கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதி கிரேக்க மெய்யியல்

Page 1
a .بعد ரசகரும மொழித் திணை
இலங்கை அரசாங்க அச்சகத்
 

கள வெளியீட்டுப் பிரிவினரால் திற் பதிப்பிக்கப்பட்டது

Page 2

ஆதி கிரேக்க மெய்யியல்
1965

Page 3

ஆதி கிரேக்க
மெய்யியல்
யோன் பேணற்று M.A., LL.D., F.B.As
முன்னைநாட் கிரேக்க மொழிப் பேராசிரியர்* சென். அந்துருசு பல்கலைக் கழகம்
தமிழாக்கம் செ. வே. காசிநாதன்
SV Kasynathan
அரசகருமமொழித் திணைக்கள வெளியீட்டுப் பிரிவினரால்
இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது.
2一R,10269一1,525(6/63)

Page 4
முதலாம் பதிப்பு 1965
EARLY GREEK PHILOSOPHY
by JOHN BURNET
M.A., LL.D., F.B.A.
Emeritus Professor of Greek, University
of St. Andrews
Translated and Published by The Government of Ceylon
by arrangement with ADAM & CHARLEs BLACK, LONDON
இலண்டன், ஆதாம் சாள்சு பிளாக்கு நிறுவனத்தாரின் இசைவு பெற்று இலங்கை அரசாங்கத்தாரால் தமிழில் வெளியிடப்பட்டது.
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்தார்க்கே.

தமிழ்ப்பதிப்புக்கு முகவுரை
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பயிலும் மாணுக்க ரின் தேவைகளை நிறைவேற்றுமுகமாக, இத்திணைக்களம் மொழி பெயர்த்து வெளியிடும் மெய்யியல் நூல்களுள் “ஆதி கிரேக்க மெய்யியல் ” என்னும் இந்நூல் முதலாவதாகும். இது, ஆங் கில நூலின் நான்காம் பதிப்பின் மொழிபெயர்ப்பு.
இதிகாசங்களிலிருந்து ஆரம்பித்து அணுவாதிகள்வரை கிரேக்க மெய்யியல் வரலாற்றை எடுத்துக் கூறும் இந்நூல், பல்கலைக் கழகக் கலைத்துறை முதலாண்டு வகுப்பில், கிரேக்க மெய்யியல் பயில்வோருக்கு விதிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முற்பாதியில் இடம்பெறும் விடயங்களனைத்தையும் விரிவாக ஆராய்வதாய் அமைந்துள்ளது. தேலிசு முதல் லியூகிப்போசுவரை மெய்யிய லில் ஈடுபட்ட பிரதான சிந்தனையாளர்கள் யாவரைப் பற்றியும், இப்போன், இடையோசினிசு போன்றேர் பற்றியும் வரலாற்று ரீதியாக ஆராயப்பட்டிருப்பதோடு, இச்சிந்தனையாளர்களுடைய கொள்கைகளை அறிவதற்கு ஆதாரங்களாகப் பயன்பட்ட நூற் பகுதிகளும் இந்நூலிற் றரப்பட்டுள்ளனவாதலால், ஆதி கிரேக்க மெய்யியல் பற்றி விரிவாக அறிந்து கொள்ள விழைவோர்க்கும் இந்நூல் பயன்படும்.
ஆங்கில நூலில், கிரேக்க மொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட பகுதிகளில், மொழிபெயர்ப்பாளர் குறிப்புக்களாக ஆங்காங்கே காணப்பட்ட சில கிரேக்க ம்ொழிக்குறிப்புக்களும், கிரேக்க பதங்களும், தவிர்க்கப்பட்டுள்ளன ; அவை தமிழ் நூல் பயில் வோருக்குப் பயன்படா.
நூலின் இறுதியில் ஆங்கில அறிவுள்ள மாணுக்கருக்கும் விரி வுரையாளர்க்கும் பயன்படக்கூடிய அரும்பத அகரவரிசை சேர்க்கப்பட்டிருக்கின்றது.
இப்புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிடும் உரிமையை அளித்த இலண்டன், ஆதாம் சாள்சு பிளாக்கு நிறுவனத் தாருக்கு இத்திணைக்களம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
அரசகரும மொழித்திணைக்களம், நந்ததேவ விசயசேகர,
(வெளியீட்டுப் பிரிவு) ஆணையாளர்.
கொழும்பு 7.

Page 5
நான்காம் பதிப்பைப் பற்றி ஒரு குறிப்பு இப்பதிப்பு உண்மையில் மூன்ரும் பதிப்பின் புதிய அச்சீடே யெனினும், சில திருத்தங்களைச் செய்தற்கு இவ்வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டுள்ளோம். சில அச்சுப்பிழைகளும் தவறுகளும் நீக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தனது பிரதியிற் குறித்துவைத்தி ருந்த ஒரு பிழையும் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. மேலதிகமாக ஒரிரு குறிப்புக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
சென். அந்துரூசு, W. L. Georgidir.
Lorij, 1930.

மூன்றம் பதிப்பிற்கு முகவுரை
இந்நூலில் மலிந்துள்ள குறைபாடுகளை, அதன் ஆசிரியன் என்ற முறையில் நான் நன்கு உணர்ந்துள்ளேன். எனினும் இந்நூல் சேர்மனிய மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும்? மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும், தற்போது இதன் மூன்ருவது பதிப்பை வெளியிடுதல் அவசியமாகிவிட்டது என் பதையும் நோக்கும்போது, இது ஏதோ ஒரு வகையிற் பயன் பட்டிருக்கவேண்டும் எனும் எண்ணம் எற்படுகிறது. பல்கலைக் கழக ஆசிரியர்களது ஓய்வுநேரம் பெருமளவிற்குக் குறைக்கப் படுவதற்கு எதுவாயிருந்த யுத்த கால நெருக்கடிகளுக்கிடை யேயே இம்மூன்றவது பதிப்புத் தயாரிக்கப்பட்டது. எனது விருப்பத்திற்குமதிகமாக இப்பதிப்பின் வெளியீடு காலந்தாழ்த் தப்பட்டதற்கும் இந்நெருக்கடியே காரணமென்க.
ஆதி அயோனிய சிந்தனையாளரே, நம்மால் இன்று விஞ்ஞா னம் என அழைக்கப்படும் புதிய துறையைத் தொடக்கிவைத் தார்களெனவும் அன்றிருந்து இன்றுவரை ஐரோப்பாவில் அறிவு வளர்ச்சி அவர்கள் வகுத்த வழியிலேயே சென்று கொண்டிருக்கிறது எனவும் நான் ஈண்டு காட்ட முயன்றுள் ளேன். ஆதலினற்றன், நான் வேறேரிடத்திற் குறிப்பிட்டது போல், விஞ்ஞானம் என்பதற்கு “கிரேக்கர் காட்டிய வழியிற் சிந்தித்தல் ” என்பது போதிய விளக்கமாக வமைகிறது. அன்றி யும், இதே காரணத்தினற்றன், கிரேக்கர்களின் செல்வாக்குக் குட்படாத மக்களிடையே விஞ்ஞானம் ஒருபோதும் வளர்ச்சி யடையவில்லை.
இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன்னர், “ஆதி கிரேக்க மெய் யியலின்" முதற் பதிப்பு வெளியிடப்பட்ட காலத்தே, கிரேக்க மெய்யியல், பொதுவாக இங்கிலாந்தில் எகேலிய கண்ணுேட்ட நிலையிலிருந்தே ஆராயப்பட்டதாதலால், எனது நூலிற் காணப் பட்ட முடிபுகளிற் பல, முரணுரைகளாகக் கருதப்பட்டன. ஆனல் இம்முடிபுகளிற் சில இன்று பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எனினும் என்னுடைய முடிபுகளுள் இரண்டு இன்றும் பலருடைய எதிர்ப்பையே பெறுகின்றன. முதலாவதாக, பார்மனைடிசுவைச் “ சடவாதத்தின் தந்தை ”
Die Anfange der griechischen Philosophie, aus dem Englischen ubersetzt von Else Schenkl (Berlin, Teubner, 1913).
*L'Aurore de la Philosophie grecque, edition francaise, par Aug. Reymond (Paris, Payot, 1919).

Page 6
என நான் அழைக்கத் துணிந்தேன் ; ஆனல் இன்னமும் சிலர் அவரை ஓர் கருத்துவாதி எனக் கொள்கின்றனர் (கருத்து வாதம் எனும் இக்கால வழக்கு, கிரேக்க மெய்யியலைப் பற்றி எழுதுவோராற் கையாளப்படுவது தவருண விளக்கங்கள் எற் படுவதற்கு எதுவாகிறது). “ புலன்களினல் உணர்த்தப்படும், சடப்பொருளாலான இவ்வுலகமே உண்மையானது எனும் கொள்கையே சடவாதத்திற்கு மையமாயமைவது ” என்பதே இவர்கள் எனது கருத்தை மறுப்பதற்குக் காட்டும் நியாய மாகும். புலன்களினல் உணர்த்தப்படும் உலகின் உண்மை யைப் பார்மனடிசு எற்க மறுத்தாரென்பது தெளிவு எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவர் அவ்வாறு மறுத்தா ரென்பதில் எவ்வகை ஐயத்திற்குமிடமில்லையென ஒப்புக்கொள் கிறேன். அன்றியும் இவர்கள் குறிப்பிடும் பொருளில் நான் பார்மனடிசுவை ஓர் சடவாதியென அழைப்பேனேயாகில், அது விழல் நியாயமாகும் என்பதிலும் ஐயமில்லை. ஆனல் எனது விளக்கத்தின்படி, சடவாதியின் “ சடப்பொரு ’ளானது புலன் களால் உணரப்படக்கூடிய பொருளேயல்ல ; “ ஆவி ’ யென் பதைப்போல, அதுவும், கருத்தளவாக மட்டும் உணரக்கூடிய வொன்றே. புலன்களுக்குட்படாத இச்சத்துப்பொருளை விளங்கிக் கொள்வதற்குச் செய்யப்பட்ட முதலாவது தெளிவான முயற்சி யின் பலனே பார்மனைடிசுவின் “ உள்பொருள். ” இதுவே எனது நூலில் நான் நிறுவ முயன்றிருக்கும் முக்கிய கருத்தென லாம். அத்துடன் அரித்தோதில், தியோபிறகத்தோசு ஆகியோரது கூற்றுக்களோடும் நன்கு பொருந்தும் வகையில் ஈலிசவாதத்தி லிருந்து பெறப்பட்டதே அணுவாதம் என நான் நிறுவமுயன் றுள்ளமையே (பக். 344 sgg.) எனது வாதத்தின் மிக முக்கிய மான பகுதியெனலாம். அணுவாதம் சடவாதத்தினுட் சேர்வதே என்பது யாவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதொன்றே. ஆனல் இவ்வாதம் தவருனல், நான் இவ்விடயத்தை ஆராய்ந்துள்ள முறைமுழுவதுமே தவறென ஒப்புக்கொள்ள வேண்டும்.
இன்னும் எற்றுக்கொள்ளப்படாத, என்னுடைய மற்ற முரணு ரையெனப்படுவது, மெய்ப்பொருளானது உருவேயொழிய சடப் பொருளல்ல வென்னும் கொள்கை-அதாவது பிளேட்டோ வினது கொள்கை-தெளிவுபெற அமைக்கப்பட்டது பிளேட்டோ வின் கழகத்தின் காலத்திலேயேயெனினும் பைதாகரசவாதிக ளின் காலத்திலேயே அஃது தோன்றிவிட்டதெனவும் சோக்கிரதர் ஏலவே அதனை அறிந்திருந்தார் எனவும், நான் நிறுவ முயன்றமையே. பிளேட்டோவின் சம்வாதங்களுக்கு விரிவான
W. T. Stace, A Critical History of Greek Philosophy (London, 1920), pp. 46 Sqq.

s
வோர் புனர்விளக்கம் தருவதன் மூலமே இதனை யாவரும் ஏற்கும் வகையில் நிறுவமுடியும் என்பது எனக்குத் தெளிவாகி யுள்ளதாதலால், நான் இப்போது பிளேட்டோவின் சம்வாதங் களைத் தெளிவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். பத்தொன் பதாம் நூற்ருண்டில், இச்சம்வாதங்களுக்கு அளிக்கப்பட்ட விளக் கம், ஆதாரமற்றனவும், நம்புதற்கரியனவுமான எடுகோள்கள் பலவற்றைக் கொண்டிருந்தது. இங்கு நான் இவ்வெடுகோள் களைப்பற்றி மேலும் கூறுதல் சாத்தியமில்லை. ஆனல் விரைவில் இதனை விரிவாக ஆராய்வதற்கு வேண்டிய சந்தர்ப்பம் ஏற் படும என நம்புகிறேன்.
யோ. பே.
சென். அந்துரூசு, gર્ટઝ), 1920.

Page 7

உள்ளுறை
பக்கங்கள்
முன்னுரை o s - 33
ஆதாரங்கள் பற்றிய குறிப்பு ... 34 - 43
அத்தியாயம் 1 மைலிசிய மரபு . . 44-83
s 2 விஞ்ஞானமும் சமயமும் .,84一134
3 எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு .. 135 -176
4 ஈலிய நாட்டுப் பார்மனைடிசு . . .77 - 205
5 அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 206-263
多复 6 கிளாசொமெனை நகரத்து அனக்ச
கோரசு .. . . 264 - 289
ps 7 பைதாகரசவாதிகள் ... 290 - 319
9 8 இளைய ஈலியவாதிகள் ... 320-340
s 9 மிலட்டசு நாட்டு லியூகிப்போசு ... 34 - 36l
10 சமரசவாதமும் பிற்போக்கும் ... 362-374
அரும்பத அகரவரிசை ... 375 - 390
அகரவரிசை ... 393 - 402

Page 8

முன்னுரை
ஆதி கிரேக்க மெய்யியல்
1. உலகு பற்றிப் பாரம்பரியமாக வழங்கி வந்த கொள்கை ஆதி கிரேக்க களும், வாழ்க்கையை ஒழுங்குபடுத்தற்கு உதவிய வழமையான மெய்யியலின் விதிகளும், வழக்கொழிந்து போனதின் பின்னரே, இயற்கை அண்டவியற் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் ஆராயும் மெய்யியற் சிந்தனை" முறைகளினல் மட்டுமே திருப்தி செய்யக்கூடிய தேவைகளைக் கிரேக்க மக்கள் உணரத் தொடங்கினர் எனலாம். ஆனல் இத்தேவைகளை அவர்கள் ஒரே முறையில் உணர்ந்து கொண்ட னர் எனக் கூறுவதும் பொருந்தாது. இயற்கை பற்றிய பழமைக் கருத்துக்கள் முற்ருக வழக்கொழிந்து போகும்வரை, மனிதனது ஒழுக்கம் பற்றிய பண்டைய விதிகளின் பொருத்தம் பற்றியும் யாருக்கும் அதிக சந்தேகம் ஏற்படவில்லை ; இக்காரணத்தினல், அக்காலத்து முதன் முதலில் மெய்யியலில் ஈடுபட்டோர் யாவ ரும் தம்மைச் சுற்றியுள்ள உலகுபற்றி ஆராய்வதிலேயே பெரி தும் ஈடுபட்டனர். காலப்போக்கில் எற்பட்ட புதிய தேவை ஒன்றைப் பூர்த்தி செய்வதற்கென அளவையியல் உருவாக்கப் பட்டது. அண்டவியல்பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து பொது மக்களது நம்பிக்கைகளுக்கும் விஞ்ஞானிகளது முடிபுகளுக்கு மிடையே இருந்த பெரிய வேற்றுமைகள் வெளிக்கொணரப் பட்டபோது, அதுவே விரைவில் தீர்க்கப்படவேண்டியவோர் பெரிய பிரச்சினையாயிற்று. அன்றியும் இதன் காரணமாக மெய்யிய லாளர்கள் பலரும், சாதாரண மக்களது நம்பிக்கைகளுக்கெதி ராகத் தமது முரணுரைகளை நிறுவுவதற்கு வேண்டிய முறை களைக் கற்கவேண்டியிருந்தது. இதற்குச் சற்றுப் பிந்தியகாலத் தில், அளவையியல் பற்றி எற்பட்ட ஆர்வம் காரணமாக, அறி வின் தோற்றம், வாய்ப்பு என்பனபற்றிய விணக்கள் எழுந்தன; ஏறக்குறைய இதற்குச் சமமான காலத்தில் பாரம்பரியமான ஒழுக்கமுறை சீர்குலைந்து போகவே, ஒழுக்கவியல் தோன்றியது. அளவையியலும், ஒழுக்கவியலும் தோன்றிய காலத்திற்கு முந் திய காலம் இவ்வகையில் ஒர் தனித்தன்மையுடையதாகையால் நாம் அதனைப் பற்றித் தனியாக ஆராய்தல் பொருந்தும்."
1. தெமோகிரித்தோசு, இங்கு குறிப்பிடப்பட்ட காலப் பகுதிக்குப் பிந்திய வேரே என்பது கவனிக்கப்படலாம். சோக்கி:தருக்குச் சமகாலத்தவரும் அவரி லும் இளைஞருமான இவரை சோக்கிாதருக்கு முந்தியோரோடு சேர்த்து ஆரா யும் பொதுவான வழக்கம், வரலாற்று வளர்ச்சியையே தெளிவற்றதாக்கு

Page 9
உலகம் பற்றிய umruTuhLuiñ?uu கருத்து
2 ஆதி கிரேக்க மெய்யியல்
II. விஞ்ஞானமும், மெய்யியலும் தோன்றியது, உலகம் தோன்றியதற்கு நெடுங்காலத்தின் பின்னரே என்பதை நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். ஈசியன் கடலையொட்டிய பகுதிகள் புதிய கற் காலத்திலிருந்தே உயர்ந்தவோர் நாகரிகத்திற்கிடமாக விளங்கின. எகிப்திய, பாபிலோனியநாகரி கங்களிலும் பழமையான இந்நாகரிகம் பல முக்கிய விடயங் களில் அவற்றிலும் சிறப்புடையதாக விருந்தது. இவர்களது வளர்ச்சி சிறிது காலத்திற்குத் தடைப்படுவதற்குக் காரணமா யிருந்தவர்களான, நாகரிகம் குறைந்த வடவர்களிடமிருந்தும், இம்மக்கள் புதியனவும், முக்கியமுடையனவுமான சில பண்பு களைப் பெற்றனராயினும், கிரேக்க நாகரிகம் என்பது பெரு மளவிற்கு ஈசிய நாகரிகத்தின் மறுமலர்ச்சியும் தொடர்ச்சியுமே என்பது நாடோறும் தெளிவாகிக்கொண்டு வருகிறதெனலாம். மத்தித்தரைக் கடற் பகுதிகளின் ஆதிவாசிகளின் தொகை அங்கு வந்து நுழைந்தவர்களினது தொகையிலும் மிக அதிக மாயிருந்திருக்க வ்ேண்டுமென்பதும் சில தலைமுறைகளுக்குள் ளாகவே அவ்வாறு வந்து குடியேறியவர்கள் யாவரும் இவர்க ளோடு இரண்டறக் கலந்திருக்கவேண்டுமென்பதும் நன்கு புலப் படுகிறது. இவ்வாறு நடைபெறுவதைத் தடுக்க முனைந்த பாட்டா போன்ற ஒரிரு நகரங்களைத்தவிர ஏனைய விடங்களிலும், இவ் வாறே புதிதாக வந்தோர் ஆதிவாசிகளோடு சேர்ந்து கொண் டனர் எனலாம். எவ்வாறயினும் கிரேக்க கலைகள், கிரேக்க விஞ்ஞானம் என்பவற்றிற்கு, இப்பகுதியின் ஆதிவாசிகளான பழைய சமூகத்தினருக்கே நாம் கடமைப்பட்டிருக்கிறேம்.
கின்றது. புரொதாகரசுவுக்குப் பிந்தியவரான தெமோகிரித்தோசு, அறிவியல், ஒழுக்கம் என்பன பற்றித் தமது முன்னேரை எதிர்நோக்கியனவற்றிலும் பெரிய பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது (See Brochard, “Protagoras et Democrite,” Arch. ii. p. 368).
See Sir Arthur Evans “The Minoan and Mycenean Element in Hellenic Life” (J. H. S. xxxii. 277 Sqq.), fög|Tagib LS6öra u Lorrap sepů பட்டுள்ளது (ப. 278): புதிய மலர்ச்சியின்போது நம்முன்னே எதிர்ப்படுபவர்கள் மஞ்சட்டோலையுடைய ஆக்கியர்களும் வெளுத்த தோலை யுடைய பிறருமான வடவர்களல்ல. நாம் இங்கு காண்பவர் கருமயிருடைய, கபில நிறத்தினரான வோர் சாதியினரே யென்க... முந்திய கால மினேவ, மைசீனிய சுவரோவியங் களிலிருக்கும் உருவங்களிலிருந்தே இவர்கள் எமக்கு முதலில் அறிமுகமா கின்றனர்”. ஆனல் வரலாற்றுக்கால கிரேக்கர்கள் " மினேவர் " களே என்பது உண்மையானல், சேர். ஆர்தர் இவான்சு "மினேவர்" களைக் கிரேக்கர் என அழைக்கத் தயங்குவது எதற்காக ? ஆக்கியர்களும், டொரியர்களும் கிரேக்கர் என அழைக்கப்படுவதற்கு எவ்வகை விசேட உரிமையையும் பெற்றவர்களல்ல ; எனெனில் கியூமேயுக்கு இப்பெயரை முதலிற் கொணர்ந்த பொயோத்தியா நாட்டு கிரேசுகள், இவர்களிலும் பழமையான சர் சாதியினர். “ எலனிய நாகரிகத்திற்கு

முன்னுரை 3
அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசுவைத் தவிர ‘நாம் இந் நூலில் ஆராயப்போகும் என மெய்யியலாளர்கள் யாவரும் அயோனியர்களே யென்பது குறிப்பிடத்தக்கதாகும். எம்பி டோக்கிளிசு அயோனியரல்ல வென்பதும் தோற்றத்தளவிலேயே யொழிய உண்மையிலல்ல வெனலாம். அக்கிரகாசு நகரம், சீலா எனும் ருேடிய குடியிருப்புப் பகுதியிலிருந்தே தோற்று விக்கப்பட்டது. ருேடிசு, டொரிய பகுதியென்பதே அங்கீகரிக்கப் பட்ட கருத்தாயினும், நெடுங்காலமாக ஈசிய நாகரிகத்திற்கு அதுவோர் கேந்திர நிலையமாக விளங்கியது. ஆகவே சீலாவிற் சென்று குடியேறியவர்கள், புதிய டொரிய மேன்மக்கள் கூட்டத் தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதுவதிலும் பார்க்க, பழைய குடிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கருதுவதே அதிக பொருத்த முடையதெனலாம். பைதாகரசு, தமது கழகத்தை ஆக்கிய நகரமான குரோட்டனில் நிறுவினரெனினும், அவர் சாமோசு வைச் சேர்ந்த அயோனியரே.
ஆகவே உலகைப்பற்றி நன்கு ஆராய முனைந்த அக்கால கிரேக்கர்கள், முன்பு யாருமே முயற்சிக்காத ஒரு பணியைத் தொடங்கும் நிலையிலிருக்கவில்லை என நாம் உணர்தல் வேண் டும். எமக்குக் கிடைத்துள்ள ஈசிய கலைச்சின்னங்கள், அக் காலத்தில் உலகத்தின் இயற்கை பற்றிய திருப்திகரமானவோர் கொள்கை எலவே இருந்திருக்கவேண்டுமென்பதையே நிரூபிக் கின்றன. ஆயினும் அக்காலப் பதிவுகளிற் கையாளப்பட்டிருக் கும் எழுத்து முறைகளை நாம் நன்கு விளங்கிக்கொள்ளும் வரை, அவர்களிடையே நிலவிய இவ்வுலகக் கொள்கைபற்றிய பூரண விவரங்களையும் அறிந்துகொள்ள வாய்ப்பேற்படாது என
முந்திய” என்னும் சொற்றெடருக்குப் பொருளெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. பிற்காலத்தில் நாடு முழுவதிற்குமே தமது பெயரை ஈந்த ஆக்கிய சாதியினருக்கு முன்பே, ஈசியர்கள் அங்கிருந்தனர் எனப் பொருள் கொண்டால், அஃது உண்மையேயாயினும், அது கவனித்தற்குரிய வொன்றல்ல. அவ்வாறல்லாமல், புதிய கற்காலத்தின் இறுதிக்குப் பின்னர், ஒரு காலத்தில் ஈசியப் பகுதிகளில் குடிசன அமைப்பில் உண்மையில் ஒர் மாற்றமேற் பட்ட தென்பது இச்சொற்றெடரின் பொருளாயின், சேர் ஆர்தர் இவான்சுவே கூறுவது போல அது தவருன கொள்கையே. அல்லது ஈசியப் பிரதேசங்களுக்கு வடவர்களினலேயே கிரேக்க மொழி கொணரப்பட்டது எனக் கொள்வதானல் (இதுவே உண்மையான பொருள் போலத் தோன்றுகிறது) அதை நம்பு வதற்குப் போதிய ஆதாரம் எதுவுமில்லை. இதற்கொப்பாக வேறெங்கும் நாம் காணவும் இல்லை. நமக்குத் தெரிந்தளவில் கிரேக்கம் அதனது சொல் வளத் தைப் பொறுத்தவரையில் ஒரு கலப்பு மொழியே. ஆனல் அதன் அடிப் படை அமைப்பு, இந்தோ-ஐரோப்பிய மொழியின் எந்தக் கிளையின் அமைப்பி லும், இந்தோ-இரானிய ம்ொழிகளின் அமைப்பையே அதிகம் ஒத்துளது. உதாரணமாக " விருத்தி ” என்னும் இலக்கண முறை சங்கதம், கிரேக்கம்,

Page 10
4 ஆதி கிரேக்க மெய்யியல்
லாம். எசியாதிரியாடாவைச் சேர்ந்த கல்லறையிற் சித்திரிக்கப் பட்டிருக்கும் சடங்கு, இறந்தவர்களது நிலைபற்றித் திட்டவட்ட மான கருத்தொன்றிருந்தது என்பதைக் காட்டுகின்றது என் பதில் ஐயமில்லை. எகிப்தியர்களையும் பாபிலோனியரையும் போல இறையியல் ஆராய்ச்சியை விருத்தி செய்வதிலும் ஈசிய மக்கள் வல்லவராயிருந்தனர் என்பது இதிலிருந்து புலப்படுகின்றது. பிற்காலத்தில் இவர்கள் நடாத்திய இறையியல் ஆராய்ச்சியின் சின்னங்களையும் காணும் வாய்ப்பு எமக்கு ஏற்படும். அன்றியும் சைரோசுநாட்டுப் பெரிக்கைடிசு எழுதியவற்றிலிருந்து கிடைத் துள்ள பகுதிகளை, இத்தகைய இறையியற் சிந்தனைப் பகுதிக ளெனக் கருதினலொழிய வேறெவ்வகையிலும் அவற்றை விளக்க முடியாதென்பதையும் இங்கேயே கூறிவிடலாம். எகிப் திய, பாபிலோனிய, ஈசிய நாகரிகங்கள் என்பன ஒன்றை யொன்று வளப்படுத்தியுள்ளன என்பதைப்பற்றி ஐயமெதுவும் இல்லையெனினும், இவ்விறையியற் சிந்தனை முறையை ஈசியர் கள் எகிப்தியர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டனர் எனக் கொள் வதற்குக் காரணமெதுவுமில்லை. எகிப்தியரிடமிருந்து எவ்வாறு கிறீட்டர்கள் பல பண்புகளைப் பெற்றுக்கொண்டனரோ அதே போல கிறீட்டர்களிடமிருந்து பலபண்புகளை எகிப்தியரும் பெற்றுக் கொண்டனர். எனினும், அம் மாநதிப் படுக்கை நாகரிகங்களில் லாதிருந்தவோர் உயிர்த்துடிப்பு இக்கடல்சார் நாகரிகத்திற் காணப்பட்டதெனலாம்.
மேலும், வலிமையுடையனவாயிருந்த பழைய அரசுகளைச் சீர் குலைத்ததன் மூலமும் இறுதியில் பாபிலோனிய, எகிப்திய சிந்தனைமுறைகள் நசிந்து போவதற்குக் காரணமாயிருந் தவை போன்ற மூட நம்பிக்கைகளின் வளர்ச்சியைத் தடை செய்ததன் மூலமும், வடவர்கள் படையெடுப்பு கிரேக்க மேதைத் திறனின் விருத்திக்குப் பெருமளவில் உதவியது என்பது வெளிப் படை. ஈசிய எச்சங்கள் சிலவற்றைப் பார்வையிடும்போது, மூட
பழைய பாரசீகம் எனும் மொழிகளில் மட்டுமே காணப்படுவதொன்ருகும். கி. மு. பத்தாம் நூற்றண்டிற்கும், இருபதாம் நூற்றண்டிற்கும் இடைப்பட்ட காலத்தே வழங்கிய கிரேக்க மொழி, அக்காலத்தே வழங்கிய பாரசீக மொழியி லிருந்து அதிக வேறுபாடுடையதாக விருந்திருக்க முடியாது. இலத்தீனிலிருந்து பிறந்த மொழிகள் பிற்காலத்தில் சதம் மொழிகளாக (கிழக்கு மொழிக ளாக) மாறியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பது போல, சென்ரம் மொழிகள் (மேற்கு மொழிகள்), சதம் மொழிகள் எனும் பாகுபாடு பொருத்தமான வொன்றல்ல வெனலாம். பழைய இந்திய மொழி, பழைய பாரசீக மொழி என்பனவற்றில் “ நூறு” என்பதற்கு வரும் “N” எனும் எழுத்திற்குப் பதிலாக “A” எனும் எழுத்து உபயோகிக்கப்படுவதைப் போல, கிரேக்க மொழியிலும் இருப்பதால் அதுவும் ஒரு சதம் மொழியே என அழைப்பது அதிக பொருத்தமுடையதாயிருக்கும் எனலாம்.

முன்னுரை 5
நம்பிக்கையினல் அவர்களது சிந்தனை வளர்ச்சியே குன்றிப் போகலாம் என்னும் அபாயம் உண்மையிலேயே இருந்தது என்பது நமக்குத் தெரிய வருகிறது. எனினும் அப்போலோ வழிபாடு வடக்கிலிருந்தே, ஆக்கியர்களினல் இப்பகுதிகளிற் புகுத்தப்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. நமக்குத் தெரிந்துள்ளவற்றை வைத்துக் கொண்டு நோக்குகையில், ஒலிம் பிய சமயம் என அழைக்கப்பட்டுள்ள மரபுகளும், வடக்கி லிருந்தே பெறப்பட்டுள்ளன வெனத் தோன்றுகிறது. ஆயினும் இவ்வொலிம்பிய சமய மரபுகள் பெற்ற கலா உருவம், மத்தித் தரைக் கடல் மக்களினது பண்பாட்டின் முத்திரை பதிக்கப்பட்ட தாகக் காணப்படுகிறதெனலாம். அவ்வாறு தமது மனதிற் கேற்ற கலாவடிவத்திலிருந்ததனலேயே ஒலிம்பிய மரபுகளின் பால் அவர்கள் ஈர்க்கப்பட்டனர். ஈசிய சமயம் தொடர்ந்திருந் தால் அவர்களது சிந்தனை வளர்ச்சி அதனல் தடைப்படும் நிலை எற்பட்டிருக்கலாம். ஆனல் ஒலிம்பிய சமயம் அவ்வாறு அவர்களைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஆக்கியர்களினது வருகையே கிரேக்கர்களிடையே ஒரு புரோகித வகுப்பினர் எற் படாததற்குக் காரணமாயிருந்திருத்தல் வேண்டும். சுதந்திர மாணவோர் விஞ்ஞானம் கிரேக்கர்களிடையே தோன்றி வளர் வதற்கு இதுவும் ஓர் காரணமாயிருந்திருத்தல் வேண்டும்.
III. ஒமரது நூல்களில் இப்பண்புகள் யாவும் நன்கு புலப்படு 1. ஓமர்
கின்றன. அவர் சந்தேகத்திற்கிடமின்றிப்பழைய ஈசிய சாதியினரே யென்பதும், பழைய மொழியிலேயே எழுதினரென்பதும் உண் மையெனினும்,? ஆக்கிய அரசர்களது சபைகளுக்காகவே அவர் பாடினர். மேலும் அவராற் புகழ்ந்து பாடப்படுவோர் பெரும் பாலாக ஆக்கிய கடவுளரும் தலைவர்களுமே. அவரது காவி
Seə Farnell, Cults of the Greek States, Voll- iv. pp. 98 Sqq.
*, ஒமரது நூல் “ பின்னர் கிரேக்கத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்ட வோர் பழைய மினேவகாவியமே " எனும் சேர் ஆர்தர் இவான்சுவின் கருத்தி லும், இது நம்பத்தகுந்த வொன்றென்க. காவியத்தின் மொழி ஆர்க்கேடிய சைப்பிரிய மொழிகளையே அதிகம் ஒத்திருக்கிறது. ஆர்க்கேடியர்கள் வடக்கி லிருந்து வந்தவர்கள் என்பது கொஞ்சமேனும் பொருத்தமுடையதாகக் காணப்படவில்லை. மேலும் கைப்பற்றப்பட்ட நாட்டுப் புலவர்கள் தம்மை வெற்றி கொண்ட அரசர்களது சிறப்பைப் புகழ்ந்து பாடியதற்கு வேறு பல உதாரணங்களும் உள்ளன.
. Guangfuit gifésGay ( Early Age of Greece, i. p. 674) Lianyou சாதியினரிடையே வழங்கிய எரக்கிளிசு, எரிகுதோனியசு, எரிசிகிதோன் ானும் பெயர்கள் கிரேக்க மொழியிற் பொருளுடையனவா யிருக்கின்றனவென வும் ஆக்கியர்களது பெயர்களான அக்கிலீசு, ஒடீசியசு, அயகோசு, லெயாதீசு, பீலியசு என்பனவற்றிற்குக் கிரேக்க மொழியிற் பொருளில்லையெனவும் சுட்டிக் காட்டியுள்ளார். அகமெமுனேன், மெனெலேயசு என்பன கிரேக்க பெயர்கள்

Page 11
2. எசியொட்டு
6 ஆதி கிரேக்க மெய்யியல்
யத்தில் உலகு பற்றிய பாரம்பரிய கருத்துக்கள் அதிகம் காணப் படாமைக்குக் காரணம் இதுவே. காவியத்தில் வரும் கடவுளர் கள் யாவரும் மானிடத் தன்மையுடையோராகவே வருணிக்கப் படுகின்றனர். அதிக் வளர்ச்சியடையாத பழமைக் கருத்துக்கள் எவையும் அங்கு இடம்பெறவில்லை. பழைய நம்பிக்கைகள், வழக்கங்கள் சிலவற்றின் சின்னங்கள் இருப்பினும் அவை மிகமிகக் குறைவே. ஆட்கொலைக்குரிய தூய்மையாக்கச்சடங்கு பற்றி ஒமர் ஒருமுறையாயினும் குறிப்பிடவில்லை என்பதைப் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். பழைய சாதியினர் செய்தது போல மாண்ட வீரர்கள் புதைக்கப்படுவதற்குப் பதிலாக ஒமரது காவியத் தலைவர்கள் தகனம் செய்யப்படுகின்றனர். ஆவிகள் பற்றியும் அதிகம் கூறப்படவில்லை. இலியாட்டுவில் குறிப்பிடப் படும் நரபலிச் சம்பவத்தை யொட்டி ஓமரது நூல்கள் முழு வதிலும் உள்ள ஒரேயொரு நரபலி இதுவே. பத்தி ரோக்கிளிசு என்பானின் ஆவி பற்றிக் குறிப்பிடப்படுகின்றது என்பது உண்மையே. அன்றியும் ஒடிசியின் பதினேராவது பாகத்தில் நெக்கியா பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. ஆனல் இத்தகைய கருத்துக்கள் மிக மிக அபூர்வமாகவே காணப்படுகின்றன. ஆகவே, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலாவது, ஓமர், எந்த அரசனுக்காகப் பாடினரோ அந்த அரசனைச் சார்ந்த சமுதாயத் திலாவது, உலகம் பற்றிய பாரம்பரிய கருத்து எனைய இடங்க ளுக்கும் முன்னராகவே கைவிடப்பட்டு விட்டதெனலாம்.? இடை யிடையே இக்கருத்துக்கள் காணப்படுகின்றன வென்பதற்காக நாம் எமது முடிபை மாற்றவேண்டியதில்லை.
IV. ஆனல் எசியொட்டு எழுதியவற்றைப் பார்க்கும்போது நாம் வேறேர் உலகுக்கே வந்துவிட்டாற் போன்ற உணர்வு எமக்கு எற்படுகிறது. கடவுளர் பற்றி அவர் கூறும் கதைகள் பகுத்தறி வுக்கு ஒவ்வாதனவையாய் இருப்பதுமட்டுமன்றி மனத்தில் வெறு
என்பது உண்மையே. பழைய சாதியினரைச் சேர்ந்தவோர் இளவரசியைப் பெலோப்புசு மணம் செய்ததன்மூலமாக அத்திரியசு தனது அரசுரிமையைப் பெற்ற காரணத்தினலேயே இவ்வாறு எற்பட்டது. நாடு முழுவதிலுமே புதிய குடிகள் பழைய குடிகளோடு சேர்ந்து கொண்டனர் என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டென்க.
1. ஒடிசியின் xi வது பாகத்தில் சில ஒபிசக்கருத்துக்கள் காணப்படுகின்றன வாதலால் அது பிற்காலத்த தெனக் கருதப்படுகிறது. ஆனல் இன்று நமக் குத் தெரிந்தவைகளை மனதிற் கொண்டு நோக்குகையில், அத்தகைய கருது கோள் அவசியமற்றதாகின்றது. இப்பகுதியிற் காணப்படும் ஒபிசக்கருத்துக்க ளெனப்படுபவை அதிக வளர்ச்சியற்றவை. ஈசிய மக்கள் இவற்றை முன்பே கொண்டிருந்திருத்தல் வேண்டும். ஒபிசம் உண்மையில் பழைய கொள்கை களின் மறுபிறப்பே யென்க.
o. 606. Lțbgó Rhode, Psycheo i. pp. 37 sqq. ( = Ps. pp. 34 Sgq.).

முன்னுரை 7
ப்பை எற்படுத்துவனவாயுமுள்ளன. ஆனல் எசியொட்டு இவற்றை யெல்லாம் மிகவும் முக்கியமானவையாகக் கருதுபவர்போலவே கூறுகின்றர். தேவதைகளை அவர் பின்வருமாறு கூறவைக் கிருர் : “ பொய்யான பலவற்றை உண்மைபோல நாம் கூறவல் லோம் ; ஆனல் நாம் விரும்பும்போது உண்மையைக் கூறவும் எமக்குத் தெரியும். ’ ஒமரது காவியங்களுக்கும் தனது காலத் திற்கு மிடையே யிருந்த வேற்றுமையை அவர் உணர்ந்திருந் தார் என இதிலிருந்து தெளிவாகிறது. ஒமரது காவியங்களிற் காணப்படும் களிப்புணர்வை இங்கு காணுேம். கடவுளர்களைப் பற்றிய உண்மையைக் கூறுவது முக்கியமென இங்கு கருதப் படுகிறது. ஒமரது காலத்திற்குப் பிந்திய, வளங்குன்றிய காலம் தன்னுடையது என்பதையும் எசியொட்டு உணர்ந்திருந்தார். உலகத்தின் காலங்களைப் பற்றிக் கூறுகையில் வெண்கலக் காலத்திற்கும், இரும்புக் காலத்திற்குமிடையே புதிய கால மொன்றைப் புகுத்துகின்றர். ஓமரால் பாடப்பட்ட வீரர்களது காலமே அது. முந்தியதான வெண்கலக் காலத்திலும், எசி யொட்டு வாழ்ந்த காலமான இரும்புக் காலத்திலும் அது மிகச் சிறந்ததென்க.? ஒமர் பாடிய வகுப்பினருக்கல்லாது தான் வேறேர் வகுப்பினருக்காகப் பாடினர் என்பதையும் எசியொட்டு நன்கு உணர்ந்திருந்தார். ஒமராற் பாடப்பட்ட ஆக்கிய அரசர் கள், எசியொட்டின் காலத்தில், பொதுமக்களோடு தொடர்பில் லாதவர்களாகவும், “செம்மையற்ற சட்டங்களை' இயற்றுபவர் களாகவும் விளங்கினர். ஆகவே பழைய சாதியினராகிய மந்தை மேய்ப்போர், கமஞ்செய்வோர் என்போரை நோக்கியே எசி யொட்டு பாடினர். “ ஆக்கிய மத்திய கால 'த்தின் வளமும் ஆடம்பர வாழ்வும் என்றும் பொதுமக்களது நிலைக்கு அப்பாற் பட்டனவாகவே இருந்தன. உலகம் பற்றிய பண்டைய கருத்து அவர்களிடையேயிருந்து அற்றுப்போகவில்லை ; ஆகவே அவர் களைப் பற்றி முதன் முதலில் எழுத முனைந்த கவிஞன், தனது கவிதைகளில், அவர்களிடையே நிலவிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டது இயல்பானவொன்றே. அதனலேயே எசியொட்டின் பாடல்களில், ஒமரால் வெறுத்தொதுக்கப்பட்ட பழைய அநாகரி கக் கருத்துக்களைக் காணக்கூடியதாய் இருக்கிறது.
1. Hes, Theog, 27 (முதற்கவிதையின் சொற்கள் xix வது ஒடிசி 203 இல் இருந்து பெறப்பட்டிருக்கின்றன). ஒமருக்கும் ஊக்கத்தை அளித்த தேவதை களே இவர்கள். இதிலிருந்து எசியொட்டு அறுசீரடிகளையே எழுதினரெனவும், காவிய நடையைப் பயன்படுத்தினரெனவும் அனுமானிக்கலாம்.
2. இஃது எசியொட்டுக்கு நல்ல வரலாற்றுணர்வு இருந்த தென்பதைக் காட்டுகின்றது. “கிரேக்க மத்திய காலம் ” எனப்படுவது வரலாற்றின் நேரிய போக்குக்கு முரணுன வொன்று என்பதை முதலிற் சுட்டியவர் எசியொட்டே யொழிய நமது தற்கால வரலாற்றசிரியர்களல்லவென்றறிக.

Page 12
அண்ட
8 ஆதி கிரேக்க மெய்யியல்
எனினும், மக்களிடை முன்பிருந்தே நிலவிவந்த மூட நம்பிக்கைகளையே எசியொட்டுவின் தேவபாரம்பரியத்திற் (தியோ கனி) காண முடிகிறதெனக் கொள்வது தவருகும். ஒமரது காவியத்திற் காணப்படும் முன்பிருந்த சூழ்நிலை மாற்ற மடை ந்து விட்டதென்பதையும், எப்படியாயினும் எசியொட்டு இப் புதிய சூழ்நிலையின் செல்வாக்குக்குட்படுதல் வேண்டும் என்பதை யும் மறுக்க முடியாது. ஆகவே அவர் தன்னையறியாமலே தனது நூலின் மூலம் ஓர் முன்னேடியாகிவிட்டார் எனலாம். பின்னர் வளர்ச்சியடைந்த அயோனிய விஞ்ஞானம், வரலாறு என்பனவற்றின் வித்து எசியொட்டுவின் பாடல்களிற் காணப் படுகின்றது. அன்றியும் எந்தக் கருத்துக்கள் அழிந்துபோவதை அவர் தடுக்க விரும்பினரோ, அக்கருத்துக்கள் விரைவில் மறைந்து போவதற்கு வேறெவரையும் விட அவரே பெரிதும் காரணமாயிருந்தாரெனலாம். கடவுளர்கள் பற்றிய கதைகள் யாவற்றையும் ஒருமுறைப் படுத்துவதற்கானவோர் முயற்சியே எசி யொட்டுவின் “தேவபாரம்பரியம்” என்னும் நூல். ஆனல் சற்றேனும் ஒழுங்கில்லாதவையான புராண வரலாறுகளை ஒழுங்கு படுத்த முயற்சிப்பது அவற்றின் சிதைவுக்கு அடிகோலும் என் பதைக் கூறவேண்டியதில்லை. மேலும் எசியொட்டு தனது காவி யப் பொருளை எடுத்துக் கூறும் விதம் பழைய சாதியினரது மனுேபாவத்தைப் பிரதிபலிப்பதாயினும், அவர் பாடும் கடவுளர் கள் பெரும்பாலும் ஆக்கியர்களது கடவுளர்களே. இது அவரது நூல் முழுவதும் ஓர் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. எலனி சியர்களது கடவுளர்க்கு ஒரு வரலாற்றை அறிந்து அக்கடவுளர் களது பதவிகளையும் கலைகளையும் பகிர்ந்து கொடுத்தவர்கள் ஒம ரும், எசியொட்டுமே என எரொடோதசு கூறுகின்றர். அவர் கூறுவது முற்றிலும் சரியானதே. பழைய கடவுளர்க்குப் பதிலாக ஒலிம்பிய கடவுளர்கள் மக்கள் மனதில் இடம் பெற்றன ரென்றல், அதற்கு ஓரளவுக்கு எசியொட்டுவும் பொறுப்பாளியே. இவர்களது பாடல்களில் மனிதர்களைப் போல வருணிக்கப்பட்ட கடவுளர்களைத் தாம் வழிபட்ட பழைய தெய்வங்களே யெனச் சாதாரண மனிதர்களினல் இலகுவில் எற்றுக்கொள்ள முடிய வில்லை. இக்கடவுளர்கள், மக்களுக்குப் பழக்கமான இயல்புகளை அற்றவர்களாகவே இப்பாடல்களில் வருணிக்கப்பட்டிருந்தனர். இப்புதிய கடவுளர்கள் மக்களது தேவைகளைத் திருப்தி செய்ய எற்றவர்களல்ல. நாம் பின்னர் ஆராயவிருக்கும் சமய மறு மலர்ச்சிக்கான காரணம் இதுவே.
W. எசியொட்டு தமது காலச் சூழ்நிலைகளின் செல்வாக்குக்
வுற்பத்தியியல் குட்பட்டிருந்தார் என்பதற்குப் பிற ஆதாரங்களும் உள. “ தேவ
1. Herod. i. 53.

முன்னுரை 9
பாரம்பரியம்” எனும் அவரது நூல் அண்டவுற்பத்தியியல் பற் றியும் கூறுவதாய் உள்ளது. ஆனல் அண்டவுற்பத்தியியலைப் பொறுத்தவரையில், அவர் தமது கொள்கையைக் கூறவில்லை யெனவும் எலவே நிலவிய பாரம்பரிய கருத்துக்களையே விருத்தி செய்தனரெனவும் தோன்றுகிறதெனலாம். எனினும் அவர் அண்டவுற்பத்தியோடு மிகுந்த தொடர்புடையவையான கயோசு, ஈரோசு எனும் கருத்துக்களைக் குறிப்பிட்டபோதிலும், அப்பெயர் கள் தரப்படுகின்றனவே யொழிய, அவை அவரது கருத்தோடு எவ்விதத்திலும் தொடர்புடையனவாக்கப்படவில்லை. இவ்விரு கருத்துக்களும் பழைய சிந்தனை முறை யொன்றைச் சேர்ந்தன போற் றேன்றுகின்றன. உலகத்தின் ஆரம்பநிலையைக் கற்பனை செய்ய முயல்வதே கயோசு எனும் கருத்து. அதன்படி உலக ஆரம்பம் உருவமற்றவோர் கலவையல்ல ; எப்பொருளும் தோன் றுவதற்கு முன்பிருந்த “ ஒ’ என்ற வெளியே அஃது. இது வளர்ச்சியற்ற காலத்தைச் சேர்ந்த ஒரு கருத்தன்று என நாம் திடமாக உணரலாம். எந்தப் பொருளுமே தோன்றுவதற்கு முன்பிருந்த நிலையைக் கற்பனை செய்யும் எண்ணம் ஆதி மனி தனுக்கு ஏற்படுவதில்லை ; தொடக்கத்தில் எதோ ஒரு பொருள் இருந்ததென அவன் எண்ணிக்கொள்ளுகிறன். ஈரோசு எனும் மற்றைய கருத்து, உலக ஆரம்ப முழுவதிற்கும் காரணமான சிருட்டித்துடிப்பை விளக்குதற்கென ஏற்பட்டிருக்க வேண்டும். இவையிரண்டும் உண்மையில் ஆராய்ச்சியின் மூலம் பிறந்த கற்பனைகளே யென்பது தெளிவு. ஆனல் எசியொட்டினது பாடல்களில் இவை தெளிவின்றியே உள்ளன.
கி. மு. ஆரும் நூற்றண்டின், அண்டவுற்பத்தியியல் பற்றிய சிந்தனைகளில் அதிக விருத்தி ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங் கள் எமக்குக் கிடைத்துள்ளன. எபிமினடிசு, பெரிகைடிசு ஆகி யோரது கொள்கைகளைப் பற்றியும் நாம் அறிவோம். எசியொட் டுக்கு முன்னரும் இத்தகைய ஆராய்ச்சிகள் இருந்தனவெ னில், ஒபிச அண்டவுற்பத்தியியலும் அந்நூற்றண்டைச் சேர்ந்த தெனக் கொள்ள நாம் தயங்கவேண்டியதில்லை.? கயோசு எனும் வெளிக்கும் முந்திய ஓர் நிலையை எடுத்துக்கொண்டு, குரொனெசு விற்கு அல்லது சியசுவிற்கு அங்கு முதலிடம் அளிப்பது இவர் கள் யாவரது கொள்கைகளிலும் காணப்பட்டவோர் பொதுவான பண்பென்க. சிறந்ததெதுவோ அதுவே முதலில் இருந்ததெ னக்கருதிய, மெய்யியற் கருத்துக்களையும் கொண்ட, இறையியல்
1. Guffi6O5yq-sr ugjöpfuLu Gg5sóLü-š5G25&šG5, Diels, Worsokratiker, 71 B, Jøšgyl-6ð7 Gomperz, Greek Thinkers, Vol. i. pp. 85 Sqq.
2. தமாகியோசுவினல் வருணிக்கப்பட்ட தேவபாரம்பரிய வியற்காவியம்(Rhapsode Thegong) பற்றி லொபெக்கு கொண்டிருந்த கருத்தும் இதுவே.

Page 13
கிரேக்க அண்ட லியலின் பொதுவான பண்புகள்
10 ஆதி கிரேக்க மெய்யியல்
வாதிகளுக்கும் பூரண இறையியல் வாதிகளுக்குமிடையே உள்ள வேற்றுமைகள் பற்றி விவரிக்கையில் அரித்தோதில் இதையே கருதியிருக்கவேண்டும். இப்போக்கு, விஞ்ஞான ரீதியான வளர்ச்சிக்கு முற்றிலும் மாறுபட்டதென்பதும், ஆரம்ப நிலையிற் றெய்வங்கள் இருந்தனரெனக் கூறுவதாயின், முடிவில்லாது அவர்கள் பின்னேக்கிச் சென்றிருக்கலாமென்பதும் வெளிப் படை ; ஆகவே இவ்வண்டவுற்பத்தியியலாளர்கள் பற்றி, அவர் களது கற்பனைகள் பிற சிந்தனையாளர்களது ஆராய்ச்சிகளை எவ் வாறு பாதித்தன எனுமளவிற்குக் கவனிப்பதேயல்லால், விரி வாக இந்நூலில் ஆராயவேண்டியதில்லை.
VI. அயோனியர்களது இலக்கியங்களைப் பார்க்குமளவில், உல கப் பொருட்கள் நிலையற்றவை என்பதை அவர்கள் மிகவும் மனதிற் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. திட்ட வட்டமான சமய நம்பிக்கைகளோ கருத்துக்களோ இல் லாது, அமிதமாக நாகரிகமடைந்துள்ள எந்தச் சமுதாயத்தி லும் இயல்பாகவே உண்டாகக் கூடியவோர் துன்பியல் உணர்வு, இவர்களது சிந்தனையின் அடிப்படையிற் புகுந்திருந்ததென லாம். கொலொபொனைச் சேர்ந்த மிமினமோசு என்பார் வரப்போகும் வயோதிப காலத்தில் துன்பத்தைப் பற்றிச் சஞ் சலப்படுவதைக் காண்கிருேம். இதற்குச் சற்றுப் பிந்திய காலத் தில், காட்டுமரங்களின் இலைகளைப் போல, பரம்பரை பரம்பரை யாக மனிதர்கள் மடிகின்றனரே என சிமோனைடிசு பிரலாபிப் பது, எற்கெனவே ஒமர் வெளியிட்ட உணர்ச்சி யொன்றை மீட்டுவது போல எமக்குத் தோன்றுகிறது?. பருவகாலங்களின் மாற்றங்கள், பொருட்கள் நிலையாமை பற்றிய இத்துன்பியல் உணர்வு நன்கு வெளிப்படுத்தப்படுதற்கு உகந்த உதாரணங்க ளாயின. இயற்கைச் சத்திகளினது இவ்வளர்சிதைவட்டவியல்பு, வடக்கேயுள்ள பகுதிகளிலும் ஈசிய பகுதிகளில் வெளிப்படையா
யிருந்தது. அன்றியும் இப்பகுதிகளில், பருவமாற்றங்கள், வெப்
பம், குளிர், ஈரலிப்பு, வறட்சி என்னும் முரண்பாடுகளுக்கிடையே
நடைபெறும் பூசல்களைப் போலத் தோன்றின. ஆகவே இத்
தகையவோர் கண்ணுேட்ட நிலையிலிருந்தே ஆதி அயோனிய
அண்டவியலாளர் உலகை நோக்கினர். பிறப்பையும் மரணத்
1. Arist. Met, 4, 4. 1091 b, 8.
. See Butcher, “The melancholy of the Greeks,' in Some Aspeets of the Greek Genius, pp. 130 sqq.

முன்னுரை
தையும், விழிப்பையும் துயிலையும் ஒப்பன போலத் தோன்றிய கோடை மாரி, பகல் இரவு என்பனவே இம்மக்கள் கண்ட உலகின் முக்கிய பண்புகளாயிருந்தன.
குளிர் ஈரலிப்பு என்பவற்றை அவற்றின் முரண்பாட்டு இணை களான சூடும் வறட்சியும் ஊடுருவ முயல்வதனலும், சூட்டை யும், வறட்சியையும் பின்னர் குளிரும் ஈரலிப்பும் ஊடுருவப் பார்ப்பதனலும் பருவகால மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது வெளிப்படை, மனித சமுதாய வழக்கிலிருந்த சொற்களின லேயே இம்மாற்றங்கள் யாவும் வருணிக்கப்பட்டன , ஆதி நாட் களில், இயற்கை நிகழ்ச்சிகளின் ஒழுங்கிலும், மனிதவாழ்க்கை யிற் காணப்பட்ட ஒழுங்கையே மக்கள் அதிகம் உணர்ந்திருந்தன ராதலால் இது இயல்பானதேயென்க. சட்டங்களினலும், வழக் கங்களினலும் அமைந்தவோர், நல்லுறவு நிலவிய, சமூகத்தில் மனிதன் வாழ்ந்தான். ஆனல் அவனைச் சூழவிருந்த உலகம் எவ்வகை நியதியுமின்றி, ஒழுங்கெதுவுமின்றி இருந்ததாகவே அவனுக்கு முதலிற் ருேன்றியது. இதனற்றன் முரண்பாடு கள் ஒன்றையொன்று ஊடுருவியபோது அது அநியாயம் என வும், அவ்வாறு ஊடுருவாது சமானமாகவிருந்தபோது அது நியாயம் எனவும் கூறப்பட்டது. பின்னர் வழங்கிய “கொசு மொசு ’ (அண்டம்) எனும் சொல்லும் இக்கருத்தின் அடிப்படை யிலேயே எழுந்தது என்க. முதலில் அச்சொல் படைகளின் கட்டுப்பாட்டையும் அதன் பின்னர் நாட்டின் ஒழுங்கான அரசி யலமைப்பு முறையையும் சுட்ட வழங்கியது.
ஆயினும் இஃது போதியதாய் இருக்கவில்லை. முரண்பாடு களிடையே நடைபெறும் ஒர் இடையருத பூசலே உலக நிகழ்ச் சித் தொடர் எனும் கருத்து முந்திய அண்டவியலாளருக்குத் திருப்தியளிக்கவில்லை. யாதேனும் பொதுவான ஓர் அடிப்ப டையிலிருந்தே இம்முரண்பாடுகள் தோன்றுகின்றனவெனவும், அதனுள்ளேயே அவை இறுதியிற் சென்று மறைகின்றனவென வும் அவர்கள் கருதினர். முரண்பாடுகளுக்கும் முந்தியதான வொன்றை, மாற்றங்கள் யாவற்றினுக்குமூடாக நிலைத்து நிற்
1. University of Chicago Ohronicle, Vol. xvi. No. 4. “The Background of Greek Science:’ பேராசிரியர் யே. எல். மையர்சு என்பவரால் எழுதப்பட்ட மேற்படி கட்டுரையில் இக்கருத்து நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. * சமயத்திலிருந்து தத்துவம்வரை ” எனும் தனது நூலின் முதல் அத்தி யாயத்தில் திரு. கோண்போட்டு கூறியிருப்பதைப் போல, ** முரண்பாடுகள் ” பற்றிய இக்கொள்கை சமயக் கருத் துக்களிலிருந்து பெறப்பட்டதென நாம் எண்ணவேண்டியதில்லை. இத்தகைய காரணம் எதுவுமின்றியே, இம்முரண் பாடுகள் கிரேக்க நாட்டவரது கவனத்தைக் கவர்கின்றன. ஆனல் நடை முறையில் கமக்காரர்களது மாந்திரீகங்களி லும் இக்கருத்துக்கள் பயன்பட்டன என்பது உண்மையே.

Page 14
புசிசு (நித்த சத்தி)
12 ஆதி கிரேக்க மெய்யியல்
குந் தன்மையுடையதும், ஒருருவிலிருந்து மறைந்துபோயினும் வேறேர் உருவில் மீண்டும் தோன்றுவதும் ஆனவோர் பொருளை அறிய அவர்கள் விழைந்தனர். இத்தகையவுணர்ச்சியோடேயே அவர்கள் தமது ஆராய்ச்சிகளை ஆரம்பித்தனர் என்பதற்கு “மூப்பற்றது”, “ இறப்பற்றது” என இவ்வடிப்படைப் பொருள் பற்றிக் கூறியிருப்பதே போதிய சான்றகும். சிலராற் கூறப்படு வதுபோல, ஆதல், வளர்ச்சி என்பனவற்றில் மட்டுமே இவர்கள் ஆர்வமுடையவர்களா யிருந்திருந்தால், அழிவுடையதும் நிலை யற்றதுமான இவ்வுலகில் நித்தியமான தெனக்கூடிய ஒரேபொ ருள்பற்றி இத்தகைய கவிதா உணர்ச்சி நிறைந்த அடைமொ ழிகளை உபயோகித்திருக்க மாட்டார்கள். அயோனிய “ ஒருமை வாதத் 'தின் உண்மையான பொருள் இதுவே யென்க.
VI. இயூரிப்பிடிசு பிறந்த காலத்திற்குச் சமகாலத்திலேயே அயோனிய விஞ்ஞானம் அதென்சு நகரில் முதன்முதலில், அனக்சகோரசுவினற் புகுத்தப்பட்டது. இவ்விஞ்ஞான அறிவின் சாயல்களை இயூரிப்பிடிசுவின் எழுத்துக்களிற் காணக்கூடியதாய் இருக்கிறது என்பதையும் நாம் ஈண்டுக் குறிப்பிடலாம். மூலப் பொருளைப் பற்றி அனக்சிமாந்தர் குறிப்பிடுகையில் உபயோகித்த “ மூப்பும் இறப்புமற்ற ’ எனும் அடையையே, விஞ்ஞான ஆராய் வுக்கென அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் சிறப்புப் பற்றிக்குறிப்பிடு கையில் இயூரிப்பிடிசுவும் உபயோகப்படுத்துகின்ருர் என்பது
குறிப்பிடத்தக்கதொன்றகும்.
ஐந்தாம் நூற்றண்டில், “ புசிசு ’ எனும் பெயர் உலகத்தின் மூலப் பொருளான நித்தியமான பதார்த்தத்தையே கருதியது என்பதற்குப் போதிய அத்தாட்சிகளுள. நாம் விளங்கிக் கொள்ளு மளவில், இஃது உலக வரலாற்றினேடும் நன்கு பொருந்து வதே. பொருட்கள் ஆக்கப்படுவதற்கு ஆதி காரணமாக வேண் டிய “பண்டம்” என்பதே இச்சொல்லுக்கு முதலிற் பொரு ளாயிருந்ததுபோலத் தோன்றுகிறது. ஆனல், “ அமைப்பு ” பொதுவியல்பு, உள்ளடக்கம் ஆகிய பொருட்களையும் இச்சொல்
இலகுவிற் பெறலாயிற்று எனலாம். “அழிவும் மூப்புமற்ற” ஒன் றைத் தேடிய இவ்வாதி அண்டவியலாளர்கள், யாவற்றினதும்
நித்தசத்தியெனும் ஒன்று எனவே தமது கருத்திற்குப் பெயரிட்டி ருப்பர் எனக் கருதலாம். ஒவ்வொன்றும் தனக்கெனவோர் புசிசு (நித்தசத்தி) உடையதான நான்கு மூலப்பண்டங்கள் இருந்தன வென எம்பிடோக்கிளிசு கருதினர். எண்ணிறந்த மூலப்பொருட் கள் இருந்தனவெனக் கருதிய அணுவாதிகளும், தமது அணுக் கள் பற்றிக் கூறுகையில் இப்பதங்களை உயோகித்தனர் என்க.
123 ஆம் பிரிவின் கீழ்ப் பார்க்க.

முன்னுரை 3
எமது ஆதாரங்களிற் பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ஆர்க்கே (முதற்காரணி) எனும் சொல், இப்பொருளில், அரித் தோதிலிய சிந்தனை மரபைச் சார்ந்ததே. தியோபிறகத்தோசு வும் அவருக்குப் பிந்திய எழுத்தாளர்கள் சிலரும் இச்சொல் லைக் கையாண்டதில் ஆச்சரியமெதுவுமில்லை ; ஏனெனில், தமது கொள்கைகளில் மெய்யியலாளர்கள் எத்தனை முதற்காரணிக ளுள வெனக் கூறினர் என்பதற்கேற்பவே அவர்களை வகைப் படுத்திய அரித்தோதிலின் பெளதிகம் எனும் நூலையே இவ் வெழுத்தாளர் யாவரும் பின்பற்றினராதலினென்க. ஆனல் பிளேட்டோ ஒரு முறையாயினும் இப்பதத்தை இப்பொருளில் உபயோகிக்கவில்லை. ஆதி மெய்யியலாளரது எழுத்துக்களின் பகுதிகள் எனக் கருதப்படுவனவற்றிலும் இப்பதம் ஒரு முறை யேனும் காணப்படவில்லை. அவர்கள் இச்சொல்லை உபயோகித் திருந்தார்களேயானல், இப்பகுதிகள் எவற்றிலும் இச்சொல்கா ணப்படாதிருப்பது ஆச்சரியத்திற்குரியது எனலாம்.
இஃது இவ்வாறயின் அயோனியர்கள் விஞ்ஞானத்தை ‘நித் தசத்தி பற்றிய விசாரணை’ என அழைத்தற்கான காரணம் நன்கு புலனகிறது. மூலப்பொருள் பற்றிய சிந்தனை வளர்ச்சியே, ஒருவரை யொருவர் தொடர்ந்து வந்த வெவ்வேறு மரபுகளைச் சேர்ந்த மெய்யியலாளர்களுக்குப் பொதுவாயிருந்ததென்பதை யும், வானவியல் போன்ற விடயங்களில் அவர்கள் தமக்குத் தமக்குத் தோன்றிய தனி வழிகளிற் சென்றனர் என்பதையும் நாம் காண்போம். நிலையற்ற உலகநிகழ்ச்சிகளின் அடிப்படை யில் இருந்த நிலையான பொருள் எதுவென்பதைக் கண்டுபிடிப் பதே இம்மெய்யியலாளர்கள் யாவரினதும் முக்கியநோக்காக விருந்தது.
1. பொதுவாக அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் பாரம்பரிய மானவையுமான “நான்கு மூலகங்கள் ” பற்றிய கொள்கையிலிருந்தே, ஆதி அண்டவியலாளர் தமது சிந்தனையை ஆரம்பித்திருக்கவேண்டும் எனும் ஓகில் பேட்டுவின் கருத்து எற்கத் தகுந்ததுபோற் காணப்படுவது “ மூலகம் ” எனும் சொல்லின் பொருள் போதியளவு தெளிவுடையதாயில்லாதிருப்பதஞலேயே. தீ, காற்று, நீர், நிலம் எனும் பெரிய தொகுதிகளையே நாம் கருதினே மாயின், மிக முந்தியவோர் காலத்திலேயே, இவற்றை அறிந்திருந்தனர். ஆனல் அண்டவியலில் “ மூலகம் ” எனும்போது, வேறெப் பொருளாலும் ஆகாது, தனக்கேயுரித்தான இயல்பையுடையவொன்றே கருதப்படுகிறது. பொதுவாக வழங்கிய மூலகங்கள் பற்றிய கருத்தோடு திருப்தியடையாது அவற்றிற்குமடிப் படையான வொன்றைக் காணவே, ஆதி அண்டவியலாளர் முனைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூலப்பொருள் ஒன்றல்லவெனக் கூறவிரும்பிய எம்பிடோக் கிளிசு, முன்பே வழங்கிய நான்கு மூலகங்களையுமே தேர்ந்தது தற்செயலாக நேர்ந்தவொன்றே. இதன் காரணமாகவே மூலகம் எனும் சொல் மேற் குறிப்பிடப்பட்ட காற்று, தீ ஆதிய தொகுதிகளையும் குறிப்பிடலாயிற்று.

Page 15
இயக்கமும் அசைவின் மையும்
14 ஆதி கிரேக்க மெய்யியல்
WI. “நித்திய இயக்கம் ” என ஒன்றிருந்ததென ஆதி அண்டவியலாளர் நம்பினர்களென்று அரித்தோதில் மூல மாகவும் அவரைப் பின்பற்றியவர்கள் மூலமாகவும் நாம் அறி கிருேம். ஆனல் “நித்திய இயக்கம் ” என இவர்கள் கூறி ஞர்களேயெனினும், முன்னையோரால் நம்பப்பட்ட கொள்கை இத்தகையவொன்றே யென்பது பற்றி நாம் நிச்சயமாக நம்புதல் இயலாது. இயக்கத்தின் நித்திய இயல்புபற்றி அயோனி யர்கள் தமது நூல்களுள் எதனிலாயினும் எழுதினர் என்பதை நம்புவது எளிதன்று. அந்நாட்களில் அசைவின்மைக்கே விளக் கம் காண்டல் அவசியம் எனக் கருதப்பட்டது. இயக்கம் மறுக் கப்படும் வரைக்கும், இயக்கத்தின் ஆரம்பம் பற்றி ஆராய வேண்டுமென யாருக்கும் தோன்றியிராது என நாம் கொள்ள லாம். பார்மனைடிசு சாதித்தது இதையே என நாம் காண் போம் ; அதற்கேற்பவே, அவருக்குப் பின் வந்தோர், இயக்கம் உளது என்பதை எற்றுக்கொண்டு, அது ஏற்படுவதற் கான காரணங்களை விளக்க முற்பட்டனர். ஆகவே, ஆதி அண்டவியலாளர்கள், இயக்கத்திற்கு ஒர் ஆரம்பம் இருந்த தெனக் கொள்ளும் அவசியம் இருந்ததாக எண்ணவில்லை எனவே அரித்தோதில் கருதினர் என நாம் கொள்வோம். ஆதி அண்டவியல் வாதிகள் நித்திய இயக்கம் இருந்ததென நம்பினர்களென்பது, அரித்தோதிலின் ஊகமேயெனினும் அது பெருமளவிற்குச் சரியானதே. ஆயினும், அவர்களது காலத்
தில் உருவாக்கவேபடாதிருந்த கொள்கை யொன்றினை அவர்
கள் மறுத்தனர் என, நாம் எண்ணுதற்கு அரித்தோதிலி னது கூற்று இடமளிக்கின்றதாகையால், அதனை ஏற்றுக்கொள் ளலாகாது.
இவற்றிலும் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய விடயம், இவ்வியக்கத்தின் இயல்பு என்னவென்பதாகும். உலகம் ஆரம் மாவதற்கும் இவ்வியக்கமே காரணமாயிருந்ததாதலால், உலக
1. இவ்வகையான சிந்தனை முறையே திரவியவுயிர்வாதம் எனப் பொது வாக அழைக்கப்படுகிறது. ஆனல் அவ்வாறு அழைத்தல் பொருந்தாதென்க. உலகம் பற்றியும் மூலப்பதார்த்தம் பற்றியும், அவை உயிருள்ளனவென எமக் குத் தோன்றும் வகையில், ஆதி அண்டவியலாளர் எழுதியுள்ளனர் என்பது உண்மையே. ஆனல் அவ்வாறு கொள்வதற்கும் சடப் பொருளுக்குத் தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும் சத்தி உள்ளது எனக் கூறுவதற்கும் மிகுந்த வேற்றுமை உள்ளது. சடப் பொருள் பற்றிய எண்ணக்கருவே அக்காலத்தில் இருக்கவில்லை. உயிர்வாழ்வன உட்பட யாவற்றையும் பொறியியல் முறைப்படி, அதாவது பொருள்களின் இயக்கத்தின் மூலம், விளக்கிவிட முடியும் என்பதே அவர்களது எண்ணமாகவிருந்தது. ஆனல் இதுவும் அக்காலத்தவர்களால் ஒரு திட்டவட்டமான கொள்கையாக உருவாக்கப்படவில்லை ; அவ்வாறு அவர்கள் கருதினர் என நாம் அறியக்கூடியதாயிருக்கிறது. அவ்வளவே.

முன்னுரை 15
ஆரம்பத்திற்கு முன்னரே இயக்கமிருந்திருக்கவேண்டுமென்பது வெளிப்படை. ஆகவே, நித்திய இயக்கத்தை வானமண்டலத் தின் நாளாந்த சுழற்சியெனவோ அல்லது பிற உலக இயக்கங்க ளெனவோ, நாம் கருதலாகாது. பிளேட்டோவின் திமாயசு? வில் தரப்பட்டுள்ள பைதாகரசகொள்கை, மூல இயக்கம் நிய தியற்றதும் ஒழுங்கில்லாததுமாய் இருந்ததென்பதே. அணுவா திகள், தமது அணுக்களின் இயக்கம்பற்றிக் கூறுவதும் ஏறக்கு றைய இதற்கொப்பதே. ஆகவே ஆதி அண்டவியலா ளரது மூலப் பதார்த்தத்தின் இயக்கக்கொள்கை பற்றி எத்தகைய திட்டவட்ட மான கருத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளாது விடுதல் நன்மை பயக்கும்.
IX. இதுவரை நாம் கவனித்த எவற்றிலும் இறையியல் அயோனிய ஆராய்ச்சி பற்றிய குறிப்பு எதையும் காணுேம். ஈசிய சமயக் விஞ்ஞானத் கொள்கைகள் முற்றப் அற்றுப்போய்விட்டனவெனவும், ஒலிம் శిణః பிய பல்லிறைவாதத்தில் அயோனிய சிந்தனை ஒருபோதும் பூரணமாக ஈடுபடவில்லை யெனவும் நாம் கண்டோம். ஆகவே, அயோனிய விஞ்ஞான்த்தின் ஆரம்பம், புராணக் கதைகளிற் காணப்படுகிறது எனக் கொள்வது முற்றிலும் தவறகும். வடவர்களது ஆட்சிக்குட்படாத கிரேக்க பகுதிகள் சிலவற்றில், பழைய கருத்துக்களும் வழக்கங்களும் ஓரளவுக்கு இன்னமும் நிலவினவெனலாம் ; ஓபிசக் கொள்கைகளின் மூலமும் எனைய வழக்கங்களின் மூலமுமாக இவை யெவ்வாறு மீண்டும் புத்துயிர் பெற்றன என்பதையும் நாம் விரைவிற் காண்போம். ஆனல் அயோனியாவைப் பொறுத்தவரையில் அங்கு பழைய கொள்கைகள் எதுவும் இருந்ததாகக் கூற முடியாது. இற் றைற்றுக்களின் ஆதிக்கம் காரணமாகச் செல்ல முடியாதிருந்த
" "நித்திய இயக்கம்” என்பது வானமண்டலங்களின் நாளாந்த சுழற் சியே என முதலில் தீர்மானித்தவர் அரித்தோதிலே.
Plato, Tin. 30 a.
* அனக்சிமினிசு போன்ற ஆதி சிந்தனையாளரொருவர் அண்டத்தின் மூலவியக்கத்திற்கும், எல்லையற்ற காற்றினது ஆதி இயக்கத்திற்கும் இடையே யுள்ள வேறுபாட்டை உணர்ந்திருப்பார் எனக் கொள்வது பொருத்தமற்றதாகை யால் “ நித்திய இயக்கம் ” என்பது ஒரு சுழிப்பியக்கமே எனவே பேராசிரியர் டபிள்யூ. எ. எய்டெல் கருதினர். ஆனல் உலகம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றியதே எனக் கருதிய எவரும், குறிப்பாக அவர் எண்ணிறந்த உலகங் களுள எனக் கருதியவராயுமிருந்திருந்தால், இவ்வேறுபாட்டையும் உணர்ந் திருப்பார் எனவே எனக்குத் தோன்றுகிறது. ஆதி அண்டவியற்கொள்கை களின்படி, அண்டத்தின் மூலவியக்கம் சுழிப்பியக்கமே எனப் பேராசிரியர் எய்டெல் கூறுவதை நான் எற்றுக்கொள்ளுகிறேன். ஆனல் அவர்கள் நித்திய இயக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர் என ஒருபோதும் கூற முடியாதென்க.

Page 16
16 ஆதி கிரேக்க மெய்யியல்
சின்ன ஆசியாவினுள், ஆக்கியர்களின் வருகையின் பின்னரே கிரேக்கர்களினற் செல்லமுடிந்தது. அதன் பின்னரே சின்ன ஆசியாவின் கரையோரங்களில் அவர்களது குடியேற்றப்பகுதி கள் தோன்றின். ஆகவே இப்பகுதிகளில் எத்தகைய பாரம் பரிய பண்பாடும் இருக்கவில்லை. ஈசிய தீவுகளில் நிலைமை வேரு யிருந்ததெனினும், அயோனியா உண்மையில் தனக்கென எவ் வித வரலாறும் இல்லாத நாடாகவேயிருந்ததென லாம். ஆதி அயோனிய மெய்யியல் முற்றிலும் லெளகீக வியல்புடையதாயி ருந்ததற்குக் காரணம் இதுவே யெனலாம்.
எமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களில் கடவுள் எனும் சொல் உபயோகிக்கப்பட்டிருக்கும் விதம், எமது மனதில் தவறன முடிவுகள் எழுவதற்குக் காரணமாகக் கூடாது. உலகு அல்லது உலகுகள் பற்றியும் மூலப் பதார்த்தம் பற்றியும் அயோனியர் கள் இச்சொல்லை உபயோகித்தனர் என்பது உண்மையே. ஆனல் ‘இறப்பற்ற" "மூப்பற்ற” எனும் இறையியல் அடைகள் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டனவென முன்னர் குறிப்பிட்டோமோ அவ் வாறே இப்பதமும் உபயோகிக்கப்பட்டதேயொழிய இதற்கு வேறெப்பொருளுமில்லை யென்க. “கடவுள்” எனும் சொல் அதன் சமயப்பொருளில் உபயோகிக்கப்படும்போது “ வழிபடப்படுவது sy என்னும் பொருளையே முதன்மையாக உணர்த்தி நிற்கும் ; ஆனல் ஒமரது நூல்களில் இச் சொல் பிற பொருள்களையும் உணர்த்தும் வகையில் உபயோகிக்கப்படுகிறது. எசியொட்டின் தேவபாரம்பரியமே இம்மாற்றத்துக்குத் தகுந்த அத்தாட்சி யெனலாம். அதிற் குறிப்பிடப்படும் தேவர்களிற் பலர் எவராலும் வழிபடப்பட்டோர் அல்லர் என்பதும், அவர்களிற் சிலர் இயற்கைத் தோற்றங்களையும், உணர்ச்சிகளையும் மனிதராகக் கற்பிப்பதன் மூலம் பெறப்பட்டவர்களே? யென்பதும் தெளிவு. நாம் இந் நூல்களில் ஆராயும் காலப்பகுதி முழுவதிலுமே கடவுள் எனும் சொல் இவ்வாறு சமயத்தொடர்பு அதிகம் இன்றி உபயோ கிக்கப்படுவதை நாம் நன்கு காணலாம். இதை நாம் நன்கு கவனித்தல் வேண்டும். அவ்வாறு கவனிப்போர் எவரும், புராணத்திலிருந்து விஞ்ஞானம் தோன்றியது எனும் தவற் றுக்கு ஆளாகமாட்டார்.
1. See Hogarth, Ionia and the East, pp. 68 Sqq.
* ஒக்கியானேசு, ரெதிசு, ஊரானேசு என்போரை எவருமே வழிபட வில்லை. போபோசு, டெய்மோசு என்போரையும் சமயச்சார்புடைய கடவுளர்க ளெனக் கூறமுடியாது.
* திரு. கோண்போட்டுவின் “ சமயத்திலிருந்து தத்துவம் வரை ” எனும் நூலில் உள்ள அடிப்படைத் தவறு இதுவேயென எனக்குத் தோன்றுகிறது. பழைய முறைகள் அயோனியாவில் முற்ருக மறைந்து போய் விட்டிருந்தன

முன்னுரை 17
பழைய சமயங்கள் வானமண்டலத்தையும் வானசோதிகளை யும் தெய்வீகமானவையெனவும், பூமியிலுள்ள யாவற்றிலிருந்
தும் வேறுபட்ட தன்மையுடையன வெனவும் கருதின. ஆனல்
அயோனிய சிந்தனையாளர்கள் மக்களது இந்நம்பிக்கைகளை
அறிந்திருந்தனராயினும், இவ்வேறுபாட்டை ஒருபோதும் மன. திற் கொள்ளவில்லை. நாம் சற்று முன்பு கூறிய யாவும்,
இதிலிருந்தே எமக்குப் புலனுகின்றன. பிற்காலத்தில் அரித் தோதிலும், பழைய சமயங்கள் கூறிய இவ்வேறுபாட்டை ஏற்றுக் கொண்டாரெனினும் கிரேக்க விஞ்ஞானம் இவ்வேறுபாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்கவில்லை.
X. கிரேக்க சிந்தனைக்கும் கீழைத் தேச ஞானத்திற்கும் எத்த கைய தொடர்பிருந்தது என்பதையும், முன்னையது எவ்வாறு பின்னையதன் செல்வாக்குக்குட்பட்டது என்பதையும் ஆராய்தல் வேண்டும். கிரேக்கர்கள் பாபிலோனியரிடமிருந்தும் எகிப்தியரிட மிருந்துமே தமது மெய்யியல் முறைகளைப் பெற்றுக்கொண்டனர் எனும் கருத்துப் பொதுவாக இப்போதும் எற்றுக்கொள்ளப்படு கின்ற வொன்ருதலால், நாம் அக்கூற்றின் பொருள் என்னவென் பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முயற்சித்தல் வேண்டும். ஈசிய நாகரிகத்தின் தொன்மை பற்றி நாம் நன்கு அறிந் துள்ள இந்நிலையில், இவ்விடயம் முழுவதையுமே ஒரு புதிய கண் ணுேட்டத்தோடு எம்மாற் பார்க்க முடிகிறது என்பதையும் நாம் மனத்திற் கொள்ள வேண்டும். கிழக்கேயிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் எனக் கருதப்பட்டவற்றுட் பல உண்மையில் ஈசி யர்களினலேயே உருவாக்கப்பட்டவையா யிருக்கலாம். அன்றி யும் ஈசியர்களது கொள்கைகளில் எவையாயினும் கீழைத்தேசங் களிலிருந்து பெறப்பட்டவையாயின் எரொடோதசு அதைப் பற் றிக் குறிப்பிடாது விட்டிருக்க மாட்டார்; ஏனெனில் கிரேக்க மதமும் நாகரிகமும் எகிப்திலிருந்து பெறப்பட்டவையென்னும் அவரது கொள்கைக்கும் இக்கருத்து வலுவூட்டியிருக்கும்?. வேறு
என்பதை அவர் உணரவில்லை. மேற்குப் பகுதிகள் பற்றிக் கூறும்போது அவரது கருத்து அதிக பொருத்தமுடையதாய்த் தோன்றுகிறது. எனினும் அங்கும், அயோனிய விஞ்ஞானத்திற்கும் பழைய பாரம்பரியத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை நன்கு உணர அவர் தவறிவிட்டார் எனவே கூற வேண்டும். . இதை எவ்வாறு வலியுறுத்தினும் மிகையாகாது. See Prof. A. B. Taylor, Aristotle, p. 58.
* டயனிசோசுவை வழிபடும் வழக்கமும், மறு பிறப்புக் கொள்கையும் எகிப்தியரிடமிருந்து பெறப்பட்டனவென மட்டுமே அவராற் கூற முடிகிறது
(i. 49, 123). இவ்விரண்டு விடயங்களிலுமே அவர் கூற்றுத் தவறனது என
நாம் காண்போம். ஆனல் இவை பற்றி அவரது கூற்று உண்மையாயிருந்தா லும் கிரேக்க மெய்யியலுக்கும் இவற்றிற்கும். எவ்வித தொடர்புமில்லை.
3-R. 10269 (6/68)
மெய்யியல் கீழைத்தேசங் களிலேயே ஆரம்பித்தது எனும் கருத்து

Page 17
18 ஆதி கிரேக்க மெய்யியல்
காரணங்களுக்காக எகிப்தியர் மீது அதிக மதிபபு வைததிருந தவரான பிளேட்டோவும் அவர்களை மெய்யியலில் அதிக பற்றில் லாத, பெரிதும் விவகார ஈடுபாடுள்ள மக்களெனவே கருதினர். அரித்தோதிலும் எகிப்தில் கணிதவியல் ஆரம்பித்தது பற்றியே குறிப்பிடுகின்றர். (இதுபற்றிப் பின்னர் கூறுவோம்.) எகிப்திய மெய்யியல் என ஒன்றிருந்திருக்குமாயின், அதைப் பற்றிக் கூறுவது அவரது வாதத்திற்கு முதவியிருக்குமாதலால் அவர் அதைப்பற்றி அவசியம் குறிப்பிட்டிருப்பார். மிகவும் பிந்திய வோர் காலப்பகுதியில் எகிப்திய மதகுருமாரும் அலெக்சாந்திரிய யூதர்களும், கிரேக்க மெய்யியல் தமது நாடுகளில் ஆரம்பித்த தெனக் கூற விழைந்தபோதுதான் கிரேக்க மெய்யியல் பீனிசி யாவிலிருந்து பெறப்பட்டதெனவும் எகிப்தியரிடமிருந்து பெறப் பட்டதெனவும் திட்டவட்டமான கூற்றுக்கள் எழுந்தன. அன்றி யும் எகிப்திய மெய்யியல் என அழைக்கப்படுவது, பழையபுரா ணக் கதைகளிலிருந்து பெறப்பட்ட ஒட்டுவமைகளின் தொகு தியே. பழைய ஏற்பாட்டுக்குப் பிலோவினல் தரப்பட்ட விளக் கத்தை இன்றும் நாம் மதிப்பிடக்கூடியதாக இருக்கிறது. எகிப் திய புராணக்கதைகளுக்குப் பொருள் கண்டவர்கள், தம்விருப் பத்துக் கேற்றவாறெல்லாம் பொருள் காண்பதில், பிலோவை யும் மிஞ்சியவர்கள் எனக் கொள்ளலாம் ; ஏனெனில் பொருள் காண்பதற்கென அவர்கள் எடுத்துக்கொண்ட வரலாறுகள் அத் துணைச் சிறப்புடையனவல்ல. உதாரணமாக ஒசிரிசு, ஐசிசு பற் றிய புராணக்கதைக்கு, முதலில் பிந்திய கிரேக்க மெய்யியற் கொள்கைகளுக்கேற்ப விளக்கம் தந்தனர்; பின்னர் கிரேக்க மெய்யியல் அதனிலிருந்தே ஆரம்பித்தது எனவும் அவர்கள் கூறினர்.
இவ்வாறு பொருள்காணும் முறை நவபைதாகரசவாதியான நூமினியோசுவோடு முடிவடைந்தது. இவருக்குப் பின்னர் கிறித் துவ வாதிகள் இம்முறையைக் கையாண்டனர். “ அதீனிய மொழி நடையிற் பேசும் மோசேசுவேயெனக் கூருது வேறெவ் வாறு பிளேட்டோவை அழைப்பது ?” எனக் கேட்டவர் நூமினி யோசுவே. நூமினியோசுவினது கடா பிளேட்டோவுக்கு மாத் திரமல்லாது வேறு பலருக்கும் பொருந்துமென, கிளிமென்று வும் இயூசிபியோசுவும் கூறினர். மறுமலர்ச்சியின் போது,
1. Arist. Met. A, I. 981 b 23.
* நூமினியோசு, பகுதி 13 (R. P. 624).
* கீழைத்தேச ஞானம் பற்றிய மிகையான கருத்துக்கள் பல என்சைகி ளோப்பீடீ (Encyclopedie) மூலமாகப் பிரபலமடைந்தன. இவை பல விடங்களுக்குப் பரவியதற்கும் எளிதில் மறையாததற்கும் இதுவே காரண மென்க. மறைந்துபோன ஓர் சாதியினரிடமிருந்து மிகவும் விருத்தி யடைந்த

முன்னுரை 9
எனையவற்றேடு இக்குழப்பமும் மீண்டும் புதுப்பிக்கப்பட் டது. அன்றியும் பிறெப்பருற்றியோ இவாஞ்செலிகாவிலிருந்து (Praeparatio Evangelica) பெறப்பட்ட சில கருத்துக்களின் அடிப் படையிலேயே, எலவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் பலவற்றிற்கு நீண்டகாலமாகப் பொருள் கொள்ளப்படலா யிற்று. தேலிசுவினலும் பைதாகரசினலும் போதிக்கப்பட்ட பண்டைய மொசுகிக, மொசாய்க்க மெய்யியல் பற்றிக் கட்வேத்து குறிப்பிடுகின்றர். சுயமாகச் சிந்திக்கும் திறன் கிரேக்கர் களுக்கு இல்லையெனப் பொருள்படும், இக்கூற்றுக்கள் எவ் வாறு ஆரம்பித்தன என்பதை உணர்தல் அவசியமாகும். பண் டைய மனிதர்களினது நம்பிக்கைகள் பற்றிச் சமீபகாலத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலமாக இக்கூற்றுக்கள் பிறக்க வில்லை ; ஏனெனில், பீனிசிய மெய்யியலோ அல்லது எகிப்திய மெய்யியலோ இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இவ்வாராய்ச்சி களின் மூலமாகப் புதிதாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஒட்டு வமைகளை உருவாக்குவதில் அலெக்சாந்திரியர்களுக்கிருந்த ஆர் வத்தையே இவர்களது ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆனல் இன்று, கிளிமென்றுவினது அல்லது இயூசிபியோசு வினது கூற்றுக்கள், கிரேக்க மெய்யியல் கீழைத்தேசங்களில் ஆரம் பித்த தென்பதற்குப் போதிய ஆதாரங்கள் என யாரும் கூறுவ தில்லை ; கலைகளைப் பொறுத்தவரையில் என்ன நடந்ததோ அவ்வாறே மெய்யியல் விடயத்திலும் நடைபெற்றதெனக் கூறுவதே இப்போது பொதுவாகக் கையாளப்படும் வாதம். கிரேக்கர்கள் தமது கலைகளைக் கிழக்கிலிருந்தே பெற்றுக் கொண் டனர் என்பதற்கான ஆதாரங்கள் பல எமக்குச் சமீபத்தில் கிடைத்துள்ளனவெனவும், மெய்யியலினது வரலாறும் இத்த கையதே யென விரைவில் நிரூபிக்கப்படுமெனவும் கூறப்படு கிறது. மேலெழுந்தவாரியாக நோக்குகையில் வாய்ப்புடையது போலக் காணப்படும் இவ்வாதத்திலிருந்து எவ்வித முடிபுக்கும் வரமுடியாது. கலைகள், மெய்யியற் கருத்துக்கள் என்பன ஒரு சமூகத்தினரிடமிருந்து இன்னேர் சமூகத்தினருக்குட் பரவும் வகைகளினிடையேயுள்ள வேறுபாட்டை மறந்துவிடலாகாது. இரு
விஞ்ஞானக் கருத்துக்களைக் கீழைத் தேசத்தினர் பெற்றிருத்தல் வேண்டு மெனப் பெய்லி கருதினர். ஆனல் மறைந்த இச்சாதியினர் பிளேட்டோவின் அத்லாந்திசுவில் வாழ்ந்த மக்களேயென அவர் கருதினர் ! (1ettres sur l'origine des sciences).
1. சிடோன்நாட்டு மோகோசுவை மெய்யியல் வரலாற்றினுட் புகுத்தியவர் பொசெய்டோனியோசுவே என திராபோவின் மூலமாக (xvi. p, 757. Strabo) அறிகிருேம். அணுவாதத்தை உருவாக்கியவர் மோகோசுவேயென பொசெய் டோனியோசு கூறினர்.

Page 18
있0 ஆதி கிரேக்க மெய்யியல்
சமூகத்தினருக்குப் பொதுவான மொழியெதுவுமில்லாதிருப்பி னும், ஒரு சாராரினது லெளகிக பண்பாடும், அவர் தம் கலைகளும் மற்றவர்களிடையே பரவுவது சாத்தியமாயிருக்கலாம். ஆனல் மெய்யியற் கருத்துக்கள் கருத்தியல்பானவோர் மொழி நடையில், நூல்களின் மூலமாகவோ அன்றேல் போதனைகளின் மூலமாகவோ கற்றேரால் மட்டுமே வெளியிடப்படக்கூடியவை. நாம் இங்கு கவனிக்கும் காலப்பகுதியில், எகிப்திய மொழியை வாசிக்கவோ, அல்லது எகிப்திய மதாசாரியன் ஒருவனது போத னைகளைக் கேட்டுணரவோ வல்ல கிரேக்கர்கள் இருந்ததாக நாம் அறியவில்லை. மேலும் இதற்கு மிகவும் பிந்தியகாலத்திற்ருன் கிரேக்கமொழியில் பேசவும் எழுதவும் வல்ல கீழைத்தேசப் போதனையாளர் பற்றி நாம் கேள்விப்படுகிறேம். எகிப்துக்கூ டாகப் பிரயாணம் செய்த கிரேக்க யாத்திரீகர்கள் சில எகிப் தியசொற்களைத் அறிந்திருக்கலாம் ; இதனிலிருந்து போலும், எகிப்திய மதாசாரியர்கள் தமது கருத்துக்களைக் கிரேக்கர் களுக்குப் புலப்படுத்தக்கூடியதாயிருந்தது எனக் கொள்ளப் பட்டது. ஆனல் அவர்கள் மொழிபெயர்ப்பாளர்களின் உதவி யைப் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அதிக கல்வியறி வில்லாத மொழிபெயர்ப்பாளரின் மூலமாக மெய்யியற் கருத் துக்கள் பரப்பப்பட்டிருக்கலாம் எனக் கற்பனை செய்யமுடியாதி ருக்கிறது.
ஆனல், பிறருக்குப் போதிக்கக் கூடியவோர் மெய்யியல் இம்மக்களிடையே வளர்ச்சியுற்றிருந்ததா என்பதை முடிவு செய்வதன் முன் மெய்யியற் கருத்துக்களை வெளியிடும் வழி வகைகள் இருந்தனவா என ஆராய்வது வீண் எனலாம். நாம் அறிந்தவரையில், கிரேக்கர்களை விட, மெய்யியல் என அழைக்கக்கூடிய ஒன்றை உடையவர்களாயிருந்த பண்டைய மக்கள் இந்தியர்கள் மாத்திரமே. ஆனல் கிரேக்க மெய்யியல் இந்தியாவிலிருந்து பெறப்பட்டதென இன்று யாருமே கூற மாட்டார்கள். உண்மையில் நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் யாவற்றையும் நோக்குகையில், கிரேக்க மெய்யியலின் செல் வாக்குக்குட்பட்டே இந்திய சிந்தனை வளர்ச்சியுற்றிருக்கிறதென்
1. Herod. i. 143; Plato, Tim. 22 b 3.
2. தனது கிரேக்க நாயகனேடு, தனது மக்களின் கொள்கைள் பற்றி உரையாடுபவளான சுதேசி மணப்பெண்பற்றிக் கொம்பர்சு குறிப்பிடுகிருரெனி னும் (rெeek Thenkers, vol i. p. 95.) எனக்கு அது நம்பிக்கை யூட்டவில்லை. தனது அந்தப்புரப் பணிப்பெண்களுக்கு, நூதனமான பெண்தேவதைகளைப் பற்றியும் அவற்றிற்குச் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும் அவள் கற்பித் திருக்கலாம். ஆனல இறையியல் பற்றியோ மெய்யியல் விஞ்ஞானம் என்ப னபற்றியோ தனது கணவனுேடு உரையாடியிருப்பாள் என எண்ண இயலா தென்க.

முன்னுரை 2.
னும் முடிபுக்கு வரவேண்டியதாயிருக்கிறது. சங்கத இலக்கியத் தின் காலமானம் இலகுவில் நிர்ணயிக்கப்படக்கூடிய வொன் றல்ல ; ஆயினும் எமக்குத் தெரிந்தவரையில், கிரேக்க கொள் கைகளைப் பெரிதும் ஒத்தனவான இந்திய மெய்யியல் முறைகள் கிரேக்க கொள்கைகளுக்குப் பிந்திய காலத்தவையே. பெளத்த, உபநிடத அனுபூதி நெறிகள் இந்திய சிந்தனை முறைகளே என்பதில் ஐயமில்லை ; இவை, அதன் சுருங்கிய பொருளில், மெய்யியலைத் தமது செல்வாக்குக் குட்படுத்தினலும், இவற் றிற்கும் இந்திய மெய்யியலுக்குமிடையேயுள்ள தொடர்பு, கிரேக்க விஞ்ஞானச் சிந்தனைக்கும், எசியொட்டு, ஒபிசம் என்பனவற் றிற்குமிடையேயுள்ள தொடர்பை ஒத்ததே.
XI. ஆனல் கீழைத்தேச செல்வாக்குகளின் தொடர்பு எதுவு எகிப்திய மின்றியே, கிரேக்க மெய்யியல் தோன்றியது எனக் கூற இய கணிதவியல் லாது. தமது கணிதவியல் எகிப்திய கணிதவியலிலிருந்தே தோன்றிய தெனக் கிரேக்கர்களே கருதினர். பபிலோனிய வானி யலையும் இவர்கள் ஓரளவுக்கு அறிந்திருக்கவேண்டும் எனலாம். இவ்விரு நாடுகளுக்கும் கிரேக்கர்களுக்குமிடையே தொடர்பு மிகுந்திருந்தபோதே கிரேக்கர்களது மெய்யியல் வளர்ச்சி யடைய ஆரம்பித்ததும், எகிப்திலிருந்து கேத்திர கணிதத்தைக் கொணர்ந்தவர் எவரோ, அவரே கிரேக்கர்களது முதற் றத்துவ ஞானி எனக் கூறப்படுவதும் எதேச்சையாக நடத்தவை என ஒதுக்கி விட்டுவிட முடியாது. ஆகவே எகிப்திய கணிதவியலின் உண்மையான தன்மையை ஆராய்தல் முக்கியமானதாகிறது. இவ்விடயத்திலும், கிரேக்கர்கள் தாமாகவே தமது கருத்துக்களை விருத்தி செய்தனரென நாம் காண்போம்.
பிரித்தானிய அரும்பொருட்சாலையில் பாதுகாத்து வைக் கப்பட்டிருக்கும் இறைன் புல்லேட்டை நோக்குகையில், நைல் நதியின் கரைகளில் வளர்ச்சியடைந்த எண்கணிதம், கேத் திரகணிதம் ஆதியன எத்தகையன என்பதை நம்மால் ஓரள வுக்கு உணரமுடிகிறது. ஆமேசு என்பவரால் ஆக்கப்பட்டதான இப்புல்லேட்டில் எண்கணித, கேத்திரகணித கணிப்புகளுக்கான விதிகள் குறிக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கணக்கு கள், தானியங்களினதும், பழங்களினதும் அளவைகள், குறிப் பிட்ட தொகையான மனிதரிடையே சில அளவுகளைப் பகிர்தல், ஒரு குறிப்பிட்ட அளவு, எத்தனை உரொட்டிகளுக்குச் சமமானது, எத்தனை சாடி பீருக்குச் சமமானது, ஒரு வேலையைச் செய்த ஆட்களுக்கு எவ்வளவு கூலி வழங்கப்படல் வேண்டும் என்பன பற்றியவை. எகிப்திய கணிதம் பற்றிப் பிளேட்டோ தனது சட்டங்கள் எனும் நூலில் கூறுவனவற்றேடு இப்புல்லேட்டு விவரங்கள் நன்கு பொருந்துவனவாயுள்ளன. எகிப்திய சிருர்

Page 19
22 ஆதி கிரேக்க மெய்யியல்
கள், நெடுங்கணக்குப் பயிலும்போதே, அப்பிள்களையும் மலர் வளையங்களையும் ஆட்களிடையே பகிர்வது பற்றிய கணக்குகளை யும், குத்துச்சண்டை வீரரையும், மல்யுத்த வீரரையும் இணை யாக்கும் கணக்குகளையும் பயின்றனர் எனப் பிளேட்டோ தமது நூலிற் கூறியுள்ளார். கிரேக்கர்கள் “லொகிட்டிகே ” என அழைத்த கலையின் தோற்றம் இதுவேயென்பதில் ஐயமில்லை. இக்கலை மிகவும் விருத்தியடைந்திருந்த நாடான எகிப்திலிருந்தே, இதை அவர்கள் பெற்றுக் கொண்டனர் எனக் கொள்ளலாம். ஆனல் கிரேக்கர்களினல் “ அறித்மிட்டிகே ’ என அழைக் கப்பட்ட, எண்கள் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்கலை பற்றிய குறிப்புக்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.
இறைன் புல்லேட்டிற் காணப்படும் கேத்திரகணிதமும் இத் தகையதே. எகிப்தில் கேத்திரகணிதம் வளர்ச்சியடைந்ததற்குக் காரணம் அந்நாட்டு மதாசாரியர்களுக்கு ஒய்வுநேரம் மிகையாய் இருந்தமையே எனும் அரித்தோதிலின் விளக்கத்திலும், அடிக் கடி யேற்பட்ட வெள்ளப் பெருக்குகளின் பின்னர் மீண்டும் மீண்டும் தமது நிலத்தை அளக்க வேண்டிய அவசிய மிருந்த மையே என எரொடோதசு தரும் விளக்கம் அதிக பொருத்த மானது. நீள்சதுர வடிவமான பரப்புகளை அளவிடுவதற் கெனத் தரப்பட்டிருக்கும் விதிகளே செம்மையுடையனவாகக் காணப்படுகின்றன. ஆனல் அவர்களது தோட்டங்கள் பெரும் பாலும் நீள்சதுரவடிவமுடையனவே யாதலால், நடைமுறைத் தேவைகளுக்கு இவ்விதிகள் போதியனவாயிருந்தன. செங் கோண முக்கோணங்கள, சமபக்க முக்கோணங்களாக இருக்க லாம் எனவும் அவர்கள் கருதிக் கொண்டனர். கூம்பகத்தி னது செகுத்து ( Sege ) என அழைக்கப்படுவதை அளக்கும் முறைபற்றிய விதி இவற்றிலும் விருத்தியடைந்தவோர் கணித வயலைச் சார்ந்ததெனலாம். இது பின்வருமாறு கூறப்படலாம் ; அடியின் மூலைவட்டத்தினதும், பக்கவிளிம்புகளினதும் நீள அளவுகளைக் கொண்டு அவற்றினிடையே இருக்கக் கூடிய விகி தத்தைக் குறிக்கும் எண்ணைக் காண்டல் வேண்டும். அடியின் மூலைவிட்டத்தின் அரைப்பங்கைப் பக்கவிளிம்பினல் வகுப்பதன் மூலம் பெறப்படும் செயன்முறை அனுபவத்தின் மூலமே இவ் விதி கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாமென்பது வெளிப்படை. இத் தகைய ஒரு விதியோடு ஆரம்ப திரிகோண கணிதத்தைத் தொடர்புபடுத்திக் கூறுவது காலவழுவாகத் தோன்றுமெனி
1 Herod. ii. 109; Arist. Met. A. I. 981 b 23.

முன்னுரை 23
னும், எகிப்தியர்கள் தமது கணிதவியலை இதற்குமேல் விருத்தி செய்திருந்தனர் எனக் கருத இடமில்லை. கடலிற் செல்லும் கப்பல்கள் போன்ற அணுக முடியாப் பொருள்களின் தூரத் தைக் கணக்கிடுதற்கு உதவும் வகையில், இக்கணிதமுறையை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே, பல பொது விதிகளைப் பெறு தற்குப் பயன்படுத்தினர். உண்மையிற் பைதாகரசுவினல் உரு வாக்கப்பட்டதான கேத்திர கணிதவியல், இப்பொதுமை யாக் கங்களிலிருந்தே தோன்றியிருக்கவேண்டுமெனக் கொள்ளலாம். தெமோகிரித்தோசுவினது எனக் கூறப்படும் குறிப்பொன்றி லிருந்து, கிரேக்கர்கள் எவ்வாறு இத்துறையில் தமது ஆசான் களாகிய எகிப்தியரையும் மிஞ்சியிருந்தனர் எனக் காணலாம். அக்குறிப்புப் பின்வருமாறு (பகுதி 299) : “ கற்றேர் பலரது வார்த்தைகளை நான் கேட்டிருக்கின்றேன். கோடுகளிலிருந்து உருவங்களை அமைப்பதிலும் அவற்றைச் செய்து காட்டுந் திற னிலும் அவர்களில் ஒருவராவது என்னிலும் திறமையுடை யராய்க் காணப்படவில்லை. ஆப்.ெடொனுட்டுகள் என அழைக் கப்படும் எகிப்திய வல்லுநர்களும் என்னைப்போன்ற திறமை யுடையோராய்க் காணப்படவில்லை?”. ஆனல் ஆப்பெடொனட் டிசு எனும் சொல் எகிப்திய சொல்லன்று; அதுவொரு கிரேக்க சொல்லே. அதன் பொருள் “ கயிறு-கட்டுபவன் ’ என்பதாகும். இந்திய கேத்திரகணித நூல்களில் மிகவும் பழமையானதான நூலும் “ கயிறு பற்றிய விதிகள் ” எனப் பொருள் படக் கூடியவாறு “ சுல்வ சூத்திரங்கள் ” எனப் பெயரிடப்பட்டிருப் பதற்கும் இதற்குமுள்ள ஒற்றுமை கவனிக்கத்தக்கதாகும். 3, 4, 5 எனும் விகிதப்படி பக்கங்களையும் செங்கோணமொன்றை யும் உடைய முக்கோணங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. மிகப் பழைய காலத்திலிருந்தே இவ்வுருவம் சீனர்களிடையேயும் இந்துக்களிடையேயும் உப யோகத்திலிருந்தது என நாம் அறிவோம். இவர்கள் பபிலோனி
gsuppu asthan 607 GSandisgigsbg, Gow, Short History of Greek Mathematics, pp. 127 Sqq.; JolášgJLGöT Milhaud, Science grecque, p. 99.
* R.P. 188. இப்பகுதி போலியானதென டியல்சு இப்போது கருதுகிறர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (Wor8.8 i. p. 124) கிரேக்க விஞ்ஞானம் உயர்வானது என வாதாடும் அதே நேரத்தில், அஃது வேருேர் நாட்டிலி ருந்து பெறப்பட்டது என விளக்க முயலும் அலெக்சாந்திரிய போலியொன்றி லிருந்தே இப்பகுதி பெறப்பட்டதென அவர் கருதுகிறர்.
*. * ஆப்பெடொனட்டிசு” எனும் சொல்லின் உண்மையான பொருளை முதலிற் காட்டியவர் கான்றர் என்பாரே. பூம்பாத்திகளை இடும் தோட்டக் காரனையே எகிப்திய “ ஆப்பெடொனட்டு'களின் தற்காலப் பிரதிநிதியென eðfTÚð.

Page 20
பபிலோனிய வானியல்
24 ஆதி கிரேக்க மெய்யியல்
லிருந்தே இதை அறிந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. தேலிசுவும் இவற்றின் உபயோகத்தைப் பற்றி எகிப்திலிருந்தே அறிந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் காண்போம். ஆனல் தாம் நடைமுறையிற் பயன்படுத்திய இவ்வடிவங்களையும் விதிகளையும் பற்றிய கொள்கைகளை விளக்க இவர்களில் எவரும் முயன்றிருப்பார்கள் எனக் கருத இடமில்லை; ஆனல் அத்த கையவோர் விளக்கத்தைத் தரும் திறன் தெமோகிரித் தோசு வுக்கு இருந்தது என்பதில் ஐயமில்லை. மேலும் இறைன் புல் லேட்டிற் காணப்படும் கணிதவியலைத் தேலிசு அறிந்திருந்தார் என்று கொள்ள எவ்வித நியாயமுமில்லையென நாம் காண் போம். கணிதவியல், உண்மையில் அவரது காலத்தின் பின்னரே, கிரேக்கரிடையே வளர்ச்சியடைந்தது எனவே நாம் முடிவு செய்தல் வேண்டும். இதுபற்றிக் கூறுகையில் கணிதவியற் பதங் கள் யாவுமே கிரேக்க மொழியடியாகப் பிறந்தன என்பதையும் கவனித்துக்கொள்ளல் நலம்.
XII. அயோனிய விஞ்ஞானத்துக்குத் தோற்றுவாயாகுமெ னக் குறிப்பிடப்படும் இன்னென்று பபிலோனிய வானியல் என்க. மிகப் பழைய காலங்களிலிருந்தே பபிலோனியர்கள் வானத்தை ஆராய்ந்து வந்தனர் என்பதில் ஐயமில்லை. நிலை யான உடுக்களை, குறிப்பாக இராசி மண்டலத்தைச் சேர்ந்த வற்றை, தொகுதிகளாக வகுத்தனர்?. பயன்படுவதேயா யினும், உண்மையில் இக்கொள்கை புராணக் கதைகளைச் சார்ந் ததே. கிரகங்களையும் இவர்கள் இனங்கண்டு பெயரிட்டதோடு அவற்றின் இயக்கத்தோற்றங்களையும் அவதானித்திருந்தனர். கிரகங்களின் நிலைகளையும் அவற்றின் வக்கிரங்களையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்; சங்கிராந்தி, சமராத்திரம் என்பன வற்றையும் அறிந்திருந்தனர். எதிர்கால நிகழ்ச்சிகளை அறியும் பொருட்டுக் கிரகணங்கள் எற்படவிருக்கும் காலத்தை அறிவதற்
* See Milhaud, Science grecque, p. 103.
* 30° ஐக் கொண்ட பன்னிரண்டு அடையாளங்களாக இராசி மண்டலத் தைப் பிரிப்பதிலிருந்து இது வேறுபட்டது. கி. மு. ஆரும் நூற்றண்டிற்கு முன்னர் பன்னிரு இராசிகளாகப் பிரிக்கும் முறையிருந்ததற்கான அடையாளம் எதையுங் காணுேம். உடுத்தொகுதிகளிற் சிலவற்றின் பெயர்களே பபிலோனி யாவிலிருந்து பெறப்பட்டுள்ளன. ஏனைய யாவும் கிரேக்கர்களது புராணங் களிலிருந்து, அதுவும் அவற்றுள் மிகப் பழையனவற்றிலிருந்து, பெறப்பட்ட பெயர்களே. " மினுேவ ” காலங்களிலேயே இவ்வுடுத்தொகுதிகளுக்குப் பெய ரிடப்பட்டிருக்க வேண்டுமென்பது இதிலிருந்து தெளிவாகிறது. அந்துரொமீடி யாவும் அவளது உறவினரும் பெற்றிருக்கும் அளவுக்குமீறிய இடம், கிரீட்டு வுக்கும் பிலித்தியாவுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருந்தவோர் காலத்தைச் சுட்டுகிறது. வானியற் புராணக் கொள்கைகளினல் மறைக்கப்பட்டவோர் கருத்து இங்கு வெளிப்படுகிறது.

முன்னுரை 25
காக, கிரகணங்கள் எற்படுங் காலங்களை அவர்கள் நன்கு அவ தானித்திருந்தனர். ஆனல் இக்கண்டுபிடிப்புகளின் தொன் மையையோ அல்லது செம்மையையோ நாம் மிகைப்படுத்தக் கூடாது. மிகவும் பிந்திய காலத்திலேயே பபிலோனியரால் திருப்திகரமானவோர் ஆண்டுமானத்தை அமைக்க முடிந்தது ; அதுவரைக்கும், அவசியம் நேர்ந்தபோதெல்லாம் பதின்மூன்றம் மாதம் ஒன்றையும் சேர்த்துக்கொள்வதன் மூலமே இவர்களால், சரியாக வருடத்தைக் கணக்கிட முடிந்தது. இந்நிலையில் நம்பத் தகுந்தவோர் காலமானம் எற்படுவது சிறிதும் சாத்தியமாயிருக் கவில்லை. ஆகவே நபுனசாரினது, என அழைக்கப்படும் காலம் (747 கி. மு.) வரைக்கும் வானியற் றேவைகளுக்கு வேண்டிய விவரங்களைப் பெற்றுக் கொள்ள இயலாதிருந்தது. 1907 ஆம் ஆண்டுவரையில் எமக்குக் கிடைத்துள்ள வானியல் நூல்களில் மிகவும் பழமையானது கி.மு. 523 ஆம் ஆண்டை, அதாவது கம்பீசசுவின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததே. இது குரோட்ட னில், பைதாகரசு தனது கழகத்தை நிறுவிய காலத்திற்கும் பிந்தியதாகும். மேலும், மகா அலெக்சாந்தரது காலத்திற்குப் பின்னர், பபிலோன் ஓர் எலனிசிய நகரமானதன் பின்னரே அங்கு வானியலாராய்ச்சியின் பொற்காலம் தோன்றியது எனக் கூறுவர். ஆனல் செம்மையாக வானத்தை அவதானிக்குந் திறனையும், பிற்காலத்தில் அலெக்சாந்திரிய வானியலாளருக்குப் பெரிதும் உபயோகமான விவரங்களையும் இவர்களாற் பெறமுடிந் திருந்தபோதிலும், இக்காலத்திற்றனும் பபிலோனிய வானி யல் அவதான நிலைக்கு அப்பால் வளர்ச்சியடைந்ததென்பதற்கு எவ்வகை ஆதாரமுமில்லை.
பபிலோனியருக்குக் கிரகணங்களை முன்னரே கணக்கிட்டறிய உத விய வட்டக் கணிப்புக்களைத் தேலிசுவும் அறிந்திருந்தா ரெனக் கொள்ள இடமுண்டென நாம் காண்போம் (பிரிவு 3) ; ஆனல் கிரேக்க விஞ்ஞானத்தின் முன்னேடிகள், பபிலோனிய வானி யல் அவதானங்களைப் பற்றி விவரமாக அறிந்திருந்தனர் எனக் கொள்வது தவறகும். பிளேட்டோவின் அந்தியகாலத்திற்கு முந்திய எழுத்துக்களில், கிரகங்கள் எவையும் பபிலோனிய பெயர்களினற் குறிப்பிடப்படவில்லை. அன்றியும் ஆதிகிரேக்க அண்டவியலாளர்கள் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. நிலையான உடுக்கள் பற்றியும், அவர் கள் யாது கருதினர் என நம்மால் அறிய முடியாதிருக்கிறது. பபிலோனிய அவதானிப்புக்களின் உதவியின்றியே கிரேக்க விஞ் ஞானிகள் தாம் சுயமாக ஆரம்பித்தனர் என்பதற்கு இதுவே போதிய ஆதாரமென்க. மேலும் இவ்வவதானிப்புக்கள் பற்றிய பதிவுகள் அலெக்சாந்திரிய காலம் வரைக்கும் கிரேக்கர்களுக்கு

Page 21
26 ஆதி கிரேக்க மெய்யியல்
எட்டவில்லையெனவும் தெரியவருகிறது. ஆனல் இப்பபிலோ னிய பதிவுகளை அயோனியர்கள் அறிந்திருந்தாரெனினும், அவர் களது சுயசிந்தனைத் திறனை மறுக்கலாகாது. பபிலோனியர் வானநிகழ்ச்சிகளை அவதானித்தது, தமது சோதிடவியலில் உதவு தற்காகவே யன்றி, விஞ்ஞானத்தில் அவர்களுக்கு ஆர்வமிருந் ததாலல்ல. தாம் அவதானித்த நிகழ்ச்சிகளுக்கு ஒழுங்கான விளக்கங்கள் காணவும் அவர்கள் முயற்சிக்கவில்லை. நமக்குக் கிடைத்த சில விளக்கங்களும் சிறிதும் திருத்தமற்றன வாகவே காணப்படுகின்றன. ஆனல் கிரேக்கர்களோ, இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்குள்ளாகவே மிகவும் முக்கியமான மூன்று விடயங்களைக் கண்டுபிடித்தனர். முதலாவதாக, பூமி, கோளவடிவான தெனவும் வேறெதஞலும் தாங்கப்படவில்லை யெனவும் அவர்கள் கண்டுபிடித்தனர்?. இரண்டாவதாக, சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய உண்மையை அவர்கள் கண்டு பிடித்தனர். மூன்றவதாக, பூமி, எமது மண்டலத்தின் மத்தியிலில்லை யெனவும், அதுவும் எனைய கிரகங்களைப்போல வேறேர் மையத்தைச் சுற்றிச் சுழல்கின்றதெனவும் அவர்கள் கண்டனர். அதிக காலஞ் செல்லு முன், சில கிரேக்க சிந்தனையாளர் பூமியும் பிற கிரகங்களும் சுழலும் வட்டத்தின் மையம், சூரியனே எனும் இறுதி முடிவுக்கும், வந்தனர் எனக் கூறலாம். இக்கண்டுபிடிப்புகள் பற்றி அவற்றிற்குரிய இடத்தில் நாம் ஆராய்வோம் ; கிரேக்க வானியலுக்கும் அதற்கு முந்திய கால சிந்தனை முறைகளுக்கு மிடையேயிருந்த வேற்று மையைச் சுட்டிக் காட்டுவதற்காகவே, இவை ஈண்டுக் குறிப்பிடப் பட்டன. மேலும் கிரேக்கர்கள் சோதிடத்தை இக்காலத்தில் எற்றுக்கொள்ளவில்லை. கி.மு. மூன்றம் நூற்றண்டிலேயே சோதிடம் அவர்களிடையே புகுத்தப்பட்டது.
சுருங்கக் கூறின், கிரேக்கர்கள் தமது மெய்யியலையோ அல்லது விஞ்ஞானத்தையோ கிழக்கேயிருந்து பெறவில்லையெனலாம். பொதுப்படுத்தப்பட்டபோது, கேத்திரகணிதம் தோன்றுவதற்குக்
இப்பதிவுகள் பற்றி நாம் முதன் முதலிற் காண்பது பிளேட்டோவின் எபிநோமிசுவிலேயே. (Epinomis, 987 a) அரித்தோதிலும் இவை பற்றிக் குறிப்பிடுகின்றர்.
* நான் அறிந்த ஆதாரங்கள் யாவும், பூமி கோளவடிவினதென எகிப்திய ரும் பபிலோனியரும் அறிந்திருந்தனர் எனும் பேகரது கருத்தைத் (Berger, Brdkunde, pp. 171 Sg.) தவறென நிரூபிக்கின்றன.
* கிரேக்கர்களிடையே சோதிடக்கலையிருந்ததற்கான ஆதாரங்களுள் மிகப் பழையது பிளேட்டோவின் திமாயசுவிலுள்ள குறிப்புக்களே (4009). கிரேக்கர் களிடையே, சோதிடம் பரவுவதற்குப் பொறுப்பானவர்கள் சுதோய்க்கர்களே. அவரிடையேயும் பொசெய்டோனியோசுவைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

முன்னுரை 27
காரணமாகிய சில அளவியல் விதிகளை எகிப்தியர்களிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்டது உண்மையே. வானமண்டல நிகழ்ச்சிகள் யாவும் சகடவோட்டமாக மீண்டும் மீண்டும் எற்படு கின்றன எனும் உண்மையை இவர்கள் பபிலோனியரிடமிருந்தே கற்றனர். இதை அவர்கள் அறிந்து கொண்டது விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்குப் பெருமளவில் அடிகோலியது; ஏனெனில் பபி லோனியர் கற்பனை செய்துகூடப் பார்த்திராத பல விடயங்களை, கிரேக்கர்களுக்கு இவ்வுண்மை உணர்த்தியது.
XII. நாம் இங்கு ஆராயப்புகும் மெய்யியலின் விஞ்ஞானச் சார்பை நன்கு வலியுறுத்தல் அவசியம். கீழைத் தேச மக் கள் கிரேக்கர்களிலும், அதிகமான அறிவைச் சேகரித்து வைத் திருந்தனரென நாம் கண்டோம். ஆயினும் அவர்கள் இந்நேர் வுகளை எவ்வகை விஞ்ஞான ஆய்வுக்கும் பயன்படுத்தவில்லை யெனவும், இந்நேர்வுகள் அவர்களை உலகம் பற்றிய தமது பண் டைய கொள்கைகளைக் கைவிடத் தூண்டவில்லையெனவும் கண் டோம். ஆனல் கிரேக்கர்களோ, பபிலோனியர்களினற் கண்டு பிடிக்கப்பட்ட இந்நேர்வுகளைத் தாம் கையாண்டு பயனடையலாம் என்பதை உடனடியாகக் கண்டுகொண்டனர். தமக்குக் கிடைக் கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதில் கிரேக்கர்கள் ஒருபோ தும் தயங்கியவர்களல்ல. எரொடோதசுவால் வருணிக்கப்படும் சொலன்-கிறீசசு சந்திப்பு வரலாற்று ரீதியான உண்மையல்ல வெனினும், கிரேக்கர்களுக்கிருந்த ஆர்வத்தை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சொலனிடம் கிறீசசு, தான் அவனது யாத்திரை கள் பற்றியும் ஆழ்ந்த ஞானம் பற்றியும் கேள்விப்பட்டுள்ள தாகவும், அறிவின் மீது கொண்ட ஆர்வத்தினல் அவர் பல நாடுகளுக்கும் ஆங்காங்கு காணவேண்டியனவற்றைக் காண்
டற் பொருட்டுச் சென்றது பற்றியும் அறிந்துள்ளதாகவும் கூறு
கிருன். “ அவதானித்தல் ” “ மெய்யியல் ஆராய்ச்சி” என்பன வற்றைக் குறிக்கும் கிரேக்க சொற்கள் இவர்களது உரையாடல் களிற் பெரிதும் காணப்பட்டன. ஆனல் இச்சொற்கள், அவற் றிற்கு இன்று வழங்கும் பொருளிலிருந்து சற்று மாறுபட்ட பொருளிலேயே அக்காலத்து வழங்கின என்பது உண்மையே. இச்சொற்கள் யாவற்றிற்கும் அடிப்படையாகவுள்ள கருத்தைத் தமிழிற் கூறுவதானல், “ புதுமை நாட்டம்’ எனும் சொல்லை உபயோகிக்கலாம். இவ்விழைவு-பிரமீதுகளையும், வெள்ளப் பெருக்குகளையும் இவையன்ன பிறவற்றையும் காணவேண்டு மென்னும் ஆர்வம்-அயோனியர்களை, மிலேச்சர்களிடமிருந்து தமக்குக் கிடைத்தவிடயங்களை உபயோகப்படுத்தத் தூண்டியது எனலாம். அயோனிய மெய்யியலாளர்கள், ஐந்து அல்லது ஆறு கேத்திரகணிதவெடுப்புக்களையும் வானமண்டல நிகழ்ச்சி
ஆதி கிரேக்க அண்டவிய லின் விஞ்ஞா னச் சார்பு

Page 22
28 ஆதி கிரேக்க மெய்யியல்
கள் சகடவோட்டமாக மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன வென்பதையும் அறிந்த மாத்திரத்தே, உள்பொருளில் எங் கெல்லாம் இவ்விதிகள் செயற்படுகின்றன என அவதானிக்க வும், உலகு பற்றியவொரு மெய்யியன் முறையை அமைக்க வும் முற்படும் அசாதாரண துணிச்சலையுடையோராய் இருந்தனர். இம்முறையில் அவர்கள் பெற்ற கொள்கைகளிற் காணப்படும், சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளும் விஞ்ஞான ரீதியான கருத் துக்களும் சேர்ந்த குழப்பம் இன்று எமக்குச் சிரிப்பையே உண்டாக்குவதாயிருக்கலாம். தமது காலத்தில் வாழ்ந்த துணி வுடைய சிந்தனையாளர்களுக்கு “ மனிதனது தகுதிக்கேற்ற சிந் தனைகளில் ஈடுபடுங்கள் ” என அறிவுரை வழங்கிய அக்கால ஞானியர் சிலரது கொள்கை சரியே எனவும் எமக்குத் தோன்ற லாம். ஆனல், இன்றும் இவைபோன்ற துணிச்சலான தீர்க்க தரிசனங்களே விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு இடமேற்படுத்து கின்றன என்பதை நாம் மனதிற் கொள்ளல் நன்மைபயக்கும். அன்றியும் இவ்வாதி மெய்யியலாளரில் ஒவ்வொருவரும், ஒவ் வொரு திசையில் உலகம் பற்றிய அறிவு விரிவடைவதற்கு வழி வகுத்தது மட்டுமன்றி, உலக அறிவிற்கும் தம் பங்கை ஈந்தனர் என்பதையும் மறுக்க முடியாது.
கிரேக்க விஞ்ஞானம் முறையான ஆய்வுகள் பரிசோதனைகள் என்பனவற்றின் வழியே அமைக்கப்படுவதற்குப் பதிலாக, பெரு மளவிற்கு அதிட்டவசமான ஊகங்களின் வழியாகவே அமைக் கப்பட்டது எனக் கொள்வதற்கு இடமில்லையெனலாம். எமக்குக் கிடைத்துள்ள வரலாறு அவர்கள் எய்திய முடிவுகளைப்பற்றியே கூறுகின்றதாதலினலேயே எமக்கு, அவை யாவும் ஊகங்கள் எனும் எண்ணம் எற்படுகின்றது. இவ்வாதி மெய்யியலாளர்கள் எவ்வாறு தமது முடிபுகளையும் பெற்றனர் என்பது பற்றிய விளக்கங்களைக் காண்டல் மிகவும் அரிதென்க. அன்றியும் ஒன் றன்பின் ஒன்ருகத் தரப்படும் இவ்வபிப்பிராயங்களை நோக்கு கையில் இவை யாவும் கொண்டது விடாக் கொள்கைகள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனல் இம்மரபின் பொது வான பண்புக்கு மாறக, சில இடங்களில் விளக்கங்கள் உள் ளன ; பிற்காலக் கிரேக்கர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத் திப் பேணியிருந்தால் இன்னும் பல விளக்கங்களோடு கூடிய கொள்கைகள் எமக்குக் கிடைத்திருக்கலாம் எனக் கருதுவதில் நியாயமுண்டு. கடலுயிரியற்றுறையில், இக்கால ஆராய்ச்சிகளா லும் நிரூபிக்கப்பட்டுள்ள பல குறிப்பிடத்தக்க உண்மைகளை அனக்சிமாந்தர் கண்டுபிடித்தார் (பிரிவு 22). செனேபனிசுவும், மோல்ற்ற பேரோசு, சிராசியூசு போன்ற ஒன்றுக்கொன்று அணித்தாக விராத இடங்களிற் காணப்பட்ட உயிர்ச்சுவடுகளையும்

முன்னுரை 29
கலாய சுவடுகளையும் குறிப்பிட்டுத் தமது கொள்கையை நிறுவ முயன்றனர் (பிரிவு 59). ஆதி மெய்யியல் வாதிகளாற் பொது வாக ஏற்றுக்கொள்ளப்பட்டதான, பூமி ஆரம்பத்தில் ஈரலிப் புடையதாயிருந்ததென்னும் கொள்கை, வெறும் புராணக் கருத்தல்ல வென்பதற்கும் உண்மையில் உயிரியல், தொல்லுயி ரியல் ஆகிய துறைகளிற் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பயன கவே இக்கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்பு தற்கும் இவை போதிய ஆதாரங்கள் எனலாம். இத்தகைய விடயங்களை அவதானித்தவர்களான கிரேக்கர்கள், இன்று நமக் குக் கிடைக்காதொழிந்து போன, வேறு பலவற்றையும் அவ தானிக்கும் ஆற்றலும் ஆர்வமும் இல்லாதிருந்திருப்பர் எனக் கொள்வது மடமையாகும். கிரேக்கர்கள் அறிவின் பொருட்டு, அவதானிப்பில் ஈடுபட்டவர்களல்ல எனக் கருதுவது கேலிக்கிட மான தவருகும். மனித உடலை மிகவும் செம்மையாகச் சித்திரித்திருக்கும் இக்காலச் சிற்பங்களே இவர்கள் நன்கு அவதானிப்பிற் பயிற்றப்பட்டவர்கள் என்பதற்குப் போதிய ஆதா ரங்களெனலாம். இப்போகிருத்திசுவின் நூற்றெகுதியும் விஞ் ஞான ரீதியான அவதானிப்பிற்கு உதாரணங்களாகக் கொள் ளக்கூடிய பகுதிகள் பலவற்றைக் கொண்டுள்ளது. ஆகவே, கிர்ேக்கர்கள் நன்கு அவதானிக்கும் ஆற்றலுடையோராயும், உலகைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதில் நாட்டமுடையோ ராயும் இருந்தனர் என அறியலாம். அத்தகையோர் தாம் பெற்றிருந்த அவதானிக்கும் திறனைத் தமது ஆர்வத்தைத் திருப்தி செய்ய உபயோகித்திருக்கமாட்டார் எனக் கொள்வது சற்றும் பொருத்தமற்றதொன்றன்றே ? அவதானித்தற்கு வேண்டிய, எம்மிடம் உள்ளவை போன்ற மிகவும் நுணுக்கமான கருவிகள் அவர்களிடம் இருக்கவில்லை என்பது உண்மையே ; ஆனல் மிகவும் எளிமையான உபகரணங்களின் உதவியுடனேயே பலவிடயங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை மறுக்க முடியாது. பருவகாலங்களை அறிதற்குப் பாட்டர்களுக்கு உதவும் என்னும் நோக்கத்துடன்தான் அனக்சிமாந்தர் நிலைக்குத்தைக் கண்டு பிடித்தார் எனக் கொள்ளலாகாது.
கிரேக்கர்கள் பரிசோதனைகளைக் கையாளவில்லை யென்பதும் உண்மையல்ல. மெய்யியலின் வளர்ச்சியில் மருத்துவ மரபு களின் செல்வாக்குப்படிந்த காலத்திலிருந்தே பரிசோதனை முறை ஆரம்பித்ததெனலாம். எம்பிடோக்கிளிசு கிளெப்சைட்ற வின் உதவியோடு நடாத்திய பரிசோதனையே, வரலாற்றிற் பதிவு செய்யப்பட்டுள்ள, ஒரேயொரு திருத்தமான பரிசோதனை யாகும். இப்பரிசோதனை பற்றி அவர் தந்துள்ள வர்ணனையைப் பார்க்கும்போது (பகுதி 100), ஆவே, ரோறிசெல்லி ஆகியோர்

Page 23
30 ஆதி கிரேக்க மெய்யியல்
பிற்காலத்தில் கண்டுபிடித்தனவற்றையும், இப்பரிசோதனை மூலம் அறியக்கூடிய நிலையில் எம்பிடோக்கிளிசிருந்தார் எனக் காணக்கூடியதாயிருக்கிறது. அறிவு தேடுவதில் மிகவும் ஆர்வ முடையோராயிருந்த் இம்மக்கள், பரிசோதனை முறையை ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் கையாண்டு எனைய விடயங்களில் தமது அறிவை விருத்தி செய்வதற்கு அதனைப் பயன்படுத்தா திருந்திருப்பர் என நம்பமுடியாது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சிப் போக்கில், மிகக் குறுகிய காலத் திற்குள்ளாகவே, புவிமையக் கருதுகோள் கைவிடப்பட்டுவிட்ட தெனினும், இதுவே விஞ்ஞானத்தின் ஆரம்ப நிலையில் எற்றுக் கொள்ளப்பட்ட கருதுகோளாயிருந்த தென்பதே எமக்குள்ள பெரிய இடைஞ்சலாகும். உலகின் மையம் பூமியே எனக் கருதப்படுகிறவளவில், வளிமண்டலவியலுக்கும் வானியலுக் கும் எவ்வகை வேறுபாடும் இல்லையெனக் கொள்ளப்படுவது தவிர்க்க முடியாததொன்றகும். இத்தகைய ஒரு கருத்தை எற்றுக்கொள்வது எமக்கு மிகவும் சிரமமாகவேயிருக்கும். * உலகு ’ எனும் சொல்லை நாம் உபயோகிக்கும்போது அது பூமியை மட்டுமே குறிக்கிறது எனவோ அல்லது முக்கியமாகப் பூமியையே குறிக்கிறது எனவோ கொள்ளலாகாது என்பதை யும் வானசோதிகள் யாவற்றையுமே - பூமி உட்பட - அது குறிக்கிறதென்பதையும் நாம் நினைவிற்கொள்ளல் வேண்டும்.
ஆகவே ஆரும் நூற்றண்டில் விஞ்ஞானம் முக்கியமாக * மேலே ”யுள்ள பகுதிகளைப் பற்றியதாகவேயிருந்தது-மேகங் கள், வானவில்கள், மின்னல் என்பனவும் வானசோதிகளோடு சேர்த்து அக்கால விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டன. இதனற் ருன், எரியூட்டப்பட்ட மேகங்களே வானசோதிகள் எனும், இன்று எமக்கு மிகவும் ஆச்சரியத்தை யூட்டுவதான,விளக்கம் தரப்பட்டது. ஆனல் இக்கருத்தும், சந்திரன் சூரியன், உடுக் கள் ஆகியன ஒன்றுக்கொன்று மாறுபட்ட இயற்கையுடையன எனும் கருத்திலும் மேம்பட்டதென்க. மிகவும் வெளிப்படையா கத் தோன்றிய கருதுகோள் எதுவோ அதுவே விஞ்ஞானத்தின் ஆரம்ப கருதுகோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை தவிர்க்க முடி யாத வொன்ருகும். எக்கருதுகோளையும் நடைமுறையிற் பயன் படுத்துவதன் மூலமே அதன் குறைபாடுகளை வெளிக்கொணர முடியுமாதலால், இவ்வாறு ஆரம்பிப்பதே பொருத்தமானது மாகும். புவிமையக் கருதுகோளை முதன் முதலில் நன்கு பயன் படுத்த முயன்றவர்கள் கிரேக்கர்களேயானபடியாற்ருன் அவர் களிஞல் அதற்கு அப்பாலும் விஞ்ஞானத்தை விருத்திசெய்ய எனினும், கலிலியோவும் வால்வெள்ளிகளை வளிமண்டல நிகழ்ச்சிக ளெனவே கருதினர்.

முன்னுரை 3.
முடிந்தது. கிரேக்க விஞ்ஞானத்தின் முன்னேடிகள், விஞ்ஞான முறையான கருதுகோள்களின் இயல்பு பற்றி அறிந்திருக்க வில்லையென்பதும், தாம் கருதியவை முற்றிலும் உண்மை யெனவே அவர்கள் நம்பினர் என்பதும் சரியே. ஆனல் செம் மையான உள்ளுணர்வொன்றினல் அவர்கள் சரியான நெறி யிற் செலுத்தப்பட்டனர் எனலாம். ஆரம்பத்திலிருந்தே “ உலக தோற்றத்தைக் கழித்தொதுக்காது விளக்க வேண்டும் ’ எனும் உணர்வே அவர்களிடையே செயற்பட்டது என்பதையும் நாம் உணரலாம். இறுதியில் உலகு முழுவதையும் பற்றி ஆராயக் கூடியவளவிற்கு வளர்ச்சியடைந்த விஞ்ஞானமுறையை முதன் முதலில் உருவாக்கியதற்காக நாம் இச்சிந்தனையாளர்களுக்கே கடமைப்பட்டிருக்கிருேம். எடுத்த மாத்திரத்தேயே, இவ்விஞ் ஞான முறையைத் தாம் பூரணப்படுத்தி விடலாமென அவர்கள் நம்பினர். இன்றும் நாம் சிலவேளைகளில் இத்தகைய தவறு விளுக்குள்ளாகிருேம் ; குறைந்த பொருத்தமுடைய கருதுகோ ளொன்றிலிருந்து, அதிக பொருத்தமுடைய கருதுகோளொன் றைத் தழுவும் நிலைக்கு முன்னேறுவதே விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் மறந்துவிடுகிருேம். இம்முறையை முதன் முத லிற் கையாண்டவர்கள் கிரேக்கர்களே. அவர்களே விஞ்ஞானத் தைத் தோற்றுவித்தவர்கள் எனக் கருதுவதற்கு இதுவே போதிய நியாயமெனலாம்.
XIV. கிரேக்க மெய்யியலின் வரலாற்றை முதன் முதலில் விெ ஒழுங்கான முறையில் விவரித்தவனன தியோபிறகத்தோசு, கழகங்கள் ஆதி அண்டவியலாளரிற் சிலர் ஆசிரியர்களாகவும் ஏனையோர் அவர்களது சீடர்களாகவும் இருந்தனரெனவும், இவர்கள் யாவ ரும் நிரந்தரமான குழுக்களில் அங்கத்துவம் வகித்தனரென வும் கூறுகிறர். இக்கூற்று ஒரு காலவழுவெனக் கருதப்படுகிறது. மேலும், மெய்யியற் “ கழகங்கள் ” என எதுவும் இருக்கவில் லையெனவும் சிலர் கூறியுள்ளனர். ஆனல் இத்தகையவொரு விடயம் பற்றித் தியோபிறகத்தோசு கூறுவனவற்றை, நாம் எளிதாக ஒதுக்கிவிட முடியாது. இவ்விடயம் மிகவும் முக்கிய மான வொன்றகையால், நாம் எமது கதையை ஆரம்பிப்ப தற்கு முதல் இதனைத் தெளிவுபடுத்துதல் அவசியமாகிறது.
வாழ்க்கையின் எந்தத் துறையிலும் ஆரம்பத்தில், மக்கள் கூட்டாயிருந்த சங்கத்துக்கே மதிப்பிருந்தது ; தனி மனிதன் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. கீழைத்தேச மக்களது வளர்ச்சி ஒருபோதும் இந்நிலைக்கு அப்பாற் செல்லவில்லை ; அவர்களது விஞ்ஞானம் எனப்படுவதும் ஒரு சாதியினரதோ அல்லது குழுவினரதோ பரம்பரைச் சொத்தாக இருந்து வந்

Page 24
32 ஆதி கிரேக்க மெய்யியல்
திருக்கிறதே யொழிய, அதனேடு சம்பந்தப்பட்ட தனிப்பட்ட மணி தர் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. கிரேக்கர்களிடையே யும் இத்தகையவொரு பழக்கமே ஒரு காலத்தில் நிலவியது என்பது சில உதாரணங்களை நோக்குகையில் எமக்குப் புல னகிறது. உதாரணமாக மருத்துவம் ஆரம்பத்தில் அசுகிளெப்பி யாட்டுகளின் "இரகசிய 'மாக இருந்தது. ஆனல், கிரேக்கர் களுக்கும் எனைய மக்களுக்குமிடையே யிருந்த வேறுபாடு, கிரேக்கர்களிடையே, இக்கலைகள் ஆரம்ப காலத்திலேயே மிகவும் ஆற்றல் படைத்த மனிதர் சிலரது செல்வாக்குக்குட்பட் டுப் புத்துயிர் பெற்றது மட்டுமன்றிப் புதிய வழிகளில் வளர்ச்சி யடையவும் வழியேற்பட்டது என்பதே. இதனல், இக்கலைகளின் கூட்டு இயல்பு, அதிகரித்த தெனலாமேயொழிய, குன்றியது எனக் கூற முடியாது. தொழிற் குழுவுக்குப் பதிலாக, “கழகங் கள் ” என நாம் அழைப்பவை தோன்றின; தொழில் பயில் வோரின் இடத்தில் சீடர்கள் தோன்றினர். இதுவோர் பெரிய மாற்றம் எனலாம். அதிகாரத்தையுடைய தலைவர்களைக் கொண் டதும் கட்டுப்பாடுகளையுடையதுமான தொழிற் குழுக்கள் அதிக மாற்றத்தை விரும்பாதனவும், பழமைச் சார்புடையனவாயும் இருத்தல் தவிர்க்க முடியாததாகும். ஆனல், தாம் மதிக்கும் ஓர் ஆசிரியனைச் சார்ந்தொழுகும் சீடர் கூட்டம் வரலாறறிந்த மிகவும் வலிமையுடைய முன்னேற்றச் சத்திகளுள் ஒன்றென்க.
பிற்காலத்து அதீனிய கழகங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக் கப்பட்ட கூட்டுச்சங்கங்களாயிருந்தன என்பதில் ஐயமில்லை. இவற் றுள் மிகப் பழையதான கழகம் எறக்குறையத் தொளாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருந்ததெனவும் நாம் அறிகிறேம். இம் மரபு, கி. மு. நான்காம் நூற்றண்டிற்ருன் ஆரம்பித்ததா அன்றேல் அதற்கு முன்பிருந்தே தொடர்ந்து வந்ததா என்பது பற்றியே நாம் முடிவு செய்தல் வேண்டும். ஆதி மெய்யியற் கொள்கைகளுட் பிரதானமானவை, இக்கழகங்களின் வழியா கவே வந்தன என்பதற்கு ஆதாரமாகப் பிளேட்டோவின் கூற் ருென்றுளது. எபிசோசுவிலிருந்த, எரக்கிளைட்டசுவின் சீடர்கள் தனது காலத்தில் மிகவும் வலிமையுடையவோர் குழுவினரா யிருந்தனர் என அவர், சோக்கிரதரைக் கூற வைக்கிருர், சோபிட்டு, தேற்சுமன் என்பனவற்றில் வரும் அந்நியனும், ஈலியாவில் தனது கழகம் இன்னமும் இருந்து வருகிறது எனக் கூறுவதைக் கேட்கிறேம். அனக்சகோரசுவின் சீடர்களைப் பற்றியும் நாம் கேள்விப்படுகிறேம் ; பைதாகரச வாதிகளும் ஒரு குழுவினரேயென்பதை யாரும் சந்தேகிக்க மாட்டார். உண் மையில், மைலீசியர்களைத் தவிர, எனையோர் யாவரும் கழகங்
Statesman.

33
களைச் சேர்ந்திருந்தனர் என்பதற்குப் பலமான புறச்சான்றுகள் பல உள எனலாம். மைலிசியர்களிலும், பிற்காலத்து மெய்யி யலாளர் சிலர் பற்றி, அவர்கள் அனக்சமீனிசுவின் சிந்தனை முறையைத் தழுவியவர்கள் என தியோபிறகத்தோசு கூறுகி ருர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றியும், முதலாம் அத்தி யாயத்தில், மைலிசியர்களிடையே கழகம் ஒன்றிருந்தது என்ப தற்குப் பலமான அகச்சான்றுகள் உள எனவும் நாம் காண் போம். இவற்றையெல்லாம் மனதிற் கொண்டே, கிரேக்க விஞ் ஞானத்தைத் தோற்றுவித்த சிந்தனையாளர்களை நாம் ஆராய் வோம்.
1 அத்தியாயம் VI. பிரிவு 122 ஒப்பிடுக.

Page 25
பிளேட்டோ
அரித்தோதில்
ஆதாரங்கள் பற்றிய குறிப்பு
அ. மெய்யியலாளர்
1. ஒழுக்கவியல், அறிவியல் என்பனபற்றிய ஆராய்ச்சிகள் ஆரம் பிப்பதற்கு முந்திய மெய்யியல் வரலாறு பற்றிப் பிளேட்டோ குறிப்பிடும் இடங்கள் மிகச்சிலவே ; ஆனல் அது பற்றி அவர் கூறியுள்ளவை யாவும் மிகவும் பயனுள்ளவையாகக் காணப்படு கின்றன. அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்த கலைத்திற னும், பிறரது மனத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றலும், ஆதிமெய்யியல் வாதிகளின் கருத்துக்கள் பற்றி ஆதாவோடு விவரிக்க அவருக்கு உதவின. இவ்வாறு விவரிக்கையில் தனக்கு முன் வந்த மெய்யியலாளர் பற்றிச் சிலவேளைகளில் விளையாட் டாகவும் சிலேடையாகவும் குறிப்பிட்டுள்ளா ரெனினும், ஒரு போதும் அவர்களது சொற்களுக்கு, அவர்கள் கருதாத பொரு ளைக் கற்பிக்க, அவர் முயலவில்லை எனலாம். உண்மையில், பண்டைய எழுத்தாளரிடையே மிகவும் அரிதாகவே காணப்பட்ட வொரு வரலாற்றுணர்வை அவர் உடையவராயிருந்தார்.
ஐந்தாம் நூற்றண்டின் நடுப்பகுதியில் அதென்சில் நிலவிய விஞ்ஞானக் கொள்கைகள் பற்றிய அவரது வருணனையான பீடோவின் பகுதி (96 a sgg.) எமக்கு மிகவும் உபயோக மானது.
2. பொதுவாக, ஆதி மெய்யியலாளர் பற்றிய அரித்தோ திலினது கூற்றுக்கள், பிளேட்டோவின் கூற்றுக்களினளவுக்கு வரலாற்று ரீதியானவையல்லவெனலாம். எறக்குறைய எல்லா விடயங்களிலும், அரித்தோதில் தனது கொள்கையின் சார்பில் நின்றே பிற கருத்துக்களை ஆராய்கின்றர் எனலாம்; அவர் எற் றுக்கொண்ட கொள்கை, வானமண்டலத்தின் தோற்றரவான நாளாந்த சுழற்சியை அடிப்படையாகக் கொண்டமைந்ததாத
லால், அதனிலும் சிறந்த, விஞ்ஞான ரீதியான கொள்கை
களை எற்றுக்கொள்வது அவரால் இயலாததாயிருந்தது. முந்திய மெய்யியலாளர்கள் முயன்றவை யாவற்றையும் தனது மெய்யி யன் முறை சாதித்து விட்டதென அவர் நம்பினராதலால், அவர்களது கொள்கைகள் யாவும், தனது மெய்யியன் முறையை இலட்சியமாகக் கொண்ட “மழலை ” முயற்சிகள் எனவே அவர் கருதினர் (Met. A,10, 9938, 15). மேலும் அரித்தோதில் சில மெய்யியன் முறைகளை எனையவற்றிலும் அதிக ஆதரவோடு நோக்கினர் என்பது கவனிக்கப்படல் வேண்டும். உதாரணமாக,
34.

ஆதாரங்கள் பற்றிய குறிப்பு 35
ஈலியவாதிகள் பற்றி அரித்தோதில் கூறியிருப்பன நியாய மற்றவையே என்பதில் ஐயமில்லை. பொதுவாக, கணிதவியற் சார்புடைய விடயங்களில், அரித்தோதில் கூறுவனவற்றை நம்ப (plu fig).
அரித்தோதில் தனது விவரங்களிற் பெரும்பாலானவற்றைப் பிளேட்டோவின் மூலமே பெற்றர் என்பதைப் பலர் மறந்து விடுவதுண்டு ; பல விடங்களில், பிளேட்டோவின் நகைச்சுவை யான குறிப்புக்களுக்குப், பொருத்தமான பொருள் கொள் ளாத தவறுக்கு அரித்தோதில் ஆளாகிருர் என்பதையும்நாம் அவதானித்தல் வேண்டும். ".
3. சுதோய்க்கர்கள், குறிப்பாகக் கிறிசிப்பியோசு, ஆதிமெய்யி யலில் அதிக கவனம் செலுத்தினர். ஆனல், அதுபற்றி அவர்கள் கூறும் முறையில், அரித்தோதிலின் கூற்றுக்களில் நாம்கண்ட தவறு, இன்னும் மிகையாக எற்பட்டிருப்பதைக் காணலாம். தமது கொள்கையின் சார்பில் நின்று, தமக்கு முந்திய மெய் யியலாளர்களை விமர்சிப்பதுடன் அவர்கள் திருப்திப்படவில்லை; பழைய கவிஞர்களும் சிந்தனையாளரும் போதித்த கொள்கை களுக்கும் தமது கருத்துக்களுக்கும் எவ்வகை வேற்றுமையும் இல்லையென அவர்கள் எண்ணினர் எனத் தோன்றுகிறது. முந் திய மெய்யியலாளரது கொள்கைகளுக்கு இவ்வாறுபொருள் கொள்ளும் முறை ஆதிமெய்யியல் வரலாற்றில், குறிப்பாக எரக் கிளைட்டசு பற்றிய விவரங்களில், பல தவறுகள் எற்படுவதற்குக் காரணமாயிருந்திருக்கிறது.
4. ஐயவாதிகளைப் பொறுத்தவரையிலும், இதுவரை கூறியன யாவும் பெருமளவிற்குப் பொருத்தமானவை யெனவே கூற வேண்டும். செகுதசு எம்பிரிக்கசு போன்றேர் ஆதி மெய்யிய லில் உள்ள முரண்பாடுகளை வெளிக்கொணர்வதற்காகவே அதில் ஆர்வம் காட்டினர். ஆனல் பெரும்பாலும் அவர் கூறுவன அதிக பயனுள்ளனவாய்க் காணப்படுகின்றன; ஏனெனில், தனது கொள்கைக்கு ஆதாரம் பெறும் பொருட்டு, அறிவு, புலனு ணர்வு பற்றிய பழைய கருத்துக்கள் பலவற்றை அவர் மேற் கோள்களாகத் தருகின்றர்.
5. இத்தலைப்பின்கீழ் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது தியோபிறகத்தோசுவின் செல்வாக்குக்குட்படாத, அரித்தோதி லின் பாடியகாரர்களையே. இவர்களிடையே காணப்பட்ட முக்கிய வியல்பு, பழைய மெய்யியற் கொள்கைகளுக்குப் பொருள் கற்பிப்பதில் இவர்கள் காட்டிய தாராள மனப்பான்மையேயாகும். இதன்படி, மனித அறிவினல் முற்ருக விளங்கிக்கொள்ளக் கூடியதே உலகு எனும் கொள்கையை ஆதி மெய்யியலாளர்
சுதோய்க்கர்
ஐயவாதிகள்
நவபிளேட்டோ தரிசனவாதி கள்

Page 26
தியோபிறகத் தோசுவின் “ øy i Surr பங்கள் "
36 ஆதி கிரேக்க மெய்யியல்
யாவரும் எகோபித்து எற்றுக்கொண்டனர் என இவர்கள் கருதினர். எனினும் ஆதி மெய்யியலாளரது மெய்யியற் பகுதி களைப் பேணி எமக்குக் கிடைக்குமாறு தந்ததற்கு, யாவரிற்கும் மேலாக சிம்பிளிசிய்சுவுக்கே நாம் கடமைப்பட்டுள்ளோம் என லாம். கி. பி. 529 ஆம் ஆண்டுவரையிலாயினும், கழக நூல் நிலையத்தைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு அவருக்கிருந்த தென்க.
ஆ. தொகுப்பாசிரியர்கள்
6. பேராசிரியர் எர்மான் டியல்சுவினது டொக்சோகிர்ாபி கிரைக்கி (Doxographi Graeci) எனும் நூல், பிந்திய ஆதா ரங்கள் பற்றிப் பல புதிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது ; பேராசிரியர் டியல்சுவின் ஆராய்ச்சிகளை நாம் மனத்திற் கொள் ளாது விடின், இவ்வாதார நூல்களிலுள்ள கூற்றுக்களைச் சரி வர மதிப்பிட முடியாது. டொக்சோகிராபி கிரைக்கியைப் படிக்க முயலும் வாசகருக்கு உதவக்கூடிய சுருக்கம் ஒன்றை இங்கு தருதல் சாத்தியமாகும்.
7. தொகுப்பாசிரியர்கள் (Doxographers) எனும்போது, தியோபிறகத்தோசுவின் பெருநூலிலிருந்து நேரடியாகவோ அல்லது பிற ஆசிரியர் மூலமாகவோ பெற்ற விவரங்களைக் கொண்டு, கிரேக்க மெய்யியலாளரது அபிப்பிராயங்களைத்
தொகுத்துத் தந்தவர்களையே குறிப்பிடுகிறேம். இவர்களுக்கு
ஆதாரமாகும், மேற்குறிப்பிடப்பட்ட தியோபிறகத்தோசுவின் நூலில் கணிசமான அளவுடையதான ஒரு அத்தியாயம் பேணப் பட்டிருக்கிறது. அரித்தோதிலது நூலொன்றின் முதற்பாகத் திற்கு, சிம்பிளிசியசு எழுதிய பாடிய மொன்றிலும், தியோ பிறகத்தோசுவின் நூலின் முக்கிய பகுதிகள் பல காணப்படு கின்றன என்று பிராண்டிசுவைப் பின்பற்றி ஊசினர் கூறினர். சிம்பிளிசியசுவும், அபுரொடிசியாசுவைச் சேர்ந்த அலெக்சாந் தரிடமிருந்தே (எ. கு., கி. பி. 200) இப்பகுதிகளைப் பெற்றுள்
ளார் போலத் தோன்றுகிறது. ஆகவே யோபிறகத்தோசு
வின் நூலின் முதற் பாகத்தின் கணிசமான பகுதியும், இறு திப் பாகத்தில் ஏறக்குறைய முழுவதும் எமக்குக் கிடைத் திருக்கின்றனவெனலாம்.
எமக்குக் கிடைத்துள்ள பகுதிகளைக் கொண்டு நோக்குகை யில், தேலிசு முதல் பிளேட்டோ வரை வாழ்ந்த மெய்யிய லாளரது கவனத்தைக் கவர்ந்த முக்கியவிடயங்களைத் தனது நூலில் வெவ்வேறு பாகங்களாக வகைப்படுத்தி ஆராய்வதே தியோபிறகத்தோசு பின்பற்றிய முறை என்பது தெளிவாகி றது. மெய்யியலாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ற

அதாரங்கள் பற்றிய குறிப்பு 37
வாறு வரிசைப்படுத்தப்படவில்லை; ஒத்தகொள்கையுடையவர்களா யிருந்த மெய்யியலாளர்கள், ஒருங்கே ஆராயப்பட்டனர். ஆனல் ஒத்தகொள்கையுடையவர் போலத் தோன்றினும் இரு மெய் யியலாளரிடையே வேற்றுமை எதுவும் உண்டெனின், அவ்வேறு பாடுகளும் கவனத்தோடு குறிப்பிடப்பட்டன. ஆனல் முதலா வது பாகம் இம்முறைக்குச் சிறிது புறனடையானது 6 னலாம் ; எனெனில் அதில் காலவரிசைப்படியே மெய்யியல் மரபுகள் வருணிக்கப்பட்டுள்ளன. அன்றியும், காலவரிசைப்படி அமைந்த வரலாற்றுக் குறிப்புக்களும் ஆங்காங்கே தரப்பட்டன.
8. காலப்போக்கில், கிரேக்கர்களது மேதைத்திறன் மங்கவா தொகுப்பா
ரம்பித்ததைத் தொடர்ந்து, எழுந்த பெருந்தொகையானசுருக்க சீரியசிகள் நூலாசிரியர்க்கும், கைநூலாசிரியர்க்கும் தியோபிறகத்தோசு வினது இந்நூல் மிகவும் பயனுடையதாயிருந்தது. இவர்களிற் சிலர் தியோபிறகத்தோசுவையே பின்பற்றி, ஒவ்வொரு பிரச் சினையையும் தனியான தலைப்பாகக் கொண்டு வரிசைப்படுத்தி னர். ஏனையோர் அவரது நூலைப் பிரித்து அதிலே தரப்பட்ட கருத் துக்களை, அவற்ாைத் தழுவிய மெய்யியலாளரது பெயர்களின் கீழ் வரிசைப்படுத்தியிருந்தனர். இயற்படுத்தும் தொகுட்புமுறை
யிலருந்து, வரன்முறைத் தொகுப்பு முறையைத் தழுவிய இப் பின்னவர்களை வரன்முறைத் தொகுப்பாசிரியர்கள் என நான் அழைப்பேன்.
1. இயற்படுத்த தொகுப்பாசிரியர்
9. புளுட்டாக்கினது எனக் கூறப்படும் நூல்களில் ஒன்றன பிளாக்கிட்டா பிளாக்கிட்டா பிலோசபோறம் (Placita Philosophorum) யோன் வும் தொபா தொபாயோசு (கி. பி. 470 அளவில்) எழுதிய எக்கிலொகியோகவும் பிசிகீ (Bclogae Physicae ) எனும் இரு நூல்களுமே இன்று இயற்படுத்த தொகுப்பாசிரியரது நூல்களாக எமக்குக் கிடைத் துள்ளவை. இவற்றுட் பின்னது, ஆதியில், அதே ஆசிரியாரால் எழுதப்பட்ட புளோரிலேகியும் (Floriegium ) என்பதோடு சேர்ந்து ஒரு நூலாகவே கொள்ளப்பட்டது. புளுட்டாக்கினது எனத் தவருகக் கருதப்பட்ட போலி நூலான பிளாக்கிட்டாவைப் பெருமளவிற்கு ஒத்திருந்த சுருக்க நூலொன்றின் பிரதியொன் றும் இந்நூலிற் சேர்க்கப்பட்டிருந்தது. ஆஞல் எக்கிலொகீ, பிளாக்கிட்டாவின் முதநூல் எனவோ அல்லது பிளாக்கிட்டா, எக்கிலொகீயின் முத நூலெனவோ சிறிதும் பொருந்தாதென் பது, நன்கு நிரூபிக்கப்படக்கூடியதே. இவற்றுள் எக்கிலொகீயே மற்றையதிலும் முழுமையுடையதாய்க் காணப்படுவது ஆயி னும் பிளாக்கிட்டாவே இவற்றுட் காலத்தால் முந்தியதாயிருத் தல் வேண்டும். ஏனெனில் கி. பி. 177 ஆம் ஆண்டில்

Page 27
ஈத்தியோசு
வெதுசுதா பிளாக்கிட்டா
38 ஆதி கிரேக்க மெய்யியல்
(Dox, p. 4) கிறித்துவரை ஆதரித்தற்கு, அதெனகரசு பயன் படுத்தியது இந்நூலையே. அன்றியும் கலன் எழுதிய தெனப் படும் மெய்யியல் வரலாற்றினதும், இயூசிபியோசு, சிரில் ஆகி யோரது நூல்களிலுள்ள குறிப்புக்களினதும் ஆதாரம் இதுவே. இவ்வெழுத்தாளர்கள் கூறுவனவற்றின் உதவியோடு எக்கி லொகீயிற் பல திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன (Dox.pp. 5. spp.).
பிளாக்கிட்டாவைப் பயன்படுத்திக்கொண்ட வேருெரு எழுத் தாளர் அக்கிலீசு (அக்கிலிசு தாத்தியசுவல்ல) ஆவர். இவரது காலம் 6 துவெனத் திட்டவட்டமாக எமக்குத் தெரியாதெனி னும், இவர் கி. பி. மூன்றம் நூற்ருண்டைச் சேர்ந்தவரென அனுமானிக்க இடமுண்டு (Dox, p. 18).
10. ஆயின், பிளாக்கிட்டானு எக்கிலொகீ ஆகிய இரண்டிற்கும் பொதுவான ஆதார நூல் யாது? தியோடோறெற்று (கி. பி. 445 ஆம் ஆண்டளவில் )இதனை வாசிக்கும் வாய்ப்பட்ை பெற்றி ருந்தார் என டியல்சு காட்டியுள்ளார்; எனெனில் சிலவேளை களில், இ விரு நூல்களிலும் காணப்படும் கருத்துக்கள் சில வற்றை, அவற்றிலும் விரிவான உருவத்தில் தியோடோறெற்று தந்திருக்கிறர். அதுமட்டுமல்லாது, ஈத்தியோசுவே ஆதாரநூலை எழுதியவர் எனவும் அவர் அறியத்தந்துள்ளார். இதற்கேற் பவே டியல்சு, பிளாக்கிட்டாவின் பகுதிகளையும், அவற்றிற்குச் சார்பான எக்கிலொகீயின் பகுதிகளையும் அருகருகே நிரல்களாக வமைத்து அச்சிட்ட தமது நூலிற்கு ஈத்தியை பிளாக்கிட்டா வெனப் (Aetii Placita) பெயரிட்டனர். புளுட்டாக்கின் நூலலி ருந்து பிர்தியகால எழுத்தாளர் கையாண்ட மேற்கோள்களும், ஈத்தியோசுவிடமிருந்து தியோடோறெற்றினல் பெறப்பட்ட பகுதிகளும் டியல்சுவன் நூலில் ஒவ்வொரு பக்கத்தின் அடியி லும் தரப்பட்டிருக்குன்றன.
11. ஆனல் ஈத்தியோசுவும் தியோபிறசத்தோசுவின் நூலை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. தியோபிறசத்தோசுவின் நூலி லிருந்து பெறப்பட்ட வேறெரு சுருக்க நூலையே அவர் பயன் படுத்தினர். வெதுசுதா பிளாக்கிட்டா என அவரால் அழைக் கப்பட்ட இந்நூலின் சாயைகள் சிசரோவின் நூலிலும், வாரோ வைப் பின்பற்றுபவரான சென்சோரினசுவன் நூலிலும் காணப் படலாம். வெதுசுதா பிளாக்கிட்டா பொசெய்டோனியசின் குழு வினரால் யாக்கப்பட்டது. ஒமரைப் பின்பற்றிய ஒட்டு வமையா ளர்களது நூல்களிலும் வெதுசுதா பிளாக்கிட்டாவின் சாயைகள் காணப்படுகின்றன.

ஆதாரங்கள் பற்றிய குறிப்பு 39
எபிசுரிய நூல்களிலிருந்தும், வேறு சில ஆதாரங்களிலி ருந்தும் பெற்று, ஈத்தியோசு தமது நூலிற் சேர்ந்திருக்கும் பயனற்ற விவரங்கள் சிலவற்றைக் கழித்துவிட்டுப் பார்ப்போ மானல், வெதுசுதா பிளாக்கிட்டாவின் பொருளடக்கத்தை ஒரள வுக்குத் திட்டவட்டமாக ஊகித்துக்கொள்ளலாம் (Dox, pp. 181 Sgg.). இதனைக் கொண்டு, தியோபிறகத்தோசுவினது முத நூலின் ஒழுங்கையும் ஊகித்துக்கொள்ளுதல் சாத்தியமே.
12. ஆதி கிரேக்க மெய்யியல்பற்றிச் சிசரோ எமக்குத் தரும் சிசரோ
விவரங்களைப் பொறுத்தவரையில், அவரைத் தொகுப்பாசிரியர் களுள் ஒருவராகக் கணிக்கலாமேயொழிய, மெய்யியலாளரெனக் கருத முடியாது; தியோபிறகத்தோசுவின் நூலிலிருந்து வேறு யார் மூலமாகவும் பெறப்பட்ட பகுதிகளேயன்றி வேறு எதுவும் இவரிடமிருந்து எமக்குக் கிடைக்கவில்லை. இங்கு நாம் இவரது “ gyné3 sua ” (Acad.i.) 118, Gg56 fusbonas (De natura deorum, t.) 25-41 ஆகிய இரு பகுதிகளையும் கவனிக்கலாம்.
(அ) “ லூக்கலசு ’ எனும் தொகுப்பு.-“ ஆர்க்கே ’ யெனும் முதற்காரணி பற்றிப் பல்வேறு மெய்யியலாளர்களும் கொண்டி ருந்த கருத்துக்களின், அதிக செம்மையற்றதும், பூரணமற்றது மான வொரு சுருக்கமே லூக்கலசுவிற் காணப்படுகிறது. தியோ பிறசத்தோசு உபயோகித்த அதே சொற்களை அறிந்து கொள் வதற்கு இது சிறிது உதவுகின்றதென்பதைத் தவிர்த்து இப் பகுதி அதிக பயனுடையதல்ல. காணியாடிசுவுக்குப் பின்னர் கழகத்தின் தலைவராயிருந்த கிளெய்தோமாக்கோசுவின் மூலமா கவே எமக்கு இத்தொகுப்புக் கிடைத்துள் ளது (கி. மு. 129).
(ஆ) தேவரியற்கை யெனும் தொகுப்பு-மிகவும் முக்கியம் வாய்ந்த இப்பகுதியைப் பெரிதும் ஒத்ததான எபிகூரிய நூலொன் றின் பகுதிகளைக் கொண்ட சுருள் ஒன்று எக்கியூவேனியத்திற் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதனைப் பற்றிய அரிய விவரங்கள் பல தெரியவந்துள்ளன. “ தேவரியற்கை ” எனும் பகுதிக்கும் இவ்வெபிசுரிய நூலிற்குமிடையே காணப்படும் ஒற்றுமை காரணமாக இந்நூலே “ தேவரியற்கை ”யின் மூல நூல் எனக் கருதுவாரும் உளர். Epp, 3d Att. xi 39.2 இல் உள்ள குறிப்பை ஆதாரமாகக் கொண்டு, மேலே குறித்த எபிசுரிய நூல் பைதுரோசுவினல் எழுதப்பட்டிருக்கலாம் என முதலிற் கொள்ளப்பட்டது. சிசிரோ, பிலோடெமோசுவைப் பார்த்துத் தமது நூலை எழுதவில்லையெனவும், உண்மையில் இவர்கள் இருவருமே வேறேர் நூலைப் பார்த்துத் (இது பைது

Page 28
இப்பொலைட்டச
சுதுருேமத்தீசு
40 ஆதி கிரேக்க மெய்யியல்
ரோசுவின் நூலேயென்பதில் ஐயமில்லை) தமது நூல்களை எழுதியிருக்கவேண்டுமெனவும், அவர்களாற் பயன்படுத்தப்பட்ட அந்நூலும் தியோபிறகத்தோசுவுக்குச் சுதோய்க்கர்களால் யாக் கப்பட்ட சுருக்கவுரையொன்றிலிருந்து பெறப்பட்டிருக்கவேண்டு மெனவும் டியல்சு காட்டியுள்ளார். சிசுரோவின் நூற்பகுதி களும் அவற்றுச் சார்பான பிலோடெமோசுவின் பகுதிகளும் டியல்சுவின் பதிப்பில் அருகருகே தரப்பட்டுள்ளன (Dox, pp. 53 sqq.).
II. வரன்முறைத் தொகுப்பாசிரியர்கள்
13. இப்பொலேட்டசு எழுதிய புறநெறிமறுப்பு (Refutation of al Heresies) எனும் நூலின் முதலாவது பாகமே வரன் முறைத்தொகுப்பு நூல்கள் யாவற்றிலும் மிகவும் முக்கியமான தாகும். இந்நூல் நீண்டகாலமாக ஒறிகென் எழுதிய பிலோ சொபொமேன (Philosophoumena) என வழங்கி வந்தது ; ஆனல் 1854 ஆம் ஆண்டில் ஒட்சுபோட்டில் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்ட, இந்நூலின் ஏனைய பாகங்கள் கண்டுபிடிக்கப் பட்டதும், முதலாவது பாகம் ஒறிகெனல் எழுதப்பட்டது என் பது தவறன கொள்கையெனத் தெரியவந்தது. தியோபிறசத் தோசுவுக்கு எழுதப்பட்ட நல்ல சுருக்கவுரை யொன்றிலிருந்து இது எடுக்கப்பட்டிருக்கவேண்டும். இதன் பொருளடக்கம் எலவே வெவ்வேறு மெய்யியலாளர்களின் கொள்கைகளாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனல் இந்நூலிலும், தேலிசு, பைதாகரசு, எம்பிடோக்கிளிசு ஆகியோரைப் பற்றிக் கூறும் பகுதிகள், ஐயத்திற்கிடமான கூற்றுக்களையும், பொய் யும் கற்பனையுமான கதைகளையும் கொண்ட வெறுமனே வரன் முறை ரீதியாகத் தொகுக்கப்பட்ட தரங்குறைந்த நூலொன் றிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
14. பிறெப்பருற்றியோ எவாஞ்செலிக்கா எனும் நூலில் அதன் ஆசிரியரான இயூசிபியோசுவினல் அனுவாதிக்கப்பட் டுள்ள, புளுட்டாக்குவினல் எழுதப்பட்டதெனத்தவருகக் கருதப் பட்ட சுதுறேமத்தீசு எனும் நூலின் பகுதிகள், பிலோசொ பொமேனுவின் மிகச் சிறந்த பகுதிகள் எந்த முதநூலிலி ருந்து எடுக்கப்பட்டனவோ, அந்நூலிலிருந்தே எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கொள்ளலாம். நாம் காணக்கூடிய வரையில் சுதுறேமத்தீசு, பிலோசொபொமேனுவிலிருந்து இரு விடயங் களில் மட்டுமே வேறுபடுவதாய்க் காணப்படுகிறது. முதலாவ தாக, சுதுறேமத்தீசுவின் பகுதிகள், பெரும்பாலும் நூலின்
முற்பகுதிகளிலிருந்தே பெறப்பட்டிருக்கின்றனவாதலால், மூலப்

அதாரங்கள் பற்றிய குறிப்பு 41
பதார்த்தம் வானசோதிகள், பூமி என்பனவற்றைப் பற்றிக்கூறு வனவாயே அமைந்துள்ளன. இரண்டாவதாக இங்கு அனு வாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளும் மூல நூலின் மொழிந டையை அதிகமாற்றமேதுமின்றிப் பெயர்த்துத் தரப்பட்டனவல்ல வெனலாம்.
15. இடையோசினிசு லயாத்தியசு அல்லது லயாத்தியசு இடைஇடையோ யோசினிசு என்பவரது பெயரில் வழங்கும் குறிப்புத்திரட்டு (el ", "சி Usener, Epicurea, pp. I sqq.) QU5Gổa)/g), Gg5 TG5ÜL ITổda5Gí? தியசு லிருந்து பெறப்பட்ட கணிசமான பகுதிகளைக் கொண்டுள்ளது. இவ்விரு தொகுப்பு நூல்களில் ஒன்று, இப்பொலைட்டசுவின் நூலில் முதல் நான்கு அத்தியாயங்களைப் போன்று, வெறு மனே சுவையான சம்பவங்களையும், பழமொழிகள் போன்றன வற்றையும் வரன்முறையாகத் தொகுத்ததாகக் காணப்படுகின் றது; மற்றையது, இதனிலும் சிறந்ததாகவும், இப்பொலைட் டசுவின் எனை அத்தியாயங்களின் ஆதார நூலைப் போன்றதாக வும் காணப்படுகிறது. இவற்றுள் முன்னையதிலிருந்து எடுக்கப் பட்ட பகுதிகளைச் “சுருக்கநூல்’ எனவும், மற்றையதைச் “ சிறப் புநூல் ” எனவும், அழைப்பதன் மூலம் இக்கலப்பை மறைப் பதற்கு முயற்சி செய்யப்பட்டிருக்கிறது எனலாம்.
16. இயூசிபியோசு (P. E. x, xiv., XV. ) தியோடோறெற்று திருச்சபைக் (Gr. aff, cur. ii. 9-11) guaofular (C. haer. ii. 14) g(369 ge" Sus (Adu. nat. ii.9 ), spasi SGö7 (Civ. Div, viii. 2) eâ + யோரது நூல்களிலும் சுருக்கமான சிறு தொகுப்புக் குறிப்புக்" soft கள் காணப்படுகின்றன. நாம் அடுத்த பிரிவில் ஆராய விருக் கும் "வரன்முறை நூல்” களின் ஆசிரியர்களிடமிருந்தே மேற் குறித்த யாவரும் தமது விவரங்களைப் பெரும்பாலும் பெற்றுக் கொண்டனர் எனலாம்.
இ. வாழ்க்கை வரலாற்ருசிரியர் 17. முதன்முதலில் கி. மு. 200 ஆம் ஆண்டளவில்" மெய்யிய வரன்முறை
லாளர் வரன்முறை ” யெனும் நூலை எழுதியவர் சோதியன் ஆால் என்பாரே. (Diog. i. 12 ;R. P. 4 a ) அவரது நூலின் வைப் புமுறை 147 ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. எரக் கிளைடிசு லெம்போசு என்பவர் இந்நூலைச் சுருக்கி எழுதினர். அன்ரித்தேணிசு, சொசிகிருத்திசு, அலெக்சாந்தர் என்போர் வரன்முறை நூல்கள் யாத்த எனை ஆசிரியர்களாவர். இந் நூல்கள் யாவும் அதிக விவரங்களைத் தராதனவாயும், போலி யான நிகழ்ச்சிகளையும், குறிப்புரைகளையும் கொண்டனவாயு மிருந்தன.

Page 29
42 ஆதி கிரேக்க மெய்யியல்
எமிப்போசு 18. அரித்தோதிலிய மரபினரான சிமைர்ன நாட்டு எமிப்போசு வென்பார், பல வரலாற்று நூல்களை யாத்துள்ளார். இவரது நூற் பகுதிகள், பல ஆசிரியர்களது நூல்களில் மேற்கோள்களா கக் கையாளப்பட்டிருக்கின்றன. இவரது வரலாற்றுக் குறிப்புக் கள் முற்றக நம்பத் தகுந்தவை எனக் கொள்ள முடியா தெனினும், ஆங்காங்கு சேர்க்கப்பட்டிருக்கும் எனைய ஆதார நூல்களைப் பற்றிய விவரங்கள் மிகவும் பயனுள்ளவை யென ώύπια.
சத்தைரோசு 19. அரித்தோதிலிய மரபைச் சேர்ந்தோருள் இன்னெருவரான சத்தைரோசு என்பார் கி. மு. 160 ஆண்டளவில் “ பெயர் பெற்றேர் வாழ்க்கை வரலாறு’ எனும் நூலே எழுதினர். இவர் அரித்தாக்கோசுவின் சீடராவர். எமிப்போசுவைப் பற்றிக் கூறியவை யாவும் இவருக்கும் பொருந்துமென்க. எரக்கிளைடிசு லெம்போசு இவரது நூலையும் சுருக்கி எழுதினர்.
“இடையோசி 20. லயாத்தியசு இடையோசினிசு என்பவரது பெயரில்
னிசுலயாத்தி வழங்கும்நூலில் வரலாற்று விவரங்களைத் தரும் பகுதிகள்
uJó፡” யாவும், முன்பே தெரிந்திருந்த விவரங்களின், அதிக ஒழுங்கற்ற தொகுப்பே. இப்பகுதிகள் முழுவதும் யாராலும் கிரகிக்கப் பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதற்கான அறிகுறி எதுவுமே காணப்படவில்லை ; ஒழுங்கெதுவு மின்றித் தாறுமாருகச் சேக ரிக்கப்பட்ட நூற்பகுதிகளின் தொகுதியாகவே இது காட்சிதரு கின்றது. ஆயினும் மிகவும் பயனுள்ளவையான பகுதிகள் பல இதில் அடங்கியுள்ளன.
ஈ. கால ஆராய்ச்சியாளர்
எதனே 21. கைரீனைச் சேர்ந்த எரதசுதேனசு (கி. மு. 275-194) வும் அப்பொ பண்டைய காலமானத்தை முதலில் உருவாக்கியவராவர். ஆனல் லோடரசும் இவருக்குப் பின்னர் கி. மு. 140 ஆம் ஆண்டளவில் அப்பொலோ டரசு அளவை முறையில் எழுதிய காலமானம் இவரது நூலி லும் அதிக பிரபலமடைந்தது. ஆதி மெய்யியலாளர் பலரினது காலம் பற்றி அப்பொலோடரசுவின் நூலிலிருந்தே நாம் அறிந்து கொள்கிருேம்.
இக்காலமான நூல்களிற் பின்பற்றப்பட்டுள்ள முறை பின் வருமாறு : ஒரு மெய்யியலாளரது வாழ்வில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியொன்றின் காலம் தெரியவந்தால், அதுவே அவர் “ சிறப்பொடு விளங்கிய " காலமாகக் கொள்ளப் படுகின்றது ; அன்றியும் அப்போது அவருக்கு 40 வயதாகி யிருக்கலாம் எனவும் கொள்ளப்படுகிறது. ஆனல் இத்தகைய சம்ப்வம் எதுவும் தெரியவராது போனல், முக்கிய வரலாற்று

ஆதாரங்கள் பற்றிய குறிப்பு 43
நிகழ்ச்சிகளுள் ஒன்று, குறித்த மெய்யியலாளர் “ சிறப்பொடு விளங்கிய ’ ஆண்டில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. கி. மு. 586-5 இல் நிகழ்ந்த, தேலிசுவால் முன்கூட்டியே அறிவிக் கப்பட்ட கிரகணம், கி. மு. 546-5 இல் சாடயிசு நகரம் கைப் பற்றப்பட்டமை, கி. மு. 532-1 இல் பொலிகிருத்திசு பட்டத்திற்கு வந்தமை, கி. மு. 444-3 இல் தெளரியை நகர் நிறுவப்பட்டமை, ஆதியன இவ்வாறு கருதப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியமானவை. இவ்வாறு தொடர்புபடுத்தப்பட்ட ஆண்டுகள் சிலவேளைகளில் சற்றேனும் பொருத்தமற்ற அளவிற்கு முக்கிய முடையனவாகக் கருதப்பட்டன. பலமுறைகளில், பிற ஆதா ரங்களைக் கொண்டு அப்பொலோடரசுவின் காலமானம் தவறன தென எம்மால் நிரூபிக்க முடிகிறது. வேறு தக்க ஆதாரங்கள் கிடையாதபோது, தற்காலிகமாக எற்றுக்கொள்வதற்கே அவர் தரும் காலமானம் உபயோகப்படும் எனலாம்.

