலைகொண்டு பரவக் கிருஷ்ணன் காலாய் அமைந்த கதை சுவாரஸ்யமானதாகும்.
கிருஷ்ண என்ற பெயர் முதன் முதற் குறிப்பிடப்படுவது இந்திரனைப் போற்றும் இருக்குவேத வாக்கியமொன்றிலாகும். கிருஷ்ணனின் மனைவியரை இந்திரன் கொன்றொழித்ததாக அதிற் குறிப்பிட ப்பட்டுள்ளது. அதன்பின 50,000 கிருஷ் ணர்களை இந்திரன் கொன்ற தாகவும் கூறப்படுகிறது. அந்தக் கிருஷ்ணர்கள் இருக்குவேதப்படி இராட்சதர்கள் ஆவா. ஆரியர்கள் இந்திரனைப் பிரியத்தோடு தம்தலைவனாகக் கொண்டாடியமையும் தங்கள் பரவலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்துநின்றவர்களை இராட்சதர் என்றும் அசுரர் என்றும் இழித்தொதுக்கியமையும் பரவலாக அறியப்பட்டனவாகும்.
கிருஷ்ன வழிபாடு நிலைபெற்ற பின்னர் அவனைப்பற்றிப் பல புராணங்கள்

வழிபாடு
பேராசியர் சி. தில்லைநாதன் |றை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
எழுப்பப்ட்டன. அவற்றின்படி, கிருஷ்ணன் யாதவ வம் ஸத்தைச் சேர்ந்தவன். யாதவர்கள் மதுராபுரியில் ஜமுனா நதியின் மேற்குப் பக்கத்திலுள்ள பிருந்தாவனத்திலும் அதன் மறுகரையிலமைந்த கோகுலத்திலும் வாழ்ந்த ஆயர்குலத்தினராவர்.
கிருஷ்ண என்பது, பசுவினை வழிபட்ட முக்கியத்துவம் வாய்ந்த குழுவினருக்கும், ஆரியர் வருவதற்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்திருந்து அவர்தம் படையெடுப்பை மும்முரமாக எதிர்த்த ஒருவம் சாவழி யினருக்கும் வழங்கிய பெயராதல் வேண்டும் என்ற கருத்து ஒதுக்கவியலாத ஒன்றாகவே தோன்றுகிறது.
கிறித்துவுக்கு முன் நான் காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பாணினியின் அஸ்டாத்தி யாயியிலும், சந்திரகுப்த மோரியனின் அரசவையில் வாழ்ந்திருந்த கி.மு.மூன்றாம் நூற்றா ண்டைச் சேர்ந்த கிரேக்கத் தூதுவனான மெகஸ்தனிஸ் குறிப்புக்களிலும் கிருஷ்ண வழிபாடு நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. மெகஸ்தனிஸ் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதார மென்று வர்ணித்துள்ளார். ஆனால் வழக்கிலிருந்த மதப்பிரிவுகளைக் குறிப்பிடும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகன் கல்லெட்டு கிருஷ்ண வழிபாடு பற்றியோ வைன வம் பற்றியோ குறிப்பிடவில்லை. கிருஷ்ண வழிபாடு, மதுரையிலும் அதன் அயலிலிருந்த சில பிரதேசங்களிலும் மட்டும் வழக்கிலிருந்த தாகவே மெகஸ்தனிஸ் உரைத்துள்ளான்.

Page 47
இவற்றைத் தொகுத்து நோக்கும் போது, கிருஷ்ணவழிபாடு கி.மு. மூன்றாம் நூற்றாண்டினை ஒட்டியே பரந்து பெற்றி ருக்க வேண்டும் என்பதும், ஆரம்பத்தில் அது ஆரியரல்லாத இந்தியாவின் பூர்வீகக் குழுவொன்றுக்கு உரியதாக இருந்திருக்க வேண்டும் என்பதும் உய்த்துணரப்படலாம். அவ்வழிபாடு முக்கியத்துவம் மிக்கதாகிப்பரவ ஆரம்பக் காரணமாயமைந்தவை மகா பாரதமும் பகவத்கீதையும் ஆகும்.
மகாபாரதம் கிறித்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததென்று சிலர் கூறினாலும், கிறித்துவுக்கு முன் 1000-1400 காலப்பகுதியிலேயே அது நடந்திருக்க வேண்டுமென்பதே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படு வதாகும். அக்கதை நீண்ட காலமாக வழங்கி வந்து, கவிஞர் கற்பனைகளால் மெருகூட்டப்பட்டு, இன்று கிடைக்கும் வடிவில் அமைந்த காலப்பகுதி கி.மு. 400க்கும் கி.மு. 100க்கும் இடைப்பட்ட தாயிருக்கலாம். இதில் சேர்க்கைகளும் செருகல் களும் அவ்வப்போது இடம் பெற்றிருக்கலாம் என்றும் அறிஞர் கருதுவர்.
கிருஷ்ணனது வாழ்க்கை குறித்து எமக்குக் கிடைக்கும் நூல்களுள் காலத்தால் முந்தியது மகாபாரதம். அதில் பாண்டவர் களுக்கும் கெளரவர்களுக்கும் இடைப்பட்ட போரில் பாண்டவர் பக்க ஆலோசகனாகவும், வழிகாட்டியாகவும் கிருஷ்ணன் தோன்று கிறான். பாண்ட வர்களுடைய நெருங்கிய உறவினனாகவும், அவர்களுக்கு இக் கட்டான வேளைகளில கைகொடுக்கும் ஆபத் பாந்தவனாகவும் சித்தரிக்கப்படு கின்றான். அதே வேளையில் சத்திரியர் களின் கர்வத்தைக் குறைக்கவும் பூமித்தா யின் பாரத்தைக் குறைக்கவும் தோன்றிய வனாவும் விஷ்ணுவின் அவதாரமாகவும் போற்றப்படுகிறான்.
சிவனை (மஹாதேவனை) வழிபட்ட வனாகவும் சிவனிடத்தும் உமாதேவி

யிடத்தும் பல வரங்களைப் பெற்றவனாகவும் கிருஷ்ணன் சித்தரிக்கப்படுவதையும் மகாபாரதத்தில் காணலாம. துரோணரின் மகன் தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்கும் பொருட்டு இரவில் பாண்டவர் கூடாரத்தினுள் புகுந்தபோது, புலியாடை தரித்துப் பாம்பாபரண மணிந்த சிவன், பேருருப்பூண்டு, தடுத்ததாகவும் சிவனது
உடல் சூரியன் போல் பிரகாசிக்க
அவ்வொளியிலிருந்து பல்லாயிரம் கிருஷ்ணர்கள் தோன்றியதாகவும் மகா பாரதம் கூறும். இவற்றை நோக்கும்போது, இறையவதாரமாகவும் அமானுஷ்ய புருடனாகவும் கிருஷ்ணன் காட்டப் பட்டாலும், வீரபுருட நிலையில் இருந்து அவன் மாறாதிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இருக்கு வேதத்தில் இந்திரனுக்குத் தோழனாகத் தோன்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கிருஷ்ணன் போற்ற ப்பட்டாலும், இந்திரனை அவனது விரோதியாகக் காணும் நிலை மாறியதாகத் தெரியவில்லை. காண்டவதகனத்தைத் தடுக்க முயன்ற இந்திரன், கிருஷ்ண னிடமும் அர்ச்சுனனிடமும் தோல்வி கண்ட மையை மகாபாரதம் கூறும். யாதவர்கள் தன்னை வழிபட மறுத்ததால், சினம் கொண்ட இந்திரன் காளமேகங்களை ஏவிக்கல்மாரி பொழிந்தபோது கிருஷ்ணன் குன்றைக் குடையாகப் பிடித்து ஆயரையும் ஆநிரைகளையும் காத்ததாகப் பின்னர் எழுதப்பட்ட பாகவதம் கூறும்."
வேதகாலத்துச் செவ்வண்ண விஷ்ணு வுடன் கிருஷ்ணனைத் தொடர்பு படுத்தும் முயற்சிகள் வலிந்து மேற்கொள்ளப் பட்டவையாகவே தோன்றுகின்றன. விஷ்ணுவின் குறிப்பிட்ட நோக்கங் களுக்கான மச்ச, கூர்ம, வராக, நரசிங்க, வாமன, பரசுராம, ராம, பலராம, புத்த, கல்கி அவதாரங்களைப் போலன்றி, கிருஷ்ணா வதாரம் எனப்படுவது கடவுளே மனித வடிவில் உதித்த ஒன்றாகக் காணப்படு

Page 48
கின்றது. எவ்வாறாயினும், கிருஷ்ணன் இல்லாத விஷ்ணு வழிபாடோ வைணவமோ பரந்து கால்கொள்ள வில்லை.
கிருஷ்ண வழிபாடு வலுப்பெற்று வேரூன்ற உதவிய பகத் கீதை, மகா பாரதத்தின் ஒரு பிற்சேர்க்கை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகும். கி.மு. நான்காம் ற்றாண்டு என்போர் முத்ல, கி.மு. G": நூற்றாண டென்போர் வரை கீதை எழுந்த காலங் குறித்து அறிஞரிடை அபிப்பிராய பேதம் நிலவுகிறது. போர்க்களத்திலே அர்சசுனனு க்குக் கிருஷ்ணன் நிகழ்த்திய உபதேசமாக அமைந்துள்ள கீதை, உபநிடதங்களின் சாரம் என்றுகொண்டாடப்படுகின்றது. வாழ்க்கை வினைகளில் உறுதி கொண்டவர்களை மட்டுமின்றி, துறவிகளையும் கவரும் அம்சங்களை உள்ளடக்கியதாய்க் கீதை காணப்படுகிறது. எழுந்தகால முதல் இந்துமதத்தில் சிறப்பான இடத்தினைப் பெற்றுவிட்ட கீதை, கிருஷ்ணனை ஒரு சமயத்தலை வனாகத் துலங்கவைக்கிறது.
வேத வழிபாட்டு முறையிலிருந்து வேறுபட்ட வகையில் புதிய விடயங்கள் இரண்டு கீதையில் அழுத்தம் பெறுகின்றன. ஒன்று நிஷ்காமகர்மம், அதாவது, பற்றின்றிக் கடமையிலே துணிந்து நிற்றல். இரண்டா வது, இறை பக்தி, தன்னைப் பாரமாகக் கொண்டு பக்தி செலுத்துபவர்களைக் கிருஷ்ணன் எந்நிலையிலும் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை, வாழ்க்கையில் ஆறுதலும் உறுதியும் அளிப்பதாயமைந்தது. கிருஷ்ணன் அனைத்துக்கும், யாவருக்கும் மேம்பட்டவனாகக் கீதையிலே தோன்று கின்றான். மஹாத்மாவே, நின்னை எங்ங்ணம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா, ப்ரம்மனிலும் சிறந்தாய். அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்றுபொருள். நீ ஸநீ, நீ அஸத், அவற்றைக் கடந்த ப்ரம்மம். நீ ஸத், நீஅஸத், நீ என்று அர்ச்சுனன் சொல்வது கவனிக்க
த்தக்கது.

மகாபாரதம் எழுத்திலே பொறிக்க ப்பட்ட காலமும், பகவத்கீதை தோன்றிய காலமும், கிருஷ்ணன் தெய்வமாகக் கொண்டாடப்பட்ட காலமும், அவன் விஷ்ணுவோடும் நாராயணனோடும் தொடர்பு படுத்த ப்பட்ட காலமும் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப் பட்டாலும், அவை யாவும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடையிலேயே நிகழ்ந் தவை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ள ப்படக் கூடியதாகும்.
இக் காலப் பகுதி, இந்துமத வர லாற்றிலே முனைப்பும் முக்கியத்துவமும் மிகுந்த ஒன்றாகும். வேதவழிபாடு இக்காலப் பகுதியிலே பல சவால் களை எதிர் நோக்கியது. அவற்றுள் முதலாவ தாகக் குறிப்பிடப்பட வேண்டியது. இந்தியப்பூர்வீகக் குடிகளினதும் அவர்தம் வழிபாட்டு முறை களினதும் எதிர்ப்பாகும். இந்திரனைக் கறுப்பு வண்ணனான கிருஷ்ணன் மூர்க்க மாக எதிர்த்துப் போரிட்ட கதையும், இந்திரனை வழிபடவேண்டாம் என்று யாதவர்கள் தடுக்கப்பட்ட பாகவதக் கதையும் இங்கு மனங்கொளத் தக்கவை.
இரண்டாவதாகக் குறிப்பிடத்தக்கது. அக்காலப் பகுதியில் வேதவழி பாட்டு முறை அடைந்திருந்த விசனத்து க்குரிய நிலைமையாகும். வருணன், உஷா, சூரியன் முதலன இயற்கைத் தெய்வங்களை வணங்கிய, மந்தை மேய்த்த, நாடோடி 96T60 புராதன ஆரியர்களின் எளிமையான வழிபாட்டு முறையானது, பிராமணியத்தின் சிக்கல் வாய்ந்த யாகங்களுக்கும் கிரியைகளுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஆட்பட்டுக் கிடந்தது. சிந்திக்கக்கூடிய பலர் மிருகபலிகளுக்கும், சடங்குகளுக்கும் எதிரான திசையிலே சிந்திக்கத் தலைப்பட்டனர்.
அடுத்துக் குறிப்பிடத்தக்கது, வேதங் களையும் வழக்கிலிருந்த கொள்கை 4

Page 49
களையும் மறுத்த புதிய சமயங்களின் தோற்றமாகும். தன்னல மறுப்பும், தூய ஒழுக்கமுமே முத்தி தரவல்லன என்று போதித்த பெளத்த, சமண மதங்களின் செல்வாக்குப் பரவலாயிற்று. ஆற்றல் மிக்க அசோகச் சக்கரவர்த்தி பெளத்தத்தை நாலா திக்கும் பரப்பப் பெருமுயற்சிகளை மேற்கொண்டான் உலகவாழ்க்கை யினை நிலையற்றதென ஒதுக்கி எல்லாம் கர்மவினைப்படியே நடக்குமென்று செயலற்றிருக்கும் மனப்பான்மை வளரவும்
பெளத்தம் வழிகோலுவ தாயிற்று.
இந்நிலையில், முன்னிரு சவால்களு க்கும் வல்லமையுடன் முகங்கொடுக்க உதவும் வகையில் முதற் சவாலைச் சமாளித்த வேத மார்க்கத்தி னரின் சாதுரியம் வியத்தற்குரியதாகும். வாசுதேவனைப் பரதெய்வமாகக் கொண்ட பாகவத்தைப் பிரசாரம் செய்த கிருஷ்ணனை, விஷ்ணுவாகவும் நாராயண னாகவும் வழிபடுதற்குரிய தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். அதற்கு மக்களை உடன்பட வைக்க உதவியது. எனவே அவர்கள் அங்கீ காரம் பெற்றிருந்த அவதாரக் கோட்பாடென்றே கொள்ள வேண்டும். விஷ்ணு சூரியனின் வடிவமாகக் கொள்ளப்பட்டவர். நாராயண என்றால் கடவுளரதும் மக்களதும் தரிப்பிடம் என்று கொள்ளப்படும். யாவற்றுக்கும் மேற்பட்ட ஒரு சக்தியைத் தரிசிக்க விரும்புவனைத் திருப்திப்படுத்துவதாக விஷ்ணு வடிவமும், பாலில் நெய்போல இயல்பாகவே எங்கும் பரந்துள்ள இறையைத்தியானிக்க விரும்பும் தத்துவ ஞானியைத் திருப்திப்படுத்துவதாக நாராயண விசுவரூபமும் அமைந்தன.
தங்களால் வெற்றிகொள்ளப்பட்ட நாட்டு மக்கள்ை அணைத்துக் கொள்ளக் கருதிய ஆரியர், அம்மக்களின் பிரதான தெய்வமொன்றுக்கு இந்துமதத்தில்

இடந்தரவிழைந்த மையின் விளைவாகவே விஷ்ணு கருநிறக் கடவுளாய்க் காணப் பட்டான் என்று ஹமமாயுன் கபீர் கூறுவர்" கிருஷ்ணனைத் திராவிட இனத்துக்கு உரியவனாக இனங்காணும், முல்க் ராஜ் ஆனந். திராவிடரைச் சமாதானப்படுத்த வேண்டி ஆரியர் அவனை விஷ்ணுவின்
அவதாரமாகக் கொண்டனர் என்பர்.
கிருஷ்ணனின் நிறம, அவன் நடு இரவிற் பிறந்ததனால் ஆனதென்றும், விஷ்ணு வின் பிழம்புவான சூரியனோடு சேர்ந்த ஆகாயத்தின் நீலவண்ணம் கிருஷ்ண னுக்கு அமைந்ததென்றும் விளக்கமளி த்து, கறுத்த திராவிட இடையனுக்கு ஆரியர் கெளரவம் அளித்தனர் என்கிறார் முல்க் ராஜ் ஆனந்.
கிருஷ்ணன் போர்வீரனாகத் திகழ்ந்த போது அவனது சின்னங்களாகக் கொள்ளப்பட்ட சக்கரமும் சங்கும் விஷ்ணுவோடு, அவன் அடையாளம் காணப்பட்டவிடத்து விஷ்ணுவுக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது". பிரம்மமாகவும் விஷ்ணுவாகவும் நாராயணனாகவும் கிருஷ்ணன் கொள்ளப்பட்டமை, அவனு க்கும் அவனை வழிபட்டவர்க ளுக்கும் அன்றிருந்த பிரசித்தியையும் செல்வா க்கையும் காட்டுவதாகும்.
மகாபாரதம் கிருஷ்ணனைச் சிறந்த வீரபுருடனாகவும் அரசியல் விவேகியாகவும் காட்ட, பகவத்கீதை அவனை ஒரு மார்க்க போதகனாகக் காட்டுகின்றது. கீதையில் அவன் விஷ்ணு அவதாரமாகவோ நாராயண னாகவோ காணப்பட வில்லையாகையால் , அந்நூல் ஆதியில் பாகவத மதத்து க்குரியதாய் இருந்திருக்கக்கூடும் என்றும் எண்ண இடமுண்டு.

