கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும் ஆய்வரங்கு 2008

Page 1
மத அலுவல்கள் ஒழுக் இந்துசமய, கலாசார அ
 
 
 
 

சோழப்ரேகம் மயப்பெருநெறிகளும்
க மேம்பாட்டு அமைச்சு
லுவல்கள் திணைக்களம்

Page 2


Page 3
சிறப்
ஆய்வரங்
“63 Typ 61.jpgarb at
පර්යේෂණ { "චෝල අධිරාජ්‍යය සහ එ
RESEARC S
"THE COLA EMPIRE AND IT
22, 23, 24 -
இராமகிருஷ்ண 1 රාමක්‍රිෂ්ණමිෂන් ශාල RAMAKRISHNA MISSIO
மத அலுவல்கள் ஒழுக் இந்துசமய, கலாசார அ
ආගමික කටයුතු හා සදා හිංදු ආගමික හා සංස්කෘති
Ministry of Religious Aff Department of Hindu Rel

மலர்
கு 2008
u JÚ 6)J565Óla5(65íbo
සමිමන්ත්‍රණය හි ආගමික සමිපුදායයන්"
SEMINAR ON
'S RELIGIOUS TRADITIONS
O8 - 20O8 ólongoör InodbrLLIh 20ව - කොළඹ - 06. NHALL COLOMBOO6.
க மேம்பாட்டு அமைச்சு லுவல்கள் திணைக்களம்
වාර වර්ධන අමාතන)ෙශය ක කටයුතු දෙපාර්තමේන්තුව
airs & Moral Upliftment; igious & Cultural Affairs.

Page 4


Page 5
உள்ளே.
C3 சோழர்காலத்துப்பண்பாட்டு மரபுகள்.
C3 சோழர் காலத்துக்கோயில்கள் .
c3 சோழர்காலச்செப்புப்பட்டயங்கள்.
C3 திருக்கோயில் திருப்பணிகளும்
சோழர்காலக் கல்வெட்டு ஆய்வுகளும்.
C3 சோழர்காலத்துச் சமுகப்பண்பாட்டுநிலை.
c3 சோழர்காலக் கல்வெட்டுகளில் புதிய
சொற்களும் அகராதியும்.
C3 சோழ மன்னர்களில் பெயராலமைந்த நினைவு மன்னர்களின் படிமங்களும் .
C3 சோழர் கால சிற்பக்கலை
சோழர் காலக் கட்டடக்கலை.
c புதிய பார்வையில் சாரங்கபாணிகரணங்கள் .
C8 B9ופ. שחJétu6נ .maaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaam
Cl3 சோழர்கால இலக்கியம்.
C3 சோழர்காலச்சமயம்.
C3 இந்துசமய, தமிழ்மொழி ஆய்வரங்குகள்.

* சின்னங்களும்
22
37
47
B3
B6B
76
82
103
110
128
161
192

Page 6


Page 7
ཆུ་
O)
99లి333@99లిలి333399లిక్
හින්දු ආගමික හා இந்துசமய, கலாசார அணு Department of Hindu Relig
Gasflüurrer } හි(ක්ස්
Director 255.2643 தலைநகல் } 2
3X
බිඳී }
(al 2552641
මෙග් අංකය ඔබේ අංකය எனது இல. } #ు. } MYNo. Yor NO,
முன்
இந்துசமய கலாசார அலுவல்கள் தின திட்டங்களில் ஒன்றாக வருடந்தோறும் ஆய்வர இவ்வாய்வரங்கில் தென்னிந்திய அறிஞர்களு தங்களது பங்களிப்பினை வழங்கி வருகின்றன
கடந்த சில வருடங்களாக தமிழர் வரலா ஆய்வரங்குகள் நடைபெற்று வருகின்றன. அ மேன்மைமிக்க காலமாக போற்றப்படும் சோழ “சோழப்பேரரசும் சமயப் பெருநெறிகளும்” எ தீர்மானித்துள்ளது. இவ்வாய்வரங்கு வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றே நூல்களிலிருந்து திரட்டப்பட்ட கட்டுை தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளாவன சோழர்காலத்துக் கோயில்கள், சோழர்காலச் திருப்பணிகளும் கல்வெட்டு ஆய்வுகளும், சே காலக் கல்வெட்டுக்களில் புதிய சொற்களும் சிற்பக்கலை, புதியபார்வையில் சாரங்கபா இலக்கியம், சோழர்காலச் சமயம் ஆகியன பயன்பெறுவதற்குரியதாக அமையும் என்பது
சோழர்கால சமூக, பொருளாதார, அரசிய இவ்வாய்வரங்கு மூலம் அறிந்துகொள்ள வாய் இலக்கிய வரலாற்றில் புகழ்மிக்க காலமாக நாட்டியக்கலை, ஓவியக்கலை என்பன எழுச்சி கட்டடக்கலை மேன்மையை தஞ்சைப் பெருங்ே திரிபுவனம் போன்ற கோயில்கள் இயம்புகின்ற
లిలిథ్మి33బ్రిఎ్మ33(SPEEg
 

এওওও৪৩০শেওওও ১৪০০-৫৫৫৩
壟 | කටයුතු දෙපාර්තමේන්තුව பவல்கள் திணைக்களம் ious and Cultural Affairs
ర్గత க்சல் }
፳፭ሞ hindudirayahoo.com
2552825
ஐயூதளம் } www.hindudept.gov.lk
ခို့ } 2008.07.08 ate
ഞ്ഞു്
ணைக்களம் தனது ஆய்வுப்பிரிவின் செயல்
ாங்குகளை நடத்தி வருவதை யாவரும் அறிவர். நம் இலங்கை அறிஞர்களும் கலந்து கொண்டு
TT.
ற்றை கால அடிப்படையின் பிரகாரம் பிரித்து வ்வகையில் தமிழரின் வரலாற்றுக் காலங்களில் ர்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு னும் தலைப்பின் கீழ் ஆய்வரங்கினை நடத்த
தொடர்பாகச் சிறப்புமலர் ஒன்றையும் ன். இவ்வாய்வரங்குச் சிறப்பு மலரானது பல ரைகளின் தொகுப்பாகும். இம்மலரில் சோழகாலத்துப் பண்பாட்டுமரபுகள், செப்புபட்டயங்கள், சோழகாலத் திருக்கோயில் ாழர்காலத்துச் சமூகப்பண்பாட்டுநிலை, சோழர் அகராதியும், சோழர்வரலாறு- சிந்தைக்கினிய ணிகரணங்கள், சோழர் அரசியல், சோழர் வாகும் இவ்வரியநூல்அனைவரும் படித்துப் எமது எதிர்பாப்பாகும்.
ல், கலை, இலக்கியங்கள், சமயம் என்பவற்றை |ப்புக் கிட்டியுள்ளது. சோழர்காலம் சமய, கலை,
விளங்கியது. கட்டடக்கலை, சிற்பக்கலை, பெற்ற காலமாக கூறப்படுகிறது. சோழர்களின் காவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், ன. அதைப் போன்று இக்காலப்படிமக்கலையை
433xSలిE>బ్రిడ33xSPE>బ్రిఎ్మ33X5
W
&

Page 8
ཆུ་
O)
SEEP33@@g)SEరి33@@s))9లి
வெளிப்படுத்துவதாக நடராஜர் சிற்பத்திை நாயன்மார்கள், ஆழ்வார்களைப் படிமங்களாக
சோழர் காலத்தில் சைவம், வைணவ சைவத்திருமுறைகள், நாலாயிரத் திவ்விய தொகுப்பட்டன. சிவனடியார்களின் வரல கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களும், எழுந்தன.
ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்கட் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. உ மாணவர்களுக்கும் தேவையான ஆய்வுத் பெற்றுக்கொள்வதற்கு இக்கருத்தரங்குக அளிப்பதன் மூலம் திணைக்களம் தனது பங்க
இவ்வாய்வரங்கினை சிறப்பாக நடத்துவத வழிகாட்டல் மிகமிக இன்றியமையாதது. பு அறிஞர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகு
ஆய்வரங்கு வருடந்தோறும் சிறப்பாக அமை மேம்பாட்டு அமைச்சர் மாண்புமிகு பண்டுப6 செயலாளர் திரு.எச்.எம். ஹேரத் அவர்களுக்கு
வருடந்தோறும் ஆராய்ச்சிப் பிரிவினரே நடத்திவருகின்றனர். இவ் ஆராய்ச் உத்தியோகத்தர்களையும் நான் மனதாரப் பா
இத்தகைய ஆய்வரங்குகளில், பங்கேற்றுக பயனுடையதுமாகும். இதில் இலங்கை, இந்தி அறிஞர்களும், ஆய்வாளர்களும் கட்டுரை படி ஆய்வுத்துறைக்கு தருவதும் மிகமிகப் பயன் மிகையாகாது.
இவ்வாய்வரங்கில் வெளியிடப்படும் சிறப் படித்துப் பயன்பெறவேண்டும் என்பது எமது
இவ்வாய்வரங்கில் ஆய்வுக்கட்டுரை படித்ே உளமார்ந்த நன்றிகள்.
சாந்தி நாவுக்கரசன் பணிப்பாளர்
లిE933>>>>5<3<3/2১৪১৪১০ও<3/3/3
னக் கூறலாம். இக்காலப்பகுதியிலேதான் அமைக்கும் முறைமையும் ஏற்பட்டது எனலாம்.
பம் என்பன இரு கண்களாக நிலவின. ப்பிரபந்தங்கள் என்பன இக்காலப்பகுதியில் ாற்றைக்கூறும் திருத்தொண்டர் புராணம், ஏனைய இலக்கியங்களும் இக்காலப்பகுதியில்
ட்டுரைகளை நூலுருவாக்கம் செய்யும் பணியை யர்வகுப்பு மாணவர்களுக்கும், பல்கலைக்கழக தேடலையும், அறிவுசார் விடயங்களையும் ளில் படிக்கும் கட்டுரைகளைத் தொகுத்து களிப்பினை நல்குகின்றது.
ற்குப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் அத்துடன் தமிழக, இலங்கை பல்கலைக்கழக ம்.
யபக்கபலமாக இருந்துவரும் மதவிவகார ஒழுக்க ண்டாரநாயக்கா அவர்களுக்கும், அமைச்சின் கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
ஆய்வரங்கினைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்து சிப் பிரிவில் கடமைபுரியும் அனைத்து ாராட்டுகின்றேன்.
ட்டுரை வாசிப்பது மிகவும் வரவேற்கத்தக்கதும் ய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும், டப்பதுடன், பயனுள்ள புதிய விடயங்களை எமது பாடுள்ள விடயமாகும் எனக் குறிப்பிட்டால்
பு மலரை ஆய்வாளர்களும், மாணவர்களும் ஆவலாகும்.
தார், பங்குகொண்டோர் அனைவருக்கும் எமது
x్మ399్మ3x3 (SE)994333
V
శి

Page 9
གྱི་
S১৪১৪১৮ও<ও<ও<হু৪১৪১১>3<3/3/38১১৪১৫
rococcolseyevastb/Office
දුරකථනය Grassouf? - 5375128
telephone
හැක්ස් අංකය தொலைநகல் 2690898 පණ්ඩු බණ්ඩ Fax N{}. ආගමික ක ് }200806 பண்டு 6. Gen. மத விவக PANDU BAND
Minister of R
මීගේ අංකය ඔබේ අංකය எனது இல. உமது இல. My : No.
MIES
It is with great pleasure and privilege to published on the occasion of the annual the Department of Hindu Religious and pire and its Religious Traditions'.
I understood that the research Seminars: on the topics of Hinduism, Hindu Cultu relevantfield from India and Sri Lanka U seminars and these papers were compil
Such research Seminars and publication students of Universities and to the intere
I wish all the success of the Seminar.
- سنہ 3/ ,ll|(/ے Pandu Bandaranaike, Minister of Religious Affairs PANDU BANDARANAKE (M.P) Minister of ReligiousAffairs 115, Weijerarna Mawatha, Colombo 07.
(O)
లిE9్మ3బ్రిడ<99>
 

>ও<ও<ও<হুs>>>>>5<3<ও<হঃs০১৪১৪১৪×5/3/3/2
B
(O)
seeslegallb/residence
මඩුගස්වලව්ව - යක්කල மடுகஸ்வலய்வ, யக்கல Madugaswalawwa - Yakkala O6e))G36) (e).s.) සූඪ : ටයුතු අමාතාන්‍ය Telephone 033-2222088 ாரநாயக் h - (ur. ) හැක්ස් අංකය
影 经 தொலைநகல் 033-2222088 ார அமைசசர Fax No. ARANAKE (M.P) eligious Affairs
දිනය திகதி Date
SAGE
) send this message for the souvenir to be Research Seminar which is organized by Cultural on the theme of "The Chola Em
are organized annually by the Department ure and Tamil Literature. The Scholars of Jniversities submit research papers in these ed and published by the Department.
is are very much beneficial to the teachers, sted General Public in the relevant fields.
ÓÒ
ఇడ(sబ్రిpg

Page 10
SSలిలికి 33@g)SEరి333@g)EE>
གྱི་
ආගමික කටයුතු හා සt LD5 sogeSQasaesãososir, (GPIBäs MNSTRY OF RELIGIOUS AF
මෙග් අෆකය ඔෆ් අංකය எனது இல. உமது ခြွ၊ } No. Your No.
ESSAGE FROM MINISTRY OF RE & MORALU
It gives me great pleasure in sending this Department of Hindu Religious and Cultu Hindu Religion and Hindu Literature on v: of Indian Scholars. This year the Research “The Cola Empire and its Religious T.
I hope that the research seminar will defin Cola to the future generations.
The Department of Hindu Religious and ( containing the articles written by the rese; lication no doubt will be helpful to the stu
@
tur
CS
al
d
ReS
e
2dTC
he
1S
dS
th
e
SC
articl
es
(EZ researchers from India and Sri Lanka.
It is my fervent wish that this endeavour v
H.M. Herath,
Secretary, Ministry of Religious Affairs & Moral Upliftment
లిలిఖ4G33లిలిఖండ333లిలిథి
O)
 

শু<ও<ও<হুs>>>>5<3/3/3;s>>>>>5<3/3/3
O)
දාචාර වර්ධන අමාතාන්‍යාශය s G3DiDLIT-co அமைச்சர் AIRS AND MORAL UPLFTMENT
දිනය திகதி } 16.7.2008
Date
THE SECRETARY LIGIOUS AFFAIRS
PLFTMENT
message to the Research Publications. The iral Affairs conducts Research Seminars on urious topics annually with the collaboration Seminar will be conducted under the theme raditions”.
litely enlighten the importance of period of
cultural Affairs usually publishes a booklet archers at the end of the Seminar. This pubdents who pursue higher studies, Teachers, would contain the contributions of historic
till be crowned with success.
3.
439933(SPE>9943($(S

Page 11
சோழர் காலத்துப்
Grugraffi'r Lufi {
1. சோழப் பேரரசிற் சமய, கலாசார
அபிவிருத்திகள்
பத்தாம் நூற்றாண்டின் முடிவிலே, அருண்மொழிவர்மனாகிய முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சியில் (985-1016), அயலிலுள்ள இராச்சியங்கள் பலவற்றைக் கைப்பற்றி வலிமைமிக்க பேரரசொன்றைச் சோழர்கள் அமைத்தார்கள். அவனுடைய ஆட்சியின் ஆரம்பத்திற் பாண்டிநாடு, சேரநாடு, இலங்கை, கொல்லம், கங்கபாடி, நுளம்பாடி, வேங்கி ஆகியவற்றையும், மேற்கிலுள்ள தீவுக்கூட்டங்கள் சிலவற்றையுஞ் சோழர் கைப்பற்றிக் கொண்டனர். '
தமிழகத்திற்கு வடக்கிலுள்ள இராச்சியங்கள் மீது சோழர் நடத்திய படையெடுப்புக்களுக்கு, இளவரசனான மதுராந்தகன் தலைமை தாங்கிச் சென்றான். அவன் போர்களில் ஈட்டிய சாதனைகளும் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்ட சோழரின் ஆதிக்கப் படர்ச்சிக்கு ஏதுவாயிருந்தன. மதுராந்தகன் கங்கபாடி, வேங்கி என்னும் மண்டலங்களுக்குப் பொறுப்பான தண்டநாயகனாக நியமனம் பெற்றிருந்தான். அவன் துளுவம்,
கொங்கணம் ஆகிய நாடுகளையும் கைப்பற்றியதோடு சேரனை அவனுடைய நாட்டிலிருந்தும் துரத்தினான். *
மதுராந்தகனை கி.பி. 1012 ஆம் ஆண்டிலே துணையரசனாக முடி சூட்டினார்கள். அதன்பின் அவனுக்கு இராஜேந்திரன்’ என்னும் பட்டப்பெயர் உரியதாகியது. இராஜராஜன் இறந்தபின் கி.பி.1016 ஆம் ஆண்டிலே இராஜேந்திரன் சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டான்.
சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்'

பண்பாடு மரபுகள்
சி. பத்மநாதன்
அவனுடைய ஆட்சியிற் சோழராதிக்கம் உன்னத நிலையினை அடைந்தது. செல்வ வளத்திலும், ஆட்சித் திறனிலும். கலாசார மேம்பாட்டிலுஞ் சோழப்பேரரசு பரத கண்டத்திலே முன்னணியில் இருந்தது.
இராஜேந்திரனின் கங்கைப் படையெடுப்பு, கடாரப்படையெடுப்பு ஆகியன கவிவாணரினாலும் அரண்மனை அதிகாரிகளினாலுஞ் சிறப்புமிக்க சாதனைகளாக நெடுங்காலம் போற்றப்பட்டன. அவற்றின் காரணமாக முறையே கங்கை கொண்ட சோழன், கடாரங்கொண்ட சோழன் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் அவனுக்குரியனவாகின. கங்கைப் படையெடுப்பினைத் திக்குவிசயம் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் வருணிக்கின்றன. கங்கை படையெடுப்பின் விளைவாக ஓங்கி உயர்ந்த தன் புகழைப் பரத கண்டத்தவர்க்கு உணர்த்தும் வண்ணமாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதியதோர் இராசதானியை இராஜேந்திரன் அமைத்தான். அத்துடன் சோழகங்கம் என்னும் பெருந் தடாகத்தினையும் அவன் அமைத்தான். அதனை “ஜலமயமான ஜயஸ்தம்பம்” என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் வருணிக்கின்றன."
சோழப்பேரரசு சோழமண்டலம், ஜயம்கொண்ட சோழமண்டலம் (தொண்டை நாடு), இராஜராஜப் பாண்டி மண்டலம், மலைமண்டலம் (சேரநாடு), அதிராஜராஜ மண்டலம் (கொங்கு தேசம்), முடிக்கொண்ட சோழமண்டலம், (கங்கபாடி), நிகரிலிச் சோழ மண்டலம் (நுளம்பபாடி), ஈழமான மும்முடிச்சோழமண்டலம், வேங்கி மண்டலம் என்னும் ஒன்பது பிரிவுகளைக் கொண்டிருந்தது. வேங்கியிற்

Page 12
சோழரின் ஆதரவுடன் கீழைச் சாளுக்கிய மரபினாரான சக்திவர்மன், விமலாதித்தன் என்போரும் அவர்களின் வழியினரும் ஆட்சிபுரிந்தனர். ஏனைய மண்டலங்கள் எட்டும் சோழரின் ஆட்சியின்கீழ் அமைந்திருந்தன.
அவற்றுள் ஒவ்வொன்றும் இராஜராஜனின் காலத்தில் , அவனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒவ்வொன்றினால் வழங்கின. மண்டலங்கள் முன்பு தனித்தனி இராச்சியங்களாய் இருந்தமையும் குறிப்பிடத்தகுந்தது. இராஜேந்திர சோழன் மண்டலங்கள் சிலவற்றின் இராஜப்பிரதிநிதிகளாக இளவரசரிற் சிலரை நியமித்தான். அத்தகைய இளவரசர் அரசர்க்குரிய பட்டாபிஷேகம் பெற்று முடிசூடிக் கொண்டனர். அவர்களுள் ஒவ்வொரு வரும் தாம் அதிகாரஞ் செலுத்திய நாட்டு வழமைகளுக்கு ஏற்பப் பட்டங்களைச் சூடிக் கொண்டனர்.
இராஜேந்திரனின் மகனாகிய சுந்தரசோழன் மதுரைக்குச் சென்று, அங்கு தங்கியிருந்து பாண்டிநாட்டின்மீது அதிகாரஞ் செலுத்தினான். அவனுடைய காலத்தில் மதுரை, இராஜேந்திர சோழப்புரம் என்னும் புனர்நாமத்தை பெற்றது. அங்கு புதிதாக அமைக்கபெற்ற அரண்மனையில் அவன் தங்கியிருந்தான். அவனைச் சோழபாண்டியன் என்று குறிப்பிட்டனர். பாண்டிய மன்னர்களின் மாறிவரும் பட்டப் பெயர்களில் ஒன்றான ஜடாவர்மன் என்பதை அவன் சூடிக் கொண்டான். சோழபாண்டியரின் ஆட்சி பாண்டி நாட்டில் முதலாங்குலோத்துங்க சோழனின் காலம் வரை (1070-1122) நிலைபெற்றது.
இராஜேந்திர சோழனின் மக்களுள் வேறொருவனாகிய மதுராந்தகன் கங்கபாடியான முடிக்கொண்ட சோழமண்டலத்திலே இராசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். அவன் அங்கு அதிகாரம் பெற்று முடிசூடிக்கொண்ட போது சோழகங்கன் என்னும் பட்டப்பெயரை அவனுக்கு வழங்கினார்கள்.
2

இராஜேந்திரனின் குமாரர்களுள் ஒருவன் இலங்கைக்கு சென்றிருந்தான். அவன் அங்கு அரசனாக முடிசூடிய பொழுது சோழஇலங்கேஸ்வரன், சங்கவர்மன் என்னும் பட்டங்களைப் பெற்றான். திருகோணமலை மாவட்டத்திலுள்ள மானாங்கேணி, கந்தளாய் என்னும் ஊர்களில் மட்டுமே அவனுடைய காலத்துச் சாசனங்கள் கிடைத்துள்ளன.
இராஜராஜ சோழனின் காலம் முதலாகச் சோழர், பாண்டி நாட்டு வழமையினைப் பின்பற்றிப் பெருநிலப் பிரிவுகளைத் தங்கள் ஆவணங்களிலே வளநாடு என்று குறிப்பிட்டார்கள். நாடு என்னும் பல பிரிவுகளை உள்ளடக்கியதே வளநாடு என்பதாகும். வளநாடுகளுக்குப் பெயரிடுமிடத்து அவற்றுக்கு அரசரின் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் வழங்கினார்கள். அத்தகைய வளநாடுகள் பல ஈழமானமும்முடிச் சோழமண்டலத்திலும் இருந்தன.
தமிழகத்து நாடுகள் பெரும்பாலானவற்றில் ஊர், தனியூர், சதுர்வேதிமங்கலம், நகரம் என்ற பிரிவுகள் இருந்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட எல்லைகளினுள் அமைந்த நிலப்பகுதியில் நிர்வாக அதிகாரங்கொண்டிருந்தது. நிலம், நீர்விநியோகம், கோயில், தேவதானம், அறநிலையம் முதலியன பற்றிய நடவடிக்கைகளை அவை கவனித்து வந்தன. புரவு, வரிப்பொத்தகம் என்ற வகைகளுக்குரிய ஆவணத் தொகுதிகள் அவற்றின் வசமிருந்தன. ஊரிலுள்ளவர்களைப்பற்றியும் நிலங்களைப்பற்றியுஞ் சில விவரங்கள் அவற்றில் எழுதப்பட்டிருக்கும்.
சோழப்பேரரசின் பல பாகங்களிலுஞ் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்களைப் பின்பற்றியவர்கள் வாழ்ந்தனர். தமிழகத்திற் சமணம், பெளத்தம் ஆகியவற்றின் செல்வாக்கு அருகி வந்தது. அவற்றைச் சேர்ந்த நிலையங்கள் அங்கும் இங்குமாகச் சில ஊர்களிலே காணப்பட்டன. சைவாபிமானிகளாய் விளங்கிய சோழர், சமணப் பள்ளிகளையும் பெளத்த விகாரங்களையுஞ் சில
ஆய்வரங்கு 2008

Page 13
சமயங்களிலே கட்டியதோடு அவற்றுக்கு நிலங்களையும் வேறு பொருட்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
சோழப்பேரரசர் காலத்துக்குரிய சிறந்த தமிழ் நூல்களிற் சில சமண, பெளத்த நூல்களாகும். சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியமும், சூளாமணியும், நீலகேசியும் , வளையாபதியும் இலக்கண நூல்களில் ஒன்றான நன்னூலுஞ் சமணரால் எழுதப்பெற்றவை. சோழமன்னர் பலரைப் பற்றிய பாடல்கள் வீரசோழியத்தில் உள்ளன.
வைணவம் சோழராட்சியிலே தமிழகத்திற் சிறப்புற்று விளங்கியது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் வைணவத் தலங்களும், பிற வைணவ நிறுவனங்களுஞ் சீரான நிலையிற் காணப்பட்டன. ஆழ்வார்களின் பாடல்பெற்ற தலங்களிலும் பிறவிடங்களிலும் அமைந்திருந்த கோயில்கள், புனர்நிர்மானமும், விரிவாக்கமும் பெற்றன. புதிய வைணவக் கோயில்களை அமைப்பதற்கும் பழைய கோயில்களிற் புதிய மண்டபங்களையும், கோபுரங்களையும், பிராகாரங்களையும் நிர்மாணிப்பதற்கும் சோழர் பல வழிகளிலும் ஆதரவு புரிந்தனர்."
நாதமுனிகள் என்னும் ஆச்சாரியார் ஆழ்வார்களின் பாடல்களைத் தேடிப்பெற்று அவற்றை நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்னும் திரட்டாகப் பத்தாம் நூற்றாண்டிலே தொகுத்தனர். ஆழ்வார்களின் பாசுரங்களையும் திருப்பாவையினையும் வைணவக் கோயில்களில் ஒதுவது வழமையாகியது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் முதலியோரின் படிமங்களைக் கல்லிலும் உலோகத்திலும் உருவாக்கி அவற்றை விண்ணகரங்களிலே தாபனஞ் செய்து, அவற்றுக்கு வழிபாடு நிகழ்த்தினார்கள். இராமாவதாரத்தின் மகிமையினையும் , வைணவங் கண்ட வாழ்க்கை நெறியினையும், ஈடும் எடுப்புமற்ற வகையிற் செப்புவதான கம்பராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தோன்றியது.
சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

இக்காலத்தவரான பூரீ இராமானுஜர் ஆழ்வார்களின் பக்திநெறியினை அடிப்படையாகக் கொண்டு வேதாந்தத்திற்குப் புதியதோர் வடிவஞ்செய்தனர். அவர் பரத கண்டத்தின் பல பாகங்களுக்குஞ் சென்று சமயவாதம் புரிந்து வைணவ சம்பிரதாயம் மேன்மைபெறச் செய்தார்.
சோழப் பெருமன்னர் காலத்திற் சைவமே தமிழகத்து மக்களிற் பெரும்பான்மையோரின் சமயமாக விளங்கியது. வெவ்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்தவர்களையும், பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டிருந்த சமுதாயப் பிரிவுகளையும் , இணைக்குஞ் சக்தியாகவும் அது தொழிற்பட்டது. அரசர்களும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிறரும் ஆலயங்களைப் புனரமைத்தும், புதிதாக அவற்றை நிர்மாணித்தும், அவற்றிலே நாள்வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுவதற்கென நிவந்தங்களைச் செய்தும் சைவசமயத்தை ஆதரித்தனர். அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஆட்சியதிகாரிகளும், குறுநில மன்னரும், வணிகரும் வேறு பலருந் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டனர்.
சோழ மன்னரின் முயற்சியால் அமைக்கப்பெற்ற ஈஸ்வரங்கள் நூற்றுக்கணக்கானவை. கோயில்களைக் கற்றளிகளாக அமைக்கும் முறையினைச் சோழர்களே தமிழகமெங்கும் வழமையாக்கினார்கள். அதற்கு முன்பு மாமல்லபுரம், காஞ்சிபுரம் போன்ற சில நகரங்களில் மட்டுமே கற்றளிகள் அமைந்திருந்தன. சோழரின் ஆட்சியிற் கோயிலமைப்புப் பெரிதும் வளர்ச்சி பெற்றது. ஓங்கியுயர்ந்த விமானங்கள், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் பொருந்திய மண்டபங்கள், கோபுர வாயில்கள், திருச்சுற்று மாளிகைகள் முதலியன பொருந்திய கலைவனப்பு மிக்க கோயில்கள் பலவற்றைச் சோழப்பெருமன்னர் அமைத்தனர். அத்தகைய கோயில்களில் முதலாம் இராஜராஜன் (985-1016), முதலாம் இராஜேந்திரன் (1012-1044), இரண்டாம் இராஜராஜன் (1146-163), மூன்றாங் குலோத்துங்கன் (1178-1218). என்போரால் முறையே அமைக்கப் பெற்றவையான
3

Page 14
தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழேஸ்வரம், ஐராவதேஸ்வரம் என்னும் இராஜராஜேஸ்வரம், திரிபுவன வீரேஸ்வரம் என்னுங் கம்பஹரேஸ்வரம் ஆகியவை மிகப் பிரதானமானவை. வணப்பில் இவற்றுக்கு நிகரான வேறு கோயில்கள் தென்னிந்தியாவில் அரிதாகவே
உள்ளன.
சோழர் காலத்தில் நாயன்மார்களின் பாடல்பெற்ற தலங்களிற் கோயில்கள் புனரமைக் கப்பட்டன. சிதம்பரம், காஞ்சி, திருவாரூர், திருவிடைமருதூர்,திருவையாறு முதலிய தலங்களில் விமானங்களும், பரிவாரதேவர் கோயில்களும், மண்டபங்களும் கற்றளிகளாக அமைக்கப்பட்டன. கோயில்கள் பலவற்றில் அமைக்கப்பட்ட மண்டபங்களும், மடங்களும், அறச்சாலைகளும் பெரும்பாலுஞ் சோழமன்னர்களின் பெயர்களால் வழங்கி வந்தன. தமிழகத்துக் கோயில்களிற் பெரும்பாலானவற்றுட் காணப்படும் சாசனங்கள் வழிபாடு, கோயில் நிர்வாகம், நிவந்தங்கள், தேவதானங்கள் என்பன பற்றிய விவரமான செய்திகளைக் கொண்டுள்ளன.
சோழர் காலத்திற் சைவசமயத்தில் ஏற்பட்ட பிரதான வளர்ச்சிகளுள் ஒன்று நாயன்மார் வழிபாடு ஏற்பட்டமையாகும். சமய குரவரான நாயன்மார்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும், வழிப்பாட்டுக்கு உரியவர்கள் என்றும் சைவர்கள் கருதினார்கள். நாயன்மார்களின் படிமங்களைக் கல்லிலும் உலோகத்திலும் உருவாக்கி அவற்றைக் கோயில்களிலே தாபனஞ் செய்து வழிபடும் வழக்கம் தோன்றியது. முதலாம் இராஜராஜன் தஞ்சையில் அமைத்த இராஜராஜேஸ்வரத்தில் நாயன்மார் பலரின் படிமங்கள், அரச குடும்பத்தவராலும் பிறர் பலராலுந் தாபனஞ் செய்யப்பட்டன. சண்டேஸ்வரரின் திருவுருவம் ஈஸ்வரங்களில் வழிபாடு செய்தற் பொருட்டுத்தாபனம்பண்ணப்பட்டது. சில தலங்களிற் சமய குரவருக்குத் தனிக்கோயில்கள் அமைக்கப் பெற்றன.

நாயன்மார்வழிபாடு வளர்ச்சி பெற்ற காலத்தில் அவர்களைப் பற்றிய தனியான இலக்கிய மரபொன்று உருவாகியது. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையினை அடிப் படையாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர்த் திருவந்தாதி என்னும் பனுவலைப் பாடினார். அவரது காலத்தில் நாயன்மார்களைப் பற்றி உருவாகியிருந்த ஐதீகங்களும் மரபுகளும் நம்பியின் மூலமாக இலக்கிய வடிவம் பெற்றன. திருச்சண்பை விருத்தம் ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமலை முதலிய நூல்களிலே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சிறப்புகளை நயம் பொருந்திய வண்ணம் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருவேகாதசமாலை என்னும் பனுவலொன்றையும் அவர் இயற்றினார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டிலே சேக்கிழாராற் பாடப்பெற்றதான பெரிய புராணம், நாயன்மார் வழிபாடு விருத்தி பெற்றிருந்த காலத்துப் பேரிலக்கியமாகும். தமிழகத்துச் சைவசமய வளர்ச்சியிலே திருத்தலங்களும் திருத்தொண்டரும் அருள்நெறியான பக்தி நெறியும் பெற்றிருந்த ஈடிலாச் சிறப்பினை உவமையிலாத வண்ணமாகச் செப்புகின்ற இலக்கியமாக அது விளங்குகின்றது.
சோழர் நிர்வாகத்தில் உயர்பதவியிலிருந்த வரிப்பொத்தகம் சேக்கிழார் மரபில் வந்தவரும் அரசசேவை புரிந்தவருமான சேக்கிழார், தமிழகத்து ஊர்கள், தலங்கள், சமூகப்பிரிவுகள், நாட்டு வளம், வழமைகள், காலபருவங்கள் என்பவற்றை நன்கறிந்தவராக விளங்கினார். இலக்கண இலக்கியங்களிலும் யாப்பு, அணி இலக்கணங்களிலும் புலமை மிக்கவரான அவர் சைவசமய தத்துவங்களைப்பற்றியும் ஆசாரங்களைப் பற்றியும் ஆழமான அறிவினைக் கொண்டிருந்தார். நாயன்மாரின் சிறப்புகளைச் 60), 56F6)6FLOLLU மரபுகளோடும் சமுதாய நிலைகளோடும் இணைத்து, எளிமையுந் தெளிவும் இனிமையுங் கலந்த
ஆய்வரங்கு 2008

Page 15
கவிநடையிற் கூறுந்தனிப்பெரும் காப்பியமாய் அமைந்தது பெரியபுராணம்.
சோழர் காலத்துச் சைவசமய இலக்கியங்களிலே பக்திப் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை. சேந்தனார், திருமாளிகைத் தேவர், கருவூர்த்தேவர், திருத்தக்கதேவர், பட்டினத்துப் பிள்ளையார் முதலியார் பாடிய இனிமையுங் கனிவுஞ்செறிந்த பாடல்கள் அக்காலத்துப் பக்திநெறி சார்ந்த இலக்கியப் பாங்கினைப் பிரதிபலிக்கும் கருவூலங்களாகும்.
ஒன்பதாம் நூற்றாண்டிலே தேவாரப் பாடல்களைக் கோயில்கள் சிலவற்றில் ஆராதனைக் காலங்களிற் படிப்பதற்கென அறக்கட்டளைகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. பத்தாம் நூற்றாண்டு முதலாகத் தேவாரங்களைக் கோயில்களிற்பாடுவது பொது வழக்காகியது. கோயில்களில் ஒதுவார் பணிகளைக் கவனிப்பதற்கெனத் தேவாரநாயகம் என்ற அதிகாரி ஒருவன் நியமிக்கப் பெற்றிருந்தான் என்பதை முதலாம் இராஜேந்திர சோழன் காலத்துச் சாசனங்கள் மூலமாக அறிய முடிகின்றது. * கோயில்களிற் படிப்பதற்கும் ஒதுவார்க்குப் பயிற்சியளிப்பதற்கும், தேவாரங்களைக் காலாகாலம் புதிய ஏடுகளில் எழுதி வைக்க வேண்டியிருந்தது. இப்பணியை மேற்கொண்டபோது பழைய ஏடுகளைப் பெற்றுக் கொள்வது சிரமமாயிருந்தது. கிடைக்கக்கூடிய ஏடுகளும் செல்லரித்துஞ் சிதைந்துங் காணப்பட்டமையாலே தேவாரப் பதிகங்கள் நாளடைவிற் கிடைக்கப் பெறாது ஒழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டிருத்தல் கூடும். அதன் விளைவாகவே தேவாரப்பதிகங்களை எழுதி வைத்துள்ள ஏடுகளைப் பரிசோதிக்கலாயினர், திருமுறைத் தொகுப்புக்குத் தேவையான அடிப்படை வேலைகள் பலரின் நீண்டகால முயற்சியாக அமைந்திருத்தல் வேண்டும். ஆயினும் திருமுறைகண்ட புராணம், இராஜராஜன் என்னும் அரசனும், திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் கோயில் அர்ச்சகரான நம்பியாண்டார் நம்பியும் இதற்குத் பொறுப்பாக விருந்தனர் என்க்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

குறிப்பிடுகின்றது. முதலாம் இராஜராஜனின் காலத்தில், அவனுடைய ஆதரவுடன், நம்பியின் தலைமையிலான குழுவொன்று திருமுறைகளைத் தொகுக்கும் பணியினை நிறைவேற்றியது என்று கொள்வது ஒரு பொருத்தமான முடியாதல் கூடும். முதலேழு திருமுறைகளே இவர்களிலே தொகுக்கப்பட்டன என்ற கருத்து அறிஞர் பலராலும் இந்நாள்களிலே வலியுறுத்தபடுகின்றது, காலப்போக்கிலே திருமுறைகள் பன்னிரண்டு ஆகின.
2. இலங்கையிற் சோழர்
முதலாம் இராஜராஜனது 8ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடப்பகுதியைச் சோழர் கைப்பற்றிக் கொண்டனர். மாதோட்டம், பதவியா, திருகோணமலை ஆகிய இடங்களிலும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலுமுள்ள அவனுடைய காலத்துச் சாசனங்கள் இலங்கையின் வடபகுதியில் இராஜராஜனின் ஆட்சி நிலவியதற்குச் சான்றாயுள்ளன. சோழராலே கைப்பற்றப்பட்டிருந்த இலங்கையின் பகுதியினை ஈழமான மும்முடிச் சோழமண்டலம் என்று சோழர் குறிப்பிட்டனர். இராஜராஜனின் ஆட்சியில் ஈழமான மும்முடிச்சோழ மண்டலம் வளநாடு என்ற பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. அவற்றிலே நிர்வாகப் பொறுப்புக்களை மேற்கொண்டிருந்த சோழப் பிரதானிகளும், வணிகரும் , படையாரும் கோயில்களை அமைத்து அவற்றுக்கு நிவந்தங்களை வழங்கியிருந்தனர்.
முதலாம் இராஜேந்திர சோழனின் 5 ஆம் ஆண்டிலே (1017) ஜயங்கொண்ட சோழ மூவேந்தவேளான் என்னுஞ் சேனாதிபதி தென்னிலங்கையிலே தங்கியிருந்த மகிந்த மன்னனையும் அவனது தேவியையும், அவர்களின் முடி முதலான அணிகலன்களையும், ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகத் தென்னவனான இராஜசிம்மன் சிங்கள மன்னரிடம் அடைக்கலமாக வைத்திருந்த பாண்டியரின் முடி முதலான அணிகலன்களையுங் கைப்பற்றிக் கொண்டு போய்ச்
5

Page 16
சோழ மன்னனிடம் ஒப்படைத்தான்." அப்படையெடுப்பின் விளைவாக இலங்கையிற் சோழராதிக்கம் விரிவு பெற்றது. தக்கிணதேசத்தின் வடபகுதியிலும் உறுகுணையின் கிழக்கு கரையோரப் பகுதியிலுஞ் சோழரின் ஆதிக்கம் ஏற்படலாயிற்று. - இவ்விதமாக வளர்ந்த சோழரின் ஆதிக்கம் கி.பி.1070 ஆம் ஆண்டளவில் முதலாங் குலோத்துங்க அரசனாகும் வரை இலங்கையில் நிலைபெற்றது.
தென்னிந்தியச் செல்வாக்கு முன்னொரு காலத்திலும் காணப்படாத அளவில் இலங்கையில் ஏற்பட்டது. சோழர் அமைத்த நிர்வாக நிலையங்களிலும் படைத்தளங்களிலும் பெருமளவிலே நிர்வாக சேவையாளரும்படையினரும் சென்று தங்கியிருந்தனர். நானாதேசி வணிகர் அக்காலத்தில் இலங்கையின் உள்நாட்டு வாணிபத்திலும், அயல்நாட்டு வாணிபத்திலும் பெரும் பங்கு கொண்டிருந்தனர். அவர்களால் அமைக்கப்பெற்ற வணிக நிலையங்களும் அவற்றைச் சூழ்ந்த குடியிருப்புக்களுங் காலப்போக்கில் நகரங்களாக வளர்ச்சி பெற்றன. அவற்றிலே தென்னிந்தியாவிலிருந்துஞ் சென்ற பல்வேறு வணிகர் குழாங்களும் போர் வீரர்களும் உற்பத்தியாளரும் கூடி வாழ்ந்தனர். இத்தகைய வளர்ச்சிகளினால் இலங்கைச் சமுதாயத்திற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. சோழராட்சியில் இவ்விதமாக இலங்கையில் ஏற்பட்ட குடியேற்றங்கள் அங்குள்ள பூர்விகத் தமிழ்க் குடிகளோடு சங்கமமாகின. சோழப்பெருமன்னர் காலத்திலே தென்னிந்தியாவில் வளர்ச்சிபெற்ற சமய , கலாசார மரபுகள் இலங்கையிற் பரவலாயின. பத்தாம் நூற்றாண்டு முதலாகத் தமிழகத்தில் வழக்கிலிருந்த ஆலய வழிப்பாட்டு நெறிகளையுங் கட்டிட-சிற்பமுறைகளையும், இலக்கிய மரபுகளையும் சோழர் காலத்திற் சென்று இலங்கையிற் குடிபுகுந்தவர்கள் அங்கு அறிமுகஞ் செய்தனர். அதன் பயனாக இலங்கையில் வளர்ச்சி பெற்ற இந்து கலாசாரத்தை அக்காலத்துக் கோயில்கள் பிரதிபலிக்கின்றன.

2.1 மாதோட்டமான இராஜராஜ
புரத்துக் கோயில்கள் அருண்மொழித்தேவ வளநாட்டுமாதோட்டமான இராஜராஜபுரத்தில் இராஜராஜ-ஈஸ்வரம், திருவிராமீஸ்வரம் என்னுமிரு கோயில்கள் அக்காலத்தில் அமைக்கப் பட்டிருந்தன. இலங்கையிலிருந்த சோழப் பிரதானிகளில் ஒருவனான சோழ மண்டலத்துச் கூடித்திரிய சிகாமணி வளநாட்டு வேளார்நாட்டுச் சிறுகூற்ற நல்லூர் கிழவன் தாழிகுமரன் என்பவனால் இவற்றுள் முதலாவது கோயில் அமைக்கப்பட்டது. அதற்கு இறையிலித் தேவதானமாக மாதோட்டத்தில் நிலம் வழங்கப்பட்டது. அந்நிலம் இராஜராஜப் பெருந்தெருவுக்குக் கிழக்கிலும் கம்மாணச்சேரிக்குத் தெற்கிலும் அமைந்திருந்தது. “இவ்வூர்குடி குன்றன் தாமன் இருந்த மாளிகையும் வீடும் தோட்டமும் நீங்கலாக” வேநிலம் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டது. அத்துடன் அரசாங்கத்துக்குரிய வருமானங்களும் நிவந்தமாகத் தாழிகுமரனாற் கோயிலுக்குத் கொடுக்கப்பட்டன. மாதோட்டத்தில் நெசவாளரிட மிருந்து மாதந்தோறும் தறியொன்றினுக்கு அரைக்கால் அக்கம் வரியாகக் கொள்ளப்பட்டது. வாணிபத்தில் விற்பானிடத்துங் கொள்வானிடத்தும் ஒவ்வொரு காசு பெறுமதியான பொருளுக்கும் ஒவ்வொரு வட்டமாக வரியிறுக்கப் பெற்றது. அரசாங்கத்துக்குரிய இவ்வரிகளைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டுமென்று தாழிகுமரன் பிரகடனஞ் செய்தான்."
கோயிலுக்கு வழங்கப்பெற்ற நன் கொடைகளினின்றும் வரும் வருமானத்தைக் கொண்டு ஒவ்வொரு காலத்துக்கும், மூன்று நாழியரிசியாக நாள்தோறும் ஆறுநாழி அரிசியும் திருவமிர்து அடுவிக்கும் பிராமணர் இருவருக்கு நாள்தோறும் எட்டுநாழி நெல்லும் கொடுக்க வேண்டுமென்றும், ‘வைகாசி விசாகம் ஏழு நாளும்” விழா எடுத்துத் தீர்த்தம் ஆட்டுவிக்க வேண்டு மென்றும் தாழிகுமரன் அறக்கட்டளை ஏற்படுத்தி யிருந்தான். இவற்றை குறிப்பிடும் சாசனம்
ஆய்வரங்கு 2008

Page 17
திருகேதீஸ்வரத்திற் காணப்பெற்றதாலும் இராஜராஜ -ஈஸ்வரம் மாதோட்டத்தில் இருந்ததென்று சாசனங்கூறுவதாலும் பாடல்பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்திற் புதிய கோயிலொன்றைத் தாழிகுமரன் அமைத்தானென்று சிந்திக்கலாம்.
திருவிராமீஸ்வரம் என்னும் சிவாலயமொன்றும் மாதோட்டத்தில் அமைந்திருந்தது. இராஜேந்திர சோழனின் “பெருந்தனத்துப் பணி மகன்’ சிறு குளத்தூருடையான் தேவன் அக்கோயிலிற் சந்தி விளக்கு எரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தான். அத்தர்மத்தின் பொருட்டு மூன்று வணிக கணங்களிடம் அவன்
காசினை ஒப்படைத்திருந்தான். " நகரத்தார் என்போரின் ஒரு பிரிவினாரான சங்கரபாடியரிடம் இரண்டு காசும், வெற்றிலை வாணியரிடம் ஒரு காசும், வாழைக்காய் வாணியர் வசம் ஒரு காசும், முதலிருப்பாக அவனாற் கொடுக்கப்பட்டன. தாம் பெற்றுக்கொண்ட காசின் வட்டியினைக் கொண்டு கோயிலிற் சந்திவிளக்கு எரிப்பதற்கு வணிக கணங்கள் மூன்றும் பொறுப்பேற்றன. மாதோட்டத் திலிருந்த வணிகர் கோயில் விவகாரங்களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தமை கவனித்திற்குரியது.
2.2 உத்தமசோழ ஈஸ்வரம், பண்டிதசோழ ஈஸ்வரம் உத்தமசோழ-ஈஸ்வரம் என்னும் சிவாலயத்தைப் பற்றி வடமத்திய மாகாணத்துக் கடவத் கோறளையிலுள்ள ஆதகட என்னும் ஊரிற் கண் டெடுக்கப்பெற்ற கல்வெட்டினால் அறியமுடிகின்றது. அது இராஜராஜனுக்கு முன்பு அரசனாயிருந்த உத்தமசோழனின் பெயரால் வழங்கியது. அக்கோயிலை 11ஆம் நூற்றாண்டில் இலங்கையி லிருந்த தமிழ்ப்பிரதானிகள் அமைத்தனர். அரங்கன் இராமேசன் என்பான் கோயிலுக்கு ஒருவேலிநிலமும் நந்தா விளக்கொன்றினை எரிப்பதற்கு 20 பசுக்களையும் 5 சந்தி விளக்கெரிப்பதற்கு 50 தென்னைகளையும் தானமாகக் கொடுத்தான்."
சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

மண்டலகிரி (மதிரிகிரி) யான நித்தவிநோத புரத்திற் பாண்டிதசோழ-ஈஸ்வரம் என்னும் சிவாலயமொன்று அமைந்திருந்தது. இளைய மும்முடிச்சோழ அணுக்கர் என்ற படைப்பிரிவைச் சேர்ந்த ஒருவன் தன்மகன் நாராயணன் பேரிலான தர்மமாக எரிப்பதற்குத் நந்தா விளக்கொன்றினையும் 26 பசுக்களையுந் தானம் பண்ணியமை பற்றி இராஜேந்திர சோழனின் காலத்துக் கல்வெட்டொன்றினால் அறிய முடிகின்றது. *
2.3 வானவன் மாதேவிஸ்ரம்
புலத்திநகரமான பொலநறுவை ஜனநாதமங்கலம் என்னும் புனர்நாமம் பெற்றுத் தலைமை நிர்வாக நிலையமாக விளங்கியது. அங்கு இந்து கலாசாரத்தின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து சென்ற நிர்வாக அதிகாரிகளும், படையினரும், நானாதேசி வணிகரும், தொழில் வினைஞரும், அந்தணரும் வேறு பல சமூகப்பிரிவினரும் அங்கு வாழ்ந்தனர். அத்தகையோரின் வழிபாட்டுத் தேவைக்கெனப் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. பதினாறுக்கும் மேலான சைவ, வைணவக் கோயில்கள் பொலநறுவையில் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றுட் சில சோழராட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை, ஏனையவை பிற்காலத்தவை.
தொல்லியலாளர் இரண்டாம் சிவாலயம், ஐந்தாம் சிவாலயம், ஆறாம் சிவாலயம் என்று வர்ணித்த கட்டிடங்களிற் சோழர் காலத்துத் தொல்பொருட் சின்னங்கள் கிடைத்துள்ளன. இரண்டாம் சிவாலயமான வானவன் மாதேவிஸ்வரம் அழிவுறாது இன்றும் சீரான நிலையிலுள்ளது. இலங்கையிலுள்ள, இன்றுவரை நிலைபெறும் இந்துக் கோயில்களின் கட்டடங்களிலே இதுவே மிகப் பழைமையானதாகும். அழகும் உறுதியுங் கொண்ட கற்றளியாக அமைக்கப் பெற்றதான இக்கோயில் சோழர் கலைப்பாணியின் சீரிய பண்புகளுக்குச் சிறந்தவோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. அதில் முதலாம் இராஜேந்திர சோழனின்
7

Page 18
சாசனங்கள் இரண்டும் அதிராஜேந்திரன் காலத்துச் சாசனங்கள் இரண்டுங் காணப்படுகின்றன." அவற்றுள் இராஜேந்திரன் காலத்தவை மிகவுஞ் சிதைவடைந்துள்ளன. அதிராஜேந்திரனின் சாசனங்களுள் ஒன்று மெய்கீர்த்திப் பகுதியினை மட்டுமே கொண்டுள்ளது. மற்றையது, குறிப்பிடத்தக்களவு நீளமானது. அதிலே 23 வரிகள் உள்ளன. எழுத்துகளுஞ் சொற்றொடர்களும் இடையிடையே சிதைந்துள்ள போதும் சாசனத்தின் பெரும்பகுதி வாசித்தறிந்து கொள்ளக்கூடிய நிலையிலுள்ளது. சோழராட்சிக் காலத்துக் கோயிலொன்றின் நிறுவன அமைப்பினைப் பற்றிய விவரங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ள ஆவணம் என்ற வகையில் அது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
அதிலே குறிப்பிடப்படுங் கோயில் வானவன்மாதேவி என்னும் அரசியின் பெயரினைக் கொண்டு வானவன் மாதேவீஸ்வரம் என வழங்கியது. இரண்டாம் பரந்தகனாகிய சுந்தரசோழன் (957-970), முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகியோரின் பட்டத்தரசிகள் வானவன் மாதேவி என்னும் பெயரைக் கொண்டிருந்தனர். இம்மூவருள்ளும் சுந்தரசோழனின் தேவியும் இராஜராஜனின் தாயாருமாகிய வானவன் மாதேவி அதிக பாராட்டினைப் பெற்றிருந்தாள். அவளுடைய படிமமொன்று மகளாகிய குத்தவைப் பிராட்டியினாலே தஞ்சைப் பெருங்கோயிலிற் பிரதிட்டை செய்யப் பெற்றிருந்தது." சுந்தர சோழனுடைய பட்டத்தரசியின் பெயராற் பொலநறுவையிலுள்ள வானவன் மாதேவீஸ்வரம் அமைக்கப்பெற்றிருத்தல் கூடும்.
அங்குள்ள அதிராஜேந்திர சோழனுடைய கல்வெட்டின் மூலம் தென்னிந்தியக் கோயில்களிற் போல இலங்கையிலுள்ள சில சைவக் கோயில்களிலும் கோயில் நிர்வாக முறை சோழரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பது தெளிவாகின்றது. பன்மாகேஸ்வரர் என்ற சிவனடியார் கூட்டம் பற்றி

அதிலே கூறப்படுகின்றது. தானதருமங்களையும் கோயில் விவகாரங்களையும் மேற்பார்வை செய்தல் பன்மாகேஸ்வரரின் மரபுவழியான உரிமையாகும். பன்மாகேஸ்வரர் ரகூைடி என்ற தொடர் கோயிற் சாசனங்களின் இறுதியிற் காணப்படுகின்றமையுங் குறிப்பிடற்குரியது.
பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரிய தேவகன்மிகள் என்ற குழுவினர் வானவன் மாதேவீஸ்வரத்தில் இருந்தனர். மூலஸ்தானத்தில் ஆராதனை முதலான கருமங்களைப் புரிகின்ற அந்தணரை அவ்வாறு அழைத்தனர். கோயிற் பணிகளைச் செய்கின்ற பரிசாரகர் என்னும் பணிமக்களும் அக்கோயிலிற் கடமை புரிந்தனர். மாணிக்கம் என்னும் பட்டம்பெற்ற தேவரடியார் பலர் வானவன் மாதேவீஸ்வரத்தில் இருந்தனர். கங்கை கொண்ட சோழ மாணிக்கம், காமன் திருவியான கோதுகுல மாணிக்கம், கோவிந்தன்
ஆடவல்லானான நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம், தேவன் காமியான இராஜேந்திர சோழ மாணிக்கம், தேவன் உய்யவந்தானான முடிகொண்ட சோழ மாணிக்கம் என்னும் தேவரடியாரை அங்குள்ள GFT GF 6OTI குறிப்பிடுகின்றது
அக்கோயிலில் விளக்கெரிப்பதற்குச்
சோழமண்டலத்து விற்பேட்டுநாட்டு மங்கலப்பாடி வேளான் சோழ பல்லவரையன் என்னும் பிரதானி ஏற்பாடு செய்திருந்தான். அதற்கென 5 காசும் "இரு சாணே நால்விரல் நீழத்துத் தாராநிலை விளக்கு” ஒன்றும் அவனால் வழங்கப்பட்டன. திருவாராதனை செய்வாரும் பரிசாரகரும பன்மாகேஸ்வரக் கண்காணி செய்வாரும் நாட்டவரும் தேவரடியாரும் என்றென்றும் இடையறாது விளக்கெரிப்பதாகச் சம்மதித்துக் காசினைப் பொறுப்பேற்றனர்."
பொலநறுவையிற் சோழரமைத்த பிற கோயில்களின் பெயர்கள் தெரியவில்லை. அங்குள்ள 5 ஆம் சிவாலயத்தின் அழிபாடுகளிடையே சோழப்பிரதானிகள் சிலரின்
ஆய்வரங்கு 2008

Page 19
பெயர்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் காணப்பெற்றன. அவற்றின் மூலமாக அக் கோயிலும் சோழராட்சிக் காலத்திற்குரியது என்பது தெளிவாகின்றது. பொலநறுவையிலிருந்த இந்துக் கோயில்களுள் அதுவே மிகப் பெரியதாக விளங்கியது. அதன் அழிபாடுகளுஞ் சுற்றுப் புறங்களும் அகழ்ந்தாராயப்பட்ட போது கல்லிற் செதுக்கப்பட்ட 8 படிமங்களும் 19 வெண்கலப் படிமங்களும் கண்டெடுக்கப்பெற்றன. நடராஜர், தகூதிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு, காளி சப்தமாதர் ஆகியோரின் படிமங்களும் நாயன்மார் ઈી6ીofી6hT படிமங்களும்அவற்றிடையே காணப்பட்டன." 6 ஆம் சிவாலயத்தின் அழிபாடுகளுக்கிடையிலும் சோழர் கலைப் பாணியிலமைந்த நடராஜரின் வெண்கலப் படிமமொன்றும் அக்காலத்துக்குரிய வரிவடிவங்களிலான “யூரீ ஆண்பிள்ளை ருெமாள்” என்ற பெயர் பொறிக்கப்பட்ட மணியொன்றுங் கிடைத்தன."
வடகிழக்கிலங்கையிலுங் குறிப்பாகக் கோணேஸ்வரத்திலுஞ் சோழர் மேற்கொண்டிருந்த சைவசமயந்தொடர்பான நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதற்கு இதுவரை கவனித்த விவரங்கள் அடிப்படையானவை.
3. திருகோணமலையிற் சோழ
இலங்கேஸ்வரன். இலங்கையின் வடக்கிழக்குப் பகுதியிலே திருகோணமலை, கந்தளாய், பதவியா என்பவற்றை உள்ளடக்கிய முக்கோணத்திலே, சோழராட்சிக் காலத்திற்குரிய தொல்பொருட் சின்னங்கள் பல கண்டெடுக்கப் பெற்றுள்ளன. இலங்கையில் இதுவரை கிடைத்துள்ள சோழர் காலத்துச் சாசனங்களிற் பெரும்பாலானவை இப்பகுதியிற் கிடைத்துள்ளன. ஈழமான மும்முடிச்சோழ மண்டலத்திலுள்ள ஆறு வளநாடுகளைப் பற்றி மட்டுமே சாசனங்கள் மூலம் அறியமுடிகின்றது. அவற்றுள் நான்கு பிரிவுகள் இப்பிராந்தியத்தைச் சேர்ந்தனவாகும். கணக்கன் கொட்டியாரமான
சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

விக்கிரம சோழ வளநாடு, மாப்பிசும்பு கொட்டியாரமான இராஜராஜ வளநாடு என்னும் பிரிவுகள் கொட்டியாரம் பற்றில் இருந்தன. * கந்தளாய்ப் பிரமதேயமான இராஜராஜ சதுர்வேதிமங்கலமும் திருகோணமலை நகரமும் இராஜேந்திர சோழ வளநாட்டில் அடங்கியிருந்தன.
இராஜவிச்சாதிர வளநாடு, மும்முடிச்சோழ வளநாடு என்பன அதன் மறுபெயர்களாகும். இராஜராஜப் பெரும்பள்ளியான வெல்காமத்து விகாரம் அமைந்திருந்த மானாவத்துளா நாடு , அபயாஸ்ரய வளநாடு, என்பதன் பிரிவாயிருந்தது. அதனை இராஜேந்திரசிங்க வளநாடு, வீரபரகேசரி வளநாடு என்னும் பெயர்களாலுங் குறிப்பிட்டனர்." அது பிற்காலத்திற் கட்டுக்குளம்பற்று என வழங்கிய பிரிவின் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
பதவியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய மூன்றும் நகரங்களாய் விளங்கின. இந்து கலாசார நிலையங்கள் அவற்றிலே குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருந்தன. அங்கு சோழர் அமைத்த படைநிலைகளும், நானாதேசி வணிகர் உருவாக்கிய வணிக நிலையங்களும், பதவியா பதினோராம் நூற்றாண்டிலே நகரமாக வள்ர்ச்சி பெறுவதற்கு வழிவகுத்தன. அது மத்திய காலத்தில் அரண்கள் பொருந்திய நகரமாய் விளங்கியதென்பதைத் தொல்பொருட் சின்னங்கள் மூலம் அறிய முடிகின்றது. இலங்கைத் தொல்பொருட்திணைக் களத்தினர் பதவியாவில் ஐந்து சிவாலயங்களின் அழிபாடுகளை அடையாளங் கண்டுள்ளனர். அவற்றுள் முதலாஞ் சிவாலயத்தின் அழி பாடுகளிடையே சோழராட்சிக் காலத்திற்குரிய 5 கல்வெட்டுகள் காணப்பெற்றன. அக்கோயிலின் பெயர் இரவிகுலமாணிக்க-ஈஸ்வரம் என்று அவற்றுள்ளொன்றிற் கூறப்பட்டுள்ளது. அதன் அத்திபாரக் கற்களில் மேல்வருஞ் சாசனங்கள் உள்ளன ? :
1. நாராயணன் திருச்சிற்றம்பலமுடையான்
இட்டகல்லு,

Page 20
2. ஸ்வஸ்தி யூரீ இக்கல்லு வருதன் திருமால் இட்டது. இக்கல்லு அழகன் உத்தமராலையன் இட்டது.
3. ஸ்வஸ்தி ழநீ இக்கல்லு அழகன் வத்தமானான
தேசியாயத் துணைச் செட்டி இட்டது.
4. ஸ்வஸ்திழரீஇக்கல்லு (பதியில்) வணிகன் தனி
அப்பன் இட்டது.
கோயிலுக்கு அத்திபாரக் கற்களை இட்டவர்களின் பெயர்களை இச்சாசனங்கள் குறிப்பிடுகின்றன என்பது அவற்றின் வாசகங்களினாலே தெளிவாகின்றது. இரவிகுல மாணிக்க ஈஸ்வரத்தை அமைத்தவர்களில் நாராயணன் வருதன் திருமால், அழகன் உத்தமராலையன், அழகன் வத்தமான், தனி அப்பன் ஆகிய ஐவரும் பிரதானமானவர்களாவர். அவர்களில் இருவர் வணிகர், அவ்விருவருள்ளும் அழகன் வத்தமான் என்பான் நானதேசி வணிகன். நாராயணன் சிற்றம்பலமுடையான் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாதல் கூடும். இரவிகுல மாணிக்க ஈஸ்வரமானது இராஜராஜனது காலத்திலே பதவியாவிலிருந்த நானாதேசி வணிகராலும் நிர்வாக அதிகாரிகளினாலும் அமைக்கப் பெற்றது என்பது அதன் அழிபாடுகளிற் காணப்படும் சாசனங்களினால் உணரப்படுகின்றது.
அவனுடைய காலத்தில் நிர்வாக அதிகாரிகளும், படையினரும், நானாதேசி வணிகரும் கோயிலுக்குப் பல நன்கொடைகளை வழங்கியிருந்தனர். தானங் கொடுத்தோருள் உடையான் என்னும் பதவிப் பெயரைக் கொண்ட பலரிருந்தனர். பாலைப்பாக்கமுடையான் பட்டமொன்றும் பொற்காசுங் கொடுத்தான். மருங்கூருடையான் கோயிலுக்குத் தானமாகப் பொன்கொடுத்தான். நானாதேசியான கொண்ணாவில் வெண்காடன் வெண்கல எறிமணி ஒன்றினையும் வெண்கல மணியொன்றினையும் தானம் பண்ணினான். சமகாலத் தென்னிந்தியச் சாசனங்களில் வழமையாக
10

வரும் நக்கன் தேவன், சாத்தன் என்னும் பெயர்கள் பதவியாவிலுள்ள இராஜராஜனின் 26ஆம் ஆண்டுச் சாசனத்தில் உள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
கந்தளாயிலுந் திருகோணமலையிலும், சமய நிறுவனங்களையும் கோயில்களையும் அமைப்பதிலும் பராமரிப்பதிலுஞ் சோழர் ஈடுபட்டிருந்தனர். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாசனங்கள் சில ந. தம்பிராசா, செ.குணசிங்கம் என்போராற் கண்டுப்பிடிக்கப் பெற்றன. அவற்றுள் இரண்டு சாசனங்கள் சோழ இலங்கேஸ்வரன் என்னும் அரசனின் காலத்தவை. பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலே சோழவம்சத்து இளவரசனொருவன் இலங்கையிலே அரசனாக முடிசூடியிருந்தான் என்பது அவற்றினால் அறியப்படுகின்றது. மானாங்கேணி, கந்தளாய் என்னும் ஊர்களிலுள்ள சாசனங்கள் சோழ இலங்கேஸ்வரனைக் கோ என்றும், உடையார் என்றும், சங்கவர்மன் என்றும் வர்ணிக்கின்றன. அத்துடன், அவனுடைய ஆட்சியாண்டுகளையும் அவை குறிப்பிடுகின்றன. எனவே அரசருக்குரிய விருதுகளையும் பட்டப்பெயர்களையுங் கொண்டிருந்த சோழ இலங்கேஸ்வரன், பாண்டி நாட்டிலிருந்த சோழ பாண்டியர்களைப் போல, ஈழநாட்டில் முதலாம் இராஜேந்திர சோழனின் காலத்திற் சோழச் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாகவிருந்து அதிகாரஞ் செலுத்தினான் என்பது தெளிவாகின்றது.
சோழ இலங்கேஸ்வரனின் ஆட்சியாண்டுகளில் எழுதப்பெற்ற சாசனங்கள் இரண்டும் சிதைவுற்ற நிலையிலுள்ளன. மானாங்கேணிக் கல்வெட்டின் ஒரு சிறிய பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. அத்துடன் சாசனம் பொறிக்கப்பட்ட தூணின் இரு ஓரங்களும் வெட்டப்பட்டுள்ளன. அதனால் ஒவ்வொருவரியிலுஞ் சராசரியாக 6 எழுத்துக்கள் மறைந்துவிட்டன. இச்சாசனத்தை வாசித்து வெளியிட்டவரான
செ. குணசிங்கம் அதன் வாசகத்தை மேல்வருமாறு எழுதியுள்ளார்.* :
ஆய்வரங்கு 2008

Page 21
1.ழரீ சோழ இல.
.தேவற்கு யாண்டெ.
.டி சோழ மண்ட. .ஐந்த்ர சோழ வள. .சோழ வளநா. .மலை பூரீ மச்சு. .மூலஸ்தானமு. .வர முடையார்.
2
. ள மண்டலத்தி. இச்சாசனம் தமிழுங் கிரந்தமுங் கலந்த எழுத்துக்களில் அமைந்துள்ளது. ஆறாவது வரியிலுள்ள கிரந்த எழுத்துக்களை மச்சு எனக் குணசிங்கம் கொண்டமை பொருத்தமானதாகத் தோன்றவில்லை. சமஸ்கிருத மொழியில் மச்சு என்ற சொல் பொருள் குறிப்பதாக அமையாது. கிரந்த எழுத்துகளிலுள்ள அச்சொல்லினை மத்ஸ்ய என்ற சமஸ்கிருதச் சொல்லாகக் கொள்வதே பொருத்தமானது. அச்சொல்லினைத் தொடர்ந்து ஏகாரத்தைக் குறிக்கின்றதான குறிகாணப்படுவதால் மத்ஸ்யகேஸ்வரம் என்ற கோயிலின் பெயரையே சாசனங் குறிப்பிடுகின்றது என்று கொள்ள வேண்டும். ம்த்ஸ்ய என்ற சொல்லுக்கு முன்பாக மலை என்னுஞ்சொல் காணப்படுகின்றமை இதனை உறுதி செய்கின்றது. மலை என்பதற்கு முன்பாக அமைந்திருந்து அழிந்து போன எழுத்தக்கள் திருகோண என்றிருத்தல் வேண்டும். ஆகவே மானாங்கேணிக் கல்வெட்டுத் திருகோணமலை மத்ஸ்யகேஸ்வரம் பற்றிக் குறிப்பிடுவதாய் அமைந்ததென்று கொள்வது சாலப் பொருந்தும். இத்தகைய விளக்கமானது நிலாவெளிக் கல்வெட்டில் வரும் “ழரீ கோணபர்வதம் திருக்கோணமலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹாதேவர்” என்னுந் தொடரினால் ஆதாரம் பெறுகின்றது. *
இச்சாசனத்தின் 5 ஆவது வரியில் வளநாடு ஒன்றின் பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. அதன் பெயரின் முதலாவது பகுதியில் இறுதியிலுள்ள டி என்பதைத் தவிர்ந்த எழுத்துக்கள் எல்லாம் அழிந்துவிட்டன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது டி என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டிருக்க
“சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கூடிய அடைமொழி யாது என்பதாகும். இதனைப் பற்றிச் சிந்திக்குமிடத்துக் கருத்திற் கொள்ள வேண்டியது பொதுவாக வளநாடுகள் எல்லாஞ் சோழப்பெருமன்னர் காலத்தில் அவர்களின் பட்டப் பெயர்களாலும் விருதுப் பெயர்களாலும் வழங்கி வந்தன என்பதாகும்.
இராஜராஜத் தென்னாடான பாண்டி நாட்டில் உத்தமசோழவளநாடு, முடிகொண்ட சோழவளநாடு, இராஜேந்திர சோழ வளநாடு என்னும் பிரிவுகள் இருந்தன. * இராஜராஜனின் காலத்தில் இராஜேந்திர சிங்க வளநாடு, கேரளந்தக வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு, நித்தவிநோத வளநாடு, இராஜாஸ்ரய வளநாடு, கூடித்திரிய சிகாமணி வளநாடு, இராஜராஜ வளநாடு, என்னும் ஒன்பது பிரிவுகளைக் கொண்டிருந்தது.* தமிழகத்திலுள்ள வளநாடுகள் மூன்றின் பெயர்கள் இலங்கையிலுள்ள வள நாடுகளுக்கும் உரியனவாய் இருந்தன. சோழரின் சாசன வழக்காறுகள் பற்றிய அனுபவத்தின் அடிப்படையில் டி என்ற எழுத்தில் முடிவதாக இச்சாசனத்தில் அமைந்திருக்கக் கூடிய சொல் மும்முடி என்பதாகும். எனவே இச்சாசனத்தின் 5 ஆவது வரியிற் குறிப்பிடப்படும் வளநாட்டின் பெயர் மும்முடிசோழ வளநாடு என்றிருத்தல் வேண்டும். அது இராஜேந்திர சோழ வளநாடு எனவும் இச்சாசனத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ மண்டலம் முதலாம்
சோழமண்டலத்து இராஜேந்திர சிங்க வளநாடு என்பதும் அதன் பிரிவுகளில் ஒன்றான நாடொன்றிலுள்ள ஒரூரைச் சேர்ந்த பிரதானி ஒருவனின் பெயரும் இச்சாசனத்தில் இடம் பெற்றுள்ளன. ஆயினும் கல்வெட்டின் இரு பக்கங்களின் ஓரங்கள் வெட்டப்பட்டுள்ளதாலும் உள்ள சாசனப்பகுதியில் எழுத்துகள் சிதைவுற்றுள்ளதாலும் பெயர்களை அனுமானித்தேனும் அறிந்து கொள்ள முடியவில்லை.
அதனைப் பற்றி இதுவரை கவனித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு மானாங்கேணிச்
11

Page 22
சாசனத்தின் முதற் பாகம் மேல்வருமாறு அமைந்திருந்ததென்று கொள்ளலாம்:
ரான உடையார் பூரீ சோழ இல(ங்கேஸ்) (வர)ேதவற்கு யாண்(ெடட்டாவது)" (மும்மு) டி சோழ மண்டலத்து) (இரா)ே ஜந்த்ர சோழ வளநாட்டு) (மும்மு)டி சோழ வளநாட்டு கோண) (மா)மலை பூரீமத்ஸ்ய(ேகஸ்வ) (ரமுடையார்) மூலஸ்தானமு(ம்.) ஸ்வரமுடையார் கே (ாயிலும்) (சே) ஈழ மண்டலத்து (இராஜே) (ந்த்ரசி)ங்க வளநாட்டு இன்னம்) (பர்) நாட்டு. 12. ()ேவளான் கணபதி.
சோழ இலங்கேஸ்வரனின் பத்தாவது ஆண்டுக்கு முற்பட்ட மூன்று ஆண்டுகளில் ஏதோவொன்றிலே, ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்து இராஜேந்திர சோழ வளநாட்டுத் திருகோணமலை மச்சகேஸ்வரத்து மூலஸ்தானமும், அதே வளநாட்டிலுள்ள வேறொரு சிவாலயமுந் தொடர்பாகச் சோழ மண்டலத்து இராஜேந்திரசிங்க வளநாட்டுப் பிரதானிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பதிவுசெய்வதாக மானாங்கேணிச் சாசனம் அமைந்ததென்பது தெளிவாயுள்ளது. மச்சகேஸ்வரத்தைப் பொருத்த வரையில் அதன் மூலஸ்தானத்தைப் புனர்நிர்மாணஞ் செய்தனர் என்று அனுமானித்துக் கொள்ளலாம். இச்சாசனம் கிடைக்கப் பெற்றதானத்திற் புராதனமான கட்டட அழிபாடுகள் காணப்படுவதால் அது குறிப்பிடும் இரண்டாவது சிவாலயம் அங்கு அமைந்திருந்தது என்றுங் கருதலாம்.
திருக்கோணேஸ்வரம் பற்றிய வரலாற்று மூலங்களில் நிலாவெளிக் கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அது பத்தாம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களிலும் தமிழும்
12

கிரந்தமுங் கலந்த எழுத்துகளிலும் அமைந்துள்ளது. அதன் முதற்பகுதி வெட்டப்பட்டு அழித்துவிட்டதால் அரசனின் பெயர் கிடைக்கவில்லை. இலங்கையிற் சோழராட்சி ஏற்பட்டதன் விளைவாகச் சாசன வழக்கில் இடம்பெற்ற வேலி என்னுஞ் சொல் அதிற் காணப்படுவதாலும், வரிவடிவ அமைப்பின் காரணத்தினாலும் நிலாவெளிக் கல்வெட்டு சோழராட்சிக் காலத்தின் முற்பகுதிக்குரியதென்று கருதலாம். திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரம் என்னுங் கோயிலுக்கு நாள் வழிபாட்டுத் தேவைக்கு நிவந்தமாக நிலங் கொடுக்கப்பட்டமை பற்றிய சாசனமாக அது அமைந்துள்ளது. அதன் வாசகம் மேல் வருமாறுள்ளது.
பூரீ கோணபர்வதம் திருக்கோணமலை மத்ஸ்ய கேஸ்வரமுடைய மஹாதேவர்க்கு நிச்சலழிவுக்கு நிவந்தமாக சந்திராதித்தவற் செய்த உராகிரிகாம, கிரிகண்ட கிரிகாமத்து) நீர்நிலமும் புன்செய்யும் . தேவாலயமும் மேனோக்கின் மரமும் கீழ்நோக்கின கிணறும் உட்பட இந்நிலத்துக்கெல்லை கிழக்குக் கழி எல்லை,தெற்கெல்லை கல்லுகுடக்கு எத்தகம்பே எல்லை. வடக்கெல்லை சூலக்கல்லாகும். இவ்விசைத்த பெருநான் கெல்லையில் அகப்பட்ட நிலம் இருநூற்று ஐம்பதிற்று வேலி. இது பன்மயேசுரரகூைடி. *
இச்சாசனத்திலே தலம் பற்றியும் , அங்கு நிகழ்ந்த நாள்வழிபாடு பற்றியும், கோயிலுக்கு வழங்கப்பெற்ற தேவதானம் பற்றியுஞ் சொல்லப்படுகின்றது. கோயிலின் பெயர் மச்சகேஸ்வரம் என்பதாகும். கோகர்ணத்துச் சிவாலயமான திருக்கோணேஸ்வரம்மச்சகேஸ்வரம் என்னும் பெயராலும் வழங்கியது என்று கைலாசபுராணம் முதலிய நூல்கள் கூறும். அது நாட்டார் வழக்கினாலும் உணரப்படுகின்றமை குறிப்பிடற்குரியது. மச்சகேஸ்வரமானது திருகோணமலையில் உள்ளதென்றுஞ் சாசனங் கூறுகின்றது. திருகோணமலையிலுள்ள பூரீ கோணபர்வதமென்று சமஸ்கிருத மொழிப்
ஆய்வரங்கு 2008

Page 23
பெயராலுஞ் சாசனத்தில் வர்ணித்துள்ளனர். திருக்கோணேஸ்வரத்து மகாதேவரைக் “கோணமாமலை அமர்ந்தாரே” என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் குறிப்பிடுகின்றார். எனவே தேவாரத் திருப்பதிகமும் நிலாவெளிக் கல்வெட்டும் ஒரே தலத்தினையே குறிப்பிடுகின்றன என்பது தெளிவாகின்றது. கோகர்ணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சைவத் திருத்தலங்கள் இருந்தமை பற்றி ஐதீகமோ, ஆதாரமோ இல்லை.
நிலாவெளிச் சாசனம் மச்சகேஸ்வரத்துக்கு வழங்கப்பெற்ற தேவதானம் பற்றியதாகும். அத்தேவதான நிலம் 250 வேலி அளவினைக் கொண்டது. ஒருவேலி நிலம் பெரும்பான்மையும் 2000 குழி எனக் கொள்ளப்படுவதால் இச்சாசனங் குறிப்பிடுந் தேவதானம் 1,700 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. உராகிரிகாம, கிரிகண்ட கிரிகாம என்னுமிடங்கள் அதில் அடங்கியிருந்தன. கிழக்கிற் கடலும் தெற்கில் கல்லும் மேற்கில் எத்தகம்பே என்னும் தானமும் வடக்கிற் சூலக்கல்லும் தேவதானத்தின் எல்லைகளாயிருந்தன. கிழக்கிற் கடல் எல்லை எனப்படுவதால் இந்நிலம் கடலோரமாய் இருந்தது என்பதை உணர முடிகின்றது. உராகிரிகாம, கிரிகண்ட கிரிகாம என்னும் இடப்பெயர்கள் வழக்கில் இல்லை. ஆயினும்
கிரிகண்ட என்பதனைப் பற்றிப் புராதன்மான பெளத்த நூல்களிலுந் திரியாய்க் கல்வெட்டிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. *
நிலாவெளிக் கல்வெட்டு சோழர் காலம்
சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 

ஆகியன பற்றி மகாவம்சம் குறிப்பிடுகின்றது. பாண்டுகாபயனின் மாமன்மாருள் ஒருவனாகிய கிரிகண்ட சிவ என்பவன் கிரிகண்ட என்னும் பகுதியை ஆட்சி புரிந்தான் என்று சொல்லப் படுகின்றது." கிரிகண்ட மகாவிகாரம் என்பதனைப் பற்றிப் புத்தகோஷர் எழுதிய விசுத்திமக்க என்னும் நூலிலும் சூளவம்சத்திலுஞ் கூறப்பட்டுள்ளது. " கிரிகண்ட என்னும் மலையிலுள்ள விகாரத்தைக் கிரிகண்ட மகாவிகாரம் என்றனர். சமஸ்கிருத மொழியிலும் கிரந்த வரிவடிவங்களிலும் எட்டாம் நூற்றாண்டளவிலே எழுதப்பெற்றதான திரியாய்க் கல்வெட்டு கிரிகண்டிக சைத்தியம் என்பதைப் புகழ்மொழிகளால் வர்ணிக்கின்றது.
திரியாய்க் கல்வெட்டு திரிபாய் என்னும் ஊரின் மேற்கிலே கந்தசாமி மலையிற் காணப்படுகின்றது. அதற்கு 200 அடி தூரத்திற் பெளத்தப் பெரும்பள்ளி ஒன்றின் அழிபாடுகள் உள்ளன. கிரிகண்ட பர்வதம் என்னுந் தானமே கந்தசாமி மலை என வழங்குகின்றது. எனவே கிரிகண்ட கிரிகாம என்பது திரியாயிலுள்ள கந்தசாமி மலையினை உள்ளடக்கியிருந்த ஒரு நிலப்பிரிவு என்று கொள்ள முடிகின்றது.
நிலாவெளிக் கல்வெட்டுப் பதிவுசெய்துள்ளதும் மச்சகேஸ்வரத்திற்கு வழங்கப்பெற்றதுமான தேவதானம் மாதோட்டமான இராஜராஜபுரத்தில் அமைக்க பெற்ற இராஜராஜ-ஈஸ்வரத்திற்குத் தாழிகுமரனாற் கொடுக்கபெற்ற தானங்களை ஒத்திருக்கின்றது. இராஜராஜ-ஈஸ்வரத்தில் நெய்வேத்தியம் செய்வதற்கும், ஆராதனை பண்ணும் பிராமணருக்கு வேதனங் கொடுப்பதற்கும், வருடந்தோறும் வைகாசி மாதத்தில் விழா எடுப்பதற்கும், மாதோட்டத்திலிருந்தும் அரசாங் கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானங்களை தாழிகுமரன் கோயிலுக்கு நிவந்தமாக விட்டான். மச்சகேஸ்வரத்துத் திருநீலகண்ட மகாதேவர் சந்நிதியில் நித்திய நிவேதனுக்கு உராகிரிகாம,
13

Page 24
கிரிகண்ட கிரிகாம என்னும் இடங்களிலுள்ள 250 வேலி நிலம் வழங்ப்பட்டது. அத்தேவதானத்தை வழங்கியோரின் பெயரினைக் குறிப்பிடும் சாசனப்பகுதி அழிந்துவிட்டது. ஆயினும் நிலம் அளவில் மிகப்பெரிது என்பதால் அது குடியானவர்களினால் அன்றித் தாழிகுமரனைப் போன்ற அரசாங்க அதிகாரி ஒருவனால் அல்லது இராசப்பிரதிநிதி ஒருவனால் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும்.
நிலாவெளிக் கல்வெட்டிலுள்ள வேறொரு பிரதான அம்சம்மச்சகேஸ்வரத்துப் பன்மாகேஸ்வரர் பற்றிய குறிப்பாகும். சாசனத்தின் வாசகம் பன்மாகேஸ்வரர் ரகூைடி' என்ற தொடருடன் முடிகின்றது. பொதுவாகத் தமிழ்ச் சாசன வழக்கிற் சிவாலயங்களுக்கு வழங்கப்பெற்ற தானங்கள் தொடர்பாக இம்மொழித் தொடர் பயன்படுத்தப்படுகின்றது. பன்மாகேஸ்வரர் என்பது பொதுவாக மகேஸ்வரனான சிவபெருமானின் அடியார்களைக் குறிக்கும். ஆலயங்களுக்கு வழங்கப்பெற்ற நிவந்தங்களின் அறங்காவலராக அவர்கள் விளங்கினர். பன்மாகேஸ்வரர் என்னுஞ் சொல்வழக்கு இலங்கையிற் சோழராட்சிக் காலம் முதலாகவே ஆவணங்களில் இடம்பெற்றது. அக்காலத்திலே பொலநறுவையிலுள்ள வானவன் மாதேவீஸ் வரத்திலும் கோகர்ணத்து மச்சகேஸ் வரத்திலும் ஆலய விவகாரங்களைக் கவனிக்கும் பன்மாகேஸ்வரர் இருந்தமை குறிப்பிடற்குரியது.
திருகோணேஸ்வரத்தின் இடிபாடுகளிடையே காணப்பெற்ற சோழ மன்னர் காலத்துச் சாசனப் பகுதிகளிற் சில சோழர் அக்கோயிலுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. முதலாம் இராஜராஜனின் மெய்கீர்த்தி அடங்கிய சிலாசாசனத்தின் பகுதியொன்று திருகோணமலையிற் கடலடியிலிருந்து மீட்கப்பெற்றது.
14

இப்போது அது திருக்கோணேஸ்வரத்து மண்டபத்தில் உள்ளது.* இச்சிலாசாசனத்தின் முதற் பகுதியும் இறுதிப் பகுதியும் உடைந்து அழிந்துவிட்டன. இராஜராஜனது மெய்கீர்த்தியில் வழமையாக வரும் "இரட்டபாடியேழரையிலக்கமும் முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும்” என்ற தொடர்கள் இச்சிலாசாசனத்து மெய்கீர்த்திப் பகுதியிற் காணப்படவில்லை. எனவே, செ. குணசிங்கம் வற்புறுத்திக் கூறியவாறு இக்கல்வெட்டு இராஜராஜ சோழனது ஆட்சியின் ஆரம்ப காலத்திற்குரியது என்று கொள்வது பொருத்தமானதாகும். அரசனின் ஆண்டுகள் மிகுந்து செல்லச் செல்ல அவ்வாண்டுகளில் நிகழுஞ் சாதனைகள் பற்றிய விவரங்கள் மெய்க்கீர்த்தியிற் சேர்த்துக் கொள்ளப்படுவதால் அது நாளடைவில் வடிவத்தில் விருத்திபெற்றது. இளவரசனாகிய மதுராந்தகன் இரட்டபாடி மீது படையெடுத்துச் செல்வதற்கும், பழந்தீவு முதலான மேற்கிலுள்ள தீவுகளைச் சோழர் கைப்பற்றுவதற்கும் முற்பட்ட காலத்து மெய்க் கீர்த்தியின் வடிவமே இராஜராஜனது கோணேஸ்வரம் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. திருகோணேஸ்வரத் திருப்பணிகளையோ அக் கோயிலுக்கு வழங்கியதானங்களையோ அச்சாசனம் பதிவு செய்திருந்தது என்று அனுமானித்துக் கொள்ளலாம்.
திருகோணமலை நகரப்பகுதியிலுள்ள சமய நிலையங்களோடு சோழர் கொண்டிருந்த
தொடர்ப்புகளுக்கு, அங்கு காணப்படும் இராஜேந்தர சோழனது காலத்துச் சாசனங்களுஞ் சான்றுகளாய் உள்ளன. அவனுடைய
மெய்க்கீர்த்தியின் வாசகம் அடங்கிய சாசனங்கள் ஒஸ்ற்றென்பேர்க் கோட்டையிலும் பத்திர காளியம்மன் கோயிலிலுங் காணப்படுகின்றன. இவற்றுட் கோட்டையில் உள்ள கல்வெட்டுக் காலத்தால் முற்பட்டதாகும். அது துண்டமாயுள்ளது. அதன் முதற் பகுதியும் கடைசிப்பகுதியும் உடைந்து விட்டன. எஞ்சியுள்ள பகுதியில் அவனுடைய
ஆய்வரங்கு 2008

Page 25
மெய்க்கீர்த்தியின் மேல்வரும் பகுதி காணப் படுகின்றது.(கொள்ளிப்) பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகடல் ஈழத்தரைசர் தம்முடியும் ஆங்கவர் தேவியர் ஒங்கெழின் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரனாரமும் தெண்டிரையீழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும் குலதனமாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பலபழந்தீவும் மாப்பொருதண்டாற் கொண்ட கோப்பரகேகரிவன்மரான உடையார் பூணூரீ இராஜேந்திர சோழ தேவர்க்குயாண்டு.
இம் மெய்க்கீர்த்திப் பகுதியிற் கங்கைப் படையெடுப்பு, கடாரப்படையெடுப்பு ஆகியன பற்றிய குறிப்புகள் இல்லை. எனவே அப்படையெடுப்புகள் நடைபெறுவதற்கு முன் , இராஜேந்திரனுடைய ஆட்சியின் 7 ஆவது ஆண்டளவில் இச்சாசனம் திருகோணமலை நகரப்பகுதியிலுள்ள கோயிலொன்றிலே அமைக்கப்பெற்றதென்று கருதலாம். திருகோணேஸ்வரம் கோயிலை இடித்த பின்பு அக்கோயிலின் அழிபாடுகளைக் கொண்டு போர்த்துக்கேயர் கோட்டையைக் கட்டினார்கள் என்று ஐரோப்பியரின் நூல்களிற் கூறப்படுவதால் இச்சாசனமானது கோணேஸ்வரத்தில் இருந்ததென்று கருதலாம்.
இராஜேந்திர சோழனின் காலத்துச் சாசனமொன்று திருகோணமலைப் பத்திரகாளி அம்மன் கோயிலிற் காணப்படும் தூணொன்றில் எழுதப்பட்டுள்ளது. அத்துTணின் பக்கங்களுள் ஒன்று கட்டிடத்தோடு சேர்த்து வைக்கப்பட்டுச் சாந்தினாற் பூசப்பட்டுள்ளது. ஏனைய மூன்று பக்கங்களிலும் அரசனின் மெய்க்கீர்த்தியின் வாசகம் எழுதப்பட்டுள்ளது.* தூணைக் கட்டிடத்திலிருந்து
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

பிரித்துப் பூச்சுகளை நீக்கிச் சாசனத்தைப் படிவமெடுத்து ஆராயின் சில முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் கிடைக்கக்கூடும். திருகோணமலையிற் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட கோயிலொன்றின் மண்டபமொன்றிலே இச்சிலாசாசனம் ஒரு காலத்திலே அமைக்கப் பட்டிருந்ததென்று கொள்வது பொருத்தமானதாகும்.
4. இராஜராஜ சதுர்வேதிமங்கலம் கந்தளாயிற் காணப்படும் சோழ இலங்கேஸ்வரன் காலத்துச் சாசனம் அங்கு பதினோராம் நூற்றாண்டில் அமைந்திருத்த சில சமய- சமூக நிறுவனங்களைப் பற்றிய அரிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது. அதன் முதற்பகுதி வாசித்தறியக் கூடிய அளவிலே தெளிவாயுள்ளது. இரண்டாம் பகுதியிற் பல எழுத்துகளுஞ் சொற்றொடர்களுஞ் சிதைந்துவிட்டன. அதன் முதற் பகுதியின் வாசகம் மேல்வருமாறு அமைந்துள்ளது:
ஸ்வஸ்தி பூg. கோ பூg சங்கவர்மாரான உடையார் பூரீ சோழ இலங்கேஸ்வர தேவற்கு யாண்டு பத்தாவது ராஜேந்திர சோழ வளநாட்டு ராஜவிச்சாதிர வளநாட்டு பிரஹ்மதேசம் பூரீ ராஜராஜச் சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி பெருமக்களோம் இய்யாட்டைக் கும்மநாயற்று பூர்வபக்ஷத்து த்வாதஸியும் செய்வாய்க்கிழமையும் பெற்ற ஆயிலியத்து நாளன்றிரவு நம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில் மானி.*
சாசனத்தின் சிதைவடைந்த பிற்பகுதியில் நீர் நிலம், வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால் இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரம், மா, மூன்றாங் கண்ணாறு என்னும் மொழிகள் உள்ளன. குளத்திலிருந்து நீர் பாயும் விக்கிரம சோழ வாய்க்காலின் இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ்சதுரத்திலுள்ள விளைநிலம்
15

Page 26
3 மா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை பற்றிச் சாசனம் வர்ணிக்கின்றது.
அதனை இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி பெருமக்கள் மேற்கொண்டனர். பிரமதேயங்களிலுள்ள சபையாரைப் பெருங்குறி மகாசபை என்றும் பெருங்குறி பெருமக்கள் என்றும் வர்ணிப்பது வழக்கம்* அத்தகைய மகாசபையின் நடவடிக்கையினை இச்சாசனம் பதிவுசெய்கின்றது. பிரமதேயமானது இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரைப் பெற்றிருந்தமையுங் குறிப்பிடற்குரியது. அது இராஜேந்திர சோழ வளநாட்டின் பிரிவாய் அமைந்திருந்தது. கந்தளாய் சாசனம் கோயில்லொன்றின் அழிபாடுகளிடையிற் காணப்படுவதாற் கந்தளாய்ச் சோழர் காலத்தில் அமைக்கபெற்ற ஆலயமொன்றிலே அது நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.
கந்தளாயிலுள்ள சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி பெருமக்கள் சோழ இலங்கேஸ்வர தேவனின் 10 ஆவது ஆண்டிலே, மாசி மாதத்துப் பூர்வபக்ஷத்துத் துவாதசியான செவ்வாய்க்கிழமையும் ஆயிலிய நகூடித்திரமுங் கூடிய தினத்து இரவிலே கூடியிருந்தது ஊர்த் தண்டுவானாகிய மானி தொடர்பாகவும், விக்கிரமசோழ வாய்க்காலின் இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்திலுள்ள நீர்நிலம் 3 மா குறித்தும் ஏதோ முடிபுகளை மேற்கொண்டனர். கந்தளாயிலிருந்த சிவன் கோயில் மண்டபத்திலே அவர்கள் கூட்டமாகக் கூடினார்கள் என்றும் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்தைக் கோயிலிலிருந்த மண்டபமொன்றின் தூணிலே சிலாசாசனஞ் செய்தனரென்றும் அனுமானித்துக் கொள்ளலாம்.
இச்சாசனத்தில் வரும் நம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில் மானி என்னுந் தொடரானது, குறிக்கப்பெற்ற சதுர்வேதி மங்கலத்திலே அம்மன் கோயிலொன்று இருந்தமையினை உணர்த்து
16

கின்றது. துர்க்கையாரை முத்தங்கை என்று குறிப்பிடுவது சாசன வழக்கமாகும். பிரம்மச் சாரிகளான இளம் பிராமணரை மானி என்பர். முத்தங்கை கோயிலைச் சேர்ந்த மானி ஒருவன் ஊர்த் தண்டுவானாக இருந்தமை கவனத்தற்குரியது. ஊர்ச் சபையாருக்குச் செலுத்த வேண்டிய இறைக் கடமைளையும் பிறவற்றையுஞ் சேகரிப்பவனைத் தண்டுவான் என்று குறிப்பிடுவது வழக்கம்” எனவே ஊரிலுள்ள குடியார்களிடமிருந்து இறை கடமைகளைச் சேகரிப்பதற்கென இராஜராஜ சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தம்மூரிலுள்ள அம்மன் கோயிலைச் சேர்ந்த அந்தணனொருவனை நியமித்தனர் என்பது தெளிவாகின்றது. அதன் எல்லைகளுக்குள் இராஜராஜ சதுர்வேதி மங்கலத்துச் சபையார் நிர்வாக ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்பதும் இதனால் உணரப்படும். இப்பிரமதேயம் 13ம் நூற்றாண்டுவரை நிலைப்பெற்றது.
கந்தளாய்ச் சாசனத்தின் சிதைவுற்றுள்ள பகுதியிற் காணப்படும் வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால், இரண்டாங் கண்ணாறு, நீர்நிலம் முதலிய சொற்களை விளக்குவதற்குத் தமிழகத்துப் பிரமதேயம் ஒன்றினை பற்றிய சாசனப்பகுதி ஒன்றினை இங்கு ஆதாரமாகக் கொள்வது மிகப் பொருத்தமானதாகும். மணிமங்கலத்திலுள்ள முதலாம் இராஜராஜனது காலத்துச் சாசனமொன்றின் பகுதி மேல்வரு மாறுள்ளது:
யாண்டு 15 ஆவது ரிஷப நாயற்று பூர்வபக்ஷத்து தசமியும் வியாழக்கிழமையும் பெற்ற அத்தத்தின்நாள் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு பிரமதேயம் பணிமங்கலமாகிய உலோகமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து மகாசபைப் பெருமக்களோம் இற்றை நாளால் பகல் எம்மூர். தண்ணிர் பந்தலிலே தர்மம் செய்து கூட்டம் குறைவறக் கூடியிருந்து எம்மூர் திருவாய்ப்பாடி பூரீ கிருஷ்ண பெருமானுக்கு நிசதம்படி நாட்
ஆய்வரங்கு 2008

Page 27
பெருவமுதும் ஒரு நந்தா விளக்கும் முட்டாமை இத்தேவர்க்கு பூரீ கார்யம் கடைக்காணக் கடவ கரணப் பெரு மக்களே முட்டாமைக் கடைக் கொண்டு குடுப் பார்களாகப் பணிப்பணியாய்ப் பணித்து. இத்தேவருடைய பூமி இவ்வூர் பாதிரிக்கழனி மேலைக்காலின் கீழ் சிறகு.பெருமான் பக்கல் இத்தேவர் விலை கொண்டுடைய இறைநிலம் நூறு குழியும் பனங்காட்டேரிவதியின் மேல் சிறகு சானூர மத்தெருமான் சோமயாஜியார் பக்கல் இத்தேவர் பெற்றுடைய இறைநிலம் நூறு குழியும் இவ்வூர் தென்பிடாகை ஆத்தனஞ்சேரி கருணாகர வாய்க்கால் . கண்ணாற்று கன்னரவதிக்குக் கிழக்கு மூன்றாஞ் சதிரத்து ஸாஹணை ஆதிச்சகுமார கிரமவித்தன் பக்கல் இத்தேவர் விலை கொண்டுடைய நிலம் நானூறு குழியுமாக இவ்வெண்ணுாறு குழியாலும் வந்த இறை திரவ்யம்.*
மணிமங்கலத்துச் சபையார் முதலாம் இராஜராஜனின் 15 ஆவது ஆண்டில் ஒரு நாட் பகலிலே தண்ணிர் பந்தலிற் கூடிக் கோயிற் காரியங்களை ஆராய்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொற்கொண்டனர் என்பது இச்சாசனப் பகுதியால் உணரப்படுகின்றது. அறக்கட்டளை ஒன்றின் தொடர்பாகத் திருவாய்பாடி கிருஷ்ணப் பெருமான் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த விளைநிலங்கள் சிலவற்றின் வருமானங் கொண்டு நாட்பெருவமுதும் நந்தா விளக்கொன்றும் இடுவிக்கப்படும் பணியைக் கரணப்பெருமாக்களே கண்காணிக்க வேண்டும் என்று சபையார் பணித்தனர். கரணப்பெருமக்கள் என்பது சபையாரால் அமைக்கப்படும் நிறைவேற்றுக் குழுவினரைக் குறிப்பதாகும். இத்தர்மம் தொடர்பான நிலங்களைப் பற்றிய விவரங்களிலே பாதிரிக்கழனி, கருணாகர வாய்க்கால், கண்ணாறு, கன்னரவதி, மூன்றாஞ் சதிரம் என்னுஞ் சொற்கள் காணப்படுகின்றன.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

குளத்தூம்பினின்றும் நீர் பாயும் வழிகளை வாய்க்காலென்றும், அவற்றின் கிளைகளைக் கண்ணாறு என்றும், கண்ணாறுகளின் அணைக்கட்டுகளை வதி என்றுங் குறிப்பிடுவது புராதன காலத்து வழமையாகும். நீர்நிலப் பகுதிகள் தொடர்பாகவே சதிரம் என்னுஞ் சொல் சாசனங்களில் வருகின்றது. இக்காலத்திற் போலவே வயல்நிலங்கள் சதுர வடிவிலும் நீள்சதுர வடிவிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதனாற் போலும் அவற்றைச் சதிரம் என்றனர். அவற்றை அடையாளங்காண்பதற்கும், இறைகடமைகளைக் காணியாளரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், அந்நிலங்களைப் பற்றிய விவரங்களைப் புரவு, வரிப்பொத்தகம் என்பன போன்ற ஆவணத் தொகுதிகளிற் பதிவுசெய்து வைத்திருப்பது வழமை. மணிமங்கலத்துச் சாசனத்தில், “இவ்வூர் தென்பிடாகை ஆத்தனஞ்சேரி கருணாகர வாய்க்கால் .கண்ணாற்றுக் கன்னரவதிக்குக் கிழக்கு மூன்றாஞ் சதிரத்து ஸாஹணை ஆதிச்சகுமார கிரமவித்தர் பக்கல் இத்தேவர் விலைக்கொண்டுடைய பூமியில் நூறு குழியும் .” என வரும் தொடர் இவ்வழமைக்கோர் உதாரணமாகும்.
சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கந்தளாய்க் கல்வெட்டில் வரும் வாய்க்கால், கண்ணாறு, சதிரம் என்னுஞ் சொற்களின் உபயோகத்தை மணிமங்கலச் சாசனத் தொடர்களின் மூலமாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் நீர்ப்பாசன வசதியுள்ள வயல்நிலங்கள் இருந்தன. குளத்திலிருந்து நீர் பாயும் இரு வாய்க்கால்கள் இருந்தன. அவை விக்கிரமசோழ வாய்க்கால், வாசுதேவ வாய்க்கால் என்பனவாகும். கந்தளாயிலிருந்த குளவாய்க் கால்களிற் கண்ணாறு என்னும் கிளை வாய்க்கால்கள் அமைந்திருந்தன. பிரமதேயம் கந்தளாய் பிரமதேயம் என்பதால் அதிலிருந்த வாய்க்கால்கள் இரண்டும் கந்தளாய்க் குளத்து
17

Page 28
வாய்க்கால்களாதல் வேண்டும். எனவே, பதினோராம் நூற்றாண்டிலே சோழ இலங்கேஸ்வரன் இலங்கையில் அரசனாக விளங்கிய காலத்திற் கந்தளாய்க் குளமும் அதனை ஆதாரமாகக் கொண்ட நீர்ப்பாசன முறையும் சீரான நிலையில் இருந்தன என்பதற்குக் கந்தளாய்க் கல்வெட்டு சான்றியுள்ளது. குளவாய்க்கால்கள் வாசுதேவ வாய்க்கால் என்றும் விக்கிரமசோழ வாய்க்கால் என்றும் பெயரிடப்பட்டுள்ளமையுங் குறிப்பிடத் தகுந்தது. சோழ இலங்கேஸ்வரன் காலத்திலே குளமும் அதன் வாய்க்கால்களுந் திருத்தி அமைக்கப்பட்டிருத்தலுங் கூடும்.
இங்கே இதுவரை ஆராய்ந்த விடயங்கள் பற்றிய முடிபுகளை மேல்வருமாறு சுருக்கமாகத் தொகுத்துக் கூறலாம்.
சோழப் பெருமன்னர் காலத்திலே தென்னிந்தியாவில் ஏற்பட்ட சமய-கலாசார அபிவிருத்திகளின் செல்வாக்கு ஈழமான மும்முடிச்சோழ மண்டலத்திற் குறிப்பிடத்தக்க அளவிலே காணப்பட்டது. தமிழகத்திற்போல இலங்கையிலும் பல புதிய ஆலயங்கள் சோழப் பிரதானிகளாலும் வணிக கணத்தவராலும் பிறராலும் உருவாக்கப்பட்டன. பொலநறுவை, பதவியா, கந்தளாய் போன்ற கேந்திர நிலையங்களில் அவை அமைக்கப்பட்டன. தமிழகத்திற் போல இலங்கையிலும் பாடல்பெற்ற தலங்களைப் புனர் நிர்மாணஞ் செய்வதிற் கவனஞ் செலுத்தப்பட்டது. திருக்கேதீஸ்வரத்திலே தாழி குமரன் என்னும் அதிகாரியினாற் புதிய கோயில் அமைக்கப்பெற்றது. அக்கோயிலின் தேவைகளுக்கென மாதோட்டமான இராஜராஜ புரத்தில் நிலமும் அரசாங்கத்துக்குரிய வருமானங்களும் மானியமாக அவனால் வழங்கப்பெற்றன. இத்தகைய நடவடிக்கைகளைச் சோழப் பிரதானிகள் திருக்கோணேஸ்வரத்திலும் மேற்கொண்டனர் என்று கருத முடிகின்றது.
18

கோகர்ணத்துச் சிவாலயமானது 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டுகளில் மச்சகேஸ்வரம் என்னும் பெயரால் வழங்கியது என்பது சாசனத் தொடர்களினால் உணரப்படுகின்றது.* அங்குள்ள மூலஸ்தானம் தொடர்பான திருப்பணிகளைச் சோழப்பிரதானிகள் சிலர் செய்தனர் என்பதைச் சோழ இலங்கேஸ்வரனின் காலத்து மானாங்கேணிச் சாசனம் உணர்த்துகின்றது. அக்கோயிலுக்குப் பெருமளவிலான நிலங்கள் தேவதானமாக விடப்பட்டமைக்கு நிலாவெளிச் சாசனம் சான்றாக அமைக்கின்றது. வானவன் மாதேவி-ஈஸ்வரத்திற் போல அங்கும் பன்மாகேசுரர் அறக்கட்டளைகளை மேற்பார்வை செய்வதற்குப் பொறுப்பேற்றிருந்தனர். சோழ மன்னர் மூவரின் காலத்துக் கல்வெட்டுகள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளன. முதலாம் இராஜராஜனதும் காலத்துச் சாசனங்கள் திருக்கோணேஸ்வரத்தில் இருந்தன என்று கொள்வதற்கான காரணங்கள் உள்ளமையுங் கவனித்திற்குரியது.
* ኃ; ՝ ? விஜயாகு? ஆட்சிக்காலக் கல்வெட்டு - கந்தளாய்
12ம் நூற்றாண்டுக் கல்வெட்டு
85f556m muiu
ஆய்வரங்கு 2008

Page 29
சோழராட்சியில் இலங்கையிலுள்ள கோயில்களிற் கிரமமாக ஆராதனைகளும் உற்சவங்களும் நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தென்னிந்தியக் கோயில்களில் உள்ளதைப் போன்ற ஆலய நிர்வாக முறையும் வழிபாட்டு முறைகளும் கோயில்களில் ஏற்படுத்தப்பட்டன. ஆலய சேவைகள் புரிவதற்கென்று அந்தணர், கம்மாளர் வாத்தியக்காரர் போன்றோரைக் கோயில் வளாகத்திற்கு அண்மையிலுள்ள இடங்களிற் குடியிருத்தினார்கள். கந்தளாய் பிரமதேயம் போன்ற புதிய அக்கிரகாரங்கள் சில அமைக்கப் பெற்றன.
இராஜேந்திர சோழனின் மகனாகிய சோழ இலங்கேஸ்வரன் இலங்கையிற் சில காலமிருந்து ஆட்சிபுரிந்தான். இதுவரை கிடைத்துள்ள அவனது காலத்துச் சாசனங்கள் இரண்டும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊர்களிலிருந்து கிடைத்துள்ளன. அவனுடைய காலத்திற் கந்தளாய்க் குளத்திலிருந்து வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்கு நீர்ப்பாசனஞ் செய்தனர். கந்தளாய்ப் பிரமதேயத்தின் எல்லைகளுக்குள் ஈஸ்வரம் ஒன்றும் அம்மன் கோயிலொன்றும் அமைந்திருந்தன என்றும் கொள்ள முடிகின்றது.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 

அடிக்குறிப்புகளும் விளக்கவுரைகளும்
1.
தி. வை. சதாசிவபண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு,அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,1974, ப.121 மேலது, ப. 108 K. A. Nilakanta Sastri, The Colas, University of Madras,
Second Edition, 1955, pp. 168, 225. மேலது, ப. 465;பிற்காலச் சோழர் வரலாறு, ப. 472. GLDougl, L. 166, K. A. Nilakanta Sastri, the Colas, pp.
1967.
அருண்மொழித்தேவ வளநாடு, நிகரிலிச்சோழவளநாடு, விக்கிரமசோழ வளநாடு. இராஜராஜ வளநாடு, இராஜவித்தியாதர வளநாடான இராஜேந்திர சோழ வளநாடு, அபயாஸ்ரய வளநாடான இராஜேந்திர சிங்க வளநாடு ஆகியன மும்முடிச் சோழ மண்டலயத்தின் பிரிவுகள் என்று சாசனங்கள் கூறும். முதலாம் இராஜராஜனின் சகோதரியான குந்தவை இராஜராஜபுரத்திலே சிவாலயம், விண்ணகரம்,ஜினாலயம் ஆகிய மூன்றினையும் அமைத்து அவற்றுக்கு நிவந்தங்களைக் கொடுத்தாள். மன்னார் கோயிலில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியில் அமைக்கப்பெற்ற விண்ணகரம் இராஜேந்திர சோழ விண்ணகரம் என்னும் பெயரால் விளங்கியது. பிற்காலச் சோழர் வரலாறு. ப. 157;The Colaspp. 203,
643. பல்லவர் காலத்தின் பிற்பகுதியிற்கோயில்களிலே தேவாரப் பதிகங்களை ஒதும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. விஜயநந்தி விக்கிரமவர்மன் காலத்திலே திருவல்லத்தில் ஒதுவார்கள் தேவாரப் பதிகங்களை ஒதினார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்து லால்குடி, ஆத்தூர் ஆகியவற்றிலுள்ள சிவாலயங்களில், முதலாம் பராந்தக சோழனது ஆட்சியில், நாள்தோறும் ஆராதனை வேளைகளிற் பிராமணர் திருப்பதிகங்களைப்படித்தனர்.
ஆலயங்களில் வாத்தியங்கள் சகிதமாகத் தேவாராப் பதிகங்களைப் படிப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைகளைப்பற்றிச் சோழநாட்டிலும் தொண்டை நாட்டிலுமுள்ள பல சாசனங்கள் கூறுகின்றன. இராஜேந்திரன் காலத்திலே தேவாரநாயம் பற்றிக் காணப்படும் சாசனக் குறிப்பானது தேவாரப்பதிகங்களை ஆலயங்களில் ஒதுவாரின் பணிகளைக் கவனிப்பதற்கென அரசாங்க நிறுவனமொன்று அமைந்திருந்தமையினை உணர்த்துகின்றது.
19

Page 30
10.
வைணவக் கோயில்களில் ஆழ்வார்கள் பாடியருளிய திருப்பதிகங்களை ஒதும் வழக்கமும் ஏககாலத்தில் ஏற்பட்டதென்று கருதலாம். உட்கலிலுள்ள முதலாம் இராஜராஜனது காலத்துக்கல்வெட்பொன்றுதிருவாய்மொழி தேவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. முதலாம் இராஜேந்திரனின் காலத்தில் உத்தரமேரூரிலே திருப்பதியம் ஒதும் பூரீ வைஷ்ணவர்களுக்குக் கோயிலில் நெய்வேத்தியமாக வைத்த திருவமிர்து பகிர்ந்து கொடுக்கப்பட்டமைபற்றியசாசனக்குறிப்புஉள்ளது. அங்கே நாள்தோறும் திருவாய்மொழி ஒதும் மூவருக்கு நிலம் வழங்கப்பட்டது.
திருவரங்கத்திலே திருப்பள்ளியெழுச்சிக் காலத்திலே திருவாய் மொழி ஒதுவதற்கு முதலாங் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் (1085) அறக்கட்டளை ஏற்பட்டிருந்தது. திருவரங்கத்திலே திருவிழாக் காலத்தில் மூன்றிரவுகளிற் குலேசேகராழ்வாரின் தேட்டருந்திறல் எனத் தொடங்குத் திருப்பதிகம் படிக்கப்பெற்றது என்பதனை 1088 ஆம் ஆண்டுக்குரிய சாசனமொன்று குறிப்பிடுகின்றது.
திருக்கோயிலூரில் ஐப்பசி, வைகாசி ஆகிய மாதங்களில் நடைபெறும். திருவிழாக்களிலே திருவாய் மொழி படிப்பதற்கு அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டமையினை இரண்டாம் இராஜாதிராஜனின் எட்டாவது (1171) ஆண்டுக்குரிய கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. காஞ்சிபுரத்து விண்ணகரமொன்றிலே
ஒதுவார் ஐம்பதின்மர் திருமொழிபாடினார்களென்று கி.பி.
1242 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற ஆவணமொன்றிற் கூறப்பட்டுள்ளது. திருக்கோயிலூரிள்ள விண்ணகரமொன்றிலே திருநெடுந் தாண்டகத்தை ஒதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. The Colas, Vol. 11, pt. I, University of Madras, 1037, pp. 479-480. South Indian Inscriptions, Vol III: No: 92 : vol: IV: No: 14 11; A.Velupillai, Ceylon Tamil Inscriptions, Pt I Peradeniya, 1970 ; Ceylon Tamil Inscriptions, Pt II Peradeniya, 1971;Epigraphia Tamilica Ed. K. Indrapala, Pt I, Jaffna Archaeological Society, 1971; S. Gunasingam, "Two Inscriptions of Cola Ilankesvara Deva'; Tricomalee Inscriptions Series -No 1 Peradeniya, 1974.
இராஜேந்திர சோழனின் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்துச்சென்று அங்குள்ள அரசனைக் கைப்பற்றிக்
20

16
17.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
கொண்டு போன சோழ சேனாதிபதியின் பெயர் ஊர்காவற்றுறையிலுள்ள ஹம்மென்ஹில் கோட்டையிற் காணப்படும் உடைந்த சாசனப் பகுதியால் மட்டுமே அறியப்படுகின்றமை குறிப்பிடற்குரியது. மாதோட்டத்தில் நிறுவப்பெற்றிருந்த அந்நச்சாசனத்தைப் பறங்கியர் பின்பு ஊர்காவற்றுறைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். Epigraphia Tamilca, Pt. South Indian Inscriptions (SII), Vol. IV, No. 141 1. SII Vol. IV, No 14148. இவற்றைக் குறிப்பிடுஞ்சாசனத்தின் வாசகம் மேல்வருமாறு உள்ளது. .பூரீயாண்டு 28 ஆவது உத்தம சோழ ஈஸ்வரமுடைய மாதேவர்க்குகல்லையில் தெலியல் பெற்றில் நிலம் மூவேலியும் நொந்தா விளக்கு 1க்கு பசு20 உம் இவை நிவந்தஞ் செய்வித்தேன் அரங்கன் இராமேசனேன். சந்திவிளக்குக்குத்) தெங்கு 50, SIVol IV, 1411. UNESCO -Sri Lanka Project of the Culural Triangle, Alahana Pirivena, polonnaruwa, Third Archaeological Excavation Report, 1982; ed., p.L.Prema tilleke, P.128 Epigraphia Tamilica, Pt. I, P27 SHI, Vol. IV: 1388- 392
The Colas, PP. 18-8
SII, Vol. IV: 1388.
Archaeological Survey of Ceylon Annual Report (ASCAR), 1981, p. 12;ASCAR 1906, p.27
ASCAR.
SI. Vol. III: NO 92.
CTI, Pt, Ipp. 16-19.
CTI, Pt, II, pp. 23-24. S. Gunasingam, “Two Inscriptions of Cola Ilankesvara Deva” Trincomalee Inscriptions Series No. 1 Peradeniya, 1974, PP. 3-6.
S.Gunasingam, "A Tamil Slab Inscription at Nilaveli", The Sri Lanka Journal of the Humanities, Vol. I, No. 1, pp. 60-71.
SII, Vol, XIV, Nos. தி. வை. சதாசிவ பண்டராத்தார். பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974, ப. 473-4.
ஆண்டினைக் குறிக்கும் எழுத்துகள் அழிந்துவிட்டன. யாண்டெ (யாண்டு+எ(ஏ)) என்ற அக்ஷரங்கள் காணப்படுவதால் இச்சாசனம் சோழ இலங்கேஸ்வரனின்
ஆய்வரங்கு 2008

Page 31
29
30.
3.
32.
33.
34.
35.
7ஆம், 8ஆம், 9ஆம் ஆண்டுகளில் ஏதோவொன்றினுக்கு உரியதாதல் வேண்டும். "A Tamil Slab Inscription at Nilaveli” The Sri Lanka Journal of the Humanities, Vol.I., No. 1 pp. 60-71. மகாவம்சம் 10 : 26-29, 83. (56T6Jub&th 60: 60-61, S.Paranavitana, "Tiriyay Rock Inscription' Epigraphia Zeylanica, Vol. 4,pp. 151-160. S.Gunasingam, "A Fragmentary Slab Inscription of the
time of Rajaraja I (A.D.985-1014)” Trincomalee inscriptions Series, No 2, Peradeniya 1979, pp. 1-5.
W.E.Baker and H.M. Durand, "Facsimiles of Ancient Inscriptions lithographed by jas. Prinsep:Inscriptions of Trincomalee", The Jouranal of the Asiatic Society of Bengal. "Slab-inscription of the time of Rajendra I from Fort-Ostenburgh, Trincomalee ” Trincomalee inscrip
tions Series, No. 2, pp. 13–23
மேலது, பக் 5-10.
S.Gunasingam, "Two Inscriptions of Cola Ilankesvara Deva'
Trincomalee Inscriptions Series No. 1 Peradeniya, 1974, p.11
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 

36.
37.
38.
39.
சபை, மகாசபைளன்ற சொற்களுக்கும்முறையே அவற்றுக்கு ஒப்பான குறி, பெருங்குறிஎன்னுந்தமிழ்ச்சொற்களும் ஒரே அமைப்பினையே குறிப்பனவாகும். அது சில சமயங்களிற் பெருங்குறி எனப்படும். அதன் உறுப்பினரைக் கூட்டாகப் GUGLOě556îT 6T6örg Gólů îG6Nuri - K.A. Nilakanta Sastri The Colas, Second Edition (revesed), p.502. ஊரில் வாழும்மக்கள் சபையாருக்குக் கொடுக்க வேண்டிய வரி முதலான கொடுப்பனவுகளைச் சேகரிக்கும் பணிமகனை “கிராம சபையார் பணித்தவற்றைச் செய்யும் பணிமக்கள், மத்தியஸ்தன், கரணத்தான், பாடிகாப்பான், தண்டுவான் (தண்டல்), அடிக்கீழ் நிற்பான் ” ஆகியோர் என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் கூறுவதும் இங்கு கவனித்தற்குரியது. பிற்காலச்சோழர் வராலாறு 1974,
SII.. Vol. VI:No 267.
திருக்கோணஸ்வரத்தைமச்சகேஸ்வரம் என்று குறிப்பிடும் வழக்கம் அண்மைக் காலம்வரைக் கிழக்கிலங்ககையிற்
காணப்பட்டது.
21

Page 32
சோழர் காலத்து
தமிழகத்துக்கு கட்டடக்கலை வரலாற்றில் உன்னத வளர்ச்சிக் காலமாகச் சோழப்பேரரசின் காலம் விளங்குகின்றது. வடமொழியிலுந் தமிழே சிறந்தது என்று வழங்கும் வண்ணமாகவும், எத்திசையிலுந் தென்திசையே சிறந்தது என்று பாராட்டும் வண்ணமாகவும், தமிழாகரனாகிய சம்பந்தர் திருவவதாரஞ் செய்தாரென்று பெரிய புராணத்திலே சேக்கிழார் பெருமை பேசுவார். சேக்கிழாரின் காலத்திலே கலாதத்துவத்திலும் கலைச் சின்னங்களின் உருவாக்கத்திலும் பரதகண்டம் முழுவதிலும் தமிழகம் தலைசிறந்து விளங்கியது. பல்லவர்கள் அமைத்த அடித்தளத்திலே மகோன்னதமான நுண்கலை மரபொன்றைச் செம்பியன் மரபினோர் கட்டி வளர்த்தனர். தஞ்சை மாநகரிலே அருண்மொழிவர்மன் அமைப்பித்த விமானம் பூதலத்திலே, ஈடிணையற்ற அற்புதக் கோலத்துடன் பொலிந்திருப்பதைப் பார்த்த கருவூர்த்தேவர் வியப்பில் மூழ்கினார். அவர் தனது உணர்ச்சி பூர்வமான அனுபவத்தைப் பதிகமாகப் பாடினார். அதன் வரைவிலாத சிறப்பைச் சொற்களால் வர்ணிக்க முடியாது தடுமாறினார்.
முதலாம் கட்டம்
சோழப்பேரரசர் காலத்துக் கட்டட - சிற்பக் கலை வரலாறு மிகவும் பரந்தவொன்றாகும். அதன் பிரதான அம்சங்களை மிகவுஞ் சுருக்கமாகவும் சில மிக முக்கியமான உதாரணங்களுடனும் மட்டுமே இங்கு விளக்க முடியும். வனப்புமிக்க, ஒங்கியெழும், உன்னதமான விமானம்; நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட அழகிய தூண்கள், கலையழகு பொலிந்த படிமங்கள் அமைந்துள்ள தேவகோட்டங்கள்;
22

துக் கோயில்கள்
சி. பத்மநாதன்
ஓங்கியெழும் எழுநிலைக் கோபுரம் என்பவற்றைக் கொண்ட பேரமைப்பாக நான்கு நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழகக் கோயிலமைப்பு பரிணாம வளர்ச்சிபெற்றது. இக்காலத்தை மூன்று பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம். அவற்றுள் முதலாம் பிரிவு விசயாலயன் காலம் முதல் உத்தம சோழனின் ஆட்சி முடியும் வரையான காலப்பகுதியாகும் (850-985). அக்காலத்திலே நூற்றுக்கணக்கான கற்றளிகள் அமைக்கப்பட்டன. பாடல் பெற்ற தலங்கள். பலவற்றிலுள்ள கோயில்கள் கற்றளிகளாகப் புனரமைக்கப் பெற்றன. அக்காலப்பகுதியில் எழுந்த கோயில்கள் மிதமான அளவுடையவை. அவற்றின் எல்லாப் பிரதானமான பகுதிகளிலும் ஒரு தனித்துவமான கலைப் பாணிக்குரிய முன்னேற்றமான வேலைப்பாடுகள் அமைக்கப் பெற்றன. பெருந்தொகையான சிற்பிகள் கட்டட வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். புதமையான சிந்தனைகளதும், அனுபவங்களினதும் பயனாகப் பாரம்பரியமான மரபுகளில் முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்பட்ட அவற்றின் அடிப்படையிலே சிற்பசாத்திரங்களிலே புதிய அத்தியாயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. கட்டட சிற்பக் கலைகளின் வளர்ச்சியானது தேக்கமடையாது ஒரு கவர்ச்சி மிக்கதான வளர்ச்சிப்பாதையை நோக்கிச் சென்றது. அதன் பயனாகப் பாரததேசத்துச் சிற்பக்கலையின் உன்னதமான அத்தியாயம் மலர்ந்தது. அந்தச் சரிதத்தின் சாராம்சங்களை இங்கு மிகவுஞ் சுருக்கமாகவே குறிப்பிட முடிகின்றது.
முதலாம் இராசராசன் காலம் வரையான கோயில்கள் கருவறை, விமானம், அர்த்த மண்டபம், பரிவாரதேவர் கோயில்கள் என்னும் பகுதிகளைக்
ஆய்வரங்கு 2008

Page 33
கொண்டனவாகும். கருவறை வெளிப்புறத்தே சதுரமானது. அதன் சுவர்கள் மிகவும் விசாலமானவை. கருவறைக்கு முன்னால் அர்த்த மண்டபம் அமைந்திருக்கும். சில கோயில்களில் அர்த்த மண்டபத்துக்கு முன்னால் மகாமண்டபம் இருக்கும். சில விடங்களிலே மண்டபங்கள் இரண்டினையும் இணைக்கும் விதமாக வேறுமொரு அந்தராளம் அமைந்திருக்கும். கீழையூரிலும் திருவையாற்றிலும் கருவறையும் அர்த்த மண்டபமும் இடைவெளியுடன் தனித்திருந்தன.
இக்காலப்பகுதியில் அமைக்கப்பட்ட கோயில்களின் விமானங்கள் ஒன்று முதல் நான்கு SIGNOJ தளங்களைக் கொண்டிருந்தன. விமானத்தின் மேற்பகுதியில் கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் அமைப்புகள் இருந்தன. சிகரங்கள் வட்டமாகவும், சதுரமாகவும், எண்கோண வடிவமாகவும் வெவ்வேறான விதங்களில் அமைக்கப்பட்டன. சப்தமாதர் தளிகள். தூங்கானை மாடக்கோயில்கள் ஆகியவற்றின் கூரைகள் வண்டிக் கூடுகள் போன்றவை. தேவகோஷ்டங்கள் மூன்று அல்லது ஐந்து என்ற விதமாக ஆலயங்களில் அமைக்கப்பட்டன." தகூறிணாமூர்த்தி, பிரமன், கணபதி, துர்க்கை ஆகியோரின் சிற்பங்கள் அவற்றில் அமைந்துள்ளன. விரலூர்க் கோயிலிற் பிரமனுக்குப் பதிலாக பிக்ஷாடனரும் திருக்கட்டளைக் கோயிலிலே தகூழிணாமூர்த்திக்குப் பதிலாகத் திரிபுராந்தகரும் உள்ளனர். வேறுசில கோயில் கோயில்களில் அர்த்தநாரீஸ்வரர், அரிகரர், லிங்கோத்பவர்,அருணாசலேஸ்வரர், சுப்பிரமணியர் ஆகிய தேவருங் காணப்படுகின்றனர்.
வெளிப்புறச் சுவரின் மேலமைந்த கபோதங்கள் கூடுகள், கொடிக்கருக்கு, வட்டங்கள் என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழே பூதகண வரிசையும் மேலே யாளி வரிசையும் உள்ளன. கும்பகோணம், புள்ளமங்கை, திருக்கண்டியூர், திருநாகேசுவரர் முதலிய கோயில்களில் அரைத்துTண்களும் தேவகோஷ்டங்களுக்கு அடியிற்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சிற்பவரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இக்காலத்திலே மூலத்தானத்தைச் சுற்றி எட்டுப் பரிவார தேவர் கோயில்கள் மதிலோடு சேர்த்துக் கட்டப்பட்டன.
இக்கால கட்டத்திற்குரிய கட்டடக்கலையின் பிரதான அம்சங்களாக நார்த்தாமலையிலுள்ள விஜயாலய சோழேஸ்வரர், கண்ணனூர் சுப்பிரமணியர் கோயில், திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில், சீநிவாசநல்லூர் குரங்க நாதர் கோயில், புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், கோனேரிராசபுரம்
முதலியன பிரதலிபலிக்கின்றன.
விஜயாலய சோழிஸ்வரம்
விஜயாலய சோழீஸ்வரத்தில் இறையகம், அர்த்த மண்டபம் என்பன பிரதான அம்சங்களாக அமைந்துள்ளன. ஓங்கார வடிவமான கருவறை 29 அடி சதரமான அமைப்பாகும். அதன் நான்கு மூலைகளிலுந் தூண்கள் அமைந்துள்ளன. அதன் நடுவில் உருண்டை வடிவமான இலிங்கம் பிரதிட்டை செய்யப் பெற்றுள்ளது. இறையகத்தின் மேலே முத்தள விமானம் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுகின்றது. இரு தளங்களின் முகப்புகளிற் கூடங்கள், சாலைகள், வனப்பு மிகுந்த சிற்பங்களையுடைய நாசிகைகள் என்பன உள்ளன. அவற்றின் மேலமைந்த தளம் கருவறையைப் போன்று வட்டமான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதன் மேற்பாகமான கிரீவத்திலே தேவகோஷ்டங்களும் விமான தேவதைகளும் உள்ளன. அவற்றுள் வீணாதர தகூதிணாமூர்த்தி, உமாசகிதர் ஆகியவை சிதைவுறாத நிலையிற் காணப்படுகின்றன.
இறையகத்தின் வெளிப்புறச் சுவர்களில் தேவகோஷ்டங்கள் அமைக்கப்படவில்லை. ஆயினும், அச் சுவர்களில் அரைத் தூண்கள் அலங்காரமான கோலத்திலே உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றின் போதிகைகள் நடுவிலே பட்டையாகவும் இரு புறங்களிலுஞ் சுருண்டு வருவனவாகவும் உள்ளன.
23

Page 34
அர்த்த மண்டப வாயிலின் இருபுறங்களிலும் 5 அடி உயரமான துவாரபாலகரின் உருவங்கள் உள்ளன. சடாமகுடம், பத்திரகுடனலம், கடிசூத்திரம், உதரபந்தம், உபவிதம், கைவளையம் ஆகிய ஆபரணங்கள் அவற்றிலே தெரிகின்றன. ஒரு கையிலே கதையும் மற்றக் கையிலே வியப்புக் குறியும் அமைந்துள்ளன. கோயிலின் உட்பிரகாரத்தில் எட்டுப்பரிவாரதேவர் கோயில்கள் அமைந்திருந்தன.
கண்ணனூர் சுப்பிரமணியர் கோயில்
புதுக்கோட்டை நகரிலிருந்து தென்மேற்கிலே 17 மைல் தூரத்திலுள்ள கண்ணனூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. சந்நிதானம் கிழக்கு நோக்கியது. கோயில் 49 அடி நீளங் கொண்டது. அதன் கருவறை 12 அடிச் சதுரமாகும்."
இறையகத்தின் வெளிப்புறச் சுவர்களில் அரைத்துரண்கள் அமைந்திருக்கின்றன. அவை திருக்கட்டளை சுந்தரரேசுவரர் கோயிலிலுள்ள வற்றைப் போன்றவை. அவற்றிலே கால், கலசம், கும்பம், பலகை என்ற உறுப்புகள் அமைந்துள்ளன. கருவறையின் வெளிப்புறத்திலே தேவகோஷ்டங்கள் காணப்படுகின்றன.
கொடுங்கைக்குக் கீழே பூதகண வரிசையும், அதன் மேல் யாளிவரிசையும் உள்ளன. அதற்கு மேலுள்ள பிரஸ்தரத்தில் நான்கு மூலைகளிலும், யானை வடிவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. கிரீவத்தின் நாற்புறங்களிலும் கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட தேவகோஷ்டங்கள் உள்ளன. அதன் மேல் வட்டமான சிகரமும், அதன் உச்சியில் உருண்டை வடிவமான ஸ்தூபியும் உள்ளன."
மூலவரின் திருமேனி 3 1/2 அடி உயரமும், 112 அடி அகலமும் 1/2 அடி கனமும் உடையது. தலையிலே கரண்ட மகுடமும் மார்பிலே சன்னவீரமும் அணிகளாக அமைந்துள்ளன. மேல்
24

