கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.01

Page 1
ni Risa sang
:ங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
rs கொழும்
.**
015 ', 'மாதிமீ
--
மிழ்ச் சங்க இணையத்தளத்தி 'செய்தி மபூல்' என்பதன் வடிவம் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். 336.60 u:56tub:www.colombotamilsangam.com
தொலைபேசி இல . 2363759 தொலைநகல் 2381381உட்
- is ideasus
தமிழ்ச் ச
ஒழுங்கமைக்கப் மாதாந்த நிகழ்வுகள் 1. சுகாதாரக் கருத்தரங்கு - LD
- - ST6 2. "அற்றைத் திங்கள் - ஒt மான
வாராந்த நிகழ்வுகள்
1. 'அறிவோர் ஒன்றுகூடல்' - பி
.D6 ܢ 2. "இலக்கியக் களம் -
-
3. சிறுவர் கதைநேரம் - பி
56.
SLS SS L LL LLL LLLLLS LLL LLLL S S LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL S * தடைப்பட்டிருந்த கொழு "சங்கத்தமிழாக” வெகுவி * வெகுவிரைவில் திருக்குற6 மலர்வெளியீடு நடைபெற
ZSSS S LLL LL LL S0S LLLLL S L LLLL LLLYS LLL LLL LLLS Z LLLLS SLLLL LLL LLLL SLLLS LLL LLLL S
డ్ట్క్ల
LTyyGGTLTLGTLTL0L
 
 
 
 
 
 
 

".....' ...'
•. " - s ר' ירי 3 יידד המצ3תה - T 2 i 高 T Kol. F. I.: QA23 است.
"6lb60)LDi".
ம்மடல்ாகும்.மேலும் விப்
" : : " . و بر மின்னஞ்சல்:tamilsagamcolomboஇyahoo.com
- * 。 . . "" : "", . . " శాతా-శా
തു 2. ' . - . - பட்ட நிகழ்வுகள்
ாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ல 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை வ்வொருமாத போயா தினத்தன்று
லை 6.00 மணி முதல் 7.00 மணி வரை
ரதி புதன்கிழமைகளில் லை 6.00 மணி முதல் 7.00 மணி வரை ரதி வெள்ளிக்கிழமைகளில் ல 6.00 மணி முத்ல் 7.00 மணி வரை தி சனிக்கிழமை pல 10.00 மணி முதல் 11.30 மணி வரை
LL LLL LLLLL Z LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LL LLL LLL LL ம்புத் தமிழ்ச் சங்க சஞ்சிகை ரைவில் தடம்மதிக்கிறது. ர் போட்டி, வள்ளுவர் விழா, வுள்ளன. ,
o e o e o O to o O e o O p O o O O. o O O. O. O.
- ” -

Page 2
தைர் மாதம் தமிழ்ச் சங்கத்தில் ရှုံးနှိ இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய' ரீஜீபாtவை:
நூலவி (சிறுவர் பகுதி) t
01.01.2011 "கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் 'திருமதி அபுவனேஸ்வரி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான
கருத்து மிக்க சுவையான கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 445 05.C.1.2011 அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் சங்கப் பொதுச் செயலாளர் 'திரு.ஆ.இரகுபதி பாலறிதரன் தலைமையில் வெள்ளவத்தை கிரியா யோக ஆரண்யத்தின் ஸ்தாபகர் திரு.ந.ஆறுமுகம் அவர்கள் "ஒளிமயமான எதிர்காலம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தலைவர் தமது உரையில், "ஆறுமுகம் ஐயா அவர்கள் நாடறிந்த யோகா ஆசான் எனவும். அன்னார் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு யோகாசனப்பயிற்சியை முறைப்படி பயிற்று வித்து அவர்கள் இன்று இலங்கையிலும், பலவெளிநாடுகளிலும் யோகா ஆசிரியர்களாக இன்னும் பலருக்கு யோகாசனம் பயிற்றுவித்து வருகிறார்கள். அவர் ஒரு நிறைகுடம். ஏறத்தாள நாற்பது வருடங்கள் வியாபாரத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த அவர் இன்று ஒரு முழு நேர ஆன்மீக வாதியாக, யோகா ஆசானாக மாறியுள்ளமை எமது சந்ததிக்கு ஒருவரப்பிரசாதம். இவ்வாங்கிலப் புத்தாண்டில் எமது சங்கத்தின் முதலாவது பேச்சாளராக இவர் வந்திருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், கெளரவத்தையும் தருகிறது" என்று கூறி "ஐயா'வைப் பேச அழைத்தார்.
பேச்சாளர் திரு.ஆறுமுகம் தனதுரையில் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" எனத் தொடங்கி மிருக உணர்வு, காழ்ப்பு உணர்ச்சி, பேராசை என்பனவற்றால் மனிதன் மிருக உணர்வைப் பெறுகிறான். அடுத்தவர் களுக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மனிதன் அவர்களது துன்பத்தை பகிர்ந்து கொள்ளலாம். கூட்டுப் பிரார்த்தனை, வாழ்த்து தல், மனித நேயம் இவற்றின் மூலம் நிகழ்காலத்தில் வாழலாம். உயர்ந்த நிலையடைய உயர்ந்த மனம் வேண்டும். அன்பு, சேவை, தியானம் இவற்றின் மூலம் சமாதி நிலையை அடையலாம்.
உலகில் இன்று 650 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுள் 340 கோடி மக்கள் அடிப்படை வசதியற்று வாழ்கிறார்கள். மனதை சாந்தமாக வைத்திருக்கவேண்டும். மாதா பிதாவைப் பேணவேண்டும். சீராட்டி பாராட்ட வேண்டும். இது கட்டாயம் செய்யவேண்டும். பிதிர்க் கடன் முடிக்கவேண்டும். மனம் ஒன்றி இறைவணக்கம் செய்ய வேண்டும். ஆரம்பநிலை சிலைவணக்கம்; பின்னர் தியானம், மனதால்
而邸 醬
 