Page 30
மிலட்டசுவும் லிடியாவும்
அத்தியாயம் 1 மைலீசிய மரபு
1. விஞ்ஞான ரீதியான அண்டவியற் சிந்தனை மரபு முத லிற் றேன்றியது மிலட்டசுவிலேயே யென்க. ஈசிய, அயோனிய நாகரிகங்களுக்கிடையேயுள்ள தொடர்பு, குறிப்பிடத்தக்க முறை யிற் காணப்படுவதும் மிலட்டசுவிலேயே என்பதும் கவனிக்கத் தக்கது. தமது எல்லைகளை மேலும், மேற்கே விரிப்பதில் நாட்டங் கொண்டோராயிருந்த லிடியர்களோடு மைலிசியர்கள் பலமுறை பொருத நேரிட்டது; ஆனல் கி. மு. எழாம் நூற்றண்டின் இறுதியில், கடுங்கோலன் திருசிபோலசுவுக்கும், அலியாத்திசு மன்னனுக்கும் இடையே எற்பட்ட உடன்படிக்கை யொன்றின் பயணுக மிலட்டசுவை எதிர்காலத்தில் இத்தகைய எல்லைப் போராட்டங்களிலிருந்து பாதுகாக்கும் ஒப்பந்தம் ஒன்று ஆக்கப்பட்டது. அரை நூற்றண்டிற்குப் பின்னரும், தனது தந்தையின் சாம்ராச்சியக் கொள்கையைப் பின்பற்றிய கிறீசசு, எபிசோசுவின் மீது போர் தொடுத்து அதனைக் கைப்பற்றிய போதும், இவ்வுடன்படிக்கையின் பாதுகாப்பினல், மிலட்டசு லிடியர்களது ஆட்சிக்குட்படாது இருக்க முடிந்தது. அன்றியும் லிடியர்களுக்கும், மைலிசியர்களுக்கும் இவ்வாறு எற்பட்டதொ டர்பு, மிலட்டசுவில் விஞ்ஞானம் வளர்ச்சியடைவதற்கு உதவி யது எனலாம். பிற்காலத்தில் எலணிசம் என அழைக்கப்பட்ட மரபு, மேமனடையின் பரம்பரையில் வழங்கி வந்த மரபே யெனத் தோன்றுகிறது ; எரொடோதசுவும், அக்காலத்துச் * சோபிட்டுகள் ” யாவரும் சாடியசுவின் சபைக்குத் திரண்டு சென்றனர் எனக் கூறியுள்ளார். கிறீசசுவைக் கிரேக்க ஞானத் தின் “ புரவலன் ” எனக் காட்டும் ஐதிகம் பூரணமாகத் தோன்றியது, ஐந்தாம் நூற்றண்டிலேயே. இவ்வைதிகத்தின் விவரங்கள் வரலாற்று ரீதியானவையல்ல போலக் காணப்படி னும், சிறிதேனும் உண்மையான ஆதாரமின்றி, இது தோன்றி யிருக்க முடியாது. தீரியாவுக்கு எதிராகக் குறேசசு நடத்திய
1. முன்னுரை 11 ஆம் பிரிவைப் பார். புதிய நகரமான நெலியசுவின் அரண் கள் அமைக்கப்படுவதற்கு முன்னரே, கிறீற்றுவிலுள்ள மிலட்டசுவிலிருந்து வந்த மக்களால் பழைய மிலட்டசு குடியேற்றப்பட்டது என எபோரசு கூறினர் ( Strabo, xiv. p. 634 ), ஈசிய நாகரிகம், ஆதி அயோனிய நாகரிகத் தோடு கலந்து மிலட்டசுவிற் பரவியதென, சமீபத்திய புதைபொருள் ஆராய்ச்சி களின் மூலம் தெரியவருகிறது. புதைபொருள் ஆராய்ச்சியின்போது, அயோ னிய உறைவிடங்களின் எச்சங்கள், “மைசீனிய” கால எச்சங்களோடு கலந்து கிடக்கக் காணப்பட்டன.
44

மைலிசிய மரபு 45
துரதிட்டவசமான போருக்குத் தேலிசுவும் அவரோடு சென்றி ருந்தாரென “கிரேக்கர்களிடையே வழங்கிவரும் கதை ” குறிப் பிடத்தக்கதாகும். இவர் ஆலிசுவின் போக்கை மாற்றினரென் பதை எரொடோதசு நம்ப மறுக்கின்றர் எனின் அதற்குக் дѣтдто007цђ, ஏற்கெனவே பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன என் பதை அவர் அறிந்திருந்ததே. அயோனியர்கள் சிறந்த கட்டிட வியல் வல்லுநராயிருந்தனர் என்பதும், கீழைத்தேச அரசர்கள் அயோனிய கட்டிடவியல் வல்லுநரைத் தம்மிடம் வேலைக்கமர்த் திக் கொண்டனரென்பதும் தெளிவு.
லிடியாவினுடைய தொடர்பு, மைலிசியர்கள், பபிலோனியா, எகிப்து ஆகிய நாடுகளுடனும் தொடர்பு கொள்வதற்கு வழி வகுத்தது என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும். பபிலோனிய நாகரிகம், லிடியாவில் வளர்ச்சிபெற்றிருந்தது என்பதோடு மட்டு மல்லாது, கிறீசசுவும், எகிப்திய, பபிலோனிய மன்னர்களோடு நட்புறவு பூண்டவராயிருந்தாரென்பதும், இவ்வாறு தொடர் பேற்படுவதற்குச் சாதகமாயிருந்தது. எகிப்திய அமாசிசுவும், குருேசசுவைப் போலவே எலனிச அபிமானங்களை யுடையவரா யிருந்தார். மேலும், நெளகிறத்திசுவில், மைலிசியர்கள் தமக் கெனவோர் கோவிலை அமைத்திருந்தனர்.
1. தேலிசு
2. மைலிசிய கழகத்தைத் தாபித்தவரும், அதனல் முதல் தோற்றம் விஞ்ஞானியெனப்படுபவரும் தேலிசுவே?. ஆனல் உண்மையில்
* Herod. i. 75. அயோனிய விஞ்ஞானத்தைச் சரிவர மதிப்பிடுதற்கு அக் காலத்திற் கட்டிடக் கலையில், அவர்கள் அடைந்திருந்த வளர்ச்சியை அறிதல், அவசியம். சாமோசுநாட்டு மந்திரோக்கிளிசு, டாரியசு மன்னனுக்காக, பொசு போரசுவுக்கு மேலே பாலம் அமைத்துக் கொடுத்தார் ( Herod. iv. 88 ). எலசுபோந்து பாலத்தை அமைப்பதில் எகிப்தியர், பீனிசியர் ஆகியோரது முயற்சி தோல்வியடைந்ததன் பின்னர், தெனெடோசு நாட்டு ஆர்ப்பலோசு, சேக்சசு மன்னருக்காக அதனைச் சரிவர அமைத்துக் கொடுத்தார். (Dies, Abh, der. Berl. Akad, 1904, p.8 ) எரொடோதசுவினுல் வருணிக்கப்பட் டுள்ள (i. 60) சாமோசுவுக்கு மேலேயுள்ள மலைக்கூடாகச் செல்லும் சுரங்க வழி, சேர்மானிய புதைபொருளாராய்ச்சியாளராற் கண்டுபிடிக்கப்பட்டுளது. இவ் வழி ஒரு கிலோமீட்டரளவு நீளமுடையதாயினும், இதன் மட்டங்கள் பெரு மளவுக்குச் செம்மையான அளவுடையனவாகக், காணப்படுகின்றன. எனைய விடங்களைப் போல, இவ்விடயத்திலும் அயோனியர்கள் மினேவ மரபுகளைத் தொடர்ந்து தழுவின ரென்க.
* தேலிசுவுக்கு முன்னரும் பல சிந்தனையாளர் வாழ்ந்தனர் என தியோ பிறசத்தோசு கூறினரென சிம்பிளிசியசு எடுத்துக்காட்டுகின்றனர். இதை நாம் கவனிக்க வேண்டியதில்லை ; எனெனில், அப்பொலோனியசு ருெடியசுவினது நூலுக்கு எழுதப்பட்ட பக்கவுரையிலிருந்து புறெமிதியசுவே முதலாவது மெய் யியலாளர் என அவர் கூறினரென அறிகிருேம்.

Page 31
கிரகணம் ஏற்படுமென தேலிசு முன்பே அறிவித்தமை
46 ஆதி கிரேக்க மெய்யியல்
நாம் இவரைப் பற்றி அறிந்த விவரங்கள் யாவும் எரொடோதசு மூலமாகப் பெறப்பட்ட விவரங்களே யென்பதையும், எரொடோ தசுவின் காலத்தில் ஞானியர் எழுவர் பற்றிய கதை எற்கெனவே வழக்கிலிருந்ததென்பதையும் நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். தேலிசுவினது முன்னேர்கள் பீனிசியாவைச் சேர்ந் தவர்கள் என எரொடோதசு கூறியுள்ளபோதிலும், கத்மோசு, அகெனேர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவோர் உயர்குடும்பத்தைத் தேலிசு சேர்ந்தவராயிருந்தமையாலேயே, எரொடோதசு இவ் வாறு கூறினர் என எனைய எழுத்தாளர்கள் விளக்கியுள்ளனர். பீனிசியரிடையே நிலவிய கப்பலோட்டும் முறைகளைத் தேலிசு அயோனியரிடையே புகுத்தினர் என வழங்கிய நம்பிக்கையே எரொடோதசு, தேலிசுவின் முன்னேர் பற்றிய இக்கருத்தினைக் குறிப்பிட்டதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். ஆயினும், எக் சாமியிசு எனும் தேலிசுவின் தந்தையின் பெயர், இவர் ஓர் செமித்தியர் எனும் கொள்கையோடு சற்றேனும் பொருந்துவ தாயில்லை. எக்சாமியிசு என்பது காரிய பெயர். காரியர்கள் என் போர் இக்காலத்தே பெரும்பாலும் அயோனிய குடிகளோடு கலந்து விட்டனர் எனவே கூறவேண்டும். இக்கால நினைவுச் சின்னங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெயர் களிடையே கிரேக்க பெயர்களும் காரிய பெயர்களும் மாறி மாறி வருதலைக் காண்கிருேம் ; மேலும் பிறவிடங்களில் தேலிசு ஒரு கிறீட்டன் என அழைக்கப்பட்டிருப்பதையும் நாம் காண முடிகிறது.
ஆகவே, தேலிசுவின் உடலில் காரியவிரத்தமுமிருந்த தெனக்
கூறலாமெனினும், அவர் ஒரு மைலிசியரே என்பதைச் சந்ே கிக்க நியாயமில்லை.
3. லிடியர்களுக்கும், மீடிகளுக்கும் இடையே நடந்த போர் முடிவதற்குக் காரணமாயிருந்த சூரிய கிரகணம் எற்படுவது பற்றித் தேலிசு முன்பே அறிவித்தாரென்பதே இவரைப் பற்றி எரொடோதசு தரும் மிகவும் குறிப்பிடத்தக்க செய்தியெனலாம். உண்மையில் கிரகணங்கள் ஏற்படுவதற்கான காரணம் என்ன வென்பது பற்றி இவர் சற்றேனும் அறிந்திருக்கவில்லை. அனக்சி
மாந்தரும், அவருக்குப் பின்வந்தோருமே இதுபற்றி அறிந்
திருக்கவில்லை?. கிரகணங்கள் எற்படுவதற்கான காரணம் பற்றிய
' Herod. i. 170 (R. P. 9 d.); Diog. i 22 (R. P. 9). es6 அயோனிய குடிகளிடையே கத்மோசு, பையற்றியா ஆகிய இடங்களிலிருந்து வந்தோரும் இருந்தனர் என எரொடோதசு கூறுவது பற்றி எவ்வகை ஐயமு Lóão&av. ( i. 146) of Strabo, xiv. pp. 633, 636; Pausan. vii. 2, 7. ஆனலும் இவர்கள் செமித்தியர் அல்ல.
* அனக்சிமாந்தர் எரக்கிளைட்டசு என்போர் நம்பிய கொள்கைகள் பற்றி 19 ஆம் பிரிவிற் பார்க்கவும்.

மைலீசிய மரபு 47
விளக்கம் தேலிசுவினுற் றரப்பட்டிருந்திருப்பின் இவர்களும் அதை அறிந்திருப்பர் எனலாம். கிரகணம் எற்படுவதற்கான கார ணத்தைத் தேலிசு அறிந்திருந்தார் எனக் கொள்வதாயினும், எகிப்தில் அவர் பொறுக்கியிருக்கக் கூடிய கேத்திரகணித அறிவு கிரகண காலத்தைக் கணிப்பதற்குப் போதியதாயிருந்திருக்க முடியாது. ஆயினும், தேலிசு இக்கிரகணம் பற்றி அது நடை பெறுவதற்கு முன்பே அறிவித்தார் என்பதற்கான சான்றுகள் மிகவும் வலுவுடையனவாதலால், அவர் அவ்வாறு அறிவித்தார் என்பதனைச் சந்தேகிக்கவும் முடியாது. எரொடோதசுவின் கூற்று செனேபனிசுவினலும் உறுதிப்படுத்தப்பட்டதெனக் கூறப்பட்டி ருக்கிறது. தியோபிறகத்தோசுவின்படி, செனேபனிசு அனக்சி மாந்தரது மாணுக்கருள் ஒருவராயிருந்தார். எப்படியாயினும், தேலிசுவின் காலத்தே நிகழ்ந்த சம்பவங்களை நன்கு நினைவில் வைத்திருந்த பலரை இவர் அறிந்திருக்கவேண்டும். ஆகவே தேலிசுவைப்பற்றிய மற்ற விவரங்களிலும், கிரகணம் பற்றிய கூற்றுக்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் உளவெனலாம்.
சந்திர கிரகணங்களை, அவை ஏற்படுவதற்கான காரணம் என் னவென்று அறியாமலே, அவை எப்போது நடைபெறு மென் பதை அண்ணளவாகக் கணித்துக் கொள்வது சாத்தியமே. பபிலோனியர்கள் உண்மையில் இவ்வாறே கணித்தனர் என்பதி லும் ஐயமில்லை. 228 சந்திரமாதங்களைக் கொண்ட காலவட்டம் ஒன்றை அவர்கள் அமைத்தனரெனவும், சமமான கால இடை வெளிகளுக்கொருமுறை சந்திர சூரிய கிரகணங்கள் எற்பட்டன வெனவும் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதன் மூலம், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எப்போது சூரியகிரகணம் ஏற்படும் என அவர்களால்முன் கூட்டியே அறிந்திருக்க முடி யாது ; ஏனெனில் சூரியன் அடிவானத்திற்கு மேற் காணப் படும் எல்லா இடங்களிலும், ஒரே நேரத்தில் சூரிய கிரகணம் காணப்படுவதில்லை. நாம் பூமியின் மத்தியில் இருக்கவில்லை ;
* Diog, i, 23. கிரகணங்களை மட்டுமல்லாது, சங்கிராந்திகளையும் தேலிசு முன் கூட்டியே அறிவித்தனரென்னும் கூற்று சிலர் கருதுவது போல, அத்தனை பொருளற்றதொன்றன்று. சமராத்திரங்களினதும், சங்கிராந்தி நேரங்களினதும் காலங்களைத் தனக்கு முந்தியோரிலும் செம்மையாக இவர் கணித்திருந்தார் என்பதையே இயூடெமோசு கருதியிருக்கலாம். நிலைக்குத்தொன்றின் நிழலை அவதானிப்பதன் மூலம் இவர் இவற்றைக் கணித்திருக்கலாம் ; மேலும் தேலிசு இத்தகைய அவதானங்களில் ஈடுபாடுடையவராயிருந்தார் என மக்கள் கருதி னர் என்பதையும் நாம் காண்போம் (ப. 62). தெரக்கிலைடிசுவினுற் பேணப் பட்டுள்ள இயூடெமோசுவின் வேறெரு கூற்றை நோக்கும்போதும் இவ்வாறு கருதுவதே சரியெனத் தோன்றுகிறது. சூரியனின் ஒழுங்கின்மையினல் எற் படும், நான்கு பருவங்களுக்கு மிடையேயுள்ள வேற்றுமையையும் தேலிசு கண் டுபிடித்தார் என்பதே இக்கூற்றென்க.

Page 32
தேலிசுவின்
48 ஆதி கிரேக்க மெய்யியல்
மேலும் புவிமைய இடமாறு தோற்றக் கணிப்பும் கவனிக்கப் படல் வேண்டுமென்க. ஆகவே பபிலோனியர்களது காலவட்டத் தின் உதவி கொண்டு அறியக் கூடியது, எங்காவது ஒரு இடத் தில் சூரிய கிரகணம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற் காணப்படும் என்பதே. அந்நேரத்தில் சூரிய கிரகணம் எற்படுகிறதா என யாரும் பார்க்கலாமெனினும், அவ்வாறு அவதானிப்போர் பெரும்பாலும் எமாற்றமே அடைவர் எனலாம். ஏனெனில் எந்த இடத்தில் கிரகணம் காணப்படும் என்பதனை அவர்கள் சரியாக அறியார். நமக்குக் கிடைத்துள்ள கல்டிய வானியலாள ரது கூற்றுக்களை நம்புவதாயின், கி.மு. எட்டாம் நூற்றண்டில் பபிலோனியரது நிலை இவ்வாறே யிருந்ததெனலாம். தமது கணிப்பின்படி, குறிப்பிட்ட நாட்களில் கிரகணம் எற்படுகின்ற தாவென அவர்கள் அவதானித்தனர்; கிரகணம் எற்படவில்லை யெனின், அதுவோர் நல்ல சகுனமென முடிவு செய்து கொண்ட னர். தேலிசு பற்றி நாம் அறிந்தவற்றை விளக்குவதற்கு வேறெ துவும் வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் கிரகணம் எற் படுமென அவர் கூறினர் ; அதிட்டவசமாக, சின்ன ஆசியாவில் அதுவும் குறிப்பிடத்தக்கவோர் வேளையில் கிரகணம் காணப் பட்டது.
4. ஆகவே, கிரகணத்தை முன்கூட்டியே அறிவித்தமையைக் கொண்டு, தேலிசுவின் விஞ்ஞான அறிவு பற்றி எவ்வகை
முடிவுக்கும் நாம் வர முடியாது ; ஆனல் அக்கிரகணம் எப்
போது நடைபெற்றதென்பதை நாம் நிர்ணயிக்க முடியுமானல், அதிலிருந்து, தேலிசு வாழ்ந்த காலத்தை மதிப்பிடுவதும் ஓரள வுக்குச் சாத்தியமாகும். கி. மு. 585 ஆம் ஆண்டு மே மாதம் (O.S.) 28 ஆம் திகதி ஓர் சூரிய கிரகணம் எற்பட்டதெனவும், அது சின்ன ஆசியாவில் காணப்பட்டிருக்கலாமெனவும் வானிய லாளர் கணக்கிட்டுள்ளனர். தேலிசுவினல் அறிவிக்கப்பட்ட கிர கணம் ஒலிம்பிய ஆண்டு XLVIII. 4 இல் (585-4 கி.மு.) எற்பட்டதென பிளினி கூறுகிருர். ஆனல் இவ்வாண்டுகள்
முற்ருகப் பொருந்தவில்லை யென்பதைக் காண்க. எனெனில்
585 ஆம் ஆண்டு மே மாதம், கி.மு. 586-5 ஆம் ஆண்டைச் சேர்ந்தது வாதலினல் என்க. ஆயினும் இவ்வாண்டுகள்
- cf. Schiaparelli, Scientia, 1908. p. 247. Øy6Jug pqL LS6ör வருமாறு : “ சூரியகிரகணங்கள் எவ்வாறு எமது கண்ணுக்குப் புலப்படுகின்றன என்பது பற்றிய விதிகள் மிகவும் சிக்கலானவையாதலால், வெறும் அவதானிப் புக்களினல் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. ” பபிலோனியர்கள் இவ்விதி களைக் கணிக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கவில்லை. அவற்றைக் கணிக்கும் சாதனை, கிரேக்கர்களது கணிதவியல் மேதையால் நிகழ்வதற்கெனக் காத்தி ருக்கவேண்டியிருந்தது.

மைலீசிய மரபு 49
மிகவும் கிட்டியவாகக் காணப்படுகின்றமையால், நாம் இதுவே தேலிசுவினல் அறிவிக்கப்பட்ட கிரகணம் எனக் கொள்ளலாம். தேலிசு சிறப்போடு விளங்கிய ஆண்டும் இதுவென அப்பொ லோடரசு கூறுவது இதனை யுறுதிப்படுத்துகின்ற தெனலாம். டிமீத்திரியோசு பலிரியசுவின்படி, தேலிசுவுக்கு, அதென்சுவில் டமாசியசு நீதிபதியாயிருந்த காலத்தில் “ஞானியெனும் பெயர் வழங்கப்பட்டது ’ எனும் இடையோசினிசுவின் கூற்றும் உண் மையில் ஞானியர் எழுவரது கதையையே குறிக்கிறது. இடை யோசினிசு பின்னர் கூறுவனவும் இதனையே உணர்த்துகின் றன. அன்றியும் இவரது கூற்று டெல்பி முக்காலி பற்றிய கதையின் அடிப்படையில் எழுந்தது என்பது பற்றியும் எவ் வகை ஐயத்திற்கும் இடமில்லை; எனெனில் பைதிய விளையாட்டுக் களுக்குப் புத்துயிரளிக்கப்பட்ட காலம், டமாசியசு நீதிபதியா யிருந்த காலமே.
5. எகிப்திய கேத்திரகணித அறிவைக் கிரேக்கர்களிடையே எகிப்தில் புகுத்தியவர் தேலிசுவே யெனக் கூறப்படுகிறது. நைல் நதியில் தேலிசு ஏற்படும் வெள்ளப் பெருக்குகள் பற்றி விளக்கும் கொள்கை ஒன்றை இவர் யாத்தனராதலால், எகிப்திற்கு இவர் சென்றி ருந்தார் என நிறுவ ஆதாரமுண்டு. ஏனைய நதிகளைப் போலல் லாது, நைல் நதி கோடைகாலத்தில் பெருகி, மழைக்கா லத்தே வற்றுவதற்கு, எரொடோதசு மூன்று விளக்கங்கள் தந்தனர்?. ஆனல் தமது வழமைபோல, இவ்விளக்கங்களின் கருத்தாக்கள் யாவரென அவர் குறிப்பிடுகின்றரில்லை. நைல் நதியிற் பெருக்கேற்படுவதற்குக் காரணம் எசுதிய காற்றுக்க ளின் உந்தலே யெனும் முதலாவது விளக்கம், தேலிசுவினுற் றரப்பட்டதே யெனவே பிளாக்கிட்டாவிற் கூறப்பட்டிருக்கிறது. ஏனைய எழுத்தாளர் பலரும் இவ்வாறே கூறியுள்ளனர். அரித் தோதிலது என அழைக்கப்படுவதும், கிரேக்க உரையாசிரியர் களால் அறியப்பட்டிருந்ததும், நைல்நதியின் பெருக்குகள் பற் றியதுமான ஓர் விளக்கத்திலிருந்து எமக்கு இச்செய்தி கிடைக் கிறது. பதின்மூன்றம் நூற்றண்டைச் சேர்ந்ததும், இலத்தீன் மொழியிலுள்ளதுமான சுருக்கமொன்றிலிருந்தே இவ்விளக் கம் எமக்குக் கிடைத்துள்ளது. இதில், எரொடோதசுவாற் குறிப்பிடப்படும் விளக்கங்களில் முதலாவது தேலிசுவினதென
1* Proclus, in Eucl. I. p. 65, Friedlein (from Eudemos). * Herod. i. 20.
*· Aet. iv. I. I. (Dox. p. 384).
* Dox, pp. 226-229. அரித்தோலினது நூற்பகுதிகளைத் தரும் ருெசுலின் பதிப்பில், இவ்விலத்தீன் சுருக்கம் காணப்படுகிறது.
4-R 10269 (6163)

Page 33
50 ஆதி கிரேக்க மெய்யியல்
வும், இரண்டாவது மசாலியா நாட்டு இயூதிமினிசுவினதெனவும் மூன்ருவது அனக்சகோரசுவினதெனவும் கூறப்பட்டுள்ளது. அரித் தோதில், அல்லது இந்நூலை எழுதியவர் எவரோ அவர், இப் பெயர்களை எவ்வாறு பெற்றனர்? எமது மனதில் இயல்பாகத் தோன்றுவது எக்காதையோசுவின் பெயரே. எக்காதையோசும், இயூதிமினிசுவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கின்றரென்பதைக் காணும்போது, எமது ஊகம் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகவே தேலிசு உண்மையில் எகிப்திற்குச் சென்றிருக்க வேண்டுமென நாம் முடிவாகத் தீர்மானிக்கலாம் ; நைல் நதி பற்றி விவரிக்கை யில் எக்காதையோசு, தன் நாட்டவரான தேலிசுவின் கருத்தை யும், குறித்துக்கொண்டிருக்க வேண்டும்.
தேலிசுவும் 6. எகிப்திலிருந்து தேலிசுவினற் கொணரப்பட்ட கணிதவிய
கேத்திர லின் விரிவையும் இயல்பையும் கவனிக்கும்போது, இவை பற்
கணிதவியலும் றிய வரலாற்றைப் பல எழுத்தாளர்கள் தவருக விளங்கியுள்ள னர் என்பதை மனதிற் கொள்ளல் வேண்டும்?. புரோக்கிளசு, இயூக்கிளிட்டினது முதற் புத்தகத்துக்குத் தான் எழுதிய பாடியத் தில், இயூடெமோசுவினது ஆதாரத்தைக் கொண்டு, தேலிசு விற்குத் தெரிந்திருந்த எடுப்புக்களெனச் சிலவற்றைக் குறிப்பிடு கிருர். இரு முக்கோணங்கள், பக்கமொன்றும், அடுத்துள கோணங்கள் இரண்டும் சமமானவையாயிருந்தால், தாமுஞ் சமமானவையாயிருக்கின்றன வென்பது இவ்வெடுப்புக்களில் ஒன்று. தேலிசு உண்மையில் இதனை யறிந்திருக்க வேண்டும் எனலாம். ஏனெனில் இதை அவர் அறியாதிருந்திருந்தால், கடலிலுள்ள கப்பல்களின் தூரத்தை அவர் கணித்துக் கூறினர் எனக்கூறப்படுவது உண்மையாக விருக்க முடியாது. எமது கூற் றுக்கள் யாவும் எவ்வாறு எழுந்தன என்பது இங்கு புலனகி றது. சில அளவுகளைச் செம்மையாகத் தேலிசு கணித்தனர் எனவழங்கிய கதைகளைக் கேட்ட மாத்திரத்தே இச்சாதனைகளின் உட்கிடையான கேத்திரகணித வெடுப்புக்களையும் தேலிசு அறிந் திருக்க வேண்டும் என இயூடெமோசு ஊகித்து விட்டார். ஆனல் இது முற்றிலும் தவறனவோர் கருத்தென்க. “ செகுற்று ’வை அறிதற் கென ஆமேசு வகுத்த விதியைக் கையாள்வதன் மூலம் கடலிலுள்ள கப்பல்களின் தூரத்தையும்,
1- எக்காதையோசு, பகுதி 278 (F. H. G. i. P. 19).
* See Cantor, Vorlesungen uber Geschichte der Mathematik, Vol. i. pp. 12 sqq.
*** Proclus, in Eucl, pp. 65, 7; 157, 10 ; 250, 20 ; 299, 1 ; 352, 14. (Friedlein). தியோபிறசத்தோசு எவ்வாறு மெய்யியலின் முதலாவது வரலாற்றை எழுதினரோ அதுபோல இயூடெமோசு வானியல், கணிதம் என்பன வற்றின் வரலாற்றை முதலில் எழுதினர்.

மைலீசிய மரபு 5.
இவர் கணித்ததாகக் கூறப்படும் கூம்பகங்களின் உயரத்தையும் இலகுவாகக் கண்டிருக்கலாம். உண்மையில், தேலிசுவின் கணி தவறிவு பற்றிய கதைகள் உணர்த்துவது யாதெனில், அமேசு வினது செயன்முறை விதியினை, எகிப்தியர்களை முன்பு ஒரு போதும் எதிர்நோக்கியிராத நடைமுறைப் பிரச்சினைகள் சில வற்றைத் தீர்த்தற்குத் தேலிசு கையாண்டார் என்பதே. இவ் வகையில் செயன்முறையொன்றினைப் பிற புதிய விடயங்களி லும் பயன்படுத்தப்படக்கூடிய பொதுமுறையாக்கியவர் இவரே. வேண்டிய புகழை அவருக்கு அளிப்பதற்கு இதுவொன்றே போதிய சாதனையென்க.
7. லிடிய அரசின் வீழ்ச்சிக்குச் சற்று முன்பாக, எரொ அரசியல்வாதி
டோதசுவின் நூலில் தேலிசு மீண்டும் குறிப்பிடப்படுகின்றர். தேலிசு அயோனிய கிரேக்கர்களை ஒன்றுபடுமாறும், தியோசுவைத் தலை நகராகக் கொண்ட கூட்டாட்சியொன்றை அமைக்குமாறும் இவர் ஊக்கினர் என அங்கு கூறப்படுகிறது?. ஆதி மெய்யியற் கழகங்கள் எவ்வகையிலும், அரசியலோடு தொடர்பற்றனவாயிருக்கவில்லை என நாம் பலமுறை காண நேரிடும்; இவை அரசியலிற் தலை யிட்டன என்பதற்குப் பல உதாரணங்களைக் காண்போம். இவை, குறிப்பாக அயோனிய புரட்சியில் எக்காதையோசு பங்கெடுத்துக் கொண்டமை போன்ற நிகழ்ச்சிகள், தேலிசுவின் மரணத்திற் குப் பின்னர் நடைபெற்ற பரபரப்பான நிகழ்ச்சிகளில் மிலட்டசு நகர விஞ்ஞானிகள் தீவிர பங்கெடுத்துக் கொண்டனர் என்பதற் குச் சான்றுகளாகின்றன. மைலீசிய மரபின் தாபகரான தேலி சுவுக்கு, “ஞானியர் எழு “வரிடையே நிச்சயமான இடமொன் றைத் தேடித் தந்தவை இவ்வாசியல் நடவடிக்கைகளே ; இவ்வெழுவரிடையே தேலிசுவின் பெயர் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்தே பிற்காலத்தில் இவரது பெயரைச் சார்ந்து பல கதைகள் வழங்கவாரம்பித்தன?.
8. எமக்குத் தெரிந்தவரையில், தேலிசு எதையும் எழுதி இவ்வரலாறு வைக்கவில்லை. மேலும் அரித்தோதிலுக்கு முந்திய எழுத் போதியளவு தாளர்களில் எவருக்கும் இவர் ஒரு “ விஞ்ஞானி’ யெனவோ நம்பிக்கை மெய்யியலாளரெனவோ தெரிந்திருந்ததாகவும் தோன்றவில்லை; ''
வென்பது பழைய வரலாறுகளிலிருந்து, இவர் ஒரு தொழில் நுட்ப வல்லுநராகவும், புதிதுகாணியாகவும் இருந்தாரெனவே அறிய
See Gow, Short History of Greek Mathematics, S 84. *. Herod. i. 170 (R. P. 9 d).
* 360 நாட்களேக் கொண்ட ஆண்டையும் 30 நாட்கள் கொண்ட மாதங் களையும் அவா புகுத்த முயற்சித்தாரெனின், அவர் இவற்றை எகிப்தியரிட மிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

Page 34
தேலிசுவின் அண்டவியல்
52 ஆதி கிரேக்க மெய்யியல்
முடிகிறது. ஆனல் வர்த்தகத்துறையிலும் ஏனைய துறைகளி லும் மைலிசியர்க்கிருந்த தேவைகளைத் திருப்தி செய்யும் பொருட்டு அவர் தனது கவனத்தை நாம் இன்று வானியல் என அழைக்கும் ஆராய்ச்சியோடு தொடர்புபட்ட பிரச்சினைகளின் பாலும் செலுத்தியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. சிறு கரடியுடுத்தொகுதியின் உதவியோடு கப்பல்களைச் செலுத்தும் முறையினையும் இவரே ஆரம்பித்தாரென இடையோசினிசு கூறியுள்ளார். ஆண்டுமானத்திலும் ஏதோவொரு மாற்றமேற் படுத்த அவர் முயன்றனரெனத் தெரியவருகிறதெனினும், அது பற்றிய போதிய விவரங்கள் எமக்குக் கிடைக்கவில்லை. மிலட்டசுவிற் பிற்காலத்தில் உபயோகத்திலிருந்ததெனக் கண் டெடுக்கப்பட்ட ஆண்டுமானம் போன்ற வொன்றைத் தேலிசு அமைத்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆயினும் தேலி சுவினுடைய முடிபுகள் எனத் தான் குறிப்பிடும் கருத்துக் கள் எவ்வாறு பெறப்பட்டனவெனவோ, அல்லது எத்தகைய வாதங்களினல் அவை நிறுவப்பட்டனவெனவோ அரித்தோதில் தானும் அறிந்திருக்கவில்லை. தான் இவற்றை அறிந்திருந்த தாக அரித்தோதில் ஒருபோதும் உணர்த்தவுமில்லை. ஆகவே தான் அவர் தந்துள்ள ஒரு சில தகவல்களைச் சந்தேகிப்பது அவசியமற்றதாகிறது. எனவே அரித்தோதில் தரும் குறிப்புக் களின் உதவியோடு, தேலிசுவின் அண்டவியற் கொள்கையினை மீட்டும் அமைத்து நோக்கலாம். ஆனல் அவரது அண்டவியற் கொள்கை அதிக விருத்தியடைந்தது போலத் தோன்றவிடி னும், நாம் அதனையிட்டுக் குறைகூற முடியாதென்க.
9. அரித்தோதிலினது குறிப்புக்களை மூன்றகச் சுருக்கித்தரு வோம்.
(1) பூமி நீரில் மிதக்கிறது. (2) பொருட்கள் யாவற்றினதும் ஆதிகாரணம் நீரே. (3) பொருட்கள் யாவற்றிலும் கடவுளர் நிறைந்துள்ளனர். காந்தக்கல் உயிருள்ளது ; ஏனெனில் அது இரும்பை நகர்த்தும் சத்தியுடையதாயிருக்கிறது. இக்குறிப்புக்களுள் முதலாவதற்கு, இரண்டாவது குறிப்பை யொட்டியே பொருள் கொள்தல் வேண்டும். இவ்விரண்டாவது அரித்தோதிலிய மொழி நடையிலுள்ளதெனினும், மாறுந் தன்மையுடைய உலகப் பொருள்கள் யாவற்றினதும் உட்பொரு ளான பண்டம் நீரேயென்பதே தேலிசு கூற வந்த கருத் தென்பதில் ஐயமில்லை. இதுவே அக்காலத்தில் ஆராயப்பட்ட முக்கிய பிரச்சினையாயிருந்ததென நாம் கண்டோம்.

மைலீசிய மரபு 53
10. அரித்தோதிலும், தியோபிறகத்தோசும் அவர்களைத் நீர் தொடர்ந்து சிம்பிளிசியசுவும் தொகுப்பாசிரியர்களும், இக் கொள்கை பற்றிய பல விளக்கங்களைத் தந்துள்ளனர். அரித் தோதில், தாம் தரும் விளக்கங்கள் உண்மையில் ஊகங்களே யென்கிருர். ஆனல் பிற்கால எழுத்தாளர்கள் அவற்றை மீண் டும் குறிப்பிடுகையில் அவை முற்றிலும் உண்மையானவை யென வுறுதியாக நம்பினர். தேலிசுவுக்குப் பிந்தியவோர் காலத்தில், சாமோசு நாட்டவனன இப்போன், தேலிசுவின் கொள்கைகளுக்கு ஒப்பான தனது முடிபுகளை நிறுவுதற்குக் கையாண்ட வாதங்களையே, அரித்தோதில் தேலிசுவின் வாதங்க ளெனக் கருதினர் என்பதே எற்றுக்கொள்ளக் கூடிய கருத் தெனலாம். இவ்வாதங்கள் உளவியல் சார்ந்தனபோற்காணப் படுவதற்கும் இதுவே விளக்கமென்க. ஐந்தாம் நூற்றண் டில் விஞ்ஞான ரீதியான வைத்தியவியல் வளர்ச்சியடைந் ததைத் தொடர்ந்து உயிரியற் தொடர்புள்ள வாதங்கள் பெரி தும் கையாளப்பட்டன. ஆனல் தேலிசுவின் காலத்தில் சிந்தனை யாளர் அதிக ஆர்வம் காட்டியது அண்டவியலிலேயே யொழிய, உடலியலிலல்ல. ஆகவே தேலிசுவின் கொள்கைகளையும் அண்ட வியற் கண்ணுேட்டத்தினின்றே ஆராய்தல் வேண்டும்.
தேலிசு கொண்டிருந்த கருத்துக்களுக்கு, வானியல் விடயங் கள் எவ்வாறு காரணமாயிருந்திருக்க வேண்டும் என்பதை எளிதில் உணரலாம். நாம் காணும் பொருட்கள் எல்லாவற்றி லும், அதிக உருவங்களை அடையக் கூடியது போலக் காணப்படு வது நீரே. திடபதார்த்தமாகவும், திரவமாகவும், வாயுவாக வும் நீரை நாம் பல்வேறு நிலைகளிற் காண்கிறேம். இதனைக் கண்ணுற்ற தேலிசு, நீரிலிருந்து உலக தோற்றம் நிகழ்வதை யும் உலகப் பொருட்கள் மீண்டும் நீராக மாறுவதையுமே தான் கண்டதாக எண்ணியிருக்க வேண்டும். நீர் ஆவியா வதைக் கண்ட மாத்திரத்தே, கடலிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் இவ்வீரலிப்பே, வானசோதிகள் அணைந்து போகாது தொடர்ந்து ஒளிவீசுவதற்குக் காரணமாயிருக்கிறது என அவ ருக்குத் தோன்றியிருக்கிறது. இன்றும் நாம் பேசுகையில் * சூரியன் நீரை உறிஞ்சுகிறது” என்கிருேம். நீர் மீண்டும் மழையாக வருகிறது. ஆகவே கடைசியாக நீர், நிலமாக மாறு கிறது என ஆதி அண்டவியலாளர் எண்ணினர். எகிப்திய நதியினல் உருவாக்கப்பட்ட கழிமுகத்தையும், சின்ன ஆசியா வின் வெள்ளங்கள் கொண்டுவரும் பெருந்தொகையான வண்
1. இப்போனை ஓர் மெய்யியலாளரென அரித்தோதில் குறிப்பிடவிரும்ப
வில்லை யெனினும், மேனனது இயாத்திரிகா வெனப் ப்ெயரிய மருத்துவவியல் வரலாற்று நூலில் இப்போனது பெயர் இடம்பெற்றுள்ளது.

Page 35
இறையியல்
54 ஆதி கிரேக்க மெய்யியல்
டல்களையும் கண்டவர்களுக்கு இக்கருத்து மிகவும் இயல்பான தாகவேயிருந்திருக்கும். இறுதியாகப் பூமி மீண்டும் நீராக மாறு கிறது என எண்ணினர். நிலத்திற்குக் கீழிருந்து வரும் நீரூற் றுகள், பனி, பனிப்புகார் என்பனவற்றைக் கண்டு இவ்வாறு அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். ஏனெனில் நிலத்துக்குக் கீழிருந்து வரும் நீரூற்றுக்களுக்கும் மழைக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாக அக்காலத்தில் எண்ணப்படவில்லை. * நிலத்துக்குக் கீழேயுள்ள நீர்கள் ’ மழை, கடல் போன்ற பிற நீர்களுக்குப் புறம்பான வொரு நீர் வகையென அவர்கள் கருதினர்.
11. தேலிசு, “உலக ஆன்மா ’ எனும் ஒன்றுளது என நம்பினர் என்பது, மேலே தந்துள்ள மூன்றவது குறிப்பி லிருந்து பெறப்படுகிறதென அரித்தோதில் எண்ணினர். ஆனல் தனது கருத்து வெறும் ஊகமே யொழிய அவ்வாறு தேலிசு கருதினரெனத் தான் கொள்வதற்கு வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்பதை எடுத்துக் கூற அரித்தோதில் மறக்கவில்லை?. ஆனல் ஈத்தியோசுவோ தேலிசு “உலக ஆன்மா” பற்றிய கொள்கையை நம்பினரென உறுதியாகக் கூறுகிறர். தனக்கு ஆதாரமான நூலிலிருந்து பெற்றுக் கொண்ட சுதோய்க்க மொழிநடையில் இக்கொள்கையை எடுத்துக் கூறும் ஈத்தி யோசு, உலக ஆன்மாவே கடவுள் எனக் கூறுகிறர். சிசரோ வும் தான் பின்பற்றிய எபிகூரிய நூலில் இது போன்ற வொரு கூற்றைக் கண்டனர். ஆனல் அவர் ஈத்தியோசுவுக்கு அப்பால் ஒருபடி சென்று, நீரிலிருந்து பொருட்கள் யாவற்றை யும் ஆக்கிய தெய்வசித்தம் ஒன்றிருந்தது எனத் தேலிசு கருதினரெனக் கூறுகிறர்8. சுதோய்க்கர்களது, அனைத்து மிறையெனும் வாதத்தை ஒதுக்கிவிட்டு, உலக-ஆன்மாவை, சிசரோ, பிளேட்டோவினது போன்றவோர் இரண்டாந்தர உலக கருத்தாவாகக் கொண்டனர் என்க. இவை யாவும் அரித் தோதிலினது மேலெழுந்தவாரியான கூற்றிலிருந்தே பெறப் பட்டவையாதலால், அக்கூற்றைப்போலவே இவையும் அத்தனை
1. இங்கு தரப்பட்டுள்ள இக்கருத்து ஓமரைப்போன்று உருவகக் கதைகள் யாப்பதிற்குப் பெயர் பெற்றவஞன எரக்கிளைட்டசுவின் கொள்கையையே பெரி தும் ஒக்கின்றன (R. P. 128). ஆனல் இதுவும் சுதோய்க்கர்களினது ஊகமாயிருக்கலாம்.
Arist. De an. A, 5. 411 a 7 (R. P. 13).
Cicero, De nat. d. 1. 25 (R. P. 13 b). SJGurios.aorgi gas (Totb பற்றி Dox, pp. 125, 128 திற் காண்க. பிலோடெமோசுவிற் பெறப்பட்ட எர்க்குலேனியசுவின் புல்லேடு இவ்விடயம்பற்றி முற்ருய்க் கூறவில்லை. ஆனல் சிசரோவின் தவறை அவர் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாது.

மைலிசிய மரபு 55
ஆதாரபூர்வமானவையல்ல வெனவே கொள்ளல் வேண்டும். ஆகவே, தேலிசு ஒரு நிரீச்சுரவாதியா அல்லவா எனும் பழைய விவாதத்தில் நாமும் சேரவேண்டியதில்லை. அவரது வழிவந் தோரின் கூற்றுக்களைக் கொண்டு மதிப்பிடுகையில், நீரைக்கடவு ளென அவர் அழைத்திருக்கலாம் போலத் தோன்றினலும், அதிலிருந்து அவரது சமயக்கொள்கை பற்றித் திட்டவட்டமாக எதனையும் பெறமுடியாதென்க.
மேலும் “பொருட்கள் யாவற்றிலும் கடவுளர் நிறைந்து ளர் ” எனும் கூற்றுக்கு நாம் வலிந்து பொருள் கொள்ள லாகாது. இத்தகையவொரு குறிப்புரையே இவரது கொள்கை பற்றிய தகுந்த ஆதாரமெனக் கொள்வதும் சரியல்ல. மைலிசிய மரபின் தாபகர் என்னும் முறையிலல்லாது, ஞானியர் எழு வருள் ஒருவர் எனும் முறையில் மட்டுமே இம்மூன்றவது குறிப்புத் தேலிசுவைச் சேர்ந்ததாயிருக்கலாம். மேலும், பொது வாக இத்தகைய குறிப்புரைகள் யாருடையவை என்பது ஆரம் பத்தில் தெரிவதில்லை ; காலத்துக்குக் காலம் வெவ்வேறு சிந்தனையாளர்களின் பெயரால் இவை வழங்குவதுண்டு. ஆனல் காந்தக்கல்லும் அம்பரும் ஆன்மாவுடையன எனத் தேலிசு கூறினரென்பது உண்மையென எண்ண இடமுண்டு. இது, * பொருட்கள் யாவற்றிலும் கடவுளர் நிறைந்துளர் ” என் பதைப் போன்றவொரு மூதுரையல்ல. “பூமி நீரில் மிதக்கிறது” என்பதைப் போன்றவொரு கூற்றகவே இதனையும் கருதல் வேண்டும். தேலிசு பற்றி, எக்காதையோசுவிடமிருந்து நாம் எதிர்பார்க்கக்கூடியன இத்தகைய கூற்றுக்களே. ஆனலும் இக் கூற்றிலிருந்து, உலகு பற்றித்தேலிசு என்ன கொள்கையுடைய ராய் இருந்தார் என அனுமானிக்க முயல்வது தவருகும் ; எனெனில் காந்தக் கல்லும், அம்பரும் உயிருடையன வெனக் கூறும்போது, அதனிலிருந்து பெறக்கூடிய உட்கிடை, எனைய வற்றிற்கு உயிரில்லை யென்பதே.
11 அனக்சிமாந்தர்
12. பிரக்சியாடிசுவின் மைந்தனன அனக்சிமாந்தரும் மிலட் டசுவைச் சேர்ந்தவரே. இவர் தேலிசுவினது “ சிந்தனைமுறை யைத் தழுவியவர் ” எனத் தியோபிறசத்தோசு கூறியுள்ளார். இதற்கு எவ்வாறு பொருள் கொள்வதென முன்பு கண்டோம் (LSifo XIV).
ஒலிம்பிய ஆண்டு TVIII. 2 இல் (547-6 கி. மு.) அனக் சிமாந்தர் அறுபத்திநான்கு வயதானவராயிருந்தார் என
1 முன்னுரை பிரிவு IX இல் காண்க.
வாழ்க்கை

Page 36
56 ஆதி கிரேக்க மெய்யியல்
அப்பொலோடரசுவிடமிருந்து அறிகிருேம். ஒலிம்பிய ஆண்டு XLI. 3 இல் (610-9 கி. மு.) இவர் பிறந்தாரென இப் பொலேட்டசு கூறியிருப்பதும், இராசியின் சாய்வு பற்றிய இவரது உன்னத கண்டுபிடிப்பு நடைபெற்றது ஒலிம்பிய ஆண்டு LWI. இல் எனப் பிளினி கூறியிருப்பதும், அப்பொலோடரசுவின் கூற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இங்கு நாம்காணும் சான்றுகளின் தொகுதி அசாதாரணமான தொன்றெனக ; ஏனெனில் எந்த விதியின்படி நோக்கினலும், அனக்சிமினி சுவுக்கும் தேலிசுவுக்கும் இடைப்பட்ட காலத்தில், அதாவது கி.மு. 565 ஆம் ஆண்டிலேயே அனக்சிமாந்தர் “ புகழுடன் விளங்கியிருத்தல் ’ வேண்டும். இதன்படி கி.மு. 546 ஆம் ஆண்டில் அவருக்கு அறுபது வயதாயிருந்திருக்க வேண்டுமே யொழிய, அறுபத்திநான்காயிருந்திருக்க முடியாது. ஆனல் அப்பொலோடரசு, தான் அனக்சிமாந்தரது நூலைக் கண்டதாகக் கூறியுள்ளார் போலத் தோன்றுகிறது; அதனதுகாலத்தை நிர்ணயிப்பதற்கு, அந்நூலிலிருந்து அவருக்கு யாதோ ஒரு ஆதாரம் கிடைத்திருக்கவேண்டும். தான் அந்நூலேக் கண்டிருந் தார் என்பதைக் குறிப்பிடுவதற்கும் இதுவே காரணமாயிருந் திருக்க வேண்டும். 547-6க்கு அடுத்த ஆண்டிலேயே சாடெயிசு நகரம் வீழ்ச்சியடைந்ததாதலால், அனக்சிமாந்தர் தனது நூலில், இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது, தான் எத்தனை வயதுடை யவராயிருந்தார் எனக் குறிப்பிட்டிருந்திருக்கலாம். “ மீடி தோன்றியபோது நீ எத்தனை வயதானவனுயிருந்தாய்?’ என் பது அக்காலத்தில் ஒரு பிரபல வினவாயிருந்ததென செனே பனிசுவிடமிருந்து நாம் அறிகிறேம்?. எப்படியாயினும் அனக் சிமாந்தர், தேலிசுவுக்கு ஒரு சந்ததி பிந்திய காலத்தவரே யெனவே தோன்றுகிறது?.
தேலிசுவைப் போலவே, அனக்சிமாந்தரும் நடைமுறையில் மிகவும் பயனுடையவாகக் காணப்பட்ட சில புதுக் கண்டுபிடிப்புக் களின் மூலம் பெயர் பெற்றிருந்தார். நிலைக்குத்தைக் கண்டு பிடித்தவர் இவரே யெனச் சில எழுத்தாளர்கள் கூறியுள்ள னர் ; ஆனல் இஃது சரியான கருத்தாயிருக்க முடியாது.
1. Diog. ii. 2 (R. P. 15). Hipp. Rf i. 6 (Doc. p. 560). Plin. N. H. ii. 31.
* Xenophanes, fr. 22( = fr. 17 Karsten; R. P. 95 a). * “ இதற்குப்பின் அதிக காலஞ் செல்வதற்குள் அவர் இறந்துபோனர் ” எனும் கூற்றுக்கு (Diog i. 2; R P. 15) அப்பொலோடரசு, தனது ஊழிகளிலொன்றின் இறுதியாகக் கருதிய, சாடெயிசுவின் வீழ்ச்சி நடைபெற்ற ஆண்டிலேயே (546-5) இவர் இறந்தாரெனக் கொண்டார் என்பதே பொருள் போலும்.

மைலீசிய மரபு 57
இக்கருவி, பபிலோனிலிருந்து கொணரப்பட்டது என எரொ டோதசு கூறியுள்ளார். சங்கிராந்தி நேரங்களையும் சமராத்தி ரங்களையும் நிர்ணயித்தற்குத் தேலிசுவும் இக்கருவியைப்ட் யன் படுத்தியிருக்கவேண்டும். முதன் முதலில் ஒரு தேசப்படத்தை அமைத்தவரும் அனக்சிமாந்தரே. பின்னர் எக்காதையோசு வினல், அதிக விவரங்கள் சேர்த்து அமைக்கப்பட்டது இப்படமே என எராதொசுதெனிசு கூறினர். கருங்கடலின் மீதுசென்ற மைலிசியக் கடலோடிகளுக்காகவே இப்படம் அமைக்கப் பட்ட தென்பதில் ஐயமில்லை. அனக்சிமாந்தரே, அப்போலோனியா விற்? குடியேறச் சென்றேர் சிலரைத் தலைமைதாங்கி அழைத் துச் சென்றனர். பின்னர் அக்குடியேற்றப் பகுதியில் அவரோடு வாழ்ந்த ஏனைய குடிமக்கள் அவருக்காகச் சிலையொன்று நிறுவினர்8.
13. அனக்சிமாந்தரது கொள்கை பற்றி நாம் அறிந்துகொள் அனலுமாத பவை யாவும் இறுதியாகப் பெறப்படுவது தியோபிறகத்தோசு தரது மூலப் விடமிருந்தே. அவர் அனக்சிமாந்தரது நூலை அறிந்திருந் பதார்த்தக் தார். குறைந்தது ஒரு இடத்திலாவது அவர் அனக்சிமாந்தரது கொள் சொற்களை மேற்கோளாகக் காட்டி அவரது மொழிநடையை : தியோ
- Y - S LSLSL SS SSS S LLLSLSSL SSL பிறகத்தோசு விமர்சித்திருக்கிருர் என்பதில் ஐயமில்லை. அவர் அனக்சிமாந் கூறியுள் தர் பற்றித் தனது முதற் புத்தகத்தில் கூறியன வற்றிலி ளவை ருந்து எமக்குக் கிடைத்தவை கீழே தரப்படுகின்றன.
பிராக்சியாடிசுவின் மகனும், தேலிசுவோடு கேண்மை பூண் டவனும், மிலட்டசுவைச் சேர்ந்தவனுமான அனக்சிமாந்தர், பொருட்களின் மூலகமும் ஆதிகாரணமுமானது எல்லையற்றதே எனக் கூறினன். முதற் கார்ணத்திற்கு இப்பெயரை முதலி
பிளினியோ, நிலைக்குத்தைக் கண்டுபிடித்தவர் அனக்சிமினிசுவே எனக் Singpy@moff (N. H. ii. 187).
* Aelian, W. H. i, 17. இங்கு குறிப்பிடப்படுவது பொன்ரசுபகுதி யிலுள்ள அப்பொலோனியாவாகவேயிருத்தல் வேண்டுமெனக் கொள்ளலாம்.
3. இக்காலத்தைச் சேர்ந்த சிலை ஒன்றினது கீழ்ப்பகுதி மிலட்டசுவிற் கண்டு Suq-šastilul "GGT GITg (Wiegand, Milet, ii. 88) AN]A E EMANA PO 6T 607 அதிற் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனல், அனக்சிமாந்தருக்கு இக்கெளரவம் அளிக்கப்பட்டது “ எல்லையற்றது” பற்றிய அவரது கொள்கைகளுக்காவல்ல வென நாம் உறுதியாக நம்பலாம். தேலிசு, எக்காதையோசு என்போரைப் போல இவரும் ஒர் அரசறிஞராகவும் புதிது காணியாகவும் விளங்கினர்.
4. இங்கும், மூலநூலிலுள்ள சொற்கள் அவ்வாறே பேணப்பட்டுள்ள எனைய இடங்களிலும், நான் அவற்றைத் தனியாகவே தந்திருக்கிறேன். மேற்கோளா கத் தரப்பட்டுள்ள எழுத்தாளர்கள் பற்றி “ ஆதாரங்கள் பற்றிய குறிப்பு,” 9 ஆம் பிரிவிற் பார்க்க.
* சிம்பிளிசியசு பெளதிகம் எனும் நூலுக்கு எழுதிய பாடியத்தில் வழி வந்தவரும் சீடருமான எனக் குறிப்பிடுகிருர்,

Page 37
மூலப் பதார்த்தம் ஒரு மூல கமல்ல
58 ஆதி கிரேக்க மெய்யியல்
லளித்தவன் இவனே. எல்லையற்றதெனும் இது, நீரோ அல்லது மூலகங்கள் எனப்படும் எனையவற்றில் எதுவுமோ அல்ல. அவற் றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதும், எல்லையற்றது மான இப்பொருளிலிருந்தே வானமும், அதனில் உள்ள பல்வேறு உல ESĖJÆGT5th Gổ5ITGÖ7 gp1666ÖTp6OT-Phys. Op. fr. 2 (Dox. p. 476; R. P. 16).
6.
அது “நித்தியமானது, மூப்பற்றது” எனவும் “ எல்லா உல கங்களையும் சூழ்ந்திருக்கிற ’ தெனவும் அவர் கூறினர் Hipp. Ref. i. 6 (R. P. 17a).
பொருட்கள் யாவும் எதனிடமிருந்து தோன்றுகின்றனவோ அதனுள்ளேயே மீண்டும் செல்கின்றன. “இதுவே பொருத் தமானது; எனெனில், இவை யாவும் தத்தம் காலத்தில், தமது நியாயமற்ற நடத்தைக்காக ஒன்றுக்கொன்று ஈடுசெய்தல் வேண்டும் ' எனக் கவிதையை யொத்த நடையில் அவர்கூறு கிருர் Phgs, op. fr. 2 (R. P. 16). இதைவிட நித்தியமான இயக்கமொன்றும் இருந்தது. உலகங்களின் தோற்றத்துக்குக் a TUGOOTLn TuSabibg.g. gig. Gaj-Hipp. Ref. i. 6 (R. P. 17 a).
சடப்பொருளில் ஏற்பட்ட மாற்றம் எதனையும் பொருட்களினது தோற்றத்துக்குக் காரணமாக அவர் காட்டவில்லை ; ஆனல், வரம்பற்ற பொருளாயிருந்த அடிப்படையிலிருந்த எதிர்ப்புக் கள் பிரிந்து போயின என அவர் கூறினர்-Simpl. Phg8. p. 150, 20 (R. P. 18).
14. ஆகவே நித்தியமானதும் அழிவற்றதுமான ஒருபதார்த் தம் உளதெனவும், பொருட்கள் யாவும் அதனிலிருந்தே தோன்றுகின்றனவெனவும், அதனுள்ளேயே சென்று மறை கின்றன வெனவும் அனக்சிமாந்தர் கருதினரெனலாம் ; உலகுகளின் தேய்மானங்கள் யாவற்றிற்கும் ஈடு கொடுக்கக் கூடிய வரம்பற்றவொரு களஞ்சியமாக இம் மூலப் பதார்த்தம் உளதென அவர் கருதினர். தேலிசுவினது கொள்கையென நாம் கொண்டதன் இயல்பான விருத்தி இவ்வாறுதான் இருக்க முடியும். குறைந்த பட்சம், அனக்சிமாந்தர் இதனைத் தெளிவாக எடுத்துக் கூறினர் என்பது பற்றியாவது எவ்வகை ஐயமும் எழமுடியாது. உண்மையில், அனக்சிமாந்தர் எவ் வாறு சிந்திப்பதன் மூலம், இத்தகைய கருத்தை அடைந்தனர் என்பதை நாம் உணர்தல் இன்னமும் சாத்தியமானதே. மற் றப் பொருள்கள் யாவும் யாதேனும் ஒரு பொருளின் உருவங் களேயெனில், அப்பொருள் நீராகவே இருத்தல் வேண்டும் எனத் தேலிசு கருதினர் ; ஆனல் மூலப்பதார்த்தம் எவ்

மைலீசிய மரபு 59
வாறு உலகப் பொருட்களில் ஒன்றக இருக்க முடியும் என் னும் கேள்வி அனக்சிமாந்தரது மனத்தில் எழுந்திருக்க வேண் டும். எல்லையற்றது பற்றி ஆராய்கையில், பின்வருமாறு எழுதி யுள்ள அரித்தோதில், அனக்சிமாந்தரது வாதத்தைப் பாது காத்துத் தந்துள்ளார் போலத் தோன்றுகிறது.
மேலும், எல்லையற்றதான, கலப்பற்ற தனிப்பொருளொன்று, மூலகங்களிலொன்றகவோ அல்லது அவை யாவற்றிற்கும் புறம்பானதாகவோ (அப்படியானல் அவை யாவற்றிற்கும் தோற்றுவாயாக) இருக்க முடியாது. சிலர் இதனை (அதாவது மூலகங்களுக்குப் புறம்பான பொருளை) நீர் அல்லது காற் றெனக் கூருது எல்லையற்றதெனக் கூறுவர் ; எனெனில் எல்லையற்றது, இவற்றுள் ஒன்றயின், எனையவை அழிந்து போகும். இவை யாவும் ஒன்றையொன்று எதிர்ப்பன-காற்று குளிரானது, நீர் ஈரலிப்புடையது, தீ வெப்பமுடையது-ஆகவே இவற்றுள் ஒன்று எல்லையற்றதாயிருந்திருந்தால், ஏனையவை இதுவரையில் அழிந்து போயிருக்கும். ஆகவேதான், எல்லையற் றது, மூலகங்களுக்குப் புறம்பான வொன்றெனவும், மூலகங் கள் அதனிலிருந்தே தோன்றுகின்றன வெனவும் அவர்கள் கூறினர்.
இங்கு அனக்சிமாந்தருக்கும், தேலிசு அனக்சிமினிசு என் போருக்குமிடையேயுள்ள வேறுபாடே ஆராயப்பட்டுள்ளதென் பது வெளிப்படை. இப்பகுதியின் மொழிநடை அரித்தோதி லினதேயென்பதும் “ மூலகம்’ எனும் சொற் பிரயோகம் ஒரு காலவழுவென்பதும் உண்மையே யெனினும், இஃது அனக்சிமாந்தரது சிந்தனையைப் பெருமளவிற்குச் சரியாக வரு னிப்பதாக அமைந்துள்ளது என்பதைச் சந்தேகிக்க நியாய மில்லை. உலகத்தின் தோற்றத்திற்குக் காரணமான, முரண் பாடுகளின் பூசலோடேயே, அனக்சிமாந்தர் ஆரம்பத்திருக்கிருர் போலத் தோன்றுகிறது ; சூடானது குளிருக்கு எதிரான தாகவும், ஈரலிப்பு வறட்சிக்கெதிரானதாகவும் இருக்கின்றன. இவை பூசலிடுகையில், ஒன்றைவிட ஒன்று அதிக வலிமை யுடையதாதல், “அநீதி’ யாதலால், தகுந்த காலத்தே, மற் றையதற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அது ஈடு செய்தல் வேண்டுமென்க. அடிப்படையான சத்துப் பொருள் நீரே யெனத் தேலிசு கூறியது உண்மையாயிருந்தால், பிற பொருள் கள் இருப்பது எவ்வாறு எனக் காண்பது மிகக் கடினமே. முரண்பாட்டில் ஒரு பக்கத்தைச் சேர்ந்த குளிரும் ஈரலிப்புமே வரம்பின்றி வலிமை பெற்றிருக்கும் ; சூடும், வறட்சியும்
* பக்கம் 13, குறிப்பு

Page 38
இக்கொள்கை பற்றி அரித்தோதில் கூறுவது
60 ஆதி கிரேக்க மெய்யியல்
எப்போதிருந்தோ உலகிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கும். ஆகவே பூசலிடும் முரண்பாடுகளல்லாத, அவற்றைவிட அடிப்படையான வோர் பொருளிலேயே, இவற்றின் தோற்றுவாயையும், இறுதி யில் இவை செல்லுமிடத்தையும் நாம் காண்டல் வேண்டும். இம்மூலப்பொருளை அனக்சிமாந்தர் “ புசிசு ’ (நித்தசத்தி) என அழைத்தார் எனவே நாம் தியோபிறகத்தோசுவின் கூற்றுக்குப் பொருள் கொள்ளல் வேண்டும் ; “ ஆர்க்கே ’ (முதற்காரணி) யெனும் பதம் அனக்சிமாந்தராலேயே முதலிற் கையாளப் பட்டது எனும் கூற்று, மயக்கம் காரணமாக எற்பட்டதென லாம். அரித்தோதில் தேலிசு பற்றிக் கூறுகையில் “ ஆர்க்கே ’ எனும் பதத்தை ஆதிகாரணம் எனும் பொருளிலேயே உப யோகித்தார் என அறிவோம். இங்கு அது வேறு பொருளில் வந்தது எனக் கொள்ள இடமில்லை.
15. அனக்சிமாந்தரது கொள்கையைத் தனது “ தேராச் சடப் பொருள் ” பற்றிய் கருத்தின் முன்னேடியெனக் கருதிய தும், சிலவேளைகளில் அனக்சிமாந்தரது கொள்கைகளைப் பிற் காலத்து “ மூலக ’க் கொள்கையைச் சார்ந்த சொற்களில் விவரித்தும், அரித்தோதில் இயல்பாக இழைத்த தவறுகளே தனது கொள்கையின்படி மூலகங்களிற்கு முதல், உடலுள் பொருள் எதுவும் இருக்க முடியாதென்பதை உணர்ந்திருந் தாரெஜனினும், அனக்சிமாந்தரது வரம்பற்றது ஒர் உடலுள் பொல்ளே யென்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, மூலகங்களுக்குப் “ புறம்பான ’ அவற்றினின்று “தனித்தி ருக்கும் ’ ஓர் வரம்பற்ற பொருள் என மூலப்பதார்த்தத்தை அவர் வருணிக்க வேண்டியிருந்தது. அரித்தோதில் இச்சொற் ருெடர்களை உபயோகிக்கும்போது குறிப்பிடுவது அனக்சி மாந்தரையே யென்பதை, எனக்குத் தெரிந்தவரையில் ஒரு வரும் சந்தேகிக்கவில்லை.
மூலகங்களுக்கு “ இடைப்பட்ட ’ அல்லது இருமூலகங்களுக்கு இடையேயுள்ள பொருளென மூலப்பதார்த்தத்தைப் பற்றிக் கூறியுள்ள யாரோ ஒருவரைப் பற்றி அரித்தோதில் வேறு பல இடங்களிற் குறிப்பிட்டுள்ளார். கிரேக்க பாடியகாரர்களி லும் கிட்டத்தட்ட எல்லோரும், இக்கருத்து அனக்சிமாந்தரது எனவே கூறியுள்ளனர். ஆனல் தற்கால எழுத்தாளர்கள்
தீக்கும் காற்றுக்கு மிடைப்பட்டவொரு பொருள் பற்றி நான்கு முறைகளும், நீருக்கும் காற்றுக்கும் இடைப்பட்டவோர் பொருள் பற்றி ஐந்து முறைகளும் அரித்தோதில் குறிப்பிட்டிருக்கிருர், நீருக்கும் தீக்கும் இடைப்பட்டபொருள் பற்றியும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் வேறுபடுவதிலிருந்து, அவரது குறிப்புக்கள் வரலாற்று ரீதியானவை யல்ல என்பது தெளிவு.

மைலீசிய மரபு 6.
அதனை ஏற்றுக் கொள்வதில்லை. அனக்சிமாந்தர் இது போன்ற எதுவும் கூறவில்லையென்பதைக் காட்டுவது மிகவும் இலகுவே யெனினும், அஃது உண்மையான கண்டனமாகாதென்க. வரலாற்று ரீதியாக அமையவேண்டிய பண்புகளைக் கொஞ்ச மும் கவனியாது, அரித்தோதில், யாவற்றையும் தனதுமொழி நடையிலேயே கூறினர் என்பது கவனிக்கப்படல் வேண்டும். அன்றியும், வரம்பற்றதை “ மூலகங்களுக்குப் புறம்பான " என வருணிப்பதிலும் பார்க்க “ மூலகங்களுக்கு இடைப்பட்ட பொருள் ” எனக் கூறுவது கூடிய காலவழு என்பது எற்றுக் கொள்ளக் கூடியதல்ல. “ மூலகங்கள் ’ எனும் பிரயோகம் எற்பட்டதன் பின், உண்மையில் பின்னதே பொருத்தமான வருணனை யெனலாம். மேலும், இப்பகுதிகள் அனக்சிமாந்த ரைக் குறிப்பிடுவனவல்ல என நாம் கொள்வோமாயின், அனக் சிமாந்தரது கொள்கைகள் சிலவற்றை எற்றுக் கொண்டது மட்டு மல்லாது, அவருக்கே உரியன போன்ற பல பதங்களையும் உபயோ கித்த ஒரு மெய்யியலாளர் பற்றி அரித்தோதில் அதிக கவனம் செலுத்தினராயினும், அம்மெய்யியலாளரது பெயரை அரித் தோதில் அறிந்திருக்கவில்லை யெனவும் நாம் முடிவு செய்தல் வேண்டும். அன்றியும் அரித்தோதில் சில இடங்களில் மூலகங் களுக்கு “இடைப்பட்ட” பொருளையும் அவற்றுக்குப் ‘புறம் பான” பொருளையும் ஒன்றெனவே கருதுகிறர் என்பதையும் குறிப்பிடவேண்டும். w
அனக்சிமாந்தரது வரம்பற்றதை ஓர் “கலவை ” யென அரித்தோதில் குறிப்பிடும் பகுதியொன்றும் உளது. ஆனல் இப்பகுதிக்கு வேறு விதமாகப் பொருள் கொள்வதும் சாத்தி யமே. ஆயினும் அனக்சிமாந்தரது கொள்கைகளுக்கு நாம் விளக்கம் காண்பது இதனுல் எவ்வகையிலும் தடைப்படவேண் டியதில்லை. பார்மனைடிசுவுக்கு முன்னர் எவராலும் சிந்திக் கப்பட முடியாதனவையாயும், எம்பிடோக்கிளிசுவுக்கு முன்னர் யாராலும் சிந்திக்கப்படாதனவாயுமிருந்த “ மூலகங்கள் ” பற்றி அனக்சிமாந்தர் எதுவும் கூறியிருக்க முடியாதென்பது உறுதி. இவ்விடயம் பற்றி நீண்ட விவாதங்கள் எழுந்துள்ளன வென் பதாலும், கிரேக்க மெய்யியலின் வரலாற்றை அறிந்து கொள் வதற்கு அரித்தோதிலின் கூற்றுக்கள் எவ்வளவுக்குப் பயன் படுகின்றன என்பதனை இதிலிருந்து கணிக்கலாம் என்பத ணுலுமே, இதனை ஈண்டு குறிப்பிட்டோம். அரித்தோதிலினது கொள்கையை மனதிற் கொண்டு நோக்கினல், அவரது கூற்றுக் கள் எற்கத்தக்கவையாயிருக்கலாம் ; ஆனல் அவ்வாறல்லாது
1. Met. A, 2. 1069 b 18 (R. P. 16 c).

Page 39
மூலப் பதார்த்தம் எல்லையற்றது
ன்ண்ணிறந்த gloSlissa
62 ஆதி கிரேக்க மெய்யியல்
தனக்கு முந்திய சிந்தனையாளரொருவரினது கருத்தொன்றை அரித்தோதில் காலவழுவான பதங்கள் மூலம் குறிப்பிடுகை யில் நாம் அவரது கூற்றுக்களை வரலாற்று ரீதியானவையெனக் கொள்ள வேண்டியதில்லை.
16. அரித்தோதில் கூறியிருப்பதுபோல, “ ஆதல் முடிவின்றி நடைபெறவேண்டு மென்பதற்காகவே ’ அனக்சிமாந்தர் மூலப் பதார்த்தத்தை வரம்பற்ற பொருளாக்கினர் என்பதில் ஐய மில்லை. இச்சொற்கள் அனக்சிமாந்தருடையவைதான அல்லவா என்பது தெளிவாயில்லை. ஆனல் பாடியகாரர்கள் பலரும் இவ்வாறு கூறியது அவரே யெனக் கூறுகின்றனர். அனக்சி மாந்தரது நூலை நேரில் அறிந்தவரான தியோபிறகத்தோசு, அனக்சிமாந்தர் இவ்வாறு சிந்தித்தாரெனக் கூறுகிருரென் பதைக் கொண்டு நாம் திருப்தியடையலாம். அன்றியும் உலகு பற்றி அனக்சிமாந்தர் கொண்டிருந்த கொள்கை அத்தகைய தாதலால் மூலப்பதார்த்தம் வரம்பற்றது என்ற கருத்து இயல் பாகவே அவருக்குத் தோன்றியிருக்கும். “முரண்பாடுகள் ” ஒன்றேடொன்று பூசலிடுகின்றன வெனவும், அவ்விரோதம் காரணமாக அவை ஒன்றனுள் ஒன்று “ அநீதியாக ’ வரம்பு கடந்து செல்கின்றன வெனவும் கண்டோம். கோடையிற் சூடும், மாரியிற் குளிரும் “ அநீதி’ இழைக்கின்றனவாதலால், இறுதி யில் வரம்பற்றதைத் தவிர்ந்த எனைய யாவும் அழிந்து போக நேரிடும். ஆகவே, புதிது புதிதாக முரண்பாடுகளாகப் பிரியக் கூடிய வரம்பற்ற களஞ்சியம் ஒன்று இருப்பதனலேயே, இவ் விறுதி அழிவு தவிர்க்கப்படலாம். எனவே, நாமறிந்த முரண் பாடுகளில் எதுவுமல்லாத, முடிவில்லாதவோர் பொருட்டொகுதி நாம் வாழும் உலகின் நானுபக்கங்களிலும் பரந்திருப்பதாக நாம் கருத வேண்டும். இத்தொகுதியிலிருந்தே எமதுஉலகு ஒரு காலத்தில் தோன்றியது; இப்பொருட் டொகுதியினுள்ளேயே அது ஒரு காலத்தில் முடிவடையும்.
17. “ வரம்பற்றதனுள்ளே எண்ணிறந்த உலகங்கள் இருந் தன” வென அனக்சிமாந்தர் நம்பியதாக நாம் அறிகிருேம். இதுபற்றி, அழியக் கூடியனவாயினும், ஒரே நேரத்தில் எண் ணிறந்த உலகங்கள், வரம்பற்றதில் உள்ளன வெனும் விளக் கத்தை அல்லது ஓர் உலகம் அழிந்து போகும்வரை புதிய உலகம் ஒன்று ஒருபோதும் தோன்றுவதில்லையாதலால், வரம் பற்றதில் ஒருபோதும் ஒர் உலகத்திற்குமேல் இருப்பதில்லை யெனும் செல்லரது விளக்கத்தைத் தேர்தல் வேண்டும். இது
1. cf. (Plut. Strom. fr* 2(R. P. 21. b).

மைலீசிய மரபு 63
மிகவும் முக்கியமான விடயமாதலால், இதுபற்றிய ஆதாரங்களைக் கவனமாக ஆராய்தல் அவசியமாகிறது.
முதலாவதாக, உள்ளது ஒர் உலகமோ அல்லது எண்ணி றந்தனவோ என்பது பற்றி ஆதி மெய்யியலாளர்கள் யாவரது கருத்துக்களையும் ஆராய்ந்த தியோபிறகத்தோசு, அணுவாதி கள் “ எண்ணிறந்த உலகங்கள்’ உளவென நம்பினர் எனக் கூறும்போது, எககாலத்தில் உள்ளனவற்றை அவர் கருதினரே யொழிய, ஒன்றன் பின் ஒன்றகத் தோன்றும் உலகங்களையல்ல வென்பது பாடிய மரபிலிருந்து தெளிவாகப் பெறப்படுகிறது. வேறுபட்ட இரு கொள்கைகளை அவர் ஒரு தலைப்பின் கீழ்த் தந்திருப்பாரேயாகில் அவை எவ்விதத்தில் வேறுபட்டன வென் பதையும் அவர் காட்டியிருப்பார். ஆனல் அவர் அதற்குமா ருக, அனக்சிமாந்தர், அனக்சிமினிசு, ஆக்கேலசு, செனுேபனிசு, இடையோசினிசு, இலியூகிப்போசு, தெமோகிரித்தோசு, எபிகூரசு எனும் யாவரும், எமது உலகத்தின் எல்லாப் பக்கங்களிலும் * எண்ணிறந்த உலகங்கள்” இருந்தனவென்னும் கொள்கை யைக் கொண்டிருந்தனர் எனக் கூறுகிறர். எபிகூரசு, இவ் வுலகங்களுக்கிடையேயிருந்த தூரம் வேறுபட்டதெனக் கூறினர், ஆனல் அனக்சிமாந்தர் இவ்வுலகங்கள் சமமான இடைவெளிக் கொன்ருக விருந்தன வெனக் கருதினர் என்பதே தியோபிற சுத்தோசு, இம்மெய்யியலாளரின் கொள்கைகளிற் காட்டும் ஒரே யொரு வேற்றுமையென்க. அனக்சிமினிசு, ஆக்கேலசு, செனே பனிசு என்போர் எண்ணிறந்த உலகங்களிருந்தன வெனக் கூறினர் என்று கூறும் ஒருவரை நாம் நம்பமுடியாதெனக் கூறி, இவ்வாதாரத்தை ஏற்றுக்கொள்ளச் செல்லர் மறுத் தனர். இம்மூவருள் முதலிருவ்ர் பற்றியும் தியோபிறசத்தோசு கூறியிருப்பது முற்றிலும் சரியானதேயெனவும், செனுேபனிசு வைப் பொறுத்தவரையிலும் கூட அவ்வாறு கூறப்பட்டதற்குக் காரணம் உண்டெனவும், நான் காட்டுவேனென நம்புகிறேன். எபிகூரசுவின் பெயர் பின்னர் சேர்க்கப்பட்டதாயினும் இப்ப குதி எமக்கு ஈத்தியோசுவிடமிருந்து? கிடைத்திருக்கிறதென்பதோ டல்லாது, தியோபிறசாத்தோசுவிடமிருந்தே இஃது பெறப்பட்டி ருக்க வேண்டுமென்பதையும் நாம் குறிப்பிடலாம். சிம்பிளிசியசு வின், பின்வரும் கூற்றினல் இது உறுதிப்படுத்தப்படுகிறது; எண்ணிறந்த உலகங்கள் உளவெனக் கருதிய அனக்சிமாந்தர்,
" தொபாயோசுமட்டுமே இவ்வாறு கூறியுள்ளார் எனச் செல்லர் எண்ணி னர். அவர் எழுதியபோது, ஆதார நூல்களின் வரன்முறை நன்கு அறியப்பட வில்லையென்க.
* பார்க்க, அனக்சிமினிசுபற்றி, 30; செனேபனிசு, பிரிவு 59 , ஆக்கிலேசு, பிரிவு 192.

Page 40
64 ஆதி கிரேக்க மெய்யியல்
இலியுகிப்போசு, தெமோகிரித்தோசு-இவர்களுக்குப் பின்னர் எபிகூரசு-போன்றேர், இவ்வுலகங்கள் தோன்றுதலும் அழித லும் முடிவில்லாது நடைபெறுகிறதெனவும், எப்போதும் சில தோன்றிக்கொண்டிருக்கின்ற வெனவும் சில அழிந்து கொண்டி ருக்கின்றன வெனவும் கருதினர்.
இப்பகுதியும், அலெக்சாந்தருக்கூடாக, தியோபிறகத்தோசு விட மிருந்தே வருகிறது என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
அடுத்ததாக, சிசரோவினது மிக முக்கியமான கூற்றென்றுக்கு நாம் வருவோம். சிசரோ இதனை, எக்கூலேனியத்திற் காணப் பட்டதும், பிலோடெமொசுவினல் எழுதப்பட்டதுமான மதம் பற் றிய எபிகூரிய நூலிலிருந்து பெற்றிருக்கவேண்டும். அல்லது அந்நூலுக்கு நேர் ஆதாரமாக உதவிய நூலிலிருந்து இக்கூற்றுச் சிசரோவினற் பெறப்பட்டிருக்கலாம். வெள்ளியசுவை ஆங்கு அவர் பின்வருமாறு பேசவைக்கிருர் : “ நீண்ட இடைவெளி களுக்கொருமுறை கடவுளர்கள் தோன்றி மறைந்தனர் என வும், எண்ணிறந்த உலகங்கள் என்பவை இவையே யெனவும் அனக்சிமாந்தர் கருதினர் ”2 அனக்சிமாந்தரது கொள்கையின் படி “ எண்ணிறந்த வானங்கள்’ என்பவையும் கடவுளர்களே என ஈத்தியோசு கூறுவதையும் சிசரோவினது இக்கூற்றேடு சேர்ந்தே நோக்குதல் வேண்டும் என்பது தெளிவு. இக்கூற்றிற் காணப்படும் “நீண்ட இடைவெளிகள்’ என்பதற்குக் கால இடைவெளிகள் எனப் பொருள் கொள்ளாது இட இடைவெளி கள் எனப் பொருள் கொள்வதே இயல்பானது என்பதையும் காண்க : இது சரியானதென எற்றுக்கொள்ளப்பட்டால், எமது ஆதாரங்கள் பூரணமாகப் பொருந்துகின்றன எனக் கூறலாம்.
மேலும், வரம்பற்றது “ எல்லா உலகங்களையும் சூழ்ந்திருக் கிறது” எனும் கூற்றுக்கு, அஃது ஒன்றன்பின் ஒன்றக வரும் எல்லா உலகங்களையும் சூழ்ந்திருக்கிறது எனப் பொருள் கொள்ளு தல் பொருத்தமானதன்று ; ஏனெனில் அவ்வாறு கொள்ளும் போது, குறிப்பிட்ட எந்தக் காலப்பிரிவிலும் “ சூழ்வதற்கு ” ஒர் உலகமே இருக்க முடியும். அன்றியும், “ வானத்திற்கு வெளியே உள்ளவை எல்லையற்றனவாயின், பொருள் எல்லை யற்றதாயிருத்தல் வேண்டும், எண்ணிறந்த உலகங்கள் இருத் தல் வேண்டும்’ என அரித்தோதில் ஓரிடத்திற் தரும் வாதம், மைலிசியர்களினது வாதத்தையே குறிப்பிடுவதாயிருத்தல்
1 தியொடொறெற்றுவும் இப்பெயர்களைத் தந்திருப்பது இதனை நிரூபிக்கிறது. 2. Cicero, De nat.d.i. 25 (R. P. 21).

மைலிசிய மரபு 65
வேண்டும் ; ஏனெனில் ஆதி அண்டவியலாளர்களுள், வானங் களுக்கு வெளியே வரம்பற்ற பொருளொன்றுளது எனக் கூறி யவர்கள் மைலீசியர்கள் மட்டுமே. இறுதியாக, பைதாகரச வாதி கள் யாவருள்ளும் காலத்தால் முந்தியவரான பீற்றன் என் பார், நூற்றி எண்பத்திமூன்று உலகங்களுளவெனவும் அவை முக்கோண வடிவாக நிரைப்படுத்தப்பட்டுள்ளனவெனவும் கூறி னர் என்பதையும் நாம் அறிவோம். அணுவாதிகளுக்கு முன்பும், உலகங்கள் பலவுள வெனக் கூறியவர்கள் இருந் தனர் என்பதையாவது இது நிரூபிக்கின்றதென்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.
18. “ வானங்கள் யாவற்றையும் அவற்றினுள்ளே உள்ள நித்திய உலகங்கள் யாவற்றையும் ” தோற்றுவித்தது “நித்திய இயக் இயக்கமும் கமே ’ எனத் தொகுப்பாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனல் சுழியும் இத்தகைய பதங்களை உபயோகித்தது அரித்தோதிலே யென வும் (பிரிவு VIII.), வரம்பற்றதன் மூல இயக்கத்தை, பூமி யினது நாளாந்த இயக்கம் போன்றவெதுவுமென நாம் கருதக் கூடாதெனவும் கண்டோம். அன்றியும், அவ்வாறு கொள்வது, எண்ணிறந்த உலகக் கொள்கையோடு முரண்படும். ஏனெனில் எண்ணிறந்த இவ்வுலகங்களில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட ஓர் மத்தியினையும் நாளாந்த இயக்கத்தையும் உடையதாயிருக்கு மென எண்ண இடமுண்டு. இவ்வியக்கம் எத்தகையதெனக் குறிக்கும் திட்டவட்டமான கூற்று எதுவும் காணப்படவில்லை ; ஆனல் “ பிரிந்துபோதல்’ எனப் பொருள்படும் கிரேக்க சொற் ருெடரைப் பார்க்கும்போது, அரிதட்டில் ஆட்டித்தெரிவது போன்றவோர் இயக்கமே கருதப்படுகிறது போலத் தோன்று கிறது. பிளேட்டோவினது திமாயசுவில், பைதாகரசவாதிகள் இத்தகையவோர் கொள்கையையே கொண்டிருந்தனர் எனக் கூறபபடுகிறது.2 பைதாகரசவாதிகள், அண்டவியல் சம்பந்த மான விடயங்களில் அனக்சிமாந்தரையே பெரிதும் பின்பற்றி னர் (பிரிவு 54). அபுதேரா மரபினரும், தமது அணுக்களின் இயக்கத்தை விவரிக்கையில் இவ்வாறே வருணித்தனர் எனக் காண்போம் (பிரிவு 179). இவர்களும் தமது கொள்கையை
* 53 g h i Síî66ți) ESIT GổOTAS. cf. Diels, Elementum, pp. 63 Sqq.
* Plato, Tim. 52 e, இங்கு மூல வடிவங்கள் (“ முரண்பாடுக ” ஞக்குப் பதிலாக இங்கு இவற்றைக் காண்கிறேம்) துழாவப்படும்போது தானியங்கள் தூற்றும் கருவிகளினல் அசைக்கப்படும்போது நடைபெறுவது போல, வெவ் வேறு திசைகளில் எடுத்துச் செல்லப்பட்டுப் பிரிகின்றன ; இவ்வாறு திண்மையும் நிறையும் கொண்டவை ஒரு திசையிலும், ஐதானவையும் நிறை யில்லாதன வுமானவை வேறேர் திசையிலும் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு சென்றவை தாமடைந்த இடங்களில் தங்கியும் விடுகின்றன.

Page 41
66 ஆதி கிரேக்க மெய்யியல்
விவரிக்கையில், மைலீசியர்களையே பின்பற்றினர். ஆனல் இது பற்றிய நேரடியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லையாத லால் நாம் வெறும் ஊகத்தோடு திருப்தியடைய வேண்டியது தான்.
ஆனல் உலகம் “ பிரிந்துபோன 'தன் பின்னர் எற்படும் இயக்கத்தைப் பற்றி அறிய முற்படும்போது எமது ஆதாரங்கள் திருப்திகரமானவையாகவுள்ளன வெனலாம். நீரில் அல்லது காற்றில் எற்படும் சுழியை ஓர் உவமையாகக் கொண்டு அதனைப் பெருமளவிற் கையாண்டமை ஆதி அண்டவியலின் முக்கிய பண்புகளில் ஒன்றக விருந்தது என்பதுபற்றி ஐயத்திற்கிட மில்லை. இவ்வுவமை அனக்சிமாந்தர், அனக்கிமினிசு என் போரின் கொள்கைகளைச் சேர்ந்தது என நாம் கொள்வதையும் நியாயமாக மறுக்க முடியாதெனலாம். மூலப்பதார்த்தம் நீர் எனும் கொள்கையோடு ஆரம்பித்து, அஃது காற்று எனும் கொள்கையை இறுதியாக அடைந்த சிந்தனையாளர்களது மனத் தில் சுழி பற்றிய இவ்வுவமை தோன்றியது முற்றிலும் இயல் பானதே. நிலமும் நீரும் மத்தியிலும், தீ சுற்று வட்டத்திலும், காற்று இவற்றிற்கிடையேயும் இருந்தனவென்னும் கொள்கை க்கும் இவ்வுவமை சிறந்தவோர் விளக்கமாக வமையும். நிறை கூடிய பொருட்கள் சுழியின் மத்தியை அடைய முற்படுகின்றன; நிறை குறைந்தன சுழியின் சுற்று வட்டப் பகுதிக்குத் தள்ளப்படுகின்றன. ஆனல் இதுவரைக்கும், கோளத்தின் சுழற்சி யென எதுவும் குறிப்பிடப்படவில்லை ; பூமியின் மேற் பரப்பை நோக்கிச் சாய்ந்துள்ளதெனக் கருதப்படக்கூடிய வொரு தளத்தில் அல்லது தளங்களில் நடைபெறும் வட்டித்த இயக்க மொன்றையே நாம் கற்பனை செய்தல் வேண்டும். மேலே தரப்பட்டுள்ள ஊகம், சுழியின் தோற்றத்தை இயக்கரீதியான முறையிற் திருப்திகரமாக விளக்குகிறது என்பதும், அதனை நாம் வற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் நியாயமாக லாம். சுழியினது தோற்றம் பற்றி அணுவாதிகள் தந்த விளக் கமும் இதுவே யென நாம் காண்போம் (பிரிவு 180).
அண்டவியக்கத்தைப் பொறுத்தவரையில், பேராசிரியர் டபிளியூ. எ எய்டெல் தரும் விளக்கத்தை நான் நன்றியோடு எற்றுக்கொள்கிறேன். ஆனல் இதுவும் நித்திய இயக்கமும் ஒன்றேயெனக் கூறமுடியாது. இயூடொக்சோசு அரித்தோதில் என்போரது “ கோளங்க “ளைப் பைதாகரசவாதத்துட் புகுத்தக் கூடாதென்பதைக் காட்டுவதற்கு, என்னல் ஆனவற்றை நான் எற்கெனவே செய்துள்ளேன். அனக்சிமாந்தரது உலகத்தின் இயக்கம், ஒரே தளத்தில் எற்படும் வட்டித்த இயக்கம் எனல், இக்கருத்துக்கு மேலும் வலுவூட்டு மென்க.

மைலிசிய மரபு 67
19. உலகின் வெவ்வேறு பகுதிகள் எவ்வாறு வரம்பற்ற வானசோதி திலிருந்து தோன்றின என்பது பற்றியும், தொகுப்பாசிரியர்கள் களினது எமக்குச் சில குறிப்புக்கள் தந்துள்ளனர். பின்வரும் கூற்று தோற்றம் தியோபிறகத்தோசுவிடமிருந்து பெறப்பட்டதாகும்.
நித்திய பொருளிலிருந்து சூட்டையும் குளிரையும் தோற்று விக்கக் கூடிய பொருளொன்று, இவ்வுலகின் ஆரம்பத்திற் பிரிந்து போனதென அவர் கூறுகிறர். இப்பொருளிலிருந்து, ஒர் தீக்கோளம் எழுந்து, மரத்திற் பட்டை பொருந்தியிருப் பதைப் போல, பூமியைச் சூழ்ந்திருந்த காற்றேடு நெருக்க மாகப் பொருந்திக் கொண்டது. இத்தீக்கோளம் பிய்த்தெடுக்கப் பட்டுச் சில வளையங்களுள் அடைக்கப்பட்டபோது சூரியன், சந் திரன், உடுக்கள் என்பன தோன்றின.- Ps-Plut. Strom. fr. 2 (R. P. 19).
வரம்பற்றதிலிருந்து, உலகை ஆக்கும் பொருட்டு ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டபோது, அது குளிர், சூடு எனும் இரு முரண் பாடுகளாக மாற்றமடைந்தது. சூடு குளிரைச் சூழ்ந்திருக்கும் தீப்பிழம்பாகத் தோன்றுகிறது ; குளிர் காற்றினற் சூழப்பட்ட நிலமாகத் தோன்றுகிறது. குளிரானது எவ்வாறு, நிலம், காற்று, நீர் என்பனவாக மாறுகிறது என்பது இங்கு விளக் கப்படவில்லையாயினும், அரித்தோதிலினது வளிமண்டலவியல் எனும் நூலில் (Meteorology) உள்ள வொரு பகுதி இவ் விடயத்தைச் சற்றே விளக்குவதாக வமைந்துள்ளது ; கடல் பற்றி “இறையியல்வாதிகள் ” தரும் கருத்துக்களை ஆராய்ந்த தன் பின்னர் அரித்தோதில் பின்வருமாறு கூறுகிறர் . ஆனல் மனிதர்களது ஞானத்தை அதிகமாகப் டெற்றவர்கள், கடலின் தோற்றம் பற்றி விளக்கமொன்று தருகின்றனர். முதலில் நிலப்பகுதி முழுவதுமே ஈரலிப்புடையதாய் இருந்ததென அவர் கள் கூறுகின்றனர் ; பின்னர் சூரியனல் அது வறட்டப்பட்ட போது ஆவியான பகுதியே காற்றுக்களை எற்படுத்தியது ; சூரி யன், சந்திரன் என்பனவற்றின் கதிகளில் ஏற்படும் திருப்பங் களுக்குக் காரணமாகியது. எஞ்சியிருந்த நீர்ப்பகுதியே கட லென்க. ஆகவேதான், சூரியன் இன்னமும் அதனை வறட்டுகிற தாதலால் கடல் அளவிற் குறைந்து கொண்டு வருகிறதெனவும் இறுதியில் அது முற்ருக வறண்டு போய் விடுமெனவும் அவர்கள் நம்புகின்றனர்-Meteor, B, 1. 353 b 5.
நிலமும் முதலில் ஈரலிப்புடையதாகவே இருந்தது, பின்னர் நிலத்திற்கு மேலேயிருந்த உலகப் பகுதி சூரியனற் சூடாக்கப் பட்டபோது வளி உண்டாகி, வானம் முழுவதுமே அதிகரித்து, அவ்வளி, காற்றுக்களை உண்டாக்கியது. சூரியனதும் சந்திரனதும்

Page 42
பூமியும் dist-g) in
68 ஆதி கிரேக்க மெய்யியல்
கதியில் திருப்பம் எற்படுவதற்குக் காரணமாகிறது என்றெல் லாம் கூறு வோரும் இத்தகைய பொருளற்ற முடிவையே அடைதல் வேண்டும்.-Ib. 2, 355 a 21 (R. P. 20 a}.
இப்பகுதிக்கு எழுதிய பாடியத்தில், இதுவே அனக்சிமாந்தர் இடையோசினிசு என்போரது கருத்தெனவும், தியோபிறசத் தோசுவே தனக்குச் சான்று எனவும் அலெக்சாந்தர் கூறுகிறர். கடல்பற்றிய அனக்சிமாந்தரது கொள்கை பற்றித் தொகுப்பாசிரி யர்களிடமிருந்து நாம் அறிந்தவையும் இதனை உறுதிப்படுத்து கின்றன (பிரிவு 20). ஆகவே, சுழியினல் முதலில் குளிரும் சூடும் பிரிக்கப்பட்டதன் பின்னர், தீயின் சூடு, உலகின் குளிர்ந்த உட்பகுதியைக் காற்றக அல்லது ஆவியாக மாற்றுகிறது-அக்கா லத்தில் இவை யிரண்டுக்குமிடையே வேற்றுமை காணப்பட வில்லை-இப்பணியே பின்னர் விரிவடைந்து, தீ, வளையங்களாகப் பிரிவதற்குக் காரணமாகிறது என நாம் முடிவு செய்யலாம். இவ்வளையங்கள் பற்றிப் பின்னர் ஆராய்வோம் ; முதலிற் பூமி பற்றிக் கூறப்படுவனவற்றை நாம் கவனித்தல் வேண்டும்.
20. ஈரலிப்பும் குளிரும் கொண்ட பதார்த்தத்திலிருந்து ஆரம்பத்தில் பூமியும் கடலும் பிரிந்தமை பின்வருமாறு வரு ணிக்கப்படுகிறது : மூல ஈரலிப்பில் எஞ்சியிருப்பதே கடலென்க. அதனிற் பெரும் பகுதியைத் தீ வறட்டி விட்டது. வெப்பமூட்டு வதன் மூலம் எஞ்சியதையும் அது உப்பாக்கிவிட்டது- Aet.i. l6, II (R. P. 20 a). r அது உருவத்தில் உருளை போன்ற தெனவும் அதனது ஆழம், அதன் அகலத்தில் மூன்றில் ஒரு பகுதியெனவும் அவர் கூறு @(mff.–Ps. – Plut. Strom. fr. 2 (R. P. ib.).
பூமி, தனது நிலையிற் தன்னை நிறுத்திவைக்க வேறு எதனது உதவியையும் வேண்டாமல், அந்தரத்திற் தனியே ஊசலாடுகிறது. அது தனது நிலை மாறது தொடர்ந்து ஒரு நிலையிலேயே யிருப்பதற்குக் காரணம், யாவற்றினின்றும் அது சமதூரத்தில் இருப்பதே. உள்ளே வெறுமையானதும் வட்டமானதுமான பூமி, உருவத்தில் ஓர் கற்றுணை ஒத்திருக் கிறது. நாம் அதன் இரு பரப்புக்களில், ஒன்றில் வாழ்கிறேம் ; மற்றது எமது பரப்புக்குக் கீழே எதிர்த்திசையில் உள்ளது.- Hipp. Ref. i. 6 (R. P. 20).
“ மூலகங்கள் ’ பற்றிய கொள்கைப்படி பார்ப்பதானல், அனக் சிமாந்தர் சூடும், வறட்சியும் எனத் தீயை ஒரு பக்கத்திலும், குளிரும் ஈரலிப்பும் என ஏனையவற்றை மறுபக்கத்திலும் வைத் தார் எனக் கூறவேண்டும். வரம்பற்றது, தீக்கும் நீருக்கும்

மைலீசிய மரபு 69
இடைப்பட்டவோர் பொருள் என அரித்தோதில் கூறியதற்கு இதுவே விளக்கமென்க. அன்றியும், குளிரான மூலகம் எவ் வாறு தீயினல், காற்ருக அல்லது ஆவியாக மாற்றப்படுகிற தென்பதையும் நாம் கண்டோம் ; வரம்பற்றதைத் தீக்கும் காற் றுக்கும் இடைப்பட்ட பொருளெனவோ அல்லது காற்றுக்கும் நீருக்கும் இடைப்பட்ட பொருளெனவோ அழைக்க அரித்தோதி லால் எவ்வாறு முடிந்த தென்பதை அது விளக்குகிறது.
உலகின் குளிரும் ஈரலிப்பும் கொண்ட உட்பகுதி உண்மையில் நீரல்ல. அது எப்போதும் “ ஈரலிப்பு ” அல்லது “ ஈரலிப்பான நிலை” யெனவே அழைக்கப்படுகிறது. ஏனெனில் அது இனி மேற்றன் சூட்டினல் நிலம், நீர், ஆவி என்பனவாகப் பிரிக்கட் படவேண்டியதாக இருக்கிறது. சூடு நீரைச் சிறிது சிறிதாக வறட் டியமை, அனக்சிமாந்தர் “ அநீதி ’ யெனக் குறிப்பிட்டதற்கு நல்லவோர் உதாரணமாகிறது.
பூமி நீரில் மிதக்கிறதெனத் தேலிசு கூறியிருந்தார். ஆனல் அது தனியே அந்தரத்தில் நிற்கிறதெனவும், அதனைத் தாங்கு வதற்கு எதுவும் வேண்டியதில்லை யெனவும் அனக்சிமாந்தர் உணர்ந்தார். இதற்கு அவர் உபயோகித்தவாதம் அரித்தோதி லாற் பேணப்பட்டிருக்கிறது. சுழியின் சுற்றுவட்டத்திலிருந்து பூமி எத்திசையிலும் சமமான தூரத்திலேயே இருக்கிறதாத லால், அது கீழ் நோக்கியோ அல்லது மேல் நோக்கியோ அன்றேல் பக்கவாட்டிலோ செல்ல வேண்டியதில்லை. எண்ணி றந்த உலகுகள் உள்ளனவென்னும் கொள்கையோடு, அண் டத்தில் மேற்பகுதியெனவும் கீழ்ப்பகுதியெனவும் முடிவாக உள் ளன வெனக் கூறுவது, முரண்படுமாதலால், இவ்வாதம் மிக வும் செம்மையானதே. பூமி மத்தியில் இருப்பதற்குக் கார ணம், சுழியே ; ஏனெனில், அளவிற் பெரிய பொருட் டொகு திகள் சுழியின் மத்தியை நோக்கிச் செல்ல முற்படு கின்றன. வட்டமான சுழற்சி இயக்கத்தில், பூமியும் சேர்ந்து கொண் டதென அனக்சிமாந்தர் கருதினர் என்று கொள்வதற்கு நல்ல ஆதாரங்கள் உள. ஆயினும், இங்கு பூமி, ஓர் கோள மெனக் கொள்ளப்பட்டவில்லையாதலால், அதனது இயக்கத்தை அச்சியற் சுழற்சியெனக் கொள்ள முடியாது. உலகம் முழு வதும், சுழன்றுகொண்டிருக்கும் வளையங்களின் தொகுதியே யென அனக்சிமாந்தர் தரும் கருத்தை வற்றுக்கொண்டோ மானல், அவரது கொள்கையின்படி பூமியின் வடிவம் என்ன வென்பதையும் விளங்கிக் கொள்ளலாம். சுழியின் மத்தியிலே யுள்ளவோர் திண்மவளையமே பூமியென்க.
* குறிப்பு பக்கம் 60.

Page 43
se சோதிகள்
70 ஆதி கிரேக்க மெய்யியல்
21. சுழியின் சுற்றுவட்டத்தை நோக்கித் தள்ளப்பட்ட தீ, அதன் வெப்பத்தினுல் விரிவடைந்த ஆவியின் அமுக்கம் காரண மாக வளையங்களாகப் பிரிந்தது என நாம் கண்டோம். இவ்வளை யங்களிலிருந்து வானசோதிகள் தோன்றிய விதம் பற்றி இப்பொலைட்டசு, ஈத்தியோசு என்போர் கூறுவனவற்றை இங்கு தருகிறேன்.
உலகத்தீயினின்று பிரிக்கப்பட்டு, காற்றினற் சூழப்பட்டிருக் கும் தீச்சில்லுகளே வானசோதிகள். இச்சில்லுகளில், வான சோதிகள் வெளியே தெரியக்கூடியவாறு, சில சுவாசத்தொளை கள், குழாய்போன்ற வழிகளாக அமைந்திருக்கின்றன. இதன லேயே சுவாசத்தொளைகள் அடைபடும்போது கிரகணங்கள் ஏற் படுகின்றன. இவ்வழிகள் மூடுவதும் திறப்பதுமாய் இருப்பதன லேயே, சந்திரன் சில வேளைகளிற் தேய்வதும் சில வேளைகளில் வளர்வதுமாகக் காட்சியளிக்கிறது. சூரியனது சில் அளவில் பூமியினதைப் போல 27 மடங்காகவும், சந்திரனது சில் 18 மடங் காகவும், இருக்கின்றன. சூரியனே இவை யாவற்றிலும் அதிக உயரத்தில் இருக்கிறது. உடுக்களின் சில்கள், ஏனைய uTalfisfig5th SGp d Gitoria07.-Hipp. Ref. i. 6. (R. P. 20).
தீ நிறைந்த, அழுத்தமடைந்த காற்று வளையங்களே வான சோதிகள். குறிப்பிட்டவோர் இடத்தில் தொளைகளின் ஊடாக இவ் வளையங்கள் தீயைக் கக்குகின்றன.-Aet.i. 13, 7 (R. P. 19a).
பூமியைப் போல 28 மடங்கு பெரிய அளவான வோர் சில்லே சூரியன். தேர்ச்சக்கரத்தின் வெளிவளையம் போறையாயிருந் தாற் போலிருக்கும் இச்சில் தீ நிறைந்ததாய் இருக்கிறது. சில்லில் ஒரிடத்திலுள்ள வழியினூடாக, துருத்தியின் மூக்குக் கூடாகத் தோன்றுவது போலத் தீ தோன்றுகிறது.- Aet. i. 20, I (R. P. 19 a).
சூரியன், பூமிக்குச் சமமான அளவினதே; ஆனல் எந்தச் சில்லினல் அது கொண்டு செல்லப்படுகிறதோ, எந்தச் சில்லிலி ருந்து அது மூச்சு விடுகின்றதோ, அந்தச் சில் பூமியைப் போல 27 மடங்கு பெரியதாய் இருக்கிறது.-Aet.i. 21, 1.
தீயின் சுவாசத்தொளையின் வாயில் அடைபடும்போது சூரிய கிரகணம் உண்டாகிறது.-Aet. i, 24, 2.
சந்திரன் பூமியைப் போலப் 19 மடங்கு பெரியதான வோர் சில்லென்க. சூரியனைப்போல இதுவும், தீ நிறைந்து, தேர்ச்சில் 1 டியல்சு எண்ணுவதுபோல (Do2. p. 560), இப்பகுதியிற் சில வரிகள் விட்டுப் போயிருக்க வேண்டுமெனவே நானும் கொள்கிறேன். ஆயினும், சூரியன் பற்றிய 27 எனும் எண்ணுடன் பொருந்தும் வகையில் சந்திரனது வட்டத்தை 19 எனது 18 ஆக மாற்றியுள்ளேன்.

மைலீசிய மரபு 7.
லொன்றின் வெறுமையான வளையம் போலவும், சரிவாயுள் ளதாயும், துருத்தியினது மூக்கைப்போல ஒரு சுவாசத்தொளை யையுடையதாகவும் காணப்படுகிறது (சில் திரும்புவதனலேயே சந்திரகிரகணங்கள் ஏற்படுகின்றன).- Aet. i, 25, 1.
சில்லின் தொளைவாய். அடைக்கப்பட்டபோது சந்திரகிரகணம் отуђLJIL-g.–Aet. ii. 29, I.
(இடி, மின்னல் முதலிய) யாவும் காற்றின் அதிர்ச்சியினல் எற்பட்டன. அடர்த்தியுடைய மேகமொன்றினுள்ளே அடைபட்டி ருக்கும் காற்று, அங்கிருந்து வெடித்துக்கொண்டு வேகத்துடன் வெளிவரும்போது, மேகம் கிழிகையில் எற்படும் ஓசையே இடி யென்க. கிழிந்த அவ்வெளி, மேகத்தின் கருமைக்கு அருகே காணப்படும்போது மின்னல் ஒளி போலத் தோன்றுகிறது.-- Aet. iii. 3, I.
வளியின், மிகவும் நுண்ணியனவும், ஈரலிப்புடையனவுமான பகுதிகள், சூரியனல் உருக்கப்படும்போதும், துழாவப்படும்போ தும் உண்டாகும் வளியோட்டமே காற்றென்க.-Aet. i. 7, 1.
வானசோதிகளினது சில்லுகளினது அளவுகளைக் குறிக்கத் தரப்பட்டிருக்கும் எண்கள் வேறுபடுவதைக் காணலாம். 18, 27 எனும் எண்கள் உட்சுற்று வட்டத்தினையும் 19, 28 எனும் எண்கள் வெளிச் சுற்றுவட்டத்தினையும் குறிக்கின்றன வெனவே தோன்றுகிறதெனலாம். உடுக்களினதும் சில்லுகள் பூமியைப் போல ஒன்பது மடங்கு பெரியனவாய் இருந்தனவென நாம் ஊகிப்பதும் பொருத்தமேயெனலாம் ; ஏனெனில், 9, 18, 27 ஆகிய எண்கள் ஆதி அண்டவியற் கொள்கைகளிற் பெரிதும் பயன்படுத்தப்படுவதை நாம் காணமுடிகிறது. தீச்சில்லுகள், பூரண வட்டங்களாக ஒருபோதும் எமக்குத் தோன்றுவதில்லை ; எனெனில் இவை தோன்றுவதற்குக் காரணமான ஆவி அல் லது பனி, தீயை முற்றகச் சூழ்ந்திருக்கும் ஓர் வளையமாக அதற்கு வெளியே அமைந்திருக்கிறது. இவ்வளையத்தின் புறச் சுற்றுவட்டத்தில் மட்டும் அமைந்திருக்கும் ஓர் துவாரத்தினு: டாக மட்டுமே தீ வெளியே வரமுடிகிறது. இதுவே உண்மையில் நாம் காணும் வானசோதி. பால்வீதி மண்டலத்தைக் கண்ட தன் பின்னரே, வானசோதிகள் இவ்வாறு சில்லுகளாகவுள்ளன என்னும் கருத்து இவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வளி யாலான இச்சில்லுகள், தம்முள்ளே யிருக்கும் தீயின் உதவி யினல் தாமும் பிரகாசமடைவதற்குப் பதிலாக, அத்தீயையும் மறைக்குந் தன்மையுடையனவாதல் எவ்வாறு எனின், கிரேக்கர் களால் “ வளி’ யென அக்காலத்து அழைக்கப்பட்ட பொருளி னது பண்பு அஃதேயென்க. உதாரணமாக ஒமரது காவியங்களி

Page 44
72 ஆதி கிரேக்க மெய்யியல்
லொன்றில் வரும் தலைவனெருவன், “ வளி ’ யினற் சூழப் படுவதன் மூலம் கண்ணுக்குத் தெரியாதவணக்கப்படும்போது, அவனுக்கூடாக மட்டுமன்றி அவ்வளிப்போர்வையினூடாகவும் எம்மாற் பார்க்க முடிகிறது. வானசோதிகளின் தோற்றம் விளக்கப்படும் விதத்திலேயே, மின்னலும் விளக்கப்படுகின்றது என்பதும் கவனிக்கற்பாலது. அமுக்கமடைந்த காற்றினூடாகபுயல் முகில்களுக்கூடாக-தீவெளிப்படுவதனலேற்படுவதெனவே மின்னலும் விளக்கப்படுகிறது. உண்மையில் அனக்சிமாந்தரது கொள்கை இதிலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும்-அதாவது வானசோதிகள் பற்றிய விளக்கத்தை யொட்டி மின்னல் பற்றிய விளக்கந் தரப்பட்டது என்பதிலும், மின்னல் பற்றிய விளக் கத்தைத் தொடர்ந்து வானசோதிகளும் அவ்வாறே விளக்கப் பட்டன எனக் கொள்வதே சரியென்க. மேலும் அக்காலத்தே வானியல், வளிமண்டலவியல் என்பன வெவ்வேருக ஆராயப் படவில்லையென்பதையும்?, வளையங்கள் அல்லது சில்லுகள் பற் றிய கொள்கை சுழி பற்றிய கருத்திலிருந்து இயல்பாகத் தோன் றியதே என்பதையும் ஈண்டு நினைவுகூர்தல் நலம்.
தியோபிறசத்தோசுவின் ஆதாரத்தோடு நாம் இதுவரை அனுமானித்தவை சரியெனத் தோன்றுகிறது ; அது உண்மை யாயின், மேலும் சில அனுமானங்களையும் பெறுவது தவிர்க்க முடியாததெனலாம். முதலாவதாக வானம் என்பது, திண்மப் பொருளாலானவோர் கூரைபோன்ற வொன்று எனும் கருத்தி லிருந்து அனக்சிமாந்தர் தன்னை முற்றக விடுவித்துக் கொண் டிருந்தார். ஆகவே வானத்திற்கு அப்பாலுள்ள வரம்பற்ற பொருளை நாம் காண்பதைத் தடைசெய்ய எதுவும் இல்லை. அனக்சிமாந்தர் இவ்வாறு தன்னல், வரம்பற்றதைப் பார்க்க முடிந்தது எனவே எண்ணினர் எனக் கருத இடமுண்டு. பழைய அண்டவியற் கொள்கை கைவிடப்பட்டு அதற்குப் பதி லாக எண்ணிறந்த சுழிகளும் வரம்பற்ற பொருட்டொகுதியும் கொண்டதும் நீரெனவோ அல்லது தீயெனவோ குறிப்பிட்டுக் கூறப்பட முடியாததுமானவோர் அண்டம் பற்றிய உன்னத கற்பனை எழுந்துள்ளது. இத்தகைய ஒர் அமைப்பில், நாம் முன்பு நிலையான உடுக்கள் எனக் கருதியவையும், “ எண்ணி றந்த உலகங்கள் ” எனப்படுவனவற்றுள் அடங்குவனவே என் னும் கருத்தைத் தவிர்க்க முடியாது. மேலும், எண்ணிறந் இது அத்தனை புதுமையானவோர் கருத்தல்ல. கடலிலுள்ளவோர் தீவு அல்லது சிறு குன்று பனியினல் மூடப்படும்போது, அது முற்ருக மறைந்து அதற்கு அப்பாலுள்ள வானமும் எமக்குத் தெரிவது பேF ற் றேன்றுகிறது.
2, 30 ஆம் பக்கத்திற் காண்க.

மைலீசிய மரபு 73
தனவான இவ்வுலகங்கள் “ தெய்வங்கள் ” எனவும் கொள் ளப்படுகின்றன. பொதுவான நாளாந்தச் சுழற்சியென்பது தோற் றவளவில் உள்ளதேயொழிய உண்மையாக நடைபெறுவதொன் றல்ல வென்பது பெறப்படும் ; ஏனெனில் எல்லா உடுக்களுக்கும் எமக்குமிடையே யுள்ள இடைவெளிகள் சமமான தூரமுள்ள னவல்லவாதலால், இவை யாவற்றுக்கும் பொதுவானவோர் இயக்கம் இருக்க முடியாது. ஆகவே இச்சுழற்சித் தோற்றம், இருபத்திநான்கு மணித்தியாலங்களில் உருளை வடிவானபூமி சுழல்வதில்ை ஏற்படுவதாயிருத்தல் வேண்டும். சுழியின் இயக் கத்தில் பூமியும் சேர்ந்து கொண்டதெனவும் எமக்கு உணர்த் தப்பட்டது. இது பூமிக்கும் சந்திரனுக்குமிடையேயுள்ள உடுக் களினது சில்லுப்பற்றிய பிரச்சினையை விலக்குகிறதெனலாம்; ஏனெனில் நிலையான உடுக்களை ஒருபோதும் சில்லுகளின் உதவி யோடு மாத்திரம் விளக்க முடியாது ; கோள வடிவத்தின் மூலமே அவற்றை விளக்குதல் கூடும். அப்படியாயின், இவ்வுள் வட்டத்தினுல் விளக்கப்படும் உடுக்களினது உண்மையான தன்மை என்ன ? விடிவெள்ளி, அந்திவெள்ளி என்பனவே இவை யென எனக்குத் தோன்றுகிறது-இவ்விரண்டும் உண்மையில் ஒன்றேயென இக்காலத்து உணரப்படவில்லையென நாம் அறி வோம். அதாவது, நிலையான உடுக்கள், ஒரிடத்திலிருந்து கொண்டே, தத்தம் சுழிகளிற் சுழல்கின்றன என நான் கருது கிறேன். ஆனல் இவ்வாறு கொள்வதனல், சூரியன் சந்திரன் என்பனவற்றைப் பற்றி ஒர் பிரச்சினை உண்டாகிறது என்பதில் ஐயமில்லை. சுழியின் இயல்பை நோக்கும்போது, சூரிய சந்திரர் களும் பூமி சுழலும் திசையிலேயே சுழல வேண்டுமென்பது பெறப்படுகின்றது. மேலும் நாம் தற்போது ஏற்றுக்கொண்ட கருதுகோளின்படி, இச்சுழற்சி மேற்கிலிருந்து கிழக்கே செல்வ தாகவும், பூமியினது சுழற்சியிலும் வேகம் குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும். ஆனல், ஒர் சுழியின் சுற்றுவட்டத்திலி ருப்பவை, அதன் மத்தியிலிருப்பனவற்றை விட வேகமாக இயங் கும் எனும் உண்மையோடு இது முரண் படுவதாகும். ஆனல், தெமொகிரித்தோசுவின் காலம்வரை வாழ்ந்த அயோனிய அண்டவியல் வாதிகள் யாவருமே இப்பிரச்சினைக்கு முடிவு காண முடியாதிருந்தனர். சுழற்சி முழுவதும் ஒரு திசையி லேயே நடைபெறுகிறதென அவர்கள் கருதினர்களாகையால், நாம் எவற்றை மிகவும் வேகமாக இயங்குகின்றன எனக் கூறுகி றேமோ அவையே மிகவும் வேகங் குறைந்தவை எனக் கூற வேண்டியிருந்தது" உதாரணமாக, சூரியனளவு வேகமாகச் சந்தி ரன் இயங்கவில்லை ; சந்திரனது இயக்கத்தினிலும், சூரியனது

Page 45
விலங்குகள்
74 ஆதி கிரேக்க மெய்யியல்
இயக்கமே, உடுக்களின் இயக்கத்தின் வேகத்திற்குச் சமமானது. இப்பிரச்சினை பற்றி முதன் முதலிற் சிந்தித்தவர் அனக்சிமாந் தரே என்பதை நாம் நினைவிற் கொண்டோமாயின், இதனை அவர் நன்கு அவதானிக்கவில்லை என்பது எமக்கு வியப்பை ஏற்ப டுத்தாது. சுழியின் மத்தி அதன் சுற்றுவட்டத்திலும் குறைந்த வேகத்திலேயே இயங்குகிறது என்பது உடனடியாகத் தெளிவா வதில்லை. பூமியினது நாளாந்த இயக்கத்திற்கு எதிரான திசை யிற் செல்லும் புறம்பானவோர் இயக்கம் வான சோதிகளுடை யது எனும் கொள்கை தோன்றியதற்கான காரணமும், இதிலிருந்து புலனகிறது. இக்கொள்கை பைதாகரசுவினது எனக் கொள்வதற்கு நியாயங்களுள வென நாம் காண்போம் (பிரிவு 54).
22. உலகினது இயல்பு பற்றிய, அனக்சிமாந்தரது கற்பனை கள், உண்மையில் மிகவும் துணிச்சலானவையே என்பது நாம் இதுவரை கண்டவற்றிலிருந்து புலனுகும். ஆனல், உயிருள்ளன வற்றின் தோற்றம் ப்ற்றி அவர் தந்துள்ள விளக்கம் நாம் இதுவரை பார்த்த அவரது கருத்துக்கள் யாவற்றையும் மிஞ்சி விடுகிறது எனலாம். தியோபிறகத்தோசு இக்கொள்கை பற்றி விவரித்தவை யாவும், தொகுப்பாசிரியர்களின் மூலம் எமக்குக் கிடைத்துள்ளன :
ஈரலிப்புடைய பகுதி, சூரிய வெப்பத்தினல் ஆவியாக்கப்பட்ட போது, அங்கிருந்து உயிருள்ள பிராணிகள் தோன்றின. -Hipp. Ref. i. 6 (R. P. 22a).
முதலிற் றேன்றிய மிருகங்கள் ஈரலிப்பிலேயே உருவாக்கப் பட்டன. அவை ஒவ்வொன்றும் முட்களையுடைய பட்டை போன்ற வெளித்தோலால் மூடப்பட்டிருந்தன. அவை வயதில் முதிர்ச் சியடைந்தபோது, வறட்சி கூடிய பகுதிகளே நோக்கிச் சென்றன. பட்டை உடைந்து போனதன்பின் சிறிது காலத்திற்கு அவை உயிரோடு வாழ்ந்தன. - Aet. V. 19, 4 (R. P. 22).
முதலில் மனிதன் வேறேர் இனத்தைச் சேர்ந்த மிருகத்தி லிருந்தே பிறந்தான் எனவும் அவர் கூறுகிருர், மற்றைய மிருகங்கள் பிறந்து சிறிது காலஞ் செல்வதற்குள்ளாகவே தமக்கு வேண்டிய உணவைத் தாமே தேடக்கூடியனவாக இருக்கையில், மனிதன் மட்டுமே நீண்ட காலத்திற்குத் தாய்ப்பா லுண்பவனக வாழ்கிறன். ஆகவே, இவன் இப்போதிருப்பது போலவே, ஆரம்பத்திலும் இருந்திருப்பானகில், மனித இனம் அழிந்து பட்டிருக்கும் எனலாம். -Ps. -Put. Strom, fr, 2 (R. P. ib.).
• Lucretius, v. 619 Sqq.

மைலீசிய மரபு 75
முதலில் மனிதர்கள் மீன்களின் உடல்களினுள்ளேயே தோன் றினரெனலாம்; சுருக்களைப் போலச் சிறிதுகாலம் வளர்ந்ததன் பின்னர், இவர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் பெற்றதால் கரையில் விடப்பட்டனர். அப்போதிருந்து இவர்கள் தரையில் வாழ ஆரம்பித்தனர். -Plut. Symp. uெaest. 730 f (R. P. ib.).
இக்கூற்றுக்களின் முக்கியத்துவத்தைச் சிலர் போதியளவு உணராதிருந்துள்ளனர் ; சிலர் அதனை மிகைப்படுத்திக் கூறி யுள்ளனர். அனக்சிமாந்தர், இடாவினது முன்னேடியெனக் கொள்ளப்படக்கூடியவர் எனச் சிலரும், இக்கூற்றுக்கள் யாவும் பழைய புராணக்கதைகளின் எச்சங்களேயென வேறு சிலரும் கூறியுள்ளனர். ஆகையாற்றன், வெறுமனே சில கூற்றுக் கள் மட்டுமல்லாது அவை என்ன அடிப்படையிற் கூறப்பட்டன என்பது பற்றிய குறிப்பும் இங்கு எமக்குக் கிடைத்துள்ளது என்பதை நாம் நன்கு உணர்தல் வேண்டும். பரிணும வளர்ச்சி யின்போது நடைபெறும் சூழ்நிலைக்கிசைவான மாற்றம், தகுதி மிக்கவற்றின் நிலைபேறு என்பன பற்றியும், ஆதி விலங்குகள் உயர்நிலை விலங்குகளாக இருந்திருக்க முடியாதென்பதையும், அனக்சிமாந்தர் அறிந்திருந்தார் என்பது இக்கூற்றுக்களிலி ருந்து நன்கு புலனுகிறது. ஆதி விலங்கு வகைகள் கடலி லேயே வாழ்ந்திருக்க வேண்டுமென அவர் கருதினர் ; அங்கு வாழ்வனவான மீன்களே முலையூட்டி இனத்திற்கு மிகவும் ஒப் பானவையென அவர் கண்டார். கலியசு லெவிசு (Galeus levis) எனும் சுருமின்வகையைப் பற்றி அரித்தோதில் கூறியவை, பிற் கால உயிரியலாளர் தருவனவற்றிலும் செம்மையான விவரங் கள் என யொகானசு முல்லர் என்பார் எடுத்துக்காட்டியுள் ளார். ஆனல் அரித்தோதில் அறிந்திருந்த இவ்வுயிரியல் விட யங்களை அனக்சிமாந்தரும் அவதானித்திருந்தார் என நாம் அறிவோம். சுரு மீன் தனது குட்டிகளுக்கு உணவூட்டும் முறை யைக் கொண்டு ஆதி விலங்குகள் உயிரோடு பிழைத்தமை எவ் வாறு என்பதை விளக்குதல் சாத்தியமாயிற்று.
III. அனக்சிமினிசு
23. இயூறிதிருத்தோசுவின் மகனும் மிலட்டசுவைச் சேர்ந்த வனுமான அனக்சிமினிசு, அனக்சிமாந்தரது சிந்தனை முறை யைத் தழுவியவன் எனத் தியோபிறகத்தோசு கூறுகிறர். சாடியசு நகரத்தின் வீழ்ச்சிக் காலத்தே (கி.மு. 546-5) அவர்
1. Theophr. Phys. op. fr. 2. (R. P. 26).
வாழ்க்கை

Page 46
அவரது நூல்
மூலப் பதார்த்தம் பற்றிய கொள்கை
76 ஆதி கிரேக்க மெய்யியல்
‘சிறப்பொடு விளங்கின“ரெனவும், 63 வது ஒலிம்பிய ஆண்டில் (528-525 கி.மு.) அவர் காலமாகினரெனவும் அப்பொலோடரசு கூறினரெனத் தோன்றுகிறது. அதாவது, தேலிசு சிறப்பொடு விளங்கிய காலத்தே இவர் பிறந்து, தேலிசு இறந்த காலத்தே சிறப்பொடு விளங்கினரென்க. இதிலிருந்து இவரது காலம் பற்றி அப்பொலோடரசுவும் திட்டவட்டமாக எதுவும் அறிந்தி ருக்கவில்லை என்பது புலனுகிறது. அறுபத்தி மூன்றது ஒலிம் பிய ஆண்டில் அனக்சிமினிசு இறந்தார் எனின், மைலிசிய மரபு மூன்று தலைமுறைகளைக் கொண்டிருந்தது என்பதோடு அது நன்கு பொருந்தும் என்பதாலேயே அப்பொலோடரசு அவ்வாறு கூறியிருக்க வேண்டும். எனவே, இவர் அனக் சிமாந்தரிலும் இளையவர் என்பதைத் தவிர, இவரது காலம் பற்றி வேறு எதுவும் திட்டவட்டமாகக் கூற முடியாது.
24. அனக்சிமினிசு எழுதிய நூல், இலக்கிய நலனய்வுக்காலத் திலும் பேணப்பட்டிருந்தது; அவரது நூல் எளிய, ஆடம்பரமற்ற அயோனிய நடையிலெழுதப்பட்டிருந்ததெனக் கூறப்பட்டிருக் கிறது?. அனக்சிமாந்தரது உரைச்செய்யுள் போன்ற நடையி லிருந்து இது மிகவும் வேறுபட்டதாயிருந்திருக்க வேண்டுமென நாம் எண்ணலாம். பலதிறப்பட்ட விடயங்கள் பற்றி மிகவும் துணிச்சலான கற்பனைகளைச் செய்தார் என்பதே அனக்சிமாந் தரது மெய்யியன் முறையின் சிறப்பாகவிருந்தது. ஆனல் அனக்சிமினிசுவின் கருத்துக்கள் இதற்கு நேர் எதிரான பண்பு படைத்தவை. தனது முன்னேடியின் கொள்கைகளில் மிகவும் தீவிரமானவற்றை விலக்கியுள்ள அனக்சிமினிசு, மிகவும் நிதான மாகவே தமது மெய்யியல் முறையை அமைத்துள்ளார். இதன் பயனக, இவரது கொள்கைகள், அனக்சிமாந்தரினது கொள்கைகளினளவுக்கு உண்மையுடையனபோலத் தோன்ற விடினும், இலகுவில் விலக்கப்பட வியலாத அநேக கருத்துக் களையுடையனவாகக் காணப்படுகின்றன.
25. மெய்யியலாளர் சிலர் பற்றித் தியோபிறசத்தோசு தனிக் கட்டுரைகள் எழுதியுள்ளார்க், அனக்சிமினிசுவும் அவர்களுள் ஒருவர். இவர்பற்றிய வரலாறு நம்பத்தகுந்த தென்பதற்கு
1 பைதாகரசு சிறப்பொடு விளங்கிய காலத்தோடு, தொடர்புபடுத்தவே * 63 வது ஒலி ஆண்டு ” எனக் குறிப்பிடப்பட்டதென யாக்கொபி கூறுகிருர், ஆனல் இது பொருத்தமற்றது போற் றேன்றுகிறது.
2. Diog. ii. 3 (R. P. 23). * பிரிவு 13 இல் தரப்பட்டுள்ள, தியோபிறகத்தோசுவின் கூற்றுக்களோடு ஒப்பிடுக.
4. See Doc. p. 103.

மைலீசிய மரபு 77
இக்கட்டுரையும் ஆதாரமாக அமைகின்றது. இவரது கொள்கை யின் முக்கியமான அம்சத்தைப் பற்றி விரிவாகக் கூறுவன பின் வரும் பகுதிகளே !
இயுறிதிருத்தோசுவின் மகனும், மிலட்டசுவைச் சேர்ந்தவ னும், அனக்சிமாந்தரது சிந்தனை முறையைத் தழுவியவனு மான அனக்சிமினிசு, தனது முன்னேடியைப் போலவே, அடிப் படைப் பதார்த்தமானது ஒன்றேயெனவும், அஃது எல்லையற்ற தெனவும் கூறினன். ஆனல் அனக்சிமாந்தரைப்போல, அது விவரிக்க முடியாதது எனக் கூருது, அது விவரிக்கக்கூடிய தேயென இவன் கூறினன்; அது வளியேயென இவன் கூறி GO)6ỞT. — Phys. op. fr. 2 (R. P. 26).
இன்றுள்ளனவும், முன்பிருந்தனவும், இனி இருக்கப்போவ னவும், கடவுளரும் தெய்வீகப் பொருள்களும் அதிலிருந்தே தோன்றின. ஏனைய பொருள்கள் இவற்றின் எச்சங்களிலிருந்து G45 (T667 sió607. --Hipp. Ref. i. 7 (R. P. 28).
“ காற்ருகிய எமது ஆன்மா எவ்வாறு எம்மைச் சிதறவிடாது வைத்திருக்கிறதோ, அதுபோலவே, மூச்சும் காற்றும் முழு உலகையும் சூழ்ந்திருக்கின்றன ’ என அவர் கூறினர். - Aet. i. 3, 4 (R. P. 24).
வளியினது வடிவம் பின்வருமாறு: அது சமசெறிவாகவுள்ள இடங்களில், எமது கண்ணுக்குத் தெரியாததாயிருக்கிறது; ஆனல், குளிர், சூடு, ஈரலிப்பு, இயக்கம் என்பன அதைக் கண்ணுக்குப் புலப்படக்கூடியதாக்குகின்றன. * அது எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது ; ஏனெனில் அது இயங்கவில்லையெனின் இவ்வளவு மாறுபடாதென்க. -Hipp. Ref i. 7 (R. P. 28).
வெவ்வேறு பொருட்களில், அடர்த்தியாகவும், ஐதாகவும் இருப்பதற்கேற்ப அது வேறுபட்ட தன்மைகளை அடைகிறது. - Phys. op. fr. 2 (R. P. 26).
ஐதாகும் வண்ணம் வளி விரிக்கப்படும்போது, அது தீயாகி றது; காற்றுக்கள், அமுக்கப்பட்ட வளியினலானவையே. காற்று, உரோமம் துணியாக்கப்படும்போது அழுத்தப்படுவதுபோல அழுத் தித் திரட்டப்படுவதனல் உண்டாவனவே மேகங்கள்; இம் மேகங்கள் மேலும் அழுத்தப்படும்போது நீர் உண்டாகிறது. நீர் மேலும் அழுத்தமடைந்து மண்ணுகிறது. அது மேலும் சாத்தியமானவரையில் அழுத்தமடைந்ததன் பின்னர் கற்களாக LOITIOJSpg) -Hipp. Ref. i. 7(R. P. 28).

Page 47
ஐதாதலும் அடர்த்தி யுறலும்
78 ஆதி கிரேக்க மெய்யியல்
26. முதலிற் பார்க்கும்போது, இது அனக்சிமாந்தரது பண் பட்ட கொள்கையிலும் பிற்போக்கான ஒன்ருகத் தோன்றுகிறது ; ஆனல் உண்மை அவ்வாறல்ல. உண்மையில், ஐதாதல், அடர்த் தியுறல் என்பனவற்றைப் புகுத்துவதன் மூலம் அனக்சிமினிசு புதியவோர் முன்னேற்றத்தைக் கொணர்ந்துள்ளார். உண்மை யில், இக்கருத்துக்கள் புகுத்தப்பட்டதன்மூலம் மைலிசிய அண்ட வியல் முதன்முறையாக இசைவுடைய வொன்ருகியுள்ள தென லாம் ; ஏனெனில், எல்லாப் பொருட்களும் ஒரு பதார்த்தத் தின் மாறுபாடுகளே எனக் கூறும் கொள்கை, அம்மாறுபாடுகள் யாவும் பெளதீக வேறுபாடுகளே யெனக்கூறுதல் தவிர்க்க முடியாததென்க. மூலப்பதார்த்தத்தின் ஒருமையை நிறுவு தற்கான ஒரேவழி, உலகிலுள்ள வேறுபாடுகள் அனைத்தும் மூலப்பதார்த்தம் வெவ்வேறு அளவுகளிற் காணப்படுவதாலேயே ஏற்படுகின்றன எனலேயாகும். இக்கருத்து எற்றுக்கொள்ளப் பட்ட பின்னர், அரித்தோதில் கூறியவாறு, மூலப்பதார்த்தம் என்பது “ மூலகங்களுக்குப்புறம்பான ' ஒரு பொருள் என்று கூறுதல் அவசியமற்றதாகிறது; அது அவற்றுள் ஒன்றே எனக் கூறுவதும் எற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகிறது.
27. “வளி’ யென்னும்போது நாம் கருதாத பலவற்றையும் அனக்சிமினிசு அப்பெயரின் கருத்துக்குறிப்பில் உட்படுத்து கிருர், சாதாரண நிலையில், சமசெறிவுடையதாக விருக்கும்போது, அது கண்ணுக்குத் தெரியாததாக விருக்கிறது. இதுவே நாம் “ வளி’ யென்னும்போது கருதுவதாகும் ; அதுவே நாம் உள்ளிழுக்கும் மூச்சும், காற்றென வீசுவதும் ஆகும். அதே நேரத்தில் பணி அல்லது ஆவி யென்பது அடர்த்தியுற்ற காற்றே யென்னும் பழைய கருத்தும் எவ்வித ஆராய்வுமில்லாது எற்றுக்கொள்ளப்படுகிறது. நாம் வளியென அழைப்பது, ஓர் தனிப் பொருளேயெனவும் அஃது ஆவியோ அல்லது வெற் றிடமோ அல்லவெனவும் முதன் முதலிற் கண்டுபிடித்தவர் எம்பிடோக்கிளிசேயென நாம் காண்போம். முந்திய அண்ட வியலாளர், யாவரும் வளியென்பது ஒரு வகை ஆவியெனவே கருதினர் ; இருளும் ஒருவ ை5 வளியெனவே கருதப்பட்டது. இருள் என்பது நிழலே யெனக் காட்டி இதனையும் தெளிவு படுத்தியவர் எம்பிடோக்கிளிசுவே.
வளியே மூலப் பதார்த்தம் என அனக்சிமினிசு முடிவு செய்தது இயல்பானதே ; எனெனில் அனக்சிமாந்தரது, அண் டவியல் முறையில், தீவளையம், அதற்குள்ளேயுள்ள குளிர்ந்த ஈரலிப்புடைய பொருள் என்னும் இரு அடிப்படை முரண் பாடுகளுக்கும் இடைப்படாதவோர் நிலை, வளிக்கு அளிக்கப் பட்டது (பிரிவு 19). வளி ஐதாகியபோது சூடாகிய தெனவும்,

மைலிசிய மரபு 79
அடர்த்தியுற்றபோது குளிரடைந்ததெனவும் அனக்சிமினிசு கரு தினரென நாம் புளுட்டாக்கின் மூலமாக அறிகிருேம். இதை உறுதி செய்வதற்கு அவர் ஓர் விநோதமான பரிசோதனையைக் கையாண்டார். நாம் எம்முடைய வாயைத் திறந்துகொண்டு சுவாசிக்கும்போது, மூச்சு சூடாகக் காணப்படுகிறது ; எமது உதடுகள் மூடப்பட்டிருக்கும்போது, மூச்சு குளிராகவிருக்கிறது.
28. இவ்வாதம், அனக்சிமினிசுவின் கொள்கையின் ஓர் முக்கியமான அம்சத்திற்கு எம்மை இட்டுச் செல்கிறது. இது எமக்குக் கிடைத்துள்ள ஒரே பகுதியினலும் உறுதிப்படுத்தப் படுகிறது. “ காற்றகிய எமது ஆத்மா எவ்வாறு எம்மைச் சிதற விடாது வைத்திருக்கிறதோ அதுபோலவே மூச்சும் காற்றும் முழு உலகையும் சூழ்ந்திருக்கின்றன. ’ மூலப்பதார்த் தம், மனித வாழ்வோடு எத்தகைய தொடர்பையுடைய தாயிருக் கிறதோ, அதே தொடர்பு அதற்கும் உலகினது வாழ்வுக்கு மிடையே நிலவுகிறது. இதுவே பைதாகரசுவின் கருத்துமென்க?. அன்றியும் பிண்டத்திலிருந்து அண்டத்திற்குத் தொடரும் வாதம் முதன் முதலிற் காணப்படுவது இங்கேயே. இவ்வாறு, உடற்றெழிலியல் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆர்வம் எற்படு வதற்கும் இதுவே ஆரம்பம்.
29. உலகமும் அதன் பாகங்களும் எவ்வாறு தோன்றின வென்பது பற்றித் தொகுப்பாசிரியர்கள் மூலம் கிடைக்கும் வரலாற்றினை நாம் இப்போது பார்ப்போம் :
வளி திரட்டப்பட்டபோது, பூமி முதலில் உண்டாகியது என அவர் கூறுகிருர், அது மிகவும் விசாலமாயிருக்கிறது. காற்று
2526075 g TĚig68rpg - Ps.- Plut. Strom, fr. 3 (R. P.25)
இதுபோலவே, தீயின் இயல்பினையுடையனவான சூரியனும் சந்திரனும் ஏனைய வானசோதிகளும், விசாலமானவையா யிருப்பதனல், காற்றினற் றக்கப்படுகின்றன. பூமியிலிருந்து ஈரலிப்பு எழுவதன்மூலம், வானசோதிகள் பூமியிலிருந்து உண் டாக்கப்படுகின்றன. பூமியிலிருந்து எழும் ஈரலிப்பு, ஐதாகும் போது, தீ உண்டாகிறது. அவ்வாறு மேலெழும் தீயிலிருந்து உண்டாவனவே உடுக்கள். உடுக்களிருக்கும் இடத்தில், நிலப் பதார்த்தத்தினலான பொருள்களும் உடுக்களோடு சுழன்று கொண்டிருக்கின்றன. மேலும், பிறர் கருதுவதுபோல, வான சோதிகள் ஒருபோதும் பூமியின் அடிப்பாகத்தின் வழியே செல்வதில்லை யெனவும், எமது தலையைச் சுற்றித் தொப் பியொன்று எவ்வாறு சுழலக்கூடுமோ அவ்வாறே அவை
1. Aet. i. 3, 4 (R. P. 24). * அத். II. 53 ஆம் பிரிவிற் காண்க.
உலகு சுவாசிக்கிறது
உலகின்
பாகங்கள்

Page 48
80 ஆதி கிரேக்க மெய்யியல்
பூமிக்கு மேலே மட்டும் அதனைச் சுற்றி இயங்குகின்றன வென வும் அவர் கூறினர். சூரியன் எமது கண்ணுக்குத் தெரியாது மறைவது, பூமியின் உயர்ந்த பகுதிகளினல் அது மறைக்கப் படுவதனலும், எம்மிடமிருந்து அதிக தூரத்திற் கப்பால் அது சென்று விடுவதாலுமே யொழிய, பூமியின் அடியே சென்று விடுவதனலல்ல. உடுக்கள் எம்மிலிருந்து அதிக தூரத்திலிருக் கின்றபடியால் அவற்றின் வெப்பத்தை நாம் உணர்வதில்லை.-- Hipp. Ref. i. 7, 4-6 (R. P. 28).
வளி அடர்த்தியுற்று இயக்கப்படுவதன் மூலம் வேகமாக ஒடும் போது காற்றுக்கள் உண்டாகின்றன ; ஆனல் அது மேலும் அடர்த்தியுற்றுத் தடிக்கும்போது முகில்கள் உண்டாகின்றன ; கடைசியாக அது நீராகிறது. -Hipp. Ref i. 7, 7(Doa, p, 561).
உடுக்கள் (வானத்தின் படிகத்தாலான முகட்டில் ஆணிகளைப் போலப் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனல் சிலரது கூற்றுப்படி, அவை) ஒவியங்கள் போன்ற தீயினலான இலைகளென்க. - Aet. ii. 14, 3 (Doac. p. 344).
அவை பூமிக்கு அடியே செல்வதில்லை, ஆனல் அதைச் சுற்றி இயங்குகின்றன. -1b. 16, 6 (Doa, p. 348).
சூரியன் தீயுடைத்து. -1b. 20, 2 (Doa, p. 348). அது இலையைப் போன்று விசாலமாயிருக்கிறது. -1b. 22, 1 (Doac. p. 352).
அழுத்தமடைந்த காற்றினல் தடைசெய்யப்படுவதால், வான சோதிகள் தமது கதியை மாற்றித் திரும்பிச் செல்கின்றன. - Ib. 23, I (Doc. p. 352).
சந்திரன் தீயுடையது. -Ib. 25, 2 (Doa, p. 356). கடல், துடுப்புக்களினற் பிரிக்கப்படும்போது ஒளிர்வதை உதா ரணமாகக் காட்டி, அனக்சிமாந்தரைப்போலவே அனக்சிமினிசு வும் மின்னல் எற்படுவதற்கு விளக்கம் g5j5g5ITff. — Ib. iii. 3, 2 (Doac. p. 368).
நீர், விழும்போது உறைவதனல் பனிக்கட்டிகள் உண்டாகின் றன ; பனி, நீரிற் சிறிது காற்று அடைபட்டிருப்பதனல் உண்டா @pgl. —Aet. iii. 4, I (Doac. p. 370).
அடர்த்தியான தடித்த வளியில், சூரியனது கதிர்கள் வீழ் வதனல் வானவில் தோன்றுகிறது. அதனுற்றன், அதனது மேற்பகுதி சூரியனது கதிர்களாற் சுடப்பட்டுச் செம்மையாகக் காணப்படுகிறது. ஈரலிப்பு மிகுதியினல், மற்றப் பகுதி இருளு டையதாகவிருக்கிறது. இரவில், சந்திரனல் வானவில் எற்படு கிறது. ஆனல் எப்போதும் முழுச் சந்திரன் இருப்ப தில்லையா

மைலிசிய மரபு 8.
தலாலும், சந்திர வெளிச்சம் சூரிய வெளிச்சத்திலும் குறைந்த தாதலாலும், இரவில் அதிகம் வானவில் எற்படுவதில்லை. - Schol. Arat. (Doa. p. 23l).
பூமி உருவத்தில் மேசையைப் போன்றதாயிருந்தது.-Aet.i. 10, 3 (Doz. p. 377).
கடும் கோடையினலும் கடும் மழையினலும் ஏற்படும் வறட் சியும் ஈரலிப்புமே பூமியதிர்ச்சி எற்படுவதற்குக் காரணம்.-- Ib. l5, 3 (Doac. p. 379).
மூலப் பதார்த்தம் பற்றியவோர் விளக்கம் தருவதில், அனக் சிமாந்தரைப் பின்பற்ருது பின்னேக்கிச் சென்று, தேலிசுவி னதைப் போன்றவோர் கொள்கையை அனக்சிமினிசு தழுவியது முற்றிலும் சரியானதேயெனக் கண்டோம். ஆனல் இதனற் சில தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய தவறுகள் எற்படுகின்றன. பூமியானது, காற்றினில் மிதக்கும், மேசை வடிவமான தட்டு எனும் கற்பனை மீண்டும் தரப்படுகிறது. சூரியன், சந்திரன், உடுக்கள் என்பனவும் “ இலைகளைப் போல’க் காற்றினில் மிதக் கும் தீத்தட்டுக்கள் எனக் கூறப்படுகிறது; “ சுழி” பற்றிய கற்பனையிலிருந்து, இவ்விளக்கமும் இயல்பாகத் தோன்று கிறதெனலாம். அனக்சிமாந்தர் கருதியதுபோல, இரவில் சூரியன் பூமிக்கு அடியே செல்லவில்லை யென்பதும், தொப் பியொன்றைப் போலவோ அல்லது திரிகைக் கல்லைப் போல வோ, பக்கவாட்டாகவே வானசோதிகள் வட்டமாகச் சுழல் கின்றன என்பதும் இதிலிருந்தே பெறப்படுகின்றன. பூமியின் வடபாகங்கள் உயர்ந்திருப்பதனல், வானசோதிகள் கண்ணுக்குத் தெரியாது மறைக்கப்படுதல் சாத்தியமெனும் இக்கொள்கை பற்றி அரித்தோதிலும் தனது வளிமண்டலவியல் நூலிற் குறிப்பிட்டிருக்கிறர். வட துருவ வட்டத்திற்கு வெளியே யிருக்கும் உடுக்கள் தோன்றுவதும் மறைவதும் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை விளக்குவதற்கே அரித்தோதில் இக்கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உலகு ஒரு தளத்திலேயே சுழல்கிறது என்பதை மனதிற் கொண்டோமாயின் இவ்விளக்கம்
தியோபிறகத்தோசுவை அறிந்திருந்தவரான பொசெய்தோனியோகவே இதற்கு ஆதாரமென்க.
* சக்கரம் போலன்றி, திரிகைக்கல்லைப் போல ஏற்படும் சுழற்சியினை நம்புவோர் பற்றித் தியொடொறெற்றுவும் (iv. 16) கூறியுள்ளார். இவ்வுவ மைகள் முறையே அனக்சிமாந்தர், அனக்சிமினிசு என்போராற் கையாளப் பட்டன என டியல்சுவும் (Doa, p. 46) கூறியுள்ளார். இக்குறிப்புக்கள் ஈத்தியோசுவிடமிருந்தே எமக்குக் கிடைத்துள்ளன.
B, I. 354 a 28 (R. P. 28 c). 5-R 10269 (6.763)

Page 49
எண்ணிறந்த a.ie)aisise soir
82 ஆதி கிரேக்க மெய்யியல்
போதுமானதே. ஆனல் அண்டம் கோளவடிவானது என்னும் கொள்ன்கயோடு இக்கருத்து முரண்பட்டது.
கிரகங்களைச் சுற்றி நிலப்பதார்த்தத்தாலான பொருட்களும் சுழல்கின்றன என்பது; சந்திரினின் வளர்ச்சி, தேய்வு, கிரகணங் கள் என்பனவற்றை விளக்குவதற்காகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்,
30. அனக்சிமாந்தர் குறிப்பிட்ட எண்ணிறந்த உலகக் கொள் கையில் எத்தகைய சிக்கல் காணப்பட்டதோ அத்தகைய சிக்கல் அனக்சிமினிசுவின் கொள்கையிலும் இருக்கும் என்பது எதிர் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனல் அனக்சிமினிசுவின் கொள்கை பற்றிக் கிடைத்துள்ள ஆதாரங்கள், முன்னவர் பற்றியுள்ள வைபோல் அத்தனை திருப்திகரமானவையல்ல. அனக்சிமினிசு வளிய்ை ஓர் தெய்வமெனவும், இது காலத்தே உண்டாகிய தெனவும். கருதினரென சிசரோ கூறுகிறர்?. இக்கூற்றுச் சரியானதாகவிருக்க முடியாது. மூலப்பதார்த்தம் என்னுமள வில் வளி நித்தியமான தெனக் கருதப்படல் முறையே. வரம்பற்றதைத் தெய்வீகமானதென அனக்சிமாந்தர் கூறிய தைப் போன்று அனக்சிமினிசுவும் வளி தெய்வீகமான தெனக் கருதியிருக்கலாம் ; ஆனல் ஆகி, அழிந்த பல தேவர்கள் பற்றியும் அனக்சிமினிசு குறிப்பிட்டிருக்கிறர். இத் தேவர்கள் வளியிலிருந்தே தோன்றினர் என அவர் கூறியுள் ளார். அவர் இவ்வாறு கருதினரென்பது, இப்பொலைட்டசு, செயின்ட் ஒகத்தீன் என்போராலும் உறுதிப்படுத்தப்பட்டிருக் கிறது. இத்தேவர்களும் அனக்சிமாந்தர் குறிப்பிடும் தேவர்கள் போலவே விளக்கப்படவேண்டியவர்கள் என்றே கொள்ள வேண்டும். உண்மையில் சிம்பிளிசியசு வேறேர் கருத்தைத் தருகிறர்; ஆனல் அவர் சுதோய்க்க ஆதாரங்களைத் தவருக எற்றுக் கொண்டார் எனலாம்.4
1 முற்றக இவைபோன்ற பொருட்கள் பற்றி அனக்சகோரசுவும் கூறினர். அத்.V. பிரிவு 135 இல் பார்க்கவும். மேலும் அத். VII. பிரிவு 151 இல் பார்க்கவும். Tannery, Science heleme இலும் காண்க.
| *. Cic. De nat d. i. - 26 (R. P. 28 b).
Hipp. Ref. i. 7, 1. (R. P. 28).
4. Simple. Phys. p. 1121, 12 (R. P. 28 a). SubLangure arg இக்கூற்ற்ையும் விட பிளாக்கிட்டாவில் இதுபற்றியுள்ள பகுதி நம்பத்தகுந்த தென்க, இங்கும், ஒன்றன் பின் ஒன்றக்ப் பல உலகங்கள் தோன்றினவென அனக்சிமினிசு, எர்க்கிளேட்டசு, இடையோசினிசு என்போரே கருதினர் எனக் கூறப்பட்டுள்ளது. சுதோய்க்க கொள்கைபற்றி அத். II. பிரிவு 78 இல் காண்க. இடையோசினிசு பற்றி அத். X. பிரிவு 188இல் காண்க.

மைலீசிய மரபு 83
31. அக்காலத்தும், அதன்பின்னரும் பலகாலமாக, அனக் அனக்சி
சிமாந்தரிலும் அனக்சிமினிசுவே அதிக முக்கியத்துவமுடையவர் மினிசுவின் எனக் கருதப்பட்டதற்கான காரணம் எம்க்கு எளிதில் விளங்கா செல்வாக்கு திருக்கலாம். ஆனல் அஃது உண்மையென்பது உறுதி. வான சோதிகள் பற்றிய வருணனையில், பைதாகரசு, அனக்சிமாந் தரையே பின்பற்றினலும், உலகம் பற்றிய தமது பொதுக் கொள்கைக்கு அனக்சிமினிசுவுக்கே தாம் பெரிதும் கடமைப் பட்டிருந்ததாக அவர் எண்ணினர் (பிரிவு 53). மேலும் பிற் காலத்தில் மீண்டுமொருமுறை விஞ்ஞானக் கல்வி, அயோனி யாவில் மறுமலர்ச்சியுற்றபோது, அனக்சிமினிசுவினது மெய் யியலையே அப்புதிய விஞ்ஞானம் தழுவிக் கொண்டது எனவும் நாம் காண்போம் (பிரிவு 122). அனக்சிமினிசுவின் அடிப் படைக் கொள்கையை யொட்டிய பல கருத்துக்களை அனக்சகோ சசுவும் (பிரிவு 135) அணுவாதிகளும் எற்றுக்கொண்டனர். அப்பொலோனியனன இடையோசினிசு, அனக்சிமாந்தரது கொள்கைகளையும் சேர்த்துக்கொள்ள முயன்றனயினும், அனக் சிமாந்தரது அடிப்படைக் கொள்கையினையே எற்றுக்கொண்டு, வளியே மூலப்பதார்த்தம் எனக் கூறினன் (பிரிவு 188). இவற்றை யெல்லாம் நாம் பின்னர் கவனிப்போம்; ஆனல், தேலிசுவினல் ஆரம்பிக்கப்பட்ட சிந்தனை முறை அனக்சிமி னிசுவோடு முடிவடைந்தது என்பதையும், “அனக்சிமினிசு வின் மெய்யியன்முறை ’ யென்பது எவ்வாறு மைலீசிய கொள்கை முழுவதையுமே குறிப்பிடலாயிற்று என்பதையும் இங்குகூறலாம். உண்மையில் இக்கொள்கை அனக்சிமினிசுவைத் தனது கடைசிப் பிரதிநிதிகளுட் சிறந்தவராகக் கொண்டவோர் கழகத்தினதே யென்பதாலும், அவரது சிந்தனை அம்மரபின ரான அவரது முன்னேடிகளினது சிந்தனை முறைகளைப் பூரணப் படுத்தியது என்பதாலுமே, அனக்சிமினிசுவின் மெய்யியன் முறை இவ்வாறு முழு மைலிசிய சிந்தனையையும் குறிப்பிடுவ தாகக் கருதப்படுகிறது. ஐதாதல், அடர்த்தியுறல் என்பன பற் றிய கொள்கை உண்மையில் மைலீசிய மெய்யியல் முறையைப் பூரணப்படுத்தியதென நாம் கண்டோம் (பிரிவு 26). இதை நன்கு உணர்தல், மைலிசிய அண்டவியலையும் அதற்குப்பின் னர் வந்த அண்டவியன் முறைகளையும் நன்கு விளங்கிக்கொள் வதற்கு உதவும். அடிப்படையில், அனக்சிமினிசு விலிருந்தே பிந்திய அண்டவியற் கொள்கைகள் ஆரம்பித்தனவெனலாம்.

Page 50
JayCurrsaf
அத்தியாயம் II
விஞ்ஞானமும் சமயமும்
32. ஆசியாவில் வாழ்ந்த அயோனியர்களது உளப்பாங்கு
யாவும் மேஜல முற்றிலும் சமயச் சார்பற்றதாகவே இருந்ததென நாம் கண்
நாடுகளும்
டோம் ; மேலும் நாம் அறிந்தவரையில் அயோனியர்கள் பழைய பரம்பரைக் கொள்கைகளை முற்ருக விலக்கினரெனலாம். மூலப் பதார்த்தம், எண்ணிறந்த உலகங்கள் என்பனவற்றைக் குறிப் பிடுவதற்கு அவர்கள் “தேவர்கள்” எனும் பதத்தைக் கையாண் டனராயினும் அப்பதத்திற்குச் சமயரீதியான கருத்துக் குறிப்பு எதுவும் இருக்கவில்லை. ஆனல் அனட்டோலிய கரையோரப் பகுதிகளிற் குடியேற்றம் ஆரம்பிப்பதற்குப் பல காலத்திற்கு முன்பிருந்தே அயோன்யர்களது இருக்கையாக விளங்கிய ஈசிய தீவுகளிலோ நிலைமை வேருக விருந்தது. அங்கு பண்டைய காலவாழ்வு முறையின் நினைவுகள் பல இன்னமும் அழியா திருந்தன. இவ்வாறு நிலவிய பண்டைய வழக்குகள் யாவும் டீலோசுவிலேயே நிலவினபோற் காணப்படுகின்றன. டீலோசு வுக்கு அண்மையிலுள்ள தீவான சைரோசுவில் வாழ்ந்தவரான பெரிகைடிசு எழுதியுள்ளனவற்றை நோக்கும்போது, அவை முந்தியவொரு காலப்பகுதி பற்றிக், காலங்கடந்து எழுதப்பட்ட னவற்றைப் போலத் தோன்றுகின்றன. எசியொட்டுவும் அவ ரைப் பின்பற்றினேரும், எதிர்க்கொணு அதிகாரம் உடையோ சாய் இருந்த காலத்தே தாபிக்கப்பட்ட, மேற்கேயிருந்த அயோ னிய, சளுக்கிடிய குடியேற்றப் பகுதிகளில் நிலைமை வேறயிருந் தது என்பது உண்மையே.
ஆசியாவிலிருந்த கிரேக்க நகர்கள் பாரசீகத்தின் ஆட்சிக்குட் படுத்தப்பட்ட தலைமுறையில் வாழ்ந்தோரில் மிகவும் சிறப்புடன் குறிப்பிடப்படும் தகுதியுடையோரான பைதாகரசு, செனேபனிசு எனும் இருவரும் அயோனியர்களே. ஆனல் இருவரும் தமது வாணுட்களிற் பெரும்பகுதியை மேற்கேயே கழித்தனர். அங்கோ சமயத்தை (குறிப்பாக இக்காலத்துக் கிரேக்க உலகம் முற்றி லும் பரவிய மறுமலர்ச்சியினல் அது வலுப்பெற்றிருந்ததனல்) புறக்கணித்தல் சாத்தியமாயிருக்கவில்லை. ஆகவே இதன் பின் னர், அறிஞரென்போர், பைதாகரசைப் போன்று பழைய சமயக்
* 16 ஆம் ப. பார்க்க. * 4 ஆம் ப. பார்க்க.
84

விஞ்ஞானமும் சமயமும் 85
கருத்துக்களைச் சீர்திருத்திப் பண்படுத்துவதில் ஈடுபட வேண்டி யிருந்தது. அன்றேல் செனெபனிசுவைப் போன்று பகிரங்க மாக அதனை எதிர்க்க வேண்டியிருந்தது.
33. இம்மறுமலர்ச்சியை, வெறுமனே பழைய ஈசிய சமயக் டீலிய கொள்கைகளின் ஒரு புதிய தோற்றமே யெனக் கொள்ளலா சமயங்கள் காது. உண்மையில் அக்காலத்து மிக மிக வடக்கேயுள்ள பகுதி யெனக் கொள்ளப்பட்ட பிரதேசத்தே, அப்போது தோன்றிய புதிய கருத்துக்கள் சிலவற்றின் கலப்பும் இம்மறுமலர்ச்சியிற் சேர்ந்திருந்தது. டீலோசியரது ஆலயவிதிகாசம் உண்மையில் மிகவும் பழைமையுடையதே. அன்றியும் இடன்யூப்பு நதிக்க ரையில் வாழ்பவர்கள் எனக் கருதப்பட்ட ஐப்பபோரியர்களுக்கும் அப்போலோ வழிபாட்டுக்குமிடையே யோர் தொடர்பையேற் படுத்துவது இவ்விதிகாசமே. எதிரியாத்திக் கடலின் வட பகுதி, டொடோன, மாலிக்குடா? வென்பவற்றுக்கூடாக, ஆங் காங்கு வாழ்ந்த மக்களாற் கொண்டு செல்லப்பட்ட “ வைக் கோலிற் பொதியப்பட்ட புனிதபொருட்கள்” என்பவை, ஆதி காலத்தில் இடன்யூப்பு, ஈசிய நாகரிகங்களிடையே நிலவிய தொடர்புக்குச் சான்று பகர்கின்றன. இதனை ஆக்கியர்களது வரு கையோடு தொடர்புபட்ட வொன்றகக் கருதுவதும் பொருத்த மானதே. ஐப்பபோரியனன அபாரிசு, புரொகொனேசசுவைச் சேர்ந்தவனன அரித்தியாசு4 என்போரது கதைகளும், இச்சமய இயக்கத்தையே சேர்ந்தவை. நாம் அறிந்த வரையில் ஈசிய பகுதிகளுக்குப் புதியதான, ஆன்மாக் கொள்கை யொன்றின் அடிப்படையிலேயே இச்சமய இயக்கம் அமைந்திருந்தது என்ப தையும் இக்கதைகள் நிரூபிக்கின்றன. பைதாகரசுவுக்கும் டீலோ சுக்குமிடையே தொடர்பிருந்தது என்பது பற்றியும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. ஆக்கிய பெயரைக் கொண்டு பெரு மையடைந்த நகர்களிலேயே அவர் தமது கழகத்தை நிறுவி னரென்பதும் உறுதி. டீலிய சமயம் ஆக்கியர்களிடமிருந்து பெறப்பட்டது உண்மையாயின், வேறு கருத்துக்களை எற்பதன் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாதனவாகவுள்ள, பைதாகரசின் வாழ்க்கை பற்றிய அம்சங்கள் சில தெளிவாகின் றன. இவை பற்றியும் நாம் பின்னர் காண்போம்.
Pindar, Ol- iii. 14-16. Herod. iv. 33. Cf. Farnell, Cults of the Greek States, iv. pp.99 sqq. Herod iv. 36,
Ibid. iv. 13-15. ... 'Encyclopaedia of Religion and Ethics' arguib pitosa) (S. V. Pythagoras) பைதாகரசுவின் மதம்பற்றி இங்குள்ளதிலும் விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

Page 51
ஓபிசம்
86 ஆதி கிரேக்க மெய்யியல்
34. ஆயினும் வடவரது சமயத்தின் செல்வாக்கு அதிக மாகக் காணப்பட்டது அதனது டீலிய உருவத்திலல்லவென்க. திறேசவில் இடையுனிசோசுவினது வழிபாட்டோடு இணைந்து கொண்ட இச்சமயம் ஒபியசுவினது பெயரோடும் தொடர்பு
பட்டது. இச்சமயத்தின் புதிய நம்பிக்கைகள், “ ஆனந்தக்
களிப்பு’ப் போன்றவோர் இறையனுபவ அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஆன்மாவானது “உடலை விட்டு வெளி யேறிய ” பின்னரே தனது உண்மை இயல்பை வெளிக்காட்டி யது என நம்பப்பட்டது. ஒமர் கருதியதுபோல மனிதனது பலம் குறைந்தவோர் பிரதியெனக் கருதப்படாது, தன் பதவியி லிருந்து வீழ்ச்சியுற்றவோர் தெய்வமென ஆன்மா வருணிக் கப்பட்டது. முறையான “தூய்மையாக்க ” வழிகளாலும் கிரி யைகளாலும் அதனை அதன் உயர் பதவிக்கு மீண்டும் உயர்த்த லாம் எனக் கருதப்பட்டது. கவிஞர்களால் உலக வியல்புடையன வும், மனிதராகக் கற்பிக்கப்பட்டனவுமான தெய்வங்களின் வழி பட்டாலும் தம் தேசீய் மதங்களைப் பின்பற்றுவதனலும் அதிக திருப்தியடைந்திருக்காத பல்வேறு மக்களும் இப்புதிய சம யத்தை ஆர்வத்தோடு தழுவிக் கொண்டனர்.
ஓபிச மதம் கிரேக்கர்களுக்கு முற்றிலும் புதியனவான இரு அம்சங்களைக் கொண்டிருந்தது. இறையினது கூற்றுக்கள் என எழுதி வைக்கப்பட்டிருந்த சிலவற்றை இம்மதம் ஆதாரமாகக் கொண்டிருந்தது. இதனைப் பின்பற்றியோர் புறம்பான சமூகங்க ளாக அமைந்து வாழ்ந்தனர். இவர்கள் தாமாக இம்மதத்திற் சேர்ந்து, பொருந்தியிருந்தனரேயொழிய, உண்மையான அல் லது கற்பிக்கப்பட்ட இரத்த உறவு எதனலும் இணைந்து கொண்டவரல்ல. எமக்குக் கிடைத்துள்ள ஒபிச இலக்கியத்திற் பெரும்பகுதி பிற்காலத்தது என்பதோடு அது எங்கு தோன்றி யது என்பது பற்றியும் திட்டவட்டமாகக் கூற முடியாது. ஆனல் தெளரியை, பெருதலியா எனுமிடங்களிற் கண்டெடுக்கப்பட்ட, ஒபிச செய்யுள்கள் பொறிக்கப்பட்ட மெல்லிய பொற்தகடுகள், ஒபிசம் மக்களிடையே பெரிதும் வழங்கியவோர் காலத்திற்கு எம்மை இட்டுச் செல்கின்றன. இவ்வோபிச வழிபாட்டுமுறை கள் அக்காலத்து இந்தியாவில் வழங்கிய சமயச் சடங்குகளைப் பெரிதும் ஒப்பனவாய் இருந்தன வென்பதும் இத்தகடுகளி லிருந்து தெரியவருகிறது. ஆனல் இக்காலத்தே இந்திய செல் வாக்குக் கிரேக்கர்களிடையே காணப்பட்டது எனக் கொள்வது
2. இப்பொற்றகடுகள் பற்றி செல்வி அரிசன் எழுதிய Prolegomena to the Study of Greek Religion 67 Egyúb ABTGM6ö7 JD SpJLupb5 š@ibas st6ixtas. பேராசிரியர் கில்பேட்டுமறே, ஆங்கு இத்தகட்டுக் குறிப்புகளினை மொழிபெயர்த் துத் தந்து அவற்றை ஆராய்ந்துள்ளார்.

விஞ்ஞானமும் சமயமும் 87.
சாத்தியமில்லை. ஒபிசச் சடங்குகளினது முக்கிய நோக்கம், ஆன் மாவைச் சம்சாரம் எனும் சக்கரத்திலிருந்து, அதாவது மீண் டும் மீண்டும் விலங்குருவத்திலும் தாவரவுருவத்திலும் பிறப் படைவதிலிருந்து, விடுவிப்பதாகவேயிருந்தது. அவ்வாறு விடு விக்கப்பட்ட ஆன்மா மீண்டும் தெய்வமாகி, அழியா இன் பத்தை அடைந்தது. ی۔
35. ஒபிச சமூகங்கள் மெய்யியல் என்பது “ஓர் வாழ்க்கை மெய்யியல்
முறை” யெனும் கருத்தின் அடிப்படையில் அமைந்தனபோற் ஒரு வாழ்க்கை காணப்படுகின்றன வென்பதே இங்கு நான் அவற்றைப் பற்றி முறையெ* ஆராய முற்பட்டதற்கு முக்கிய காரணமென்க. அயோனியாவி s லும், அதன் பின்னர் அதென்சுவிலும் மெய்யியல் என்பதைக் குறிக்கும் கிரேக்க சொல் “ புதுமை நாட்டம் ”, “ பண்பாடு* என்னும் தொடர்புகளிலேயே பிரயோகிக்கப்பட்டு வந்ததென் நாம் கண்டோம். ஆனல் பைதாகரசுவின் சிந்தனையின் செல் வாக்குப் படிந்துள்ள இடங்களிலெல்லாம், மெய்யியல் என்பது இவற்றிலும் ஆழமானவோர் பொருளுடையதாயிருக்கக் காண் கிருேம். மெய்யியல் என்பது ஒர்வகைத் தூய்மையாக்கமாகவும் சம்சார “சக்கரத்தி’னின்று விடுதலை பெறுதற்கான வோர் வழியாகவுமே கருதப்படுகிறது. பிளேட்டோவினது பீடோவில் மிக மேன்மையான முறையில் உணர்த்தப்பட்டிருக்கும் கருத் தும் இதுவே. இக்கருத்து அங்கு பைதாகரச கொள்கையி லிருந்தே பெறப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. மெய் யியலை இவ்வாறு ஒர் வாழ்க்கை முறையாகக் கருதுவது, இக்காலத்திற்குப் பிந்திய கிரேக்க சிந்தனை முறைகளின் ஓர் பண்பாகவிருக்கிறது. அரித்தோதிலும், ஏனையோரைப் போல இப்பண்பினைத் தழுவியிருந்தாரென்பது அவரது ஒழுக்கவிய லின் பத்தாவது பகுதியிலிருந்து புலனுகிறது. இத்தகைய மனப்பாங்கு, வெறும் அமைதியோடு கூடிய மறுவுலக ஈடு
1. இந்திய செல்வாக்குக்குட்பட்ட முதலாவது கிரேக்கனெனக் கொள்ளப் படக்கூடியவன் எலிசு நாட்டுப் பைரோ என்பானே ('Sceptics" by Burnet in the Encyclopaedia of Religion & Ethics). gig, gift SL'il (th சமயக் கொள்கைகள் எங்கிருந்து கிரேக்கர்களை அடைந்தனவோ, அவ்வடபகுதி யிலிருந்தே இந்தியாவையும் அடைந்திருக்க வேண்டும் என நான் எண்ணு கிறேன். கைதியாவிலிருந்து இவை தோன்றியிருக்கலாம் ( Scythia). சீசர் கூறுவதுபோல, கலிக்க மதாசாரிகள் மறுபிறப்புக் கொள்கையைப் போதிதி தனர் என்பது உண்மையாயின், எனது ஊகம் உறுதிப்படுத்தப்படுகிறது. எல். QaumsäSrGLitgg Glasff GT60& Git (Pythagoras und die Inder, 1884 ) பைதாகரசவாதம் பற்றி நன்கு அறியாததால் ஏற்பட்டவை. அன்றியும் கால்வ முக்களும் பல காணப்படுகின்றன.
2. பிளேட்டோவினது பீடோ, பிளெயசுவில் வாழ்ந்த பைதாகரச சமூகத் தினருக்கே சமர்ப்பணப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறலாம்.

Page 52
சமயத்திற்கும் Guotu யியலுக்கு மிடையே airan தொடர்பு
88 ஆதி கிரேக்க மெய்யியல்
பாடாக மாறலாம் எனும் அபாயம் எப்போதும் இருந்தது. பிளேட்டோ இவ்வாறு எற்படுவதைத் தவிர்ப்பதிற் கருத்துடைய வராயிருந்தார். மெய்யியலாளர் தாம் விடுதலை பெற்ற குகைக்கு மீண்டு அங்கு முன்பு தம்மோடு சிறைப்பட்டிருந்த பிறரையும் அங்கிருந்து விடுவிக்க முயலவேண்டும் என வலிறுத்தியவர் அவரே. ஆனல் இறுதியில் வெற்றி பெற்றது இக்கருத்து அல்ல வென்றல் அதற்குப் பொறுப்பாளிகள் மெய்யியலாளர் களே.
36. விஞ்ஞானம் இவ்வாறு சமயமாக மாறியது; இந்த அளவிற்கு மெய்யியல் சமயத்தின் செல்வாக்குக்குட்பட்ட தென லாம். ஆனல் இக்காலத்தும், எந்தக் குறிப்பிட்ட சமயக் கொள் கையாவது மெய்யியலிற் சேர்த்துக் கொள்ளப்பட்டது எனக் கொள்ளலாகாது. இக்காலத்துச் சமய மறுமலர்ச்சி, ஆன்மா பற்றிய புதிய கொள்கை யொன்று எற்படுவதற்குக் காரண மாயிருந்தது எனக் கண்டோம். இஃது மெய்யியலாளர்கள் ஆன்மா பற்றிக் கூறியவற்றிலும், பெரிய மாறுதல்களேற்படுத் தினல் அது இயல்பானதே. ஆனல் இங்கு குறிப்பிட வேண்டி யது என்னவெனின் அவ்வகை மாற்றம் எதுவும் நிகழவில்லை என்பதே. இச்சமய மறுமலர்ச்சியிற் பங்கு பற்றியவர்களான பைதாகரச வாதிகளும் எம்பிடோக்கிளிசுவும் கூட, தமது சமய முறைகளுக்கு முற்றிலும் முரண்பட்டனவான, ஆன்மாக் கொள் கைகளைத் தமது மெய்யியன் முறைகளில் எற்றுக்கொண்டனர். இக்காலத்து மெய்யியல் முறை எதனிலும் ஆன்மாவின் சிரஞ்சி வித்துவம் எற்றுக்கொள்ளப்பட வில்லையென நாம் காண்போம். ஆன்மா அழிவற்றது எனும் கொள்கையை முதன் முதலில், வாதமுறைப்படி நிறுவ முயன்றவர் சோக்கிரதரே. சோக்கிரதர் தனது கொள்கைக்கு ஆதாரமாக, ஒபிசக்கருத்துக்களைச் சுட்டிக் காட்டும்போது, அதிற் பாதி கேலி கலந்திருப்பதாகப் பிளேட்டோ காட்டியிருப்பதும் கவனித்தற்குரியது.
இதற்குக் காரணம் என்னவெனில், பண்டைய சமயங்கள் ஒருபோதும் திட்டவட்டமான கொள்கை முறைகளை உடையன வாகவிருக்கவில்லை யென்பதே. சமயக் கிரியைகள் செம்மை யாகவும், உகந்த மனப்பாங்குடனும் செய்யப்படல் வேண்டும் என்பதே முக்கியமானதாயிருந்தது; வழிபடுவோர் தமது மனத் திற்குகந்த விளக்கங்களைத் தழுவிக் கொள்ளுதலே வழக்கா
எம்பிடோக்கிளிசு பற்றி பிரிவு 117; பைதாகரசவாதிகள் பற்றி பிரிவு 149.
See The Socratic Doctrine of the Soul' (Burnet, Proceedings of the British Academy, 1915-16, p. 235) gias Georuseo இவ்விடயத்தை விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

விஞ்ஞானமும் சமயமும் 89
யிருந்தது. அவ்விளக்கங்கள், சொபோக்கிளிசு, பிந்தார் போன் ருேரினது விளக்கங்களைப் போல மேன்மையுடையனவாகவோ அல்லது பிளேட்டோவினது குடியரசில் வருணிக்கப்படும் போலி ஞானியரது கருத்துக்கள் போலவோ இருத்தல் கூடும். இச் சமயத்தை எற்றுக்கொண்டோர் புதிய கொள்கை எதனையும் கற்றுக் கொள்வதாகக் கருதப்படுவதில்லை; ஆனல் இவர்கள் ஒருவகை மாற்றத்தை அனுபவித்துப் புதிய மனப்பாங்கொன் றினை அடைவதாகக் கருதப்படுகிறது என அரித்தோதில் கூறி ஞர். இதனலேயே இச்சமய மறுமலர்ச்சி, மெய்யியலுக்குப் புதிய ஊக்கத்தை அளித்ததாயினும் புதியகொள்கைகள் ஒன்றையும் அதனுட் புகுத்தவில்லை.
1. சாமோசு நகரத்துப் பைதாகரசு
37. பைதாகரசுவைப் பற்றி, வரலாற்று ரீதியானதெனக் இவரைப் கொள்ளப்படக்கூடிய விவரம் எதுவும் தருவதென்பது எளிதானறிய தல்ல. அவரைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைய வரலாற்றின் குறிப்பு, அவர் காலத்துக்குரியவொன்ருகும். நாயொன்று இயல்பு கத்துவதைக் கேட்ட பைதாகரசு, அதனது குரல்தனது இறந்து போன நண்பனெருவனது குரலெனத் தனக்குத் தெரிந்ததால், அதனை அடிக்க வேண்டாமென அதன் சொந்தக்காரனைக் கேட் டுக் கொண்டாரென்னும் பொருள் கொண்ட செனெபனது செய்யுள்கள் சில தரப்படுகின்றன. இதிலிருந்து பைதாகரசு மறுபிறப்புக் கொள்கையைப் போதித்தார் என்பது பெறப்படு கிறது. தமது போலி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடனேயெனினும், பிறர் எவரையும் விட விஞ்ஞான ஆராய்ச்சியை அதிகம் விருத்தி செய்தவர் பைதாகரசுவேயென, அவருக்கு அடுத்த தலைமுறையினரான எரக்கிளைட்டசு கூறினர். எரக்கிளைட்டசுவுக்குப் பின்னர், ஆனல் அதே நூற்றண்டில், எரொடோதசு பைதாகரசைப் பற்றி “எலனிசிய விஞ்ஞானியருள் எனையோருக்கு எவ்வகையிலும் குறைந்தவரல்ல" எனக் கூறி ஞர். வரலாற்றுப் புகழ் பெற்ற கைதியனன சலுமொக்சிசு சாமோசுவில் பைதாகரசுவின் அடிமையாக விருந்தவன் எனத் தான் கேள்விப்பட்டதாகவும், ஆனல் அதைத் தான் நம்பவில்லை யெனவும் அவர் கூறுகிருர் ; ஏனெனில் சலுமொக்சிசு பைதா கரசுவிற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என அவர் அறிந்திருந்தார். விஞ்ஞானி எனவும், மறுபிறப்புக் கொள் கையைப் போதித்தவன் எனவும், 5 ஆம் நூற்றண்டிற் பைதா
1. Xenophanes, fr. 7.
*. Herod. iv. 95.
3. Herakleitos, fr. 17.

Page 53
9) ஆதி கிரேக்க மெய்யியல்
கரசுவின் பெயர் பிரபலமடைந்திருந்தது என்பதற்கு, இக்கதை சான்று பகர்கிறது எனலாம். இதுவும் எமக்கு மிகவும் பயனுள்ள தாகும்.
பிளேட்டோ பைதாகரசவாதத்தில் அதிக ஈடுபாடுடையவராயி ருந்தார் எனினும், எனே அதுபற்றி அதிகம் கூறவில்லை. அவ ரது நூல்கள் முழுவதிலும் பைதாகரசுவின் பெயர் ஒரேயொரு முறையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அங்கும் எமக்குக் கூறப் படுவதெல்லாம், பைதாகரசு, தமது சீடர்களுக்குப் பைதாகரச வழியென இன்னமும் அழைக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் போதிப்பதன் மூலம், அவர்களது அன்பை அசாதாரணமான அளவுக்குச் சம்பாதித்துக் கொண்டார் என்பதே. பைதாகரச வாதிகளும் ஒருமுறையே பெயரிட்டுக் குறிப்பிடப்படுகின்றனர். சங் கீதமும், வானியலும் சகோதர கலைகள் என அவர்கள் கருதி னர் என சோக்கிரதர் கூறும் இடமே அஃதென்க. ஆனல் வேறு வழிகளில் பைதாகரசவாதிகள் என நாம் தெரிந்து கொண்ட பலரைப் பற்றிப் பிளேட்டோ கூறுகிருர் ; ஆனல் அவர் அவர்களைப் பெயரிட்டுக் குறிப்பிடவில்லை. அவர் சொல் வனவற்றிலிருந்து, எகிகிறத்திசு, பிலோலெசு ஆகியோர் பைதா கரச வாதிகள் என எம்மால் ஊகிக்க முடிகிறதேயொழிய அவர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை. பெரும்பாலும் பைதா கரச கொள்கைகள் அவற்றைக் கொண்டிருந்தோரது பெயரில் லாது, “ கெட்டிக்காரர்களினது கொள்கைகள் ” என்பதுபோன்ற குறிப்புக்களோடு தரப்படுகின்றன. பைதாகரச, அண்டவியற் கொள்கை யொன்றை உலோகிரிய நாட்டுத் திமாயோசுவைக் கொண்டு கூறவைத்தபோதும், அவன் பைதாகரச கழகத்தைச் சேர்ந்தவன் என்பதைக்கூடப் பிளேட்டோ வெளிப்படையாகக் கூறவில்லை. அவன் ஓர் இத்தாலியன் எனக் கூறப்படுவதிலி ருந்து அவன் ஓர் பைதாகரசவாதி யென்பதையும் நாம் ஊகிக்கவேண்டியிருக்கிறது. பிளேட்டோ இவ்வாறு, இவ்விட யங்கள் பற்றி அதிகம் கூருது விட்டதைப் போலவே அவரது மாணவரான அரித்தோதிலும், எமக்கு இவர்களைப்பற்றி அதி கம் கூறவில்லை. எமக்குக் கிடைத்துள்ள அரித்தோதிலினது நூல்கள் முழுவதிலும் இரண்டு இடங்களில் மட்டுமே பைதாகரசு எனும் பெயர் காணப்படுகிறது. பைதாகரசு முதியோனுயிருந்த காலத்தில் அலுக்மையோன்? இளைஞனுயிருந்தான் எனும் செய்தி ஓரிடத்திலும், “இத்தாலியர்கள் பைதாகரசுவைப் பெரி தும் மதித்தனர்” எனும் அலுக்கிடாமசின் கூற்றென்று
i. Ibid. vii. 530 d.
2. Arist Met. A., 5.986 al 29.
*** Arist. Rhet. B, 23. 1398 b 14.

விஞ்ஞானமும் சமயமும் 91
மற்ற இடத்திலும் தரப்பட்டிருக்கின்றன. “ பைதாகரசவாதி” எனும் பெயரைப் பிளேட்டோ தவிர்க்க முயன்ற அளவிற்கு அரித்தோதில் அதனைத் தவிர்க்க முயலவில்லை யெனினும், அதை அவர் விநோதமான முறையிற் கையாண்டிருக்கிறர் எனலாம். “ பைதாகரசவாதிகள் என அழைக்கப்படும் இத் தாலியர்கள் ” என்று சில வேளைகளில் எழுதியிருப்பதுடன் குறிப்பிட்ட சில கொள்கைகளைப் பற்றி “ இவை பைதாகரச வாதிகளிற் சிலருடையவை ’ என்றும் வேறு சில வேளைகளிற் குறிப்பிட்டிருக்கிருர். இவற்றை நோக்கும்போது நான்காம் நூற் ருண்டில், உண்மையான பைதாகரசவாதிகள் யார் என்பது பற்றி ஐயம் நிலவியதுபோற் றேன்றுகிறது. இதற்குக் கார ணம் என்னவென்பது நமக்குப் பின்னர் தெரியவரும்.
பைதாகரசவாதிகள் பற்றி அரித்தோதிலும் விசேட கட்டுர்ை யொன்று எழுதியிருந்தார். இது எமக்குக் கிடைக்காத போதி லும், பிந்திய எழுத்தாளரது நூல்களில் இதிலிருந்து எடுக்கப் பட்ட மேற்கோள்களைக் காண முடிகிறது. இம்மேற்கோள்கள் பைதாகரசவாதத்தின் சமயச் சார்பான கருத்துக்கள் பற்றியன வாத்லால் எமக்கு மிகவும் பயனுடையனவாகவுள்ளன.
இவர்களைவிட, பைதாகரசுபற்றி எமக்கு எதுவாயினும் தரு வோர் அரித்தோசெனேசு, திகயாக்கோசு, திமாயோசு என் போர்ே. இவர்கள் யாவரும் பைதாகரசுவை அறிவதற்கு விசேட வாய்ப்புக்கள் உடையோராய் இருந்தனர். அயாம்பிளிகோசு எழுதிய பைதாகரசுவின் வாழ்க்கை யெனும் நூலில் பைதா கரச கழகம் பற்றிக் கூறப்பட்டிருக்கும் யாவும் திமாயோசுவின் மூலம் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட வையே. திமாயோசு, போதிய ஆராய்வில்லாதவோர் வரலாற் ருசிரியனேயெனினும், இத்தாலி, சிசிலியெனும் இடங்கள்பற்றி அதிக விவரங்களை அறியும் வாய்ப்பு இவனுக்கிருந்ததாதலால், இவனது கூற்றுக்களில் எமக்குக் கிடைத்தவை யாவும் மிகவும் பயனுள்ளவையே. அரித்தோசெனேசு வென்பான் பிளெயசு விலிருந்த பைதாகரசவாதிகளின் கடைசித் தலைமுறையினரை நேரில் அறிந்திருந்தான். ஆனல் இவன் பைதாகரசுவை ஓர் விஞ்ஞானியென மட்டுமே வருணிக்கவும், அவர் ஓர் சமயாசிரியரு மாய் இருந்தார் என்பதை மறுக்கவும் விரும்புகிறன் என்பது வெளிப்படை. இதுபோலவே, திகயாக்கோசுவும் பைதாகரசு அர சியல் ஞானியாகவும் சீர்திருத்தவாதியாகவும் மட்டுமே வாழ்ந் தார் என நிறுவமுயல்கிருன்.
1. Cf. e.g. Met. A, 5. 985 b 23, De caelo, B, 13. 293 a 20.