இரண்டு கைகளிலுஞ் சக்தியும் அக்ஷமாலையும் உள்ளன. கீழ் வலக்கரம் அபயகரமானது. கீழ் இடக்கரம் துடை மீது தொங்கும் நிலையில் உள்ளது.
திருக்கட்டளைச் சுந்தரேசுவரர் கோயில்
புதுக்கோட்டைக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்திலுள்ள சுந்தரரேசுவரம் 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலே கற்குறிச்சி என்னும் பெயரால் வழங்கியது. அதனைத் திருக்கற்றளி - ஈஸ்வரம் என்று சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலின் கருவறையும் அர்த்த மண்டபமும் ஆதித்த சோழன் காலத்துத் திருப்பணிகளாகும்.
இக்கோயிலின் கருவறை வெளிப்புறத்திலே 12 அடிச் சதுரமாகும். உட்புறத்தில் அது 6 அடிச் சதுரமாகும். வெளிப்புறச் சுவர்களில் அரைத் தூண்கள் உள்ளன. அவற்றின் போதிகை கோணவடிவமானது. கொடுங்கைகளில் மனிதத் தலைகளின் உருவங்கள் அடங்கிய கூடுகள் உள்ளன. அவற்றின் மேலே யாளி வரிசை காணப்படுகின்றது. தேவகோஷ்டங்களிலே தெற்கிலே திரிபுராந்தகரும், மேற்கே இலிங்கோத்பவரும், வடக்கே பிரமனும் அமைந்துள்ளனர். கோயிலின் இரண்டாவது தளத்தின் முகப்பிலே சாலை, கூடம் என்ற உறுப்புகள் உள்ளன. இவற்றின் நடுவில் விமான தேவதைகளின் படிமங்கள் உள்ளன. தென்சாலையின் நடுவிற்பிக்ஷாடனரும், மேற்கிலே திருமாலும், வடக்கிலே பிரமனும் உள்ளனர். இரண்டாந் தளச் சுவரின் மேல் மற்றுமொரு கொடுங்கையும், யாளி வரிசையும் உள்ளன. பிரஸ்தரத்தின் நான்கு புறங்களிலும் சச்தி உருவங்கள் அமைந்திருக்கின்றன. கிரீவம், சிகரம், சிகரம், ஸ்தூபி ஆகியவை சதுரமானவை. கிரீவத்தின் கோஷ்டங்களிலே, தெற்கிலே தகூதிணாமூர்த்தியும், மேற்கில் வராகமூர்த்தியும், வடக்கிற் பிரமனும், கிழக்கில் இந்திரனும் காணப்படுகின்றனர்.
ஆய்வரங்கு 2008

Page 35
மூலஸ்தானத்தின் சுற்றுப்புறங்களிற் சூரியன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், ஜேஷ்டாதேவி, சந்திரன், சண்டேசுவரர், வைரவர் ஆகியோரின் கோயில்கள் அமைந்துள்ளன.
இக்காலப்பகுதிக்குரிய பிரதானமான கோயில்களிற் கொடும்பாளூர்மூவர் கோயிலும் ஒன்றாகும். மூன்று விமானங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளமையால் அது மூவர் கோயில் என்னும் பெயரால் வழங்கியது. அவற்றைச் சிற்றரசனாகிய பூதி விக்கிரமகேசரி தன் பெயராலும் தன் தேவியர் இருவரது பெயர்களாலும் ஒரே வரிசையில் ஒரே மாதிரியாக அமைப்பித்தான். அவை சுந்தர சோழனின் காலத்துக் கற்றளிகளாகும். காளாமுக சைவர்களின் பெரிய மடாலயமொன்று அதனைச் சேர்ந்திருந்தது. மல்லிகார்ஜுனர் என்பவர் அதன் மடாபதியாக விளங்கினார்."
விமானங்கள் ஒவ்வொன்றினதும் அடிப்பாகம் 21 அடிச்சதுரமாகும். அவை மேற்கு நோக்கிய சந்நிதானங்களாக அமைக்கப்பட்டிருந்ன. அவற்றுக்கிடையில் 10 அடி இடைவெளி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் முன்னால் 18 அடிச் சதுரமான அர்த்த மண்டபம் அமைந்திருந்தது. அவற்றுக்கு மேற்கே, 8 அடிச் சதுரத்தில் 91 அடி நீளமும் 41 அடி அகலமுங்கொண்ட மகா மண்டபம் இருந்தது. அதற்கு மேற்கில், 2 அடி இடைவெளிக்கு முன்னால் மகாமண்டபத்தின் மத்திய நிலையத்துக்கு எதிராக 1அடிச் சதுரமான நந்திமண்டபம் அமைந்திருந்தது. அதற்கு முன்னால் அமைந்திருந்த கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றின் அடையாளங்கள் உள்ளன. “அதிஷ்டானத்தில் உபபீடம், பத்மம் குமுதம் என்ற படைகளையும், கோடியில் திறந்த வாயையுடைய மகரங்களோடு கூடிய யாளிவரிசை(யை)யும் காணலாம்”
பிரதான தளிகளைச் சுற்றி அமைப்பில் அவற்றை போன்றனவும், வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டனவுமான 15 பரிவாரதேவர் கோட்டங்கள் இருந்தன. அவற்றுள் நான்கு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

கோட்டங்கள் கோபுரவாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் இவ்விரண்டு என்ற வண்ணமாய் இருந்தன. தெற்கிலே நான்குதளிகளும், வடக்கிலே நான்கு தளிகளும், மதிற் சுவரோடு ஒட்டிக் காணப்பட்டன. மூன்று தளிகள் கிழக்கு மதிலைச் சார்ந்து காணப்பட்டன.
மூன்று பிரதான கோயில்களும் பத்மகோசங் களாய் அமைந்தவை. அதிஷ்டானத்தில் உபபீடம், பத்மம், குமுதம் என்ற படைகளையும், கோடியில் திறந்த வாயையுடைய மகரங்களோடு கூடிய யாளி வரிசையையுங் காணலாம்.
“மூன்று வெளிச் சுவர்களிலும் தேவ கோஷ்டங்கள் உள்ளன. ஒவ்வொரு தேவ கோஷ்டத்தையும் அரைத்தூண்களும் முழுத் தூண்களும் மேலே மகர தோரணமும் அலங்கரிக்கின்றன. தூண்களின் முக்கிய பகுதிகளான கால், கலசற் பத்மம், கும்பம், பலகை, போதிகை என்பன சிறப்பாய் அமைந்துள்ளன. கொடுங்கையின் அடியில் பூதவரிசையும் மேலே இரு கோடிகளிலும் மகரங்களோடு கூடிய யாளி வரிசையும் உள்ளன. கொடுங்கையில் இரட்டைக் கூடுகளும் நுனிப்பகுதியில் வட்டங்களும் திகழ்கின்றன."
இவ்விருதளக் கற்றளியின் இரண்டாவது தளத்தில் சாலைகளையும் கூடங்களையும் காணலாம். சாலையின் நடுவில் நேர்த்தியான சிலைகள் உள்ளன. இரண்டாம் தளத்துச் சுவர்மீது கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட கொடுங்கையும் அதன்மேல் யாளி வரிசையும் உள்ளன."
கிரீவமும் சிகரமும் சதுரவடிவமானவை. கிரீவத்தின் அடித்தளத்தில் நான்கு கோடியிலும் ரிஷபங்கள் காணப்படுகின்றன. மத்தியில் விமான தேவதைகளோடு கூடிய கோஷ்டங்கள் உள்ளன. கோஷ்டங்களின் மீது சிங்கத்தலையால் அலங்கரிக்கப்பட்ட கூடுகள் காணப்படுகின்றன. சிகரம் நடுவில் பிதுங்கியும் கிழே உள்ளடங்கியும் உள்ளது. இதன் கோடியில் கொடிக்கருக்குகள்
25

Page 36
உள்ளன. பத்மபட்டியல் மீது சதுரமான ஸ்தூபி உள்ளது. இம்மூவர் கோயில் சிகரம் மாமல்லபுரத்தில் உள்ள துர்க்கை ரதத்தின் சிகரத்தை ஒத்திருக்கின்றது. நடுத்தளிவிமானத்தின் கிழக்குப் பக்கத்தில் கருவறையில் அர்த்த நாரீசுவரரும், இரண்டாம் தளத்தில் சிவனும் பார்வதியும் கிரீவத்தில் இந்திரனும் காணப்படுகின்றனர். வடக்குப்புறத்தில் கருவறையில் நின்ற திருக்கோலத்திலுள்ள சிவபெருமானையும் இரண்டாம் தளத்திலும் கிரீவத்திலும் இருந்த திருக்கோலச் சிவபெருமானையும் காணலாம்."
தெற்குப் புறத்திலே, இரண்டாம் தளத்தில் தட்சிணாமூர்த்தியும் மூன்றாம் தளத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். கிரீவத்திள் மேற்குப்புறத்திலே சிவனின் ஆலிங்கன வடிவம் உள்ளது.
“தென் தளி விமானத்தின் கிழக்குப்புறக் கருவறைச் சுவரில் கங்காதரரும், இரண்டாம் தளத்தில் காலாரி மூர்த்தியும் கிரீவத்தில் அந்த காசுரவத மூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். வடக்குப் புறத்தில் நின்ற திருக்கோலத்திலுள்ள சிவபெருமானும் gly 600TL-Th தளத்தில் சங்கரநாராயணரும் காணப்படுகின்றனர். கிரீவத்திள்ளன வடபுறத்திலும் மேற்குப்புறத்திலும் இப்போது சிலைகள் காணப்படவில்லை.”
இரண்டாம் கட்டம் - பெருவிமானங்கள்
முதலாம் இராசராசனின் ஆட்சிக்காலம் முதல் (985-1016) அதிராசேந்திரனுடைய காலம் வரையுள்ள காலப் பகுதி சோழர் கலைப்பாணியின் வளர்ச்சியின் இரண்டாவது காலகட்டமாகக் கொள்ளப்படுகின்றது. இக்காலப்பகுதியில் முன்பு போல அநேகமான கற்றளிகள் அமைக்கப்பெற்றன. அவை பொதுவாக முற்காலத்துக் கோயில்களிலும் சற்றுப் பெரியனவாக விளங்கின. இக்காலப்பகுதியிற் சோழராதிக்கம் உன்னத நிலையிலே காணப்பட்டது. சோழரின் இராச்சியம் பேரரசாகியது. அயல் இராச்சியங்களான
26

பாண்டி நாடு, சேரநாடு, ஈழம், கங்கபாடி, நுளம்பபாடி முதலியவற்றைக் கைப்பற்றிச் சோழர் அவற்றைதங்கள் இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டனர். அது வலிமை மிக்க பேரரசாக விளங்கியது. தென்னாசியாவின் பிரதானமான வர்த்தக மையமாக விளங்கிய பகுதி முழுவதும் சோழர் வசமாகியது. தென்னிந்தியாவிலுள்ளவர்கள், இராசராசன் காலம் முதலாகச் சோழ மன்னனைச் சக்கரவர்த்தியெனக் குறிப்பிடத் தொடங்கினார்கள். கர்நாடகத்திலே சோழமன்னன் அமைத்த கோயிலைத் தேவாலயச் சக்கரவர்த்தியென்று குறிப்பிட்டார்கள். இக்கால கட்டத்திலே தென்னிந்தியக் கட்டடக் கலை வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் எத்தகையது என்பதை அந்த வர்ணனை மூலமாகப் புரிந்து கொள்ளலாம்.
இக்கால கட்டடத்து வளர்ச்சிகளை விளக்குவதற்குத் திருவாலீஸ்வரம், தஞ்சைப் பெருங்கோயில், கங்கைகொண்ட சோழ-ஈஸ்வரம் ஆகிய மூன்றையுமே இங்கு உதாரணங்களாகக் கொண்டு வர்ணிக்க முடியும்
திருவாலிஸ்வரம்
இராசராசனது காலத்துக் கோயிலான பிரம்மதேசத்தில் அமைந்துள்ள திருவாலீஸ்வரம் அதிற் காணப்படும் வனப்பு மிக்க உன்னதமான சிற்பங்களின் காரணமாக மிகுந்த முக்கியத்துத்தைப் பெறுகின்றது. அதன் சில பகுதிகள் புதுமையான முறையிலும் மிக நுட்பமாகவும் அமைந்துள்ளன. கர்ப்பக்கிருகம் சதுரமானது. அதிஷ்டானத்திலுள்ள யாளி வரிசையில் யாளியின் உருவங்கள் முழுமையாகவும் கம்பீரமான கோலத்திலுங் காணப்படுகின்றன. கொங்கையின் கீழமைந்த பூதகண வரிசையும் புதுமையான வகையில் அமைந்துள்ளது. நானாவிதமான நாட்டியக் கோலங்களிலும் வேறுவிதமான கோலங்களிலும் மனித உருவங்கள் இங்கு அமைந்துள்ளன. சிலர் சிங்கமுகங்களுடனும் வேறுசிலர் குரங்கு முகங்களுடனும் காணப்படுகின்றனர். உருவங்களின் பேளைவயிறும் ஆனந்தக் களிப்பினாலே ஆடிப்பாடி
ஆய்வரங்கு 2008

Page 37
ஆர்ப்பரிக்கும் கோலமும் கவர்ச்சிமிக்கவை. கொடுங்கைகளிலே அழகுவாய்ந்த சிங்கமுகக் கூடுகள் அமைந்துள்ளன. அவற்றினிடையே வளைந்த கொடிகளும் அவற்றின் இலைகளும் மிகவுஞ் செம்மையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
விமானத்தின் முதலாவது தளத்திலுள்ள சிற்பங்கள் அவற்றின் பிரதிமாலசுஷணங்களின் காரணமாக மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தெற்கிலே நடுவில் நடராசரும், இடப்பக்கத்தில் விருஷபாரூடர், கங்காதரர் ஆகியோரும், வலப்பக்கத்திலே வீரபத்திரர், உமாதேவியார் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். மேற்கிலே விஷ்ணு, பிரமன் ஆகியோரின் பக்கங்களிலும் நடுவிலே இலிங்கோத்பவரும் காணப்படுகின்றனர். அவர்களின் இடப்புறத்தில் காலாரிமூர்த்தி, கிராதாமூர்த்தி என்போரும், வலப்பக்கத்தில் யோகதசுஷிணாமூர்த்தி, உமாசகிதர் என்போரும் உள்ளனர். வடக்கிலே நடுவில் கஜாரிமூர்த்தியும், வலது பக்கத்தில் சண்டேசானுக்கிரகமூர்த்தி, சுகாசனமூர்த்தி ஆகியோரும், இடப்பக்கத்தில் சோமாஸ்கந்தரும் வேறொருவரும் உள்ளனர்.
விமானத்தின் இரண்டாவது தளத்திலுள்ள சிற்பவேலைப்பாடுகளும், அலங்காரச் சிற்பங்களும் கர்ப்பக்கிருகத்தின் வெளிப்புறத்திலுள்ளவற்றைப் போன்றவை. அதிலே மேற்புறத்து நான்கு மூலைகளிலும் அளவிற் பெரியனவும் கவர்ச்சியான வடிவழகு பொருந்தியனவுமாகிய நான்கு மூலைகளிலும் அளவிற் பெரியனவும் கவர்ச்சியான வடிவழகு பொருந்தியனவுமாகிய நான்கு நந்திகள் அமைந்துள்ளன. எண்கோணமான பீடத்திலே கீரீவம் அமைந்துள்ளது. அதன் தெற்கிலும், மேற்கிலும் வியாக்கியான தகூதிணாமூர்த்தி, யோகநரசிங்கர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. வடக்கிற் பிரமனும், கிழக்கில் இந்திரனும் உள்ளனர். மிகவும் அலங்காரத் தோற்றங்கொண்ட சிகரத்திலே பகாபத்மமும் பட்டிகையும் தூபியும் உள்ளன. அர்த்தமண்டபமும் விமானமும் ஒரே காலத்தவை, மகாமண்டபம் சற்று காலத்துக்குரியதாகலாம்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

திருவடி உத்தரகைலாசம், திருமழவாடி வைத்தியநாதர் கோயில், தாதாபுரத்து ஈஸ்வரம், விண்ணகரம் ஆகிய இரட்டைத் தளிகள், பொலநறுவையிலுள்ள வானவன்மாதேவீஸ்வரம் ஆகியவை இராசராசனது காலத்துக் கோயில்களிற் குறிப்பிடத்தக்கவை. ஆயினும் அவை சிற்பக்கலையினைப் பொறுத்த வரையிலே திருவாலீஸ்வரத்தின் உன்னதமான வனப்பினைக் கொண்டிருக்கவில்லை."
தஞ்சைப் பெருவுடையார் கோயில் தென்னிந்தியக் கோயிலின் உன்னதமான வளர்ச்சிக் கட்டத்தை தஞ்சைப் பெருவுடையார் கோயிலிற் காணலாம். இந்தியக் கோயில்களில் மிகப்பெரியதும், மிகவும் உயரமானதும், கலைவனப்பில் நிகரற்றதுமான அப்பெருங்கோயில் இந்தியக் கட்டடக்கலை வளர்ச்சியின் சிகரமாய் விளங்குகின்றது. ஒன்றன்முன் ஒன்றாக ஒரேநிலையில் அமைந்துள்ள விமானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நந்திமண்டபம் ஆகியனவும் அவற்றின் விசாலமான வளாகமும் மதில்கள் ஆழ்ந்த 500 அடி நீளமும் 250 அடி அகலமுங் கொண்ட பிரகாரத்தினுள் அமைந்துள்ளன. பிரகாரச் சுவர்களின் உட்புறத்தே எல்லாப் பக்கங்களிலும் கற்றாலையொன்று அமைந்திருக்கின்றது. அதிலே நூற்றுக்கணக்கான தூண்கள் வரிசையாக அமைந்துள்ளன. பரிவாரதேவர் கோயில்களை இணைக்கும் பாண்மையிற் சுற்றாலை அமைக்கப்பட்டது. ஆலயத்தின் முகப்பிலே இரண்டு கோபுரவாயில்கள் உள்ளன. அவற்றுள் முன்புறமாக உள்ளது இரண்டாம் பிரகாரத்தின் நுழைவாயிலாக அமைந்திருந்தது. ஆனால் அப்பிரகாரத்தின் மதில்கள் இடிந்து அழிந்துவிட்டன.
தஞ்சையிலே கோயிலின் பிரதான பகுதியாக விளங்குவது வானத்து முகில்கள் தோயும் வண்ணமாக ஓங்கியெழும் அற்புதக் கோலமான விமானமாகும். அது சிற்பநூல்களில் கஜப்பிருஷ்டம் என்று சொல்லப்படும் தூங்கானைமாடம் என்னும் வகையைச் சேர்ந்ததாகும். அது 216 அடி உயரங்
27

Page 38
கொண்டது. பதினான்கு தளங்களால் அமைந்தது. விமானத்தின் பகுதிகளின் மிகவும் பொருத்தமான அளவுப் பிரமாணங்களும், மிகவும் செம்மையான வேலைப்பாடுகளும் அதன் ஈடிணையிலாதவனப்புக்கு ஏதுவாயுள்ளன. 82 அடி சதுரமான அதன் தளம் 50 அடி உயரங்கொண்டது. அதன் சுவர்கள் எதுவிதமான வளைவுமின்றி நேராக நிமிர்ந்த தோற்றங் கொண்டவை. அதற்கு மேல் 13 நாற்சதுரமான தளங்களுடன் உள்நோக்கிய சரிவுகொண்டு விமானம் அமைந்துள்ளது. உச்சித் தளத்தின் நீளம் அடித்தளத்தின் நீளத்தில் மூன்றிலொரு அளவுடையதாகும். நேராக நிமிர்ந்த அடித்தளத்தைக் கொடுங்கை இருவேறு பகுதிகளாகப் பிரிக்கின்றது. கொடுங்கையின் கீழும் மேலும் அமைந்துள்ள சுவர்களிலே தேவகோஷ்டங்களும், அரைத் தூண்களும், அலங்கார வேலைப்பாடுகளும் மிகந்த வனப்புடன் அமைந்துள்ளன.
கர்ப்பக்கிருகம் உட்புறத்தில் 45 அடிச் சதுரமாகும். அதனைச் சுற்றி 9 அடி அகலமான திருச்சுற்றாலை உள்ளது. அதன் சுவர்களிற் சமகாலத்து ஒவியங்கள் இருந்தன, நாயக்கர் காலத்தில் அவற்றுக்கு மேலே புதிய சித்திரங்களை வரைந்து பழைய ஓவியங்களை மறைத்துவிட்டனர். கருவறையின் நடுவிலே இராஜராஜஈசுவரமுடையார் என்ற பிரமாண்டமான இலிங்கம் இருந்தது. இறையகத்து முன்னால் அந்தராளம் அமைந்திருக்கின்றது. அதனை அடைவதற்குத் தெற்கிலும் வடக்கிலும் படிக்கட்டுகள் உள்ளன. அந்தராளத்தின் இரு பக்கங்களில் 8 தூண்கள் இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. இறையகத்து வாயிற்புறத்தே அளவிற் பெரியதான துவாரபாலகரின் உருவங்கள் அடங்கிய கோஷ்டங்கள் உள்ளன. இறையகத்தைப் போல அர்த்த மண்டபமும் இருதள அமைப்பாகும். அந்தராளமும் அர்த்த மண்டபமும் ஒரு பொதுவான் அதிஷ்டானத்தில் உள்ளன. அவற்றின் தேவகோஷ்டங்களும் அரைத்தூண்களும் ஒரே மாதிரியானவை. மகா மண்டபத்துக்கு முன்னால், சிறிது தூரத்தில் நந்திமண்டபம் உள்ளது."ஆதியான
28

நந்தி பழுதடைந்துவிட்டதால், அதனை நீக்கிவிட்டு, நாயக்கர் காலத்திலே மிகவும் வனப்பு மிக்க ஒரு நந்தியின் உருவத்தை அமைத்துள்ளனர்.
கோயில் வளாகத்திலே வேறு மூன்று சந்நிதானங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டன. வடக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் அம்மன் கோயில் பாண்டியர் காலத்துத் திருப்பணியாகும். மேற்கிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது. பிள்ளையார் கோயில் மராட்டியர் காலத்துக்குரியது. அவற்றின் வேலைப்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இராசராசனின் ஆட்சியின் முடிவிலே அவனாலும், அவனது தேவியராலும், அமைச்சர், சேனாதிபதியர் முதலானோராலும் பெருமளவிலான தானங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டன. நித்திய நைமித்திய கருமங்களுக்கும் ஆலய தெய்வங் களினதும் நாயன்மார்களினதும் உலோகப் படிமங்கள் அநேகமானவை ஸ்தாபிக்கப்பட்டன. நன்கொடைகள் பல ஊர்களின் சபையாரிடம் ஒப்படைக்கப்பெற்றன. கோயில் வளாகத்திலே காவல்புரிவதற்கும் அணுக்கர், வேளைக்காறர் போன்ற படையினர் நியமிக்கப்பட்டனர்.
கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் இராசராசனின் மகனாகிய மதுராந்தகன் என்னும் இராசேந்திர சோழனின் அரசியற் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் வண்ணமாகக் கங்கை கொண்ட சோழபுரம் சோழரின் புதியவொரு தலைநகராக அமைக்கப்பட்டது. வட இந்தியா மீது திக்குவிசயஞ் செய்தமையின் விளைவாகக் கங்கைகொண்ட சோழன் என்னும் பெரும் புகழுக்குரிய அலங்கார நாமம் அவனுக்குரியதாகியது. மதுராந்தகனின் இணையிலாத புகழினைப் பரத கண்டத்தவருக்கு உணர்த்தும் வண்ணமாக அவனால் அமைக்கப்பெற்ற நகரம் கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெயரைப் பெற்றது. அங்கு அவனால் அமைக்கப்பெற்ற கங்கைகொண்ட சோழேஸ்வரம் அளவிற்
ஆய்வரங்கு 2008

Page 39
பெரியதாகவும் கலைவனப்பு மிக்கதாகவும் விளங்கியது.
தஞ்சைப் பெருங்கோயிலை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பெற்ற கங்கைகொண்ட சோழேஸ்வரம், தமிழகத்துக் கட்டடக்கலையின் மகோன்னதமான படைப்புகளில் ஒன்றாகும். கோயில் வளாகம் 567 அடி நீளமும் 318 அடி அகலமுங் கொண்ட சுற்றளவினை உடையதாகும். வளாகத்தினுள் ஆலயத்தைச் சுற்றி வடகைலாசம், தென்கைலாசம், சண்டேசுவரர் கோயில், மகிஷாசுரமர்த்தனியின் கோட்டம் என்னுங் கோயில்களும்; பலிபீடம், நந்திபீடம், அலங்கார மண்டபம் என்பனவும் அமைந்திருந்தன. கோயில் வளாகத்தின் கிழக்குப் பகுதியிற் கோபுரவாசல் அமைந்திருந்தது.
கர்ப்பகிருகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய பிரதான பகுதிகள் ஒரு பொதுவான, பிரமாண்டமான அதிஷ்டானத்தின் மேல் அமைந்துள்ளன. அதன் மகத்தான உபபீடத்தின் அடிப்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது. உபபீடம், அதிஷ்டானம் ஆகியவற்றுக்கிடையில் ஒர் ஒடுக்கமான மேடை காணப்படுகின்றது. பத்மம், குமுதம், வளிமானம் என்னும் வேலைப்பாடுகள் அதிஷ்டானத்தில் உள்ளன. உபபீடமானது 340 அடி நீளமும், 100 அடி அகலமுங் கொண்டது. கர்ப்பக்கிருகம், மகாமண்டபம் ஆகியன முறையே 100 அடியும் 175 அடியும் நீளங்கொண்டவை.
ஓங்கி எழுந்த விமானம் கோயிலின் சிறப்பு மிகுந்த பகுதியாகும். கர்ப்பக் கிருகச் சுவர்கள் 35 அடி உயரமானவை. சுற்றி வரும் உத்திரம் ஒன்றினாற் சுவர்கள் மேல் கீழாக இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் அகலப்பாட்டில் ஐந்து பாகங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் நடுவிலுள்ள பாகமே மிகப் பரந்தது. கரையோரமாக உள்ள இரண்டுஞ் சதுரமானவை. இடையிலுள்ள இரண்டு பாகங்களும் நாற்சதுர வடிவமானவை. சிவாகமங்களிலும் புராணங்களிலும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

போற்றப்படும் 50 தெய்வீகக் கோலங்கள் இச்சுவர்களில் மிகச் சிறப்புடன் அமைந்து காணப்படுகின்றன. அவற்றோடு அலங்கார வேலைப்பாடுகளும், கூடு, கும்பஞ்சரம் சிங்கமுகம் முதலானவையுஞ் செம்மையாக உருவாக்கப் பெற்றுள்ளன.
கர்ப்பக்கிருகச் சுவர்களில் அமைந்த சிற்பங்களில் நடராஜர், சண்டேசானுக்கிரக மூர்த்தி, சரஸ்வதி ஆகியோரின் படிமங்கள் வனப்புடையவை.
கர்ப்பக்கிருகச் சுவர்களின் அடித்தளத்தில் வடக்கிலே காலாந்தகர், துர்க்கை, பிரமா, வைரவர், காமாந்தகர் ஆகியோரின் உருவங்களும், மேற்கிலே கங்காதரர், இலிங்கோத்பவர், மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், அனுக்கிரக விஷ்ணு மூர்த்தி ஆகியோரின் உருவங்களும் அமைந்துள்ளன. தெற்கிலே கணபதி, அர்த்தநாரி, தகூழிணாமூர்த்தி, ஹரிஹரர், நடராஜர் ஆகியோரின் படிமங்கள் உள்ளன.
கர்ப்பக்கிருகத்து மேற்றளச் சுவர்களில் வடக்கிலே கெளரிபிரசாதர், சோமன், பிரமன், ஈசானர், பூவராகர், சுப்பிரமணியர் முதலியோரின் படிமங்கள் உள்ளன. பிக்ஷாடனர், திரிமூர்த்தி, வருணன், விஷ்ணு, இலிங்கோத்பவர், பிரமன், வாயு முதலியோரின் வடிவங்கள் மேற்கில் உள்ளன. தெற்கிலே காலாந்தகர், யமன், தகூழிணாமூர்த்தி, நிருத்தி முதலியோரின் உருவங்கள் உள்ளன.
கங்கைகொண்ட சோழேஸ்வரத்தின் விமானம் ஒன்பது தளங்களால் அமைந்தது; அது 160 அடி உயரங்கொண்டது. மேலுள்ள தளம் ஒவ்வொன்றும் அதன் கீழமைந்ததைக் காட்டிலும் சுற்றளவிற் சிறியது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானத்திலுள்ள தளங்களின் நாற்பக்கங்களும் நேராக அமைந்திருக்கையில் இங்குள்ள தளங்கள் நான்கு பக்கங்களிலும் வில் வளைவான கோலத்தில் உள்ளன. அதன் காரணமாக விமானம் கல்யாணத் தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. சதுர
29

Page 40
வடிவிலும் நாற்சதுர வடிவிலும் அமைந்த மாடங்கள் தளங்களை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும், நடுவிலும் அதன் அருகிலும் அமைந்த மாடங்கள் மூலைகளிலுள்ள கூடங்களைக் காட்டிலும் முன்னோக்கி நீண்ட வண்ணமாயுள்ளன.
கிரீவத்தின் நான்கு பக்கங்களிலுந் தேவகோஷ்டங்கள் வழமை போல் அமைந்திருக் கின்றன. அதன் கீழமைந்த சதுரமான பீடத்தில் நான்கு நந்திகளின் உருவங்கள் உள்ளன. தேவகோஷ்டங்களின் மேலே சிங்கமுக வடிவங்கள் தோரணங்களின் சிகரமாய் உள்ளன. அவற்றின் மேலே பதுமபட்டிகை அமைந்துள்ளது. அதன் மேற்பொன்முலாம் பூசிய தூபியின் உச்சி, தாமரை மொட்டுப் போலத் தெரிகின்றது. அதிலே உடையார் பாளையத்துப் பாளையக்காரரான நல்லக்கதோழ உடையாரின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
இறையகம், மகாமண்டபம் ஆகியவற்றின் நடுவில் அர்த்த மண்டபம் அமைந்திருக்கின்றது. படிக்கட்டுகள் மூலமாக அதனை அடையும் வழிகள் வடக்கிலுந் தெற்கிலும் உள்ளன. படிக்கட்டுகள் இரு கட்டங்களில் உள்ளன. முதலாவது கட்டத்துப் படிகள் உபபீடத்தின் மட்டம் வரை அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டத்துப் படிகள் அதிஷ்டானத்தின் மட்டம் வரை உயர்ந்துள்ளன. பிரமாண்டமான துவாரபாலகரின் உருவங்கள் வாசலின் இரு பக்கங்களிலுங் காணப்படுகின்றன. மண்டபத் தூண்கள் வேலைப்பாட்டின்றிச் சதுரமாகவுங் கனதியாகவும் உள்ளன.
புராணக் கதைகளை விளக்குஞ் சிற்பங்கள் அர்த்த மண்டபத்தின் கிழக்குச் சுவரிலே சித்திரிக்கப் பெற்றுள்ளன. அவற்றுளொன்று மகேஸ்வரன் இராவணனின் கர்வத்தினை அடக்கும் பான்மையைக் காட்சிப்படுத்தும் வகையில் உள்ளது. சிவனை அர்ச்சிப்பதற்கு வேண்டிய 1008 தாமரை மலர்களின் ஒன்று குறைவாக இருப்பதைக் கண்டு திருமால் தனது கண்களில் ஒன்றைப் பறிப்பதையும், அதனைக் கண்ட சிவபெருமான் பெருமாளுக்கு
30

அனுக்கிரகம் பண்ணுவதையும் மற்றொரு சிற்பம் உணர்த்துகின்றது. வேறொன்று பார்வதி கல்யாணம் பற்றியதாக அமைந்திருக்கின்றது. சடங்கினை நடத்தும் புரோகிதராகப் பிரமாவும் கன்யாதானஞ் செய்பவராகத் திருமாலுங் காணப்படுகின்றனர். கிராதார்ச்சுனர், மார்க்கண்டேயர், சண்டேஸ்வரர் ஆகியோரின் கதைகளை விளக்குஞ் சிற்பங்களும்
உள்ளன.
மகாமண்டபமும் அதன் முன்பாகவுள்ள மணிமண்டபமும் அவற்றோடு அதிஷ்டானம், இறையகம் ஆகிய அமைப்புகளும் ஒரு பொதுவான பீடத்தில் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் மேற்பாகமும், அதன் சுவர்களும் இடிந்து வீழ்ந்துவிட்டன. அது புனரமைக்கப்பெற்ற காலத்தில் அதன் சுவர்கள் குறைந்த உயரத்துடன் அமைக்கப்பெற்றன. அதன்மேற்குப் புறத்தில் மட்டுமே பழைய சுவரின் பகுதிகள் உள்ளன. அதிலுள்ள தூண்களும் பக்கச் சுவர்களும் கூரையும் பிற்காலத்திலே புதிதாக அமைக்கப்பட்டவை. மகாமண்டபம், மணிமண்டபம் ஆகியவற்றைச் சென்றடைவதற்கான வழி படிக்கட்டுகளினால் அமைந்துள்ளது.
மகாமண்டபத்தின் வடக்கிழக்கு மூலையிற் செளரயீடம் அமைந்திருக்கின்றது. அது, சதுரமான பீடமொன்றில் அமைந்துள்ள தாமரை மலரின் வடிவமானது. அமைப்பிலே கட்டடம் இருதள தளி போன்றுள்ளது. மேலுள்ள தளத்தில் எண்திசைகளையும் நோக்கிய கோலத்தில் எட்டுக் கிரகங்களினதும்மூர்த்தங்கள் உள்ளன. அடித்தளம் ஏழு குதிரைகள் பூட்டிய இரதம் போன்று அமைந்துள்ளது. குதிரைகள் ஏழும் வாரமொன்றிலுள்ள ஏழு நாட்களையுங் குறிக்கும். சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்ததாமரை இதழ் போன்ற 12 சட்டங்களும் பன்னிரு மாதங்களையும் குறிக்கும். புவனம் சூரிய மண்டலமாய் அமைந்திருப்பதையும், காலச்சக்கரமானது சூரியனை ஆதாரமாகக் கொண்டு நாள், வாரம், மாதம் என்ற வகையில் வரிசைக் கிரமமாகச் சுழன்று செல்வதையும்
ஆய்வரங்கு 2008

Page 41
அற்புதமான வகையிலே செளரயீடத்தில் உருவகப்படுத்தியுள்ளனர்.
கர்ப்பக்கிருகத்தின் இருப்பக்கங்களிலும் வடகைலாசம், தென்கைலாசம் என்னுஞ் சிவாலயங்கள் அமைந்திருந்தன. முதலாம் இராசராசனதும், இராசேந்திரனதும் காலங்களில் இத்தகைய கோயில்கள் திருவையாற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. வடகைலாசத்திற் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம் என்னும் அமைப்புகள் உள்ளன. துவிதள விமானத்திலே கிரீவம், ரேகாசிகரம், ஸ்தூபி ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன. கர்ப்பக்கிருகத்தின் சுவர்களிலுள்ள தேவகோஷ்டங்களிலே, தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலும் முறையே தக்ஷதிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரமன் ஆகியோரின் பிரதிமைகள் உள்ளன.
வடகைலாசத்து அர்த்த மண்டபத்துச் சுவர்களின் கூடுகளில் வடக்கிலே கெளரிபிரசாதர், துர்க்கை, அர்த்தநாரி, வைரவர் ஆகியோரின் வடிவங்களும், தெற்கிலே நடராசர், பிக்ஷாடனர், சுப்பிரமணியர் என்போரின் பிரதிமைகளும் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பெற்றுள்ளன. காலப்போக்கிலே வடகைலாசத்தைத் திருக்காமக் கோட்டமாக மாற்றிவிட்டனர். தென்கைலாசத்து மகாமண்டபம் காலப்போக்கில் இடிந்து வீழ்ந்துவிட்டது. தென்கைலாசத்தின் கர்ப்பக் கிருகத்துச் சுவர்களிலும் அர்த்த மண்டபத்திலும் உள்ள சிற்பங்கள் யாவும் வடகைலாசத்திற் போலவே காணப்படும்.
சிங்கக்கேணியின் சமீபத்தில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தனியின் கோயில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதொன்றாகும். அதிலுள்ள மகிஷாசுர மர்த்தனியின் படிமம் சாளுக்கியர் கலைப்பாணியில் அமைந்துள்ளது.
கங்கைகொண்ட சோழேஸ்வரத்தில் ஆதியான வெண்கலப்படிமங்களிற் சில இன்றும் உள்ளன.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சோமாஸ்கந்தர், கார்த்திகேயர், யோகேஸ்வரி, துர்க்கை, ஆதிகாரநந்தி, ரிஷபவாகனர் என்போரின் படிமங்கள் அவற்றுட் குறிப்பிடத் தக்கவை. சோமாஸ்கந்தர் படிமத்தி லுள்ள உமாமகேஸ்வரரின் உருவங்கள் அளவில் மிகப் பெரியவை. சோழர் காலத்து வெண்கலப் படிமங்களுள் அவை மிகப்பெரியவை. பத்மபீடத்தில் அமைந்த கார்த்திகேயரின் வடிவம் 107 சென்றிமீற்றர் உயரங் கொண்டதாகும். இறையகத்தின் அருகிலுள்ள யோகேஸ்வரியின் கோலம் குமிண் சிரிப்புடன் பொலிந்த வனப்புமிகு தோற்றமாகும். சமபங்க நிலையிலுள்ள துர்க்கையின் கரங்கள் நான்கினுள் மேலுள்ளவை சங்கு, சக்கரகங்ளை ஏந்திய நிலையில் உள்ளன. கீழ்க்கரங்கள் வரத கடி-அவலம்பித முத்திரைகளில் உள்ளன.
கோயில் வளாகத்தினுட் கற்சிற்பங்களும் பல காணப்படுகின்றன. வடக்கு வாசலுக்குச் சமீபமான மேடையொன்றில் இலிங்கோத்பவர், பிக்ஷாடனர், கணபதி, சுப்பிரமணியர், உமாதேவியார் வீரபத்திரர், பிரமன், துர்க்கை, சந்திரசேகரர், ரிஷபாந்திகர், வீணாதரர் போன்ற மூர்த்தங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தென்கைலாசத்தின் அருகில் அர்த்தநாரீசுவரர், கஜலக்ஷமி, சூரியன் முதலியோரின் சிற்பங்கள் நிலத்திற் புதைந்து காணப்படுகின்றன. மகாவிஷ்ணு, பூரீதேவி ஆகியோரின் படிமங்கள் சிங்கக் கேணியின் அருகில் உள்ளன.
மூன்றாம் கட்டம் - விமானக் கோயில்களிற் கோபுரங்கள்
முதலாம் குலோத்துங்கன் (1070-1122) காலம் முதலாக மூன்றாம் இராசேந்திரன் (1246-78) ஆட்சி முடியும் வரையுள்ள காலப்பகுதி சோழர் கலைப்பாணியின் இறுதிக் கட்டமாகும். இக்காலப் பகுதியிற் கட்டடக் கலையின் வளர்ச்சியில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கோயில் அமைப்பிலே விசாலமாகி விரிவடைந்தது. தில்லைச்
31

Page 42
சிதம்பரம் இக்காலத்து மன்னர்களின் திருப்பணிகளின் பயனாக முன்னிருந்ததைக் காட்டிலும் ஆறுமடங்கு பெரிதாக விசாலமடைந்தது. தென்னிந்தியக் கோயில்களில் மிகவும் பெரியதாக அது வளர்ச்சி பெற்றது.
தில்லைச் சிதம்பரம்
நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், திருக்காமக்கோட்டம், திருச்சுற்றாலைகள், கோபுரம் என்ற பல புதிய அமைப்புகள் சிதம்பரத்திலும் வேறு சில தலங்களிலும் அரசர்களாலும் பிரதானிகள் பலராலும் அமைக்கப்பெற்றன. விக்கிரமசோழன் தில்லையிலே திருத்தேர்க்கோயிலைச் செம்பொன் வேய்ந்து, தன்பெயரால் வழங்கும் மாளிகையினையும் திருவீதியினையும் அமைத்தான். இதனை அவனுடைய மெய்க்கீர்த்தி மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
‘தன்குல நாயகன் தாண்டவம் பயிலுஞ் செம்பொன்னம்பலம்சூழ் திருமாளிகையும் கோபுர வாசல் கூடசாலைகளும் உலகு வலங்கொண் டொளி விளங்கு நேமிக் குலவரை உதைய குன்றமொடு நின்றெனப் பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமமும் விசும்பொளிதழைப்ப இமையவர்களிப்பப் பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும் உயர் பூரட்டாதி உத்திரட்டாதியில் அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர் இம்பர் வாழ எழுந்தருளுவதற்குத் திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து பருந்திரண் முத்தின் பயில்வடம் பரப்பி நிறைமணி மாளிகை நெடுந்திரு வீதிதன் திருவளர் பெயராற் செய்து சமைத் தருளி பைம்பொற் குழித்த பரிகல முதலாச் செம்பொற் கற்பகத்தொடு பரிச் சின்னமும் அளவிலாதன வொளிபெறவமைத்தும் பத்தா மாண்டில் சித்திரைத் திங்கள் அத்தம் பெற்ற ஆதிவாரத்துத் திருவளர் மதியின் திரையோதிசிப் பக்கத்து இன்ன பலவும் இனிது சமைத்தருளி”
32

“தனது முன்னோர்களின் குலதெய்வமான நடராசப் பெருமான் பள்ளி கொண்டுள்ள பேரம்பலத்திலே அமைந்துள்ள கோபுர வாசலும் அதிலுள்ள கூடங்கள் சாலைகள் ஆகிய யாவும் கதிரவனின் கிரணங்களினால் ஒளிபெற்று விளங்கும் உதயகிரி போலப் பிரகாசிக்கும் வண்ணமாக விக்கிரம சோழன் பொன் வேய்ந்தான் அவ்வாறான கோலத்தைப் பலிபீடமும் பெற்றது. திருத்தேர்க் கோயிலையும் அவர் பொன் வேய்ந்தான். தனது திரு நகூடித்திரமான பூரட்டாதி - உத்திரட்டாதியில் தில்லைப்பெருமான் மகிழும் வண்ணமாக தேர்த்திருவிழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்தான். அத்தேரினை முத்து வடங்களினால் அலங்காரஞ் செய்தான். தன் பெயரால் வழங்கும் வண்ணமாக அழகிய மண்டபங்களையும் திருவீதிகளையும் அவன் அமைப்பித்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அளவிலாத அலங்காரச் சிற்பங்களையும் அமைப்பித்து அவனது பத்தாம் ஆண்டிலே, சித்திரை மாதத்து வளர்பிறையிற் பதின்மூன்றாம் நாளன்று, அத்த நக்ஷத்திரம் கூடிய மங்களவோரையிலே, இத்திருப்பணிகள் யாவும் நிறைவு பெற்றதன் அடையாளமாகப் பெருவிழா எடுத்தனர்.”
சிதம்பரத்திலுள்ள திருச்சுற்று மாளிகையின் சுவர்கள் முதலாங்குலோத்துங்கன், விக்கிரமசோழன் ஆகியோரின் காலங்களில் அமைக்கப்பெற்றன. அதன் பகுதிகள் சோழன் திருமாளிகை, விக்கிரமசோழன் திருமாளிகை என்னும் பெயர்களால் வழங்கியமை கவனித்தற்குரியது.
தில்லையில் முன்பு, சயதரனின் சேனாதிபதியான நரலோகவீரன் செய்த திருப்பணிகள் சாசனச் செய்யுள்களிற் போற்றப் படுகின்றன. அவன் பொன்னம்பலம், பேரம்பலம் ஆகியவற்றைப் பொன் வேய்ந்தான். கிழக்கிலுள்ள கடலின் தீர்த்தத்துறைக்குப் போகும் வழி அவனால் அமைக்கப்பட்டது. அதன் விழா மண்டபமும், குளமும் அமைக்கப்பட்டன. இரண்டு கோபுரங்களுடன் அமைந்த நரலோகவீரன் திருமாளிகை அவனுடைய திருப்பணியென்றும் சொல்லப்படுகின்றது. பசுபதியும்
ஆய்வரங்கு 2008

Page 43
தேவியும் வீற்றிருக்கும் நூற்றுக்கால் மண்டபமும், திருக்காமக்கோட்டமும் அதன் கோபுரவாசலும் திருச்சுற்று மாளிகையும் கற்றளிகளாக நரலோகவீரனால் அமைக்கப்பெற்றன."
“கோயில் முன் ஏழ்நிலை கொண்டதோர் கோபுரவாயில் வகுத்தபிரான்” என்று இரண்டாம் குலோத்துங்கனை அவைக்களப் புலவராகிய ஒட்டக்கூத்தர் சிறப்பித்துப்பாடுவார். மேலும், அவர் அவனை இராசராச சோழனுலாவில் மேல்வருமாறு புகழ்ந்து பாடுகின்றார்:
'சேய பெரிய திருக்குலத்து - நாயகன் சிற்றம்பலமும் திரும்பெரும் பேரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய மாளிகையும் பீடிகையும் மாடமும் கோபுரமும் திருக்காமக் கோட்டமும் அக்கோயில்
வாயில் திருச்சுற்று மாளிகையும் தாயசெம் பொன்னிற் குயிற்றி”
முன்பு அமைக்கப்பெற்ற கட்டடங்கள் பலவற்றைக் குலோத்துங்கள் பொன் வேய்ந்தான் என்ற செய்தி இதனால் உணரப்படுகின்றது. சிதம்பரத்திலுள்ள “கீழைக்கோபுரம், வடக்குக் கோபுரம் என்பவற்றின் தலைவாயில்களும், திருக்காமக் கோட்டம் என்ற சிவகாமி அம்மன் கோயிலும், அக்கோயிலின் திருச்சுற்று மாளிகையும் இக்குலோத்துங்கன் காலத்திலேயே கட்டடப்பட்டன. இம்மன்னனுடைய அமைச்சரான சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணம் தில்லை ஆயிரங்கால்மண்டபத்தில் அரசன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது” பெரிய புராணம் “ஐயிரு நூறுகால் மணிமண்டபம்’ என்பதிலே அரங்கேற்றப்பட்டதென்று 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழார் சுவாமிகள் புராணத்திலே குறிப்பிடுகின்றார்?
திருக்காமக்கோட்டம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், எழுநிலைக் கோபுரம்,
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

திருச்சுற்று மாளிகை என்பன தென்னிந்தியக் கோயிலமைப்பிலே பிரதானமான புதிய அம்சங்களாக, இக்காலப் பகுதியில் வளர்ச்சி பெற்றமையினை சிதம்பரம் கோயிலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை கவனித்தோம். இப்போது இக்காலப்பகுதியிலே புதிதாக அமைக்கப் பட்டனவாகிய ஜராவதேசுவரம், கம்பஹரேசுவரம் என்னுங் கோயில்களின் அம்சங்களைச் சுருக்கமாக விவரித்தல் அவசியமாகின்றது.
இராஜராஜேஸ்வரம்
இரண்டாம் இராசராசன் (1146-1173) இராசராசபுரத்தில் அமைப்பித்த ஐராவதேஸ்வரம் என வழங்கும் இராஜராஜ - ஈஸ்வரம் பிற்காலச் சோழரின் திருப்பணிகளிற் தலைசிறந்து விளங்கும் கற்றளியாகும். இக்கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், இராச கம்பீரன் திருமண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. அதிஷ்டானப் படையிற் சைவ நாயன்மாரின் கதைகளின் அம்சங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் அவர்களின் பெயர்கள் எழுதப் பெற்றுள்ளன. சிற்பங்களிலுள்ள நாயன்மாரின் வரிசை சுந்தரரின் திருத்தொண்டத் தொகையில் உள்ளவாறு போல அமைந்துள்ளது.
“இக்கோயிலின் விமானம் ஐந்து தளங்களை உடையது. மேலே வட்டமான கிரீவமும் சிகரமும் உள்ளன. முதலிரண்டு தளங்களும் அர்த்த மண்டபமும் முகப்பில் பஞ்சரங்களால் அணி செய்யப்பட்டுள்ளன. அக்ரமண்டபத்தின் தூண்கள் வீற்றிருக்கும் சிங்கங்களின் தலைமீது அமைந்துள்ளன. அவை அகலமான பலகைகளையும் போதிகைகளையும் கொண்டவை. மூன்று பக்கங்களிலும் தூண்களின் மீது உத்திரங்களும் அவற்றின் மீது கைப்பிடிச் சுவர்களும் சுவர்கள் மீது இடபச் சிலைகளும் காணப்படுகின்றன. அக்ர மண்டபத்தின் வடக்கே உள்ள அம்மன் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தது ஆகலாம்”*
33

Page 44
விமானம் தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம் ஆகியவற்றிலுள்ள விமானங்களைப் போன்றது. ஆயினும், அவற்றிலும் அளவிற் சிறியது. கோயில் வளாகம் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த பிராகாரத்தினுள் அமைந்துள்ளது. பிராகாரத்தோடு இணைந்து திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. அதன் சுவர்களில் 108 சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. வெளிக்கோபுரம் தனிச் சிறப்புடையது. இதன் தலைவாயிலைச் சுற்றி புறச் சுவர்களில் கோஷ்டங்கள் உள்ளன. சிலைகளிற் பெயர்கள் பொறிக்கப் பட்படிருக்கும் அம்சத்தில் இக்கோபுரம் தில்லை மூன்றாம் திருச்சுற்று மாளிகையிலுள்ள மேலைக் கோபுரத்தை ஒத்திருக்கின்றது.
“வடபுறத்தில் ஆதி சண்டேசுவரர், கங்காதேவி, தும்புரு நாரதர், வைஸ்ரவணன், சந்திரன், மகாசாஸ்தா, நாகராஜா, வாயு என்ற 8 பெயர்களும் மேற்புறத்தில். தேவி, ருத்திராணி, வைஷ்ணவி, பிராமி, வருணன், நந்திதேவர், பெரிய தேவர், சாந்தயாதீத சக்தி, சாந்திதேவி, வித்யாசக்தி, பிதிஷ்டா சக்தி, நிவர்த்தி சக்தி என்ற12பெயர்களும் தென்புறத்தில் தட்ச பிரஜாபதி, யமுனாதேவி, இரதி, காமதேவன் என்ற 4 பெயர்களும், கீழ்ப்புறத்தில் அக்கினி தேவர், அகத்திய தேவர், பூரீதேவி, துர்க்காதேவி, தேவேந்திரன்,பத்மநிதி, சூரியதேவர், சுப்பிரமணிய தேவர், க்ஷேத்திர பாலர், சரசுவதி, விச்வசர்மா, ஈசானதேவர் ஆகிய 12பெயர்களும் என
36 பெயர்கள் காணப்படுகின்றன.”
ஐராவதேசுவரத்திலுள்ள தூண்கள் நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்தவை. அங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வனப்புடையவை. அதன் காரணமாக அது தனிச்சிறப்பான கலைவனப்புடன் பொலிந்து விளங்குகின்றது.
திரிபுவனம் கோயில்
மூன்றாங் குலோத்துங்கன் (1178-1216) பாண்டியரை வென்று மதுரையில் வீராபிஷேகம்
34

பெற்று, வெற்றிவிழாக் கொண்டாடிய சமயத்திலே திரிபுவனவீரதேவன் என்னுஞ் சிறப்புப் பெயரைப் பெற்றான். பழையாறை, கும்பகோணம் ஆகியவற்றுக்கு இடையில் அவனால் அமைக்கப்பெற்ற பெருங்கோயில் திரிபுவனவீர - ஈஸ்வரம் என்னும் பெயரைப் பெற்றது. ஆனால் இப்பொழுது அது கம்பஹரேஸ்வரம் என்று சொல்லப்படுகின்றது. அக்கோயில் அமைந்துள்ள ஊர்திரிபுவனம் என்ற பெயரால் வழங்கி வருகின்றது.
இக்கோயில் இரண்டு கோபுரங்களையும் இரண்டு பிராகாரங்களையுங் கொண்டுள்ளது. கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், அந்தராளம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகியன பிரதான கோயிலின் பகுதிகளாகும். கர்ப்பக்கிருகம் உள்ளே 3.81 மீற்றர் சதுரமாகும்; வெளியே அது 18:29 மீற்றர் அளவுடைய சதுரமாகும். கர்ப்பக்கிருகத்தின் சுவர்கள் 35 அடி உயரமானவை. அதன் மேல் அமைந்துள்ள ஆறுதள விமானம் 91 அடி (2770 மீற்றர்) உயரங்கொண்டது. நிலமட்டத்திலிருந்து தூபியின் நுனிவரைக் கோயிலின் உயரம் 126 அடியாகும். (38.40 மீற்றர்).
தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப்போன்று திரிபுவனத்துக் கோயிலும் மிக உயரமான உபபீடத்தில் அமைந்துள்ளது. அதனாற் கட்டடம் மிகுந்த கவர்ச்சியான வடிவத்தையும் அலங்காரத் தோற்றத்தையும் பெற்றுள்ளது. உபானம்,பத்மதளம், வியாளமாலம், கண்டம் முதலிய அம்சங்களும், அவற்றின் மேலே கொடுங்கையும் நாட்டியக் கோலமான சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதிஷ்டானத்தில் மூன்றுதள உபானம், பத்மதளம், குமுதம், கண்டம், கபோதம், வியாளமாலயம், வேதிகை என்னும் அம்சங்கள் காணப்படுகின்றன. குமுதப்படையிலே தாமரைப் பூவின் இதழ்கள் போன்ற வடிவங்கள் நிமிர்ந்த வடிவிலுங் கவிழ்த்த கோலத்திலுங் கீழும் மேலுமாக
ஆய்வரங்கு 2008

Page 45
அமைக்கப்பட்டுள்ளன. இராமாயணக் கதையினை விளக்கும் சிறிய சிற்பங்கள் வரிசையாகத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பக்கிருகத்தின் சுவர்களிலே, முன்புறமாக நீட்டி அமைக்கப்பெற்ற கட்டடத் தொகுதிகளிலே தேவகோட்டங்கள் உள்ளன. அவற்றிலே தெற்கிலே தகூழிணாமூர்த்தியும், மேற்கில் இலிங்கோத்பவரும், வடக்கிற் பிரமனும் அமைந்துள்ளனர். சுவர்ப்பாகம் ஒவ்வொன்றிலும் சதுரமான பீடமும், எண்கோண வடிவமான தண்டும், கண்டம், கும்பம், குமுதம் முதலிய அம்சங்கள் பொருந்திய தூண்கள் அமைப்புகள் காணப்படும். தேவகோட்டங்களின் பக்கங்களில் அரைத்துரண்கள் அமைந்துள்ளன. " அர்த்த மண்டபத்தின் தெற்குப் பக்கத்திலே கணேசரின் படிமமும், வடக்குப் புறத்திலுள்ள தேவகோட்டத்திலே ஷட்புய துர்க்கையின் உருவமும் உள்ளன.
கர்ப்பக்கிருகம், திருக்காமக்கோட்டம், சண்டேசுவரர் சந்நிதி, சரபாமூர்த்தி கோயில் ஆகியவை முதலாம் பிராகாரத்திலுள்ளன. வடக்குப் பக்கத்திற் சிறிய தேவகோட்டங்கள் உள்ளன. வசந்த
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடம், துவஜஸ்தம்பம் ஆகியன இரண்டாம் பிராகாரத்தில் உள்ளன.
திருக்காமக் கோட்டம் அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்த பீடமொன்றில் அமைந்திருக்கின்றது. அதன் இறையகம் சதுர வடிவமானது. விமானத்தின் கிரீவமுஞ் சிகரமும் வட்டமானவை. முன்னால் அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்னும் அமைப்புகள் உள்ளன. அவை யாவும் ஒரு பொதுவான அதிஷ்டானத்தில் அமைக்கப்பெற்றுள்ளன. அதில் உபானம், பத்மம், ஜகதி, திரிபட்டகுமுதம் என்னும் படைகள் உள்ளன. இறையகச் சுவர்கள் மூன்றில் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்போரின் படிமங்கள் உள்ளன.
சரபாமூர்த்திக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளமை திருபுவனம் கோயிலின் தனிச்சிறப்பாகும். சரபாமூர்த்தியின் வழிபாடு சோழர் காலத்தின் பிற்பகுதியிலே செல்வாக்குப் பெற்றது. அங்குள்ள சரபாமூர்த்தியின் வெண்கலப் படிமம் காமிகாமத்திலே சொல்லப்பட்டவாறு அமைக்கப்படவில்லை."
35

Page 46
10.
1.
12.
13.
14.
15.
அடிக்குறிப்புகளும்
S.R.பாலசுப்பிரமணியம்,சோழ கலைப்பாணி, ப. 119. மேலது,பக். 49-452. மேலது,பக். 43-44 மேலது,பக்.50-51
மேலது, பக்.51. மேலது, பக். 52-53.
K.A. Nilakanta Sastri, A History of South India, pp.
456-6.
S.R.பாலசுப்பிரமணியம், ப. 94.
மேலது.
மேலது.
மேலது,பக்.94-95.
மேலது.
மேலது. K.A. Nilakanta Sastri, A History of South India, p.
467.
மேலது, பக். 468-9.
36
 

விளக்கவுரைகளும்
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
இந்துக்கலைக் களஞ்சியம் - பகுதி 111, பிரதம பதிப்பாசிரியர் சி. பத்மநாதன், வெளியீடு : இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,கொழும்பு 1996,பக்.
19-26.
திவைசதாசிவபண்டாரத்தார்,பிற்காலச் சோழர்வரலாறு அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,1974, ப. 641
S.R. பாலசுப்பிரமணியம்,சோழர் கலைப்பாணி, ப.141 மேலது,பக். 143.
மேலது, ப. 159.
மேலது. ப. 160.
மேலது.
மேலது. ப. 166.
மேலது.
இந்துக் கலைக் களஞ்சியம் - பகுதி 111 பிரதம பதிப்பாசிரியர் சி. பத்மநாதன், இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1996, பக். 138
145.
ஆய்வரங்கு 2008

Page 47
சோழர் காலச் சை
நடன காசி
சோழர் காலச் செப்புப் பட்டயங்கள் இதுவரை 17 கிடைத்துள்ளன. இவற்றில் காலத்தால் மிகவும் பழமையானது உதயேந்திரத்தில் கிடைத்துள்ள முதலாம் பராந்தகனின் செப்பேடாகும். 1. இச்செப்பேட்டை அண்மைக்காலம் வரை கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதியினுடையது என்றே குறித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இது முதலாம் பராந்தகனுடையது தான் என்பது உறுதியாகி விட்டது. 2. இச்செப்பேடு பராந்தகச் சோழனின் 15-ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டிருக்கிறது. இச்செப்பேட்டை அடுத்து இதே மன்னனின் வேலஞ்சேரி செப்பேட்டைக் குறிப்பிடுதல் வேண்டும். 3. இது பராந்தகச் சோழனின் 25-ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக் கிறது. இதனையடுத்த சுந்தர சோழன் காலத்திய அன்பில் செப்பேட்டைக் குறிப்பிடுதல் வேண்டும். 4. இச்செப்புப் பட்டயம் சுந்தர சோழனின் நான்காம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. இம்மன்னன் முதலாம் இராஜராஜனின் தந்தையாவான். அடுத்து வரிசையில் வைத்து எண்ணத்தக்கது பள்ளன்கோயில் செப்புப் பட்டயமாகும். 5. இது சுந்தர சோழன் காலத்தியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்பொழுது இச்செப்புப் பட்டயம் தமிழ்நாடு அரசு, தொல்பொருள் ஆய்வுத் துறையில் உள்ளது. இது முழுமையாக இல்லை. பதின்மூன்றாம் ஏட்டின் முதல் பக்கத்திலிருந்து இருபத்து மூன்றாம் பக்கத்தின் இரண்டாம் பக்கம் வரை உள்ளன. சென்னை அருங்காட்சியகத்தில் உத்தம சோழன் காலத்திய செப்புப் பட்டயம் உள்ளது. 6.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

பிபுப் படயங்கள்
நாதன்
முதலாம் இராஜராஜன் காலத்தைச் சார்ந்த பெரிய லெயிடன் செப்பேடு என்னும் ஆனைமங்கலச் செப்பேட்டை அடுத்ததாகக் குறிப்பிடுதல் வேண்டும். 7. இச்செப்பேடு ஹாலந்து நாட்டில் உள்ள லெயிடன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. மொத்தம் இருபத்தொரு ஏடுகளைக் கொண்டதாக இது விளங்குகிறது. முதலாம் இராஜராஜனின் 21-ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதலாம் இராஜேந்திரன் காலத்திய திருவாலங்காட்டுச் செப்பேட்டைக் 8. குறிப்பிடலாம். முதலாம் இராஜேந்திர சோழனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இச்செப்பேட்டுக்கு அடுத்து வரிசை முறையில் வைத்துக் கருதத்தக்கது கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடு ஆகும். 9. இதுவும் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் வெளியிடப்பட்டது. இப்பட்டயம் ஐம்பத்தேழு ஏடுகளைக் கொண்டது. இவ்வேடுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. முதல் மூன்று ஏடுகள் சமஸ்கிருதப் பகுதியையும், அடுத்த இருபத்திரண்டு ஏடுகள் அளிக்கப்பெறும் கொடையைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ்ப் பகுதியையும், அடுத்த முப்பத்திரண்டு ஏடுகளில் கொடையைப் பெறும் பிராமணர்கள், கோயில்கள், வழிபாடுகள் ஆகியவைகளைத் தெரிவிக்கும் பகுதியையும் காண முடிகிறது. இம்மூன்று பகுதிகளுமே தனித்தனியாக எண்கள் இடம்பெற்றுள்ளன.
37

Page 48
இச்செப்பேட்டில் காணப் பெறும் ஒரு சிறப்பு அம்சம் தமிழ் எழுத்தில் காணப்பெறும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதியில் உள்ள ஏடுகளில் முதற் பக்கத்தில் 'த்ருபு அல்லது 'திரிபு என்று எழுதப் பெற்றிருப்பதாகும். இச்சொல் திரிபுவனச் சதுர்வேதிமங்கலம் என்னும் ஊர் ஏற்படுத்தப் படுவதற்காக இச்செப்பேடு வெளியிடப்படுகிறது என்பதைத் தெரிவிப்பதாகும். அடுத்துக் கருதத்தக்கது இம்மன்னனது திருக்களர்ச் செப்பேடாகும். 10. முதலாம் இராஜாதிராஜன் காலத்திய திருக்களர் செப்பேடு அடுத்து இடம் பெறுகிறது.1
வீரராஜேந்திரன் காலத்தில் வெளியிடப்பெற்ற சராலா செப்புப் பட்டயத்தை 12. இதற்கு அடுத்ததாகக் கூறலாம். இதனையடுத்து வருவது, முதலாம் குலோத்துங்கன் காலத்தில் எழுதப்பெற்ற சிறிய லெயிடன் செப்பேடு. 13. இம்மன்னன் காலத்திய மற்றொரு செப்பேடு திருக்களர்ச் செப்பேடாகும். 14. காலக் கணக்கில் இச்செப்பேட்டை அடுத்ததாகத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராஜராஜதேவன் காலத்தில் வெளியிடப்பெற்ற திருக்களர்ச் செப்பேட்டைக் கூறலாம். 15. இதற்கு அடுத்து மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்த திருக்களர்ச் செப்பேட்டையும் 16. இதனையடுத்து இராஜகேஸரிவர்மன் காலத்தைச் சேர்ந்த இரண்டு செப்பேடுகளையும் 17. கூறலாம். கடைசியாகக் கூறப்பெற்ற இருசெப்பேடுகளும் திருச் செங்கோட்டிலிருந்து கிடைக்கப் பெற்றவையாகும். ஆக மொத்தம் பதினேழு செப்பேடுகள், சோழர் காலத்தைச் சார்ந்ததாக இதுவரை கிடைத்துள்ளன.
உதயேந்திரம் செப்பேடு : (முதலாம் பராந்தகன் காலம்)
இச்செப்பேட்டில் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு பகுதிகள் உள்ளன. சமஸ்கிருதப் பகுதி முதல் ஐந்து ஏடுகளிலும், தமிழ் பகுதி இரு ஏடுகளிலும் எழுதப்பெற்றுள்ளன. சமஸ்கிருதப் பகுதி கிரந்த எழுத்திலும், தமிழ்ப் பகுதி தமிழ் எழுத்திலும்
38

காணப்படுகின்றன. இச்சேப்பேட்டின் சமஸ்கிருதப் பகுதியில் புராண காலத்துச் சோழ முன்னோர் களைப் பற்றியும், சங்க காலத்துச் சோழ மன்னர்கள் பற்றியும், பின்னர், பாராந்தகச் சோழனின் பாட்டன், தந்தை ஆகியோரைப் பற்றியும் காண முடிகிறது. பிரமன், மரீசி, காஸ்யப, சூரியன், ருத்ரஜித், சந்த்ரஜித், சிபி ஆகியோர் புராண காலச் சோழ முன்னோர்களாகக் குறிக்கப்படுகின்றனர். கோக்கிள்ளி சோழன், கரிகாலன், கோச் செங்கணான் ஆகியோர் சங்க காலச் சோழர்களாகவும், விஜயாலயன், ஆதித்தன் ஆகியோர் பராந்தகச் சோழனின் பாட்டன், தந்தை ஆகியவர்களாகவும் பேசப்படுகின்றனர்.
அதற்குப் பின்னர் பராந்தகனின் சிற்றரசனான கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதியின் முன்னோர் வரிசை குறிக்கப்படுகிறது.
தமிழ்ப் பகுதி “மதிரை கொண்ட கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு பதினைந்தாவதற்கு” என்று தொடங்குகிறது. செம்பியன் மாவலிவாணராயர் விண்ணப்பத்தால் பெருமானடிகள் (முதலாம் பராந்தகன்) தம் பெயரால் பிரமதேயம் ஏற்படுத்தியதைக் குறிக்கிறது. படுவூர்க் கோட்டத்து மேலடையாறு நாட்டுக் கடைக் கோட்டுரை உதயச் சந்திரமங்கலத்தோடு இணைத்து வீரநாராயணச் சேரி என்று பிரமதேயமாக்கி, அதன் எல்லை விவரங்களையும் தெரிவித்து எழுதப்பட்டிருப்பதை இச்செப்பேடு புலப்படுத்துகிறது.
வேலஞ்சேரி செப்புப் பட்டயம்: (முதலாம் பராந்தகன் காலம்)
தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையால் 1977-ஆம் ஆண்டு, வேலஞ்சேரியில், முதலாம் பராந்தகன் காலத்தியச் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது. இச்செப்பேட்டோடு, பல்லவ மன்னன் அபராஜிதன் காலத்தைச் சார்ந்த மற்றொரு செப்பேடும் கண்டறியப்பட்டது. 18. இரண்டு செப்பேடுகளுமே முறையே சோழர், பல்லவர்
ஆய்வரங்கு 2008

Page 49
வரலாற்றில் பல புத்தொளியைப் பாய்ச்சியுள்ளன. குறிப்பாகப் பராந்தகன் காலத்திய செப்பேட்டின் மூலம் பல புதிய செய்திகளைச் பெற முடிகிறது.
சங்ககாலச் சோழன் கரிகாலன் இமயத்தில் புலிச் சின்னம் பொறித்ததையும், காஞ்சி மாநகரை வென்றதையும், அங்கே பல வியத்தகு அரண்மனைகள் அமைத்ததையும்,கோச்செங்கண்ண மன்னர் சிலந்தி கதையையும் தெரிவிக்கிறது. இதுவரை எந்த செப்பேடும் கூறாத மற்றொரு புதிய செய்தியையும் இது குறிக்கிறது. அதாவது விஜயாலயச் சோழனின் தத்தையாக ஒற்றியூரன் என்னும் அரசனைக் குறிப்பிடுவதாகும். அஃதன்றி இச்செப்பேட்டை வெளியிட்ட பராந்தகச் சோழன் கன்னியாகுமரி, இராமேஸ்வரம் மற்றும் பூரீரங்கம் ஆகிய இடங்களில் துலாபாரம் செய்ததாகவும் விவரிக்கிறது.
வழக்கம் போலவே இச்செப்பேடும் சமஸ்கிருதம், தமிழ் என்ற இரு பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இரு பகுதிகளுமே பொதுவாகப் பராந்தகன் அளித்த கொடையைத் தெரிவிக்கின்றன. தமிழ்ப் பகுதி இக் கொடையை விரிவாகக் குறிப்பிடுகிறது. தாலைவேடு, மயங்காடு, கிலகல் ஆகிய கிராமங்களைப் பிரமதேயமாக, மேலிருஞ்செறுவில் உள்ள வேத வேதாந்தங்களில் தேர்ந்தவர்களான பிராமணர்களுக்கு வழங்கியதைக் தெரிவிக்கிறது.
அன்பில் செப்பேடு : (சுந்தர சோழன் காலம்)
வேலஞ்சேரி செப்புப் பட்டயம் கிடைக்கும் வரையிலும், உதயேந்திரம் செப்புப் பட்டயத்தைப் பராந்தகன் செப்புப் பட்டயம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு முன்பு வரையிலும், அன்பில் செப்பேடுதான் சோழர்கள் காலத்திய செப்பேடுகளில் பழமையானது என்று கருதப்பட்டு வந்தது. அன்பிலைச் சேர்ந்த நாராயண அநிருத்த பிரம்மாதிராஜர் என்பவருக்கு, திருவழுந்தூர் நாட்டில் உள்ள நன்முழான்குடி என்னும் ஊரைச்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சேர்ந்த நிலங்களை ஏகபோக பிரமதேயமாக இராஜகேசரி சுந்தர சோழன் அளித்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ஏகபோக பிரதேயமாக அளிக்கப்பட்டது என்பதிலிருந்து பிராமணர்களின் அனுபவத்துக்கே வழங்கப்பட்டது என்றும், அரசுக்கு உணரப் படுகிறது. இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் “சர்வ பரிஹாரம்’ (வரி 181) என்னும்சொல் செப்பேட்டில் பயன்படுத்தப் பட்டிருப்பது கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.
திருச்செங்கோடு செப்பேடுகள் : (சுந்தர சோழன் காலம்)
திருச்செங்கோட்டிலிருந்து இரண்டு செப்புப் பட்டயங்கள் கிடைத்திருக்கின்றன. முதல் பட்டயம் இரு பகுதிகளாக உள்ளன. இரு பகுதிகளும் முதல் எட்டின் இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருக் கின்றன. இப்பட்டயம் கோவி ராஜகேசரிவர்மனின் 10-ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
மழவரையன் சுந்தர சோழன் என்பான் தூசியூர் நகரத்தாரிடமிருந்து முழு மனைக்கு கால் (காசும்), அரை மனைக்கு அரைக்கால் (காசும்) இறை வசூலிப்பது என்றும், இறை கொடுக்க மறுத்தவர்கள் மீது நந்திபுரத்தில் வழக்கில் உள்ளவாறு தண்டம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது.
இப்பட்டயத்தில் குறிக்கப் பெறும் இராஜகேசரி முதலாம் இராஜராஜனாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எழுத்தமைதியைக் கொண்டும், மழவரையன் சுந்தர சோழன் என்ற பெயரில் அதிகாரி ஒருவன் குறிக்கப்படுவதாலும் இம்மன்னன் சுந்தர சோழன் என்று கொள்வதே சரியானதாகத் தோன்றுகிறது. இப்பட்டயத்தின் இரண்டாம் பகுதி, கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழன் தம் தந்தை ஈழத்தில் இறந்து விடவே அவர் (பூரீ மதாஹத்துக்கு) நீர் வேட்கையைத் தணிப்பதற்குத் தூசியூர் திருக்கற்றளி பரமேஸ்வரர்க்கு நிலக்கொடை அளித்தைக் குறிக்கிறது.
39

Page 50
இரண்டாம் பட்டயம் மூன்று ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன. கோவிராஜகேஸரிவர்மன் 5ஆம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்டவர்மன் என்பார், தூசியூர்த் திருக்கற்றளி திருமூலஸ்தானமுடைய பரமேஸ்வரர்க்கு உதகபூர்வஞ்செய்து கொடுத்த நிலத்தின் எல்லைகளை விவரிக்கிறது இப்பட்டயம்.
முன்பு எழுதப் பெற்றிருந்த சாசனத்தை அழித்து அதே செப்புத் தகடுகளில் இப்பட்டயத்தை எழுதியிருக்கலாம் என்று இப்பட்டயத்தைப் பதிப்பித்தவர்கள் சந்தேகிக்கின்றனர். 19. அச்சந்தேகம் நியாயத்தின் பாற்பட்டதாகவே தெரிகிறது.
முதல் செப்புப் பட்டயத்தின் முதல் மற்றும் இரண்டாம் பகுதியில் கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழன் தூசியூர் நகரத்தாரிடம் இறை வசூலித்தது பற்றியும், தூசியூர் திருக்கற்றளி பரமேஸ்வரர்க்கு நிலக்கொடை அளித்ததைப் பற்றியும் குறிப்பிடப்படுகிறது.
இந்த இரண்டாம் பட்டயத்தில் கொல்லிமழவன் ஒற்றியூரன் பிரதிகண்டவர்மன் நிலக்கொடை அளித்தது குறிக்கப்பட்டுள்ளது. கொல்லிமழவன் ஒற்றியூரன் பிரதிகண்டன் தந்தையாகவும், கொல்லிமழவன் பிரதி கண்டன் சுந்தர சோழன் மகனாகவும் இருக்கலாம் என்று ஊகிக்கலாம். ஆதலால்தான் இரண்டாம் பட்டயம் மன்னனின் 5ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. 5ஆம் ஆட்சி ஆண்டில் உயிரோடிருந்த கொல்லிமழவன் ஒற்றியூரன் பிரதிகண்டன் 10-ஆம் ஆட்சி ஆண்டில் இறந்து விட்டான் போன்று தெரிகிறது. ஆதலால் 10-ஆம் ஆட்சி ஆண்டில் அவன் மகன் கொல்லிமழவன் பிரதிகண்டன் சுந்தர சோழன் குறிக்கப்படுகிறான். அதுமட்டுமல்லாமல் ஈழத்தில் இறந்துபட்ட தன் தந்தை என்று பிரதிகண்டன் சுந்தர சோழன் குறிக்கப்படுவது ஒற்றியூரன் பிரதிகண்டனையேயாகும் என்று
40

ஊகிக்கலாம். அவ்வாறெனில் சுந்தர சோழனின் 9ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு 20. கொடும்பாளூர் சிறிய வேளார் ஈழத்துக்குப் படை நடத்திச் சென்று, அங்கு போரிட்டு அப்போரில் இறந்து விட்டதைத் தெரிவிப்பது நாம் மேலே கொண்ட கருத்தை உறுதிப்படுத்துகிறது.
பள்ளன் கோயில் செப்பேடு : (சுந்தர சோழன் காலம்)
இச்செப்புப் பட்டயம் முழுமையாக இல்லாதது. மற்ற சோழர் காலச் செப்புப்பட்டயங்களைப் போலவே இதிலும் சமஸ்கிருதம், தமிழ் என்று இரு பகுதிகள் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது கிடைத்துள்ளவற்றில் சமஸ்கிருதப் பகுதியும், தமிழ்ப் பகுதியின் தொடக்கப்பகுதியும் காணப்பெறவில்லை. இச்செப்பேடுகளை நாம் கண்டுபிடித்தல் வேண்டும். இது குறைந்த பகுதியையே உடைய செப்புப் பட்டயம் என்றாலும் ஒரளவுக்குச் செய்தியைத் தரக் கூடியதாக இருக்கிறது.
உம்பள நாட்டில் உள்ள இருமுடி சோழபுரத்து நகரத்தாரிடமிருந்து செலேட்டி குடியன் என்னும் வியாபாரி நிலம் வாங்கி, அதில் சுந்தர சோழப் பெரும் பள்ளி அமைத்து, அப்பள்ளிக்கு இறையிலிப் பள்ளிச் சந்தமாக நிலம் தானம் அளிக்கப் பெற்ற நிலம் இரு வேறிடங்களில் அமைந்திருந்ததாகத் தெரிகிறது. புறங்கரம்பை நாட்டில் உள்ள தனமலிப் பூண்டியைச் சார்ந்த முப்பது வேலி நிலமும், உம்பள நாட்டைச் சேர்ந்த நிலம், மிகுதி நிலமாகவும் குறிக்கப்பட்டுள்ளது. உம்பள நாட்டில் எந்த ஊரைச் சார்ந்தது என்பதை அறிய இயலவில்லை.
சென்னை அருங்காட்சியகச் செப்பேடு : (உத்தம சோழன் காலம்)
இப்பட்டயம் ஐந்து ஏடுகளைக் கொண்டதாக உள்ளது. மற்ற செப்பேடுகளைப் போலவே இதுவும் சமஸ்கிருதம், தமிழ் என்ற இரு பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. கச்சிப்
ஆய்வரங்கு 2008

Page 51
பேட்டிலிருந்து (காஞ்சிபுரம்) கோப்பரகேசரி வர்மன் உத்தம சோழன், தம் அமைச்சரின் வேண் டுகோளுக்கிணங்க, கச்சிப்பேட்டு விஷ்ணு கோயிலுக்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த பல கொடைகளைத் தம் ஆட்சியிலும் உறுதிப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டதை இச்செப்புப் பட்டயம் புலப்படுத்துகிறது. கூரம் மற்றும் அரிய பெரும்பாக்கம் கிராமங்கள் கச்சிப்பேட்டுக் கோயிலிலிருந்து 250 கழஞ்சு கடன் பெற்றதற்கு வட்டியாக ஆண்டு ஒன்றுக்கு 500காடி நெல் அளிக்க வேண்டும் என்றும், காஞ்சிபுரத்துக்குஅருகிலுள்ள கிராமத்தினர் கோயிலிலிருந்து தாங்கள் வாங்கியிருந்த கடனுக்கு வட்டியாக ஆண்டு ஒன்றுக்கு 5 சதவிகிதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது.
பெரிய லெய்டன் செப்பேடு :
(முதலாம் இராஜராஜன் காலம்)
இது வரை கூறப் பெற்ற செப்பேடுகளைக் காட்டிலும், இப் பட்டயத்தில் சோழர் குலத்தைப் பற்றியும், கொடை பற்றியும் அதிகமான செய்தியைக் காண முடிகிறது.
சமஸ்கிருதப் பகுதியில், வழக்கம் போலவே சோழர் குலம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்றும், யார் யார் புராண காலச் சோழ மன்னர்களாகவும், சங்க காலச் சோழ மன்னர்களாகவும் விளங்கினார்கள் என்றும், வரலாற்றுக் காலச் சோழ மன்னர்களின் பரம்பரையில் யார் மகன் யார் என்றும், அவர்களது வீரமிகு செயல்கள் யாவை என்றும் அறிய முடிகிறது. புராணக் காலச் சோழ மன்னர்கள் மனு தொடங்கி, இக்ஷ்வாகு, மசுகுந்தா, வளபா, சிபி சோழன், இராஜகேசரி, பரகேசரி, சுரகுரு, வியாகரகேது, பஞ்சப என்று புராண காலச் சோழர்களைக் கூறி விட்டு, சங்க கால மன்னர்களான கரிகாலன், கோச்செங்கண்ணான், கோக்கிளியின் வழியில் வந்தவன் விஜயாலயன் என்றும், அவனது மகன் ஆதித்யன் என்றும், அவன் மகன் பராந்தகன் என்றும், அவன் மகன்கள் இராஜாதித்யன், கண்டராதித்யன் மற்றும் அரிஞ்சயன் என்றும், அரிஞ்சயன் மகன் இரண்டாம்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

பராந்தகன் என்றும், அவன் மகன் இரண்டாம் ஆதித்யன் என்றும், இவனுக்கு அடுத்து கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் ஆண்டான் என்றும், அவனையடுத்து இரண்டாம் பராந்தகனின் மகன் முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தான் என்றும் தெரிவிக்கிறது.
கரிகாற் சோழனைப் பற்றிக் குறிப்பிடும்போது இச்செப்பேடும் அவன் காவிரிக்குக் கரை அமைத்ததைத் தெரிவிக்கிறது. கோச்செங் கண்ணானைப் பற்றித் தெரிவிக்கையில் சம்புவின் காலடியில் சுற்றும் வண்டு என்று அம்மன்னனை வருணிக்கிறது. கோச்செங்கண்ணானுக்குப் பின் ஆட்சி செய்த கோக்கிள்ளி, அவன் வழியில் வந்த விஜயாலயன், ஆதித்யன் ஆகியோரைப் பற்றி வேறெந்த செய்தியும் கூறப்படவில்லை.
பராந்தகச் சோழனைப்பற்றிக் குறிப்பிடுகையில் (1) பெரிய நகரங்களை உருவாக்கினான் என்றும், (2) சில வெற்றிகளைப் பெற்றான் என்றும் (3) வியாக்ராக்ரஹாராவில் உள்ள சிவன் கோயிலுக்குப் பொன் வேய்ந்தான் என்றும் தெரிவிக்கிறது.
இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனோடு போரிடுகையில் பராந்தகனின் மைந்தன் இராஜாதித்யன் இறந்து விட்டான் என்று குறிப்பிடுகிறது. கண்டராதித்த சோழன் காவிரியின் வடகரையில் தம் பெயரால் ஒரு நகரம் அமைத்தான் என்றும், மதுராடந்தகன் என்னும் குழந்தை பிறந்த பிறகு கண்டராதித்தன் இயற்கை எய்தினான் என்றும் தெரிவிக்கிறது. திருச்சி மாவட்டத்திலுள்ள கண்டராதித்தம் என்னும் ஊரே அவன் காலத்தில் அமைக்கப்பட்ட நகரமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அரிஞ்சயனின் வீரசாகசங்கள் யாதும் குறிப்பிடப்படாமல், அவனது மகனான இரண்டாம் பராந்தகனின் சேவூர் போரும், அவனது மகன் இரண்டாம் ஆதித்யன் இளம் வயதினனாக
41

Page 52
இருக்கும் போதே வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டான் என்றும் குறிக்கப்படுகிறது. மதுராந்தகனைப் பற்றியும் ஒன்றும் சிறப்பாகக் கூறவில்லை. அவனுக்கு அடுத்துப் பட்டம் எய்திய முதலாம் 'இராஜராஜன் பாண்டிய, கேரள, துளு நாடுகளை வென்றான் என்றும், சிம்ஹனேந்திரனையும் சத்யாஸ்ரயனையும் தோற்கடித்தான் என்றும் விவரிக்கிறது.
தமிழ்ப் பகுதியில், இராஜராஜனின் 21- ஆம் ஆட்சி ஆண்டில், 92- ஆம் நாளில், தஞ்சாவூரில் இராஜாஸ்ரயன் என்னும் தம் அரண்மனையின் தென் பகுதியில் உள்ள மண்டபத்தில் தாம் அமர்ந்திருக்கையில், கடாரத்தரையன் சூளாமணி மணிபன்மன், கூடித்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப் பட்டணத்தில் எடுப்பித்திருக்கின்ற சூடாமணி விகாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக, கூடித்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து ஆனை மங்கலத்தைப் பள்ளிச் சந்தமாக அளித்ததைக் குறிக்கிறது.
திருவாலங்காடு செப்பேடு : (முதலாம் இராசேந்திரன் காலம்)
இப்பட்டயம் 31 ஏடுகளை உடையதாகவும், ஏடுகளின் இரு பக்கங்களிலும் எழுதப் பெற்றுள்ளதாகவும் காணப்படுகிறது. இவ்வேடுகள் அனைத்தும் ஒரே வளையத்தில் கோர்க்கப்பட்டு வளையத்தின் மீது சோழர் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம், தமிழ் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. கிரந்த எழுத்தில் எழுதப்பெற்றுள்ள வட மொழிப் பகுதி 271 வரிகளையுடையது. தமிழ் எழுத்தில் உள்ள தமிழ்ப் பகுதி 524 வரிகளைக் கொண்டது.
வடமொழிப் பகுதியில், சோழ மன்னன் விசயாலயன் தஞ்சாவூரை வென்று, தஞ்சையை தலைநகராக்கியதோடு, நிசும்பசூதனிக்கு கோயில்
42

எடுப்பித்தது, ஆதித்த சோழன் அபராஜிதப் பல்லவனை வென்றது, அவன் மகன் முதலாம் பராந்தகன் மதுரையையும், ஈழத்தையும் வென்றது, தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தது, பராந்தகன் மகன் முதலாம் இராஜாதித்தன் ராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனைத் தோற்கடித்தது, இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழன் இறந்துபட, அவன் பட்டத்தரசி வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியது, முதலாம் இராஜராஜன் பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்றது, அவன் மைந்தன் முதலாம் இராஜேந்திரன் பாண்டியனை வென்று, பாண்டிநாட்டில் தம் மகனைச் சோழ பாண்டியன் என்று பட்டம் சூட்டித் தம் பிரதிநிதியாக ஆக்கியது, இராஜேந்திரன் ஆணையை ஏற்று அவன் படைத் தலைவன் கங்கை வரை படை நடத்திச் சென்று அங்குள்ள மன்னர்களை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து, கங்கைகொண்டசோழபுரத்தில் சோழகங்கம் என்ற ஜலஸ்தம்பத்தை உருவாக்கியது ஆகியவை அழகாக வருணிக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பகுதி, கோநேரின்மை கொண்டான் என்று தொடங்குகிறது. இப்பகுதி இரு பிரிவாகக் காணப்படுகிறது. முதல் பிரிவுசயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற்கோட்டத்துப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையார் திருவாலங்காடு உடையார் கோயில் அம்மை நாச்சியார்க்குத் தேவதானமாக 251/2 வேலி நிலம் வழங்கப் பெற்றிருப்பதைத் தெரிவிக்கிறது. இரண்டாம் பிரிவு திருவாலங்காடுடைய மாதேவர்க்கு வழங்கப் பெற்ற கொடையைப் பற்றிக் குறிக்கிறது.
இராஜேந்திர சோழன், முடிகொண்ட சோழபுரத்து வீட்டின் உள்ளால் உள்ள கருமாளிகை மதுராந்தக தேவனில் தெற்கில் மறைவிடத்தில் எழுந்தருளி இருந்த போது இவ்வாணை வழங்கப்பட்டிருக்கிறது.
நடுவின்மலை பெருமூர் நாட்டுச் சிங்களாந்தகச் சருப்பேதி மங்கலத்துச் சபையார்க்கு பிரம்மதேயமாய்
ஆய்வரங்கு 2008

Page 53
இருந்து வந்த மேல்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூரை பிரம்மதேயத்தினின்று தவிர்த்து வெள்ளான் வகையில் மாற்றிப் பழையனூர் திருவாலங்காடு உடைய மகாதேவர்க்குக் கொடையாக வழங்கப் பெற்றது. இம்மாற்றத்தினால் திருவாலங்காடு மாதேவர்க்கு ஆண்டுதோறும் 3288 கலம் 7 குறுணி, 5 நாழி நெல்லும், 193 கழஞ்சு, 1 மஞ்சாடி, 1 மா பொன்னும் வருவாய் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.
கொடையாக வழங்கப்பட்ட ஊரின் அனைத்து வகையான நிலப் பகுதிகளும் அதில் அடங்கும் என்பதை “இவ்விசைத்த பெருநான் கெல்லையுள்ளும் அகப்பட்ட நீர்நிலனும் புன்செய்யும், ஊரும் ஊரிருக்கையும், மனையும் மனைப் படைப்பையும், மன்றும் குன்றும், குளமும் கொட்டகாரமும், புற்றும் தெற்றியும், காடும் பீடிலிகையும், களரும் உவரும், ஒடையும் உடைப்பும், ஆறும் ஆறிடுபடுகையும், மீன்பயில் பள்ளமும் தேன்பயில் புொதும்பும், மோனோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறும், கிடங்கும் கேணியும், ஏரியும் ஏரிநீர்க்கோப்பும் உள்ளிட்டு நீர் பூசி நெடும்பரம்பு எறிந்து உடும்போடி ஆமை தவழ்ந்த எவ்வகைப்பட்டதும் உண்ணிலம் ஒழிவின்றி” என்று தெரிவிக்கிறது.
கரந்தைச் செப்பேடு : (முதலாம் இராசேந்திரன் காலம்)
நராக்கன் மாராயன் என்னும் இராஜேந்திர சோழ பிரமாதிராஜனது வேண்டுகோளுக்கிணங்க, முதலாம் இராஜேந்திரன், தமது தாயின் பெயரில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் அக்ரஹாரத்தை அமைத்துத் தந்ததை இச்செப்பேடு குறிக்கிறது. மன்னனின் எட்டாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.
சமஸ்கிருத பகுதியில் முதல் பாடலிலிருந்து பன்னிரண்டாம் பாடல்வரை வழக்கம் போலவே சோழர் வம்சத்தின் புராண அரசர்களைப் பற்றி தெரிவிக்கிறது. பதின்மூன்றாம் பாடல் தொடங்கி
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

வரலாற்றுக் கால மன்னர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. சங்க காலச் சோழர் கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்ததைக் கூறுகிறது. அதற்கு அடுத்து பல மன்னர்களுக்குப் பிறகு அக்குலத்தில் விஜயாலயன் தோன்றினான் என்று குறிப்பிடுகிறது. அடுத்து ஆதித்யனைப் பற்றி விமர்சிக்கிறது. ஆதித்யனான சூரியன் எவ்வாறு இருளைப் போக்கியதோ அது போன்று தம் எதிரிகளை அழித்தான் என்று புலப்படுத்துகிறது. ஆதித்யனின் மகனான பராந்தகன் இலங்கை வேந்தனையும், பாண்டிய, கேரள, பல்லவ மன்னர்களையும் வென்றதாக குறிப்பிடுகிறது. தாம் வென்ற நாடுகளிலிருந்து கொண்டு வந்த தூய்மையான தங்கத்தால் வியாக்ராக்ர ஹாரா (சிதம்பரம்) வில் உள்ள சிவன் கோயிலுக்குப் பொன் வேய்ந்ததைத் தெரிவிக்கிறது. மேலும் பராந்தகன் தம் பெயரால் வீரநாரயாண அக்ரஹாரம் என்னும் ஊரை ஏற்படுத்தியதையும், ஆயிரக்கணக்கான கால் வாய்கள் அமைத்துச் சோழ நாட்டை வளப்படுத்தியதையும் விவரிக்கிறது.
பராந்தகனுக்குப் பிறகு அரிஞ்சயன் ஆட்சி செய்ததையும், அவனது மகன் இரண்டாம் பராந்தகன் தம் எதிரிகளோடு சேவூரில் போரிட்டதையும், வீரபாண்டியனை வென்றதையும் புகலுகிறது. இதனை அடுத்து இரண்டாம் பராந்தகனின் மகனான முதலாம் இராஜராஜனின் தோற்றத்தைக் குறிப்பிட்டுவிட்டு, அவன் சிங்கள, பாண்டிய, கேரள, கொங்க, மாளவ, ஆந்திர
அரசர்களை வென்றதும், அவர்களது நாடுகளிலிருந்து மிகுந்த செல்வங்களைக் கொண்டு வந்ததையும் தெரிவிக்கிறது.
முதலாம் இராஜராஜனுக்கு மகனாக மதுராந்தகன் பிறந்தான் என்று குறிப்பிடுகிறது. கலியை அழிக்க ஹரி பிறந்ததைப் போன்று பிறந்தான் என்று ஒப்பிடுகிறது. மதுராந்தகன் இளமைப் பருவத்திலேயே தன் குடும்பத்தாருக்கு புகழைச் சேர்ப்பவனாகவும், எதிரிகளுக்கு அச்சத்தைத் தோற்றுவிப்பவனாகவும், எல்லா வித
43

Page 54
போர்ப் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றவனாகவும் விளங்கினான் என்றும் கூறுகிறது.
இராஜேந்திரனது நட்பைப் பெறுவதற்காகவும், அதன் மூலம் தம் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், காம்போஜ நாட்டு மன்னன் இராஜேந்திர சோழனுக்கு ஒரு தேரை அனுப்பி வைத்ததாகவும், அதன் துணை கொண்டு இராஜேந்திரன் தம் எதிரிகளின் படைகளைத் தோற்கடித்தான் என்றும் கூறுகிறது. சக்கரக் கோட்டத்து மன்னனும் தம் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல யானைகளைப் பரிசாக இராஜேந்திரனுக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கிறது.
மான்யகேட்டாவைக் கைப்பற்றும்வரை தமக்கு ஒய்வு, உறக்கம் ஏதும் இல்லை என்று முதலாம் இராஜராஜன் சூளுரைத்ததையும், அதை அவன் நிறைவேற்ற முடியாமலேயே இறந்துவிட்டதையும், அவன் மகனான இராஜேந்திரன் தாம் தம் தலைநகரத்தில் இருந்து கொண்டே மான்ய கேட்டாவைத் தம் படை வலிமையால் தீயிட்டுக் கொளுத்தினான் என்றும், அரச குலப் பெண்க ளெல்லாம் மேக மூட்டங்களுக்கு இடையே எழும் மின்னலைப் போன்று தீயில் எரியும் அரண்மனையி லிருந்து எழும் புகைக் கூட்டத்திற்கு இடையே அச்சத்தினால் திகைத்து அங்குமிங்கும் ஓடினார்கள் என்றும் மிக அழகாக விவரிக்கிறது. அடுத்து இராஜேந்திரன் சிங்களத்திற்குச் சென்று இலங்கை வேந்தனையும், அவனது பெண்டிர் பண்டாரத்தையும் சிறைப் பிடித்ததையும், பாண்டியனது முடியைக் கைப்பற்றியதையும் புலனாக்குகிறது. இறுதியாக இராஜேந்திரன் கீழ்த்திசை நாடான கடாரத்தை வென்றதையும் தெரிவிக்கிறது.
செப்பேட்டின் தமிழ்ப் பகுதியானது, “நமக்கு (இராஜேந்திர சோழருக்கு) யாண்டு எட்டாவது, நாள் நூறேழிநால் நாம் பெரும்பற்றப் புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ ப்ரமாதிராஜனில் நாம்
44

உண்ணாவிருந்த” பொழுது இப்பரிசு அளிக்கப்பட்டதை புலப்படுத்துகிறது. ஐம்பத்தொரு ஊர்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு த்ரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்று ஒரு அக்ரஹாரம் ஏற்படுத்தி 1080 சதுர்வேதிபட்டர்களுக்குப் பங்காக அளிக்கப்பட்டதைக் கூறுகிறது. ஊர்களின் பெயர்கள், அவைகளின் எல்லைகள், பட்டர்களின் பெயர்கள், அவர்களது ஊர்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன.
திருக்களர்ச் செப்பேடு : (முதலாம் இராசேந்திரன் காலம்)
தஞ்சாவூர் மாவட்டம், திருக்களர் என்னும் ஊரைச் சார்ந்த பாரிஜாதவனேஸ்வரர் கோயிலைச் சேர்ந்தது இச்செப்பேடு. இச்செப்பேடு பற்றி முதன் முதலில் 1902-03 ஆம் ஆண்டு, கல்வெட்டு ஆண்டறிக்கையில் சிறுகுறிப்பு வெளிவந்தது. ஐந்து செப்புப் பட்டயங்கள் ஒரு வளையத்தில் கோர்த்துக் காணப்பட்டன. ஐந்து பட்டயமும், ஐந்து சோழ மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. இவற்றில் முதலாம் செப்புப் பட்டயம் முதலாம் இராஜேந்திர சோழனின் காலத்தில் வெளியிடப்பட்டது. இப்பட்டயம் ஒரு செப்புத் தகட்டில் இரு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது.
வழக்கமாகக் காணப்படுவதற்கு மாறாக இதில் தமிழ்ப் பகுதி மட்டுமே காணப்படுகிறது. திருமன்னிவளர என்றே கல்வெட்டு வாசகம் தொடங்குகிறது. இப்பட்டயம் மன்னனின் 18- ஆம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. திருக்களர் மஹாதேவர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தேவதான நிலத்தைப் பற்றித் தெரிவிக்கிறது. திருக்களர் என்னும் ஊர், அருமொழி தேவ வளநாட்டில் உள்ள புறங்கரம்பை நாட்டில் அடங்கிய பகுதி என்று தெரிவிக்கிறது.
திருக்களர்ச் செப்பேடு : (முதலாம் இராசாதிராசன் காலம்)
இச்செப்புப் பட்டயம் ஒரே தகட்டில் ஆறு வரிகளில் எழுதப்பட்டுள்ளன. இராஜகேஸரியான முதலாம் இராஜாதிராஜனின் 31-ஆம் ஆட்சி
ஆய்வரங்கு 2008

Page 55
ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. திருக்களர் உடையார்க்கு முன்பு ஆராதனை செய்து வந்த பிராமணனுடன் மற்றும் ஒரு பிராமணனை நியமித்து இருவருக்கும் ஒரு நாளைக்கு தூணிகுருணி நெல் என்னும் விகிதத்தில் 365 நாளைக்கு 157 கலன் நெல்லை நிவந்தமாக அரையன் நாகரையநான மஹிபாலக்குலகாலப்பேரரைய நான திருமணப்பிச்சன் அளித்ததைத் தெரிவிக்கிறது.
syrsom GlassFuG3LuGB) : (வீரராசேந்திரன் காலம்)
இச்செப்பேடு, 1931 - ஆம் ஆண்டு, சித்துர் மாவட்டத்தில் உள்ள பங்கனூர் வட்டத்தைச் சேர்ந்த சராலா என்னும் ஊரில், நரசா ரெட்டி என்பவர் தம் எருக்குழியிலிருந்த மண்ணை அகற்றுகையில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பட்டயம் ஏழு ஏடுகளைக் கொண்டதாகவும், மொத்தம் 211 வரிகளையிடையதாகவும் விளங்குகிறது. அனைத்தும் ஒரு செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்டு வளையத்தின் மீது சோழ அரசு முத்திரை இடப்பட்டிருக்கிறது.
வழக்கம் போலவே இப்பட்டயமும் சமஸ்கிருதம், தமிழ் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. சமஸ்கிருதப் பகுதியில் மன்னனின் வழிமுறை விரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
சோழ மன்னன் இராஜகேசரி வீரராஜேந்திரனின் 7- ஆம் ஆட்சி ஆண்டில் இப்பட்டயம் எழுதப்பட்டுள்ளது. சக ஆண்டு 991 என்றும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டு சௌமியா’ என்றும் தரப்பட்டுள்ளது.
உத்தராயண சங்கராந்தியன்று புலி நாட்டைச் சார்ந்த சேராம் என்னும் மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரை மூன்று பிராமணர்களுக்குத் தானமாக வழங்கியதை இச்செப்பேடு குறிக்கிறது.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

இப்பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ள சோழ மன்னர் வரிசை மிகவும் முக்கியமானதாகும். இம்மன்னன் காலத்திய மிக முக்கிய கல்வெட்டான கன்னியாகுமரிக் கல்வெட்டில் அழிந்து காணப்படும் பலபகுதிகளைப்பூர்த்தி செய்வதற்கு இச்செப்பேட்டு வாசகங்கள் உதவுகின்றன. இச்செப்புப் பட்டயத்தில் காணப்பெறும் சமஸ்கிருத சுலோகங்கள் கன்னியாகுமரிக் கல்வெட்டில் காணப் பெறும் சமஸ்கிருத சுலோகங்களோடு வரிக்கு வரி ஒற்றுமையுடையனவாகக் காணப்படுகின்றன.
வீரராஜேந்திரன், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துத் திரு வேகம்பமுடையார் கோயில் திருக்காவணத்துத் திருவோலக்க மண்டபம் ராஜராஜனில் எழுந்தருளியிருந்த போது இப்பட்டயம் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.
சிறிய லெயிடன் செப்பேடு : (முதலாம் குலோத்துங்கன் காலம்)
இப்பட்டயம் மூனறு ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது. மூன்று ஏடுகளையும் ஒரு வளையத்தில் கோர்த்து முத்திரை
வைக்கப்பட்டிருக்கிறது. இப்பட்டயம் தற்பொழுது ஹாலந்து நாட்டில் உள்ள லெயிடன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இச்செப்பேடு முழுதும் தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. முதலாம் குலோத்துங்கச் சோழனின் வழக்கமான மெய்க்கீர்த்தியாகிய “புகழ் மாது விளங்க” என்னும் தொடரோடேயே தொடங்குகிறது. மன்னனின் 20-ஆம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டுள்ளது.
ஆயிரத்தளியான ஆஹவமல்லகுலகாலப் புரத்து கோயிலுள்ளால் (அரண்மனை) திருமஞ்ஞன சாலையில் பள்ளிப் பீடம் காலிங்கத்தரையனில் மன்னன் அமர்ந்திருக்கையில், கடாரத்தரையன், ஜெய மாணிக்க வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து சோழ சூலவல்லி பட்டனத்து எடுப்பித்து
45

Page 56
இராஜேந்திர சோழப் பெரும் பள்ளிக்கும், இராஜராஜ பெரும் பள்ளிக்கும், பள்ளிச் சந்தமான ஊர்களில் வரிகள் எல்லாவற்றையும் தவிர்த்தமைக்கும்; முன்பு பள்ளிச் சந்தங்கள் காணியுடைய காணியாளரை நீக்கி பள்ளிச் சங்கத்தார்க்கே காணியாக விட்டமைக்கும் இப்பட்டயம் வெளியிடப் பட்டிருக்கிறது.
திருக்களர்ச் செப்பேடு : (முதலாம் குலோத்துங்கன் காலம்)
இப்பட்டயம் மூன்றாம் ஏட்டில் முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 19 வரிகளையுடையது. குலோத்துங்கச் சோழனின் 28-ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இராஜேந்திர சோழ வளநாட்டு, புறங்கரம்பை நாட்டு திருக்காளருடைய மாதேவர்க்கு, அமாவாசை தோறும் அரவாபரணதேவர் திருவிழா நடத்துவதற்காகவும், அந்நாளில் பெருந்திருவமுது படைக்கவும், பிள்ளையார்க்குத் திருவமுது படைக்கவும், பூரீமுலத்தானமுடையார்க்கு அமுது செய்தருளவும், தேவர் அடியார்களுக்கு அமுது செய்தருளவும், நென்மலி நாட்டு, தண்ணிர்க்குன்ற முடையான் சிவன் தில்லை நாயகனான சிறுத்தொண்டநம்பி செய்த உபயத்தைத் தெரிவிக்கிறது இச்செப்புப் பட்டயம்.
இச்செப்பேட்டை வெளியிட்ட குலோத்துங்கச் சோழன் முதலாம் குலோத்துங்கச் சோழன்தான் என்பது இரண்டாம் இராஜராஜனின் திருக்களர்ச் செப்பேட்டின் மூலம் புலனாகிறது.
திருக்களர்ச் செப்பேடு : (இரண்டாம் இராசராசன் காலம்)
இப்பட்டயம் மூன்றாம் ஏட்டின் இரண்டாம் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 17 வரிகளைக் கொண்டது. இராஜராஜதேவரின் 18-ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
சுங்கந்தவிர்த்தருளின குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் சிவன் தில்லை நாயகன் பக்கல்
46

உனபயம் பெற்று திருவமுது செய்து வருகிற ஆண்டார்களில் ஆண் வழி அற்றுப் பெண் வழியான கொத்துக்கு(குடும்பத்துக்கு) யார் இவ்வுபையத்தைத் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும் என்பதைக் கனகராயரும், பூரீமாகேசுவரரும் நிச்சயித்ததை இப்பட்டயம் தெரிவிக்கிறது.
திருக்களர்ச் செப்பேடு : (மூன்றாம் குலோத்துங்கன் காலம்)
இப்பட்டயம் நான்காவது ஏட்டின் இரு பக்கங்களிலும், ஐந்தாம் எட்டின் உட்பக்கத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. மன்னனின் 29-ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. “திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய பூரீகுலோத்துங்க சோழதேவற்கு” என்று பட்டயம் தொடங்குகிறது.
திருக்களர் நாயனார் கோயில் ஆபரணங்களையும், அவைகளின் எடைகளையும் விவரிக்கிறது இச்செப்பேடு. குடிஞைக் கல்லால் 6T6) நிறுக்கப்பட்டது. என்பதையும் தெரிவிக்கிறது. திருக்கொள்கை 1, திருவுதரமாலை பொற்பூ 16, திருவுத்தரியம் 1, திருப்பிறை 1, கன்ன புஷ்பம் 3, திருப்பட்டிகைப் பலகை 1, திருப்பட்டம் 1, திருப்பள்ளியறை நாச்சியார் சிறு தாலி 1, மணி 1, காறை 1, திருமங்கல நாண் 1, தாலி1, கொக்குவாய் படுகன் 9, திருவாசிகை 1, அரவாபரண தேவர் அபிஷேகம் 1, திருவாரம் 1, திருத்தோடு 2, நாச்சியார் அபிஷேகம் 1, நாச்சியார் திருவாரம் 1, நாச்சியார் திருத்தோடு 2, திருவட்டமணி 24, திருவட்டமணிவடம் 3, திருச்சிலம்பு 2, நிறைதவஞ்செய்நாச்சியார் அபிஷேகம் 1, திருநெற்றித் திறநை 1, திருமங்கலநாண் 1, திருத்தாவடம் 1, திருகைச்சரி 44, வெள்ளி மணி 35, வெள்ளிக்காறை 1, திருத்தோடு 2, திவாரம் 1, சிரச்சக்கரம் 1, திருக்கண்டவாளி 2, திருவுருத்தரியம் 1, திருவாசிகைப் புரிமத்தில் பாம்பு 1 ஆகிய ஆபரணங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
ஆய்வரங்கு 2008

Page 57
திருக்கோயில்த சோழர்காலக் கல்வி
சிதம்பரம் ம
சோழநாடு சங்க காலத்தில் மிகச் சிறப்புற்று இருந்தது. சோழநாட்டுப் புலவர் ஆவூர் மூலங்கிழார் குடகுமலையில் முகில் முழங்கினால் போதும், காவிரியில் பூவிரி புதுநீர் பொங்கி வழியும். காவிரி இருமருங்கும் நீர் வளம் நிறைந்திருக்கும். அத்தகைய எம் ஊரிலே உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுவோம் என்று இறுமாந்து பேசுகிறார். அந்நிலையிலுள்ள சோழ நாடு பல்லவர் படையெடுப்பால் சிறிது சீர் குலைந்தது. பின் 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே சிறிது தலை தூக்கத் தொடங்கியது. அப்போதிருந்த நாட்டினியல்பைக் கல்வெட்டுக்கள் நன்கு தெரிவிக்கின்றன. சோழநாடு வளநாடுகளாக பிரிக்கப்பட்டு நல்லதோர் ஆட்சி முறையில் வந்தது. முதற் குலோத்துங்கனும் முன்னர் காவிரிக்கு வடக்கிலும், தென் பெண்ணைக்குத் தெற்கிலுமுள்ள பகுதி, இராஜராஜவளநாடு என்றும், வடகரை ராஜேந்திர சோழவளநாடு என்றும் வழங்கியது. பின் விருதுராஜ பயங்கர வளநாடென்று வழங்கலாயிற்று. இவ்வளநாட்டில் மேற்காநாட்டு இருங்கோளப்பாடிநாடும். மிழலைநாடும். நல்லாற்றுார் நாடும். பருவூர்க் கூற்றமும், அடங்கியன. இவைகளுள் சிதம்பரம் தனியூராக அரசன் நேர் பார்வையில் இருந்து வந்தது.
கோயிலென்றும் இத்தில்லை. சைவ நெறிக்குச் சீர்த் திருக் கோயில் களெல்லாவற்றிலும் முடிமணியாக நிலவுவது. தில்லைநகர், பதினான்கு சிற்றுார்களைத் தன்னகத்தடக்கியதோர் பேரூராக இருந்தது. பண்ணங் குடிச்சேரி என்கிற பரகேசாநல்லூர், இளநாங்கூர், காரிகுடி, மணலூர், கோயில்பூண்டி, சிவபுரி, கோலம், அக்கன், பள்ளிப்பட்டி என்கிற விக்கிரமசோழநல்லூர்,
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

திருப்பணிகளும்
வெடு ஆய்வுகளும்
யில்வாகனன்
திருவேட்களம், கடுவாய்ச்சேரி, சண்டேசநல்லூர். கொற்றவன்குடி, மிதினிக்குடி, எருக்காட்டுப்படுகை என்கிற எருக்காட்டுச்சேரி என்பன அப்பதினான்கு சிற்றுார்களாம்.
சிற்றம்பலம் என்பது இத்தலத்தின் பழைய பெயராகும். இது வடமொழியில் சிதம்பரமெனத் திரிந்ததாக அரசாங்கக் கல்வெட்டிலாகா 1914ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. கல்வெட்டுக்களில் இத்தலம் புலியூர், பெரும்பற்றப்புலியூர், பொற்புலியூர்,
தில்லை, தில்லையூர், " கோயில் என்று வழங்கப்படுகிறது. தில்லையில் தேவகாரியங்களைக் கண்காணிப்பவர்களே சோழநாட்டுத்
தேவாலயங்களையும் கண்காணிப்பவராக இருந்து வந்தனர். திருக்கண்ணபுரத்து இராமனதிச்சரத்துக் கோயில் வருவாய் குறைந்து பூசைக்கு முட்டுப்பாடு ஏற்பட, கோயில்தானத்தாரும். மாகேசுரரும். தில்லைப் பெரும் பற்றப்புலியூர் கோயில்தானத்துக்கு விண்ணப்பம் செய்து கொள்ள அவர்கள் சோழமண்டலம் இராஜ ராஜபாண்டி மண்டலம், வீரசோழமண்டலம், நடுவில் நாடு, தொண்டைநாடு, சயங்கொண்டசோழ மண்டலம், ஆகிய இங்கிருந்த கோயிலார்களை நெல்லாகவோ, பொன்னாகவோ கொடுத்து இராமனதீச்சரக்கோயில் பூசனை நடைபெறும்படி, ஏற்பாடு செய்தனர் என்று மூன்றாம் இராஜராஜனுடைய ஆட்சி பதினாறாம் ஆண்டு இராமனதிச்சரக் கல்வெட்டுக் கூறுகிறது.
சோழநாட்டின் முடிசூடவேண்டுமானால் தில்லையிலுள்ள அரசகாரியம் பார்ப்பாரைத் தலைமையாகக் கொண்ட தேவகாரியக் குழுவினரே
47

Page 58
முடிசூட்ட வேண்டுமென்ற நியதி இருந்தது. எல்லாக் கோயில்களுக்கும் தலைமைக் கோயிலாக இருந்ததனாலே இது கோயிலெனவே வழங்கலாயிற்று.
ஆதியில் இத்தில்லைக்கோயில் மிகச்சிறியதாக இருந்திருக்க வேண்டும் என்றும், இப்போதுள்ள திருமூலத்தானமும், திரு அம்பலமும் விளக்கமாக இருந்திருக்க வேண்டுமென்றும், இங்கே நடராஜர் மூலத்தானத்தார், காமக்கோட்டமுடைய நாச்சியார் இவர் மூவர் கோயில் தவிர ஏனையோருக்கும் சிறு கோயில்கள் பல இருந்திருக்கின்றன என்றும், கனகசபையில் கூத்தப் பெருமானாரும் ரகசியமுமே இருப்பதற்குக் காரணம் ஒன்றும் சொல்ல முடியவில்லை என்றும், ஆகாசப் பெருவெளியையும் தனக்கு இடமாகக் கொண்ட ஆண்டவன் அறிவுருவாக எழுந்தருளியிருக்கின்றான் என்று சைவர்கள் சொல்கிறார்கள் என்றும் கூறுகிறது.
கல்வெட்டுக்களில் மிகப் பழமையானதாகிய இராஜேந்திர சோழ தேவனுடைய 24ஆம் ஆண்டு கல்வெட்டும், குலோத்துங்கசோழ தேவனுடைய 47ஆம் ஆண்டுக் கல்வெட்டும் கனகசபையையும் திருமூலட்டானத்தையும் பிரிக்கும் சுவரில் உள்ளன.
கனகசபையைக் சுற்றியுள்ள பிரகாரம் விக்கிரம சோழன் திருமாளிகை என்றும், திருமூலட்டா னத்தைச் சேர வருகின்ற இரண்டாம் பிரகாரம் குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும், அதற்கும் வெளியிலுள்ள மூன்றாம் பிரகாரம் ராசாக்கள் தம்பிரான் திருமாளிகை என்றும் வழங்கப்பட்டன. இவற்றுள் குலோத்துங்க சோழன் திருமாளிகை என்ற பெயரும், மேற்குறித்த சுவரிலுள்ள கல்வெட்டுக்களிலேயே காணப்படு கின்றமையின், விக்கிரமனே தன்தந்தையாகிய குலோத்துங்கன் பெயரால் உட்பிரகாரத்தையும் தன் பெயரால் இரண்டாம் பிரகாரத்தையும் செய்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.
48

சம்பந்தர் முதலிய மூவர் காலத்திலேயே இத்தலம் சிறப்புற்றிருக்கவும், அவர்கள் காலத்திய பல்லவ வேந்தர்களின் கல்வெட்டொன்றும் இதில் காணப்பெறாமை குறிப்பிடத்தக்கது.
சிதம்பரத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 271 உள்ளன. அவைகளுள் பெரும்பாலான கோப்பெருஞ்சிங்க அரசனைப் பற்றியும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனைப்பற்றியும் கூறுவனவாகும். மற்றும் சோழமன்னர்களாகிய ராஜேந்திரன் முதல், ராஜராஜன் 111 முடிய உள்ள பலருடைய கல்வெட்டுக்களும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுக்களும் நாயக்க மன்னர்களின் கல்வெட்டுக்களும் இருக்கின்றன.
இவைகளுள் பெரும்பாலானவற்றில் நந்தவனப் பணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன. மிகச் சிலவற்றுள், பூசை வழிபாட்டுக்குரிய நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அறச்சாலைகளைப் பற்றியும், அக்கிரகாரங்கள் அமைப்பதைப் பற்றியும், திருப்பாவாடை போடுவதைப் பற்றியும், தெரிவிக்கின்றன சில கல்வெட்டுக்கள்.
தில்லைப் பெருங்கோயிலிற் சேமிக்கப் பெற்றிருந்த தேவாரத் திருமுறைகளைத் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையாரது திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளின் துணை கொண்டு தேடிக்கண்டு தொகுத்த சோழமன்னன் இராசராசன் அபயகுலசேகரன் என்னும் பெருவேந்தன் எனவும், அவ்வேந்தன் திருமுறைகளைக் கண்டு தேடித் தொகுத்தமை பற்றித் திருமுறை கண்ட இராசராச தேவர் என அழைக்கப்பெற்றான் எனவும் திருமுறை கண்ட புராணம் கூறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடிய திருப்பதிகங்களில் தமக்குத் தெரிந்த ஒரு சில பதிகங்களையே சிவனடியார்கள் பாடக்கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து உருகிய இராசராசனாகிய சோழ மன்னன், மூவர்
ஆய்வரங்கு 2008

Page 59
பாடிய இனிய திருப்பதிகங்கள் எல்லாவற்றையும் தேடிக் கண்டு ஒரு சேரத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அப்பதிகங்களைப் பலவிடங்களில் தேடியும் முழுதும் கிடைக்கவில்லை.
அந்நிலையிலுள்ள திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையார் திருவருளை நிரம்பப் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளை வணங்கித் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும் மன்னனது விருப்பத்தினை மனத்திற் கொண்டு பொல்லாப் பிள்ளையாரை இறைஞ்சி வேண்டினார். தில்லையில் கூத்தப் பிரான் திருநடனஞ் செய்யும் பொன்னம்பலத்தின் அருகிலே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் அடையாளமுள்ள அறையினுள்ளே தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ள செய்தியைப் பொல்லாப் பிள்ளையார் அறிவுறுத்தியருளினார்.
அதனைக் கேட்டு மகிழ்ந்த நம்பியாண்டார் நம்பியும் அபய குலசேகரனும் தில்லையை அடைந்து கூத்தப் பெருமானை வணங்கினார். தில்லைச் சிற்றம்பலத்தின் மேற்றிசையிலுள்ள அறையிலே தேவாரத் திருமுறைகள் இருத்தலைத் தில்லை வாழ் அந்தணர்களிடம் தெரிவித்து அவ்வறையைத் திறக்கும்படி மன்னன்வேண்டிக் கொண்டான். அதுகேட்ட அந்தணர்கள் மூவர்கையிலச் சினையுடன் பூட்டப் பெற்றுள்ள அவ்வறையினை அம்மூவரும் வந்தாலன்றித் திறக்க வியலாது என்றனர். உடனே சோழமன்னன் தில்லையம் பலவாணர்க்குச் சிறப்புடைய பூசனை செய்யச் செய்து தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங் களுக்கும் வழிபாடியற்றித் திருவீதிக்கு எழுந்தருளச் செய்து திருமுறைகள் சேமிக்கப் பெற்றிருந்த அறையின்முன் திறந்திடுமின்” எனப் பணித்தான். அரசனது ஆணையால் அறை திறக்கப்பட்டது. அறையினுள்ளேயிருந்த தேவார ஏடுகள் கரையான் புற்றால் மூடப்பட்டுச் சிதைந்த நிலையிற் காணப்பட்டன. அவ்வேடுகளின் மேல் எண்ணெயைச் சொரிந்து அவற்றை வெளியில்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

எடுத்துப் பார்த்த அளவில் பெரும்பாலானவை பழுதுபட்டுச் சிதைவுற்றமை கண்டு மன்னன் பெரிதும் வருந்தினான். அந்நிலையில் இறைவனருளால் “இக்காலத்திற்கு வேண்டு வனவற்றை மட்டும் சொல்லரிக்காமல் வைத்தோம்” என்றதொரு அருள்வாக்கு யாவரும் கேட்கத் தோன்றியது. அது கேட்டு உள்ளந்தேறிய சோழ மன்னன் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை மட்டும் சிதையாமலெடுத்து முன்போலத் தொகுத்துத் தரும்படி நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான். திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் 1, 2, 3 திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 4, 5, 6 திருமுறைகளாகவும், சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் 7ஆம் திருமுறையாகவும் வகுக்கப்பெற்றன. மன்னனும் நம்பியும் திருவெருக்கத்தம் புலியூரை அடைந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற் பிறந்த இசைவல்ல அம்மையாரைத் தில்லைக்கு அழைத்து வந்து தேவாரத் திருமுறைகட்குப் பண் வகுத்தனர்.
இவ்வாறு நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு திருமுறைகளைத் தேடித் தொகுத்த சோழ மன்னன் தஞ்சை இராசராசேச்சுரந் திருக் கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனேயென ஆராச்சியாளர் கூறுவர். வேந்தர் பெருமானான இவன், தான் கட்டுவித்த தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலில் நாள்தோறும் தேவாரப் பதிகங்கள் பாடுதற்குப் பிடாரர் (ஓதுவார்) நாற்பத்தெண்மரையும் அவர்களுக்குத் துணையாக உடுக்கை வாசிப்போர், மத்தளம் முழக்குவோர் இருவரையும் நியமித்து நிபந்தம் வழங்கியுள்ளான். இச்செய்தி
“ழநீராஜராஜ தேர் தொடுத்த பிடாரர்கள் நாள்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மர்க்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜசேகரியோடொக்கும் ஆடவல்லா னென்னும்
49

Page 60
மரக்காலால் உடையார் உள்ளூர்ப் பண்டாரத்திலே பெறவும் (தெ.இ.க. தொ. I எண் : 65) எனவரும் கல்வெட்டுப் பகுதியால் நன்கு விளங்கும். இவ்வாறு திருக்கோயிலில் ஒதுவார் நாற்பத்தெண்மரையும், இசைக்கருவியாளர் இருவரையும் நியமித்துத் தேவாரத் திருப்பதிகங்களைப் பண்பொருந்தப் பாடி இறைவனை வழிபடுதற்குரிய திட்டம் வகுத்த பெருமை முதலாம் இராசராச சோழனுக்கே உரியதாகும். இதுபற்றியே. “சேய திருமுறை கண்ட ராசராச தேவர்” (சேக்கிழார் புராணம்) என இம்மன்னன் பாராட்டப் பெற்றுள்ளான்.
திருமுறைகண்ட சோழன் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராசன் தில்லையம்பலவாணர்பால் நிரம்பிய ஈடுபாடு உடையவன் என்பது தஞ்சைப் பெருங்கோயிலில் ஆடவல்லானை எழுந்தருளு வித்துள்ளமையாலும் அக்கோயிலிற் பயன் படுத்தப்படும் முகத்தலளவையாகிய மரக்காலுக்கு “ஆடவல்லான்’ எனப் பெயரிட்டுள்ளமையாலும் உய்த்துணரப்படும். சோழ மன்னர்கட்குத் தில்லையம்பலவாணரே தெய்வம் என்பது கல்வெட்டுகளால் உணரப்படும் செய்தியாதலின், பிற்காலச் சோழர்களில் முதலாம் ஆதித்தன், பராந்தகன் முதலியோர் தில்லைப் பெருங் கோயிலுக்குப் 6) திருப்பணிகளைச் செய்துள்ளார்கள் என்பது நம்பியாண்டார் நம்பிகளும், கண்டராதித்தரும் பாடியுள்ள திருமுறைப் பனுவல்களால் நன்கு விளங்கும். கண்டராதித்த சோழர்க்குப் பின் திருமுறை கண்ட சோழர் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராச சோழனும் தில்லைப் பெருங்கோயிலிற் பல திருப்பணிகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பிற்காலத்தில் அயலவர் படைகள் சிதம்பரம் திருக்கோயிலில் தங்கிச் செய்த அழிவுகளாற் சிதைந்து போயின என்பது இக்கோயிலில் தளவரிசையில் ஆங்காங்குத் துண்டு துண்டாகக் காணப்படும் கல்வெட்டுக் கற்களால் உய்த்து உணரப்படும்.
தனியூராகிய இத்தில்லைப் பதியினைப் சூழ்ந்துள்ள பிடாகைகளாகிய இருபத்திரண்டுக்கு
50

மேற்பட்ட சிற்றுார்களும் வழிகளும் முதலாம் இராசராச சோழனுடைய தந்தை சுந்தர சோழர், தாயார்வானவன், மாதேவி, தமக்கை குந்தவையார் சிறிய தந்தை உத்தம சோழன், இராசராசன் முதலியோர் பெயர்களால் சுந்தரசோழவழி, வானவன் மாதேவிவழிகுந்தவை வாய்க்கால், உத்தமசோழபுரம், இராசராசன் வாய்க்கால் என்றாங்குக் கல்வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளமையால் முதலாம் இராசராசன் தந்தையார் சுந்தர சோழரும், தாயார் வானவன் மாதேவியும் தமக்கையார் குந்தவையாரும், சிறிய தந்தை உத்தமசோழரும் தம் சூலநாயகராகிய ஆடவல்லான் எழுந்தருளிய தில்லைப்பதியிற்பல திருப்பணிகளைச் செய்துள்ளமை நன்கு புலனாகும்.
தமிழகத்தைக் கி.பி. 1012 முதல் 1044 வரை ஆட்சிபுரிந்த பெருவேந்தன், முதல் இராசேந்திரனாகிய கங்கை கொண்டசோழன் ஆவான். திருவிசைப்பா ஆசிரியர் கண்டராதித்தர் மனைவியார் செம்பியன் மாதேவியாராலும், தன் தந்தை இராசராச சோழர் தமக்கையார் குந்தவையாராலும், வளர்க்கப் பெற்ற இவ்வேந்தர் பெருமான், தன் வடநாட்டு வெற்றிக்கு அடையாளமாகக் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னும் பெருங்கோயிலைக் கட்டியவனாவான். இத்திருக்கோயிலைத் திருவிசைப்பாப் பதிகத்தாற் பரவிப் போற்றிய கருவூர்த் தேவர், இத் திருப்பதிகத்தின் கடைசிப் பாடலில் இவ்வேந்தனது சிவபத்தியின் மாண்பினைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இவ்வேந்தனது 24ஆவது ஆட்சியாண்டில் இவனுக்கு அணுக்கப் பணிபுரிந்த நக்கன் பாவையார் என்பவர், தில்லைக் கூத்தனாகிய திருச்சிற்றம்பலமுடைய பெருமான் திருவானில் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளும் அன்றைக்கு வேண்டும் செலவுகட்கும் அமுது படிக்கும் சிவனடியார்களுக்குச் சட்டிச்சோழ ஆயிரம் கொடுக்கவும், திருவிழாவுக்கு வேண்டும் எண்ணெய்க்கும் வேண்டும் வழக்கத்துக்கும் பரிசட்டம் திருவிளக்கு எண்ணெய் முதலிய
ஆய்வரங்கு 2008

Page 61
செலவுகட்கும் திருமாசித் திருநாளில் திருத்தொண்டத்தொகை விண்ணப்பஞ் செய்வதற்கும் ஆண்டொன்றுக்கு மேல்வாரம் இரண்டாயிரத் திருநூற்றைம்பதின் கலம் ஆக வருவாயுள்ள நாற்பத்துநாலு வேலி நிலம் நிபந்தமாக அளித்துள்ளார். அணுக்கி நக்கன் பரவையாராகிய இவரே இத்தில்லைப் பதியில் உள்ள சிங்களாந்தகன் என்னும் அறச்சாலையில் நாள்தோறும் பிராமணர் இருபத்தைவர் உண்பதற்கும், சமையல் ஆளுக்கும், தண்ணீர்க்கலம் கொண்டு வருவானுக்கும் உடை முதலிய செலவுகட்கும் ஆக ஓராண்டுக்கு மேல்வாரமாக ஆயிரத்து இருநூற்று இருபத்தைந்து கலம் நெல் வருவாயுள்ள பத்து வேலி நிலமும் நிவந்தமாக அளித்துள்ளார். இது பற்றிய விவரங்கள் தில்லைப் பெருங்கோயிலின் முதற் பிரகாரத்தில் வடபுறமதிலில் கங்கை கொண்ட சோழனது 24ஆம் ஆட்சியாண்டில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டில் (தெ.இ.க. தொகுதி IV எண் : 223) விரிவாகக் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
மேற்குறித்த கல்வெட்டுச் செய்திகளை ஊன்றி நோக்குங்கால், இப்பொழுது தில்லைப் பெருங்கோயிலில் நிகழ்ந்து வரும் ஆணித் திருமஞ்சனத் திருவிழாவும், மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் கங்கை கொண்டசோழன் ஆட்சிக் காலத்திற்கு முன்பிருந்தே நிகழும் தொன்மை வாய்ந்தன என்பதும், இவ்விரு திருவிழாக்களிலும் அடியார்களுக்கும், அந்தணர்களுக்கும் அன்னம் பாலிக்கப் பெற்றதென்பதும் இவ்விரு திருவிழாக்களுடன் திருமாசித் திருநாளிலும் திருவிழா நிகழ்ந்ததென்பதும் அத்திருவிழாவில் தில்லை வாழ்ந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என ஆரூரிறைவர் அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம் தில்லைக் கூத்தப் பெருமான் திருமுன்னர் விண்ணப்பஞ் செய்யப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும்.
பிற்காலச் சோழரது ஆட்சியில் சோழர்களின் பெண்வழி மரபில் தோன்றித் தமிழகத்தை
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