Page 50
கடவுளுக்கும் கடமைக்கும் ஒருவன் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்று பகவத் கீதை வலியுறுத் துகிறது. யாகங்களுக்கும் கிரியைகளுக்கும் அது முக்கியத்துவம் அளிக்கவில்லை. முடிவற்ற கிரியைகளி லிருந்து விடுபட மக்களுக்கு வழிகாட்டுவதாய் அது அமைந்தது . அதனை வேதமாக, உபநிடத சாரமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் யாக, கிரியைச் சிக்கல்களை ஒரளவேனும் புறங்காணக் கூடியதாயிற்று. பெளத்த சமணக் கொள்கைகள் பரவுவதைத் தடுக்கவும் அது வலுவ்ளிப்பதாயிற்று. வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய பெளத்த, சமண மதங்களுக்கு மாறாக கருமத்தை வலியுறுத்திய தோடமையாது, சரணடைந் தோர் வினையனைத்தும் களையவல்ல எங்கும் நிறைந்த யாதுமான இறையாகக் கிருஷ்ணனை நிறுத்தியதன்மூலம் மனித வாழ்க்கையின் ஒருபற்று க் கோடாகவும் பகவத்கீதை விளங்கியது. இந்த உலகத்து இன்பங்களும் கடமைகளும் துறந்துவிடத் தக்கன என்ற பெளத்த மதத்தினரின் போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்கீதை எழுதப்பட்டது என்று தமது பகவத்கீதை மொழிபெயர்ப்பின் முன்னுரை யிலே மகாகவிபாரதியார் கூறியிருப்பதையும் இங்கு எண்ணிப் பார்த்தல் ஏற்றதாகும். சுருக்கமாக கூறுவதெனின், மகாபாரதமும் பகவத்கீதையையும் தோற்று வித்த கிருஷ்ண விம்பம் இந்துமதம் புதுத்தெம்புடன் மக்கள் மத்தியிலே பர்வ உதவியது எனலாம்.
இந்துமத மறுமலர்ச்சியை ஒட்டியும் அதற்கு உறுதுணையாகவும் | ]67) புராணங்கள் எழுந்தன. அவற்றுட் பல இக்காலத்தில் முதன்மைபெற்றுவிட்ட சிவனையும் கிருஷ்ணனையும் பற்றிய வரலாறுகளைப் பலவற்றாலும் விரித்துரைப் பனவாயின. பொதுமக்கள் மத்தியில் இந்துமத சம்பந்தமான கதைகளை எடுத்துச் சென்ற இப்புராணங்கள்பெளத்தமதப்பரவலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது"

கிருஷ்னனை பற்றிக் கிடைக்கும் புராணங்களுட் காலத்தால் முந்தியது ஹரிவம் சம். ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கொள்ளப்படும் இப் புராணம் மகாபாரதத்தின் பின்னிணை ப்பாகக் கருதப்படுகின்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணனுடைய இடைக்குலச் செயல் களை ஒரிடத்து சிசுபாலன் இகழ்ந்துரைக் கிறானாயினும் அந்நூல் கிருஷ்ணனுடைய பிறப்பினையும் இளமைப் பருவச் சம்பவங்களையும் பற்றிக் கூறவில்லை. அவ்வரலாறு பின்னெழுந்த புராணங்களிலே விரித்து ரைக்கப்படுவதைக் காணலாம். கிருஷ்ணனைப் பூரணாவதாரமாகக் கொண்டு அவனது வரலாற்றை ஒருமுகப்படுத்தி 16,374செய்யுள்களிலே கூறும் ஹரிவம்சம் அவனுடைய இளமைக் காலத் தீரச் செயல்களை எடுத்து ரை ப்பதுடன், கொடுமையியையும் அநீதியி னையும் அழித்துப் பூவுலகிலே நன்மையை நிலைநாட்டத் தோன்றிய கடவுளாக அவனைச் சித்தரிக்கின்றது.
அதனையடுத்து 7,000 செய்யுள்களில் இயற்றப்பட்ட விஷ்ணுபுராணம் ஹரிவம்சத்திற்கூறப்பட்ட செய்திகளுக்குப் புத்துயிரளிப்பதாய்க் காணப்படுகின்றது. விஷ்ணு வின் முன்னைப் பெருமைகள் யாவும் ஆயர்பாடிக் கிருஷ்ணரைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளன. வாசுதேவனுக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்து ஆயர் பாடியில் யசோதையால் வளர்க்கப்பட்டது முதல் வேடனொருவனின் அம்பினால் மாண்டது வரையிலான கதை
விஷ்ணுபுராணத்திற் கூறப்படுகின்றது.
கிருஷ்னன் பற்றி எழுதப்பட்ட புராணங்களிலே கோபிமாதருடன் அவன் புரிந்தலிலைகள் மிகுதியாக வர்ணிக்கப் படலாயின. கவிஞர்களின் கற்பனை காமம் சார்ந்த சல்லா பங்களின் பால் சற்று மிகுதியாகவே செல்வதாயிற்று. கோபியர் கிருஷ்ணன் மீது கொண்ட காதலும், கிருஷ்ணன் அவர்களிடத்துக்கொண்ட
6

Page 51
காதலும், கிருஷ்ண வழிபாட்டுக்கு ஒரு தனி வசீகரத்தைத் தந்து பொதுசன உணர் வீடுபாட்டை அதிகரித்தது உண்மைதான். என்றாலும், பெரு வீரனாகவும் அரசியல் தலைவனாகவும் ஆன்மீக போதகனாகவும் கிருஷ்ணனைக் காணும் தன்மையினை அவை பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் தோன்றுகின்றது. பத்ம புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் அதனைக் காணக்கூடிய தாகவுள்ளது.
ராதையைக் கிருஷ்ணனுடைய இதயத்திலிருந்து தோன்றிய அவனுடைய விசேட பிரியத்துக்குரிய கோபிப் பெண்ணாகக் காட்டியமை பின்னைய ராதாகிருஷ்ண வழிபாட்டுக்கு வழிவகுத்தது. ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் தோன்றியபல இலக்கியங்களிலும், சிற்ப ஒவியங்களிலும், நடனநாடகங்களிலும் கிருஷ்ணன் கோபியர் காதல் சிரஞ்சீவித்தன்மை பெற்றுவிட்டது. ஹல்லிசக, ராஸ்க, கோஸ்தீ போன்றவை கிருஷ்ணலீலைகளைச் சித்தரிக்க உருவான சமஸ்கிருத நடனங்களாம்14, அக் கலைப் படைப்புகள் பலவற்றில் அழகியலும் ஒழுக்காறும் முரண்பாடின்றி இசைந்து விளங்குவதும் உண்மையே.
ஆயினும் சம்போக சிருங்கார வர்ணனைகள் எல்லைமீறிய ஒரு நிலை பிரம்மவைவர்த்த புராணத்திலும் ஜயதேவ. சைத்தன்ய ஆகியோர் பாடல்களிலும் துலாம் பரமாகத் தெரிகிறது. கிருஷ் ணனுக்கும் கோபிக்கும் இடைப்பட்ட காதலைச் சித்திரிக்கும் பாடல்களை இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் இடையி லான காதலைக் காட்டும் நாயகநாயகி பாவப் பாடல்களாக எந்தளவுக்குக் கொள்ள முடியும் ? “இந்த பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப்பாகத்தின் மீது நடப்பது போன்ற கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கின்றது; அதற்கு இப்புறம் அப்புறம் போய்விட்டால், அசந்தர்ப்பமாகிவிடும்”

என்று பாரதியாரின் கண்ணன் பாட்டு இரண்ட்ாம் பதிப்புககும் எழுதிய முன்னுரையில் வ.வே.சு. ஐயர் எழுதியதை இவ்விடத்து எண்ணிப் பாராதிருத்தல் இயலாது, அனேக தமிழ் ஆழ்வார்களும் மீராபாயும் பாடிய நாயகன் நாயகி பாவப் பாடல்களுடன் ஜயதேவ, சைத்தன் ய போன்றவர்கள் பாடல்களை ஒப்பிட்டு நோக்கினால் அப்பாவத்தின் அர்த்தங் களையும் அனர்த்தங்களையும் புரிந்து கொள்ளவியலும். தமிழ்நாட்டைப்பொறுத்த வரையில் சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலான வற்றிலும் விஷ்ணு மாயோனாகவும், மாலாகவும், கண்ணனாகவும் வழிபட்ட மைக்குச் சான்றுகள் உண்டாயினும் கிருஷ்ன வழிபாட்டின் உயர்நிலை விளங்குவது ஆழ்வார்களின் பாசுரங்களி லேயாம். ஆழ்வார் என்றால் இறைவனது குணத்திலே ஆழ்ந்து ஈடுபட்டவர் என்றே பொருள்படும். பல்வேறு சாதிகளையும் சேர்ந்த ஆழ்வார் பக்தி வைராக்கியத்துடன் கண்ணனுடைய பெருமைகளையும் தோற்றப் பொலிவினையும் லீலைகளையும் படிப்போர் உள்ளங்களை அள்ளும் வகையிற் பலவாறாகப்பாடியுள்ளனர். பகவத்கீதைக்கும் பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதிய பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இராமானுஜரும் தமிழரேயாவர். ஆழ்வார் பாசுரங்களிலே சிறப்பாக ஆன்டாளின் திருப்பாவை மீது ஈடுபாடு மிகக்கொண்ட இராமானுஜர் கிருஷ்ண வழிபாட்டுக்குத் தத்துவ ப்பரிமாணம் அளித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரை, வைணவர் எனப்படுவோர் அருகியே காணப்படினும், கிருஷ்ண வழிபாடு பரவலாக இடம்பெற்றுள்ளது. தென்கோடியிலுள்ள தெவிநுவரவிலும் வடகோடியிலுள்ள வல்லிபுரத்திலும் எழுந்தருளும் சிறப்பு கிருஷ்னனுக்கு உண்டு. பருத்தித் துறையிலுள்ள வல்லிபுரத்திலும், யாழ்ப்பாண த்துப் பெருமாள் கோவிலிலும்

Page 52
பொன்னாலையிலும், இயக்கச் சிக்கரு கேயுள்ள மல்வில்லிலும் கிருஷ்ண வழிபாடு நடைபெறுகிறது. இந்துக்கள் ஏனைய தெய்வங்களுக்கான பல ஆலயங்களில் கிருஷ்ணன் வழிபடப் படுகின்றான். பெளத்தர்கள் நீலவண்ணக் கடவுளாக, உபுல்வனாக வழிபடுவது கிருஷ்ணனையே. அவர்களுடைய பிரசித்தி வாய்ந்த களனி, தம்புல்லை, அனுராதபுர ஆலயங்களிலே கிருஷ்னனுக்குச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தமிழ் மக்களை பொறுத் தமட்டில் அவர்கள் போற்றும் கிருஷ்ணன் அல்லது கண்ணன் மகாபாரதம், பகவத்கீதை, ஆழ்வார் பாசுரங்கள் ஆகியவற்றின் மூலமும் மகாகவி பாரதியார், கண்னதாசன் முதலான தற்காலக் கவிஞர்கள் வாயிலாகவும் அறியப்பட்டவனாவான். அவனிடத்துப் பிரம்மத்தோடு விஷ்ணுவும் வாசுதேவனும் அடங்குவர். மகாபாரதம் சித்தரிக்கும் கிருஷ்ணன் தீரமும், அரசியற் தந்திரோபாயமும் பிரச்சினைகளை நிலைமைக்குத் தக்கவாறு எதிர்கொண்டு புறங் காணும் விவேகமும் மிக்கவன். பகவத்கீதை காட்டும் கண்ணன் இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் இம்மைக்கும் மறுமைக்கும் வழி காட்டும் கூட்டாளியாகவும் ஆசியராகவும் விளங்கு கின்றான்.
ஹரிவம்சம், விஷ்ணு, பாகவத பத்ம, பிரம்மவைவர்த்த புராணங்களைத் தமிழ் மக்கள் அவ்வளவுக்கு அறியமாட்டார்கள். அவற்றிற் கூறப்பட்டவற்றை ஆழ்வார்கள். பிழிந்து வடிகட்டி வழங்கியுள்ளனர். அவற்றை இக்கால அனுபவ உணர்வோடு பாரதியார், கண்ணதாசன் முதலானோர் பாடியுள்ளனர். தந்தை யாக, தாயாக, அரசாக ஆண்டானாக ம்டடுமின்றித் தோழனாக, காதலனாக, சீடனாக, சேவகனாக, குழந்தையாக வெல்லாம் கண்ணன் தமிழ் மக்களுக்குத் தரிசனம் தந்துள்ளான். காதலனாகவும் குழந்தையாகவும் பாவனை

செய்து பாடப்பட்ட பாடல்கள் கிருஷ்ணக் கவர்ச்சி சாதாரண மக்களிடை மிகுதியாக பரவக் காரணமானதைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
கண்ணனுடைய கண் டாரைப் பிணிக்கும் வசீகரமும், ஆயர் பாடியில் கோபிமாதருடன் அவன் புரிந்ததாகக் கூறப்படும் லீலைகள் சல்லாபங்களும், இதயத்துக்கு இதமான காதலனாக அவன் கொள்ளப்படுவதற்கு ஏதுவாய் அமைந்தன. கொடுமைமிகு ஹம்ஸனைப் கொன்று தருமத்தையும் தாய்தந்தையரையும் காக்கப் பிறந்த பிள்ளை ஆயர்பாடிக்குக் கடத்தப்பட்டு ஆபத்துக்களின் மத்தியில் யசோதையிடம் வளர்ந்த கதை, கண்ணுங் கருத்துமாகப் பேணப்பட வேண்டிய பெறுமானமிக்க ஒரு குழந்தையாகக் கண்ணன் காணப்படு வயிதற்கும் பொருத்தமான பகைப்புல மாயிற்று.
இறைவனைத் தாயாக அல்லது தந்தையாக நோக்குவது பழைய மரபு. அது மறுதலையாக்கப்பட்டு, மனிதனின் மிருதுவான பராமரிப்பினை வேண்டிநிற்கும் கள்ளமற்ற, மென்மையான குழந்தையாக அவன் நோக் கப்டுவது ஒர் அழகிய புதுமைதான். அவனது துடுக்குத்தனமான குறும்புகளைப் பொறுக்க முடியாது கடிவதும் கண்டிப்பதும் ஒறுக்க முனைவதும், ஒன்றும் பலன்தராதவிடத்து. "தோற்றுவிட்டேனடா! சூழ்ச்சிகளழிந்தேன்.” என்று கையை விரிப்பதும் அற்புதமான கற்பனைகளாகும். இயற்கையான வாழ்வோடும் மானிடப் புலனுணர்வுக ளோடும் 689 للا ہوا تا அனுபவங்களை மனித உள்ளங்களிலே கிளர்ந்தெழவைக்கும் தமிழ்ப் பாசுரங்களும், * பிரம்மத்தையும் விஷ்ணுவையும் கரந்து விளங்கு பவனாகக் கண்ணனை தமிழர் உள்ளங்களில் நிறுத்திவைத்துள்ளன.

Page 53
அடிக்குறிப்புக்கள்
1.நாச்சியார் திருமொழி 13:1
2.மண்டலம் 8, சூக்தம் 6.
3. Benjamin Walker, Hindu World. London 1968, p 559
4. Bahadur Mal, Shri Krishna, His Philosophy and His Spritual path, Hoshiarpur 1960 pp. 6,50,51.
5. John Dowson; A Classical Dictionary of Hindu Mythology and Religion Geography History and Literature London 1879, p. 164.
6.எஸ்.இராமகிஷ்ணன், இந்தியப் பண்பாடும் தமிழரும், மதுரை 1971, பக், 157 - 58.
7.பகவத்கீதை 11:37 (மகாகவிபாரதியார் மொழிபெயர்ப்பு)
8.E.Sவரதராஜஅய்யர், தமிழ் இலக்கிய
} } } }
4.

வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1957 பக். 214.
9. W. D.P. Hill. Bhagavad Gita. Oxford 1928, p 10
10. Humayun Kabir, our Herit age Bombay 1946, p.3l.
11.Mulk Raj Anand, The Krishna Theme in Indian Art, Cultural Forum. New Delhi Oct 67 Jan 68, p. 10
12. P.L. Bhargava Fundamentals of Hinduism. New Delhi, 1982, p. 48.
13. Elizabeth A. Reed the Ancient Books of India, New Delhi 1988 p.354.
14. E.W. Marasinghe The sanskrit Theatre and Stage craft, new Delhi 1989, pp. 471-73
15.மகாகவி பாரதியார், கண்ணன் - என் சீடன்,
漆 举 裘 浆

Page 54
தமிழ்ச் சைவ
செல்வச்சந்நிதியின் விரிவான ஒர்ஆய்வுக்கான சில தொடக்கக் குறிப்புகள்
தொண்டைமானாற்றிலுள்ள “செல்வ ச்சந்நிதி "எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது. இலங்கையின் சைவக் கோயில் கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகார முடையோரின் கோயில் களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன இது மனித இயல்பின் பாற்பட்டதே. ஒரு குறிப்பிட்ட கோயிலோடு தொடர்புடையவர்களின் சமூக அதிகாரம், உயரிடச் செல்வாக்கு என்பனவற்றைக் கொண்ட அக்கோயிலுக்கு வெகுஜனத் தொடர்புச் சாதனங்களான பத்திரிகை, வானொலியிற் கிடைக்கும் முக்கியத்துவம் தீர்மானமாகின்றது. செல்வச் சந்நிதி அத்தகைய உயர் செல்வாக்கு மட்டத்தினுள் வரவில்லை யெனினும், அது பெரும் பான்மையும் அடி நிலை மக்களிடையே தான் அதன் பக்தி
*யாழ்ப்பாணத்து சிந்தனை மரபில் சைவத்த 1879) குறிப்பிட்ட ஒரு வரலாற்றுப் பின்னணியில் முன்வைத்த இக்கோஷத்தைப் பண்பாட்டு மான அணுகுமுறையாகக் கொள்ளல் சிரமமாகலாம். சைவமத வழக்காறுகள் பிரசதேசங்களுக்கேற்ப வரும். இவ்வாறு நோக்கும் பொழுது முருகன் மு குழவி சிவன் மகனாக, சோமாஸ் கந்தனாக இணைக்கப்படுகின்றான். தமிழ் இங்கு “தப முறைமையினைக் குறிக்கும். தமிழைத் தாய் பண்பாட்டைப் போற்றுபவர்களை இது சுட்டும்.

வப்பண்பாட்டிற்
T முக்கியத்துவம்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
ஈர்ப்பினைக் கொண்டுள்ளது, இது மாத்திரமல்லாது, சந்நிதியின் கோயிலொழுகு முறையில் தனி மனிதக் கொடைகள் பிரபல்யப்படுத்தப்படும் முறைமைகளோ அல்லது தனி மனித மேலாண்மை மேலோங்கத் தக்க ஒரு முகாம்ைச் சாத்தியப்பாடோ இல்லை. இது இக்கோயிலின் சமூகவியலடிப் படையில் முக்கியமான ஒர் அம்சமாகும்.
செவ்வச்சந்நிதி பற்றிய விரிவான ஆய்வு யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சைவ மரபின் சில முக்கிய இயல்புகளை - இது வரை வற்புறுத்தப்படாத முக்கிய இயல்புகளை வெளிக்கொணர உதவும்.
சந்நிதி ஆகம வழிபாட்டு முறைமையினைக் கொண்டதன்று. ஆகம வழிபாட்டிற் காணப்படும் பல அம்சங்கள் இன்று அங்கு இடம் பெறத் தொடங்கி யுள்ளனவெனினும்(உருத்தி ராபிஷேகம்
தமிழ் என்று கூறலே மரபு. ஆறுமுகநாவலர் (1822குறிப்பிட்ட ஒரு சமூக வரலாற்றுத் தேவைக்காக ரிடவியல் நெறிசார்ந்த இவ்வாய்வுக்கு வேண்டிய அனைத்திந்திய அடிப்படையில் நோக்கும் பொழுது சிற்சில மாறுதல்களைக் கொண்டுள்ளமை தெரிய ]ற்றிலும் தமிழ்நாட்டுத் தெய்வமாகும். பழையோன் ஆகமச் சைவ வணக்க முறைமைகளுக்குள் ழ்ெ" நாட்டில்வளர்த்தெடுக்கப்பட்ட பண்பாட்டு மொழியாகக் கொண்டதனால் ஒரு குறிப்பிட்ட

Page 55
போன்றவை) அடிப்படையில் அது தனக்கேயுரிய சில சிறப்பான வழிபாட்டு முறைகளைக் கொண்டதாகும். இச்சிறப்பு முறைமைகளில் ஆகம வழிபாட்டு முறைமை தமிழ்நாட்டிற்கு வருவதன் முன்னர் காணப்பட்ட சில பூர்வீகப் பண்புகளைக் g, T600T6) TD.
இன்னொரு மட்டத்திற் பார்க்கும் பொழுது சந்நிதியில் “நாட்டார் நிலை” மதவழக்காறுகள் பலவற்றைக் காணலாம். தமிழ்ப்பண்பாட்டின் செந்நெறிமுறைமையும் (Classical form) Ab T L U Tri (obj) முறைமையும் (Folk form) (p(L55, வணக்கத்தில் இணைந்து நிற்பது தெரிந்ததே. அத்துடன் வடமொழிக் கலப்பும் இவ் வழிபாட்டில் வந்து விட்டது. அக் கலப்பினைத் திருமுருகாற்றுப் படையிலே காணலாம். செல்வச்சந்நிதி வழிபாட்டு முறைமையில் வடமொழிக்
கலப்புக்கு முற்பட்ட நிலையினை இப்பொழுதும் பிரித்தறியக் கூடியதாகவுள்ளது.
சந்நிதி பற்றிய ஆய்வில் முக்கிய இடம் பெற வேண்டியது அதனைத் தமது மிகமுக்கிய வழிபடு , தலமாகக் கொள்வோருடைய சமூகவியற் பண்புகளாகும். (இவ் வேளையில் அடியார்கள் எனும் பதத்தை நான் இங்கு பிரயோகிக்க விரும்பவில்லை. ஏனெனில், அடியார் எனும் இக்கருதுகோள் வைதிகப் பக்தி எழுச்சியுடன் வந்த ஒரு எண்ணக் கருவாகும்) இவர்களுக்கும் கோயில் பொறுப்பாளர்களுக்குமுள்ள உறவு பற்றி ஆராய்தல் வேண்டும். இக்கட்டத்திலேதான் இக்கோயிற் பூசகர்களின் தனித்துவமான பண்புகள் நன்கு தெரியவரும் . இக்கோயில் பூசகர்களின் அடிப்படையான அணுகுமுறை இங்கு முக்கியமாகும். இங்கு நடக்கும் பூசை முறைமையை நோக்கும் பொழுது, இவர்கள் தங்களைக் “கும் பிடுபவர்களுள் முன் bri Gurtsi ' (First among the worshippers) ஆகக் கருதிக் கொண்டே

கிரியைகளைச் செய்கின்றமை தெரிய வரும்.
அடுத்து சந்நிதியை தமது உயர் வழிபாட்டுத் தலமாக (முறைப்பாட்டுக்த் தலமாக துயர் களை தலமாக) கொண்டு கும்பிடுபவர்களின் அடிப்படை மனநிலையும் சமூக உளவியலும் நின்று ஆராயப்படல் வேண்டும். அதாவது சந்நிதியிற் பெறப்படும் மத அநுபவம் (Religious experience) urg,
அது மற்றைய வழிபாட்டிடங்களிற்
காணப்படுவதிலிருந்து எவ்வகையில் வேறுபடுகின்றது என்பன போன்ற வற்றை ஆழமாக ஆராய்தல் வேண்டும். அப்பொழுதுதான் சந்நிதியின் முக்கியத்துவம் புலனாகும். சந்நிதியிற் பெறப்படும்" மத அநுபவம்” சமூக நிலையுடன் எவ்வாறு தொடர்புகொண்டுள்ளது என்பது தெளிவாக்கப்பட வேண்டும். சமூக உருவாக்கத்தை அறிய முனையும் பொழுது அச் சமூகத்தின் மத அநுபவம் பற்றிய ஆய்வும் முக்கியமாகின்றமை தெரிந்ததே.
செல்வச் சந்நிதி யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதற்குமான கோயிலெனினும் அதன் பிரதானமான "ஈர்ப்பாளர் வட்டம்” அது இடம் பெற்றுள்ள
தொண்டைமானாறும், கிழக்கே அம்பன்,
51
குடத்தனை நாகர்கோயில் துன்னாலை, கரவெட்டி, பருத்தித் துறை, வதிரி, உடுப்பிட்டி, சக்கோட்டை, இன்பருட்டி பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய கிராமங்களும் மேற்கே பலாலி, மாதகல் மயிலிட்டி முதலாம் கிராமங்களும், தென்மேற்கே கதிரிப்பாய் இடைக்காடு, பத்தமேனி, அச்சுவேலி முதலாம் கிராமங்களுமாகும்.
இக் கட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பெற்ற ஒர் உண்மையை வலியுறுத்தல் வேண்டும். சந்நிதியின் வழிபடுவோர் வட்டம் மேனாட்டு மயப்படுத்தப்படாத ஒரு வட்டமே. இது பெரும்பான்மையும் அடிநிலைச் சமூக