Page 54
92 ஆதி கிரேக்க மெய்யியல்
பைதாகரசினது வாழ்க்கை பற்றிப் போபைரி, அயாம்பிளி கோசு, இடையோசினிசு லயாத்தியசு என்போர் எழுதிய நூல் களைப் படிக்கும்போது அவர் பற்றி மீண்டும் அதிசயிக்கத்தக்க செய்திகள் பல எமக்குக் கிடைக்கின்றன. ஆனல் நம்பத்தகாத கற்பனைகள் நிறைந்தனவான இவை சந்தேகத்திற்கிடமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின் றன. ஆயினும், பைதாகரசுபற்றிய வரலாற்றில் உள்ள விந்தை யான செய்திகளை முற்ருக விலக்குதலும் தவறனதெனலாம் : ஏனெனில் இவற்றுட் குறிப்பிடத்தக்கனவான விவரங்கள் பல பைதாகரச வாதிகள் பற்றி அரித்தோதில் எழுதிய நூலிலி ருந்தும் எபிசோசு நாட்டு ஆந்திரோனது முக்காலி யெனும் நூலிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இந்நூல்களிரண்டும் கி.மு. நான்காம் நூற்ருண்டைச் சேர்ந்தனவாதலால், நவபைதாகர வாதிகளினது கற்பனைகளின் பீடிப்பினல் எழுந்தவையென நாம் இவற்றைக் கருதவேண்டியதில்லை. உண்மை யென்ன வெனில் பைதாகரசு பற்றிய பழைய வருணனைகளும், பிந்திய வருணனைகளும் அவர் பல விந்தையான காரியங்களைச் சாதித் தார் எனக் கூறுவதில் ஒத்திருக்கின்றன. ஆனல், என்ன காரணத்திற்காகவோ, கி.மு. ஐந்தாம் நூற்றண்டில், பைதா கரசுவினது இத்தகைய சாதனைகளைக் குறிப்பிடாது விடுவதற்கு யாவரும் முயற்சித்துள்ளனர். பிளேட்டோவும் அரித்தோதிலும்
போபைரியினது * மெய்யியல் வரலாறு” எனும் நூலிலிருந்து எமக்குக் கிடைத்துள்ள பகுதி அவரது “பைதாகரசுவினது வாழ்க்கை” மட்டுமே. அயாம் பிளிகோசு எழுதிய பைதாகரசுவினது வாழ்க்கை நோக்குவினுற் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது (1884).
* தையஞவைச் சேர்ந்த அப்பொலோனியோசுவினது நூலிலிருந்தும், கெரேசாவைச் சேர்ந்த நிக்கொமாக்கோசு வென்னும் கணிதவல்லுன்னினது நூலிலிருந்துமே அயாம்பிளிகோசு தமது நூலைத் தொகுத்தார். “ நூலிற்கு அப்பாலிருந்து பெற்ற விந்தைகள் ” எனும் நூலை எழுதிய அந்தோனியசு இடையோசினிசு, நிக்கொமாக்கோசு என்போரே போபைரியினது ஆதாரங்கள். அந்தோனியசுவின் நூல் லூசியனது Wera Historia எனும் நூலில் நையாண்டி செய்யப்பட்டிருக்கிறது.
* கொடிய விடப்பாம்பொன்றினைப் பைதாகரசு கடித்துக் கொன்றமை பற்றியும், இரு இடங்களில் அவர் ஒரே நேரத்திற் காணப்பட்டமை பற்றியும், ஒலிம்பியாவில் அவர் தமது பொன்னலான துடையைக் காட்டியமை பற்றியும், அவர் காசாசு நதியைக் கடந்தபோது, வானிலிருந்து ஓர் குரல் அவரை அழைத் தமை பற்றியும் இன்னுேரன்ன பல செய்திகளையும் தந்துள்ளவர் அரித்தோதிலே, இசசெய்திகளைக் கூருது விடுத்த பிற்கால பைதாகரசவாதிகளை எதிர்க்கும் பொருட்டு, அரித்தோதில் இவற்றைக் கூறுவதில் விசேட கவனம் செலுத்தி ஞர் போலும்.
* "ஞானியர் எழுவர் ” பற்றி ஆந்திரோன் ஓர் நூல் எழுதினர். இத்த லைப்பு அவர்கள் பற்றிய கதையையே குறிக்கிறது.

விஞ்ஞானமும் சமயமும் 93
அதிகம் கூற விரும்பாதமைக்கான காரணத்தையும் இது விளக் குகிறதெனலாம். ஆனல் இதன் பூரண முக்கியத்துவம் பின் னரே புலணுகும்.
38. பைதாகரசு தனது வாலிபப் பருவத்தைச் சாமோசுவிற் பைதாகரசின் கழித்தாரென்றும், அவர் நெசாக்கோசுவின் மகனென்றும் வாழ்க்கை எமக்கு நன்றகத் தெரியுமெனக் கூறலாம். பொலிகிருத்திசு வின் ஆட்சிக் காலத்தில் (கி.மு. 532) இவர் சிறப்புடன் விளங் கினரெனவும் எமக்குத் தெரியவருகிறது?. எரக்கிளைட்டசு இவ ரைக் குறிப்பிடும் வசனங்கள் இறந்தகாலத்தில் எழுதப் பட்டி ருக்கின்றன வாதலால், இவ்வாண்டு விவரங்கள் முற்றிலும் பிழையானவையாக விருக்க முடியாது.
பைதாகரசு அநேக இடங்களுக்குப் பிரயாணம் செய்தார் என் னும் செய்தி அவ்வளவு நம்பத்தகுந்ததல்ல. அவர் எகிப் திற்குச் சென்ருர் என்னும் செய்தியும், சாமோசு நகரத்த வனன பொலிகிருத்திசுவுக்கும் அமாசிசிசுவுக்குமிடையேயிருந்த நெருங்கிய தொடர்பைக் கவனிக்கும்போது, நம்பத்தகுந்ததே யாயினும், போதிய ஆதாரமுடைய வொன்றல்ல. “ஒபிக்கு ”, "பாக்கிக்கு” எனும் விதிகளோடும், உண்மையில் இவை எகிப் தியர்களுடையனவேயென்க-பைதகரவாதிகளோடும் எகிப்தியர் டெரிதும் பொருத்தமுடையோராய்க் காணப்பட்டனர் என எரொ டோதசு கூறுகிறர். ஆனல், பைதாகரசவாதிகள் இவற்றை
1. Cf. Herod. iv. 95, and Herakleitos, fr. 17 (R. P. 31 a). Suom யோசு, இவரது தந்தையின் பெயர் டெமாறத்தோசுவெனக் கூறுகிறர் எரொடோதசு அவர் சாமோசுவில் வாழ்ந்ததாகக் கூறுகிறர். அதெனியர்கள் குடியேறிய தீவுகளிலொன்றிலிருந்து "அவர் குடும்பத்தினர் வந்தனர் என அரித்தோசெனேசு கூறுகிறர் ( Diog wi. 1 ). இத்தீவு லெமுனேசு அல்லது இம்புரோசுவாக இருக்கலாம். வேறு சில கூற்றுக்கள் இவரைப் பிளெயசுவுடன் தொடர்புபடுத்துகின்றன. ஆனல் 4 ஆம் நூற்றண்டில் அங்கு நிலவிய கழகத்தினர் தமது ஆவல் மிகுதியால் இவ்வாறு கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டுமென்க. பைதாகரசுவினது பூட்டனன இப்பா சோசு, பிளெயசுவிலிருந்தே சாமோசுவுக்குக் குடியேறினுரென, பிளெயசுவில் ஓர் வரலாறு வழங்கியதாகப் பெளசானியசு கூறுகிருர்,
2. 48 வது ஒலிம்பிய ஆண் (கி.பி.588/7) டின், ஒலிம்பிய வெற்றி வீரன் பைதாகரசுவேயென எராதொசுதெனிசு தவருகக் கருதினுர். ஆணுல் இவர் சிறப்புற்று விளங்கிய ஆண்டு 532/1 என அப்பொலோடரசு கூறுகிறர். பொலி கிருத்திசுவின் கொடுங்கோன்மையை வெறுத்தே பைதாகரசு சாமோசுவை நீங்கினர் என அரித்தோசெனேசு கூறியுள்ளதன் அடிப்படையிலேயே அப்பொ லோடரசு இவ்வாறு கூறியிருத்தல் வேண்டும்.
* Herakl. fr. 16, 17 (R.P. 31 , 31a).
* ஐசோகிருத்திசுவின் Boustris என்னும் நூலிற்ருன் இது முதலிற் காணப்படுகிறது.

Page 55
94 ஆதி கிரேக்க மெய்யியல்
எகிப்தியர்களிடமிருந்தே பெற்றனர் என இதற்குப்பொருள் கொள்ளலாகாது. மறுபிறப்புப் பற்றிய கொள்கையை முற்கா லத்தவரும், பிற்காலத்தவருமான கிரேக்கர் சிலர் தமதெனக் கூறினரெனினும், அஃது எகிப்தியரிடமிருந்து பெறப்பட்டதே யெனவும் அவர் கூறுகிறர். ஆனல் அவர் அக்கிரேக்கர்களது பெயர்களைக் குறிப்பிட மறுக்கிருராதலால், அவர் பைதாகரசைக் குறிப்பிடுகிறர் எனக் கொள்ளுதல் சிறிதும் பொருந்தாது. அவ்வாறு அவர் கருதியிருந்தாலும் அதை நாம் கவனிக்க வேண்டியதில்லை; ஏனெனில் எகிப்தியர்கள் மறுபிறப்புக் கொள் கையை ஒருபோதும் எற்றுக் கொள்ளவில்லை. எரொடோதசு அங்குள்ள சமாதிகளின் குறிப்பைத் தவருக விளங்கிக்கொண் டிருக்கவேண்டும்;. அல்லது எகிப்திய மதகுருமாரால் எமாற் றப்பட்டிருக்க வேண்டும்.
பொலிகிருத்திசுவின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை பெறும் 'ப்ொருட்டே பைதாகரசு சாமோசுவை விட்டு வெளியேறி னர் என அரித்தொசெனேசு கூறினர். சாமோசுவோடு நெடுங் காலமாக நட்புறவு பூண்டிருந்ததும் தன்னகத்தே வாழ்ந்த விளையாட்டு வீரர், மருத்துவர்? என்போரது சிறப்பினற் பெயர் ப்ெற்றதுமான குரோட்டனிலேயே அவர் தமது கழகத்தை நிறு வினர். பைத்ாகரசு கி.மு. 592 ஆம் ஆண்டில் இத்தாலியை அடைந்து, இருபது ஆண்டுகளாகக் குரோட்டனில் வாழ்ந்தா ரெனத் திமாயோசு கூறியுள்ளார்போலத் தோன்றுகிறது. குரோட்டன் வாசிகள்.இவரது ஆணைக்கெதிராகக் கிளர்ச்சி செய் ததன் பின்னர், தான் சென்று வாழ்ந்த மெற்ருபொந்தி யோனிலேயே இவர் காலமானர்.
1. Porph. v. Pyth. 9 (R.P. 53a).
* தெமோக்கிடிசுபற்றி எரொடோதசு கூறுவதிலிருந்து (i. 131) குரோட்டன் நகர மருத்துவக் கழகம் பைதாகரசுவின் காலத்திற்கு முன்பே நிறுவப்பட்டதென நாம் அனுமானிக்கலாம். கி. மு. ஆரும் நூற்றண்டில், தொடர்ந்து குரோட்டன் வாசிகள் பெற்ற ஒலிம்பிய வெற்றிகள் குறிப்பிடத் தக்கவை.
* காலத்தை நிர்ணயிப்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு, Rostagni, "Pitagora ei Pitagoriciin Timespp. 376 Sqq. 6gutfaroslait aspé6äga பின்னர் (கி. மு. 510) உடனடியாகக் கைலோன் கிளர்ச்சியேற்பட்டதெனத் திமாயோசு காட்ட முனைந்தார் என்பது வெளிப்படை. அதைத் தொடர்ந்து பைதாகரசு, மெற்றபொந்தியோனிற் சென்று வாழலானர் என்பது சிசிரோ வினலும் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்நகர் இன்னமும் பெருமையுடன் நினைவு கூரப்படுகிறது எனச் சிசிரோ மேலும் கூறுகிறர் (R. P.57e). அரித் தொசெஞ்ேசுவும் இதையே குறிப்பிட்டிருக்கிறர் (R. P. 576). cf. also Andron, fr. 6 (F. H. G.ii. 347)

விஞ்ஞானமும் சமயமும் 95
39. பைதாகரச கழகமென்பது, அதன் ஆரம்பத்தில் ஓர் பைதாகே
சமயத் தொடர்பான சங்கமாயிருந்ததே யொழிய, சிலர் கூறு "சி" வது போல அஃதோர் அரசியற் குழுவாகவிருக்கவில்லை. “ டோரிய உயர்குலத்தோரது திட்டம்’ என அழைக்கப்பட்ட இயக்கத்தோடும் இவர்களுக்கு எவ்வித தொடர்பும் இருக்க வில்லை. பைதாகரசு ஒர் அயோனியரே. அவரது கழகமும் முதலில் ஆக்கிய நகரங்களில் மட்டுமே செயற்பட்டது. மேலும் “ டோரிய உயர்குலத்தோரது திட்டம்' என்பது, பாட்டா, கிறீற்று என்பவற்றைப் பற்றிச் சோக்கிரதர் யாத்த உயர்வுநவிற்சிகளின் அடிப்படையில் எழுந்த வெறும் கற்பனைக்கதையே யென்க. கொரிந்து, ஆர்கோசு, சிராக்கியூசு என்பன நினைவிலிருந்து அகன்றுவிட்டன. அன்றியும் பைதாகரசவாதிகள். உயர்குலத் தோரது கட்சியை எவ்வகையிலும் ஆதரித்தனர் என்பதற்கு எவ்வகை ஆதாரமுமில்லை. தமது வாழ்க்கையை மேலும் மேலும் புனிதமுடையதாக்குதலே இக்கழகத்தினரது முக்கிய நோக்கமாக விருந்தது. இடையனிசோசு வல்லாது அப்போ லோவே பைதாகரச வாதிகளது பிரதான கடவுளெனக் கரு தப்பட்டாரெனினும், மேற்கூறிய வழியில் இவர்கள் (ஓபிச கழகத்தினரை ஒத்திருந்தனர், பைதாகரசிற்கு டீலோசுவோ டிருந்த தொடர்பின் காரணமாகவே இவ்வொற்றுமை வற் பட்டது என்பதில் ஐயத்திற்கிடமில்லை. குரோட்டன் வாசிகள் இவரை அப்போலோ ஐப்பபோரியசு எனக் கருதியதற்கும் இதுவே காரணமாயிருந்திருக்க வேண்டும்?.
1. பைதாகரசு, பொதுச்சேவையில் எத்தகைய பதவியும் வகிக்கவில்லை யெனப் பொருள் தோன்றுமாறு பிளேட்டோ குடியரசில் எழுதியுள்ளார். பைதாகரச கழகம் என்பது ஓர் அரசியற் குழுவென்னும் கருத்து, திகயாக் கோசுவினல் ஆரம்பிக்கப்பட்டதாகும். இக்கழகம் அடிப்படையில் ஓர் விஞ் ஞானக் கழகமே எனும் கருத்து எழுவதற்குக் காரணமாயிருந்தவர் கணித வியலாளரான அரித்தொசெனேசு என்பார்.
* குரோட்டன் வாசிகள் இவ்வாறு, இவ்விருவரும் ஒருவரே எனிக் கருதி ஞர்கள் என்பது அரித்தோதிலாலும் உறுதிப்படுத்தப்படுகிறது (fl. 186. 1510 6 20). அபாரிசு, அரித்தியாசு என்போரது பெயர்கள், ஒபிசத்திற்கு ஒப்பான, ஆணுல் அப்போலோ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட சமயவியக்கம் ஒன்றினைக் குறிக்கின்றன ; பிந்திய வரலாற்ருசிரியர், இவர்களிருவரும் பைதா காசுவின் முன்னேடிகள் எனக் கூறுகின்றன்ர். எரொடோதசுவின் குறிப்பிஞ. லும், பைதாகரசு இறந்தவிடமான மெற்ருபொந்தியோனில் அரித்தியாசுவின் சிலையொன்றிருந்தது என்பதனுலும் இஃது உறுதிப்படுத்தப்படுகிறது.எனலாம். பைதாகரசிற்கும் சலுமொக்கிசுவுக்கும் இடையேயிருந்த தொடர்பும் இத்தகை யதே. பைதாகரசினற் போதிக்கப்பட்ட மதம் முற்றிலும் அயோனியாவைச் சேர்ந்ததே யென்பதும் இடையனிசோசுவுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பு மில்லை யென்பதும், ஐப்பபோரியர் வரலாறு டீலியாவைச் சேர்ந்தது என்பதி லிருந்து தெளிவாகிறது.

Page 56
கழகத்தின் обрва
96 ஆதி கிரேக்க மெய்யியல்
40. இப்புதிய கழகம் தோன்றியபின் சிறிது காலத்திற்கு ஆக்கிய நகரங்களில் எல்லாம் பூரணம் ஆதிக்கம் பெற்றதாய் விளங்கிற்று. ஆனல் விரைவில் நிலைமை மாற்றமடைந்தது. ஆனல், பைதாகரசுவின் சீவிய காலத்திலேயே நடைபெற்ற கைலோன் புரட்சி, இத்தாலியிலிருந்து பைதாகரவாதிகள் வெளி யேற்றப்படுவதற்குக் காரணமாயிருந்த பிற்காலத்துக் கிளர்ச்சி கள் என்பனவற்றை நம்மால் நன்கு பிரித்தறிய முடியா திருக்கிறதாதலால், கழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான இந் நிகழ்ச்சிகளை மயக்கமின்றி அறிந்து கொள்ள முடியவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட கிளர்ச்சிகளைத் தனித்தனியாகப் பிரித் தறிந்து கொண்டதன் பின்னரே நாம் இந்நிகழ்ச்சிகளைச் சிறிது விளங்கிக் கொள்ளக்கூடும். சைபாரிசுவின் வீழ்ச்சிக்குக் (கி.மு. 610) காரணமான நிகழ்ச்சிகளுக்கும், கைலோன் புரட்சிக்கும் நெருங்கிய தொடர்பிருந்ததாகத் திமாயோசு கருதினர் போலத் தோன்றுகிறது. சைபாரிசியர்களுக்குப் பைதாகரசு ஏதோ வொருவகையில் தமது அனுதாபத்தைத் தெரிவித்தாரென வும் கொடுங்கோலனன தெலிசுவினல் வெளியேற்றப்பட்ட அகதிகள் சிலருக்குப் புகலிடம் தருமாறு குரோட்டன் வாசி களைக் கேட்டுக் கொண்டாரெனவும் நாம் அறிகிருேம். ஆனல் இவ்வகதிகள்" உயர்குலத்தோ "ரானபடியாற்றன், பைதாகரசு அவர்கள் மீது அனுதாபம் காட்டினர் எனும் கூற்றுக்கு எவ்வகை ஆதாரமுமில்லையென்க; கொடுங்கோன்மைக்குட்பட் டோரான இவ்வகதிகள் மிகவும் தாழ்மையோடு உதவி வேண் டினராதலால், அயோனியரான பைதாகரசு, துரதிட்டத்தினற் பீடிக்கப்பட்ட, ஆனல் மேன்மையுடையதான அயோனிய நாட்டு மக்கள் மீது இரக்கம் காட்டினர் என்பது விநோதமான நிகழ்ச்சி
யல்லவெனலாம். செல்வத்தாலும், பிறப்பினலும், குரோட்ட
னில் வாழ்ந்தோரில் முதன்மையானவனென அரித்தொசெனே சுவினல் வருணிக்கப்பட்டுள்ள கைலோன் என்பான், பைதா
கரசு மற்றேர் ஆக்கிய நகரான மெற்றபோந்தியோனிற்குச்
செல்லவேண்டிய நிலையை உண்டாக்கினன். பைதாகரசு தனது
வாழ்வின் எஞ்சிய ஆண்டுகளை இந்நகரிலேயே கழித்தனர்.
பைதாகரசு மெற்றபோந்தியோனுக்குச் சென்றதன் பின்ன ரும், அவர் காலமாகியதன் பின்னரும், குரோட்டனிற் கலவரங் கள் தொடர்ந்து நடைபெற்றன. இறுதியில், பைதாகரவாதி கள் விளையாட்டு வீரனன மைலோவின் இல்லத்திற் கூடி யிருக்கையில் அவ்வில்லிற்குத் தீவைக்கப்பட்டபோது இளமை யும் வலிமையுமுடையோரான ஆகிப்போசு, இலைசிசு எனும்
* தற்கால வரலாற்ருசிரியர்கள் இவனை ஒர் மக்கள் தலைவனென அழைப் பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.

விஞ்ஞானமும் சமயமும் 97
இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். டோரிய குடியாட்சி நாடான தாரசுவிற்கு ஆகிப்போசு சென்று வாழ்ந்தான் ; இலைசிசு முதலில் ஆக்கியாவுக்கும் பின்னர் தீபிசுவிற்கும் சென்றன். தீபிசுவில் அவன் எப்பாமினந்தோசுவுக்குக் குரு வாகவிருந்தான். இந்நிகழ்ச்சிகள் யாவும் நிகழ்ந்த ஆண்டு களை நிர்ணயித்தல் சாத்தியமில்லையெனினும், இலைசிசுவின் பெயர் குறிப்பிடப்படுவதிலிருந்து, இவை யாவும் ஒரு தலை முறைக்காலத்திற்குள்ளாகவே நடைபெற்றிருக்கவேண்டும் என அனுமானிக்கலாம். எப்பாமினந்தோசுவின் குருவினல், குரோட் டன் சதியிலிருந்து தப்பிச் செல்ல முடிந்ததென்றல், கி.மு. 450 க்குப் பின்னர், சில ஆண்டுகள் கழிந்த பிறகே குரோட் டனில் சதி நடைபெற்றது என்பது உண்மையாயிருக்க முடி யாது; எனெனில் அவ்வாருயின் தெளரியை நகர் கி.மு. 444 இல் நிறுவப்பட்ட நிகழ்ச்சி பற்றிய வருணனைகளில் இச் சதிச் சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக்கிய நகரங்கள் யாவற் றிலும், பைதாகரசவாதிகளினது “ குடில்கள் ” தீயூட்டப்பட்டது பற்றிப் பொலிபியசு கூறும் சிறந்தவோர் நூற்பகுதி யுளதுஇப்பகுதி திமாயோசுவிடமிருந்தே பெறப்பட்டிருக்க வேண்டும். பொலிபியசுவினது வருணனையை நோக்கும்போது, இறுதியில் பெலோப்பொனிசசுவைச் சேர்ந்த ஆக்கியர்கள் அமைதியை நிலைநாட்டும் வரையில், பைதாகரச வாதிகளின் குடில்களுக் குத் தீயூட்டும் இவ்வியக்கம் நீடித்ததுபோற் றேன்றுகிறது. இதற்குச் சிறிது காலத்தின் பின்னர் பைதாகரசவாதிகளுட் சிலர் இத்தாலிக்கு மீளமுடிந்ததெனவும், அங்கு மீண்டு மொரு முறை அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெறமுடிந்த தென வும் நாம் பின்னர் காண்போம்.
41. பைதாகரசுவின் வாழ்க்கை பற்றி எமக்குக் கிடைத்த விவரங்களிலும் அவரது கொள்கைகள் பற்றி நாம் அறிந் பைதாகரசின் துள்ளவை மிகக் குறைவே. பைதாகரசுவின் கொள்கைகள் போதனைகன் எனக் கூறப்படக்கூடிய ஒழுக்கவியற் கொள்கைகள் அல்லது 'சி'"சி" பெளதிகக் கொள்கைகள் எதனையும் அரித்தோதிலோ அல்லது .ே பிளேட்டோவோ அறிந்திருக்கவில்லை என்பது தெளிவு. அரித்தொசெனேசு ஒழுக்கவியற் கோட்பாடுகள் சிலவற்றை மட்
Rohde, Rhein. Mus. xxxvi. p. 565, n. I. ØéSyodu fåæpå 6æsit பற்றிக் கூறும் பிற்கால எழுத்தாளர் இவற்றை ஒரே சம்பவமாக இணைத்துக் கூறுகின்றனர். மைலோவின் வீட்டில், பைதாகரசும் தீயிலகப்பட்டு இறந்து போனர் எனவும் சிலர் கூறுகின்றனர்.
* பைதாகரச கொள்கை பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், அரித்தோதில் * பைதாகரசுவினது" எனது, எப்போதும் " பைதாகரச வாதிகளினது ” எனவே கூறுகிறர். பைதாகரச கொள்கையெனத் தாம் அறிந்திருந்த கொள் கையின் பெரும்பகுதி, உண்மையில், எம்பிடோக்கிளிசு, அனக்சகோரசு, லியூ

Page 57
மறுபிறப்புக்
போதித்தாரென நாம் கண்டோம். திகயாக்கோசுவின் கூற்
கொள்கை
98 ஆதி கிரேக்க மெய்யியல்
டும் தருகிறர். மறுபிறப்பு, பிறவிச் சக்கரம், உயிர்கள் யாவற் றிற்கு மிடையேயுள்ள உறவு என்பனபற்றிய கொள்கைகளைத் தவிர, பைதாகரசு தமது சீடர்களுக்குப் போதித்த பிற கொள் கைகளைப் பற்றி எதுவும் தெரியாதெனத் திகயாக்கோசு கூறி
னர். பைதாகரசு தமது கொள்கைகளை எழுத்து மூலம்
பரப்புவதிலும் பேச்சுக்கள் மூலம் பரப்புவதனையே விரும்பினர் போலத் தோன்றுகிறது. மேலும் அலெக்சாந்தரது காலம் வரை யில் இவரது பெயரில், போலி நூல்களை வெளியிட யாரும் துணிய வில்லை. ஆதிபைதாகரசவாதிகளினது நூல்களெனக் கூறப் படு வனவும், இக்காலத்தே தயாரிக்கப்பட்ட போலிகளே?. ஆகவுே பைதாகரவாதத்தில் ஆதி வரலாறு பெரும்பாலும் ஊகங்களா லானதே ; ஆயினும் இவற்றைக் கொண்டு, கிரேக்க சிந்தனை யின் வரலாற்றில் பைதாகரசுவின் நிலையென்னவென்பதைப் பொதுப்படையான முறையிற் கணிக்க முயலலாம்.
42. முதலாவதாக, அவர் மறுபிறப்புக் கொள்கையைப்
றுப்படி பைதாகரசு கொண்டிருந்ததெனப்படும், மனிதருக்கும்
விலங்குகளுக்குமிடையே உறவுண்டெனும் பழைய நம்பிக்கையி
லிருந்தே, மறுபிறப்புப் பற்றிய இக்கொள்கை விருத்தி செய்யப்
பட்டிருக்கவேண்டுமென எளிதில் விளக்கிவிடலாம். விலங்கு
களும் மனிதரும் இம்முறையில் ஒரே இனத்தவை எனும்
நம்பிக்கையுடையோர், சில உணவுவகைகளைத் தவிர்க்க வேண்
டும் எனும் கொள்கையுடையோராயுமிருத்தலைக் காண்கிருேம். பைதாகரசின் விதியொன்றின்படி இத்தகைய தடைகள் விதிக்
கப்பட்டன வென்பது நன்கு தெரிந்ததே. அயோனியாவிலி
ருந்து வரும்போதே பைதாகரசு இக்கருத்துக்களை எற்கெனவே
தழுவியவராயிருத்தல் வேண்டும் என்பது உறுதியெனலாம்.
டீலோசுவிலுள்ள பலிபீடங்கள் யாவற்றிலும் மிகப் பழைய தான, தந்தை அப்பொலோசுவின் பீடத்திலொழிய மற்றைய இடங்களில், பைதாகரசு எவ்வகைப் பலியும் இட மறுத்தா ரெனத் திமாயோசு கூறுகிறர். அப்பொலோசுவின் பலிபீடத்
தில் உயிர்ப்பலி அனுமதிக்கப்படவில்லை.
கிப்போசு என்போரது காலத்திலேயே யாக்கப்பட்டது என்பதை அரித்தோதில்
நன்குணர்ந்திருந்தார் ; எனெனில் இவர்களை வருணித்த பின்னர், பைதா
கரசவாதம் இவர் காலத்திலும் அதற்கு முன்பும் நிலவியது எனக் கூறுகிறர்.
1. Porphyry, v. Pyth. 19 (R. P. 55). 2. See . Diels, Dvac,. p. 150. * 89 ஆம் பக்கத்திற் காண்க. 4. See Diog. viii. 3.

விஞ்ஞானமும் சமயமும் 99
43. பைதாகரசுவினல் ஏற்கப்பட்ட புலால்மறுப்புக் கொள்கை பற்றிப் போபைரி போன்ற மிகவும் பிந்தியகால எழுத்தாளர்கள் கூறுவனவற்றை எற்பது பொருத்தமுடையதோவெனச் சிலர் புலால் ஐயமெழுப்பியுள்ளனர். பைதாகரசு விலங்குகளினது இறைச் பிறுத்தல் சியை உண்ணலாகாது எனப் பொதுவாகக் கூறவில்லையென வும், உழுவதற்குப் பயன்படும் எருது, செம்மறிக்கடா என்பன வற்றினையே உண்ணலாகாதெனக் கூறினரெனவும் அரித்தொ செனேசு தெளிவாகக் கூறியுள்ளார். அவரைக்காய், எனைய தாவரங்களிலும் அதிகமாக வயிற்றை யிளக்குமியல்புடைய தாதலாற் பைதாகரசு அதனையே அதிகம் விரும்பினரெனவும், பன்றிக்குட்டிகளையும் எனைய மென்மை படைத்த இளம் கன்று களையும் உண்பதில் அவர் பிரியமுடையவராய் இருந்தாரென வும் அரித்தொசெனேசு கூறினர். பைதாகரவாதிகள் புலால் உண்பதையும், அவரை யுண்பதையும் விலக்கினர் என அரித் தொசெனேசுவின் காலத்திலும் வழங்கி வந்த நம்பிக்கையை எதிர்க்கும் பொருட்டே அரித்தொசெனேசு இவ்வாறெல்லாம் கூறினர் என்பது பெரிதும் மிகைப்படுத்தப்பட்டனவான இக் கூற்றுக்களிலிருந்து புலனுகிறது. ஆனல் பைதாகரசவாதிகள் இவ்வுணவு வகைகளை விலக்கினர் எனும் வரலாறு நவபைதா கரசவாதிகளினது காலத்திற்கு மிகவும் முன்பிருந்தே வழங்கி வந்ததெனும் உண்மையை அரித்தொசெனேசுவின் வார்த்தை களைக் கொண்டே நாம் நிரூபிக்கலாம் எனலாம். அரித்தொ செனேசு இவ்வாறு நடந்துகொண்டதற்குக் காரணம் அவர் பைதாகரசவாதிகளின் இறுதித் தலைமுறையினரின் நண்பரா யிருந்தமையே; இவர்களது காலத்தில், கடுமையான இம் மறுப்புக் கொள்கைகள் பெரிதும் தளர்த்தப்பட்டிருந்தன. இன்னமும் இம்மறுப்புக் கொள்கையைத் தழுவுவோராயிருந்த சில தீவிரவாதிகளும், இக்காலத்தில் கழகத்தின் தலைமைப் பீடத்திலிருந்தோரால் விலக்கப்பட்டனர். இன்னமும் பழைய பைதாகரச கருத்துக்களைத் தழுவி நடந்தோர், புறநெறியாளர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் “ அக்கெளசுமாத்திகள்” எனப் பெயரிடப்பட்டதுடன், உண்மையில் இவர்கள் இப்பாசோசு வின் சீடர்கள் எனவும் அவரது அந்தரங்க கொள்கைகளை வெளியிட்டதனலேயே இவர்கள் அவரது குழுவிலிருந்து வெளி யேற்றப்பட்டனர் எனவும் கூறப்பட்டது. பைதாகரசுவின் உண் மையான வழித்தோன்றல்கள் கணிதவியலாளரே யெனக் கூறப் பட்டது. ஆனல் மத்திய இன்பியல் நூலின் கவிஞர்கள் பற்றிய
இவ்வாறிருந்தும், அரித்தொசெனேசுவினற் கூட, பெரிகைடிசு இறந்த
போது, ப்ைதாகரசு, டீலோசுவில் அவரை அடக்கஞ் செய்தார் எனும் உண் மையைக் குறிப்பிடாது மறைத்து வைக்க முடியவில்லை யென்க.

Page 58
அக்கெளசு
மாத்திகள்
OO ஆதி கிரேக்க மெய்யியல்
அங்கதசித்திரம், அரித்தொசெனேசுவின் நண்பர்கள் புலால் மறுப்பு ஆதியனவற்றைக் கடைப்பிடிக்க வில்லையெனினும், நான்காம் நூற்ருண்டில் பைதாகரச வாதிகள் எனத் தம்மை அழைத்துக்கொண்ட பலர் இவற்றைக் கடைப்பிடித்தனர் என் பதை நிரூபிக்கிறது. மேலும், இவர்கள் இன்னமும் மெளன விதியையும் பின்பற்றினர் என ஐசோகிருத்திசுவின் மூலம் அறிகிருேம். அக்கெளசுமாத்திகள் பற்றிய உண்மை, வரலாற் றில் நன்கு உணர்த்தப்படவில்லை. ஆனல் அவர்கள் என்றும் முற்றக அழிந்து போய்விடவில்லையென்க. அவர்களது காலத் திற்கும், தயன நாட்டு அப்பொலோனியசுவுக்கு மிடையேயும் டையடோரசு, நிசிடியசு பிகுலசு என்போர் அவ்விடைக்காலத்தே, அம்மரபைக் காத்தனர் எனலாம். -
மனிதர் உண்மையில் விலங்குகளினது உறவினரே யெனப் பைதாகரசு போதித்தாரென நாம் கண்டோம். இவரது புலால் மறுப்புக்கொள்கை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டதேயொழிய, துறவு மனப்பான்மையினலோ அல் லது மன்னுயிர் நலன் பேணும் நோக்கத்தோபோ கடைப் பிடிக்கப்பட்டதல்ல என நாம் அனுமானிக்கிருேம். பொது வாக, பைதாகரசவாதிகள் புலால் மறுப்பு விதியைக் கடைப் பிடித்தனரெனினும், தேவர்களுக்குப் பலியிடப்பட்டனவற்றை அவர்கள் உண்டனர் என போபைரி தனது “ புலால் மறுப்பின் பெருமை” எனும் நூலிற் கூறியிருப்பதனுல் இது நன்கு உறுதிப்படுத்தப்படுகிறது. இன்றும் புலால் உண்ணல் கொடிய பாவமெனக் கருதும் ஆதிவாசிகள் சிலரிடையே சில சடங்கு களின்போது விலங்குகளைக் கொன்று உண்ணல் அனுமதிக்கப் படுவதைக் காண்கிருேம். இங்கு நாம் காண்பதும் இத்தகைய ஆதாரமற்றவோர் நம்பிக்கையே ; எனவே, அரித்தொசெனேசு வின் மறுப்புக்களை நாம் பெரிதாய்ப் பொருட்படுத்தவேண்டிய தில்லையென்க.
44. எமக்குக் கிடைத்துள்ள பைதாகரச விதிகளையும் உய தேசங்களையும் எவ்வாறு மதிப்பிடுவதென நாம் அறிந்து கொண்டோம். இவை இரண்டு வகையானவை; எமக்கு இவை
* விளையாட்டுவீரர்கள் (மைலோ ?) புலால் உண்ணவேண்டுமென பைதா கரசு கூறினரெனும் வரலாறென்று போபைரியினுற் பேணப்பட்டுள்ளது. பொன்ரோசுவைச் சேர்ந்த எரக்கிளைட்டசுவே இக்கதையின் கருத்தா என பேணயிசு கூறியுள்ளார். அயம்பிளிகோசுவும் ஏனையோரும் இவ்வாறு கூறி யது பைதாகரசு எனும் பெயருடைய உடற்பயிற்சி வீரரையே என விளக்கினர். நவபிளேட்டோ தரிசனவாதிகள் நான்காம் நூற்றண்டில் எற்பட்ட புனர் விளக்கக் கொள்கைகளை நீக்கி, பழைய பைதாகர மரபைப் பேண எவ்வாறு முயன்றனர் என்பதை இங்கு காண்கிருேம்.

விஞ்ஞானமும் சமயமும் 0.
இரு எழுத்தாளர் மூலமாகக் கிடைத்துள்ளன. அரித்தொசெ னேசுவிடமிருந்து பெறப்பட்டவையும் பெரும்பான்மையாக அயாம் பிளிகோசுவினற் பேணித் தரப்பட்டவையுமான சில, ஒழுக்கம் பற்றிக் கூறும் வெறும் உபதேசங்களே. இவை பைதாகரசிட மிருந்தே பெறப்பட்டனவென யாரும் கூற முற்படுவதில்லை ; இவை பைதாகரசவாதிகளின் கடைசித் தலைமுறையினரான * கணிதவியலாளர் ” தமது முன்னேடிகளிடமிருந்து அறிந்து கொண்டவையே. மற்றைய வகுப்பைச் சேர்ந்த விதிகள் அக் கெளசுமாத்தா என அழைக்கப்படுவதிலிருந்து, பழைய கொள் கைகளை விசுவாசத்தோடு பேணிய, இப்பெயருடைய பிரிவினரி டமிருந்தே இவை பெறப்பட்டிருக்க வேண்டுமென அறியலாம். பிற்காலத்து எழுத்தாளர்கள் இப்பின்னைய விதிகள் ஒழுக்க வியலுண்மையின் “ அடையாளங்கள்” எனக் கூறினர்; ஆனல் இவை உண்மையில் வெறும் ஆதாரமற்ற நம்பிக்கையின் அடிப் படையிற் பின்பற்றப்பட்ட விதிகளே என்பதை எளிதில் உணர லாம். பைதாகரசவாதிகளினது இயல்பை எடுத்துக் காட்டும் பொருட்டுச் சில உதாரணங்களைக் கீழே தருகிறேன்.
1. அவரைக்காயை விலக்குதல் வேண்டும்.
விழுந்தனவற்றை எடுக்கலாகாது. வெள்ளைச் சேவல்களைத் தொடலாகாது. உரொட்டியைப் பிய்க்கலாகாது. குறுக்குத் தடிகளைக் கடத்தலாகாது. நெருப்பை இரும்பினுற் கிளறக்கூடாது. முழு உரொட்டியிலிருந்து உண்ணலாகாது. மாலையைப் பிடுங்கலாகாது.
அளக்கும் கொத்தின்மேல் உட்காரக்கூடாது. இதயத்தை உண்ணலாகாது. நெடுஞ்சாலைகளில் நடக்கலாகாது. தூக்கணங்குருவிகளைக் கூரையிற் கூடுகட்ட விடக்கூடாது. பாத்திரத்தைத் தீயிலிருந்து அகற்றியதன் பின்னர் சாம்பரில் அதன் அடையாளம் இருக்காதவாறு அத னைக் கிளறிவிடவேண்டும். 14. வெளிச்சத்திற்கு அருகே, கண்ணுடியிற் பார்க்கக்கூடாது. 15. படுக்கை ஆடைகளிலிருந்து எழும்போது, உடலின் அடை யாளம் அவற்றில் இராதவாறு அவற்றைச் சுருட்டி வைத்தல் வேண்டும். பைதாகரசவாதத்திற்கும் பழைய ஆதாரமற்ற நம்பிக்கை களுக்குமிடையே யிருந்த நெருங்கிய தொடர்பை நிரூபிப்ப
:

Page 59
102 ஆதி கிரேக்க மெய்யியல்
தற்கு இன்னும் பல உதாரணங்களைத் தருதல் சாத்தியமே. ஆனல் மேலே தரப்பட்டவை போதுமானவை. «Llos Tsaoub 45. பைதாகரசுவின் போதனைகள் இவை மட்டுமேயெனில் விஞ்ஞானமும் மெய்யியல் வரலாற்றிலிருந்து நாம் அவரது பெயரை நீக்கி, எபிமைனிதிசு, ஒனேமகிறித்தோசு ஆகியோரைப் போன்ற, வைத்தியர்களின் வரிசையில் அவருக்கும் இடமளித்திருப்போம். ஆனல் அவ்வாறு எண்ணுவது மிகத் தவறனது. கிரேக்க நாட் டின் முக்கிய விஞ்ஞானக் கழகங்களில் ஒன்றகப் பைதாகரச கழ கம் வளர்ச்சியடைந்திருந்தது. அன்றியும் பைதாகரச விஞ் ஞானம், ஐந்தாம் நூற்றண்டின் முற்பகுதியிலேயே, அதாவது கழகத்தின் தாபகராகிய பைதாகரசுவின் காலத்திலிருந்தே தோன்றியது எனக் கருத இடமுண்டு. விஞ்ஞான ஆராய்ச் சியை, வேறு எவரையும் விட விருத்தி செய்தவர் பைதாக ரசுவே என எரக்கிளேட்டசு கூறியுள்ளார். இவர், பைதாகர் சுவை உயர்த்திக் கூறும் பொருட்டே இவ்வாறு அவரைப் போற் றினர் எனக் கருத இடமில்லை. “ எலனிசிய தார்க்கீகர்களுள் எவ்வகையிலும் எனையோரிலும் குறைந்தவரல்ல ” என எரொடோதசு பைதாகரசுவைப் பற்றிக் கூறுகிறர். அக் காலத்தே “தார்க்கீகன்’ (சோபிட்டு) என ஒருவர் அழைக்கப் படின் அவர் விஞ்ஞான அறிவுடையவர் என்பது பொருளே யன்றி, அஃது அவரை எவ்விதத்திலும் இகழ்ந்து நவில்வ தாகாது. பைதாகரசு கணிதவியலிலும், எண்களிலும் பெரி தும் ஈடுபட்டிருந்தாரென அரித்தோதில் கூறுகிறர். ஆனல், அவர் பெரிகைடிசுவின் அற்புத ஈடுபாடுகளிலிருந்து தம்மைப் பின்னர் விடுவித்துக் கொள்ளவில்லை யெனவும் அரித்தோ தில் கூறுகிறர். பைதாகரசினது இவ்விருவகை நடவடிக்கை களுக்குமிடையே யாதேனும் தொடர்பிருந்ததெனக் காட்டுதல் சாத்தியமாகுமா ?
ஓபிச களியாட்டச் சடங்குகளினதும் அத்தகைய எனைய நட வடிக்கைகளினதும் இலட்சியம், பண்பாடற்ற இத் “தூய்மை யாக்க' முறைகளின் மூலம் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுவதேயென முன்பு கண்டோம். பைதாகரசவாதத்தில் புதிய அம்சம் ஒன்று இருந்ததெனக் கூறுவதாயின், இப் பழைய நடவடிக்கைகளை எற்றபோதிலும், “ தூய்மையாக்கம் ” பற்றிய ஆழ்ந்த கருத்தொன்றைத் தரப் பைதாகரசவாதிகள் முயன்றனர் என்பதே அஃதெனலாம். உடலைத் தூய்மை யாக்குவதற்கு எவ்வாறு மருந்துகளை உபயோகித்தனரோ அவ் வாறே ஆன்மாவிலிருந்து மாசுகளை அகற்றுதற்குப் பைதாகரச
k Herod. iv. 95.

விஞ்ஞானமும் சமயமும் 103
வாதிகள் இசையை உபயோகித்தனர் என அரித்தொசெ னேசு கூறினர். கொறிபாந்திசுகளினது களியாட்டங்களிலும், ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதற்கு இத்தகைய முறைகள் கையாளப்பட்டன. மேலும், பைதாகரசவாதிகள் இசையியலில் ஆர்வமுடையோராயிருந்தமைக்கும் இது விளக்கமாயமையும். ஆனல் இவ்விடயம் இன்னும் ஆழமாகக் கவனிக்கத்தக்கது. எரக்கிளைட்டசு கூறுவது உண்மையானல், அரித்தோதில் தமது ஒழுக்கவியலிற் குறிப்பிட்டிருக்கும், அறிவுவாழ்க்கை, ஆக்க வாழ்க்கை, போகவாழ்க்கை யென்னும் பிரிவை முதலில் உண்டாக்கியவர் பைதாகரசுவே எனல் வேண்டும். இக் கொள்கை பின்வருமாறு : நாம் எல்லோரும் இவ்வுல கிற்கு வந்துள்ள அந்நியர்களே. எமது ஆன்மாக்கள் எமது உடல் எனும் சமாதியில் அடைபட்டிருக்கின்றன. ஆயினும் தற்கொலை மூலம் நாம் எம்மை விடுவித்துக்கொள்ள முயல லாகாது ; ஏனெனில் நாம் எல்லோரும் எமது பாதுகாவல னகிய இறைவனின் அடிமைகள். அவன் ஆணையின்றி எம்மை விடுவித்துக்கொள்ள எமக்கு உரிமையில்லை. ஒலிம்பிய விளை யாட்டுப் போட்டிகளுக்கு மூன்று வகையான மனிதர்கள் வரு வதைப் போல இவ்வுலகிலும் மூவகை மனிதர்கள் வாழ் கின்றனர். ஒலிம்பிய விளையாட்டுக்களுக்கு வருவோரில் மிகத் தாழ்ந்தவர்கள் அங்கு பொருட்களை வாங்கவும் விற்கவும் வருப வர்களே. அவர்களை விடச் சிறிது உயர்ந்தோர் போட்டிகளிற் பங்குபற்ற வருவோர். அங்கு போட்டிகளைக் காண வருவோரே இவர்கள் யாவரிலும் உயர்ந்தவர்கள். எனவே தூய்மையாக்க முறைகள் யாவற்றிலும் சிறந்தது விஞ்ஞானமே. விஞ்ஞானத் தில் முற்ருக ஈடுபடுபவனே உண்மையான மெய்யியல் ஞானி யாவான். * பிறவிச் சக்கர ”த்திலிருந்து தன்னைச் செம்மை யாக விடுவித்துக் கொள்பவன் அவனே. பைதாகரசு தனது கொள்கையை, இத்தகைய வார்த்தைகளில் வெளியிட்டார் எனக் கூறுவது பொருந்தாது என்பது உண்மையே. ஆனல் இக் கருத்துக்கள் யாவும் பைதாகரசினுடையனவே என்பதில் ஐய மில்லை. அன்றியும் இதுபோன்ற வழியொன்றினலன்றி வேறு எவ்வகையிலும், பைதாகரசெனும் விஞ்ஞானிக்கும் பைதாகரசு எனும் சமய போதகனுக்குமிடையேயுள்ள வேறுபாட்டை அகற்ற
பீடோவில் (62b) இதுவே பைதாகரசினது கொள்கையெனப் பிளேட்டோ கூறுகிறர். பீடோவில் இதைக்குறிப்பிடும் பகுதி இக்கருத்து பிலோலெசு வினுடையது மட்டுமல்லவெனவும் அவருக்கு முந்தியவோர் காலத்திலிருந்து இது வழங்கியதெனவும் தெளிவாக உணர்த்துகிறது.

Page 60
எண்கணிதம்
04 ஆதி கிரேக்க மெய்யியல்
முடியாதென்க. ஆனல், இவரது சீடர்களிற் பலர், குறைந்த தரமான தூய்மையாக்க முறைகளைப் பின்பற்றுவதோடு திருப்தி யடைந்திருந்தால், ஆச்சரியப்படுவதற்கில்லை. அக்கெளசுமாத்தி கள் போன்ற ஒரு பிரிவினர் தோன்றியதற்கு இதுவே விளக்க மாயிருத்தல் வேண்டும். ஆனல் இவரது சீடர்களிற் சிலர் உயர்ந்தவழியைப் பின்பற்றியிருக்கலாம். ஆகவே நாம் ஆராய வேண்டியது யாதெனில், பிற்காலத்தில் பைதாகரச விஞ்ஞா னம் என வழங்கிய கொள்கைகளில் எவையெவை பைதாகரசி னல் யாக்கப்பட்டவை என்பதே.
46. அக்கால வணிகர்களது தேவைக்கும் மேலாக எண் கணிதவியலை முதலில் விருத்தி செய்தவர் பைதாகரசே என அரித்தொசெனேசு எண்கணிதம் பற்றிய நூலிற் கூறியுள்ளார். நாம் பிற வழிகள் மூலம் அறிந்துள்ளனவும் அவரது கூற்றை உறுதிப்படுத்துகின்றன வெனலாம். கி.மு. ஐந்தாம் நூற்றண் டின் இறுதியளவில் இத்தகைய துறைகளிற் பலர் ஆர்வம் செலுத்துவதையும், வேறு நோக்கங்களெதுவுமில்லாமலே, கணி தவியல் போன்றவற்றைப் பலர் படிப்பதையும் காண்கிறேம் ; இப்புதிய ஆர்வம் குறிப்பிட்ட வொரு கழகத்தினரின் நட வடிக்கைகளால் மட்டும் தூண்டப்பட்டது எனக் கூறுதல் பொருந் தாது ; அக்காலத்து வாழ்ந்த அறிஞர் ஒருவரது செல்வாக் கின் காரணமாகவே இத்தகைய புத்துணர்ச்சி பரவுதல் சாத்திய மாகியிருக்க முடியும். பைதாகரசுவை விட வேறு யாரையும் நாம் இக்காலத்தே இத்தகைய செல்வாக்குடையவராக இருந்த தாகக் குறிப்பிடமுடியாது. ஆயினும் அவர் ஒன்றையும் எழுதி வைக்கவில்லை யாதலால், அவரது கொள்கைகளையும் அவருக்கு அடுத்த ஒரிரு தலைமுறைகளில் வாழ்ந்த அவரது சீடர்களது கொள்கைகளையும் பிரித்தறியும் வழியெதுவும் இல்லை. பைதா கரச கொள்கைகள் எவ்வளவுக்கு அதிக விருத்தியடையாதன வாகக் காணப்படுகின்றனவோ அவ்வளவுக்கு அவை பைதா கரசுவின் கொள்கைகளே யெனக் கருத இடமுண்டென மட்டும் நாம் கூறலாம். மேலும், இக்கொள்கைகளுள், பைதாகரசு வின் காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பாக வாழ்ந்
• See Doring in Arch. v. pp. 505 sqq. estarš692anclavesår 111 ஆது பகுதியிலும், “ மூவகை வாழ்க்கைகள்" பற்றிய இக்கொள்கை குறிப் பிடப்பட்டிருக்கிறதுபோல் தோன்றுகிறது. பிளெயசுவிலிருந்த பைதாகரச கழகத்தில் இக்கொள்கை கற்பிக்கப்பட்டதுபோலும் ; எனெனில் பைதாகரசு வுக்கும் பிளெயசுவின் கொடுங்கோல் மன்னனுக்குமிடையே நடைபெற்ற உரை யாடலின்போது, பைதாகரசு இக்கொள்கையை வருணிப்பதாக எரக்கிளைட்டசு சித்திரித்துள்ளார். பிளேட்டோவும், பீடோவில், சோக்கிரதரை இவ்வாதத் தைக் கையாள வைத்துள்ளார்.

விஞ்ஞானமும் சமயமும் 105
தோரது காலத்தில் நிலவிய கொள்கைகளோடு அதிக தொடர் புடையனபோற் காணப்படுவனவற்றையும், பைதாகரசுவின் கொள்கைகளே என நாம் கருதலாம். அன்றியும், பிற்காலத்துப் பைதாகரசவாதிகள், தமது காலத்திற்கொவ்வாத கொள் கைகள் சிலவற்றைப் போதித்தனர் எனக் காணும் போதும், அக்கொள்கைகள் பைதாகரசுவின் கொள்கைகளே யென நாம் அனுமானிக்கலாம்; எனெனில், இக்கொள்கைகள் எனும் கருத் தினலேயே, அவை தமது காலத்திற்கு ஒவ்வாதனவாக ஆகி விட்டபின்னரும் அவர்கள் அவற்றைத் தழுவியிருந்திருக்க வேண் டும். இக்கொள்கை முறை பற்றிப் பின்னர் கூறுவதே பொருத் தமாயினும், இக்கருத்துக்களிற் சிலவற்றை இங்கேயே குறிப்பிடு தல் வேண்டும். முந்திய பைதாகரசவாதத்தையும் அதன் பிந்திய வடிவத்தையும் தனித்தனியாகத் திட்டவட்டமாகப் பிரித்துக் காட்ட முடியாதெனினும் அவ்வாறு அவற்றைப் பிரித்துணராது, கிரேக்க சிந்தனை வரலாற்றில், பைதாகரசவாதத்திற்கு அளிக்க வேண்டிய இடம் பற்றிச் சரிவர மதிப்பிட முடியாது.
47. ஆக்கைத்தாசுவின் மறுக்கமுடியாத ஆதாரத்தின் பேரில், இயூறைத்தோசு கூறியுள்ளது, பைதாகரசவாதம் பற்றி எமக் குக் கிடைத்துள்ள மிக முக்கியமான கூற்றுக்களிலொன்றகும். இயூறைத்தோசு வென்பார் பிலோலெசுவின் சீடர்களிலொரு வராவார். அரித்தொசெனேசு, கடைசித் தலைமுறையைச் சேர்ந்த பைதாகரசவாதிகளின் ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிடு கையில், பிலோலெசுவின் பெயரோடு இவரையும் குறிப்பிட் டுள்ளார். ஆகவே பைதாகரசவாதம் நன்கு விருத்தியடைந்தி ருந்த காலமான ஐந்தாம் நூற்ருண்டைச் சேர்ந்தவரான இவர் தற்போக்கான உற்சாகத்தாற் பீடிக்கப்பட்டவர் எனக் கொள்ள லாகாது. உண்மையில், அக்காலத்தில் வாழ்ந்த பைதாகரசவா திகளுள் முதன்மையானேரில் இவரும் ஒருவர். குதிரைகள், மனிதர்கள் போன்ற பல்வகைப் பொருட்களுக்குமுரிய எண் களை இவர் கூறினரெனவும், பரற்கற்களைக் குறிப்பிட்ட வடிவங் களில் அடுக்கி வைப்பதன் மூலம் அவ்வெண்களின் பொருத்த முடைமையை நிரூபித்தா ரெனவும் கூறப்படுகிறது. அன்றியும் முக்கோணம், சதுரம்போன்ற வடிவங்களுக்குள் எண்களைப் புகுத்துவோரது முறையோடு, அரித்தோதில் இவரது முறையை ஒப்பிடுகின்றர்.
1. அயாம்பிளிகோசுவின் ஆாலில், பிலோலெசு, இறந்து பல ஆண்டுகள் கழிந்ததின் பின்னர், இயூறைத்தோசு அவரது குரலை, அவரைப் புதைத்த இடத்திற் கேட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதைவிட நாம் குறிப்பிட்ட அரித் தொசெனேசுலின் பகுதியிலும் இயூறைத்தோசுவின் பெயர் பிலோலெசுலின் பெயருக்குப் பின்னர் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
aliquids air

Page 61
06 ஆதி கிரேக்க மெய்யியல்
நெடுங்கணக்குக் குறியீடு, கோடுகளின் மூலம் செய்யப்படும் இயூக்கிளிட்டுவின் குறியீடு என்பனவற்றைவிட, தனியான எண் குறியீட்டுமுறை ஒன்றும் இக்காலத்தே பயன்பட்டது என்பது, இக்கூற்றுக்களால், 'குறிப்பாக, இறுதியாகத் தரப்பட்ட அரித் தோதிலினது கூற்றினற் பெறப்படுகிறது. சூனியம், இக் காலத்தே இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை யாதலால், நெடுங்கணக்குக் குறியீட்டை உபயோகிப்பதில் வசதிக் குறைவு கள் காணப்பட்டன. விகிதமுருக் கணியங்களின் கண்டுபிடிப்பால் எற்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டுப் பயன்படுத்தப் பட்ட இயூக்கிளிடினது கோட்டுக்குறியீட்டு முறை, பிற்காலத்துக் குரியது. இலகுவாக இனங்கண்டு கொள்ளக் கூடிய சமசீருள்ள வடிவங்களாக அமைக்கப்பட்ட குற்றுக்களின் மூலமாகவே, எண் கள் முதலிற் குறிக்கப்பட்டனவெனத் தோன்றுகிறது. தாயக் கருவிகளிற் பொறிக்கப்படும் குற்று வடிவங்களிலிருந்து இவ் வடிவங்கள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டுமென ஒருவாறு ஊகிக்கலாம். மேலும், எண்களைக் குறிப்பதற்கு முற்காலத்தில் உபயோகிக்கப்பட்ட முறை இதுவே என்பதற்குத் தாயக்கருவிக ளில் இவ்வடையாளங்கள் காணப்படுவதே மிகச் சிறந்த நிரூ பணமெனலாம். ஏனெனில் மிகமிகப் பழைய காலத்திலி ருந்து உபயோகிக்கப்படுவனவான இக்கருவிகள், எண்களை இவ் வடிவங்களில் அமைப்பதன் மூலமே பொருட்களைக் கணக்கிடக் கூடிய நிலையில் மனிதர்கள் இருந்த காலத்திலும், உபயோ கத்தில் இருந்தனவெனலாம். அக்கால மனிதர்கள், தாம் இவ்வாறு அமைத்த புதிய வடிவங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வோர் புதிய அளவையாகக் கருதினர்.
எனவே, “முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களுள் எண் களைப் புகுத்தியவர்கள் ” எனும் அரித்தோதிலின் கூற்றை எம் மால் முதலில் விளங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. எண்கணி தத்தை, கேத்திர கணிதத்தோடு சேர்க்காது, ஒரு தனியான
1. கிரேக்க கணித நூல்களிற் காணப்படும் குறியீட்டுமுறை கி. மு. 4 ஆம் நூற்றண்டிற்கு முன்னரே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனக் கொள்ள ஆதாரங்களுள. அராபியரது எண்களென அழைக்கப்படுபவை, இந்தியராற் கண்டு பிடிக்கப்பட்டவை யெனப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. "இந்திய ” எனப்பொருள்படும் “ இந்தி ” எனும் சொல்லிற்கும் “ கணிதம் சார்ந்த * எனப் பொருள்படும் “ இந்தாசி ” எனும் அராபிய சொல்லிற்குமிடையே எற்பட்ட மயக்கமே இவ்வாறு கொள்ளப்படுவதற்குக் காரணம் என்பது Góllandšais LJUL'-(5&š8pg. (M. Carra de Voux, Scientia, xxi. pp. 273 sqq. ). நவபைதாகரசவாதிகளாற் கண்டு பிடிக்கப்பட்ட இவ்வெண்முறை நவப்பிளேட்டோ தரிசனவாதிகளால் பராசீகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட தெனவும் அங் கிருந்தே இந்தியாவுக்கும் பின்னர் அரேபியாவுக்கும் பரவிய தெனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

விஞ்ஞானமும் சமயமும் 107
விஞ்ஞானமாக ஆராயும் கலைக்குப் புத்துயிரளித்தவர்களும், தம்மைப் பைதாகரசவாதிகள் என அழைத்துக்கொண்டவர் களுமான பிற்காலச் சிந்தனையாளர் சிலர் பற்றி அறிந்ததன் பின்னரே, அரித்தோதிலின் மேற்கூறிய கூற்றுக்கு எம்மாற் பொருள் காணமுடிகிறது. இவர்கள், இயூக்கிளிட்டினது கோட் டுக் குறியீட்டு முறையை விலக்கியதோடு, தாம் பயன்படுத்திய நெடுங்கணக்குக் குறியீட்டுமுறையும், எண்களின் உண்மையான இயல்பை உணர்த்துதற்கு உகந்தனவல்ல வெனக் கருதினர். கெரேசாவைச் சேர்ந்த நிக்கொமாக்கோசு, எண்களைக் குறிப் பதற்கு எழுத்துக்களை உபயோகிக்கும் முறை வெறும் வழக்கி ஞல் எற்பட்டதே யொழியத் தகுதிகாரணமாக எற்பட்டதல்ல வெனக் கூறினர். பகாவெண்களை வரிசையமைப்புக்களினலும், வடிவ எண்களை ஒருதளவுருவங்களாலும், திண்மவெண்களைக் கூம்பகம் போன்ற வடிவங்களாலும் குறியீடு செய்வதே இயல் பான முறையாயமைந்திருக்கும். இத்தகைய முறையைப் பின் பற்றுவதன்மூலம் கீழே தரப்பட்டுள்ளவை போன்ற வடிவங் கள் உண்டாகின்றன :
O. O, O, O, O O, O, COO
O O.O. O, O, O, O, O,
O. O. O, O, OLOLO,
O, O, O, O, O,
இம்முறையில் எத்தகைய புதுமையுமில்லை யென்பது வெளிப் படை. அமைப்புக்களில் அலகுகளாகப் பயன்படுத்தப் பட்டுள்ள * a ’ எனும் எழுத்து, வழக்கிலிருந்த குறியீட்டு முறையி லிருந்து பெறப்பட்டதேயென்பது உண்மையாயினும், இங்கு நாம் காண்பது உண்மையில் விஞ்ஞானத்தின் ஆரம்ப காலத் தைச் சேர்ந்த ஒரு முறையே யென்றறிக.
48. அரித்தோதில் இம்முறை பற்றியே குறிப்பிடுகிருரென் ° பது வெளிப்படை, மனித இனத்திற்குப் பைதாகரசு உணர்த் செவ்வகவுரு தியனவற்றுள் மிகச் சிறப்புடையது அவர் கண்டுபிடித்த “நாற் எண்கள் கணம்’ எனும் வடிவமே-பைதாகரசவாதிகள், சத்தியங்கள் செய்வதற்கும் இவ்வடிவத்தையே சாட்சியாகக் கொண்டனர் என்பதிலிருந்து, இதனை அவர்கள் எவ்வாறு மதித்தனர் என் பது புலனகும்-எனக் கூறப்படுவதனலும் இது உறுதிப் படுத்தப்படுகிறது. அத்துடன் இக்கொள்கை முற்றிலும் பைதா கரசுவினதே எனக் கொள்வதற்குப் பியூசிப்போசுவினது கூற்றும் ஆதாரமாகவுளது. பிற்காலத்தில் பலவகையான “நாற்கணங்
ን பிலோலெசுவின் கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு பியூசிப்போசு பைதாகரச எண்கள் பற்றிய நூலொன்றை எழுதினர். இதிற் பெரும் பகுதி Theologumena Arithmetica எனும் நூலில் இன்னமும் பேணப்பட்டிருக்கிறது.

Page 62
08 ஆதி கிரேக்க மெய்யியல்
கள்" வழக்கிலிருந்தனவெனினும், பைதாகரசுவினல் ஆக்கப் பட்ட முதல் வடிவம் “ தசாங்க நாற்கணம்” என்பதே. அது கீழேயுள்ளது போன்றவோர் உருவமாகும்.
* பத்து ’ எனும் எண்ணை, நாலாலான முக்கோணமொன் றின் மூலம், இவ்வடிவம் காட்டிற்று. ஒரேபார்வையில் 1+2+ 3+4=10 என்பதை இவ்வடிவம் உணர்த்தியது. தசாங்கத் திற் பைதாகரசு கண்ட வேறு பல அம்சங்கள் பற்றியும் பியூசிப் போசு கூறுகிறர். உதாரணமாக, தொகுப்பெண்களையும், பகாவெண்களையும் சமமான எண்ணிக்கையிற் பெற்றுள்ள முதல் எண் பத்தே. . இவற்றுள் எவையெவை பைதாகரசு வினுடைய கருத்துக்கள் என்பது பற்றி நாம் முடிவாகக் கூறமுடியாது ; ஆனல் “ எலனிசியர்களும், மிலேச்சர்களும், பத்துவரைக்கும் எண்ணியதன் பின்னர் மீண்டும் புதிதாகத் தொடங்கி எண்ணும் முறையைக் கைக்கொண்டதற்குக் காரணம் அதுவே “ இயற்கையான முறை ” என்பதே எனும் கருத்து பைதாகரசுவினதே யெனக் கொள்ளப் போதிய நியாயமுண் டெனலாம்.
தொடர்ந்த முழுவெண்களின் கூட்டுத்தொகைகளைச் சித்திர வடிவிற் காட்டும் வண்ணம், இந்நாற்கணவடிவங்கள் வரைய றையின்றி மேலும் மேலும் அதிக அங்கங்களுடையனவாக அமைக்கப்படலாம் என்பது வெளிப்படை. அதற்கேற்ப, இவ் வெண்தொடர்களின் தொகைகள் “முக்கோணவெண்” களென அழைக்கப்படுகின்றன.
இதே காரணங்களினல், தொடர்ந்த ஒற்றையெண்களின் தொகைகள் " சதுரவெண் "களென அழைக்கப்படுகின்றன; தொடர்ந்த இரட்டை யெண்களின் தொகைகளான எண்கள் * செவ்வகவுருவெண் ”கள் என அழைக்கப்படுகின்றன. மூலை மட்டங்கள் போன்ற அமைப்புக்களில் ஒற்றை எண்கள் சேர்க்கப் படும்போது உண்டாகும் வடிவம் எப்போதும் ஓர் சதுரமாகவே யிருக்கும்; இவ்வாறு இரட்டையெண்கள் சேர்க்கப்படும் போது ஏற்படும் அமைப்பு எப்போதும் நீள்சதுரவடிவமுடைய தாகவே பிருக்கும். இஃது எவ்வாறெனக் கீழே படத்திற்காண்க:

விஞ்ஞானமும் சமயமும் 109
சதுரவெண்கள் செவ்வகவுருவெண்கள்
o o O
--- و مسموس-سسسسسسس
O to O O O O O
Mmmm
o o o
ஆகவே, தொடர்களின் தொகைகள் பற்றிய ஆராய்ச்சியை நடத்தியவர் பைதாகரசுவே என நாம் கொள்ளப்போதிய நியாயமுண்டென்பது தெளிவு ; ஆனல் செவ்வகவுருவுக்கு அப்பாலும் சென்று, கூம்பக வடிவ எண்கள், கனவடிவ எண்கள் என்பனவற்றைப் பற்றியும் அவர் ஆராய்ந்தாரோ அல்லவோ என்பது பற்றி நாம் முடிவாக எதுவும் கூறமுடி யாது.
49. எண்களை இவ்வாறு குறியிடும் முறையிலிருந்து கேத் கேத்திர
திர கணிதவியல்புடைய வினக்கள் எழுதல் இயல்பே என்பது கணிதமும் இலகுவாக உணரப்படும். பரற்கற்களைக் குறிக்கும் குற்றுக்கள் இசையியலும் வழக்கமாக “ எல்லைக்கற்கள் ” என அழைக்கப்படுகின்றன; இவற்றினற் காட்டப்படும் பரப்பு “ புலம் ” என அழைக்கப்படும். இது அத்தனை வளர்ச்சியடையாதவோர் முறையாகக் காணப் படுகின்றதாதலால், பைதாகரசுவினலேயே இம்முறை ஆரம் பிக்கப்பட்டதெனலாம். எண்களைப் போலவே “ புலங்க "ளையும் ஒப்பிடலாம் எனும் எண்ணம் பைதாகரசுவுக்குத் தோன்றி யிருக்கவேண்டும். அத்துடன் எகிப்தில், நடைமுறையில் இது பின்பற்றப்பட்டபோது கையாளப்பட்ட வழிகளையும் அவர் அறிந் திருந்திருக்கலாம். ஆனலும் பைதாகரசு அங்கு பின்பற்றப்பட்ட முறைகளைத் திருப்திகரமானவையாகக் கருதியிருக்க முடியாது என்பது உறுதி. இவ்விடயம்பற்றி அவர் எவ்வாறு சிந்தித் திருக்க வேண்டும் என்பதையும் நாம் வரலாற்றின் உதவி கொண்டு ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்கலாம். 3, 4, 5 எனும் அளவுகளைக் கொண்டு அமைக்கப்படும் முக்கோணங் களினல் செங்கோணங்களை அமைக்கலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். எகிப்து போன்ற கிழக்கு நாடுகளில் இம்முறை எற்கெனவே பயன்படுத்தப்பட்டதெனவும், எலனிசிய ரிடையே தேலிசுவினலாவது இம்முறை புகுத்தப்பட்டிருக்க
. " நாலு " என்னும் எண்ணே முதற்கருதப்பட்ட கூம்பகவெண்ணெனப் பியூசிப்போசு கூறுகிறர். ஆனல் அவர் இக்கருத்தைப் பிலோலெசுவிடமிருந்தே அறிந்து கொண்டாராதலால், இது பைதாகரசுவினது கருத்து என உறுதியாகக் கூறமுடியாது.

Page 63
பொதுவள விண்மை
10 ஆதி கிரேக்க மெய்யியல்
வேண்டுமெனவும் நாம் முன்பே கண்டோம் (பக். 20). பிற்கால எழுத்தாளர்கள், இவ்வாறு அமைக்கப்படும் முக்கோணத்தைப் * பைதாகரச முக்கோணம் ” என அழைத்தனர். செங்கோண முக்கோணங்களில், செம்பக்கத்தின் சதுரம், எனைய இருபக்கங் களின் சதுரங்களுக்கும் சமமானது என்பதே, பைதாகரசுவின் எடுப்புக்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பைதாகரச முக்கோணம் எனப்படுவது, இவ்விதியின் மறுதலையை ஒரு தனிப்பட்ட வகையிற் பிரயோகிப்பதனல் அமைக்கப்படுவதே. செம்பக்கம் எனப் பொருள்படும் கிரேக்க சொல்லே, மேற் கூறிய விதிக்கும், முக்கோணவமைப்புக்குமிடையேயுள்ள நெருங் கிய தொடர்பை நன்கு உறுதிப்படுத்துகிறதெனலாம். இக்கிரேக்க சொல்லின் நேரடியான பொருள் " மேலே, எதிராக இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும் நாண் ” என்பதேயாகும். எகிப்திய ஆப்பெ டொனட்டுக்கள் பயன்படுத்திய கயிறே இந்நாண் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இவ்வெடுப்பு உண்மையில் பைதாகரசுவின லேயே கண்டுபிடிக்கப்பட்டது என எண்ண இடமுண்டு. ஆனல், இதுபற்றி உறுதியாக நாம் எதுவும் கூறமுடியாதென்பதும், இவ்வெடுப்பை நிரூபிக்க இயூக்கிளிட்டுத் தரும் வாதம் இவருடையதல்ல வென்பதும் உண்மையே.
50. ஆனல் இவை யாவற்றுக்கும் பின்னர் பைதாகரசு, பெரிய ஏமாற்றம் ஒன்றை அடையவேண்டியிருந்தது. சதுர மொன்றினது மூலை விட்டத்திலுள்ள சதுரம், அதனது பக்கத்தி லுள்ள சதுரத்தைப் போலவே இருமடங்கு அளவானதாய் இருக்கவேண்டுமென்பது, பைதாகரசுவின் விதியிலிருந்து நேரடி யாகப் பெறப்படுகிறதாதலால், கணிதரீதியாகவும், இதனை நிரூ பித்துக் காட்டக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஆனல் உண் மையில், சமமான இருவர்க்க எண்களாகப் பிரிக்கப்படக் கூடிய வர்க்க எண் எதுவும் இல்லையாதலால், இப்பிரச்சினை தீர்க்க முடியாததாய் உளது. ஆகவே, சதுரத்தின் மூலை விட்டத் திற்கும், பக்கத்திற்குமிடையே உள்ள பொதுவளவின்மையைக் கண்டு பிடித்தவர் பைதாகரசுவே என்பது உண்மையாயிருக் கலாம். அன்றியும், சதுரத்தினது பக்கமும் மூலை விட்டமும் பொதுவளவுடையனவெனின், ஒற்றை எண்ணும், இரட்டை எண்ணும் சமமானவை எனக் கூற வேண்டியதாகும் என அரித்தோதிலிணற் குறிப்பிடப்படும் வாதமும், பைதாகரசு வின தைப் போலத் தோன்றுகிறது என்பது உண்மையே. அஃது எவ்வாருயினும், இவ்விடயம் பற்றி மேலும் ஆராய்வதில், பைதாகரசு அதிக அக்கறை காட்டவில்லை என்பது தெளிவு. இரண்டின் வர்க்க மூலமும், ஓர் விதிதமுரு மூலம் என்பதை
1- See Proclus's commentary on Euclid i. 47.

விஞ்ஞானமும் சமயமும் I
எதாவது ஒரு வழியில் இவர் அறிந்து கொண்டிருக்கலாம் ; ஆனல் விகிதமுருவெண்கள் பற்றிய பூரண கொள்கையொன்றை அமைத்த பெருமை உண்மையில் பிளேட்டோவின் நண்பர்க ளான தியொடோரசு, தியாய்தித்தோசு என்போரையே சேரும் என்பது நாம் அறிந்ததே. அதுவரை, சதுரத்தினது மூலை விட்டத்திற்கும் பக்கத்திற்குமிடையே யுள்ள பொதுவளவின்மை பற்றிய இப்பிரச்சினை “தீர்க்கப்படாதவோர் புறனடை” யாகவே யிருந்தது. மெற்ருபொந்தியோனைச் சேர்ந்த இப்பாசோசு வென் பான், இதைப்பற்றி வெளியே கூறிய குற்றத்திற்காகக் கடலில மிழ்த்தப்பட்டுக் கொல்லப்பட்டானெனவும் எமக்குக் கிடைத்த வரலாறு கூறுகிறது.?
51. இயூக்கிளிட்டினது நூல்களில், முதலுள்ளனவற்றை விகிதசமமும் ஆதி பைதாகரசவாதிகளுடையன வெனக் கூறலாமெனினும், இசைவும் அவருடைய கணித முறையை இவர்களினதெனக் கூறமுடியா தென்பது மேலே இறுதியாகக் கூறியனவற்றிலிருந்து தெளி வாகியிருக்கும். அலகுகளேயன்றிக் கோடுகளை இக்கணிதமுறை பயன்படுத்தியதாதலால், விகிதமுறுமெண்களின் சமன்பாடுக ளாகக் காட்டப்பட முடியாத தொடர்புகளுக்கும் இம்முறை பிர யோகிக்கப்படலாம். இதனுற்றன் போலும், இயூக்கிளிட்டினது நூலில் கேத்திரகணிதத்திற்குப் பிறகே எண்கணிதம் பற்றிக் கூறப்படுகிறது. இதே காரணத்திஞற்றன் விகிதசமம் பற்றிய கொள்கையையும் பைதாகரசுவினற் கண்டுபிடிக்கப்பட்ட தெனக் கூறமுடியாதிருக்கிறது. அது உண்மையில் இயூட்ொக்சோசுவினது கொள்கையே. ஆனல் ஆதிபைதாகரசவாதிகளும் சமன்பாட்டுக் கொள்கையை ஓரளவுக்கு ஆராய்ந்தனர் என்றே கூறவேண் டும். விகிதசமன்கள் பற்றிப் பைதாகரசவாதிகள் கொண்டிருந்த கொள்கைகளில் முக்கியமானதான இசைவுபற்றிய கொள்கை பைதாகரசுவின் கண்டுபிடிப்பான அட்டசுரத்தோடு தொடர் புடையதாகக் காணப்படுகிறதாதலால், விகிதசமன்கள் பற்றி ஆதிபைதாகரசவாதிகள் அல்லது பைதாகரசாவது ஆராய்வுகள் நடத்தினர் என நாம் நம்பலாம். 12 : 8 : 6 எனும் இசை விகிதத்தை எடுத்துக் கொண்டோமானல் 12 : 6 என்பது எட் டாவது சுரம் எனவும் 12 : 8 என்பது ஐந்தாவது சுரம் எனவும் 8 : 6 என்பது நாலாவது சுரம் எனவும் அறிகிறேம். இதனை உணர்வோர் இவ்விடைவெளிகளைக் கண்டுபிடித்தது பைதாகர சுவே என்பதைச் சந்தேகிக்க நியாயமில்லை. இவர் இவ்விசை
1. Plato., Theaet. 147 d 3 sqq. * அயாம்பிளிகோசுவிடமிருந்தே இவ்வரலாறு எமக்குக் கிடைத்திருக்கி
றது. இதற்குப் பிந்தியது போற் காணப்படும் வேறேர் வரலாற்றைப் பின்னர் காண்போம் (பிரிவு 148).

Page 64
பொருட்கள் எண்கனே யெனல்
2 ஆதி கிரேக்க மெய்யியல்
விடைவெளிகளை முதலில் ஒர் பட்டடையிலேயே அவதானித்தன ரெனவும், பின்னர் அவற்றுக்குக் காரணமான சுத்தியல்களை அல்லது அவற்றுக்குச் சமமான நிறைகளைச் சம அளவுடையன வான நூல்களிற் கட்டிப் பரிசோதனை செய்தனரெனவும் வழங் கும் கதைகள் யாவும் உண்மையில் அபத்தமான கற்பனைகளே; இவை எவ்வாறு உண்டாயினவெனக் காரணங்காண முனைவதும் நேரத்தை வீணுக்குவதாகும். ஆனல் எமது ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, இவை இவ்வளவு அபத்தமானவையாய் இருப் பதே இவற்றில் நாம் காணக் கூடிய பெரும் சிறப்பாகும். ஏனெனில், இத்தகைய கதைகளை, எந்தக் கிரேக்க கணிதவிய லாளனும் புனைந்திருக்க மாட்டான் என்பதும், பைதாகரசுவே இம்முக்கிய கண்டுபிடிப்பின் கருத்தாவெனக் கூறிய வரலாறு ஒன்று அக்காலத்தே மக்களிடையே வழங்கியது என்பதும் இக் கதைகளின் தன்மையினுற் றெளிவாகின்றன. ஆனல், ஒத்திசை களை, ஒற்றைநாண்கருவியில் அவற்றுக்கிணையான அளவுகளைக் காண்பதன் மூலம், பைதாகரசு கண்டுபிடித்தாரென்பது முற்றி லும் நம்பத்தகுந்ததே. இது ஒலியியலோடும் பொருந்துவதே யென்க.
52. இக்கருத்துக்களே, பொருட்கள் யாவும் எண்களே எனப் பைதாகரசு கூறியதற்குக் காரணமாயிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இவற்றுக்குச் சிறிது பிந்திய காலத்தே வாழ்ந்த பைதாகரசவாதிகள் இவ்வெண்கள் கேத்திரகணித உருவங்களே யெனக் கூறினர்; ஆனல் “ எண்கள் ” எனும் பெயர் கையாளப்பட்டமையையும், இயூறைத்தோசு கையாண்ட முறையையும் நோக்கும்போது, இக்கொள்கை முதலில் இப் பொருளிற் கருதப்படவில்லை என்பது புலனுகிறது. பைதாகரசு வின் சிந்தனை பின்வருமாறே செயற்பட்டிருக்கவேண்டுமென நாம் கருதலாம். இசையொலிகளை எண்களாகக் கருதலா மெனின், எனைய பொருள்களை என் அவ்வாறு கருதக் கூடாது? பொருள்களில் எண்களுக்கு ஒப்பான இயல்புகள் பல இருப்பதைக் காண்கிறேம். நல்வாய்ப்பிருந்தால், அட்டசுரம் கண்டுபிடிக்கப்பட்டதுபோல, பரிசோதனை யொன்றின் மூலம் பொருள்களின் உண்மையான “ எண் இயல்பு ”ம் எமக்குப் புலப்படலாம். நவபைதாகரச எழுத்தாளர்கள், பிறவிடயங்களில் தாம் பின்பற்றிய வழியைத் தொடர்ந்து, தமது கழக்கத்தின் மிகப் பழைய கருத்துக்களைத் தழுவி, தமது கற்பனைக்கேற்ற வாறெல்லாம் பொருள்களுக்கும் எண்களுக்குமிடையே பல்வேறு வகையான ஒற்றுமைகளையும் காண முனைந்திருக்கின்றனர்; ஆனல் அதிட்டவசமாக, அவர்களது முயற்சிகளையெல்லாம் கவ னிக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கில்லை. ஒரு சில பொருள்களை

விஞ்ஞானமும் சமயமும் 13
மட்டுமே பைதாகரசு எண்கள் மூலம் விளக்கினர் என அரித் தோதில் தெளிவாகக் கூறியுள்ளார். ஆகவே, பைதாகரசு இது பற்றிய பூரணமான கொள்கையெதனையும் விட்டுச் செல்ல வில்லை யென்பதும், ஐந்தாம் நூற்ருண்டைச் சேர்ந்த பைதாகரச வாதிகளும் இக்கொள்கையை மேலும் விருத்தி செய்வதில் எத்தகைய ஆர்வமும் காட்டவில்லையென்பதும் இதிலிருந்து பெறப்படுகின்றன. ஆனல், “ தக்கசமயம் ” என்பது எழு என வும், நீதி நாலு எனவும், திருமணம் மூன்று எனவும் இவர்கள் கருதினர் என அரித்தோதில் கூறியுள்ளார். இவையும் இவை போன்ற சிலவும் பைதாகரசுவினல் அல்லது அவருக்கடுத்த தலைமுறையில் வாழ்ந்த அவரது சீடர்களினற் கூறப்பட்டனவே யெனக் கொள்ளலாம் ; ஆனல் இவற்றுக்கு நாம் அதிக முக்கியத்துவமளிக்கலாகாது. நாம் இவ்வொப்புமைகளிலிருந்து எமது ஆராய்ச்சியை ஆரம்பிக்காது, மைலிசிய கொள்கைக ளோடு தொடர்புடையனபோற் காணப்படும் கூற்றுக்களிலிருந்தே ஆரம்பித்தல் வேண்டும். ஏனெனில், அவையே இக்கொள்கை ஆரம்பத்திலிருந்த நிலைபற்றி எமக்குக் கூறுவன.
53. பைதாகரச கழகத்தின் ஆரம்பகாலக் கொள்கை பற்றிக் கூறும் கூற்றுக்களிற் குறிப்பிடத்தக்கதாய் உள்ள வொன்று அரித்தோதிலினதாகும். வானத்திற்கு வெளியே “ வரம் பற்ற மூச்சு ’ இருந்ததெனவும் பூமி அதனைச் சுவாசித்ததென வும்? பைதாகரசவாதிகள் கூறினரென அரித்தோதில் கூறு கிருர், பொருளளவில் இது அனக்சிமினிசுவாற் போதிக்கப்பட்ட கொள்கையேயாகும். பின்னர் செனுேபனிசுவால் இக்கொள்கை மறுக்கப்பட்டது என்பதைக் காணும்போது, பைதாகரசுவும் இக் கொள்கையைப் போதித்தார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இக்கொள்கை மேலும் விருத்தி செய்யப்பட்டதற்கும் பைதா கரசுவே காரணம் என நாம் ஊகிக்கலாம். முதலாவது அங்கம்-அஃது எவ்வாறு நடைபெற்றதெனினும்-தோன்றிய தன் பின்னர், வரம்பற்றதில் மிகவும் அணித்தாக இருந்த பகுதி உள்ளிழுக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டது;? இவ்வாறு உள்ளிழுக்கப்பட்ட வரம்பற்றதின் பகுதியே, அங்கங்கள் யாவற் றையும் ஒன்றேடொன்று சேராது பிரித்து வைத்திருக்கிறது. வரம்பற்றதிலிருந்து உள்ளிழுக்கப்பட்ட பகுதியே இவ்வங்கங்களுக் கிடையேயுள்ள வெளியாகிறது. சார்பிலாது தனிப்பட்ட கணிய மெனும் கருத்தை உணர்த்துதற்கே இவ்வாறெல்லாம் வருணிக் கப்பட்டதென்க.
| 1. Arist. Met. M, 4. 1078, b 21 (R. P. 78).
- Arist. Phys. A 6. 213, b. 23 (R. P. 75a). 8. Arist. Met. N, 3. 1091 a 13 (R. P. 74). 6-R 10269 (6168)
அண்டவியல்

Page 65
114 ஆதி கிரேக்க மெய்யியல்
அரித்தோதிலிடமிருந்து பெறப்பட்ட இப்பகுதிகளில், *மூச்சு”, வெளியென அல்லது வெறுமையானதென வருணிக்கப்படு கிறது. அனக்சிமாந்தரது கொள்கையிலும் இம்மயக்கத்தை நாம் கண்டோமாதலால், இங்கு இதனைக் காண்பதையிட்டு நாம் ஆச்சரியமடையவேண்டியதில்லை. வளிக்கும், பனிக்கும் வேறு பாடு காணுததால் எற்படும் மயக்கம் இங்கும் எற்பட்டதற்கான சான்றுகளையும் காண்கிருேம். பைதாகரசு எல்லையைத் தீயென வும், வரம்பற்றதை இருளெனவும் கூறினரென்பது பற்றி எவ்வகையான சந்தேகத்திற்குமிடமில்லைப் போலத் தோன்று கிறது. இப்பாசோசு தீயே மூலதத்துவமெனக் கூறினரென அரித் தோதில் மூலமாக அறிகிருேம். பார்மனைடிசு தமது காலத் தவர்களது கொள்கைகளைப் பற்றிக் கூறுகையில், தீ, இரவு? எனும் இரண்டுமே முதற்றத்துவங்கள் என அவர்கள் கருதினர் எனக் கூறுகிருர். பைதாகரச முரண்பாட்டு அட்டவணையிலும், ஒளியும் இருளும், முறையே எல்லை, எல்லையற்றது எனும் தலைப்புகளின் கீழ்த்தரப்பட்டிருப்பதையும் நாம் காணலாம்." மூச்சு என்பதற்கும் இருளுக்கும் இங்கு வேற்றுமை காணப் படாதிருப்பதிலிருந்து, இக்கொள்கை கொஞ்சமேனும் வளர்ச்சி பெருதவொன்று என்பது நன்கு நிரூபிக்கப்படுகிறது; எனெ னில் கி.மு. ஆரும் நூற்ருண்டிற்ருன் இருள் என்பது ஒருவகை ஆவி எனும கருத்து நிலவியது. ஐந்தாம் நூற்றண்டில் அத னது உண்மையான தன்மை உணரப்பட்டிருந்தது. பிளேட்டோ, வரலாற்று ரீதியான விடயங்களைக் கையாளுவதில் தனக்குள்ள வழமையான சாமர்த்தியத்தோடு பைதாகரசவாதியான திமா யோசுவை, இருளும் பணியும், அடர்த்தியுற்ற வளியேயெனக் கூற வைக்கிறர்.4 எனவே, இருளாலான புலமொன்றில், பிர காசமுள்ள ஒளித்திட்டுக்களிருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்ளவேண்டும்-உடுக்கள் நிறைந்த வானத்தைக் காணும் போது இக்கற்பனை இயல்பாகவே தோன்றுகிறது. உலகம் ஒன் றல்ல, பல உள எனும் மைலிசிய கருத்தையும், பைதாகரசு ஏற்றுக்கொண்டார் எனக் கூறவும் இடமுண்டெனலாம். அதி லும் அவை எண்ணிறந்தன எனக் கூறுவதே பைதாகரசுவின் கொள்கைக்கு ஏற்றதாயிருந்திருக்கும் எனல் பொருந்தும். ஆதி பைதாகரசவாதிகளுள் ஒருவனகிய பெட்ரோன் என்பான், எல்
1. Arist. Met. A., 3. 984 a 7(R. P. 56 c), * அத். 4.91 ஆம் பிரிவிற் காண்க. * Arist. Met. A., 5. 986 a 25 (R. P. 66).
4. Plato, Tim. 68 di 2.

விஞ்ஞானமும் சமயமும் 115
லாமாக நூற்றெண்பத்துமூன்று உலகுகள் இருந்தன வென வும், அவை முக்கோணவடிவான ஒழுங்கில் அமைந் திருந்தன வெனவும் கூறியுள்ளான்.
54. வானசோதிகள் யாவும் தீ நிறைந்த வளிச்சில்லுகள் எனவும் அவற்றிலுள்ள சில துவாரங்களுக்கூடாகத் தீ வெளி யேறுகிறதெனவும் அனக்சிமாந்தர் கூறினர் (பிரிவு 21). பைதா கரசுவும் இக்கருத்தையே தழுவினர் எனக் கருத இடமுண்டு. வானசோதிகளான சில்லுகள் மூன்று இருந்தனவென அனக் சிமாந்தர் கருதினரெனவும் கண்டோம். பைதாகரசு தான் கண்டுபிடித்த நான்காவது, ஐந்தாவது, எட்டாவது இசையிடை களுக்கும், வானசோதிகளான இம்மூன்றுக்குமிடையேயும் ஒப் புமை கண்டிருக்கலாம். “ கோளங்களின் இசைவு” பற்றிய கொள்கை, இவ்வொப்புமையிலிருந்து ஆரம்பித்ததெனக் கரு துவதே மிகவும் பொருத்தமான தென்க. ஆனல் பைதாக ரசுவின் கொள்கை எதனையும் கோளங்களின் இசைவு பற்றிய கொள்கையென அழைப்பின் அது இருவழிகளில் தவறகும். பைதாகரசு உபயோகித்த பதத்தின் பொருள் அட்டசுரம் என் பதே யொழிய இசைவு என்பதல்ல. மேலும் கோளங்கள் எனும் சொல்லைப் பைதாகரசுவின் கொள்கையிற் சேர்ப்பது காலவழுவாகும். ஏனெனில் இவரது காலத்தேயும் சக்கரங்கள் அல்லது சில்லுகள் எனவே வானசோதிகள் விளக்கப்பட்டன. கிழக்கு மேற்காக நடைபெறும் பூமியினது நாளாந்த சுழற் சிக்கும், மேற்கிலிருந்து கிழக்கை நோக்கிப் பூமியிலும் குறை வான வேகத்தில், சூரியன் சந்திரன் கிரகங்கள் என்பன செல் வதற்கும் இடையேயுள்ள வேறுபாடும் பைதாகரசு கழகத்தின் ஆரம்பகாலத்திற் கண்டு பிடிக்கப்பட்டவொன்றே யெனக் கூறி விடலாம். உண்மையில் இவ்வேறுபாட்டை முதலில் உணர்ந்த வர் பைதாகரசுவே எனக் கூறினும் பொருந்தும்.? இக்கருத்தை எற்றுக்கொள்வதானல், சுழிக்கொள்கை கைவிடப்படவேண்டு மென்பதும் அண்டம் கோளமானது எனும் கருத்தே பொருத்த மானதாகக் கொள்ளப்படவேண்டுமென்பதும் தெளிவு. ஆனல்
* அத். 4.93 ஆம் பிரிவிற் காண்க.
* பிளேட்டோ இதனை ஓர் புதுமையாக எடுத்துக்காட்டுகிறர் என எண்ணி, நான் இக் கொள்கையின் உண்மையைச் சந்தேகித்தேன். ஆனல் பேராசிரியர் ரெய்லர் எனது கருத்துத் தவருனது என எனக்கு உணர்த்தியுள்ளார். பிளேட்டோ மறுப்பது (L008 8228) இக்கொள்கையையே. அவர் புகழ்வது புதிய உருவத்திலமைந்த சிக்கலற்ற வியக்கம் பற்றியவோர் கொள்கையையே எனலாம். இது பிளேட்டோ பிற்காலத்தில் உணர்ந்தவோர் விடயமெனலாம். குடியரசு, திமாயசு ஆகிய நூல்களில் சிக்கலான இயக்கம் பற்றிய பைதாகரச கொள்கையே காணப்படுகிறது.
வானசோதி

Page 66
16 ஆதி கிரேக்க மெய்யியல்
அனக்சிமாந்தரது கொள்கையிலுள்ள சிக்கல்களிலிருந்து தப்பு வதற்கு இது ஒன்றே சாத்தியமான வழியாயிருந்தது. முடி வாகக் கூறுவதாயின், சூரியன், சந்திரன், கிரகங்கள் ஆகிய யாவற்றினது இயக்கங்களும் வேறு வேறன இயல்பின வெனவே கூறுதல் வேண்டும். மாறுபடக்கூடிய, கோணவேகத்தோடுகூடிய தமக்கியல்பான சுழற்சிகளை யுடையனவாயிருப்பதோடு, இவை நாளாந்த சுழற்சியின் காரணமாகக் கிழக்கு மேற்காகவும் கொண்டு செல்லப்படுகின்றன. வானமையரேகைக்குச் சாய்வாக அமையும் கிரகங்களின் ஒழுக்குகள் நாளாந்த சுழற்சியின், சத்திக்கு உட்படுகின்றன எனக் கூறுவதன் மூலம் இவற்றின் இயக்கத்தின் தன்மையை வருணிக்கலாம். தெமோகிரித்தோசு வின் காலம்வரை, அயோனிய சிந்தனை மரபினர் இக் கருத் தினை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். வானசோதிகள் யாவும் ஒரே திசையிற் சுழல்கின்றன எனும் சுழிக்கொள்கையையே அவர்கள் தழுவி நின்றனர். இக்கொள்கையின்படி, பைதாகரச கொள்கையின்படி மிகக் கூடிய கோண வேகத்தையுடைய வானசோதிகளே, மிகக் குறைந்த வேகத்தையுடையனவாகக் கருதப்பட்டன. பைதாகரசு கொள்கைப்படி, சனி, முப்பது ஆண்டுகளிற் கொருமுறை சுழல்கிறது ; அயோனிய கொள்கைப் படி, கிரகங்கள் யாவற்றிலுள்ளும் மிகக் குறைந்த வேகத்தை யுடையது இதுவே. அதாவது இராசிகளினது வேகத்திற்குச் சமமான வேகமுடையது எனக் கருதப்படக்கூடியது சனியே என லாம்.
அயோனியர்களாலும், அனக்சகோரசு தெமோகிரித்தோசு போன்றேராலும் மறுக்கப்பட்டதான, பூமி கோளவடிவினதே யெனும் உண்மையைக் கண்டு பிடித்தவர் பைதாகரசுவே யென நாம் உறுதியோடு கூறலாம். இதற்கான ஆதாரங்களை நாம் பின்னர் காண்போம். ஆனல் பூமியைச் சுற்றி எனை உடுக்கள் சுழன்றனவெனவே பைதாகரசு கருதினரெனவும், பூமியும் ஒரு கிரகமே யென்பது பிற்காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது எனவும் தோன்றுகிறது (பிரிவு 150).
பைதாகரசுவின் கொள்கைகள் பற்றி நாம் இதுவரை கூறியவை பெருமளவிற்கு எமது ஊகமே என்பதோடு, இவ் வருணனை பூரணமான தல்ல வென்பதையும் குறிப்பிடல் வேண்டும். பைதாகரச கழகத்தினரின் கொள்கைகளெனப்படு வனவற்றில் மிகவும் பழமையானவையாய்க் காணப்படுவன வற்றை நாம் பைதாகரசுவின் கருத்துக்கள் எனத் தீர்மானித் துள்ளோம். இவ்வாறு தீர்மானித்தற்கு நாம் ஆராய்ந்த சான்று களையும் நாம் இங்கு முற்றகத் தரமுடியவில்லை. பிற்கால பைதாகரசவாதிகளின் கொள்கைகளையும், பார்மனைடிசுவின் கவி

விஞ்ஞானமும் சமயமும் 17
தையின் இரண்டாவது பகுதியையும் நாம் ஆராய்ந்ததன் பின் னரே, பைதாகரசு பற்றி நாம் கூறியவற்றின் உண்மையான தன்மை புலப்படும். எளிய, எண் விகிதங்களின் மூலம் இசைவுடைய இசையிடைகளைக் குறிப்பிடலாம் எனக் கண்டு பிடித்தமையே விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் செய்த மிகப் பெரிய பணியென்பது வெளிப்படை, பைதாகரசுவின் இக்கண்டு பிடிப்பைத் தொடர்ந்து வழமையாக, “முரண்பாடுகள் ” என அழைக்கப்பட்டவை பற்றிய புதிய கொள்கை ஒன்று உருவாக வும் வழியேற்படுகிறது. இவ்விகிதங்களை அவதானிப்பதன்மூலம் உயர்ந்தனவற்றிற்கும் தாழ்ந்தனவற்றிற்கு மிடையே இசை வுண்டாக்க முடியுமானல், அதே முறையில் எனைய முரண்பாடு களிடையேயும் இசைவேற்படுத்தலா மென்பது தெளிவு. குடுகுளிர், வறட்சி-ஈரலிப்பு எனும் முரண்பாடுகள் யாவும் சம நிலையடையும் வகையில் இணைக்கப்படலாம்?. யாவரும் நன்கு அறிந்ததான இடைக்கோட்பாடு என்பதும், பைதாகரசுவின் இசைவு முறையை ஒழுக்கத்துறையிற் பிரயோகிப்பதஞல் எற் பட்டதே. பைதாகரசுவின் காலத்திற்குப் பின்னர், கிரேக்க மெய்யியல் முழுவதையுமே “பூரணமாகச் சுருதி கூட்டியதந்தி ” யெனும் இலட்சியம் வியாபித்து நின்றது எனினும் மிகையா 55.
I-கொலொபோன் நாட்டு செனுேபனிசு
55. பைதாகரசுவின் கொள்கைகளின் மூலம், அக்காலத்துச் வாழ்க்கை சமய இயக்கங்களுக்கு ஆழ்ந்தவோர் பொருளேற்பட்டதெவ்வாறு என்பதைக் கண்டோம். கவிஞர்களாற் புகுத்தப்பட்ட கடவுட் கொள்கைகளுக் கெதிராகத் தோன்றிய, முற்றிலும் வேறு விதமான விளைவொன்றை நாம் இங்கு ஆராய்தல் வேண்டும். செனுேபனிசு தனது காலத்தே நிகழ்ந்த சமய மறுமலர்ச்சி யைப் பற்றிச் சற்றேனும் கவனியாதிருந்தாரெனினும், தெய் வங்களை மனித இயல்புடையோராகக் கருதுவதை முற்றக
* அத். 4, பிரிவு 92-93 ஐயும் அத், 7, பிரிவு 150-152 ஐயுங் காண்க.
* டோல்ற்றனது இரசாயனச் சேர்க்கைக் கொள்கைக்கும் மேலே தரப்பட்ட இசைவுக் கோட்பாட்டிற்குமிடையே உள்ள ஒற்றுமையைக் கண்டு வியப்படையாதி ருக்க முடியாது. இன்றைய இடத்திண்ம இரசாயனவியலாரது படக் குறியீடுகளும் பைதாகரசுவினது வடிவங்களைக் குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருக்கின்றன. *பொருள்கள் யாவும் எண்களே' எனக் கூறியபோது பைதாகரசு உலகதோற்றத் தைப் பற்றிய உண்மையை அறிந்திருந்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.
* பிளேட்டோவினது பிலிபசுவிலிருந்தே அரித்தோதில் தனது இடைக் கோட்பாட்டைப் பெற்ருர். அந்நூலில் இக்கொள்கை பைதாகரசுவினது எனவே விளக்கப்பட்டுளது.

Page 67
18 ஆதி கிரேக்க மெய்யியல்
எதிர்த்தார். பைதாகரசுவையும் அவரது மறுபிறப்புக்கொள் கையையும் நையாண்டி செய்து, அவர் எழுதிய இரங்கற் பாவின் பகுதியொன்று இன்றும் உளது. பைதாகரசு, தேலிசு ஆகியோரது கொள்கைகளை இவர் எதிர்த்தாரெனவும், எபிமை னிடிசுவின் கொள்கைகளையும் இவர் தாக்கினரெனவும் நாம் அறிகிருேம். இவை யாவும் நம்பத் தகுந்தனவே யெனினும், இவற்றைப் பற்றிக் கூறும் இவரது நூற்பகுதிகள் எவையும் எமக்குக் கிடைத்திலது.
செனுேபனிசுவின் காலத்தை நிர்ணயிப்பது அவ்வளவு இலகு வான காரியமல்ல. இவ்விடயங்களிற் பெரிதும் நம்பத்தகுந்த ஆதாரமான திமாயோசு, அயரோன், எபிகாமோசு ஆகியோரது காலத்தையே செனேபனிசுவும் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார். கிறீசசுவையும், ஞானியர் எழுவரையும் பற்றிய கதைகள் ஐந் தாம் நூற்றண்டில் வாழ்ந்த கிரேக்கர்களுக்கு எவ்வாறு சிரிப்பை யூட்டினவோ, அவ்வாறே நான்காம் நூற்றண்டில் வாழ்ந்த கிரேக்கர்களுக்குப் பெரும் களிப்பை யூட்டிய கதை யொன்றின் பொருளாயமைந்த, அயரோனது சபை நிகழ்ச்சிக ளில் இவரும் பங்கெடுத்துக் கொண்டாரெனவே தோன்றுகிறது. செனேபனிசு, நூறு வயதினராகும் வரை வாழ்ந்தார் எனக் கூறுவதாயினும் கூட, அயரோன் கி. மு. 478 இல் இருந்து 467 வரையே ஆண்டானகையால், அவர் கி. மு. 570 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தார் எனக் கூறமுடியாது. ஆனல் 40 வது ஒலிம்பிய ஆண்டில் (கி. மு. 620-616) இவர் பிறந் தாரென அப்பொலோடரசு கூறினரெனவும், டாரியசு, சைரசு என்போரது காலம் வரை இவர் வாழ்ந்தாரெனவும் கிளி மென்று என்பார் கூறுகிறர். இத்தகைய விடயங்களில் அப் பொலோடரசுவையே பெரும்பாலும் நம்பியிருப்பவரான இடை யோசினிசு 60 ஆவது ஒலிம்பிய ஆண்டில் (கி. மு. 540-37) இவர் சிறப்புடன் விளங்கினரெனக் கூறுகிறர். டியல்சுவும் அப்பொலோடரசு உண்மையில் இவ்வாறு கூறினர் எனக் கூறு கிருர். இவை எவ்வாறிருப்பினும், ஈலியா நிறுவப்பட்ட ஆண் டில் இவர் அங்கு சென்றிருந்தார் என்பதைக் கொண்டே கி. மு. 540 ஆம் ஆண்டு என்பது பெறப்பட்டிருக்கிறது. ஆகவே இது வெறும் ஊகமேயாதலால், நாம் இதற்கு அதிக முக்கியத் துவம் அளிக்க வேண்டியதில்லை.
* கீழே வரும் 7 ஆவது பகுதியைப் பார்க்கவும்.
* Diog ix. 18 (R. P. 97). கிரகணம் ஏற்படப் போவதைத் தேலிசு முன் கூட்டித் தெரிவித்தது பற்றிச் செனுேபனிசு குறிப்பிட்டுள்ளார் என நாம் எற்கெனவே கண்டோம்.

விஞ்ஞானமும் சமயமும் 19
செனுேபனிசுவைப்பற்றி நாம் உறுதியாக அறிந்து கொண்ட தெல்லாம், இருபத்தைந்து வயதிலிருந்தே அவர் நாடோடியாக வாழ்ந்தாரென்பதும், 92 வயதிலும் அவர் உயிரோடிருந்து கவிதைகள் புனைந்து கொண்டிருந்தார் என்பதுமேயாம். அவர் தானகக் கூறுவதாவது (fr, 8-24 Karst; R. P. 97):
சஞ்சலங்கள் பலவற்றை அனுபவித்த எனது ஆன்மா எலாசு நாடு முழுவதும் அறுபத்தேழு ஆண்டுகளாக அலைந்திருக்கிறது ; இவ்விடயங்களைப் பற்றி உண்மையாக நான் எதுவும் கூறமுடியு மென்றல், அப்போது நான் பிறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்திருககும் என்பதுவே அது.
இன்னெரு கவிதையில் எழுதப்பட்ட வினவிற்கே, செனே பணிசு இங்கு பதிலளிக்கிருரெனவும் அவர் இங்கு குறிப்பிடு வது அயோனியாவை ஆர்ப்பகோசு கைப்பற்றிய சம்பவமேயென வும் கொள்ள ஆவல் எற்படுவதியல்பே (tr. 22-17 Karst; R. P. 95 a).
மாரிகாலத்தில் நல்ல உணவுண்டதன் பின்னர் இனிமை யான உவைனைப் பருகிக் கொண்டு தீயினருகே, மென்மை யான படுக்கைகளில் கடலையைக் கொறித்துக்கொண்டிருக்கை யில் நாம் கூறவேண்டியன இவை போன்றவைகளே. 'நீங்கள் எத்தேசத்தைச் சேர்ந்தவர், அருமையான கனவானே, உங்க ளுக்கு எத்தனை வயதாகிறது ? மீடி வந்தபோது நீங்கள் எத்தனை வயதானவராயிருந்தீர்கள்."
இதன்படி இவர் கி. மு. 565 ஆம் ஆண்டிற் பிறந்திருக்க வேண்டும். அத்துடன் இதன்படி அயரோனுக்கும் இவருக்கு மிடையே யிருந்ததெனக் கூறப்படும் தொடர்பும் நம்பத் தகுந்ததாகிறது. மேலும் பைதாகரசுவை இவர் இறந்தகாலத் திற் குறிப்பிட்டனரென்பதையும் எரக்கிளைட்டசு இவரை இறந்த காலத்தில் அழைத்தாரெனவும் நாம் காண்கிருேம்.2
அனக்சிமாந்தரது போதனைகளைச் செனேபனிசு “ கேட்டா ” ரெனத் தியோபிறகத்தோசு கூறியுள்ளார்?. அயோனிய அண்ட வியலையும் இவர் அறிந்திருந்தாரென நாம் காண்போம். தான் பிறந்த நகரிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் இவர் சிசிலியில், பெரும்பாலும் சாங்கிள், கட்டான ஆகிய இடங்களில்,
* அது வேறெரு கவிதையாயிருக்க வேண்டும் என்பது உறுதி; ஏனெனில்
இங்குள்ள பகுதி இரங்கற்பாவாக இருக்கையில் அதுவோ அறுசீரடிகளாலான தாகக் காணப்படுகிறது.
• Xenophanes, fr. 7; Herakleitos, frs. 6, 17. o. i. Diog. ix. 2ı (R. P. 96 a).

Page 68
கவிதைகள்
20 ஆதி கிரேக்க மெய்யியல்
வாழ்ந்தார் என அறிகிறேம். தனக்கு முன்பு வாழ்ந்த ஆக்கிலொக்கோசுவைப் போல இவரும் தனது இதயபாரம் முழுவதையும் இரங்கற்பாக்கள், அங்கதக் கவிதைகள் என் பனவற்றின் மூலம் வெளியிட முனைந்தார். இவர் தமது கவிதைகளைப் பாடிய வைபவங்களில், அயோனியாவிலிருந்து வந்த அகதிகள், தமது நாட்டு நற்பழக்கங்களைப் பேண முயன் றிருப்பார்கள் என நாம் எண்ணலாம். ஆனல் இவர் ஓர் பாணனுக வாழ்ந்தார் எனும் கூற்றுக்கு எவ்வகை ஆதாரமு மில்லை யென்க. அக்காலத்தே, இரங்கற்பாக்களைப் பாடியவர் கள், தமது பாட்டுக்களைக் கேட்போருக்குச் சமமானவர்களாய் இருந்தனரேயொழிய, பாணர்களைப் போலச் சமுதாயத்திற் குறைந்தோராக மதிக்கப்படவில்லை. இவர் தனது தொண்ணுற் றிரண்டாவது வயதிலும் நாடோடி வாழ்க்கையையே மேற் கொண்டிருந்தாரென நாம் கண்டோம். இது, இவர் ஈலியாவிற் றங்கி வாழ்ந்து, அங்கோர் கழகத்தையும் நிறுவினரென்னும் செய்தியோடு முரண்பட்டதாகக் காணப்படுகிறது. அன்றியும் இவர் தனது இறுதிநாட்களை அயரோனது சபையிற் கழித்தன ரென நாம் கருதுவோமாயின் இம்முரண்பாடு மேலும் வலு வடைகிறதெனலாம். பண்டைய எழுத்தாளர்களில் ஒருவராவது இவர் எப்போதாவது ஈலியாவிற் றங்கி வாழ்ந்தனர் என நேரடியாகக் கூறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. நமக் குக்கிடைத்துள்ள சான்றுகளும், அவர் அங்கு தங்கினர் என்ப தோடு பொருந்தாதனவாகவே உள்ளன.
56. செனேபனிசு அறுசீரடிப் பாடல்களை யெழுதினரெனவும், ஒமர் எசியொட்டு என்போருக் கெதிராக இரங்கற்பாக்களையும் ஐந்து சீரடிப்பாடல்களையும் எழுதினரெனவும் இடையோசினிசு கூறியுள்ளார். இவர் மெய்யியற் கவிதை யெதுவும் எழுதின ரென நம்பத் தகுந்த ஆதாரம் எதனிலும் குறிப்பிடப்படவில்லை. பூமி முடிவின்றிக் கீழ் நோக்கி விரிந்துள்ளது (பகுதி. 28) எனப் பொருள்படும் கவிதை எதையும் தான் கண்டதில்லை யெனச் சிம்பிளிசியசு கூறுகிறர். இதிலிருந்து கழகத்தில் இக் கவிதையின் பிரதியெதுவும் இருக்கவில்லை யென்பது பெறப்படு கிறது. உண்மையில் இத்தகைய கவிதையொன்றிருந்ததாயின், கழகத்தில் அதன் பிரதியில்லாதிருந்தது என்பது மிகுந்த ஆச் சரியத்திற் குரியதே. செனேபனிசுவிலும் குறைந்தவ ரான பலரது நூல்களைச் சிம்பிளிசியசுவினல் அங்கு காண முடிந் தது. மெய்யியற் கவிதையொன்றினைச் செனுேபனிசு எழுதின ரென்பதற்கு அகச் சான்றுகளும் இல்லை. மெய்யியற்
• Diog. ix. 18 (R. P. 96).

விஞ்ஞானமும் சமயமும் 12
பொருளுடைய, இருபத்தெட்டடிகளையுடைய கவிதையொன் றிருந்ததென டியல்சு கூறியுள்ளார். ஆனல் நான் இங்கு விளக்க முயன்றுள்ளதுபோல, செனுேபனிசு, ஓமர், எசியொட்டு என்போரைத் தாக்கும்வகையில் எழுதிய கவிதைகளில் இம் மெய்யியற் பொருளும் இயல்பாகவே அமைந்திருக்கும் என லாம். ஒமரது காவியங்களுக்கு எழுதப்பட்ட பாடியங்களிலி ருந்தே, செனேபனிசுவின் மெய்யியற் கருத்துக்கள் எனக் கூறப் படுபவை பெரும்பாலும் பெறப்பட்டிருக்கின்றன வென்பது குறிப் பிடத்தக்கது. ஆகவே, செனுேபனிசு, தாம் கொண்டிருந்த விஞ் ஞானக் கருத்துக்களை அங்கதக் கவிதைகளிடையே ஆங்காங்கே வெளியிட்டனர் எனக் கொள்வதே பொருந்தும். இம்முறையே அக்கால வழக்காயுமிருந்தது என்பது எபிகாமோசுவின் நூலில் எமக்குக் கிடைத்தனவற்றைப் பார்க்கும் போதும் தெளி வாகிறது.
* சில்லோய்” எனும் பெயரால், பிற்காலத்தில் வழங்கிய, செனுேபனிசுவின் அங்கதக் கவிதைகள் அவர் காலத்திலும் இப்பெயராலேயே வழங்கியிருக்கலாம். அல்லது அங்கதக் கவிதை யெழுதுவோன் எனும் பொருளிற் கிரேக்க மொழியில் சில்லோ கிருபோசு என அழைக்கப்பட்டவனும், மெய்யியலாளரை நையாண்டி செய்து தான் கூறியனவற்றை யெல்லாம் செனே பனிசுவின் பெயரில் வழங்குமாறு செய்தவனுமான பிளேயசு நாட்டவனன திமோன் (ஏறத்தாழ கி. மு. 259) என்பவன் முத லாக, இக்கவிதைகள் இவ்வாறு “சில்லோய்” என அழைக்கப்பட் டிருக்கலாம். ஐந்து சீரடிகளுள் ஒன்று மட்டுமே எமக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் அறுசீரடியையே அடுத்த அடியாகக் கொண்டிருக்கிறது (பகுதி 14). இதைப் பார்க்கும்போது மாகைப் டுக்களி லுள்ளதைப்போல, செனுேபனிசுவும் தனது அறுசீர டிப்பாடல்களினிடையே ஐந்து சீரடிகளைப் புகுத்தும் பழக்கத்தை யுடையவராயிருந்தார் எனத் தோன்றுகிறது.
57. டியல்சு தந்துள்ளவாறு, அதே ஒழுங்கில் செனேபணி சுவின் கவிதைப்பகுதிகளைத் தருகிறேன்.
இரங்கற்பாக்கள்
(1)
எல்லோருடைய கைகளும், அவர்களது கிண்ணங்களும் இந் நிலமும் சுத்தமாயுள்ளன ; முறுக்கிய மாலைகளை ஒருவர் எமது தலைகளிற் சூட்டுகிருர் ; இன்னெருவர் வாசனைக் குழம்பைத் தட்டத்திற் கொணர்ந்து எமக்குத் தருகிறர். நிறைந்த இன் பத்தைத் தரும், கலவைப் பாத்திரம் தயாராக இருக்கிறது.
கவிதைப் பகுதிகள்

Page 69
122 ஆதி கிரேக்க மெய்யியல்
மென்மையானதும், மலர் மணமுடையதுமான உவைன், ஒரு போதும், குறையமாட்டாதது போல, எமக்கருகே சாடிகளில் ஏராளமாக இருக்கிறது. யாவற்றுக்கும் நடுவே தூய வாசனைப் புகையை அளிக்கும் சாம்பிராணியிருக்கிறது; இனிமையான குளிர்ந்த நன்னீரும் உளது. பாற்கட்டியும், நறுந்தேனும், பொன்னிறமாகச் சுடப்பட்ட உரொட்டிகளும் எமக்கு முன்னே படைக்கப்பட்டிருக்கின்றன. நடுவேயிருக்கும் பீடத்தைச் சுற்றிலும் மலர்கள் நிறைந்து காணப்படுகின்றன ; ஆடலும் பாடலுமாக இம்மண்டபமே களிப்பால் நிறைந்திருக்கிறது.
ஆனல் புனிதமான கதைகளையும் தூயவார்த்தைகளையும் கூறி, களிப்பொடு இறைவனை வழிபடுவதே முதலிற் செய்ய வேண்டியதாகும் ; அதன் பின், நன்னெறியில் ஒழுகுதற்கு வேண்டிய திடத்தை எமக்குத் தருமாறு பிரார்த்தனை செய்து அருக்கியங்களைச் சமர்ப்பித்ததன் பின்னர், பணியாளொருவனது உதவியின்றித் தானகவே தனது இல்லம் சேரும் நிதானத்தை இழக்காதவரையில், விரும்பிய அளவு மதுவருந்துவதிற் பிழை யெதுவும் இல்லையென்க. மூப்புக்காலத்தே தளர்ச்சியடையா திருக்கவும் இது அனுகூலமானதே. மதுவருந்தியதன் பின் னரும், திறனைப் பரீட்சிக்கும் போட்டிகளில், தனது நினைவையும், வலிமையையும் இயன்றமட்டிற் பாவித்து, தனது ஆற்றலைக் காட்டுபவன் எவனே அவனே மனிதரிடையே போற்றப்படக்கூடி வனகிருன், பண்டைய மனிதர்களது கற்பனைகளான தைத் தியர்களையும் இராட்சதர்களையும் மற்றும் குழப்பமான சண்டை களையும் பற்றிப் பாடும் பயனற்ற செயலில் ஈடுபடாது, மனிதன் தெய்வங்களை வணக்கத்தோடு வழிபடல் வேண்டும் ; அது அவ னுக்கு எப்போதும் நன்மை தரும்.
(2)
பைசாவூற்றுக்கருகே, சியசுவின் இருப்பிடம் அமைந்துள்ள ஒலிம்பியாவில் நடக்கும் ஐந்திறப் போட்டிகளிலாவது, ஒட்டப் பந்தயத்திலாவது ஒருவன் வெற்றியீட்டினலென்ன, மற்போ ரில், கடூரமான குத்துச்சண்டையில் அல்லது இவையிரண்டும் சேர்ந்த யுத்தங்களில் சிறந்து விளங்கி மக்களின் அபிமானத் தைப் பெற்றலென்ன, இவற்றின் மூலமாக, போட்டிகளின் போது யாவரும் காணக்கூடிய இடத்தில் ஆசனமும் அரசாங்கத் தின் செலவில் உணவும் பேணிவைத்திருக்கக் கூடிய பரிசில்களும் ஒருவனுக்குக் கிடைத்தாலென்ன, இரதப் போட்டியில் வெற்றி பெற்றலென்ன, இவை எவற்றினலும் எவனும் வாழ்க்கை யில் எம்மிலும் அதிக தகுதியுடையவனக மாட்டான். இவர் களைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதெல்லாம் இச்செயல்களை நன்கு

விஞ்ஞானமும் சமயமும் 123
சிந்தித்து மதிப்பிடாது விடுவதனலேயே, மேலும் பெருமை யுடையனவான கலைகளோடு, உடல்வலிமையை ஒப்பிட்டு அத னைப் புகழ்தல் பொருத்தமானதன்று. விளையாட்டுப் போட்டி களின் போது நடைபெறும் ஒவ்வொரு போட்டி ஓட்டத்திலும், குத்துச் சண்டை, மற்போர், ஐந்திறப்போட்டி ஆகிய இவை அனைத்திலும் யாவரையும் வெல்லக்கூடிய ஒருவன் மக் களிடையே தோன்றினலும், எமது நகர ஆட்சி மேலும் சிறப் பாக நடைபெறுவதற்கு அவனல் எவ்வித உதவியுமில்லை. பைசா வின் கரைகளில் நடைபெறும் போட்டிகளில் ஒருவன் வெற்றி பெறுவதன் மூலம் எமது நகர் அ6 டயக்கூடியது அற்ப இன் பமே ; ஒரு நகரின் களஞ்சியங்கள் அதிக வளமுடையவை ஆவ தற்கு இதுபோன்ற சாதனைகள் ஒருபோதும் உதவுவதில்லை.
(3)
வெறுக்கத்தக்க கடுங்கோலாட்சிக்கு உட்படாதிருந்த காலத் தில், இனிமையான, ஆனல் பயனற்றவையான, பல விடயங் களை அவர்கள் லிடியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்; ஊதா நிறச் சாய மூட்டப்பட்ட மேலங்கிகளை அணிந்தோராய், இவர் களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சந்தை நடைபெறுமிடத்தே சென்றனர். மிகுந்த திறமையோடு தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்களின் நெடிவிசுவோராயிருந்த இவர்கள், தமது அழ கிய சுருண்ட மயிரைப் பற்றிப் பெருமைப்படுவோராயும் வீண்
புகழ்ச்சியை விரும்புவோராயு மிருந்தனர்.
(4) எவனும் தன் கிண்ணத்தில் உவைனை முதலில் ஊற்றி அதன்பின் நீரை ஊற்றிக் கலப்பதில்லை. முதலில் நீரை ஊற்றி அதன்மேலேயே உவைனை ஊற்றுவான்.
(5)
ஆட்டுக்குட்டி யொன்றின் தொடையெலும்பொன்றினை அனுப்பி அதற்குப் பதிலாக நன்கு கொழுத்த எருதொன்றின், கொழுத்த காலொன்றைப் பெற்றுக்கொண்டாய். கிரேக்க பாடல் கள் அழியாதிருக்கும் வரை அழியாததும், எல்லாசு நாட்டின் பகுதிகள் யாவற்றிற்கும் பரவுவதுமான புகழையுடையவனன உனக்கு இது தகுந்த பரிசே."
1 பேராசையுடையவன் எனப் பிரசித்தமானவனன சிமோனைடிசு போன்ற
வோர் கவிஞனை இழித்துக் கூறுமுகமாகவே இது எழுதப்பட்டிருக்க வேண்டு மென டியல்சு கருதுகிருர்.

Page 70
24 ஆதி கிரேக்க மெய்யியல்
(7)
இப்பொழுது நான் இன்னெரு கதையைக் கூறி வழிகாட்டு வேன். ஒருநாள் நாயொன்றினை யாரோ அடித்துக் கொண்டி ருந்தபோது, அவ்வழியாற் சென்றுகொண்டிருந்த அவர் (பைதா கரசு) பின்வருமாறு கூறினரெனச் சொல்கிருர்கள் : “நிறுத்து : அதனை அடிக்கவேண்டாம் ; எனெனில் அதன் குரலிலிருந்து அது எனது நண்பனெருவனது ஆத்மா எனநான் தெரிந்து கொண்டேன்’1.
(8) 114 ஆம் பக்கம் பார்க்க.
(9) வயோதிபரிலும் பலவீனமுடைய.
அங்கதக் கவிகள்
(10)
முதலில் யாவரும் ஒமரது வழியிலேயே பயின்றுள்ளனராத
லால்.
(11)
மனிதர்களிடையேயும் அவமானத்தைக் கொணர்பனவாயும், வெட்கப்பட வேண்டியனவாயும் கருதப்படும் செயல்கள் பல வற் றில் களவு, விபசாரம், ஒருவரையொருவர் ஏமாற்றுதல் போன் றனவற்றில் தேவர்கள் ஈடுபட்டதாக ஒமரும் எசியொட்டுவும் கூறியுள்ளனர். R. P. 99.
(12) களவு, விபசாரம், ஒருவரையொருவர் எமாற்றுதல் போன்ற பல சட்டவிரோதமான செயல்களில், தேவர்கள் ஈடுபட்டனர் என அவர்கள் கூறியிருப்பதால், R. P. ib.
(14). ஆனல் தேவர்களும் தங்களைபோலவே பிறக்கின்றனர் என வும், தங்களைப்போலவே உடையணிகின்றனர் எனவும், உருவம் குரல் என்பன உடையர் எனவும் மனிதர்கள் எண்ணுகின்றனர்.
R. P. 100.
* எமக்குக் கிடைத்துள்ள அடிகளில் பைதாகரசு எனும் பெயர் காணப்பட
வில்லை. ஆனல் இடையோசினிசுவின் ஆதாரத்தில் இவ்விவரங்கள் பா முழு வதும் இருந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானமும் சமயமும் 125
(15) ஆம், எருதுகளும், குதிரைகளும், சிங்கங்களும், கைகளை யுடையவையாய், மனிதர்கள் வரைவது போலக் கலைவண்ண முடைய ஓவியங்களை வரையும் ஆற்றலுடையனவாய் இருந்தால், குதிரைகள், குதிரைகளைப் போன்ற தேவர்களையும், எருதுகள், எருதுகளைப் போன்ற தேவர்களையும் படைத்திருக்கும். பல்வேறு இனங்களைச் சேர்ந்த பிராணிகளும், தத்தம் உருவங்களைக் கொண்ட தேவர்களைப் படைத்திருக்கும். R. P. ib.
(16) எதியோப்பியர்களது கடவுளர்கள் கறுத்த நிறமும் சப்பை மூக்கும் படைத்தவர்களாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றனர். திரேசியர்கள், தமது கடவுளர்கள் நீலக்கண்களும் செம்மயி ரும் உடையவர்கள் என்கிருர்கள். R. P. 100 b.
(18) முதலிலிருந்து முழுவதையும், தேவர்கள் மனிதர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. ஆனல் தாமாகவே தேடுவதின் மூலம் மனிதர்கள் எது நல்லதோ அதை அறிந்து கொள்கின்றர்கள். R. P. 104 b.
(23) கடவுள் ஒருவன். கடவுளருள்ளும் மனிதருள்ளும் யாவரி லும் உயர்ந்தவன், உருவத்திலோ சிந்தனையிலோ மனிதர்களைப் போலல்லாதவன். R. P. 100.
(24)
அவன் முழுவதுமே கண்ணுகவும், செவியாகவும், சிந்தனையா கவும் இயங்குகிறன். R. P. 102.
(25) தான் இயங்காமலே தனது சிந்தனையினல் அவன் அனைத் தையும் இயக்குகிறன். R. P. 108 b.
(26) அவன் சற்றேனும் அசையாமல் ஒரே இடத்திலேயே நிலைத்
திருக்கிருன் ; அங்குமிங்குமாக அலைவது அவனது தகுதிக்குப் பொருத்தமானதும் அல்ல. R. P. 110 8.

Page 71
126 ஆதி கிரேக்க மெய்யியல்
(27) அனைத்தும் நிலத்திலிருந்தே தோன்றுகின்றன, நிலத்தி லேயே முடிவடைகின்றன. R. P. 103 a.
(28) நிலத்தின் மேற்புற எல்லை, எமது பாதங்களுக்குக் கீழே காற் ருேடு சேருமிடத்தே காணப்படுகிறது ; அடிப்புறத்தே அது எல்லை யின்றிக் கீழ் நோக்கிச் செல்வதாக உள்ளது. R. P. 103.
(29) தோன்றி வளர்வன யாவும் நீரும் மண்ணுமே. R. P. 103.
(30) நீரும், காற்றும் கடலிலிருந்தே தோன்றுகின்றன ; ஏனெ னில் பரந்த கடலானது இல்லையேல், மேகங்களினுள்ளே யிருந்து (வெளியே வீசும் காற்றுக்கள் இருக்கமாட்டா), வானத் திலிருந்து நீர் கொணரும் மழையும், ஆறுகள், அருவிகள் என்பனவும் இருக்கமாட்டா. பரந்த கடலே, மேகங்களுக்கும் காற்றுக்களுக்கும் ஆறுகளுக்கும் தந்தையாக உளது. R. P.103.
s
እ
(31) பூமிக்கு மேலே ஊசலாடி அதனைச் சூடாக்கும் சூரியன்.
(32)
ஐரிசு என அழைக்கப்படுவதும் ஊதா, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களையுடைய ஒர் மேகமே. R. P. 103.
(33)
நாம் யாவரும் மண், நீர் என்பனவற்றிலிருந்து பிறந்த வர்களாதலால், R. P. ib.
(34) நான் குறிப்பிடும் விடயங்கள் அனைத்தைப் பற்றியும் கடவு ளர்களைப் பற்றியும் ஐயமற அறிந்த மனிதன் ஒருவனும் ஒரு போதும் இருந்ததில்லை ; இனியும் இருக்கப்போவதில்லை ; தற்செயலாக அவன் கூறுவது முற்றிலும் உண்மையாக இருந் தாலும், அதனை அவன் உணர்வதில்லை. ஆனல் ஒவ்வொரு
* இப்பகுதி ஒமருக்கு எழுதப்பட்ட செனீவாப் பக்கவுரையிலிருந்து பெறப் பட்டது. பக்கவடைப்புகளுக்குள்ளே தரப்பட்டிருக்கும் சொற்கள் டியல்சுவி லுடையவை.

விஞ்ஞானமும் சமயமும் 127
வரும் தமக்குப் பிடித்த கற்பனைகளை நம்பிக்கொண்டிருக்கலாம். R. P. 104.
(35) இவற்றை உண்மையைப் போன்ற கற்பனைகள் எனக் கருத Gontub. R. P. 104 a.
(36) மனிதர்களது பார்வைக்குப் புலப்படக்கூடியனவாய் உள்ள அனைத்தும்.
(37) சில குகைகளில் நீர் சொட்டுகிறது. . . . . .
(38)
பொன்னிறமான தேனை இறைவன் படைத்திராதிருந்தால், அத்திப்பழங்களை, (இப்போது கருதுவதிலும் பார்க்க) மிகவும் இனிமையானவையென மனிதர் கருதியிருப்பார்கள்.
58. இக்கவிதைப்பகுதிகளிற் பெரும்பாலானவை எவ்வகையி லும் மெய்யியற் சார்புடையனவல்ல. அத்தகைய சார்புடை யன போற் காணப்படுவனவும், உண்மையில் பிறவிடயங்களைக் கருதுவனவே என்பதை எளிதில் உணரலாம். இவற்றுள் ஒன்று (32 ஆவது பகுதி) எதைக் கருதுகிறது என்பது தெளிவு. “ஐரிசுவும் ’ ஒரு மேகமே எனப்படுவதிலிருந்து சூரியன், சந்திரன், உடுக்கள் என்பனவற்றைப் பற்றியும் இவ்வாறே கூறப்பட்டிருக்க வேண்டும் என நாம் அனுமானிக்கலாம், எனெனில் இவையெல்லாம் “ இயக்கம் காரணமாகத் தீப்பற்றிக் கொண்ட மேகங்களே “யென விளக்கப்பட்டன வெனத் தொகுப்பாசிரியர்கள் மூலமாகவும் அறிகிருேம். ஈத்தியோக வின் மூலமாகக் கிடைத்துள்ள, புனித எல்மோசுவின் தீ பற்றிய விளக்கமும் இச்சந்தர்ப்பத்திற்கே பொருந்துவதாகக் கொள்ளப்படல் வேண்டும். டயசுகொரோய் எனச் சிலரால் அழைக்கப்படுவனவும், கப்பலிற் செல்கையில் உடுக்கள் போலக் காணப்படுவனவுமான சிறு பொருட்களும் இயக்கம் காரண மாக ஒளியூட்டப்பட்ட சிறு மேகங்களே யெனவும் கூறப்பட் டிருக்கிறது. தொகுப்பாசிரியர்களும், சந்திரன், உடுக்கள், வால்வெள்ளிகள், எரிவெள்ளிகள் முதலியவை பற்றிக் கூறு கையில், மேற்கூறிய விளக்கத்தையே சிறு மாற்றங்களோடு
மேகங்களெனச் செனேபனிசுவாற் கருதப்பட்ட உடுக்களையே இது குறிக் கிறது என டியல்சு கூறுவது சரியெனலாம்.
வானசோதி

Page 72
128 ஆதி கிரேக்க மெய்யியல்
தந்துள்ளனர். ஆகவே, இஃது ஒர் ஒழுங்கான அண்டவியற் கருத்தெனவே கொள்ளத் தோன்றுகிறது. ஆனல் இவ்வொ ழுங்கான விளக்கமுறை தியோபிறசத்தோசுவினதே யொழியச் செனுேபனிசுவுடையதல்ல வெனலாம். ஏனெனில் ஒரு சில அறுசீரடிச் செய்யுள்கள் அதிகமாக இருந்திருந்தால், தொகுப்பு நூல்கள் ஏற்பட்டமை முற்ருக விளக்கப்பட்டிருக்கும் என்பது வெளிப்படை.
ஆனல் சூரியன் பற்றிக் கூறப்பட்டிருப்பவற்றை நோக்கும் போது ஓர் சிக்கல் ஏற்படுகிறது. அதுவோர் தீப்பற்றிய மேக மெனக் கூறப்படுகிறது ; சூரிய வெப்பம் காரணமாகக் கடல்நீர் ஆவியாகி, அவ்வாவியிலிருந்தே மேகங்கள் உருப்பெறுகின்றன வெனும் கூற்றேடு இது அவ்வளவு பொருந்துவதாயில்லை. ஈரலிப்பான வெளிமூச்சிலுள்ள தீப்பொறிகளின் சேர்க்கையே மேகங்கள் எனச் செனேபனிசு கருதினரெனத் தியோபிறசத் தோசு கூறுகிறர் ; ஆனல் இதுவும் வெளிமூச்சு எவ்வாறு உண்டாகிறது என்பதை விளக்கவில்லை. ஆனல், மனித வியல்புடையவர்களாகக் கற்பனை செய்யப்பட்ட கடவுளர்களை இழித்துக் கூறுவதே யொழிய, வானசோதிகள் பற்றிய விஞ்ஞான ரீதியான கொள்கை யொன்றை அமைப்பது செனே பனிசுவின் நோக்கமல்ல என்பதை உணர்ந்தோமாயின், வெளி மூச்சு எவ்வாறு ஏற்படுகிறதென்பது விளக்கப்படாததை ஒர் குறையாகக் கருதமாட்டோம். இங்கு முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது ஈலியோசுவும் ஓர் தற்காலிக நிகழ்ச்சி யெனப் பட்டமையே. அனக்சிமாந்தர் கருதியதுபோலச் சூரியன் பூமி யைச் சுற்றி இயங்கவில்லை. உண்மையில் சூரியன் நேரான வோர் கதியிலேயே செல்கிறது. அதற்கும் எமக்கும் இடை யேயுள்ள தூரம் அதிகரிப்பதுவே, அது வட்டமாகச் செல்வது போற் றேன்றுவதற்குக் காரணம். ஆகவே மறுநாள் உதயமாவது, முதல் நாள் காணப்பட்ட சூரியனே எனக் கொள் வது தவறகும். ஒவ்வொரு நாளும் உதயமாவது ஒவ்வொரு புதிய சூரியன் என்க. பூமியில் மக்கள் வாழாத இடங்களிற் சூரியன் செல்கையில், அங்கு “ ஒர் குழியினுள் அது விழுந்து விடுவதனலேயே’ சூரிய கிரகணம் எற்படுகிறது. ஒர் கிரகணம் ஒரு மாதகாலம் வரை நீடிக்கலாம். மேலும் அநேக சூரியன் களும் சந்திரன்களும் உள. பூமியின் ஒவ்வொரு பாகத்திற் கும், இவ்விரு இனங்களிலும் ஒவ்வொன்று உள்ளன.
* குழியில் விழுந்து விடுகிறது” எனும் வர்ணனை செனே பணிசுவின் கவிதைகளிலொன்றிலிருந்தே எடுக்கப்பட்டிருக்க
* சத்தியோசுவின் இப்பகுதிகள் டியல்சுலினல் தொகுக்கப்பட்டவை.

விஞ்ஞானமும் சமயமும் 129
வேண்டும் என்பது தெளிவு. இதுவும் இதனை யொத்தை வாகக் காணப்படும் இன்னும் பல சொற்றெடர்களும் தியோ பிறசத்தோசுவினல் எடுத்தாளப்பட்டிருத்தல் வேண்டுமெனவே நாம் கருதுதல் வேண்டும். உடுக்கள் பகலில் அணைந்து போகின்றன. ஆனல் இரவில் மீண்டும் “தணற்கட்டிகள் போல ” ஒளிர்கின்றன. உலகும் அதனில் வாழும் சிவராசி களும் தோன்றுவதற்குச் சூரியனும் காரணமாயிருந்திருக்கிற தெனலாம். ஆனல் சந்திரன் “ இப்படகில் எவ்வேலையுமே செய்யவில்லை”. இத்தகைய சொற்ருெடர்கள், வானசோதிகளை நகைப்புக்கிடமானவையாக்குந் தன்மையையே யுடையனபோலத் தோன்றுகின்றனவாதலால், அண்டவியற் சார்புடையனபோலக் காணப்படும் எனைய கவிதைப்பகுதிகளும் இந்நோக்கத்தோடு தான் எழுதப்பட்டனவோ எனும் வின மனத்தே எழுகிறது.
59, 29 ஆவது பகுதியில் “பொருட்கள் யாவும் மண்ணும் மண்ணும்
நீருமே ’ எனச் செனுேபனிசு கூறுகிறர். எச்சந்தர்ப்பத்தில் நீரும் இது கூறப்பட்டது என்பதைப் பற்றித் தியோபிறசத்தோசு கூறியவை இப்பொலைட்டசுவினற் பேணித் தரப்பட்டுள்ளன. இவை பின்வருமாறு :
நிலம் கடலோடு கலந்துகொண்டிருக்கிற தெனவும் ஈரலிப்பி னல் அது சிறிது சிறிதாகக் கரைந்து கொண்டிருக்கிறதென வும் செனுேபனிசு கூறினர். இதைத் தான் பின்வருமாறு நிரூபிப்பதாக அவர் கூறுகிறர். நாட்டின் மத்திய பகுதிகளி லும் மலைகளிலும் கிளிஞ்சில்கள் காணப்படுகின்றனவெனவும், சிராக்கியூசுவின் கற்குழிகளில் மீன், கடற்பாசி என்பனவற்றின் சுவடுகள் காணப்பட்டன வெனவும், பாரோசு எனும் இடத்தில் கல்லொன்றின் ஆழத்தில் “பே ” இலையொன்றின் சுவடும், மோல்ட்டா சமபூமியில் பல கடலுயிர்களினது சுவடுகளும் காணப்பட்டனவெனவும் அவர் எடுத்துக் காட்டினர். ஆதியிற் பொருட்கள் யாவும் சேருக இருந்தபோதே இவை யாவும் தோன்றினவெனவும், சேற்றிற் பதிந்த இவற்றின் அடையாளங் கள் காய்ந்து போயினவெனவும் இவர் கூறுகிறர். பூமி கடலுள் இழுத்துச் செல்லப்பட்டுச் சேருக மாறும்போது, மனிதர்கள் யாவரும் அழிந்து போகின்றனர். எல்லா உலகங் 56fg|th 9 hunn pig,6) poo)LGug)/Spg). Hipp. Ref. i. 14 (R. P. 103 a).
ஆனல் இது அனக்சிமாந்தரது கொள்கையே யாதலால், உயிர்ச்சுவடுகளைக் கண்டுபிடித்த பெருமை செனுேபனிசுவை விட அனக்சிமாந்தரையே சாரும் எனக் கூறுவது பொருத்த முடையது எனலாம். மேலே கூறப்பட்டுள்ள யாவற்றிலும்

Page 73
முடிவுள்ளது அல்லது முடிவற்றது
130 ஆதி கிரேக்க மெய்யியல்
குறிப்பிடத்தக்கது “ எல்லா உலகங்களிலும் ” இம்மாறுதல்கள் எற்படுகின்ற வென்னும் கூற்றே. செனேபனிசுவும் “ எண் ணிறந்த உலகங்கள் ” இருந்தனவென நம்பினர் எனவே தியோபிறகத்தோசு கூறியிருக்கவேண்டும். இக்கொள்கையை ஏற்றுக்கொண்டோரது பெயர் வரிசையில் இவரது பெயரையும் ஈத்தியோசு குறிப்பிட்டிருந்தாரென முன்பு கண்டோம். இடை யோசினிசுவும், செனுேபனிசு இக்கொள்கையை யுடையரா யிருந்தார் எனவே கூறினர். இப்பொலைட்டசு, இதுபற்றி ஐயத்திற்கேயிடமில்லையெனக் கருதிக் கொண்டார். ஆனல் வேறேர் சந்தர்ப்பத்தில், உலகம் அல்லது கடவுள் ஒன்றே யெனச் செனுேபனிசு கூறியுள்ளார். ஆனல் அவரது கொள் கைக்கு நாம் இதுவரை பொருள் கண்ட முறை சரியான தேயெனின், இது எமக்கு அதிக சிரமத்தை அளிக்க வேண்டிய தில்லை. உண்மையில் கவனிக்கப்படவேண்டியது என்னவென் றல், ' கையா” என்பதும், விரைவிற் கழிந்து போகும் ஓர் தோற்றமெனக் கருதப்பட வேண்டுமேயொழிய, எல்லாப் பொருள்களுக்கும் நிரந்தரமாக உள்ளவோர் இடமெனக் கரு தப்படக் கூடாதென்பதே. எசியொட்டைத் தாக்குமுகமாகவே இது கூறப்பட்டது. இம் முறையில் செனேபனிசு அனக்சிமாந் தரைப் போல, எண்ணிறந்த உலகங்கள் உள எனக் கூறிப் பின்னர் வேருேர் இடத்தில் உலகம் அல்லது இறைவன் ஒன்றே யெனக் கூறியிருந்தால், இதனை இனி ஆராயப்போகும், நன்கு உறுதிப்படுத்தப்பட்ட வேறேர் முரண்பாட்டோடு தொடர்பு படுத் திப் பார்க்கலாம்.
60. செனேபனிசு உலகம் முடிவுள்ள தெனக் கருதினரா அல்லது முடிவற்றதெனக் கருதினரா என அவரது பாடல்களிலி ருந்து அறிவதற்கு அரித்தோதில் முயன்றர். “இவ்விடயம் பற் றித் தெளிவாக அவர் எதுவும் கூறவில்லை” என அரித்தோதில் இறுதியிற் கூறினர். ஆனல் “ எல்லாத் திசைகளிலும் அது சமமாயிருந்தது” எனவும், முடிவற்றதாயிருந்தது எனவும் கூறுவதில் உள்ள முரண்பாட்டினைச் செனுேபனிசு உணரவில்லை யெனவே கொள்ளத் தோன்றுகிறது. சூரியன் அனந்தம் வரைக்கும் செல்கின்றதென அவர் கூறினரெனக் கண்டோம். பூமியானது எல்லையற்றுப் பரந்திருக்கும் ஓர் வெளியாக உள்ளது எனும் அவரது கொள்கையோடு இது பொருந்துவதாகவே உள்ளது. மேலும், பூமி, நாம் காணக்கூடியதாகவுள்ள மேற்புற எல்லையொன்றை உடையதாயினும், கீழ்ப்புறத்தே எல்லையின்றி நீண்டிருக்கிறதெனவும் அவர் கூறியுள்ளாரெனக்
Arist. Mets. A, 5.986 b 21 (R. P. 101).

விஞ்ஞானமும் சமயமும் 3.
(பகுதி 28) கண்டோம். பூமி * முடிவில்லாத வேரையுடைய தாய்” இருக்கிறதென அரித்தோதில் கூறுவதாலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது. செனேபனிசுவின் இக்கொள்கையை எம்பிடோக்கிளிசு கண்டித்தார் எனவும் அரித்தோதில் கூறி யுள்ளார். விசாலமான வளிமண்டலம், எல்லையின்றி மேல் நோக்கிப் பரந்துளதெனவும் செனேபனிசு கூறியிருக்கவேண்டு மென, அரித்தோதிலால் எடுத்தாளப்பட்டிருக்கும் எம்பிடோக் கிளிசின் கூற்றென்றிலிருந்து அனுமானிக்கக் கூடியதாயிருக் கிறது. ஆகவே, முடிவுள்ள, கோளவடிவினதான உலகில், முடி வற்றவையான பூமி, வளியென்பனவற்றிற்கு இடம் காணவேண் டியதாயிருக்கிறது ; அங்கத நோக்கோடு எழுதப்பட்டனவற்றி லிருந்து விஞ்ஞானக் கருத்துக்களைப் பெற முனைவதாலேயே இத்தகைய நிலையேற்படுகிறது. ஆனல், வானசோதிகள் பற்றிய கூற்றுக்களுக்கு எவ்வாறு பொருள் கொண்டோமோ, அவ் வாறு இக்கூற்றுக்களுக்கும் பொருள்காண முனைவோமானல், இவை எதை உணர்த்துகின்றன என உணர்தல் ஒருவேளை சாத்தியமாகலாம். ஒளரானசு, கையா என்பவை பற்றிய கதைகளே, தேவபாரம்பரியத்தில் மிகவும் பிரச்சினைக்கிடமான பகுதிகளாயிருந்தன. ஆனல் முடிவற்ற வளிமண்டலம் பற்றிய கொள்கை, ஒளரானசுவை முற்றக நீக்கிவிடுகிறது. பூமி கீழ்நோக்கி, எல்லையற்று நீண்டிருக்கிறது எனும் கொள்கை, கடல், பூமி என்பனவற்றின் அடிப்புற எல்லையில், வானம், பூமிக்கு மேலே எவ்வளவு தூரத்தில் உள்ளதோ, அவ்வளவு தூரத்தில் எடிசுவுக்குக் கீழே உள்ளதென ஒமரால் வரு ணிக்கப்பட்ட இராட்டறச என்பதனை முற்றக நீக்கிவிடுகிறது. இவையெல்லாம் எமது அனுமானமே யென்பது உண்மையே. ஆனல் இவை உண்மையாயிருப்பது சாத்தியமானல், இத்த கைய பாரதூரமான முரண்பாடுகள் இருந்தன என்பதை நம் பாதுவிட எமக்கு உரிமையுண்டெனலாம்.
மெலிசசு, செனுேபனிசு, யோக்சியாசு ஆகியோர் பற்றிய ஆராய்ச்சியென இன்று அழைக்கப்படுவதும், அரித்தோதிலின் நூற்றெகுதிகளிடையே இன்னமும் காணப்படுவதுமான, ஈலிய மெய்யியலாளர் பற்றிய கட்டுரையொன்றின் ஆசிரியரான, பிற் கால அரித்தோதிலிய எழுத்தாளர் ஒருவர், இம்முரண்பாடு களை நுட்பமான ஓர் வழியில் விளக்க முயன்றுள்ளார். உலகம் முடிவுள்ளதுமல்ல, முடிவற்றதுமல்லவெனச் செனேபனிசு கூறி னரெனக் கூறி அதற்கு ஆதாரமாகப் பல நியாயங்களைக் காட்டியதுமல்லாமல், உலகம் இயங்கவுமில்லை, இயங்காமலு மில்லை எனும் ஒர் கூற்றினையும் தான் அதனுட் புகுத்தினர். இதன் காரணமாக, இவ்வரலாற்றில் மிகுந்த மயக்கமேற்பட

Page 74
உலகும் கடவுளும்
132 ஆதி கிரேக்க மெய்யியல்
இடம் உண்டாகியது. அலெக்சாந்தர், தியோபிறகத்தோசுவின் கூற்றுக்களோடு, இவரது கூற்றுக்களையும் தமக்கு ஆதாரமாகக் கொண்டார். சிம்பிளிசியசு, இவரது கூற்றுக்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களையும், தியோபிறகத்தோசுவிடமிரு ந்து பெறப்பட்டவையெனக் கருதினர். செனுேபனிசுவின் கவிதைகளின் பிரதி சிம்பிளிசியசுவுக்குக் கிடைக்கவில்லையாத லால், அவர் பெரிதும் குழப்பமடைந்தார். சமீப காலம் வரைக்கும், செனுேபனிசு பற்றிய வரலாறுகள் யாவும் இக் குழப்பத்தாற் பாதிக்கப்பட்டனவாயே காணப்பட்டன. ஆனல் இக்குழப்பம் ஏற்பட்டிராதுவிடின், “ செனேபனிசுவின் மெய் யியற் கொள்கை ’ யெனும் சொற்ருெடரை நாம் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டோம் என்பதைக் குறிப்பிடலாம். ஏனெ னில் மேற்குறிப்பிடப்பட்ட, புலமைக் கொள்கையாளரது கூற்று, எவ்வகையிலும் நம்பத்தகுந்ததல்ல என உணரப்படும் காலத் திற்கு முன்பிருந்த வழக்கே “செனுேபனிசுவின் மெய்யியற் கொள்கை ’ யெனும் சொற்ருெடருக்குக் காரணமென்க.
61. “எகம் உளது எனும் கொள்கையின் முதல் ஆதரவாளர்” எனச் செனேபனிசுவை, அரித்தோதில் பெளதிகவதிதத்தின் பகுதிகளிலொன்றில் வருணித்திருக்கிருர், அங்கே சந்தர்ப் பத்தை நோக்குமிடத்து, இவரே முதலாவது ஈலியவாதியென உணர்த்தவே அரித்தோதில் இவ்வாறு கூறினர் என்பது புலன கிறது. ஆனல் செனேபனிசுவின் வாழ்க்கை பற்றி நாம் இதுவரை அறிந்த விவரங்களை நோக்குமிடத்து, அவர் ஈலியா வுக்குச் சென்று அங்கு ஓர் மெய்யியல் மரபினை ஆரம்பித்தார் என்பது உண்மையாயிருக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஆகவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் வழமையாக நடைபெறு வது போல, இங்கும் அரித்தோதில் பிளேட்டோவின் கூற்றுக் கள் சிலவற்றை அப்படியே திருப்பிக் கூறியிருக்கிருர் எனவே கொள்ளல் வேண்டும். பிளேட்டோ ஈலியவாதிகளைப் பற்றி அவர்கள் * முழுமைக் கொள்கையைப் பின்பற்றியவர்கள் ’ எனவும் செனுேபனிசுவிலிருந்து, அல்லது அவரது காலத் திற்கு முன்பிருந்தே ஈலியவாதம் நிலவிவந்ததெனவும் கூறி யிருந்தார்.1 பிளேட்டோவின் கூற்றின் இறுதிச் சொற்கள் அவர் என்ன கூறவிரும்பினர் என்பதைத் தெளிவுபடுத்து கின்றன. எரக்கிளேட்டியர்களை அவர் எவ்வாறு “ ஒமரதும்
Soph. 242 d 5 (R. P. 101 b). இப்பகுதியின்படி, செனுேபனிசு ஈலியாவில் குடியேறி வாழ்ந்தாரெனின், பிளேட்டோ கற்பனை செய்த அவரது முன்னேடிகளும் அங்கு வாழ்ந்தனர் எனக் கொள்ள வேண்டியதாகிறது. ஆனல் செனுேபனிசு நடுவயதினராகும் வரை ஈலியாநகர் நிறுவப்படவில்லை யென்றறிக.

விஞ்ஞானமும் சமயமும் 133
அவருக்கு முந்தியோரான ஆசிரியர்களினதும் கொள்கைகளைப் பின்பற்றினேர் ” என வருணித்தாரோ அவ்வாறே, செனே பனிசுவினதும் அவருக்கு முந்தியோரினதும் வழிவந்தோரே என ஈலிய வாதிகளை வருணித்தார். பிளேட்டோ விளையாட் டாகவும் கேலியாகவும் கூறிய பலவற்றிற்கு எவ்வாறு தவ ருகப் பொருள் கொள்ளப்பட்டது என நாம் முன்பே கண் டோம். ஆகவே, இங்கும் அரித்தோதில் அவ்வாறே தவறி ழைத்திருப்பதைக் கண்டு நாம் அதிகம் குழப்பமடைய வேண் டியதில்லை.
* முழு உலகையும் பற்றிக் குறிப்பிடுகையில், எகம் என்பது இறைவனே ” யெனச் செனுேபனிசு கூறினரென அரித்தோதில் மேலும் கூறுகிறர். கடவுளுக்கு மனிதப்பண்புகள் எவையும் இல்லையெனவும், தேவருள்ளும் மனிதருள்ளும் முதல்வன யுள்ளவனே கடவுள் எனவும் கூறும் 23, 24, 25, 26 ஆம் பகுதிகளையே இது குறிப்பிடுகிறதென்பது தெளிவு. 11 முதல் 16 வரையுமுள்ள பாடல்கள் அங்கதக்கவிதையைச் சேர்ந்தன வெனவும் 23 முதல் 26 வரையுள்ள பாடல்கள் அண்டவியற் கவிதையைச் சேர்ந்தனவெனவும் கொள்வதற்குப் பதிலாக, இவை ஒன்றேடொன்று நெருங்கிய தொடர்புடைய பாடல்கள் எனக் கொள்ளின் இப்பாடல்கள் அதிக பொருளுடையனவா கின்றனவெனலாம். இதே முறையிற்றன் கடவுள் அல்லது உலகு எனப்படுவது “ எல்லாத் திசைகளிலும் சமமாயிருக்கிற ” தெனவும் அது சுவாசிக்கவில்லையெனவும் செனுேபனிசு கூறி யிருக்க வேண்டும். தேவர்களிடையே தலைமைப் பதவியெதுவு மில்லையெனும் கூற்றும் 26 ஆம் பகுதியோடு நன்கு பொருந்து வதாயுள்ளது. கடவுளுக்குத் தேவையென எதுவுமிருப்பதில்லை. அத்துடன் ஒமரது காவியத்தில் வரும் எர்மிசு, ஐரிசு என்பா ரைப் போலத் தேவர்களிலொருவர் இன்னெருவருக்குத் தொண்டு செய்பவராயிருப்பதும் பொருத்த ரானதாயில்லை.
62. ஈண்டுக் “கடவுள் ” எனக் குறிப்பிடப்படுவது உலகே ஒரிறைவாதம் என அரித்தோதில் கூறுகிறர். தனித்தனியான புலனுறுப் *து புக்களில்லையாயினும், இது புலனுணர்வுகளை யுடையதாயிருந்த தெனவும், தனது மனத்தின் சிந்தனையாலேயே பொருட்கள் யாவற்றையும் இயக்கும் ஆற்றலுடையதாய் இருந்ததெனவும் செனுேபனிசு கூறினர். இதனை அவர் “ ஒரே கடவுள் ” எனக் குறிப்பிடுகிறர். இதனிலிருந்து மட்டும் இவர் ஒரிறைவாதக் கொள்கையினர் என அனுமானிக்க முடியுமாயின், செனே பணிசு அத்தகையவரே. ஆனல் உண்மையென்ன வெனில், “ஒரே கடவுள்’ எனும் சொற்ருெடருக்குக் கிரேக்கரிடையே அக் காலத்தே வழங்காத பல கருத்துச் சாயல்கள், இக்காலத்தே

Page 75
134 ஆதி கிரேக்க மெய்யியல்
அச்சொற்றெடரைக் கேட்ட மாத்திரத்தே எம்மனத்தில் எழு கின்றன என்பதே. கடவுள் எனும் சொல்லுக்கு வழமை யாகத் தரப்படும் பொருளுக்குப் பொருந்தும் கடவுளர்கள் எவ ரும் இருக்கவில்லையென்பதையே, உண்மையில் செனுேபனிசு நிறுவ விரும்பினர் எனலாம். “ ஒரே கடவுள் ” என்பதற்கு * உலகன்றி வேறு கடவுளில்லை “யெனவே பொருள் கொள் ளல் வேண்டும்.
ஆகவே, புரோய்டெந்தால் கூறுவது போலச் செனேபனிசு ஒர் பல்லிறைவாதி யெனக் கொள்வது, தவறேயென்பது உறுதி. செனுேபனிசு தமது இரங்கற்பாக்களில், பல்லிறை வாதத்திற் கேற்ற மொழியைக் கையாண்டிருப்பது நாம் எதிர் பார்த்திருக்கக் கூடியவொன்றே. * கடவுளர்கள் ” பற்றிய அவ ரது மற்றைய குறிப்புக்களும், ஓமர், எசியொட்டு என்போரது மனிதவியல்புடைய கடவுட் கொள்கையைத் தாக்கும் வகையில் அமைந்தவையெனவே கருதுதல் வேண்டும். பழமொழியினை யொத்தவோர் மொழி நடைக்கு அப்படியே நேராகப் பொருள் கொண்டமையே, புரோய்டெந்தாலினது தவறுக்குக் காரண மெனலாம்.? குறைந்த பதவியினரான அல்லது வரையறுக் கப்பட்ட சில அதிகாரங்களையுடைய கடவுளர்கள் இருந்ததாகச் செனேபனிசு கருதினரென் நாம் கூறுவதும் சற்றேனும் பொருந்தாது ; எனெனில் இத்தகைய கடவுளர்களை மறுப்பதே அவரது முக்கிய நோக்கமாயிருந்தது. ஆனல் “ உலகில் உண் மையான ஒரிறைவாதத்தைத் தழுவியவர் செனுேபனிசு ஒரு வரே " எனக் கூறும் உலிலமோவிட்சுவினளவுக்குப் புரோய் டெந்தால் பிழைவிடவில்லையெனவும் என்னல் எண்ணுதிருக்க முடியவில்லை. செனேபனிசுவின் கொள்கை " ஒர் குறுகிய அனைத்துமிறையெனும் வாதக்கருத்து ’ எனும் டியல்சுவின் கூற்று ஓரளவுக்கு உண்மையைக் கொண்டுள்ளது எனலாம். ஆனல் இக்கூற்றுக்கள் யாவுமே, செனேபனிசுவுக்கு ஏறக் குறையச் சம அளவு ஆச்சரியத்தை அளித்திருக்குமெனலாம். சேட்டேயினது உவெல்ட்கைன்டைப்போல (Weltkind) தன்னைச் சுற்றிலும் தீர்க்கதரிசிகளை உடையவராயிருந்த அவர், ஒரு காலத் தில்தானும் ஓர் இறையியல்வாதியென அழைக்கப்படலாம் என அறிந்திருந்தால், கட்டாயம் புன்னகை செய்திருப்பார்.
* Freudenthal, Die Theologie des Xenophanes (Breslau, 1886). * " கடவுளருள்ளும் மனிதருள்ளும் முதன்மையானவர்” எனச் செனே
பனிசு தமது கடவுளைப் பற்றிக் கூறுவதிலிருந்து, அவர் பல கடவுளர் இருந் தனர் எனக் கருதினர் எனக் கொள்ளலாகாது. இதுவோர் பேச்சு முறையே.

அத்தியாயம் II
எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு
63. புளொசனது மகனும் எபிசோசு நாட்டவனுமான எரக் எரக்கிளேட்ட கிளைட்டசு 69 ஆவது ஒலிம்பிய ஆண்டில் (504/3-501/0 கி.மு.) சின் சிறப்பொடு விளங்கினரெனக் கூறப்படுகிறது ; அதாவது, பல் "சி* வேறு வரலாறுகளிலும் இவரோடு தொடர்புடையனவெனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசனன டாரியசுவினது ஆட்சிக்காலத்தின் நடுப்பகுதியிலென்க.* பைதாகரசு, செனுேபனிசு என்போரை, எரக்கிளைட்டசு இறந்த காலத்திற் குறிப்பிடுகின்றரெனினும் (பகுதி 16), பார்மனைடிசு இவரை இறந்தகாலத்தில் வைத்தே குறிப்பிடுகின்றர் (பகுதி 6) என்பது நாம் முக்கியமாகக் கவ னிக்கவேண்டியதாகும். மெய்யியல் வரலாற்றில் இவருக்குரிய இடத்தை இக்குறிப்புக்களிலிருந்து நிர்ணயிக்கலாம். 114 ஆவது பகுதியிற் குறிப்பிடப்பட்டிருக்கும், எமோடரசு நாடுகடத்தப்பட்ட சம்பவம், பாரசீகரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு முன்னர் நடைபெற் றிருக்க முடியாது என்பதைக் கொண்டு, எரக்கிளைட்டசு கி. மு. 478 ஆம் ஆண்டிற்கு முன்னர் தனது நூலை வெளியிட்டிருக்க முடியாதெனச் செல்லர் கருதினர். இது உண்மையானல், தனது கவிதையை எழுதிய காலத்தே, பார்மனைடிசுவுக்கு எவ்வாறு எரக் கிளைட்டசுவின் கருத்துக்கள் தெரிந்திருந்தன என்பதை விளக்கு தல் சிரமமாயிருக்கும். ஆனல் பேரரசனுக்குத் தாம் திறை செலுத்தி வந்த காலத்திலேயே, எபிசியர்கள் தம் நாட்டவன் ஒருவனை நாடுகடத்தினர் என எண்ணுவதிற் சிக்கல் எதுவுமில்லை. சந்தேகத்திற் கிடமானதான எரக்கிளேட்டசுவின் கடிதங்கள் எனும் நூல் எமோடரசு நாடு கடத்தப்பட்ட சம்பவம் டாரிய சுவின் ஆட்சிக்காலத்தே நடந்ததெனவே நம்பப்பட்டதெனக் கூறுகிறது. எமோடரசுவின் தலைமையிற் செயற்பட்ட கட்சியினர்,
1 இடையோசினிசு, வேறு யாருக்குமூடாக அப்பொலோடரசுவிடமிருந்து இதனை அறிந்திருத்தல் வேண்டும். பிளைசன் என்பதிலும் புளொசன் என்பதே சரியான தென்பதற்கு அதிக ஆதாரங்கள் உள. மேலும், புளொசன் என்பது ஒர் அயோனிய பெயர் என்பது சாசனங்களிலிருந்தும் தெரிய வருகிறது.
? Bernays, Die heraklitischen Briefe, pp. 13 Sqq. * பார்மனைடிசுவின் காலத்திற்கு 177 ஆம் பக்கம் பார்க்கவும். * Bernays, op. cit, pp. 20 Sqq. g. Garrufilâ) u6576ofd5 FClséé567 இயற்றப்பட்டபோது, எமோடரசும் அப்பணியிற் பங்கு பற்றினன் என்னும் உரோம வரலாற்றேடும் இது பொருந்துவதாகவேயுள்ளது. உரோமிலுள்ள, கொமித்தியத்தில் இவரது சிலை ஒன்றிருந்ததெனப் பிளினி கூறுவர். கிரேக்கர்
135

Page 76
136 ஆதி கிரேக்க மெய்யியல்
பாரசீக அரசினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராயும் இருந்தனர் என எண்ணுவதிலும் நியாயமுண்டு. ஆகவே, எமோடரசு நாடு கடத்தப்பட்ட சம்பவம், பாரசீகரது ஆட்சிக்கு எதிரானவோர் இயக்கம் ஆரம்பித்ததைக் குறிக்குமேயல்லாது, அவ்வாட்சியின் வெற்றியையல்ல வெனலாம்.
எரக்கிளைட்டசு, செனுேபனிசுவின் சீடராயிருந்தனர் எனச் சோதியன் என்பார் கூறுகிறர். ஆனல் இது நம்பத்தகுந்த தல்ல வெனலாம் ; எனெனில், எாக்கிளைட்டசு பிறப்பதற்கு முன்னரே செனேபனிசு அயோணியாவை நீங்கியிருந்தார். இவர் எந்த ஒருவரினதும் சீடரல்ல எனக் கொள்வதே பொருத்தம்போலத் தோன்றுகிறது. ஆனல் மைலிசிய அண் டவியல், செனேபனிசுவின் கவிதைகள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தார் என்பது தெளிவு. பைதாகரசுவினற் போதிக் கப்பட்ட கொள்கைகளைப் பற்றியும் அவர் ஓரளவுக்கு அறிந் திருந்தார் (பகுதி 17). இவர் பழமையான அரசகுடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதையும், தமது தம்பிக்காக, பசிலியசு எனும் கெளரவ பதவியைத் துறந்தவர் என்பதை யும் தவிர இவரது வாழ்க்கை பற்றி நாம் அதிகம் அறியோம்?. இவரது வாழ்க்கை பற்றிய பிற கூற்றுக்கள் எவ்வாறு தோன் றின என்பதை நாம் அறிவோம்.8
களது சட்டங்களை மாதிரிகளாகக் கொண்டே பன்னிரு சட்டங்கள் இயற்றப்பட்டன வென்பதை உரோமர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். பேணேய்சு கூறுவதுபோல, உரோம வரலாற்றில் போதிய ஆதாரங்களுடைய மிகச்சில விடயங்களில் இதுவு மொன்றென்க.
• Sotion ap. Diog. ix. 5 (R. P. 29 c).
- Diog, ix. 6 (R. P. 31).
* ஆன்மாக்கள் நீராதல் அவற்றிற்கு மரணத்தைக் கொண்டுவரும் என எாக்கிளைட்டசு கூறினர் (பகுதி 68). இதனேடு பொருந்தத்தக்கதாக, அவர் நீர்வீக்கத்தினுல் இறந்தாரெனக் கூறப்படுகிறது. எபிசியர்கள் தமது நகரத்தைச்
சிறுவர்களுக்கு விட்டுவிடவேண்டுமெனவும் (பகுதி 114) காலம் என்பது
சொக்கட்டானடிக் கொண்டிருக்கும் ஓர் சிறுவனெனவும் (பகுதி 79) அவர் கூறினர். ஆகவே, அவர் பொதுவாழ்விற் பங்குகொள்ள மறுத்தாரெனவும், ஆட்டெமிசு ஆலயத்திற் சிறுவர்களோடு விளையாடுவதில் தனது காலத்தைக் கழித்தாரெனவும் கூறப்படுகிறது. சாணத்தை வெளியே வீசி விடுவோர் பிரே தங்களை அதனிலும் விரைவாக வீசிவிடுதல் வேண்டுமென அவர் கூறினர் (பகுதி 85) ; இதற்கேற்ப, இவர் தனக்கு நீர்வீக்கநோய் வந்தபோது சாணத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டார் எனக் கூறப்படுகிறது. இறுதியாக, 58 ஆம் பகுதி யோடு பொருந்துவதற்காக, இவர் தனது வைத்தியர்களோடும் அதிகம் வாதித் தாரெனக் கூறப்படுகிறது. இக்கட்டுக்கதைகளை Diog. ix. 3-5 இல் காண்க.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 137
64. எரக்கிளைட்டசுவின் நூலின் பெயர் யாதென நாம் அறி அவரது நூல் யோம். அதற்குப் பெயரெதுவும் இருந்ததா வென்பதும் சந்தே கமே. ஆகவே அதிற் கூறப்பட்டனவற்றைப் பற்றியும் நாம் ஓர் தெளிவான கருத்தைப் பெறமுடியாதிருக்கிறது. அது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததெனக் கூறப்படுகிறது : பிர பஞ்சநூல், அரசியல்நூல், இறையியல்நூல் என்பனவே அப் பகுதிகள் என்க?. இந்நூலை இவ்வாறு பிரித்தவர் எரக்கிளைட் டசுவே என நாம் கொள்ளலாகாது ; சுதோய்க்க பாடிய காரர்கள் இதனைத் தொகுக்க முயன்றபோது, இயல்பாகவே இது இத்தகைய மூன்று பகுதிகளாக்கப்படக்கூடியதாகக் காணப் பட்டது எனவே நாம் அனுமானித்தல் வேண்டும்.
எரக்கிளைட்டசுவின் மொழிநடை சிறிதும் தெளிவற்றதென் பது பிரசித்தம் ; இதனுல் இவருக்கு “ இருளுடையார்” எனும் பட்டப் பெயரும் எற்பட்டது. இடெல்பிக்கடவுள், சிபில் என்பவைபற்றிய பகுதிகளிலிருந்து (11-12), தேவவாக்கைப் போன்றவோர் மொழி நடையைத் தாம் கைக்கொண்டமையை இவர் உணர்ந்திருந்தார் என்பது புலப்படுகிறது. ஆகவே இவர் என் இந்நடையில் எழுதினர் என நாம் வினவலாம். முதலாவதாக, அக்காலத்தில் இத்தகைய நடையில் எழுது வதே வழக்காயிருந்தது என்பதைக் குறிப்பிடல் வேண்டும். அக்காலத்தே நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்களும், சமய மறுமலர்ச்சியின் செல்வாக்கும் சேர்ந்து அக்கால சிந்தனையாளர் களுக்கு, தீர்க்கதரிசிகளினதைப் போன்றவோர் மதிப்பை ஏற் படுத்தின. பிந்தர், ஐசுகைலோசு என்போரும் இத்தகைய நடை யிலே எழுதினர். தனித்துவம் மலிந்திருந்த இக்காலத்தே வாழ்ந்த இவர்கள் தனிமையுடையோராயும் எதனிலும் ஆர்வமில்லாதோராயும் இருக்குமியல்புடையராயிருந்தனர். எரக் கிளைட்டசு இத்தகையவராயிருந்தார் என்பதில் ஐயமில்லை. தங்கத்தைத் தேடி நிலத்தைத் தோண்டும் ஆர்வம் மனிதர் களுக்கிருந்தால் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கலாம் (பகுதி 8);
1. Diog ix. 12 (R. P. 30 b) இல் அநேக தலைப்புக்கள் தரப்பட் டிருப்பதிலிருந்து, அவற்றுள் எதுவுமே ஆதாரபூர்வமாக, உறுதிப்படுத்தப்பட்ட தல்ல என்பது தெளிவாகிறது. "தேவதைகள் ” என்னும் தலைப்புப் பிளேட் டோவில் சொபோக்கிளிசு எனும் நூலில் உள்ள குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டதே. எனைய யாவும் சுதோய்க்க தொகுப்பாசிரியர்கள் புகுத்திய “இலட்சியங்களே. "
* Diog ix. 5 (R. P. 30). எரக்கிளைட்டசுவின் கவிதைப்பகுதிகளை வரிசைப் படுத்துவதில், பைவாட்டர் இம்முறையையே பின்பற்றியுள்ளார். 1-90, 91-97, 98-130 என்பனவே ஈண்டு முப்பிரிவுகளாகக் கருதப்படல் வேண்டும்.
* Heraket08 00m Ephe808 எனும் நூலின் முன்னுரையில் டியல்ச தந்துள்ள குறிப்புக்களைப் பார்த்தல் பயனளிக்கும்.

Page 77
கவிதைப் பகுதிகள்
38 ஆதி கிரேக்க மெய்யியல்
அத்தகைய ஆர்வமில்லாதோர், வைக்கோலோடு திருப்தியடைய வேண்டும் (பகுதி 51). தியோபிறசத்தோசு எரக்கிளைட்டசுவைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தும் இதுவெனவே தோன்றுகிறது. எரக்கிளேட்டசு, விறைத்த தலையுடையவன் போன்ற மனேவியல் புடையராய் இருந்தமை, அவரது கூற்றுக்கள் பல குறைவுடை யனவாயும் முரண்பாடுடையனவாயும் இருப்பதற்குக் காரணமா யிருந்தது எனத் தியோபிறகத்தோசு கூறினர்.
65. மிகவும் சிறந்ததான பைவாட்டரது பதிப்பில் உள்ள ஒழுங் கின்படி, எரக்கிளைட்டசுவின் பகுதிகளைத் தருகிறேன்.
(1) என்னைக் கவனிக்கவேண்டியதில்லை ; ஆனல் எனது சொல்லைக் கேட்பதும், பொருள்கள் யாவும் ஒன்றேயென ஒப்பு தலும் அறிவுடையோர்க்கழகாகும். R. P. 40.
(2) இச்சொல்லானது என்றும் உண்மையானதெனினும், மனிதர்கள் முதன்முதலில் இதனைக் கேட்கும்போது, இதனைக் கேட்பதற்கு முன்பு எப்படியிருந்தார்களோ, அவ்வாறே இதனை விளங்காதவர்களாக இருக்கின்றனர். இச்சொல்லின்படியே யாவும் நிகழ்கின்றவெனினும், நான் சொற்களையும் சம்பவங் களையும் இனவாரியாகப் பிரித்து விளக்கும்போதும், மனிதர்கள் இவற்றைக் கொஞ்சமேனும் அறியாதவர்போலக் காணப்படு கின்றனர். ஆனல் சிலர், விழித்திருக்கும்போதும் தாம் என்ன செய்கின்ருேம் என்பதை அறியாதிருக்கிருர்கள்; இவர் கள் விழித்திருக்கும்போதும், நித்திரையில் தாம் செய்வன வற்றை மறந்துவிடுபவர்கள்போல் இருக்கிருர்கள். R. P. 32.
(3) அறிவிலிகள், செவிப்புலன் உள்ளபோதும் அது இல்லா தவர்களுக் கொப்பானவரே ; சிலர், இருக்கும்போதும் இல்லாத வர்கள் போன்றேரேயென்னும் கூற்று இவர்களுக்கே பொருந்
guh. R. P. 31 a.
1. Cf. Diog. ix. 6 (R. P. 31).
* தனது பதிப்பில், டியல்சு இப்பகுதிகளை அவற்றின் பொருளுக்கேற்ப வரிசைப்படுத்தும் முயற்சியை முற்ருகக் கைவிட்டுவிட்டாராதலால், அவரது நூல் எமக்குச் சிறிதும் பயனற்றதாகிவிடுகிறது. முற்றிலும் சீராயில்லாத வோர் ஒழுங்கு முறையினல் எற்படக் கூடிய சிரமத்தை அதிகமாக மதிப் பிட்டதுடன், எரக்கிளைட்டசுவின் மொழிநடை தொடர்பற்ற உரைக்குறிப்புக்களா லானது போன்றது எனும் கூற்றையும் இவர் மிகையாக மதிப்பிட்டுவிட்டார் எனவே எனக்குத் தோன்றுகிறது. எரக்கிளைட்டசுவின் நடை அத்தகையது என்பது உண்மையே யெனினும், அதைக் கொண்டு அவர் நீட்சேயைப்போல எழுதினர் என முடிவு செய்யலாகாது. கிரேக்க எழுத்தாளன் ஒருவனது நடை எவ்வளவுதான் தீர்க்கதரிசன வாக்குப்போல விளக்கமில்லாது இருந்தா லும் அது தொடர்பற்றதாகவிருந்திருக்க முடியாது.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 39
(4) கண்கள் காதுகள் என்பனவற்றின் மொழியை அறியாத ஆன்மாக்களை உடையோருக்கு, இவை பொய்ச்சாட்சிகளே. R. P. 42.
(5) பலர் தாம் காண்பவற்றையும் கவனிப்பதில்லை. பிறர் அவற்றைப் போதிக்கும்போதும் மனத்திற் பதிவு செய்து கொள் வதில்லை. ஆனல் தாம் அவற்றை உணர்ந்து கொள்வதாகத் தம்முள்ளே எண்ணிக் கொள்கிருர்கள்.
(6) பேசவும் தெரியாமல், கேட்கவும் தெரியாமல். (7) திடீரென நடப்பதை, எதிர்பார்த்திராவிட்டால், காண முடியாது. ஏனெனில் அதனைத் தேடிக் காண்டல் சிரமமானது. (8) தங்கம் தேடுவோர், அதிக மண்ணைக் கிண்டிச் சிறிது தங்கமே பெறுகின்றனர். R. P. 44b.
(10) இயற்கை மறைந்திருப்பதிற் பிரியமுடையதாயிருக்கிறது. R. P. 34 f.
(11) இடெல்போயிலிருந்து தீர்க்கதரிசனம் தரும் கடவுள், தனது கருததைக் கூறுவதோ அல்லது மறைப்பதோ இல்லை : அடையாளங்கள் மூலமாக அதனை உணர்த்துகிறர். R. P. 30 a.
(12) அலங்காரமோ, நறுமணமோ அல்லது களிப்போ இல் லாத மொழிகளைத் தனது பிதற்றும் உதடுகளினல் விளம் பும் சிபிலின் குரல் அவளுள்ளேயுள்ள கடவுளின் சத்தியால், ஆயிரமாண்டுகளுக்கப்பாலும் கேட்கிறது. R. P. 30 a.
(13) காணக்கூடியனவாயும், கேட்கக்கூடியனவாயும் அறி யக்கூடியனவாயும் உள்ளனவற்றையே நான் அதிகம் மதிக்கி Gp6ð7. R. P. 42.
(14) ஐயத்திற்கிடமான விடயங்களுக்காதாரமாக நம்பத்த காத சாட்சியங்களைக் கொணர்ந்து. . . . . .
(15) காதுகளிலும் கண்களே செம்மையான சாட்சிகள். R. P. 42 o.
(16) பலபொருள்களை அறிவதனல், அதிக விளக்கம் ஏற் படுவதில்லை. அவ்வாறில்லையெனின் எசியொட்டு, பைதாகரசு, செனுேபனிசு, எக்காதையோசு என்போர் நல்ல விளக்கமுடை யோராயிருந்திருக்க வேண்டும். R. P. 31.
(17) நெசாக்கோசுவின் மகனன பைதாகரசு, வேறு எவரை யும் விட அதிகமாக விஞ்ஞான ஆராய்ச்சியை விருத்தி செய் தான். இவற்றுட் சிலவற்றைத் தேர்ந்துகொண்டு, தான்
* Cf. Herod. i. 8.

Page 78
40 ஆதி கிரேக்க மெய்யியல்
மிகுந்த ஞானமுடையவனெனக் கூறிக் கொண்டான். ஆனல் அவன் பெற்றிருந்தவை பலவிடயங்களைப் பற்றிய அறிவும் பாசாங்குமே. R. P. 31 8.
(18) நான் கேட்ட யாவருள்ளும், ஞானம் என்பது இவை யனைத்திற்கும் புறம்பானது என்பதை உணர்ந்தவர் எவரு
668%. R. P. 32 b.
(19) ஞானம் என்பது புறம்பான வொன்று. யாவற்றை யும், யாவற்றிற் கூடாகவும் இயக்கும் சிந்தனையைத் தெரிந்து கொள்வதே ஞானம். R. P. 40.
(20) யாவருக்கும் பொதுவான இவ்வுலகு, எந்தத் தேவ னலோ, அல்லது மனிதனலோ ஆக்கப்பட்டதல்ல; அது முன் பும், இப்போதும், இனியும் என்றுமறியாத தீயே. அதன் பகுதி கள் சில அணைந்துபோகின்றன ; வேறு சில பகுதிகள் புதி தாகத் தீப்பற்றிக் கொள்கின்றன. R. P. 35.
(21) தீயின் பல்வேறு உருவங்கள் பின்வருமாறு : முதலா வதாக, கடல் ; கடலிற் பாதி நிலம், மறுபாதி சுழல்காற்று.
R. P. 35 b.
(22) கலன்கள் தங்கத்திற்கும், தங்கம் கலன்களுக்கும் மாற் ருகப் பயன்படுவதுபோல, எல்லாப் பொருட்களும் தீக்கும், தீ எல்லாப் பொருட்களுக்கும் மாற்றே. R. P. 35.
(23) அது திரவமான கடலாகிறது. அப்போதும், அது நிலமா வதற்கு முன்பிருந்த அளவினதாகவே யிருக்கிறது. R. P. 39.
(24) தேவையும், தெவிட்டலுமாயிருப்பது தீ. R. P. 36 &. (25) வளியின் மரணம் தீயின் வாழ்வு, தீயின் மரணம் வளியின் வாழ்வு; நிலத்தின் மரணத்தின் மீது நீர் வாழ் கிறது, நீரின் மரணத்தின் மீது நிலம் வாழ்கிறது. R. P. 37.
(26) தீ முன்னேறும்போது, யாவற்றையும் மதிப்பிட்டுத் தண் டனையளிக்கும். R. P. 36 8.
(27) என்றும் மறையாதிருப்பதிலிருந்து யாரும் எப்படி ஒளித் திருக்க முடியும் ?
(28) யாவற்றையும் அவற்றின் திசையிற் செலுத்துவது 9qGuu. R. P. 35 b.
(29) சூரியன் ஒருபோதும் தனது அளவை மிஞ்சுவதில்லை. அவ்வாறு செய்யின், நீதியின் எவற்பெண்களான எரிநையிசுகள் அதனைக் கண்டுபிடித்துவிடும். R. P. 39.
* எம்பிடோக்கிளிசுவின் நான்கு மூலகங்களுமே இங்கு குறிப்பிடப்படு கின்றன போற் ருேன்றுகிறது.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 14
(30) காலை, மாலை என்பனவற்றின் எல்லை கரடியே ; பிரகாச முடைய சியசுவின் எல்லை கரடிக்கு நேரேயுளது.
(31) எனைய உடுக்கள் யாவும் இருப்பினும் சூரியன் இல்லை யேல் இரவு வந்துவிடும்.
(32) ஒவ்வொருநாளும் சூரியன் புதியதே. (33) (தேலிசு கிரகணம் எற்படுமென முன்னரே கூறினர்). (34) யாவற்றையும் கொணரும் பருவங்கள். (35) பெரும்பாலானேரின் ஆசிரியன் எசியொட்டுவே. அவர் அநேக விடயங்களை அறிந்திருந்தாரென மனிதர்கள் உறுதியாக நம்புகின்றனர். இரவையோ பகலையோ அறியாத எசியொட்டுக்கு இவை ஒன்றே. R. P. 39 b.
(36) பகலும் இரவும், கோடையும் மாரியும், போரும் சமா தானமும், பசியும் தெவிட்டலும், யாவும் கடவுளே ; ஆனல் தீ எவ்வாறு வெவ்வேறு வாசனைத் திரவியங்களோடு சேர்கை யில் அவற்றின் சுவைகளுக் கேற்ப அழைக்கப்படுகிறதோ, அவ்வாறே கடவுளும் பல உருவங்களை அடைகிறர். R. P. 39 b. (37) பொருட்கள் யாவும் புகையாக மாறினல், எமது மூக்கு அவற்றை இனங்கண்டு கொள்ளும்.
(38) எடிசுவின், ஆன்மாக்கள் மணமுடையவையாய் இருக் 696ö7p6OT. R. P. 46 d.
(39) குளிர்ந்த பொருள்கள் சூடாகின்றன, சூடானவை குளிர் கின்றன ; ஈரமாயுள்ளது வறண்டு போகிறது, வறண்டிருப்பது ஈரலிப்புடையதாகிறது.
(40) அது பரவுகிறது. ஓரிடத்திற் றிரள்கிறது; முன்னேறு கிறது, பின்னடைகிறது.
(41-42) ஒரே ஆற்றினுள் இருமுறை இறங்க முடியாது ; எனெனில் புது நீர் எப்போதும் வந்து கொண்டிருக்கிறது. R. P. 33.
(43) “ தேவரிடையே யிருந்தும், மனிதரிடையே யிருந்தும் பூசல் என்பது அழிந்து போவதாக ” என ஓமர் கூறியது தவறு. தான் உண்மையில் இப்பிரபஞ்சத்தின் அழிவை வேண் டியே பிரார்த்தித்தார் என்பதனை அவர் உணரவில்லை ; எனெ னில் அவரது பிரார்த்தனை பலித்திருந்தால் யாவும் அழிந்து போயிருக்கும். R. P. 34 d.
* பகல், இரவின் குழந்தையென எசியொட்டு கூறினர்.