ஆண்டவர்கள் முதற் குலோத்துங்கன் விக்கிரம சோழன் முதலியோராவர். சோழ நாட்டில் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த பெருவேந்தர்களுள் முதற்குலோத்துங்க சோழனும் ஒருவன். சிவபெருமான்பால் எல்லையற்ற பேரன்பினனாய், குடிமக்கள் மகிழச் சுங்கம் தவிர்த்த சோழனாகிய இம்மன்னன், கி.பி. 1070 முதல் 1120 வரை சோழநாட்டை நன்முறையில் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ஆட்சிக்காலத்தில் தில்லைப் பெருங்கோயிலின் திருப்பணி மிகச் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.
முதற்குலோத்துங்கன் தன் முன்னோர்களைப் போலவே தில்லைக் கூத்தப் பெருமான்பால் பேரன்பு செலுத்தியவனாவான். இவ்வேந்தன் தன் நண்பனாகிய காம்போச நாட்டு மன்னன் தனக்குக் காட்சிப் பொருளாகத் தந்த ஒளி திகழ் பளிங்குக்கல்லினைத் தில்லைச் சிற்றம்பலத்தைச் சார்ந்துள்ள திருவெதிரம் பலத்தில் அணி திகழ வைத்தான். இச்செய்தி.
“ழரீ இராசேந்திர சோழ தேவர்க்குக் காம்போஜராஜன் காட்சியாகக் காட்டின் கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோயிலில் முன் வைத்தது - இந்தக் கல்லு திருவெதிரம்பலத்துத் திருக்கல் சரத்தில் திருமுன் LåghéGG6)I606uüLôgul6o606)55gi (EP Ind. Vol II No. 132).
எனத் தில்லைத் திருக்கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டால் அறியப்படும்.
முதற்குலோத்துங்க சோழனுக்குச் சகோதரிகள் இருவர். இவர்கள் குந்தவை. மதுராந்தகி என்போராவர். இவ்விருவரும் தில்லையம்பல வாணர்பால் எல்லையற்ற பேரன்பினால் தில்லைத் திருக்கோயிலுக்குச் சிறப்புடைய திருப்பணிகள் செய்துள்ளார்கள். இவருள் குந்தவை என்பார்,
51

Page 62
தில்லைச் சிற்றம்பலப் பெருமான் தண்ணிர் அமுது செய்தருளுதற்கென ஐம்பதின் கழஞ்சு நிறையுள்ள பொன்வட்டிலைத்தில்லைப் பெருங்கோயிலுக்கு உளமுவந்து வழங்கியுள்ளர். இச்செய்தி, "ஸ்வஸ்திழீ தரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர் திருத்தங்கையார் இராஜராஜன் குந்தவை ஆழ்வார் ஆளுடையார்க்குத் தண்ணிர் அமுது செய்தருள் இட்ட(மி)ண்டம் ஒன்றினால் குடிஞைக்கல் நிறைமதுராந்தகன் மாடையோடு ஒக்கும் பொன் ருய ஐம்பதின் கழஞ்சு உ” (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 5) எனவரும் கல்வெட்டிற் குறிக்கப்
பெற்றுள்ளமை காணலாம்.
குந்தவையாழ்வாராகிய இவ்வம்மையார், கி.பி. 1114 ஆம் ஆண்டில் தில்லையம்பலவாணர் திருக்கோயில் முழுவதும் பொலிவுடன் திகழப் பொன்னம்பலத்திற்கு மீண்டும் பொன் வேய்ந்துள்ளார். இச்செய்தி.
“நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு நாற்பத்து நாலா மாண்டில் மீனநிகழ் நாயிற்று வெள்ளி பெற்ற வுரோகணி நாள் இடபப் போதால் தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தங் கோயிலெலாஞ் செம்பொன் வேய்ந்தான் ஏனவருந் தொழுதேத்தும் இராசராசன் குந்தவை பூ விந்தையாளே”
(எபிராபிகா இண்டிகா தொகுதி 5, பக். 105) எனவரும் கல்வெட்டுச் செய்யுளால் இனிது விளங்கும்.
இப்பாடலில் சயதரன் என்றது முதற்குலோத்துங்க சோழனுக்கு வழங்கும் சிறப்ஸபுப் பெயர்களுள் ஒன்றாகும். இராசராசன் குந்தவை என்றது அவன் தங்கையாகிய குந்தவையாரை. முதற்குலோத்துங்கனது ஆட்சியில் நாற்பத்து நாலாமாண்டில் அவன் தங்கை குந்தவையாரால் தில்லைச் சிற்றம்பலம் மீண்டும் பொன் வேயப் பெற்றதென்பது இச்செய்யுளால் நன்கு புலனாகிறது.
52

இனி முதற்குலோத்துங்கனது மற்றொரு தங்கையாகிய மதுராந்தகி என்பார். கி.பி. 16ஆம் ஆண்டில் தில்லையில் திருச்சிற்றம்பலமுடையார் திருநந்தவனத்திற்கும் சிவனடியார் திருவமுது செய்யுந் திரு மடத்திற்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் வழங்கியுள்ளார். இச்செய்தி
“திரிபுவனச் சக்கரவர்த்திகள் பூரீகுலோத்துங்க சோழ தேவற்குயாண்டு நாற்பத்தாறாவது ராஜாதிராஜ வளநாட்டுத்தனியூர் பெரும்பற்றப் புலியூர் உடையார் திருச்சிற்றம்பலமுடையார்க்குத் திருந்தவனப்புறமாகவும் பூரீ மாகேவரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறம் நம் பெருமாள் திருத்தங்கையார் மதுராந்தகியாழ்வார் வாச்சியன் இரவிதிருச்சிற்றம்பல முடையான் பேரில் விலை கொண்ட நிலம் கிடாரங்கொண்ட சோழப் பெரிளமை நாட்டு எருக்காட்டாஞ் சேரியான ஜயங்கொண்ட சோழ நல்லூர்ப் பால்” (தெ.இ.க. தொகுதி 4 எண்: 223) எனவரும் கல்வெட்டுப் பகுதியில் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
இங்கு எடுத்துக் காட்டிய கல்வெட்டுப் பகுதிகளால் முதற் குலோத்துங்க சோழன் தங்கைமாராகிய இராசராசன் குந்தவையாரும், மதுராந்தகி யாழ்வாரும் தில்லைப் பெருங் கோயிலுக்குத் திருப்பணிகள் பல புரிந்துள்ளமை நன்கு புலனாதல் காணலாம்.
முதற்குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாம் ஆட்சியாண்டில் தொண்டை நாட்டுக் காரிகைக் குளத்தூர் தலைவனும் மிழலை நாட்டு வேளாண்மை கொண்டவனுமாகிய கண்டன் மாதவன் என்பான் தில்லையம்பலத்தின் வடகீழ்த்திசையில் சொன்னவாறறிவார் கோயிலும் சிவபுராணங்களை விரித்துக் கூறுவதற்கு இடமாகிய புராண மண்டபமும் அதனையொட்டிய திருமாளிகைப் பத்தியும் மலைபோன்று உயர்ந்து தோன்ற வரிசையாகக் கட்டினான். இச்செய்தி நீடூர்க் கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டில்,
ஆய்வர்ங்கு 2008

Page 63
“ஆரியவுல்கம் அனைத்தையும் குடைக்கீழ் ஆக்கிய குலோத்துங்க சோழற் காண்டொரு நாற்பத்தாறிடைத் தில்லை யம்பலத்தே வட கீழ்பால் போரியல் மதத்துச் சொன்னவாறறிவார் கோயிலும் புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையா விளங்கப் பொருப்பினான் விருப்புறச் செய்தான். கண்டன்
மாதவனே
எனவரும் பாடலில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். இப்பாடலில் சொன்னவாறறிவார் கோயில் என்றது. யாம் யாவும் சுழறினவும் அறியும் ஆற்றலை இறைவனருளாற் பெற்ற சேரமான் பெருமாளுக்கு அமைத்த திருக்கோயிலாகும். தில்லைப் பெருங்கோயிலின் வடகீழ்த்திசையிற் கண்டன் மாதவனாற் கட்டப்பட்ட இத்திருக்கோயில் காலப்பழமையால் பேணுவாரின்றிச் சிதைந்து அழிந்து போய்விட்டதெனக் கருதவேண்டியுள்ளது. தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப் பெருமானைச் சுற்றியுள்ள முதல் திருச்சுற்று விக்கிரம சோழன் திருமாளிகை எனவும், இரண்டாம் திருச்சுற்று குலோத்துங்க சோழன் திருமாளிகை எனவும், மூன்றாம் திருச்சுற்று, இராசாக்கள் தம்பிரான் திருவீதி எனவும் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன. குலோத்துங்க சோழன் திருமாளிகையாகிய இரண்டாம் திருச்சுற்றின் மேற்புறத்தில் அமைந்த கோபுரவாயில் குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் (தெ.இ.க.தொ. எண் :22) எனக் கல்வெட்டிற்குறிக்கப்பெற்றுள்ளது.
வாச்சியன் திருச்சிற்றம்பலமுடையான் சங்கரனான தென்னவன் பிரமராயன் என்பான். பெரும்பற்றப்புலியூர் வடபிடாகை மணலூரில் தான் அனுபவித்து வருகிற மணற் கொல்லை கால்வேலி நிலத்தையும் சுங்கம் தவிர்த்தருளின குலோத்துங்க சோழதேவர் மகளார் அம்மங்கையாழ்வாரான பெரிய நாச்சியார்க்குச் சேமமாக சம்மதித்து அன்னிய நாம கரணத்தால் தில்லைப் பெருங்கோயிலுக்கு
"சோழப் பேரரசும் சமயப் ப்ெருநெறிகளும்"

அளித்துள்ளான். (தெ.இ.க. தொகுதி IV எண்:1226). அடுத்து
“திருமணி பொற்றோட் டெழுது பத்தாண்டில் வருதிறை முன்னே மன்னவர் சுமந்து திறை நிறைத்துச் சொரிந்த செம்பொற்குவையால் தன்குல நாயகன் தாண்டவம் பயிலும் செம்பொன்னம்பலஞ் சூழ் திருமாளிகையும் கோபுரவாசல் கூடசாலைகளும் உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக் குலவனாயுதய குன்றமொடு நின்றெனப் பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும் விசும்பொளிதழைப்ப விளங்கு பொன் வேய்ந்து இருநிலந் தழைப்ப இமையவர்களிப்ப பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும் உயர் பூரட்டாதி உத்திரட்டாதியில் அம்பலம் நிறைந்த அற்புதக்கூத்தர் இம்பர் வாழ எழுந்தருளுவதற்குத் திருதேர்க் கோயில் செம்போன் வேய்ந்து பருத்திரள் முத்தின் பயில்வடம் பரப்பி நிறைமணி மாளிகை நெடுந்திருவீதிதன் திருவளர் பெயராற் செய்த சமைத்தருளி பைம்பொற்குழித்த பரிகல முதலாச் செம்பொற் கற்பகத்தொடு பரிச்சின்னமும் அளவில்லாதன வொளிபெற அமைத்துப் பத்தாமாண்டிற் சித்திரைத் திங்கள் அத்தம் பெற்ற ஆதிவாரத்துத் திருவளர் மதியின் திரையோதசிப்பக்கத்து இன்ன பலவும் இனிது சமைத்தருளி”
எனவரும் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்திப்பகுதி அவன் செய்த தில்லைத் திருப்பணிகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
“அழகிய மணி பதித்த பொன்னேட்டிற் குறிப்பிட்டு எழுதத்தக்க தனது பத்தாம் ஆட்சியாண்டில் தனக்குக் கீழ்ப்படிந்த மன்னவர்கள் சுமந்து வந்து நிறைத்த திறைப்பொருளாகிய பொற்குவையினைக் கொண்டு தன்
53

Page 64
குலதெய்வமாகிய சிவபெருமான் திருநடம் புரியும் பொன்னம்பலத்தினைச் சூழவுள்ள சுற்றுமாளிகையும் அதனையடுத்துள்ள கோபுரவாயிலும் மலைகளும் உலகினைச் சூழ்வுள்ள சக்கரவாள மலை கதிரவன் உதிக்கும் உதய மலையுடன் கூடி நின்றாற் போல பொன்னால் வேயப்பட்ட பலிபீடமும் வானத்தில் விளங்கப் பொன் வேய்ந்து மண்ணுலகத்தவர் விண்ணவர் மகிழத் தான் பிறந்து பெரியவிழாவென்னும் புரட்டாதி, உத்திரட்டாதி திருச்சிற்றம்பலத்தின் அருளும் வாய்நிறைந்து ஆடும் அற்புதக் கூத்தினை நிகழ்த்தி யருளும் கூத்தப்பெருமான் இவ்வுலகத்தவர் வாழ எழுந்தருளித் திருவுலா வருதற்குரிய இயங்குந் திருக்கோயிலாகிய திருத்தோனைச் செம்பொற் கூரையுடையதாகப் பொன் வேய்ந்த அதன்கண் பருமை வாய்ந்த முத்துவடங்களை வரிசையாகத் தொங்கும்படி அணி செய்து அத்தேரானது உலா வருதற்கு ஏற்றவாறு தில்லைப்பதியில் நிறைமணி மாளிகையுடைய நெடுந் திருவீதிகளாக நான்கு வீதிகளையும் விக்கிரம சோழன் திருவீதி எனத் தன் பெயரால் அமைத்துப் பசியபொன்னினால் உட்குழிவுடையதாகச் செய்யப் பெற்ற பரிகலம் (உண்கலம்) முதலாகச் செம்பொன்னாற் கற்பகத் தருவினையும் பரிச்சின்னங்களையும் அளவில்லாத வனவாக ஒளி பெய அமைத்துத் தனது பத்தாம் ஆட்சியாண்டில் சித்திரை மாதம் அத்த விண்மீனுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் வளர்பிறைத் திரயோதசித் திதியில் இத்தகைய பல திருப்பணிகளைத் தில்லைப் பெருங்கோயிலிற் செய்து நிறைவேற்றினான்’ என்பது மேற்குறித்த மெய்க்கீர்த்தி கூறும் செய்தியாகும்.
இவ்வாறு விக்கிரம சோழன் தில்லைப்பதியிற் செய்த திருப்பணிகள் யாவும் கி.பி.128ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் நாளில் நிறைவேறின் என்பது இம்மெய்க் கீர்த்தியிற் குறிக்கப்பட்டுள்ள காலக்குறிப்பினால் நன்கு அறியப்படும். தில்லைச்சிற்றம்பலத்தைச் சூழவுள்ள திருமாளிகைப் பத்தியாகிய முதற்பிரகாரம் இவ்வேந்தனால்
54

அமைக்கப் பெற்றமையின் “விக்கிரம சோழன் திருமாளிகை’ 66 வழங்கியதென்பது கல்வெட்டுகளாற் புலனாகின்றது. (lns, No. 282,284, and 287 of 1913).
விக்கிரமசோழன் பெரும் பற்றப்புலியூராகிய தில்லையிற் பெருவீதியமைத்த கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இவன் மகன் இரண்டாங்குலோத்துங்கனைக் குறித்துப் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில்,
“பாவக நிரம்புதிரு மாலும் மலரோனும் பரந்த பதினெண்கணமும் வந்து வரவத்தம் சேவக நிரம்பு திருவீதி புலியூரிற் செய்த பெருமான்”
(குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் (9-7)
எனவரும் தொடரிற் பாராட்டிப் போற்றியுள்ளமை காணலாம்.
தில்லைத் திருக்கோயிலிற் சிவகங்கைத் தீர்த்தத்திற்கு மேற்பக்கத்தேயுள்ள நூற்றுக்கால் மண்டபம் விக்கிரம சோழன் பணித்த வண்ணம் அவனுடைய படைத்தலைவனாகிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனாற் கட்டப்பெற்றதாகும். இம்மண்டபத்தில் பன்னிரண்டு தூண்களில் விக்கிரம சோழன் திருமண்டபம் எனப்பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலால் இம்மண்டபம் விக்கிரம சோழன் பெயரால் அவனது படைத்தலைவன் காலிங்கராயனாற் கட்டப்பெற்றதெனத் தெரிகிறது. இம்மண்டபத்தைக் கட்டியவன் அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பது.
“மல்லற் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தைத் தில்லைப் பிரானக்குச் செய்தமைத்தான் - சொல்லம் அழிவுகண்டான் சேரன் அளப்பரிய வாற்றற் கிழிவு கண்டான் தொண்டையா ரேறு”
(தெ.இ.க.தொ. IV பக். 33)
ஆய்வரங்கு 2008

Page 65
எனவரும் சிதம்பரம் கல்வெட்டுச் செய்யுளால் அறியப்படும்.
தில்லையம்பலவாணர் மாசிமக நாளில் கிள்ளையிலுள்ள கடல் துறையில் தீர்த்தமாடி வீற்றிருந்தருளுதற்கு மண்டபமும், தில்லையிலிருந்து கிள்ளைக் கடற்கரைக்குச் செல்லுதற்குரிய பெருவழியும் விக்கிரம சோழன் ஆட்சியில் அவ்வேந்தனது ஆணை எங்கும் நிகழ அவன் படைத்தலைவனாகிய காலிங்கராயனால் அமைக்கப்பெற்றன. இச்செய்தி
“மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் பேசற்ற அவற்றைப் பெருவழியும் - ஈதற்குத் தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன்
திசையனைத்தும் மன்புலியாணை நடக்க வந்து”
(தெ.இ.க.தொ. IV பக். 34) எனவரும் வெண்பாவால் இனிது புலனாதல் காணலாம்.
அரும்பாக்கிழான் காலிங்கராயனாகிய இவன் முதற்குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் விக்கிரம சோழன் ஆட்சியிலும் படைத்தலைவனாக விளங்கியவன். இவன் தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்தின் தலையூராகிய மணவில் என்னும் ஊரினன். தொண்டையர் கோனாகிய இத்தலைவன் முதற்குலோத்துங்கனது ஆட்சியில் படைத்தலைவனாயமர்ந்து வேணாடு, மழைநாடு, பாண்டிநாடு, வடநாடு முதலியவற்றில் நிகழ்ந்த போரில் தன் வேந்தனுக்கு வெற்றியை நல்கிப் பெரும்புகழ் பெற்றான். இவனது வெற்றிச் செயல்களை நன்குணர்ந்த முதற் குலோத்துங்கன் இவனுக்குக் காலிங்கராயன்,என்னும் பட்டமளித்துப் பாராட்டினான். இவன் அருளாகரன், அரும்பாக்கிழான், பொன்னம்பலக் கூத்தன், நரலோக வீரன் முதலிய பெயர்களாற் பாராட்டப்பெற்றுள்ளான். இவன் விக்கிரமசோழன் ஆட்சியில் முதற்பகுதியில் படைத்தலைவனாக
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

இருந்தனன் என்பது ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவால் நன்கு புலனாகின்றது.
சோழ வேந்தர்க்கு வெற்றி விளைக்கும் போர்த்திறம் வாய்ந்த காலிங்கராயனாகிய இத்தலைவன் தமிழ் மக்கள் உள்ளத்திலே சிவபத்தியினை விளைக்கும் சிறந்த சிவநெறிச் செல்வனாகவும் நிகழ்ந்துள்ளான். இச்செய்தி தில்லைப் பெருங்கோயிலிலும் திருவதிகை வீராட்டானத்திலும் இவன் செய்துள்ள திருப்பணிகளை வெண்பா நடையிற் போற்றிவரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் இனிது புலனாகும். தில்லைப் பெருங்கோயிலிலும் திருவதிகை வீராட்டானத்திலும் இவன் செய்துள்ள திருப்பணிகளை வெண்பா நடையிற் போற்றிவரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் இனிது புலனாகும். தில்லைப் பெருங்கோயிலுக்கு இவன் செய்துள்ள திருப்பணிகளைக் குறித்த முப்பத்தேழு வெண்பாக்கள் சிதம்பரம் கல்வெட்டிற் பொறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
1. தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள திருக்கொடுங்கைப் பகுதியைப் பொன்னால் வேய்ந்தது. 2. தில்லையிற் பொன்னம்பலத்தைச் செம்பொன்னால் வேய்ந்தது. 3. தில்லைப் பெருங்கோயிலிலுள்ள திருஞானசம்பந்தர் திருக்கோயிலைப் பொன்னால் வேய்ந்தது. 4. தில்லைப் பெருங்கோயிலிலுள்ள பேரம்பலத்திற்கு செப்புத் தகடு வேய்ந்தது. 5. வடநாட்டுப் பகையரசர் திறையாகத் தந்த செம்பொன்னைத் தில்லைக் கூத்தப்பெருமானுக்குப்பரிகலமாகச் செய்தளித்தது. 6. கூத்தப்பெருமானுக்குப் பொற்படிக்கம் செய்து கொடுத்தது. 7. செம்பொற்காளஞ் செய்து கொடுத்தது. கூத்தப் பெருமானுக்கு நீண்டெரியும் கற்பூர விளக்கு அமைத்தது. பொன்னம்பலத்தினைச் சூழ்ந்த திருச்சுற்றில் பொன்விளக்கமைந்தது. தில்லைப் பெருமானுக்கு நாள்தோறும் பாலமுது நிவேதிக்க நிபந்தம் அளித்தது. ஆயிரம் நாழி நெய்யால் கூத்தப் பெருமான் திருமஞ்சனஞ்
55

Page 66
செய்தருளக் கண்டு மகிழ்ந்தது. சிவபெருமான் ஞானங் குழைத்தளித்த சிவஞானப் பாலைப் பருகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாடியருளிய திருப்பதிகம் முதலாகவுள்ள தேவாரத் திருப்பதிகங்களை நாளுந்தடையின்றி ஒதுவதற்கும் பலர் கூடியிருந்து கேட்டு மகிழ்வதற்கும் உரிய வண்ணம் தேவார மண்டபத்தைக் கட்டியது, தில்லைப் பெருங்கோயிலில் மலைபோன்று உயர்ந்த நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியது. தில்லையம்பலத்தைச் சூழத் திருச்சுற்று மாளிகை அமைத்தது சிவகங்கைத் தீர்த்தத்துக்குக் கருங்கற்களால் படியமைத்தது. தில்லைத் திருவீதி சூழ நல்ல ஒளி விளக்கும் அவ்வீதியின் நாற்றிசையிலும் இறைவன் வீற்றிருக்குந் திருமண்டபமும் செய்தது. தில்லைக் கூத்தப் பெருமான் இடப்பாகத்தேயுள்ள சிவகாமியம்மைக்குத் தனிக் கோயிலாகச் சிவகாமிக்கோட்டம் அமைத்தது. அக்கோட்டத்தினைச் சூழச் திருச்சுற்று மாளிகை அமைத்தது. சிவகாமியன்னைக்கு நாள்தோறும் திருமஞ்சனஞ் செய்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்தது. சிவகாமியன்னைக்குப் பொன்னாடை சாத்தியது. உலகம் ஈன்ற அன்னையின் அருளை நினைந்து போற்றும் முறையில் அக்கோயிலில் நாள்தோறும் குழந்தைகட்கும் பாலும் எண்ணெயும் வழங்க நிபந்தம் செய்தது. புலியூர்ச் சிற்றம்பலத்தைப் பொன்மயமான கொடிகளால் அலங்கரித்தது. தில்லையில் கூத்தப்பிரான் திருவீதியில் எழுந்தருளும் போது நறும்புகை கமழ ஏற்பாடு செய்தது. அத்திருவிழாவில் திருஞானசம்பந்தர் முதலான சைவ சமய ஆசிரியர்களின் திருவுருவமான திருக்கோலங்களை ஒளி பெருக எழுந்தருளச் செய்தது. தில்லைப் பெருமானை வழிபடும் அன்பர்கள் தில்லையில் தங்கியிருந்து உணவு கொள்ளும் முறையில் அன்னம் பாலிக்க அறக்கட்டளை வகுத்தது. முதற் குலோத்துங்கன் பட்டத்தரசியாகிய தியாகவல்லியின் பெயரால் நிலம் வாங்கி அந்நிலத்திற்குரிய வரியை நீக்கித் தில்லை வாழந்தணர்க்கு வீதியல் மனை கட்டிக் கொடுத்தது. தில்லைப் பெருங்கோயிலுக்குக் களிற்று யானை
56

கொடுத்தது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் எல்லாம் வல்ல முதல்வனாகிய சிவபெருமானது புகழ்த்திறத்தைப் பாடியவாறு அம்மூவர் அருளிய தேவாரப் பதிகங்கள் முழுவதையும் முன்போற் சிதலரிக்கவொண்ணாதவாறு அளவொத்த செப்பேடுகளில் எழுதித் தில்லைப்பெருங்கோயிலிற் சேமித்து வைத்தது. தில்லைக் கூத்தப் பெருமானுக்குத் திருநந்தவனம் அமைத்தது, தில்லைப் பெருமான் மாசிமக நாளி கடலாட்டிற்கு எழுந்தருளுந் திருவிழாவில் அம்முதல்வன் வீற்றிருந்தருளக் கிள்ளைக் கடற்றுறையில் மண்டபம் அமைத்தது. தில்லைப் பெருங்கோயிலுக்கு ஆயிரம் பசுக்களை அளித்தது. தில்லையில் புலி மடுவின் அருகே வியாக்கிரபாதர் தந்தையார் மத்தியந்தன முனிவர் வழிபட்ட சுடலையமர்ந்தார் திருக் கோயிலைக் கற்றளியாக்கியது. தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் செல்லப் பெருக்கமுடையராதல் வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் தில்லையருகேயுள்ள ஏரியிலிருந்து தண்ணிர் பாய்தற்கமைந்த மதகினைக் கல்லினாற் செய்தமைத்தது ஆகிய பணிகள் மேற்குறித்த செய்யுட் கல்வெட்டில் விரித்துரைத்துப் பாராட்டப் பெற்றுள்ளன. இவ்வாறே மணவிற் கூத்தன் காலிங்கராயனாகிய இவன் தில்லையிற் போன்றே திருவதிகை திருவீரட்டானத்திருக்கோயிலிலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். அப்பணிகள் யாவும் அக்கோயிலில் வரையப்பெற்றுள்ள இருபத்தைந்து வெண்பாக்களில் எழில் பெற விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
இவ்வாறு சோழரது அரசியல் ஆட்சிவளம் பெறவும், தமிழகத்தின் அருளியலாட்சி முறையாகிய சிவநெறி வளர்ச்சி பெறவும் மணவிற் கூத்தன் காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகளில் சிறப்புடையதாகக் குறிக்கத் தகுவது தேவார ஆசிரியர் மூவரும் பாடிய திருப்பதிகங்கள் முழுவதையும் செப்பேடுகளில் வரையச் செய்து சிவராச தானியாகத் திகழும் தில்லைப்
ஆய்வரங்கு 2008

Page 67
பெருங்கோயிலிற் சேமித்து வைத்த திருநெறித் தமிழ்ப் பணியேயாகும். இத்திருப்பணியை
விரித்துரைத்துப் போற்றும் முறையில் அமைந்தது.
“முத்திறத்தார் ஈசன் முதற்றிறத்தைப் பாடியவாறு) ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி -
இத்தலத்தின் எல்லைக் கிரிவாய் இசையெழுதினான்கூத்தன் தில்லைச்சிற்றம்பலத்தே சென்று”
(தெ.இ.க. தொகுதி IV பக்கம் 34. செய்யுள் 55) எனவரும் வெண்பாவாகும்.
இறைவன் திருக்கோயிலுக்குச் செய்யும் திருப்பணி நாட்டில் வாழும் ஏழையெளிய மக்களுக்கும் நற்பயனளித்தல் வேண்டும் என்னும் பெருநோக்குடையவன் காலிங்கராயன் என்பது, அவன் தில்லைச் சிவகாமியம்மை திருக்கோயிலில் நாள்தோறும் இளங்குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் வழங்குமாறு அறக்கட்டளை வகுத்துளை சமுதாயத் தொண்டினால் நன்குணரப்படும். இச் செய்தி.
“செல்வி திருந்தறங்கள் தென்னகரித்தில்லைக்கேய நல்லமகப் பால்எண்ணெய் நாடோறுஞ் -
செல்லத்தான் கண்டான் அரும்பையர்கோன் கண்ணகனிர்
ஞாலமெல்லாங் கொண்டானந் தொண்டையார் கோன்”
(தெஇ. தொகுதி IV பக்கம். 34 செய்யுள் 47) எனவரும் வெண்பாவில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியருளிய தேவாரத்திருப்பதிகங்களை தடையின்றி எல்லாரும் இருந்து கேட்டதற்குரிய தேவராய மண்டபத்தைத் தில்லையம்பல மூன்றிலிலே காலிங்கராயன் கட்டினான். இச் செய்தி.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

“நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட வாட்போக்குந் தொண்டையர்கோன் மன்”
(தெ.இ.க. தொகுதி IV பக்கம் 34) எனவரும் வெண்பாவிற்கூறப்பெற்றுள்ளது. தில்லைப் பொன்னம்பல மூன்றலிலே இப்பொழுது கோவிந்தராசப் பெருமான் சந்நிதியின் கிழக்குப் பகுதியை காலிங்கராயன் கட்டிய தேவார மண்டபம் இருந்த இடமாகும். இப்பகுதியில் தேவார ஆசிரியர் மூவர்க்கும் தில்லைக் கூத்தப்பெருமானை நோக்கிய நிலையில் சந்நிதியிருந்தது. இச்சந்நிதியிலிருந்த தேவார ஆசிரியர் மூவர் திருவுருவமும் இப்பொழுது பொன்னம்பலத்தைச் சூழவுள்ள முதற்பிரகாரத்தில் பரமானந்த கூடத்தின் எதிரிலே பைரவர் சந்நிதியையொட்டி எழுந்தருளச் செய்யப் பெற்றாமையைக் காணலாம்.
விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் இரண்டாங் குலோத்துங்க சோழன் கி.பி. 133 முதல் 150 வரை இந்நாட்டினைச் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த பெருவேந்தனாவான். இவ்வேந்தனைத் “தில்லைத் திருநகர் சிறப்புடையதாகத் திருமுடி சூடிய குலோத்துங்க சோழ தேவர்” (தெ.இ.க. தொகுதி VII எண் 780) எனத் திருமாணி குழியிலுள்ள கல்வெட்டு சிறப்பித்துப் போற்றுகின்றது. எனவே இவனது ஆட்சிக் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் திருப்பணிகள் பல இனிது நிறைவேற்றப்பெற்றுத் தில்லைத் திருநகரம் மிகவும் சிறப்புடையதாகத் திகழ்வதாயிற்று என்பது நன்கு புலனாகும். இரண்டாங் குலோத்துங்கனாகிய இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலப் பெருமான்பால் அளவிலாப் பேரன்புடையவன் என்பது, “தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்கும் சிந்தை பயன்’ (குலோத்துங்க சோழனுலா வரி74-76 எனவும் வரும் ஒட்டக் கூத்தர் வாய்மொழியாலும், “தில்லைக்
57

Page 68
கூத்தபிரான் திருவடித் தாமரையிலுள்ள அரளாகிய தேனைப் பருகும் வண்டு போன்றவன்’ (தெ.இ.க. தொகுதி IV எண் 397) எனத் திருவாருர்க்கல்வெட்டு இவ்வேந்தனது சிவபக்தித் திறத்தினைக் குறிப்பிடுதலாலும் நன்கு விளங்கும்.
இவ்வேந்தன் தில்லைத் திருநகரின் நான்கு பெருவீதிகளையும் வனப்புடையனவாக அழகு படுத்தினான். பற்பலமண்டபங்களைக் கட்டுவித்தான். சிவபெருமான் திருக்கூத்தயற்றியருளும் திருச்சிற்றம் பலத்தைத் தம்முன்னோர் செய்தது போலவே பொன்னாலும்மணிகளாலும் அணிபெறச் செய்தான். திருச்சிற்றம்பலத்தின் கப்பாகிய எதிரம்பலத்தையும் உட்கோபுரத்தையும், திருச்சுற்று மாளிகைகையும் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்களைக் கட்டினான். தன் தந்தை விக்கிரமசோழன் காலத்திற் கட்டப்பெற்ற சிவகாமக் கோட்டத்தினை உமாதேவியார் தான் தோன்றிய இமயமலையையும் மறக்கும்படி மேலும் விரிவுடையதாக்கினான். சிவகாமியம்மையார் திருவிழா நாளில் உலா வருவதற்குப் பொன்னினும் மணியினும் அணி செய்யப்பெற்ற தேரினைச் செய்து கொடுத்தான். பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். அம்மை திருக்கோயிலுக்கு எதிரேயுள்ள சிவகங்கைத் தீர்த்தத்தினைச் சூழ நாற்புறமும் மண்டபம் அமைத்தான். இவ்வாறு இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலத்தை விரிவுபடுத்தும் திருப்பணிகளைச் செய்யத் தொடங்கிய போது கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தில்லைத் திருமுற்றத்தில் நந்திவர்மனால் பிரதிட்டை செய்யப்பட்ட தில்லைக் கோவிந்தராசர் கோயிலை இடமாகப் பற்றி வாழ்ந்த வைணவர் சிலர் இத்திருப்பணிக்குத் தடையாய் இடையூறு பல புரிந்தனர். அது கண்டு சினமுற்ற இவ்வேந்தன் அத்திருமால் மூர்த்தத்தை இடம் பெயர்த்துப் பின்னர்த் தான் மேற்கொண்ட தில்லையம்பலத் திருப்பணியினை நிறைவேற்றினன் என்பது வரலாறு
58

இவ்வேந்தன் தில்லையில் சிவகாமி அம்மை திருக்கோயிலைத் தென்திசை மேலு என்னும்படி பலரும் வந்து பணிந்து தங்கும்படி உயர்ந்த விமானமும் மண்டபமும் உடையதாக விரிவுபடுத்தினான் என்பதனை,
“நீடிய வெண்டிசை நீழல் வாய்ப்ப நேரிய தெக்கின மேரு வென்னப் பீடிகை தில்லை வானத்தமைத்த பெரியபெருமாளை வாழ்த்தினவே
(தக்கயாசப்பரணி) எனவரும் தாழிசையில் ஒட்டக்கூத்தர் குறித்துள்ளார். தில்லையம்பலத்தைச் சூழ்ந்துள்ள இரண்டாம் திருச்சுற்றினைத் திருமாளிகைப் பத்தியுடன் அமைத்தவன் இரண்டாங் குலோத்துங்கன், தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழந்துள்ள இரண்டாம் திருச்சுற்று, குலோத்துங்க சோழன் திருமாளிகை என வழங்கப்பெற்றது.
அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகளைக் கொண்டு சிவனடியார்கள் அறுபத்துமூவர் வரலாறுகளையும் குறித்துத் திருத்தொண்டர் புராணமாகிய வரலாற்றுக் காப்பியத்தைப் பாடும்படி செய்தவன் இரண்டாங் குலோத்துங்கனே என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் துணிபாகும். தில்லையம்பலவன் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்த திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளிய சேக்கிழார் நாயனார் தம்மை ஆதரித்துப் போற்றிய சோழ மன்னனைப் பத்து இடங்களில் பாராட்டிப் போற்றியுள்ளார். அப்பாடல்களுள் அநபாயன் என்ற பெயரையே சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.
“சென்னி அபயன் குலோத்துங்கன் சோழன்
தில்லைத்திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் பேரேறு என்றும்
புவிகாக்கும் மன்னர் பெருமான் அநபாயன்”
(பெரியபுராணம் - சண்டேசர் 8)
ஆய்வரங்கு 2008

Page 69
எனவரும் பாடலில் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு' எனச் சேக்கிழார் நாயனார் தில்லைப்பதியில் இவனுக்குள்ள பெரும்பற்றினைப் புலப்படுத்தி யுள்ளமை காணலாம்.
திருநீற்றுச்சோழன்
தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிசூடி இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளிவளரத் தில்லைப் பெருங்கோயிலிற் பலவகைத் திருப்பணிகளையும் ஆர்வமுடன் செய்த இத்திருக் கோயிலைப் பொன்மயமாக்கியவன் அநபாயன் என்னும் சிறப்புப் பெயருடைய சோழ மன்னனாதலின், அவ்வேந்தர் பெருமானைச் சிவநெறிச் செல்வர் பலரும் திருநீற்றுச் சோழன்' எனச் சிறப்பித்துப் போற்றுவாராயினர். தில்லையம்பலவாணர்பால் வைத்த பேரன்பின் திறத்தால் தில்லைப் பெருங்கோயிலிற் சிவத்திருப்பணிகள் புரிந்து தில்லையம்பலவாணர் எடுத்த பொற்பாதத்தின்கீழ் என்றும் பிரியாதமர்ந்தின்புறும் தெய்வநிலை கைவரப் பெற்ற இச்சோழர் பெருமானை உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய கோயிற்புராத்தில்,
“ஒன்றிய சீர் இரவிகுலம் உவந்தருளியுலகுய்யத் துன்று புகழ்த் திருநீற்றுச் சோழனென முடிசூடி மன்றினடந் தொழுதெல்லை வளர்கனக மயமாக்கி வென்றிபுனை யநபாயன் விளங்கிய பூங்கழல் போற்றி”
(கோயில் - பாயிரம் -12)
எனவரும் பாடலால் வணங்கிப் போற்றியுள்ளார். தில்லைப் பெருமான் திருவீதிக்கு எழுந்தருளும் போது விநாயகர், முருகன் சமயாசாரியர் முதலியோர் திருவுருவங்களோடு திருநீற்றுச் சோழனாகிய இவ்வேந்தர் பெருமான் திருவுருவமும் எழுந்தருளச் செய்யப் பெற்றது என்ற செய்தி தில்லையுலாவில் இடம் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

“தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்குஞ் சிந்தையபன்” எனக் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிலும்,
“ஏத்தற் கருங்கடவுள் எல்லையிலானந்தக்
கூத்தைக் களிகூரக்கும்பிட்டு” எனக் குலோத்துங்க சோழனுலாவிலும் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தில்லை யம்பதியில் அநபாயனாகிய இவ்வேந்தனுக் குள்ள ஈடுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும். இவன் மைந்தன் இரண்டாம் இராசராசசோழனது 17ஆம் ஆட்சியாண்டில் திருமழபாடிக் கோயிலில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்றில் ஐயங் கொண்ட சோழ மண்டலத்து குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவரான் என்பார் திருமழபாடித் திருக் கோயிலுக்குத் தொண்ணுாணு பேராடுகள் உதவிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
“அத்தகைய புகழ்வேளாண் மரபிற்சேக்கி ழார் குடியில் வந்த அருண்மொழித் தேவர்க்குத் தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுந் தலைமையளித்தவர்தமக்குத் தனது பேரும் உத்தம சோழப் பல்லவன் தானென்னும் உயர்பட்டங் கொடுத்திட ஆங்கவர் நீர்நாட்டு நித்தனுறை திருநாகேச் சுரத்திலன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்”
எனச் சேக்கிழார் புராணங் கூறுமாறு, குன்றத்தூரிற் சேக்கிழார் குடியிற் பிறந்து, இரண்டாம் இராசராசன் 17ஆம் ஆட்சியாண்டில் கோயிலுக்கு நிபந்தமளித்த குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தமசோழப்பல்லவராயன் என்பவரே சேக்கிழார் நாயனார் என்பதும், இவரை ஆதரித்துத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடச்செய்த அநபாயன் என்பவன் இரண்டாம் இராசராசனுடைய தந்தை இரண்டாங் குலோத்துங்க சோழன் என்பதும், சேக்கிழாருடைய தம்பியார் பாலறாவாயர் என்பவர் இரண்டாம்
59

Page 70
இராசராசனது 19ஆம் ஆட்சியாண்டில் திருவருத்துறையில் நிகழும் மாசி வைகாசி விழாக்களில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மாறன்பாடிக்கு எழுந்தருளுதற்கு நிலமளித்த குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்பது. இவர் இரண்டாங் குலோத்துங்கனது ஆட்சியின் இடைப்பகுதி தொடங்கி மூன்றாங்குலோத்துங்கன் ஆட்சியின் முதற்பகுதிவரை வாழ்ந்தவரென்பதும் அறிஞர் மு. இராகவையங்கார் முதலிய ஆராய்ச்சியாளர் துணியாகும்.
தில்லை நகர்ச்சிறப்புடையதாகத் திருமுடி சூடிய இரண்டாம் குலோத்துங்கசோழன் தில்லைப் பெருங்கோயிலில் எழுநிலைக் கோபுரங்களைக் கட்டினான். சேக்கிழாராடிகள் பெரியபுராணம் பாடுதற்கு முன்னேயே தில்லைப் பெருங்கோயிலிலுள்ள எழுநிலைக் கோபுரங்கள் நான்கும் கட்டப்பெற்றுருந்தன என்பது.
"நீடுவான்பணிய உயர்ந்து பொன்வரைபோல் நிலையெழுகோபுரம்”
(பெரிய - தடுத் -109) எனவும் “நிலையேழகோபுரம்முறையேகொடுதொழுதுள்புக்கார் (திருநாவுக் - 194)
எனவும “நீடுநீணிலைக் கோபுரத்துள் புக்கு”
W wდ. (திருஞான - 158) எனவும் வரும் சேக்கிழார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.
தில்லையின் மேற்குக்கோபுரம் சுந்தரபாண்டியன் கோபுரம் எனக் கல்வெட்டுக்களிற்குறிக்கப்பெறினும் (தெ.இ.க. தொகுதி IV எண். 628 - 30) அது அவனுக்குமுன் அரசாண்ட சோழர்களாலே கட்டப் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அதனை மேலும் புதுப்பித்தவன்முதல்சடையவர்மன் சுந்தரபாண்டியன் எனவும், அவ்வாறே தில்லையின் தெற்குக் கோபுரத்தைப் புதுப்பித்துச் சொக்கசீயன் என்று பெயரிட்டவன் முதற்கோப்பெருஞ்சிங்கன் எனவும், வடக்குக்கோபுரத்தைப் புதுப்பித்தவர் கிருஷ்ண தேவராயர் எனவும் கொள்ள வேண்டியுள்ளது. இந்நான்கு கோபுரங்களின் அமைப்பும் சிற்பத்தினை
60

வடித்தவர்களும் ஒரே 56iT60)LDu6).Tö5 அமைந்திருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இந்நான்குகோபுரங்களும் சோழ மன்னர்களால் அமைக்கப்பெற்றுச் சேக்கிழார் காலத்திலேயே சிறந்து விளங்கிய என்பது இனிது புலனாகும்.
“சுந்தரபாண்டியன் திருநிலை யெழு கோபுரச்சன்னதியில் சொக்கசீயன் குறளில் கீழ்ப்பக்கத்துக்கு கீழைமட தானமாகத் திருநோக்கழகியான் திருமடமென்னல் பேரால் செய்வித்த மடத்துக்கு மடசேழமாக நாயகரும் நாச்சியாரும் எழுந்தருளும் நாள்எதிரிலி சோழன் திருநந்தவனத்துக்கு”(தெஇ.க.தொ IV எண். 624)
எனவும், “ழரீ கிருஷ்ணதேவமகாராயன் தன்மமாக ஸிம்ஹாத்திறை பொட்டுனுரற்கு எழுந்தருளி ஐய தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பல நாதனையும் சேவித்து, வடக்குக்கோபுரம் கட்டிவித்தவேலை”(IV எண். 623)
எனவும் வரும் கல்வெட்டுக்கள் சுந்தரபாண்டியன் கட்டியது மேலைக்கோபுரம் என்பதனையும் வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் கட்டப் பெற்றதென்பதனையும் குறித்துள்ளமை காணலாம்.
“இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத்திருமாளிகையில் நிலையெழுகோபுரத் திருவாசல் புறவாசல் தென்பக்கத்து எழுந் தருளியிருந்து பூசைகொண்டருளுகிற குலோத்துங்க சோழ விநாயகர்” எனப்பாண்டியர் கல்வெட்டிற் குறிக்கப்பட்ட தலவிநாயகர் மேலைக் கோபுரத்துடன் இணைந்துள்ள திருமேனியாதலால் அப்பெருமான் எழுந்தருளியுள்ள மேலைக்கோபுரம் குலோத்துங்க சோழனால் முதன்முதற் கட்டப்பெற்றதென்பது உயத்துணரப்படும்.
கி.பி. 1178 முதல் 1218 வரை தமிழகத்தை ஆட்சிபுரிந்தசோழ மன்னன் மூன்றாங் குலோத்துங்கன் ஆவன். இவன் தில்லையில் சிற்றம்பலத்திற்கு முன்னுள்ளதும் இப்பொழுது
ஆய்வரங்கு 2008

Page 71
கனகசபையென வழங்கப்பெறுவதும் ஆகிய எதிரம்பலத்தைப் பொன்னினால் வேய்ந்தான். கூத்தப்பெருமானுக்குச் சித்திரைத் திங்களில் திருவிழா நிகழ ஏற்பாடு செய்தான். சிவகாமியம்மை திருக்கோயிலின் விமானமாகிய கோபுரத்தைப் பொன்னால் வேய்ந்தான். இவன் தில்லையிற் செய்த இத்திருப்பணிகள் “எத்தரையும்தொழும் இறைவற்கு எதிரம்பலம் செம்பொன் வேய்ந்து, சித்திரைவிழா அமைத்து இறைவிதிருக்கோபுரம் செம்பொன் வேய்ந்து” எனவரும் இவனுடைய மெய்க்கீர்த்தியிற் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். இங்கு எதிரம்பலம் என்றது சேக்கிழார் கூறும் பேரம்பலமே எனவும், எதிரம்பலம் பொன் வேய்ந்த மூன்றாங்குலோத்துங்கனே திருத்தொண்டர் புராணம் கூறும் பேரம்பலம் பொன்வேய்ந்த அநபாயன் எனவும், சேக்கிழாரை ஆதரித்துத் திருத்தொண்டர் புராணம் பாடுவித்தவன் இம்மூன்றாங் குலோத்துங்கனே எனவும் கூறுவர் ஆராய்ச்சியறிஞர் சதாசிவபண்டாரத்தார்.
“சபாபதியின் முன்னுள்ள முகமண்டபத்தையும் மலைமகள் (சிவகாமியம்மை) கோயிலின் கோபுரத்தையும் சுற்றியுள்ள பிரகாரமாளிகைகளையும் அவ்வூர்ப் பெருமானிடத்தே இடையறாத பக்தி கொண்ட இவ்வரசன் பொன்மயமாக விளங்கும்படி நிர்மாணித்தான்.” எனத் திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலில் வரையப்பட்டுள்ள வடமொழிக் கல்வெட்டும். இவ்வேந்தன் தில்லையிற் செய்த திருப்பணிகளைக் கூறியுள்ளமை காணலாம். இக்கல்வெட்டில் முகமண்டபம் என்றது, தில்லைச் சிற்றம்பலவர் திருமுன் கொடிமரத்தின் தென்திசையில் அமைந்துள்ள நிருத்தசபையெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இச்சபையானது குதிரைகள் பூட்டிய தேரின் அமைப்பினையுடைய தாயிருத்தலின் இது தேர்மண்டபம் எனவும் வழங்கப்பெறும். (சங்கற்ப நிராகரணம்). இம்மண்டபத்தின் தூண்கள் யாவும் இவ்வேந்தனால் தஞ்சை மாவட்டம் திரிபுவனத்தில் நிறுவப்பெற்ற திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள தூண்களின் அமைப்பினையுடையனவாக இருத்தலாலும் இவனது வழிபாடு மூர்த்தமாகத் திரிபுவனத்திலுள்ள சரபமூர்த்தயியன் திருமேனி
“சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

இச்சபையிலும் இருத்தலாலும் இம்மண்டபத்தின் வடபுறத்து அடிப்பட்டியலில் கூத்தப்பெருமானை நோக்கிக்கும்பிடும் நிலையில் இவனது உருவப்படிவம் நேரே அமைக்கப் பெற்றிருத்தலாலும் நன்கு விளங்கும். சிறிய அளவில் இச்சபையில் உள்ள இவ்வேந்தனது கருங்கற்படிவமும் திரிபுவன வீரேச்சுர விமானத்தில் உள்ள இவனது கதைப்படிவமும் ஒன்றாயிருத்தலால் இந்நிருத்தசபையைக் கட்டியவன் திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலை நிறுவிய மூன்றாங் குலோத்துங்க சோழனே என்பது நன்கு தெளியப்படும்.
தில்லையில் திருமாளிகைப் பத்தியுடன் கூடிய மூன்றாம் பிராகாரம் இராஜாக்கள் தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரினையுடைய மூன்றாங் குலோத்துங்கனால் அமைக்கப் பெற்றதாகும். அதுபற்றியே இது இராசாக்கள் தம்பிரான திருமாளிகையென கல்வெட்டில் வழங்கப் பெறுகின்றது. சேரபாண்டிய மண்டலமாகிய பாண்டி நாட்டை இவ்வேந்தன் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் திறையாகப்பெற்றபசும்பொன்னும் விளை நிலங்களும் ஆகியவற்றைப் பெரும்பற்றப் புலியூர் தில்லையம்பலத்திலே ஆடல்புரியும் கூத்தப் பெருமானுடன் இருந்து அம்முதல்வனது அருள்நடங்கண்டருளும் சிவகாமியம்மைக்கும் திருவாரூர்ப்பெருமானுக்கும் திரிபுவன வீரேச்சுரத்து இறைவனுக்கும் மதுரைத்திருவாலவாய் இறைவனுக்கும் கொடுத்து மகிழ்ந்தான். இச்செய்தி, “சிறை கொண்ட புனல் வையைச் சேர பாண்டிய மண்டலத்து இறை கொண்ட பசும் பொன்னும் இறையிலியு
மெயிற்புலியூர் ஆடும் அம்பலவாணர் கூடி வாய்ந்த திருநடங்
கண்டருளும் பாடகக்காற் பைங்கிளிக்கும் பைம்பொன் மதிள்
திருவாரூர் வானவற்கும் திரிபுவன வீரிச்சுர அருந்தவற்கும் தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங்"
கொடுத்தருளி எனவரும் இவ்வேந்தனது மெய்க்கீர்த்தியால் அறியப்படும்.
61

Page 72
இவ்வேந்தனது முப்பத்தாறாவது ஆட்சியாண்டில் தில்லைச்சிற்றம்பலத்தில் திருஅணுக்கன்திருவாயிலை ஒட்டி அமைந்த கனக சபையாகிய எதிரம்பலத்தின் அடிப்பீடமாகிய குறடு இவ்வேந்தனால் பொற்றகடு போர்த்தப் பெற்றது. பொற்றகடு போர்த்துவதற்குமுன் அக்குறட்டில் வரையப்பெற்றிருந்த கல்வெட்டு படியெடுக்கப் பெற்று இரண்டாம் பிரகாரத்தினை யொட்டிய வாயிலாகிய குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் வடபக்கத்திற் பொறிக்கப்பட்டது. முதற் குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாவது ஆண்டில் அவ்வேந்தனுடைய தங்கையார் மதுராந்தகி ஆழ்வார் திருச்சிற்றம்பல முடையார்க்குத் திருநந்தவனமாகவும், பூநீ மாகேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறமாகவும் நிலமளித்தசெய்தியினைக்கூறுவதுஇக்கல்வெட்டாகும்
தில்லைப் பெருங்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தை இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை எனத் தன்பெயரால் அமைத்த மூன்றாங்குலோத்துங்க சோழன் அத்திருச்சுற்றின் மேலைப்பிராகாரத்தில் தன்
முன்னோர் நிறுவிய சிவகாமியம்மை திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததோடு அதனையடுத்துள்ள முருகப்பெருமான்
திருக்கோயிலாகிய பாண்டிய நாயகத் திருக்கோயிலையும்நிருத்தசபையினைப்போன்றுபெரிய தேர்மண்டபமாக அமைத்துள்ளான் எனக் கருத வேண்டியுள்ளது. தில்லைக்கோயிலில் அண்டமுற நிமிர்ந்தாடும் கூத்தப்பெருமானுக்கு அமைக்கப்பெற்றுள்ள நிருத்த சபையிலும் ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்தருளிய பாண்டியநாயகத்திலும் அமைந்துள்ள தூண்கள் மூன்றாங் குலோத்துங்கனால் நிறுவப்பெற்றுள்ள திரிபுவனவீரேச்சுரத்தில் உள்ள தூண்களை யொத்த அமைப்புடையவனாகவும், இம் மண்டபங்களிலுள்ள சிற்ப அமைப்புகள் ஒரு காலத்தனவாகவும் காணப்படுவதாலும் இவை தமிழகத்தை நாற்பது ஆண்டுகள் நலம்பெற
ஆட்சிபுரிந்த மூன்றாங்குலோத்துங்கனால் அமைக்கப்பெற்றனவே எனக் கருத வேண்டியுள்ளது. இவ்வேந்தன் பாண்டியர்களை வென்று
பாண்டிமண்டலத்திற்குச் சோழ பாண்டிய மண்டலம்
62

எனவும், மதுரைமாநகர்க்கு முடித்தலை கொண்ட சோழபுரம் எனவும், மதுரையரண் மனையிலுள்ள கொமண்டபத்திற்குச்சேரபாண்டியர்தம்பிரான் எனவும் தன் பெயர்களை வழங்கியுள்ளான் அவ்வாறே இத்தில்லைப் பதியில், பாண்டியர் தம்பிரானாகிய மூன்றாங் குலோத்துங்கனாற் கட்டப் பெற்ற முருகன் கோயிலும் பாண்டிய நாயகம் 6T6T வழங்கப்பெறுவதாயிற்று எனத்தெரிகிறது. தில்லைத் திருக் கோயிலிற் சேக்கிழார்பெருமான் அமர்ந்து திருத்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கும், உரைவிரித்தற்கும் இடமாக விளங்கியது ஆயிரக்கால் மண்டபமாகும். இது மூன்றாங் குலோத்துங்கனாகிய இவ்வேந்தனாற்கட்டப்பெற்றிருத்தல் வேண்டும்என்பது ஆராய்ச்சியறிஞர் சதாசிவபண்டாரத்தார் துணிபாகும்.
முதல் குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாம் ஆட்சியாண்டில் மிழலைநாட்டு வேளாண்மை கொண்ட கண்டன் மாதவன் என்பான் தில்லையம்பலத்தின் வடகீழ்த்திசையில் புராணநூல் விரிக்கும் புரிசை மளிகையினை அமைத்தான் என்ற செய்தி முன்னர்க் கூறப்பட்டது. அப்புராண மண்டபத்தினை ஆயிரக்கால் மண்டபமாக விரிவு படுத்தியவன் மூன்றாங்குலோத்துங்க சோழன் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். ஆயிரக்கால் மண்டபம் கட்டும் வழக்கம் இவன் காலத்தில் தான் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம் தேவாசிரியன் என வழங்கப்பெறுகின்றது. இம் மண்டபம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்பது, திரிபுண வீரேச்சுரத்திலுள்ள வடமொழிக் கல்வெட்டால் அறியப்படும். இவ்வேந்தனது படைத்தலைவனாகிய கண்டர் சூரியன் சம்புவராயன் என்பான் திருவக்கரையிலுள்ள சிவன் கோயிலில் சூரியன் திருக்கோபுரமும் கண்டர் சூரியன் என்ற ஆயிரக்கால் மண்டபமும் ஆகியவற்றைக் கட்டியுள்ளான். எனவே தில்லையிலுள்ள ஆயிரக்கால் மண்டபமும் இவ்வேந்தன் காலத்திலேயே கட்டப்பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாயிரக்கால் மண்டபத்திலேயே சேக்கிழார் நாயனார் தாம்பாடிய திருத்தொண்டர் புராணத்திற்கு உரை விரித்தருளினார் என்பது உமாபதி சிவாசாரியார் இயற்றிய சேக்கிழார் புராணத்தால் அறியப்படும்.
ஆய்வரங்கு 2008

Page 73
சோழர் கால தஞ்சைப் பெ
ിഖ്യ தரையில் \ கருவறை தாழ்வாரத்தில் இருக்கும் இந்தச் சிற்பத்தில்
 

ச் சிற்பங்கள் ருங்கோயில்
ஆடும் நடராஜன்
சில பகுதிகளில் வண்ணம் இன்றளவும் இருக்கிறது. أمر

Page 74
激 #
சிற்பக்கலையும், கட்டடக்கலையும் இ
6Tഖ് - B,
 
 
 
 
 
 
 
 
 
 

னையும் பிரம்மாண்டமான கோவில்

Page 75
قطعتيقظ
壘轟
 


Page 76
ராஜகம்பீர குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரின்
ங்ாருங்காத்
Pస్లోనిw
 
 

என் மண்டபம்
வடிவில் உருவமைக்கப்பட்டிருக்கிறது

Page 77
* 岛高
 

வனம்
| ,

Page 78
கங்கை கொண்
TL. T.I.
தெற்குப்புற
"""""""""""FFFFFFFFFFFFFFFFFFFFF"
 
 
 

ண்ட சோழபுரம்
FIFA
UT56T لر

Page 79
சோழர் காலத்துச் ச
சமூகநிலை
சோழர் காலத்துச் சமூகம் சாதி அடிப்படையில் அமைந்திருந்தது' வர்ணாசிரமதர்மம்
வலியுறுத்தப்பட்டது. எனவே சமூகத்தில் உயர்வு தாழ்வும், வேற்றுமைகளும் பாராட்டப்பட்டன. சாதிக்குள் உட்பிரிவுகள் பெருகின. சமூகத்தின் உயர்ந்த மட்டத்தில் வேதியர்கள் வைக்கப்பட்டனர். அவர்கள் எல்லா நிலையிலும் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டனர். அவர்கள் தனிக் கிராமங்களில் வாழ்ந்தனர். அவை அகரங்கள், அக்கிரகாரங்கள் அல்லது சதுர்வேதி மங்கலங்கள் எனப்பட்டன. சோழர் காலம் பிராமணர்களை மறுமுறையும் சிறப்பான இடத்துக்குக் கொண்டு வந்தது என்றார் டாக்டர் என். சுப்பிரமணியம்’. அவர்கள் கோயில்களிலும் மடங்களிலும் வேதக் கல்வி நிலையங்களிலும் தனிச் சலுகைகளும் உடையவர்களாக விளங்கினர். ஆலயப் பணிகளும் கல்விச் சலுகைகளும் அவர்களுடைய நிலையை உயர்த்தின. இலவச உண்டியும் உறையுளும், வேதவிருத்தி, பட்டவிருத்தி, பாதரவிருத்தி, புராணவிருத்தி போன்ற பட்டங்களும் தானங்களும் அவர்களுடைய வசதிகளை மேலும் பெருக்கின. பொதுவாக வேதியர் இனத்தினருக்கு சமூகப் பாதுகாவலும் பொருளாதார விடுதலையும் இருந்தன. சமூகத்தின் உயர் மட்டத்திலிருந்த மக்களுக்கு மிகுதியான சமூகச் சுதந்திரம் இருந்தது என்று பேராசிரியர் கே. எ. நீலகண்ட சாஸ்திரியர்கள் கூறினார்.
l. T. V. S. Pandarathar - History of the later Cholas 2. History of Tamilnadu P. 343. Dr. N. Subramanial 3. The Cholas P. 546. 4. (a) Krishnasamy, Cultural Development in the
(b) Sastry, K. A. N. Cholas, P. 546. -
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

Cup5Î LI6ôILIIID666060
சமூக அமைப்பில் சதுர்வர்ணப்பாகுபாடு காட்டப்பட்டது என்றாலும் அது கொள்கையளவில் ஏட்டுவடிவப்பாகுபாடேயாகும். உண்மையில் சமூகம் இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்தது. சலுகைகளும் வசதியும் உடையவர்கள் உயர்ந்த நிலையிலும் வசதியற்று வரிச்சுமைகளையும் வேலைப்பளுவையும் தாங்கியவர்கள் தாழ்ந்த நிலையிலும் இருந்தனர். அரசுப் பணிகளிலும், படைகளிலும் பணியாற்றிய பரம்பரையினர் நிலமானியங்கள் பெற்றுச் சமூகத்தில் நிலக்கிழார்களாகத் தழைத்தனர்; உயர்ந்தவர்களாக கருதப்பட்டனர். சாதி உணர்வு ஆழமாக வேரூன்றியது. நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் உயர்வான நிலையிலிருந்தனர். இவர்களுக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட சாதிப்பிரிவினர் இருந்தனர். அவர்கள் வலங்கை இடங்கை என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன்ர். குருதி உறவுகள் தொழில் குழுக்கள் ஆகியவை சமூகத்தைக் கூறிட்டன. பள்ளி, சுருதிமார், நத்தமான் முதலான புதிய சாதிகள் சாதிப்பிரிவில் இணைக்கப்பட்டன. எனவே சமூகத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் பாகுபாடும் அதனால் எழுந்த வினைகளால் சமூகப் பூசல்களும் போராட்டங்களும் தோன்றின. சாதிவேற்றுமைகளும் ஏற்றத் தாழ்வுகளும் பாராட்டப்பட்டன. என்றாலும் சோழர் காலத்துச் சமூகத்தில் அமைதியின்மையும் பூசல்களும் எழவில்லை என்று கருதுவது உண்மைக்குப் புறம்பானதாகும்." சமூக உரிமைகளுக்காக சச்சரவுகளும் சண்டைகளும் எழுந்துள்ளன.
- P. 547.
Chola Period P. 144.
63

Page 80
வலங்கை இடங்கை பிரிவினர்கள்
சோழர் காலத்துச் சமூகத்தில் உயர்வு தாழ்வு பாராட்டப்பட்டது என்பதை வலங்கை இடங்கைப் புராணக் கதைகள் காட்டுகின்றன. வலங்கை இடங்கைப் புராணத்தைக் காட்டும் நூற்சுவடிப்படி வலங்கைப் பிரிவில் 98 குலங்களும் இடங்கைப் பிரியில் 98 குலங்களும் இருந்தன. இடங்கைப் பிரிவினர்கள் உழைப்பாளிகளும் வணிகர்களுமாவர் என்று விஜயபாகுவின் பொலன்னருவை கல்வெட்டு உணர்த்துகின்றது.
சமூகத்தில் வசதியுடையவர்கள் பல்லக்கில் சென்றனர். வட்டக்குடை பீலிக்குடைகளும் கால்களுக்கு மரக்கட்டை செருப்பணிகளும் பயன்படுத்தினர். அரசின் அரவணைப்பும் சலுகைகளும் அதனால் வாழ்க்கை வசதிகளும் பெற்றிருந்தவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொண்டனர். நடையுடை பாவனைகளிலும் வேற்றுமையைக் காட்டிக் கொண்டனர். அவர்கள் உழைக்க வேண்டியதில்லை. உழைப்புக்கு உறுதுணையான வலக்கைக்கு அவர்கள் ஓய்வளித்திருந்தனர் என்பதைக் காட்ட அவர்களுடைய தாய்க் குலம் புடவையின் முந்தானையை வலப்பக்கத் தோள் வழி எடுத்துச் சுற்றி மேலாடையணிந்தனர். இவ்வினங்கள் வலங்கை சலுகையும் மதிப்பும் பெற்றவர்களாக விளங்கினர்.
சமூகத்தில் சலுகைகளற்றவர்கள் உழைத்து வாழ்ந்தனர்; அரசுக்குரிய கட்டாயப் பணிகள் செய்தனர். வரிப்பளுவையும் தாங்கினர். அவர்கள் உழைப்பாளிகள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதப்பட்டனர். உழைப்பின் சின்னமாகிய வலக்கைக்கு ஒய்வில்லை. எனவே உழைப்பாளிகளின் தாய்க்குலம் புடவையின் முந்தனையை இடப்பக்க தோள்வழி எடுத்துச் சுற்றி மேலாடை அணிந்தனர். இவ்வினங்கள்
1. Dr. K. K. Pillai, தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும்.ப.
64

இடங்கையினர் எனப்பட்டனர். தொண்டு புரிவது அவர்களுடைய கடமை, உழைப்பு அவர்களுக்குக் கட்டாயத் தண்டமெனத் தோன்றிய கதைகளின் வடிவமே வலங்கை இடங்கை கதைகள்.
மெல்ல மெல்ல வலங்கை இடங்கைப் பாகுபாடு
முறுக்கேறியது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் குலப்பாகுபாடு வரையறுக்கப்பட்டது.
இனப்பூசல்கள்
சோழர் காலத்துச் சமூகத்தில் வேதியர் இனத்தார் சலுகைகளும் வசதிகளும் பெற்று வாழ்ந்தனர். நிலக்கிழார்கள் நிலமானியங்களும் வரிச்சலுகைகளும் பெற்றுக் காணியாட்சி நடத்தி வாழ்ந்தனர். காணியாட்சியைப் பயன்படுத்திக் கொண்டு நிலமானிய உடைமையாளர்கள் சாதாரண மக்களிடையே பலவகையான நிலவரியும் வீட்டுவரியும், விதம் விதமான தொழில் வரிகளும் விதித்து அரசாங்கத்தின் சார்பில் வசூலித்துத் தங்களுடைய வசதிக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். குலத்தையும், தொழிலையும், உற்பத்திச் செய்த பண்டங்களையும் காரணம் காட்டி வரிகளையும் கட்டணங்களையும், சுங்கங்களையும் மகமைகளையும் தண்டங்களையும் அரசின் சார்பிலும் கோயில்களின் பெயரிலும் வசூலித்தனர். ஏழ்மையும், இடையிடையே தோன்றிய பஞ்சங்களும் சாதாரண மக்களை வாட்டி மனதைப் புழுங்கச் செய்தன. எனவே இடங்கை வலங்கைப் பூசல்கள் தோன்றின. இடங்கைக் குலத்தாரும் வலங்கைப் பிரிவில் பாதிக்கப்பட்ட சிலரும் சேர்ந்து வேதியர் குலத்தாருக்கும் நிலஉடைமையாளர்களுக்கும் எவ்விதத் தொண்டும் செய்யக்கூடாது என்று முடிவு கட்டிப் புரட்சிப் பாதையை நோக்கினர். (விருத்தாச்சலம் கொறுக்கைக் கல்வெட்டுகள்) எனவே வலங்கை இடங்கைப் போராட்டங்களும் பூசல்களும் பெருகின. கி. பி. 1071-ல் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நடைபெற்ற கலகத்தில்
10
ஆய்வரங்கு 2008

Page 81
இராசமகேந்திர சதுர்வேதிமங்கலம் சுட்டு எரிக்கப்பட்டது. கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. கோயில்களையும் கோயில் பண்டாரங்களையும் சூறையாடினர் என்று திருவரங்கம் கோயில் கல்வெட்டுச் செய்தி காட்டுகின்றது. இனப் போராட்ட நிகழ்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இதைப் போன்று காணியாட்சி நடத்தியவர்களுக்கு எதிராகவும் படைமானியம் பெற்றவர்களுக்கு எதிராகவும் பூசல்கள் நிகழ்ந்தன. சமுதாய உரிமைகளைக் குறைக்க அல்லது கடமைகளைப் பளுவாக்கக் கொணர்ந்த சட்டங்களும், தாங்க முடியாத வரிகளும் தண்டங்களும் வரிகொடா இயக்கங்களை உருவாக்கின, அடக்கு முறையை மீறிக் கலவரங்கள் வெடிக்கச் செய்தன.
நீண்டகால அடக்குமுறைகளும், சுரண்டல்களும் ஏற்படுத்திய மனக்குமுறலினால் இனப் போராட்டம் புரட்சிப் பாதையில் சென்றது மட்டுமின்றி ஆலயங்களை உடைத்து எறியும் அளவுக்கு எல்லை கடந்து சென்றுள்ளது என்பதை இது உணர்த்துகின்றது.
கலப்பு இனங்கள்
வலங்கை இடங்கை குலங்கள் நீங்கலாகச் சில கலப்பு இனத்தவர்களும் சமூகத்தில் இருந்தனர். அவர்களை அனுலோமர்கள் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மாகிஷியர்களும், காரணிகர் களும் கலப்பினத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இரதக்காரர்கள் என்ன தொழில்கள் செய்ய வேண்டுமென்று இராசிரேய சதுர்வேதிமங்கலத்துப் பட்டர்கள் வரையறை செய்தனர். அதன்படி இரதக்காரர்கள் கட்டிடம் கட்டுதலும் இரதங்கள் நிர்மாணித்தலும், வேதியர்களுக்கு வேள்விக்கு வேண்டிய சட்டுவங்களும் தட்டுகளும் செய்து தருதலும் வேண்டுமென்று பணித்தனர். பிரம்மச்சத்திரியர்களும் பிரம்ம வைசியர்களும் கலப்பு இனத்தவர்களேயாவர்.
"சோழப் பேரரசுக் சமயப் பெருநெறிகளும்"

சேரிமக்கள்
சமூகத்தில் அடிமட்டத்தில் இருந்தவர்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களுக்கெனச் சேரிகளும் சுடுகாடுகளும் தனியாகவிருந்தன. அவர்கள் தீண்டப்படாத வர்களாக வைக்கப்பட்டனரா என்பது ஆராய்வதற்குரியது. சேரி மக்களுக்கும் பிறருக்கும் அடிக்கடி பூசல்களும் சச்சரவுகளும் நிகழ்ந்தன.
தமிழகத்தில் அடிமைமுறை விரிவாக்கம்
போர்க் கைதிகளை அடிமை வேலைக்குக் கட்டாயப்படுத்தும் வழக்கம் சங்க காலம் தொட்டே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. சங்கம் மருவிய காலத்தில் வாணிபப் பொருளாதாரத்தின் மேம்பாடு கூலியடிமைகளைப் பெருக்கின. காவிரிப் பூம்பட்டினத்தில் ‘கொண்டிமகளிர், (சிறைப் பிடிக்கப்பட்டோர்) அம்பலங்களில் விளக்கேற்றினர். வணிகர்கள் வெளிநாடுகளிலிருந்து கொணர்ந்த அடிமைகள் அரசர்களுக்குப் பணி ஆட்களாகப் பயன்பட்டனர்.
பல்லவர் காலத்தில் சமுதாய அமைப்புமுறையும் நில உடைமை முறையும், பொருளாதார வாழ்க்கை முறையும் ஒட்டு மொத்த மாற்றம் கண்டன. தேவதானங்களையும் பிரம்மதேய நிலங்களையும் மையம் கொண்ட படைமானியமுறை புதிய சமுதாயத் திருப்பமாகியது. பல்லவர்களின் சாசனங்கள் (குறிப்பாகக் காசக்குடி சாசனம்) மேல்குடியினரின் சமுதாய உரிமைகளை வரையறைசெய்வதுடன் புதிய சமுதாய நடைமுறைக்கு விளக்கமளிக்கின்றது.
கழனிகளிலிருந்து விரட்டப்பட்டு வறண்ட மேட்டுப்பகுதிகளில் அமர்ந்தோர் ஏழ்மையில் வாடிக் கட்டாய தண்டங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். கோயில்களுக்கு ஊழியம், கோயில் நிலங்களுக்குக் கட்டாயப் பணி, அரசர்களுக்குக் கட்டாயப்பணி எனப் பல வகைகளுக்கு மேல் ஆளோலை மூலம் அடிமைப்படுத்தும் வழக்கமும் விரிவடைந்த வண்ணமிருந்தது.
65

Page 82
சோழர் காலத்தில் இடைவிடாப் போர்கள்வழிப் போர்அடிமைகள் குவிந்தனர். கோயில் அடிமைகள், அரசர்களுக்கான அடிமைகளுக்கும் மேல் குடும்ப அடிமைகள் விரிவடைந்திருந்தனர். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் திருச்சி வயலூர் திருக்கற்றளிப் பரமேசுவரர் கோவிலுக்குப் பணிப் பெண்களை அடிமைகளாக அளித்த நிகழ்ச்சி கல்வெட்டில் ஆதாரமாகப் பொறிக்கப் பொற்றது. கி.பி. 1000இல் மீனவப் பெண்கள் 12 பேர் தங்களைச் செங்கற்பட்டு மாவட்டம் திருப்படைந்தை கோவிலுக்கு வறுமையின் காரணமாக அடிமைகளாக விற்றுக் கொண்டனர். கி. பி. 10 - ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசு அதிகாரி ஒருவர் திருநெல்வேலி கருங்குளம் வராகதேவர் கோவிலுக்குப் பணியாட்களை அடிமைகளாகத் தானம் செய்துள்ளார். இதே மாதிரி 1208 இல் உயர் அதிகாரி திருவாலங்காட்டுக் கோவில் மடத்துக்கு முப்பத்தாறுபேரைப் பணி அடிமைகளாக வழங்கினார். இதே மாதிரி தங்களுடைய பரம்பரை அடிமைகளைச் சூலமங்கலக் கோவிலுக்கு அடிமைகளாக அதிகாரி ஒருவர் அளித்துள்ளார்.
வீட்டடிமைகளும் கழனிக் குடியாட்களான பணி அடிமைகளும் நாடு முழுவதும் இருந்தனர். சொத்துரிமை வழக்கொன்றில் ஒரு குடும்பத் தலைவன் இறந்த பின்னர் நிலபுலங்களுடன் அடிமைகளும் மனைவிக்குச் சொந்தமாகும் என்ற ஒரு தீர்ப்பை இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் குலோத்துங்க சோழச் சதுர்வேதிமங்கலத்துச் சபையோர் வழங்கியுள்ளனர். வெள்ளாட்டிகள் வேதியர் குடியிருப்பில் அடிமைப் பெண்களாகும் வழக்கமும் பிற சாதாரணர் ஏனைய மேல் குடியினருக்குக் கட்டாயப் பணிகளுக்காக அடிமைப்படுத்தப்படும் வழக்கமும் தொடர்ந்தது.
தேவரடியார்கள் நிலையான கோவிலடிமை களாக்கப்பட்டது சோழர் காலம் முதற் கொண்டே யாகும்.
66

“எங்களடியாள் அங்காடியும் இவள் மகள் பெருங்காடியும், இவ்ஸ் மக்களும் திருவக்கரையுடைய மாதேவற்கு தேவரடியாராக நீர்வார்த்துக்குடுத்தோம்" என்று கி. பி. 1098 இல் மூன்று வேளாளர்கள் தென்னார்க்காடு திருவக்கரை ஊர் சந்திர மெளலீசுவரர் கோவிலுக்கு விற்றமை, கல்வெட்டா தாரம் மூலம் விளக்கம் பெறுகின்றது.
இவற்றால் சோழர் காலத்தில் அடிமை வியாபாரம் விரிவடைந்து கொண்டிருந்தமை விளக்கமாகின்றது. அடிமை வியாபாரத்துக்கு கல்வெட்டுக்கள் ஆதாரமாகப் பதிவாயின. ஆளோலை முறைப்படி விற்பது அன்றாட நிகழ்ச்சி. தனி நபர்களாவும், குடும்பமாகவும், கூட்டமாகவும் விற்கும் நிலை விரிவடைந்தது. குடும்பத்தினர் அடிமையாக்கப்படும் போது பிறக்கவிருக்கும் வாரிசுகளைத் தலைமுறை காலத்துக்கும் என விற்பதும் வாங்குவதுமான நிகழ்ச்சிகள் சமுதாயக் கொடுமைகளாகத் தொடர்ந்தன.
பெண்கள் நிலை
பெண்கள் ஆடவர்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவராயினர். ԼՈ6նն} உரிமைகள் சாதிமரபுகளுக்குக் கட்டுப்பட்டன. சீதனச் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை இருந்தது. சீதனச் சொத்தின் மீதான உரிமை பிறர் ஆதிக்கத்துக்கு அப்பாற்பட்டது. சீதனச் சொத்தை விற்கும் உரிமை கணவர்களுக்குக் கிடையாது. குடும்பச் சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. உயர்குடிப் பெண்கள் அதிகமான உரிமைகளைப் பெற்றிருந்தனர்; சமூகத்தில் சிறந்த நிலையில் வைக்கப்பட்டனர். அரசியர்கள் நாட்டு நலனுக்குக் கொள்கைகள் வகுப்பதில் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தினர். கோயில் களுக்குக் கொடைகளும் தானங்களும் அவர்கள் பெயரில் கொடுத்தனர்.
ஆய்வரங்கு 2008

Page 83
இலக்கியக் குறிப்புகளும், சிற்பங்களும், ஒவியங்களும் பெண்களின் ஆடையலங் காரங்களைக் காட்டுகின்றன அல்லது ஒவியனின் கற்பனையை உணர்த்துகின்றன. குடும்பப்பெண்கள் கொய்சகம் வைத்துப் புடவை கட்டினர். புடவையின் முந்தானைப் பகுதி உடலின் மேலாடையாகப் பயன்பட்டது. சிற்பங்களிலும் ஒவியங்களிலும் மேலாடையற்றநிலை, கலைஞன் கற்பனை என்று உணரவேண்டும். செல்வக் குடும்பத்துப் பெண்கள் தங்கத்தாலும், முத்தாலும் ஆன பலவகை அணிகலன்களை அணிந்தனர். பந்தாட்டம் ஊஞ்சலாட்டம் போன்றவை அவர்களுக்குப் பொழுதுபோக்கு,
கற்பு, பெண்களுக்கு அணியாகவும், வலிமையாகவும் விளங்கியது. மக்களிடத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை பாராட்டப்பட்டுப் போற்றி வளர்க்கப்பட்டது. ஆனால் செல்வந்தர்களும் அரசர்களும் இதற்கு விதிவிலக்காக நடந்தனர். உடன்கட்டையேறும் தீயவழக்கம் தமிழகத்தில் புகுந்திருந்தது.
தேவரடியார்கள்
கோயில்களில் திருவலகிடுவதற்கும் திருமெழு கிடுவதற்கும் மலர் தொடுப்பதற்கும் ஆடல்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 

பாடல்களுக்கும் கன்னியர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர்.
அவர்கள் தேவர் அடியார்கள் எனப்பட்டனர். அவர்கள் கல்வியிலும் கலைகளிலும் சிறந்த பயிற்சி பெற்றவர்களாக விளங்கினர். திருமேனி ஊர் வலங்களின் போது ஆடலுக்காகக் கோயிலுக்கு வெளியில் தோன்றினர். கோயில்களிலும் மடங்களிலும் நடைபெற்ற ஆடலுக்காகக் கோயிலுக்கு வெளியில் தோன்றினர். கோயில்களிலும் மடங்களிலும் நடைபெற்ற ஆடல் பாடல்களிலும் சாந்திக்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து, தமிழ்க்கூத்து போன்ற வைகளிலும் அவர்கள் பங்கு கொண்டனர்.
தேவரடியார்களின் பராமரிப்புக்காக மானியங்களும் தானங்களும் வழங்கப்பட்டிருந்தன. எனவே, அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாவல் இருந்தது. என்றாலும் கிரேக்க நாட்டு ஹெட்டேற (Hetaera) என்ற பெண்களைப் போன்று இவர்கள் குறிப்பிட்ட செல்வந்தர்களுக்குப் பொழுது போக்குக்கும் உல்லாசத்துக்கும் இடமளித்தனர்.
தேவரடியார்களுள் சிலர் மணம் முடித்து இல்லறவாழ்வில் ஈடுபட்டனர் என்பதைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
67

Page 84
சோழர்காலக் கல் புதிய சொற்களு
சி. கோவிந்தர
தமிழகத்தில் உள்ள கோயில்களிலும், மலைப்பாறைகளிலும், குகைகளிலும், தனித்து நிறுத்தப்பட்ட பலவகைக் கற்கள், கம்பங்கள் ஆகியவற்றிலும் கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கிலுள்ள இக்கல்வெட்டுகள் பல்லவர், பாண்டியர், சோழர், ஒய்சலர், வாணர், நாயக்கர், மராட்டியர் ஆகிய மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் பொறிக்கப் பட்டுள்ளன. கல்வெட்டுக்களைப் போன்றே அரசர்களால் செப்பேடுகளில் அறச்சாசனங்களும் செய்தளிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்திகளில் பெரும்பான்மையாக அமைந்திருப்பது அறநிவந்தங் களைப் பற்றியதாகவே உள்ளதென்பது குறிப்பிடத் தக்கதாகும். தமிழகக் கல்வெட்டுகளின் தொடர் நிலைக்கால அளவினை, கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதலாக கி.பி. பதினேழாம் நூற்றாண்டளவினதாக ஓராயிரம் ஆண்டளவினைக் கணித்தலாகும்.
எல்லை :
பிற்காலச் சோழர் மரபினைக் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோற்றுவித்த விசயாலய சோழனின் மரபினர் கி. பி. பதினோராம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில் ஆட்சி செய்துள்ளனர். தொடர்ந்து கீழைச்சாளுக்கிய சோழ குலத்தவர்களின் ஆட்சி கி. பி. 1279 வரையில் நிகழ்ந்துள்ளது.
நான்கு நூற்றாண்டுகட்கும் மேலாக நிகழ்ந்த இச்சோழப் பேரரசில், சோழ மண்டலத்தினைச் சார்ந்ததாக, தொண்டைநாடு, சேரநாடு, - கொங்குநாடு, ஆகிய தமிழகப் பகுதிகள் அடங்கியிருந்துள்ளன. ஆட்சி எல்லைக்கும்.
68

boopGeiboflób
b அகராதியும்
ாசனார்
வடபுறத்தே ஆந்திரநாடு, கன்னடநாடு, முதலாகக் கங்கைக்கரை வரையிலும் தொடர்ந்த போர்நிகழ்ச்சிகளினால், ஒருசில பகுதிகளில் சோழரின் செல்வாக்கும் ஆட்சியும் நிகழ்ந்து உள்ளன. மற்றும் தமிழகத்திற்கு வெளியே கடல் கடந்த இடங்களாக, கடாரம் என்னும் பர்மாதேசம், மலேயா நாடு, கிழக்கிந்தியத் தீவுகளில் சுமத்திரா, ஜாவா ஆகிய நாடுகள், ஈழமெனும் இலங்கை நாடு ஆகிய மொழி வேறுபட்ட நாடுகளும் சோழரின் செல்வாக்கிடங்களாகவும் உரிமையிடங்களாகவும் அவ்வப்போது இருந்துள்ளன.
மொழிநிலை :
நானூறு ஆண்டிற்கு மேலாகத் தொடர்ந்திருந்த பேரரசொன்றின் ஆட்சிக்காலத்தில், சோழநாட்டில் வாழ்ந்திருந்த மக்களுடன் பிறநாட்டு மக்களின் கூட்டுறவும் அரசியல் பிணைப்பும் ஏற்படுவது வாழ்வியல் நிலையேயாகும். இவ்வாறமைந்த சமூகவிணக் கத்தினால் மொழிவழக்கில் பிறமொழித்தாக்கங்கள் இன்றியமையாத நிலையில் ஏற்பட்டமைந்து வழக்கில் தொடர்வது இயல்பாகும். இவ்வாறமைந்த மொழித்தாக்கக் கலப்புருச் சொற்களை, கொங்கு நாடு, சோழநாடு, பாண்டியநாடு, ஈழநாடு, வடுகநாடு ஆகிய நாடுகளில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் காணமுடிகின்றது.
பேசுவது தமிழாயினும் வழக்கில் பயிலப்பெறும் சொற்கள் பல்வேறுபட்ட வடிவங்களில் வருவதுடன் பொருட்பாடு கருத்துக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்ப மாறுபட்டதாக வழங்கப்பெற்றுள்ளதைக் கல்வெட்டுச் செய்திகட்கமைந்த சொற்களின் பொருள
ஆய்வரங்கு 2008

Page 85
மைதியினால் அறியமுடிகின்றது. எடுத்துக்காட்டாக, விடுதல் என்ற சொல்லிற்குச் சோழநாட்டார், தொடர்பினை, பற்றினை விட்டுவிடுதல், அதனினின்றும் நீங்கிவிடுதல் ஆகிய பொருள் நிலையினையே குறிக்கின்றனர். இச்சொல் தென்பாண்டி நாட்டில் மிகுதியாக வார்த்தல், மேலும் ஊற்றுதல் இன்றும் வழங்கப்படுகின்றது. இந்நிலையினை ஆராயின், சோழ நாட்டு வழக்கு பழந்தமிழ் வழக்கென்பதும் தென்பாண்டிநாட்டு வழக்கு பிற்காலத்தில் கன்னடமொழித் தாக்கத்தால் பயிலப்பெற்று வருவதென்பதும் அறியமுடிகின்றது. மற்றும், சோழர்கள் பிறநாட்டினருடன் நிகழ்த்திய போர்களினாலும் பிற நாடுகளில் ஆட்சியை நிறுவியதினாலும் அரசியல் அதிகாரநெறியில் திசை மொழியாளர்களின் இடமாற்றத்தால் இயல்பாகவே மொழித்தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
சோழர்களின் பெண்வழி உரிமை அரசனான குலோத்துங்கனது உரிமைநாடு கீழைச்சாளுக்கிய வேங்கி நாடாகும். அந்நாட்டின் தொன்மையான மொழி வடுகு என்பதாகும். இதனையே தெலுங்கு என்பர். இவர்களுடைய தொடர்பு அரசியல் உரிமைகளுடன் தமிழகத்தில் இருந்துள்ளது. இதைப்போன்றே வடகொங்கு நாட்டவராகிய கன்னட மொழியினரின் இணக்கமும் வடமொழியை மிகுதியாகக் கொண்ட கேரளரின் பிணைப்பும் சோழவரசில் இடப்பெயர்ச்சியாகவும் கலந்துறை மனைவாழ்க்கையாகவும் நிகழ்ந்துள்ளன. ரேணான்டு சோழர் என்றே தெலுங்குச் சோழர் மரபொன்று தோன்றிப் பெருகியிருந்தனை வரலாறு கணிக்கின்றது.
மன்னர்கள் பிறமொழி மன்னர்களிடம் பெண்கொண்ட நிலையிலும், பிறவரசரால் கொடுக்கப்பட்ட பெண்வழி நிலைப்பினாலும் அரச சுற்றத்தில் மொழிநிலைக் கலப்பும் குறிப்பும் ஏற்பட்டிருத்தற்கு இயல்புளது. வெற்றிபெற்ற பிறமொழித் தேயங்களில் வீரர்கள் கொணர்ந்த மங்கையரை வாழ்க்கைக்கு இலக்காக்கிக் கொண்ட நிலையிலும் சோழர்காலத் தமிழில் புதிய சொற்களும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சொல்திரிபுகளும் மக்கள் வழக்கில் தாக்கம் பெற்றுள்ளன. இவற்றிற்கும் மேலாகச் சோழ நாட்டு, பிறநாட்டு வணிகக்குழுவினரும் மக்களோடு பொருளியல் தொடர்புடையராக இருப்பது வணிகநிலையாதலின், அதனால் மொழிக் கலப்பினையும் திரிபுநிலை மரபினையும் படைத்துக் கொள்ளும் ஓர் வழக்கும் அங்காடி, சந்தை, நகரம் ஆகிய வணிகவிடங்களின் வழியே மக்களிடம் எளிதில் தாக்கமுற்று வழக்கில் சொல்லினும் பொருள்நிலையிலும் புதியதோர் படைப்பினை ஆக்கிக் கொண்டுள்ளதனை அறியமுடிகின்றது.
இவ்வாறான மொழி நிலையில் சோழராட்சியில் தமிழ் மொழி நாட்டுவழக்கிலும் ஏட்டுவழக்கிலும் இருந்த காலத்திலேதான் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் தோன்றியுள்ளன என்பதுடன், ஆட்சியில் அரசியல் மதிப்புடன் வாழ்ந்திருந்த வடமொழிப் பண்டிதர்களின் தொடர்பினாலும், அரசு செய்தளித்த அறச்செயல்களையும் ஆணைகளையும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் செதுக்கு வதற்குரிய நிவந்த வாசகங்களைப் பெரும்பான்மையும் வடமொழிப் பண்டிதர்களே எழுதியளித்துள்ளமை யினாலும் தமிழ்மொழி வழக்கில் வடமொழியின் தாக்கம் மிகுந்த புதிய பல சொற்கள் இடம் பெற்றுள்ளதனையும் அறியமுடிகின்றது.
இவ்வாறாக, சோழர் கால ஆட்சியில் நிலவிய மொழி நிலையில் தோன்றியுள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள அரிய புதிய சொற்களுள் ஒரு சிலவற்றை அகரவரிசையில் பொருளமைதியுடன் தொகுத்துரைப்பது ஏற்புடைய தாகும்.
அகராதிக் கலை பற்றிய மதிப்பீட்டில் இதுவரையில் தமிழ் மொழியின் கணிப்பாக வெளிவந்துள்ள நிகண்டுகளும் அகராதிகளும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு அமைந்த களத்தில் தக்க மதிப்பீட்டினைப் பெற்றுள்ளன. இக்காலத்தில் பல்கலைக் கழகங்களில் உருவாக்கம் பெறும் அகராதிகள் மொழி வளர்ச்சிக்குரிய
69

Page 86
கூறுபாடுகளைக் கொண்டதாக விரிவு நிலைபெறுவது நன்முயற்சியாகும் எனினும், அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள கல்வெட்டுகளில் புதிய அரிய சொற்கள் பல்வேறுபட்ட நிலைகளில் உள்ளன. அவற்றை நிகண்டுரையளவில் கூறுதலோடு, வட்டார வழக்கில் அவ்வக் காலத்தில் அச்சொல் பெறும் பொருளுரையினையும் ஏற்புடைய சான்றமைதியுடன் அகராதிகளில் இடம் பெறச் செய்யின் இருபதாம் நூற்றாண்டளவில் மொழி நிறைவினைத் திட்ட அளவில் அகராதி பெற்றதாகும்.
சொல்லும் பொருளும் :
அகர முதலியாகும் அகராதிகளில் முதற் பகுதியில் தொடக்கமுற்று நிகழ்வது அகரவரிசைச் சொற்களாகும். அவற்றுள் கல்வெட்டுகள் குறிக்கும் நாணய மதிப்பீட்டுப் பெயர்களுள் ஒன்று அக்கம் என்பதாகும். இவ்வக்கம் பகர வரிசையில் புத்தக்கம் என்றும் இடம்பெறும். அகம் என்பதன் திரிபே அக்கமாகும். அகுதல் மதிப்பில் குறைதல் ஒரு காசு என்பதன் மதிப்பிற்கு ஈடான பின்ன மதிப்பீட்டின் பகுதியே அக்கமாகும். சோழர் காலத்தில் 12 அக்கம் கொண்டது, ஒருகாசு 6 அக்கங் கொண்டது. ஒரு காசு என்ற அளவீடு பரவலாகப் பொருளாக்கி மதிப்பீட்டில் இருந்தபோது பராந்தகன் ஆட்சியில் ஈழநாட்டுப் பொற்காசு சோழ நாட்டிலும் வழக்கில் நிலவியுள்ளது. ஈழப் பொன்னின் உயரத்திற்கேற்ப அதன் பின்ன நாணய மதிப்பீட்டினை அரசு 7 1/2 அக்கம் கொண்டது ஒரு காசு என்ற அளவில் வழங்கியுள்ளது. இவ்வாறு ஈழக்காசுக்குரியதாகப் புதிதாகப்பின்ன மதிப்பீடு செய்யபெற்ற அக்கமே புத்தக்கம் என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது.
அகரம் இப்பெயர்ச்சொல்லிற்கு, பார்ப்பனச்சேரி, பிராமணர்கள் வாழுமிடம் என்ற அளவில், பொருள். விளக்கம் செய்துள்ளனர். கல்வெட்டுகளில் காணப்பெறும் தானவகைகளைக் கொண்டு இச்சொல்லிற்கு விளக்கம் காண முடிகின்றது. அக்ரஹாரம் என்ற, சொல்லிற்குத் தமிழிலமைந்த குறிப்புப்பெயரே அகரம் என்பதாகும். அகரம் என்பது
70

சதுர் வேதியர்களான பிராமணர்கட்குத் திருக்கோயில்களில் உச்சியம்போதில் மரியாதை செய்து குறித்த அளவில் கொடுக்கப்பட்ட உணவு நியதிதானமாகும். அக்ரதானத்தினை நாளும் பெறும் வேதியர்கள் ஒரு சேர வாழ்ந்திருப்பதற்கு அறநிலையில் தனிப்பட வரிசையாக அமைக்கப்பட்ட குடியிருப்பிடமே ஹாரம் எனப்பட்டது. இவ்வாறான அக்ரம் பெறும் வேதியர் குடியிருப்பிடமே அக்ரம் குறிக்கப்பட்டது. பார்ப்பனச்சேரி வேறானதாகும். சோழர்காலக் கோயில்களில் அற நிவந்த உணவுத் தானத்தினை வேதியர்கள் நாளும் பெறுதற்கென்று அமைக்கப்பட்ட மண்டபம் அக்ரமண்டபம் எனப்பட்டது. அக்ர என்பது முதன்மை என்ற பொருள் தருவதை, பட்டத்தரசி அக்ரமஹாதேவி என்ற கல்வெட்டுச் செய்திகள் குறிப்பதிலிருந்து அறிய முடிகின்றது.
: ق(960
இச்சொல் எச்சவமைதி பெற்றதோர் சொல் கல்வெட்டுச் செய்திகளால் இச்சொல்லிற்குப்பிரித்த வகுத்த, பிரிக்கும் என்ற பொருள்கள் அமைகின்றன. பெரிய நீர்க்காலிலிருந்து பாசனத்திற்கு பிரிக்கப் பெறும் சிறுகால் (சிறுவாய்க்கால்) அகைத்தல் பெற்றது என்ற தொழிற்பாட்டின் ஆக்கப்பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அகைக்கால் என்பது நிறைபொருள் தரும் சொல்லாகும்.
அங்காடி மாற்றத்தண்டம் :
சோழவரசில் விதிக்கப்பட்ட அபராதக் காசு என்ற தண்டனைக்குள் ஒன்று ஊர்ப்பொதுவிடத்தில் குறித்த இடத்தில் அன்றாடம் சிறுவியாபார செய்வானொருவன், அவ்விடத்தை மாற்றம் செய்தோ விற்பனைப்பொருளை வேறொன்றாகமாற்றம்செய்தோ இருப்பானாயின் அதிகாரிகள் அதற்கு விதிக்கும் தண்டக்காசே அங்காடி மாற்றத் தண்டமாகும்.
அஞ்சினான் புகலிடம் :
அச்சமுற்றவன் அடைக்கலமாகப் புகுமிடம்.
சோழர் காலச் சமணப் பள்ளியும் பாழியும் இப்பெயர்
பெற்றிருந்தன. வாழ்வில் நேர்ந்த கொடுமைகட்கும்.
ஆய்வரங்கு 2008

Page 87
தீய தாக்கங்கட்கும் அறிவறிந்தும் நீக்கம் காணவியலாதவன், அஞ்சிய நிலையில் அடைக்கலம் புகுந்து துறவி நிலை பெறும் இடங்களாகச் சமணர் பாழிகள் அன்றிருந்த மேன்மையினாலேயே, அஞ்சினான் புகலிடம் என்று குறிக்கப்பட்டன.
(வீரசிகாமணிக் கல்வெட்டு)
அடிக்காசு :
வரி அங்காடி கூடுமிடத்தில் விற்பனைப்
பொருள்களைப் பரப்பிய இடத்திற்காக, அரசு பெறும்
வரி, அடியிட வரிக்காசு என்பதாகும்.
ஆக :
எச்சச்சொல் இதன்பொருள் கூடியதாக, கூடுதலாக, அளவாக, இத்தனையாக,
ஏற்புடையதாக, செய்ததாக, செய்வதாக, செய்ய வேண்டியதாக என்ற பொருள் வேறுபாட்டுடன் கல்வெட்டுச் செய்திகளுக்கேற்பப் பொருள் மாற்றம் பெற்றுள்ளது.
இசங்குதல் :
இச்சொல் உடன்படுதல் என்னும் கருத்திற்கு இடனாகத் தொண்டை நாட்டில் வழங்கப்பட்டதோர் சொல். இச் சொல்லே இசங்கும் வழி இசங்குவிப்பதாகவும் என்ற கிராம சபையாரின் தீர்ப்புரையாகவும் கல்வெட்டுகளில் இடம் பெறும் போது, இயன்ற வரிமுறைகளில் கட்டுப் படுத்த வேண்டியது என்ற விளக்கமாகவும் அமைகின்றது.
இசைகிடாய் :
இப்பெயர்ச்சொல், கொங்குநாடார் வழக்கிலுள்ளது. பொலிதகர், இனப்பெருக்கத்திற் கென்று அனுமதித்த ஆட்டுக்கடா. கடா வழக்கில் கிடாய் உன்று திரிந்துள்ளது.
இரிஞ்ஞாலம் :
கேரளநாட்டார் வழக்குச் சொல். பிரிக்கப்பட்ட
தரை. இடையே பறித்தோடிய நீரோட்டத்தால்
இரண்டாகப் பிரிந்த நிலம், நாடு.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

D&FIT6) is :
சோழராட்சியில் கிராமங்கள் தோறும் குறித்த காலங்களில் அரசியலதிகாரிகள் எழுந்தருளி இறை, வரி, ஊர் விசாரணை ஆகியவற்றைச் செய்யும் கொட்டகாரம், தனியிடம்.
உவச்சு-கொத்து :
ஊர் நன்மை தீமைகட்கும், கோயில் விழக்களுக்கும் தாரை, தம்பட்டை, சகடை ஆகிய இசைக்கருவிகளை முழக்கும் தொழில் உவச்சு எனப்படும். குழுவினராக அவ்விசைத்தொழிலாளர் செயற்படுதலால் அக்குழு கொத்து என்னும் கலைச்சொல்லால் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. கொத்துபலர் சேர்ந்து செய்யும் தொழில்.
ஏம்பல் :
மழைநீர் வார்ந்தோடி வந்து தேங்கி நிற்கும் - பள்ளத் தாழ்வு நிலம் (ஏரிவகையுள் ஒன்று)
ஏற்றம் :
இச்சொல் நீரிரைக்கும் ஏற்றத்திற் குரிதாகக் கொள்ளப் பெறுகின்றது. இதனால் பெயர் சொல் நிலைபெறினும் கல்வெட்டுகளில் இச்சொல் உரிச்சொல்லாக்கமாகப் பொருள் தந்து நிற்கின்றது.
ஏற்றம் :
இறுத்து என்ற தொடர் நிலையில் மிகுதியாக என்றும் ஏற்றம் செய்து என்ற நிலையில் கூடுதல் செய்து என்றும் இச்சொல் பொருள் தந்து உள்ளதனை அறிய முடிகின்றது.
나-L우 :
என்ற எச்சச் சொல், கல்வெட்டுச் செய்திகளில் சேர்த்து, இணைத்து, அதனுடன் என்ற பொருள் வேறுபாட்டுடன் இடம் பெற்றுள்ளது. ஒட்டிக்குடுத்தோம், ஒட்டிக்கொள்ளவும், இச்செயல் ஒட்டியதாகவும் என்ற தொடர்நிலைகளால் அறியப்பெறுவதாகும்.
71

Page 88
@(ԱՔ(Ց :
ஒரேதரமாகவும் திட்டமாகவும் எக்காலத்திலும் எதனாலும் மாற்றம் பெறாமல் ஒரே அளவையாக அரசு பெறும் முறை, வரி கிராமநிலங்களை முறையாக அளவிட்டுப் புரவு வரிக்கணக்கில் இடுவதும் ஒழுகு என்ற கலைச்சொல்லால் குறிக்கப்பெறுகின்றது.
இவ்வளவில் ஒரு சில கல்வெட்டுக் கலைச்சொல்லாக இருக்கும் உயிர்ச் சொல் அகர நிலையினைக் Östly. Lu தாயிற்றாயினும் இதனைப்போன்று நூற்றுக்கணக்கில் சொற்கள் உளவாயினும் கட்டுரை அமைதி நோக்கி மேல்மெய்யெழுத்தியல் முறைக் கமைந்த சொற்களை முறைப்படுத்திக் கூறுதலமையும்.
&SL-65 :
இச்சொல் செய்வது என்ற பொருள் தருவதாயினும், கல்வெட்டுச் செய்திகளில் இடம் பெறும் போது, கடவதல்ல, கடவோமாக, கடவர்களாக, கடவரானவராக, கடவரானமைக்கு என்றெல்லாம் விரிந்து நின்று, தன்மை முன்னிலைகளில் ஒருமைப் பன்மை அமைப்பிலும், உடன்பாடு எதிர்மறைப் பொருளிலும் ஏவலாகவும் செய்தி கட்கேற்பச் சொற்றொடர்களில் பகுதிப் பொருள் கருவியாக நின்று பொருளமைதி பெறுகின்றது.
கண்ணாலக்காணம் :
வரிகையுளொன்று, திருமணத்தின் போது, பெண் கொள்வாரும் கொடுப்பாரும் தனித்தனியே அரசுக்குச் செலுத்தும் மகமைக்காசு கண்ணாலங்களில் கொண்டவனொரு சின்னமும் குடுத்தவனொரு சின்னமும் இடக் கடவார்களாகவும்.
(கல்வெட்டு) கண்ணாறு :
வேளாண்மைக்கு ஏற்புடையதாக, ஆற்றிலிருந்து பிரிக்கப்பெறும் தலைக்காலில், நிலத்தில் நீர் மடைவழிப் பாய்ச்சுவதற்கு இயல்பானதாக,
72

கிளைத்து எடுக்கப்பெறும் சிறுகால்வாய் கண்ணாறு என்று பெயர்பெறும். இச்சிறுகால், மடைவாய்களாகிய கண்ணகத்தினை ஆங்காங்கே பாங்குடன் பெற்றிருப்பதால் கண்ணாறு என்ற காரணப் பெயரினைப் பெற்றுள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகளில் வேளாண்மை பற்றிய செய்திகளில் இக்கண்ணாறு குறிக்கப் பெற்றிருப்பது, அன்றைய
நீர்ப்பாசன 959[ ل﴿6 لا நுட்பத்தினைப் புலப்படுத்துவதாகும்.
SLu T6AdLib :
தலையோடு என்று குறிப்பது
இப்பெயர்ச்சொல்லாயினும், சோழ மன்னர்கள் திருக்கோயில்களுக்குச் செய்தளித்துள்ள உலோகத் திருமேனிகளில், சிவமூர்த்தங்களாகும் சிலைகளில், சிவபெருமான், பிச்சதேவர் ஆகியோர் திருமேனிகளின் கையொன்றில் தலையோடு போன்று அமைக்கப் பெறும் குழிந்த பாத்திரம் போன்ற அமைப்பும் கபாலம் என்றே குறிக்கப்படுகின்றது. மற்றும் கருவறையில் வழிபாட்டில் அர்ச்சகர் திருநீறு வைத்தளிக்கும் பாத்திரமும் கபாலம் என்றே பெயர் கூறப்பட்டுள்ளது. அமைப்புத் தோற்றத்தால் இப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
கருமாளிகை :
இன்றிமையாத அங்கங்களுடனும், சுருங்கை வழிகளுடனும், பதுங்கு மதிலங்களுடனும் திண்மையாகக் கட்டப் பட்ட அரசு மாளிகை. அந்தரங்க சபைகூடும் மாளிகை என்பதுமாம். அரசுறை கருமாளிகை பொடி யாக்கி
- கல்வெட்டு
கல்லும் கள்ளியும் நாட்டி :
அரசனால் அறமாகச் செய்யப்பட்ட நிலம் கிராமம், ஊர் ஆகியவற்றிலொன்றின் எல்லைகளைக் கண்டு உறுதி செய்வதற்கு, ஊர்ப் பெருமக்களும் அதிகாரிகளும் பிடி சூழ்ந்து பிடாகை நடந்து, எல்லைகளைத் திட்டப்படுத்தி அவ்வவ்
ஆய்வரங்கு 2008

Page 89
விடங்களில் எல்லைக் கல்லும், எக்காலத்தும் அழியாது கிளைக்கும் நெடுங்கள்ளியும் நாட்டிச் செல்லும் செயலாக்கத்தினை, நிலநிவந்தக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் சாசன விளக்கப் பகுதியில் குறிப்பது வழக்கமாகும்.
-(ஆனைமங்கலச் செப்பேடுகள்)
கற்படி மாற்று -
கற்களில் பொறிக்கப்பட்ட சாசனச் செய்தியை
உள்ளவாறே புத்தகத்தில் படியாக மாற்றி
எழுதிவைப்பது.பொத்தகப்படி என்றும் பெயர்பெறும்.
έδΠΙη :
புளித்த நீர், கள் என்ற பொருள் தரும் சொல்லாயினும், கல்வெட்டுச் செய்திகளில், நெல் அளவையினைக் குறிக்கும் கலைச் சொல்லாகக் குறிக்கப்பட்டுள்ளது. நெல்லளவைகளுள் உயர்தர அளவையினைக் குறிக்கும் இச்சொல் பல்லவர் ஆட்சியில் பெருவழக்காகி நின்றதுடன் சோழராட்சியில் அருகிய வழக்காகத் தொண்டை நாட்டில் இருந்துளது.
பல்லவர் ஆட்சியில் 5 குறுணி அல்லது 40 நாழி கொண்டது ஒரு காடி என்றிருந்துள்ளது. சோழர் ஆட்சியில், 3 காடி கொண்டது ஒரு கலம் என்ற திட்டம் செயல்பட்டுளது.
சந்து விக்கிரகப்பேறு :
அரசு பெற்ற வரிகளுள் ஒன்று. பகையை விசாரித்து சமாதானம் செய்வதும், பகைமுற்றில் குற்ற முடையாரைத் தண்டித்து அடக்கலும் ஆகிய மக்கள் வழக்குத் தீர்க்கும் அரச ஆணைக்குப் பெறும் வரி,
சமைதல் :
அமைதல்,பூப்படைதல் ஆகிய பொருள்கட்குரிய சொல்லாயினும், கல்வெட்டுகளில் நாட்டு வழக்கியல் சொல்லாகக் கையாளப்பட்டுள்ளது. சமைதல் கிராம சபையார்கள் ஆராய்ந்த திட்டங்களை நிறைவு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

செய்தல், செய்வதற்குத் தகுதிகளைத் திட்டமிடல், பொறுப்பேற்றல், பொருந்துதல் என்றெல்லாம் பொருள் மாற்றம் பெறும் நிலையில் இச்சொல் அமைந்துள்ளது.
சயிஞை :
இச்சொல் சமிஞ்ஞை என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கையினால் சைகை செய்து காட்டும் தள்ளாமை நிலை. இந்நிலையெய்திய முதியோர் ஆவணக் களரி எனும் FTF60Tů பதிவகத்தில் ஆவணச்சாசனத்தில் கையொப்பமிட வேண்டியதாயின் தனது அனுமதியினைச் சைகையால் தெரிவிக்க அவர்க்குப் பதிலாக, பிறரொருவர் கையெழுத்திடுதல் அக்கால வழக்காகும். சைகை காட்டும் அளவில் தளர்ந்த முதுமை என்பது சுருக்கப்பொருளாகும். தற்குறிக்கு மாட்டெறிதல் வேறாகும்.
GFIT DI :
இச்சொல் அரசு பெறும் பெருவரிகளாகிய இறை, புரவு வரி ஆகியவற்றுடன் கூடியதாகப் பெறும் சிறுவரிகள் என்னும் குறிப்புச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எச்சொறும் எத்தகைய உள்வரிகளும் என்ற விளக்கம் பெறுகின்றது.
சாவா மூவாப் பசு :
கோயில்கட்கமைந்த திருவிளக்கு நிவந்தகட்கு மூலப்பெருளாக ஆடுகளையும் பசுக்களையும் அளித்து நிவந்தத்தினை என்றும் குறையாமல் திட்டப்படுத்துவது வழக்கமாகும்.
நிவந்தப் பசுக்களைப் பெற்றார் பசுக்கள் எண்ணிக்கையில் குறையாமல் குட்டிகளைக் கொண்டு ஈடுசெய்து காக்கும் பசுநிரை என்னும் விரிந்த பொருள் தரும் தொடராகும்.
தலைச்சமாடு :
முதலீட்டுப்பொருள், முதன்மை பெறும் செல்வம், முதலுக்குரிய மூலதனம், முதல்தர மதிப்புடைய நிலம்,
73

Page 90
தலைப்பாக அமைந்த நிலம் என்ற பொருளமைதிகளில் இச்சொல் கல்வெட்டுகளில் பயின்று வந்துள்ளது.
தலைமாறு :
பரிவர்த்தனை என்ற பொருள் தரும் சொல்லாகும். நிலத்திற்கு நிலமோ, நிலத்தின் மதிப்பீட்டிற்கு ஈடான வீட்டு மனையோ மாற்றாக உரிமை செய்யப்பெறும் செயல் தலைமாறு என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றது.
தன்னேற்றம் :
தன்னோடு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளும் நிலை, இஃது ஆள், உரிமை, செயல் பெருக்கம் ஆகிய பொருள் நிலைகட்குப் பொதுவாகக் குறிக்கப்பெறும் சொல்லாகும். தாமோதரன் செட்டிக்குத் தன்னேற்றம் ஆள் பதினொருவர்க்குப் பேரால்
-(கல்வெட்டு)
岛lq :
வயல் என்ற பெயர் குறிப்பதாயினும் பரந்துபட்டதாகக் கிடக்கும் நஞ்செய் நிலத்தை, நீர்ப் பாசன தகுதிக்கேற்பவரப்பிட்டு, துண்டு நிலங்களாக அமைந்திருப்பதே தடிதலாகிய செயலுடைய நிலம் என்ற ஆக்கப்பொருள் நிலை தரும் பெயர்ச்சொல்லாகியுள்ளது. தடிதடிக்கப்பட்ட நிலம்.
நகரம் :
வணிகவளமும் வணிகரும் சிறந்து பொருந்தியுள்ள ஊர்ப்பகுதி வணிக மையமாக மாற்றம் பெற்ற ஊரே நகரம் எனப்பட்டுள்ளது.
நகரவாரியம் :
நகரமாகக் கொள்ளப்பட்ட ஊர்களில் வணிகத் தொடர்பான செயல்களனைத்தினையும் கண்காணிக்கும் கிராம சபையின் உட்குழு இவ்வாரியம் சிறந்த வணிகர் வாழும் நகரங்களில் அமைக்கப்பெறுதலினால் நகரவாரியம் என்று பெயர் பெற்றது.
74

நிச்சம் :
(நித்தம்) நாள்தோறும், நாளும், இச்சொல், ஒருசில கல்வெட்டுகளில் நிச்சில் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. முதல் இராசராசன் ஆட்சியில் இச்சொல்லிற்கு ஈடாக நிசதம் என்ற சொல்லே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
பரிசு :
இச்சொல் வழக்கில் எளிமையாகப் பயன்படும் சொல்லாகும். இதனால் பெறும் பொருள் கொடை, அன்பளிப்பு, இனாம் என்பன போன்றவனாயினும் கல்வெட்டுக்களில் பரிசு என்னும் சொல் முறைமை, தீர்மானம், முடிபு, செயல்திட்டம், ஒருமனமாகச் செய்த திட்டம், அனுமதி, என்பன போன்ற பொருள் தரும் நிலையில் செய்திகட்கேற்ப இடம்பெற்றுள்ளதனை அறிய முடிகின்றது.
பாகாசிரியம் :
பங்குக் காணியாட்சியாகக் கொடுக்கப்பட்ட நிலப்பகுதி பருவகாலத்தில் பாசனத்திற்கு அவ்வவ்வூர்களின் பங்கு முறைமையாக விடப்பெறும் முறைநீர் அளசீட்டுரிமையும் கொள்ளப்பெறுகின்றது. இவ்வாறான இரண்டு நிலையில் இக்கூட்டுச் சொல் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.
பிரமாதல் :
(பிரமாதம்) வடசொல் தமிழாக்கமாக வந்துள்ளது. நாட்டு வழக்கில் பிரமாதமாகப் பேசினான், பிரமாதமாக நடித்தான் என்பன போன்ற இடங்களில் பாராட்டுதலுக்குரிய சொல்லாகவும் மிகமேலான உயர்ந்த செயல் என்பதற்குரியதாகவும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. இச்சொல்லின் வட மொழிநிலை ப்ரமாதம் என்பதாகும்.
கல்வெட்டுக்களில் இச்சொல் எதிர்பாராத கைப்பிழையால் கொல்லப்படுதல் என்னும் பொருளைத் தருவதாகவே குறிக்கப்பட்டுள்ளது.
ஆய்வரங்கு 2008

Page 91
என் சிற்றப்பன் உபகாரி மல்லன் பருக்கலுடையான் பிரிதி வெண்காடந் கையிலே பிரமாதல் பட்டமை இவனைச் சார்த்திவைத்த
விளக்கு.
-(கல்வெட்டு)
தமிழாக்கமாக பிரமாதல் என்று ஒரு சில கல்வெட்டுக்களிலும் பிரமாதப்பட்டான் என்று ஒருசில கல்வெட்டுக்களிலும் இடம்பெற்றுள்ளன.
புறங்கொன்று பிச்சை என்பன தெண்பாண்டி நாட்டுக்கு
பொற்றை :
மண்ணடைவுடைய குறுங்குன்று பொச்சை பொத்தை என்பன தென்பாண்டி வழக்கு.
மன்றுபாடு :
கிராம நியாய விசாரணை சபையார் செய்த
தீர்ப்புப்படி, குற்றவாளி வாரிய மன்றத்திலே
செலுத்தும் அபராதக் காசு.
இவ்வூர் குடிகளைக் குற்றந் தோறும் மன்றுபாடு சபையாரே தண்டித்துக் கொள்வதாகவும்
-(கல்வெட்டு)
மீயாட்சி :
நிலவுரிமையாளர், குத்தகைப் பங்குரிமையும்
பெறுதல் அதன் மேலுரிமையும் சிறப்புரிமையு
மாதலின் மீயாட்சி எனப்பட்டது.
வாமனக்கல் :
வாமன உருவம் பொறித்ததும் அறச்செயல் பொறிக்கப்பட்டதுமான அறநடைக்கல் திருமால்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

வாமன பிராமணனாக மகாபலியிடம் வந்த வடிவினை, பிராமணர்கட்கு வழங்கும் தான சாசனமுள்ள கல்லிலும் பொறித்து, வேதியர்கட்களிப்பது வாமனக்கல் என்பதால் இதனை பிரமதேய சாசனக்கல் என்றும் குறிப்பது வழக்கமாகும்.
இதுவரையில் சோழர்காலக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களுள் ஒரு சிலவற்றிற்குப் பொருளுரை தரப்பட்டுள்ளது. சோழர்காலத்தில் நிலவிய வரி வகைகள் நூற்றுக்கும் மேலாக உள்ளன. நவமணிகளின் எண்ணிக்கை முப்பத்திரண்டு வகையினவாக இருப்பதனை, அரசர்களும் பிறரும் திருமேனிகட்குச் செய்தளித்துள்ள திருவாபரண விளக்கக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. மற்றும் அரசியல், வழக்கியல், சமயவியல், சமுதாயவியல், வணிகவியல், வேளாணியல், பொருளியல், கலையியல் ஆகிய துறைகட்கிலக்காகக் கல்வெட்டு களில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களில் புதிய சொற்கள் மிகுதிக் குறையாக இரண்டாயிரத்திற்கும் மேலானவையாகும். அவற்றையெல்லாம் சொற் பொருளாக்கமுடன் கட்டுரையளவில் தொகுத் துரைத்தற்கியலவில்லை. ஒரு சில சான்றுகளையே இக்கட்டுரை கொண்டுள்ளது.
இவ்வளவில், சோழர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய மொழிநிலை ஆய்வுரைக்குறிப்புடன், அகராதிக் கலைக்குரிய ஆக்க நிலைகட்குக் கருதிய குறிப்பும் சுருக்கமாகக் கூறப்பெற்றுள்ளது சான்றாக கல்வெட்டுச் சொற்கள் சிலவற்றினை எடுத்துக்காட்டிப் பொருளுரை விளக்கமும் குறிக்கப்பபெற்ற அளவில் நிறைவுபெறுவதாகும்.
75

Page 92
சோழ மன்னர்களின் வப சின்ன்ாங்களும் மன்ன
ஆ. வேலுசுவ
சோழ மன்னர்கள் ஆட்சியின் மறு மலர்ச்சிக்குக் காரணமாகயிருந்தவன் விசயாலய சோழனாவான். புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை என்ற இடத்தில் அமைந்த விசயாலய சோழிச்சுரம் என்னும் கோயில் இம் மன்னனால் (கி. பி. 846-881-இல்) கட்டப்பட்டிருக்க வேண்டும்."
விசயாலய சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் (கி. பி. 871-907) பெயரால் திருப்புறம்பயத்தில் ஆதித்தேச்சுரம என்னும் ஓர் ஆலயமிருக்கிறது. இக் கோயிலின் கல்வெட்டும் அக்கோயில் ஆதித்தேச்சுரமென்று வழங்கப்பட்டதை உறுதி செய்கிறது. திருப்புறம்பயத்தில் கிடைத்த வெற்றியின் காரணமாக இப்பெயர் இக்கோயிலுக்கு இடப்பட்டிருக்கலாமென்று கருத இடமிருக்கிறது: இம்மன்னன் கி. பி. 907- ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டம் திருக்காளத்திக்கு அருகிலுள்ள தொண்டைமான் பேராற்றுாரில் இறந்தானென்று தெரிகிறது. இம்மன்னனின் மகன் பராந்தகன் (கி. பி. 907 - 953) ஆதித்தன் இறந்த இடத்தில் பள்ளிப்டையாக ஒரு கோயில் எடுப்பித்து அதற்கு ஆதித்தன் நினைவாக ஆதித்தேசுவரம் என்று பெயர் சூட்டினான். பராந்தகனின் முதற் புதல்வனான இராசாதித்தனின் பெயரில் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவலூர் தாலுகாவில், தற்பொழுது திருநாமநல்லூர் என்று வழங்கும் ஊரில் இராசாதித்தேசுரம் என்னுமோர் கோயில் அமைந்திருக்கிறது. பராந்தக சோழனின் மகன் கண்டாரதித்தன் (கி. பி. 950- 957) பெயரால் கண்டராதித்த விண்ணகரம் என்ற ஒரு வைணவக் கோயில் கட்டப்பட்டது. இம்மன்னனின் துணைவியார் செம்பியன் மாதேவியார் தற்பொழுது
76

யராலமைந்த நினைவுச்
febofloor plDfbobs)
ாமி சுதந்திரன்
கோனேரிராசபுரமென்று வழங்கும் திருநல்லம் என்னும் திருப்பதியில் தம் கணவன் பெயரால் கண்டராதித்தம்'என்ற கற்றளி அமைந்திருக்கிறார். 7 மன்னன் அரிஞ்சய சோழன் (கி. பி. 956-957) நினைவாக வடஆர்க்காடு மாவட்டம் திருவல்லத்திற்கு வடக்கே, ஆறுமைல் தூரத்திலுள்ள மேற்பாடி என்ற ஊரில், அரிஞ்சயேச்சுரமென்னும் கோயில் முதலாம் இராசராசனால் எழுதப்பட்டது." தற்பொழுது இக்கோயில் சோழச்சுரமென்று வழங்கப்பெறுகிறது. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் (கி. பி. 957-70) பெயரால் தென்னர்க்காடு மாவட்டத்தில் உலகபுரம் என்ற ஊரில் சுந்தரசோழ பெரும்பள்ளியென்னும் ஒரு புத்தர் கோயிலிருக்கின்றது.
இராசராசன் (985-1014) பெயரால் இலங்கையில் இராசராச ஈச்வரம் என்னுமோர் கோயில் எழுதப்பட்டது. கருங்கற்பாறை கல்வெட்டு ஒன்று இக்கோயிலமைந்ததை உறுதி காட்டுகிறது." இக்கோயிலுக்கு வானவன் மாதேவீச்சுரமென்றவொரு பெயருமுண்டு." இது தன் தாயாகிய வானவன் மாதேவியை நினைவு கூறும் பொருட்டு பெயரிடப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. தஞ்சைப் பெரியகோயில் இவன் பெயரால் இராசராசேச்சுரம் என்று வழங்கப்படுகிறது." நாகபட்டினத்தின்கண் அமைந்திருக்கும் புத்தவிகாரத்திற்கு இராசராசப்பெரும்பள்ளி என்று பெயரிடப்பட்டது." பெங்களூர் மாவட்டத்திலுள்ள மணலூரில் சயங்கொண்ட சோழ விண்ணகரம் என்னும் கோயிலும் தலைக்காட்டிற்கு அண்மையிலுள்ள இரவிகுலமாணிக்க விண்ணகரம் என்னும் கோயிலும் இம்மாணிக்கன் நினைவாக
ஆய்வரங்கு 2008

Page 93
விளங்குகின்றன. முதலாம் இராசேந்திரன் (10121044) நினைவாக சேரமன்னனாகிய இராசசிங்கன் என்பவன் ust 6tioTly நாட்டிலமைந்த மன்னார்கோயிலில் ஒருவிண்ணகரம் எடுப்பித்து அதற்கு இராசேந்திர சோழ விண்ணகரம் எனப் பெயர் கொடுத்தான். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலுக்கு அண்மையிலமைந்த கோட்டாற்றில் இம் மன்னனின் பெயரால் இராசேந்திர சோழேச்சருமான மகாதேவர் என்ற கோயிலிருக்கிறது." இம்மன்னனின் சிறப்புப் பெயரால் கங்கை கொண்ட சோழன் நினைவாகக் கட்டப்பட்டதுதான் கங்கை கொண்ட சோழச்சரமாகும். முதல்குலோத்துங்கன் (கி. பி. 1070-120) பெயரால் சூரியன் கோயில் கட்டப்பட்டு அதற்குக் குலோத்துங்க சோழமார்த்தண்டாலயம் என்ற பெயர் வழங்கப்பட்டது." தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடியிலிருக்கும் 'இராசகோபாலசாமிக் கோயில் இம்மன்னன் பெயரால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது." சுத்தமல்லன் உத்தம சோழனாகிய இலங்கேசுவரன் என்னும் வாணர் குலக் குறுநில மன்னர் மேலப்பழுவூரிலிருந்த செங்கற் கோயிலைக் கற்றளியாக அமைத்து அதற்குத் தன் மன்னன் நினைவாக, குலோத்துங்க சோழேச்சுரம்' என்னும்
வாணகோவரையன்
பெயர் சூட்டினான். விக்கிரம சோழேச்சுரம் ஆலயம் காடவராய குறுநில மன்னரான சேந்தமங்கல முடையான் அரையான் எதிரிலி சோழனால் எழுப்பப்பட்டது."இரண்டாம் இராசராசன் காலத்தில் (கி. பி. 1146-1163) இம் மன்னன் நினைவாக இராசராசேச்சுரம் என்னும் ஆலயம் தாராசுரத்தில் கட்டப்பட்டது."திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பியான பல்லவராயன் என்பவன் இரண்டாம் இராசராசன் நினைவாக இராசராசேச்சுரம் என்னும் மற்றுமொரு கோயில் எடுப்பித்தான்." மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி. i78) பட்டப் பெயரான திரிபுவன வீரதேவன் நினைவாக, திருவிடை மருதூருக்கு அண்மையில் திரிபுவன வீரேச்சுரம் என்னும் கோயில் நிறுவப்பட்டது." இக்கோயில் இராமாயண மகாபாரத சிற்பக் காட்சிகளைக்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கொண்டு. ஈடு இணையற்று விளங்குகிறது. தென்னார்க்காடு மாவட்டம் வேலூரிலுள்ள திருமால் கோயிலுக்கு இம்மன்னன் பெயர் நினைவாக, குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று பெயரிடப்பட்டது."
மன்னன் பெயராலமைந்த ஊர்கள், ஏரிகள், மண்டபங்கள், மருத்துவச்சாலைகள், திருச்சுற்றுகள்:
தஞ்வைப் பெரிய கோயிலிலமைந்த கல்வெட்டொன்று'சோழநாட்டில் விசயாலய சோழச் சதுர்வேதி மங்கல மென்னும் ஊர் மன்னன் விசயாலயன் பெயராலமைந்ததைக் குறிப்பிடுகிறது. மற்றுமொரு கல்வெட்டானது. விசயாலய நல்லூர் என்ற மற்றுமொரு ஊரைக் குறிக்கிறது.’தஞ்சாவூர் ஜில்லா ஐயன்பேட்டைக்கண்மையிலுள்ள இராசகிரி என்ற ஊர் முதலாம் ஆதித்தன் பட்டப்பெயரால் இராசகிரிச் சதுர்வேதி மங்கலமென்று அழைக்கப்படுகிறதென்று தேவராயன் பேட்டைக் கல்வெட்டு உணர்த்துகிறது. தென்னார்க்காடு மாவட்டம். திருக்கோவலூரிலமைந்திருக்கும் திருநாமநல்லூர் பராந்தக சோழன் மகனாகிய இராசித்தன் பெயரால் இராசித்தபுரம்' என்று வழங்கப்படுகிறது.* முதல் பராந்தகனின் பட்டப் பெயரான “வீரநாராயணன்” நினைவாக வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் ஏற்படுத்தப்பட்டது.* தற்பொழுது காட்டு மன்னார் கோயில் என்று இது வழங்கப்படுகிறது. வீரநாராயணன் ஏரியும் இவன் பெயராலமைந்தது ஆகும். கண்டராதித்தன் பெயரால் காவிரியாற்றிற்கு வடக்கே கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் அமைந்ததை ஆனை மங்கலச் செப்பேடு தெரிவிக்கிறது. இவ்வூர் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் தாலுகாவில், கொள்ளிடப் பேராற்றுக்கு வடகரையில் திருமழபாடிக்கு மேற்கே, தற்போது கண்டிராச்சியம் என்று வழக்கிலிருக்கிறது. இம்மன்னன் பெயரால் கண்டராதித்த பேரேரி ஒன்று இருந்ததைத்
77

Page 94
தென்னார்க்காடு மாவட்டம் உலகபுரத்திலுள்ள கல்வெட்டுகாட்டுகிறது.*தன் தந்தையின் பெயரால், குந்தவைப்பிராட்டி சுந்தரசோழ விண்ணகர் ஆதூர சாலை ஒன்றை ஏற்படுத்தி, மருத்துவக் காணியாக நிலமும் வழங்கியுள்ளார்." வட ஆர்க்காடு மாவட்டம் பிரமதேச என்னும் ஊரில் இம்மன்னன் பெயரால் சுந்தர சோழப் பேரேரி ஒன்றும்" புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் தாலுகாவில் சுந்தரசோழபுரம் என்னுமொரு நகரமும் ஏற்பட்டன.* தற்பொழுது இவ்வூர் சுந்தரம்' என்று அழைக்கப்படுகிறது. கண்டராதித்தன் மனைவி செம்பியன் மாதேவி பெயரால் தஞ்சைமாவட்டம் நாகபட்டினம் தாலுகாவில் 'செம்பியன் மாதேவி' என்றும் ஊர் இருக்கிறது. இராசராசனின் சிறப்புப் பெயரான மும்முடிச் சோழன்’ நினைவாக மலையாள தேசத்தில், முட்டம் என்ற ஊருக்கு மும்முடிச் சோழநல்லுர் என்ற பெயர் அமைந்தது.* ஈர மண்டலத்தைக் கைப்பற்றி அதற்கும்மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிடப்பட்டது.* தஞ்சைபெரியகோயிலின் முன் கோபுரம் இம்மன்னின் சிறப்புப் பெயரான கேரளாந்தகன்' பெயரால் கேரளாந்தகன் திருவாயில்’ என்று அழைக்கப்படுகிறது." இரண்டாவது உபகோபுரம் இராசராசன் திருவாயில் எனப்படும்.* இம்மன்னன் செம்பியன் மாதேவி நினைவாக மண்டபம் அமைத்து அதற்குச் செம்பியன் மாதேவிப்பெருமண்டபம் எனப் பெய்ரிட்டான்.° இம்மன்னின் மகன் சடையவர்மன் சுந்தரசோழபாண்டியன் நினைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற ஊருக்குச் சுந்தர சோழச் சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடப்பட்டது.* இம் மன்னனின் 'கடாரங்கொண்டன்’ என்று சிறப்புப் பெயர் நினைவாக மாயவரம் தாலுகாவில் ஒர் ஊர் அமைந்திருக்கிறது. இம்மன்னும் தந்தையைப் போன்று முடிகொண்டான்' என்ற சிறப்புப்பெயர் பெற்றிருந்தான். இப்பெயர் நினைவாகப் பழையாறை முடிகொண்ட சோழ புரமென்று பெயர் பெற்றது.* இந்நகருக்கு தென்பால் ஒடும் ஆறும் இப்பெயர் நினைவாக முடிகொண்ட சோழப்பேராறு என்று அழைக்கப்படுகிறது. இம்மன்னன் கங்கையை
78