Page 56
மட்டமேயாகும். மேனாட்டு மயப்பட்ட வளர்ச்சியையுடையவர்களும் இங்கு வரும் பொழுது மேனாட்டுமயப்பாட்டின் சின் னமான விழுமியங்களையும் நடைமுறைகளையும் முதன்மைப்படுத்து வதில்லை
தோ யலொழுகு முறை ய ன
அடிப்படையான, ஆகம இறுக்கமற்ற, நெகிழ்ச்சியம் வழிபடுவோரின் மனநிலை நெகிழ்வும்.இணையும் பொழுது, முற்றிலும் தனித்துவமான ஒரு அநுபவச் சூழல் இங்கு ஏற்படுகின்றது.
சந்நிதியின் சிறப்பமிசங்களாக நான்கினைக் குறிப்பிடலாம் முதலிரண்டைப் பறறி ஏற்கனவே குறிப்பிட் டாயிற்று.
9|606).JuJT6)6OT;
(1)இக் கோயிலின் சடங்கு முறைமைகள்
(2)வழிபடுவோரின் மனப்பாங்கும் நடைமுறையும்
இவை பற்றிய சில முக்கியமான அமிசங்களுண்டு.
இக்கோயிலின் சடங்கு முறைமை மிக முக்கியமானது. எப்பொழுதும் மதம் என்பது சடங்கும், அச் சடங்குக்கு அடிப்படையான ஐதீகமும் இவற்றின் பாலுள்ள Ibiotild.60)5u(SLDLLJIT(gld. (Ritual, Myth and Faith) இம் மூன்றும் ஒரு குறிப்பிட்ட உலக நோக்கை வளர்க்கும். முதல் மூன்றுக்கும் சமூக் அமைப்புக்கும் தொடர்புண்டு.
சந்நிதி கோயிலின் பூசைமுறை பிராமணிய முறையைச் சாராதது. இக்கோயிற் பூசையிலும் பல்வேறு சடங்குகளிலும் இக்கோயில் பற்றிய பல ஐதீகங்கள் அடிப்படையாய் அமைவதைக் காணலாம். உதாரணமாக, பூசை முடிவில் பூசகர், மணி ஆதியனவற்றை வைத்துத் தானே முதன் முதலிற் கும்பிடுவதை எடுத்துக் கூறலாம். இது இக் கோயிலின் தோற்றம் பற்றிய கதைகளோடு தொடர்புடைய ஒரு சடங்காகும்.
சந்நிதியின் ஐதீகங்களையும்,

52
சடங்குகளையும் அவதானிக்கும் பொழுது, கதிர் காமத்துக்கும் சந்நிதிக்கும் கற்பிக்கப்பட்டுள்ள உறவுகள் தெரிய வரும். கதிர்காமத் திருவிழாவுக்கு முதல் நாள் முருகன் இங்கிருந்து கதிர்கா மஞ் செல்லுவதாகவும், அங்கு தீர்த்தம் முடிந்ததும் இங்கு வருவதாகவும் சொல்லப்படும் கிரியைகள் மிகமுக்கியமானவையாகும்.
வழிபடுவோரின் மனப் பாங்கு, நடைமுறையில் சந்நிதிக்கான நேர்த்திக் கடன் முறை மிக முக்கியமானதாகும். காவடி எடுத்தல், குழந்தைகளை விற்று வாங்கல், மொட்டையடித்தல், மாவிளக்கு எரித்தல் ஆகியன உண்டு. இக்கோயிலின் முக்கிய நடைமுறைகளின் ஒன்று, இங்கு நடைபெறும் அன்னதானமாகும். இக் கோயில் பற்றிய நேர்த்திக்கடன்களுள் அன்னதானமும் ஒன்று. இக் கோயிலுக்கு வரும் மரபுநிலை வழிபடுவோர், அன்னதானச் சோறு சாப்பிடுவதை வழிபாட்டில் ஒரமிசமாகவே கொள்வதுண்டு. அன்னதானம் வணக்க முறையாகவே
இங்கு தொழிற்படுகின்றது.
அன்னதானத்தின் சமூக, பொருளாதார முக்கியத்துவத்தை நோக்குதல் வேண்டும். ஒரு நிலையில் இது” குழுநிலை உணவுப் பகிர்” வினைக் (Communal meal) (g fligib. 96ör (Oo(TTCLB மட்டத்தில் உபரிச் செல்வத்தைக் குழுமத்துக்குப் பயன் படும் முறையின் செலவு செல்வத்தையும் குறிக்கும்.( Communally useful way of sharing the surplus)
மூன்றாவதாகக் குறிப்பிடப்பட வேண்டிய சந்நிதியின் சிறப்பமிசம் இங்கு கரணப்படும் மடங்களாகும்.
தீராநோய் தீர்க்கும் மருத்துவனாக சந்நிதியானைக் கொள்ளும் நம்பிக்கையும், அன்னதான நேர்த்திக்கடன் முறைமையும், இங்கு மடங்களின் தோற்றத்துக்கும்

Page 57
தொடர்ச் சிக்கும் காரணமாக அமைகின்றனவெனலாம். பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள், மடங்களைக் கட்டி அவற்றின் நிருவாகத்துக்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளனர். பூசகர் குடும்பங்களைத் தவிர, இங்கு நிலையான ஒரு சனத்தொகை காணப்படுவதற்கும் மடங்களே காரணமாகும். தத்தம் குடும்பங்களிலிருந்து பிரிந்தவர்களும் பிரிக்கப்பட்டவர்களும் மடங்களைத் தமது வதிவிடமாகக் கொண்டிருந்தமை ஒரு முக்கியமான உண்மையாகும். மடங்களற்ற சந்நிதியைக் கற்பனை பண்ணக் கூட முடியாத அளவுக்கு மடங்கள் சந்நிதியின் ஒரமிசமாகவுள்ளன.
சந்நிதியின் மிக முக்கியமான, ஆனால் விதந்து காணப்படாத ஒரு சிறப்பமிசம், அது யோகியர் பலரின் தங்குமிடமாக இருப்பதேயாகும். கிராம வீதிகளில் காணப்படும் சாதாரண சாமியார் முதல் யோகசாதனை புரியும் ஜேர்மன் சாமியார் , ஆனைக்குட்டிச் சாமியார் வரை பல யோகியர் இங்கு காணப்படுகின்றனர். சந்நிதி கோயிலின் அன்றாடப் பூசை முறைகளிற் பங்கு கொள்ளாத இப்பெரு யோகியர் பலர் செல்வச் சந்நிதி அளிக்கும் ‘சூழலை' த் தமக்கு ஏற்ற இடமாக்க் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்துச் சித்தர் பரம்பரைக்கும் சந்நிதிக்குமுள்ள தொடர்பினை ஆராய்தல் வேண்டும்.
செல்வச்சந்நிதியின் சிறப்பமிசங்களை ஆராய முனையும் பொழுதுதான் இதன் பெயரின் அசாதாரணத் தன்மை புலனாகின்றது.

தமிழ்ச் சைவ மரபில் பெரும்பாலும் கோயில்களின் பெயர்கள், இடத்தின் பெயரையும் தலமூர்த்தியின் பெயரையும் கொண்டிருக்கும். ஆனால், இங்கோ செல்வச்சந்நிதி என்று மாத்திரம்பெரிதும் வழங்கப்படுகிறது. “தொண்டைமனாற்றுச் செல்வச் சந்நிதி” என்னு மீது மரபும் இல்லையென்றே கூற வேண்டும்ரஅதுபால சந்நிதி முருகன் 2 எண்றும்
விதந்தோதப்படுவதில்லை. အီဂွါနှီ၌ ன்
PY Ke Na
53
என்றே குறிப்பிடப்படுத் 'ஆற்றங்கரையான்’ எனும் L என்பதை இங்கு குறிப்பிடல் ண்ேடும். ஊர்ப்பெயரையும் உறையும் தெய்வத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டாத 苓 முக்கியத்துவம் பெற்றுள்ள தெய்வத்தின் சந்நிதி என்ற இப்பெயரின் கருத்தை அறிவது அவசியம். சந்நிதி என்னும் சமஸ்கிருதச் சொல்சம் +நி+தி என நிற்பது. இதன் கருத்து.
(1)அண்மையில்இருப்பது, அண்மைநிலை (2)முன் நிற்றல்
என்பனவாகும். காலக்கிரமத்தில் தெய்வம், குரு, பெரியோர் முன்நிற்பதை 'சந்நிதி "சந்நிதானம்' என்பன குறித்தன. எனவே, சந்நிதி என்பது முருகன் முன் நிற்றலைக் குறிக்கின்றது. செல்வச் சந்நிதி என்பது முருகனையே செல்வமாகவும், அவன் தருவனவற்றைச் செல்வமாகவும், அவனைச் செல்வ த்தைப் பெறுவதற்கான வழியாகவும் கொள்ளும் அர்த்தங்களும் மனநிலைகளும் அதிலே தொனிக்கின்றன.
கோயில்களிற் 'சந்நிதி கள் உண்டு. இங்கு சந்நிதியே கோயிலாகவுள்ளது. செல்வச்சந்நிதி ஒர் அசாதாரண பெயர். செல்வச் சந்நிதி ஒர் அசாதாரணமான கோயில்.
K. K.

Page 58
பெரிய புராணமும்
சிவத்தமிழ் செல்வி
இறைவரோ தொண்டைருள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'
என்பது ஒளவையாரின் வாக்கு. நினைப்பவர் மனம் கோவிலாய்க் கொண்டவன் பெருமான். இதனாலே யே அடியவர்களின்பெருமை ஆண்ட வனின் பெருமையிலும் பார்க்க விஞ்சி நிற்கிறது. இத்தகைய பெருமையுடையவர்களைப் பற்றிப்பேசிய புராணம் பெரியபுராணம் என்று போற்றப்படுகிறது. முதற் பதினொரு திருமுறைகளும் இறையின் பத்தின் நிலைமையை எடுத்தோதுவன. ஈற்றிலுள்ள பன்னிரண்டாந்திருமுறை மாத்திரந்தான் இறையின் பத்திற் திளைத்த அடியார் களைப் பற்றிக் கூறுவது. அவர்கள் இறையின்பத்தில் திளைத்தவர்கள்.
“காலையும் மாலையும் கைதொழு வார் மனம் ஆலய மாமே அரநெறி யார்க்கே”
என்னும் திருமுறைக்கேற்ப அடிய வர்களின் உள்ளமே ஆண்டவனு க்குரிய இடமாகும். இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருந்தாலும் சிறப்பாக வெளிப்பட்டு விளங்குவது சிவனடியார்களிடத்திலேதான் என்று அறிகிறோம். இதனை நீதிவெண்பா என்ற நூல் அழகான முறையில் விளக்கு கின்றது. வெப்பமானதாகிய சூரியனது கிரணத்தில் நின்றாலும் நிற்கலாம். அக் கிரணத்தைப் பெபற்று வெப்பமாக விளங்கும் மணலின்மேல் நிற்றல் முடியாது. அதே போன்று இறைவனுடைய அருளாற்ற

D சைவசித்தாந்தமும்
தங்கம்மா அப்பாக்குட்டி
லிலும் பார்க்க அவ்வருளைப் பெற்று நிற்கும் அடியவர்களின் அருளாற்றல் வியத் தற்குரியதாகும்.
"ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேச ரெதிர் நிற்பதரிதாமே - தேசுவளர் செங்கதிர் முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம் தங்கு மணல் நிற்பத ரிதே தான்.”
இவ்வாறு நீதிவெண்பா என்ற நூல் அழகாக விளக்குகின்றது.
சேக்கிழார் நற்பணி
தோத்திரங்களுக்கும் சாத்திரங்களு க்கும் இடைப்பட்ட ஒரு காலத்தி லேயே சேக் கிழார் சுவாமிகள் வாழ்ந்தார். மெய்கண்ட சாத்திரங்களுள், முடிமணி போன்று விளங்கும் சிவஞான போத த்தையருளிய மெய்கண்ட தேவநாயனா ருக்கு எழுபது வருடம் முந்தி வாழ்ந்தவர் இவர். காலத்தை நோக்கி இவர் ஆற்றிய இந்தச் சேவையினால் சைவத்தமிழுல கம் மூன்று பெரும் பயன்களை அடைந் ததெனலாம். முதலாவது, ஆட்சி பீடத்திலே சைவத்தை ஏற்றிவைத்த பெருமையாகும். இரண்டாவது, நாயன்மார்கள் வரலாற்றை உலகுக் குக் காட்டிய சிறப்பாகும். மூன்றாவது, சைவசித்தாந்தத்துக்கு விளக்கங் கொடுத்த பெருமையாகும். இதனாலேயே சைவசித்தாந்த சாத்திர ங்களில் எட்டு நூல்களை ஆக்கிய உமாபதி சிவாச்சாரியர்ாஅவர்கள் சேக்கிழாழக்கு

Page 59
ஒரு தனிப்புராணம் இயற்றினார். மாதவச் சிவஞான சுவாமிகளும் எங்கள் பாக்கியப் பயன் சேக் கிழார் என்று
போற்றினார் இன்னும்,
“துTக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரிவாக்கினாற் சொல்ல வல்ல մlՄIT6ծT."
என்று குறித்தருளினார்.
நூலின் தோற்றம்
அரசன் அநபாயசோழன் திருமுறை முதலிய நூல்களில் ஈடுபட்டுத்திருவருளைப் பெற்று உய்யாமற் சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களிலே ஈடுபாடு கொண்டு சுவைப்பதைச் சேக்கிழார் உணர்ந்தார். இந்த ஈடுபாட்டை மாற்றவேண்டுமென்று குருதி அரசனுக்குச் சிவகதைகள் பற்றிச் சுருக்கமாக விளக்கினார். இதனால் திருத்தொண்டர்களது வரலாற்றை விரிவாகப் பாடித்தரும்படி அமைச்சராகிய இவரை அரசனே வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு திருத்தொண்டர்களது வரலாற்றை எடுத்துப் பாடுவதில் பெருமகிழ்ச்சிய்டைந்தார். ஆனால் பாடுவதற்குத் தனக்குத் தகுதியுண்டா என்று எண்ணி ஏங்கி இறைவனை நினைந்தார்.
“ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி”
என்னும் சைவசித்தாந்த விளக்கப்படி இறைவனே தனக்கு உள்நின்று உணர்த்த வேண்டுமென்று நினைத்தார். தில்லையை நோக்கிச் சென்றார். அதன் எல்லையிலே வீழ்ந்து வணங்கினார். திருக்கோயிலில் புகுந்து வலம் வந்து கனகசபையிலே கூத்தப் பெருமானைக் கண்டு வணங்கி “எம்பெரு மானே! உன்னடியார்களது பெரும்புகழைப் பாட அடியேனுக்கு அடியெடுத்துக் கொடுத்தருளல் வேண்டும்” என்று வணங்கினார்.

உலகெலாம்
தில் லையம் பலவன் திருவருளால் அப்பொழுது “உலகெலாம்” என்ற பேரோலி அசரீரியாக எழுந்தது. இதனை அறிந்து கொண்ட தில் லைவாழந்தணர்கள், சேக்கிழாரது திருமாலையைத்திருநீற்றுடன் அவருக்கு அளித்துப் பரிவட்டங்கட்டி வாழ்த்துக்கூறி நின்றார்கள். அவையனை த்தையும் ஏற்றுக்கொண்டு ஆயிரங்கால் மண்டபத்தையடைந்து"உலகெலாம்” என்ற அச்சொல்லையே முதலாகக் கொண்டு புராணத்தைப் பாடத் தொடங்கினார்.
“உலகெலாமுணர்ந்தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலிவேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.”
கூத்தப் பெருமான் எடுத்துக் கொடுத்த இந்த உலகெலாம் என்ற தொடரை முதலாகக் கொண்டு பாடிய சேக்கிழார் இறைவனது திருவடியையே அதன் பொருளாகக் கொண்டு முதற் பாடலை பாடிமுடித்தார்.
முதற்பாடல்தரும் சித்தாந்த விளக்கம்
உலகு என்பது உயிர்களைக் குறித்து நிற்கிறது இறைவன் உயிர்களின் சொல்லையும் நினைவையும் கடந்தவன். அதனாலேயே கடவுள் எனப்படுகிறான். பாசஞானங்களுக்கும் பசு ஞானங்களுக்கும் அப்பாற்பட்டவனாகிய இறைவனை அரியவனாகக் காட்டிய அடிகள் உணர்தல் என்பதால் மனத்தையும், ஒதுதல் என்பதால் வாக்கையும் காட்டி வாக்குமனாதீதன் என்பதை விளக்குகிறார். இது இறைவனுடைய சொரூபநிலையாகும். ஆனால் உணர் வதற்கு அரியவனாயினும் எளியவனாக உருவந்தாங்கி நிற்றலால் இரண்டா வதடியில் "நிலவுலாவிய நீர்மலி

Page 60
வேணியன்” என்கிறார். எனவே இது இறைவனது தடத்த நிலையைக் கூறுகிறது. அத்தடத்த நிலையில் அனந்தசக்தி எனப்படும் அளவில்லாத ஆற்றல்களை உடையவனாய் உயிர்களைப் பஞ்சகி ருத்தியம் செய்து உய்விப்பதை விளக்கி " அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்” என மூன்றாமடியில் அருளுகிறார். மலர்சிலம் படி என்பதால் எல்லாப் பொருள்களும் அவனது திருவடியினின்றே தோன்றுவதுஉணர்த்தப் படுகின்றது. பக்குவமுள்ள அன்பர்களின் உள்ளத்திலே மலர்கின்ற சிலம் படி இதுவாகும். நினைத்தல், வாழ்த்தல், வணங்கல் ஆகிய முக்கரண வழிபாட்டையும் சிலம்படிக்குக் கூறித் தொடங்கு கிறார். கூத்தப் பெருமான் எடுத்துக் கொடுக்க ‘உலகெலாம்” என்பதை முதலாகக் கொண்டு தமது வியாபாரத்தை நன்கு செய்தார் என்று மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிச் சேக்கிழாரைச் சிறப்பிக்கிறார். இவ்வாக்கினை முதல்,நடு, முடிவு என்னும் மூன்றிடத்திலுஞ் சிறப்பாக அமைத்து முடித்திருக்கிறார். திருஞான சம்பந்தர் இறைவன் அளித்த முத்துச்சி விகையை ஏற்று, அதனை வலம் வந்து வணங்கி, அஞ்செழுத்து ஒதி, அதன் மீது அமர்ந்தார் என்பதை எடுத்துக்காட்டிய இடத்தில்,
“சோதி முகத்தின் சிவிகை ஆழ் வந்துபார் மீது தாழ்ந்து வெண்ணிற் றொளிபோற்றி நின்று)ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்து) ஒதி ஏறினார்
உய்ய உலகெலாம்.”
எனப் பாடியுள்ளார். நாலாயிரத்து இருநூற்று எண்பத்தொரு பாடல்களில் ஏறக்குறையப் பாதி அளவில் மேற்காட்டிய பாடல் அமைந்து நடுவில் 'உலகெலாம்.' என்பது விளங்குகிறது. திருத்தொண்டத் தொகையை அருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் திருவாரூர்ப் பெருமானே அடியெடுத்துக் கொடுத்தார். வகை நூலாகிய திருத்தொண்டர் திருவந்

56
தாதிக்கும் திருநாரையூர்ப் பிள்ளையார் அருள் அளித்தார். விரிபாடிய சேக்கிழாரு க்கும் அம்பலவாணனே அடியெடுத்துக் கொடுத்தார். சுத்தாத்துவித சைவசித்தாந்தப் புதையல்,
சைவத்தின் குலக் கவிஞராகிய சேக்கிழார் சித்தாந்த உண்மைகளைத் தெளிவுபட இந்நூலில் விளக்கியுள்ளார். இவர் காலத்துக்குமுன் சமயாசாரியார் களின் பாடல்களும் திருமந்திரமும் ஞானாமிர்தம் போன்ற சித்தாந்த சாத்திரங்களும் தோன்றியிருந்தபோதிலும் சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மை களையும் சாதனம், பயன் முதலிய இயல்பு களையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாத விளக்கங்களையும், குரு, லிங்க, சங்கம வழிபாட்டு விளக்கங்களையும், மிகச் சிறப்பாக விளக்கிய பெருமை சேக்கிழார் சுவாமிகளுக்கே உண்டு. உயிரின் இயல்புகளையும் பசு, பாச ஞானங்களின் இயல்புகளையும் பதி ஞானத்தின் உயர்வையும், அணைந் தோர் தன்மையையும், அடியார்களின் பெருமை யையும், அவ்ர்கள் இறைவனு டன் இரண்டறக் கலந்ததன்மையையுந்தெளிவுற விளக்கியுள்ளார்.
இருவகை ஞானம்
திருத்தோணிபுரத்தில் ஞானப்பாலூ ட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் தவமுதல்வர் சம்பந்தர் ஞானம் பெற்ற தன்மையை விளக்குமிடத்திற் பாடிய,
“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனையறமாற்றும் பாங் கினிலோங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுண ர்ந்தா ரந்நிலையில்”
என்ற பாட்டில் விளக்கிய ஞான வாய்மையே சிவஞானசித்தியாரில் அப்படியே அடியொற்றிக்கூறப்படுகிற்து.

