கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமரர் இராமலிங்கம் (நினைவு மலர்)

Page 1

வாழ்க்கை வரலாறு கிரியைகள் (தொகுப்பு)

Page 2

சின் அமரர் திரு.
O ன்னத்தம்பி இராமலிங்கம்
நினைவுமலர்

Page 3

L) = }
(5.
|× \,\! |
参
·|N
}
உயர்தி பி இராமலி
gLOTIT
Lh
திதிவெண்பா
சீராரும் விய வருடம் சேர் கார்த்திகை பூர்வ சாராரும் திதி ஏகாதசியில் - நேராரும்
豪 参见 N
N}参
ண்ணத்த
1938. Ti T23
சொல்லரியபுகழ் இராமலிங்கம் சிவன்பாதம் எல்லவரும் கலங்க ஏகினான் காண்.
சி
பிறப்பு

Page 4
参见参见T\
| W
参 | |- N
|-
() |!
·\参见参见} WN参见\\
 

\,
|

Page 5
  

Page 6
வாழ்வு இனிதெனினும் வரவுகள் அளவுதான் இந்நாட்டின் வன்முறையால் வசதியீனங்கள் பலப்பல கஷ்டங்கள் பலவந்து காணாததெல்லாம் கண்டபோதும் மனம் கலங்காமல் நிதானமாய் இருந்து வாழ்ந்தவன்.
பிள்ளைகள் மூன்றைப் பெற்றெடுத்து வெறுமனே வளர்க்காது சின்னக் குழந்தைக்கும் தனித்துவம் இருக்குதென்ற தத்துவம் அறிந்தவன் தானும் குழந்தையாய் என்றுமே தோழனாய் தாங்கி வளர்த்தான் தன் மக்கள் மூன்றையும்.
உற்ற துணையவள் நோயுற்ற வேளையில் ஒன்றா இரண்டா அளவிலா சேவைகள் அவளுக்குச் செய்தனன். பிள்ளைகள் யாவருக்கும் பொறுப்பதை கொடுக்காமல் எல்லாம் அவனே ஏற்று நடத்தினான்
அன்னை அவளும் சிவன் அடிசேர்ந்த பின்னாலே தாயாயும் ஆகிவிட்டான் தன்குழந்தைகளிற்கு d சமைப்பது முதற்கொண்டு சட்டை அலசுவதுவரை அனைத்தையும் செய்தான் அதை இப்படியும் சொன்னான் "இறைவழிபாடென்பது இனிய குடும்ப ஒழுக்கம் இவைகளை செய்வேன் எனி என்குடும்பந்தான் என் கோவில்"
பிள்ளைகள் காதலித்தால் பேயாக மாறும் பெற்றோர் ஆனால் பிள்ளைகளை நம்பி அவர்களின் உளமறிந்து தானே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தான். எப்போதும் சொல்லுவான் "எதுவும் எம் கையிலில்லை எல்லாம் அம்மாளாச்சி பார்ப்பாளென்று" நடந்தபின் தான் நாமுணர்ந்த உண்மையது. அவருக்கோ எல்லாம் "அன்னை" அம்மையின் அருள்தான் எல்லாம்.
பேரப்பிள்ளைகள் பிறந்தன வம்சமும் வாழ வழியும் பிறந்தது கடமைகள் அனைத்தும் கறையற முடித்தவன் இனிய உறவுகளை சற்று எண்ணிப்பார்த்தான். ஒருக்கால் அவர்களை ஒருமுறை பார்ப்பமென்று யாழ்ப்பாணம் சென்றான் தேடித்தேடி எங்கும் திரிந்தலைந்து காண நினைத்த உறவுகள் அனைத்தையும் கண்டு கழித்தான் "கண்ணிர்மல் கி கழைத்தேன் என்றான்"

இன்னும் சிலர் இலங்கையில் இல்லையென்று கடல் எல்லை தாண்டி கனடா, லண்டன் சென்றான். இவர்களெல்லாம் இருக்கிறார்களென்று எஞ்சி இருக்கும் தன் குடும்பத்திற்கு இனங்காட்டி மட்டுமன்றி இறுதி விருப்பாக எல்லோரையும் கண்டான்.
பயணம் முடிகையிலே பலருக்கும் சொல்லியுள்ளான் நான் பாரினில் வந்த அலுவல் அத்தனையும் முடிந்தது பார்க்க வேண்டியதுவும் பார்த்து மகிழ்ந்தேன் எனி பாடையில் போய் ஈசன் பாதமடைவதுதான் எஞ்சியுள்ளதென்றான்
எதிரிகள் இல்லாமல் இறந்தவரில் இவனும் ஒருவன் வேதங்கள், பகவத்கீதை, நம்முன்னோர் சொன்னதுபோல் பிறந்தான் வாழ்வாங்கு வாழ்ந்தான் பிறந்த நோக்கத்தை பிறழ்வற முடித்தான் இருந்த ஒரீராசை இனிதே முடித்தான் மரணபயமது மருந்துக்கும் இல்லாமல் நடந்து திரியும் போதே நற்சாவு பெற்றான்"
மனிதனாக வாழ்ந்தாலும் அவனில் சில அதிசய சக்திகள் ஆழத்தில் இருந்தன. உண்மையோ என்னமோ "அன்றை சக்தி தன் முன் ஆடக் கண்ட துண்டாம்" கண்விழித்தே அதைத் தான் கண்டு கழித்ததுண்டாம்.
பெண்ணுரு ஒன்று தன்னை பலகாலம் அழைத்துச் சென்று இருட்டினில் கூட இவன் முன் வழி காட்டி நின்றதாம் தூக்க வியாதியென்று சிலரதை சொல்லியது முண்டாம்.
தன் அப்பன் இறந்தபின்னர் தனக்கு மூத்த மகன் பிறந்த போது பட்டப்பகலில் அப்பனின் உருவம் ஒருமுறை அம்மாவை பார்த்துச் சென்றதாம்.
என்ன அதிசயமோ இவனுர் சிவன் கோவில் சிவனின் பெயர் இராமலிங்கம் அம்மை பெயர் சுலோஜனாதேவி இவன் துணையும் அதே நாமம்தான்.

Page 7
தந்தை பெரியாரின் சிந்தனைதான் தன்னை சமைத்து மனிதனாய் ஆக்கியது என்பார்.
பிள்ளைகள் எவரும் எப்போது திருமணம் பெறுவர் என்பதை முன்பே சொன்னான். ஸ்கானிங்கில் பார்க்க முன்னமே பேரப்பிள்ளைகள் ஆணா பெண்ணா என்று சொன்னான்.
அவன் துணை இறந்துபின் அவனை பல தடவை வாருமென்று அழைத்ததாம் தான் அலுவல் முடிந்ததும் வருவேனென்றானாம். இதை ஒருமுறை அவர் கடைசி மகளும் கண்டதுண்மை. எட்டு மாதத்தில் இறந்தாலும் இறப்பேனேன்று தம்பி ஒருவருக்கு தன்விதி கூறி வைத்தான்.
மகனிடமும் மற்று சில பிறருடனும் தான் எனி எப்போதும் இறக்க ஆயத்தம் என்று இறுமாப்பாய் சொல்லியுள்ளான். தன் இறுதிக்காலம் திருமலை மண்ணில் தானென அங்கே தகனமுமாகிவிட்டான்.
பூரண வாழ்வென்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

3
இராமலிங்கம் சாதித்தவைகளில் சில
SSE பரீட்சையில் 17 பாடங்களில் சித்திபெற்றது. (சமஸ்கிருதம்
உட்பட)
மும்மொழி பெயர்ப்பாளரானது. (சிங்களம், ஆங்கிலம், தமிழ்)
இலிகிதராக இருந்து நீதிமன்ற பதிவாளராக பதவி உயர்ந்தது.
சமாதான நீதவானாக (Whole island) நியமனம் பெற்றது.
மாகாணசபை நிதிப்பிரிவின் நிர்வாக உத்தியோகத்தராக பணியாற்றியது. அறுபது அகவையின் பின் கல்விகற்று பிரசித்த நொத்தாரிசு ஆக வெற்றிபெற்றது.
6)JLáÉSupĠ5635 DIT BT60OT Deciplinary Inquiry officer egyéb JÉ6uuuD60Tb பெற்றது.
பதிவு பெற்ற ஏலவிற்பனையாளராக நியமிக்கப்பட்டது.
தொழிநுட்பக்கல்லூரி மாணவர் தலைவராக இருந்தது.
கதிர்காம தொண்டர் சபையில் பணியாற்றியது.
பாணந்துறை முருகன் கோவில், கபிதாவத்தை முருகன் கோவில் சபைகளில் பணியாற்றியது.
ஏறத்தாழ திருகோணமலை நகர் கோயில்களான திருக்கோணேஸ்வரம், சிவன் கோவில், விநாயகர் கோவில் மற்றும் பல கோவில்கள் சபைகளின் அங்கத்தவராக இருந்ததுடன் பலகாலமாக இருந்துவந்த பல பிணக்குகளை, பிரச்சினைகளை தீர்க்க முனைந்ததும் வெற்றிகண்டதும்.

Page 8
அப்பா
உன்னை விட ஒரு சிறந்த அப்பாவை நான் பலதடவை ஒப்பிட்டுப்பார்த்தும் பெறமுடியவில்லை. உன் மரணத்தின் பின் எள்ளளவாகிலும் ஏதாவது எமக்குச் செய்யாமல் விட்டதாகவோ அன்று நாங்கள் உமக்கு செய்யாது விட்டதாகவோ எதுவும் இருப்பதாக ஞாபகத்திற்கு வரவில்லை. அறிவு சொல்கிறது அப்பா நீ பூரணமாக வாழ்ந்து வந்த அலுவலை முடித்து மரணிக்கத் தோதான ஊசி முனை புள்ளியான காலத்தில்தான் காலனுடன் சென்றாயென்று. ஆனால் மனம் நாம் மண்ணுலகு நீங்கும்வரை எம் ஒவ்வொரு அசைவிலும் உன்னை ஞாபகப்படுத்தி அழவைக்கத்தான் செய்கிறது.
குமரன், கெளரி மீனா
வாழ்க்கைத்துணை பிள்ளைகளாக வந்ததும் எமக்கும் இப்படியொரு மனிதரை சந்திக்கக் கிடைத்ததில் அப்படியொரு திருப்தி.
நான் சந்தித்த சாதாரண நல்ல மனிதர்களை விட நீங்கள் எமக்கு மிக நெருக்கமாக வந்தீர்கள். இந்த வயதுகளிலும் எம்மை கட்டியணைத்து உரிமை பாராட்டும் உங்களின் அன்பின் ஆழம் அனுபவித்த அரைகுறையில் ஆவிசென்றதே.
சிலர் பேச்சுக்குத்தான் சொல்வார்கள் எம் மாமனார் எம்மைப் பிள்ளைபோல் பார்க்கிறார் என்று ஆனால் நீங்கள் எம் தந்தையாக தானாகவே எம்மை தத்தெடுத்து மிக நீண்ட நாட்களாகின்றன.
எது எப்படியோ இப்படியான ஓர் அபூர்வப்பிரவி எமக்கு மாமனாரானது நாம் செய்த புண்ணியம்.
வினித்தா, கிரி ஆனந்

அப்பப்பா
அவர்களின் பரம்பரைக்காக நாங்கள் என்றீர் என் அப்பா அடிக்கடி ஏங்குவது போல் எமக்கும் அப்பப்பா அப்பம்மா இல்லாமலே போய்விட்டது. நீங்கள் நேசித்த இந்த மண், மொழி, சமயம் இன்றும் எல்லாவற்றையும் நாடும் நேசிக்கக் கற்றுக்கொள்கிறோம். அடுத்த பிறப்புகளில் நீங்கள் எம் அருகினில் வரக்கிடைத்தால் வாருங்கள் உங்கள் ஆன்மா ஆனந்தப்படுமளவிற்கு உம்பேரை எடுத்துச் செல்வோம்.
ஈஸ்வர். அமிதேஷா,ஆதேஷா
அப்புச்சி
எமக்கு உலகத்தில் முதல் எது தெரியுமென்று கேட்டால் நான் அப்புச்சி என்பேன் ஏனென்றால் எனக்குத் தெரிந்ததெல்லாம் அப்பு காட்டிய உலகம்தான். கருவறை குழந்தைபோல் நான் சுவாசித்தது வாழ்ந்தது உதைத்தது விளையாடியது ரசித்தது எல்லாம் அப்பு என்ற அம்மாவைதான் என்னைக் கண்ட பின்பும் கூட நீங்கள் அசையாது படுத்திருந்த போதே எனக்குப் புரிந்துவிட்டது ஏனென்றால் நான் உம்முடன் சரீரத்தால் மட்டுமல்ல ஆன்மாவாலும் பின்னிப் பிணைந்தவன். என் வயதிற்கு இவையெல்லாம் எனி மறந்துவிடும்தான் ஆனாலும் நான் அடித்துச் சொல்லுகிறேன் என்னைவிட்டு உமக்கு இருக்கமுடியாது அடுத்தபிறப்பில் விரைவில் என் அருகில் வருவாய் அதுவரை காத்திருப்பேன். நீங்கள் கற்பித்ததுபோல் நல்ல பிள்ளையாக,
பிரித்வி, பிரணவன்

Page 9
சகோதரன் புலம்பல்
நெஞ்சில் வஞ்சமில்லாத பழகஇனிய பண்பாளன் பாங்காக எவரோடும் உறவாடும் உளதிலத்தோன் தான் என் அண்ணன் இட்ட பணி அத்தனையும் ஒப்பிலாத் திறமையுடன்
ஆற்றி அழகுறவே பெருமை பெற நின்ற அண்ணன் போனானே அவனென்று இனும் நெஞ்சம் நோகின்றது. அலுவலக நண்பர்களும் அயலவரும் மற்றவரும் ஆசையுடன் ராம் என்றே பாசமுடன் பழகி நின்றனர் எல்லோரையும் கலங்கவைத்து அண்ணா நீ சென்றிரோ
உனை வரித்து
உயிர் தனைக் கொடுத்து என்னவெல்லாம் செய்தாள் மலர்க்கொடியாள் சுலோசனா தேவியவள் அண்ணியைத் தேடி அண்ணா நீ சென்றிரோ தந்தை தாய் இல்லா எனக்கு தாயினும் மேலாக என்னைத் தாங்கிய எம் அண்ணன் எம்மை விட்டு ஏன் சென்றீர்? என்ன சொல்லி என்ன பயன் எல்லாம் முடிந்த பின்னர் வல்லோமா நாம் இறை எழுத்தை மாற்ற நன்றாக நாமுணர்ந்தும் உளவலியோ மாறாது அண்ணா நீ வாழ்வாய் எமதுள்ளத்தினில் எப்போதும் மீண்டும் உன்னைக் காணும் வரை சிவனுலகில் நீ இருப்பாய்
தம்பி

சகோதரி புலம்பல்
அன்பு நிறைந்த சகோதரனே ஆசை வைத்து உம்மை ஆதரித்தோம் எம்துயர் அகற்றி நின்றாய் இனிய வார்த்தைகள் பல பேசிடுவாய் நாமிருக்குமிடம் தேடி வந்திடுவாய் அண்ணன் என அழைத்து நாமருகில் வந்திருந்திடுவோம் - முத்தான வாய் திறந்து மொழிகள் பல கூறுவீர் என் குழந்தைகட்கு நல்ல வரன்களைத் தான் அமைத்து கண்ணை இமை காப்பது போல காத்து வந்த என் அண்ணனே! இத்தரையில் நீங்கிடவே - இவ் உலகை நீத்தகன்ற எம் அண்ணனே! பித்தானோம்! பேதையானோம்! பாதி வழியில் எமைத் தவிக்கவிட்டு ஏன் சென்றீர்.
தங்கை முத்தம்மா
பெறாமகள் புலம்பல்
அன்பெனும் உரம் கொண்டு என்னைத் தன் சொந்தப்பிள்ளை போலப் பேணிய பெரியப்பாவே! உம் அன்பினுள் வாழ்ந்த அந்தப் பசுமையான நாட்கள் தான் எத்தனை? ஆற்றாமையால் நானிருக்கும் போதெல்லாம் உங்கள் ஆறுதல் வார்த்தை தான் எனக்குத் துணையிருக்கும். என் வரனைக் கூட நீங்கள் பாராமல் சென்ற தேனோ? இப்போ என்னை விட்டுச் சென்றதாலே.
என் பேனா கூட

Page 10
விக்கித்து நிற்கின்றது இருக்கின்ற சொற்ப துளிகளால் உம் ஆத்மாவிற்காக வரைந்த வரிகள் தான் இவை.
பெறாமகள்
பெற்ற மைந்தரிலும் பெருமையாக பிள்ளைகளென பாசத்தால் வளர்த் தெடுத்து பாசமுடன் நேசம் காட்டி பாரினில் சிறந்து விளங்க நல்லொழுக்கமும் நல்லறிவுமூட்டிய எம் பெரியப்பாவே! அல்லும் பகலும் உங்களோடு கலந்து பேசி மகிழ்ந்தோமே கணக்கற்ற கருமங்கள் இருந்தாலும் எம்முடன் பேசாமல் இருந்ததில்லை எம் இனிய பெரியப்பா நாளும் பொழுதெல்லாம் கவலையை சுமக்கின்றோம் நாம் ஏன் இந்தக் கொடுமை இதனை எனி யாரிடம் தான் கூறுவது எல்லாமே கனவாகிப் போனதே பெரியப்பா!
பெறாமகன்மார்

ஜோதி ஒளி அணைந்தது
யாழ்/ஆவரங்காலைச் சேர்ந்த அமரர் சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள் நாம் வசித்த சுண்டிக்குளி கிராமத்தின் அண்மைக்கிராமம் கொழும்புத்துறை (சிவயோக சுவாமிகள் வாழ்ந்த இடம்)யில் திருமணம் செய்தவர். இதன் பயனாக குமரன், கெளரி, மீனா எனும் மூன்று செல்வங்களைப் பெற்றார். தாயார் மறைந்ததுக்குப்பின் தானே தந்தையாகவும் தாயாகவும் இருந்து மூவரையும் செம்மையாக வளர்த்து நல்ல கல்வியையும் கற்றுக் கொடுத்தார்.
1995இல் தனது மனைவியின் சகோதரி பபாவை எமது மகன் ஞானிக்குத் திருமணஞ்செய்து வைத்தார். இதனால் எங்கள் உறவு பலவகைகளிலும் சிறப்படைந்தது. குடும்ப உறவினரானோம். தனது மூத்த மகன் சட்டத்தரணி செந்தில்குமரனுக்கு எமது இளைய மகள் சட்டத்தரணி வினித்தாவை திருமணம் செய்து வைத்தார்.
இருபக்க உறவுகளால் இருகுடும்பங்களும் மிக நெருக்கமாக வாழ்ந்தோம். 5 பேரச் செல்வங்களையும் கண்டு ஆனந்தப்பட்டிருக்கும் போது அவரது திடீர் மறைவினால் அதிர்ச்சியடைந்தோம்.
அமரர். இராமலிங்கம் அவர்களுக்கு தம்பு துரைராசா குடும்பத்தினரின் கண்ணிர் அஞ்சலிகள். அவரது குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் உறவினர்கள் பிரிவுத்துயரிலிருந்து மீளவும் நாம் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
"திருவாசகம்" (சம்பந்தி) 31 A ஜானகிலேன் தம்புதுரைராசா குடும்பத்தினர் பம்பலப்பிட்டி, கொழும்பு -04
தொ.பே. 4515042

Page 11
மைத்துனரின் பிரிவால் வாடும் சுசீலாதேவியின் (பயா) இரங்கல் செய்தி
நான் விபரம் அறிந்த நாள் முதல் என் மூத்த சகோதரியை மணந்தாலும் ஏழு வயது நிரம்பிய என்னை தனது பிள்ளையாக எண்ணி எனக்கு அன்னைக்கு அன்னையாய் தந்தைக்கு தந்தையாய் இருந்தார் என்று சொன்னால் மிகையாகாது. அவருடைய அன்புச் செல்வங்களாகிய குமரன், கெளரி, மீனா இவர்களுடன் நானும் அவருக்கு ஒரு பிள்ளையாகத்தான் இருந்தேன். அவருடைய அன்பும் பண்பும் பழக்க வழக்கமும் மற்றவரை நேசிக்கின்ற பெரும் குணமும் நான் எவரிடமுமே கண்டதில்லை. கோபமென்பதே என்னவென்று அறியாத ஜீவன் அந்த ஜீவன். பிறருக்கு உதவி சேவை செய்வதையே தனது தொழிலாகக் கொண்டிருந்தார்.
அவர் நீதிமன்ற பதிவாளராக தொழில் புரிந்த இடங்களில் எல்லாம் அந்த அந்த நீதிமன்ற நீதிபதிகளின் அன்புக்கு உரியவராகவும் தனது சக ஊழியர்களின் அபிமான நண்பராகவும் இருந்தார். தனது நீதிமன்ற பதிவுகளெல்லாவற்றையும் மனப்பாடமாக அவர் கொண்டிருந்தது அவர் தனது தொழிலில் வைத்திருந்த பக்தியையும் கடமை உணர்வையும் காட்டுகிறது.
எனது சகோதரி சுலோசனாதேவியை அவர் மணம் புரிந்த நாள் முதல் ஒவ்வொரு குடும்ப விவகாரங்களிலும் எவ்வளவு பொறுமையை கையாண்டு அவற்றை சுமூகமாக தீர்த்து வைத்தார் என்பது எனக்குத்தான் தெரியும். அவர் எங்கள் குடும்பத்திற்காகவே வாழ்ந்தார் என்று சொல்ல வேண்டும். எனது சகோதரியின் பிரிவுக்கு பின்பு கடந்த பத்து வருடங்களாக தனது மூன்று பிள்ளைகளையும் தானே தனித்து நின்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து தாய் இல்லையென்ற குறையே இல்லாமல் செய்தார்.
தனது இறுதி நாட்கள் வந்துவிட்டது என்று அறிந்தோ பத்து வருடங்களுக்கு மேலாக காணாத என்னை காணவேண்டி கனடா வந்து தன் மனத்திலிருந்தவை எல்லாவற்றையும் மனம் திறந்து பேசி கனடாவிலும் இங்கிலாந்திலுமுள்ள தன் சொந்த பந்தங்களை நண்பர்களை கண்டு களித்துச் சென்றார்.
அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்.
சுசீலாதேவி (பபா)
d5 6.0L

திரு.இராமலிங்கத்தின் மறைவால் சகலனாய் மருமகனாய் வாடும் ஞானதரன் (ஞானி)
இருவருக் கிடையிலே வழமையாக ஒரு வகையான உறவு முறையே இருப்பது வழக்கம். ஆனால் என்னைப்பொறுத்தமட்டில் அவருடைய மனைவி சுலோசனாதேவியின் சகோதரி சுசீலாதேவி (பயா) அவர்களை திருமணம் புரிந்ததன் மூலம் அவருக்கு சகலன் ஆனேன் பின்பு அவரின் மகன் செந்தில்குமரன் எனது தங்கை வினித்தாவை மணம் புரிந்ததன் மூலம் அவருக்கு மருமகன் ஆனேன். ஆனால் எனது தங்கை அவரின் மகனை மணந்ததன் மூலம் முறைப்படி மாமனானாலும் அவர் எனது மனைவி பபாவை தனது மகளாக நினைத்து அன்பு பாசம் காட்டி வளர்த்து வந்த காரணத்தால் என் திருமணத்திலிருந்தே அவரை என் மாமனாகவே ஏற்றுக்கொண்டு கெளரவித்து வந்தேன்.
என் திருமணத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவரை நான் அறிந்திருக்கின்றேன் அவரோடு நன்கு பழகியிருக்கின்றேன். தொழில் ரீதியாக அவருடைய கடைமை கண்ணியம் கட்டுப்பாடு குடும்ப ரீதியாக அவருடைய அன்பு பாசம் பொறுமையை நான் எவரிடமுமே கண்டதில்லை.
உறவு என்னும்போது எல்லோரையும் தன் குடும்ப அங்கத்தவ. ராகவே பார்ப்பார் கவனிப்பார். பொறுமை சலிப்புத் தன்மை நிதானம் செயற்திறன் இவை எல்லாமே அவருக்கு சொந்தமானது. எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை புதியனவற்றை வரவேற்கின்ற அவரது சுபாவம். குடும்ப வாழ்க்கையை சீராக வழி நடத்த அவரது வாழ்க்கை முறையைப் பின்பற்றலாம்.
அவருடன் நான் இறுதியாக நடத்தி தொலைபேசி உரையாடல். அவர் : எப்படி இருக்கறையள்? நான் : ஒம் ஓம் சுகமா இருக்கிறன் அவர் : பொடியள் என்ன செய்யிறாங்கள்? நான் : அவங்களுக்கென்னத்தான் ராஜா வீட்டுப்பிள்ளையஸ் (பபா அத்தான் என்று அழைப்பதால் நானும் அப்படியே அழைப்பேன்) அவர் : சிரிப்பு (நான் கேட்ட அவரது இறுதிச் சிரிப்பு) அவங்கள் வளந்திட்டாங்கள் நீங்களும் கொஞ்சம் அனுசரிச்சுப்போங்கோ.
நான் : ஒம் ஓம் அத்தான்

Page 12
இவை என்னுடன் அவர் பேசிய இறுதிப்பேச்சு. நான் அறிய அவர் என்னிடம் எதையும் வேண்டுமென்று கேட்டதில்லை. இதை அதை செய்யுங்கோ என்று சொன்னதுமில்லை. மிக உன்னதமானவர் இழந்துவிட்டோம்.
அவர் கனடா வந்திருந்தபோது இறுதியாக விமான நிலையத்திற்குப் புறப்பட வாகனத்தில் ஏறுகையில் இந்த மண்ணை தொட்டு வணங்கி நீங்கள் புண்ணியம் செய்த பூமியில் இருக்கிறியள் என்றார் எனக்கு மெய்சிலிர்த்துப்போனது. இங்கு வந்து தன் உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் தன்னுடன் தொழில் புரிந்தவர்களையும் சந்தித்த மகிழ்ச்சியிலே இந்த மண்ணைத்தொட்டு வணங்கி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
ரோறொன்ரோ விமானநிலையத்தில் எம்மை விட்டு பிரியும்போது எங்கள் பார்வைக்கு தெரியுமட்டும் கையசைத்து அவர் சென்ற காட்சி எமது பார்வையிலிருந்து மட்டுமே அவர் மறைந்து சென்றாரே தவிர எமது மனதில் என்றும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பார்.
ஆயினும் கிடைக்கற்கரிய ஒரு அன்பை இழந்த இதய சுமையுடன் தங்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டி நிற்கும் -
ஞானதரன் (ஞானி)
d560 IT

நல்லார் வழிவந்தவல்லார்
சிவபூமி என்னும் சிறப்புடைய ஈழவளநாட்டில் சிரசு போலத் திகழ்வது யாழ்ப்பாணம் அதில் வளமெல்லாம் மலிந்து பொருந்துமூர் ஆவரங்கால் அங்கு ஆதி சைவ வேளான்குல மரபினனாய் நடராச இராமலிங்கேஸ்வரரின் தொண்டினை சிரமேற் கொண்டு பணிபுரிந்த சின்னத்தம்பி வள்ளியம்மையின் தவப்பயனாக அவதரித்தவர்தான் திருவாளர் இராமலிங்கம் அவர்கள். அவர் கல்வியின் சிறந்து விளங்கி பல பதவிகளை வகித்து தன் குடும்பத்திற்கு ஊருக்கும் நற்பெயர் தந்து வையத்துள் வாழ்வாங்கு வாழந்து வானுறையும் தெய்வத்தினடி சேர எல்லாம் வல்ல பர்வதபத்தினி சமேத நடராச இராமலிங்கப் பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
சுபமஸ்து மங்களம்
பிரதிஷ்டாவித்தகர் பிரம்மவேநடராசக் குருக்கள்
சிவன் தேவஸ்தானம் ஆவரங்கால்
புத்துர் முநீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத் தலைவரும் அகில இலங்கைச் சமாதான நீதவானுமாகிய திரு.வ.ஆறுமுகம் அவர்கள் வழங்கிய இரங்கல் செய்தி
எங்கள் ஊரவரும் எங்கள் கல்லூரி அன்னையின் மாண்புமிகு தவப் புதல்வர்களுள் ஒருவருமாகிய திரு.சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை ஏற்பதற்கு இன்றும் என்நெஞ்சம் மறுக்கிறது.
சின்னவயது முதலே என்னோடு அன்பாகப் பழகிப் பண்பட்ட நெஞ்சம். ஊரவர் என்ற வாஞ்சையுடன் தழுவும் இதயம். எப்படி என்னால் இச்செய்தியை ஏற்க முடியும்?
மாவட்ட நீதிமன்றில் பதிவாளராகவும், வடக்கு கிழக்கு மாகாணசபையில் நிர்வாக உத்தியோகத்தராகவும், பிரசித்த நொத்தாரிசுவாகவும் மக்களுக்குச் சேவை செய்வதில்