வென்றதன் நினைவாககங்கை கொண்டசோழபுரம் உருவானது. இவ்வூருக்குக் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரமென்று வேறு பெயர்களுமுண்டு. காஞ்சிபுரத்தில் திருமயானமுடையார் கோயிலிலுள்ள மண்டபம் இம்மன்னின் சிறப்புப் பெயரால் “கங்கை கொண்டான்” மண்டபம் என்றழைக்கப்படுகிறது." இம்மன்னின் சிறப்புப் பெயரான “சோழ கங்கன்” கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் ஒர் ஏரி வெட்டப்பட்டு அதற்குச் சோழகங்கப்பேரேரி என்று பெயரிடப்பட்டது"இரண்டாம் இராசேந்திர சோழன் (கி. பி. 1051-1063) மகன் இராசமகேந்திரன் நினைவாகத் திருவொற்றியூரிலிருக்கும் படம்பக்க நாதர் கோயிலில் இம்மன்னன் பெயரால் நந்தவனம் அமைக்கப்பட்டது.* இக்கோயிலில் கூத்தப்பெருமான் எழுந்தருளியுள்ள கருங்கற் பீடத்திற்கு வீரராசேந்திரன்' என்ற பெயருமுண்டு* முதற்குலோத்துங்க மன்னனது சிறப்புப் பெயரான சுங்கம் தவிர்ந்த சோழன்’ நினைவாக, சுங்கம் தவிர்ந்த சோழ நல்லூர் என்ற ஊரும்" சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு என்று ஏரியும் ஏற்படுத்தப்பட்டன தஞ்சையைச் சார்ந்த கருந்திட்டைக் குடிக்கும் சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என்ற வேறு பெயருமுண்டு. விக்கிரம சோழன் நினைவாக சிதம்பரம் கோயிலிலுள்ள திருச்சுற்று விக்கிரம சோழன் திருமாளிகை என்றழைக்கப்படுகிறது"இம்மன்னனின் கல்வெட்டு, இம்மன்னன் தன் பெயரால் விக்கிரம சோழன் திருவீதி அமைந்ததைக் குறிப்பிடுகிறது. முற்காலத்தில் அது, விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி என்று குறிப்பிடப்பட்டது.* இப்பொழுது இப்பெயர் வழக்கில் இல்லை. ஒட்டக்கூத்தரும் இவ்வீதியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் இம்மன்னன் பெயரால் விக்கிரம சோழன் திருமண்டபம் எனப்பெயர் பெற்றது.*இம்மன்னனின் பட்டப் பெயரான தியாக சமுத்திரம் நினைவாகத் திருவிடைமருதூரைச் சார்ந்த வண்ணக்குடி என்ற ஊர் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கல மென்று குறிப்பிடப்படுகிறது.* மற்றுமொரு கல்வெட்டு
ஆய்வரங்கு 2008

Page 95
திருக்கோடிகா சிவாலயத்திலுள்ள சண்டேசுவர நாயனார் கோயில் தியாக சமுத்திரம் என்று பெயருடையதாய் இருந்தது என்று வலியுறுத்துகிறது. இரண்டாம் இராச ராச சோழன் தன் பெயர் நினைவாக, பழையாறைக்கு “இராசராசபுரமென்று” பெயர் கொடுத்தான்." இராசராசபுரிய என்பது மற்றொரு பெயர்." இவனது சிறப்புப் பெயரான இராச கம்பீரன் நினைவாக இராச கம்பீர நல்லூரும். இன்னொரு சிறப்புப் பெயரான சோழேந்திர சிங்கன் நினைவாகச் சோழேந்திர சிங்கநல்லூரும் அமையப்பெற்றன.* தாராசுரம் கோயிலிலுள்ள மண்டபம் இம்மன்னனின் சிறப்புப் பெயரால் இராச கம்பீரன் திருமண்டபம் என்ற சிறப்புநிலைபெற்றது.
மூன்றாம் குலோத்துங்கன் (கி. பி. 178-1218) தன் பெயர் நினைவாக மதுரையில் திருவீதியும் திருவிழாக்களும் ஏற்படுத்தினான்." இம்மன்னனின் பெபயரால், தென்னார்க்காடு மாவட்டம் வேலூரில் குலோத்துங்க சோழ நல்லூர் அமைந்தது." இம்மன்னன் சிறப்புப்பெயரால் முடிதலைக்கொண்ட பெருமாள்' நினைவாக. தில்லை மேற்கு வீதி முடி தலைக் கொண்ட பெருமாள் என்றும், இன்னுமொரு சிறப்புப் பெயரான இராசதம்பிரான் நினைவாகத் தில்லைக் கோயிலின் மூன்றாம் பிரகாரம் இராசாக்கள், தம்பிரான் திரு வீதியென்றும்" தனிநாயகன் என்ற சிறப்புப்பெயர் நினைவாக, சோழ நாட்டில் காவிரி ஆற்றிற்க்கு வடகரையிலுள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய திருக்கருப்பறியலூர் என்பது தனி நாயக சதுர்வேதி மங்கலம் என்றும் பெயரிடப்பட்டது. இவ்வூர் இன்று தலைநாயிறென்று அழைக்கப்படுகிறது.
மன்னர்களின் படிமங்கள் :
மன்னர்களின் படிமங்கள் பொதுவாக நின்ற கோலத்தில் கும்பிட்ட கையுடன் அமைந்திருக்கின்றன. சில படிமங்கள் உட்கார்ந்த நிலையில் யோகத்தில் காணப்படுகின்றன. மைசூரில் நந்தி என்னும் ஊரிலுள்ள ஒரு சிவன் கோயிலில் ஓர் அரசர் படிமம் இருக்கிறது. அது சோழ மன்னரது
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

படிமம் என்று வழங்கப்படுகிறது." இப்படிமத்திற்கு கோனேரிராசபுரத்திலமைந்திருக்கும் படிமத்திற்கும் ஒப்புமை இருப்பதால் மைசூரில் காணப்படும் படிமம் இம்மன்னனுடையதாக இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது.* கோனேரிராசபுரத்தில் அமைந்திருக்கும் சிலை, இறைவனை வழிபடுவது போல் அஞ்சலி நிலையில் காணப்படுகிறது. இச்சிலை நிறுவுவதற்குக் காரணமாயிருந்தது இம்மன்னனின் அரசியார் செம்பியன் மாதேவி ஆவார்." முற்காலச் சோழர்களின் சிற்பத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாக இது காணப்படுகிறது. இராசராசசோழனால் எடுப்பிக்கப்பட்ட இராசராசேச்சுரம் என்னும் பெரியகோயிலில் குந்தவைப் பிராட்டி தம் தந்தை சுந்தர சோழன், தாய் வானவன் மாதேவி போன்றோருக்குப் படிமங்கள் ஏற்படுத்தி அவற்றின் வழிபாட்டிற்காகப் பொருளுதவியும் வழங்கியிருக்கிறார்.* முதல் இராசராசசோழன் மகனாகிய கங்கைகொண்ட சோழன் செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோயிலில் கி.பி.1019-இல் இவ்வம்மையின் படிமத்தை எழுந்தருளுவித்திருக்கிறான்." இவ்வம்மையார் கோயில் திருப்பணி செய்வதில் மிக ஆர்வமுடையவர்களாதலால், இவ்வம்மையின் உருவம் கையில் பண முடிச்சு கொண்டு காணப்படுகிறது. இதேபோன்ற படிமம், தஞ்சை மாவட்டம், குத்தாலம் தாலுகாவில் அமைந்திருக்கும் திருமணஞ்சேரி ஆலயத்திலும் காணப்படுகிறது. முதலாம் இராசராசன் காலத்தில் பொய்கை நாட்டின் தலைவனாக, பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன். மூவேந்த வேளாளன் என்பவன். மன்னன் மேல் கொண்டிருந்த பாசத்தை எடுத்துக்காட்டும் வகையில் தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசசோழன், லோகமாதேவி ஆகியோருடைய படிமங்களை எடுப்பித்திருக்கிறான்."
இத்தகைய நினைவுச் சின்னங்கள் இன்றும் தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் பெருந்துணை புரிகின்றன. இச்சிறப்புப் பெயர்கள்
79

Page 96
மன்னர்களின் ஆட்சி அந்தப் பகுதிகளில் வலுவாயிருந்ததைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. மன்னர்களின் அமைதியான ஆட்சிக்கும், இந்நினைவுச்சின்னங்கள் சான்றாக அமைகின்றன. மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1256) மூன்றாம் இராசேந்திரன் (கி. பி. 1246-1279) ஆட்சிக் காலங்களில் இத்தகைய நினைவுச் சின்னங்கள் ஏற்படவில்லை. இம்மன்னர்கள் வீரமற்றவர்களாகவும் இவர்கள் ஆட்சியில் குறுநில மன்னர்களின் குழப்பங்களும், பாண்டிய மன்னர்களால் பல அழிவுகளும் ஏற்பட்டதே நினைவுச் சின்னங்கள் இல்லாமைக்குக் காரணமென்று கூறலாம். ஏரிகளுக்கு மன்னர்களின் பெயரிட்டிருப்பது மன்னர்கள் விவசாயத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தனரென்பதனையும். விவசாயம் தான்
அடிக்குறிப்புக்கள் :
1. தி. வை. சதாசிவப்பண்டாரத்தார் பிற்காலச் சோழர்
வரலாறு. பக்கம் 23, 1974.
2. தி. வை. சதாசிவப்பண்டாரத்தார் பிற்காலச் சோழர்
வரலாறு பக்கம் 30, 1974.
3. S. H. II; Vol III, No. 142
4 S. I. I. Vol VIII pp. 268 and
5. S.I. II; Vol. VIII, Nos. 989, 954, 955, 956, 959, 966,
973, and 981
6. S. 78 of 920
7. S. I. III Vol III No. 46
8. ஆற்றுார்த் துஞ்சின தேவர்க்குப் பள்ளிப் படையாக உடையார் இராசராசத்தேவர் எங்கள் நகரத்தில் எடுப்பித்தருளின திரு அரிஞ்சிகை ஈசுவரத்து மகாதேவர்
9. S. I. II; Vol. III, No. 15
சோழ மண்டலத்து சத்திரிய சிகாமணி வளநாட்டு சிறுகூற்ற நல்லூர்க் கிழவன் தாழி குமரன் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்து மா தோட்டமான இராசராசபுரத்து எடுப்பித்த ராசராச ஈஸ்வரத்து மகாதேவர்க்கு சந்திராத்தவல் நிற்க, S. 1. 1;Wol No.
V 1412
10. S. I. I. Vol. IV No. 388
1. பாண்டியகுலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி இராசராசசேச்வரம்
80

மக்கள் வாழ்க்கையின் அடிப்படையாக இருந்தது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. நினைவுச் சின்னங்களான கோயில்கள், மண்டபங்கள், கோபுரங்கள் மன்னர்கள் இறைவழிபாட்டில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதையும் இறைவழிபாட்டால் உலகம் தழைக்கும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன. மக்களிடம் நல்லொழுக்கம் ஏற்பட்டு இறைவன் சந்நிதியில் எல்லோரும் சமம் என்கிற நிலை ஏற்பட்டு, மக்கள் குழப்பமில்லாமல் அமைதியாக வாழ்வதற்காகக் கோயில்களை மன்னர்கள் தோற்றுவித்தனர். அவர்களும் அத்தகைய வாழ்க்கை வாழ்ந்து காட்டினர் என்பதின் நினைவாக இத்தகைய நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டன.
12. S. I. I. Vol. II. No.
Epigraphia Indica, Vol. XXIII No. 34
13. Travancore Archacological series Vol VI, No. 4
14. Annual Report on South Indian expigraphy (1926-27
part II pp 79 and 80)
15. S. I. Vol. VI, No. 57
16. (Ins 393 of 1907; 309 of 1913)
17. தாராக வண்டந் தொடுத்தணிந்தார்
தமக்கிடம் போதத் தமனியத்தாற் சீராச ராசீச் சரஞ்சமைத்த தெய்வப் பெருமாளை வாழ்ந்தினவே - தக்கயாகப்பரணி, தா. 772
18. A.R.E., 427 of 1924; 435 of 1924
19. A.R.E. for 1908, part II para 64.
20, A.R.E. 14 of 1919
21. S. I. I, Vol III, No. 69
22. Ins. NoS. 236 and 274 of 924
23. S. I. I, Vol. VII, Nos. 2989, 954, 955,956, 966, 973,978
and 981
24. T. A. S Vol, HII No. 34, Verse 60
25. InS 140 of 1919
26. Ins 248 and 249 of 1923
* 27. Ins 264 of 1915
28. Inscriptions of Pudukottai state No. 189
29. ஸ்வஸ்திழரீ திருமகள் போல . செழியரைத்
தேசுகொள்
ஆய்வரங்கு 2008

Page 97
30.
3.
32.
33.
34.
35.
பூநீகோ இராசராச கேசரிவன்மர்க்கு யாண்டு பதினெட்டாவது இராசராசத்
தென்னாட்டு வள்ளுவநாட்டு முட்டம் முட்டமென்னும் பேரைத்தவிர்த்து மும்முடிசோழ நல்லூரென்று பேராக்கி இந்நாட்டு திருந்திக்கரை மாதேவர்க்குப் பெருமாள் ஐப்பசி சதயத்தினாள் . திருவிழா வெடுத்து (Travancore Archacological Series, Vol I. 282) S. I. I. Vol. II, No 92
S. I. I. Vol, II page 96
Ibid, pp. 227 and 332
InS 178 Of 195
Travancore Archacological Series Vol IVIV, Nos, 32 35
InS. 27 of 1927
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
S. I. I. Vol III Nos 205, verse 124 கோயில் ஒழுகு. பக்கம் 3, Ins 36 Of 1912
InS. NO. 217 Of 1912
Ins 231 and 233 of 1916
Ins. 282, 284, and 287 of 1913 InS 312 Of 1913 பாவக நிரம்புதிரு மாலுமல ரோனும்
பரந்தபதி னென்கணனும் வந்துபர வத்தஞ்
சேவக நிரம்புதிரு வீதிபுலி யூரிற் செய்த பெருமான் மதவை சிற்றில் சிதையேலே - குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் (9-7) Ins 616 of 1930
Ins No. 272 and 273 of 1907 Ins 495 of 1907, Ins, 292 of 190 தக்கயாகப்பரணி தா, 18
81

Page 98
சோழர் கால
சோழர் காலக்
வேலுச்சாமி
சோழர் வரலாறு
தமிழகம், பல்லவர் ஆட்சிக்குப்பின்பு சோழ மன்னர்களின் ஆளுகையின் கீழ் வந்தது குறுநிலமன்னர்களான முத்தரையர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தஞ்சையை மீட்டு, தரணியை ஆண்ட பெருமைவிசயாலனைச் சாரும் கிபி.880இல் நடைபெற்ற திருப்புறம்பியம் போர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். விசயாலயன் மகன், ஆதித்தன் பெற்ற வெற்றி பல்லவ, பாண்டியர் ஆதிக்கத்தை அடியோடு அழித்துச் சோழராட்சியைத் தலைநிமிரச் செய்தது. இப்போருக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இளமையில் பெற்ற தலையாலங்கானத்துப் போரையும், ஆங்கிலேயர் வென்ற பிளாசிப்போரையும் ஒப்பாகக் கூறுவர் (பண்டாரத்தார் 1967:22) பரகேசரி, இராசகேசரி என்ற பட்டப் பெயர்கள் கொண்டு பாராண்ட பெருமை சோழ மன்னர்களைச் சாரும். முதலாம் இராசராசன் (கி.பி. 985-1016), முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012-1044), முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-126) இவர் தம் ஆட்சிக் காலங்களில், சோழராட்சி எட்டுத்திசையிலும் விரிந்து பரவி நானிலம் போற்றும் பெருமை கொண்டது.
தமிழகத்தின் தெற்குப்பகுதியைப் பாண்டியர்கள் ஆட்சி செய்தாலும், சோழருக்கு அடிபணிந்த நிலையில் அவர் முடியாண்டாராயினர். கி.பி 1216இல் பட்டத்திற்கு வந்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், கி.பி.1219இல் பேராற்றல் படைத்த பெரும் படையுடன் சோழ நாட்டின் மீது போர் தொடுத்து, வெற்றிக் கொடிநாட்டினான். தஞ்சையும் உறையூரும் பேரழிவுக்கு இலக்காயின. வெற்றி வாகை சூடிய
82

சிற்பக்கலை
கட்டடக்கலை
சுதந்திரன்
பாண்டியன், நாடிழந்த சோழமன்னனுக்கு, மறுபடியும் நாட்டை வழங்கி, நல்லாட்சி ஏற்பட நல்வழி காட்டினான். 'சோனாடு வழங்கியருளி, ‘சோனாடு கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர் என்றச் சிறப்புப் பெயர்கள் பாண்டியனின் பெருமைக்குச் சான்று பகரும். மூன்றாம் இராசராசனுக்குப் பின் (கி.பி. 1216-1250) அரசுரிமையேற்ற மூன்றாம் இராசேந்திரனும் (கி.பி. 1240-1279) வலிமையான ஆட்சியை சோழமண்ணில் ஏற்படுத்தவில்லை. கி.பி. 1257இல் நடந்த சடாவர்மன் சுந்தர பாண்டியன் படையெடுப்பால் மூன்றாம் இராசேந்திரன் தோல்வியடைந்து, பாண்டியனுக்கு கப்பம் செலுத்தும் இழிநிலையடைந்தான் (பண்டாரத்தார் 1967 - 98), கி.பி.1279இல் இராசேந்திரன் மறைவுடன், சோழநாடு பாண்டியப் பேரரசோடு இணைக்கப்பட்டது. இம்மன்னனோடு பாரெல்லாம் கொடிகட்டிப் பறந்த சோழராட்சி முடிவுற்றது. (மேலும் காண்க காளிதாசு, இராசகோபாலன் 1977, 156-225).
சோழர் காலக் கலை வளர்ச்சியை அறிஞர் பெருமக்கள் பொதுவாக மூன்று கட்டங்களாகக் பிரித்துக் காட்டுவர். கி.பி. 850 முதல் கி.பி.1250 வரை சுமார் 300 ஆண்டுக்காலம் சோழர்கள் தென்னகத்துப் பேரரசர்களாய் விளங்கியமையால் இக்காலக் கலை வரலாற்றை கட்டட-சிற்ப பரிணாமவளர்ச்சியடிப் படையில் ஒருமித்த தொகுப்பாக எடுத்தாளுவது இயலாது. எனவே விசயாலயன் முதலாக உத்தம சோழன் ஈறாக (கி.பி. 850-985) முதற்கட்டமாகவும், முதலாம் இராசராசன் முதலாக அதிராசேந்திரன் ஈறாக (கி.பி. 985-1070) இடைக்காலமாகவும், முதலாம் குலோத்துங்கன் முதலாக மூன்றாம் இராசேந்திரன் ஈறாக (கி.பி.1070
ஆய்வரங்கு 2008

Page 99
1279) பிற்காலமாகவும் வகுத்துக் கொள்ளப்படும் (பாலசுப்பிரமணியம் 1966 : 30),
தம் ஆட்சியில் ஆதிக்கம் காட்டிய சோழ பேரரசர் கட்டட-சிற்பக் கலையிலும் வல்லவராய் விளங்கினர். முதலாம் இராசேந்திரன் காலத்தில் இப்பேரரசு கலிங்கத்தை வடஎல்லையாகக்கொண்டு ஈழத்து வட பகுதியை உள்ளிட்டு, கல்யாணிச் சாளுக்கியரை எதிர்த்துநின்று, பாங்குடன் நிகழ்ந்தது. தம் பேரரசைப் போலவே கோவில்கள் முழுமையும், கருங்கல்லால் மாற்றியமைத்து அவற்றை பேரரசுச் சின்னமாக நிலை நாட்டியது சோழர் தனிச் சிறப்பாகும். கோயில்களைக் கற்றளிகள்' என்று சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடும். ஒருநிலைகொண்ட விமானத்தை ஏக (ஒன்று) தள விமானமென்றும், இருநிலை கொண்டதை தீவி (இரண்டு) தள விமானமென்றும் பகுத்து, மூன்றுநிலைகொண்டதை திரி (மூன்று) தள விமானமென்றும் பகுத்துப் பாங்குறக் காட்டிய பெருமை சோழர்காலக் கட்டடக்கலையின் சிறப்புமிகு அம்சமாகும். இப்பாணி தஞ்சை, கங்கை கொண்டசோழபுரம், தாராசுரம், திரிபுவனம் கோவில்களில் முற்றுப்பெறும். முற்காலச் சோழர் கோயில்கள் பெரும்பாலும் கருவறை, அர்த்த மண்டபங்களுடன் காணப்படும். இடைக் காலத்தில் மகா மண்டபம், முக மண்டபங்கள் இணைந்தன. பிற்காலச் சோழராட்சியில், நடன நிகழ்ச்சிகளை நடத்த நிருந்த மண்டபமும், இசை முழுங்க வாத்திய மண்டபமும், நீராட்டு வைபவம் நடத்த சினபன மண்டபமும் எழுப்பப்பட்டன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திரிபுவனம் கம்பகரேசுவரர் ஆலயமாகும்.
கருவறை அமைப்பு சதுரத்திலோ அல்லது நீள் சதுரத்திலோதான் பெரும்பாலான கோயில்களில் காணப்படும். சீனிவாச நல்லூர்க் குரங்கநாதர் ஆலயக் கருவறை வெளிப்புறம் சதுரமாகக் காணப்பட்டாலும் உட்புறம் வட்ட வடிவிலிருக்கும் இது ஒரு தனிக் கட்டடப் பாணியாகிறது. பெரும்பாலும் தூண்களை உடையதும் சிலவற்றில் தூண்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

இல்லாததுமான அர்த்தமண்டபங்களை முற்காலச் சோழர் கட்டடத்தில் காண இயலும்.
கட்டட அமைப்பில் தஞ்சைப் பெரிய கோயில் ஒரு தனித் தன்மையுடையது இக்கோயிலின் கருவறை அர்த்தமண்டபம், மகா மண்டபம், முக மண்டபங்கள் சம நிலை உயரம் கொண்ட உபபீடம், அதிட்டானத்துடன் நிகழ்வது இதன் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஏனைய கோயில்களில் மகாமண்டபம் அர்த்தமண்டபத்தைவிடப் பெரிய தாகவும், முகமண்டபம் மகா மண்டபத்தை விடப் பெரியதாகவும் அளவில் வேறுபடும். இதன் விமான அமைப்பு திராவிடக் கலைப்பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு, அடி முதல் முடி வரை இதன் உயரம் 196 அடியாகும். விமானத்தின் மேல்பகுதி 13 நிலைகளாகக் பிரிக்கப்பட்டுக் கலைவண்ணம் காட்டுகிறது. விமானப்பகுதியை அலங்கரிக்கும் கூடு, கர்ண கூடு, சாலை, நாசிகள் கட்டடக்கலைக்கு மெருகூட்டும். நிமிர்ந்த தோற்றத்தோடு, பிரமிடு போன்ற அமைப்புக் கொண்டு வானளாவி நிற்பதால் இது உத்தம விமானம் எனவும் தட்சிணமேரு எனவும் அழைக்கப்படும். கட்டடக் கலையமைதியில் இதை ஆண்மைக்கு உவமைகாட்டுவர். எண் பட்டை வடிவம் தாங்கிய சிகரப்பகுதி திராவிடக்கலையின் சிகரமாகும். சிகரத்தின் உட்பகுதியை 80தொன் எடையுள்ள பிரமந்திரக்கல் நிரப்பி அழகு செய்கிறது. இவ்வித அமைப்புமுறை வேறெங்கும் பார்க்க முடியாத ஒரு அற்புதப் பொறியியல் படைப்பாகும். கீழிருந்து பார்ப்பவருக்கு இக்கல் முழுநிலவு போன்று கண்ணுக்குப் குளிருட்டி மனத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும். கோவிலைச் சுற்றி நிற்கும் திருமதில், இதைச் சுற்றி அரண்போல் நிற்கும் சுவர் அமைப்பு கோட்டைக் கொத்தளம் போன்ற ஒரு காட்சியைத் தரும். இரண்டு கோபுரங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது, கோயிலின் கலை அழகுக்கு மெருகூட்டிச் சிறப்புச் சேர்க்கும் இரண்டு கோபுரங்களை முன்பக்கம் கொண்ட தமிழகத்து முதற்கோயிலும் இதுவேதான். காஞ்சி கைலாயத்தில் நீட்டிக் கொண்டுவரும் சிறிய கோபுரம் தஞ்சை வழி பயணித்துப் பிற்காலத் திருவரங்கத்தில் திசைக்கு
83

Page 100
நான்காகப் பல்கிப்பெருகுவது தமிழன் கண்ட கட்டடக் கலையின் தனிச்சிறப்பாகும் (Harle 1963). இராசராசன் சேரநாட்டின் மீது கொண்ட வெற்றியின் நினைவால் வெளிக்கோபுரம் “கேரளாந்தகன் திருவாயில் எனவும், இரண்டாவது கோபுரம் மன்னரின் பெயரால் இராசராசன் திருவாயில் எனவும் அழைக்கப்படும். இரண்டாவது கோபுரத்தின் அடிப்பகுதியைப் புராண கதைகளைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அழகு செய்கின்றன. இது கோபுர அமைப்பில் ஒரு புதிய முயற்சி எனக் கூறலாம். கருவறை சர்வதோபத்திரம்' என்னும் உத்தம பாணியைச் சார்ந்தது. வலம்வரும் பாதையுடன் இரண்டு சுவர்களால் சூழப்பட்ட கருவறையில் மகாலிங்கமும் உட்சுவரின் முப்புறமும் அகோரமூர்த்தி (தெற்கு), சத்யோசாதமூர்த்தி (மேற்கு), வாமதேவ மூர்த்தி (வடக்கு) சிற்பங்கள் தோன்றுவது தனிப்பெருஞ் சிறப்புடையது. கோவிலின் அமைப்பையே சதாசிவமாகக் காட்டும்பண்புடையவை 9606). (Kalidos 1985).
முதலாம் இராசேந்திரனின் அரியபடைப்பு கங்கைகொண்டசோழீசுவர ஆலயமாகும். ஒன்பது நிலைகளைக் கொண்டு, பெண்ணின் இடைபோன்ற அமைப்புக் காட்டும் இக்கோயில் விமானம், இராசேந்திரனின் கலைப்பாணியென்றே கூறலாம். பெர்சிபிரவுன் என்ற மேலைநாட்டு அறிஞர் இக்கோயிலைப் பெண்மைக்கு உவமை காட்டுவார் (Brown 1959:64).
இரண்டு திருச்சுற்றுக் கொண்ட கோவில்கள், பிற்காலச் சோழராட்சியில் தோன்றியது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திரிபுவனம் கம்பகரேசுவரர் ஆலயமாகும். கோவிலின் முன்புறமும், பின்புறமும் கோபுரங்கள் எழுப்பப்பட்டிருப்பது, கட்டடக்கலையின் அடுத்தகட்ட விரிவாக்கம் எனலாம். சீர்மிகு கோவிலின் வெளிச் சுற்றுப்பிரகாரத்தில்,சரபேசுவரர் சன்னதி தோன்றுவது ஒரு தனிச் சிறப்பாகும். தாராசுரம் கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் ஒரு முற்றுப்பெறாத மொட்டைக் கோபுரத்தின் அடிப்பகுதி மட்டும் பெரிய அளவில் காணப்படும். இக்கோபுரம்
84

முற்றுப்பெற்றிருந்தால் சோழர்காலக் கட்டட படைப்புகளில் முதல் நிலை பெற்றிருக்கு மெனலாம். முற்றுப் பெறாநிலைக்கு காரணம் தெரியவில்லை. இரண்டாம் இராசராசனின் ஆட்சிக் காலத்தில், ஏற்பட்ட அரசியல் படையெடுப்புக்கள், கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக் கலாமென எண்ணத் தோன்றுகிறது. இக்கோயில் முன் மண்டபம் மன்னரின் சிறப்புப் பெயரைத் தாங்கி இராச கம்பீரன் மண்டபம் என்றழைக்கப்படும். இம்மண்டபம் இரதம் போன்று சக்கரங்கள் கொண்டு குதிரைகள் பூட்டிய நிலையில், இரத மண்டபம் என்றழைக்கப்பட்டு (Kalidos 1984; 160-63) ஒரு அற்புதப் படைப்பாய்த் திகழ்கிறது. முதற் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்து மேலைக் கடம்பூர் ஆலய விமானம் இரதம் போன்ற தோற்றம் கொண்டது. சோழர் காலத்திலெழுந்த இத்தகு இரதம் போன்ற அமைப்புமுறை, விசயநகர மன்னர் காலத்தில் உதித்த ஆயிரங்கால் மண்டபத்தின் முன் னோடியெனலாம். நூற்றுக்கால் மண்டபம் அமைத்த பெருமை சோழருக்குத்தான் உண்டு. தில்லைக் கோயிலின் நூற்றுக்கால்மண்டபம் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. தாராசுரத்து இராசராசேசுவரம் சுமார் 100 தூண்களுடைய இரதமண்டபமுடையது. தென்னிந்திய கட்டடக்கலை வரலாற்றில் இவை ஒரு சகாப்தத்தின் தொடக்கமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது (Gopalakrishnan 1993).
கல் திருமேனிகள்
சோழவளநாடு சோறுடைத்து' என்பதுபோல, சோழ நாடு கலை வளமுடைத்தது என்ற பெருமையைச் சோழர் கால கோவில்கள் எடுத்துக் காட்டும். இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் பொற்காலம் எனச் சிறப்புப் பெற்றது போல் தென்னக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு பொற்காலமாகும். இச்சிறப்பிற்கு மூலகாரணம், சோழர்களால் படைக்கப்பட்ட, கண்ணிற்கினிய கருத்துக் கருவூலங்களாகத் திகழும், காலத்தால் அழியாது நின்று, என்றும் கலைக்கோலம் காட்டி நிற்கும், சிந்தைக்கினிய சிற்பங்களாகும்.
ஆய்வரங்கு 2008

Page 101
சோழர் காலக் கலைச் சிறப்பைப் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு (Barrett 1974, 1965 : Harle 1971) அறிஞர்கள் உலகறியச் செய்திருக்கிறார்கள். இருப்பினும் சில சிற்பங்கள், கலைவல்லுனரின் கண்ணுக்கு அகப்படாமல், உலகுக்கு எடுத்துக் காட்டபடாமல், வரலாற்று இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. அத்தகைய காவியச் சிற்பங்கள், இப்பகுதில் இடம்பெறுவது இப்புத்தகத்திற்கு மெருகு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், வெளிச்சத்திலிருக்கும் சிற்பங்கள்கூட, அவற்றின் தனிக் கலை நுட்பங்கள் வெளிப்படுத்தப் படாமல் இருக்கும் நிலையில் உள்ளன. இத்தவறுகளும் இப்பகுதியில் விளக்கம் பெறுகின்றன. சிற்பக்கலை அடிப்படையிலும், சோழர் காலத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
சோழரின் சிறப்புமிகு சிற்பங்கள் கோவில்களில் இடம் பெற்றிருப்பது ஆலயத்தின் பெருமைக்குப் புகழாரங்களாக என்றும் கலைமணம் வீசிக்கொண்டிருக்கின்றன. ஆலயங்களிலிருந்து பிரித்துக் காட்டமுடியாத இச்சிறப்பு இந்தியச் சிற்பக் கலைக்கே உரிய தனித் தன்மையாகும். என்று ஆலயங்கள் தோன்றினவோ, அன்றே சிற்பங்களும் தோன்றித் தனித்தொரு இடத்தைப் பெற்றுப் பொலிவுறுகின்றன. கருத்தாழங்கொண்ட கற்சிற்பங்கள் கட்டுரையின் இப்பகுதியிலும், உலகில் எல்லாக்கலை அரங்குகளிலும், தனி இடம் வகிக்கும் உலோகத் திருமேனிகள் அடுத்துவரும் பகுதியிலும் விளக்கம் பெறுகின்றன.
சோழர்காலக் கலை வளர்ச்சிக்கு முதல் வித்திட்டவன் விசயாலயன். நிலையான அரசுக்கட்டிலேறி, ஆட்சி நடத்திய இம்மன்னனின் காலத்தில் கலை வளர்ந்தது. கலைஞர்கள் புதிய ஊக்கத்துடன் ஆதரிக்கப்புட்டார்கள். இவ்வரசனின் பெயர் கொண்டு விளங்கும் நார்த்தாமலை (புதுக்கோட்டை மாவட்டம்) விசயாலய சோழீசுவரக் கோயிற் சிற்பங்கள், சோழர்களின் முற்காலக் கலைவளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகும். இக்கோயிலின் அர்த்த மண்டபச் சுவரை
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

அலங்கரிக்கும் துவாரபாலகர் சிற்பங்கள் காட்டும் கலை நளினம் மன எழுச்சியூட்டும். கையிலே வீணையேந்தி, கல்லும் கவிபாடும்' என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இசை மீட்டி நிற்கும் இக்கோயிலின் வீணாதரதட்சிணாமூர்த்தி உருவம், புதுக்கோட்டை அருங்காட்சியகத்தை அலங்கரித்து இன்றும் இன்பராகம்பாடும் மாட்சிமை உடையது. வெற்றிச் செல்வியாகிய கொற்றவைக்கு, சிலை வடித்துச் சோழன் தன் இதய அஞ்சலியை மலர் மலையாக்கி மகிழ்ந்திருக்கிறான். ஒரு சிற்பத்தில் இச்சிலை இன்றும் கலையாத கலையாகக் காண்பவர் மனத்தில் களிப்பூட்டி நிற்கிறது. கையில் கத்தியும், கேடயமும் தாங்கி நின்ற நிலையில் காட்சி தரும் இச்சிற்பத்தின் ஈடு இணையற்ற வனப்பு என்றும் சோழர் 5606) வனப்பைக் கவிபாடும் பெருமையுடையது.
புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் ஆலயச் சிற்பங்கள் முதலாம் பராந்தகன் காலப் படைப்பு நாற்கரங்கள் கொண்ட விநாயகர் தலைக்கு மேலே அரைவட்டக் குடையுடன், அதன் மேல் அஞ்சலி நிலையில் காட்சி தரும் கந்தவர்கள் இருவருடன் கம்பீரத்தோடு தோன்ற, இரட்டைத் தாமரை இதழ்கொண்ட பீடத்தில்
அமர்ந்து காட்சிதரும் கந்தவர்கள் இருவருடன் கம்பீரத்தோடு தோன்ற, இரட்டைத் தாமரை இதழ்கொண்ட பீடத்தில் அமர்ந்து காட்சிதரும் விக்கின விநாயகன் அக்காலச் சிற்பியின் எழிலார்ந்த படைப்பாகும். அடிமுடிகானா அண்ணலாக விசுவரூபம் காட்டும் இலிங்கோத்பவமூர்த்திச் சிற்பம் தத்துவப் பிழம்பாகும். திருமெய்யக் குகையில் தொடங்கிக் காணப்படும் இப்படிமம் புள்ளமங்கையில் எய்தும் கலையின் மாட்சியைக் காட்டும் நிலை தான் என்னே! “முத்தேடி முன் வருவல் என முனைந்த அன்னமும், அடிதேடி அறிவல் எனச் சென்ற வராகமும்” இலிங்கத்தின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும், உயிரோவியமாக காட்டப்படு கின்றன. தேவகோட்டத்தின் இருபுறமும் அடியையும் முடியையும் காணாது தங்களது செருக்கை உணர்ந்து, செயலற்ற நிலையில் திருமாலும் நான்முகனும் தலை தாழ்த்தி, கரம் கூப்பி
85

Page 102
நிற்கின்றனர். கலைப் பொலிவூட்டும் மூன்று முகங்களுடன் திருமார்பில் நுட்பமிகு வேலைப்பாடு காட்டும் ஆரங்களுடன் வளைந்து நெளிந்து செல்லும் புரிநூலும், வயிற்றை அழகுபடுத்தும் உதரபந்தமும், உன்னத வேலைப்பாடு காட்டும் உத்தரீயமும் கொண்டு நிமிர்ந்த நிலையில் நிற்கும் பிரம்மனின் சிற்பம் ஒரு சிந்தைக்கினிய படைப்பாகும். துர்க்கையின் திருக்கோலம் கலை நிறைவு கொண்டது. மகிடனை வென்ற தேவியின் அருகில் அவர் ஊர்திகளான சிங்கமும், கலைமானும் அழகுறக் கலை அழகோடு காட்சி தருகின்றன. சர்வ வல்லமை படைத்த தேவியின் அருகில், சிங்கம் சீற்றத்தைக் காட்டாது வீறுகொண்டு சிந்தைக்கு விருந்து கொடுக்கிறது. கலைமானின் கலைத்தோற்றம், கலைஞனின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது. எட்டுக்கரங்களிலும் ஆயுதம் தாங்கி நிற்கும் தேவியின் நிலை, உலகத்தில் அநீதியை அடியோடு அழிக்கப் புறப்பட்டவள்போல், போர்க்கோலம் காட்டிக் காண்போர் மனத்தில் மெய் மறந்த பயத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் நீதிக்கு காவல் அவளே என்பதை அபயக்கரம் காட்டும். இடையைத் தாங்கி நிற்கும் கரம், தேவியின் மென்மைத்தன்மைக்கு மெருகூட்டும்.
எறும்பூர், கடம்பவனேசுவரர் ஆலயச் சிற்பங்கள் பராந்தகனின் மற்றுமொரு கலைப்படைப்பாகும். முக்கண்ணனார் இங்கு மகாயோகியாகக் காட்சித் தருவது எலபென்டா, எல்லோராவை நினைவூட்டும். பின்னிரு மேற்கரங்களில் மானும் மழுவும் தாங்கி, இரண்டு கீழ்க்கரங்களையும் இரண்டு தொடைகளின் மீது வைத்து யோக நிலையில் அமர்ந்திருக்கும் பாங்கு பாரிலுள்ள உயிரினங்களின் நலனுக்காகப் பரம் பொருளே தவக்கோலம் பூண்டாரோ என எண்ணத் தோன்றும். படைப்புத் தொழில் நாயகன் பிரம்மனும் உலகைப் படைக்கும் எண்ணங்கொண்டு இரு யோக நிலையில் காட்சி தருகிறான். யோகமூர்த்திகளைத் தாங்கி நின்ற இப்பாரத புண்ணிய பூமியில் என்றும் ஆன்மீக நெறியில் யோகமார்க்கத்தின் குறியீட்டுப் படிமங்களக இவை சிந்துவெளி முதல் எறும்பூர்வரை நிலை கொண்டுள்ளன எனலாம்.
86

இராசகேசரி சுந்தரசோழன் என்கிற இரண்டாம் பராந்தகனின் கலைச் சிறப்பிற்கு உதாரணமாகக் திகழ்வது மூவர் கோயிலாகும். ஆண்மை, பெண்மையின் இணைப்பிலேதான், உலகத்தின் பேரியக்கங்கள் என்றும் இயங்க இயலுமென்பதை உணர்த்தும் உமையொருபங்கன் சிற்பம், உலக நீதிக்கு ஒர் காலக் கண்ணாடியாகும். ஆண்மைக்கு இலக்கணம் காட்டும் வலப்பாகமும், பெண்மைக்கு அழகூட்டும் இடப்பாகமும் சிற்பியின் கலைத் திறத்தால் கலை வண்ணம் கொண்டு, உமையொரு பாகனின் எழிலைக்கண்டு, அவர் தம் வாகனமாகிய காளையும் எழுச்சியுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. அநீதியின் மொத்த வடிவமாக நின்று, இறைவனை அச்சுறுத்தி, யானையின் வடிவம் தாங்கி வந்த அசுரனைக்கொன்று தோல் உரித்து, அதையே தன் ஆடையாகப் போர்த்திக் களிநடனம் புரியும் சிவனின் கசசங்காரமூர்த்தித் திருஉருவம் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தும், அதேசமயம், அதன் கலையழகு மனத்தை ஆனந்தக் களிப்பில் திளைக்கச் செய்யும் வழுவூர், திருச்செங்காட்டங்குடி, கசசம்காரமூர்த்திச் சிற்பங்களும் என்றும் மனத்தைவிட்டு நீங்காத கலை மாட்சிமை கொண்ட அற்புதப்படைப்புகளாகும். அநீதி எவ்வுருவில் வந்தாலும், உருமாறி அழிந்தே நீரும் என்பதே இச்சிற்பம் எடுத்தியம்பும் பாடமாகும். கங்கையைச் சடையில் தாங்கி நிற்கும் கங்காதரர் சிற்பம், கலையீர்ப்புத் தன்மை கொண்டது கங்கையைக் கொண்ட களிப்பு சிவனின் முகத்தில் பளிச்சிடுகிறது. மறுபுறம் உமையவளை அவல நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என்ற சோர்வுத்தன்மையும், பின்னணியில் தொக்கி நிற்கிறது. எத்துணை இடர்வரினும், அவர் நாமமே பாடிப்பரவசம் கொண்ட மார்க்கண்டேயனைக் காலனின் பிடியிலிருந்து மீட்டுத் தூய்மையான இறைப்பற்று என்றும் அருள் பாலிக்கப்படும் என்ற சிவஞான தத்துவத்தை உணர்த்தும்தன்மையுடையது காலசங்காரமூர்த்திச் சிற்பம், பக்தி மார்க்கத்துக்கு அது வழிகாட்டும். எமனை நோக்கி காட்டப்பட்ட திரிசூலம், காலனின் உடல்கிழிந்து, பாதாளம் வரை சென்றிடுமோ என எண்ணவைக்கிறது. இறைவனின் நின்ற திருக்கோலம், இயமனை அழித்த இறைவன்,
ஆய்வரங்கு 2008

Page 103
மகிழ்ச்சியால், ஆனந்த நடனத்திற்குத் தயாராகிவிட்டாரோ என எண்ணத் தூண்டும். அந்தக்காசுரவதமூர்த்தியாக நிற்கும் சிவனின் காட்சியும், அநீதிக்கும் கொடுஞ்செயலுக்கும் என்றும் சாவுமனி அடிக்கப்படும் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்க வைக்கும்.
அரியணை ஏறிச் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யாவிடினும், சோழர் வரலாற்றில், கலையாட்சி செய்த பெருமை, ஒரு பெண்ணுக்கு உண்டென்றால், அது செம்பியன் மாதேவியைச் சாரும். இக் கலைநாயகியின் படைப்புக்களைக் கோனேரிராசபுரம் உமாமகேசுவரர் ஆலயத்தில் கண்டுகளிக்கலாம். கையில் பணமூட்டையைப் பிடித்திருப்பதுபோலக் காட்சிதரும் இவளது உருவப்படமான திருமணஞ் சேரிக்கோவில் புடைப்புச்சிற்பம், இத்தேவி, கலை வளர்ச்சிக்குக் காட்டும் வள்ளல் தன்மையை வெளிப்படுத்துகிறது. காண்போர் கவனத்தை கவரும் இச்சிற்பியின் சிலை உமாமகேசுவர ஆலயத்தின் கருவறைத் தெற்குச் சுவரை அலங்கரிக்கிறது. இதுதான் சோழர்கால சிற்பியைச் சிலையாகக் காட்டும் சிற்பமாகும்.
வானளாவி நிற்கும், தஞ்சைப் பெரிய கோவில்கள் சிற்பங்களை வடித்துக் கொடுத்த சிற்பியைச் சிலை வடிவில், நாம் கண்டு மகிழ முடியாது. இறைவனின் திருமேனிகளைப் படைத்து, வணங்கி மகிழ்ந்த மாமன்னன் இராசராசன், இறைத்திருவுருவங்களைப் படைத்துத் தந்த சிற்பிக்குச் சிலையெழுப்பவில்லை. தந்தைச் செய்த தவற்றையே மகனாகிய இராசேந்திரனும் செய்திருக்கிறான். சண்டிகேசுவரனுக்கு அனுக் கிரகம் காட்டும் அழகுச்சிற்பத்தை உலகுக்குத்தந்த, இம்மன்னனும், உருவாக்கியச் சிற்பியை மறுத்து விட்டான். ஆகையால், சிற்பிக்குச் சிலையெழுப்பிய, செம்பியன் மாதேவியை என்றும் கலை உலகு நினைவு கூறும். சிற்பியின் பெயர் “ஆலத்தூர் சாத்தான் குணபட்டனான அரசன் சேகரன்’ என்பதாகும். இவனது கலைத் தொண்டினைப் பாராட்டி, இவனுக்கு “இராசகேசரி மூவேந்த
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்" -

வேளான்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அர்த்தமண்டபச் சுவரை அலங்கரிக்கும் நடராசர், காளி, இடபாரூடர் (காளி, திருமால், பிரம்மன் இவர்களுடன்), பிச்சைத்தேவர் துர்க்கை, அர்தநாரீசுவரர் சிற்பங்கள் இம்மாதேவிக் காலத்துக் கலைத் தொண்டுக்கு என்றும் கவிபாடுமெனலாம். மாதேவியின் மற்றமொரு கலைப்படைப்பு, முருகப் பெருமானை யானைமீது அமர்த்திக் காட்டும் சிற்பங்கள். கண்ணுக்குக் கலைவிருந்தளிக்கும் இச்சிற்பங்களைத் தமிழ் இலக்கியங்களும் அழகுற வர்ணிக்கின்றன. “பிணிமுக ஊர்தி ஒன் செய்யோனும்” எனப் புறநானூறும், “ஓடாப்பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி”யெனத் திருமுருகாற்றுப் படையும், “கடுங்சின விறல்வேள் களிறு ஊர்த்தாங்கு” எனப் பதிற்றுப்பத்தும் கூறுகின்றன.
சோழ மன்னன் இராசராசனின் கலைத் தொண்டிற்கு எடுத்துக்காட்டு விண்ணை முத்தமிட்டு நிற்கும் பெரிய கோயிலில் காணப்படும் சிற்பங்களாகும். ஓங்கி உலகளந்தான் போல் நிமிர்ந்த உடல் காட்டிக் கோரப்பற்களை நீட்டி, கையிலே தடிதாங்கி, நேர்கொண்ட பார்வை காட்டும், கோபுர வாயிற் காவலர் சிற்பங்கள் அச்சத்தை ஏற்படுத்தினாலும், அதன் கலைக் கூறுபாடுகள், இமைமூடாத நம்மை சிலிர்க்க வைக்கும். பரம்பொருளைப் பார்ப்பதற்கு நுழைவுச் சீட்டு வழங்குவதுபோல் வாயில் இருமருங்கும் காட்சிதரும் இப்பெரிய உருவங்கள் சிந்தையைக் களிப்பில் ஆழ்த்தி விடுகின்றன. திரண்ட கைகளையும், தூண்போன்ற பருத்த கால்களையும் அகன்ற மார்பையும் கொண்டு, செம்மாந்து நிற்கும் இவ்வாயிற் காவலர்கள் கலையுலகில் ஒரு புதுமைப்படைப்பாகும். இவர்கள் சிவனாரைத் தலையில் தாங்கியதுபோல், தலையில் திரிசூலம் தாங்கியிருக்கிறார்கள். கலைமகள், இலக்குமிச் சிற்பங்கள் தாய்மையின் இலக்கணம் காட்டும். ஐம்புலன்களையும் அடக்கிச் சிந்தனைத் தெளிவு பெற்றால், கல்வியில் மேன்மையுடையலாம் என்ற உட்கருத்தை சரசுவதியின் கலைவடிவமைப்பு வெளிக்காட்டுகிறது.
87

Page 104
இராசராசனின் சிற்பக்கலை நாட்டத்தை நாடறியச் செய்யும் விதத்தில் நடராசர், இலிங்கோத்பவமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, சந்திரசேகரமூர்த்தி, ஆலிங்கன சந்திரசேகரமூர்த்தி (உமையாளுடன்) கருவறை அர்த்தமண்டபச் சுவரை அழகு செய்கின்றன. ஆரனும், அரியும் இணைந்த படிமம் பரம்பொருள் ஒன்றே என்ற கருத்தை வலியுறுத்தி'அரியும் சிவனும் ஒன்று, இதை அறியாதவன் வாயில் மண்ணு என்னும் சன்மார்க்க சித்தாந்தத்தைக் காட்டி நிற்கிறது.
ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட காளையின் உருவம் தஞ்சை பெரிய கோவிலின் தனிச்சிறப்பாகும் வெளிநாட்டுக் கலைவல்லுநர்கள் சிலர் இந்தியச் சிற்பங்களுக்கு உயிர் கிடையாது என்று ஒரு தவறான கருத்துக் கொண்டனர். அக்கருத்தை மாற்றவைத்து, இந்தியக்கலைக்குப் புகழாரம் வாங்கிக் கொடுத்த பெருமை, பெரிய கோவிலின் கற்காவியமான காளையைச் சாரும். நேரில் கண்ணுற்ற பிறகு, வெளிநாட்டுக் கலை வல்லுநர்கள், இதன் சிறப்பைப் பாரறியச் செய்திருக்கிறார்கள். பின் கால்களின் அமைப்பும், காலிற்கு ஊடே சென்று மறுபுறம் வெளிவந்து நிற்கும் வாலின் அழகும், இயல்பான எழிலாகும். பருத்த திமிலும், நிமிர்ந்த கழுத்தும், இக் காளையின் உயிர்த்துடிப்பைத் துல்லியமாகக் காட்டுகின்றன.
கருவறையைச் சுற்றி மேல்தளத்தில் காணப்படும் நாட்டியச் சிற்பங்கள், நம்மனத்தையும் நாட்டியமாட வைத்துவிடும் நடன நளினங்கள் காட்டும் இச்சீர்மிகு சிற்பங்கள் நம் சிந்தையில் சிந்துபாடும் பாங்குடையவை. நூற்றெட்டுக் கரணங்கள் இங்கு முற்றுப்பெறாமலிப்பது ஒரு பெரிய கலையிழப்பாகும். தில்லைச் சிற்றம்பலம் கோயில் கிழக்கு, மேற்குக் கோபுரங்களில் நாட்டியக் கரணங்கள் தீட்டப் பட்டிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இச்சிற்பங்கள் பிற்காலச் சோழர் கலைக்கு உதாரணமாகுமெனச் சில அறிஞர்கள் கருது கிறார்கள். இராசராசனின் திருவாயிலின் அடிப்படைப் பகுதியில் சித்தரிக்கப்படும்

சிவபெருமானின் திருமணக்கோலக்காட்சி யாவரின் மனத்திலும் கலைக்கோலம் போடும் மாட்சிமை கொண்டது. போதி மரத்தடியில் தவக்கோலம் காட்டும் புத்தரின் சிற்பம், அண்டத்தில் அவர் நிலைநாட்ட விரும்பும் அமைதியின் பிரதிபலிப்பாகும் (படம் 31). இது பார்ப்பவர் மனத்தில் ஆன்மீக வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச்செய்யும். சைவம் தழுவிய இராசராசன், பெளத்தத்திலும் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தான் என்பதை உணர்த்தும் இச்சிற்பம், கி.பி. 10ஆம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் பெளத்தம் நிலை கொண்டிருந்ததை இது தெளிவாக்குகிறது. சோழர் காலத்துப் புத்தச் சிற்பங்கள் பல எழும்பூர் அரசாங்க அருங்காட்சியகத்திலிருக்கின்றன.
அலைகடலுக்கு அப்பாலும் கலைவளர்த்த பெருமை இராசராசனைச் சாரும். இலங்கைப் பொலனறுவை, அனுராதபுரத்தில் கோயில்கள் நிறுவி, சிற்பங்கள் படைத்து, கலைத் தொண்டாற்றிய இம்மன்னரின் பெருமையை, வெறும் வார்த்தைகளால் எடுத்தியம்ப இயலாது.
தஞ்சை இராசஇராசேசுவரம் தமிழகத்தின் கலைச்சிகரம் (படம் 44), மத்திய பாரதத்து கசுராகோ, கலிங்கத்து கொனாரகா, பூரி போன்ற இடங்களிலுள்ள நாகர பாணிக் கோவில்களை எதிரிட்டழைத்து விண்ணளாவ நிற்கும் இதன்பெருமை ஆகாய மார்க்கமாகச் சென்று கண்டால் தான் விளங்கும். ஒரு துணைக் கண்டத்தைத் தன் மகன் சோழர் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து, தமிழன் பெருமையைக் கங்கை முதல் கடாரம் வரை பரப்ப வேண்டுமென்ற பேராவலில் தன் பேரரசுக் கனவுகளுக்குக் கோவில் வடிவில் எழுப்பிய நினைவுச் சின்னமே தஞ்சைக் கோவில். விமானத்தைப் போலவே மகாலிங்கமாகச் சிவனார் கருவறையில் எழுந்தருளியிருப்பது வடபுலத்தில் காசி. புவனேசுவரம் (இலிங்கேசுவரர் கோவில்) ஆகிய இடங்களில் உள்ள பெரிய கோவில்கள் சிறிய மூர்த்திகளைக் கொண்டுள்ள பணியுடன் ஒப்பு நோக்கத்தக்கது. கருவறை வலம் வரும் பாதை அமைப்புடைய 'சாந்தாரம்' எனும் அரிய பாணியைச்
ஆய்வரங்கு 2008

Page 105
சாரும். இந்த நாழிகைப்பகுதியில் அகோரதேவர் (தெற்கு), சத்யோசாதமூர்த்தி (மேற்கு), வாமதேவர் (வடக்கு) சிற்பங்கள் இலிங்கத்தைப் போலவே மாமேனியராய்க் காணப்படுவது ஒரு தனிச்சிறப்பு. கிழக்குப்புறம் கருவறை வாயில் வழியே இலிங்கம் தென்படுவதால் இது தத்புருடமூர்த்தி வடிவம் என்றும், விமானத்து உச்சியில் உள்ள உருட்டுக் கல் ஈசான முகம் என்றும், எனவே இக்கோவிலே மேற்படி ஐந்து முகங்கொண்ட சதாசிவ வடிவமைப்புடையது என்றும், இந்துக் கோவில்கள் ஐந்தொழில் (பஞ்சகிருத்தியம்) குறியீடுகளாகும் எனவும் சிந்தனையைத் தூண்டும் வகையில் எடுத்தியம்பப் பட்டுள்ளது (விளக்கம் காண்க Kalidos 1985 : 205-11)
இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு பாதப்பகுதி (அதாவது சுவர்) சிறுத்துக்கொண்டே செல்லும் விமானத்துடன் இணையும் கபோதத்தளவில் மூன்று திசைகளிலும் எண்ணற்ற திரிபுராந்தகப் படிமங்களுடன் அமைவது. இதன் மூலம் இராசராசன் தன் பேரரசு விரிவாக்கத்திற்கு இதயபூர்வமான கனவுச் சின்னம் எழுப்பியதாகக் கூறுவர். அது உண்மை. மண்ணுயிரைத் தன்னுயிராய்ப் போற்றிய வேந்தர், தம்மையே ஆண்டவனுக்குச் சமமாகக் கருதியதில் வியப்பில்லை.இக்காரணம்பற்றியே சோழ மன்னர்கள் தம்பெயரையே தாம் எழுப்பிய கோவில்களுக்கும் இட்டனர். தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்கள் இராசராசேசுவரம் என வழங்கப்பட்டதிலிருந்து இதை அறியலாம்.
இராசேந்திரன் காலத்துக் கலையாட்சிக்குக் கங்கை கொண்ட சோழீசுவரம் ஆலயம் ஒரு நல்ல உதாரணமாகும். வடநாட்டில் பெற்ற வெற்றியின் சின்னமாக இம்மன்னன் இக்கோயிலைக் கட்டி மகிழ்ந்தான் என்பர். சிற்பக்குவியலான இக்கோவில் கோட்டத்திலுள்ள ஆடல்வல்லான் கலைவனப்புக் கொண்ட படிமமாகும். எடுத்த பொற்பாதமும், முயல்கன் மீது ஊன்றிய திருவடியும், கலைநயம் காட்டும் நாற்கரங்களும், சிலைக்கு உயிர்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

ஊட்டுகிறது. அருகில் பிருங்கியும், பூதகணங்களும் மெய்மறந்த நிலையில், தாண்டவ மாண்புகளை இரசிக்கின்றனர். காரைக்கால் அம்மையார் நடனத்திற்கு இசைவாகத் தாளமிடுவது, நம்மையும் நடனத்தோடு, ஒன்றிவிடச் செய்கிறது. திருமால் மிருதங்கம் இசைப்பது பார்ப்பவர் மனத்தில் களிப்பூட்டும். தந்தையின் ஆட்டத்தைக் கண்டு களிக்க கணபதியும், முருகனும் தங்கள் வாகனங்களில் அமர்ந்தவண்ணம் புன்முறுவல் பூத்தநிலையில் காட்சிதருகின்றனர். தேவி காளையின் மீது சாய்ந்த நிலையில், தன் நாயகனின் நடனத்தை, மன நிறைவோடு அனுபவிக்கிறாள். கலையழகு பாங்குற அமைந்து கண்கவர் காட்சியாக விளங்கும், இச்சிற்பம் என்றென்றும் சோழர்காலக் கலைப் பெருமையைப் பறைசாற்றி, இவ்வகைப்பட்ட வெண்கலப் படிமங்களுக்கு இணையான நுட்பமிகு மாட்சிமையுடன் விளங்குகிறது.
அர்த்தமண்டப வெளிச்சுவரில் இடம் பெறும் சண்டேசனுக்கிரகமூர்த்தி சிற்பியின் கைதேர்ந்த கலைப்படைப்பாகும். அருள்பாலிக்கும் இறைவனும், இறைவியும் அகமகிழ்ந்து புன்முறுவல் காட்ட, அருள்பெற்ற நிலையில் சண்டேசர் மெய்மறந்து இறையுடன் இணைகிறார். இறைவனின் திருக்கரங்கள், F6doT (Lefsir தலையை, மலர்ச்சரத்தால் பரிவட்டம் கட்டக் கண்ட தேவி ஆனந்தக் களிப்பில் மிதக்கிறாள், சிவனின் வலது மேல்கரம்பரசையும், இடது மேற்கரம் கலைமானையும் அழகுறப் பிடித்திருக்கின்றன. மதிசூடிய சடாமகுடமும், காதணிகளும், நெற்றியை அழகுபடுத்தும் ஆபரணமும், கழுத்தணிகளும் சிவனின் பேரழகுக்கு மெருகூட்டுகின்றன. குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்' கனிந்த உதடுகளும், பளபளக்கும் கன்னமும் பக்தர்களுக்கு அருள் வழங்குவதில் இறைவன் காட்டும் மன மகிழ்ச்சியை, நம் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும். சோழர்காலக் கற்சித்திரங்களுள் இதுவே தலையாயது என்றால் அக்கூற்று மிகையாகாது.
89

Page 106
கங்கையைத் தலையில் தாங்கி, உமையவளை இடப்பாகத்தில் காட்டி நிற்கும் கங்காதரர் சிற்பம், காண்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும், தனக்குரிய பாகத்தை இன்னொருத்தி ஆக்கிரமித்துக் கொள்கிறாளே என்று ஒரு பதட்ட நிலை, உமையவளின் முகத்தில் பளிச்சிடுகிறது, இருப்பினும் முதல்நிலையை எவ்வகையிலும் இழந்துவிடக்கூடாது என்கிறமன உறுதியையும் முகம் மறைமுகமாகக் காட்டும் சிற்பியின் கலைத்திறனைக் காட்டும் சிற்பங்களாக உமையொருபாகன், கொண்டவளாய் சிம்ம வாகனத்தில் அருளும் தேவி, தன் யோக நிலைக்கு இடையூறு கொடுத்த மன்மதனை எரித்த மதனாந்தகமூர்த்தி, அழகின் ஒட்டு மொத்த வடிவமாகக் காட்சிதரும் படைப்புக்களை இக்கோயிலில் கண்டு களிக்கலாம் பிரம்மனின் உருவம் தனிக் கலைப்பாணி படைக்கும் மாண்புடையது. இவர் இந்தியப்படையெடுப்பை உறுதி செய்யும் ஒரு படிம ஆதாரமாகும். ஏனெனில் வட இந்திய படிமங்களில்தான் பிரம்மன் தாடியுடன் பிதாமகனாகத் தோன்றுவார்.
முகமண்டபச்சுவரை உட்பக்கத்தில் அழகுசெய்யும் புடைப்புச் சிற்பங்கள் இறைவனின் அருள்பாவிக்கும் உயர்நிலையை, உன்னதக் கலை அழகால், உலகுக்கு உணர்த்துகின்றன. ஆயிரத்தெட்டு மலர்களால் இறைவனை வழிபட்ட திருமாலுக்கு அருள் வழங்கிய மூர்த்தியாகவும், கைலாய மலையை அசைத்து இறைவன் இறைவிக்கு இடையூறு கொடுத்த இராவணனுக்கு முதலில் துன்பத்தைக் கொடுத்துப் பின் அவன் இசையால் மயங்கித் துயர்துடைத்த நிலையில் இராவண அனுக்கிரகமூர்த்தியாகவும், காலனின் பிடியிலிருந்து விடுபட இலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்ட மார்க்கண்டேயருக்கும் பாசக்கயிறு அறும்படி நேசக்கரம் காட்டும் மார்க்கண்டேய அனுக்கிரக மூர்த்தியாகவும், நாயகனை இலிங்கமாக வழிபாடு செய்து தனது மனத்தை இறைவனோடு இரண்டறக் கலந்த தேவிக்கு அன்பு முகம் காட்டும் தேவி அனுக்கிரக மூர்த்தியாகவும் இறையனார் காணப்படுவது இவர் யுகங்களின் முடிவில்
90

அண்டத்தை அழிக்கும் சங்கார மூர்த்தியா அல்லது அருள்பாவிக்கும் அனுக்கிரக மூர்த்தியா எனும் வியப்பை உருவாக்கும். ஐந்தொழிலுக்கும் அவரே நாயகர் என்பதை இச்சித்திரங்கள் சொல்லாமல் சொல்லும்.
முதல் குலோத்துங்கன் காலத்துக் கலை வளம் காட்டும் சிற்பங்கள் இம்மன்னரின் கலைவளர்ச்சிப் பணிக்குப் பாமாலைகளாகும். தில்லை நடராசர் கோயில் நிருத்தசபையில் இடம் பெறும் ஊர்த்துவதாண்டவமூர்த்தி, காஞ்சிக் கைலாயத்தில் தொடங்கிவரும் ஒரு கலையருவியின் தொடராகும். நெற்றி வரை தூக்கிய திருப்பாதம், தாண்டவத்தின் மகிமையை அம்பலப்படுத்தும். ஆடாத ஆட்டத்தை ஆடிக்காட்டி, காளியின் ஆணவத்தை அடக்கி, போட்டியில் வென்று சிரித்த முகம் கொண்டு நிற்கும் காட்சி, நாட்டியத்தின் நாயகனே சிவன்தானே என்ற உணர்வை நன்கு ஊட்டி இப்போட்டி நடத்த திருவாலங்காட்டுக்கே நம்மை இட்டுச்செல்லும். தோல்வியுற்று விரட்டப்பட்டவளே இன்றும் ஊர்க்கோடியில் குங்குமமுகமாய்க் காட்சி தரும் தில்லைக்காளி என்பர்.
மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவிலில் உள்ள சிற்பங்கள் அமிழ்தினும் மேலான கலைப்படைப்பாகும். இக்கோவில் விமான அமைப்பு, நடமாடும் இரதமோ என எண்ண வைக்கும். சக்கரவேலைப்பாடும், பாய்ந்து நிற்கும் குதிரைகளும், கலை இரசிகர்களுக்கு ஒர் வரதப்பிரசாதமாகும். எண்ணற்ற சிற்பங்களைத் தன்னகத்தே தாங்கியிருக்கும் இத்திருக்கோவில் ஒரு சிற்பக்கலைக் கூடமாகத் திகழ்கிறது.ஞான தட்சிணா மூர்த்தி, துர்க்கை, அர்த்தநாரீசுவரர், கங்காதரர், அகத்தியர், கணபதி ஆகிய சிற்பங்கள் கலைரசம் ததும்பிய வண்ணம் பார்ப்போர் மனத்தை ஈர்க்கும் ஆற்றல் படைத்தவை. சிம்மத்தை வாகனமாகக் கொண்டு காட்சிதரும் துர்க்கையின் கலைவடிவம் புதுமைப் பொலிவுடையது. மகிடனின் ஆணவத்தை அழித்த தேவி,பத்மபீடத்தின் மீது நிற்பதும் எருமைத் தலை தனியாக பீடத்தின் கீழிருப்பதும், கலைவானில்
ஆய்வரங்கு 2008

Page 107
ஒரு புதுப்படைப்பாகும். இதன் நோக்கத்தை மேலே கூறப்பட்ட பல்லவர் காலத்துப் படிமங்களுடன் ஒப்பு நோக்கினால் உண்மை புலப்படும். பத்மபீடம் மகிடப்பீடத்தின் மாற்றுருவே என இயல் ஒன்றில் எழுதியம்பப்பட்டது. இங்கு நினைவு கூறத்தக்கது. காலங்கள் மாறினாலும் படிமக்கோட்பாடுகளின் அடிப்படை மாறுவதில்லை (ஒப்பு நோக்குக Kalidos 1989: 20-5)
குலோத்துங்கன் காலத்துக் குன்றாத கலை வளத்திற்குக் காரணம் காட்டுவது சூரியனார் கோயிலாகும். கி.பி. 1114இல் கட்டப்பட்ட இக் கலைக்கோயில் உலகுக்கு ஒளிகொடுக்கும் சூரியனுக்கு எழுப்பப்பட்டது. சூரியபகவான், குலோத்துங்க சோழ மார்த்தாண்ட தேவரென, இம்மன்னனின் பெயர் கொண்டு தோற்றமளிப்பது இவனது ஆழ்ந்த சூரிய வழிபாட்டுக்குச் சிறப்பான எடுத்துக்காட்டெனலாம். சூரியநாராயண அட்டோத்தரம் குறிப்பிடும் “சாயா உசா தேவி சமேத சிf சூரியநாராயண சுவாமி” எனப்படும் சூரியனார் கையில் தாமரை மலர்களைத் தாங்கி நிற்கிறார். ஆதவன் கதிரியக்கத்தால் மலரும் தாமரை என இலக்கியம் காட்டும் சூரியனுக்கும், தாமரைக்குமுள்ள தத்துவத் தொடர்பைச் சுட்டிக் காட்டவே அவர் திருக்கரத்தில் சிற்பி தாமரையைக் கொடுத்தான் போலும். சந்திரபகவானின் கைகளில் அல்லி இருக்கும் பொருத்தமும், ஈண்டு நினைவு கொள்ளுதல் சாலப்பொருந்தும். சந்திரன் முகம் கண்டு அல்லி மலர்வதும் குறிப்பிடத்தக்கது. சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா? செங்கதிர் பரப்பி, விஞ்ஞானிக்கு ஒளி காட்டும் ஆதவன், இங்கு கையில் மலர்தாங்கி, ஆன்மீக ஒளி காட்டுவது, விஞ்ஞானத்தை மிஞ்சுவது மெஞ்ஞானம் என்பதை உலகுக்கு உணர்த்தவோ? குலோத்துங்க மன்னரின் சமகாலத்தவனான கன்னோசி மன்னரின் மெய்க்கீர்த்தியொன்று கங்கை கொண்ட சோளிசுவரர் ஆலயத்தில் கிடைத்துள்ளது இது குலோத்துங் கனுக்கும் கன்னோசி நாட்டிற்கு மிடையே காணப்பட்ட அரசியல் தொடர்பிற்கு ஒரு சிறந்த ஆதாரமாகும். இவ்வரசியல் தொடர்பால்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

தோன்றியதுதான் இக்கலைக் கோவில் காட்டும் சூரியனார் சிற்பம். நாடுகளுக்கிடையேயான அரசியல் போட்டி கலாச்சார இணைப்புப் பால மென்பதை இச்சிற்பம் புரிய வைக்கும். இருப்பினும் சங்கம் மருவிய காலத் தொட்டு ஞாயிறும் திங்களும் வழிபாடு செய்யப்பட்டதை சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டும் கடவுள் வாழ்த்துப் பாடலையும் இளங்கோவடிகள் “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றதும். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என பரவுவதாலும் அறியலாம். (Kalidos 1992: ChapI)
இரண்டாம் இராசராசனின் கலை வளர்ச்சிக்கு ஆதாரச் சின்னம் தாராசுரம் கோயிலாகும். கோயிற் சுவரில் இடம்பெறும் சரபேசுவரர் சிற்பம், கலையுலகில் தனித்துவம் காட்டும். இக்கோயிலில்தான் இச்சிற்பம் முதன் முதலில் தோற்றமளிக்கிறது, புதுக்கலைப் படைப்பில் இது ஒரு மைல்கல். திருமால், நரசிம்மன் அவதாரம் எடுத்து இரணியனைக் கொன்ற பிறகும், தாகம் தணியாது, தம் அபாரபலத்தால் உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்க. அச்செயலைத் தடுப்பதற்காகச் சிவன் சரப வடிவம் கொண்டதாகப் புராணங்கள் கூறும். இதுபற்றி மராட்டியர் காலத்தில் சரபuராணம் ஒன்று தமிழில் எழுதப்பட்டது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமேயெனச் சிவனை எதிர்த்து வாதாடிய நக்கீரனைப்போன்று குற்றம் புரிவது இறைவனாக இருப்பினும், அழிக்கப்படல் வேண்டுமென்ற ஆன்மீகக் கருத்தை இச்சிற்பம் நம் சிந்தைக்குப் புகட்டுகிறது. இதன் வரலாற்றுப் பின்னணியும் அறிவுக்கு விருந்தாகும். சாளுக்கியர்களின் வெற்றிக் கடவுள் நரசிம்மன். அதுபோன்று சோழர்களுக்கு சிவன், சோழருக்கும், சாளுக்கியருக்குமிடையே ஏற்பட்ட படையெடுப்புகள் எண்ணிலடங்கா. முதலாம் இராசராசன் காலம் முதல் கல்யாணிச் சாளுக்கியர் சோழருடன் போட்டியுடன் அரசியலை நடத்தினர். இந்த இடைவிடாச் சண்டையின் பல்வேறு கட்டங்களிலும் வெற்றி பெற்றவர் சோழரே. நரசிம்மன் சரபத்தால் கொல்லப்படும் இச்சிற்பக்காட்சி, சோழர் சாளுக்கியர் மீது கொண்டவெற்றியை நினைவுபடுத்துமெனலாம்.
91

Page 108
இம்மூர்த்தியின் சமயப் பின்னணியும் கருத்தாழம் கொண்டது. நரசிம்மன் சிவனால் அழிக்கப்படும் இத்தோற்றம், வைணவத்தை மிஞ்சிய நிலையில் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் சைவம் தழைத்திருந்தது என்பதை உணர்த்தும். எது எப்படியிருப்பினும் சமயக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகக் கலை உலகுக்குக் கிடைத்தது ஒரு அரிய சிற்பச் செம்மலாகும்.
மனிதன், மிருகம், பறவை இனக்கலப்பின் ஒரு இணைப்புக்கலைக் கூறுபாடு இச்சரபத்தில் இடம் பெறுவது தனிச்சிறப்பாகும். மனித முகம் காட்டி, சிங்க உடல் கொண்டு, எட்டுக்கால்களுடன், பறவை இறக்கையைப் பெற்றிருக்கும் சரபம் ஒரு பேரண்டத் தத்துவக்குவியலாகிப்புதுப்பொலிவுடன் மிளிர்கிறது. தாராசுரப் படிமத்தில் சிங்கத்தின் பின்னிரு கால்கள், நரசிம்மனின் உடல்மீது அழுத்தமாக ஊன்றியிருக்கின்றன. நரசிம்மனின் கூப்பியகைகள், தவறு செய்ததை உணர்ந்து மன்னிப்புக் கோரும் பாணியில் உருப்பெற்றுத் தோன்றும் (விரிவாக்கம் காண்கKalidos1980:213-18, 1987:283-96.சிவனின் தலைக்குமேல் குடையும், சாமரமும் அழகுறச் செதுக்கப் பட்டிருக்கின்றன. சிவனின் வெற்றியைப் பாடி விண்ணுலகத் தேவர்கள் இருகரம் கூப்பித் தொழுகின்றனர். தவறு செய்தால், நமக்கும் இந்நிலைதான் என்ற எண்ணங் கொண்டவர்களாய், மெய்மறந்து மணம்பதைத்து, உடல் சிலிர்த்துத் தோற்றமளிக்கின்றனர்.
விக்கிரமசோழீசுவரம் உடையார் கோயிலிலும் இது போன்ற சிற்பம் உள்ளது. இங்கு நரசிம்மனின் கைகள் வணங்கிய நிலையில் அமையாது, செயலிழந்து இரண்டு பக்கங்களிலும் தொங்கிய நிலையில் காணப்படும். 'உலகமே என் கையில்' என ஆர்ப்பரித்த அலெக்சாண்டர், பின் உண்மை உணர்ந்து, என் கையில் ஒன்றுமில்லை, ஆகவே இறந்தபிறகு சவப்பெட்டிக்கு வெளியே எனது கையைத் தொங்கவிடுங்கள் என்று வீரர்களை வேண்டிக் கொண்டது ஈண்டு நினைவு கொள்வது தகும். அநீதிச் செயல் புரியும் எக்கைகளும் செயலற்றுப் போகுமென்பது தெய்வ வாக்கு.
92

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.
தாராசுரத் தூண் சிற்பங்கள், சைவப் புராணக் காட்சிகளை நம் மணக்கண் முன் கொண்டு வந்துக் காட்டுகின்றன. ஊர்த்துவதாண்டவமூர்த்தி, காளி நடனங்கள் இவை கலைப் பாங்கு பெறும். உடல் வளைத்துக் கண்சிமிட்டும் ஆடலரசிகளின் தோற்றம் காண்போரைக் கலகலத்துப்போகச் செய்யும். பேரழகு காட்டும் ஆரணங்குகள் காளிதாசனின் காவிய வர்ணனைகளையும் மிஞ்சுகின்றனர். இவள் நளினம் தஞ்சைப் பெரிய கோயில் ஒவியத்தில் இடம்பெறும். அரம்பையர்களையும் தோல்வியுற வைத்துவிடும் நடனக் கோலம் காட்டிக் கண்ணுக்கும் சிந்தைக்கும் இவை கலைவிருந்து வழங்கும். இந்நாட்டியக் கலை அரசிகளைக் கண்ணுறும்போது “தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித்தூங்கக் கைவழிநயனம் செல்லக் கண்வழி மணமும் செல்ல, ஐயறுண் இடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார்” என்ற கவிச்சக்கரவர்த்தி கம்பரின் காப்பிய வரிகள் நம் சிந்தையில் சிந்துபாடும். அவர்கள் அணிந்திருக்கும் அணி கலன்களில் “சூடகமே தோள் வளையே, தோடே செவிப்பூவே, பாடகமே யென்றினைய பலகலனும்” அடங்கும்.
ஆன்மீகப் பாடல்களைச் செவிக்குணவாகத் தந்த நானிலம் வணங்கும் நாயன்மார்களின் தெய்வ மணங்கமழும் வரலாற்றுச் சிறப்பை, புடைப்புச் சிற்பமாகக் காட்டி நிற்கும் தராசுரத் திருக்கோயில், என்றும் குன்றாத கலையழகுக் காட்டும் கருவறைச் சிற்பப் பெட்டகமாகச் செம்மையுறச் செதுக்கப் பட்டிருக்கும் பாங்கு, இறைவன் நாயன்மார்கள் புடைசூழ அமைந்திருக்கும் ஒரு கோலாகலக் காட்சியை நம் கண் எதிரே காட்டும். திருச்சுற்று மாளிகையில் நூற்றெட்டுச் சிலைகள் செதுக்கப் பட்டிருக்கும் அழகுக் காட்சி, சிற்பியின் கலைத் துடிப்பையும், இரண்டாம் இராசராசன் காலத்துக் கலைச் செழிப்பையும் பாரறியச் செய்யும். வெளிக் கோபுரத்தில் பூங்கொத்து பூங்கோலம் காட்டுவது போல், எண்ணற்ற தேவகோட்டங்கள் அழகுறக்
ஆய்வரங்கு 2008

Page 109
காணப்படுகின்றன. அன்று சிற்பம் தாங்கிய கோட்டங்கள் இன்று கலையிழந்த வெற்றிடங்களாகத் தோன்றுவது சோழர்கலைக்கு ஒரு பேரிழப்பாகும். ஒவ்வொரு தேவகோட்டத்தின் கீழும் சிற்பத்தின் பெயர் ஆழமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. சிற்பங்கள் காணாமைக்கு எவ்விதக் காரணமும் காட்ட முடியவில்லை. சில தஞ்சை அருங்காட்சியகத்தில் (உ.ம். பிச்சதேவர்) வைக்கப்பட்டுள்ளன. எல்லாச் சிலைகளும் காட்சி அளித்தால் இக்கோயில் தேவலோகத்துக் கலைக் காட்சிக் கூடமெனத் தோன்றும். இன்று காணப்படும் ஒரு சில சிற்பங்கள் இதற்கு ஆதாரமாகும்.
கோவிலின் முகப்பில் இடம்பெற்றுள்ளன மூன்று தலைகள் கொண்ட சிற்பமொன்று, காண்போரை ஈர்க்கும் பாங்குடையது. ஆகமங்களில் இதற்கு விளக்கமில்லை. ஒரு பக்கம் பெண்ணின் மார்பகம் இருப்பதால், சிலர் உமையொருபாகனாகக் (அர்த்த நாரி) கருதுவர் (Kalidos 1993 - 99-100, படம் 10). சர்வவல்லமை கொண்ட மாகாளி என்று சிலர் அடையாளம் கண்டனர். இது சூரிய சக்தியென்றும் கருத்து வெளிவந்தது. கருத்துக்கள் வேறுபடினும், களங்கமில்லாத இதன் கலையழகு தனித்துவம் படைத்தது.
இக்கோயிலின் முன்பண்டபத்திலிருக்கும் மோகினிச்சிலை இத்தாலிய நாட்டு ஓவியம் காட்டும் பேரழகி மோனோலிசாவை விஞ்சிடும் கருங்கல் சித்திரம். இவள் உயிர்த் துடிப்புள்ள பாவையோ? என எண்ணத் தோன்றும். இம்மோகினியின் மோகனப் புன்னகையில் நான் மயங்கக் காரணம் சாகசம் காட்டும் அவள் சித்திரப் பேரழகே. கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு யார்தான் விதி விலக்கு சொல்லால் வர்ணிக்க முடியாத கலையழகு காட்டும் அருள்பெருங் கொடை இது.
இரண்டாம் இராசராசன் காலத்துப் பிச்சைத் தேவர் உருவம் தஞ்சைக் கலைக்கூடத்தில் கலைஒளி வீசுகிறது. பூதகணங்கள் புடைசூழ, தாருக வனத்து இருடிகள், பத்தினிகள் வரிசையில் நிற்க, ஆணவம்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கொண்ட முனிவர்களை அடக்குவதற்குச் சிவன் ஏந்திய இக்கோலம் ஆடைகளைந்த நிலையில் எழில் காட்டும். முனிவர்களின் கலையாத மன உறுதியைத் தகர்க்கத் திருமால் மோகினி வடிவம் பெற்றுத் தோன்றுகின்றார். “உடுக்கையிழந்தவன் கைபோல்” எனும் கூற்றுக்கிணங்க சிவனின் அழகில் மெய்மறந்த ஒருத்தியின் உடைதளர்கிறது. மறுகணமே மற்றொரு கையினால் கீழிறங்கும் ஆடையைப் பிடித்துக் கொள்கிறாள். நிர்வாணக் காட்சியால் நிலையிழந்த இன்னொருத்தி, கால்களினால் நிற்கும் செயல் இழந்து, நாணத்தால் முகம் கோணி, இன்னொருத்தி உடல்மீது தன்பாரத்தை சுமத்துகிறாள். சிவனைப்பார்த்த அளவில் நிலம் நோக்கும் நிலை “யான் நோக்கும் காலை நிலம் நோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்லநகும்” என்ற குறளை நினைவூட்டுகிறது. இமை மூடாது, மெய்மறந்த நிலையில் சிவனின் அழகில் ஒன்றிவிட்ட மற்றொருத்தியின் மயங்கிய நிலை கண்ணோடு கண்ணினை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இல” என்ற வாசகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சிவனின், அழகைச்சுவைத்து மெய்ச்சிலிர்த்த ஒருத்தி, தன் ஒருபாதத்தைத் தூக்கிய நிலையில் காணப்படுகிறாள். அவள் பாதத்தின் மென்மைத்தன்மை “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம்” என்ற குறளுக்கு ஒப்புமை காட்டுகிறது. மற்றொரு மங்கை பிச்சை கேட்கும் குரலைக்கேட்டுக் கையில் அரிசி கொண்டு அவசரமாக ஓடி வருகிறாள். பிச்சைத் தேவராகிய சிவனின் ஒப்பற்ற அழகில் மயங்கி, அசைவற்று நிற்கிறாள். அவள் உடலில் ஏறிய காமக் கனலில், அரிசி, சோறாக மாறியிருப்பதைச் சிற்பி, தத்ரூபமாகக் காட்டிருக்கிறான், காமத்தீயால், அரிசி சோறாக மாறும் தத்துவார்த்தம் தான் என்னே?
மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி. 178-1216) காலக் கலை வளர்ச்சியைத் திரிபுவனம் கம்பசுரேசுவரர் ஆலயத்தில் கண்டு களிக்கலாம். இம்மன்னரின் சிறப்புப்பெயரான திரிபுவன வீரதேவர் நினைவாக,திரிபுவன வீரேசுவரம் என்று இக்கோவில் அழைக்கப்படும். இங்கு சரபேசுவரமூர்த்திக்குத்
93

Page 110
தனிக்கோவில் எடுக்கப்பட்டுள்ளமை தனிச் சிறப்பாகும். தாராதரத்திலிருந்து திரிபுவனம் இடத்தாலும் காலத்தாலும் அருகே இருப்பதாலும் சமயப் பின்னணியில் வளர்ச்சி ஒரு பெரிய மாற்றத்தையே காட்டி நிற்கும்.
சரபமூர்த்தி சன்னதியில் இருபுறமும் தோன்றும் கன்னியர் கண்களால் கவிபாடிக்கைகளால் தனிமை காட்டித் தம் அங்க அசைவுகளில் இவ்வுலக இன்பங்களின் இலக்கணமாய் நிற்கின்றனர். இதைக் கண்ணுறும் போது, கவிஞனின் நகை நட்டுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள், அவள் இடையோ, ஒரு பிடிக்கும் காணா இளம்பிடி இதழ்களில் தேன் ஒருபடி இல்லை குறையென்னும் முல்லை, பேச்சிலோர் கிள்ளை, அவளை விடுமோ காதல் தொல்லை” என்ற கவிநயம் நம் சிந்தையில் பாய்ந்தோடுவதை உணரலாம்.
கோயிலின் அடிப்பகுதியை இராமாயண, மகாபாரதச் சிற்பங்கள் அழகு செய்கின்றன. இங்கு சித்திரிக்கப்படும் இராமன் - இராவணன், வாலி - சுக்கிரீவன் போர்க் காட்சிகள் உயிர்த்துடிப்புக் கொண்டவை. இராமனின் திருமணக்கோலக் காட்சி, மங்கலச்சிறப்புக்கொண்டு, மனத்தை இன்பக் கடலில் ஆழ்த்திவிடும். இச்சிற்பங்கள் வெறும் காட்சிப்பொருளாக அமையாது தென்னிந்திய கலை வரலாற்றில் அவதாரத் செம்மல்களான கண்ணனும் இராமனும் பெறும் இடத்தைச் சுட்டி, சைவத்துடன் வைணவம் இணைந்து செல்லும் மேம்பாட்டு நிலையைக் காட்டும். முதலாம் இராசராசனின் காலத்தில் தோன்றிய சமயப் பொறையுடைமை, மூன்றாம் குலோத்துங்கன் வரை நீடித்திருப்பது இம்மண்ணின் மாட்சிமைக்கு மங்காத சிறப்பாகும்.
அர்த்த மண்டபச்சுவரில் இடம்பெறும் ஒரு சிற்பம் குட்டி போடும் யானையை, அதன் இயற்கைச்சூழலோடு எடுத்துக்காட்டும், குட்டி போடுவதற்குத் துணை செய்யும் பாங்கில், ஆண் யானை பெண்யானையின் வயிற்றை, தன் துதிக்கையால் மென்மையாக அழுத்தும் மற்றொரு
94

UT 6OD 60T, பெண் யானையின் 66)6) உயர்த்திப்பிடிக்கும் சிவனும் உமையும் யானை உருக்கொண்டு கலவியில் ஈடுபட்டு யானைமுகனை (கசானனன்) பெற்றெடுத்த புராணக் கதையை இங்கு நினைவுகூர்தல் தகும்.
உலோகத்திருமேனிகள்
“தண்ணிடுங் காவிரியே, தார்வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழமண்டலமே” என்னும் தமிழ் மூதாட்டியின் சொல்லுக்கு இலக்கணமாய் அமைந்தவை மாபெருஞ் சோழர் படைத்த உலோகத்திருமேனிகள்.
உலோகத்தால் உருவங்கள் உருவாக்கும் கலை சோழர் காலத்தில் உயர்நிலை அடைந்தது. ஐந்து வகை உலோகக் கலவையால் உருவாக்கப்பட்டதால் பஞ்சஉலோகச் சிலைகளென அழைக்கப்பட்டன. உலோகங்கள் முறையே தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, வெள்ளியம் ஆகியவை. உருவங்கள் உருப்பெறும் செய்கைக்குத் தேன்மெழுக்கு முறையென்று பெயர். இன்றும் தமிழ்நாட்டில் சுவாமிமலை, கும்பகோணம் போன்ற இடங்களில் தேன்மெழுக்குமுறையில் எழில் உருவங்கள் அழகுறச் செய்யப்படுகின்றன. நேரில் கண்டால்தான் இம்முறையின் சிறப்பை அறிந்து கொள்ள முடியும்.
வடநாட்டில் எட்டுவகை உலோகக் கலவையில், உருவங்கள் வார்க்கப்படும். எண்வகை உலோகங்கள் அட்டதாதுக்களெனப்படும். அவை முறையே தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, தகரம், ஈயம், பாதரசம், துத்தநாகம், சிற்ப நூல்களில் உருவங்கள் வார்க்கும் முறை விரிவாக விளக்கப்பெறும். மேற்குச் சாளுக்கிய மன்னன் மூன்றாம் சோமேசுவரன் எழுதிய “மான சோலல்லசா” என்ற களஞ்சியம் இம்முறையைத் தெளிவுற விளக்கிக்கூறும். பராந்தகன் காலத்திலிருந்து கலைநுட்பம் காட்டும் உலோகத் திருமேனிகள், சோழர்காலக் கலைத்திறனுக்குப் பெருமை சேர்க்கும் கலைபாங்குடன் உருவம் பெற்றன.
ஆய்வரங்கு 2008

Page 111
சிதம்பரம் கோயில் நடராசர் திருமேனி காலத்தால் பராந்தகனைச் சாருமென்று சிலர் கருதுவர். சிலர் மறுக்கவும் செய்வர். காலக் கணக்கீடு எப்படியிருப்பினும், இக் கண்கவர்சிலை சோழர்காலச் சிற்பியின் கலை வண்ணம் என்பதில் யாதொரு ஐயப்பாடுமில்லை. அதன் ‘பணித்த சடையும், பவளம் பொன் மேனியும், இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும்” கண்ணால் கண்டு உணர்வு பூர்வமாய் அனுபவிக்கும் பாங்குடைவை, இராசராசன் காலத்தில் நடராசப் பெருமானுக்கு ஆடல் வல்லான்' எனச் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுக்களில் ஆடல் வல்லான்’ பெயர் இடம் பெறும். பிற்காலச் சோழர் காலத்தில் கூத்தாடும் தேவர், கூத்தாடும் பெருமாள் என்ற பெயர்கள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டொன்று நடராசர் திருமூர்த்தியின் படிம அளவை எடுத்தியம்புகின்றது. இதுவொன்றே, இம்மன்னன், நடராசர் சிலையை வடிப்பதில் எத்தகைய நாட்டம் கொண்டிருந்தான் என்பதைப் புலப்படுத்தும் “கீழ்க்கிடந்த முயலகனோடும் கூட பாதாதி கேசாந்தம், முக்காலே அரைக்கால் முழ உசரமும், (திருக்கை) நாலும், சடைமேல் கங்கா பட்டாரகியும், சடை ஒன்பதும், பூமாலை எழுமுடைய கனமாக எழுந்தருளிவித்த ஆடல்வல்லான் திருமேனி ஒன்று, ரத்தின நியாசம் செய்து இவர் எழுந்தருளி நின்ற மூவிரல் உசரமுடைய பத்மம் ஒன்று. ஐவிரல் உசரத்தில் அரைமுழ நீளத்து, பதிற்றுவிரல் அகலமுடைய பீடம்” என்பது கல்வெட்டு வரிகளாகும்.
தஞ்சைப் பெரிய கோயில், திருவாலங்காடு, சிவபுரம் திருமேனிகள், கலைச்சுருதி இசைக்கும் கவிநயம் காட்டும் சிறந்த படைப்புக்களாகும். சோழர் காலத்து, நடராசர் திருமேனிகள் அனைத்தும் கலைப்பொலிவு காட்டும் பெட்டகங்கள். பரம் பொருளின் இடைவிடாத ஆட்டத்தால் தான் இப்பேரண்டமே நிலையாக இயங்குகிறது. பூமியின் சுழற்சியைச் சிற்பி தாண்டவக்கோலத்தில் காட்டி மகிழ்ந்திருக்கிறான் போலும். ஆனந்த குமாரசுவாமி அவர்கள், ஆனந்த தாண்டவ உரு அமைப்பில்,
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

சமயமும், விஞ்ஞானமும், கலையும் இணைந்து கவினுறத் தோற்றமளிக்குமென்று ஆனந்தம் கொள்கிறார். அம்பலத்தில் ஆடாது இப் பேரண்டத்தில் ஆடும் ஆடல் வல்லானின் நடனச் சுழற்சியில் கையிலே தாங்கியிருக்கும் கனல் தலையை அலங்கரிக்கும் சடைமுடி, பிறைமதி யெல்லாம், இவ் வழகுத் திருநடனத்தில் பங்கேற்று, அவைகளும் களிநடனம் காட்டுகின்றன. ஆடல் நாயகனின் ஆட்டத்தைக் கண்ணுறும் போது “ஆதிபரனாட அங்கைக் கனலாட ஒதும் சடையாட, உன்மத்த முடியாட, பாதி மதியாட, பாரண்ட மீதாட, நாத மோடு ஆடினான் நாதாந்த நட்டமே” என்ற திருமூலரின் கூற்று நம் மனத்தில் காவியம் பாடுமெனலாம். திருக்கரங்கள் நான்கும், தூக்கிய பாதமும், இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தலென்ற ஐந்தொழிலையும் சுட்டும் காலின் கீழேநசுக்கப்பட்ட முயலகன், அறியாமையின் (மாயையின்) ஒட்டுமொத்த வடிவம். இறைவனின் காலடியில் அவன் அழுத்தப்பட்டிருப்பது மாயையை (இருட்டை) நீக்கி, அருள் ஒளிக்காட்டுவது பரம்பொருளே என்பதை மெய்ப்பிக்கிறது.
எண்ணற்ற சோழர் கால நடராசர் திருமேனிகள், உலக நாடுகளின் பல்வேறு அருங்காட்சியகங்களை அழகு படுத்துவதோடு மட்டும் அமையாது, சோழர் காலக் கலைப்பெருமையை உலகறிய உணர்த்தும், அமெரிக்க நாட்டு பிலடெல்பியா அருங் காட்சியகத்தில் கலைப்பாங்கு காட்டும் நடராசர் சிலைகளின் எண்ணிக்கை அதிகமாகும். கலை அழகு காட்டும் தமிழகக் கோயிலொன்று அவ்வருங் காட்சியகத்தில் இடம் பெற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
கால்கள் இரண்டையும் தலைகீழாகக் காட்டி, அற்புத நடனம் காட்டும் ஒரு அழகுப்படிமம் திருவெண்காடு சுவேதாரண்யசுவாமி ஆலயத்தில் உள்ளது. இந்த நடராசனின் திருமேனியைக் கண்டு மகிழ மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' எனப் பாடத் தோன்றும். இன்னும் பளபளப்புக்கு குன்றாமல், பார்ப்பவரை மகிழ்ச்சிக்
95

Page 112
கடலில் ஆழ்த்தும்பாங்குடையது இச்சிற்பம். பீடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இந்த நடனத்தைத் தேசிக் கூத்தெனச் சுட்டிக்காட்டுகிறது சடையில் கங்கையைக் காட்டாத திருமேனிகளும் சோழர் காலத்தில் உண்டு (உ.ம். திருநாரையூர் சித்தேசுவரசுவாமி ஆலயத்திருமேனி), தூக்கிய திருவடிகளில் தான் எத்தனை மாற்றங்கள் சிற்பி உருவம் படைத்திருக்கிறான் என்பதைவிட, ஒரு கலை விளையாட்டையே நடத்தியிருக்கிறான் என்று சொல்வதே பொருத்தமுடையதாகும். தூக்கிய திருவடி, சில உருவங்களில், வலது கால் முழங்காலுக்கு மேலேயும், பாதம் நிலம் நோக்கியும் காட்டப்படும் (சிறந்த எடுத்துக்காட்டு வடமுல்லை வாயில் மாசிலாமணிசுவரர்ஆலயத்திருமேனியாகும்). பாதம் நிலம் பார்க்காது. திருவாசி நோக்கும் பாங்கினைத் திருமீயச்சூர் முயற்சினதேசுவரர் ஆலயத்தில் கண்டு களிக்கலாம். சடை அமைப்பில்தான் எத்தனை வேறுபாடுகள். நாக பட்டிணம், காயரேசன்சுவாமி ஆலயத் திருமேனி காட்டும், கண் சிமிட்டும் சடையின் வேலைப்பாடு, எங்கும் காணப்பெறாத ஓர் கலைப் புதையலாகும் தோளின் இருமருங்கு விரிந்து, நீளும், சடையின் எண்ணிக்கையில் எத்தனை மாறுபாடு,மரக்கோணம், பூமிசுவர ஆலயத் திருமேனியில், பாம்புகள் தலையிலிருந்து கீழிறங்குவதுபோல், பக்கத்திற்கு ஒன்றாகக் காட்டப்படும். சடையழகும் நம் உள்ளத்தை மகிழ்விக்கும். இருமருங்கும், இரண்டு சடாமுடிகள் தோள் மீது கொடிபோல் தவழ்ந்து செல்லும் அழகுக் காட்சியை திருமீயச்சூர் முயற்சினதேசுவரர் ஆலயத்தில் கண்டு பரவசம் கொள்ளலாம். ஏழு சடைகள் தாங்கிய கண்கவர் அழகைத் திருநாறையூர் சித்தீசுவரசுவாமி ஆலயத்தில் பார்க்க முடியும். சடைமுடியே காட்டாத திருமேனிகளும் சோழர் காலச் சிற்பியின் அற்புதப் படைப்பாகும். இவ்வழகுக் காட்சியை வழுவூர் வீராட்டானேசுவரர் ஆலயத்தில் மெய்மறந்து இரசிக்கலாம். ஆனதாண்டவபுரம் திருமேனிக்கு தனித்ததொரு கலையம்சம் உண்டு. தூக்கிய திருவடி ஊன்றிய வலதுகால் குறுக்கே செல்லாது நேர்மேல் தூக்கிக் காட்டப்படும். முயலகனின் தோற்றஅமைப்பிலும் இருநிலையினைப் பார்க்க முடியும்.தலைகீழ்நோக்கிக் குப்புறப்படுத்தும்,
96

தலை நிமிர்ந்து ஆடும் நாயகனைப் பார்த்தும், முயலகனின் உடல் அமைப்பு அமைகிறது. இறைவனின் திருவடியால் அழுத்தப்பட்ட முயலகனின் உடல் அசைவுகளை இயற்கை நயத்தோடு சிற்பி காட்டியிருக்கிறான்.
சதுர தாண்டவம் ஆடும் சிவனார் திருஉருவங்கள், சோழர் கலை மாட்சிமைக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும். குமாரவயலூர்ப்படிமத்தின் பாதத்தின் கீழ் முயலகனுக்குப் பதில் தாமரப் பீடம் காணப்படுகிறது. ஊன்றிய வலது காலின்கீழ் முயலகன் இருக்க, களிநடனம் காட்டும் சதுர தாண்டவத்தைக் கிழக்காடு ஆலயத்திலும்
காணலாம்.
சோமாசுந்தர் படிமங்கள் சோழர் காலத்தில் கலை வளப்புத் கொண்டுகோயில்களில் இடம்பெறுகின்றன. (படம்27) சிவன், பார்வதி, கந்தன் மூவரும் தோன்றும் காட்சி, முத்தமிழ்தான் இங்கு ஒருங்கிணைந்து தோற்றமளிக்கின்றதோ என எண்ணத் தோன்றும். இது இச்சா, கிரியா, ஞானசக்திகளின் இணைப்பு எனக் கொள்வதுமிகப்பொருந்தும், கந்தனை இருந்த, நின்ற கோலங்களில் கண்டு களிக்கலாம். சிவனின் நான்கு திருக்கரங்களில் மேலிருகைகள் மான் மழுத்தாங்கியும், வலது கீழ்கை அபயம் வழங்கியும், இடது கீழ்கை கடக முத்திரையும் காட்டும். திருப்பனையூர் சிவன் கோயில் சோமாசு கந்தப் படித்தில் சிவனின் இடது கீழ்க்கரத்தில், மாம்பழமிருக்கிறது. இவ்வித அமைப்புமுறை வேறெந்தப் படிமத்திலும் பார்க்க முடியாது. திருவிளையாடற் புராணக் கதையின் தாக்கத்தை இச்சிற்பம் எடுத்துக்காட்டுமெனலாம் உலகத்தையார் முதலில் சுற்றிவருவது என்ற ஒரு போட்டியை சிவன், தன் பிள்ளைகளாகிய கணபதி, முருகனிடத்தில் நடத்தினார் உலகமே சிவன் எனக் கருதிக் கணபதி தாய்தந்தையைச் சுற்றிவந்து பரிசான மாங்கனியைப் பெற்றார். இச்செய்தியை நினைவுப்படுத்தவே சிவன் கையிலே மாம்பழம் ஏந்துகிறார். (Suthanthiran 1992 : 295 - 97) மயில்மீதுஎறி, உலகத்தைச் சுற்றி வந்த முருகன், தோல்விகண்டு துவண்டு போனார். “அன்னையும் பிதாவும் முன்னேறிதெய்வம்” என்றும்
ஆய்வரங்கு 2008

Page 113
தமிழ் மூதாட்டியின் உலகநீதிக்கு இச்சிற்பம் சிறப்பான உதாரணமாகும்.
திருப்புகலூர் அக்னிசுவரர் ஆலயத் திருமேனியில், தேவியின் நிலையில் ஒரு கலைமாற்றம் தெரியும். தேவியின் இடதுகை, நந்தியைப் பிடித்திருப்பது, கலைகாட்டும் புதுப்பொலிவெனலாம். பல்லவர் காலம் முதல் விசயநகர் காலம்வரை எங்கும் இவ்வித படிம அழகைக் பார்க்க முடியாது. நந்தியின் தோற்றத்திற்கு முழுக்காரணம். அக்காலக் கட்டத்தில் வழக்கிலிருந்து புராணக் கதை. வழங்கிவரும் தலபுராணக் கதையின் படி திருப்புகலூருக்கு அருகிலிருக்கும், இராமநந்தீகெசுவரத்தில், ஈசுவரனை வழிபட இராமபிரான் செல்கிறார். அத்தருணம், நந்தி குறுக்கே வந்து இராமபிரானின் தரிசனத்திற்குத் தடையாக நிற்கிறது. தடையாகயிருந்த நந்தியை பார்வதிகையில் பிடித்துக் கொள்கிறாள். இதைத் தான், சிற்பி சிற்பத்தில் காட்டியிருக்கிறான். இது கண்ணுக்கு என்றும் 6(55g5 Tf5 g6OLOLLjuh (Suthanthiran 1990 : 321-24). கச்சியப்பர், கந்தபுராணத்தில், தாய்தந்தையருக் கிடையே தோன்றும் முருகனின் பேரழகை இரவுக்கும் பகலுக்கும் இடையே தோன்றும் மாலை வெயிலுக்கு உவமை காட்டி மகிழ்கிறார்:
“ஏலவார்குழல் இறைவிக்கும் தனக்கும் பாலன் ஆகிய முருகவேள் நடுவுறும்பான்மை ஞால மேவும் இரவோடு பகலுக்கும் நடுவே மாலையான தோன்றலின்றி வெகுமாறத் தொக்க”
என்பது கந்தபுராணம் பாட்டு. அம்மை - அப்பனுக்கிடையில் காட்சிதரும் கந்தப் பெருமானைச் சங்கப்பாடலொன்று “மறியிடைப்படுத்த, மாண் பினைப்போல் புதல்வன் நடுவன் ஆக நன்றும்” என்ற நயம்படி உணர்த்துகிறது. குழந்தைச் செல்வத்தோடு காட்சியளிக்கும் குடும்பமே மகிழ்ச்சி தருமென்ற ஆழ்ந்த கருத்தை சிற்பி தன் மூர்த்தத்தில் அழகுறக் காட்டியிருக்கிறான் “குழல் இனிது யாழினிதென்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்று குறளும், மகிழ்ச்சியூட்டும் குழந்தையில் பிறப்பிலேதான், ஒரு குடும்பம் பொலிவு பெறும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

என்பதை வலியுறுத்தும். பட்டீசுவரம். திருமுல்லைவாயில், மாயவரக் கோயில்களில், சோழர் கலைப்பாணியிலாகிய இப்படிமங்களைப் பார்க்க முடியும்.
கையிலே வீணையேந்தி, இசைமீட்டும் நாயகனாகக் காட்சிதரும் கோலம்தான் வீணாதர தட்சிணாமூர்த்தியாகும். சப்த சுவரங்களின் நாயகன் வீணையேந்தி, இசைநாதம் வழங்கும் எழில்மிகு காட்சியைப் படிம உருவில் மனங்குளிரக் கண்டு இரசிக்கலாம். பொன்விளைந்தான்பட்டி, தஞ்சைப் பெரிய கோயில் படிமங்கள் வீணை நாதத்தை எழுப்பிய வண்ணம் காட்சி தருகின்றன. இசைகேட்ட நாகம்போல், காலின் கீழ், முயலகன் கிடக்கிறான். புன்முறுவல் காட்டி இசை மீட்டும் காட்சி, என்றும் யாவரின் மனயெழுச்சிக்குத் தூண்டுகோலாகும். பிறைதாங்கி, ஈடில்லா அழகு காட்டும், சந்திரசேகரமூர்த்தி உருவங்கள் சோழர் காலக் கலை மாண்புக்கு சான்று பகரும். உண்மையான இறையுள்ளம் கொண்டவருக்கு இறைவன் வழங்கும் அருளைக் குன்றுமேலிட்ட விளக்குபோல், தெளிவுபடுத்தவே, இளம்பிறை தலையில் பூத்துக் குலுங்குகிறதோ என எண்ணத் தோன்றும். இக்கருத்தைக் கந்தபுராணம் “நெற்றியில் கண்ணுடை திமிலத் தெம்பிரான் உற்றவர்க்கருள் புரிகின்ற உண்மையைத் தெற்றென உணர்த்தல்போல் திங்களின்கலை கற்றையஞ் சடைமிசைக் கவின்று பூத்ததே”எனக் கூறிஅகத்தில் இன்ப அலைகள் எழச் செய்கிறது. "தோடுடைய செவியன், தூவெண்மதி சூடிய” இறைவனின் பேரழகால், தனைமறந்த மாணிக்கவாசகர், முழு நிலவு தரும் ஆன்மீகக் குளிர்ச்சியை ஆழ்ந்து அனுபவித்த நிலையில் “மதியொடு நீரிற் குளித் தொளிக்குஞ்சடை மன்னவனே”யென மெய்யுருகிக் காதலால் கசிந்து, கண்ணிர் மல்குகிறார்,
தேவியை அணைத்த நிலையில் காட்சிதரும் ஆலிங்கன சந்திரசேகரமூர்த்தி உருவங்கள், மிகச்சிறந்த முறையில், கலை நுணுக்கம் கொண்டு, பார்ப்பவர் மனத்தில் ஒரு தெய்வீகக் காதலை வளர்க்கும். இடது கீழ்க்கை தேவியின்
97

Page 114
ஆலிங்கனமாக அரவணைக்கிறது. நாயகனின் கைப்பட்டதும் ஏற்படும் புத்துணர்வைத் தேவியின் ஒளிமுகம் வெளிக்காட்டுகிறது. திருவெண்காடு சுவேதாரண்ய ஆலய இடபவாகனமூர்த்தி உலகக் கலைவானில் என்றும் ஒளிவீசும் ஒர் ஆற்புதத் திருமேனியாகும். உலக நாடுகள் நடத்திய கலாசாரக் கண்காட்சியில் முதல் பாராட்டைப்பெற்றதும் இதுவே, சிவனின் தலைப்பாகை இதில் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவது தனிச்சிறப்பு ஆகமங்களோ சிற்ப சாத்திரங்களோ இவ்வித அமைப்புமுறைக்கு வழிகாட்ட இயலாத நிலையில் கலை அழகுடன் மிளிரும் இப்படிமம் சிற்பிகள் கலை உலகில் தனித்துச் செயல்பட்டுத் தம் கற்பனை வளத்தை வெளிக் கொணர்ந்தமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. பாகையின் அமைப்பு விவசாயிகளின் தலையணியை ஒத்துப்போவது சிற்பிக்கு ஏன் இந்த எண்ணம் எழுந்தது எனும் கேள்வியைத் தூண்டும். ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயி என்பதைப் பாருக்கு உணர்த்தவே இதைச் சிற்பி வடித்தான் என்பதுதான் தகுந்த விடையாகும். ஏனெனில் “சுழன்றும் ஏர் பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை” என்பது தமிழ்ப்பாட்டில் வள்ளுவர் இட்ட வித்தன்றோ. சிவனைப் பல இடங்களில் பல்வேறு கோலங்களில் கண்ட சிற்பி, இங்கு ஒரு விவசாயியாகக் காண்பது வள்ளுவர் காட்டியப் பாதையிலும் கலை உலகுக்குச் சென்றதை நிரூபிக்கும்.
முருகனின் அழகுத் திருமேனிகளைப் பல்வேறு வடிவில் கண்டு களிக்கலாம். அம்மையப்பனோடு குழந்தையாக, வள்ளி தெய்வானையோடு மணவாளனாக, சூரனை அழித்த நிலையில் வில்லேந்திய வேலவனாக, மயிலேறும் ஆறுமுகனாக, வெவ்வேறு திருவுருவங்களில் முருகனைக்கண்டு களிக்கலாம். குழந்தையான கந்தன், கையில் மலர்தாங்கிய நிலையில் தோற்றம் தருவான். ஏதுமறியா, களங்கமற்ற, குழந்தை உள்ளத்தை அவனது திருமுகம் காட்டுகிறது. குழந்தையும் தெய்வதும் ஒன்றுதானே! மணவாளனாகக் காட்சிதரும் கோலத்தில் அருகில் தெய்வயானை யையும், வள்ளியையும் கொண்டு, புன்முறுவல் காட்டுவான். வில்லேந்திய வேலன் படிமம் சாயாவனம்
98

சாயாவனேசுவரர் ஆலயத்திலிருக்கிறது. மேலிருகைகள், சக்தி, வச்சிரம் தாங்கி, கீழிருகைகளும் வில்லும் அம்பும் ஏந்திய நிலையில் போர்க்கோலம்பூண்டு அருள்பாவிக்கும் படிமம் இது. மூக்குப் பகுதி சற்றுச் சிதைந்திருந்தாலும், இதன் கலையழகு, என்றும் சிந்தைக்கு விருந்தாகும், இச்சிலை கடலிலிருந்து எடுக்கப்பட்டது என்பது செவிவழிச் செய்தியாகும். கடல் மண்ணால் ஏற்பட்ட உராய்வுதான், மூக்குப்பகுதி சிதைந்து போனதற்குக் காரணமூமாகலாம். கடலில் வீசப்பட்ட காரணம் தெரியவில்லை இதுபோன்ற அமைப்புமுறை கொண்ட மற்றுமொரு சிலை நாகபட்டினம் சாம்பவன்ஓடை கிராமத்தில் கிடைத்தது. இது எழும்பூர் அரசு அருங்காட்சியகத்திலிருக்கிறது. மயிலேறும் ஆறுமுகன் திருமேனியில் மயிலின் அழகும், முருகனின் கலைப் பொலிவும் இணைந்து ஒப்பற்ற தோற்றம் காட்டும். கங்கை கொண்ட சோழபுரத்துக் கார்த்திகேயத் திருமேனி ஒரு தனிச் சிறப்புக் கொண்டது. நான்கு திருக்கரத்தில் வலதுமேல் கை சக்திப் படையையும், இடது மேங்கை சேவலையும் இடது கீழ்கை கேடயத்தையும் பிடித்திருக்கும். இராசராசனின் வடநாட்டுப் படையெடுப்பால் தோன்றிய கலாச்சாரத் தொடர்பால் மலர்ந்ததது தான் இப்புதுத் திருக்கோலமெனலாம்.
இறைவனைப் பிச்சையேற்கும் பெருமானாகக் காட்டும் பிச்சாடன மூர்த்தித் திருமேனிகள் நிர்வாணக்கோலத்திலும் கலை எழில் காட்டும் படிமங்கள். இடையை மறைத்துக் காட்டி பாம்பு சுற்றிச்சுற்றி வருவதுபோல் தோற்றம் காட்டும் (படம் 28) வலது மேல்கையில் உடுக்கையும். இடது கீழ்க்கையில் கபால பாத்திரமும் காணப்படுவது பொதுவான கூறுபாடு. வெண்காட்டுத் திருமேனி, சோழர் காலக் கலை எழிலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வலது கீழ்க்கரம் மாலுக்கு உணவூட்டுகிறது. முன் கால்களை உயர்த்தி, உணவு பெறச் சிவனின் கை விரலை முத்தமிடும் கலைமானின் பேரழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்னும் காரணம் கொண்டு தான் சிற்பி படிமத்தில் காட்டினால் போலும் மானும் துளிருக்காகத் துள்ளுவதைவிட இறைவனின்
ஆய்வரங்கு 2008

Page 115
பேரழகில் மயங்கிக் களிநடனம் புரிகிறது என்பதே பொருத்தமாகும் பிச்சையாகப்பெறும் ஆணவத்தைத் குறும்பூதம் தலையில் பாத்திரமேந்தித் தாங்குகிறது. குறும்பூதத்தின் குறும்புத்தன விளையாட்டு அதன் நடை அமைப்பில் தெரிகிறது. தஞ்சாவூர், மாயவரம் தாலுகா மேலப் பெரும்பள்ளம் வலம்புரிநாதர் ஆலயத்திலிருக்கும் பிட்சாடனார் திருமேனி, ஆகமவிதிகளுக்குமாறுபட்டுத்தனிக்கலைக்கோலம் காட்டுகின்றது. கீழ் இரண்டு கரங்களும் வீணையேந்திய நிலையில் அமைந்திருப்பதால், இதை வீணாதர பிட்சாடன மூர்த்தியென அழைக்கலாம். (Suthanthiran 1992 495-500) 660ėséhës35JğgöIT6ão, மானுக்கு உணவு ஊட்டுவது பொதுவான படிம அமைதியாகும். ஆனால் இங்கு வலது மேற்கரம் அப்பணியைச் செய்கிறது. பல அரிய படிம அமைதியுடைய இத்திருமேனி ஆடையணிந்திருப்பது ஒரு புதுகலைக் கண்ணோட்டமாகும். நிர்வாணம் மறைத்து ஆடைகாட்டும் பிச்சைதேவர் படிமம் இது ஒன்றுதான். தலையில் சடாமண்டலமோ, அல்லது சடாபாரமோ தாங்காது. சடாமகுடம் தரித்திருப்பது ஒரு தனிக் கலைக் கூறுபாடு. இரண்டாம் இராசராசன் கல்வெட்டொன்று இத்திருமேனியை “வட்டணை காட்டவந்த நாயகர்” எனக் குறிப்பிடும் வட்டணை என்பதுதாளம் என்று பொருள்படும் எனச் சூடாமணி, பிங்கல நிகண்டுகள் தெரிவிக்கின்றன. வீணையேந்தித் தாளம் கொட்டியதால் வட்டணை காட்ட வந்த நாதரெனப் பெயர் பெற்றார் போலும் புன்முறுவல் காட்டி வந்த முனிகணங்கள் புடைசூழ, வீணையேந்திச் செல்லும் இவரைத் தேவாரத்தில் வாழ்த்திப்பாடும் செய்யுள் “முனிகணங்கள் புடைசூழ முற்றந்தோறுந் தெறித்த தொரு வீணையராய்ச் சொல்வார்தம்வாய் சிறு முறுவல் வந்தெனது சிந்தை வெளவமறித் தொருகால் நோக்காதே மாயம்பேசி வலம்பூரமே புக்கங்கே மன்னினாரே' என்பதாகும். வலம்பூரம் இத்திருமேனியுள்ள கோயிலிருக்கும் ஊரின் பெயராகும்.
சிவன் உமையவளைக் கைத்தளம் பற்றும் திருமணக் கோலக் காட்சி சோழர்கலை வளர்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் வெங்கலப்படிமங்களாய் காட்சிதருகின்றன. கோனேரிராசபுரம் உமாமகேசுவர
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

ஆலயத் திருமேனி தனிக் கலைப்பாங்கு கொண்டதாகும். இறைவனின் இடது கீழ் கை காளையின் மீது சாய்ந்த வண்ணமிருப்பது ஒரு புதிய கலைப்பாணியாகும். பிறபடிமங்களில் கீழ்கை அபயம் காட்டும். அக்கினிக் குண்டம் வளர்க்கும் பிரமனும், திருமணத்தை முன்னின்று நடத்தும் திருமாலும் அருகில் நிற்கிறார்கள். உமையவளின் தந்தை திருமணத்திற்கு வரவில்லை.இந்நிலையில் தேவியின் சகோதரரான திருமாலே முன்னின்று, திருமணத்தை நிறைவேற்றிவைக்கும் காட்சி ஒரு சமுதாயச் சூழலை இங்கு வெளிக்கொணர்கிறது. இன்றும் சமுதாயத்தில், தந்தை இல்லாத நிலையில் மனப் பெண்ணின் திருமணப் பொறுப்பை, அவளது சகோதரன் தானே ஏற்றுக் கொள்கிறான். ஆகவே உலக வழக்குமறையைக், கலையில் வடித்த சிற்பியின் பெருமைதான் சித்திரம் தீட்டுவது கலையின் சமுதாய உண்மைத் தன்மையை என்னே திருமணஞ்சேரி உத்வநாகேசுவரர் ஆலயத் திருமேனியில் காளை காட்டப்படவில்லை. தேவியின் துணை அமைப்பில் எத்தனைக் கலை அழகு முத்துவேடம் சுற்றி வளைத்தது போன்ற ஆடை அமைப்பு, சிற்பியின் கலைத் தேர்ச்சிக்கு ஒர் சிறந்த எடுத்துக்காட்டாகும். திருவேள்விக்குடி, மணவாளேசுவரர் ஆலயப்படிமத்தில் முத்துமாலைகள் தொங்கும் தோரணத்தை உடை வெளிப்படுத்தப்படும். திருமணஞ்சேரி கல்யாணசுந்தரமூர்த்தி,திருப்புகழுர் சோமாசுகதமூர்த்தி, மேலப்பெரும் பள்ளம் பிட்சாடனமூர்த்தி உருவங்கள் மூன்றையும் முக்கனி, முத்தமிழ், மூவுலகு என்பது போல் முத்திருமேனிகள் என்றழைத்தால் மிகையாகாது.
திரிபுராந்தகத் திருமேனிகள். சோழர் காலத்தில் கலை வனப்புப் பெற்று, சோழராட்சிக்குப் பெருமை சேர்த்தன. மேற்கரங்களில் மானும், மழுவும் தாங்கி, கீழ்க்கரங்களில் கடக முத்திரை காட்டுவார் இவர். முப்புரம் எரித்த முக்கண்ணனின் செயல், சிலைவடிவில் அமைந்திருப்பது கண்ணுக்கினிய கலைக் காட்சியாகும். முப்புரம் என்பது மூன்று அசுரர்களைக் குறிக்கும் என்பதைவிட, மும்மலங்களை உணர்த்துமென்பதே மிகப் பொருத்தமாகும். திருமூலரும் இதேகருத்தை
99

Page 116
“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன், முப்புரம் செற்றனன் என்பவார்கள் மூடர்கள், முப்புரமாவமி மும்மலகாரியம், அப்புரம் எரித்தமை யார் அறிவாரே” என்று தெரிவிக்கிறார். மும்மலம் என்பது ஆணவம், கன்மம், மாயையைக் குறிக்கும் 'சிவஞான போதம் தரும் விளக்கமும் இதுவே தான்.
சோழர் காலச் செப்புத் திருமேனிகள் மாண்பைக் கீழையூர்கோயில், தஞ்சைப் பெரிய கோயில், மாயவரம் மயூரநாதர் ஆலயங்களில் கண்டு பூரிப்புப் பெறலாம். மூன்றும் காலத்தால் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. எழிலார்ந்த சரபே சுவரமூர்த்திக்கும் திரிபுவனத் தில்லைக் கோவில் படிமம் சிறந்த உதாரணமாகும். வடபுலத்தில் கல்லிலும் காணக்கிடைக்காத இவ்வடிவம் தமிழகத்தில் தனிப்பெரும் படைப்பாகும்.
எட்டுக்கரங்களைக் கொண்டு, கழுத்தில் முண்டமாலையணிந்து, நிர்வாணம் காட்டும் பைரவருக்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருவெண்காடு சுவேதாரண்யசுவாமி திருக்கோயில் படிமம். வழுவூர் வீரட்டானேசுவர ஆலயத்தில் இடம் பெறும் கசசம்காரமூர்த்தி ஒரு அரிய செப்புத்திருமேனி, கற்சிலைகள் அதிகமுண்டு, மதயானையின் தோலுரித்து, கால்கள் விண்ணைப்பார்க்க, தலைகீழாகப்பிடித்து நிற்கும் சிவனின் இக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் கலைப்பாங்குடையது உணர்ச்சிக் குவியலாகிய இக்கலைவடிவம், “உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறொழுக்கோடே விரித்திட்டார் சிறிதுபோது கரிக்கிலராகிக் தாமும் சிரித்திட்டார் எயிறு தோன்றித் திருப்பயற்நூரனாரே” என்ற அப்பரின் பாடலை நினைவுக்கு கொண்டு வரும் திறம் படைத்தது.
தமிழகத்தில் சிலைகளெடுத்துச் சைவம் வளர்த்த சோழ மன்னர்கள், வைணவத்திற்கும் கலைத் தொண்டாற்றியிருக்கின்றனர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுபோல், மதங்களும், மறைகளும் காட்டும் வழி ஒன்றே என உயர்ந்த நன்னெறியில் ஆட்சி நடத்தினர். பருத்தியூர்
100

வரதராசப்பெருமாள் கோயில் இராமன், சீதை, பரதன் படிமங்கள் அழகுணர்வைத்தூண்டும்பண்புடையவை அநீதியை அழித்து நிதியை நிலைநிறுத்திய, இராமனின் தோற்றம் சோழர்காலக் கலைமகுடமாகும் இலக்கியத்தில் காப்பியம் கம்பர் படைக்க, சித்திரத்தில் திரு மேனிகளைச் சிற்பிகள் படைத்து இராமகாவியத்திற்கு உயிரூட்டினர். கையிலே வில்லேந்திய கோலத்தைக் காட்டி, முகத்திலும் வில் போன்ற புருவத்தைக் காட்டும் சிற்பியின் காவியத்திறனை என்னென்று வியப்பது இராமனது சிலை
“செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி
வாயினொடும் சந்தார் தடம் தாளொடும் தாள் தடக்கைகளோடும் அந்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றமென
வந்தான் இவனாகும் வல்வில் இராமன்” என்ற கம்பனின் கூற்றை நினைவுபடுத்தும்.
சீதையின் அழகு, சிந்தைக்கு விருந்தாகும். சிறைமீட்டநாயகனின் பேராற்றல் கண்டு புன்முறுவல் காட்டுகிறாள். சீதையின் சிலை
“புல்லிதழ் கமலத்தெய்வம் பூவிற்கு முண்டாம் மதிக்குமுண்டாம் களங்கமென்றுரைக்கும் - ஒதம் அல்லவும் சிறிது குற்றம் அகன்றில் இதுநல்லியளாக்கு எல்லா நலனன்றி
பிறிதுண்டால்” என்ற பாடலுக்கு இலக்கணம் காட்டுகிறது.
பாரதத்தின் காவியத் தலைவன் பரதனின் படிமம், அண்ணனுக்கு அடங்கிய தம்பிக்கு இலக்கணங்காட்டும். கலை வேலைப்பாடு கொண்ட வைணவப் படிமங்கள் வடக்குப்பனையூர், முடி கொண்டான், திருக்கண்ணபுரம் ஆலயங்களில் காட்சி தருகின்றன.
சைவம் பரப்பித் தமிழ் வளர்த்த சைவ நாயன்மார்களின் திருமேனிகள் சோழர் கலை வண்ணத்தால், தமிழகமெங்கும் காட்சியளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர்,
ஆய்வரங்கு 2008

Page 117
மாணிக்கவாசகராகிய நால்வருக்கும் முதன் முதலில் உலோகத்தால் படிமம் அமைத்த பெருமை இராசராசனுக்கேயுண்டு (இராமசுவாமி 1976 : 27) திருப்புகழுர், அப்பர் திருமேனியாவரின் மனத்தையும் ஈர்க்குமாற்றலை யுடையது. வடித்த காதுகளும், மூடிய கண்களும், அணிகலன்கள் இல்லா உடல் அமைப்பும், அலங்காரமில்லா மழித்த தலையும், அடியாரின் பற்றற்ற நிலையைப் பாங்குற விளக்குகிறது. தோளிலே சாய்ந்திருக்கும் உழவாரம் அப்பரின் சமயத் தொண்டை பிரதிபலிக்கும். என் கடன் பணி செய்து கிடப்பதே” என வாழ்ந்த இப்பெரியாரின் உலோகத் திருமேனி இவர் அடியார் நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட வரலாற்றுப் போக்கின் சின்னமாகும். “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு” என்ற குறளின்படி, உலகப்பற்றை மறந்து இறைப்பற்றே உயிரென வாழ்ந்த இவ்வடியார்கள் இறை நிலையில் ஏற்றம் பெற்றது இப்புண்ணிய பூமியில் செந்தமிழ் பேசப்படும் இத்தென்கோடித் திருநாட்டில்தானே! நால்வரின் கலைவடிப்பில், எத்தனையோ கலைவேறுபாடுகள் உண்டு கீழுர் வீரட்டானேசுவர ஆலயத்திலிருக்கும் அப்பர் திருமேனியில் உழவாரத்தோடு, ஒரு சிறிய தண்டும் இருப்பது புதுப்படைப்பாகும். குற்றாலம் சோழீசுவரமுடைய ஆலயத்தில் மாணிக்க வாசகர் நின்ற நிலையில், திருமணஞ்சேரி, உத்வாகேசுவரர் படிமத்தில், கோவணம் தரித்துக் காட்சி தருகிறார். சம்பந்தரை எல்லாப் படிமத்திலும், குழந்தையாகப் பார்க்கலாம். சுந்தரர் திருக்கோலமும் நல்ல வேலைப்பாடு கொண்டதாகும். ஆத்தூர், சோமநாதேசுவரர் திருக்கோயிலில் சேரமான் பெருமாள் நாயனார், கையில் வீணையேந்தி, ஆன்ம கீதம் இசைக்கிறார்.
கலையழகு கொண்ட சிலைகளைத்தந்த மாமன்னர்கள் இன்றுநம் கண் முன்னால்,உயிர்பெற்ற சிலையாகத் தோன்றுகிறார்கள். கல்லிலும், உலோகத்திலும் வடிக்கப்பட்ட இத்திருமேனிகள், கலைவளர்த்த செம்மல்களின் பெயரைப் பாரறியச் செய்கின்றன. மன்னன் கண்டரரதித்தனுக்குச் செம்பியன் மாதேவியால் கேனேரிராசபுரம்,
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

உமாமகேசுவரர் கோயிலில் சிலை நிறுவப்பட்டது. இதை, 1. ஸ்வஸ்தி பூரீ கண்டாரதித்த தேவர் தேவியார் மாதே வடிகளாரான பூரீ செம்பியன் மாதேவியார் 2. தம்முடைய திருமகனார்ழரீமதுராந்தக பூரீஉத்தம
சோழர் திருவிராஜயஞ்செய்த ருளா. 3. நிற்கக் தம்முடையார் பூரீ கண்டராதித்த தேவர்
திருநாமத்தால் திரு நல்லமுடையார்க்குத் 4. திருக்கற்றளி எழுந்தருளிவித்து இத் திருக்கற்றளிலேய் திரு நன்னி முடையாரைத் திருவடித் தொழுகின்றாராக 5. எழுந்தருளிவித்த பூரீ கண்டாரதித்த தேவர்
இவர்”
என்ற கல்வெட்டு வரிகள் உறுதி செய்யும்.
ஆடுதுறை, திருக்குரங்காடுதுறை மகாதேவர், திருவேள்விக்குடி கல்யாண சுந்தரர் திருக்கோயில்களில் கண்டாரதித்தன் இலிங்கத்தைந் கைகூப்பி வழிபடும் ஆன்மீகப் பாங்கினைக் காணலாம். மனத்தைச் சொக்க வைக்கும் அழகுச் செப்புத் திருமேனிகளைப் பாருக்குத்தந்த செம்பியன் மாதேவியார். இலிங்கத்தை வழிபடும் தோற்றம் காட்டுகிறார். கந்தர்வ கோட்டையில் கிடைத்த உத்தம சோழனின் செப்புத் திருமேனியொன்று, சென்னை அருங் காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது பாரெல்லாம் பார்த்து மகிழ, கலைக் கூடமெனப் பெரிய கோயிலை நிறுவிப் பாராண்டமன்னன் இராசராசனுக்கு உலோகப் படிமம் இருந்ததாக ஆதாரமுண்டு. சிலை நிறுவியவன் பெரிய கோயில் அதிகாரியான தென்னவன் மூவேந்தவேளான் எனும் சிறப்புப் பெயர் கொண்ட “பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியன்’ என்பனவாகும். கங்கைகொண்டு, கடாரம் கொண்ட முதலாம் இராசேந்திரனின் கற்சிலை அவனது காதற் கிழத்தியுடன் திருவாரூர் கோயில் திருச்சுற்றில்
கிடைத்துள்ளது. அவள் 6(5 நடனமாதாகயிருந்தாலும் சிற்பி அவ்வாடலரசியின் அழகை அரசமாதேவிக்கோலமாகக்
காட்டியிருக்கிறான். களி நடனம் காட்டும் ஆடல் அரம்பையர்களும், அரசநிலை எய்துவர் என்பதை இச்சிற்பம் உணர்த்துகிறது. தில்லை மேற்கு
101