Page 61
"கேட்டலுடன் சிந்தித்தல், தெளிதல், நிட்டை கிளத்த லென வீரிரண்டாங் கிளக்கின் ஞானம்”
என்கிறார் அருணந்திசிவம். கேட்டல், சிந்தித்தல் இரண்டும் நூல் பற்றிய தாகையால் அபரஞானம் என்றும், தெளிதல், நிற்றல் இரண்டும் நூல் பற்றாததாகையால் பரஞானம் என்றுங் கூறப்படும். உவமை யில்லாக் கலை ஞானம், உணர்வரிய மெய்ஞானம் என்றும் பிரித்துச் சேக்கிழார் காட்டி யபடியே அருணந்திசிவமும் பிரித்து விளக்கியுள்ளார்.
திருப்பாசுர விளக்கம்
திருஞானசம்பந்தர் சமணருடன் புனல்வாதஞ் செய்யச் சித்தங்கொண்டு சைவத்தின் பெருமையை உலகிற்குக் காட்டிஅருளிய பதிகம் திருப்பா சுரமாகும். இது ஞானபாத முடிவாய்ச் சிவஞான போதத்தின் விளக்கமாய் அமைந்துள்ளது. முதல் மூன்று பாட்டுக்களும் பொதுவகை யிலும், பின்பாட்டுக்கள் சிறப்பு வகையிலும் அமைந்துள்ளன. ‘வாழ்க அந்தணர் என்ற பாட்டின் விளக்கத்தில் சங் காரக் கடவுளாகிய சங்கரனே முதல்வன் என விளக்கி வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் யாவும் அவனுக்கே உரிய தெனக் காட்டுகிறார்.
"அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்கவென்று இந்தமெய்ம் மொழிப் பயன் உலக மின்புறச் சந்தவேள் விகள் (ypg5s) சங்க ரர்க்குமுன்வந்தவர்ச்சனை வழிபாடு மென்னுவாம்”
எனக்கூறி அடுத்தபாட்டில் ‘உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம், பெரிய நல்லடையா ளங்கள் பேசினர் என விளக்கி இறைவன் உண்மையன்பர்க்கே காட்சி கொடுப்பான் என்பதையுங் கூறி,

பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்த பெருமையையும் விளக்கியுள்ளார். சிவஞானபோதம் 8ம் சூத்திரப் பொருளைச் சேக் கிழார் மெய்கண்டாருக்கு முன்னமே கூறிப் போந்தார்.
"தம்மையே சிந்தியா வெனுந்தன்மை தான் மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென இம்மையே நினை வார்தம இருவினைப் பொய்ம்மை வல்லிருள் போக்குவா ரென்றதாம்”
இவ்வாறு பல சைவசித்தாந்தக் கருத்துக்களை எடுத்து விளக்கும் திட்பத் தைத் திருப்பாசுர விளக்கத்திற் காட்டியுள்ளார்.
மும்மலங்கள் பற்றிய விளக்கம்
சாத்திரங்கள் மும்மலங்கள் பற்றி விளக்கி நிற்கின்றவெனினும் அவற்றுக் கெல்லாம் முன்னோடியாக நின்று விளக்கந்தந்தவர் சேக்கிழார். நாவுக்கர சரைக் கல்லோடு கட்டி கடலிலே போடு கிறார்கள்." கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச் சிவாயவே” என்று பதிகம் பாடுகிறார். கல் மிதக்கிறது. தெவப்பம் போல் அதன்மேல் உட்கார்ந்து வருகிறார் நாவரசர். இநத இடத்திற் சேக்கிழார் அதிசயத்தோடு உணர்நத ஒரு உணர்வைத் தருகிறார். இரு வினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின், வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய்யஞ்செழுத்து' என்று கூறி வினையாகிய கர்மம் பாசமாகிய மாயை, மலம் எனப்பட்ட ஆணவம் மூன்றையும் இணைத்து பிறவியென்னும் கடலில் தடுமாறும் மக்களைக் கரையேற்றும் சக்தி திருவைந்தெழுத்துக்கு உண்டு என்பதை விளக்கி அத்தகைய ஐந்தெழுத்து திருநாவுக் கரசரை ஒரு கல்லோடு பிணிக்கப்பட்ட போது கரையேற்றாமல்

Page 62
இருக்கமுடியுமா என்கிறார். கண்ணப்ப நாயனார் புராணத்தில் இன்னும் சிறப்பாக மும்மல விளக்கத்தைக் காண்கிறோம்.
“முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் இன்புறுவேதத்திரும்பு பொன்னானாற் போல் யாக்கை தன்பரிசும் வினை யிரண்டும் சாருமல மூன்றுமற அன்புபிழம் பாய்த்திரிவர் அவர்கருத்தின் இளவினரோ”
திருக்காளத்தி நாதரைத் தரிசித்த மாத்திரத்திலே திண்ணனாரி டத்திற் காணப்பட்ட மாற்றங்களைக் கூறுகிறார். யாக்கை தன்பரிசு என்பது மாயையாகும். மும்மலக்கழிவு குறித்துச் சிவச்சார்பு பற்றி நின்றதைக் காட்டுகிறார். அன்புப்பிழம்பாகிய அடியவரின் மலநாசத்தினால் ஏற்பட்ட மாற்றம், இரசவாதத்தால் இரும் பு பொன்னானாற் போன்ற பெருமாற்றமாகும். பேணுதத்துவங்க ளென்னும் பெருகுசோ பனமேறி ஆணையாம் சிவத்தைச் சாரச் சென்றவர் அவர். இங்கே தத்துவங்களின் படிமுறையினையும் தசகாரியம் எனப்படும் சோபன முறையையுஞ் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார்.
கூன் பாண்டியன வெப்புநோய் காரணமாக அல்லலுற்ற நேரத்தில் ஞானசம்பந்தர் பாண்டியனுக்குத் திருநீற்றினைப் பூசிப் பதிகம் பாடி வெப்பை நீக்கிய இடத்திலும் இக்குறிப்பு வருகிறது.
“தென்னவன் மாறன் தானும் சிவபுரத்தலைவர் தீண்டிப் பொன்னவில் கொன்றை யார்தம் திருநீறு பூசப்பெற்று முன்னைவல் வினையும் நிங்கி முதல்வனை யறியுந்தன்மை துன்னி னான் வினைகள் ஒத்துத் துலையென நிற்றலாலே.”
ஞானசம்பந்தரால் நோக்கம் பெற்றவுடனேயும் அவர் நாமம் கேட்ட

வுடனேயும் முன்வினை நீங்கி இறைவனை அறியுந் தன்மையை அடைந்தான் பாண்டியன் எனக் காட்டுகிறார். இளையான் குடிமாறநாயனார் தமது வீட்டுக் கொல்லையில் உள்ள கீரை வகைகளைப் பிடுங்கிச் சிவனடி யாருக்கு த் திருவமு தூட்ட நின்ற சமயத்தில்,
"குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழி முதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க”
என்பதால் நாயனாருடைய பாசம், பழிபாவங்கள் அனைத்தையும் வேரோடு களைவதுபோல, அங்கிருந்த குறும் பயிரைக் களைந்தாரெனக் கூறப் பட்டுள்ளது.
உய்வானுளன்
சாக்கியநாயனார் புராணத்தில் மற்றொரு சைவசித்தாந்தக் கருத்தைக் காண் கிறோம். சாக்கியநாயனார் புத்தர்களது அறத்தின் வழியைச் சார்ந்து நல்ல ஞானமடைவதற்குப் பலவழிகளையும் ஆராய்ந்து, அச்சிமய முடிவுக ளெல்லாம் உண்மைப் பொருளை உணர்த்தாவன்றும் ஈற்றில் சிவநன்னெறியே மெய்ப்பொருளாவ தென்றும் உணர்ந்தார். சிவனை அடைவதே உய்யும் வகை என்றும் உணர்ந்து Olg, T600TLITs.
“செய்விளையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும, மெய் வகையா னான்காகும் விதித்த பொரு ளெனக் கொண்ட இவ்வியல் பு சைவநெறியல்லவற்றுக் கல்லையென உய்வகையாற் பொருள் சிவனென் றருளாலே உணர்ந்தறிந்தார்."
அதாவது செய்யும் வினை ஒன்று: செய்பவனாகிய கருத்தா ஒன்று; அதன் பயன் ஒன்று; அதனைக் கொடுத்து ஊட்டுபவனாகிய முதல்வன் ஒன்று என எண்ணப்படும் நான்குமே உண்மைக்

Page 63
கூறுபாட்டால் துணியப்பட்ட பொருள் எனக் கொண்டு இந்தச் சிறப்பு சைவநெறிக்கே உண்டென்றும் ஏனைய வற்றுக்கு இல்லையென்றும் துணிந்து திருவருளால் உண்மைப் பொருள் சிவனெனத் தெளிந்தார் என்பதாம். உமாபதிசிவம், திருவருட் பயனில் இக் கருத்தின் விளக்கமாகவே,
“செய்வானும் செய்வினையும்
சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வானுளன்
என்று ணர்”
எனப் பாடினார்.
முடிவுரை
திருமுறைகளின் இறுதியாக விளங்கும் இப்பெரிய புராணமும், சிவஞான போதத்தின் இறுதிச் சூத்தி ரமும் பொருத்திக் காட்டும் உண்மைப் பொருள் யாதெனில் சிவனடியாரையும், சிவாலயங் களையும் சிவனெனவே கண்டு வழிபடுதல் வேண்டும் என்பதாகும்.
“செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழிஇ அன்பரொடு மரீஇமாலற நேயம்மலிந்தவர் வேடமும் ஆலயந் தானு மரனெனத் தொழுமே”
என்னும் 12 ஆம் சூத்திரப்பொருளுக்கு இலக்கியமே பெரிய புராணம் என்று கூறினால் அதில் மிகையொன்றுமில்லை. இறைவனுடைய சிவந்த தாமரைமலர்கள் போன்ற திருவடிகளை அடையவிடாது தடுத்து நிற்கும் மலத்தினின்றும் விடுபட்டுச் சிவனடியார்களோடு மருவி, மேலும் மயக்கம் நீங்குவதால் சிவனடியார்களின் திருவேடத்தையும், திருக்கோயிலையும் சிவபிரானே எனக் கண்டு தொழுது நிற்பர் என்பது சூத்திரப் பொருளாகும். இத்தகைய நிலையில் சீவன்முத்தர்களாக வாழ்ந்த வர்களே பெரிய புராணம் போற்றும் சிவனடியார்களாவர். இவர்களைப் பற்றி

எழுதப்பட்ட இந்நூலுக்குமாக்கதை' என்று பெயர் குறிக்கிறார் சேக்கிழார்.
“எடுக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்து டைத் தாழ்செவி நீள்முடிக் கட க்களிற்றைக் கருத்து ஸ்ரிருத்து வாம்.”
பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடப்பட்ட இச்சிவனடியார் சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கும். கேட்பவர் க்கும் பிறவிலிருந்து மீளக்கூடிய பெரும் பேறு கிடைக்கும் என்பதையே முதலடியில் ‘எடுக்கும் மாக் கதை’ என்பதால் விளக்குகிறார். எடுக்கும்' என்பது பிறவிக் கடலிலிருந்து தூக்கி எடுக்கும் என்னும் பொருள் விளக்கத்துக்குரியது. எடுக்கும் மாக்கதை’ என்று இதனைக் குறிப்பிடுவதால் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமல் உய்தியளிப்பது இந்நூல் என்று புலனாகிறது.
இத்திருவருட் காவியத்தில் எக்கருத்தை எடுத்துக் கொண்டாலும் சைவசித்தாந்த அடிப்படையிலே அவை கூறப்பட்டுள்ளன. "தோடுடைய செவி யன்’ என்று ஒங் காரத்தில் தொடங்கி 'உலகெலாம் என மகர ஒற்றில் முடிக்கிறார். இதனால் திருமுறைகள னைத்தும் ஓங்காரத்தின் விரிவாதல் விளங்கும். ஆண்டவன் பெருமையில் தொடங்கி அடியவர்கள் பெருமையில் முடிவதைத் திருமுறைகளின் தொகுப்பிற் காண்கிறோம். திருமுறைகளை எமது உயிராகப் பேணி இறைகளோடு இசைந்த இன்பமும், இன்கத்தோடு இசைந்த வாழ்வும் வாழ்ந்து
நற்பயனடை வோமாக.
“என்றும் இன்பம்பெருகும் இயல
’பினால் ஒன்று காதலித் துள்ளமும்
ஓங்கிட மன்றுளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலெகலாம்.”

Page 64
போர்த்துக்கீசர் அழி கோனே
புனிதக்ஷேத்திரமாயிருந்த திருக் கோணேஸ்வரம் தற்போது முற்ற வீதியாகவும், கடைவீதிகளுட்பட மக்கள் குடியிருப்பாகவும் விளங்கும் மூன்று மைல் சுற்றளவுள்ள திருக்கோணமலைப் பட்டினம் அமைந்துள்ள தரைப் பகுதியோடு தொடாபுபட்டுக் கடலினுள் நீண்டுகிடக்கும் மலைப்பகுதியாகும்.
போர்த்துக்கீசரும் டச்சுக்காரரும் முக்கோணவடிவமான للاوا تلا ذلك கோட்டைக்குள் ஆங்கிலேயர்கள் தமது ஆட்சிக் காலத்தில் கட்டிய கட்டிடங் களையும், இலங்கை சுதந்திர மடைந்தபின் கி.பி.1979ஆம் ஆண்டுக்குப்பின் பூரீலங்கா அரசுகள் அமைத்த கட்டிடங்களையும், அதேயாண்டில் இலங்கை இராணுவத் தரைப் படைப் பிரிவொன்று தமது வழிபாட்டுக்காகக் கட்டிப்பின்னர் பெரிதாக எழுப்பிய பெளத்த விகாரை, புத்தர்சிலை என்பவற்றையும் முற்றாக அகற்றிவிட்டால் நமது அகக் கண்ணுக்கும், புறக் கண்ணுக்கும் தோற்றமளிக்கும் மலைப்பகுதியே கோணேஸ்வரமாகும்.இந்த நிலப் பகுதியின் நீள, அகல உயரங்களையும் அங்கிருந்த கோயில்களையும் குறித்து
போர்த்துக்கல் மன்னனுக்கு கொன்ஸ்ரன்டைன் டீசா எழுதியனுப்பிய குறிப்புகளும் கோயில்களின்
வரைபடங்களும் லிஸ்பனிலுள்ள அஜபடா நூல் நிலையத்தில் இருக்கின்றன. இந்த நிலப்பரப்பையும், மலையின் உயர்வு தாழ்வுத் தரைத் தோற்றத்தையும் கற்பனைக் கண் கொண்டு பாருங்கள். திருக்கோணமலைப் பட்டணத்தோடு

ப்பதற்கு முன்னிருந்த ஸ்வரம்
பண்டிதர் இ.வடிவேல்
தொடர்புபட்ட தற்போதுள்ள முள்ளவெளிச் சமதரையை வடக்கேயும் தெற்கேயும் கடல் சூழ்ந்து நெருக்கிக் கொண்டருக்கின்றது. அந்தச் சமதரையில் வாழ்ந்த குடிமக்களைக் கடலலைகள் நெருக்குகின்றன என்பதை,
“கொடிதெனக் கதறும் குரைகடல்
சூழ்ந்து கொள்ளமுன் நித்திலம் சுமந்து குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை”
என்று திருஞானசம்பந்தர் திருக்கோணமலைத் தேவாரத் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இந்தச் சமதரையிலிருந்து முன்னேறி கோணேசர் மலையின் அடிவாரத்தை நெருங்கும்போது, மலையின் வடக்கேயும், தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்வதைக் காணலாம். இந்தப் பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு விரிந்த சமதரையாகக் காட்சியளிக்கின்றது. இந்தச் சமதரையின் தென்திசையில் பிடியன்ன நடையாளாகிய மாதுமையம் பாளின் பிரமாண்டமான கோவில் கட்டப் பட்டிருந்தது. 6). Πρ0) u J எழுந்த கோபுரத்தையுடைய இவ்வாலயத்து க்கு வடகிழக்கே பாவநாசத் தீர்த்தக்கேணி அமைந்திருந்தது. நீள் சதுர வடிவமான இந்தக் கேணி கருங்கற்களாலான அனேக படித்துறை களையுடையதாய்க் கடல் மட்டத்துக்குக் கீழ் ஆழமுடைய

Page 65
தாயிருந்தது. இதனால் இப்பாவநாசத் தீர்த்தம் எக்காலத்திலும் வற்றாத நீர் நிறைந்ததாயிருந்தது. மக்கள் நீராடுவதற்கு இதனைப் பயன்படுத்திய காரணத்தினால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாடுவதற்கும் ஆலயங்களி லுள்ள மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வதற்கும் தனியாகப் பாவநாசக் கிணறு அமைக்கப்பட்டிருந்தது. போர்த்துக்கீசரின் அக்கிரமங்களுக்குத்தப்பிய இந்தத் தீர்த்தக் கிணற்றில்தான் இப்போது மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்தோற் சவத்தில் தீர்த்தமாட எழுந்தருளுகின்றார். பாவநாசத் தீர்த்தக்கேணிக்கு வடக்குப் பக்கமாக தீர்த்த மண்டபம் அமைந்திருந்தது. சுவாமி தீர்த்த மாடியபின் இந்த மண்டபத்தில் தான் எழுந்தருளியிருப்ப்ார். ஆதலால் இதனை ஆஸ்தான மண்டபம் என்றும் கூறுவர்.
கோணமாமலையில் மாதுமை யம்பாளின் ஆலயம் அமைந்திருந்த இடம், விரிந்து பரந்த பெரிய சமநிலமாயிருந்த காரணத்தினால் இவ்வாலயத்தைச் சுற்றியே தேரோடும் வீதியும் அமைந்திருந்தது. ஆலய அமைப்பு விதிகளுக்கு ஏற்றவகையில் மணி மதில்களும் மண்டபங்களும், மடங்களும் இங்குதான் வசதியாக அமைந்திருந்தன. கோணேஸ்வரத்தைத் தரிசிக்க வரும் உள்நாட்டு, வெளிநாட்டு அடியார்களின் உபயோகத்துக்காகப் பாவநாசத் தீர்த்தத்தைச் சுற்றி ஐந்து கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இப்போது மூன்று கிணறுகள் தான் இருக்கின்றன.
போத்து க்கீசருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் இரண்டு கிணறுகளை மூடிவிட்டார்கள். தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள்
பாவநாசத்தில் தீர்த்தமாடிச் சமயாசார முறைப்படி ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதைக் காணலாம்.

தெட்சண கயிலாய சேஷத்திரத்தின் மகிமையும், இறைவனுடைய புகழுமே மக்களுடைய வாயிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கும். ஒருபுறம் புராண படனமும், மறுபுறம் மங்களவாத்தியங்களின் ஒலியும் வேதபாராயணம் , திருமுறைப் பாராயணம் என்பவற்றின் ஒலியும் எழுந்து இந்த இடம் எப்பொழுதும் தெய்வ சாந்நித்தியம் நிறைந்த புனித சூழலாகவே
காணப்படும்.
கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்துதான் தொடங்கும். மலையின் உச்சியிலிருந்த ஆலயத்திலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப் பெருமான் மாதுமை யம்பாளுடைய ஆலயத்தைச் சுற்றிவந்து, இரதத்தில் ஆரோகணம் செய்து மலையடிவாரத்தைத் தாண்டி இப்போது பட்டணமாக மாறியிருக்கும் குடியிருப்புப் பகுதியை வலமாகச் சுற்றிக் கந்தசுவாமி மலையடிவாரத்திலுள்ள LD 60) 60T ULl T வெளிக்குளம், வில்வபத்திரக் கோணேசர் கோவில் குளம் , (பிற்காலத்தில் தக்கியாக்குளம் இந்தக்குளம் தூர்க்கப்பட்டு அவ்விடத்தில் உள்ளுராட்சி திணைக்களக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது) சிவன் கோயிலுக் கருகில் அமைந்திருக்கும் செங்கற் பண்ணைக்குளம், வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் தாமரைக் குளம் என்பனவற்றை மருவியிருந்த வீதி வழியாகவந்து வடதிசைக் கடற்கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவார். மேற்கூறிய குளங்களின் சமீபமாக இப்போதிருப்பது போன்று ஆலயங்கள் இருக்கவில்லை. அந்தந்தக் குளங்களினருகே குடிமக்கள் தற்காலிகப் பந்தல் களையமைத்து சுவாமியை வரவேற்றுச் சமயாசார முறைப்படி வழிபாடு செய்தார்கள்.