வணங்கலாம். "உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது' என்று சுவாமி விபுலானந்தர் கூறியது. நாமும் வாழலாம், தூங்கும் போது 5 நிமிடம் சிந்தனை ஓட்டத்தை அவதானித்தல், காலையில் ஓய்வு எடுக்கவேண்டும். இது 4 மணித்தியாலங்கள் துங்கியது போல் இருக்கும். மனதை அலைய விடாமல் அடக்கவேண்டும். மெளனமாக இருத்தல் ஒரு சிறந்த பயிற்சி. சாத்வீக உணவினால் சாத்வீக குணத்தை அடையலாம். உணவே மருந்தாகும். சினம் தவிர்க்கவேண்டும். குடும்பத் தலைவர் முதல் அனைவரும் பின்பற்றவேண்டும். மற்றவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். அன்னதானம் மிக்கச் சிறந்த தான மாகும். பிரமச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு நிலைகளிலும் பற்றற்று வாழவேண்டும். சிரித்து வாழுங்கள், இரத்தோட்டம் சீரடையும். நிகழ் காலத்தில் "ஒளிமய மான எதிர்காலத்தை காணலாம்” என்று மக்களுக்கு ஓர் நல்ல சிந்தனையைத் தூண்டும் உரையை நிறைவு செய்தார்.
இநமக்கியக்களம் 37 01.01.2011 இன்று நடைபெறவிருந்த இலக்கியக்களம் நிகழ்வு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றதால் இடம்பெறவில்லை,
நூலகம் (சிறுவர் பகுதி)
(). 1.2(11 "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி சுமதி பாலறிதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க சுவையான கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 446 1:, {1,2011 அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். தோப்பில் மீரான் பற்றி சுருக்கமாக சில செய்திகளைக் கூறியதோடு "கடலோரக் கிராமம்" பற்றியும் சில கருத்துக்களைத் தெரிவித்தார். திரு மானா மக்கின் அவர்களை அறிமுக உரையாற்றும்படி அழைத்தார்.
திரு.மானா மக்கீன், "1980லிருந்து மீரானின் விசிறியாக இருந்து வருகிறேன் என்று தொடங்கினார். சமூகச் சீர் கேட்டை எடுத்துக் கூறி சமூகச் சீர்திருத்தத்துக்கு பாடுபட்டவர். 1997இல் இவருக்கு சாகித்திய விருது பெற்றுக் கொடுத்தது "சாய்வு நற்காலியாகும்.
மலையாளம் தான் அவரது பேர்தனா மொழியாக இருந்தது. அந்த மண்ணிலிருந்தே தனது தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். 'துறைமுகம்" இவரது இரண்டாவது நாவலாகும். மொத்தமாக 5 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவற்றை எழுத 25 ஆண்டுகள் சென்றன. சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்" என்றார்.
ਫ
க:தமிழ்ச்சிங்கிசெய்திட்ல்:

Page 3
பேச்சாளர் தோப்பில் மீரான் தனது உரையில் எனது சொந்தவூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைசிக் கிராமமாகும். எமது ஊர் ஒரு கோட்டை போலிருந்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்தில் "காப்பிக் காட்டில்" தொல்காப்பியர் பிறந்தார். அதே போல் எங்கள் ஊருக்குப் பக்கத்தில்தான் அகளிப்தியரும் பிறந்தார். பழங்காலத் தமிழ் தான் இன்றும் பேச்சுவழக்கில் உள்ளது. 5 வகையான மொழி யுன்ைடு. சுத்தத்தமிழ்ப் பேச்சுண்ைடு. போர்த்துக்கீச மொழி கலந்த பேச்சு, சிலோனிலிருந்து வந்தவர் பேச்சு, மலையாளம், அந்தந்த மொழிமூலம் தான் நான் எழுதினேன். மக்கள் பேசும் மொழியிலேயே இலக்கியம் படைக்க வேண்டும். சங்க இலக்கியங்கள் நான் படிக்க வில்லை. 1990க்குப் பின்னர் தான் படித்தேன். வட்டார வழக்கு என்று கூறி எனது படைப்புக்களை ஒரம் கட்டினர். இப்படி வட்டார வழக்குகளால் இலக்கியத் தரம் தமிழில் குறைந்தது. மலையாள மொழியில் இத்தகு வேறுபாடு இல்லை. இதனால் தான் அம்மொழி வளர்கிறது. சொற்கள் பரிச்சியம் இல்லாவிட்டாலும் கதையைக் கிள்ளி எடுக்கும் சக்தி எனக்குண்டு. படைப்பு வேறு; விமர்சனம் வேறு. விமர்சனம் என்பது ஒரு விஞ்ஞானம், படைப்பாளிக்கும் எழுத்தாளனுக்கும் வித்தியாசம் உண்டு. மூலப் படைப்பைச் செப்பவன் படைப்பாளி. 10 புத்தகம் படித்துவிட்டு 11வது புத்தகம் எழுதினால் அவன் எழுத்தாளன். படைப்பு மொழி மாறக் கூடியது. காலத்துக்கு ஏற்றவாறு மாறும். எடுத்துக் கொள்ளப்படும் விடயம் காலத்துக்கேற்ப மாறும். "அவன் காட்டை வென்றான்' என்ற தெலுங்கு நாவல் வெறும் 80 பக்கங்களே. நல்ல படைப்புகள் என்பன பக்கங்களில் தங்கியிருப்பதில்லை. பேச்சு மொழி, அரிய ஒரு சிறந்த படைப்புக்குத் தேவை. படைப்புத் தான் முக்கியம், சிறுகதை மொழி வேறு. நாவல் மொழி வேறு. பொருளும் வேறு. விடயங்களும் வேறு சிறுகதை மொழி கூரியதாக இருக்கும். சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத முடியாது. அதுபோல் சிறுகதை ஆசிரியர் நாவல் எழுத முடியாது. தமிழுக்கு ஏன் நோபல் பரிசு இல்லை. தாகூருக்கு நோபல் பரிசு கொடுத்தது தவறு என இந்திய படைப்பாளிகள் கூறினர். பாரதிக்குத்தான் கொடுக்க வேண்டும். பாரதி படைப்பு மொழி பெயர்க்கப்ப்படவில்லை என்பது ஒரு காரணம், ஆங்கில இலக்கியங்கள் பல மலையாளத்திலுண்டு. தமிழில் இல்லை. நமது இலக்கியங்களுக்கு வேறு மொழி பெயர்ப்பு இல்லை. அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராக பேனா எடுப்பவர்கள் படைப்பாளிகள். படைப்பாளி ஒரு போராளி. பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தான் பேகவான். தாமிரபரணி உற்பத்தியாகும் இடம் தெரியாது. மக்கள் சார்பான இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. இவை பாதுகாக் கப்பட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
 