Page 13
இன்பங்கண்டவராக அமரர் சின்னத்தம்பி, இராமலிங்கம் விளங்கினார்.
பாடசாலைக் காலங்களில் துடிப்பான மாணவனாக எதையும் ஆய்ந்தறிய வேண்டும் என்ற உளப்பாங்கு கொண்டவராக வாழ்ந்தார். இவ்வியல்புகளால் வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்றார். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய பாடங்களில் அந்நாட்களில் திறமைச்சித்தி பெற்ற ஒருவராக இவர் விளங்கினார்.
ஒருவரது ஆளுமையின் அதீத வெளிப்பாட்டுக்கு மொழிப்பாண்டித்தியமும் ஒரு காரணமாகும். நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தமையால் எல்லோரிடத்திலும் மரியாதை கலந்த அன்பைப் பெற்றிருந்தார். தனது மொழிப்பாண்டித்தியத்தால் சமூகத்தவர் யாவருக்கும் தன்னாலியன்ற சேவைகளைச் செம்மையாக வழங்கினார்.
எமது கல்லூரி முன்னேற்றம் பற்றியும் கிராம முன்னேற்றம் பற்றியும் அவரிடம் அதிக ஆர்வம் இருந்தது. பொது வைபவங்களில் என்னைச் சந்திக்கும் வேளைகளில் எல்லாம் இத்தகைய துறைசார்ந்த செய்திகளையே பரிமாறிக் கொள்வார்.
ஊருக்கு உழைத்த உத்தமராக வாழ்ந்து அம்பலக் கூத்தனின் அடிகளைத் தழுவிய அமரர் இராமலிங்கத்தின் ஆன்மா
சாந்தியடையவும் அவரை இழந்து தவிக்கும் இதயங்கள் ஆறுதல் பெறவும் நடராஜ இராமலிங்க சுவாமியின் பாதங்களைச் சேவிக்கிறேன்.
திரு.வ.ஆறுமுகம்

“உள்ளும் புறமும் ஆனந்தமானவர் அமரர் திரு.சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள்
சிவஞான போதத்தில் இந்நிலை மிகவும் மேன்மைப்படுத்தி எடுத்துரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அண்மையில் காலஞ்சென்ற ஒய்வுபெற்ற நீதிமன்றப் பதிவாளர் திரு.சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள் இவ்வியல்புக்கு உதாரணமாவர்.
இவர் அகங்காரம், அபிமானம், ஆடம்பரம் போன்ற உணர்வுகள் அற்றவர். இவைகள் மூன்றும் சேவைப் பணிக்குச் சிறிதும் லாயக்கற்றவை என எண்ணம் கொண்டவர். அகங்காரத்தினால் மனித உணர்வையே மதிக்கத்தவறும் மனிதர்களும் உண்டு. இவர் இதற்கும் புறம்பானவர். மனித நேயத்தை நேசித்தவர். அகங்காரம் ஓங்கி நிற்கும் ஒருவரில் தன்னம்பிக்கை தாரைவார்க்கப்பட்டுவிடுகிறது. இந்த யதார்த்தத்தையும் நன்கு புரிந்து கொண்டவர். அத்துடன் ஆடம்பரத்துக்கு சமாதி கட்டியவருமாவர். அபிமானம் என்னும் தேவையற்ற பற்றுதல் நிலை நீக்கி, ஒற்றுமை உணர்வைக் கடைப்பிடித்தவர்.
தனது சேவைப்பணியில் தூய்மையுடனும், துணிவுடனும் மிளிர்ந்தவர். எண்ணத்திலும், தூய்மை உடையவர். மேலும் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமான நிலையில் ஏற்கும் சுபாவமுடையவர். இவற்றை இவ்வாறு கூறுவதற்கு எனக்குத் தகுதியுண்டு. இவர் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் கடமை பார்க்கும்போது, அவ்விடத்தில் சட்டத்தரணியாகத் தொழில் பார்த்து வந்ததோடு, எனது கிராமத்தைச் சேர்ந்தவரும், சிறுபராயத்திலும், இடைநிலைக்காலங்களிலும் ஒரே இடத்தில் கல்வி கற்ற, ஒரே வயதினராவோம்.
இவர் முதலில் பாணந்துறை நீதிமன்றத்திற்கு லிகிதராக நியமிக்கப்பட்டு, சில வருடங்களின் பின், மாத்தளை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவ்விடம் கடமை பார்க்கும்போதே திருமணம் நிச்சயமாகியது. அந்நேரம் இவரின் மனைவியின் தந்தை செழிப்பான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. பின்பு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டார். அதன் பின்பு யாழ்ப்பாணம் மாவட்ட நீதி மன்றத்திற்கு வந்து சேர்ந்தார். அவ்விடத்தில் ஐந்து, ஆறு வருடங்கள், முக்கியமானவையும், சிக்கல் நிறைந்ததுமான தத்துவ வழக்குகள், கடன் முறி வழக்குகள் - கையாளும் லிகிதராக இருந்து,

Page 14
நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக இருந்த காலஞ்சென்ற திரு.கே.பாலக்கிட்டணர் அவர்கள், இவரின் சேவைத் திறமையை அவதானித்து, இவரைப் பதில் உதவிப் பதிவாளராகச் சிபார்சு செய்திருந்தார்கள். இந்தச் சிபார்சைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றிற்கு உதவிப் பதிவாளராக நிரந்தர நியமனம் பெற்று அவ்விடம் சென்றார். பின்பு இவ்விடத்திலேயே பதிவாளராக நியமிக்கப்பட்டார். மிகவும் குறுகிய காலத்திற்குள். இப்பதவிக்கு உயர்ந்தவர்களில் இவரும் ஒருவராவர் என்பது நோக்கற்பாலது. இவ்விடம் பதிவாளராகச் சேவையிலிருக்கும்போதே, நொத்தாரிஸ் தொழிலுக்கான பரீட்சையை எடுத்து, அதில் சித்தி பெற்று, பதிவாளராக ஒய்வு எடுத்துக்கொண்டபின், அவ்விடத்திலேயே பிரசித்த கொத்தாரிஸ் ஆகத் தொழில் பார்த்தார். இவர் மிகவும் அண்மைக்காலத்தில் அமெரிக்கக் கண்டத்திற்குச் சென்று தனது உறவினர்களைச் சந்தித்து வந்து, அந்தப் பூரிப்பில் திளைத்திருக்கும் காலை, தனது இயற்கையான கண்டத்தையும் சந்தித்துக் கொண்டார்.
மனித வாழ்க்கை ஜஸ்கட்டி போன்றது, ஒவ்வொரு தினமும் இது உருகிக் கொண்டே செல்கிறது. இது முழுமையாகக் கரையும் முன்பு, எங்களது கடமைகளைச் செய்து முடித்துவிடவேண்டும். இதற்கு ஒப்ப, திரு.இராமலிங்கம் அவர்கள் தனது மூன்று பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கொடுத்தும், அவர்களை மணவாழ்க்கையில் மாண்புற வைத்தும், பேரப்பிள்ளைத் தூக்கி மகிழ்ந்தும் சகல மனநிறைவோடு, கிறிஸ்து மத பைபிள் நூலில் கூறிய கால எல்லைக்குள் நிம்மதியான நிரந்தர ஒய்வு பெற்றுக் கொண்டார்கள்.
அமரர் திரு. இராமலிங்கம் அவர்களது பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனதும், எனது குடும்பத்தாரினதும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஓம் சாந்தி
சதா லோகேஸ்வரன்
(சட்டத்தரணி)
புத்தூர் முன்னாள் வலிகாமம் கிழக்குப்
2-12-2006 பல்கலைக்கழகம்)

கணிணிரஞ்சலி.
இராமலிங்கம் ஐயா இராமலிங்கம் ஐயா இராமலிங்கு ஏன் போனிர் ஐயா வராத துன்பங்கள் எல்லாம் - உம்மிடம் வந்துற்ற போதினில் எல்லாம் கலங்காது நின்றிட்ட கர்மவீரனே காலனைக் கண்டு கலந்து போனதேனோ? கலங்கரை விளக்கமாய் நின்ற காவலனே கரை தெரியாது கலங்கிறோம் நாங்களே!
"ரெஸ்ர மென்ரரி" ராமலிங்க மென்றார் "ரெஜிஸ்ரார்" ராமலிங்க மென்றார் - தன் இஸ்ரம் போல் இயங்குபவ ரென்றார் இனியெப்படி அழைப்போமுமை இறைவா
வழக்குரைஞர் தமக்கெல்லாம் தன்கையால் வழக்குரையை தான்வரைந்து கொடுப்பான் அழாக்குறையாய் வந்துறும் அபலையர்க் கெலாம் அபயமாய் அவனங்கு அடைக்கலங் கொடுப்பான் உழவுத் தொழிலையுமே உத்தமமாய் போற்றி தன் சிறிய வயதுமுதல் செய்தே வந்தவன் அழகுதேவதை போல் அன்பு மனையாளை அடைந்தின்பங்கண்டு இல்லறங் காத்தவன்.
இரு கண்களாய் இரு புதல்விகளோடும் இதயமொன்று போல் ஒருமகன் தன்னோடும் பெருமின்பமாய் பெரும்பேறு பெற்றென்றும் பெருவாழ்வு வாழ்ந்திட்ட பெற்றியனே நீதித்துறை யதனில் நின்காலம் முழுதும் நீதியாய் கடமையை செய்திட்டாயே நீதித்துறை யதனில் நின்னுடன் பணியாற்றியோர்க்கு நீ யென்றும் குருவாய் நின்றிட்டாயே

Page 15
நீதித்துறை யதற்கு நின்பணி போதாதென்று நின்மகன் குமரன் தன்னையும் நீதித்துறை யதற்கு நீதி உரைத்து நிற்க சட்டத்தரணி ஆக்கி சாதனை புரிந்தாயே
அன்பரே உங்கள் ஆத்மா என்றும் ஆண்டவனின் காலடியில் ஆறுதல் பெற்று இன்பமாய் என்றும் வீற்றிருந்து இனியெமக்கு நல்வழி புகட்டட்டும்.
- பிரிவுத்துயர் தாளாது பிதற்றி நிற்கும் - நிலாவெளி தர்மகுலராசா குடும்பத்தினர். திருக்கோணமலை இராதா கமலச்சந்திரன் குடும்பத்தினர்.

உடல்கூற்று வண்ணம்
ஒருமட மாதும் ஒருவனும் ஆகி இன்பசுகம்தரும் அன்பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து
பனியில் ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து புதுந்து திரண்ட பதும அரும்பி கமடம் இதென்று பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமுமாகி உயிர்வளர்மாதம் ஒன்பது மூன்றும் நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து
மகளிர் சேனை தரவணையாடை மண்பட உந்தி உதைந்து கவிழ்ந்து மடமை கொங்கை அமுதம் அருந்தி ஓரிறிவு ஈரறிவு ஆகிவளர்ந்து
ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து வாஇரு போவென நாமம்விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆடஉண்பவர் தின்பவர் தங்களோடு உண்டு தெருவில் இருந்துபுழுதி அளைந்து தேடிய பாலரொடு ஒடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குருஉபதேசம் முத்தமிழின்கலையுங் கரைகண்டு வளர்பிறை என்றுபலரும் விளம்ப வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை கொண்டை புனைந்து மணிபொன் இலங்குபணிகள் அணிந்து மாகதர் போகதர் கூடிவணங்க

Page 16
மதனசொரூபன் இவன்என மோக மட்கையர்கண்டு மருண்டு திரண்டு வரிவிழிகொண்டு சுழியளறிந்து மாமயில்போல் அவர்போவது கண்டு
மனதுபொறாமல் அவர்பிறகோடி மங்கல செங்கல சந்திகம் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு தேடிய மாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும் வம்பில் இழந்து மதனசுகந்த விதனம் இதென்று வாலிப கோலமும் வேறு பிரிந்து
வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்துஇரு கண்கல் இருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து வாதவிரோத குரோதம் அடைந்து செங்கையினில் ஒர்தடியும் ஆகியே
வருவது போவது ஒரு முதுகூனும் மந்தியெனும்படி குந்திநடந்து மதியுமழிந்து செவிதிமிர்வந்து வாயறியாமல் விடாமல் மொழிந்து
துயில்வரும் நேரம்இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும் உலர்ந்துவறண்டு துகிலும் இழந்துதணையும் அழிந்து தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
கலியுகமீதில் இவர்மரியாதை கண்டிடும் என்பவர் கஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசம்வந்து கால்வழி மேல்வழி சாரநடந்து
தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும் அலைந்து மருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து
மறையவன் வேதம் எழுதியவாறு வந்தகண்டமும் என்றுதெளிந்து இனிஎன - கண்டம் இனியென தொந்தம் மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன்முறை பேசும்என உரைநாவுறங்கி விழுந்துகை கொண்டுமொழிந்து கடைவழிக்கஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலு சுவாசமும் நின்று நெஞ்சு தடுமாறி வரும்நேரமே.
வளர்பிறைபோல எயிறும் உரோமமும் சடையும்கிறு குஞ்சியும்விஞ்ச மனதும்இருண்ட வடிவும் இலங்க மாமலைபோல் யமதூதர்கள் வந்து
வலைகொடுவீசி உயிர்கொடுபோக மைந்தரும்வந்து குனிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவிபுலம்ப மாழ்கினரே இவர்காலம் அறிந்து
பழையவர் காணும் எனுமயலாலர்கள் பஞ்சுபறந்திட
நின்றவர்பந்தர் இடுமென வந்து பறையிடமுந்த வேபிணம்வேக விசாரியும் என்று
பலரையும்ஏவி முதியவர் தாமிருந்த சவம்கழுவும் சிலரென்று பணிதுகில்தொங்கல் களபமணிந்து பாவகமே செய்து நாறும் உடம்பை
வரிசை கெடாமல் எடுமெனஓடி வந்திளமைந்தர் குனிந்துசுமந்து கடுகிங்டந்து சுடலை அடைந்து மானிடவாழ்வென வாழ்வெனநொந்து
விறகிடைமூடி அழல்கொடுபோட வெந்துவிழுந்து முறிந்துரிணங்கள் உருகிஎரும்பு கருகிஅடக்கி ஒர்பிடிநீறும் இல்லாதஉடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே.

Page 17
நிஜம்
என் பெற்ற தாயாரு மென்னைப் பிணமென் றிகழ்ந்து விட்டார் பொன் பெற்ற மாதரும் போமென்று சொல்லி புலம்பி விட்டார் கொன் பெற்ற மைந்தரும்பின் வலம்வந்து குடமுடைத்தார் உன் பற்றொழிய ஒரு பற்றுமில்லையுடையவனே
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவர் வெண்கலம் கவிழ்ந்த போது வேணுமென்று பேணுவர் நம் கலம் கவிந்தபோது நாறுமென்று போடுவர் என்கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே
முதற் சங்கமுதுரட்டு மெய் குழலாராசை நடுச்சங்க நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்க மாம்போ ததுவூது மம்மட்டோ விம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த காலம்
எட்டு காலன் வருமுன்னே கண்பஞ்சடைமுன்னே பாலுண்கடைவாய் படுமுன்னே - மேல் விழுந்தே உற்றா ரழமுன்னே ஊரார் அடுமுன்னே குற்றாலத் தாணையே கூறு
இருப்பது பொய் போவது மெய் யென்றெண்ணி நெஞ்சே யொருத் தருக்குத் திங்கினை யுன்னதே - பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க நாய் நரிகள் பேய்க் கழுகு தம் மதென தாமிருக்குந் தான்.
-
மாடிமனை செல்வமும் மனைவி மக்கள் மகிழவே மாட மாளிகைப் புறத்தில் வாழ்கின்ற நாளிளே ஓடி வந்த காலதூதன் சடுதியாக மோதவே உயிர் பிரிந்து உடல் கிடந்து உண்மை கண்டும் உணர்கிலிர்.
விண்கடந்து நின்றசோதி மேலைவாசலைத் திறந்து கண்களிக்கு உள்ளே கலந்துபுக்யிருந்தபின் மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்து போய் எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பதும் உண்மையே.

இந்த உடல் காயம் இறந்து விடு இவ் உலகில் வந்த வழி தானறியா வாழ்க்கை - இந்த உடல் அற்பக் குழியிலரவ மிருப்பதெனும் கற்பகத்தை யாண்டிடுமோ காண்
வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டு விடப் பொதிந்தவன் மொழி கோட்டிலையோ செய்த புண்ணியத்தால், ஆதித்தன் சந்திரன் போலே வெளிச் சடம் ஆகும் பொழுது காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே
அன்றுதான் அன்னையுங் தந்தையுங் கூடியே அனுபவிப்பதும் சஞ்சலம் அங்கொரு ஜெலத்துளி தறிப்பதுஞ் சஞ்சலம் தறித்துப்பின் ஆதலானதுஞ் சஞ்சலம் பெண்ணையும் மண்ணையும் விரும்புவதுஞ் சஞ்சலம் பெண்டிலாதிருப்பதுஞ் சஞ்சலம் பெற்ற மகளில்லாதிருப்பதுஞ் சஞ்சலம் பெற்றபின்புஞ் சஞ்சலம் எண்ணரிய திரவியம் தேடியுஞ் சஞ்சலம் தேடாதிருப்பதுஞ் சஞ்சலம் என்றுதான் சஞ்சலம் ஒழிந்து யான் உன் திருவடிக்காளாவனே விண்ணவர் தொழங்கருணை வள்ளி தெய்வானையுடன் வாழு மயிலேறியே வரவேண்டு மெந்தனருகே,
-கண்டசுத்தி.

Page 18
இந்து மதம் பதிலளிக்கிறது
ஆத்மா அழிவில்லாதது என்று சொல்லுகிறோம். அது முற்பிறவியில் நம்முடன் இருந்து, இந்தப் பிறவியிலும் நம்முடைய உடலில் இருப்பது, ஆனால் முற்பிறவியைப் பற்றி நாம் உணர முடிவதில்லையே? இது ஏன்?
முற்பிறவி என்று நாம் நினைப்பது என்ன? இதற்கு முந்தைய ஒரு பிறவியை மட்டும்தான். ஆனால், அந்த ஒரு பிறவிதான் நமக்கு உரியதா? அதற்கு முன்னால் நூற்றுக்கணக்கான பிறவிகளை நாம் எடுத்திருக்கிறோம். அவை எல்லாமே இந்தப் பிறவிக்கு முன்னால் அமைந்தவைதான். அவற்றைப் பற்றிய நினைவு நமக்கு இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? இந்த ஒரு பிறவியில் நாம் நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுபவர்களையும், தீங்கு செய்பவர்களையும், குறுக்கிடுபவர்களையும் சமாளிப்பது போதாதா? முற்பிறவியில் நமக்கு மனைவியாக இருந்த ஒரு பெண் இன்று வேறொருவனின் காதலியாக
நடந்ததை ஒருபோதும் நினைக்காதீர்கள். இன்றைய மனோவியாதிகள் பலவற்றுக்கும் டாக்டர்கள், நடந்துபோன ஒன்றின் பின்னணியைத்தான் அடிப்படையாகக் குறிப்பிடுகிறார்கள். சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் வாழ்நாள் முழுவதும் நமக்கு நினைவில் இருக்கிறது அதற்குப் பிறகு அதே சூழ்நிலையில் நிகழ்ந்தாலும், நம்முடைய மனம் அன்று நடந்ததையே நினைத்துப் பயப்படும்; சஞ்சலத்துக்கு உள்ளாகும். எவ்வளவோ விதமான உணவுகளைச் சாப்பிட்டு ஜீரணித்து, உடலை வளர்த்துக் கொள்ளுகிறோம். ஆனால் என்னென்ன சாப்பிட்டோம் என்று அப்புறம் எங்கே நினைக்கிறோம்? பலவிதமான புத்தகங்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளுகிறோம். ஆனால் அதற்குப் பிறகு அதை எழுதியவர் யார் என்றோ, எங்கே எந்தப் புத்தகத்தில் அதைப் படித்தோம் என்றோ, நாம் நினைத்துக் கொண்டே இருப்பது உண்டா? கடந்த பல பிறவிகளின் அனுபவங்கள் யாவும் சேர்ந்த தொகுப்புதான் இந்தப் பிறவி. அதை வைத்துக் கொண்டு இதற்குமேல் முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும். வந்த வழியையே நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.
ஆத்மா சூரியனைப் போன்றது. கடந்த பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகச் சூரியன் ஒளிவீசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தைப் பற்றிய சரித்திரத்தைப் பற்றி அதனிடம் கேட்க

முடியுமா? அதைப் போல, ஆத்மா நமது கடந்த பிறவியின் அனுபவங்களையெல்லாம் உணர்ந்த ஒன்றுதான். ஆயினும், அது கடந்தகாலத்தைப் பற்றி நமக்கு உணர்த்தும் என்று நாம்-எதிர்பார்க்க முடியாது. இந்தப் பிறவியில் முன்னேற நினையுங்கள். கடந்ததைப் பற்றிய நினைவுகளின் சுமை நம்மை அழுத்தித் தடுக்க இடம் கொடுக்காதீர்கள்.
-சுவாமி சின்மயானந்தர்
(சின்மயானந்தரின் கேள்வி - பதில்கள் என்ற சின்மயா யுவ கேந்திரா வெளியீட்டிலிருந்து)
을
தர்ப்பணம் செய்து வாழைக்காய், அரிசி ஆகியவற்றேயோ, சாப்பாட்டையோ, என் கண் முன்னால் இருக்கும் ஒருவனுக்கு அளிக்கிறேன். அதை அவன் சமைத்தோ, அப்படியே சாப்பிட்டோ அனுபவித்து விடுகிறான். அப்படி இருக்க இங்கே உள்ள இந்தப் பொருள் பித்ருக்களுக்குப் போய்ச் சேருவதாகச் சொல்லுவதை எப்படி ஏற்பது?
ஒருவர் தனது பையனைப்பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவன், பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டி இருந்தது. உடனே அப்பாவுக்கு, "தந்தி மணிஓரிடத்தில் பணம் அனுப்பு!" என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணிஓடரும் வெவ்வேறு என்பது தெரியும். பிள்ளையோ தந்தி மணிஓடர் அனுப்பும்படி எழுதி இருந்தான். அப்பா தபாலாபிசுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்து விட்டுத் தந்தி மணிஓடர் பண்ண வேண்டும் என்றார். அவர் தபாலாபிஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணிக் கம்பியில் கட்டி அனுப்பிவிடுவார் என்று எண்ணினார். ஆனால் அந்தக் குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, 'சரி, உம்முடைய பணம் போய்ச் சேர்ந்து விடும். ரசீது கொடுத்தாகி விட்டது" என்றார். குமாஸ்தா பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டதையும், ரூபாயை ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்த்து விடாமல் இருப்பதையும் பார்த்த அப்பா, "என்னுடைய பணம் இங்கேதானே இருக்கிறது? அதை நீர் கோர்த்து அனுப்பவில்லையே?" என்று கேட்டார். "அது போய்ச் சேர்ந்துவிடும்." என்று குமாஸ்தா சொன்னார். மறுபடியும் தொடர்ந்து 'கட்டுக் கடகட' என்று தந்தியும் தொடர்ந்து, "ஏதோ லொட்டு லொட்டென்று தட்டுகிறார். பணம் இங்கேயே இருக்கிறது. இது எப்படிப் போய்ச் சேரும்!" என சந்தேகப்பட்டுக் கொண்டே போனார் அப்பா. ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது!

Page 19
தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரிதான். நாம் அதைக் கொடுத்தாலும் அதற்குரிய சட்டப்படி கொடுத்தால், அது போய்ச் சோந்துவிடும். சாஸ்திரம் என்கிற சட்டப்படி நாம் கொடுக்கும்போது பிதுர்தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அவர்களுக்குச் சேர்த்துவிடுவார்கள். தேவதைகளுக்குப் பரமேசுவரன் இப்படி உத்தரவு பண்ணி அதற்கான சக்தியையம் கொடுத்திருக்கிறான். அதுமட்டும் அல்ல. வெளிநாட்டில் கொடுக்கப்பட வேண்டிய பவுண் அல்லது டாலரை நாம் இங்கே கொடுக்க முடியாது. ரூபாவாகத்தான் கொடுக்க முடியும். அதேபோலச் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட, எள், வாழைக்காய் ஆகியவற்றை இங்கே தந்தால், பிதுருக்கள் இருக்குமிடத்தில் அது அவர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.
ஜகத்குரு று காஞ்சி காமகோடி பூரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ஆத்மீக வாழ்க்கை
சிந்தனையாளர் - பிளேட்டோ
ஆத்மாவின் வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து விடுவதில்லை உறங்குவது போல் சாக்காடு கண் விழிப்பது போல் பிறப்பு ஒன்றில் இருந்து தான் ஒன்று தொடங்கிறது. ஆத்மா மறு உலகத்துக்குச் சென்று இந்த உலகில் பெற்ற பண்புகளுக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு பரிசோ தண்டனையோ பெற்று அழிவற்ற தன்மையோடு இணைகிறது. அல்லது மறு பிறப்பு அடைகிறது.
மனித வாழ்க்கையில் உடல் விவகாரங்களில் விளையாட்டு ஒரு சிறு அங்கம்தான். இந்த அழியக்கூடிய மண் உலகிலிருந்து அழிவற்றதும் தெய்வீகமாயுமுள்ள விண்ணுலகுக்குச் செல்லும் யாத்திரை. தான் மனிதனின் வாழ்க்கை. இந்த யாத்திரையில் தோழர்களாய் வந்தவையும் ஐம்புலன் உணர்ச்சிகளை நம்பக் கூடாது. மாறுதலில்லாத நித்திய உண்மைகளை மனம் ஒன்றுதான் ஆராய்ந்து அறியும். அந்த அறிவின் வழித் துணை குணப்பண்பின் வழியில் ஒழுக்கமான வாழ்க்கையாகும். அறிவையும், பண்பொலுக்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. அறிவும் ஒழுக்கமும் விழுப்பம் தரும். ஆகவே வாழ்க்கை முழுவதிலும் அறிவையும் பண்பையும் தேடி மனிதன் நற்கதி பெற முயல வேண்டும்.