Page 118
கோபுரத்தில், விக்கிரம சோழனின் முழு உருவச்சிலையிருக்கிறது. கோபுரத்தைக் கட்டிய தோரணைக்கொண்டு, மன்னன் கம்பீரமாகக் காட்சித் தருகிறான். இரண்டாம் இராசராசனும், அவனது பட்டத்தரசிபுவனமுழுதுடையாளுடன், திரிபுவனமும் (மூன்று உலகமும்) கண்டு இரசிக்க, கலைப் பொலிவு காட்டுவது சிறப்புடையது. தாராசுரம் கோயில் கட்டிமகிழ்ந்த, அவனது ஆன்மீக உணர்வு, முகத்தில் பளிச்சிடுகிறது. தான் கட்டிய கோயிலைக் கண்டு மகிழ, மீண்டும் உயிர்பெற்று வந்தானோ என எண்ணத் தோன்றும். மூன்றாம் குலோத்துங்களின் உருவச் சிலைகளை திருவாலங்காடு, திருமண்டங்குடி, பட்டீசுவரம் கோயில்களில் கண்டு மகிழலாம். கோயில் விரிவாக்கம் செய்த புதுப்பொலிவை முகம் காட்டுகிறது. களம்பல கண்டு வெற்றிகள் கண்ட இம்மன்னன் இங்கு இறைவனுக்கு முன்னால் ஐம்புலன்களை அடக்கி, சிந்தைதெளிந்து சிலையாகி நிற்கிறான். மூன்றாம் இராசராசனின் திருவுருவங்கள், முனியூர் வெற்றிக்கெல்லாம் காரணம், இறையே என, ஆட்சி நடத்திப் பெரும்புகழ்கொண்ட பெருமை சோழ மன்னர்களைச் சாருமெனலாம். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நெறி முறை தவறாத ஆட்சியைத் தமிழகத்தில் அவர்கள் நிலை நாட்டினார்.
சோழமன்னர்களின் ஆட்சியின் கீழ்ச்சிறப்பாகப் பணிபுரிந்த அதிகாரிகளுக்குப்பட்டங்கள் கொடுத்து, மன்னர்கள் மகிழ்ந்ததை வரலாறு காட்டும். பணியின் சிறப்புக்கருதிச் ઈી6u அதிகாரிகள் சிலையாக்கப்பட்டிருப்பது சோழர் கலையின் சிறப்புமிகு அம்சமாகும். சேரசிங்கள, பாண்டியர்கள் தோல்விக்கு காரணமாகிய மும்முடிச் சோழ பிரம்மராயன் செப்பும் படிமம் ஒன்று திருவெண்காடு, சுவேதாரண்யம் திருக்கோயில் திருச்சுற்றில் கிடைத்தது. ஆயிரக்கணக்கான படை வீரர்களை வழி நடத்திச் சென்று போரில் வெற்றி வாகை" சூடியவர், இங்குக் கரம் குவித்துத் தனிச்சிலையாக நிற்பது, தனிப்பெருஞ் சிறப்புடையது. திரண்ட உடல்கொண்ட இவரது சிலையே சோழர் கால வீரர் ஆண்மைக்குச் சான்று பகரும். இராசேந்திர சோழ பிரம்மராயர் என விருதுப்பெயர்கொண்ட
102

கிருட்டிணன் இராமனுக்குச் சிலை எழுப்பப்பட்டது. இவர் ஈழத்தின் மீது படையெடுத்து வெற்றி மாலை சூடியவர்.
இலக்கியம் படைத்து நற்றமிழ் வளர்த்த, செந்தமிழ்ப் புலவர்களுக்கும், சிலை வடிக்கப்பட்டது. எழுத்தாற்றல் படைத்த புலவர்களுக்கு கலையாற்றல் பெற்ற சிற்பிகள் உருவச்சிலை அமைத்தது தமிழ்க்கலையின் தனிப்பாணியாகும். உலாக்களும், கோவையும், அத்தாதியும் பாடித் தமிழ் மணம் பரப்பி இன்றும் தமிழ்வானில் உலாவிவரும் ஒட்டக்கூத்தருக்கு ஒப்புமையில்லாத சிலை கும்பகோணம் பெரியமடத்தில் எழுப்பப்பட்டது. ஆன்மீக நெறியில் வாழ்ந்து பக்திப்பரவசமூட்டும் பாடல்களை இவ்வுலகுக்குப் படைத்து எங்கும் எந்நாட்டவரும் தொழும் வண்ணம் பெருமைபெற்ற, நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை வடித்துதந்த சேக்கிழாருக்குத் திருஉருவச்சிலை திருநாகேசுவரம், திருச்சி மலைக்கோயில்களில் சிறப்புற அமைந்திருக்கிறது. பெரியபுராணம் தந்த சேக்கிழார் பெருமையை என்றும் உலகுக்கு இச்சிலைகள் நினைவூட்டும், “உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்” என்று இறையைப் போற்றிய இப்புலவருக்குத் தமிழ்த்தரணி காட்டிய கைம்மாறு இச்சிந்தைக்கினிய சிற்பங்கள் ஆகும்.
சோழர்காலச் சிற்பங்கள், தமிழகப் பண்பாடு, கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். இலக்கியம் காலக்கண்ணாடியென்றால், சிற்பம் கலங்கரை விளக்கமாகும். தமிழகப் பண்பாட்டை உலகறியச் செய்யும் காலக்கண்ணாடிகள் சிற்பம். சிற்பம் வடிப்பது சிற்பியின் 5L6) அதை உலகுக்கு அறிமுகப்படுத்துவது கலைவல்லுநரின் கடமை. பாதுகாப்பது பொது மக்களின் கடமை. கடமையேற்போம். கலைவளம் காப்போம்.
குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தமிழ் இலக்கியக் கருத்துகள் தஞ்சை அருங்காட்சியகப் காப்பாளராகிய திரு இரத்தினசபாபதி அவர்களுடன் உரையாடிச் சேர்க்கப்பட்டவை.
ஆய்வரங்கு 2008

Page 119
புதிய பார்வையில் சாரார்
முனைவர் இரா. ச
தஞ்சாவூர், சிதம்பரம், திருவண்ணாமலை, விருத்தாசலம் கோயில்களில் கரண வரிசைகளைக் காணமுடிந்தாலும் அங்கெல்லாம் இல்லாத சிறப்புகள் பல கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கரணங்களுக்குண்டு.
தஞ்சாவூர் இராஜராஜிசுவரத்து விமான உட்சுவரில் சிவபெருமான் ஆட, மற்ற மூன்று கோயில்களிலும் கோபுர உட்சுவரில் மகளிரின் கரணம். குடந்தையிலோ அழகாய்ப் புனைந்து, அவிநயம் காட்டிக் கரணம் நிகழ்த்துபவர் ஆடவர். இவரைச் சிவபெருமான் என்றும், கண்ண பெருமான் என்றும் முருகன் என்றும்கூட அறிஞர்கள் சிலர் அடையாளம் காட்டுகின்றனர். அதன் உண்மையை அறியும் முன் சார்ங்கபாணி கரணங்களை அறிமுகப்படுத்திக் கொள்வோம்.
சார்ங்கபாணி கோயில் நுழைவுக் கோபுரம் கபோதபந்த அதிட்டான வகையைச் சேர்ந்தது. துணைத் தளங்களின் மேல் நிற்கும் தாங்குதளத்தின் பட்டிகைக்கு மேலாக அரைத்தூண்களுக்கு இடையில் அழகாய்ப் பதிக்கப்பட்டுள்ள கரணச் சிற்பங்கள் இக்கோயிலைச் சேர்ந்தவையல்ல. அழிந்து போன கோயிலொன்றின் கலை வரலாற்று எச்சங்களாய்க் கோபுரக் கட்டுமானப் பணியின் போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டவை. பதிக்கப்பட்டுள்ள முறையும், எண் வரிசைகள் மாறுபட்டிருக்கும் விதமும், சிற்ப அமைப்பும், அவற்றின் கீழிருக்கும் கிரந்த எழுத்தமைப்பின் காலமும், அவற்றுள் சிதறிய இரண்டு சிற்பங்கள் கும்பேசுவரர் கோயிலில் காணப்படும் அதிசயமும் இந்தக் கருத்துக்கு வலிவூட்டும் சான்றுகள்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

வ்கபாணி கரணங்கள்
லைக்கோவன்,
கோபுரக் கட்டுமானக் கலைமுறையில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் இக்கரணச் சிற்பங்கள் முதலாம் இராஜராஜருக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்திற்கு உரியவை என்பதை இவற்றின் சிற்ப அமைதியில் இருந்தும், இவற்றின் கீழுள்ள கிரந்தக் கல்வெட்டுகளின் எழுத்தமைப்பில் இருந்தும் தெளிவாய் உணரலாம். கோபுரத்தின் நான்கு திசைகளிலும் இக்கரணச் சிற்பங்கள் பதிக்கப்பெற்றுள்ளன.
கோபுரத்தின் வட,தென்பகுதிகள் மதில் சுவரால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்குப் பட்டிகைக்கு மேல் நாற்பத்து நான்கு சிற்பங்களும், மேற்குப் பட்டிகைக்கு மேல் முப்பத்தெட்டுச் சிற்பங்களும் உள்ளன.
தெற்கில் மதில் சுவருக்குக் கிழக்கே ஐந்து சிற்பங்களும், மேற்கில் பத்துச் சிற்பங்களும் இருக்க, வடக்கில் மதில் சுவருக்குக் கிழக்கே ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடமேற்குப் பகுதி சிற்பங்கள் இன்றி வெறுமையாக உள்ளது. இந்த நூற்றி ஆறு சிற்பங்களுள் ஐந்து சிற்பங்கள் தவிர பிற, கரணச் சிற்பங்களாகவே தோன்றுகின்றன.
சிவபெருமானின் ஊர்த்வதாண்டவம்,காளியின் தாண்டவம், சூத்ரதாரணம், தனிப்பூதம், ஒரு முதிய முனிவரும் இரண்டு இளைஞர்களுமாய் நிற்கும் தொகுதி என்னும் இந்த ஐந்து சிற்பங்களுள் இரண்டு கிழக்கிலும், இரண்டு மேற்கிலும், ஒன்று தென்கிழக்கிலும் உள்ளன. இவை தவிர்ந்த ஏனைய நூற்றியொரு சிற்பங்களுள் தொண்ணுாற்றாறு சிற்பங்களையே கரண வகையின என்று கபில வாத்ஸ்யாயனாவும், சிவராமமூர்த்தியும் தத்தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
103

Page 120
ஐந்து சிற்பங்களை ஏன் கரணவகையினவாய் இவர்கள் கொள்ளவில்லை என்பதற்கு இரண்டு அறிஞர்களுமே காரணங்கள் தரவில்லை.
இந்தச் சிற்பங்களுள் நான்கு தவிர ஏனைய நூற்றிரண்டும் தனித்தனிப் பலகைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இப்படித் தனித் தனியாகச் செதுக்கப்பட்டவை சார்ங்கபாணி கோபுரத்தில் பதிக்கப் பெற்றபோது தனித்துவம், சேர்த்தும் பொருத்தப்பட்டுள்ளன. நாற்பத்தைந்து சிற்பங்கள் தனித்தும், முப்பது சிற்பங்கள் இரண்டிரண்டாகவும், இருபத்தேழு சிற்பங்கள் மும்மூன்றாகவும் பதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்ந்த நான்கு சிற்பங்கள் செதுக்கப்பட்ட காலத்திலேயே இரண்டிரண்டாக, இரண்டு தனிக் கற்பலகைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த நூற்றி ஆறு சிற்பங்களுள் எட்டு மட்டும் சிதைந்துள்ளன. ஆனால் கரணத்தைக் குறிக்கும் கிரந்தக் கல்வெட்டு பல சிற்பங்களின் கீழ் அழிந்துள்ளது. இச்சிற்பங்களுள் ஒவ்வொன்றும் சராசரியாக 43-50 செ.மீ. அகலமும் 44 செ.மீ. உயரமும் உள்ளவை.
ஆடல் மேடையொன்றில் ஆடல் நிகழ்வது போலவே சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. ஆடுபவரின் பின்புறம் அரங்கத்தின் பின்திரையாய்ச் சிற்பம் வடிக்கப்பட்ட பலகை இருக்க, அதன் மேற்புறம்,
திரையின் மேல் வளைவுகளென அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூச்சரங்கள் தொங்கும் மடிப்புகள் போல இந்த வளைவுகள்
அழகுபடுத்தப்பட்டுள்ளன. ஆடலுக்குத் தேவையான இசையைத் தர பெரும்பாலான சிற்பங்களுடன் இரண்டு இசைவல்லாரும், சில சிற்பங்களுடன் ஓர் இசைக் கலைஞரும் காட்டப்பட்டுள்ளனர். பதினொரு சிற்பங்களுக்கே இசை கூட்ட யாருமே இல்லாத நிலை. இந்த இசைவாணர்கள் குள்ளச் சிறு பூதகணங்களாய்க் காட்டப்பட்டுள்ளனர். நான்கு இடங்களில் வேறுபட்ட வடிவங்களைப் பார்க்க முடிகிறது. நந்திகேசுவரரும் சிங்கமுகக் கணமொன்றும் வடமேற்கில் விளங்க. குரங்குமுகக் கணமொன்றும், சிங்கமுகக் கணமொன்றும் கிழக்கில் காணப்படுகின்றன.
104

இசைவாணர்கள் பொதுவாகப் பருத்த வயிறும், பிதுங்கிய விழிகளுமாய்ப் பனையோலைக் குண்டலங்களுடன் காட்டப்பட்டுள்ளனர். அரையாடை அனைவர்க்கும் உள்ளது. பெரும்பாலோர் நின்ற வண்ணமிருக்க, ஒரு சிலர் சாய்ந்தும், சரிந்தும், குனிந்தும், வளைந்தும் இசையெழுப்பக் காணலாம். மிகச் சிலர் இளைத்த வடிவினராய்ச் சிறு பிள்ளைகள் போல காட்சி தருகின்றனர். பதித்தலில் நேர்ந்த தவறால் சில வடிவங்கள் சிதைந்துள்ளன. சடை மண்டலம், சடைப்பாரம், சடைமசூடம் எனப் பல்வகைத் தலையலங்காரங்கள். ஒரு சில கணங்கள் ஆடுபவரைவிட அதிகமான அவிநயம் காட்டி நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகின்றன. குறைந்த அணிகளும் உதரபந்தமும் சில வடிவங்களுக்கு உள்ளன. வடகிழக்குப் பூதமொன்று சன்ன வீரத்தோடு புன்னகை புரிய, அதே திசையிலுள்ள மற்றொன்று முப்புரிநூலோடு மகிழ்ந்து நிற்கிறது.
மேற்கில் நுழைவாயிலுக்கு அருகில் தனிப் பூதகணமொன்று காட்டப்பட்டுள்ளது. கைகளில் செண்டு தாளம். யாருக்கு வாசிக்கிறது என்பது நமக்குப் புரிந்தாலும் தனிப் பலகையில், தனித்ததொரு சிற்பமாய் இடம்பெற இப்பூதகணம் செய்த பேறுதான் நமக்கு விளங்கவில்லை. ஆனால் அதன் அழகைப் பார்க்கும் போது, அதன் தனித்துவம் உள்ளங்கைக் கனியாய் உள்ளத்தில் பதிகிறது. எத்தனை அழகாய் உதடுகள்! எத்தனை இதமான சிரிப்பு கால்களின் வளைவுகளில், 'எனக்கும் ஆடத்தெரியும் என்ற அறிவிப்பு. பூதகணத்தைக் கூட இத்தனை அழகாய் ஒருவர் வடிக்க முடியுமா? கழுகுமலைக் கணங்களையும், கயிலாசநாதர் கணங்களையும் சிற்பச்செறிவில் போட்டிக்கு அழைக்கும் பொல்லாத கல்பகக் கணம் இது.
இந்த இசைவாணவர்களுள் பெரும்பாலோர் வகைவகையான முழவுகள், இடக்கை ஆகிய தோல்கருவிகளையும், பல்வகைத் தாளங்களையும் இயக்கி ஆடலுக்குத் தாளம் தர, ஒரு சிலர் வீணையும் சங்கும் கொண்டு இசையெழுப்பு
ஆய்வரங்கு 2008

Page 121
கின்றனர். வீணையேந்திய ஐவருள், நால்வர் வலப்புற இசைவாணர்களாவும், ஒருவர் மட்டும் இடப்புற இசைவாணராகவும் இருக்க, நந்திகேசுவரர் ஐமுகக் குடமுழவை நின்றபடி இயக்கி மகிழ்கிறார். மற்றோர் இடத்தில் புல்லாங்குழலின் நாதவெள்ளம் ஒரு சில இசைவாணர்கள் இந்நாளைய இசை இயக்குநர்கள் போலக் கருவிகள் இன்றிக்கைகளை வெறுமனே உயர்த்திப் போற்றி மெய்ப்பாட்டில் இசை இயக்கம் செய்து காட்டுகின்றனர்.
கரணம் காட்டும் ஆடவர் வடிவத்தின் உயரம் பெரும்பாலும் அனைத்துச் சிற்பங்களிலும் 39-41 (ରଥF.lf. அளவுக்குள் அமைந்துள்ளது. சடைமசூடத்துடன் காணப்படும் இந்தக் கரணரை மகுடப்பூரிமம், மகர குண்டலங்கள், வாகுவளையம், கண்டிகை, சரப்பளி, சுவர்ண வைகாக்ஷம் (? சன்னவீரம்), தோன்வளை, கைவளைகள், சிங்கமுக அரைக்கச்சு, குறங்குசெறி, தாள்செறி, நூபுரம், சிலம்பு, வீரக்கழல் எனப் பட்டியலாய் நீளும் அணிகளுள் பெரும்பான்மையான அழகு செய்கின்றன. சுவர்ண வைகாக்ஷ சரங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் இடத்தில் முதுகுப்புறத்தே அமையும் தூக்கம் என்னும் பதக்க வடிவம் சில சிற்பங்களில் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. சிற்பங்கள் உதரபந்தம் கொண்டிருக்க, ஒன்று மட்டும் முப்புரிநூலுடன் காட்சியளிக்கிறது. அசைவுகளுக்கேற்பச் சரிந்தும், பரந்தும் காணப்படும் மாலைகளுடன் சில காணப்படுகின்றன.
இரண்டு பிரிவுகளாய் மகுடத்தின் கீழ்ப் பிரிந்து தோள்களைத் தழுவிப் பக்கவாட்டில் கைப்புறத்தே சரிந்து தொங்கும் ஸ்கந்தமாலையின் அழகு சில சிற்பங்களில் கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்துள்ளது. இந்த மாலைச் சரிவுகளில் பல்வேறு பூக்களைத் தொகுத்தும், பொருத்தியும் சிற்பிகள் கூட்டியுள்ள பொலிவு சொல்லுந்தரமன்று. இக்கரணச் சிற்பங்களின் இடையாடை மிகுந்த கலைநயத்தோடு செதுக்கப்பட்டுள்ளது. இடைக் கட்டின் பக்கவாட்டு முடிச்சுகள் சோழர்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கலைமுறைக்கே உரிய நளினச் செறிவுடன் காட்டப்பட, இடைச் தொங்கல்கள் பூவிரியாய் இறங்கி ஆடவர் தம் அழகுக்கு அழகூட்டி அசையும் பாங்கில் ஆட்டவிரைவை எடுத்துரைக்கின்றன.
கரணத்தில் முக்கியமானவை மூன்று ஒன்று காலசைவு மற்றொன்று கையசைவு, மூன்றாவது உடல்நிலை, பரதரின் அட்டவணைப்படி காலசைவுகள் விண் சார்ந்தவை, மண் சார்ந்தவை எனப் பிரியும்.
சார்ங்கபாணி சிற்பங்களில் பார்வையாளர் தொகுதி மற்றும் தனிப் பூதகணம் தவிர்ந்த ஏனைய நூற்று நான்கில் அறுபத்தெட்டு மண் கால்கள் காட்ட, முப்பத்தாறு விண் கால்கள் காட்டுகின்றன. பெரும்பாலான சிற்பங்கள் முன்புறம் காட்டிக் கரணம் நிகழ்ந்த சில பக்கவாட்டைக் காட்டியும், சில பின்புறம் திருப்பியும் கரணம் காட்டுகின்றன.
இந்தக் கரணச் சிற்பங்கள் மிக அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. புன்னகை மாறாத இளம் உதடுகள், உருண்டை முகம், எடுப்பான நாசி, வில்லைப் போல் புருவங்கள், அழகாய்க் கண்கள், திரண்ட தோள்கள், பரந்த மார்பு, சரியான அளவில் இடையும் பின்புறமும், ஆடலில் உரமேறிய கால்கள் என அழகாய் அமையாத உடற்பகுதியே இல்லை என்னுமளவுக்குத் தேர்ந்த சிற்பிகளால் இவ்வடி வங்கள் தெரிந்து செய்யப்பட்டுள்ளன. சூசி, அக்ரதலசஞ்சாரம், அஞ்சிதம், உத்கட்டிதம், குஞ்சிதம் எனும் பாத அமைப்புகள் இச்சிற்பங்களில் காட்டப்பட்டிருப்பது போல் தஞ்சாவூரிலோ, சிதம்பரத்திலோ கூடக் காட்டப்படவில்லை யென்றால் அது மிகையாகது.
தமிழகத்தில் உள்ள ஐந்து கரணக் கோயில்களில் அழகு, அங்கசுத்தம், கரணக்கோலம் கொண்டு பார்த்தால் சார்ங்கபாணி சிற்பங்களுக்கே முதலிடம் தரவேண்டியிருக்கும்.
105

Page 122
இங்குள்ள சிவபெருமானின் ஊர்த்வதாண்டவச் சிற்பம் தன்னிகரில்லாத கலைப்புதையலாகும். இதை லலாட திலகமென்று அறிஞர் சிலரும் காளிகா ஊர்த்வ தாண்டவமென்று பத்மா சுப்பிரமணியமும் தத்தம் நூல்களில் தவறாகக் குறித்துள்ளனர். பதினெட்டுக் கைகளுடன் ஊர்த்வ தாண்டவமாடும் சிவபெருமானின் வலப்புறத்தே விஷ்ணுவும் நான்முகனும் வணங்கி வழிபடுகின்றனர்.
இந்தக் கரணச் சிற்பங்களுள் சிலவற்றின் பக்கத்தில் உள்ள அரைத்துரண்கள் சற்றே பெரிய அளவினவாய் அமைந்து, சிற்பிகள் தம் கைவண்ணம் காட்டிட இடம் தந்துள்ளன. சிவபெருமானின் பல்வேறு தோற்றங்களே பெரும்பாலான தூண்களில் இடம் பெற்றுள்ளன. பிச்சையேற்கும் பெம்மான், உமையை அணைத்தவர், உமாசிவர், ஆலமர் அண்ணல், நந்தி அறுக்கர், யானையை அழித்தவர், கிரதார்ச்சுனர் எனப் பல தோற்றங்கள். பிச்சையேற்றவர் கோலமும், வீராசன ஆலமர்க் கோலமும் கண்ணில் நிற்கும் கவிதைகள்.
சில தூண்கள் ஆடற் சிற்பங்களைக் கொண்டுள்ளன. ஒரு தூணில் யானையொன்றின் மீது சிங்கம் பாய்ந்து கடித்துக் குதறும் காட்டுக் காட்சி, இந்தச் சிங்கத்தின் தோற்றம் தஞ்சாவூர் இராஜராஜிசுவரத்து இராஜராஜன் திருவாயிலின் கிழக்கு முகச் சிற்பத் தொகுதியிலுள்ள சிங்கத்தின் தோற்றத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளையாரும் யானைத்திருமகளும் கூடத் தூண் சிற்பங்களாய் இடம்பெற்றுள்ளனர்.
அமைப்புமுறை, இலக்கணக் கோட்பாட்டை அதிகம் மீறாத ஆடல் அசைவுகள், மெய்ப்பாட்டு முத்தாய்ப்பாய் முகத்தோற்றங்கள் என்ற இம்மூன்று சிறப்புகளாலும் சார்ங்கபாணி கரணச் சிற்பங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கரண வரிசைச் சிற்பத் தொகுதிகளில் முதலிடத்தைப் பெறுகின்றன. இதைவிடப் பெரும் சிறப்பு இங்கு ஆடல் நிகழ்த்துபவராலும், அதைக் கண்டு நிற்பவராலும் இக்கோயில் வரிசைக்குக் கிடைத்துள்ளது.
106

சிவராமமூர்த்தி நடராஜரைப்பற்றிய தன்னுடைய மிகப்பெரும் நூலில் சாாங்கபாணி கரணங்களைக் கண்ணன் நிகழ்த்துவதாக எழுதித் தம் கூற்றுக்குச் சான்றாகக் கும்பகோணக் கரணச் சிற்பங்களில் காணப்படும் வனமாலை போன்ற மாலையையும், மார்பணி ஒன்றையும் காட்டுகிறார். இந்த மார்பணியை அவர் சுவர்ண வைகாக்ஷம் என்று குறிப்பிட்டு, இது இளவயதினர் அணியென்றும், பாலசுப்பிரமணியர், கிருஷ்ணர் படிமங்களில் அதிகம் காணப்படுவது, என்றும் கூறுகிறார்.
வைகாக்ஷம் என்பதற்கு மோனியர் வில்லியம்ஸ் தோளிலிருந்து தொங்கவிடப்படும் ஒரு மாலை என்று பொருள் தருகிறார்.
சிவராமமூர்த்தி சுட்டும் மார்பணியான சுவர்ண வைகாக்ஷம், சன்னவீரம் போன்ற அமைப்புடையது, இந்த மார்பணியை ஆடல் தோற்றத்திலுள்ள பெண் சிற்பங்கள் சிலவற்றிலும், உமையின் செப்புத் திருமேனிகள் சிலவற்றிலும் பூதவரிச் சிற்பங்களிலும் காணமுடிகிறது. தஞ்சாவூர் இராஜராஜிசுவரத்துக் கரணத் தொடரிலும் சிவபெருமான் ஓரிரு இடங்களில் இவ்வணியுடன் காணப்படுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. அதனால் இவ்வணி இடம்பெற்றிருப்பதாலேயே இதை அணிந்துள்ள ஆண்டிவடிவம் கிருஷ்ணராகவோ, முருகனாகவோ இருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை.
மேலும் பாலசுப்பிரமணியர் வடிவங்கள் தமிழ்நாட்டில் அரிதாகவே காணக் கிடைக்கின்றன என்பது, பார்வைக்குக் கிடைக்கும் பெரும்பாலான கிருஷ்ணர் வடிவங்களில் சுவர்ண வைகார்ஷம் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கன.
சார்ங்கபாணிகரணச் சிற்பங்களில் காணப்படும் மார்பணியைச் சன்னவீரமாகக் கொண்டால் அதை இக்கரணச் சிற்பங்கள் பெற்றுள்ளமை முற்றிலும் பொருத்தமே என்று கருதமுடியும். தாண்டவத்தில் இரண்டு பிரயோகங்களைக் குறிப்பதுண்டு. ஒன்று
ஆய்வரங்கு 2008

Page 123
உத்ததப் பிரயோகம். இது சிவபெருமானுக்குக் குரியது. மற்றொன்று சுகுமாரப் பிரயோகம். அது பார்வதிக்குரியது. சிவபெருமானுக்குரிய உத்ததப் பிரயோகம் வலிமை நிறைந்தது. சக்தி வாய்ந்த வீச்சுக்களோடு கூடியது. இதை நிகழ்த்திக் காட்டுபவர் சன்னவீரத்தை ஒர் அணியாகக் கொள்வது இயல்பானதே. தஞ்சாவூர்க் கரணத் தொடரில் கூட சிவபெருமான் ஒரிரு இடங்களில் இந்த அணியுடன் காணப்படுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள நூற்றியொரு கரணச் சிற்பங்களுள் இருபது வடிவங்களில் மட்டுமே சிவராமமூர்த்தி வனமாலை என்று குறிப்பிடும் மாலை காணப்படுகிறது. இது பார்க்க வனமாலை போலக் காணப்படுகிறதே தவிர வனமாலையல்ல. வனமாலை முழங்கால்கள் வரை தொங்குவது போல அமைக்கப்படும். இந்த மாலைகளோ சில இடுப்புவரையிலும், ஒன்றிரண்டு தொடைவரையிலும் காட்டப்பட்டுள்ளன. இருபதே சிற்பங்களில் காணப்படும் இம்மாலைகளைக் கொண்டு இந்த வடிவங்களைக் கண்ணன் என்று கொள்வது சரியன்று.
இக்கரணச் சிற்பங்கள் கண்ணனைச் சுட்டவில்லை என்பதற்கு மிகப் பெரும் சான்றுகளாய்ப் பூதகணங்களும், நந்திகேசுவரரும் நிற்கிறார்கள். கண்ணனின் ஆடலுக்கு நந்நி எப்படிக் குடமுழா வாசிப்பார்? மேலும் குடமுழா கைலாயத்துக்குரியது. எந்த வைணவ வடிவத்தோடும் அல்லது மரபுகளோடும் பேசப்படாது. எல்லாவற்றையும் விடக் கரணங்களைச் சிவபெருமான் வழங்கியதாகத்தான் நாட்டிய சாத்திரம் பேசுகிறது.
ஒருவேளை வைணவ ஆர்வலர் சிலர் இக்கரணங்களைக் கண்ணனுக்கு ஏற்றிக் காட்ட விரும்பி இவற்றைப்படைத்தனர் என்றுகொள்ளலாம் என்றாலோ, இரண்டு விஷயங்கள் தடுக்கின்றன. ஒன்று இச்சிற்பங்கள் தோன்றிய காலகட்டம், சைவப்
“சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

பெருவேந்தன் சிவபாதசேகரன் முதலாம் இராஜராஜர் தஞ்சாவூரில் கரணக் கோவையை அந்தச் சிவபெருமானே ஆடுவது போல் அமைத்த காலத்தை ஒட்டியெழுந்த சார்ங்கபாணி சிற்பங்கள் கரணங்களைக் கண்ணனுக்கு தாரைவார்த்துத் தந்திருக்க முடியாது. இரண்டாவது, இசை கூட்டும் பூதகணங்கள். கண்ணனுக்கு எப்படிப் பூதகணங்கள் இசை கூட்டும்? புராண வரலாறே இல்லையே!
பத்மாவும், கபிலாவும் இவ்வடிவங்களைச் சிவபெருமான் என்று கூறுகின்றனர். சான்றாக அவர்கள் காட்டுவது பூதகணங்களை. பூதகணங்களும், நந்தியும் சிவச் சார்புடையவை என்பதில் எள்ளத்தனையும் ஐயமில்லைதான். ஆனால் அதனாலேயே இங்கு ஆடுபவரைச் சிவபெருமான் என்று எப்படிச் சொல்ல முடியும்? நெற்றிக் கண்ணில்லை. ஆகமவிரோதமாய் இரண்டே கைகள். இவர் சிவபெருமான்தான் என்பதற்குத் தோற்ற அமைதியில் எந்தச் சான்றுமில்லை.
ஆகமங்கள், எந்த இறைவடிவமாக இருந்தாலும், தனியாக வடிக்கப்பெறும் போது அவை நான்கு கரங்களுடன்தான் அமையுமென்கின்றன. அதனால் தானே தஞ்சாவூரில் கரணங்களைச் சிவபெருமான் நிகழ்த்துவதாகக் காட்ட விரும்பிய நித்தவிநோதர், அங்கே ஒவ்வொரு வடிவத்திற்கும் நான்கு கைகளைத் தந்து சிவபெருமானுக்குரிய கருவி களையும் அந்தக் கைகளில் வைத்து நம்மைக் காப்பாற்றியுள்ளார்.
இந்தக் கரணச் சிற்பங்கள் சைவச் சார்புடையவையே. ஆனால் பத்மாவும், கபிலாவும் சொல்வது போல் இங்கு ஆடுபவர் சிவபெருமான் அல்லர். இச்சிற்பங்கள் தண்டுவைக் குறிக்கின்றன. நாட்டிய சாத்திரத்தில் சிவபெருமான் தண்டுவை அழைத்து பரதருக்கு அங்ககாரங்களைக் கற்றுத்தரச் சொன்னதாககவும், அதன்படி தண்டு தனக்குக் கற்றுத் தந்ததாகவும் பரதரே கூறுகிறார்.
107

Page 124
மேலும் சிவபெருமான் கண்டுபிடித்துத் தமக்குச் சொன்ன ரேசகங்கள், அங்ககாரங்கள், பிந்திகளைக் கற்று அவற்றைக் கொண்டு இசையுடன் கூடிய ஆடலைத் தண்டு உருவாக்கியதாகவும், அதனாலேயே அவ்வாடல் தாண்டவம் என்று பெயர் பெற்றதாகவும், தண்டு தமக்குக் கற்றுத்தந்த அந்தச் செவ்விய ஆடலைத் தாம் கற்றவிதமாகவே இங்குச் செய்வதாகவும் பரதர், நாட்டிய சாத்திரத்தில் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.
சார்ங்கபாணி சிற்ப வரிசையில், கிழக்கு முகத்தின் வடபுறத்தில் நுழைவாயிலில் இருந்து ஆறாவது சிற்பமாக மூன்று ஆடவர்கள் காட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் முதலாவமவர் முதியவர், தாடி, மீசையும், பட்டாடையுமாய்க் காட்சியளிக்கும் அவரையடுத்து இளைஞர்களாய் இருவர்.
முதியவரின் வலக்கை கரணங்களை இரசித்துப் போற்றும் மெய்ப்பாட்டில், இடக்கை இடுப்பில்; அவரை ஒட்டி நிற்கும் இளைஞர்களுள் ஒருவர் இடக்கையைக் கடிய வலம்பிதமாய்க் கொண்டு வலக்கையைப் பதாக முத்திரையில் காட்டி நிற்கின்றார். பதாகத்திற்குள்ள விநியோகங்களில், இது, அது என உரைத்து மகிழ்தலும் ஒன்றாகும். இந்த இளைஞர் தண்டுவின் ஆடல் அமைவுகளை இது, அது என இனம் கண்டு மகிழ்கிறார். மற்றோர் இளைஞர் இந்த அதிசயக் கரணங்களைக் கண்டு வியந்து போற்றி நிற்க, முதியவரோ பெரிதும் சிலாகித்துப் போற்றிப் பெருமகிழ்வில் மூழ்கியிருக்கிறார். இவர்களைப் கபிலா சொல்வது போல் கரண ஆசிரியர்களல்லர். சாட்சாத் பரதரும் அவருடைய பிள்ளைகளும்தாம்.
நாட்டிய சாத்திரம், பரதர் ஆடலைத் தம் நூறு பிள்ளைகளுக்கும் கற்றுத் தந்ததாகக் கூறுகிறது. பிறகு நான்முகன் அறிவுரைப்படி நாட்டிய நிகழ்ச்சி சிவபெருமான் முன்னிலையில் நிகழ்கிறது. நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் நான்முகனிடம் ஆடல், அங்ககாரங்களாலும்
108

கரணங்களாலும் அழகுபெறுவதாகக் கூறி அவற்றை நாட்டிய நிகழ்ச்சியின் பூர்வராங்கத்தில் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார். நான்முகன் அங்ககாரங் களின் பயன்பாடு பற்றிச் சிவபெருமானிடம் கேட்க, சிவபெருமான் தண்டுவை அழைத்துப் பரதரிடம் அங்ககாரம் பற்றிப் பேசுமாறு பணிக்கிறார். தண்டு அந்த ஆணையைத் தலைமேல் ஏற்றுக் கற்றுத் தருகிறார். இதைத்தான் சார்ங்கபாணி கரணச் சிற்பங்கள் படம்பிடித்துள்ளன.
தண்டுவின் கரண விளக்கங்களைப் பரதரும் அவருடைய பிள்ளைகளும் கண்டு மகிழ்ந்து கண்களில் நிறைப்பதைக் கிழக்கு முகத் தொகுதி காட்டுகிறது. தண்டுவின் ஆடலுக்கு இசைக்கூட்ட கயிலாயத்தில் பூதகணங்களையும், நந்தியையும் விட்டால் வேறு யார் வரமுடியும்?
நாட்டிய சாத்திர மரபை நன்கறிந்த சோழச் சிற்பிகள் சற்றும் அதினின்று பிறழாமல் பரதரையும் காட்டி, தண்டுவையே கரண இயக்கங்களில் படம் பிடித்து அற்புதமான இலக்கியமாய் இந்தச் சிற்ப வரிசைகளைச் செதுக்கி வைத்தனர். இந்தக் கரணச் சிற்பங்களில் காளியையும் சிவபெருமானையும் அவர்கள் இடம்பெற வைத்ததுகூட உத்தத, சுகுமாரத் தாண்டவ மரபுகளையும், சிவச்சார்பையும் சுட்டிக்காட்டத்தான்.
சார்ங்கபாணி கோயிற் சிற்ப வரிசையில்தான் பரதர் முதன் முதலாக இடம்பெறுகிறார். மாமல்லை தர்மராஜர் தளியின் நடுத்தளத்தில் வடமுகக் கோட்டங்களில் சிற்பத் தொகுதிகள் இரண்டு உள்ளன. இவை இரண்டிலும் சிவபெருமான் உள்ளார்.
ஒரு தொகுதியில், சிவபெருமானுடன் காட்டப் பெற்றிருக்கும் ஆண் வடிவம் தன் இடக்காலைத் தூக்கிப் பார்சுவஜாறு கரணம் காட்டுகிறது. இந்த வடிவத்தைத் தண்டு என்று அறிஞர்கள் அடையாளம் கண்டு எழுதியுள்ளனர். தம்மிடம் ஆடலைக் கற்ற தண்டு ஆட, அதைச் சிவபெருமான் சரிபார்ப்பதாக இத்தொகுதியை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
ஆய்வரங்கு 2008

Page 125
ஆனால் பத்மா, சிவபெருமானுடன் காணப்படும் வடிவத்தை பரதர் என்று கூறியுள்ளார். பரதரின் ஆடலைச் சிவபெருமானின் முன்னால் தாம் ஆடியதாக பரதர் குறிப்பிடவில்லை. பேச்சு நடப்பதே சிவபெருமானுக்கும், நான்முகனுக்கும் இடையில்தான். பிறகு சிவபெருமானுக்கும் தண்டுவுக்கும் இடையில் உரை நிகழ்கிறது. நாட்டிய சாத்திர நிகழ்வுகள் கொண்டு பார்க்கும்போது இச்சிற்பத் தொகுதியில் இருக்கும் ஆடல் வடிவத்தைத் தண்டு எனக் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
தர்மராஜர் தளியிலுள்ள மற்றோர் சிற்பத் தொகுதியில் சிவபெருமானுடன் இருக்கும் ஆடவரைச் சிவராமமூர்த்தி தம்முடைய நூலொன்றில் அருச்சுனராகவும், மற்றோர் நூலில் ஓரிடத்தில் பரதராகவும், வேறோர் இடத்தில் சண்டீசராகவும் அடையாளம் காட்டுகிறார். பத்மா இந்த வடிவத்தைத் தண்டு என்கிறார். கூரா. சீனிவாசன் இந்த வடிவம் சண்டீஸ்சராக இருக்கலாம் என்று கூறுகிறார். அதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது. இதனால் தர்மராஜர் தளியில் எந்த இடத்திலும் பரதரின் வடிவமில்லை என்பது தெளிவாகிறது.
தமிழகத்துச் சிற்பக்கலை வரலாற்றில் சிவபெருமான் தண்டுவின் ஆடலைப் பார்க்கும் தர்மராஜர் தளித் தொகுதியில் தான் நாட்டிய சாத்திரக் கல்வி மரபு அப்படியே பின்பற்றப்பட்டு முதன் முதலாக இடம்பெறுகிறது. நாட்டியக் கல்வி மரபின் இந்த இரண்டாம்நிலையைத் தர்மராஜர் தளி தர, தொடர்ச்சி விடுபட்டுவிடக் கூடாதென்று அதன் முதல்நிலையைத் தஞ்சாவூரில் இராஜ ராஜீசுவரத்தில் உருவாக்கினார் முதலாம் இராஜராஜர். அவருக்குப் பின் வந்த கலையார்வம் கொண்ட சோழ மன்னர் ஒருவர் நாட்டிய சாத்திர மரபின் அடுத்த நிலையைச் சார்ங்கபாணித் தொடரில் பின்பற்றினார்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

சிவபெருமான் தஞ்சாவூரில் ஆடிக்காட்டியதைக் கற்றுத் தண்டு மாமல்லையில் அதைச் சிவபெருமானுக்கு ஆடிக் காட்டிச் சரிபார்த்துக் கொண்டு, சார்ங்கபாணியில் பரதருக்குக் கற்றுத்தருகிறார். பரதர் அதைத் தம் பிள்ளைகளுக்கும், நான்முகன் அனுப்பிய பெண்களுக்கும் சொல்லித் தந்ததைக் கருத்தில் கொண்டே, பின்னால் வந்த அனைத்துக் கரண வரிசைகளிலும் பெண்களை இடம்பெற வைத்தனர் மரபறிந்த சிற்பாசிரியர்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, விருத்தாசலம், திருவதிகை, கும்பகோணம் நாகேசுவரர், திருச்சிராப்பள்ளி மதுரகாளியம்மன் என்று அனைத்துக் கோயில்களிலும் பெண்களே கரணக் காரிகைகளாய்க் காட்சி தருகின்றனர்.
நாட்டிய சாத்திர மரபுகளை அடியொட்டிய நிலையிலும், தண்டுவின் கரணக் கோலங்களைக் கொண்டிருக்கும் ஒரே சிற்ப வரிசை என்ற முறையிலும் தமிழகத்துச் சிற்பக்கலை வரலாற்றில் தனிச்சிறப்புப் பெற்றுவிடும் சார்ங்கபாணி கோயிற் கரணச் சிற்பங்கள் மற்றோர் மகுடத்தையும் சூடிக் கொள்கின்றன. ஆம் நாட்டிய வேதத்தை நமக்குத் தந்த பரதரை தமிழகத்துப் பழங்கோயில்களில் இங்கு மட்டுமே காணமுடிகிறது. அதுவும் அவரெழுதிய நாட்டிய சாத்திர மரபுப்படியே! அவர் படைத்த கரணங்களைக் கண்டபடியே!
பரதரின் பெயரைச் சாளுவன் குப்பத்தில் கல்வெட்டாய்ப் பொறித்து நாட்டிய சாத்திரத்தின் கால நிர்ணத்துக்குக் கைகொடுத்தார் இராஜசிம்மப் பல்லவர். அந்த பரதரையே சிற்பமாய் வடித்துச் சிறப்பைப் பெற்றதோ பெயர் தெரியாப்புகழ்ச் சோழர் ஒருவர். தண்டுவும், பரதரும் இடம்பெற்றதாலேயே இந்தக் கரணத் தொகுதிகள் அழியாப் புகழ்பெற்றுவிட்டன. சொல் இலக்கியத்துக்குக் கல் இலக்கியம் படைத்துவிட்ட சோழ நாட்டுச் சிற்பிகளின் செம்மாந்த திறனை என்னென்பது எப்படி வியப்பது
109

Page 126
Bយប្រ
நித்தியவதி
மெய்க்கீர்த்திகள்
சோழர் காலத்திய முக்கியமான நிகழ்ச்சிகளை சோழமன்னரின் மெய்க்கீர்த்தி களிலிருந்து அறிந்து கொள்கிறோம். ராஜ ராஜ சோழன்தான் இம் மெய்க்கீர்த்தி எழுதும் வழக்கத்தைக் கொண்டு வந்தவன் எனலாம். வீர ராஜேந்திரன் காலத்தில் பூரீ விஜயப் பேரரசுக்குச் சோழர் படை ஒன்று சென்றது என்பதை இதை அவனுடைய மெய்க்கீர்த்தி அல்லாமல் வேறு எந்தக் குறிப்பிலிருந்தும் அறிவதற்கில்லை. ராஜசேகரன், பரகேசரி என்ற பட்டங்களைச் சோழமன்னர்கள் ஒருவர்பின் ஒருவராகப் புனைந்து கொண்டார்கள். அவர்களின் மெய்க்கீர்த்திகளில் இப்பட்டப்பெயர்கள் வருகின்றன. சோழமன்னர்களின் மெய்க்கீர்த்திகள் துதிப்பாடல்களாக, மன்னர்களின் உலகியல் சாதனைகளைக் கூறுகின்ற புகழுரையாக அமைந்திருப்பினும் அச் செய்திகள் உண்மைத் தன்மையினின்றும் விலகி விடவில்லை. விஜயால சோழரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு உரிய திகதி வரையறையைப் பிழையில்லாமல் தெரிந்து கொள்ள இம் மெய்க்கீர்த்திகள் பெரிதும் உதவுகின்றன. இம் மெய்க்கீர்த்திகளில் உண்மைக்குப் புறம்பான முறையிற் செய்திகள் இடம் பெற்றாலும் அவற்றை அகற்றி விட்டு ஆராய்கின்ற போது சோழமன்னரின் ஆட்சிக்காலச் சிறப்பைக் கூறும் மெய்க்கீர்த்திகளும் உள்ளன.
சோழ அரசனும் இளவரசனும்
முதற்கோலச் சோழர்கள் எப்போ முதலில் ஆட்சியமைத்தார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாது. பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் சேர,சோழ, பாண்டியர் மூவரும் முற் காலத்தில் தமிழகத்தை ஆண்டனர் என்ற
110

O fluóò
நித்தியானந்தன்
செய்தி கூறப்படுகின்றது. 'வண்புகழ் மூவர் தண் பொழில் வரைபு என்னும் இக் கூற்று சோழர்களின் ஆட்சியுரிமை எத்துணை பழமை வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகின்றது.
சோழர்களது அரசுரிமை தந்தை மகற்களிக்க வழிவழித் தொடர்ந்து வந்துள்ளது. மக்கட் பேறில்லாமல் இறந்த மன்னரும், அரசாட்சி செய்வதற்குரிய புதல்வர்கள் இல்லாதவர்களும் தமது ஆட்சியுரிமையை உடன் பிறந்தவர்களுக்கு அளித்த செய்தியும் உண்டு. சோழமன்னர்கள் தம் மூத்த புதல்வர்க்கே அரசுரிமையை வழங்கியுள்ளனர். தமது ஆட்சிக்காலத்திலேயே அவர்களுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியல் முறைகளிற் சிறந்த பயிற்சியும் வழங்கினர். இதனை முதற்பராந்தக சோழன்- ராஜாதித்தனுக்கும், சுந்தரச் சோழன் - ஆதித்த கரிகாலனுக்கும், முதல் ராஜராஜசோழன்இராஜேந்திர சோழனுக்கும் இளவரசுப்பட்டம் கட்டி அரசியல் நிகழ்ச்சிகளில் அன்னாரை ஈடுபடுத்திப் பல்துறை வல்லுனராக்கிய செய்திகள் மூலம் அறியலாம்.
சோழமன்னர்கள் எக்கருமத்தையுத் ஆற்றும் வல்லமையும் அதிகாரமும் பெற்றிருந்தும் அமைச்சர் முதலானவரோடு எக்கருமத்தையும் ஆராய்ந்தபின்புதான் நிறைவேற்றுவது வழக்கம். அமைச்சர்களைவிட உடன்கூட்டத் ததிகாரிகள் என்ற ஒரு குழுவினரும் அரசாட்சியில் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அரசனோடு எவ்விடத்தும் செல்லும் உரிமை பெற்றிருந்ததோடு தகுந்த வேளையில் ஆலோசனைகள் வழங்கி மன்னர் தம் ஆட்சியின் மேன்மைக்கு ஊன்றுகோலாய் இருந்தனர் என்றும் கருத இடமுண்டு . சோழரின் அரசியல் சிறக்க உறுதுணையாக இருந்த மற்றொரு
ஆய்வரங்கு 2008

Page 127
பிரிவினர் அந்தணர்களாவர். அந்தணர்கள் தம் அறவுணர்ச்சிக் கேற்ப தர்ம சாஸ்திரங்களை எடுத்தோதி நீதி நிர்வாகம்,பரிபாலனம் ஆகியவற்றை ஏற்றிருந்தார்கள். தர்ம சாஸ்திரங்களைச் சார்ந்து வாழ்ந்த அவ் அறவோர்கள் அவற்றையே சோழ நாட்டின் சட்டம் என எடுத்தோதினார்கள். சோழ மன்னர்கள் பேரரசர்களாக விளங்கியபோதும் அவர்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கவில்லை. மன்னர்கள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையிற் காலங்காலமாக இருந்து வந்த தர்ம சாஸ்திரங்களை நிறைவேற்றுகின்ற நிர்வாக ஆணைகளை மட்டும் செய்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதையும் நினைவு கூர்தல் வேண்டும். சோழ மன்னர்கள், சமூக நீதியைக் காவலன் காவான் எனின், ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்’ என்ற அச்சத்தோடு தங்களுடைய அரசியலை நடத்தினார்கள்.
முடிசூட்டல்
நாட்டை ஆளுகின்ற மன்னனுக்கு கடவுளின் பெயரால் எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ள வைக்கின்ற முறையில்தான் முடிசூட்டு விழா நடைபெற்றது.
சோழ மன்னர்கள் முடிசூடும் போது ராஜசேகர், பரகேசரி சக்கரவர்த்திகள், உடையார் திரிபுவனச் சக்கரவர்த்திகள் , கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டு அரசாண்டனர் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது.
முடிசூட்டும்போது அபிஷேகம் செய்கின்ற முறை பின்பற்றப்பட்டது. மேலும் அந்நிகழ்ச்சியின்போது இயற்பெயருக்குப் பதிலாக விருதுப் பெயராகவும் மன்னர் குல மாண்புப் பெயராகவும் அம்ைந்த புதிய பெயர்களை மன்னர்கள் வரித்துக் கொண்டார்கள். அங்ங்னமாக அருள் மொழித்தேவன் - முதலாம் ராஜராஜன் என்றும் அவன் மகன் மதுராந்தகன் - ராஜேந்திரன் என்றும்; ராஜேந்திரன்குலோத்துங்கன் என்றும்; எதிரிலிப் பெருமாள்
“சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

என்பவன்-இரண்டாம் ராஜாதிராஜன் என்றும்; பெயர் சூடிக் கொண்டார்கள். முடிசூட்டல் மூலமாக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டதால் சோழமன்னர்கள் தாங்கள் கொண்ட விரதங்களின்படி மக்கள் நலம் பாராட்டுகின்ற அறநோக்கு அரசியலை நடத்தினர்.
யுவராஜனுக்கும் முறைப்படி முடிசூட்டுதல் சோழரின் வழமையாகும். அரசின் இராணுவ வலிமையை நன்கு அறிந்து கொண்டு படைகளை நடத்திப் போர்புரிகின்ற வீரத்தை சாஸ்திர பூர்வமான பயிற்சியின் மூலம் யுவராஜன் பெற்றிருந்தான். அமைச்சர்களோடு அமர்ந்து அவையில் அமைச்சருக்குரிய முறையில் தம்முடைய அரசியல் புலமையை வெளிக் காட்டுகின்ற வாய்ப்பினையும் அந்த யுவராஜன் பெற்றிருந்தான்.
சோழராட்சியமும் அதன் உட்பிரிவுகளும்
தொன்று தொட்டு சோழமன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு அவர்களால் ஆளப்பட்டு வந்த தமிழகப்பகுதி சோழமண்டலம் என்று வழங்கப்பட்டது. அது தமிழகத்தின் கிழக்குப் பகுதியாக அமைந்துள்ளதால் குணபுலம் எனவும் கூறப்பட்டது. அது தற்காலத்து தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காட்டின் சில பகுதிகள், புதுக்கோட்டை நாட்டின் சில பகுதிகள் என்பவற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெரு நிலப்பரப்பாகும். சோழர்கள் தம் படை வலிமையினாற் பிறநாடுகளை வென்று பேரரசு ஒன்றை நிறுவிய போது அவர்களது ஆளுகையின் கீழ் அமைந்த நாடுகள் அனைத்தும் சோழராச்சியம் என்ற பெயரைப் பெற்றன. அஃது முதலாம் இராஜராஜசோழனின் 17ஆம் ஆட்சியாண்டில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. அவை சோழமண்டலம், ராஜராஜ பாண்டிய மண்டலம், சயங் கொண்ட சோழ மண்டலம், மும்முடிச் சோழ மண்டலம், முடி கொண்ட சோழமண்டலம், நிகரிலிச் சோழ மண்டலம் அதிராஜராஜ சோழ மண்டலம், மலை மண்டலம் வேங்கை மண்டலம் என்பனவாகும்.
111

Page 128
ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடு என்பது ஆறுகளுக் கிடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். எடுத்துக் காட்டாக உய்யக்கொண்டார் வளநாடு அரிசிலாற்றிற்கும் காவிரியாற்றிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகும். அதை “அரிசியலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரை மூர் நாடப் பள்ளிச் சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம்” என்னும் தஞ்சைக் கோயில் கல்வெட்டு உணர்த்தி நிற்கிறது. ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகக் பிரிக்கப்பட்டிருந்தன. நாடுகளிற் சில கூற்றங்கள் எனவும் வழங்கி வந்தன. அவை தமது நாட்டிலுள்ள பேரூர் ஒன்றைத் தலைநகரமாகக் கொண்டிருந்த காரணத்தால் அப்பேரூர்களின் பெயரையே தம் பெயராகக் கொண்டு நிலவி வந்தன. இவ்வுண்மை நல்லூர் நாடு, திருநறையூர் நாடு, இன்னம்பர்நாடு, அம்பர் நாடு, உறையூர் கூற்றம், தஞ்சாவூர் கூற்றம், திருவாரூர்க் கூற்றம், பட்டினக் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம் என்ற நாடுகளின் பெயர்களும் கூற்றங்களின் பெயர்களும் நன்குணர்த்தும்.
அரச அதிகாரிகளும் கடமைகளும் அரசியலை நடத்துவதற்கு அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோழ மன்னர்களால் அறிவு, ஒழுக்கம் , ஆற்றல், குடிப்பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தெரிந் தெடுக்கப்பட்டவர்கள். அரசியல் அதிகாரிகளில் பெருந்தரம், சிறுதரம் என்ற இருவகையினர் இருந்தனர். சில கல்வெட்டுக்களில் அவ்விரு வகையினரும் பெருந்தனம், சிறுதனம் என்றும் கூறப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் பல அதிகாரிகள் கடமையாற்றினர் என்பது கல்வெட்டுக்களாற் புலனாகிறது. தலைநகரில் அரசனோடு இருந்து நாட்டை ஆட்சி புரிவதில் துணை புரிந்தவர்கள் அமைச்சர்களாவர்.' அவ்வமைச்சர்களிற் தலைவனாயிருந்தவன் முதல் மந்திரி என வழங்கப் பெற்றான். விக்கிரம சோழனுலா, கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களினால் அமைச்சர் குழுவும் முதல் மந்திரியும் இருந்தமை தெளிவாகத் தெரிகிறது.
112

மன்னர் அவையில் அமைச்சர் குழுவோடு நான்கு படைத்தளபதிகளும் அமைச்சர்களுக்குத் தலைவர்களாகவுள்ள மாசாமந்தரும் இருந்தனர். இவர்களை விட அரண்மனையில் இருந்த ஏனைய அதிகாரிகள் திருமந்திர ஓலை (அரசனின் உத்தரவுகளை நேரில் கேட்டு ஒலையில் எழுதும் அதிகாரி) திருமந்திர ஒலை நாயகம் ( ஒலையில் எழுதியுள்ள அரசனின் உத்தரவுகளை மேற்பார்த்து கையொப்பமிடும் அதிகாரி. அத்துடன் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கருமங்கள் செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சி குறிப்பினை நினைவூட்டி நிறைவேற்றுபவனும் அவனே). விடையில் அதிகாரி (அரசனது திருமடல்களை பணிமக்கள் மூலம் உரியவர்களுக்குச் சேர்ப்பித்து அதற்குரிய பதிலையும் பெற்றுக் கொள்பவன்) கருமம் ஆராயும் அதிகாரி (அரசாங்கத்தில் அமைந்த பல துறைகளிலும் நிகழும் நிகழ்ச்சிகளை அரசனது ஆணைப்படி ஆராயும் அதிகாரி) நாடுகாவல் அதிகாரி (தன் நாட்டிலுள்ள ஊர்களிற் களவு,கலகம் முதலியவை நிகழாமற் காத்து உள்நாட்டில் அமைதி காக்கும் ஒரு தலைவன்) இவ்வதிகாரியின் செயலுக்காகப் பொதுமக்களிடமிருந்து நாடுகாவல் என்ற வரி ஒன்று நெல்லாக வாங்கப்பட்டு வந்தது.
புரவரித்திணைக்களம்
சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானங்களின் பெரும் பகுதி நிலவரியால் வந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம். எனவே விளை நிலங்களை அளந்து அவற்றின் தரத்திற்கேற்ப அவற்றில் வரிவிதித்துவருடந்தோறும் குடிமக்களிடம் இருந்து வரியை அறவிடுவது அரசாங்கத்தின் தலையாய கடமையாக நிறை வேற்ற அதிகாரிகள் பலரைக் கொண்ட புரவரித் திணைக்களம் (நிலவரிக்கழகம்) அமைக்கப் பட்டிருந்தது. புரவரித்திணைக் களகத்திலிருந்து U6) அலுவல்களைப் பார்த்து வந்தோர் புரவளித் திணைக்கள நாயகம் (திணைக்களத் தலைவர்) புரவளித் திணைக்களக் கங்காணி (ஊர்கள் தோறும் சென்று நிலவரிக் கணக்குகள் ஒழுங்காக எழுதப்பட்டு கிராமசபைகளில் வைக்கப்பட்டுள்ளதா? என மேற்பார்வை செய்யும் அதிகாரி) வரிப்
ஆய்வரங்கு 2008

Page 129
பொத்தகம் (அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஊரினின்றும் வருவதற்குரிய காணிக் கடனாகிய அரசிறை எவ்வளவென்று உணர்த்தும் புத்தகம் ஆகும். அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் சீவிதமாகவும், இறையிலியாகவும் அரசன் நிலங்களை வழங்க நேர்ந்தால் அவற்றைப்பற்றிய விளக்கமும் நிலவுரிமை பற்றி காலந்தோறும் ஏற்படும் மாறுதல்களும் இவ்வரிப் புத்தகத்திலே தவறாமற் குறிக்கப்படும். இவ்வரிப் புத்தகம் வைத்திருப்பவரும் வரிப்புத்தகம் என்றே அழைக்கப்படுவர்) இவர்களுக்குத் தலைவன் வரிப் புத்தக நாயகன் என்று கூறப்பட்டான். ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு ஊரிலும் நிலவுரிமையாளர் களாகவுள்ள காணியாளர்களிடம் வாங்க வேண்டிய நிலவரியும் பிறவரியும் இவ்வளவு என்பதும் அவற்றுள் அரசாங்கத்திற்குச் செலுத்துவது போக எஞ்சிய தொகை இவ்வளவு என்றும் எழுதப்பட்டுள்ள புத்தகம் வரிப்பொத்தகக் கணக்கு எனப்படும். வரியிலிடு அதிகாரி (நிலவுரிமை பற்றி அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களைச் சில தலைவர் முன்னிலையில் குறிப்பவன் ஆவான்) இவர்களை விட கீழ் நிலை உத்தியோகத்தர்களாக முகவெட்டி (ஊர்களின் பெயர்கள் முதலான எல்லாவற்றிற்கும் அட்டவணை தயாரித்து அவற்றை வரிப்புத்தகம் முதலியவற்றில் எளிதில் கண்டு பிடிப்பதற்கு துணைபுரிபவன்) அவனுக்கு உதவியாக இருப்பவன் கீழ் முகவெட்டி. பட்டோலை என்பான் நாள் தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதி வைப்பவன்.இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக இருந்த புரவளித் திணைக்களம் ஒவ்வொன்றிலும் இருந்தனர். இவர்களைத் தவிர நாடுகளை கூறுபட அளப்பவரும், விளை நிலங்களைத் தரங்கண்டு வரிவிதிக்கும் அதிகாரிகளும் இருந்தனர். இவர்கள் நாடு கூறு செய்வோர், வகை செய்வோர் என அழைக்கப்பட்டனர். புரவளித்திணைக்கள அதிகாரிகளும் மன்னனைப் போல் நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்தனர்.
அரசன் தன் ஆளுகைக்குட்பட்ட நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்கள் குறைகேட்டு அவற்றைத் தீர்ப்பதற்காக 9 -L60Tlp. நடவடிக்கை மேற்கொண்டான். அரசனிடம் தம் விண்ணப்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

பங்களை விண்ணப்பிக்க விரும்பிய குடிமகன் முதலில் அதனை உடன் கூட்டத்ததிகாரிகளில் ஒருவரிடமோ அல்லது வேறு அதிகாரியிடத்தோ தெரிவிக்க வேண்டும். அவ்வதிகாரி அவற்றை அப்படியே மன்னனுக்கு விண்ணப்பிப்பான். அரசன் உடனே அக்குடிமகனை நேரே வரவழைத்துக் குறைபோக்க ஒரு அதிகாரியை நியமிப்பான். சிக்கலான விடயமாக இருந்தால் உடன் கூட்டத்தார், அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோதித்தல் அக்கால வேந்தர்கள் கையாண்ட முறையாகும். இதனால் குடிமக்களின் குறைகள் எல்லாம் காலதாமதமின்றியும் பொருட் செலவின்றியும் நிவர்த்திபெற்று வந்தமை. குறிப்பிடத்தக்கது.
சோழ மன்னர்களின் சுற்றுலாக்களினால் அரசாட்சி வலுப் பெற்றது. திருவிழாக்கள் முதலான நாட்கள் ஆண்டு தோறும் வருகின்ற சந்தர்ப்பங்களில் திருவாரூர், சிதம்பரம் , திருவொற்றியூர் போன்ற ஊர்களுக்கு வருகின்ற சோழ மன்னர்களின் மேற்பார்வைக்குக் கொண்டுவரப்பட்ட அரசியற் காரியங்கள் அந்த நேரங்களில் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்ற வழக்காறு ஆட்சியமைப்பின் ஓர் அங்கமாகக் காணப்பட்டது. சோழமன்னர்கள் தங்கள் ஆதிக்கத்திலுள்ள இடங்களையும் நாட்டு மக்களையும் நேரில் தெரிந்து வைத்திருந்தார்கள்.
அரசியல் அதிகாரிகளும் பட்டங்களும்
சோழமன்னர்கள் தம் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்களை வழங்கிக் கெளரவித்துள்ளார்கள் என்பதைக் கல்வெட்டுக்கள் பல உணர்த்தி நிற்கின்றன. மாராயன், பேரரையன், அரையன், மூவேந்த வேளாளன், தொண்டமான், பல்லவராயன், காலிங்கராயன், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், வாணகோவராயன், மாவலிவானராயன், கேரளராசன், விழுப்பரையன், மழவராயன், நாடாள்வான், பிரமாதிராசன், பிரமாராயன், சோழர்கோன் முதலியனவாகும். இப்பட்டங்களைப் பெரும்பாலும் தம் இயர்பெயர் அல்லது சிறப்புப் பெயர்களோடு இணைத்தே சோழமன்னர்கள் தம் அரசியல் அதிகாரிகளுக்கு
113

Page 130
அளித்து வந்தனர். இவ்வுண்மையை ராஜராஜ மாராயன். விக்கிரமசோழமாராயன் ராஜேந்திர சோழமூவேந்த மாராயன், குலோத்துங்க சோழ கேரள ராஜன், ராஜராஜ காடவராயன், வீரராஜேந்திர பிரமாதிராஜன் என்று வழங்கப் பெற்றுள்ள பட்டங்களால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. பிரமராயன், பிரமாதிராசன் என்ற பட்டங்கள் பிராமண குல அதிகாரிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பட்டங்கள் அனைத்தும் ஒன்றுக் கொன்று உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ கருதப்படாமல் சமமாகவே மதிக்கப் பெற்றன.
கிராம ஆட்சி
சோழமன்னர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கும் மக்கள் பல நலன்களும் பெற்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்ததற்கும் ஊர்கள் தோறும் நிலைபெற்றிருந்தவை ஊராட்சி மன்றங்களாகும். இம்மன்றங்கள் பொறுப் புணர்ச்சியுடன் அறநெறி பிறளாமல் நடுநிலை நின்று தமது கடமைகளைச் செவ்வனே நடத்தி வந்ததால் பொதுமக்கள் பெருமதிப்பும், நம்பிக்கையும் வைத்து அவற்றின் முடிவுகளை ஏற்று நடந்து வந்தனர். சோழ மன்னர்களின் கீழ் இருந்த ஊராட்சி மன்றங்களில் நான்கு சபைகள் இருந்தன. அவை, பிராமணர்கள் பிரமதேய உரிமையுடன் வசித்து வந்த சதுர்வேதி மங்கலங்களில் இருந்த சபை, திருக்கோயிலுக்குரிய தேவதானங்களில் இருந்த சபை, பிராமணரல்லாத பிற வகுப்பினர் வசித்த ஊர்களில் இருந்த சபை, வணிகர்கள் வசித்த நகரங்களில் இருந்த சபை, ஆகிய நான்குமாகும். இச்சபைகள் தமிழகத்திற் புராதன காலத்திலேயே நிறுவப்பட்டிருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. கடைச்சங்கப் பாடல்களில் உறையூரின் கண் சோழர்களின் அறங் கூறவையம் ஒன்று இருந்ததென்பதும் அது அறங்கெடாமல் எல்லோர்க்கும் நீதி வழங்கி வந்த தென்பதைப்பும் அறியக் கூடியதாக உள்ளது. பின்னர் பல்லவ அரசர் காலத்திலும் , சோழ மண்டலத்திலும் இச் சபைகள் இருந்துள்ளன என்பதற்குக் கல்வெட்டா தாரங்களும் நூலாதாரங்களும் உண்டு. பல்லவர் காலத்தில் அவை நீதி வழங்குவதோடமையாது ஏரி,
114

குளம், தோட்டம் ஆகியவற்றைப் பாதுகாத்தல், பெருவழி அமைத்தல், அறநிலையங்களை ஏற்று நடத்துதல், அவற்றைக் கண்காணித்தல், அரசிறை வசூலித்தல் ஆகியவற்றையும் தம் கடமைகளாகக் கொண்டிருந்தன. இவ்வாறு ஊராட்சி நடத்தி வந்த கிராம சபைகளும், நகரசபைகளும் சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்திலே தான் மிகச் சிறந்த நிலையில் அமைந்து செயற்பட்டன என்பது உண்மை, சோழர் ஆட்சி நிலை குலைந்து தமிழகம் அன்னியர் ஆட்சிக்குட்பட்ட வேளையிலும் இவ்வூராட்சி மன்றங்கள் பொதுமக்கள் வாழ்வுநிலை குலையாமல் இருப்பதற்கு அரும்பணியாற்றியதை வரலாற்றாசிரியரின் குறிப்புகள் புலப்படுத்து கின்றன.
ஊரிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினராக இருந்தனர். கிராம சபையால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கழகங்கள் கிராமியக் காரியங்கள் முழுவதையும் நடத்தி வந்தன. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற கிராமசபைகளைப் பற்றிய செய்திகளைப் பல கல்வெட்டுக்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இத்தகைய கல்வெட்டுக்களில் முதற் பராந்தகசோழன் ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள உத்தரமேரூரில் வரையப் பெற்றுள்ள இரு கல்வெட்டுக்கள், கிராமசபையாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்றுக் கழக உறுப்பினரின் தகுதி, அன்னார் தேர்ந்தெடுக்கும் முறை, நிறைவேற்றுக் கழகங்களின் அமைப்பு முறை முதலான பல விளக்கங்களைத் தந்து நிற்கிறது.
உத்தரமேரூரிற் காணப்பட்ட இவ்விரண்டு கல் வெட்டுக்களும் முதலாம் பராந்தகனது 12 ஆம் ஆட்சியாண்டிலும் 14ஆம் ஆட்சியாண்டிலும் வரையப் பெற்றவை. அவற்றுள் முதற் கல்வெட்டு அவ்வூர்ச் சபையார் சம்வத்சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பஞ்சவாரவாரியம்,பொன்வாரியம் ஆகிய நிறைவேற்றுக் கழகங்களை நிறுவுவதற்குரிய விதிகளையும், முறைகளையும் கூறுகின்றது. இஃது பராந்தக சோழனுடைய ஆணைப்படி அக்கூட்டத்திற்கு வந்திருந்த தத்தனூர் மூவேந்த
ஆய்வரங்கு 2008

Page 131
வேளான் என்ற அரசியல் அதிகாரியின் முன்னிலையில் உத்தரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தாமே அமைத்துக் கொண்ட விதிகளாகும். இரண்டு ஆண்டுகளின் பின் ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக இவ்விதிகள் திருத்தியும், விளக்கியும் எழுதப்பட வேண்டிய தாயிற்று. பராந்தகனது 14 ஆம் ஆட்சியாண்டாகிய கி.பி. 921 இல் அவ் வேந்தன் ஆணைப்படி இங்கு வந்திருந்த சோமாசிப் பெருமான் முன்னிலையில் உத்தர மேரூர்ச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் நிறைவேற்றுக் கழகங்களாகிய வாரியங்களை அமைத்தற்குரிய விதிகளையும், முறைகளையும் விளக்கமாக வரையறை செய்து கொண்டனர்.
கழக உறுப்பினர்க்குரிய தகமைகள்
கழக உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் சொந்த மனையில் குடியிருப்பவர் களாகவும் காணிக்கடன் செலுத்துவதற்குரிய கால் வேலி நிலம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும். சிறந்த அறிவாளியாகவும், அறநெறி பயின்றவ ராகவும் 35 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப் பட்டவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் மூன்றாண்டு களுக்குள் எந்த வாரியத்துக்கும் தேர்ந்தெடுக்கப் படாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நியதி கடைப்பிடிக்கப்பட்டது. பெரும் கல்விமான்கள் அரைக்கால் வேலி நிலம் இருப்பினும் தகுதியுடைய
வர்களாகக் கருதப்பட்டனர்.
கழக உறுப்பினர்களாக இருந்து உரிய கணக்குக் காட்டத் தவறியவர்கள், ஐம்பெரும் பாதகங்களில் முதல் நான்கையும் செய்தவர்கள். அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், பிறர் பொருளைக் கவர்ந்தவர்கள், இலஞ்சம் பெற்றோர், ஊருக்குத் துரோகம் செய்தோர், குற்றம் காரணமாகக் கழுதை மேல் ஏற்றப்பட்டவர்கள், கள்ளக் கையெழுத்திட்டவர்கள் ஆகியோர் கிராமவாரியம் செய்யும் கழக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் உரிமையைத் தம் வாழ் நாள் முழுவதும் இழந்து விடுகிறார்கள்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

உறுப்பினர்களைத் தெரிந் தெடுக்குமுறை
ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும், ஊரும், நகரமும் அக்காலத்தில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குடும்புக்கும் பிரதிநிதியாக ஒவ்வொரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டனர். குடும்புகளின் எண்ணிக்கை அவ்வூர் பெருமை, சிறுமைகளுக்கேற்ப மிகுந்தும் குறைந்தும் காணப்பட்டது. ஊர்மக்கள் தமக்குள்ளே கூட்டம் வைத்து கழகத்தின் உறுப்பினராக பெயர் எழுதி, அவ்வோலைகளை ஒன்று சேர்த்து அவை எக் குடும்பிற்குரியவை என்று பெயர் வரையப்பெற்ற ஒலை ஒன்றையும் சேர்த்துக் கட்டி அவ்வோலைக் கட்டைகுடத்திலிட்டு வைப்பர். உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கக் குறிக்கப்பட்ட நாளிலே ஊர்மக்கள் ஒன்று கூடுவர். அரசரது ஆணைப்படி அங்கு சமூகம் தந்திருக்கும் அதிகாரி முன்னிலையில் குடும்ப ஒலை பொதுமகனால் எடுக்கப்பட்டு நிறைவேற்றுக்கழக உறுப்பினர் தேர்ந் தெடுக்கப் படுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக் குரிய உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்ட பின்னர் வாரியங்கள் அமைக்கப்படும்.
இவ்வாரியங்கள் சம்வற்சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம் ,பொன்வாரியம், பஞ்சவாரவாரியம், கழனிவாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், குடும்பு வாரியம் என வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம சபையும் அவ்வூருக்கும் சூழ்நிலைக்கும் இன்றியமையாத வாரியங்களை மட்டும் அமைத்துக் கொண்டனர் ஆயினும் சம்வற்சரவாரியம் மட்டும் எல்லா ஊர்களிலும் நிறுவப்பட்டிருந்தது. இதனை ஆட்டை வாரியம் என்றும் கூறுவர். சம்வத்சர வாரியத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவோர். முன்பு ஏரி வாரியத்திலும், தோட்ட வாரியத்திலும் உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர்களாகவும் கல்வியிலும், வயதிலும் முதியவர்களாகவும் இருத்தல் வேண்டும். இவ் உறுப்பினர்கள் அனைவரும் ஏதாவது ஒரு குற்றத்தின் நிமித்தம் இடையில் நிறுத்தப்பட்டால் அன்றி அனைவரும் வருடம் ஒன்றிற்குக் கிராம காரியங்களைச் செய்ய உரிமையுடையவர்களாவர்.
115

Page 132
இதற்காக அவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. கழக உறுப்பினர் அனைவரும் ஆளும் கணத்தார், வாரியப் பெருமக்கள், பெருமக்கள் என அந்நாளிற் பொதுமக்களாற் பெருமையாக அழைக்கப்பட்டனர்.
சபை கூடும் இடமும் காலமும்
இப் பெருமக்கள் கூடிக் காரியங்கள் நடத்துவதற்குப் பல ஊர்களில் மாளிகைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் பெரும்பாலும் அவர்கள் கோயில் மண்டபங்களிலும் ஏனைய மன்றுகளிலும்தான் கூடுவர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாலூர்ச்சபையார் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அவ்வூர்க்கோயில் கண்டராதித்தன் மண்டபத்திலும் ராஜராஜ மண்டபத்திலும், வண்ணக்கனார் அம்பலத்திலும் கூட்டம் நடத்தியுள்ளமை அங்கு காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக் கூடியதாக உள்ளது. திருவிடை மருதூர் நகரசபையாரும். திரைமூர் சபையாரும் திருவிடை மருதூர் நாடகசபையில் கூட்டம் நடத்திய செய்தி ஒரு கல்வெட்டிற் காணப்படுகின்றது.
காளம் ஊதுவித்தும், முரசடிப்பித்தும் சபை கூடுமிடம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். கிராமக் காரியங் களாகச் செய்து வந்த பொதுமக்கள் ஊதியம் எதுவும் இதற்காகப் பெறவில்லை. அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால் அவர்களுக்கு ஒய்வு கிடைக்கும் நேரத்தில் தான் சபை கூடும் வழக்கம் இருந்தது. எனவே பகல், இரவு என்ற வேறுபாடில்லாமல் கூட்டங்கள் நடத்தப்பட்டமைக்கு நாகப் பட்டினம் செம்பியன்மாதேவி என்ற ஊரிற் காணப்படும் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது.
கழக உறுப்பினர்க்குரிய தகமைகள
கிராமசபையார் பணித்தவற்றைச் செய்யும் பணிமக்கள், மத்தியஸ்தன், கரணத்தான், பாடிகாப்பான், தண்டுவான், அடிக்கீழ் நிற்போன் என்போராவர். அவர்கள் அனைவரும் கிராமசபையில் ஊதியம் பெற்றுப் பணிபுரிந்தனர். சபைக்குரிய
116

கணக்கை எழுதிச் சபையோர் விரும்பியபோது அதனைக் காட்ட வேண்டிய 560) கரணத்தானுக்குண்டு. அவன் சபையோரின் நன்மதிப்பைப் பெறாவிட்டால் அடுத்த ஆண்டு அவனுக்கு அவ்வேலை அளிக்கப்பட மாட்டாது. அதற்கு ஊதியமாக ஒரு நாளைக்கு நானாழி நெல்லும் ஒராண்டிற்கு இரண்டு கழஞ்சுப்பொன்னும் கொடுக்கப்பட்டது. கணக்கில் தவறு ஏற்படின் 10 கழஞ்சு பொன் தண்டம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாரியத்திற்கும் தனித்தனியாகக் கணக்கன் இருந்திருக்கிறான். பாடிக்காப்பான் என்போன் திருட்டு, கலகம் போன்றவை நிகழாமல் ஊரைக் காத்து வருபவன். பாடி காவலருக்கும் இவர்களின் அதிகாரிக்கும் ஊதியம் வழங்குவதற்கு ஆண்டு தோறும் ஒவ்வோர் ஊரிலும் பாடிகாவல் என்ற வரியொன்று வாங்கப்பட்டு வந்தமை அறியக் கூடியதாக உள்ளது. பழைய செப்பேடுகளில் இவ்வரி நாடு காவல் என்ற பெயருடன் காணப்படுகின்றது. தண்டுவான் என்போன், கிராமத்திலுள்ள மக்கள் அரசாங்கத்திற்கும் ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வசூலிப்பவன். அடிக்கீழ் நிற்போன் ஊர்ச் சபையோருக்குக் குற்றேவல் புரிபவன். மத்தியஸ்தன் என்போன் ஊர்ச்சபையிலே செய்யப்படும் முடிவுகளை நிகழ்ச்சிக் குறிப்பில் அவர்கள் கூறியபடி எழுதுபவன். கிராம சபைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எத்தகைய தொடர்புமின்றி வந்தகாரணம் பற்றி அவன் மத்தியஸ்தன் என வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
கிராமசபைக்குரிய கடமைகளும் வருவாயும
கிராம காரியங்களைச் செவ்வனே நடத்தி மக்கள் வாழ்வில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதே கிராம சபைக்குரிய முக்கிய கடமையாகும். அதை நிறைவேற்ற கிராம சபையாருக்கு உட்கழகங்கள் இருந்தன. அவை வாரியங்கள் என்றழைக்கப்பட்டன. கிராம சபைக்குரிய முக்கிய கடமை நியாய விசாரணை செய்வதாகும். அறங்களை ஏற்று நடத்துவது, அறநிலையங்களைக் கண்காணிப்பது என்ற முக்கிய கடமைகளை சம்வற்சரவாரியம் மேற்கொண்டது. ஏரி, குளம் , ஊருணி முதலிய நீர் நிலையங்களைப்
ஆய்வரங்கு 2 Ο Ο8

Page 133
பாதுகாத்தலும், விளைவிற்கு வேண்டிய நீரைப் பாய்சுவதும் ஏரி வாரியத்தின் கடமைகளாகும். புன்செய் நிலங்களையும் தோட்டங்களையும் பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்ட வாரியத்தின் கடமையாகும். ஊரில் வழங்கும் பொன் நாணயங்களை ஆராய்வது பொன் வாரியத்தின் கடமையாகும். அரசனுக்குக் குடிகள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிறவரிகளையும் வாங்கி அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் அனுப்பும் கடப்பாடுடையவர் பஞ்சவாரியர் ஆவர்.
இவ்வாரியங்களேயன்றி திருப்பாற் கடற்கல் வெட்டிலே கழனிவாரியம், தடிவழி வாரியம், கணக்கு வாரியம், கலிங்குவாரியம், குடும்பு வாரியம் ஆகிய வாரியங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. நீர் நிலையங்கள் போன்றவற்றைக் கவனித்து வேண்டிய வற்றைச் செய்தல் களனி வாரியரது கடமை. ஊர்க்கணக்கரும், மத்தியஸ்தரும் எழுதும் கணக்குகளை ஆராய்ந்து உண்மை காண்பது கணக்கு வாரியரது கடமையாகும். தாங்கிகளில் நீரைத் தேக்கி அவரவர்க்கேற்ற முறை நாட்களில் கால்வாய்களிலே தண்ணிரை விடுவது கலிங்கு வாரியரது கடமையாகும். அவ்வாண்டில் குடிகள் பயிரிடும் நிலங்களைக் கோல் கொண்டு அளந்து விளை நிலப்பரப்பையும், விளைபொருளையும் கணக்கனைக் கொண்டு கிராமக்கணக்கில் எழுதி வைப்பது தடிவழி வாரியரது கடமையாகும். இவ்வாரியங்கள் எல்லாம் எல்லா ஊர்களிலும் இடம் பெறவில்லை. சில ஊரர்களிற் சம்வத்சரவாரியம் ஒன்றே கிராம காரியங்கள் எல்லாவற்றையுஞ் செய்து வந்ததைக் கல் வெட்டுக்களால் அறியக் கூடியதாக உள்ளது. சில ஊர்களில் விளை நிலங்களில் ஒரு பகுதி திருக்கோயிலுக்குரிய தேவதானமாகவும் மற்றொரு பகுதி பயிரிடும் குடிகளுக்குரிய வெள்ளான் வகையாகவும் இருந்துள்ளன. இத்தகைய இடங்களில் கிராம ஆட்சியை நடத்துவதற்கு இரு வேறு சபைகள் இருந்தன. இவ்வுண்மையை “ஆமூர் கோட்டத்து படுவூர் நாட்டுத் தேவதானம் திருவிடவந்தை சபையோமும் ஊரோமும் கைய்யெழுத்து” எனவும் “விலை ஆவணஞ் செய்து கொடுத்தோம் வானவன் பேரரையனுக்குத் திரு நெய்தானத்து சபையோமும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

ஊரோமும்” எனவரும் கல்வெட்டுப் பகுதிகளால் நன்குணரலாம். ஒரே கிராமத்தில் இவ்விரு சபைகளும் தனித்தனியே கிராம காரியம் செய்து வந்தன என்பதற்குக் கல்வெட்டுக்கள் ஆதாரமாக உள்ளன.
கிராமசபையார் தாம் மேற்கொண்ட பணிகளை ஒழுங்காகச் செய்வதற்கு சபாவிநியோகம், ஊரிடு என்ற வரி வாங்கி வந்தனர். வாரியப் பெருமக்கள் மகாசபையாரின் அனுமதி பெறாமல் ஒரு பொருளுக்கு இரண்டாயிரம் காசுகளுக்கு மேல் செலவழித்தல் கூடாது என்ற விதி நடைமுறையில் இருந்தது. சபையார் மக்களின் வரிப்பணத்தை நியாயமாகவும் ஒழுங்காகவும் செலவிடுதலில் பெருங்கவனம் செலுத்தி வந்தனர் என்பதை இஃது உணர்த்தி நிற்கின்றது. இச் சபையார் தம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழைய விதிமுறைகளைப் பின்பற்றி தமது கடமைகளைச் செய்துவந்த போதும் சூழ்நிலைகக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப இன்றியமையாதவை என்று அனுபவத்தால் உணர்ந்து செய்யப்பட்ட சில மாறுதல்களும் உண்டு.
கிராம சபையைவிட வேறு குழுவினரும் ஊர்களில் இருந்தனர். அவர்கள் மூலபருடையார், சாத்தகணத்தார், காளிகணத்தார். கிருஷ்ண கணத்தார், குமார கணத்தார், மணிக்கிராமத்தார், வளஞ்சியர், சங்கரபாடியர் பான்மா கேச்சுரர் என்போர். கோயிற் காரியங்களை நடத்துவதற்கு தேவதான ஊர்களிலுள்ள சபையார் அமைத்திருந்த உட்கழகத்தினரே இவர்கள். காளிகணத்தார் என்போர் கிராங்களில் உள்ள காளிகோயில் நிர்வாகத்தை நடத்தி வந்த கூட்டத்தினர் கிருஷ்ண கணத்தார் கிருஷ்ணன் கோயிலை நிர்வகித்து வந்தனர் குமார கணத்தார் முருகன் கோயிலை நிர்வகித்து வந்த குழுவினர். இக்கோயில் நிர்வாகக் குழுவினரை கணப் பெருமக்கள் என்று சிறப்பித்து அந்நாளில் வழங்கியுள்ளனர்.
கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இருந்த தனித்தனிச் சபையைப் போல் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிச் சபை இருந்தது. இவை அந்நாட்டின் பொதுக்
117

Page 134
காரியங்களைக் கவனித்து நிறைவேற்றும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்தது என்பது கல்வெட்டு செப்பேட்டு ஆதாரங்களால் உணரக் கூடியதாக உள்ளது. நாட்டிலுள்ள எல்லாக் கிராமசபை, நகரசபை உறுப்பினர்களைக் கொண்டதே இந்த நாட்டுச் சபையாகும். மாநாட்டுக் கூட்டம் நடைபெறும்போது ஒவ்வோரூரின் பிரதிநிதியோடும் அவ்வூரின் கணக்கரும் இருத்தல் வேண்டும் என்ற செய்தி அறியக் கூடியதாக உள்ளது. நாட்டுச் சபையார் தாமே அறச் செயல்களைச் செய்ததோடு அறப்புறங்களை ஏற்று நடத்தியும் வந்துள்ளார்கள்.
இறை கடமைகளும் வரிகளும்
சோழமன்னர்கள் தமது ஆட்சியைத் திறம்பட நடத்தவும் நாட்டு மக்களுக்கு பலவகை நன்மை புரிந்து காத்தற் பொருட்டும் குடிமக்களிடம் பலவகை வரிகளை அறவிடுவது இன்றியமையாத தாயிற்று.
சோழர் ஆட்சியில் அரசனது வருவாய்களில் முதன்மை பெற்றதுநிலவரியாகும். அதனைக் கடமை எனவும், காணிக்கடன் எனவும் இறை எனவும், கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இறைவரி தவிர்ந்த ஏனைய வரிகள் குடிமை எனவும் அங்கம் எனவும் அந்நாளில் வழங்கப்பட்டன.
இவ்வரிகளை மன்னர்கள் தம் குடிகளிடம் அறவிட்டு வந்தார்கள், என்பதற்குப் பல கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் சான்றாக உள்ளன. அவற்றைவிட தம்கீழ் வாழ்ந்து வந்த குறுநில மன்னர்களிடமும் ஆண்டு தோறும் திறைப்பொருள் வாங்கி வந்தனர். அதுவும் பேரரசுக்குரிய வருவாய்களில் ஒன்றாகும்.
நிலவரியாக விளைநிலங்களில் விளைந்த நெல்லின் ஒரு பகுதியாகவோ,பொன்னும் காசுமாகவோ வாங்கப்பட்டு வந்தது. அந்நாட்களில் நிலங்களில் விளைந்த நெல்லை ஆறு கூறாக்கி அவற்றில் ஐந்து கூறுகளை நிலவுரிமை யாளராகவுள்ள குடிகளுக்கு அளித்து விட்டு எஞ்சியுள்ள ஒரு பகுதியை அரசாங்கத்திற்குரிய நிலவரியாக வாங்கிவந்தனர். இது தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கிவந்த முறையாகும்.
118

முதற் பராந்தகனது ஆட்சிக் காலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் சோழ சிங்கபுரத்தில் எழுதப்பட்ட கல்வெட்டொன்று அரசற்குரிய நிலவரியாக அக்காலத்தில் எவ்வளவு வாங்கப்பெற்று வந்தது. என்பதைப் புலப்படுத்துகின்றது. வெண்பா வடிவில் அமைந்துள்ள அக்கல்வெட்டு,
ஆறுகூறினால் புரவு மாயதியும் பொன்னும் பெறுமாறு சோழர்கோன். பறிவையர்கோன் மங்கல வீரசோழன் அத்தி மல்லன் தான் கொடுத்தான்
முங்கில்வர் என்னும் வயல். என்பதாகும். இதனால் அரசனுக்குரிய அரசிறையாகிய நிலவரி ஆறிலொன்று என்பதும் அது புரவு என்று அந்நாளில் வழங்கப்பெற்று வந்தது என்பதும் தெளிவாகிறது. அரசிற்கு மிகப் பெரிய வருமானத்தைத் தேடிய அந்த நிலவரியாகிய புரவுவரியைச் சேகரிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு தனிச் சபை நிறுவப்பட்டிருந்தது. அவை தொண்டை நாட்டுப் புரவளித் திணைக்களம், சோழ நாட்டுப் புரவரித் திணைக்களம் என்ற பெயர்களை உடையனவாய் இருந்தன. நெல்லாக அறவிடப் பட்ட புரவுவரியை குடிகளிடம் வசூலிப்பது கிராம சபைகளின் உட்கழகங்களுள் ஒன்றாகிய பஞ்சவாரியத்தின் கடமை. இவ்வாரியப் பெருமக்கள் விளை நெல்லை ஆறு கூறாக்கி ஒரு கூறை அரசிறையாகப் பெற்றுக் கொண்டனர். இவற்றைச் சேமிப்பதற்காக ஊர் தோறும் ஊர்க்களஞ்சியம் நிறுவப்பட்டது. இவ்வாறு கிடைக்கப் பெற்ற நெல்லை கிராம சபையார் அரசாங்க உத்தரவுப்படி உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இவற்றைத் தவிர, செக்கிறை, மறைஇறை, அங்காடிப்பாட்டம், தட்டாரப்பாட்டம், இடைப்பாட்டம், ஈழம்பூட்சி, வண்ணாரப்பாளை, கண்ணாலக் காணம், குசக்காணம், ஒடக்கூலி, நீர்க்கூலி, நாடுகாவல், உலகு, தரகு, மரவிறை, இலைக்கூலம் முதலான வரிகளும் அறவிடப்பட்டதைச் சுந்தரச் சோழனின் அன்பிற் செப்பேடுகளும், முதலாம் ராஜ ராஜசோழனின் ஆனைமங்கலச் செப்பேடுகளும், கங்கை கொண்ட சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
ஆய்வரங்கு 2008

Page 135
இறை,கூலி, பாட்டம், பூட்சி என்பவை வரியை உணர்த்தும் மொழிகளாகும். இவை பெரும்பாலும் உழவுத் தொழில் தவிர்ந்த 6T60)6OTL தொழிலாளர்களிடம் பெறப்பட்ட வரிகளாகும். தறியிறை, செக்கிறை தட்டாரப் பாட்டம். வண்ணாரப்பாறை, குசக்காணம், தரகு என்பன அவ்வத் தொழில் புரிந்தோரிடம் அரசாங்கம் வாங்கிவந்த ஒரு வரியாகும். அங்காடிப் பாட்ட்ம் என்பது கடைக்காரர்களிடம் வாங்கப்பட்ட வரியாகும். இடைப்பாட்டம் என்பது ஆடு, மாடுகளை வளர்த்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டிய இடைக்குல மக்களிடம் வாங்கப்பட்ட வரியாகும். ஈழம்பூட்சி என்பது பனை, தென்னை முதலியவற்றில் கள் இறக்கும் தொழில் செய்தவர்களிடம் வாங்கப்பட்ட வரியாகும். கண்ணாலம் கணம் என்பது திருமண நாளிற் செலுத்தப்பட்ட வரியாகும். ஒடக்கூலி என்பது ஆறுகளிலும், ஏரிகளிலும் ஒடந்தள்ளுவோரிடம் வாங்கிய வரியாகும். நாடுகாவல் என்பது ஊர்களில் களவு முதலான குற்றங்கள் நிகழாமல் காத்தற் பொருட்டு குடிமக்களிடம் வாங்கி வந்த ஒரு வரியாகும். இவ்வரி சோழர் கல்வெட்டுக்களில் பெரும் பாடி காவல், சிறுபாடிகாவல் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மரவிறை என்பது பயன்தரும் மரங்களை அனுபவித்த குடிமகளிடம் வாங்கப்பட்டவரியாகும். சில கல்வெட்டுக்களில் மரமஞ்சாடி என்று குறிக்கப்பட்டதால் காயும், பழமும் தரக்கூடிய மரம் ஒன்றிற்கு ஒரு மஞ்சாடி பொன் வாங்கப் பெற்றிருக்கலாம் என்று கருத இடமுண்டு. இலைக்கூலம் என்பது வெற்றிலை பயிரிடுபவர்களிடம் பெறப்பட்ட வரியாகும். உல்கு என்பது அங்க வரியாகும். அங்கம் என்பது வணிகத்தின் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக மரக்கலங்களிலும் உள்நாடுகளில் இருந்து பெருவழிமூலம் வண்டிகளிலும் வரும் பண்டங்களுக்கு வாங்கப் பெற்ற, வரியாகும். இவ்வரிகள் எல்லாம் சோழமன்னர்களால் தம் குடிகளிடத்து அறவிடப்பட்டவை என்பதைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்தி நிற்கின்றன. வரிகளின் பெயர்கள் அதிகமாகக் காணப்படுவதால் சோழர்கால மன்னர்கள் மக்களிடம் அதிக வரியை அறவிட்டு வந்தார்கள்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

என்பது உண்மையல்ல. ஒவ்வொரு வரியும், அந்தந்தத் தொழில் செய்தவர்களிடம் வாங்கப்பட்டதே அன்றி எல்லா மக்களும் எல்லா வரிகளும் செலுத்தவில்லை.
இரவுவரி
வடஆர்க்காட்டில் திருமாற் பேறு சிவாலயத்துக் குரிய புரவரியாக ஆயிரம் கலம் நெல் ஆண்டு தோறும் அளித்துவந்த புதுப்பாக்கத்துச் சபையார் இரவு வரியாக 187 கலம் நெல்லும் இருபத்தாறு கழஞ்சு அரைமஞ்சாடிப் பொன்னும் கொடுத்து வந்தார்கள் என்று உத்தமச் சோழனின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வரியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் கிடைக்காமையால் இதைப்பற்றித் தெளிவாக ஆராய முடியவில்லை.
போர்வரி
சில வேளைகளில் குறிப்பிட்ட சில காரியங்களுக்காகவே சிலவரிகள் ஒதுக்கப்பட்டன. கங்கை கொண்ட சோழனின் புதல்வனாகிய வீரராஜேந்திர சோழன் என்பான் வடக்கேயுள்ள வேங்கை மண்டலத்தின் மீது படையெடுத்துச் செல்ல நேர்ந்த போது அச்செலவை ஈடுசெய்வதற்காக சோழராட்சியத்திலிருந்த விளைநிலங்களுக்கு வேலி ஒன்றிற்கு ஒரு கழஞ்சு பொன் போர் வரியாக தன் நாட்டு மக்களிடம் வாங்கினான் என்று ஆலங்குடியில் உள்ள கல்வெட்டொன்று கூறுகிறது.
காவேரிக் கரை விநியோகவரி
மூன்றாம் குலோத்துங்க சோழனது 31 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு தஞ்சாவூர் திரம்பாம்புரத்தில் காவேரி விநியோகம் என்ற வரி மக்களிடம் வாங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. காவேரி ஆறும் அதன் கிளைகளும் பெருகிக் கரைகளை உடைத்து ஊர்களை அழிக்காதவாறு காவேரி ஆற்றின் இரு மருங்கிலும் பலமான கரைகள் அமைக்கும் பொருட்டு அவ்வாற்றங்கரையைச் சார்ந்த மக்களிடம் வாங்கப்பட்ட வரி என்று கருத இடமுண்டு. எனவே இவ்வரி எல்லா ஊர்களிலும் வாங்கப்படவில்லை என்பது தெளிவு. இத்தகைய வரிகள் காலத்தின் தேவையை ஒட்டி ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் அறவிடப்பட்டன.
119

Page 136
சபாவிநியோகம்
இது பிராமணர்க்குரிய கிராமங்களாகிய சதுர்வேதிமங்கலங்களிலிருந்த சபையார் சபையின் செலவுக்காக ஆண்டுதோறும் வாங்கிய வரியாகும்.
ஊரிடு வழிபாடு
இது நகரங்களிலும் வெள்ளாண்வகை ஊர்களிலுமிருந்த சபையார் ஆண்டுதோறும் வாங்கிய வரியாகும். இவ்வரித்தொகை அரசாங்கத்திற்கு உரியதன்று. பண்டைக்காலத்தில் வழங்கி வந்த முறையைப் பின்பற்றியே ஊர், கிராமம், நகரம் ஆகியவற்றில் வரிகள் வசூலித்தார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலைப் பழுவூரிலே சுந்தர சோழன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் இரண்டு கிடைக்கப் பெற்றுள்ளன. இக்கல்வெட்டு நந்திபுரத்தில் முன்னர் மன்றுபாடும் பிறவரிகளும் வாங்கிய முறையைப் பின்பற்றியே அவ்வூர்ச் சபையாரும் வாங்கிவர வேண்டும் என அந்நாட்டுத் குறுநில மன்னன் பழுவேட்டரையன் கண்டன் மறவன் என்பான் செய்த உத்தரவு காணப்படுகின்றது. நந்திபுரம் என்பது கும்பகோணத்துக்குத் தெற்கே பழையாறை என்ற பெயருடன் நிலவிய பெருநகரமாகும். இது முற்காலத்தில் சோழர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. இந் நகரத்திலிருந்த வழக்கத்தைப் பெரிதும் மதித்து இதனைப் பிறநாட்டுக் குறுநில மன்னர்களும் பின்பற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வரிவசூலிப்பும் ஊர்ச்சபையும்
பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகளைப் பெற்று அரசாங்கத்திற்கு அனுப்பி வந்தவர்கள் அவ்வூரிலிருந்த சபையாரே. பொதுமக்களும் தத்தம் வரிகளை ஒழுங்காகச் செலுத்தி வந்ததனால் ஊர்ச்சபையாரும் எதுவித தடங்கலுமின்றித் தமது காரியங்களை மேற்கொண்டு வந்தனர். பொதுமக்களிடம் இருந்து வரிஅறவிடும் பொறுப்பு முழுவதும் ஊர்ச் சபையாருக்கு இருந்ததால் வரி வசூலிப்பது பற்றிய இன்றியமையாத அதிகாரத்தை அரசாங்கம் அளிக்க வேண்டியதாயிற்று என்பது வட ஆர்க்காட்டு மாவட்டம் உக்கலிற் காணப்படும் கல்வெட்டால் அறியக் கூடியதாக உள்ளது. இதிற் பொறிக்கப்பட்டுள்ள செய்தியின்படி சோழ நாடு,
120

சோழநாட்டைச் சார்ந்த புறநாடுகள், தொண்டை நாடு, பாண்டிநாடு ஆகிய நாடுகளிலுள்ள ஊர்களின் காணியாளர்கள் தம் நிலங்களுக்குரிய அரசிறையையும், ஊரிடுவரியையும் இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டும் கொடாமல் இருந்தால் அவர்கள் நிலங்களைப் பறிமுதல் செய்து ஊர் மக்கள் அவற்றை விற்று அவ்வரிகளுக்கு ஈடு செய்யவேண்டும் என்ற உத்தரவு காணப்படுகின்றது.
இவற்றை விட நிலவரி, முதலியவற்றைச் செலுத்தாமல் ஊரையும் நாட்டையும் விட்டு வேறு நாட்டிற்குப் போய்க் குடி புகுந்தவர்கள் நிலத்தையும் அவ்வாறே ஊர் நிலமாக்கி விற்று வரிப்பணம் செலுத்தப்பட்டமையைக் கல்வெட்டுச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. கி.பி 1117 இல் தஞ்சாவூர் மாவட்டம் வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் சிலர் தமக்குரிய நிலவரியைச் செலுத்தாமல் வேற்றுார் ஒன்றுக்குச் சென்றுவிட கிராமசபையார் நிலங்களைக் கைப்பற்றி அண்டையிலிருந்த திருச்சேறைக் கோயிலுக்கு விற்று அரசிறை செலுத்தினர் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.
சோழர் ஆட்சி உன்னத நிலையில் இருந்தபோது எதுவித முறைக்கேடுகளுமின்றி நடைபெற்று வந்த வரிவசூலிப்பு அவர்களது ஆட்சி ஆட்டம் கண்ட வேளையில் அவர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களும் அரசியல் தலைவர்களும் தம்மனம் போனவாறு நாட்டு மக்களிடம் வரிவசூலிக்கத் தொடங்கி விட்டனர். அவர்களது அநியாய வரிவசூலிப்பைக் கண்டஞ்சிய நாட்டு மக்கள் இனிப் பயிர்த் தொழில் புரிந்து கொண்டு தங்கள் ஊரிலே குடியிருக்கப் போவதில்லை என்று கிராமசபையாரிடம் முறையிட்ட செய்தியும் அதனால் ஐந்து சபையார் ஒன்றாகக் கூட்டம் கூடி ஆண்டு தோறும் கொடுக்க வேண்டிய வரிகள் இவ்வளவு என்று தெளிவாக வரையறுத்து, உறுதிசெய்து, அதற்கு மேலதிகமாகக் கேட்கும் வரி எதையும் செலுத்த வேண்டியதில்லை என்பதைத் தெரிவித்து அவற்றை மீறுபவர்கள் ஊர்க்கேடு, நாட்டுக் கேடு, பொற்கேடு செய்த துரோகிகளாகக் கணிக்கப்பட்டு தண்டம் கட்டக் கடப்பாடுடையவர்கள் என்று தீர்மானம் எடுத்து அவற்றைக்
ஆய்வரங்கு 2 Ο Ο8

Page 137
கைலாயமுடையார் கோயிலிலும், வண்துவராபதி மன்னார் கோயிலிலும் வரைந்து வைக்கும் படியும் செய்தனர். சோழர் ஆட்சியில் நிகழ்ந்த வரிக் கொடுமைகள் பற்றி சிற் சில கல்வெட்டுக்களில் செய்தி வருகிறது. மக்கள் வரிப் பழுவைத் தாங்க முடியாமல் எதிர்ப்புத் தெரிவித்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன. ஆயினும் இவ்வெதிர்ப்புகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை என்றே தெரிகிறது. பொதுவாக நோக்குமிடத்து பழைய காலம் முதல் வாங்கி வந்த ஒரு நியாயமான முறையைப் பின்பற்றியே அரசிறை வாங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நில அளவும் உரிமையும்
சோழ அரசின் முக்கிய வருமானமாக நிலவரி இருந்ததால் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்து அங்கு விளை நிலங்கள் எவ்வளவு உண்டு, அரசிறை செலுத்தும் கடமையும், உரிமையும் பூண்ட குடிகள் இன்னார் என்பவற்றைத் தெளிவாக உறுதிப்படுத்துவதற்காக சோழராட்சியில் மூன்று முறை நில அளவை நிகழ்ந்துள்ளது. அவற்றுள் முதலில் நிகழ்ந்த நில அளவு முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அவனது பதினாறாம் ஆட்சியாண்டில் 1001 இல் நடைபெற்றது. குரவன் உலகளந்தான் ராஜராஜ மாராயன் தலைமையில் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெற்றது. சோழராட்சியும் முழுவதையும் அளந்து கணக்கெடுத்தமை பற்றி இவனுக்கு உலகளந்தான் என்ற பட்டம் அரசனால் அளிக்கப்பட்டது. சோழரின் இராச்சியத்தில் நில அளவு நடைபெற்ற காலத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வோர் அதிகாரி தலைமை வகித்து அதனை நடத்தி நிறைவேற்றியிருத்தல் வேண்டும். நிலத்தை அளக்கப் பயன்பட்ட கோல் நிலம் அளந்த கோல், உலகளந்தகோல் என்று வழங்கப்பட்டுள்ளது. இக்கோல் பதினாறு சாண் நீளமுடையதாக இருந்தது. முதற்குலேர்த்துங்க சோழனது பதினாறாம் ஆட்சியாண்டாகிய 1086இல் சோழ ராச்சியம் முழுவதும் இரண்டாம் முறை அளந்து கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இந்நில அளவு இரண்டு ஆண்டுகளில் நிறைவேறி அரசிறை விதிக்கப்பெற்றது என்பது உடையார் சுங்கந்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

தவிர்த்தருளின குலோத்துங்க சோழதேவருக்கு 41 ஆவது இறை கட்டின காணிக்கடன் என்னும் திருவிழிமிழலைக் கல்வெட்டால் அறியக் கூடியதாக உள்ளது. இவ்வேந்தன் காலத்தில் நிலம் அளந்த கோல் 'திருவுலகளந்த பூரீபாதக் கோல்' என்று வழங்கப் பெற்றது. இது முதலாம் குலோத்துங்கனின் பாதத்தை ஒரு அடியாகக் கொண்டு அமைக்கப்பட்ட அளவு கோல். சோழர் காலத்தில் மூன்றாம் முறையாக 1216 இல் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நில அளவு இடம் பெற்றது. இச் செய்தி மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்களிலேதான் காணப்படுகின்றது. இதனைத் தெளிவாக அறியக் கூடிய வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
நிலங்களை நீர்,நிலம்,கொல்லை, நத்தம், காடு என்று வகுத்துள்ளனர். அவற்றுள் நீர், நிலம், கொல்லை என்பன நன்செய், புன்செய் நிலங்களாகும். நத்தம் என்பது மக்கள் வீடு கட்டக் கூடிய மேட்டு நிலமாகும். நிலங்களெல்லாம் குழி, மா, வேலி என்ற முறையில் நூறு குழி கொண்டது ஒரு மா ஆகவும் இருபது மா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பட்டது. நிலங்கள் அளக்கப்பட்டு எல்லைகள் தெளிவாகத் தெரிவதற்காக கற்கள் நடப்பட்டது. அக் கற்கள் புள்ளடிக் கற்கள் எனப்பட்டன. சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களுக்குத் திரிசூலம் பொறிக்கப்பட்ட கற்களும், திருமால் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களுக்குத் திருவாழி பொறிக்கப்பட்ட கற்களும் சமணக் கோயில்களுக்கு விடப்பட்ட நிலங்களுக்கு முக்குடை பொறிக்கப்பட்ட கற்களும் எல்லைக் கற்களாக நடுவது சோழராட்சியில் நிலவிய பழைய வழக்கமாகும்.
இவ்வாறு அளக்கப்பட்டு எல்லை குறிக்கப்பட்ட காணிகளின் தரத்திற்கேற்ப இறைவரி விதிக்கப்பட்டது. நிலங்களின் வளத்தையும் அதற்குப் பாய்ச்சப்படும் நீர் வளத்தையும் ஆதாரமாகக் கொண்டே தரம் வகுக்கப்பட்டன. தரம் வகுக்கப்படாத நிலங்கள் தரமிலி என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரங்களில் உள்ள நிலங்களில் எவ்வளவு நெல்
121

Page 138
விளைந்தது என்ற விவரத்தைத் தற்போது தெளிவாக அறிய முடியவில்லையாயினும் நிலங்களின் விளைவின் அளவைக் கொண்டுதான் அவற்றின் தரங் கண்டு அதிகாரிகள் வரி விதித்தனர் என்பது புலனாகிறது.
ராஜராஜ சோழன் ஆணைப்படி நிலங்கள் அளக்கப்பட்டு வரி விதிக்கப்படாத காணிகளும் இருந்தன. என்பதை அறியக் கூடியதாக உள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்டவை ஊர் நத்தம், கம்மாளச் சேரி, வண்ணார் சேரி, ஈழச்சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சேரி, பறைச் சுடுகாடு, "ஊர்நிலத்தூடறுத்துப் போன வாய்க்கால் , ஐயன் கோயில், பிடாரி கோயில், தேவர் திருமஞ்சனக் குளம், ஊருணி, களனிக் குளம், நந்தவனக் களம், சுடுகாட்டிற்குப் போகும் வழி, ஆறு, பெருவழி, மன்றம், மனை, கடைத்தெரு, கிடங்கு, காடு, உவர் நிலம் என்பனவாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து விளை நிலங்களுக்கு மட்டும் வரிவிதிக்கப்பட்டதே அன்றி பிற நிலங்களுக்கு வரிவிதிக்கப்படவில்லை என்பது அறியக் கிடக்கிறது. ஒவ்வொரு ஊரும் இவ்வளவு வேலி நிலம் என்று அளந்தறிந்து அதிலிருந்து வரி விதிக்கப்படாத இடங்களின் நிலப்பரப்பைக் கழித்துக் கொண்டு எஞ்சி இருந்த நிலங்களுக்குத் தான் வரிவிதிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
நிலவுரிமை
சோழர் ஆட்சியில் நிலங்களை அனுபவித்து வந்தோரின் உரிமையை அடிப்படையாகக் கொண்டு அந் நிலங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. அவற்றுள் உழவுத் தொழிலை மேற்கொண்டு நிலங்களை அனுபவித்து வந்த வெள்ளான் குடிமக்களின் நிலங்கள் , அரசிறை செலுத்தப்பட வேண்டும். அவர்கள் இறைகுடிகள் எனப்பட்டனர். அவர்களில் குறைந்த நிலமுடையவர்கள் தாமே உழவுத் தொழிலை மேற்கொண்டு வந்தனர். அதிக நிலமுடையவர்கள் பிறரைக் கொண்டு உழுவித்து வாழ்ந்தனர்.
மற்றொரு வகை நிலங்கள், தானமாகப் பெறப்பட்டவை. அவை தேவதானம்,
122

திருவிடையாட்டம், பள்ளிச் சந்தம், மடப்புறம், சாலபோகம், பிரமதேயம் என்று வழங்கப்பட்டுள்ளன. இதில் தேவதானம் என்பது சிவன் கோயில்களுக் களிக்கப்பட்ட நிலம். திருவிடையாட்டம் திருமால் கோயில்களுக்களிக்கப்பட்ட நிலம். பள்ளிச் சந்தம் பெளத்த, ஜைன கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலம், மடப்புறம் என்பது மடங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம். சாலாபோகம் என்பது அபூர்விகள், அந்தணர்கள் , சிவயோகிகள் ஆகியோருக்கு உணவு கொடுக்கும் அறச் சாலைகளுக்கு அளிக்கப்பட்ட நிலம். பிரமதேயம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் நன்கு பயின்று சீலமும் புலமையும் படைத்த பார்ப்பனருக்கு வழங்கப்பட்ட நிலம். இவ்வகை நிலங்கள் பெரும்பாலும் இறையிலி நிலங்களாகவே இருந்தன. இறையிலி நிலங்களைப் பெற்றவர்கள் அரசாங்கத்திற்கும், ஊர்ச் சபைக்கும் எதுவித வரியும் செலுத்தத் தேவையில்லை என்பது கோட்பாடாயினும் அரசாங்கத்திற்கு அவர்கள் சிறுவரியைச் செலுத்தி வந்தனர் என்பதற்குச் சில கல்வெட்டுக்கள் ஆதாரமாக உள்ளன.
பிறிதொரு வகை சில குறிப்பிட்ட காரியங்களைச் செய்தற் பொருட்டு அவற்றைச் செய்து வருவோருக்குக் கொடுக்கப் பெற்றவை யாகும். இவற்றை சீவிதம், போகம், விருத்தி. பற்று, புறம், பட்டி என்று வழங்கினர். சோழர் ஆட்சியில் அரசியல் அதிகாரிகளுக்குத் திங்கள் தோறும் பணம் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக அதிகாரிகளின் தகுதிக் கேற்றவாறு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக் கூடிய வகையில் சோழமன்னர்காளல் அளிக்கப்பட்ட நிலமே சீவிதம் ஆகும். இவ்வதிகாரிகள் தங்கள் காலத்திற் பெருந் தொண்டுகளை அரசாங்கத்திற்குச் செய்து பேரும், புகழும் எய்துவராயின் அவர்களுடைய காலத்திலேயே அந்நிலங்கள் இறையிலி நிலங்களாக்கப்பட்டு அவர்களும் அவர்கள் வழியினரும் அனுபவித்துக் கொள்ளுமாறு கொடுத்துவிடுவதும் உண்டு. அத்தகைய சிறந்த அதிகாரிகள் இறந்தபின் அந்நிலங்கள் அவர்களது மனைவி, மக்கள், சகோதரருக்கு இறையிலி நிலமாக வழங்கப்பட்டன. திருக்கோயில்களிலும் , பேரூர்,
ஆய்வரங்கு 2008

Page 139
சிற்றுார்களிலும், அம்பலங்களிலும் சில குறிப்பிட்ட காரியங்களை நாள்தோறும், திங்கள் தோறும் செய்துவரும் பொருட்டு அரசர்களாலும் அதிகாரிகளாலும் , கிராம சபையாலும் கோயில் அதிகாரிகளாலும், செல்வந்தர்களாலும் கொடுக்கப்பட்ட நிலங்களும் இறையிலி நிலங்களாகும்.
திருக்கோயில்களில் அர்ச்சனை செய்யும் பொருட்டு சிவவேதியர்க்கும் ஆதுலர்சாலை களிலிருந்து பொதுமக்களுக்கு வைத்தியம் செய்யும் பொருட்டு மருத்துவர்கட்கும் விழா நாட்களில் ஆரியக் கூத்து நடத்தும் பொருட்டு கூத்தச் சாக்கியர்க்கும் கொடுக்கப்பட்ட நிலங்கள் முறையே அர்ச்சனா போகம், வைத்திய போகம், நிருத்த போகம் என வழங்கிவந்தன. ஊர்களில் இரவில் அம்பலத்தமர்ந்து பாரதம் படித்து விரிவுரை நிகழ்த்தும் பொருட்டுப் புலவர்க்கும் திருக்கோயிலில் வேதம் ஒதுவதற்கும் புராணங்கள் படிப்பதற்கும் அந்தணர்க்கும் கொடுக்கப்பட்ட நிலங்கள் பாரத விருத்தி, பட்டவிருத்தி எனவும் வழங்கப்பட்டன.
திருக்கோயில்களில் ஆடல் பாடல்களைச் செய்த பதியிலார்க்கும் அவர்களை ஆட்டுவிக்கும் ஆடலாசிரியனாகிய நட்டுவனுக்கும் ஆரிய, தமிழ்க் கூத்தாடுவோருக்கும், வீணை வாசிப்போனுக்கும், மத்தளம் கொட்டுபவனுக்கும், கணக் கெழுதும் கணக்கனுக்கும், திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் ஒதுவார்க்கும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்கள் பதியிலர்காணி, நட்டுவக்காணி, வீணைக்காணி, உவச்சன் காணி, திருப்பதிகக் காணி என வழங்கப்பட்டன என்பதைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. தேவரடியார்க்கும் இசைப் பயிற்சியளித்து வந்த பாணருக்கும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் பாணக் காணி எனப்பட்டது. ஊர்களிலுள்ள அம்பலங்களை நாள்தோறும் மெழுகிச் சுத்தம் செய்த பணி மக்களுக்கும் அவ் அம்பலங்களில் குடி தண்ணிரும், அக்கினியும் சேமித்து ஊராருக்கு வேண்டும்போது கொடுத்துதவும் பணிமகனுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலங்கள் மெழுகுப்புறம், அம்பலப் புறம் என்று கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. சில
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

அறங்களைச் செய்தற் பொருட்டு கிராமச் சபையாரிடத்தும் குறிப்பிட்ட சிலரிடமும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்கள் அறப்புறம் என்று வழங்கின. போரில் உயிர்துறந்த வீரனின் மனைவி மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் உதிரப்பட்டி எனவும், ஏரிகளை ஆண்டுதோறும் வெட்டியும் கரை கட்டியும் பாதுகாத்தற் பொருட்டுக் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஏரிப்பட்டி எனவும் வழங்கி வந்தன.
வெள்ளாண் வகை தவிர, பிறவகை நிலங்களிற் பலவற்றிற்கு அக்காலத்திற் காராண்மை, மீயாட்சி என்ற இரு வேறு உரிமைகள் இருந்தன. காராண்மை என்பது பயிரிடும் குடிகளின் உரிமையாகும். மீயாட்சி என்பது நிலத்தின் சொந்தக்காரரது உரிமையாகும். அரசியல் அதிகாரிகளுக்கு அரசர்களாற் கொடுக்கப்பட்டிருந்த சீவிதங்களிலும் இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று அரசாங்கத்திற்குரிய நிலவரி முதலான வரிகளை மாத்திரம் அந்நிலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் குடிகளிடத்து ஆண்டு தோறும் வாங்கிக் கொள்வது, மற்றொன்று சீவிதமாகத் தமக்குக் கிடைத்துள்ள நிலங்களை இறையிலியாகத் தாமே நேரில் அனுவித்துக் கொண்டிருப்பதாகும். அரசியல் அதிகாரிகளுக்கும் பிறருக்கும் நிலவரி முதலானவற்றை மட்டும். அனுபவிக்கும் உரிமையைக் கொண்ட நிலங்கள் இறை நீங்கல் எனவும், இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் இறை இறங்கல் எனவும் வரிப்புத்தகத்திற் குறிக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுக்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. சோழ மன்னர்கள் கோயில்களுக்கு தேவதானம் அளிக்கும்போது சில சமயங்களில் அவ்வூரிலுள்ள குடிகளையும் அவர்களுக்குரிய பழைய உரிமையோடு அக்கோயிலுக்குக் கொடுத்து விடுவது வழக்கம் . இதுகுடி நீங்காத் தேவதானம் வழங்கி வந்தது. தமது நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குப் போய் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களின் நிலம் அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடிமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும்படி செய்து அவர்களிடம் அரசிறை வாங்கப்பட்டது. இதைக் கங்கை கொண்ட சோழமன்னன் உத்தரவு
123

Page 140
பொறிக்கப்பட்ட தென்னார்க்காடு ஒமப் பேரூர்க் கோயிற் சாசனம் அறியத் தருகிறது.
சோழ மன்னர்கள் தம்வருவாயின் பெரும் பகுதியை நிலவரியாகவே குறிப்பாக வேளாண்மை வரியாகவே பெற்றுக் கொண்டனர் என்பது தெளிவாகிறது. அதனால் சோழமன்னர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் அவற்றின் இயற்கையமைப்பிற்குத்தக்கவாறு பல ஆறுகளையும், ஏரிகளையும் வெட்டி அந் நாடுகளையும் விவசாயத்தையும், வளம் படுத்தியுள்ளனர். இவர்கள் ஆட்சிக்காலக் கல்வெட்டுக்கள் பல இவர்கள் வெட்டிய ஆறுகள், ஏரிகள் குளங்கள் என்பன பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளன. பேராறுகளுக்குக் குறுக்கே அணைகளைக் கட்டித் தண்ணிரைத் தேக்கி கிளையாறுகளில் விட்டும் , ஏரிகளில் மதகுகள் கட்டி கால்வாய்களின் மூலமாக வேண்டிய அளவு தண்ணிரை விட்டும், ஆறுகளும், ஏரிகளும், கரைகளை இடிக்காதவாறு கருங்கற்களாற் கற்படை அமைத்தும் சோழமன்னர்கள் தம்மாட்சிக்குட்பட்ட நாடுகளிற் புரிந்த அருட் தொண்டுகள் பலவாகும். இச் செய்திகள் அனைத்தும் சோழமன்னர்கட்கு தமது ஆளுகையின் கீழ் இருந்த நாடுகளில் எத்துணை நிலவுரிமை இருந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன.
நாணயங்களும் அளவைகளும்
சோழமன்னர்கள் காலத்தில் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்ட நாணயங்கள் வழங்கி வந்தன என்பதற்கு கல்வெட்டுக்கள் சிறந்த ஆதாரமாக உள்ளன. அக்காலத்துக்குரிய நாணயங்களில் செப்பு நாணயமே அதிக அளவிற் கிடைக்கப் பெற்றுள்ளது. சோழமன்னர்கள் வெளியிட்ட எல்லா நாணயங்களிலும் அவர்களின் பெயரோ, சிறப்புப் பெயரோ இடம் பெற்று அப்பெயர்களால் நாடு முழுவதும் வழங்கிவந்தன. இப்போது கிடைக்கப்பட்ட சோழ நாணயங்களில் மிகப் பழமையானதாகிய உத்தம சோழன் காலத்து நாணயம் நடுவில் புலியுருவமும் அதன் வலப்பக்கத்தில் மீனுருவமும் பொறிக்கப் பெற்றது. அது வட்டமான
124

வடிவத்தையுடையது. அக்கால நாணயங்கள் மாடை, காசு என்ற பெயரால் அழைக்கப்பட்டன. அவற்றை விட ஈழக்காசு என்ற ஒருவகைப் பொற்காசு சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வழங்கியுள்ளமை கல்வெட்டுக்களால் அறியக் கூடியதாக உள்ளது. இவற்றை விடக் கச்சாணம், அக்கம், திரமம், மதுராந்தகன் மாடை, கண்ட கோபாலன் மாடை ஆகிய வேறு நாணயங்களின் பெயர்களும் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.
சோழ அரசியலும் கோயில்களும்
ஆழ்ந்த சிவப்பற்றுக் கொண்டிருந்த சோழர்கள் சைவ சமயத்தை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அவர்கள் காலத்தில் மன்னர் முதல் சாதாரண குடிமகன் வரையிலான அனைவரும் சைவசமயத் தொண்டில் திளைத்தனர். இதன் விளைவாக இக்காலத்தில் கோயில்கள் பெருகின. மன்னர்களும் அவர்களின் அரசியாரும் அவர்தம் உறவினர்களும் சிவன் கோயில்களுக்குப் பெருமளவு அறங்களைச் செய்து வழிகாட்டினர். அவர்களை அமைச்சர்களும், குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களும் பின்பற்றினர். வணிகர்களும் செல்வாக்குற்ற பிற குலத்தவர்களும் தாராளமாக அறங்கள் புரிந்தனர். புதிய கோயில்கள் கட்டப்பட்டன. அதே நேரம் பல்லவர் காலப் பாடல் பெற்ற தலங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் கோயில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டது. சோழப் பேரரசின் உருவாக்கம் சைவ சமயத்துடன் இணைந்தே வளர்ந்தது என்று கூறுவதே பொருத்தமானது.
கோயில்களின் வளர்ச்சியினையும் பங்கையும் பற்றி நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய சோழர்கள் என்ற நூலில் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார். “கோயில்கள் நாடெங்கும் பரவிய பிறகு, பத்திமான்கள் தாராளமாக நிலமும், பொன்னும் அவற்றிற்கு வழங்கினார்கள். அந்த நன்கொடைகளால் கோயில்கள் செழித்தன, செல்வத்தில் திளைத்தன. பணம் வீணாக்கப்படாமல் அறக்கட்டளையாக்கப்பட்டு ஒழுங்காகச் செலவிடப்பட்டது. அவற்றின் நிர்வாகம் செம்மையாகவும் மிகுந்த கவனத்துடனும்
ஆய்வரங்கு 2008

Page 141
நடத்தப்பட்டது என்பது எமக்கு வியப்பைத் தரும் செய்திகளாகும். தம் முன்னோர்களின் அறக் கட்டளைகளைச் செயல்படுத்துவதிலும் ஒவ்வொரு தலை முறையினரும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர். தாங்களும் புதிய அறக்கட்ளைகளை ஏற்படுத்தி பின்வரும் தலமுறையினருக்குக் கூடுதலான அறக்கட்டளைகளை விட்டுச் சென்றனர். கோயில்களில் மிகுதியான சொத்துச் சேர்ந்ததால் அந்தந்த வட்டாரத்துப் பொருளாதார வாழ்வில் அவை முக்கியத்துவம் பெற்றன’
சோழர் கால அரசியல், சமூக பொருளாதார மையமாக விளங்கிய கோயில்களைத் திறம்பட நிருவகிக்க சோழ மன்னர்கள் மிகுந்த முனைப்புக் காட்டினர். சோழ அரசின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராகக் கோயில் அதிகாரிகள் இருந்தனர். சிறிய கோயில்கள் சிவப்பிராமணர்கள் பொறுப்பில் விடப்பட்டன. பெரிய கோயில்களில் நிருவாகத்திற்கென தனி ஆட்சிக் குழு இருந்தது. கோயிலின் முக்கியமான செய்திகள் மன்னரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மன்னர்கள் கோயில்களுக்கு வருகை தந்து அதன் பாரம்பரியத்தைக் கவனித்தனர். கோயில்களின் வரவு செலவுக் கணக்குகள் அரசாங்க அதிகாரிகளினால் ஆண்டுதோறும் மேற்பார்வை செய்யப்பட்டுத் தணிக்கை செய்யப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன் தான் எடுப்பித்த ராஜராஜேஸ்வரத்தில் நியமித்த தளிர்சேரிப் பெண்டுகளையும், நிவந்தக காரர்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. அதாவது வெவ்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட கோயிற் பணியாளர்கள் பற்றியும் அவற்றின் பங்குகளைப் பற்றியும் அக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. இப்பணியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையைச் சோழமன்னர்கள் மேற் கொண்டனர். கோயிலுக்குச் சேர வேண்டிய வருவாயைத் தவறாகப் பயன்படுத்துவோரும், செலுத்துவோரும் சிவத்துரோகிகளாகத் தண்டிக்கப்பட்டனர். தனிநபர்கள் இல்லாமல் பிரமதேய சபைகளும் மேற்கூறிய தவறிழைத்த போது அவற்றையும் அரசு விட்டுவைக்கவில்லை.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

சோழர் கல்வெட்டுக்கள் இறைவழிபாட்டிற்காக மன்னர்களும், மற்றவர்களும் நாள்தோறும் செய்த அறங்களைக் குறிப்பிடுகின்றன. 9Ugl படைப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஏராளமானவை. சிறப்புப் பூசைகளின் போதும், விழாக்காலங்களிலும் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்யப் பட்டது. கல்வெட்டுக்கள் மூலமாக சிவன் கோயில்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றதை அறியக் கூடியதாக உள்ளது. இப்பூசைகளிலும் விழாக்களிலும் சைவத் தொண்டர்களும் பாமர மக்களும் கலந்து கொண்டனர். விழாக்காலங்களில் ஆடல் பாடல்களும் நடைபெற்றன. பெரிய விழாக்களில் வெவ்வேறு கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.
சோழமன்னர்களின் ஆதரவில் கோயில்கள் பெரிய நிறுவனமாக வளர்ந்த போது அவற்றின் தொடர்போடும் அவற்றிற்கு இணையாகவும் சைவ மடங்கள் முழுமையான சமய பண்பாட்டு நிறுவனங்களாக வளர்ச்சியுற்றன. சோழர்காலத்தில் கோயிற் பூசைகளும், விழாக்களும், அதிகரித்த வேளையில் சைவ மடங்களும் எண்ணிக்கையில் அதிகரித்தன. மடாதிபதிகள் சமயத் தலைவர்களாக, பண்பட்ட ஆன்மீக வாதிகளாக இருந்து சமுதாயத்தின் மேன்மக்களையும், பாமரர்களையும், தங்கள் சமயத்தின்பாற் கவர்ந்தனர். தாங்கள் மடாதிபதிகளாக இருந்து மடங்களை நிர்வகித்ததுடன் சமய, தத்துவ அறிவை மக்களிடையே பரப்பினர். கல்வி பொதுமக்களின் நல்வாழ்வு ஆகியவற்றிற்கான பங்களிப்பைச் செய்து சைவ சமயத்துக்கான, சமுதாய அடிப்படையை வேரூன்றச் செய்தனர். முறையான கல்வி மடங்களாகச் செயல்பட்ட சைவ மடங்கள் மரபு வழியான 18 வித்தைகளை உயர்நிலையில் மக்களிடையே போதித்து வந்தன. சமயக் கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து வந்த இம்மடங்களின் சீடர்கள், துறவிகள், பிராமணர்கள், பக்தர்கள், ஒதுவார்கள் ஆகியவர்களுக்கென சோழமன்னர்களும் சிற்றரசர்களும் அதிகாரிகளும் நிவந்தங்கள் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். முதலாம் இருபெரும் சோழமன்னர்கள் மேலைச்சாளுக்கியப் போரில் பெற்ற பெருஞ்
125