-mlm
இநகுறும் படங்கள்
13, 1,201
கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் கனடா மூர்த்தி அவர்களின் இருகுறும்படங்களான 'உலகப் பொது மகன்' - ஜெயகாந்தன் என்ற படமும், "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் - ஒரு பண்பாட்டியல்' என்ற படமும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் குறிப்புகளுடன் காட்டப்பட்டது.
அன்று ஒரு அலுவலக நாளான போதும் மண்டபம் நிறைந்திருந்த ரசிகர்கள் இரண்டு குறும் படங்களையும் பார்த்து இரசித்தார்கள்.
மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணிநேரமே எடுத்துக் கொண்ட இக்குறும் படங்கள் எவ்வாறு, எங்கே, எவ்விதம் தயாரிக் கப்பட்டன என்பதையும் நிறுத்தி, நிறுத்தி இடையே பேராசிரியர் கா.சிவத்தம்பி எவ்விதம் குறிப்புகள் தந்தார் என்பதையும் கனடா மூர்த்தி அவர்கள் சுவார்சியமாக விபரித்தார்.
இங்கியக்களம் 38
14.1.201 II
அண்றைய நிகழ்ச்சிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகச் செயலாளர் திரு.தி.ஞானசேகரன் தலைமை வகித்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த WT.இளமாறன் அவர்கள் "கே.டானியலின் நினைவலைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தலைவர் தனதுரையில், "இன்றைய பேச்சாளர் பல ஆண்டுகளாக பிரான்ஸில் வாழ்ந்தாலும் தமிழை மறக்காமல் பேச்சாளராகவும், கவிஞராகவும், சிறந்த எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். எழுத்தாளர் கேடானியலுடன் நெருங்கிப் பழகிய W.T.இளமாறன் "கேடானியலின் நினைவலைகள் என்ற தலைப்பில் பேசப் பொருத்த மானவர்" எனக் கூறிப் பேச்சாளரை உரையாற்ற அழைத்தார்.
W.T.இளமாறன் தனது உரையில், முன்னூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதிய டானியலின் "பஞ்சமர் நாவல் சாகித்தியப் பரிசு பெற்றது. சாதி ஒடுக்குமுறை மூர்க்கத்தனமாகத் தலைதுாக்கி யிருந்த பொழுது அதைத்தகர்த்தெறிந்து புது வாழ்வு காணத்துடித்த ஆயிரமாயிரம் விடுதலைப் போராளிகளோடு தோளோடு தோள் கொடுத்துப் போராடி அந்தப் போராட்ட அனுபவங்களையே இலக்கிய மூலதனமாகக் கொண்டு பல இலக்கியங்களைப் படைத்தவர் டானியல்,
இளமைக் காலத்திலிருந்தே மக்கள் இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றிய திரு.டானியல் ஈழத்து இலக்கிய உலகில் வெகு துணிச் சலாகவும் இதயகத்தியோடும் முற்போக்குக் கொள்கையை முன் வைத்தவர்.
1951இல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சுன்னாகத்திலிருந்து யாழ்ப் பாணம் வரை ஊர்வலமொன்றுக்குத் தலைமை தாங்கி அடிவாங்கியவர்.
-----ii
트트브 - STASALkLSA AATCLS TTTASTLSSLASYS

Page 4
சிகோலம் தடுப்புக் காவலிலும் இருந்தவர்.
தமிழ்நாடு சரஸ்வதி இதழில் பிரபல எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றோரின் ஆக்கங்களோடு இவரின் ஆக்கங் கரும் இடம்பெற்றன. டானியலின் நூல்கள் இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அன்னார் தனது இறுதிக்காலத்தில் தமிழ் நாட்டிற்குச் சென்றபோது நோய்வாய்ப்பட்டார். நான் அவருடன் இருந்தேன். அந்த நிலையிலும் சில எழுத்தாளரைச் சந்திக்கவிரும்பினார். நான் அழைத்துச் சென் றேன். தமிழ்நாட்டிலேயே காலமானார்” என்று உருக்கமாகக் கூறித் தனது பேச்சை நிறைவு செய்தார் பிரான்ஸ் இளமாறன்,
பொங்:5ல் திருநாள் நிகழ்ச்சி
FO, இன்று நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் கொழும்புத்
தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை
தங்கினார். தமிழ் வாழ்த்தை திருமதி மைதிலி அமுதன் பாடினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.சுந்தரமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் அக்கரைச்சக்தி பொங்கல் கவிதை இசைத்தார். திரு.க.இரகுபரன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற தமிழ்ச் சங்க சிறுவர் பாடசாலை இளஞ்
சிறTர்களின் இரண்டு நடனங்கள் அவையோரின் மனதைக் கொள்ளை
கொண்டன. இதனைத் தொடர்ந்து பொங்கல் கவியரங்கம் தலைமைக்
கவி கவிஞர் சடாகோடன் தலைமையில் நடைபெற்றது. "பொங்கி
வருகையிலே புலருகின்ற முகங்கள் ஏழு” என்ற பொருள்பட ஏழு
* :
இளம் கவிஞர்கள் கவிதை அரங் E. கேற்றினர். நீர் - அ.ஹரிசன், நிலம் - தி.சுகந்தன், ஏர் -
க.பத்துபானந்தன், எருது - மு.மயூரன், ! நெல் - தெ.ஞா.மீனிலங்கோ, சூரியன் - பொ.கோபிநாத், உழவன் - வி.விமலாதித்தன் ஆகியோர்
இங்கத்தச்ேசர்:சந்தில்ே
 