ஆத்மா அழிவற்றது. அழிவற்ற ஒன்றோடு இணையவே விரும்புகிறது. சத்தியம் தான் நமது ஆத்ம தாகம் மெய்யறிவுதான் அதன் பாதை. ஆனால் உடல் அதற்கொரு தடையாகவும் சின்றயாகவும் இருக்கிறது. பசி, பயம், துக்கம், காமம், பாபம், நோய் இன்னும் பலவிதமான மனோ பாவங்களை நம் உடலானது ஆத்மாவிற்குள் நிரம்பி நமது அறிவை குழப்பிச் சிந்தனா சக்தியை சிதைத்து விடுகிறது.
உடலுக்கு அப்பாலிருந்து எதையும் ஆத்மா ஆராய வேண்டும். உடலை ஒரு சிருஷ்டிக் கருவியாக ஆத்மா உபயோகப்படுத்தும் போது ஐம்புலன் உணர்ச்சிகளின் வழியாக வழி தவறி நடத்திச் செல்லப்படுகிறது. ஆத்மா குழம்பிக் குடி போதை கொள்ளுகிறது. ஆனால் ஆத்மா தன்னையே உணரும் போது அது அழிவற்ற தன்மையோடு இரண்டறக் கலந்து விடுகிறது அந்த நிலைதான் ஆத்மாவின்,
ஞானமாகும். - -
ஆத்மா அழிவற்றதாகையாலே அது உன்னதமான பண்பையும் ஞானத்தையும் பெற்றாலொழிய அதற்குத் தீமைகளிலிருந்து விடுதலையோ நிவாரணமோ இல்லை. ஆத்மா இந்த உலகத்தை விட்டு மறு உலகத்திற்கு செல்லும் போது தன் பயிற்சியையும் கல்வியையும் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்வதில்லை.
அநுக்கிரகம் : நீ ஒவ்வொரு வினாடியும் இருப்பதற்கு இறைவன்
அளிக்கின்ற வாய்ப்பு
கடவுள் : உன்னிடம் இயக்கமாய் இருக்கின்ற நிலையே அவன்
dibl6)6H
LJTUub : மனிதன் இனிமேல் செய்ய இருக்கின்ற சுயநலத்தின்
எதிரொலி
புண்ணியம் : செய்கையின் அநுபவம்
துக்கம் : அறியாமையில் நீநினைக்கின்ற நினைப்பு
கவிழ்டம் : திறமையின்மையால் உனக்கு ஏற்படுகின்ற சோர்வு
ஆனந்தம் : திருப்தியை தெரிந்து கொள்கின்ற நிலை
மரணம் ; உன்னையே மதிக்காத ஒரு செயல்
பிறவி : இறைவனை அறிகின்ற நிலை
م. |

Page 20
விண்ணுலக வாழ்க்கை பற்றியும்
மரணத்ஒதப்போல சிறந்த பரிசு வேறொன்றும் கிடையாது. ஐரஐம் என்பதை மறைவு என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் இல்லாமல் போவதில்லை நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து வாழ்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களின் ஆத்ம சாந்திக்காக நீாம் பிரார்த்தனை செய்தல் வேண்டும் இதனையே பிதிர்க்கடன் என்றும் பித்ருகாரியம் என்று கூறுகிறார்க்ள்.
நமது மதத்தில் பித்ரு காரியத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் காரணம் எந்த ஒரு ஆத்மாவும் மேலும் முன்னேற வேண்டும் நல்ல கதி அடைய வேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு அமைத்தார்கள்.
எந்த ஒரு ஆத்மாவும் சூசுஷ்மமாக இருக்கும் இந்த ஒரு வருட காலத்தில் தன்னுடைய ஆத்மீக முன்னேற்றத்துக் குத் தானே தடையாக இருக்காது ஸ்துலமாக இருக்கும் போது அந்த ஆம்மாவால் செய்ய முடியாமல் போன் எந்த ஒரு காரியத்தையும் நாம் செய்து அதன் பலனை இந்த ஒரு வருடகாலத்தில் அவ்ஆத்மாவிற்கு ஆத்மீக முன்னேற்றம் கிட்டும் ஒரு ஆத்மா ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்தவுடன் ஆறு மணி நேரத்துக்கு எந்தவிதமான உணர்வும் இன்றி ஒரு மயக்க நிலையில் இருக்கும் ஆகையினால் ஒரு ஆத்மா பிரிந்தவுடன் ஸ்துல உடலை ஆறுமணி நேரத்திற்கு முன்பாகத் தகனம் செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆறுமணி நேரம் ஆனவுடன் சூக்ஷம தேகத்துக்கும் ஸ்தூல தேகத்துக்கும் இடையே உள்ள நூல் அறுபடுகிறது அதன் பின்னரே அந்த சூசுஷ்ம உடலோடு எழும்புகின்றது.
சாதாரணமாக ஒரு ஆத்மா ஸ்தூல உடலை விட்டுத்தான் பிரிந்து விட்டோம் ஸ்தூல உடலை உகுத்து விட்டோம் என்ற ஞானத்தைப் பெறுவதற்கே எட்டு நாட்களாகின்றன அந்த ஞானம் வந்ததும் அதற்கு ஒரு அவா தோன்றும்.
கடைசி காலத்தில் எதையாவது விரும்பி செய்ய முடியாமல் கோயிருந்தாலோ நாம் அவ் ஆத்மாவுக்கு எதையாவது செய்ய நினைத்து முடியாமல் போயிருந்தாலோ இரு சாராரின் அவாவும் இந்த எட்டாம் நாள் காரியம் எட்டுச் செலவு செய்யும் போது தீர்க்கப்படுகின்றது. பல இடங்களில் ஆங்காங்கு உள்ள வழக்கத்தின்படி பத்தாம் நாள் பன்னிரண்டாவது நாள் இக்காரியத்தை

செய்வதுண்டு. ஆயினும் இக்காரியத்தை எட்டாம் நாள்தான் செய்ய வேண்டும். அன்று அந்த ஆத்மா விரும்பிய உண்ட உணவு வகைகள் விரும்பிப் பாவித்த பொருட்கள் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். உணவை யாராவது ஏழைக்குத் தானமாக கொடுக்க வேண்டும். பொருட்களை அந்த ஆத்மாவின் ஞாபகார்த்தமாக நாம் வைத்துக் கொள்ளலாம். அந்தி கருகுகின்ற வேளையில்தான் இப் பூஜா காரியம் செய்ய வேண்டும் என்றொரு கருத்து நிலவுவதுண்டு. உள்ளபடி மதியத்தில்தான் செய்ய வேண்டும். இப்பூஜை செய்யும் போது மூன்று செவ்விளநீரின் மேல் எலும்மிச்சபழ தீபமேற்றி வழிபட்டால். அந்த ஆத்மாவின் பலவிதமான தாகங்களும் தாபங்களும் அந்த எட்டாம் நாளில் தீர்ந்து விடுகிறது. பதினாறாவது நாளில் அந்த ஆத்மாவுக்கு ஸ்தூல உடலை உடுத்த அனுபவ உணர்வு பரிபூரணமாக ஏற்படும்.
பூரீ முத்துக்கிருஷ்ண ஸ்வாமிகளின் உரையிலிருந்து சிலகுறிப்புகள்
\ \ \;

Page 21
சமயக் கிரியைகள்
பூர்வக் கிரியை
ஆன்மார்த்தக் கிரியையின் ஒரு பகுதியாகிய பூர்வக் கிரியையை ஆராய்வோம். ஒருயிர் தாயின் கருப்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுவதாகிய பூர்வக்கிரியை, இருது சங்கமனம், கருப்பாதானம், பும்சவனம், சீமந்தம், ஜாதகருமம், கர்ணவேதனம், உத்தாபனம், நாமகரணம், உபநிஷ்கிரமணம், அன்னப்பிராசனம், பிண்ட வர்த்தனம். செளளம், வித்தியாரம்பம், உபநயனம், காண்டோபகரணம், காண்டமோசனம், சமாவர்த்தனம், விவாகம், தீகூைடி, சந்தியாவந்தனம், சிவபூசை, சிவாசிரமம் என்னும் பிரிவுகளையுடையதாகும்.
இந்தப் பூர்வக் கிரியைகளுக்கு அங்கமாக அவற்றிற்கு முதலில் செய்யப்படும் கிரியைகளும் சிலவுள. அவை: சங்கல்பம், விநாயகபூசை, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்வியம், மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், காப்புக் கட்டுதல், நாந்திமுகம், நவக்கிரகசாந்தி, அக்கினிமுகம், வாஸ்து சாந்தி என்பனவாம்.
பூர்வக் கிரியைகளுக்கு அங்கமாகச் செய்யப்படும் இக்கிரியைகளைப் பற்றி முதலில் கூறிவிட்டு, அதன்பின்னர் பூர்வக் கிரியைகளை முன்னர்க் காட்டியுள்ள முறைப்படி கூறுவது பொருத்தமாகும்.
விநாயக பூசை
சகல மங்கள காரியங்களும் இடையூறின்றி இனிது நிறைவேறும் பொருட்டு, விக்கினங்களை நீக்கும் விநாயகரைப்பூசை செய்து வேண்டுதல் செய்வது சைவ மரபாகும். சாணம் மஞ்சல் சந்தனம் இவைகளுள் ஒன்றினால் விநாயக லிங்கம் அமைத்து முறைப்படி பூசை செய்து தேங்காய் உடைத்து நைவேத்தியம் பண்ணி அருச்சனை செய்து கருப்பூர தீபங் காட்டி வழிபட்டு விநாயகரை வேண்டுதல் செய்து கொள்வது முறையாகும். தேங்காய் உடைத்தலினால்நாம் தொடங்கும் காரியத்தின் பெறுபேற்றை ஒருவாறுணர. லாம். இவ்வாறே தூபத்தினால் சுகப்பேறும், தீபத்தினால் அறிவொளி விளக்கமும் கருப்பூரத்தினால் தற்போதக் கேடும் உளவாமென உண்மையுணர்ந்தோர் உரைப்பர்.
காப்புக் கட்டுதல்
இது தொடங்குங்காரியம் நிறைவேறும் வரையும் இடையூறு இல்லாமல் இருத்தற் பொருட்டு நூல் முதலியவைகளால் காவலாகக் கை மணிக்கட்டில் கட்டிக் கொள்வதாகும். நூல் முதலியவற்றாலான காப்பில் திரியம்பக
மந்திரத்தையும் ஆன்மவித்தியா சிவதத்துவங்களையும் பூசை செய்து ஆடவர் வலக்கையிலும் மகளிர் இடக்கையிலும் கட்டுவித்தல் வேண்டும்.

நவக்கிரக சாந்தி
உயிர்கள் செய்த கரும பலங்களை இறைவனாணையால் அவ்வுயிர்களுக்கு ஊட்டுபவர்கள், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன். வெள்ளி, சனி, இராகு, கேது என்னும் ஒன்பது கிரக தேவர்களாகும். ஆதலால் அவர்களை வழிபடுவது அவர்கள் மூலமாய் இறைவனை வழிபடுவதாகி, தீய கரும பலங்கள் ஒரளவு சாந்தியடைவதற்கும், நற்கரும பலங்கள் விருத்தியடைவதற்கும் ஏதுவாகும்.
இருது சங்கனம்
இனி முறையே இருது சங்கமனம் முதலாகவுள்ள பூர்வக் கிரியைகளைப் பற்றிக் கூறுவாம்.
இருது சங்கமானம் என்பது இருதுவாகிய பெண்ணை விவாகமானவளாயின் முதல் நான்கு நாளும் கழிந்தபின் நல்ல சுபவேளையில் முன்னிரவில் நாயகனுடன் சேர்த்து வைப்பதற்காகச் செய்யும் கிரியையாகும்.
இதற்குமுன் முதல் இருதுவான மாதம், கிழமை, திதி, நக்ஷத்திரம், லக்கினம் என்பவைகளை ஆராய்ந்து அவைகள் சுபமாயின் மிக்க சுபந் தரும். அசுபமாயின் அதற்குச் சாந்தி செய்தல் வேண்டும். சாந்தி செய்யும் பொருட்டு வீட்டு வாயிலில் பந்தலிட்டு மண்டபமமைத்து நடுவில் குடமும் சுற்றிவர கலசங்களும் வைத்து நடுக்குடும்பத்தில் சிவ பெருமானையும் கிழக்கு முதல் எட்டுத் திக்கிலுமுள்ள கும்பங்களில் இந்திரன் முதலிய எட்டுத்திக்கு பாலகர்களையும் பூசை செய்து, கிழக்குத் திக்கில் சிவ மந்திரத்தையும் தெற்கில் அகோர மந்திரத்தையும் மேற்கில் பாசுபதாஸ்திர மந்திரத்தையும் வடக்கில் சிவஸ்திர மந்திரத்தையும் ஐம்பது முறைக்குக் குறையாமல் செபஞ் செய்து பின்னர் முறைப்படி சிவாக்கினியை உண்டாக்கி அதில் சிவபெருமானைப் பூசை செய்து சாந்தியின் பொருட்டு வெண்கடுகு சீந்திற் கொடிவன்னி கருங்காலி நவதானியம் முதலிய ஓமப் பொருள்களை முறைப்படி ஒமஞ் செய்து பூரணாகுதி கொடுத்து உத்தாபனம் பண்ணுக.
பின்னர் இருது ஸ்நானம் செய்து சுத்தமடைந்த பெண்ணை விவாகமானவளாயின் நாயகனுடன் ஒவ்வோராடையுடனும், அன்றாயின் தனியாகவும் ஆசனத்தில் கிழக்கு முகமாக இருக்க வைத்து சிவகும்ப கவசதீர்த்தங்களால் ஸ்நானம் செய்து வைக்குக. இதனால் இருதுகால தோஷங்கள் நீங்கிச் சுபமுண்டாகும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெண்ணை ஆசனத்தில் கிழக்கு முகமாக இருத்திபூர கருமமாகிய நெல் அப்பம் முதலிய பொருள்களை ஆராத்தி செய்து கழித்து முடிவில் ஆலாத்தியெடுத்தல் வழக்கத்தில் நடந்து வருகின்றது. இதுவரை இருதுதோஷ சாந்தியாகும்.
இனி இருது சங்கமனம் செய்யும்போது, இருதுவான பெண் நான்காம் நாளில் ஸ்நானம் செய்தபின், சுபதினசுபமுகூர்த்தத்தில் சிவாக்கினியை

Page 22
யுண்டாக்கி, அதற்கு மேற்குப் பக்கத்தில் நாயகனுடன் கிழக்கு முகமாக இருக்க வைத்து ஆசாரியர் அக்கினியில் சிவத்தைப் பூசை செய்து மூல மந்திரத்தாலும் பதினொரு மந்திரங்களாலும் ஒமஞ் செய்து நாயகனால் நாயகிக்கு விபூதி தாரணஞ் செய்வித்து ஆசீர்வாதம் பண்ணுக, அன்று இரவில் நாயகனும் நாயகியும் பாயசம் புசித்து, மகப்பேற்றைக் குறிக்கோளாகக் கொண்டு சேர்ந்து இன்புறுக.
இருதுவாகி நீராடியபின் பன்னிரண்டு நாட்கள் கருப்பகாலமாகும். இவற்றில் இரட்டை நாளில் ஆணும் ஒற்றை நாளில் பெண்ணும் உண்டாம். அன்றியும் சுக்கிலம் மிகுந்தால் ஆணும் சுரோணிதம் மிகுந்தால் பெண்ணும் கருப்பாசயத்தையடைந்த விந்து வாயுவால் பிரிக்கப்பட்டால் இரட்டைப் பிள்ளையும் உண்டாம்.
இந்த இருது சங்கமனம் என்னும் கிரியை பிராமணர்களுள் ஒரளவு கைக்கொள்ளப்படுகின்றது. மற்றைப் பெரும்பாலானவர்களிடத்தில் இது அவதானிக்கப்படாது போயிற்று. ஆயினும் விவாக தினத்தில் மணமக்கள் சேர்ந்தின்புறுதற்குரிய வேளையைச் சுபமானதாகப் பார்த்துக்கொள்வது அறிவுடைமையாகும்.
சீமந்தம்
இது கப்பவதியின் கூந்தலை உச்சிவகிர்ந்து முடியும்படி செய்யப்படுங் கிரியையாகும். மஞ்சல் குங்குமம் திருமங்கலியந் தரித்திருந்தலால் ஒரு பெண் விவாகமானவள் என்பது அறியப்படுவதுபோல, உச்சிவகிர்ந்து குடுமி முடிதலால் அவள் தாய்மைத் தன்மை அடைந்தவளென்பது அறியப்படும். ஆகவே முற்காலத்தில் மகளிர் உச்சி வகிர்ந்து கூந்தல் முடிதல் பிள்ளைப் பேற்றின் பின்னர்தான் எனத் தெரிகின்றது. சீமந்தம் - உச்சி வகிர்தல்,
கருப்பமடைந்த ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் சுபவேளையில் விக்கினேசுவர பூசை முதலியன செய்து சிவாக்கினியையுண்டாக்கி அகோர மந்திரத்தால் நூற்றெட்டு ஆகுதி செய்க.
சிவாக்கினிக்கு மேற்கே கிழக்கு முகமாக இருக்கும் கருப்பவதியின் நெற்றி முதல் உச்சி வரையும் முட்பன்றி முள்ளினால்ஒம் பரமேசுவர பராய பிரமணேஇருதயாயநம என்று கூந்தலை வகிர்ந்து, பின்னும் தருப்பையினால் ஓம் சர்வயோகாதி கிருதாய வித்தியாதிபாய சிரசே சுவாகா, என்றும் அத்திக் குச்சியால் ஒம் உருத்திராணியை சிகாயை வெளஷடு, என்றும் கோதுமை முனையினர் ஒம் கோப்திரே புருஷாய கவசாய ஹரம் என்றும் உச்சியை வகிர்ந்து பின்பு பன்றிமுள் தருப்பை அத்திக் குச்சு கோதுமை இவைகளைத் தருப்பையால் ஒன்றாகக் கட்டி அதனால், ஒம் தேச தேச சித்துரூபாய நேத்திரத் திரயாய ஹரம் பண் நம என்று உச்சி வகிர்ந்து, அதனை ஓம் பிரதம பிரதம பாசுப தாஸ்திராய அஸ்திராய ஹசம் பட் என்று சிரசின்மேல் வைக்குக.

பின்னர் வஸ்திராபரணங்களால் கருப்பவதியை அலங்கரித்துக் கோதுமை, உழுந்துகளை அரைத்துப் பால், தயிர் நெய் கலந்து மும்முறை குடிப்பித்து,நாயகன்நாயகியின் வயிற்றினைத்தற்புருஷ மந்திரத்தால் தடவி சிவ மூலமந்திரத்தைச் செபிக்குக.
அப்போது தம்பதிகளின் முழந்தாள், கொப்பூழ், மார்பு, நெற்றி, உச்சி என்னும் இடங்களில் சத்தியோசாதம் முதலிய ஐந்து பிரம மந்திரங்களாலும் அறுகு அரிசி இட்டு வாழ்த்தி விபூதி அணிவிக்குக.
இந்தச் சீமந்தம் வரையுமுள்ள கிரியைகள் முதல் கருப்பத்தில் மாத்திரஞ் செய்ய வேண்டியனவாகும். பின்னார்ச்செய்ய வேண்டியனவல்ல.
இதனைப் பிராமணர் மட்டும் ஓரளவு கைக்கொண்டு வருகின்றனர். ஏனையோர் கைவிட்டு விட்டனர். அதுமட்டோ? உச்சி பிரித்துக் கொள்வதற்கும் ஒரு கிரியை செய்யவேண்டுமோ? எனப் பரிகசிப்பாருமாயினர். இனி இக்காலத்தில் உச்சி வகிர்தல் சிறு பிராயத்திலேயே தொடங்கிவிட்டது. ஆண்களிடத்தும் கன்ன உச்சி என்று புகுந்துவிட்டது.
ஜாத கருமம்
இது குழந்தை பிறந்தவுடன் செய்யப்படுவதாகும். பிரசவத்துக்கு முன் அதற்காக அமைத்த இடத்தில் எள்ளுகடுகுச் சூரணத்தை இருதய மந்திரத்தாலிட்டுத் தூபமுண்டாக்கி, அவ்விடத்தில் பிரசவமாது துணை செய்பவள் மருத்துவ மாது என்பவர்களைச் சேர்த்தல் வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் தந்தை ஸ்நானம் செய்து விக்கினேசுவர பூசை முதலியன செய்து சிவாக்கினியையுண்டாக்கிக் காவலின் பொருட்டு அஸ்திர மந்திரத்தால் ஆகுதி செய்து, சிவபெருமானைத் தியானித்துக் கொண்டு வாமதேச மந்திரத்தால் குழந்தையின் முகத்தைப் பார்த்து, அஸ்திர மந்திரத்தால் நாபிக் கொடியை வெட்டி,ஆறு அங்க மந்திரங்களால் குழந்தையைச் சுத்தஞ் செய்து ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களையும் உச்சரித்துக் குழந்தையின் உச்சியை மோந்து, அதன் வலக்காதில் தற்புருட மந்திரத்தைச் செபித்து, தேன், நெய், வெல்லங்களைக் கலந்து பிரம முடிச்சிட்ட தருப்பையுடன் பொற்கரண்டியால் இருதய மந்திரத்தால் பிரசவ மாதினைக் குடிப்பித்து, பூரண கும்பத்தை இருதயத்தால் பூசித்துக் குழந்தையைக் காக்கும்படி வேண்டுதல் செய்துபூரணாகதி கொடுத்து, விபூதி சாத்தி இயன்றதான தருமங்கள் செய்க. மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, ஆகிய நாட்களில் யனங்களைச் சுத்தஞ் செய்க. பத்து இரவு வரையும் அக்கினியைப் பாதுகாத்து அஸ்திர அரி அரமந்திரங்களால் நெய் வெண்கடுககுகளை ஒமஞ் செய்க. இங்ங்ணம் செய்யமுடியாவிடில் சூதக முடிவில் எல்லாவற்றையும் செய்யலாம் இக்கிரியை இப்போது எவராலும் செய்யப்படுவதில்லை.

Page 23
கர்ண வேதனம்
பாலாரிஷ்ட சாந்தியின் பொருட்டும் அழகின் பொருட்டும் செய்யப்படுவதே காது குத்துதலாகும் பத்து, பன்னிரண்டு, பதினாறு, முப்பத்தொன்று என்னும் நாட்களில் சுபவேளையில் காது குத்துக. வேறு காலத்திலும் செய்யலாம். இது இக்காலத்தில் ஆண் குழந்தைகளுக்குச் செய்வது அரிதாய்விட்டது.
நாமகரணம்
இது பெயரிடுதற் பொருட்டுச் செய்யப்படுங் கிரியையாகும். பதினொராம்நாள்முதலான சூதக முடிவாகிய நாட்களில் ஸ்நானஞ்செய்து விக்கினேசுவர பூசை, புண்ணியாகம், சிவகும்ப பூசை, சிவாக்கினி காரியம் என்பவற்றைச் செய்து, சிவமந்திரத்தால் நூற்றெட்டு ஆகுதி செய்து குழந்தைக்கு அறுகு அரிசியிட்டு ஆசீர்வதித்து, ஆண் குழந்தையாயின், மகாதேவன், மகேசுவரன், சங்கரன் விருஷபத்துவசன், சூலபாணி, காமாரி, தேவதேவன், பூரீகண்டன், ஈசுவரன், பார்வதிப் பிரியன் உருத்திரன், சிவன் என்னும் பன்னிரண்டு திருநாமங்களிலொன்றையும், பெண் குழந்தையாயின் அம்பிகை, பார்வதி, கெளரி, பவானி, சுரார்ச்சிதை, தாகூடிாயனி, ஜமவதி, மகாதேவி, அரப்பிரியை, உமை, சிவங்கரி, கிரிஜா என்னும் பன்னிரண்டு திருநாமங்களுளொன்றையும் பெயராக இடுக. அன்றியும் சென்ம நக்ஷத்திரத்துக்குப் பொருத்தமான பெயரையும் வழிபடு தெய்வப் பெயரையும் தம் முன்னோரின் பெயரையும் இடலாம். இது இக்காலத்தில் அரசினரின் பிறப்புப் பதிவுகாரரிடம்பெயர் கொடத்தலளவில் முடிகின்றது. பெரும்பாலும் பெயர்களும் நவீன முறையில் யாதொரு தொடர்புமின்றி அமைகின்றன.
உபநிஷத்கிரமணம்
இது வீட்டிலிருந்து முதலில் குழந்தையை வெளியே கொண்டு செல்வதற்காகச் செய்யப்படுங் கிரியையாகும்.
நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் ஸ்நான சந்தியா வந்தனங்களை முடித்துக் கொண்டு, முன் கூறியவாறு விக்கினேசுவர பூசை முதல் சிவாக்கினி காரியம் வரை செய்து, தந்தை குழந்தையை அலங்கரித்து தற்புருட தந்திரத்தால் உச்சிமோந்து, வீட்டுக்கு வெளியே பசுப்படுக்குமளவான இடத்தை மெழுகி அதன்மேல் நல்ல மணலால் மேடை செய்து அதில் அரசமிலை வைத்து அதன்மீது உருத்திரா நித்தியனைப்பூசை செய்து குழந்தையைப் பாதுகாக்கும்படி வேண்டுதல் செய்க.
பின்னர் நல்ல முகூர்த்தத்தில் தாய் மாமன் குழந்தையை யெடுத்துக்கொண்டு சிவமந்திர ஒலியுடனும் மங்கள வாத்திய ஒலியுடனும் வெளியே கொணர்ந்து தந்தையும், தாயும், இனசனர்களும் சேர்ந்துவர மெல்ல மெல்ல

சிவாலயத்தையடைந்து நந்திக்குப் பின் நின்று நந்திக்குரிய காயத்திரி மந்திரத்தைக் கூறி வணங்கி, மகாதேவரையும்பரிவாரதேவர்களையும் நவக்கிரக தேவர்களையும் வணங்கிக் குழந்தையைப் பாதுகாக்குமாறு வேண்டுதல் செய்து, மெல்ல மெல்ல வீட்டையடைந்து சிவ சூரியன்ன வணங்கி உள்ளே சென்று திருஷ்டிதோஷம் நீங்கும்படி அகோர மந்திரத்தால் நூற்றெட்டாகுதி செய்து விபூதி சாத்தி ஆசீர்வதிக்குக. மூன்றாம் மாதத்தில் சூரியனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும் குழந்தைக்குக் காட்டுதல் வேண்டும். அன்னப் பிராசன காலத்திலாவது இந்த உபநிஷ்கிரமணக் கிரியையைச் செய்யலாம்.
இது இக்காலத்தில் குழந்தையைக் கோயிலுக்குக் கொண்டு போதல் என்ற அளவில் ஒரளவு நடக்கின்றது.
அன்னப்பிராசனம்
இது குழந்தைக்கு முதலில் சோறு ஊட்டும் பொருட்டுச் செய்யப்படும். கிரியையாகும். குழந்தை பிறந்த நாள் முதல் முப்பது நாட்கள் கொண்ட ஆறாம், எட்டாம், பத்தாம், பன்னிரண்டாம் மாதங்களில் ஆண்குழந்தைக்கும். ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம், பதினொராம் மாதங்களில் பெண் குழந்தைக்கும் அன்னப் பிராசனஞ் செய்தல் வேண்டும்.
அன்னப்பிராசனத்துக்குச் சொல்லப்பட்டநல்ல முகூர்த்தத்தில் ஸ்நான சந்தியாவந்தனங்களை முடித்து முன் கூறியவாறு விக்கினேசுவர பூசை முதல் சிவாக்கினி காரியம் வரையும் செய்து நவக்கிரக பூசை செய்து குழந்தையைப் பாதுகாக்குமாறு வேண்டுதல் செய்க. பின்னர் குழந்தையை அலங்கரித்து அக்கினிக்கு மேற்கே கிழக்கு முகமாக இருத்தி, சிவமூல மந்திரத்தாலும். பிரம மந்திரங்களைந்தாலும் நெய்கலந்த பாயாசத்தை இயன்ற அளவு ஓமஞ் செய், சுபமுகூர்த்தம் வந்ததும் சிவபீச மந்திரத்தால் குழந்தைக்குப் பாயசத்தை ஊட்டுக. பின் பூரணாகுதி செய்து விபூதி சாத்தி ஆசீர்வதிக்குக. பெண் குழந்தையாயின் அக்கினி காரியமின்றி மற்றையவற்றைச் செய்க.
இது இக்காலத்தில் கோயிலுக்குக் கொண்டு சென்றோ, அல்லது வீட்டிலோ சுபவேளையில் பால், தயிர், நெய், தேன் சர்க்கரை கலந்த அன்னம் ஊட்டுதல் என்ற அளவில் ஒருவாறு நடந்து வருகின்றது.
வித்தியாரம்பம்
ஐந்தாம் வயதில் கல்வி கற்கத் தொடங்குவதே பெரு வழக்காகும்.
சிலர் இரண்டாம் வயதில் தொடங்குவது நல்லதென்பர். அப்படிக் கொள்வ.
தற்கு இலக்கிய வரலாறுகள் இல்லை. இதனை அக்ஷராரம்பம் வித்தியாரம்பம் என இருவகையாகக் கொள்வர். எழுத்துப் பயிலத் தொடங்குதல் நூல்

Page 24
பயிலத் தொடங்குதல் என்னும் இரண்டும் இணைந்து நிகழ்வனவன்றி வேறாவனவல்ல. கல்வி பயில்வார் சில நாள் விட்டு, மீளத் தொடங்குவதே வித்தியாரம்பம் என்பாருமுளர்.
உத்தராயணத்தில் வித்தியாரம்பத்திற்குக் குறித்த சுப வேளையில் விக்கினேசுவர பூசை, சரசுவதி பூசை செய்து வித்தியாரம்பஞ் செய்தல் வேண்டும். இது இக்காலத்தில் கோயிலிலோ வித்தியாசாலையிலோ செய்யப்படுகின்றது. சிலர் நவராத்திரியில் சரசுவதி பூசை முடிவில் விசயதசமியிலும் வித்தியாரம்பஞ் செய்கின்றனர்.
விவாகம்
இது இல்லற தருமத்தைக் கைக்கொள்வதற்காகத் தகுதியான கன்னிகையை முறைப்படி கைப்பிடிக்கும் பொருட்டுச் செய்யப்படும் கிரியையாகும். விவாகம் எட்டு விதமாகும். அவை: பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசனம் என்பனவாம். பிரமம்: பிரமசரியநிலையிலுள்ள ஒருவனுக்குச் சிவாக்கினி முன் கன்னிகையைத் தத்தம் செய்து கொடுத்தல். பிராசாபத்தியம்: மணமகனின் சுற்றத்தார் பெண் கேட்க மணமகளின் சுற்றத்தார் அதற்குடன்பட்டுக் கன்னிகையை அக்கினி முன் தத்தம் செய்து கொடுத்தல், ஆரிடம்: பசு, எருது என்பவற்றுள் இரண்டையேனும் ஒன்றையேனும் வாங்கிக் கொண்டு கன்னிகையைத் தீமுன் கொடுத்தல். தெய்வம்: வேள்வி முதலிய வழிபாடுகளால் பெற்ற கன்னிகையைத் தீமுன் கொடுத்தல். காந்தருவம் - தலைவனும் தலைவியும் தெய்வ வசத்தால் தனியிடத்தில் சந்தித்துத் தாமே மணந்து கொள்ளுதல். இது இரண்டு மாத எல்லையுள் தந்தை தாயாரால் அறியப்பட்டு முறைப்படி விவாகஞ் செய்து வைக்கப்படல் வேண்டும். ஆசுரம்: சுற்றத்தவர்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுத்துக் கன்னிகையை விவாகஞ் செய்து கொள்வது இராக்கதம் - சுற்றத்தவர்கள் உடன்படாதிருக்க ஒரு கன்னி. கையை வலிதிற் கவர்ந்து சென்று விவாகஞ் செய்து கொள்வது. பைசாசம் - உறங்கிக் கிடப்பவளையும் மதுவால் மயங்கிக் கிடப்பவளையும் கூடுதல். இராக்கத, பைசாச மணங்கள் உயர்குடி மக்கள் செய்யும் மணங்களாக மாட்டா. இவைகளன்றிச் சுயம்வரம், விடை தீவல், வில்வளைத்தல் முதலியவற்றாலும் விவாகம் நடப்பதுண்டு. இவற்றுள் ஒருவகை விவாகமும் சீதனம் கேட்டு வாங்குவனவாக இல்லாதிருத்தல் அவதானிக்கத்தக்கது.
ஆனால் இக்காலத்தில் சீதன மணங்களே மிகுதியாகவுள்ளன. எவ்வளவு சீதனம் மிகுகின்றதோ அந்த மணம் விரைவில் நிறைவேறுகின்றது. விவாகப் பொருத்தம் பிரதானமன்றாக, சீதனப் பொருத்தமே பிரதானமாய் விட்டது. அதனால் அழகும், அறிவும். குணநலங்களுமிருந்தும் சீதனமில்லாத கன்னியர் வாழ்வு பெற முடிகிறதில்லை. இது இக்காலத்தில் விவாகத்திற்கு இடையூறாகவுமுள்ளது.