Page 142
செல்வத்தைப் பெரிய கோயிலுக்கும் காங்காபுரியின் சோழிச்சுரத்திற்கும் உரிமை ஆக்கினார்கள். மூன்றாம் குலோத்துங்கன் 1203 அளவில் பாண்டி நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று அங்கு பொன் வரி வசூலித்துச் சிதம்பரம், பூரீரங்கம், திருவாரூர்க் கோயில்களுக்கு இறையிலி நிலங்களின் வருவாயோடு சேர்த்து அளித்தான். கொங்கு நாட்டை வென்ற ஆதித்த சோழன் தங்கம் கொண்டு வந்து சிதம்பரத்தைப் பொன் வேய்ந்தான். பராந்தகனும், குலோத்துங்கனும் ஏனைய மன்னர்களும் இத்தகைய முறையிற் சிதம்பரத்திற் பொன் வேய்ந்தார்கள். இந்த வகையில் சோழ மன்னர்களைத் தம் பொருளாதாரச் செழிப்பினால் பெற்ற பொருளையும் போர் வெற்றியினால் கவர்ந்து வரப்பட்ட பொருட்களையும் கோயிலுக்கு உரியதாக்கி தங்கள் அரசியல் இயக்கத்தால் கோயில்களை மக்கள் நலச் சாதனங்களாக ஆக்கிக் கொண்டனர்.
நீதி நிர்வாகம் தழைக்க இக்கோயில்களே பெரிதும் பயன்பட்டன. உலாச் சென்ற மன்னர்கள் இக்கோயில்களிலாவது அல்லது கோயில்களைச் சார்ந்த மடங்களிலாவது தங்கினர். இதனால் மக்களின் குறைகளை மன்னன் நேரடி விசாரணை மூலம் தீர்க்கக் கூடியதாக இருந்தது. நீதி விசாரணை நடத்திய கிராம சபைகள் கோயில்களில் அமர்ந்து தான் செயற்பட்டன. கொலைக்குற்றம் போன்ற குற்றங்கள் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குரிய தண்டனையை, கோயில்களை மையமாக வைத்துப் பெற்றார்கள். நந்தா விளக்குகளைக் குற்ற வாளிகளைக் கொண்டு கோயில்களில் எரிக்கச் செய்தார்கள். இவ்வாறு சோழ நாட்டின் நீதி நிர்வாகம் கோயில்களை மையமாகக் கொண்டியங்கியது. இறந்து போன சோழமன்னர்களுக்குச் சமாதிக் கோயிலாகப் பள்ளிப்படைகள் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் காலமாகிய போது அவன் மகன் பராந்தகன் ஆதிச்சேச்சுரர் என்ற பள்ளிப்படைக் கோயிலைக்" கட்டினான். முதலாம் ராஜேந்திரன் தன் தந்தையின் சிலையை பெரிய கோயிலின் உற்சவ மூர்த்தி வெளிவருவதற்கு முன்பு உலாச் செல்ல ஏற்பாடு செய்தான். ஆகவே அக்காலக் கோயில்கள் எல்லாம் அரசியலுக்குச் சார்பாகவே நின்றதை இஃது
126

விளக்குகிறது. சோழர் காலக் கோயில்கள் அரசியலுக் கிருக்கையாகவும், சாதனங்களாகவும் செயல்பட்டாலும் நாட்டில் அரசியல் இரண்டுபடுகின்றபோது நடுநிலமை வகித்தன என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
சோழர் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் அனைத்தும் அரசியற்செல்வாக்குடன் விளங்கியதால் அவை நாட்டின் பொருளாதாரத்திற் கணிசமான அளவில் பங்களிப்புச் செய்தன. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஏற்பட்ட நன்கொடைகள், அவை வட்டிக்குக் கொடுக்கப்பட்டமுறை, வெளிநாட்டுப்படை யெடுப்பால் அக்கோயிலுக்குரித்தாகிப் போன தங்கம் வெள்ளி ஆகிவற்றின் அளவைப் பொறுத்து நாட்டின் நாணயச் செலவாணியை வரையறை செய்யப்பட்ட விதம் ஆகிய செய்திகள் அக்காலப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பைக் கட்டுப்படுத்தும் செயல்திறன் கொண்டவையாக கோயில்கள் விளங்கின என்பதற்குச் சான்றாக உள்ளன.
அக்காலப் கோயில் ஏராளமானோருக்கு தொழில் வழங்கும் நிறுவனமாகச் செயற்பட்டது. அத்துடன் வட்டி கருதி கடன் கொடுக்கும் வங்கிகள் , உடற்பிணி போக்கும். சத்திரங்கள், அன்னதான மடங்கள், யாத்திரீக இல்லங்கள் அனைத்தும் கோயில்களில் ஏற்பட்டு இருந்தன. அத்துடன் ஏராளமான தனியார் அல்லது ஸ்தாபன அறக்கட்டளைகளை நிர்வாகம் செய்யும் மேற்பார்வை இயக்குநராகவும் அவை செயல்பட்டன. இந்து சமய வளர்ச்சிக்குப்பிற்காலத்தில் பெருந்தொண்டாற்றிய மடங்களைக் கல்விச் சாலைகளாகவும் அறக் கோட்டங்களாகவும், நடத்துவதற்கு அம்மடங் களுக்கு அருகில் இருந்த கோயிலகளே காரணமாக இருந்தன. பாட்டும், பரதமும் கோயில்களின் நடனச் சாலையில்தான் நடந்தன. ஒதுவார்கள் பாடகர்கள். தாளவாத்தியக்காரர்கள், ஆகியோர் கோயில்களில் இருந்த தேவாரப் பாடல்களைப் பண்ணோடு படித்து வந்தார்கள். கோவில்களை மையமாகக் கொண்டே சிற்பம், ஒவியம் போன்ற நுண்கலைகளும் வளர்ச்சி யடைந்தன. இங்கு இதிகாச புராணங்கள். விளக்கப்பட்டன. நல்லாசிரியர்களால் திண்ணைப்
ஆய்வரங்கு 2008

Page 143
பள்ளிக் கூடங்கள் கோயில்களில் நடத்தப்பட்டன. சரசுவதி பண்டாரம் என்றழைக்கப்பட்ட நூல் நிலையங்கள் கோயில்களில் ஏற்பட்டு இருந்தன. திருமுறை ஏடுகளைப் பாதுகாக்கவும் படியெடுக்கவும் தமிழ் விரகர் என்ற அலுவலர், நியமிக்கப்பட்டிருந்தார் என்பதை இரண்டாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கூறுகிறது. சிதம்பரக் கோயிலிற் காணப்படும் 1251 ஆம் ஆண்டுக்குரிய கல்வெட்டின்படி கோயில் நூலகருக்கு பண்டார உத்தியோகமுடையார் என்ற உத்தியோகப் பெயர் வழங்கியது என்பது தெளிவாகிறது. இலக்கியப் படைப்புகள், கவிதைகள் அனைத்தும் கோயிலிலேயே அரங்கேற்றப்பட்டது. நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற ஆடவரும், பெண்டிரும் கோயில்களிலேதான் தங்களுடைய கலைத் திறனை உலகறியச் செய்தனர். கோயிலில் அரங்கேறிய பின்புதான் மக்கள் அங்கீகரிக்கக் கூடிய திறனைப் பெற்றவர் என அவர்கள் கருதப்பட்டார்கள்.
மேலும் சோழர் கோயில்களில் நடைபெறும் திருவிழாவைக் காண மக்களும் மன்னரும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்
 

அணிதிரண்டு கோயிலுக்கு வருவர். இதனால் சமுதாய ஒற்றுமையுணர்வு வளர்வதற்கும் நாட்டைப்பற்றிய அறிவு வளர்வதற்கும், கடவுளுணர்வும் அரசபற்றும் நிலைப்படுவதற்கும் இத் திருவிழாக்கள் உதவின. சமுதாயத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில் அக்கோயில்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் அளித்தன. மன அமைதியற்ற மக்களுக்கு அடைக்கலம் நல்கும் அன்னையாக விளங்கின. அரசியல், சமூக பொருளாதாரம் சார்ந்த எல்லாப் பிரச்சனைகளின் தீர்வுகளைக் கோயில்களிலே தான் கல்லெழுத்துக்களாகப் பதித்து வந்தனர். அரச ஆணைகள் ஒலைகளில் எழுதப்பட்டாலும் கல் வெட்டுக்களில் அவை செதுக்கப்பட்ட பின்புதான் நிரந்தரமுடைய பத்திரங்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றன. ஆகவே சோழர்காலக் கோயில்கள் பத்திரங்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களாகவும் விளங்கின. அதுமட்டுமன்றிச் சோழர் காலத்தைப் பற்றி நமக்கு நிரூபணமான செறிவான செய்திகளைக் கொடுக்கின்ற வரலாற்றுப் பெட்டகங்களாகவும் கோயில்கள் விளங்குகின்றன.
127

Page 144
சோழர்கால
காலத்திற்குக் காலம் கருத்துகள் மாறுகின்றன. கருத்து மாற்றங்களுக்கு ஏற்ப, இலக்கிய புத்தெழுச்சியும் வளர்ச்சியும் நிகழ்கின்றன. சங்க கால இலக்கியங்களிலிருந்து பல்லவர் கால இலக்கியங்களும் பல்லவர் கால இலக்கியங்களிலிருந்து சோழர் E IT 6Ս இலக்கியங்களும் மாறுபடுகின்றன. காலத்திற்குக் காலம் மாறுபாடு நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது.
பல்லவர் காலத்திற்கும் சோழர் காலத்திற்கும் இடையே காணப்படும் இலக்கிய வேறுபாடுகள், கலைப்பணிகளில் காணலாகும் வேறுபாடுகள் போல் குறிப்பிடத்தக்கவை. பல்லவர் வடமொழிக்குத் தலைமை தந்தனர். தமிழுக்கும் ஆக்கம் தேட முற்பட்டனர். இலக்கியத்தில் எளிமை புறக்கணிக்கப்பட்டுச் செறிவு முதன்மை கொண்டது. சோழர்கள் வடமொழிக் கருத்துகளைத் தமிழ்க் கோலமிட்டு ஏற்றனர். இலக்கியங்களில் நெகிழ்வுக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. படைப்புகளில் தெய்வீக மணம் கமழ்ந்தது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. 850 முதல் 1270 வரையிலான காலக்கட்டத்தில்தான் ஏராளமான இலக்கியங்களும் இலக்கண நூல்களும் தோன்றின; தமிழுக்கு அழியாப் புகழ் தேடித் தந்த பெரும்புலவர் பலர் தோன்றினர்.
கம்பராமாயணம், பெரிய புராணம், சிந்தாமணி, சூளாமணி போன்ற பெரும் காப்பியங்கள் தோன்றி இலக்கிய உலகிலும் சமய உலகிலும் அழியா இடம் பெற்ற காலம் சோழர் காலம்.
பல்லவர் காலத்தில் அரும்பிய பக்தி இயக்கம் மொட்டவிழ்ந்து மலராய் மணம் பரப்பிய காலம், சோழர் காலம். பக்தி பாடல்களின் வளர்ச்சிக்கு ஆக்கமளித்த காலமும் இதுவே.
128

600é55ub
சிற்றிலக்கியங்கள் செழித்து வளர்ந்த காலமும் இதுவே. பரணி, உலா, பிள்ளைத்தமிழ், அந்நாதி, கோவை முதலியன தரத்தாலும் எண்ணிக் கையாலும் தமிழை வளப்படுத்தின.
புராணங்களின் தோற்றுவாய்க்கான பின்னணியை அமைத்துத் தந்தது இக்காலமே. தமிழில் புராணங்கள் 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே எழுகின்றன. ஆயினும் காப்பியங்கள் எனப் போற்றப்பெறும் பெரியபுராணம், இராமாயணம் ஆகியவையும் கூடப் புராணச் சாயல் கொண்டவையே. தல புராணங்கள் பிற்காலத்தில் எழுந்தன என்றாலும் அவற்றிற்குரிய வித்து சோழர் காலத்தில் விதைக்கப்பட்டது.
இக்கால இலக்கிய வானில், சிறந்த உரையாசிரியர்கள் சுடர்விட்டு ஒளி வீசினார். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார், பரிமேலழகர் போன்ற இலக்கண, இலக்கிய உரையாசிரியர்கள் தோன்றித் தமிழுக்குப் பெருஞ் சேவை புரிந்தனர். சைவ நெறியை விளக்கவந்த சித்தாந்த சாத்திர ஆசிரியர்களும், நஞ்சீயர் முதல் பெரிய சீயர்வரை தோன்றிய திவ்யப்பிரபந்த உரையாசிரியர்களும் சமய உலகில் அழியாப் புகழ் பெற்றனர்.
தமிழ்மொழிக்குக் கிடைத்த பன்முகப் பெருவளர்ச்சி, பல வகையான இலக்கண நூல்கள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தைத் தோற்றுவித்தது. வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், தமிழ்நெறிவிளக்கம், அகப்பொருள் விளக்கம், களவியற் காரிகை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்கராம், வெண்பாப்பாட்டியல், பன்னிருப்பாட்டியல் முதலிய இலக்கணங்கள் இக் காலத்தில் எழுதப்பட்டன.
ஆய்வரங்கு 2008

Page 145
தமிழக வரலாற்றின் சில பகுதிகளைத் துல்லியமாகக் கணிப்பதற்கும், பிற்காலச் சோழர் குலமரபு பற்றித் தெளிவுற அறிவதற்கும், இடைக்காலத்தில் தமிழ் உரைநடையில் அரும்பிய புதிய கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் பெருந் துணையாக உள்ள கல்வெட்டுகள் பெரும் எண்ணிக்கையில் எழுந்த காலமும் இதுவே.
காப்பியங்கள்
தமிழ்க் காப்பியங்களில் பதினைந்துக்கும் மேற்பட்டவை சோழர் காலத்தைச் சார்ந்தவை. காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்திருப்பவை சிலவே. சிலவற்றிற்குச் சில பாடல்கள் மட்டுமே, அவற்றின் காப்பியப் பகுதியாகக் கிடைக்கின்றன. சிலவற்றிற்கு அவையும் இல்லை; வெறும் பெயர் மாத்திரமே உரையாசிரியர்களால் சூட்டப் படுகின்றன. தமிழ் இலக்கிய பரப்பில் காலந்தோறும் எண்ணிறந்த நூல்கள் இயற்றப்பட்டிருப்பினும் இயற்றப்பட்ட அத்தனை நூல்களும் இன்று நம் கைக்குக் கிடைத்திருப்பதாகக் கூற முடியாது. கால வெள்ளத்திற்கும் கரையான பசிக்கும் சமயக் காழ்ப்புக்கும் சரியான பராமரிப்பின்மைக்கும் பலியாகி, ஏரளமான நூல்கள் மறைந்துவிட்ட உண்மை நம்மை உறைந்துபோகச் செய்கிறது.
சீவக சிந்தாமணி
சிந்தாமணியென்பது, இந்நூற்குத் தன்மையால் வந்த பெயரென்பர்; புலவர் சிந்தித்தவற்றையெல்லாம் தருதலின்’ இது சிந்தாமணியென்று பெயர் பெற்றது.
சச்சந்தன் மகனாகிய சீவகன், எண்மரை மணம் புரிந்து, வாழ்வின் எல்லாப் பேறுகளையும் முற்றத் துய்த்து, இறுதியில் வீடுபேறு நோக்கித் துறவு பூண்டதைக் கூறும் சிந்தாமணிக்கு “மணநூல்” என்ற பெயரும் உண்டு. இந்நூல் நாமகள் கலம்பகம் முதல் முத்திக் கலம்பகம் முடிய. 3145 விருத்தப் பாடல்களைக் கொண்டது. ‘விருத்த உருவை நெம்பாடலுக்கு ஆக்கும் முயற்சியில் வெற்றியுடன் ஈடுப்பட்டவர் திருத்தக்கதேவர். இந்நிலையில் அவர் முன்னோடியாக அமைகின்றார். விருத்தத்திற்கு வித்திடாவிடினும் காப்பியத்திற்கு விருத்த வடிவு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

அளித்த பெருமை திருத்தக்கதேவரைச் சாரும்' இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். நச்சினார்க்கினியத்திற்கு முன்பு, இந்நூலுக்குப் பழையவுரையொன்று இருந்ததாகத் தெரிகிறது." இதன் ஆசிரியராகிய திருத்தக்கதேவரைச் சோழ மரபில் பிறந்தவராக நச்சினார்க்கினியர் கருதுகிறார். கம்பரும் சேக்கிழாரும் முன்மாதிரி யாகக் கொள்ளும் அளவிற்கு இவரது கவிதைப் பாங்கு உன்னதம் மிக்கது என்பர். இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு' என டாக்டர் மு. வரதராசன் கருதுகின்றார்.
தன்ஆசிரியர் கட்டளைப்படி நிலையாமையைப் பொருளாகக் கொண்ட நரிவிருத்தம்' என்ற நூலினையும் திருத்தக்கதேவர் இயற்றியதாக கூறுவதுண்டு. திருத்தக்கதேவரின் திறமையை அறிவிப்பதற்காக முதலில் இஃது இயற்றப்பட்டது,
என்பர்.8
திருத்தக்கதேவர் சமண சமயத்தை சார்ந்தவராயினும் அவரது நூல், சமயம் கடந்த ஒன்றாகத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் சமணத்திற்கு இழைக்கப்பட்ட கேடுகள், இந்தத் தமிழ்க் காப்பியத்தைப் பாதிக்கவில்லை. இதனைச் “சிந்தாமணித் தமிழ்ப்பெற்றி” என்று வியந்து ரைக்கிறார் திரு.வி.க. அரசியலில் அறப்போர் சிந்தனையை வலியுருத்தும் இந்நூல் உலக அமைதிக்கு வழிகாட்டி எனப்பாரட்டப் படுகிறது.
கம்பராமாயணம்
96) மாக்காப்பியங்களுக்கு ஒப்பப் போற்றத்தக்க அளவிற்கு வனப்புமிக்கதாக மிளிர்வது கம்பராமாயணம். தமிழ் இலக்கியத்தின் காப்பிய வளர்ச்சி கம்பரின் இராமாயணத்தில் உச்ச நிலை அடைந்தது. எண்வகை யாப்பமைப்புகள் கம்பரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுல் கலிவிருத்தமே மிகுதியாகக் காணப்படுகிறது என்று கூறுவர்." ‘விருத்த மென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பர்” என்பது முதுமொழி. வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாக வைத்து எழுந்த நூலெனினும் காப்பிய மாந்தர் மட்டுமே வால்மீகி வழங்கியவை. கதை
129

Page 146
நிகழ்களனும், மரபும் தமிழ் மண்ணுக்குரியவை. கோசல நாட்டு வருணனையில் சோழ நாட்டு மண்வாசனை வீசுகிறது. அண்ணலும் நோக்கி, அவளும் நோக்கியதில் தமிழ் மண்ணின் அக ஒழுக்கம் புலப்படுகிறது. இது கருதியே, மூல நூலாம் வால்மீகி இராமாயணத்தைக் காட்டிலும் கம்பராமாயணம் பல வகைகளில் சிறப்புடையது என வ.வே.சு.ஐயர் குறிப்பிடுகிறார்." இருப்பினும் இது ஒரு வழிமுறைக் காப்பியம் என்பதை மறுக்க முடியாது. மேலும், இராமாயண மூலகத்தை வால்மீகியி னுடையதாக இருந்தாலும், இராமாவதாரத்தில் கம்பர் கொண்ட பற்றுள்ளத்திற்குக் காரணம் அவர் தனக்கு முன் வாழ்ந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் கொண்ட ஈடுபாடேயாகும். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் தன் நூலை இயற்றிய போதிலும் அதில் உள்ள பக்திச் சுவைக்கு ஆழ்வார்களின் பாடல்களே அடிப்படையாக அமைந்தன என்று கூறுவது பொருந்தும்."
கம்பராமாயணம், காப்பியக் கட்டுக்கோப்பிலே சிறந்து விளங்குகிறது. காட்சிச் சித்திரிப்பிலும், பாத்திரங்களிலும், பண்பு வேறுபாடுகளை நூல் முழுக்க முரண்பாடின்றிக் கொண்டு செல்லும் ஒருமைப்பாட்டிலும், பாத்திரங்களின் உணர்ச்சிக்கேற்ற சந்தவேறுபாடுகளிலும், உரையாடல் திறனிலும் தனக்கே உரிய தனிச் சிறப்போடு நிகழ்வதால் இந்நூலுக்குக் கம்பசித்திரம், கம்பநாடகம்' என்னும் பெயர்களும் வழங்குகின்றன. தமிழின் பாவியப் பேரெல்லையைக் காட்டுவதே கம்பராமாயணமாகும்."
கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களும் 10,500 பாக்களும், 96 வகையான சந்தங்களும் அடங்கியுள்ளன."
கம்பரின் பிறப்பு, வாழ்ந்த காலம் முதலியான இன்னமும் ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பமாகவேயுள்ளன. சோழ நாட்டின் திருவழுந்துTரில் (மூவலூர்) உவச்சர் குலத்தில்
130

ஆதித்தனென்பவரின் மகனாய் இவர் தோன்றினார் என்று கூறுவர். இவரது இயற்பெயர் கம்பன் என்பதாகும்." இவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென்று சிலர் கூறுவர்."
வால்மீகி இராமாயணத்தில் உயர்ந்த மனிதர்களாய்க் கூறப்பட்ட இராமர், இலக்குமணர் கம்பரால் தெய்வங்களாக உயர்த்தப்பட்டதால், இந்தியா முழுவதும் இராமர் வழிபாடு பெருகியது
என்பார் டாக்டர் மு.வரதராசனார்."
கம்பர், உத்தமசோழன் (கி.பி. 970-985) காலத்தவரென்று சதாசிவப் பண்டாரத்தார் கூறுவதால் கம்பர் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரென்று தெரிகிறது.குமரகுருபரர் என்னும் தமிழ் நாட்டுத் துறவியார், கங்கைக் கரையில் இராமயணக் கதையைப் பரப்பிய பின்னரே துளசிதாசர் இந்தியில் இராமயணம் இயற்றினார் என்று டாக்டர். மு. வரதராசனார் கூறுவார்.
கம்பர் சோழ நாட்டைப் பற்றி, இது தியாக விநோதன் என்னும் மன்னனது நாடு, என்று கூறுகிறார். தியாக் விநோதன்' என்பது மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி. 1163 - 1216) பட்டப் பெயர்களுள் ஒன்றாகும். எனவே, இம்மன்னனுடைய காலத்தில்தான் கம்பர் வாழ்ந்தாரென்று க.அ. நீலகண்ட சாத்திரியார் கருதிகிறார். தமிழர் பலர் அயலிடங்களில் நிரந்தரமாகக் குடியேறினர். இதனால் கம்பராமாயணக் கதைகளும், பண்பாடுகளும் , சிற்பங்களும் அங்கெல்லாம் நின்று நிலவுகின்றன."
வளையாபதி
சமண சமயக் காப்பியமான இந்நூல் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்துள்ள எழுபத்திரண்டு பாடல்களும் பல உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பெற்றவைகளேயாகும். இந்நூலாசிரியரின் பெயரும், காலமும் தெரியவில்லை. தமிழறிஞர் மு. அருணாசலம் இந்நூல் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்பார். இவ்வாறு பல தமிழ் நூல்கள் சென்ற நூற்றாண்டு வரையிலிருந்து,
ஆய்வரங்கு 2008

Page 147
ஆங்கிலம் சிறப்புற்றுத் திகழ்ந்தபோது மங்கி மறைந்து போயின என்பார் மு.வரதராசனார்." சென்ற நூற்றாண்டின் பிற்பகுதிவரை இருந்த வளையாபதி காப்பியத்தை தாம் ஒரு மடத்தில் கண்டதாகவும், பின்னர் அதனைத் தேடிச் சென்றபோது அது கிடைக்காமல் போனதாகவும் டாக்டர்.உ.வே.சாமிநாத ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதம்
பாரதத்தை தமிழில் வெண்பா முறையில் பாடியவர் பெருந்தேவனார். தமிழ் இலக்கியப் பரப்பில் பெருந்தேவனார் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றனர். அதனால் இவரைப் பாரதம் பாடிய பெருந்தேவனார், என அழைப்பர். மூன்றாம் நந்திவர்மனின் அவைப் புலவர்களுள் இவர் ஒருவர் என அறிஞர்கள் கருதுகின்றனர்." இவர் பாடிய பாரதம் 12,000 பாடல்களைக் கொண்டது எனக் கூறுவர். ஆனால் இதுவரை கிடைத்திருப்பவை830 பாடல்களே. இவர் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த வேளாளர் எனத் தொண்டை மண்டல சதகம்' கூறுகிறது. இவர் திருமாலிடத்து அளவிலாப் பக்தி உடையவர். இவரது காலம் கி.பி. 832-850-க்குள் என்பர் *.
பாரத வெண்பா, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், அதாவது வெண்பாப் பாட்டும், கதைத் தொடர்பை அமைத்துக் கூறும் உரைநடைப் பகுதியும் கொண்டது. பாடல் பகுதி செந்தமிழ் நடையிலும் உரைநடைப் பகுதி வடசொற்கள் மிகுந்த மணிப்பிரவாள நடையிலும் அமைந்திருக்கிறது. இதில் அடங்கிய பகுதி உத்தியோகப் பருவம், பீஷ்மப் பருவம், துரோணப் பருவத்தில் கி.பி 13ஆம் நாள் போர் வரையில் உள்ள பகுதி ஆகியவையே. இருவருக்குக் கவிசாகரப் பெருந்தேவனார்’ எனவும் அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது.
முத்தொள்ளாயிரம்
இது ஒன்பதாம் நூற்றாண்டின் கடைசிப்
பகுதியில் இயற்றப்பட்டது என்றும் காப்பிய
வரிசையில் சேர்க்கத்தக்கது என்றும் கருதுவர்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

தமிழக மூவேந்தர் ஒவ்வொருவர் மீதும் வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட 300 பாடல்கள் வீதம் 900 பாடல்கள் கொண்ட நூல் இது. ஒவ்வொருவர் மீதும் 900 ஆக, மொத்தம் 2700 பாடல்கள் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆனால் தற்போது புறத்திரட்டு என்ற நூலிலிருந்து கிடைத்துள்ள 109 பாடல்களே எஞ்சியிருக்கின்றன.
சுவை மிகுந்த இந்த நூலில், மூவேந்தர் தம் ஆட்சி முறையும், போர் மரபுகளும் நல்ல மொழி வளத்துடன் எடுத்து இயம்பப்பட்டுள்ளன. இதில் (Լիկ պ60ւ- மூவேந்திரன் பெயர்கள் பொதுப்பெயர்களாகவே - தென்னை , வழுதி, மாறன் எனவும் செம்பியன், கிள்ளி, புனல்நாடன் எனவும் கோதை, வானவன் எனவும் உள்ளன. புறச்செய்திகள் கொண்ட இந்நூலில் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறா அகப்பொருள் மரபு பேணப்பட்டிருப்பது புதுமையாக இருக்கிறது. சொல்நயமும் பொருள்நயமும் அணிநயமும் செறிந்த இப்பாடல்களைப் பாடிய கவிஞர் யாரெனத் தெரியவில்லை.
சூளாமணி
சிறுகாப்பியங்களுள் தலைசிறந்த காப்பியம் சூளாமணியாகும். இது பாயிரத்தோடு,
பன்னிரெண்டு சருக்கங்களையும் இரண்டாயிரத்து முந்நூற்று முப்பது விருத்தப்பாக்களையும் கொண்டதாகும்.* இதன் ஆசிரியர் தோலா மொழித் தேவர். இவர் சமணச் சமயத்தவர். விருத்தப்பாவில் சிறந்த சீவகசிந்தமாணியை விடச் சிறந்த விருத்தப்பாக்களால் ஆனது சூளாமணி யாகும்.*
வடமொழியில் உள்ள புராணக்கதையைக் கருப் பொருளாகக் கொண்டு, திவிட்டன எனும் அரச குமாரனுடைய கதையைச் சூளாமணி கூறுகிறது. இயற்கை வளங்களையும், போர் நிகழ்ச்சிகளையும் இந்நூல் திறம்பட வருணிக்கிறது.
இந்நூலாசிரியரின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டெனக் கருதப்படுகிறது.*
131

Page 148
குண்டலகேசி
ஐம்பெருங்காப்பியங்ளுள் ஒன்றான குண்டலகேசியை இயற்றியவர் நாதகுப்தனார் எனும் பெளத்த சமயத்தவர். இந்நூல் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியவற்றைத் தொகுத்தே இந்நூலாக்கியுள்ளனர். இந்நூலாசிரியர் வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி வலியுறுத்துகிறார். இந்நூலைப்பற்றிய விரிவான செய்திகள் தெளிவாக அறியக்கிடைக்கின்றன.
நீலகேசி
குண்டலகேசி என்னும் பெளத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சைன சமய நூல் இது. நீலகேசித் தெருட்டு’ என்ற பெயரும் இதற்கு உண்டு. இத 894 விருத்தங்கள் கொண்டது. நூலாசிரியர் பெயர் அறியப்படவில்லை.
இந்நூலில் வரும் நீலகேசி என்னும் பெண், சைன முனிவர் ஒருவரின் மாணவி ஆகிறாள். அவள் குண்டலகேசியை எதிர்த்து வாதிட்டுத் தோல்வியுறச்செய்கிறாள். இந்த நூல் முழுவதும் பிற சமய எதிர்ப்பே மேலோங்கி நிற்கிறது. இதன் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு.*
இராசராச விசயம்
இது முதலாம் இராசாரசன் மீது இயற்றப்பட்ட காப்பியமாகும். இதன் ஆசிரியர் நாராயணன் பட்டாதித்தன். இந்நூலில் , முதல் இராசராசனது பிறப்பு, வளர்ப்பு, திருமணம், அவன் ஆட்சி புரியத்தொடங்கினமை, ஆட்சித் திறம், அவனது பெருவெற்றிகள், வள்ளன்மை, அவன் நீதி வழங்கியமை முதலியன காப்பிய முறையில் விரிவாகக் கூறப்பட்டிருக்க வேண்டும். நூல் இப்போது கிடைக்காமையால், வேறு யாதும் நாம் தெரிதற்கில்லை. இது முதல் இராசராசனைப் பற்றியதாதலால், இக்காப்பியம் கி.பி.11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும்." இராராச விசயத்தை விசேட காலங்களில் படிப்பதன் பொருட்டு இப்பட்டாதித்தனுக்கு நிலம் இறையிலியாக
132

விடப்பட்ட செய்தி ஒன்றைக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. *
இராசராசேசுவர நாடகம்
இராசராசன் காலத்தில் அவன் மீது இயற்றப்பட்ட மற்றொரு காப்பியம் இராசராசேசுவர நாடகம் ஆகும். இது ஒரு நாடகக் காப்பியம். இதுவும் இராசராசனின் பிறப்பு வளர்ப்புகளையும், வீரம், நியாயம் முதலிய அருஞ்செயல்களையும், பிற அறச் செயல்களையும் அவன் தஞ்சையில் உருவாக்கிய இராசராச்சசுவரமான பெரிய கோயில் கட்டப்பட்ட வராலாறுகளையும் பற்றிப் பாடப்பெற்றதாதல் வேண்டும். இந்நாடகத்தைத் தஞ்சைப் பெரிய கோயிலில் சிறப்பான காலங்களில் நடித்துக் காட்டி வந்தனர். அங்ங்ணம் நடித்ததற்கு வேண்டும் நிவந்தங்களை முதல் இராசராசனின் மகன் இராசேந்திரன் ஏற்படுத்தினான் என்பது அவனுடைய கல்வெட்டில் விளங்குகிறது. அந்நாடகத்தை இயற்றியவரின் பெயர் முதலிய வரலாறு யாதும் தெரியவில்லை.*
வீரணுக்கன் விசயம்
முதல் இராசேந்திரனது மக்களுள் ஒருவனாகிய வீரராசேந்திரன்வீரணுக்கன்' எனும் பெயரால் அழைக்கப்பட்டான். இவனே, இக்காப்பியத்தின் தலைவன். இக்காப்பியத்தைப் பாடியவர் பூங்கோயில் நம்பி என்பவர். இதன் காலம் கி.பி.11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாதல் வேண்டும்.° வீரராசேந்திரனாகிய வீரசோழன் தன் தந்தையின் காலத்தே போர்ப்பயணம் ஒன்று நடத்தி அதில் வெற்றி பெற்றான் என்பதும், இவ் வெற்றித்திறத்தைப் புகழ்ந்து பாடியவர் இப்பூங்கோயில் நம்பி என்பதும் திருவாரூர் கோயில் முதற் பிரகாரத்திலுள்ள தெற்குத் திருமதிலிற் கண்ட ஒரு சாசனம் தெரிவிக்கிறது.*
குலோத்துங்க சோழ சரிதை
இது 11 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. இந்நூலின் ஆசிரியர் புதுச்சேரிப் பகுதியில் உள்ள திரிபுவனி என்னும் ஊரைச் சேர்ந்த பாவலர் குமுதசந்திர பண்டிதன் திருநாராயண பட்டன் என்பவர். இந்நூல் இயற்றியமைக்காக
ஆய்வரங்கு 2008

Page 149
நூலாசிரியருக்குத் திரிபுவனி ஊரினர், நிலம் இறையிலியாகக் கொடுத்ததை முதற் குலோத்துங்கனது 27 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது.
குலோத்துங்கனது ஆட்சியின் முற்பகுதியில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகள், அக்காப்பியத்தின் கருப்பொருளாதல் வேண்டும் அவன் பிற்பகுதியில் நிகழ்த்திய கலிங்கப்போர் முதலியன அந்நூலில் இடம் பெறவில்லை. எனவே, அதன் ஆசிரியர் கலிங்கத்துப் பரணியாசிரியராகிய செயங் கொண்டார்க்கு முற்பட்டவராவர் எனக் கருதுவது மிகவும் பொருத்தமுடையதாகும்.
கல்லாடம்
கல்லாடத்தை இயற்றியவர் கல்லாடனார். தாம் பிறந்த இடமாகிய கல்லாடம் என்னும் ஊரின் பெயராலேயே இவர் அழைக்கப்படுகிறார். அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகிய தொகை நூற் செய்யுட்களில், பாடல்கள் எழுதிய கல்லாடனார் வேறு, இவர் வேறு. திருச்சிற்றம்பலக் கோவை என்னும் நூலிலிருந்து 100 பாடல்களை இவர் தேர்ந்தெடுத்துத் தம் நூலுக்கு அடிப்படையாக கருப்பொருளாக அமைத்துக் கொண்டார். இவரது இலக்கிய நடை, சங்கச் செய்யுள் போன்று உயர்தமிழ் நடையில் அமைந்துள்ளது.
இந்நூலில், ஒவ்வொரு பாடலிலும் அகத்துறையின் கூறுகள் அடங்கியிருக்கின்றன. “கல்லாடம் கற்றவரோடு மல்லாடாதே’ என்ற பழமொழி இதன் நடை இறுக்கத்தைப் புலப்படுத்தி நிற்கின்றது. எனவே கற்றவரன்றி மற்றவர் இதனைச் சுவைக்க இயலாது.
சிவபெருமானோடு மாணிக்கவாசகர், தருமி, இடைக்காடர் போன்றோர் கொண்டிருந்த தொடர்புகளையும், சிவபெருமானின் பிற அற்புதங்களையும் விளக்கிச் சொல்லும் இந்நூல் மதுரை மாநகர் பின்னணியிலேயே உருவாகியிருக் கிறது.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

கி.பி. 11 ஆம் திருமுறையில் இடம் பெற்றிருக்கின்ற திருக்கண்ணப்பத் தேவர் திருமறம் என்னும் நூலின் ஆசிரியரும் இவராகவே இருத்தல் கூடும். இவர் காலம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட முடியவில்லை. கி.பி. 10ஆம் நூற்றாண்டு என்றும்° கி.பி. 11ஆம் நூற்றாண்டு என்றும் இருவிதக் கருத்துகள் நிலவுகின்றன. "
பெரியபுராணம்
சைவ சமயக் காப்பியமாகிய பெரியபுராணம் 4286 விருந்தப்பாக்களால் ஆகியது." தழுவலாகவே மொழிபெயர்ப்பாகவோ இல்லாமல் தமிழ் மூல காப்பியமாக நிகழ்வது இதுவே. இது சேக்கிழாரால் எழுதப்பட்டது. இவர் சோழ மன்னன் அநபாயனிடம் அமைச்சராக இருந்தவர்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையை முதன் நூலாகவும் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு, சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விரிவுபடுத்தி 4253 செய்யுள்களால் பெரிய புராணம் என்னும் காப்பியத்தை இயற்றினார்.
சோழப் பேரரசில் அமைச்சர் பணியில் இருந்த அவர், நாட்டின் பல பகுதிகளுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கக்கூடும் நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்குத் தாமே நேரில் சென்று அவ்விடங்களில் செவிமரபாக வழங்கிய வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து அறுபத்து மூவருடைய வாழ்க்கையைப் புனைந்திருக்ககிறார். தாம் கேட்டறிந்த செய்திகளையும் கற்றுணர்ந்த சான்றுகளையும் தம் நேரடி அனுபவங்களையும் ஒன்றாக இணைத்து இப்பெருநூல் ஆக்கப்பட்டிருக்கிறது. செவிழியாக வந்த கதைகளுடன் அடிப்படையான சாசனங் ளிலிருந்தும் அவர் குறிப்புகள் எடுத்துத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார்." அவராக எதையும் கற்பனை செய்யவில்லை. எனினும் செவிமரபாக வந்த செய்திகளில் மக்களின் கற்பனை பல, இடம்பெற்றிருக்கக் கூடும். ஆனால் சேக்கிழாரைப் பொறுத்த வரையில், அவர் உண்மை
133

Page 150
என்று உணர்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் எளிய இனிய தமிழில் வடித்துத்தந்தார். ஆகவே இடைக்காலத்து இலக்கியத்தில் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி அறிவிக்கும் ஒரு பெருநூலாக, வரலாற்றுக் கருவூலமாகப் பெரிய புராணம் விளங்குகிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், செயல்முறைகள் ஆகிய பலவற்றை அக்காலத்தில் இருந்தவாறு வரலாற்று போக்கில் அறிவதற்கு உதவுவது இந்த நூலே ஆகும்."
பல இனத்தவரும் பல நாட்டவருமாகிய அடியார்கள் பற்றிய வரலாற்றைக் காப்பியமாக்கியிருக்கும் பண்பு கருதியே பெரிய புராணத்தைத் தேசிய இலக்கியம்' எனக் குறிப்பிடுகின்றனர். 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சேக்கிழார், அநபாயன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சோழனின் காலத்தவர். பெரிய புராணத்தில் 10 இடங்களில் அவர் அநபாயச் சோழனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப்பாடுவதில் வல்லவரான சேக்கிழார், காதல் உணர்வைச் சுவைபடப்பாடும் போதும் இறைவன் திருவருளையே உவமை சொல்ல நினைக்கின்றார். பரவையாரைக் கண்ட ஆரூரின் வியப்பை, அற்புதமோ சிவனருளோ என்று வருணிக்கும் பக்திப் பேரின்ப மிக்கவர்.
இவரது பக்திப்பெருக்கையும் பாடல் திறத்தையும் போற்றி உமாபதி சிவாச்சாரியார் எனும் புலவர் சேக்கிழார் சுவாமிகள் புராணம் என்னும் நூலை இயற்றியுள்ளார். பெரிய புராணம் பாடுவதற்கான காரணம் ஒன்றும் கூறப்படுகிறது. மன்னனும் மக்களும் சீவக சிந்தாமணியின் கவிதைச் சுவையில் மூழ்கியிருந்த நிலமையை மாற்றுவதற்கே சேக்கிழார் பெரிய புராணம் பாடினார் என்பர். இலக்கிய உலகிலும் அரசு மட்டத்திலும் பக்தி நெறியிலும் செல்வாக்குப் பெற்றிருந்த சமண, பெளத்த மதங்களின் ஆதிக்கத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் சைவ, வைணவ சமயங்களுக்கு ஏற்பட்டது என்பதையே இது காட்டுகின்றது. வாய்ப்புக் கிடைத்தபோது சமண, பெளத்த மதங்கள் மீது இலக்கியத்தாக்குதலும் தொடுக்க நேர்ந்தது. அருள்
134

உள்ளத்தவராகிய சேக்கிழார் பெருமானும் “சமண குண்டம்’,“புன் சமயம்’போன்ற வசைமொழிகளைப் புனைய வேண்டி நேர்ந்தது.
இந்தக் காப்பியத்திற்குச் சேக்கிழார் இட்ட பெயர் 'திருத்தொண்டர் புராணம் என்பது. சைவ சமய வரலாற்றைக் கூறும் 11ஆம் திருமுறையிலும் பிற நூல்களிலும் இடம் பெறாத செய்திகள் பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளன. திருநீல கண்டர் இளமையில் துறவுபூண்டதும், சாக்கியர் காஞ்சியில் சிவனை வழிபட்டு முத்தியடைந்ததும், சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டதும் பிற நூல்களில் காணக் கிடைக்காத குறிப்புகளாகும்.
“தொண்டச்சீர் பரவுவார்’ என்று போற்றப்பட்ட சேக்கிழார் பண்பட்ட நெஞ்சம் கொண்டவர். அவர் காலம் வரையில் எத்தகைய பெரியவரையும் “அவன்” என்று ஒருமையிலேயே நூல்கள் குறித்து வந்தன. ஆனால் சேக்கிழார், நாயன்மார் ஒவ்வொருவரையும் ஆண் ஆயினும் பெண் ஆயினும் அவர் என்றே மதிப்புப் பன்மைச் சொல்லால் குறிப்பிட்டுள்ளார். சாதிப் பாகுப்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்காத சேக்கிழார், இறைவன் திருமுன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டினர்.
பொதுமக்கள் காப்பியமாக இதைப் படைக்க நினைத்த சேக்கிழார், தம் பாடல்களுக்கு எளிய சொற்களையே தெரிவு செய்கிறார். திருத்தக்கத்தேவர் கையாண்ட விருத்தப் பாவை எளிய நடைக்கு ஏற்றதாகச் செழுமைப்படுத்தினார்.
அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் மக்களிடையே நிலவிய பழக்க வழக்கங்கள், சடங்குகள், சட்டச் சிக்கல்கள், கல்வி முறை, ஆட்சிமுறை, நீதிமுறை, இசை, நடனம் போன்ற அனைத்துக் கூறுகளின் பதிவேடமாகப் பெரிய புராணம் விளங்குகிறது.
கந்தபுராணம்
கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணம் 103646 செய்யுட்களைக் கொண்ட , ஆறுகாண்டங்களால் ஆகிய நூல். இது வடமொழி நூலான சிவசங்கர சங்கிதையின் ஒரு பகுதியில் கூறப்பட்டிருக்கும் கந்தனின் வரலாற்றைத் தமிழில்
ஆய்வரங்கு 2008

Page 151
தருகிறது. இன்றைய ஆய்வாளர்கள் முருகன் - வள்ளி கதை தமிழகத்ததுவே என்பர். அதில் வடமொழிப் புராணக் கலப்பு உண்டென்றும் கூறுவர்." ஆறுமுகக் கடவுளின் பிறப்பும் சிறப்பும் சூரபன்மாவுடன் போரிட்டு வென்றமையும் வள்ளி, தெய்வானை திருமணங்களும் இந்நூலில் மிக விரைவாகப் பேசப்படுகின்றன. இது சோழர் காலம் ஏற்றுமுற்றிருந்த போது, சைவ சமயம் தழைத்தோங்கிய காலத்தில், அச்சமயவுண்மைகள் வெளித்துலங்குமாறு எழுதப்பட்டது. கச்சியப் சிவாச்சாரியார் காஞ்சிபுரத்தில், ஆதிசைவ மரபில் தோன்றியவர். இவர் காலம் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பர்? யாழ்ப்பாணத் தமிழர்கள் விரும்பிக் கற்கின்ற 69 (5 நூல் கந்தபுராணமேயாகும்.
உத்தர ராமாயணம்
காண்டங்களைக் கொண்ட لا طال கம்பராமாயணம், இராமனுக்கு முடிசூட்டுவதோடு முற்றுப் பெறுகிறது. அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டதே ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டமாகும். இதன் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் என்பர். இது 1510 விருத்த பாக்களால் ஆகியது. இவர்தம் கவித்திறம் நோக்கி இவரைக் “கவிராட்சசன்’ என்றும் “கவிச்சக்கரவர்த்தி” என்றும் “சருவஞ்ஞகவி’ என்றும் பலபடப் பாராட்டுவதுண்டு. இவர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்.
நளவெண்பா
ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவராகக் கருதப்படுகின்ற புகழேந்தி, தொண்டை நாட்டுப் பொன்விளைந்தகளத்தூர் என்னும் ஊரினர். நளோபாக்கியாணம்' என்ற வடமொழி நூலைத் தழுவித் தமிழில் 424 வெண்பாக்களில் மிக அற்புதமான காப்பியம் படைத்தவர். 'வெண்பாவிற் புகழேந்தி’ என்று தமிழ் மக்களால் பாராட்டிப் போற்றப்படும் தகுதி பெற்றவர்.
இவர் முதலில் பாண்டியன் அரசவையில் இருந்ததாகவும், பாண்டிய இளவரசியைச் சோழ அரசன் மணந்த போது சோழப்பேரவைக்கு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

அரசியுடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், முன்பே
சோழ அரசவையில் இருந்த ஒட்டக்கூத்தருக்கு இவர் மேல் பொறாமை ஏற்பட்டதாகவும் கதை கூறுகிறது.
தன்னை ஆதரித்துப் போற்றிய, மாளுவ நாட்டுச் சந்திரன் சுவர்க்கி என்ற சிற்றரசனைத்தன் நூலில் ஐந்து இடங்களில் நன்றி உணர்வோடு புகழ்ந்துரைக்கிறார். இவருடைய காலம் 13 ஆம் நூற்றாண்டு எனக் கருதுவார் சதாசிவப் பண்டாரத்தார்."
யசோதர காவியம்
யசோதர காவியம் என்பது 330 விருத்தங்களால் ஆன சமணக் காப்பியமாகும். வடமொழியில் உள்ள யசோதர சரிதத்தைத் தழுவிச் செய்யப்பட்ட நூல் இது. உயிர்க்கொலை கூடாது என்பதே இந்நூல் வற்புறுத்திக் கூறும் முதன்மைக் கொள்கையாகும். இதன் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு.
திருவிளையாடற் புராணம்
மதுரையைக் களமாகக் கொண்டு சிவபெருமான் புரிந்ததாகக் கூறப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை 1752 விருத்தப்பாக்களில் விரித்துக் கூறும் நூல் திருவிளையாடற் புராணம். இந்நூலினுடைய ஆசிரியரின் பெயர் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பதாகும். பாண்டிய மன்னனின் வேண்டுக்கோளுக்கிணங்க இவர் இக்காப்பியத்தைச் செய்தார் என்பர். இவருடைய குடும்பத்தைச் சார்ந்தோரால் மதுரையில் கி.பி 1277இல் கோபுரம் ஒன்று நிறுவப்பட்டது என்ற செய்தியைக் கொண்டு இவர் 13 நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்வர். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணத்திலிருந்து இந்நூல் சிற்சில இடங்களில் வேறுபடுகிறது. பரஞ்சோதி முனிவர் வரிசைப்படுத்தும் அறுபத்து நான்கு பாண்டிய மன்னர்களில், பத்துக்கும் குறைவான மன்னர்களை மட்டுமே தம் நூலில் நம்பி குறிப்பிடுகிறார். திருவிளையாடல் நிகழ்ந்த வரிசையிலும் இருவரும் மாறுபடுகின்றனர். *.
135

Page 152
சமய இலக்கியங்கள்
பெளத்த இலக்கியங்கள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பெளத்தத்தின் பங்குக் குறிப்பிடத்தக்கது. சமணர் ஆற்றிய அளவுக்குப் பெளத்தரின் தமிழ்த்தொண்டு இல்லையென்றாலும் மணிமேகலை போன்ற சமுதாயப் புரட்சியை மையமாகக் கொண்டெழுந்த காப்பியங்களும், வீரசோழியம் போன்ற வேறுபட்ட மொழி இலக்கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுகின்றன. மறைந்து போன நூல்களில் கணிசமானவை பெளத்த மதத்தைத் சார்ந்தவை. இலக்கிய இலக்கணங்களுக்கு இவர்கள் எழுதிய உரைகளும், தனிப்பாடல்களும் நினைவில் கொள்ள வேண்டிய படைப்புகள். வழக்கில் இருந்து அழிந்துபோன குண்டலகேசி என்னும் நூல் தவிர ஏனைய பெயர் தெரிந்த நூல்கள் பிம்பிசார கதை, சித்தாந்த தொகை, திருப்பதிகம், புத்தநூல், மானாவூர்ப் பதிகம் போன்றவைகளாகும்.
பிம்பிசார கதை
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட பிம்பிசார மன்னனது யாகத்துக்குச் சென்ற ஆடுகளைக் கண்ட புத்தர், பிம்பிசாரனுக்கு நல்லறிவு புகட்டி உயிர்க் கொலையைத் தடுத்து, அவனைத் தன் தொண்டனாக்கிக் கொண்டார் என்பது வரலாற்றுப்புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். இந்திய நாட்டின் பல மொழிகளிலும் இதைப் புலவர்கள் கதையாகவும் கவிதையாகவும் வடித்தனர். தமிழில் இப்படி ஏற்பட்ட ஒரு கவிதை நூல் பிம்பிசார கதை என்பது இதிலிருந்து நான்கு வரிகளை மட்டும் நீலகேசியுரைகாரர் எடுத்துக்கையாண்டுள்ளார். இந்த நான்கு வரிப் பாடலே பிம்பிசார கதையாகும். இது ஒரு பெளத்த காப்பியம். ஆசிரியப் பாவினாலானது அதனுள் புத்தர் வரலாறும் கூறப்படுகிறது. * கி.பி. 14ஆம். நூற்றாண்டைச் சேர்ந்தவராகிய நீலகேசி உரைகாரர் இதைக் குறிப்பிடுவதிலிருந்து பிம்பிசார கதையின் காலம் கி.பி.13 நூற்றாண்டு என ஊகிக்க இடமுண்டு. ܀
136

சிந்தாந்தத் தொகை
இறந்துபோன மற்றொரு பெளத்த நூல் இது. சிவஞான சித்தி பரபக்கவுரையில் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் முதலில் இரண்டு வரிகளையும் பின்னர் முழுப் பாடலையும் தந்து இஃதவர்தம் சித்தாந்தத் தொகை என்கிறார்."
L55 @T60
புத்தன்-சுகதன்:- இந்நூல் துக்கத்தின் நிவாரண மார்க்கத்தை உணர்த்திச் சுகத்தைப் பெறும் மார்க்கத்தைக் காட்டுவதால் இப்பெயர் பெற்றது ‘சுகதநூற்றுணிவு' என்று சொல்லி, சித்தியார் பரக்கவுரையில், ஞானப்பிரகாசர் இரண்டு பாடல்களைக் காட்டுகிறார். ஒன்று விருத்தப்பா, மற்றது வெண்பா, விருத்தத்தைத் திருவொற்றியூர்த் தத்துவப் பிரகாசரும் காட்டுகிறார். இப்பாடல்களால் புத்த சமயத் தத்துவத்தைக் கூறுகின்ற நூல்களும் இருந்தனவென்று நன்கு அறியலாம். இவற்றின் பெயர்களை அறிவதற்கில்லை.*
மானாவூர்ப் பதிகம்
புத்த சமயத்தினர் தங்கள் சமயச் சார்பாகப் பல பெரு நூல்களும் சிறு நூல்களும் இயற்றினர். மணிமேகலை என்ற பெரு நூல் தவிர, ஏனைய யாவும் இறந்த போயின. அவ்வாறு மறைந்து போனவற்றுள் மானாவூர்ப்பதிகம் என்பதும் ஒன்று. நீலகேசியுரையில் சமயதிவாகரவாமன முனிவர் இதன் பாடல்களில் இரண்டை எடுத்துக் காட்டுவதால் இந்த நூல் இருந்ததை அறிகிறோம்."
பிறநூல்கள்
புத்த சமயத்தினராகிய பெருந்தேவனார் தனது வீரசோழிய உரையில் புத்த சமயப் பாடல்கள் பலவற்றைத் தருகிறார். யாப்பருங்கல விருத்தியுரையிலும் இத்தகைய பாடல்கள் பல காணப்படுகின்றன. இவற்றை ஆராயும் போது, எல்லாவகையிலும் சிறப்புடைய பெளத்த சமய இலக்கியங்கள் பல இருந்தமை தெரியவருகிறது. இவை யாவும் காலத்தில் அழிந்து போயின. அரசியல் ஆதிக்கம் பெறத் தொடங்கிய சமணர்கள்
ஆய்வரங்கு 2008

Page 153
பெளத்தரை ஒடுக்கத் தலைப்பட்டனர். அவ்வாறு ஒடுங்கிய காலத்தில் பெளத்த சமய நூல்களும் போற்றுவாரின்றி அழிந்தன எனக் கருதலாம். *
சமண இலக்கியம்
களப்பிரர் மரபில் வந்தவர்களாகக் கருதப்படுகின்ற சைன சமயத்தினர் காலப்போக்கில் தமிழ் மக்களாக, தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவர்களாக, மொழியின் இலக்கணஇலக்கியத் தேவை அறிந்தவர்களாகத் தமிழ்நாட்டில் காலூன்றினர். தமிழ்நாட்டில் களப்பிரரின் அரசியல் ஆதிக்கம் மேலோங்க மேலோங்கச் சைன சமயச் செல்வாக்கும் மேலோங்கியது. சைனம் அரசுச் சமயமாகச் சிறப்பு பெற்றது. இந்தச் சூழல் சைன இலக்கியத் தோற்றுவாய்க்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரிந்தது. ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும் அதன் பின்னும் பல நூல்கள் இயற்றப்பட்டன. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஐந்து நூல்கள் இவர்களால் எழுதப்பட்டவை. இலக்கியத்தில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றிய பெருந்தொண்டு குறிப்பிடத்தக்கது. இவ்விலக்கணத் தொண்டு சோழர் காலத்தில் பெருமளவில் அமைந்தது.
காப்பியங்கள்
சமயம் கடந்த ஒன்றாகத் தமிழ் மக்களால் ஏற்றுப் போற்றப்படும் சீவக சிந்தாமணியும் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை முழுமையாக இருந்ததாகவும் பின்னர் மறைந்து விட்டதாகவும் தெரியவருகிற வளையாபதியும், யாப்பருங்கல விருத்தியுரையினால் மட்டுமே அறியவருகின்ற கலியாணன் கதையும், யாப்பருங்கலம் மற்றும் காரிகை உரைகளால் தெரியவருகின்ற பாவைப்பாட்டும், சிறு காப்பியம்’ எனப்பலர் குறிப்பிட்ட போதிலும் பேரிலக்கியமாக இலங்குகின்ற சூளாமணியும், குண்டலகேசி என்னும் பெளத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்ததும் சைன சமயத் தத்துவம் போதிப்பதற் கென்றெழுதப்பட்டதுமாகிய நீலகேசியும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் எடுத்துக்காட்டும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

அமிர்தபதியும், புறத் திரட்டில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதும் சைனப் பெரியார் வரலாறு கூறும் காப்பியமென்று கருதத் தக்கதுமான நாரத சரிதையும் இவர்கள் எழுதிய காப்பிய நூல்களில் சில.
உரை நூல்
திருக்குறளுக்கு உரை செய்த மணக்குடவர்
ஒரு சமணராவார். தொல்காப்பிய உரையாசிரியர்
இளம்பூரணரும் சமணரே.
9D T6)
சைனர்கள் மேற்கொண்டொழுகத் தக்க அறங்களைப் பொதிந்து வைத்த பேழை போன்றமைந்த அருங்கலச் செப்பும், அருங்கலச் செப்பைப் பின்பற்றி அமைந்த அறநெறிச்சாரமும் அற நூல் வரிசையில் குறிப்பிடத்தக்கவை. அருங்கலச் செப்பில் சுருக்கமாக உள்ள செய்திகள் பலவற்றை அறநெறிச் சாரத்தில் விளக்கமாகக் காணலாம். இருநூற்று இருபத்தாறு வெண்பாக்களைக் கொண்ட இதனுள் பொதுவகையான அறநெறிகளும் சைன சமயத்திற்கே உரிய சிறப்பு ஒழுக்கங்களும் சுட்டப்படுகின்றன.
சைவ இலக்கியம்
சமண பெளத்த மதங்களை எதிர்த்துத் தமிழகத்தில் கிளர்ந்த பக்தி இயக்கம், சைவ வைணவ மதங்களின் எழுச்சிக்கு வித்திட்டது. காலப்போக்கில் சமணம் வீற்றிருந்த இடத்தைச் சைவம் கைப்பற்றிக் கொண்டது. இதற்காக போராடும் அவசியம் இறையடியார்களுக்கு சேர்ந்தபோது அதை ஒர் இயக்கமாக நடத்த வேண்டிய தேவை எழுந்தது. பக்தி உணர்வின் மூலம் மக்களை ஒருங்கிணைத்து அரசயுைம் அதிகார வர்க்கத்தையும் எதிர்க்கும் துணிச்சலை மக்களிடையே வளர்த்தனர். ‘நாமார்க்கும் குடியல்லோம் என்றும், சேரவாரும் செகத்தீரே' என்றும் பாடி மக்களைப் பரவசப்படுத்தினர். சமுதாயத்திலுள்ள பலரும் சேர்ந்து அனுபவித்துப் பாடக்கூடிய பொது உணர்வு நிலை யில் பல பாடல்களை இயற்றினர்."
137

Page 154
பல்லவர் காலத்திலே தலைதூக்கிய சைவம் சோழப்பேரரசிலே அரசமதமாகிப் பெருஞ் சிறப்புற்றது. அக் காலத்திலே அதன் வரலாற்றை எழுதினார்கள்." அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலிய சமயக் குரவர் நால்வர் பாடிய நூல்கள் உள்ளிட்ட சைவத்திருமுறைகள் சோழர் காலத்தில் தொகுக்கப்பட்டன.
மாணிக்கவாசகர்
சமயக் குரவர் நால்வருள் முதல் மூவர் எட்டாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியைச் சார்ந்தவர்கள். மாணிக்கவாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியவர் என்று சிலரால் கருதப்பட்டாலும் இவர் 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ கி.பி. 10 நூற்றாண்டின் தொடக்கத்திலோ பாண்டிய மன்னன் இரண்டாவது வரகுணன் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலன ஆராய்ச்சியாளரின் முடிபு.’ இவர் பாடிய திருவாசகம் சிவபெரு மானைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுதி. திருக்கோவையார் என்னும் நூலும் இவர் பாடியதே. அதில் நானூறு பாடல்கள் உள்ளன. காதல் துறைப் பாடல்களாக அமைந்த இவை. சிவபெருமானை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் கொண்டு பாடப்பெற்றவை. ஆயினும் பக்திப் பாடல்களாகச் சிறப்பு பெற்றவை, திருவாசகத்திலுள்ள 650 பாடல்களேயாகும். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. வேற்றுச் சமயப் பிரச்சாரகரின் - ஒரு கிறித்தவப் பாதிரியாரின் உள்ளத்தையும் இந்தப் பக்தி நூல் கொள்ளை கொண்டிருக்கின்றது. ஜி.யு.போப் இதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்திருக்கிறார். திருவாசகத்தில் கிறித்துவ மத உணர்ச்சிப் பாடல்களும் ஆங்காங்கே காணப்படுவதாகச் சொல்லப்படுவதுண்டு.* மக்களிடையே பெரு வழக்கில் இருந்த நாட்டுப் பாடல் வடிவங்களைத் தன் நூலில் அமைத்து அவற்றிற்கு மிகப் பெரிய இலக்கியத் தகுதி வழங்கியிருக்கிறார் மாணிக்க வாசகர். திருவாசகத்தில் உள்ள திருவம்மானை, திருப்போற்சுண்ணம், திருக் கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருத்தோள்நோக்கம்,
138

திருச்சாழல், திருப்பூவள்ளி, திருப்பொன்னுரசல் ஆகியவை அவ்வாறு பாடப்பெற்றவை. இளம் பெண்கள் ஆடிப் பாடும் பாடல் வடிவங்கள் இவை.
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற கவிதையுணர்வை நமக்கு உரிமையாக்கியவர்மாணிக்க வாசகர். அவருடைய பக்தி நெறியிலும், அவர் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கித்திளைத்து அனுபவித்த முறையிலும் வெப்பத் தன்மை பெற்ற உணர்ச்சி ஒளிர்கின்றது. தமிழ் மொழிக்குரிய மென்மை, இனிமை ஆகியவை முழுமை உருவெடுத்துத் திருவாசகத்தின் பாடல்களில் அமைந்திருக்கின்றன. அவைகளின் மெருகு பெற்ற கட்டமைப்பும், எளிய நடையும் தித்திக்கும் ஒசைப் பண்பும், மெய்ப்பாடுகளைக் காட்டக்கூடிய வெவ்வேறு விதமான மன நிலைகளின் சித்திரங்களும் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கும் மாணிக்கவாசகருக்கு , தமிழில் உள்ள தலைசிறந்த இசைக் கவிகளுக்குள் முதன்மையான இடத்தைக் கொடுத்திருக்கின்றது."
பட்டினத்தடிகள்
பட்டினத்தார் என்ற பெயரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பட்டினத்தார் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர். கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்முணிக்கோவை, திருவிடை மருதூர் மும்முணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது முதலிய ஐந்து பிரபந்தங்கள் பாடியவர்.
இவர் பாடிய ஐந்து பிரபந்தங்களிலும் அடங்கிய பாடல்கள் 192, இப்பாடல்களின் பொருட்பொலிவை ஆழ்ந்து ஆராயும்போது, இலக்கியச் சுவையிலும் பக்திப் பெருக்கிலும் சமய நுணுக்கத்திலும் இவருக்கு இணையாகப் பிறர் ஒருவரையும் சொல்லத் தோன்றவில்லை. *
ஆய்வரங்கு 2008

Page 155
நம்பியாண்டார் நம்பி
சைவச் சான்றோர்களாகிய மூவர் தேவாரப் பாடல்களையும் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தையும் பின் வந்தோர் பாடிய பாடல்களையும் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
இவர் சிறுவயதிலேயே திருநாரையூரில் இருந்த பொல்லாப் பிள்ளையாரின் தாக்கத்தால் சைவ சமயத்தில் ஈடுபட்டுப் பெரும் தமிழ்ப் புலவராய் விளங்கியவர். கி.பி. 985 இல் அரியணை ஏறிய சோழப் பேரரசன் இராசராசன் காலத்தவர். இந்தப் பேரரசன் தேவாரப் பாடல்கள் சிலவற்றைக் கேட்டு அவற்றின் பக்திச் சுவையில் ஈடுபட்டு அப்பாடல்கள் முழுவதையுமே தேடிப்பெற வேண்டுமென்று நம்பியின் துணையை நாடினான். நம்பியும் அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார். தேவாரப் பாடல்கள் முழுவதுமே சிதம்பரம் பெரிய கோயிலின் உள்ள அறை ஒன்றில் இருப்பதாகத் தெரியவந்தது இராசராசனின் துணையுடன் அவ்வறையைத் திறக்கச் செய்து செல்லரித்த சுவடிகள் போக மீதி உள்ளவற்றை ஒழுங்குபடுத்தி 6) Աք திருமுறைகளாகத் தொகுத்தார். இதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகவும் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பதின்மர் இயற்றிய திருவிசைப்பாமாலை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும், திருவால வாயுடையாரின் திருமுகப்பாசுரமும் மற்றும் பதின்மர் பாடிய 29 பிரபந்தங்களும் பதினோராம் திருமுறையாகவும் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப் பெற்றன. நம்பியும் சிறந்த தமிழ்ப்புலவர் ஆதலால் அவர் Li fTiș LL திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய 10 நூல்களும் இத்திருமுறையின் இறுதியில் சேர்க்கப்பட்டன. இவற்றில் முதல் ஏழு திருமறைகளை மட்டும் நம்பியாண்டார் நம்பி தொகுத்தார் என்றும் மற்ற நான்கு திருமுறைகளை நம்பி தொகுத்திருக்க முடியாது என்ற கருத்தும் உண்டு.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சைவ சித்தாந்த நூல்கள்
தமிழில் முதன் முதலில் தோன்றிய சைவசித்தாந்த சாத்திர நூல் மெய்கண்டாரின் சிவஞான போதமாகும். அவர் காலம் முதலாகத் தோன்றிய ஆசிரிய மாணவர் பரம்பரை “மெய்கண்டார் பரம்பரை” என்றும் “மெய்கண்ட சந்தானம்” என்றும் வழங்கப்படும். சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்றும் மெய்கண்ட சாத்திரங்கள் என்றும் வழங்குகின்ற சாத்திர நூல்கள் பதினான்கு.
இவற்றுள் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்ற இரு சாத்திர நூல்கள் சிவஞான போதம் செய்த மெய்கண்டார் காலத்துக்கு முன்னமே தோன்றியவை. இவற்றின் காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு." இவற்றைச் செய்தோர் முறையே திருவியலூர் உய்யவந்த தேவரும், திருக்கடவூர் உய்யவந்த தேவரும் ஆவர்.
திருவுந்தியார்
இது 45 தாழிசைகளால் ஆன ஒரு சிறு நூல். தாழிசை ஒவ்வொன்றும் மூன்றடி கொண்டது. இந்த யாப்பு, திருவாசகத்தில் வரும் திருவுந்தியாரைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது. நூலாசிரியராகிய உய்யவந்தார், உந்தி பறத்தலாகிய ஒரு விளையாட்டமைப்பைத் தன் நூலுக்கு அமைப்பாக எடுத்துக் கொண்டார். உந்தி பறந்தலென்பது பெண்களின் விளையாட்டு வகையாகும். பல்வரிக் கூத்துள் ஒன்றாக அடியார்க்கு நல்லார் இதைக் காட்டுவார்.
திருக்களிற்றுப்படியார்
சைவ சாத்திர உரையாசிரியர் அனைவருமே திருக்களிற்றுப்படியாரைக் குறிப்பிட்டுள்ளனர். இது 100 வெண்பாக்களைக் கொண்டது. இப்பாடல்கள் திருவுந்தியார்ப் பாடல் தொடர்களை எடுத்து விரிப்பனவாகவும், அதன் கருத்தை மேலும் விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. விளக்கம் கூறுமிடத்து, திருக்குறள் வரிகளும் திருவாசக வரிகளும் இடம்பெறுகின்றன.
139

Page 156
ஞானாமிர்தம்
இது கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சைவ சித்தாந்த சாத்திர நூல் பதினான்கனுள் ஒன்று. பண்டைச் சைவ நூலாசிரியர் அனைவராலும் மேற்கோள் காட்டப்படுகின்ற மிகச் சிறந்த சித்தாந்த சாத்திரப் படைப்பு. இதன் ஆசிரியர் வாகீச முனிவர்.
இந்நூல் காலத்தால் மெய்கண்டாருக்கு முந்தியது; இது அகவற் பாவால் இயன்றது. கல்லாடம் போன்ற பழைய நூல்களின் தமிழ் நடையைக் கொண்டது. சங்க நூல்களின் சொற்களும் தொடர்களும் அப்படியே இதன்கண் இடம் பெற்றிருக்கின்றன.
ஆசிரியர் சிவாகாமப் பயிற்சி மிக்கவர் எனப்தோடன்றி இந்நாட்டுப் புராண இதிகாசங்களில் நிறைந்த பயிற்சியும் ஈடுபாடு முடையவருமாவார். ‘வினை வகை, தீவினை முதலியன கூறுமிடங்களில் ஆசிரியர், பல இதிகாச வரலாறுகளைக் குறிப்பிடுகிறார்." இந்நூலமைப்பினின்றும், மெய்காண்டாருக்கு முன்னரே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகைப் பாகுபாடு ஏற்பட்டிருந்தது என்று அறிகிறோம். கல்வெட்டாராய்ச்சியில் வாகீச முனிவர் இரண்டாம் இராசாதிராசனின் காலமாகிய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரென்று தெரிகிறது.*
சிவஞான போதம்
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையைப் பன்னிரண்டு சூத்திரங்களில் விளங்கிச் சொல்லும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூலாகிய சிவஞான போதத்தின் ஆசிரியர் மெய்கண்டார். வடமொழியில் உள்ள ரெளரவ ஆகமத்தின் பன்னிரு சூத்திரங்களின் மொழிபெயர்பே சிவஞான போதம் என்றும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மொழிந்த சைவ சிந்தாந்தக் கருத்துகளைத் தொகுத்து வழங்கும் மூல நூலே இப்போதம் என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. மெய்கண்டார் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும்*12ஆம்
140

நூற்றாண்டின் பிற்பாதியைச் சார்ந்தவர் என்றும் ° இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
வைணவ இலக்கியம்
சோழர் கால இலக்கியத்தில் வைணவத்தின் பங்கு முக்கியமானது. உலகப் பெருங்காப்பியமாகிய கம்பராமாயணம் இக்காலத்தில் தான் இயற்றப்பட்டது. நாத முனிகள் ஒர் ஆசிரிய மரபுக்குத் தலைவராக அமர்ந்து வைணவ சமயத்தை வளர்த்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தளித்துள்ளார். தமிழில் மணிப்பிராவள நடையைச் செழுமைப்படுத்தும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
இதைத் “திராவிட வேதம்’ என்றும், இதன் முக்கியப் பகுதியாகிய திருவாய்மொழியைத் “திராவிட உபநிடதம்” என்றும் வைணவ சமயத்தார் போற்றுவர்.
நாதமுனிகள் தொகுத்த பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்திற்குச் சற்றுக் குறைவாயிருந்தும், அந்தப் பேரெண்ணாலேயே இத்தொகுதி பெயரிடப்பட்டிருக்கிறது. பின்னால் திருவரங்கத்தமுதனாரால் இயற்றப்பெற்ற இராமாநுச நூற்றந் தாதியும் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப் பெற்று, பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரமாக ஒருவாறு ஆக்கப்பெற்றது."
நாதமுனிகளின் காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டு என்பர்? நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இயற்பா' 'இசைப்பா' என்று இருவகையாக அமைந்திருக்கிறது; சுமார் ஆயிரம் பாடல்கள் இயற்பாவாகவும் மற்றவை இசைப்பாவாகவும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பாக்களில் வெண்பாவும், பாவினங்களில் விருத்தமும், பிரபந்தங்களில் அந்நாதியும் பெரும்பாலும் காணப்பெறுகின்றன. ஆசிரியம், கலித்துறை, நெடுந்தாண்டகம், குறுந்தாண்டகம்
ஆய்வரங்கு 2008

Page 157
எழுகூற்றிருக்கை போன்ற யாப்பினங்களும், பிள்ளைக்கவி, மடல் போன்ற பிரபந்த வகைகளும் இதில் சிறிதளவு இருக்கின்றன.
தமிழ் இலக்கியத்தில் உள்ள மிகச் சிறந்த இசைப்பாக்களைக் கணக்கிட்டால் அவைகளில் மூன்றில் ஒரு பங்கு திவ்வியப் பிரபந்தத்திலும், மற்றொரு பங்கு திருமுறைகளிலும், மீதமுள்ள ஒரு பங்கு மட்டுமே மற்றெல்லா நூல்களிலும் காணப்பெறும்."
பிற வைணவப் புலவர்கள் திருவரங்கத்தமுதனார்
திருமாலின் ஆலயங்களையும் ஆழ்வார்களையும் குறிப்பிட்டு, இராமானுசர் மீது நூற்றெட்டுக் கலித்துறைப் பாடல் கொண்ட இராமானுச நூற்றந்தாதி பாடிய காரணத்தால் இவர் வைணவ சமயத்தில் சிறப்பாகப் போற்றப்பெறுகிறார். ஆழ்வார்களின் காலமுறைக் கணிப்பிற்கு இந்நூல் பெருந்துணையாக இருக்கிறது. இவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
திருக்குருகைப்பிரான் பிள்ளான்
இவர் பெரிய திருமலை நம்பியின் புதல்வர்கள் இருவருள் ஒருவ்ர். இவருடைய காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டின் இறுதியும் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் முற்பாதியும் ஆகும். பிள்ளான் செய்த நூல்கள் திருவாய்மொழி ஆறாயிரப்படி, பிள்ளான் ரசசியம் என்பன. இவர், பூதத்தாழ்வருடைய இரண்டாம் திரு வந்தாதிக்குத் தமிழ்த் தனியன் ஒன்று செய்தார் என்று கூறுவர்."
தனியன்
நாதமுனிகள் காலம் தொடங்கி மணவாள மாமுனிகள் காலம் வரையில், வைணவ சமயத்தில் தோன்றிய அடியவர்களும் ஆசிரியர்களும் தத்தமக்கு விருப்பமான ஓர் ஆழ்வாரை யும் அவர் நூலையும் சிறப்பித்துப் பாடல் பாடியிருக்கிறார்கள். சிறப்புப் பாயிரம் எனப் புனையப்பட்ட இப்பாடல்களைத் “தனியன்”என்று கூறுவது 606) 60OT 62j DJ L. நாதமுனிகளே இவ்வாறு
“சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

மதுரகவியையும் பெரியாழ்வாரையும் குறித்துப் பாடினார் என்பது வரலாறு. இப்பாடல்கள் வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறையில் அமைந்தள்ளன. தற்போது கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை சுமார் 50 இருக்கும். இவை பெரும்பாலும் கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகளில் பாடப்பெற்றவை.* பாடியோரில் குறிப்பிடத்தக்கவர் வருமாறு :
உய்யக் கொண்டார்
இவர் திருவெள்ளறையில் அவதரித்தவர். நாதமுனிகளின் சீடராய்த் தொண்டு புரிந்தவர். ஆண்டாள் பாடிய திருப்பாவைக்குரிய இரு தனியன்களும் உய்யக்கொண்டாரால் எழுதப் பெற்றவை.
மணக்கால் நம்பி
மணக்கால் என்னும் ஊரிலே பிறந்தவரான இவர் மணக்கால் நம்பி எனப் பெயர் பெற்றார். உய்யக்கொண்டாரின் சீடராய் எல்லாச் சமய நூல்களையும் கற்றார். இவர் மிக்க ஆசாரிய பக்தி உள்ளவர் குலசேகராழ்வார் பாசுரங்களாகிய பெருமாள் திருமொழிக்கு மணக்கால் நம்பிகள் இரு தனியன்கள் பாடியுள்ளார்.
வியக்கியான நூல்
இராமானுசரின் சீடரான திருக்குருகைப்பிரான் பிள்ளான் செய்த திருவாய்மொழி வியாக்கியானம் ஆறாயிரப்படியே வைணவ மரபில் முதன் முதலாகத் தோன்றிய வியாக்கியானம் நூல் என்பர். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, ஆகிய ஆசாரியர்கள் முறையே 9,24,36 ஆயிரப்படி வியாக்கியனங்கள் செய்யவும், பின்னால் வாதிகேசரி அழகிய மணவாளர் 12 ஆயிரப்படி செய்யவும், தோற்றுவாயாயிருந்தது இவ்வுரையே.*
மணிப்பிரவாளம்
வைணவர்கள் தமிழுக்குத் தந்த கொடையாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஆனால், பின்னர் அதிகம் போற்றப்படாது வழக்கொழிந்த - மணிப்பிரவாளத் தமிழ் நடை, உண்மையில் சமணர்கள் தமிழில்
14

Page 158
கொண்டுவர முயன்ற நடையாகும். தொடக்கத்தில் அவர்களுடைய சமயக் கருத்துகளும் தத்துவங்களும் அடங்கிய நூலெல்லாம் சமசுகிருதத்திலும் பிராகிருதத்திலும் இருந்தன. இவற்றைத் தமிழில் கொண்டு வர முதலில் அவர்களால் இயலவில்லை. இந்த நிலையைச் சமாளிக்க, சமணர் ஒரு புது வழியைக் கையாண்டனர். சமசுகிருதத்தையோ பிராகிருதத்தையோ தமிழோடு சேர்த்து மணிப்பிரவாளம் என்ற கலப்பு மொழியைப் பிற்காலத்தில் படைத்துக் கொண்டனர். சமணர் தொடங்கிய இத்தகைய நடையைப் பின்பு வைணவரும் தங்களுடைய சமயத் தொடர்பான நூல்களைஆக்குவதற்குக் கையாண்டனர்."
மணிப்பிரவாளத்தில் இருக்கும் வைணவ இலக்கியத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவைகளில் ஒரு பகுதி குருபரம்பரா ப்ரபாவ நூல்கள். இவற்றில் குறிப்பிடத்தக்கது. பின்பழகிய பெருமாள் ஜியர் இயற்றிய குருபரம்பரை. இரண்டாவது பகுதியில் பெரும்பாலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் உரை நூல்களும் சிறுபான்மையாக வைணவ சித்தாந்தம் பற்றியுள்ள நூல்களும் அடங்கும். இவ்வுரை நூல்களும் குருபரம்பரை நூல்களும் சமய இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்று கூறலாம்.
பிரபந்த இலக்கியம்
இன்றுள்ள பட்டியல் இலக்கண நூல்களில் மிகவும் பழமையானதாகக் கருதப்படும் பன்னிரு பாட்டியல், 75 பிரபந்தங்களின் இலக்கணத்தை எடுத்துரைக்கிறது. ஆனால் அவற்றைப் “பிரபந்தம்” என்ற சொல்லால் சொல்லவில்லை; பாவினம் என்றே சொல்கிறது. “பிரபந்தம்” என்ற வடசொல்லுக்கு “தொடர்பாகச் செய்யப்பட்டது” என்பதே பொருள் பேரிலக்கியங்கள் அல்லது தொடர்நிலைச் செய்யுள்கள் அல்லாதனவாய், ஒரு பொருள் குறித்துச் செய்யப்பட்ட ஒரு நெடும்பாட்டுக்கு அல்லது பாடல் தொகுதிக்குப் பிரபந்தம் என்ற பெயரை இப்போது வழங்குகிறோம்.
சங்க காலம் தொடங்கியே தமிழில் சிறு பிரபந்தங்கள் தோன்றிவிட்டன. பத்துப்பாட்டின்
142

முதல் பாட்டாகிய திருமுருகாற்றுபடை ஒர் ஆற்றுப்படைப் பிரபந்தமாகும். சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்பனவும் ஆற்றுப்படைப் பிரபந்தங்களாகும். பன்னிருப்பாட்டியல் முதன்முதலாகச் சில பிரபந்தங்களுக்கு இலக்கணம் கூறுகிறது. தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்கள் என்பது பிற்காலத்திய வழக்கு. கி.பி.12,14,16 நூற்றாண்டுகளில் தோன்றிய வச்சணந்தி Lost 606), நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல் முதலாயின குறிப்பிடும் பிரபந்த வகைகள் 96க்கும் குறைந்தவையே. ஆனால் பாட்டியல்களில் சொல்லப்படாத பல பிரபந்தங்கள் வழக்கில் உள்ளன.
சோழர் காலத்தில் புதுப் புது இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பண்டைக் காலத்திய அகம், புறம் எனும் இலக்கிய பாகுபாடுகளோடு, பக்தி என்னும் புதிய பாகுபாடும் வழக்கில் வந்தன. அரசன் மீதும் ஆண்டவன் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணாமாக இயற்றப்பட்ட இலக்கியங்களுக்குப் புதிய வடிவங்கள் தேவைப்பட்டன. அத்தேவையின் வெளிப்பாடே கலம்பகம், கோவை, பரணி, உலா, தூது போன்ற இலக்கியப் புதுவடிவங்கள்.
கலம்பகம்
பலவகையான பொருள் பற்றி நூறு பாடல்கள் ஒரே நூலில் அந்தாதித் தொடையில் அமையப் பெற்றது கலம்பகம். நந்திக்கலம்பகம் என்பது நந்திவர்மன் என்ற பல்லவ அரசனைப் புகழ்ந்து பாடப்பட்டது. தன் மீது பாடப்பட்ட இப்பாடல்களைக் கேட்டுச் சுவைப்பதற்காகவே தன் உயிரையும் இழக்கச் சம்மதித்தான் பல்லவ நந்தி என்று வழங்கும் கதை நந்திக்குலம் நந்திக்கலம்பத்தின் சிறப்பை உயர்வு தவிற்சியாகச் சொல்வதாகக் கொள்ளலாம். இதன் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.*
அக்காலத்தில் தமிழிலக்கியத்தில், ஏற்பட்டுவந்த புது வளர்ச்சியைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்த நூல் கருத்தினைச்
ஆய்வரங்கு 2008

Page 159
சொல்லும் முறையில் புதுமை, உணர்ச்சிக்கு ஏற்றவகையில் பாட்டின் ஒசையை அமைக்கும் முறையில் புதுமை, எல்லாவற்றையும் விடப் பொருளைத் தெளிவாகப் புலப்படுத்தும் எளிய நடையின் புதுமை ஆகிய இவை அனைத்தும் இந்நூலுக்குச் சிறப்பைச் தருகின்றன. சிலப்பதிகார காலத்திலிருந்து வளர்ச்சியுற்ற தமிழிலக்கிய நடை, இந்த நூலில் தெளிவும் எளிமையும் பெற்று நிறைவு எய்தியது எனலாம்,° புதுமையும் புலமையும் சொற்சுவையும் பொருட்சுவையும் பரவிக் கிடக்கும் இந்த அற்புதப் படைப்பை உலகுக்களித்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
திருப்பள்ளியெழுச்சி
சங்ககாலத்தில்துயிலெடைநிலை என்றிருந்த பாடல் மரபு பக்தி இயக்கத்தின்போது திருப்பள்ளியெழுச்சியாக உருவெடுத்தது எனலாம். நாயன்மார்களில் மாணிக்கவாசகரும் ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியுள்ளனர். அவ்வச்சமயக் கோயில்களில் இன்றும் வைகறையில் பூபாள ராகத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
கோவை
இது பல வகைச் செய்யுள்களைத் தொடர்புபடுத்திச் சேர்த்துப்பாடும் பாடல்வகை யாகும். தெய்வங்களையும் அரசர்களையும் போற்றிப் பாடுவதற்குப் புலவர்கள் இப்பாடல் வகையைக் கொண்டனர். திருக்கோவையார், சிவபெருமானை மாணிக்கவாசகர் போற்றிப் பாடிய
நூலாகும்.
திருவாரூர் மும்மணிக்கோவை எனும் இலக்கியத்தைச் சேரமான் பெருமாள் நாயன்மார் பாடினார். வெவ்வேறான மூன்று வகை மணிகளை மாறி மாறித் தொடுத்த மாலைபோல், வெவ்வேறான மூவகைச் செய்யுள் வகைகள் மாறி மாறி வரும் முறையில் முப்பது பாடல்களைக் கொண்டதாகப் பாடப்பட்ட நூலே மும்மணிக்கோவை. அம்பிகாபதிக் கோவை 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நூல் என்று கருதப்படுகிறது. கண்டன்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கோவை என்ற அகப்பொருள் இலக்கியம் கண்டன் என்னும் இரண்டாம் இராசராசன் மீது பாடப்பட்டதாகும். "
தஞ்சைவாணன் கோவை என்பது, மாறவர்மன் குலசேகர பாண்டியனின் அமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் விளங்கிய தஞ்சைவாணன் மீது பொய்யா மொழிப் புலவர் பாடியது. இதன் காலம், 13 ஆம் நூற்றாண்டு." இந்நூல் இதற்கு முற்பட்ட கோவை நூல்களை விட எளிமையும் தெளிவும் கொண்ட சிறந்த நூலாகும். இதன் பாடல்கள் அகப் பொருள் இலக்கண நூலாகிய நம்பியாகப் பொருள் கூறும் ஒவ்வொரு துறைக்கும் பொருத்தமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
Luy Gouf
ஆயிரம்யானைகளைப் போர்க்களத்தில் கொன்று வெற்றிக்கொடி நாட்டும் வீரன் ஒருவனைப் புகழ்ந்து பாடுவது பரணி. முதல் இராசேந்திர சோழன், சாளுக்கியரை வென்ற கொப்பத்து வெற்றி குறித்தும், வீரராசேந்திரன் மேலைச் சாளுக்கியரை வென்ற கூடல் சங்கமத்து வெற்றி குறித்தும் எழுந்த பரணிகளைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அந்நூல்கள் கிடைக்கவில்லை. நமக்குக் கிடைத்துள்ள முதல் பரணி நூல், கலிங்கத்துப்பரணியாகும்.
கலிங்கத்துப்பரணி, கலிங்க நாட்டின் மீது சோழ நாடு கொண்ட வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்த கருணாகரத் தொண்டைமான் என்னும் படைத் தலைவனையும் சோழ மன்னன் குலோத்துங்கனையும் புகழ்ந்து பாராட்டு முகத்தான் கவி மாமன்னன் சயங்கொண்டாரால் இயற்றப்பட்டது. பரணி என்னும இலக்கிய வகையுள் இன்றுவரை சிறப்புடையதாகத் திகழ்வது; இரண்டிரண்டு அடிகளால் ஆன தாழிசை என்னும் செய்யுள் வகையால் இயன்றது; போர்க்களம் பற்றியது ஆதலின், வீரச்சுவைக்கு ஏற்றமிடுக்கான சந்தத்தில் அமைக்கப்படடிருக்கிறது. வெவ்வேறு உணர்ச்சிகளுகேற்ப வெவ்வேறு சந்தங்களைக் கையாளுகிறார் ஆசிரியர். சொற்களின் யாப்பும் சொல்லிய முறையும் நம் மனக்கண் முன்
143

Page 160
காட்சிகளை அப்படியே கொண்டு வந்து படம் பிடித்துக் காட்டுகின்றன. இதன் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. இதனைப் பின்பற்றியே ஒட்டக்கூத்தரும் இரண்டு பரணிப் பிரபந்தங்களைப் பாடினாரென்று அறிகின்றோம்.
ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி, பிரபந்தங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. தக்கனுடைய யாகத்தை வீரபத்திர தேவர் அழித்த வெற்றியைப் பாடுவது. இரண்டாம் இராசராசனை வாழ்த்தி அமையும் இது, கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு சிறப்பான பிரபந்தமான இரணியவதைப் பரணிக்கு வழி காட்டியிருக்கிறது.
D 6) IT
தெய்வங்களோ அரசரோ வீதிஉலா வருவதைப் பாடுபொருளாகக் கொண்டு அமைக்கப்பட்ட இலக்கிய வகையே உலாவென்பதாகும். திருக்கைலாய ஞானவுலா என்பது உலா நூல்களுள் மிகப் பழமையானது. கி.பி.9 ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் நாயனாரால் இயற்றப்பட்டது. இதற்கு ஆதியுலா என்ற பெயரும் உண்டு. சிவலோகத்தில் தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமான் உலா வந்து காட்சி தர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைகிறார்.
உலா வரும் தெருக்களில் மங்கையர் பலர் தெய்வத்தின் அழகைக் கண்டு களிக்கின்றனர். அவர்களுள் ஏழுமங்கையர் இறைவனைப் பார்த்துக் காதல் கொள்ளும் நிலையையும் அவர்களின் ஏழுவகை பருவ வேறுப்பாட்டுக்கு ஏற்ப, ஏழுவகை மனநிலையையும் இந்நூலில் விளக்கப்படுகின்றன. இவ்வாறு பலருடைய உள்ளங் கவர் கள்வனாய்த் தலைவன் வீதிவலம் வருவைதைப் பாடுவதே உலா நூலின் மரபு ஆகும். ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, திருஞான சம்பந்தர் மேல் நம்பியாண்டார் நம்பி பாடியது. இதன் காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டு.
மூவருலா என்பது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. விக்கிரமன், குலோத்துங்கன்,
144

இராசராசன் ஆகிய மூன்று சோழ மன்னர்கள் மீது பாடப்பட்டது. திருமாலின் பிரதிநிதிகளாகக் கருதும் மரபின் காரணமாகத் தெய்வத்துக்கு உரிய சிறப்பை அரசர்களுக்கும் கூறும் வழக்கம் நிலவியது. எனவே அவர்கள் மீது உலா நூல் பாடுவது வழக்கமாயிற்று. ஒட்டக்கூத்தர் பாடிய மூன்று உலாக்களும் அவ்வாறு ஏற்பட்டவையே.
தில்லையுலா என்ற சிறப்பான நூல் , முற்றுப்பெறாத நிலையில் இன்று கிடைத்துள்ளது. இது இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்துக்குரியது.
5T 5
பேசும் ஆற்றல் இல்லாத பறவை, விலங்கு போன்றவற்றையும் உயிரில்லாத மேகம், காற்று முதலியவற்றையும் தூது அனுப்புவதாகக் கற்பனை செய்து பாடுவது, சங்க இலக்கியக் காதல் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
பிற்காலத்துப் பக்தி இலக்கியத்திலும் கடவுளிடம் தூது அனுப்பும் முறையில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல பாடல் பாடியுள்ளனர். நாயகன் நாயகி காதலைப் பக்திப் பாடல்களுக்குரிய வடிவில் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தூது என்னும் வகையை நன்கு பயன்படுத்தி நெஞ்சை உருக்கும் பாடல்கள் படைத்தனர்.
அந்தாதி
அந்தத்தை ஆதியாகக் கொண்டு பாடல் இயற்றுவது முன்னுள்ள பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஒன்றை அடுத்த பாடலின் முதலில் அமைத்துப் பாடுவது இவ்வந்தாதித் தொடை அமைந்த பாடல்களைச் சங்க இலக்கியத்திலும் தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தங்களிலும் காண முடிகிறது.
சிராமலை அந்தாதி என்பது கல்வெட்டின் மூலம் அறிய வந்ததொரு நூலாகும். திருச்சிராமலைக் குன்றின்மேல் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயில்
ஆய்வரங்கு 2008

Page 161
மதிலில் பொறிக்கப்பட்டு, கல்வெட்டுத் துறையினரால் கி.பி. 1888 இல் படி எடுக்கப்பட்டு 1923இல் சிராமலை அந்தாதி வெளியிடப்ட்டது. இந்நூலின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.” இந்நூலினைப் பாடிய ஆசிரியர் வேம்பையர் கோன் நாராயணன். இது 102 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டது.
இராமானுச நூற்றந்தாதியை அமுதனார் இயற்றினார். புகலூரந்தாதியை நெற்குன்றவாணர் பாடினார். சடகோபரந்தாதி, சரசுவதியந்தாதி ஆகியவை கம்பரால் எழுதப்பெற்றவை. இவை 12 ஆம் நூற்றாண்டுக்கு உரியவை.
சதகம்
நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர். நூறு பாடல்கள் கொண்ட தொகை நூல் மரபு, தமிழுக்குப் புதியதன்று இத்தகு நூல்களில் பதிற்றுப் பத்து ஒன்று. ஆனால் பிற்காலத்தில் இவ்வாறெழுந்த நூல்கள் சதகம் என்ற வடசொல்லால் பெயரிடப் பட்டன. வடமொழியில் அவை நீதி போதனையும் தத்துவமும் உணர்த்தும் நூல்களாக விளங்கின."
திருச்சதகம் என்பதே தமிழின் முதற் சதகமாகும். வடமொழியின் சதக மரபைப் பேணாமல் உள்ளமுருக்கும் சமயப் பாடல்களின் தொகுதியாக இது விளங்குகிறது. இதன் ஆசிரியர் மாணிக்க வாசகர் ஆவர். கார்மண்டல சதகம் என்னும் நூல் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தோன்றியதென்றும் இதன் ஆசிரியர் அவிநாசி ஆறைக்கிழார் என்றும் கூறுவர்."
இலக்கணம்
தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்ற முப்பகுதிகளைக் கொண்டது. யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திலக்கணம் எனப் பெயர் பெற்றது. இவ்வகை இலக்கணம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது எனலாம். தொல்காப்பியர் ஐந்திலக்கணத்தைப் பற்றிப் பேசவில்லை என்றாலும் யாப்பும் அணியும் அவர்தம் பொருளதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றன.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

தமிழ்மொழி ஐந்திலக்கணம் கொண்டது என்று போற்றத்தக்க அளவிற்கு யாப்பும் அணியும் தனிப்பெரும் பிரிவுகளாக வளரத்தொடங்கியது பிற்காலச் சோழர் காலத்தில்தான்.
இவ்வைந்திலக்கணத்துள் அடங்காது வேறாகக் கிளைந்து நிற்கும் பிரிவுகளும் உண்டு. அவை பாட்டியல், நிகண்டு முதலியன.
பிற்காலச் சோழர் காலத்தில், எழுத்துக்கான, சொல்லுக்கான இலக்கண நூல்கள் என்றும், பொருளுக்கான நூல்கள் என்றும், யாப்புக்கான, அணிக்கான நூல்கள் என்றும், அனைத்தும் சேர்ந்த ஐந்திலக்கணம் நூல் என்றும் பலவகையான இலக்கண நூல்கள் எழுந்தன.
எழுத்து, சொல்லிலக்கணம்
நேமிநாதம்
எழுத்து, சொல் பற்றி எழுந்த இலக்கணம் நேமிநாதம். நேமிநாதர் என்கின்ற தீர்த்தங்கரரின் பெயரால் இது வழங்கப்பட்டது. குணவீர பண்டிதரால் 96 வெண்பாக்களில் இயற்றப்பட்டது. இதனைச் சின்னூல் எனவும் வழங்குவர் வச்சணந்தியின் மாணவராகிய இவர், சமண மதத்தினர். இவரின் ஊர் தொண்டை நாட்டில் உள்ள களத்தூர் ஆகும். வச்சணந்திமாலை என்ற நூலையும் இவர் எழுதியிருக்கிறார். வச்சணந்தி மாலையில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இவர் கி.பி. 1178-கி.பி.1218 ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த சோழ மன்னனாகிய திரிபுவன தேவர் என்ற சிறப்புப் பெயருடைய மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்று அறிகிறோம்."
நன்னூல்
மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் இயற்றப்பட்ட மற்றொரு நூல் நன்னூல். இந்நூல் எழுந்த காலம் வரையில் எழுதப்பட்ட இலக்கணப் பரப்பில் தனியரசு ஒச்சிய நூல். எளிமையும் செறிவும் தெளிவும் கொண்டது. எழுத்து, சொல் ஆகிய இலக்கணக் கூறுகள் பற்றியது. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டது.
145

Page 162
இது தோன்றிய காலத்து வரையிலான மொழி வளர்ச்சியையும், இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள் ஆங்காங்கே தெரிவித்த கருத்துகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டதொரு இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் பவணந்தி. இவர் ஒரு சமணர். இவரை அமராபரன் சீயகங்கன் என்ற கங்க மன்னன் ஆதரித்ததாகவும், அவன் விருப்பத்திற்கிணங்கவே இந்நூல் செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
பொருளிலக்கணம்
தமிழ் நெறி விளக்கம்
தமிழ் நெறி விளக்கம் என்பது அகப்பொருள் பற்றி எழுந்த இலக்கண நூல். ஆசிரியர் பெயர் அறியப்படாத இந்நூல் அழகான ஒரு சிறு நூல். முன் தோன்றிய இறையனார் களவி உல் 60 விதிமுறைப் பாக்களைக் கொண்டது. தமிழ் நெறி விளக்க ஆசிரியர் அதைச் சுருக்கி 25 ஆக ஆக்கியிருக்கிறார். இவற்றுள்ளும், பாயிரப் பகுதிக்காக இவர் 13 விதிமுறைகளை ஒதுக்கிய பின், ஏனைய 12விதிமுறைப்பாக்களுக்குள்ளேதான் இறையனார் கூறும் பொருள் முழுமையும் சுருக்கிக் கூறியுள்ளார். அதுமட்டுமன்று; துறைகளுக்கெல்லாம், சங்க இலக்கியம் போன்ற பண்டை நூல்களின் சொல்லும் தொடரும் கருத்தும் பொதிந்த எடுத்துக்காட்டுச் செய்யுள்களையும் தானே இயற்றியிருக்கிறார். ‘நூலின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி"
புறப்பொருள் வெண்பாமாலை
தொல்காப்பியத்திற்குப் பின் அகப்பொருள் இலக்கணம் பல தோன்றிய போதிலும், புறப்பொருள் பற்றித் தோன்றிய தனி நூல் ஐயனாரிதனார் செய்த புறப்பொருள் வெண்பாமாலை ஒன்றே. இது வெட்சி முதல் பெருந்திணை ஈறாகப் பன்னிரு படலங்களையுடையது.
ஐயனாரிதனார் உலக வாழ்வில் நன்கு தோய்ந்து, புறத்துறையை நன்குணர்ந்து நூல் செய்திருக்கிறார். இவர் பாடலை எடுத்து
146

மேற்கோள் காட்டாத பிற்கால உரையாசிரியரே இல்லை எனலாம். இவ்வாசிரியர் தன் நூல் முழுவதிலும், முற்றுமோனை அடிகளை நினைத்த இடமெல்லாம் பெய்திருக்கிறார். வேறு எந்த ஆசிரியருக்கும் மோனை இவ்வளவு எளிதாக, இயல்பாக பொருந்தி வந்து ஏவல் கேட்கவில்லை.
பன்னிரு படலத்தை இது மூலநூலாகக் கொண்ட போதிலும், தொல்காப்பியத்தையும் தழுவியே ஆசிரியர் தன் நூலைச் செய்திருக்கிறார். தொட்ட இடமெல்லாம் திருக்குறள், நாலடியார் முதலான நூற் கருத்துகளும் தொடர்களும் இடம்பெறக் காணலாம். புறப்பொருள் வெண்பாமாலை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்டது."
நம்பியகப்பொருள்
இது நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்ட அகப்பொருள் பற்றிய இலக்கண நூலாகும். அகத்திணை, புறத்திணை, களவு, வரைவு, கற்பு ஆகிய ஐந்து இயல்களைக் கொண்டது. தொல்காப்பிய அகப்பொருள் கருத்துகடிளப் பிற்காலச் சோழர்காலத் தமிழில் தரும் இனிய நூல் இது. இதற்கு இலக்கியமாக இயற்றப்பட்டது தஞ்சை வாணன் கோவை என்னும் பிரபந்தமாகும். முதலாம் மாறவர்மன் குலசேகரனின் ஆட்சிக்காலமாகிய கி.பி.13ஆம் நூற்றாண்டில் இது இயற்றப்பட்டதாகத் தெரியவருகிறது."
யாப்பிலக்கணம்
யாப்பருங்கலம்
யாப்பருங்கலம் என்பது தமிழ்ப்பாட்டிலக்கணம் பற்றி விரிவாகப் பேசுகின்ற ஒரு நூலாகும். தமிழ்ச் செய்யுளின் உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்றவற்றின் பல்வேறு படி நிலை வளர்ச்சிகளையும் விளக்குகிறது. இது உறுப்பியல், செய்யுளியல், ஒழிப்பியல் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது. இவற்றில் 96 நூற்பாக்களில் யாப்பினை ஆய்கிறது. இதன் ஆசிரியர் அமிர்தசாகரர்; இதன் காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டாகும்.
ஆய்வரங்கு 2008

Page 163
இதற்கு எழுதப்பட்ட விரத்தி உரை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. அவிநயம், காக்கைப் பாடினியம், நாலடி நாற்பது, பல்காயம், மயேச்சுர யாப்பு, சங்க யாப்பு போன்ற பல யாப்பிலக்கண நூற்களின் செய்திகளையும் சில நூற்பாக்களையும் தந்து, மறைந்து போன பல்வேறு தமிழ் இலக்கணத்தின் பகுதிகளையும் இந்த உரை மேற்கோளாகக் காட்டி, அவற்றிற்கு உயிரூட்டியிருக்கிறது.
யாப்பருங்கலக் காரிகை
யாப்பருங்கலத்தின் சுருக்கமாகவும் புறநடையாகவும் எழுந்த நூல் யாப்பருங்கலக் காரிகை. யாப்பருங்கல ஆசிரியரே காரிகையையும் இயற்றினார் என்பர். குணசாகரர் என்பவர் காரிகைக்கு மிகச் சிறந்த உரை ஒன்று எழுதியிருக்கிறார்."இது கலித்துறை யாப்பில் பாடப் பெற்றுள்ளது. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்ற மூன்று இயல்களைக் கொண்டு விளங்குகிறது.
அணியிலக்கணம்
தண்டியலங்காரம்
பன்னிரண்டாம் நூற்றாண்டில், சிறப்பு மிக்க இலக்கண நூல்கள் பல எழுந்தன. யாப்பருங்கலம், காரிகை முதலான யாப்பிலக்கண நூல்கள் முந்திய நூற்றாண்டுகளில் தோன்றின. ஆனால் அணியிலக் கணம் அப்போது தோன்றவில்லை. தண்டியாசிரியர் இக்குறையை நிறைவு செய்து தண்டியலங்காரம் உருவாக்கினார். அத்துறையில் இன்றும் இணையில்லாத சிறப்புடைய நூலாக இது பயிலப்பட்டு வருகிறது." அணியிலக்கணம் கூறுவதற்கென்றே தோன்றிய நூல்களில், தண்டியலங்காரமே பழமையானது; முதன்மையானது"
தண்டி என்பவரால் செய்யப்பட்ட இதற்கு அணியியல்', 'அணியிலக்கணம்', 'அணியதிகாரம் என்ற பெயர்களும், உண்டு. வடமொழியில் தண்டி ஆசிரியர் செய்த காவியாதர்சம்' என்ற அலங்கார சாத்திரத்தின் வழி நூலாகும் இது.* இந்நூலின் முதல் பகுதி பொதுவணி இயலாகும். இரண்டாம்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

பகுதி பொருளணியிலாகும். மூன்றாம் பகுதி சொல்லணி இயலாகும்.
நூலில் அணிக்கு எடுத்துக்காட்டாக 350க்கு மேற்பட்ட செய்யுள்கள் தரப்பட்டுள்ளன. இவை யாவுமே வெண்பாக்கள். எடுத்துக்காட்டும் செய்யுட்களைத் தண்டியாசிரியரே செய்தார் என்பர். இந்நூலுக்குச் சுப்பிரமணிய தேசிகர் உரை செய்தார். தண்டியலங்காரத்தின் காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலமாகிய கி.பி.12ஆம் நூற்றாண்டு.*
ஜந்திலக்கணம்
வீரசோழியம்
சோழமன்னன் வீரராசேந்திரன் பெயரில் எழுதப்பட்ட வீரசோழியம் புத்தமித்திரரால் இயற்றப்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் எழுந்த இதற்குப் புத்தமித்திரரின் மாணவராகிய பெருந்தேவனார் உரையொன்று எழுதியிருக்கிறார். தமிழ், வடமொழி ஆகிய இருமொழி இலக்கணத்தை விரிவாகப் பேசுவது இது. எழுத்து, சொல், யாப்பு, பொருள், அணி ஆகிய 5 பிரிவுகளைக் கொண்டது.
நேமிநாதம், நன்னூல் முதலிய இலக்கணங்களைவிட அக்கால மொழி சூழலையும் இலக்கிய வழக்கையும் உயர்ந்தோர் வழக்கையும் சமூக நோக்கில் அணுகி ஆராய உதவும் மொழி வரலாற்றுக் கருவூலமாக வீரசோழியம் விளங்குகிறது. அத்துடன் அக்காலப் புலவர்களின் இலக்கியப் பாங்கைப் பிரதிபலிக்கும் இலக்கணமாகவும் இது விளங்குகின்றது.*
சோழர்கள் வைதீக சமயத்தையும் தமிழ் மொழியையும் போற்றுபவர்களாக இருந்தனர். இருந்தும், பிற மொழிகளையோ பிற சமயக் கொள்கைகளையோ புறக்கணித்தாரில்லை. மாறாக, அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். சமசுகிருத மொழியைப் போற்றிய வைதீகப் பிராமணர்களுக்கு ஒரு முக்கிய இடம் இருந்தது. வடமொழிக் கருத்துக்களைத் தமிழர் புரிந்து கொள்வதும் தமிழ்மொழிக் கருத்துக்களை
147

Page 164
வடமொழியாளர் புரிந்து கொள்வதும் இருமொழி வளர்ச்சிக்கும் ஆக்கம் தரும் முயற்சி என்பதால், இருமொழிக்கும் பொதுவான ஓர் இலக்கணம் எழுதப்பட வேண்டிய எண்ணம் இருந்தது. அதிலும் தமிழின் சிறப்பைப் பிறர்க்கு உணர்த்தவே வீரசோழியம் போன்ற இலக்கியம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது வடமொழியாளர் களுக்குத் தமிழ்க் கற்பித்தலை நோக்கமாகக் கொண்டு சமசுகிரதம், தமிழ் என்ற இருமொழி அணுகு முறையில் எழுதப்பட்ட ஒரு வகையான ஒப்புமை இலக்கணம்."
பிற இலக்கண நூல்கள்
பஞ்சமரபு
இறந்துபோன நூல்களிலொன்று என்று இதுவரை கருதப்பட்டுவந்த பஞ்சமரபு நூல் இப்போது கிடைத்திருக்கிறது. வேலம்பாளையம் திரு. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஏடு கிடைத்து, குடந்தை பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனாரால் பிரதி செய்து நன்கு பரிசோதித்து, முதல் பகுதி கி.பி. 1973 அக்டோபரில் வெளியிடப்பட்டுள்ளது. இது இருபதாம் நூற்றாண்டின் அதிசய நிகழ்ச்சிகளில் ஒன்று" ஆசிரியர் பெயர் அறிவனார். காலம் 9ஆம் நூற்றாண்டு.
பெரும் பொருள் விளக்கம்
தொல்காப்பியப் புறத்திணைக்கு விளக்கம் போல் அமைந்துள்ள பெரும்பொருள் விளக்கம் என்னும் இந்நூலுக்குப் “பெரும் பொருள்” என்ற பெயரும் உண்டு. அடியார்க்கு நல்லார் உரை, நச்சினார்க்கினியர் உரை, புறத்திரட்டு, யாப்பருங்கல விருத்தி நான்கிலுமாக 120 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. அனைத்தும் வெண்பாக்கள். இதன் காலம் கி.பி.1ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கல விரத்தி, இதன் பாடல் ஒன்றினை எடுத்தாள்வதால் இது அதற்கு முந்தையது என்பது தெளிவாகிறது. புறத்திரட்டே இதன் பெயரைக் குறிப்பிடுகிறது." சோழ நாட்டின் பெருமையைப் பெரிதும் பாராட்டிப் பேசுகிறது இந்நூல். இதன் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
148

பாட்டியல் நூல்கள்
பாட்டியல் நூல்கள் கி.பி. 8-9 நூற்றாண்டுக் காலத்தில் தோன்றின. தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்திலும் தமிழ் நூல்களின் வகைகள் பெருகவில்லை. பல்லவர், சோழர் காலத்தில் புது நூல் வகைகள் தோன்றின. அந்தாதி, மடல், ஏழு கூற்றிருக்கை, அங்க மாலை, இரட்டை மணிமாலை, உலா, மும்மணிக் கோவை முதலான புது நூல் வகைகள் பெருகின. கோவை முன்னமே தோன்றியது. இந்த நிலையில் இவற்றிற்குச் சற்றே பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் இவை அனைத்தையும் தழுவி இவற்றிற்கு ஓர் இலக்கணம் செய்ய முற்பட்டனர். இன்ன வகைப் பாடல் இவ்வாறு பாடப் பெறுதல் வேண்டும், அதற்கு இலக்கணம் இன்னது எனக் கூறும் பாட்டியல் நூல்கள் தோன்றின.
பன்னிரு பாட்டியல்
பாட்டியல் என்ற புது நெறியின் விளக்கமாக கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிடைப்பது பன்னிரு பாட்டியல் என்ற ஒரு சிறு நூலே. பன்னிரண்டு பொருள்களைக் கூறுகின்றமையால் இந்நூல் பன்னிரு பாட்டியல் என்று பெயர் பெற்றது. பன்னிரு பாட்டியல் எழுத்தியல், சொல்லியல், இனவியல் என்ற மூன்று பாகுபாடுகளைக் கொண்டது.
இந்நூல் குறிப்பிடும் பிரபந்தங்கள் 74 ஆகும். மெய்க்கீர்த்தி என்ற சிறப்பான ஒரு பிரபந்த வகையை இது குறிப்பிடுகிறது. இதில் சொல்லப்பட்ட இலக்கணத்தின்படி அமைந்த முதல் மெய்க்கீர்த்தி இராசராசனுடைய மெய்க்கீர்த்தியாகும்.
வெண்பாப் பாட்டியல்
குணவீர பண்டிதர் என்ற சைவ முனிவர் இரண்டு இலக்கண நூல்களைச் செய்தார். ஒன்று எழுத்தும் சொல்லும் பற்றிக் கூறுகிற நேமிநாதம்; மற்றது பாட்டியல் பற்றிக் கூறும் வச்சணந்திமாலை என்னும் வெண்பாப்பாட்டியல். இதன் காலம் 11ஆம் நூற்றாண்டு ஆகும். சிற்றிலக்கியங்களின் அமைப்பைப் பற்றியும் செய்யுள் எழுதும் முறைகள் குறித்தும் கூறும் இந்நூல் மூன்று இயல்களைக்
ஆய்வரங்கு 2008

Page 165
கொண்டது. நூற்றிமூன்று வெண்பாக்களில் அமைந்தது.
நிகண்டுகள்
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் வழங்கி வந்த சொற்களக்கு வழக்குகளுக்கும் பொருள் புரிந்துகொள்வது பிற்காலத்தவருக்கு - புலவருக்கும்கூட - எளிதாக இருக்கவில்லை. புலவருக்கும் இலக்கிய ஈடுபாடு கொண்டவர்க்கும் பண்டைக்கால இலக்கியங்களை அனுபவிப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு எழுந்தவையே நிகண்டுகள் எனலாம். நிகண்டுகளின் இயல்புகள், தொல்காப்பியத்திலேயே - சொல்லதிகார இடையியலிலும் உரியியலும், பொருளதிகார மரபியலிலும் காணப்படுகின்றன. ஒரு பொருளுக்கு வழங்கிய பல சொற்களும் ஒரு சொல்லின் பல பொருள்களும் உணர்த்த எழுந்த தனி நூல்களே நிகண்டுகளாகும். இவை செய்யுள் வவிைல் மனப்பாடம் செய்யத் தக்கவகையில் தொகுத்துத் தரப்பட்டன.
தமிழில் எத்தனையோ நிகண்டுகள் தோன்றியிருந்த போதிலும் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுபவை மூன்று. அவை சேந்தன் திவாகரம், பிங்கலந்தை சூடாமணி. இவற்றில் சூடாமணியின் காலம் 16ஆம் நூற்றாண்டு. பிற இரண்டும் சோழர் காலத்தைச் சார்ந்தவையாகும். -
சேந்தன் திவாகரம்
தமிழ் மொழியின் முதல் நிகண்டு திவாகரமாகும். செய்வித்தோன் பெயரையும் சேர்த்து இதைச் சேந்தன் திவாகரம் என்பர். இவரது பெயர், ஊர் பற்றி எதுவும் ரிெயவில்லை. ஆயினும் சோழநிாட்டில் அம்பரில் வாழ்ந்த அருவந்த சேந்தன் என்ற வள்ளலை அதிகமாக இவர் புகழ்வதனால் அதே ஊரில் சேந்தனின் ஆதரவு பெற்று வாழ்ந்தவர் என்று தெரிகிறது. இவர் சேந்தனைப் பன்னிரு தொகுதிகளின் இறுதியிலும் வேறு ஏழு இடங்க்ளில் சிறப்பிக்கின்றார்.8
திவாகரர் எல்லாத் துறையிலும் புலமை மிக்கவர். வேதம் அறிந்தவர்; டவடமொழி கற்றவர்;
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்'

இவருடைய காலம் ി.tി.9മൃ நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.* கி.பி.11ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கருதுவாரும் உண்டு."
பிங்கலந்தை
பிங்கல முனிவரால் செய்யப்பட்ட பிங்கலந்தை நிகண்டு, சேந்தன் திவாகரத்தை விட அளவில் பெரியது. இது பற்றி நன்னூல் ஆசிரியர் தன் செய்யுள் ஒன்றில்91 குறிப்பிடுவதால் இவரது காலம் பவணந்தியின் காலத்திற்கு முற்பட்டது எனக் தெரிகிறது. பிங்கலந்தையின் சிறப்புப் பாயிரம், திவாகரன் பயந்த பிங்கலமுனி' என்று கூறுவது கொண்டு இவரைத் திவாகரரின் பிள்ளையாகக் கருதுவதுண்டு. பெற்ற பிள்ளையாகவும் இருக்கலாம், ஞானபுத்திரராகிய மாணாக்கராகவும் இருக்கலாம்,'.? எனவே பிங்கலந்தையின் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு.*
பிங்கல நிகண்டை இவர் திவாகரரின் விதிமுறைப் பாக்களைத் தழுவியே செய்துள்ளார். இந்நிகண்டு 4181 செய்யுள்களும் 10 பகுதிகளும் உடையது. நூற்பகுதி ஒவ்வொன்றுக்கும் இவர் “வகை” என்று பெயர் வைத்திருக்கிறார். திவாகரத்தில் இடம்பெறாத புதிய சொற்களுக்கு இதில் பொருள் கூறப்பட்டுள்ளது.
உரைநூல்கள்
பண்டைத் தமிழ் நூல்களும், இலக்கிய இலக்கண நூல்களும், வைத்தியம் சோதிடம் உள்ளிட்ட பிற துறை நூல்களும் - ஒரே வகையான செய்யுள் அமைப்பையே கொண்டிருந்தன. எழுதுகின்ற சாதனமாக ஏடு ஒன்றே இருந்த அந்தக் காலத்தில் இது தவிர்க்க முடியாததாக இருந்தது. சொற்செறிவுள்ள இந்தச் செய்யுள்கள், அவை எழுந்த காலத்தில், பொருள் எளிமை கொண்டனவாக இருந்தன. காலம் செல்லச் செல்லப் புரிந்துகொள்ளக் கடினமானவையாக அவை மாறின. எனவே அவற்றை விளக்கிச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு உரைநடை வடிவம் உறுதுணை செய்தது.
தமிழ் இலக்கியத்தில் சோழர் காலத்தில் மொழித் தொடர்பாக ஏற்பட்ட மிக முக்கிய
149

Page 166
மாற்றங்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. உரை நூல்கள் இயற்றப்பெறாவிட்டால் தமிழ் இலக்கியத்தின் பழமையான பகுதி அழிந்து போயிருக்கும் என்று கூடக் கருதலாம். அவ்வாறு அழிந்து போகாமல் கிடைத்திருப்பினும், அதன் பொருளைத் தெரிந்து கொள்வது கடினமாயிருந் திருக்கும்.*
960)) செய்தலுக்குத் தெளிவான இலக்கணமும் முன்னோர் வகுத்திருக்கின்றனர். உரையாக்கத்திற்குக் கருத்துரைதல், கண்ணரித்தல், பொழிப்புத் திரட்டல், அகலங்கூறல் என்று நான்கு இயல்புகள் இருக்கின்றன.
உரைநூல்களும் உரைநடை நூல்களும் தனியே கிளைப்பதற்கு முன் செய்யுளும் உரைநடையமாய் அமைந்த இலக்கியங்கள் இருந்தன. அவை எண்ணிக்கையில் மிகவும் குறைவு. வடமொழியில் இவ்வகை நூல்கள் சம்பு காவியம்' எனப்படும். பண்டை இலக்கணங்களுள் இது “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்று சொல்லப் படுகிறது. சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் நடையில் உருவானது. ஆனால் அதனுள் உரைப்பகுதி மிக மிகக் குறைவு, அதுவும் எதுகை மோனையும் செய்யுளோசையும் கொண்ட சிறு பகுதியே ஆகம். தகடூர் யாத்திரை என்ற பண்டை நூலும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பர். ஆனால் அந்நூல் இப்போது கிடைக்கப் பெறவில்லை.
பெருந்தேவனார் எழுதிய பாரத வெண்பா, செய்யுளும் உரைநடையுமாக அமைந்தது. இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. வெண்பா என்று பெயர் பெற்றிருந்த போதிலும், இதனுள் சில விருத்தப் பாக்களும் ஆசிரியப்பாக்களும் உள்ளன. பாக்களெல்லாம் செந்தமிழ் நடையிலும், உரை நடை, பேச்சு நடையிலும் அமைந்திருக்கின்றன. கல்வி கற்ற மக்களுடைய பேச்சே இதில் இடம் பெற்றுள்ளது.
150

இலக்கிய உரை
திருக்குறள் உரையாசிரியர்கள் மணககுடவா
திருக்குறளக்கு உரை செய்த ஆசிரியர்கள் பதின்மர் இவர்களும் மணக்குடவர் ஒருவர். குறளுக்கான இவர் உரை மிகவும் எளிமையானது, காரண காரியத்தொடர்பு கொண்டது, தம் காலத்து வழக்காறுகள் சிலவற்றைப் புலப்படுத்தி நிற்கின்றது. சான்றாக'நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மில் அளவு ஒக்குமாயின் கொல்லும் பலாப்பழம் தின்று பின் சுக்குத் தின்றால் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. பரிமேலழகரும் இவற்றை அப்படியே எடுத்தாள்கிறார்.
மணக்குடவர் காலத்தைக் குறிப்பிடுவதற்கான திட்டமான சான்றுகள் இல்லை. திருக்குறள் உரை செய்த பதின்மரில், பரிப்பெருமாள் உரை, கிடைத்த ஐந்து உரைகளில் ஒன்று. இவ்வுரையின் காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு. பரிப்பெருமாள், மணக்குடவர் உரையைத் தழுவியே தம் உரையைச் செய்தார். இதனால் மணக்குடவர் உரை பரிப்பெருமாளுக்கு முந்தியதென்பது தெளிவு. இதன் காலம் கி.பி. 9501000 ஆக இருத்தல் கூடும்.*
பரிமேலழகர்
திருக்குறளுக்குப் பல உரைகள் எழுதப்பட்டிருக் கின்றன. அவ்வுரைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது பரிமேலழகர் உரை அள்ளக் குறையாத சுரங்கமாய் விளங்கும் வள்ளுவரின் உள்ளக் கருத்தினைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவதில் பெருவெற்றி பெற்றிருக்கிறார் பரிமேலழகர். தனது புலமைத் திறத்தாலும் பரந்துபட்ட நூல் பயிற்சியாலும் வள்ளுவரின் உள்ளத்தை ஊடுருவிப்பார்த்து அவரது புலமையின் அகலத்தையும் ஆழத்தையும் அறிந்து குறட்பாக்களின் பொருண்மைத் தொடர்பையும் அதிகார முறையையும் விளக்கித் தனது உரையை எழுதியிருக்கிறார். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடலுக்கும் பரிமேலழகர் உரை எழுதியிருக்கிறார். உரையில் காணப்படும் நயமும் அரிய குறிப்புகளும் மூலத்தின் பெருமையை உயர்த்தி நிற்கின்றன.
ஆய்வரங்கு 2008

Page 167
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பரிமேலழகர், வடமொழியும் தமிழும் கற்றுணர்ந்தவர். இவர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர் என்றும், திருநெல்வேலியில் பிறந்து மதுரையில் வசித்தவர் என்றும் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. வைணவ சமயத்தைச் சார்ந்தவராகக் கருதப் படுகிறார். பரிமேலழகரின் திருக்குறள் உரைத் திறத்தினை கி.பி.14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான உமாபதி சிவாச்சாரியார் பலபடப் பாராட்டுகிறார்.
சிலப்பதிகார உரையாசிரியர்
அடியார்க்கு நல்லார்
சிலப்பதிகாரத்திற்கான அரும்பதவுரை ஒன்று
முன்னமே எழுதப்பெற்றிருந்தது. அதை நன்கு
பயின்று, விரிவுரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
அடியார்க்கு நல்லார் என்பது சிவபெருமானின் பெயர். இவர் சைவராயினும், பிற சமயக் கருத்துகளை, அவற்றின் சார்பாக நின்றே விளக்கிச் செல்கிறார். இவர் சார்ந்துள்ள சமயம் மூலநூலாசிரியரின் சமயக் கொள்கையோடு ஒருபோதும் முரண்படுவதில்லை.
அடியார்க்கு நல்லார் உரை, சிலப்பதி காரத்திற்கான வெறும் உரை மட்டுமன்று; பண்டைக் காலத்து இசை நாடகம் பற்றிய பல அரிய செய்திகளைத் தரும் தகவல் களஞ்சியம். அவர் காலத்தில் வழக்கிலிருந்த இசை நுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ் போன்ற பல்வேறு நூல்களை ஆதாரமாகக் கொண்டு தனது உரையை வகுத்திருக்கிறார். வான நூற் புலமை கொண்டவராகவும் இவர் காணப்படுகிறார். அடியார்க்கு நல்லார் உரையானது கடைச் சங்க காலத்துக்கு முன்னும் பின்னும் உள்ள காலத்திய, முத்தமிழ் இலக்கியத்தைத் தெளிவு பெற உணர்த்துகின்ற ஒர் அடிப்படை நூல்.
இவருடைய காலம் புலப்படவில்லை. ஆனாலும் நச்சினார்க் கினியரால் மறுக்கப்படுவனவற்றுள் சில, இவருடைய கொள்கையாக இருந்த
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

காரணத்தால் இவரது காலம் நச்சினார்க் கினியருடைய காலத்துக்கு முந்தியதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகின்றது.* இதனால் நச்சினார்க்கினியர் காலம் 14ஆம் நூற்றாண்டு, அடியார்க்கு நல்லார் காலம் கி. பி. 12ஆம் நூற்றாண்டு என்பர்."
புறநானூறறுரை
இவ்வுரையானது நூல் முழுமைக்கும் கிடைக்கவில்லை. இவ்வாசிரியருடைய உரையின் இயல்பை உ. வே. சாமிநாத ஐயர் மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக் கருதும் அளவுக்கு இவரது உரைத்திறன் அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் பண்டைய வரலாற்றையும் புலப்படுத்துகின்ற இந்நூலுக்கு உரை எழுதினார் என்பதே, இவர் பேராற்றலுடைய பெருமகன் என்பதைச் சுட்டி நின்றது.
புறநானூற்றுரைகாரர்,இளம்பூரணர் உரையைச் சில இடங்களில் குறிப்பிட்டுப் பேசுகிறார். இளம்பூரணர் காலம் கி. பி. 11ஆம் நூற்றாண்டு. எனவே புறநானூற்றுரைகாரர் காலத்தால் இவருக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. புறநானூற்றின் 9 அம் பாட்டு உரையில், முந்நீர் என்ற சொல்லுக்கு இவர் எழுதும் பொருளை அடியார்க்கு நல்லார் மறுக்கிறார். அடியார்க்கு நல்லார் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. புறநாநூற்றுரைகாரர் அடியார்க்கு நல்லார்க்கு முற்படடவர் எனக் கொள்ளலாம்.
திருக்கோவை - பழைய உரையாசிரியர்
இவ்வுரையாசிரியரின் பெயரோ இவரைப் பற்றிய வரலாறோ எதுவும் தெரியவில்லை. இவ்வுரை மிகவும் பழைமையானது என்று மட்டும் தெரிகிறது. பேராசிரியர் தனது உரையில் பழைய உரையாசிரியன் உரையைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். ஆதலால் பழைய உரையின் காலம் பேராசிரியருக்கு முந்தியது என்று தெரிகிறது. பேராசிரியர் காலம் கி. ப 13ஆம்
15

Page 168
நூற்றாண்டு. எனவே இவ்வுரை கி. பி. 12ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
இவர் பொழிப்புரையாகவும். பதவுரையாகவும் எழுதிச் செல்கிறார். சில இடங்களில் விசேடவு ரையும் எழுதுகிறார். சில இடங்களில் சாதாரண பேச்சுநடை போலவும் இருக்கிறது. தன் சொந்தக் கருத்தை மூலத்தில் ஏற்றிச் சொல்லும் போக்கை இவர் பெரும்பாலும் மேற்கொள்வதில்லை.
இலக்கண உரை
இலக்கியங்களுக்கு உரைநூல் எழுந்தது போலவே இலக்கணங்களுக்கு உரை எழுதும் மரபும் வளர்ந்தது. காலப் போக்கில் இலக்கியங்க்ளுக்கு உரை எழுத நேர்ந்த தேவையை விடவும் இலக்கணங்களுக்கு உரை எழுத வேண்டிய தேவை கூடுதலாகவே இருந்தது எனலாம். காரணம், மொழி என்பது காலந்தோறும் வளரும் இயல்புகொண்டது. பழையன கழிதலும் புதியன புகுதலும் மொழியின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதவை. காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பப் புதிய இலக்கணங்கள் இயற்றப்பட வேண்டும். அவ்வாறு புதிய இலக்கணங்கள் எழுதப்படாதபோது அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியவர்கள் பழைய இலக்கணங்களுக்கான உர்ையாசிரியர்களே. பண்புடையுரையாசிரியர்கள் தமிழ் மொழியின் நிலைபேற்றுக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டு தமிழினம் உள்ளளவும் மறத்தற்கரியது. முத்தமிழ் அறிவும் பிற கலைகளின் அறிவும் பெற்ற இப்பெருமக்கள், பவணந்தியார், புத்தமித்திரனார், ஐயனாரிதனார், நாற்கவிராச போலத் தாமே புது இலக்கண நூல் படைக்க வல்ல ஆற்றல் உடையவர்கள். உண்மையில் பின் எழுந்த இலக்கண நூல்கட்களெல்லாம் கருத்து வழங்கியவை இவ்வுரைகளே. ஆதலின் இவற்றை உரை மூலங்கள் என மதிக்க வேண்டும்?
இறையனார் களவியல் உரை
எட்டாம் நூற்றாண்டில் இறையனார் களவியல் எழுந்தது. அதற்கு நக்கீரர் உரை செய்தார். இறையனார் களவியலுக்கான நக்கீரர் உரை முன்னரே செய்யப்பட்டிருந்தபோதிலும்கூட, பத்தாம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது.
152