Page 79
142 ஆதி கிரேக்க மெய்யியல்
(44) போரே யாவற்றினதும் தந்தையும், அரசனும் ஆகும் ; சிலரைத் தேவர்களாகவும் சிலரை மனிதர்களாகவும், சிலரைச் சுதந்திர மற்றவர்களாகவும், சிலரைச் சுதந்திரமுடையோராயும் அது ஆக்கியுள்ளது. R. P. 34.
(45) முரண்பட்டிருப்பது எவ்வாறு தன்னுள்ளே இசைவுடைய தாயிருக்கிறது என்பதை மக்கள் அறியார்கள். வில்லிலும், வீணையிலும் உள்ளது போல இதுவும் ஒன்றையொன்று எதிர்த் துள்ள இழுவிசைகளின் இசைவே. R. P. 34.
(46) முரண்பாடானதே எமக்கு நன்மை பயப்பது. (47) வெளிப்படையாகவிருக்கும் இசைவிலும், மறைந்திருக் கும் இசைவு நல்ல தென்க. R. P. 34.
(48) யாவற்றிலும் பெரியனவான விடயங்களைப் பற்றி நாம் எமக்குத் தோன்றியவாறெல்லாம் கற்பனை செய்யாதிருப்போ
OT5. -
(49) ஞானத்தை அடைய வேண்டுவோர், உண்மையில் அநேக விடயங்களை அறிந்திருத்தல் வேண்டும்.
(50) கம்பளி திருத்துவோனது சீப்பிற்கு நேர்வழியும் குறுக்கு வழியும் ஒன்றே.
(51) பொன்னையும், வைக்கோலையும் கொடுத்தால் கழுதை கள் வைக்கோலையே நாடுகின்றன. R. P. 31 a.
(51அ) 1கைப்புத்தன்மையையுடைய காட்டவரையைக் கண்ட தும் எருதுகள் அதனை உண்ணலாமென்று களிப்படைகின்றன. R. P. 48 b.
(52) கடல்நீர், யாவற்றிலும் சுத்தமானதும், யாவற்றிலும் அசுத்தமானதும் ஆகும். மீன்கள் அதனைக் குடிக்கின்றன, அவற்றிற்கு அது நன்மை பயக்கிறது. மனிதர்களுக்கு அது குடிக்கத் தகாததாயுள்ளது. அவர்களுக்கு அது தீமை விளை விக்கிறது. R. P. 47 c.
(53) பன்றிகள் சேற்றற் தம்மைக் கழுவிக்கொள்ளுகின்றன. தோட்டத்துக் கோழிகள் புழுதியிற் குளிக்கின்றன.
(54) ...... சேற்றிற் களிப்பதற்கு. (55) எந்த மிருகமும் அடித்தே மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.?
(56) 45 ஆவது பகுதியில் உள்ளவாறே.
• See Bywater in Journ. Phil. ix p. 230. *· 55 g6 Lugufbgf : Diels in Berl. Sitzb., l901, p. 188.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 143
(57) நன்மையும் தீமையும் ஒன்றே. R. P. 47 e. (58) நோயாளர்களை வெட்டியும் எரித்தும், குத்தியும் பல மாக இழுத்தும் வேதனை செய்யும் வைத்தியர்கள், தாம் செய்யும் இப்பணிக்குப் பணமும் கேட்கின்றனர். இவர்கள் அத னைப் பெறுதற்குச் சற்றேனும் தகுதியுடையரல்லர். R. P. 47 .ே (59) முழுமையுடையனவும் முழுமையற்றனவுமாய் ஒன்ருய்ச் சேர்ந்தும் வேருய்ப் பிரிந்தும், இசையும் விரோதமும் உடையன வையாய் இருப்பவையே இணைகள். எகம் என்பது அனைத் தினலும் ஆக்கப்பட்டிருக்கிறது ; அனைத்தும் அதனிலிருந்து தோன்றுகின்றன.
(60) இவை இல்லாதிருந்திருந்தால், மனிதர்கள் நீதியின் பெயரையே அறிந்திருக்கமாட்டார்கள்.
(61) கடவுளின் நோக்கில் எந்தக் காரியமும் நியாயமான செம் மையான பண்புள்ள காரியமே. ஆனல் மனிதர்கள் சிலவற்றைச் சரியான காரியங்கள் எனவும் சிலவற்றைத் தவறன காரியங்கள் எனவும் கருதுகிருர்கள். R. P. 45.
(62) போர் யாவற்றிற்கும் பொதுவானதென்றும், விரோதமே நீதியென்றும், விரோதத்தின் மூலமாகவே (?) பொருள்கள் யாவும் தோன்றி மறைகின்றனவென்றும் நாம் அறிதல் வேண்டும்.
(64) உறங்குபவன எல்லாம் துயிலிலிருப்பது போலவே, விழித் திருப்பனவாக நாம் காண்பன யாவும் மரணமே. R. P. 42 0.
(65) எகம் மட்டுமே ஞானமுடைத்து. சியசு எனும் பெயரால் அழைக்கப்படுதற்கு அது விருப்பமுடையதாகவிருக்கிறது ; விருப் பமில்லாததாயுமிருக்கிறது. R. P. 40,
(66) வில், உயிரென அழைக்கப்படுகிறது; ஆனல் அது மரணத்தைக் கொணரும் தொழிலைச் செய்கிறது. R. P. 49 8. (67) இறப்புளோர் இறப்பிலாரே, இறப்பிலார் இறப்புளோரே; இவர்களது வாழ்வு அவர்களது சாவு, அவர்களது வாழ்வு இவர்களது சாவு. R. P. 46.
(68) ஆன்மாக்கள், நீராகின் இறந்துபோகின்றன. நீர், மண் ணுகின் இறந்து போகின்றது. ஆனல் நிலத்திலிருந்து நீர் வருகிறது, நீரிலிருந்து ஆன்மா உண்டாகிறது. R. P. 38.
* "இவை” எனும் பொழுது, எல்லாவகை அநீதிகளையும் அவர் கருதியிருக்க வேண்டும்.
* கிரேக்க மொழியில் வில்லையும் உயிரையும் குறிக்கும் சொல் ஒன்றே. (மொ. பெ. கு.).

Page 80
144 ஆதி கிரேக்க மெய்யியல்
(69) போம்வழியும் வரும்வழியும் ஒன்றே. R. P. 36 d. (70) வட்டத்தின் பரிதியில் தொடக்கமும் முடிவும் ஒன்றே. (71) எத்திசையிற் சென்ருலும், ஆன்மாவின் எல்லைகளைக்
கண்டு பிடிக்க முடியாது ; எனெனில் அது அத்தனை ஆழ மானது. R. P. 41 d.
(72) ஆன்மாக்கள் தாம் ஈரப்பற்றுடையனவாகும்போது களிப் u6OOL @6ö7p6OT. R. P. 46 c.
(73) மது மயக்கத்திற்குள்ளாகுபவனுடைய ஆன்மா ஈரப்பற் றுடையதாகிறதாதலால், தான் அடியெடுத்து வைக்கும் இடங் களை அறியாது தடுமாறும் அவன் வழிநடப்பதற்கு முகத்தில் உரோமம் கூட வளராத சிறுவனது உதவியை நாடுகிறன். R. P. 42.
(74-76) உலர்ந்த ஆன்மாவே, மிகவும் புத்தியுடையதும் சிறந் ததும் ஆகும். R. P. - 42.
(77) மனிதன் இறந்தவனய், ஆனல் உயிருடையவனுய் இருக் கும் இராக்காலத்தில் தனக்கென ஓர் ஒளியை எற்றிக்கொள் கிருன். துயிலின்போது காட்சியிழந்திருந்தவன், மரணத்தி லிருந்து ஒளி பெற்றெழுகிறன் ; விழித்திருப்பவன், துயில் பவனிடமிருந்து ஒளிபெறுகிறன்.
(78) எம்முள்ளே இளமையுடையதாயிருப்பதும் மூப்புடைய தாயிருப்பதும் ஒன்றே ; செயலுடையதாயிருப்பதும் இறந்து போவதும் ஒன்றே ; முன்னுள்ளவை மாறிப் பின்னுள்ளவை யாகின்றன, பின்னுள்ளவையும் மாறி முன்னுள்ளவையா கின்றன. R. P. 47.
(79) காலம் என்பது சொக்கட்டான் ஆடும் ஓர் சிறுவனென்க: அரசனது போன்ற இவ்வதிகாரம் உண்மையில் ஓர் சிறுவனது கையிலேயே உளது. R. P. 40 a,
(80) நானே தேடியுள்ளேன். R. P. 48. (81) அதே ஆற்றில் நாம் கால்வைக்கிறேம், கால் வைக்க வில்லை ; நாம் இருக்கிறேம், நாம் இல்லை. R. P. 338.
(82) ஒரே தலைமகனுக்காக பணி செய்தலும், அவனலேயே ஆளப்படுவதும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
(83) மாற்றமடைகையில் அது ஆறுதலடைகிறது.
டியல்சு தந்துள்ளவாறு, இப்பகுதிகளைப் பூரணமாகவே தந்திருக்கிறேன். மரணம், துயில், விழிப்பு என்பவை, எாக்கிளைட்டசுவின் மெய்யியல் முறை
யில், முறையே நிலம், நீர், வளி என்பனவற்றைக் குறிக்கின்றன.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 145
(84) பொசெற்றுப்பானமும், கிளறப்படாவிடில் வேறு வேற கப் பிரிந்து விடுகிறது.
(85) சாணத்திலும், பிரேதங்கள் வெளியே வீசத்தகுந்தன. (86) பிறந்ததும், வாழவும், பின்னர் தமது முடிவை அடைய வும் விரும்புகிறர்கள். தாம் இறக்கும்போது, பிள்ளைகளை விட்டுச் செல்கின்றனர். அவையும் தமது காலத்தின் இறுதியில் தமது முடிவை அடைகின்றன.
(87-89) ஒரு மனிதன், முப்பது ஆண்டுகளில் பாட்டனுகலாம். (90) துயின்று கொண்டிருப்போரும் (உலகில் நடந்துகொண்டி ருக்கும் கருமங்களில்) எமது சக தொழிலாளரே.
(91அ) சிந்தனை யாவருக்கும் பொதுவானது. (91ஆ) ஒரு நகரத்தில் வாழ்வோர் எவ்வாறு அதன் சட்ட முறையை இறுகத் தழுவியிருக்கின்றனரோ, அதுபோலவே, அல்லது அதனிலும் பலமாக, பூரண விளக்கத்தோடு பேசுவோர் யாவரும், யாவருக்கும் பொதுவான அறிவை இறுகத் தழுவி ஒழுகல் வேண்டும். ஏனெனில் மனிதரது சட்டங்கள் யாவும், ஒன்றே ஒன்ருகவுள்ள தெய்வ விதியிலிருந்தே தமது ஆணை யைப் பெறுகின்றன. இத்தெய்வவிதி எவ்வளவு வியாபிக்க முடியுமோ அவ்வளவிற்கு வியாபித்திருக்கிறது. அப்படியிருக் கையில், அது யாவற்றிற்கும் கண்டு சிறிது எஞ்சியுமிருக்கிறது.
R. P. 43.
(92) ஆகவே, எது பொதுவானதோ அதையே நாம் நம்புதல் வேண்டும். ஆனல் எனது சொல் யாவருக்கும் பொதுவான தாயிருந்தபோதிலும், சிலர் தமக்கெனப் புறம்பான ஞான்ம் உள்ளவர்கள் போல நடந்து கொள்கின்றனர். R. P. 44.
(93) தாம் எதனை அடிக்கடி புணர்கின்றனரோ, அதன்ையே அவர்கள் விரோதித்திருக்கின்றனர். R. P. 32 b.
(94) துயிலிலிருக்கின்ற மனிதர்களைப் போலப் பேசுவதும், கருமமாற்றுவதும் தகுதியுடைய காரியங்களல்ல.
(95) விழித்திருப்போர் யாவருக்கும் பொதுவானவோர் உலகு உளது. ஆனல் உறங்குவோர் ஒவ்வொருவரும் தமக்கெனத் தனித்தனியே உள்ள உலகங்களுக்குச் செல்கின்றனர்.
(96) மனிதனது வழியில் ஞானம் இல்லை ; ஆனல் கடவுளி னது வழியில் ஞானம் உளது. R. P. 45.
(97) இளஞ்சிறரை மனிதர்கள் குழந்தை என அழைப்பது போலவே, மனிதனும் கடவுளால் குழந்தையென அழைக்கப்
G969(ao96ÖT. R. P. 45.
7-R 10269 (6163)

Page 81
146 ஆதி கிரேக்க மெய்யியல்
(98, 99) மனிதர்கள் யாவரிலும் அதிக ஞானமுடையவனும் கடவுளோடு ஒப்பிடப்படும்போது வாலில்லாக் குரங்குக்குச் சம மானவனே. இது, வாலில்லாக் குரங்குகள் யாவற்றிலும் மிக வும் அழகியதாயுள்ள குரங்கும், மனிதனேடு ஒப்பிடப்படும் போது அவலட்சணமுடையதாய்த் தோன்றுவது போலென்க.
(100) தமது (நகரத்தின்) சுவர்களைக் காப்பதற்கு எவ்வாறு போரிடுகின்றனரோ அவ்வாறு தமது சட்டங்களைக் காப்பதற்கும் மனிதர்கள் போரிடல் வேண்டும். R. P. 43 b.
(101) சிறந்த முறையில் மரணமடைவோர் உயர்ந்த பலனைப் பெறுகின்றனர். R. P. 49 a.
(102) போரில் வீரமரணம் எய்துவோரைத் தேவர்களும் மனி தர்களும் கவுரவிக்கின்றனர். R. P. 49 8.
(103) குடியிருக்கும் வீட்டிற் பற்றிய தீ எவ்வாறு உடனடி யாக அணைக்கப்படவேண்டுமோ, அதனிலும் விரைவாக அணைக் கப்படவேண்டியது பொறுப்புணர்ச்சியற்ற உற்சாகம். R. P. 49 a.
(104) தாம் வேண்டுவனவற்றை யெல்லாம் பெறுவது மணி தர்களுக்கு உகந்ததல்ல. இடையே நோய்கள் ஏற்படுவதாலேயே, செளக்கியம் இன்பமூட்டுவதாயிருக்கிறது ; தீமைகளினல் நன்மை சிறப்படைகிறது ; பட்டினியினல் வளமும், களைப்பினுல் ஓய்வும் இவ்வாறே இன்பமூட்டுவனவாகின்றன. R. P. 48 b.
(106-107) இதயத்தின் ஆசைகளோடு போராடுதல் அரிது. அது தனக்கு வேண்டிய யாவற்றையும் ஆன்மாவின் செலவிற் பெற்றுக் கொள்கிறது. R. P. 49 a.
(108, 109) எமது குறைபாடுகளை மறைத்து வைத்திருத்தல் புத்திசாலித்தனம் ; ஆனல் (மதுக்) கிண்ணங்களோடு ஒய்ந் திருக்கும் வேளைகளில் அவ்வாறு மறைத்து வைத்திருத்தல் மிகவும் கடினம்.
(110) வகத்தினது அறிவுரையின்படி ஒழுகுதல் வேண்டும் என்பது ஓர் சட்டமும் கூட. R. P. 49 8.
(111). ஏனெனில் இவர்களுக்கு எவ்வளவு சிந்தனை அல்லது ஞானம் உளது? மக்கட் கூட்டத்தைத் தம் ஆசிரியராக மதிக் கும் இவர்கள், கவிஞர்களையும் பின்பற்றுகின்றனர். ஆனல் அவர்களுட் பெரும்பாலோர் தீயவர்கள் என்பதையும் சிலரே நல்லவர்கள் என்பதையும் இவர்கள் அறியார். ஏனெனில், அவர்களுள் மிகச் சிறந்ததோரும், மனிதரிடையே தாம் அழி யாப் புகழ் பெறவேண்டுமென்னும் இலட்சியத்தை, மற்ற எல் லாவற்றிலும் உயர்வாக மதிக்கின்றனர். ஆனல் அவர்களிற்

எபிசோசு நாட்டு எரக்கிண்ட்டசு 147
பெரும்பாலானேர் விலங்குகளைப் போல அமிதமாக உண்டு வாழ்கின்றனர். R. P. 31 8.
(112) ஏனையோரிலும் உயர்வாக மதித்தற்குரியவனும், தியூத் தாமசுவின் மகனுமான பியாசு வென்பான் பிரீனியில் வாழ் கிருன் (“ பெரும்பாலான மனிதர் தீயோர்” என அவன் கூறினன்).
(113) யாவரிலும் சிறந்தவனுயிருப்பவன், அவன் ஒருவனே யானுலும், என்னைப் பொறுத்தவரையில் ஆயிரம் பேருக்குச் சமமானவனவான். R. P. 31a.
(114) முகத்தில் உரோமம் முளைக்காத தமது சிறுவரிடம் நகரை விட்டு விட்டு, எபிசியர்கள் யாவரும் தற்கொலை செய் வதே பொருத்தமானது ; எனெனில் தம்முள் யாவரிலும் சிறந்தவனகிய எமோடரசுவை “ எம்மிடையே யாவரினும் சிறந் தவனன ஒருவனும் இருக்கவேண்டாம். அப்படி யொருவன் இருப்பானகில் அவன், வேறு எங்காவது, வேறுயாருக்குமிடையே அவ்வாறு இருக்கட்டும் ” எனக் கூறி அவனை இவர்கள் வெளி யேற்றினரன்றே ! R. P. 29 b.
(115) நாய்கள் தாம் அறியாதவர் எவரைக் கண்டபோதிலும் குரைக்கின்றன. R. P. 31 &.
(116) நம்பிக்கையில்லாததால் மனிதர். (ஞானியைத்) தெரிந்து கொள்வதில்லை.
(117) எல்லோரும் தன்னைப் புகழ்கிறர்கள் என மூடன் நம்புகிருன். R. P. 44 b. .
(118) இவர்களுள் மிகவும் உயர்வாக மதிக்கப்படுபவன் கூட வெறும் கற்பனைகளையே நம்பிக்கொண்டிருக்கிருன். ஆனல் தமது கற்பனைகளை எவ்வளவு உறுதியாகத் தழுவிக்கொண்டி ருப்பினும், பொய் புனைவோரும், பொய்ச்சாட்சி கூறுவோரு மான இவர்கள் ஒருகாலத்தில் நீதியின் பிடிக்குள் அகப்படு வார்கள் என்பது உண்மை.
(119) ஒமரை மேடையிலிருந்து இறக்கிச் சவுக்காலடிக்கவேண் டும். ஆகைலொகோசுவுக்கும் அவ்வாறே செய்தல் வேண்டும். R. P. 31.
(120) எல்லா நாட்களும் ஒரு தன்மையுடையனவே. (121) மனிதனது குணங்களே அவனது விதியாகின்றன.
* 2 ஆம் அத்தியாயத்தில் 45 ஆம் பிரிவில் உள்ள மூவகை வாழ்க்கையையே இது குறிப்பிடுகிறதுபோலத் தோன்றுகிறது.

Page 82
48 ஆதி கிரேக்க மெய்யியல்
(122) மனிதர்கள் இறந்தபின்னர், அவர்கள் முன்பு எதிர் பார்த்திராத, கனவு கூடக் கண்டிராத பலவிடயங்கள் அவர்களை எதிர்நோக்குகின்றன. R. P. 46 d.
(123) . . . . . அவர்கள் எழுந்து, உயிருள்ளவர்களையும் இறந் தோரையும் விழிப்புடன் பாதுகாப்போராகின்றனர். R. P. 46 d. (124) இரவிற்றிரிவோர், மேசியர்கள் (Magians) மதுக் கடவுளை வழிபடும் “ பச்சோய்கள் ” லினய்கள் (Lenai) “ தீட்சை பெற்றேர் ”. . . . . .
(125) மனிதர்கள் ஈடுபடும் மர்மச்சடங்குகள் யாவும் தூய்மை யற்றனவே. R. P. 48.
(126) தேவர்களினதும், வீரர்களினதும் இயல்பை அறியாத வர்கள், அறிவிலியொருவன் வெறுமையான வீடொன்றேடு கதைக்க முற்படுவதுபோல, உருவச்சிலைகளை வழிபடுகின்றனர். R. P. 49 a. ب.
(127) இவர்கள் ஊர்வலத்திற் சென்றதும், இழிவானதான லிங்கபாசுரத்தைப் பாடியதும் இடையணிசசுவையல்லாது வேறு எவரையாயினும் போற்றுதற்கே யெனின், இவர்கள் செயல் மிகவும் இழிந்ததே. ஆனல் இவர்கள் வெறிகொண்டவர்களைப் போலப் பாடியும் ஆடியும் கவுரவிக்கும் இடையணிசசுவும் எடிசு வும் ஒன்றே. R. P. 49.
(129, 130) சேற்றிற் காலை வைத்தவன் அச்சேற்றினலேயே அதனைக் கழுவ முற்படுவதுபோல, தம்மைப் பரிசுத்தப்படுத்துவ தாக எண்ணிக் கொண்டு இவர்கள் தங்கள்மீது இரத்தத்தைப் பூசிக்கொள்கிறர்கள். தன்னைக் கழுவும் பொருட்டுச் சேற்றைப் பூசிக்கொள்பவனைக் காணும் எந்த மனிதனும், அவனுக்குப் பைத்தியம் பிடித்ததெனவே எண்ணுவான். R. P. 49 a. தொகுப்பு 66. இப்பகுதிகளிற் பலவற்றின் பொருள் என்னவென்பது ஆசிரியர்கள் கொஞ்சமேனும் தெளிவாயில்லை. இவற்றுட் பலவற்றின் தரும்வரலாறு பொருள் என்னவென்று எமக்கு ஒருபோதும் தெரியாமலே போய்விடலாம் என்பதும் சாத்தியமே. தொகுப்பாசிரியர்கள் மூலமாக, இவற்றின் பொருளினை அறியக்கூடிய குறிப்பெதுவும் கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். ஆனல், துரதிட்டவசமாக ஏனையோரைப் பற்றிக் கூறியுள்ளளவிற்குத்தானும், தொகுப்பா சிரியர்கள் எரக்கிளைட்டrவைப் பற்றிக் கூறவில்லை. பொதுவாகத் தியோபிறகத்தோசு கூறியனவற்றைத் திரிபின்றிக் கூறுபவ ரான இப்பொலைட்டசுவும், தேலிசு, பைதாகரசு, எரக்கிளைட்டசு, எம்பிடோக்கிளிசு ஆகியோரைப் பற்றிய தகவல்களை அதிகம் நம்பத்தகாததும், மிகவும் சுருக்கமான சுட்டுரைகளைக் கொண்

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 49
டதுமான வாழ்க்கை வரலாறுகளின் தொகுப்பொன்றிலிருந்தே பெற்றுள்ளார். பிற்காலத்து விடயங்களை அறிதற்கு அவர் உபயோகித்த மிகச்சிறந்த நூலினை அவர் எரக்கிளைட்டசுவைப் பற்றி அறிதற்கும் பயன்படுத்தியிருந்திருப்பாரேயாகில், எரக் கிளேட்டசுவைப்பற்றி நாம் அநேகவிடயங்களை அறியக் கூடியதா யிருந்திருக்கும். இப்பொலேட்டசு எரக்கிளைட்டசு பற்றி அறிதற்கு உபயோகித்த நூல், எரக்கிளைட்டசுவை ஓர் பைதாகரசவாதி யெனக் கருதியவோர், “வரன் முறை நூல்’ எழுத்தாளரால் எழுதப்பட்ட தென்க. பைதாகரச வாதிகளுக்கும் எரக்கிளைட்டசுவுக்கு மிடை யேயுள்ள தொடர்பு, இப்பாசோசுவே. ஏனெனில் இப்பாசோசு வினது மெய்யியற் கொள்கையிலும் தீயிற்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அரித்தோதிலைப் பின்பற்றியவரான தியோபிறசத்தோசுவும், எரக்கிளேட்டசு, இப்பாசோசு ஆகிய இரு வரையும் ஒரே வசனத்திற் குறிப்பிட்டமை வரன்முறை நூலாசிரி டையே இம்மயக்கத்தை எற்படுத்துவதற்குப் போதுமானதாயிருந் தது. ஆகவே பெருமளவிற்குப் பூரணமாயிருப்பதும், சரியான தும், “வெதுசுதாபிளாக்கிட்டா’ விலிருந்து பெறப்பட்டதும் இடை யோசினிசுவால் எழுதப்பட்டதுமான வருணனை யொன்றையே நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. எரக்கிளைட்டசுவைப்பற்றி இடை யோசினிசுதந்துள்ள இரு வர்ணனைகளில் இதுவே விரிவானது.
எரக்கிளைட்டசுவின் பாடியகாரர்கள் என இடையோசினிசுவாற் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே சுதோய்க்கர்கள் என்பது இன் னெரு பிரச்சினையாகும். ஏனெனில், எரக்கிளேட்டசுவின் மீது விசேட மதிப்புக் கொண்டிருந்தோரான சுதோய்க்கர்கள், கூடிய ளவிற்குத் தமது கொள்கைக் கேற்றவாறு அவரது கொள்கை களுக்கு விளக்கம் காணமுயன்றனர். மேலும் தமக்கு முந்திய கால சிந்தனையாளர்களது கொள்கைகளைத் தமது கொள்கை களோடு ‘இசைவிப்பதில்’ இவர்கள் அதிக பிரியமுடையோராய் இருந்தனர். இதன் விளைவுகளும் பாரதூரமானவை. ஆகவே சுதோய்க்கரினது கொள்கைகள் சில, அடிக்கடி எரக்கிளைட் டசுவின் கொள்கைகளெனக் கூறப்படுகின்றன. சுதோய்க்கர் களுக்குரியனவான சொற்கள் பலவும், எரக்கிளைட்டசுவின் பகு திகளிடையே விரவிக் கிடக்கக் காணப்படுகின்றன.
67. மக்கட்கூட்டத்தை மட்டுமல்லாது, தனக்கு முன்பு இயற்கை பற்றி ஆராய்ந்த சிந்தனையாளர் யாவரையுமே எரக்கிளைட்டசு இழித்துக் கூறுகிருர். என்றும் வெளிப்படையாயிருந்தபோதி
1. Arist. Met. A, 3. 984 a 7 (R. P. 56 c); Theophr. ap. Simpl. Phys. 23,33 (R. P. 36 d).
2. Diog. ix. 15 (R. P. 30 c).
எரக்கிளேட்ட சின் கண்டுபிடிப்பு

Page 83
எகமும் பலவும்
50 ஆதி கிரேக்க மெய்யியல்
லும் (பகுதி 93) வேறு யாராலும் முன்பு உணரப்படாதிருந்த ஒர் உண்மையைத் தான் கண்டுபிடித்துவிட்டதாக அவர் கரு தினர் என நாம் இதிலிருந்து அனுமானிக்கலாம். மனிதர் கள் யாவரும் அறிவிலிகள் எனவும் புத்திகூர்மை யற்றேர் எனவும் இவர் இழித்துக்கூறியபோது இவர் மனத்தில் என்ன கருத்துடையராயிருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். 18 ஆம், 45 ஆம் பகுதிகளில் இதற்கான விடை காணப்படுகிறதெ னத் தோன்றுகிறது. மேலெழுந்தவாரியாக நோக்குகையில், தனித்தனவாகவும் முரண்பட்டனவாகவும் காணப்படும் பொருள் கள்யாவும் உண்மையில் ஒன்றே யென்னும் கருத்தும், இவ்வே கப்பொருள் பலவாயும் உளது எனும் கருத்தும் இப்பகுதி களிலிருந்து பெறப்படலாம். “முரண்பாடுகளின் விரோதம் ” என்பது உண்மையில் ஒர் இசைவே. இதிலிருந்து பூசலிடும் முரண்பாடுகளின் அடிப்படையாக ஒருமை உளதென்னும் அறி வேயொழிய, ஞானம் என்பது பல பொருள்களைப் பற்றிய அறி வல்லவென்பதும் பெறப்படுகிறது. எரக்கிளேட்டசுவின் கொள் கைகளில் முக்கியமானது இதுவேயெனப் பிலோவும் கூறியுள் ளார். அவர் கூறியிருப்பதாவது : “ இரு முரண்பாடுகளாலும் ஆனதாயிருப்பது ஒன்றே ; அது பிரிக்கப்படும்போது முரண் பாடுகள் வெளிப்படுகின்றன ; தம்மிடையே மிகவும் புகழப் பட்டவரும், உயர்ந்தவருமான எரக்கிளேட்டசு தனது கொள்கை களில் முதன்மையுடையதெனக் கூறித் தந்த கருத்து, எனக் கிரேக்கர்களாற் போற்றப்பட்டது இதுவன்றே ?!
68. வரம்பற்றதிலிருந்து பிரிந்தே முரண்பாடுகள் உண்டாகின் றன வெனவும், ஆனல் அவை தமது அநீதியான ஆக்கிரமிப் புகளுக்கு ஈடு செய்யும் வகையில், மீண்டும் வரம்பற்றதனுள் ளேயே சென்று தமது இறுதியை அடைகின்றனவெனவும் அனக்சிமாந்தர் கூறியிருந்தார். முரண்பாடுகளின் பூசல் தவற னது, முரண்பாடுகள் இருப்பது, எகத்தின் ஒருமைப்பாட்டில் ஏற்பட்ட பிளவையே குறிக்கும் என்பனபோன்ற கருத்துக்கள் இங்கு காணப்படுகின்றன. ஆனல் எரக்கிளேட்டசு போதித்த உண்மைகள் உலகு எககாலத்தில் ஒன்ருகவும் பலவாகவும் இருக்கிறது, முரண்பாடுகளுக்கிடையே “ எதிர் எதிராகவுள்ள இழுவிசையே ’ எகத்தை ஒருமையுடையதாக வைத்திருக்கிறது என்பவையே. வேறு விதமாகக் கூறப்பட்டிருப்பினும், பைதா கரசு கூறியதும் இதுவே. பைதாகரசு கையாண்ட பதம் ஒன்றை எரக்கிளைட்டசுவும் உபயோகித்திருப்பதிலிருந்து, தன் காலத்
• Philo, Rer. div. her. 43 (R. P. 34 e).

எபிசோசு நாட்டு எரக்களைட்டசு 51
திலேயே வாழ்ந்த தன்னிலும் சிறிது வயது முதிர்ந்தவரான பைதாகரசுவின் செல்வாக்குக்கு எரக்கிளைட்டசு உட்பட்டிருந்தார் என்பது புலனகிறது.
இதுவே எரக்கிளேட்டசுவின் முக்கிய கொள்கை யெனப் பிளேட்டோ தெளிவாகக் கூறியுள்ளார். சோபிட்டு என்பதில் (242 d), வரும் ஈலிய நாட்டவன், ஒன்றென நாம் கொள்வது உண்மையிற் பலவே என்பதை எவ்வாறு ஈலியர்கள் நிறுவினர் என்பதை விளக்கிய பின்னர் தொடர்ந்து கூறுவதாவது :
“ ஆனல் சில அயோனிய கவிஞர்களும், (அதற்குப் பிந் தியவோர் காலத்தில்) சில சிசிலிய கவிஞர்களும், இவ்விரண் டையும் ஒன்றுபடுத்தி, உள்பொருள் என்பது ஒன்றகவும் பலவாகவும் இருக்கிறதெனக் கொள்வதே தகுந்த தெனக் கூறினர். காதலும், காய்தலும் இவற்றை ஒன்றுபடுத்தி வைத்திருக்கின்றன எனவும் கூறினர். “ எனெனில் அது வேற்றுமையடைகையில், ஒன்று சேர்க்கப்படுகின்றது” என இக் கவிஞர் எழுவரும் கூறினர் (59 ஆம் பகுதியோடு ஒப்பிடுக). ஆனல் இவருள் மிதமான மனப்பான்மை படைத்தோரா யிருந்தோர், எப்போதும் இவ்வாறேயிருத்தல் வேண்டுமெனும் நிபந்தனையைத் தளர்த்தி, எல்லாம் என்பது ஒருகாலத்தில் அபுரொடைற்று எனும் காதற்றெயவத்தின் ஆணையால் ஒன் ருகவும் சலனமற்றும் இருந்ததெனவும், இன்னெருகாலத்தில் விரோதத்தின் சத்தியால் பலவாகவும் பூசலிட்டுக் கொண்டும் இருந்ததெனவும் கூறினர். இது மாறி மாறி நிகழ்ந்ததாம்.
இப்பகுதியில் அயோனிய கவிஞர் என்பது எரக்கிளைட்டசுவை யும், சிசிலிய கவிஞர் என்பது எம்பிடோக்கிளிசுவையும் குறிக்கின்றன என்பது வெளிப்படை. ஆகவே, உள்பொரு ளென்பது எககாலத்தில், ஒன்றகவும் பலவாகவும் இருந்த தென எரக்கிளைட்டசு போதித்தார் எனப் பிளேட்டோ கருதினர் என்பது புலனுகிறது. ஆனல் இதுவோர் தருக்க ரீதியான தத்துவமாகக் கருதப்படவில்லை. வேற்றுமையிற் காணப்படும் ஒற்றுமையென எரக்கிளைட்டசு விளக்கியது மூலப்பதார்த்தத்தின் பல்வேறு தோற்றங்களுக்கடியேயுள்ள ஒருமையையே. மைலிசி
* லாசல் தனது நூலில் விட்ட பிழை இதுவே. எரக்கிளைட்டசுவின் எடுப் புக்களில், தான் தனது அளவையியலிற் சேர்த்துக் கொள்ளாதது எதுவு மேயில்லையென எகெல் கூறியதே, லாசல் பிழைவிட்டதற்குக் காரணம். 'இப் பொருள் எவ்வாறு உளதோ அவ்வாறுதான் உள்பொருளும் உளது” என அரித்தோதிலின் பெளதிகவதிதத்தில் உள்ள கூற்றை ஏகெல் உதாரணமாகக் காட்டுகிறர். ஆனல் உண்மையென்ன வென்றல், அங்கு இக்கூற்று லியூகிப் போசு அல்லது தெமோகிரித்தோசுவினதாகத் தரப்பட்டிருக்கிறதேயொழிய எரக் கிளைட்டசுவினதாகவல்ல. லியூகிப்போசுவும் தெமோகிரித்தோசுவும் இக்கூற்றின்

Page 84
52 ஆதி கிரேக்க மெய்யியல்
யர்கள் எற்கெனவே இவ்வொருமையை உணர்ந்திருந்தனரெனி னும், வேறுபாடுகளிருந்தமை அவர்களுக்குப் பிரச்சினையாயி ருந்தது. முரண்பாடுகளின் விரோதத்தை அனக்சிமாந்தர் அநீதி யென விளக்கினர். ஆனல் எரக்கிளைட்டசுவோ இவ்விரோதமே மிக உயர்ந்த நீதியெனக் காட்ட முனைந்தார் (பகுதி 12).
69. இத்தகைய காரணங்களினல், எரக்கிளைட்டசு புதியவோர் மூலப்பதார்த்தத்தைத் தேடவேண்டியதாயிற்று. இம்மூலப்பதார் த்தம் முரண்பாடுகளாகப் பிரியக்கூடியதாகவிருப்பது மட்டுமன் றித் தன் இயல்பினல் பிற பொருள்களாக மாறக் கூடியதாகவும் பிற பொருட்கள் தானக மாறக்கூடியனவாகவும் இருத்தல் வேண்டுமென விரும்பினர். தீயில் அம்மூலப்பதார்த்தத்திற்கு வேண்டிய இலட்சணங்கள் யாவும் இருப்பதைக் கண்டார். எரியும் தீயின் பண்புகளை நாம் அவதானிப்போமாயின் அவர் தீயை மூலப்பதார்த்தமாகத் தேர்ந்தமைக்கான காரணங்கள் புலப் படும். இடைவிடாது எரியும் சுடரில் உள்ள தீயின் அளவு மாருதிருப்பதுபோலக் காணப்படுவதுடன், “ பொருள் ” என அழைக்கப்படுதற்குரியது போலவும் தீச்சுடர் காணப்படுகிறது. ஆயினும் அதன் “ உட்பதார்த்தம்’ எப்போதும் மாறிக்கொண் டிருக்கிறது. மேலும் அது எப்போதும் புகையாக மாறிக் கொண்டிருக்கிறது. எரிபொருளிலிருந்து புதிது புதிதாக வரும் பதார்த்தம் புகையாக மாறிய பதார்த்தத்தின் இடத்தை நிரப் புகிறது. நமக்கு வேண்டியது இதுவே. “ என்றும் அணையாது எரியும் தீ’யென உலகை அறிந்து கொள்வோமேயானல் (பகுதி 20) அது எவ்வாறு எல்லாப் பொருள்களாகவும் ஆகின் றது, எல்லாப் பொருள்களும் எவ்வாறு அதுவாகின்றன என அறிந்துகொள்வோம்.
மூலம் கருதியது, சடப்பொருள் எந்த அளவிற்குச் சத்துப் பொருளோ அவ்வள விற்கு வெளியும் சத்துப் பொருளே யென்பதாகும் (பிரிவு 175). ஒரு பொருள் உள்பொருளாகவும் இல்பொருளாகவும் எககாலத்தில் இருக்க முடியுமென எாக்கிளைட்டசு கூறினா எனச் “சிலர் ” கருதுகிருர்கள் என அரித்தோதில் பெளதிகவதிதத்திற் குறிப்பிட்டுள்ளார். ஆனல் அதனைத் தொடர்ந்து, ஒரு மனிதன் தான் பேசுவது போலவே சிந்திக்கிருன் என்பது பெறப்படாது எனக் கூறுகிருர், வேறேர் இடத்தில் அவர் கூறுவனவற்ருல் இது விளக்கப்படு கிறது: குறிப்பிட்ட ஓர் விதத்தில் எரக்கிளைட்டசுவோடு வாதித்தால் எதிர்மறை விதியை அவர் ஒப்புக் கொள்வார் ; ஆனல் அவர் தான் கூறியதன் பொருளை எப்போதும் உணர்ந்து கொண்டவரல்லர் ; அதாவது அதன் தருக்க ரீதியான தாற்பரியத்தை அவர் உணர்ந்திருக்கவில்லை. ‹ሪ
எரக்கிளைட்டசுவின் தீயும் அனக்சிமினிசுவின் வளிபோன்ற வொன்றே யென்பது அரித்தோதிலின் பெளதிகவதிதத்தில் உள்ளது போன்ற சில கூற்றுக்களால் தெளிவாக்கப்படுகிறது. ஆணுல் இங்கு தீயென்பது உண்மையிற் தியைக் கருதுவதல்ல. இலக்கணப் பொருளிலேயே அதனைக் கொள்ள வேண்டும்

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 153
70. தீயை மூலப்பதார்த்தமாக எற்றுக்கொள்ளல், உலகில் பாயம் எற்படும் மாற்றங்களையும் இயக்கத்தையும் புதியவோர் வழியில் நோக்குதற்கும் காரணமாகவமைகிறது. தீ இடைவிடாமல், தொடர்ந்து எரியும் இயல்புடையது. அது எப்போதும் எரி பொருளை உட்கொண்டு புகையை வெளிப்படுத்துவதாயுள்ளது. யாவும், ஒன்றில் எரிபொருளாக மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன, அல்லது சுடருக்கு உயிரூட்டிய பின்னர் கீழ் நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. உள்பொருள் முழுவதுமே, என்றும் ஒடிக்கொண்டிருக்கும் ஒர் அருவி போன் றதென்பதும், ஒருகணமேனும் அது ஒய்ந்திருப்பதில்லை யென் பதும் இதிலிருந்து பெறப்படுகின்றன. நாம் காணும் பொருட் களின் உட்பொருள் எப்போதும் மாறிக்கொண்டே யிருக்கிறது. நாம் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, இப்பொருட்களின் உட் பொருளில் ஒரு பகுதி மாற்றமடைந்து வேறு பொருட்களுக்குட் சென்றுவிடுகிறது. அது போலவே பிறபொருட்களின் பகுதி களும் மாறி இதனுள்வந்து புகுந்து விடுகின்றன. எல்லாப் பொருட்களும் ஆற்றுநீர் போன்று பாய்ந்துகொண்டிருக்கின் றன’ எனும் கூற்று இக்கொள்கையைச் சுருக்கமாக எடுத் துக் கூறுவதாகக் கருதப்படுகிறது. இக்கூற்றுச் சரியான பொருளுடையதேயெனினும், இது எரக்கிளைட்டசுவிடமிருந்து பெறப்பட்டதுபோலத் தோன்றவில்லை யெனலாம். ஆனல் பிளேட்டோ இக்கருத்தைத் தெளிவாக வெளியிடுகிறர். “ ஒன் றும் ஒருபோதும் இல்லை, யாவும் எப்போதும் ஆவனவே ”; “அருவிகளைப் போல யாவும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன ”; * யாவும் கழிவனவே, நிலையாயிருப்பது எதுவுமில்லை '; “ எல்லாப் பொருட்களும் கழிவனவே யெனவும் ஒன்றும் நிலைத்திருப்பதில்லையெனவும் எரக்கிளைட்டசு எங்கோ ஓரிடத் திற் கூறியுள்ளார் ; மேலும் பொருட்களை ஆற்றின் நீரோட் டங்களுக்கு ஒப்பிட்டு, அதே ஆற்றில் இருமுறை கால் வைக்க முடியாதெனக் கூறுகிருர்’ (41 ஆம் பகுதியோடு ஒப்பிடுக)- இவ்வாறுதான் பிளேட்டோ எரக்கிளைட்டசுவின் கொள்கையை விளக்குகிறர். அரித்தோதிலும் இவ்வாறே கூறுகிறர்: “யாவும் இயங்கிக்கொண்டிருக்கின்றன ”, “ எதுவும் நிலையாகவில்லை " எந்தப் பொருளும், எவ்வளவு நிலையானதாகத் தோன்றின லும், உண்மையில் ஓர் அருவி போன்ற ஓட்டத்தின் பகுதியே
என்னும் கருத்துக்கு ஆதாரமாக பிளேட்டோவின் கூற்றென்று (Orat. 413 b) தரப்படினும் அக்கூற்றின் சந்தர்ப்பத்தை ஆராயின் அது இக்கருத்துக்கு எவ் வகையிலும் ஆதாரமாக அமையவில்லை என்பது புலப்படும்.
Plato, Theaet. 152e I; Orat. 401 d 5,402 a 8, Arist. Top. A, ll. 104 b22 , De caelo T, I, 298 b 30; Phys. 0, 3. 253 b 2.

Page 85
154 ஆதி கிரேக்க மெய்யியல்
யெனவும், அதன் உட்பொருள் தொடர்ந்து இரு கணங்களுக் காயினும் மாருதிருப்பதில்லை யெனவும் எரக்கிளைட்டசு கூறினர். இது எவ்வாறு நடைபெறுகிறதென அவர் கற்பனை செய்த முறையை நாம் விரைவிற் காண்போம். ஆனல் எரக்கிளைட்டசு வின் கொள்கையில், மிகவும் புதுமையான அம்சம் இதுவல்ல வென்பதைக் குறிப்பிடலாம். மைலிசியர்களும் இதுபோன்ற வோர் கொள்கையையுடையராயிருந்தனர்.
மேலும் கீழும் 71. எரக்கிளைட்டசு, அனக்சிமினிசுவின் கொள்கைக்கு அமை செல்லும் வழியவே, தனது கொள்கையின் நுணுக்கமான விவரங்களை விருத்தி
செய்தார். ஆனல் ஐதாதல், அடர்த்தியுறல் எனும் கருத்துக் களைக்கொண்டே அவர் சடப்பொருள் மாற்றங்களை விளக்கினர் எனக் கூறமுடியாதெனலாம். ஆனல் எரக்கிளைட்டசு அவ்வாறு தான் சடப்பொருள் மாற்றத்தை விளக்கினர் எனும் பொருள் படத் தியோபிறகத்தோசு எழுதினர் எனக் கருத இடமுண்டு ; ஆனல் எரக்கிளைட்டசு தந்த விளக்கம் தெளிவாயில்லை எனத். தியோபிறகத்தோசு ஒப்புக்கொள்கிறர். நாம் கீழே தந்துள்ள, இடையோசினிசுவிடமிருந்து பெறப்பட்ட பகுதி இதனை நன்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது. எரக்கிளேட்டசுவின் பகுதி களில் ஐதாதல், அடர்த்தியுறல் என்பன பற்றி எதுவுமே கூறப்படவில்லை. “ மாற்று’ எனும் பதமே (பகுதி 22) கையாளப்பட்டிருக்கிறது. தீ புகையை வெளியிட்டு அதற்குப் பதி லாக எரிபொருளை உட்கொள்கையில், நடைபெறுவதனைக் கூறு வதற்கு இதுவோர் நல்ல பதமே.
இப்பொலைட்டசு மூலமாக எந்த விவரமும் கிடைக்காதவிடத்து, எரக்கிளைட்டசுவைப்பற்றிக் கூறும் தியோபிறசத்தோசுவின் தொகு ப்பைப் பற்றி நாம் பெறக்கூடிய மிகச் சிறந்த கட்டுரை, இடை யோசினிசு எழுதிய இரண்டில், விரிவாயிருக்கும் கட்டுரையே என முன்பு கண்டோம். அது பின்வருமாறு :
குறித்த சிலவிடயங்கள் பற்றி அவர் கொண்டிருந்த அபிப் பிராயங்கள் இவை :
தீ ஒரு மூலகம் எனவும், ஐதாதல், அடர்த்தியுறல் என்பன வற்றின் மூலம் எல்லாப் பொருட்களும் அதற்கு மாற்றுக் களாகலாம் எனவும் அவர் கூறினர். ஆனல் எதனையும் அவர் தெளிவாக விளக்கவில்லை. எதிர்ப்புக் காரணமாகவே யாவும் தோன்றுகின்றனவெனவும் இவ்வாறு தோன்றுபவை யாவும் ஆற்றைப்போன்று பாய்ந்து செல்கின்றன வெனவும் அவர் கூறினர்.
* அத்தியாயம் 1, 29 ஆம் பிரிவிற் பார்க்கவும்.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 155
எல்லாம் என்பது எல்லையற்றது; உலகு எகமே. தீயிலிருந்து தோன்றும் இது, தீயினலேயே இறுதியில் உட்கொள்ளப்படு கிறது. ஆதியும் அந்தமுமில்லாது, காலவட்டத்தில் இந்நிகழ்ச் சிகள் மாறி மாறி நடைபெறுகின்றன. இவை விதியின்படியே நடைபெறுகின்றன. முரண்பாடுகளில், உலகம் ஆவதற்குக் காரணமாயிருப்பது போர் எனவும் விரோதம் எனவும் அழைக் கப்படும். இறுதித் தீக்கோளுக்குக் காரணமாயிருக்கும் முரண் பாடு இசைவு எனவும் அமைதியெனவும் அழைக்கப்படும்.
மாற்றத்தை அவர் கீழும் மேலுமாகச் செல்லும் வழியென அழைத்தார். உலகம் இதன் காரணமாகவே தோன்றுகிற தெனவும் கூறினர். தீ அடர்த்தியுறும்போது ஈரலிப்புடைய தாகவும், மேலும் அழுத்தப்படும்போது நீராகவும் மாறுகிறது; நீர் உறையும் போது மண்ணுகிறது. இதனையே அவர் கீழ் நோக்கிச் செல்லும் பாதையென அழைக்கிருர். இவ்வாறேமண் திரவமாக்கப்படின் அதிலிருந்து நீர் உண்டாகிறது, அதனிலி ருந்து யாவும் தோன்றுகின்றன ; எனெனின் யாவற்றிற்கும், கடல் ஆவியாவதையே இவர் காரணமாகத் தருகிறர். இதுவே மேல் நோக்கிய பாதையென்க.
நிலம், கடல் ஆகிய இரண்டில் இருந்தும், வெளி மூச்சுக் கள் எழுந்தன வெனவும் அவர் கூறினர் ; இவற்றுட் சில பிர காசமுடையனவாயும் தூயனவாயும் இருந்தன. எனைய இருள் படைத்தனவாய் இருந்தன. பிரகாசமுடையனவற்றிலிருந்து தீ ஊட்டம் பெற்றது. ஈரலிப்பு எனையவற்றிலிருந்து ஊட்டம் பெற்றது.
உலகைச் சூழ்ந்திருக்கும் பொருளின் இயல்பென்ன வென் பதையும் இவர் நன்கு தெளிவுபடுத்தவில்லை. ஆனல் அதில் கிண்ணங்கள் இருந்தனவெனவும் இவற்றின் உட்குழிந்த பக் கங்கள் நம்மை நோக்கியிருந்தனவெனவும் அவர் கூறினர். இவ்வுட்குழிவுகளில், பிரகாச முடையனவான வெளி மூச்சுக்கள் சென்று சேர்ந்து கொண்டனவெனவும் அதன் மூலம் தோன் றிய தீச்சுடர்களே வானசோதிகளெனவும் இவர் கருதினர்.
இவற்றுள் சூரியனது சுடரே, எனைய யாவற்றிலும் ஒளியும் சூடும் கூடியதாகும் ; ஏனெனில் எனைய சோதிகள் பூமியிலி ருந்து அதிக தூரத்திலுள்ளன ; இக்காரணத்தால் அவை தரும் ஒளியும் சூடும் குறைந்த அளவினவே. ஆனல் சந்திரன் பூமிக்கு மிகவும் அண்மையில் உள்ளதாயினும், அது இருண்ட தூய்மை யற்ற பகுதிக்கூடாகச் செல்கிறது. சூரியன் பிரகாசமான, கலப் பற்ற பகுதிகளுக்கூடாகச் செல்கிறது மட்டுமல்லாது, எம்மிட மிருந்து கணக்கான தூரத்தில் இருக்கிறது. சூரிய சந்திர

Page 86
156 ஆதி கிரேக்க மெய்யியல்
கிரகணங்கள் எற்படுவதற்குக் காரணம் அவற்றின் கிண்ணங் கள் மேல்நோக்கித் திரும்புவதே. சந்திரனது அளவில் மாதந் தோறும் எற்படும் மாற்றங்களுக்குக் காரணம் அதன் கிண் ணம் சிறிது சிறிதாகத் திரும்புவதே.
இரவு பகல், மாதங்கள் பருவங்கள் ஆண்டுகள், மழைகள் காற்றுக்கள் என்பனவும் இவைபோன்ற யாவும் பல்வேறு வகையான வெளிமூச்சுக்களினலேயே உண்டாகின்றன. பிரகாச மான வெளிமூச்சுக்கள் சூரியனது வட்டத்தினுள்ளே தீப்பற் றுவதனல் பகல் உண்டாகிறது. இவற்றிற்கு எதிரான இயல் புடைய வெளிமூச்சுக்கள் அதிகமாக இருப்பதனல் இரவு உண்டாகிறது. ஒளியுள்ள வெளிமூச்சுக்களிலிருந்து வரும் சூடு அதிகரித்ததினல் கோடைகாலமும், இருண்ட வெளிமூச்சுக்களி லிருந்து வரும் ஈரலிப்பு அதிகரித்ததினல் மாரி காலமும் உண்டாயின. எனையவற்றின் காரணங்களையும் இதற்கமையவே எரக்கிளைட்டசு விளக்கினர்.
வானசோதிகளினது கிண்ணங்களைப் பற்றி எவ்வாறு தெளி வாக விளக்காது விட்டுள்ளாரோ, அதுபோலவே பூமியின் இயல் பையும் விளக்கிக் கூருதுவிட்டனர். ஆயின், இவையே அவரது கருத்துக்கள் என்க.
இப்பகுதியை நாம் நம்பலாமானல், இது மிகவும் பயனு டையதாயிருக்குமென்பதில் ஐயமில்லை; தியோபிறசத் தோசுவை ஆதாரமாகக் கொண்ட தொகுப்பு நூல்கள் யாவற்றிலும் பின் பற்றப்பட்டுள்ள வரிசைப்படியே இப்பகுதியிலும் வெவ்வேறு விடயங்களின் தோற்றமும் தரப்பட்டிருக்கின்ற தாதலால், இதை நாம் நம்பலாம் என்பது புலனுகிறது. முதலில் மூலப்பதார்த்தம், பின்னர் உலகு, அதன்பின்னர் வானசோதிகள் அவற்றைத் தொடர்ந்து வளிமண்டல மாற்றங்கள்-இவ்வரிசையே எல்லாத் தொகுப்பாசிரியர்களது நூல்களிலும் தரப்பட்டிருக்கிற தென்க. ஆகவே ஒரிரு விடயங்களைத் தவிர்த்து எனையவற்றை நாம் இப்பகுதியில் உள்ளவாறே எற்றுக்கொள்ளலாம். முதலிற் றவிர்க்கப்படவேண்டியது அடர்த்தியுறல் ஐதாதல் என்பவை பற்றித் தியோபிறசாத்தோசு, கொண்டிருந்த தவறன கற்பனை; அடுத்ததாக, வெதுசுதாபிளாக்கிட்டாவிலிருந்து பெறப்பட்ட சில சுதோய்க்க விளக்கங்கள் நீக்கப்படல் வேண்டும்.
இக்கொள்கையின் விவரங்களேச் சற்று நோக்கலாம். தூய தீ, பிரதானமாகச் சூரியனிலேயே காணப்படுகிறதாம்: இது வும் ஏனைய வானசோதிகள் போல ஒர் கலம் அல்லது கிண் ணமே. இக்கிண்ணத்தின் உட்குழிந்த பக்கம் எம்மை நோக்கு வதாயுள்ளது. கடலிலிருந்து மேற்செல்லும் வெளிமூச்

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 157
சுக்கள் இதனுட் சேர்ந்து எரிகின்றன. சூரியனிலுள்ள இத்தீ பிற உருவங்களை அடைவது எவ்வாறு ? கீழ் நோக்கிய பாதை பற்றிய பகுதிகளை ஆராய்வோமாயின், தீ முதலில் கடலாக மாறுகிறது எனக் காண்போம். இக்கடலில் ஒருபாதி நிலம் எனவும் மறுபாதி பெரும் புயலும் தீயும் சேர்ந்த நீர்த்தம்பம் எனவும் கூறப்படுகிறது. கடலிலிருந்து பிரகாசமான ஆவிகள் எழுவதாலேயே தீ ஏற்படுகிறதென எரக்கிளேட்டசு கூறினர் என நாம் அறிவோம் ; ஆகவே தீ, கடலாக மாறுவதையும், இதனை யொத்த வளிமண்டலமாற்றத்தின் மூலமே விளக்குதல் வேண்டும். உண்மையில், சூரியன் எரிவதனுல் உண்டாகும் புகையையும், தீக்கும் நீருக்கும் இடைப்பட்ட நிலையையும் சரி வர விளக்கக்கூடிய முறையொன்று வேண்டும். தீயோடு சேர்ந்த நீர்த்தம்பம் என்பதைவிட வேறு எதுவுமே இந்நிலையைப் பொருத்தமாக விளக்க முடியாதெனலாம். இந்நீர்த்தம்பம் சூரியனிலுள்ள தீயினல் எற்படும் புகையெனக் கொள்ளக் கூடிய முறையில், தோற்றத்தில் புகையை ஒத்திருக்கிறது. அத்துடன் அது நீராகவே கீழே வருகிறது என்பதையும் எவரும் மறுக்க முடியாது. எரக்கிளேட்டசுவின் இக் கொள்கை பற்றி ஈத்தியோசு கூறியிருப்பது நிலைமையை மேலும் தெளி வாக்குகிறது. "மேகங்கள் தீப்பற்றிப் பின்னர் அணைந்துபோ வதனல்’ இந்நீர்த்தம்பங்கள் உண்டாகின்றன என ஈத்தியோசு கூறியுள்ளார். அதாவது, சூரியனது கிண்ணத்திலிருக்கையில் தீப்பற்றிக்கொண்ட பிரகாசமான ஆவிகள், அணைந்துபோன பின் தீயுடைய இருண்ட புயல் மேகங்களாகத் தோன்றி மீண்டும் கடலுட் செல்கின்றன. அடுத்தபடிவத்தில் கடல் இடையருது மண்ணுக மாறிக் கொண்டிருக்கிறதெனக் கூறப்படுகிறது. நாம் இம்மாற்றம் பற்றி ஏலவே கண்டோம் (பகுதி 10). “ மேல் நோக்கிச் செல்லும் பாதை " பற்றிக் கூறப்படுவதை நோக்கு வோமானல், கடல் எந்த அளவில் நிலமாகிறதோ, அதே விகிதமுறைப்படி நிலம் நீராகிக் கொண்டிருக்கிறதெனக் கூறப் பட்டிருக்கிறது. ஆகவே கடல் எப்போதும் முன்பிருந்த அளவினதாகவேயிருக்கின்றது (பகுதி 23). அதில் ஒருபாதி நிலம், மறுபாதி சுழற்காற்று (பகுதி 21). இதன்படி, குறிப் பிட்ட எந்தக் கணமும் கடலின் ஒரு பாதி கீழ்நோக்கிச் செல் லும் பாதையிற் சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே எப்போ தும் ஒரு பாதி சிறிது நேரத்திற்கு முன்புதான் சுழல்காற்ரு யிருந்ததாயிருக்கும் ; மறுபாதி மேல் நோக்கிச் செல்வதாய்ச் சிறிது நேரத்திற்கு முன்புதான் நிலமாயிருந்ததாயிருக்கும். கடல்நீர் மழையினல் அதிகரிப்பதற்கேற்ப அதே விகிதத்தில் நீர், நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆவியாவதன் மூலம்

Page 87
அளவுக்கு அளவு
மனிதன்
158 ஆதி கிரேக்க மெய்யியல்
கடல் நீர் குறைவதை நிவர்த்தி செய்யும் வகையில் நிலத்தினல் அது கூட்டப்படுகிறது. இறுதியாக, சூரியனது கிண்ணத்தில் கடலிலிருந்து சென்ற ஒள்ளிய ஆவிகள் தீப்பற்றுவதுடன், மேலேயும் கீழேயுமாய்ச் செல்லும் பாதையெனும் வட்டமும் முற்றுப்பெறுகிறது.
72. இவ்வாறு பொருட்கள் இடையருது பாய்ந்து செல்வன வாயிருந்தும், அவை நிலையானவைபோலத் தோற்றமளிப்பது எவ்வாறு ? “ அளவுகள் ” வழுவாது அவதானிக்கப்படுவதா லேயே இது சாத்தியமாகிறதென எரக்கிளைட்டசு பதிலிறுக்கிருர். இதனல், பொருட்களின் உட்பொருள் மாற்றமடைந்து கொண் டிருந்தாலும் அதன் அளவு காலப்போக்கில் மாற்றமடையா திருக்கிறது. “ என்றுமழியாத தீ"யின் சில “ அளவுகள் ” எப்போதும் எரியூட்டப்படுகின்றன. இவற்றைப் போன்ற வேறு * அளவுகள் ” அணைந்து போகின்றன (பகுதி 20). தீக்கு எல்லாப் பொருள்களும் * மாற்ருகின்றன” , தீ எல்லாப் பொருள்களுக்கும் மாற்றகிறது (பகுதி 22). இதிலிருந்து தீ தான் எடுத்துக்கொள்ளும் அளவிற்குக் கொடுக்கிறது என் பது புலனுகிறது. “சூரியன் தனது அளவை மிஞ்சுவதில்லை ” (பகுதி 29).
எனினும் இவ்வளவுகள் முடிவாக நிர்ணயிக்கப்பட்டனவல்ல. ஒள்ளிய வெளிமூச்சுக்களும் இருண்ட வெளிமூச்சுக்களும் மாறி மாறி ஆட்சிபெற்றனவெனத் தியோபிறசத்தோசு கூறின ரென மேலே தந்துள்ள இடையோசினிசுவின் கட்டுரைப்பகுதியி லிருந்து அறிகிருேம். ஆவியாதல் மூலமாக எரக்கிளைட்டசு எல்லாப் பொருட்களின் தோற்றத்தையும் விளக்கினரென அரித் தோதில் கூறுகிறர். குறிப்பாக, இரவு பகல், கோடை மாரி எனும் மாற்றங்கள் இவ்வகையில் விளக்கப்பட்டன. உண்மை யில் எரக்கிளைட்டசுவின் மரபைச் சேர்ந்ததும், இப்போகிருட் டிசுவால் எழுதப்பட்டதெனத் தவருகக் கருதப்படுவதுமான நூலொன்றில், இரவு பகல் என்பனபற்றியும் சூரிய சந்திரர்களது ஒழுக்குகள் பற்றியும் கூறுகையில் “தீ’, நீர் என்பனவற்றின் முன்னேற்றம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறேம். 26 ஆம் பகுதியிலும் தீயின் முன்னேற்றம் பற்றிக் கூறப்படுகிறது. இவை யாவும் தொடர்புபட்டனபோற் காணப்படுகின்றன. ஆகவே எனைய பகுதிகளிலும் இதனேடு தொடர்புடைய குறிப்புக்கள் எதுவும் காணப்படுகின்றனவோ என நாம் ஆராய்தல் வேண் (9ւհ.
73. தீ, நீர் என்பன மாறி மாறி அடையும் முன்னேற்றம் பற்றிய ஆராய்ச்சியைப் பிண்டத்திலிருந்து ஆரம்பித்தல் நலம்.

எபிசோசு நாட்டு எரக்கிளேட்டசு 159
உலகின் இருவகை வெளிமூச்சுக்களைப் பற்றி நாம் அறிவதிலும் அதிகமாக மனிதனது வெளிமூச்சுக்களைப் பற்றி அறிவோம். எரக்கிளைட்டசுவும் அண்டத்தின் மூலம் மனிதனை விளக்காது மனிதன் பற்றிய விளக்கத்தின் மூலமாக அண்டத்தை விளக் கினர் எனவே தோன்றுகிறது. ஆன்மாவும் வறண்ட வெளி மூச்சும் ஒன்றே எனப் பொருள்பட அரித்தோதில் எழுதி யுள்ளார். எரக்கிளேட்டசுவின் பகுதிகளும் இக்கருத்தை உறுதிப் படுத்துகின்றன. தீ, மண், நீர் எனும் முப்பொருள்களால் ஆனவனே மனிதன். ஆனல் அண்டத்தில் தீ மட்டுமே ஏகமாய ஞானம் எனக் கூறப்பட்டிருப்பது போல, பிண்டத்திலும் தீ மட்டுமே உணர்வுடைய தெனக் கூறப்படுகிறது. தீ உடலை நீங்கியதன் பின்னர் எஞ்சியிருப்பனவான நிலமும் நீரும் சிறிதும் பயனற்றவை (பகுதி 85). அண்டத்திலுள்ள தீ எவ் வாறு கீழ் நோக்கியும் மேல் நோக்கியும் செல்லும் ஒழுங்குக் குட்பட்டிருக்கிறதோ அவ்வாறே மனிதனது அமைப்பிலுள்ள தீ யும் அவ்வொழுங்குக்குட்பட்டிருக்கிறது. இது பற்றி எரக்கிளைட்டசு வின் கூற்றுப் பின்வருமாறு : எல்லாப் பொருட்களும்-தெய் வீகமானவையும், மானிடரைச் சேர்ந்தனவும்-மாற்றுக்களாக மேலும் கீழுமாகச் செல்கின்றன. உலகின் ஏனைய பொருட்கள் எவ்வாறு நிலையற்ற மாற்றத்துக்குள்ளாகின்றனவோ அதைப் போலவே நாமும் என்றும் ஒழியாத மாற்றத்திற்குட்பட்டவர் களே. அடுத்துள்ள எந்த இருகணங்களிலும் நாம் ஒத்த இயல் பையுடையவர்களாயிருப்பதில்லை (பகுதி 81). எம்மில் உள்ள தீ என்றும் நீராகிக்கொண்டிருக்கிறது. அதுபோலவே எம்முட லில் உள்ள நீரும் மண்ணுக மாறிக்கொண்டிருக்கிறது; இவற் றிற்கு எதிர்த்திசையிலும் அதே நேரத்தில் மாற்றங்கள் நிகழ் ந்து கொண்டிருக்கின்றனவாதலால் நாம் முன்பிருந்தவாறே இருப்பது போலத் தோன்றுகிறது.
1. எபிகாமோசுவின் பகுதியொன்றிலும் (2 வது) இதுபற்றிக் கூறப்பட் டிருக்கிறது போலத் தோன்றுகிறது. " மனிதர்களையும் நோக்குவாயாக. ஒருவர் வளர்கையில் மற்றவர் இறந்துபோவதையும் யாவரும் எப்போதும் மாற்ற மடைவதையும் நீ காண்பாய். ஒரே இடத்தில் நிலைத்திராததும் , உட்பொருளி லேயே மாற்றமடைவதுமான பொருள் எப்போதும் சற்று நேரத்திற்கு முன் இருந்துகழிந்த பொருளிலிருந்து ஒருவகையில் வேறுபட்ட இயல்புடையதாகவே இருக்கும். ஆகவே நானும் நீயும் நேற்று வேறன மனிதர்களாக இருந் தோம். இப்போது நாம் முற்றிலும் வேறு மனிதர்கள். இனியும் நாம் வேருக மாறுவோம். இத்தகைய மாற்றம் மீண்டும் மீண்டும் நடைபெற்றுக்கொண்டேயி
ருக்கும். நாம் வேறு வேறு ஆட்களாகிக் கொண்டிருப்போம்.” வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க விரும்பாத கடன்காரன் ஒருவன் கூறுவதாக இப்பகுதி
அமைந்துள்ளது.

Page 88
(அ)
துயில்தலும் விழித்தலும்
60 ஆதி கிரேக்க மெய்யியல்
74. இதுமட்டுமன்று. மனிதனது உடலில் உள்ள தீ, நீர் என்பனவற்றின் “ அளவுகளி’ல் எற்படும் ஓர் வகை அலைவே, துயில்தல் விழித்தல், வாழ்வு மரணம் என்பவை மாறி மாறி எற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இதுபற்றி ஐனெசிடெ மோசு கூறியனவற்றை அப்படியே தரும் செகுதசு எம்பி ரிக்கசுவின் கட்டுரை யொன்றை இவ்விடயத்தைப் பற்றிய மிகச்சிறந்த ஆதாரமெனக் கொள்ளலாம். அது பின்வருமாறு (R. P. 41) :
எம்மைச் சுற்றிவர இருப்பவை யாவும் உணர்வுடையனவென வும் நியாயத்திற்கிணங்கவே அமைந்துள்ளன வெனவும் இயற் கைமெய்யியல் அறிஞர் கருதுகின்றனர். இத்தெய்வீக அறிவினைச் சுவாசிப்பதன் மூலம் நாம் உட்கொள்வதனல் நாமும் பகுத்த றிவுடையோராகின்றேம் என எரக்கிளைட்டசு கூறினர். துயிலும் போது நாம் நினைவிழந்தாலும், விழித்ததும் நாம் மீண்டும் உணர்வுடையோராகின்றேம். ஏனெனில் துயிலும்போது புலன் வாயில்கள் அடைபட்டுப் போவதால் எம்முள்ளே இருக்கும்மனத் திற்கும் எமது சுற்றுப்புறத்திலுள்ளனவற்றிற்கும் இடையே உள்ள தொடர்பும் அந்நேரத்தில் அற்றுப் போய்விடுகிறது. இந்நிலையில் எமது சுவாசம் மட்டுமே, மரங்களின் வேரைப் போன்று, வெளியுலகிற்கும் எமக்குமுள்ள தொடர்பைப் பேணி வைத்திருக்கிறதெனலாம் (இதனிலிருந்து பின்னர் பிற புலன் களும் எழுதல் கூடும்). இவ்வாறு துயிலின்போது வெளியுலகத் தொடர்பை இழந்த ஆன்மா, விழித்திருக்கையில் அதற்கிருந்த ஞாபகசத்தியையும் இழந்து விடுகிறது. ஆனல் நாம் மீண்டும் விழித்தெழும்போது, ஆன்மாவானது, பலகணிகளினூடாகப் பார் ப்பது போலப் புலன்களுக்கூடாகப் பார்ப்பதன்மூலம், சுற்ருட லோடு மீண்டும் ஒன்றிவிடுகிறது. இதனல் அது மீண்டும் சிந்திக்கும் திறனைப் பெறுகிறது. தீயினிலிருக்கும்போது வெம் மையடைந்து செந்நிறமாயும் அதனிலிருந்து வெளியே யெடுக் கப்பட்டபின் அணைந்தும் காணப்படும் தணலைப் போல, சூழ விருக்கும் மனத்திலிருந்து எமது உடலினுட் புகுந்து வாழும் பகுதியும், வெளிமனத்தோடு தொடர்பற்றதாகிவிடும்போது சிந்திக்கும் திறனற்றதாகி, புலன்வாயில்களோடு தொடர்பேற் படும்போது வெளிமணத்தைப் போல சிந்தனை ஆற்றலையுடைய தாகிறது.
மேற்கண்ட பகுதியில், பிற்காலத்துக் கருத்துக்கள் பலவும் கலந்துள்ளன என்பது தெளிவு. குறிப்பாக, “ எம்மைச் சூழ வுள்ளது” வளியே எனும் கருத்து எரக்கிளைட்டசுவின் கருத் தாயிருக்க முடியாது ; ஏனெனில் வளி ஒர்வகை நீரே என்பதை யன்றி எரக்கிளைட்டசு வேறெதையும் அறிந்திருக்கவில்லை

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 6.
(பிரிவு 27). தொளைகள் அல்லது புலன்களின் வாயில்களைப் பற்றிய குறிப்பும் அவருக்குத் தெரியாதவொன்றே யெனக் கொள்ளலாம் ; ஏனெனில் தொளைகள் பற்றிய கொள்கை அலுக்மையோனதே (பிரிவு 96). இறுதியாக உடலுக்கும் மனத் திற்குமிடையேயுள்ள வேற்றுமை இப்பகுதியில் மிகத் தெளி வாகத் தரப்பட்டுள்ளது (இவ்வேற்றுமையை எரக்கிளைட்டசு அத் தனை தெளிவாக உணர்ந்திருக்க முடியாது). ஆனல் சுவா சிப்புக்கு இங்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் எரக்கிளைட் டசுவின் கொள்கையிலிருந்து பெறப்பட்டதாயிருக்கலாம்; எனெ னில் ஏலவே அனக்சிமினிசுவின் கொள்கையிலும் நாம் இக்க ருத்தைக் கண்டுள்ளோம். அன்றியும், தீயினருகே கொணரப் படும்போது ஒளிரும் தணல் பற்றிய உவமையின் பொருத் தம் பற்றியும் நாம் ஐயுற நியாயமில்லை யெனலாம் (77 ஆம் பகுதியோடு ஒப்பிடுக). உடலிலுள்ள நீரிலிருந்து வெளிப்படும் இருண்ட ஈரமான வெளிமூச்சுக்கள் தீயினை ஒரளவுக்குத் தணிப்பதனற் துயிலுண்டாகிறது என்பதே உண்மையில் இவ ரது கொள்கையாயிருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. துயிலும்போது, யாவருக்கும் பொதுவான தீயோடு நாம் கொண்ட தொடர்பினை இழந்து எமக்கு மட்டும் உரியதானவோர் தனி உலகினுட் சென்று விடுகிறேம் (பகுதி 95). தீயும் நீரும் நன்கு சமமாகவுள்ள ஆன்மாவில், காலையில் ஒள்ளிய மூச்சுக் கள் சம அளவிற்கு முன்னேறும்போது சமநிலை மீண்டும் செம்மையடைகிறது.
75. ஆனல் எந்த ஆன்மாவிலும் தீயும் நீரும் இவ்வாறு செம் மையான நடுநிலையிற் றெடர்ந்திருப்பதில்லை. இவற்றுள் எதா வது ஒன்று மற்றையதை மீறி ஆட்சிபெறுகிறது. இவ்வாறு மீறும் இரண்டில் எதுவாயினும் எற்படுவது மரணமே. இது எவ்வாறு என நோக்குவோம். நீராகுவதால் ஆன்மாக்கள் மரணமடைகின்றன என நாம் அறிவோம் (பகுதி 8) , இன் பத்தை நுகர வேண்டி முயலும் ஆன்மாக்களுக்கு நேர்வது இதுவே. ஏனெனில் இன்பம் என்பது ஆன்மா ஈரமடைந்த நிலையே (பகுதி 72). தான் செல்லும் வழியையும் அறிய முடியாத அளவிற்குத் தனது ஆன்மாவை ஈரப்படுத்திக் கொள் ளும் குடிகாரனைப் பார்த்தோமானல் இது தெளிவாகும் (பகுதி 73). எமது மதுக்கிண்ணங்களோடு நாம் காலத்தைக் கழிக்கும் போது, நாம் அதிகம் மது அருந்தாதபோதும், எமது குறை பாடுகளை மறைத்து வைப்பது ஏனைய காலங்களைவிடச் சிரம மாயிருக்கிறது (பகுதி 108). இதனுற்றன் நாம் அமிதமான ஆசைகளைக் கட்டுப்படுத்தல் வேண்டுமென்பது (பகுதி 103) ; எனெனில் எமது இதயம் ஆவலோடு விரும்புவது எதுவும்,
வாழ்வும் மரணமும்

Page 89
62 ஆதி கிரேக்க மெய்யியல்
எமது உயிரின், அதாவது எமதுள்ளேயுள்ள தீயின், செல விலேயே பெறப்படுகிறது (பகுதி 105). இனி மற்றைய வழியை நோக்குவோம். ஈரலிப்பு மிகக் குறைவாக உள்ள உலர்ந்த ஆன்மாவே சிறந்தது (பகுதி 74) ; ஆனல் நீர் அளவை மீறி முன்னேறுவதால் மரணம் உண்டாவதுபோல, தீ மிகைப்படு வதாலும், மரணம் உண்டாகிறது. ஆனல் இது வேறு வகை யான மரணமென்பதோடு இவ்வழியில் மரணமெய்துவோர் அதிக பலன்களுக்கும் உரிமையுடையோராகின்றனர் (பகுதி 101),
மேலும் கோடையும் மாரியும் ஒன்றென்பதும், இவை தமது எதிரிழுவிசையினல் ஒன்றை ஒன்று உண்டாக்கின்றன என் பதும் எவ்வாறு உண்மையோ அவ்வாறே வாழ்வும் மரண மும் ஒன்றென்பதும், ஒன்றையொன்று உண்டாக்கின்றன என் பதும் உன்மையே. இளமையும் முதுமையும் கூட இத்தன்மை யனவே எனக் கூறப்படுகிறது (பகுதி 78). இதிலிருந்து ஆன்மா என்பது உயிருடையதாகவும் உயிரற்றதாகவும் இருக்கும் இயல் புடையது என்பது பெறப்படுகிறது ; அது தீயாக அல்லது நீராக மாற்றமடைந்து மீண்டும் அதாவது இடையருத மேல் நோக்கு வதும் கீழ்நோக்குவதுமான பிரயாணத்தை ஆரம்பிக்கும் என் பதே இதன் பொருள். ஈரமடைவதனல் மரணமடைந்த ஆன்மா கீழிறங்கி நிலத்தினை அடைகிறது; ஆனல் நிலத்தி லிருந்து நீருண்டாகிறது. இந்நீரிலிருந்து மீண்டுமோர் ஆவி வெளிவருகிறது (பகுதி 68). மேலும் தேவரும் மனிதரும் ஒரே இயல்பினரே எனவும் கூறப்படுகிறது (பகுதி 67). வாழ்வும் மரணமும் இருவருக்கும் பொதுவானதே. தீ மிகைப்படுத லால் மரணம் அடையும் மக்கள் நித்தியவாழ்வு பெற்று இறந்தோரையும், வாழ்வோரையும் காப்போராகின்றனர் (பகுதி 123) ;? இவ்வாறு நித்தியவாழ்வு பெற்றேரும் காலப்போக்கில் இறப்புளோராகின்றனர். ஒவ்வொன்றும் பிறிதொன்றின் இறப் பைக் குறிப்பதே (பகுதி 64). வாழ்வனவும் இறந்தனவும்
* முரணும் தோற்றம் எற்படுத்தும் பொருட்டு இப்பதம் கையாளப்பட் டிருக்கிறது. ஆனல் இவர்கள் யாவரும் ஒருவகையில் இறப்புளோர் எனவும் வேருெருவகையில் இறப்பிலோர் எனவுமே கொள்ளல் வேண்டும்.
* போர்க்களத்தில் மாய்வோரும் இந்நிலையையே எய்துகின்றனர் எனவே தோன்றுகிறது (பகுதி 102). மரணத்தின் பின்னரும் ஆன்மா எஞ்சியிருந்த தென எரக்கிளைட்டசு கருதினரென்பதை உருேட்டு (Psyche-I? pp. 148 Sgg.) எற்க மறுத்தனர். உண்மையில் இது முரண்பட்டவோர் கருத்தேயென்பதில் ஐயமில்லை ; ஆனல் செல்லர், டியல்சு ஆகியோர் கூறுவதைப் போல, இது வோர் எற்கத்தக்க முரண்பாடு எனவே நானும் எண்ணுகிறேன். பீடோவில் ஆன்மாவின் இறப்பின்மையை நிறுவுதற்குப் பிளேட்டோ கையாண்ட முதலா வது வாதம், துயிலிற்கும் விழிப்பிற்கும் வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே எரக்கிளேட்டசு காட்டிய ஒற்றுமையே.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 63
எப்போதும் இடம்மாறுகின்றன (பகுதி 78). இது சிருர்கள் விளையாடும் சொக்கட்டான் பலகைகளிலுள்ள காய்களினது இயக் கம் போன்ற நிகழ்ச்சியென்க (பகுதி 79). நீராக மாறி விட் டுள்ள ஆன்மாக்களுக்கு மட்டும் இது பொருந்துவதல்ல ; தீயாகி நித்திய வாழ்வு பெற்ற ஆன்மாக்களுக்கும் இது பொருந்தும். ஒரே நிலையிற் றெடர்ந்திருப்பதே உண்மையிற் களைப்பைத் தருவது (பகுதி 82) ; மாற்றங்களுக்குள்ளாதலே உண்மையில் ஓய்வைத் தருகிறது (பகுதி 83). வேறெவ்வகையிலும் ஒய்வு பெறல் எனல் முற்ருகப் பிரிந்து அழிந்து போவதற்குச் சம மானதாம் (பகுதி 84). ஆகவே அவையும் மீண்டும் பிறவி எடுக்கின்றன. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள சமநிலையைப் பேணும் சக்கரம், ஒரு மனிதன் பாட்டனவதற்குக் குறைந்தபட்சம் தேவையான காலமான முப்பதாண்டுகளுக்கு நீடிக்கின்றது என எரக்கிளைட்டசு மதிப்பிட்டார் (பகுதிகள் 87-89).
76. இனி உலகை நோக்குவோம். தரையிலிருந்தும் கடலி நாளும் லிருந்தும் வெளிப்பட்ட ஒள்ளிய மூச்சுக்கள் தீயை ஊட்டின ஆண்டும் வெனவும் இருண்ட மூச்சுக்கள் ஈரலிப்பை ஊட்டினவெனவும் இடையோசினிசு கூறுகிறர். ஈரலிப்பை ஊட்டுவனவான இவ் விருண்ட ஆவிகள் யாவை ? அனக்சிமினிசுவின் “ வளி ’யை நாம் நினைவுகூர்வோமானல் இவ்வாவிகள் உண்மையில் இருளே யென்று கொள்ளலாமென எமக்குத் தோன்றும். ஆகவே தரையிலிருந்தும் கடலிலிருந்தும் எழுந்த இருளிலிருந்தே இரவும் மாரியும் உண்டாகின்றன வெனவும்-குன்றுகளின் உச்சிகளோடு ஒப்பிடுகையில் பள்ளத்தாக்குகள் இருண்டனவாகக் காணப்பட்டதை அவர் கவனித்திருக்கவேண்டும்-இவ்விருள் ஈர மானதாதலால், நீர்ப் பகுதி அதிகரித்துச் சூரியனது ஒளி அவிந்து போகிறதெனவும் எரக்கிளேட்டசு நம்பியிருக்க வேண்டு மென நான் கருதுகிறேன். ஆனல் இருள் மேற்கண்டவாறு சூரியனது ஒளியை அவித்துவிடுமாயின், அதனது வலியும் கெட்டு விடுமென்க. சூரியன் இருளிற்கு இயக்கம் அளியாது விடின், அதனல் மேலெழ முடியாது. ஆகவே புதிய சூரியன் ஒன்று (பகுதி 32) தீப்பெற்றுத் தோன்றலும், சிறிது காலத்திற் காயினும், ஈரமான பகுதிகளின் செலவிற் றன்னை ஊட்டிக் கொள்ளுதலும் சாத்தியமாகின்றன. ஆனல் இஃது அதிக காலத்திற்கு நடைபெறமுடியாது. சூரியன், ஒள்ளிய ஆவிகளை எரிப்பதன் மூலம் தனது ஊட்டத்தை அழித்துவிடுகிறதாதலால், இருண்ட ஆவிகள் மீண்டும் ஆட்சியேறுகின்றன. இதனுலேயே * பகலும் இரவும் ஒன்றே ’ யெனக் கூறப்படுகிறது (பகுதி 35). ஒன்று உளதெனின் மற்றையதும் உள தென்பது பெறப்படு கிறது ; அவை ஒரே நிகழ்ச்சியின் இரு அம்சங்களே. இவ்

Page 90
பேராண்டு
164 ஆதி கிரேக்க மெய்யியல்
வாறு கொள்வதனலேயே அவற்றின் உண்மையான விளக்க மான அடிப்படையை அறிதல் கூடும் (பகுதி 36).
கோடை மாரி என்பனவும் இவ்வாறே விளக்கப்படுகின்றன. சூரியன் தனது 'கதியிற் திரும்பிச் செல்லல் ’ பற்றி அக் காலத்தில் ஆராய்ந்தனர் என நாம் அறிவோம். ஆகவே சூரி யன் தெற்கு நோக்கிப் பின்னடைந்தமையை, அதன் வெப்பத் தினல், ஈரமான பகுதி முன்னேற்றமடைந்ததால் ஏற்பட்ட நிகழ்ச்சியென எரக்கிளேட்டசு விளக்க முயன்றதில் ஆச்சரியத் திற்கிடமில்லை யெனலாம். ஆனல் இதன் காரணமாகச் சூரிய னது ஆவியாக்குந் திறன் குறைந்துவிடுவதால், அது தனக்கு ஊட்டம் பெறுவதற்காக வடக்கு நோக்கி மீள வேண்டி யிருக் கிறது. சுதோய்க்க கருத்து இதுவாயிருந்தது என்பதில் ஐய மில்லை. அவர் இதனை எரக்கிளைட்டசுவிடமிருந்தே பெற்றிருக்க வேண்டுமென்பதற்கும் ஆதாரமுளது. பின்வரும் பகுதி எரக் கிளைட்டசுவினதே யென்பது தெளிவு :
(தீ, நீர் என்னும்) இவை, சாத்தியமான மிகக் கூடிய அளவிலும் மிகக் குறைந்த அளவிலும், மாறிமாறி ஒன்றை யொன்று ஆட்சி செய்கின்றன. ஏனெனில் ஒன்றும் முற்றக மற்றதனை அடக்குதல் சாத்தியமில்லை. அதற்கான காரணங் கள் பின்வருமாறு : தீ, நீரின் கடைசி எல்லை வரைக்கும் முன்னேறுமாயின் அதற்கு ஊட்டமில்லாது போகும். ஆகவே அது தனக்கு ஊட்டம் கிடைக்கக்கூடிய வோரிடத்தில் ஒய் வெடுத்துக்கொள்கிறது. இவ்வாறே நீர் தீயின் இறுதியெல்லை வரைக்கும் முன்னேறுமாயின் அதனை இயக்குஞ் சத்தி அற்றுப் போய்விடும். அந்நிலையில் அது இயக்கமின்றி நிற்றல் வேண் டும் ; அவ்வாறு இயங்காது நிற்பின் அதற்கு எதனையும் தடை செய்யும் திறனில்லாதுபோய்விடுமாதலால் அதன்மீது வரும் தீயினல் எளிதில் ஊட்டமாக உட்கொள்ளப்பட்டுவிடும். ஆகை யாற்றன் இவ்விரண்டில் ஒன்ருயினும் முற்றக மற்றதனை அடக்குதல் இயலாதென்க. ஆனல் எக்காலத்திலாயினும், எவ் வகையிலாயினும் ஒன்று முற்றக அடக்கப்படின் அதன் பின் ஒன்றேனும் இப்போதுள்ளவாறிராது. ஆனல் பொருட்கள் யாவும் இன்றுளவாறு இருக்கும்வரை தீயும் நீரும் இருந்தே தீரும் ; இவையிரண்டிலும் எதுவும் இல்லாது போகாது.
77. “ பேராண்டு” எனப்படுவதும், 18,000 ஆண்டுகளைக் கொண்ட தெனவும் 10,800 ஆண்டுகளைக் கொண்டதெனவும் பல்வேறு வகைகளில் வருணிக்கப்பட்டுள்ளதுமான வோர் நீண்ட காலப்பிரிவு பற்றியும் எரக்கிளைட்டசு குறிப்பிட்டுள்ளார். ஆனல் பேராண்டெனும் இக்காலப் பிரிவில் என்ன நிகழ்ந்ததென எரக்கிளைட்டசு கருதினர் என்பது பற்றிய திட்டவட்டமான கூற்

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 65
றெதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. 36,000 ஆண்டுகள்கொண்ட காலப்பிரிவு பற்றிய ஓர் கருத்துப் பபிலோனியரிடையே வழக்கி லிருந்தது. காலச்சக்கரங்கள் யாவற்றையும் மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் செல்லும் வழிகளாகப் பிரிப்பது எரக்கிளைட்டசு வுக்கு வழக்கமானவோர் முறையாயிருந்ததாதலால், 36,000 ஆண்டுகள் கொண்ட காலப்பிரிவை இரண்டாக வகுப்பதன் மூலம், 18,000 ஆண்டுகள் கொண்ட வோர் காலப்பிரிவை அவர் பெற்றிருக்கலாம். சுதோய்க்கர்கள்-அவர்களிற் சில ராவது-ஓர் ஊழித் தீக்கும் அதற்கடுத்த ஊழித்தீக்கும் இடைப் பட்ட காலமே, பேராண்டு எனக் கருதினர். ஆனல், இக்கால இடைவெளி, எரக்கிளேட்டசு கருதியதிலும் நீண்டதென அவர் கள் கூறினர். எவ்வாருயினும், எரக்கிளேட்டசு ஊழித் தீ பற்றிய கொள்கை யொன்றை அமைத்திருந்தார் எனக் கூறு வதில் அதிக சிரமமுள்ள தெனலாம். எலவே நாம் ஆராய்ந் துள்ள சிறுகாலப் பிரிவுகளை உவமைகளாகக் கொண்டே பேராண்டு பற்றிய கருத்திற்கும் பொருள்கொள்ள முயலல் வேண்டும்.
ஒரு மனிதனது வாழ்வில் அவன் பாட்டனுகுவதற்கு வேண் டிய மிகக் குறைந்த காலம் ஓர் தலைமுறை யெனவும், ஆன்மா மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கிச் செல்வதற்கு வேண்டிய காலம் அதுவெனவும் நாம் எலவே பார்த்தோம். இதைக் கொண்டு நோக்குவதாயின், உலகத்தீயானது, கீழ் நோக்கிச் சென்று நிலமாகுதற்கு அல்லது மேல் நோக்கிச்சென்று மீண் டும் தீயாதற்கு வேண்டும் காலமே, பேராண்டுக்காலம் எனப்பொ ருள் கொள்ளலாம். உலக நிகழ்ச்சிகள் பற்றிய காலப் பிரிவு களுக்கும் மனித வாழ்க்கையில் உள்ள காலப்பிரிவுகளுக்கு மிடையே இவ்வாறு உவமை காணப்படுகிறதெனப் பொருள்படும் வகையில் பிளேட்டோவும் எழுதியுள்ளார். ஊழித்தீயைக் குறிப் பிடுவதெனப் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அரித்தோதி லின் பகுதியொன்றிலும், பிளேட்டோவின் கூற்றை உறுதிப் படுத்தும் குறிப்பொன்றுளது. அங்கு அவர் வானம் (இதனை அவர் “முதலாவது வானம்’ என அழைக்கிருர்) நித்திய
• GF(35 Tuiušas Gas TG676045Luftbpó), Cf. Nemesios, De nat. hom. 38 (R. P. 503) பிளேட்டோ வற்றுக்கொண்ட ஆண்டின் இறுதியிலும் உலக அழிவோ அல்லது பெருந்தீயோ ஏற்படவில்லையென ஆதாம் ஏற்றுக்கொள்கிருர். ஆனல் இந்நிகழ்ச்சிகளிடையே தொடர்பிருந்ததெனும் கொள்கை உண்மையிற் பிந்திய வோர் காலத்தைச் சேர்ந்ததே யெனவும், ஆகையால் எரக்கிளைட்டசு இவற்றைத் தொடர்புடையனவாகக் கொண்டார் எனக் கொள்வதற்கு எவ்வகையாதாரமு மில்லாதளவில் அவ்வாறு கொள்ளலாகாதெனவும் இயல்பாக அடைய வேண் டிய முடிவிற்கு வருவதற்கு ஆதாம் மறுக்கிருர்,

Page 91
பெருந்தீ பற்றிய கொள்கை யொன்று எரக்கிளேட்ட சுவாற் போதிக் கப்பட்டதா?
166 ஆதி கிரேக்க மெய்யியல்
மானதா அல்லவா என ஆராய்கையில் அதனை எரக்கிளைட்டசு வின் தீயிலிருந்து வேறுபடாததாகக் கருதுகிருர். இது அவ ரது கண்ணுேட்ட நிலையில் இயல்பானதே. எரக்கிளைட்டசு எம் பிடோக்கிளிசுவைப்போல “ வானம் ”இப்போதுள்ள நிலையிலும், இந்நிலையிலிருந்து கழிந்து போவதான இன்னேர் நிலையிலும் மாறி மாறி யிருப்பதாகக் கருதினர் என அரித்தோதில் அங்கு குறிப்பிடுகிருர். ஆனல் மேற்குறிப்பிட்ட இரண்டாவது நிலை உண்மையில் அழிவு அல்லவெனவும், இம்மாற்றம் ஒரு சிறு வன் மனிதனுகவும் அவன் மீண்டும் ஓர் சிறுவனவது போல வும் எற்படுவதே யெனவும் அவர் தொடர்ந்து கூறிச் செல் கிருர். இது உண்மையில் பேராண்டிற்கும், மனிதனது வாழ் வில் உள்ள தலைமுறைக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமை பற்றியவோர் குறிப்பே என்பதில் ஐயமில்லை. ஆயின் அரித் தோதிலது பகுதிக்கு வழமையாகப் பொருள் கொள்ளும் முறை தவறனதாயிருத்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட * அளவு” தி மேல் நோக்கிய, கீழ் நோக்கிய பயணங்களுக் கூடாகத் தனது ஒருமை மாறதிருக்கும் எனக் கொள்வது, இக்கொள்கையோடு உண்மையிற் பொருந்தாதென்க. ஆனல் ஒவ்வொரு ஆன்மாவும் தொடர்ந்திருக்கிறது என்னும் கொள் கையைப் பொறுத்தவரையில் நாம் கட்டாயமாக எற்றுக்கொள்ள வேண்டும் எனக் கருதியது இத்தகைய ஒரு முரண்பாட்டையே. 18,000 எனும் எண், 36,000 எனும் எண்ணின் பாதி யெனின், 10,800, 360ஐ 30ஆற் பெருக்கும்போது பெறப்படும் தொகையாகும். இரண்டாவது கணக்கின்படி, ஒவ்வொரு தலை முறையும் பேராண்டின் ஒரு நாளுக்குச் சமமாகிறது. இந்தக் கணக்கை நோக்கும்போதும், 18,000 ஆண்டுகள் எனலே ஏற்கத்தகுந்ததுபோற் றேன்றுகிறது.
78. காலத்துக்குக் காலம் ஓர் பெருந்தீ ஏற்பட்டதென எரக் கிளைட்டசு போதித்தாரென, பெரும்பாலான ஆசிரியர்கள் கருது கின்றனர். ஆனல் இஃது எரக்கிளைட்டசுவின் பொதுவான கொள்கைக்கு முரணுனது. செல்லரும் இதனை ஒப்புக்கொண்டு, நாம் முன்னர் (பக். 151) மேற்கோளாகத் தந்த, பிளேட்டோ வின் கூற்றுக்கான உரையைத் தொடர்ந்து பின்வருமாறு கூறுகின்றர் : “ உலகத்தின் அமைப்பில் காலத்துக்குக் காலம் எற்படும் மாற்றம் பற்றிய தனது கொள்கையின் ஓர் அம்சமா யிருந்த, பெருந்தீ பற்றிய கருத்தை எரக்கிளைட்டசு நீக்க விரும்பவில்லை. இதனுல் ஒர் முரண்பாடு எற்படுகிறதெனின், அவர் அதனை உணர்ந்திருக்கவில்லை”. எரக்கிளைட்டசுவின் போதனையில் முரண்பாடுகள் இருந்திருக்கலாம். ஆனல் மேற் கூறிய முரண்பாடு காணப்பட்டிருக்கும் என எண்ண முடியா

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 167
தெனலாம். ஏனெனில் இது அவரது மனத்தை முற்றக ஆட்கொண்டிருந்ததும் அவரது கொள்கையின் மையமாயமைந் ததுமான கருத்திற்கு முரணுயுள்ளதாதலினலென்க (பிரிவு 67). ஆகவே மறுக்க முடியாத ஆதாரம் காணப்பட்டாலொழிய, இம்முரண்பாடு இருந்திருக்கலாம் என நாம் எற்கலாகாது. இரண்டாவதாக, பலனன்பது எப்போதும் எகமாகவும் எகம் என்பது எப்போதும் பலவாகவும் இருந்தது என எரக்கிளைட்டசு கூறினரெனவும் எம்பிடோக்கிளிசு, எல்லாம் என்பது பலவாக வும் எகமாகவும் மாறி மாறி இருந்ததெனக் கூறினரெனவும், பிளேட்டோ இவ்விருவருக்குமிடையே காட்டியமுக்கிய வேறுபா டும் (பிரிவு 68) முறைப் பெருந்தீக் கொள்கையை ஏற்றுக்கொண் டால் பொருளற்றதாகிவிடுகிறது. ஆகவே செல்லரது விளக் கத்தை நாம் எற்றுக்கொண்டால், எரக்கிளேட்டசு தமது கண்டு பிடிப்போடு முற்ருக முரண்படும் கருத்தொன்றைத் தம்மை அறியாமலே தமது கொள்கையிற் புகுத்தினரெனவும், இக் கண்டுபிடிப்பை ஆராய்ந்த பிளேட்டோவும் இதனைச் சற்றும் உணரவில்லையெனவும் நாம் நம்பவேண்டியதாயிருக்கும்.
அரித்தோதிலும், பிளேட்டோவின் கூற்றை மறுக்கும்வகை யில் எதனையும் கூறவில்லை. எரக்கிளேட்டசுவும் எம்பிடோக் கிளிசுவைப்போல, வானம் முதலில் ஓர் நிலையிலும் பின்னர் வேறேர் நிலையிலும் மாறி மாறி இருக்கின்றதெனக் கூறினர் என அரித்தோதில் கூறும் பகுதி, உலகைக் குறிப்பிடுவ தொன்றல்ல, அவரால் “முதல்வானம் ’ என அழைக்கப்பட்ட தீயையே அது குறித்ததென நாம் பார்த்தோம். மேலும், யாவும் எப்போதாவது ஒரு காலத்திற் தீயாகின்றன எனும் அவரது கூற்றும் எமது விளக்கத்தோடு முற்றிலும் இசை வானதே. யாவும் ஒரே நேரத்தில் தீயாகின்றன என நாம் இதற்குப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. மேல் நோக்கு வதும் கீழ் நோக்குவதுமான வழிபற்றிய, எரக்கிளைட்டசுவின் கொள்கையே இதுவெனலாம்.
பெருந்தீக்கொள்கையை எரக்கிளைட்டசு போதித்தார் என்னும் கருத்து முதன் முதலிற் காணப்படுவது சுதோய்க்க எழுத் தாளர்கள் நூல்களிலேயே. பிற்காலத்துக் கிறித்துவ கொள்கை பேணுவோரும், இறுதித்தீ பற்றிய கொள்கையில் ஆர்வமுடை யோராயிருந்தனர். சுதோய்க்கர்களது கருத்தை அவர்கள் முற் ருக எற்றுக்கொண்டனர். ஆனல் இங்குள்ள விநோதம் என் னவென்றல், சுதோய்க்கர்களிடையே இக்கொள்கை பற்றி வேறுபாடிருந்ததென்பதே. மாக்கசு ஒளfலியசு ஒரிடத்திற் பின்வருமாறு கூறுகிருர் : “ ஆகவே இவை யாவும், அண்டத் தின் நியாயத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன ; இது

Page 92
168 ஆதி கிரேக்க மெய்யியல்
காலத்துக்குக் காலம் எற்படும் பெருந்தீயினலோ அல்லது நித் தியமான மாற்றுக்களினல் உண்டாகும் திருத்தங்களினலேயோ நடைபெறுகிறது. ’ உண்மையில், எரக்கிளைட்டசுவின் கொள்கை யில், பெருந்தீய்ெனும் அம்சமே இருக்கவில்லை எனக் கூறு வோரும் இருந்தனர். புளுட்டாக்கு தனது பாத்திரங்களிலொன் றைப் பின்வருமாறு பேசவைக்கிருர் : “ அவற்றையெல்லாம் பற்றி நான் கேள்விப்படுகிறேன்; அத்துடன் சுதோய்க்க பெருந்தீ, எரக்கிளைட்டசு, ஒபியசு என்போரது பாடல்களுக்கு மேற் பரவு வதைப்போல எசியட்டுவின் பாடல்களுக்கு மேலாகவும் பரவு வதைக் காண்கிறேன்.” இதிலிருந்து இவ்விடயம் ஐயத்திற்கிட மானதாகவும் விவாதத்திற்குரியதாகவும் இருந்ததென நாம் அறிகிறேம். ஆகவே பெருந்தீக் கொள்கையை எரக்கிளைட்டசு போதித்தார் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய அவரது கூற் றெதுவும் இருந்திருந்தால் அது மீண்டும் மீண்டும் இவ்விவா தங்களில் மேற்கோளாகத் தரப்பட்டிருக்கும். ஆனல் அத்தகைய மேற்கோள் ஒன்ருயினும் எமக்குக் கிடைக்கவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், எரக்கிளைட்டசு பெருந்தீக்கொள்கையைப் போதித் தார் என்பதற்கு அத்தாட்சியாகத் தரப்படும் சில பகுதிகளை நோக்கும்போது, உண்மையான அத்தாட்சி எதுவுமேயில்லை யென்னும் எண்ணம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. பெரும் பாலும், அத்தாட்சியாகத் தரப்படும் 24ஆவது பகுதியில் தெவிட் டலும், தேவையுமாகத் தீயிருந்ததென எரக்கிளைட்டசு கூறு கிருர். இவ்வாறு கூறுவது அவருக்கு இயல்பானதே. மேலும் நாம் பொருள் கொள்ளும் முறையில் இதனை நன்கு விளங்கக் கூடியதாயிருப்பது மட்டுமன்றி 36ஆவது பகுதியினலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்தது, தீ முன்னேறும்போது யாவற்றையும் மதிப்பிட்டுத் தண்டனையளிக்கும் எனக் கூறும் 26ஆவது பகுதியாகும். ஆனல் தீ, யாவற்றையும் மதிப்பிட்டுத் தண்டனையளிப்பது வெவ்வேறு காலங்களிலல்லாது, ஒரே நேரத்
" இது வெறும் வாயடை நியாயம் மட்டுமே எனச் சிலர் கூறியுள்ளனர். ஆனல் இதுபோன்ற விடயங்களில் வாயடை நியாயம் பிற நியாயங்களிலும் உபயோகமானதெனல் வேண்டும் ; உள்ள கூற்றுக்களைப் பிழையாக விளங்கிக் கொள்ளலாம் ; ஆனல் ஒருவிடயம் மிகத் தீவிரமாக விவாதிக்கப்படுகையில் இரு கட்சியினரும் தமது கருத்தை நிறுவக்கூடிய ஐயத்திற்கிடமில்லாத கூற் றெதனையும் ஆதாரமாகக் காட்ட முடியாதிருந்தால், அத்தகைய கூற்றெதுவும் உண்மையில் இருக்கவில்லை எனும் முடிபு தவிர்க்க முடியாததாகிறது. இவ் விடயத்தைப் பற்றி இக்காலத்திற் கூறப்படுவனவற்றையும் இவ்வாறே கொள்ள வேண்டும். டியல்சு, எனது கருத்துத் தவருனது எனச் சுருக்கமாகக் கூறின ரெனினும் அதற்கு ஆதாரமாகப் புதிய நியாயம் எதனையும் அவர் காட்டவில்லை. அத்தகைய நியாயம் எதுவும் அவரிடம் இல்லையென்பதே எனது முடிவு.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 69
தில் நடைபெறுமோர் நிகழ்ச்சி யெனக் கருதுவதற்கு இப் பகுதியில் எவ்வகை ஆதாரமுமில்லை. உண்மையில் இப்பகுதி யின் சொற்ருெடர்களின் அமைப்பை நோக்கும்போது, தீ,நீர் என்பனவற்றின் முன்னேற்றம் பற்றி எரக்கிளைட்டசு கூறியுள்ள வையே எமக்கு நினைவுக்கு வருகின்றன. ஆங்கு, இவற்றின் முன்னேற்றம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேற் சாத்தியமில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கிறித்துவ கொள்கை பேணுவோரும், சுதோய்க்கர்களும் தமது முடிவுக்கு அத்தாட் சியாகத் தரும் பகுதிகள் இவையிரண்டுமே. நாம் இவற்றுக்குப் பொருள் கொண்ட முறை தவறெனக் கொள்ளினும், அவர் கள் கொண்ட முடிவுக்கு ஆதாரமளிக்கும் வலிமை இப்பகுதி களுக்கில்லையென்பதும், சுதோய்க்கர்களுக்கும் எனையோருக்கும் இவற்றிலும் வலுவுள்ள அத்தாட்சி எதுவும் கிடைக்கவில்லை என்பதும் தெளிவு.
ஆனல் பெருந்தீக்கொள்கைக்கு முரணுகவுள்ள பகுதிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதென்க. 20 ஆம், 29 ஆம் பகுதி களிற் குறிப்பிடப்படும் “ அளவுகள்’ என்பவை ஒரு பொருளையே குறிப்பிடல் வேண்டும். மேலும் 23 ஆம் பகுதியின் பொருளே யொட்டியே இவற்றிற்கும் பொருள் கொள்தல் வேண்டும். இது சரியான முறையெனின் 20 ஆம் பகுதியும், குறிப்பாக 29 ஆம் பகுதியும், பெருந்தீக் கொள்கையை நேரடியாக மறுக்கின்றன வெனலாம். “ சூரியன் தனது அளவுகளை மீருது’ இரண்டாவதாக, “ மாற்று ’ எனும் உவமேயம் 22 ஆம் பகுதியில் தீக்கு அளிக்கப்பட்டிருப்பதும் இதனையே காட்டுகிறது. கலன்களுக்கு மாற்றகத் தங்கமும் தங்கத்திற்கு மாற்றகக் கலன்களும் கொடுக்கப்படும்போது இவற்றின் தொகையோ அல்லது “ அளவோ ’ மாறுவதில்லை. மாறுவது அவற்றின் உரிமையாளர்களே. எல்லாக் கலன்களும் எல்லாத் தங்கமும் ஒருவரிடமே போய்ச் சேர்வதில்லை. அதுபோலவே எதுவும் தீயாக மாறும்போது, அதற்குச் சம அளவான வேறு பொருள் எதுவும் தீயல்லாததாக மாறினற்றன், இம்மாற்று நியாயமானதாயிருக்கும். சூரியன் தான் கொடுப்பதில் அதிக மாக எடுத்துக்கொள்ளாது எரினயிசு (பிரிவு 29) பார்த்துக் கொள்ளும் என உறுதி கூறப்படுகிறது. நாம் முன்பு கண்டது போல, ஒரு குறிப்பிட்ட வகையான மாற்றம் நிகழ்கிறது என்பது உண்மையே. ஆனல் இது ஒர் வரம்புக்குட்பட்டதாயிருப்பதுடன், காலப்போக்கில் எதிர்த்திசை நோக்கி எற்படும் மாறுதலினல்
இங்கு பொருள் கொள்ளப்படும் முறை பற்றி யாருக்கும் சந்தேகம்
ஏற்படின், அப்பொலோனியா நாட்டு இடையோசினிசுவின் பிரயோகத்தோடு (பகுதி 3) ஒப்பிட்டு நோக்கவும்.

Page 93
170 ஆதி கிரேக்க மெய்யியல்
ஈடுசெய்யவும் படுகிறது. மூன்றவதாக, பூசலின் அழிவை வேண் டியதற்காக ஒமரை எரக்கிளேட்டசு கண்டிப்பதாக அமைந்துள்ள 43வது பகுதி குறிப்பிடத்தக்கது. பூசல் நின்றுபோனல் எல் லாப் பொருட்களும் ஒரே நேரத்தில் கீழ்நோக்கியே அல்லது மேல்நோக்கியே செல்லும் ; அத்துடன் அவை ‘ எதிர்த்திசை களிற் செல்வது” நின்றுவிடும். யாவுமே ஒரே நேரத்தில் மேல் நோக்கும் வழியிற் சென்றல், பெருந்தீ ஏற்படும். இதுவே விதியின்படி நடக்கவேண்டியது என எரக்கிளைட்டசுவும் எண்ணியிருந்தால், அவ்வாறு ஏற்படுதலை விரும்பியதற்காக ஒமரை அவர் கண்டித்திருப்பாரா ? நான்காவதாக, 20 ஆம் பகுதியில் நித்தியமானதென அழைக்கப்படுவது இவ்வுலகமே யொழிய ' என்றும் எரியும் தீ’ யல்லவென்பதையும் நாம் காண முடிகிறது ; மேலும் உலகில் எரியூட்டப்படும் பகுதியும், தணிந்து போகும் பகுதியும் எப்போதும் ஒரே அளவினதாய் இருப்பதாலும், ஒரு திசையில் நடைபெறும் ஆக்கிரமிப்பு மறு திசையில் அதன் பின்னர் நடைபெறும் ஆக்கிரமிப்பினல் ஈடு செய்யப்படுவதனலுமே, உலகு நித்தியமானதாயிருக்கிறது எனவும் தோன்றுகிறது. இறுதியாக, மேலே நாம் மேற் கோளாகத் தந்த பகுதி எல்லாப் பொருள்களும் தீயின லும் நீரினலும் ஆனவை யெனப் பொருள் கொள்ளக்கூடிய வாறு அமைந்திருப்பதால், அப்பகுதி எரக்கிளைட்டசுவினதாக இருக்க முடியாது எனும் செல்லரது மறுப்பினல் லாசலது வாதத்தின் வலு எவ்வகையிலும் குறைக்கப்படவில்லையென்க. உண்மையில் அப்பகுதியின் பொருள் அதுவல்ல ; வானசோதி களைப் போல மனிதனும் தீக்கும் நீருக்கும் இடையே அலை கிருன் என்பதே இப்பகுதியின் பொருள். எரக்கிளைட்டசு போதித்த கொள்கையும் இதுவே. தீயோ அல்லது நீரோ முற்றக ஆட்சி பெறமுடியாதெனவும் இப்பகுதியிற் கூறப்பட் டிருக்கிறது. அத்துடன் மிகவும் பொருத்தமானதும், எரக் கிளேட்டசுவின் எனைய கொள்கைகளோடு இசைவுடையதுமான வோர், நியாயமும் இதற்கு ஆதாரமாகத் தரப்பட்டிருக்கிறது. உண்மையில் பெருந்தீ ஒன்று எற்படுமாயின் உலகு அதனி லிருந்து எவ்வாறு மீளமுடியும் என்பதை, இக்கொள்கை களுக்கு இசைவான முறையில் விளக்குவது இலகுவானதல்ல. இக்கொள்கை முழுவதுமே தெவிட்டல் என்பது தேவையுமே என்பதில்-அதாவது தீ அதிகரிக்கும்போது ஈரமான மூச்சுக் கள் அதிகரிக்கின்றன, நீர் அதிகரிக்கும்போது, தீ, தனது ஆவியாக்கும் ஆற்றலை இழந்துவிடுகிறது என்பதில்-தங்கியிருக் கிறதெனலாம். பெருந் தீ, ஒரு கணத்திற்கேனும் எற்படின், புதிய உலகம் தோன்றுவதற்கு இன்றியமையாததான எதிர்

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 171
இழுவிசை அழிக்கப்பட்டு விடுமாதலால், இயக்கம் என்பதே முற்ருக அசாத்தியமானதாகிவிடும்.
79 “ மேலும் கீழும் நோக்கிய வழி” யின் மூலம் வெளிப்படும் விரோதமும் விரோதம் அல்லது எதிர்ப்புப் பற்றிய விதியை, நாம் இப்போது "இசைவும்" நன்கு விளங்கிக் கொள்ளலாம். எந்த ஒரு கணத்திலும் தீ,நீர், நிலம் எனும் மூன்று தொகுதிகளும் இரு சமபங்குகளாகப் (மேலே குறிப்பிடப்பட்ட அலைவுகள் நிகழ்வது உண்டே) பிரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுள் ஒருபகுதி மேல்நோக்கிச் செல் கையில் மறுபகுதி கீழ்நோக்கிச் செல்கிறது. இவ்வாறு யாவற் றின் இருபாதிகளும் இவ்வாறு ** எதிர்த்திசைகளில் இழுக்கப் படுவதே ’-இவ் “ வெதிரிழுவிசை ’யே-* பொருட்களை ஒன் ருக வைத்திருக்க ”வும், ஒருவரம்புக்குள், தற்காலிகமாக மட்டும் எற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்த்து எனைய நேரங்களில் சம நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. அண்டத்தினது “மறைந் துள்ள இசைவு’ என்பது இதுவே (பகுதி 47). ஆனல் இன் னேர் அம்சத்தை நோக்குகையில், இது விரோதமா யிருக்கிறது என்பது உண்மையே. “வில்லையும் வீணை ’யையும் பொறுத்த வரையில் (பகுதி 45) கமெல் தந்திருப்பதே இவ்வுவமைக்கு மிகவும் பொருத்தமான விளக்கம் என நான் கருதுகிறேன். “ அம்பானது நாணைவிட்டுச் செல்லும்போது கைகள் ஒன்றுக் கொன்று எதிரான திசைகளிலும், வில்லின் வெவ்வேறு பாகங் களை ஒன்றுக்கொன்று எதிரான திசைகளிலும் இழுக்கின்றன’ 6T6IOT gdy@JIŤ Sísý9G9ff (cf. Plato, Rep iv. 439) ; 6S26OOTUS6ð7 இனிய சுரங்களும் இதற்கொப்பான இழுவிசை, பற்றுநிலை என் பனவற்றினலேயே உண்டாகின்றன. அண்டத்தின் இரகசியமும் இதுவே. ஆகவே தான் மனித சமுதாயத்திலுள்ளது போல அண்டத்திலும் போரே யாவற்றினதும் தந்தையாயும் அரசன யும் உள்ளது (பகுதி 44) ; இதனுற்றன் விரோதம் ஒழிய வேண்டும் என ஒமர் வேண்டியமை, உண்மையில் உலக அழிவை வேண்டும் பிரார்த்தனை எனப்பட்டது (பகுதி 43).
எரக்கிளைட்டசு தனது கொள்கைக்கு ஆதாரமாகப் பல உதார ணங்களைத் தந்தார் என நாம் பிலோவின் மூலம் அறிகிருேம் ; இவற்றுட் சிலவற்றை நாம் இன்றும் பெறக்கூடியதாயிருக் கிறது. அரித்தோதிலது எனக் குறிப்பிடும் போலி நூலிலும், இப்போக்கிருத்திசுவின் நூலிலும் இதுபற்றி உள்ள பகுதிகள் குறிப்பிடத்தக்க முறையில் ஒற்றுமையுடையனவாயிருக்கக் காண் கிருேம். எரக்கிளைட்டசுவின் லிகிதங்கள் எனும் நூலின் பகுதி யொன்றேடும் இவையிரண்டும் ஒற்றுமையுடையனவாயிருப்பதி லிருந்து, இந்நூலாசிரியரிருவரும் எரக்கிளைட்டசுவின் போதனைக ளிலிருந்தே தமது கருத்துக்களைப் பெற்றிருக்கவேண்டுமென்பது

Page 94
முரண்பாடுகள் இனமாக் &Siluld
172 ஆதி கிரேக்க மெய்யியல்
நன்கு உறுதிப்படுத்தப்படுகிறது. எரக்கிளைட்டசுவின் லிகிதங்கள் எனும் நூலும் போலியேயாயினும் அதனை எழுதியவர் உண்மை யில் எரக்கிளைட்டசுவின் கருத்துக்களை நேரடியாக அறிந்தவரே எனலாம். இயற்கை எவ்வாறு செயற்படுகிறதோ அவ்வாறே மனிதரும் செயற்படுகின்றனராதலால், அவர்கள் இயற்கையிற் செயற்படும் விதிகளை அறியாதிருப்பது வியப்புக்குரியது என்பதே இப்பகுதிகளிற் குறிப்பிடப்பட்டுள்ள வாதம். ஒவியன் தனது சித்திரத்தில், நிறங்களை வேறுபடுத்தி உபயோகிப்பதன் மூலம் இசைவு நிலையை ஏற்படுத்துகிருன் ; சங்கீதத்திலும் இவ்வாறே உயர்ந்தனவும் தாழ்ந்தனவுமான சுருதிகளிடையே இசைவு எற்படுத்தப்படுகிறது. யாராவது எல்லாப் பொருட்களையும் ஒரே தன்மையுடையனவாகச் செய்தால், அதன்பின் அவற்றில் இன் பம் இராது. இவை போன்ற பல உதாரணங்களுள. அவற்றுட் சில எரக்கிளைட்டசுவிடமிருந்தே பெறப்பட்டிருக்க வேண்டும் என் பதில் ஐயமில்லை. ஆனல் அவற்றைப் பிற்கால இடைச்செருகல் களிருந்து பிரித்தறிதல் கடினமே.
80. எரக்கிளைட்டசுவின் பகுதிகளிற் பல தமக்கெனவுரிய ஓர் விசேட இயல்பையுடையனவாகக் காணப்படுகின்றன. எமக்குக் கிடைத்துள்ள மிகவும் குறிப்பிடத்தக்க கூற்றுக்களில், இவை պւճ சிலவெனலாம். வழமையாக முரண்பாடுகளாகக் கருதப் படும் பொருட்களின் ஒருமையைச் சிறிதும் தயக்கமின்றி மிகவும் உறுதியாக அவை கூறுகின்றன. இரவும் பகலும் ஒன்றே எனும் கூற்றுக்கு நாம் எலவே தந்த விளக்கத்தையொட்டியே, இத்தகைய பிற கூற்றுக்களுக்கும் பொருள் கொள்ள வேண் டும். உண்மையில் எரக்கிளைட்டசு கூறியது, இரவு என்பது பகலே யெனவோ அல்லது பகலென்பது இரவே யெனவோ அல்ல ; இவையிரண்டும் தீ, நீர் என்பனவற்றின் அளவு களில் ஏற்படும் அலைவின் இரு பக்கங்களே, இவற்றில் ஒன் றில்லாது மற்றது நடைபெற முடியாது என்பதே அவரது கூற்று. இரவை விளக்குவதற்குத் தரப்படும் எந்த விளக்க மும் பகலையும் விளக்குகிறது; அதே போலப் பகலுக்குத் தரும் எந்த விளக்கமும் இரவையும் விளக்குகிறது. ஏனெனில் அத் தகைய விளக்கம், இவ்விரண்டிற்கும் பொதுவானதும், மாறி மாறி இவ்விரண்டின் மூலமும் தன்னை வெளிப்படுத்துவது மான பொருளைப் பற்றிய விளக்கமாயிருக்கும். மூலத் தீ தனது பிரிவிலும் ஒன்ருகவேயிருக்கின்றது எனும் தத்து வத்தின் ஓர் குறிப்பிட்ட பிரயோகமே இதுவென்க. அது தனது ஒருமையிலும் தானே தெவிட்டலும் தேவையுமாயும் போரும் சமாதானமுமாயும் இருக்கிறது (பகுதி 36). அதாவது தீ, பிற உருவங்களைப் பெறுவதற்கும், “ மாற்றத்தில் ஆறுதல் பெற ’

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 173
விழைவதற்கும் (பகுதி 83) மறைந்துள்ளதான, எதிர்ப்புக் களின் இசைவிற் கரந்தொழுக முனைவதற்கும் (பகுதி 10) காரணமான “தெவிட்டல்’ நிலை உண்மையில் உலக நிகழ்ச்சி யின் ஒரு பக்கமே. ஒள்ளிய மூச்சுக்களைத் தனது எரிபொரு ளாக நுகர்வதற்குக் காரணமான தேவையே இந்நிகழ்ச்சியின் மறுபக்கமென்க. மேல் நோக்கிய வழி, கீழ் நோக்கிய வழி யின்றி எதனையும் சாதிக்க முடியாது (பகுதி 69). இவற்றுள் ஒன்று இல்லாதுபோனல் மற்றதும் நின்றுவிடும் ; உலகம் மறைந்துவிடும் ; எனெனில் நிலையானது போலத் தோற்ற மளிக்கும் ஒர் உலகை ஆக்குதற்கு இவ்விரு முறைகளும் வேண்டும்.
இவை போன்ற ஏனைக் கூற்றுக்களும் இவ்வாறே விளக்கப் படல் வேண்டும். குளிரில்லையாயின், சூடும் இருக்க முடியாது ; ஏனெனில், குளிராயிருக்கிறவரைக்குமே ஒரு பொருள் சூடாக முடியும். ஈரலிப்பு, வறட்சி எனும் முரண்பாடுகளும் இத் தகையனவே (பகுதி 39). இவ்விரண்டும், அனக்சிமாந்தரது ஆதி முரண்பாடுகளே யென்பது கவனிக்கப்படும். இவற்றிற் கிடையே ஏற்படும் போரென்பது உண்மையில் அமைதியே என எரக்கிளைட்டசு காட்டுகிறர். ஏனெனில் அவற்றிற்குப் பொதுவான அம்சம் இவ்வமைதியே (பகுதி 62). விரோதமாகக் காட்சியளிக் கும் இதுவே நீதியும் கூட, அனக்சிமாந்தர் கருதியதுபோல, இந்நிகழ்ச்சி, இவற்றுள் ஒன்று மற்றையதிற்கு எதிராக இழைக் கும் அநீதியல்ல.
இக்கூற்றுக்கள் யாவற்றிலும் அதிக வியப்பைத் தருவது நன்மையும் தீமையும் ஒன்றே யென்னும் கூற்றே (பகுதி 57). நன்மையென்பது தீமையே என்பதோ அல்லது தீமையென்பது உண்மையில் நன்மையே என்பதோ இதன் பொருளல்ல. நன் மையும் தீமையும் ஒரே பொருளின் பிரிக்க முடியாத இரு பாதிகளே என்பதே மேற்படி கூற்றின் பொருளென்க. ஒரு பொருள் எலவே நல்லதாய் இருக்குமளவிற்குத்தான் அது தீய தாக முடியும். அதேபோலத் தீயதாக இருக்கும் அளவிற்கே அது நல்லதாக முடியும் ; வேறுபடுதலிலேயே யாவும் தங்கியிருக் கின்றன. 58ஆவது பகுதியில் உள்ள உவமை இதை நன்கு விளக்குகிறது. சித்திரவதை என்பது தீயது என யாவரும் ஒப்புக்கொள்வர் ; ஆனல் நோயெனும் வேறேர் தீமை இருப்ப தனல் இதுவோர் நன்மையாகிறது. நோயாளிகளைப் பலவகை யிலும் துன்புறுத்தும் வைத்தியர்கள் தமது வேலைக்குப் பணம் கேட்கின்றனர் எனும் உதாரணத்தின் மூலம் இது விளக்கப்
* அத். 1, 16 ஆம் பிரிவு.

Page 95
ஞான (p60. Elig.
174 ஆதி கிரேக்க மெய்யியல்
படுகிறது. நன்மை பயப்பதான நீதி, தீயதான அநீதியின்றேல், எவருக்கும் தெரியாதவொன்றயிருக்கும் (பகுதி 60). அதனற் றன், மனிதர்கள் தாம் விரும்புவன யாவற்றையும் பெறுவது நன்றல்ல எனக் கூறப்படுகிறது (பகுதி 104). விரோதம் இவ்வுலகில் இல்லாது போனல், எவ்வாறு இவ்வுலகு அழிந்து போகுமோ, அவ்வாறே பசி, பிணி, சோர்வு என்பன இல்லாது போயின், இவ்வுலகில் திருப்தி, ஆரோக்கியம், ஒய்வு என்பனவும் இல்லாது போம்.
* மனிதனே யாவற்றிற்கும் அளவாவான் ” எனும் புரொட் டாகரசுவின் கொள்கைக்கு வழிகோலும் ஓர் சார்புநிலைக் கொள்கைக்கு இது அடிகோலுகிறது. கடல் நீர் மீன்களுக்கு நல்லதாகவும் மனிதர்களுக்குக் கூடாததாகவும் இருக்கிறது (பகுதி 52), பிறபொருட்கள் யாவும் இவ்வாறுள்ளன. அதே நேரத்தில், எரக்கிளைட்டசு தனி மெய்ம்மை வாதத்தை நம்பியவ ரல்ல என்பதையும் குறிப்பிடல் வேண்டும். உலக நிகழ்ச்சி வெறுமனே வட்டமானவொன்றல்ல. அது “ கீழ்நோக்கியும் மேல்நோக்கியும்" செல்லுமோர் வழியாகும். இருவழிகளும் மேலே சந்திக்குமிடத்தில் தூய தீயுளது. அதில், பிரிவில்லை யாதலால், சார்பும் இல்லை. மனிதனுக்குச் சில பொருட்கள் தீயனவாயும் வேறு சில நல்லவையாயும் தோன்றினலும், கடவுளுக்கு யாவும் நல்லவையே எனக் கூறப்படுகிறது (பகுதி 61). இங்கு கடவுள், அல்லது “ ஞானமுடைய எகம் ” எனக் கூறும்போது எரக்கிளேட்டசு தீயையே கருதுகிருர் என்ப தில் ஐயமில்லை. உலகில், நீக்கமற நிலவும் எதிர்ப்பும் சார்பும் தீயில் மறைந்து போகின்றன என்பதையே இங்கு எாக்கிளைட்டசு கூறினர் என்பது பற்றி ஐயத்திற்கிடமிருக்க முடியாது. 96 ஆம், 97 ஆம், 98 ஆம் பகுதிகள் இக்கருத்தையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை.
81. “ஞானம் ”, “ஞானமுடைய” என்பவற்றை எரக்கிளைட்டசு இரு பொருள்களிற் பிரயோகிக்கிருர். “ஞானம் ” என்பது “ என யாவற்றிற்கும் புறம்பான வொன்று ” என அவர் கூறி னர் என்பதை நாம் எலவே பார்த்தோம் (பகுதி 18). பலவா யுள்ளவற்றினடியேயுள்ள ஒருமையைக் காண்பதே ஞான
* தியோத்தசுவில் சார்புநிலைக்கொள்கை பற்றிப் பிளேட்டோ கூறியிருப் பவை, எரக்கிளேட்டசுவிலிருந்து பெறப்பட்டிருக்க முடியாது. ஆனல் எரக்கிளேட்டசு வின் கொள்கையிலிருந்து இத்தகைய சார்பு நிலை வாதம் எழமுடியும் என்ப தனையே இது காட்டுகிறது. ஆன்மாவும் பொருள்களும் நீரோட்டங்கள் போன்ற வையெனின் அறிவு சார்பு பற்றியதாகவேயிருத்தல் வேண்டும். பிற்காலத்து எரக்கிளைட்டசவாதிகள் தமது கொள்கையை இவ்வாறே விருத்தி செய்திருக்க வேண்டும்.

எபிசோசு நாட்டு எரக்கிளைட்டசு 175
மெனவே அவர் கருதியிருக்கவேண்டும். யாவற்றின் இயக்கத் தையும் வழிப்படுத்தும் சிந்தனையெனக் கொள்ளப்படும் ஒருமை யெனும் பொருளிலும், அவர் “ ஞானம் ” எனும் சொல்லை உபயோகித்துள்ளார். இது, மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் செல்லும் இருபகுதிகளாகப் பிரிக்கப்படாதிருக்கும் தூய தீயைக் குறிப்பதாயிருக்கவேண்டும். அது மட்டுமே ஞானமுடையது ; நாம் காணும் அபூரணமான பொருட்கள் எவையும் ஞான முடையனவல்ல. நாமும் தீயுடையவர்களாகவிருக்கும் அளவிற் குத்தான், ஞானமுடையவர்களாயிருக்கிறேம் (பகுதி 74).
82. குறிப்பிட்ட சில வரையறைகளுக்குள், எகமாய ஞானத்தைச் இறையியற் சியசு என அழைக்க எரக்கிளைட்டசு தயாராயிருந்தார். 62ஆவது கொள்கை பகுதியின் பொருள் இதுவெனவே தோன்றுகிறது. இவ்வரை யறைகள் எவையென ஊகித்தல் கடினமன்று. சியசுவை மனித உருவத்திற் கற்பனை செய்யலாகாது. இங்கு எரக் கிளைட்டசு, செனுேபனிசு கூறியதையே மீண்டும் கூறுகின்றர் என்று கொள்ளலாம். இக்கடவுள், இதனை அவ்வாறு அழைப்ப தாயின், ஒன்றே யெனும் கருத்தையும் எரக்கிளேட்டசு, செனே பனிசுவைப் போல எற்றுக்கொள்கிருர் ; ஆனல் மக்களது சமயத்திற்கு எதிராக அவர் துரந்த கண்டனங்கள், சமயக்கிரியை களுக்கும் சடங்குகளுக்கும் எதிராகவமைந்தனவே யொழிய, அச்சமயங்களை யொட்டிய புராணக்கருத்துக்களுக்கெதிராகவமைந் தனவல்ல வெனலாம். தனது காலத்துச் சமயத்தலைவர்களினது பெயர்ப்பட்டியல் ஒன்றையும் அவர் தருகிறர் (பகுதி 124). இப்பகுதி மேற்கோளாகத் தரப்படும் சந்தர்ப்பத்தை நோக்கு மிடத்து, பின்வரப்போகும் சினத்தைச் சுட்டிக்காட்டி, அத்தலை வருட் சிலரை ஏதோ ஒரு வழியில் இவர் அச்சுறுத்தினர் என ஊகிக்கக் கூடியதாகின்றது. உருவங்களை வழிபடும் மடமை யையும் (பகுதி 126), இரத்தம் சிந்திய குற்றத்தை இரத்தம் சிந்துவதால் நீக்கிவிடமுடியும் எனும் விநோதமான நம்பிக்கை யையும் (பகுதி 130) அவர் இகழ்ந்து கூறினர். களிப்பற்றன வான சடங்குகள் மூலம் எடிசுவை வழிபடுவோர், களிப்புடையன வும், ஒழுக்கவீனமானவையுமான சடங்குகளால் இடயனிசோசு வைக் கொண்டாடுதல் மடமையென அவர் கூறினர் போலத் தெரிகிறது (பகுதி 127). அனுபூதி நெறியின்படியும் இவையி ரண்டும் உண்மையில் ஒன்றே ; எகமாய ஞானம், வேறெந்தக் கருத்தோடும் சேர்க்கப்படாது தனியாக வழிபடப்படல் வேண்டும்.
83. “பொதுவானதைப் பின்பற்று ” எனும் விதியை எரக்
எாக்கிளேட்ட கிளைட்டசுவின் சன்மார்க்க போதனையின் மையக் கருத்தாகக் கொள்ளலாம். ஆனல் எரக்கிளேட்டசு, வற்புறுத்திய “பொது ஒழுக்கவியற் வான * தென்பது சாதாரண அறிவு என்பதல்ல. உண்மையில், கொள்கைகள்

Page 96
176 ஆதி கிரேக்க மெய்யியல்
எரக்கிளைட்டசு “ சாதாரண அறிவு” என்பதை மிகவும் இகழ்ந் துரைத்தார் (பகுதி II). “ பலர் ” பற்றி அவர் தரும் கண்டனங் களுள் மிகவும் தீவிரமானதும் இதுவே ; இவர்கள் ஒவ்வொரு வரும் தமது தனி உலகங்களில் வாழ்கின்றனர் (பகுதி 95) , தங்களுக்கென ஒவ்வொரு தனி ஞானம் உடையவர்கள் போல இவர்கள் நடந்து கொள்கின்றனர் (பகுதி 92) ; ஆகவே பொது அபிப்பிராயம் என்பது உண்மையிற் “ பொதுவான ”திற்கு எதிரானதாகும். “ பொதுவானதைப் பின்பற்று ’ எனும் இவ் விதி உண்மையில் இவரது அண்டவியல், மானிடவியல் என்பன பற்றிய கொள்கைகளிலிருந்து பெறப்பட்ட ஒரு விளைவாகவே கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக உண்மையிற் பொது வானதான, எகஞானமான தீயினேடு சேரும் வகையில் நாம் எமது ஆன்மாக்களை உலர்ந்தவையாய் வைத்துக்கொள்ள வேண்டும். எமது ஆன்மாக்களை ஈரமடையவிட்டு, உலகிலுள்ள தீக்கும் அவற்றிற்குமிடையேயுள்ள தொடர்பு அறும்வகையில், துயில்பவர்களைப்போல நடந்துகொள்வதே மிகப்பெரிய தவரு கும் (பகுதி 94).
* பொதுவான ’தை, நகரத்தின் சட்டங்களுக்கு ஒப்பிடுவதன் மூலம், சுதோய்க்கர்களது உலக-அரசுக்கொள்கைக்கு எரக்கிளைட் டசு அடிகோலிஞர். இவற்றைத் தெய்வீக நியதிகளில் ஒருவகை எனக் கொள்வது போதாது. உண்மையில் அவை தெய்வீக நியதியின் அபூரணமான உருவங்கள் கூட. ஆனல் இவற்றில் உருவமடைவதால் தெய்வீக நியதி முற்றக ஒழிந்துபோவ தில்லை, ஏனெனில் மனித நடவடிக்கைகள் யாவும் ஓரளவிற் குச் சார்பு நிலையினவே (பகுதி 91). கடவுளோடு ஒப்பிடப்படும் போது ‘* மனிதன் ஒரு குழந்தையே ’ (பகுதி 97). எனினும் ஓர் நகரம் தனது சுவர்களைப் பகைவரிடமிருந்து காப்பதற்கு எவ்வாறு போரிடுமோ, அவ்வாறு இந்நியதிகளைக் காப்பதற் கும் போரிடுதல் வேண்டும் ; ஒரு நகரின் நல்வாய்ப்பினல் அங்கு உலர்ந்த ஆன்மாவுடையவன் ஒருவன் இருப்பானகில் அவன் பத்தாயிரம் சாதாரண மனிதர்களுக்குச் சமமானவ னவான் (பகுதி 113) ; எனெனில் அவனில் மட்டுமே “பொது வானது ” இடம்பெற்றிருக்கிறது.

அத்தியாயம் 4
ஈலியா நாட்டுப் பார்மனடிசு
84. பைரிசுவின் மகனன பார்மனைடிசு, ஐலீ அல்லது ஈலியா வாழ்க்கை அல்லது வேலியா என அழைக்கப்படும் நாட்டுக் குடிமகன வான். இது பொகாயாநாட்டு அகதிகளால் கி. மு. 540-39 இல் ஐனத்திரியாவில் நிறுவப்பட்டவோர் குடியேற்றப்பகுதியாகும். இவர் 69 ஆவது ஒலிம்பிய ஆண்டில் (கி. மு. 504-500) சிறப்புடன் விளங்கினரென இடையோசினிசு கூறுகிருர். அப் பொலோடரசு தந்த தேதியும் இதுவே யென்பதில் ஐயமில்லை. ஆனல், பிளேட்டோவோ பார்மனைடிசு தனது அறுபத்தி நாலாவது வயதில் சேனேவோடு அதென்சுக்கு வந்தாரென வும், அப்போது மிகவும் இளைஞராயிருந்த சோக்கிரதருடன் உரையாடினர் எனவும் தெரிவிக்கிருர், கி. மு. 399 ஆம் ஆண்டில் சோக்கிரதருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டபோது அவருக்கு எழுபதுக்குச் சற்று அதிகமான வயதாகியிருந்தது ; ஆகவே அவர் பார்மனைடிசுவைச் சந்தித்தபோது அவருக்கு வயது பதினேழுக்கும் பதினெட்டுக்குமிடையே யிருந்ததெனக் கொள்வதாயின், இச்சந்திப்பு கி. மு. 451-449 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியெனக் கொள்ள வேண்டும். பிளேட்டோ இவ்வாறு கூறியிருக்கையில், குறிப்பாக, “ பல நகர்க"ளுக் கும் சென்றது பற்றிப் பார்மனைடிசுவும் குறிப்பிட்டிருக்கை யில், அப்பொலோடரசுவின் கருத்தை ஆராய்வின்றி எற்றுக் கொள்ளலாகாது. மேலும் சேனே அதென்சுக்குச் சென்றது பற்றி வேறு ஆதாரமுமுளது. அங்கு பெரிக்கிளிசு சேனே வின்போதனைகளைக் “கேட்டனர்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்பொலோடரசு தரும் தேதி, ஈலியா நிறுவப்பட்ட திகதியை (கி. மு. 540) மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பெறப்பட்டுள்ளது. இத்திகதியைச் செனுேபனிசு சிறப்புடன் விளங்கிய தேதியாக அப்பொலோடரசு எலவே எற்றுக்கொண்டிருந்தார். சேனே எவ்வாறு பார்மனைடிசு சிறப்புடன் விளங்கிய ஆண்டிற் பிறந்தா ரெனக் கூறப்பட்டதோ அது போலச் செனேபனிசு சிறப்புடன் விளங்கிய ஆண்டில் பார்மனைடிசு பிறந்தார் என அப்பொலோ டரசு கூறுகிறர். இத்தகைய விநோத அனுமானமுறைக்கு
1. ஈலியா நிறுவப்பட்டதுபற்றி Herod. i. 165 sqq. பார்க்க. பொசெய் டோனியாவுக்குத் தெற்கே, லூக்கானியாவின் கரையோரத்தில் இப்பகுதி அமைந்திருந்தது.
177 8-R 10269 (6/63)

Page 97
178 ஆதி கிரேக்க மெய்யியல்
யார்தான் எப்படி அதிக முக்கியத்துவம் அளிக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை.
பார்மனைடிசு, செனுேபனிசுவின் சீடர்களுள் ஒருவர் எனக் கூறும் கூற்றென்றை அரித்தோதில் குறிப்பிட்டுள்ளார் என நாம் முன்பு கண்டோம் (பிரிவு 55) ; ஆனல் அரித்தோதில் குறிப்பிடும் இக் குறிப்பு உண்மையில் பிளேட்டோவினது சோபிட்டுவில் வரும் ஓர் நகைச்சுவைக் கூற்றே என்பது ஐயத் திற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. இதுபற்றி நாம் எலவே பார்த்தோம். தர்ம் தமது தொண்ணுற்றிரண்டாவது வயதி லும் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துகொண்டிருந்ததாகச் செனுேபனிசுவே கூறுகிறர் (பகுதி 8). செனுேபனிசு வுக்குத் தொண்ணுற்றிரண்டு வயதாகியிருந்தபோது பார்மனை டிசுவும் மிக முதிர்ந்தவராகியிருந்திருப்பார். அன்றியும் பார் மனைடிசு செனேபனிசுவின் போதனைகளைக் “கேட்டா” ரெனி னும், அவரைப் பின்பற்றவில்லையெனும், இடையோசினிசு வாற் டேணப்பட்டுள்ள, சோதியனது கூற்றையும் நாம் மறந்து விடலாகாது. உண்மையில் இவர், டையசய்தாசுவின் மகனும் பைதாகரசவாதியுமான ஆமெனியாசுவோடு கேண்மை பூண்ட வரென்க. “வறியவரானலும் கண்ணியமான மனிதரான ஆமெனியாசுவுக்கு இவர், ஓர் வீரனுக்குச் செய்வது போல ஒர் கோவிலெடுத்தனர். ” பார்மனைடிசுவை மெய்யியல் வாழ்வை நோக்கித் திருப்பியது ஆமெனியாசுவே யன்றி, செனேபனிசு அல்ல. இது ஒர் கற்பனையெனத் தோன்ற வில்லை. மெற்ற போந்தியோனிலிருந்த பைதாகரசுவின் சமாதியைப் போல, பார்மனைடிசுவால் நிறுவப்பட்ட கோவிலும் பிற்காலத்திலும் இருந்திருக்கும். மேலும், அக்கோவில் யாருக்கு அர்ப்பணிக் கப்பட்டது என்பது போன்ற விவரங்கள் கொண்ட குறிப்பும் அங்கு பொறிக்கப்பட்டிருக்கும். பார்மனைடிசுவும் சேனேவும் திராபோவினல் பைதாகரசவாதிகள் என வருணிக்கப்பட்டிருக் கிருர்கள் என்பதையும், “ பார்மனைடிய, பைதாகரச வாழ்க்கை முறை ’ யெனும் ஒன்றைப் பற்றிக் கீபிசு குறிப்பிடுகின்ற ரென்பதையும் கவனித்தல் வேண்டும்.? ஏதோ ஒரு வகையிற் றவருனவோர் கொள்கையிலிருந்து தான் உண்மையென நம் பிய கொள்கைக்குத் தான் திருப்பப்பட்டமையை உருவகித்துக் கூறும் பாவனையிலும், ஒபிசவெளிப்பாடு ஒன்றைக் கூறுவது போன்ற உருவத்திலும் பார்மனைடிசுவின் கவிதையின் ஆரம்
1. அத். 2. 132 ஆம் பக்கம் பார்க்க. *. இப்போது 'எமக்குக் கிடையாத வரலாற்றசிரியர்களின் அடிப்படையில் அமைந்தனவாதலின், திராபோவின் கூற்றுக்கள் மிகவும் பயனுடையவை யென்க.

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 179
பம் அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. இவர் முதலில் ஓர் பைதாகரசவாதியாயிருந்திருத்தால் இவ்வாறு தமது கவி தையை அமைத்ததில் வியப்பிற்கிடமில்லை. ஆகவே அவர் ஓர் பைதாகரசவாதியாயிருந்தார் எனும் வரலாற்றைநாம் எற்றுக் கொள்ளத் தயங்கவேண்டியதில்லை. பைதாகரச கொள்கைக்கும் பார்மனைடிசுவுக்கும் இடையேயுள்ள தொடர்புபற்றி நாம் பின் னர் சில கூறுவோம். ஆனல், பழைய மெய்யியலாளருள், பெரும்பாலானேரைப் போல, பார்மனைடிசுவும் அரசியலில் ஈடுபட்டார் என்பதைக் கவனித்துக்கொண்டால் இப்போது போது மென்க ; தனது நகரிற்கான சட்டங்களை இவர் இயற்றின ரெனப் பியூசிப்போசு குறிப்பிட்டுள்ளார். ஈலியநாட்டுக் குடிகள், பார்மனைடிசு தந்த சட்டங்களுக்குத்தாம் கட்டுப்படுவோம் என ஆண்டுதோறும் சத்தியமிட வேண்டும் என அந்நாட்டு நீதிபதி கள் கட்டளையிட்டதாக வேறு சிலர் கூறியுள்ளனர்.
85. தனது கொள்கையை, யாப்பியல்மொழியில் விளக்கிய அவரது முதலாவது மெய்யியல் ஞானி பார்மனைடிசுவே. இவருக்கு கவிதை முன்னர், அனக்சிமாந்தர் அனக்சிமினிசு எரக்கிளைட்டசு என் போர் யாவரும் வசனநடையிலேயே தமது மெய்யியற் கொள் கைகளை விளக்கினர். கவிதை நடையில் எழுதிய கிரேக்க மெய்யி யலாளர்கள் பார்மனைடிசு எம்பிடோக்கிளிசு எனும் இருவர் மட்டுமே ; ஏனெனில் எபிகாமோசுவை எவ்வளவுக்கு மெய்யிய லாளரெனலாமோ அவ்வளவுக்கே செனுேபனிசுவும் மெய்யிய லாளரென அழைக்கப்படுதற்குத் தகுதியுள்ளவராவர். எம்பி டோக்கிளிசு, பார்மனடிசுவைப் பின்பற்றியே எழுதினர். பார் மனடிசுவும் ஒபிச செல்வாக்குக்குட்பட்டதாலேயே இவ்வாறு கவிதை நடையில் எழுத முற்பட்டார் என ஊகிக்கலாம். ஆனல் கவிதையில் மெய்யியலை எழுதும் முறை புதிதாகப் புகுத்தப் பட்டவோர் அம்சமே. அத்துடன் இப்புதிய மரபு நீடித்து நிலைக்க வுமில்லை.
பார்மனைடிசுவின் கவிதைப்பகுதிகளிற் பெரும்பாலானவை சிம்பிளியசுவினற் பேணித் தரப்பட்டுள்ளன. அவரது காலத் தில் பார்மனடிசு எழுதிய மூல நூல் ஏற்கவே அரிதாகி விட்டிருந்ததாதலால், அவர் தமது பாடிய நூலில் பார்மனை டிசுவின் பகுதிகளையும் சேர்த்தெழுதியது எமது நல்வாய்ப்பே. நான் டியல்சு தந்துள்ள ஒழுங்கில் அவற்றைத் தருகிறேன் :
* ஆரும் நூற்றண்டைச் சேர்ந்த வெளிப்பாட்டுப் பாடல்களைப் பற்றி நாம் மிகச் சிறிதே அறிவோமாதலால், இதுபற்றிய விவரங்கள் எமக்குத் தெரிய வில்லை. ஆனல் அத்தகைய பாடலொன்றின் அமைப்பையே பார்மனைடிசுவும் தனது பாடலில் தழுவியுள்ளார் என்பதில் ஐயமில்லை.

Page 98
180 ஆதி கிரேக்க மெய்யியல்
(1)
அறிவுடையவனை எல்லா நகரங்களுக்கூடாகவும் கொண்டு செல்லும் தேவதையின் புகழ்பெற்ற வழிக்கு எனக்கொ ணர்ந்த இரதம், நான் விரும்பிய தூரத்திற்கு என்னை இட்டுச் சென்றது. அவ்வழியால் எனது இரதம் மேலும் சென்றது ; எனெனில் கன்னிப்பெண்கள் வழிகாட்ட, அதிற் பூட்டப்பட்டி ருந்த அறிவுள்ளனவான குதிரைகள் அவ்வழியில் என்னை இட்டுச்சென்றன. சூரிய குமாரிகள், ஒளியினிடத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் அவசரத்தில், தமது முகங்களிலிருந்த திரைகளை அகற்றிப் பின்னே தள்ளிட்டு, இரவினிடத்திலிருந்து வெளிப்பட்டபோது, குடத்தினுள்ளே ஒளிர்ந்து கொண்டிருந்த அச்சு-இருமுனைகளிலும் வேகமாகச் சுழன்று கொண்டிருந்த சில்லுகளினல் உந்தப்பட்டு வேகமாக இயங்கியதால் அச்சு ஒளிர்ந் ததென்க-ஊதுகுழலினது போன்றவோர் ஓசையை வெளி யிட்டது.
இரவினதும் பகலினதும் வழிகளின் கதவுகள் அங்கு உள்ளன. அவை மேலே பாவுபடிகளிலும், கீழே கல்லாலான வாயிலிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவையும் உயரத்தில், பலமான கதவுகளால் மூடப்பட்டிருக்கின்றன. இவற்றின் திறப்புக்களை, பழிவாங்குபவளான நீதி வைத்திருக்கிருள். என்னை வழி காட்டி அழைத்து வந்த கன்னிப்பெண்கள், அவளோடு மென் மையான சொற்களால் சாமர்த்தியமாகப் பேசி, கதவுகளைப் பூட்டியிருந்த தாழ்ப்பாள்ச் சட்டங்களை மறுப்பின்றி அகற்றச் செய்தனர். இக்கதவுகள் திறந்து பின் தள்ளப்பட்டபோது, ஆணிகளாலும், தறைகளாலும் பொருத்தப்பட்ட, பித்தளையா லான கதவுத் துண்கள் ஒன்றன்பின் ஒன்ருகப் பின்னுக்குத் திரும்பியபோது, ஓர் விசாலமான வெளி தென்பட்டது. இவை யாவற்றிற்கும் ஊடாக, அக்கன்னிப் பெண்கள் எனது இரதத் தையும் குதிரைகளையும், அவ்விசாலமான வழியால் அழைத் துச் சென்றனர். என்னைக் கண்டதும் அப்பெண்தெய்வம், இனிமையாக வரவேற்றள். எனது வலதுகையைத் தனது கையினுற் பற்றியவாறே அவள் பேசலானள் :
இறப்பில்லாதவரான சாரதிகளது கண்காணிப்பிலுள்ள இர தத்தில் எனது இடத்திற்கு வந்துள்ள இளைஞனே, உனக்கு நல்வரவாகுக ! உன்னை இவ்வழியில் இட்டுக்கொணர்ந்தது எவ்வகையிலும் தீயவோர் விதியன்று ; நீதியும் நன்னெறி யுமே உன்னை இங்கு அனுப்பியுள்ளன என்பதையறிவாய். மனிதர்கள் சாதார்ணமாகச் செல்லும் வழியிலிருந்து இது உண்மையில் மிகவும் சேய்மையிலேயே உளது. சற்றேனும்

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 8.
உண்மைக்கலப்பில்லாதனவான, சாதாரண மனிதர்களது கருத் துக்களையும், நன்கமைந்த உண்மையின் அசைக்க முடியாத உட் பொருளையும் நீ அறிவது நல்லதே. ஆனல் நீ இவற்றை அறித லும் மிகவும் முக்கியமானதே-எவ்வாறு யாவற்றிற்கு மூடாகச் சென்று, உள்ளனபோற் காட்சியளிக்கும் பொருட்களை மதிப்பி டுதல் வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
ஆனல் இக்கொள்கையை ஒரேயடியாக ஏற்றுக்கொண்டு அதனை விருத்தி செய்ய முனைவதிலிருந்து உனது சிந்தனையை நீ கட்டுப்படுத்தல் வேண்டும். அன்றியும் அதிக அனுப வத்தால் வந்த பழக்கம் காரணமாக இவ்விடயத்தைச் சாவ தானமான கண்கொண்டு அல்லது அதிக உன்னிப்பில்லாத செவியால் அல்லது நாவினல் உணரமுயல்வதும் கூடாது. ஆனல் நான் கூறும் மிகுந்த விவாதத்திற்கிடமானவையான நிரூபணங்களை, வாதரீதியாக மதிப்பிடல் வேண்டும். எல்லா முறைகளிலும், பேசத் தகுந்ததென எஞ்சியுள்ளது ஒன்றே. . . . R. P. 113.
உண்மையின் வழி
(2) சேய்மையிலுள்ளனவாயிருப்பினும், பொருட்கள் அண்மையி லுள்ளன வென்றெண்ணி அவற்றை உனது மனத்தால் உற் றுக் கவனிப்பாயாக. வெளியே ஒழுங்காகப் பரப்பும் நோக்கத் துடனே அல்லது ஒன்று சேர்க்கும் நோக்கத்துடனே, உள்ளத னேடு இறுக இணைந்திருக்கும் உள்ளதனை உன்னுற் றுணிக்க QpLquITgsJ. R. P. 118 a.
(3)
நான் எந்த இடத்திலிருந்து ஆரம்பித்தாலும் எனக்கு ஒன்று
தான்; ஏனெனில் நான் மீண்டும் அந்த இடத்திற்கு வருவேன்.
(4, 5)
தேடுதற்குரியனவான, நமது சிந்தனைக் கெட்டிய இரண்டே இரண்டு வழிகளை நான் உனக்குக் கூறுவேன்-நீ நான் கூறு வனவற்றைக் கேட்டு, அவற்றை வெளியே பரப்புவாயாக. முத லாவது அது இல்லாதிருப்பது சாத்தியமில்லை எனும் வழி யாகும். இது நம்பிக்கையின்வழி. உண்மை எப்போதும் இத னேடு சேர்ந்திருக்கிறது. இரண்டாவது, அது இல்லை, அது இருப் பது சாத்தியமில்லை என்பதாகும். இவ்விரண்டாவது வழிபற்றி ஒருவரும் அறிய முடியாது என நான் கூறுவேன். ஏனெனில் இல்லாததைப் பற்றி நீ அறிய முடியாது-அது அசாத்திய

Page 99
182 ஆதி கிரேக்க மெய்யியல்
மானது-அதனைப் பற்றி நீ பேசவும் முடியாது ; ஏனெனில் உளது என்பதும் சிந்திக்கப்படுவது என்பதும் ஒன்றே. R. P. 114.
(6)
பேசப்படக்கூடியதும், சிந்திக்கப்படக்கூடியதும் உள்ளதாயிருத் தல் வேண்டும் ; ஏனெனில் உள்ளது, உளதாயிருத்தல் சாத்தி யமானது, இலது என்பது இருத்தல் அசாத்தியமே. இதைப் பற்றியே, உன்னைச் சிந்திக்கும்படி நான் கேட்கிறேன். இம் முதலாவது வழியிலும் இம்மற்ற வழியிலும் செல்வதிலி ருந்து நான் உன்னைக் கட்டுப்படுத்துகிறேன். இவ்விரண்டாவது வழியிற்றன் எதுவுமறியாத மனிதர்கள், பொய் நெறி யாளராக அலைகின்றனர். ஏனெனில் இவர்களது நெஞ்சிலுள்ள அலையும் சிந்தனைகளை நடாத்திச் செல்வது இவர்களது பல வீனமே. ஆகவே குருடும் செவிடுமான மனிதர்களைப்போல, எதுவுமறியாது திகைத்தவர்களாய் இவர்கள் அவ்வழியில் இழுத்துச் செல்லப்படுகின்றனர். அது உளதெனவும் இல தெனவும், ஒன்றேயெனவும், ஒன்றல்லவெனவும், பொருட் கள் யாவும் எதிரெதிரான திசைகளிற் செல்கின்றனவெனவும் கூறும் அறிவிலிகள் மனிதர் ! R. P. 115.
(7) எனெனில் உள்ளது இல்லை யென்னும் இக்கருத்து ஒரு போதும் நிரூபிக்கப்படமாட்டாது ; நீ இவ்வழியிற் செல்வதி லிருந்து உனது சிந்தனையைக் கட்டுப்படுத்துவாயாக. R. P. 116.
(8)
பேசுவதற்கு எமக்கு ஒரு வழியே எஞ்சியுள்ளது ; அது உளது என்பதே அது. உள்ளது என்பது ஆக்கப்பட்டதும் அல்ல, அழியக்கூடியதும் அல்லவென்பதற்கு இவ்வழியிற் பல அடையாளங்களுள ; ஏனெனில் அது பூரணமானதாயும், அசைக்க முடியாததாயும் முடிவற்றதாயும் உளது. அது எப்போதாவது இருந்தது எனலோ, இருக்கும் எனலோ தவறு; எனெனில் அது முழுமையுடையதாகவும், தொடர்ந்துள்ளதாக வும் இப்போதே உள்ளது. ஏனெனில் இது எவ்வாறு ஆரம் பித்ததென உன்னுற் கூற முடியும் ? எதனிலிருந்து, எவ்வகையில் அது தனது வளர்ச்சிக்கான பொருளைப் பெற்றி ருக்க முடியும் ? இல்லாததிலிருந்து அது வந்தது எனக் கூறவோ நினைக்கவோ நான் உன்னை அனுமதியேன் ; ஏனெ னில் எதுவும் இல்லை என்பதை நினைக்கவோ பேசவோ முடி யாது. அன்றியும் இல்லாததிலிருந்து அது வந்ததெனின் எக்காரணத்தினல் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற் றேன்றி

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 183
யது ? ஆகையால் அது எப்போதும் உளதாதல் வேண்டும், அன்றேல் ஒருபோதும் இல்லாததாயிருத்தல் வேண்டும். அன்றி யும் இல்லாததிலிருந்து இல்லாததைத் தவிர வேறு எதுவும் தோன்றுவதை, உண்மையின் சத்தி அனுமதிக்காது. ஆத லால், நீதி தனது தளையை இளக்கி எதனையும் தோன்றவோ, அழிந்து போகவோ விடுவதில்லை. அவள் அதனை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறள். ஆகவே அது உளதா அல்லது அது இல்லையா என்பதிலேயே நமது முடிவு தங்கியிருக்கிறது. இவற்றுள் ஒரு வழி சிந்திக்கப்படக்கூடியதல்ல வென்பதுடன் பெயரிடவும் முடியாததாதலால் ஒதுக்கப்படவேண்டுமெனவும் (ஏனெனில் அது உண்மையான வழியல்ல), மற்றவழியே உண் மையானதும் உள்ளதுமான தெனவும் முடிவு செய்தல் அவசியம். அப்படியானல் உள்ளதென்பது எதிர்காலத்தில் இருக்கும் என்பது எவ்வாறு ? அல்லது அது உண்டாகும் எனல் எவ்வாறு ? அது உண்டாவதெனின், அது இல்லை யென்க ; அது எதிர்காலத்தில் இருக்கப்போவதெனினும் அது இப்போது இல்லையென்க. இவ்வாறே ஆதல் என்பது மறுக்கப்படுகிறது. இதனற்றன் அழிதல் என்பதைப் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை. R. P. 117.
உள்ளது எல்லா இடங்களிலும் ஒரே தன்மையுடையதாயிருப்ப தாலும் ஒரிடத்திற் குறைவாகவும் இன்னேரிடத்தில் அதிகமாக வும் இல்லாதிருப்பதனுலும், எல்லாப் பகுதிகளிலும் நிறைந் திருப்பதனலும், அதனைப் பிரித்தல் இயலாது. ஆகையால் அது முற்றிலும் தொடர்புடையதாகவிருக்கிறது ; ஏனெனில் உள் ளது, (அதன் எனைய பாகங்களோடு) உள்ளதோடு தொட்டுக் கொண்டிருக்கிறது.
அன்றியும், அது ஆதியும் அந்தமுமில்லாது, பலமான சங்கி லிகளின் தளையிற் கட்டுண்டு இயங்க முடியாதிருக்கின்றது; ஆதல், அழிதல் என்பவை, உண்மையான சிந்தனையால் விலக்கப்பட்டு அகலத் துரத்தப்பட்டு விட்டனவாதலால், அது, தானன்றி வேருகாது, அதே இடத்திலேயே, தன்னிலேயே தங்கி நிற் கிறது. இவ்வாறு அது தனது இடத்திலேயே நிலைத்திருக் கிறது; ஏனெனில் எல்லாப் பக்கங்களிலும் அதனை வரையறை செய்யும் இன்றியமையா விதி அதனைக் கட்டுப்படுத்தி வைத்தி ருக்கிறது. ஆதலால் அதற்கு எல்லையற்றதாக இருக்க அனு மதி இல்லை. அது எதனையும் வேண்டி நிற்கவில்லை ; ஆனல் அது எல்லையற்றதாயிருப்பின் யாவற்றையும் வேண்டி நிற்பதா யிருக்கும். R. P. 118.

Page 100
184 ஆதி கிரேக்க மெய்யியல்
எதனைப் பற்றிச் சிந்தித்தல் சாத்தியமோ அதுவும், எதற் காகச் சிந்தனையிருக்கிறதோ அதுவும் ஒன்றே ; ஏனெனில் உள்பொருள் இல்லாது, ஆதலால் அதனைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமும் இல்லாது போனல், சிந்தனையும் இருக்க முடியாது. விதியானது உள்ளதை முழுமையுடையதும் இயங்க முடியாததுமாக ஆக்கியுள்ளதாதலால் அதனைத் தவிர்த்து வேறெதுவுமில்லை. வேறெப்போதும் இருக்கப்போவது மில்லை. ஆதலால், ஆதல், அழிதல் என்பனவும், உள்பொருள், இல் பொருள் என்பனவும், இடமாற்றம் நிறமாற்றம் என்பனவும்இவை யாவும் உண்மையென நம்பிய மாந்தர் ஆக்கிய பெயர் asGBGT. R. P. 119.
ஆகவே அதற்கோர் எல்லையுளது. அது எல்லாப் பக்கங் களிலும் பூரணமானதாயும், மத்தியிலிருந்து எல்லாப் பக்கங் களிலும் சமமாக அமைந்திருக்கும் ஓர் கோளத்தில் பொருள் போலவும் உளது; ஏனெனில் அது ஒர் இடத்தில் இன் னேரிடத்தில் உள்ளதிலும் குறைவாகவோ கூடுதலாகவோ இருக்க முடியாது. ஏனெனில் அது எல்லாப் பக்கங்களிலும் சமமாகப் பரவுவதை எதனலும் தடைசெய்ய முடியாது. அன்றி யும் உளதாயிருப்பது எதுவும், அது சிறிதும் இழிவுபடுத்தப் படக்கூடாததாதலால், ஓரிடத்தில் இன்னேரிடத்திலிருப்பதிலும் குறைவானதாக இருக்க முடியாது. அன்றியும், அது எவ் விடத்திலிருந்து, எல்லாப் பக்கங்களிலும் சமமாக விருக்கிறதோ, அவ்விடம் எல்லாத்திசைகளிலும் எல்லையை நோக்கிச் சமமாக முனைகிறது. R. P. 120.
நம்பிக்கையின் வழி
உண்மை பற்றியதும், நம்பத்தகுந்ததுமான எனது பேச்சை யும், சிந்தனையையும் இப்போது நிறுத்துவேன். இனி, எனது பேச்சின் போலித் தொனியை மனதிற் கொண்டு, சாதாரண மாந்தரது நம்பிக்கைகளை அறிவாயாக.
மாந்தர்கள் இரு உருவங்களைப் பற்றிப் பேசுகின்றனர். இவற் றுள் ஒன்றைப் பற்றிப் பேச முடியாதாதலால், இங்கு அவர்கள் உண்மையை விட்டு விலகியலைகின்றனர். இவையிரண்டும் ஒன் றுக்கொன்று எதிரானவையெனவும் வேறுபட்ட பண்புடையன வெனவும் அவர்கள் கூறுகின்றனர். ஒன்று, மென்மையுடைய தும், எத்திசையிலும் மிகவும் இலேசானதுமான, ஆனல் மற்ற உருவத்திலிருந்து மாறுபட்டதுமான வானத்தீயென அவர்கள் கூறுவர். மற்றது, திண்மையுடையதும், மிகவும் பாரமான பொருளுமான இருண்ட இரவு ; முன்னையதற்கு எல்லா வகைகளிலும் எதிரானது. மாந்தர்களது சிந்தனைகள் யாவற்.

ஈலியா நாட்டுப் பார்மனேடிசு 185
றிலும் நீ திறமையுடையவனுயிருக்க வேண்டுமாதலால், இவ் விரண்டையும் பற்றியும், அவை உண்மையில் எவ்வாறிருக் கின்றன எனக் கூறல் பொருந்துமோ அவ்வாறு உனக்கு விளக்குவேன். R. P. 121.
(9)
பொருள்கள் யாவும் ஒளியும் இரவும் என வகுக்கப்பட்டு விட்டனவாதலாலும், இவற்றின் சத்திகளின் பெயர்களும் பொருள்கள் யாவற்றிற்கும் அளிக்கப்பட்டு விட்டனவாதலாலும், எல்லாப் பொருள்களும் ஒரே நேரத்தில், சமமான ஒளியும் இருண்ட இரவும் நிறைந்தனவாக இருக்கின்றன ; ஏனெனில் இவற்றில் ஒன்றிற்காவது மற்றதோடு எவ்வகைத் தொடர்பும்
(10, 11)
ஒளிரும் சூரியனது தூய விளக்கின் அழகிய சாதனைகளை யும், வானத்தின் உட்பொருளையும், வானத்தில் உள்ள எல்லா அடையாளங்களையும், இவை யாவும் எவ்வாறு தோன்றின என்பதையும் நீ அறிவாய். அதே போல வட்ட முகமுடைய சந்திரனது உட்பொருளையும், அலையும் அதனது செயல்களை யும் நீ அறிவாய். அன்றியும், எம்மைச் சூழவிருக்கும் வானுல கங்கள் பற்றியும், அவை எவ்வாறு தோன்றின என்பது பற்றி யும், மாற விதி எவ்வாறு அவற்றை உடுக்களின் எல்லைகளைக் காக்குமாறு பணித்ததென்பது பற்றியும். . . . . . பூமி, சூரியன், சந்திரன், யாவற்றுக்கும் பொதுவான ஆகாயம், பால்வழி மண்ட லம் ஆகிய யாவும் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் நீ அறிவாய். கடைசி எல்லையிலிருக்கும் ஒலிம்போசும், எரியும் உடுக்களினது வலியும் எங்ங்ணம் ஏற்பட்டன என்பதையும் நீ அறிவாய். R. P. 123, 124.
(12)
ஒடுங்கிய வட்டங்கள் தூய தீயினலும், அவற்றை அடுத் துள்ளவை இரவினலும் நிறைக்கப்பட்டன. இவற்றின் நடுவே இவற்றின் தீப்பகுதிகள் பாய்கின்றன. யாவற்றையும் ஆற்அறுப் படுத்துபவளான தெய்வம் இவற்றின் நடுவேயுள்ளாள் ; ஏனெ னில் ஆணின் அணைப்பை விரும்புமாறு பெண்ணைத் தூண்டி யும், பெண்ணின் அணைப்பை விரும்புமாறு ஆணைத் தூண்டி யும், புணர்ச்சியையும், நோமிகுந்த பிரசவத்தையும் ஆரம் பிப்பவள் இவளே. R. P. 125.

Page 101
186 ஆதி கிரேக்க மெய்யியல்
(13) எல்லாத் தெய்வங்களுக்கும் முன்னர் அவள் ஈரோசுவை (காதற் கடவுளை) ஆக்கினள். R. P. 125.
(14) பூமியைச் சுற்றி அலைவதும், இரவல் ஒளியால் இரவிற் பிரகாசிப்பதும்.
(15) எப்போதும் சூரியனது கதிர்களைப் பார்த்துக்கொண்டு.
(16) தவறிழைக்கும் அதனது அங்கங்களுக்கு ஏற்றதாக எவ்வாறு சிந்தனை அமைகிறதோ, அவ்வாறே மனிதர்களுக்கும் அது அமைகிறது ; எனெனில் சிந்திப்பது-ஒரு பொருளே-அதா வது ஒவ்வொரு மனிதனிலும் அவனது அங்கங்களின் உட் பொருளாயமைந்த அதுவே ; ஏனெனில் அவர்களில் எது அதிகமாயிருக்கிறதோ அதனல் அமைவதே அவர்களது சிந்தனை?. R. P. 128.
(17) வலப்பக்கத்தில் சிறுவர்கள் ; இடப்பக்கத்தில் சிறுமியர்.
(19) மனிதர்களது கருத்துப்படி, பொருள்கள் இவ்வாறே தோன் றின, இவ்வாறே இன்று உள. காலத்தின் போக்கில் அவை வளர்ந்து மறைகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் மனிதர்கள் ஒவ்வொரு பெயரைச் சூட்டியிருக்கின்றனர். R. P. 129 b.
* இலியட்டின் (ப. 214) எதிரொலியைக் காண்க. எம்பிடோக்கிளிசுவிலும் இது காணப்படுகிறது (பகுதி 45). செனேபனிசுவின் காலத்தில், சந்திரனது ஒளி பிரதிபலிக்கப்படும் ஒலியே எனக் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர் கூறி யவைபோல, இதுவுமோர் கேலிபோலும். இக்கருத்தினை அனக்சகோரசு அதென் சில் புகுத்தியிருக்கலாம் (பிரிவு 135). ஆனல் இப்பாடல்கள் இது அவராற் கண்டு பிடிக்கப்பட்ட விடயமல்ல என்பதை நிரூபிக்கின்றன.
* பார்மனைடிசுவின் கவிதையின் இரண்டாம் பகுதியில் விவரிக்கப்பட்ட அறி வியற் கொள்கையின் இப்பகுதிக்கு, தியோபிறகத்தோசு தமது “ புலனுணர்வு பற்றிய பகுதி ” யிற் கூறுவனவற்றேடு சேர்த்தே பொருள் கொள்ளப்பட வேண்டும் (201 ஆம் பக்கம் ஒப்பிடுக). மனிதர்களது உடலில் ஒளியுள்ள பகுதியோ அல்லது இருண்ட பகுதியோ அதிக மிருப்பதற்கிணங்கவே அவர்களது சிந்தனை அமைகிறது. ஒளியுள்ள பொருள் அதிகமாயிருக்கும்போது அவர்கள் ஞான முடையோராகவும், இருள் அதிகமாகும்போது பேதைகளாகவும் இருக்கின் றனர்.
* இது பார்மனைடிசுவினது கருவியலிலிருந்து ஒர் பகுதி.

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 187
9 &
86. கவிதையின் முதலாவது பகுதியில், “ அது உளது என்பதை நிறுவுவதில் பார்மனடிசு அதிக கவனம் செலுத்து வதைக்காண்கிறேம். ஆனல் முதலில் நோக்கும்போது அவர் குறிப்பிடும் உள்ளது என்பது என்னவென்று விளங்கவில்லை. உள்ள தென்பது உளது என வெறுமனே கூறுவதோடு அவர் நிறுத்திவிடுகிறர். நாம் உடலுள் பொருள் என வழக்கமாக அழைப்பதே இங்கு அவராற் கருதப்படுவது என்பதில் உண்மை யான ஐயத்திற்கிடமேயில்லை. அது வெளியிற் பரந்துள்ள தாகவே கருதப்படுகிறது என்பது திண்ணம் ; ஏனெனில் அது கோளவடிவினது எனக் கூறுப்படுகிறது (பகுதி 8). மேலும், புலன்களால் உணரப்படக்கூடியதான வொன்றையன்றி வேறெந் தச் சத்துப் பொருளுமிருந்ததாகப் பார்மனடிசு நம்பவில்லை யென அரித்தோதில் கூறுகிறர். “ உள்பொருள் ” என்பதைப் புற்றிப் பார்மனடிசு ஓரிடத்திலும் ஒரு சொல்லாயினும் கூற வில்லை. மேலும், அவருக்கு முன்பும், பின்பும் வாழ்ந்த மெய்யியலாளர்களால், அதிகம் கையாளப்பட்ட “ இறை ” யெனும் சொல்லை அவர் ஓரிடத்திலும் கையாளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “அது உளது” எனும் கூற்றிற்கு இறுதி யில் நாம் கொள்ளக்கூடிய பொருள் உலகு ஒர் பூரணம் என்பதே ; அத்துடன் உலகுக்கு வெளியேயோ உள்ளேயோ வெற்றிடம் எனும் ஒன்று இருக்கவில்லை எனவும் அறிதல் வேண்டும். இதிலிருந்து இயக்கம் எனும் எதுவும் இருக்க முடியாதென்பதும் பெறப்படுகிறது. எகத்தை மாறும் இயல் புடையதாக்கி அதன்மூலம் உலக நிகழ்ச்சிகளை விளக்கிய எரக் கிளைட்டசு போலல்லாது, மாற்றம் என்பது வெறும் கண்மாயமே எனப் பார்மனைடிசு அதனை ஒதுக்கியுள்ளார். எகம் என்பதனை அதன் முழுத்தாற்பரியத்தோடும் உணர்ந்து எற்றுக்கொள் வோர், பிற அனைத்தையும் மறுத்தல் வேண்டும் என்பதனைப் பார்மனைடிசு தீர்க்கமாக விளக்கினர். ஆகவே, இப்பிரச்சினைக்கு, அவருக்கு முன்னர் தரப்பட்ட விளக்கங்கள் யாவும் உண்மையில் இப்பிரச்சினையை நன்கு உணராது தரப்பட்டவையே யெனல் வேண்டும். ஐதாதல், அடர்த்தியுறல் என்பவை பற்றிய தனது கொள்கையின் மூலம், மூலப்பதார்த்தத்தின் ஒருமையைக் காப் பாற்ற முனைந்த அனக்சிமினிசு, உள்பொருள் ஓரிடத்தில், வேறேரிடத்திலிருப்பதிலும் குறைவாக உளது எனக் கொள் வது, உண்மையில் இல்பொருளுளது எனத் தான் ஒப்புக் கொள்வதற்குச் சமமாகும் என்பதை உணரவில்லை (பகுதி 8). உலகின் வெளியே வெற்றிடம் அல்லது வளி இருந்ததெனவும், அலகுகளைப் பிரிக்கும் பொருட்டே உலகினுள்ளே அது வந்த தெனவும் பைதாகரசவாதிகள் விளக்கினர் (பிரிவு 53). இவ்
அது உளது”

Page 102
188 ஆதி கிரேக்க மெய்யியல்
விளக்கமும் இல்பொருள் உளது எனும் கருதுகோளை உடைய தாயிருக்கிறது. எரக்கிளைட்டசுவின் கொள்கையையும் இவற்றி லும் திருப்திகரமானதெனக் கொள்ள முடியாது ; எனெனில் தீ உளது எனவும் இலது எனவும் ஒருங்கே கூறும் முரண் பாட்டின் அடிப்படையில் அவரது கொள்கை அமைந்துளது (பகுதி 6).
நாம் மேலே கடைசியாக எடுத்துக்காட்டிய கவிதைகளில் குறிப்பிடப்பட்டிருப்பவர் எரக்கிளைட்டசு என்பதன் உண்மையைச் சிலர் சந்தேகித்துள்ளனர். ஆனல் இச்சந்தேகம் எழப்போதிய நியாயமில்லை யெனலாம். உள்பொருளும் இல்பொருளும் ஒன் றேயென (6 ஆம், 8 ஆம், பகுதிகளின் பழைய மொழி பெயர்ப்பு) எரக்கிளேட்டசு ஒருபோதும் கூறவில்லை யென்பது செல் லரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது ; இதைவிட வேறெந்த ஆதாரமும இல்லையெனில், இச்சந்தேகங்கள் நியாயமானவையே யெனலாம். ஆனல் , இங்கு தர்க்கிக்கப்படும் கருத்தின்படி நோக்கின், “ எல்லாப் பொருள்களும் எதிர்த்திசைகளிற் செல் கின்றன’ எனும் கூற்றுக்கு “ மேலும் கீழும் செல்லும் வழி” (பகுதி 71) எனும் எரக்கிளைட்டச கொள்கை யென்பதைத் தவிர வேறு முறையிற் பொருள் கொள்ள இயலாது. அன்றி யும், தான் கண்டிக்கும் மெய்யியலாளர் உள்பொருளும் இல் பொருளும் ஒன்றெனவும் கூறினர் எனப் பார்மனடிசு கூற வில்லையெனவும் நாம் கண்டோம் ; அவர் கூறுவதெல்லாம் அது உள்பொருள், அது இல்பொருள் (எனவும்) அது ஒன்றே, அது ஒன்றல்ல (எனவும் மக்கள் கூறுகிறர்கள்) என்பதே. மேலேயுள்ள வார்த்தைகளிலிருந்து இயல்பாகப் பெறக்கூடிய பொருள் இதுவே ; எரக்கிளேட்டசுவின் கொள்கையை இது மிகவும் செம்மையாக வருணிக்கிறதெனலாம்.
பார்மனடிசின் 87. பார்மனடிசு வாதிக்கும் முறையே அவரது கவிதையிற்
முறை காணப்படும் பெரிய புதுமையென்க. தான் ஆராயப்போகும் கொள்கைகள் யாவற்றிற்கும் பொதுவாயுள்ள முற்கற்பிதம் யாதென அவர் முதலிற் றேடுகிறர். இல்பொருள் உளது என்பதே அக்கற்பிதம் எனக் கண்டதும், அதனைப் பற்றிச் சிந்தித்தல் சாத்தியமா எனும் இரண்டாவது வின எழுகிறது. இல்பொருள் பற்றிச் சிந்தித்தல் சாத்தியமில்லை யென்பதே அதற்கு விடையாகக் கிடைக்கிறது. சிந்திக்க வேண்டுமானல், எதையேனும் பற்றியே சிந்திக்க வேண்டும். ஆகையால் இல் பொருளென்பது எதுவும் இல்லை. சிந்திக்கப்படக்கூடியதே இருக்க முடியும் (பகுதி 5) ; ஏனெனில் உள்ளதற்காகவே சிந்தனை உளது (பகுதி 8).

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 189
இம்முறையைப் பார்மனைடிசு மிகவும் கண்டிப்போடு விருத்தி செய்கிறர். சிந்திக்கப்பட முடியாதனவென:நாம் ஒத்துக்கொள்ள வேண்டியனவற்றைப் பற்றி நாம் சிந்திக்கிருேம் எனப் பாசாங்கு செய்ய அவர் எம்மை அனுமதியார். நாம் நன்கு விளங்கிக் கொள்வனவற்றைத் தவிர வேறு எதனையும் எற்றுக்கொள்ள மாட்டோம் என நாம் துணிவோமானல், அழிவும், மாற்றமும் நிறைந்தவோர் உலகை எமக்குக் காட்டும் எமது புலன்களோடு எமது அறிவு முற்றிலும் முரண்படும் என்பது உண்மையே. இது புலன்களின் துரதிட்டமே என்கிருர் பார்மனேடிசு. ஒருடல் வாதத்தை ஏற்றுக்கொண்டால் இம்முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகும். பார்மனேடிசு துணிச்சலோடு இம்முடிவை எடுத் துக் கூறியமை, இக்கொள்கையின் வளர்ச்சிக்கே ஓர் முடிவை எற்படுத்தியிருக்க வேண்டும். அக்காலத்தில் நிலவிய கருத்துக் களை அவற்றின் தருக்க ரீதியான முடிவு வரைக்கும் விருத்தி செய்து, அம்முடிவை, அது எவ்வளவுதான் முரண்பட்டதாகத் தோன்றினலும், எற்றுக்கொள்ளும் துணிவு பார்மனடிசுவுக்கு இல்லாது போயிருந்தால், மெய்யியலாளர் இன்னும் நெடுங் காலம்வரை ஐதாதல்-அடர்த்தியுறல், எகம்-பல எனும் எதிர்ப்பு வட்டங்களிற் சிக்கி அவற்றிலிருந்து வெளியேற வழிய றியாதிருந்திருப்பார்கள். பார்மனடிசு துணிச்சலோடு தமது வாத வியல் முறையைப் பூரணமாகப் பின்பற்றியமையே பிற்கால மெய்யியற் சிந்தனை முன்னேறுவதற்கு வழியமைத்துக் கொடுத் தது. இனி மெய்யியலானது, ஒன்றில், ஒருமை வாதத்தைக் கைவிடுதல் வேண்டும் அன்றேல் உடல்வாதத்தைக் கைவிடுதல் வேண்டும் என்னும் நிலை ஏற்பட்டது ; அவை இரண்டையுமே தழுவுதல் இயலாததாயிற்று. ஆனல் உடலற்ற பொருள் பற்றி இன்னும் அவர்கள் அறிந்திலராதலால், உடல் வாதத்தைக் கைவிடுதல் இயலாததாயிற்று. ஆகவே அவர்கள் ஒருமை வாதத்தைக் கைவிட்டு, இறுதியாக அணுவாதக் கொள்கையைத் தழுவுவாராயினர்; உலகத்தை, இயக்கத்திலிருக்கும் ஓர் பொருட் டொகுதியென்னும் கொள்கையின் அடிப்படையில் வருணிப்ப தற்குக் கடைசியாகத் தரப்பட்ட கொள்கை நாமறிந்த வரையில் அணுவாதமே.
88. “அது உளது” என்பதை ஒப்புக்கொண்டதன் பின்னர் விகவுள் அதனல் எற்படும் விளைவுகள் யாவற்றையும் பார்மனைடிசு விருத்தி
1. நாம் இப்போது எற்றுக்கொள்ளும் கண்ணுேட்டத்திலிருந்து அணுவாதத் தையும் ஒருமைக்கொள்கை யெனலாமா என்பது ஐயத்திற்கிடமானதே. எனெ னில் அணுவாதம் வெற்றிடம் உண்மையில் உளதென ஒப்புக்கொள்கிறது. தற்கா லத்து ஒருமை வாதக் கொள்கைகளின்படி உடலல்லாது சத்தியே மூலப் பொருள். ஆகையால் இவை உடல்வாதங்களல்லவென்க.