இனிக் காதல் மணங்களோ ஆண்டுக் கணக்கில் நீண்டு சென்றும் கைகூடாதபோது சாதல் மணங்களாகின்றன. அப்படியாகும்போது ஒன்றை நினைக்க அஃதொழிந்திட்டொன்றாய் வாழ்வு கெடுகின்றது.
இனி இக்காலத்தில் கோயில்களில் விவாகஞ் செய்வது தலையெடுத்திருக்கின்றது. பெண் வீட்டில் அல்லது மாப்பிள்ளை வீட்டில் விவாகம் நடப்பதே இயல்பாகவுள்ளது. ஆலயத்தில் விவாகம் நடந்ததாகப் புராண இதிகாசங்களில் யாண்டும் காணவில்லை. இது கிறிஸ்தவ நடைபற்றியுண்டாயது போலும்.
பண்டைத் தமிழ் மக்களுள் காந்தருவ விவாகமே சிறப்புற்றிருந்ததாயினும் "பொய்யும் வழுவும் புகுந்த பின்னர்-ஐயர் வகுத்தனர் கரணமென்ப" எனத் தொல்காப்பியனார் கூறுமாற்றால் காந்தருவ விவாகத்தில் தவறுகள் உண்டான பின் தந்தை தாயரால் செய்து வைக்கப்படும் கரண விவாகம் உளதாயதெனத் தெரிய வருகின்றது.
விவாகத்தில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும் வழக்கமாகும். சுத்தமாகக் கணிக்கப்பட்ட ஜாதகங்களை அனுபவம் மிகுந்த சோதிடர்கள் பார்த்து நிச்சயிப்பதனால் பெரிதும் நன்மையுண்டாகும். பெண் தருவதாக அழைத்தபோதும், பெண் தருகவென வந்து வேண்டிக்கொண்டபோதும், காதல் விவாகத்திலும், சுயம்வர விவாகத்திலும் கருப்பகாலத்தில் நிச்சயித்துக்கொண்ட விவாகத்திலும், குருவினால் தெய்வத் திருவருளால் நிச்சயிக்கப்பட்ட விவாகத்திலும், மிருகசிரிடம். மகம், சுவாதி. அனுஷம் என்னும் நான்கு நகூடித்திரங்களுளொன்று பிள்ளை அல்லது பெண் நக்ஷத்திரமாயமைந்தபோதும் விவாகப் பொருத்தம் பிரதானமன்று.
தந்தை வழியில் ஏழு தலைமுறைக்குட்பட்டவளும் தாய்வழியில் ஐந்து தலைமுறைக்குட்பட்டவளும் தாய் முறை சகோதரி முறை உள்ளவளும் விவாகஞ் செய்வதற்குரியவளல்லள் மந்திரவாசம் எனப்படும் கூறை பதினான்கு முழநீளமும் அதில் எட்டிலொரு பங்கு அகலமுமுள்ள பட்டோ, பருத்தியோ கொள்ளத்தக்கது. திருமங்கலிய மெனப்படும் தாலி பதினாறு குன்றிமணி எடை முதல் முப்பத்திரண்டு குன்றிமணி எடை வரையான பொன்னால் கணேச வடிவு. தாமரைப்பூ வடிவு, சிவலிங்க வடிவு என்பவற்றுள் ஒரு வடிவாகவும் ஐந்து குண்டுகளும் பக்கத்தில் துவாரமும் உடையதாகவும் இரட்டைப் பொற்சரடோ பட்டுநூற் சரடோ கோத்ததாகவும் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
இனிக் கரண விவாக முறையை நோக்குவோம். நல்லொழுக்கமும், அழகும், செல்வ வாழ்வும், சுத்த குலமும், குற்றமற்ற தாய் தந்தையரும் சகோதரரும் பந்துக்களும் உடைய கன்னிகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

Page 25
நல்ல முகூர்த்தத்தில் ஸ்நான சந்தியாவந்தனங்களை முடித்துக்கொண்டு முன் கூறியுள்ளவாறு சங்கல்பம், விக்கினேசுவர பூசை, புண்ணியாகம், பஞ்சகவ்வியம், காப்புக் கட்டுதல், முளையிடுதல். சிவகும்பபூசை, நவக்கிரக பூசை, சிவாக்கினி காரியம் நாந்திமுகம் என்பன வரையும் செய்து கொண்டு, சிவாக்கினிக்கு மேற்குப் பக்கத்தில் மேடை அமைத்து நெற் பரப்பி ஆசனமமைத்து மணமகனை இடப்பக்கத்திலும் மணமகளை வலப்பக்கத்திலும் கிழக்கு முகமாக இருக்கும்படி செய்க. இருவருக்கும் பஞ்சகவ்வியம் கொடுத்துக் காப்புக் கட்டிய பின்னர் கன்னிகாதானம் செய்பவர் மணமகளை மகேசுவரனாகப் பாவித்துச் சந்தனம். புஷ்பம் முதலிய உபசாரங்களைக் கொடுக்கவும் அதன்பின் இருவருடைய மரபில் பிதா பேரன் பீட்டன் என்பவர்களின் பெயர்களைப் பெண்ணின் மரபு முதலாக எடுத்து மும்முறை முறைப்படி கூறுக. மணமகளின் தந்தையோ, சகோதரனோ, தாய்மாமனோ அல்லது அம்மரபினரில் பிறர் ஒருவரோ கன்னிகாதானம் செய்பவர் மணமகனின் வலக்கையில் மணமகளின் கைகளை வெற்றிலை பாக்கு பொன் என்பவைகளுடன் வைத்து, எனது மரபில் எனதும் எனக்கு முன் பத்து பின் பத்துத் தலைமுறையில் உள்ளவர்களுமான பிதிரர்கள் நித்தியமான சிவலோக வாழ்வு பெறும் பொருட்டும் எல்லா வேள்விகளின் பலன்களும் கிடைக்கும் பொருட்டும் கன்னிகாதானம் என்னும் இப்பெரியதானத்தைச் செய்கின்றேன் என்று கூறிக்கொண்டு தீர்த்த நீரை வார்த்துத் தத்தம் செய்க.
பின்பு யாகேசுவரர்களாகிய உமாமகேசுவரர்களை வணங்கி அனுமதி பெற்று, ஆபரணம், கூறை, தாலி முதலியவைகளைச் சுத்தி செய்து சங்கிதா மந்திரங்களால் சம்பாத ஒமஞ் செய்து, சபையிற் பெரியோர்களால் தொடுவித்து, ஆபரணங்களையும் கூறையையும் கொடுப்பித்து, உமா மகேசுவர மந்திரத்தால் திருமங்கலியத்தைத் தரிப்பித்து, அதன் முடியிலும் மணமகளின் நெற்றியிலும் விபூதிசாத்துவித்து, மாலை அணிவித்து இருவரையும் வலமிடமாக மாறியிருக்கச் செய்து, உமா மகேசுவரர்களாகப் பாவித்து, சிவமூல மந்திரத்தால் நூறாகுதி செய்க.
பின் பால், தயிர், நெய், தேன், சருக்கரை, பழம் கலந்த மதுபர்க்கத்தை உண்பித்து, பூதமோதனமாகிய சாதங் கறிகளைச் சிவகாயத்திரி மந்திரத்தால் தரிசிப்பித்து, ஆசமனஞ் செய்வித்து, இருதய மந்திரத்தால் நூறாகுதி செய்து, இருதய மந்திரத்தால் பசுக்கன்றைத் தரிசிப்பித்து, சிவாக்கினிக்கு வடக்கில் ஏழிடத்தில் இடப்பட்டுள்ள நெல்லின்மீது மணமகன் மணகமகளின் வலக்கையைப் பிடித்துக் கொண்டு ஏழடி நடந்து சென்று, அதனால் மணமகளைத் தன் மரபிற்குரியவளாகச் செய்து, அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மியில் மணமகளின் வலக்காலை இருகைகளாலும் பிடித்தெடுத்து வைத்துச் சிவகாயத்திரி மந்திரத்தால் அம்மி மிதிப்பித்து, அதனால் இல்லற வாழ்க்கையிலுளவாகும். எவ்வித தாக்கங்களையும்

பொறுத்து நிலைக்கும் தன்மை உளதாக்கி, சிவாக்கினியை வலமாகச் சுற்றிவந்து இருவரும் கூப்பிய கைகளால் நெற்பொரியை அக்கினியில் சொரிக. இவ்வாறு நெல்லின்மீது எழடிநடத்தல், அம்மி மிதித்தல், நெற்பொரி சொரிதல் என்பனவற்றை மும்முறை செய்க.
பின் உமா மகேசுவரர்களை வணங்கி, வியோம வியாபி மந்திரத்தால் பிராயச்சித்தமாக நூற்றெட்டு ஆகுதி செய்து பூரணாகுதி கொடுக்குக. ஆசீர்வாதம் அறுகரிசியிட்டு வாழ்த்துதல் முதலியன ஆனபின் மணமகளின் கைகளை வெற்றிலை பாக்கு பொன் என்பவைகளுடன் வைத்து, எனது மரபில் எனதும் எனக்கு முன் பத்து பின் பத்துத் தலைமுறையில் உள்ளவர்களுமான பிதிரர்கள் நித்தியமான சிவலோக வாழ்வு பெறும் பொருட்டும் எல்லா வேள்விகளின் பலன்களும் கிடைக்கும் பொருட்டும் கன்னிகாதானம் என்னும் இப்பெரியதானத்தைச் செய்கின்றேன் என்று கூறிக்கொண்டு தீர்த்த நீரை வார்த்துத் தத்தம் செய்க. பின்பு யாகெசுவரர்களாகிய உமா, மகேசுவரர்களை வணங்கி அனுமதிபெற்று, ஆபரணம், கூறை, தாலி முதலியவைகளைச் சுத்தி செய்து சங்கிதா மந்திரங்களால் சம்பாத ஒமஞ் செய்து, சபையிற் பெரியோர்களால் தொடுவித்து, ஆபரணங்களையும் கூறையையும் கொடுப்பித்து, உமா மகேசுவர மந்திரத்தால் திருமாங்கலியத்தைத் தரிப்பித்து, அதன் முடியிலும் மணமகளின் நெற்றியிலும் விபூதி சாத்துவித்து, மாலை அணிவித்து இருவரையும் வலமிடமாக மாறியிருக்கச் செய்து, உமா மகேசுவரர்களாகப் பாவித்து, சிவமூல மந்திரத்தால் நூறாகுதி செய்க.
பின் பால், தயிர், நெற், தேன். சருக்கரை, பழம் கலந்த மதுபர்க்கத்தை உண்பித்து, பூதமோதனமாகிய சாதங் கறிகளைச் சிவகாயத்திரி மந்திரத்தால் தரிசிப்பித்து, ஆசமனஞ் செய்வித்து, இருதய மந்திரத்தால் நூறாகுதி செய்து, இருதய மந்திரத்தால் பசுக்கன்றைத் தரிசிப்பித்து, சிவாக்கினிக்கு வடக்கில் ஏழிடத்தில் இடப்பட்டுள்ள நெல்லின்மீது மணமகன் மணமகளின் வலக்கையைப் பிடித்துக் கொண்டு ஏழடி நடந்து சென்று, அதனால் மணமகளைத் தன் மரபிற்குரியவளாகச் செய்து, அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மியில் மணமகவின் வலக்காலை இரு கைகளாலும் பிடித்தெடுத்து வைத்துச் சிவகாயத்திரி மந்திரத்தால் அம்மி மிதிப்பித்து, அதனால் இல்லற வாழ்க்கையிலுளவாகும் எவ்வித தாக்கங்களையும் பொறுத்துநிலைக்கும் தன்மை உளதாக்கி, சிவாக்கினியை வலமாகச் சுற்றிவந்து இருவரும் கூப்பிய கைகளால் நெற்பொரியை அக்கினியில் சொரிக. இவ்வாறு நெல்லின்மீது ஏழடி நடத்தல், அம்மி மிதித்தல், நெற்பொரி சொரிதல் என்பனவற்றை மும்முறை செய்க.
பின் உமா மகேசுவரர்களை வணங்கி, வியோம வியாபி மந்திரத்தால் பிராயச்சித்தமாக நூற்றெட்டு ஆகுதிசெய்து பூரணாகுதி கொடுக்குக. ஆசீர்வாதம் அறுகரிசியிட்டு வாழ்த்துதல் முதலியன ஆனபின் மணமகளின்

Page 26
வலக்கையைப் பற்றிக்கொண்டு கிருகப்பிரவேசஞ் செய்க. மூன்றுநாள் வரை காலை மாலைகளில் சங்கிதா மந்திரங்களால் உபாசனை ஒமஞ் செய்க. நான்காம்நாள் எண்ணெயிட்டு ஸ்நானஞ் செய்து, இரவு அருந்ததி தரிசனஞ் செய்து வணங்கிப் பத்தினிக்குப் பதிவிரதா தருமத்தை எடுத்துக் கூறிக் கிருகப் பிரவேசஞ் செய்க. ஐந்தாம் நாள் பத்தினியுடன் தன் மனைக்குச் செல்லுக. இவையனைத்தும் ஒரே நாளில் செய்வது இப்போது பெருவழக்காகவுள்ளது.
திகூைடி
இஃது உபநயனத்தையடுத்துக் கூறலேண்டியதாயினும் மிகவும் விரிவுடைமையாலும் எல்லா வகை மக்களுக்கும் உரியதாதலாலும் இங்கே தனியே கூறவேண்டியதாயிற்று. சைவசமய தீகூைடி பெறதற்குரிய காலம் ஏழு வயது முதல் பதினாறு வயதளவான காலமாகும்.
தீகூைடி என்பது உண்மை அறிவை உபதேசித்துப் பொய்யறிவை நீக்குவதாகும். இத்திகூைடி சைவாகமத்திலேயே மிக விரிவாகக் கூறப்படுவதாகும். இதனாலன்றி வீடுபேறு கிடையாதென்பது சைவாகமத் துணிபாகும். இது வைதிகத்தில் விரசா தீகூைடி, சிரோ விரதம், பாசுபத விரதம், அத்தியாச்சிரமம் என்னும் பெயர்களால் ஓரளவு கூறப்படுகின்றது.
இத்தீகூைடி நிராதார தீகூைடி, சாதார திகூைடி என இருவகைப்படும். நிராதார தீகூைடி சிவபெருமானால் விஞ்ஞான கலர், பிரளயாகலர் என்னும் இருவகை ஆன்மாக்களுக்கும் சகல வர்க்கத்தான்மாக்களுள் அதிதீவிர பக்குவமுடையவர்களுக்கும் தாமே குருமூர்தியா யெழுந்தருளியிருந்து செய்யப்படுவதாகும். மாணிக்கவாசக சுவாமிகள் சகல வர்க்கத்துள் அதிதீவிர பக்குவமுடைய அணுக்கன் தொண்டராதலின் இறைவர் தாமே குருமூர்த்தியாய் வலிய எழுந்தருளி வந்து தீகூைடி செய்தருளியமை அறிக. சாதார தீகூைடி பொதுவான சகல வர்க்கத்தான்மாக்களுக்கு இறைவரால் குருமூர்த்தியை யதிட்டித்து நின்று செய்யப்படுவதாகும். இதுவே சைவ உலகில் மிகுதியாக நிகழ்வதாகும்.
இனி அத்தீகூைடியானது: ஒளத்திரி தீகூைடி, சாம்பவி தீகூைடி, பரிச தீகூைடி, வாசிக தீகூைடி, சாத்திரதீகூைடி, யோக தீகூைடி என ஏழு வகைப்படும்.
ஒளத்திரி தீகூைடியாவது: ஆசாரியன் குண்டம், மண்டலம், அக்கினி முதலியவற்றை அகத்திலோ புறத்திலோ விதிப்படி அமைத்து, ஆகுதி முதலிய கிரியைகளைச் செய்து, சீடனது பாசங்களைக் கெடுத்து, உண்மை அறிவையுண்டாக்கி, அவனை மேல்நிலையடையச் செய்வதாம்.
சாம்பவி தீகூைடியாவது: மாந்திரிகன் தனக்குக் கைவந்த கருடபாவனையினாலே பாம்பு தீண்டப்பட்டவனைப் பார்த்து விடந் தீர்ப்பது போல ஆசாரியன் தனக்குக் கைவந்த சிவோகம் பாவனையினாலே சீடனைப்

பார்த்துப் பாசந் தீர்ப்பதாம். இது சக்ஷ திகூைடி எனவும், விஞ்ஞான தீகூைடி எனவும், நயன தீகூைடி எனவும் சொல்லப்படும்.
பரிச தீகூைடியாவது: பரிசன வேதியினாலே தாமிரம் முதலிய லோகங்களைப் பரிசித்துக் களிம்பை நீக்கிப் பொன்னாக்குவது போல, ஆசாரியன் சிவஹஸ்த பாவனையுற்ற தன்கையை அங்ங்ணம் சிவனது கரமாக அருச்சித்துச் சீடனது சிரசில் வைத்து எங்கும் தடவி மும்மலங்களையும் நீக்கிச் சிவனாக்குவதாம். இது சிவஹஸ்த மத்தக சம்யோசனம் எனவும்படும்.
வாசிக தீகூைடியாவது: சீடனது மரபுக்கும் நிலைக்கும் பொருந்தப் பதினொரு மந்திரங்களயும் பஞ்சாக்கர மந்திரத்தையும் உபதேசிப்பதாம்.
மானச திகூைடியாவது: ஆசாரியன் சீடனது ஆன்மாவைத் தன் இருதயத்திலெழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடத்தில் சேர்த்துச் சுத்தி செய்து, சுத்தி செய்யப்பட்ட சீடனது தேகத்தில் மீளத் தாபிப்பதாம். இது பாவனா தீகூைடி எனவும் பெயர் பெறும்.
சாத்திர தீகூைடியாவது: சைவாகமம் முதலிய சிவ சாத்திரங்களைச் சீடனுக்குப் போதிப்பதாம்.
யோக தீகூைடியாவது: நிராதார சிவயோகத்தைச் சீடனுக்கு அப்பியாசம் செய்து வைப்பதாம்.
இந்த ஏழு வகையான தீகூைடிகளுள் ஒளத்திரி தீகூைடி,யொழிந்த மற்றைய ஆறு தீகூைடிகளும் சீடர்களுள் அவ்வவர் தகுதிக்கேற்றவாறு தனித் தனியாகவும் ஒளத்திரி திகூைடிக்கு அங்கமாகவும் செய்யப்படுவனவாம். அவை ஒவ்வொன்றேயாம். பாகுபாடு உடையனவல்ல.
இனி ஒளத்திரி தீகூைடி ஞானவதி, கிரியாவதி என்றிரு வகைப்படும். அவற்றுள் ஞானவதி; குண்டம், மண்டலம் முதலியவற்றை அகத்தே மனத்தாற் சங்கல்பித்துக் கொண்டு செய்யப்படுவது. இது சத்தி தீகூைடி எனவும் பெயர் பெறும். கிரியாவது: குண்டம், மண்டலம் முதலியவற்றைப் புறத்தே அமைத்துக் கொண்டு செய்யப்படுவது, இது மாந்திரி தீகூைடி எனவும் பெயர் பெறும்.
இன்னும் இந்த ஞானவதி கிரியாவதி என்னும் இரண்டும் தனித்தனி நிர்ப்பீசதிகூைடி, சபீச திகூைடி என்றிரு வகைப்படும்.
அவற்றுள் நிர்பீச தீகூைடியாவது: மலபரிபாகமுடைய ராயினும் தீகூைடி பெற்றபின் நியமமாக வழுவின்றி அநுட்டிக்க வேண்டிய நித்தியம், நைமித்திகம், காமியம் என்னும் பிரிவுகளையுடைய சமயாசாரங்களை அநுட்டிக்கும் அறிவும் ஆற்றலும் இல்லாத சீடர்களுக்கு மல மாயா சஞ்சித ஆகாமிய கன்மங்களுடன் சமயாசார கன்மங்களையும் ஆகுதியால் முறைப்படி சுத்தி செய்து ஒழித்து, நித்திய கன்மத்தில் மாத்திரம் இயன்ற

Page 27
மட்டும் அதிகாரங்கொடுத்துச் செய்யப்படுவதாம். ஆயினும் சமயாசாரங்கள் மூன்றினும் அதிகாரங் கொடாமையால் இது நிரதிகார தீகூைடி எனவும் பெயர் பெறும். நிர்ப்பீச தீகூைடி,திகூைடி - மல மாய சஞ்சித ஆகாமிய சமயாசார கன்மங்களின் வித்தும் இன்றிச் சுத்தி செய்து செய்யப்படுவது.
இத்தீகூைடி; சமயமும், விசேடமும், நிருவாணமும் என மூவகைப்படும். அவற்றுள் சமயமும், விசேடமும் ஒவ்வொன்றேயாம். இவை தனியேயும் நிருவாண தீகூைடிக்கு அங்கமாகவும் செய்யப்படும். நிருவாணம்; சத்தியோ நிருவாணமும், அசத்தியோ நிருவாணமும் என இரு வகைப்படும். சத்தியோ நிருவாணம் செய்த உடனேயே முத்தி கொடுப்பது கொற்றங்குடி உமாதிபதி சிவாசாரியரால் பெற்றான் சாம்பானுக்கும் முள்கரிச்செடிக்கும் செய்யப்பட்டு உடனே முத்தி கொடுத்தது இச்சத்தியோ நிருவான தீகூைடியேயாகும். நிருவாணம் - மோகூடிம், அசத்தியோ நிருவாணம் பிராரத்த கன்ம முடிவில் முத்தி கொடுப்பதாகும் இந்த நிர்ப்பீச நிரதிகார சமய விசேட நிருவாண தீகூைடிகளே ஆசாரியரல்லாத மற்றையோர்களுக்குச் செய்யப்படுவனவாம்.
சமய திகூைடி மாத்திரம் பெற்றவர் சமயி எனவும் அதனுடன் விசேட தீகூைடியும் பெற்றவர் சாமானிய புத்திரர் எனவும் அவற்றோடு நிருவான தீகூைடியும் பெற்றவர் விசேட புத்திரர் எனவும் பெயர் பெறுவர்.
இனிச் சபீச தீகூைடியாவது: மலபரிபாகமாகிய பக்குவத்துடன் கற்றறிவும் ஆற்றலும் குரு பாரம்பரிய முறைமைகளும் மிகவும் உடையாயினர்க்கு மல மாயா சஞ்சித ஆகாமிய கன்மங்களை ஆகுதியாற் சுத்தி செய்து ஒழித்து. நித்தியம், நைமித்திகம், காமியம் என்னும் மூவகைச் சமயாசாரங்களிலும் பேரதிகாரமுடையவராகச் செய்யப்படுவதாகும். சமயாசாரங்களில் அதிகாரங் கொடுக்கப்படுவதால், இது சாதிகார தீகூைடி எனவும் பெயர் பெறும், மல மாயா கன்மங்களின் வித்துச் சுத்தி செய்யப்படினும் சமயாசாரங்களின் வித்துடைமையால் இது சபீச தீகூைடி எனப்பட்டது. இத்திகூைடிப் பேறுடையார் தாம் பெறும் சமஸ்கார வேறுபாட்டால் சாதகம் ஆசாரியரும் என இறுதிறப்படுவர். சமய விசேட அங்கங்களோடு கூடிய சபீச சாதிகார நிருவாண தீகூைடியும் சாதகாபிஷேகமும் பெற்றவர் சாதகராவர். சமய விசேட அங்கங்களோடு கூடிய சபீச சாதிகார நிருவாண திகூைடியும் ஆசாரியாபிஷேகமும் பெற்றவர் ஆசாரியராவர். சபீச சாதிகார நிருவாண தீகூைடிக்கு அங்கமாகச் செய்யப்படும் சமய விசேடங்கள் தனியே செய்யத்தக்கனவல்ல. இந்தச் சபீச சாதிகார நிருவாண தீகூைடியே விசேட தகுதி வாய்ந்த சாதகாசாரியர்களுக்குச் செய்யப்படுவதாகும்.
இன்னும் இத்தீகூைடியானது: உலோகதருமிணியும் சிவதருமிணியும் என
இருவகைப்படும். இவை முறையே பெளதிக தீகூைடி நைஷ்டிக தீகூைடி எனவும் பெயர் பெறும்.

உலொகதருமிணி. சிவதத்துவ புவனபோகங்களுடன் அணுக்கர்களாகிய கிரியையாளர்க்குத் திரோதான சுத்திரூபமாகிய சிகாச்சேதம் இன்றிச் செய்யப்படுவதாகும். இத்திகூைடிப் பேறுடையவரே ஆதி சைவர், மகா சைவர், அனுசைவர், அவாந்தர சைவர் என்னும் நால்வருள் இல்லறத்தோடு கூடியிருக்கும் கிரியா குருமாராவர். இக்குருமாருள் அவர்ந்தர சைவக் குருமார் பலர் சிகையின்றி முண்டிதராயே இருக்கின்றனர். இங்ங்னம் இருத்தற்குக் காரணம் யாதென வினவில் தாம் பெற்ற தீகூைடிதானும் இன்னதெனத் தெரியாது திகைக்கின்றனர். இல்லறத்தோடியைந்த கிரியா குருமார் முண்டிதராயே இருக்கவேண்டுமென்பதற்குப் பிரமாணமுளதாயின் அறிவிற் சிறந்த பெரியோர் அதனை வெளியிட்டருள்க.
அவாந்தர சைவர்க்கு ஞானாசாரியத்துவம் மாத்திரமே உண்டு. கிரியாசாரியத்துவமின்று; எனக் காமிகாகமத்தில் கூறப்படுதலால் அவாந்தர சைவாசாரியர் முண்டிதராயே இருக்கவேண்டுமெனக் கூறின்; அது பொருந்தாது. என்னை? அன்னவர் பெற்றது உலோகதருமிணி தீகூைடியா? ܐ சிவதருமிணிதீகூைடியா?சிவதருமிணிதீகூைடியெனின், இல்லறத்தோடியைந்திருத்தல் பொருந்தாதே? உலோதருமிணி தீகூைடியெனின், அதற்குச் சிகாச்சேதம் விதிக்கப்படவில்லையே? என்க.
இனி: சுப்பிரபேதம், சிந்திய விசுவம், கந்தகாலோத் தரம் முதலிய ஆகமங்களில் அவாந்தர சைவர்க்குக் கிரியா சாரியத்துவமும் உண்டு எனக் கூறப்படுதலால், காமிகாகமப் பிரமாணம் முழுவதுஞ் செல்லுமாறு இல்லையென்க. அங்ங்ணமாயின் சைவாகமங்கள் தம்முள் மாறுபடுமோ? எனின் காமிக விதி. நைஷ்டிகப்பிரமசரியம் வழுவாது அநுஷ்டிப்போர் பலருளராகப் பெற்ற முன்னைய காலங்களுக்கும், சுப்பிரபேதம் முதலிய ஆகம விதி; நைஷ்டிகப்பிரமசரியம் வழுவாது அநுஷ்டிப்போர் மிகவும் அரியராகப் பெற்ற பின்னைய காலங்களுக்கும் கொள்ளத்தக்கனவாதலின், சைவாகமங்களுள் மாறுபாடின்மை தெளியப்படுமென்க. நைஷ்டிகப் பிரமசரியத்தை விட்டு, பழி பாவங்களுக்குப் பயப்படாது நைஷ்டிகப் பிரமசரிய வேடம் மாத்திரம் தரித்துக் கொண்டு கூடாவொழுக்கம் பூண்டு வேண்டியவாறெல்லாம் ஒழுகி வழுவிநிற்கும் அநாசாரியரை ஆசாரியராகக் கொள்வதும், பிறர் மனைவியரையும் வரைவின் மகளிரையும் விரும்பாது பழி பாவங்களுக்குப் பயந்து நல்லறமாகிய இல்லற வாழ்க்கையில் ஒழுகும் ஆசாரியரை அநாசாரியரெனத் தள்ளுவதும் உய்தியில் குற்றமாமென்க.
இனிச் சிவதமிணியாவது: பரமுத்தியை விரும்பும் நைஷ்டிகப் பிரமசாரிகளாகிய ஞானிகளுக்குத் திரோதான சுத்திரூபமாகிய சிகாச்சேதத்துடன் செய்யப்படுவதாகும். இத்திகூைடிப் பேறுடையவரே ஆதி சைவர் முதலிய சைவர்களில் நைஷ்டிகப் பிரமசரியம் வழுவாதிருக்கும் ஞானாசாரியர்களாவர். இத்தகையோர் இக்காலத்தும் திருவாவடுதுறை

Page 28
முதலிய தலங்களிலுள்ள மடாலயங்களில் ஞான தேசிகமூர்த்திகளாயெழுந்தருளியிருக்கின்றனர்.
அநாதி சைவராகிய சிவபெருமான் அருளிய சைவாகமங்களில் கூறப்பட்ட சிவதீகூைடி பெற்றவர்களாகிய சைவர்கள்: ஆதி சைவர், மகா சைவர், அநுசைவர், அவாந்தர சைவர், பிரவர சைவர், அந்திய சைவர் எனத் தத்தம் மரபு பற்றி ஆறு வகைப்படுவர். ஆதி சைவராவார்; அநாதி சைவராகிய சதாசிவமூர்த்தியின் ஐந்து திருமுகங்களிலும் தோன்றிய கெளசிகர் முதலிய இருடிகள் ஐவரின் மரபில் உதித்த சிவப்பிராமணருள் சிவதிகூைடி பெற்றவராவர். மகா வைசராவார்: வைதீகப் பிராமணருள் சிவ தீகூைடி பெற்றவராவர். அநுசைவராவார்: அரசர், வணிகருள் சிவதிகூைடி பெற்றவராவர். அவாந்தர சைவராவார்: வேளாளருள் சிவதீகூைடி பெற்றவராவர். பிரவர சைவராவார்; அநுவோமர் அறுவருள் சிவதீகூைடி பெற்றவராவர். அந்திய சைவராவார்; மற்றைய மரபுகளிலுள்ளவருள் சிவதிகூைடி பெற்றவராவர். அநுலோமராவார். அந்தணர் முதலிய மூவரும் தத்தம் மரபிற் கீழுள்ள மரபுக் கன்னியரை மணஞ் செய்து பெற்ற பிள்ளைகள் அறுவருமாம்.
இந்த அறுவகைச் சைவர்களுள் முன்னுள்ள நால்வருமே ஒளத்திரி
தீகூைடிக்கு உத்தம தகுதியுடையர். பிரவர சைவரும் மத்திமமாகக்
கொள்ளப்படுவர். மற்றையோர் சாம்பவி முதலிய ஆறனுள் அவ்வவர் தகுதிக்கேற்ற தீகூைடி செய்யப்பெறுவர்.
வேளாளர் சுத்தர், அசுத்தர் என இருவகைப்படுவர். இவர்கள் முறையே உழுவித்துண்போர், உழுதுண்போர் எனவும் கூறப்படுவர். மிருதி நூலார் சுத்த வோளாளர்; அந்தணர்க்கு வேளாண் கன்னியர்பால் உதித்தவரென்பர். அவர் அநுலோமராவரன்றிச் சுத்த மரபினராகாரென்க. பிராமணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நாற்பெருஞ் சுத்த மரபினரையும் தொல்காப்பியனார், அந்தணர், அரசர் வணிகர், வேளாளர் எனத் தமிழாக்கஞ் செய்துள்ளனர். அதனால் சூத்திரரே வேளாளர் ஆகின்றனர். வேளாளரை உழுவித்துண்பார், உழுதுண்பார் என இரு வகைப்படுத்தி, உழுவித்துண்பாரை வணிகரோடு இயைவித்து ஒதலும், வேட்டலும், ஈதலும், உழவும், நிரைகாத்தலும், வாணிகமும் ஆகிய அறுவகைத் தொழில் கூறுவர். இன்னும் "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் - கீழோர்க்காகிய காலமு முண்டே" என்னுஞ் சூத்திரத்தால், அந்தணர் முதலிய மூவர்க்கும் உரியவாகக் கூறப்பட்ட சடங்குகள் அம்மூவர்க்கும் உரியவாகக் கூறப்பட்ட சடங்குகள் அம்மூவர்க்கும் மகட்கொடைக்குரிய வேளாண் மாந்தர்க்கும் உரியவாகியிருந்த காலமும் உண்டு என்பர். உயர்ந்த வேளாளர் அரசராற் சிறப்புப் பெற்று அவர்க்கு மகட் கொடுத்தலும், அமைச்சராதலும், மண்டல மகிபராதலும் தண்டத் தலைவராதலும், வேளரசு என உரிமை பெற்றோராதலும், பகைமேற் செல்லுதல், நாடு காத்தல், சந்துசெய்தல் உடையராதலும் பெறுவர் என்பர். இவற்றால் வேளாளர் மற்றைய மரபினரோடு ஒத்த தகுதியினரே என்பது தெளிவாகும்.