 
 
 

பங்கேற்றனர். இளைஞர்கள் படைத்த கவியரங்கு சிறப்பான நிகழ் வாகவும் இருந்தது. இறுதியாக "கோகுலம் சிவா சுப்பிரமணியத்தின் தனித் தவிலி நிகழ்வு நடைபெற்றது. நன்றியுரையை பொதுச் செயலாளர் ஆ.இரகுபதி பாலறிதரன் அவர்கள் ஆற்றினார். நிறை வாக தமிழ் வாழ்த்துடன் பொங்கல் திருநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவெப்தியது.
ஆட்சிக்குழு கூட்டம்
16...).2O1
காலை 10.00 மணியளவில் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அற்றைந்திங்கள் - கெளரவ தெ.ஈஸ்வரனி உரையாற்றினார்
19.11.2)
அற்றைத் திங்கள் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமை யில் இலங்கைக்கான மொரிஷியஸ் நாட்டுக்கான தூதுவர் கெளரவ தெ.ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றினார். திரு.ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றும்போது, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு இறுதி நாள் விழா இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றபோது தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இந்த "அற்றைத் திங்கள்' நிகழ்வில் உரையாற்றக் கேட்டுக் கொண்டார். அதன்படி இங்கு உரையாற்று கிறேன் என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார்.
"எனது வாழ்க்கையில் நடத்த சில சம்பவங்களை கணத்த மனத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒருமுறை ஓர் இளம்பெனன் தனது பெற்றோருடன் என்னைச் சந்திக்க வந்தார். எத்தனையோ வேலைப் பழுவின் மத்தியிலும் அவர்களைச் சந்தித்தேன். அந்த இளம் பெண் என்னைக் கண்டதும், விக்கி, விக்கி அழத்தொடங்கினாள். தான் ஒருவனைக் காதலித்த தாகவும், அவன் தன்னை மனப்பேன் என்று உறுதி கூறி இருந்தான் எனவும், தான் இப்போது கர்ப்பமாயிருப்பதாகவும் அவன் தன்னை இப்போது சந்திப்பதை தவிர்த்து வருவதாகவும் கூறி அழுதாள். அவனுடன் தொடர்பு கொண்டு தங்களைச் சேர்த்து வைக்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். நானும் அவனைச் சந்தித்து, எவ்வளவோ முயற்சி செய்தேன். முடியவில்லை; அவன் என்னைச் சந்திப்பதைத் தவிர்த்தான். இளம் பெண்ணோ தவித்தாள். குழந்தை யும் பிறந்தது. அவனோ சொல்லிக் கொள்ளாமல் எங்கோ போய் விட்டான். அந்த இருவரையும் சேர்த்து வைக்க முடியவில்லையே என்ற சோகம் இன்றும் எனது மனதை வாட்டுகிறது. இப்படி எத்தனையோ சம்பவங்கள்!
மேலும், தான் எழுதிய சிறுகதையொன்றையும், தனக்குப்பிடித்த நயினாதீவுக் கவிஞர் ராமச்சந்திரன் எழுதிய பின்வரும் கவிதை யொன்றையும் கூறினார். நயினை ரீநாகபூசணி அம்மனின் கோயில் உட்சுவரில் இருந்த கவிதை இதோ:
Himm
-
(த்ெதி:சங்க செய்திமடல்"

Page 5
"எனக்கென்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை
எம்மினத்தார் வாழ்வொன்றே கருதவில்லை உனக்கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற
உண்மையை யான் ஒருபோதும் மறந்ததில்லை சினம்கொண்டு திங்கிழைக்கும் தீயர்தாமும்
சீலமுற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் தனக்கொருவர் ஒப்பில்லாத் தாயே - இந்த
தரனிதனில் சாந்தியையே தருவாய் நீயே!” தொடர்ந்து ஒரு சுவரஸ்யமான சம்பவத்தை கூறி தனது உரையை முடித்தார்,
ஒரு நாள் ஒரு புத்த பிக்கு என்னை அணுகினார். 'றம்பொடை ஆஞ்சநேயர் சிலை அமைத்தது தாங்களா?" என்று வினாவினார். "ஆம்" என்று கூறிய நான் "தமிழகத்திலிருந்து சிற்பிகளை அழைத்து அதனைச் செய்தேன்" எனக் கூறினேன். தாம் 68-12 அடி உயரமான கௌதம புத்தரின் சிலையொன்று குருநாகலில் அமைக்க இருப்பு தாகவும் அந்தச் சிற்பியின் பெயர் விலாசம் முதலானவற்றைத் தந்துதவுமாறும் கேட்டுக் கொண்டார். நானும் கொடுத்துதவினேன். பேலும் அவர் தாம் இந்தியா சென்று அந்த சிற்பியைச் சந்திக்க வேண்டுமென்றும் அதற்கு தன்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்றும், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை எடுத்துத் தருமாறும் பணிவாகக் கேட்டுக் கொண்டார். அதன் படியே நானும் செய்து எனது செலவி ேேய சென்னைக்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்தேன். ஒரு சதம் கைவசம் இல்லாத பிக்கு எவ்விதம் பல இலட்சம் பெறுமதி யான புத்தசிலை அமைக்கப்போகிறார் என்று எனக்குள் வியந்து கொண்டேன். ஆனால் அந்த பிக்குவோ, அக்கம் பக்கத்தவரிடம் இருந்து சிறிது, சிறிதாய் பணம் சேர்த்து சிற்பியை அழைத்துவந்து குருநாகலைக்கு அருகிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் 8-12 அடி உயரமான 125 இலட்சம் பெறுமதியுள்ள பெளத்த சிலையொன்று அமைக்கும் பணியை ஆரம்பித்து தற்போது அது முடிவடையும் தறுவாயிலுள்ளது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் எம்மால் முடியாத காரியம் என்று ஒன்றில்லை! நினைத்தால் எதையும் செய்துமுடிக்கலாம்!" என்ற அறிவுரையுடன் தமது உரையை முடித்தார் திரு.தெ.ஈளப்வரன். பெரியவர் ஒருவரின் நிறைவான உரை!
இலக்கியக்காம் 39
21. C. () இன்றைய நிகழ்வில் "சமகால இலக்கியக் கருப்பொருட்கள்
என்றும் தலைப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.க.உதயகுமார் அவர்கள் தலைமையில் சட்டத்தரணி எஸ்.எம்.என்.எஸ்.ஏ.மர்தும் மெளலானா அவர்கள் உரையாற்றினார்.
EERS Airgi திேகரிச்சங்கசெய்தி மல்)
 