Page 103
190 "ஆதி கிரேக்க மெய்யியல்
செய்கிறர். அது ஆக்கப்படாததாகவும், அழிக்கப்படக் கூடாததா கவும் இருத்தல்வேண்டும். இல்லாதது என எதுவும் இல்லையாத லால் அது இல்லாததிலிருந்து வந்திருக்க முடியாது. அதைத் தவிர்த்து வேறு எதுவும் இருக்க இடமில்லையாதலால், அது வேறு எதனிலிருந்தும் வந்திருக்க முடியாது. உள்ளது, தனக் கருகே வேறு எதுவும் தோன்றுவதற்கு இடமளிக்கும் வெற் றிடத்தை உடையதாகவிருக்க முடியாது ; எனெனில் வெற்றிடம் என்பது இல்லை, இல்லாததைப் பற்றிச் சிந்திக்க முடியாது. ஆகவே அது இருக்க முடியாது. உள்ளது, எப்போதும் தோன் றியதல்ல, எதிர்காலத்திலும் எதுவும் தோன்றப்போவதில்லை, * அது உளதாயின் ' அது முழுவதும் ஒருங்கே இப்போதே உளது.
பார்மனைடிசுவின் இக்கொள்கை, வெற்றிடம் உளது என்பதை மறுக்கிறது என்பது பிளேட்டோவுக்கு நன்கு தெரிந்திருந்தது. “ எல்லாப் பொருட்களும் ஒன்ருயிருந்தன வெனவும், இயங் குவதற்கிடமில்லை யாதல்ால் அது தன்னிலேயே நிலைத்திருந்தது" எனவும் பார்மனைடிசு கருதினர் எனப் பிளேட்டோ கூறுகிறர். அரித்தோதிலும், பிளேட்டோவைப் போலவே, இதனை மிகவும் தெளிவாக உணர்ந்திருந்தார். பார்மனடிசுவின் காலத்திலும் அதற்கு முன்பும், புலன்களால் அறியக் கூடியனவற்றைத் தவிர, புலன்களால் உணரமுடியாத சத்துப்பொருளும் இருத்தல் கூடுமென யாரும் கற்பனை செய்திருக்கவில்லை யாதலாற்றன், எகம் என்பது இயக்கமற்றது எனக் கூறும் நிர்ப்பந்தம் பார்மனடிசுவுக்கு எற்பட்டதென அரித்தோதில் கூறினர்.
உள்ளதென்பது உளது; அது கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க முடியாது. ஆகவே ஓரிடத்தில் அதில் எவ்வளவிருக் கிறதோ அவ்வளவு எனைய இடங்களிலும் இருக்கிறது. ஆக வேதான் உலகு நீக்கமற்றதும், பிரிக்க முடியாததுமானவோர் பூரணமாக விருக்கிறது. இதை எற்றுக்கொண்டவுடன், இப் பூரணம் இயங்க முடியாது என்பது உடனடியாகப் பெறப் படுகிறது. அது இயங்குவதானல், வெற்றிடத்திலேயே இயங் குதல் வேண்டும்; ஆனல் வெற்றிடம் என்பது இல்லை. எல்லாப் பக்கங்களிலும், உள்ளதனல், சத்துப்பொருளினல், அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நியாயத்தின்படியே அது எல்லையுடையதாகவும், தனக்கப்பால் வேறெதுவும் இல்லாததா கவும் உளது எனப்பட்டது. அது தன்னிலேயே பூரணமாயிருக் கிறதாதலால், இல்லாததான வெற்றிடத்திலே, தன்னைப் பரப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் அதற்கில்லை, ஆகை யினற்றன் அது கோளவடிவானதாகவும் உளது. அது எல்லாப் பக்கங்களிலும் சம அளவு மெய்மையுடையதாக விருக்கிறது.

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 191
இந்நியமத்திற்குப் பொருந்தும் ஒரே வடிவம் கோளமே. வேறு எந்த உருவத்திலும் ஒருபக்கத்தில் இருப்பது பிறபக்கத்திலிருப்ப திலும் அதிகமாகக் காணப்படும்.
89. சுருங்கக் கூறுவதாயின், உளதென்பது, எல்லையுள்ள பார்மனேடிசு தும், கோளவடிவமுடையதும், இயக்கமற்றதும் உடலுள்ளதுமா வே சடவாதத் னவோர் பூரணம் ; அதனையன்றி, வேறெவுமில்லை. நமக்குத் தின் சந்தை தோன்றும் பலவாகுமியல்பு, இயக்கம், வெற்றிடம், காலம்" என்பன யாவும் வெறும் மாயைகளே. ஆதி அண்டவியலாளர் தேடிய மூலப்பதார்த்தம், இங்கு “தானேயுளவாயபொருள் ” போன்றவொன்றக ஆதலை இங்கு காண்கிருேம். பின்னர் ஒரு போதும் இது இத்தன்மையை முற்ருக இழக்கவில்லை. எம்பி டோக்கிளிசுவின் மூலகங்களும், அனக்சகோரசுவினது “ ஒமி யோமரிசு ’ என அழைக்கப்பட்ட பொருள்களும், லியூகிப்போசு, தெமோகிரித்தோசு ஆகியோரது அணுக்களும் பார்மனைடிசுவினது * உள்பொருளே ” யன்றி வேறில்லை. சிலர் கூறியிருப்பது போலப் பார்மனைடிசு “ கருத்து வாதத்தின் தந்தை ” அல்ல. அதற்கு மாருக சடவாதம் முழுவதும், பார்மனைடிசுவின் கண்ணுேட்டத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளது.
90. புலன்கள் தரு உலகம் பற்றித் தனது கற்பனையில் எழுந்த 4 மக்கள் • விளக்கமாக, பொருட்களின் ஆரம்பம் பற்றிய இருமைவாதக் நம்பிக்கைகள் கொள்கையொன்றையே, பார்மனடிசு தனது கவிதையின் இரண்டாவது பாகத்திற்றருகின்றர் எனப் பொதுவாகக் கருதப் படுகிறது. “ அவர் தருவதெனக் கூறுவது இறப்புளோரான மக்களது கருத்துக்களையே ; ஆனல் பார்மனடிசு இவ்வாறு தருவது பிறரது கருத்துக்கள் மட்டுமல்ல. தமது கருத்துக்க ளிலும் வெளிப்படையான மெய்யியலுண்மையின் அடிப்படை யில் இன்றியமையாதனவென, எத்தகைய கண்டனத்திற் கெதிராகவும் நிறுவப்படக்கூடியனவற்றைத் தவிர்த்து ஏனைய வற்றைத் தந்துள்ளார்” எனக் கொம்பர்சு கூறியிருப்பதும் இதனையே. அரித்தோதில் இத்தகைய ஒர் கருத்தை ஒரிடத்தில் எற்றுக்கொள்கிருர் என்பது உண்மையேயாயினும் இக்கருத்து ஒர் காலவழுவென்பதில் ஐயமில்லை. மேலும் இது உண்மை யில் அரித்தோதிலின் கருத்துமல்ல. இல்பொருள், எவ்வகை யிலும் இருந்ததெனப் பார்மனைடிசு ஒப்புக்கொள்ள வில்லை யென்பதை அரித்தோதில் நன்கு உணர்ந்திருந்தார் ; ஆனல் பார்மனைடிசுவின் கவிதையின் இரண்டாவது பகுதியிற் காணப் பட்ட அண்டவியற் கருத்துக்களே அவரது அண்டவியற் கருத்துக்க ளெனவே குறிப்பிடுவது இயற்கையான முறையாகத் தோன்றி
- Greek Thinkers, Vol. i. p. 180 Sqq.

Page 104
92 ஆதி கிரேக்க மெய்யியல்
யிருக்க வேண்டும். அவர் கூறுவதை நேரே கேட்டுக் கொண்டி ருந்தவர்கள் அக்கூற்றின் பொருளை உணர்ந்து கொண்டிருப் பார்கள். எவ்வாருயினும், பார்மனைடிசு தமது கவிதையின் இரண்டாவது பகுதியில் “ பலரது ” நம்பிக்கைகளையே தர விரும் பினர் என்பதே அக்காலத்து அரித்தோதிலது குழுவினரான அதெனியரிடையே வழங்கிய கருத்துமென்க. தியோபிறகத்தோ சும் இவ்வாறே கூறுகிறர். இவ்விரண்டாவது பகுதியிலுள்ள அண்டவியற் கருத்துக்கள் யாவும் முற்றிலும் தவருனவை எனப் பார்மனைடிசு தானும் உணர்ந்திருந்தார் என அலெக் சாந்தர் கூறுகிருர். மற்றைய கருத்து, “ உண்மையின் வழி’ சிந்தனைக்குரிய உலகு பற்றிய வருணனையெனவும், “நம்பிக் கையின் வழி’ புலன்கள் தரு உலகுபற்றிய வருணனை என வும் கருதிய நவப்பிளேட்டோ தரிசனவாதிகளினது, குறிப்பாக சிம்பிளிசியசுவின் கருத்தாகும். கொம்பர்சு பார்மனைடிகவின் இரண்டாவது பகுதிக்கும் கான்றுவின் கொள்கைக்குமிடையே உவமை காண முனைந்தது எவ்வளவிற்குக் காலவழுவாகுமோ அவ்வளவிற்குச் சிம்பிளிசியசுவின் கருத்தும் காலவழுவாகு மெனலாம். தான் தரும் (அண்டவியற்) கொள்கையில் சிறிதே ணும் உண்மையில்லையெனப் பார்மனைடிசுவே திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அன்றியும் “இறப்புளோரான மக்கள’து நம்பிக் கைகளையே தான் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன லேயே இக்கொள்கைகள் “பலரது” கொள்கைகள் எனத் தியோ பிறசத்தோசு கூறினர்.
தியோபிறகத்தோசுவினது விளக்கம், சிம்பிளிசியசுவினது விளக்கத்தை விடச் சிறந்ததே யெனினும், ஏற்றுக்கொள்ளக் கூடியவொன்றல்ல. பார்மனைடிசுவாற் றரப்பட்டது போன்ற விரி வான இருமைவாதக் கருத்தொன்றைப் "பலர் ” (சாதாரண மக்கள்) நம்பியிருப்பார்கள் எனக் கூறுவது ஒருபோதும் பொருந்தாது. அதே நேரத்தில், சாதாரண மக்களின் நம்பிக் கைகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படலாம் எனக் காட்டும் பொருட்டுப் பார்மனைடிசு இவற்றைக் கூறினரென்பதும் மிகவும் செயற்கையானவோர் கருதுகோளாகும். தமக்குச் சற்றும் பழக் கமில்லாதவொரு முறையிற் றமது கொள்கைகள் தரப்படும் போது, அதனிலுள்ள பிழைகள் தமது பிழைகளே யெனச் சாதாரணமக்கள் கண்டுகொள்வார்கள் எனக் கொள்வது சிறி தும் பொருந்தாது. நாம் பார்த்த விளக்கங்கள் யாவற்றிலும் கொஞ்சமேனும் பொருத்தமில்லாத விளக்கம் இதுவேயெ னலாம். ஆனல் இவ்விளக்கத்தை நம்புபவர்கள் இன்னமும் உளராதலால், இவை யாவற்றையும் கூறுபவள் ஒரு தேவதை யென்னும் காரணத்தினலேயே, இரண்டாம் பகுதியிலுள்ள

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 193
கருத்துக்கள், “ மக்களது நம்பிக்கைகள் ” எனக் குறிப்பிடப் பட்டன என்பதைச் சுட்டிக்காட்டுதல் அவசியமாகிறது. மேலும் இருவகையான ஆராய்ச்சிகளைப் பார்மனடிசு, ஏற்கக் கூடாதவை யென்கிருர் என்பதையும் கவனித்தல் வேண்டும். இவற்றுள் * மக்களது வழி” எனத் திட்டவட்டமாக வருணிக்கப்பட்டி ருக்கும் இரண்டாவது வழி, எரக்கிளைட்டசுவின் கொள்கையா யிருத்தல் வேண்டும். ஆகவே மற்றைய வழியும், அக்காலத் தில் வழங்கிய வேறேர் குழுவினரது கொள்கையாய் இருத்தல் வேண்டும். ஆனல் பைதாகரசவாதத்தைத் தவிர்த்து, அக்கா லத்து வழங்கிய வேறு முக்கிய மரபெதனையும் காண்டல் அரிது. பார்மனைடிசுவின் கவிதையின் இரண்டாவது பகுதியில் பைதாகரச கருத்துக்கள் உள்ளன என்பது இடபோது யாவ ராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆகவே இப்பகுதியிலுள்ள அண்டவியற் கருத்துக்கள் யாவும் யாரிடமிருந்து பெறப்பட்டன வென்பது திட்டவட்டமாகத் தெரியாதவரையில், இவையும் பைதா கரசவாதிகளிடமிருந்தே பெறப்பட்டன என ஏற்றுக்கொள்ள வேண்டியதே. இரண்டாவது வழியில் ஆராய்ச்சி செய்யலாகாது எனக் கூறுமிடத்தைத் தவிர்த்து வேறு எங்காயினும் பார்மனை டிசு எரக்கிளைட்டசுவைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிய வில்லை. உண்மையில் சிந்திக்கப்படக்கூடியனவான வழிகள் இரண்டேயுளவெனவும் அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு எரக் கிளைட்டசு செய்த முயற்சி அவமே எனவும் பொருள்படுமாறு அவர் நாம் குறிப்பிட்ட பகுதியில் எழுதியுள்ளார். எவ்வா ருயினும் அக்காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த மெய்யிய லாளர் யாவருள்ளும் பைதாகரசவாதிகளே பார்மனைடிசுவுக்கு முக்கிய எதிரிகளாயிருந்தனராதலால் அவர்களது கொள்கை கள் பற்றித் தான் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தார் எனக் கட்டாயம் பார்மனேடிசு குறிப்பிட்டிருப்பார் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஆயினும் முற்றிலும் பிழையானவை யெனத் தாமே உணர்ந் திருந்த இக்கருத்துக்களை அறுசீரடிப் பாடல்களிற் றரப்படக் கூடிய தகுதியுடையனவாக இவர் கருதியதற்குக் காரணம் என்னவென்பது இன்னமும் தெளிவாயில்லை. பார்மனடிச, தானும் முன்பு ஓர் பைதாகரசவாதியாயிருந்தார் என்பதையும், இக்கவிதையின்படி அவர் துறப்பவை, அவர் முன்பு எற்றுக் கொண்டிருந்த கொள்கைகளையே என்பதையும் நாம் இங்கு நினைவுகூரல் நன்மைபயக்கும். தான் இருளிலிருந்து, ஒளி யுள்ள இடத்திற்கு வந்ததாக, பார்மனடிசு தனது ஆரம்ப கவிதைகளிற் றெளிவாகக் கூறுகிறர். அத்தகைய சந்தர்ப் பங்களில், மனிதர்கள் தமது பழையகொள்கைகள் எவ்வ

Page 105
இருமைவாத அண்டவியல்
194 ஆதி கிரேக்க மெய்யியல்
கையிற் றவருனவை என விளக்கமுற்படுவது வழக்கமே. “ஒருவன் எவ்வாறு யாவற்றிற்கும் ஊடாக நோக்கி, உள்ள னபோற் தோன்றுவனவற்றை மதிப்பிட முடியும் ’ என்பதை அறிதற்கு வேண்டிய நம்பிக்கைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென அப்பெண் தெய்வம் அவருக்குக் கூறுகிறது. இதைப் பற்றி மேலும் ஓர் குறிப்பு வேறேரிடத்திற் காணப்படு கிறது. “மாந்தர்களது கொள்கைகள் யாவற்றுக்கும் அவர்
ஈடுகொடுக்கவேண்டுமாதலால்” அவர் அவர்களது நம்பிக்கைகளை
அறிதல் வேண்டும் (பகுதி 8). பைதாகரச கொள்கைகள் அக் காலத்தில் வாய்மொழியாகவே வழங்கி வந்தன என்பதை மனதிற் கொள்வோமானல், இக்குறிப்பின் பொருளே நாம் உணர்ந்து கொள்ளலாம். பைதாகரசவாதத்திற்கு எதிரான மரபொன்றைப் பார்மனைடிசு ஆரம்பித்தாராகையால், அவரது சீடர்களை, அவர்கள் எதிர்க்கவேண்டிய கொள்கையிலும் பயிற் றுதல் அவசியமாகியது. அவர்கள் பைதாகரசவாதத்தை அறி யாது, அதனைத் தர்க்க்ரீதியாகக் கண்டித்தொதுக்குவது சாத்தி தியமாகாதாதலால், பார்மனைடிசு அவர்களுக்குப் பைதாகரசம் பற்றிய அறிவினையுமூட்டுதல் அவசியமாகிற்று.
91. பார்மனடிசுவின் கவிதையின் இரண்டாவது பகுதியிற் றரப்பட்டுள்ள கருத்துக்கள், உண்மையில், அக்காலத்து வழங் கிய பைதாகரச அண்டவியற் கருத்துக்களே யென்பது தருக்க ரீதியாக நிறுவப்படக்கூடிய வொன்றல்லவாயினும், இவ்வெண் ணம் சரியாகவிருத்தல் வேண்டு மென்பதை ஓரளவுக்குக் காட் டுதல் கூடும். கி. மு. ஐந்தாம் நூற்றண்டின் இறுதிவரையும் பைதாகரசவாதம் அடைந்த மாற்றங்கள் பற்றிய வரலாறு முழுவதும், ஊகங்களின் அடிப்படையில் அமைந்ததே. ஆனல் பார்மனைடிசுவின் கவிதைகளிலே, உலகு பற்றிய அவரது கொள் கையோடு சிறிதும் தொடர்பற்றனவும், பின்னைப் பைதாகரசவா தத்திற் காணப்படுவனவுமான கருத்துக்களைக் கண்டால், அவை ஆதி பைதாகரசவாதிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களே யென அனுமானிப்பது பொருந்தும். மேலும் இக்கருத் துக்களில் எவையேனும் பழைய அயோனிய அண்டவியற் கருத் துக்களின் விருத்திகள் எனக் கண்டோமாயின், அவை ஆதி பைதாகரசவாதிகளின் கருத்துக்களே யென்பது மேலும் உறுதிப்படுத்தப்படும். பைதாகரசு சாமோசு நாட்டிலிருந்து வந் தாரெனவும் உண்மையில் அவரது சுயசிந்தனைத் திறன் காணப் பட்டது அவரது அண்டவியற் கொள்கைகளிலல்ல வெனவும் நாம் முன்பு கண்டோம். உலகு சுவாசிக்கிறதென்பது அனக் சிமினிசுவிடமிருந்து பெறப்பட்ட கருத்தென முன்பு சுட்டிக்காட்டப் பட்டது (பிரிவு 53) , அனக்சிமாந்தரது கொள்கைகளின் சாயை

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 195
களும் பைதாகரசுவின் அண்டவியலிற் காணப்பட்டால் அதை யிட்டு வியப்படைவதற்கில்லை. நாம் இங்கு அரித்தோதிலிட மிருந்து பெறக்கூடிய கூற்றுக்களை மட்டுமே நம்பியிருந்தால் பைதாகரச கொள்கைகளே பார்மனைடிசுவின் இரண்டாவது பகு தியிற் றரப்பட்டுள்ளவை என நிரூபிப்பது மிகக் கடினமாயிருக் கும் ; ஆனல் வழக்கம்போல அவரது கூற்றுக்களை மிகவும் கவனமாக ஆராய்தல் அவசியம். சூடும் குளிருமே பார்மனை டிசுவின் இரு மூலகங்கள் என அவர் முதலிற் கூறுகிறர். பார்மனைடிசு குறிப்பிடும் தீ சூடானதாதலால், அதற்கு எதிரான குணங்கள் யாவற்றையும் கொண்டுள்ள மற்ற * உருவம்” குளிர் என்பது தருக்க ரீதியாகப் பெறப்படுகிறதா தலால், இதைப் பொறுத்தவரை அரித்தோதில் கூறுவது சரியே. மைலீசியர்கள், பாரம்பரியமாகக் குறிப்பிட்ட “முரண் பாடு ’களே இவை. குளிர், சூடு எனும் இம்முரண்பாடுகளை, அரித்தோதில் தீ, நிலம் எனும் இரண்டோடும் வேறுபடாதன போல ஒன்ருகக் குறிப்பிடுவது தவறன கற்பிதங்களுக்கு இட மளிக்கவல்ல தெனினும், தியோபிறகத்தோசும், அரித்தோதி திலைப் போலவே இவ்விரு முரண்பாட்டிணைகளையும் வேற்றுமை யின்றிக் கண்டிருக்கின்றரென்க. பார்மனைடிசுவின் கவிதையை நேரில் வாசித்தவரான (பிரிவு 85) சிம்பிளிசியசு தீயையும் நிலத்தையும் குறிப்பிட்டபின் " அல்லது ஒளியும் இருளும்’ எனல் அதிக பொருத்தமுடையது என்கிருர், இது கவ னித்தற்குரியது. இறுதியாக அரித்தோதில், கவிதையின் முதற் பகுதியில், “ இல்லாத ’ தெனக் குறிப்பிடப்படுவதும் திண்மையான மூலகமும் ஒன்றேயெனக் கொள்வதோடு, அது நிலமெனும் கருத்துப் பொருந்தாதென்க. ஆனல், “ பெய ரிட்டழைக்கப்பட்டிருக்கக் கூடாததான இரண்டாவது “ உருவம் ” உண்மையில் பைதாகரச வளி அல்லது வெற்றிடம் எனக் கொள் வோமாயின், “ இல்லாததென்பது ’ அதுவே யென்னும் அரித்தோதிலினது கூற்றுப் பொருளுடையதாகிறது. இவ்வாறு கொண்டால், திண்மையான மூலகம் என்பது நிலமே என்னும் கருத்தை எற்க மறுப்பதற்கு நியாயமுண்டெனலாம். இவ்வி ரண்டையும் ஒன்றெனக் கருதும் வழக்கம் எவ்வாறு ஆரம் பித்ததென்பதை நாம் பின்னர் காண்போம். சூடே நிமித்த காரணமெனவும், குளிர் ஆதி அல்லது செயற்படாத காரண மெனவும் தியோபிறகத்தோசு மேலும் கூறுவதை நாம் வரலாற்று ரீதியானதென ஏற்கவேண்டியதில்லை.
* அத். 7, 147 ஆம் பிரிவின் கீழ்க் காண்க.

Page 106
196 ஆதி கிரேக்க மெய்யியல்
பார்மனைடிசுவின் கவிதையை நேரில் வாசித்தறிந்தவரான சிம்பிளிசியசு, தீயும் நிலமும் என்பதற்குப் பதிலாக ஒளியும் இருளும் எனும் முரண்பாட்டிணையைத் தந்து அரித்தோதிலைத் திருத்துகிருர் எனக் கண்டோம். சிம்பிளிசியசு மேற்கோள் களாகத் தரும் பகுதிகளும் அவரது கருத்துக்குப் போதிய ஆதாரங்களாயமைகின்றன. பார்மனேடிசுவும் இவற்றுள் ஒரு வடிவத்தினை ஒளி, தழல், தீ எனும் சொற்களாலும் மற்ற வடிவத்தினை இரவு எனும் சொல்லாலும் அழைக்கிருர். இனி இவ்விரண்டு உருவங்களையும் பைதாகரசுவினது எல்லை, வரம் பற்றது என்பனவாகக் கொள்ளலாமோ வென்பதே நாம் ஆராய வேண்டியதாகும். உலகம் சுவாசிக்கிறது எனும் கருத்துப் பைதாகரசவாதத்தில் முதலிலிருந்து ஒர் அம்சமாயிருந்தது எனக் கொள்வதற்குப் போதிய நியாயமுண்டென நாம் முன்பே (பிரிவு 58) கண்டோம். வரையறையற்றதான இவ்வுலக மூச்சே இருள் எனக் கூறுவதில் எவ்வகையான சிரமமுமில்லையென லாம். மேலும் சிம்பிளிசியசுவாற் குறிப்பிடப்பட்ட இவ்விருள் பைதாகரசுவினது வரம்பற்றதுவே எனக் கூறுவதற்குப் போதிய நியாயமுண்டு. “வளி’ அல்லது பணி இருண்ட மூலகமெனவே எப்போதும் கருதப்பட்டு வந்தது?. தெளிவற்றதான இருளுக் குத் தெளிவான வடிவத்தையளிப்பது தீயல்லது ஒளியே, இப்பாசோசு தீக்குப் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தமை க்கு இதுவே காரணமாயிருக்கலாம். ஆகவே, எல்லை, வரம் பற்றது எனும் பைதாகரச பிரிவு (இதனைப் பற்றி நாம் பின்னர் ஆராய்வோம். (அத். 7) விருத்தியற்றதான இம்முறையிலேயே தோன்றியிருக்க வேண்டுமென நாம் முடிவு செய்யலாம். ஆனல் இதற்கு மாறக வேறு சில ஆசிரியர்கள் கொண்டுள்ள வாறு, இருளே எல்லையெனவும் ஒளியே வரம்பற்றதெனவும் நாமும் முடிவு செய்வோமானல் விலக்க முடியாத சிக்கல்கள் பலவற்றுக்குள்ளாவோம்.
வானசோதிகள் 92. கவிதையின் இரண்டாவது பகுதியிற் றரப்பட்டிருக்கும் பொதுவான அண்டவியற் கொள்கையை இனி நாம் நோக்குதல் பொருந்தும். எமக்குக் கிடைத்துள்ள பகுதிகள் மிகக் குறை வானவையே என்பதுடன், இவை பற்றித் தொகுப்பாசிரியர்கள் கூறுவனவற்றுக்குப் பொருள் காண்பதும் மிகவும் சிரமமா யுள்ளதென்க ; ஆனல் இங்கும் நாம் காண்பவை பைதாகரச
* திண்மையான மூலகம் என்பதும் “ வளி”யும் ஒன்றே எனும் கருத்து (Plut) Strom.fr. 5 (Dox. p. 581) gav DGMT g. GJ Gńluqih “ u Gof, gait ” என்பனவும் ஒன்றே எனும் கருத்தை அத். 1 பிரிவு 27, அத். 5 பிரிவு 107 ஆகியவற்றுடன் ஒப்பிடுக. இவ்விரண்டாவது உவமையைப் பிளேட்டோ பைதா கரசவாதியின் மூலமே வெளியிடுகிருர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 197
வாதத்தைச் சேர்ந்த கருத்துக்களே யென்பதைக் காட்டுவதற்குப் போதிய ஆதாரங்களுள. ஈத்தியோசு இதுபற்றிக் கூறுவதாவது:
ஒன்றுக்கொன்று குறுக்காகச் செல்வனவும், ஒன்றையொன்று சுற்றியுள்ளனவுமான வளையங்களால் முறையே, ஐதான மூல கம், திண்மையான மூலகம் என்பன அமைந்திருந்தன வென வும் இவற்றிற்கிடையே ஒளியாலும் இருளாலும் ஆன கலப்பு வளையங்கள் இருந்தனவெனவும் பார்மனேடிசு கூறினர். இவை யாவற்றையும் சூழ்ந்திருப்பது சுவர் போலக் கடினமானவோர் பொருளெனவும் அதற்குக் கீழே ஓர் தீவளையும் உளதெனவும் அவர் கருதினர். வளையங்கள் யாவற்றுக்கும் நடுவே யிருப்பதும் ஓர் திடப்பொருளே. இதுவும் ஓர் தீவளையத்தினற் சூழப் பட்டிருக்கிறது. கலப்பு வளையங்களின் உள்வட்டமே, ஏனையவை யாவும் ஆவதற்கும் இயங்குவதற்கும் காரணமாயிருக்கிறது. இதனையே அவர் “ அவற்றின் வழியைக் காட்டும் தேவதை ” எனவும், “ இன்றியமையா விதி ’ எனவும், “ பால்வரைமுத ல்வி ’ எனவும் அழைக்கிறர்.-Aet. i. 7. 1. i. 7 (R. P. 126). 93. இங்கு குறிப்பிடப்படும் “வளையங்கள்’ என்பனவற்றைக் கோளங்கள் எனக் கருதுவது சிறிதும் பொருந்தாது. ஈத்தியோசு தரும் கிரேக்க சொல்லிற்கு விளிம்பு எனவோ, ஒரவட்டம் எனவோ அல்லது அதனைப் போன்ற வேறு எவ்வகையிலும் பொருள் கொள்ளலாம். ஆனல் அச்சொல் கோளம் எனும் பொருளில் உபயோகிக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதற்கே யிடமில்லை. அன்றியும் எல்லா உச்சிகளையும் சூழவுள்ள திடப் பொருளாலான வட்டம் ஓர் கோளமாயிருக்கலாம் என்பதும் பொருந்துவதாயில்லை. அப்படியுாயின் சுவர் எனும் உவமை கொஞ்சமேனும் பொருத்தமுடையதாயிருக்காது. இங்கு நாம் காண்பது அனக்சிமாந்தர் குறிப்பிட்ட “ சில்லுகள் ” போன்ற பொருள்களே யெனத் தோன்றுகிறது. பைதாகரசு தமது அண்டவியற் கருத்தை அனக்சிமாந்தரிடமிருந்தே பெற்றர் எனக் கருதவும் போதிய நியாயமுண்டு. அத்தோடு, பைதாகரச வாதிகள் வானசோதிகளை இவ்வாறே கருதினர் என்பதற்கும் போதிய ஆதாரங்களில்லாமலில்லை. பைதாகரசவாதத்தின் பொதுவியல்பைக் கொண்டதான பிளேட்டோவினது * எர்* எனும் கதையில் கோளங்கள் பற்றியே குறிப்பிடப்படவில்லை. அடுக்குப் பெட்டிகள் போல, ஒன்றனுள் ஒன்றகப் பொருந்தி யிருக்கும் ஒரு மையங் கொண்ட புரிகளின் “ சொண்டுகள் ” பற்றியே அதிற் கூறப்பட்டிருக்கிறது. திமாயசுவிலும் ஒன்றுக் கொன்று கோணமிட்டுக் குறுக்காகச் செல்லும் வளையங்கள் அல்லது துண்டுகள் பற்றிக் குறிப்புளதே யொழிய, கோளங்கள் பற்றிய குறிப்பெதுவும் இல்லை யெனலாம். இறுதியாகப் பைதா

Page 107
பெண் தெய்வம்
198 ஆதி கிரேக்க மெய்யியல்
கரச செல்வாக்கில் எழுதப்பட்டது போற் காணப்படும் “ எரிசுவை வழிபடும்பாடல் ” என்பதிலும், கிரகத்தின் ஒழுக்கைக் குறிப் பிடுவதற்கு உபயோகிக்கப்பட்ட சொல் “ விளிம்புவட்டம்’ எனும் பொருள் கொள்ளக்கூடிய வொன்றகவே காணப்படுகிறது.
தோற்ற நிகழ்ச்சிகளை முற்றக ஒதுக்காது விளக்கும்பொருட் டென இயூடெக்சோசு தந்த கேத்திரகணித ரீதியான அமைப்பு க்களை, அரித்தோதில் உண்மையில் உள்ள பொருள்களாக மாற்றும்வரைக்கும், வானகோளங்கள் உளவென யாரும் கருதி யதாக ஆதாரம் எதுவுமில்லை. ஏனெனில் இக்காலத்தில், கோள ங்களின் உதவியின்றியே எளிய முறையில் விளக்கப்பட முடி யாத எதனையும் விளக்குவதற்குக் கோளங்கள் பயன்பட்டிருக்க முடியாது.
இனி, இவ்வளையங்கள் ஒன்றையொன்று சுற்றியிருக்கின்றன அல்லது ஒன்றின் மீது ஒன்றக மடிக்கப்பட்டிருக்கின்றனவென வும், இவை ஐதானதும் அடர்த்தியானதுமான மூலகத்தால் ஆனவை யென்றும் எமக்குக் கூறப்பட்டுள்ளது. இவற்றிற் கிடையே, ஒளியினலும் இருளினலும் ஆன கலப்பு வளையங்கள் உள்ளன வெனவும் கூறப்படுகிறது. ஒளி, இருள் என்பவை உண்மையில் ஐதும் திண்மையுமே யாதலால், இங்கு ஏதோ வொருமயக்கம் உண்டுபோலத் தோன்றுகிறது. தீயினலான வளையங்களுக்கிடையே ஒரளவுக்குத் தீயையும் கொண்ட இரவின் வளையங்கள் காணப்பட்டன எனவும் பொருள் கொள்ளப்படக் கூடிய 12 ஆம் பகுதியைத் தவிர்த்து வேறு எந்த ஆதாரமும் இக்கூற்றுக்களுக்குண்டோ வென்பதும் சந்தேகத்திற்கிடமானதே. அது சரியாயிருக்கலாம் ; ஆனல், ஒடுங்கிய வட்டங்கள், இரவின் அகன்ற வட்டங்களினற் சூழப்பட்டிருக்கின்றனவெனவும், இவற் றுள் ஒவ்வொன்றினது மத்தியிலும் வேகமாகப் பாயும் தீயுள தெனவும் இப்பகுதிக்குப் பொருள் காண்பதே, மிகவும் இயல் பானதென எனக்குப் படுகிறது. ஒடுங்கிய வட்டங்கள் கலப்பற்ற தீயினை யுடையவையாய் இருக்கின்றன என்பதே இதற்குப் பொரு ளாகுமாதலால், இது அனக்சிமாந்தரது “ சில்லுகள் ” பற்றிய வோர் செம்மையான வருணனையென அழைக்கப்படலாம்.
94. “ எல்லாவற்றுக்கும் நடுவே, யாவற்றையும் அவற்றின் வழியே செலுத்துபவளான பெண்தெய்வம் உள்ளாள் ” எனப் பார்மனடிசு கூறுகிறர். “ கலப்பு வட்டங்களின் நடுவே ” என ஈத்தியோசு இதற்குப் பொருள் கொள்கிறர். ஆனல் சிம்பிளி யசு, எல்லா வளையங்களுக்கும் நடுவே அதாவது உலகின் நடுவே எனப் பொருள் கொள்கிறர். இவர்கள் இருவருக்குமே
* இயூடெக்சோசுவின் ஒருமைக் கோளங்கள் பற்றி : Heath, p. 1938g.

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 199
பார்மனைடிசுவின் வார்த்தைகளைத் தவிர்த்து வேறு ஆதாரம் எதாயினும் இருந்தது எனக் கொள்ள இடமில்லை. பார்மனை டிசுவின் சொற்களோ மிகவும் மயக்கத்தைத் தரக்கூடியன வாய்க் காணப்படுகின்றன. பைதாகரச எசுத்தியா அல்லது மத்திய தெய்வமே இப் பெண்தெய்வமெனச் சிம்பிளிசியசு கருதினரென்பது சிம்பிளிசியசு கையாளும் வார்த்தைகளிலிரு ந்து புலப்படுகிறது. ஆனல், பார்மனேடிசு பூமி உருண்டை யானதெனவும் உலகின் மத்தியிலுள்ளதெனவும் கூறினரெனத் தியோபிறகத்தோசு நன்கு அறிந்திருந்தாராதலால், அவரால் சிம்பிளிசியசு கூறியதைப்போலக் கூற முடியாதிருந்தது. எல்லா வளையங்களுக்கும் நடுவேயிருந்தது திடபதார்த்தமாயிருந்தது என இப்பகுதியிலேயே கூறப்பட்டுள்ளது. மேலும் தியோபிற சுத்தோசு தரும் தகவல்களை நோக்கும்போது மத்திய தீயே பார்மனைடிசுவின் பெண்தெய்வம் எனக் கூறுவது சிறிதும் இய லாததாகின்றது. மேலும் இவ்வாறு கொள்வதாயின் எல்லா வளையங்களுக்கும் மத்தியில் உள்ளது திடப்பொருள் எனவும் அதன் கீழே ஓர் தீ வளையம் உள்ளதெனவும் கூறமுடியாது. அத்துடன் திடப்பொருளாலானதும் கோளவடிவினதுமான பூமி யின் மத்தியில் அப் பெண்தெய்வமுள்ளாள் எனக் கூறுவதும் சிறிதும் பொருத்தமுடையதாயில்லை.
இத்தேவதை “ அணங்கே ’ எனவும் “ பால்வரை முதல்வி ” எனவும் அழைக்கப்பட்டாள் என ஈத்தியோசு மேலும் கூறு கிருர். அவள் “ யாவற்றிற்கும் வழிகாட்டுகிருள் ” என, அதா வது வான வளையங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிருள் என நாம் எலவே அறிந்தோம். அவள் ஆன்மாக்களை ஒளி யுள்ள உலகிலிருந்து, கண்ணுக்குத் தெரியாத உலகிற்கும், கண்ணுக்குத் தெரியாத உலகிலிருந்து ஒளியினிடத்திற்கும் மாறி மாறி அனுப்புகிறள் எனச் சிம்பிளிசியசு மேலும் கூறுகிறர். துரதிட்டவசமாக அவர் இது பற்றிய மேற்கோள் எதுவும் தரவில்லை. “ எர்’ பற்றிய கதையிற் கூறப்படுவதும் இதே யாதலால், இங்கு நாம் காண்பதுவும் பைதாகரச கருத்துப் போலவே தோன்றுகிறது. 10 ஆவது பகுதியில், அனங்கே எவ்
லிருந்து வழுவாது செய்யுமாறு பணித்தாள் என்பது பற்றி யும் 12 ஆவது பகுதியில் ஆண் பெண் சேர்க்கைக்கும், பிறப்புக் கும் அவளே காரணமெனவும் கூறப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக, மற்றக் கடவுளர்கள் யாவருக் கும் முன்னதாக அவள் ஈரோசுவையே படைத்தாள் என்பது 13 ஆவது பகுதியிற் றரப்பட்டுள்ளது. ஆகவே இதனைத் தொடர் ந்து, அனங்கேயின் ஒர் பழைய வாக்கு அல்லது ஆணையே

Page 108
200 ஆதி கிரேக்க மெய்யியல்
கடவுளர்கள் வீழ்ச்சியடைந்து, பிறவி பிறவியாக மாறி மாறி அவதாரமெடுப்பதற்குக் காரணமென எம்பிடோக்கிளிசு கூறு வதைக் காண்போம்.
எர்பற்றிய கதையில் அனங்கே எங்குள்ளாள் என அறிந் தோமானல், உலகில் இப்பெண்தெய்வத்திற்கு எவ்விடம் அளிக் கப்படுகிறதென்பதை நாம் மேலும் திட்டவட்டமாக அறிந்து கொள்ளலாம். ஆனல் சிக்கல் நிறைந்ததான அவ்வினவை எழுப்பாமலே, தியோபிறசத்தோசுவின்படி அவள் பூமிக்கும் வானத்திற்கும் இடையேயுள்ள ஓர் நிலையிலிருந்தாள் என ஓரளவு நம்பிக்கையோடு நாம் கூறலாம். இவ்விடயத்தைப் பொறுத்தவரையில், கலப்பு வளையங்கள் உள்ளனவென நாம் நம்புகிறேமா அல்லவா என்பது இங்கு வேண்டியதில்லை ; ஏனெனில், அவள் கலப்பு வளையங்களின் நடுவே இருந்தாள் எனும் கூற்றிலிருந்தும், அவள் பூமிக்கும் வானத்துக்குமிடையே இருந்தாள் என்று ஐயத்திற்கிடமின்றி ஊகிக்க முடிகிறது. சிசிரோவினது, அதிக தெளிவற்ற பகுதியொன்றில், பெண் தெய்வம், இவ்வளையங்களிலொன்றே யெனக் கூறப்பட்டிருக் கிறது. மேலும், பால்வழி மண்டலத்திலிருந்தே, சில்லுகள் அல்லது வளையங்கள் பற்றிய இக்கொள்கை முழுவதுமே ஆரம் பித்திருக்க வேண்டும். ஆகவே சூரியனுக்கும் சந்திரனுக்கு மிடையேயுள்ள வோர் வளையமாகவே நாம் பால்வழி மண் டலத்தைக் கருதுதல் வேண்டும். 11 ஆவது பகுதியில் மிகவும் முக்கியமுடையவொன்று போல, பால்வழிமண்டலம் குறிப்பிடப் படுவதோடும் இது நன்கு பொருந்துகிறதெனலாம். எனை விவ ரங்களைப் பற்றித் திட்டவட்டமான அபிப்பிராயமெதுவும் கொள் ளாதிருத்தல் நலம். ஆனல் விடிவெள்ளியும் மாலைவெள்ளி யும் ஒன்றே யெனக் கண்டுபிடித்தவர் பைதாகரசுவெனச் சில ரும் பார்மனடிசுவே யென வேறு சிலரும் கருதுகிருர்களென் பதைக் கவனிக்கலாம்.
இவை யாவற்றையும் விட, எனைக் கடவுளர் எவ்வாறு தோன் றினரெனவும் எவ்வாறு வீழ்ச்சியடைந்தனரெனவும் பார்மனை டிசு தொடர்ந்து வருணித்துச் சென்றர் என்பதில் ஐயமில்லை. இவை ஒபிசக் கருத்துக்கள் என நாம் நன்கறிவோம். இவை பைதாகரசவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க லாம். எம்பிடோக்கிளிசுவைப் பற்றி ஆராய்கையில் நாம் இதுபற்றி மீண்டும் காண்போம். பிளேட்டோவினது சிம்போசியத்தில் அகாதன் என்பான், கடவுளர்களது பண்டைய கொடுஞ்செயல் கள் பற்றிக் கூறுவோரென எசியொட்டு, பார்மனைடிசு ஆகிய
1 எம்பிடோக்கிளிசு, பகுதி 115.

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 20
இருவரது பெயர்களையும் தருகிறன். பைதாகரசவாதிகளின் இறையியற் கருத்துக்களையே பார்மனைடிசுவும் கொண்டிருந்தார் என்பது உண்மையானல், நாம் அவரிடமிருந்து எதிர்பார்க்க வேண்டியதும் இத்தகைய வரலாறுகளையே. ஆனல் உண்மை யின் வழியின் நோக்கம் பற்றித் தரப்பட்டுள்ள எனைய விளக் கங்களால இதனை விளக்க முயல்வது வீண் முயற்சி போலத் தோன்றுகிறது. இத்தகைய விடயங்கள் இறையியல் பற்றிய கற்பனைகளின்பாற்பட்டவையே யொழிய 'பலரது' நம்பிக்கை களின்பாற்பட்டவை அல்ல. இனி, உலகம் பற்றிச்சாதாரணமக் கள் கொண்டிருந்த கருத்துக்கள் நன்கு முறைப் படுத்தப்பட் டால் எவ்வாறிருக்கு மென்பதைக் காட்டுதற்காகப் பார்மனை டிசு இக்கதைகளைத் தாமே அமைத்தார் என்பதையும் நம்பக்கூ டியதாக நாம் எற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இவ்விளக் கங்களில் ஒன்றை எற்றுக்கொள்வதாயின், அதுகவிதையில் கணிசமான பகுதியாயிருந்ததை விளக்கக் கூடியதாயிருந்தி ருத்தல் அவசியமென நான் எண்ணுகிறேன்.
95. தனது காலத்தே வாழ்ந்தோரது கருத்துக்களை வருணிக் கையில், உடலியல் சம்பந்தமான விடயங்கள் பற்றியும் பார்மனை டிசு பெருமளவு கூற நேர்ந்தது என்பது எமக்குக் கிடைத் துள்ள பகுதிகளைப் பார்க்கும்போது தெரிகிறது. ஏனைய யாவற் றையும் போல மனிதன் சூடு,குளிர் என்னும் இரண்டினலும் ஆனவனயிருந்தான். சூடு நீக்கப்பட்டபோது மரணம் நேர்ந் தது. சந்ததி விருத்தி பற்றியும் நூதனமான கருத்துக்கள் சில தரப்பட்டன. முதலாவதாக, பெண்கள் இடது பக்கத்திலி ருந்தும் ஆண்கள் வலது பக்கத்திலிருந்தும் தோன்றினர். பெண்கள் சூடதிகமானவர்களாயும் ஆண்கள் குளிரதிகமான வர்களாயுமிருந்தனர். எம்பிடோக்கிளிசு இக்கருத்தை மறுத் தலைக்காண்போம். மனிதரில், சூட்டுக்கும் குளிருக்குமிடையே உள்ள விகிதமே அவர்களது சிந்தனையின் தன்மையை நிர்ண யிக்கிறது. ஆதலாற்றன், சூடு முற்றக நீங்கிய பிரதேசங்களும் குளிரையும் இருளையும் உணரும் ஆற்றல் உடையனவாய் இருக் கின்றன. இப்பகுதிகளைத் தனியே நோக்குவதன் மூலம் நாம் அதிகம் அறிய முடியாது. ஆனல் வைத்தியசாத்திரத்தின் வரலாற்றேடு இவை நன்கு பொருந்துவதுமட்டுமல்லாது, வைத் திய கழகங்களிலொன்றுக்கும் பைதாகரச கழகத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பிருந்த தென்பதையும் உணர்த்தி நிற்கின் றன. பைதாகரசுவுக்குப் பின்னர், பார்மனைடிசுவுக்கு முன் னர் குரோட்டனில் வாழ்ந்த மிகவும் புகழ்பெற்ற வைத்திய
1. இவ்விளக்கங்களைத் 90 ஆம் பிரிவிற் காண்க.
உடலியல்

Page 109
குரோட்டன்
202 ஆதி கிரேக்க மெய்யியல்
நூலாசிரியரொருவரது பெயரையும் நாம் அறிவோம். இவரைப் பற்றி எமக்குக் கிடைத்துள்ள சில விவரங்களிலிருந்து, பார்மனை டிசு வருணிக்கும் உடலியல்பு பற்றிய கருத்துக்கள், தொடர்பற்ற சில கண்டுபிடிப்புக்களல்ல, என்பதும் தேக ஆரோக்கியம் முரண்பாடுகளின் சமநிலையேயென விளக்குவதும் செல்வாக்கு மிகுந்ததுமான ஓர் மருத்துவக் கொள்கையின் வளர்ச்சியைக்காட் டும் முக்கிய கண்டுபிடிப்புக்களே அவை என்பதும் புலனுகிறது.
96. குரோட்டன் நகரத்தவனன அலுக்மையோன்,பைதாகரசு
நகர அலுக் வயோதிபனக வாழ்ந்த காலத்தில் இளைஞனக விருந்தான்
மையோன்
என அரித்தோதில் கூறுகிறர். பிற்காலத்து எழுத்தாளர் கள் சிலர் கூறியிருப்பது போல, அவர் ஒர் பைதாகரசவாதியே என அரித்தோதில் கூறவில்லை. ஆனல் எதிர்ப்புகள் பற்றிய கொள்கையைப் பைதாகரசவாதிகளிடமிருந்து இவர் பெற்றி ருத்தல் வேண்டும் அல்லது அவர்கள் இவரிடமிருந்து பெற் றிருக்க வேண்டுமென அரித்தோதில் சுட்டிக்காட்டுகிறர். ஆயி னும், இவரது நூலிலிருந்து மிக அரிதாகக் கிடைத்துள்ள பகுதிகளிலொன்றிலிருந்து, அலுக்மையோன் பைதாகரச கழகத் தோடு நெருங்கிய தொடர்பு பூண்டிருந்தாரென்பது தெளிவா கின்றது. அப்பகுதி பின்வருமாறு : “ பெயிரித்தவுசுவின் மக னும் குரோட்டன் நகரத்தவனுமான அலுக்மையோன் பாதில் லோசுவைச் சேர்ந்த லியோன், புரோத்தினேசு என்போருக் குப் பின்வருவனவற்றைக் கூறினன். கண்ணுக்குப் புலப்படா தனவும் இறப்புள்ளனவுமான பொருட்களைப் பற்றிக் கடவுளர் கள் திட்டவட்டமாக அறிவர் ; ஆனல் மனிதர் ஊகிக்கக்கூடிய வரையில்.” துரதிட்டவசமாக இக்கூற்று இவ்வாறு திடீரென முடிவடைந்துவிடுகிறது. ஆனல் நாம் இதிலிருந்து இரண்டு விட யங்களை அறிந்து கொள்கிருேம். முதலாவதாக, சிறந்த கிரேக்க மருத்துவ நூலாசிரியர் யாவரிடையேயும் காணப்பட்ட அடக்கம் அலுக்மையோனிடத்தேயும் இருந்தது; இரண்டாவதாக அவர் தமது நூலைப் பைதாகரச கழகத்தின் தலைவர்களுக்குச் சமர்ப் பணம் செய்தார்.1
அனுபவமுறை உளவியலை ஆரம்பித்தவர் என்பதிலேயே அலுக்மையோனது முக்கியத்துவம் உண்மையிற் றங்கியுள்ள தெனலாம்.? மூளையே பொதுவான புலன் என அவர் கருதி
1. புரோத்தினேசு (அல்லது புரோந்தினேசு) பைதாகரசுவின் மருமகன் எனச் சிலராலும் மாமன் என வேறு சிலராலும் வருணிக்கப்பட்டுள்ளார். லியோன், அயாம்பிளிகோசுவின் அட்டவணையிற் காணப்பட்ட மெற்ருபோந்தி யர்களில் ஒருவன்.
* 360)ay umagb60pulb upp5) Prof. Beare's, Greek Theories of Elemenaேry 00gmண்om. விவரங்களுக்கு அதனைப் பார்க்க.

ஈலியா நாட்டுப் பார்மனடிசு 203
ஞர். எம்பிடோக்கிளிசும் அரித்தோதிலும், சுதோய்க்கர்களும் இதயமே மத்திய புலன் எனும் பழைய கொள்கையை மீண்டும் தழுவிக்கொண்டனராயினும், இப்போகிருத்திசும், பிளேட்டோவும் இவரது கொள்கையையே எற்றுக்கொண்டனர். உடலை ஆராய்வதன் மூலமே அலுக்மையோன் இம்முடிவுக்கு வந்தார் என்பதைச் சந்தேகிக்க எவ்வகை நியாயமுமில்லை. இவர் உடலை அறுத்துச் சோதனைகள் செய்யும் வழக்கத்தை உடையவராயிருந்தார் எனவும், அக்காலத்தில் நரம்புகள் பற்றிக் கண்டுபிடிக்கப்படவில்லை யெனினும், புலனுணர்ச்சியை மூளையி லிருந்து பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் “ சிலவழி கள் ” இவராற் கண்டுபிடிக்கப்பட்டன வெனவும், இவ்வழி களை அழிப்பதன் மூலம் மூளைக்கும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மிடையேயுள்ள தொடர்பை இல்லாமற் செய்தல் சாத்தியமென இவர் கண்டுபிடித்தாரெனவும் கூறுவதற்கு ஆதாரங்களுள. புல னுணர்ச்சிக்கும், விளக்கத்திற்குமிடையேயுள்ள வேறுபாட்டை யும் இவர் தெளிவுபடுத்தினர். ஆயினும் இவை இரண்டுக்கும் இடையே உள்ள எல்லையை இவர் எவ்வாறு நிர்ணயித்தார் என்பதை அறிய எமக்கு எவ்வித வழியுமில்லை என்பது உண்மையே. விசேட புலன்கள் பற்றிய இவரது கொள்கைகள் மிகவும் சுவையானவை. பார்வையென்பது கண்ணிலிருந்து புறப்படும் ஒருவகைக் கதிர் வீச்சம் என்பதையும், கண்ணிற் பிரதிபலிக்கப்படும் ஒரு வடிவத்தால் ஏற்படுவதே பார்வை யென்பதையும் இணைத்து இவை இரண்டின் மூலமும் பார் வையை விளக்கும் முயற்சி இவரிடத்தே காணப்படுகிறது. இவ் வறு இவரிடத்து எலவே காணப்படும் இக்கருத்து, கிரேக்க பார்வைக்கொள்கைகள் அனைத்திலும் காணப்படும் ஓர் அம்ச பென்க. வளியினை இவர் வெற்றிடம் என அழைத்தாராயினும் (இது முற்றிலும் பைதாகரசுவின் செல்வாக்காலுண்டான சொற் பிரயோகமே) செவிப்புலனுக்கு அது எவ்வளவு முக்கியம் என் பதை உணர்ந்திருந்தார். மற்றைய புலன்களைப் பற்றி எமக்குக் கிலடத்த விவரங்கள் மிகக் குறைவேயெனினும், இவ்விடயத்தை இவர் ஒழுங்காக ஆராய்ந்தார் என அவற்றிலிருந்து அனு மானிக்க முடிகிறது.
பைதாகரசுவோடு இவர் நெருங்கிய தொடர்புடையவர் என் பதை மனத்திற் கொள்ளும்போது, இவரது வானியற்கொள் கைகள் சிறிதும் செப்பமற்றனவாகத் தோன்றுகின்றன. சூரிய னைப் பற்றி அனக்சிமினிசு வெளியிட்ட கொள்கையையும், கிரக ணங்கள்பற்றி எரக்கிளைட்டசு தந்த விளக்கத்தையும் இவர் ஏற்றுக் கொண்டாரெனக் கூறப்படுகிறது. பார்மனைடிசுவின் கவிதையின் இரண்டாம் பாகத்திலுள்ளவை பைதாகரசுவின் கருத்துக்களே

Page 110
204 ஆதி கிரேக்க மெய்யியல்
என நாம் கொண்டது உண்மையானல், பைதாகரசு இவ்விடயங் களில் மைலீசியர்களிலும் அதிகம் முன்னேறியிருக்கவில்லை என்பது பெறப்படும். வானசோதிகள் பற்றிய அவரது கொள்கை இன்னமும் வளிமண்டலச் சார்புடைதாகவே இருந்தது. கிரகங் கள், வானசோதிகளது தினசரிச் சுழற்சியின் திசைக்கு எதிர் த்திசையிற் றமது ஒழுக்குகளில் இயங்குகின்றன எனவும் அலுக் மையோன் கூறினர் எனப்படுகிறதென்பதும், குறிப்பிடத்தக்கது. பைதாகரசுவிடமிருந்து இவராற் பெறப்பட்டதா யிருக்கக்கூடிய இக்கருத்து, அனக்சிமாந்தரது கொள்கையிலுள்ள குறைபாடு களை நோக்கியபோது இயல்பாகவே தோன்றியிருக்குமெனலாம். ஆன்மாவானது அழிவற்ற பொருள்களைப்போல விருந்ததாத லாலும், வானசோதிகளைப் போல எப்போதும் இயங்கிக்கொண்டி ருப்பதாலும் அது அழிவற்றதே யெனும் இவரது வேறேர் கருத்துக்கும் இக்கருத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளதென லாம். பிளேட்டோ பைதாகரசவாதியான திமையோசுவைக் கூற வைக்கும், “ வானமும் கிரகங்களும் எவ்வாறு சுழல்கின்றனவோ அவ்வாறு சுழலும் வட்டங்கள் ஆன்மாவிலும் உள்ளன ” எனும் விநோதமான கருத்தும் இவருடையது போலவே தோன் றுகிறது. இது, மனிதன், ஆரம்பத்தை முடிவோடு இணைக்க முடியாதிருப்பதனலேயே இறக்கிறன் எனும் அவரது வேறு கூற்றென்றிற்கு விளக்கமாயமையும் போலக் காணப்படுகிறது. வானசோதிகளினது ஒழுக்குவட்டங்கள் பூரணமானவையாயிருக் கின்றன. ஆனல் மனிதனது தலையில் உள்ள வட்டங்கள் தம் மைப் பூரணமாக்கிக்கொள்ள இயலாது போகலாம்.
மனித உடலில் நிலவும் ஆரோக்கியம், அங்குள்ள எதிர்ப்புக் களினிடையே நிலவும் சமவுரிமையே எனும் கொள்கையே, அனக்சிமாந்தர் போன்ற முந்திய மெய்யியலாளர்களுக்கும் இவருக்குமிடையே உள்ள தொடர்பைக் காட்டுகிறது. அதே நேரத்தில், இவருக்குப் பிந்திய மெய்யியலின் வளர்ச்சியிலும் இக்கொள்கை பெரும்பங்கு கொண்டதெனலாம். முதலாவதாக, * மனித பொருள்களிற் பெரும்பாலானவை இரண்டாயிருந்தன" என அவர் கூறினர். சூடு குளிர், ஈரம் வறட்சி, என்பனவற் றலும் என முரண்பாடுகளாலும் ஆனவனே மனிதன் என்பதே அவர் இங்கு கருதியதென்க. நோய் என்பது இவற்றுள் ஒன்று “ ஆட்சி” பெறுவதே-அனக்சிமாந்தர் “ அநீதி “யென அழைத்தது இதனையே-சமமான சட்டங்களோடு கூடிய சுதந் திர ஆட்சி நிறுவப்படுதலே ஆரோக்கியமெனப்படும். சிசிலிய மருத்துவக் கழகத்தினரது முக்கிய கொள்கையும் இதுவே. இனி பைதாகரச வாதத்தின் வளர்ச்சியை இக்கொள்கையின் விளைவுகள் எவ்வாறு வளப்படுத்தின என்பதையும் நாம் ஆராய்

ஈலியா நாட்டுப் பார்மனைடிசு 205
தல் வேண்டும். “ தொளைகள் " பற்றிய கொள்கையோடு, முரண் பாடுகளின் சமநிலையெனும் இக்கொள்கை இணைந்தமை, பிற் கால விஞ்ஞான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான விளைவுகளைக் கொணர்ந்தது.

Page 111
63760 to
வாதம்
Grubu 5,63 Tâ8 விசுவின்
astola
அத்தியாயம் 5
அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு
97. பொருள்கள் யாவும் ஒன்றன் பல்வேறு உருவங்களே என்னும் நம்பிக்கை (ஒருமைக் கோட்பாடு), ஆதி அயோனிய சிந்தனையாளர் பலரிடையே பொதுவாக நிலவி வந்தது ; ஆனல் பார்மனைடிசுவின் காலத்துக்குப் பின்னர் இந்நிலையில் ஒருமாற் றம் ஏற்படலாயிற்று. உண்மையில் இருப்பது ஒரே பொருளா யின், அது பல உருவங்களைப் பெறமுடியும் என நிறுவு தல் சாத்தியமாகாது என்று பார்மனைடிசுவின் தத்துவக் கொள்கை தெளிவாகப் புலப்படுத்தியது. மாறுந்தன்மையுடைய பல்வேறு பொருள்களை எமக்குக் காட்டுகையில் எமது புலன்கள் எம்மை எமாற்றுகின்றன என அவர் வாதித்தார். பார்மனடி சுவின் வாதங்கள் வலுவுள்ளனவாயும் மறுக்க முடியாதன வாயும் அமைந்திருந்தன. ஆகவே அவருக்குப் பின் வந்த மெய்யியல் சிந்தனையாளர் ஒருமைக் கோட்பாட்டை முற்ருகக் கைவிடலாயினர். ஒருமைக் கோட்பாட்டில் இன்னமும் நம் பிக்கையுடையோராயிருந்த சிலர் நலனய்வுக் கண்ணுேட்ட நிலை யில் நின்று, பார்மனைடிசுவின் கொள்கைக்கு முரணுக எழுந்த புதிய கொள்கைகளை மறுத்து அவரது கொள்கைகளை நிறுவுவ தில் ஈடுபட்டனர். வேறு சிலர் எரக்கிளைட்டசுவின் வாதத்தைச் சற்று மிகைப்படுத்தி விருத்தி செய்யலாயினர்; வேறு சிலர் ஆதி மைலிசியர்களது கொள்கை முறைகளைப் பரப்புவதற்கு முனைந்தனர்; ஆயினும் இக்கால மெய்யியற் சிந்தனையாளருள் முக்கியமானவர்கள் பன்மைவாதிகளாகவே யிருந்தனர் என்று கூறலாம். ஒருமைவாதக் கொள்கையின் விருத்திக்குப் பின்னர் சடவாதக் கருதுகோளைத் தொடர்ந்து தழுவுதல் இயலாது போயிற்றெனலாம்.
98. சிசிலியில் அக்கிரகாசு நகரத்தில் வாழ்ந்தவர் எம்பி டோக்கிளிசு. மெய்யியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள டொரிய நாட்டவர் இவர் ஒருவரே. எமக்குக் கிடைத்த குறிப்புக்களில் மிகவும் நம்பிக்கையானவற்றிலிருந்து இவரது தந்தையின் பெயர் மீட்டன் எனத் தெரியவருகிறது. எம்பிடோக்கிளிசு என்னும் பெயராலேயே அழைக்கப்பட்ட இவ ரது பாட்டனர் 71 ஆவது ஒலிம்பிய ஆண்டில் (496-95 கி.மு.) ஒலிம்பியாவில் நடந்த குதிரைப் பந்தயத்தில் வெற்றியீட்
1. முன்னுரை இரண்டாம் பிரிவைப் பார்க்க.
206

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 207
டியவர். எம்பிடோக்கிளிசு புகழுடன் வாழ்ந்த காலம் 84 ஆம் ஒலிம்பிய ஆண்டென (444-43 கி.மு.) அப்பொலோடரசு நிர்ண யித்துள்ளார். தெளரியை நகரம் அமைக்கப்பட்ட ஆண்டும் இது வேயாகும். இப்புதிய நகரம் அமைக்கப்பட்டுச் சிறிது காலத் திற்குள் எம்பிடோக்கிளிசு அங்கு சென்றர் என 5 ஆம் நூற் ருண்டு வரலாற்றசிரியரான றெசியன் நகர கிளெளக்கசு கூறி யிருப்பது இடையோசினிசின் கூற்றென்றிலிருந்து எமக் குத் தெரிய வருகிறது. ஆனல் அப்பொலோடரசு கொள்வது போல எம்பிடோக்கிளிசுவிற்கு அப்போது 40 வயது தானிருந் திருக்க வேண்டும் என்பதை நாம் எற்றுக்கொள்ள வேண்டி யதில்லை. உண்மையில் அப்பொலோடரசு தரும் திகதி மிகவும் பிந்தியது? என்று கருத இடமிருக்கிறது. அக்கிரகாசு நகரத்தி லிருந்து நாடு கடத்தப்படும்வரை எம்பிடோக்கிளிசு தெளரியைக் குச் செல்லவில்லையெனவும், அது நிகழ்ந்தபோது அவருக்கு 40 வயதிற்கு அதிகமாக இருந்திருக்கும் எனவுமே கூறத் தோன்று கிறது. எம்பிடோக்கிளிசுவின் பாட்டனர் கி.மு. 496 இல் வாழ்ந் தவர் என்பதும், 472 ஆம் ஆண்டில் தேரொன் காலஞ்சென்ற தன் பின்னரும் எம்பிடோக்கிளிசு அக்கிரகாசில் வாழ்ந்து வந் தாரென்பதும், இவர் 444 ஆம் ஆண்டிற்குப் பின்னரே இறந் தார் என்பதுமே எமக்கு இதுவரை நிச்சயமாகத் தெரிந்த விவ ரங்கள் எனக் கூறலாம்.
99. தேரொனின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அரசியல்வாதி அரசியற் சம்பவங்களில் எம்பிடோக்கிளிசும் முக்கிய பங்கெடுத்துக் '* கொண்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. திமாயோசு
* இதற்கு எமக்கு அப்பொலோடரசுவின் ஆதாரம் கிடைத்துள்ளது (Diog. wi. 51 52, R.P. 162) அரித்தோதிலேப் பின்பற்றி எராதொசுதேனிசு எழுதிய ஒலிம்பிய வீரர் (Olympic octors) என்பதையே அப்பொலோடரசு பின்பற்றியுள்ளார். எரக்கிளைட்டசு, மூத்த எம்பிடோக்கிளிசுவை ஒரு “ குதிரை வளர்ப்போர்ன் ” என வ்ர்ணித்துள்ளார். திமாயோசு தனது பதினைந்தாவது நூலில் அவரைக் குறிப்பிட்டுள்ளார். சத்தைரோசு இவரை இவரது பேரனெனத் தவருகக் கருதினர்
* டியல்சுவின் " எம்பிடோக்கிளிசுவும் யோர்ச்சியாசுவும் ” எனும் நூலைப் பார்க்க (Berl. Si26. 1884). அனக்சகோரசு பிறந்து அதிக காலமாவதற் குள்ளாகவே, அதாவது கி. மு. 500 ஆம் ஆண்டளவிலேயே எம்பிடோக்கிளிசு பிறந்து விட்டாரென (120 ஆம் பிரிவில் பார்க்க) தியோபிறகத்தோசு கூறினர் (Dox, p. 477, 17). இவர் பார்மனைடிசுவுக்குப் பின்னவர் என்பது உறுதியாதலின், அப்பொலோடரசு கூறுவதிலும் பார்க்கப் பார்மனைடிசு 15 ஆண்டுகள் மூத்தவர் என்னும் பிளேட்டோவின் கூற்றுக்கு இது புதியதோர் ஆதாரமாகிறது. பொதுவாகத் தெளரியைக் காலம் அப்பொலோடரசுவைப் பல விடயங்களில் பிழையாகக் கருதும்படி செய்துவிட்டதெனக் கூறலாம். தெளரியை யோடு சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் (எரொடோட்டசு, புறத்தகோரசு போன்றேர்) கி.மு. 484 ஆம் ஆண்டிற் பிறந்ததாகவே கூறப்படுகிறது.

Page 112
208 ஆதி கிரேக்க மெய்யியல்
இவ்வரசியல் சம்பவங்களைப்பற்றி ஓரளவு விரிவாகக் கூறியுள் ளார். இச் சம்பவங்கள் நடந்து எறக்குறைய 150 ஆண்டுகளின் பின்னர் வழக்கிலிருந்தவையும் உண்மையெனக் கருதக் கூடிய வையுமான வரலாற்றுக் கதைகள் சிலவற்றையும் இச்சரித் திரவாசிரியர் தந்துள்ளார். சாதாரணமாக, மக்களிடையே நில விவரும் பிற கதைகள்போல இவையும் சிறிது குழப்பமான வையாகவே காணப்படுகின்றன. சுவையான சம்பவங்கள் எவை யும் மறக்கப்படவில்லை. ஆனல் பல முக்கிய விவரங்கள் குறிப் பிடப்படவில்லை. ஆயினும், அவரது பிற்சந்ததியினருக்கு எம்பி டோக்கிளிசு எப்படித் தோற்றினர் என்பதைக் காட்டுவதன் மூலம், எம்பிடோக்கிளிசுவின் சரித்திர முக்கியத்துவத்தை நிர்ண யிக்க எமக்கு உதவும் இப்பழங்கதைகளைச் சேகரித்துத்தந்த சரித்திரகாரர் திமாயோசுக்கு நாம் நன்றி செலுத்தாதிருக்க முடியாது. இக்கதைகள் யாவும் அவர் சனநாயகக் கொள்கை களை எவ்வாறு உறுதியாகக் கடைப்பிடித்தார் என்பதை எடுத் துக்காட்டவே தரப்பட்டுள்ளன. உதாரணமாக எம்பிடோக்கிளிசு ஆயிரவர் மகாநாட்டைக்-இது ஒர் ஆட்சிக் குழுவாயிருந்திருக் கலாம்-கலைத்தது பற்றிய கதை தரப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்துதான், எம்பிடோக்கிளிசு அரசபதவியை எற்றுக் கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை செய்யப்பட்டது. எம்பி டோக்கிளிசு அரச பதவியை ஏற்க மறுத்துவிட்டார் என அரித் தோதில் குறிப்பிடுகிறர். எம்பிடோக்கிளிசு என்ன காரியங்களில் ஈடுபட்டிருந்தார் என்பது பற்றி எமக்குத் தெளிவாகத் தெரிய வராதபோதிலும், அக்கிரகாசு நகரத்தில் அந்நாட்களில் அவர் ஒரு முக்கியத்துவம் பெற்ற மக்கள் தலைவராக விளங்கினர் என்பது எமக்குப் புலப்படுகிறது.
உதாரணமாக, ஒருநாள் நீதிபதியொருவருடன் உணவருந்த அவர் அழைக்கப்பட்டிருந்தாரெனத் திமாயோசு கூறுகிறர். சாப்பாடு ஆரம்பித்து வெகு நேரம் கழிந்த பின்னரும் உவைன் எதுவும் கொண்டு வரப்படவில்லை. மற்றவர்கள் ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. ஆனல் எம்பிடோக்கிளிசுவோ கோபித்து, உவைன் கொண்டுவரப்பட வேண்டுமென வற்புறுத்தினர். விருந்துக் கழைக்கப்பட்ட வேருெரு அதிகாரி வரும்வரைக்கும் காத்திருப்பதாக அவ் விருந்தை வழங்கிய வீட்டுக்காரர் கூறினர். அவ்வதிகாரி சிறிது நேரங்கழித்து வந்ததும் வீட்டுக்காரர் அவரையே விருந்தின் தலைவராக நியமித்தார். இதன் பின்னர் அவ்வதிகாரி சற்று ஆணவத்துடன் பழகவாரம்பித்தார். அங்கிருந் தோர் யாவரும் உவைனைக் குடித்தல் வேண்டும் அல்லது தங்கள் தலைகள்மீதே அதை ஊற்றிக்கொள்ள வேண்டுமென அவர் கட்டளைவிடுத்தார். எம்பிடோக் கிளிசு ஒன்றும் கூறவில்லை. ஆனல் மறுநாள் அவ்வீட்டுக்காரர்மிதும் அவ்வதிகாரி மீதும் குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்துக்கழைப்பித்து அவர்களிருவருக்கும் மரண தண்டனை விதிப்பித்தார்.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 209
100. எம்பிடோக்கிளிசினது குணங்களிடையே அவரது அரசி எம்பிடோக்
கிளிசுவும் மத
யற் கொள்கைகளோ ண்பட்ட அம்சங்கள் சிலவம் கானட்
ற டு முர لک{/ வும க "போதண்யும்
பட்டன எனத் திமாயோசு கூறுகிறர். தான் ஒரு தெய்வம் என வும், தனது சகபிரசைகள் அதையிட்டுத் தம்மை வழிபட வேண்டு மெனவும் எம்பிடோக்கிளிசு கூறினர். உண்மை யென்ன வென்றல் எம்பிடோக்கிளிசு வெறும் அரசறிஞனய் மட்டும் இருக்கவில்லை. " மாந்திரீக ’ரது பண்பாடுகள் பலபடைத்தவரா யும் அவர் விளங்கினர்.
தனது குருவான எம்பிடோக்கிளிசு சூனிய வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது தானும் அவரோடு கூட விருந்ததாக யோச்சியாசு ஒத்துக்கொண்டதாகச் சத்தைரோசு கூறுகிறர். * தூய்மையாக்கம்’ என்னும் நூலிலிருந்து கிடைத்துள்ள பகுதிகளைப் பார்க்கும்போது எமக்கு இதன் அர்த்தம் புலப் படுகிறது. தேவைகளைக் கட்டுப்படுத்திப் புனித வாழ்க்கை வாழ்வதன் மூலம் பிறவித் தொடர்பிலிருந்து விடுதலை பெற மனிதன் முயலவேண்டும் எனும் புதிய சமயத்தின் போதன சிரியராக எம்பிடோக்கிளிசு விளங்கினர். தேரொனது காலத் தில் அக்கிரகாசில் ஒபிசம் வலுவுற்றிருந்தது எனக் கருத இடமிருக்கிறது. அத்துடன் எம்பிடோக்கிளிசின் கவிதைகளுக் கும் தேரொன்மீது பிந்தர் பாடிய ஒபிசக் கவிதைகளுக்கு மிடையே சில சொல்லொற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனல் * தூய்மையாக்க ”த்தின் 134 ஆவது பகுதி அப்போலோவைக் குறிக்கிறது என அம்மோனியோசு கூறியிருப்பதையும் நாம் சந்தேகிக்கக் காரணமில்லை. இது உண்மையானல், பைதா கரசைப் போல எம்பிடோக்கிளிசும், அயோனியர்களினதைப் போன்ற இறையனுபவக் கொள்கையை அனுட்டித்தவர் என்றே தோன்றுகிறது. “ போதனைகளைத் திருடிய” காரணத் திற்காகப் பைதாகரச கழகத்திலிருந்து எம்பிடோக்கிளிசு வெளி யேற்றப்பட்ட வரலாறு திமாயோசுக்கு எற்கெனவே தெரிந்திருக் கிறது. “தூய்மையாக்க ”த்தின் 129 ஆவது பகுதி பைதாகர சையே குறிப்பிடுகிறது எனக் கருதவும் இடமிருக்கிறது. பைதாகரச கழகத்தினரால் சரியானவையெனக் கருதப்பட்ட கொள்கை களுக்குப் புறம்பான பைதாகரச கொள்கைகளைப் போதித்த காரணத்திற்காகவே எம்பிடோக்கிளிசு கழகத்திலிருந்து வெளி யேற்றப்பட்டார் எனத் தோன்றுகிறது. இவர் சாதித்தவை யெனக் கூறப்படும் அதிசயங்கள் பற்றிய விவரங்கள் இவரது
9-R 10269 (6/63)

Page 113
21q ஆதி கிரேக்க மெய்யியல்
கவிதைகளில் காணப்பட்ட குறிப்புகளிலிருந்து விரித்தெழுதப் பட்டவை போலவே காணப்படுகின்றன. சொற்கோப்புக் 101. சொற்கோப்புக்கலையை எற்படுத்தியவர் எம்பிடோக்கி *%vպմ: ளிசே என அரித்தோதில் கூறுகிருர், கொசு, நிடோசு முதலிய வைத்தியமும் வைத்தியக் கழகங்களுக்குச் சமானமான இத்தாலிய வைத்தி யக் கழகத்தை நிறுவியவரும் எம்பிடோக்கிளிசே எனக் கலன் கூறுகிறர். எம்பிடோக்கிளிசின் அரசியல், அறிவியல் சார்ந்த ஈடுபாடுகளோடு சேர்த்தே அரித்தோதில் கலன் ஆகியோரது இவ்வித கூற்றுக்களும் ஆராயப்படல் வேண்டும். யோச்சியாசு, எம்பிடோக்கிளிசின் சீடன் என்பதும், பின்னர் அதென்சு ம்க்களுக்கு யோச்சியாசினல் அறிமுகப்படுத்தப்பட்டதும் இலக்கிய நடையொன்று? தோன்றக் காரணமாயிருந்ததுமான செயற்கை அணிகள் கொண்ட நடையிலேயே இவரது சொற்பொழிவு கள் நிகழ்த்தப்பட்டன என்பதும் உண்மையாயிருக்கலாம். வைத்தியத்தை மட்டுமல்லாது, அதன் மூலமாக விஞ்ஞான வளர்ச்சி முழுவதையுமே வசப்படுத்திய, எம்பிடோக்கிளிசுவின் வைத்தியம் சம்பந்தமான சிந்தனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்பிடோக்கிளிசிற்குப் பின்னர் அவரது வழி வந்தோர் யாரும் இருக்கவில்லையெனக் கூறப்பட்டிருக்கிறது. இவரது மெய்யியற் கொள்கைகளைப் பொறுத்தவரையில் இக் கூற்று உண்மையே. ஆனல் இவரால் நிறுவப்பட்ட வைத்தி யக் கழகம் பிளேட்டோவின் காலத்திலும் நிலைத்திருந்து அவரையும் தனது செல்வர்க்குக்குட்படுத்தியது. அரித்தோதில் பிளேட்டோவைவிட அதிகமாக இக்கழகத்தின் வசப்பட்டிருந் தார் எனக் கூறலாம்.? வெப்பம், குளிர், வறட்சி, ஈரலிப்பு
* கழுதைகளின் தோலினலான பைகளை மரங்களில் தொங்கவிடுவதன் மூலம், ஈற்றிசியன் காற்றுகளின் வேகத்தை இவர் எவ்வாறு கட்டுப்படுத்தினு ரென்பது பற்றித் திமாயோசு கூறுகிறர். இவர் போதித்த விஞ்ஞானத்தை நன்ருகத் தெரிந்த இவரது சீடர்கள் காற்றுக்களைக் கட்டுப்படுத்த நன்றக அறிந் திருந்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 30 நாட்களாகச் சுவாசம், நாடித் துடிப்பு எதுவுமின்றி இருந்த பெண் ஒருத்தியை இவர் எவ்வாறு உயிர்ப்பித்தார் என்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. கவிதைப்பகுதி (i) இல் தன்னுடைய, போதனை எவ்வாறு எடிசிலிருந்து இறந்தவர்களை மீட்க உதவுமென அவர் பெளசானியாசுக்குக் கூறுகின்றர்.
2 , யோச்சியாக எம்பிடோக்கிளிசுவின் சீடர் என்பதைத் தெரிவிக்கும் மிகப்பழைய ஆதாரம் சத்தைரோசுவிடமிருந்து கிடைப்பது. யோச்சியாசுவின் சீடனன அலுக்கிடாமசுவிடமிருந்தே அவர் இதை அறிந்திருந்தார் எனத் தோன்றுகிறது. பிளேட்டோவின் " மேனே"வில் நுண்ணிய துவாரங்கள், வெளியொழுக்குகள் பற்றிய எம்பிடோக்கிளிசுவின் கொள்கை, யோச்சியாசுவின தெனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
8. இக்காலத்திலிருந்து மருத்துவவியலின் வளர்ச்சியை அறியாது மெய்யி 'யலின் வரலாற்றை அறிதல் அசாத்தியம்.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 2.
என்பனவே நான்கு மூலகங்களும் என்பதே இக்கழகத்தின் பிரதான கொள்கையாயிருந்தது. உடலிலுள்ள நுண்ருெளே கள் யாவற்றினலும் நாம் சுவாசிக்கிறேம் என்பதும் சுவாசா னுபவத்திற்கும் இரத்தவோட்டத்திற்கும் நெருங்கிய தொடர் பிருக்கிறது என்பதும் இவர்களது கொள்கைகளாயிருந்தன. உணர்வுக்கான உறுப்பு இருதயம் என்றும் மூளையல்ல வென் றும் இவர்கள் நம்பினர். எம்பிடோக்கிளிசின் வழிவந்தவர் களது வைத்தியக் கொள்கைகளில் மாந்திரீக முறையான கருத் துக்கள் பல சேர்ந்திருந்தன என்பதும் உண்மையாகும். இம் மாந்திரீகக் கொள்கைகளைக் கண்டித்துக் கோவன் வைத்தியக் கழக அங்கத்தினர் ஒருவர் வெளியிட்டவொரு கருத்துப் பற்றிய குறிப்பு இன்றும் நாம் அறியக் கூடியதாயிருக்கிறது. எம்பி, டோக்கிளிசின் வைத்தியக் கழகத்தினர் “மாந்திரீகர்களும் தூய் தாக்கிகளும் போலி அறிஞர்களும், போலி மருத்துவர்களு மென், றும், மிகுந்த சமயப்பற்றுடையவர்கள் போலப் பாவனை செய்து, கொள்பவர்கள் ” என்றும் இவர் குறிப்பிட்டிருக்கிருர்,
102. எம்பிடோக்கிளிசின் வாழ்க்கை வரலாற்றில் இயற்கை இவருக்கு பற்றிய அவரது கொள்கை எதுவும் தரப்படவில்லை. அவரது முன்பிருந் ஆசிரியர்கள் பற்றிய சில கூற்றுக்களை மட்டுமே எம்மால் பெற" முடிகிறது. எம்பிடோக்கிளிசைப்பற்றி அறிய மிகவும் வாய்ப்புப் பெற்றிருந்த அலுக்கிடாமசு இவர் சேனேவுடன் சேர்ந்து பார் மனடிசிடம் கற்றவர் எனக் கூறுகிறர். தியோபிறகத்தோசும் இவர் பார்மனைடிசைப் பின்பற்றியவர் என்றே கூறியுள்ளார். ஆளுனல் பைதாகரசிடம் இவர் பாடம் “ கேட்டவர் ” என்ற கூற்று. உண்மையாயிருக்க முடியாது. பைதாகரசின் வழிவந்தோ, ரிடம் பாடம் கேட்டோர் என்றே அலுக்கிடாமசு கூற விரும்பி யிருக்கவேண்டும்.
எம்பிடோக்கிளிசின் கொள்கைகளின் சில பகுதிகள், குறிப் பாக நுண்ருெளைகள் பற்றியும் வெளியொழுக்குகள் பற்றியும். அவர் கொண்டிருந்த கொள்கை போன்றன லியூக்கிப்போசின் செல்வாக்கின் மூலம் எற்பட்டவை எனச் சிலர் கருதுகின்ற னர். ஆனல் அலுக்மையோன் நுண்ருெளைகள் பற்றிக் குறிப் பிட்டிருப்பது எமக்குத் தெரியுமாதலால் எம்பிடோக்கிளிசின் கொள்கை அவரிடமிருந்து பெறப்பட்டிருக்கலாமென்க் கருத இடமுண்டு. அலுக்மையோனும், பிற்கால அயோனிய மெய்
* எம்பிடோக்கிளிசு, லியூக்கிப்போசுவின் செல்வாக்குக் குட்பட்டிருந்தார் என்னும் கருத்தை எற்றுக்கொள்வது இனிவரும் சில அத்தியாயங்களின் முக்கிய கொள்கையையே மாற்றுவதாக முடியும். எம்பிடோக்கிளிசின் சிெல் வாக்குக்குட்பட்ட பிந்திய பைதாகரச கொள்கையின் செல்வாக்கு லியூக்கிப் போசுவை வசப்படுத்தியது என நான் நிரூபிப்பேன்.

Page 114
ldugofth
நூல்கள்
22 ஆதி கிரேக்க மெய்யியல்
யியற் ந்ெதனேயாளர்களும் கொண்டிருந்த சில உடற்கூற்றுக் கொள்கைகள் பற்றிய வரலாற்றுடனும் இக்கருத்து பொருந் துவதாயுள்ளது. எம்பிடோக்கிளிசால் நிறுவப்பட்ட வைத்தியக் கழகத்தின் மூலமாகவே இக்கொள்கைகள் அயோனியாவை அடைந்திருக்க வேண்டும் என எம்மால் உணரமுடிகிறது.
103. தன்னைத் தெய்வமெனப் பிறர் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்துடன் எம்பிடோக்கிளிசு எட்ன எரிமலையின் வாயினுட் குதித்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் திடீரென எம்பிடோக்கிளிசு வானுலகிற்குத் தூக்கியெடுக்கப்பட் டார் என அவரைப் பின்பற்றியோர் துவக்கி வைத்த கதையே கெட்ட எண்ணத்துடன் இவ்வாறு திரித்துக் கூறப்பட்டதெனத் தோன்றுகிறது. உள்ளூர் மக்களிடையே எவ்வித வரலாறும் வழக்கிலிருக்காதபடியால் இவ்விரு கதைகளும் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படலாம். எம்பிடோக்கிளிசு காலஞ் சென்ற இடம் சிசிலி அல்ல ; பெலேர்ப்பொனீசு அல்லது தெளரியையா யிருக் கலாம். அவர் அதென்சு சென்றிருக்க முடியாது என்று கூறு வதற்கும் எவ்வித நியாயமும் இல்லை.? சோக்கிரதருக்கு இளமை யிலேயே எம்பிடோக்கிளிசின் கொள்கைகள் தெரிந்திருந்தன வென்று பிளேட்டோ கூறுகிருர். அத்துடன் எம்பிடோக்கிளிசின் கொள்கைகளில் அவரின் தனித்தன்மையைக் காட்டுவதான ஒன்றையே பெரிய கிரிட்டாசும் பின்பற்றினர்.8
104. அங்கதக்கவிஞர் செனுேபனிசைச் சேர்த்துக் கொள்ளா விட்டால், செய்யுள் உருவத்தில் தமது சிந்தனைகளை வெளியிட்ட இரண்டாவது மெய்யியல் ஞானி எம்பிடோக்கிளிசே. கிரேக்க மெய்யியல் அறிஞருள் செய்யுளியற்றிய கடைசி அறிஞரும் எம்பிடோக்கிளிசே எனக் கூறலாம் பைதாகரசின் கொள்கை களைச் சார்ந்து எழுதப்பட்டிருக்கும் செய்யுள்கள் பிந்தியகால இடைச்செருகல்கள் போலக் காணப்படுவதால் நாம் அவற்றை யும் விட்டுவிடலாம். செய்யுள் எழுதும் முறையில் பார்மனை
1. இது பொண்டோசுநாட்டு எரக்கிளைட்டக்வாற் கூறப்பட்ட கதையாகும்.
* பொதுவாக வழங்கிய கதைகளை, திமாயோசு விரிவாக மறுத்துள்ளார். எம்பிடோக்கிளிசு ஒலிம்பியாவுக்குச் சென்றதன் பின்னர் சிசிலிக்கு ஒருபோதும் மீளவில்லை என அவர் திடமாகக் கூறுகின்றர். ஆனல் தெளரியைக் குடி யேற்றம் பற்றி ஒலிம்பியாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன வென்றும், பெலோப்பொனிசிலிருந்தும் எனைய இடங்களிலிருந்தும் கிரேக்கர்கள் அங்கு சென்றனரென்றும் நாம் அறிவோம். இது சம்பந்தமாக அவர் அதென் சுக்குச் சென்றிருக்கலாம்.
*. இவன் பிளேட்டோவின் திமாயசுவில் வரும் கிரிட்டோசுவே யன்றி முப்ப தின்மரில் ஒருவனன கிரிட்டோசுவல்ல. உண்மையில் இவன் அவனது பாட்டனுவான்.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 23
டிசை எவ்வாறு எம்பிடோக்கிளிசு பின்பற்றினரோ அதேமாதிரி லியூக்கிறத்திசு இவரைப் பின்பற்றினர். கவிதை அணிகளுடன் எழுதப்படுவனவற்றிற்குப் பொருள் காண முயலும் போது சிரமம் ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனல் எரக்கிளைட் டசுவின் வசனங்களிலும் பார்க்க எம்பிடோக்கிளிசின் செய்யுள் களிலிருந்து அவற்றின் மெய்யியல் உட்பொருளை மீட்பது இல குவாயிருக்கிறது என்றே கூறவேண்டும்.
105. வேறு எந்தக் கிரேக்க மெய்யியல் ஞானியையும் விட எம்பிடோக்கிளிசுவின் குறிப்புக்களே எமக்கு அதிகமாகக் கிடைத் திருக்கின்றன. “இயற்கை பற்றிய கவிதைகள் ” “ தூய்மை யாக்கம் ’ ஆகிய இருதொகுதிகளும் மொத்தம் 5,000 செய் யுள்களைக் கொண்டிருந்தன வென்று அலெக்சாந்திரியா நகர நூல்நிலையக் காப்பாளர்கள் மதிப்பிட்டனர் என இடையோ சினிசு, சூயிதாசு ஆகியோர் எழுதி வைத்துள்ள குறிப்புக்கள் கூறுகின்றன. இவற்றுள் 2,000 செய்யுள்கள் “இயற்கை பற்றிய கவிதைகள்’ என்னும் நூலில் அடங்கியிருந்தன. இந்நூலின் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைந்ததாக இருந்த, பேரண்டவியற் கவிதையிலிருந்து 350 செய்யுள்களும் செய் யுட் பகுதிகளும் எமக்கு வரலாற்றசிரியர் டியல்சு மூலம் கிடைத் திருக்கின்றன. ஆகவே இதிலும் எவ்வளவோ தொலைந்து போயினவென்பதை நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். அலெக்சாந்திரிய அறிஞர்களால் எம்பிடோக்கிளிசின் கவிதைகள் எனக் கூறப்படும் பிற சிலவற்றை அவருடையவை என ஒத்துக் கொள்ள முடியாது. டியல்சு ஒழுங்குபடுத்திய முறையில் எஞ்சி யுள்ள செய்யுள்களைத் தருகிறேன் :
(1) அறிவாழம்கொண்ட அங்கிதோசுவின் மகனுகிய பெளசானி யாசே உற்றுக் கேட்பாயாக.
(2) அவர்களது உடல்களின் பல பாகங்களிலுமுள்ள ஆற்றல்கள் மிகக் குறைந்தவை ; அவர்களது சிந்தனையின் கூர்மை மழுங்கும் வண்ணம் அவர்களேத் தாக்கும் கவலைகள் அநேகம். உண்மையில் வாழ்வெனக் கருதப்பட முடியாத சிறு கால வாழ்வையே அவர்களாற் காண முடிகிறது. விரைவுடன் வரும் முடிவான, மரணத்தை நோக்கி இட்டுச் செல்லப்படும் அவர்கள், புகையைப் போல மறைந்து விடுகின்றனர். எல்லா வகையிலும் அவசரவழிகளில் அழைத்துச் செல்லப்படும் ஒவ் வொருவனும் தன்னல் காண முடிந்தவற்றை மட்டுமே முற்றக நம்பி, தான் பூரணத்துவத்தையே கண்டுவிட்டதாக
எஞ்சியுள்
@YT@@f

Page 115
214 ஆதி கிரேக்க மெய்யியல்
வீணில் தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறன். இந்த விடயங்களை மணி தர் தமது மனத்தால் அறிந்து கொள்வது எத்தனை கடினம் ! கண்களால் முற்றகக் காண்டலும் காதுகளால் முற்றகக் கேட்ட லும் அரிது, அரிது எப்படியாயினும், இங்கு வந்துள்ள நீ அழியும் தன்மையுடைய மனித மனத்தின் ஆற்றலுக்கு அப் பாற்பட்டவற்றை அறிந்து கொள்ள முடியாது. R. P. 163.
(3) உனது ஊமை இதயத்துட் பேணுதற்காக . . . . . . . .
(4)
தெய்வங்காள் l மனிதர்களுக்கியல்பான விசரை எனது நாவி லிருந்து விலக்குவீராக. எனது உதடுகளுக்கு ஒளியூட்டி அவற்றிலிருந்து புனித ஊற்றுப் பாயும்படி செய்வீராக. வெண் மையான கைகளுடைய கன்னியே, யாவரும் வழிபடும் தேவ தையே, ஒரு நாட் குழந்தைகளாகிய நாம் அறிய வேண்டிய வற்றை நான் கேட்க வகை செய்யும்படி உன்னை இறைஞ்சு கிறேன். உனது புனித இருப்பிடத்திலிருந்து, உன்வசப்பட்டு நிற்கும் என்னை இயக்குவாயாக, எனக்கு வேகத்தைத் தரு வாயாக. உன்னற்றம் பெற்ற கர்வத்தினல் தமது தகு திக்கு மிஞ்சிய முறையில் பேசும் பொருட்டும், அதன்மூலம் * அறிவின் உச்சியில் ” தமக்கு ஓர் இடம் பெறும்பொருட்டும், உனக்குப் புகழும் மதிப்பும் கொண்ட மாலைகளைச் சமர்ப்பிக்கும் மானிடர்களை நீ அதிகமாக உயர்த்தாது விடுவாயாக.
நீ இப்போது சென்று ஒவ்வொரு பொருளும் என்ன விதத் தில் தெளிவாயிருக்கிறதென்று உனது முழு ஆற்றலையும் உபயோகித்துக் கவனித்தல் வேண்டும். உனது காதுகளால் கேட்பனவற்றிலும் பார்க்க நீ காணும் காட்சிகள் அதிகம் நம்பத்தகுந்தவை என்று நினைத்துவிடாதே. அல்லது உனது நாவின் சுவை யுணர்வு உனது காதுகளின் ஒலியுணர்விலும் பார்க்கத் தாழ்ந்தது என்று நினைக்கக்கூடாது. அறிவைத் தேட உதவக்கூடிய எந்த அங்கத்தையுமே நம்பத்தகாததென நீ கழித்துவிடக்கூடாது. ஒவ்வொன்றையும் அது எவ்வகையில் தெளிவாயிருக்கிறதோ அவ்வகையில் மதிப்பிடல் வேண்டும். R. P. 163,
(5)
ஆனல் உன்னிலும் சிறந்தவர்களது சொற்களை நம்ப மறுப் பதும் மிகவும் இழிந்த குணமாகும். நான் கூறுபவை உனது இதயத்தில் பதிந்ததும் அவற்றை நீ எனது தேவதையின் உறுதியான சாட்சிகளாகக் கருதிப் படித்துக் கொள்ளலாம்.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 215
(6) முதலில் எல்லாப் பொருள்களினதும் நான்கு மூலகங்களை யும் தெரிந்துகொள் : ஒளிர்விடும் சியசு, உயிரளிக்கும் ஏரா, அழியுந் தன்மையுடைய யாவர்க்கும் நீரூற்றகும் கண்ணிர்த் துளிகளையுடைய நெசுத்திசு, அய்தோனியசு. R. P. 164.
(7) ஆக்கப்படாத . . . . . . . . . . . .
(8) நான் உனக்கு இன்னுமொன்று சொல்வேன். அழிகின்ற அனைத்திலும், ஒன்ருவது பொருளாவதில்லை ; பழிகேடுடைய மரணம் அவற்றை அடையாது விடுவதுமில்லை. எற்கெனவே கலந்திருப்பவை மீண்டும் கலந்து ஒன்றேடொன்று மாறு பட்டு உண்டானவையே அவை. பொருளென இவை மனிதர் களால்தான் பெயரிடப்பட்டிருக்கின்றன. R. P. 165.
(9) ஆனல் வளியும் ஒளியும் கலந்து (தற்செயலாக) மனிதர் கள்ாக உருப்பெறும்போது, அல்லது காட்டுமிருகங்களாகவோ, பறவைகளாகவோ, தாவரங்களாகவோ கலக்கும்போது அதைப் பிறப்பு என அவர்கள் கொள்கின்றனர். இந்தப் பொருள்கள் மீண்டும் பிரியும்போது அதை அவர்கள் துயர் மிகுந்த இறப் பென (தவருக ?) அழைக்கிறர்கள். நானும் அந்த வழக்கத் தைப் பின் பற்றி இவற்றை இந்தப் பெயர்களாலேயே அழைக் கிறேன்.
(10) பழி வாங்கும் மரணம்.
(11, 12) முன்பு இல்லாதவை புதிதாகத் தோன்றலாம் என்றும் பொருள்கள் அழிந்து முற்றக நாசமாகிவிடலாம் என்றும் நினைப்பவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனை எதுவும் இல்லை-அறி விலிகள் : ஏனெனில் எவ்விதத்திலும் இல்லாததிலிருந்து ஒன்றும் தோன்ற முடியாது; இருப்பது அழிந்து போவதும் சாத்தியமில்லை ; அவ்வாறு நடத்தல் சாத்தியம் என நாம் கேள்விப்பட்டதும் இல்லை. R. P. 165a,
* நான்கு மூலகங்களும் அவற்றின் புராணப் பெயர்களினல் இங்கு அறி முகப்படுத்தப்பட்டுள்ளன.

Page 116
216 ஆதி கிரேக்க மெய்யியல்
(13) முழுமை என்பது கொஞ்சமேனும் வெறுமையாகவோ அள வுக்கு மீறி நிரம்பியோ இல்லை.
(14) முழுமை என்பதில் ஒன்றும் வெறுமையாய் இல்லை. அப்படியா யின் அதை அதிகரிப்பதற்கான எதுவும் எங்கிருந்து வரமுடியும் ?
(15) மக்கள் தமது வாழ்வென அழைப்பதை வாழும் வரைக்கும் தான், இருக்கிறர்கள், நல்லதையும் கெட்டதையும் அனுபவிக்கி ருர்கள் ; தாம் உருவாகுதற்கு முன்னரும், தாம்கலைந்து போனதன் பின்னரும் முற்றக இல்லாது போய்விடுகிறர்கள் என இவ்விடயங்களில் ஆழ்ந்த அறிவுள்ள எந்த மனிதனும், முடிவுசெய்ய மாட்டான் R. P. 165 a.
(16)
எனெனில் அவை (பூசலும் காதலும்) முன்பிருந்தவாறே கட்டாயம் தொடர்ந்து இருக்கும் ; எல்லையற்ற காலத்தில் இவை எப்போதாவது இல்லாது போய்விடும் எனவும் நான் pÉ726O7ašas66602a. R. P. 166 c.
(17)
நான் உனக்கு இரட்டைத் தன்மையுடைய கதையொன்று சொல்வேன். ஒரு காலத்தில் பலவற்றிலிருந்துதான் ஒன்று வளர்ந்தது ; இன்னெரு காலத்தில் ஒன்றுக்குப் பதிலாக அது பலவாகப் பிரிந்தது. அழியும் பொருள்கள் வருதலும் மறைதலும் இரட்டிப்பாக நடைபெறுகிறது. எல்லாப் பொருள் களும் ஒன்று சேர்தல் ஒரு தலைமுறையைத் தோற்றுவித்து அதை அழிக்கிறது; மற்றையது வளர்ந்து பொருள்கள் பிரியும் போது, சிதறுகிறது. இப்பொருள்கள் தொடர்ந்து இடம் மாறுவதும் இடைவிடாது நடைபெறுகிறது-ஒரு நேரத்தில் காதலினல் எல்லாம் ஒன்ருகச் சேர்கின்றன ; பிறிதொரு நேரத்தில் பூசலின் எதிர்ப்பினல் யாவும் வெவ்வேறு திசை களில் இட்டுச் செல்லப்படுகின்றன. பலவற்றிலிருந்து ஒன்ருக வருதலும் ஒன்று பிரிக்கப்படும்போது மீண்டும் பலவாதலும் இவற்றின் இயல்பாக இருக்கும்வரை, இவை இவ்வாறு தோன்று தலும் இவற்றின் வாழ்வு முடிந்து போதலும் நடைபெறுகிறது. ஆனல் இவை தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருத்தலை நிறுத்தாதிருக்கும் வரை இவற்றை இருப்பு வட்டத்திலிருந்து அகற்றுதலும் முடியாது.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 217
எனது சொற்களைக் கவனிப்பாயாக. எனெனில் கல்வியே அறிவை அதிகரிக்கச் செய்கிறது. எனது உரையின் தலைப்பு களைத் தந்தபோது நான் கூறியது போல நான் உனக்கு இரட் டைத் தன்மையுடைய கதையொன்று சொல்வேன். ஒரு காலத் தில் அது பலவற்றிலிருந்துதான் ஒன்றகச் சேர்ந்து வளர்ந் தது. இன்னெரு காலத்தில் ஒன்றுக்குப் பதிலாக அது பல வாகப் பிரிந்தது; தீயும் நீரும் நிலமும் மிகவும் உயரமான வளியும், இவற்றைவிட ஒவ்வொன்றுக்கும் சம நிறையுள்ள பயங்கர பூசலும் இருந்தது. அத்துடன் இவற்றின் நடுவே சமநீளமும் அகலமும் கொண்ட காதலும் இருந்தது. திகைத் துப் போனவன் மாதிரி வெறுமனே பார்த்துக்கொண்டிராது அவளைத்தான் நீ உனது மனத்தில் இருத்திச் சிந்தித்தல் வேண்டும். மனிதரின் அமைப்பிலேயே பதிக்கப்பட்டவளெனக் கூறபபடுபவள் அவளே. அவர்களிடையே காதல் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுபவந்ம் சாந்தமான செயல்களைச் செய்ய வைப்பவளும் அவளே. இன்பம் என்றும் அபுருெடைற்று என்றும் அவளையே அழைக்கிருர்கள். தம்மிடையே நடமிடும் அவளை இன்னமும் மனிதர்களில் எவரும் கவனிக்கவில்லை. ஆனல் நீ இப்போது நான் வஞ்சனையின்றிக் கூறுவனவற்றின் ஒழுங்கைக் கவனிப்பாயாக. ஏனெனில் இவையெல்லாம் சம வயதுடையவையாய் இருப்பினும் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரித்தான தனி இயல்பும் போக்கும் உண்டு. ஆனல் காலப் போக்கில் ஒவ்வொன்றும் மாறி மாறி முதன்மை பெறுகிறது. இவற்றை விட வேறென்றும் தோன்றுவதில்லை. இவை மறைவதும் இல்லை. தொடர்ந்து மறைந்து கொண்டிருந் திருந்தால், இவை இப்போது இருக்கமாட்டா. அத்துடன் முழுமை என்பதை யாது அதிகரிக்கச் செய்ய முடியும் ? அது எங்கிருந்து வரமுடியும் ? அது எப்படி அழிய முடியும் ? எனெனில் இவை இல்லாது வெறுமையாய் இருக்கின்ற இடத் தைக் காணுேம். இவை மாத்திரமே இருக்கின்றன. ஆனல் ஒன்றுக்கூடாக ஒன்று ஓடுவதால் அவை ஒரு கணம் ஒன்றக வும் இன்னெரு கணம் மற்றென்றகவும் எப்போதும் இத்தகைய பொருள்காாகவும் மாறிக்கொண்டேயிருக்கின்றன.
R. P. 166.
(18) காதல்.
(19)
விடாது பற்றிக் கொள்ளும் காதல்.

Page 117
28 ஆதி கிரேக்க மெய்யியல்
(20) இது (காதலுக்கும் பூசலுக்கும் இடையே உள்ள போட்டி) மனித அங்கங்கள் எல்லாவற்றிலும் நடைபெறுவது வெளிப் படை. ஒரு காலத்தில், வாழ்க்கையின் மலர்ச்சிப் பருவக் காதலினல், உடலின்பாகங்களான அங்கங்கள் யாவும் ஒன்று சேர்க்கப்படுகின்றன. இன்னெரு காலத்தில் கொடிய பூசலி னல் துண்டிக்கப்பட்டு இவை யாவும் வாழ்க்கைக் கடலின் பேரலைகளோடு தனித்தனியே கலைந்து செல்கின்றன. நீரில் வாழும் மீன்களும், குன்றுகளில் வசிக்கும் விலங்குகளும், சிறகடித்துப் பறக்கும் கடற்பறவைகளும், தாவரங்களும், யாவும் இவ்வாறே. R. P. 173 d.
(21) எனது உரையை முன்பு கூறிய முறையில் எதாவது குறைபர் டிருந்ததாயின், அதற்குச் சாட்சியாக உள்ளவற்றை இப்போது அவதானித்துப் பார். எங்கும் பிரகாசமாயும் சூடாகவும் இருக் கும் சூரியனையும், ஒளிவிடும் பிரகாசத்திலும் வெப்பத்திலும் மூழ்கியிருக்கும் அழியாத பொருள்களையும் நோக்குவாயாக. எங்கும் இருளும் குளிருமாயிருக்கிற மழையையும், நிலத்தி லிருந்து வெளிப்படும் திடமான நெருக்கமான பொருள்களையும் நோக்குவாயாக. விரோதித்திருக்கும்போது இவை யாவும் உரு. மாறியும் தனித்தும் இருப்பன. காதலினல் இவை யாவும் ஒன்று சேர்கின்றன; ஒன்றை ஒன்று விரும்புகின்றன.
முன்பு இருந்தவைகளும், இப்போது இருப்பவையும், இனி இருக்கப் போகின்றவைகளும் இவற்றிலிருந்துதான் பிறந்தன. மரங்கள், ஆண்கள், பெண்கள், விலங்குகள், பறவைகள், நீரில் வாழும் மீன்கள் ஆகிய யாவும், என், நீண்ட காலம் வாழ்ந்து யாவராலும் உயர்ந்தவர்களாக மதிக்கப்படும் கடவுளர்கள் கூடத்
35 TGÖT. R. P. 166 i. V−
எனெனில் இவை மட்டுமே இருக்கின்றன ; ஆனல் ஒன்றுக் கூடாக ஒன்று ஓடி வெவ்வேறு உருவங்களைப் பெறுகின்றன. கலப்பு இவற்றை அவ்வளவு மாற்றிவிடுகிறது. R. P. 166 g.
(22) சூரியன், நிலம், வானம், கடல் என்னும் இவை யாவும், தம்மிடமிருந்து பிரிக்கப்பட்டு அழியும் பொருள்களில் சேர்க்கப்பட் டுள்ள தமது பகுதிகளோடு ஒத்த தன்மையுடையனவாயே உள்ளன. இவற்றுள்ளும் கலப்புக்கு மிகவும் ஏற்றவையா யுள்ள பொருள்கள் ஒன்றுக்கொன்று ஒத்த தன்மையுடையன வாயிருத்தலால், அபுருெடைற்றின் மூலம் காதலால் இணைக்கப்

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 219
படுகின்றன. பிறப்பிலும், சேர்க்கையிலும் உருவத்திலும் மிக அம் மாறுபட்ட பொருள்கள் மிகவும் விரோதித்திருக்கின்றன. ஏனெனில் பூசலினல் பிறப்பிக்கப்பட்ட இவை இணைவதற்குச் சிறிதேனும் பழக்கமில்லாதனவாயும் பூசலின் கட்டளையால் மிக வும் துயரடைவனவாயும் உள்ளன.
(23) ஆழ்ந்த அறிவினல் நன்றகத் தமது கலையைப் பயின்ற ஒவியர்கள் ஆலய சித்திரங்களைத் தீட்டமுற்படும்போது, தமது கைகளில் பல நிறமான சாயங்களை எடுத்துச் சிலவற்றைக் குறை வாகவும் சிலவற்றை அதிகமாகவும், எற்ற விகிதப்படி கலந்து, அதிலிருந்து எல்லாவிதமான உருவங்களையும்-மரங்களையும், ஆண்களையும், பெண்களையும், விலங்குகளையும், பறவைகளையும், நீரில் வாழும் மீன்களையும் நீண்டகாலம் வாழ்பவர்களும் உயர் வாக மதிக்கப்படுபவர்களுமான தெய்வங்களையும்-தோற்று விப்பது போலவே உண்மையில் இவை யாவும் தோற்றுவிக்கப்படு கின்றன. எண்ணிறந்தவையாகத் தோன்றும் அழியுந்தன்மையு டைய இவை யெல்லாம் வேறு எந்த முறையிலோ பிறக்கின்றன என்னும் பிழையான எண்ணத்தை உன் மனத்தில் இருக்க விடாதே. இந்தக் கதையை ஒரு தெய்வத்திடமிருந்து கேட்டுள்ளா யாதலால் இதை நீ உறுதியாக அறிந்து கொள்ளலாம்.
(24) கடைசிவரை வெறும் வார்த்தைகளாலான ஒரே பாதையிற் சென்றுகொண்டிருக்காமல் ஒரு உச்சியில் இருந்து இன்னுெரு உச்சிக்கு அடியெடுத்து. . . . . . . . .
(25) சரியானதெதுவோ அதை இரண்டு முறை வேண்டுமானலும் சொல்லலாம்.
(26) காலச்சுழற்சியில் அவை தமது முறையின்படி ஒன்றனுள் ஒன்று புகுந்து தமது முறைவரும் போது வலிமை பெறு 66ö7p6OT. R. P. 166 c.
இவை மாத்திரம் உள்ளன. ஆனல் ஒன்றனுள் ஒன்று புகும்போது இவை மணிகர்களாகவும் விலங்கினங்களாகவும் மாறுகின்றன. ஒரு காலத்தில் காதல் மூலமாக இவை யாவும் ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவரப்படுகின்றன. இன்னெரு காலத் தில் பூசலின் எதிர்ப்பினல் இவை வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் செல்லப்படுகின்றன. மீண்டும் ஒன்ருகச் சேர்ந்து தணி

Page 118
220 ஆதி கிரேக்க மெய்யியல்
யும் வரை இவை கலைந்து செல்கின்றன. இவ்வாறு பலவற்றி லிருந்து ஒன்றகவும், ஒன்றிலிருந்து பலவாகவும் மாறுவதனல் இவை தோற்றம் பெறுகின்றன ; இவற்றின் வாழ்வு நீடிப்ப தில்லை; ஆனல் தொடர்ந்து இவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் வரை இவை இருப்பு வட்டத்திலிருந்து அகற்றப்படாது இருந்து வரும்.
(27) கோளமாயும் வட்டமாயும், தனது வட்டமான தனிமையிற் களித்துக்கொண்டும் இருப்பதான இசைவு, மிகவும் நெருக்க மாகக் கடவுளை அணைத்திருப்பதனல் அங்கே (அந்தக்கோணத்தி னுள்ளே) சூரியனது வேகத்துடன் அசையும் அங்கங்களையோ வலிமையும் அடர்த்தியான வளர்ச்சி கொண்டதுமான நிலத் தையோ கடலையோ அடையாளம் கண்டு கொள்ள முடியா திருக்கிறது. R. P. 167.
(27 a) அவனுடைய அங்கங்களிலே முரண்பாடோ, வேண்டத்தகாத பூசலோ இல்லை.
(28) ஆனல் அவன் எல்லாப் பக்கங்களிலும் எல்லையற்ற சம அளவுடையவனுகவும் கோளமாயும், வட்டமாயும், தனது வட்ட மான தனிமையிற் களிப்பவனகவும் இருந்தான்.
(29) அவனது முதுகிலிருந்து இரு கிளைகள் வெளிவருவதில்லை : அவனுக்குப் பாதங்களோ, வேகமான முழங்கால்களோ அல்லது வேறு எந்தப் பயன்தரு உறுப்போ இல்லை. ஆனல் அவன் கோளமாயும் எல்லாப்பக்கங்களிலும் சம அளவினனயும் இருந் தான்.
(30, 31) அந்த வன்மையான உறுதிமொழியின்படி தமக்கென விதிக் கப்பட்ட காலம் முதிர்ந்து வந்தபோது கடவுளின் உறுப்புக்களில் பூசல் மிகுந்து அப்பூசல் தனது உரிமைகளைக் கேட்க முற்பட்டது. . . கடவுளின் உறுப்புக்கள் யாவும் அப்போது ஒன்றன்பின் ஒன்ருக அதிர்ந்தன. R. P. 167.
(32) அந்த இணைப்பினல் இருபொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 22.
(33) அத்திமரத்தின்பால் வெண்மையான பாலைக் கட்டி இறுக் குவதுபோல. . . . . . . . . 0 '0 s s a a a
(34) தண்ணிரால் மாவைக்கட்டி யாக்குவதுபோல. . . . .
(35, 36)
இனி நான் இதுவரை நடந்த கவிதைகளின் வழியே திரும்பி அடியெடுத்து வைத்து, இது வரை நான் கூறியவற்றிலிருந்து புதிய கூற்றுக்களை வெளிக்கொணர்வேன். சுழியின் மிகவும் ஆழமான அடிவரைக்கும் பூசல் வீழ்ந்து, சுழியின் மத்தி வரைக்கும் காதல் வந்து விடும்போது அதிலே எல்லாப் பொருள்களும் ஒன்றகவே இருப்பதற்காக ஒன்று சேர்கின்றன; யாவும் ஒரே நேரத்தில் வராது தமக்கிசைந்தவாறு வெவ் வேறு பகுதிகளிலிருந்து வருகின்றன. அவை கலக்கும்போது பூசல் கடைசி எல்லைநிலை வரைக்கும் விலகிச் செல்லத் தொடங் கியது. ஆனல் இன்னும் முற்றக வீழ்ச்சியடையாத பூசலின் பிடியிலிருந்த பல பொருள்கள், கலக்கும் பொருள்களினி டையே, இன்னும் கலவாது எஞ்சியிருந்தன ; ஏனெனில் பூசல் இன்னும் முற்றக ஓய்ந்து போகாமலும், வட்டத்தின் வெளியே யுள்ள எல்லைவரைக்கும் போகாமலும் இருந்தது. அதில் இன்னமும் கொஞ்சம் உள்ளே இருந்தது. அத்துடன் முழுமை என்பதன் உறுப்பிலிருந்து கொஞ்சம் எற்கெனவே வெளி வந்திருந்தது. பூசல் இவ்வாறு வெளியேறிக்கொண்டிருக்கும போது, அழியாத தன்மையுடைய காதல் ஒரு மென்மையான ஒடையென உள்ளே வந்துகொண்டிருந்தது. உடனே முன்பு அழியாதனவாயிருந்தன வெல்லாம் அழியுந் தன்மையு டையனவாக மாறின; முன்பு கலவாதிருந்தவை யெல்லாம் கலந்தன ; ஒவ்வொன்றும் தனது வழியை விட்டு விலகிற்று. அவை அவ்வாறு கலந்தபோது எண்ணற்ற அழியும் தன்ழை யுடைய பொருள்கள் பல்வேறு வகையான உருவங்களுடன் தோன்றி வெளியே பரவின. இவை யாவும் பார்ப்பதற்கு வியக்கத்தக்க அழகுடையவையாயிருந்தன. R. P. 169.
(37)
நிலம் தனது பொருட்திரளைத் தானே கூட்டிக்கொள்கிறது ;
காற்றுத் தனது அளவைத் தானே கூட்டிக்கொள்கிறது.

Page 119
222 ஆதி கிரேக்க மெய்யியல்
(38) சூரியனின் தொடக்கத்தையும், நிலம், பொங்கும் கடல், ஈர மான வாயு ஆகிய எல்லாப் பொருள்களும், இவற்றைச் சுற் றித் தனது வளையத்தை நெருக்கமாக இடும் பெரியவனன வளி யும், இப்போது நாம் காணும் பொருள்கள் யாவும் எங்கிருந்து பிறந்தன என்பதையும் நான் உனக்கு முதலில் சொல்வேன். R. P. 170 a.
(39) முழுமையின் சிறியவோர் பகுதியையே கண்டவர்களாகிய மனி தர்களது வாயிலிருந்து பிறந்த அறிவற்ற கூற்றின்படி-நிலத் தின் ஆழமும், அகன்ற காற்றும் எல்லையற்றனவாய் இருந்
5íTốo. . . .1.; R. P. 103 b.
(40) சடுதியாகத்திரும்பும் சூரியனும் சாந்தமான நிலவும்.
(41) அது (சூரியவெளிச்சம்) ஒன்றுசேர்க்கப்பட்டு அகன்ற வான (மண்டலத்தைச் சுற்றி வட்டமிடுகின்றது.
(42) அவள் தனக்கு மேலாக அவன் போகும்போது அவனது கதிர்களைத் தடைசெய்து வெளிறிய முகத்தையுடைய சந்திர ன்ளேவு அகலமுடைய நிலப்பகுதியின் மீது நிழலொன்றைப் படிய விடுகிருள்.
(43) அபபடியாயினும் சூரியனது கதிர் சந்திரனது அகன்ற வலிய வட்டத்தில் மோதியதும் உடனே வானத்தைத் தொடும் பொருட்டு ஓடி மீள்கிறது.
(44) கொஞ்சமும் கலவரப்படாத முகத்துடன் அது ஒலிம்போசுக்கு விரைந்து பாய்கிறது. R. P. 170.
(45, 46) சக்கரத்தின் அச்சுக்குடம் அதி தூரத்திலுள்ள இலட்சியத்தை நோக்கிச் சுழல்வதுபோல் நிலத்தைச் சுற்றி வட்டமான இரவல் ஒளியொன்று சுழல்கிறது.
* இக்கூற்று செனேபனிசுவினுடையது என அரித்தோதில் குறிப்பிட்டுள் ளார். இரண்டாம் அத்தியாயத்தில் பார்க்க:

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 223
(47) எனெனில் அவள் எதிரேயுள்ள வீறர்ந்த சூரியனது புனித வட்டத்தை நோக்குகிருள்.
(48)
வெளிச்சத்திற்கு எதிராக வருவதன் மூலம் பூமியே இரவை உண்டுபண்ணுகிறது.
(49) தனிமையான, பார்வையற்ற இரவு.
(50) கடும் மழையும் காற்றும் ஐரிசுவினல் கடலிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.
(51) வேகமாக மேலெழும் (தீ)
(52) நிலத்திற்குக் கீழே தீ பல இடங்களில் எரிகின்றது. R. P. 171 a.
(53) பெரும்பாலும் வேறுவழியிற் செல்வதானலும், அந்த நேரத் தில் அது (வளி) அவ்வழியில் ஓடிக்கொண்டிருந்தது. R. P 171 a.
(54)
வளி தனது நீண்ட வேர்களினல் நிலத்தில் பதிந்தது. R. P. 171 a.
. (55) நிலத்தின் வியர்வையான கடல். R. P. 170 b.
(56) சூரியனது கதிர்களின் தாக்கத்தினுல் உப்பு கட்டியாக்கப்பட்டது
(57)
அதன்மீது (நிலத்தின்மீது) கழுத்தில்லாத பல தலைகள் முளைத் தெழுந்தன ; தோள்களில்லாது வெறுமையான கைகளும் நெற்றியில்லாத கண்களும் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்
5607. R. P. 173 a.

Page 120
224 ஆதி கிரேக்க மெய்யியல்
(58) தனிமையான உறுப்புக்கள் பிணைப்பை நாடி அலைந்தன.
(59) ஆனல் தெய்வத்தன்மையோடு தெய்வத்தன்மை மேலும் மேலும் கலக்கும்போது இப்பொருள்கள் தாம் அவ்வப்போது இருந்தவாறு இணைந்து கொண்டன. அத்துடன் இவற்றை விட மேலும் பல பொருள்களும் தொடர்ந்து தோன்றின.
(60) எண்ணிறந்த கைகளையுடைய அருவருக்கத்தக்க பிராணிகள்.
(61) மார்பும் முகமும் வெவ்வேறு திசைகளைப் பார்த்துக்கொண்டி ருப்பது போல உள்ள பல பிராணிகள் பிறந்தன ; சில மனித முகங்களோடு பிறந்த எருதுகளின் கன்றுகள் ; வேறு சில எருது முகங்களோடு பிறந்த மனிதக் குழந்தைகள் ; மற்றும் மலடான பாகங்களைக் கொண்டவையும் ஆணினது இயற்கையும் பெண்ணினது இயற்கையும் கலந்துள்ளனவையுமான பிராணி saiT. R. P. 173 b.
(62) ஆண்களது கங்குற்றுளிர்களையும் கண்ணிர் விடும் பெண்டிர் களையும் தீ தான் பிரிந்தபேர்து தோற்றுவித்தது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக; ஏனெனில் நான் கூறும் கதை தொடர் பற்றதோ அல்லது அறியாமையினல் கூறப்படுவதொன்றே அல்ல. பூரணத்துவம் கொண்டவையும் நீரும் நெருப்பும் அடங்கினவையுமான உருவங்கள் நிலத்திலிருந்து தோன்றின. தனது இயல்பு கொண்டவற்றை அணுகும் பொருட்டு, தீ இவற்றை மேலே அனுப்பியது. இவற்றுக்கு அப்போதும் மனி தர்களுக்குப் பொருத்தமான இயல்புகளோ, குரலோ, அல்லது இனிய உறுப்புருவங்களோ எற்படவில்லை. R. P. 173 c.
(63) . . . . . . . . .ஆனல் (குழந்தையின்) உறுப்புப் பொருள் இவர் களுக்கிடையே பிரிக்கப்பட்டிருந்தது, ஒருபகுதி மனிதனது உட லில் (இன்னெருபகுதி பெண்ணின் உடலில்).
(64) பார்வை மூலம் அவனுக்கு நினைவூட்டியவாறு அவனிடத்தே ஆசை வந்து படிந்தது.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 225
(65)
SSSSLS SSSS SSSL S SS SLSS SSS0SL SSSLSS SSSSSLSSSSSSSS அது தூய்மையாக்கப்பட்ட பகுதிகளிலே வார்க் கப்பட்டது ; பின்னர் அது குளிரைச் சந்தித்தபோது அதனிட மிருந்து பெண்கள் தோன்றினர்.
(66) அபுருெடைற்றின் பகுக்கப்பட்ட பசும்புல் வெளிகள்.
(67) எனெனில் கருப்பை தனது சூடான பகுதிகளிலிருந்து ஆண் களைத் தோற்றுவிக்கிறது. அதனற்றன் ஆண்கள் நிறங்குறைந் தவர்களாயும் ஆண்மையுடையவர்களாயும் முரட்டு மயிர்நிறைந் தவர்களாகவும் இருக்கிருர்கள்.
(68)
எட்டாவது மாதத்தின் 10 ஆவது நாளில் அது அழுகிய பொரு ளாக மாறுகிறது.
(69) இருமுறை கருத்தரிக்கும்.?
(70) செம்மறியாட்டுத் தோல்?.
(71)
அபுறெடைற்றினல் ஒன்று சேர்க்கப்பட்டவையும், நீர்,நிலம்,
ஆகாயம், தீ என்பனவற்றின் சேர்க்கையினல் உண்டானவை
யுமான இப்பொருள்களின் நிறங்களும் உருவங்களும் எப்படித்
தோன்றின என்பது பற்றி உனக்கு முற்ருக விளங்காதிருக்கு
மாணல். -
(72)
உயரமான மரங்களும் கடலில் உள்ள மீன்களும் எவ்வாறு.
(73) நிலத்தை நீரில் நனைத்தபின், சூட்டை உண்டாக்கிய கைப் பிரிசு அதைக் கடும் தீயிலிட்டுக் கடினமாக்கையில் . R. P. 71
இரத்தம் பழுதடைவதனலேயே பால் உண்டாகிறதென எம்பிடோக் கிளிசு கருதினரென்பது அரித்தோதிலினல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
* 7 ஆம் 9 ஆம் மாதங்களில் நடைபெறும் பிறப்புக்களைக் குறித்து, பெண் கள்பற்றிக் கூறியது.
* கருப்பிண்டத்தைச் சுற்றியுள்ள சவ்வு.

Page 121
226 ஆதி கிரேக்க மெய்யியல்
(74) வளமார்ந்த பாடாத மீனினத்தை நடாத்திச்சென்று.
(75) கைப்பிரிசுவின் கரங்களிலிருந்து இத்தகைய உரமற்ற தன் மையைப்பெற்று உட்பாகம் அடர்த்தியாகவும் வெளிப்பாகம் அடர்த்திக் குறைவாகவும் உள்ள அப்பொருள்கள்.
(76) நன்ருகச் சுடப்பட்டவையான கடல்வாழ் கிளிஞ்சல்களிலும், கடல் நத்தைகளிலும், கல்போன்ற தோலையுடைய ஆமைகளி லும் நீ இவ்வியல்பைக் காண்பாய். இவற்றில் நிலத்தாலான பகுதி தோலின் அதிமேற்பகுதியில் இருப்பதையும் காண்பாய்.
(77-78) என்றும் பசுமையாயிருக்கும் மரங்களை ஆண்டு முழுவதும் திர ளான பழங்கள் கொழிக்கச் செய்வது ஈரலிப்பே.
(79) எல்லாவற்றிற்கும் முதலில், ஒலிவ மரங்களில் முட்டைகள் தோன்றின.
(80) அக்காரணத்தினற்றன் மாதுளங்கனிகள் காலந்தாழ்த்தித் தோன்றுவனவாகவும் அப்பிள்கள் சாறு நிரம்பியவையாகவும் இருக்கின்றன.
(81) மரத்திலிருந்து அழுகிப்போய், பட்டையிலிருந்து வரும் நீரே ഈ ബ്.
(82)
மயிரும், இலைகளும், பறவைகளின் தடித்த இறகுகளும், வலிய உறுப்புக்களில் வளரும் செதில்களும்-இவை யாவும் ஒரு பொருளே.
(83) ஆனல் முள்ளெலியின் முதுகுப்புறத்தில் சிலிர்த்துக்கொண் டிருக்கும் அதனது மயிர்கள், கூரிய நுனிகளையுடையன.
(84) புயல் நேரத்தில் இரவில் வெளியே செல்ல நினைப்பவன். விளக்கொன்றை, எரியும் நெருப்பான தீச்சுடரைத், தயார்

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 227
செய்து, எவ்வகைக் காற்றையும் சிதறவைத்துத் தீச்சுடரைக் காப்பாற்றவல்ல கொம்புச் சட்டங்களையும் தனது விளக்கில் பொருத்திக்கொள்ளுகிறன். ஆனல் யாவற்றிற்குமூடாக ஒளி வெளியே பாய்கிறது. அதனுடைய தூய்மைமிக்க கதிர்கள் தவருது வழிநெடுகிலும் பிரகாசமூட்டுகின்றன. அதே போல அவள் (காதல்) அந்த மூல நெருப்பை, வட்டக் கண்மணியை, அகப்படுத்தி, அதிசயமான எத்தனையோ வழிகளடர்ந்த மென் தோல்களாலும் மென்மையான இழையங்களாலும் அதனைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிருள். வட்டக்கண்மணியைச் சுற்றி யுள்ள ஆழமான நீரை இந்த அதிசயமான வழிகள் வெளி யேறவிடாது வைத்திருக்கின்றன. ஆனல் தீயின் தூய்மைமிக்க கதிர்களை அவை செல்ல அனுமதிக்கின்றன. R. P. 177b.
(85) ஆனல் இந்த (கண்ணின்) மென்மையான தீச்சுடரில் நிலம் மிகக் குறைவாகவே உள்ளது.
(86) தெய்வீகத் தன்மையுடைய அபுருெடைற்று இவற்றிலிருந்து சோர்வில்லாத கண்களை உருவாக்கினள்.
(87) காதலினல் ஆன ஆணிகளால் அபுருெடைற்று இவற்றை ஒன் ருக இணைத்தாள்.
(88) இரு கண்களும் சேர்ந்தே ஒரு காட்சியை உண்டு பண்ணு கின்றன.
(89) உண்டாகியுள்ள பொருள்கள் யாவற்றிலிருந்தும் வெளியொ ழுக்குக்கள் வெளிப்படுகின்றன என்பதை அறிந்து கொள். R. P. 166 h.
(90) இப்படியே இனிமை, இனிமையைப் பற்றிக்கொள்கிறது. கசப்பானது கசப்பானதிடம் செல்கிறது. அமிலம் அமிலத்தை அடைகிறது. சூடு சூட்டுடன் சேர்கிறது. R. P. 166 h.
(91)
நீர் உணவனுடன் நன்றகச் சேர்கிறது. ஆனல் அது எண் ணெயுடன் கலப்பதில்லை.

Page 122
228 ஆதி கிரேக்க மெய்யியல்
(92) தகரத்தோடு கலந்த செம்பு.
(93) சாம்பல் நிற நார்த்துணியுடன் சிவப்புச் சாயத்தின் மலர்ச்சி கலந்து விடுகிறது.
(94) ஆற்றின் அடியிலிருக்கும் கறுத்தநிறம் நிழலிலிருந்து உண் டாகிறது. குகைகளிலும் இவ்வாறே.
(95) கைப்பிரிசினுடைய கைகளில்தான் அவை (கண்கள்) முதலில் ஒன்ருக வளர்ந்தனவாகையால்.
(96) பிரகாசமுடைய நெசுத்திசுவின் எட்டுப் பகுதிகளில் இருபகு திகளையும் எபாயுசுத்தோசுவின் நான்கையும் காருண்ணியம் மிக்க நிலம் தனது அகண்ட புனல்களில் எற்றுக்கொண்டது. விகிதமுறை என்னும் சீமெந்தால் தெய்வீகமாகப் பொருத்தப் பட்ட வெண்மையான எலும்புகள் இவ்வாறு தோன்றின.
R. P. 175.
(97) முதுகெலும்பு (உடைந்திருந்தது)
(98) அபுருெடைற்றின் குறைவற்ற துறைகளில் தங்கும் நிலம் இவற்றுடன் கிட்டத்தட்டச் சமவீதங்களில் கலக்கிறது. எபாயுசுத் தோசுடனும் நீருடனும், பிரகாசமான வளியுடனும்-அதில் சிறிது கூடுதலாக, அல்லது அவற்றில் குறைவாகவும் அதில் கூடுதலாகவும். இவற்றிலிருந்து தான் இரத்தமும் பலவகை யான தசைகளும் தோன்றின. R. P. 175 .ே
(99) அந்த மணி . . . . . . (காதின்) தசையுடைய முளை.
(100) இவ்வாறே எல்லாப் பொருள்களும் காற்றை உள்ளே இழுத்து மீண்டும் வெளியே விடுகின்றன. எல்லோருடைய உடலின் மேற்பரப்புக்களிலும் இரத்தமில்லாத தசைக்குழாய்கள் இருக் கின்றன ; இக்குழாய்களின் வாயிலில் தோலின் பரப்பு மிக

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 229
வும் நெருக்கமான நுண்ருெளைகளுடையதாய் இருத்தலினல் இரத்தம் வெளியே வராமலிருக்கையில் காற்று உட்புகுதலும் வெளியேறுதலும் சாத்தியமாயிருக்கிறது. இவற்றிலிருந்து செறிவு குறைந்த இரத்தம் நீங்கும்போது குமிழியிடும் காற்று வேகத்துடன் உள்ளே பாய்கிறது. இரத்தம் குழாய்க்குள் திரும்பி வரும்போது காற்று வெளியேற்றப்படுகிறது. பிரகாச முள்ள பித்தளையால் செய்யப்பட்ட நீர்க்கடிகாரத்தை வைத் ருக்கும் பெண்ணெருத்தி தனது அழகிய கைகளினல் அதன் வாயைப் பற்றிக்கொண்டு, அதனை நீரில் அமிழ்த்தும்போது உள்ளே அடர்ந்திருக்கும் காற்று கடிகாரத்தின் நெருக்கமான நுண்ருெளேகளில் ஆழ்த்திக் கொண்டிருப்பதால் நீர் உள்ளே செல்வதில்லை. ஆனல் பெண் தனது கைகளைக் கடிகாரத் தின் வாயிலிருந்து எடுத்ததும் காற்றுவெளியே செல்வதும் தண்ணீர் உள்ளே வருதலும் சாத்தியமாகிறது. இதேபோலப் பித்தளைப் பாத்திரத்தில் நீர் நிரம்பியிருக்கும்போது, வாயில் கையால் அடைக்கப்பட்டிருந்தால், வெளியிலிருந்து உள்ளே வரமுயலும் காற்று, பரப்பை அழுத்துவதன் மூலம் நீரை வெளியேவராது பாத்திரத்தின் கழுத்தளவிலேயே நிறுத்தி வைக்கிறது. பெண் கையை விட்டதும் முன்பு நடந்ததற்கு மாறுபாடாகக் காற்று உள்ளே பாய்தலும் அதற்கு இடமளிக்கும் பொருட்டுச் சம அளவான நீர் வெளியேறுதலும் நடைபெறு கின்றன. இதே போலத்தான் உறுப்புக்களுக்கூடாகப் பாயும் செறிவு குறைந்த இரத்தம் உட்பகுதிகளுக்குப் பாயும்போது காற்றுவெள்ளம் தசைக்குழாய்களுக்குள்ளே பாய்கிறது. ஆனல் இரத்தம் மீண்டும் குழாய்களுக்குள் பாயும்போது காற்றுச் சம அளவில் வெளியே செல்கிறது.
(101) மென்மையான புல்லில் விலங்குகளின் பாதங்கள் விடும் மணத்தையும், அவற்றின் உறுப்புக்களின் துகள்களையும் தமது நாசித்துவாரங்களினல் மோப்பம் பிடிக்கும் (நாய்கள்).
(102)
ஒவ்வொருவரும் சுவாசத்திலும், மணத்திலும் தமது பங்கைப் பெறுகின்றனர்.
(103-104) காலதேவதையின் தீர்மானத்திலேயே எல்லாப் பொருள் களும் சிந்தித்தன. . . . . . தமது வீழ்ச்சிக்காலத்தில் மிக அபூர்வ
மான பொருள்கள் ஒன்று சேர்ந்ததைப் போல.

Page 123
230 ஆதி கிரேக்க மெய்யியல்
(105) எதிர்த்திசைகளில் ஒடிக்கொண்டிருக்கும் இரத்தக் கடலில்வா ழும் (இருதயம்), மனிதர்களால் சிந்தனையென அழைக்கப்படு வதின் பிரதான நிலையம் ; ஏனெனில் இருதயத்தைச் சுற்றிவர உள்ள இரத்தமே மனிதர்களது சிந்தனை. R. P. 1788.
(106) அவர்களுக்கு முன்னல் என்ன உள்ளதோ, அதற்கேற்பவே மனிதர்களது அறிவு வளர்கிறதாகையால் .. , , , , R. P. 177.
(107)
s இவற்றிலிருந்தே எல்லாப் பொருள்களும் உருவாக்கப்பட்டு இணைக்கப்படுகின்றனவாதலாலும், இவற்றின் மூலமே மனி தர் சிந்தித்து, இன்ப துன்பங்கள்ை உணர்கின்றனராதலாலும். R. P. 178.
(108) . . . .
அவர்கள் வேறுபட்ட பண்புடையோராய் இருக்குமளவிற்கு "அவர்களின் மனங்களில் (கனவுகளில்) தோன்றும் சிந்தனை களும் வேறுபட்டவையாய் உள்ளன. R. P. 1773,
(109)
நிலத்தினலேயே நாம் நிலத்தைப் பார்க்கிறேம். நீரை நீராலும் பிரகாசமான வானத்தை வானத்தாலும், அழிக்கும் நெருப்பை நெருப்பினலும் நாம் பார்க்கிருேம். காதலினல் காதலையும், துன்பமான வெறுப்பினல் துன்பத்தையும் நாம் காண்கிருேம். R. P. 176.
(110)
இவற்றை உறுதியாக உனது மனத்தில் இருத்தி, பிழை யின்றிக் கவனத்துடனும் கூர்மையாகவும் நீ சிந்திப்பாயானல், உனது வாழ்நாள் முழுவதும் இவற்றைப் பெருமளவில் பெறு வதுடன் இவற்றிலிருந்து வேறு பல பொருள்களேயும் நீ அடைவாய். ஒவ்வொரு மனிதனதும் உண்மையான இயல்பின் நிலையமான இருதயத்தில் இவை தாமாகவே வளரும் தன்மை யுடையன. ஆனல் சாதாரணமாக மனிதர்களது முக்கியமான சிந்தனைகளைப் பல்லாயிரம் வீண் எண்ணங்கள் வந்து கலைத் துவிடுவதைப் போல நீயும் வேறுவகையான பொருள்களைப் பின்பற்ற முற்பட்டாயானல், இவை காலப்போக்கில் விரைவில்
l இது கனவுகளையே குறிப்பிடுகிறது எனச் சிம்பிளியசுவின் மூலம் அறிகிருேம்.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 23.
உன்னை விட்டு அகன்றுவிடும் ; ஏனெனில் அவை தமது இனத்தை மீண்டும் அடையவே ஆவலுடையனவாய் இருக்கும் ; எல்லாப் பொருள்களுக்கும் ஓரளவு சிந்தனையும் அறிவும் உள்ளன என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்.
(111)
முதுமையிலிருந்தும், பிணிகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கும் மருந்துகள் யாவற்றையும் நீ தெரிந்துகொள்வாய் ; ஏனெ னில் உனக்காகவே நான் இவையெல்லாவற்றையும் பெற்றுத் தருவேன். வயல்களைப் பாழாக்கவும், பூமியைத் துடைத் தழிக்கவும் தொடர்ந்தெழுந்து வரும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவாய். நீ விரும்பும் போது அவற்றை மீண்டும் வேகத்துடன் வீசச் செய்வாய். இருண்ட மழைக்காலத்தின் பின்னர் மனிதர் விரும்பும் வறட்சியை நீ உண்டுப்ண்ணுவாய். பின்னர் கோடைகால வறட்சியை, மரங்களுக்கு ஊட்டமாகும் படி வானத்திலிருந்து பொழியும் தாரையாக மாற்றுவாய். எடிசு என்னும் தென்புல உலகிலிருந்து இறந்த மனிதனது உயிரையும் நீ மீட்டு வருவாய். -
தூய்மையாக்கங்கள்
(112) அற்பத்தனத்தில் பயிற்சி குறைந்தோரது இருப்பிடமும், அந் நியர்களுக்குக் கண்ணியமான தங்குமிடமும் நல்வாழ்வின் நிலையமுமாய், அக்கிரகாசின் மஞ்சட்குன்றைப் பார்த்தவண் ணம், அரணுடன் அமைந்திருக்கும் மாநகரத்தில் வசிப்பவர் களே, நண்பர்களே, யாவரும் வருகை தாருங்கள். நான் இப்போது அழியுந்தன்மையுடைய மானுடனல்லன். மயிர்க் கொடிகளினலும், மலர் மாலைகளினலும் அலங்கரிக்கப்படும், தகுதியுடையோரால் கவுரவிக்கப்படும், இறப்பில்லாத தேவன கிய நான் உங்களிடையே நடமாடுகிறேன். ஆண்களும் பெண் களும் அடங்கிய எனது கூட்டத்தினருடன் நான் செல்வம் கொழிக்கும் நகரங்களுக்குள் செல்லும்போது உடனே எனக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது. எண்ணற்ற கூட்டத்தினராய் அவர்கள் எனக்குப் பின்னே வந்து, இலாபம் பெறும் வழி என்னவென என்னிடம் கேட்கின்றனர் ; சிலர் எதிர்காலம் பற்றிய குறியுரை கேட்டு வருகின்றனர். வேறுசிலர் பல வகையான நோய்களினதும் துன்பத்தை அனுபவித்தபின் என்னிடம் நோய் தீர்க்கும் வார்த்தைகளைக் கேட்டு இறைஞ் e;6667paotif. R. P. 162 f.

Page 124
232 . ஆதி கிரேக்க மெய்யியல்
(113)
அழியுந்தன்மையுடையவனும் அற்பகால வாழ்வுடையவனு ls)ff607 மனிதனிலும், நான் அதிக சத்தியுடையவன் என்பதைப் பெரிதாகக் கருதுவது போல, நான் இதை எல்லாம் என் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் ?
(114)
நண்பர்களே, நான் கூறப்போகும் வார்த்தைகளில் உண்மை யிருக்கிறது என்று எனக்கு நன்றகத் தெரியும். ஆனல் தமது ஆன்மாக்களுடன் பிணைக்கப்பட்ட நம்பிக்கைகளைத் தகர்க் கக்கூடிய இவ்வுண்மைகளை நம்புவது மனிதர்களுக்குச் சிரம மாயிருக்கும்.
(115)
தேவர்களது பழமைமிக்க கோட்பாடாயுள்ளதும் மிகுந்த சத்தியங்களுக்குக் கட்டுப்பட்டதும் கட்டாயமுடையதுமான உறுதி மொழி யொன்றுளது. அஃது எவ்வாறெனின் : குறுகிய வாழ் வையுடையனவான தேவதைகள் பாவவழியிற்சென்று தங்கள் கைகளை இரத்தத்தினற் கறைப்படுத்திக் கொண்டால் அல்லது பூசலைத் தொடர்ந்து தம்மைப் பொய்மைக்குட்படுத்திக் கொண் டால், அவை தாம் வாழும் சுவர்க்கத்தினின்றும் நீங்கி, முப்பதாயிரம் ஆண்டுகள் வரை அலைதல் வேண்டும். காலம் முழுவதும், அழியும் உடல்களை மீண்டும் மீண்டும் பெற்று, துயர்மிகுந்த வெவ்வேறு வாழ்க்கைகளை அனுபவித்தல் வேண் டும். ஏனெனில் வலிமை பொருந்திய காற்று அவனைக் கடலுக்குத் துரத்துகின்றது. கடலோ, அவனை வரண்ட நிலத்தில் உமிழ்ந்து விடுகிறது. சுவாலையிடும் கதிரவனது கதிர்களின் உள்ளே அவனை நிலம் எறிந்துவிடுகிறது. சூரியன் அவனை மீண்டும் காற்றின் சுழலுக்குள் எறிந்துவிடுகின்றன். ஒன்று இன்னென்றிலிருந்து அவனைப் பெற்றுக் கொள்கிறது. ஆனல் யாவும் அவனை விலக்குகின்றன. நான் இப்போது இவர்களில் ஒருவன். பூசலில் எனது நம்பிக்கையை வைத்தது காரண மாக இப்போது கடவுள்களினிடத்திலிருந்து நீங்கி அலைபவ கைவும், இருப்பிடமிழந்தவனுகவும் நான் வருந்துகிறேன்.
R. P. 8.
(116) சகிக்க முடியாத மாருநியதியைக் காரிசு வெறுக்கிருன்.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 233
(117) ஏனெனில் நான் இதற்கு முன்பு சிறுவனகவும், சிறுமியாக வும், ஒர் புதராகவும் பறவையாகவும், கடலில் வாழும் ஊமை மீனகவும் இருந்திருக்கிறேன். R. P. 182.
(118) எனக்குப் பழக்கமில்லாத தரையைக் கண்டதும் நான்தேம் SuupG356ö7. R. P. 182.
(119) எத்தகைய கெளரவமான நிலையிலிருந்து, எத்தனை இன் பத்தின் உச்சத்திலிருந்து வீழ்ச்சியடைந்து, நான் இங்கு பூமியில் மனிதர்களிடையே வாழ்கின்றேன் !
(120) நாம் இந்தக் கூரை சரிந்த குகையின் கீழே வந்துள்ளோம்.
(121) சாவும், சினமும், அழிவின் படைகளும் நிறைந்திருக்கும் துயர்மிகு நாடு . . . . . . . . ; வாட்டும் கொள்ளை நோய்களும்,
அழிவும் வெள்ளமும் ஏற்று என்னும் பசும்புல்வெளியில், இருளில் அலைகின்றன.
(122-123)
கிதோனியும், தூரப்பார்வையுள்ள ஈலியோப்பும், மாறுபாடும், சாந்த சுபாவமுள்ள இசைவும், கலிசுத்தோவும், அயுசுக்கிரேயு வும், வேகமும், தாமதமும், இனிமையான உண்மையும், கருமையான மயிரையுடைய தெளிவின்மையும், பிறப்பும், அழிவும், விழிப்பும் நித்திரையும், இயக்கமும், இயக்கமின் மையும், முடிசூடிய மாட்சிமையும் அற்பத்தனமும் அமைதியும் ஒசையும் இவை யாவும் அங்கிருந்தன?. R. P. 182 a.
(124)
பரிதாபத்திற்குரியதும் அருளில்லாது துயரடைவதுமான அழி யும் (மனித) வர்க்கமே, இத்தகைய பூசல்களிலிருந்தும், புலம் பல்களிலிருந்துமே நீ பிறந்தாய் :
" போபைரியின்படி ஆன்மா முதலில் அழைத்துக்கொண்டு வந்த * சத்தி ”களால் கூறப்பட்டவைகளே இவ்வார்த்தைகள்.
*. இலியத்துவில் உள்ள “அரமகளிர் வரிசை "யை இப்பகுதி மிகவும் ஒத்துள்ளது.

Page 125
234 ஆதி கிரேக்க மெய்யியல்
(125) உயிருள்ள பிராணிகளிலிருந்து அவற்றின் உருவங்களை மாற்றி இறந்தனவற்றை அவன் உண்டாக்கினன்.
(126)
தசையாலான ஒரு விநோதமான ஆடையால் அப்பெண் தெய் வம் அவர்களுக்கு உடையணிவித்தாள்.
(127) மிருகங்களுள் அவர்கள் தரையில் தமது படுக்கையையும் மலைகளில் தமது குகைகளையும் அமைக்கும் சிங்கங்களாகின் றனர்; அடர்த்தியான இலைகளுள்ள மரங்களுள் அவர்கள் புன்னைகளாகின்றனர். 181.
(128) கைப்பிரிசு இராணியே யொழிய, எரிசுவோ, கைட்ொயு மோசுவோ சியசு மன்னனே, குரோனசுவோ அல்லது பொசெயு தொனே அவர்களுக்குத் தெய்வமாக இருக்கவில்லை. அவ ளின் அருளைப்பெறும்பொருட்டுப் புனிதபொருள்களையும், வர் ணம் பூசிய உருவங்களையும் துாய சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றையும் காணிக்கையாக அளித்து, சிவந்த தேனைக் குடிதேறலாக நிலத்தில் வார்த்தனர். படையல் மேடையில் எருதின் இரத்த நாற்றம் வீசவில்லை. ஏனெனில் அதன் உயிரைப் பறித்தபின், அதனுடைய அழகிய உறுப்புக்களை உண்பது மிகவும் இழிவான செயலென அவர்கள் கருதினர். R.P. 184.
(129) ஆழ்ந்த அறிவச் செல்வத்தையும், எல்லாவகையான திறமை களையும் பெற்றவனும், அபூர்வமான கல்வியுடையவனுமான ஒருவன் அவர்களிடையே இருந்தான். அவன் தனது மனத்தால் முயற்சி செய்தபோதெல்லாம், சாதாரணமக்கள் பத்து அல்லது இருபது முறை வாழ்ந்து அறியக் கூடிய அனைத்தையும் முற்றக அறியும் ஆற்றல் உடையவனுயிருந்தான்?. V
1. பொற்காலத்தே வாழ்ந்தோர்.
* இவ்வடிகள் பைதாகரசுவால் எழுதப்பட்டவை எனத் திமாயோசு ஏற் கெனவே கூறியிருந்தார். சிலர் இக்கவிதைகள் பார்மனைடிசுவால் இயற்றப்பட் டவை எனக் கூறினர் என்று இடையோசினிசு கூறியுள்ளபடியால் பெயர் எதுவும் தரப்படவில்லை யென்பது தெளிவு.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 235.
(130) மனிதரிடத்து மிருகங்கள், பறவைகள் ஆதிய யாவும் அடக் கமும் அமைதியான சுபாவமும் உடையனவாய் இருந்தன; எவ்விடத்தும் நட்புணர்ச்சியே நிலவியது. R.P. 1848.
(131) மிக அற்பமான ஆயுளையே உடையனவான இவற்றைப் பற்றிக் கூற நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு உதவ நீ நினைத் திருந்தாயானல், அழியா இயல்புடைய தேவதையே! ஒ கலி யோப்பியா 1 அருளுடைய தெய்வங்களைப் பற்றிய புனிதவார்த். தைகளை நான் கூறப்புகும்போதும் எனக்குதவ வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். R. P. 179.
(132) தெய்வீகமான அறிவுச் செல்வத்தை அடைந்தவன் அருள் பெற்றவன் ஆவான் ; தனது இதயத்தில் தெய்வங்களைப் பற்றிக் குறைவான அபிப்பிராயம் கொண்டவன் பரிதாபத்துக் குரியவன்.
(133) மனிதன் தனது இதயத்தில் நம்பிக்கை பெறும்பொருட்டு யாவற்றையும் கண்ணுல் காணவும், கைகளினல் தொட்டுப் பார்க்கவும் முயல்கிருன். ஆனல் கடவுளை எங்கள் கண்கள் முன்னிலையில் நிறுத்தவோ அல்லது கைகளினல் பற்றவோ, (1ԲւԳԱյՈՑl.
(134) ஏனெனில் அவரது உடலிலே மனிதத் தலையில்லை, தோள் களிலிருந்து பிரியும் இருகிளைகளோ, பாதங்களோ வேகமாய் இயங்கும் முழங்கால்களோ அல்லது உரோமமுடைய பாகங் களோ அவருக்கு இல்லை; உலக முழுவதிற் கூடாகவும் மின்ன லெனப் பாயும் சிந்தனைகளைக் கொண்ட வர்ணிக்க முடியாத வோர் புனிதமனமே அவர். R. P. 180.
(135) (இவை சிலருக்குச் சட்டபூர்வமானவையும் மற்றவர்களுக்குச் சட்ட விரோதமானவையும் அல்ல.) யாவருக்கும் உள்ளசட்ட மானது விரிந்திருக்கும் காற்றின்மீதும், விண்ணுலகின் எல்லை யற்ற ஒளிமீதும், எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. R. P. 183.

Page 126
236 ஆதி கிரேக்க மெய்யியல்
(136) இந்தக் குரூரமான கொலை வதையை நீங்கள் நிறுத்தமாட் டீர்களா ? இதயத்தில் சிறிதும் சிந்தனையின்றி நீங்கள் ஒரு வரை யொருவர் இரையாக்கிக்கொள்கிறீர்கள் என்பதை உங்க ளால் அறிய முடியவில்லையா? R. P. 184 b.
(137) வேற்றுருவிலிருக்கும் தனது சொந்த மகனைத் தந்தை தூக்கி, இறைவணக்கஞ் செய்து கொண்டே கொலை செய்கிருன். அறிவிழந்தபேதை கருணை வேண்டி இவர்கள் யாவரும் பலியிடுவோனிடம் விரைகையில் அவனே இவர்களது இறைஞ் சல்களுக்குச் செவிமடுக்காது யாவரையும் தனது மண்டபங்களில் வதைசெய்து தனது தீய விருந்தைத் தயார் செய்கிறன். இதே முறையில் மகன் தந்தையையும், பிள்ளைகள் தங்கள் தாயையும் பிடித்து உயிரைப் ப்றித்துத் தமது இனத்து மாமிசத்தை உண்கின்றனர். R. P. 184 b.
(138) பித்தளையினல் அவர்களது உயிரைப் போக்கி.
(139) என்னுடைய உதடுகளால், இவற்றை உண்ணும் தீச்செயல் களை நான் செய்வதற்கு முன்னர் இரக்கமற்ற மரணதினம் வந்து என்னை அழித்து விடவில்லையே அந்தோ ! R.P. 184 b. (140) புன்னை இலைகளை முற்ருக விலக்குவீராக.
(141)
இழிந்தவர்களே, மிகவும் இழிந்தவர்களே ! அவரையைத் தொடாதீர்கள்.
(142) ஐகிசு என்னும் கவசமணிந்த சியசுவின், கூரையுடன் கூடிய மாளிகையோ அல்லது. . . . . . இன் வீடோ அவனை ஒருபோ தும் அனுபவிக்க முடியாது.
(143)
கடினமான வெண்கலத்திலிருந்து வெளிப்படும் ஐந்து ஊற்றுக்களின் நீரிலும் உங்கள் கைகளைக் கழுவிக் கொள் @prišlaisGT. R. P. 184 c.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 237
(144) தீயன செய்யா நோன்பிரு. R. P. 184 c.
(145) இதனற்ருன் நீ மிகவும் தீய செயல்களினல் மனம் குழப் பமடைந்து, உனது ஆத்மாவிலிருந்து அருவருக்கத்தக்க துன்பச் சுமையை இறக்க முடியாதிருக்கின்றய.
(146-147) கடைசியில் அவர்கள், மனிதரிடையே கவிஞர்களாகவும், தீர்க் கதரிசிகளாகவும், வைத்தியர்களாகவும், அரசர்களாகவும் தோன் றுகின்றனர். அதன்பின்னர் மிகவும் கவுரவிக்கப்படும் கடவுளர் களாக உயர்ந்து அவர்களோடு சரிநிகர் சமானமாக உணவ ருந்தி, குளிர்காய்ந்து வாழ்வர். மனிதர்க்கியல்பான துயர்கள், தீங்குகள், ஊழ்வினை என்பவற்றிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றவராயிருப்பர். R. P. 181 c.
(148)
மனிதனைச் சூழ்ந்திருக்கும் நிலம். . . . . .
106. பூரணத்தைக் கண்டுவிட்டதாகக் கூறுபவர்களைப் பற்றி எம்பிடோக் எம்பிடோக்கிளிசு கோபத்துடன் தனது கவிதையின் முற்பகு கிளிசம்பார்ம தியில் (பகுதி 2) பேசுகிருர். இதை “விசர்’ என்றுகூடக் கூறு னைடிசும் கிருர் (பகுதி 4). பார்மனடிசுவைப் பற்றியே இவர் இவ்வாறு கரு தினர் என்பதில் ஐயமில்லை. ஆயினும் இவரை ஐயக்கொள்கை யினர் என்று கூற முடியாது: ஒவ்வொரு பொருளையும் அது தெளிவாகத் தென்படும் முறையில் நன்ருக விளங்கிக் கொள்ள முயலாது (பகுதி 4), பிரபஞ்சம் முழுவதற்குமே பூரண விளக்கம் தரும் கொள்கைகளைச் சிறிதும் சிந்தனையில்லாது இயற்ற முயல் வோரை அவர் இழித்துக் கூறினர். பார்மனைடிசுவைப் போல, நாம் புலனறிவை ஒதுக்கிவிடக் கூடாது என்பதே அவரது கருத் தாகும். ஆனல் எம்பிடோக்கிளிசும் யாவற்றையும் விளக்குவ தற்கான கொள்கையொன்றைப் புனைந்தார் என்பது எமக்கு விரைவில் தெரியவருகிறது. ஆனல் எம்பிடோக்கிளிசுவினது கொள்கை ஒருமைவாதமன்று.
பார்மனைடிசு, எரக்கிளேட்டசு ஆகிய இருவரது கொள்கை களையும் இணைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சியே எம்பி டோக்கிளிசின் கொள்கையெனப் பலர் கூறியுள்ளனர். ஆனல் எம்பிடோக்கிளிசின் வாதத்தில் எரக்கிளேட்டசுவின் கருத்துச் சாயைகளைக் காண்டல் சுலபமல்ல. ஈலிய கொள்கைகளுக்கும், புலன்களுக்குமிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த முனைந்த

Page 127
238 ஆதி கிரேக்க மெய்யியல்
கொள்கையென அதைக் கூறுவதே அதிக பொருத்தமான தெனத் தோன்றுகிறது. “ இருப்பது ’ உண்மையானதென்பதற் கும் அழியாத்தன்மையுடையதென்பதற்கும் ஈலிய மெய்யியற் சிந்தனையாளர் காட்டிய காரணங்களை எறக்குறைய அதே சொற் களில் எம்பிடோக்கிளிசு தருகிறர் (பகுதிகள் 11-15). “கோளம்" என்பது பற்றி அவர் கொண்டுள்ள கருத்து பார்மனைடிசுவின் உள்பொருள் வர்ணனையிலிருந்து பெறப்பட்டது போலத் தோன் றுகிறது. புலன்களால் அறியப்படும் உலகம் பற்றிய திரிபுக் காட்சியின் பின்னல் உள்ளது கோளமான, தொடர்பான, நித்தியமான அசைவற்ற பரப்புள்ள ஒரு “ பூரணம் ” எனப் பார்மனைடிசு கூறினர். இதிலிருந்தே எம்பிடோக்கிளிசு தமது கொள்கையை ஆரம்பிக்கிருர். பார்மனடிசு வர்ணிக்கும் கோளத்தை எற்றுக்கொண்டு, “ இதனிலிருந்து, எமது புல னுக்குத் தென்படும் உலகை எவ்வாறு விளக்குவது ?’ என அவர் தம்மைக் கேட்டுக்கொண்டார் போலத் தோன்றுகிறது. அசைவற்ற இப்பூரண்ப் பொருளில் இயக்கத்தை எவ்வாறு புகுத்தலாம் ? கோளத்தின் அசைவைக் கட்டாயம் மறுக்க வேண்டியிருந்தாலும் கோளத்தினுள்ளே முற்ருக இயக்கத்தை மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் பார்மனைடிசுவுக்கு இருக்க வில்லை. ஆனல் அவ்வியக்கத்தை அவர் அனுமதித்திருந்தாலும் அதனல் எவ்வித பயனும் எற்பட்டிருக்காது. கோளத்தின் எப்பகுதி நகர்ந்தாலும், வெற்றிடம் எதுவும் இல்லையாதலால் நகர்ந்த பொருளின் இடத்தை உடனே வேறு பொருள் வந்து நிரப்புதல் வேண்டும். புதிதாக அவ்விடத்துக்கு வரும் இப் பொருள் முற்றிலும் முன்பிருந்த பொருளின் குணங்களையே உடையதாயிருக்கும் ; ஏனெனில் “ இருப்பது ’ முழுவதும் ஒன்றே. ஆகவே அசைவின் பயனும், அசையாமையின் பயனும் எவ்வித வேற்றுமையுமின்றி ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனல் கோளப் பொருள் எவ்வித மாறுபாடுமில்லாத ஒரே. தன்மையுடைய பொருள் எனக் கொள்ளுதல் உண்மையில் அவசியம்தான ? அத்தகைய அவசியமெதுவும் இல்லையென் பது வெளிப்படை ; இருப்பது யாவும் ஒன்ருய் இருக்க வேண்டும் எனும் ஆய்வதிகமில்லாத பழைய கருத்தே இக்கொள்கைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஆயினும் எமது புலன்கள் எமக்குக் காட்டும் எண்ணிறந்த உருவங்களை நாம் முடிவான சத்துப்பொருள்கள் எனக் கருத முடியாது. அவற்றிற்குத் தமக்கென உறுதியான இயல்பு இல்லை என்பதுடன் அவை நிலையற்றனவாகவும் காணப்படுகின்றன (பகுதி 8). ஆகவே ஒரு
* பார்மனடிசுவின் 8 ஆம் பகுதியுடன் எம்பி. 27 ஆம் 28 ஆம் பகுதிகளை ஒப்பிடுக.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 239
வரம்புக்குட்பட்ட சிலவற்றை முடிவான சத்துப்பொருள் என நாம் கொள்ளுவதே சரியானதாகும். அப்படிச் கொள்வோ மாயின் “ இருப்பது ” பற்றிப் பார்மனைடிசு கூறிய யாவும் இப்பொருள்+ள் ஒவ்வொன்றுக்கும் பொருந்துமென நாம்-கூற லாம். அதன்பின்னர் இவை யாவும் ஒன்றுடனென்று கலத்த லினல் உண்டாவனவே நிலையற்ற பல்வேறு உருவங்களும் என நாம் இவற்றிற்கு விளக்கம் தரலாம். “ மூலகங்கள் ” என்னும் கருத்துக் கண்டிபிடிக்கப்பட்டதும், அவற்றிலிருந்து பிற பொருள்கள் உண்டாவதற்கான எற்பாடும் உடனடியாகத் தெரிய வந்தது. தனிப்பட்ட பொருள்களைப் பொறுத்தவரை, அவை தோன்றி நிலையாக இராது மறைகின்றன என எமது புலன்கள் எமக்குக் கூறுவது உண்மையே. ஆனல் அவற்றின் தோற்றத்துக்குக் காரணமான மூலகங்களைப் பொறுத்தவரை * இருப்பது ” தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை என்னும் பார்மனடிசுவின் கூற்றை நாம் ஒப்புக் கொள்வோம் (பகுதி 17). மைலிசியர்களுடைய இயற்கை எவ்வாறு “முதுமையும், முடி வும் அற்றதாய்” இருந்ததோ அதுபோலவே மூலகங்களும் அழிவற்றனவாய் உள்ளன.
107. எல்லாப்பொருள்களினதும் “நான்கு மூலங்கள் “என நான்கு எம்பிடோக்கிளிசினல் கொள்ளப்பட்டவை-தீ, வளி, நிலம், நீர்- மூலங்கள் வழமையாக “ எதிர்ப்புக்கள் ” என்று கருதப்பட்டனவற்றைவெப்பமும் குளிரும், ஈரலிப்பும் வறட்சியும்-முற்றிலும் பார் மனைடிசியக் கொள்கைக்கேற்ப உடைய சத்துப் பொருள்களாக்கு வதனற் பெறப்பட்டுள்ளன போலத் தோன்றுகிறது.
வளி என்பதற்கு வானத்தின் மேற்பகுதியில் உள்ள தூய வளியைக் குறிக்கும் கிரேக்க சொல்லை உபயோகியாது, கீழ் மண்டலத்திலிருக்கும் அடர்ந்த வளியைக் குறிப்பிடும் சொல்லை உபயோகித்திருப்பதிலிருந்து, இதுவரை முதற் சொல்லினல் கருதப்பட்டதைத் தவிர்க்க இவர் விரும்பியிருத்தல் வேண்டு மென்பது பெறப்படுகிறது. வளி என்பது தனித்தன்மையுடைய பரப்புள்ள ஒரு பொருள் எனவும், வெறும் சூனிய வெளி, அடர்த்தி குறைந்த பணி ஆகியவற்றிலிருந்து அது வேறனது என்பதையும் அவர் கண்டுபிடித்திருந்தார். நீர் என்பது முற்றி லும் வேருன ஒரு பொருளேயொழிய திரவமாக்கப்பட்ட வளி யல்ல. கிளெப்சைட்ருவின் உதவியால் எம்பிடோக்கிளிசு இவ் வுண்மையை நிரூபித்துக் காட்டினர். சுவாசித்தல், இரத்த வோட்டம் ஆகியவற்றை விளக்குதற்கு எம்பிடோக்கிளிசு தான் கண்டுபிடித்த இவ்வுண்மைகளை எவ்வாறு உபயோகித்தார் என்
* அத்தி. 1, 27 ஆம் பிரிவுடன் ஒப்பிடுக.

Page 128
240 ஆதி கிரேக்க மெய்யியல்
பதைக் காட்டும் கவிதைகள் இன்றும் உள்ளன (பகுதி 100). நீர்க் கடிகாரங்களுள்ளேயும் தோற்பைகளுக்குள்ளேயும் வளியை அடைப்பதன்மூலம் சூனியவெளியென்பது இல்லையென நிரூ பிக்க முயல்வோரை அரித்தோதில் எளனம் செய்கிறர். இத்தகைய பரிசோதனைகள் வளி ஒரு பொருள் என்பதை மட்டுமே நிரூபிக்கின்றன என அவர் கூறுகிறர். ஆனல் எம்பிடோக்கிளிசு நிரூபிக்க முற்பட்டதும் அதுவே. அத்துடன் விஞ்ஞானத்தின் வரலாற்றிலேயே எம்பிடோக்கிளிசுவினது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானவொன்றகும். ஆகவே கீழ் மண்டலவளியை நாம் சிரமமின்றி வளி என மொழிபெயர்ப் பில் குறிப்பிடலாம். ஆனல் மேல்மண்டலவளிக்கான கிரேக்க சொல்லையும் வளி என மொழிபெயர்க்காது பார்த்துக்கொள்ளல் வேண்டும். அனக்சககோரசுவே இச்சொல்லை வளிமண்டலக் காற்று எனும் பொருளில், முதலில் உபயோகித்திருப்பதாகத் தோன்றுகிறது.
அத்துடன் “நான்கு மூலங்க ’ளுக்கு எம்பிடோக்கிளிசு சில தெய்வங்களின் பெயரை, அளித்தார்-" பிரகாசமுள்ள சியசு, உயிரூட்டும் எரா, ஐதோனியசு, நெசுத்திசு’ (பகுதி 6). ஆயினும் மூலங்களில் எவையெவை இப்பெயர்களினல் அழைக்கப்பட வேண்டும் என்பது எமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. நெசுத்திசு ஓர் சிசிலிய நீர்த்தேவதை எனக் கூறப்படுகின்ற படியாலும் அவளைப் பற்றிய வர்ணனைகள் சிலவற்றிலிருந்தும் இத்தேவதை நீரையே குறித்தாள் எனத் தெரிகிறது ; ஆனல் எனைய மூவரைப் பற்றியும் அபிப்பிராயபேதம் உள்ளது. ஆயி னும் இதையிட்டு நாம் கவலைப்படவேண்டியதில்லை. மூலகங்களை எம்பிடோக்கிளிசு தெய்வங்களென அழைக்கிருர் என்பதை அறிய நாம் எற்கெனவே தயாராயுள்ளோம் ; ஏனெனில் இதற்கு முந்திய சிந்தனையாளரும் தாம் முதற் பொருள்கள் எனக்கொண்டவற்றை இவ்வாறு அழைத்தார்கள் என நாம் ஏற்கெனவே அறிந்துள்ளோம். நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியதெல்லாம் இச்சொல் அதன் சமயச்சார்பான பொரு ளில் உபயோகிக்கப்படவில்லை யென்பதே. எம்பிடோக்கிளிசு மூல கங்களை வழிபடவோ அல்லது அவற்றிற்குக் காணிக்கைகள் வழங்கவோ இல்லை.
“ பொருள்களினது மூலகங்கள் ’ நிரந்தரமானவை யென எம்பிடோக்கிளிசு கருதினர். வெறுமையிலிருந்து எதுவும் உண்
* அரித்தோதில் அனக்சகோரசுவின் பெயரை மட்டுமே இங்கு குறிப்பிடு கிருர், ஆனல் அவர் பன்மையை உபயோகித்துள்ளார். அன்றியும் 100 ஆம் பகுதியிலிருந்து எம்பிடோக்கிளிசு கிளெப்சைட்ரு பரிசோதனையை உபயோகித் தார் என்பது எமக்குத் தெரிகிறது.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 24
டாக முடியாது; எதுவும் முற்றக அழிந்து வெறுமையாக முடியாது (பகுதி 12). “ இருப்பது ’ இருக்கின்றது ; புதியன உண்டாவதற்கோ அழிதற்கோ இடமில்லை (பகுதி 8). அத்துடன் இவை மாறுதலடையாத் தன்மையுடையன வென அவர் கற் பித்தாரென அரித்தோதில் கூறுகிருர், “ அவை எப்போதும் ஒரே மாதிரியே உள்ளன ’ எனக் கூறுவதன் மூலம் எம்பி டோக்கிளிசு இக்கருத்தை வெளியிட்டார். நான்கு மூலகங்களும் * சமமானவை” என்னும் கருத்து அரித்தோதிலுக்கு நூதன மாகத் தோன்றிய போதிலும் எம்பிடோக்கிளிசுவின் காலத்தில் யாவர்க்கும் விளங்கக் கூடியதாயிருந்தது. இவை எல்லா வற்றிற்கும் மேலாக, நான்கு மூலகங்களும் இறுதியானவை. ஏனைய பொருள்கள் யாவும் மூலகங்களாகும் வரை பிரிக்கப் படலாம் ; ஆனல் தீயும் எனைய மூலகங்களும் பிற மூலக மொன்றில் ஆக்கப்பட்டிருந்தன எனக் கூறினரேயன்றி அவற்றை மேலும் விவரிக்க எம்பிடோக்கிளிசினல் முடியவில்லை.
மூலகங்கள் யாவற்றையும் தம்முள் அடக்குவனவாகவே எம்பிடோக்கிளிசுவின் “நான்கு மூலகங்களும் ’ தரப்பட்டுள்ளன (பகுதி 23) ; எமது புலன்களால் அறியப்படும் இவ்வுலகத்தின் பண்புகள் அனைத்திற்கும் இம்மூலகங்களின் வழியாகவே விளக் கம் தரப்படுகிறது. எம்பிடோக்கிளிசினல் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் வைத்தியக் கழகத்தினர், தமது வைத்திய முறை யின் அடிப்படையாயிருந்த வெப்பம், குளிர், ஈரலிப்பு, வறட்சி என்னும் “ எதிர்ப்புக்களை ”யே மூலகங்களாகக் கொண்டனர். இதை நாம் அறிந்தவுடன் இக்கொள்கை முந்திய உள்பொருள் கொள்கைகளுடன் எப்படித் தொடர்பு பட்டிருந்ததென்பதும் எமக்குத் தெரியவருகிறது. பண்பு என்னும் கருத்து அக்கா லத்து உருவாகியிருக்கவில்லை. அனக்சிமாந்தர் எதிர்ப்புக்களெ னத் தான் குறிப்பிட்டவற்றைப் பொருள்களெனவே கருதின ரென்பதில் சந்தேகமில்லை. ஆனல் பார்மனைடிசுவின் காலம் வரைக்கும் பொருள் என்னும் சொல்லின் கருத்து முற்றக உணரப்படவில்லை என்று கூறலாம். இப்போது நாம் அந் நிலையையே அடைந்துள்ளோம். “ பண்பு” என்பது பற்றிய கருத்து இன்னமும் தெளிவாக உணரப்படவில்லையாயினும் பொருள் என்பதன் கருத்து முற்ருக உணரப்பட்டுள்ளது.
நான்கு மூலகங்கள் உள்ளதாக எம்பிடோக்கிளிசு கருதிய போதிலும் அவர் அவற்றை இரண்டாகவே பாவித்தாரெனதீயை எதிர்த்து எனைய மூன்றும்-அரித்தோதில் இரு இடங் களில் கூறியுள்ளார். அவருடைய பாடலிலிருந்து நாமே இதைக் கண்டு கொள்ளலாமென்று அவர் கூறுகிருர். பொதுப்படை யான கொள்கையைப் பொறுத்தவரையில் இத்தகைய ஒன்றை
10-R. 10269 (6163)

Page 129
பூசலும் காதலும்
242 ஆதி கிரேக்க மெய்யியல்
யும் கூற முடியாது. ஆனல் உலக தோற்றம் பற்றிய பகுதிக்கு வரும்போது (பிரிவு 112) தீ உலக தோற்றத்தில் ஒரு முக்கிய பங்கெடுக்கின்றதென்பதைக் காணமுடிகிறது. அரித்தோதில் இதையே கருதியிருக்கலாம். உயிரியற் பகுதிகளிலும் (பிரிவுகள் 114-116) எனைய மூன்று மூலகங்களும் ஏறக்குறைய ஒரே முறையில் செயற்படுகையில் தீ தனக்கென ஒரு சிறப்பான பங்கை நிறைவேற்றுவதைக் காண்கிறேம். ஆனல் தீ ஏனைய வற்றைவிட முதன்மை வாய்ந்ததென இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது ; எல்லாம் சமமானவையே.
108. ஈலிய மெய்யியல் வாதிகளின் கண்டனத்தின் பின்னர்
இயக்கம் ” என்பதற்கு விளக்கம் கொடுத்தல் அவசியமாகிறது.
“நான்கு மூலகங்’களையும் கொண்ட ஆதி நிலையிலிருந்து எம்பிடோக்கிளிசு தமது சிந்தனையைத் துவங்குகிறதைக் காண் கிறேம். பார்மனைடிசு குறிப்பிட்ட ஒரே தன்மையும், தொடர் பும் உடைய கோளம் போன்றிராது எம்பிடோக்கிளிசின் துவக்க நிலைப் பொருள் ஒரு கலவையாயிருந்தது. இவ்வித்தியாசமே இயக்கம், மாற்றம் என்பவற்றைச் சாத்தியமாக்குகின்றது. ஆனல் பைதாகரசு குறிப்பிட்ட “ வளி’ போன்ற எதாவதொரு பொருள் வெளியேயிருந்து கோளத்தினுள்ளே நுழைந்து மூல கங்களைப் பிரிக்காவிட்டால் அதனினின்று ஒன்றும் தோன்ற முடியாது. ஆகவேதான் எம்பிடோக்கிளிசு அத்தகைய ஒரு பொருள் உண்டெனக் கொண்டு அதற்கு பூசல் எனப் பெயரும் இட்டார். ஆனல் இதன் விளைவு கோளத்தில் உள்ள மூலகங்களை முற்ருகப் பிரிப்பதாய் இருக்குமே யொழிய முடிவில் வேறென் றும் நிகழ்வது சாத்தியமாயிராது. ஆகவே மூலகங்களை மீண்டும் ஒன்று சேர்த்தற்கு வேறு ஒரு பொருள் தேவையாயிருந்தது. காதலே இப்பொருள் என எம்பிடோக்கிளிசு கூறினர். மனிதர் களது உடலிலிருந்து, அவர்களைப் புணர்ச்சியை நாடச் செய்யும் இவ்வுணர்ச்சியே மூலகங்களையும் ஒன்று சேர்க்கிறது என்பது அவரது கருத்து (பகுதிகள் 17, 22). வைத்தியக் கழகம் ஒன்றை நிறுவியவரான எம்பிடோக்கிளிசு இதையும் உடற் ருெழிலியல் ரீதியாகவே நோக்கியிருப்பதில் ஆச்சரியமில்லை. தங்கள் உடலிலே உணரக்கூடியதாக இருக்கும் காதலுக்கு மூலகங்களிடையேயும் இடமிருக்கிற தென்பதை எந்த மணி தனும் இதுவரை கவனிக்கவில்லையென அவர் கூறினர்.
எம்பிடோக்கிளிசு குறிப்பிடும் காதலும் பூசலும் வெறும் உடலற்ற சத்திகளல்ல. அவை இயக்கமுடையனவாயிருந்தபோதி லும் உடற்சார்புடையனவே. அக்காலத்து இவ்வாறு கொள்ளு வது தவிர்க்க முடியாததாயிருந்தது. உடலற்றதாக எதையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. தான் நிமித்தகார

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 243
ணம் எனக் கூறியவை இவ்வாறு அழைக்கப்பட்டமை அரித் தோதிலுக்கு வியப்பை அளித்தது. “ எம்பிடோக்கிளிசுவின் காதல் பொருள்களை ஒன்று சேர்ப்பதாகையால் நிமித்தகாரண மாயும், கலக்கும் பொருள்களில் ஒன்றய இருந்தமையால் ஆதிகாரணமாயும் விளங்கிற்று ’ என அரித்தோதில் கூறுகிருர். எம்பிடோக்கிளிசு காதலுக்கும் பூசலுக்கும் சிலவேளைகளில் இயக் கும் ஆற்றலை அளித்துள்ளார் : சில வேளைகளில் அவற்றையும் எனை நான்கு மூலகங்களுடன் சேர்த்து விடுகிருர் எனக் கூறுகை யில் தியோபிறகத்தோசும் இதே கருத்தையே வெளியிடுகிருர், எம்பிடோக்கிளிசுவின் கவிதைப் பகுதிகளை நோக்கும்போது அவர் இவ்விரண்டையும் பரப்புடைய உடலுள்ள பொருள்களாகவே கருதினர் என்பதில் ஐயத்திற்கே யிடமில்லை. இவை ஆறும் * சமமானவை” என எம்பிடோக்கிளிசு கூறினர். காதல் எனையவற்றுக்குச் சமமான “நீளமும் அகலமும்” கொண்ட தாயிருந்ததெனவும் பூசல் அவற்றுக்குச் சமமான நிறையுடைய தாயிருந்த தென்றும் கூறப்பட்டிருக்கிறது (பகுதி 17).
புணர்ச்சியை உண்டாக்குவதே காதலின் தொழில் ; அதை மீண்டும் பிரித்து விடுவதே பூசலின் தொழில். ஆனல் இன் னெரு முறையில் நோக்கும்போது, இணைப்பது பூசலெனவும், பிரிப்பதே காதல் எனவும் கூறலாம் என அரித்தோதில் கூறுவதும் சரியே. கோளமானது பூசலினற் பிரிக்கப்படும் போது, உதாரணமாக, தீயை எடுத்துக்கொண்டால், கோளம் முழுவதிலுமிருந்த தீ சேர்ந்து ஒன்ருகிவிடுகிறது. மூலகங்கள் மீண்டும் காதலினல் ஒன்று சேர்க்கப்படும்பொழுது ஒவ்வொரு மூலகமும் பிரிக்கப்படுகிறது. அழிவுக்கே பூசல் காரணமாயிருக் கிறதெனக் கொள்ளப்படுகிற போதிலும், உண்மையில் கோள த்தை அது அழித்து விடுகின்றதாயினும், அவ்வாறு அழிக்கை யில் யாவற்றையும் தோற்றுவித்தற்கு அது காரணமாயிருக் கிறதென அரித்தோதில் இன்னெரு இடத்தில் கூறுகிருர், ஆகவே எம்பிடோக்கிளிசு குறிப்பிடும் காதலுக்கும், “ ஒரே தன்மையுடையனவற்றினிடையே உள்ள ஈர்ப்புக் 'குமிடையே வித்தியாசம் உண்டென்பதை நாம் கவனித்தல் வேண்டும். உலக உருவாக்கத்தில் இவ்வீர்ப்புக்கு முக்கிய பங்குண்டென எம்பிடோக்கிளிசு கூறியுள்ளார். இது ஒரு தனியான மூலக மல்ல. கோளத்தைப் பூசல் பிரிக்கும்போது வெளிப்படும் ஒவ் வொரு மூலகத்தினதும் தனித்தன்மையிலேயே இச்சத்தி செயற் படத் தொடங்குகிறது. ஆனல் இதற்கு மாறக ஒரே தன்மை யில்லாதனவற்றை, ஒன்றை ஒன்று ஈர்க்கச் செய்வது காதல்.