இனி ஒளத்திரி தீக்ஷையின் வகை இரண்டனுள் ஒன்றாகிய சாதிகார நிருவாண உலோகதருமிணி தீகூைடியினையோ, சிவதருமிணி தீகூைடியினையோ பெற்று ஆசாரியராவதற்குத் தகுதியுடையவர்: ஆதி சைவர், மகா சைவர், அநுசைவர், அவாந்தர சைவர் என்னும் நால்வருமேயாம். அநுசைவர்களாகிய அரசர் வணிகருள் ஆசாரியர் இக்காலத்திலரென்க. அவருள்ளும் பிரமசாரிகள், கிருகத்தர் என்னும் இருவகை ஆச்சிரமத்தாருமே தகுதியுடையர். பிரமசாரிகள்: பெளதிகப் பிரசாரி நைஷ்டிகப் பிரமசாரி என இரு வகைப்படுவர். இவருள் மரணபரியந்தம் விரத நியமித்துத் துறவிகளாயிருக்கும் நைஷ்டிகப் பிரமசாரிகளே ஞானாசாரியர்களாகலாம். கன்னிகா கல்யாண பரியந்தம் விரத நியமித்திருக்கும் பெளதிகப் பிரமசாரிகள் கல்யாணத்தின் பின் அன்றி அதற்கு முன் ஆசாரியராதல் பொருந்தாது. பொருந்துமெனில், அவர் கிரியாசாரியராவரா? ஞானாசாரியராவாரா? கிரியாசாரியராவரெனில், கிருகத்தரல்லர் என்க. ஞானாசாரியராவரெனில் நைஷ்டிகப் பிரமசாரியல்லரென்க. ஆதலின் பெளதிகப் பிரமசாரிகள் ஆசாரியராதல் பொருந்தாமை காண்க.
இன்னும் ஞானாசாரியர், கிரியாசாரியர் என்னும் இரு வகையினரும் பாரம்பரியமாக அமைவர். அன்னவர்க்கே பாரம்பரியமான சீடருமுளராவா. அச்சீடர்களுக்கு அசாரியாராயிருந்தவர் தமக்குப் பின் அவர்களுக்கு ஆசாரியராயமைதற்கேற்ற கற்றறிவாற்றல் நல்லொழுக்கம் மந்திர தந்திர பாவனா கிரியா ஞானம் பாரம்பரிய சம்பிரதாயம் முதலியன உடைய ஒருவரை ஆசாரியராக்கி அதிகாரங் கொடுத்து நியமிப்பர். இங்ங்னமன்றி இடையே சீவனோபாயமாகிய விருத்திப் பொருட்டு ஆசாரியாபிஷேகம செய்வித்துக் கொண்டவரும், பொருள் வாஞ்சை முதலிய ஏதுக்களால் அவர்க்கு ஆசாரியாபிஷேகஞ் செய்து வைத்தவரும் துன்ப உலகடைவர்.
இன்னும் ஆதிசைவ சிவாசாரியர்களே பரார்த்தப் பிரதிஷ்டை, நித்தியபூசை, உத்சவம் முதலியவற்றைச் செய்வதற்குட், மகா சைவர், அநுசைவர் அவாந்தர சைவர் என்னும் மூவர்க்கும் ஒளத்திரி தீகூைடி செய்து ஆசாரியராயிருத்தற்கும், வேண்டும்போது அம்மூவருள் தகுதியுடையோரை ஆசாரியராக்குவதற்கும் பேரதிகாரமுடையவராவர். ஆதி சைவ சிவாசாரியர் கிடையாதபொழுது மகா சைவாசாரியர் முதலியோரும் பார்த்தப் பிரதிஷ்டை முதலியன செய்யலாம். இக்காலத்து வேண்டுமிடங்களில் எங்கும் ஆதி சைவ சிவாசாரியர் கிடைக்கப் பெறாமையால் இது உலகியலாய் வழங்குவதாயிற்று.
அன்றியும், உலகத்தில் சைவாசாரிய பரம்பரைகள் யாவும் அநாதி சைவராகிய சதாசிவப் பெருமானார் வாயிலாகவும் தென்முகத் தெய்வப் பரமாசாரியர் வாயிலாகவும் கெளசிகர் முதலிய ஆதி சைவர்களிடத்தும் சனகர் முதலிய நால்வரிடத்தும் அவர்கள் வாயிலாக ஒவ்வோர் மூல புருஷரை முன்னிட்டு ஏனைய மகா சைவர், அநுசைவர், அவாந்தர சைவர் என்பவர்

Page 29
களிடத்தும் அமைந்துள்ளனவாகும். ஆதலால் ஆதிசைவ சிவாசாரிய பாரம்பரியமே மற்றைய சைவாசாரியர்களிட்த்தும் உள்தாதலின் பரார்த்தாதிகாரமும் ஓரளவு உளதாயதெனவும் கொள்ளலாம்.
இன்னும் ஆதிசைவர் முதலிய அந்தணர்கள் தமக்கும் மற்றைய மூன்று மரபினர்க்கும், அரசர் தமக்கும் மற்றை இரு மரபினர்க்கும், வணிகர் தமக்கும் மற்றொரு மரபினர்க்கும், வேளாளர் தம் மரபினர்க்கு மட்டும் ஆசாரியராகலாமெனக் கூறப்பட்டிருக்கவும் அந்தணர்களாகிய சைவாசாரியர்கள் மற்றை மரபினர்க்குப்பூர்வம். அபரம் என்னும் இருவகைக் கிரியைகளையும் செய்து வைப்பதில் திகுதியாகப் பின்னிற்கின்றனர். அஃது அன்னவர்க்குச் சைவாசாரியத்துவத்தைக் கொடுத்த சைவாகம விதிக்கு மாறுபாடாகும். இதனால் சைவரொருவர் தமது சைவக் கிரியைகளில் சிலவற்றிற்கு ஒரு ஆசாரியரையும் மற்றும் சிலசற்றிற்கு வேறொரு ஆசாரியரையும் கொள்ள வேண்டிய சங்கடமுளதாகின்றது. ஒருவர்க்குச் சைவ சமய குரு ஒருவரேயன்றிப் பலராக யாண்டும் கூறப்படவில்லை. தாம் கொண்ட குருவை விட்டு மற்றொருவரைக் குருவாகக் கொள்ளுதல் முறைமையாகாது.
இந்த நியதிகள் கிரியா குருமாரைப் பற்றியனவாம். ஞானகுருமாரைப் பற்றியோவெனில், தம் குரு கிரியா பாதமன்றி ஞானபாதங் கைவந்திலரேல் அதில் வல்ல ஞானகுரவரைத் தேடிச் சென்றடையலாம். தமது மரபில் ஞானகுரவரிலராயின் தமக்குக் கீழ்ப்பட்ட மரபிலுள்ள ஞானகுரவரையும் அடையலாம். இது குற்றமாகாது. ஞானகுரவருக்கு மரபு கொள்ளப்படுவதின்றாகும். பிரம இருடிகளாகிய துருவாசர் முதலியோர் சூத்திரராகிய விதுரரிடத்து ஞானோபதேசம் பெற்றனரெனப் பாரத பாகவதங்களிற் கூறப்படுதலாலும், திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியர் தமது சீடர் மரபிலுதித்த வேளாளராகிய மெய்கண்ட தேவரிடத்து ஞானோபதேசம் பெற்றதாகச் சைவ சித்தாந்த சாத்திரத்து அறியப்படுதலாலும் அது குற்றமாகாமை தெளியப்படும்.
இனி ஒரு சாரார் தீகூைடி பெறுதற்கு முன்னுள்ள மரபு தீகூைடியால் மாறுபடாதென்பர். உடலுடன் கூடிய உயிருக்கே தீகூைடி செய்யப்படுவதாலும், காணப்படாத உயிரைத் தூய்மை செய்யும் தீகூைடி, காணப்படும் உடலைத் தூய்மை செய்யமாட்டாதெனல் பொருதாமையாலும், தீகூைடி பெறுவதற்கு முன்னுள்ள மரபு பின்னர்க் கொள்ளப்படாதெனச் சைவ பூஷணத்துள் கூறப்படுதலாலும், அவாந்தர சைவரில் தீகூைடிகளின் பேறுபற்றி இருபத்தைந்து, இருபது, பதினைந்து, பதினொன்று என்னும் நாட்களினளவான சூதகாசெளசங்கள் கூறப்படுவதாலும், நிருவாண தீகூைடி பெற்ற எல்லா மரபினர்க்கும் சூதகாசெளசக் குறைவு கூறுமிடத்துச் சுயம்பாகிச் சூதகாசெளசமே இல்லையென்றும் பரபாகிக்கு மூன்று நாளென்றும் கூறப்படுதலாலும் தீக்ஷையில் சாத்தியுத்தாரண (மரபை மேற்படுத்தும்) ஒமங் கூறப்படுதலாலும், சீடனது உயிரைக் கிரகித்துச் சிவாக்கினியிடத்தும் தனது

இருதய கமலத்தினிடத்தும் உள்ள சிவத்துடன் சேர்த்துச் சமரசிபாவம் (ஒப்புமைத் தன்மை) செய்து சுத்தம் செய்யப்பட்ட உடலில் மீளப் பதித்து வைக்கும் கிரியை ஒன்று தீகூைடியில் கூறப்படுதலாலும், தீகூைடியினால் உயிர் மாத்திரமன்றி உடலும் தூய்மையும் உயர்வும் பெறும் என்பதில் ஐயமில்லையென்க. அங்ாவனமாயின் ஆதிசைவர் முதலிய பிரிவுகள் மரபு பற்றி வந்தனவல்லவோ? எனில், அது பலவகை மரபினரும் சைவராகுமாறு பற்றிக் கூறப்பட்டதென்க.
ஆனால், மிருதிசாரமான அகநிர்ணய நூலில் கலியுகத்தில் சூதகாசெளங்களைக் குறைக்கும் கெளணாசெளசங்கொள்ளத்தக்க தன்று எனக் கூறப்பட்டிருத்தலால், தீகூைடியினால் குறைக்கப்படும் கெளணாசெளசங் கொள்ளக்கூடாது; மரபு பற்றிய முக்கியாசெளசமே கொள்ள வேண்டியதெனில், அந்நூலிலேயே கூறப்பட்ட பிரமசாரி வானப்பிரத்தன் சந்நியாசி என்பவர்களுக்குச் சூதகாசெளசங்களில்லையென்பதும் நிலைமைபற்றி வந்த கெளணாசெளசமாதலால் அதுவும் கொள்ளப்படக்கூடாததாகும். அவ்வாறன்றி அது கொள்ளப்படுவதால், தீகூைடியாலுளதாகும் சூதகாசெளசக் குறைவும் கொள்ளத்தக்கதே யென்க.
சைவ சமய முறைப்படி எல்லா மரபினரும் தத்தம் தகுதிக்கேற்றவாறு தீகூைடி பெற்று அதனால் ஞானங் கைவந்து வீடுபேறு அடையலாமென்பதில் யாதும் தடையில்லை. வீடுபேறு ஒரு மரபினர்க்கு மட்டும் உரியது ஒன்று அன்று. எல்லா உயிர்களுக்கும் உரியதேயாகும்.
சந்தியாவந்தனம்
இது தீகூைஷ் பெற்றவர் காலை, உச்சி, மாலை, என்னும் மூன்று காலங்களிலும் செய்யவேண்டிய வழிபாடாகும். சமய தீகூைடி பெற்றவர் காலைச் சந்தியாவந்தனமாகிய ஒன்றுக்குக் குறையாமலும், விசேடதீகூைடி பெற்றவர் காலை மாலையாகிய இரு சந்திக்குக் குறையாமலும், நிருவாண தீகூைடி பெற்றவர் காலை, உச்சி, மாலையாகிய மூன்று சந்திக்குக் குறையாமலும் நியமமாகச் செய்து வருதல் வேண்டும். திகூைடி பெற்றவர் தம்மாலியன்ற அளவில் சந்தியாவந்தனஞ் செய்யாதொழியின் தாம் பெற்ற தீகூைடியினால் பெரிதும் பயன்பெறமாட்டார். நாம் பெற்றது சமயாசார சுத்தியோடு கூடிய நிரதிகார தீகூைடிதானே ஆதலால் சந்தியா வந்தனஞ் செய்யாதொழியினும் குற்றமில்லையே என்று எண்ணிவிட்டுவிடாது இயன்ற அளவு சந்தியாவந்தனஞ் செய்தே வருதல் வேண்டும். அவ்வளவு அதிகாரம் தீகூைடி யின்போது கொடுக்கப்படுவதுண்டு.
சந்தியாவந்தனத்தில் செய்யப்படுங் கிரியைகளாவன: தானசுத்தி, கணபதி குரு வணக்கம், சலசுத்தி, அசமனம், தொடுமிடந் தொடுதல், விபூதி சுத்தி, முக்குறி தரித்தல், பிராணாயாமம், அமிர்தத்தாபனம், மார்ச்சனம்,

Page 30
அகமருஷணம், தருப்பணம், அமிர்தொடுக்குதல், சகளிகரணம், மூலமந்திரசெபம், தோத்திரம், திக்குவந்தனம், சிவத்தியானம், நமஸ்காரம், சிவசூரியதரிசனம் என்பனவாம்.
தானசுத்தி: அமைதியாக இருந்து சந்தியாவந்தனஞ் செய்யும் பொருட்டு அமைந்துள்ள இடத்தை அஸ்திர மந்திரத்தால் சலந் தெளித்துச் சுத்தமாக்குதலாம்.
கணபதி குரு வணக்கம்: தொடங்குங் காரியம் இடையூறின்றி இனிது முடியும்படி கணபதியையும் தீகூைடி செய்த குருவையும் தியானித்துக் குமட்டிக் கும்பிடுவதாம்.
சலசுத்தி: சந்தியாவந்தனத்துக்காக எடுத்துக் கொண்ட சலத்தைப் பார்த்தல், தெளித்தல், தட்டுதல், அமைத்தல் என்னும் நால்வகைச் சுத்திகளை மந்திரத்தோடு செய்து அந்தச் சலத்தால் தன்னையும் சுத்தி செய்து கொள்ளுதலாம்.
ஆசமனம்: ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என்னும் மூவகைத் தத்துவங்களையும் சுத்தம் செய்யும் பொருட்டு அந்த மந்திரங்களால் ஒவ்வொரு முறை சிறிது சலம் உறிஞ்சிப் பருகுதலாம். இது சந்தியாவந்தனத்துள் மூன்று முறைக்குக் குறையாமல் இடையிடையே 6)/(bLD.
தொடுமிடந் தொடுதல்: மோவாய் முதல் உச்சி முடிவான பன்னிரண்டு இடங்களிலுள்ள தேவர்களைத் தான் செய்யும் சந்தியாவந்தனத்தில் எதிர்முகமாக இருக்கும்படி மந்திரத்தால் தொட்டு அருட்டுவதாம்.
விபூதிசுத்தி: அணிந்து கொள்வதற்காக எடுத்துக் கொண்ட விபூதியை நால்வகைச் சுத்தி செய்து சம்கிதா மந்திரங்களைச் செபித்து, இராக்கதரால் இடையூறு வராமல் தென்மேற்கில் சிறிது தெறித்து சிவசத்தி வடிவான விபூதியால் தன்னையும் உச்சி முதல் எங்கும் சுத்தஞ் செய்து கொள்வதாம். விபூதி சுத்திக்குச் சம்கிதா மந்திரங்கள் பதினொன்று மல்லாமல் கலா மந்திரங்களைந்தும் ஸ்தலமிதிபஸ்ம முதலிய பஞ்சபூத மந்திரங்களைந்தும் உரியனவாகும்.
முக்குறி தரித்தல்: சுத்தஞ் செய்யப்பட்ட விபூதியை நீர் சேர்த்துக் குழைத்து உச்சி, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்முதலிய உறுப்புகளில் பிரம மந்திரங்களைந்தினாலும் முறையே மூன்று குறி பொருந்துமாறு தரித்து, மிகுந்த விபூதியைச் சிறிது சலஞ் சேர்த்து அந்த மந்திரங்களால் தன்மீது தெளித்துக் கொள்வதாம். விபூதியானது ஆணவம் முதலிய மும்மலங்களின் நீக்கத்துக்கும் சிவத்துவப் பேற்றிற்கும் அறிகுறியாகத் தரிக்கப்படுவதாகும்.

பிராணாயாமம்; இது பிராணவாயுவை ஒழுங்குபடுத்திச் செவ்விதாகச் சுவாசிக்கும் பொருட்டும், அதனைக் கட்டுப்படுத்தி நோயற்ற வலிய உடல் நிலையைப் பெறும் பொருட்டும், பதினொரு மந்திரத்துடன் உள்ளே உள்ள பிராணவாயுவின் கழிவுப் பகுதியை வெளியே நீக்கியும், சுத்தமான பிராண வாயுவை உள்ளே இழுத்தும், அதனை உள்ளே அடக்கியும் செய்யும் கிரியையாம். சந்தியாவந்தனத்தில் பிராண ஆயாமம் (உயிர்ப்புக் காற்றை ஒழுங்குபடுத்துதல்) பிரதானமாக உள்ளதாகும். இது சந்தியாவந்தனத்துள் இரு முறைக்குக் குறையாமல் உண்டு.
அமிர்தத்தாபனம்: கட்புருவ மத்தியிலுள்ள விந்து அக்கினியினால்
இளகியுள்ள அமிர்தத்தை மந்திரத்தால் எடுத்துச் சந்தியாவந்தனத்துக்
குரிய சலத்துள் மந்திரத்தால் வைத்துப் பாவனை செய்வதாம். இதனால் அந்தச் சலம் மிக்க தூய்மையடையும்.
மார்ச்சனம்: அமிர்தமயமான சலத்தில் சிறிதையிடக் கையில் கொண்டு கீழே சிந்துஞ்சலத்தைச் சம்கிதா மந்திரங்களை உச்சரித்து வலக்கையால் தன்மீது தெளித்துக் கொள்வதாம். அலகினால் பெருக்கித் தூய்மை செய்வது போல, அமிர்தசலத்தால் தெளித்துத் தூய்மை செய்வதே மார்ச்சனமாகும். மார்ச்சனம் - சுத்தஞ் செய்தல்.
அகமருஷணம் : செய்த பாவங்களை நீக்கும் பொருட்டுச் செய்யும் கிரியையாகும். அக மருஷணம் - பாவங்களை நீக்குதல். அமிர்தமயமான சலமானது இட நாசியால் உள்ளே சென்று பாவங்களைக் கரைத்துக் கொண்டு வல நாசியால் வெளியே வந்ததாகப் பாவிப்பதாம். இதனை மனப்பூர்வமாகவும் விசுவாசத்துடனும் நாள்தோறும் செய்வதால் பாவ நீக்கமுளதாகு மென்க.
தருப்பணம்: இது சம்கிதா மந்திர தேவர்களையும் செபமூல மந்திர தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டுச் செய்யப்படுவதாகும். சம்கிதா மந்திரங்கள் பதினொன்றையும் சுவாகா என்பது அந்தமாக உச்சரித்து ஒவ்வொரு தரத்துக்குக் குறையாமலும், செபமூல மந்திரங்களைச் சுவாகா என்பது அந்தமாக உச்சரித்து மும்மூன்று தரத்துக்குக் குறையாமலும் இரு கைகளாலும் சலஞ் சொரிந்து தருப்பணஞ் செய்தல் வேண்டும்.
அமிர்தொடுக்குதல்: முன்னர் சலத்தில் வைத்த அமிர்தத்தை மந்திரத்தால் எடுத்துப் புருவ நடுவில் வைத்தலாகும்.
சக்ளிகரணம்: எங்கும் நிறைந்து அருவமாயுள்ள இறைவர் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுச் சத்தியின் கலைகளாகிய மந்திரங்களின் திருவுருவம் அமைந்துள்ளனர். அவரது மந்திரத் திருவுருவத்தை நமது சரீரத்திலும் அமைத்துக் கொள்வதே சகளிகரணமாகும். அங்ங்ணம் அமைத்தலால் நமது சரீரம் தூய்மையடைந்து உயிர் சிவமாந்தன்மைப் பெருவாழ்வைப் பெறுதற்குத் தகுதியுடையதாகும்.

Page 31
உருவமில்லாத இறைவரை உயிர்கள் தியானித்து வழிபடுதற்கு இலகுவாக மந்திர உருவமுடையராகப் பாவிக்கும் சகளிகரணம்: கரநியாசம், அங்கநியாசம் என இரு வகைப்படும். கரநியாசம், சிவபெருமானையும் அவருடைய பிரம அங்கங்களைந்தையும் மற்றைய அங்கங்கள் ஆறையும் சிவசத்தியையும் இரு கைகளிலும் அம்தமந்திரங்களால் முறைப்படி அமைத்தலாகும். அங்கநியாசம், அம்மந்திரங்களைச் சரீரத்தில் முறைப்படி அமைத்தலாம். இச்சகளிகரணம் விசேஷ நிருவாண தீகூைடி பெற்றவரும் சாதக ஆசாரியாபிஷேகங்கள் பெற்றவரும் அசவியம் செய்தல் வேண்டும்.
மூலமந்திர செபம்: சிவமூல மந்திரத்தையும் பரிவார தேவர்களான விநாயகர் முதலியோருடைய மூலமந்திரங்களையும் பத்துத் தரத்துக்குக் குயைாமல் இறை தொட்டோ செபமாலை கொண்டோ எண்ணிச் செபஞ் செய்தலாம். மூலமந்திரத்தை எவ்வளவு அதிகமாக மன ஒருமையுடன் உருவேற்றுகின்றோமோ அவ்வளவு விரைவில் இறைவர் அருளைப் பெறலாம். உருவேறத் திருவேறும் என்பது முதுமொழி.
தோத்திரம்: செப முடிவில் தேவார திருவாசக முதலிய திருவருட்பாக்களையும் மற்றும் பக்திப்பாடல்களையும் உச்சியில் அல்லது மார்பில் குவித்த கைகளுடனிருந்து மனங் கசிந்துருகிப் பாடுதல் வேண்டும். இதனால் அவ்வளவு நேரமும் ஆவது மனம் இறைவரிடத்திலேயே பொருந்தி நிலைபெறும். இவ்வித பயிற்சியினால் "நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை - என்றும் சிவன்தான் இணை" என்ற பெரியாரது ஆணைப்படி இறைவரை எப்போதும் நினைக்குந் தன்மை வாய்க்கும்.
திக்குவந்தனம்: கிழக்கு முதல் எட்டுத் திக்கிலும் இந்திரன் முதலிய லோக பாலகர்களை நினைந்து வணங்குவதாம்.
சிவத்தியானம் : சமய தீகூைடி பெற்றவர் பார்வதி பரமேசுவரரையும், விசேஷ தீகூைடி பெற்றவர் ஈசுவரி ஈசுவரரையும், நிருவாண தீகூைடி பெற்றவரும் அதற்கு மேலுள்ள சாதக ஆசாரியாபிஷேகங்களைப் பெற்றவரும் மநோன்மணி சதாசிவரையும் மன ஒருமையுடன் தியானித்து நமஸ்காரஞ் செய்தல் வேண்டும்.
சிவகுரியதரிசனம்: சிவசூரியமூர்த்தியைத் தரிசித்து அம்மண்டலத்துள்ள சிவத்தை வணங்குவதாகும். இங்கே கூறப்பட்ட சந்தியாவந்தனக் கிரியைகள் யாவும் அடிக்கடி இறைவரை நினைவூட்டிச் சதாதியானித்தற்கு ஏதுவாதல் காண்க. மானுடப் பிறவியின் பயன் கல்வி, செல்வங்களோடு கூடிய உலக வாழ்வு மட்டும் அன்று. இவ்வுலக வாழ்வு எவ்வளவு உயர்ந்ததாயினும் நிலையானதன்று. ஆதலால் நிலையான பேரின்ப வாழ்வைப் பெறுதற்கும் இங்கு வாழும்பொழுதே எற்ற வழிவகைகளைச் செய்து கொள்ளுதல் வேண்டும்.