பேச்சாளர் தனது உரையின் போது ஒரு சிக்கலான தலைப்பில் எனது பேச்சு அமைகிறது என்ற பீடிகையுடன் தமது உரையை ஆரம் பித்தார். இளம் சட்டத்தரணி மர்ஆம் மெளலானா அவர்கள் இன்றைய காலகட்டத்தில் நவீனம் என்ற பெயரால் இலக்கியம் பாழ்படுத்தப் படுகிறது; பெண்ணியம், போராட்டங்கள் என்ற பெயரால் இன்றைய இலக்கியம் திசை திருப்பப்படுகிறது. எனினும் முற்போக்கு எழுத் தாளர்கள், கம்யூனிச, மார்க்சீய எழுத்தாளர்கள் ஓரளவு கொள்கை ரீதியாக இலக்கியம் படைக்கிறார்கள் என்றும் தனது கவிதைகள் சிலவற்றையும் கூறிய பேச்சாளர் சினிமா இலக்கியம் இன்று ஆதிக்கம் செய்கிறது என்ற கருத்தையும் முன்வைத்தார்.
பின்வரும் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி தனது உரையை
நிறைவு செய்தார் அன்றைய பேச்சாளர்.
"மலையக இலக்கியங்களுக்கு தேசிய ரீதியில் சரியான இடம் அளிக்கப்பட்டுள்ளதா?”
"விவசாயிகள், தொழிலாளர்களை விட்டு விட்டு இலக்கியம் படைக்கமுடியுமா? என்றும்’ அகதிகளாக சென்று இலக்கியம் படைத்து விட்டு இதுதான் ஈழத்து இலக்கியம் என்று கூறமுடியுமா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்கள். திருவாளர்கள் அந்தனி ஜீவா, கே.விஜயன், சி.கந்தசாமி, ஆ.இரகுபதி பாலரீதரன் ஆகியோரின் கருத்துரைகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
நூலகம் (சிறுவர் பகுதி)
22. . . "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில்
செல்வி ஹேமபிருந்தினி ஜனகன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான நல்ல கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 447 25. அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் 'கண்ணதாசனின் கருத்துப் பொதிந்த பழைய பாடல்கள் தலைப்பில் இசை நிகழ்வு நடை பெற்றது. பொதுச்செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலரீதரன் அவர்கள் தலைமை வகித்தார்.
தலைவர் தமது முன்னுரையில் "ரசிகர்களான உங்கள் அனை வரையும் 20, 30 வயது குறையச் செய்ய எமது பாடல்கள் அமையும்” என்று குறிப்பிட்டார். பாடல்களை திருவாளர்கள் மு.சதானந்தன், க.சுந்தரமூர்த்தி நவகம்புர கனேஷ் ஆகியோர் இசைத்தார்கள். பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம், பாடல்களின் கருத்துக்கள் என்பன பற்றியும் எடுத்துரைத்தார்கள்.
திரு.பா.நாகேந்திரன், ராதா - வீரசிங்கம் ஆகியோரின் பின்னணி இசையுடனும், மண்டபம் நிறைந்த ரசிகர்களுடனும் இசைநிகழ்வு இனிதே நிறைவேறியது.
LLLLSLSLL LL LLLLLSSLLLLLSSL
Hau HTrum
琶歴エ