Page 66
பிரமாண்டமான கோபுரத் தையுடைய மாதுமையம்பாளின் கோவில், கிழக்கு நோக்கிய வாயிலையுடைய தாயிருந்தது. கற்பக்கிரகத்தில் அம்பாளுடைய சிலா விக்கிரகமும், ஏனைய பரிவாரமூர்த்திகளின் ஆலயங்களும் ஆகம சாஸ்திர முறைப்படி அமைந்திருந்தன. தற்போது கச்சேரியும், ஏனைய அரசாங்கப் பணிமனைகளும் இருக்கின்ற இடத்தில் மாதுமை யம்பாளின் ஆலயம் இருந்தது. தெட்சண கயிலாய புராணத்தில் திருநகரச் சருக்கம் 59ஆம்60ஆம் பாடல்களில் கூறப்பட்டுள்ள மாதுமையம்பாளின் ஆலயம் இதுவாகும்.
மாதுமையம்பாளின் ஆலயத்துக்கும், பாவநாசத்தீர்த்தம் இருக்கும் இடத்திற்கும் மத்தியில் மலையில் ஒரு நெடும்பாதை ஏறிச் செல்கின்றது. அப்பாதை இப்போதும் இருக்கின்றது. அப்பாதை வழியே ஏறிச் செல்லும்போது மலையில் மற்றுமொரு சமதரை அமைந்திப்பதைக் காணலாம். தற்போதுள்ள காவல் துறையினரின் குடியிருப்பும் கிளிவ் கொட்டேச் சும், இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் 6of Lost 60T எதிர்ப்புப் பீரங்கி பொருத்தப்பட்டுள்ளதுமான நிலப்பகுதியே இந்தச் சமதரையாகும். மேலே கூறப்பட்ட கட்டிடங்களை யெல்லாம் அகற்றிவிட்டுக் கற்பனைக் கண்கொண்டு பார்க்கும் போது இந்தச் சமதரை தெளிவாகத் தெரியும். இந்த நிலத்தின் தெற்குப் பக்கத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் நிலத்தை அகழ்ந்து பிரம்மாண்டமான நீர்த்தொட்டியொன்றை நிலத்தினடியில் அமைத்திருக்கிறார்கள். இப்போதும் அது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நீர்த் தொட்டியை அமைப்பதற்காக நிலத்தை அகழ்ந்தபோது சுமார் ஐந்து அடி உயரமான பூரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமியும் என்பவர்களின் சிலாவிக்கிரகங்கள் கிடைக்கப் பெற்றன. இவை இரண்டும் ஊனப்பட்ட நிலையில் கோணேசர் கோவிலில் இருக்கின்றன.
குளக்கோட்டு மன்னன் கோணேஸ்வரத்தில் திருப்பணிகள்

செய்தபோது எழுப்பப்பட்ட ழரீ நாராயணமூர்த்தியின் கற்கோவில் இந்த இடத்தில் தான் இருந்தது. தெட்சணகயிலாய புராணம் திருநகரச் சருக்கம் 62ஆம் பாடலில் கூறப்பட்ட பூரீ நாராயணர் கோவில் இதுவாகும். கிழக்கு நோக்கிய இவ்வாலயம் பிரமாண்டமாய் உயர்ந்த கோபுரத்தை உடையதாயிருந்தது. கருவறையில் ழரீமகாலெட்சுமி சமேத நாராயண மூர்த்தியின் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிந்தது.ழரீ கோணேஸ்வர சேஷத்திரத்தின் தெய்வீக சாந்நித்தியத்தினால் பூரீ நாராயணரும் மகாலெட்சுமியும் அந்த இடத்திலேயே மண்ணில் மறைந்திருந்திருந்தார்கள். மண்ணைத்தின்று மகிழச்செய்யும் மாயவன் மண்ணில் மறைந்திருப்பதை அறியாமல் நிலத்தை அகழும்போது ஆயுதங்களால் தாக்குண்டு சிலாவிக்கிரகங்கள் சிதைந்தனவோ? அன்றி அக்கிரமக்காரப் போர்த்து க்கீச வெறியர்கள் தான் உடைத்து ப் புதைத்தார்களோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம் அந்த வெறியர்களுக்குப் பொன்னும் மணியும் கோட்டை கட்டுவதற்குக் கருங்கற்களுந் தான் முக்கியமாகத் தேவைப்பட்டன.
இவ்வாலயம் அமைந்திருந்த சமதரை, மாதுமையம்பாள் கோவில் அமைந்திருந்த சமதரையிலும் பார்க்கப் பரப்பளவில் சற்றும் குறைவானது. இந்தச் சமதரையின் கிழக்கே செங்குத்தான மலைப்பாறைச் சரிவும் வடக்கேயும்,தெற்கேயும் சற்று சரிந்த மலைச் சாரலும், மேற்கே முரட்டுப் பாறைத் தொடர்களை உடையதாகவும் இருந்தது. இந்தப் பாறைத்தொடரின் அந்தத்திலே தான் ழரீ லங்கா அரசாங்கத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென கி.பி. 1979 ஆம் ஆண்டில் ஒரு விகாரையைக் கட்டிப் புத்தர் சிலையையும் நிறுவிக் கோகர்ணவிகாரை இங்கே தானிருந்ததென்று பத்திரிகைகள் மூலம் பிரசாரம் செய்து வரலாற்றையும் இதிகாசத்தையும் திரிபுபடுத்தியிருக்கி றார்கள். இலங்கை அரசாங்கத்தின் புதை பொருளா ராய ச சரித துறை

Page 67
நிறுவனத்தின் தலைவராயிருந்த திரு பரணவித்தான அவர்கள் தமது ஆராய்ச்சியின் போது வேறெங்கோ ஓரிடத்தில் கண்டெடுக்கப்பட்டதங்க ஏட்டில் கோகர்ண விகாரை பற்றியிருந்த குறிப்புக்களை ஒரு ஆங்கிலத்தி னசரியில் է 167) வருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். அச் செய்தியை இலங்கை அரசாங்கம் இருட்டடிப்புச் செய்துவிட்டது. ஏன்? என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் . திரு. பரணவித்தான அவர்கள் உண்மையை வெளிப்படுத்தியதை அரசாங்கம் வரவேற்கவில்லை.
கோணேஸ்வரத்தின் தொன்மை பற்றி ஆய்வுசெய்யும் சிந்தனைக்குக் கிடைத்த தொன்மையான திருவுருவம் பூரீ லெட்சுமி நாராயணர் கி.பி.1624ஆம் ஆண்டு போர்த்து க்கீசரால் அழிக் கப்பட்ட திருக்கோணேஸ் வரத்திலிருந்து மூன்று ஆலயங்களில் ஒன்று பூரீ நாராயணர் கோவில். அவ்வாலயம் இருந்த இடத்தில் லெட்சுமி, நாராயணர் திருவுருவங்கள் சிதைந்த நிலையில் நிலத்தினடியில் புதைந்து கிடைந்து எடுக்கப்பட்டன. கோணேஸ்வர ஆலயபரிபாலனசபையின் தலைவராயிருந்த டாக்டர். சி. சித்திரவேலு அவர்கள் இந்தச் சிதைந்த திருவுருவங்களை சிற் பாசாரியரைக் கொண்டு சீராகப் பொருத்திப் புதிதாகத் திருப்பணி செய்யப்பட்ட கோணேசர் கோவிலில் வைப்பித்தார்.
காஞ்சிப்பெரியவாள் பூரீசங்கராச்சரிய சுவாமிகள் லோக சேஷ் மார்த்தமாகச் சிந்தித்து அருளிய கருத்தொன்றினை இவ்விடத்தில் கூறுதல் பொருத்தமாயிருக்கு மெனக் கருதுகிறேன். கர்நாடக மானிலத்தில் விஜயநகர சாம்ராச்சியத்தை நடாத்திய கிருஷ்ண தேவராயரால் அமைக்கப்பட்ட இருபத்தேழடி உயரமான நரசிங்கமூர்த்தியின் சிலையை கி.பி.1565ஆம் ஆண்டு பீஜப்பூர் சுல்த்தான் விஜயநகர்மீது படையெடுத்தபோது தீமூட்டிச் சிதைப் பித்தான். சிதைக் கப்பட்ட அச் சிலா

விக்கிரகத்தைப் பல்லாண்டு களுக்குப்பின் இந்திய அரசு புதைபொருளாராய்ச்சி நடத்தித் தேடியெடுத்துச் சிற்பாசாரியரைக் கொண்டு பொருத்திப்பாதுகாத்து வைத்தி ருக்கின்றது.
ஆக மநுால் கூற்றின் படி பெரும் வழிபாட்டிலிருந்த தெய்வ உருவங்கள், ஆலயங்கள் என்பன சிதைந்தால் அங்கு வாழுகின்ற மக்களுக்குப் பெரும் துன்பங்கள் ஏற்படுமென்று கூறப்படுகின்றது. அவ்வூர் மிகவும் பின் தங்கி மக்கள் துன்ப துயரங்களுக்கு ஆளாகி ஏழ்மை நிலையில் இருப்பதற்கு இதுவே காரணமென்று நம்புகிறார்கள். நம்பிக்கை வீண்போவ தில்லை. தொன்மைவாய்ந்த ஆலயங்கள். அங்கு வழிபடப்பட்டுவந்த திருவுருவங்கள் என்பன முழுமையாகத் திருப்பணி செய்யப்பட்டு சீரமைக்கப்படும்போது உலகம் முழுவதும் கூேஷிமமாயிருக்கு மென்பது சங்கராச்சாரிய சுவாமிகளுடைய கருணை உள்ளம்.
இதனைக் கருத்திற் கொண்டு கோணேஸ் வர 9ےb6Uللا )UDLb , திருவுருவங்களும் பேணப்படவேண்டும். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்துக்களும், எதிர்காலச் சந்ததியும் கோணேஸ்வரத்தின் தொன்மையையும், தெய்வீகச் சிறப்பையும் ஆழ்ந்து சிந்தித்து திரிகரண சுத்தியோடு தொண்டாற்ற முன்வரவேண்டும். மதவெறி கொண்ட வர்களின் செயற்பாட்டிற்கு இந்துக்கள் இடமளிக்க கூடாது. திருக்கோணேஸ்
வரத்தின் வரலாற்றை முன்னெடுத்துச்
53
சென்று குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்த கோணேஸ்வரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். “நின்றுணும் சமணும் இருந்துணும் தேரும் நெறியல் லாதன புறங் கூற” என்று திருக்கோணேஸ்வரத் திருப்பதிகத்தில் கூறப்பட்டுள்ள திருஞானசம்பந்தரின் திருவாக்கின் உட்பொருளை உணர்ந்து சைவ உலகம் செயல்படவேண்டும்.
பூரீ லெட்சுமி நாராயணமூர்த்தியின் ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப்

Page 68
பக்கமாக கோணேசமலையின் சாரலில் ஒர் பாதை செல்கின்றது. பாதையின் கிழக்குப் பக்கம் மலையின் உயர்ந்த சரிவு ம், மேற்குப்பக்கம் தாழ்ந்த சரிவும் உடையதாக இருந்தது. உச்சிமலையிலிருந்த கோணேசப் பெருமானின் பேராலய த்துக்குச் செல்ல இந்தப் பாதைதான் உபயோகிக் கப்பட்டு வந்தது இப்போதும் இப்பாதையே பயன்பட்டு வருகின்றது. கி.பி. 1963 ஆம் ஆண்டு கும் பாபிசேஷகம் செய்யப்பட்ட புதிய கோணேசர் கோயிலுக்குரிய மடம் இப் பாதையரு கிலேயே இருக்கின்றது. பாதைகள் இப்போதிப்பதைப்போன்றுதார் ஊற்றப்பட்ட கற்பாதைகளாயிருக்க வில்லை. மலையின் இயற்கை அமைவுக்கேற்ப வீதிகள் தாழ்ந்தும் உயர்ந்தும் சென்றதால் வேண்டிய இடங்களில் கருங்கற் படிகள் அமைக்கப் பட்டிருந்தன. இப்பாதை இராவணன் வெட்டை அடையும்போது இராவணன் வெட்டியதாலேற்பட்ட குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல நேர்ந்த குளக்கோட்டு மன்னன் அந்த ஆழமான பள்ளத்தை நிரப்பும் திருப் பணியும் செய்தானென்று தெட்சணகயிலாய புராணம் கூறுகின்றது.
“ வேந்தனும் மந்திரியும் போய் விமலர் மலை முறித்தசிலை வரும் படிக்கு வழிவேண்டிக் காய்ந்த அரக்கன் தலைநாள் உடைத்தவழிக் கடல டைத்து ப் போந்தபடி கட்டியதன் புற மேறித் தெரிசித்தான் ”
(திருநகரச் சருக்கம் 57)
அரக்கர்தங் குலத்திற் தோன்றி அமரர் தங் குலங்க ளெல்லாம் வெருக்கொளத் து யரஞ் செய்யும் விறன்மிகு மிராவணேசன் தருக்கொடு தலைநாள் வந்துதன்கைவாட்படையால் வெட்டும் பெருக் குறு கடல் வாய் தன்னைப் பேணிமுன் னடைத்தல்

செய்தான்”
என்று திரிகோணாசலபுராணம் திருப்பணிசெய் படலம் 25 ஆம் பாடலிலும் காணப்படுகின்றது. இந்த இராவணன் வெட்டைக் கடந்து மலையுச்சியை அடையும் போது அங்கு ஒரு சமதரையைக் காணலாம். இந்த இடத்தில்தான் மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமானு க் கு ஒப்புயர்வ்ற்ற பெருங்கோவில் கட்டப்பட்டி ருந்தது . இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப் பற்ற இரத்தின மணிகள் தூரத்திலே கடலிற் செல்லும் பிராணிகளுக்குத் தெளிவாகத் தெரியக் கூடியதாக உயர்ந்து விளங்கியிருந்தது . உத்தர கயிலாயத்திலே கயிலாய பதியும் உமாபிராட்டியாரும் வீற்றிருப்பது போலத் தெட்சணகயி லாயமாகிய திருக்கோ ணேஸ்வரத்திலே கோணேசப் பெருமானு ம் மாதுமையம் பாளும் அமர்ந்திருந்தார்கள். கருவறையிலே அருவருவத் திருமேனியாகிய சிவலிங்கத் திருமேனி (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது .
கோணேசர் மலையின் அடிவாரத்தில் ஆழ்கடலின் அடியில் ஆராய்ச்சி செய்ததிரு. மைக் வில்சன், சேர் ஆதர் சி. கிளாக் என்றும் ஆய்வாளர்கள் கடலிலிருந்து ஒரு லிங்கத்தை வெளிக்கொணர்ந்தார்கள். ஊனப்பட்ட அந்த லிங்கம் கோணேஸ் வரத்தில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த லிங்கம் போர்த்துக்கீசர் கோணேசர் கோயிலை அழிப்பதற்கு முன்னிருந்த கோணேஸ்வரத்தின் தொன்மைத்தோற்றம் இவ்வாறிருந்தது .
“நம்பிக்கை ஏற்படுவது கஷ்டமாக இருக்கலாம் நம்பிக்கையின் அவசியத்தி லிருந்து மட்டும் நாம் தப்பமுடியாது "
(தத்துவ கலாநிதி ராதா கிருஷ்ணன்)

Page 69
م2D அருள்மொழியரசி - திரு
உபசாரம் என்பதற்குப் பணிவிடை செய்வது என்பது பொருளாகும். மனிதர் களுக்கும் மன்னர்களுக்கும் இறைவனு க்கும் உபசாரம் அளிக்கப்படும். இறைவனுக்கு அளிக்கப்படும் உபசார த்தையே நூல்கள் சிறப்பாகப் பேசுகின்றன. இவை பஞ்சோபசாரம், சோடசோபசாரம் சதுஷ்டி உபசாரம் உன்று விரியும்.
ஐந்து வித உபசாரம் (பஞ்சோப சாரம்):
பிருதிவி சம்பந்தமான உபசாரங்கள் - சந்தனம் மலர், கிழங்கு,வேர், பழம், அன்னம் முதலியன.
அப்பு சம்பந்தமான உபசாரங்கள் - நீர், பால் தயிர், வஸ்திரம் முதலியன.
அக்கினி சம்பந்தமான உபசாரங்கள் - பொன், இரத்தினம், தீபம், கர்ப்பூர தீபம், ஆபரணம் முதலியன.
வாயு சம்பந்தமான உபசாரங்கள் தூபம், சாமரை, விசிறி முதலியன.
ஆகாச சம்பந்தமான உபசாரங்கள் வாத்தியம், தோத்திரம் முதலியன.
பதினாறு வகை உபசாரங்கள் (சோட (8g Tugntrud):
தேவி பூஜைக்குரியது:
ஆவாஹனம், ஆஸ்னம், பாத்தியம், அர்க் யம், ஆசமநீயம், ஸ்நானம், வஸ்திரதாரணம், சந்தன குங்கும தாரணம், அகூyததாரனம் , ஆபரண தாரணம் , புஷ்பதாரணம், தூபம், தீபம், நைவேத்தியம் நீராஞ்ஜனம், பிரதசுஷிண நமஸ்காரம்.

LIJFITJIb மதி வசந்தா வைத்தியநாதன்
(ஆபரணதாரணம், பிரதசுஷிண நமஸ்கர்ரம் ஆகியவற்றிற்குப் பதிலாக உபவீததாரணம். மந்திர புஷ் பம் என்பவற்றைச் சிலர் சமர்ப்பிப்பர்)
அறுபத்து நான்கு வகை உபசாரங்கள் :-
(சதுஷ்ஷஷ்டி உபசாரம்) இது தேவி பூஜைக்கே சிறப்பானது. தேவியை வரவேற்று அவளுக்கு உகந்த சிறந்த ஆசனத்தில் அமர்த்தியதும் செய்ய
ப்படும் உபசாரங்கள்.
பாத்தியம் - திருவடிகளைத் தூய்மையாக்க நீர்வார்ப்பது (இதனுள் கரங்களையும், முகத்தையும் தூய்மை யாக்க நீர் வார்ப்பதா ன அர்க்கியமும், ஆசமனியமும் அடங்கும்).
2. ஆபரண-அவரோபணம்- திருவா
பரணங்களைக் கழற்றி வைப்பது.
3. ஸ0கந்தி தைல அப்யங்கம்-மணமுள்ள எண்ணெய்க் காப்பு செய்து கொள்வது
4. மஜ்ஜநசாலாப் பிரவேசநம் -
குளியலறையினுள் நுழைவது.
5. மஜ்ஜநசாலாப் மணிபீட உபவே சனம்குளியலறையிலுள்ள இரத்தினபீடத்தில் அமர்வது.
6. திவ்யஸ்நாநீய உத்வர்த்தனம் - வாசனைப் பொடிகளைத் தேய்த்து க் கொள்வது.
7. உஷ்ண ஸ்நானம் - வென்னீரில்
ஸ்நானம் செய்வது.