அபரக் கிரியை
ஆன்மார்த்தக் கிரியை வகைகள் இரண்டனுள் பூர்வக் கிரியைகள் இதுவரை ஆராயப்பட்டன. இனி அபரக் கிரியைகளை ஆராய்வோம்.
அபரக்கிரியைகள்: உத்கிராந்திக் கிரியை, தேகாந்த சூர்னோத்சவம், அந்தியேஷ்டி, நிவாபாஞ்சலி தருப்பணம், நக்கினதானம், துர்மரணப் பிராயச்சித்தம், புணர்த்தகனம், அத்திசஞ்சயனம், பாஷாணத்தாபனம், இடபதாபனம், ஏகோதிஷ்டம், பஞ்சதமாசிகம், சோதகும்ப சிராத்தம், மகாளயம், அமாவாசை தருப்பணம் என்னும் பிரிவுகளையுடையனவாம். இவற்றை முறையே ஆராய்வோம்.
உத்கிராந்திக் கிரியை
சிவதீகூைடிகளுள் சமய தீகூைடி மாத்திரம் பெற்ற சமயி ஒருவர் உடலை விட்டு நீங்கும் நிலையினையடையின் அதனைக் குறிகளால் அறிந்து புதல்வன் முதலியோர் தேவாரம் முதலிய திருவருட் பாக்களை அவர் முன் ஒதுதலும் ஒதுவித்தலும் வேண்டும். புண்ணிய தலங்களின் சிவப்பிரசாதங்களை அணிதல் வேண்டும். இயன்றவாறு கோதானம் முதலிய தான தருமங்களைச் செய்தல் வேண்டும். பஞ்சாக்ஷர மந்திரத்தையும் பஞ்சப் பிரம சடங்கமாகிய பதினொரு மந்திரங்களையும் அவர் செவியில் கூறுதல் வேண்டும். உத்கிராந்திக் கிரியை-உயிர் உடலைவிட்டு மேற்செல்லும்போது செய்யும் கிரியையாகும்.
விசேஷ தீகூைடியும், நிருவாண தீகூைடியும், சாதகாபிஷேகமும் ஆசாரியாபிஷேகமும் பெற்ற சாமானிய புத்திரர், விஷே புத்திரர், சாதகர், ஆசாரியர் என்போர் உட்லை விட்டு நீங்கும் நிலைமையை அடையின் அவர்கள் தினந்தோறும் பூசை செய்து வந்த சிவலிங்கத்தை அது சலலிங்கமாயினும் (சலலிங்கம் - வைத்திருந்து பூசை செய்வது) கணிகலிங்கமாயினும் (கணிகலிங்கம் - பூசை முடிவில் விடப்படுவது) அவர்களுடைய புதல்வரோ, சீஷரோ, ஆசாரியரோ ஒருவர் ஆக்கினேய ஸ்நானம் (விபூதியால் செய்யும் சுத்தி) செய்து அச்சிவலிங்கத்தை அஷ்ட புஷ்பங்களால் அருச்சித்து, அன்னவரையும் ஆக்கினேய ஸ்நானம் செய்வித்து, அவரது இருதயத்தில் சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்து, அவரைக் கொண்டு சிவலிங்கத்தைத் தொடுவித்து, அஷ்ட புஷ்பம் சாத்துவித்து, சிவபூசையின் உத்தியாபனமாகச் சிவபூசையின் பலத்தை அப்பெருமானிடத்திலேயே சமர்ப்பித்து, "சுவாமீ! சிவபூசை செய்யும் பேறுடையவரும் சிவாஞ்ஞையைப் பரிபாலிப்பவரும் ஆகிய இவருடைய ஆன்மாவைச் சபிண்டீகரணத்தின் மேல் சிவமாந்தன்மைப் பெருவாழ்வடையச் செய்தருளுக" என்று விண்ணப்பஞ் செய்து, சிவலிங்கத்தில் பூசிக்கப்பட்ட சிவத்தை அவரது இருதயகமலத்திலொடுக்குக. பின்னர்ச் சிவலிங்கத்தை உரிய இடத்தில் சேர்க்க. இந்த உத்கிராந்திக்

Page 32
கிரியைகள் ஒரு முறையன்றிப் பலமுறை செய்யவும் நேரலாம். உயிர் உடலைவிட்டு நீங்கியபின் உடலை இயன்றாவறு சுத்தி செய்து தரையை மெழுகித் தருப்பை பரவித் தெற்கே தலையாகப் படுக்க வைக்க.
தேகாந்த சூர்னோத்சவம்
இது பிரேத ஸ்நானத்தின் பொருட்டும் இறந்தவரது நைஷ்டிகக் குறைவு நீங்கும் பொருட்டும் மேற்கதிச் செலவிலுள்ள தடை நீங்கும் பொருட்டும் தூலதேக முடிவாகிய அமங்கலத்தை மங்கலமாக்கும் பொருட்டும் தூலதேகம் நீங்கியபின் உயிர் சூக்கும தேகத்துடன் சஞ்சரித்தலைக் குறிக்கும் பொருட்டும் செய்யப்படுவதாகும். இறந்தவர் நைஷ்டிகராயின் இது செய்யவேண்டியதில்லை.
ஆலயங்களில் உற்சவ முடிவில் தீர்த்த ஸ்நானத்திற்கு முன் சூர்ணோத்சவம் செய்து கொண்டு சுவாமி தீர்த்தத்திற்கு எழுந்தருளச் செய்வதை உற்று நோக்கின் இங்கேயும் சுண்ணமிடித்த பின்பே பிரேதத்திற்குக் குளிப்பாட்ட வேண்டுமென்பது இனி விளங்கும். ஆனால் அதற்கு மாறாகவே பெரும்பாலும் நடந்து வருகின்றது. இவ்வழக்கம் எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை வழக்கமாய் ஏற்பட்டுவிட்டபடியால் உண்மையை அறிந்தவர்களும் ஒன்றுஞ் செய்யமுடியாமல் சங்கடப்பட வேண்டியுள்ளது. அதனால் சுண்ணமிடிப்பதன் முன் பிரேத சுத்திக்காக ஒன்பது கும்பங்களைப் பூசை செய்து முடித்துப் பிரேத ஸ்நானஞ் செய்து கொண்டு வந்தபின் கண்ணத்தின் பொருட்டு ஒரு கும்பமமைத்துப் பூசித்துச் சுண்ண மிடித்தபின் சுண்ணத்தைக் கும்ப சலத்துடன் சேர்த்துத் தெளித்து ஸ்நான பாவனை செய்யவேண்டி ஏற்படுகின்றது. எந்தக் கிரியையையும் செய்து வைக்கும் குருவும் செய்யும் கருத்தாவும் இது எதற்காகச் செய்யப்படுவது? எப்படிச் செய்யவேண்டியது? என்பவைகளை நன்றாக அறிந்து கொண்டால் இவ்வித மாறுபாடுகள்
2_.6IT6)」s「@T.
இனி இந்தச் சூர்னோத்சவக் கிரியை அச்சிடப்பட்டுள்ள அகோர சிவாசாரியர் பத்ததி அபரக் கிரியையினும் குருக்கள்மாரிடத்திலுள்ள கையெழுத்துப் பிரதிகளினும் உள்ளதன்றி, அச்சிடப்பட்டுள்ளதும் நிருமலமணி வியாக்கியானத்துடன் கூடினதுமான அபரக் கிரியையில் சொல்லப்படவில்லை. ஆனால் வியாக்கியானத்தில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் சைவாகம வசனங்களால் பிரேத ஸ்நானம் செய்யவேண்டிய முறையும் அதனை வீட்டிலாவது மயானத்திலாவது செய்யலாமென்பதும் அறியத்தக்கனவாகவுள்ளன. சைவ பூஷணம் என்னும் நூல் அபர சூர்ணோத்சவக்கிரியைகளைக் கூறி, அதில் பேரிதாடனஞ் செய்யும்போது கூறவேண்டிய சுலோகங்களையும் கூறுகின்றது. ஒரு பத்ததிகாரரும் அச்சுலோகங்களைத் தமது பத்ததியில் அபர சூர்ணோத்சவத்தில் சேர்த்து எழுதிக்கொள்ளவில்லை. விஷயமறிந்த சில குருமார் கிரியை செய்யும்போது

அச்சுலோகங்களைச் சேர்த்துக் கூறுகின்றனர். ஆலய விஷய சூர்னோத்சவத்திற்கு உரிய சுலோகங்கள் தேக அந்திய சூர்னோத்சவத்திற்குப் பொருந்தா என்பது பற்றியே சைவ பூஷணநூலுடையார் வேறு சுலோகமியற்றியுள்ளார் என்பது அறிய வேண்டியதாகும். ஒரு பத்த்தி ஏட்டில் சூர்னோத்சவத்தைக் கூறுமிடத்தில் இது வேறு பத்ததியிலிருந்து எடுத்துக் கூறப்படுகின்றது எனக் காட்டப்பட்டுள்ளது.
இவைகளை நோக்குமிடத்து அபர சூர்ணோத்சவம் செய்யவேண்டியதே என்பது தெளிவாகும். ஆனால் அதற்குரிய முறையை அபர பத்ததியிற் சேர்த்துக் கொண்டவர்கள் ஆலய விஷயத்தில் சொல்லப்பட்ட முறையையே அடியொற்றி எழுதிக்கொண்டனர். ஆதனால் ஆலய விஷயத்தில் சொல்லப்படும் சுலோகங்களை அபர சூர்ணோத்சவத்திலும் சொல்லுகின்றனர். தமிழுரையுடன் அகோர சிவாசாரியர் பத்ததியை வெளியிட்டவர் அச்சுலோகங்கள் அபர சூர்ணோத்சவத்திற்குப் பொருந்தாமை கண்டு, "இது பொது விதி. யாதலின் இங்ங்ணம் கூறப்பட்டது" எனச் சமாதான மெழுதியுள்ளனர். ஆலய விஷயத்தில்சுண்ணமிடிக்கும்போது ஆசாரியர் எஜமானர் உருத்திர கணிகையர் உலக்கையில் எவ்வெவ்விடங்களில் பிடிக்கவேண்டுமெனக் கூறப்பட்டுள். ளது. உத்சவ ஆரம்பத்திலேயே அவர்கள் யாவரும் சங்கல்பம் காப்புக் கட்டுதல்களால் தொடர்பு உடையவர்களாதலால் அங்ங்னம் கூறப்பட்டதாகும்.
அபர சூர்னோத்சவத்தில் இறந்தவருக்குக் கிரியை செய்பவரே கர்த்தாவன்றிக் குரு கர்த்தாவல்லர். குரு அதனைச் செய்வித்து வைப்பவரே. அங்ங்னமாகவும் குருவும் கர்த்தாவும் எழுந்து நின்று உலக்கையைப் பிடித்துக் கொண்டு சுண்ணமிடிப்பது பொருந்தாததாகும். அது பொருந்துமாயின் கர்த்தா செய்யும் பிரேத ஸ்நானம், தானம், வாய்க்கரிசியிடல், கொள்ளி வைத்தல், குடமுடைத்தல், கல்லில் தருப்பணஞ் செய்தல், பிண்டமிடல் முதலிய எல்ல்ாக் கிரியைகளும் குருவும் சேர்ந்து செய்யவேண்டுமே! அங்ங்ணம் செய்யாமையால் சுண்ணமிடிக்கமட்டும் குருவும் சேர்ந்து இடிக்க வேண்டுமென்பது எங்ங்ணம் பொருந்தும்?
இனித் தேகாந்த சூர்ணோத்சவக் கிரியை செய்யும் முறை: இறந்தவரது வீட்டு வாயிலில் பந்தலிட்டு அலங்கரித்து மெழுகிக் கிழக்கு மேற்காக மூன்று மண்டலங்களமைத்து மாவினால் கோலமிட்டுத் தானியங்களைப் பரப்பி மேற்கு மண்டலத்தில் நடுவில் பிரதான கும்பமும் சூழவர எட்டுக்கும்பங்களும் வைத்து, நடு மண்டலத்தில் உரல் உலக்கையை அலங்கரித்து வைத்து உரலில் மஞ்சல்மாவும் அறுகுமிட்டு, கிழக்கு மண்டலத்தில் பேரிகை அல்லது பூசை மணியை அலங்கரித்து வைத்து, உரலைச் சூழ வரவாவது வேறாகவாவது எண்ணெய் முதலிய பிரேத ஸ்நானத்துக்குரிய பொருள்களைப் பாத்திரங்களில் வைத்துக்கொண்டு, கர்த்தா ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு, குரு மூலமாகச் சங்கல்பஞ் செய்து, கிரியைகளை முடித்தல் வேண்டும்; என்பதாம்.

Page 33
ஒன்பது கும்பங்களில் பூசை செய்யும் போது இறந்தவர் பெற்ற தீகூைடிக்குத்தக்கவாறு சமய தீக்ஷிதருக்கு உருத்திர மூர்த்தியையும் விசேட தீக்ஷிதருக்கு ஈசுவரமூர்த்தியையும் நிருவாண தீகூைடியும் சதாகாபிஷேகமும் ஆசாரியாபிஷேகமும் பெற்றவர்க்குச் சதாசிவ மூர்த்தியையும் நடுக்கும்பத்தில் பூசித்தல் வேண்டும். மற்றைய கும்பங்களில் ஈசானம் முதலாக எட்டுத் திக்கு பாலகர்களையும் பூசித்தல் வேண்டும். நடுவில் பூசிக்கப்படும் மூர்த்தி, சத்தியாகிய வர்த்தனி கும்ப பூசையின்றியே பூசிக்கப்பட வேண்டுமெனக் காமிகாகயத்தில் கூறப்பட்டிருக்கவும் சிலர் உருத்திராணி என ஒரு சத்தி கும்பம் வைத்துப் பூசிக்கின்றனர். இதனை அறியாமை என்பதா? பொருளவா என்பதா? இனி ஒன்பது கும்பமின்றி ஒரு கும்பமாயின் அதில் பாசுபதாஸ்திர மூர்த்தியைப் பூசித்தல் வேண்டும்.
சிலர் சூர்ணோத்சவத்திலும் அந்தியேஷ்டியிலும் பிரேதசுத்திக்காகவும் மண்டப சுத்திக்காகவும் அமைக்கப்பட்ட பஞ்சகவ்வியத்தைக் கொடுத்துக் கர்த்தாவைப் பருகச் செய்கின்றனர். அதனால் கர்த்தா அடையும் சுத்தி யாதோ? ஒருபோது ஆசெளசமே இல்லாது போய்விடுமோ! அபரக் கிரியையில் ஆசௌச முடிவிலன்றிக் கர்த்தாவுக்குப் பஞ்சகவ்வியப் பிராசனம் சொல்லப்படவில்லை.
கண்ணமிடிக்கும்போது திருப்பொற் சுண்ணமும் தேவார முதலிய திருவருட் பாடல்களும் ஒதப்படுகின்றன. ஆலயத்தில் தீர்த்தத்திற்கு முன் சுண்ணமிடிக்கப்படுதலைத் திருவுள்ளத்திற் கொண்டே, அதற்கு உபயோகிக்கத்தக்கதாகத் திருப்பொற்சுண்ணத்தினை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்தனராதலின் அதனை இங்கே ஒதுவது பொருந்தாதெனச் சிலர் கூறுகின்றனர். அங்ங்னமாயின் தேவாரம் முதலிய திருவருட் பாடல் ஒன்றும் அந்தியக் கிரியைகளில் ஒதப்படக்கூடாதனவாகும். அம்மட்டோ! அத்திருவருட் பாடல்களால் போற்றப்படும் பரமசிவனாரும் அவரது பஞ்சாக்ஷர மகா மந்திரமும் பஞ்சப் பிரம சடங்க மந்திரங்களும் பூசைகளும் அந்தியக் கிரியைகளில் சேர்த்துக் கொள்வதும் பொருந்தாதன. வாகும். அதனால் அந்தியக் கிரியைகளே செய்ய முடியாமற் போகும். ஆதலால் தேவாரம் முதலிய திருவருட் பாடல்களில் அவ்வவ்விடங்களுக்கு இயைந்தவைகளை ஒதுவது தவறாகாதென்க.
இந்தச் சூர்ணோத்சவக் கிரியை அந்தியேட்டிக்கு அங்கமாக அதற்கு முன்னர்ச் செய்யப்படுவதாகும். இறந்தவர் தீகூைடியில்லாதவராயினும் அதனைப் பெறுதற்குரிய வயதும் சிவ சின்னங்களை அணிவதும் சிவ வழிபாடும் உடையராயின் சூர்ணோத்சவம் முதலிய அந்தியக் கிரியைகளைச் செய்யலாமெனவும் அவர் சிவகதியடைய வேண்டுமென விரும்பும் மக்கள் முதலியோர் அவரது அந்தியக் கிரியையைச் செய்யவேண்டு மெனவும் சைவ நூல்கள் கூறுகின்றன. "தீகூஷிதாநாம் அதாந்யேஷாம் சிவசாதந தாரிணாம் அந்யேஷ்டியாஞ்சயதா யோக்யம் ராத்ரி சூர்ணஞ்

சைவயுத்" என்னும் காமிகாகமத்தினாலும் அது விளங்கும்.
இனி எவர் ஒளத்திரி தீகூைடிக்குரியவரோ, அத்திகூைடியைப் பெற்றவரோ ஆயின் அவருக்குச் சூர்ணோத்சவத்தை அங்கமாகவுடைய அந்தியேஷ்டியைச் சரீரத்திலேயே செய்ய வேண்டும். ஆனால் மாமிசம் புசிப்பவர்களுக்குச் சரீரத்தில் அந்தியேஷ்டி செய்யாது பின்னர் தருப்பையாலாகிய பிரதிசரிரத்தில் அந்தியேட்டி செய்யும் முறைமை பெரியோர்களால் அமைக்கப்பட்டுள்ளது. அது மாமிசம் புசிப்பவர்களை அதனை விடுத்து உயர்வடையச் செய்ய வேண்டுமென்னும் நல்ல நோக்கத்துடன் அமைக்கப்பட்டதாகும். அதனால் மாமிசம்புசிப்பவர் இறந்தபோது சூர்ணோத்வசத்துடன் சிவாக்கினி காரியஞ் செய்து சிவாக்கினியால் பிரேதத்தைத் தகனம் செய்வித்துப் பின்னர் ஆசௌச முடிவில் அந்தியேஷ்டியைப் பிரதி சரீரத்தில் செய்து புணர்த்தகனஞ் செய்வித்துக் கிரியை நடத்தும் வழக்கம் வழங்கு வதாயிற்று. மாமிசம்புசியாதவர்களும் புசிப்பவர்களுடன் இனமுறைமையால் சிலபோது போசனக் கலப்பு அடைவதால் தாங்களும் மாமிசம் புசிப்பவர்கள் போலவே ஆசௌச முடிவில் அந்தியேஷ்டியை நடத்தும் வழக்க முடையவர்களாக உள்ளனர்.
இனி ஒருவர் இறந்தபோது அவருடைய அந்தியக் கிரியையைச் செய்தற்குரியவராகப் பலர் கூறப்பட்டுள்ளனர். அவராவார்; மகன், மனைவி, கணவன், மகள், தம்பி, தமையன், அவர் மகன், தந்தை, தாய், மகன் மனைவி, சகோதரி, சகோதரி மகன், சபிண்டன், சமானோதகன், தாயின் சபிண்டன், சமானோதகன், சீடன், குரு, மகள் கணவன், தோழன், அரசன் என்பவர்களாம் வேறொரு வகையாகவும் கூறப்பட்டுள்ளனர்; அவர்: மகன், அவன் மகன், அவன் மகள் மகள் மகன், அவன் மகன், தத்தயுத்திரன், அவன் மகன், பொருளையடையும் மகள் மகன், மனைவி, கணவன், சககளத்தி மகன், மகள், தம்பி, தமையன், அவர் மகன், தந்தை, தாய், மகன் மனைவி, மகன் மகள், மகள் மகள், பெளத்திரன் மனைவி, பெளத்திரன்மகள், தத்தன் மகள், தங்கை, தமக்கை, அவர் மகன், சபிண்டன், சமாணோதகன், தாயின் சபிண்டன், சமானோதகன், அந்த வம்மிசத்தவன், சீடன், நியமிக்கப்பட்டவன் வேலைக்காரன், குரு, ஆசிரியன், கூடப்படித்தவன், மகள் கணவன், தோழன், தன் மனைவியையடைபவன், அரசன் என்பவர்களாம். இவர்களில் முன்னவர் முன்னவர் இல்லாதவிடத்து அல்லது அனைவர்க்கு அபரக் கிரியையில் அதிகாரமில்லாவிடத்து அடுத்த அடுத்தவர் அந்தியக் கிரியையைச் செய்ய வேண்டியவராவர். அவருள்ளும் நல்லொழுக்கமும் சிவதிகூைடிப் பேறும் உடையவரே சைவக் கிரியைகளைச் செய்வதற்குச் சிறந்த அதிகார முடையவராவர்.
பிள்ளையில்லாத மனைவியிறந்தபொழுது கணவனே தந்தை தாயுள்ளவனாயினும் கிரியை செய்ய வேண்டியவனெனச் சிலர் கொள்கின்றனர். அவ்வாறே செய்விக்கின்றனர். அதற்குப் பிராமணமுங் கூறுகின்றனர்.

Page 34
அங்ங்ணமாயின் தமையனிறந்தவிடத்தும் தம்பி தந்தை தாயுள்ள போதும் கிரியை செய்யவேண்டியவனாவனாதலாலும், தந்தை தாயுள்ளபோதும் மகள் மகன் தாயின் தந்தை தாய்க்குக் கிரியை செய்யவேண்டியவனாவனாதலாலும், இங்ங்னஞ் செய்தல் எங்கள் தேச வழக்கமாகிய பெரியோர் கொள்கையல்லாமையாலும் அது பொருந்தாதென்க.
சோபனநாந்தி சிராத்தத்தைத்தானும் தந்தை தாயுள்ளவர் செய்யக்கூடாதென விலக்கும்போது, மனைவிக்குக் கிரியை செய்யலாமெனக் கொள்வது சிட்டாசார விரோதமாகும். இன்னும் கந்தாதி ஈசாதிருபமான பிதிர் தேவர்களைப் பூசிக்கு மதிகாரமில்லாத ஒருவர். தம் மனைவியின் பிரேதரூபமான நிமித்த பிண்டத்தை அதே பிதிர் தேவரூபமான பிண்டத்துடன் சேர்க்கும் ஏகோத்திட்ட விதானமான சபிண்டியும் செய்ய முடியாதவரே. யாவரென்க.
இன்னும் மகன் மனைவியும் மாமனுக்குக் கிரியை செய்யலாமெனக் கூறப்பட்டிருக்கும்போது, மாமன் மருமகளுக்குக் கிரியை செய்யக்கூடாதென விலக்குவது எங்ங்ணம் பொருந்தும்? மகன் மனைவியாருமின்றி யிறந்தவிடத்து மாமன் இருப்பின் அவர் மருமகளுக்குக் கிரியை செய்யக் கூடாதென்பார்கள் போலும் தந்தை உயிருடனிருக்கப் பெற்றவன் தாய்க்குத் தருப்பணஞ் செய்யக்கூடாதென்றும், தாய்க்கு மகாளயஞ் செய்யக்கூடாதென்றும், தன் மக்களுக்கும் கிரியை செய்யக்கூடாதென்றும் விலக்கியிலுக்கவும் தன் மனைவிக்குக் கிரியை செய்யலாமென்பது எங்ங்னம் பொருந்தும்? காமிக ஆகமத்தில், "புதல்வன் இன்றி இறந்தவளுக்குக் கணவன் சபிண்டியைச் செய்க" என விதிக்கப்பட்டுள்ளதேயெனின், அவ்விதியினைப் பொருந்துமாறு பற்றித் தந்தையை யிழந்தவற்கே உரியதெனக் கொள்ளவேண்டுமென்க. அங்ங்ணமாயின், காமிகாகம வசனத்துக்கு முக்கியமாகிய பொருள் கொள்ளாது. பொருந்துமாறு பற்றிய கெளணப் பொருள் கொள்வது குற்றமாகாதோவனின், ஆதி சைவ மகா சைவ அந்தண ஆசாரியர்களே நால்வகை மரபினர்க்கும் ஆசாரியராயிருக்க வேண்டுமென அறுதியிட்டுக் கூறியிருப்பவும், அன்னவர் எல்லோரும் அதனைக் கைக்கொள்ளாமையாலும், சிலர்க்கு விதிக்கப்பட்ட மூன்று நாள் ஆசெளசம் பெரும்பாலும் கொள்ளப்பட்டாமையாலும் சைவாகம விதிகள் சில நெகிழவிடப்படுகின்றன; ஆதலின், காமிகாகம விதிக்குக் கெளணப் பொருள் கொள்வது குற்றமாகாதென்க. இவ்வாராய்ச்சி இவ்வளவில் அமைக.
சூர்ணோத்சவம் செய்தபின் பிரேதத்தைத் தைலம், சூர்ணம் முதலியவைகளினாலும் சத்த சலத்தினாலும் பஞ்சகவ்வியத்தினாலும் சத்தியில்லாத நவகலச ஸ்நபன கும்பங்களினாலும் நன்றாகக் குளிப்பாட்டி வஸ்திரம், விபூதி, சந்தனம், புஷ்பங்களினால் அலங்கரித்து, யாகத்துக்குரிய அல்லது குற்றமில்லாத மரங்களால் அமைக்கப்பட்ட பாடையில் வைத்து,

விசித்திர விமானத்திலேற்றி, தம் மரபினராவது பிறராவது தூயவர் சுமந்துவர். வாத்தியம் சங்கம் ஒலிக்க முன்னே முக்காலியுறியில் வைத்து எடுக்கப்பட்ட புகைநெருப்புடனும் பின்னே குனிந்த தலையுடன் வருகின்ற இனசனங்களுடனும் வடக்கு, வடகிழக்குத் திசையிலோ வேறு திசையிலோ உள்ள மயானத்தை நோக்கிக் காற்பக்கம் முன்னாகக் கொண்டு சென்று நீர்க்கரையை யடுத்ததும் தென்புறந்தாழ்ந்ததுமான அவ்விடத்தில் தெற்கே சிரசாக வைத்தல் வேண்டும்.
அந்தியேஷ்டி
அந்தியேஷ்டி என்பது: துலதேக முடிவில் ஆன்மா சபிண்டீகரணத்தின் பின் பரகதியடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம் எனப் பொருள்படும்.
சமயாசாரங்களில் உளவாகிய குறைகள் மாறுபாடுகள் செய்யப்படாதவைகள் என்பவற்றைச் சுத்தி செய்வதே அந்தியேஷ்டியின் நோக்கமாகும்.
அவ்வந்தியேஷ்டி சமய அந்தியேஷ்டி, விசேஷ அந்தியேஷ்டி, நிருவாண அந்தியேஷ்டி என மூன்று வகைப்படும். சமய அந்தியேஷ்டி சமய தீகூைடி மாத்திரம் பெற்றவருக்கும், தீகூைடி பெறாவிடினும் சிவ சின்னந் தரித்தலும் சிவ வழிபாடு செய்தலும் உடையவர்களுக்கும் செய்யப்படுவதாகும். விசேஷ அந்தியேஷ்டி சமய விஷேட தீகூைடிகள் பெற்றவருக்கு செய்யப்படுவதாகும். நிருவான அந்தியேஷ்டி சமய விசேஷ நிருவாண தீகூைடிகள் பெற்றவருக்கும் அவற்றோடு சாதகாபிஷேக ஆசாரியபிஷேகங்கள் பெற்றவருக்கும் செய்யப்படுவதாகும். அந்தியேஷ்டி மூன்று வகைப்படினும் மண்டப கும்ப அமைப்புக்களிலும் பூசையிலும் வேறுபாடில்லை. இறந்தவர் விஷயமான கிரியையிலேயே வேறுபாடுளதாகும்.
மயானத்தில் ஒன்பது முதல் குறைந்தது ஐந்து வரையான முழ நீள அகலங் கொண்ட சதுரமான மண்டபம் அமைக்க வேண்டும். பதினாறு பன்னிரண்டு நான்கு கால்களேனும் இருக்கவேண்டும். மண்டபத்தை ஒன்பது பதமாக்கி நடுப்பதத்தில் ஓம குண்டமும், வடமேற்குப் பதத்தில் சிவகும்ப வேதிகையும்,வடகிழக்குப் பதத்தில் பாசுபதாஸ்திர கரக வேதிகையும், தென்கிழக்குப் பதத்தில் சிதாவாஸ்து காதமும், தென்மேற்குப் பதத்தில் பஞ்சகவ்விய மேடையும், மண்டபத்தின் சுற்றுப்புறத்தில் திரிசூலம் முதலிய பத்து ஆயுத கும்பங்களின் பொருட்டுச் சுற்று வேதிகையும் நான்கு வாயிலும், தெற்கில் பிரதான வாயிலும் பொருந்தும்படி அமைத்துவிதானம், தோரணம், மாலைகளால் அலங்கரித்துச் சாணத்தால் சுத்தி செய்தல் வேண்டும்.
மண்டபத்தை அரிசிமாவினால் கோலமிட்டு, சிதாவாஸ்துகாத பதத்தை வடக்குத் தெற்காக நீண்ட சதுரமாக்கி ஆறு அல்லது எட்டு அங்குல ஆழமாகச் செய்து அதனுள் வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் ஆறு ஆறு ரேகைகள் கீறி அதனை இருபத்தைந்து பதமாக்கி, நடு ஐந்து பதங்களில் மஞ்சல்மா இட்டு ஒன்றாகச் செய்து அதில் பிருதுவிதத்துவத்

Page 35
தையும், தென்மேற்கில் நான்கு பதங்களில் அரிசிமா இட்டு ஒன்றாகச் செய்து அதில் அப்புதத்துவத்தையும், தென்கிழக்கில் நான்கு பதங்களில் செங்கல் மா இட்டு ஒன்றாகச் செய்து அதில் தேயு தத்துவத்தையும், வடமேற்கில் நான்கு பதங்களில் கரிமா இட்டு ஒன்றாகச் செய்து அதில் வாயுதத்துவத்தையும், வடகிழக்கில் நான்கு பதங்களில் பச்சிலை மா இட்டு ஒன்றாகச் செய்து அதில் ஆகாசதத்துவத்தையும், வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்குத் திக்குகளிலுள்ள ஒவ்வொரு பதங்களில் முறையே செங்கல் மா, அரிசிமா, கரிமா மஞ்சல் மாக்களையிட்டு, அவற்றில் முறையே குபேரன், வருணன், யமன், இந்திரன் என்னும் பெருந்திசை காவலர் நால்வரையும் அமைத்து கும்பங்களையும் முறைப்படி தானியங்களின் மீது வைத்தல் வேண்டும்,
இறந்தவரது தீகூைடிக்குத் தக்கவாறாக சமய விசேட நிருவாண அந்தியேஷ்டிகளுள் ஏற்ற அந்தியேஷ்டியைக் குரு மூலமாகச் சங்கல்பஞ் செய்து செய்வித்தல் வேண்டும். சாதக ஆசாரியரல்லாதவர்களுக்குச் செய்யப்படுந் தீகூைடி நிரதிகார தீகூைடியேயாயினும் தீகூைடிக்குப் பின் இயன்ற மட்டும் அநுஷ்டிக்க வேண்டிய சமய ஆசாரங்களில் அறியாமையாலுளதாய குறைவினதும் அறியாமையாற் செய்யப்படாத பிராயச் சித்தத்தினதும் சமய ஆசார விகல்பத்தினதும் குற்றம் நீங்கும் பொருட்டும் பிரேதத்தை முறைப்படி தகனம் செய்யும் பொருட்டும் சபிண்டீகரணத்தின்பின் ஆன்மா சிவத்துவப் பேறடையும் பொருட்டுமே அந்தியேஷ்டி செய்யப்படுவதாகும். அங்ங்னமாயின் தீகூைடி பெறாதவருக்கு அந்தியேஷ்டி இல்லையே? எனின், "சமயம் முதலிய தீகூைடிகளைக் கேள்வியாளறிந்தவரும் தீகூைடி பெறுதற்குரிய காலங் கழியப் பெற்றும். அதனைப் பெறாதவரும், சைவத் தந்தை தாயாருக்குப்பிள்ளையாயுள்ளவரும், சைவ சாதனங்களையுடையவரும், சைவாலய வழிபாடு செய்பவரும் ஆகிய ஒருவர் இறந்தவிடத்து அவருக்கு மறுமை நற்பேறு ஒன்றும் இல்லையாய் விடுமாதலால் அவருக்கும் நற்பேறு உண்டாகும் பொருட்டு அந்தியேஷ்டி செய்க" எனக் கூறப்பட்டுள்ளது என்க. இதனைக் கருதியே தீகூைடியில்லாதவருக்கும் சூர்ணோத்சவமும், அந்தியேஷ்டியும் செய்யலாமெனக் காமிகாகமத்தில் விதிக்கப்பட்டதாகும்.
அந்திவேஷ்டியில் செய்யப்படுங் கிரியைகளாவன: ஸ்நான சந்தியாவந்தனம் முடித்த ஆசாரியர் அஸ்திரவர்த்தனியை எடுத்துக் கொண்டு இடப்புறமாக மண்டபத்தைச் சுற்றி வந்து தெற்கு வாயிலினால் உள்ளே புகுந்து இடமாகச் சென்று சிவகும்ப வேதிகைக்குத் தெற்கில் வடக்கு முகமாக இருத்தல், சங்கல்பம், கரநியாசம், அங்கநியாசம், சாமானிய அர்க்கியம், பூதசுத்தி, அந்தர்யாகம், விசேஷார்க் கியம், மந்திரசுத்தி விசஹஸ்தம் ஞானகட்கதாரணம் என்பவைகளைச் செய்தல், வர்த்தனிசயத்தைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து அஸ்திர மந்திரஞ் செபித்துத்