Page 6
--
இலக்கியக்காம் 40 28.01.2011 இலக்கியக்களம் நிகழ்வில் "திரு ஆராஜ்மோகன் (சக்தி அறிவிப் பாEர் தயாரிப்பாளர்) "கவிஞர் பிரமிள் ஒரு தரிசனம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக் குழுச் செயலாளர் திரு.மா,கணபதிப்பிள்ளை தலைமை தாங்கினார்.
பேச்சாளர் பற்றிய அறிமுக உரையில் தலைவர் அவர்கள் கண்டி பயில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (தமிழகம்) பட்டம் பெற்று விஜய் TV யில் அறிமுகமாகி தற்சமயம் இலங்கை சக்தி Fmஇல் அறிவிப்பாளராக பணிபுரிவதாக கூறினார். பேச்சாளர் இலங்கை - இந்திய நட்புறவுப் பாலமாக விளங்கி, அழகிய மொழிநடையில் கவர்ச்சிகரமாக உரையாற்றினார். அவர் கவிஞர் பிரமிள் என்ற தர்மு சிவராமலிங்கம் என்ற இலக்கியவாதி பற்றி எமது முத்த இலக்கிய வாதியும் எழுத்தாளருமான திரு.அந்தனி ஜீவா அவர்களின் 'பார்வையில் பதிவுகள்' என்ற நூலில் இவர் பற்றி கூறியுள்ளதை மேற்கோள்காட்டினார். இவர் வேலணையில் பிறந்து 56 வருடங்கள் வாழ்ந்து இந்தியாவில் இறையடி எய்தினார். திருகோணமலை இவர் கல்வி கற்ற இடமாகும். இவர் இயற்றிய 'வண்ணத்துப் பூச்சியும் கடலும்" என்ற கவிதையில் "நாளிரவு பாராமல் ஓயாமல் மலரும் எல்லையற்ற பூவில் ஓய்ந்து அமர்கிறது' என்றார்.
இவர் இயற்றிய கவிதை வரிகளிலும் ஒன்றைக் கூறும்போது "சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் திரா பக்கங்களில் எழுதிச் செல்கின்றது, ஒரு பறவையின் வாழ்த்து" என்பதாகும். மனிதா பிமானம் மிக்க கவிஞர் பிரமிள் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவித்து எழுதும் ஆற்றலைக் கொண்டவர். "மேல் நோக்கிய பயனம்”, “தெற்கு வாசல் காலண்டர்" என்பவை ஏனைய துளிகள். தனிநபர் ஆளுமை பிரமிள் அவர்களில் தெரிகிறது என்றார், எஸ்.ராமகிருஷ்ணா என்ற இணையத்தள எழுத்தாளர். நோயினையும், மரணத்தையும் கூட அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற அபூர்வ சிந்தனையாளர். இவரை அடையாளம் கண்டவர் தமிழகத்து எழுத்தாளர் கால கப்பிரமணியம் ஆகும். "சாமுண்டி" என்ற இவரது நூல் வெளியாகும் முன்பே மறைந்துவிட்டார். இவரது பெருமை உணர்ந்து தமிழக மக்கள் இவரைத் தேடி அணி திரண்டனர்” என்றார் ராஜ்மோகன்.
இரவது உரைபற்றி தலைவரும், திரு.க.சுந்தரமூர்த்தி, திருமதி பத்மா சோமகாந்தன், திரு.அந்தனி ஜீவா ஆகியோரும் பாராட்டிக் கருந்துரை வழங்கினர்.
விவாத அரங்கு - விவாத விழா
29 ()|.2Č)|| கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு கடந்த ஆண்டு யூன் மாதம் முதல் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான "விவாத அரங்கு' - விவாத விழாவாக தமிழ்ச் சங்கத் தலைவர்
rin ni
@T亡工
: :கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)
 

திரு.மு.கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. திரு.உதயகுமார் அவர்கள் நிகழ்வினை நெறிப்படுத்தினார். மங்கள விளக்கேற்றுதலில் லயன் ஹரிரத்னா அவர்களும் துணைவியார் வசந்தியும் பங்கு பற்றினர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி பத்மா சோமகாந்தன் பாடினார். தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தமது உரையில், "தமிழிலக்கிய மரபுகளில் விவாதமும் ஒன்று. 69 ஆண்டுகால வரலாறு கொண்ட கொழும்புத் தமிழ்ச் சங்கம் பல அறிஞர்களையும் பெருமக்களையும் எம்மிடையில் அடையாளம் கண்டுள்ளது. ஆளுமை, தலைமையேற்கும் பண்பு, மொழி ஆர்வம், சமூகப்பணி என்பவற்றில் முன்னின்று உழைத்தது எமது சங்கம் என்று கூறினார். பல விழாக்களை நடாத்தி
蠶 it
F 蠶 స్త్రీ 豎 * - * If .j، نهجين is i" + "|نتیجہ:
CGH, ,'''K''. SÅNG
憧°
நாடகங்களை மேடையேற்றி, கருத்தரங்குகளையும் நடாத்தி வரலாறு கண்டோம் என்றும் ஒயமாட்டோம்” என சூளுரைத்தார். தொடக்கவுரை ஆற்றிய கல்விக் குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் சிறந்ததொரு உரையை ஆற்றி அமோக கரகோசம் பெற்றார். "சடையப்ப வள்ளல்" போன்ற திரு.திருமதி.ஹரிரத்னாவை பாராட்டிப் பேசினார். மாணவர்களுக்கு நற்பண்புகள், தமிழ்க் கலாச்சாரம் பேணப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் திரு.செ.குணரத்தினம், திரு.சரவணமுத்து அவர்கள், தமிழவேள் திரு.இ.க.கந்தசுவாமி அவர்களின் பணிகளை பாராட்டிப் பேசினார். திருமதி.செ.குணரத்தினம், திரு.சரவணமுத்து அவர்களின் புதல்வி திருமதி நித்தியகலா தமிழவேள் கந்தசுவாமி அவர்களின் பெறாமகன் மா.சடாட்சரன் ஆகியோர் இந்த விழாவிற்கு தந்துதவிய பங்களிப்பு பற்றியும் விரிவாகக் கூறினார். தமிழர்களிடம் தங்கள் காலத்து வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைக்கும் பண்பு அவ்வளவு இருந்திருக்கவில்லை. இளம் தலைமுறைக்கு நாம் எமது வரலாற்றினை எழுதி வைத்தல் வேண்டும். நம்முடைய இளைய பரம்பரையினரிடம் தமிழ்மொழி, இந்துசமயம், சமூக விஞ்ஞானம் போன்ற துறைகளில்