இதுவே இன்று கிடைக்கின்ற தமிழ் உரை நூல்களுள் முதல் உரை நூலாகும்*
உண்மையில், மூல நூலாகிய இறையனார் களவியலை விடக் களவியல் உரைக்கே முக்கியத்துவம் அதிகம். தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கங்கள் இருந்தன என்னும் ஒரு முக்கியத் தகவலை இறையனார் அப் பொருளுரையின் பாயிரம் தருகிறது. இந்த விவரம் களவியல் உரையாசிரியருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது தெரியவில்லை. எதுஎப்படியாயினும் தமிழில் உள்ள உரை நூல்களில் எல்லாம் இதுவே தலைசிறந்தது. இதன் வாக்கியங்களில் காணப்பெறும் சொற்கள் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் இனிமையும், பல இடங்களில் இவை எதுகை மோனையுடனும் ஒசைப் பண்புடனும் விளங்கும் அழகும், பொருட் பொலிவுள்ள உவமைகளும் பிற அணிகளும் இந்த வசன நடை, உரைக்குத் கவிதைத் தன்மை அளித்திருக்கின்றன."
வீரசோழிய உரை
இந்நூல் பெருந்தேவனாரால் இயற்றப்பட்டது. தமிழில் பழமையான ஐந்திலக்கண நூலுரை வீரசோழிய உரையைக் காட்டிலும் வேறு எதுவும் இல்லை. இது வடமொழி இலக்கணத்தைக் கவனத்தில் கொண்டு, தமிழில் ஒரு பெளத்தரால் இயற்றப்பட்ட தமிழிலக்கண நூலுக்குப் பெருந்தேவனார் என்ற ஒரு சைவர் செய்த உரையாகும். இவர் சைவராயிருந்தும், மூலநூலின் சிறப்பு நன்கு விளங்கும்படி பெளத்த சமய மேற்கொள்களையே அதிகமாக அமைத்துக் கூறியது இவருடைய விரிந்த மனப்பான்மையைக் காட்டுகிறது."
ஐந்திலக்கணங்களையும் ஐந்து பாகுபாடாகச் சொல்லும் பண்டைய இலக்கண நூல் வீரசோழியம் ஒன்றே. பெருந்தேவனார் உரை இல்லை என்றால் வீரசோழியம் ஒன்றே. பெருந் தேவனார் உரை இல்லை என்றால் வீரசோழியத்தின் பல பகுதிகளுக்குப் பொருள் விளக்கம் பெற வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இவருடைய நடை
ஆய்வரங்கு 2008

Page 169
சிறுசிறு வாக்கியங்களால் இயன்ற மிக எளியநடை தடைவிடைகளைக் கூறிக் கருத்தை உவமைகளால் நன்கு விளக்கும் இயல்பு நடை.
முன்னரே கூறியதுபோல் ‘புத்தமித்தரர் வீரராசேந்திரன் காலத்தில் இவ்விலக்கணத்தைச் செய்து “வீரசோழியம்” என்று பெயரிட்டார். வீரராசேந்திரன் காலம் கி.பி. 1060 - கி.பி. 1090 எனக் கருதலாம். மாணாக்கரான பெருந்தேவனார் காலம் கி.பி. 1080 - கி.பி. 120 எனக் கொள்வது பொருந்தும்"
தொல்காப்பிய உரையாசிரியர்கள்
இளம்பூரணர்
தொல்காப்பிய உரைகளில் காலத்தால் முந்தியது இளம்பூரணம். உரை செய்தவர் இளம்பூரணர். இவர் ஒரு துறவி. கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவரை இளம்பூரண அடிகள்’ என்றும் ‘உரையாசிரியர்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. இவர் தொல்காப்பியம் முழுவதுக்கும் 9-60), செய்திருக்கிறார். தொல்காப்பிய விதிமுறைப்பாக்களுக்கு நேரான பொருளை எளிய முறையில் சுருங்கச் சொல்லி விளங்கவைத்திருக்கிறார்.
பேராசிரியர்
பொருளதிகாரம் முழுவதற்கும் பேராசிரியர் உரை செய்திருந்தாலும் இப்போது மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் என்ற நான்கு இயல்களுக்கு மட்டுமே இவரது உரை கிடைத்திருக்கிறது. இவர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.103 திறனாய்வு முறையில் உரை வகுத்துச் செல்லும் இவர் ‘இலக்கிய மரபுகளையும் தத்துவங்களையும் விளக்குவதில் அரிய முன்னோக்காளராகவும் முற்போக்குப் பான்மை உடையவராகவும் விளங்குகிறார்"
மாணிக்கவாசகரின் திருக்கோவையாருக்கும் குறுந்தொகையில் உள்ள முதல் 380 பாடல்களுக்கும் இவர் உரை செய்திருக்கிறார்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

குறுந்தொகைக்கு இவர் எழுதியதாகக் கருதப்பெறும் உரை கிடைக்கவில்லை.
தெய்வச் சிலையார்
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கும்
தெய்வச்சிலையார் உரை எழுதியிருக்கிறார். இவர்
காலம் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.
இளம்பூரணர் போல், விதிமுறைப் பாக்களுக்கு நேரான முறையில் பொருள் கூறுகிறார். பிறர் உரையில் காணமுடியாத சில சிறப்புகளை இவர் உரையில் காணமுடிகிறது. வடமொழியில் சிறந்த பயிற்சி பெற்றவர். அதற்கான அடையாளங்களை இவர் உரையில் காணலாம்.
சேனாவரையர்
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மாத்திரமே உரை செய்தவர் சேனாவரையர். இவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழோடு வடமொழியையும் திறம்படக் கற்றவர். தனக்குள்ள வடமொழிப் பயிற்சியைப் பயன்படுத்தித் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் நுட்பங்களை மிக அழகமாக விளக்கியிருக்கிறார்.
பிற விகை நூல்கள்
இதுவரை கூறப்பட்டவற்றுள் அடங்காத, வெறும் தகவல்களைச் சொல்வதற்காகவும் நீதிகளை எடுத்துரைப்பதற்காகவும் மட்டுமெ எழுதப்பட்ட நூல்களும் உண்டு.
இவற்றைத் தருக்க நூல், சோதி நூல், வேறுவகை நூல்கள், சாசனப் பாடல், தனிப்பாடல் என்று பாகுபடுத்திக் கொள்ளலாம். யாப்பருங்கல விருத்தியுரையின் மூலம் பெயர் தெரியவரும் பிங்கலகேசி, காலகேசி முதலியன தருக்க நூல்கள். திரையக் காணமும், சிலப்பதிகார அரும்பதவுரை காரர் குறிப்பிடும் சினேந்திர மாலையும் சோதிட நூல்கள்.
தருக்க நூல்கள்
பக்தி இயக்கத்தின் மூலம் சைவ வைணவ சமயங்கள், சமணர் ஆதிக்கத்தை எதிர்த்துத்
153

Page 170
தொடுத்த மதப்போரில் சமணம் செல்வாக்கு இழந்தது. சமணச் சான்றோர் ஆங்காங்குள்ள தங்கள் பள்ளிகளுள் புகுந்து ஒடுங்கினர்.
ஒடுங்கிய சைனர் தாங்கள் கவனத்தை இலக்கியத் துறையில் அதிகம் செலுத்தினார்கள். காப்பியங்களில் சமயத்தை அதிகம் வலியுறுத் தினார்கள். சமய வாதத்துக்கென்றே பல நூல்கள் செய்தார்கள்." பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, தத்துவ தரிசனம் என்பன அவ்வாறு எழுந்த நூல்களில் சில. இவற்றின் காலம் கி.பி.
10ஆம் நூற்றாண்டு.
சோதிட நூல்கள்
கி.பி. 11ஆம் நூற்றாண்டில் யாப்பருங் கலத்துக்கு விருத்தியுரை எழுதிய ஆசிரியர் சோதிடம், சகுன சாத்திரம், மந்திரவாதம், மருத்துவ நூல், ஆருட நூல், கணித நூல், அருங்கல நூல் முதலான பலவகை நூல்களைக் குறிப்பிடுகிறார். இத்துறைகளில் இவருக்கு முன்வேறு நூல்கள் இருந்திருக்கக்கூடும். சோதிடத் துறை நூலாகிய சினேந்திர மாலை மட்டுமே கிடைத்திருக்கிறது.
சினேந்திரமாலை
இது உபேந்திரசாரியார் என்னும் சைன முனிவரால் இயற்றப்பட்டது. இந்நூல் 464 வெண்பாக்களாலானது. 23 காண்டங்கள் கொண்டது. 80 செய்யுள்கள் கொண்ட காண்டப் பொழிப்பு என்ற பகுதி, கோள்களின் உதயம், நட்பு, பகை, திக்கு, பால், வடிவு முதலான பலவகைப் பொருள்களைக் கூறுகின்றது.
இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. நூலில் குழுஉக்குறிகள் பல இடம்பெற்றிருப்பதால், அவற்றைத் தெரிந்து எழுதப்பட்டிருக்கின்ற பழைய உரை இல்லாமலிருந்தால், நூலின பொருளைப் புரிந்து கொள்வது கடினம். உரை செய்தார் யார், காலம் யாது என்பன விளங்கவில்லை.
திரையக் காணம்
இப்பெயருடைய நூலொன்றை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் எடுத்துக் காட்டுகிறார்.
154

ஒழிபியலில் நிரல் நிறைக்குப் பல பிரிவுகளைச்
சொல்லுகிறார். அவற்றுள் சோதிடநூல் பற்றிய பாடல்களையும் காட்டுகின்றார்."
தேசிக மாலை
இந்நூல் பற்றிய குறிப்பை யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும் குணசாகரரும் தருகிறார்கள். பன்மணிமாலையும், மும்மணிக் கோவையும், உதயணன் கதையும், தேசிக மாலையும் முதலாகவுடைய தொடர்நிலைச் செய்யுட்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க’ என்பது விருத்தி
தேசிகமாலை, பஃறொடை வெண்பாக்களால் ஆனது. உரைகாரர்களுக்கு இது நன்கு பழகிய
நூலாயிருந்தது. ஆனால் இந்நூல் இப்பொழுது இல்லை."
திருவள்ளுவ மாலை
திருக்குறளுக்குச் சிறப்புப் பாயிரம் போல் அமைந்தது திருவள்ளுவ மாலை. குறள் எழுந்த காலத்தில், எழுந்த நூல் இது என்றும், மிகப் பிற்காலப் புலவர் ஒருவர் பழம் புலவர்களின் பெயரில் பாடி வைத்தது இது என்றும் இரு வேறு கருத்துகள் உலவுகின்றன.
திருக்கறளைப் பாராட்டும் வகையில் எழுந்த திறனாய்வு நூலே திருவள்ளுவ மாலை எனலாம். திறனாய்வு நூல் என்பதை விட, இது திறனாய்வுப் பாடல்களின் தொகுப்பு நூல் எனலாம். இந்தத் தொகுப்பு தனி வேறுபாட்டோடு விளங்குகின்றது. சங்கப் புலவர்கள் ஒருங்கு கூடித் திருக்குறளைத் திறனாய்ந்ததால், ஒவ்வொரு புலவரின் கண்ணோட்டத்திலும் திருக்குறள் திகழுமாற்றைத் தனிப் பாடலாக்கித் தகுந்த நிலையில் இது அமைந்திருக்கின்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி.11ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு புதுமையான முயற்சி என்றே இதைக் கூற வேண்டும். இதில் 53 வெண்பாக்களும், ஒளவையார் பாடியதாக ஒரு குறள் வெண்பாவும் ஆக 54 பாடல்கள் உள்ளன.
ஆய்வரங்கு 2008

Page 171
ஒளவையார்
சங்க காலம் தொடங்கி மிக பிற்காலம் வரை பல ஒளவையார்களைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சந்திக்கிறோம். பிற்காலச் சோழர் காலத்தில் ஒளவையார் ஒருவர் வாழ்ந்தார் என்றும், அவர் ஆத்திசூடி, கொள்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்னும் நீதி நூல்கள் பாடிய பெருமாட்டி என்றும் அறிகிறோம். இவரே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். சங்க காலத்து ஒளவையார் நாட்டை ஆண்ட தலைவர்களின் அவைக்களத்தில் மட்டும் விளங்கியவர். இந்த ஒளவையார் சோழ அரசனுடைய அவைக்களத்திலும் விளங்கினார். சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் பழகினார். அந்த அளவில் நிற்காமல், ஊர் ஊராகச் சென்று சிற்றுார்களில் சிறு குடிசைகளில் வாழ்ந்த உழவர்களோடும் பழகி, அவர்கள் அன்போடு தந்த கூழையும் குடித்துப் பாடினார். ஏழை உழைப்பாளிக் குடும்பங்களோடு ஒன்றி அன்போடு வாழ்ந்த அந்தப் புலவரைக் 'கூழுக்குப்பாடியவர்”என்று இன்றுவரை பாராட்டி வருகிறார்கள். அவர் சிறுப்பிள்ளைகளின் வாழ்விலும் இன்பம் கண்டவர்.108 சிறுவர்களுக் காவும் மாணவர்களுக்காகவும் அவர் இயற்றிய நூல்கள் நீதிகளையும் வாழ்க்கை உண்மைகளையும் எடுத்துரைக்கின்றன.
கல்வியொழுக்கம், நன்னூற்கோவை, பந்தனந்தாதி, அருந்தமிழ் மாலை, தரிசனப்யத்து, அசதிக்கோவை ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவை என்பர். அசதிக் கோவையின் சில பாடல்களே கிடைத்துள்ளன.
மெய்க்கீர்த்தி
‘மெய்க்கீர்த்தி என்பது பேரரசனது மெய்ப்புகழையும் வரலாற்றையும் எடுத்துரைத்து, அவன் தன் மாதேவியருடன் நீடுவாழ்க என வாழ்த்தி, அம்மன்னனின் இயற்பெயரோடு சிறப்புப் பெயர்களையும் ஆட்சியாண்டினையும் கூறும் செய்யுளாகும்.109 பொதுவாக இது சோழ மன்னருடைய கல்வெட்டுகளின் தொடக்கத்தில், அரசனுடைய இத்தனை யாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப் பெறுவது. அவனுடைய வரலாற்றையும் வெற்றிச் சிறப்பு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

களையும் முறையாகக் கூறுவது. தமிழ் வளம் நிறைந்த இம்மெய்க்கீர்த்திகள், அவ்வேந்தர்களின் அவைக்களப் புலவர்களாக விளங்கிய பெரு மக்களால் பாடப் பெற்றிருத்தல் வேண்டும்.10
சோழ மன்னர் பரம்பரையில் முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்திக் காணப்படுகிறது (கி.பி.1993). இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் என்று தொடங்கி உடையார் பூரீராசராச தேவர்க்கு யாண்டு என்று முடியும் இது 14 அடிகள் மட்டுமே கொண்டது.
பின் வந்த மெய்க்கீர்த்திகள் குலமரபை மிகவும் விரிவாகக் கூறுகின்றன. வீரராசேந்திரனின் மெய்க்கீர்த்தி ஒன்று 224 அடிகள் கொண்டது. பொதுவாக அகவலோசையும் கலி ஓசையுமே கொண்டு மெய்க்கீர்த்தி இயற்றப்படும்.
தனிப்பாடல்கள்
இலக்கிய ஆராய்ச்சியில் பல சமயங்களில் தனிச் சுவை பயப்பனவாய்த் திகழ்வன தனிப் பாடல்கள். சோழ மன்னர்களைப் பற்றிய பழம் பாடல்களாகிய இவற்றை, நூலாசிரியர்களும் மக்களும் இவற்றிலுள்ள இலக்கியச் சுவையும் நயமும் கருதிப்பெரிதும் போற்றிவந்திருக்கிறார்கள். சில பாடல்கள் அரசர்களால் பாடப்பட்டவை.
முதலாம் ஆதித்த சோழனைப்பற்றிக் காணப்படும் மூன்று பாடல்கள் நம்பியாண்டார் நம்பி இயற்றியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ளன.
கண்டராதித்த சோழர் தானே பாடிய பத்துப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இப்பதிகத்தின் இறுதிப்பாடலில் தன் பெயரை இவர் குறித்திருப்பதோடு எட்டாம் பாடலில் தன் தந்தை முதற் பராந்தக சோழன் தில்லையம் பலத்தைப் பொன் வேய்ந்து சிறப்பித்தனையும் பாராட்டியிருக்கிறார்.
இரண்டாம் பராந்தகன் என்று சொல்லப்படு கின்றவனும் இராசராச சோழனின் தந்தையுமான
155

Page 172
இராசசேகரி சுந்தரசோழரின் கி.பி.957-970இல் ஆட்சி புரிந்தான்; இவனைப் போற்றும் நீண்ட கலிப் பாடலொன்று, யாப்பருங்கல உரையிலும் வீரசோழிய உரையிலும்t11 காணப்படுகிறது. இப்பாடலானது, பழையாறை மன்னர் சுந்தர சோழனுடைய கொடைத் திறத்தினையும் படைத்திறத்தினையும் அழகினையும் ஆற்றலினையும் பலபடப் பாராட்டி, அத்தகு சோழன் உலகிற் சிறந்து வாழ வேண்டுமென்று போதி நிழலிலமர்ந்த புத்தனைப் பரவுகிறது. இது மன்னனுடைய சமயப் பொதுமைக்கு எடுத்துக் காட்டான பாடலும் ஆகும்.
இவனைப் பற்றி மற்றொரு பாடலும் வீரசோழிய உரையில் காணப்படுகிறது.12 இப்பாடல்களைச் சுந்தர சோழனே பாடியதாகக் கருதுவாரு முண்டு.13
இரண்டாம் இராசேந்திரனைப் பற்றி பாடலொன்றம் காணப்படுகிறது.114 இதில் இச்சோழன் மேலைச்சாளக்கியரோடு பொருத கொப்பதுப் போர் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
வீரராசேந்திரனைப் பற்றி ஏழு பாடல்கள் காணப்படுகின்றன.15 முதலாம் குலோத்துங்கனைப் பற்றி 13 பாடல்களும், விக்கிரம சோழனைக் குறித்து 11 பாடல்களும், இவனது படைத்தலைவர் மணவிற்கூத்தன் காலிங்கராயன் புரிந்த கோயில் திருப்பணிகள் குறித்து 63 பாடல்களும், இரண்டாம் குலோத்துங்கன் மீது 12 பாடல்களும், இரண்டாம் இராசராசன் பற்றி 16 பாடல்களும், மூன்றாம் குலோத்துங்கன் மீது 10 பாடல்களும் காணக்கிடைக் கின்றன.116
வடமொழி நூல்கள்
பல்லவரால் போற்றி வளர்க்கப்பட்டு, ஆட்சிமொழித் தகுதியைப் பெற்ற வடமொழியின் , இலக்கிய வளர்ச்சிச் சோழர் காலத்திலும் தொடர்ந்தது. ஆனால் அதன் தலைமை நிலை மாறி விடுகிறது. தலைமை ஏற்கும் தகுதியைத் தமிழ்மொழி பெற்று இலக்கியச் செழுமையில் ஒரு பொற்காலத்தை நிறுவுகிறது. என்றாலும்
156

வடமொழியின் இலக்கிய வளர்ச்சி இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறமுடியாது. ‘சோழர் காலத்தில் புலவர் போற்றும் இலக்கிய மொழியாக வடமொழி விளங்கியது. விரிந்து பரந்த சோழப் பேரரசின் அயல்மொழியாக பகுதி மக்களோடு தொடர்புகொள்ள வடமொழி பெரிதும் உதவியது. எனவேதான் இலக்கியம், அரசியல், சமூகம், கல்வி ஆகிய துறைகளில் தமிழுக்குரிய செல்வாக்கினை வடமொழி பெற்றிருந்தது எனக்கூறலாம். வடமொழித் தொடர்பால் தமிழில் செழுமை கூடவும், தமிழ்நாடு தந்த ஆதரவால் வடமொழியில் வளமை கூடவுமான போக்கை இக் காலக் கட்டத்தில் காணுகிறோம்.
வடமொழிப் புலமை மிகந்த தமிழறிஞர்கள் அம்மொழியில் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கினர். வடமொழிக் காவியங்களும், சமணத் தத்துவ நூல்களும், இலக்கணங்களும் அகராதிகளும் இயற்றப்பட்டன. இத்தகைய இலக்கியப் பணியில் சோழப் பெருவேந்தர்கள் பெரிதும் ஈடுபாடு காட்டினர். 'வடமொழி வல்ல சைவ அந்தணருக்காக ஒரு கிராமத்தையே உருவாக்கினான் முதலாம் குலோத்துங்கன்.
இலக்கிய நூல்கள்
10-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பகவத்புராணம், தமிழ் மண்ணில் உருவான வடமொழி இலக்கியம். இதில் பக்தியும் அத்தைவ வேதாந்தமும் இணைந்துள்ளன. குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்த மாலா' பக்திபத்ரா எழுதிய "ஆச்சாரிய சூடாமணி', 'உண்மாத வாசவதத்தர்’ ஆகியவையும் வடமொழி நாடகங்களாகும். உத்தரமேரூர் அந்நாளில் வடமொழி வல்லுநர்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. அங்குள்ள கற்றறிந்தோர் இல்லத்தைச் சார்ந்த சாரத தனயன், பல்வேறு வகையான வடமொழி நாடகங்களின் பண்பியல்புகளைத் குறித்து ஒரு நூல் எழுதியுள்ளான். “பாவப்பிரகாசா எனும் சொல்லணி நூலையும், சாரதியார்’ எனும் இசை ஆய்வு நூலையும் இயற்றியுள்ளார். மேலும் சிம்மபுரத்தைச் சேர்ந்த் கனகசேனவாதிராசன், பாசோரத சரிதம்' எனும்
ஆய்வரங்கு 2008

Page 173
இரக்கியத்தைப் படைத்துள்ள்ார். திருவிடை மருதூரைச்சார்ந்த தட்சிணாவர்த்த நாதர், காளிதாசரின் காப்பியங்களுக்கு உரை எழுதிய பெருமையுடையவர்.
சமய,தத்துவ நூல்கள்
11-ஆம் நூற்றாண்டில், 6. திருமுல்லைவாயிலைச் சேர்ந்த சிறீகந்தன், எழுதிய 'பிரமிமாம்ச பாஷ்யத்தில் சைவ சமய நோக்கில் பாதராயினாவின் சூத்திரங்களை விளக்குகிறார். இது சிவாத்மைதமாகத் தனித்து மிளிர்கிறது. 12-ஆம் நூற்றாண்டில் திரிலோசன சிவாச்சாரியார் சைவசித்தாந்தம் குறித்த 'சித்தாந்த சாராவளி' யை இயற்றினார். அதே நூற்றாண்டில் சிதம்பரத்தைச் சார்ந்த அகோரசிவம் என்பார், சைவ சமய நியமங்கள் பற்றிய கிரியா கிரமத்யாதிகம்' என்ற நூலினை இயற்றினார். இவரே, தத்துவ சங்கிரகம், போக காரிகம், நாதாகாரிகம், சத்தினதிரேயம் ஆகிய நூல்களின் உரையாசிரியருமாவார். சிதம்பரத்தைச் சேர்ந்த மற்றொரு குறிப்பிடத்தக்க சான்றோர்உமாபதி சிவாச்சாரியாவார். சைவ சித்தாந்த நூற்கள் பலவற்றை பலவற்றையும் தமிழில் தந்த இவர், வடமொழிப் புலமைமிக்கவர். ‘சதரத்தின சங்கிரகம்’ என்னும் சிவாகமத் தொகுப்பினை வடமொழியில் இற்றியவரும் இவரே. விசிஷ்டாத்வைதம், துவைதம் குறித்த நூல்களும் இக்காலக்கட்டத்தில் படைக்கப்பட்டன. ஆழ்வார்களின் பக்திப் பாடல்களைத் தொகுத்தளித்த நாதமுனி வடமொழியில் ‘யோக ரகசியம் 'நியாயத்த்துவம் குறித்த ஸ்தோத்திர ரத்தினம்’ என்ற நூலின் ஆசிரியர். இவர் பகவத்கீதைக்கும் உரை எழுதியுள்ளார். இவரது பிறநூல்கள்; ஆகமப் பிரமாண்யம், சித்திரத்யம், மகாபுருஷ நிர்யணம் ஆகியவை. இம் மூன்று நூல்களும் கீதார்த்த சங்கிரகம் என்ற நூலும், இராமனுசர் செய்த பூரீபாஷ்யத்துக்கும் கீதாபாஷ்யத்துக்கும் ஆதாரமாக அமைந்தவை. இராமானுசரின் குருவாகக் கருதப்படுகிற, பேதாபேதவாதியாகிய யாதவப்பரிகாசர், 'யதிரர்ம சமுச்சயம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

திருப்பெரும்புதூரைச் சார்ந்த இராமானுசர், விசிஷ்டாத்வை தத்துவத்தை முறைப்படுத்தியவர். ‘ழரீபாஷ்யம்', 'கீதாபாஷ்யம் கத்யத்ரம்' ஆகிய நூல்களின் ஆசிரியரும் இவரே. இராமானுசரின் சீடராகிய கூரேசன், இராமானுசரின் பூரீபாஷ்யத்திற்கு உரை எழுதியுள்ளார். முதலாம் பராந்தகன் காலத்து வெங்கடேச மாதவன், ரிக்வேதத்திற்கும், திருவரங்கத்து பரதசுவாமி, சாம வேதத்திற்கும் உரை வடித்துள்ளனர். உத்தர மேரூரை சேர்ந்த சாமவிதான பிராமணனும் இலக்குமண வேதபூஷணம்’ என்னும் வேத விளக்கத்தை வரைந்துள்ளனர். ஹரதத்தன் என்பவர் ஆகவலாயன கிரிய சூத்திரம், ஆபஸ்தம்பம், பெளதம தர்மசூத்திரம் வேண்டிய நியதிகள் பற்றிய ஸ்மிருதி முக்த பாலா’ என்னும் நூலை வைத்திய நாத தீட்சிதர் சமைத்துள்ளார். வைணவர்கள் பின்பற்ற வேண்டிய நியதிகள் பற்றிய ஆஷங்க சதகம்' என்னும் நூலை மணற்பாக்கம் வெங்கடாச்சாரியார் படைத்திருக்கிறார்.
இலக்கண நூல்கள்
வாமனர், ஜெயாதித்தர் எழுதிய காசிகா என்னும் இலக்கண நூலுக்கு ஹரதத்தன் எழுதிய பதமஞ்சரி என்னும் விளக்க நூல் குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே மற்றொரு நூல், கிருஷ்ண லீலாசுகர் எழுதிய புருஷகாரம் ஆகும். அகராதித் துறையில், யாதவப் பிரகாசரின் வைஜயந்தி என்னும் நூல் ஒரு சிறந்த படைப்பு. வடமொழி இலக்கிய வளர்ச்சிக்காக முதலாம் குலத்துங்கன், சமஸ்கிருத வல்லுநர்கள் கொண்ட ஊர் ஒன்றை உருவாக்கியதைத் தொடர்ந்து இவ்வூரைச் சேர்ந்த மரபிலக்கண ஆசிரியர் ஒருவரிடம் இரண்டாம் இராசராசன் இளைய தலைமுறையினருக்காகப் பேரகராதி ஒன்றைத் தொகுத்துத்தரப் பணித்தான் என்பது எண்ணி மகிழற்பாலது. இப்பேரகராதியிலுள்ள சொற்கள் இம்மன்னனின் நேரடிப் பார்வையின் கீழ் அகரவரிசைப் படுத்தப்பட்டன. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருளை மன்னனே தீர்மானிக்க, இப்பேரகராதி எழுதப்பட்டது என்பர். நானார்த்தார்ணவ சம்க்ஷே என அழைக்கப்படும் இப்பேரகராதியில் முன்னுரைப் பாடல்களிலிருந்து இச்செய்திகளை அறிகிறோம்.
157

Page 174
அடிக்குறி
1. உ.வே. சாமிநாத ஐயர், சீவகசிந்தாமணி மூலமும்
நச்சினார்க்கினியருரையும்-மூன்றாம் பதிப்பு 1922, U3.20
2. சீவகசிந்தாமணி 3154 என்கிறார் மு. அருணாசலம்.
உ.வே.சா. பதிப்பில் 3145.
3. ச.வே. சுப்ரமணியன், இலக்கணத் தொகை, யாப்பு
பாட்டியல், தமிழ் பதிப்பகம், சென்னை,1978, பக்.93
4. சீவகசிந்தாமணி-நச்சர் உரை-பக்21
5. K.A. Nilakanta Sastri, The Colas, University of Ma
dras, 1984 p.666.
6. K.A. Nilakanta Sasttri, The Colas, University of Ma
dras, 1984 p.667.
7. மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு. (ஆனால், கே. ஏ. நீலகண்ட சாத்திரி, கி.பி. 898இல் குணபத்திரரால் இயற்றப்பட்ட உத்தர புராணத்தில் காணப்படும்கூடித்திரசூடாமணியின் கதையைத் தழுவியது இது. எனவே இதன் காலம் கிபி.10ஆம் நூற்றாண்டுஆக இருக்கலாம் என்கிறார், பக்666)
8. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு , சாகித்திய
அகாதமி, புதுதில்லி,1972, பக்.146.
9. Collected papers of Prof. T.P. Meenakshisundran,
Annamalai University, Annamalaingar, 961 p.46
10. ச.வே. சுப்பிரமணியன், இலக்கணத் தொகை, யாப்பு -
பாட்டியல், தமிழ்ப்பதிப்பகம்இ சென்னை, 1978,பக்.96
11. "...in the Ramayana of Kamban the world possesses an epic which can challenge comparision not merely with liiad, Aneid, The Paradise Lost and the Maha Baharatha but with its ofrignal itself namely the Ramayana of Valmiki. this is not the language of mere patriotic enthusiasm. It is an opinion that has grown slowly with years and after and deep careful study" -V.V.S. lyer
Kambaramayana, a study.)
12. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய
அகாதமி, புதுதில்லி, 1972, பக்.118
13. எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ் இலக்கியசரிதத்தில் காவிய
காலம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை-5, 1962, பக் 228.
14. ச.வே. சுப்பிரமணியன், இலக்கணத் தொகை, யாப்பு
பாட்டியல், தமிழ்ப்பதிப்பகம், சென்னை, 1978, பக்.96.
15. ம.து.ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1987, பக்.159
58

|մպ&56ir
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, அகாதமி, புதுதில்லி, 1972,பக். 159
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972,பக்.163 மேற்படி, பக்.163-4. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972,பக்.148-149.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு பக்.7. மேற்படி, பக்.92.
சூளாமணி மூலமும் உரையும், சைவ சிந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1970.
மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972, பக்-148
மேற்படி, பக்.92. மு. வ. 29 என்கிறார். மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972, 3.150
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.10. மேற்படி, பக்.10, 8 ஆம் நூற்றாண்டு என்பது மு.வ.வின் கருத்து. (பக்.149) க.அ. நீலகண்டசாத்திரி வளையாபதி குண்டலகேசி ஆகிய காப்பியங்களின் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பதாகக் கருதுகிறார். மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு பக்.19. எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ் இலக்கிய சரித்திரத்தில் காவிய காலம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-5, 1962 பக், 228-229.
மேற்படி, பக்.229. மேற்படி, பக்.230
மேற்படி, பக்.221 சாசனத் தமிழ்க்கவி சரிதம், மு.இராகவையங்கார், பக்5152.
எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ் இலக்கிய சரித்திரத்தில் காவிய காலம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை-5, 1962 பக், 231,
K.A. Nilakanta Sasttri, The Colas, University of Madras, 1984 p.668.
ஆய்வரங்கு 2008

Page 175
37.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.296
38. சோக்கிழார் புராணம் 4253 என்கிறது.
39.தமிழர் பண்பாடும் வரலாறும், ஆங்கிலமூலம்; க.அநீலகண்ட
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
சாத்திரி, தமிழாக்கம் சிட்டி, வாசகர் வட்டம், சென்னை-17, 1965, பக் 179.
மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972,பக்.152-153. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, சிந்தாமணி பதிப்பகம், மதுரை, 1992, பக்.270 மேற்படி, பக்.270. டி.வி.சதாசிவபண்டதாரத்தார் - தமிழ் இலக்கிய வரலாறு 13,14,15 ஆம் நூற்றாண்டு பக்.14
K.A. Nilakanta Sasttri, The Colas, University of Madras, 1984 p.677. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.396
மேற்படி, பக்.398.
மேற்படி, பக்.400.
மேற்படி, பக்.401
மேற்படி, பக்.404. க.கைலாசபதி, சமூகவியலும் இலக்கியமும், நியூ செஞ்சுரி புக் அவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1970,ப270. க. கைலாசபதி, அடியும் முடியும், பாரி நிலையம், சென்னை, 1970, L. 270.
ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக்.148. っ தமிழர் பண்பாடும் வரலாறும், ஆங்கில மூலம்: க. அ. நீலகண்ட சாத்திரி, தமிழாக்கம் சிட்டி, வாசகர் வட்டம், சென்னை-17, 1965,பக்.175.
ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக். 148.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,பக்.374.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.730
மேற்படி, பக்.730
மேற்படி, பக்.739. மெய்கண்டசாத்திரம், தருமபுர ஆதின வெளியீடு,1942 ம. பாலசுப்பிரமணியன், ஆங்கில முன்னுரை
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.706.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

6.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
8.
ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக். 167. மேற்படி, பக்170.(நாதமுனிகள் கிபி.823-இல் அவதரித்த 918வரை வாழ்ந்தார் என்றும் கருதுவர்- ஆழ்வார்கள் கால நிலை, மு.இராகவையங்கார்,பக்.20) ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக். 189. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.756.
மேற்படி, பக்.769.
மேற்படி, பக்.741 ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக்.221-222. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.390 மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972,பக்.28. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.821,822. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972,பக்.133.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.529. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, சிந்தாமணி பதிப்பகம்,மதுரை, 1992, பக்,355. ந.வீ. செயராமன், சிற்றிலக்கியச் செல்வம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1979 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.653. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.247.
மேற்படி, பக்.282.
K.A. Nilakanta Sasttri, The Colas, University of Madras, 1984 p.684.
மேற்படி, பக்.682.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.529. பிறநூல்கள் மாறனலங்காரம், குவலாயனந்தம் என்பன. இறந்துபோன அணியில் என்னும் நூல் 24 அணிகளைக் குறிப்பிடுகிறது. தண்டி 35; மாறலங்காரம் 64; குவலயானந்தம் 100.
159

Page 176
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.627
மேற்படி, பக்.631
க. இராசாராம், வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, இராகவேந்திரா, நாகர்கோவில், 1992,பக். 32
மேற்படி, பக்.264 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.313. மது. ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், ஐந்திணைப்பதிப்பகம், சென்னை, 1987, uės. 189
மேற்படி, பக்.131
மேற்படி, பக்.138-155 எஸ். வையாபுரிப் பிள்ளை, தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை-5, 1964, uši 211-212.
நன்னூல் சூத்திரம் 459 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு,பக்.135.
மேற்படி, பக்.155. ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக்.238. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,பத்தாம் நூற்றாண்டு,பக்.149
160
 

96.
97.
98.
99.
100.
101.
102.
103.
飞]4。
105
106.
O7.
108.
109.
O.
உ.வே. சாமிநாத ஐயர், சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்,1968.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.535.
வ.சுப. மாணிக்கம், ஒப்பியல் நோக்கு, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1978,பக். 109. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,பக்.523. ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக்.286 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரெண்டாம் நூற்றாண்டு,பக்.565. மேற்படி, பக்.301
ஏ.வி. சுப்ரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, அமுத நிலையம்,பக்.298
மேற்படி, பக்.301 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,பக்.545
மேற்படி, பக்.552.
மேற்படி, பக்.55, மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதமி, புதுதில்லி, 1972, பக்171172 டிவிசதாசிவபண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம், பகுதி1,அண்ணாமலைபல்கலைக்கழகம், 1949,பக்.253 மேற்படி, பக்.256.
ஆய்வரங்கு 2008

Page 177
击 டும்பாளூ IT
T சியிருக்கும் இரண் எஞ்சியிரு
 

டு கருவறைகள் மாத்திரம்

Page 178
■
காலாரிமூர்த்தி, ந
 
 

*
W WA
WAW
魯
th பண் - ஸ்வஸ்திகக் கரன الجسر

Page 179
தேவ க குறும்பும் நாணமும் இ
இராமன் லட்சுமணனை பயமுறுத்த
 
 

00്ടിr
ளவு சிற்பம்
முயலும் அரக்கன். வியப்பில் சீதை

Page 180
நாட்டிய
புள்ளமங்கையில் ஒரு சாச்
 
 

சிற்பங்கள் கை வாழ்ந்ததன் எதிரொலி

Page 181
GBognypst a
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக் காலத்திலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிவரையில் ஆட்சிபுரிந்த சோழகுல மன்னர்கள் வலிமை மிக்க பேரரசைத் தென்னிந்தியாவில் ஏற்படுத்தி, அதற்கேற்ற நிருவாக அமைப்பினை உருவாக்கி, நாட்டு மக்களின் ஆன்மீக மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்களாக விளங்கினர். மேலும் இறைப் பற்றில் மக்கள் சமுதாயம் ஊறித் திளைத்து நல்வாழ்வு காணும் வகையில் சமயங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டிருக்கின்றனர். சோழர் காலத்தில் சமயங்களின் வளர்ச்சி உயரிய நிலையை அடைந்தது எனலாம்.
சைவ சமயம்
சோழர்கள் முனைப்பான சிவபக்தர்களாக விளங்கினர். சைவ சமயத்தின் மீது ஆழமான பற்று கொண்டிருந்த அவர்கள் நூற்றுக்கணக்கான சிவன் கோயில்களைக் கட்டினார்கள். சோழப் பேரரசின் உருவாக்கமும், சைவ சமய வளர்ச்சியும் ஒருங்கிணைந்தது. பக்தி இயக்கமும் அதன் அடிப்படையிலான சைவ சமய வளர்ச்சியும் சோழராட்சிக்கு ஒரு கருத்தியல் கருவியாக அமைந்தது எனலாம். அதே நேரத்தில் இச்சமயம் சோழர் காலச் சமுதாயத்தில் அரசு ஆதரவோடு பல்வேறு வழிகளில் செல்வாக்குற்றது. சைவ பக்தி இயக்கத்தின் இலக்கிய அடிப்படையான தேவாரப் பதிகங்களில் முறையான மரபு முழுமை பெற்றது. சோழர் காலத்தில்தான் பக்திஇயக்கத்தின் நிறுவன அடிப்படைகளான கோயில்களும், மடங்களும் சிறப்புற்றன. சோழர் காலத்தில் தான் சேக்கிழாரின் மாபெரும் படைப்பான பெரிய புராணம் தோன்றியது. சைவ சித்தாந்தம் முறைப்படுத்தப்பெற்றது.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

560ô ĐFIDuLufô
சைவப் பிரிவுகள்
பல்லவர் காலந்தொட்டுத் தமிழகத்தில் பக்தியின் அடிப்படையிலான சைவ சமய வளர்ச்சி அமைந்தது. தமிழகத்திற்கு அப்பாற்பட்ட வெவ்வேறு சைவ சமயப் பிரிவுகளின் சார்புடைய அறிஞர்களும் துறவிகளும் தமிழ்நாட்டிற்கு வந்ததன் காரணமாகச் சோழர் காலத்தில் அப்பிரிவுகளின் தாக்கத்தினைக் காண முடிகிறது. தமிழகத்தில் குடியேறிய சைவத் துறவியர்கள் தங்களது நம்பிக்கைகளாகிய பாசுபதம், காபாலிகம், காளமுகம், கோளகி ஆகிய சைவப் பிரிவுகளைத் தோற்றுவித்தனர்.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், பாசுபத சைவம் திருவொற்றியூரில் சிறப்புற்றிருந்ததை அறிய முடிகிறது. பல்லவர் காலத்தில் சிறப்புற்றிருந்த காபாலிகரது சைவம் சோழர் காலத்தில் வீழ்ச்சியுற்றது. இருப்பினும் 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் காபாலி சைவம் திருவொற்றியூரில் விளங்கியதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. கி.பி.181ஆம் ஆண்டில் வாகீச பண்டிதர் என்பவர் அக்கோயிலில் ‘சோமசித்தாந்தம்' என்னும் காபாலிகரது சித்தாந்தத்தை விளக்கியது பற்றி அறிகிறோம்.
பத்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழகத்தில் காளமுக சைவம் பரவியிருந்ததைக் காணலாம். கன்னட நாட்டு மன்னர்கள் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்புகளால் தான் காளமுக சைவம் இங்கு பரவியது என அறிஞர்கள் கருதுகின்றனர். காளமுகர்களின் கோயில்களையும் மடங்களையும் தருமபுரி, செங்கல்பட்டு தென்னார்க்காடு (ஜம்பை), வட ஆர்க்காடு (வேடல், மேல்பாடி, தஞ்சாவூர் (திருவையாறு, திருவலஞ்சுழி),
61

Page 182
புதுக்கோட்டை (கொடும்பாளூர்), ஆகிய மாவட்டங்களில் காண முடிகிறது, தமிழகத்தில் சைவ மடாலயங்களை முறைப்படுத்தியவர்கள் அவர்களே. காளமுக சமயத் தலைவர்களான ஈசான சிவ பண்டிதரும் சர்வசிவ பண்டிதரும் முறையே முதலாம் இராசராசனுக்கும் முதலாம் இராசேந்திரனுக்கும் அரச குருக்களாக இருந்துள்ளனர்.
சோழர் காலத்தில் தமிழகத்தில் கோளகி சைவம் பரவியிருந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் கோளகி சைவம் நுழைந்தது. பிறகு அரசு ஆதரவினாலும், பொதுமக்கள் போற்றுதலினாலும் அது நாடெங்கிலும் பரவிற்று. மத்திய இந்தியாவில் தாகலா மண்டலத்தை ஆட்சி புரிந்த திரிபுரி கலாசூரிகளால் போற்றப்பட்டவர்கள் கோளகி சைவத்தினர் (S.I.IXNo.395). பாசுபத சைவத்தின் அடிப்படையிலான இப்பிரிவு மாளவ, திரிபுர, வாரங்கல் மன்னர்களால் பின்பற்றப்பட்டது. சோழப் பேரரசர்கள் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் முதலியோரின் கிழக்குக் கன்னட நாட்டின் படையெடுப்புகளையடுத்து, கோளகி சைவாச்சாரியர்கள் தமிழகத்தில் நுழைய லாயினர். இப்பிரிவு மன்னர்களாலும், மக்களாலும் சோழராட்சியில் போற்றப்பட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் இந்தச் சைவப் பிரிவு தமிழகத்தில் காணப்பட்டாலும் முதலாம் இராசேந்திரன் காலத்திலிருந்து இப்பிரிவைச் சார்ந்த சைவாச்சாரியார்களின் சந்தானங்களைக் காணமுடிகிறது. இக்காலத்தில் லட்சாத்யாயி சந்தானத்தைச் சார்ந்த கோளகிச் சைவர் சிதம்பரத்தில் மேலைச் சேரிப் பகுதியில் சிறப்புற்றிருந்தனர். சோழர், பாண்டியர் ஆகியோரின் கல்வெட்டுகள் இப்பிரிவினர் 12-13 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகமெங்கும் பரவியிருந்ததனைக் குறிப்பிடுகின்றன. இப்பிரிவைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் சிவப்பணியில் தங்களை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டு சுத்த சைவத் தத்துவங்களை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டு சுத்த சைவத் தத்துவத்தின்
162

அடிப்படையிலான கோளகி அறமுறையைப் பரப்புவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்
கொண்டனர். அவர்களில் சிலர் சோழ மன்னர்களின் அரச குருக்களாகவும் செயலாற்றினர்.
சோழப் பெருவேந்தர்களின் சைவக் கோயிற் பணிகள்
ஆழ்ந்த சிவப்பற்று கொண்டிருந்த சோழர்கள் சைவ சமயத்தை வளர்ப்பதில் கண்ணுங் கருத்துமாயிருந்தனர். இவர்கள் காலத்தில் மன்னர் முதல் சாதாரணக் குடிமகன் வரையிலான அனைவரும் சைவ சமயத் தொண்டில் திளைத்தனர். இதன் விளைவாக இக்காலத்தில் கோயில்கள் பெருகின. மன்னர்களும் அவர்களது அரசியாரும், அவர்தம் உறவினர்களும் பெருமளவில் சிவன் கோயில்களுக்கு அறங்களைச் செய்து வழிகாட்டினர். அவர்களை அமைச்சர்களும், குறுநில மன்னரும், நிலப்பிரபுக்களும் பின்பற்றினர். வணிகர்களும், செல்வாக்குள்ள பிறகுலத்தவர்களும் தாராளமாக அறங்கள் புரிந்தனர். அரசாங்க அலுவலர்களும், அவர்தம் மனைவியரும், துறவியரும், குடிமக்களும் கோயிற் திருப்பணிகள் பல செய்தனர். சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்டத்தை தேவதானம்' எனவும் திருநாமத்துக்காணி எனவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. புதிய கோயில்களும் கட்டப்பட்டன. அதே நேரத்தில் பல்லவர் காலத்துப் பாடல் பெற்ற தலங்களும், பாடல் பெறாத கோயில்களும் இக்காலத்தில் புதுப்பிக்கப்பெற்றன. பக்தி இயக்கத்தின் ஒரு நிறுவன அடிப்படையாகவிருந்த சிவன் கோயில்கள் மன்னனுக்கும் ஊர் மக்களுக்குமிடையில் ஒர் இணைப்பாக நீடித்தன.
சோழர் காலத்தில் கோயில்கள் எடுப்பித்தலும் அவை சார்ந்த திருப்பணிகளும் ஒர் இயக்கமாகவே உருவெடுத்தன. இவ்வியக்கம் விசயாலய சோழன் காலத்தில் தொடங்கிற்று. சோழப் பேரரசை நிறுவிய இவன், தஞ்சை நகரில் நிசும்பசூதனி’ என்ற துர்க்கைக்கு ஒரு கோயில் எடுப்பித்தமையைத்
ஆய்வரங்கு 2008

Page 183
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் எடுத்தியம்பு கின்றன. மேலும் இம்மன்னன் காலத்தில் புதுக் கோட்டைக்கு அருகில் நார்த்தாமாலை என்ற ஊருக்குத் தென் மேற்கேயுள்ள ஒரு குன்றின் மேல் விசயாலய சோழிச்சுவரம் என்ற கற்றளி எழுதப்பட்டது."
முதலாம் ஆதித்த சோழனின் திருப்பணிகளும் சிறப்பானவையேயாம். இவன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவன் கோயில்களைக் கற்றளிகளாய் எடுப்பித்தான். அன்பிற் செப்பேடுகள் இச்செய்தியைப் புகழ்ந்து கூறுகின்றன. பல்லவர் காலத்துக் கற்றளிகளல்லாத பல கோயில்களைக் கற்றளிகளாக மாற்றிய பெருமை இவனைச் சாரும். இதுபோன்ற பணிகள் சோழ அரசர்களாலும், அரசியராலும் மற்றவர்களாலும் சோழராட்சிக் காலம் முழுவதும் செய்யப்பெற்றன. ஆதித்தன் காலத்தில் மேற்கூறிய கோயில்களின் கருவறையும் விமானமும் கற்றளிகளாக மாற்றப்பட்டன. திருப்புறம்பியம் போர் ஈந்த வெற்றியின் நினைவாக அவ்விடத்திலிருந்து ஆதித்தேச்சுவரம் என்ற கோயிலை இம்மன்னன் அரிய சிற்பத்திறனுடன் பெருங் கற்றளியாக எடுப்பித்தான். திருச்சிராப் பள்ளிக்கு அண்மையிலுள்ள திரு எறும்பியூர்க் கோயில் இம்மன்னால் கற்றளியாகக் கட்டப்பட்டது. கும்பகோணம் நாகேசுவரம் கோயிலும், திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூர் அரங்கநாதர் கோயிலும் இவனால் அமைக்கப்பட்டத் தனிச்சிறப்புப் பெற்ற கற்றளிகளாகும். இவனது மூத்த மனைவியாகிய வல்லரையன் மகளான இளங்கோப்பிச்சி திருமழபாடி சிவன் கோயிலுக்குத் திருவிளக்குப்புறமும்" மற்றொரு மனைவியான திரிபுவனமாதேவி திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறைக் கோயில்களுக்கு விளக்கு நிவந்தங்களும் பொன்னும் அளித்தமை நோக்கத் தக்கவையாம்.' மேலும் திருவாரூரில் உள்ள பூங்கோயில் கருவறையும் இவன் காலத்தது எனக் கருதுவோரும் உண்டு. ஆரூரில் அறநெறி என்னும் கோயிலில் எழிலுறு கோட்டக் கற்சிற்பங்களைப் படைத்த பெருமை இவனைச் சாரும்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சிறந்த சிவபக்தனான முதலாம் பராந்தகன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்து அதனைப் பொன்னம்பலமாக்கியதனை ஆனை மங்கலம் மற்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. திருவிடைமருதூர், திருவாவடு துறை, திருச்செந்துறை, உறுமூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோயில்கள் இவனது காலத்தில் கற்றளிகளாக" எடுப்பிக்கப்பட்டன. திருக்கற்றளிப் பிச்சன் என்ற படைத்தலைவள் பராந்தக மன்னனின் பொருளுதவியினால் திருவாவடுதுறைக் கோயிலைக் கட்டினான்."
முதலாம் பராந்தகனின் மூத்த மகனான இராசாதித்தன் திருநாவலூரில் இராசாதித் தேச்சுவரம் என்னும் புதிய கோயிலை" எடுப்பித்தான். மிகச் சிறந்த சிவனடியானான கண்டராதித்தன் காலத்தில் அவன் பெயரிலமைந்த சதுர்வேதி மங்கலத்தில் சிவன் கோயில் கட்டப்பட்டது. கண்டராதித்தன் பாடிய பத்துப் பாக்கள் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ளன. கண்டராதித்தன் மனைவியான செம்பியன் மாதேவியார் சிறப்பான கோயிற் பணிகளைச் செய்தார். பாடல் பெற்ற சில கோயில்களை இவன் கற்றளிகளாக மாற்றினான். (எடுத்துக்காட்டு : திருநல்லம், கேனேரிராசபுரம், செம்பியன் மாதேவி," ஆடுதுறை, திருநாகேசுவரம் திருமணஞ்சேரி) சில கோயில்கள் இவனால் நிலதானமும், பொன் வெள்ளிப் பாத்திரங்களும், நகைகளும், விளக்குத் தானமும் பெற்றன. ஆரூரில் அறநெறிக் கோயில் இறைவனுக்கு வெள்ளிப் பாத்திரங்கள் அளித்த செய்தியையும் இவ்வம்மையார் அதே கோயிலில் தான் செய்தளித்த தன்மவிடங்கதேவர், உமாபட்டாரசி யார் செப்புத் திருமேனிகளின் வழிபாட்டுக்காகவும் மற்ற திருப்பணிக்காவும் 234 காசுகளை அளித்த செய்தியையும், அறநெறியின் கருவறை இத்தேவியாலேயே கற்கோயிலாக எடுக்கப்பட்ட செய்தியையும் கவ்வெட்டுகளால் அறிகிறோம்.
163

Page 184
சிவபாத சேகரன் எனப்படும் முதலாம் இராசராசசோழன் தலைநகராகிய தஞ்சாவூரில் மாபெரும் கோயில் ஒன்றை எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுரம்' என்று பெயரிட்டு, நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளான். பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் தாம் எடுப்பித்த திருக்கற்றளி°இராசராசேச்சுவரம்” என்னும் கல்வெட்டுப் பகுதியினால் இராசராசன் கோயில் எடுப்பித்த இடமும், அக்கோயிலின் பெயரும், அது அமைந்துள்ள நாடும் வளநாடும் நன்கு புலனாகும்.
அப்பரடிகள் திருவீழிமிழலைப் பதிகத்தில் வைப்புத் தலமாகப் பாடிய தஞ்சை தளிக்குளம்" என்னும் கோயிலைத் தான் இராசராசன் பெரிய கற்றளியாக எடுப்பித்துச் சிறப்பித்தான். இக்கோயிலுள்ள பெருமான் மீது இராசராசன் காலத்தவரான கருவூர்த்தேவர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அது ஒன்பதாம் திருமுறையில் சேர்த்துத் தொகுக்கப்பட்டுள்ளது. அக்கோயிலின் கல்வெட்டுகள் இராசராசனும், அவன் உரிமைச் சுற்றத்தினரும், வழித் தோன்றல்களும் அக்கோயிலுக்கு மிக்க வருவாயுள்ள ஊர்களையும் பெரும் பொருள்களையும் அளித்துப் போற்றியதைக் கூறுகின்றன. மேலும் அரசியல் அதிகாரிகளும் படையிருனரும் அக்கோயில் பெருமானுக்கும் பொற் பூக்களும், அணிகலன்களும், வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்துள்ளனர்.
இராசராசன் தஞ்சைக் கோயிலில் கடவுளர், நாயன்மார் திருமேனிகளை எழுந்தருளச் செய்தான், ஒவ்வொன்றிற்கும் விலையுயர்ந்த நகைகள் அளித்தான். பூசை விழாவிற்காகப் பல சிற்றுார்களை மானியமாக விட்டான். அங்கு இசையையும், நடனத்தையும் வளர்க்க 400 பதியிலார், நாடெங்குமுள்ள பல கோயில்களிலிருந்து குடியேற்றப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடும், ஒராண்டுக்கு 100 கலம் நெல் விளையக்கூடிய ஒருவேலி நிலமும் சேர்ந்த ஒரு பங்கு
164

கொடுக்கப்பட்டது. இதேபோன்று நடன ஆசிரியர்கள், இசைவாணர்கள், தவில் வித்துவான்கள், தையற்காரர், பொற்கொல்லர், கணக்கர் ஆகிய 212 ஆடவர்களுக்கு 180 பங்குகள் ஒதுக்கப்பட்டன. பல கோயில்களிலிருந்தும் 50 பேர் திருப்பதிகங்கள் பாடக்குடியேற்றப்பட்டனர். ஆரியம் பாடச் சிலர் நியமனம் பெற்றனர். இவ்வாறு கோயிற் பணிகளை நன்கு செயலாற்றப் பிற கோயில்களிலிருந்து பலர் தஞ்சையில் குடியேற்றப்பட்டனர்.
இராசராசன் காலத்தில் திருவாரூர்க் கோயில் அறநெறி இறைவனுக்குச் செம்பியன் மாதேவியார் அளித்த கொடைகளைப் பற்றி முன்பே கண்டோம். அக்கோயிலில் உள்ள இராசராசனது கல்வெட்டு அறநெறிக் கோயிலின் கருவறையின் தென்புறத்தில் காணப்படுவதால் அறநெறி ஒரு கற்கோயிலாக மாற்றப்பட்டதென அறிகிறோம். இஃது கி.பி. 987ற்க்கு ஒரிரு ஆண்டுகள் முன்பாக இருக்கலாமென அறிஞர்கள் கருதுகின்றனர். இராசராசன் காலத்தில் இக்கோயில் ஆடற்கலையில் உயரிய இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தது. இராசராசனின் பட்டதரசியாக விளங்கிய உலோக மாதேவி திருவையாற்றில் ஐயாறப்பரது கோயிலின் வடக்குத் திருச்சுற்றில்" உலோகமாதேவீச்சுரம் என்னும் ஒன்று எடுப்பித்து அதன் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்தாள். அது இந்தியாவின் 'உத்தரகைலாசம் என்று வழங்கப்படுகிறது. முதலாம் இராசராசன் தன் பாட்டனாகிய அரிஞ்சயனையும் பெரிய பாட்டியாகிய செம்பியம் மாதேவியையும் நினைவுகூறும் வகையில் வேலூரையடுத்த மேல்பாடி என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுரம்" என்ற கோயிலும், திருமுக்கூடலில் 'செம்பியன் மாதேவி பெருமண்டபம் என்ற மண்டபமும் கட்டுவித்தான்."
இராசராசனின் படைத் தலைவர்களுள் ஒருவரான சேனாபதி கிருட்டிணன் இராமனான மும்முடிச் சோழப் பிரம்மராயன் தஞ்சைப் பெரிய கோயிலின் திருச்சுற்று" மாளிகையைக் கட்டினான். பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவனான ஈராயிரவன்
ஆய்வரங்கு 2008

Page 185
பல்லவரையன் ஆகிய மும்முடிச் சோழப் பேரரசன் தஞ்சைப் பெரிய கோயிலின் சண்டேசுவர தேவரை எழுத்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளான். இக்காலத்தில் பொய்கை நாட்டின் தலைவனான, பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளாண் பெரிய கோயிலில் சிறீகாரியஞ் செய்து வந்தவன். இவன் இராசராசேச்சுவரத்தில் திருஞானசம்பந்த அடிகள், திருநாவுக்கரையதேவர், நம்பியாரூரர், நங்கை பரவையார் மெய்ப்பொருள் நாயனார், சிறுதொண்ட நாயனார் என்போருக்குச் செப்புப் படிமங்கள் எழுந்தருளிவித்து அவற்றிற்கு அணிகலன்களும்" அளித்துள்ளான். இவன் தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசசோழன் உலோகமாதேவி ஆகிய இருவர் படிமங்களையும் எழுந்தருளிவித்து அவற்றிற்கு அணிகலன்களும் கொடுத்துள்ளான். மேலும் இவன் திருச்சோற்றுத்துறைக் கோயிலில் நாள்தோறும் தேவாரப்பதிகம் பாடுவோர்க்கு நிவந்தமாகப் பொன் அளித்துள்ளன்.
இராசராசன் ஈழத்திலும் சிவாலயம் கட்டுவித்துள்ளான். ஈழத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள்" பொலன்னருவையில் (ஈழத்தில்) இராசராசன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்ததைத் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் கட்டட அமைப்பு தஞ்சை நகர, இராசராசேச்சுரக் கோயிலைப் போன்றே அமைந்துள்ளது.
தந்தையைப்போலவே சிவநெறியைத் தனக்குரிய சமயமாகக் கொண்ட முதலாம் இராசேந்திரன் திருச்சி உடையார்பாளையம் வட்டத்தில் பெரிய நகரம் ஒன்றை நிறுவினான். அந்நகரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற ஒரு பெரிய கோயிலை எடுப்பித்துள்ளான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சுரம் என அழைக்கப்படுகிறது. இவன் காலம் முதல் சோழராட்சி வீழ்ச்சியுறும் வரை அக்கோயில் மிகச் சிறந்த நிலையில் இருந்தது. அக்கோயில் பெருமானது நாள் வழிபாட்டிற்கும், பிறவற்றிற்கும் இராசேந்திர சோழனும் இவன் வழித்தோன்றல்களும் நிவந்தமாக வழங்கியுள்ள ஊர்கள் பல.
“சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

முதலாம் இராசேந்திரனின் நேரடியான கவனத்தில் திருவாரூர்க் கோயில் இருந்தது என்பதைச் சான்றுகள் பகர்கின்றன. இப்பெரும் மன்னனின் தேவியாம் அணுகியர் பரவை நங்கை இத்திருக்கோயிலில் தொண்டாற்றினாள். இவளது விருப்பத்தை நிறைவேற்ற இராசேந்திரன் பல தொண்டுகள் செய்துள்ளார். செங்கல் தளியாகவிருந்த வீதிவிடங்கப் பெருமானின் அர்த்த மண்டபம் கற்றளியாக மாறிற்று. விமானத்திற்கும் கருவறையின் சுவர்களுக்கும் பொன் வேயப்பட்டது. மேலும் அணுக்கியர் பரவை நங்கை கருவறையின் கதவுகளுக்கும் மண்டபத் தூண்களுக்கும் செம்பினால் தகடு வேய்ந்தாள். 15579 பலம் எடையுள்ள மிகப்பெரிய 28 குத்து விளக்குகளைக் கொடையாக அளித்தாள். ஆயிரக்கணக்கான கழஞ்சு எடையுள்ள பொன் அணிகளையும், பாத்திரங்களையும் அளித்தான். 428 முத்துக்கள், 7 மாணிக்கக் கற்கள், 36 வைரக் கற்கள், எண்ணற்ற மரகதக் கற்கள் போன்றவற்றையும் மன்னனின் ஆணையால் இறைவனுக்குக் கிடைக்கச் செய்தாள். பாவை விளக்குகள் இரண்டு அளிக்கப்பட்டன. இக்கோயிலில் அன்னதானத்திற்காகப் பல வேலி நிலங்களை இராசேந்திரன் அளித்தான். மேலும் இராசேந்திரன் தான் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய நாளிலும், தன் தந்தையின் பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாளிலும் இறைவனுக்கு வாசனைத் திருமஞ்சன நன்னீராட்டு செய்வதற் கென்றே பல நிவந்தங்களை அளித்துள்ளான்.
இம்மன்னன் கி.பி. 1019இல் சிவபக்தி மிக்க செம்பியன் மாதேவியாரின் படிமம் ஒன்று செய்வித்து அதனை நாகப்பட்டினம் வட்டத்தில் செம்பியன்மா தேவி என்னும் ஊரிலுள்ள கோயிலில் எழுந்தருளி வித்து அதன் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்.?
மன்னார்குடியிலுள்ள செயங்கொண்ட சோழேச்சுரமும், இராசராசேச்சுரமும் முதலாம் இராசாதிராசனால் கட்டப்பட்டவையாம்.
165

Page 186
முதலாம் குலோத்துங்கன் சைவ நெறியைச் சிறப்பாகப் பின்பற்றியவன். சிவபிரானிடத்தில் எல்லையற்ற பேரன்புடையவனாய்த் திகழ்ந்தவன். சிவ தீக்கைப் பெற்ற இவன் “திருநீற்றுச் சோழன்” எனவும், LIJII) மகேசுவரன் எனவும் அழைக்கப்பட்டான். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள* சூரியனார் கோயில் இவன் காலத்தில் கட்டப்பட்டது. இவன் காலம் முதல், வேங்கி நாட்டுத் திராஷாராமம் - பீமேசுவரர் கோயில் சிறப்படையத் தொடங்கியது. தில்லையுலா என்னும் நூல் முதலாம் குலோத்துங்கன் தில்லையில் கூத்தப்பெருமான் ஊர்வலத்தைச் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தான் என்று கூறுகிறது.
விக்கிரம சோழன் தில்லைத் திருக்கோயிலுக்கு ஆற்றிய திருப்பணி மகத்தானது. பிற அரசர்கள் அளித்த திறைப்பொருளைக் கொண்டு தில்லையம்பதியில் அம்பலவாணரது கோயிலுக்குப் பல திருப்பணிகள் புரிந்தான்.* தில்லைச் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகை, கோபுர வாயில், கூடசாலை, பலிபீடம் ஆகிய வற்றிற்குப் பொன் வேய்ந்தான். உத்திரட்டாதி நாள் பெரு விழாவில் இறைவன் எழுந்தருளும் திருத்தேரைப் பொன் வேய்ந்து அதற்கு முத்து வடங்கள் அணிவித்து அழகுறுத்தினான். இறைவன் திருவமுது புரிவதற்குப் பொற்கலங்கள் அளித்தான். கோயிலில் பொன்னாலாகிய கற்பகத்தருக்களையும் இவன் அமைத்துள்ளான். இவன் எடுப்பித்த தில்லைச் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த முதல் திருச்சுற்று மாளிகை விக்கிரம சோழன் திருமாளிகை எனப்படும். தன் பெயரால் விக்கிரம சோழன் திருவீதி' என்ற வீதியைத் தில்லை நகரில் அமைத்தான். விக்கிரம சோழன் மண்டபம் இவன் காலத்திலேயே அமைக்கப்பட்டதாகும். இப்பொழுதுள்ள நூற்றுக் கால் மண்டபம் அதுவே. விக்கிரம சோழன் திருவாரூர்க் கோயிலுக்கு அளித்த நிவந்தங்களைப் , பற்றியும், கோயில் திருக்குளம் பற்றியும் இவனது திருவாரூர்க் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இரண்டாம் குலோத்துங்கன் விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்ற தில்லைத்
166

திருப்பணிகளை முடித்தான்.மேலும் பல திருப்பணிகள் செய்தான். இவன் தில்லைச் சிற்றம்பலவாணரிடத்து எல்லையற்ற பேரன்புடையவன் என்பதை ஒட்டக்கூத்தரின் 'குலோத்துங்க சோழன் உலா வரிகள் குறிப்பிடுகின்றன. இவன் தில்லையம்பதியில் நாற்பெருந் தெருக்கள் அமைத்துப் பற்பல மண்டபங்களைக் கட்டுவித்து அந்நகரைச் சிறப்பித்தான், சிற்றம்பலத்தைப் பொன்னாலும் பல்வகை மணிகளாலும் அலங்கரித்தான், பேரம்பலத்தையும் உட்கோபுரத்தையும் திருச்சுற்று மாளிகையையும் மாமேரு போலப் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் கட்டினான். உமையம்மைக்குச் சிவகாமக் கோட்டம் மிகப்பெரியதாக அமைத்தான். உமையம்மை உலாவரத் தேரொன்றும் அளித்தான். திருக்குளம் ஒன்றமைத்தான். ஆனிரைகளும் களிற்றினங்களும் மிகுதியாக வழங்கினான்.* திருவாரூர்க் கல்வெட்டொன்று இவன் தில்லைக் கூத்தபிரான் திருவடித் தாமரையிலுள்ள அருளாகிய தேனைப் பருகும் வண்டு போன்றவன்' என்று கூறுகிறது." திருமாணிக்குழியில் காணப்படும் கல்வெட்டொன்று தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிகுடிய' சிறீ குலோத்துங்க சோழன் தேவர்'என்று கூறுகிறது. இவன்தன் வழிபடுகடவுளாகியதில்லையம்பலவாணர் கோயிலுக்குப் புரிந்த திருப்பணிகள் இவனது சைவசமயப் பற்றையும், சமயக் கொள்கையையும் தெரிவிக்கின்றன. தில்லைத் திருமுன்றலில் இருந்த கோவிந்தராசப்பெருமாளின் சிலையை அப்புறப்படுத்தி விட்டான். இந்நிகழ்ச்சிஅவனது வெறுப்புகாரணமாக இருந்திருக்க முடியாது.
திருவாரூர்க் கல்வெட்டொன்று இவன் கி.பி.140 இல் சைவ சமயக் குரவர்களுக்குப் படிமம் எடுத்த அவற்றின் பூசைகளுக்காக அனபாயநல்லூர் என்ற கிராமத்தை அளித்தமையைக் குறிப்பிடுகிறது.* இதனால் அனபாய சோழன்’ என்ற சிறப்புப் பெயரும் பெற்றான். இவன் சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடச் செய்தான் என்று கூறுவோர் உளர்.
ஆய்வரங்கு 2008

Page 187
இரண்டாம் இராசராசனும் தன் தந்தையைப் போலவே தில்லைக் கூத்தபிரானிடம் எல்லையற்ற அன்புடையவன். 'தொல்லைத் திருமரபிற்கெல்லாந் தொழுகுலமாந் தில்லைத் திருநடனஞ்சிந்தித்து என்னும் ஒட்டக்கூத்தரின் 'இராசராச சோழனுலா வரிகள் இவனது சைவ சமயப் பற்றினைப் பறைசாற்றுகின்றன. இவன் எடுப்பித்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தாராசுரத்து ஐராவதேசுவரர் கோயில் 'இராசராசபுரத்து இராசராசேச்சுவரம்' எனப்படும். இக்கோயிலின் கட்டக்கலையும், சிற்பக் கலையும் கண்டோர் கண்களை ஈர்க்கும் திறன் வாய்ந்தவையாம். இப்பெருங் கோயிலுள்ள கருவறையின் புறச்சுவரில் சிவனடியார் அறுபத்து மூவருடைய வரலாறுகளை அறிவிக்கும் முறையில் சிற்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இக்கோயிலின் இராசகம்பீரன் திருமண்டபத்தில் சைவாச்சாரியர் நூற்றெண்மரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
மூன்றாம் குலோத்துங்கனின் சிவபக்தி அளவிட முடியாதது என்று கீழ்வரும் கல்வெட்டுத் தொடர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் திரிபுவனத்திலுள்ள கல்வெட்டு இவனைத் “தில்லைச் சிற்றம்பலவாணருடைய* ஏகபக்தர்” என்கிறது. திருவாரூரிலுள்ள இறைவன் தன் கோயில் தானத்தார்க்கு அளித்த அணையில், இம்மன்னரை நம் தோழன்” என்று கூறியுள்ளார் என்று அவ்வூரிலுள்ள இவனது கல்வெட்டொன்று உணர்த்துகிறது. இறைவனோடு தோழமை நிலையில் இதற்குமுன் சுந்தரர்தான் விளங்கினார். இவன் காலத்திலும் பின்னவர்கள் காலத்திலும் சைவத் திருமுறைகளைப் பாதுகாக்கக் குகைகளும், சைவ சமயப் பிரசாரத்திற்காகவும் சமயப் பணிகட்காகவும் மடங்களும் நாட்டில் பெருகின. அவற்றில் ஒரு குகை பகைவர்களால் தாக்கப்பட்டுக் குகையிடி கலகம்' என்னும் ஒரு நிகழ்ச்சி இவன் காலத்தில் நடைபெற்றது. இதுபற்றிப் பின்வரும் பகுதி ஒன்றில் விளக்கம் காணப்படுகிறது.
புதுக்கோட்டையைச் சார்ந்த குடுமியான் மலையிலும், சேரனுாரிலும் காணப்படும் இரு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கல்வெட்டுகளும் திருவிடை மருதூருக்கு அண்மையிலுள்ள திரிபுவனத்தில் காணப்படும்" வடமொழிக் கல்வெட்டும் இவனது சைவப்பணிகளை விளக்குகின்றன. கும்பகோணத்திற்கு அருகில் திரிபுவனவீரேச்சுரம் என்ற கோயில் இவனால்? எடுப்பிக்கப்பட்டது. இக்கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றில் ஈடு இணையற்றதாகவும், பார்போரைக் கவரும் வகையிலும் விளங்குகிறது. இம்மன்னன் தில்லையில் பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான். அம்பலவாணரது முகமண்டபம், மூன்றாம் பிரகாரம், சிவகாமி அம்மையின் கோயிற் கோபுரம் என்பவற்றை எடுப்பித்தான்." மேலும் இம்மன்னன் காஞ்சி ஏகாம்பரர் கோயில், மதுரைச் சிவன் கோயில், திருவிடைமருதூர், இராசராசபுரம் ஆகிய இடங்களில் திருப்பணிகள் ஆற்றினான். திருவாரூரில் வன்மீகநாதர் கோயிலைப் பொன்மயமாக்கியதோடு புற்றிடங்கொண்ட பெருமானின் சபையையும் பெரிய கோபுரத்தையும் கட்டுவித்தான்.
சிற்றரசர்களின் சைவப் பணிகள்
சோழர் காலச் சிற்றரசர்களும் தமிழகத்தில் பல கோயில்களில் திருப்பணிகள் செய்துள்ளனர். நுளம்பாதிராசன், யாதவராயன், சம்புவராயன், வாணகோவரையர், பெத்தப்பிச் சோழன், வைதும்பன், சேதிராயன், மழவராயன், காடவராயன், முனையதரையர் ஆகிய சிற்றரசர்களும் சைவப் பணியிலும், கோயிற் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பதின்மூன்றாம் நூற்றாண்டிலாண்ட காடவகுலச் சிற்றரசனான முதலாம் கோப்பெருஞ்சிங்கன் சிவபக்தி மிக்கவன். சிதம்பரம் தெற்குக் கோபுரத்தை இவன் கட்டினான்." காவிரியின் தென்கரையில் உள்ள கோயில்களுக்கு யாத்திரை சென்று ஆக்கூர்க் கோயில் விமானத்தைப் புதுப்பித்தான். திருவண்ணா மலை, வித்தாச்சலம், கழுக்குன்றம், பிரம்மதேசம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்கு நிவச்ந்தங்கள் அளித்தான். இவனும் இவனது அரசியாரும் திருவண்ணாமலைக் கோயிலுக்குப் பெரும்பொருளை அளித்தனர். இவன் மகனும் பல சிவன் கோயில்களுக்கு நிவந்தங்கள்
167

Page 188
அளித்துள்ளான். மேலும் தில்லைக் கோயிலின் கிழக்குக் கோபுரத்தைக் கட்டினான்."
மன்னர்களையும் சிற்றரசர்களையும் போன்று அரசு அலுவலர்களும் குடிகளும் சைவப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். நரலோகவீரன் என்ற காளிங்கராயன் முதலாம் குலோத்துங்கனின் படைத் தலைவனாவான். ஆழ்ந்த சிவபக்தனான இவன் சித்தலிங்க மடத்தில் சிவன் கற்றளி எடுப்பித்தான். திரிபுவனம் திருப்புகலூர் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில் மண்டபங்களை அமைத்துப் பல தானங்களும் செய்தான். தில்லையில் மாசிமகத் திருவிழாவின்போது இறைவன் தங்க, அருகிலிருந்த கடற்கரையில் மண்டபம் அமைத்தமையும், மூவர் தேவாரத்தைச் செப்பேடுகளில் எழுதுவித்தமையும், தேவாரம் ஒதுவதற்கு மண்டபம் ஒன்று எடுப்பித்தமையும் இவனது தில்லைக் கோயிற் பணிகளாகும். அதுபோன்று திருவதிகையில் நூற்றுக்கால் மண்டபம் கட்டினான். அப்பருக்குத் தனிக் கோயிலைக் கட்டுவித்து அப்பர் மடத்திற்கு நிலங்களையும் அளித்தான்*
சிற்றரசர்களைப் போன்றும் அரசு அலுவலர்களைப் போன்றும் வணிகர்களும் குடிமக்களும் திருப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்குள்ள வணிகர் கழகங்கள் திருவிளக்குடி, திருப்பாசூர், திருப்புகலூர், திருவிடைமருதூர், காளத்தி, காஞ்சி போன்ற இடங்களிலுள்ள சிவன் கோயில்களுக்குத் தானங்கள் அளித் துள்ளமையைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கோயில்களும் சமுதாயமும்
சோழர்களின் நீண்ட நெடுங்கால ஆட்சியில், நாட்டின் சமூக வாழ்வில் கோயில்கள் சிறப்பான பங்கு கொண்டிருந்தன. சோழர் காலத்தில் கோயில்கள் கும்பிடும் சிறியதொரு வழிபாட்டு இடமாக மட்டும் இருந்துவிடவில்லை. முன்பு செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கோயில்கள் அப்பொழுது கற்கோயில்களாக
168

உருவெடுத்தன. அக்காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுடைய வாழ்க்கையும் கோயிலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்தது அல்லது பிணைக்கப்பட்டு இருந்தது. முந்தைய காலத்தில் சிறிய அளவிலிருந்த கோயில்கள் பின்னர் பெரிய அளவினதாகவும் அவற்றின் சாதாரணத் தன்மை மாறிப் பல்வகை வளர்ச்சி கொண்டதாகவும் உருவெடுத்தன.
சோழர் காலத்துக் கோயிலின் அமைப்பினை அறிஞர் மு. இராசமாணிக்கனார் கீழ்கண்டவாறு விவரிக்கிறார். சாதாரணமாக ஒவ்வொரு கோயிலும் கருவறை, நடுமண்டபம் ஆகிய இவற்றைப் பெற்றிருக்கும். பின்னர் முகமண்டபம் அமைந்தது. கோயிலைச் சுற்றிலும் முதல் திருச்சுற்றும் மதிலும் அமைந்தன. முதல் திருச்சுற்றில் சண்டீசர்க்குத் தனிக் கோயில் அமைந்தது. அத்திருச் சுற்றில் வலம் வரும் முறையில் தென்கிழக்கில் சூரியன், தென் மேற்கில் கணேசர், சப்தகன்னியர், மேற்கில் சுப்பிரமணியர் வடமேற்கில் ஜேஷ்டர், வடக்கே சண்டேசுவரர், வடகிழக்கில் சந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இத்திருச்சுற்றுக் கோவில்கள் சில இடங்களில் தனித்தும், மதிலை ஒட்டி அமைந்த கட்டடத்திற்குள்ளும் இருந்தன. மதிலில் ஒன்று முதல் நான்கு வாயில்கள் வரை கோயிலுக்கேற்றவாறு அமைந்தன. வாசல் மீது சிறிய கோபுரங்கள் அமைந்தன. இராசராசன், இராசேந்திரன் ஆகியோர் காலம் வரை கருவறைக்கு மேல் உள்ள விமானமே வானனாவக் கட்டப்பட்டது. ஆயின், பிற்காலங்களில் விமானத்தை விடக் கோபுரங்கள் உயர்த்திக் கட்டப்பட்டன. கோயிலைச் சுற்றிலும், சில இடங்களில் கோயிலுக்குள்ளும் நந்தவனங்கள் ஏற்பட்டன. அவ்வாறே திருக்குளங்களும் கவனிப்பு மிகுந்த கோயில்களில் இரண்டாம் திருச்சுற்றும், மூன்றாம் திருச்சுற்றும் கட்டப்பட்டன. அச்சுற்றுகளில் அரசர், சிற்றரசர் முதலியோர் கட்டிய சிறிய கோயில்கள் நாளடைவில் இடம்பெற்றன." பல்லவர் காலத்திலும் முற்காலச் சோழர் காலத்திலும் அம்மன், போகசக்தி அம்மன் என்ற பெயரில் இடம்பெற்றிருந்தாள். முதன்முதலாக
ஆய்வரங்கு 2008

Page 189
இராசராசன் போகசக்தி அம்மனை உமாபரமேசுவரி என்று குறிப்பிட்டான். பிறகு 16ஆம் நூற்றாண்டு முதல் இராசேந்திரனின் எண்ணாயிரம் கல்வெட்டு, திருச்சுற்றாலையின் அம்மன்° தனிக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கோயிலின் தன்மை மாற மாற, அதன் சமுதாயம் தொடர்பான பணிகள் கூடக்கூட, கோயில்களில் சிறப்பு மண்டபங்கள் தோன்றின. செங்காட்டாங்குடியில் சிறுதொண்டர் நம்பி மண்டபம், திருவொற்றியூரிலிருந்த வக்காணிக்கும் மண்டபம், மண்ணைக் கொண்ட சோழன் இராசராசன் மண்டபம், இராசேந்திரன் மண்டபம், வியாகர்ணதான - வியாக்யான மண்டபம் ஆகியவை சிறந்தவையான இதுபோன்று நடனமண்டபம், நாடக மண்டபம் திருப்பதியம் பாடலை எழுதவும் பயன்பட்ட திருக்கைக்கோட்டி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், யாகசாலை ஆகியனவும் உண்டு. சில கோயில்களில் மாளிகைகளும் உண்டு. மாளிகைகளில் மடங்கள் செயற்பட்டமைக்கு “மாளிகை மடத்து முதலியார்” என்ற சொற்றொடர் விளக்கம் தரும்."
கோயில் நிருவாகம்
கோயில்களின் வளர்ச்சியையும் பங்கையும் பற்றி க.அ. நீலகண்ட சாத்திரி தன்னுடைய சோழர்கள் என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். “கற்கோயில்கள் நாடெங்கும் பரவியபிறகு, பக்திமான்கள் தாராளமாக நிலமும் பொன்னும் அவற்றுக்கு வழங்கினார்கள். இதே நன்கொடைகளால் கோயில்கள் செழித்தன, செல்வத்தில் திளைத்தன, பணம் கூட வீணாக்கப்படாமல் அறக்கட்டளைகள் யாவும் செவ்வையாகச் செலவிடப்பட்டன என்பதும், அவற்றின் நிருவாகம் செம்மையாகவும் மிகுந்த கவனத்துடனும் நடத்தப்பட்டது என்பதும் நமக்கு வியப்பு (இப்போது புதுமையும்) தரும் செய்திகளாகும். முன்னோர் அறக்கட்டளைகளை நடைமுறைப் படுத்துவதில் ஒவ்வொரு தலைமுறையினரும், அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொண்டனர். தாங்களும் புதிய அறக்கட்டளைகளை ஏற்படுத்தினர். பின்வரும் தலைமுறையினருக்கு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கூடுதலான மூலதனத்தை விட்டுச் சென்றனர். கோயில்களிடம் மிகுதியாகச் சொத்துகள் சேர்ந்ததால் அந்தந்த வட்டாரத்துப் பொருளாதார
40
வாழ்வில் அவை முக்கியத்துவம் பெற்றன." என்று அவர் கூறுகிறார்.
மேற்கூறிய வகையில் முக்கியத்துவம் பெற்ற சோழர்காலச் சிவன் கோயில்கள் நன்கு நிருவகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் சோழ மன்னர்கள் மிகுந்த முனைப்பு காட்டினர். சோழ அரசின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராகக் கோயில் அதிகாரிகள் இருந்தனர். சிறிய கோயில்கள் சிவப்பிராமணர்களின் பொறுப்பிலேயே விடப்பட்டன. பல கோயில்களில் சைவ மடங்களில் வாழும் மகேசுவரர் நிருவாகப் பொறுப்பிலிருந்தனர். சில கோயில்கள் ஆண்டவர்கள் ஆட்சியில் இருந்தன. அதுபோன்று சில கோயில்கள் ஊரவையார் பார்வையில் இருந்தன. பெரிய கோயில்களில் நிருவாகத்திற்கெனத் தனி ஆட்சிக்குழு இருந்ததை அறிகிறோம். அக்குழுவினர் சிறீகாரியம் செய்பவர், கோயில்கணப் பெருமக்கள், பாதமூலத்தார் என வெவ்வேறாக அழைக்கப்பட்டனர். சில கோயில்களின் நிருவாகம் ஊரவை, கோயில் ஆட்சிக்குழு, மகேசுவரர் கண்காணிச்செய்பவர் ஆகிய மூவரிடமும் இருந்தன. சைவ மடங்களில் வாழ்ந்த துறவியர் மாகேசுரர் கோயில் நிருவாகங்களை மேற்பார்வை செய்ததைப் பல் கல்வெட்டுகள் கூறும்.
இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தில் தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் பல கோயில்களைத் தங்கள் நிருவாகத்தின் கீழ்க் கொண்டிருந்தன. சில நேரங்களில் ஒரு பெரிய கோயிலிலுள்ள நடுக்கோயில் (சிறப்புடைக் கோயில்) ஒரு குழுவினர் ஆட்சியிலும் இருந்துள்ளது. அக்குழு கோயிற்பணிகளைக் கவனித்தது. சில நேரங்களில் கோயில்களின் முக்கியச் செய்திகள் மன்னர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மன்னர்களும் கோயில்களுக்கு வருகை தந்தபோது அவற்றின் பராமரிப்பைக்
169

Page 190
கவனித்தனர். சிறீகாரியம் செய்வாரைப் போன்றே
பெரிய கோயில்களில் ‘சிவபண்டாரிகள் செயற்பட்டனர். இவர்கள் கோயில்களின் கருவூலங்களான “சிறீபண்டாரங்களை”
நிருவகித்தவராவர். கருவூலக் கணக்குப் புத்தகங்களாகிய “சிறீபண்டாரப் பொத்தகம்’ பற்றியும் சான்றுகள் உள்ளன. முழுக் கோயில்களை ஆட்சி நடத்தும் பொறுப்பிலிருந்தோர் அக்கோயில்களின் நிலங்களை விற்கவும் வாங்கவும் உரிமை பெற்றிருந்தனர். கோயில்களைச் சார்ந்த தேவரடியார் முதலிய மக்களுக்கும் கால்நடைகளுக்கும் சூலச்சின்னம் பொறிக்கப் பட்டன. கோயில்களின் வரவு-செலவுக் கணக்குகள் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டுதோறும் தணிக்கைக்குட்பட்டன. கோயில் சிவத்துரோகிகள் தண்டனைக்குட்பட்டனர்."
சோழராட்சியில் கட்டப்பட்ட கோயில்களில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலும், கங்கை கொண்ட சோழீச்சுவரமுடையார் கோயிலும் அளவிலும், முக்கியத்துவத்திலும் பெரியனவாம். அறிஞர் க. கைலாசபதி இந்தியாவிலேயே அதிகச் செல்வமுடைய கோயிலாகத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் இருந்தது என்றுரைக்கிறார். இக்கோயிலில் பணிபுரிந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பணியாட்களைத் தவிர, கோயிலின் நிருவாகத்திலிருந்த பிற நிறுவனங்களில் பணியாற்றியவர்களையும் சேர்த்துப் பார்த்தால் கோயிலின் ஆளும் சக்தியும் பொருளாதாரப் பெருமையும் தெளிவாகும் என்கிறார். இவ்வளவு பெரிய கோயிலின் சிறீகாரியக் கண்காணி நாயகமாக இருந்தவன் பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன்என்பவனாவான் - (உடையார் சீராசராசேசுவரம் உடையார்க்குச் சிறீகாரியக் கண்காணி நாயகம் செய்கின்றன பாண்டிய நாடான இராசராச மண்டலத்துத் திருக்கானப் பேர்க் கற்றடத்துப் பாளூர், பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன்,*) மேலும் தன் வாழ்நாளில் சிவனடியார்களிடத்தும் அரசனிடத்தும் ஒப்பற்ற அன்பு பூண்டு ஒழுகிய
170

பொய்கை நாட்டின் தலைவனான தென்னவன் மூவேந்த வேளான் இராசராசேச்சுரத்தில் சிறீகாரியம் செய்யும் வேலையில் அமர்த்தப்பட்டான். இராசராசன் காலத்தில் இரண்டாம் கண்டராதித்தன் எனப்படும் மதுராந்தகன் கண்டராதித்தன் கோயில்களைக் கண்காணித்து வந்ததுடன் அவற்றில் தவறிழைத்தவர்களைத் தண்டித்து, அவை நல்ல நிலையில் இருக்கு மாறு பாதுகாத்துவந்த பெருமையுமுடையவன். மேலும் இவன் சில கோயில்களின் வருவாய்களை ஆராய்ந்து அக்கோயில்களில் நாள் வழிபாடுகள் முறைப்படி நடைபெறுவதற்கு அவற்றிற்கு அளிக்கப்பெற்றிருந்த நிவந்தங்களும் அரசு வழங்கும்படி ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் சிவன் கோயில்களில் சண்டேசுவரர் பெயராலேயே கோயில் வரவு-செலவுக் கணக்குகள் எழுதுவதும், விலை கொள்வதும், விற்பதும் நடைபெற்று வந்தன. ஆதலின் கோயிலில் முதல் திருச்சுற்றில் அவருக்கு மட்டும் இறைவன் கருவறையை அடுத்துக் கோயில் கட்டுவது வழக்கமாயிற்று.
தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டொன்று முதலாம் இராசராசன் தான் எடுப்பித்த இராசராசேச்சுரத்தில் நியமித்த தளிச்சேரிப் பெண்டுகளையும், நிவந்தக்காரர்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது. அதாவது வெவ்வேறு பணிகளும் அவற்றை நிறைவேற்றும் கோயிற் பணியாளர்களைப்பற்றியும் அவர்களின் பங்குகளைப் பற்றியும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதில் கூறுப்பெறும் நிவந்தக்காரர்களாவன, நட்டுவம், நிருத்தப்பேரரயன் வக்கிபட்டாலகன், நாடகமய்யன், வாத்யமராயன், உடுக்கை வாசிப்போன், வீணைவாசிப்பார், ஆரியம்பாடுவார், தமிழ்பாடுவார், பக்கவாத்யர், கொட்டிமத்தளம் வாசிப்பார், மத்திரைச் சங்கு ஊதுவார், காந்தர்வர், வலங்கை வேளைக்காரர், பரிக்காரர் திருவாய்க்கேழ்வி, கணக்கு எழுதுவோர், சகடை கொட்டிகள், விளக்குடையார்கள், நீர்த்தெளிப்பான் சன்னாலியன், திருமடைப் பள்ளிக் குசவர், வண்ணத்தார்கள், கோலின்மை செய்வார்,
ஆய்வரங்கு 2008

Page 191
அம்பட்டன், தய்யான், ரத்னம் தய்யான், கன்னான், தச்சார்யம் பாணன் முதலியோர் ஆவார்.
திருவாரூர்க்கோயில் கல்வெட்டுகள் அக்கோயிலின் நிருவாக அதிகாரிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. முதலாம் இராசேந்திரனின் கவ்வெட்டொன்று அவ்வூர்க் கோயில் நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பு அதிகாரியான “சிறீகாரியம் செய்கின்ற நம்பன் ராமனான மூவேந்த வேளான் நாயகத்து” என்று குறிப்பிடுகிறது. அதே மன்னனின் மற்றொரு கல்வெட்டு சிறீ ஆரூர் சிறீ காரியம் ஆராய்கின்ற செம்பியன் அம்பர் நாட்டு கோனார் மேநாயகத்து' என்று குறிப்பிடுகிறது. “திருவாரூர்த் திருக்கோயில்” என்ற நூலின் “ஆசிரியரான குடவாயில் பாலசுப்பிரமணியன் சிறீகாரியம் ஆராய்கின்ற மேநாயகம் என்ற அதிகாரி உயர்மட்டளவிலிருந்து கோயிற் பொறுப்புகளை நிருவகிக்கும் “சிறீகாரியம் செய்கின்ற நாயகம்” என்ற அதிகாரியைக் கண்காணித்தவர்” என்று கூறுகிறார். மேலும் இக்கோயிலில் மாகேசுரக்காணி செய்வார், கோயில் முதல் கரணத்தார், தேவகன்மி ஆகிய அதிகாரிகளும் நிருவாகத்தில் ஈடுபட்டனர். ஆருர்க்கோயிலில் மேற்கூறப்பட்ட அதிகாரிகளைத் தவிர, பிடாரர்கள், திருப்பதியம் விண்ணப்பிப்பார், மாகேசுரர், பரிசாரர்கள், மெய்க்காவலர், விளக்கேற்றுவார். பள்ளித்தாமம் ஆக்குவோர் போன்ற பணியாளர்களும் ஊழியம் புரிந்தனர், மேலும் இக்கோயிலில் சிற்பிகள், ரதகாரார்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள் போன்றோரும் பணியாற்றினர். மேற்கூறப்பட்ட பணியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் சோழ மன்னர்கள் மேற்கொண்டனர்.
சோழர் காலத்தில் தில்லைக் கோயிலாட்சி சைவத் துறவிகளான, மாகேசுரர்களின் பொறுப்பிலிருந்தது. தில்லைக் கோயிலின் செல்வாக்குடனிருந்த மாகேசுரர் அக்காலத் தமிழகத்தில் செல்வாக்குடனிருந்தனர். கருங்கல் திருப்பணியற்ற சிறிய கோயிலான இராமநதீச்சுரம் கோயில் மூன்றாம் இராசராசன் காலத்தில்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

தாழ்வுற்றது. அக்கோயில் தானத்தாரும் மாகேசுரரும் தில்லை மாகேசுரர்களை வேண்டியதன் பேரில், பின்னவர் தங்களது செல்வாக்கினைப் பயன்படுத்தி மற்றகோயில்களின் பணியாளர்கள், மாகேசுரர், பிராமணர் ஆகியோரின் உதவியுடன் இராமநதீச்சுரம் கோயிலுக்குப் பொருளுதவி செய்தனர்.
கோயிலுக்கச் சேரவேண்டிய வருவாயைத் தவறாகச் செலுத்துவோரும், தவறாகப் பயன்படுத்துவோரும் சிவத்துரோகிகளாகத் தண்டிக்கப்பட்டனர். தனி நபர்கள் மட்டுமல்லாமல் பிரமதேயச் சபைகளும் மேற்கூறிய தவறிழைத்தபோது அவற்றையும் அரசு விட்டுவைக்கவில்லை. மேலும் கோயில்கள் பெரிய நிலக்கிழார்களாகச் செயற்பட்ட வேளையில், கோயில் நிலங்களின் மேற்பார்வையாளர்களாக இருந்த வெள்ளாள நாட்டார்களே கோயில் குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிக்கும் உரிமையைப் பெற்றனர். ஆதலின் இவர்கள் சமுதாயத்தில் பிராமணருக்கு அடுத்தநிலையில் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
சோழர் காலத்தில் கோயிற் பூசைகளும் திருவிழாக்களும் சிறப்புற்றன. பல்லவர் காலத்திய பக்தி இயக்கத்திலிருந்து சிவவழிபாடு முக்கியத்துவம் பெற்றது. நாட்டுத் தெய்வங்களும் செல்வாக்கை இழக்கவில்லை. முக்கியத் தெய்வங்கள் சிவ வழிபாட்டுடன் இணைக்கப்பட்டன. ஆதலின் புராணங்கள் விளக்கும் சிவனின் பல மூர்த்தங்களும், மற்ற தெய்வங்களின் திருவுருவங்களும் திருமேனிகளாகப் படைக்கப்பட்டன. சிவன் கோயில்களில் பிட்சாடனர், கங்காதரர், கல்யாணசுந்தரர், கிராதிதார்ச்சுனியர், பஞ்சதேவர், உமாசகிதர், நடராசர், தட்சிணாமூர்த்தி, ரிடபவாகனத் தேவர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களும், கணபதி, சுப்பிரமணியன், மகாவிட்ணு, சூரியன் ஆகியோரின் திருமேனிகளும், காலப்பிடாரி, துர்க்கை, பரமேசுவரி, ஏமளத்துத் துர்க்கையார், ஓங்காரசுந்தரி ஆகியோரின்
171

Page 192
சிற்பங்களும் திருமேனிகளும், சப்தமாதர், சரசுவதி, மகாசாஸ்தா ஆகிய கடவுளரின் உருவங்களும் காணப்பட்டன. அவை முறையாகப் பூசிக்கப்பட்டன.
பக்தி இயக்க வளர்ச்சியில் மக்களின் சமய வாழ்க்கை கோயிற் பூசைகளிலும் விழாக்களிலும் பிரதிபலித்தது. சோழர் கல்வெட்டுகள் இறை வழிபாட்டிற்காக மன்னர்களும், மற்றவர்களும் நாள்தோறும் செய்த அறங்களைக் குறிப்பிடுகின்றன. வழிபாட்டின்போது அமுது படிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஏராளமானவை. சிறப்புப் பூசைகளின் போதும் விழாக்காலங்களிலும் ஒவ்வொரு நாளும், இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஆகமக் குறிப்புகளுக் கேற்றவாறு பூசைகள் செய்யப்பட்டன. சைவசமயத்தின் சிறப்பான இலக்கியமாகிய பெரிய புராணம், சிவன் கோயில் பூசைகளையும் விழாக்களையும் பற்றிக்குறிப்பிடுகிறது. கல்வெட்டுகள் மூலமாக சிவன் கோயில்களில் திங்கள் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றதை அறிகிறோம். மேலும் தில்லை உலா விழாக் காலங்களில் கடவுளர் திருமேனிகள் ஊர்வலம் வந்ததை அறிகிறோம். அடியார்களின் படிமங்களும் பெருகின. மேற்கூறப்பட்ட பூசைகளிலும், விழாக்களிலும் சைவத் தொண்டர்களும், பாமர மக்களும் கலந்து கொண்டனர். விழாக் காலங்களில் ஆடல் பாடல்களும் நடைபெற்றன. பெரிய விழாக்களில் வெவ்வேறு கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டது அவர்களிடையே ஒற்றுமைக்கு வழிகோலியது.
சைவ இலக்கிய மரபும் திருமுறைகளின் வளர்ச்சியும் சோழர்காலத்தின் சிறப்புக் கூறுகளாகும். முதலாம் இராசராசன் காலத்திற்கு முன்னர் சில ஊர்க்கோயில்களில் திருப்பதிகங்கள் ஒதப்பட்டன. முதலாம் இராசராசன் தான் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத்தில் திருப்பதிகம் ஒதப்பட்டன. திருப்பதிகம் ஒத, 48 பேரைப்பல கோயில்களிலிருந்து வரவழைத்தான். கோயில்களில் இப்பதிகங்களைப் பிராமணர், பிடாரர், தேவரடியார் ஆகியோர் ஒதினர். உடுக்கை, மத்தளம், தாளம் ஆகியவற்றுடன்
172

திருமுறைகள் ஒதப்பட்டன. அதேபோன்று மார்கழித் திங்களில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை ஆகியவை பாடப்பட்டன. நாயன்மார் பாடல்களெல்லாம் சோழர் காலத்தில் சிறப்புற்றன.
பல கோயில்களில் திருப்பதிகம் பாட ஒதுவார்கள் நியமிக்கப்பட்டனர். “திருப்பதியக் காணி’ என்பது அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலமாகும். அவர்களுக்குத் தலைவனாகவோ, அவர்களை மேற்பார்வை செய்யபவனாகவோ தேவாரநாயகம் என்ற ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டான். அதே மன்னன் காலத்தில் தில்லையில் மாசித் திங்கள் விழாவில் திருத்தொண்டத் தொகை பாடப்பட்டது. பிறகு தேவாரம் ஒதத் தனி மண்டபங்கள் கட்டப்பட்டன. பெரியபுராணம் இயற்றப்பட்ட பிறகு திருமுறைகளும், நாயன்மார் பாடல்களும், மக்களால் மேலும் போற்றப்பட்டன. அக்காலத்துச் சைவ மடங்களும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. மடங்கள் திருப்பதிகம் ஒதுபவர்க்குப் பயிற்சி அளித்தன. குகைகள் திருமுறைகளைப் பாதுகாத்தன.
திருப்பதிகங்கள் விண்ணப்பிக்கும் மரபினை யொட்டிக் கோயில்களில் மேலும் பல சைவ நூல்கள் படிக்கப்பட்டன; மக்களிடையே விளக்கப்பட்டன. அவற்றில் முக்கியமாக இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் ஒரு பங்குனி உத்தரத்து ஆறாம் திருநாளில் திருவொற்றியூரில் படம்பக்க நாயக்க தேவர், திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்த போது, ஆளுடைய நம்பியினால் சிறீபுராணம் படிக்கப்பட்டது. இதனை இரண்டாம் இராசராசனும் கேட்டான். இந்தச் சிறீபுராணம் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமே என்று மா. இராசமாணிக்கனார் கருதுகிறார்.
சைவத் திருமுறைகளில் மூவர் தேவாராம் முதல் ஏழு திருமுறைகளாகவும், மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகவும், ஒன்பதின்மரின் திருவிசைப்பாவும் சேந்தனாரின் திருப்பல்லாண்டும் ஒன்பதாம்
ஆய்வரங்கு 2008

Page 193
திருமுறையாகவும் தொகுக்கப்பெற்றுள்ளன. திருமூலரின் திருமந்திரம்பத்தாம் திருமுறையாகவும். நம்பியாண்டார் நம்பி உட்படப் பன்னிருவர் பாடிய நாற்பது பிரபந்தங்கள் பதினோராம் திருமுறையாகும். சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும்.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் தில்லை உமாபதி சிவாச்சாரியார். அவர் இயற்றியன திருமுறைகண்டபுராணமும் சேக்கிழார் புராணமும் ஆகும். முந்தைய நூலில் அவர் திருமுறைகண்ட சோழன் இராசராசன் அபயகுலசேகரன் என்றும், பிந்தைய நூலில் இராசராசதேவர் சிவாலய தேவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அம்மன்னன் முதலாம் இராசராசசோழன் என்றும், அவன் திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றிய நம்பியாண்டார் நம்பியின் உதவியால் தில்லையில் திருமுறைகளைக் கண்டு உலகிற்களித்தான் என்றும் சிலரால் கருதப்படுகின்றது. திருமுறைகண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஆய்வுக்குரியன. நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராசன் காலத்திற்கு மிகவும் முன்பே வாழ்ந்தவர் என்பதைச் சோழர் வரலாற்றை ஆராய்ந்த க.அ.நீலகண்ட சாத்திரி, தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் முதலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். முதலாம் இராசராசன் காலத்தில் சிறப்புமிக்கவராக விளங்கிய சைவசமயத் தலைவர் கரூர்த் தேவராவார். நம்பியாண்டார் நம்பி அவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பதற்கு அக்காலச் சான்றுகள் ஏதுமில்லை.
முதலாம் இராசராசனின் கல்வெட்டுகள் எவற்றிலும் அபயகுலசேகரன் என்ற பெயர் காணப்படவில்லை அதுபோன்றே சிவாலயதேவர் என்ற பட்டமும் காண்பதற்கில்லை. அது ஒருபுறமிருக்க, அச்சோழனின் மெய்க்கீர்த்தியிலும் அவன் திருமுறை கண்டதாகக் குறிப்பு எதுவுமில்லை. அவ்வாறு அவன் திருமுறைகளைக்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கண்டிருந்தால் அவை அவனுடைய மெய்க்கீர்த்தியில் இடம்பெற்றிருக்கும் என்பது உறுதி. அவ்வாறில்லை. சோழப் பெருவேந்தர் புகழினைக் கூறும் கலிங்கத்துப்பரணி, உலாக்கள் ஆகியவை அதுபற்றி எதையும் குறிப்பிடாதது கவனத்திற்குரியதாகும். மேலும் சோழர்காலத்திற்கு மிகவும் முன்னரே கோயில்களில் திருப்பதிகம் பாடுவது வழக்கில் இருந்துள்ளது. பல்லவர் காலக் கல்வெட்டுகளில் அதுபற்றிய செய்தி தெளிவாக உள்ளது. முதலாம் இராசராசன் தஞ்சைக்கோயிலுக்கென்று பிற கோயில்களிலிருந்து ஒதுவார்களைக் கொண்டு வந்தான் என்று கூறும் கல்வெட்டுச் செய்தி அவன் காலத்திற்கு முன்னரே கோயில்களில் திருமுறைப் பாடல்களை ஒதியோர் இருந்து வந்தனர் என்பதை நன்கு உணர்த்துகின்றது. எனவே உமாபதி சிவாசாரியாரின் திருமுறைகண்ட புராணச் செய்திக்கும் முதலாம் இராசராசனுக்கும் தொடர்பில்லை எனக் கூறலாம்.
ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டுப் பதிகங்கள் பாடியுள்ள திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பிகாடநம்பி, கண்டராதித்தர், திருவாள அமுதனார், சேதிராயர் முதலியோர் சோழப் பெருவேந்தர் காலத்தில் வாழ்ந்தவர்களே. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலங்களில் வாழ்ந்த கருவூர்த்தேவர் அவர்கள் எடுப்பித்த கோயில்களைச் சிறப்பித்துப்பாடியுள்ளார்.
6፬) ዕ# 6)! & LouLu'u பெருஞ்சிறப்பிற்கான காரணங்களில் ஒன்று சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர்புராணம்.இது பெரியபுராணம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை இயற்றிவர் சேக்கிழார் ஆவார். நாயன்மார்களின் புகழைப்பரப்பிச் சைவ சமயத்தின் செல்வாக்கை மக்களிடையே பெருக்கிய பெருமை சேக்கிழாருக்கே உரியதாகும். பிற எச்சமயத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பைப் பெரியபுராணம் சைவத்திற்கு அளித்துள்ளது என்பது உண்மையே.
173

Page 194
மெய்கண்டாரின் சிவஞான போதமும், அருணந்தியாரின் சிவஞான சித்தியார், இருபாஇருபஃது முதலிய சைவசித்தாந்த நூல்களும் சைவ சமயத்தின் சிறப்பினைக் கூட்டின. அவற்றின் சாத்திரப் பெருமையைப் பின்னர் காண்போம்.
சைவ மடங்கள்
பக்தி இயக்கத்தின் மற்றொரு அடிப்படை நிறுவனமாக சைவமடம் பல்லவர் காலத்தில் தோற்றம் பெற்றது. இந்நிறுவனத்தின் வரலாற்றில் சோழர் காலம் இரண்டாம் கட்ட வளர்ச்சியினைக் குறிப்பிடுகிறது. குறிப்பாக 10-13ஆம் நூற்றாண்டுகளில் சைவ மடங்கள் தமிழகமெங்கும் பரவலாக வளர்ச்சியுற்றன. சோழர் காலத்தில் அவை எல்லாவித வளர்ச்சியையும் பெற்றன. இக்காலத்தில் வெவ்வேறு சைவப் பிரிவுகளைச் சார்ந்த மடங்கள் பெரும்பாலும் முறையாக அமைக்கப்பட்டனவாகும், முழுமை பெற்றனவாகவும், தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டு வனவாகவும் இருந்தன. இக்காலத்து மடங்கள் காளமுக சைவம் மற்றும் கோளகிச் சைவப் பிரிவுகளைச் சார்ந்தனவாக இருந்தன மேலும் தமிழ்ச் சைவ மடங்களும், குகைகள் எனப்படும் நிறுவனங்களும் வளர்ச்சியுற்றன.
பல்லவர் காலத்தில் தமிழகத்தில் இதன்முதலில் தோற்றம் கொண்ட சைவ மடங்கள் பக்தி இயக்கத்தின் துணைக் கருவிகளாகுக்க்தி மடங்கள் எனப்படும் இவை எளிமையாகவும், தொடக்கநிலையிலும் இருந்தபோதிலும், அவைகளி லிருந்துதான் தேவார முதலிகள் பக்திக் கொள்கையினைக் பாமர மக்களிடையே பரப்பினர். தமிழகத்தில் குடியேறிய மற்ற சைவப் பிரிவினர்களின் தாக்கத்தினால் மடம் என்ற நிறுவனம் முறைப்படுத்தப்படலாயிற்று
தமிழகத்தில் காளமுகரின் வருகை, சைவ மடங்களின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். அவர்கள் பக்தி இயக்கத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். சைவ மடங்களுடன் தங்களைத் தொடர்புபடுத்திக்
74

கொண்டு அவர்கள் மடாலயங்களை முறைப் படுத்தினர். திருவொற்றியூர் காளமுக சைவத்தின் வலுவான மையமாகும், 10 ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர் காலத்தில் இங்கிருந்த ஆதிபுரீசுவரர் கோயிலில் காளமுகர் சிறப்புற்றிருந்தனர். இங்கிருந்த மடம் சதுரானன பண்டிதர் எனப்படும் துறவிகளால் நன்கு நிருவகிக்கப்பட்டது. கி.பி.942-இல் மகா விரதிகளின் மையமாகிய திருவொற்றியூரில் சதுரானனபண்டிதர் மடம் நிறுவி ஆதிபுரிசுவார் கோயிலில் பணியாற்றினார். 13ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் சிறப்புற்றிருந்த இம்மடத்தின் தலைவர்கள் சதுரானன பண்டிதர் என்றே அழைக்கப்பட்டனர். இம்மடத்தின் தலைமை ஆசிரியர் அப்பகுதியில் சமுதாயம் மற்றும் பண்பாட்டு முறையில் செல்வாக்குற்றிருந்தனர். மடத்தின் தலைவர் மடபதி என்றும், அவர் தருமத்தைக் காப்பவர் என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கி.பி.1077இல் சதுரான்ன பண்டிதர் அக்கோயிலின் கனக்கு வரவுகளைக் கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் அம்மடத்தில் தலைவர் ஒரு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூர், காளமுக சைவம் தழைத்தோங்கிய மற்றொரு மையமாகும். இங்கிருந்த பெரிய காளமுக மடத்தைப் பற்றியும், மூவர் கோயிலைப் பற்றியும், பூதி விக்கிரமசேகரி என்ற சிற்றரசன் அந்நிறுவனங் களுக்கு ஆற்றிய தொண்டினைப் பற்றியும், அம்மடத்துத் தலைவர் மல்லி கார்ச்சுனர் மற்றும் அவரது 50 சீடர்களைப் பற்றியும் கொடும்பாளூர் வடமொழிக் கல்வெட்டு (10-ஆம் நூற்றாண்டு) தெளிவாகப் பகர்கிறது." தமிழகத்தில் சைவ மடாலயங்களின் வரலாற்றில் திருவொற்றியூர், கொடும்பாளூர் மடங்கள் சிறப்பானதொரு இடத்தைப் பெறுகின்றன. இக்காளமுக மடங்கள் தான் முதன்முதலில் முறைப்படுத்தப்பட்ட மடாலய அமைப்பினை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. காளமுக மடங்கள் லகுளாகமத்தினை அடிப்படை யாகக் கொண்டவை.
ஆய்வரங்கு 2008

Page 195
காளமுக சைவத் துறவிகள், கோமடத்து வழிவந்தோர், முந்தைய செங்கல்பட்டு மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் சிறப்புற்றிருந்தனர். அம்மடத்துத் துறவிகள் பொதுவாகச் சைவராசி, ஞானராசி என்ற தீக்கை பெற்ற பெயர்களைக் கொண்டிருந்தனர்.
கோளகிச் சைவ மடங்கள்
இவை முதலாம் இராசேந்திரன் காலத்திலிருந்து சிறப்புற்றிருந்தன. கி.பி. 1041-இல் சிதம்பரத்தில் மேலைச்சேரியில் பதஞ்சலிதேவர் மடத்துலட்சத்யாயி சந்தானத்தைப் பற்றிக் கீழையூர்க் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஞானசிவராவனர் என்பவரின் மாணவரான ஓங்கார சிவராவனர் என்ற கோளகிச் சைவர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பாசூரில் இருந்தார். இவ்வாசாரி யார்கள் வாரணாசிக் கொல்லாமடத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரையில் கோளகி மடங்கள் சோழமண்டலத்தில் செல்வாக்குற்றிருந்தன.
கோளகி மடங்களைச் சார்ந்த மாகேசுவரர், கோயில் நிருவாகங்களில் சிறப்புற்றுள்ளனர். சுத்த சைவத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கோளகி மடத்துச் சைவாச்சாரியார்கள் சோழப் பேரரசர்களின் இராசகுருக்களாகவும் செயலாற்றினர். முதலாம் இராசாதிராசனால் குருதேவர்' என்று போற்றப்பெற்ற ஈசான சிவபண்டிதர் அவனுடைய கல்வெட்டுகளால் அறியப் பெறுகிறார். முதலாம் குலோத்துங்கனும் குருதேவர் என்ற ஒருவரைத் தன் இராசகுருவாகக் கொண்டிருந்தான். அவர் சொற்படி அம்மன்னன் 108 சதுர்வேதியருக்கு ஒரு கிராமத்தைப் பிரமதேயமாக விட்டான். விக்கிரமசோழன் சுவாமிதேவன் என்பரை இராசகுருவாகப் பெற்றிருந்தான். மூன்றாம் குலோத்துங்கன் சோமசேசுவரர் என்ற ஈசுவர சிவனார் சைவாச்சாரியாரைத் தன் இராசகுருவாகக்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கொண்டிருந்தான். இவரைக் கொண்டே திரிபுவனத்தில் சம்பகரேசுவரர் கோயிலில் மகா கும்பாபிசேகம் மேற்கொண்டான்.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரையில் சோழ மண்டலத்தில் சிறப்புற்றிருந்த கோளகி மடங்கள் அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டி மண்டலத்தில் சிறப்புற்றன.
தமிழ்ச் சைவ மடங்கள் தஞ்சாவூர்ப் பகுதியில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுச்சியுற்றதைக் கல்வெட்டுகள் மூலமாக அறிகிறோம். அவை எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் சிறிதுசிறிதாக வளர்ச்சியுற்றன. பிராமணரல்லாத தலைவர்களைக் கொண்ட இம்மடங்கள் பக்தி இயக்கத்தின் தலைவர்களான திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரின் பெயர்களைப் பெரும்பாலும் கொண்டிருந்தன. மடங்களுக்கு வெள்ளாளர் தலைமை தாங்கினர். இம்மடங்களின் தலைவர்கள் திருச்சித்திமுற்றம் சந்தானம், மருதப்பெருமாள் சந்தானம் ஆகியவற்றைச் சார்ந்தவராவர். திருச்சித்திமுற்றத்துத் திருஞானசம்பந்தர் திருமடத்தின் கிளைமடங்கள் திருவானைக்கா, உசாத்தானம், திருவிழிமிழலை, வலிவலம் ஆகிய இடங்களில் தோன்றின. இச்சந்தானத்தைச் சேர்ந்த பரிபூரணச் சிவாச்சாரியார் உசாத்தானத்திலுள்ள கூத்தாடு நாயனார் மடத்தின் தலைவராவார், அதேபோன்று தவப்பெருமாள் என்பவர் திருவீழிமழலையில் உள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடையார் மடத்திற்குத் தலைமை தாங்கினார். வலி வலத்தில் இருந்த தவப்பெருமாள் திருமடத்திற்குச் சோமநாததேவர் என்ற எதிரொப்பிலாதார் தலைமை தாங்கினார். இச்சந்தானத்தைச் சேர்ந்த நமச்சிவாயத் தேவருடைய சீடர்கள் திருவானைக்காவல் நாற்பத்தெண்ணாயிரவர் திருமடத்தில் இருந்தனர்.
மூன்றாம் இராசராசன் காலத்தில் திருவிடைமருதூரில் மாளிகை மடத்தில் சந்தானத்தைச் சேர்ந்தவர் இருந்தனர். அவர்களின்
175

Page 196
வழிவந்தோர் தில்லை மாளிகை மடத்தைச் சேர்ந்தவரும், திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவருமாவர். 13 ஆம் நூற்றாண்டினரான பெரும்பற்றப்புலியூர் நம்பி, தில்லையில் இருந்த மடத்துத் தலைவரான வெண்காடர்க்கு மாணவரான விநாயகர் என்பவர் தனக்குக் குரு (ஞானசிரியர்) என்று கூறுகிறார்.
கி.பி. 1230-இல் ஆண்டார் மருதப்பெருமாள் சந்தானத்தைச் சேர்ந்த நமசிவாயதேவர் என்பவர் செங்காட்டங்குடியில் சிறுதொண்டர் திருமடத்தைத் தோற்றுவித்தார். திருவாரூர் அசாரம் அழகியான திருமடம், அதன் கிளைமடமான திருப்பத்தூர் திருஞானசம்பந்தர் மடம், கோவிந்தபுத்தூர் திருத்தொண்டத் தொகையான திருமடம், தில்லையிலுள்ள அதன் கிளைமடம், திருப்பத்துாரில் அதே பெயரிலுள்ள மற்றொரு மடம், சோழ வந்தானுக்கு அருகில் தென்கரையிலுள்ள பாண்டரங்கவாணர் சந்தானத்தைச் சார்ந்த திருஞானசம்பந்தன் மடம் ஆகியவை யாவும் முக்கியமான* தமிழ்ச் சைவமடங்களேயாம்.
தமிழ்ச் சைவ மடங்கள் முந்தைய செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வேறு சில இடங்களிலும் தோன்றின.
வெள்ளாள 6፬) öቻ6)! ஆசிரியர்களின் தலைமையிலான மேற்கூறப்பட்ட தமிழ்ச் சைவ மடங்கள் சைவ சித்தாந்தக் கொள்கையின் நிறுவன அடிப்படைகள் என்றால் மிகையாகாது. இறைப்பற்று, பக்தி ஆகியவற்றின் அடிப்படையிலான இந்தச் சித்தாந்தம் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் மெய்கண்டாராலும் அவரது சீடர்களாலும் முறைப்படுத்தப்பட்டன. தத்துவ நூல்களாக எழுதப்பட்டன. தமிழ்ச் சைவ மடங்களின் தோற்றமும் மற்றும் பரவலும், சைவ சித்தாந்தத்தின் முறைப்படுத்தப்படுதலும் ஒரே காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் என்பதால் அம்மடங்கள்
176

மெய்கண்டாரின் பல சீடர்களால் நிறுவப் பட்டிருக்கலாம்.
தக்கயாகப் பரணியில் குடந்தையில் இருந்த ஒரு பெரிய மடத்தையும், அதிலிருந்த மயேச்சுரரைப் பற்றி குறிப்புமுள்ளது. அந்த மடம் வீரசைவர்க்குரியது என்று முனைவர் மா. இராச மாணிக்கனார் கருதுகிறார்."
குகையிடி கலகம்
குகையிடி கலகம் என்பது கிபி. 1200-இல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி சைவ மடங்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் சோழர்காலக் கல்வெட்டுகள், குகைகள் எனப்படும் சைவ மடங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மூன்றாம் குலோத்துங்கன் கால முதல் பல கோயில்களில் (தஞ்சாவூர் பகுதியில்) குகைகள் என்னும் மடங்கள் இருந்துள்ளன. இவை சிவன் மக்களின் வாழ்க்கையில் இவை முக்கியப்பங்காற்றின. அக்குகைகள் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, குறுக்கை, சீர்காழி, திருக்கழுமலம், திருவிடவாயில், திருப்புகலூர்,திருமாகாளம், திருமணஞ்சேரி,முனியூர் ஆகிய இடங்களிலிருந்தன. இம்மடங்கள் சைவப் பணியில் ஈடுபட்டிருந்தன." இவை சைவக் குரவர்களின் பெயர்களைத் தாங்கியிருந்தன. திருஞானசம்பந்தன் குகை, திருமுறைத்தேவாரச் செல்வன் குகை, திருத்தொண்டத் தொகையான் குகை, ஆலாலசுந்தரன் குகை எனத் தமிழ்ப் பெயர்களைத் தாங்கியிருந்தன. இக்குகைகளின் முதலிகள் (தலைவர்கள்) சைவத்திருமுறைகளில் வல்லவர்களாகவும், தேவார இலக்கியங்களின் பாதுகாவலர்களாகவும், திருமுறைகளைப்பண்ணுடன் ஒதுபவர்களாகவும் விளங்கினர். 22-ஆம் ஆட்சி ஆண்டில் திருத்துறைப்பூண்டியில் இருந்த குகை தாக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகுகையிடி கலகம் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குகையின் தலைவரான திருச்சிற்றம்பலமுடைய முதலியார் அக்கலகத்தில் இறந்தார். குகையின் சொத்தெல்லாம்
ஆய்வரங்கு 2008

Page 197
பிடுங்கப்பட்டது. பிறகு புதிய தலைவர் இருதயதேவர் என்பவர் பொறுப்பேற்றார்" இக்கல்வெட்டினைப் படியெடுத்த அரசாங்கக் கல்வெட்டாய்வாளர் இக்கலகம் அப்பிராமணர் நிறுவனத்தின் மீது பிராமணரின் தூண்டுதலால் ஏற்பட்ட கலகம் என்று ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்." இந்நிகழ்ச்சி 1-12ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சைவசமய வரலாற்றோடு தொடர்பு படுத்தி ஆராய்ந்தால் வரலாற்று உண்மைகளை Ֆլմlափգամ, அந்நூற்றாண்டுகளில் பிராமணத் தலைவர்களைக் கொண்ட கோளகி மடங்கள் சோழர்காலத்தில் வளர்ச்சியுற்றுப்பேரரசர்களின் பேராதரவுடன் மக்கள் மத்தியில் சிறப்புற்றன. அதன் விளைவாகத் தமிழ்ச் சைவம் தாழ்வுறலாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இதன் பெருமையையும், முக்கியத்துவத்தையும் மீண்டும்பெறும் முயற்சியே குகைகளின் தோற்றமும் வளர்ச்சியுமாகும். கோயில்களில் பாதுகாப்பாகக் கட்டப்பட்டுப் பணியாற்றிய இந்நிறுவனங்களையும், அவற்றின் வெள்ளாளர்த் தலைவர்களையும் கோளகி மடச் சைவாச்சாரியார்கள் போட்டியுணர்வுடன் நோக்கியிருந்திருக்க வேண்டும். வட இந்திய அடிப்படையிலான வடமொழி முக்கியத்துவம் பெற்ற - கோளகிமடச் சைவாச்சாரியார்கள் தமிழ்ச் சைவத்தைப் போற்ற முற்பட்ட குகைகளையும் அவற்றின் முதலிகளையும்(தலைவர்களையும்) சமயப் பகையுடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் நோக்கியமையே குகையிடி கலகத்திற்குக் காரணமாயிற்று. இவ்வாறாகப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய முதலியார் சந்தானங்களைக் கொண்ட தமிழ்ச் சைவமடங்கள் ஆன்மீகச் செல்வாக்கையும் துணைச் செல்வாக்கினையும் குகைகளிட மிருந்துதான் பெற்றிருக்க வேண்டும் என்பது புலப்படுகின்றது.
சைவ மடங்களும் சமுதாயமும்
சைவமடங்கள் அனைத்தும் சமயத்துறையில் முக்கிய பங்காற்றின. அவை பக்திக் கொள்கையின் பரவலுக்கு நிறுவன அடிப்படைகளாக அமைந்தன. கோயில்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சியுறும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

பொழுது அவற்றின் தொடர்போடும், அவற்றுக்கு இணையாகவும் சைவமடங்கள் முழுமையான சமயபண்பாட்டு நிறவனங்களாக வளர்ச்சியுற்றன. சோழர் காலத்தில் கோயிற் பூசைகளும், விழாக்களும் அதிகரித்த வேளையில் சைவ மடங்களும் எண்ணிக்கையில் அதிகரித்து, முக்கியத்துவம் பெற்றுச் சமயப்பணிகளில் சிறப்புற்றன.
சைவமடங்களின் சமயத்தலைவர்கள் பண்பட்ட ஆன்மீகவாதிகளாக இருந்து சமுதாயத்தின் மேன்மக்களையும் பாமரர்களையும் தங்கள் சமயத்தில் கவர்ந்தனர். தாங்கள் மடபதிகளாக இருந்து, மடங்களை நிருவகித்ததுடன் சமயம் மற்றும் தத்துவ அறிவை மக்களிடையே பெருக்கினர். சைவமடத்துத் தலைவர் ஆன்மீகத் தலைமை ஏற்று, சிவன் கோயில் நிருவாகத்தில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தினர். அவர்களது சீடர்களாகிய மாகேசுவரர்களும், சிவயோகிகளும் கோயில் அலுவல்களில் ஆர்வம் காட்டி அவற்றின் நிருவாக உறுப்பினர்களாக முக்கியப் பணிபுரிந்தனர். மாகேசுவரர் கண்காணிசெய்வார்’ எனக் கல்வெட்டுகள் அவர்களைக் குறிப்பிடுகின்றன.
சைவமடங்களது ஆசாரியார்களும், சீடர்களும் மக்களின் சைவ சமய வாழ்வில் நெருங்கிய தொடர்புற்றிருந்தனர். சோழர் காலம் முழுவதும் இம்மடங்கள் பக்தியின் உயர்நிலையினைப் போற்றின. திருப்பதிகங்கள் ஒதுவதைச் சிறப்பாக்கின. கோயில்களில் திருப்பதிகங்களைத் தவிர மற்ற சமய நூல்களைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டின. கோயில்களில் பூசைகளுக்கும் விழாக்களுக்கும் மடங்கள் தானங்கள் அளித்தன. கோயில் விழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களின் உணவுமற்றும் இருப்பிடத் தேவைகளை நிறைவுசெய்து, பாமரர்கள் அதிக அளவில் கோயில் இயக்கத்திலும் இறைநெறியிலும் ஈடுபட மடங்கள் உதவி செய்தன.
சைவ மடங்கள் கல்வி, பொது மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றின் மேற்பாட்டிற்குப்பங்காற்றிச்
177

Page 198
சைவ சமயத்திற்கான சமதாய அடிப்படையினை வேரூன்றச் செய்தன முறையான கல்வி நிலையங்களாகச் செயற்பட்டுச் சைவ மடங்கள் மரபு வழியான 18 வித்தைகளை உயர் நிலையில் மக்களிடையே போதித்து வந்தன. மடங்களின் பாடத்திட்டம் சைவ சமயத்தின் அடிப்படையில மைந்தாலும். புறச்சமயத் தத்துவங்களையும் கொண்டிருந்தது. சில நேரங்களில் சமயச் சார்பற்ற போதனைகளையும, மருத்துவம், விலங்கு மருத்துவம் ஆகியவற்றையும் கற்பித்தன. சோழர் காலத்தில் மடங்கள் சமய நூல்களைப் படித்தும், விண்ணப்பித்தும், விளக்கியும் சைவ மக்களுக்குப் பொது - சமயக் கல்வியையும் ஒழுக்கத்தையும் புகட்டின. இவ்வகையில் தமிழ்ச் சைவமடங்களின் பங்கும் குகைகளின் பங்கும் சிறப்பானது. சைவமடங்கள் புனிதப் பயணிகளின் நலத்தைக் கவனித்தன மடங்களின் சீடர்கள், வெளித் துறவிகள், பிராமணர்கள், பக்தர்கள், ஒதுவார்கள், ஆகியோர் அனைவருக்கும் சைவமடங்களில் உணவளிக்கப்பட்டது. இதற்கெனச் சோழ மன்னர்களும் சிற்றரசர்களும் அதிகாரிகளும், மக்களும் அவற்றிற்கு நிவந்தங்கள் அளித்தது குறிப்பிடத்தக்கதாம்.
சைவ மடங்களின் தாராளக் கொள்கை சைவ சமயத்தின் மனிதநேய நெகிழ்விற்கு வழிவகுத்தது எனலாம். சிவன்மீது பற்று கொண்ட எல்லோரையும் சாதி பேதம் இன்றிச் சைவ மடங்கள் போற்றின; அவர்கட்கு உணவளித்தன; கல்வித் தொண்டாற்றின. சைவ மடாலயச் சமுதாயத்தில் பேதங்கள் அகற்றப்பட்டன. சைவ மடங்கள் ஆகமங்களைக் கொள்கையின் அடிப்படைகளாகக் கொண்டிருப்பினும் வேதக் கல்வியையும் போற்றின.
சைவ சித்தாந்தம்
கி.பி. 13ம் நூற்றாண்டு சைவ சமய வரலாற்றின் முக்கியக் காலக்கட்டமாகும். திருமந்திரம், தேவாரம், திருவாசகம் முதலியவற்றில் சைவ சித்தாந்தக் கருத்துக்களான பசு, பதி, பாசம் முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவற்றையும் ஒரு
178

சித்தாந்தமாக முறைப்படுத்திய பெருமை மெய்கண்ட தேவரையே சாரும். சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் தலைமையானது அவர் இயற்றிய சிவஞானபோதமாகும். இவர் மூன்றாம் இராசராசன் காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த்வர். சந்தானக் குரவர் நால்வருள் இவர் முதல்வர். பன்னிரண்டு சூத்திரங்களைக் கொண்ட சிவஞானபோதம் பதி (இறைவன்), பசு (உயிர்). பாசம் (தளை) முதலியவற்றின் உண்மையையும், இலக்கணங்களையும், உயிர் முத்திபெற சிவஞானத்தை உணரும் முறையுைம், பாசம் நீக்கும் முறையையும், சிவானந்த அனுபவத்தையும் சீவன் முத்தர் நிலையையும் நாற்பது வரிகளில் கூறுகின்றது. இந்நூல் சைவ சித்தாந்த நூல்கள் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.
மெய்கண்ட தேவரின் தலைமாணாக்கரான அருணந்தி சிவாச்சாரியார் சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். சைவசித்தாந்த நூல்களில் இதுவே மிக விரிவானது. இதில் சைவசித்தாந்தக் கொள்கைகள் நன்கு விளக்கப்பட்டதுடன் SO சமயங்களின் கோட்பாடுகளும் அவற்றிற்கு மறுப்புகளும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூலின் பெருமையைச் சிவத்தின் மேல் தெய்வமில்லை, சிவஞான சித்திக்கு மேல் சாத்திரமில்லை' எனும் பழமொழியால் அறியலாம். இதே ஆசிரியர் இருபாஇருபாஃது என்னும் ஒரு சிறு நூலையும் இயற்றியுள்ளார். இந்நூல் வினா, விடை வடிவில் சித்தாந்த உண்மைகளை விளக்கிக் கூறுகிறது. மெய்கண்ட தேவரின் மாணவரில் ஒருவரான திருவதிகை மனவாசங்கடந்தார் இயற்றிய நூல் உண்மைவிளக்கம் எனப்படும். இது சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்றாகும். ஐம்பத்து மூன்று வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றியும், உயிர், பதி, பாசம் முதலியவற்றின் தன்மைகளையும், திருக்கூத்தின் பொருளையும், கூத்தப்பிரிவின் வடிவில் ஐந்தெழுத் துண்மையின் விளக்கம் பற்றியும் சுருக்கமாகக் கூறுகிறது.
ஆய்வரங்கு 2008