தெளித்தல், பஞ்சகவ்வியம் அமைத்தல் அதனால் தெளித்து மண்டப சுத்தி செய்தல், நெற்பொரிமுதலியவற்றை மண்டபத்துள் அஸ்திரத்தால் தூவுதல், அவற்றின் சேஷத்தை ஈசானத்தில் பாசுபதாஸ்திர வர்த்தனியாசனத்தில் இடுதல், சிதாவாஸ்து பூசை, பாசுபதாஸ்திர பூசை, தசாயுத பூசை, தசாயுத தேவர்களிடம் யாக முடிவுரை பாதுகாக்கும் சிவாஞ்ஞையைத் தெரிவித்தல், சிவகும்ப பூசை சிவாக்கினி காரியம், பிராயச்சித்த செபம், சிதாவாஸ்துவில் விசேடக் கிரியை பிரேத சுத்தி, தத்துவ பூசை, மகாசாலப் பிரயோகம், நாடீசந்தானம், சந்நிதானாகுதி, ஆசார வைகல்யசுத்தி ஓமம்,தானகரணம், ஆத்மயோசனை, மண்டப விசர்ச்சனம், பவிகரணம், பிரேதத்தைச் சிதையில் வைத்தல், சிவகும்ப கடச்சேதனம் வாய்க்கரிசியிடல், சவாகுதி, கொள்ளி வைத்தல், குடமுடைத்தல், பிரேத தகனம் என்பவைகளாம்.
பெரும்பான்மையான மக்கள், ஒருவரிறந்தபோதே அந்தியேஷ்டியைச் செய்யாது ஆசெளச முடிவிலேயே அதனைச் செய்வதால், அதற்கு அங்க மாகச் செய்யப்பட்ட சூர்னோத்சவம் பலநாள் இடையீடுபட்டு விட்டமையால் மீட்டும் அச்சூர்ணோத்சவத்தைச் சுருக்கமாகச் செய்துகொள்ளும் வழக்கமுளதாயது. அன்றியும் இறந்தபோது சூர்ணோத்சவம் செய்யப்படாவின் அந்தியேஷ்டி செய்யும் பொது அதனைச் செய்யவேண்டியதாகின்றது. ஆதலால் அந்தியேஷ்டிக்கு முன் சூர்ணோத்சவம் செய்தே குருமார் அந்தியேஷ்டியைத் தொடங்குகின்றனர்.
இக்கிரியைகளில், அஸ்திர வர்த்தனி என்பது பாசுபதாஸ்திர கரகம் என்றே அநேக குருமார் எண்ணி அதனையே எடுத்துக் கொள்கின்றனர். பூர்வயாகத்தில் சிவகும்பத்தினைச் சீடன் பின்னே கொண்டுவர, குரு வர்த்தனிகரகத்தினை எடுத்துக்கொண்டு அதன் நாசியால் சலஞ்சிந்த மண்டபத்துள் வலமாகச் சுற்றி வந்து, அவைகளை முன்னிருந்த இடத்தில் வைக்க, எனச் சொல்லப்பட்டுருத்தலை எண்ணியே இங்கேயும் அங்ங்னஞ் செய்கின்றனர் போலும், இங்கே அஸ்திர வர்த்தனியென்பது பாசுபதாஸ்திர கரகமாயின் அதனை அதற்குரிய இடத்தில் வைக்க, எனவும் சொல்லப்படும்; அங்ங்னஞ் சொல்லப்படாமையாலும், அஸ்திர மந்திரத்தால் வர்த்தனி சலத்தைச் செபித்து, அதனால் மண்டபதிரவியங்களைச் சுத்தி செய்க, எனக் கூறப்படுதலாலும் "வர்த்தநீம் உதக பூர்ணாம்" (வர்த்தனி நீர் நிறைந்த பாத்திரம்) எனக் காமிகாகமத்தில் கூறப்படுதலாலும், பத்ததி வியாக்கியானகாரர் "அஸ்திர வர்த்தனி" என்பதோடு "சலபூர்ணாம்" என்பது சேர்க்கப்பட வேண்டுமெனக் கூறுதலாலும். அதனால் வர்த்தனியென்பது சலம் நிறைந்த பாத்திரம் எனப் பொருள் கொள்ளத்தக்கதாக இருத்தலாலும் பாசுபதயஸ்திர கரகத்தைக் கொள்ளுதல் பொருந்தாமை காண்க.
சிதாவாஸ்துகாதம் என்பதில், சிதா என்பது தகனத்துக்குரிய
விறகடுக்கு. வாஸ்து என்பது இருபத்தைந்து பதங்களையுடையதும் வேதாள நாமத்தையுடையதுமாகிய வாஸ்து. அவ்வாஸ்துவே தகனத்துக்

Page 36
குரிய விறகடுக்குமிடமாகும். காதம் என்பது ஆழம், சிதா வாஸ்து பூசையில் ஐம்பெரும் பூதங்களும் ஒடுக்கக் கிரமத்தில் கூறப்பட்டிருத்தலால், நாற்பெருந்திசை காவலரையும் வடக்கு முதலாக அப்பிரதகூதிணமாகவே பூசித்தல் வேண்டும். சிதாவாஸ்து, பிரேத சரீரத்தை அதற்குக் காரணமாகவுள்ள பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களிலும் மந்திரத்துடன் ஒடுக்கும் பொருட்டு, அமைத்துக் கொண்ட தகனத்துக்குரிய இடமாகும்.
சிவகும்ப பூசையிலும், அங்கே தொடங்கப்படுவது சமய விசேஷ நிருவாண அந்தியேஷ்டிகளுள் எதுவோ அதற்கியைந்தவாறாக உருத்திர, ஈசுவர, சதாசிவமூர்த்திகளுள் இயைந்த மூர்த்தியைப் பூசிக்க வேண்டுமென்பர் சிலர். அது பொருந்தார்; சமய விஷேச நிருவாண தீகூைடிகள் எல்லாவற்றிலும் சிவமண்டல பூசையில் சதாசிவமூர்த்தியே பூசிக்கப்படுவதாலும் காரணேசுவரர்களில் சதாசிவமூர்த்தியே தலைவராதலாலும் அவரது அணுக்கிரகத்தினாலேயே ஆன்மா எந்தப் பதவியையும் அடையுந் தகுதி பெறுதலாலும் எல்லா அந்தியேஷ்டிகளிலும் சதாசிவமூர்த்தியைப் பூசிப்பதே பொருத்தமாமென்க.
தத்துவ பூசையில், தருப்பை முதலியவற்றால் செய்யப்பட்ட பிரதி தேகத்தில் மாத்திரமே அப்பூசை செய்தல் வேண்டும்; நிச தேகத்திலானால் அது செய்யவேண்டியதில்லையென்றே அநேகர் கொள்கின்றனர். தத்துவ பூசை எதற்காகச் செய்யப்படுவது என்பதையும் எந்தத் தேகத்திலிருந்து தத்துவங்களையும் தத்துவ பதிகளையும் கொணர்ந்து பிரதி தேகத்தில் பூசிக்குமாறு கூறப்பட்டதென்பதையும் ஆராயும் போது இறந்த ஆன்மாவின் சூக்கும தேகத்திலிருந்தே கொணருமாறு கூறப்படுதலாலும் தத்துவங்களும் தத்துவ பதிகளும் உயிர் உடலில் வசிப்பதற்கு உறுதுணையாய் உதவுவன ஆதலாலும் இறந்த நிச தேசகத்தில் அத்தத்துவம் முதலியன இல்லையென்பது தெளியப்படும்.
மிருதக திகூைடி என்பது : உயிரை வசிக்கச் செய்யும் பொருட்டு நிச தெகத்திலோ பிரதி தேகத்திலோ செய்யப்படும் தத்துவ பூசையாகும். நிருவாண தீகூைடி பெற வேண்டுமென விரும்பியிருந்த ஒருவர் இறந்தபோது அவரதுநிசதேகத்தில் மிருதக தீகூைடியாகியதத்துவபூசை கூறப்படுகின்றது. நிருவாண தீகூைடியை விரும்பிய ஒருவர் தேசாந்தரதில் இறந்துவிட்டால் பிரதி தேகத்தில் மிருதக தீகூைடியாகிய தத்துவ பூசை கூறப்படுகின்றது. அதன் பின்னரே நிருவாண அந்தியேஷ்டி செய்யுமாறு கூறப்படுகின்றது. இவற்றால் நிச தேகத்திலும் தத்துவபூசையுண்டென்பது தெளிவாகும்.
இறந்தவரது தேகத்தில் தத்துவங்களும் தத்துவ பதிகளும் உண்டாயின ஆன்மாவும் அங்கேயுண்டு; அஃதின்மையால் ஆன்மாவினை நிச தேகத்திலோ பிரதி தேகத்திலோ வசிக்கச் செய்து அந்தியேஷ்டியினால்

தூய்மையடைவித்து சிவகதியிற் சேர்க்கும் பொருட்டே தத்துவ, பூசை செய்யப்படுவதாதலின் தத்து பூசை நிச தேகத்திலும் செய்ய வேண்டியதே. யென்பது கிரியைகளின் உண்மைகளையுணர்ந்த சிறந்த ஆசாரியர்களின் கருத்தாகும்.
மகாசாலப் பிரயோகம் என்பது: ஆன்மாவைப் பற்றுதற்குரிய நாதசத்தியாகிய பெருமை பொருந்திய மந்திர வலையை உபயோகித்தலாம். இதனால் ஆன்மாவைச் சூக்கும தேகத்திலிருந்து கொணர்ந்து துரல தேகத்தில் சேர்த்துச் சுத்தி செய்யுமாறு கூறப்படுதலால், அதற்குமுன் அதிலுள்ள தத்துவங்களையும் தத்துவபதிகளையும் கொணர்ந்து தூல தேகத்தில் அமைத்துக் கொள்ளுதல் வேண்டுமென்பதும் போதரும்.
ஆத்தும யோசனை என்பது: ஆன்மாவைத் தீகூைடிக்குத் தக்கதாக உரியமூர்த்தியிடத்தில் சேர்த்தலாகும். அங்ங்ணம் உரியமூர்த்தியிடத்தில் சேர்த்தபின், கல்லில்பூசித்தால் முதலாகச் சபிண்டீகரணம் வரையும் செய்யுங் கிரியைகள் எதன் பொருட்டுச் செய்யப்படுவன? எனின் அந்தியேஷ்டியில் சமயாசார வேறுபாடுகளின் சுத்தியும் மல கருமாயா பாசங்களின் சுத்தியும் செய்து சிவத்துவப் பேறு உண்டாவதற்குத் தக்கமாக ஆன்மாவைத் தகுதியடையச் செய்வதே ஆத்தும யோசனையின் தாற்பரியமென்க. "சமிண்டீகரண தூர்த்துவம் சிவலோகஞ்ச கச்சதி" என்னும் காமிக வசனம் இக்கருத்தை வலியுறுத்தும்.
சிவகும்ப கடச்சேதம் என்பது; அந்தியேஷ்டியின் முடிவில் மண்டப விசர்ச்சனம் செய்தபின் செய்வதாகும். அஃதாவது; கர்த்தா பிரேதத்தைச் சிதையில் வைத்தபின் சிவகும்ப கடத்தையெடுத்து இடத்தோளில் வைத்துக் கொண்டு கடத்தின் பக்கத்திலிருந்து சலமொழுகச் செய்து சிதையை இடப்புறமாக மும்முறை சுற்றி வந்து தலைப்பக்கத்தில் வைத்து அதன் கழுத்துவரை உடைத்தெடுத்து விட்டு அந்தச் சலத்தில் அரிசியை நனைத்துக் காசுடன் தத்புருஷ மந்திரத்தால் வாய்க் கரிசியிட்டு, சிவாக்கினியை எடுத்துத் தலைப் பக்கத்தில் வைத்துக் குரு மூலமாகச் சவாகுதிசெய்து, பின்பு கர்த்தா அந்தக் கடத்தையும் கொள்ளியையும் எடுத்துக் கொண்டு முன்போலச் சிதையை ஒரு முறை சுற்றிவந்து தலைப்பக்கத்தில் தெற்கு முகமாக நின்று பின்புறமாகக் கொள்ளியைப் பிரேதத்தின் தலையில் வைத்துக் கடத்தை முன்புறமாக உடையும்படியிட்டுத் திரும்பிப் பாராது நீர்க்கரையை அடைவதாம்.
நிவாபாஞ்சலி தருப்பணம்
நீர்க் கரையையடைந்து கழுத்துக்குமேல் சவுரம் செய்வித்துஸ்நானஞ் செய்து சலக்கரையில் நவாபாஞ்சலி தருப்பணஞ் செய்க. பிதிரர் பொருட்டு இரு கைகளாலும் செய்யப்படுஞ் சல தருப்பணம் என்பது அதன் பொருளா

Page 37
கும். இது சபீண்டீகரணத்தின் பின் ஆன்மாவுக்குக் கிடைப்பதாகிய கந்தாதிஈசாதி ரூபமான பிதிர் தேவ சிவத்துவ சித்தியின் பொருட்டு ஒவ்வொன்றற்கும் மும்மூன்று தருப்பணஞ் செய்து உவப்பிப்பதாகும். சமயி புத்திரர்களுக்கு கந்தர் சண்டர் கணாதீசர் பிதிர் தேவர், விசேஷ புத்திரர் சாதகர் ஆசாரியருக்கு ஈசர் சதாசிவர் சாந்தர் பிதிர் தேவராகும். இதனைப் பாஷாண உத்தியாபனத்திலும் செய்யலாம்.
சவுரம் கருமாங்க சவுரம், சுத்தி சவுரம், அலங்கார சவுரம் என மூவகைப்படும். அவற்றுள் கருமாங்க சவுரம் செய்யத் தொடங்கும் கருமத்துக்கு அங்கமாகக் கழுத்துக்கு மேல் செய்விப்பதாகும். சுத்தி சவுரம் மரண ஆசௌச முடிவில் மரணா செளசிகள் எல்லோரும், செனன சூதக முடிவில் தந்தை மாத்திரமும் சர்வாங்கமும் செய்வித்துக் கொள்வதாகும். அலங்கார சவுரம் வாரத்துக்கு ஒரு முறையோ இருமுறையோ இரு வாரத்துக்கு ஒரு முறையோ குற்றமற்ற நாளில் செய்வித்துக் கொள்வதாகும். இங்கே சொல்லப்பட்ட கருமாங்க சவுரத்தை வீட்டில் சூர்னோத்சவக் கிரியை தொடங்குமுன் செய்வித்துக் கொள்ளலாமெனவும் சைவ பூஷணங் கூறுகின்றது.
நக்னதானம்
இறந்தவரின் நிருவாணம் பசி தாகம் இருள்களை நீக்கும் பொருட்டுக் குடும்பத்தாரான தீக்ஷிதருக்குத் தகன முடிவில் வஸ்திரம் அரிசி முதலியவைகளைத் தானமாகக் கொடுக்க வேண்டுமெனக் காமிகத்தில் கூறப்பட்டுள்ளது.
துர்மரணப் பிராயச்சித்தம்
இது பொதுவாக எல்லாருக்கும் செய்யப்படும் அபரக் கிரியையன்றாயினும், பின்னர்ச் சொல்லப்படும் புணர்த்தகனத்தோடு தொடர்புடையதாதலின் இங்கே கூறப்பட்டதாகும்.
துர்மரணம் அறிந்து செய்வது அறியாது உளதாவது என இருவகைப்படும். அறிந்து செய்வது தானே தன்னை மாய்த்துக் கொள்வது. அது நஞ்சுண்டல், நீரில் நெருப்பில் மலையில் மரத்தில் வீழ்தல், நான்று கொள்ளுதல், ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளுதல் முதலியவற்றால் வருவது. இதில் அப்போது பிரேதத்தைச் சமானிய அக்கினியால் தகனஞ் செய்க. ஒரு வருடம், ஆறு மாதம், மூன்று மாதமாவது சென்றபின் இறந்த திதியில் வைரவ சாந்தி செய்து தருப்பை முதலியவற்றாலான பிரதிதேகத்தில் அந்தியேஷ்டி செய்க. மூன்று நாள் ஆசௌசம் காத்து ஏகோத்திட்டம் முதலியவற்றைச் செய்க. இந்த மரணத்தில் ஞாதிகளுக்கு அப்போது ஆசௌசமில்லை. பின்னர்க் கிரியை செய்யும் போது மூன்று நாளுண்டு. தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டவர் பைசாச உருவத்துடன் அலைந்து

திரிவராதலால் அப்பைசாச புவனத்துக்கு அதிபதியாகிய வைரவ மூர்த்தியை வழிபட்டுப் பைசாச வடிவத்தை நீக்குவிக்கும் பொருட்டே வைரவ சாந்தி செய்யப்படுவதாகும்.
அறியாது உளதாகும் துர்மரணத்தில் சாதாரண மரணத்திற் போலவே கிரியையும் ஆசௌசமுங் கொள்ளப்படும். தேகம் பின்னப்பட்டுவிட்டதாயின் அப்போது சர்மானிய அக்கினியால் தகனஞ் செய்துவிட்டு, ஆசௌச முடிவுள் பிரதி தேகத்தில் கிரியைகளை முடித்துப் புணர்த்தகனம் செய்க. அறிந்து செய்யும் துர்மரணத்தில் எங்ங்னம் வைரவ சாந்தி செய்து கிரியை தொடங்கப்படுகின்றதோ அங்ங்னமே அறியாதுளதாகும் துர்மரணத்திலும் வைரவ சாந்தி செய்தே கிரியை தொடங்க வேண்டுமென்பது பெரியோரது கொள்கையாகும். சிலர் அறியாதுளதாகும் துர்மரணத்தில் வைரவ சாந்தி செய்ய வேண்டியதில்லையென்பர். அங்ங்ணமானால் அறிந்துளதாயதோ அறியாதுளதோ என்று நிச்சயிக்க முடியாத துர்மரணத்தில் யாது செய்வது? ஆதலால் பொதுவாகத் துர்மரணத்தில் சாந்தி செய்து கிரியை தொடங்குவதே கொள்ளத்தக்கதாகும்.
புனர்த்தகனம்
தேசாந்தரத்தில் மரணமாகிக் கிரியை முடிக்கப் பெறாதவருக்கும், அறிந்து துர்மரணமானவருக்கும். அறியாது துர்மரணமானவரில் தேகம் பின்னப்பட்டவருக்கும், அறிந்துளதாயதோ, அறியாதுளதாயதோ என்று நிச்சயிக்க முடியாது துர்மரணமானவருக்கும், கூடியம், குஷ்டம், வைசூரி முதலிய நோய்களினால் இறந்து தேகம் பின்னப்பட்டவருக்கும், ஆசெள முடிவுள் சபிண்டியொழிந்தகிரியைகள் செய்யப்படாதவருக்கும், பிரதி தேகத்தில் கிரியை முடித்துப் புணர்த்தகனம் செய்தல் வேண்டும். புனர்த்தகனம்-பின்னரும் சுடுதல், துதியை, சத்தமி,துவாதசித் திதிகளுள் ஒன்றும், செவ்வாய், வியாழன், வெள்ளி வாரங்களுள் ஒன்றும், கார்த்திகை, உத்தரம், உத்தராடம், புனர்பூசம் விசாகம், பூரட்டாதி நக்ஷத்திரங்களுள் ஒன்றும் சேர்ந்த திரிபுஷ்கரமென்னும் குற்றநாளில் இறந்தவருக்கும் புனர்த்தகனம் செய்யவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இவ்விதி ஆசரணையில் இல்லை. இன்னும் மது மாமிச போசனிகளுக்கும் புணர்த்தகனம் செய்வது சிட்டாசாரமாக நிகழ்ந்து வருகின்றது. சைவ திகூைடிப் பேறுடையவருக்கு நிச தேகத்தில் அந்தியேஷ்டி செய்வதற்குத் தடையாதெனச் சிலர் விவாதிக்கின்றனர். தீகூைடி பெற்றவர் அதன் பின்னும் மது மாமிசம் உண்பவராயின், தாம் பெற்ற தீகூைடியினால் உயர்வும் பயனுமுடையவராகார். ஆதலால் அவர் அசுத்த வேளாளர் தன்மையும் சைவாசாரத்தை விடுத்த குற்றமும் உடையவராகின்றார். ஆகவே அப்படியானவருக்கும் பிரதி தேகத்தில் கிரியை முடித்துப் புனர்த்தகனம் செய்வதாகப் பெரியோர் கைக்கொண்ட வழக்கம் பொருத்தமுடையதேயாகும். மந்திரமில்லாமல் தகனஞ் செய்யப்

Page 38
பட்டவருக்குப் புணர்த்தகனம் விதிக்கப்பட்டமை சைவாசாரத்தை விடுத்தவரையும் மிகுதியும் கருதியேயாகும்.
அத்திசஞ்சயனம்
தகனம் செய்த அன்றேனும், மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் நாளேனும் என்பு பொறுக்குதல் வேண்டும். தகன அக்கினி அவிந்துவிட்டால் அவ்விடத்தில் முறைப்படி சிவாக்கினியையுண்டாக்கிப்பிராயச்சித்த ஒமஞ் செய்து பின்னர் தத்துவ ஒமஞ் செய்து அக்கினியை உத்துவாசனஞ் செய்க. பின் பால் முதலியவைகளால் அபிஷேகஞ் செய்து கால், கொப்பூழ் மார்பு, நெற்றி, தலை என்னுமிடங்களிலுள்ள என்புக.ைச் சத்தியோசாதம் முதலிய ஐந்து பிரமமந்திரங்களாலெடுத்துப் பாலும் நீருமுள்ள பாண்டத்தில் ஒலியுண்டாகாமல் வைத்துக்கொண்டு, சாம்பலையும் அள்ளிவிட்டு, அவ்விடத்தைச் சுத்தி செய்து பண்படுத்தித் தானியம் விதைத்து, நெற்பொரி, மாஅடை, தாம்பூலம், பழம் முதலியவைகளைப் பூதப் பிரேத பைசாசங்களின் பொருட்டுப் பலியாக இட்டு அத்தியையும், சாம்பலையும் சமுத்திரம் முதலிய தீர்த்தங்களில் இடுக.
பாஷாணத்தாபனம்
அந்தியேஷ்டி முடித்து வீட்டில் வந்து வீட்டினுள்ளேயாயினும், வாயிலிலாயினும், வெளியிலாயினும் நான்கு முழச் சதுரத்தில் மண்டபமும் வடக்கே மாத்திரம் வாயிலும் மண்டபத்துள் தெற்குப் பக்கத்தில் வேதிகையும் அதற்கு முன் குழியும் அமைத்து வேதிகையில் கும்பமும் குழியில் பாத்திரத்தில் கல்லும் வைத்துப் பூசித்தல் வேண்டும். முதல்நாளாவது, மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் நாளாவது, ஆசௌசமுடிவு நாளாவது கல்லு வைத்துப் பூசிக்கலாம். முதல் நாள் முதலிய தினங்களில் கல்லு வைத்தால் ஆசெள முடிவுநாள்வரை பூசிக்கவேண்டும்.
கல்லு வைத்துப் பூசிப்பதும் வாச உதகம், குச உதகம், தில உதகம் ஆகிய தருப்பணங்கள் செய்வதும் ஆசெளசநாட்கணக்கான பிண்டமிடுவதும் நைவேத்தியம் கொடுப்பதும் உருத்திர பலியிடுவதும் பிரபூத பலி படைப்பதும் ஆகியவைகளைச் செய்வது தேகம் தகனஞ் செய்யப்பட்ட ஆன்மாவின் வெப்பம் பசி, தாகங்கள் நீங்கும் பொருட்டும், சூக்குக தேகம் விருத்தியடையும் பொருட்டும், அத்தேகத்தில் பதினொரு மந்திரங்கள் அமைக்கப்படுதலால் அது மந்திர தேகமாகும் பொருட்டும், பிரேத வடிவம் நீங்கும் பொருட்டும், ஆன்மாவின் பலவகை உணவு விருப்பங்களைத் திருப்தி செய்யும் பொருட்டுமாகும்.
வேதிகையில் வடக்கு முகமாக ஒரு கும்பம் வைத்து அதில், இறந்தவர் பெற்ற தீகூைடிக்குத் தக்கவாறு உருத்திரர், ஈசுவரர், சதாசிவர் என்பவருள்

ஏற்ற மூர்த்தியைப் பூசித்தல் வேண்டும். குழியில் பாத்திரத்தில் கல்லினைக் கூர்ச்சங்கட்டி வடக்கு முகமாக வைத்து அதில், கர்த்தாவைக் கொண்டு கோத்திர நாம தீக்ஷா நாமங்களுடன் ஆன்ம மந்திரத்தால் ஆன்மாவை ஆவாகனஞ் செய்வித்து, எண்ணெய், அரிசிமா, மஞ்சல் மா, முதலியவைகளால் அபிஷேகஞ் செய்வித்துத் தருப்பை கூர்ச்சம் சேர்த்துக் கட்டிய வஸ்திரத்தைக் கைகளில் மடக்கி வைத்துக் கொண்டு, வாச உதகம் முதலிய மூவகைத் தருப்பணங்களையும் மூன்றாவது முதல் நாள் மூன்று இரண்டாம் நாள் நான்கு என்ற முறைப்படி நாளொன்றுக்கு ஒவ்வொன்று கூட்டியாவது ஆசௌச முடிவு நாள்வரை சங்கிதா மந்திர பீசங்களால் தருப்பணஞ் செய்வித்து வஸ்திரம் விபூதி சந்தனம் புஷ்பங்களால் அலங்கரித்து ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொன்றாக ஆசௌசதினக் கணக்கான பிண்டம் இடுவித்தல் வேண்டும்.
கல்லெடுக்கு முன் இறந்தவரைக் குறித்து ஒற்றித்த தினங்களில் ,
புதிதாகச் செய்யப்படும் நவச்சிராத்த தானத்தையும் மூன்று முதல் நாள்தோறும் ஒவ்வொன்று கூட்டி ஆசௌச முடிவுநாள் வரை செய்யப்படுவதாகிய ஏகோத்தர விருத்தி தருப்பண திருப்தியின் பொருட்டுச் செய்யும் ஏகோத்தர விருத்திசிராத்ததானத்தையும், மந்திரதேகத்தையுண்டாக்கும் பொருட்டு உபயோகித்த பதினொரு மந்திர தேவ திருப்தியாகிய சங்கிதா சிராத்த தானத்தையும் முறைப்படி செய்தல் வேண்டும். தானமாவது அதற்கென அழைக்கப்பட்டவருக்குக் கொடுப்பதாகும். தாமே வந்தவருக்குக் கொடுப்பது தானமாகாது; தருமமேயாகும்.
சைவக் கிரியைகளில்தானத்துக்கு அழைக்கப்படுவோர் சைவதிகூைடி பெற்றவராயே இருத்தல் வேண்டும். அத்தகையவர் கிடையாதபோது சைவ தலங்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளில் விரும்பியவர்களைக் கூர்ச்சத்தில் பூசித்துத் தானத்தைக் கொடுத்துத் தானப் பொருளை அத்தலத்தில் சேர்த்தல் வேண்டும். புரோகிதர் சைவதிகூைடி பெற்றவராயே இருத்தல் வேண்டும் அங்ங்ணம் இருந்தாலேயே அன்னவர் சைவக் கிரியைகளைச் செய்து வைக்கும் அதிகாரமும், அறிவும், பயிற்சியும், அபிமானமும், ஆற்றலுமுடையவராவர்.
தானங்கள் முடிந்த பின் நீர்க் கரையில் உருத்திர பலியிடுதல் வேண்டும். உருத்திர பலி பிரேத வடிவத்தை நீக்குவிக்கும் பொருட்டுச் செய்யப்படுவதாகும். அது: பிரதான நீலகண்ட உருத்திரரை நடுவிலும் சுற்றிவர வடகிழக்கு முதல் மகாதேவர் முதலான பதினொரு உருத்திரர்களையும் பூசித்து அரிசிப் பலியிடுவதாகும். இதனைச் சுருக்கிப் பிரதான உருத்திரரை மட்டும் பூசித்துச் செய்வதுமுண்டு.
உருத்திர பலி முடிந்த பின், பிரபூத பலி எனப்படும் பேருணவுப் படையல் படைத்து நிவேதித்துத் தீபாராதனை தோத்திர நமஸ்காரங்கள் செய்து