Page 7
நாட்டம் குறைவடைந்து வருகிறது. பெற்றோர், ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்துதல் வேண்டும். வெறும் விஞ்ஞானம், கணனி, மருத்துவம், பொறியியல் துறைகள் மட்டும்தான் அறிவு என எண்ணக் கூடாது. நடை, உடை, பாவனைகளில் தமிழர் கலாச்சாரம் மிளிர வேண்டும் என்று வகையில் றோயல் கல்லூரி பிரதி அதிபர் திரு.மா,கணபதிப்பிள்ளை அவர்கள் உரையாற்றினார்.இறுதி விவாத அங்கிற்கு நடுவர்களாக, இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை வளர்மதி, சட்டத்தரணி மர்ஆம் மெளலானா, எழுத்தாளர் மதுசூதனன், செல்வி சற்சொருபவதி நாதன், ந.காண்டீபன் ஆகியோர் பணியாற்றினர். விவாதத்தின் தலைப்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்பேசும் மக்களை பிரதி நித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளின் போக்கு சரியானதா? அல்லது தவறானதா? (சரியற்றவையா) என்பதாகும். இதில் சரியானது தான் என்று புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மாணவர்களும், தவறானது என்று
霄
" , ,:1
臣、 姆 :م
றோயல் கல்லூரி மாணவர்களும் விவாதத்தில் ஈடுபட்டனர். மொத்தமாக கொழும்பில் கலந்து கொண்ட 9 பாடசாலை அணிகளில், இவ்விரு அணிகளுமே இறுதி அரங்கிற்கு தெரிவு செய்யப்பட்டனர். புனித ஆச்ர்வாதப்பர் கல்லூரி அணி அ.கினோஜ் பீற்றர் தலைமையிலும் றோயல் கல்லூரி அணி இ.அருணோதயன் தலைமையிலும் கலந்து கொண்டனர். முதலில் தமிழர் பிரச்சினை என்றால் என்ன? தமிழ் கட்சிகளின் போக்குகள் எவை? என்பவை பற்றி புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணித் தலைவர் விளக்கினார். தமிழக் கட்சிகளின் போக்கு காரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது என்றார். றோயல் கல்லூரி அணித் தலைவரோ, "எமது பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் சரியாக அடையாளப்படுத்தப்படவில்லை என்று கூறினார். இருவரும் அதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினர். அதன் பின்பு இரு
கல்லூரிகளிலுமிருந்து தலா மூன்று மாணவர்களும் தமது தரப்பு விவாதங்களை முன்வைத்து காரசாரமாக உணர்வு பூர்வமாக வாதிட்
:ேகிெரமித் தமிழ்ச்சங்க
 
 
 

டனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் இணைந்து பணியாற்றி தமிழர் உரிமைகளைப் பெற முடியும் என புனித ஆசிர்வாதப்பர் கல்லூரி மாணவர்கள் வாதாடிய வேளையில், முறையான அரசியல் தீர்வு பற்றிய முடிவினை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ முறையாக முன்வைக்கவில்லை என தமிழ்க் கட்சிகளைச் சாடினார்கள். றோயல் மாணவர்கள். கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்களின் சிந்த னையை கிளறிச் செல்லும் வகையில் சிறப்பாக அமைந்தது விவாத மேடை, 0ே ஆண்டுகால எதிர்ப்பு அரசியல் தமிழர்களுக்கு எதையும் பெற்றுத்தரவில்லை என புனித ஆசிர்வாதப்பர் கல்லூரியினர் கூறிய வேளையில், சுயநல அரசியல் வாதிகளினால் தமிழர்களுக்கு எதையும் பெற்றுத் தர முடியாது என்பதை றோயல் மாணவர்கள் ஆணித்தரமாக கூறினார். இறுதியில் றோயல் மாணவர்கள் வெற்றி பெற்றனர். இறுதி அரங்கில் சிறந்த விவாதியாக புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணித் தலைவர் அ.கினோஜ் பீற்றரும் முழுமொத்தமான விவாத மன்னனாக றோயல் கல்லூரி அணித்தலைவர் இ.அருணோதயனும் விருது வழங்கிப் பாராட்டப்பட்டனர். பங்குபற்றிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. பரிசில்களை அமரர் செ.குணரத்தினத்தின் துணைவியாரும், அமரர் தமிழவேள் கந்தகவாமி அவர்களின் பெறா மகன் சடாச்சரன் அவர்களும், அமரர் சரவணமுத்து மாமா அவர்களின் மகள் நித்தியகலாவும், தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதனும், பிரதமவிருந்தினர் திரு திருமதி என்.ஹரிரத்னா அவர்களும் வழங்கிச் சிறப்பித்தனர். முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 130பேர் வருகைதந்ததுடன், ஆசிரியர் நந்தகுமார் அவர்களும் மாணவர் தலைவன் லோகேஸ் வரனும் உரையாற்றினர். பிரதம விருந்தினர் திரு.ஹரிரத்னா அவர்கள் வருகை தந்த மாணவர்களின் செலவுக்கென ரூ.10,000/= பன உதவி வழங்கி கெளரவித்தார். விவாத அரங்கின் மூன்றாவது பரிசு இராமநாதன் இந்து மகளிர் அணிக்கு வழங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத் தின் துணைச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். தமிழ் வாழ்த்துடன் விழா இரவு 8.30 மணியளவில் நிறைவெய்தியது.
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல் ), C12O. அன்று ஆரோக்கிய வாழ்வுக்கான கருத்தரங்கில் "ஆரோக்கிய
விருத்தியில் - எமது இருதயத்தைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலை மையில் காலை 9.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது.
முதலில் உரையாற்றிய வைத்திய கலாநிதி அனுஷ்யந்தன் அவர்கள் "இருதயம் மனித வாழ்வில் வசிக்கும் இடம் பற்றியும், அன்பு இருதயத்தில் இருந்து வருவதால் நாம் அதனைப் பாதுகாக்க
i