Page 130
கலத்திலும் பிரிதலும்
244 ஆதி கிரேக்க மெய்யியல்
109. பூசல் மூலகங்களைப் பிரித்தவுடன் அவை எத்திசைக ளில் இயங்கும் என்பது அவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது ? ஒவ் வொன்றும் ஒரு குறிப்பிட்ட திசையில் “ஓடுகிறது ” என்பதை விட எம்பிடோக்கிளிசு வேறு விளக்கம் எதுவும் தந்திருப்ப தாகத் தோன்றவில்லை (பகுதி 53). தனது சட்டங்கள் என்னும் நூலில் பிளேட்டோ இதனல் ஒழுங்கிற்கே இடமில்லாது போகி றது எனத் தீவிரமாகக் கண்டிக்கிருர், வாய்ப்புக்கு முக்கியத்து வம் கொடுத்தவரான எம்பிடோக்கிளிசு அதைப்பற்றி எவ்விடத் திலும் வர்ணிக்கவில்லையேயென அரித்தோதில் குறை கூறு கிருர், அத்துடன் “மாருநியதி ’ என்பதும் குறிப்பிடப்பட்ட போதிலும் அதைப்பற்றிப் போதிய விளக்கம் தரப்படவில்லை. இன்றியமையாமை காரணமாகவோ அல்லது " வலிமிக்க அவ் வுறுதிமொழி” காரணமாகவோ பூசல் ஒரு குறிப்பிட்ட காலத் தில் கோளத்தி னுள்ளே புகுகிறது (பகுதி 30). ஆனல் இதற்கு மேலாக ஒன்றும் இது பற்றிக் கூறப்படவில்லை.
மூலகங்களின் இயக்கத்தைக் கூற முற்பட்ட எம்பிடோக்கிளிசு அவை “ ஒன்றனூடு ஒன்ருக ஒடுகின்றன” எனக் கூறினர் (பகுதிகள் 17, 34). “நுண்ருெளைகளின் உருவப் பொருத்த ” த்தின் மூலமாகவே பொதுவாகக் கலத்தல் விளக்கப்பட்டதென அரித்தோதில் கூறுகிறர். “ஒரு தன்மையுடையவற்றினிடையே உள்ள ஈர்ப்பு’க்கு இதுவே உண்மையான விளக்கம். ஒரே தன்மையுடைய பொருள்களின் “நுண்ருெளைகள் ” பெரும் பாலும் ஒரே அளவினவாய் இருப்பதால் இப்பொருள்கள் இலகு வாகக் கலத்தல் கூடும். ஆனல் நுட்பமான பொருள் கலப் படையாமலே தடித்த பொருளுக்கூடாக “ஒட ’ முடிகிறது. அத்துடன் நுட்பமான பொருளின் நுண்ருெளைகளுள் தடித்த பொருள் புகவே முடிவதில்லை. அரித்தோதில் கூறுவதுபோல, அணுக் கொள்கை போன்ற ஒன்று ஏற்படவே இது காரண மாகிறது. ஆனல் எம்பிடோக்கிளிசு இதை உணர்ந்திருந்தார் என்பதற்கு எவ்வகை அத்தாட்சியும் இல்லை. அரித்தோதில் எழுப்பும் இன்னெரு வினவும் மிகவும் பயனுள்ளதாயிருக் கிறது. இந்த நுண்ருெளைகள் நிறைந்துள்ளனவா அல்லது வெறுமையாயிருக்கின்றனவா என அவர் வினவுகிறர். அவை வெறுமையாயிருந்தால் வெறுமையே இல்லை என்னும் கூற்று என்னவாகிறது ? அவை நிறைந்திருந்தால், நுண்ருெளைகள் என நாம் கொள்வதில் என்ன பயன் ? இவ்வினக்களுக்குப் பதிலளிப்பது எம்பிடோக்கிளிசுவிற்குச் சிரமமாயிருந்திருக்கும்.
* பிளேட்டோ. இது எம்பிடோக்கிளிசவை மட்டுமே குறிப்பிடுவதல்ல வாயி னும், பிளேட்டோவின் வார்த்தைகளைக் கவனிக்கும்போது அவர் எம்பிடோக் கிளிசவையே மனதில் வைத்து இவ்வாறு கண்டித்தாரென்பது தெரிகிறது.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 245
110. ஏற்கெனவே கூறப்பட்டவற்றிலிருந்து காலவட்டத்தில் நான்கு காலப்
நான்கு காலப்பிரிவுகள் இருந்தனவென்பது தெளிவாகியிருக் பிரிவுகள் கும். முதலில் காதலினல் ஒன்று சேர்க்கப்பட்ட மூலகங்களைக் கொண்டகோளம் இருக்கிறது. பின்னர் காதல் வெளியேறுவதும் பூசல் உட்புகுவதுமான நிலை ;- இப்போது மூலகங்கள் ஒரளவு இணைந்தும் ஒரளவு பிரிந்தும் இருக்கும். மூன்றவதாக மூலகங் கள் முற்ருகப் பிரிந்துள்ள நிலை ; இந்நிலையில் காதல் முற்ருக வெளியேறிவிடுவதால் ஒரே தன்மையுடையனவற்றையே இணைக் கும் பூசல் பூரணமாகச் செயற்படுகிறது. கடைசியாக மீண்டும் காதல் மூலகங்களை ஒன்று சேர்க்கையில் பூசல் வெளியேறும் நிலையைக் காண்கிறேம். இது மீண்டும் எம்மைக் கோளத்திற் குக் கொண்டு வருகிறது ; காலவட்டம் மீண்டும் புதிதாகத் தொடங்குகிறது. எமது உலகத்தைப் போன்ற ஒரு உலகம் இவற்றுள் இரண்டாம், நான்காம் காலப் பிரிவுகளிலேயே இருக்க முட ம். நாம் நான்காம் காலப்பிரிவிலேயே இருக் கிருேம், எனவே பொதுவாகக் கொள்ளப்படுகிறதெனத் தோன் றுகிறது. ஆனல் பூசல் ஏற்ற நிலையிலிருக்கும் இரண்டாம் படிவத்திலேயே நாம் இருக்கிறேம் எனக் காட்ட முடியும் என நான் நம்புகிறேன்.
111. அழியுந் தன்மையுடைய பொருட்களைக் கொண்ட உலக பூசலினுல்
மொன்று இரண்டாம் படிவத்திலும், நான்காம் படிவத்திலும் உண்டானது உண்டாகியதென எம்பிடோக்கிளிசு கூறியது உண்மையாதலால் எமது உலகம் (பகுதி 17) எமது உலகம் இவற்றுள் எதுவென அவர் கட்டாயம் தீர்மானித்தே யிருப்பார். எமது உலகத்திற் பூசல் மிகுந்து கொண்டிருக்கிறது என அரித்தோதில் கருதினர் என்பது வெளிப்படை. “முன்புகாதற் காலத்தில் இருந்த அதே நிலை யில் இப்போது பூசற் காலத்தில் உலகம் இருக்கிற ”தென எம்பிடோக்கிளிசு கருதுகிருரென அரித்தோதில் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறர். மூலகங்கள் தனித்தனியாக இருக்கும் இவ் வுலகம், பிரியும் நிலையிலுள்ள பொருள்களிலிருந்து தோன்று கிறதெனக் கூறுவது இயற்கைக்கு முரண்பாடானதாகவிருக்கும் என்பதாலேயே எம்பிடோக்கிளிசு காதற் காலப்பிரிவில் பொருள் கள் தோன்றுவது பற்றிக் கூறவில்லை என அரித்தோதில் இன்னேரிடத்தில் குறிப்பிடுகிருர். இக்குறிப்பைப் பார்க்கும்போது
இதுவே செல்லரது கருத்து. ஆனல் அரித்தோதில் முதலியோரது சாட்சியங்கள் மற்றக் கருத்துக்கே முற்றிலும் சாதகமாகவுள்ளன எனச் செல்லர் ஒத்துக்கொள்கிறர். ஆகவே இப்பகுதிகள் அரித்தோதிலின் கருத்துக் கேற்ப விளக்கப்பட்டால் இது பற்றிய சிக்கல் தீர்ந்து விடும். செல்லாது பிரச்சினை இப்பகுதிகளின் சரியான பொருள் என்ன வென்பது பற்றிய தாகும்.

Page 131
246 ஆதி கிரேக்க மெய்யியல்
உலகிற் பூசல் மிகுந்து கொண்டு வருகின்றதென்பதே எம்பி டோக்கிளிசுவின் கருத்தாயிருந்திருக்க வேண்டுமெனத் தோன்று கிறது. அதாவது அவரது கருத்தின்படி பரிணும வளர்ச்சி யென்பது கோளம் பிரிவடைதலே யொழிய, பிரிவு நிலையி லிருந்த பொருட்கள் ஒன்று சேர்தல் அல்ல எனக் கொள்ள வேண்டும். பார்மனைடிசுவின் கோளத்திலிருந்து உலகம் எவ் வாறு தோன்றியது என்பதை விளக்குதலே எம்பிடோக்கிளிசு வின் பிரச்சினையாயிருந்தது என நாம் கொள்வது சரியானல், இம்முடிபையே நாம் எதிர்பார்க்க வேண்டும். உலகம் மேலும் சிறப்படைவதற்குப் பதிலாகக் குன்றிக் கொண்டு போகிறதென் ணும் பிற கற்பனைகளோடும் இக்கருத்து நன்கு பொருந்துவ தாயுள்ளது. எம்பிடோக்கிளிசின் கொள்கையை விவரமாக ஆரா யும்போது இப்பொதுக் கொள்கை நிரூபிக்கப்படுகிறதா என் பதை நாம் ஆராய்தல் வேண்டும். பூசலின் மூலம் 112. “ எல்லாப் பொருள்களினதும் நான்கு மூலகங்களும் ” உலகம் கலந்திருக்கும் கோளத்தை எடுத்துக்கொண்டால், மூலகங்கள் தோன்றுதல் எவ்வாறு சில கவிதைப் பகுதிகளில் தெய்வமெனக் குறிப்பிடப் படுகின்றனவோ, அவ்வாறே இதுவும் தெய்வமென அழைக்கப் படுதலைக் கவனிக்கலாம். அரித்தோதிலும் பல தடவைகளில் இவ்வாறே அதை அழைத்துள்ளார்?. காதலும் இந்தக் கலவை யில் ஒன்றென்பதை நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும்?.
" காதற்கால உலகம் பற்றி எம்பிடோக்கிளிசு யாதும் குறிப்பிடவில்லை யெனக் கொள்ள வேண்டியதில்லை. 17 ஆம் பகுதியில் அவர் இரு உலகங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறர் என்பது வுெளிப்படை. பொதுப்படையாக இரு உலகங்களை யும் பற்றிக் கூறியதன் பின்னர் பூசற்கால உலகைப் பற்றி அவர் விரிவாகக் கூற முற்பட்டனர் எனக் கொள்ளலாம்.
* இது அரித்தோதிலின் கருத்துக்கள் சிலவற்றையும் காட்டுவதாகும். எம்பிடோக்கிளிசு கூறுவதுபோல, எல்லாப் பொருள்களும் " ஒன்ருகச் சேர்வத " ற்கும் எல்லாப் பொருள்களும் ஒன்றினுட் சேர்வதற்கும், வித்தியாசம் உளது. பின்னதன்படி அவை கோளத்தில் தமது தனித்தன்மையை இழந்து அரித் தோதில் குறிப்பிடும் “ சடப் பொருளை " ஒத்த பொருளாகிவிடும். முன்பு கூறியவாறு, வேறு பொருள்களாகப் பிரிக்கமுடியாத மூலகங்களைப் பற்றிய கொள்கை அரித்தோதில் உணராதவொன்ருக விருந்தது. ஆனல் எம்பிடோக் கிளிசவைப் பொறுத்தவரையில் மூலகங்கள், அவை கோளத்தில் இருக்கையி லும், பிரிந்திருக்கும்போதும், தமது தன்மை மாருமலே இருக்கின்றன. கோளம் ஒரு கலவையென்பதை அரித்தோதிலும் நன்கு உணர்ந்திருந் தாரென்க. 1 ஆம் அத்தியாயம் 15 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனக்சி மாந்தரது எகம்பற்றிய பிரச்சினைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க.
* தேலிசுவினுடைய நீரைப் போலவும், அனக்சிமீனிசுவுடைய வளியைப் போலவும், எரக்கிளைட்டசுவினுடைய நெருப்பைப் போலவும் காதலும் ஒன்ற னது அடிப்படையாகும் என அரித்தோதில் கூறியதற்கு இதுவே காரணம்.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 247
முந்திய முறைகளில் வரம்பற்றது எவ்வாறு உலகைச் சூழ்ந் திருந்ததோ அவ்வாறே பூசல் உலகைச் சூழ்ந்திருந்தது என்பது கவனிக்கப்படல் வேண்டும். ஆனல் பூசல் எல்லையற்ற அளவின தல்ல. நான்கு மூலகங்களுள் யாதேனும் ஒன்றுக்கு அல்லது காதலுக்கு அது அளவிற் சமமானது.
விதிக்கப்பட்ட காலம் வந்தபோது பூசல் கோளத்தினுட்புகத் தொடங்கியது; காதல் கோளத்தை விட்டு வெளியேறத்தொடங் கியது (பகுதிகள் 30, 31). இதைப்பற்றிக் கவிதைப்பகுதிகளி லிருந்து போதிய விவரங்கள் பெற முடியவில்லை. ஆனல் தியோபிறகத்தோசு இதுபற்றி என்ன கூறினரென்பது பற்றிய கணிசமான வரலாறு ஈத்தியோசு விடமிருந்தும் புளுட்டாக்கின் துருேமதீசுவிலிருந்தும் எமக்குக் கிடைக்கிறது.
முதலில் வளி பிரிந்ததென்றும் இரண்டாவதாகத் தீ பிரிந்த தென்றும் எம்பிடோக்கிளிசு கருதினர். அடுத்ததாக நிலம் தோன்றியது. தனது சுழற்சி காரணமாக மிகவும் அழுத்த மடைந்திருந்த இதனின்றும் நீர் வேகத்துடன் வெளிப்பட்டது. நீரிலிருந்து பனி ஆவியாகத் தோன்றியது; வளியிலிருந்து வானுலகு தோன்றியது ; தீயிலிருந்து சூரியன் உண்டானது; எனைய மூலகங்களிலிருந்து உலகப் பொருள்கள் அனைத்தும் குளிர்ச்சியின் மூலம் உண்டாக்கப்பட்டன. Aet.i. 6. 3 (D00.p. 334; R. P. 170).
மூலக்கலவையிலிருந்து வளி பிரிந்தவுடன் அது வட்டமாகப் பரவுகிறதென எம்பிடோக்கிளிசு கருதினர். வளியின் பின்னர் தோன்றிய தீ வெளிப்புறம் நோக்கிப் பரவுகையில் வேறு இட மொன்றும் கிடையாமையால் காற்றைச் சூழ்ந்திருந்த திடப் பொருளின் கீழே பரவியது. பூமியைச் சுற்றி இரு அரைக் கோளங்கள் சுழன்று கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று முற்றகத் தீயினல் ஆனது ; மற்றது வளியும் சிறிது தீயும் கலந்ததாயிருந்தது. இவற்றுட் பிந்தியதே இரவு என எம்பி டோக்கிளிசு கருதினர். ஒரு கோளத்தில் தீ மிகுதியாகச் சேர்ந் திருந்ததனல் உண்டாகியதே இவற்றின் இயக்கம் என அவர் sc56)G9ff. Ps.– Plut. Strom.fr. 10 (Dor. p. 582,; R. P. 170 a).
உலகைச் சூழ்ந்திருந்தனவற்றுள் யாவற்றுக்கும் வெளியே யுள்ள இடத்துக்குச் சென்ற காற்றே பூசலினற் பிரிக்கப்பட்ட முதலாவது மூலகம் எனலாம் (ஒப்பிடுக ப. 38). ஆயினும் காற்று உலகை “ வட்டமாக ’ச் சூழ்ந்திருந்தது எனும் கூற்றை
எல்லா மூலகங்களும் காதலோடு ஒன்றித் தமது தனித்துவத்தை இழந்துவிடு கின்றன என அவர் கருதினர். இவ்விடத்தில் காதலையே அவர் தனது "சடப் பொருளுக்குச் சமமான * தெனக் கொண்டார்.

Page 132
சூரியன், சந்திரன் உடுக்கள் பூமி என்பன
248 ஆதி கிரேக்க மெய்யியல்
நாம் அதன் பூரண கருத்துடன் கொள்ள வேண்டியதில்லை. வானுலகு முட்டை வடிவினதாயிருந்ததென எம்பிடோக்கிளிசு கருதினரெனத் தோன்றுகிறது. இக்கொள்கையில் ஒபிசக் கருத் துக்களின் சாயல் காணப்படுகிறதெனலாம். எவ்வாருயினும் காற்றின் வெளிப்பகுதி வட்டம் உறைந்து கட்டியாகிப் படிகத் தாலானது போன்ற வளைந்த கூரையாகியது. இதுவே உலகத் தின் எல்லையாகியது. வளியைத் திடப்பொருளாக்கி, அதைப் பனிக்கட்டியாக்கியது தீயே என நாம் அறிகிறேம். தீக்குப் பொதுவில் பொருள்களைத் திடப்பொருள்களாக்கும் சக்தியிருந் தது.
உறைந்த வானத்தால் உண்டாகிய குழிந்த கோளத்தின் மேற்பகுதியிலிருந்த வளியின் ஒரு பகுதியை, மேல் நோக்கி வேகத்துடன் பாய்ந்த தீ, வெளியேற்றியது. அவ்வளி தீயிற் சிறிதளவையும், கொண்டு கீழ் நோக்கி இறங்கியது. இவ்வாறே இரண்டு அரைக்கோளிங்கள் உண்டாகின : ஒன்று முற்றகத் தீயை உடையதாய் இருந்தது. இதுவே பகலாய்த் தோன்று வது ; மற்றது இரவிற் றேன்றுவது ; காற்றும் சிறிதளவு தீயும் கொண்டது.
மேலேயுள்ள அரைக்கோளத்தில் அதிகம் தீ மண்டியிருப்ப தால் வானுலகங்களின் சமநிலை குழப்பமடைகின்றது. இதன் விளைவாக வானுலகங்கள் சுழலத் தொடங்குகின்றன. இச் சுழற்சி பகல், இரவுகளை உண்டாக்குவது மட்டுமல்லாமல், இதன் வேகம் வானம், பூமி என்பனவற்றை நிலைப்படுத்தி வைத்திருக் கிறது. நூலொன்றின் முனையிலே கட்டப்பட்ட நீர் நிறைந்த கோப்பை வேகமாகச் சுழற்றப்படும்போது நிலை தளராது இருக் கும் எனும் உதாரணத்தின் மூலம் இக்கருத்து விளக்கப்பட்ட தென அரித்தோதில் கூறுகிறர். இவ்வாறு பரிசோதனைகள் மூலம் விளக்குவது எம்பிடோக்கிளிசுவிற்கு மிகவும் இயல்பான ஓர் பண்பாயிருந்தது. வேகமான இயக்கம் கீழே விழுதலைத் தடை செய்யும் என்பதைக் காட்டவே இவ்வுதாரணம் தரப்பட் டுள்ளது. மையநீக்க விசைக்கும் இப்பரிசோதனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை யென்ப.
113. சூரியனைப் பற்றிக் குறிப்பிடாமலே, இரவு பகல் என்பன விளக்கப்பட்டிருத்தல் கவனிக்கப்பட்டிருக்கலாம். தீயினல் உண் டான அரைக்கோளத்தின் வெளிச்சமே பகல். தீயினல் உண் டான இவ்வரைக்கோளம் பூமியின் மறு பக்கத்திலிருக்கும் போது எற்படும் பூமியின் நிழலே இரவாகும் (பகுதி 48). அப்படி யானுல் சூரியன் என்பது என்ன ? புளுட்டாக்கின் துருேமதீசி லிருந்தே எமக்கு இதற்கான விடை கிடைக்கிறது : “ சூரியன்

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 249
உண்மையில் தீப்பொருளல்ல. அது தீயின், நீரிலிருந்து உண் டாவது போன்ற, பிரதிபலிப்பே. ’ புளுட்டாக்கே தனது பாத்தி ரங்களிலொன்றைப் பின்வருமாறு பேசவைக்கிருர் : “ வானுலக வெளிச்சத்தின் பிரதிபலிப்பாகத் தோன்றி மீண்டும் சலனமற்ற முகத்தோற்றத்துடன் ஒலிம்போசுவுக்குப் பின்னல் மறையும் சூரியன் பூமியினுல் உண்டாக்கப்படுவதே என்று எம்பிடோக் கிளிசு கூறியதைக் கேட்டு நீங்கள் சிரிக்கிறீர்கள். ” ஈத்தியோசு பின்வருமாறு கூறுகிறர் : “இரண்டு சூரியன்கள் இருந்தன வென எம்பிடோக்கிளிசு கருதினர். இவற்றுள் ஒன்றே மூலப் பிரதியெனலாம். இதுவே உலகின் ஒரு அரைக்கோளம் முழு வதையும் நிறைத்துக்கொண்டிருக்கும் தீ. தனது பிரதிபலிப் புக்கு எதிராகவே எப்போதும் இருக்கும் தன்மையுடையது இது ; மற்றது நாம் காணும் சூரியன் ; காற்றும் தீயும் கலந்த மற்ற அரைவட்டத்தில் ஏற்படும், முந்தியதன் பிரதிபலிப்பு இது ; வட்டமான பூமியினல் படிகத்தன்மையுடைய சூரியன் மீது ஏற் படுத்தப்படுவது : தீ நிறைந்த அரைவட்டத்தின் இயக்கத்தினுற் சுற்றிவரக் கொண்டுசெல்லப்படுகிறது. அல்லது சுருங்கக் கூறு வதாயின் பூமியிலுள்ள தீயின் பிரதிபலிப்பே சூரியன் ”.
இவ்வுரைப் பகுதிகள், குறிப்பாக கடைசிப்பகுதி, சற்றேனும் தெளிவாயில்லை. சூரியனென நாம் அழைக்கும் பிரதி பலிப்பு, தீ நிறைந்த அரைக்கோளத்திற்கு எதிராக உள்ள அரைக் கோளத்தில் இருக்க முடியாது ; எனெனில் அது இரவுக்கான அரைக்கோளம். தீ நிறைந்த அரைக்கோளத்தி லிருந்து வரும் ஒளி பூமியினல் மீண்டும் தீ நிறைந்த அவ் வரைக்கோளத்திற்கு ஒரு அடர்ந்த ஒளிக்கற்றையாக வீசப்படு கிறது என்றே நாம் கூற வேண்டும். இதிலிருந்து சூரியனென நாம் அழைக்கும் தோற்றமும் பூமியின் அளவையே யுடைய தென்பது பெறப்படுகிறது. இக்கொள்கை தோன்றியதற்கான காரணத்தை நாம் ஒருவேளை பின்வருமாறு விளக்குதல் கூடும். பிரதிபலிக்கப்பட்ட ஒளியினலேயே சந்திரன் பிரகாசிக்கிறது என் பது அப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. புதுமை யான கொள்கைகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், பொருத்தமில் லாத விடயங்களிலும் அவற்றிற்கு இணக்கங்காண முற்படு வது மக்களிடையே ஓர் பொதுவான இயல்பெனலாம். கி.மு. ஐந்தாம் நூற்றண்டின் முற்பகுதியில் மனிதர்களுக்கு எங்கு .ார்த்தாலும் பிரதிபலிக்கப்பட்ட ஒளியே தெரிந்தது ; பைதா
தியோபிறகத்தோசு மிக நுணுக்கம் பார்த்துச் செய்த கண்டனம் ஒன் றிஞலேயே இம்மயக்கம் எற்பட்டிருத்தல் வேண்டும் இக்கொள்கையின்படி * இரண்டு சூரியன்கள் ” இருத்தல் வேண்டுமெனக் கூறுதல் அவரிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதே.

Page 133
250 ஆதி கிரேக்க மெய்யியல்
கரசைப் பின்பற்றியுள்ளோரிற் சிலரும் இத்தகையவோர் கொள் கையை நம்பினர் (பிரிவு 150).
இவ்விடயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையிற்றன், ஒளி ஒரிடத்தி லிருந்து இன்னேரிடத்திற்குச் செல்வதற்கு நேரம் எடுக்கிறது எனவும் அது மிகவும் வேகமாகச் செல்வதனலேயே நம்மால் அதை அறிய முடியவில்லை யென்றும் எம்பிடோக்கிளிசு கூறி யிருக்க வேண்டும்.
“ தீயினல் துண்டிக்கப்பட்ட வளியினலேயே சந்திரன் ஆக்கப் பட்டிருக்கிறது ; பனிக்கட்டிகளைப் போல இதுவும் உறைந்து கட்டியாகின்றது. சூரியனிடமிருந்து இது தனது ஒளியைப் பெறு கிறது.” அதாவது வானுலகங்களைச் சூழ்ந்திருக்கும் உறைந்த வளி எப்பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அப்பொருளாலேயே ஆனவோர் உறைந்த வளி வட்டமே சந்திரன். சந்திரன் சூரிய னிலும் பார்க்கச் சிறியது என எம்பிடோக்கிளிசு கற்பித்தார் என இடையோசினிசு கூறுகிருர், பூமிக்கும் சூரியனுக்கு மிடையே இருந்த தூரத்தில் பாதி தூரமே பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே இருந்ததென ஈத்தியோசு கூறுகிறர்.
கிரகங்களின் மூலமாகவோ, அல்லது பிரதிபலிக்கப்பட்ட ஒளி யின் மூலமாகவோ நிலையான உடுக்களை விளக்க எம்பிடோக் கிளிசு முற்படவில்லை. பூசலினல் முதலில் பிரிக்கப்பட்டதும், வேகத்தோடு மேலெழுந்த தீயினல், நிலத்தின் கீழே தள்ளப் பட்டதுமான வளி தன்னேடு கொணர்ந்த சிறிது தீயினலேயே இவை ஆக்கப்பட்டன. நிலையான உடுக்கள் உறைந்த வளி யுடன் பொருத்தப்பட்டிருந்தன. கிரகங்கள் எதனிலும் பொருத் தப்படாது, எளிதில் இயங்கக்கூடியனவாயிருந்தன.
சூரிய கிரகணங்கள் பற்றிய உண்மையான கொள்கை எம்பி டோக்கிளிசிற்குத் தெரிந்திருந்தது (பகுதி 42). இதுவும் சந்திர னது ஒளி பற்றிய கொள்கையுமே அக்காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டவற்றுள் முக்கியமானவையாயிருந்தன. இரவு என்பது முன்பு கருதப்பட்டதுபோல ஒருவகையான வெளிமூச்சு அல்ல வென்றும் பூமியின் கூம்புருவான நிழலே யென்றும் அவர் அறிந்திருந்தார் (பகுதி 48).
தீயினலும், வளியினலும் ஆன அரைக் கோளங்களின் எதிர்த் திசை இயக்கங்களினல் காற்றுக்கள் விளக்கப்பட்டன. காற்று அழுத்தப்பட்டபோது, அதன் நுண்ணிய துவாரங்களிலே இருக் கக்கூடிய நீர் துளிகளாக வெளிப்படுதலே மழை என விளக்கம் தரப்பட்டது. இதே முறையில் மேகங்களிலிருந்து வெளிப்படுத் தப்பட்ட தீயென மின்னலுக்கு விளக்கம் கூறப்பட்டது.

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 251
முதலில் நிலத்துடன் நீர் கலந்திருந்தது. ஆனல் அது சுழற்சியின் வேகம் காரணமாக மேலும் மேலும் அழுத்த மடைந்தபோது நீர் வேகத்துடன் வெளிக் கொணரப்பட்டது. இதனற்றன் கடல் “ நிலத்தின் வியர்வை ’ என அழைக்கப் பட்டது. ஆனல் இச்சொற்றெடர் வெறும் கவிதை உருவகமே யொழியச் சரியாகப் பொருள் கொள்ளக்கூடியவொன்றல்ல என அரித்தோதில் கண்டனம் தெரிவித்தார். கடலின் உப்புத்தன் மையும் இவ்வுவமை மூலமே விளக்கப்பட்டது. சுழியின் சுழற் சியில் நிலமும் சேர்ந்து கொள்கிறதென எத்தகைய நிரூபணமு மின்றி நம்பப்பட்டது.
114. தசை, எலும்புகள் போன்ற அழியுந்தன்மையுடைய ஒன பொருள்கள் எவ்வாறு நான்கு மூலகங்களும் வெவ்வேறு விகி பொருட் தங்களில் சேர்வதால் உண்டாயின என எம்பிடோக்கிளிசு விளக்க சேர்க்கைகள் முற்பட்டார். இவை யாவும் காதலினல் உண்டானவையே ; ஆனல் இவ்வுலகம் எக்காலப் பிரிவைச் சேர்ந்தது என்பது பற்றிய கருத்துக்கும் இக்கருத்துக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. ஒரு காலத்தில் காதல் முற்றக வெளியேற்றப்படு மாயினும், இன்னும் அவ்வாறு நடைபெறவில்லை. இப்போ தும் மூலகச் சேர்க்கைகளை உண்டுபண்ணக்கூடியதாகவே காதல் உள்ளது. ஆனல் பூசல் மிகுந்து கொண்டிருக்கிறதாகையால், இவை யாவும் அழியக் கூடியனவையே. விகிதமுறைக்கு எம் பிடோக்கிளிசுவின் கொள்கைகளில் அளிக்கப்பட்டிருக்கும் முக் கியத்துவத்திற்குப் பைதாகரசின் கொள்கைகளின் செல்வாக்கே காரணம் என்பதில் ஐயமில்லை. நிலத்தினுள்ளே இன்னமும் நீரும், என் தீயும் இருக்கின்றன வென்பதிலேயே சேதனப் பொருள்களுக்கான சேர்க்கைகள் ஏற்படுதல் தங்கியிருக்கிறது. எட்னவைப்பற்றி நாம் குறிப்பிடாவிடினும், சிசிலியில் உள்ள வெந்நீர் ஊற்றுக்கள் இதை நிரூபித்தன. வெந்நீர்த்தொட்டி கள் சூடாக்கப்படுவது பற்றிய உவமையின் மூலம் எம்பிடோக் கிளிசு இவ்வெந்நீரூற்றுகள் பற்றி விளக்கினர். இவ்வுவமை எம்பிடோக்கிளிசுவுக்கு இயல்பானவோர் உவமை எனக்கூறலாம். இவரது உவமைகளில் பெரும்பாலானவை மனிதர்களது கண்டு பிடிப்புக்களிலிருந்து அல்லது அவர்களாற் செய்யப்பட்ட பொருள் களிலிருந்து பெறப்பட்டவையாயிருந்தன.
115. பூசல், காதல் ஆகியவற்றின் வசப்பட்ட நான்கு மூலகங்க ளிலுமிருந்தே தாவரங்களும் மிருகங்களும் தோன்றின. 77 இல் இருந்து 81 வரையிலுள்ள கவிதைப் பகுதிகள் தாவரங்களை யும் மரங்களையும் பற்றிக் கூறுவன. இவற்றையும், அரித்தோ திலின் கூற்றுக்களிற் சிலவற்றையும், மற்றும் தொகுப்பாசிரி யர்களாற் சேகரித்து வைக்கப்பட்டுள்ள செய்திகளையும் சேர்த்துப்
தாவரங்கள்

Page 134
252 ஆதி கிரேக்க மெய்யியல்
பார்ப்போமானல் இக்கொள்கை பற்றி ஒரளவுக்கு அறிந்துகொள் ளுதல் கூடும். இது பற்றிக் கூறும் ஈத்தியோசுவின் வாசகங்க ளும் தெளிவற்றனவாயே உள்ளன. ஆயினும் பின்வருமாறு அவற்றை வாசித்துக்கொள்ளலாம்.
இரவு, பகல் என்பன தனித்தனியே உண்டாவதற்கு முன்னர், சூரியன் பரவுவதற்கு முன்னர், நிலத்திலிருந்து மேலே முளைத் தெழுந்த முதல் உயிரினங்கள் மரங்களே. அவற்றின் உருவ அமைப்புகளுக்கு ஏற்ற விகிதங்களில் அவை ஆண் பெண் இயற்கைகளை உடையவையாயிருக்கின்றன. நிலத்திலிருக்கும் வெப்பத்தின் காரணமாக அவை மேலெழுந்து வளர்கின்றன. கருக்கள் எவ்வாறு கருப்பையின் பகுதிகளாக இருக்கின்றனவோ அவ்வாறே இம்மரங்களும் நிலத்தின் பாகங்களாயுள்ளன ; தாவரங்களிலுள்ள தீ, நீர் ஆதியனவற்றிலிருந்து வெளிவரும் கழிவுப் பொருள்களே பழங்கள். ஈரலிப்புக் குறைவாக உள்ள மரங்களிலுள்ள நீர், கோடை வெப்பத்தினுல் நீராவியாகி வெளி யேறும்போது அவை இலைகளை உதிர்க்கின்றன. ஒலிவமரம், தாலம், புன்னைமரம் போன்ற ஈரலிப்பு மிகுந்த மரங்கள் எப் போதும் பசுமையாய் இருக்கின்றன. நிலத்தில் பலவகைச் சத் துப் பொருள்கள் இருப்பதும், மரங்கள் வெவ்வேறு வகை யான சத்துப் பொருள்களே உறிஞ்சிப் பெறுவதுமே அவற்றின் சுவைகளிலுள்ள வேறுபாட்டிற்குக் காரணம். திராட்சைப் பழங்களின் சுவை இடங்களுக்கேற்ப மாறுபடுவது இதனலேயே. திராட்சைக் கொடிகள் வித்தியாசமாய் இருப்பதல்ல சில உவைன் கள் நல்லாயிருப்பதற்குக் காரணம் ; அவை வளரும் நிலத் தின் தன்மையே அவற்றிலிருந்து பிழியப்படும் உவைன்கள் நல்லாயிருப்பதற்குக் காரணமாயிருக்கிறது. Aet. 0.26, 4 (R. P. 172).
தாவரங்களில் இருக்கும் நிலம், தீ என்பனவற்றின் இயல் பான எதிரியக்கத்தினலேயே, மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் இரண்டு விதமாகத் தாவரங்கள் வளர்கின்றன என எம்பி டோக்கிளிசு தந்துள்ள விளக்கம் தவறனது என அரித் தோதில் கூறுகிறர். “ இயல்பான இயக்கங்கள் ” என்பதற்கு நாம் ஒரே தன்மையானவற்றிற் கிடையே உள்ள ஈர்ப்பு எனவே பொருள் கொள்ளுதல் வேண்டும் (பிரிவு 109). தியோபிறகத் தோசும் ஏறக்குறைய இதே கருத்தையே கூறியுள்ளார். ஆகவே பூசலினல் மூலகங்கள் பிரிக்கப்படும்போது நடைபெறும் ஓர் நிகழ்ச்சியெனவே நாம் தாவரங்களின் வளர்ச்சியைக் கருது தல் வேண்டும். நிலத்தின் கீழே இன்னமும் உள்ள தீயில் ஒரு பகுதி (பகுதி 52) மேல்நோக்கி வருகையில், தன் இனத்தை நோக்கிக் கீழ் நோக்கி “ ஒடிக்கொண்டிருக்கும் ” ஈரம் நீங்காத

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 253
நிலத்தைச் சந்திக்கிறது. இவ்வாறு சந்தித்த தீயும் நிலமும், உலகில் இன்னமும் எஞ்சியுள்ள காதலின் சத்திக்குட்பட்டுச் சேரும்போது எற்படும் நிலையற்ற சேர்க்கையையே நாம் தாவர மென அல்லது மரமென அழைக்கிறேம்.
அரித்தோதிலால் எழுதப்பட்டதெனத் தவருகக் கருதப்படும் “ தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி’ எனும் நூலின் முற்பகுதி யில், தாவரங்கள் நோ, இன்பம், ஆசை, புலன் உணர்வுகள் ஆகியனவற்றை அனுபவித்தன என எம்பிடோக்கிளிசு கருதின ரெனக் கூறப்பட்டிருக்கிறது. தாவரங்களில் ஆண், பெண் எனும் இரு பால்களின் தன்மைகளும் ஒருங்கே அமைந்திருந் தன என்னும் உண்மையை எம்பிடோக்கிளிசு அறிந்திருந்தா ரெனவும் இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது. இவ்விடயம் ஈத்தி யோசினல் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அரித்தோதிலினது எனக் கூறப்படும் இந்நூலிலும் ஆராயப்பட்டிருக்கிறது. அராபிய மூலநூலின் இலத்தீனக்கத்திலிருந்து பெறப்பட்ட பைசாந்திய மொழிபெயர்ப்பை நாம் நம்புவதாயின், இதற்கான கார ணத்தை ஒரளவுக்கு அறிதல் கூடும். பால்களைத் தனித்தனியே முற்ருகப் பிரிக்குமளவிற்குப் பூசல் ஆட்சி பெருத ஒரு காலப் பகுதியில், அதாவது “ உலகம் பூரணவளர்ச்சி பெருத ஓர் நிலையில் ” தாவரங்கள் தோன்றின என ஈண்டுக் கூறப்படு கிறது. முதலில் தோன்றிய விலங்கினங்களைப் பற்றியும் இவ் வாறு கூறப்பட்டிருத்தலை நாம் காணலாம். தாவரங்கள் உண் மையில் எவ்வாறு தம்மை விருத்தி செய்து கொள்கின்றன என்பதைப் பற்றி யாதும் கூறது, எம்பிடோக்கிளிசு, வெறு மனே அவை “முட்டைகளைப் பயந்தன ’-அதாவது பழங்களைஎனக் கூறியிருப்பது வியப்பிற்குரியது (பகுதி 79).
116. அழியும் தன்மையுடையவை தோன்றுதலும், மறைத மிருகங்களின் லும் இருமுறை நடைபெறுகின்றன என்னும் கூற்றுடன் பரிணுமம் சேர்த்தே (பகுதி 17) விலங்குகளின் பரிணுமம் பற்றிய கவிதைப் பகுதிகளையும் (பகுதிகள் 57-62) நோக்குதல் வேண்டும். ஈத்தி யோசுவின் நூலில் உள்ள ஒரு பகுதியில் இப்பரினமத்தின் நான்கு படிவங்களும் தெளிவாக வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இப்படிவங்களில் இரண்டு உலக வரலாற்றின் இரண்டாவது காலப் பிரிவைச் சேர்ந்தவையெனவும் மற்ற இரண்டும் நான்காவது காலப் பிரிவைச் சேர்ந்தவையெனவும் கருத அத்தாட்சியிருப்ப தையும் நாம் கவனிக்கலாம்.
* மூன்றவது என்றியின் ஆட்சிக்காலத்தே அல்பிரட்டு எனும் ஆங்கி லேயன் அரபிப்பதிப்பை இலத்தீனில் மொழிபெயர்த்தனன். மறுமலர்ச்சிக் காலத்தே இத்தாலியில் வாழ்ந்த கிரேக்கன் ஒருவன் இவ்விலத்தீன் பதிப்பை மீண்டும் கிரேக்க மொழிக்குப் பெயர்த்தான்.

Page 135
254 ஆதி கிரேக்க மெய்யியல்
விலங்குகளின் வெவ்வேறு உறுப்புக்களும் தனித்தனியே தோன்றும் காலமே முதலாவது படிவமாகும். இக்காலத்தி லேயே கழுத்தில்லாத் தலைகளும், தோள்களில்லாத கைகளும், நெற்றியில்லாத கண்களும் தோன்றுகின்றன (பகுதி 57). உலக வரலாற்றின் நான்காவது காலப் பிரிவென நாம் அழைக்கும் காலத்தின் முதற்படிவத்தில், அதாவது பூசல் வெளியேறுகை யில், காதல் புகுந்துகொண்டிருக்கும் நிலையில், இது நடை பெற்றதென்பது தெளிவு. அரித்தோதிலும் இவை நடை பெற்ற காலம் காதற் காலம் எனவே கூறுகிறர். காதல் அதிகரித்துக்கொண்டிருக்கும் காலத்தையே அவர் காதற்காலம் எனக் குறிப்பிடுகிறர். இதற்கிணங்கவே அவர் தனித்தனியே தோன்றிய இவ்வுறுப்புக்கள் பின்னர் காதலினல் ஒன்று சேர்க்கப்பட்டனவெனக் கூறுகிருர்,
வெவ்வேருக உள்ள உறுப்புக்கள் ஒன்றக இணைக்கப்படும் காலப்பகுதியே இரண்டாவது படிவமாகும். முதலில் அவை சாத்தியமான எல்லா முறைகளிலும் இணைக்கப்பட்டன (பகுதி 59). மனித முகங்களையுடைய எருதுகளும், இரட்டைமுகங்களையுடைய பிராணிகளும், இரட்டை மார்புகளை உடையனவும், பலவகைப் பயங்கர விலங்குகளும் இக்காலத்தே தோன்றின (பகுதி 61). இவற்றில் வாழத் தகுதியுடையனவாய் அமைந்தவற்றை விட எனைய யாவும் இறந்து போயின. இம்முறையிலேயே காதற் காலத்தில் விலங்குகளின் பரிஞ்றம வளர்ச்சி நடைபெற்றது.
கோளத்தின் ஒருமை பூசலினல் அழிக்கப்பட்ட காலப் பகுதி மூன்றம் படிவமாகும். ஆகையினல் இதுவே எமது உலகின் பரிணுமத்தில் முதலாவது படிவமெனக் கருதப்படும். இன, பால் வித்தியாசங்கள் எதுவுமில்லாத “ முழுத்தன்மையுடைய உருவங்களோடு இம்மூன்றவது படிவம் தொடங்கியதெனலாம். தன்னினத்தவற்றை நோக்கி மேலெழும் தீயினல், நிலத்தை யும் நீரையும் கொண்டு இவை உண்டாக்கப்பட்டிருந்தன.
நான்காவது படிவத்தில், வமிச விருத்தியால் மிருகங்கள் உற்பத்தியாகின. இவை பால் ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இக்காலத்தே புதிய மிருகங்கள் எவை யும் மூலகங்களிலிருந்து உற்பத்தியாகவில்லை.
இவ்விருவகைப் பரிணமங்கள் பற்றிக் கூறும்போதும், வாழ மிகவும் தகுதிவாய்ந்தன எவையோ, அவையே தொடர்ந்து வாழ முடியும் என்னும் கருத்தினல் எம்பிடோக்கிளிசு முற் ருக ஆட்கொள்ளப்பட்டிருந்தார். அரித்தோதில் இதைத் தீவிர மாகக் கண்டித்தார். யாதேனும் ஒரு இலட்சியத்துடன் பொருட் கள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருந்தால் அவை எவ்வா

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 255
றிருந்திருக்குமோ அதே முறையில் அவை காலப்போக்கில் இயல் பாகவும் அமைப்புப் பெற்றுள்ளன என எம்பிடோக்கிளிசு கருதி னர் என அரித்தோதில் குறிப்பிடுகிறர். சில இனங்கள் இயல்பா கவே பொருத்தமான அமைப்புப் பெற்றிருந்தபடியால், அவை தொடர்ந்து வாழ முடிகிறது. மனித முகங்கொண்ட எருது கள் போன்ற பொருத்தமற்ற அமைப்புடன் பிறந்தவை யாவும் அழிந்து போயின. விலங்குகளின் பரிணும வரலாற்றில் தற் செயல் நிகழ்ச்சிகளுக்கு இக்கொள்கை அதிக இடமளிக்கிற தென அரித்தோதில் குறிப்பிடுகிருர், முள்ளந்தண்டிலியான மிருகமொன்று தனது உடலைத் திருப்ப முயற்சிக்கையில் தனது முதுகை முறித்துக் கொண்ட தெனவும், அவ்வாறிருப்பது அனுகூலமானவோர் மாற்றம் போலக் காணப்பட்டமையால் அதன் பின்னர் தொடர்ந்து அவ்வாறு இருக்கிறதென முள் ளந்தண்டு தோன்றியமைக்கு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இவ்விசித்திர உதாரணம் மனித முகங்களையுடைய எருதுகளைப் போலல்லாது பூசற் காலத்தைச் சேர்ந்ததென்பதும் காதற் காலத்தைச் சேர்ந்ததல்லவென்பதும் கவனிக்கப்படல் வேண் டும். இவ்விரு காலங்களிலும், வாழத் தகுதியுடைய அமைப் புப் பெற்றவையே தொடர்ந்து வாழ முடியும் என்னும் நியதிப்படியே பரிணுமவளர்ச்சி நடைபெற்றது. -
117. பூசலினல் ஏற்படுத்தப்பட்ட மாறுபாடே பால்களுக் கிடையே உள்ள வேற்றுமைக்குக் காரணம். ஆண்பாலிற் சூடு கூடுதலாக இருந்தது எனவும் கருப்பையின் சூடு கூடிய பகுதி களிலேயே ஆண் குழந்தைகள் உருவாகின என்றும் கூறுகை யில் (பகுதி 65) எம்பிடோக்கிளிசு, பார்மனைடிசு தனது இரண்டாம் பகுதியில் (பிரிவு 95) கூறிய கருத்துக்குப் புறம்பானவோர் கருத்தையே தெரிவிக்கிருர். கருப்பிண்டத்தின் ஒரு பகுதி ஆணின் விந்து நீரிலிருந்தும் இன்னேர் பகுதி பெண்ணின் சுரோணிதத்திலிருந்தும் உண்டாகிறதெனக் கூறப்பட்டது (பகுதி 63). இவ்வாறு குழந்தையின் உடலின் பகுதிகள், ஆண், பெண் ஆகியோரில் வைக்கப்பட்டிருந்தமையே அவர்கள் ஒருவரை யொருவர் காணும்போது ஆசையை உண்டாக்கியது (பகுதி 64). ஆணினது விந்து நீரிலும் பெண்ணினது சுரோணிதத்திலும் உள்ள நுண்ருெளைகளில் அமைப்பில் ஒருவகைப் பொருத்தம் இருத்தல் சந்ததி உற்பத்திக்கு அவசியமெனவும் கோவேறு கழுதைகள் மலடாயிருப்பதற்கு இவ்வகைப் பொருத்தமின் மையே காரணம் எனவும் எம்பிடோக்கிளிசு விளக்கம் தந் தார். குழந்தை உருவாகுவதற்குப் பெற்றேரில் எவர் மிக வும் காரணமாயிருந்தாரோ, அவரையே குழந்தை அதிகம் ஒத்திருந்தது. சிலைகள் உருவப்படங்கள் ஆதியனவற்றின் செல்
உடலியல்

Page 136
256 ஆதி கிரேக்க மெய்யியல்
வாக்கும் குழந்தைகளின் தோற்றத்தை மாறுபடுத்தியது என்ப தும் குறிப்பிடப்பட்டது. விந்துநீர் மிகவும் அதிகமாக இருந்து பிரிவதே ஒரே சூலில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. கருப்பிண்டம் சவ்வு ஒன்றினல் சுற்றப்பட்டிருந்தது எனவும் முப்பத்தாருவது நாளில் உருப்பெறத் துவங்கும் கரு நாற்பத்தொன்பதாம் நாளில் முற்றக உருப் பெற்றுவிடும் எனவும் எம்பிடோக்கிளிசு கருதி னர். இருதயமே முதலில் உருவாகியதெனவும், நகங்கள் போன்றவை கடைசியாகத் தோன்றினவெனவும் அவர் கூறி னர். குழந்தை பிறக்கும் நேரம் வரைக்கும், அதாவது திரவப் பொருள்கள் கருப்பையினுள் அதைச் சூழ்ந்திருக்கும் வரைக்கும் சுவாசிப்புத் துவங்குவதில்லை என அவர் கருதினர். எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் குழந்தை பிறக்கிறது. எட் டாவது மாதத்தின் பத்தாவது நாளில் பெண்ணின் உடலிற் தாய்ப்பால் தோன்றுகிறது (பகுதி 68).
தத்தம் இனத்தைச் சேர எப்போதும் முயன்று கொண் டிருக்கும் (உடலிலுள்ள) நிலமும் தீயும் இறுதியிற் பூசலினற் பிரிக்கப்படும்போது மரணம் எற்படுகிறது. தீப்பகுதி ஓரளவிற் குத் தற்காலிகமாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையே நித்திரை. மரணத்தின் பின்னர் விலங்கானது மூலகங்களாகப் பிரிக்கப் படுகிறது. அதன் பின்னர் இம்மூலகங்கள் புதிய கலவைகளாக ஒன்று சேரலாம் ; அல்லது. நிரந்தரமாகத் “தத்தம் இனங்க ளோடு ” சேர்ந்திருக்கலாம். இங்கு சிரஞ்சீவியான ஆன்மா என எதைப்பற்றியும் குறிப்பிட இடமில்லையெனலாம்.
ஒரே தன்மையினவானவற் றிடையேயுள்ள ஈர்ப்புச் சத்தி தாவரங்களின் கீழும் மேலுமான வளர்ச்சியில் காணப்படுவது போலவே மிருகங்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. தாவரங்களில் உள்ள இலைகளும் மிருகங்களின் உரோமமும் ஒன்றே (பகுதி 82). ஒடுள்ள சில மீன்வகைகளைப் பொறுத்த வரையில் நிலத்தாலான பாகம் மேலேயிருந்தாலும் (பகுதி 76) பொதுவாக மிருகங்களின் பகுதிகளில் தீயினலானவை மேல் நோக்கியும், நிலத்தினலானவை கீழ் நோக்கியுமே செல்ல முனைகின்றனவெனலாம். இன்னமும் உலகில் பெருமளவு காதல் உள்ள தாதலினலேயே இத்தகைய புறனடைகள் இருக்க முடிகிறது. பல்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளின் வாழ்க்கையிலும் ஒரே தன்மையுடையனவற்றிற்கிடையே உள்ள இவ்வீர்ப்புச் சத்தி செயற்படுதலை நாம் காணலாம். உடலிற் தீ மிகுதியாக உள்ளவை காற்றில் பறக்கும் தன்மை உடையன வாய் உள்ளன ; எப்போதும் ஒரு ஒட்டின்மீது குந்தியிருந்த நாயைப்போல, உடலில் நிலவியல்பு மிகுதியாய் உடையவை

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 257
நிலத்துக்கண்மையிலேயே வாழ்கின்றன. நீர் மிகுதியாக உள் ளனவே நீர்வாழ் மிருகங்கள். ஆனல் மீன்கள் இத்தகையன வல்ல. தீ அதிகமாக உள்ள இவை தம்மைக் குளிர்விக்கும் பொருட்டே நீரில் வாழ்கின்றன.
சுவாசானுபவத்தைப் பற்றி எம்பிடோக்கிளிசு மிகுந்த ஆராய்ச் சியுடன் தந்துள்ள விளக்கம் முற்றக இன்றும் பேணப் பட்டுள்ளது (பகுதி 100). சுவாச உறுப்புக்கள் என அழைக்கப்படு வனவற்ருல் மாத்திரமல்லாது உடலிலுள்ள நுண்ருெளைகள் யாவற்றிஞலுமே நாம் சுவாசிக்கிறேம் என அவர் கருதிஞர். கிளெப்சைத்திராவின் உதவியால் விளக்கப்பட்டவாறு, இதயத்தி லிருந்து உடலின் பரப்புப் பகுதிகளை நோக்கியும் மீண்டும் இதயத்தை நோக்கியும் இரத்தம் ஒடுவதனலேயே எம்மால் மாறி மாறிச் சுவாசிக்க முடிகிறது எனக் காரணம் கூறப்பட்டது. விலங்குகளின் ஊட்டமும் வளர்ச்சியும், ஒரே தன்மையை யுடையனவற்றிற் கிடையே உள்ள ஈர்ப்புச் சத்தியின் மூலம் விளக் கப்பட்டன. உடலின் ஒவ்வொரு பாகத்திலும் நுண்ணிய துவா ரங்களுள்ளன வெனவும் அவ்வப்பகுதிக்கேற்ற உணவுத்துகள் கள் இத்துவாரங்களிற் பொருந்திச் சேரும் எனவும் கூறப்பட்டது. இவ்வாறு துவாரங்களிற் பொருந்தக்கூடிய ஒரே தன்மையையு டைய ஊட்ட உணவுகள் இருந்தபோது இன்பம் ஏற்பட்டது; இல் லாதபோது துன்பம் உண்டாகியது. இரத்தத்தை உறையச் செய்த குழப்ப நிகழ்ச்சிகளினலேயே கண்ணிரும் வியர்வையும் ஏற்பட் டன; இவற்றை இரத்தத்தின் தெளிவுநீர் என்று கூறலாம்.
118. எம்பிடோக்கிளிசுவின் புலனுணர்வுக் கொள்கையைப் பற்றி நாம் தியோபிறசத்தோசுவின் வார்த்தைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம் :
எம்பிடோக்கிளிசு புலன்கள் யாவற்றையும் பற்றி ஒரே முறை யிலேயே விளக்கம் தருகிறர். பொருள்களிலிருந்து வெளிப் படும் ஒருவகை “வெளியொழுக்குகள்' ஒவ்வொரு புலனிலு முள்ள வாயில்களிற் பொருந்துவதாலேயே எம்மால் அவற்றை உணர்ந்தறியக் கூடியதாக இருக்கிறதாக அவர் கூறுகிறர். இதனலேயே ஒருவருக்குத் தெரிகிற பொருள்களை மற்றவர்கள் மதிப்பிடுதல் இயலாது போகிறது ; ஏனெனில் சிலரது புலன் களிலுள்ள வாயில்கள் மிகவும் ஒடுங்கியவையாய் இருப்பதினல், அப்பொருள்களிலிருந்து வரும் “ வெளியொழுக்குகள் ” இவற் றுட் புக முடிகிறதில்லை. வேறு சிலரது புலன்களிலுள்ள வாயில்கள் மிகவும் அகன்றவையாய் இருப்பதால் இவ்வெளி யொழுக்குகள் வாயில்களில் முட்டாமல் நேரே தாண்டிச் சென்று விடுவதும் உண்டு. R. P. 177 b.
உணர்வு

Page 137
258 ஆதி கிரேக்க மெய்யியல்
பார்வையின் தன்மையை விளக்கவும் அவர் முயல்கிருர். கண்ணின் உட்பகுதியில் தீயுள்ளதெனவும் அதைச் சுற்றி நிலமும் காற்றும் இருக்கின்றன எனவும் அவர் கூறுகிறர். விளக்குகளிலுள்ள ஒளி வெளிப்படுதல்போல, இக்காற்று, நிலம் ஆகியவற்றிற்கூடாக மிகவும் நொய்யதான தீ செல்லு தல் சாத்தியமாகிறது (பகுதி 84), தீயும், நீரும் செல்லும் வாயில்கள் ஒன்றுவிட்டொன்றக அமைந்துள்ளன. தீ செல் லும் வாயில்களினூடாக நாம் ஒளியுடைய பொருட்களைக் காண் கிருேம் ; நீர் செல்வனவற்றுக்கூடாக இருண்ட பொருள்களைக் காண்கிறேம். ஒவ்வொரு வகைப் பொருள்களும் ஒவ்வொரு வகையான வாயில்களுக்குள்ளே பொருந்துகின்றன ; நிறங் களே அவற்றின் வெளியொழுக்குகளின் மூலமே பார்க்க முடி @pgJ. R. P. ibo
ஆனல் எல்லாக் கண்களும் ஒரேமாதிரியாக அமைக்கப்பட்ட னவல்ல. சில ஒரே தன்மையுடையனவான மூலகங்களால் உண்டாக்கப்படுகின்றன. வேறு சில எதிர்மாறன தன்மைகளை யுடைய மூலகங்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. சிலவற் றுக்கு, மத்தியிலேயே தீ இருக்கிறது; சிலவற்றுக்கு வெளியிலே தீ இருக்கிறது. இதனலேயே சில விலங்குகள் பகலில் நல்ல பார்வையுடையனவாய் இருக்கையில் எனையவை இரவிற் பார்க்கும் ஆற்றலுடையனவாய் இருக்கின்றன. தீ குறைவாக உள்ளவை பகலில் நல்ல பார்வை உடையனவாய் இருக்கின் றன-ஏனெனில் அப்போதுதான் உள்ளேயிருக்கும் தீ வெளியே யிருக்கும் தீயோடு சேர்ந்து சமநிலைக்கு வருகிறது. இதற்கு எதிரான பொருள் (அதாவது நீர்) குறைவாக உள்ளவை இரவில் நன்ருகப் பார்க்கக் கூடியனவையாய் உள்ளனஎனெனில் அப்போதுதான் உள்ளே குறைவாக உள்ள நீர் வெளியேயிருந்து சமநிலைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆனல் தீ அதிகமாய் இருக்கிற கண்கள் பகலின் ஒளியால் கூச்சம் அடை யும்-ஏனெனில் அப்போது தீ மேலும் அதிகரிக்கப்படுவதால் நீரினுடைய நுண்ணிய துவாரங்களும் தீயினல் நிறைக்கப் பட்டு அடைபட்டு விடுகின்றன. இதே முறையில் நீர் அதிகமாக உள்ள கண்கள், இரவில் தீயின் துவாரங்கள் நீரினல் அடைக்கப்படும் காரணத்தால், சத்தி குறைந்து போய் விடுகின்றன. எல்லாவிடயங்களிலும் எதிர்த்தன்மையுடையதே மாற்ருக விளங்குமாதலால், வளியினல் நீர் பிரிக்கப்படும்வரை இவ்வாறே தொடர்ந்து நடைபெறுகிறது. நீரும், தீயும் சம மான முறையில் சேர்ந்திருக்கும் பார்வையே மிகவும் நன்றக அமைந்ததும் சிறந்ததுமான பார்வையுமாகும். பார்வையைப் பற்றி எம்பிடோக்கிளிசு கூறுவது பொதுவில் இதுவேயாகும்.

அக்கிரகாசு நகரத்து எம்டோக்கிளிசு 259
ஒலி வெளியே எற்படுகிறதெனவும், வெளியேயுள்ள குரல் களினல் உண்டாகும் காற்றதிர்ச்சி, காதினுள்ளே சப்திக்கும் போது நம்மால் கேட்க முடிகிறதெனவும் அவர் கருதினர். * தசையுடையமுளே " யென அவர் குறிப்பிடும் செவியினுள்ளே மணிபோன்ற ஒன்று ஒலிப்பதே செவிப்புலனுகும். காற்று இயங்கும்போது அது கடினமான பகுதிகளில் மோதி ஒலியை உண்டாக்குகிறது. சுவாசிப்பதனலேயே முகர்ச்சி அனுபவம் எற்படுகிறது என அவர் கருதினர். இதனலேயே பலமாகச் சுவாசிப்பவர்கள் கூர்மையான முகர்ச்சி உணர்வு பெற்றிருக் கிருர்கள் எனவும், சூக்குமமான நுண்ணிய பொருள்கள் அதிக மணமுடையவையாயிருப்பதற்கு இதுவே காரணமெனவும் அவர் கருதினர். நுண்ணிய துவாரங்களுக்குள் பொருள்களின் வெளி யொழுக்குகள் பொருந்துவதால் புலனுணர்வு எற்படுகிறது என் னும் பொதுப்படையான விளக்கத்தை விட, தொடுகை, சுவை ஆகிய புலன்களைப்பற்றியும் அவை எவ்வாறு எழுகின்றனவென் றும் அவர் தனியாக எதுவும் கூறவில்லை. மூலகங்களில் ஒரே தன்மையுடையவை இருப்பதனலும் அவற்றின் கலவையி னலுமே இன்பம் ஏற்படுகிறது : எதிரான தன்மையுடையனவற் ருல் துன்பம் உண்டாகிறது. R. P. ib.
இதே முறையில் சிந்தனை, அறியாமை என்பனவற்றைப் பற்றி மிகவும் திட்டவட்டமான விவரங்கள் தந்துள்ளார். சிந்த னையும் புலனுணர்வைப் போன்றதே என்னும் பொருள் தோன்றும்படியாக, ஒரே தன்மையுடையனவற்றிலிருந்து சிந் தனை எழுகின்றதெனவும், எதிர்த்தன்மைகள் காரணமாக அறியாமை உண்டாகின்றதென்வும் அவர் கூறியுள்ளார். ஒவ் வொரு பொருளையும் நாம் எவ்வாறு அதன் மூலமாகவே பார்க்க முடிகிறது என்பதைப் பற்றிக் கூறிய பின்னர் அவர் பின்வருமாறு மேலும் கூறுகிறர்: “ இவற்றிலிருந்தே எல் லாப் பொருள்களும் உருவாக்கப்பட்டு இணைக்கப்படுகின்றனவாத லாலும் இவற்றின் மூலமே மனிதர் சிந்திக்கின்றனர், இன்ப துன்பங்களை உணர்கின்றனர் என்பதாலும்’ (பகுதி 107). இக் காரணத்தினல் நாம் பெரும்பாலும் எமது இரத்தத்தினலேயே சித்திக்கிறேம். ஏனெனில் உடலின் எல்லாப் பாகங்களுள்ளும் இரத்தத்திலேயே எல்லா மூலகங்களும் ஒன்றகச் சேர்ந்துள்ளன.
R. P. 178.
கலவை சமமாய் அல்லது கிட்டத்தட்டச் சமமாயிருக்கின்ற யாவரும்-மூலகங்கள் அதிகம் பிரிக்கப்படாது, மிகவும் குறை யாமலும் மிகவும் கூடாமலும் இருப்பவர்கள்-கூர்மையான உணர்வுடையவர்களாயும் ஆழ்ந்த புத்தியுடையவர்களாயுமிருப் பர்; அவர்களுக்கு அடுத்ததாக வருபவர்கள் அதற்கேற்ற

Page 138
260 ஆதி கிரேக்க மெய்யியல்
விகிதப்படி புத்தியுடையவர்களாயிருப்பர். இதற்கு எதிரான நிலையிலிருப்போரே மிகவும் புத்தியற்றவர்களாயிருப்பர். திட் பம் குறைந்தவையும் இடைவெளிகளால் பிரிக்கப்பட்டவையு மான மூலகங்களைக் கொண்டவர்கள் மிகவும் மந்தபுத்தியுடைய வர்கள். நுண்ணிய துகள்களாகவுள்ள மூலகங்கள் அடர்த்தி யாகத் திணிக்கப்பட்டிருப்பவர்கள் மனமுடுக்குக்கேற்ப முன் யோசனையதிகமின்றி நடப்பவர்களாயும் அநேக காரியங்களை ஆரம்பித்துச் சிலவற்றையே முடிக்குந் தன்மையுடையோராயும் இருப்பர். இவர்களின் இரத்தம் மிகவும் வேகமாக இயங்குவதே இதற்குக் காரணம். தமது உடலின் ஒருபகுதியில் சரியான கலவையுடையோர் அவ்வுறுப்பின் தொழிலில் சீராயிருப்பர். இதனலேயே சிலர் சிறந்த பேச்சாளர்களாயும், சிலர் சிறந்த கைத்தொழிற்றிறமை யுடையோராயும் காணப்படுகின்றனர். பின்னவர்கள் கைகளில் நல்ல கலவையுடையோரா யிருக்கின் றனர் ; முன்னவர் தமது நாக்குகளில் நல்ல கலவையுடை யோராய் இருக்கின்றன்ர்-இவ்வாறே பிற விசேட திறமைகளும் ஏற்படுகின்றன. R. P. ib.
ஆகவே எங்களுக்குள்ளே உள்ள ஒரு மூலகம் வெளியே யுள்ள ஒன்றைச் சந்திக்கும்போதே புலனுணர்வு உண்டாகிறது. எல்லாப் பொருள்களிலிருந்தும் எப்போதும் வெளிப்படும் வெளி யொழுக்குகளோடு பொருந்தும் வண்ணம் புலன்களில் உள்ள நுண்ணிய துவாரங்கள், மிகவும் பெரியவையாகவோ, சிறி யவையாகவோ இல்லாதிருக்கும் போதே இவ்வுணர்வு எற்படும் (பகுதி 89). சுவாசத்தின் மூலமே முகர்ச்சி உணர்வு ஏற்படுகிறது. உள்வரும் சுவாசம் நுண்ருெளைகளுக்குள் பொருந்தக் கூடிய சிறு துகள்களையும் தன்னேடு சேர்த்துக்கொண்டே உள்ளே வருகிறது. தலையில் தடிமன் பிடித்தவர்களுக்கு, சுவாசிப்பது சிரமமாய் இருப்பதனல், முகரவும் முடியாமலிருப்பதை உதா ரணமாகக் காட்டி எம்பிடோக்கிளிசு இதை விளக்கினர். நாய் களின் மோப்பசத்தியும், இக்கொள்கையை நிரூபித்தற்கு எம்பி டோக்கிளிசினல் குறிப்பிடப்படுவதை 101 ஆம் கவிதைப் பகுதி யில் நாம் காண்கிருேம். ஆயினும் முகர்ச்சியுணர்வைப் பற்றி எம்பிடோக்கிளிசு எவ்வகை விளக்கமும் தரவில்லை ; அத்துடன் தொடுகையுணர்வைப் பற்றியும் அவர் ஒன்றும் கூறவில்லை. செவியினுள்ளே யுள்ள கசியிழையத்துடன் மோதி அதை அசைத்து மணிபோன்று ஒலிக்கும்படி செய்யும் காற்றின் அசைவே ஒலி எமக்குக் கேட்பதற்குக் காரணமெனக் கூறப்பட் = [5یا
பார்வையுணர்வு பற்றிய கொள்கை யாவற்றிலும் அதிக சிக்கலானது. அத்துடன் பிளேட்டோ தனது பாத்திரமான

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 26.
திமாயோசுவை இக்கருத்தை எடுத்தியம்பச் செய்திருப்பதால், இது மெய்யியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அலுக்மையோன் கருதியது போலவே, (பிரிவு 96) கண் நீரி ஞலும் தீயாலும் ஆயதெனக் கருதப்பட்டது. விளக்கிலுள்ள தீ நாக்கு எவ்வாறு கொம்பினலான மறைப்பால் காக்கப்படுகிறதோ (பகுதி 84), அதே போலக் கதிராளியிலுள்ள தீயும், அதனைச் சூழவுள்ள மென்சவ்வுகளினல் நீரிலிருந்து காக்கப்படுகிறது. இந்த மென்சவ்வுகளிலுள்ள நுண்ணிய துவாரங்களுக்கூடாகத் தீ வெளியேற முடிந்தாலும் நீர் உட்புக முடியாது. கண்ணி னுள்ளே உள்ள தீ வெளியேயுள்ள பொருள்களைச் சென்று சந்திப்பதனலேயே காட்சி ஏற்படுகிறது.
“வெளியொழுக்குகள்’ எனத் தாம் குறிப்பிட்டவை பொருள் களிலிருந்து கண்களுக்கும் வந்தன என்பதையும் எம் பிடோக்கிளிசு அறிந்திருந்தார். “நுண்ருெளைகளுக்குள், உரு வங்களிலிருந்து (அல்லது பொருள்களிலிருந்து) வரும் வெளி யொழுக்குகள் பொருந்தி, உணரப்படும் போதே நிறங்கள் தோன்றுகின்றன” என அவர் நிறங்களை வருணித்தார். இவ் விரு கொள்கைகளும் எவ்வாறு பொருந்துகின்றன வென்பதோ அல்லது பிளேட்டோவின் திமாயசுவில் உள்ள கொள்கையை எவ்வளவு தூரம் எம்பிடோக்கிளிசுவினது என்று கொள்ள லாம் என்பதோ தெளிவாயில்லை. நாம் இங்கு தந்திருக்கும் கூற்றுக்கள் ஏறக்குறைய அதையே கருதுவனபோலத் தோன்று கின்றன.
எம்பிடோக்கிளிசு புலனுகர்வுக்கும் சிந்தனைக்குமிடையே வேற் றுமை காட்டவில்லை எனத் தியோபிறகத்தோசு கூறுகிறர். அரித்தோதிலும் ஏற்கெனவே இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிருர், நான்கு மூலகங்களும் நன்றகக் கலந்திருக்கிற இரத்தம், அதிலும் இருதயத்தை அடுத்துள்ள இரத்தமே புலனுணர் வின் முக்கிய பிறப்பிடம் என்பது எம்பிடோக்கிளிசுவின் கருத்து (பகுதி 105). ஆனல் இதன்மூலம், உடலின் மற்றப் பகுதிகளாலும் உணரமுடியும் என்பது தவிர்க்கப்படவில்லை ; உண்மையில் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சிந்தனையில் பங்கு உண்டென்பதே எம்பிடோக்கிளிசின் கொள்கையாகும் (பகுதி 103). ஆனல் இரத்தம் மிகவும் நுண்ணிதாகக் கலக்கப்
* இது சிசிலிய மரபினர்க்கு மிகவும் இயல்பானவோர் கொள்கையாய இருந்தது. அரித்தோதிலும், சுதோய்க்கரும் இக்கருத்தையே தழுவினரென்க. இப்போகிருத்திசு அலுக்மையோனது கருத்தைப் பின்பற்றி உணர்வின் இருப் பிடம் மூளையெனக் கொண்டனர். பிற்காலத்தே பிளேட்டோவின் நண்பரான சிராக்கியூசு நாட்டுப் பிலிசுத்தியோன் என்பார் இரத்தத்தோடு கலந்திருப்பதான " விலங்கு இரசம்” எனப் பொருள்படும் சொல்லொன்றை உபயோகித்தனர்.

Page 139
சமயமும் இறையியலும்
262 ஆதி கிரேக்க மெய்யியல்
பட்டிருந்ததால் அது புலனுணர்வுக்கு வேண்டிய நுகர்ச்சிக் கூர்மையை அதிகம் பெற்றிருந்தது. எமது உடலின் சேர்க் கையின் மாறுபாடுகளுக்கேற்ப எமது அறிவும் மாறுபடுகிறது (பகுதி 106) என்ப் பார்மனைடிசுவின் கவிதையின் இரண்டாம் பாகத்தில் (பகுதி 16) தரப்பட்டிருக்கும் கருத்தையே எம்பிடோக் கிளிசும் கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து தெரிய வரு கிறது.
119. எம்பிடோக்கிளிசுவின் இறையியற் கொள்கை எமக்குச் செனுேபனிசுவை நினைப்பூட்டுகையில் அவரது நடைமுறைச் சமயபோதனை, பைதாகரசையும் ஒபிக்குகளையும் நினைவூட்டுகின்றன எனலாம். கவிதையின் முற்பகுதியில் சில “கடவுளர்கள் ” மூலகங்களினல் ஆனவர்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது ; ஆகை யினல் அவர்கள் “நீண்ட காலம் வாழ்பவர் ”களாயினும் இறத் தல் வேண்டும் (பகுதி21). மூலகங்களும் கோளமும் கூடக் கடவுளர் கள் என அழைக்கப்பட்டாலும் இஃது அச்சொல்லின் முற்றி லும் வேறுபட்டவோர் பொருளிலேயாகும்- அத்துடன் மூலகங் கள் ஒருபோதும் இல்லாது போவதில்லை.
தூய்மையாக்கத்திலுள்ள சமயபோதனைக் கருத்துக்களேக் கவ னித்தோமானல் அவை யாவும் மறுபிறப்புக் கொள்கையோடு தொடர்புடையனவாயிருப்பதைக்காணலாம். இதன் முக்கியத்து வத்தைப் பற்றி எற்கெனவே போதியளவு கூறப்பட்டிருக்கிறது (பிரிவு 42) ; எம்பிடோக்கிளிசு தரும் விவரங்கள் நூதன மானவையே. இன்றியமையாமை யென்னும் கோட்பாடு ஒன் றின்படி பாவம் செய்யும் “நற்றேவதைகள் ” வானுலகிலுள்ள தமது இருப்பிடத்தை விட்டு நீங்கி முப்பதினயிரம் பருவகா லங்களுக்கு அலையும்படி துரத்தப்படுகின்றன (பகுதி 115). தானும் அத்தகையவோர் கடத்தப்பட்ட தேவதையே யெனவும், விரோ தத்தில் நம்பிக்கை வைத்ததாலேயே தான் தனது உயர்ந்த பதவி யிலிருந்து வீழ்ச்சியடைய நேரிட்டதெனவும் எம்பிடோக்கிளிசு கூறுகின்றர். நான்கு மூலகங்களும் வெறுப்புடன் ஒன்றிலிருந்து இன்னென்றுக்கு அவரை மாறி மாறி எறிகின்றன. இதனல் அவர் மனிதனுகவும், தாவரமாகவும் மட்டுமல்லாது மீனுகவும் இருந் திருக்கிருர், ஆதித்தீவினைப்பயனை அகற்றுவதற்கு வழி புனித மான கிரியைகளை அனுட்டித்தல், தூய்மையாக்கம், புலாலுண் னமை என்பனவற்றைக் கைக்கொள்ளலே. ஏனெனில் விலங்கு கள் எமது இனத்தைச் சேர்ந்தவையாதலாலும் அவற்றைக் கொல் லல் தந்தையைக்கொலை செய்வதற்குச் சமமாகும் என்பதனலு மென்க (பகுதி 137). இக்கூற்றுக்களிற் சில அண்டவியலோடு சம்பந்தமுடையனவாய் இருப்பதைக் காணலாம். “வன்மையான

அக்கிரகாசு நகரத்து எம்பிடோக்கிளிசு 263
உறுதிமொழி”(பகுதி 115 ; ப. 30), நான்கு மூலகங்கள், ஆதித்தீ வினைக்குக்காரணமாகும் வெறுப்பு, பொற்கால அரசியெனும் கைப்பிரிசு ஆகியன ஈண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன (பகுதி 128). ஆனல் இவற்றில் எதுவும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த தல்ல. அத்துடன் தூய்மையாக்கத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் ஆன்மா அழிவின்மைக் கொள்கை, எம்பிடோக்கிளிசுவின் அண்டவியற்கோட்பாட்டில் கொஞ்சமேனும் உபயோகப்படுத்தப்பட வில்லை. இக்கால மக்களது சமய நம்பிக்கைகளுக்கும் அண்ட வியல்பற்றிய அவர்களது கருத்துக்களுக்குமிடையே மிகுந்த வேற்றுமை இருந்திருக்கிறது போலத் தோன்றுகிறது. நாம் முன்பு குறிப்பிட்டுள்ளவாறு, சில விடயங்கள் இறையியலிலும், அண்டவியலிலும் கையாளப்பட்டுள்ளமை எம்பிடோக்கிளிசுவே இவ்வுண்மையை அறியாது விடுதற்குக் காரணமாயிருந்திருக்க 60ուի,

Page 140
sia):
அத்தியாயம் 6
கிளாசொமென நகரத்து
அனக்சகோரசு
120. டிமீத்திரியசு பெலேரியசு தனது “ பிரதம நீதிபதிகள் இடாப்பு ” என்னும் நூலில், கலியாடிசு அல்லது கலியாசு, பிரதம நீதிபதியாயிருந்த காலத்தில் (கி. மு. 480-79) அதென்சு நகரத்தில், அனக்சகோரசு தனது இருபதாவது வயதில் “ மெய்யியல் அறிவாளனெனப் பெயர் பெறத் தொடங்கினர் ” என்று குறிப்பிட்டுள்ளார். எமக்கு அனக்சகோ ரசுவின் காலம் பற்றி அப்பொலோடரசு கூறும் அனைத்தும் டிமீத்திரியசு பெலேரியசின் குறிப்பிலிருந்தே பெறப்பட்டவை எனலாம். இம்ம்ெய்யியலாளரது வழக்கு விசாரிக்கப்பட்ட போது இவருக்கு என்ன வயதாகியிருந்தது என்பதைக் கொண்டே இத்திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்கலாமெனத் தோன் றுகிறது. தற்போது நமக்குக் கிடைக்காத எத்தனையோ ஆதா ரங்களிலிருந்து டிமீத்திரியசு இவ்விசாரணையைப் பற்றிய முழு விபரங்களையும் அறிந்திருக்கலாம். எழுபதாவது ஒலிம்பிய ஆண்டில் (கி. மு. 500-496) அனக்சகோரசு பிறந்தார் என்பது அப்பொலோடரசின் ஊகம். அத்துடன் எண்பத்தி எட்டாவது ஒலிம்பிய ஆண்டில் (கி. மு. 428-27) தமது எழுபத்திரண்டாவது வயதில் அனக்சகோரசு காலமாகினர் எனவும் அவர் கூறியுள் ளார். பெரிக்கிளிசவைவிட அனக்சகோரசு நீண்ட காலம் வாழ்ந் திருக்க முடியாதென்பதும் பிளேட்டோ பிறந்த ஆண்டிலேயே இவர் இறந்திருக்க வேண்டுமென்பதும் அப்பொலோடரசுக்கு மிகவும் பொருத்தமானவையாகத் தோன்றியிருக்க வேண்டு மென்பதில் ஐயமில்லை. அதென்சில் அனக்சகோரசு முப்பது வருடங்களாக வாழ்ந்தார் என்னும் வேறெரு கூற்றும் எமக் குக் கிடைத்துள்ளது. இக்கூற்று யாருடையது என்பது எமக் குத் தெளிவாகத் தெரியாது போனலும் இதுவும் டிமீத்திரிய சினுட்ையது என்று கருத இடமிருக்கிறது. எனினும் இக்கூற்று உண்மையானல் அனக்சகோரசு அதென்சில் வாழ்ந்த காலம் கி. மு. 480 இல் இருந்து 450 வரை என நாம் கொள்ள 6DfTL).
இத்திகதிகள் யாவும் கிட்டத்தட்டச் சரியானவையே என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. கி. மு. 490 ஆம் ஆண் டுக்கு முன்னரே பிறந்தவரான எம்பிடோக்கிளிசுவைவிட அனக்

கிளாசொமெனை நகரத்து அனக்சகோரசு 265
சகோரசு வயதாற் கூடியவர் என அரித்தோதில் கூறுகிருர் (பிரிவு 93). “ அனக்சகோரசுவுக்குப் பின்னர் அதிக காலமாவ தற்குள்ளேயே ’ எம்பிடோக்கிளிசும் பிறந்துவிட்டார் எனத் தியோபிறகத்தோசும் கூறியுள்ளார். அனக்சகோரசின் அந்திம காலத்தில் தான் ஓர் இளைஞனக இருந்ததாகவும் அவர் கி. மு. 460 ஆம் ஆண்டில் பிறந்திருக்க வேண்டும் எனவும் தெமோ கிரித்தோசு கூறியுள்ளார்.
121. அனக்சகோரசு கிளாசொமெனையைச் சேர்ந்தவர். இவ இளமை ரது தந்தையாரின் பெயர் எகெசிபவுலோசு எனத் தியோபிற நாள்கள் சுத்தோசு கூறுகிருர். இவர் விஞ்ஞானம் கற்கும் பொருட்டுத் தமது உடமைகளையும் கவனியாது விட்டுச் சென்றரென்று இவரைப் பற்றி வழங்கும் வரலாருென்றுண்டு. நான்காம் நூற்றண்டிலேயே “ கொள்கை வழி’ வாழும் மனித ரென இவர் பெயர்பெற்றிருந்தார் என்பது நிச்சயமாகத் தெரி கிறது. உலகியற் பொருள்கள் மீது இவருக்கிருந்த பற்றின்மை பற்றிய கதை பிற்காலத்துச் சரித்திர நாவலாசிரியர்களால் நையாண்டியுடன் திரித்தெழுதப்பட்டது. இவற்றைப் பற்றி நாம் இங்கு கவனிக்கவேண்டியதில்லை. அனக்சகோரசு இளை ஞஞயிருந்த காலத்தில் ஐகொசப்பொத்தேமசுவினுள்ளே எரி மீன்கல்லொன்று வீழ்ந்த சம்பவம் பற்றிய குறிப்பொன்றுளது. இச்சம்பவம் கி. மு. 468-67 இல் நடந்ததாகும். இச்சம்பவம் நடக்குமென அனக்சகோரசு முன்பாகவே அறிந்திருந்தாரென எமது வரலாற்றுக்காரர்கள் கூறுவது முற்றிலும் அபத்த மானதே. ஆனல் முந்திய அண்டவியற் கருத்துக்களை அவர் முற்ருகக் கைவிட்டமைக்கும் அதென்சு நகரத்தில் அவரைக் கண்டனத்துக்காளாக்கிய அண்டவியற் கொள்கைகளை அவர் கடைப்பிடித்தமைக்கும் இந்நிகழ்ச்சியே காரணமாயிருந்ததென நம்ப இடமுண்டு. எப்படியாயினும், இவ்வெரிமீன்கல் வீழ்ச்சிச் சம்பவம் அக்காலத்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது என லாம். பிளினி, புளுட்டாக்கு ஆகியோரது காலத்திலும் அப்ப குதிக்குச் சென்ற யாத்திரீகர்கள் இக்கல்கலைக் காண அழைத்துச் செல்லப்பட்டனர்.
122. அனக்சகோரசு அனக்சிமினிசுவின் சீடர் என வரலாற் அயோனிய ருசிரியர்கள் கூறுவர். இது உண்மையாயிருக்க முடியாது. இந்தஜனயாள அனக்சகோரசு பிறப்பதற்கு முன்பே அனக்சிமினிசு இறந்து ரும் இவரும் விட்டார் எனக் கருத இடமுண்டு. ' பாரம்பரியம்’ என்னும் நூலில் அனக்சிமினிசுவின் பெயரை அடுத்து அனக்சகோரசுவின்
1. தெமோகிரித்தோசுவின் காலம்பற்றி 9 ஆம் அத்தியாயம் 171 ஆம் பிரிவிற் காண்க.

Page 141
266 ஆதி கிரேக்க மெய்யியல்
பெயர் தரப்பட்டிருப்பதாலேயே இவ்வாறு கருத இடமேற்பட்டது எனக் கூறுவதோடு நிறுத்திவிட முடியாது. அனக்ககோரசு 'அனக்சிமினிசுவின் மெய்யியற் சிந்தனையோடு தொடர்பு கொண்டவர்,” ன்னக் கூறும் தியோபிறசத்தோசுவின் குறிப் பொன்றிலிருந்தே இக்கருத்து உண்மையிற் பெறப்பட்டதென்க. இந்நூலின் முன்னுரையில் (பிரிவு XIV) விஞ்ஞானக்கழகங்கள் என்பதற்குத் தரப்பட்டிருக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட் டால் தியோபிறசத்தோசுவின் இக்கூற்றுக்கும் திட்டவட்ட மாணவோர் பொருளேற்படும். அதாவது கி. மு. 494 ஆம் ஆண்டில் மிலட்டசு நகரம் அழிந்ததன் பின்னரும் பழைய அயோனிய குழு செயற்பட்டிருந்த தெனவும், பிற ஆசிய நகரங்களில் இக்குழுவினரின் சிந்தனை மரபு தொடர்ந்து சிறப் பாக வழங்கி வந்ததெனவும் பொருள் கொள்ளத் தோன் றும். அத்துடன் இக்குழுவின் மூன்றவது மாண்புமிக்க சிந் தனையாளனுக்குப் பின்னர் சிறப்பு மிக்க மெய்யியலாளன் ஒருவனும் தோன்றவில்லை யெனவும் , அனக்சிமினுசுவின் தத்துவமே இக்குழுவின் தலைவர்களாக யார் இருந்தார்களோ அவர்களால் இன்னமும் போதிக்கப்பட்டு வந்த தெனவும் பெறப்படும்.
கி. மு. ஐந்தாம் நூற்றண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளி லும் ஏற்பட்ட மெய்யியல் வளர்ச்சியைப் பற்றி அடுத்து வரும் சில அத்தியாயங்களில் நாம் அடையப்போகும் முடிவுகளை, இந்நிலையிலேயே சுருக்கமாகக் குறிப்பிடல் நன்மை பயக்கும். சிறந்த சிந்தனையாளரைத் தோற்றுவிக்கும் ஆற்றல் பழைய அயோனிய குழுவிற்கு இன்னமும் இருந்தபோதிலும் அவர் களை ஒரே சிந்தனை மரபோடு தொடர்ந்து பிணைத்து வைத்திருக் கும் சத்தியை அக்குழு இழந்துவிட்டிருந்தது என்பதை நாம் காணலாம். அனக்சகோரசு தன் வழியே சிந்தனையை வளர்த் தார் ; மெலிசசுவும் லியூகிப்போசுவும் தமது சிந்தனையின் உண்மையான தோற்றுவாய் எதுவெனப் பிறர் கண்டுகொள்ளு மளவிற்கு அயோனிய கருத்துக்களைக் கொண்டிருந்தபோதும், ஈலிய முரண்நிலை ஆய்வுமுறையில் அவர்களுக்கிருந்த ஈடுபாடு அவர்களை அனக்சிமினிசுவின் கொள்கைகளை எற்பதுடன் திருப் தியடைய விடவில்லை. சாமோசுவைச் சேர்ந்த இப்பன்போன்ற திறமையற்ற சிந்தனையாளர்கள் தேலிசுவின் செப்பமற்ற கொள் கையையும், இரண்டாந்தர மெய்யியலாளனன இடையோசினிசு போன்றேர் வைதீக அயோனிய வாதத்தையும் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படலாயிற்று. இங்கு நாம் தரும் குறிப்புக் களைப் பற்றிய முழு விபரங்களும், தொடர்ந்து வாசித்துச் செல் கையில் வாசகருக்குத் தெரியவரும். இப்போது வாசகர் நினை

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 267
வில் வைத்திருக்க வேண்டியதெல்லாம் இதுவே. முந்திய அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள சிந்தனைகளுக்கு எவ்வாறு பைதாகரச ஒபிசக்கருத்துக்கள் பின்னணியாக நின்றனவோ அதே முறையில் நாம் இப்போது கூறுங் கதைக்குப் பழைய அயோனிய மெய்யியற் சிந்தனை முழுவதும் பின்னணியாக அமைந்துள்ளது.
123. அதென்சில் வாழ முற்பட்ட முதலாவது மெய்யிய லாளர் அனக்சகோரசே. சலாமிசு ஆண்டில் இவர் அங்கு சென் ருர், அதென்சுக்கு இவர் சென்றதற்குக் காரணமென்ன என்பது பற்றி எமக்குத் தெரியவில்லை. ஆயினும் அவர் அப்போது பாரசீகப் பிரசையாய் இருந்தார் என்பது எமக்குத் தெரி கிறது. ஏனெனில் அயோனிய புரட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிளாசொமெனை அடக்கப்பட்டிருந்தது. அத்துடன் பாரசீகப் படையில் அனக்சகோரசு சேர்ந்திருந்தார் என எண்ணவும் போதிய ஆதாரங்களுள. பெரிக்கிளிசின் குரு அனக்சகோரசுவே எனக் கூறப்படுகிறது. பிளேட்டோவினுடைய அத்தாட்சி யுடன் இச்செய்தி ஐயத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்படுகிறது. * பீதரசு” என்னும் உரையாடலில் பிளேட்டோ சோக்கிரதரைப் பின்வருமாறு பேசவைக்கிருர்:
“உயர்ந்த கலைகளைப் பயில விரும்புவோர், உயர்ந்த விடயங் களைப் பற்றிக் கூறும் விஞ்ஞானத் துறைகளைப் பற்றிப் பேசுத லும் விவாதித்தலும் வேண்டும் ; எத்திசையிலும் உயர்ந்த மனப்போக்கையும் திறமையையும் இவ்வாறே பெற முடியும் போலத் தோன்றுகிறது. பெரிக்கிளிசு தனக்கு ஏற்கெனவே இயல்பாக இருந்த ஆற்றல்களுடன் இத்திறனையும் சேர்த்துக் கொண்டான். விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவரான அனக்சகோரசுவுடன் அவன் சேர்ந்து கொண்டான் எனத் தோன்றுகிறது. உயர்ந்த விடயங்களைப் பற்றிய அறிவை அவன் பூரணமாகச் சேகரித்துக்கொண்டான் , அனக்சகோரசுவின் உரை யாடல்களுக்கு முக்கிய பொருள்களாயிருந்த மனம், அறிவாற் றல் ஆகியவற்றின் உண்மைத் தன்மையையும் நன்றக அறிந்துகொண்டு தனக்குப் பேச்சுக்கலையில் இவற்றில் எவை அனுகூலமாயிருக்குமோ அவற்றை யெல்லாம் ஆழமாக உணர் ந்துகொண்டான்”. பெரிக்கிளிசு பிரபலமானவோர் அரசியல் வாதியாவதன் முன்னர் அனக்சகோரசுவுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை இஃது தெளிவாக்குகிறது. அனச்ச கோரசு, டேமன் என்னும் இரு சோபிட்டுகளிடம் பெரிக்கி ளிசு மாணவனுயிருந்தார் என ஐசோக்கிரத்திசும் கூறியிருக்
அதென்சில் அனக்சகோரசு

Page 142
as nu%0of
268 ஆதி கிரேக்க மெய்யியல்
கிருர். பெரிக்கிளிசுவின் இளமைப்பராயத்திலே டேமனது போதனை அவருக்குக் கிடைத்ததென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அனக்சகோரசுவும் அக்காலத்திலேயே அவருக்குக் குருவாயிருந்தார் என நாம் ஊகிக்கலாம்.
அனக்சகோரசுவுக்கும் இயூரிப்பிடிசுவுக்கும் இடையே இருந்த தொடர்பை நிர்ணயித்தல் சிக்கலானது. தொலமிபிலடெல் பொசுவின் (கி. மு. 280) அரசவையில் வாழ்ந்த கவிஞனும் நூல்நிலைய அதிபனுமான அய்தோலிய நாட்டு அலெக்சாந்தரிட மிருந்து எமக்கு இத்தொடர்பு பற்றிய மிகப் பழமையான ஆதாரம் கிடைத்திருக்கிறது. இயூரிப்பிடிசை, “ தைரியமிக்க அனக்சகோரசுவின் வளர்ப்புக்குழந்தை ’ என அவர் ஓரிடத்தில் வருணிக்கிருர், விஞ்ஞான வாழ்வின் உயரிய தன்மை பற்றிக் கூறும் பிரசித்தமான அக்கூற்று அண்டவியல் அறிஞருள் எவரையாவது குறிப்பிடுவதாயிருக்கலாம். அனக்சகோரசு
வையே அக்கூற்று குறிப்பிடுகிறதெனத் திட்டமாகக் கூற
முடியாது. உண்மையில் அக்கூற்றின் இயல்பை நோக்கு பிடத்து அங்கு குறிக்கப்படுபவர் அதிக விருத்தியடையாத அண்ட வியற் கொள்கையையுடைய சிந்தனையாளரொருவர் எனவே எண்ன்னத் தோன்றுகிறது. ஆயின் அனக்சகோரசு தனது மெய்யியற் சிந்தனையைப் படிப்படியாகவே விருத்தி செய்தனர் எனக் கொள்ளுதலும் கூடும். அத்துடன் அனச்சிமினிசுவின் சிந்தனையையே இவர் முதலில் போதித்தனர் என்பதிலும் ஐயமில்லை. அன்றியும் அனக்சகோரசுவின் பிரதான கருத்தை எடுத்துக் கூறும் பகுதி ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது. இதை அனச்சிமினிசுவை விட வேறெவரையும்சார்ந்த சிந்தனை யெனக் கூற முடியாது.
124. பெலரோன் நகரத்து டிமீத்திரியோசு தரும் காலமா னத்தை நாம் எற்றுக்கொண்டால் பெரிக்கிளிசுவின் அரசியல் வாழ்வின் முற்பகுதியிலேயே அனக்சகோரசுவின் விசாரணை நடை பெற்றதென்பது தெளிவாகிறது?. மெலிசியாசுவின் மகனன
1. கி.மு. 460 ஆம் ஆண்டளவிலேயே டேமன் அரசியலிற் பெரிதும் ஈடு பட்டிருந்தாராகையால் அவர் கி. மு. 500 ஆம் ஆண்டளவிற் பிறந்திருக்கவேண் டும். மேயரது கூற்றின்படி, கி. மு. 443 ஆம் ஆண்டின் முன்பே இவர் சமூ கத்திலிருந்து விலக்கப்பட்டுவிட்டார் எனக் கொள்ள வேண்டும். கி.மு. 445 இல் இவர் விலக்கப்பட்டு, 435 இல் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் எனக் கொண்டோமாயின், அதன்பின் அவருக்கும் சோக்கிரதருக்கும் இடையே நிலவிய தாகக் கூறப்படும் தொடர்புகள் இயல்பாக எற்பட்டிருக்கக் கூடியவையே. பிளேட்டோ இவரை நேரடியாக அறிந்திருக்க முடியாது.
2. அனக்சகோரசுவின் வழக்கு, பெலோப்பனிசிய போரிற்குச் சிறிது காலத் திற்கு முன்பே விசாரிக்கப்பட்ட தெனவே பொதுவாகக் கூறப்படுகிறது.

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 269
தவுக்கிடிடெசுவினல் மீடிசம் (பாரசீகர்களுக்குச் சார்பான நடவடிக்கை) நாத்திகம் ஆகியவற்றுக்காக அனக்சகோரசு குற்றம் சாட்டப்பட்டாரெனச் சத்தைரோசு கூறுவதும் இதுவே. தவுக்கிடிடெசு கி. மு. 443 இல் சமுதாயத்திலிருந்து விலக் கப்பட்டானதலால் அனக்சகோரசுவின் விசாரணை கி. மு. ஐம்ப தாம் ஆண்டளவில் நடைபெற்றதெனக் கொள்ளுதல் பொருந் தும். பெரிக்கிளிசுவின் இன்னெரு ஆசிரியரான டேமன் சமூ கத்திலிருந்து விலக்கப்பட்ட சம்பவத்திற்கும் அனக்சகோர சுவின் விசாரணைக்கும் இதனுல் தொடர்பேற்படுகிறது. இக்கால நிர்ணயம் சரியெனின் பிளேட்டோ என் தனது நூல்களில் சோக்கிரதர் ஒருமுறையாவது அனக்சகோரசுவைச் சந்தித்த தாகக் கூருது விட்டனர் என்பது எமக்குத் தெளிவாகும். விஞ் ஞானக் கொள்கைகளில் கவனம் செலுத்துமளவிற்குச் சோக் கிரதருக்கு வயதாகுமுன்னரே அனக்சகோரசு தனது கழகத்தை ஆக்கேலசுவிடம் ஒப்படைத்துவிட்டார்?. ஆயினும் இவர் மீது நாத்திகன் என்னும் குற்றச்சாட்டு என் சுமத்தப்பட்டதென்பத்ை நாம் பிளேட்டோவிடமிருந்து அறியக்கூடிய தாயிருக்கிறது. சூர் யன் ஒரு சிவந்த சூடான கல்லெனவும், சந்திரன் பூமியைபி போல மண்ணுலானதெனவும் அனக்சகோரசு போதித்தமையே அவர் நாத்திகனெனப்பட்டதற்குக் காரண மென்க. உன்னும யில் அனக்சகோரசு இக்கொள்கைகளில் நம்பிக்கையுடையவரர்ப் இருந்தார் என்பதை நாம் காண்போம் (பிரிவு 133). எனையவற் றிற்கு, இவர் பெரிக்கிளிசுவினல் சிறையினின்றும் விடுவிக்கப் பட்டு அனுப்பப்பட்டார் என்னும் விவரமே மிகவும் பொருத் தமானது. அதென்சில் இத்தகைய நிகழ்ச்சிகள் சாத்தியமா யிருந்தன என்பது எமக்கு எற்கெனவே தெரிந்ததே.
இரண்டாம் தாயகமாகத் தான் தழுவிக்கொண்ட நகரிலி ருந்து வெளியேற்றப்பட்ட அனக்சகோரசு தான் விரும்பியவற் றைச் சுதந்திரமாகப் போதிக்கும் பொருட்டு அயோனியாவுக்கு . அனக்சகோரசு, குறைந்தது 30 ஆண்டுகளாவது அதென்சில் வாழ்ந் தார் எனும் கூற்றேடு இது முற்ருகப் பொருந்துவதாயுள்ளது.
2. சோக்கிரதர் மிகவும் இளவயதினராயிருக்கும்போதே அனக்சகோரசு அதென்சிலிருந்து சென்றுவிட்டார் எனப் பொருள்படும் வகையிலேயே, பீடோ விலுள்ள இப்பெயர்பெற்ற பகுதி அமைந்துள்ளது. அனக்சகோரசுவின் நூல்பற்றி ஆக்கேலசுவிடமிருந்தே அவர் கேள்விப்படுகிறர். உடனே அதைத் தருவித்து அதனைச் சோக்கிரதர் வாசிக்கிருர். அனக்சகோரசு அக்காலத்தில் அதென்சில் இருந்திருந்தால் சோக்கிரதர் அவரைத் தம்மிடத்திற்கு அழைத்து அவரோடு உரையாடியிருப்பார். பிளேட்டோவும் அதனை ஓர் உரையாடலாக எழுதியிருப்பார். பார்மனடிசு, சேனே என்போர், சோக்கிரதரைச் சந்தித்தன ரெனச் சித்திரித்துள்ள பிளேட்டோ அனக்சகோரசுவைப்பற்றி அவ்வாறு கூருது விட்டது கவனித்தற்குரியது.

Page 143
இவர் எழுதியவை
270 ஆதி கிரேக்க மெய்யியல்
மீண்டும் சென்றர். அங்கு அவர் மிலட்டசுவின் குடியேற்றப் பகுதிகளுள் ஒன்றய இலாம்புசகோசுவில் வாழலாயினர். இங்கு கழகம் ஒன்றையும் அவர் நிறுவினர் என எண்ண ஆதாரம் இருப்பதைக் காண்போம். ஆனல் இதுவுண்மையானல், அனக்ச கோரசு இறப்பதற்கு முன்னர் சிறிதுகாலம் இலாம்புசகோசில் வாழ்ந்திருத்தல் வேண்டும். இலாம்புசகோனியர்கள் இவரது ஞாபகார்த்தமாக மனத்திற்கும் உண்மைக்கும் அர்ப்பணிக்கப் பட்ட பீடமொன்றைத் தமது சந்தையிடத்தின் நடுவே நிறுவி னர். அத்துடன் அவரது வேண்டுகோளின் பேரில் அவரது இறந்த நாள் ஆண்டு தோறும் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஓர் விடு முறை நாளாகக் கொண்டாடப்பட்ட தெனவும் கூறப்பட்டது.?
125. ஒரே ஒரு நூலை மட்டும் எழுதிவைத்துவிட்டுப் போன மெய்யியலாளரின் வரிசையில், இடையோசினிசு அனக்சகோரசு வின் பெயரையும் தந்துள்ளார். அன்றியும், இந்நூல் உயர்வா னதும் வாசிக்க “ இனிமையானதுமான நடையிலே எழுதப் பட்டிருந்தது’ என்னும் மதிப்புரையையும் அவர் பேணித்தந்துள் ளார். அலெக்சாந்திரிய நூலகவதிபர்களிடமிருந்து பெறப்பட்ட தான இக்கூற்றுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை யெனலாம். காட்சிச் சித்திரங்களை வரைவோர் அவதானிக்க வேண்டிய இயலுருத்தோற்ற அமைப்புக்கள் பற்றிய நூலொ ன்றையும் இவர் எழுதினரெனக் கூறப்படுகின்றதெனினும் அதனை நம்ப முடியாதெனலாம்?. அன்றியும், வட்டத்தின் பரப்புக்காண்முறை பற்றிய நூலொன்றையும் இவர் எழுதின ரென்னும் கருத்து, புளுட்டாக்கின் கூற்றென்றிற்குப் பிழை யாகப் பொருள் கொண்டதனலேற்பட்டதே. அதென்சில் அனக்சகோரசுவின் நூல்கள் ஒரு திருக்குமாவுக்கு வாங்கக் கூடியனவாயிருந்தன எனும் செய்தியை நாம் அப்பொலசி எனும் நூலிற் காண்கிறேம்; அந்நூலைப்பற்றிச் சோக்கிரதரைப் பிளேட்டோ அதிக நேரம் பேச வைப்பதிலிருந்து, அது கணிசமான அளவினதான நூல் எனக் கருதக்கூடியதாயிருக் கிறது. கி. பி. ஆரும் நூற்றண்டில் கலைக்கழக நூல் நிலையத்தி லிருந்து போலும் சிம்பிளிசியசுவினல் அந்நூலின் பிரதியொன்
1. ஆக்கேலசுவின் வருணனையை அத்தியாயம் 10, 191 ஆம் பிரிவிற் காண்க.
* அனக்சகோரசு கெளரவிக்கப்பட்ட முறைகள் பற்றிய மிகப்பழைய ஆதா ரம் அலுக்கிடாமசுவே. யோச்சியாசுவின் மாணவனன இவர் தனது காலத்திலும், அனக்சகோரசுவின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதெனக் கூறுகிறர்.
* Witruvius, wii pr. 1. தனது சித்திரத்தில் புகழ்பெற்ற சிறந்த கலைஞன் ஒருவனுடைய ப்ெயரைப் பொறிக்க விரும்பும் பொய்யன் எவனும் இயூறிப் பிடிசுவுக்குப் போதித்தவரெனப்படும் மெய்யியலாளரது பெயரையே உடனடியாக நினைவுகூர்வான்.

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 27
றைப் பெற முடிந்தது. ஐயத்திற்கிடமானவையான இரண்டொரு பகுதிகளைத் தவிர்த்து, எமக்குக் கிடைத்துள்ள இந்நூற் குறிப் புக்கள் யாவும் இவரிடமிருந்தே பெறப்பட்டுள்ளன. துரதிட் டவசமாக இவர் எடுத்தாண்டுள்ள பகுதிகள் யாவும் பொதுப் படையான கொள்கைகளைக் கூறும் முதற் பாகத்திலிருந்தே பெறப்பட்டுள்ளமையால், அவற்றின் விவரங்களைப்பற்றி நன்றக நம்மால் அறிய முடியாதிருக்கிறது.
126. டியல்சுவின் வைப்புமுறைப்படி இந்நூற்பகுதிகள் கீழே நூற் பகுதிகள் தரப்பட்டுள்ளன :
(1) எண்ணிக்கையிலும் நுண்மையிலும் எல்லையற்றனவா யிருந்த பொருள்கள் யாவும் ஒருங்கே யிருந்தன ; ஏனெனில் நுண்மையும் எல்லையற்றதாயிருந்தது. அன்றியும் இவையாவும் ஒருங்கே யிருந்தபோது ஒன்றன் நுண்மை இன்னென்றின் நுண்மையிலிருந்து வேறுபடாததாயுமிருந்தது. காற்றும் ஈதரும் எல்லையற்றனவாதலால் எல்லாப் பொருள்களையும் பரவி நின்றன. எல்லாப் பொருள்களுக்குள்ளும் இவ்விரண்டுமே அளவிலும் தொகையிலும் கூடியவை. R. P. 151.
(2) உலகைச் சூழ்ந்திருக்கும் பொருட்டொகுதியிலிருந்து காற் றும் ஈதரும் பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு உலகைச் சூழ்ந் திருக்கும் பொருளும் எல்லையற்ற அளவினது. R. P. ib.
(3) நுண்மையானவற்றுள்ளே யாவற்றிலும் சிறியதென் ருென்றில்லை ; ஏனெனில் இருக்கும் எப்பொருளும் பிரிப்பத ஞல் இல்லாது போவதில்லை. யாவற்றிலும் பெரிய பொருள் என எண்ணப்படும் பொருளிலும் பார்க்கப் பெரியதானபொருள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். அது தொகையில் மிகச் சிறியதானதிற்கு எப்போதும் சமமானதாயுமிருக்கும். இப்பொருள்களில் ஒவ்வொன்றும் தன்னுடனேயே ஒப்பிடப்படும் போது பெரியதாகவும் அதே நேரத்தில் சிறியதாகவும் உள்ளது.
R. P. 159 a.
(4) பொருள்கள் இவ்வாறிருக்கின்றனவாகையால், பல்வேறு சுவைகளையும் நிறங்களையும் உருவங்களையும் கொண்ட பல பொருள்களின் வித்துக்களும் வேறு பலவகையான பொருள் களும், இணையும் பொருள்களில் இருப்பதாக நாம் கொள்ளல் வேண்டும் (R. P. ib). அன்றியும் இப்பொருள்களில் மனிதர் களும் மற்றும் உயிருள்ள மிருகங்களும் உருவாகியுள்ளனர் எனவும் அம்மனிதர்களும் எம்மைப் போல கமத்தொழில் போன்ற தொழில்களில் ஈடுபட்டனரெனவும், எம்மைப் போல அவர்களுக்கும் சூரியன் சந்திரன் என்பன இருந்தன எனவும் நாம் கொள்ளல் வேண்டும். அவர்களது நிலத்திலிருந்து அவர்

Page 144
272 ஆதி கிரேக்க மெய்யியல்
கள் பல பொருள்களைப் பெற்றுக்கொண்டனரெனவும் அவற்றுட் சிறந்தனவற்றை அவர்கள் தமது இல்லங்களுக்குக் கொண்டு சென்று உபயோகித்தனரெனவும் நாம் கொள்ளல் வேண்டும் (R. P. 160b). பொருள்கள் பிரிதல், எம்மிடத்தே மட்டும் நிகழ்வ தொன்றல்ல, பிற இடங்களிலும் நிகழ்வதே என்பதைக் காட்டும் பொருட்டு நான் பிரிதல் பற்றி இவ்வளவும் கூறியுள்ளேன்.
ஆனல் இவை பிரியுமுன்னர், பொருள்கள் யாவும் ஒன்ற யிருந்தபோது நிறங்களைத் தானும் கண்டு கொள்ளுதல் இய லாததாயிருந்தது. ஏனெனில் வேறுபட்ட பண்புகளையுடைய எண்ணற்ற பல பொருள்கள்-ஈரலிப்புடையனவும் பசுமையான வையும், சூடானவையும் குளிர்ந்தவையும், ஒளி பொருந்திய வையும், இருளானவையும் அதிக மணல் சேர்ந்தனவுமான பொருள்கள்--கலந்திருந்தன. இவ்வாறு இவை யாவும் கலந் திருந்தமையாலேயே இவற்றைத் தனித்தனியே இனங்கண்டு கொள்ளுதல் இயலாதிருந்தது. எனெனில் இப்பொருள்களில் ஒன்ருவது மற்றதைப்போலில்லை. இப்பொருள்கள் இவ்வாறு இருத்தலால், பொருள்கள் யாவும் முழுமையிலுள்ளன வெனக் கொள்ளுதல் வேண்டும். R. P. 1511.
(5) இப்பொருள்களைப் பற்றி இவ்வாறு முடிவு செய்ததன் பின்னர், இவை யாவும் கூடியோ அன்றிக் குறைந்தோ இல்லை எனவும் அறிதல் வேண்டும். ஏனெனில் யாவற்றிலும் பார்க்க அவை கூடுதலாக இருத்தல் சாத்தியமில்லை ; அத்துடன் யாவும் எப்போதும் சமமாய் உள்ளன. R. P. 151.
(6) பெரியனவற்றின் பகுதிகளும் சிறியனவற்றின் பகுதி களும் தொகையிற் சமமாயிருக்கின்றபடியாலும் ஒவ்வொரு பொருளிலும் எல்லாப் பொருள்களும் இருக்கின்றன. இவை பிரிந்திருப்பதும் சாத்தியமில்லை; ஆனல் எல்லாப் பொருள்களும், எல்லாவற்றின் பகுதிகளையும் உடையனவாய் இருக்கின்றன. யாவற்றிலும் மிகக் குறைந்ததான ஒன்று இல்லையாதலால் இவற்றைப் பிரிக்கவும் முடியாது; இவை தாமாகத் தனியே இருக்கவும் இயலாது ; ஆரம்பத்தில் இருந்ததுபோல யாவும் ஒன்றகவே, இப்போதும் இருத்தல் வேண்டும். எல்லாப் பொருள்களிலும் பல பொருள்கள் உள்ளன. பிரியும் பொருள் கள் யாவற்றிலும், சிறிய பொருள்களும் பெரிய பொருள்களும் &FLOLOT &5 gD_GöîTGoTG607.
இதனை ஓர் தொடர்பான பகுதியாக, சிம்பிளிசியசு மும்முறை மேற் கோளாகக் கையாண்டிருக்கிறராதலால், நாம் இதனைப் பிரித்தல் பொருந்தா தென நான் முதற்பதிப்பில் எலவே சுட்டிக்காட்டியிருந்தேன். இப்போது டியல்சுவும் இதனை ஒரே பகுதியாகவே அச்சிடுகின்றர்.

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 273
(7) பிரிக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையை நாம் சொல் லிலோ செயலிலோ அறிய முடியாதபடி. . . . . . . . . . . . . .
(8) ஒருலகில் உள்ள பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக் கப்பட்டோ கோடரியினல் வெட்டப்பட்டோ இல்லை ; சூடானவை குளிர்ந்தனவற்றிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கவில்லை. குளிர்ந் தவை சூடானவற்றிலிருந்து பிரிக்கப்பட்டுமில்லை. R. P. 155 8.
(9) இப்பொருள்கள் சுழன்று, அச்சுழற்சியின் வேகத்தாலும் விசையாலும் பிரிக்கப்படுகையில் . . . . . . . . வேகமே விசையை உண்டாக்கின்றது. ஆனல் இவற்றின் வேகம் இப்போது மனிதரி டையேயுள்ள எதனது வேகத்தையும் போன்றதல்ல. எல்லா வழிகளிலும் பல மடங்கு கூடியதாகும்.
(10) மயிரல்லாததிலிருந்து எவ்வாறு மயிர் உண்டாதல் கூடும் ? அன்றேல் தசையல்லாததிலிருந்து எவ்வாறு தசை யுண்டாதல் கூடும் ? R. P. 155, t, n. 1.
(11) ஒவ்வொரு பொருளிலும், நூசு தவிர்ந்த எனைய பொருள்கள் எல்லாம் சிறிதளவு உளது. நூசும் உள்ள பொருள்களும் சில உள. R. P. 160 b.
(12) எனப் பொருள்கள், பிற பொருள்கள் யாவற்றையும் கொண்டவையாய் இருக்கையில் நூசானது எல்லையற்றதாயும் தன்னியல்புடையதாயும் வேறென்றேடும் கலவாததாயும் தானேயாய்த் தனித்துள்ளதாயும் இருக்கிறது. ஏனெனில் அது தனித்திராது, வேறு எதனேடும் கலந்திருப்பதாயின், அது எல்லாப் பொருள்களோடும் கலந்திருப்பதாகிவிடும் ; ஏனெனில் நான் முன் கூறியவாறு ஒவ்வொரு பொருளிலும் சிறிதளவு ஏனைய ஒவ்வொரு பொருளும் உளது ; அத்துடன் இவ்வாறு பல பொருள்கள் கலந்திருப்பின் நூசு தடைசெய்யப்படுமாதலின், இப்போது தனித்திருக்கையில் அதற்கிருக்கும் சத்தி அதற்கு ஒன்றன்மீதும் இல்லாது போய்விடும். ஏனெனில் அது யாவற்றி லும் மிகவும் நொய்யதும், தூய்மையுடையதும், மிகக் கூடிய வலிமையுடையதும், யாவற்றையும் பற்றிய அறிவும் படைத்தது மாயுள்ளது. பெரியனவும் சிறியனவுமான உயிருள்ள எல்லாப் பொருள்கள்மீதும் நூசு அதிகாரம் உடையதாயிருக்கின்றது. சுழற்சி முழுவதன்மீதும் நூசு அதிகாரமுடையதாயிருந்தது. ஆகவே ஆதியிலேயே அது சுழலவாரம்பித்தது. ஆனல் அச் சுழற்சி இப்போது முன்பிருந்ததிலும் கூடிய வெளியை வியா பிக்கிறது ; இன்னும் கூடிய வெளியையும் அது காலப்போக்கில் வியாபிக்கும். ஒன்ருகக் கலந்திருப்பவையும் பிரிந்துள்ளவை யும் பிரித்தறியக்கூடியனவுமாயுள்ள பொருள்கள் யாவும் நூசு வின் மூலமாகவே அறியப்படுகின்றன. முன்பு இருந்து தற்
1-R, 10269 (663)

Page 145
274 ஆதி கிரேக்க மெய்யியல்
போது இல்லாத பொருள்கள், பின்னர் இருக்கப்போகின்ற பொருள்கள், இப்போது இருக்கின்ற பொருள்கள் ஆகிய யாவும் நூசுவினுல் ஒழுங்குபடுத்தப்பட்டன. பிரிந்திருக்கும் ஈதர், காற்று என்பனவற்றையும், சூரியன், சந்திரன், விண்மீன்கள் என்பன வற்றையும் உள்ளடக்கிய இச்சுழற்சியும் நூசுவினல் ஒழுங்கு படுத்தப்பட்டதே. இச்சுழற்சியே இவற்றின் பிரிவை உண்டாக் கியது. ஐதானவற்றிலிருந்து அடர்த்தியானவையும், குளிர்ந்தன வற்றிலிருந்து சூடானவையும், இருண்டனவற்றிலிருந்து ஒளி பொருந்தியனவும், ஈரலிப்புடையனவற்றிலிருந்து வறண்டவை பும் பிரிக்கப்பட்டன. அன்றியும் பல பொருள்களிற் பல பகுதி கள் உள்ளன. ஆனல் எந்தப் பொருளும் முற்றகப் பிரிக்கப் படவில்லை. அன்றியும் நூசுவிடமிருந்தேயொழிய மற்றப் பொருள் களிலிருந்து எப்பொருளையும் தனித்தறியவும் முடியாது. சிறி யனவாயும் பெரியனவாயும் உள்ள நூசு முழுவதும் ஒரே தன்மையதாய் உள்ளது. எந்தப் பொருளும் வேறு எந்தப் பொருளையும் போன்ற தன்மையுடையதல்ல. ஆனல் ஒவ்வொரு பொருளும் அதில் எப்பொருள்கள் அதிகமாக உள்ளதோ அப்பொருளின் தன்மையையுடையதாயிருந்தது. இப்போது அவ் வாறேயுள்ளது. R. P. 155.
(13) பொருள்களை நூசு நகர்த்த ஆரம்பித்ததும், நகர்த்தப் பட்ட பொருள்கள் யாவும் பிரிய ஆரம்பித்தன. அன்றியும் நூாசு இவற்றை இயக்கியவரையிலும் எல்லாப் பொருள்களும் பிரிந்து போயின. பொருள்கள் இயக்கத்துக்குள்ளாகிப் பிரிந்த போது, சுழற்சி அவற்றை மேலும் அதிகமாகப் பிரியச் செய்தது.
(14) எது இருப்பினும் நூசு இருப்பது உறுதியே. எனைய பொருள்கள் யாவும் இருக்கும் இடத்திலும், சூழவிருக்கும் பொருட்டொகுதியிலும், அதனேடு சேர்ந்தனவற்றிலும், அத னின்று பிரிக்கப்பட்டவற்றிலும் நூசு உள்ளது.
(15) அடர்த்தியானவையும், ஈரலிப்புடையவையும், குளிர்ந்த வையும், இருண்டவையும், இப்போது பூமி உள்ள இடத்தில் ஒன்று சேர்ந்தன. ஐதானவையும், சூடானவையும், வறண்ட வையும், பிரகாசமானவையும் ஈதரின் வெளியெல்லையை நோக் கிச் சென்றன. R. P. 156.
(16) இவற்றிலிருந்து-இவை பிரியும்போது-பூமி இறுக்க மடைகிறது ; ஏனெனில் புகாரிலிருந்து நீர் பிரிக்கப்படுகிறது ; நீரிலிருந்து நிலம் பிரிக்கப்படுகிறது. குளிரினல் இறுகிய நிலத் திலிருந்து கற்கள் உண்டாகின்றன. இவை நீரிலும் பார்க்க அதிகமாக வெளியே விரைகின்றன. R. P. 156.

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 275
(17) தோன்றுவது பற்றியும் அழிவது பற்றியும் பேசுகையில் எலெனிசிய மக்கள் பிழையான வழக்கமொன்றிற் குட்படுகின் றனர் ; ஏனெனில் ஒரு பொருளும் தோன்றுவதோ அழிவதோ இல்லை. அவை இருந்தவாறே கலப்படைதலும் பிரிதலுமே நடைபெறுகின்றன. ஆகவே தோன்றுவதற்குப் பதிலாகக் கலப் படைதல் எனவும் அழிதல் என்பதற்குப் பதிலாகப் பிரிதல் எனவும் அவர்கள் கூறுவது சரியாகும். R. P. 150.
(18) சந்திரனுள்ளே பிரகாசத்தை வைத்தது சூரியனே, (19) நாம் வானவில்லை, மேகங்களிற் றேன்றும் சூரியனது பிரதிபலிப்பு என்கிறேம் ; அது இப்போது புயலின் ஒரு அறி குறி ; எனெனில் மேகத்தைச் சுற்றிப் பாயும் நீர் காற்றை உண்டாக்கிறது அல்லது மழையாகப் பொழிகிறது.
(20) நாய் வெள்ளியின் (?) உதயத்துடன் மனிதர்கள் அறு வடையை ஆரம்பிக்கின்றனர். அதன் அத்தமனத்துடன் அவர் கள் நிலத்தை உழ ஆரம்பிக்கின்றனர். நாற்பது இரவு பகல் களுக்கு அது மறைந்திருக்கிறது.
(21) எமது புலன்கள் பலவீனமாயிருப்பதால் எம்மால் உண் மையை மதிப்பிட முடியவில்லை.
21 a) எமக்குத் தோன்றுவது, காணப்படாதவொன்றின் தோற்றமே.
(21b) நாம் எமது அனுபவம், ஞாபகசத்தி, திறமை, புத்தி ஆகியவற்றை உபயோகிப்பதால் (எம்மால் எனைய மிருகங்களைப் பயன்படுத்தமுடிகிறது).
(22) "பறவையின் பாலென்”பது முட்டையின் வெண்பகுதி யையே.
127. எங்கு பார்ப்பினும் தோன்றுவதும் அழிவதுமாய்க் அனக்சகோரச காட்சி தரும் இவ்வுலகு, மாறுபடாததன்மையுடையதே தூலப் பிம் வருக்கு பொருள் எனும் ஈலிய மெய்யியலாளரது கொள்கையோடு உண் முதன்றி மையில் முரண்பட்டதன்று என்பதை நிறுவுவதே எம்பிடோக்கி இரு ளிசுவைப் போல, அனக்கோராசுவினதும் நோக்கமாயிருந்தது. பார்மனடிசுவின் முடிபுகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி ஏற்றுக் கொளளப்பட்டு மீணடும் அனக்சகோரசுவினல் இயம்பப்பட்டன. எல்லாப் பொருள்களுடனும் எதையும் சேர்க்க முடியாது. ஏனெ னில் எல்லாவற்றையும் விட அதிகமாக எதுவும் இருக்கமுடி யாது. அன்றியும் எல்லாம் எப்பொழுதும் சமமாகவே இருக்கிறது (பகுதி 5). ஒன்றும் முற்றக அழிந்து போகவும் முடியாது. மணி தர்கள் பொதுவாக தோன்றல் எனவும் அழிதல் எனவும் கூறு வது உண்மையில் கலப்பையும் பிரிவையுமே என்க (பகுதி 17).

Page 146
276 ஆதி கிரேக்க மெய்யியல்
கலப்புப்பற்றிய இக்கொள்கையை, தன் காலத்தவரும் தன்னி லும் இளையவருமான எம்பிடோக்கிளிசிடமிருந்து அனக்சகோரசு பெற்றிருக்கலாமென எண்ண எவ்வகையிலும் இடமுண்டு. எம்பிடோக்கிளிசுவின் பாடல்கள் இவரது நூலுக்கு முன்னரே வெளிவந்திருக்கலாம். எப்படியாயினும் ஐந்தாம் நூற்றண் டின் நடுப்பகுதிக்கு முன்னரே எம்பிடோக்கிளிசுவின் கருத் துக்கள் அதென்சில் தெரிந்திருந்தன என்பதை நாம் கண் டோம். சூடு, குளிர், ஈரலிப்பு, வறட்சி எனும் முரண்பாடுகள் ஒவ்வொன்றும் பார்மனைடிசுவின் கருத்துக்கேற்ற உண்மைப் பொருள்களே என நிறுவுவதன் மூலம் எவ்வாறு எம்பிடோக் கிளிசு காட்சியுலகத்தை மறுப்பதிலிருந்து காப்பாற்ற முயன்ற ரென்பதையும் நாம் கண்டோம். அனக்சகோரசுவிற்கு இது திருப்தியளிக்கவில்லை. பொருள்களில் எதுவும் மற்றைய எல்லாப் பொருள்களாகவும் மாறுகிறது. உலகத்தில் உள்ள பொருள்கள் இவ்வாறு “கோடரியினல் வெட்டப்பட்டிருக்கவில்லை’ (பகுதி 8). இதற்கு மாறக உண்மையான சூத்திரம் இதுவே ஒவ்வொரு பொருளிலும், எல்லாப் பொருள்களினது ஒரு பகுதி இருக் கின்றது. “ Gresi 128. அனக்சகோரசு இதை நிரூபிக்க உபயோகித்த வாதத் பொருள்களும் தின் ஒரு பகுதி, சற்றே சிதைந்த முறையில், ஈத்தியோசுவினல் பேணித் தரப்பட்டிருக்கின்றது. சென். கிரேகரி நேசியான்சீன் பாருளிலும்"
ற்றி எழுதப்பட்ட குறிப்புரையிலிருந்து டியல்சும் இவ்வாதம் பற்றி முதலில் எழுதப்பட்ட சில வார்த்தைகளையே பெற்றுள் ளார். “நாம் நீரை அருந்தும் போதும் அல்லது டிமீட்டரது பழத்தைப் புசிக்கும்போதும் மிகவும் எளிமையான ஊட்டத் தையே பெறுகிறேம் ; ஆனல் தசையல்லாததிலிருந்து தசை உண்டாதலோ, மயிரல்லாததிலிருந்து மயிர் உண்டாதலோ எவ் வாறு சாத்தியமாகும் ?’ என அவர் வினவினர் (பகுதி 10). ஆதி மைலிசியர்களும் இத்தகைய வினக்களையே எழுப்பியிருத் தல் வேண்டும். உடற்றெழிலியல் பற்றிய முந்திய ஆர்வம் இப்போது வாயுமண்டலம் பற்றியதாகிவிட்டது என்பதே வேறு பாடு என்க. அப்பொலோனியாவைச் சேர்ந்த இடையோ சினிசுவும் இவ்வாறே வாதித்தார் என்பதையும் நாம் காண் போம் (பகுதி 2). உலகங்களின் தோற்றத்துக்கு முன்பு இருந்த மூலக்கலவையையே “ ஒவ்வொரு பொருளிலும் எல்லாப் பொருளினதும் ஒரு பகுதி இருந்தது’ எனும் வார்த்தைகள் வர்ணிக்கின்றன என நாம் கொள்ளலாகாது (பகுதி 1). உண் மையில் இதற்கு மாறக, இப்பொழுதும் “ எல்லாப் பொருள் களும் ஒன்ருகவே இருக்கின்றன ’ ; அன்றியும் சிறியனவும் பெரியனவுமாகிய எல்லாப் பொருள்களிலும் சமமான அளவு

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 277
* பகுதிகள் ” உள்ளன (பகுதி 6). ஒரு குறைந்த அளவான பொருளில், பொருட்பாகங்களில் ஒன்று இலதாகின், குறைந்த எண்ணிக்கையுடைய பகுதிகளே இருத்தல் கூடும் ; ஆனல் பார்மனடிசுவின் கொள்கையின் பூரனை கருத்துக் கேற்றவாறு, ஒரு பொருள் உளதாயின் வெறும் பிரித்தலினல் அப்பொருள் அற்றுப் போகும் எனல் சாத்தியமில்லை (பகுதி 3). தூலப் பொருளானது எல்லையின்றிப் பிரிக்கப்படக்கூடியது ; எனெ னில் மிகப் பெரியது என்பது எவ்வாறு இல்லையோ அவ்வாறு மிகச் சிறியது என்பதும் இல்லை. ஆனல் ஒரு பொருள் எவ்வ ளவு பெரியதாயோ சிறியதாயோ இருப்பினும், அதில் ஒரே எண்ணிக்கையுடைய பகுதிகளே இருக்கும்-அதாவது ஒவ்வொரு பொருளிலும் ஒரு பகுதி இருக்குமென்க.
129. என்ன “பொருள்க’ளின் பகுதிகள் இவ்வாறு எல்லாப் பொருள்களிலும் இருக்கின்றன? உதாரணமாகக் கோதுமையில் தசை, இரத்தம், எலும்பு போன்றனவற்றின் சிறு துகள்கள் இருப்பதாக அனக்சகோரசு கூறியதாகச் சிலர் அவரது கொள் கையைப்பற்றிக் கூறுதல் வழக்கமாயிருந்தது ; ஆனல் தூலப் பொருள் எல்லையின்றிப் பிரிக்கப்படக்கூடிய தென்பதையும் (பகுதி 3) சிறு பொருளிலும் பெரிய பொருளில் உள்ள அளவு பகுதிகள் உள்ளன (பகுதி 6) என்பதையும் நாம் இப்போது கண் டோம். இது பழைய கொள்கையை வலுவற்றதாக்குகிறது. நாம் எவ்வாறு மேலும் மேலும் பிரித்துக் கொண்டு சென்றலும், நம்மால் “ கலப்பற்ற ’ தனிப் பொருளை அடைய முடியாது. ஆகவே எவ்வளவு நுண்ணியதாத ஒரு பொருள் இருப்பினும் அது தனிப்பண்பையுடையவோர் கலப்பற்ற பொருளாக இருக்க (1ԲւԳաո Ֆl.
இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரே ஒரு வழியே உண்டு. “ஒன்றிலி ருந்து ஒன்று கோடரியால் வெட்டப்பட்டதுபோற் பிரிக்கப்படாத னவாய்” இருக்கும் பொருள்களுக்கு உதாரணமாக 8 ஆவது பகுதியில் தரப்பட்டவை வெப்பமும் குளிருமே. பிற இடங்க ளில் (பகுதிகள் 4, 15) வழமையான எனைய முரண்பாடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மூலதத்துவங்கள் எல்லையற்ற வையெனக் கொள்வதானல், அவை தெமோகிரித்தோசு கூறி யதுபோல ஒரே இனத்தவையாகவோ அல்லது முரண்பட்ட வையாகவோ இருக்கலாம் என அரித்தோதில் கூறுகிறர். முரண்பட்ட தன்மையுடையனவே மூல தத்துவங்கள் என அனக்சகோரசு கருதினரென, போபைரியையும் தெமிசுத்தியோ சுவையும் பின்பற்றிச் சிம்பிளிசியசு கூறுகின்றர். “ கோமியோ மரிசு ’ (Homoeomeries) எனும் ஒத்த இயல்புடைய மூலப்பொ
பகுதிகள்

Page 147
விதைகள்
278 ஆதி கிரேக்க மெய்யியல்
ருள்களை மூலதத்துவங்கள் என அழைக்குமளவிற்கு அனக்ச கோரசுவின் “முரண்பாடுகளை ” யும் அவ்வாறு அழைக்கலாம் என்று பொருள்பட அரித்தோதிலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ஒவ்வொரு பொருளிலும் இருப்பவை அம்முரண் பாடுகளின் பகுதிகளேயன்றி வெவ்வேறு வகைத் தூலப்பொ ருள்களின் பகுதிகளல்ல. எவ்வளவு சிறியதாய் அல்லது பெரிய தாய் இருப்பினும், ஒவ்வொரு பொருட்பகுதியும் இம்முரண் பட்ட குணங்கள் ஒவ்வொன்றையும் உடையதாயிருக்கின்றது. சூடாயுள்ளது ஒரு அளவிற்குக் குளிர்ந்ததாயும் இருக்கிறது. வெண்பனியும் கறுப்பாயிருக்கிறதென அனக்சகோரசு கூறி னர்; அதாவது வெண்மையும் அதற்கு எதிரான நிறம் சற்றே உள்ளதாகவேயிருக்கிறது. இதற்கும் எரக்கிளைட்டசுவின் கொள் கைக்கு மிடையே உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டின் போதும் (பிரிவு 80).
130. எம்பிடோக்கிளிசுவின் கொள்கைக்கும் அனக்சகோரசு வின் கொள்கைக்குமிடையே உள்ள வித்தியாசம் இதுவே. உல கத்திலுள்ள பல்வேறு பொருள்களை, குறிப்பாக உடலின் பகுதி களான தசை, எலும்பு என்பனவற்றைப் பிரித்தால், முதற் றத்துவங்களாகிய நான்கு “ மூலகங்கள் ” அல்லது தனிமங்கள் பெறப்படும் என எம்பிடோக்கிளிசு போதித்தார். அனக்சகோர சுவோ, எல்லையின்றிப் பிரிக்கப்படக்கூடியனவான இப்பொருள் களை எப்படிப் பிரிப்பினும், எதிர்த்தன்மையுடையனவான * முரண்பாடுகள் ” யாவற்றின் பகுதிகளையும் கொண்டிருக்க முடியாதளவுக்கு நுண்ணியவையான பொருள்களைப் பெறுதல் முடியாது என்று கூறுகிறர். ஆனல் எதுவும் வேறு எந்தப் பொருளுக்குள்ளும் சேர்தல் சாத்தியமே. ஏனெனில் “ விதை கள் ” என அவரால் அழைக்கப்பட்டவையான தூலப் பொருட் பகுதிகள் “முரண்பாடுகள் ” யாவற்றிலும் ஒவ்வோர் பகுதி களையுடையனவாயிருந்தன. ஆனல் ஒவ்வொரு பொருளிலும் இவை வெவ்வேறு விகிதப்படி இருந்தனவென்க. “மூலகங்கள்’ எனும் சொல்லை உபயோகிப்பதாயின், அனக்சகோரசுவின் மெய்யியற் கொள்கையில் இவ்விதைகளே மூலகங்கள் எனல் வேண்டும். எம்பிடோக்கிளிசுவினது “ மூலகங்களுக்கு’ப் பதி லாக அனக்சகோரசு குறிப்பிட்ட “ விதைகள், ’பிரிந்த நிலையில் உள்ள முரண்பாடுகள் அல்ல வென்றும், அவை ஒவ்வொன் றிலும் முரண்பாடுகள் யாவற்றினது பகுதிகளும் இருந்தன. வென்றும் நாம் கொள்ளல் வேண்டும். “ கோமியோமரிசு ” என்னும் சொல்லை அனக்சகோரசு உபயோகித்திருந்தால், இச்சொல்லடங்கிய பகுதியெதையும் சிம்பிளிசியசு எடுத்தாளாது விட்டிருப்பது ஆச்சரியமே.

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 279
இவ்விரு மெய்யியற் கொள்கைகளுக்கு மிடையே யுள்ள வித்தியாசத்தை இன்னெரு வகையிலும் நாம் காண்டல்கூடும். அனக்சகோரசு தனது கொள்கையின்படி, எம்பிடோக்கிளிசுவின் மூலகங்களை முதற் பொருள்களாகக் கருதவேண்டியிருக்க வில்லை. எம்பிடோக்கிளிசுவின் கருத்தில், குறிப்பாக நிலம் பற்றிய அவரது கொள்கையில், மறுத்தற்குரிய சில வெளிப் படையான அம்சங்கள் இருந்தன. அனக்சகோ சு வேறு முறையில் தமது விளக்கத்தைத் தந்தார். ஒவ்வொரு பொரு ளிலும் எல்லாப் பொருள்களின் பகுதிகளும் இருந்த போதி லும், பொருள்கள் தம்மில் எப்பொருள் அதிகமாக இருந் தனவோ, அப்பொருளாகவே தோன்றின (பகுதி 12). ஆகவே நாம், காற்றில் ஓரளவு வெப்பமும் தீயில் ஓரளவு குளிரும் இருக்கின்றதென்னும் கொள்கையைக் கைவிடாமலே, அதிக மாகக் குளிரையுடையதே காற்றெனவும் அதிகமாக வெப் பத்தை உடையதே தீ எனவும் கூறலாம். எம்பிடோக்கிளிசு மூலகங்கள் எனக் கருதிய பொருட்திரட்சிகள் பல்வேறு வகை யான “ விதை ’களின் தொகுதிகளே. ..
131. “ எல்லாப் பொருள்களும் ஒன்ருய் இருந்தபோது, "எல்லாப் அதாவது வெவ்வேறு பொருள்களின் விதைகள் யாவும் மிகச் பொருள்ககும் சிறிய பகுதிகளிற் கலந்திருந்தபோது (பகுதி 1) இதுவரை (" மூலப்பொருள் ” என யாவராலும் கருதப்பட்டு வந்ததைப் போலவே அக்கலவையும் காட்சியளித்திருத்தல் வேண்டும் என நாம் இவை யெல்லாவற்றிலிருந்தும் அனுமானிக்க முடிகிறது. உண்மையில் அவை " வளியையும் ஈதரையும் ’ போலக் காட்சி யளித்தன. ஏனெனில் இவ்விரு பொருள்களினதும் பண்பு களாகிய வெப்பமும் குளிரும், உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருள்களிலும் அதிகமாக இருத்தலாலும், ஒவ்வொரு பொருளும் அதனில் எது கூடுதலாயிருக்கின்றதோ அதுவேயா தலாலும் என்க (பகுதி 12). இங்கே அனக்சகோரசு அனக்சி மினிசுவோடு சேர்ந்து கொள்கிறர் எனலாம். உலகங்கள் தோன்றுவதற்கு முன் பொருள்கள் இருந்த ஆதிநிலை இரு வராலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியே வர்ணிக்கப்படுகிறது; அனக்ச கோரசுவின் கொள்கையின்படி ஆதியிலிருந்த பொருள் ஒரு மூலப்பொருளாகவிராது, மிகச் சிறியனவாகப் பிரிக்கப்பட்டிருந்த எண்ணிறந்த “ விதைக”ளின் கலவையாயிருந்தது என்பதே ஒரு வித்தியாசம் என்க.
அனக்சிமினிசுவுடைய வளியைப் போல இப்பொருட்திரட்சி யும் எல்லையற்றது. அத்துடன் சூழவொன்று மில்லையாதலால் அது தனக்குத் தானே ஆதாரமாகவுள்ளது. மேலும் அதனுள் அடங்கியுள்ள பல பொருள்களின் விதைகள் எண்ணிறந்தன

Page 148
நூாசு
280 ஆதி கிரேக்க மெய்யியல்
(பகுதி 1). ஆனல், குளிரும், ஈரலிப்பும், அடர்த்தியும், இருளும் உள்ள பகுதிகளாகவும், சூடும், வறட்சியும், ஐதும், ஒளியும், கொண்ட பகுதிகளாகவும், இவ்வெண்ணிறந்த விதைகளைப் பிரித்தல் கூடுமாதலால், மூலக்கலவை எல்லையற்ற தீயையும் எல்லையற்ற வளியையும் கொண்டிருந்ததென நாம் கூறலாம். ஆனல் காற்றின் விதைகளில், தீயை அதிகமாகக் கொண்ட விதைகளில் இருக்கும் பொருள்கள் இருந்தன ; அதே போலத் தீயின் விதைகளிலும். ஆனல் எல்லாப் பொருள்களையும் அவற் றில் எப்பொருள் அதிகமாக இருந்ததோ அப்பொருளாகவே கொள்கிருேம். அத்துடன் கலவையில் வெறுமையான பகுதி யெதுவும் இல்லை. இக் கருத்து, பார்மனடிசுவின் வாதங்கள் காரணமாகச் சேர்க்கப்பட்ட தென்க. ஆனல் இதற்கு ஈலியர் களுடைய முரண்நிலைஆய்வழி நிரூபணத்துடன் அனக்சகோரசு பரிசோதனை ரீதியான நிரூபணம் ஒன்றையும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்பிடோக்கிளிசு செய்ததைப்போல (பகுதி 100) அவரும் “ கிளெப்சைத்திரு ” பரிசோதனையை உபயோகித்தார். அன்றியும் காற்றுமோர் சடப்பொருளே என்ப தைக் காற்று நிறைக்கப்பட்ட தோற்பைகள் மூலம் நிரூ பித்தார்.
132. கலவையில் இயக்கத்தை எற்படுத்துதற்கு எம்பிடோக் கிளிசுவைப் போல அனக்சகோரசுவுக்கும் ஒரு புறக் காரணம் வேண்டியிருந்தது. மைலிசியர்கள் கருதியதுபோல, சடப்பொ ருள்கள் தாமாக இயங்கமாட்டா எனப் பார்மனைடிசு எற்கெனவே விளக்கியிருந்தார். ஆகவே இயக்கத்தின் காரணம் “ நூசு ’ என அனக்சகோரசு கூறினர். இதனலேயே அனக்சகோரசு “ அவ ருக்கு முன்வாழ்ந்த விண்பேச்சுக்காரரின் நடுவே ஓர் நிதானபுத் தியுடையவராகத் திகழ்ந்தார் ” என அரித்தோதில் கூறியுள் ளார். அத்துடன் மெய்யியலில் ஆன்மீகத்தை முதலிற் புகுத்தி யதும் இவரே எனக் கூறப்படுகிறது. ஆனல் இக்கொள்கையை அனக்சகோரசு விருத்தி செய்த முறை பற்றிப் “ பீடோ "வில் சோக்கிரதர் வெளியிட்டிருக்கும் அதிருப்தியைக்கவனிக்கையில் நாம் இக்கொள்கையின் சிறப்பை மிகையாக மதிப்பிடுவதற்கு முன் சிறிது சிந்தித்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. பீடோவில் பிளேட்டோ சோக்கிரதரைப் பின்வருமாறு பேசவைக் கிருர் : “ முன்பு ஒருபோது ஒரு மனிதன் அனக்சகோரசு எழு தியதாகக் கூறப்பட்ட நூல் ஒன்றை வாசிப்பதைக் கேட்டேன். மனமே எல்லாப் பொருள்களுக்கும் காரண மென்றும், இவ்வு லகத்தை மனமே ஒழுங்குபடுத்திய தெனவும் அதில் கூறப்பட் டிருப்பதாகக் கேட்டபோது, அவர் கூறியதுமிகச் சரியானது போலத் தோன்றியதால் நான் மிகவும் களிப்படைந்தேன்

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 281
a y s p a ஆனல் மேலும் வாசிக்கையில் இக்கொள்கையில் மனம் கொஞ்சமும் உபயோகப்படுத்தப்படவில்லை என நான் கண்டபோது எனக்கு மிகவும் ஏமாற்றமாயிருந்தது. பொருள்களை ஒழுங்குபடுத்துவதில் அவர் மனத்திற்கு எந்தவிதமான காரண இயல்பையும் அளியாது, வளி, ஈதர், நீர் முதலிய பல நூதன மான பொருள்களை உலக ஒழுங்குக்குக் காரணங்களாகக் காட் டியிருந்தார். ’ “ சில நாடகாசிரியர்கள் கதைப் போக்கில் ஏற் பட்ட சங்கடத்தை அவிழ்ப்பதற்குக் கடவுளேக் கதையுட் புகுத் துவதுபோல, அனக்சகோரசுவும் உலகம் தோன்றிய விதத்தை விளக்குதற்கு மனத்தை உபயோகித்தனர் ” என அரித்தோ தில், சோக்கிரதரின் கூற்றை மனத்தில் கொண்டு போலும், கூறியுள்ளார். “ என் ஒரு பொருள்கட்டாயமாக இருக்கிறது என விளக்க முடியாதபோது அவர் மனத்தைக் கொணர் கிருர். ஆனல் எனைய வேளைகளில் மனத்தைவிட வேறு எதை யுமே அவர் காரணமாகக் காட்டுகிறர் ” என அரித்தோதில் மேலும் கூறியுள்ளார். எம்பிடோக்கிளிசின் காதல், பூசல் என் பனவற்றைப் போன்றதே அனக்சகோரசுவின் நூசுவும் என இக் கூற்றுக்களிலிருந்து புலப்படுகிறது. மேலும் நூசுவைப்பற்றி அனக்ககோரசு கூறுவனவற்றிலிருந்தும் இக்கருத்து உறுதிப் படுகிறதெனலாம்.
முதலாவதாக நூசு கலப்பற்றது என்பதும் (பகுதி 12) மற்றப் பொருள்களைப் போல எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கியதல்லவென்பதும் குறிப்பிடத்தக்கன. சடப்பொருளா லானதல்லாத மனத்தைப் பற்றி இவ்வாறு கூறுவது அவசிய மல்ல வென்க; அது வெப்பமாக அல்லது குளிராக இருக்கு மென யாரும் நினையார். அது கலப்பற்றதாக இருப்பதன் பயனுக இது எல்லாவற்றின் மீதும் “சத்தியுடையதாய்” இருக் கிறது ; அதாவது அனக்சகோரசுவின்படி யாவும் இயங்கக் காரணமாயிருக்கிறது. எரக்கிளைட்டசு தீயைப் பற்றி இவ்வாறே கூறியுள்ளார். எம்பிடோக்கிளிசும் விரோதத்தைப் பற்றி இவ் வாறே கூறியுள்ளார். மேலும் நூசுவே பொருள்கள் யாவற் றிலும் நொய்யதாயிருந்தது. அதனல் அது எல்லாவிடங்களி னுள்ளும் புகும் தன்மையுடையதாயிருந்தது. ஆனல் சடப் பொருளல்லாதவொன்று சடப்பொருள்களிலும் பார்க்க நொய்ய தாயிருந்தது எனக் கூறுவதில் பயனெதுவுமில்லை. நூசு * யாவற்றையும் அறியும் ஆற்றல் படைத்திருந்தது ’ என்பதும் உண்மையானலும் இடையோசினிசுவின் காற்றும் இவ்வாற்ற லைக் கொண்டிருந்ததே. எரக்கிளைட்டசுவின் தீயும் இவ்வாற் றலையுடையதாயிருந்ததெனலாம். உண்மையில் அசரீரியான வொன்றைப்பற்றியே அனக்சகோரசு கூறமுனைந்திருக்க வேண்டு

Page 149
உலகங்களின் தோற்றம்
282 ஆதி கிரேக்க மெய்யியல்
மெனச் செல்லர் கூறுகிருர் ; ஆனல் நூசுவை அசரீரியான வொன்ருகக் காட்டும் முயற்சியில் அனக்சகோரசு வெற்றி பெற் வில்லையெனச் செல்லர் கூறுவதே வரலாற்று ரீதியாக நாம் கவனிக்க வேண்டியதென்க. ஆனல் நூசு பரப்பையுடையதா யிருந்தது என்பதில் ஐயமில்லை ; அதன் சிறியனவும் பெரியன வுமான பகுதிகளைப் பற்றி நாம் கேள்விப்படுகிறேமாதலின் (பகுதி 12).
எல்லாவற்றையும் “அறியும் ’ மூலப் பொருள் எனும் அயோனியக் கொள்கையையும் யாவற்றையும் “இயக்கும்’ மூலப் பொருள் எனும் புதிய கொள்கையையும் இணைக்கும் நோக் கத்துடன் அனக்சகோரசு, எம்பிடோக்கிளிசுவின் காதல், பூசல் என்பவற்றிற்குப் பதிலாக நூசைத் தேர்ந்தனர் என்பது உண்மையாயிருக்கலாம். வெறும் அண்டவியல் பற்றிய விட யங்களிலல்லாமல் உடலியல் பற்றிய விடயங்களில் அவருக் கிருந்த மிகையான ஆர்வம் அவர் இவ்வாறு ஆன்மாவுக்குப் பதிலாக மனத்தைப் பற்றிப் பேசுவதற்குக் காரணமாயிருந் திருக்கலாம். ஆன்மா எனும் சொல்லினும் பார்க்க மனம் எனும் சொல் உடலோடு மிகவும் தொடர்புடையவொன்றகக் கிரேக்கர்களுக்குத் தோன்றியிருக்கலாம். எனினும் அனக்ச கோரசுவின் நூசு பற்றிய கொள்கையிலும் பார்க்க அவரது பதார்த்தம் பற்றிய கொள்கையே அதிக புதுமையுடைத்து எனக் கொள்ளல் வேண்டும்.
133. “ எல்லாப் பொருள்களும் ஒன்ருயுள்ள ” (பகுதி 13) கலவையில் நூசு எற்படுத்தும் இயக்கத்தினல் கலவை மேலும் மேலும் விரிந்து, அதிக இடத்தை வியாபிக்கத் தொடங்குகிறது. சுழற்சியுடையதான இவ்வியக்கத்தினலேயே உலகம் தோன்று கிறது. இவ்வியக்கத்தின் வேகத்தினல் (பகுதி 19) அடர்த்தி யானவை ஐதானவற்றிலிருந்தும் வெப்பமுடையவை குளிர்ந் தனவற்றிலிருந்தும், ஒளியுடையவை இருண்டனவற்றிலிருந்தும் ஈரலிப்புடையவை வறட்சி யுடையனவற்றிலிருந்தும் பிரிக்கப்படு கின்றன (பகுதி 15). இவ்வாறு பிரிக்கப்படுவதனல், பெரும் பாலும் ஐது, வெப்பம், ஒளி, வறட்சி ஆகியனவற்றைக் கொண்ட ஈதர் என அழைக்கப்படும் ஓர் பொருட்திரட்சியும், இவற்றிற்கு எதிரான குணங்களைப் பெருமளவிற்குக் கொண்டதும் வளி என அழைக்கப்படுவதுமான (பகுதி 1) வேறேர் பொருட் திரட்சியும் உண்டாயின. இவற்றுள் ஈதர் அல்லது தீ வெளியேயும் வளி நடுவேயும் இருந்தன (பகுதி 15).
இதற்கு அடுத்த பருவத்தில், வளி மேகங்கள், நீர், நிலம், கல் என்பனவாகப் பிரிதல் நிகழ்ந்தது (பகுதி 16). இது

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 283
பற்றிக் குறிப்பிடுகையில் அனக்சகோரசு அனக்சிமினிசுவைப் பெரும்பாலும் பின்பற்றுகிறர் எனலாம். ஆனல் வானசோதிகள் பற்றிய அவரது விளக்கம், அவருக்கே உரித்தான கருத்துக் களைக் கொண்டுள்ளது. 16 ஆவது பகுதியின் கற்கள் “நீரிலும் அதிகமாக வெளிப்புறம் விரைகின்றன” என அவர் கூறி யிருப்பதைக் காண்கிருேம். மேலும் நிலத்தின் சுழற்சி வேகத் தினல் அதிலிருந்து விடுபட்டுப்போன கற்களே வானசோதிகள் என்றும், அவை தமது இயக்கத்தினுல் வெப்பமடைந்து செம்மை யொளி பெற்றன என்றும் விளக்கப்பட்டதெனத் தொகுப்பாசிரி யர்கள் மூலம் அறிகின்றேம். ஐகொசுப்பொத்தமையில் வால் வெள்ளியொன்று விழுந்தமைக்கும் இக்கொள்கை தோன்றி யமைக்கும் யாதேனும் தொடர்பிருக்கலாம். அத்துடன் தட்டை
யான இவ்வுலகும் * சுழி ”யோடு சேர்ந்து சுழல்கிறது என்பதும்
இக்கொள்கையிலிருந்து தவறது பெறப்படுகிறதென்பதும் குறிப் பிடப்படத்தக்கது.
134. எண்ணிறந்த உலகங்கள் இருந்தனவென்னும் ஆதி அயோனியக் கொள்கையை அனக்சகோரசும் கொண்டிருந்தார் என்பது 4 ஆம் பகுதியிலிருந்து தெளிவாகிறது. இப்பகுதியைத் தொடர்பற்ற தெனக் கருதவும் நியாயமில்லை. " எம்மிடத்தில் மட்டுமல்லாது, பிறவிடங்களிலும் பொருள்கள் பிரிக்கப்பட்டன" எனும் சொற்களுக்கு, நூசு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், சுழற்சி இயக்கத்தை எற்படுத்தியது எனவே பொருள் கொள்ள முடியும். ஒரு உலகம் மட்டுமே இருந்தது எனக் கூறியோர் வரிசையில் அனக்சகோரசுவையும் ஈத்தியோசு சேர்த்துக்கொண் டார் என்பது உண்மையே; ஆனல் நமக்குக் கிடைத்துள்ள அனக்சகோரசுவின் கருத்துப் " பகுதி ”களிலும் பார்க்க ஈத்தியோசுவின் கூற்று வலுவுள்ள ஆதாரமென எற்றுக் கொள்ள முடியாது. மேலே குறிப்பிட்ட சொற்கள் சந்திரனைக் கிருதுவன எனும் செல்லரது கூற்றும் அவ்வளவு எற்கத்தகுந்த தல்ல. சந்திரனில் வசிப்போரும் “நம்மைப்போல், சூரிய சந்தி ரர்களே உடையோரே " என யாரும் கூறுவார்களா ?
எண்ணிறந்த உலகங்கள்
135. அனக்சகோரசுவின் அண்டவியற் கொள்கைகள் பெரு அண்டவியல்
மளவிற்கு அனக்சிமினி சுவின் கொள்கைகளது அடிப்படையி லேயே அமைந்திருந்தன என்பது, இப்பொலைட்டசுவின் பின் வரும் பகுதியை, முதலாம் அத்தியாயத்தில் (29 ஆம்பிரிவு) தரப்பட்டுள்ள மேற்கோள்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பின் நன்கு புலப்படும் :

Page 150
284 ஆதி கிரேக்க மெய்யியல்
(3) பூமி தட்டையானது. அதன் மிகப் பரந்த அளவினலும், சூனிய வெளியின்மையினலும் அது அந்தரத்தில் நிற்க முடி கிறது. இதற்கெனவே காற்று மிகவும் வலிமையுடையதாயிருந்து தன்மீதுள்ள பூமியைத் தாங்கிக்கொள்கிறது.
(4) பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர்நிலைகளில், கடலானது பூமியினுள்ளே உள்ள நீர்களினலும் (இவற்றில் ஆவியானவை போக எஞ்சியவை உப்புத் தன்மையுடையவா யிருந்தன) ஆறுகளிலிருந்து தன்னுள் வந்து கலக்கும் நீரினலும் ஆனது?. (5) பூமியிலுள்ள நீர்களிலிருந்தும், மழையிலிருந்தும் ஆறு கள் உற்பத்தியாகின்றன ; எனெனில் பூமியின் போறையான உட்புறம் முழுவதும் நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எதியோப் பியாவிலுள்ள பனி உருகிக் கீழே வருவதனல் கோடைகாலத் தில் நைல் நதியில் நீர் பெருகுகிறது.
(6) ஈதரின் சுழற்சியினல் வட்டமிடும் தீக்கற்களே சூரியனும், சந்திரனும், எனைய விண்மீன்களும். விண்மீன்களுக்குக் கீழே, சூரியனும், சந்திரனும், எமது கண்ணுக்குத் தெரியாது. அவற் றேடு சுழலும் வேறு சில பொருள்களும் உள்ளன.
(7) விண்மீன்கள் பூமியிலிருந்து மிகுந்த தொலையிலுள்ள பாடியாற்றன் நாம் அவற்றின் வெப்பத்தை உணர்வதில்லை. அன்றியும், அவை குளிரான பகுதியில் இருப்பதால் அவை சூரியனளவு வெப்பமுடையனவாய் இல்லை. சந்திரன் சூரிய னுக்குக் கீழேயும் அதனிலும் பார்க்க எமக்கு அண்மையிலும் உள்ளது.
(8) சூரியன் பெலோப்பொனிசசுவிலும் பார்க்க அளவிற் பெரியது. சந்திரனுக்குச் சொந்தமான ஒளியில்லை ; சூரியனிட மிருந்தே அது தனது ஒளியைப் பெறுகிறது. பூமிக்குக் கீழாக வும் விண்மீன்கள் பிரயாணம் செய்கின்றன.
(9) சூரியனிடமிருந்து வரும் ஒளியைப் பூமி அல்லது சந்திர னுக்குக் கீழேயுள்ள வேறு பொருள்கள் மறைப்பதால் சந்திர கிரகணம் உண்டாகிறது. அமாவாசைக் காலத்தில் சூரியனைச் சந்திரன் மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. காற்றினல் பின் தள்ளப்பட்டுச் சூரியனும் சந்திரனும் தாம் செல்லும் வழியில் மேலும் செல்ல முடியாது திரும்புகின்றன. சந்திரனல் குளிருக்கு ஈடு கொடுக்க முடிவதில்லையாதலால் அது இவ்வாறு அடிக்கடி திரும்ப நேரிடுகிறது.
சூனியவெளியுண்டென்பதை ஈலிய வாதிகள் மறுத்தது காரணமாக,
முந்திய கருத்துக்கு வலுவூட்டும் வகையில் இது அமைகிறது.
* இப்பகுதி சற்றுத் தெளிவற்றதாயுள்ளது. ஆனல் Aet. i. 162 இலி ருந்து இப்பகுதியின் பொதுவான பொருளை அறிந்து கொள்ளலாம்.

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 285
(10) சூரிய சந்திரர்களது ஒளி, அவற்றின் கிரகணம் ஆகியவற் ருேடு தொடர்புபட்ட விடயங்களை முதலில் மதிப்பிட்டவர் அனக் சகோாசுவே. சந்திரன் நிலத்தைப் போன்ற அமைப்புடைய தெனவும் சமவெளிகளையும் கணவாய்களையும் கொண்டதென வும் அவர் கூறினர். சூரியனல் ஒளியூட்டப்படாத விண்மீன் களின் ஒளியின் பிரதிபலிப்பே பால்வீதிமண்டலம். வான மண்டலத்தின் இயக்கத்தினல் பறக்கும் தீக்கங்குகளென வால் வெள்ளிகளை அழைக்கலாம்.
(11) சூரிய வெப்பத்தினுல் காற்று இலேசாக்கப்பட்டபோதும், பொருள்கள் எரிந்து வானமண்டலத்தை அடைந்தபோதும் காற் றுக்கள் உண்டாகின. வெப்பம் மேகங்களோடு மோதியபோது இடியும் மின்னலும் உண்டாயின.
(12) பூமிக்கு மேலேயுள்ள வளி அதற்குக் கீழேயுள்ள காற்றேடு மோதுவதால் பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டன; ஏனெனில் பூமிக்குக் கீழேயுள்ள காற்றின் அசைவு அதன் மேலே மிதக்கும் பூமியை ஆடச்செய்கிறது.
அனக்சகோரசு, அனக்சிமினிசுவின் மரபைச் சேர்ந்தவர் எனும் தியோபிறசத்தோசுவின் கூற்றை, இவை யாவும் உறுதி செய் கின்றன. காற்றில் மிதக்கும் தட்டையான பூமி, சந்திரனுக்குக் கீழேயுள்ள ஒளியற்ற பொருள்கள், காற்றின் அமுக்கத்தினல் சந்திரனின் “ பிரயாணத்தில் எற்படும் திருப்பங்கள் ” அயனத் தொடக்கம் ஆகியவை பற்றிய விளக்கம், காற்று, இடி, மின்னல் என்பவை பற்றிய விளக்கம் என்பன யாவும் அனக்சிமினிசுவின் கொள்கைகளிலிருந்தே பெறப்பட்டிருக்கின்றன. சந்திரனது ஒளி கிரகணங்களின் காரணம் ஆகியவற்றைக் கண்டு பிடித்தவர் அனக்சகோரசுவேயென அதென்சு நகர மக்கள் நம்பியதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனல் பூமி தட்டையானதென நம்பிய ஒருவர் இவற்றைக் கண்டுபிடித்தார் என நம்ப முடியாதென லாம். அத்துடன் இக்கண்டுபிடிப்புக்கள் பைதாகரசினுடையவை என எண்ண ஆதாரங்கள் உள்ளன.
136. “ நூசைத் தவிர்ந்த எனைய பொருள்கள் யாவற்றிலும் , ஒசிறிதளவு எல்லாப் பொருளும் உள்ளது ; ஆனல் சில பொருள்களில் நூசும் அடங்கியுள்ளது ’ (பகுதி 11). சேதன, அசேதனப் பொருள்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை அனக் சகோரசு இவ்வார்த்தைகளில் தந்துள்ளார். உயிருள்ளவை யாவற்றின் மீதும், சிறியனவற்றின் மீதும் பெரியனவற்றின் மீதும் “சக்தி உடையது ”-அதாவது அவற்றை இயங்க வைப் பது-ஒரே நூசுவே என அவர் கூறுகிருர் (பகுதி 12). உயிருள்ள பிராணிகள் யாவற்றிலும் உள்ள நூசு ஒன்றே

Page 151
புலனுணர்வு
286 ஆதி கிரேக்க மெய்யியல்
(பகுதி 12). விலங்குகளும், தாவரங்களும் வெவ்வேறு அள வான நுண்மதியைப் பெற்றிருப்பது அவற்றின் உடலமைப் பிற்கேற்றவாறே என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. நூசு ஒன்ருக விருந்தபோதிலும், சில உடல்களில் மற்றவற்றிலும் பார்க்க அதற்கு அதிக வாய்ப்பிருந்தது. விலங்குலகில் மணி தனே அதிக கெட்டித்தனம் உடையவனுயிருக்கிருன். இதற்குக் காரணம் அவனுக்குக் கைகளிருப்பதனலேயே யொழிய, மற் றைய விலங்குகளிலும் பார்க்கச் சிறந்த நூசை உடையவன யிருப்பதாலல்ல வென்க. எற்கெனவே இவ்விடயம் பற்றி நில விய கருத்துக்களுடனும் இக்கொள்கை பொருந்துவதாயுள்ளது. மனிதர்களது சிந்தனை அவர்களது உறுப்புக்களின் அமைப்புக் கேற்றவாறே உள்ளது எனப் பார்மனைடிசுவும் தமது இரண்டாம் பாகத்தில் (பகுதி 16) கூறியிருந்தார்.
நூசு முழுவதும் ஒன்றகையால் தாவரங்களும் உயிருள்ள பொருள்களாகக் கொள்ளப்படுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. அரித்தோதிலால் எழுதப்பட்டதெனக் கூறப்படும் நூலான * தாவரவியலி’ல் தாவரங்கள் தாம் வளர்ச்சியடைகையிலும், இலைகளை யுதிர்க்கையிலும் முறையே களிப்பும் துன்பமும் அடைகின்றன என அனக்சகோரசு வாதித்தார் எனக் கூறப் பட்டிருக்கிறது. “நிலத்தில் பொருந்தியுள்ள விலங்குகள்’ என அனக்சகோரசு தாவரங்களை வருணித்தார் எனப் புளுட்டாக்கு கூறுகிறர்.
காற்றிலிருந்த தாவர விதைகள் மழை நீரோடு நிலத்தை அடைந்ததைத் தொடர்ந்து தாவரங்கள் தோன்றின. விலங்கு களும் இவ்வாறே உண்டாயின. அனக்சிமாந்தரைப் போல அனக்சகோரசுவும், விலங்குகள் முதலில் ஈரலிப்புடைய மூலகத் திலேயே தோன்றினவெனக் கருதினர்.
137. இச்சிறு குறிப்புக்களிலிருந்து, எம்பிபோக்கிளிசுவின் கொள்கைகளை மறுக்க முயல்வது போன்றவோர் உளப்பாங்கை நாம் அவதானிக்க முடிகிறது. அனக்சகோரசுவின் புலனுணர்வுக் கொள்கையைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதிலும்-குறிப்பாக, மறு தலைகளையே உணர முடியும் எனும் கொள்கையில்-நாம் இத்தகையவோர் உளப்பாங்கைத்தான் காண்கிறேம். இது பற் றித் தியோபிறகத்தோசு கூறுவது பின்வருமாறு :
“ அனக்சகோரசுவோ, முரண்பாடுகளினற்றன் புலனுணர்வு ஏற்படுகிறது எனக் கூறுகிறர் ; ஏனெனில் ஒத்த தன்மை யுடைய பொருள்களில் ஒன்றினல் மற்றதன்மீது எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. ஒவ்வொரு புலனையும்
விரிவாக விவரிக்க அவர் முயல்கிருர் ; கண்மணியில் தோன்

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 287
றும் விம்பத்தின் மூலம் எம்மால் பார்க்க முடிகிறது; ஆணுல் ஒத்த நிறமுடைய பொருளில் எவ்வகை விம்பமும் ஏற்படுவ தில்லை ; வேறுபட்டவொன்றிலேயே விம்பம் ஏற்படுகிறது. உயி ருள்ளனவற்றில் பெரும்பாலானவற்றிற்கு, பொருள்கள் யாவும்; பகலில் தம்முடைய விம்பத்திலிருந்து வேறுபட்ட நிறங்களை யுடையனவாகவே யுள்ளன. ஆனல் இரவிலும் சில பிராணி களது கண்மணிகள் இவ்வாறு பொருள்களிலிருந்து வேறுபட்ட நிறமுடையனவாயிருப்பதனற்றன் அவற்றல் இரவிலும் கூர் மையாகப் பார்க்க முடிகிறது. ஆனல் பொதுவாகப் பகலைவிட இரவே கண்களை அதிகம் ஒத்த நிறமுறையதாயிருக்கிறதென லாம். பகலில், கண்மணியில் எவ்வாறு விம்பம் ஏற்படுகிற் தெனின், ஒளியானது விம்பம் ஏற்படுதற்கு உடனியலுகின்ற ஒரு காரணமாதலினலும், அந்நேரத்திலுள்ள நிறம், அத ற்கு முரணுன நிறமுடையவொன்றில் இலகுவாகத் தனது விம்பத்தை ஏற்படுத்துவதனலுமென்க.
சுவை, ஊறு போன்ற உணர்வுகளும் கூட இம்முறையிலேயே செயற்பட்டுப் பொருள்களை உணர்கின்றன. எங்கள் உடலின ளவு சூடாகவோ அல்லது குளிர்ந்தோ இருக்கும் பொருள்கள் எம்மைச் சூடாக்கவோ, குளிர்விக்கவோ முடியாது; இவ்வாறே இனிப்பு, புளிப்பு எனும் சுவைகளையும் நாம் அவற்றின் மூலமாக அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு சுவையையும் அதன் இன்மையினலேயே நம்மால் உணர முடிகிறது-- குளிரைச் சூடடின்மூலமும், உப்பற்றதை உப்புமூலமும், இனிமையுடையதைப் புளிப்பின் மூலமும் நாம் அறிகிறேம்; ஆரம்பத்திலிருந்தே இச்சுவைகள் யாவும் எம்மிடத்தே இருக் கின்றன. மணம், ஒலி முதலியனவற்றை நாம் உணர்வதும் இவ்வாறே. பொருள்களின் மணங்களை அவற்றினேடு சேர்ந் துவரும் மூச்சுக்காற்றினல் நாம் உணரமுடிகிறது. ஒலியைப் பொறுத்தவரையில் மூளையைச் சுற்றியிருக்கும் எலும்பு போறை யாயிருப்பதால், அதன்மீது ஒலிவிழுந்து மூளையை அடைந்த துமே, நம்மால் ஒலியை உணர முடிகிறது.
மாறுபட்ட தன்மையுடைய பொருள்கள் ஒன்றையொன்று தீண்டும்போது நோ எற்படுகிறதென முன்பே கொள்ளப்பட்ட தாதலின், எத்தகைய புலனுணர்வு ஏற்படும்போதும் நோவும் எற்படுமென்பது பெறப்படும். புலனுணர்வு அமிதமாக அல்லது தொடர்ந்து எற்படும்போது இந்நோவை நாம் உணர்கிருேம். மிக வும் பிரகாசமான நிறங்களும், அமிதமான சந்தடியும் நோவை உண்டுபண்ணுகின்றன ; ஒரேபொருளை எம்மால் அதிக நேரிம் களிப்புடன் அனுபவிக்க முடிவதில்லை. அளவிற்பெரிய விலங் குகளது புலனுணர்வு கூர்மை கூடியதாக இருக்கிறது. அன்

Page 152
288 ஆதி கிரேக்க மெய்யியல்
நியும் பொதுவாகப் புலனுணர்வுத்திறன் உணர்வுறுப்புக்களின் அளவுக்கேற்ப அமைந்துள்ளதெனலாம். பெரியனவும் துய்மை யும் பிரகாசமுமுடையனவான கண்களையுடையனவான விலங் குகளால் பெரிய பொருள்களையும், மிகுந்த தூரத்திலுள்ளவற் றையும் பார்க்க முடிகிறது. இவ்வாறு அல்லாத விலங்குகளுக்கு இத்தகைய திறன் இருப்பதில்லை.
செவிப்புலனும் இவ்வாறே. பெரிய விலங்குகளால் மெல் லோசைகளைக் கேட்க இயலாதெனினும், வல்லோசைகளையும் அதிக தூரத்திலிருந்து எழும் ஒசைகளையும் நன்றகக் கேட்க முடிகிறது. சிறிய விலங்குகள் அண்மையிலிருந்து எழும் மெல் லோசைகளை இலகுவாகக் கேட்கவல்லன. மோப்பவுணர்வும் இவ்வாறே. திண்மை குறைந்த காற்று அதிக மணமுடையதா யிருக்கிறது. ஆகவேதான் காற்றுச் சூடாகி ஐதாகும்போது அதிக மணமுள்ளதாயிருக்கிறது. பெரிய விலங்குகள் சுவா சிக்கும்போது ஐதான காற்றைத் திண்மை கூடிய காற்றுடன் சேர்த்தே உள்ளிழுக்கின்றன. ஆனல் சிறிய விலங்குகளோ ஐதான காற்றை மட்டும் உள்ளிழுக்கின்றன ; ஆகவேதான் பெரிய விலங்குகளால் அதிக பொருள்களை உணர முடிகிறது. ஏனெனில் காற்று அதிக திண்மையுடையதாயிருக்கும் கார ணத்தினல் அது அண்மையிலுள்ளபோது, சேய்மையிலிருக் கும்போது முடிவதைவிட, நன்றக அதிலுள்ள மணங்களை உணரமுடிகிறது. மணங்கள், பரந்து ஐதாகியிருக்கும்போது, பெரிதும் குன்றிவிடுகின்றன. ஆனல் பொதுவில், பெரிய விலங் குகளால் ஐதான மணங்களை உணர முடியாதெனவும், சிறிய விலங்குகளால் செறிவு கூடிய மணங்களை முகர முடியாது எனவும் கூறலாம்.
அனக்சகோரசுவின் இக்கொள்கை சில வழிகளில் எம்பிடோக் கிளிசுவினது கொள்கையிலும் வளர்ச்சியுடையதாகும். முரண் பாடுகளின் தூண்டுதலில் புலனுணர்வு தங்கியுள்ளதெனவும் அது நோவோடு தொடர்புடையதெனவும் அனக்சகோரசு கூறி யது போற்றத்தக்க வொன்றகும். தற்காலக் கொள்கைகள் பலவும் இத்தகைய கருத்தொன்றையே அடிப்படையாகக் கொண் டுள்ளன. i
புலன்களினல் உண்மையை அணுகமுடியாதென அனக்சகோ ரசு களுதினரென்பது செகுசுதசுவால் பேணப்பட்டுள்ள பகுதி களிலிருந்து தெரியவருகிறது. ஆயினும், நாம் அவரை ஓர் ஐய வாதி எனக் கூறிவிட முடியாது. அரித்தோதில் மூலம் நமக் குக் கிடைத்துள்ள, “பொருள்கள் எவ்வாறிருக்கின்றன வென நாம் கருதுகின்றேமோ அவ்வாறே அவை உள்ளன ’ எனும்

கிளாசொமென நகரத்து அனக்சகோரசு 289
கூற்றிலிருந்து நாம் எத்தகைய முடிவுக்கும் வந்துவிட முடி யாது. இக்கூற்று, பழமொழித் தொகுதி யொன்றிலிருந்து எடுக்கப்பட்டதேயன்றி அனக்சகோரசுவின் நூலிலிருந்து எடுக் கப்பட்டதல்ல ; அத்துடன் இக்கூற்று ஒழுக்கவியல் சம்பந்தப் பட்டவொன்று எனக் கருதவும் இடமுண்டு. “ எமது புலன் களின் பலவீனம் உண்மையைக் காண்பதிலிருந்து எம்மைத் தடைசெய்கின்றது” என அவர் கூறியுள்ளார் (பகுதி 21) என்பது உண்மையே. ஆனல் இதற்குப் பொருள் ஒவ்வொரு பொருளிலுமுள்ள எல்லாப் பொருள்களினதும் பகுதிகள் யாவற்றையும் நாம் காண்பதில்லை என்பதேயொழிய, வேறெ துவுமல்ல ; உதாரணமாக வெண்மையிலுள்ள கருமைப் பகுதி களை நாம் காண்பதில்லை. மேலோங்கி நிற்கும் பகுதிகள் எவையோ அவற்றையே நமது புலன்கள் எமக்குக் காட்டுகின் றன. நாம் காணும் பொருள்கள் கட்புலனகாதவற்றையும் காணும் திறனை எமக்கு அளிக்கின்றவெனவும் அனக்சகோரசு கூறியுள்ளார். அஃது ஐயவாதத்திற்கு முற்றிலும் முரணன வோர் கருத்தென்க.

Page 153
அத்தியாயம் 7
பைதாகரசவாதிகள்
பைதாகசசகுழு 138. ஆக்கையன் நகரங்களில் தமது செல்வாக்கு வீழ்ச்சியுற் றதைத் தொடர்ந்து, பைதாகரசவாதிகள் பலரும், றெகியோன் நசரில் வாழத்தலைப்பட்டனர். ஆனல் அங்கு நிறுவப்பட்ட குழு அ நிக காலம் நிலைத்திருக்கிவில்லை; ஆக்கைற்ருசு ஒருவர் மட்டுமே இத்தாலியில் தங்கினர். குரோட்டன் படுகொலையிலிருந்து தமது இளமைக் காலத்திலே தப்பி வந்தவரான லைசிசுவும், பிலோ லெசுவும் எற்கெனவே தீபிசுவை அடைந்திருந்தனர். ஐந்தாம் நூற்றண்டின் இறுதியில் பிலோலெசு அங்கிருந்தாரெனவும், லைசிசு, பின்னர் ஏப்பாமீனந்தாசுவின் ஆசிரியராயிருந்தா ரெனவும் நாம் பிளேட்டோவின் மூலமாக அறிகிருேம். ஆனல் பைதாகரசவாதிகளிற் சிலர், பின்னர் இத்தாலிக்கு மீண்டனர். பிலோலெசு அவ்வாறு சென்றனர் என்பது உறுதி; பிளேட்டோவும் சோக்கிதர் கொலையுண்ட ஆண்டாகிய கி. மு. 399 க்குச் சற்று முன்பாக, அவர் தீபிசுவை விட்டு அகன்றர் எனும் பொருள்பட எழுதியுள்ளார். நான்காம் நூற்றண்டில் இக்கு ழுவினர் சிறப்பாகச் செயற்பட்டது டோரிய நகரமாகிய தாரசு விலேயே. சிரக்கியூசு நாட்டு இடையனிசியசு என்பாரது தலையாய எதிரிகளாகப் பைதாகரசவாதிகள் விளங்கியதையும் நாம் அறி யக்கூடியதாயிருக்கிறது. ஆக்கைட்டாசுவின் நடவடிக்கைகளும் இக்காலத்தைச் சேர்ந்தவையே. பிளேட்டோவின் நண்பரான ஆக்கைட்டாசு, “ மெய்யுணர்வேந்து ’ எனும் இலட்சியத்தைப் பெருமளவிற்குக் கிட்டியவரெனக் கூறலாம். தாரசுவைப் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த இவர், ஒரு போதும் போர்க்களத் தில் தோற்கடிக்கப்பட்டதில்லை என அரித்தோசெனசு கூறு கிருர், கணித நிலையியக்கவியலைக் கண்டுபிடித்தவரும் இவரே. இதே காலத்தில் பைதாகரசவாதம் கீழைத்திசையிலும் பரவியி ருந்தது. லைசிசு, தீபிசுவிலேயே தங்கினர். இங்கு சிம்மியாசு, பிேசு ஆகியோர் ஏற்கெனவே பிலோலெசுவின் போதனைகளைக் கேட்டிருந்தனர். றெகியோனை நீத்த பைதாகரசவாதிகளில் ஏனையோர் பிளேயசுவில் குடியேறினர். இக்குழுவினரின் கடை சிச் சந்ததியினரை நன்கு அறிந்திருந்தவரான அரித்தோ செனசு இவர்களுட் பலரது பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். திரேசு நாட்டுக் கல்கிசு நகரத்தவனன செனுேபிலோசு, பாண் டன், எக்கிருத்திசு, இடயோக்கிளிசு, பிளியசுநாட்டுப் பொலி

பைதாகரசவாதிகள் 291
மினத்தோசு ஆகியோர் யாவரும் பிலோலெசுவினதும், இயூ ரைத்தோசுவினதும் சீடர்களென அரித்தோசெனசு குறிப்பிட்டு டுள்ளார். மேலும் தீபிசுநாட்டுச் சிம்மியாசு, கீபிசு என்போரும் பிளேயசுவைச்சேர்ந்த எக்கிருத்திசுவும் சோக்கிரதரின் தோழர் களாயிருந்தனர் எனப் பிளேட்டோ மூலமாகவும் நாம் அறி கிருேம். அரித்தோசெனேசுவின் ஆசிரியரான செனேயிலோசு என்பவர் தமக்கு நூற்றிஐந்து வயதாகும் வரை பூரண ஆரோ கீகியமுடையவராய் அதென்சு நகரில் வாழ்ந்தார்.
139. இக்குழுவினருள், ஈண்டு குறிப்பிடப்பட்ட தலைமுறையி பிலோலெச
னர் உண்மையில் இதற்குப் பிந்தியவோர் காலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். நாம் இங்கு கவனிக்க வேண்டியது பிலோ லெசுவையே. இவரது போதனைகளைப் பற்றிப் புறவழிகளால் நாம் அறிபவை மிகக் குறைவானவை. கோள் மண்டலங்களைப் பற்றி இவர் விரிவானவோர் கோட்பாட்டை ஆக்கியிருந்தாரெனத் தொகுப்பாசிரியர்கள் கூறியுள்ளனரெனினும் அரித்தோதில் அத்தகைய கோட்பாடு பற்றிக் கூறுகையில் இவரது பெயரை ஒருபோதும் குறிப்பிட்டுள்ளாரில்லை. “பைதாகரச கொள்கை ’ எனவே அவர் இக்கோட்பாடு பற்றிக் கூறியுள்ளார்.2 பிளேட் டோவின் பீடோ, யோச்சியாசு என்பனவற்றிலுள்ள பைதாகரச கருத்துக்கள், பிலோலெசுவிடமிருந்தே பெறப்பட்டிருக்க வேண் டுமெனக் கொள்ளுதலே இயல்பாகத் தோன்றுகிறது. தற்கொலை செய்வது என் சட்டவிரோதமானது என்பதை சிம்மியாசுவும் கீபிசுவும் அவரிடமிருந்து அறிந்து கொள்ளாதது பற்றிச் சோக் கிரதர் ஆச்சரியமடைவதைப் பிளேட்டோ காட்டுகின்றர். மேலும் * மெய்யியலாளன்’ என்னும் பதம் வாழ்க்கைச் சுமையிலி ருந்து விடுதலை பெற வழிகாண முயல்வோன் ஒருவனையே குறிக்கும் எனத் தீபிசுவிலுள்ள பைதாகரசவாதிகள் கருதினர் என்னும் கருத்துத் தோன்றும் வகையிலும் குறிப்பொன்றுள் ளது. ஆன்மாவைச் சிறைவைத்திருக்கும் கல்லறையே உடம்பு எனப் பிலோலெசு கூறினர் எனக் கருத இடமுண்டு. பழைய பைதாகரச சமயக் கொள்கையையே இவர் போதித்தாரெனவும், அறிவின் மூலம் விடுதலை பெறமுயலும் கொள்கையில் இவர் அதிக கவனம் செலுத்தினரெனவும், நாம் கருதுவதற்குப்
* பீடோவின் அமைப்பை நோக்கும்போதும் இவ்வாறே தோன்றுகிறதாத லால், இவ்விடயத்தில் பிளேட்டோ பிழைவிட்டிருப்பாரென நம்ப முடியா தென்க. சிம்மியாசும் கீபிசுவும் பிளேட்டோவிலும் சிறிது இளையவராயிருந்தன ராதலால், அவர்கள் உண்மையில் சோக்கிரதரின் சீடர்களாயிருந்திராவிடின் பிளேட்டோ அவர்களை இவ்வுரையாடலிற் பாத்திரங்களாக்கியிரார்.
* 150, 152 ஆம் பிரிவுகளில் பார்க்க.

Page 154
292 ஆதி கிரேக்க மெய்யியல்
போதிய காரணங்களுளவெனலாம். இவர் பற்றிய மிகச் சிறந்த ஆதாரங்களான பிளேட்டோவின் நூல்களிலிருந்து நாம் பெறும் கருத்து இதுவே.
மேலும் பிலோலெசு “ எண்களே 'ப்பற்றி எழுதினரெனவும் நாம் அறிகிருேம் ; இவ்விடயம் பற்றிய பைதாகரச கொள்கை களைப் பற்றி எழுதிய பியூசிப்போசு இவரையே பின்பற்றினராத லின். இவர் எண்கணிதத்திலேயே அதிக கவனம் செலுத்தின ரெனக் கருத இடமுண்டு. அத்துடன் இவரது கேத்திரகணிதம் நாம் முன்போர் அத்தியாயத்தில் விவரித்தது போன்ற அதிகம் விருத்தியடையாதவோர் கோட்பாடே என்பதில் ஐயத்திற்கிட மில்லை யெனலாம். இவரது சீடனன இயூரைத்தோசு என்பா ரின் கொள்கைகள் அதிக செம்மையற்றனவாயிருந்தன என் பதையும் முன்பு கவனித்தோம் (பிரிவு 47).
பிலோலெசு வைத்தியம் பற்றியும் எழுதினரெனவும், சிசிலிய மரபை அவர் பின்பற்றினர் போலத் தோன்றினலும் உண்மை யில் பைதாகரச கொள்கைகளின் அடிப்படையில் நின்று சிசிலிய கொள்கைகளை அவர் எதிர்த்தாரெனவும் நாம் அறிவோம். எமது உடல்கள் சூடானவற்றையே கொண்டிருந்தன வென வும், குளிர்ந்தவை எவையும் அவற்றில் இல்லையெனவும் அவர் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பின் பின் னரே சுவாசத்தின் மூலமாகக் குளிர் எமது உடல்களிற் புகுத்தப் பட்டது. இதற்கும் பழைய பைதாகரச கொள்கைக்கும் இடையே உள்ள தொடர்பு வெளிப்படை. அண்டத்திலுள்ள தீ எவ்வாறு உலகைச் சூழவிருக்கும் இருண்ட குளிர்காற்றை உள்ளிழுத்துக் கட்டுப்படுத்துகின்றதோ (பிரிவு 53), அதுபோலவே எமது உடல் களும் வெளியேயிருந்து குளிரை உள்ளிழுக்கின்றன. பித்தம், இாத்தம், கபம் என்பனவே நோய்களுக்குக் காரணங்களெனப் பிலோலெசு கூறினர் ; அன்றியும் இக்கொள்கைக்கேற்ப, சிசிலிய மரபினர் கூறியது போல கபம் குளிருடையது அல்ல என அவர் கூறவேண்டியிருந்தது. அச்சொல்லின் (கிரேக்க சொல்லின்) அமைப்பை ஆராயின் அது சூடானது என நிரூ பிக்கப்படும் என அவர் கூறினர். இவ்வாறு சிசிலிய வைத்திய மரபுடன் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்தமையே, பின்னைப் பைதாகரசத்தின் சில முக்கிய இயல்புகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த தென்பதை நாம் கண்போம்.
140 வரலாற்றின் மூலம் நாம் அறியவரும் பிலோலெசு, நாம் அறிந்தவரையில் இத்தகையவரே. ஆனல் வேறு பலவா றும், கொப்பர்ணிக்கசுவின் முன்னேடியெனவும் கூட, இவர்
* 2 ஆம் அத்தியாயம் 107 ஆம் பக்கத்தைப் பார்க்க.