Page 39
கல்லில் பூசித்த ஆன்மாவைக் கும்பமூர்த்தியிடத்திலும் கும்பமூர்த்தியை அதற்குரிய இடத்திலும் ஒடுக்கிக் கும்பம், கல், பிண்டங்களை எடுத்துக் கொண்டு வாத்திய ஒலியுடன்சென்று சமுத்திரம் முதலிய தீர்த்தநீரில் விடுக. ஆசௌச முடிவு தினத்துக்கு முன்கல்லு வைத்துப் பூசிக்கும் முறையில், ஆசௌச முடிவில் கல்லினை நீரில் விட்டபின் ஆசௌச சுத்திக்காகவும் பின்னர்ச் செய்யப்படும் இடபதானம் முதலியவைகளுக்கு அங்கமாகவும் கர்த்தா சவுரம் செய்வித்துக் கொள்ளுதல் வேண்டும்.
இடபதானம்
ஆசௌசம் முடிந்த ஆண்டு அடுத்த தினத்தில் வீடு முதலியவற்றைச் சுத்தஞ் செய்து ஸ்நான சந்தியா வந்தனங்களை முடித்துப் புண்ணியாகஞ் செய்து இடபதானஞ் செய்க. இடபதானத்தின் நோக்கம், இறந்தவருடைய தானதருமபலங்களைத் தரும வடிவான இடபத்தின் மூலம் சிவபெருமானிடத்தில் சேர்த்து ஆன்மாவை இறைவரது திருவருள் வழியின்கண் நிற்குமாறு செய்தலாம். அங்ங்னஞ் செய்யாத போது ஆன்மாதான் செய்த தான தரும பலங்களை இன்ப உலகங்களிற் சென்று அனுபவித்துமீட்டும் பூமியில் வந்து பிறக்கும். அதனால் தான தருமங்களும் மீளப் பிறவிக்கேதுவாகின்றன. அவ்வாறு மீளப் பிறவியுண்டாகாது பாதுகாப்பது, தானதரும பலங்களை இறைவர்பாற் சேர்த்து அவர் திருவருள் வழியில் நிற்பதேயாகும்.
ஏகோத்திட்டம்
இது இறந்தவர் ஒருவரை மட்டும் குறித்துச் செய்யப்படுந் தானமாகும். இறந்தவர் இவ்வுலக வாழ்வில் பலவிதமான அனுபவங்களையும் விரும்பியிருக்கலாம். அவ்விருப்பங்களையெல்லாம் இயன்றமட்டும் திருப்திசெய்யும் பொருட்டே பலவிதமான உபசாரங்களுடன் ஏகோத்திட்டஞ் செய்யப்படுகின்றது. இதனால் அந்த ஆன்மா உலக வாழ்வில் ஒரளவு திருப்திடையுமென்பதாம்.
பஞ்சதச மாசிகங்கள்
இறந்த திதிக்குரிய மாசிகமே ஏகோத்திட்டம் என்னும் பெயரால் முன்னர்ச் சொல்லப்பட்டதாகும். அஃதொழிந்த இரண்டாம் மாத திதி முதலிய பதினொரு மாத திதிகளும் இருபத்தேழாம், முப்பதாம் நாட்களுக்கிடையில் குற்றமற்ற நாளில் செய்யப்படும் ஊன மாசிகமும், நாற்பதாம், நாற்பத்தைந்தாம் நாட்களுக்கிடையில் செய்யப்படும் ஊனத்திரி பக்ஷ மாசிகமும், நூற்றெழுபதாம், நூற்றெண்பதாம் நாட்களுக்கிடையில் செய்யப்படும் ஊனசாண் மாசிகமும், முந்நூற்று ஐம்பதாம், முந்நூற்று அறுபத்தைந்தாம் நாட்களுக்கிடையில் செய்யப்படும் ஊன ஆப்திக மாசிகமும் ஆகிய பதினைந்து மாசிகங்களையும் அவ்வவற்றுக்குரிய காலங்களிற் செய்து

வருஷ முடிவில் சபிண்டீகரணஞ் செய்வதே முறையாயினும், கர்த்தாவின் தேக அநித்தியம் முதலிய இடையூறுகளால் அவர் தொடங்கிய கிரியை முடிவடையாமல் தடைப்படவுங் கூடுமாதலால் பதினைந்துமாசிகங்களையும் ஒன்று சேர்த்து ஏகோத்திட்ட முடிவில் செய்வதும் முறையாகும். இவைகளும் இறந்தவரை மட்டுங் குறித்துச் செய்யப்படுவனவாதலால் ஏகோத்திட்டங்களேயாகும். இவைகளாலும் இறந்தவரின் உலக வாஞ்சைகள் நீங்கிவிடுமென்பதாம். ஊன மாசிகங்கள் நான்கும் மாசம் மூன்று பக்ஷம் ஆறு மாசம் வருஷம் என்பவைகளின் குறையில் அவைகளை நிறைவு செய்யுமாறு செய்யப்படுவனவாம். ஊனம் - குறைவு.
சோதகும்ப சிராத்தம்
இது இறந்த நாள் தொடக்கம் வருஷ முடிவு வரையுள்ள முந்நூற்று அறுபத்தைந்து தினங்களிலும் அந்த ஆன்மா தாகம் தீர்த்துக் கொள்ளும் பொருட்டுச் செய்யுந்தானமாகும். இதுவும் முன் கூறப்பட்ட இடையூறுகளால் தடைப்படாமைப் பொருட்டுச் சபிண்டிக்கு முன் செய்து முடிப்பதும் முறையாகும். இதில் நீர் நிறைந்த பாத்திரதானம் பிரதானமாகும். சோதகும்ப சிராத்தம் - நீர்நிறைந்த பாத்திரத்துடன் செய்யும் சிராத்தம்.
சபிணர்டீகரணம்
ஏகோத்திட்டம், நான்கு ஊன மாசிகங்கள், மாதந்தோறும் இறந்த திதியில் செய்யப்படும் பதினொரு மாசிகங்கள், சோதகும்ப சிராத்தங்கள் என்பவைகளை உரிய காலங்களில் செய்து வருஷ முடிவில் சபிண்டீகரணஞ் செய்வதே உத்தமமாயினும் கர்த்தாவின் தேகாதி அநித்தியங்களினால் இடையூறு அடையவும் கூடுமென்பதை யெண்ணிப் பன்னிரண்டாம் நாள் முதலிய ஆசௌச முடிவு நாட்களிலும் திருபக்ஷம் முதலிய வேறு காலங்களிலும் சபிண்டீகரணஞ் செய்யலாமெனக் கூறப்பட்டுள்ளது. அங்ங்னஞ் செய்யும்போது அதற்கு முன் செய்யவேண்டிய மாசிகம் முதலியவைகளைச் செய்தே செய்தல் வேண்டும்.
சபிண்டீகரணம், பார்வண விதானம், ஏகோத்திட்ட விதானம் என இரு வகைப்படும். பார்வண விதானம் பிதிர்தேவர் மூவரைக் குறித்துச் செய்யப்படுவது. ஏகோத்திட்ட விதானம் குறித்த பிதிர்தேவர் ஒருவரைக் குறித்துச் செய்யப்படுவது.
தந்தை, தாய், தந்தையுடன் பிறந்தான், அவன் மனைவி, தந்தையின் தந்தை, தந்தையின் தாய், தாயின் தந்தை தாயின் தாய் என்பவர்களுக்குச் செய்யும் சபிண்டியிலேயே பார்வண விதானம் அமையும். மனைவி, கணவன், உடன் பிறந்தான், மகன், மகள், மாமன், மாமி முதலானவர்களுக்குச் செய்யும் சபிண்டி ஏகோத்திட்ட விதானமாகவே அமையும்.

Page 40
சைவ சாபிண்டியத்தில், பிதிர்தேவர் மூவரில் மேற்படியிலுள்ளவரைச் சுவர்க்கபாதேயஞ் செய்துநீக்கி, இரண்டாம் படியிலுள்ளவரை மேற்படியிலும் முதற்படியிலுள்ள வரை இரண்டாம் படியிலும் நிமித்தரை (இறந்தவரின் பிதிரை) முதற்படியிலும் அமைத்துக் கிரியை செய்தலும்,நிமித்த பிண்டத்தை மூன்று கூறாக்கிப்பிதிரர் மூவருடைய பிண்டங்களுடன் தனித்தனி ஒவ்வொரு கூற்றினைச் சேர்த்து ஒன்றாக்கும் பிண்டகண்டனமும் சொல்லப்படவில்லை. ஆதலால் அங்ங்னஞ் செய்வது சைவ சிரார்த்த சபிண்டீகரணமாகாது. நிமித்த பிண்டத்தைச் சிறிது நீளமாகப் பிதிர்தேவபிண்டங்கள் மூன்றிற்கும் கிழக்கில் இட்டு, அது அம்மூன்று பிண்டங்களிலும் தொடும்படி செய்தலும், பிரேத ரூபமான நிமித்தரை முதற்படியிலுள்ள அதே பெயருடைய பிதிர் தேவருடன் சேர்த்துப் பூசித்துத் தேவரூபமாக்குதலுமே சொல்லப்பட்டுள்ளது. அன்றியும் வடக்குத் தெற்காக மூன்று பாத்திரங்களும் அவற்றுக்குக் கிழக்கில் ஒரு பாத்திரமும் வைத்து அவற்றில் முறைப்படி பிதிர்தேவர் மூவரையும் நிமித்தரையும் பூசித்து அருக்கியம் அமைத்துநிமித்தருக்குரிய அருக்கிய சலத்தைப் பிதிர்தேவர் மூவருக்குமுரிய அருக்கிய சலங்களுடனும் சேர்த்தலாகிய அருக்கிய சம்யோசனமும் சொல்லப்பட்டுள்ளது.
சிராத்தம், அன்னசிராத்தம், ஆமகிராத்தம், இரணிய சிரார்த்தம் தருப்பண ரூப சிரார்த்தம் என நால்வகைப்படும். இவற்றுள் அன்ன சிராத்தமே சிறப்புடையதாகும். அதில் தம் மரபிலோ தம்மிலுமுயர்ந்த மரபிலோ உள்ள தீகூைடி பெற்றவரை அழைத்துத் தானத்தில் இருத்திக் குறித்த தானத்துக்குரியவராகப் பாவித்துப் பூசித்து அமுது படைத்து உண்பித்தல் வேண்டும். இதற்குத் தகுதியானவரையும் உடன்படுபவரையும் பெற்றுக் கொள்ளுதல் அரிதாகும். ஆதலால் அரிசி காய்களைப் படைத்துச் செய்வதாகிய ஆமச்ராத்தமே பெரும்பாலும் செய்யப்படுகின்றது. ஆமசிராத்தம் செய்யவும் வசதியில்லாதபோதும் தகுதியானவர் கிடையாத போதும் பணம் வைத்துச் செய்வதாகிய இரணிய சிராத்தம் செய்யப்படுகின்றது. ஆமகிராத்தமும் இரணிய சிராத்தமும் முற்பலிலேயே செய்தல் வேண்டும். தருப்பணரூப சிராத்தம் அமாவாசையில் செய்யப்படுவதாகும்.
சபிண்டியில் நந்தி மகாகளர் அல்லது அநந்தர் உருத்திரர் என்னும் தேவத்தானத்தின் பொருட்டு இருவரும், கந்த சண்ட கணாதீசர் அல்லது ஈசதசாசி சாந்தர் என்னும் பிதிர்த் தானத்தின் பொருட்டு மூவரும் பண்டறிவுண்மையில் தெரிந்து வந்தாரும் அஃதின்மையில் தெரியாது வந்தாரும் ஆகிய அதிதி அப்பியாகதர் தானத்தின் பொருட்டு இருவரும், நிமித்தர் தானத்தின் பொருட்டு ஒருவரும் ஆக எண்மர் வரிக்கப்படல் வேண்டும். தகுதியானவர் கிடையாதபோதும் சுருக்கமாகச் செய்யும்போதும் நால்வரேனும், அதுவுங் கூடாதபோது இருவரேனும் வரிக்கப்படல் வேண்டும். வருஷந் தோறும் செய்யும் சிராத்தத்திலாயின் ஒருவரை வரித்தும் செய்யலாம்.

தேவத்தானத்தில் வரிக்கப்பட்டவரை தெற்கு முதல் வடக்கு வரை மேற்கே கிழக்கு முகமாகவும், பிதிர்த்தானத்தில் வரிக்கப்பட்டவரை கிழக்கு முதல் மேற்கு வரை தெற்கே வடக்கு முகமாகவும், நிமித்தரை கிழக்கே மேற்கு முகமாகவும், அதிதி அப்பியாகதர் தானத்தில் வரிக்கப்பட்டவரை நிமித்தருக்கு வடக்கே மேற்கு முகமாகவும் ஆசனங்களில் இருத்துதல் வேண்டும்.
பின்னர் தேவத்தானத்திலுள்ளவரின் பூசை முதலிலும் பிதிர்த்தானத்திலுள்ளவரின் பூசை இரண்டாவதாகவும் நிமித்தரின் பூசை மூன்றா. வதாகவும் அதிதி அப்பியாகத்தரின் பூசை நான்காவதாகவும் சொல்லப்பட்டுள்ளன. நிமித்தரென்பவர் இறந்தவரின் பொருட்டு வரிக்கப்பட்டவர்.
சமய, விசேஷ திகூைடிகள் பெற்றவருக்கத் தேவத்தானத்தில் பூசிக்கப்படுபவர்: நந்தி, மகாகளர் ஆவர். பிதிர்த் தானத்தில் பூசிக்கப்படுபவர்: கந்தசண்ட கணாதிசராவர், நிருவாண தீகூைடியும், சாதக ஆசாரியாபிஷேகங்களும் பெற்றவருக்குத் தேவத்தானத்தில் பூசிக்கப்படுபவர்: அநந்தர், உருத்திரராவர், பிதிர்த்தானத்தில் பூசிக்கப்படுபவர்: ஈச சதாசிவ சாந்தராவர்.
பிதிர் தேவர்களைப் பூசிக்கும்போது, ஒம் கந்த சொரூபாய அஸ்மத் பித்ரே நம: என்பது முதலாகவோ, அல்லது ஒம் ஆஈச சொரூபாய அஸ்மத் பித்ரேநம: என்பது முதலாகவோ பூசித்தல் வேண்டும். ஓமத்தில் கூறும்போது, ஓம் கந்த சொரூபாய அஸ்மத் பித்ரே சுவதா நமச் சுவாகா என்பது முதலாகவோ, அல்லது ஓம் ஈச சொரூபாய அஸ்மத் பித்ரே சுவதா நமச் சுவாகா என்பது முதலாகவோ கூறுதல் வேண்டும்.
பிண்டமிடும்போது, ஒம் கந்த சொரூபாய அஸ்மத்பித்ரேசுவதா என்பது முதலாகவோ, அல்லது ஓம் ஈசசொரூபாய அஸ்மத் பித்ரே சுவதா என்பது முதலாகவோ கூறிப்பிதுபிதாமக பிரபிதாமகர்களாகிய பிதா, பேரன், பீட்டன் என்னும் மூவருடைய பிதிர் தேவர்க்கும் வடக்கு முதல் தெற்கு வரை மூன்று பிண்டம் இடல் வேண்டும்.
நிமித்தரை, ஓம் சிகோத்திர ஜாதாய சிவிபூதாய தீக்ஷா நாம யுத்தாய பித்ரே நம: என்று பூசித்து, ஓம் சிவகோத்திர ஜாதாய சிவிபூதாய தீக்ஷா நாம யுத்தாய பித்ரே சுவதா என்று, சிறிது நீளமானதாக ஒரு பிண்டத்தை, பிதிர்தேவபிண்டங்கள் மூன்றற்கும் கிழக்கில் அவற்றையடுத்திருக்குமாறு இடுதல் வேண்டும் இவ்வாறு பத்ததி மூலங் கூறவும், சிட்டாசாரம் இருக்கவும், உரைகாரர், பிதிரர்களைக் கூறும்போது, ஓம் கந்த சொரூபாய அஸ்மத் பிது பித்ரே என்பது முதலாகவோ, அல்லது ஓம் ஈச சொரூபாய அஸ்மத் பிதுபித்ரே என்பது முதலாகவோ கூறவேண்டும் என்கின்றனர். அஸ்மத் பிது பித்ரே என்பது எனது தந்தையின் தந்தைக்கு எனப் பொருள் தரும். அவர் கூறும் முறைப்படி கொள்வதாயின் கிரியை செய்யும் கருத்தாவின் பேரன், பீட்டன்,

Page 41
கொட்பாட்டன் என்பவர்களின் பிதிர் தேவர்களே அங்கே அமைவர். சைவ சபிண்டியில் மூன்றாம் படியில் உள்ளவரைச் சுவர்க்கத்துக்கு அனுப்புவதாகிய பாதேயம் சொல்லப்படாமையால், நிமித்தராகிய பிதாவுக்குப் பிரேதத்துவம் நீங்கவும், பிதிர் தேவத்துவம் உண்டாகவும் வழிபாடு செய்வதற்கு இடமில்லையாகும். ஆதலால் நிதித்தராகிய பிதாவுக்குப் பிரேதத்துவம் நீங்கும் பொருட்டும், பிதிர் தேவத்துவம் உண்டாகும் பொருட்டும், கந்த சொரூபாய அஸ்மத் பித்ரே என்பது முதலாகவோ, அல்லது ஈச சொரூபாய அஸ்மத் பித்ரே என்பது முதலாகவோ கொண்டுபிண்டமிட்டுப் பூசித்து வழிபடுவதே பொருத்தமானதும், பெரியுோர்கள் கைக்கொண்டு வரும் முறைமையுமாகும். இம்முறைமையில் நிமித்தராகிய பிதா பிரேத ரூபத்திலாக அவரை, முதற்படியிலுள்ள கந்த சொரூப அல்லது ஈச சொரூப பிதிர் தேவருடன் சேர்த்துத் தேவலீபமாக்குதல் அமையும் என்க.
இனி ஏகோத்திட்ட விதான சபிண்டீகரணத்தில், மனைவி, கணவன், உடன் பிறந்தான், மகன், மகள் முதலான நிமித்தர்கள் அவ்வப் பெயருடன் பிரேத ரூபத்திலும், ஒம் கந்த சொரூபாயை அஸ்மத் பத்தின்னியை என்பது முதலாகவோ, அல்லது ஓம் ஈச சொரூபாயை அஸ்மத் பத்தின்னியை என்பது முதலாகவோ பிதிர் தேவரூபத்தில் ஓரிடத்தினும் பூசித்து வழிபடுவதும், பார்வண விதானத்திலும் நிமிர்த்தர் பிரேத ரூபத்திலும் பின்னர், கந்தர் அல்லது ஈசர் ஆகிய பிதிர் தேவரூபத்திலும் வழிபடல் வேண்டுமென்பதை வலியுறுத்தும்.
சபிண்டீகரணஞ் செய்தாலேயே இறந்தவரின் ஆன்மா கந்தாதி ஈசாதி பிதிர்தேவ வடிவமாகிய இறைவர் கதியினை அடைகின்றது. ஆதலால் இதுவே ஆன்ம ஈடேற்றத்துக்குரிய சிறந்த கிரியையாகும்.
மாசிகங்கள்
கருத்தா தன் இடையூறுகளைக் கருதி ஆசௌச முடிவில் சபிண்டி செய்யும்போது மாசிகங்களை எல்லாம் செய்திருப்பினும் அவைகளைக் குறித்த காலங்களிலும் இயன்றமட்டும் செய்து வருவது நன்றாகும். அங்ங்னஞ் செய்யும்போது ஏகோத்திட்டம் போல் ஒரு பிண்டத்துடன் செய்யாது மூன்று பிண்டங்களுடனேயே செய்தல் வேண்டும். சயிண்டியின் பின் செய்யும் மாசிகங்கள் மூன்று பிண்டங்களுடன் செய்யவேண்டுமென்பது விதியாகும்.
ஆப்திகம்
இது வருஷ முடிவில் இறந்த திதியில் செய்யப்படுவதாகும். இதனுடன் இறந்தவரைக் கருதித் தொடங்கிய அந்தியக் கிரியைகள் நன்கு முடிவடைகின்றன. இதில் நிமித்தருக்குத் தானம் அமைத்தல் பொருந்தாது.

ஏனெனில் முன்னர்ச் செய்த சபிண்டியில் நிமித்தரைப் பிதிரருடன் சேர்த்து விட்டமையால் அவரைப் பிரித்தல் கூடாமையாலாகும். இதனாலேயே சபிண்டியின் பின் செய்யும் மாசிகங்களிலும் மூன்று பிண்டங்களுடன் செய்யவேண்டுமெனக் கூறப்பட்டதாகும். இதனால் ஆப்திகத்தை முதல் வருஷசிராத்தம் என்றும் சொல்லலாம்.
வருஷ சிரார்த்தம்
இது இறந்த தந்தை தாயரின் ஞாபகமாகவும் நன்றி மறவாமைக்காகவும் நல்லாசி பெறுதற்காகவும் வருஷந்தோறும் இறந்த மாத திதியில் செய்யப்படுவதாகும்.
மகாளயம்
இது புரட்டாதி (பாத்திரபத) மாதத்தில் அபர பக்கத்தில் தந்தை தாயாரின் இறந்த திதியில் செய்யப்படுவது விசேடமாகும். அது வசதிப்படாதபோதுமகாளய பக்கத்தில் சிறந்ததாகிய ஒரு திதியிலுஞ் செய்யலாம். மகாளயம் என்பது பெரிய ஒடுக்கம் எனப் பொருள்படும். ஆலயங்களில் சுவாமிக்கு அர்த்த சாமப் பூசை செய்து கதவடைப்பது போல, பிதிர் தேவர்களுக்குத் தெற்கு அயனமாகிய இராத்திரி காலத்தில் நடுப்பகுதியாகிய புரட்டாதி (பாத்திர பத) மாதத்தில் அபர பக்கத்தில் பேரொடுக்கமாகிய மகாளய சிராத்தம் சொல்லப்பட்டதாகும்.
அமாவாசைத் தருப்பணம்
இது மாதந்தோறும் அமாவாசையில் பிதாவின் வர்க்க, மாதாவின் வர்க்க பிதிர் தேவர்களின் தாக சாந்தியின் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.
குறைவிலா நிறைவுடையரான இறைவருக்கு நாம் எங்ங்ணம் பூசை வழிபாடு உத்சவங்கள் செய்து நமக்கு நல்வாழ்வைப் பெற விரும்புகின்றோமோ, அதுபோலவே நம்முடைய முன்னோர்களுக்கு நன்மை செய்பவர்களாகிய கந்தாதி. ஈசாதியாகிய பிதிர் தேவர்களை நாம் வழிபடுவதும் சிராத்த தருப்பணங்கள் செய்வதும் நம் முன்னோர்களும் நாடும் நல்வாழ்வடையும் பொருட்டேயாகும்.
நன்றி : சிவசங்கர - சுப்பிரமணியதேசிகன் எழுதிய சைவக் கிரியைகள்

Page 42
இராமலிங்கத்தின் சிந்தனைகள்
இறைவனிடம் ஏதாவது கேட்க விரும்பினால் நடந்து திரிகையிலேயே மரணம் வேண்டுமென்று கேள்.
உலகில் நீஎதை அடையவிரும்பினும் எதைச் செய்ய விரும்பினும் முதலில் உன் உடலை உறுதியாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்து. அதற்காக ஒரு நேரமொதுக்கு சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். சில சம்பவங்கள் நடக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கும் ஆனால் நடந்து முடிந்தவைகளை சற்றுத்திரும்பிப்பார் எல்லாம் நல்லதிற்கே நடந்தது என்று புரியும்.
தெரியாத மோட்சத்திற்கு போவதை வேண்டுவதைவிட ஒவ்வொரு பிறப்பிலும் சேவை செய்ய சந்தர்ப்பம் கொடு என்பதை இறைவனிடம் கேள்.
பிள்ளையைக் கருவுற்று பிறப்பது என்பது ஒரு தவம் அந்தப்பெண் தெய்வத்திற்கு சமமானவள்.
உலகத்தில் சிலருக்கு சில நன்மைகள் செய்வதற்கு நாரதர் கலகம்போல சில கலகங்கள் அவசியம் வள்ளுவன் சொன்னது போல் பாதிப்பில்லா பொய்களும் அவசியம் எது எப்படி இருப்பினும் இவற்றால் இறுதியில் எவரும் பாதிப்புறாதிருத்தல் வேண்டும். பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது அவர்களுக்கு உன் நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் உன்னை நம்பி இந்த உலகத்தில் வந்த அவர்களுக்கு உரியதை தர வேண்டியது உன் d5 60) D.
கோயில், கடவுள் வழிபாடு அவசியம் தேவைதான் ஆனாலும் ஒருவன் குடும்பத்தின் கடமைகளை சரிவரச் செய்வானாயின் அது கடவுளை அடைய வழி சமைக்கும்.
நீநாத்திகனாகவே இருந்து விட்டுப்போ பரவாயில்லை ஆனால் உன் பிள்ளை தன் பிறப்பிலே பெற்ற சமயத்தை உதற ஊக்குவிக்க உனக்கு உரிமையில்லை. சம்பிரதாயத்திற்காகவேனும் உன் பிள்ளைக்கு கடவுளை வழிபடுவதை பழக்கு அது பக்குவமடைந்ததும் தானே முடிவெடுக்கட்டும் எது சரியென்று.

புலாலுண்ணாமல் வாழக்கிடைத்தது மிக் பெரிய புண்ணியம் எந்த உயிரிற்கும் ஊறின்றி வாழக் கிடைத்தது மிகப்பெரிய கொடுப்பனை என் சந்ததி இயன்ற மட்டும் எப்படி வாழ்வதையே நான் விரும்புகிறேன்.
எது எப்படி இருப்பினும் மரணத்திற்கு ஒருவரும் பயப்பட வேண்டியதில்லை ஏனெனில் ஒருவன் உயிருடன் இருக்கும் போது மரணம் வரப்போவதில்லை அவன் மரணித்தபின் அவன் அதை உணர உயிருடன் இருக்கப் போவதில்லை.
கோயில் உண்டியலில் காசு போடும் போது உன்நோக்கம் அது நன்மைக்கு பயன்படும் என்பது அத்துடன் உனக்குரிய பலன் கிடைத்துவிட்டது. அதை யார் என்ன செய்கிறார்கள் என்பதை
ஆராய வெளிக்கிடாதே அது உன் அலுவலல்ல. ܐ
ஒரு பெரியவரின் அல்லது குருவின் காலில் விழுந்து வணங்குவது நீ அவர் செய்த நற்காரியங்களுக்கு கொடுக்கும் மரியாதை அதை ஏற்க அவர் தகுதியுள்ளவரா என்பதை ஆராய வேண்டிய அவசியம் உனக்கில்லை.
புழுகுவதென்பது ஒன்றை அழகுபடுத்திச் சொல்வது அது எல்லோராலும் முடியாது. எவரும் பாதிக்கப்படாதவிதத்தில் புழுகுவதால் சிலரை மகிழ் விக்க முடியுமானால் நான் புழுகிக்கொண்டுதான் இருப்பேன்.

Page 43
நன்றி நவில்கின்றோம்
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொள்ளும்
எமது அன்புத் தெய்வம்
இயற்கை எய்திய செய்தி கேட்டு உடனே சமூகம் தந்து ஆறுதல் கூறியும், வேண்டிய உதவிகள் புரிந்தும், ஈமைச் சடங்கிற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்தும், ஏனைய வழிகளில் உதவிகள் புரிந்தும் எமக்கும் ஒத்துழைத்த உற்றார் உறவினர் நண்பர்கள், கடிதமூலம், தந்திமூலம், தொலைபேசி மூலம் நேரில் ஆறுதல் தெரிவித்த அனைவரிற்கும், இறுதிக் கிரியைகள், சபிண்டீகரணக் கிரியை, வீட்டுக்கிரியையில் கலந்து கொண்ட அனைவரிற்கும் எமது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
குடும்பத்தினர்
31 A, Janaki Lane, Bambalapitiya, Colombo-O4.
Tel: 026-2220274, O777319426


Page 44
வம்ச வி
குஞ்சன் குமாரவேலு உடையார்
சுப்பிரமணியம் தில்லைஉடையார் கந்தர் உடையார் அமராவதி
புத்தூர் புத்துரர் புத்துர்
ஆழ்வயினார்
அருணா 1ம் + முத்துப்பிள்ளை
|-
சின்னத்தம்பி வள்ளியம்மை
|-
gyfi difft Diol i சுப்பிரமணியம் முத்தம்மா d560c
இராமலிங்கம் + சுலோஜனாதேவி
செந்திற் குமரன் + வினித்தா கயல்விழி + ஹிரிதர6)
- கிருத்தீஸ்வர் பிருத்விராம்
- அமிதேஷா பிரணவராம்
- ஆதேஷா

ருட்சம்
நிற்சிங்க முதலியார்
நிலையினார் முதலியார்
முதலித்தம்பி
கந்தர்
-- மீனாட்சிப்பிள்ளை
சபாபதி -. பொன்னம்மா அம்பலவாணர் | - சிற்றம்பலம்
சரவணபவாநந்தன் தில்லையம்பலம் + மனோன்மணி
கரட்ணம்
— —
சிவசோதி
கலையரசி + ஆனந்

Page 45


Page 46