Page 70
8. கநகலசச்யுத தீர்த்த அபிஷேகம்தங்கக் குடங்களிலுள்ள கங்கை நீர் முதலிய புண் ணியதீர்த்தங்களால் ஸ்நானம்.
9. தெளத வஸ்த்ர பரிமார்ஜனம்உலர்ந்த ஆடையால் துவட்டிக் கொள்வது.
10. அருணதுகூலபரிதானம்-சிவப்புப்
பட்டாடை அணிவது.
11. அருண குசோத்தரீயம் - சிவப்பு
மேலாடை தரிப்பது.
12. ஆலேப மண்டபப் பிரவேசம்வாச  ைன ப் பூச் சுக களு கி கான அறையினுட் செல்வது.
13. ஆலேப மண்டப மணிபீட உபவேசனம் - பூச்சுக்களுக்கான அறையில் உள்ள இரத்தினபீடத்தில் அமர்வது.
14. சந்தன-அகரு-குங்குமம் ருகமத கர்ப்பூர கஸ்தூரி- கோரோசனாதி திவ்யகந்த ஸர்வாங்கீன விவேலே பனம்- சந்தனம், அகில், குங்குமப்பூ, ஜவ்வாது, பச்சைக்கர்ப்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலிய நறுமணப் பொருட்களை உடலெங்கும் பூசிக்கொள்வது.
15. கேசபாரஸ்ய காலாகருதுTபம்கேசங்களில் அகிற்புகைகாட்டுவது.
16. மல் லிகா - மாலதி-ஜாதீ-சம் பக அசோக-சதபத்ர-பூக-குஹலி-புந்நாக கல்ஹாரமுக்யஸர்வர்து குஸ்பம்மாலா சமர்ப்பணம்-மல்லிகை,நித்யமல்லிகை, சண்பக ப்பூ, அசோகம், தாமரை, கமுகம்பூ, குவளை, புன்னை, ஆம்பல் முதலிய எல்லா ருதுக் களிலும்,
66

கிடைக்கக் கூடிய பூமாலைகளை வழ்ங்குவது.
17. பூஷண மண்டபப் பிரவேசம் - ஆபரணம் பூணும் அறையினுள் நுழைவது.
18. பூஷண மண்டப மணிபீட உபவேசனம்-அங்குள்ள இரத்தின பீடத்தில் அமர்வது (பின் வரும் அணிகளை அணிவிப்பது).
19. நவமணி மகுடம் - ஒன்பது
இரத்தினங்கள் பதித்த கிரீடம்.
20. சந்திர சகலம் -சந்திரனது
பிறைவடிவமான நெற்றியணி
21. ஸிமந்த ஸிந்துTரம்-நெற்றியில்
வகிட்டிற் சிந்துTரப் போட்டு
22. திலகரத்னம்-நெற்றியில் பொட்டு
23. காலாஞ்ஜனம்- கண்ணிற்கு மை
24, 6JT6) (பால)யுகளம்-காது LDL6)
அணிகள்.
25. மணிகுண்டல யுகளம்-இரு
இரத்தின குண்டலங்கள்
26. நாஸாபரணம்-மூக்குத்தி
27. அதரயாவகம்-உதட்டுச் சாயம்
28. பிரதம பூஷணம் - மங்கலநாண்
29. கநக சிந்தாகம்-தங்க அட்டிகை
30. பதகம்-பதக்கம்
31. மஹா பதகம்-பெரும் பதக்கம்

Page 71
32. முக்தாவளி-முத்துச்சரம்
33.ஏகாவளி-27 முத்துக்கள் கோர்த்த
ஒற்றை வடமுள்ள மாலை
34. சந்நவீரம்-பூணுால் போன்று இடது தோளினின்று வலது விலாப்புறம் வரையிலும், வலது தோளினின்று
இடது விலாப் புறம் வரையிலும்
தொங்கும் சங்கிலி,
35. கேயூர யுகள சதுஷ்டயம்-தோளின்
மீதும், புஜத்திலும் நான்கு
கரங்களுக்கான கேயூர ஜோடிகள்.
36. வளயாவளி-வளையல்கள்
37. ஊர்மிகாவளி-வளையல்கள்
38.காஞ்சீதாம -ஒட்டியாணம் 39. கடிஸ் பத்ரம்-அரைஞாண்
40. ஸெளபாக்யாபரணம்- அரசிலை
41. பாதகடகம்-காலிலனியும் காப்பு
42. ரத்ன நூபுரம்-இரத்தினப் பரல்கள்
கொண்ட சிலம்பு
43. பாதாங்குல்யகம்-கால்விரல் மோதிரம்
44. பாசம்-பாசாயுதம்(மேல்வலதுகையில்)
45. அங்குசம்-தொட்டி (மேல்இடது
கையில்)
46. புண்டரேகூy5) சாபம்-(கரும்புவில் கீழ் இடது கையில்)
47. புஷ்பபாணம்-மலரம்புகள் (கீழ் வலது
கையில்)
48. பூரீமன் மாணிக்ய பாதுகே-ஒளிவிடும் சிவப்பு இரத்தினம் பதித்த இரு

49.
50.
51.
52.
53.
54.
55.
57.
58.
59.
6O.
61,
62.
பாதுகைகள்.
ஸ்வஸமான வேஷா ஆஹண தேவதாபி ஆஹண மஹாசக்ராதி ரோஹணம்-தனக்கு ஒப்பான அணி முதலியவைகளை அணிந்த ஆபணர தேவதைகளுடன் மஹர சக் கிர பீடத்தில் அமர்தல்.
காமேச்வர பர்யங்க உபவேசநம்காமேசுவரரது மடியில் அமர்தல்.
அமிருத ஆஸவ சஷகம் - அமிருதமாகிய மது நிரம்பிய கிண்ணம்.
ஆசமநீயம்-வாய்அலம்ப நீர் வார்த்தல்
கர்ப்பூரவீடிகா-ஏலரிசி, கிராம்பு, பச்சைக் கர்ப்பூரம் , கஸ்துTரி, குங்குமப்பூ. சாதிக்காய், ஜாதிபத்திரி, பாக்கு, வால் மிளகு, சுக்கு, சுண்ணாம்பு, கந்தம், காம்பு ஆகியன
சேர்ந்த தாம்பூலம்
அநந்த உல்லாஸ் விலாஸ்-ஆனந்தக் களிப்பைக் காட்டும் சிரிப்பு
மங்களாரார்த்திகம் - மங்கள ஆரத்தி
சத்ரம்-குடை
சாமரம்-கவரி
தர்ப்பணம்-கண்ணாடி
தாளவ்ருந்தம்-விசிறி
கந்தம்-சந்தனம்
புஷ்பம்-மலர்
தூபம்-நறும்புகை

Page 72
63. தீபம்-விளக்கு 64. நைவேத்தியம்-நைவேத்தியம்
இவைகளிற் சந்தனம் புஷ் பம், தூபம்,தீபம், நைவேத்தியம் என்ற ஐந்து உபசாரங்களை அப்படியே செய்து விட்டு மற்றவற்றைப் பாவனையால் சமர்ப்பணம் செய்யலாம். பூரீசங்கரது சதுஷ் ஷஷ்டி உபசார பூஜா தோத்திரம் இந்த வரிசையில் அழகாகப் பணிவிடை புரிவதைத்
தொகுத்துத் தருகிறது. பொருள் உணர்ந்து
இசைத்தவாறே இவைகளைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும். சிவபூஜைக்குரியது சோடசோப சாரம்:
ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், சன்னி ரோதனம், அவகுண்டனம் , தேனுமுத்திரை, பாத்தியம், ஆமன்யம், அருக்கியம், புஷ் பதானம் துTபம், தீபம்,நைவேத்தியம் பானியம், ஜபசமர்ப்பணம், ஆராத்திருகம் என்பன சோடாசோப சாரங்கள்
ஆவாஹனம்:
பூசையின் பொருட்டு சிவபெருமானை
இலிங்கம் முதலியவற்றில் வரவழைத்து
அபிமுகமாகச் செய்யும் பாவனையாகும்.
தாபனம்:- 'கருணைக் கடலே! அடியேனுக்கு அருளும் பொருட்டு இச் சிவலிங்கத்தில் எழுந்தருளியிருக்க வேண்டும்’ என்று அன்புடன் செய்யும்
UT6)6O)6OT.
சந்நிதானம் :- ஆன்மாவினறிவு சிவ பிரானது பரிபூர்ண குணத்திலும் சிவபிரானது பரிபூர்ணத் தன்மை ஆன்மாவினறிவிலும் ஒன்றையொன்று பிரியாதபடி ஆண்டானும், அடிமையுமாக நிற்றல்.
சந்நிரோதனம்:- பகவானே எப்பொழுதும் என்னிடத்தில் அணுக்கிரகம் வைத்திருக்க வேண்டும் என்னும் மனோபாவனையாகும்.

அவகுண்டனம்:-
எண்ணிறந்த கரணங்களையுடை யவராகவும், சின் மயராகவும் எங்கும் நிறைந்திருப்பவராகவும் இருக்கும் பரமசிவனை பக்தர் அல்லாதவர்களுக்கு அறிவிக்காமல் மறைத்தல்.
தேனுமுத்திரை:-
காமதேனுவின் அமிர்தத்தினால் அனைத்தையும் தூய்மையாக்கல்.
பாத்யம், ஆசமனியம், அர்க்யம்:
இவைகள் ஆன்மசுத்தியின் பொரு ட்டுச் செய்தலாகும்.
புஷ்பதானம்:-
மணமுள்ள மலர்களைச் சிவ பிரானது திருமுடியிற் சார்த்தல். சுத்த சைதன்னிய த்தின் பொருட்டாம்.
சாத்வீக குணமுள்ள வெண்ணிற மலர்களால் சாத்துவிக காலமாகிய உஷத்காலம், சாயரசைஷ், அர்த்தயாமம், என்னும் காலங்களில் அர்ச்சித்தவர்கள். முக்தியை அடைவர்.
இராசத குணமுள்ள செந்நிற மலர் களால் மத்தியானத்தில் பூசித்தவர்கள் போகத்தை அடைவார்கள்.
இராசத தாமத பத்திரங்களாகிய வில்வம் முதலியவைகளால் அர்ச்சித்த வர்கள் போகமோகூ, மடைவார்கள்.
மேலும் இல்லாத பொருட்களை இணைப்புக் கருதி இருப்பதாகக் கூறலை ‘உபசாரம் உபசார வழக்கு என்பர்.
மந்திரம், பதம், வன்னம், புவனம். தத்துவம், கலை என்னும் அத்துவாக்கள் ஆறும் மாயா காரியங்கள். இவை இறைவனது வடிவமாக ஆகமங்கள் கூறுவது உபசாரம் . இதனைக் கந்தர் கலிவெண் பாவில் "மந்திரமே” எனத் தொடங்கும் பாடலிலே காணலாம்.

Page 73
இலங்கையி
இலங்கையில் இந்து சமயம் மிக நீண்ட வரலாற்றையுடையது. உலகில் இந்து மதம் நிலவும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனியம்சங்கள் இங்கு காணப்படுகின்றன.
திருநீற்றின் மகிமையைக் கூற வந்த திரு ஞானசம்பந்த சுவாமிகள் இலங்கை வேந்தனாகக் கருதப்பட்ட “இராவணன் மேலது நீறு" எனப் பாடியதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இதிகாச காலத்திலேயே நிலவிய சிவவழிபாட்டு
மகிமையைச் சுட்டிக்காட்டுகின்றார்.
வரலாறு, அகழ்வாராய்ச்சி, ஆலயங்கள், விழாக்கள், இலக்கியம், கல்வி இன்னும் என்ன என்ன துறைகளை எடுத்து ஆராய்ந்தாலும், மிகப்பழைய காலத்திலே சிங்கள மக்களே விஷ்ணுவை இலங்கையின் காத்தற் கடவுளாகக் கொண்டு விஷ்ணு வுக்குத் தென்னிலங்கையின் கோடியாகிய தேவந்துறையிலே அற்புதமான ஆலயத்தை அமைத்தது தொட்டு, கல்வித்துறையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துப் பண்பாட்டுக்கென அமைக்கப்பட்ட பீடம் வரை இலங்கையிலே இந்துசமயம் உலகில் வேறெங்கும் காணாத பல தனியம் சங்களைக் கொண்டுள்ளது என்பது புலனாகும்.
நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களைக் கொண்ட இந்திய நாட்டிலே கூட, ஒரு பல்கலைக் கழ கத்திலாவது இந்துப் பண்பாடு என்ற பெயரில் பீடமெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. காசிப் பல்கலைக்கழகத்திலே மட்டும் இதுவரை இருந்த சைவ சித்தாந்த

ல் இந்து சமயம்
கி. லக்ஷமண ஐயர்
பீடத்தைக் கூட தத்துவதுறையின் ஓர் அங்கமாக மாற்றிவிட்டார்கள்.
இந்து சமயம் என்னும் தலைப்பில் இக்கட்டுரையைத் தொடங்கும்போது சென்னையில் நடைபெற்ற இந்துமத மாநாட்டிலே வரவேற்புரை நிகழ்த்திய பேராசிரியர் டி. எம். பி. மகாதேவன் வெளியிட்ட கருத்தொன்றினை இங்கு குறிப்பிடுவதும் பொருத்தமாகும். “ஏனைய நாடுகளில் வாழும் எங்கள் சகோதரர்கள் எங்கள் பழம் பாரம் பரியத்திலே வைத்திருக்குமளவு நம்பிக்கையை இந்திய நாட்டிலே வாழும் நாம் வைத்திருக்கிறோமா என்பதை யிட்டு ஐயப்பட வேண்டி யிருக்கிறது." இதுவே பேராசிரியர் வெளியிட்ட கருத்து. இவ்வாறு பேராசிரியர் கூறியதன் மூலம் . இந்து மதத்தின் தாயகமாகக் கருதப்படும் இந்தியாவிலும் பார்க்க ஏனைய நாடுகளிலே இந்து மதத்தின்பிடிப்பு மிகவும் இறுக்கமாகவுள்ளது என்ற ஒரு தொனியை வெளியிட்டு ஏனைய நாடுகளைப் பாராட் டி வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்றார். பேராசிரியர் வெளியிட்ட கருத்து இலங்கையர் களாகிய எமக்கு மகிழ்ச்சி தருவது மட்டுமன்றிப் ப்ெருமையையும் தருகிறது.
கல்வித்துறையில் தனிச்சிறப்பு:
கல்வித்துறையில் இலங்கைக்கேயுரிய தனிச்சிறப்பையும் குறிப்பிடலாம். உலகம் முழுவதிலும் இலங்கையில் மட்டுமே, சமய பாடம் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால், இந்து மாணவர்

Page 74
அனைவரும் இந்து சமயத்தைக் கட்டாயமாகக் கற்றுகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமயத்துக்குப் பெயர் பெற்ற இந்திய தேசத்தில் கூட அது மதச்சார்பற்ற நாடு என்ற காரணத்தால் இத்தகைய வாய்ப்புக் கிடையாது.
இலங்கைக்குச் சிவபூமி என்ற பெயர்
ஈஸ்வரங்கள் என்ற பெயரில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொட்டே நிலவி வந்தவை என்ற பெருமைக்குரிய சிவஸ்தலங்களாக ஐந்தைக் குறிப்பிடுவது வழக்கம் இராமேஸ்வரம்,திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் என்பனவே இந்த ஐந்து சிவஸ்தலங்களுமாகும். இராமேஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கும் இலங்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பொன்றே, இலங்கையில் இந்து சமயத்தின் பழமைக்கும் பெருமைக்கும் போதிய எடுத்துக் காட்டாகும். இவற்றுள் முன்னேஸ்வரமே ஏனைய எல்லாவற்றை யும்விட மிகப்பழையது என்பது அதனுடைய பெயரிலிருந்தே புலப்படுகின்றது என்பது அறிஞர் சிலருடைய கருத்து.
இந்த நான்கு புராதன சிவஸ் தலங்களுள் நகுலேஸ்வரம் 6) L இலங்கையிலும், திருக்கேதீஸ்வர மும், முன்னேஸ்வரமும், மேற்கிலங்கை யிலும், கோணேஸ்வரம் கிழக்கிலங்கையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்த க்கது.
இவை தவிர, வடமத்தியில் தான்தோன்றீஸ்வரமும் ,தென்கோடியில் சந்திரசேகரம் என்ற பெயரில் ஒரு சிவஸ் தலமும் குறிப்பிடத்தக்கவை.
தேவந்துறையிலே சந்திரசேகரம் என்ற சிவாலயத்தைக் கட்டுவித்தவன் விஜயன் எனவும் போர்த்துக்கேயரால் அவ்வாலயம் அழிக்கப்பட்ட தெனவும் குறிப்பிடப்ப டுகின்றது.

இவ்வாறு மிகப் பழங்காலத்திலேயே எல்லாத்திசைகளிலும் முக்கியமான சிவஸ்தலங்கள் இருந்த காரணத்தாற் போலும் திருமந்திரத்தை இயற்றிய திருமூலர் தமது திருமந்திரத்திலே நமது இலங்கையைச் “சிவபூமி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இந்துசமயம்:
இதுவரை உதாரணத்துக்காக இரண் டொரு தனிச் சிறப்புக்களைக் குறிப்பிட்டோம். இனிமேலே நாம் குறிப்பிட்ட ஒவ்வோரு துறையை யொட்டியும் சிற்சில கருத்துகளைத் தெரிவிப்போம்.
வரலாற்றையொட்டி இலங்கையில் இந்துசமய வரலாற்றை இதிகாச காலம், ஆதிக்குடிகள் காலம், விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையுள்ள சிங்கள இந்து அரசர்கள் காலம், பெளத்தம், வந்ததன்பின் ஏற்பட்ட சிங்கள பெளத்த அரசர்கள் காலம், சோழ பாண்டிய அரசர்கள் காலம், போத்துக்கேய ஒல்லாந்தர் காலம் , யாழ்ப்பாண அரசர் காலம், பிரித்தானியர் காலம், தற்காலம் எனப்பலவகையாகக் பிரிக்கலாம்.
எவ்வாறாயினும் மக்கள் இந்த நாட்டில் வாழத் தொடங்கிய காலந் தொட்டு பெளத்தம் இந்த நாட்டுக்கு வந்த நாள்வரை இந்த நாடு முழுவதும் வழங்கி வந்தது இந்துமதமே எனக் கொள்வது தவறாகாது.
இந் நாட்டு ஆதிக் குடிகளாகக் கருதப்படும் வேடர்கள் கூட மலைத் தெய்வத்தையும் கடல் தெய்வத்தையும் வழிபட்டு வந்தனர் என ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளனர்.முருகனும், திருமாலுமே இங்கு குறிப்பிடப்படும் மலைத் தெய்வமும் கடற் றெய வமும் எனக் கொள்ள இடமுண்டு. பெளத்தம் இலங்கைக்கு வரும் வரை இலங்கையை ஆண்ட

Page 75
அரசர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றியவர்கள் என்பது தெளிவு. அவர்களுட் பலர் பெரும் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1ஆம் பராக்கிரமபாகு 13 இந்து ஆலயங்களைக் கட்டுவித்தான் எனவும், பழுதடைந்த 79 ஆலயங்களைத் திருத்திப் புதுப்பித்தான் எனவும் கூறப்பட்டுள்ளது. 1ஆம் ராஜசிங்கனே கதிர்காமமுருகன் ஆலயத்தைக் கட்டுவித்தான் எனவும், அவன் தன் ஆட்சிக்காலத்திலே 48 பத்தினிக் கோயில்களை, அதாவது கண்ணகி அம்மன் கோவில்களைக் கட்டுவித்தான் எனவும் கூறப்படுகிறது. 1450இலே நல்லூரிலே முருகனுக்கு ஒரு கோயில் கட்டுவித்தவன் புவனேகபாகு.
இவையாவும் இந்துமதத்தின் சிறப்புக்கும் அக்காலச் சிங்கள பெளத்த அரசர்களின் பரந்த மனப்பாங்குக்கும் நல்ல எடுத்துக் காட்டுகளாகும். இவை பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியவை. சிங்கள அரசர் பலர், தமிழக இளவரசியரை மணஞ் செய்து கொண்டம்ை, பிராமணர் பலர் சிங்கள அரசர்களுக்கு ஆசிரியர்க ளாகவும் ஆலோசகர்களாகவும் அமர்த்தப்பட்ட மை, சமஸ்கிருதத் கல்விக்கு இடமளிக்கப்பட்டமை போன்ற பல காரணங்களே அக்கால அரசர்கள் இந்துசமயத்திலே ஈடுபடவும் அதனைப் பேணிப் பாதுகாக்க முன்வரவும், இந்து கலாசாரங்களையே தாமும் பெரும்பாலும் அனுட்டிக்கவும் செய்தவை எனலாம்.
சிங்கள அரசர்கள் இந்துமதத்துக்கு ஆதரவு நல்கியது போலவே தமிழரசர்கள் ஆட்சி செய்த காலங்களில் பெளத்த மதத்துக்கு நிதி வழங்கி வேண்டிய ஆதரவுகளையும் நல்கியுள்ளார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

71
போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் இழைத்த இன்னல்கள்:
இவ்வாறு சிங்கள அரசர்கள் ஆண்ட காலமாயினும் சரி, தமிழரசர்கள் ஆண்டகாலமாயினும் 乐r门, [ ] 6Ꮩ) நூற்றாண்டுகளாக இலங்கையிலே சிறப்புற்று விளங்கி வந்த இந்து சமயத்துக்கு, என்று போர்த்துக்கேயர் இந்த நாட்டிலே கால் வைத்தனரோ அன்று தொடங்கியது அதன் துன்ப காலம்.
போத்துக்கேயரும் அவருக்குப்பின் வந்த ஒல்லாந்தரும் இந்துமதத்தை இந்நாட்டில் இருந்து அழித்தொழி ப்பதிலே காட்டிய வேகத்தையும் அதன்பொருட்டு அவர்கள் இழைத்த கொடுமைகளையும் நோக்கும்போது,இந்துசமயம் இந்நாட்டிலே மீண்டும் ஒரு போதுமே தலையெடுக்க முடியாமல் முற்றாக அழிந்து போயிருக்குமென்றே சொல்ல வேண்டும்.
அவ்வாறு அழிந்தொழியாது தப்பிப் பிழைத்தமைக்கு இரு வித காரணங்களைக் கூறலாம். ஒன்று.இந்து மதத்தின் மகிமையும் உள்ளார்ந்து அமைந்துள்ள அதன் ஜிவ சக்தியும்; மற்றது, அதனை அனுட்டித்து வந்தவர்களுக்கு அதன் பாலிருந்த தீவிரமான பற்றும், நம்பிக்கை யும் என அனைத்துலக இந்துமத நாட்டிலே பேராசியர் மகாதேவன் குறிப் பிட்டவை எனக் கொள்ளலாம்.
அகழ்வாராய்ச்சிகள்:
இலங்கையில் இந்துமத வரலாற்றைப் பற்றிய கருத்துகளை இம் மட்டில் நிறுத்திக்கொண்டு. இந்துமத அகழ்வா ராய்ச்சிகள் பற்றி இரண்டொரு குறிப்புகள் தெரிவிப்போம்.