Page 199
சிவஞானபோதம் இயற்றிய மெய்கண்ட தேவருக்கு முன்பாகவே திருவுந்தியார்', திருக்களிற்றுப்படியார் முதலிய சித்தாந்த நூல்கள் எழுதப்பட்டன என்று முனைவர் மா. இராச மாணிக்கனார் கூறுகிறார். சித்தாந்த நூல்கள் வரிசையில் இவை இரண்டும் முதலில் கூறப்படுவன என்பது உண்மையே. திருவுந்தியாரை இயற்றியது திருவியலூர் உய்யவந்ததேவர். இந்நூல் இறைவன், உயிர் சிவகதியை அடையும் முறை, முக்திநிலை முதலியவை பற்றி நாற்பத்தைந்து மூவடிப்பாடல்களில் சுருக்கமாக விளக்குகின்றது. திருக்களிற்றுப் படியாரை இயற்றியது திருக்கடவூர் உய்யவந் தேவர். இவர் திருவுந்தியார் ஆசிரியரின் மாணக்கருடைய மாணாக்கர் என்று கூறப்படுகின்றது. நூறு வெண்பாக்களையுடைய இவரது நூல் இறைவன், உயிர், முக்தியடைவதற்கான நெறி, முக்தி நிலை முதலியவை பற்றிக் கூறுகின்றது.
வைணவ சமயம்
சோழர் காலத்தில் வைணவ சமயத்தின் வரலாறு சைவ சமய வரலாற்றிற்கு இணையாகவே செல்கிறது எனலாம். விசயாலய சோழ குலத்தின் கீழ்த் தென்னிந்தியாவில் சைவ வைணவச் சமயங்களுக்கு ஒரு வெள்ளியுகம் தொடங்கிற்று' என்பர். முனைப்பான சைவக் கொள்கையினை மேற்கொண்ட போதிலும் பிற சமயங்களைப் புறக்கணிக்காதவர்கள் சோழர்கள். ஆதலின் சைவண சமய நிறுவனங்களும் சோழர் காலத்தில் போற்றப்பட்டன. ஒரிரு பூசல்களைத் தவிர, பொதுவாக இவ்விரு சமயங்களும் நாட்டில் ஒருமைப்பாட்டுடன் பயின்று வந்தன.
பக்தி இயக்கத்தின் அடிப்படையில் பல்லவர் காலத்தில் எழுச்சியுற்ற வைணவம் சோழர் காலத்தில் சிறப்புற்றது. வைணவ பக்தி இயக்கத்தின் நிறுவன அடிப்படைகளான கோயில்களும் மடங்களும் சிறப்புற்றன. வைணவ இலக்கியங்களான திவ்வியப் பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டிதும் இக்காலத்தில் தான். சோழாாட்சிக் காலத்தில்தான் வைணவப் பெரியார் இராமானுசர் விசிட்டாத்வைதக் கொள்கையினைப் போதித்தார்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சோழரின் வைணவப் பணிகள்
சிறந்த சிவபக்தனான முதலாம் பாரந்தகன் வைணவத்தைப் போற்றியவன் என்பதற்கு அவனது சிறப்புப் பெயர்களுள் ஒன்றான வீரநாராயணன்' என்பதும் சான்றாக விளங்குகிறது. முதலாம் பராந்தகன் காலத்தில் பல பிரமதேயங்கள் ஏற்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு வைணவக் கோயிலான இராசமன்னார் கோயிலைத் தன்னகத்ததே கொண்டதாகும். பராந்தகன் மேலும் பல திருமால் கோயில்களை உருவாக்கினான்.
சைவ சமயத்தில் பெரிதும் பற்றுடைய கண்டராதித்த சோழன் தான் அமைத்த கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்னும் ஊரில் கண்டராதித்த விண்ணகரம் என்னும் வைணவக் கோயில் எடுப்பித்தான்." முதலாம் இராசராசன் வைணவத்தின்பால் கொண்டிருந்த ஆர்வம் குறிப்பிடத்தக்கது. பெங்களூருக்கருகில் மணலூரில் சமயங்கொண்டி சோழ விண்ணகரம் என்ற கோயிலை இராசராசன்° கட்டினான். மேலும் தலைக்காட்டிற்கு அண்மையில் ஒர் ஊரில் இரவிகுல மாணிக்க விண்ணகரம் என்ற கோயிலையும் அமைத்தான். அக்கோயில்களுக்கு அவனும் அவனது? தமக்கை குந்தவைப் பிராட்டியாரும் நிவந்தங்கள் அளித்தனர். இராசராசனின் 23ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று வேலங்குடி கிராமத்தினர் திருவாரூர்க் கோயில் விட்டுணுவுக்கு அளித்த கொடைகள் பற்றி விவரிக்கின்றது. எனவே இம்மன்னன் காலத்தில் திருமால் திருமேனி, பூசைகளுக்கு உரியதாக இருந்தமையை நன்கு உய்த்துணர முடிகிறது. இன்று இத்திருமாலை இங்குக் காணப்படவில்லை அக்காலத்தில் சைவ வைணவ ஒருமைப்பாட்டினை இச்சான்று நன்குணர்த்தும். முதலாம் இராசாதிராசன் காலத்தில் அவனது படைத் தலைவர்களுள் ஒருவரின் சேனாபதி இராசேந்திரசோழ மாவலிவாணராயன் திரிபுவனியில் ஆண்டு ஒன்றுக்கு 12000 கலம் நெல் வருவாயுள்ள 72 வேலி நிலத்தை அவ்வூர் வீரநாராயண விண்ணகர் கோயிலில் சில திருவிழாக்களும் ஒரு கல்லூரியும் நடத்துவதற்கு நிவந்தமாக வழங்கினான். மேலும் அவன் கோயிலில் திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்வதற்கும் ஏற்பாடும் செய்தான்."
179

Page 200
மலைய மானாட்டை ஆட்சிபுரிந்த குறுநில மன்னனான மிலாடுடையான் நரசிங்கவர்மன் காலத்தில் திருக்கோயிலூரிலுள்ள திருமால் கோயில் கருங்கற்கோயிலாகக் கட்டப்பெற்றது." மும்முடிச்சோழன் எனப்படும் இராசமகேந்திர சோழன் திருவரங்கத் திருப்பணி புரிந்துள்ளான். இவன் திருவரங்கநாதனிடம் அன்பு பூண்டு அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவெையான்று அமைத்தான். மேலும் அவன் அக்கோயிலில் இராசமகேந்திரன் திருவீதி' என்னும் பிரகாரம் ஒன்றையும் எடுப்பித்தான்."
முடிசூடிய சில தினங்களில் ஊழ்வினை வயத்தால் இறக்க நேர்ந்த அதி இராசேந்திரசோழன் தன் முன்னோர்களைப் போல் வைணவ சமயத்தில் சிறிதும் வெறுப்பின்றி அதன்பால் ஆதரவு காட்டிச் சமயப்பொறையுடன் ஒழுங்கியவன். இவன் காலத்தில்தான் முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திருவக்கரை சந்திர மெளலீசுவரர் சிவாலயத்திற்குள் இருந்த வரதராசப் பெருமாள் கோயில், கருங்கற் கோயிலாக* மாற்றப்பட்டது. வைணவத்திற்கும், இராமாநூசருக்கும் தீங்கு செய்ததாகப் பிற்காலத்து வைணவ நூல்கள் கூறும் கிருமிகண்ட சோழன் இவனல்லன்.
சைவத்தின்பால் தீராப்பற்றுகொண்ட - திருநீற்றுச் சோழன்’ என்ற பெயர் பெற்ற முதலாம் குலோத்துங்கன் புறச் சமயத்தினர் மீது சிறிதும் வெறுப்பு காட்டினவனல்லன். இவனது ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடியிலுள்ள இராசகோபாலசாமிக் கோயில் என்று கூறப்படும் திருமால் கோட்டம் எடுப்பிக்கப்பெற்றது. அக்கோயில் இவன் பெயாாலேயே குலோத்துங்க சோழ விண்ணகரம்" என்று பெயரிடப்பட்டது. வேங்கி நாட்டில் இவன் இளவரசுப் பட்டம் பெற்ற நாளில், இவன் பெற்ற அபிடேகப் பெயரான சப்தம விஷ்ணு வர்த்தனன் என்பதன் மூலம் இவனுடைய வைணவப் பற்றை அறியலாம். மேலும் இவன் இராசநாராயணன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றிருந்தான். முதலாம் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தி திருமாலா கத்துப்பிரியா தென்றும், திருமகளிருந் தென வீர
18O

சிம்மாசனத்து 965 முடையாளொடு வீற்றிருந்தருளிய' என்றும் தொடர்களைக் கொண்டிருப்பது அவனுடைய வைணவப் பற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அடுத்து, சோழ அரியாணை ஏறிய அவனது புதல்வனான விக்கிரமசோழனும் தந்தையைப் போன்றே வைணப் பற்றுடையவன் என்பதை அவனது மெய்க்கீர்த்தியில் உள்ள தொடர்களான நெடுமால் ஆகத்துப் பொருந்திப் பிரியாது என்பதும் திருமகள் இருந்தென என்பதும் நன்கு உணர்த்தும்.
இரண்டாம் குலோத்துங்கனும் வைணவமும
திருமாலிடம் அன்பு பூண்டொழுகிய தந்தையிடமும் (விக்கிரம சோழன்) பாட்டனிடமும் (முதலாம் குலோத்துங்க சோழன்) பழகி வளர்ந்த இரண்டாம் குலோத்துங்கன் வைணப் பற்று கொண்டிருந்தான் என்பதில் ஐயமில்லை. இவனுடைய மெய்க்கீர்த்தி ஒன்று நெடுமாலிவனென நெடுமுடிசூடி என்று இவனுடைய வைணவப் பற்றினைக் குறிப்பிடுகிறது. இவனுடைய 7ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கோயிலூர் வைணக் கோயில் பூசைக்கும் வைணவர் உணவிற்கும் நிலங்களை நிவந்தமாக அளித்த செய்தியைக் கூறுகிறது. (245oh1937-35)59ஆனால் பிற்காலத்தில் தோன்றிய 'திவ்யசூரிசரிதம்', 'கோயிலொழுகு போன்ற சில வைணவ நூல்கள் இவனை வைணவர்களின் பகைவனாகவும், கிருமிகண்ட சோழன்’ என்றும் பழித்துரைக்கின்றன. அதாவது நந்திவர்மப் பல்லவ மல்லனால் தில்லையம்பல முன்றலில் நிறுவப்பெற்ற அன்று முதல் நீடித்திருந்த திருமால் மேனியைக் கடலில் இவன் எறிந்தான் எனக் குலோத்துங்கசோழனுலா கூறுகிறது. இதனால் வைணவ சமயத்தினர் எல்லோரும் இவனுக்குப் பகைவராயினர் என்பர் சிலர். ஆனால் வைண சமயத்தின் மீது இவன் வெறுப்புற்றவன் என்று கூறமுடியாது. உண்மையில் திருமால் மீதும், வைணவத்தின் மீதும் வெறுப்பு கொண்டவனாயின் இவன் தன் ஆட்சிப் பகுதியிலிருந்த பல திருமால் கோயில்களுக்கு இடையூறு புரிந்திருக்க வேண்டும். மாறாகத் தில்லையிலன்றி வேறெங்கும் அவன் அவ்வாறு செய்ததாகத் தெரியவில்லை. இவன்
ஆய்வரங்கு 2008

Page 201
தில்லையில் திருப்பணிகளை விரிவாக மேற்கொண்டபொழுது தில்லைக் கோவிந்தராசரை வழிபட்டு வந்த வைணவர்கள் அத்திருபணிக்கு முரண்பட்டிருக்கலாம் அல்லது இடையூறுகளைச் செய்திருக்கலாம். அதனால் கோபமுற்ற இரண்டாம் குலோத்துங்கன் திருமால்மேனியைப் பெயர்த்து கடலில் போடச் செய்த பிறகு திருப்பணியை நிறைவேற்றியிருத்தல் வேண்டும் என்று சதாசிவப் பண்டாரத்தார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்." இவன் தில்லைப்பணியினை விரிவாக மேற்கொண்டபொழுது வைணவ சமயத்தினர் செய்த இடையூறுகளை ஒரு பொருட்டாகக் கூறவிரும்பாத ஒட்டக்கூத்தர். இவன் மன்றிற்கு இடம் காணவேண்டித் திருமாலை அவருக்குரிய பழைய கடலுக்கே அனுப்பிவிட்டான் என்று தன் தக்கயாகப்பரணியில் கூறியுள்ளார்." ஆதலில் வழிவழியாகச் சமயப்பொறையைத் தங்களது கொள்கையாக கொண்ட சோழ மன்னர்களில் ஒருவரான இரண்டாம் குலோத்துங்கன் திருமால் மீது வெறுப்பு கொண்டு வைணவர்களுக்குத் தீங்கிழைத்தான் என்று கூறுவது முற்றிலும் பொருந்தாது. மேலும் குலோத்துங்களைப் பழித்துரைக்கும் நூல்களான திவ்யசூரிசரிதம், கோயிலொழுகு ஆகியவை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இயற்றப்பட்டவை. அவை கூறுவன உண்மைநிலையிலிருந்து மாறான ar மிகைப்படுத்தப்பட்ட - பழித்துரைகளாகும். மேலும் அக்காலத்தில் எவ்விதச் சமயக் கலகமும் ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. மேலும் மேற்கூறப்பட்ட திருமால் மேனி, மூலவர் அல்ல; அது உற்சவ மூர்த்தி என்றும் அதனை இராமானுசர் திருப்பதி கோவிந்தராசர் கோயிலில் கொண்டு வைத்தார் என்றும், பிற்காலத்தில் அதே திருமேனியை விசயநகர இராமராயர் என்ற மன்னர் மீண்டும் தில்லைக்கோயிலில் பூசைக்குரியதாக்கினார் என்றும் கூறுவர்.
இரண்டாம் இராசராசசோழன் தன் தந்தை தில்லையம்பல முன்றலிருந்த திருமாலை அகற்றியமை பற்றி வைணவர்கள் மனம் புண்பட்டிருத்தலை உணர்ந்து தன் ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவளித்தான் என்பதனை விழுந்த
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

அரிசமயத்தையும் மீளவெடுத்தான்' என்ற அவனது மெய்க்கீர்த்தியால் அறியலாம்”
தில்லைச் சிற்றம்பலவாணருடைய ஏகபக்தன், திருவாரூர் இறைவனின் நம் தோழன்'என்றெல்லாம் அழைக்கப்படும் சிறந்த சிவபக்தனான மூன்றாம் குலோத்துங்கன் வைணவத்தின் மீது கொண்டிருந்த பற்று குறிப்பிடத்தக்கதாம். முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்து வேலூரில் உள்ள திருமால் கோயிலுக்குக் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று தன்பெயர் வைத்து, அதற்கு நிவந்தமாகக் குலோத்துங்க சோழ நல்லூர் என்ற ஊரை கி.பி.181இல் இவன் வழங்கினான்.
சோழ மன்னர்களைப் போன்று சிற்றரசர்களும், அதிகாரிகளும், மற்றவர்களும் மக்களும் வைணவ இறைப்பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். குறிப்பாக யாதவராயர்கள், காடவராயர், தெலுங்குச் சோழர் முதலியோர் சிறப்பான வைணவ அறப்பணிகள் புரிந்துள்ளனர்.
வைணவர் இலக்கிய மரபு
சோழர் காலத்தில் வைணவ பக்தி இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. முதலாம் இராசராசன் காலத்தில் நம்மாழ்வாரின் வழிபாடு தொடங்கிவிட்டிருந்தது. அதற்கு முன்பாகவே திவ்வியப் பிரபந்தங்களைத் தொகுக்கும் செயல்களை நாதமுனி அடிகள் மேற்கொண்டார். பக்தி இயக்கத்தில் பாடல் மரபினை முதலில் தொடங்கியவர் வைணவ ஆழ்வார்தான் எனலாம். முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் ஆச்சாரியார்களுள் முதல்வரான நாதமுனி அடிகள் நம்மாழ்வாரின் பாசுமரங்களைக் கண்டெடுத்தார். அன்பில் செப்பேட்டில் கூறப்படும் சிறீநாதனும், வைணவ ஆச்சாரியாரான நாதமுனி அடிகளும் ஒருவரே என்று அறிஞர்கள் கருதுங்கால் அவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின்° தொடக்கமும் ஆகும். பாசுரங்கள் ஏற்பட்ட காலம், சிறீராமனுசருக்கு உரிய காலம், பிறகு தோன்றிய உரையாசிரியர்கள் காலம் ஆகிய இரண்டு காலப் பகுதிகளுக்கும் இடைப்பட்டது. தென்னிந்தியாவில் வைணவ வரலாற்றில் இரண்டாவது பெரிய பிரிவின்
181

Page 202
முதலாவது பெரிய ஆச்சாரியாரால், திவ்வியப் பிரபந்தங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டு, அவற்றிற்குரிய இசைக் குறிப்புகளும் முடிவு செய்யப்பட்டன என்று வரலாற்றறிஞர் நீலகண்ட சாத்திரி கருதுவார். வைணவ இலக்கிய மரபின் வளர்ச்சிக்கும், வைணவ அடியார்கள் ஒரு சமுதாயமாக எழுச்சியுற்றதற்கும் காரணமே ஆழ்வார்களின் பாசுரங்கள்தான். ஆனால் வைணவப் பாசுரங்களின் தொகுப்பு ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடைபெற்ற ஒன்றல்ல. இவைகளின் தொகுப்பைப்பற்றிப்பிற்கால வைணவ இலக்கியங்கள் தான் குறிப்பிடுகின்றன. மேலும் இலக்கிய மரபின் வளர்ச்சியைப் பற்றித் தற்செயலாகத்தான் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. என்று ஆர். சம்பகலக்குமிஎன்ற வரலாற்றறிஞர் கருதுகிறார். அதே போன்று இராமானுசர் காலத்திற்குப் பிறகு வைணவ சமயத் தலைவர்கள்தாம் ஆர்வம் கொண்டு உரைகளியற்றும் மரபினை ஏற்படுத்தினர், வைணவ பக்திக்கான தத்துவ மரபினை ஏற்படுத்திய முயற்சியில் முதல்வராகப் பணியாற்றியவர் இராமானுசர் ஆவார். சங்கரரின் அத்துவைதத்தையும், மாயாவாதத்தையும் மறுத்த இராமானுசர் வேதாந்தத்திற்குப் பக்தியின் அடிப்படையிலான விளக்கம் கொடுத்தார். தன்னுடைய தத்துவக் கருத்துகளை சிறீபாஷ்யம், கீதாபாஷ்யம் ஆகிய நூல்களில் விவரித்துள்ளார். வைணவத் தத்துவ நூல்கள் தமிழில் தோன்றவில்லை. யமுனாச்சாரியார், யாதவப் பிரகாசர், இராமானசர் ஆகியோர் வடமொழியில் வைண இலக்கியத்தை வளர்த்தனர். இராமனு சருக்குப் பிறகு இத் தத்துவ நூல்களுக்கு விளக்க உரைகள் தோன்றலாயின. பொதுமக்கள் பாடி உளமுருகி நின்ற ஆழ்வார்களின் இனிய பாசுரங்களுக்குத் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் விளக்கங்கள் எழுந்தன. பாமர மக்கள் அறிந்து கொள்ளவியலாத - ஆடம்பரமான - வலிந்து பொருள் காணக்கூடிய - மணிப்பிரவாள நடையில் தோன்றிய இலக்கிய் உரைகள் ஒரு சில மக்களுக்கே பயன்பட்டன. பெரியவாச்சான் பிள்ளை, நம் பிள்ளை ஆகியோர் இம்முறையிலேயே விளக்கங்கள் தந்துள்ளனர். அவற்றினை ஈடுகள்’ என்பர். குறிப்பாக நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குக் குருகைப்பிரான்
182

பிள்ளான் என்பவர் எழுதிய ஆறாயிரப்படி என்ற ஈடும், கோனேரி தாசரி என்பார் எழுதிய விளக்கமும் சிறப்பானவையாகும். இக்காலத்து வைணவ நூலாசிரியர்கள் கடைப்பிடித்த பொதுவிதிக்கு விலக்காகத் திருவரங்கத்து அமுதனாரால் இயற்றப்பட்ட இராமானுச நூற்றந்தாதி அமைந் துள்ளது. கலித்துறை என்ற பாவினத்தில் 100 செய்யுட்களைக் கொண்ட இந்நூல் எளிய முறையில் பக்தி நடையில் அமைந்து பெரிதும் போற்றப்பட்டு மதிக்கப்படுகிறது. அன்றாடப் பிரார்த்தனைப் பாடல்களாக இச்செய்யுள்கள் ஒதப்படுவதால் இந்நூலுக்குப் பிரபன்ன காயத்திரி என்ற பெயரும் உண்டு. சோழர் காலத்தின் இறுதியிலும் பதினான்காம் நூற்றாண்டிலும் வாழ்ந்திருந்த வேதாந்த தேசிகர் தென்மொழியிலும், வட மொழியிலும் கடலனைய புலமையும், பல்கலைகளில் வல்லமையும் வாய்ந்தவர். அவர் தமிழில் 24 பிரபந்தங்களையும், வடமொழியில் 84 பிரபந்தங்களையும் பாடினார். மேலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் வடமொழி வேதத்துக்கு ஒப்பாகும் என்ற உண்மையை வலியுறுத்தி வந்தார். பிரபத்தி அல்லது 'அடைக்கலம்' என்ற தத்துவத்தை அவர் நிலைநாட்டினார். அவர் வளர்த்த வைணவ மரபு பிற்காலத்தில் வடகலை மரபு என்றாயிற்று.
முதலாம் இராசராசன் காலத்திலேயே நம்மாழ்வாரின் வழிபாடு தொடங்கி விட்டிருந்தது. வைணவக் கோயில்களில் திருவாய்மொழி, திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் குலசேகர ஆழ்வாரின் பாசுரங்கள் ஆகியவற்றைச் சாற்றுமுறை செய்து வரப் பல நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இராசராசனின் ஆட்சியில் உக்கலிலுள்ள ஒரு கல்வெட்டில் திருவாய்மொழித் தேவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.* முதலாம் இராசேந்திரன் காலத்தில் உத்திரமேரூரில் திருவாய்மொழி ஒதுகிற மூன்று பேர்களைப் பற்றிக்° கல்வெட்டுகள் கூறுகிறது. கி.பி.1085 இல் ஒரு கல்வெட்டு திருவரங்கம் கோயிலில் திருப்பள்ளி எழுச்சியின் போது திருப்பள்ளி எழுச்சி", திருவாய்மொழி ஒதுவதற்கு ஒரு கட்டளையை ஏற்படுத்தியிருப்பதைக் கூறுகிறது. கி.பி.1088 ஆம் ஆண்டுக்
ஆய்வரங்கு 2008

Page 203
கல்வெட்டொன்று திருவரங்கத்தில் 905 திருவிழாவின் போது மூன்று இரவுகளில் இறைவனுடைய சந்நிதிக்கு முன்னால் தேட்டரூந்திறல்' எனத் தொடங்கும் குலசேகர ஆழ்வார் பாசுரம் பாடப்பட்ட செய்தியைத்" தெரிவிக்கின்றது. கிபி.171 இல் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் திருக்கோயிலூரில் ° ஐப்பசி, வைகாசி மாதங்களில் நடைபெற்ற திருவிழாக்களில் திருவாய்மொழியைப் பாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதே ஊரில் பெருமாள் கோயிலில்° திருநெடுந்தாண்டகம் ஒதுவதற்கான ஒரு கட்டளை அமைக்கப்பட்டிருந்தது. கி.பி.1242 இல் காஞ்சியில் 58 பிராமணர்கள் ஒன்றாகக் கூடி ஒரு குழுவாகத் திருவாய்மொழியை" பாடினர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் காஞ்சிபுரத்தில் தகுதியான ஒருவர் தொடர்ந்து இராமனுச பாஷ்யத்திற்கு 'வியாக்யானம் சொல்வதற்காகப் பாஷ்ய விருத்தி'என்ற கட்டளை உருவாக்கப்பட்டது."
இராமானுசர்
விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய இராமானுசர் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் என்ற ஊரில் அவதரித்தார். காஞ்சியில் மாதவப்பிரகாசர் என்ற ஆச்சாரியரிடம் சங்கரரின் அத்வைதத் தத்துவத்தைப் பயின்றார். இராமானுசரும், வைசியத் திருக்கச்சி நம்பியும் வேதாந்த ஆசிரியரான யாதவப் பிரகாசருடன் கருத்து வேறுபாடு கொண்டனர். இராமானுசர் சங்கரரின் போதனைகளிலிருந்து வேறுபட்டார். காஞ்சியில் யாதவப்பிரகாசர் குணப்படுத்த முடியாத காஞ்சி மன்னனுடைய மகளிர் நோயை இராமானுசர் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. யாதவப் பிரகாசரை விட்டு நீங்கிய இராமானுசர் காஞ்சிக் கோயிலில் பணிபுரிந்தார். பிறகு திருவரங்கம் சென்று பெரிய நம்பியுடன் தொடர்பு கொண்டார். சாதி, செல்வம், அறிவுச் செருக்கு இவையே முக்குறும்பு என்ற பெரிய நம்பியின் உபதேசத்தினை அவர் என்றும் மனத்தில் கொண்டிருந்தார். திவ்வியப் பிரபந்தத்தை இராமானசர் ஊக்கமுடன் பயின்றார். ஒரு சமயம் இராமனுசரின் மனைவி தாழ்சாதி வேலைக்காரனுக்கு உணவில்லை என்றதும் அவரே அதனைப் படைத்தார். இராமானுசர் திருவரங்கத்தில் ஒரு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

மடத்தை நிறுவினர். திருவரங்கக் கோயில் நிருவாகத்தை அவர் செம்மைப்படுத்தினார். இறைவனின் பணி ஆட்களான பரிவாரங்களை 10 ’கொட்டுகளாகப் பிரித்தார். அதற்கு முன் 5 கொட்டுகள் தான் இருந்தன.
இராமானுசர் மனிதநேயத்தின் அடிப்படையில் செயலாற்றினார். மாறனேரி நம்பி என்ற ஒர் ஆதிதிராவிடன் ராஜரண நோயுடன் வாழ்ந்திருந்தான். பெரிய நம்பி அவனக்கு உணவளித்து வந்தார். அவன் இறந்தபோது அவனுக்குப் பெரிய நம்பி இறுதிச் சடங்கைச் செய்தார். அப்படிப்பட்ட பெரிய நம்பியை இராமானுசர் போற்றினார். பெரிய நம்பியை வைதீக வைணவர் வெறுத்தனர். இராமானுசர் பாகவதர்கள் எக்குலத்தவராயினும் வழிபடத்தக்கவர்களெனப் போதித்தார். விழாக்காலங்களில் ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள் நுழைவதை ஆதரித்தார். அவரின் முற்போக்குக் கருத்துக்களை விரும்பாத கோயில் அர்ச்சகர் உட்படப் பலர், அவரை நஞ்சு வைத்துக் கொல்லப் பலமுறை சூழ்ச்சியிலிறங்கினர். அவற்றிலிருந்தெல்லாம் இராமானசர் தப்பினார்.
இராமானுசர் தன்னுடைய தத்துவ நூல்களான வேதாந்த சங்கிரகம், சிறீபாஷ்யம், கீதாபாஷ்யம் ஆகியவற்றில் விசிஷ்டாத் வைதக் கொள்கையினை விளக்கினார். சங்கரரின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, மாயாவாதத்தை மறுத்தார். வேதாந்தத்திற்குப் பக்தியின் அடிப்படையிலான விளக்கம் அளித்தார். அவர் மனிதநேயத்தின் அடிப்படையிலான தமிழ்ப் பக்தி மரபினை மனத்திற்கொண்டு வேதக்கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று ஆர். சம்பகலக்குமி கூறுகிறார்.
இராமானுசர் கூரத்தாழ்வானைக் கலந்து சிறீபாஷ்யத்தை எழுதியதாகக் கூறுவர். அவரின்சுற்றுப்பயணத்தின்போது ஒர் ஆதிதிராவிடப் பெண்ணை வைணவியாக்கினார். திருவளந்தபுரம் கோயிலில் இராமானுசர் சீர்திருத்தம் செய்வதை விரும்பாத நம்பூதிரிமார் இவரைத் திருங்குறுங் குடிக்கு அப்புறப்படுத்தினர். பிறகு திருவரங்கத்திலிருந்து அவர் மைசூர் அரசிலிருந்த 45
183

Page 204
பேர்கள் சென்றனர் எனக் குருபரம்பரை நூல் கூறுகிறது. திருவரங்கத்தில் இராமானுவர். கிருமி கண்ட சோழனால் சமயத் துன்புறுத்தலுக் குள்ளாயினார் எனத் திவ்யசூரி சரிதமும் குருபரம்பரப்பிரபவமும் கூறுகின்றன. திருநாராயண புரத்தில் பெருமாள் உற்சவத் திருமேனியான நாமப்பிரியரை இராமானுசர் டெல்லியிலிருந்து பெற்றதாகக் கூறுவர். அதில் தனக்கு உதவிய ஆதிதிராவிட மக்கள் திருநாராயணப்பெருமாள் திருவிழாவின்போது மூன்று நாள் கோயிலில் வழிபாடு செய்ய இராமனுசர் ஏற்பாடு செய்தார். சோழநாட்டில் கிருமிகண்ட சோழன் இறந்ததும் இராமானுசர் திருவரங்கம் திரும்பினார் (கி.பி.137) என்று வைணவ நூல்கள் கூறுகின்றன.
திருவரங்கத்திலிருந்தபோது கிருமிகண்ட சோழனான இரண்டாம் குலோத்துங்கனின் சமயத் துன்புறத்தலுக்கு உள்ளானதால் இராமானுசர் திருநாராயணபுரத்திற்குச் செல்ல நேரிட்டது என்ற கருத்தை ஆராய வேண்டியுள்ளது. இவ்வாறு சோழனைப் பழித்துரைக்கும் பிற்கால நூல்களான திவ்யசூரிசரிதமும், குரும்பரம்பரைப்பிரபாவமும் இராமானுசர் காலத்திற்கு மிகவும் பிற்பட்டவை. இரண்டாம் குலோத்துங்கன் தீவிர சிவபக்தன்; அவன் சமயப் பொறையற்றவன்; அவனது சமயப் பொறையின்மையே இராமானுசர் திருவரங்கத்தி லிருந்து வெளியேறியதற்குக் காரணம் என்று கூறுவது பொருத்தமாக இல்லை. இராமானுசரின் கொள்கைகள் UIJ6)q6)Ig5ğib(ğ5 இடையூறு விளைவித்தாகக் கூறப்படும் குலோத்துங்கனே திருவரங்கத்துக்கோயிலில் குலசேகராழ்வாரின் பிரபந்தங்களையும், திருவாய்மொழியையும், திருப்பள்ளி எழுச்சியையும் பாடுவதற்கு நிவந்தம் அளித்தான் என்ற கவ்வெட்டுச் செய்தியும் உண்டு. ஆதலின் இரண்டாம் குலோத்துங்கன் முனைப்புள்ள சிவபக்தன் ஆயினும் சமயப்பொறையும் உடையவன் என்பதை உணரலாம். திருமாலிடம் அன்பு பூண்டொழுகிய தந்தையிடமும் (விக்கிரமசோழன்) பாட்டனிடமும் (முதலாம் குலோத்துங்கன்) பழகி வளர்ந்த இரண்டாம் குலோத்துங்கனை வைணவர்களுக்குப் பகைவன் என்பது பழித்துரையாகும். உண்மைக்குப் புறம்பானதும் ஆகும். மேலும் இராமானுசரின் நடவடிக்கைகளை
184

அக்காலச் சமுதாய நிலையுடன் தொடர்புபடுத்தி ஆராய்வோமேயானால் சில உண்மைகள் புலப்படும். சோழர் காலத்துச் சமுதாயத்தில் சாதியின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமையும் வழக்கத்திலிருந்தன. அச்சூழலில் இராமானுசரின் புரட்சிகரமான சமூக அணுகுமுறை, எக்குலத்த வராயினும் பாகவதர்கள் வழிபடத் தக்கவர்கள் என்ற கொள்கை ஆகியவை வைணவ மேற்குலத்தார்க்கு ஏற்புடையதாக இல்லை. அவர்களின் எதிர்ப்பே இராமானுசர் திருவரங்கத்திலிருந்து வெளியேறிய தற்குக் காரணமாயிருக்கலாம் என்ற கருத்தினையும் நாம் மனத்திற் கொள்ள வேண்டும். அக்காலத்தில் வைணவ - சைவப் பூசல்கள் சில இருந்துள்ளன. அதற்குக் காரணம் வைணவ இலக்கிய மரபு ஏற்படுத்திய வைணவ விழிப்புணர்வாகும். ஆனால் அது பொறையுடைமைக்குப் பெயர் பெற்ற சோழ மன்னர்களைப் பாதித்திருக்காது.
பெளத்தம்
சோழராட்சியில் பக்தி இயக்கத்தின் உன்னத நிலையாகச் சைவமும், வைணவமும் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றன. அதன் விளைவாகப் பெளத்தம், சமணம் ஆகியவற்றின் செல்வாக்கு குறைந்தாலும் அவை சோழமன்னர்களால் புறக்கணிக்கப்பட வில்லை. அவற்றின் நிலையைப் பற்றிக் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் சமண சமயத்தைப் போன்று பெளத்தசமயம் அவ்வளவாக இடம்பெறாவிட்டாலும் அச்சமயமும் சோழ மன்னர்களால் ஆதரிக்கப்பட்டதனை அறிகிறோம். இரண்டாம் பராந்தகன் எனப்படும் சுந்தரசோழன் காலத்தில் முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள உலகபுரம் என்ற ஊரில் சுந்தரசோழப் பெரும்பள்ளி என்னும் புத்த கோயில் ஒன்று' இருந்ததனை அறிகிறோம். பெளத்த நூலாகிய வீரசோழிய உரையில் அதன் ஆசிரியர் சுந்தரசோழன் சிறப்புறப் புத்த பெருமானை வேண்டிப் பரவியிருப்பது நோக்கத் தக்கதாம். மாமன்னன் முதலாம் இராசராசன் நாகப்பட்டினத்தில் கடாரத்தரசனாகிய சூளாமணி வர்மனால் தொடங்கப்பெற்று அவன் மகன் மாறவிசயோத்துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற புத்த விகாரத்திற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் என்ற ஊரைப் பள்ளிச்சந்தமாக அளித்தான். இவ்விகாரம்
ஆய்வரங்கு 2008

Page 205
சூடாமணி விகாரம் என்று வழங்கப்பட்டது. இராசராசன் இவ்விகாரத்திற்கு இராசராசப் பெரும்பள்ளி என்று பெயரிடுவதற்கு உடன்பட்டான். ஆனைமங்கலம் என்னும் ஊர் ஏறக்குறைய8943கலம் நெல் வருவாயுள்ள 97 வேலி நிலத்தைத் தன்னகத்தே கொண்டதாம். லெய்டன் செப்புப் பட்டயங்கள் மேற்கூறிய செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன. ஆனை மங்கலம் என்னும் ஊர் மேற்கூறப்பட்ட புத்த விகாரத்திற்கு முதலாம் இராசேந்திரன் காலத்தில்தான் நிரந்தரமாகக் கொடுத்து உறுதிப் படுத்தப்பட்டது. முதலாம் இராசராசன் எடுப்பித்த தஞ்சைக் கோயில் சுவர்களில் புத்த படிமங்கள் உள்ளன. கி.பி.1090 ஆம் ஆண்டில் கடாரமாகிய சிறீ விஜய நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நாகப்பட்டினத்தில் கட்டப்பெற்ற இரு பெளத்த விகாரங்களுக்காகச் சோழ மன்னர்களால் பள்ளிச் சந்தமாக அளிக்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் செப்பேடுப் பட்டயங்களில் வெளியிடப் பட்டன. அவ்வாறு வெளியிடப்பட்ட செப்பேடு சிறிய லெய்டன் பட்டயம் ஆகும். நாகப்பட்டினத்தின் அன்றைய பெயர் சோழகுல வல்லப்பட்டினம் ஆகும். இதில் குறிக்கப்படும் இரு விகாரங்கள் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி, இராசராசப் பெரும்பள்ளி என்று அழைக்கப்பட்டது. இரண்டாம் பள்ளியான சிறீசைலேந்திர சூடாமணி வர்ம விகாரமே முதல் இராசராசனின் பெரிய லெய்டன் பட்டயத்தில் குறிப்பிடப்படும் விகார் ஆகும். இராசேந்திர சோழன் பெரும்பள்ளிக்கு முதலாம் குலோத்துங்கன்" சில ஊர்களை இறையிலியாக நன்கொடை அளித்துள்ளன். பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் நாகப்பட்டினம் சிறந்த பெளத்த மையமாக விளங்கியது. சோழர் காலத்தில் காஞ்சிபுரமும் பெளத்த சமய மையமாக இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதே காலத்தில் கேரளக் கடற்கரையில் சிறீ மூலவாசம் என்னும் இடமும் பெளத்த சமயத் தொடர்பு கொண்டிருந்தது.
சோழர் காலத்தில் பெளத்த சமயத்தினர் சிலர் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றியுள்ளனர். வீர இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வீரசோழியம் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலின் மூலப்பகுதிபுத்தமித்திரரால் எழுதப்பெற்றது. அவரின்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

மாணவரான பெருந்தேவனார் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். கலித்துறை என்ற பா இனத்தில் வீரசோழியம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் இலக்கணக் கருத்துகள் வளர்ந்த வரலாற்றை அறிய இந்நூல் பெரிதும் பயன்படும்.
பொதுவாகச் சோழர் காலத்தில் பெளத்த சமயத்தின் நிலை பற்றிய இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இக்காலத்திற்கு முன்பான பல்லவர் காலத்தில் தோன்றிய சமயப் பூசல்களின்போது பெளத்த சமயம் மிக அதிகமாகவே பாதிக்கப்பட்ட எனலாம்.
சமண சமயம்
சோழர் காலத்தில் சைவ, வைணவ சமயங்களுக்குப் புறம்பானவை எனப்பட்ட பெளத்த சமயமும் சமண சமயமும் சிறந்த நிலையில் இருந்திருக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியினால் பாதிக்கப்பட்ட சமணம், சோழர் காலத்தில் மீண்டும் ஆதரவு பெறத் தொடங்கியது. பக்தி இயக்கத்தின் தாக்கத்தினைச் சமண சமயத்தில் காணமுடிகிறது. சமணக் கோயில்கள் பெருகின. இக்காலத்தில் சமண நிறுவனங்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன; பல இடங்களில் புதிய சமணக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன; சில கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன; மேலும் அவை புறக்கணிக்கப்படாமல் போற்றப்பட்டுள்ளன; சோழ மன்னர்கள். சிற்றரசர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆதரவுடன் இக்கோயில்கள் சிறப்புற்றன. சமணர் கோயிலுக்குரிய நிலங்களுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்குபெற்ற பள்ளிச்சந்தம் பற்றிப் பல கல்வெட்டுகள் பகர்கின்றன. முந்தைய தென்னார்க்காடு மாவட்டப் பள்ளிச் சந்தல் என்னும் ஊரில் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்ற அமண் பள்ளி இருந்தது." சோழர் காலத்தில் சமணரின் குகைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் எடுப்பிக்கப்பட்டன.
தொண்டைநாடும், Luit sooty. நாடும் சோழராட்சியின் விரிவாக்கத்திற்குட்பட்டபொழுது, அப்பகுதிகளில் சமணரின் குகைக் கோயில்கள்
185

Page 206
தோன்றலாயின. குறிப்பாகத் தொண்டை நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் இங்குப் பல இடங்களில் புதிய குகைக் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவைகள் சிறந்து விளங்கும் வழிமுறைகளும் மேற்கொள்ளப் பட்டள. மற்றன பகுதிகளில் இருந்த குகைகப் பள்ளிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி.9-10 ஆம் நூற்றாண்டுகளில் மேல் சித்தாமூர், திருநறுங்கொண்டை, அனந்தமங்கலம், ஆட்சிப்பாக்கம், சோழபாண்புரம், வழுதலங்கணம், மேல்கூடலூர், வலத்தி, புதுக்கழனி. சேதாரம்பட்டு ஆகிய இடங்களில் புதிதாகக் குகைக் கோயில்களும், பாறைச் சிற்பக் கோயில்களும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. சித்தாமூரில் தனியாக உள்ள சிறிய பாறை ஒன்றில் வரிசையாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வழிபடப்பட்டன. மேற்கூறப்பட்ட பல தலங்களிலுள்ள குகைகள் துறவியரது வாழிடங்களாகவும், வழிபாட்டிடங் களாகவும் சோழரது ஆட்சிக்காலத்தில் விளங்கின என்று சமண சமய வரலாற்று ஆராய்ச்சியாளரான அ. ஏகாம்பரநாதன் கருத்தளிக்கிறார். செஞ்சியின் அருகில் உள்ள மேல்சித்தாமூர் தமிழகத்திலுள்ள திகம்பரம் பிரிவு சமணருக்குத் தலைமைப் பீடமாகத் திகழ்ந்தது. இங்குள்ள திருமலைநாதர் கோயில் கி.பி.9ஆம் நூற்றாண்டில் பாறைச் சிற்பக் கோயிலாகத் திழ்ந்தது. கி.பி.888ஆம் ஆண்டில் பார்சுவ நாதர் கோயிலில் சமண நூல்களுக்கு விளக்கம் சொல்லப் பட்டதையும், அக்கோயில் மண்டபத்தில் தீபம்" போட ஒரு கட்டளை ஏற்பட்டிருந்ததையும் கல்வெட்டு மூலம் அறிகிறோம். அக்காலத்திலிருந்த இப்பள்ளியை ஆரம்பநந்தி என்னும் துறுவியும், அவ்வூர் பாதமூலத்தாரும் கண்காணித்து வந்தனர் என அறிகிறோம். கி.பி. 1713ஆம் ஆண்டில் இரண்டாம் இராசாதிராசனது படைத் தலைவனாக விளங்கிய அம்மையப்ப சம்புவராய சிற்றரசன் இப்பள்ளிக்குப் பள்ளிச்சந்த நிலதானம் செய்துள்ளான்.'இம்மலைநாதர் கோயில் திருக்காட்டம்பள்ளி எனப்பெயரும்பெற்றுள்ளது.
திருநறுங்கொண்டை, சோழர் காலத்தில் சமண வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாக விளங்கிற்று. இங்குச் சமணத் துறவியர் உறைந்த குகைக் பள்ளியும், அப்பாண்டைநாதர் கோயிலும், சந்திரநாதர் கோயிலும்
186

உள்ளன. சோழ மன்னர்களும், அதிகாரிகளும், மலையமான், காடவராயர் போன்ற சிற்றரசர்களும் அப்பாண்டை நாதர் கோயிலுக்கும், சந்திரநாதர் கோயிலுக்கும் விளக்கேற்றுவதற்கும், வழிபாடுகளுக்கும், திருவிழாக்களுக்கும் கொடைகள் வழங்கியுள்ளனர். திருக்கோயிலூர் வட்டத்தைச் சேர்ந்த சோழபாண் புரத்திலுள்ள குகைக் கோயில் கங்கரையர் புத்தடிகள் தேவாரம் எனப்படும். இங்குக் கி.பி.10ஆம் நூற்றாண்டுச் சோழர் கல்வெட்டொன்று இக்கோயிலை 'வேலகொங்கரையர் புத்தடிகள் செய்வித்த தேவராம் எனக் குறிப்பிடுகிறது. சோழர் காலத்தில் கோயிலைத் தேவாரம் என்றழைக்கும் வழக்கம் இருந்ததை இது உணர்த்துவதெனலாம்.
சோழராட்சிக் காலத்தில் முன்பிருந்த குகைப் பள்ளிகளில் சிற்ப உருவங்களைச் செதுக்கி வழிபாட்டுத் தலங்களாக மாற்றியமைத்துள்ளனர். சில இடங்களில் ஏற்கெனவே இருந்த பள்ளிகளுக்குப் பல்வேறு வகையான தானங்கள் அளித்து அவற்றில் சமய, சமுதாயப் பணிகள் தொடர்ந்து நடைபெறப் பெருவேந்தர்களும், சிற்றரசர்களும் அறபபணிகள் புரிந்துள்ளனர். அவ்வகைக் கோயில்களைத் தொண்டூர், நிருநாதர்குன்று," திருமலை, திறக்கோல்,"பஞ்சபாண்டவமலை, விளாப்பாகம், அம்மா சமுத்திரம், நார்த்தாமலை ஆகிய இடங்களில் காணலாம். இவற்றில் மிகுதியும் தொண்டைநாட்டில் உள்ளவையாம். திருமலையிலுள்ள பள்ளிகளைச் சார்ந்த துறவியர் கி.பி.9ஆம் நூற்றாண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற சமயப்பணி மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டைக்கருகில் நார்த்தாமலையிலுள்ள அருகதேவன் குடைவரைக் கோயிரூலுக்குக் கி.பி.1205இல் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மூன்று மா அளவுள்ள நிலங்கள் அந்த நார்த்தா மலையில் இருந்தமையை அறிகிறோம். கி.பி.1228 ஆம் ஆண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சியில் இச்சமணக் குடைவரைக் கோயில் வைணவ சமயக் கோயிலாக மாற்றியமைக் கப்பட்டிருக்கிறது.
சோழராட்சியில் பல சமணக் கோயில்கள் புதிய கட்டுமானக் கோயில்களாக எடுப்பிக்கப்பட்டுள்ளன. சில தலங்களில் முன்பே இருந்த கோயில்களில் புதியதாகத் திருப்பணிகளும் செய்யப்பட்டிருக்
ஆய்வரங்கு 2OO8

Page 207
கின்றன. அக்காலத்துச் சமணர் கட்டிய கோயில்களும் ஓரளவிற்கு அக்காலக் கலையம்சங் களைக் கொண்டவையாக இன்னமும் இருப்பவை தொண்டை மண்டலத்திலுள்ள கோயில்களாகும். ஆனால், சோழரின் மையப் பகுதியான தஞ்சை, திருச்சிப் பகுதியிலுள்ள சமணர் கோயில்கள் அனைத்தும் அழிந்துபட்டுள்ளன.
திருநறுங்கொண்டையிலுள்ள அப்பாண்டை நாதர் கோயில் கி.பி.9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குகைப் பள்ளிக்கும், அருகிலிருந்த பார்சுவநாதர் பாறைக்கும் இடையிலுள்ள பகுதியில் கட்டிடச் சுவர்கள் எழுப்பிக் கற்கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. அங்குள்ள சந்திரநாதர் கோயில் ஒரு தனிக் கோயிலாகும். இது கி.பி.9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே சந்திர பிரபா தீர்த்தங்கரருக்கென எழுப்பப்பட்ட கோயிலாகும். இதனைக் காவிரியாற்றின் தென்கரையிலுள்ள தழக்குடி என்னும் ஊரைச் சார்ந்த விசயநல்லூழான் என்பவன் கட்டியதாக அறிகிறோம். கி.பி.12, 13ஆம் நூற்றாண்டுகளிலும் இக்கோயில்" சோழர்களிடமும் மலையமான், காடவராயர், சேதிராயர் போன்ற சிற்றரசர்களிடமும் நிலக்கொடைமகளும், திருப்பணி ஆதரவும் பெற்றது. போரூர் வட்டத்திலுள்ள திருமலையில் அடிவாரத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசன் முதலாம் இராசராசனது தமக்கை யாராகிய குந்தவைப் பிராட்டியரால் நேமிநாதத் தீர்த்தகரருக்கெனத் தனிக்கோயில் ஒன்று எடுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் குந்தவை ஜினாலயம் என்றழைக்கப் பெறும்.* இக்கோயிலில் வழிபாடு சிறக்கவும், சமயப்பணிகள் தொடர்ந்துநடைபெறவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. திறக்கோல் மைசுத்தப்பெரும் பள்ளி, புதுப்பேடு பார்சவப்பெருமாள் கோயில், பெருமண்டூர்" சந்திரநாதர் கோயில் ஆகியன தொண்டைமண்டலத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சமணக் கோயில்களாகும்.
ஜினக் காஞ்சி என்றழைக்கப்படும் காஞ்சி மாநகரின் தென்மேற்குப்பகுதியிலுள்ள திருப்பருத்தித் குன்றத்தில் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வர்த்தமான மகாவீரருக்கெனக் கட்டப்பட்ட கோயில் சோழக்காலத்தில் கருங்கல்லினால் முற்றிலுமாக
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

மாற்றியமைக்கப்பட்டது. இக்காலத்தில் இங்கு இரண்டு தொகுதிகளாக அடுத்தடுத்துக் கோயில்கள் கட்டப்பட்டன. முதல் தொகுதியான திரைலோக்கிய நாதர் கோயில், பழைய வர்த்தமானேசுவரர் கோயிலின் புதுப்பிப்பாகும். கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுப்பப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் திருப்பருத்திச் சமணக் கோயிலுக்கு 20 வேலி நிலம் பள்ளிச்சந்த இறையிலியா அளித்துள்ளான். கி.பி.13ஆம் நூற்றாண்டில் இவ்விரு தொகுதிகளை உள்ளடக்கித் திருச்சுற்று மதிலும், மண்டபங்களும் எழுப்பப்பெற்றன. அதே நூற்றாண்டில் சிற்றரசன் காடவக் கோப்பெருஞ்சிங்கன் கோபுரத் திருப்பணிசெய்துள்ளான். காஞ்சிபுரத்துக்கு அருகில் திரும்பறம்பூர் எனப்படும் கரந்தை என்னும்" திருத்தலத்தில் கி.பி.11ஆம் நூற்றாண்டில் வீரஇராசேந்திர சோழனால் குந்துநாதர் சமணக் கோயில் புதுபிக்கப்பட்டது. முந்தைய தென்னர்க்காடு மாவட்டத்தில் சித்தாமூரில் கி.பி.12ஆம் நூற்றாண்டில் பார்சுவத நாதருக்கெனத் தனியாக ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. சிம்மபுரிநாதர் என்றுபெயர்பெற்ற இக்கோயில் விக்கிரம சோழன் ஆட்சியிலோ அதற்கு முன்பாகவோ தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டுமென அ. ஏகாம்பரநாதன் என்ற தொல்லியல் நிபுணர் கருதுகிறார். இரண்டாம் குலோத்துங்கனது ஆட்சியில் சித்தாமூரின் பெரும் பகுதியும் இக்கோயிலுக்குத் தீர்க்கமானியமாக அளிக்கப் பட்டதை அறிகிறோம். இக்கோயிலுக்கு ஒரு சோழ அரசி நிவந்தம் அளித்துள்ளாள்.° வந்தவாசிக்கு அருகிலுள்ள பொன்னூர் ஆதிநாதர் கோயில், சென்னைக்கு வடக்கில் புழல் ஆதிநாதர் கோயில், முந்தைய செங்கை மாவட்டத்தில் பொன்னேரிக் கருகில் சரவணன்பேடு பார்சுவநாதர் கோயில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணிக் கருகிலுள்ள பூண்டியில் பொன்னிவனநாதர் கோயில் ஆகியன இக்காலத்தில் சிறப்புற்ற கோயில்களாகும். அக்காலத்தில் கொங்கு நாட்டில் விசயமங்கலம், திங்களூர்," வெள்ளேடு அரசமலை, பூந்துறை, சீனமங்கலம் முதலிய ஊர்கள் சமணர் சிறப்புற்றிருந்த இடங்களாகும்.
சோழர் காலத்தில் தோன்றிச் சிறப்புற்றிருந்த பல சமணக் கோயில்கள் இன்று காணப்படவில்லை. அவை அழிந்துவிட்டிருக்கலாம். அவை கீழ்க்கண்ட
187

Page 208
சில முக்கியமானவையாம். தொண்டை நாட்டில் பள்ளிச்சந்தல் நாட்டால் பெரும்பள்ளி, திருப்பந்தியூர் பள்ளி, சளுக்கி வீரகேரளப் பெரும்பள்ளி, உலகபுரம்" சுந்தர சோழப்பெரும்பள்ளி, புதுப்பாடி இரவிகுல மாணிக்கப் பெரும்பள்ளி,"தாதாபுரம்" குந்தவை ஜினாலயம்,மயிலாப்பூர் நேமிநாதர் கோயில் ஆகியன சோழர் காலத்தில் சிறப்புற்றுப் பிற்காலத்தில் அழிந்துவிட்டன. புதுக்கோட்டையில் செட்டிப்பட்டி மகாவீரர் கோயில், செம்பட்டுர் அருகன் கோயில், புத்தாம்பூர் அருகன் கோயில், காயாம்பட்டி ஐந்நூற்றுவப் பெரும்பள்ளி, அன்னவாசல் மகாவீரர் கோயில் ஆகியன அக்காலத்தில் சிறப்புற்றுமறைந்த கோயில்களாகும். தஞ்சைப் பகுதிக் கோயில்களில் சோழர் காலத்தில் சிறப்புற்று, காலச் சூழலில் அழிந்து பட்ட கோயில்களில் குறிப்பிடத்தக்கன வருமாறு:-
திருநாகேசுவரம் மிலாடுடையார் பள்ளி, பள்ளன் கோயில் சுந்தர சோழப் பெரும் பள்ளி' செந்தலைப்பள்ளி, கூகூர் குலோத்துங்க சோழப்பெரும்பள்ளி,° ஆவரணி சித்திரைலேகைப் பெரும்பள்ளி, திருவிடைக்குடி அமுத மொழிப் பெரும்பள்ளி ஆகியனவாம். பாண்டிய நாட்டில் கோவிலங்குளம் முக்குடையோர் கோயிலும், தருமபுரியிலுள்ள அதிகமான் கோட்டை பார்சுவநாதர் கோயிலும் இவ்வகையைச் சார்ந்தவையாம்.
இவ்வாறு மேற்கூறிய இடங்களில் சோழப் பேரரசர்களின் அரவணைப்பு, இறைவழிபாட்டிலும் சமயத்திலும் பற்றுமிக்க சிராவகப் பெருமக்களின் ஆதரவு, துறவு நெறியில் ஈடுபட்ட சான்றோரின் நடவடிக்கைகள் ஆகியவற்றினால் சோழர் காலத்தில் சமண சமயம் தழைத்தோங்கிற்று. மன்னர்களும், மக்களும் அளித்த பல்வேறு வகையான கொடைகளினால் சமணக் கோயில்கள் சிறப்புற்ற துடன் சமுதாய வாழ்வில் பெரும்பங்கேற்றன.
சோழர் காலச் சமணர் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி, மிகச் சிறப்பானது. இக்காலத்தில்தான் திருத்தக்கத்தேவர் என்ற சமணப் புலவர் தமிழின் சிறப்புக் காவியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியை இயற்றினார். தமிழ் மொழியின் எழுத்திலக்கணத்தையும், எழுத்து, சொல் ஆகியவற்றையும் விளக்கும் நேமிநாதம்'எனும் சீரிய
188

நூலை இயற்றிய குணவீரப்பண்டிதர் இக்காலத்தைச் சார்ந்தவர்தான். தமிழ் இலக்கணம் பயில்பவர் களுக்குத் தொடக்கக் கையேடாக விளங்கும் நன்னூல் எழுதிய பவணந்தி என்ற சமணர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தவரே.
சமயப்பொறையும் சமுதாய ஒருமைப்பாடும்
சோழப் பெருவேந்தர் காலம் சமயப்பொறையும் சமுதாய ஒருமைப்பாடும் நிறைந்த ஒரு காலமாகும். சோழப் பேரரசர்களின் சமயக் கொள்கை சமயப் பொறைக்கு வழிவகுத்தது. சோழராட்சியில் எல்லாச் சமயங்களும் சிறப்புற்றிருந்த நிலையினைக் கண்டோம். சோழர்கள் தனிப்பட்ட முறையில் முனைப்புடைய சிவபக்தர்கள் ஆவர். சைவ சமயத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்கள். சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கும், அதன் ஆதிக்க வளர்ச்சிக்கும், அதன் விரிவாக்கத்திற்கும் சைவ சமய வளர்ச்சி ஒரு கருத்தியல் கருவியாகவே அமைந்தது. சோழமன்னர்கள் மற்ற சமயங்களுக்குத் தங்கள் ஆதரவை நல்காமலில்லை. இந்து சமயத்தின் மற்றொரு பிரிவான வைணவமும் சோழர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. சைவ சமய நிறுவனங்களைப் போன்றே வைணவ சமய நிறுவனங்களுக்கும் மன்னர்களின் ஆதரவு சீரிய முறையில் கிடைத்ததெனலாம். சில சோழ மன்னர்களின் விருதுப் பெயர்கள் அவர்களின் சமயப் பொறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. முதலாம் இராசராசன் தஞ்சையில் கட்டிய சிவன் கோயிலின் ஒப்பனையில் வைணவம், பெளத்தம் ஆகிய சமயக் கோட்பாடுகளை விளக்கும் கருத்துகளையும் பிரதிபலிக்கச் செய்து, எம்மதமும் சம்மதம் என்ற அவனுடைய கொள்கைைைய நிலைநாட்டினான் என்று வரலாற்றறிஞர் க.அ. நீலகண்ட சாத்திரி கருதுகிறார். பெளத்தத்திற்கும், சமண சமயத்தின் வளர்ச்சிக்கும் மன்னர்கள் முதலாக மக்கள் பலரும் பரந்த மனப்பான்மையுடன் ஆற்றிய பணிகளைக் கண்டோம்.
இராமானுசர் கன்னட நாட்டிற்குச் சென்ற சூழ்நிலையையும், இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் சிலையைக் கடலில் எறிந்த சூழ்நிலையையும் மேலே நன்கு
ஆய்வரங்கு 2008

Page 209
ஆராய்ந்தோம். வைணவ நூல்கள் கூறும் கிருமி கண்ட சோழன் கற்பனை என்றுதான் தோன்றுகிறது.
பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் காழ்ப்பு ஒரு சில மக்களிடையே காணப்பட்டிருப்பினும், பொதுவாகச் சோழ மன்னர்கள் எல்லாச் சமயத்தினரிடமும் பொறையுடன் ஆட்சி புரிந்தனர். கவ்வெட்டொன்றில் வரக்கூடிய சொற்றொடரான 'ஆசுவிகக் காசு என்பதனை மனத்திற் கொண்டு சில அறிஞர்கள், ஆசுவிகர்களின் மீது விதிக்கப்பட்ட வரி ஆசுவிகக் காசு எனவும், அது சோழகர்கள் ஆசுவிகர்கள் மீது கொண்டிருந்த வெறுப்புணர்வைப்பிரதிபலிப்பதாகவும் கூறுவர். ஆனால்'ஆசுவிகக் காசு என்பதுஓர் இறை. அச்சொற்றொடர் ஆசுவிகர்களுடன் தொடர்புடையதன்று. ஆசுவம் என்பது குதிரை வைத்திருப்போரையும், ஆசுவிகக் காசு என்பது அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியையும் குறிப்பதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். ஆதலின் சோழர் ஆட்சியில் சமயப் பொறை நிலையாகவே அக்காலம் முழுவதும் நீடித்துள்ளது எனலாம்.
சோழர் காலத்தில் ‘சமயப் பூசல்களாலும் போட்டிகளாலும் சில சமயங்களில் சில குழுக்களின் கை ஓங்கியிருந்தது இயல்பே என்று அறிஞர் க.ஆ. நீலகண்ட சாத்திரி கூறுகிறார். அவர் கூறுவது போன்று பூசல்களுக்கும், போட்களுக்கும் சான்றாக ஒரு சில கல்வெட்டுகள் இருப்பினும், அக்காலத்தில் சமுதாய ஒருமைப்பாடு சிறப்புற்ற தனையும் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. சோழ வேந்தர்களின் சமயப் பொறைக் கொள்கை சமுதாயத்திலும் பிரதிபலித்தது. சோழர்களின் தொடக்க காலம் முதற் கொண்டு சைவ, வைணவ மக்களிடையே ஒருமைப்பாடு நன்கு நிலவியது. முதலாம் இராசராசன், உக்கலிலுள்ள ஒரு கல்வெட்டில் “சிவபாத சேகரனான இராசராசன் திருவாய் மொழித்தேவர்” என்று குறிப்பிடப்படுகிறான். அவன் காலத்தில் திருமால் கோயில்களிலும் திருப்பதிகங்கள் பாடப்பெற்றன. ஆதலின் சைவமும் வைணவமும் ஒரேயளவில் வளர்ச்சியடைந்தன. வைணவ மக்கள் தங்கள் கோயிலில் திருப்பதிகங்கள் பாடுவதை ஏற்றிருந்தனர்.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

சைவ-வைணவ சமுதாயங்களிடையே காணப்பட்ட ஒருமைப்பாட்டிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதே போன்று தாராசுரம் எனப்படும் இராசராபுரத்தில் இராசராசனின் தமக்கையார் குந்தவை திருமாலுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கும் ஒரு கோயிலும், ஜினருக்கு ஒரு கோயிலும் கட்டுவித்தாள். ஒரே ஊரில் மூன்று வெவ்வேறு சமயக் கோயில்களைக் கொண்டு வெவ்வேறு சமுதாய மக்கள் அமைதியான, ஒத்த வாழ்வினை மேற்கொண்டதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாம். சோழர் காலக் கோயில்களில் தேவாரப் பாடல்கள், ஆழ்வார்ப் பாசுரங்கள் ஆகியவற்றுடன் வடமொழி வேதங்களும் ஒதப்பட்டன என்பதும், அதற்கு மன்னர்கள் நிவந்தங்கள் அளித்தனர் என்பதும் சோழ மன்னர்களின் பொறையுடைமையும், அவர்களின் ஆட்சியின் கீழ் மக்கள்,பண்பட்டதன்மையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டிருந்தனர் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.
சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் சமய வாழ்வு பலதரப்பட்டதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் இருந்ததால் சில நேரங்களில் சமயக் காழ்ப்பு மக்களிடையே எழலாயின. குறிப்பாக 12ஆம் நூற்றாண்டில் வைணவர் தனி விழப்புணர்வுற்றனர். அதன் விளைவாக இராசராசன் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னுமாக நிலவிய சைவ-வைணவ ஒருமைப்பாடுகள் குறைந்திருக்கலாம். ஆனால், சோழமன்னர்களின் சமயப்பொறைக் கொள்கைக்கு குறைவு ஏற்படவில்லை. அவர்களின் பொறையுடைமைக் கொள்கை நின்று நீடித்ததெனலாம். சமணம், பெளத்தம், வைணவம், சைவம் ஆகிய நிறுவனங்களிடையே வேற்றுமைகள் இருந்தபோதிலும் வழிபாட்டு முறை, நிருவாக அமைப்பு, திருவிழாக்கள் ஆகியவற்றில் பல ஒற்றுமைகள் நிலவின. பொதுவாகச் சோழராட்சியில் சமயத் துறையில் பொறையையும் ஒருமைப்பாட்டையும் காணமுடிகிறது.
Οιρις.660ου
சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த
சோழர் தங்களது ஆட்சிப் பரப்பிலுள்ள பல
ஊர்களிலும், நகர்களிலும் அச்சமயத்தின் முதன்மைக்
189

Page 210
கடவுளான சிவபிரானுக்கு எடுப்பித்த கோயில்கள் பலவாகும். அவற்றில் வழிபாடு சிறப்பவழிவகைகளும் செய்தனர். ஆனால் அவர்கள் பிற சமயங்கள் எவற்றையும் புறக்கணிக்கவில்லை. அவர்கள் திருமாலுக்கும் சில கோயில்களை எழுப்பியுள்ளனர். சைவமும், வைணவமும் இக்காலத்தில் மின உன்னத நிலையை எட்டியிருந்தன. மேற்கூறப்பட்ட இரு பெருஞ்சமயங்களின் நிறுவனங்களாகிய கோயில்களுக்கும் மடங்களுக்கும் சோழ மன்னர்களும், சிற்றரசர்களும், மற்றவரும் ஏராளமான நிவந்தங்கள் வழங்கியுள்ளமைக்குப் பல கல்வெட்டுகள் சான்றுகளாக உள்ளன.
பல்லவர் காலத்தின் தொடர்ச்சியாகச் சோழர் காலத்தில் புராண, சமய மரபுடன் பக்தி இயக்கத்தின் அடிப்படையில் சைவ, வைணவ சமயங்கள் வளர்ச்சியுற்றன. அதே நேரத்தில் இக்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலான சமய வளர்ச்சியைக் காணமுடிகிறது. சைவ சித்தாந்தம் முறைப்படுத்தப் பட்டு பரவலாயிற்று. அதன் முக்கிய நூல்கள் அக்காலத்தே தோன்றியவையே. அதே நேரத்தில் இக்காலச் சமயத்துறையில் பிராமணியத்தின் (வைதிகத்தின்) தாக்கத்தினையும் உணரமுடிகிறது.
பக்திஇயக்கத்தின்மாபெரும்வளர்ச்சியாகச் சைவ வைணவக் கோயில்கள் சிறப்புற்றன. கோயில்களும் மடங்களும் பக்தி இயக்கத்தின் உன்னத வளர்ச்சிக்கு நிறுவன அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுத்தன. சோழராட்சியின் மீதான இந்நிறுவனங்களின் தாக்கத்தினையும் பெரிதும் உணரமுடிகிறது. சைவ சமயத்திற்கே உரிய சிறப்பான தன்மை சோழ மன்னர்களிடையே சமயப்பொறைக் கோட்பாட்டினை வளர்த்ததாகும். இராசராசனின் பெயருள்ள காசு ஒன்றில் குழலூதும் கண்ணன் உருவம் காணப்படுவதும், முதலாம் குலோத்துங்கன் காசுகள் சிலவற்றில் 'சோளநாராயண' என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஈண்டு கவனிக்கத் தக்கதாம். வைதீக சமயத்திற்குப் புறம்பானவை எனப்படும் புத்த, சமண சமயங்களும் இக்காலத்தில் சிறந்த நிலையில்தான் இருந்திருக்கின்றன. பெளத்தம் சோழராட்சிக்கு முன்பே செல்வாக்கை இழந்திருந்த போதிலும்கூட இக்காலத்தில் நாகப்பட்டினம்,
190

காஞ்சிபுரம் போன்ற சில இடங்களில் அது சிறப்புற்றிருந்ததைக் காணமுடிகிறது. அதேபோன்று கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியினால் பாதிக்கப்பட்ட சமணமும் மீண்டும் இவ்வாட்சியில் சிறப்புற்றது. இக்காலத்தில் சோழமன்னர்கள் சிலர் சமண சமயநிறுவனங்களுக்கு மிகுந்த தானங்கள் அளித்திருப்பதும், சில கோயில்களைக் கட்டி இருப்பதும் நன்கு தெரிகிறது. எனவே சோழப் பெருவேந்தர் காலம் சமயப்பொறைக காலம் என்றால் மிகையாகாது. அக்காலத்தே ஏற்பட்ட சமய வளர்ச்சி கலைகள் வளர்ச்சியுறப் பெரிதும் காரணமாக இருந்தது. எல்லாக் கலைகளும் சமயத்தை சார்ந்தே வளர்ந்தன. சுருங்கக் கூறுமிடத்துக் கலை வளர்ச்சிக்குச் சமயம் சிறந்த உந்துதலாக இருந்தது. இலக்கியத் துறையிலும் அவ்வுண்மையைக் காண்கிறோம்.
சோழப் பெருவேந்தர்கள் பெரும் பொருட் செலவில் கோயில்களைக் கட்டியதால் அவர்கள் அரசின் வருவாயை வீணடித்ததாகக் கருதுவதற் கில்லை. மக்களை அறிநெறிப் படுத்துவதே அவர்களின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். பிற நாடுளிடமிருந்து தாம் பெற்ற அரிய பொருட்களைத் தம்மிடமே வைத்திராமல் அவர்கள் கோயில்களுக்கு அளித்துள்ளனர். பெருமளவில் மக்கள் வந்து இறைவனை வழிபடப் பெருங் கோயில்கள்தான் பொருத்தமானவை. இங்கும் பிற நாடுகளிலும் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுநிலையங்கள் - மடாலயங்கள் - மசூதிகள் - அவ்வாறுதான் உள்ளன. பெருங்கோயில்கள் கட்டுவதற்குரிய செல்வங்களைப் பெருவேந்தர்கள் தவிர வேறு எவர் பெற்றிருக்கக்கூடும்?
மேலம் கோயில்கள் மக்களுக்குப் பெருமளவில் வேலை வாய்ப்புகளை அளித்தன. அங்கு இறையுணர்வுடன் செய்யக்கூடிய பணிகள் பல இருந்தன. பார்வை இழந்தோர்கூடப்பணிவாய்ப்பைப் பெற்றிருந்தனர். உழவையே நம்பிவாழ்ந்த மக்கள் பலர் வேறுபணிவாய்ப்பைப்பெறமுடிந்தது. அன்றியும்பஞ்சம், வெள்ளம் முதலியவை எற்பட்ட காலத்தில் கோயில்கள் மக்களுக்குப் பலவிதங்களில் உதவிபுரிந்துள்ளன. எனவே அக்காலத்தில் கோயில்கள் மக்களுக்குப் பாடுபடும் நிறுவனங்களக விளங்கின என கருதலாம்.
ஆய்வரங்கு 2008

Page 211
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
அடிக்கு
371 of 1911.
S.I.I.VO.III MO.205 V 46.
216 of 1940 - 41.
E. Vol.XV No.5.
S.I...Vol.VINo.30.
E.E.XXVI PP233-234.
S.I...Vol.XIII No.351, 100 of 1931. E..Vol.XXII No.34, V.17.S.I...Vol.III No.205. S.I.I.Vol.III No.124, 258 of 1907.
126 & 143 of 1925.
S.I.I.Vol.VII. Nos.954,955,956%. 1966. Lbid Vol.III. NOS 151 & 151 Am 485 of 1925. T.V. Sadasiva pandarathar - Prikalach Cholar Charittaram (Tamil) Vol.1.I.P.94.
S.E.Wol.I.P2.
TV. Sadasiwapandarathar, Op.Cit. Vol. PP & 127. S.I...Vol.V.No. 521.
Libia Vol.II No. 15.
178 of 1915.
S.I...Vol. Nos.31, 33 & 45.
bid No.55.
bid Nos.38, 40 & 45.
bid Vol. No. 1388.
481 of 1925.
ARE 1926-27, of II, PP 79 & 80. TV. Sadasivapandarathar Op. Cit. Vol.11. PP 76 to 78.
bid 938 94.
S.I...Vol.VNo. 397.
S...VO. VINO.780.
bid No. 485.
ARE 1908, pt. I para 64.
554 of 1904.
190 of 1907.
ARE 1908, pt. para 64.
Ibid, paras 64 & 65. S.I...Vol.VII No.51. VOL.X. No No. 119.
S.E.IVol.XII No.247.
t.V. Sadasivapandarathar, op.cit.Vol.li pp 61 & 62. Dr. M. Rajamanickam - The Development of Saivision in South India pp 179 & 180.
335 of 1917.
Dr. M. Rajamanickam, op.cit. p.181. K.A. Nilakanta Sastri - The Colas, P.612. Dr. M. Rajamanickam - Op.Cit.pp.183-186.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

றிப்புகள்
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
76.
77.
78.
79.
8O.
31.
82.
83.
84.
85.
86.
J.O.R.Vol...No.36.
S... Vol. II. NO.36. Dr. M. Rajamickam, Op.Cit.pp.231-34. Ibid,pp 222 8 223.
Ibid, pp. 239 & 240.
471 of 1912.
ARE 1913, pt.II para 42. Dr. Rajaminckam, Op.Cit.pp 263 to 269. 78 of 1920.
E.C.Vol.IX Chennapatna Nos. 130 & 132. E.C.Vol.II. T. Narasapur No. 35. 176 of 1919, ARE 1919 pt II pp 96 & 97. 123 of 1900, E.I. Vol. VII pp 145 & 146. T.V. Sadasivapandarathar, Op.Cit.Vol.I, PP. 222 & 223. 205 of 1904.
S...Vol.V No.57.
S.I.I.Vol.No. 1263, Vol. VINo.201.
245 of 1934-35.
T.V.Sadasivapandarathar, Op.Cit.Vol. Il PP 95 & 96. Takkayappparani, V 777.
114 of 1919.
K.A. Nilakantasastri, Op. Cit. P638.
bid, P639.
181 of 1892.
62 of 1892.
343 of 1921.
126 of 900.
557 of 1919.
493 of 1919,
141 of 1919.
E.G.Vol.XXNo.34.
bid No. 35.
201 of 1902.
S.I.I.Vol.VII Nos. 820, 846 & 848.
385 of 1902.
S.I...Vol. No.75.
277 of 1916.
301. 311, 377 & 319 of 1939-40.
S...Vol.IV No. 366.
219 of 1902.
S...Vol. IV NO.366.
130, 135 & 141 of 1939 140.
S...Vol.VINo. 830.
191

Page 212
OòsògöIGULDuLu, GöIsOp 6
திருமதி. தே சிரேஷ்ட ஆராய்ச்சிஅலுவலகர், இந்து
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஆய்வுப்பிரிவினால் நடத்தப்படும் இந்துசமய ஆய்வரங்குகள் ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்படுவதுடன். ஆக்கபூர்வமான செயற்பாடாகவும் இது அமைகின்றது. திணைக்கள ஆராய்ச்சிப் பிரிவினரால், 1986 - 2007 வரையான காலப்பகுதியில் இதுவரை பனிரெண்டிற்கும் மேற்பட்ட ஆய்வரங்குகள் இந்துசமயம், தமிழிலக்கியம், பண்பாடு தொடர்பான பல்வேறு விடயங்களை பலவகைப்பட்ட பரிமாண நோக்கில் ஆராயும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாய் வரங்குகளிற் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் ஆய்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படுபவையாகும். இவ்வாய் வரங்குகளை பேராசிரியர் சி. பத்மநாதன் நெறிப்படுத்த, திணைக்கள பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு. சீ. தெய்வநாயகம் ஆகியோரின் வழி நடத்தலில் நடைபெறுகின்றமை குறிப்பிடத் தக்கது.
தொடர்பாடல், மொழி, நவீனத்துவம்
1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வரங்கு, மொழியியல் மாநாடாக அமைந்திருந்தது. ‘தொடர்பாடல் மொழி நவீனத்துவம்' என்னும் ஆய்வுக் கருப் பொருளை அடிப்படையாகக், கொண்டு. 1992ஆம் ஆண்டு மே மாதம் 7,8,9ஆம் திகதிகளில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இராஜாங்க அமைச்சர் கெளரவ பி.பி. தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வரங்கில்,
192

மாழி ஆய்வரங்குகள்
வகுமாரிஹரன்
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
இந்திய மொழியியற்துறை பேராசிரியர் டாக்டர் இ. அண்ணாமலை . மொழி, புதுமையாக்கத்தில் அகராதியின் பங்கு
கலாநிதி கி. அரங்கன் - தமிழில் இரட்டை வழக்கும், கற்பித்தல் பிரச்சனைகளும் (மொழியியற்துறை தஞ்சாவூர்)
பேராசிரியர் இராமசுந்தரம் . தமிழில் கலைச்சொல்
கலாநிதி எஸ். இராமமூர்த்தி. கலைச்சொற் தொடர்பாடல் திறனும், புதுமையாக்கமும்
பேராசிரியர் கி. கருணாகரன் -
தற்கால செய்திப் பரிமாற்றத்தில் தமிழ் சமுதாய மொழியியல் ஆய்வு
கலாநிதி. கே. திலகவதி - தற்காலத் தமிழ் இலக்கணமும் அதன் தேவையும் பிரச்சனைகளும்
கலாநிதி. செ. வை. சண்முகம் - தற்காலத் தமிழின் இலக்கண இயல்பு
கலாநிதி சுப. திண்ணப்பன் -
தமிழ் கற்பித்தலில் மேனாட்டு செல்வாக்கு
பேராசிரியர் எ. சுசீந்திரராஜாஇலங்கை தமிழை இரண்டாவது மொழியாகக்
ஆய்வரங்கு 2008

Page 213
கற்றலும் கற்பித்தலும் பேராசிரியர் சி. தில்லைநாதன் . தமிழிலே தொடர்பாடல்
கலாநிதி எம். ஏ. நுஃமான் - மொழிவளர்ச்சி, இலக்கணத் தூய்மை
பேராசிரியர் அ. சண்முகதாஸ். புதிய தமிழ் இலக்கணம், அதன் தேவையும் சிக்கல்களும்.
திருமதி. சுபதினி ரமேஸ் - சொற்புணர்ச்சியும் மொழி கற்பித்தலும்
ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ்வாய்வு கட்டுரைகள் நூலாக்கப்பட்டு 1993இல் வெளியிடப்பட்டது.
தமிழ் நாட்டார் வழக்காற்றியல்
தமிழ்நாட்டார் வழக்காற்றியல் என்னும் ஆய்வுத் தலைப்பின் கீழ் 1993 ஆகஸ்ட் மாதம் 20,2122ஆம் திகதிகளில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் ஆய்வு அமர்வுகள் நடைபெற்றன. ஆய்வு அமர்வுகளுக்கு பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியர் பொ. பூலோகசிங்கம், பேராசிரியர், சி. தில்லைநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இவ்வாய்வரங்கில் வெளிநாட்டு ஆய்வாளர்களும் இலங்கை ஆய்வாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
பேராசிரியர் எஸ். டி. லூர்து - நாட்டார் வழக்காற்றுக் கோட்பாடுகளும் அணுகுமுறைகளும்
பேராசிரியர் அ. பாண்டுரங்கன் - நாட்டுப்புறக் கதைப் பாடல்
திரு. ஆ. சிவசுப்பிரமணியம் - அடித்தள மக்கள் மீதான பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறும்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கலாநிதி வ. தயாளன் . தமிழ்க் கதைப் பாடல்கள் அமைப்பியல் ஆய்வு
பேராசிரியர் கா. சிவத்தம்பி. தமிழில் நாட்டார் பற்றிய தேடல்
கலாநிதி துரை மனோகரன் - பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள்
கலாநிதி ஆ. வேல்முருகு, கலாநிதி எம். ஏ. நுஃமான், திரு. என். சண்முகலிங்கன், திரு சாரல்நாடன், திரு. பெ. வடிவேலன் ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ்வாய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 1995ஆம் ஆண்டு “தமிழ்நாட்டார் வழக்காற்றியல்” என்னும் நூலுருப்பெற்றது.
தமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களும்
“தமிழ் அரங்கியல் மரபும்மாற்றங்களும்” என்னும் ஆய்வுக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 1994ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15,16,17 ஆம் திகதிகளில் கொழும்பு7இல் அமைந்துள்ள விஜேராம மாவத்தை, பொறியியலாளர் நிறுவன மண்டபத்தில் ஆய்வரங்கு நடைபெற்றது. பேராசிரியர் ஏ.வி. சுரவீர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழகத்திலிருந்து பேராசிரியர் எஸ். இராமானுஜம், திரு. ஜே. ரெங்கராஜன், திரு. என். முத்துசாமி, திரு. இரா. இராசு. திருமதி பிரசன்னா இராமசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் ஆய்வரங்கில் பலர் அரங்கியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
பேராசிரியர் கா. சிவத்தம்பிஇலங்கையில் தமிழ் நாடகப் பயில்வு
கலாநிதி செ. சுந்தரம்பிள்ளை - யாழ்ப்பாண மரபுவழி நாடகங்கள்
193

Page 214
பேராசிரியர் பூg மரிய சேவியர் அடிகள் - சைவப் புலவரின் கிறிஸ்தவக் கூத்து
திரு. மெற்றாஸ்மயில் - வன்னிப் பிரதேச அரங்கியல் மரபு.
திரு. எஸ். ஜெய்சங்கர், கலாநிதி சி. மெளனகுரு, மாத்தளை வடிவேலன், திருமதி கமலினி செல்வராஜா, திரு. க. பூநீகணேசன், திரு. க. சிவபாலன், திரு. மாத்தளை கார்த்திகேசு, திரு. எஸ். பாலசுகுமார் ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ்வரங்கு ஆறு அமர்வுகளில் இடம் பெற்றது.
தமிழ் இலக்கிய விமர்சனம் இன்றைய போக்குகள்
“தமிழ் இலக்கிய விமர்சனம் - இன்றைய போக்குகள்” என்ற ஆய்வுப் பொருளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வரங்கு 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24,25ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வரங்கில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி எம். ஏ. நுஃமான், திரு. மு. பொன்னம்பலம், திரு. க. சண்முகலிங்கம், திரு. கே. எஸ். சிவகுமாரன், கலாநிதி சோ. கிருஷ்ணராஜா ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் 696) TLD
“தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறும்” என்னும் ஆய்வுத் தலைப்பை கருப் பொருளாகக் கொண்டு 1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இவ்வாய்வரங்கின் தொடர்ச்சியாக தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறு என்னும் கட்டுரைத் தொகுப்பு கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது.
194

தமிழகத்திலும் இலங்கையிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட இந்து சமய வளர்ச்சி
என்னும் தலைப்பின் கீழ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்ப்பட்ட இந்து சமய ஆய்வரங்கு, 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12,13ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜெயக் கொடி கலந்து கொண்டார். ஆய்வரங்கு அமர்வுகளுக்கு பேராசிரியர் சி. பத்மநாதன் பேராசிரியர், அ. பாண்டுரங்கன், பேராசிரியர் வி. சிவசாமி கலாநிதி எஸ். என். கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் - ஈழத்து பிராமண குலங்களும் அக்கிரகாரங்களும்
பேராசிரியர் வி. சிவசாமி. திருமுறையும் திருமந்திரமும்
கலாநிதி எஸ். என். கந்தசாமி - திருமுறையும் திருமந்திரமும்
திருமதி. ஏ. என். கிருஷ்ணவேனிசைவ சித்தாந்த தத்துவம் - திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன் - இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்களின் செல்வாக்கு
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜாதமிழின் முதலாவது பக்தியுகமும், சைவ சித்தாந்தத்தின் பிறப்பும்
திரு. மா. வேதநாதன் - திருமுருகாற்றுப்படை சித்தரிப்பு முருகன்
ஆய்வரங்கு 2008

Page 215
பேராசிரியர் அ. பாண்டுரங்கன் .
உபய வேதாந்தம் - தோற்றமும் வளர்ச்சியும்
திரு. க. இரகுபரன் - பாவை மரபு
திருமதி கலைவாணி இராமநாதன் திருமதி, விஜயலட்சுமி சிவச்சந்திரன், திருமதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ் ஆய்வரங்கு தொடர்பாக சிறப்புமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்
நூலுருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்துசமயமும் கலாசாரமும்
என்னும் ஆய்வுகருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27,28,29ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் இந்து சமய ஆய்வரங்கு நடைபெற்றது. இவ்வாய்வரங்கு பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ் ஆய்வரங்கு இந்துசமயப் பிரிவுகள், வழிபாட்டு முறைகள் என்பனவற்றை ஆராயும் வகையில் அமைந்தது. இவ்வாய்வரங்கில்,
பேராசிரியர் அ. பாண்டுரங்கன் . வைணவக் கோயில்களில் வழிபாட்டு நெறிகள்
பேராசிரியர் சூடாமணி நந்தகோபால் -
கோயில்கலைகள், கோயிற் கட்டிடக் கலை
பேராசிரியர் க. அருணாசலம் - சமண சமயம்
திரு. வ. மகேஸ்வரன் - வைணவம்
திரு. கனக. நாகேஸ்வரன் - சைவ சமய அடிப்படைக் கோட்பாடுகள்
“சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

திரு. க. இரகுபரன் - சைவ இலக்கியம், தேவாரம்
செல்வி. அம்பிகை வேல்முருகு - முருக வழிபாடு
செல்வி. மீரா வில்லவராயர் - இசைக் கலை வளர்ச்சி
ஆகிய தலைப்புகளில் கீழ் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
இந்துக் கோயில்களும் நுண்கலைகளும் என்னும் ஆய்வுப் பொருளில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22,23,24ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இந்துசமய ஆய்வரங்கு நடைபெற்றுள்ளது. இவ்வைபவத்திற்கு பிரதம அநிதியாக பேராசிரியர் ஏ.வி. சுரவீர அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கெளரவ பி.பி தேவராஜ், கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. என். பரம்சோதி, கல்வி, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். தில்லை நடராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ்வாய்வரங்கிற்கு பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையுரையையும், திரு. எஸ். தெய்வநாயகம் தொடக்கவுரையையும் நிகழ்த்தினர். இவ்வாய்வரங்கிற்கு பெங்களூர் சித்திர, கலா நுண்கலைக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் சூடாமணி நந்தகோபாலும், கலாநிதி பூரீமத் துளசி இராமசந்திராவும் இந்தியாவிலிருந்து வருகை தந்தனர். இவ் ஆய்வரங்கில் உள்நாட்டு அறிஞர்களும் வெளிநாட்டு அறிஞர்களும் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
திருமதி, சூடாமணி நந்தகோபால் - இந்துக் கோயில்களும் நகர கலைப்பாணிகளும், தக்கணத்து சாளுக்கிய விஜய நகரக் கோயில்கள்
195

Page 216
கலாநிதி துளசி இராமச்சந்திரா . வேசர கலைப்பாணி - நாட்டிய மரபுகள்
கலாநிதி வேல்முருகு - சுவரோவியங்களில் சிவனின் வடிவங்கள்
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜாதாந்திரிகக் கலை
பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் - இலங்கையில் திராவிடக்கலை
திரு. க. இரகுபரன் - திருமுறைகளில் சைவ தத்துவம்
என்னும் தலைப்புகளில் ஆய்வுரைகளைச் சமர்ப்பித்தனர்.
11, 13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு 660) இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட நுண்கலை வளர்ச்சி
என்னும் ஆய்வுப் பொருளில் 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12,1314ஆம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் இந்துசமய ஆய்வரங்கு நடைபெற்றது. இவ் ஆய்வரங்கில் தமிழ் நாட்டு அறிஞர்களும் உள்நாட்டு அறிஞர்களும் கலந்து கொண்டனர்.
டாக்டர். இரா. கலைக்கோவன் - பல்லவர் கால கட்டடக்கலை, சிற்பக்கலை
செல்வி. மு. நளினி -
சோழர்காலக் கட்டிட கலை, சிற்பக் கலை
கலாநிதி வேலுச்சாமி சுதந்திரன் - சோழர்கால படிமக்கலை
கலாநிதி இராசு காளிதாஸ் . விஜயநகர சிற்பக்கலை
196

பேராசிரியர் க. சிற்றம்பலம். ஈழத்து சிவாலயங்களும் சிவ வடிவங்களும்
திரு. வை. கா. சிவப்பிரகாசம் . தமிழக, இலங்கை நுண்கலை வளர்ச்சியில் கணேச சிற்பங்கள்
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜாஇந்துக் கோயிற் சிற்பம் - 18ஆம் நூற்றாண்டு வரையான சித்திரிப்பு.
திரு. க. நாகேஸ்வரன் - இந்துக் கலைகளின் தத்துவ பரிணாமம்
திரு. க. இரகுபரன் ஆகியோர் பல்வேறு ஆய்வுப் பொருள்களில் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவ்வாய்வரங்குக் கட்டுரைகள் நூலாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள்
என்னும் ஆய்வுத் தலைப்பில் 2002ஆம் ஆண்டு யூன் மாதம் 22,2324ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆய்வரங்கு நடைபெற்றது. இந்துசமய விவகார அமைச்சு, இந்துசமய கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய முதலாவது ஆய்வரங்கு இதுவேயாகும். சிலப்பதிகாரம் என்னும் காவியம் பல்வேறுபட்ட பார்வையில் இவ் ஆய்வரங்கில் ஆராயப்பட்டது.
இவ்வாய்வரங்கிற்கு தமிழ்நாட்டில் இருந்து கலாநிதி. வெ. வேதாசலம், கலாநிதி கு. சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் ஆய்வரங்கை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் நெறிப்படுத்தினார். இவ்வரங்கில் 17 கட்டுரைகள் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. அவையாவன,
ஆய்வரங்கு 2008

Page 217
கலாநிதி பெ. வேதாசலம் - தமிழ் நாட்டில் சமணம்
கலாநிதி கு. சேதுராமன் - தமிழ் நாட்டில் வைணவம்
பேராசிரியர் அ. சண்முகதாஸ்சிலப்பதிகார ஆசிரியரும் இலக்கிய பணிப்புரைகளும்
பேராசிரியர் வி. சிவசாமி. அறமும் அரசியலும்
பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் - அரசுகளும் நாட்டுப்பிரிவுகளும்
கலாநிதி நா. ஞானகுமாரன் - சிலப்பதிகாரம் காட்டும் சமூகநீதி
கலாநிதி ப. புஷ்பரட்ணம் - சிலப்பதிகார காலப் பின்னணியின் தொல்லியற் சான்றுகள் காட்டும் சிவவழிபாடு
கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி - சிலப்பதிகார அழகியல்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
கண்ணகியும் மாதவியும்
திரு. க. இரகுபரன் - கொண்டதும் கொடுத்ததும்
பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாசிலப்பதிகாரத்தில் பெண்
கலாநிதி அநுராத செனவிரத்ன, திரு. செ. யோகராசா, திரு.க. சிவானந்தமூர்த்தி ஆகியோரும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இவ்வாய்வரங்கு கட்டுரைகள் நூலுருப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

சங்க இலக்கியமும் சமூகமும்
எனும் ஆய்வுப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 345ஆம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வாய் வரங்கிற்கு பிரதமவிருந்தினராக மாண்புமிகு அமைச்சர் திஸ்ஸகரலியத்த அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமயவிவகார அமைச்சின் செயலாளர் திரு.பி.என். ஜினசேன, யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த. குமாரவடிவேலு, கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். இரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தில் உதவிப்பணிப்பாளர் திரு.எஸ். தெய்வநாயகம் வரவேற்புரையையும், சுவாமி ஆத்மகனானந்தாஜி (தலைவர், கொ! இராமகிருஷ்ணமிஷன்) ஆசியுரையையும், திணைக்களப் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் தொடக்கவுரையையும், பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் தலைமையுரையையும் ஆய்வரங்குத் தொடக்க சிறப்புரையை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் நிகழ்த்தினர்.
இவ்வைபவத்தின் மாலை நிகழ்வுகளாக பிரதமவிருந்தினர் உரை, சிறப்புவிருந்தினர்கள் உரைகளும், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், இலங்கைத் தமிழ் சாசனங்கள் எனும் திணைக்கள நூல்களின் வெளியீடும் இடம்பெற்றன. நூல்களுக்கான விமர்சன உரைகளைக் கலாநிதி எஸ். யோகராசா, கலாநிதி வ. மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர். இவ்வாய்வரங்கில் தென்னிந்தியா விலிருந்து பேராசிரியர் வி. அரசு அவர்களும் இவ்வாய்வரங்கில் கலந்து கொண்டார். இலங்கை பல்கலைக்கழக அறிஞர்களும் இவ்வாய்வரங்கில் கலந்து கொண்டனர்.
இவ்வாய்வரங்கில் தொல்லியலும் வரலாறும், சங்ககாலச் சமூகம், மொழி இலக்கியம் கலை, சமயமும் பண்பாடும், நுண்கலைகளும் வாழ்வியலும் எனும் தலைப்புகளின் கீழாக பல அமர்வுகளில்
197

Page 218
ஆய்வுக் கட்டுரைகள் அறிஞர்களால் சமர்ப்பிக் கப்பட்டன.
இலங்கையிற் பெருங்கற் பண்பாடு - பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன
இலங்கையில் சங்ககால நாணயங்கள் - பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
சங்ககால மகளிர் - கலாநிதி செ. யோகராஜா
சங்க காலப் பெண்புலவர்கள் -
வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
சங்ககாலப் போர்முறைகள் -
பேராசிரியர் வி. அரசு
சங்ககால வாணிபம் -
கலாநிதி வ. மகேஸ்வரன்
சங்க இலக்கியங்களில் சமஸ்கிருத மொழிச் செல்வாக்கு - பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணஐயர்
மதுரை காஞ்சி புலப்படுத்தும் வாழ்வியல் அம்சங்கள் - பேராசிரியர் க. அருணாசலம்
சங்ககால சமுதாயப் பிரிவு - குடும்பம் - பேராசிரியர் பெ. மாதையன்
இலங்கையிற் பெருங்கற் காலப்பண்பாடு - பேராசிரியர் சி.கா. சிற்றம்பலம்
ஆற்றுப்படை இலக்கியங்களில் சமூக உறவுகள்கலாநிதி துரை மனோகரன்
சங்க காலத்தில் களவொழுக்கம் - திரு. மா. ரூபவதனன்
198

சங்க கால தத்துவ சிந்தனைகள் - பேராசிரியர் எஸ். கிருஷ்ணராஜா
சங்க காலச் சமயமும் நம்பிக்கைகளும் -
திருமதி சோதிமலர் இரவீந்திரன்
சங்க கால வைதீகச் சிந்தனைகள் - பேராசிரியர் வி. சிவசாமி
சங்க காலத்தில் சைவநெறி - கலாநிதி மா. வேதநாதன்
பரிபாடலிற் சமய வழிபாடுகள் - திருமதி நாச்சியார் செல்வநாயகம்
சங்ககாலக் கட்டடக்கலை - திரு. க. இரகுபரன்
சங்ககாலப் பண்பாடு, கலைவெளிப்பாடு, விருட்சங்கள், அடிப்படையாகக் கொண்ட ஆய்வு -
கலாநிதி கிருஷ்ணவேணி அன்டன் நோபேட்
சங்க காலத்தின் ஆடைகளும் அணிகலன்களும் - திரு. கனகசபாபதி நாகேஸ்வரன்
பல்கலைக்கழகங்களில் சங்கப்பயில்வுபேராசிரியர் எம்.ஏ. நுஃமான்
சங்க காலத்துக் கல்விச் சிந்தனைகள் - திரு. உ. நவரத்தினம்
சங்க இலக்கியங்களில் அகத்தினை மரபும் காமத்துப் பாலும் - திரு. பூg. பிரசாந்தன்
தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் - பேராசிரியர் சி. பத்மநாதன்
சங்க இலக்கியத்தில் வைணவம் -
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
ஆய்வரங்கு 2008

Page 219
ஆகியோர் மேற்படி தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தனர்.
இவ்வாய்வரங்கு தொடர்பாக சிறப்பு மலரொன்றும் வெளியிடப்பட்டது. இச்சிறப்பு மலரில் சங்க இலக்கியங்கள், பண்டைத்தமிழரின் இலக்கிய நோக்கு, பழந்தமிழ்ச் செய்யுள்மரபு, சங்ககால ஆட்சி முறைமை, புறநானூறு வெளிப்படுத்தும் உயர்நெறிக் கொள்கைகள், பழந்தமிழர் படைகளும், படைக்கலன்களும், சங்க காலக்காசுகள், சங்க காலக் கல்வெட்டுக்கள் ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் யாவும் நூலுருவாக்கப் பெற்றுள்ளன.
பக்திநெறியும் பண்பாட்டுக் கோலங்களும்
எனும் ஆய்வுப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2007ஆம் ஆண்டு யூன் மாதம் 29,30 யூலை 1ஆகிய திகதிகளில் கொழும்பு இராம கிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வாய்வரங்கிற்கு பிரதம விருந்தினராக மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சர் மாண்புமிகு பண்டுபண்டாரநாயக்க அவர்களும், சிறப்புவிருந்தினர்களாக மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு. பி. கொடிதுவக்கு, கலாநிதி இரா. நாகசாமி (முன்னைனாள் பணிப்பாளர் தமிழ்நாடு தொல்லியல் துறை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தின் தொடக்கவைபவ உரையை உதவிப்பணிப்பாளர் திரு.எஸ்.தெய்வநாயகம் அவர்களும். சுவாமி சர்வரூபானந்தாஜி (தலைவர், கொஇராமகிருஷ்ணமிஷன்), வித்துவான் வசந்தா வைத்தியநாதன் ஆகியோர் ஆசியுரையையும், திணைக்களப் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் அறிமுக உரையையும், பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் தலைமையுரையையும், ஆய்வரங்குத் தொடக்க சிறப்புரையை பேராசிரியர் ப.
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

கோபாலகிருஷ்ணஐயர், கலாநிதி இரா.நாகசாமி ஆகியோர் நிகர்த்தினார்.
இவ்வாய்வரங்கில் தென்னிந்திய அறிஞர்களாக கலாநிதி இரா. நாகசாமி, கலாநிதி சு. பத்மாவதி, கலாநிதி இரா. கலைக்கோவன், கலாநிதி இரா. இராஜவேலு ஆகியோரும், இலங்கைப் பல்கலைக்கழக அறிஞர்களும் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். தமிழக அரசியலும் வரலாறும், சமயமும் பண்பாடும், திருத்தலங்களும் கலைகளும், திருமுறைகளும் திவ்வியப் பிரபந்தங்களும், பல்லவர்கால சமூகம், பல்லவர்கால இலக்கியங்களும் மொழியும் எனும் தலைப்புகளின் கீழாக பல அமர்வுகளின் கீழ் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
முற்காலப் பல்லவர் - பேராசிரியர் இரா. நாகசாமி
பல்லவர் காலத்து சாசனத்தமிழ் - கலாநிதி வ. மகேஸ்வரன்
பல்லவர் காலத்து வரிவடிவங்கள் - கலாநிதி சு. இராஜவேலு
இலங்கையில் பல்லவர் கலைப்பாணி - பேராசிரியர் சி. பத்மநாதன்
இலங்கையில் பல்லவர் செல்வாக்கு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
மாமல்லபுரத்து சிற்பங்கள் - கலாநிதி சு. இராஜவேலு
பல்லவர் காலச்சமணம் -
பேராசிரியர் க. அருணாசலம்
பல்லவர் காலப் பெளத்தம் - பேராசிரியர் எஸ். கிருஷ்ணராஜா
199

Page 220
சைவமரபில் வேதாகமங்கள் - பேராசிரியர் வி. சிவசாமி
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு -
திரு. கனகசபாபதி நாகேஸ்வரன்
தேவதானங்களும் பள்ளிச்சந்தங்களும் - திருமதி விக்னேஸ்வரிபவநேசன்
பல்லவர் காலச்சைவம் - பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம்
சைவ இலக்கியங்களில் சைவசித்தாந்தக் கோட்பாடுகள் - திரு. எஸ். துஸ்யந்த்
மங்களாசனம் செய்யப்பட்ட வைணவத்தலங்கள் - கலாநிதி இரா. கலைக்கோவன்
பக்தியும் பாவனாயுக்தியும் - திரு. க. இரகுபரன்
சம்மந்தர் - திரு. பூணு பிரசாந்தன்
சுந்தரர் - கலாநிதி துரை மனோகரன்
நம்மாழ்வார் பாசுரங்களில் வைணவ சம்பிரதாயம் - திரு. பூஜி. பிரசாந்தன்
பல்லவர் காலத்து ஆட்சிநிர்வாக முறைமை - கலாநிதி அ. பத்மாவதி
பக்தி இலக்கியங்களில் அணிகலன்கள் - வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
பல்லவ கால இலக்கியங்களில் பெண்கள் -
திருமதி நாச்சியார் செல்வநாயகம்
பொருள்மரபும் இலக்கிய வடிவங்களும் - திரு. க. இரகுபரன்
200

பக்திரசம் - கலாநிதி கிருஷ்ணவேணி நோபேட்
இலங்கையில் பல்லவகாலச் சமஸ்கிருத மொழிச்செல்வாக்கு - சிவபூg கிருஷ்ணானந்த சர்மா
தேவாரங்களில் சைவசமயக் கோட்பாடு - கலாநிதி ப. கணேசலிங்கம்
ஆண்டாள் - திரு. க. அருந்தாகரன் சாசனவழக்கில் சமஸ்கிருதம் -
திரு. எஸ். பத்மநாதசர்மா
ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
இவ்வாய்வரங்கு தொடர்பாக சிறப்புமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இச்சிறப்புமலரில் இலங்கையில் பல்லவர் கலாசாரம், பல்லவர் கலைப்பாணி, கோயில்களும் சிற்பங்களும், பல்லவர் கால தமிழகப் பண்பாட்டுக் கோலங்களும், பல்லவர் பாண்டியர் கால செப்பேடுகளும் கல்வெட்டுக்களும், பல்லவர் காசுகள், கொற்றவைத்தளிர் மாமண்டூர் நரசமங்களம், குடைவரைகள், கலைக்கருவூலங்கள், பல்லவர் பாண்டிய நடனம், பல்லவர் காலச் சமயம் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட இக்கட்டுரைகள் யாவையும் நூலாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.
மேற்படி ஆய்வரங்குகள், தமிழக, இலங்கை அறிஞர்களின் ஒன்று கூடலாகவும், பரந்துபட்ட ஆய்வுகளுக்குக் களம் அமைப்பனவாகவும் அமைந்தன. பல்கலைக்கழக மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பேரார்வத்தோடு இவ்வரங்குகளிற் பங்கேற்றமை இவற்றின் வெற்றிக்குச் சான்றாக அமைந்தது. பல்கலைக்கழக அறிஞர் மட்டத்தில், திணைக்களம் பற்றிய உயர் எண்ணத்தை உருவாக்க இவை வழி சமைத்தன என்றால் மிகையாகாது.
ஆய்வரங்கு 2008

Page 221
இந்துசமய, கலாசார அலுவல்கள்
தலைவர்
பிரதம ஆலோசகர்
உறுப்பினர்கள்
செயலாளர்
:- திருமதி சாந்தி நாவு
பணிப்பாளர்
இந்துசமய கலாசார அலு
பேராசிரியர் சி. பத்ம வரலாற்றுத்துறை தகைச
:- பேராசிரியர் ப. கோ
பேராசிரியர் வி. சிவ பேராசிரியர் சோ. கி கலாபூஷணம் திரும கலாநிதி ம. வேதநா கலாநிதி செ. யோகா
கலாநிதி வ. மகேஸ்வி
கலாநிதி திருமதி. கி திரு. க. இரகுபரன், ே திரு. ச. முகுந்தன், கி திருமதி இந்திரா சத திரு. எஸ். துஸ்யந், வி திரு.ழரீ. பிரசாந்தன் திரு. சீ. தெய்வநாயக திரு. ம. சண்முகநாத திருமதி ஹேமலோஜி திருமதி தேவகுமாரி திருமதி நித்தியவதி
செல்வி நந்தினி சண் திருமதி பவாணி முகு
:- திருமதி தேவகு
முகாமைத்துவ உதவியாளர்கள் :- திருமதி
திருமதி
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்

திணைக்கள ஆலோசனைச் சபை
க்கரசன்
வல்கள் திணைக்களம்
நாதன்
ர் பேராசிரியர்
பாலகிருஷ்ணஐயர்
SFTLÓ)
ருஷ்ணராஜா, பீடாதிபதி, மெய்யியல்துறை தி வசந்தா வைத்தியநாதன் தன், யாழ்பல்கலைக்கழகம் ாஜா, கிழக்கு பல்கலைக்கழகம் பரன், பேராதனைப்பல்கலைக்கழகம் ருஷ்ணவேணி அன்ரன் நோர்பட், யாழ்பல்கலைக்கழகம் தென்கிழக்குப்பல்கலைக்கழகம் ழக்கு பல்கலைக்கழகம்
ானந்தன்
பிரிவுரையாளர்
, பூரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் கம், உதவிப்பணிப்பாளர்
ன், உதவிப்பணிப்பாளர் lனி குமரன், உதவிப்பணிப்பாளர்
ஹரன், சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவலர் நித்தியானந்தன், ஆராய்ச்சி அலுவலர் முகலிங்கம், ஆராய்ச்சி அலுவலர் ந்தன், அபிவிருத்தி உதவியாளர் (இந்து கலாசாரம்)
ாரிஹரன், சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவர்
சுமதி வீரவாகு பிறேமா நந்தகுமாரன்
201

Page 222
பிரதம ஆலோசகர் ப
சீ. தெ உதவிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) இந்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஆய்வுப்பிரிவின் செயற்பாடுகள் பல. அவற்றுள் இந்துசமய தமிழிலக்கிய ஆய்வரங்கு, இந்துக்கலைக் களஞ்சியம் ஆகிய செயற்திட்டங்களின் முக்கியமான பங்களிப்பினை நல்கி வருபவர் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள். 1991ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆலோசகராக இருந்து ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தி வரும் பேராசிரியரைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவர் திணைக்கள ஆய்வுப்பிரிவின் இந்துக் கலைக்களஞ்சிய ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், இந்துசமய ஆய்வரங்குக்குத் தலைமையாளராகவும் கடந்த பல வருடங்களாகச் செயலாற்றுப்வர். இவரின் வழிகாட்டலின் கீழ் இதுவரை 1991ஆம் ஆண்டில் இருந்து 10 ஆய்வரங்குகள் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் 1940ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் சிவசுப்பிரமணியம், சிவபாக்கியம் ஆவர்.
ஆரம்பக்கல்வி 1945-49 வரை அராலி சரஸ்வதி வித்தியாலயம்
இடைநிலைக்கல்வி 1950 - 59 வரை யாழ்ப்பாணக் கல்லூரி
இவரின் தமிழ், சைவசமயம் தொடர்பான இலக்கியங்களின் மீதான ஆர்வம் குடும்பப்
202

ற்றிச் சில வார்த்தைகள்
ய்வநாயகம் து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
பாரம்பரியத்தினால் ஏற்பட்டது. வரலாற்றில் ஈடுபாடு தந்தையாரின் செல்வாக்கினால் விளைந்தது. யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் ஐரோப்பிய வரலாறு அபிமானத்திற்குரிய பாடமாக இருந்தது. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு களையும் நூல்களையும் படித்ததன் காரணமாகவும் மகஸ்முல்லர் உடைய சமஸ்கிருத இலக்கியம் உபநிடதங்கள் பற்றிய நூல்கள் மூலமாக இந்திய நாகரீகம், இந்துசமயம் என்பவற்றில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐரோப்பிய வரலாற்றில் கொண்டிருந்த அபிமானத்தை இந்திய வரலாறு அபகரித்துக் கொண்டது.
பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றைப் பிரதானமாகக் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க மாணவராகப் பரீட்சையில் எல்லாக் காலங்களிலும் முதல் நிலையில் சித்தியடைய நேர்ந்தது. அதன் பயனாகப் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் உடனடியாகவே ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பினைப்பல்கலைக்கழகம் வழங்கியது. 60களின் முற்பகுதியில் தமிழ்மொழிப் பற்று சமுதாயத்தில் விலாசமாக விளங்கிய காலம் அது இவரையும் விட்டு வைக்கவில்லை. தென்னிந்திய வரலாற்றைப் போதிப்பதன் மூலம் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் என்பவற்றைச் சுயமாக கற்க வேண்டிய தேவையும் ஆர்வமும் ஏற்பட்டன.
இலங்கைத் தமிழ் வரலாற்றின் உன்னத காலமான ஆரியச் சர்க்கரவர்த்திகளின் காலம்பற்றிப்
பட்ட மேற்படிப்புக்கான ஆய்வினை மேற்கொள்ள
ஆய்வரங்கு 2008

Page 223
வேண்டும் என்ற பற்றுறுதியினால் அதனைப் பற்றி லண்டன் பல்கலைக்கழகத்தில் 1969ஆம் ஆண்டில் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொள்ள முடிந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் சமஸ்கிருத பேராசிரியரான O.H.D.A. விஜயசேகர அவர்களே தனது ஆசிரியர்கள் எல்லோரிலும் தன்மீது கூடிய அன்பு செலுத்தியதாகவும் இவர் கருதுகின்றார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் குறித்து அவரே தடிடிய அக்கறை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக ஆசிரியராக விளங்கிய இளமைக்காலத்தில் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஆணித்தரமாகவும், கவர்ச்சியாகவும் உரையாற்றும் வல்லமை இருந்ததால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பலர் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி அரசாங்கம் சார்பான நாளிதழ்களிலும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் கட்டுரை எழுதுவதற்குத் தடை ஏற்பாடு செய்தனர் என்று அக்காலத்தைச் சுவராசியமாகச் சொல்கின்றார். ஆயினும் இவற்றால் எதுவிதமான இழப்புக்களும் ஏற்படவில்லை.
இளமைக்கால இச்சாதனைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலக மாநாட்டில் கொண்டிருந்த இவரின் பங்கு பிரதானமானது. அதிலே பங்கு கொண்டவர்களில் பெரியார் இரா. நமச்சிவாயம் இவருமே இப்பொழுது நாட்டில் உள்ளனர். அந்த மாநாட்டில் இவர் ஒழுங்கு செய்த தொல்லியல், கலை, கைத்தொழில் ஏட்டுச் சுவடிகள் தொடர்பான கண்காட்சி மிகப் பிரசித்தமானது. அதைப்போன்ற வேறு ஒரு நிகழ்ச்சி இதுவரை வடஇலங்கையில் நடைபெறவில்லை.
இரண்டாம் உலக இந்துமாநாட்டிற்கான பொதுச் செயலாளர் என்ற நிலையில் இவரே திட்டமிட்டு
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"

அதன் நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்தியதோடு இந்து நிறுவனங் களினதும், பொது மக்களினதும், பெரியார்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு இவரால் ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டன. ஆராய்ச்சித்துறையில் இவரது வெளியீடுகள் இருதுறைகள் சார்ந்தவை
1) இலங்கைத் தமிழர் வரலாறு, பண்பாடு, கலாசாரம்
என்பன பற்றியது 2) இந்துசமயம், கலாசாரம் பற்றிவை
யாழ்ப்பாண இராச்சியம் என்ற ஆங்கில நூலையும், வன்னியர் என்ற சுருக்கமான தமிழ்நூலையும் 70களில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய வரலாறு, இலங்கை வரலாறு, இலங்கைத் தமிழ் சாசனங்கள் பற்றி ஏறக்குறைய 200 கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். இந்து நாகரிகம் தொடர்பாக இவர் ஆற்றிய பணிகள் மிகவும் பிரதானமானது.
இலங்கையில் இந்துநாகரிகம் என்ற நூல் 2000ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வரலாறு, தொல்லியல், தமிழ்இலக்கியம், நுண்கலை சின்னங்கள் என்பவற்றினை ஆதாரமாகக் கொண்டு புதிய பார்வையில் ஆதாரபூர்வமாக அந்நூல் வெளியிடப்பட்டது. மிகவிரிந்த நிலையில் இந்நூல் “இலங்கையில் இந்துசமயம்” என்ற புனர்நாமத்துடன் இன்று வெளிவந்துள்ளது. 2005ஆம் ஆண்டில் வெளியான சமயம், உளவியல் தத்துவம் என்பன தொடர்பாக வெளியான நூல்களில் தலைசிறந்த நூலாக தமிழ்நாடு அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டு அதற்குப்பாராட்டுச் சான்றிதழ்பெற்றது. அந்தவருடம் தமிழில் வெளிவந்த ஆய்வுநூல்களில் அதுவே முதன்மையானது என்றும் சொல்லப்பட்டது.
இந்துநாகரீகத்தை (5 LI TOT 66 பயிலுகின்றவர்களின் நலன்கருதித் தொகுத்து
2O3

Page 224
வெளியிடப்பட்ட கோயில்களும் கலைகளும், நடனங்களும் ஒவியங்களும் என்ற நூல்கள் அதிகளவு பாராட்டைப்பெற்றுள்ளன. தமிழ்மொழியல் இத்துறைகள் பற்றி இவ்வண்ணமாக வெளிவந்த நூல்களில் இவையே முதன்மையானவை. கலை சம்பந்தமான நூல்களை ஆங்கில மொழியில் தான் கவர்ச்சியாக எழுதலாம் என்று கருதிய தமிழ்நாட்டு அறிஞர்கள் பலர் தமிழிலும் அவ்வண்ணமாகக் கலைகளைப்பற்றி வர்ணிக்க முடியும் என்பதை இந்நூல்கள் மூலமாக உணர்வதாகக் கருதத் தொடங்கினார்கள். இலங்கைத் தமிழரின் பாரம்பரியங்கள் தொடர்பாக வெளிவந்த நூல்களில் இலங்கைத் தமிழரின் தேச வழமைகளும், சமூகவழமைகளும் தனிச் சிறப்புடையது. வடகிழக்கு மாகாணங்களிலே வாழ்ந்த தமிழர்களிடையே நிலவிய தேசவழமைகள், சமூகவழமைகள் என்பன தொடர்பான ஆவணங்கள் தமிழில் உள்ள ஆவணங்கள் எல்லாம் ஒரே தொகுதியாக இந்நூலிலே முதன் முதலாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்தையும், சமூகத்தையும் பற்றிய விரிவான வரலாற்று விளக்கங்களும் நூலை அணி செய்கின்றன. சாகித்திய மண்டலம் இந்நூலைச் சிறந்த ஆராய்ச்சி நூலாக அடையாளம் செய்து கெளரவமும் சான்றிதழும் வழங்கியது. சம்பந்தர் விருதும் கிடைத்தது.
2006ஆம் ஆண்டிலே இலங்கைத் தமிழ் சாசனங்கள் என்ற மிகவும் பெரிய நூல் வெளிவந்தது. 13ஆம் நூற்றாண்டு வரை வெளியிடப்பட்ட அனைத்துத் தமிழ்ச்சாசனங்களின் விளக்கங்களும் இதில் அடங்கியுள்ளன. அவற்றைப் பற்றிய விமர்சன ரீதியான விளங்கங்கள் மூலமாக இலங்கைத் தமிழர் வரலாற்றில் சமய, சமூக வழமைகளும் விரிவாக்கம் பெறுகின்றன. அது வரலாற்று ஆதாரங்களைப் பற்றிய நூலாகவும், வரலாற்றினை ஆதாரங்களோடு விளக்கும் நூலாகவும் புதிய விளக்கம் பெற்றுள்ளது. சில காலமாகத் தேங்கியிருந்த சாசனவியல் பற்றிய
204

ஆராய்ச்சி பற்றி இவருடைய முயற்சிகள் புத்துயிர் அளித்தன. மாகவிலிலே அமைந்த விக்கிரம் சலாமேகபுரம் வணிகர்களின் நகரம் என்பதை இவரே முதன் முதலில் அடையாளம் கண்டார். அங்குள்ள சிதைவுற்ற கற்பலகை சாசனம் வணிகரின் மெய்க்கீர்த்தியின் போது ஆரம்பமாகின்றது என இவரே விளக்கினார். அதுமட்டுமன்றி இலங்கையில் உள்ள வீரசாசனங்களை நன்கு வாசித்து வெளியிடுவதற்கான முயற்சிகள் முனைப்புப் பெறுவதற்கு இவருடைய ஆலோசனைகள் ஏதுவாக இருந்தன. இவருடைய ஆலோசனைப்படி பேராசிரியர் ஹாரசீமா தலைமையிலான ஒரு சர்வதேச அறிஞர்குழு இவற்றை வாசித்து வெளியிடுவதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். ஜப்பான் தேசத்துப் பல்கலைக்கழகம் அதற்குரிய ஆதரவினை வழங்கியது. சாசனங்களில் வாசகங்கள் எல்லாம் விளக்கங்களோடு இந்நூலிலே இடம்பெறுகின்றன. பொலனறுவைக் காலத்து சாசனங்களிலே கூறப்படுகின்ற விக்கிரம சாலமேகன் என்னும் பெயர் விக்கிரமபாகுவோடு தொடர்புடையது என்றும் அது சோழரின் ஆட்சிக் கால வழமைக்கேற்ப உருவானது என்றும் விளக்கினார்.
கொழும்பு அருங்காட்சியத்திலுள்ள சாசனம் ஒன்று இரண்டாம் சோழ இலங்கேஸ்வரனது என்று அடையாளம் கண்டமை இவருடைய மற்றுமொரு சாதனையாகும். அதன் வாசகத்தையும் இவரே முதன் முதலாக அறிஞர்களுக்கு அறிமுகம் செய்தார். இன்னோர் என்ன பல புதிய சிந்தனைகளை சாசனவியலிலே இவர் ஏற்படுத்தியுள்ளார். அவற்றிற் பிரதானமாக ஒன்று பொலனறுவை கால வேளைக்காரர் சாசனம் பற்றியது.
இந்துக்கலைக்களஞ்சியத்தின் இதுவரை வெளிவந்த ஒன்பது தொகுதிகளில் முதலாவது தவிர்ந்த ஏனையவையாவற்றிற்கும் இவரே தலைமைப் பதிப்பாசிரியர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆய்வரங்கு 2008

Page 225
முதலாவது தொகுதியும் இவரால் விரிவாக்கி மீள் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் உபதலைவராக இருந்த சமயத்தில் நெருக்கடி நிலையிலும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது ஆயினும் தொடர்ந்து நடைபெறுவதற்கு இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியமானவை.
பல்கலைக்கழகக் கல்லூரி முறையினை ஒழித்து அவற்றில் இருந்து புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்க வேண்டும் என்ற அறிக்கைகளை எழுதி இவர் சமர்ப்பித்திருந்தார். அது அவ்வாறே முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டு நடைமுறைப்
படுத்தப்பட்டது. ராஜரட்ட பல்கலைக்கழகம், சப்ரகமுவ
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 

பல்கலைக்கழகம் என்பன உதயமாகின. அத்துடன் வவுனியா, திருகோணமலை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகள் இவரது அறிக்கையின் மூலம் அவை அமைந்திருந்த மாகாணங்களிலேயே பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. அவை அங்குள்ள பல்கலைக் கழகங்களின் வளாகங்களாக அமைந் துள்ளமையும் இவரது அறிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு கல்வி, பல்கலைக்கழகம் தொடர்பான பல பணிகளை ஆற்றிய, ஆற்றிவரும் பேராசிரியரின் சமய, கல்விப் பணிகள் மேலும் தொடரவேண்டும் என்பது இந்துசமய ஆர்வலர்களின் விருப்பமாகும்.
205

Page 226
2O6
 

ஆய்வரங்கு 2008

Page 227
5553 g
శొgEFiశం
斋、
Eīlli:2C2E2 isss
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

נסים פסaסנפה 10:30
రుడ్
호
14.05 පොත් එළිදැක්වීම් ,
(.333igi.
O

Page 228
34 தேவாரம்
__ 鹭
OB
 

10:15 QETTLE EG63T
பஃப்பர் ந்ேதுசமய கலாசாரத்துவர்கள் திருக்களம் 3. தலைமையுரை
| iii விருந்தினர்:விர
:வல்கள் அமைச்சர் ' கெளரவ விருந்தினர் உரை
i। வுேறுத்
ஆராய்ச்சி அலுவலர்
ந்ேது கார அலுவங்கள்தினைக்கள்
இவ்விழ்த் கலந்துகொள்ளுமாறு தங்களை
ைேழக்கின்றோம்
ஆய்வரங்கு 2008

Page 229
Chief Guest
HION. PANDU
Religious Affairs
Guests of Honou
EEEEErրEnt Assistant; Départmátilof Hindu obligious:
100
சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 
 
 
 

ugural Address
Diriği:ğr. Dağıtmanı CTHirdu. Religious : Culturul AFilir:
3 Addre
s by chairman
ss by Chief Guest Horn, Pandu Bandar Ministerof Rangious Affa
Prof.5.
Presentation abou E.
in Univeri
20 keynote. Address rof. K.5iv
Yular cordially invited to a tenti 田蕙 itiatigural | cerelliony and the prսըeedings of the Seminar
raiIHg3:Fa:-riggihi ATFr; Sh; ჭ:1ჯ1ik;lt:
-
:

Page 230
2O
 

ஆய்வரங்கு 2008

Page 231
அழை
ஆய்வரங்
“சோழப்பேரரசும் சமர
2008-08-22 -
இராமகிருஷ்ண மி கொழும்
மத அலுவல்கள் ஒழுக்க இந்துசமய, கலாசார அலு
சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்"
 

ப்யிதழ்
கு-2008
ாப்பெருநெறிகளும்’
2008-08-24
ஷென் மண்டபம் L 06.
மேம்பாட்டு அமைச்சு வல்கள் திணைக்களம்
2

Page 232
22.08-2008 வெள்ளிக்கிழமை அமர்வு 1
சோழர் கால அரசியலும் வரலாறும்
தலைமை: பேராசிரியர் கா. சிவத்தம்பி
தகைசார் பேராசிரியர்
பி. ப. 01.30 சோழர் கால வணிக நகரங்கள்
பேராசிரியர் சி. பத்மநாதன் தகைசார் பேராசிரியர்
02.00 இலங்கையில் சோழர் ஆதிபத்தியம்
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
02.30 சோழர் காலப் பெண்மணிகள்
கலாநிதி செ. யோகராஜா கிழக்குப் பல்கலைக்கழகம்
03.00 சோழ நாட்டின் வரலாற்றுப் புவியியல்
பேராசிரியர் எ. சுப்பராயலு தமிழ்நாடு
அமர்வு 11
சோழர் கால அரசியலும் வரலாறும்
தலைமை: பேராசிரியர் எ. சுப்பராயலு
தமிழ்நாடு
பி. ப. 03:30 சோழர் காலச் சமூகம்
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
04.00 சோழர் நாட்டின் நீருரிமை
கலாநிதி கி. இரா. சங்கரன் ஜே. வி. சி. கல்லூரி, தமிழ்நாடு
04.30 சோழர் கால மெய்க்கீர்த்திகள்
பேராசிரியர் சி. பத்மநாதன் தகைசார் பேராசிரியர்
05.00 சோழர்கால அறிஞர்களும்
கலைஞர்களும் பேராசிரியர் விஜயா இராமசாமி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்,
இந்தியா.
212

தலைமை:
மு. ப. 09.00
09.10
O9.40
10.10
0.40
1.00
தலைமை:
மு. ப. 11.30
12.00
12.30
23-08-2008 சனிக்கிழமை
(eipia III
சமயமும் தத்துவமும்
கலாநிதி என். முத்துமோகன்
தேவாரம்
சமஸ்கிருத மொழியில் சைவ சித்தாந்தம் பேராசிரியை கலைவாணி இராமநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
விசிட்டாத்துவைதி கம்பன் திரு. ச. முகுந்தன் கிழக்குப் பல்கலைக்கழகம்
சோழர் காலச் சமணம்
பேராசிரியர் க. அருணாசலம் பேராதனைப் பல்கலைக்கழகம்
தேநீர் இடைவேளை
அடியார் வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும் திரு. க. இரகுபரன் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
SIDữa IV
சமயமும் தத்துவமும்
பேராசிரியர் சோ. கிருஸ்ணராஜா
சேக்கிழார் காட்டும் சைவ சித்தாந்தம் திரு. யூநி பிரசாந்தன்
ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
சைவ சித்தாந்த நோக்கில் பெளத்தம் திரு. கே. ஜெகநாதன் கிழக்குப் பல்கலைக்கழகம்
வைணவப் பாசுரத் தொகுப்பு பேராசிரியர் அ. சண்முகதாஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஆய்வரங்கு 2008

Page 233
தலைமை:
பி. ப. 1.30
2.00
2.30
3.00
g560)660)LD:
S. Lu. 3.30
4.00
4,30
5.00
é9iLDñieQ V
சமயமும் தத்துவமும்
(3uyudffui sıf. d'69 Tıf6
சைவத் திருமுறைத் தொகுப்பு பேராசிரியர் என். முத்துமோகன்
, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
தமிழ்நாடு,
சோழர் காலப் பக்திப் பாடல்கள் வித்துவான், கலாபூஷணம் திருமதி வசந்தா வைத்தியநாதன்
சோழர் காலத் திருமடங்கள் திரு. எஸ். துஸ்யந்த்
கலிங்கத்துப் பரணி: காளி வழிபாடு பேராசிரியர் சி. மெளனகுரு கிழக்குப் பல்கலைக்கழகம்
69iuDi6n VI
சோழர்கால இலக்கியங்கள்
பேராசிரியர் ஞானா குலேந்திரன்
சைவ சித்தாந்த இலக்கியம் பேராசிரியர் என். முத்துமோகன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
திருத்தொண்டர் புராணம் திரு. சேது முருகபூபதி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு.
சோழர் கால சிற்றிலக்கியங்களும் சோழர் குலமரபும் கலாநிதி வ. மகேஸ்வரன் பேராதனைப் பல்கலைக்கழகம்
சோழர்கால தமிழ் இலக்கண
நூல்கள் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
"சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்’

24-08-2008 ஞாயிற்றுக்கிழமை
தலைமை:
மு. ப. 09.00
09.0
09.40
10.10
O.40
1.10
தலைமை:
11.30
2.00
12.30
Si Dia VIII
சோழர்கால இலக்கியங்கள்
பேராசிரியர் சி. தில்லைநாதன் தகைசார் பேராசிரியர்
தேவாரம்
சோழர்கால இலக்கண நூல்கள் காட்டும் அழகியல் கொள்கை கலாநிதி கிருஷ்ணவேணி நொபேர்ட் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கம்பராமாயணம் கலாநிதி துரை மனோகரன் பேராதனைப் பல்கலைக்கழகம்
சோழர்கால சமஸ்கிருத இலக்கியம் பேராசிரியர் வி. சிவசாமி
சோழர்காலத் தமிழ் இலக்கண உருவாக்கம் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தேநீர் இடைவேளை
6DD6a VIII
சோழர்கால இலக்கியங்கள்
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
சோழர் காலத் தமிழ் வழக்கு கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் கிழக்குப் பல்கலைக்கழகம்,
மொழியியல் நோக்கில் கம்பராமாயணம் சுந்தரகாண்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
கலாநிதி சுபதினி ரமேஷ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கலிங்கத்துப் பரணி திரு. அன்ரன் டயஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
23

Page 234
கோயில்களு
தலைமை: பேராசிரிய
01.30 சோழர் 8
கலாநிதி தொல்பொ
02.00 சோழர்கள் கலாநிதி
யாழ்ப்பான
02.30 நாயன்மா விக்கிரக 65. LITT. யாழ்ப்பான
03.00 சோழர்கா (Bugydfiu
c
கோயில்களு
தலைமை: பேராசிரிய
03.30 ւյr6Ծdiւջա பேராசிரிய
காமராஜர்
04.00 சோழர்க
திருமதி
யாழ்ப்பான
04.30 சோழர்கr
கலாநிதி தொல்பெ
05.00 முற்கால பேராசிரிய
தமிழ்நாடு.
214

Df6! IX
நம் கலைகளும்
பர் கு. சேதுராமன்
ால ஒவியக்கலை இரா. இராஜவேலு ருள் ஆய்வாளர், தமிழ்நாடு.
ல விக்கிரகங்கள் மா. வேதநாதன் னப் பல்கலைக்கழகம்
ர்களை
படுத்துகை அகிலன்
ஈப் பல்கலைக்கழகம்
ல இசைக் கலை பர் ஞானா. குலேந்திரன்
LDña. X
நம் கலைகளும்
பர் சி. மெளனகுரு
நாட்டில் சோழர் கோயில்கள் பர் கு. சேதுராமன்
பல்கலைக்கழகம், மதுரை.
ல அம்மன் விக்கிரகங்கள் விக்கினேஸ்வரி பவநேசன் னப் பல்கலைக்கழகம்
லக் கோயில்கள் இரா. இராஜவேலு ருள் ஆய்வாளர், தமிழ்நாடு
சோழர் சிற்பக்கலை பர் வி. வேதாசலம்
ஆய்வரங்கு 2008

Page 235


Page 236

சாழப் பெருமன்னர் காலத்திற் சைவமே மிழகத்து மக்களிற் பெரும்பான்மையேறின் மயமாக விளங்கியது. வெவ்வேறு லப்பகுதிகளில் வாழ்ந்தவர்களையும் ல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த முதாயப் பிரிவுகளையும், இணைக்கும் க்தியாகவும் அது தொழிற்பட்டது. ரசர்களும் அரச குடும்பத்தைச் சேர்ந்த றரும் ஆலயங்களைப் புனரமைத்தும், திதாக அவற்றை நிர்மாணித்தும், அவற்றிலே நாள்வழிபாடுகளும் விழாக்களும் டைபெறுவதற்கென நிவந்தங்களைச் சய்தும் சைவசமயத்தை ஆதரித்தனர். வர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஆட்சியதிகாரிகளும், குறுநில மன்னரும் 1ணிகரும் வேறு பலருந் திருப்பணிகள் லவற்றை மேற்கொண்டனர்.
- பேராசிரியர் சி. பத்மநாதன்
UNIEARTS, (PVT)LTD. COLONNECTSTELD