பைதாகரசவாதிகள் 293
பிறரால் வருணிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அறிவதானல் நாம் இலக்கியச்சதி ஒன்றைப்பற்றிச் சற்றே தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.
பிளேட்டோ பிலோலெசுவைப் பற்றி ஒரிருமுறைகள் குறிப்பிட் டுள்ளாரெனினும், பைதாகரச விஞ்ஞானக் கொள்கைகளின் வளர்ச்சியில் இவர் பிரதான பங்கெதுவும் எடுத்தாரென இக் குறிப்புக்களிலிருந்து தெரியவில்லை. பைதாகர விஞ்ஞானத்தைப் பற்றிய மிக விரிவான விவரங்களை, லோக்கிரியன் நாட்டவனன திமாயோசு என்பவனின் வார்த்தைகளாகப் பிளேட்டோ எமக் குத் தருகிருர். ஆனல் திமாயோசுவைப் பற்றிப் பிளேட்டோ கூறுபவற்றைத் தவிர நாம் எதுவும் அறியோம். சோக்கிரதருக்கு அதிக வயதாவதற்கு முன்னரே அவர் அதென்சுக்கு வந் தார் என்பதுவும் அவர் பிலோலெசுவின் காலத்தவர் என்பதுவுமே எமக்குத் தெரியவந்துள்ளவை. உண்மையில் திமாயோசுவிலும் அதிக பிரசித்தமானவரான, பிலோலெசு வின் கண்டுபிடிப்புக்களைத் திமாயோசுவினுடையவை எனப் பிளேட்டோ கூறியுள்ளார் எனக் கருத இடமில்லை. பிளேட்டோ விற்கு எதிரிகளும், பழிகூறுவோரும் பலர் இருந்தனர் என் பதில் ஐயமில்லை; அரித்தோசெனசுவும் அவர்களுள் ஒருவர். பிளேட்டோவினுடைய “ குடியரசு ’ என்னும் நூலின் பெரும் பான்மையும் புரொதாகரசுவின் நூலொன்றிற் காணப்படுகிறது என்னும் விநோதமான கூற்று அவரது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிளேட்டோ பிலோலெசுவிடமிருந்து * மூன்று பைதாகரச நூல்களை வாங்கி அவற்றிலிருந்தே திமா யோசு ’ வைப் பிரதிபண்ணினர் என்னும் கதையை உண்டாக்கி யவரும் இவரே எனவும் தோன்றுகிறது. இக்கதையின்படி இம்“மூன்று நூல்களும்” பிலோலெசுவிடம் இருந்தன. அவர் மிகுந்த வறுமையடைந்திருந்தாராதலின், அந்நூல்களை டியோன் என்பார் பிளேட்டோவின் வேண்டுகோளின்படி, பிலோலெசு விடமிருந்தோ அல்லது அவரது உறவினர் ஒருவரிடமிருந்தோ நூறு மினே பணத்திற்குப் பெற்றுக்கொண்டாரென்பது கதை.? இக்கதை மூன்றம் நூற்றண்டிலேயே பெருவழக்கிலிருந்தது என்பது நிச்சயம் ; ஏனெனில் பிளேயசு நாட்டு அங்கதகாரரான திமோன் என்பார் பின்வருமாறு பிளேட்டோவை நோக்கிக் கூறுகிருர் : “ பிளேட்டோ, அறிவு சேர்க்கும் ஆசை உன்னை யுமல்லவோ பீடித்தது. எனெனில் அனேக வெள்ளி நாண
* அதிக வயதினனன மூத்த கிரித்தியாசுவுடனும், இளைஞனன எமோக்கிருத் திசுவுடனும் அவர் உரையாடிக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளாாராத லால், நாம் இவ்வாறு கொள்ள முடிகிறது.
* இக்கதை அரித்தோசெனசுவுடையது என டியல்சு கொள்வது மிகச் சரியே.

Page 155
294 ஆதி கிரேக்க மெய்யியல்
யங்களைக் கொடுத்து ஒரு சிறிய நூலைப் பெற்றுக்கொண்ட நீ, அதிலிருந்து திமாயசுவை எழுதக் கற்றுக்கொண்டாயன்றே?" பிளேட்டோ தானகவே நாற்பது அலெக்சாந்திரிய மினே நான யங்களைக் கொடுத்துப் பிலோலெசுவின் உறவினர்களிடமிருந்து இந்நூல்களைப் பெற்றுக்கொண்டாரெனவும் அவற்றிலிருந்து திமாயசுவைப் பிரதி பண்ணினரெனவும் “ யாரோ ஒரு எழுத் தாளர் ” குறிப்பிட்டுள்ளதாகக் கலிமாச்சோசுவின் மாணவரான எமிப்போசு என்பார் கூறியுள்ளார். அரித்தாக்கியரான சத்தை ரோசு என்பார் டியன் மூலமாகவே இந்நூல்கள் நூறு மினே கொடுத்து வாங்கப்பட்டன எனக் கூறுகிறர். இக்கூற்றுக்கள் எவற்றிலாவது, இங்கு குறிப்பிடப்படும் நூல்கள் பிலோ லெசுவால் எழுதப்பட்டன எனக் கூறப்படவில்லை ; பிளேட்டோ வி 1ங்கியது பைதாகரசுவினுடையவோர் நூல் அல்லது அவரது போதனையின் உண்மையான குறிப்புக்கள் கொண்டவோர் நூல் என்பதும், அவை பிலோலெசுவிடம் இருந்தன என்பதுவுமே இக்கூற்றுக்களில் தரப்படுவது என்க. பிற்காலத்தில் லோக்கிரிய ஞன திமாயோசு என்பாரது பெயரோடு வழங்கும் “ உலகத் தின் ஆன்ம7 ’ என்னும் போலியே இங்கு குறிப்பிடப்பட்ட நூல் எனக் கருதப்பட்டது. ஆனல் இந்நூல் முதலாம் நூற் ருண்டிற்கு முன்னர் இருந்திருக்க முடியாது என்பது தற் டோது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மேலும் இந்நூல் பிளேட்டோ வின் திமாயசுவையே தழுவி, அவரது நூல் களவாடி எழுதப் பட்டது என்னும் கதையை நம்பத்தகுந்ததாக்குவதற்காக, எழு தப்பட்டது என்பது தெளிவு. அன்றியும் இக்கதையின் ஒர் பிரதான அம்சமான “மூன்று நூல்கள் ’ என்னும் முக்கிய நிபந்தனையோடும் “ உலகத்தின் ஆன்மா ’ எனும் இந்நூல் பொருந்தவில்லை.
நாம் இங்கு குறிப்பிட்டவர்களில் ஒருவர்தானும் பிரசித்த மான இம் “மூன்று நூல்ளே "த் தான் நேரிற் கண்டதாகக் கூறவில்லை. ஆனல் பிற்காலத்தில் குறைந்தது இரண்டு நூல்களாவது, இப்பெயரால் வழங்கின. அயோனிய மொழியில், எழுதப்பட்ட மூன்று பிரிவுகளைக் கொண்ட நூலொன்று, பைதாகரசுவின் பெயரால் வழங்கியதென டியல்சு எடுத்துக்காட்டி யுள்ளார். இந்நூல் அரித்தோசெனசுவின் நூலொன்றைப் பெரி தும் தழுவி எழுதப்பட்டதாகும். ஆயினும் இதனது காலத்தை நிர்ணயிக்க இயலாதிருக்கின்றதென்க.
* பைவாட்டர் கூறியதுபோல, இந்நூலின் வரலாறு, உண்மையில் கற்பன சத்தி கொண்ட எழுத்தாளர்களது மனத்தில் தோன்றும் ஓர் இலக்கியக் கொள்ளிவார்பேயின் வரலாறு போலத் தோன்றுகிறதேயொழிய, ஒரு புத்த கத்தின் வரலாறு போலத் தோன்றவில்லை.

பைதாகரசவாதிகள் 295
கி. மு. முதலாம் நூற்றண்டைச் சேர்ந்த டிமீத்திரியசு மக் னேசு என்பார் தான் கூறும் வார்த்தைகள் சில, பிலோலெசு பிரசுரித்த நூலொன்றின் ஆரம்பப் பகுதியிலிருந்து எடுக்கப் பட்ட மேற்கோள்கள் எனக் கூறுகிருர். இவை டொரிக்கு மொழியிலுள்ளன. இந்நூல் உண்மையில் பிலோலெசுவின லேயே எழுதப்பட்டது 6ான டிமீத்திரியசு கூறவில்லை. ஆயினும் தோபேயோசு முதலாய எழுத்தாளர்களது நூல்களில் இவரது பெயரோடு உள்ள மேற்கோள்கள் எடுக்கப்பட்ட நூலே, டிமீத் திரியசு குறிப்பிடும் நூல் என்பதில் ஐயமில்லை. இது பிலோ லெசுவினல் எழுதப்பட்டதெனக் கூறப்படின், அது மூலக்கதை யோடு அவ்வளவு டொருத்தமுடையதாயிருக்கவில்லை; ஆனல் இவரது பெயர் இந்நூலுக்கு என் வந்தது என்பதை இலகு வாக விளங்கிக்கொள்ளலாம். பைதாகரசினது பெயரோடு வழங் கிய மற்றைய நூல் உண்மையில் லைசிசுவால் எழுதப்பட்டதென நாம் அறிகிருேம். பிலோலெசு எழுதியது எனக் கூறப்பட்ட நூலும் மூன்று பகுதிகளையுடையதாயிருக்கலாம் எனப் பீக்கு விளக்கியுள்ளார். புரோக்கிளிசு அந்நூலை “டக்காய்' என அழைக் கிருர், எரொடோதசுவின் "தேவதை “களை நினைவூட்டும் இத் தலைப்பு அலெக்சாந்திரிய செல்வாக்கினைக் காட்டுகிறது. தொபே
யோசுவிலுள்ள பகுதிகளிரண்டும் இதை அத்தாட்சிப்படுத்து கின்றன. இக்கதை முழுவதுமே மிகவும் சந்தேகத்திற்கிட மானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
141. பிலோலெசுவின் பெயரிலுள்ள பகுதிகள் யாவும் உண் பிலோலெசின்
மையானவையேயெனப் பீக்கு வாதித்தார். ஆனல் தற்போது "குசி" ஒருவரும் அதனை ஒப்புக்கொள்ளார். எனைய பகுதிகள் யாவும் உண்மையில் பிலோலெசுவுடையனவே என ஒப்புக்கொள்வோர் கூட, ஆன்மா பற்றிய நீண்ட பகுதி அவரது அல்லவெனவே கூறுவர். இக்கருத்து எற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல வெனலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இருந்தனவெனக் கொள்ளுதற்கு எவ்வகை ஆதாரமுமில்லையெனக் கண்ட பீக்கு, எஞ்சியுள்ளவை யாவற்றையும் நாம் அவை முழுவதும் உண் மையானவை அல்லது போலிகள் எனக் கொள்ளுதல் வேண் டும் என முடிவு செய்தார். எனினும் பெரும்பாலான பகுதிகள் உண்மையானவையே என அநேக அறிஞர்கள் கருதுவதால், அவற்றை நாம் ஒரேயடியாக ஒதுக்கி விட முடியாது. இவர்க ளின் கொள்கையின் அடிப்படையில் எழும் வாதங்கள் ஒன்றை
* இது R. P. 68 இல் தரப்பட்டுள்ளது. இதையும் எனைய பகுதிகளையும் பற்றிய ஆராய்வு பின்வரும் கட்டுரையிற் காணப்படுகிறது : "On the Fragments attributed to Philolaus the Pythagorean-by Bywater” (J. Phil. i. pp. 21 8ας.).

Page 156
296 ஆதி கிரேக்க மெய்யியல்
ஒன்று பற்றிநிற்பன போலத் தோன்றுவது உண்மையே. ஆயினும் பிலோலெசுவின் இப்பகுதிகளுக்கெதிராகக் கூறப் படும் இரு பிரதான குற்றச்சாட்டுக்களை ஈண்டு உடனடியாகத் தரலாம்.
முதலாவதாக, பிலோலெசு டொரிக்கு மொழியில் எழுதி யிருக்க முடியுமா என நாம் அறிதல் வேண்டும். பெலோப் பொனிசியப் போர்வரைக்கும் அயோனிய மொழியே உபயோகிக் கப்பட்டதாதலின் ஆதி பைதாகரசவாதிகள் வேறேர் மொழியை உ யோகித்தனர் எனக் கொள்ளுவதற்குக் காரணமெதுவும் இல்லையென்க. மேலும் பைதாகரசுவும் ஓர் அயோனியரே யாதலால், அவர் தமது மரபை நிறுவிய ஆக்கையன் நாடு களில், அவரது காலத்திலேயே டொரிக்கு மொழியை உபயோ கித்தனர் என எண்ண இடமில்லை. குரோட்டன் நாட்டவ ரான அலுக்மையோனும் அயோனிய மொழியிலேயே எழுதின ரெனத் தோன்றுகிறது. பிலோலெசுவும் அவருக்குப் பின்னர் ஆக்கைட்டாசுவுமே தமது பிறந்த நாட்டு மொழியை உபயோ கிக்கத் தொடங்கிய முதலாவது பைதாகரசவாதிகள் என டியல்சு கூறுகிறர். ஆனல் டியல்சுவுக்குப் பிறந்த நாடு என ஒன்று இருந்ததெனக் கூறுவதே அத்துணைப் பொருத்தமுடையதா யிராது. அன்றியும் தீபிசுவில் வாழ்ந்த ஆக்கையன் நாட்டு அகதி யொருவன் எதற்காக டொரிக்கு மொழியில் எழுதி யிருக்க வேண்டும் என அறிந்து கொள்ளுதல் சுலபமல்ல. மேலும் ஆக்கைட்டாசு எழுதியது “ பாமரர்களது டொரிக்கு ' எனக் கூறக்கூடியவோர் மொழியிலேயே யன்றி தாரசு நாட்டு லாக் கோனிய மொழியிலல்ல. அன்றியும் அவர் பிலோலெசுவுக்கு ஒருதலைமுறை பிந்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிலோ லெசுவின் காலத்திலும் அதற்குப் பின்னரும்கூட டொரிய நகரங்களில் விஞ்ஞான அலுவல்களுக்கு அயோனிய மொழியே உபயோகிக்கப்பட்டது. சிராக்கியூசு நாட்டு வரலாற்ருசிரியரான அந்திக்கோசுவும், டொரிய நாட்டு வைத்திய நூலாசிரியர்க ளான கோசு, நிடோசு என்பாரும் அயோனிய மொழியிலேயே எழுதினர். பைதாகரசுவினுடையதெனக் கூறப்படும் போலி நூலும்-இதுவே வேறு சிலரால் லைசிசுவால் எழுதப்பட்டதெனக் கூறப்படுவது-அயோனிய மொழியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அந்திரோக்கைடிசுவால் எழுதப்பட்டதெனக் கூறப்படும் அக் கெளசுமாட்டா பற்றிய நூலும் அயோனிய மொழியிலேயே எழுதப்பட்டிருப்பதிலிருந்து, பைதாகரச நூல்களுக்கு அயோ னிய மொழியே பொருத்தமானதென அலெக்சாந்திரிய காலங் களிலும் கருதப்பட்டது என்பது தெளிவாகிறது.

பைதாகரசவாதிகள் 297
இரண்டாவதாக, இப்பகுதிகளிலொன்றில் ஐந்து ஒழுங்கான திண்மங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவென்பதிலும் அவற்றில் நான்கு எம்பிடோக்கிளிசுவின் நான்கு மூலகங்களே என்பதி லும் எவ்வகை ஐயத்திற்குமிடமில்லை. “ குடியரசு ’ எனும் தனது நூலில், அவ்வுரையாடல் நிகழ்ந்தகாலத்து திண்மப் பொருளளவையியல் இன்னமும் விருத்தி செய்யப்படவில்லை யெனப் பிளேட்டோ கூறியுள்ளார். * பிளேட்டோவின் உருவங் கள் ’ என அழைக்கப்படும் ஐந்தும் கழகத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டனவென்பதற்குத் தக்க ஆதாரமுளது. பைதாகரச வாதிகளுக்குச் சதுரத்திண்மம், பிரமீது (நான்முகத்திண்மம்), பன்னிருமுகத்திண்மம் என்பனவே தெரிந்திருந்தன வென வும் எண்முகத் திண்மம், இருபான்முகத்திண்மம் என்பன தியாதித்தோசுவினலேயே கண்டுபிடிக்கப்பட்டன வெனவும் இயூக்கிளிடுவுக்கெழுதப்பட்ட பக்கக் குறிப்பொன்றிற் காணப் படுகின்றது. “பிலோலெசுவின் பகுதி ’களை நாம் முற்ருக எற்றுக்கொள்ள மறுப்பதற்கு இதுவே போதிய காரணமாகும் எனலாம். அன்றியும் இப்பகுதிகள் எந்நூலிலிருந்து எடுக்கப் பட்டனவோ அந்நூலை அரித்தோதில் அறிந்திருக்கவில்லை யென் பதும் நாம் இப்பகுதிகளை முற்றக ஏற்க மறுத்தற்குக் காரண மெனலாம்?.
142. ஆகவே நாம் பிற ஆதாரங்களைக் கவனித்தல் வேண்டும். பிரச்சினை பைதாகரசவாதத்தைப்பற்றிப் பிளேட்டோவிடமிருந்து மட்டுமே அதற்குச் சாதகமான முறையில் அறிய முடியும் என்பது எற்கெனவே கூறப்பட்டனவற்றிலிருந்து தெளிவாகிறது. பைதா கரச சிந்தனைகளில் அரித்தோதிலுக்கு அதிக மதிப்பில்லாதிருந்த போதிலும், அவர் அவற்றை விளங்கிக்கொள்வதற்குப் பெரிதும் முயன்றர். அவர் இவ்வாறு முயன்றது எனெனில் பிளேட்டோ
SC3an GL 7, Rep. 528 b.
* அரித்தோதிலினது நூல்கள் முழுவதிலும் பிலோலெசு ஒரேயொரு இடத்திலேயே (Eth. Eud, B, 88. 1225 a 33) குறிப்பிடப்பட்டிருக் கிருர், வேருேர் இடத்திலும் அவரது பெயர்கூடக் குறிப்பிடப்படவில்லை. பைதாகரச கொள்கைகளை விளக்கும் இவரது நூலெதையும் அரித்தோதில் கண்டிருந்தாரானல் இஃது இவ்வாறிருக்க நியாயம் இல்லை. பிளேட்டோவின் * பீடோ "விலிருந்து பிலோலெசுவின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருப்பா சாதலால், அத்தகைய நூலெதுவும் இருந்திருந்தால் அவர் அதைத் தேடிப் பெற்றிருப்பார். எமது பகுதிகளிலுள்ளதுபோன்ற உயர்தர இசைக் கொள்கை யைப் பிலோலெசுவினல் இயற்றியிருக்க முடியாது எனத் தானரி கூறு கிருர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளேட்டோ, ஆக்கைட்டாசு என்போருக்குப் பின்னரே அக்கொள்கை தோன்றியிருக்க வேண்டுமென அவர் வாதித்தார் (Rev. de. Phil. xxviii. pp. 233 Sqq). Giraluluišias Gíîổo -øya Jag söëg மதிக்கத்தக்கது என்க.

Page 157
298 ஆதி கிரேக்க மெய்யியல்
வினதும் அவருக்குப் பின் வந்தோரினதும் கொள்கைகளின் வளர்ச்சியில் பைதாகரச கொள்கைகளுக்கு அதிக பங்குண்டாத லினல் இவ்விரு கொள்கைகளுக்கிடையேயுள்ள தொடர்பைத் தாம் அறிந்து கொள்ளுதற்கும் தமது சீடர்களுக்குத் தெளிவு படுத்துதற்கும் அவர் பைதாகரச கொள்கைகளையும் நன்று அறிந்துகொள்ளவேண்டி யிருந்ததனலென்க. ஆகவே நாம் இப்போது செய்ய வேண்டியது அரித்தோதில் கூறுபவற்றைப் பிளேட்டோவின் மனப்பக்குவத்தோடு பொருள் செய்துகொண்டு, அம்முறையினல் நாம் பெறும் கொள்கை அதற்கு முந்திய கொள்கைகளோடு எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது எனக் காண்டலேயாகும். இது மிக நுட்பமானவோர் வேலையென் பதிற் சந்தேகமில்லை யெனினும், கணிதவியல் வைத்தியவியல் என்பனவற்றின் ஆதி வரலாறு பற்றிய சமீபகாலக் கண்டு பிடிப்புக்களின் மூலம் இது அத்துணைச் சிக்கலல்லாதவொன்ருகி விட்டதெனலாம்.
பைதாகரச கொள்கையின் பிந்திய வர்ணனைகளிற் புகுந்த பிளேட்டோனிய அம்சங்களை நீக்குவதன்மூலம், செல்லர் நிலை மையை ஒரளவுக்குத் தெளிவுபடுத்தியுள்ளாரெனலாம். மேற் கூறிய பிளேட்டோனிய அம்சங்கள் இருவகைப்பட்டன. முதலா வதாக எல்லையையும், எல்லையற்றதையும், எகமும் தேரா விரட்டையும் எனக் கூறுவதுபோன்ற வழமையானகழகக் கருத் துக்களுள்ளன ; இரண்டாவதாக, எல்லைக்கும் எல்லையற்றதற் குமிடையே உள்ள எதிர்ப்பு, பதிக்கும் சடப் பொருளுக்குமி டையே உள்ள எதிர்ப்பு எனக் கூறும் நவப்பிளேட்டோதரிசனக் கருத்துளது.? இத்தகையவோர் கொள்கை பைதாகரச வாதிக ளுடையது என இப்போது யாரும் கூறராதலின், செல்லரது வாதங்களை இங்கு தர வேண்டியதில்லை.
இது, பிரச்சினையைச் சற்றே இலகுவாக்கினலும், இன்னமும் எமது வேலை கடினமானதே. அரித்தோதில் கூறுவதன்படி பொருள்கள் எண்களே எனப் பைதாகரசவாதிகள் கூறினர். ஆனல் பிலோலெசுவின் பகுதிகளிலிருந்து நாம் பெறும் கொள்கை இதுவல்ல. இவற்றின் மூலமாகவே எம்மால் பொருள் களை அறிய முடிகிறது. ஆனல் அவற்றின் உண்மையான சாரம் நம்மால் அறிய முடியாததொன்றகும். பைதாகரசுவே பொருள்கள் எண்களே எனக் கூறியுள்ளார் என நம்புதற்
" " எகமெனக் கருதப்படும் எல்லையற்றதற்குப் பதிலாக இரட்டையொன்றை நிறுவுவதும், எல்லையற்றதில் பெரியவையும் சிறியவையும் உள்ளன வெனக் கூறுவதும் பிளேட்டோவிற்கு இயல்பானதே ' என அரித்தோதில் கூறுகிறர்.
*· Zeller, p. 369 sqq. (Eng. trans. p. 397 sqq.)

பைதாகரசவாதிகள் 299
கான காரணங்களை நாம் பார்த்தோம் (பிரிவு 52.) இச் சூத்திரத்துக்கு அவரைப் பின்பற்றியோர் எவ்வாறு பொருள் கொண்டனர் என்பதிலும் ஐயமில்லை ; எனெனில் அவர்கள் அதை அண்டவியற் கருத்தில் உபயோகித்தனர் என அரித் தோதில் கூறுகிறர். உலகம் “நான்கு மூலகங்களால் ” உண் டாக்கப்பட்டிருக்கிறது எனவும் எண்ணிறந்த விதைகளினல் உண்டாக்கப்பட்டிருக்கிறது எனவும் பிறர் எவ்வாறு கூறினர் களோ அதே போலவே இவர்கள் உலகம் எண்களால் உண்டாக் கப்பட்டிருக்கிறது எனக் கருதினர். இதை வெறும் அனுபூதி நெறியென ஒதுக்கிவிட முடியாது. ஐந்தாம் நூற்றண்டில் பைதாகரசவாதிகள், விஞ்ஞானிகளாயிருந்தனராதலால் அவர் கள் கூறியதற்குத் திட்டவட்டமான பொருளிருந்திருத்தல் வேண்டும். பொருள்கள் எண்களே எனும் சொற்களுக்கு அவர்கள் அவற்றின் இயல்புகளுக்கு மாறன பொருளேதும் கொண்டிருத்தல் வேண்டுமென நாம் கொண்டாலும் அதில் எவ்வித சிக்கலுமில்லை. தமது குருவின் சொற்களை எவ்வகை மாற்றமுமின்றி உபயோகிப்பதில் பைதாகரசவாதிகள் அதிக கவனமுடையோராயிருந்தனர்; ஆனல் சொற்களை அப்படியே உபயோகிப்பதில் அவர்களுக்கு இத்தகைய பக்தி இருந்த அதே நேரத்தில் அச்சொற்களுக்குத் தாம் விரும்பியவாறெல்லாம் பொருள் கொள்ளும் பண்பையும் அவர்கள் கொண்டிருந்தனர். ஆகவே நாம் அரித்தோதில் எண்களைப் பற்றிக் கூறுவதி லிருந்து ஆரம்பிக்கலாம்.
143. பைதாகரசவாதமும் எனையவற்றைப் போலவோர் அண்டவியற் கொள்கையாகவே அமைந்ததென அரித்தோதில் தெளிவாக அபிப்பிராயப்படுகிறர். “ பைதாகரசவாதிகள் உய யோகித்த முதற்றத்துவங்களும் மூலகங்களும், புலன்றருபொ ருள்களிலிருந்து பெறப்படாதவையாதலால், அத்தனை வெளிப் படையானவையாயல்லாத போதிலும், அவர்களது ஆராய்ச்சி களும் விவாதங்களும் இயற்கை பற்றியே குறிப்பிடுவனவாய் அமைந்துள்ளன. வானத்தின் தோற்றத்தைப் பற்றி அவர்கள் வர்ணிக்கின்றனர். அதன் பகுதிகளையும், அதற்கு நடப்பன வற்றையும் அதன் இயக்கங்களையும் அவர்கள் அவதானித்த னர் ” என அரித்தோதில் கூறுகிறர். உள்பொருளானது புலன்களால் அறியத் தரப்படுவதேயெனவும், வான வட்டத் திற்குட்பட்டதெனவும் மற்ற மெய்யியல் வாதிகளோடு தாமும் ஒப்புக்கொள்பவர் போன்று, இப்பொருள்களையே அவர்கள் தமது முதற்றத்துவங்களால் விளக்க முற்படுகின்றனர். ஆனல் அவர்களாற் கையாளப்பட்ட முதற்றத்துவங்களும், காரணங்
எண்கள் பற்றி அரித்தோதில் கூறியவை

Page 158
எண்களின்
மூலகங்கள்
300 ஆதி கிரேக்க மெய்யியல்
களும் புலன்றரு பொருள்களை விட உயர்ந்த உள்பொருள் வகைகளை விளக்கவல்லன என்பது குறிப்பிடத்தக்கது.
எண்களின் மூலகங்கள் பொருள்களின் மூலகங்களேயாத லால் பொருள்கள் எண்களே யென அரித்தோதில் இக்கொள் கையை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். அன்றியும், * பொருள்கள் ” என்பவை புலன்றரு பொருள்களே யெனவும் உண்மையில் அவை இவ்வுலகத்தின் பல்வேறு பகுதிகளாயு முள்ள உடல்களே யெனவும் அவர் திட்டவட்டமாகக் கூறு கிருர், எண்களிலிருந்து உலகத்தை உண்டாக்குதல் உண்மை யில் நடைபெற்றவோர் செயன்முறை யெனவும் அது காலத்தில் நடைபெற்றதெனவும் கருதிய பைதாகரசவாதிகள் அச்செயன் முறையை விரிவாக வருணித்துள்ளனர்.
மேலும் இக்கொள்கையில் குறிப்பிடப்படும் எண்கள் புலன் றரு பொருள்களிலிருந்து முற்றக வேறுபட்டனவல்லவாயினும், அவை கணிதவியலெண்களே. அதே நேரத்து அவை வெறு மனே பிறவற்றின் பண்புகளாக மாத்திரமிராது, தமக்கென வோர் மெய்ம்மையுடையனவாயிருந்தன. “ எல்லை, எல்லையற் றது, எகம் என்பன தீ, நீர் போன்ற பிற பொருள்கள் என அவர்கள் கருதவில்லை ; ஆனல் எல்லையற்றதும், எகமுமே, தாம் எவற்றிற்குப் பயனிலையாகக் கூறப்பட்டனவோ அவற்றின் மெய்ம்மைகளாக விருந்தன. இதனுற்றன் எண்களே யாவற் றினதும் உள்பொருளாக விருந்தனவென அவர்கள் கூறினர். ” ஆகவேதான் எண்கள், அரித்தோதிலின் சொற்களிற் கூறுவதா ஞல் பொருள்களின் நியமகாரணங்களாக மாத்திரமிராது ஆதி காரணங்களாகவுமிருந்தன. ” ܗܝ
பைதாகரசவாதிகளுக்கும் பிளேட்டோவுக்குமிடையே ஒற்றுமை யிருந்த கொள்கையெதுவெனில், எண்கள் வேறெதனேடும் சாராது தாமாகவே மெய்ம்மையுடையனவாயிருந்தன வென் பதே என அரித்தோதில் கூறியிருக்கிருர் ; ஆனல் எண்களி னது மெய்ம்மை புலன்றரு பொருள்களின் மெய்ம்மையிலிருந்து வேறுபட்ட தன்மையினது எனக் கூறுவதன் மூலம் பிளேட்டோ பைதாகரசவாதிகளிலிருந்து வேறுபட்டார். இக்கூற்றுக்களை நாம் விரிவாக ஆராயலாம்.
144. எண்களின் * மூலகங்கள் ” சிலவற்றைப் பற்றி அரித் தோதில் குறிப்பிடுகிறர். இவையே பொருள்களின் மூலகங்களு மாம். இதன் பொருளையறிந்தால், அது இப்பிரச்சனையை விளக்கு தற்கு வழியாயமையும். ஆரம்பத்தில் ஒற்றை, இரட்டை என் பனவே “ எண்களின் மூலகங்கள் ” என நாம் கொள்ளலாம். ஆனல் அவ்வாறு கொள்ளுதல் எமக்கு அதிகம் உதவுவதா

பைதாகரசவாதிகள் 3O
யில்லை. ஆனல் பைதாகரச அண்டவியலின் முதற்றத்துவங்க ளென நாம் கருதக்கூடியனவையான எல்லை, எல்லையற்றது என் பனவே, ஒற்றை, இரட்டை என்பனவாகக் கொள்ளப்பட்டனவென வும் நாம் காண்கிறேம் (பிரிவு 53). பொருள்களிலிருக்கை யில், ஒற்றையினல் கட்டுப்படுத்தப்படும் இரட்டையே பொருள்க ளுக்கு அவற்றின் எல்லையற்ற தன்மையை அளிக்கிறது என அரித் தோதில் கூறுகிறர். பொருள்களுக்கு, எல்லையற்றுப் பிரிக்கப்படும் தன்மையை அளிப்பது இரட்டையே என உரையாசிரியர்கள் யாவ ரும் கருத்து வேற்றுமையின்றி இதற்குப் பொருள் கொண்டுள் ளனர். ஆனல் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்க முயல்கையிற்றன் அவர்களுக்குப் பிரச்சினைகள் எற்படுகின்றன. அலெக்சாந்தரினது என நம்பத்தகுந்ததான விளக்கமொன் றைச் சிம்பிளிசியசு பேணித் தந்துள்ளார். அது வருமாறு : “ஒவ்வொரு இரட்டையும் சமமான பகுதிகளாகப் பிரிக்கப்படுவதா லும் சமமாகப் பிரிக்கப்படுவது எல்லையின்றி இரண்டாக்கப்பட லாமாதலாலும் இரட்டை எண் எல்லையற்றதெனக் கொள்ளப் பட்டது; ஏனெனில் பாதிகளாகவும், சமபங்குகளாகவும் செய் யப்படும் பங்கீடு எல்லையின்றி நடைபெறும் தன்மையுடைய தாயிருக்கிறது. ஆனல் ஒற்றை அதனுட் கொணரப்பட்டதும் இரட்டை கட்டுப்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது சமபங்குகளா கப் பிரிக்கப்படுவதை ஒற்றை அசாத்தியமாக்குகிறது. ” இரட்டை எண்கள் எல்லையின்றி இரண்டாகப் பிரிக்கப்படும் தன்மை யுடையன வெனப் பைதாகரசவாதிகள் கூறினர் என நாம் கூற முடியாது என்பது வெளிப்படை, இரட்டை எண்களான 6, 10 ஆகியன ஒருமுறை மட்டுமே இரண்டாகப் பிரிக்கப்படலாம் என அவர்கள் அறிந்திருப்பார்கள். அரித்தோசெனசுவுடைய பகுதியொன்றிற் காணப்படும் பொருளே பொருத்தமுடையது போலத் தோன்றுகிற தெனலாம். அதன்படி “ சமபங்குக ளாகப் பிரிக்கப்படக்கூடியவை இரட்டை எண்கள். ஒற்றை எண் கள் சமமில்லாத பங்குகளாகப் பிரிக்கப்படும் தன்மையையுடை யன ; அன்றியும் அவை “நடுப்பதம்’ ஒன்றை உடையன." சுதொபேயோசுவினல் மேற்கோளாகக் கையாளப்பட்டிருக்கும் பொசெய்டோனியோசுவின் பகுதி யொன்றில் இது மேலும் விளக்கப்பட்டிருக்கின்ற தெனலாம். அது வருமாறு : “ ஒற்றை எண் இரு சமபங்குகளாகப் பிரிக்கப்படும்போது அதன் ஒரு அலகு நடுவில் எஞ்சிவிடுகிறது ; ஆனல் இரட்டை எண் இவ் வாறு பிரிக்கப்படும்போது தலைவனற்ற புலம் போன்றவோர் எண் இல்லாத வெற்றிடமே எஞ்சி நிற்கிறது. இதிலிருந்து இரட்டை எண் குறைவுடையதும் பூரணமில்லாததுமானவொன்று என்பது தெளிவாகிறது. “ புளுட்டாக்கும் பின்வருமாறு கூறு

Page 159
sreasof Tu
புடையன
302 ஆதி கிரேக்க மெய்யியல்
கிருர் : 'இரட்டை எண்ணுனது எத்திசையிலாவது பிரிக்கப்படும் போது தனக்குள்ளேயே.ஒரு வெற்றிடத்தை விடுவது போலத் தோன்றுகிறது ; ஆனல் ஒற்றை எண்ணை இவ்வாறு பிரிக்கும் போது, பிரித்தலின் பின்னர் எப்போதும் ஒரு நடுப்பதம் எஞ்சி நிற்கிறது. ” இப்பகுதிகள் யாவும் ஒரு பொருளையே குறிக்கின்றன வென்பதும் அப்பொருள் நமக்கு முன்பே அறி முகமான “ பதங்கள் ” அதாவது குற்றுக்களே யல்லாது வேறெ துவுமல்ல வென்பதும் வெளிப்படை (பிரிவு 47). பிரிக்கும் போது, அது எப்போதும் இவற்றிற்கிடையே நடைபெறல் வேண் டும் ; ஏனெனில் பிரிக்கும்போது, பிரிக்க முடியாத பதமெது வும் எதிர்ப்படின், பிரித்தல் தடைப்படுகிறதென்க.
145. எல்லையற்றது என்பது பரப்புடையதெனவே பைதாகாசு கருதினர் என்பதில் ஐயமெதுவுமில்லை ; எனெனில் அவர் வளி, இரவு, வெறுமை என்பனவெல்லாம் அதுவே யெனக் கூறி னர். ஆகவே அவரைப் பின்பற்றியோர்களும் எல்லையற்றது பரப்புடையதே எனக் கருதினர்கள் என எதிர்பார்க்கலாம். அரித்தோதிலும் இவ்வாறே கருதினர் என்பது உறுதி. எல்லை யற்றது வேறேர் உள்பொருளின் பயனிலையாய் மாத்திரமிராது தானே ஓர் உள்பொருளாயின், வளியின் பகுதிகளும் எவ்வாறு வளியாயுள்ளனவோ, அவ்வாறு அதன் ஒவ்வோர் பகுதியும் எல்லையற்றதாய் இருத்தல் வேண்டுமென அவர் வாதித்தார். பைதாகரச எல்லையற்றது வானத்திற்கு வெளியே யுள்ளது எனும் அவரது கூற்றிலும் இக்கருத்தே பொதிந் துள்ளது. இதற்கப்பால், தெளிவாகப் பொருள் கொள்ள இய லாதென்க. பிலோலெசுவும் அவரைப் பின்பற்றியோரும் எல்லை யற்றதை வளியெனக் கருதியிருக்க முடியாது; எனெனில் அவர்கள் அம் “ மூலகத் ’தைப் பொறுத்தவரை எம்பிடோக்கி ளிசுவின் கொள்கையை ஏற்று, அதை வேறு வழியில் விளக் கின ரென்பதை நாம் காண்போம். அவர்களில் ஒருவரான சூத்தோசு என்பார் அடர்த்தியுறல், ஐதாதல் என்பன நடை பெறும்போது, வெற்றிடம் இல்லாது விடின் அண்டம் கொள் ளாது போய் விடுமாதலின், வெற்றிடம் இருத்தல் வேண்டும் என வாதித்தார். இவர் அணுவாதிகளுக்கு முந்தியவரோ அல்லரோ என நாம் அறியோம். எல்லையற்றது எனும்போது பரப்புடைய பொருள்களையே பைதாகரசவாதிகள் கருதினர் எனக் கூறினல் போதுமானது. எல்லையற்றது பரப்புடையதானல் எல் லையும் பரப்புடையதாய் இருத்தல் வேண்டும். மேலும் கோடு, புள்ளி, மேற்பரப்பு என்பன எல்லையின் உருவங்கள் எனக்
2 ஆம் அத்தியாயம் 53 ஆம் பிரிவைப் பார்க்க.

பைதாகரசவாதிகள் 303
கொள்ளப்படலாம். அதுவே பின்னர் கைக்கொள்ளப்பட்ட கருத்
தாயிற்று. ஆனல் பைதாகரசவாதத்திற்கு இயல்பான அம்சம், புள்ளி, எல்லையாகக் கருதப்படாதது மாத்திரமல்லாது, எல்லை,
எல்லையற்றது என்பனவற்றின் முதலாவது உறுபொருளாக
வும் அது கொள்ளப்பட்டது என்பதே. அன்றியும் புள்ளி யானது, பூச்சியமெனக் கொள்ளப்படவில்லை. அதுவே கணித அலகாக அவர்களாற் கொள்ளப்பட்டது. ஆகவே இக்கொள் கையின்படி புள்ளிக்கு ஒரு பரிமாணமும், கோட்டிற்கு இரு பரிமாணங்களும், மேற்பரப்புக்கு மூன்று பரிமாணங்களும் திண் மங்களுக்கு நான்கு பரிமாணங்களும் உள்ளன. அதாவது பைதாகரச புள்ளிகளுக்குப் பரிமாணமும், கோடுகளுக்கு அகல மும், மேற்பரப்புகளுக்குப் பருமனும் இருந்தன. “நிலையொன் றுளதான ’ அலகெனப் புள்ளியைக் கருதுவதிலேயே இக் கொள்கை முழுவதும் தங்கியிருக்கிறது எனலாம். இத்தகைய மூலகங்களிலிருந்தே உலகத்தை ஆக்குதல் இயலும் எனத் தோன்றியது.
146. பைதாகரசவாதிகளால் தோற்றுவிக்கப்பட்டது(பிரிவு 47) என நாம் எண்ணக் கூடியதாயிருக்கும், சமச்சீருள்ள வடிவங் களில், குற்றுக்களை அடுக்கி அவற்றின் மூலம் எண்களைக் காட்டும் முறையோடு, புள்ளி, கோடு, மேற்பரப்பு என்பன வற்றை மேற்கண்டவாறு கொள்ளும் முறை தொடர்புபட்டது. கேத்திரகணிதம் இக்காலத்துப் பல வழிகளில் முன்னேறியி ருந்ததாயினும், அலகுகளின் தொகையே கணியமென இன் னமும் கருதப்பட்டதால், புள்ளியானது 0 எனக் கொள்ளப் படுவதற்குப் பதிலாக 1 எனவே கொள்ளப்பட்டது. பைதா கரச எண்கள் பரப்புடையனவெனக் கொள்ளுதல், அவை ஆதியில் எண் கணிதச் சார்புடையனவாயிருந்தன வென்பதை மறந்து, கேத்திர கணிதச் சார்புடையனவெனக் கருதுவதாகும் என்னும் செல்லரது வாதத்திற்கு இதுவே விடையாகும். நாம் பொருள் கொண்டுள்ள முறை, அவ்வுண்மையை மனத்திற் கொள்ளுவது மாத்திரமல்லாது, பைதாகரச கொள்கை முழுவதி லுமுள்ள சிறப்பியல்புகளையும் அவ்வுண்மையைக் கொண்டே விளக்க முற்படுகிறது. பைதாகரச புள்ளிகள் அளவுடையன என்பது பற்றி அரித்தோதில் திட்டவட்டமான அபிப்பிராய முடையவராயிருந்தார். “ அவர்கள் உலகம் முழுவதையும் எண் களிலிருந்தே உண்டாக்குகின்றனர். ஆனல் அலகுகள் பரு மனுடையவை என அவர்கள் கொள்ளுகின்றனர். ஆனல் பருமனுடையதான முதல் அலகு எவ்வாறு உண்டாகியது என் * புள்ளி ஒர் அலகே எனக் கருதப்படுவது பற்றி அரித்தோதிலின் நூலில் கூறப்பட்டிருக்கிறது.
எண்கள் அளவுகள் 6rešé)

Page 160
எண்களும் மூலகங்களும்
304 ஆதி கிரேக்க மெய்யியல்
பதை அவர்களால் விளக்க இயலாதிருக்கிறது” என அவர் கூறினர். இஃது அரித்தோதிலின் அனுமானமேயெனச் செல் லர் கூறுகிருர். புள்ளிகள் பருமனுடையவே யென வெளிப் படையாகப் பைதாகரசவாதிகள் கூறவில்லையாதலால் செல்லர் இவ்வாறு கூறுவதிலும் ஓரளவு உண்மையிருக்கிறதெனலாம்.
பைதாகரச அண்டவியற் பகுதிகளில், எண்கள் பரப்புடையன வாகவே கொள்ளப்படல் வேண்டும் எனச் செல்லர் ஒப்புக் கொள்கிருர்-இது இவ்வாறே யென அவர் மிகவும் உறுதி யாகக் கூறுகிருர் எனலாம். ஆனல் பைதாகரச கொள்கை யின் எனைய பகுதிகளைப் பற்றியே அவர் வினக்கள் எழுப்பு கிருர், ஆன்மா, நீதி, வாய்ப்பு என்பன போன்ற பிறவும் எண்களெனவே கூறப்படுகின்றன. ஆனல் இவை புள்ளிக ளாலும், கோடுகளாலும் மேற்பரப்புகளாலும் ஆனவை எனக் கூறமுடியாது. பைதாகரசுவைக் கண்டிக்கும் பந்தியொன்றில் அரித்தோதில் கூறுவதும் இதுவே என எனக்குத் தோன்று கிறது. உலகில் ஒரு பாகத்தில் அபிப்பிராயம் நிலைபெற்றிருந்த தாகவும் அதற்குச் சற்று மேலே அல்லது கீழே அநீதி அல்லது பிரிவு அல்லது கலவையிருந்ததாகவும் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு எண்ணெனவும் பைதாகரச வாதிகள் கருதினர் என அரித்தோதில் கூறுகிருர். ஆனல் வானத்தில் அதே பகுதிகளில் பருமனுள்ள பொருள்கள் இருந்தன. இவையும் எண்களே. நீதி பருமனல்லாதவொன்ருதலால் இது எவ்வாறு சாத்தியமாகும்? விருப்பத்திற்கேற்றவாறெல்லாம் தரப்பட்டவை போலத் தோன்றும் இவ்வுதாரணங்கள், தமது கேத்திரகணித இயல்பு கொண்ட அண்டத்தோடு எவ்வாறு பொருந்தினவென் பதைப் பைதாகரசவாதிகள் தெளிவாக விவரிக்கவில்லை என் பதையே இது காட்டுகிறது எனலாம்.
147. இக்காலப் பைதாகரசவாதிகளுக்கும் அவர்களுக்கு முந் தியவர்களுக்கும் உள்ள வேற்றுமை, இக்காலத்தவர் தமது கொள்கையைப் புதிய “ மூலக ’க் கொள்கைக் கேற்ப மாற்றிய மைக்க முயன்றமையே யெனலாம். இதனலேயே நாம் இவர் களை மீண்டும் பன்மைவாதிகளோடும் ஒப்பிட்டு நோக்குதல் அவ சியமாகிறது. பைதாகரசவாதிகள் தென் இத்தாலிக்கு மீண்ட போது அங்கு நிலவிய கருத்துக்களுக்கேற்பத் தமது கொள்கையை ஒரளவுக்கு மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த னர் என்பதை நாம் பின்னர் காண்போம். எம்பிடோக்கிளிசு ஒரு மெய்யியற் குழுவை ஆரம்பித்தாரா என்பதை அறியா விட்டாலும், இப்பகுதிகளில் பரவியிருந்த வைத்திய மரபுகள் பெருமளவிற்கு அவரது கருத்துக்களின் செல்வாக்குக்குட்பட் டிருந்தன என்பதில் ஐயமில்லை ; வைத்திய அறிவின் வர

பைதாகரசவாதிகள் 305
லாற்றில் பிலோலெசுவுக்கும் ஓர் இடமுண்டு என்பதையும் நாம் அறிவோம். முன்பு தெளிவற்றது போலத் தோன்றிய வற்றை விளங்கிக் கொள்வதற்கு இவ்வறிவு உதவும். மூலகங்களை, அவை கேத்திரகணித உருவங்களால் ஆனவையெனப் பைதாகர சவாதிகள் விளக்கினர் என்பது வரலாறு. பிளேட்டோவின் திமாயசுவில் இக்கொள்கை மேலும் விருத்தி செய்யப்பட்டிருப் பதை நாம் காணலாம். இத்தாலியில் வைத்திய அறிவில் தாமே தலைசிறந்தவர்களாகத் தொடர்ந்து இருப்பதாயின், பைதாகரச வாதிகள் மூலகங்களை விளக்கவே வேண்டியிருந்தது. ஆனல் மூலகங்களின் ஆக்கம் பற்றிய பைதாகரச விளக்கம் பிளேட் டோவின் திமாயசுவில் நாம்காணும் கொள்கையை அப்படியே முற்றக ஒத்திருந்ததெனவும் நாம் கொள்ளலாகாது. உண் மையில் ஒழுங்கான திண்மங்களில், பிரமீது, பன்னிருமுகத் திண்மம், சதுரத்திண்மம் என்னும் மூன்றையுமே இவர்கள் அறிந்திருந்தனர் எனக் கொள்ளுதற்கு இடமிருக்கிறது? என்ப தையும் பார்த்தோம். பிளேட்டோ தனது பாத்திரமான திமா யசுவை, தீ, நிலம் என்பனவற்றிலிருந்து ஆரம்பிக்க வைக் கிருர். மேலும் மூலகங்களை ஆக்குகையில் எண்முகத்திண்மம், இருபான்முகத்திண்மம் என்பன இலகுவில் பிரமீதுகளாக மாற் றப்படக்கூடிய முறையிலும் சதுரத்திண்மம், பன்னிருமுகத் திண்மம் என்பன அவ்வாறு மாற்றப்பட இயலாத முறை யிலுமே செய்துள்ளார் என்பதையும் காண்கின்றேம். இதி லிருந்து காற்றும் நீரும் இலகுவாகத் தீயாகின்றன என்பதும், நிலம் அவ்வாறு மாருது என்பதும் பன்னிரு முகத்திண்மம் வேருெரு நோக்கத்துக்காக ஆக்தப்பட்டது என்பதும் தெளிவா கின்றன. அந்நோக்கம் என்ன என்பது பற்றி நாம் விரைவில் ஆராயலாம். இம்முறை பைதாகரச கொள்கையோடு நன்கு பொருந்துவதாய் உள்ளது ; பார்மனைடிசுவின் கவிதையின் இரண்டாம் பாகத்தில் விளக்கப்பட்டது போன்றவோர் இரு மைக் கொள்கைக்குப் போதிய இடமளிப்பதாதலின் இப் பாசோசு தீயையே முதற்றத்துவமாக்கினர் என்பதை நாம் அறிவோம். காற்று, நீரென்பனவற்றைத் தீயின் பிறவடிவங்க ளெனக் கொள்ளுதல் கூடுமென்பதைத் திமாயசுவிலிருந்து அறிகிருேம். காற்றல்லாது, நிலமே மற்றைய மூலகமெனக் கொள்வதற்குக் காரணங்களுள வென்பதையும் ஆதிபைதாகரச கொள்கையிலிருந்து அறிந்தோம். எம்பிடோக்கிளிசுவினது வளிமண்டலக் காற்றின் கண்டுபிடிப்பிலிருந்தும், மூலகங்கள்
பற்றிய அவரது பொதுவான கொள்கையிலிருந்தும் இம்முடிவு
292 ஆம் பக்கம் பார்க்க.
* 297 ஆம் பக்கம் பார்க்க. 12-R 10269 (668)

Page 161
பன்னிருமுகத் திண்மம்
306 ஆதி கிரேக்க மெய்யியல்
இயல்பாகவே எற்படும். பார்மனைடிசுவால் குறிப்பிடப்பட்ட இரு * உருவங் ”கள் தீயும் நிலமுமே என அரித்தோதில் கூறியதை யும் இதனல் விளக்கலாம்.
148. பன்னிருமுகத்திண்மம் உபயோகிக்கப்படும் முறையே இக்கொள்கையில் அதிக கவனத்திற்குரிய அம்சமெனலாம். “அண்டகோள ’த்துடன் அல்லது பிலோலெசுவின் பகுதியிற் கூறப்படுவது போலக் “ கோளத்தின் அடிக்கல'த்துடன் பன்னிரு முகத்திண்மம் ஒப்பிடப்பட்டது என அறிகிருேம். இப்பகுதிகள் உண்மையானவையோ என்பது பற்றி எத்தகைய ஐயமிருப் பினும், இவை பைதாகரசுவின் சொற்களே என நாம் நம்ப லாம். மேலும் மத்தியிலுள்ள தீ பற்றிப் பேசுகையில் உபயோ கிக்கப்பட்ட “ எரா” என்னும் சொல்லுடன் சேர்த்தே இவ் வார்த்தைகளையும் நோக்குதல் வேண்டும். உலகத்தின் அமைப்பு ஒரு கப்பலின் அமைப்புடன் ஒப்பிடப்பட்டது என்பதற்குப் பிற ஆதாரங்களும் உள. பன்னிருமுகத்திண்மம் பற்றிக் கூறப்படு வனவற்றை விளக்குதற்கான வழியும் பிளேட்டோவிடமிருந்தே எமக்குக் கிடைக்கிறது. ஒழுங்கான திண்மங்கள் பற்றிய கொள்கை முற்ருக உருவாக்கப்படுவதற்கு முன்னர் எழுதப் பட்டதுபோலத் தோன்றும் பீடோவில் “ உண்மையான உலகு மேலேயிருந்து பார்க்கையில் பன்னிரண்டு தோற்றுண்டுகளா லான பந்துகளைப் போலப் பல நிறங்களுடன் காணப்படுகிறது ” எனப் பிளேட்டோ கூறுகிறர். இவ்விடயம் திமாயசுவிலும் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது : “ ஐந்தாவது அமைப்பு இன்னமும் எஞ்சியிருந்தபடியால் கடவுள் உலகுக்கு வர்ணந் தீட்டுகையில் அதற்கு இவ்வமைப்பை உபயோகப்படுத்தினர்.? மற்றைய ஒழுங்கான திண்மங்களிலும் பார்க்கப் பன்னிருமுகத் திண்மமே கோளத்தை மிகவும் ஒத்திருந்தது என்பதே கவ னிக்க வேண்டியதாகும். பந்தை ஆக்குதற்கு வேண்டிய பன் னிரண்டு தோற்றுண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டவை ஒழுங்கான ஐங்கோணங்களாயிருத்தல் வேண்டும் ; அவ்வாறு எடுக்கப்பட்ட தோற்றுண்டுகளுக்குப் பதிலாக வளையுந் தன்மையற்ற மூலப் பொருள் எதுவும் உபயோகிக்கப்பட்டால் நாம் பெறும் உருவம் கோளமாயிருப்பதற்குப் பதிலாகப் பன்னிருமுத்திண்மமாக
ஆரும் அத்தியாயம் 195 ஆம் பக்கம் பார்க்க.
* பிளேட்டோ, Tim. 55 04, இப்பகுதியோ அல்லது இதற்கு முந்தி யதோ இராசியைக் குறிக்க முடியாது. இராசியைப் பன்னிரு கோணம் எனக்
கூறலாமேயொழிய பன்னிருமுகத்திண்மம் எனக் கூறமுடியாது. இங்கு குறிப்
பிடப்பட்டது கிரகங்களை வைத்தற்காக வானம் பன்னிரு ஐங்கோணப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டமையேயாகும். இம் முறைகளின் வரலாற்றிற்கு : Newbold in Arch. xix. pp. 198 Sqq. Lurrifáš 35

பைதாகரசவாதிகள் 307
விருக்கும். தியாதித்தோசுவின் காலத்திற்கு முன்னரே கிரேக் கர் பன்னிருமுகத்திண்மத்தை நன்கு அறிந்திருந்தனர் என் பதை இது நிரூபிக்கின்றது. மேலும் பன்னிருமுகத்திண்மத் தையே, கோள வடிவமான வானத்தை அமைப்பதற்கு வேண்டிய ஆதார சட்டமாக உபயோகித்தனர் எனக் கருதப் பட்டதென நாம் அனுமானிக்கலாம். v
பைதாகரச கொள்கையில் பன்னிருமுகத் திண்மத்திற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பரம்பரை வரலாறும் ரச மான முறையில் உறுதிப்படுத்துகிறது. “ பன்னிரண்டு ஐங் கோணங்களினல் கோளம் ஆக்கப்பட்டது” என்பதை வெளி யிட்டதற்காக இப்பாசோசு கடலில் அமிழ்த்திக் கொல்லப் பட்டார் என்பர். ஐங்கோணச் சக்கரமான 'பென்ரல்பா’ என் பதை அவர்கள் தமது அடையாளமாக்கியதிலிருந்தும் பைதா கரசவாதிகளே பன்னிருமுகத் திண்மத்தை அமைத்தனர் என் பதை நாம் ஓரளவுக்கு அனுமானிக்கலாம். பிற்காலத்து மாந் திரீக முறைகளில் இவ்வடையாளம் பெரு மளவிற்கு உபயோ கப்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். பாசெல்சசு அதை ஆரோக்கியத்திற்குரியவோர் குறியாக உபயோகித்தார். பைதாகரச வாதிகளும் அதை அவ்வாறே அழைத்தனர்.
149. ஆன்மா என்பது ஓர் “ இசைவு”. அதாவது பொருந்தி நிற்கும் ஒரு நிலை எனும் கருத்து நான்கு மூலகங்கள் பற்றிய கொள்கையோடு நெருங்கிய தொடர்புடையது. இக்கருத்து ஆதிப் பைதாகரச வாதத்தைச் சேர்ந்ததாய் இருக்க முடியாது ; ஏனெ னில் பீடோவில் கூறப்பட்டிருப்பதுபோல, இக்கருத்து ஆன்மா உடலை விட்டுச் சுதந்திரமாகவும் இருக்க முடியும் என்பதற்கு முரணுனதாகும். “ எந்த உடலுக்குள்ளும் எந்த ஆன்மாவும் புகமுடியும் ’ எனும் கருத்துக்கும் இது நேர் எதிரானதாகும். ஆனல் தீபிசுவில் பிலோலெசுவிடம் போதனை கேட்டவர்களான சிம்மியாசும் கீபிசுவும், பிலோலெசு இயூறைத்தோசு என் போரது சீடனன பிளேயசு நாட்டு எகிகிறத்தீசும் இக்கருத்தை எற்றுக்கொண்டனர் என நாம் பீடோவிலிருந்து அறிகிருேம். இக்கருத்து வைத்தியவியலிலிருந்து பெறப்பட்டது என்பதோடு இதனைப் பற்றிப் பிளேட்டோ கூறுவனவும் பொருந்துவனவா யுள்ளன. சிம்மியாசு பின்வருமாறு கூறுகிறர்; ' எமது உட லானது சூடு, குளிர், வறட்சி, ஈரலிப்பு என்பனவற்ருலும் இவை போன்ற பிறவற்றலும் இணைத்து வைக்கப்பட்டிருக்கிற தாகையால், இவை யெல்லாம் ஒன்றேடொன்று, விகிதாசாரப்
* இரண்டாம் அத்தியாயம் 111 ஆம் பக்கம் கு. 2.
ஆன்மா என்பது ஓர் "இசைவு”நிலை 676୪tଶ}

Page 162
மத்திய தீ
308 ஆதி கிரேக்க மெய்யியல்
படி நன்கு கலந்திருக்கையில் இவற்றினிடையே எற்படும் ஓர் பொருத்தமும் உளப்பாங்குமே எமது ஆன்மா வென்பது. இவ்வாறு எமது ஆன்மாவோர் பொருத்தநிலையெனில், எமது உடல், நோய்கள் காரணமாகவோ அல்லது பிற பிணிகள் காரணமாகவோ அளவுக்கு மீறி இளகியோ அல்லது முறுக் குண்டோ இருப்பின் ஆன்மா உடனே அழிந்து போய்விடு மென்பது தவிர்க்க முடியாதவோர் உண்மையென்பது தெளிவு." இது சிசிலிய சிந்தனை மரபுகளை யொட்டியவோர் கருத் தென்பதுடன், அலுக்மையோனது கொள்கையிலிருந்தே இக் கருத்துப் பெறப்பட்டது என்பதும் ஐயத்திற்கிடமின்றித் தெரி கிறது (பிரிவு 96). ஐந்தாம் நூற்றண்டில் நிலவிய பைதாகரச கொள்கை புதிய எம்பிடோக்கிளிசிய கருத்துக்களுக்கேற்ப மாற்றி யமைக்கப்பட்டவோர் உருவமே என்பதற்கான ஆதாரத்தொகு தியை இது பூரணப்படுத்துகிறது எனக் கூறலாம்.
ஆன்மாவானது பைதாகரசவாதத்திற் கூறப்படுவது போன்ற வோர் இசைவு நிலையெனக் கொள்வதாயின், அக்காலத்து ஏற்கப்பட்ட நான்காவது, ஐந்தாவது, எட்டாவது, எனும் மூன்று இசையிடைகளையும் அது கொண்டிருத்தல் வேண்டுமென நாம் எண்ணலாம். பிளேட்டோவின் குடியரசு"என்பதிலிருந்து நாம் அறியும் முப்பிரிவுடைய ஆன்மா பற்றிய கொள்கை உண்மையில் ஒரு பைதாகரச கருத்தே எனும் பொசெய்டோனியோசுவின் கூற்றும் பெருமளவிற்கு இதனல் உறுதிப்படுத்தப்படுகிறது என லாம். இஃது ஆன்மா பற்றிய பிளேட்டோவின் கருத்தோடு முற்றிலும் முரண்பட்டதாயினும், நாம் சற்று முன்னர் விளக் கிய கொள்கையுடன் வியக்கத்தகு முறையிற் பொருந்துவதா யுள்ளது.
150. அரித்தோதில் பைதாகரசுவுடையதெனக் கூறுவதும் ஈத்தியோசுவினல் பிலோலெசுவினதெனக் கூறப்படுவதுமான கோட்டொகுதிக் கொள்கை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளுடையது. இக்கொள்கையின்படி உலகின் நடுவே பூமி இல்லை. அதற்குப் பதிலாக மத்திய தீயிருக்கிறது. ஆனல் இதைச் சூரியன் எனக் கொள்ளுதல் கூடாதென்க. இத் தீயைச் சுற்றிப் பத்துக் கோள்கள் சுழல்கின்றன. முதலாவ தாக “அன்ரிக்தோன் ” எனும் மறு-பூமி இருக்கிறது. அதற்கு அடுத்ததாகப் பூமி இருக்கிறது. இவ்வாறு பூமியும் ஒரு கிரக மாகக் கொள்ளப்படுகிறது. பூமிக்குப் பின்னர், முறையே சந்திரன், சூரியன் கிரகங்கள், நிலையான உடுக்களினது வானம் என்பன உள்ளன. பூமியில், நாம் இருக்கும் பக்கம் எப் போதும் மத்திய தீ, அன்ரிக்தோன் என்பனவற்றைப் பார்க்க முடியாது திரும்பியிருப்பதனலேயே நம்மால் அவற்றைப்

பைதாகரசவாதிகள் 309
பார்க்க முடியாதிருக்கிறது. சந்திரனை உதாரணமாகக் கொள் வதன் மூலம் இது விளக்கப்படுகிறது. சந்திரன் எப்போதும் ஒரே முகத்தையே எமக்குக் காட்டுவதால், அதன் மறு பக்கத்தில் உள்ள மனிதர்களால் ஒருபோதும் பூமியைப் பார்க்க முடியாது. இக்கோள்கள் மத்திய தீயைச் சுற்றி வருதற்கு எடுக்கும் நேரத்திலேயே தமது அச்சிலும் சுழல்கின்றன என இதற்கு நாம் பொருள் கொள்ள முடிகிறது. மேலும் பூமி மத்திய தீயைச் சுற்றி வரும் அதே நேரத்தில் அன்ரிக் தோனும் சுற்றி வருவதால் அது எப்போதும் பூமிக்கு எதி ராகவே உள்ளது.
இக்கொள்கை பிலோலெசுவினல் போதிக்கப்பட்டதென்னும் ஈத்தியோசுவின் கூற்றை நாம் எளிதில் எற்றுக்கொள்ள முடியாது. அரித்தோதில், இக்கொள்கை பற்றிக் கூறுகையில் சிம்மியாசுவை ஒருபோதும் குறிப்பிடவில்லை. பிடோவில், பூமி யைப் பற்றியும் உலகத்தில் அது எப்பகுதியிலுள்ளது என்பது பற்றியும், இக்கொள்கைக்கு முற்றிலும் முரணன முறையில் சோக்கிரதர் போதிக்கையில் பிலோலெசுவின் சீடனன சிம்மி யாசு எவ்வித மறுப்புமின்றி அதனை எற்றுக்கொள்வதைக் காண்கிருேம். ஆயினும் அதென்சில் நிலவிய அயோனிய கொள்கைகளிலும், குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற்ற தான இக்கொள்கை ஒரு பைதாகரச கொள்கை என்பது பற்றி ஐயப்பட வேண்டியதில்லை. பூமியை அதன் நிலையில் வைத் திருப்பதற்கு வளியோ அல்லது அதைப்போன்ற வேறெதுவுமோ அவசியமில்லை என்பதை ஒரு புதுமைக் கருத்தாகவே சோக்கிர தர் எடுத்துக் கூறுகிறர் என்பதும் தெளிவு. ஆனல் அனக்ச கோரசுவினல் அக்கருத்தை அவசியமற்றதென ஒதுக்கிவிட முடி யவில்லை. தெமோகிரித்தோசுவும் பூமி தட்டையானது எனும் தனது கொள்கையுடன் பூமியைத் தாங்குதற்கு வளியும் அவ சியமெனவே நம்பினர். கோள வடிவமான பூமி தனது சமநிலை காரணமாக உலகத்தின் மத்தியில் இருக்க முடிகிறது வான உடுக்களுக்கு அச்சியற் சுழற்சியிருப்பதாக, பிளேட்டோ திமாயசு வைக் கூறவைக்கிறர். அச்சுழற்சியும் இத்தகையதாகவே இருத்தல் வேண்டும் ( Tim. 40 & 7). சந்திரனும் தனது அச்சிற் சுழல்வதற்கு, பூமியைச் சுற்று வதற்கு வேண்டிய நேரமே ஆகிறது ; ஆனல் அதன் ஒழுக்கைப் பொறுத்த வரையில் அது சுழலவில்லையெனக் கூறினும் சரியே. கிரேக்கர்கள் கூறியதும் அவ்வாறே. உடுக்கள் யாவற்றைப் பற்றியும் இவ்வாறு கூறலாமென்பது பைதாகரச வாதிகளுக்கு இயல்பாகவே தோன்றியிருக்கும். இதைத் தொடர்ந்தே உடுக்கள் யாவும் சடப்பொருட் கோளங்களிலேயே பொருத்தப்பட்டிருக்கின்றன என்னும் கொள்கை ஏற்பட்டது.
* பூமியும் மறு-பூமியும் எப்போதும் ஒன்ருகவே உள்ளன என்பதைப் பார்க்கிலும் இது இயற்கையான கருத்தெனக் கூறலாம்.

Page 163
310 ஆதி கிரேக்க மெய்யியல்
எனும் கொள்கை பிலோலெசுவினுடையது. என்பதே பீடோவி லிருந்து நாம் இயல்பாகப் பெறக் கூடிய முடிவெனலாம்" அப்படியானல் மத்திய தீ பற்றிய கொள்கை பிலோலெசுவுக் குப் பிந்தியவோர் காலத்தைச் சேர்ந்ததெனல் வேண்டும்.
சூரிய ஒளி பற்றி எம்பிடோக்கிளிசு தந்த விளக்கத்திலிருந்தே மத்திய தீயைப் பூமி சுற்றி வருவது பற்றிய கொள்கை எற் பட்டிருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. எம்பிடோக் கிளிசு இரு சூரியன்கள் இருந்தனவெனக் கூறினர்; ஆனல் பிலோலெசுவோ இரண்டு அல்லது மூன்று சூரியன்கள் இருப்ப தாக நம்பினர் எனக் கூறுகையில் ஈத்தியோசு இவ்விரு கொள் கைகளையும் நெருங்கிய தொடர்புடையனவாகக் காட்டுகிறர். அவரது வார்த்தைகள், அவ்வளவு தெளிவுடையனவாயில்லா திருப்பினும் தியோபிறகத்தோசு இவ்விரு கொள்கைகளும் ஒற்றுமையுடையவை எனக் கருதினர் என நாம் நம்புவதற்கு இடமளிக்கின்றன. இரவும் பகலும் மாறி மாறி வருவது பற்றி எம்பிடோக்கிளிசு ஒன்றுகொன்று முரணுன இரு விளக் கங்கள் தந்தார் என நாம் பார்த்தோம் (பிரிவு 113). மத்திய தீ ஒன்றிலிருந்து பெறப்பட்ட பிரதிபலிப்பினலேயே சூரியன் ஒளியுடையதாகத் தோன்றியது எனக் கூறுவதன் மூலமாகவே அச்சிக்கலுக்கு முடிவு காணலாம் போலவும் தோன்றியிருக்க லாம். சந்திரனது ஒளி பற்றியும் அதன் கிரகணங்கள் பற்றி யும் எற்பட்டுள்ள சமீபகாலக் கண்டுபிடிப்புக்கள் சூரியனுக்கும் பொருந்துவதாகக் கூறப்பட்டால்-அவ்வாறு கூறப்படுவது கிட் டத்தட்ட தவிர்க்க முடியாதவொன்றெனலாம்-இக்கொள்கை இயல்பாகவே எற்படும். r
புராணங்களை யொட்டிய பல பெயர்களாலும் “ மத்திய தீ” குறிப்பிடப்பட்டது : “ உலகத்தின் கணப்பிடம் ”, “சியசுவின் வீடு” அல்லது “ காவற்கோபுரம்”, “கடவுளரின் தாய்” என்பனபோன்ற பெயர்களால் மத்திய தீ வழங்கியது. இம் மரபினரது இயல்பு இதுவேயாயினும், இதுவோர் விஞ்ஞான ரீதியான கருதுகோள் என்பதை மறந்துவிடலாகாது. மத்தியில் பிரகாசிக்கும் பொருள் ஒன்று இருப்பதன் மூலமே தோற்றப் பாடுகள் “ பாதுகாக்கப்படலாம் ” எனவும் பூமியும் மற்றைய கோள்களைப் போலவோர் சுழலும் கோளமாகவே இருத்தல் வேண்டும் எனவும் எண்ணியமை விருத்தி பெற்ற சிந்தனையைக் காட்டுவதாகும். உண்மையில் இதனுடன் ஒப்பிடும்போது மத் திய தீயே சூரியன் எனும் கண்டுபிடிப்பு அவ்வளவு பெரிய சாதனையல்ல வெனவே கொள்ளத் தோன்றுகிறது. சூரியனே உலகின் மத்தியிலுள்ளது எனும் கருதுகோளைச் சாமோசு நாட்டு

பைதாகரசவாதிகள் 31
அரித்தாக்கோசு அடைவதற்கு அவனுடைய சிந்தனையைத் தூண் டிவிட்டதும் இக்கொள்கையே என நம்ப இடமுண்டு எனலாம். பூமியே உலகின் மத்தியில் உள்ளதென அரித்தோதில் மீண்டும் நிறுவுவதில் வெற்றி பெற்றபடியாலேயே, பின்னர் கொப்ப ணிக்கசு புதிதாக இவ்வுண்மையைக் கண்டுபிடிக்க வேண்டியி ருந்தது. ஆனல் தான் பைதாகரசவாதிகளிடமிருந்து இக்கருத் துப்பற்றிக் கற்றுக்கொண்டதாக அவரே கூறுகிறர்.
நாம் இங்கு தந்துள்ள உருவத்தில் இக்கொள்கையினல் எத்தனை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டனவோ, அதேயளவு புதிய வினக்கள் எழுவதற்கும் இது இடமளித்தது எனக் கூறலாம். அன்றியும் இக்கொள்கை நீண்டகாலம் நிலைக்கவில்லை யென லாம். பூமி மத்திய தீயைச் சுற்றி வலம் வந்ததென்பது உண்மையானல் அவ்வியக்கம் காரணமாகக் குறிப்பிடத்தக்க இடமாறு தோற்றங்கள் ஏற்படுமென இக்கொள்கைக் கெதிரா கக் கண்டனம் எழுப்பப்பட்டதென அரித்தோதில் கூறுகிருர், ஆனல் அவ்வாறு பெருமளவிற்கு மாற்றங்கள் எதுவும் நிகழ முடியாதென்பதற்குப் பைதாகரசவாதிகள் சிலகாரணங்கள் காட் டியதாகவும் அவர் கூறுகிறர். இருசாராரும் கையாண்ட வாதங்களைப் பற்றிய தெளிவான குறிப்பெதுவும் எமக்கு அரித்தோதிலிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனல் அக்காலத்தில் பூமி அதன் உண்மையான அளவிலும் மிகச் சிறிய அளவின தாகவே கருதப்பட்டது. ஆகவே அதன் ஒழுக்கின் வட்டம், இப்போது நமக்குத் தெரிவதிலும் பார்க்க மிகப் பெரியதாக இருந்ததென அவர்கள் கருதினர் என்று நாம் நினைப்பதற்கு நியாயமெதுவு மில்லை.
பூமியின் அளவுகள் பற்றிய சரியான அறிவிருப்பின், இரவு பகல் என்பன பூமி தன்னச்சிலேயே சுழல்வதனல் ஏற்படு கின்றன என்னும் முடிபு இயல்பாகவே எற்படும். அவ் வாருயின் பூமியே உலகத்தின் மத்தியிலிருக்கிறது என மீண்டும் கொள்ளலாம் எனத் தோன்றும். இக்கொள்கை யைக் கொண்டிருந்தவர்களான யாரையும் அரித்தோதில் அறிந் திருந்ததாகத் தெரியவில்லை. ஆனல் இக்கேதாசு, சிராக்கியூசு நாட்டு எகுபாந்தோசு என்பார் இக்கொள்கையைத் தழுவி யிருந்தனர் எனத் தியோபிறகத்தோசு கருதியதாகத் தெரிகிறது. ஆனல் இவ்விருவரைப் பற்றியும் நாம் அதிகம் அறியோம்.1
சிசிரோவும் இக்கொள்கை இக்கேதாசுவினதெனக் கூறுகிருர் (Acad. pr. i. 39). ஆனல் நிலையான உடுக்களைப் போலச் சூரியனும் சந்திரனும் அசைவற்றிருந்தன என அவன் கூறுவதாக எழுதுவதன் மூலம் யாவற் றையுமே அர்த்தமற்ற குழப்பத்திற் குள்ளாக்கிவிடுகிறர். இக்கேதாசு, எகு

Page 164
312 ஆதி கிரேக்க மெய்யியல்
நிலையான உடுக்களிருக்கும் வானமும் நிலைபெற்ற வொன்றே என அவர்கள் கருதியிருந்திருக்க வேண்டும். அரித்தோதிலது கொள்கையும் முற்ருக நாளாந்த இயக்கத்தையே மையக் கொள்கையாகக் கொண்டிருப்பதால், இதைப்பற்றி அவர் எங்கா யினும் கேள்விப்பட்டிருந்தாராயின், கட்டாயம் குறிப்பிட்டிருப்
LITT.
மத்திய தீயைப் பூமி வலம்வருவது பற்றிய கொள்கையும், பூமி தன்னச்சிலேயே சுழல்வது பற்றிய கொள்கையும் சேர்ந்து, பைதாகரசவாதிகள் முற்றக நம்பிய நிலையான உடுக்களும் சுற்றுகின்றன எனும் கொள்கையை விளக்குவதற்கரிதான வொன்ருக்கின. அவை நிலையானவையாயிருத்தல் வேண்டும். அன்றேல் அவை இயங்குபவையானல் அவற்றின் இயக்கம் நாளாந்த சுழற்சியிலிருந்து வேறுபட்டதாயிருத்தல் வேண் டும். இக்காரணத்தினற்ருன் போலும் இக்கொள்கை பின்னர் கைவிடப்பட்டது. --
பூமி இயக்கமுடையது எனக் கருதுவோரின் கொள்கைகளைப் பற்றி ஆராய்கையில், மத்திய தீயைப் பூமி வலம்வருகிறது எனும் கொள்கையை விட, திமாயசுவிலுள்ள கொள்கையை மட்டுமே அரித்தோதில் குறிப்பிடுகிறர். இக்கொள்கையின்படி பூமி கோள்களுளொன்றெனக் கருதப்படாது, " மத்தியில் ” இருப்பதாகவும், அண்டத்தின் அச்சைப் பொறுத்தவரையில் ஒருவகை இயக்கம் உடையதாகவும் கூறப்படுகிறது. ஆனல் குருேத்தே கூறியது போல, இச்சுழற்சி ஓர் அச்சியற் சுழற் சியாக இருக்க முடியாது ; வானத்தின் நாளாந்த சுழற்சி யினலேயே இரவு, பகல் என்பன உண்டாகின்றன எனும் கருத்தே திமாயசுவிலுள்ள முழு அண்டவியற் பகுதியிலும்
பாந்தோசு என்போர் எரக்கிளைட்டசுவின் உரையாடலிற் காணப்பட்ட இரு கற்பனைப் பாத்திரங்களே யெனத் தானரி கருதினர். இவர்கள் உண்மையில் வாழ்ந்தன ரென தியோபிறகத்தோசு கருதினர் என்பதில் ஐயமில்லை. ஆனல் பூமியின் சுழற்சி பற்றிய கொள்கை ஒன்றும் புதுமையானதல்ல வென்பதை இங்கே குறிப்பிடலாம். மைலீசியர்கள் தமது தட்டைப்பூமி இவ்வாறு சுழல்கிறதென நம்பினர் என்று கூற இடமிருக்கிறது (பிரிவு 21) ; அனக்சகோரசு அவ்வாறு எண்ணினர் என்பதில் ஐயத்திற்கே இடமில்லை (பக். 288). ஆனல் கோளத்தைப் பற்றி இது கூறப்பட்டதே புதுமையென்க. உலகின் மத்தியிலிருக்கும் பூமி சுழல்கின்றதெனக் கூறிய பைதாகரசவாதிகள், மத்திய தீ பூமியின் உட்பகுதியி னுள்ளே இருக்கிறதென நம்பினர் என நிரூபிக்க முடியுமானல், அவர்களது கொள்கை பிலோலெசுவைவிடப் பிந்தியதென நிரூபிக்கலாம். சிம்பிளிசியசு இதையே கூறுகிருர் போலத் தோன்றுகிறது (Le caeo, p. 5129 Sqq). அவ ரது வார்த்தைகள் தொலைந்துபோன, பைதாகரசம் பற்றிய அரித்தோதிலின் நூலிலிருந்து எடுக்கப்பட்டனவாயிருக்கலாம். எவ்வாருயினும் இது சந்தே கத்திற்குரிய விடயமே.

பைதாகரசவாதிகள் 33
கூறப்படுகிறதாதலின். ஆனல் சற்றே பின்னதாக “ இரவை யும் பகலையும் எற்படுத்துபவனும் அவற்றின் பாதுகாவலனும் ” எனப் பூமி வருணிக்கப்படுவதிலிருந்து இக்கருத்துக்கு எதிரான எதுவும் நிரூபிக்கப்படுகிறதெனக் கொள்ள முடியாது. எனெ னில் எவ்வாறயினும், இரவு பூமியின் கூம்பு வடிவமான நிழலே யாதலால், பூமியே இரவு பகல் மாறி மாறி ஏற்படு வதற்குக் காரணம் என்பதில் மறுத்தற் கெதுவுமில்லையாதலி ணுலென்க. ஆகவே இதுவரை பீக்குவும் அவரைப் பின்பற்று வோரும் கூறுவதே சரியெனத் தோன்றுகிறதெனலாம்.
ஆனல் திமாயசுவிற் குறிப்பிடப்பட்டிருப்பது “ உருண்டிருக் கிறது” அல்லது வட்டமாகப் “பொதிந்திருக்கிறது” எனும் கருத்தேயொழிய இயக்கமெனும் கருத்தல்ல எனப் பீக்கு வாதிக்கையில் என்னல் அவர் கூறுவதைச் சற்றும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மொழியியல் ரீதியான நியாயங்கள் ஒருபுறமிருக்க, இவ்வகையான விளக்கம், அரித்தோதிலின் வாத முறையைப் பொருளற்றதாக்குகின்றதெனலாம். பூமி இயக்கமுடையதாயின், அவ்வியக்கம், “ மத்தியில் நடைபெறுவ” தாயினும் சரி, “ மத்திக்கு அப்பால் நடைபெறுவ 'தாயினும் சரி, “ இயல்பான இயக்க 'மாயிருக்க முடியாதென அவர் கூறு கிருர், ஏனெனில் அப்படியாயின், பூமியின் ஒவ்வொரு பகுதி யும் அத்தகைய இயக்கத்தையே உடையதாயிருத்தல் வேண்டும் ; ஆனல் ஒவ்வொரு பிடி மணலும் “கீழ்நோக்கியே ', அதாவது மத்தியை நோக்கியே, இயங்குவதை நாம் அவதானிக்கிறேம். மேலும் பூமியின் இயக்கம், " மத்தியில் நடைபெறுவ ” தாயி னும் சரி, “ மத்திக்கு அப்பால் நடைபெறுவ ”தாயினும் சரி, * முதற் கோள ’த்தைத் தவிர்த்து ஏனைய யாவற்றையும்போல, பூமியும் இருவகைப்பட்ட இயக்கம் உடையதாய் இருத்தல் வேண் டும் எனவும் அவர்கூறுகிருர், அப்படியாயின் நிலைபெற்ற உடுக் களுக்கும், மேலும் கீழுமாகவும், தம் கதியில் திரும்பிப் பக்கவாட் டாக மாறியும் செல்லும் இருவகை இயக்கங்கள் இருத்தல் வேண் டும். ஆனல் இவ்வாறில்லை என்க. எனவே, பூமியின் இயக்கம் பற்றிய கொள்கைகளில் இரண்டாவதும் முதலாவதைப் போல இடப்பெயர்ச்சி யியக்கம் பற்றிக் கூறியதெனவும் அது பிளேட் டோவின் திமாயசுவிலுள்ள கொள்கையே யெனவும் அரித்தோ தில் கருதினர் என்பது தெளிவு. இதுபோன்றவொரு விடயத் தில் அரித்தோதில் பிழைவிட்டிருப்பாரென நம்ப முடியாது.
1 திமாயசு வெளியிடப்பட்டபோது, அரித்தோதில் கழகத்திலோர் அங்கத்தவ ராயிருந்திருக்க வேண்டும். திமாயசுவுக்கு விளக்கம் காண்பதே, பிளேட்டோ 'வின் மரணத்தின் பின்னர், கழகத்தினரின் பிரதான வேலைகளிலொன்ருக லிருந்தது எனவும் நாம் அறிவோம். ஆகவே இடம் பெயரும் இயக்கம் நடை

Page 165
34. ஆதி கிரேக்க மெய்யியல்
திமாயசுவில் கூறப்பட்டவற்றை நாம் சரிவரப் பார்வையிடுகை யில், அங்கு கூறப்படும் கருத்து, இடப்பெயர்ச்சியியக்கமே யேற் படுகிறதென்னும் அரித்தோதிலின் கூற்றை முற்றக ஆதரிப் பதைக் காணலர்ம். பீக்கு பொருள் கொள்ளும் முறை இலக்கண ரீதியாகவும் சொல்லியல் ரீதியாகவும் தவறன தெனவும் காண்போம். ஆகவே பூமி " மத்தியிலுள்ளது ” என்னும் கருத்துடன் எவ்வகையான இடம் பெயரும் இயக்கமும் பொருத்தமுடையது என ஆராய்தல் வேண்டும். அவ்வாறு ஆராயின் அண்டத்தின் அச்சில் மேலும் கீழுமாகச் செல்லும் இயக்கமே சாத்தியமான தெனக் காண்போம். மேலும், முன்னும் பின்னுமாகச் செல்லும் இயக்கம் எனப் பொருள் கொள்ளப்படக் கூடிய பதம் ஒன்று பிரயோகிக்கப்பட்டிருப்ப தையும் நாம் காணலாம். யாரோ வொரு பெயர் தெரியாத அண்டவியல்வாதியின் ஆதாரத்தின் பேரில், பீடோவில் சோக் கிரதர் பூமியிலுள்ள நீர்களைப் பற்றித் தந்துள்ள விளக்கத்தைப் பார்க்கையில், இத்தகைய இயக்கம் பற்றிப் பைதாகரசவாதி. களும் அறிந்திருந்தனர் என்பது புலனுகிறது.
எதை விளக்கும் பொருட்டு இவ்வியக்கம் கூறப்பட்டது ? அதுவும், மற்றையதும், அதாவது பூமத்திய ரேகை ஞாயிற்று வீதி ஆகியவற்றின் வளையங்களினல் தோற்றப்பாடுகளை முற்ருக விளக்க முடியாது என்பது தெளிவு. எனினும், கிரகங்கள் யாவும், ஒன்றில் ஞாயிற்று வீதியிற் செல்லல் வேண் டும் அல்லது அவ்வீதியிலிருந்து எப்போதும் சம தூரத்திலேயே காணப்படல் வேண்டும். ஆனல் உண்மைநிலை இதுவல்ல. ஆகவேதான், கிரகங்கள் மேலும் கீழுமாக இடம் பெயர் வதற்கு, அதாவது அவை மாறி மாறி ஞாயிற்று வீதியை நோக்கியும் அதனிலிருந்து விலகியும் செல்வதற்கு, வேறெவ் வகையிலாயினும் விளக்கங் காண்டல் வேண்டும். சந்திரன் தனது கதியில் திரும்பிச் செல்லல் பற்றி ஆராய்வதில் அனக்சி மாந்தர் சிரத்தை காட்டினர் என நாம் முன்பு (பக். 67) பார்த்தோம். மேலும் கிரகங்களின் நேரியக்கம், வக்கரிப்பியக் கம் என்பனவும் திமாயசுவில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. இக்கொள்கையிலுள்ள முரண்பாடுகள் அனைத்தை யும் திமாயசுவிற் குறிப்பிடப்பட்டுள்ள இயக்கத்தை எற்றுக்
பெறுகிறதென இவர் அவ்வுரையாடலுக்குத் தவறன விளக்கம் கண்டிருந்தால், கட்டாயம் அலெக்சாந்தர், சிம்பிளிசியசு ஆகியோர் கிருந்தர், அல்லது வேறு யாராவது ஒருவரைக் கொண்டு அத்தவருன விளக்கத்தை உறுதியாகக் கண்டித்திருப்பர். திமாயசுவில் பீக்கு கண்டிருப்பது அரித்தோதிலின் கருத்தே யாகும். அது வேண்டுமெனத் தவருகச் செய்யப்பட்ட விளக்கமென அவர் காணுது விட்டிருப்பாரென எண்ண முடியாது.

பைதாகரசவாதிகள் 315
கொள்வதன் மூலம் நீக்கிவிடலாம் என்பதை நாம் விரிவாகக் காட்ட வேண்டிய அவசியமெதுவுமில்லை ; அவ்வாறு காட்ட முடியும் என ஐந்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த பைதாகர சவாதிகள் கருதினர் என்பதைக் காட்டின் போதுமென்க. கிரகங் களின் தற்போக்கான இயக்கத்தால் நிகழ்ச்சிகளை விளக்க முயல்வதிலும், பூமியின் கிரமமான இயக்கத்தினல் அவற்றை விளக்க முற்படுவது விரும்பத்தக்கது போல் தோன்றியிருக்கும்; அவ்வாறு அவர் கருதியிருந்தாரெனில் அவர்களது சிந்தனை சரியான முறையில் வளர்ச்சியடைந்ததெனலாம்.
முந்திய தலைமுறையைச் சேர்ந்தவர்களான பைதாகரவாதி களுக்கு அவர்களது கொள்கை எற்றதே யெனப் பிளேட்டோ கருதியிருந்தாலும், தாம் அக்கொள்கையை எற்றுக்கொள்வ தோடு திருப்தியடைந்திருப்பார் என எண்ண முடியாது என் பதையும் இங்கு குறிப்பிடுவது, தவருன கருத்தேற்படுவதைத் தவிர்க்கும். பிளேட்டோ தனது கருத்துக்களைத் தனக்கு முந்திய காலத்தில் நடைபெற்றவோர் உரையாடலின் உருவத்தில் தந் திருப்பார் என்பது என்னைப் பொறுத்தவரையிலாவது நம்பு தற்கரியதாகவே தோன்றுகிறது. மேலும் பிளேட்டோ தனது கடைசி நாட்களில், உலகின் மத்தியில் என்ன இருக்கிறதென அவராற் கூற முடியவில்லை யெனினும், பூமி உலகின் மத்தி யிலுள்ளது எனும் கருதுகோளைக் கைவிட்டு விட்டாரென அந் நாட்களில் கழகத்தில் அவரது சக அங்கத்தவராயிருந்த முற்றி லும் நம்பத்தகுந்த சாட்சியான தியோபிறகத்தோசுவிடமிருந்து அறிகிருேம். மேலும் சட்டங்கள் என்னும் நூலிலிருந்து, அவர் பூமி அச்சியற் சுழற்சியுடையதெனக் கூறினரென்பது தெளி வாகத் தெரிகிறதெனலாம்.
151. கிரகணம் எனும் தோற்றப்பாட்டை விளக்கும் பொருட்டே அன்ரிக்தோன் (இரண்டாவது பூமி) ஒன்று உளது எனும் கருது கோள் கைக்கொள்ளப்பட்டது. சுற்றும் கோள்களின் எண் ணிக்கையைப் பத்தாக உயர்த்தும் பொருட்டுப் பைதாகரசவாதி கள் அன்ரிக்தோனைக் கண்டுபிடித்தனர் () என அரித்தோதில் 1. சட்டங்கள் எனும் இந்நூலில் நாம் குறிப்பிட்டுள்ள பகுதியில் (8228 4 Sgg.) கோள்கள் எளிய வட்டமான கதியிற் செல்பவை யெனப் பிளேட்டோ கூறுகிறர். மேலும் அக்கருத்து, தான் தனது இளமையிலோ அல்லது அதற்கு முன்போ ஒருபோதும் கேள்விப்படாத ஒன்றென்கிருர். இருபத்தி நான்குமணி நேரத்தில் பூமி தனது அச்சிற் சுழல்கின்ற தென்பதே இக்கருத்தா யிருந்திருத்தல் வேண்டும். எனெனில் கோள்களின் இயக்கம் பலதரப்பட்டது என்னும் பைதாகரச கொள்கையை இது மறுப்பதாகும். நாங்கள் இக்கருத்தைத் திமாயசுவிலும் காணவேண்டும் என எதிர்பார்க்கலாகாது. எனெனில் ஐந்தாம் நூற்ருண்டைச் சேர்ந்த பைதாகரசவாதி ஒருவனது கருத்துக்களைக் கூறுவதாகவே அது எழுதப்பட்டிருக்கிறது. ". .
அன்ரிக்தோன்

Page 166
316 ஆதி கிரேக்க மெய்யியல்
ஓரிடத்திற் கூறுகிருர். ஆனல் வேண்டுமென்று இவ்வாறு கூறினரேயெனினும் அரித்தோதில் அன்ரிக்தோன் பற்றி நன்கு அறிந்திருந்தார். பைதாகரசவாதம் பற்றிய தனது நூலில், சந்திர கிரகணங்கள் சிலவேளைகளில் பூமியின் குறுக்கீட்டினலும், சிலவேளைகளில் அன்ரிக்தோனினலும் ஏற்பட்டனவென அவர் கூறுகிருர் ; இவ்விடயம் பற்றி நன்கு அறிந்தவரான ஒப்பவுசு நாட்டுப் பிலிப்பு என்பவரும் இவ்வாறே கூறியுள்ளார். அரித் தோதில் உண்மையில் வேருெரு பகுதியில் இக்கொள்கை எவ்வாறு உண்டாகியதென விளக்கியுள்ளார். பூமியின் குறுக் கீட்டினல் நமது கண்களுக்குப் புலனகாதுவிடினும், பல கோள் கள் மத்தியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கலாமெனவும், சூரியனை விடச் சந்திரன் பலமுறை கிரகணப்படுவதற்கு இதுவே காரணமெனவும் சிலர் கருதினர் என அவர் கூறுகிறர். இது அன்ரிக்தோனுக்கு நெருங்கிய தொடர்புடையதாகவே குறிப் பிடப்படுவதால், அரித்தோதில் இவ்விரு கருதுகோள்களும் ஒரே தன்மையுடையனவெனக் கருதினர் என்பது தெளிவாகிறது. இக்கொள்கையின் வரலாறு இதுவெனவே தோன்றுகிறது. சந்திரகிரகணங்களை விளக்கும் பொருட்டு அனக்சிமினிசு இருண்ட கோள்கள் உளவெனக் கூறினர் (பிரிவு 29). அனக்சகோரசுவும் அக்கொள்கையை மீண்டும் போதித்தார் (பிரிவு 135). சில பைதாகரசவாதிகள், இவ்விருண்ட கோள்கள் எமது கண்களு க்கு ஒருபோதும் புலப்படாதிருப்பதை விளக்கும் பொருட்டு, அவை பூமிக்கும் மத்திய தீக்குமிடையிலே உள்ளன எனக் கூறினர். இவை யாவும் ஒரு கோளே எனக் கூறுவதே அவர்களது சிந்தனையின் அடுத்தபடியாயிற்று. பைதாகரசவாதி கள் தமது முன்னேடிகளது சிந்தனையை எவ்வாறு எளிமை யுடையதாக்க முனைந்தனர் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
152. “ கோளங்களது இசைவு” பற்றிய கொள்கையெனப் பொதுவாக-ஆனல் தவருக-வழங்கிவரும் "ொள்கை, பிந்திய வோர் தலைமுறையினராலேயே விரிவாக விளக்கப்பட்டதாயினும் பைதாகரசுவினலேயே முதலில் தோற்றுவிக்கப்பட்டதென நாம் முன்பு பார்த்தோம் (பிரிவு 54). கி. மு. நான்காம் நூற்றண் டின் இறுதியிலும் கோள்களின் இயக்கங்கள் பற்றி நிலவிய பல் வேறு கருத்துக்களே, “கோளங்களின் இசைவு’க் கொள்கை பற்றி நமக்குத் தெரிய வந்துள்ள பல்வேறுபட்ட விவரங்களுக் குக் காரணமாதல் வேண்டும். வானத்துக் கோள்கள் தமது கதிகளிற் செல்கையில் இசையொலிகளை யெழுப்பின எனப் பைதாகரசவாதிகள் நம்பினர் என அவர்களது கொள்கையை நன்கு அறிந்தவரான அரித்தோதில் எமக்குக் கூறுகிறர். இவ்விசையின் சுரங்களின் சுருதி, கோள்களின் இயக்கத்தின்

பைதாகரசவாதிகள் 317
வேகத்திற்கேற்ப வமைந்ததெனக் கூறப்பட்டது. இனி இவ் வேகங்கள், அட்டம சுரத்தின் ஒத்திசையிடைகளின் விகிதத் திலேயே அமைந்துள்ள தூரங்களிற்கேற்ப உண்டாகின்றன. அசைவற்ற உடுக்களையுடைய வானமும் இவ்விண்ணுலக இசைக் குழுவில் சேர்ந்திருந்ததென அரித்தோதில் நம்பினர் என் பதில் ஐயமில்லை. ஏனெனில் “ அளவிலும் எண்ணிக்கையி லும் மிகக் கூடியனவாயுள்ள சூரியனும், சந்திரனும், உடுக்க ளும் ” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து கிரகங்களை மட்டுமே குறிப்பிடுவதானல் அவர் இவ்வார்த்தைகளை உபயோகித்திருக்க மாட்டார். மெதுவாக அசைந்த கோள்கள் ஆழமான ஒலியை எழுப்பின வெனவும், வேகமாக இயங்கியவை சன்னமான ஒலியை எழுப்பினவெனவும் கூறப்பட்டிருக்கிறது. ஒலிவரிசை யில் உயர்ந்த சுருதியுடையவையான சன்ன ஒலிகள், இருபத்தி நான்கு மணிநேரத்திற் சுழலும் உடுக்களின் வானத்தால் உண் டாக்கப்பட்டனவெனவே பொதுவாக நம்பப்பட்டதெனவும் தெரி யவருகிறது. சனி அடுத்ததாகக் கூறப்படுகிறது; எனெனில் அது எதிர்த்திசையில் மெதுவாகச் செல்லுமியல்பையுடையதாயினும், நாளாந்த சுழற்சியின் வேகத்தின்முன் அது ஒருபொருட்டன்று என்க. வானத்தின் நாளாந்த சுழற்சிக்குப் பதிலாகப்பூமியின் அச்சியற் சுழற்சி கைக்கொள்ளப்பட்டதன் காரணமாகவே, சந்திரன் உயர்ந்த சன்னவொலியை எழுப்புகிறதெனவும் அசை வற்ற உடுக்கள் ஆழமான ஒலியை எழுப்புகின்றன வெனவும் கூறும் மற்றைய கொள்கை எற்பட்டிருக்க வேண்டும்.
153. பொருள்கள் “ எண்களைப் போன்றவை ” என்னும் பொருள்கள் கொள்கையையும் ஆராய்தல் வேண்டும். இதுவும் பைதாகரச எண்களேப் வாதிகளுடையதே என அரித்தோதில் சிலவிடங்களில் குறிப்பான்ற பிட்டுள்ளார். “பொருள்கள் எண்களே ” என்னும் கொள்கை யோடு இது எப்படிப் பொருந்துமென்பது எமக்குத் தெளிவாக வில்லையாயினும், அவர் இவையிரண்டும் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை எனக் கருதுவதாகத் தோன்றவில்லை. ஆனல் பைதாகரசவாதிகள் பொருள்கள் எண்களைப் போல விருந்தன எனப் போதித்தனர் எனவே அரித்தோசெனசு கூறினர் என் பதில் ஐயமில்லை. மேலும் இதுவே பைதாகரச வாதத்தின் மூலக் கொள்கையெனக் கூறுவதற்கும் ஒருமுறை முயற்சி செய்யப்பட்டதென்பதற்கான ஆதாரங்களுள. பைதாகரசுவின் மனைவியான தியனேவினல் எழுதப்பட்டதெனவோர் கடிதம் கொணரப்பட்டது. எலனிசியர்கள் பலர், பைதாகரசு பொருள் கள் எண்களாற் செய்யப்பட்டனவெனக் கூறியதாக, நம்புகின்

Page 167
38 ஆதி கிரேக்க மெய்யியல்
றனர் எனவும் ஆனல் உண்மையில் பொருள்கள் எண்களுக் கேற்பவே செய்யப்பட்டனவென அவர் போதித்தார் எனவும் தியனே கூறுவதாகவும் அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இக்கருத்துத் தன் மனத்தை ஆட்கொண்டிருக்கையில், பிளேட்டோவுக்கும் பைதாகரசவாதத்திற்குமிடையில் சொல்லள விலேயே வேற்றுமை இருப்பதாக அரித்தோதிலுக்குப் படுகிறது. * பிரதியாதல் ” எனும் உவமேயத்திற்குப் பதிலாகவே “பங் கெடுத்தல்” எனும் உவமேயம் புகுத்தப்பட்டது. “கருத்துக் கள் பற்றிய கொள்கை ’ யெனப்படுவதன் பொருளை ஆராய இது இடமல்ல. ஆயினும் “ பிரதியாதல் ’ பற்றிய கொள்கை பைதாகரசவாதிகளுடையதென அரித்தோதில் கூறுவது பீடோ வினல் வேண்டிய அளவிற்கு உறுதிப்படுத்தப்படுகிறதென்பதை இங்கு குறிப்பிடலாம். “இக்கொள்கையை ஏற்கின்றயா?” எனச் சிம்மியாசு கேட்கப்படும்போது எவ்வித தயக்கமுமின்றி, எவ்வித விளக்கமும் வேண்டாது, தான் அதை ஏற்பதாக, அவன் உறுதியுடன் பதிலிறுக்கின்றன். ' சமம் ” என்பது மட்டுமே உண்மையானது, நாம் சமமெனக் கூறுபவையனைத்தும் அதன் நிறைவற்ற பிரதிகளே யென்னும் கொள்கை அவனுக்கு நன்கு பரிச்சயமானதுபோல் தோன்றுகிறது. அன்றியும் உருக் கள் பற்றிய கொள்கையிலிருந்து ஆன்மாவின் அழிவின்மை பெறப்படுகின்றது எனச் சோக்கிரதர் காட்டியபடியாற்றன் அவன் இறுதியில் அழிவின்மைக் கொள்கையை நம்புகிறன்.
மேலும் இக்கொள்கையைச் சோக்கிரதர் ஒர் புதுமையாகக்கூற வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. “கருத்துக்களின் ' மெய்ம் மையானது "நம்மால் எப்போதும் பேசப்படுவது ” போன்ற வோர் மெய்மையே. மேலும் ஒரு மரபினதெனக் கூறப்படும், நூதனமானவோர் மொழிநடையிலேயே இக் “ கருத்துக்கள் ” விளக்கப்படுகின்றன. “நாம் சொல்கிறேம் ” எனத் தொடங் கும் சூத்திரங்களினலேயே கலைச்சொற்கள் அறிமுகப்படுத்தப்படு கின்றன. இது யாருடைய கொள்கை ? பொதுவாக இது பிளேட் டோவுடையதெனவே நம்பப்படுகிறது. ஆனல் இது “ கருத் துக்கள்” பற்றி அவர் முதன் முதலிற் கொண்டிருந்த கொள் கையெனவும், பின்னர் இக்கொள்கையில் கணிசமான மாற் றங்கள் செய்யப்பட்டன வெனவும் சிலர் கூறுகின்றனர். ஆனல் இவ்வாறு எண்ணுவதில் பல நெருக்கடிகள் உள்ளன. பீடோ வில் இது பற்றித் தரப்பட்டிருக்கும் உரையாடலின்போது தான் அங்கு இருக்கவில்லை யெனப் பிளேட்டோ கூறுகிறர் எந்த மெய்யிய்லாளனவது தனது புதிய கொள்கை ஒன்றை, அது எற்கெனவே தன்னேடு வாழ்ந்த பல பெயர்பெற்றி அறிஞர்

பைதாகரசவாதிகள் 39
களுக்குத் தெரிந்தவொன்றுதான் என அறிமுகஞ் செய்த துண்டா ? அதை நம்புவது சுலபமல்ல. ஆனல் இக் கொள்கை சோக்கிரதருடைய தெனக் கொள்வதும் சரியா காது. ஆகவே “ உருக்கள் ” பற்றிய இக்கொள்கை, பின்னர் சோக்கிரதரினல் விருத்திசெய்யப்பட்ட தாயினும் பைதாகரச குழு வினரிடையேயே முதலில் உருவாகியது எனக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லைப்போலத் தோன்றுகிறது. இதில் ஆச் சரியப்படுவதற் கெதுவுமில்லை. சிம்மியாசுவும் கீபிசுவும் பைதா கரசவாதிகள் என்பது மட்டுமல்லாது சோக்கிரதரின் சீடர்களு மென்பது வரலாற்று உண்மை. அவர்கள் நாம் சாதாரண மாக நம்புவதிலும் பார்க்கக் “ கருத்துக்களில் ’ அதிக பிரிய முடையராயிருந்தனர் என்பது பற்றி ஐயமில்லை.
பிளேட்டோ சோக்கிரதரின் மூலம் வெளியிடும் கருத்துக்களி லிருந்து பிரித்தறிந்து கொள்ள முடியாதளவுக்குப் பைதாகரச வாதம் மாற்றமடைந்துள்ள வரை அதன் வரலாற்றைக் கூறு வதன் மூலம் நாம் உண்மையில் இந்நூலின் எல்லைக்கப் பாற் சென்றுவிட்டோமெனலாம். ஆனல் நமக்குக் கிடைத் துள்ள ஆதாரங்களான கூற்றுக்களின் உண்மையான தன் மைகளை அறிந்துகொள்வதற்கு அவ்வாறு செய்தல் அவசி யமாயிருந்ததென்க. அரித்தோசெனசு தான் நேரில் அறிந்த மனிதர்களைப் பற்றித் தவருன கருத்துக்கொண்டிருக்க முடி யாது. அதேபால அரித்தோதிலும் போதிய ஆதாரமின்றி எதை யும் கூறியிருக்க மாட்டார் என நம்பலாம்.
* பார்மனைடிசில் சோக்கிரதரைத் தான் பிறப்பதற்கு இருபது ஆண்டு களுக்கு முந்தியவோர் திகதியில், இக்க்ருத்தைக் கூற வைப்பது போலக் காட்டு வதில் பிளேட்டோ கவனம் செலுத்தியுள்ளார்.

Page 168
இவர்களும் இவர்களின் முன்னுேடிக கும்
Ayalarg வாழ்க்கை
அத்தியாயம் 8
இளைய ஈலியவாதிகள்
154. நாம் சற்று முன்வரை படித்த கொள்கைகள் யாவும் அடிப்படையில் பன்மைவாதக் கொள்கைகளே. ஒருடல் வாதத்தை நாம் கடைப்பிடித்தோமேயானல் எங்கும் பன்மையியல்பு, இயக்கம், மாற்றம் என்பனவற்றைக் கொண்டதாய எமது உலக அனுபவத்திற்கு முரணுன பண்புள்ளது சத்துப் பொருள் எனக் கூறவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாவோம் எனப் பார் மனடிசு காட்டியிருந்தாராதலாற்றன், இக்கொள்கைகள் இவ் வாறு பன்மைவாத அடிப்படையிலமைந்தன (பிரிவு 97). எம் பிடோக்கிளிசுவின் நான்கு “மூலகங்களும்’ அனக்சகோரசுவின் எண்ணிறந்த “ விதைகளும் " பார்மனடிசுவினல் எழுப்பப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே கொணரப்பட்டவையெனலாம் (பிரிவுகள் 106, 127). பைதாகரசவாதிகள் பார்மனைடிசுவின் கொள்கைகளின் செல்வாக்குக்குட்பட்டனர் என்பதை நிறுவு தற்கு வேண்டிய ஆதாரங்கள் இல்லையாயினும், அவர்களது கொள்கையின் பிந்திய உருவம் எம்பிடோக்கிளிசுவின் கொள் கையின் அடிப்படையிலேயே அமைந்தது என நாம் பார்த் தோம் (பிரிவு 147). இவ்வாறு அக்காலத்து நிலவிய பன்மை வாதமே, ஈலியவாதக் கண்ணுேட்ட நிலையினின்று சேனேவினல் கண்டிக்கப்பட்டது. குறிப்பாக, பைதாகரசவாதத்திற் கெதிரா கவே இவர் வாதித்தார். மெலிசசுவும் பைதாகரசவாதத்தைக் கண்டித்தார். ஆனல் சத்துப் பொருள் எல்லையற்றது என்னும் பழைய அயோனிய கொள்கையை நிறுவுவதன் மூலம், மெலி சசு தனக்கும் தனது எதிரிகளுக்குமிடையே ஒரு பொதுவான கருத்தைக் காண முயன்றனர் எனலாம்.
1. ஈலிய நாட்டு சேணுே 155. அப்பொலோடரசுவின்படி சேனே எழுபத்தி ஒன்பதா வது ஒலிம்பிய ஆண்டில் சிறப்புடன் விளங்கினர். பார்மனடிசு விலும் இவர் நாற்பது ஆண்டுகள் இளையவர் எனக் கொள்வதன்
l. Diog. ix. 29 (R. P. 130 a). G-FG3966ör smrGiesos Jepósibš5 அப்பொலோடரசுவைப் பார்த்தல் வழக்கமில்லையாயினும், அவரது தகப்பன் பெயரை அறிவதற்கு அப்பொலோடரசுவிடமிருந்தே மேற்கோள் பெறப்படுவ தால், அவர் விளங்கிய காலத்தையறிதற்கும் இவரே ஆதாரம் என்பதில் ஐய மில்லை.
320

இளைய ஈலியவாதிகள் 32
மூலம் இத்திகதி பெறப்படுகிறது. ஆனல் இது நாம் பிளேட்டோ மூலம் அறிவதற்கு நேர்முரணுனதாயிருக்கிறது. இளைஞரான சோக்கிரதரைப் பார்மனைடிசுவும் சேனேவும் சந்தித்த சம் பவம் கி. மு. 449க்கு முன்னர் நடந்திருக்க முடியாதென நாம் எலவே பார்த்தோம். சேனே அப்போது “ கிட்டத்தட்ட நாற்பது வயதினராய் இருந்தார் ” எனப் பிளேட்டோ கூறு கிருர், அப்படியானுல் அவர் கி. மு. 489 ஆம் ஆண்டளவில், அதாவது பார்மனைடிசுவிற்கு இருபத்தைந்து ஆண்டுகளின் பின் னர், பிறந்திருத்தல் வேண்டும். இவர் திலீயுத்தகாரசுவின் மகனவார். இவர் பார்மனடிசுவினல் சுவீகாரம் செய்யப்பட் டார் என அப்பொலோடரசு கூறுவதற்குக் காரணம் பிளேட் டோவின் சோபிட்டுவிலுள்ள சில சொற்களுக்கு அவர் தவருகப் பொருள் செய்து கொண்டமையே. அவர் நெடிதுயர்ந்த வசீகரமான தோற்றத்தை உடையவர் எனப் பிளேட்டோ அவரை மேலும் வருணிக்கிருர்.
பார்மனைடிசுவைப்போல, சேனேவும் தனது நகரத்தின் அரசியலிற் பங்கெடுத்துக்கொண்டார். திமாயோசுவின் கூற்றுக் களை ஆதாரமாகக் கொண்டுபோலும், ஈலியநாட்டில் நல்லரசு நிலவியதற்கு சேனேவும் ஒரு காரணம் எனவும், அவர் ஒரு பைதாகரசவாதி யெனவும் திராபோ கூறுகிறர். இக்கூற்றை விளக்குவது சுலபம். பார்மனைடிசு முதலில் ஒரு பைதாகரச வாதி யாகவே இருந்தார் என நாம் பார்த்தோம். ஆகவேதான் ஈலிய மரபும் பைதாகரச கழகத்தின் ஓர் கிளையெனக் கருதப்பட்டது. சேனே ஒரு கொடுங்கோலனுக்கு எதிராகச் சதி செய்தாரெனவும் கூறப்பட்டிருக்கிறது. இக்கொடுங்கோலனது பெயர் பற்றியும் அவனது சித்திரவதைகளின்போது சேனே காட்டிய மனத் திடம் பற்றியும் வெவ்வேறு நூல்களில் வெவ்வேறு விதமான செய்திகள் தரப்பட்டுள்ளன.
156. சேனேவின் “ நூல்கள்” பற்றி இடையோசினிசு குறிப் அவருடைய பிடுகிருர், குயிதாசுவும் சில நூல்களின் பெயர்களைக் குறிப்பிடு நூல்கள் கிருர். இவை மிலட்டசு நாட்டு எசைக்கியோசு மூலமாக அலெக் சாந்திரிய நூல் நிலைய அதிபர்களிடமிருந்து பெறப்பட்டிருக் கலாம். பார்மனைடிசில் பிளேட்டோ சேனேவை, தான்
1. Plato, Parm. 127 b (R. P. 111 d). Gage pyG5 girardig வந்தசெய்தி புளுட்டாக்கினலும் உறுதிசெய்யப்படுகிறது Per, 4 (R. P. 130 e). அனக்சகோரசு, சேனே என்போரது போதனைகளைப் பெரிக்கிளிசு “கேட்டதாக" அவரது நூலில் கூறப்பட்டிருக்கிறது Ale. T 119 8 இலும் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐசொலொக்கோசுவின் மகனன பைதோடரசும் கலி யாடிசுவின் மகனன கலியாசும் ஆளுக்கு 100 மினே வீதம் சேனேவிடம் பாதனை கேட்பதற்காகப் பணம் கொடுத்ததாக இந்நூலிற் கூறப்பட்டிருக்கிறது.

Page 169
322 ஆதி கிரேக்க மெய்யியல்
எழுதிய நூல்களில் தனக்கு மிகவும் புகழைத் தேடித் தந்த நூல், தான் மிகவும் இளைஞனயிருக்கும்போது எழுதப்பட்ட தெனவும் தனது விருப்பத்திற் கெதிராகவே வெளியிடப்பட்ட தெனவும் கூறவைக்கிருர். இவ்வுரையாடலின்போது அவ ருக்கு நாற்பது வயது எனக் கொள்ளப்படுவதால் இந்நூல் கி. மு. 460 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும் ; ஆகவே அவர் அதற்குப் பின்னர் பல நூல்களை எழுதியிருக்கலாம் என்பதும் சாத்தியமே. சேனே, குயிதாசு கூறுவதுபோல * மெய்யியல்வாதிக ”ளுக்கு எதிராக நூலொன்று எழுதின ரென்பது உண்மையானல் அது பைதாகரச வாதிகளுக்கெதி ராகவே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். . “ மெய்யியல்வாதி” எனும் சொல்லிற்கும் பைதாகரசவாதிகள் வழக்கிற்குப் புறம் பான வோர் புதிய பொருள் கொண்டனரெனவும் பார்த்தோம். பிளேட்டோவின் பார்மனைடிசில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் இவரது “ வாதாட்டங்கள் ’ எனும் நூலாகவோ அல்லது “இயற்கை விளக்கம் ” எனும் நூலாகவோ இருக்கலாம் ; அல்லது வேறெரு நூலாகவும் இருத்தல் கூடும்.
அரித்தோதிலின் நூல்களில் சேனேவும் உரையாடல்கள் சில வற்றை எழுதினரெனும் பொருள்படக்கூடிய சில குறிப்புக் கள் உள்ள போதிலும், அவ்வாறு நாம் எண்ணுதற்கிட மில்லை யெனலாம். அரித்தோதிலது பெளதிகம் எனும் நூலில், சாமைக்குவையொன்றின் மிகச் சிறிய பகுதியும் ஒலியை உண்டாக்கும் எனும் சேனேவின் வாதம் ஒன்று குறிப்பி டப்படுகிறது. சிம்பிளிசியசு, சேனேவுக்கும் புரோதாகரசவுக்கு மிடையே நடந்த உரையாடற் பகுதியொன்றை மேற்கோளாகக் காட்டி, இவ்வாதத்தை விளக்குகிறர் ; ஆனல் சேனே தான் எழுதிய உரையாடலொன்றில், தன்னையும் ஒரு பாத்திரமாக் கியிருப்பார் எனக் கூற முடியாது. பிற்காலத்திற்றன் அவ்வழக்கம் ஏற்பட்டது. “ சேனே வினவுபவராகவும் வேருெ ருவர் பதிலிறுப்பவராகவும் ’ கொண்டு அமைந்த இன்னுெரு உரையாடல் பற்றியும் அரித்தோதில் வேறேர் இடத்திற் குறிப் பிடுகின்றர். இதையும் முந்திய குறிப்பைப் போலவே இலகு வாக விளக்கிவிடலாம். யோச்சியாசுவை ஒரு பாத்திரமாகக் கொண்ட உரையாடலொன்றை அலுக்கிடாமசுவும் எழுதியதாகத் தெரிகிறது. சேனேவினது வாதங்களை உரையாடல் மூலமாக விளக்குவது இவர்கள் யாவருக்கும் சிறந்தவோர் முறையாகத் தோன்றியிருக்கவேண்டும்.

இளைய ஈலியவாதிகள் 323
சேனே இளமைக்காலத்தில் எழுதிய நூல் பற்றிப்பிளேட்டோ தெளிவான விவரங்கள் தந்துள்ளார். அதில் ஒன் றுக்கு மேற்பட்ட “ விரிவுரை ’ களிருந்தனவெனவும், ஒவ்வொரு விரிவுரையும் அவரது எதிரிகளின் முற்கற்பிதங்கள் பற்றிக் கூறும் பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்ததெனவும் பிளேட்டோ கூறுகிறர். எகம், பன்மை, என்பனபற்றிய சேனேவின் வாதங் களைப் பேணித் தந்ததற்காக நாம் சிம்பிளிசியசுவுக்குக் கட மைப்பட்டிருத்தல் வேண்டும். இயக்கம் பற்றிய வாதங்கள் அரித்தோதில் மூலம் எமக்குக் கிடைத்துள்ளன. ஆனல் அவர் அவற்றைத் தமது வார்த்தைகளில் தந்துள்ளார்.
157. அரித்தோதில் தனது சோபிட்டில் வாதவியலைக் கண்டு பிடித்தவர் சேனேவே எனக் கூறியுள்ளார். இவ்வகை வாத முறை ஈலிய மரபு ஆரம்பித்தபோதே ஆரம்பித்ததெனினும் அரித்தோதிலின் கூற்றுப் பெருமளவிற்கு உண்மை எனலாம். சேனேவின் நூலின் நோக்கம், மொழிநடை என்பவை பற்றி யவோர் ரசமான வர்ணனை, சேனே தானே கூறுவதுபோல, பிளேட்டோவினல் தரப்படுகிறது.
சத்துப்பொருள் ஒன்றேயெனின், பார்மனேடிசுவின் வாதம் பல முரண்பாடுகளைக் கொண்டதாயும் பொருளற்றதாயும் ஆகி விடும் எனும் காரணத்தைக் காட்டிப் பார்மனைடிசுவின் கொள் கையை நையாண்டி செய்ய முயல்வோருக் கெதிராக, அவரது கொள்கைக்கு வலியூட்டுவதே உண்மையில், இங்கு எழுதப் படுபவற்றின் நோக்கமாகும். பன்மையை ஆதரிப்பவர்களுக்கெ திராகவே இவ்வாதம் ; அவர்கள் சொல்லுபவற்றிற்கு அவர் களிலும் பார்க்க இரண்டு மடங்கு வலுவுடன் பதிலிறுப்பதும், ஒருமைக் கற்பிதத்திலும், பன்மைக் கற்பிதமே போதியளவு விரித்துப் பார்க்கின், அதிக முரண்பாடுகளுக்கு இட்டுச்செல்லும் எனக் காட்டுவதுமே எமது வாதத்தின் நோக்கம். W
தனது எதிரியின் அடிப்படை இடுகோள்களில் ஒன்றினை யெடுத்துக் கொண்டு, அதிலிருந்து ஒன்றுக் கொன்று முரண் பட்ட இரு முடிவுகளுக்கு வரலாமென்பதைக் காட்டுவதே சேனேவின் முறையாயிருந்தது. அரித்தோதில் இவரே வாத வியலைக் கண்டுபிடித்தவர் எனக் கூறியபோது, இதையே கரு தினரென்க. தானே உண்மையான எடுகூற்றுகளிலிருந்து ஆரம்பிக்காது, மாற்றனல் எற்றுக்கொள்ளப்பட்ட எடுகூற்றுக்க ளிலிருந்து வாதிப்பதே இம்முறை. பார்மனைடிசுவின் கொள்கை, புலன்களினல் நாம் பெறும் அறிவுக்குப் பலவகைகளில் முர ணுன முடிவுகள் எற்படுவதற்குக் காரணமாயிருக்கிறது. ஆனல் சேனேவின் வாதங்கள் இம்முடிவுகளை ஆதரிக்கும் பொருட்டு எழுதப்படவில்லை. பார்மனைடிசுவின் எதிரிகளின் கொள்கையும்
வாதவியல்

Page 170
சேனேவும் பைதாகரசவா
தமும்
324 ஆதி கிரேக்க மெய்யியல்
இத்தகைய முரண்பாடுகளையே எற்படுத்தின என்பதையே அவரது வாதங்கள் விளக்க முற்பட்டன.
158. பொருள்கள் “ பல ” வாயிருந்தன வெனக் கூறியவர் களான பார்மன்ைடிசுவின் எதிரிகளைக் கண்டிக்கும்பொருட்டே சேனேவின் வாதங்கள் எழுந்தன வென்னும் பிளேட்டோவின் கூற்றிலிருந்து, அவரது வாதவியல் குறிப்பாகப் பைதாகரச வாதிகளுக் கெதிராகவே எழுதப்பட்டதென்பது பெறப்படுகிறது." பொருள்கள் பலவேயென்னும் கொள்கை பற்றிப் பொதுவாக மக்களிடையே நிலவிய கருத்தையே சேனே மறுக்க முனைந் தார் எனச் செல்லர் கூறுகிறர். ஆனல் மெய்யியலாளரொரு வர் மறுக்குமளவிற்குப் பொருள்கள் பலவென்னும் கொள்கை சாதாரண மக்களிடையே நிலவியதென்பது உண்மையாக விருக்க முடியாது. பார்மனைடிசுவின் எதிரிகள் நம்பிய கருத்துக்களே சேனேவின் எடுகூற்றுக்களா யமைந்தனவெனப் பிளேட்டோ கூறுகிருர், வெளியும், ஆகவே உடலும், பல தனியலகுகளினல் ஆனவை யென்னும் 'இடுகோளிலிருந்து சேனே தனது முரண் பாடுகளை யெல்லாம் பெறமுடியுமெனக் காட்டியுள்ளார். இவ் வொப்புக்கோள் பைதாகரச கருத்தே யென்க. சேனேவின் நூல் அவரது இளமைப் பருவத்தே யெழுதப்பட்டது என நாம் பிளேட்டோ மூலம் அறிகிருேம். ஆகவே இவர் அதை இத்தா லியிலிருந்தே எழுதியிருத்தல் வேண்டும். அங்கு அக்காலத்தில், பார்மனைடிசுவின் கொள்கையைக் கண்டித்திருக்கக் கூடியவர்கள் பைதாகரசவாதிகளே.2
நாமும் பிளேட்டோவைப் பின்பற்றி வழக்கமாகச் சேனேவுக் களிக்கப்படும் திகதியை விடப் பிந்தியவோர் திகதியை அளிப் போமாயின், அதன்மூலம் வரலாற்றில் அவரது நிலை மிகத் தெளிவாகின்றதென்பது கவனிக்கப்படலாம். முதலில் பார் மனடிசுவையும் அவருக்குப் பின்னர் பன்மைவாதிகளையும் அவர்களைத் தொடர்ந்து சேனேவின் கண்டனங்களையும் நாம் காண்கிறேம். வரலாற்று வளர்ச்சி இவ்வாறு நிகழ்ந்ததா கவே அரித்தோதிலும் கருதுகிருரெனலாம்.?
* சமீப காலத்தில் தானரி, போம்கர் என்போரும் சேனேவின் வாதங்கள் பைதாகரசுவுக்கு எதிராகவே எழுந்தன என்பதை நிறுவியுள்ளனர்.
* சேனேவாற் கண்டிக்கப்பட்டவர் எம்பிடோக்கிளிசுவாக இருக்கலாமென வும் கூறப்பட்டுள்ளது. அவரும் சேனேவின் வயதையுடையவராய் இருந்தார் (பிரிவு 98) இவர், பார்மனைடிசுவைக் கண்டித்தெழுதியுள்ளார் (பிரிவு 106). ஆனல் சேனேவின் வாதங்கள் அவரது கொள்கையை விசேட மாகக் குறிப் பனவெனக் கருத இடமில்லை. அனக்சகோரசுவையும் அவ்வாறு கருத முடி யாதென்க.
.ே 173 ஆம் பிரிவைப் பார்க்க.

இளைய ஈலியவாதிகள் 325
159. “ அலகு ’ என்பது பற்றியவோர் குறிப்பிட்ட கருத்துக் கெதிராகவே சேனேவின் வாதங்கள் பிரதானமாகத் தொகுக் கப்பட்டிருக்கின்றனவெனலாம். “ யாராயினும் தனக்கு அலகு என்ன வெனக் கூறினல் பொருள்கள் என்னத்தாலானவை யெனத் தன்னுற் கூறமுடியுமென ’ சேனே கூறியதாக இயூ டெமோசு தனது ** பெளதிகம் ” எனும் நூலிற் கூறுகின்றர். சிம்பிளிசியசுவினற் பேணித் தரப்பட்டுள்ள, இதுபற்றிய அலெக் சாந்தரது குறிப்புரை மிகவும் திருப்திகரமானதாயுள்ளது. * பன்மை என்பதற்குப் பல அலகுகள் என்பது பொருளாதலா லும், பொருள்களில் அலகுகளில்லை யாதலாலும், பொருள் கள் பலவாயிருத்தல் சாத்தியமேயில்லை யெனப் பார்மனைடிசு வின் சீடரான சேனே நிரூபிக்க முற்பட்டாரென இயூடெமோசு கூறுகின்ருர்’ என அலெக்சாந்தர் எழுதியுள்ளார். எல்லாப் பொருள்களும் பல அலகுகளாலானவையேயென்னும் பைதாகரச கொள்கையே குறிப்பிடப்படுவதை இங்கு நாம் தெளிவாகக் காண்கிறேம். சேனே மறுத்தது இதையே.
அலகு” என்பது என்ன?
160. சேனேவின் கொள்கை பற்றி நமக்குக் கிடைத்துள்ள சேனேவின் பகுதிகளை நோக்கும்போதும் இதுவே அவரது வாதத்தின் கருத் "ெ2"
தென்பது தெளிவாகின்றது. அப்பகுதிகள், டியல்சு அவற்றைத் தந்துள்ள ஒழுங்கின்படி இங்கே தரப்பட்டுகின்றன.
(1)
இருப்பது அளவு அற்றதாய் இருந்தால், அது இருக்கவே மாட்டாது. . . .ஆனல் அது அளவுடையதாய் இருந்தால், ஒவ் வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவையும் மொத்தத்தையும் உடையதாய் இருப்பதோடு தனக்கு முன்னிருப்பதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருப்பதாயுமிருக்கும். அதற்கு முன்னல் இருப்பதைப் பற்றியும் இவ்வாறு கூறலாம். எனெனில் அதுவும் அளவையுடையதாயிருக்கும் ; அதற்கு முன்னலும் ஒன்று இரு க்கும். இதை ஒருமுறை கூறினும், பலமுறை கூறினும் சரியே ; ஏனெனில் இவற்றில் ஒரு பகுதியும் கடைசிப் பகுதியாயிராது. மேலும் இவற்றுள் ஒன்றயினும், பிறிதொன்றேடு ஒப்பிடப் படும்போது அதனளவுக்கு இருப்பது அல்லாததாகவிராது ஆகவே, பொருள்கள் பலவாயின் அவை ஒருங்கே பெரியனவும் சிறியனவுமாயிருத்தல் வேண்டும் ; இவற்றிற்கு அளவே இல்லை எனுமளவிற்குச் சிறியனவாயும், எல்லையற்றன எனுமளவிற்குப் பெரியனவாயும் இருத்தல் வேண்டும்.R.P.134.
பைதாகரச புள்ளி மூன்று பரிமாணங்களைக் கொண்டது எனச் சேனே
asri G967(git.
பகுதிகள்

Page 171
ون)60 إع
326 ஆதி கிரேக்க மெய்யியல்
(2)
ஏனெனில், அதை எப்பொருளோடு சேர்த்தாலும் அப்பொருள் அதனல் அளவிற் பெரியதாகாது ; எனெனில், அளவற்றவொன் றைக் கூட்டுவதாஞ்ல் ஒரு பொருளும் அளவிற் பெரியதாகாது. இதிலிருந்து சேர்க்கப்பட்டது அளவேயில்லாதது என்பது உட னடியாகப் பெறப்படுகிறது. இது வேருெரு பொருளிலிருந்து எடுக்கப்பட்டாலும் அப்பொருள் அளவிற் குறைந்ததாகாது ; இது வேருெரு பொருளோடு சேர்க்கப்படும்போது அது அளவிற் கூடுவதில்லை ; ஆகவே எடுக்கப்பட்டதும், சேர்க்கப்பட்டதும் உண் மையில் அதிரவியமே என்பது தெளிவு. R.P.132.
(3)
பொருள்கள் பலவாயிருந்தால் அவை தாம் எத்தனையோ, அத்தனையாயே இருத்தல் வேண்டும். அதிற் கூடவோ குறை யவோ இருக்க முடியாது. அவை தாம் எத்தனையோ, அத்தனை யாயிருப்பின், எண்ணிக்கையில் அவை முடிவுள்ளவையே.
பொருள்கள் பலவாயின் அவை எண்ணிக்கையில் முடிவற் றவை ; ஏனெனில் அவற்றிற்கிடையே பிறபொருள்கள் எப்போ தும் இருக்கும். அவற்றிற் கிடையேயும் பிற பொருள்கள் இருக் கும். ஆகவே பொருள்கள் எண்ணிறந்தவையே. R.P. 1339.
161. அலகு அளவு இல்லாததென நாம் கொள்வோமாயின்அரித்தோதில் கவர்பாட்டு வாதம் எனக் கூறும் வாதத்தி லிருந்து இது பெறப்படுகிறது-யாவும் மிக மிகச் சிறியனவா யிருத்தல் வேண்டும். அளவு இல்லாத அலகுகளினல் ஆன எதுவும் அளவுடையதாய் இருக்க முடியாது. அதேபோல பொருள்களில் உள்ள அலகுகள், எவ்வளவு சிறியனவாயினும், அளவுடையனவே யென்போமானல் பொருள்கள் எல்லையற்றுப் பருத்தனவெனக் கூறுதல் வேண்டும். கோடு முடிவில்லாது
செல்லர் இவ்விடத்தில் ஒருகுறையுளதெனக்காட்டுகிறர். ஒரு பொருளிலி ருந்து ஒரு புள்ளியைக் குறைப்பதனல் அப்பொருள் அளவிற்குறைவடையாது எனச் சேனே கட்டாயம் காட்டியிருக்கவேண்டும். ; ஆனல் அவர் இப்பகுதிக ளின் ஆரம்பத்திற்கு முதலே அவ்வாறு செய்திருக்கலாம்.
* இதையே அரித்தோதில் “ கவர்பாட்டு வாதம்” என அழைத்தனர். ஒரு கோடு புள்ளிகளால் ஆனதெனின் “ குறிப்பிட்டவொரு கோட்டில் எத்தனை புள்ளிகளுள்ளன ?” எனும் கேள்விக்கு நாம் விடை கூறக் கூடிய வர்களாயிருத்தல் வேண்டும். ஆனல் ஒரு கோட்டையோ அல்லது அதன் எந்தப்பகுதியையுமோ இரு சமபாதிகளாகப் பிரிப்பது எப்போதும் சாத்தியமே.
ஆகவே கோடு புள்ளிகளாலானதெனின், அதிலுள்ள புள்ளிகள் எப்போதும்
நாம் கூறும் எண்ணிலும் கூடியனவாயே இருக்கும்.

இளைய ஈலியவாதிகள் 327
பிரிக்கப்படக்கூடியது. இக்கொள்கையின்படி ஒவ்வொன்றும் சிறிய அளவுள்ள, ஆனல் முடிவற்ற எண்ணிக்கை கொண்ட, அலகுகளினலானதே கோடு.
இவ்வாதம் புள்ளிகளைப் பற்றியதே யென்பது அரித்தோதி லின் ‘* பெளதிகவதிதம் ' எனும் நூலிலுள்ளவோர் மிகவும் பயனுடைய பகுதியினல் நிரூபிக்கப்படுகிறது. அப்பகுதி பின் வருமாறு :
* அலகு பிரிக்கப்படக்கூடியதாயின், சேனேவின் எடுப்பின் படி, அஃது அதிரவியமாயிருக்கும். எதைச் சேர்ப்பதனல் எப் பொருளினது அளவும் அதிகரிக்கவில்லையோ, எதைக் கழிப் பதனல் எப்பொருளினது அளவும் குறைக்கப்படவில்லையோ, அப்பொருள் சத்துப் பொருளேயல்லவெனச் சேனே கூறு கின்றர் ; ஏனெனில் சத்துப் பொருள் அளவுடையதாயிருத்தல் வேண்டுமென்பது தெளிவு. மேலும் அது அளவுடையதாயின் அஃது உடலுள் பொருளென்க; ஏனெனில் எல்லாவகையிலும் பரிமாணமுடையது உடலுள்ள பொருளே. கோடு, தளம் ஆகிய எனைப் பொருள்கள், பொருள்களோடு ஒரு முறையாகச் சேர்க்கப் படின் அவற்றைப் பெரிதாக்கும் ; வேறெரு முறையாகச் சேர்க் கப்படின் அப்பொருள்களில் எவ்வகை மாற்றமும் எற்படாது. ஆனல் புள்ளியினலும், அலகினலும் பொருள்களை எவ்வகை யிலும் பெரிதாக்க முடியாது. ”
இவை யாவற்றிலிருந்தும் புலப்படுவது "பன்மை”யை ஆக் குவதாகக் கூறப்படும் “ஒன்று ’க் கெதிராகவே சேனே தனது வாதங்களைத் தொடுத்துள்ளார் என்பதே. “ பன்மை ’ பல “ஒன்று ’களினல் ஆனது என்கையில் குறிப்பிடப்படும் * ஒன்று ’ பைதாகரச கொள்கையிலுள்ள அலகே.
162. வெளி பற்றிய பைதாகரச கொள்கைக் கெதிராகத் தொடுக்கப்பட்டதுபோலத் தோன்றும் வாதமொன்று அரித் தோதிலாற் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிம்பிளிசியசு அதைப் பின்வருமாறு கூறுகிறர் :
* வெளியிருக்குமாயின் அது யாதேனுமொன்றிலேயே இருக் கிறது ; எனெனில் இருப்பவை யாவும் யாதேனும் ஒன்றிலேயே இருக்கின்றன. ஆனல் அதுவும் வெளியிலேயே இருக்கிறது. ஆகவே வெளி, வெளியிலிருத்தல் வேண்டும். இது இவ்வாறு இறுதியின்றி ஒடுகிறது. ஆகவே வெளியென்பதில்லை. ’
வெளியை அதனில் இருக்கும் உடலிலிருந்து பிரித்துக் கருதும் முயற்சியையே இங்கு சேனே கண்டிக்கிருர். உடல் வெளியில் இருக்கிறதென நாம் கூறினல் வெளி எதில்
வெளி

Page 172
இயக்கம்
328 ஆதி கிரேக்க மெய்யியல்
உள்ளதெனவும் நாம் கேட்டல் வேண்டும். வெற்றிடத்தை மறுக்கும் பார்மனடிசுவின் வாதத்திற்கு வலுவூட்டுவதே இவ் வாதம். ஒவ்வொரு பொருளும், யாதேனும் ஒன்றில் இருக்க வேண்டும் அல்லது தனக்கு அப்பால் எதையும் கொண்ட தாய் இருத்தல் வேண்டும் எனும் வாதம் வெளியே யெதுவு மில்லாத முடிவுள்ள கோளம் பற்றிய பார்மனடிசிய கொள் கைக் கெதிராக உபயோகிக்கப்பட்டிருக்கலாம்.
163. இயக்கம் பற்றிய சேனேவின் வாதங்கள் அரித்தோதிலி னலேயே பேணித் தரப்பட்டுள்ளன. பார்மனடிசுவின் கொள்கை எவ்வகை இயக்கமும் சாத்தியமில்லை யெனும் முடிவை எற் படுத்தியது. அவருக்குப் பின் வந்தோர் இம்முடிவைத் தவிர்க் கும் பொருட்டு ஒருமைவாதக் கருதுகோளையே கைவிட நேரிட்டது. இயக்கமென்பது அசாத்தியமெனக் காட்டுவதற்குச் சேனே புதிய நிரூபணம் எதையும் கொண்டுவரவில்லை ; பார்மனைடிசுவின் கொள்கையால் எவ்வாறு இயக்கத்தை விளக்குவது இயலாத தாய் இருந்ததோ அதுபோலவே பைதாகரசவாதிகளினுடையது போன்ற பன்மைவாதக் கொள்கைகளினலும் இயக்கத்தை விளக்க இயலவில்லை என்பதையே அவர் காட்டுகின்றர். இவ் வாறு நோக்குகையில் சேனேவின் வாதங்கள் வெறும் சார மற்ற தொடர்களல்ல வென்பதும், அளவு எனும் எண்ணக் கோளின் வரலாற்றில் இவை ஒரு பெரிய வளர்ச்சியைக் குறிப் பனவென்பதும் புலணுகும். இயக்கம் பற்றிய அவரது வாதங்கள் பின்வருமாறு :
1. ஒட்டப்போட்டி மைதானமொன்றையும் உன்னுற் கடக்க முடியாது. முடிவுள்ள காலத்தில், உன்னல் முடிவற்ற எண் ணிக்கையுள்ள புள்ளிகளைக் கடக்க முடியாது. நீ எந்தக் குறிப் பிட்ட தூரத்தையும் கடப்பதற்கு முன்னர் அத்தூரத்தில் பாதித் தூரத்தைக் கடத்தல் வேண்டும். அப்பாதியைக் கடப்பதற்கு முன்னர் அதன் பாதியைக் கடத்தல் வேண்டும். இது இவ்வாறு இறுதியின்றிச் செல்கின்றதாகையால், குறிப்பிட்ட வெளியெத
னிலும் முடிவற்ற எண்ணிக்கையுள்ள புள்ளிகள் உள்ளன.
இவ்வாறு முடிவற்றனவாயுள்ள புள்ளிகளை, முடிவுள்ள காலத் தில் ஒவ்வொன்றகத் தொடுதல் இயலாது.
2. அக்கிலிசு ஒருபோதும் ஆமையை முந்த முடியாது. ஆமை எந்த இடத்திலிருந்து தொடங்கியதோ அந்த இடத்தை அவன் முதலில் அடைதல் வேண்டும். அதற்குள் ஆமை சற்றுத்துரம் முன்னே சென்றிருக்கும். அக்கிலிசு அப்போது அந்தத் தூரத்தைக்கடந்து முடித்தல் வேண்டும். மீண்டும் ஆமை சற்றுத்தூரம் முன்னே சென்றுவிடும். அக்கிலிசு

இளைய ஈலியவாதிகள் 329
எப்போதும் முன்பிருந்ததிலும் பார்க்க அண்மையில் வருகின் றனயினும், ஒருபோதும் ஆமைக்கு நேர் சமமாக வரமாட் l7667.
இரண்டாவது வாதத்தின் “ கருதுகோளு”ம் முதலாவது வாதத்தினதும் ஒன்றே. கோடென்பது புள்ளிகளின் வரிசையே எனும் கருதுகோளே இரண்டிலும் உளது. ஆனல் இரண்டாவ தில், இயங்கும் பொருள் ஒன்று புகுத்தப்படுவதன் மூலம் வாதம் சற்றே சிக்கலுடையதாக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை யும், வித்தியாசம், முன்பிருந்ததில் பாதியாகுவதற்குப் பதி லாக, மாறவிகிதமொன்றின்படி குறைந்து வருகிறது. மேலும், இக்கருதுகோளின்படி, இயங்கும் பொருளெதுவும், அது எவ் வாறு வேகமாக இயங்கினலும், எவ்வளவு சிறிய தூரத்தையும் ஒருபோதும் கடக்க முடியாதென முதலாவது வாதம் விளக்கி யது ; இரண்டாவது வாதம், எவ்வளவு மெதுவாக இயங்கின லும் அது முடிவற்ற தூரத்தைக் கடக்குமென்பதை விளக்கு கிறது."
3. பறக்கும் அம்பு நிலையாயிருக்கிறது. தனக்குச் சமமான அளவுள்ள வெளியிலிருக்கும் எப்பொருளும் நிலையாயிருக்கிற தென்றல், இயங்கிக் கொண்டிருக்கும் எப்பொருளும் ஒரு குறிப்பிட்ட கணத்தில் தனக்குச் சமமான வெளியிலேயே இருக் கின்றதாதலால், இயங்கிக்கொண்டிருக்கும் எப்பொருளும் நிலை யாயிருக்கிறது.
இங்கு மீண்டுமொரு புதிய சிக்கல் புகுத்தப்பட்டிருக்கிறது. இயங்கும் பொருளே நீளமுடையதாயிருக்கிறது. அதன் பல் வேறு நிலைகள் புள்ளிகளாயிராது கோடுகளாயுள்ளன. முடி வற்ற எண்ணிக்கையுள்ள பிரிக்க முடியாத பகுதிகள் ஒரு கோட்டிலுள்ளனவெனும் கருதுகோளை மறுக்கும் நோக்கத் துடனேயே முதலிரு வாதங்களும் தரப்பட்டுள்ளன. இவ்வாத மும் இதற்கடுத்ததும் ஒரு கோட்டில் முடிவுள்ள எண்ணிக்கை யுள்ள பிரிக்கமுடியாத பகுதிகளேயுள்ளன எனும் கருத்தை நிறுவ முயல்வன.?
* திரு. யோடயின் கூறுவதுபோல (Mind, 1916, p. 42) * முதலாவது வாதம் இயக்கம் ஒரு போதும் ஆரம்பிக்கவே முடியாதென்பதைக் காட்டுகின் றது : இரண்டாவது வாதம் மெதுவாகச் செல்வதும், அதனிலும் விரைவாகச் செல்வனவற்றைப் போன்றளவு விரைவாகச் செல்கிறது எனக் காட்டுகின்றது. " ஒரு கோட்டை அதை ஆக்கும் புள்ளிகளாக முடிவின்றிப் பிரிக்க முடியும் எனும் கருதுகோளின் அடிப்படையில் எற்படும் விளைவுகளைக் காட்டுவனவாகவே இவ்வாதங்கள் அமைந்துள்ளன.
* யோடயின், முன்பு கூறிய நூலில்.

Page 173
330 ஆதி கிரேக்க மெய்யியல்
4. ஓரளவு நேரத்தின் அரைப்பங்கு, அதன் இருமடங்கு நேரத் திற்குச் சமமாயிருக்கலாம். மூன்று வரிசைகளாகப் பொருள்கள் இருக்கின்றனவென வைத்துக் கொள்வோம். அவற்றில் ஒரு வரிசை (A) நிலையாயிருக்கையில் மற்ற இருவரிசைகளும் (B,C) ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் நகர்கின்றன (படம் 1). இவை யாவும் ஒரே இடத்திற்குள் வருவதற்குள் B, A, யில் உள்ளவற்றிலும் இரண்டு மடங்கு பொருள்களை C யிற் தாண் டியிருக்கும் (படம் 2).
படம் 1 படம் 2
A O O. O. O. A. O. O. O. O
B O O. O. O. -- B O O. O. O.
C <-- O O. O. O. C O O. O. O.
ஆகவே C யைத் தாண்டுவதற்குச் செல்லும் நேரம் A யைத் தாண்டுவதற்குச் செல்லும் நேரத்தைப்போல இருமடங்காகிறது. ஆனல் C யும் B யும் A யின் இடத்தை அடைவதற்கு வேண் டிய நேரம் சமமானதே. ஆகவே இரண்டு மடங்குநேரம் பாதி நேரத்திற்குச் சமமானதே.
எந்தப்பொருளும், அதற்குச் சம அளவுள்ள பொருள் நிலை யாயிருந்தாலும் சரி, இயங்கிக் கொண்டிருந்தாலும் சரி சம மான வேகத்திற் செல்கையில் சமமான நேரத்திற்குச் செல்லல் வேண்டும் எனும் எடுகோளிலேயே இப்போலி நியாயத் தொடை தங்கியுள்ளதென அரித்தோதில் கருதுகிறர். அது உண்மை யென்பதில் ஐயமில்லை. ஆனல் இவ்வெடுகோள் சேனே வுடையதென நாம் கற்பித்துக்கொள்ள வேண்டியதில்லை. இரண் டாவது வாதம் மூன்றவது வாதத்தோடு தொடர்புள்ளதா யிருக்கிறது. முதலாவது வாதத்திலுள்ள, ஒரு இயங்கும் புள்ளி யோடு அக்கிலிசுவும் இரண்டாவது இயங்கும் புள்ளியாகச் சேர்ந்து கொள்கிருன் ; இந்த வாதம் பறக்கும் அம்பெனும் ஒரு நகரும் கோட்டுடன் இரண்டாவது நகரும் கோடொன்றை யும் சேர்த்துக்கொள்கிறது. ஆனல் கோடுகள் இங்கு அலகு வரிசைகளாகக் காட்டப்படுகின்றன. பைதாகரசவாதிகளும் கோட்டை, அலகுகளின் வரிசையெனவே கருதினர். கோடுகள் தனியான அலகுகளின் தொகுதியென்பதும், நேரம் தனியான கணங்களின் தொகுதியென்பதும் உண்மையானல், ஒவ்வொரு அலகும் எத்தனை அலகுகளைத் தாண்டுகிறது என்பதைவிட, இயக்கத்தை அளவிடுதற்கு வேறு வழி காணமுடியாதென்க. பொருள்கள் யாவும் தனித்தனியே உள்ளவை என்னும் எடு கோளைக் கொள்ளுவதால் உண்டாகும் பொருந்தா முடிபுகளை எடுத்துக்காட்டுதற்காகவே மற்றைய எல்லா வாதங்களையும்போல

இளைய ஈலியவாதிகள் 33.
இவ்வாதமும் கொணரப்பட்டது. மற்றைய கருதுகோள்கள் எம் மைப் பொருந்தா முடிபுகளுக்கு இட்டுச் செல்லுகின்றன என் பதை விளக்குவதன் மூலம் உலகம் இடையீடின்றித் தொடர் பாய் இருக்கும் பொருள்களைக் கொண்டது என்னும் கருத்தைச் சேனே நிறுவியுள்ளார். ஒன்று தொடர்பாய் உள்ளதெனப் பார்மனடிசு கூறினர் என்பது நம் நினைவில் இருக்குமானல் (பகுதிகள் 8,25), சோக்கிரதர் கூறுவது போல, பிளேட்டோ சேனேவின் வாதமுறையைப் பற்றித் தரும் விவரம் எவ்வளவு சரியானது என்பதை நாம் கண்டு கொள்வோம்.
2. சாமோசுநாட்டு மெலிசசு
164. இதாகெனிசுவின் மகனும், மெய்யியலாளனுமான மெலிசசுவே கி. மு. 441-0 ஆண்டின் அதெனிய கப்பற்படை யைத்தோற்கடித்த சாமியப் படைத்தலைவனென, அரித்தோதிலது ஆதாரத்தோடு, தனது பெரிக்கிளிசுவின் வாழ்க்கை யென்னும் நூலில் புளுட்டாக்கு கூறுகிறர் ; இவர் சிறப்புடன் விளங்கிய காலம் எண்பத்திநான்காவது ஒலிம்பிய ஆண்டென (கி. மு. 444-41) அப்பொலோடரசு நிர்ணயித்ததற்கும் இதுவே காரண மாயிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. இதைவிட மெலிசசுவின் வாழ்க்கை பற்றி நாம் வேறென்றும் அறியோம். சேணுேவைப் போல இவரும் பார்மனைடிசுவின் சீடரேயெனக் கூறப்படுகிறது. ஆனல் இவர் சாமோசு நாட்டைச் சேர்ந்தவராத லால், முதலில் இவர் அயோனிய மரபைச் சேர்ந்தவரா யிருந்திருக்கலாம். இவரது கொள்கையின் அம்சங்கள் சில வும் இக்கருத்தை ஆதரிப்பனவாயுள்ளன. ஆனல் அதே நேரத் தில் ஈலிய வாதவியல் முறையில் இவர் முற்றக நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது பற்றியும், அயோனிய கருத்துக் களில், அதற்கு முரணுயிருந்தவற்றைக் கைவிட்டனர் என்பது பற்றியும் சந்தேகத்திற்கேயிடமில்லை. அதென்சின் மேன்மை காரணமாக, கிழக்குக்கும் மேற்கிற்குமிடையே இலகுவாகத் தொடர்பு கொள்ளக்கூடிய முறையில் ஏற்பட்டிருந்த புதிய வசதிகளின் பயனை நாம் இங்கு கவனிக்கலாம்.
1. அப்பொலோடரசு ஒலிம்பியாட்டின் நான்காவது ஆண்டையல்லாது முதலாவது ஆண்டையே கருதினரென்பது சாத்தியமாயிருக்கலாம். தெளரியை நிறுவப்பட்ட ஆண்டாய இதுவே அவரது வழமையான காலம் என்க. ஆனல் அவர் நான்காவது ஆண்டையே கருதினர் எனக் கொள்ளுவதே அதிக பொருத்தமானதெனலாம்.
Jeauwe வாழ்க்கை

Page 174
மெலிசகவின் வாதத்திலிரு ந்து வந்துள்ள பகுதிகள்
332 ஆதி கிரேக்க மெய்யியல்
165. நமக்குக் கிடைத்துள்ள பகுதிகள் சிம்பிளியசுவிட மிருந்தே கிடைத்துள்ளன. முதலாவது பகுதி தவிர ஏனைய யாவும் டியல்சு தந்துள்ளவாறு இங்கு தரப்பட்டுள்ளன.
(Ia) அதிரவியமே உள்ளதாயின், மெய்யான ஒன்றைப்பற்றிக் கூறுவது போல அதைப்பற்றி யாது கூறமுடியும் ?
(I) இருந்தது எதுவோ அது என்றும் இருந்தது. ஏனெனில் அது இடையிலே எற்பட்டதாயின், அவ்வாறு எற்படுவதற்கு முன்னர் அது அதிரவியமாயிருந்திருத்தல் வேண்டும். ஆனல் அது அதிரவியமாயிருந்தால், எவ்வகையிற்ருனும் அதனின் றும் எப்பொருளும் தோன்றியிருக்க முடியாது. R. P. 142.
(2) ஆகவே அது இடையில் ஏற்பட்டதல்ல. இருப்பதாதலால் அஃது எப்போதும் இருந்தது; எப்போதும் இருக்கும், ஆரம் பமோ முடிவோ அதற்கு இல்லை; அதற்கு எல்லையும் இல்லை. எனெனில் அது இடையிலே உண்டாகியதாயின் அதற்கு ஒரு ஆரம்பமும் (ஏனெனில் அது எதாவது ஒரு காலத்தில் உண் டாகத் தொடங்கியிருக்கும்), முடிவும் (எனெனில் உண்டாவது, ஏதோவொரு காலத்தில் முடிந்திருக்கும்) இருந்திருக்கும் ; ஆனல் அது ஆரம்பிக்கவோ முடியவோ இல்லை. எப்போதும் அது இருந்தது, எப்போதும் அது இருக்கும். அதற்கு ஆரம் பமோ முடிவோ, எதுவும் இல்லை; எனெனில் முற்றக இராது. இருப்பதென்பதே ஒன்றுக்கும் ஒருபோதும் சாத்தியமில்லை.
R. P. 143.
(3) மேலும் அது என்றும் இருப்பதைப்போலவே, என்றும் அளவில் எல்லையற்றதாகவும் இருக்கும். R. P. 413.
(4) ஆனல் ஆரம்பமோ, முடிவோ உள்ள எதுவும் எல்லை யற்றதாகவோ, நித்தியமானதாகவோ இருக்க முடியாது. R.
P. 143.
(5) அது ஒன்றல்லவெனின், அதை வேறெதுவும் சூழ்ந் 6(5ěšGg5 h. R. P. 144 a.
(6a) (அன்றியும் அது ஒன்றயிருப்பதனல் அது முழுவதும் ஒரே தன்மையுடையதாயிருக்கிறது; எனெனில் மாறுபட்டதா யிருந்தால், அது பலவாயிருக்குமேயொழிய ஒன்றயிருக்காது). (6) எனெனில் அது (எல்லையற்றதாக) உளதானல், அது ஒன்றயிருத்தல் வேண்டும் ; எனெனில் அது இரண்டானல் அது எல்லையற்றதாயிருக்கமுடியாது; ஏனெனில் அவை அப் போது ஒன்றையொன்று கட்டுப்படுத்துவனவாய் அமையும். R. P. 44.

இளைய ஈலியவாதிகள் 333
(T) ஆகவே அது நித்தியமானதாகவும், எல்லையற்றதாகவும், ஒன்றேயாகவும், முற்றிலும் ஒரே தன்மையுடையதாகவும் இருக் கிறது. மேலும் அது அழியவோ, அல்லது அளவிற் கூடவோ மாட்டாது. அதற்கு நோவோ துன்பமோ எற்படுவதில்லை. எனெனில் இவற்றுள் எதாவது ஒன்று அதற்கு எற்படுமாயி னும் அது ஒன்றக இருக்க முடியாது. எனெனில் அது மாற்றமடைந்தால், சத்துப்பொருள் முற்றக ஒரே தன்மை யுடையதாக இருக்க முடியாது. ஆனல் முன்பிருந்தது இல்லாது போய் முன்பில்லாதது புதிதாக உண்டாதல் வேண்டும். சத்துப் பொருளானது பததாயிரம் ஆண்டுகளிற்றணும் ஒரு மயிரளவாவது மாற்றமடையுமானல், காலம் முடிவதற்குள் அது முற்றய் அழிந்துவிடும் எனலாம்.
அன்றியும் அதனுள் நிலவும் ஒழுங்குதானும் மாற்றமடை யும் என்பதும் சாத்தியமில்லை ; எனெனில் முன்பிருந்த ஒழுங்கு அழிவதுமில்லை ; முன்பில்லாத ஒழுங்கு புதிதாக உண்டாவதுமில்லை. ஆனல் அதிலுள்ள எதுவும் மாற்றமடை யாமலும், அதனேடு எதுவும் சேராமலும், அதிலிருந்து எது வும் கழிக்கப்படாமலுமிருந்தால், ஒரு சத்துப்பொருளின் ஒழுங்கு எவ்வாறு மாற்றமடைதல் கூடும் ? எனெனில் எதாவது பொருள் மாற்றமடையின், அஃது அதன் ஒழுங்கு மாற்றமடை வதற்குச் சமமாகும்.
அது நோவையும் அனுபவிப்பதில்லை ; எனெனில் நோவுள்ள ஒரு பொருள் முற்றக இருக்க முடியாது. நோவை அனுப விக்கும் ஒரு பொருள் என்றுமுளதாக விராது ; பூரண மாக விருக்குமொன்றைப் ப்ோன்றளவு ஆற்றலும் அதற்கு இராது. அன்றியும் நோவை அனுபவிப்பதாயிருந்தால் அது முற்றிலும் ஒரே தன்மையுடையதாகவுமிராது. எதோவொன்று சேர்க்கப்பட்டதால் அல்லது கழிக்கப்பட்டதாலேயே அது நோவை அனுபவிக்கின்றதாதலால், அது முற்றிலும் ஒரே தன்மை யுடையதாயில்லை. பூரணமாயிருக்கின்ற எதுவும் நோவை உணர மாட்டாது. எனெனில் அவ்வாறு அது உணரின், பூரண மாயும், சத்துப்பொருளாயும் இருந்ததும் அழிந்துபோம். முன் பில்லாதிருந்தது உண்டாகும். நோவைப்பற்றிய இவ்வாதங்கள் துன்பத்திற்கும் பொருந்துமென்க.
வெறுமையாகவும் ஒன்றுமில்லை. ஏனெனில் வெறுமையா யிருப்பது அதிரவியமே. அதிரவியமென்பது இருக்க முடியாது. அது இயங்குவது மில்லை ; ஏனெனில் அது செல்வதற்கு இடமெதுவுமில்லை. ஆனல் அது நிறைவுள்ளதாயிருக்கிறது, ஏனெனில் ஆங்கு எதுவும் வெறுமையாயிருந்தால் அது அவ்

Page 175
334 ஆதி கிரேக்க மெய்யியல்
வெறுமையுட் செல்ல முடியும். ஆனல் ஆங்கு வெறுமை யாய் எதுவுமில்லையாதலால், அது செல்வதற்கு இடமெதுவும்
அது ஓரிடத்தில் திண்மையுடையதாகவும் பிறிதோரிடத்தில் ஐதானதாகவும் இருக்க முடியாது. ஐதாகவுள்ள எதுவும் திண்மையுடையதாயுள்ள வெதனிலும் பார்க்க வெறுமையான தாயிருக்கிறது. ஐதாகவுள்ளது திண்மையாகவிருப்பதைப்போல நிறைவுள்ளதாய் இருக்க முடியாது.
நிறைவாக இருப்பதிலிருந்து நிறைவில்லாது இருப்பதை நாம் இவ்வாறே இனங்கண்டுகொள்ள வேண்டும். ஒரு பொருளில் வேறு எந்தப் பொருளுக்காவது இடமிருந்து அதை உட் சேர்த்துக்கொள்ள முடிந்தால், அது நிறைவுள்ளதல்ல. ஆனல் அதற்குள்ளே வேறு எந்தப் பொருளையும் உட்சேர்த்துக்கொள்ள இடமில்லாதிருந்தால் அது நிறைவானதே. அதில் எதுவும் வெறுமையாயில்லாவிட்டால் அது நிறைவாகவே இருத்தல் வேண்டும். அது நிறைவானதாயிருந்தால் இயங்கமுடியாது.
R. P. 145.
(8) அது ஒன்றுமட்டுமே என்பதற்கு இவ்வாதமே மிகச் சிறந்த நிரூபணமென்க; ஆனல் பின்வருவனவும் அதை நிரூபிப்பனவே. பல இருப்பின், அவை யாவும் ஒன்று எத் தன்மை படைத்ததென நான் கூறினேனே, அத்தன்மையை உடையனவாகவே இருத்தல் வேண்டும். ஏனெனில் நிலமும், நீரும், காற்றும், தீயும், இரும்பும், தங்கமும் இருப்பின், அவற் றுட் சில உயிருள்ளவாயும் சில இறந்தனவாயும் இருப் பின், பொருள்கள் வெள்ளையாயும், கறுப்பாகவும், அவை எவ்வாறெல்லாமுள்ளனவென, மனிதர்கள் கூறுகின்றர்களோ, அவ்வாறெல்லாம் இருப்பின், நாம் காண்பவையும் நமக்குக் கேட்பவையும் சரியானல், இவை ஒவ்வொன்றும் நாம் முன்பு தீர்மானித்ததுபோலவே இருத்தல் வேண்டும். அன்றியும் அவை மாற்ற முடியாதனவையாய் என்றும் ஒரே தன்மை யுடையனவாய் இருத்தல் வேண்டும். ஆனல் நாம் காண்பதும் கேட்பதும் அறிவதும் சரியே என நாம் கூறினலும், சூடா யிருப்பது குளிர்கிறது எனவும் குளிர்ந்திருப்பது சூடாகிறது என வும் நாம் நம்புகிறேம் ; கடினமாயிருப்பது மென்மை யுடைய தாகவும் மென்மையாயிருப்பது கடினமானதாகவும் மாறு கின்றனவென நம்புகிறேம் ; வாழ்வது இறக்கின்ற தெனவும் வாழாதிருப்பதிலிருந்து பொருள்கள் பிறக்கின்றன வெனவும் எண்ணுகிறேம் ; எல்லாப் பொருள்களும் மாறியுள்ளனவென வும் அவற்றின் முந்திய தன்மைக்கும் இப்போதைய தன்

இளைய ஈலியவாதிகள் 335
மைக்கும் இடையே எத்தகைய ஒற்றுமையும் இல்லையெனவும் நம்புகின்ருேம். கடினமான பொருளான இரும்பு, விரலால் தொடுவதனல் தேய்ந்து போகிறது என நாம் எண்ணுகிறேம். நாம் திடமான பொருள்கள் எனக் கருதும் தங்கம், கல் என்பனவும் இவ்வாறே என நினைக்கிறேம். மேலும் மண்ணும் கல்லும் நீரிலிருந்து உண்டானவை என எண்ணுகிறேம். எனவே நாம் சத்துப் பொருள்களைக் காணவோ அறியவோ இல்லையென்பது தெளிவாகிறது. இப்பொருள்கள் ஒன்றே டொன்று பொருந்துவனவல்ல. தமக்கென உருவமும் வலி மையும் உடைய நித்தியமான பொருள்கள் பல உளவெனநாம் கூறியிருந்தாலும் அவை யாவும் மாற்றமடைகின்றன வென வும் நாம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவை வெவ் வேறு தன்மைகளையுடையனவாயிருக்கின்றன வெனவும் நாம் நினைக்கிறேம். ஆகவே நமது காட்சி பிழையென்பதும், இப் பொருள்கள் பலவென நாம் நம்பியது தவறென்பதும் தெளி வாகின்றன. சத்துப் பொருள்களாயிருந்தால் அவை மாற்ற மடையமாட்டா. ஒவ்வொரு பொருளும், அது எத்தன்மையது என நாம் எண்ணினேமோ அத்தன்மையதாகவே இருந்தி ருக்கும் ; ஏனெனில் உண்மையான சத்துப் பொருளிலும் வலி மையுடையது எதுவுமில்லை. ஆனல் அது மாற்ற மடைந்த தானல், முன்பிருந்தது, இல்லாது போய்விட்டது; முன்பு இல் லாதிருந்தது உண்டாகியுள்ளது எனலாம். ஆகவே பல பொருள் கள் உளவாயின், அவை யாவும் ஒன்றினது தன்மையையே உடையனவாயிருத்தல் வேண்டும். R. P. 147.
(9) அது இருப்பதானல், அது ஒன்றகவே இருத்தல் வேண் டும். ஆனல் அது ஒன்றனல் அதற்கு உடல் இருக்க முடி யாது ; எனெனில் உடலிருப்பின், பகுதிகளிலிருக்குமாதலால், அது ஒன்றயிருக்காது. R. P. 1462.
(10) சத்துப்பொருள் பிரிக்கப்படுவதாயின், அது இயக்கமுடை யது. இயங்குவதாயின் அது இருக்க முடியாது. R.P. 144a°.
166. ஆரம்பத்தில் மெலிசசு ஈலிய மரபைச் சேர்ந்தவராக சத்துப்பொ அல்லாதிருந்திருக்கலாம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது. ருள் பற்றில் ஆனல் பார்மனை,டிசுவின் கொள்கையில் குறிப்பிடத்தக்க ஒரே கொள்கை யொரு கருத்தைமட்டும் தவிர்த்து, எனைய யாவற்றையும், அவர் ஏற்றுக்கொண்டார் என்பதில் ஐயமில்லை. “அதிரவியம் என்ப தில்லை ” என்னும் பார்மனைடிசுவின் கருத்தை மீண்டும் வலியு றத்தியே அவர் தமது நூலை ஆரம்பித்திருக்கிறரெனத் தோன் றுகிறது (பகுதி Ia). மேலும் இக்கருத்தை ஆதரிக்கும் பொருட்டு அவர் தரும் வாதங்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுக

Page 176
சத்துப்பொ ருள் எல்லையற்ற வெளியிலுள் ளது எனல்
336 ஆதி கிரேக்க மெய்யியல்
மாைைவ(பகுதி1). சத்துப் பொருள், பார்மனடிசு கூறியதைப் போல நித்தியமானதே. இக்கருத்தை மெலிசசு தனக்கே உரிய முறையிற் கூறியுள்ளார். உண்டானவை யாவற்றிற்கும் ஓர் முதலும் முடிவும் உளவாதலால், உண்டாகாதவற்றிற்கு முத லும் முடிவுமில்லை யென அவர் வாதித்தார். நிறைவிதி எடுப்பொன்றை இவ்வாறு எளிய எதிர்மாற்றஞ் செய்ததுபற்றி அரித்தோதில் மெலிசசுவைப் பலமாகக் கண்டிக்கிருா. ஆனல் மெலிசசு இக்கருத்தை நம்பியதற்கு இந்நியாயமொன்றே ஆதா ரம் எனக் கொள்ளலாகாது. சத்துப் பொருள்பற்றி அவர் கொணடிருந்த கருத்து முழுவதுமே அது நித்தியமானது என அவரை எண்ணத் தூண்டியதெனலாம். சத்துப்பொருள் காலத்தைப் பொறுத்தவரையில் ஆதியும் அந்தமும் இல்லாத வொன்ருதலால் வெளியைப் பொறுத்தவரையிலும் கூட அது எல்லையற்றதாயிருத்தல் வேண்டும் என மெலிசசு அனுமானித் தாரென அரித்தோதில் கருதியது சரியாயிருந்திருந்தால், அது உண்மையில் நாம் கவனிக்க வேண்டிய வொன்றகியிருக்கும். ஆனல் அரித்தோதில் எப்பகுதியைப் பார்த்து இவ்வாறு பொருள் கொண்டாரோ அப்பகுதி எமக்கும் கிடைத் திருக்கிறதாதலால் (பகுதி 2) நாம் எமக்குத் தோன்றுகிறவாறு அதற்குப் பொருள் கொள்ளலாம். அப்பகுதியைப் பார்க்கையில் அதிலுள்ள “எல்லை யற்ற ” என்னும் சொற்றெடர் * வெளியில் எல்லையற்ற ” எனும் பொருள் கொண்டது என அரித்தோதில் எண்ணுவ தில் நியாயம் எதுவுமில்லைப் போலத்தோன்றுகிறது.
167 காலத்தில் மட்டுமல்லாது வெளியைப் பொறுத்தவரையி லும் கூட சத்துப்பொருள் எல்லையற்றதே என்கையில் மெலிசசு பார்மனடிசுவின் கொள்கையிலிருந்து மாறுபடுகிறர் எனவே கூறவேண்டும். ஆல்ை இவ்வாறு எண்ணுவதற்கு அவருக்குச் சிறந்தவோர் நியாயமிருந்ததாகையால், அவர் இத்தகைய அசா தாரணவாதத்தின் உதவி கொண்டு தனது கருத்தை நிறுவி யிருக்க வேண்டியதில்லை. சத்துப் பொருள் கட்டுப்படுத்தப் பட்டதாயின் வெற்றிடத்தினலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்பதே அவர் கூற்று. அரித்தோதில் மூலம் நாம் அறியும் இந்நியாயம், உண்மையில் பார்மனடிசுவின் கொள்கைக்கு மேற்பட்ட்வோர் வளர்ச்சியைக் குறிப்பதாகும். சத்துப்பொரு ளோர் முடிவுள்ள கோளமென அவர் கருதினர். ஆனல் இக்கொள்கையின் முழுவிவரங்களையும் காண்டல் இவருக்கு மிகச் சிரமமானவோர் காரியமாக இருந்திருக்கும். கோளத் திற்கு வெளியே அதிரவியமே உள்ள தெனவே அவர் கூற வேண்டியிருந்திருக்கும் ; ஆனல் அதிரவியமென ஒன்றும் இல்லையென்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எல்லை

இளைய ஈலியவாதிகள் 337
யுள்ளவோர் கோளத்தைச் சூழ எல்லையற்ற வெற்றிட மில்லாது, கற்பனை செய்து பார்க்க முடியாது என்பதை மெலிசசு உணர்ந்தார் ; அவரும் இம்மரபைச் சேர்ந்த எனையவர்களைப் போலவே வெற்றிடம் என்பதை மறுத்திருந் தாராதலால் (பகுதி 7) , சத்துப் பொருள் வெளியளவிலும் எல்லையற்றதே எனக் கூறவேண்டியிருந்தது (பகுதி 3) . இக் கருத்தை அவர் எற்பதற்கு, அயோனிய சிந்தனை மரபோடு இவருக்கு இருந்த தொடர்பும் காரணமாயிருந்திருக்கலாம்.
சத்துப்பொருள் எல்லையற்றது என்பதிலிருந்து அது ஒன்றே என்பது பெறப்படுகிறது ; எனெனில் ஒன்றல்லவாயின், அது பிறிதொன்றல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் (பகுதி 5) . ஒன்ற யிருக்கையில் அது முற்றிலும் ஒரே தன்மையுடையதாயிருத்தல் வேண்டும் (பகுதி 6 a) . ஏனெனில் ஒன்றென்பதன் பொருள் அதுவே. ஆகவே சத்துப்பொருள் ஒன்றேயான, முற்றிலும் ஒரே தன்மையுடையதான உடலுள்ள பூரணம். அன்றியும் அது வெளியில் எல்லைற்றதாகவும் காலத்தில் எல்லை கடந்து முன்னும் பின்னும் விரிவதாயும் உள்ளது.
168. ஈலியவாதம் எப்போதும் பிறகொள்கைகளை விமரிசனம் அயோனிய செய்வதாகவே அமைந்தது. அக்காலத்து நிலவிய எனைய வாதிகளுக் மெய்யியற் கொள்கைகளைப் பற்றி மெலிசசுவின் கண்ணுேட்டம் கெதிரான எவ்வாறிருந்தது என்பது பற்றியும் நம்மால் அறிய முடிகிறது. 56öO767 ub ஒன்றில், ஓரினவியல்பு முற்றக விருக்கவில்லை எனக் கொள் ளும் இசைவின்மை அயோனிய கொள்கைகளில் உள்ள தவ றென மெலிசசு காட்டினர். மேலும் அயோனிய மெய்யிய லாளர்கள் யாவரும் மாற்றம் ஏற்படுதல் சாத்தியமென ஒப்புக் கொண்டனர். ஆனல் பொருள்கள் யாவும் ஒன்ருயின் மாற்றம் என்பது ஒருவகையில் உண்டாதலும், அழிதலுமாயிருத்தல் வேண்டும். ஒரு பொருள் மாற்றமடையலாமென ஒப்புக்கொண் டால் அது நித்தியமானது என நிறுவமுடியாது. அனக்சி மாந்தர் போன்றேர் கூறியது போல, அதன் பகுதிகளின் ஒழுங்கிலும் மாற்றமேற்பட முடியாது. அத்தகைய மாற்றத்தின் போது எப்போதும் அழிதல், உண்டாதல் என்பன நடைபெறு கின்றன.
மெலிசசு அடுத்ததாகக் கூறும் விடயம் சற்று நூதனமானது. சத்துப்பொருளினல் துன்பத்தையோ நோவையோ உணரமுடி யாதென அவர் கூறுகிறர்; எனெனில் இவை, சத்துப்பொருளி லிருந்து யாதேனும் கழிக்கப்படுவதால், அல்லது அதனேடு
1. சேனேவின் கொள்கைக்கும் இதற்குமிடையேயுள்ள வேறுபாட்டைக் கவனிக்க.
13-R 10269 (6163)

Page 177
பைதாகரச வாதத்திற்கு எதிரான கண்டனம்
338 ஆதி கிரேக்க மெய்யியல்
யாதேனும் சேர்க்கப்படுவதால் மட்டுமே உண்டாகின்றன. ஆனல் சத்துப்பொருள் இவ்வாறு கூடுவதோ, குறைவதோ அசாத்தி யம். இதற்கு என்ன பொருள் எனக் காண்பது எளிதான காரியமன்று. அனக்சகோரசு புலனுணர்வை விளக்குதற்கு உப யோகித்த கொள்கையே இங்கு கருதப்படுவதாயுமிருக்கலாம்.
பொதுவாக இயக்கமும், குறிப்பாக ஐதாதல், திண்மையடை தல் என்பனவும் அசாத்தியமே ; எனெனில் இவையிரண்டும் நடைபெறுவதாயின் வெற்றிடமிருத்தல் வேண்டும். இக்கார ணத்திற்காகவே பிரிக்கப்படுந்தன்மையும் சத்துப் பொருளுக் கில்லையெனப்பட்டது. இவை பார்மனைடிசுவினலும் உபயோகிக் கப்பட்ட வாதங்களே.
169. மெலிசசுவின் கொள்கையைப் பற்றிய விவரங்கள் யாவற்றிலும், அவர் சத்துப்பொருளானது உடலுள் பொருளே யென்பதை மறுத்தாரெனவே கூறப்பட்டிருக்கிறது. சிம்பிளிசியசு இக்கருத்தை நிரூபித்தற்கெனவே மேற்கோளாகத் தந்துள்ள 9 ஆவது பகுதியைப் பர்ர்ப்பின், இவ்வபிப்பிராயம் மேலும் உறுதி யாக்கப்படும். ஆனுல் ஆதி கிரேக்க மெய்யியல் பற்றிய எமது பொது வான கருத்துச் சரியானதெனின், இக்கூற்று நம்பமுடியாத வொன்று போல் தோன்றும். “ பார்மனைடிசுவின் ஒன்று கருத் துப் பொருளாயிருந்தது; மெலிசசுவினதோ சடப்பொருட் சார் பானதாயிருந்தது’ என அரித்தோதில் * பெளதிகவதிகம் ” எனும் நூலிற் கூறியிருப்பதை நோக்குகையில் இக்கூற்றைப்பற்றி எமக்கு மேலும் ஆச்சரிய முண்டாகிறது. ஆனல் சிம்பிளிசியசு வின் கையெழுத்துப் பிரதியில் உள்ளபடி, இப்பகுதியில் தரப்பட் டிருப்பது முற்றிலும் கற்பனையானவோர் உதாரணமே. எது வாயினும் இருப்பின் அது உடலுள்ள பொருளாகவும், ஒன்றக வும் இருக்கவேண்டுமாகையால் பொருள்கள் உள்ளமையை மறுப் பதே இதற்குப் பொருள் எனவே நாம் இயல்பாகக் கருதுதல் வேண்டும். ஆனல் இது மெலிசசுவினலும் நம்பப்பட்ட ஈலிய ஒன் றைக் கருதுவதாக விருக்க முடியாது ; மேலும் இவ்வாதம் சொற்களைப் பொறுத்தவரையிலும் சேனேவின் வாதங்களி லொன்றைப் போல விருப்பதால், முடிவான அலகுகள் பற்றிய பைதாகரச எடுகோளுக் கெதிராகவே இதுவும் தொடுக்கப்பட் டிருக்கிறதெனக் கொள்ளலாம். ஆனல் நாம் இவ்வாறு கொள் வதற்குத் தடையேது மிருப்பின், அது இப்பகுதி பற்றி இரு முறை குறிப்பிட்டுள்ள சிம்பிளிசியசு, அதற்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் பொருளையே கொண்டார் என்பதேயாகும். ஆனல் அவ்வாறு அவர் பொருள் கொண்டது இயல்பாகவே ஏற்படக் கூடியவோர் தவறே. கி.மு. ஐந்தாம் நூற்றண்டின் நடுப் பகுதியில் “ ஒன்று ” எனும் சொல்லிற்கு இரு பொருள்கள்

இளைய ஈலியவாதிகள் 339
வழங்கின; அச்சொல் சத்துப்பொருள் முழுவதையுமோ அல்லது வெளியின் அலகான புள்ளியையோ கருதிற்று. முதலாவது பொருளில் அதை நிறுவுதற்கு, ஈலிய வாதிகள் இரண்டாவது பொருளில் அதை மறுக்கவேண்டியிருந்தது. ஆகவேதான் தாம் மறுத்த பொருளில் “ ஒன்று ” எனக் குறிப்பிட்டபோதும் சிலவேளைகளில் அது அவர்கள் ஆதரித்த பொருளில் உபயோ கிக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. சேனே “ ஒன்றை ’ மறுத்த பகுதி பற்றியும் இப்பிரச்சினை எற்பட்டதை நாம் பார்த்தோம்.
170. மெலிசசுவின் பகுதிகளில் மிகவும் விசேடமாகக் குறிப் அனக்சகோச பிடத்தக்கது அவரது கடைசிப் பகுதியேயாகும் (பகுதி 8). அது ாேன அனக்சகோரசுவுக் கெதிராகத் தொடுக்கப்பட்டது போலத் தோன் றுகிறது. அப்பகுதியின் சொற்கள் அவரைக் குறிப்பனபோலவே தோன்றுகின்றனவெனலாம். எமது புலன்கள் எமக்குக் காட்டு பவை தமது கொள்கைக்கு முரணுயுள்ளனவென அனக்சகோரசு ஒப்புக்கொள்கையில் (பிரிவு 137) இதற்குக் காரணம் அவற்றின் வலுவற்ற தன்மையேயென அவர் கூறியிருந்தார். அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டதைப் பயன்படுத்திக்கொண்டு, சத்துப் பொருளைப் பற்றிப் புலன்கள் கூறுவதை நாம் நம்பாவிடின், நாம் ஈலியவாதத்தை நிராகரிக்க முடியாதென மெலிசசு கூறுகிறர். உள்ளவை பலவென நாம் அனக்சகோரசுவோடு ஒப்புக்கொள்வோமாயின், அவை ஒவ்வொன்றும் ஈலியவாதி கள் கூறும் ஒன்றைப் போல விருத்தல் வேண்டும் என அவர் வியக்கத்தக்க புத்திக்கூர்மையோடு சுட்டிக்காட்டினர். அதாவது இசைவுள்ள ஒரேயொரு பன்மைவாதம் அணுவாதமே யென்க.
அரித்தோதிலின் கண்டனங்கள் காரணமாக மெலிசசு மிகக்கு றைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளார். அவரது வாதத்தின் முற்பகு தியிலுள்ள போலியான எதிர்மாற்றத்தை வைத்துக் கொண்டே அரித்தோதில் தமது படாடோபமான கண்டனங்களை எழுப்பி னர் என நாம் எற்கெனவே பார்த்தோம். எதிர்மாற்ற விதிகள் பற்றி மெலிசசு எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர் தனது கொள்கையை மாற்ருமலே அதை அப்பழுக்கற்ற நியமமுடைய தாக்கியிருக்கலாம். ஈலியவாதக் கொள்கைகளை முறைப்படுத்திய பெருமை இவரையே சாரும். அத்துடன் பன்மைவாதிகள் உணர்வதற்கு முன்னரே, பொருள்கள் பலவென்னும் கொள் கையை எவ்வாறு இசைவின்மை இன்றி அமைக்க முடியும்
1. 159 ஆம் பிரிவை பார்க்க.

Page 178
340 ஆதி கிரேக்க மெய்யியல்
என்பதைக் கண்டவரும் அவரே. மூலப் பொருள் ஒன்றே யெனப் போதித்த “சோபிட்டுகள் ” மெலிசசுவின் கொள் கையை நிலைநாட்டினர் ” என இப்போகிருத்திசுவின் மருகனன பொலிபோசு குற்றஞ்சாட்டினர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
1. பொதுவாக ஈலியவாதிகளையும், குறிப்பாக மெலிசசுவையும் மதிக்காமல், அவர்களுடைய கொள்கையையும் பெரிதும் தவருகப் பொருள் கொண்டவரான அரித்தோதிலுக்குப் பின்வந்தோர் ஒப்புக்கொண்ட கதையே மெலிசசு ஆற்றலற்றவர் என்பது.