Page 8
வேண்டும்" என்றார். இணைப்பாளர் திரு.வைத்தீஸ்வரன் அவர்கள் பேசும்போது "உழைப்பு உழைப்பு என்று அலையும் மக்கள் இருதயம் இறுக்கிய பின்பு தான் வைத்தியரிடம் ஒடுகின்றனர்" என்றார். வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்கள் இருதய நோய்கள் பற்றியும், பக்க பின்விளைவுகள் பற்றியும் விவரணப்படங்களுடன் ஒரு மணி நேரம் பயனுள்ள பல விடயங்களை வலியுறுத்தி உரையாற்றினார். இருதய சுருக்கம், விரிவடைதல், இருதய உள் சுற்றோட்டம், முடியுரு நாடிகள், கொழுப்புப் படிவுகள், உணவுப் பழக்கங்களினால் ஏற்படும் வியாதிகள், நெஞ்சு வலி ஏற்படும் தருணங்கள், முதலுதவிகள் உடல் நிறை குறைப்பின் அவசியம், நாம் உட்கொள்ள வேண்டிய உளவு வகைகள், இருதய நோய் சிகிச்சை முறைகள். Baloon Agiplasty, By-Pass graft என்பவை பற்றி மிகத் தெளிவாக அற்புதமாக உரை நிகழ்த்தினார். அதன் பின்பு திரு.ராஜேந்திரன் அவர்கள் ஆழமான சுவாசம், மலச்சிக்கலும், மனச்சிக்கலும் பற்றிக் கூறி மூச்சு ப.பிற்சி வகைகளைச் செய்து காட்டினார். சுவாசக் குழாய் அமைப்பு பற்றியும் கூறினார். இந்நிகழ்வு திரு.அ.பாலச்சந்திரனின் தமிழ் வாழ்த்துடன் பகல் 12 மணிக்கு நிறைவெய்தியது.
வெகுஜனத் தொடர்பியல் ஆதாரப் பயிற்சி நெறி
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சமூக மேம்பாட்டுக்குழு வெகுஜனத் தொடர்பியல் ஆதாரப் பயிற்சி நெறியை, இளம் ஊடகவியலாளர்களை இத்துறைக்கு தகைமை பெறவென மார்ச் மாதத்தில் 12, 13ஆம் திகதிகளிலும் 19, 20ஆம் திகதிகளிலும் 26, 27ஆம் திகதிகளிலும் ஏப்ரல் மாதத்தில் 2, 3ஆம் திகதிகளிலும் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை நான்கு வாரங்களுக்கு நடத்தவிருக்கின்றது. விண்ணப்பக் கட்டணம் ரூபா.1500/=.
H
இர்ைகையர்கோனி நினைவுச் சிறுகதைப் போட்டி
இ1ேங்கையின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான அமரர் இலங்கையர்கோனின் நினைவாக இப்போட்டி நடத்தப்படவுள்ளது.
போட்டிக்கான சிறுகதைகளை 2011 மார்ச் 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.
சிறுகதைகள் அனுப்ப வேண்டிய முகவரிஅமரர் இலங்கையர்கோன் நினைவுச் சிறுகதைப்போட்டி "இலக்கியக் குழு' கொழும்புத் தமிழ்ச் சங்கம் இல7, 7ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு - 06.
C15 *寸 முேத்தமிழிச் சத்க்)

H --- لتكتين مثقفين ليس "
2ύίίεμε ஆண்டுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்
தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கு முகமாக, குறித்த சில துறைகளுக்கான போட்டிகளை இவ்வாண்டில் நடத்தவுள்ளது. இத்துறையில் கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2011 மார்ச் 31 ஆகும். ஆக்கங்களை பொதுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல7, 87ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
SSLSS S LSSLLS LSSLSLSSMSS
திருக்குறள் அறிவுப் போட்டி 2011
மாணவர்களின் தூய தமிழ் அறிவு, அறவாழ்வு, ஒழுக்கம் முதலான பனன்புகளையும், மனனம், எழுத்து, பேச்சு, கிரகித்தல் ஆகிய திறன்களையும் விருத்தி செய்து மேம்படுத்தலை நோக்கமாகக் கொண்டு இப்போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகள் அகில இலங்கை மட்டத்தில் பாடசாலை மாணவர் கருக்கிEடயில் பாலர் பரிவு, கீழ்ப் பிரிவு, மேல் பிரிவு நடைபெறும். தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்களின் குடும்பத்தவர்கள் தவிர்ந்த மாணவர்கள் 2011இல் கல்விகற்கும் வகுப்புகளுக்குரிய பிரிவில் பங்குபற்றலாம். ஒரு மாணவன் தனது பிரிவுக்குரிய ஒரு போட்டியில் மட்டுமே பங்குபற்றலாம். பாடசாலை அதிபரூடாகவே விண்ணப்பிக்க முடியும். விண்ணட்பங்கள் 2011 பங்குனி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் திருக்குறள் அறிவுப்போட்டி 2011 பொதுச்செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இ0.7, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06 என்ற முகவரிக்கு அறுப்பப்படுதல் வேண்டும். "
LL L LLLL LL LL LLL L S LLLL LL L LS LL LL LL L LL L LL LL LL LL LL L LL LL LL L LL LL LLLL LLL LLLL L LL LLL L
தொகுப்பாளர்- கந்தசாமி மகாதேவா - வடிவமைப்பு:- உறுப்பான்மைக்குழுச் செயலாளர் திருமதி.கு.சத்தியஜோதி

Page 9
| اح
السيد ستستدعت الإ{
== P +
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
தமிழ்ச் சங்கத்தின் சேவைகள்
ஏறத்தாள 50,000 தமிழ் நூல்கள் கொண்ட நூலகம் சிநுவர் நூலகம் 3. தினசரி தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் வாசிக்கும் அறை - காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை சி. மானவர்கள் கல்வி கற்க வசதியாக படிப்பக மண்டபம் 5. மூன்று மண்டபங்கள் - 1. சங்கரப்பிள்ளை மண்டபம்
2. விநோதன் மண்டபம் 3. மாலதி மணிடபம் .ே தககுவதற்கான ஆறு அறைகள்.
(மேலும் 3ஆம் மாடியில் ஐந்து அறைகள் அமைக்கப்பட்டு
வருகின்றன சித்திரைத் திங்களில் திறக்கப்படும்)
மு.கதிர்காமநாதன் ஆ.இரகுபதி பாலமுரீதரன் செதிருச்செல்வன்
L LSL S SS SS SSL SSL SS SLS LS LS LLLLL LLL SL LSLS SS SS SS SSLLLLSL SLS LSL LL LL LSL LS SSSLS S SLL L S SLS S SSSSS SLSLLLLLSLCLL LLL LLL S SS SL SSSSLLLLSS CCSCS SSSSS SSSCSCSSSS LSLSSSLLSSLL LLLLCSLLSLLLLLSCSCSLLLLLSCLCCLLSS
தலைவர் பொதுச்செயலாளர் நிதிச்செயலாளர்