Page 76
காலத்துக்குக்காலம் இலங்கையி லே பற்பல இடங்களிலே இந்து மத சின்னங்களும் விக்கிரகங்களும் அகழ்ந்தெடுக் கப்பட்டு வருகின்றன. இவற்றுள் சில மிகப் பழங்காலத்தவை. பல போத்துக்கேயர் இந்துக் கோயில்களை அழித்தபோது, மண்ணுள்ளே பிதைந்தவையும் புதைக் கப்பட்டவையு மாகும். திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், பொலநறுவை ஆகிய இடங்களிலே கண்டெடுக்கப்பட்டவை குறிப்பிடத்த க்கவை. 1908 ஆம் ஆண்டு பொலநறு வையிலே கண்டெடுத்த சோமாஸ்கந்த மூர்த்தி, சிவகாமி, நடராஜர் ஆகியன மிக அற்புதமானவை. இவ்வகழ்வாரா ய்ச்சிகள் பற்றியும் கண்டெக்கப்பட்ட விக்கிரகங்களின் அமைப்புகள், அவற்றி ன் காலம், அவற்றை அமைத்தோர் பற்றியும் அறிஞர் பலர் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டுள்ளனர்.
ஆலயங்கள்:
இனி, இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களையும், விழாக் களையும் எடுத்துக்கொள்வோம்.
வடகோடியில் உள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தொடக்கம, தென்கோடியிலுள்ள கதிர்காமம் வரையும், வடமேற்கில் திருக்கேதீஸ்வரம் முதல், தென் கிழக்கே கோணேஸ்வரம் திருக்கோவில் ஈறாக, இலங்கை எங்கணும் பெரியதும் சிறியதுமாக எத்தனையோ கோவில்கள் உள்ளன. இவை சிவன்,அம்மன்கோவில், பிள்ளை யார் கோவில், முருகன் கோவில், பெருமாள் கோவில் எனப் பல வகையின. இவற்றுள் எத் தெய்வத்துக்குரியவை எண்ணிக்கையில் கூடியவை என்பதைக் கணக்கிட்டுச் சொல்வது சிரமமான காரியம்.
இக்கோவில்கள் தமிழகத்திலுள்ளவை போலப்பிரமாண்டமான கோபுரங்களையோ விமானங்களையோ கொண்டிராதபோதும்,

இவற்றுள் பல நல்ல வேலைப்பாடுகளும் அழகிய தோற்றமும் உடையன. பல கோவில்களிலுள்ள மூலமூர்த்தி, நந்தி முதலியன நல்ல களையும் கலைநுட்ப மும், பொருந்தியனவாயுள்ளன. இவற்றுள் பல இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலும், சென்ற நூற்றாண்டு இறுதியிலும் , தமிழத்திலுள்ளன தேவ கோட்டை போன்ற இடங்களிலுள்ள சிற்பிகளால் செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டவை.
விழாக்கள்:
கோவில் விழாத் தொடங்கிவிட்டால் ஊர் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுவிடும். ஊர் முழுவதுமே புனிதமாகி விடும். விழாக்காலம் முடியும்வரை மக்கள் விரதம் அனுஷ்ட் டிப்பதும், மாமிச உணவை முற்றாகத் தவிர்த்து சைவ போசனத்தைக் கைக்கொள்வதும் வழக்கமாகும்.
யாழ்ப்பாணத்துக் கோவில்களில் வருட விழாக்கள் சித்திரை மாதத்திலே தொடங்கி, ஆவணி மாதத்தோடு முடிந்துவிடும். இந்த மாதங்களைத் தெரிந்ததற்குரிய காரணங்கள் ஆராயத்தக்கன. பெரும் பாலான கோவில்களில் 10 நாள் விழாவே நடைபெறும். சுதுமலை அம்மன் கோவில் போன்றகோவில்களில் 18நாள் திருவிழாவும், மாவிட்டபுரம், நல்லூர் ஆகிய முருகன் கோவில்களில் 25 நாள் விழாவும், நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடைசி நாள் தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முதல் நாள் தேர்த்திருவிழாவும் நடைபெறுவது யாவரும் அறிந்தது.
பெரும்பாலான கோவில்களில் ஒரு தேரும், சுதுமலை அம்மன் கோவில் போன்ற கோவில் களில் மூன்று தேர்களும், மாவிட்டபுரத்தில் 5 தேர்களும் தேர்த்திரு விழாவில் வீதிவலம் வருகின்றன. இந்த வித்தியாசங்கள் ஆரம்பத்திலே எப்படித் தொடங்கின என்பது தெரியவில்லை.

Page 77
அவ்வக் காலத்தில் அவ்வவ்வூர்களிலிருந்த வசதிகள் தான் காரணமோ அல்லது வேறு காரணங்களும் உண்டோ என்பது தெரியவில்லை. சில கோவில்களில் தீர்த்தம் பெளர்ணமி தினத்திலும், சில கோவில்களில் தீர்த்தம் அமாவாசை தினத்திலும் நடைபெறுவதையும் குறிப்பிட வேண்டும்.
கொடித்தம்பம் உள்ள கோவில் களிலே கொடியேற்றித் தினமும் கொடித்தம் பத்துக்கும் முறையாகப் பூசைகள் நடைபெறும். கொடித்தம்பம் இல்லாத கோவில்களில் "அலங்காரத் திருவிழா” என்ற பெயரில் 10 நாட்கள் விழாக்கள் நடைபெறும். இவ்விழாக்க ளின் உட்கிடை களையும், தத்துவக் கருத்துக்களையும் சைவ சித்தாந்த அடிப்படைகளோடு இணைத்துக் காலஞ்சென்ற அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள் தாம் எழுதிய மகோத்ஸவ விளக்கம் என்னும் நூலிலே விளக்க
யுள்ளார்.
ஆலயங்களில் நுண்கலைகள்:
கோவில்களே பலவித கலைநுட்ப வளர்ச் சிக்கும் வழிகோலுவனவாக அமைந்துள்ளன என மேலே குறிப்பிட்டோம். எழுந்தருளிய விக்கிரகங்கள் வீதி வலம் வருமுன் அவற்றுக்குச் செய்யப்படும் அலங்காரத்தைச் "சாத்துப்படி” எனக் குறிப்பிடுவது வழக்கம். இந்த அலங்காரமும் ஒரு கவின் கலையாகும்.
அலங்காரத்தைப் பற்றிப் பேசும்போது நல்லுTர்க் கந்தசுவாமி கோவில் திருவிழாவிலே தண்டிகைலே சுப்பிரமணிய சுவாமி வீதிவலம் வரும்போதும் தேரைவிட்டு இறங்கி வரும்போதும் ஆறுமுக சுவாமியின் அழகையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். அவற்றைக் கண்டவர் எவரையும் அவை கவராமல் விடா. நம்நாட்டிலே “சாத்துப்படி” கட்டுவதிலே பிரபல்யம் அடைந்த பலர் இருந்திருக்கிறார்கள்.

கோவில் விழாக்களிலே மேள வாத்தியம் முக்கிய இடம் பெறுவதைச் சொல் லத் தேவையில்லை. இதன் விளைவாக நம் நாட்டிலே தவில் வாசிப்பதிலும், நாதஸ்வரம் வாசிப்பதிலும் அதிவிற்பன்னரான ஒரு பரம்பரையே இணுவில் , அளவெட்டி போன்ற கிராமங்களிலே ஏற்பட்டு வருவதையும், அவ்விற்பன்னருட் சிலர் உலகப் புகழ்பெற்று நம் நாட்டுக்கே பெருமை தேடித் தருவதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
விசேஷ விழாக்கள்:
வருடாந்த விழாக்களை விட, சிற்சில கோவில்களில் மட்டும் சிறப்பாக இடம்பெறும் சில விழாக்களையும் குறிப்பிட வேண்டும். நல்லூர்ச் சிவன்கோவில் யமசங்காரம், வண்ணை பெருமாள் கோவில் உறியடி உற்சவம், Π Π 6) . 600 Jg sħj gÐ T U Lò, முன்னேஸ்வரத்தில் நவராத்தி விழா ஆகியன நினைவுக்கு வருகின்றன. காலஞ்சென்ற சோமஸ்கந்த குருக்கள் என்பவர் முன்னேஸ்வரத்திலே நவராத்திரி நாள்களிலே அம்மனுக்குப் பூசை செய்வது பார்ப்பதற்கு ஒரு தனி அழகாக இருக்கு மெனப் பலர் சொல்வதுண்டு.
அர்ச்சகர்கள் :
இந்த இடத்திலே சைவாலயங்களிலே பணிபுரியும் அர்ச்சகர்களைப் பற்றியும் இரண்டொரு கருத்துக்கள் தெரிவிப்பது பொருத்தமாகும். அர்ச்சகர்களின் சிறப்பைப் பொறுத்ததே இந்து சமயத்தின் மதிப்பும் வளர்ச்சியும் என்று கொண்டாற் கூட மிகையாகாது. அறிவு, ஆசாரம், பக்தி ஆகியன நிரம்பிய அர்ச்சகர்கள் பலர் நம் நாட்டிலே இருந்திருக்கின்றனர். இப்போதும் இருக்கின்றனர். இவர்களுடைய சமய அறிவையும், கிரியைகளில் இவர்களுடைய திறமையை விருத்தி செய்வதன்

Page 78
பொருட்டுக் காலத்துக்குக் காலம் பெரியோர் பலர் பல நன்முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றார். அவற்றுள் காலஞ் சென்ற சதாசிவ ஐயரும். வித்துவான் கணேசஐயரும் சுன்னாகத்தில் நடத்திய பிராசீன பாடசாலையும் அகில இலங்கை இந்து மாமன்றம் இப்போது யாழப்பாணத்தில் நடத்திவரும் குருகுலமும் குறிப்பிடத்தக்கவை.
இக் குருகுலம் முன்பு திருக்கேதீஸ்வரத்தில் நடத்தப்பட்டு இப்போது யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நம் நாட்டிலே இந்துமத வளர்ச்சிக்கு இக் குருகுல விருத்தி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பலர் இன்று போதிய அளவு உணராமலிக்கக் கூடும். ஆயினும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்து கலாசார அமைச்சு இதன் முக்கியத்து வத்தை உணர்ந்து செயற்படத் தொடங்கிருப்பது மகிழ்ச்சிக் குரியது.
சில தனி அம்சங்கள் :
நம் நாட்டு ஏனைய முருகன் கேர்வில் களிலே காணாத ஒர் அம்சத்தைத் தெற்கே கதிர்காமத்திலும், வடக்கே செல்லச் சந்நிநிதியிலும், கிழக்கே மண்டூர் கந்தசுவாமி கோயிலிலும் காண்கின்றோம்இம்மூன்று இடங்களிலும் பூசை செய்யும் பூசாரிகள் மந்திரம் சொல்லாது தங்கள் வாய்களைத் துணியாற் கட்டிக் கொண்டு பூசை செய்கின்றனர். இதன் தொடக்கம் ஆராய்ச்சிக்கு உரியது.
அம்மன் கோவில்களுள் நம்நாட்டி லே பல இடங்களிலே கண்ணகி அம்மன்

கோவில்கள் மிகுதியாக உள்ளன. கண்ணகி தோன்றிய தமிழ் நாட்டை விட நம நாட்டிலேயே கண்ணகிக்கு அதிகமான கோவில்கள் இருக்கின்றன. என்று கூடச் சொல்லலாம் சில கண்ணகி அம்மன் கோவில்களிலே நடைபெற்று வருகின்ற மாற்றம் ஒன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆகம விதிப்படி கண்ணகியை உத்ஸவ மூர்த்தியாகக் கொள்ள இடமில்லை, என்ற காரணத்தால் சில கண்ணகி அம்மன் கோவில்களிலே கண்ணகி அம்மனையும் வைத்துக்கொண்டு ராஜராஜேஸ்வரி அம்மனையே மூல மூர்த்தியாகப் பிரதிஷ்டை செய்தி ருக்கிறார்கள் இக்கோவில்களின் பெயர் தொடர்ந்து கண்ணகி அம்மன் கோவிலென்றே இருந்த போதும் மூல மூர்த்தி ராஜராஜேஸ்வரியேயாகும்.
விஷ்ணு ஆலயங்கள்:
நம் நாட்டு விஷ்ணு கோவில்களை பற்றியும் ஒன்று சொல்ல வேண்டும். இந்தியாவிலே வைஷ்ணவ மதத்தைச் சேர்ந்தவர்கள் பெருந்தொகையினராக இருக்கின்றனர். இவர்கள் தொகை க்கேற்ப அங்கு விஷ்ணு ஆலயங்களும் பெருந்தொகையாக இருக்கின்றன். ஆனால் இலங்கை இந்துக்களுள் வைஷ்ணவவரே இலர் என்று கூடச் சொல்லுமளவுக்கு மிகச் சிலரே உளர். இருந்தும் விஷ்ணு ஆலயங்களும் பல இருக்கின்றன. இதிலே விசித்திரம் என்னவெனில் இவ் விஷ்ணுஆலய ங்களில் பூசை செய்யும் அர்ச்சகர்களும் சைவர்கள். அங்கு சென்று வழிபடு வோரும் சைவர்கள். இலங்கையிலே இந்து சமயத்தில் அன்றாட வாழ்விலும் சமய நிலையிலும் சைவத்துக்கும்,
'4

Page 79
வைஷ்ணவத்துக்கும் அதிகவேற்றுமை பாராட்டப்படுவதில்லை என்பதையே
இந்தநிலைமை எடுத்துக்காட்டுகின்றது
தலைநகர் ஆலயங்கள்:
இலங்கையின் தலைநகரம் கொழு ம்பு இங்கு பல வேறு இன மக்கள் வாழ்கி ன்றார்கள். பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க இனத்தவர்கள்.
கொழும்பில் இந்துக் கோவிலகள் கணிசமான அளவு உள்ளன. இந்து சமய விழாக்களும் பெருமளவு நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக ஆடி மாதத்தில் வேல்விழா என்று ஒரு பெரிய விழா நடை பெறுகின்றது. இந்தவிழாவினை நகரத் தார் எனப்படும் தென்னிந் நிதிய வணிகப்பெருமக்கள் நடத்திவருகின்றா ர்கள். அவர்களுடைய நிருவாகத்தில் மூன்று. நான்கு பெரிய கோவில்கள் கொழும்பில் இருக்கின்றன.
வேல்விழாக் காலத்தில் தங்கரதம் , வெள்ளிரதம் என்ற பெரிய அலங்கார ரதங்கள் சுமார் ஏழு மைல் தூரம் சென்று வருகின்றன. இந்த விழாவிலே இந்துக்கள் மட்டுமன்றி ஏனையோருக் வெகு உற்சாகத்தோடு கலந்துகொள்கி
ன்றர்கள்.
கொழும் பிலே சேர், பொன் இராமநாதன் என்ற ஒரு பெருமகனாரா ல் நிருமாணிக்க்ப்பட்ட பிரமாண்டமான சிறந்த கோவில் ஒன்று உண்டு. கருங்கற் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் இந்தக் கோவில் ழரீபொன்னம் பல

வாணேசர் கோவில் என வழங்கின்றது. இங்கே திருவிழாக்களும், தேர்த்திரு ழாக்களும், இடம்பெற்று வருகின்றன. மார்கழி மாதத்தில் இந்த ஆலயத்திருந்து ஒலி பரப்பப்படும் திருவேம்பாவைப் பாடல்கள் அன்னிய நாடுகளிலுமுள்ள இந்துப் பெருமக்களும் கேட்கும் வண்ணம் அதிகாலையில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படுவது உண்டு. கொழும்பிலே மேற்குறிப்பிட்ட ஆலயத்தை விட விநாயகர் ஆலயங்களும் முருகன் ஆலயங்களும், அம்மன் ஆலயகளும் பல உள. கதிர்காமம் :
இலங்கையிலே தலைசிறந்த தலங்களிலே ஒன்றகா விளங்குவது கதிர் காமத் திருத்தலம் ஆகும் . கதிர்காமத்தில் இருக்கின்ற முருகன் ஆலயத்திற்கு அருகில் மாணிபக்க பிள்ளையார் ஆலயமும் இருக்கின்றது. இந்த ஆலயத்தை அரவணைப்பதுபோல மாணிக்க கங்கை இங்கு ஒடிக் கொண்டிருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளையு டைய இந்தத் தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேர்ந்து வணங்குவது ஒரு சமய ஐக்கிய அறிகுறியாக விளங்குகின்றது.
பெளத்த இந்து இணைப்பு:
இந்து ஆலயங்களைப் பற்றி ஆராயும் இச்சந்தர்ப்பத்திலே இந்து சமயத்துக்கும் பெளத்தத்துக்குமுள்ள ஓர் இணைப்பையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்துக் கோவில் எதிலும் பெளத்த சிலை எதையும் வைக்கும் வழக்கம் கிடையாது. ஆயினும்
5

Page 80
பெளத்தக் கோவில்கள் பலவற்றிலே விநாயகர், முருகன், விஷ்ணு கண்ணகி ஆகிய தெய்வங்களை வைத்து வழிபடுகின்றனர். அதைப் போலவே பெளத்த கோவில் களுக்கு வழிபடுவதற்காக இந்துக்கள் எவரும் செல்லும் வழக்கம் இல்லை. ஆயினும் பெளத்தர்கள் ш60 гт இந்துக் கோவில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் உண்டு. முக்கியமாகக் கதிர் காமம் , முன்னேஸ் வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய கோவில்களுக்குப் பெருத்தோகையான பெளத்தர்கள் சென்று வழிபடுகின்னர். இவை தவிா, கண்டியிலே நடைபெறும் பெராகராவில் கதிர்காமத் தெய்வமும் முக்கிய இடம் பெறுகின்றது. இவையாவும் நம்நாட்டிப் பாரம்பரிய த்தைதில் இந்து மதத்துக்கும் பெளத்த த்துக்குமுள்ள நெருங்கிய இணைப்பு க்கும் இந்துக் கலாசாராமும் வழிபாட்டு முறைகளும் பெளத்தத்தில் எவ்வளவு தூரம் செறிந்துள்ளன என்பதற்கும். எடுத்துக்காட்டுகளாகும்.
புராணப் படிப்பு:
கோவில்களோடு 69للا ہوا ا அம்சங்களிலே இலங்கைக்கே தனிச் சிறப்பாகக் குறிப்பிடக்கூடிய இன்னெரு அம்சம் புராணப் படிப்பு. இங்கு நடைபெற்று வரும் இப்புராணப் பாடிப்பு இந்திய மக்களாலும் பாராட்டப் பெற்று து. முக்கியமாகக் கந்தபுராணமே படித்துப் பயன் சொல்லப்படுவது. இதன் மூலம் சமய அறிவு மட்டுமன்றி எழுத வாசிக்கத் தெரியாத கிராம மக்கள் ஒரளவு இலக்கண, இலக்கிய அறிவைக் கூடப் பெற்று வந்திருக்கி ன்றனர். இதனை இப்போது

76
grijdouggou (Adiut Education) 6T60T 5. குறிப்பிடப்படும் முதியோர் கல்வியின் ஒர் அம்சம் என்றுகூடக் கருதலாம்.
மார் கழி மாதத்திலே வரும் திருவெம் பாவை நாள்களிலே சில கோவில்களிலே திருவாதவூரடிகள் புராணம் படித்துப் பயன்சொல்லுவது உண்டு. பிட்டுக்கு மண்சுமந்த சருக்கம் படித்துப் பயன் சொல்லப்படும் நாளான்று சர்க்கரைப் பிட்டையே சுவாமிக்கு நைவேத்தியமாக வைத்துப் பின்னர் புரானப் படிப்பைக் கேட்க வந்தவர்களுக்கு வழங்குவது வழக்கம். இவ்வாறு சிந்தனைக்கும் நாவுக்கும் ஒருங்கு விருந்தளித்து வந்த அரிய ԼD Սւ Ց, 6fr للاموا لا لا والا TT ذلك அருகி வருகின்றன.
இதுவரை கோவில்களைப் பற்றிக் குறிப்பிடத்தக்க விவரங்கள் சிறப்பான அம்சங்கள் ஆகியன குறிப்பிடப்பட்டன.
நூல்கள்:
இந்துசமய வாழ்விலே கோவில்கள் முக்கிய இடம் வகிக்கும் காரணத்தால் கோவில்கள் பற்றிய விவரங்கள் பலவற்றை இதுவரை குறிப்பிட்டோம். இவற்றுள் பெரும் பாலானவை நம்நாட்டுகேயுரிய தனியம்சங்களாகும். இனி, இந்து சமய இலக்கியப் பணியிலே நம் நாட்டவர் ஆற்றிய பணிகளுட் சிலவற்றைக் குறிப்பிடுவோம். இவற்றை இராண்டாப் பிரிக்கலாம். ஒன்று இந்து g5g5g.J6).JứD (Hindu PhiloSophy) LDÖDg5 இந்து சமயம் (Hindu Religion) இவற்றை மேலும் இரண்டாகப் பிரிக்கலாம். தமிழ்ல் இயற்றப்பட்டவை ஒரு பிரிவு. ஆங்கில த்தில் இயற்றப்பட்டவை மற்றப் பிரிவு.