அத்தியாயம் 9
மிலட்டசுநாட்டு லியூகிப்போசு
171 மைலிசிய மரபு அனக்சிமினிசுவுடன் முடிவடையவில்லை லியூகிப்போசும்
என நாம் கண்டோம் (பிரிவுகள் 31, 122). தேலிசுவினல் தெமோகிரித் முதலில் எழுப்பப்பட்ட வினவிற்கு மிகவும் பூரணமான விடைய*" ளித்தவரும் ஒரு மைலிசிய சிந்தனையாளரே என்பது குறிப்பிடத் தக்கது. ஆனல் லியூகிப்போசு என ஒருவர் இருந்தாரோ வென் பது பற்றியும் சந்தேகிக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மையே. இப்பெயருடைய மெய்யியலாளர் எவரும் இருக்கவில்லை யென எபிகூரசு கூறியதாக நாம் அறிகிறேம். சமீபகாலத்திலும் அவரது கூற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனல் அரித்தோதி லும் தியோபிறகத்தோசுவும், அணுவாதம் இவராலேயே தோற் றுவிக்கப்பட்டதெனக் கூறினர். இவ்விடயத்தில் அவர்கள் பிழை விட்டிருப்பார்கள் எனக் கொள்ள முடியாது. அரித்தோதில் தெமோகிரித்தோசுவைப் பற்றி விசேட ஆர்வத்தோடு ஆராய்ந் தார். அணுவாத மரபு தோன்றிய ஊராகிய அபுதேராவும் அவரது பிறந்தவூரான தாகெய்ரோசுவும் அணித்தாய் இருந்தன.
லியூகிப்போசு பற்றிய இப்பிரச்சினை தெமோகிரித்தோசுவின் காலம் பற்றிய பிரச்சினையுடன் சேர்த்தே ஆராயப்படவேண்டும். அனக்சகோரசு வயோதிபராயிருந்த காலத்தில் தான் இளைஞன யிருந்ததாகத் தெமோகிரித்தோசு கூறியுள்ளார். அவர் சிறப்பு டன் விளங்கிய காலமென அப்பொலோடரசு குறிப்பிடும் கி. மு. 420 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னராகவேதான் தெமோ கிரித்தோசு தமது மரபை அபுதேராவில் ஆரம்பித்திருக்க 1. இவர் ஒரு ஈலியர் அல்லது மைலீசியர் எனத் தியோபிறகத்தோசு கூறுகிருர். சிலர் இவர் ஓர் ஈலியர் எனவும் வேறு சிலர் இவர் ஓர் அபுதேரைற்று வெனவும் கூறினர் என இடையோசினிசு கூறுகிறர். பைதாகரசவாதிகளது பிறந்தவூர்கள் பற்றிய சந்தேகங்கள் (7 ஆம் அத். 298 ஆம் பக். கு.1) போன்றவை இக்கூற்றுக்கள். வேறு சிலர் லியூகிப்போசு ஒரு மீலியர் எனக் கருதினரெனவும் இடையோசினிசு கூறுகிருர். இதுவும் பலரை ஆட்கொண்டவோர் மயக்கமாகும். மீலோசுநாட்டு டயாகரசு ஒர் மைலிசியரென ஈத்தியோசு கூறுகின்றர். லியூகிப் போசு எக்காரணத்திற்காக ஈலியர் என அழைக்கப்பட்டாரோ அக்காரணத்திற் காகவே தெமோகிரித்தோசு சிலரால் மைலீசியர் என அழைக்கப்பட்டார். எரொடோதசு தன்னை ஒரு அலிக்கரநாசியன் எனக் கருதினரோ அல்லது தெளரியன் எனக் கருதினரோ எனும் சந்தேகமும் இத்தகையதே யென 6th.
341

Page 179
342 ஆதி கிரேக்க மெய்யியல்
வேண்டுமென்பது இதிலிருந்து பெறப்படுகிறது. அப்பொலோ னிய நாட்டு இடையோசினிசு வென்பார் தமது கருத்துக்களிற் சிலவற்றை அனக்சகோரசுவிடமிருந்தும் வேறு சிலவற்றை லியூ கிப்போசுவிடமிருந்தும் பெற்றரெனத் தியோபிறகத்தோசு கூறு கிருர். அப்படியாயின் இடையோசினிசுவின் நூலிலும் அணு வாதக்கொள்கையின் சாயைகள் இருந்திருக்க வேண்டும். மேலும் கி. மு. 423 ஆம் ஆண்டுக்கு முன்னரே எழுதப்பட்ட தான அரித்தோபெனிசுவின் “மேகங்கள்’ எனும் நூலில் இடை யோசினிசுவின் நூல் நையாண்டி செய்யப்பட்டிருக்கிறது. இதி லிருந்து கி. மு. 423 ஆம் ஆண்டிற்கு முன்னரே லியூகிப் போசுவின் நூல் அறிமுகமாகியிருந்ததென்பது பெறப்படுகிறது. அந்நூலெது வென்பதையும் நாம் தியோபிறகத்தோசுவின் மூல மாக அறிகிருேம். தெமோகிரித்தோசுவினுடையதென வழக்க மாகக் கூறப்படும் பேரண்டவியல் எனும் நூலே அதுவென்க. ஆகவே தெமோகிரித்தோசுவினுடையவை எனப் பிற்காலத் திற் கருதப்பட்ட பிற் நூல்களும் உண்மையில் அபுதேரா மரபினைச் சேர்ந்தனவே என்பதும் பெறப்படுகின்றது. அப் படியாயின் அம்மரபைத் தோற்றுவித்தவரான லியூகிப்போசு வின் நூல்களும் அவற்றுட் சில இருந்திருத்தல் வேண்டும். இப்போகிருத்திசுவின் பெயரில் எமக்குக் கிடைத்துள்ள நூற் ருெகுதியைப் போன்றவையே இவையும் எனக் கூறலாம். அத்தொகுதியிலுள்ள பல்வேறு நூல்களின் ஆசிரியர்களது பெயர்களை அறிதல் எவ்வாறு இயலாதாயிருக்கிறதோ, அவ் வாறே இந்நூற் ருெகுதியின் ஆசிரியர்களது பெயர்களைப் பற்றியும் முடிவு செய்தல் சிரமமாயிருக்கிறதெனலாம். லியூ கிப்போசு ஒரு ஈலியர் எனச் சில நூல்களிற் குறிப்பிடப் பட்டிருந்ததெனத் தியோபிறகத்தோசு கூறுகின்றர். முன்பு வேறேர் மெய்யியலாளரது பிறப்பிடம் எதுவென்பதுபற்றி எற் பட்ட மயக்கமே இங்கும் எற்பட்டதெனக் கொள்வதாயின், லியூகிப்போசு ஈலியாவிற் குடியேறியிருந்தார் எனவே நாம் கொள்ளுதல் வேண்டும்?. கி. மு. 450-49 ஆம் ஆண்டில் மிலட்டசில் நடைபெற்ற புரட்சிக்கும் அவர் அங்கிருந்து வெளி யேறியதற்கும் தொடர்பிருக்கலாம். இவர் பார்மனேடிசுவின் கழகத்தின் அங்கத்தவராயிருந்தார் எனத் தியோபிறகத்தோசு
1. டியல்சு சொல்வதுபோல, தெமோகிரித்தோசு எழுதிய காலத்தில் அனக்ச கோரசு காலமாகிவிட்டாரெனவே இக்கூற்றிற்குப் பொருள் கொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது. இதனலேயே, இவர் சிறப்புடன் விளங்கிய காலம் அனக்சகோரசுவிற்கு 40 ஆண்டுகளின் பின்னரே யென அப்பொலோ டரசு கருதினர் போலும்,
2. 341 ஆம் பக்கக் குறிப்பைப் பார்க்க.

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 343
தெளிவாகக் கூறுகிருரர். மேலும் அக்காலத்தும் பார்மனை டிசுவே அக்கழகத்திற்குத் தலைமை வகித்தாரென்பதும் தியோ பிறகத்தோசுவின் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பிளேட்டோ தரும் காலமானத்தை ஏற்றுக்கொண்டால், இது உண்மையென்பது புலனுகும். லியூகிப்போசு சேனேவிடம் பாடம் “ கேட்டா” ரெனவும் தியோபிறகத்தோசு கூறியுள்ளார் போலத் தோன்றுகிறது. இது நம்பக்கூடியவொன்றே. எப்படி யாயினும் இவரது சிந்தனை முறையில் சேனேவினது செல் வாக்கு மறுக்க முடியாதளவிற்குப் படிந்திருந்ததென்பதை நாம் பார்ப்போம். எம்பிடோக்கிளிசு, அனக்சகோரசு என்பா ருக்கும் லியூகிப்போசுவுக்கும் இடையே எத்தகைய தொடர்பு இருந்ததென்பதையும் இலகுவாக நிர்ணயிக்க முடியாது. இவ் விருவருடைய கொள்கைகளிலும் அணுவாதத்தின் சாயல்கள் காணப்படுகின்றன வென்பதும் லியூகிப்போசு என ஒருவர் உண்மையில் இருந்தாரென்பதற்கு ஆதாரமாகக் கொள்ளப் படுகிறது ; ஆஞரல் லியூகிப்போசு இருந்தது பற்றிய உண்மையை நம்புவதற்கு இத்தகைய நியாயங்கள் எவையும் உண்மையில் அவசியமில்லை எனலாம். எம்பிடோக்கிளிசு லியூகிப்போசுவின் கொள்கைகளின் செல்வாக்குக்குட்பட்டிருந்தார் என்பதற்கு ஆதாரமான முக்கிய கருத்து “நுன்ருெளைகள்” பற்றிய கொள்கையிலிருந்து பெறப்பட்டதாகும். ஆனல் இக்கொள்கை உண்மையில் அலுக்மையோனிடமிருந்தே தோன்றியது என நாம் அறிவோமாதலால், எம்பிடோக்கிளிசுவிடமிருந்தே லியூகிப் போசு இக்கொள்கையைப் பெற்ருர் என நம்ப இடமுளது. அன்றியும் அனக்சகோரசுவுக்கு லியூகிப்போசுவின் கொள்கை களைப் பற்றித் தெரிந்திருந்தது எனக் கருதவும் இடமில்லை எனக் கூறலாம். வெற்றிடம் எதுவும் இல்லையென அவர் கூறினர் என்பது உண்மையே. ஆனல் அணுவாதப் பொருளில் யாராயினும் இக்கொள்கையை அதற்கு முன் நிறுவ முயன் றனர் என்றும் கூற முடியாது. ஆதி பைதாகரசவாதிகள் வெற்றிடம் என்பது பற்றிக் கூறியிருந்தனர். ஆனல் அவர்கள் வளிமண்டலக் காற்றுக்கும் வெற்றிடத்திற்கும் வேறுபாடிருப் பதை அறியாதிருந்தனர்; அன்றியும், கிளெப்சைட்ரு, காற்று நிறைக்கப்பட்ட தோற்பைகள் என்பனவற்றின் மூலம் அனக்ச கோரசு நடாத்திய பரிசோதனைகள் பைதாகரச கொள்கையை மறுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டவையாயிருத்தல் வேண் டும். அன்றேல் அவை பயனற்றனவாகி விடுகின்றன. உண்
1. 6 ஆம் அத். 131 ஆம் பிரிவையும் 7 ஆம் அத். 145 ஆம் பிரிவையும்
initiašas.

Page 180
344 ஆதி கிரேக்க மெய்யியல்
மையில் லியூகிப்போசுவை மறுக்க விரும்பியிருந்தால், அனக்ச கோரசு முற்றிலும் வேறுவகையான பரிசோதனைகளை உபயோகித் திருக்க வேண்டும். அணுவாதக் 172. அபிப்பிராயங்கள் எனும் தனது நூலின் முதற்பகுதி கொள்கை யில் தியோபிறகத்தோசு லியூகிப்போசு பற்றிப் பின்வருமாறு பற்றித் தியோ கூறினர். “ ஈலியா அல்லது மிலட்டசுவைச் சேர்ந்த லியூகிப் பிறகத்தோசு - l −
போசு (எனெனில் அவரைப் பற்றி இரண்டுவிதமாகவும் கூறப் பட்டிருக்கிறது) மெய்யியல் வாதி எனும் முறையில் பார்மனை டிசுவுடன் தொடர்பு பூண்டிருந்தார். ஆயினும் பொருள்களை விளக்கும் முறையில் அவர் பார்மனைடிசு, செனேபனிசு போன்றேர் பின்பற்றிய வழியே செல்லவில்லை. உண்மையில் இவர்களுக்கு முற்றிலும் எதிரான ஒரு வழியையே அவர் பின்பற்றினர் எனவே தோன்றுகிறது (R. P. 185.). எல்லாம் என்பது ஒன்றெனவும், சிருட்டிக்கப்படாததெனவும், எல்லை யுள்ளதெனவும் அவர்கள் கூறினர். அன்றியும் இப்பொருள் பற்றிச் சிந்திக்கவும் முடியாதென அவர்கள் கூறினர். ஆனல் லியூகிப்போசு எண்ணிறந்த, இடைவிடாது இயங்கிக் கொண்டிருக் கும் அணுக்கள் உள்ளனவெனக் கூறினர். அவை எண் ணற்ற வடிவங்களையுடையனவெனவும் அவர் கூறினர். இவை ஒரு குறிப்பிட்ட வடிவத்தையுடையனவாயே இருத்தல் வேண்டும் எனக் கொள்வதற்கு எவ்வகை நியாயமுமில்லையென அவர் கருதியதும், உலகில் இடைவிடாது புதிய பொருள்கள் தோன்றுவதும், அவை மாறுதலடைவதும், நடைபெறுகின்றன என அவர் கண்டதுமே, இவ்வாறு அவர் கூறியதற்குக் காரணங் கள் என்க. மேலும், உள்பொருள், இல்பொருளை விட எவ் வகையிலும் கூடிய மெய்மையுடையதன்று எனவும் இவை யிரண்டுமே புதிதாக உண்டாகும் பொருள்களுக்குக் காரணங்க ளாகலாம் எனவும் அவர் கூறினர்; அணுக்களின் உட்பொருள் செறிவும் நிறைவுமுடையதெனவும் அவையே உட்பொருள் எனவும் அவர் கூறினர். வெற்றிடத்திலேயே அணுக்கள் இயங் கினவெனவும் இல்பொருளான இவ்வெற்றிடம், உட்பொருள் எவ்வளவு மெய்ம்மையுடையதோ அவ்வளவு மெய்மையுடைய தெனவும் அவர் கூறினர் ”. R. P. 194. ஈலியவாதி 173. லியூகிப்போசுவுக்கும் ஈலிய மரபிற்குமிடையே தொடர் களும் லியூகிப் பிருந்ததெனத் தியோபிறகத்தோசு குறிப்பிட்டுள்ள போதும், போசுவும் முதல் நோக்கில் அவரது கொள்கை பார்மனடிசுவினதுக்கு முற்றிலும் எதிரானதேயெனச் சுட்டிக்காட்டுகிறர் என்பது கவ னிக்கப்பட்டிருக்கலாம். இதைத்தொடர்ந்து பலர் லியூகிப்போசு ஈலிய மரபோடு தொடர்பு கொண்டவர் என்பதை முற்ருக மறுக்க

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 345
முயன்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் மறுத்ததற்குப் பார் மனைடிசுவின் கொள்கை " பெளதிகவதித ” வியல்புடையதென அவர்கள் கருதியதும், அணுவாதம் போன்ற வொரு விஞ்ஞான ரீதியிலமைந்த கருதுகோள் “பெளதிகவதிக”க் கொள்கை யொன் றிலிருந்து தோன்றியிருக்கும் என ஒப்புக்கொள்ள அவர்கள் விரும்பாமையுமே காரணங்கள். ஆனல் இது வெறும் முற் கோட்டமேயென்க. மேலும் முதல் நோக்கில் தோன்றுமளவிற்கு இவற்றிற்கிடையே வேற்றுமை இருந்ததெனத் தியோபிறகத் தோசு கருதினர் எனவும் நாம் கொள்ளலாகாது. ஆதி கிரேக்க மெய்யியல் வரலாற்றில் இதுவே மிகவும் முக்கியமான விடயமாத லாலும், நன்றக விளங்கிக் கொண்டால், இவ்வரலாற்றையே அறிதற்கு இது வழியாக உதவுமாதலாலும், இக்கொள்கையின் வரலாற்றுத் தொடர்பை நன்ருக விளக்கும் வகையில் அமைந் துள்ள, அரித்தோதிலால் எழுதப்பட்ட பகுதியொன்றை இங்கு தருதல் நன்மைபயக்கும்.
* இயல்பாக எது முதல் வருகிறதோ அதனையே தமது தொடக்கநிலையாகக் கொண்டு, ஒரே கொள்கையின் மீதமைந்த, கிட்டத்தட்ட ஒரே தன்மையான முறையைக் கையாண்டே லியூகிப் பொசுவும் தெமோகிரித்தோசுவும் எல்லாவிடயங்களைப் பற்றியும் முடிவு செய்துள்ளனர். முந்திய சிந்தனையாளர்களிற் சிலர் சத்துப் பொருள் ஒன்ருகவும், இயக்கமற்றதுமாகவே இருக்க முடியும் எனக் கூறியிருந்தனர்; எனெனில் வெற்றிடம் மெய்ம்மையுடையதல்லவெனவும், சடப்பொருளல்லாத வெற் றிடமின்றி இயக்கம் எற்பட முடியாது எனவும் அவர்கள் கருதினர். மேலும் பொருள்களைப் பிரிக்கும் வகையில் அவற் றிற் கிடையில் ஒன்றுமில்லையாதலால், பொருள்கள் ஒன்றுக்கு மேற்பட்டவையாயும் இருக்க முடியாது என அவர்கள் கூறினர். எல்லாம் என்பது பலவெனவும், ஒன்றல்லவென்றும் வெற்றிட முளதென்றும் கூறுவதற்குப் பதிலாக, அது தொடர்புடைய தொன்றல்ல, ஒன்றை யொன்று தொடுவனவாயுள்ள பகுதி களைக் கொண்டதேயென யாரும் கூறினும் நிலைமையில் மாற் றம் எதுவுமில்லை. எனெனில் அஃது எவ்விடத்திலும் பிரிக்கப் படக் கூடியதாயின், இருப்பது ஒன்றல்ல. ஆகவே பலவுமல்ல.
1 கொம்பர்சுவின், “கிரேக்க சிந்தனையாளர் ” எனும் நூலில் இம்முற் கோட்டம் புகுந்திருப்பதை நாம் காணலாம். சற்றே கற்பனை சேர்ந்ததாயினும் மிகவும் சுவையான இந்நூலின் மதிப்பு இதன் காரணமாகச் சிறிது குறைந்து விடுகிறது எனலாம். இதே கருத்துடனேயே பரீகர் என்பார், சோக்கிரதருக்கு முந்தியவர்களில் அனக்சகோரசுவே இறுதியானவர் எனும் கொள்கை இறை யியற் கற்பிதங்களினல் எற்பட்ட தெனக் கூறுகிறர் என்பதும் சுவையான வோர் விடயமாகும்.

Page 181
346 ஆதி கிரேக்க மெய்யியல்
முழுமை வெறுமையானதே (சேனே) ; அப்படியல்லாமல் அஃது ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே யொழிய பிற இடங்களில் பிரிக்கப்படக்கூடியதல்லவெனின், அது எவ்வித நியாயமுமின்றி நாம் கூறும் கற்பனைக் கதை போலாகிவிடுமெனலாம். ஏனெ னில் முழுமை எக்காரணத்திற்காக, ஏனைய பகுதிகளில் தனித் தனியாகப் பிரிக்கக் கூடியதாயிருக்கையில், சில பகுதிகளில் தொடர்புடையதாகவும் நிறைவுடையதாகவும் இருக்கவேண்டும் ? இவ்வாறு தொடர்பும் நிறைவுமுள்ள பகுதி எங்கே முடிவடை கிறது ? இதே காரணங்களுக்காகவே இயக்கமும் சாத்தியமில்லை யெனக் கூறப்படுகிறது. இந்நியாயங்களின் முடிவாக, புலன்கள் தரும் அறிவிலும் பார்க்க வாதங்களைத் தொடர்தலே நன்று எனும் கருத்துடன், புலனறிவுக்கு அப்பாற் சென்று, எல்லாம் என்பது இயக்கமற்ற ஒன்று எனக் கூறுகின்றனர். (பார்மனைடிசு). வரைவு என எதுவுமிருப்பதாயின் அதைச் சூழ வெற்றிட மிருக்க வேண்டுமாதலால், அது முடிவற்றதே யென அவருட் சிலர் கூறினர் (மெலிசசு) . இதுவே உண்மை பற்றி அவர்கள் தெரிவித்த அபிப்பிராயம் ; இவ்வபிப்பிராயத்தை அவர்கள் அடைந்ததற்கான நியாயங்களும் இவையே. இந்நியாயங்களைப் பொறுத்தவரையில் இம்முடிவு அவற்றிலிருந்து பெறப்படுவதே. ஆனல் நேர்வுகளை நாம் பார்ப்போமானல், இத்தகைய ஒரு கொள்கையை ஏற்றல் புத்தி பேதலித்தோரது செயல்போலத் தோன்றும். புத்தி பேதலித்தோருள்ளும் தீயும், பனிக்கட்டியும் ஒன்றே யெனக் கூறுமளவிற்கு அறிவை இழந்தோர் யாரும் இருக்க மாட்டார். சரியாய் உள்ளனவற்றிற்கும் பழக்கம் காரண மாகச் சரியெனத் தோன்றுபவற்றுக்குமிடையே மட்டும்; சிலர் தமது பேதமை காரணமாக, மயக்கமடைதல் கூடுமென்க.
ஆனல் லியூகிப்போசு புலனறிவோடு இசைவுள்ளவோர் கொள் கையைத் தாம் கொண்டதாகக் கருதினர். ஆதல், அழிதல், இயக்கம், பன்மை என்பனவற்றை அவர் மறுத்தவர் அல்லர். புலனனுபவத்தின் இவ்வம்சங்கள் சரியெனவே அவர் கூறினர். அன்றியும் ஒன்று பற்றிக் கூறியவர்கள் கருதியதுபோல, வெற் றிடமின்றி இயக்கம் ஏற்படமுடியாதெனவும், வெற்றிடம் மெய்ம்மையானதல்ல வெனவும் சத்துப் பொருளின் எப் பகுதியும் மெய்ம்மை யற்றதல்ல வெனவும் அவர் ஒப்புக் கொண்டார். “ ஏனெனில் உண்மையில் சத்துப்பொருளெனப் படுவது முற்றிலும் பூரணமான வொன்ருய் இருத்தல் வேண் டும் ; ஆனல் பூரணம் ஒன்றுமட்டுமல்ல. இதற்கு எதிர்மாறக, எண்ணிறந்தனவாய் உள்ள இவை அளவிற் சிறியனவாகை யால் கண்ணுக்குப் புலப்படாமலிருக்கின்றன. அவை வெற்

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 347
றிடத்தில் இயங்குகின்றன (எனெனில் வெற்றிடமுளது) ; இவை ஒன்று சேர்வதனல் பொருள்கள் உண்டாகின்றன. இவை பிரி வதனல் பொருள்கள் அழிகின்றன’ என லியூகிப்போசு கூறினர்.
இப்பகுதியில் சேனே, மெலிசசு என்போரது பெயர்கள் தரப்படவில்லையாயினும் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் என் பதில் ஐயமில்லை. பைதாகரசவாதிகளுக் கெதிராகச் சேனே வினல் தொடுக்கப்பட்ட வாதம் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. சத்துப் பொருள் முடிவற்ற தெனக் கூறிய ஈலியவாதி மெலிசசு ஒருவரே யென்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள வொரு விடயமாகும். ஆகவே அணுவாதத்தின் தோற்றம், அதற்கும் ஈலியவாதத்துக்குமிடையேயுள்ள தொடர்பு என்பனவற்றைப் பின்வருமாறு நாம் விளக்கினல் அது அரித்தோதிலின் கூற் ருேடும் பொருந்துவதாயமையும் எனலாம். முடிவின்றிப் பிரிக் கப்படுந் தன்மை பற்றிய தனது வாதத்திற்கெதிராக அக்காலப் பன்மைவாதக் கொள்கைகளையும், குறிப்பாக பைதாகரசவாதத் தையும் நிறுவமுடியாது எனச் சேனே காட்டியிருந்தார். அனக் சகோரசுவுக்கு எதிராக மெலிசசு இதே வாதத்தை உபயோ கித்தனர். அன்றியும், பொருள்கள் பலவாயின் அவை ஒவ் வொன்றும் ஈலியவாதிகள் வருணித்த ஒன்றைப் போல விருத் தல் வேண்டும் எனும் பொருந்தாமுடிவு ஏற்படுவதையும் காட்டினர். இதற்கு லியூகிப்போசு “ என் அவ்வாறிருத்தல் இயலாது?’ எனக் கேட்பதன் மூலம் விடை பகர்கிருர். பிரிக்கப் படுந்தன்மைக்கு ஒரு வரைவு காட்டுவதன் மூலம் சேணுேவின் வாதத்தின் வலுவை ஒப்புக்கொண்ட லியூகிப்போசு, அவ்வாறு தான் பெற்ற “ அணுக்கள் ’ ஈலியவாதிகளது ஒன்றின் தன்மை கள் யாவற்றையும் பெற்றிருந்தனவெனக் கூறினர். எனெ னில் அஃது உளதாயின், இப்பண்புகள் யாவற்றையும் அது பெற்றிருத்தல் வேண்டும் எனப் பார்மனைடிசு காட்டியிருந்தார். அரித்தோதிலது பெளதிகம் எனும் நூலின் பகுதியொன்றி லும் இக்கருத்துத் தோன்றும்படி எழுதப்பட்டிருக்கிறது. அப் பகுதி பின்வருமாறு : “ சிலர் இரு நியாயங்களுக்கும் இணங்கி னர். இல்லாதனவும் மெய்ம்மையுடையனவே எனக் கூறு வதன் மூலம், இருப்பது ஒன்றேயென்னும் முதலாவது வாதத் தோடு (பார்மனைடிசு) இசைந்து கொண்டனர். பிரிக்கப்படமுடி யாத அளவுகளைத் தமது கொள்கையிற் புகுத்துவதன்மூலம் கவர்பாட்டிலிருந்து பெறப்பட்ட வாதத்தோடும் (சேனே) சமா தானம் செய்து கொண்டனர். ’ இவ்விடயத்தை இவ்வாறு நோக்குவதன் மூலம் மட்டுமே, லியூகிப்போசு, தெமோகிரித் தோசு என்போரும் பைதாகரவாதிகளும் எண்களிலிருந்தே பொருள்கள் யாவற்றையும் உண்டாக்கினர் என அரித்தோதில்

Page 182
அணுக்கள்
வெற்றிடம்
348 ஆதி கிரேக்க மெய்யியல்
வேருேரிடத்தில் கூறுவதற்கும் பொருள் காண முடிகிறது. உண்மையில் பைதாகரச மொஞட்டுகளுக்கு லியூகிப்போசு பார் மனைடிசுவின் ஒன்றன் தன்மையை அளித்தாரென்க.
174. அணு, கணிதவியற்படி பிரிக்க முடியாததல்ல என்பதை நாம் கவனித்தல் வேண்டும். எனெனில் அது பருமனுடையது. ஆளுனல் அதை உண்மையிற் செயலில் பிரித்தல் முடியாது. ஏனெனில் பார்மனைடிசுவின் ஒன்றினைப்போல அதனுள்ளே யும் வெற்றிடமெதுவும் இல்லை. எல்லா அணுக்களும் பரப் புடையன. யாவும் ஒரே தன்மையான உட்பொருளுடையன. ஆகவே பொருள்களில் உள்ள வேற்றுமைகளுக்கு அணுக்களின் வடிவத்திலும் அவற்றின் ஒழுங்கிலும் உள்ள வேற்றுமைகளே காரணமாயிருத்தல் வேண்டும். பொருள்களில் வேற்றுமைக்குக் காரணமாகும் வடிவம், நிலை, ஒழுங்கு என்பன எற்கெனவே லியூகிப்போசுவிற்குத் தெரிந்திருந்தன. எனெனில் அரித்தோ தில் இவைபற்றிக் குறிப்பிடுகையில் லியூகிப்போசுவின் பெயரை யும் குறிப்பிடுகின்ருர், அணுக்கள் “ உருக்கள்”, “உருவங் கள் ” என அழைக்கப்படுவதற்கான-இவை பைதாகரசவாதி கள் உபயோகிக்கும் வார்த்தைகளே யென்க--காரணமும் இத ஞல் விளக்கப்படுகிறதெனலாம். முன்னுரையில் (பிரிவு 7) “ புசிசு ’ எனும் கிரேக்க சொல் பற்றிக் கூறப்பட்டிருப்பதை நோக்குவோமானல், அணுக்கள் என் அவ்வாறு அழைக்கப் பட்டன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். இப்போது குறிப்பிடப்பட்ட நிலை, ஒழுங்கு, வடிவம் என்பனவற்றின் வேற் றுமைகளாலேயே “ முரண்பாடுகள் ” விளக்கப்பட்டன. அனக் சகோரசு கருதியது போல “முரண்பாடுகள் ” அணுக்களின் தொகுதிகளாகவே கருதப்பட்டன.
175. நிறைவு, வெறுமை என்பன உளவேயென லியூகிப்போசு கூறினர். இச்சொற்களை அவர் மெலிசசுவிடமிருந்து பெற்றிருக்க லாம். உடலின் இயற்கை பற்றிய விளக்கத்தைத் தருதற்கு அவர் ஈலியவாதிகளால் மறுக்கப்பட்ட வெற்றிடம் மெய்யானதே யெனக் கூறவேண்டியிருந்தது. இங்கும் அவர் பைதாகரச கொள்கையொன்றையே விருத்தி செய்கின்ருர் என்க. அலகு களைப் பிரித்து வைப்பதற்கு உதவிய வெற்றிடம் பற்றிப் பைதா கரசவாதிகள் குறிப்பிட்டிருந்தனர். ஆனல் உடலுள்ள பொரு ளென (பிரிவு 107) எம்பிடோக்கிளிசுவினல் நிரூபிக்கப்பட்ட காற்றுக்கும் (பிரிவு 53) வெற்றிடத்திற்குமிடையேயுள்ள வேற்
1. எபிகூரியவாதிகள் இவ்விடயத்தைத் தவருக விளங்கியிருத்தல் வேண்
டும்; அல்லது தமது திறனைப் பெரிதாகக் காட்டும் நோக்கத்துடன் வேண்டு மென்றே இதைத் தவருக எடுத்துக்கூறியிருக்க வேண்டும்.

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 349
றுமையைப் பைதாகரசவாதிகள் அறிந்திலர் எனலாம். பார் மனைடிசு வெளி பற்றித் தெளிவாக அறிந்திருந்தாராயினும், அதன் மெய்ம்மையை அவர் மறுத்தனரென்க. லியூகிப்போசு இதிலிருந்தே ஆரம்பித்தார். வெற்றிடம் சத்துப்பொருளல்ல வென, அதாவது உடலுள்ள பொருளல்லவென, அவர் ஒப்புக் கொண்டார். ஆனல் அது உளதேயென அவர் கூறினர். ஆனல் தமது கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறுதற்கு அவருக்குச் சொற்களே கிடைக்கவில்லையெனலாம். ஏனெனில் “இருத் தல் ’ எனும் சொல் அதுவரை மெய்யியல் வாதிகளால் உடல் பற்றிக் கூறுவதற்கே உபயோகிக்கப்பட்டது. ஆனல் “ இல் பொருளும்’ (பழைய உடலுள்ளபொருள் பற்றிய சொன்முறை யில்) “ உள்பொருள் ’ எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறு இருக்கிறது எனக் கூறுவதன் மூலம் தனது கருத்தை இயன் றவரை வெளிப்படுத்த முயன்றர். வெற்றிடமும் உடலைப் போல மெய்ம்மையுடையதே.
176. தெமோகிரித்தோசுவின் அண்டவியலிலிருந்து வழக்க மாக அதனின் வேருனதன்று என எண்ணப்படும் லியூகிப்போக வின் அண்டவியலைப் பிரித்துக் காண்டல் இலகுவான காரியமல்ல வெனவே தோன்றும். ஆனல் இந்நிலையே நாம் முக்கியமான வோர் விடயத்தை உணர்வதற்குக் காரணமாகிறது. தியோ பிறகத்தோசுவுக்குப் பிந்திய எவராலும் இவர்களது கொள் கைகளைப் பிரித்தறிய முடியவில்லை. ஆகவே லியூகிப்போக பற்றிப் பிந்திய எழுத்தாளர்கள் தரும் திட்டவட்டமான கருத் துக்கள் யாவும் தியோபிறகத்தோசுவிடமிருந்தே பெறப்பட்டி ருக்க வேண்டும். நாம் இக்கருத்தின் வழியே செல்வோமானல் லியூகிப்போசுவின் அண்டவியற் கொள்கை பற்றித் தெளிவாக அறிந்து கொள்வது சாத்தியமாகும். அன்றியும் தெமோ கிரித்தோசுவினல் எற்றுக்கொள்ளப்படாத, லியூகிப்போசுவிற்கே உரித்தான சில கருத்துக்களையும் நாம் அறிதல் சாத்திய LrofTa5@i)FTLfb.
இடையோசினிசுவினல் தொகுக்கப்பட்ட பகுதிகளிற் பூரண மானதுவும், தியோபிறகத்தோசுவின் சுருக்கவுரையொன்றிலி ருந்து பெறப்படுவதுமானவோர் பகுதி பின்வருமாறு :
“ எல்லாம் என்பது முடிவற்றதெனவும், அதன் ஒருபகுதி நிறைவாயிருக்கிறதெனவும், மற்றப்பகுதி வெறுமையாயிருக்கிற
1. இப்பகுதி லியூகிப்போசுவைப் பற்றி மட்டுமே கூறுகின்றது. தெமோ கிரித்தோசுவைப் பற்றியோ அல்லது “ லியூகிப்போசுவையும் தெமோகிரித் தோசுவையும் ” பற்றியோ இங்கு கூறப்படவில்லை. சுருக்கமான தொகுப்பு நூல்களுக்கும் விரிவான தொகுப்பு நூல்களுக்குமிடையேயுள்ள வேறுபாட்டிற்கு ஆதாரங்கள் பற்றிய குறிப்பின் 15 ஆம் பிரிவைப் பார்க்க.
அண்டவியல்

Page 183
350 ஆதி கிரேக்க மெய்யியல்
தெனவும் அவர் கூறுகின்றர். இவையே (வெறுமையும், நிறைவும்) மூலகங்கள் என அவர் கூறுகிருர், எண்ணிறந்த உலகங்கள் இவற்றிலிருந்து உண்டாகி, பின்னர் இவையாகப் பிரிகின்றன. இவ்வாறே உலகங்கள் உண்டாகின்றன. * முடி வற்றதிலிருந்து துண்டிக்கப்படும் செயன்முறை ’ யொன்றினல் பலவகை உருவங்களையுடைய அநேக உடல்கள் “ விசாலித்த வோர் வெற்றிட ”த்திற்கிட்டுச் செல்லப்பட்டு ஆங்கோர் தனிச் சுழிப்பேற்படும் வகையில் ஒன்று சேர்க்கப்பட்டன. அங்கு அவை ஒன்றேடொன்று முட்டியும், எல்லாத்திசைகளிலும் சுழற்றப்பட்டும் செல்கையில் ஒரே தன்மையுடையவை யாவும் பிரிந்து, தம் இனத்தவையோடு சேர்ந்து கொண்டன. ஆனல் அவை தமது மிகையான தொகை காரணமாகத் தொடர்ந்து சமநிலையிற் சுழல முடியாதிருந்தமையால், அவற்றுள் நுண் ணியனவாய் இருந்தவை யாவும் அரிதட்டினூடாகச் செலுத்தப் பட்டவை போன்று, வெளியுள்ள வெற்றிடத்திற்குச் சென்றன. எனையவை அங்கேயே தங்கி நின்று, தம்முள்ளே, ஒன்றே டொன்றகச் சிக்குண்டு, ஒன்ருகக் கீழ் நோக்கி ஓடி, முதலாவது கோள அமைப்பை உண்டாக்கின. இது தன்னுள்ளே பல வகையான உடல்களை அடக்கிய ஒரு தோல் அல்லது சவ்வு போன்ற பொருளாயிருந்தது. மத்தியிலிருந்த தடைச்சத்தி காரணமாக இப்பொருள்கள் ஓர் சுழிப்பாகச் சென்றனவாகை யால், ஒன்றேடொன்று முட்டியவாறு இப்பொருள்கள் செல் கையில், அச்சுழிப்பிற்பட்டு, சூழவிருந்த சவ்வு மெல்லியதா யிற்று. இவ்வாறு பூமி உண்டாயிற்று. மத்தியை நோக்கி இட்டுச் செல்லப்பட்ட பொருள்கள் அங்கேயே தங்கின. வெளி யிலிருந்து மேலும் பொருள்கள் பிரிந்ததன் மூலம், இப் பொருள்களை அடக்கிய சவ்வு அதிகமாயிற்று. அதுவும் சுழிப்பிற் கொண்டு செல்லப்பட்டதாதலால், தன்னேடு முட்டிய யாவற் றையும் தன்னுள்ளே சேர்த்துக்கொண்டது. இவற்றுட் சில சிக்குண்டு ஓர் அமைப்பைத் தோற்றுவித்தன. இவ்வமைப்பு முதலில் ஈரலிப்பும் சேற்றின் இயல்புமுடையதாய் இருந்தது ; ஆனல் இது காய்ந்து முழுச்சுழிப்பினேடும் சுழல்கையில், தீப்பிடித்து, உடுக்களின் உட்பொருளாயிற்று. சூரியனின் வட்டம் யாவற்றிற்கும் வெளியே உள்ளது. சந்திரனது வட்டம் பூமிக்கு மிகவும் அண்மையில் உள்ளது. எனையவற்றின் வட்டங்கள் இவையிரண்டிற்குமிடையே உள்ளன. வானசோதி கள் யாவும் அவற்றின் வேகமான இயக்கம் காரணமாகவே தீப்பற்றிக் கொள்கின்றன; சூரியன் உடுக்களினலும் தீயூட்டப் படுகின்றது. ஆனல் சந்திரனுக்கு மிகச் சிறிதளவான தீயே கிடைக்கின்றது. பூமி தெற்கு நோக்கிச் சாய்ந்திருப்பதனல்

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 351
சூரியனும் சந்திரனும் கிரகணமடைகின்றன. . . . . . . . . . (இராசியின் சாய்வு நிலையும் எற்படுகின்றது); மேலும் அதன் வடபகுதிகள் எப்போதும் மழைப்பனியுடையனவாயும் குளிரு டையனவாயும், உறைந்தும் உள்ளன. சூரியன் மிக அரிதாக வும், சந்திரன் அடிக்கடியும் கிரகணமடைவதற்குக் காரணம் அவற்றின் வட்டங்கள் சம அளவினவாய் இல்லாதிருப்பதே. உலக ஆக்கங்கள் பல எற்படுவது போலவே , வளர்ச்சிகளும், தேய்வுகளும், அழிவுகளும் பலமுறை ஏற்படுகின்றன. விலக்க முடியாத ஓர் நியதியின்படியே இவை ஏற்படுகின்றன. இந் நியதியின் இயற்கை பற்றி அவர் தெளிவாக எதுவும் கூற வில்லை. ’
இப்பகுதி, பெருமளவிற்குத் தியோபிறகத்தோசுவிடமிருந்து பெறப்பட்டதாதலால், லியூகிப்போசுவின் அண்டவியலுக்குச் சிறந் தவோர் ஆதாரமாகின்றதெனலாம். பேரண்டவியல் எனும் நூலிலுள்ள சில எபிகூரிய பகுதிகளினலும் இப்பகுதி உறுதிப் படுத்தப்படுகிறது. ஆனல் அப்பகுதிகளில் அவரது கொள்கை கள் எபிகூரிய கண்ணுேட்டத்திற்கேற்ப ஓரளவுக்குத் திரிபடைந் திருப்பதால், மிகுந்த கவனத்துடனேயே அவை கையாளப் படல் வேண்டும்.
177. லியூகிப்போசுவின் அண்டவியலை நோக்குகையில் எமக் அயோனிய குத்தோன்றுவது யாதெனில், பிந்திய பைதாகரசவாதிகளின் அண்ட சிந்தனைகளின் மூலம் உலகம் பற்றிய பொதுவான @ಹಳ್ಲಬಹTC களில் எற்பட்டிருந்த வளர்ச்சியை அவர் அறிந்திருக்கவில்லை, ಸ್ತ್ಲಲ್ಲಿ
துள்ளார் என்பதேயாகும். தமது பெளதிகக் கொள்கையில் அவர் எவ்வளவு துணிவுள்ளவராயிருந்தாரோ, அவ்வளவுக்குத் தமது விரிவான அண்டவியற் கொள்கையில் பிற்போக்குடைய வராயிருந்தார். அவரது அண்டவியலை வாசிக்கையில், இடை யிடையே எம்பிடோக்கிளிசு, அனக்சகோரசு ஆகியோரது கொள் கைகளின் சாயைகள் புலப்பட்டாலும், பொதுவாக அனக்சி மினிசு, அனக்சிமாந்தர் ஆகியோரது சிந்தனைகளையே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்ச்சியேற்படுகிறது. இதற்குக் காரண மென்னவெனக் காண்டல் அரிதல்ல. லியூகிப்போசு தமது ஈலிய ஆசிரியர்களிடமிருந்து ஓர் அண்டவியற் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பவில்லை. அன்றியும், பார்மனைடிசுவின் சத்துப் பொருட் கொள்கையை மறுக்காமலே, தானேர் அண்ட வியலை அமைக்க முடியும் என அவர் கண்டபோதுங் கூட, பழைய அயோனிய கொள்கைகளையே நாடவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கேற்பட்டது. இதன் விளைவு மிகவும் பாதகமானதாக அமைந்தது. தெமோகிரித்தோசுவின் வானியல் இன்னமும்

Page 184
நித்தியமான இயக்கம்
352 ஆதி கிரேக்க மெய்யியல்
சிறுபிள்ளைத்தனமானதாகவே அமைந்திருந்தது. பூமி தட்டை யான தெனவும், காற்றினல் தாங்கப்பட்டுக்கொண்டிருந்ததென வும் அவர் நம்பினர்.
* அயோனிய உடலியலாளர்களால் வளர்க்கப்பட்ட பழைய அயோனிய சடப்பொருட் கொள்கையென்னும் மரத்திற் பழுத்த பழமே அணுவாதம்” எனும் கொம்பர்சுவின் கூற்று ஒப்புக் கொள்ளக் கூடிய வொன்றவது இக்காரணத்தினலேயே.1 லியூ இப்போசுவின் விரிவான அண்டவியல் இத்தகையவோர் பழமே என்பதில் ஐயமில்லை. அது மிதமிஞ்சிப் பழுத்தவோர் பழமெ னவும் கூறலாம். ஆனல் லியூகிப்போசுவின் "திறமையை உண்மையில் எடுத்துக்காட்டுவதான அணுவாதக் கொள்கை முற்ருக ஈலியவாதத்தின் அடிப்படையிலிருந்து தோன்றிய வொன்றே. ஆயினும் இவ்வண்டவியலையும் ஆராய்தல் நமக் குப் பயனுடையதாயிருக்கும் ; இத்தகைய ஆராய்ச்சியின்மூலம், இவ்வண்டவியலை எழுவதற்குக் காரணமாயிருந்த வரலாற்று வளர்ச்சியின் உண்மையியல்பை அறிந்துகொள்வதும் சாத்திய மாகிறதாதலின்.
178. அணுக்கள் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பன வென லியூகிப்போசு கூறினர். அரித்தோதில் இதைத் தனது வார்த்தைகளிற் கூறுகிருர்: “அணுவாதிகள் ‘சோம்பற்றனமாக" இவ்வியக்கத்தின் காரணமென்னவென விளக்காது விட்டது டன், இது எத்தகைய இயக்கம் எனக் கூறவும் மறந்தனர் ” என அவர் கூறுகிறர். அதாவது அவற்றின் இயக்கம், “ இயல்பான இயக்க ”மோ அல்லது அவற்றின் “இயற்கைக்கு மாறக ” அவற்றிற்கு அளிக்கப்பட்டதோ என முடிவு செய்யப்படவில்லை யென்க. அணுக்களின் இயக்கம் *தானகவே எற்படுவதென ” அவர்கள் கூறினரெனவும் அரித்தோதில் கூறினர். அரித் தோதில் இவ்வாறு கூறியமை, அணுக்களின் இயக்கம் தற் செயலாக நிகழ்வது என அணுவாதிகள் கூறினரெனச் சிலர் தவருகக் கருதுவதற்குக் காரணமாயிற்று. ஆனல் அரித் தோதில் உண்மையில் அவ்வாறு கூறவில்லை. மூலகங்களின் இயக்கத்தைத் தான் விளக்கிய எவ்வழியிலும், அணுவாதிகள் அணுக்களின் இயக்கத்தை விளக்க முயலவில்லை என்பதே அவர் கூறியதாகும். அவற்றின் இயக்கம் விண்ணில் நடை பெறுவது போன்ற வட்டவியக்கமெனவோ, சந்திரனுக்குக் கீழே யுள்ள மண்டலங்களில் நடைபெறுவது போன்ற நேர்க்கோட்டி யக்கமெனவோ அவர்கள் கூறவில்லை. பாரம் கூடிய பொருள் கள் மேல்நோக்கிச் செல்கின்றனவெனவும் பாரமற்ற பொருள்
Gomperz, Greek Thinkers, Vol. i. p. 323.

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 353
கள் கீழ் நோக்கிச் செல்கின்றனவெனவும் கூறுவது போன்ற, தம்மியல்புக்கு முரணன நிர்ப்பந்த இயக்கமே இவ்வணுக்க ளுடையது எனவும் அவர்கள் கூறவில்லை. லியூகிப்போசு எழுதியவற்றுள் எமக்குக் கிடைத்துள்ள ஒரே யொரு பகுதி தற்செயற் சம்பவங்களை மறுப்பதேயாகும். “ காரணமின்றி எதுவுமே நடைபெறுவதில்லை ; யாவும் காரணத்தோடும் விலக்கமுடியாத நியதியுடனும் நடைபெறுகின்றன” என அவர் கூறினர்.
வரலாற்று ரீதியாகக் கூறுவதானல், எம்பிடோக்கிளிசு, அனக் சகோரசு என்போர் கருதியது போல, இயக்கத்தை ஆரம்பிப் பதற்கு விசையெதுவும் அவசியமென லியூகிப்போசு கருதவில்லை எனல் வேண்டும். காதலும் பூசலும், மனமும் வேண்டுமென அவர் எண்ணவில்லை. அதற்கான காரணம் வெளிப்படையென்க. எம்பிடோக்கிளிசு, அனக்சகோரசு என்போர் பன்மை, இயக்கம் என்பனவற்றை விளக்க முயன்றது உண்மையேயாயினும், பார்மனைடிசுவின் ஒன்று பற்றிய கொள்கையிலிருந்து லியூகிப் போசு வேறுபட்ட அளவிற்கு அவர்கள் வேறுபடவில்லை. “ மூல கங்கள் ” அல்லது “ விதைகள்’ என்பன “ யாவும் ஒன்று சேர்ந்து ’ கலந்திருக்கும் நிலையிலேயே அவர்கள் இருவரினதும் ஆரம்ப சடப்பொருள் இருந்ததாகையால், அவ்வொருமையைப் பிரித்தற்கு அவர்கள் யாதேனும் ஒருவிசையைக் கற்பிக்க வேண் டியிருந்தது. பார்மனடிசுவின் ஒன்றைப் போன்றனவெனக் கூறக்கூடிய எண்ணிறந்த அணுக்களுடன் லியூகிப்போசு ஆரம் பித்தாராகையால் அவற்றைப் பிரித்தற்கு வேற்று விசையெது வும் கற்பிக்க வேண்டிய அவசியம் அவருக்கு எற்படவில்லை. அவர் செய்யவேண்டி யிருந்ததெல்லாம் இதற்கு முற்றிலும் எதிர்மாறனவொன்றே. அவை எவ்வாறு ஒன்றுசேர்ந்தன வெனவே அவர் விளக்க வேண்டியிருந்தது. இயக்கத்திற்கு விளக்கம் எதுவும் வேண்டியதில்லை எனும் பழைய கருத்தைத் தழுவுவதில் சிரமமும் இருக்கவில்லை."
இக்கொள்கையின் இயல்பிலிருந்தும், அரித்தோதிலின் விமரிச னத்திலிருந்தும் நாம் பெறக்கூடிய கருத்து இதுவே யெனத் தோன்றுகிறது. ஆனல், அணுக்களின் மூலவியக்கம் எபிகூரசு வின் கொள்கையிலுள்ளதுபோல, முடிவற்ற வெளியினூடான வோர் வீழ்ச்சியே யென்னும் செல்லரது கருத்தோடு இது பொருந்துவதாயில்லை. ஆனல் செல்லரது கருத்து, அணுக்கள் நிறையுள்ளன-நிறையென்பது பொருள்கள் கீழ் நோக்கி விழும் இயல்பே-என்னும் கருத்துக்களிலேயே தங்கியுள்ளது. ஆகவே
1* (p6ö76gJ6MT. Síî6y VIII.

Page 185
அணுக்களின்
354 ஆதி கிரேக்க மெய்யியல்
நாம் அணுக்கள் நிறையுடையனவாவெனவும் அவ்வாறெனின் என்ன பொருளில் அணுக்கள் நிறையுடையவை எனக் கூறலா மெனவும் ஆராய்தல் வேண்டும்.
179. அணுக்கள் இயல்பாக நிறை மிகுந்தவை யெனவும் அவை முடிவற்ற வெளியினூடாக, முடிவற்று வீழ்ந்து கொண்டி ருந்தன வெனவும் எபிகூரசு கூறினரென்பதை யாவரும் அறி வர். ஆனல், அணுவாதிகளது மூலக்கொள்கைகளுடன், எபிகூரசு தான் சேர்த்த கருத்தே அணுக்களின் “ இயல்பான நிறை ” பற்றிய கொள்கை என்பதே இம்மரபு பற்றிய பரம்பரை வரலாறகும். தெமோகிரித்தோசு அணுக்களுக்கு உரு, பருமன் எனும் இருபண்புகளே உளவெனக் கூறினரெனவும் எபிகூரசு நிறையெனும் மூன்ருவது பண்பொன்றையும் சேர்த்தனர் என வும் கூறப்படுகிறது. ஆனல் அரித்தோதிலோ அணுக்கள் ஒவ் வொன்றும், மற்றையதைவிட எவ்வளவு பெரியதாக விருந்ததோ அதற்கேற்ற விகிதப்படி நிறையிற் கூடியதாக வுமிருந்ததெனத் தெமோகிரித்தோசு கருதினரெனத் திட்டவட்ட மாகக் கூறுகிறர். தெமோகிரித்தோசு அணுக்கள் தமது பருமனுக்கேற்ற நிறையுடையனவாயிருந்தன வெனக் கருதின ரெனும் தியோபிறகத்தோசுவின் கூற்று இதை விளக்குவதாய மைந்துள்ளது. ஆயினும் நிறை, பருமனைப் போல அணுக்களின் முதற்பண்புகளுளொன்ருய்க் கருதப்படவில்லை.
நிறைபற்றிய கிரேக்க கருத்துக்களின் வரலாற்றை இங்கே சுருக்கமாகவேனும் குறிப்பிடாது, தோற்றரவான இம்முரண் பாட்டை விளக்குதல் சாத்தியமில்லை. பாரமின்மை, நிறை யென்பனவும் உடலின் பண்புகள் என்பதும் அப்பண்புகள் முதன்முதலில் அறியப்பட்டபோதே உணரப்பட்டிருத்தல் வேண் டும் என்பதும் வெளிப்படை பாரமான பொருள்களை உயர்த்த வேண்டிய நிலையிலிருந்த மனிதன், தெளிவற்ற முறையிலா யினும், இப்பண்புகளை இனங்கண்டு கொண்டிருப்பான். நிறை, பாரமின்மை என்பன உடலிலுள்ள பொருள்கள் எனக் கருதப் பட்டிருக்கலாம். ஆனல் முதலிலிருந்தே ஆதி கிரேக்க மெய் யியல், இக்கருத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருந் தது என்பது குறிப்பிடத்தக்கவொன்றகும். உதாரணமாக சூடு குளிர் என்பன “ பொருள்கள்’ என அழைக்கப்பட்டவாறு நிறை ஒருபோதும் ஒரு பொருளென அழைக்கப்படவில்லை. மேலும் நாம் இதுவரை படித்த மெய்யியலாளர்களில் ஒருவ ராயினும் நிறையெனும் பண்பை விளக்குதல் அவசியமெனவோ அல்ல்து அதைப்பற்றி எதுவும் கூறவேண்டுமெனவோ எண்ண வில்லை யென்பதையும் கண்டோம். பொதுவாக வழங்கும்

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 355
கருத்துக்களின்படி நிறையினியல்புகளெனக் கொள்ளப்பட்ட இயக்கம், தடை என்பனவும் பிறவழிகளாலேயே விளக்கப்பட் டன. தனக்கு முந்திய சிந்தனையாளருள் எவரும் தனிநிறை, பாரமின்மை என்பவற்றைப் பற்றி எதுவுமே கூறவில்லையென அரித்தோதில் திட்டவட்டமாகக் கூறுகிறர். ஒன்றேடொன்று ஒப்பிடப்படும்போது தோன்றும் பாரம், பாரமின்மை என்பன பற்றியே அவர்கள் ஆராய்ந்தனர்.
பிளேட்டோவின் திமாயசுவிலேயே, நிறை, பாரமின்மை என் பனவற்றை இவ்வாறு விளக்கும் முறை முதன்முறையாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. “ மேல் ”, “கீழ் ” என எதுவும் உலகிலில்லை என அங்கு கூறப்படுகிறது, உலகத்தின் மத்தி, * மத்தியில் ” உள்ளதேயொழிய * கீழே ” யிருக்கவில்லை. பரிதி யிலுள்ள எந்தப் புள்ளியாவது மேலே இருக்கிறது எனவோ அல் லது கீழே இருக்கிறது எனவோ கூறுவதற்கு எவ்வகை நியாய முமில்லை. பொருள்கள் தமது இனத்தை நோக்கிச் செல்லும் இயல்பே விழுகின்ற பொருளைப் பாரமானதெனவும், அது விழுமிடத்தைக் “கீழே ’ எனவும் நாம் கூறக் காரணமாயிருக் கிறது. இங்கு பிளேட்டோ தருவது கிட்டத்தட்ட அவரது முன் னேடிகளால் எற்கப்பட்ட கருத்தேயாகும். அரித்தோதிலின் காலம் வரைக்கும் இக்கொள்கை பற்றி ஒருவரும் எவ்வகை ஐயமுமெழுப்பவில்லை யெனலாம். அரித்தோதில் விண்ணி னது பரிதி “ மேலே ” யெனவும் உலகின் மத்தி * கீழே ” யெனவும் கூறினர். இவ்வாறு அவர் கருதியதற்கான காரணங் களை நாம் இங்கு ஆராய வேண்டியதில்லை. மேலும் இவற்றிற் கிடையே மூலகங்களது நேர்க்கோட்டியக்கம் சாத்தியமாகும் பொருட்டு, மூலகங்களுக்கு இயல்பான நிறையும், பாரமின்மை யும் உண்டெனவும் கூறினர். ஆயினும் விண்ணிற்கு இயல் பான நிறையில்லை யெனவும், உலகம் ஒன்றேயுளதெனவும் அரித்தோதில் கருதினராகையால், மேற் கூறிய அவரது பிற் போக்கான கொள்கை அவரது அண்டவியற்கொள்கையைப் பெரு மளவுக்கு மாற்றவில்லை யெனலாம் ; எயிகூரசு தனது முடி வற்ற வெற்றிடம் பற்றிய கொள்கையோடு இதை இணைத்த
1. நிறையென்பதற்கு, பொருள்கள் கீழ் நோக்கி இயங்குவதற்குக் காரண மான பண்பென எண்ணினரேயொழிய ஆதிகாலத்து அதற்கு வேறெவ்வகைப் பொருளும் கொள்ளப்படவில்லையெனச் செல்லர் கூறுகின்றர் ; ஆனல் சடப் பொருள் முழுவதும் கோளம் ஒன்றினுள்ளேயே அடங்கியிருந்தது எனக் கருதிய வர்கள் " மேலே ” என்பது பரிதியெனவும் “கீழே” யென்பது மத்தியெனவும் கருதினராம். நிறை பற்றிய இத்தகைய கருத்தெதுவும் முந்திய மெய்யியலாளர் எவரது பகுதியிலும் காணப்படவில்லை ; அவர்கள் இவ்வாறு கருதியதாக வேறெங்கும் கூறப்படவுமில்லை. பிளேட்டோவும் அவர்கள் இத்தகைய கொள் கையை உடையோராயிருந்தனர் என்பதை முற்றக மறுக்கின்றர்.

Page 186
356 ஆதி கிரேக்க மெய்யியல்
போதுதான், இக்கொள்கையின் உண்மையான பண்பு வெளிப் பட்டதெனலாம். அரித்தோதிலிய கருத்தொன்று அதற்குச் சற்றேனும் பொருத்தமில்லாத கொள்கையொன்றேடு பலவந்த மாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்பதன் மூலமே, எபிகூரிய அணுவாதத்தின் சிக்கலை விளக்கலாம் என எனக்குத் தோன்று கிறது. எபிகூரசுவின் கொள்கை, முந்திய மெய்யியலாளர்களின் சிந்தனைகளிற் காணப்படும் கருத்துக்களிலிருந்து முற்றக வேறு பட்டதாகவுள்ளது. 冷
இதை நோக்குகையில், அணுக்கள் சுழிப்பில் உள்ளபோதே நிறை, பாரமின்மை எனும் பண்புகளை அடைகின்றன என உடனடியாக எமக்குத் தோன்றுகிறது. அன்றியும் நிறை, பார மின்மை என்பன மேலும் பிரித்தறியப்படக்கூடிய நேர்வு களுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களே. ஒத்த தன்மையுடைய அணுக்கள் தமது இனத்தவையோடு சேர்க்கப்படுதல் சுழிப்பின் விளைவுகளில் ஒன்றென லியூகிப்போசு கருதினரெனவும் நாம் அறிவோம். இங்கு குறிப்பிடப்படும் “ஒத்த தன்மை” வேறு வகையானதெனினும், எம்பிடோக்கிளிசுவின் சிந்தனையின் செல் வாக்கு இங்கு காணப்படுகிறதெனலாம். அணுக்களில் நுண் ணியவை பரிதியை நோக்கிச் செலுத்தப்படுகின்றன ; பெரிய அணுக்கள் மத்தியை நோக்கிச் செல்கின்றன. பெரிய அணுக் கள் பாரமானவை யெனவும், நுண்ணிய அணுக்கள் பாரங் குறைந்தன வெனவும் நாம் கூறினேமேயானல் அது தியோ பிறகத்தோசு, அரித்தோதில் என்போர் கூறும் யாவற்றையும் நன்கு விளக்குவதாய் அமையும். சுழிப்புக்கு வெளியேயுள்ள அணுக்கள் பாரமானவை எனவோ அல்லது பாரங்குறைந்தவை யெனவோ திட்டவட்டமாகக் கூறப்படும் பகுதியெதுவும் இல்லை யாதலால், நாம் இவ்வாறு விளக்குவது பொருத்தமே.1
நாம் முன்பு மேற்கோளாகத் தந்துள்ள அணுவாத அண்ட வியலில், இக்கருத்து குறிப்பிடத்தக்க வகையில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளதெனலாம்.? “ தமது தொகை காரணமாக இவ் வணுக்கள் தொடர்ந்து சமநிலையிற் சுழல்வது சாத்தியமாகாது போனமையாலேயே’ சிறுவணுக்களும் பெரியவணுக்களும் பிரிய நேரிட்டதென அங்கே கூறப்பட்டது. இதிலிருந்து இவை முன்னர்
* டைரோபு என்பாரது பிரதான கருத்தும் இதுவே போலத் தோன்று கிறது. ஆயினும் பாரமின்மை, நிறையென்பன பூமியின் அணுக்கள் பற்றியே கூறப்பிட்டன என்று கொள்வதை நான் ஏற்றுக்கொள்ள விரும்பேன். “பூமி” என்பதற்குப் பதிலாக “உலகம்” என நாம் கொண்டோமாயின் நாம் உண்மையை உணரும் வாய்ப்பு அதிகரிக்கும் எனலாம்.
* 349-50 ஆம் பக்கங்கள் பார்க்க.

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 357
* சமநிலை ’யிலிருந்தன வென்பது பெறப்படும். இங்கு உய யோகிக்கப்பட்டிருக்கும் கிரேக்க பதமும் நிறையற்றவோர் நிலையை வருணிப்பதாகக் கொள்ளப்படலாமேயன்றி, இரு முரண்பட்ட நிறைகள் ஒன்றையொன்று சமப்படுத்தும் நிலையைக் குறிப்ப தாகக் கொள்ள முடியாதென்க.
உலக தோற்றத்துக்கு முந்தியவையும், உலகிற்குப் புறம் பானவையுமான அணுக்களின் “ நித்திய இயக்கம் 'அவற்றின் நிறை காரணமாக ஏற்பட்டதென நாம் கருதாவிடின், அவ் வியக்கத்தை ஓர் வீழ்ச்சியெனவும் நாம் கருத வேண்டிய தில்லையெனலாம். உண்மையில் நாம் ஆதாரமாகக் கொள்ளும் ஆசிரியர்கள் எவரும் அவ்வியக்கத்தை அவ்வாறு வருணிக்க வில்லை. அது எத்தகைய இயக்கம் எனவும் அவர்கள் எவ்வழியி லும் எமக்குக் கூறவில்லை. அஃது இப்படியும் அப்படியுமான வோர் ஒழுங்கற்ற இயக்கமேயெனக் கூறுவதே உத்திபோலத் தோன்றுகிறது. ஆன்மாவில் இன்னமும் எஞ்சியுள்ள அணுக்க ளின் மூல வியக்கத்தை விளக்கும் பொருட்டே ஆன்மாவின் அணுக்களின் இயக்கம், பலகணிக்கூடாக வரும் சூரிய கிரகணங் களிலுள்ள தூசுத்துகள்களுக்கு ஒப்பிடப்பட்டிருக்கலாமென்பது எற்றுக்கொள்ளப்படக்கூடிய வோர் கருத்தே. இவ்வுவமை தெமோகிரித்தோசுவினுடைய தென அரித்தோதில் கூறுகிறர். பைதாகரசவாதிகளும் இவ்வுவமையை உபயோகித்தனரென்பது இக்கருத்தை மேலும் வலுப்படுத்துகிறதெனலாம் ; எனெனில் பைதாகரச மொனட்டுகளுக்கும் அணுக்களுக்குமிடையே உண் மையான தொடர்பிருந்த தென்பதை நாம் கண்டுள்ளோம். இவ்வுவமையில் ஒப்பாகவுள்ள விடயம் சூரியனது கிரகணத்தி லுள்ள தூசுத்துகள்கள் காற்றில்லாதபோதும் இயங்குகின்றன வென்பதே யென்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனலேயே
1. பிரிகர், லீப்மன் என்போர், தனித்தனியே இக்கருத்தை வலியுறுத்தின ராயினும், நிறை அணுவின் மூலப்பண்புகளிலொன்று எனக் கூறுவதன்மூலம் இவர்களிருவருமே தமது வாதத்தின் வலிமையைக் குறைத்துக் கொண்டன ரென்க. அணுக்களின் நிறையே அவற்றின் மூலவியக்கத்தின் காரணமென்பதைப் பிரிகர் மறுத்தார். அணுக்களினது நிறை, சுழிப்பில் இருக்கையில் மறைவாகவே உளதெனவும் அணுக்கள் உலகிலிருக்கையிலேயே அது வெளிப்படுகின்ற தெனவும் லீப்மன் கூறினர். ஆணுல் மறைவிலிருக்கையில் செயற்படாதிருக்கும் இந்நிறை அந்நிலையில் இல்லாதிருக்கின்றதெனக் கூறுவதே பொருத்தமு டைத்து. அணுக்கள் நிறையுள்ளவையானல், அவை வீழ்தல் வேண்டுமெனப் பிரிகர், லீப்மன் என்போருக்கெதிராக, செல்லர் சரியாக வாதித்தார். ஆனல் நான் அவர்களது கொள்கையை எடுத்துக் கூறியிருப்பது போலக் கூறினல், செல்லரது வாதங்கள் அக்கொள்கையை எவ்வகையிலும் பாதிக்கமாட்டாவென எனக்குத் தோன்றுகிறது. கொம்பர்சுவும் பிரிகர்-லீப்மன் விளக்கத்தையே எற்றுக்கொண்டார்.

Page 187
சுழிப்பு
358 ஆதி கிரேக்க மெய்யியல்
அணுக்களில் மோதுகை மூலமாக ஏற்படுவதைவிட, இயல்பாக எற்படும் இயக்கத்தை விளக்குதற்கு இதுவோர் சிறந்த உவமை யாகிறது.
180. இவ்விளைவுகள் யாவற்றிற்கும் காரணமான சுழிப்பைப் பற்றி நாம் யாது கூறலாம் ? இச்சுழிப்பின் விளைவுகள் * பெளதிக நியதிகளுக்கேற்ப உண்டாகவேண்டிய விளைவுகளுக்கு நேர் எதிரான தன்மையுடையனவாயுள்ளன ‘ வெனக் கொம் பர்சு கூறுகின்றர் ; ஏனெனில் “ ஒவ்வொரு மையநீக்கப் பொறியும் எமக்குக் காட்டுவது போல உண்மையில் மிகுந்த தூரத்துக்குச் செலுத்தப்படுவன பாரம் கூடிய பொருள்களே”, எம்பிடோக்கிளிசுவிற்கும் அனக்சகோரவிற்கும் தெரிந்திருந்த இவ்வுண்மையை லியூகிப்போசு அறிந்திருக்கவில்லை யென நாம் கொள்ளுவதா ? சுழிப்பின் மூலம், பூமி உலகின் மத்தியில் இருப்பதற்கு விளக்கம் தர முயன்றவர்கள் யாவரும், காற்றிலும், நீரிலும் எற்படும் சுழிகளையே தமது கொள்கைக்கு ஆதாரமான உதாரணங்களாகக் கொண்டனர் என நாம் அரித் தோதிலின் மூலம் அறிகிருேம். இதிலிருந்து பெறப்பட்டவோர் தவறன பொதுமையாக்கமே, இக்கொள்கை முழுவதும் என் பது கொம்பர்சுவின் கருத்து. ஆனல் இவ்விடயத்தை நாம் கூர்ந்து கவனிப்போமானல், இங்கு எவ்வித தவறும் எற்பட வில்லை யென்பதைக் காண்போம் என்பது எனது எண்ணம்,
சுழிப்பின் எல்லாப் பகுதிகளும் ஒன்றையொன்று தொட்ட வாறுள்ளன வென்பதையும், இத்தொடுகை மூலமாகவே வெளிப்புறமுள்ள பொருள்களின் இயக்கம், அவற்றினுள்ளே யுள்ளவற்றை அடைகிறதென்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளல் வேண்டும். பெரிய உடல்கள், இவ்வாறு தம்மை அடையும் இயக்கத்தை, சிறிய உடல்களிலும் பார்க்க நன்ருகத் தாங்கிக் கொள்ளக்கூடியனவாக உள்ளன. இவ்வழியாக அவை இயக்கம் மிகக் குறைவாயுள்ள மத்திய பகுதியை அடைந்து சிறிய உடல்களை வெளியேற்றி விடுகின்றன. இவ்வாறு இயக் கத்தை எதிர்த்துத் தாங்கக்கூடிய ஆற்றல் பற்றிய கருத்து, சுழிப்பின் மத்திக்கு அண்மையில் உள்ள பொருள் சேய்மை யிலுள்ளனவற்றிலும் மெதுவாகவே சுழல்கிறது எனும் அணு வாதக் கருத்தோடும் பொருந்துவதாயுள்ளது. நாம் எற் கெனவே பார்த்ததுபோல, இவ்விடயத்தையே அனக்சிமாந் தர் கவனிக்கத் தவறிவிட்டார் போலத் தோன்றுகிறது. மைய நீக்கவிசைக்கே இங்கு இடமில்லை. அன்றியும் காற்றிலும்
1. எம்பிடோக்கிளிசுவிற்கு 5 ஆம் அத். 248 ஆம் பக். பார்க்க. அனக்சகோ ரசுவுக்கு 8 ஆம் அத், 283 ஆம் பக். பார்க்க.

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 359
நீரிலும் எற்படும் சுழிகள் பற்றிய உதாரணம் உண்மையில் முற்றிலும் திருப்திகரமானதே.
181. அணுவாத அண்டவியலை விரிவாகப் பார்க்கின் அதனது பூமியும் வான பிற்போக்கான பண்பு மிகவும் வெளிப்படையாகிறதெனலாம். சோதிகளும் பூமி கஞ்சிரா வடிவமாயிருந்த தெனவும் அது காற்றில் மிதந்த தெனவும் கருதப்பட்டது. தெற்கேயுள்ள பகுதியில் வெப்பத்தி ஞரல் காற்று ஐதாகவிருந்தபடியாலும் வடக்கே பனிக்கட்டியும் குளிரும் காற்றைத் திண்மையாக வைத்திருந்தபடியால் அப்ப குதியில் காற்று பூமியைத்தாங்கும் தன்மையுடையதாயிருந்த தாகையாலும், பூமி தெற்கு நோக்கிச் சற்றே சாய்ந்திருந்தது. இராசியின் சாய்வுநிலைக்கு இதுவே காரணமாயிருந்தது. அனக்சிமாந்தரைப் போல (பிரிவு 19) லியூகிப்போசுவும் சூரியன் உடுக்களைவிட அதிகதொலைவில் இருந்ததெனக் கூறி னர். ஆனல் உடுக்கள் சந்திரனை விட அதிக தொலைவில் இருந்ததென அவர் கருதினர். சந்திரனற் கோள்கள் மறைக் கப்படுகின்றன வென்பதை எற்கெனவே அவதானித்திருந்தனர். ஆனல் அசைவற்ற உடுக்களுக்கும் கோள்களுக்குமிடையேயுள்ள வேற்றுமையை அவர்கள் தெளிவாக அறிந்திருந்ததாகத் தெரிய வில்லை. அனக்சகோரசுவினது கிரகணங்கள் பற்றிய கொள்கையை லியூகிப்போசு அறிந்திருந்தார் போலத் தோன்றுகிறது. சில முக்கிய அம்சங்களைப் பொறுத்தவரையில், லியூகிப்போசுவின் அண்டவியற் கொள்கை, பின்னர் தெமோகிரித்தோசுவினற் போதிக்கப்பட்ட கொள்கையிலிருந்து வேறுபட்டிருந்தது என் பதை எமக்குக் காட்டுமளவுக்கே, இவரது கொள்கை பற்றி எமக்குக் கிடைத்துள்ள பிற செய்திகள் எமக்குப் பயனுடைய வாயுள்ளன.
182. புலனுணர்வினல் நாம் அறியும் பொருள்கள் இயற்கை புலனுணர்வு
யாகவல்லாது, “நியதியினலேயே’ உள்ளன வெனும் கொள்கை லியூகிப்போசு வினுடையதே என ஈத்தியோசு திட்டவட்டமாகக் கூறுகிறர். இது தியோபிறகத்தோசுவின்மூலம் அறியப்பட்டதா யிருத்தல் வேண்டும்; எனெனில் அவருக்குப் பிந்திய எழுத்தா ளர்கள் யாவரும் தெமோகிரித்தோசுவை மட்டுமே மேற்கோ ளாகக் கொள்கின்றனர். இக்கொள்கை அப்பொலோனிய நாட்ட வனன இடையோசினிசுவினது எனக் கூறப்படுவதும், ஈத்தி யோசுவின் கூற்றை மேலும் நிரூபிக்கிறதெனலாம் ; ஏனெனில் இடையோசினிசுவின் கருத்துக்கள் சில லியூகிப்போசுவிடமிருந்து பெறப்பட்டனவெனத் தியோபிறகத்தோசு எமக்குக் கூறுகிறர்.
இக்கொள்கையில் வியப்புக்குரிய தெதுவுமில்லை. புலன்கள்
நம்மை எமாற்றுவன வெனவும், நிறங்கள் ஆதியன வெறும்

Page 188
360 ஆதி கிரேக்க மெய்யியல்
* பெயர்களே " யெனவும் பார்மனைடிசு எற்கெனவே கூறியி ருந்தார். எம்பிடோக்கிளிசுவும் ஆதல், அழிதல் என்பன வெறும் பெயர்களே யெனக் கூறியிருந்தார். லியூகிப்போசு இவற்றிற்கு அப்பால் தமது சிந்தனையை அதிகம் விருத்தி செய் திருந்தாரெனக் கூற முடியாது. “ஒழுங்காகப்பிறந்த ’ அறிவு “ஒழுங்கற்றுப் பிறந்த” அறிவு எனத் தெமோகிரித்தோசு காட் டிய தெளிவான பாகுபாட்டையோ அல்லது சடப்பொருளின் முதற் பண்புகள் துணைப்பண்புகள் எனும் பாகுபாட்டையோ லியூகிப் போசுவே முதலிற் கண்டனர் எனக் கூறுவது தவறகுமெனவே கொள்ளல்வேண்டும். ஒரு திட்டவட்டமான விஞ்ஞானக் கொள் கையிருந்திருந்தாற்றன் இப்பாகுபாடுகள் தெரியவந்திருக்கும் என்க. நாம் இங்கு கூறக்கூடியது, அத்தகையவோர் அறிவியற் கொள்கையின் ஆரம்பவித்துக்கள் லியூகிப்போசுவினதும் அவரது முன்னேடிகளினதும் எழுத்துக்களில் காணப்பட்டன வென்ப தேயாகும். இக்கொள்கைகளைக் கொண்டிருந்தமையால் லியூ கிப்போசு, எம்பிடோக்கிளிசுவை அல்லது அனக்சகோரசுவை விடத் தீவிரமானவோர் ஐயவாதியெனக் கூறமுடியாது. அனக்ச கோரசுவின் புலனுணர்வு பற்றிய குறிப்பொன்றை (பகுதி 219) தெமோகிரித்தோசு அவரது அனுமதியுடன் மேற்கோளாக உப யோகித்ததாகக் கூறப்படுகிறது.
தெமோகிரித்தோசு, எபிகூரசு என்போரது கொள்கைகளில் முக்கியமாக இடம்பெற்ற உருவ ஒற்றுமை மூலமான காட்சி பற்றியகொள்கை லியூகிப்போசுவினுடையதே யெனக் கூறுவதற் குப் போதிய ஆதாரங்கள் உளபோலத் தோன்றுகிறது. இக் கொள்கை “ வெளியொழுக்குகள் " பற்றிய எம்பிடோக்கிளிசு வின் கொள்கையின் (பிரிவு 118) இயல்பான விருத்தியாகும். ஆனல் லியூகிப்போசு இவ்விடயம் பற்றி விரிவாக ஆராய்ந்தார் என்பது ஐயத்திற்கிடமானதேயாதலால், இக்கொள்கையை விரி வாக விருத்தி செய்தவர் தெமோகிரித்தோசுவே யெனக் கொள்வதே உத்தியெனலாம். வியூஓப்போக 183. கிரேக்க சிந்தனையின் வரலாற்றில் அணுவாதத்திற் வின் களிக்கப்படவேண்டிய இடம்பற்றிச் சமீபகாலத்து எழுத்தாளர்க முக்கியத்துவம் விடையே மிகுந்த கருத்து வேறுபாடுளதென்பதை நாம் பார்த் தோம். பெளதிகவதித நியாயங்களின் மூலமாக, அதாவது சத்துப் பொருள் பற்றிய ஈலியகொள்கையை ஆராய்வதன் மூல மாக லியூகிப்போசு தமது கொள்கையை ஆக்கினரா, அன்றேல், அயோனிய அறிவியலின் வளர்ச்சியாக அவரது கொள்கை தோன்றியதா என்பதே நாம் இப்போது தீர்மானிக்கவேண்டிய
215 ஆம் பக். 9 ஆம் பகுதியைப் பார்க்க.

மிலட்டசுநாட்டு லியூகிப்போசு 36.
விடயமாகும். நாம் இதற்கு முன்னதாகத் தந்துள்ள விளக் கத்திலிருந்து உண்மையான விடையைப் பெறுதல் சாத்தியமா யிருத்தல் வேண்டும். உலகின் பெளதிக அமைப்பைப் பற்றிய அவரது பொதுவான கொள்கையைப் பொறுத்தவரையில் அது ஈலிய, பைதாகரச கொள்கைகளின் அடிப்படையிலேயே எழுந்ததெனவே எனக்குத் தோன்றுகிறது. ஆனல் அவரது விரிவான அண்டவியல், இப்புதிய பெளதிகக் கொள்கையோடு பழைய அயோனிய நம்பிக்கைகளைப் பொருத்துதற்குச் செய்யப் பட்ட முயற்சியென்பதையும் அது பெருமளவிற்கு வெற்றி யடைந்துள்ளதென்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். உடலே முடிவான சத்துப்பொருள் எனக் கொள்வதாயின், அது எத்தன்மையதெனக் கொள்ளப்படல் வேண்டும் என்பதை முதலிற் கண்டவர் என்பதே அவருக்குப் பெருமை அளிப் பதாகும். பழைய மைலிசிய கருத்துக்கள் அனக்சிமினிசுவின் கொள்கையில் (பிரிவு 31) தமது பூரணமான வடிவத்தை அடைந்திருந்தன. மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் நெருக்க மாக ஒன்று சேர்கின்றன அல்லது வெளியில் பிரிந்து செல் கின்றன எனும் கருதுகோளின்றி, ஐதாதல், திண்மைய டைந்து சுருங்குதல் என்பனவற்றை விளக்க முடியாது. பார் மனடிசு இதை நன்கு அறிந்திருந்தார் (பகுதி 2). லியூகிப் போசு தனது கொள்கையை அம்முறையில் அமைக்கக் காரணமாயிருந்தது ஈலியர்களது விமரிசனமே. பிரிக்கப்படுந் தன்மை பற்றிய சேனேவின் வாதங்களை (பிரிவு 128) அனக் சகோரசுவும் கருத்திற் கொண்டாரேயாயினும், வேறுபட்ட பண்புகளையுடைய “ விதைகள்’ பற்றிய அவரது கொள்கை, சில அம்சங்களைப் பொறுத்தவரையில் ஆழமுடையதானலும், அணுவாதத்தின் மிகவும் கவர்ச்சிகரமான பண்பான எளிமை அவரது கொள்கையிலிருக்கவில்லை யென்க.

Page 189
விஞ்ஞானத் தின் வறட்சி
அத்தியாயம் 10 சமரசவாதமும் பிற்போக்கும்
184. லியூகிப்போசுவுடன் எமது கதை ஒரு முடிவுக்கு வந்தி ருத்தல் வேண்டும் ; ஏனெனில் தேலிசுவினல் முதலிலெழுப் பப்பட்ட வினவிற்கு அவர் நன்றகப் பதிலளித் திருந்தார். ஆனல் சடப்பொருள் பற்றிய அவரது கொள்கை துணிவும் புதுமையும் மிக்கதாயினும், திருப்திகரமான அண்டவியற் கொள்கையொன்றை அமைத்தற்கு அவர் எடுத்த முயற்சி போதியளவு வெற்றிபெறவில்லை யென நாம் பார்த்தோம். அணுக்கொள்கை குறைவாக மதிப்பிடப்படுவதற்கு இது ஒரு காரணமாயிற்று. வைத்தியவியலின் செல்வாக்கு இக்காலத்து அதிகரிக்கவாரம்பித்த் தென்பதையும், அதன் விளைவாக முந் திய பொதுப்படையான அண்டவியற் கொள்கைகளுக்குப் பதி லாக விரிவான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தப்படலாயிற் றென்பதையும் நாம் எற்கெனவே கவனித்தோம். இக்கா லத்து ஆராயப்பட்ட விடயங்களைப் பற்றி, இப்போகிருத்திசுவின் நூற்ருெகுதியிலுள்ள பல விளக்கவுரைகளிலிருந்து அறியக் கூடியதாயிருக்கிறது. ஈலிய எடுகூற்றுக்களிலிருந்து பெறக் கூடிய முடிவு, விஞ்ஞானமே சாத்தியமற்ற வொன்றெனக் கூறுவதுபோற் றேன்றிய “மெலிசசுவின் கொள்கை” மட்டுமல் லவென லியூகிப்போசு விளக்கியிருந்தார். அத்துடன் பெரு மளவிற்குப் பழைய அயோனிய கொள்கையைப் போன்றிருந் தவோர் அண்டவியலையும் அவர் ஆக்கினர். இதன் முதல் விளைவாகப் பழைய மரபுகள் அனைத்தும் புத்துயிர் பெற்றுச் சிலகாலம் மீண்டும் செயற்படலாயின. பழைய கொள்கைகளை லியூகிப்போசுவினது கொள்கைகளுக்கேற்ப இணைக்கும் நோக்கத் துடன், அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்கொவ்வும் முறையில் ஒரு சமரசரீதியில் இவற்றை இணைக்கும் நோக்கத்துடன், சில புதிய கழகங்களும் தோன்றின. ஆனல் இம்முயற்சிகளுள் ஒன்றுகூட நீடித்த செல்வாக்கையோ முக்கியத்துவத்தையோ பெறவில்லை எனலாம். உண்மையில் நாம் இங்கு கவனிக்க வேண்டியது விஞ்ஞானத்தின் வரலாற்றிலே ஒரு அத்தியாயத் தின் இறுதியையும், இன்னென்றினது ஆரம்பத்தையும் காட்டுவது போன்று இடைக்கிடையே எற்படும் விஞ்ஞானத்தின் வறட்சி நிலைகளிலொன்றையே யென்க.
362

சமரசவாதமும் பிற்போக்கும் 363 1. சாமோசுநாட்டு இப்போன்
185. றெகியோனை, அல்லது குரோட்டனை அல்லது சாமோ ஈரலிப்பு
சுவைச் சேர்ந்தவரான இப்போன் என்பார் இத்தாலிய வைத் தியமரபைச் சார்ந்தவர். பெரிக்கிளிசு வாழ்ந்த காலத்து வாழ்ந் தவர் என்பதைத் தவிர இவரைப்பற்றி நாம் அறிந்தது மிகக் குறைவேயெனலாம். கிருத்தினேசு வென்பார் தமது பனேப்தை எனும் நூலில் இவரை நையாண்டி செய்தாரென அரித்தோபணிசுவின் மேகங்கள் எனும் நூலுக்கெழுதப்பட்ட பக்கவுரையொன்றிற் காண்கிருேம். அரித்தோதில் தமது பெள திகவதிதத்தில் தந்துள்ள ஆதி மெய்யியல்வாதிகளின் வரிசை யில் இவரது பெயரும் உளது. ஆனல் அம்மெய்யியலாளர்க ளோடு வைத்தெண்ணப்படும் தகுதி புத்திக் கூர்மையற்றவரான இவருக்கில்லை யெனவே அரித்தோதில் அங்கு குறிப்பிடுகிறர்.
இவரது கொள்கைகளைப் பற்றிய மிகவும் தெளிவானவோர் கூற்றை நாம் அலெக்சாந்தரிடமிருந்தே பெறமுடிகிறது. அலெக் சாந்தர் இவ்விடயத்தில் தியோபிறகத்தோசுவைப் பின்பற்று கின்றர் என்பதில் ஐயமில்லை. மூலப்பொருள் ஈரலிப்பே யென இவர் கூறினரெனவும், அது காற்றே அல்லது நீரோ என இவர் முடிவாகக் கூறவில்லையெனவும் நாம் அலெக்சாந்தரது கூற்றின் மூலம் அறிகிருேம். அக்காலத்துச் சாதாரணமாக வழங்கிய உடலியற் சார்பான வாதங்களைக் கொண்டே இவர் தனது கொள்கையை நிறுவினர் என்பதற்கு இப்பொலைட்டசு மூலமாக, அரித்தோதில் தியோபிறகத்தோசு ஆகியோரது ஆதாரங்கள் எடிக்குக் கிடைத்துள்ளன. அரித் தோதில் தேலிசுவுடையதாயிருக்கலாம், என ஊகமாத்திரை யாகக் கூறிய வாதங்களும் இத்தகையனவே (பிரிவு 10). இப்போனது பிற கொள்கைகள் வைத்திய வரலாற்று மாண வர்க்கே வேண்டியவை. கொஞ்சக்காலத்துக்கு முன்னர் வரை இப்போனது எழுத்துக்களின் பகுதியெதுவும் இருந்ததாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனல் ஒமருக்கெழுதப்பட்ட செனிவாப் பக்கவுரையிலிருந்து ஒரேயொரு பகுதி பெறப்பட்டுள்
1. அரித்தோசெனசு இவர் சாமோசு நாட்டவர் என்கிறர். மேனனது
இயாத்திரிகாவில் இவர் குரோட்டன் நாட்டவர் எனக் கூறப்பட்டிருக்கிறது. எனையோர் இவர் றெகியோனை அல்லது மெற்றபொன்தியனைச் சேர்ந்தவர் என்பர். இவர் முதலில் பைதாகரசமரபைச் சேர்ந்தவர் எனவே நாம் இவற்றி லிருந்து அறிய முடிகிற்து. ஆயின், அரித்தோசெனசுவினது ஆதாரமே இவ்விடயத்தில் உபயோகமிக்க தெனலாம். இயாம்பிளிக்கோசுவின் பைதாகரச வாதிகளின் அட்டவணையிலும் மெலிசசுவோடு, இப்போனும் சாமோசு நாட்டவரெனவே குறிப்பிடப்படுகின்றர்.

Page 190
SIT60th
364 ஆதி கிரேக்க மெய்யியல்
ளது. “பூமிக்கடியிலுள்ள நீர்’களும் ஈரலிப்பை உண்டாக்கும் தனிப்பட்ட ஊற்றுக்களேயென்னும் பழையகருத்தைக் கண்டிப் பதாக அமைந்துள்ள இப்பகுதி பின்வருமாறு :
"நாம் பருகும் நீர்கள் யாவும் கடலிலிருந்தே பெறப்படுகின் றன ; எனெனில் கிணறுகள் கடலிலும் ஆழமானவையாயின் நாம் கடல் நீரைப் பருகுகிறேம் என்பது உண்மையாயிருக்க முடியாது என்பதில் ஐயமில்லை. கிணறுகள் கடலிலும் ஆழமா னவையாயின் நாம் பருகும் நீர் பிறிதோர் ஊற்றிலிருந்தே வருவதாயிருத்தல் வேண்டும் ; ஆனல் உண்மையில் கடல் மற்றைய நீர்நிலைகளிலும் ஆழமானதாகையால், அதற்கு மேலேயுள்ள நீர்கள் அனைத்தும் அதிலிருந்தே வருதல் வேண்டும்.
நீர் பூமியிலிருந்து மேலேழுந்த தன்மையுடையதேயன்றி பூமிக்குள்ளே கீழ்நோக்கிச் செல்லுந் தன்மையுடையதல்ல வென்னும் பொதுவான எடுகோளையே நாம் இங்கும் காண் கிருேம்.
இப்போனேடு சேர்த்து இமேராநாட்டு இடாயோசுவையும் நாம் இங்கு குறிப்பிடலாம். காற்றே மூலப்பொருள் என இவர் கருதினரெனச் செகுதசு கூறியுள்ளதற்கு மேலாக இவரைப் பற்றி நாம் வேறெதுவும் அறியோம். ஆயினும் இவர் ஒர் சிசிலிய நாட்டவர் என்பது சிந்தனைக்குரியவொன்றே.
2. அப்பொலோனியநாட்டு இடையோசினிசு
186. மைலிசிய மரபின் சிந்தனையாளர் மூவரையும் பற்றி ஆராய்ந்ததன் பின்னர் தியோபிறசத்தோசு பின்வருமாறு கூறினர் :
இத்தகைய துறைகளைப் பயின்றேரில் மிகப் பிந்தியவர் என அழைக்கப்படக்கூடியவரான அப்பொலோனிய நாட்டு இடை யோசினிசுவும் சிலவிடயங்களில் அனக்சகோரசுவை ஏற்றும், வேறுசில விடயங்களில் லியூகிப்போசுவை எற்றும், பெருமள விற்கு ஒரு சமரசரீதியிலேயே எழுதினர். முடிவற்றதும்,
1 பைசாந்தியனைச் சேர்ந்தவனன சிதீபனேசு இது கிறீற்றிலுள்ள அப் பொலோனியா வெனக் கூறுகிறன். ஆனல் இது எற்கத்தகுந்ததல்ல. இடை யோசினிசு அயோனிய மொழியில் எழுதினராகையால் செல்லரும் இக்கூற்றை நம்பத் தயங்கினர். ஆனல் அறிவியல் நூல்களெழுதுவதற்கு வழமையாக உபயோகிக்கப்பட்டது அயோனிய மொழியேயாதலால், நாம் அதிலிருந்து எவ் வகை முடிவுக்கும் வரமுடியாது. அனக்சிமாந்தரே தன்னை உருவாக்கியவர் எனக் கருதிய மைலீசிய குடியேற்றப்பகுதியாகிய, பொன்ரோசுவிலுள்ள அப் பொலோனியாவிலிருந்து இவர் வந்திருக்கலாமெனக் கொள்ளலாம் போலத் தோன்றுகிறது.

சமரசவாதமும் பிற்போக்கும் 365
நித்தியமானதுமான காற்றே பிரபஞ்சத்தின் மூலப் பதார்த்த மெனவே அவரும் கூறினர். பொருள்கள் யாவற்றினதும் வடிவங்களும், இக்காற்றின் சுருக்கம், ஐதாதல், மாற்றம் என்பனவற்றின் மூலமே உண்டாயின என அவர் கருதினர்.
இவர் அனக்சகோரசுவுக்குச் சமகாலத்தவர்` எனும் லயாத் தியசு இடையோசினிசுவிலுள்ள கூற்றிலிருந்து நாம் இவரது காலமெனக் கொள்வதிலும், பிந்திய காலத்தைச் சேர்ந்தவரே இவர் என்பது மேலேயுள்ளபகுதியின் மூலம் தெளிவாகிறது. அரித்தோபணிசுவின் மேகங்கள் எனும் நூலில் இவரது கருத் துக்கள் நையாண்டி செய்யப்பட்டிருப்பதிலிருந்தும் நமக்குத் தோன்றுவதும் இதுவே.
187. தனது காலத்தில் இடையோசினிசுவால் எழுதப்பட்ட இவர் னவற்றுள் ஒரேயொரு நூல் மட்டுமே எஞ்சியிருந்த தெனி எழுதியவை னும், இடையோசினிசு பல நூல்களை எழுதினரென்பது உண் மையென சிம்பிளிசியசு கூறுகிறர். எஞ்சியிருந்த அந்நூலி லிருந்த குறிப்புக்களை வைத்துக்கொண்டே, அவர் இவ்வாறு கூறினராதலால், நாம் அவரது கூற்றை வெறுமனே ஒதுக்கிவிட முடியாது. அக்காலத்தில் பன்மைவாத அண்டவியலாளராயி ருந்த சோபிட்டுக்களுக் கெதிரானவோர் சிறுநூலை அவர் யாத் தனர் என்பது பெரிதும் நம்பத்தகுந்தது. வளிமண்டலவியனூல் ஒன்றையும் மனிதனது இயல்பு எனப் பெயரிய நூலொன்றை யும் இவர் யாத்தனர் எனவும் நம்ப இடமுண்டு. பின்னையது உடலியல், அல்லது வைத்தியவியல் பற்றிய நூலாயிருந்திருத் தல் வேண்டும். நாளங்கள் பற்றிய பிரசித்தமான பகுதியும் இந்நூலிலிருந்தே பெறப்பட்டிருக்க வேண்டும்.?
188. இடையோசினிசுவின் நூல்கள் கழகத்தினற் பேணப் இவரது பட்டன போலத் தோன்றுகிறது; நமக்குக் கிடைத்துள்ள பகுதிக நூலின் ளில் ஒரளவுக்குப் பெரியவையாய் இருப்பன யாவும் சிம்பிளிசியசு பகுதிகள் மூலமாகவே நமக்குக் கிடைத்துள்ளன. டியல்சுவினல் ஒழுங்கு செய்யப்பட்டவாறு நான் அவற்றை இங்கு தருகிறேன் :
1. எந்த ஆய்வுரையையும் ஆரம்பிப்பவன் தனது தொடக்கக் கருத்தை மறுக்க முடியாத வொன்ருகவும் தனது மொழி
1. இவர் அனக்சிமினிசுவின் போதனைகளைக் * கேட்டனர் ” எனும் அன்ரிசு தேனிசுவினது கூற்று, வழமையானவோர் மயக்கங் காரணமாக உண்டானதே யாகும். அனக்சகோரசுவைப் போல இவரும் அனக்சிமினிசுவின் மெய்யியல் முறையோடு தொடர்பு பூண்ட ஒருவராகவே இருந்தார் என்பதில் ஐயமில்லை. 6 ஆம் அத். 122 ஆம் பிரிவிற் பார்க்க.
* டியல்சு இதையே 6 வது பகுதியாகத் தருகிருர். ஆனல் இது உண்மையில் வைத்திய வரலாற்றைச் சேர்ந்ததாகையால், நான் அதை நீக்கியுள்ளேன்.

Page 191
366 ஆதி கிரேக்க மெய்யியல்
நடையை எளிமையும் கம்பீரமும் கொண்டதாகவும் அமைத்துக் கொள்ளல் வேண்டுமென எனக்குத் தோன்றுகிறது.
2. சுருங்கக் கூறுவதாயின், எல்லாப் பொருள்களும் ஒரே பொருளேயென்பதும், அவை யாவும் அதன் வேறுபட்ட உரு வங்களே யென்பதுமே எனது கருத்து. இது வெளிப்படையான வொன்றே; ஏனெனில் இவ்வுலகில் இப்போதுள்ள பொருள் களில்-நிலமும் நீரும், காற்றும் தீயும், மற்றும் உலகில் உளவாக நாம் காணும் பிறபொருள்கள் யாவற்றிலும்-ஒன்ற யினும் பிறிதொன்றிலிருந்து வேறுபட்ட தாயிருப்பின், அதா வது தனக்கு மட்டுமுரியவோர் உட்பதார்த்தத்தை உடையதாயி ருப்பதன் மூலம் வேறுபட்டதாயிருப்பின் ; அடிக்கடி மாற்ற மடைந்து பிறபொருள்களாவது ஒரே பொருளல்ல வெனின், பொருள்கள் ஒன்றேடொன்று எவ்வகையிலும் கலத்தல் சாத் தியமாகாது. மேலும், ஒரு பொருளுக்கு இன்னெரு பொருளி ஞல் தீமையோ அல்லது நன்மையோ ஏற்படுத்தவும் முடியாது. பொருள்கள் யாவும் ஒரே தன்மையுடையனவாயிருக்கும் வகை யில் அமைந்திருந்தாலொழிய, நிலத்திலிருந்து செடிகள் முளைப் பதும், மிருகங்கள் உண்டாதலும் சாத்தியமாகா. ஆனல் இவை யாவும் ஒரு பொருளிலிருந்தே தோன்றுகின்றன; அவை மாறு தலடைந்து, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உருக்களைப் பெற்று, பின்னர் அப்பொருளிடத்தேயே மீள்கின்றன.
3. நுண்மதியின்றிப் பொருள்கள் இவ்வாறு பிரிக்கப்பட்டி ருக்க முடியாது. மாரியும் கோடையும், இரவும் பகலும், மழையும் காற்றும் மற்றும் காலநிலைகளும் நுண்மதியின்றி இவ்வாறு எப்போதும் தமது விகிதத்தை மீருதவகையில் செம்மையாகப் பிரிக்கப்பட்டிருக்க முடியாது. இதுபற்றிச் சற்றுச் சிந்திப்பவர்கள் எவரும், எனைய பொருள்களும், அவற்றிற்கு மிகவும் உகந்த முறையிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன வென்பதை உணர்ந்து கொள்வர்.
4. மேலும், பின்வரும் சிறந்த நிரூபணங்கள் உள்ளன : மனிதர்களும் மற்ற மிருகங்களும் காற்றைச் சுவாசிப்பதன் மூலம் உயிர் வாழ்கின்றனர். வளியே இவர்களது ஆன்மாவும், நுண்மதியுமென்பது இந்நூலில் தெளிவாகக் காட்டப்படும். வளி இல்லாது போயின் இவர்கள் இறந்து போய்விடுகின்றனர். இவர்களது நுண்மதிகளும் செயலிழந்து விடுகின்றன.
5. மனிதர்களால் வளியென அழைக்கப்படுவதே நுண்மதி யுடைய தெனவும் அது பொருள்கள் யாவற்றையும் தனது அதிகாரத்துக்குட்படுத்துவதெனவும், பொருள்கள் யாவும் அதற் கேற்றவாறே இயங்குகின்றன வெனவும் நான் கருதுகிறேன்

சமரசவாதமும் பிற்போக்கும் 367
இதுவே இறையெனவும், எங்கும் செல்லக்கூடிய தெனவும், எங்குமுள்ளதெனவும், எதையும் மாற்றும் ஆற்றல் உடைய தெனவும், இதுவில்லாத பொருள் எதுவும் இல்லையெனவும் நான் கருதுகிறேன். ஆனல் ஒரு பொருளாயினும், மற்றப் பொருள்கள் அதில் பங்கு பெறும் முறையில், தானும் இதில் பங்கு பெறுவதில்லை ; ஆனல் வளி, நுண்மதி என்பனவற்றில் அநேக ஆகாரங்களுள்ளன. ஏனெனில் அது பலவகையான மாற்றங்களை அடைகிறது. சூடு கூடியதாகவும், குளிர் கூடியதா கவும், வறட்சியுடையதாகவும், ஈரலிப்புடையதாகவும், நிலையுள் ளதாகவும், மிகவேகமாக இயங்குமியல்புடையதாகவும், இன்னும் அநேக மாற்றங்களையுடையதாகவும், எண்ணிறந்த நிறங்களையும் சுவைகளையும் உடையதாகவும் அது மாறுகின்றது. உயிருள்ளன யாவற்றினது ஆன்மாக்களும் வளியே. எமக்கு வெளியேயுள்ள காற்றிலும் கூடிய சூடுள்ள, ஆனல் சூரியனுக்குக் கிட்டவுள்ள காற்றிலும் சூடு குறைந்த காற்றே ஆன்மாவென்க. ஆளுனல் எந்த இரு உயிருள்ள பிராணிகளிலும், எந்த இரு மனிதர் களிலும், ஆன்மாவின் சூடு, ஒருபோதும் ஒரே அளவினதாய் இருப்பதில்லை. ஆனல் இவற்றுக்கிடையே யுள்ள வித்தியாசம் மிகவதிகமாய் இருப்பதில்லை. அவற்றின் ஒத்த தன்மையோடு இசைவாயிருக்குமளவிற்கே அவற்றிற்கிடையே வித்தியாசம் இருக்கிறது. ஆனல் பிரிந்துள்ள இருபொருள்கள், மீண்டும் ஒரு பொருளாகச் சேரும் வரைக்கும், முற்ருக ஒரே தன்மை யுடையனவாய் ஒருபோதுமிருப்பதில்லை.
6. மூலப்பதார்த்தத்தின் வகையீடு இவ்வாறு பலதரப்பட் டதாயிருப்பதால் உயிர்வாழ்வன பலவாயும், பலதரப்பட்டவை யாயும் உள்ளன. அவை தோற்றத்திலோ அல்லது நுண்மதி யாற்றலிலோ ஒருபோதும் ஒன்றையொன்று ஒத்திருப்பதில்லை. ஆனல் ஒரே பொருளின் மூலமாகவே இவற்றல் உயிர்வாழ வும், பார்க்கவும், கேட்கவும் முடிகிறது. இவை யாவும் தமது நுண்மதியை ஒரே பொருளிடத்திலிருந்தே பெறுகின்றன.
7. இது (வளி) அழிவில்லாததும், நித்தியமானதுமெனி னும், அப்பொருள்களிற் சில ஆகின்றன ; சில அழிந்து போகின்றன.
8. இது பெரிதென்பதும், வலிதென்பதும், இறவாது நித்தி யமாயிருப்பதென்பதும், மிகுந்த அறிவையுடையதென்பதும் கூட வெளிப்படையாகத் தெரியும் விடயங்களாகவே எனக்குத் தோன்றுகின்றன.
அரித்தோதிலாற் பேணப்பட்டுள்ள, நாளங்கள் பற்றிய விரி வான விளக்கத்திலிருந்து, இடையோசினிசுவின் பிரதான சிந்

Page 192
அண்டவியல்
368 ஆதி கிரேக்க மெய்யியல்
தனை உடலியல் பற்றியதே யென்பது தெளிவாகிறது. ஒரு பொருள் இன்னென்றிற்கு எவ்வாறு, தீங்கிளைக்கவோ அல்லது நன்மை செய்யவோ கூடுமென்பதை விளங்குவது சாத்தி யமல்ல வென்பதும் எல்லாப் பொருள்களின் அடிப்படையிலும் ஒற்றுமையுள்ள தென்பதை நிரூபிக்க அவர் கையாண்ட வாதங்களிலொன்று என்பது குறிப்பிடத்தக்கது (பகுதி 2). இடையோசினிசுவின் கருத்துக்கள், போலி-இப்போகிருத்திய நூல்களிற் பெரும்பாலானவற்றின் இயல்பையே ஒத்தனவா யிருக்கின்றன வெனலாம். இக்காலத்துச் சிறுநூல்களின் ஆசி ரியர்கள் அனக்சகோரசு, எரக்கிளைட்டசு என்போனரப் பயன் படுத்திய அளவிற்கு இப்போகிருத்திசுவின் நூல்களையும் பயன் படுத்தினர் எனும் கருத்தில் பெருமளவு உண்மையிருக்கிற தெனலாம்.
189, அனக்சிமினிசுவைப்போல இடையோசினிசுவும் வளியே மூலப்பதார்த்தமெனக் கருதினர். ஆனல் பிற கருத்துக்களும் நிலவியவோர் காலத்திலேயே அவர் வாழ்ந்தாரென்பது அவரது வாதங்களிலிருந்து எமக்குப் புலனகிறது. எம்பிடோக்கிளிசுவின் நான்கு மூலகங்களையும் பற்றி அவர் தெளிவாகக் கூறுகின்றர் (பகுதி 2). அன்றியும் அனக்சகோரசு குறிப்பிட்ட நூசுவின் பண் புகள் யாவற்றையும், வளியும் கொண்டிருந்தது எனக் கூறுவதி லும் அவர் மிகவும் கவனமாயிருக்கிருர் (பகுதி 4). இவரது அண் டவியற் கொள்கைகள் பற்றித் தொகுப்பாசிரியர்கள் கூறியிருப் பவை நன்கு பேணப்பட்டுள்ளன :
காற்றே மூலமெனவும், பொருள்கள் யாவும் இயங்குகின் றன வெனவும், எண்ணிறந்த உலகங்கள் உள்ளன வென வும் அப்பொலோனிய நாட்டு இடையோசினிசு கூறினர். உல கத்தின் தோற்றத்தை அவர் பின்வருமாறு விளக்குகின்றர். எல்லாம் என்பது, இயக்கத்தின் மூலம் சில இடங்களில் ஐதான தாகவும், வேறு சில இடங்களில் திண்மையுடையதாகவும் ஆகும்போது, திண்மையானவை யெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பொருட்டொகுதி உண்டாயிற்று. பிற பொருள்களும் இவ் வாறே தோன்றின. மிகவும் பாரங்குறைவான பொருள்கள் அதி உயரமான இடத்திற்குச் சென்று சூரியனைத் தோற்றுவித்தன. இல்பொருளிலிருந்து எதுவும் ஆவதில்லை. எப்பொருளும் அழிந்து இல்பொருளாவதில்லை. பூமி வட்டமாயிருக்கிறது, மத்தி யில் உளது. சூட்டினல் உண்டாகும் சுழற்சியின் மூலமே பூமி அதனது வடிவத்தை அடைந்துள்ளது. குளிரின் மூலமாகவே அது தனது திட்டத்தைப் பெற்றுளது.

சமரசவாதமும் பிற்போக்கும் 369
உடுக்கள் நுரைக்கல் போன்றனவாயிருந்தன. உலகின் சுவா சத்துவாரங்கள் இவையே யெனவும், இவை சிவக்கக் காய்ந் திருந்தனவெனவும் அவர் கருதினர்.
சூரியன் நுரைக்கல் போன்றிருந்தது. ஈதரிலிருந்துவரும் கிரணங்கள் அதனுள்ளே பொருந்திக்கொள்கின்றன. சந்தி ரன் நுரைக்கல் போன்றவோர் தீயாயிருந்தது.
கண்ணுக்குப் புலப்படும் விண்ணுடுக்களோடு, கண்ணுக்குத் தெரியாத பல கற்களும் சுழல்கின்றன. அவை கண்ணுக்குப் புலப்படாதனவாகையால் பெயரிடப்படாதனவாக உள்ளன. ஆனல் ஐகொசுபொத்தேசுவில் தீப்பற்றியபடியே வீழ்ந்த கல் லுடுவைப்போன்று, இவை அடிக்கடி வீழ்ந்து பூமியில் அணை ந்து போகின்றன.
'இங்கு நாம் காண்பது சில புதிய கருத்துக்களோடு சேர்க் கப்பட்ட பழைய அயோனிய கொள்கைகளையே. சூடு குளிர், வறட்சி ஈரலிப்பு நிலையுடையன, இயங்குவன எனும் முரண் பாடுகளை விளக்குவதற்கு இங்கும் ஐதாதல், அடர்த்தியுறல் என்பனவே உபயோகிக்கப்படுகின்றன (பகுதி 5). அனக்சகோ ரசு போதித்ததைப்போல, காற்று, எல்லையின்றி முரண்பாடு களாக மாற்றமடையக் கூடியதே. ஆனல் இவை யாவும் ஐது, திண்மை எனும் மூலமுரண்பாடாகச் சுருக்கப்படலாம். காற்று இறுகிச் சுருங்குவதன் மூலம் நிலமும், நீரும் உண் டாகினவென அனக்சிமினிசு கூறியதுபோல இடையோசினிசு கூற வில்லையெனச் சென்சோறினசு கூறுகிறர். இரத்தம், தசை, எலும்புகள் என்பனவே காற்றிலிருந்து இவ்வாறு உண்டாகின் றனவென இடையோசினிசு கருதினரென அவர் கூறுகிறர். இவ்விடயத்தில் இவர் அனச்சகோரசுவைப் பின்பற்றினர் (பிரிவு 130). அவ்வாறு பின்பற்றியது இயல்பானதே. ஆனல் காற் றின் ஐதான பகுதி, தீயாகிச் சூரியனையும், எனைய விண்ணு டுக்களையும் தோற்றுவித்தது. உலகின் வட்டவியக்கத்திற்குக் காற்றின் நுண்மதியே காரணமாயிருந்தது. பொருள்கள் வெவ் வேறு உருவான உடல்களாகப் பிரிக்கப்படுதற்கும், இவ்வு டல்கள் “ விகிதம் ' தவருது ஒழுங்குடனியங்குவதற்கும் கார ணமாயிருப்பதும் காற்றே.
அனக்சிமாந்தரைப் போல (பிரிவு 20) இடையோசினிசுவும், நிலத்தைத் தனியே பிரித்தெடுக்கும் பொருட்டுச் சூரியனுற் காய்ச்சப்பட்ட பின்னரும், மூல ஈரலிப்பில் எஞ்சியுள்ள பகுதியே கடலெனக் கூறினர். பூமி வட்டமானது-அதாவது அதோர் தட்டென்க: தொகுப்பாசிரியர்களது வார்த்தைகளில்
1. “ விகிதங்கள்” பற்றி 3 ஆம் அத். 72 ஆம் பிரிவில் பார்க்க.
14--R 10269 (6168)

Page 193
விலங்குகளும் செடிகளும்
37O ஆதி கிரேக்க மெய்யியல்
கோளவடிவைக் குறிக்கக்கூடிய வெதுவுமில்லை. குளிரினல் பூமி திடப்பொருளாவதற்குக் காரணம் குளிர் அதனை அடர்த்தி யுறச் செய்வதே.
முந்திய அண்டவியலாளர் கூறியது போல உடுக்கள் காற் றினல் அல்லது தீயாலானவையெனவோ, அனக்சகோரசு கூறி யதுபோல அவை கற்களே யெனவோ, இடையோசினிசு கூற வில்லை. அவை நுரைக்கற்கள் போன்றிருந்தனவென அவர் கூறினர். இக்கொள்கையை அவர் கொண்டதற்கு லியூகிப் போசுவின் செல்வாக்கும் காரணமென நாம் காணலாம். அவை நிலத்தாலானவையே ; ஆனல் முற்றிலும் திண்மவியல்புடை
யனவல்ல. அவற்றின் தொளைகளுக்குள்ளே ஈதரிலிருந்து
வரும் தீக்கதிர்கள் நுழைந்தன. அனக்சகோரசு கூறியது போல, உடுக்களோடு சேர்ந்து சுழல்வனவென இவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட இருண்ட உடல்களை நாம் என் காண முடியாதிருக்கிறது என்பதையும் இக்கொள்கை விளக்குகின்றது. அவை உண்மையில் திண்மையான கற்களேயாகையால் தீ அவற்றினுள்ளே நுழைய முடியாதிருக்கிறது. ஐகொசு பொத் தேமசுவினுள்ளே வீழ்ந்தது இக்கற்களுளொன்றே. அனக்ச கோரசுவைப் போல இடையோசினிசுவும், விலங்குகள் தோன் றியதன் பின்னரே பூமி சாய்வடைந்ததெனக் கூறினர்.
எண்ணிறந்த உலகங்களிருந்தனவென இடையோசினிசுவும் கருதினரென்பதை அறிகையில் எமக்கு வியப்பெதுவும் ஏற் படவில்லை. ஏனெனில் பழைய மைலிசிய சிந்தனையாளர்களது இக்கொள்கை, இவருக்குச் சற்று முன்பாகவே அனக்ககோ ரசு, லியூகிப்போசு என்போரால் புத்துயிரளிக்கப்பட்டிருந்தது. பிளாக்கிட்டாவில், எண்ணிறந்த உலகங்கள் உளவென நம் பியோரது வரிசையில் இவரும் குறிப்பிடப்படுகின்றர். ஒரேயொரு உலிகே மீண்டும், ஆகி அழிகின்றது எனும் சுதோய்க்க கொள் கையையே அனக்சிமினிசு, எரக்கிளேட்டசு என்பாரைப் போல இவரும் கொண்டிருந்தார் எனச் சிம்பிளிசியசு கூறியிருப்பாரா யின், அவர் இவ்விடயத்தல் தவருன கருத்துக்கொண்டுள் ளார் எனவே கூறுதல் வேண்டும்.
190. உயிருள்ள பிராணிகள் நிலத்திலிருந்தே தோன்றினவெப்பம் காரணமாகவே இது நடைபெற்ற தென்பதில் ஐய மில்லை. காற்றே இவற்றின் ஆன்மாக்களாயிருந்தது. அக்காற்று ஐதாக, அல்லது அடர்த்தியாகவோ இருந்ததற்கேற்பவே இவ்வான்மாக்கள் வேறுபட்டிருந்தன (பகுதி 5). இதயம் அல்லது மூளையைப் போன்ற எந்தக் குறிப்பிட்ட இடமாவது
1 ஆம் அத். 63 ஆம் பக்கம் பர்ர்க்க.

சமரசவாதமும் பிற்போக்கும் 37.
ஆன்மாவுக்களிக்கப்படவில்லை ; நாளங்களினூடாக, குருதியோடு சேர்ந்து சுற்றியோடிய சூடான காற்றே ஆன்மாவெனக் கூறப் பட்டது. சுவாசம், சந்ததி உற்பத்தி, குருதி என்பன பற்றிய இடையோசினிசுவின் கொள்கைகள் வைத்தியவியல் வரலாற் றின்பாற்பட்டவை. தியோபிறகத்தோசுவினல் வருணிக்கப்பட் டுள்ள இவரது புலனுணர்வுக்கொள்கை பற்றியும் வெறுமனே குறிப்பிட்டாற் போதுமெனலாம். சுருக்கமாகக் கூறின் அக் கொள்கை பின்வருமாறு : மூளையிலும் மற்ற அங்கங்களி லும் காற்றினல் எற்படுத்தப்படும் விளைவுகளே புலனுணர் வுகள். குருதியில் காற்றுச் செறிவதனலேயே களிப்புணர்ச்சி எற்படுகிறது. இக்கொள்கையைப் பற்றி விரிவாக அறிவதற்கு இப்போகிருத்திசுவின் நூல்களோடு சேர்த்தே இதனைப் படித்தல் வேண்டும் ; இடையோசினிசு புதிய அண்டவியல்வாதிகளினது மரபைச் சேர்ந்தவரல்லவாதலின். இவரது கொள்கையை, நேர்வு கள் சேகரித்தற்கும், விரிவாக ஆராய்தற்கும் புதிதாக எற்பட்டி ருந்த ஆர்வத்தோடு பழைய மெய்யியற் கொள்கைகளும் இணைந்ததால் எற்பட்டவோர் புதிய வளர்ச்சியென வருணிக் கலாம்.
3 அதென்சு நகரத்து ஆக்கேலசு
191. பழைய அண்டவியல்வாதிகளது மரபில் கடைசியாக வந் தவர் அனக்சகோரசுவின் சீடரான, அதென்சு நகரத்து ஆக் கேலசு. இவர் சோக்கிரதருக்குக் குருவாயிருந்தாரென அரித் தோசெனசு, தியோபிறகத்தோசு ஆகியோர் கூறுவதைச் சந் தேகிக்க எவ்வித நியாயமுமில்லை. இலாம்புசகோசத்திலிருந்த அனக்சகோரசுவின் கழகத்தின் தலைமைப்பீடத்தை அவருக்குப் பின்னர் ஆக்கேலசு எற்றுக்கொண்டார் எனும் வரலாற்றை யும் நாம் தயக்கமெதுவுமின்றி எற்றுக்கொள்ளலாம். சோபிட் டுக்களென அழைக்கப்படுவோரது தோற்றத்தின் பின்னர் அனக்சகோரசவாதிகளது புகழ் விரைவில் மறைந்து போயிற் றெனினும், அவர்களைப் பற்றி நாம் கேள்விப்படாமலில்லை.
192. ஆக்கேலசுவின் அண்டவியற் கொள்கை பற்றி இப்பொ லைட்டசு பின்வருமாறு எழுதியுள்ளார் :
ஆக்கேலசு, அதென்சு நகரத்தில், அப்பொலோடரசுவின் மகனகப் பிறந்தார். சடப்பொருட்கலவை பற்றியும் முதற்றத்
* ஆக்கேலசுவோடு சாமோசுநகருக்குச் சோக்கிரதரும் சென்ரு ரென கியோசு நாட்டு ஐயோன் கூறினர். இது சாமோசுவின் முற்றுகையைக் குறிப்பிடுவதாயின் இளைஞரான சோக்கிரதர், மெலிசசுவினல் நிர்வகிக்கப்பட்ட படையொன்றிற் கெதிரர்கப் போர் செய்தனர் என நாம் எண்ணலாம்.
அனக்சகோரச வாதிகள்
அண்டவியல்

Page 194
372 ஆதி கிரேக்க மெய்யியல்
துவம் பற்றியும் இவர் கூறியவை, அனக்சகோரசுவின் கொள் கைகளை ஒத்திருந்தன. நூசுவிலும் ஒருவகைக் கலவை உள் ளுறைவாக இருந்ததென அவர் கூறினர். தனித்தனியாக இரண்டு நிமித்தகாரணங்கள் இருந்தன வெனவும் இவை குடும், குளிருமெனவும் அவர் கருதினர். இவற்றுள் முன்னை யது இயங்கிக்கொண்டும், பின்னையது அசைவின்றியும் இருந்தன. நீர் திரவமாகியபின்னர் மத்தியை நோக்கி ஒடிய பின்னர், தீயூட்டப்பட்டு நிலமாகவும் காற்றகவும் மாறி யது. இவற்றுள் காற்று மேலேசெல்ல, நிலம் கீழே தனது இடத்தில் நிலைத்தது. நிலம் உண்டாவதற்கும், அது இந்நிலை யிலிருப்பதற்குமான காரணங்கள் இவையே. அது மத்தி யிலே இருக்கிறது. உலகில் நிலம் ஒரு பெரிய பகுதியெனக் கருத முடியாது (ஆனல் காற்று இவையெல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி புரிகின்றது) ; தீயூட்டப்பட்டதனல் அது உண் டானதாதலால் அதன் மூலத்தகனத்திலிருந்து வானசோதி களின் உட்பொருள் பெறப்பட்டது. இவற்றுள் சூரியனே மிகப்பெரியது. சந்திரன் இரண்டாவது பெரியது. எனையவை யாவும் வெவ்வேறு அளவினவாய் இருந்தன. விண் சாய்ந் திருந்ததெனவும், பூமியில் சூரியன் ஒளியேற்படுத்தியதென வும், அது காற்றை ஒளிபோகவிடும் இயல்புடையதாக்கியதென வும், நிலத்தை வறட்சியுடையதாக ஆக்கியதெனவும் அவர் கூறுகிருர் ; எனெனில் அது முதலில் பரிதியில் உயர்வாகவும் மத்தியில் பள்ளமாகவும் உள்ளவொரு தடாகத்தைப் போன் றிருந்தது. பூமி எல்லாப் பகுதிகளிலும் சமமான மட்டத்தை உடையதாயிருப்பின், சூரியனது தோற்றத்தையும், மறைவை யும் எல்லா மக்களும் ஒரே நேரத்தில் பார்க்கலாமெனவும், ஆளுல்ை உண்மையில் அவ்வாறு நடக்காதிருப்பதிலிருந்து, பூமி யின் மத்தியில் ஒர் பள்ளம் இருக்கிறதென்பது தெளிவாகின்ற தெனவும் அவர் கூறுகிறர். விலங்குகளைப் பொறுத்தவரை யில், பூமியில் குளிரும், குடும் கலந்திருந்த கீழ்ப்பகுதியில் முதலிற் சூடேறியபோது பல உயிரினங்கள்-குறிப்பாக மனிதர் கள்-எழுந்தன. இவை யாவும் ஒரே தன்மையுடைய உயி ரையுடையனவாயும், சகதியிலிருந்தே தமது உணவைப் பெறு வனவாயும் இருந்தன ; இவை பலகாலத்திற்கு உயிர் தரித் திருக்கவில்லை. பின்னர் சந்ததி விருத்தி என்பதும் உண் டாகலாயிற்று. மனிதர்கள் மற்ற உயிரினங்களிலிருந்து வேரு கித் தம்முள்ளே தலைவர்களையும், சட்டங்களையும், கலைகளையும் எற்படுத்தி, நகரங்களையும் இன்னும் பலவற்றையும் உண்டாக் கினர். எல்லா விலங்குகளிலும் நூசு சமமாகவே உள்ளது.

சமரசவாதமும் பிற்போக்கும்
விலங்குகள், மனிதர்கள் ஆகியயாவும் நூசுவை உபயோகிக் கின்றனர் ; சிலர் விரைவாகவும், சிலர் ஆறுதலாகவும் அதைப் பயன்படுத்துகின்றனர்”.
இடையோசினிசு எவ்வாறு அனக்சிமினிசுவின் கொள்கைக் குள் சில அனக்சகோரச கருத்துக்களைப் புகுத்த முயன்றரோ, அதுபோலவே அயோனிய கொள்கையோடு குளிரும் குடும், ஐதும் அடர்த்தியும் ஆகிய முரண்பாடுகளைச் சேர்ப்பதனுலும், அனக்சகோரசுவின் கொள்கையில் நூசுவைப் பிறபொருள்களி லிருந்து இனங்கண்டு கொள்ள உதவிய அதன் எளிமையை நீக்குவதன் மூலமும், ஆக்கேலசு அனக்சகோரச வாதத் தைப் பழைய அயோனிய கொள்கைகளுக்கு ஒற்றுமையுடைய வொன்றக மாற்ற முனைந்தார் என்பது இப்பகுதியிலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. இக்காரணத்தினலேயே போலும், இவரது கொள்கையில் நூசுவே உலகின் கருத்தாவெனக் கூறப் படவில்லை. அத்தகையவொரு சத்தி அவசியமில்லை யென லியூகிப்போசு நிரூபித்திருந்தார். ஆக்கேலசுவுக்கும் அவரது முன்னேடிகளுக்குமிடையே யுள்ள இவ்விருவகைத் தொடர்பை நோக்குகையில், எண்ணிறந்த உலகங்களிருக்கின்றனவென இவர் நம்பினரெனும் ஈத்தியோசுவின் கூற்றை நம்பலாமெனத் தோன்றுகிறது ; அனக்சகோரசுவும், பழைய அயோனியர்களும் இக்கொள்கையையுடையோரா யிருந்தனராதலின்.
193, ஆக்கேலசுவின் அண்டவியலிலும், இடையோசினிசுவின் முடிவுரை
கொள்கையிற் காணப்பட்ட, அக்காலத்து இயல்புகளான பிற் போக்கு, சமரசவாதம், விரிவான ஆராய்வு என்பனவற்றை நாம் காண முடிகிறது. மெய்யியல் ஒரு மேலே செல்லமுடியாத நிலையை அடைந்துவிட்டதெனவும், வந்தவழியே திரும்புவதன் மூலமே அது அங்கிருந்து தப்ப முடியுமெனவும் அக்காலத்து எற்பட்டிருந்தவோர் உணர்ச்சியையே, நாம் சாமோசுநாட்டு இப்போன், இமேராநாட்டு இடாயோசு என்போரது சிந்தனைகளிற் காண முடிகிறது. எபிசசுவிலிருந்த எரக்கிளைட்டிய வாதிகள், பிற கருத்துக்கள் தம்மை அணுக முடியாதவாறு, தமது கொள்கை யாலேயே தமக்கு அரணமைத்துக் கொண்டவர்போல விருந் தனர். எரக்கிளேட்டியவாதத்தின் முரணுரைகளையும், ஆழமற்ற பகுதிகளையும் பெரிதுபடப் புனைந்தும், விருத்தி செய்தும் அவர் தம் காலத்தைக் கழித்தனர் ஒரே ஆற்றினுள் இருமுறைகள் 1. இவர்களைப் பற்றிய வேடிக்கையானவோர் வருணனைக்குப் பிளேட்டோவின் Theaet. 179 e, பார்க்க. மொழி, சொல்லணியியல் என்பனவற்றில் ஏற்பட்டி ருந்த புதிய ஆர்வம் இவர்களைச் சொற்களின் இயல்புபற்றித், தமது கற்பனைக்கும் விருப்பத்திற்குமேற்றவாறெல்லாம் கூறவைத்தது. பிளேட்டோவின் கிராத்தில சில் இதுவே நையாண்டி செய்யப்பட்டுள்ளது.
15—R 10269 (6/63)
373

Page 195
374,
ஆதி கிரேக்க மெய்யியல்
கர்ல் வைக்க முடியாது என எரக்கிளைட்டசு கூறியது (பகுதி 84) போலக் கூறுவதுடன் நின்றுவிடுவது போதுமெனக் கிராத்தி லசு கருதவில்லை ; ஒருமுறை கூட ஆற்றினுள் கால் வைக்க முடியாதென்பது அவரது வாதம். உண்மையென்னவெனில், பழைய கற்பிதங்களையே இன்னமும் தழுவிக்கொண்டிருந்த இக்காலத்து, மெய்யியலாளரால் புதிய கொள்கைகள் எதை யும் பிறப்பிக்க முடியவில்லை ; தேலிசு எழுப்பிய வினவிற்கு லியூகிப்போசு தந்த விடை முடிவானவொன்றக அமைந்தது. இவ்வாறு தம்முள் முரண்பட்டிருந்த கொள்கைகள் யாவும் அதென்சு வர்ைக்கும் பரவினவென்பதும், அங்கேதான் அயோ னியாவிலெழுந்த பலதரப்பட்ட கொள்கைகளுக்கும், மேற்கேயி ருந்து வந்த கொள்கைகளுக்கும் தொடர்பேற்பட்டதென்பதும் கவனித்தற்குரியது. கி. மு. ஐந்தாம் நூற்றண்டின் நடுப் பகுதியில், பூமி தட்டையானதா அல்லது வட்டமானதா, “நாம் சிந்திக்க உதவுவது? காற்ற அல்லது குருதியா என்பது போன்ற விடயங்கள் பற்றி அதென்சு நகரில் மிகவும் வன் மையாக வாதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இக்காலத்து அங்கு வாழ்ந்த சோக்கிரதர் இளவயதினராயிருந்தார். அவரைப் பற்றி நாம் எத்தகைய கருத்துக்கொண்டிருந்தாலும், பிற்காலத்தில் இவ்விடயங்கள் மிகவும் சேய்மையானவையாக அவருக்குத் தோன்றியிருந்தாலும், இக்காலத்தில் இவ்விவாதங்களில் அவர் சற்றேனும் சிரத்தையெடாதிருந்திருப்பாரென்பது சிறிதும் நம் பமுடியாததாகும். பிளேட்டோ தனது பீடோவில் இதுவே உண் மையெனச் சோக்கிரதரைக் கூற வைக்கிறர். அந்நூலில் சோக் கிரதர் குறிப்பிடும் பிரச்சினைகள், அதென்சுநகரில் அக்காலத்து வாழ்ந்த மனிதர்களது சிநதனைக்கு மட்டுமே ஆராய்தற்குரிய விட யங்களாகத் தோன்றியிருக்க முடியும்.? விஞ்ஞானச் சார்புடைய மரபுகள் யாவும் அதென்சில் முடிவடைந்தன. அதெனி யரான சோக்கிரதராலேயே, வேறெரு கண்ணுேட்டத்திலிருந்து புதிதாகச் சிந்திப்பதன் மூலமே இவர்கள் எழுப்பியவினக் களுக்கு விடைகள் பெறமுடியுமென்பதை உணரமுடிந்தது.
. அவர் பேசவும் மறுத்தாரெனவும், தனது விரல்களை மட்டுமே அசைத் தாரெனவும் கூறப்படுகிறது.
2. பீடோவின் எனது பதிப்பில், (ஒக்சுபோட்டு, 1911) இப்பகுதிக்கான குறிப்புரையில் இவ்விடயத்தை விரிவாக விளக்க முயன்றிருக்கிறேன். தான் பிறப்பதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானத்துறை எவ்வாறிருந்தது என்பதை, எவ்வகைக் காலமுரணுமின்றிப் பிளேட்டோவினல் வர்ணிக்க முடிந்ததென்பது, அவரது வரலாற்றுணர்வின் சிறப்புக்கு நல்ல வோர் எடுத்துக்காட்டென்க.

அரும்பத அகரவரிசை
அக்கெளசுமாத்தா அக்கெளசுமாத்திகள். . அகாதன் அகெனேர் அச்சியற்சுழற்சி அச்சு அசுகிளெப்பியாட்டுக்கள்
அட்டசுரம் அடர்த்தியுறல் அடிக்கலம் அண்டம் அண்டவியல் அணுவாதிகள் அதிரவியம் அதென்சு அப்பொலசி அப்பொலோடரசு அப்பொலோனியசு ருேடியசு அபுதேராமரபினர் அபுரொடைற்று (காதற்றெப்வம்) அம்மோனியோசு அமாசிசு அய்தோலியா அயாம்பிளிகோசு அயோனியா அரித்தாக்கோசு அரித்தோசெனசு அலகு அலுக்மையோன் அலெக்சாந்தர் அலைவு அளவையியல்
Akousmata Akousmatics Agathon Agenor. Axial revolution Axle Asklepiads Octave Condensation Hull (ship) Macrocosm Cosmology Atomists Nothing Athens Apology Appollodoros Appollonios Rhodios The school of Abdera Aphrodite Ammonios
Amasis Aitolia
Iamblichos Ionia Aristarchos Aristoxenos Unit Alkmaion Alexander Oscillation Logic

Page 196
376 ஆதி கிரேக்க மெய்யியல்
அன்ரிக்தோன் Antichthon (Counter earth) அனக்சிமாந்தர் Anaximander அனக்சிமினிசு Anaximenes அனக்சகோரசு Anaxagoras அனங்கே Ananke . . அனந்தம் Infinity அனுபூதிநெறி Mysticism. அனைத்துமிறையெனும் வாதம் Pantheism
용,
ஆக்கியர் Achaeans ஆக்கைற்ருசு Archytas ஆகாரம் Mode ஆண்டுமானம் Calendar ஆதல் Becoming ஆதிகாரணம் Meterial cause ஆப்பெடொனுட்டுக்கள் Arpedonapts ஆலயவிதிகாசம் Temple legend
இ
9600ᏧᎧ! Harmony இடப்பெயர்ச்சியியக்கம் Motion of translation இடமாறு தோற்றம் Parallax இடாவின் Darwin இடுகோள் Postulate இடைக்கோட்பாடு The doctrine of the mean இடையனிசோசு Dianysos இடையோசினிசு Diogenes இடையோசினிசு லயாத்தியசு . Diogenes Laertios இப்பொலைட்டசு . . Hippolytos இப்போகிருத்திசு Hippocrates இப்போன் OM O Hippon இயலுருத்தோற்ற அமைப்பு Perspective இயாத்திரிகா Iatrika இயூக்கிளிட்டு Euclid இயூசிபியோசு Eusibios

இயூதிமினிசு இயூரிப்பிடிசு இயூறைத்தோசு இராசி மண்டலம் இராசியின் சாய்வு இராட்டறச இருப்புவட்டம் இறையியல் இல்பொருள் இலாம்புசகோசு இழுவைவிசை இழையம் இறைன்
ஈசியன் ஈத்தியோசு ஈதர் ஈலியவாதம் ஈலியா
FGyTer
உட்கிடை
உடல்வாதம் உடலுள் பூரணம் உடனியலுகின்ற காரணம் உலக ஆன்மா
உளவியல்
உறுபொருள்
261 Lith
ஊற்றுணர்வு
எக்காதையோசு எசியொட்டு
அரும்பத அகரவரிசை 377
Euthymenes Euripides Eurytos
Zodiac Obliquity of the Zodiac Tartaros
Circle of existance Theology What is not Lampsakos Tension
Tissue
Rhine
Aegian Aetios
Aether
Eleaticism
Elia,
Eros
Implication Corporealism Corporeal Plenum Concomitant cause World Soul Psychology Product
Nourishment Sense of touch
Hekatios
Hesiod

Page 197
378
எசுத்தியா
எட்ன
எடுகூற்று எடுகோள்
எடுப்பு எண் குறியீடு எண், திண்ம எண், தொகுப்பு எண், பகா எண், பல வடிவ எதிர்மறையன்மை விதி எதிர்மாற்றம் எபிசுடரசு எபிகூரியர்
øT SIGFTir
எரக்கிளேட்டசு எரொடோதசு எல்லாம் எல்லையற்றது எலனிசம்
எகம்
எகெல் எசியா திரியாடா
எடிசு எதிரியாத்திக்கடல் எமோடரசு
* ଘrft メ
ஏர்மிசு
ஐங்கோணச்சக்கரம் ஐசிசு ஐசோக்கிறத்திசு ஐதாதல்
ஆதி கிரேக்க மெய்யியல்
Hestia
Etna,
Premise
Assumption Proposition Numerical symbolism Number, Solid Number, Composite Numbers, Prime Numbers, Polygonal Law of non-contradiction Converse
Epicurus
Epicureans
Ephesos
Herakleitos
Herodotus
All
Infinite
Hellenism
One
Hegel
Hagia Triada
Hades
Adriatic sea Hermodoros Er, (Plato's myth of) Hermes
Pentagram Isis
Isokrates
Rarefaction

அரும்பத அகரவரிசை 379
ஐப்பபோரியர் ஐயவாதி
ஐரிசு ஐனெசிடெமோசு
ஒசிரிசு
ஒட்டுவமை ஒத்திசைகள் ஒருதளவுருவம்
ஒருமை ஒருமைக்கோட்பாடு ஒழுக்கவியல் ஒழுக்கு ஒற்றைநாண்கருவி
ஒபிக்குகள் ஓபிசம்
ஒமர் ஓரிறைவாதம் ஒருடல்வாதம்
ஒள
ஒளரானசு
கசியிழையம் έ5ώδυτιρΠιμιρ கணியம் கத்மோசு கதிராளி
öLjub
дs(Bштат கருத்துக்குறிப்பு கருத்துவாதம்
Hyperborean Sceptic
Iris
Ainesidemos
Osiris
Allegory Consonances Plane figure
Unity Monistic hypothesis Ethics
Orbit
Monochord
The Orphics Orphism
Homer
Morotheism Corporeal monism
Auranos
Cartillage Illusion Quantity Kadmos Iris (eye) Phlegm Chaos
Connotation
Idealism

Page 198
380
கருதுகோள் கருப்பிண்டம் கருவியல் கல்டியர் கவர்பாட்டுவாதம்
கழகம் கழிமுகம் கற்குழி
காரியன்
SITG)LOT60T lb
காலவழு காற்று கான்று
கியூமே கிரகணம்
கிளாசொமெனை கிளிமென்று கிளெப்சைட்ரு கிளைத்தேற்றம்
இபிசு
குடம்
குடியரசு குரொனேசு குரோட்டன்
குருேத்தே
கூம்பகம்
ஆதி கிரேக்க மெய்யியல்
85n
Hypothesis
Foetus
Embryology
Chaldeans
Argument from dichotomy
(Zeno)
The Academy
Delta
Quarry
Karyan Chronology Anachronism Wind
Kant
Cumae Eclipse Klazomenai
Clement Klepsydra Corollary
Kebes
Socket Republic Kronos
Kroton
Grote
Pyramid

கெரேசா
கைதியா கைப்பிரிசு
60)BULJIT
G35|Tortun
சகடவோட்டம் சங்கிராந்தி சடவாதம் சத்துப்பொருள் * சதம் ” மொழி சமராத்திரம்
சாடெயிசு சாதாரண அறிவு சாமோசு
சார்பு
gFTULb
இரரோ
சிம்பிளிசியசு
சிம்போசியம் சிமோனைடிசு சியசு
சிறுகரடியுடுத்தொகுதி
சின்ன ஆசியா
சுதோய்க்கர்
அரும்பத அகரவரிசை 381
கெ
கோ
Geresa
Scythia Kypris Gaia
Sphere
Cyclic motion Solstice
Materialism Reality “Satem” Language
Equinox
Sardeis
Common sense
Samos
Relation
Essence
Cicero
Simplicius
Symposium
Simonides
Zeus
Little Bear Constellation Asia Minor
Stoics

Page 199
382
சுரோணிதம் சுழி
சூத்தோசு சூனியம்
செகுதசு செம்பக்கம் செல்லர்
செவ்வகவுரு
ஆதி கிரேக்க மெய்யியல்
சென். கிரெகோரி நேசியான்சின்
சென்சோரினசு * சென்ரம் * மொழி செனுேபனிசு செனுேபிலோசு
சேனே
சைரோசு
சொபோக்கிளிசு
சோக்கிரதர் சோதியன்
டிமீத்திரியசுபெலேரியசு
o G36)Tr
சொ
Female semen
VorteX
Xouthos
Zero
Sextus
Hypotenuse
Zeller
Oblong figure St.Gregory Nazianzene Censorinus “Centum” Language Xenophanes Xenophilos
Zeno
Syros
Sophocles
Socrates
Sotion
Demetrios Phalereus
Delos

அரும்பத அகரவரிசை 383
டொ
டொரியர்கள்
தசாங்கநாற்கணம் தமாசுகியோசு தனிமம்
தா
தாரகம் தாகெய்ரோசு தாபகர் தார்க்கீகன், சோபிட்டு
தாரசு தானரி தானேயுளவாயபொருள்
தி
திண்மப்பொருளளவையியல் திமாயசு
திமாயோசு
தியனே
தியோபிறசத்தோசு
திராபோ
திருக்குமா
தீபிசு
துருேமதீசு
தூய்மையாக்கம்
தூலப் பொருள்
தெ தெமிசுத்தியோசு
Dorians
Tetraktys of the dekad Damaskios
Element
Sustenance Stageiros Founder Sophist
Taras Tannery Thing-in-itself
Stereometry Timaeus
Timaios
Theano Theophrastos Strabo
Drachma,
Thebes
Stromatelis
. Purification
Matter
Themistios

Page 200
384
தெமோகிரித்தோசு தெரக்கிலைடிசு தெலிசு
தேராச்சடப்பொருள் தேராவிரட்டை தேலிசு தேவபாரம்பரியம்
தையன
தொடுகையுணர்வு
தோற்றப்பாடுகள்
நபுனசார் நவப்பிளேட்டோதரிசனம் நவபைதாகரசவாதம் நவபைதாகரசவாதிகள்
நாளம் நாற்கணம் நான்கு மூலகங்கள்
நிக்கொமாக்கோசு நிமித்தகாரணம் நிமிளை நியமகாரணம் நிரீச்சுரவாதி நிலைக்குத்து
தே
தை
ஆதி கிரேக்க மெய்யியல்
Demokritos Derkyllides Telys
Indeterminate matter Indeterminate Dyad Thales
Theogony
Diana,
Sense of Touch
Phenomena
Nabonassar Neoplatonism Neopythagoreanism Neopythagoreans
Wein Tetraktys The four roots (Empedocles)
Nikomachos Efficient cause Amber
Formal cause Atheist Gnomon

நிலையியக்கவியல் நிறைவிதி எடுப்பு
நீர்த்தம்பம்
நுண்டொளை நுரைக்கல்
நூசு o நூமினியோசு O. O.
நெடுங்கணக்குக் குறியீடு
நேர்வு நேரியக்கம்
பக்காய்
LIL965th
பதி
பதிவு
பரசெல்சசு பல்லிறைவாதம் பற்றுநிலை பன்னிருமுகத்திண்மம் பனேப்தை
பார்மனைடிசு பாட்டர்கள்
LITL 'LLIT பாடியகாரர்
LITLUlfb பால்வரைமுதல்வி
அரும்பத அகரவரிசை
நே
Mechaniçs Universal affirmative
Waterspout
Pore Pumice stone
Nous
Noumenios
Alphabetical notation
Fact Direct motion
Balkohai Crystal God
Recordi Paracelsus Polytheism Retention
... Dodecahedron
Panoptai
. , Parmenides
Spartans Sparta
*** Commentator
Flux . . Holder oflots (Goddess)

Page 201
386
பால்வழி மண்டலம் . .
பாவுபடி * * *
լ Տ) 600TLlb é 秒 பித்தம்
SG3a)ft
பிலோலெசு
பிளேயசு
t SG_fr பீதரசு
புகார் புதிதுகாணி புரொதாகரசு புரோய்டெந்தால் புல்லேடு புலனுணர்வு
புவிமையக்கருதுகோள்'
புவிமையவிடமாற்றம்
GlittliTaig5
பூசல் a ve பூரணம்
பெரிகைடிசு பென்ரல்பா
G8uTTGot(B
பைதாகரசு பைவாட்டர் ة*
ஆதி கிரேக்க மெய்யியல்
The Milky Way Lintel
Microcosm
Bile
Philo
Philolaos Phleious
Phaedo
Phaedrus
Mist
Inventor
Protagoras Freudenthal Papyrus
Perception Goe etric hypothesis Geocentric parallex Plutarch
Strife Plenum
Perekydes
. :ʻ.Pentalpha, (Pentagram)
The Great Year
Pythagoras Bywater

பொசெய்டோனியோசு பொதுவளவின்மை பொயோத்தியா பொலிகிருத்திசு
போபைரி போலிநியாயத்தொடை
பெளதிகவதிகம்
மயக்கம்
மறுதலை மனமுடுக்கு மனிதனது இயல்பு
மாகைட்டுக்கள்
மாற்று மாருவிகிதம்
மிமினமோசு
மிலட்டசு மினேவர்
மீடி
முக்காலி 8 முரண்நிலை ஆய்வுமுறை முரண்பாடுகள்
அரும்பத அகரவரிசை 387
Glt uir
Gum
பெள
Poseisdonios Incommensurability Biotia
Polykrates
Porphyry Paralogism
Metaphysics
Confusion
Converse
Impulse The Nature of Mam
Margites Exchange Constant ratio
Memnermos
Miletus
Minoans
Mede
Tripod
Dialectical method Opposites

Page 202
388 ஆதி கிரேக்க மெய்யியல்
முரணுரை
முழுமை முற்கற்பிதம் முற்கோட்டம் முறைப் பெருந்தீ
மூலக் கலவை மூலக்கூறு மூலகம் மூலைவிட்டம்
மெ
மெய்யியல் மெய்யுணர்வேந்து மெலிசசு மெற்ருபொந்தியோன் மென்சவ்வு மென்தோல்
Gio
மேமனடை
மேனே
மைசீனியா மையநாட்டவிசை மையநீக்கவிசை மைலீசியர்
மொசாய்க்க
மொசுகிய O
மொனட்டு es
மோசேசு 2
Paradox
The Whole Presupposition Prejudice Periodic Conflagration
Original mixture
Molecule
Element Diagonal
Philosophy The Philosopher King Melissos
Metapontion Membrane Membrane
Mermanadai
Meno
Mycenea Centripetal Centrifugal force Milesians
Mosaical
Moschical
Monad
Moses

அரும்பத அகரவரிசை 389
யோ
யோச்சியாசு
லி
லிடியர் லியூகிப்போசு
லைசிசு
லோபெக்கு
€እል!
வக்கரிப்பியக்கம்
வக்கிரம் (வானியல்) . . வட்டத்தின் பரப்புக்காண்முறை வரம்பற்றது
வரன்முறைநூல்
வளி
வளிமண்டலவியல்
வாதவியல் வாதாட்டங்கள் வாய்ப்பு வாயடை நியாயம் வாரோ வானசோதிகள் வானமையரேகை வானியல்
விகிதசமம் விகிதமுருக்கணியம் விகிதமுருமூலம் விகிதமுரு வெண்
Georgias
Lydians Leukippos
Lysis
Lobeck
Retrograde motion Retrogression Quadrature Boundless Successions
Air
Meteorology
Dialectic
Disputation
Walidity Argumentum ad Silentium Varro
Heavenly bodies Celestial Equator Astronomy
Proportion Irrational quantity Surd
Irrational number

Page 203
390. ஆதி கிரேக்க மெய்யியல்
விதைகள் விம்பம்
விருத்தி (பக். 2, குறி 2)
வெதுசுத்தாபிளாக்கிட்டா
வெளி o o
வெளிப்பாடு to a
வெளிமூச்சு o
வெளியொழுக்குகள்
றெ
றெசியோன்
Seeds (Anaxagoras) Jimage Augment
Vetusta Placita, Space Apocalypse Exhalation Effluences
Rhegion

Arch,
BEARE.
DELS D0X.
DIELS Wors.
COMPERZ.
JACOBY.
R. P.
- ZELLER.
39
ABBREWATIONS
Archiv fur Geschichte der Philosophie, Berlin,
1888-1920
Greek Theories of Elementary Cognition, by John
I. Beare. Oxford, 1906.
Doxographi graeci. Hermanus Diels. Berlin,
1879.
Die Fragmente der Vorsokratiker, von Hermann
Diels, Dritte Auflage. Berlin, 1912.
Greek Thinkers, by Theodor Comperz, Authorised
(English) Edition, vol. i., London, 1901.
Apollodors Chronik, von Felix Jacoby (Philol.
Unters. Heft. xvi.) Berlin, 1902.
Historia Philosophiae Graecae, H. Ritter et L. Preller. Editio octava, quam curavit Eduardus Wellmann. Cotha, 1898.
Die Philosophie der Griechen, dargestellt von Dr. Eduard Zeller. Erster Theil, Funfte Auflage. Leipzig, 1892.

Page 204

அகரவரிசை
غنية
அக்கிரகாசு, 3, 206 தொ. அக்கிலிசு, 38 அக்கிலிசும் ஆமையும், 328 அக்கெளசுமாத்தா, 101, 104, 296 அக்கெளசுமாத்திகள், 99, 104 அங்கம் (பைதாகரசு) 113, 326 தொ. அசைவின்மை, “ இயக்கம் ” பார்க்க அடர்த்தியுறல், அண்டவியல் ஆர்வம், 53, 242, 276, 282,362 அண்டவுற்பத்தியியல்கள், 8 தொ.
&
ஐதாதல் ” பார்க்க
அணுக்கள் :
இயக்கம், 15, 65, 352, 357 நிறை, 354 தொ. அணுவாதம், 189 கு, 191, 348 தொ. அதென்சு, 331, 374 ;
அனக்சகோரசு, 269 ; எம்பிடோக்கிளிசு, 212 ; பார்மனைடிசுவும் சேணுேவும், 177, 321 கு. அதெஞகாக, 38 அந்திரோக்கைடிசு, 298 அந்திரோன் (எலிசோசு) , 92 அந்தோனியசு இடையோசினிசு, 92 அப்பொலோடரசு, 42
அனக்சகோரசு, 264 அனக்சிமாந்தர், 55 அனக்சிமினிசு, 75 எம்பிடோக்கிளிசு, 207, 207 கு. ; எரக்கிளைட்டசு, 135 ; செனுேபனிசு, 117 ; பார்மனைடிசு, 177 ; மெலிசசு, 331 ; லியூகிப்போசு, 341. அப்பொலோனியோசு (தையன) 92 கு. 2, 100 அப்போலோ-ஆக்கியர்தெய்வம், 5
அப்போலோனியா, 57, 364 கு.
அபாரிசு, 85, 95 கு. 2
அபுதேரா : 341 தொ.
அபுதேரா மரபு : 65
அமாசிசு, 45, 93
அமெனியாசு, 178
அயரோன், 118
அயாம்பிளிகோசு,
‘பைதாகரசுவின் வாழ்க்கை”, 91, 105 கு. 1
அயோனியர் கட்டிடவியல், 45 கு.
அயோனியர் : 3
அண்டவியல், 118 கட்டிடக்கலை, 43 கு. 1 துன்பியல் உணர்வு, 10 ; லெளகிகம், 15 தொ, 84
அரித்தாக்கோசு (சாமோசு), 311
அரித்தியாசு, 85, 95 கு. 2
அரித்தோசெனசு :
ஆக்கைற்றச, 290 இப்போன், 383 கு. 1 ; இயூறைத்தோசு, 105 கு. 291 ; பிளேட்டோ, 293 தொ ; பைதாகரசு, 91, 93 கு. 1, 94, 96, 99 கு. 1 ; பைதாகரசவாதிகள், 290, 319
அரித்தோதில், 34 :
Jgļ6āš8stra, 265, 2, 278, 280 ; அனக்சிமாந்தர், 59, 60 தொ, 82, 67 அனக்சிமினிசு, 81 ; அலுக்மையோன், 202 ; இடைக்கோட்பாடு, 117 கு. 2 இடையோசினிசு, 367; இப்பாசோசு, 114, 149 , இப்போன், 363 ; இறையியல்வாதிகள், 9 தொ ; எகிப்தியர் கேத்திரகணிதம், 22
393

Page 205
394
எண்கள், 105 தொ ; எம்பிடோக்கிளிசு, 208, 210, 240, 241, 243, 244, 245, 2 6 கு 3, 248, 251, 252, 253, 254, 261 ; எரக்கிளேட்டசு, 151 கு 1, 153, 165,
167 சென்ேபனிசு, 130 தொ, 132 தொ ; சேனே, 322, 323, 327, 328 தெமோகிரித்தோசு, 354 ; தேலிசு, 52-55 ; நித்திய இயக்கம், 14, 15 கு 1 ; நைல் நதிப்பெருக்கு, 49 ; பாபிலோனியர் வானிலை, 26 ; பார்ம2னடிசு, 178, 190, 191, 194 தொ. புவியீர்ப்பு, 352, 353 பைதாகரசு, 91, 92 கு 3, 95 கு 2 ; பைதாகரசவாதிகள், 97 கு 2, 113, 291, 297 தொ, 302, 303 தொ, 315, 317 ; மெலிசசு, 336 தொ, 338, 339 ; லியூகிப்போசு, 341, 348 ; வானகோளங்கள், 198 அரித்தோபனிசு, இடையோசினிசுபற்றி, 342,
365 அலுக்மையோன், 90,
26 , 269, 308, 343 அலுக்கிடமாசு, 90, 211, 270 கு 2, 322 அலெக்சாந்தர் (அபுரொடிசியாசு), 36
161, 202-5, 211,
அாைச்சிமா நீதர், 68 செனேபனிசு, 132 அலெக்சாந்தர் (அய்தோலிய), 268 அளவைகள், 158 தொ, 169 அளவையியலின் தோற்றம், 1 அன்ரிக்தோன், 308, 315 தொ அனக்சகோரசு :'.264-289;
அனக்சிமினிசு, 265, 279, 283, 285 ; ஆதிகால அண்டவியல், 116, 308 தொ ; இயூரிப்பிடிசு, 288 Føýlusr, 275, 320 ; எம்பிடோக்கிளிசு, 276, 278, 279, 280,
282, 286; எரக்கிளைட்டசு, 278, 281 ; ச திர ஒளி, 186 கு 1 ; சந்திர கிரகணங்கள், 316 ;
ஆதி கிரேக்க மெய்யியல்
சேனே, 361 சோக்கிரதர், 269, 280 நைல்நதி, 50 பெரிக்கிளிசு, 267 தொ ; லியூகிபபோசு, 342 அனக்சிமாந்தர், 55-75 ;
கடலுயிரியற்றுறையில் கண்ட உண்மை,
28; செனேயனிசு, 119 அனக்சிமினிசு, 75-83, 187
மெய்யியன்முறை, 83, 266, 316, 341,
365 கு 1
월, ஆக்கிப்போசு, 96 ஆக்கியர், 2 கு 1, 5, 85 ;
பொலிபியசுவைச்சேர்ந்தவர், 87 ஆக்கேலசு, 269-3 ;
அனக்சகோரசு, 373 ஆக்கைற்ருசு, 290 ஆண்டு, " பேராண்டூ ” பார்க்க ஆண்டுமானம்
பபிலோனியர், 25 தேலிசு, 52 ஆமேசு, 21 தொ ; 51 ஆப்பெடொனட்டு, 110 ஆர்க்கேடிய சைபபிரிய மொழி, 5 கு 2 ஆன்மா (மனித)
ஒபிச, 88 அனக்சிமினிசு, 79 அலுக்மையோன், 204 ஒர் “ இசைவு ”, 307 தொ. சோக்கிரதர், 88 ஆனுேபியசு, 41
9
இக்கேதாசு, 311, 311 கு 1 இசை, பைதாகாச, 103 இசையியல், 103, 316 இடாயோசு, 364 இடைக்கோட்பாடு, (அரித்தோதிலினது) 117கு 3 இடைபோசினிசு (அப்போலோனிய), 68, 83,
364-37;
அனக்சகோரசு, 368, 369

அகரவரிசை
எம்பிடோக்கிளிசு, 368 லியூகிப்போசு, 370 இடைனிசோசு, 88 இதயம்
அலுக்மையோன், 203 எம்பிடோக்கிளிசு, 211 இந்திய மெய்யியல், 21, 87 கு 1 இப்பாசோசு, 149, 196, 305, 307 இப்பொலைட்டசு, 40 ,
அனக்சகோரசு, 283 அனக்சிமாந்தர், 58 அனக்சிமினிசு, 82 எரக்கிளைட்டசு, 148 இப்போகிருத்திசு (கொசு) 29, 261 கு 1 இட்போன், 363-4 தேலிசு, 363 பைதாகரசர், 363 கு 1 இயக்கம்
அனக்சகோரசு, 280 எம்பிடோக்கிளிசு, 237 தொ சேணுே, 328 நித்திய 14, 85 பார்மனேடிசு, 187, 190 மெலிசு, 337 லியூகிப்போசு, 352 இயூக்கிளிட்டு, 111 இயூசிபியோசு, 19, 38, 40, 41 இயூடொக்சோக
கோளங்கள், 66 கு1, 198 ; விகிதசமம், 111 இயூதிமினிசு, 50 இயூமெமோசு, 47 கு 1, 50 கு 3 இயூரிப்பிடிசுவும் அனக்சகோரசுவும், 268 இயூறைத்தோசு, 105 தொ, 105 கு 1, 112,
291, 292 இரட்டை ஒற்றை, 300 தொ இரத்தம் :
இனடயோசினிசு, 367 எம்பிடோக்கிளிசு, 211, 239, 259 சிசிலிய மருத்துவ மரபு, 261 கு 1 இரனியசு, 4
395.
இராசியின் சாய்வு :
அனக்சிமாந்தர், 56 அனக்சிமினிசு, 81 இடையோசினிசு, 370 லியூகி போசு, 359 இருள், 78, 114, 163, 195, 196, 248, 20 இலாம்புசகேனியர், 270, 371 இவைசிசு, 96, 290, 295, 296 இறையியல்வாதிகள், 9 தொ இறைன்புல்லேடு, 21 இன்பமும் நோவும் :
அனக்சகோரசு, 287 எம்பிடோக்கிளிசு, 253, 257, 259
FF
ஈசிய நாகரிகம், 2, 3, 17, 44, 84 ஈத்தியோசு, 38 ஈமர், 5 தொ
ஆன்மன், 88 ஈலியவாதிகள் :
பிளேட்டோ, 132, லியூகிப்பே சு, 342, 344 தொ, 360 பார்மனைடிசு, சேனே, மெலிசசு ஆகியோ
66ort uit fjö&5.
ஈலியா, 177
காலம், 118, 177 செனுேபனிசு, 118, 120, 132 சேனே, 321 பார்மனேடிசு, 177 RFG.gif, 9, 199
உடலியல் :
இடையோசினிசு, 367
எம்பிடோக்கிளிசு, 255 தொ
பார்மனைடிசு, 201 தொ உடுத்தொகுதிகளின் பெயர்கள், 24 கு 2 உயிர்ச்சுவடுகள் :
செனுேடனிசுவின் கூற்று, 28, 129 தொ "உலக ஆன்மா ?
தேடுவிசு, 54;
அனக்சிமினிசு, 79 உலகத்தின் காலங்கள் , 7 உலக மூச்சு, 79, 113, 133, 194 தொ

Page 206
396 ஆதி கிரேக்க மெய்யியல்
எக்காதையோசு :
அனக்சிமாந்தரின் தேசபடம், 61
எரக்கிளைட்டசு, 139 ;
தேலிசு, 50, 55 எக்சாமியிசு, 46 எகிகிறத்தோசு, 90, 290, 307 எகிப்திய கணிதவியல், 18 ;
எண்கணிதம், 21 ;
கேத்திரகணிதம், 22 எகிப்து, 4, 17, 18,
தேலிசு, 49,
பைதாகரசு, 93 எசியொட்டு, 6 தொ, 16 எட்டாவது சுரம், 111, 115, 308, 317 எண்கணிதம் :
இயூக்கிளிட்டு, 111
எகிப்திய, 21
பைதாகரச, 104 தொ
எண்கள் :
அணுக்களும் எண்களும், 348 பைதாகரச கோட்பாடு, 112 தொ, 292,
298 தொ, 317 தொ முக்கோண, சதுர, செவ்வகவுரு எண்கள்,
07 எண்குறியீட்டுமுறை, 106 எண்ணிறந்த உலகங்கள் :
அனக்சகோரசு, 283 தொ அனக்சிமாந்தர், 62 தொ, 72 அனக்சிமினிசு, 82 ஆக்கேலசு, 373 இடையோசினிசு, 370 செனுேபனிசு, 130 பைதாகரசு, 82 எபிகாமோசு, 121, 159 கு
எபிகூரசு :
அணுக்கொள்கை , 354 தொ, 355 தொ “ எண்ணிறந்த உலகங்கள் ', 83 லியூகிப்போசு, 351
எபிசோசு, 135 தொ
எபிமினடிசு, 9, 102, 118
எம்பிடோக்கிளிசின் சொற்கோப்புக்கலை, 210 எம்பிடோக்கிளிசு, 206-263 ;
அதென்சில், 212 ; ஒபிசம், 209, 262 தொ ; செனுேபனிசு, 131 ; சேனே, 211 பார்மனைடிசு, 191, 211, 234 கு 2,
237 தொ, 262 தொ, 320 பைதாகரசு, 209 யோச்சியாசு, 210 லியூகிப்போசு, 211, 343 வளி, இருள், 248 வைத்தியம், 211 தொ
எரக்கிளைட்டசு, 135-176
அனக்சிமினிசு, 54 ஆகைலொகோசு, 141 எக்காதையோசு, 139 எசியொட்டு, 139, 141 ஓமர், 141, 147, 170, 171 செனுேபனிசு, 135, 139 புரொட்டாகரசு, 174 பைதாகரசு, 89, 93 கு 1, 94, 102,
135, 136, 139 * மூவகை வாழ்க்கைகள் ”, 104 கு 1,
147 கு 1 எாக்கிளைட்டசு, 64 கு 1 எரக்கிளேட்டசு (பொண்டோசுநாட்டு)
எம்பிடோக்கிளிசு, 212 கு 1 பைதாகரசு, 104 கு 1. எரக்கிளைடிசு லெம்போசு, 41 எரதசுதேனசு, 42,
அனக்சிமாந்தரின் தேசபடம், 57 பைதாகரசு, 93 கு 2 எரொடோதசு
எகிப்திய செல்வாக்குகள், 17 ; ஓபிசம், 83 ; ஒமரும் எசியொட்டும், 8 ; சொலனும் கிறிசசும், 27 ; தேலிசு, 45-50, 51 ; நைல்நதி, 49 ; பைதாகரசு, 89, 93 ; லிடியசெல்வாக்கு, 44

அகரவரிசை
எல்லையற்றது :
அனக்சிமாந்தர், 58 தொ ; செனுேபனிசு, 130 தொ ; பார்மனைடிசு, 190; மெலிசசு, 336 தொ
ஏ
எமிப்போசு, 42, 294 எமோக்கிருத்திசு, 293 கு 1 எமோடரசு, 135, 135 கு 4, 147 தொ * எர்” (எனும் கதை), 197, 199, 200
ஐகொசப்போத்தே தேச எரிமீன்கல், 265,
283, 370
ஐங்கோணச் சக்கரம், 307
ஐசோக்கிரத்திசு, 267
ஐதாதலும் அடர்த்தியுறலும், 78 தொ,
154, 187, 338, 369 ஐப்பபோரியர், 85, 95 கு 2 ஐனெசிடெமோசு, 160
se ஒகத்தீன், 41 ஒருமைவாதம், 12, 189, 208, 320 ஒழுக்கவியல், 1 ஒளி, 196, 250 ஒற்றை இரட்டை, 300 தொ ஒறிகென், 40 ஒனுேமகிறித்தோசு, 102
ge
ஓபிசம், 6 கு 1, 86 தொ, 200, 209 ஒமர் (உருவக்கதையெழுதி, 64 கு 1 ஒமர் உருவக் கதைகள், 54 கு 2 ஓரிறைவாதம், 133
கட்டுக்கதைகள் :
எம்பிடோக்கிளிசு, 210 கு 1 ; எரக்கிளைட்டசு, 136 கு 3
5L6) :
அனக்சகோரசு, 284 ; அனக்சிமாந்தர், 88 தொ ; இடையோசினிசு, 369 ; எம்பிடோக்கிளிசு, 251 ; எரக்கிளைட்டசு, 157 ;
கடவுள் :
அனக்சிமாநதர், 64 ; , அனக்சிமினிச, 82 ;
397
6TSGuitt, 6, 16; எம்பிடோக்கிளிசு, 240, 246, 262 ; எரக்கிளைட்டசு, 175 ; ஓமர், 5 கடவுளரின் வீழ்ச்சி, 88 ; சமயத்தொடர்பற்ற கடவுள், 18, 84 ; செனேபனிசு, 133 தொ ; கேலிசு, 52, 55 பார்மனைடிசு இப்பதத்தினைத் தவிர்த்தல்,
187 ; கப்பலோட்டும் முறை :
அனக்சிமாந்தர், 57 ; தேலிசு, 46, 52 கயோசு, 9 * கருத்துக்கள் ” கொள்கை, 318 தொ கருவியல் :
எம்பிடோக்கிளிசு, 256 ; பார்மனேடிசு, 186 கு 3, 201
&;606cm}○」 。
அனக்சிமாந்தர், 81 ; எம்பிடோக்கிளிசு, 246
கலன், 38 ;
எம்பிடோக்கிளிசு, 210
கழகம், 32
கழக நூல்நிலையம், 36, 365
காந்தக்கல் பற்றித் தேலிசு, 52, 58 காற்று, 66, 67, 68, 71, 72, 78தொ, 114,
155, 160 வெளியெனக்கூறப்படுவது, 114, 195, 203,
239, 240
剑 கிரகங்கள், 24, 73, 110தொ, 203தொ, 250
பைதாகரசவாதிகள் முறை, 291, 308 கிரகங்களின் வக்கிரங்கள், 24, 314 கிரகணங்கள் :
அனக்சகோரசு, 285 அனக்சிமினிக, 82 எம்பிடோக்கிளிக, 250 எரக்கிளைட்டசு, 156 செனுேபனிசு, 128 தேலிசு, 46 பபிலோனியர், 47 பைதாகரசு, 310, 315 லியூகிப்போசு, 259 கிரித்தியாசு, மூத்த, 293கு1 கிராத்திலசு, 374தொ கிளிமென்று, 18

Page 207
398 ஆதி கிரேக்க மெய்யியல்
கிளெப்சைட்ரு, 29, 239, 257, 343 கிருத்தினேசு, 363 综
கீபிசு (பைதாகரசு பார்மனைடிசு), 178 கீழைத்தேசச் செல்வாக்குகள், 17தொ
கு குரொட்டன், 94, 202
&ர்,
கூர்ப்பு :
அனக்சகோரசு, 285தொ அன. சிமாந்தர், 75 எம்பிடோக்கிளிசு, 253தொ
GES கேத்திரகணிதம் :
எகிப்தியர், 22தொ தேலிசு, 50தொ பைதாகரசு, 109தொ
கைலோன், 96
Golgis/r கொறிபாந்திசுகள், 103
கோ கோளங்கள் :
எம்பிடோக்கிளிசு, 238 பார்மனைடிசு, 190, 238, 242 வான்கோளங்கள், 66கு * கோணங்களின் இசைவு” 115, 316தொ
சங்கிராந்தி, 24, 47கு1, 57 சடவாதம், 191 சத்தைரோசு, 42
அனக்சகோரசுபற்றி, 289தொ எம்பிடோக்கிளிசு பற்றி, 210 கு2 ; பிளேயசு பற்றி, 293 சந்திரன் :
அனக் கோரசு, 284தொ அனக்சிமாந்தர், 70 அனக்சிமினிசு, 79 தொ எம்பிடோக்கிளிசு, 250 ஒளி, 186கு1, 250, 285, 310 சுழற்சி, 308 செனுேபனிசு, 129 லியூகிப்போசு, 259
*ւԸԱյւն :
ஈசியர், 4, 5, 84 டீலிய, 83, கடவுள், ஒருமைவாதம் ஓபிசம், பலியிடல் ஆகியவற்றைப் பார்க்க
சமராத்திரம், 24, 47கு1, 57 சலுமொச்சிசு, 89, 95கு2
ΕΤ
son 159air, 119
剑
சிடிரோ, 39
அனக்சிமாந்தர், 64 அனக்சிமினிசு, 82 தேலிசு, 54தொ பார்மனைடிசு, 97கு1 பைதாகரசு, 94கு3 சிந்தனை
எம்பிடோக்கிளிசு, 259 பார்மனைடிசு, 186 சிம்பிளிசியசு, 36
அனக்சகோரசு, 270, 277 இடையோசினிசு, 365, 370 எண்ணிறந்த உலகங்கள், 63தொ செனுேபனிசு, 120தொ, 132 சேணுே, 323 தேலிசு, 53 பார்மனேடிசு, 179, 192, 196, 198 மெலிசசு, 332 சிம்மியாசும் பிேசும், 291, 291கு, 307, 319 சிரஞ்சீவித்துவம், 88, 162தொ, 204, 283
சில்லுகள் :
அனக்சிமாந்தர், 72, 115, 198 பார்மனைடிசு, 198 பைதாகரசு, 115 சில்லோய், 121
சுதோய்க்கர், 35, 137, 137கு1, 149, 156,
167தொ. பேராண்டு, 165 சுல்வகுத்திரங்கள், 23 சுவாசிப்பு, 161, 211, 239, 257, 292 சுழற்சி, நாளாந்த, 15, 65, 115
கு சூத்தோசு, 302 சூரியன் :
அலுக்மையோன், 203 அனக்சகோரசு, 285 அனக்சிமாந்தர், 70தொ அனக்சிமினிசு, 80தொ எம்பிடோக்கிளிசு, 249 எரக்கிளைட்டசு, 155, 163

அகரவரிசை
செனுேபனிசு, 128 தேலிக, 53 லியூகிபபோசு, 359
ܣܛ؟ செகுதசு எம்பிரிக்கசு, 35
attri3%m Li, 160 செகுற்று, 22, 50 செம்பகம், 110 செவிப்புலன் :
அலுக்மையோன், 203; அனக்சகோரசு, 287 : எம்பிடோக்கிளிசு, 259, 260 சென்ரம் சதம்மொழிகள், 4 கு செனுேபனிசு ; 117-134
அனக்சிமாந்தர், 119 ; உயிர்ச்சுவடுகள், 28 ; ஒமர் எசியாட்டு, 120, 130 ; தேலிசு, 117, 118; பார்மனைடிசு, 178 ; பைதாகாசு, 89, 113, 118 செனேயிலோசு, 291
GBs சேர் ஆர்தர் இவான்சு, 2 கு 1, 5 கு 2 சேனே, 320-331
அதென்சில் 177, 321 கு 1 ; எம்பிடோக்கிளிசு, 211, 324 கு 2 ; பைதாகரசர், 324 தொ
6ኽã# சைபாரிசு, 94 கு 3, 96
@gIहु சொசிகிருத்திசு, 41 சொலன்-கிறீகசு, 27 தொ
சோ
சோக்கிரதர் :
அக்கோசு, 371 தொ ; அனக் கோரசு, 269, 280 ; ஆன்மா, 88 : * கருத்துக்கள் கோட்பாடு”, 318 பார்மனைடிசுவையும் சேனேவையும் சந்
தித்தல், 177, 269 கு 2, 321; பைதாகரசவாதிகள், 291 சோதிடக்கலை, 26 கு 3; சோதியன், 41
பார்மனைடிசு பற்றி, 178.
ஞா ஞானியர் எழுவர், 48, 49, 55, 118
399
டமாசியசு, 49
s டிமீத்திரியசுமக்னேசு, 295 டிமீத்திரியோசு பலீரியசு :
தேலிக, 49 ; அனக்சகோரசு, 264 டியல்சு, 36
s டீலோசு, 84, 85, 95 கு 2
GöL டேமன், 268 கு 1, 269
டையடோரசு, 100
டொ டொரிக்குமொழி, 295, 296 தொ டொரியர், 2 கு, 95
乐 தசாங்கம், 108 தமாகியோசு, 9 கு 2
தா தாவரங்கள் :
அனக்சகோரசு, 285 தொ எம்பிடோக்கிளிசு, 251 தொ
திகயாக்கோசு (பைதாகரசுபற்றி), 91, 98 திமாயோசு :
எம்பிடோக்கிளிசு, 207, 208 கு 1, 209,
212; செனேபனிசு, 118; பார்மனைடிசுவும் சேனேவும், 321 ; பைதாகரசு, 91, 93, 94
திமாயோசு (லோக்கிரியநாட்டு) 90, 207, 293
திமோன் :
செனேபனிசு, 121; பிளேட்டோ, 293
தியனே, 317
தியாய்தித்தோசு, 111, 297
தியொடோரசு, 111
தியோடோறெற்று, 38, 41
தியோபிறசத்தோசு, 36
அனக்சகோரசு, 265, 266, 285, 286 தொ; அனக்சிமாந்தர், 55 ; அனக்சிமினிசு, 75 தொ ; இக்கேதாசு (எகுடாந்தோசு பற்றி) 31: இடையோசினிசு,364, 371 :

Page 208
400
எண்ணிறந்த உலகங்கள், 63 தொ : எம்பிடோக்கிளிசு, 211, 243, 249 கு 1,
252, 257 தொ, 261 : எரக்கிளேட்டசு, 138, 148, 1543 செனுேபனிசு, 119, 128, 129, 130 ; தெமோகிரித்தோசு, 354 : தேலிசு, 45 கு 1, 57 தொ: பார்மனேடிசு, 188 கு 2,
199, 200 தொ ; பிளேட்டோ, 315 தொ ; புறெபீதியசு, 45 கு 1 ; மெய்யியற் கழகங்கள், 31தொ: லியூகிப்போசு, 341, 344, 349தொ திரபோ :
எகோடரசு பற்றி, 135 கு 4 : மோகோசு பற்றி, 19 ; பார்மனைடிசும் சேனேவும் பற்றி, 178, 321 திரவியவுயிர்வாதம், 14 கு 1
192, 195,
தீ தீபிசு :
இ2லசிசு, 97, 290 பிலோலெசு, 290
துயில் :
எம்பிடோக்கிளிசு, 256 எாக்கிளைட்டசு, 144கு1, 160தொ
தெ தெமோகிரித்தோசு :
அனக்சகோரசு, 285, 341, 360 ; ஆதிஅண்டவியல், 116, 309தொ, 351 ; எகிப்தியர் கணிதம், 23 காலம், 285கு1, 341 ; சோக்கிரதருக்கு முந்தியவர், 1கு1 லியூகிப்போசு, 341, 354 ;
தே தேசப்படம், அனக்சிமாந்தரின், 57 தேலிசு, 44-55, 109 தேலிசு ஊளி, 43 தேவபாரம்பரியம் :
எசியொட்டு, 8தொ
தொகுப்பாசிரியர், 36 தொபாயோசு, 37 தெளரியை (நகரம்), 43, 97, 207, 212கு?
ந நபுனசார்காலம், 25 நவப்பிளேட்டோதரிசனவாதிகள், 35, 192
ஆதி கிரேக்க மெய்யியல்
நவபைதாகரர், 112;
நா நாற்கணம், 107 :
நி நிக்கொமாக்கோசு, (கெரேசா), 92கு2 நிசிடியசு பிகுலசு, 100 நிரீச்சுரவாதம், 55 நிறை, 354தொ
நீர் (தேலிசு), 52
gif நூசு (அனக்சகோரசு), 280 நூமினியோசு, 18
நை நைல் நதி, 49, 284
髓星 பபிலோனிய இராசிமண்டலம், 24கு2 பபிலோனிய வானியல், 24தொ
சூரியகிரகணம், 47 பலியிடல், 98, 100 பன்மைவாதம், 208, 320 பன்னிருமுகத்திண்மம், 306தொ
IITuth, 153 பார்மனேடிசு, 177-201
எரக்கிளைட்டசு, 135, 187, 193 தொ செனுேபனிசு, 178 பைதாகரசவாதமும் எம்பிடோக்கிளிசும், 178, 193தொ, 201, 211, 305, 320 பால்வழி, 200, 285
பியூசிப்போசு :
பார்மனைடிசு பற்றி, 1793 பைதாகரச எண்கள் பற்றி, 107கு1, 292 பிலிசுத்தியோன், 261கு பிலிப்பு (ஒப்பவுசு), 316 பிலோடெமோசு, 39
அனக்சிமாந்தர், 64 பிலோலெசு, 90, 105, 290, 291தொ, 305,
309தொ பிளினி :
அனக்சிமாந்தர், 56; எரிமீன்கல், 265 தேலிசு, 48 LSGatn"GLIT, 34
அனக்சகோரசு, 267, 269கு2, 270, 280 ; ஈலியவாதிகள், 132 :

அகரவரிசை
எம்பிடோக்கிளிக, 151, 210கு2, 244 எரக்கிளேட்டசு, 151, 163, 186, 167 எாக்கிளேட்டகவாதிகள், 32, 174கு : ஓபிசம், 88 ; கிரகங்களின் இயக்கங்கள், 204 ; செனுேபனிசு, 132, 178:
(ത്ര, ', 821, 828, 824; சோக்கிரதர், 376 ; பார்மனைடிசு, 177, 178, 190,200, 207கு2,
321 ; பிலோலெசு, 290 ; புவியீர்ப்பு, 355 ; பூமியின் இயக்கம், 312தொ ; பேராண்டு, 165தொ ; பைதாகரசு, 90, 95கு ; பைதாகரசவாதிகள், 65, 90 318 ; மெய்யியல் கழகங்கள், 32தொ ; * வளி " 196குt; பிறவிச்சக்கரம், 102, 103;
பீற்றன், 65, 144 : பீனிசய செல்வாக்கு, 46;
니
புரொட்டாகரசு :
எரக்கிளைட்டசு, 174 ; சேணுே, 322 புரோத்தினேசு, 202கு1 ; புலனுணர்ச்சி :
அலுக்மையோன், 202 ; அனக்சகோரசு, 288தொ ; இடையோசினிசு, 371 ; எம்பிடோக்கிளிசு, 257தொ ; பார்மனைடிசு, 186; லியூகிப்போசு, 359தொ
புலால் மறுத்தல் :
எம்பிடோக்கிளிசு, 262 ; பைதாகரசு, 99, 100 புளுட்டாக்க :
அனக்சியினிசு 79 ; எரக்கிளைட்டசு, 168 ; எரிமீன்கல், 265 ; ஒற்றை இரட்டை, 301 சேனே, 321கு! ; பார்மனைடிசு, 321கு1 ; மெலிசசு, 331தொ
: هلي
40
அனக்சகோரசு, 255 ; அலக்சிமாந்தர், 69தொ ; அனக்சிமினிசு, 81 ; ஆரம்பத்தில் ஈரலிப்பு, 29, 8Tதொ, 68,
252தொ ; இடையோசினிசு, 389 ; இயக்கம், 89, 73, 310தொ, 316, 317 எம்பிடோக்கிளிக, 251 : செனுேபனிசு, 130 ; தேலிசு, 52; பைதாகரசவாதிகள், 311தொ ; லியூகிப்போசு, 359; வடிவம், 69, 116, 309, 359
பெ
பெரிக்கிளிசு :
அனக்சகோரசு, 264, 287 தொ ; சேனே, 177, 321கு ; '.
மெலிசசு, 331 م% பெரிகைடிசு, 4, 9கு1, 84, 99கு1, 102
பேராண்டு, 164தொ
பை
பைதாகரசதேற்றம், 109தொ பைதாகரசவாதிகள் : 290-319 ;
பிளேட்டோ, 15, 65, 87, 90, 95கு1 வளி, 114, 185, 242 பைதாகரசு, 89-117 ;
அயோனியதேசத்தவர், 3 பைதியகாலம், 49 பைதுரோசு, 39 பைதோடரசு, 321கு பைரோ, 87கு1
Gour பொசெய்டோனியோக :
சிடோன்நாட்டு மோகோசு, 19கு பொதுவளவின்மை, 110 பொலிகிருத்திசு, 43, 93
Gurr போபைரி, 92, 95
o மத்தியதீ, 199, 308 தொ Lo{tଙfli) :
அலுக்டிையோன், 204 ; எம்பிடோக்கிளிசு, 256; எரக்கிளைட்டசு, 143, 161 தொ மறுபிறப்பு, 87கு1 89, 94, 98, 262 மனிதன்';
அனக்சிமாந்தர், 74 தொ

Page 209
4Սչ ஆதி கிரேக்
* **
ா திாேட்ட4, 15 தெர
f மிலட்டசு 44 கிரிகு,ே 341, 342 மின்னலும் இடியும்
அரிக்கிர்ந்த,72; -eIgeral. 877aß5:Far, 8i:}; ாபிடேக்கிவிடி, 20
முக்கோனம் (பதாகரசு), 23, 109 முகர்ச்சி;
அனக்சகோசர், 287 : artiւնitքլ-րձնs": 25ն, Ջht)
மூ மூலகங்கள், 13கு1, 58, 10 தொ, 232 தோ,
3C-1 Gr
3 - 3 ខ្សគឺ ៖
அலுரிமையே 1, 202 բrլու: Eլո, Հ-ում, 11 | : பிளேட்டோவும் இப்போகிருத்திசம், 281கு
ெ மெய்யியலறிஞரின் அரசியல் ஈடுபாடு:
எம்பிடோக்கிளி, 20 தொ
:: skálk 5l ; LIIIs Laş:TL = 179 ;
L; thւյրը: Ալյրք 34ն மெய்யியற கழகங்கள், 31நொ 83 [...Likolarტეi, ჭჭ|=3; |II) ;
அஆோதிரியர், 3:1-3:37
Egeraars'Art Iran, 333 334), 347- : பார்பனேடின் 3:31, 3ஃப் விபதாகரசவாதிகன், 338 மேற்றுபோந்தியோன், 24 25கு2, 26
፪፻፹1IFI]
மைவிசிய மரபு, 44-83 மைலோ, 26
ĞLiam மோகோசு, 19கு?
ה,
வியாத்தியது இடயோசிரிதி, 41, 42, 14 தொ
விடியா, 44 தோ, 123 வியூவிப்போசு, 341-361 :
யோனியர், 351 தொ. 380

4.
சு மெய்யியல்
„-erlärsamer, 33, 3) இடையோசினின் 3: ஈவியன்ாதிகள், 191, 342தொ. 344தோ, 3HB, 353, 3եD ։
| , || தெமோதிரித்தோக, 340, 358 ப்ேபதாகரசவாதிகள் 348, 351, 337 வியூக்கிறததிசு Tம்பிடோக்கிளி பற்றி, 1ே3
Eual Eir :
அராபிய, 10க்கு 1
Tarl eu Giffar:L:Ja'uJo, 30, 54, 204
Կ11 || | வானசோதிகன், 67 தொ
அனக்சகோாசு 285 தோர் அனக்சிமாந்தர் 70 தொ: அன்க்ரியின், தோ: அலுத்மையோன் 204 : இடையோசிரிக, 370 ETILENZITEālañas, 248 GESIT ; எர்க்கிளேட்டசு 156 தொ : செஆேபணிக, 12 தோ: பார்பனேடிசு, 19ம் தோ: பைதாகரசு, 15 தோ
வானியங், பபிலோனியாதும் கிரேக்காதும்,
24 தோ
କୀଳ விகிதசமம், 111 விகிதமுருக்கணியங்கள், 10, 11 விதைகள், அஜாக்சகோாசு, 'B தொ
வே வெற்றிடம் :
| தலுக்ாபயோர், 203 பார்:ாடிதி, 188, 19ர், 328 Eii iiiT AIFF, l 14, 187, 19, 302;
|T வியூகிப்போசு 343, 248
El ETI வைத்தியம் :
அலு:கனமயோன், 202 தொ; GTLDLEGLIT55-Graf, 210 (3:5, "T 23T |ւննցմnt: Ճիք, 3H2 ETILEPTITA, 102, 201
វិញ
ருேடிக், 3