Page 81
எல்லாப் பிரிவுகளிலும் நம் நாட்வர் காலத்துக்கு காலம் இயற்றிய நூல்கள் தொகையால் ஒரு வேளை குறை வாயிருப்பினும் வகையாலும் தரத்தாலும் உயர்ந்தவை எனக் கரதலதம். எல்லாவ ற்றையும் இங்கு குறிப்பிடுவது இயலாது. சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிடு வோம்.
தத்துவ நூல்கள்:
தத்துவத் துறையிலே முதலிலே மனத்துக்கு வருவது நீலகண்டபாஷ்யத்துக்கப் புன்னாலைக் கட்டுவனிலே பிறந்த காசியிலே வாழ்ந்த காசி வாசி செந்திநாதையர் செய்த மொழிபெயர்ப்பேயாகும். பிரம்மசூத்திரம் எனப்படும் நூலே இந்திய தத்துவ ஞானத்துக்கு முக்கியமான ஒரு மூலநூல். அதற்குப் பலர் சமஸ் கிருதத்த்திலே பெரிய விளக்கங்கள் எழுதியுள்ளனர். அந்த விளக்கங்களே பாஷ்யங்கள் எனப்படும். பாஷ்யங்களை எழுதினோர் வேதாந்தச் சார்பாகவே எழுதியுள்ளனர். நீலகண்டர் என்பவர் மட்டும் சைவ சித்தாந்தச் சார்பாக விளக்கம் எழுதியுள்ளார். அவருடைய பாஷ்த்தைத் தமிழாக்கி அதன்மூலம் சைவ சித்தாந்தத்துக்கு வலுவூட்டிய பெருமைக்குரியவர் செந்திநாதையர்.
இவர் இம்மொழிபெயர்ப்பின் முகப் பிலே எழுதிய இரண்டு உபக்கிரமணிகைகளைப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை தாம் எழுதிய கந்தபுராண கலாசாரம் என்னும் நூலிலே குறிப்பிட்டு "ஒவ்வொன்றும் தனித்தனிகோடி பொன் பெறும்" எனக் கூறுகின்றார். சித்தாந்த சாத்திரங்களுள் முக்கியமான சித்தியார் சுபக்கத்துக்கும்

சிவப்பிரகாசத்துக்கம். திருவிளங்கம். எழுதிய உரைகள் ஆகியன தமிழில் நம் நாட்டிவர்கள் செய்த தத்துவப் பணிகளுக்குச் சில உதாரணங்கள்.
ஆங்கிலத்தில் எத்தனையோ நூல்களைக் குறிப்பிடலாம். சேர். பி. இராமநாதனின் LD IT LD 6OT T ff முத்துக்குமாரசாமி 1857 இல்லேளியிட்ட (Synopsis of Saivasiddhanta) Og, FTL5, Ulf அண்மையிலே காலஞ்சென்ற கே. JTLD5.5 big JIT Sussilu 'Hindu in a nutshel வரை அவை வளரும்.
கலாயோகி ஆனந்தக்குமாரசாமி இயற்றிய பல நூல்கள், முக்கியமாக "Dance of shivel' (85-ft (S. 9(5600TT 56 to 96 fig,6T Sup)sful 'Studies and Translation Philosophical and Religious' 5,606)| புலவர் நவரத்தினமவர்கள் இயற்றிய "Studies in Hinduism' Jf6 JUIT 95 g, sbg J LD6)Jf†g,6T Subsfluj Saiva School of Hinduism போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இத்தொடர்பிலே சிவபாதசுந்தரம வர்கள் ஆற்றிய பணியொன்றையும் குறிப்பிடுவது பொருத்த மாகும். சென்னையிலேளயிருந்து வயலறி பரஞ்சோதி என்பவர் சைவ சித்தாந்தம் என ஆங்கிலத்தில் தம் ஆராய்ச்சியாக வெளியுட்ட நூலில் சிற்சில இடங்ளிலே வேதாந்தத்தோடு ஒப்பிட்டுச் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைச் சாடியிருப்பதைக் கண்டபோது சிவபாத சுந்தரமவர்கள் வயலற் பரஞ்சோதியின் கருத்துக்களின் பொருந்தாமையைக் காட்டி அவற்றுக்கு மறுப்பெழுதியமையே இங்கு குறிப்பிடுகின்றோம்

Page 82
சமய நூல்கள்:
சமய நூல்களைப் பொறுத்த மட்டில் இலங்கை அறிஞர் இயற்றியவற்றைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். தலபுராண ங்கள், உரைகள், வசன நூல்கள், கட்டுரைகள், கிரியா விளக்கங்கள், மறுப்புகள், கண்டனங்கள், என இந்நாட்டு அறிஞர் காலத்துக்குக் காலம் இயற்றிய நூல்கள் எண்ணிலடங்கா. இலங்கையிலுள்ள பல ஆலயங்கள் பெயரில் இயற்றப்பட்ட உலா, ஊஞ்சல், பிள்ளைத் தமிழ், தலபுராணங்கள் அனைத்தையும் கணக்கெடுக்கின் அவை பெருந்தொகையின வாகும்.
தலபுராணத்துக்கு உதாரணமாகக் காலஞ்சென்ற இளமுருகனார் இயற்றிய ஈழத்துச் சிதம்பர தலபுராணத்தைக் குறிப்பிடலாம். உரைகளுக்கு உதாரண மாகப் பருத்தித்துறை சுப்பிரமணிய சாஸ்திரிகள் கந்தபுராணத்துக்கு எழுதிய உரை, பண்டிதர் அருளம்பல வனார் செய்த திருவாசக ஆராய்ச்சி யுரை, பண்டிதமணி கணபதிப்பிள்ளை யின் தட்சகாண்ட உரை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
புராண வசன நூல்களுக்கு நாவலர் பெருமானுடைய பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கட்டுரை நூல்களுக்குப் பண்டிதமணி கணபதி ப்பிள்ளையவர்களின்" சமயக் கட்டுரை” மட்டக்களப்பு அருணாசல தேசிகரவர்க ளின் “சைவ சமய சிந்தாமணி” போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.

78
சைவாலயங்களிலே நடைபெறும் கியை விளக்கங்களுக்கு அச்சுவெலி குமாரசுவாமிக் குருக்கள் இயற்றிய மகோற்சவ விளக்கமும், கலாநிதி கைலாசநாதக் குருக்கள் இயற்றி ய,"சைவத் திருக்கோவிற் கிரியை நெறியும் பயனுள்ள ஆக்கங்களாகும்.
மறுப்புகள், கண்டனங்களின் விளைவாக எழுந்தவற்றுக் எத்தனை யோ உதாரணங்களைக் கூறலாம். சென்ற நூற்றாண்டிறுதியிலும் இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தும் தமிழகத்தில் இந்து சமயம் பற்றிக்கா லத்துக்குக் காலம் எழுப்பப்பட்ட ஒவ்வொரு பிரச்சனையிலும் ஈழநாட்ட றிஞர்களும் ஈடுபட்டு, ஒட்டியும் வெட்டியும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் சமயக் கருத்துக்கள் தெளிவு பெற்றல் மட்டுமன்றிச் சமய இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றுள்ளன.
உதாரணத்துக்கு இரண்டைக் கூறுவோம். வடமொழி வேதங்கள் வேறு. தமிழ் மறைகள் எனப்படுபன வேறு. இரண்டுக்கும் தொடர்பு கிடையாது என்ற கருத்தைத் தமிழ்நாட்டிலே சிலர் எழுப்பியபோது, அவை இரண்டும் கூறுவன ஒன்றே என்று நிலைநாட்டி வேதங்களிலிருந்தும் தேவாரங்களி லிருந்தும், மேற்கோள்கள் காட்டிச் செந்திநாதையர் எழுதிய நூலே “தேவாரம் வேதசாரம் என்ற நூலாகும். "சிவஞான போதம்” முதல்நூலா அல்லது வடமொழியிலுள்ளதன் தமிழாக்கமா என எழுந்த பிரச்சனையிலே அச்சுவேலி குராசுவாமிக் குருக்கள் போன்றோரும் ஈடுபட்டுத்தம் கருத்துக் களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Page 83
இந்துசமய வளர்ச்சிக்கு நL நாட்டவர் ஆற்றிய பணியை விளக்கு பொருட்டுச் சில பெயர்களையும் நூல்களையும் மட்டுமே இங்கு குறிப்பிட்டோம். இங்கு குறிப்பிடாத முக்கியமான பெயர்களும் நூல்களும் இன்னும் எத்தனையோ இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் சமயத்துக்குக் கொடுத்து வரும் ஆதரவும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்திலே தோன்றி, கதாப்பிர சங்கத் துறையிலே முன்னோடியாகத் திகழ்ந்து ஈழத்தில் மட்டுமன்றித் தம ழக த தரி லுமி புகழ் பெற ற திருவாலங்காடு சங்கரசுப்பையர் நினைவுகூரத்தக் கவர். மாணிக்கத் தியாகராச பண்டிதரும் இத்துறையிலே குறிப்பிடத்தக்க மற்றெருவராவர்.
ஆதீனம்:
சங்கரசுப்பையரைப் போலவே கதாப்பிரசங்கம், புராணப் பிரசங்கம் ஆகிய துறைகளிலே திறமை பெற்று, ஈழத்திலும் தமிழகத்திலும் மட்டுமன்றி, மலாயாவிலும் புகழீட்டிவந்து சென்ற ஆண்டு பரிபூரணநிலைஎய்திய நல்லை ஆதீனத் தலைவர் இந்துசமய விருத்தி யின் பொருட்டு ஆற்றிவரும் அரும் பணிகள் யளாவும் பாராட்டுக்குரியன.
இராமகிருஷ்ண மிஷன்:
நம்நாட்டிலே இந்துமத வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றிவரும் நிறுவனங்களுள் இராமகிருஷ்ண மிஷக்குச் சிறப்பான தனியிடன்றுண்டு. சுவாமி விபுலானந்தர் அவர்களின் முயற்ச்சியினால் வடக்கில் வைத்தீஸ்வர வித்தியாலயம் உட்பட

எத்தனை யோ இந்துக்கல்லூரிகளைத் தொடங்கி நடத்திய பெருமை இராகிரு ஷ்ண மிஷனுக்குரியது. கிழக்கிங்கையில் ஆரம்பித்த இந்துக் கல்லூரிகள், இங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்ற அநாதை இல்லம், தென்னிலங்கையில் கதிர்காமத்தில் மடம், கொழும்பிலிருந்து பற்பல பணிகள் என இராமகிருஷ்ண மிஷன் ஆற்றிவரும் அரும்பணிகள் யாவும் பாராட்டத் தக்கன.
இன்றைய நிலை
கடைசியாக இன்றைய நிலை பற்றிச் சில வார்த்தைகள். இந்து சமயம், “ஆன்மா நிலையானது; இறைவன் ஒருவனுளன்; கர்ம பலன், மறுபிறப்பு என்பன நிச்சயம்” என்ற அடிப்படைக் கொள்கைகளையுடையது. இவற்றுக்கு அனுசரணையாகவும் இவற்றுக்கு வடிவம் கொடுக்கு முகமாகவும் அமைந்தவையே விழாக்கள், வழிபாடுகள் சமயச்சடங்குகள் ஆகிய அனைத்தும். இன்றைய நிலையில் பலவித போக்குகளைக் காண்கிறோம். ஒரு சிலருக்குச் சமய வாழ்வில் சிறிதாவது ஈடுபடுவதற்கு வேண்டிய பெறுாமையுமில்லை; விருப்பமுமில்லை; அக்கறையுமில்லை. இன்னும் சிலர் சமய சம்பந்தமான எதுவும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தவர்கள். இவருள் சிலர் வெளிப்படையாகவே தம் முடிவைத் வெளிப்படையாக எதையும் பேதாத போதும், மெளனமாகத் தம் முடிவைத் தெரிவிப்பவர்கள். வேறு சிலர் உபசாரத்துக்காக வெளிப்படையாக எதையும் பேசாதபோதும், மெளனமாகத் தம் முடிவைச் செயல்களிலே சாதிப்பவர்கள் வேறு சிலர் சாரத்தைத் தவறவிட்டுச் சக் கையைப் பிடித்து

Page 84
கொண்டவர்கள் போலச சமயத்தின் உள் நோக்கங்களை உணராது புற வேடங்களிலும் வெற்றாரவாரங்களிலும் மட்டும் ஈடுபடுகின்றனர்.
அண்மைக் காலத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமய மன்றங்கள் தொடங்கபட்டுள்ளன. இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக உயர் வகுப்பு மாணவர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டருக்கின்றது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிராதான வளாகம் பேராதனை என்ற இடத்திலே அமைந்திருக்கின்றது. அங்கு கல்வி பயிலச்சென்ற பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் பக்கத்தில் இருந்த குன்றின் மீது குமரனுக்கு அழகிய ஆலயம் அமைத்துள்ளார்கள்.
இவ்வாறு புத்துணர்ச்சி ஏற்பட்டு வருகின்ற இந்த வேளையிலே எந்த நாட்டிலும் இல்லாத, இந்து
VM 裘 米 米

り/ N.
சமயத்திற்கான ஒரு தனி அமைச்சு ஈழநாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நேபாள த்தைத் தவிர உலகில் இந்து சமயம் அரசாங்கத்தால் ஆதரிக்க ப்படும் நாடு இலங்கை மட்டுமே எனலாம் எனலாம். இலங்கை பெளத்தர்களைப் பெரும் பான்மையினராகக் கொண்ட நாடு. இந்த நாட்டிலே இந்து சமயத்திற்கு மதிப்பளித்து அதற்கென ஓர் அமைச்சை உண்டாக்கி அதன் மூலம் சமய சமரசத்தைக்காண்பதற்கு வழி செய்ய ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் தான் இலங்கையில் முதன்முதலாக ஒர் அகில உலக இந்து மாநாடு நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது. பல இடங்களில் இந்து மாநாடு இடம் பெற்றபோதிலும் அரசாங்க ஆதரவில் நடைபெறுகின்றது என்பது இலங்கை வாழ் இந்துப் பெருமக்களுக்குப் பெருமைதரும் ஒரு நிகழ்ச்சியாகும்.
※米浆 2 1YY

Page 85
கட்டுரைகள் பெறப்பட
1. உலக மாதேவிச் சதுர்வேதிமங்கலம் -
பக்கம் 102 -110
2. நாவலர் பரம்பரை - பண்டிதமணி நிை
3. கிருஷ்ண வழிபாடு - இந்து தருமம் ப
4. தமிழ்ச் சைவப் பண்பாட்டிற் செல்வச் சந் செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவி
5. பெரிய புராணமும் சைவசித்தாந்தமும்
LD6)ft -1995
6. போர்த்துக்கீசர் அழிப்பதற்கு முன்னிரு
கும்பாபிஷேக மலர் - 1993,
7. உபசாரம் -இந்துக்கலைக் களஞ்சியம்
8. இலங்கையில் இந்து சமயம் - அகில :
பக்கம் 257-264

ட நூல்கள்
இந்துக்கலைக்களஞ்சியம் பகுதி மூன்று
'61 LD6uft Uj,9 Lo 97-108
S, D 01-07
தியின் முக்கியத்துவம்-தொண்டமானாறு ழா மலர்
நான்காவது உலக சைவமாநாட்டுச் சிறப்பு
ந்த கோணேஸ்வரம் - கோணேசர் ஆலய
பகுதி மூன்று பக்கம் 59- 62
உலக இந்து மாநாட்டு மலர் -1982.

Page 86
கட்டுரையாளர்கள்
1.பேராசிரியர் சி.பத்மநாதன்.
2.பேராசிரியர்.பொ.பூலோகசிங்கம் -
3.பேராசிரியர். சிதில்லை நாதன். -
4.பேராசிரியர்கார்த்திகேசுசிவத்தம்பி -
5. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா -
அப்பாக்குட்டி
6.பண்டிதர்.இ.வடிவேல். -
7.வித்துவான்.வசந்தா
வைத்தியநாதன்.
8.கி.லஷமண ஐயர். -
3ද 3ද 3ද
82

ரலாற்றுத்துறைப்பேராசிரியர் பராதனைப்பல்கலைக்கழகம். பதலைவர்.பல்கலைக்கழக மானியங்கள் பூனைக்குழு.
ன்னைநாள் தமிழ்த்துறைப் பேராசிரியர்
பராதனைப் பல்கலைக்கழகம்.
லைவர் தமிழ்த்துறை பேராதனைப்,
ல்கலைக்கழகம்.
}துதமிழ்ப் பேராசிரியர் கிழக்குப் ல்கலைக்கழகம்
Iர்க்கா துரந்தரி, துர்க்கையம்மன் தவஸ்தானம் தெல்லிப்பளை.
5ானசிரோன்மணி, திருகோணமலை.
நானசிரோன்மணி, அருள்மொழியரசி காழும்பு.
]ன்னைநாள் வித்தியாதிபதி, யாழ்ப்பாணம்.

Page 87
: கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் த
: சிவ பூரீ சுவாமிநாத பரமேஸ்வர குரு
3: புத்த சாசன அமைச்சரும், கலாசார
மாண்புமிகு லக்ஷமன் ஜயக்கொடி,
: கால்நடை அபிவிருத்தி, தோட்ட அடி மாண்புமிகு செளமிய மூர்த்தி தொன்
: கலாசார சமய அலுவல்கள் பிரதி அன
: கலாசார சமய அலுவல்கள் அமைச்சி
கலாசார சமய அலுவல்கள் அமைச்சி திருமதி இராஜலெட்சுமி கைலாசநாத
:பல்கலைக்கழக மானியங்கள் ஆணை பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் ே
3: ஆய்வரங்கிற் கலந்து கொண்ட தமிழ் பேராசிரியர் புலவர் செ. இராசு, பேர கலாநிதி எஸ்.என். கந்தசாமி,
: இலங்கை ஆய்வாளர்கள். பேராசிரிய பேராசிரியர், சி.க. சிற்றம்பலம், பேராசி பேராசிரியர் அ. சண்முகதாஸ்,பேராசி பேராசிரியர் சிதில்லைநாதன், பேராக பேராசிரியர் நா.சுப்பிரமணியம், கலா திருமதி மனோன்மணி சண்முகதாஸ் செல்வி, சுகந்தினி பொன்னம்பலம், தி

O
நன்றி !
லைவர் சுவாமி ஆத்மகனாநந்தா,
$கள்,
சமய அலுவல்கள் அமைச்சருமான
த்தள அமைப்பு அமைச்சர் TLLDIT60T,
மச்சர் கெளரவ பேராசிரியர் ஏ.வி. சுரவீர.
ன் செயலாளர் திரு. ஆர்.ஏ.ஏ.ரணவீர,
ன் மேலதிகச் செயலாளர் (இந்துவிவகாரம்) நன்,
ாக்குழுவின் பிரதித்தலைவரும், பேராதனை பராசிரியருமான சி.பத்மநாதன்,
நாட்டு ஆய்வாளர்களான ாசிரியர் அ. பாண்டுரங்கன்,
ர் பொ.பூலோகசிங்கம், ரியர் வி.சிவசாமி lரியர் பி. கோபாலகிருஷ்ணன் ரியர் சோ.கிருஷ்ணராஜா, நிதி எஸ்.சிவலிங்கராஜா, திரு. ம. இரகுநாதன், ருமதி கீதாமணி கமலேந்திரன்,
:::::::
83

Page 88
: திருமதி விஜயலட்சுமி சிவச்சந்திரன், திரும திரு. கி. விசாக ரூபன், திரு. க. சிவானந்த திரு.க. இரகுபரன், திரு. என். சண்முகலி
:திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் திருமதிக திரு.வீ.விக்கிரமராஜா, உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம், கணக்காளர் தி
கலாசார உத்தியோகத்தர்களான, திரு.பி. திரு. எஸ். மகேந்திரராஜா, திருமதி நிர்மலா
:தகவல் அலுவலர், திரு.ம. சண்முகநாதன்,
:நூலகர் திருமதி.என். புவனேஸ்வரி,
; ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள்
: ஆராய்ச்சிப்பிரிவில் உதவியாளர்களாகக் க
செல்வி. சாந்தி தெய்வேந்திரன் செல்வி. கல்யாணி நாகராஜா
* ஜே. அண்ட் . எஸ். அச்சக உரிமையாளர்
ஆகிய அனைவரும் எமக்கு அளித்த ஒத்து எமது இதயம் கனிந்த நன்றிகள் உரியன.

தி. கலைவாணி இராமநாதன்,
மர்த்தி,
கன்,
ாந்தி நாவுக்கரசன், உதவிப்பணிப்பாளர்
திரு. குமார் வடிவேல், உதவிப்பணிப்பாளர் ரு.கே.பி.எம்.எஸ்.பெரேரா,
வடிவேல், திருமதி இராஜேஸ்வரி பூரீகாந்த்,
கருணானந்தராஜா,
டமைபுரியும்
திரு.பி.ஜெகதீஸ்வரன்
ழைப்பிற்கு
: :

Page 89


Page 90