கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

Page 1
susijos,
 

ன்னாடியின் இத்திர்

Page 2


Page 3
s
2
 

கே.எஸ். சிவகுமாரன்
மணிமேகலைப்பிரசுரம்
தபால் பெட்டி எண்: 1447, 7 (ப.எண்: 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி: 24342926, 24346082 tSabrecordo: manimekalai1Qdataone.in goodoru partb: ww.tamlvanan.com

Page 4
நூல் விவரம்
WAAAAAAAAWA X, സ്റ്റ
缀 3)
நூல் தலைப்பு
ஆசிரியர்
உரிமை
மொழி பதிப்பு ஆண்டு பதிப்பு விவரம் தாளின் தன்மை நூலின் அளவு அச்சு எழுத்து அளவு மொத்த பக்கங்கள்
11
గొ*
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை கே. எஸ். சிவகுமாரன் ஆசிரியருக்கு
தமிழ்
2010
முதற் பதிப்பு
மேப்லித்தோ கிரெளன் சைஸ் (12 X 18 செ.மீ) 105 புள்ளி
Xi+276= 288
இலங்கை விலை
நூலின் இந்திய விலை ரூ.1OO
e5.300/-
அட்டைப்பட ஓவியம் லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர் நூல் கட்டுமானம் இலங்கையில் கிடைக்குமிடம்
மோகன் கிராஃபிக்ஸ் ழரீவிக்னேஷ்வரா கிராஃபிக்ஸ், போன் : 2650 3802. பி.வி.ஆர். ஆப்ஸெட், சென்னை-94 தையல்
கே.எஸ்.சிவகுமாரன், 21, முருகன் பிளேஸ், ஹவ்லொக் வீதி வழியாக பாமன்கடை, கொழும்பு-06 இலங்கை. தொலைபேசி: 0094-11-2587617 GLDIT60L6b: 0094 - 077 0392234
WAV
u/ &) * (i.

10.
11.
12,
13.
14.
15.
16.
iii
శృణ్ణి உள்ளே.
யார் இந்த நூலாசிரியர்? 20-ஆம் நூற்றாண்டின் அடிச்சுவடுகள்:
ஈழத்துத் தமிழ் இலக்கியம் இன ஒற்றுமை இலக்கிய வழி நமக்குள்ளே புதுக்கதைகள். பண்பாட்டு வேர்களை அறிந்துணர
உதவிய பயணம் திருவனந்தபுரப் புனைகதைகள் மூன்று பாரதியும் சீனி விசுவநாதனும் Walt Witman uppó) urrJý6urri போதை தரும் எழுத்து நடை பழைய தாமரை இதழ்களிலிருந்து. 'ஆராய்ச்சி ஆரம்ப இதழ்களில்
எனக்குப் பிடித்தவை படித்தவற்றுள் மனதில் நிற்பவை - 01 படித்தவற்றுள் மனதில் நிற்பவை - 02 1970கள் வரை புனைகதைகள்
பற்றிய நூல்கள் ஈழத்து வானம்பாடிகள் பாடும் கவிதைகள் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் "அக்னி" என்றொரு கவிதை ஏடு
vi
41
44
48
54
62
68
76
8O
82
86
90
95
101
109
117

Page 5
17.
18.
19.
20.
21.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
iV
எம்.ஏ.நுஃமானின் கவிதைகள் இஸ்லாமிய பக்திப் பாடல்கள் மன்னாரிலிருந்து ஒரு மனிதாபிமானக் குரல் றச்ஷமி ஊடாக உளவியல் சமூக யதார்த்தம் பழைய இலக்கியங்கள் முற்றாக
அழிந்துவிடுவதில்லை! கனபரிமாணம் - 01
கனபரிமாணம் - 02
கனபரிமானம் - 03 மேலைக் கலையுலகம் கவிதையும் விமர்சனமும் அதிதி - சிறப்புச் சித்திராம்சங்கள் உடனிகழ்கால தமிழ் இலக்கியப் போக்கின்
சில கூறுகள் மேலை இலக்கியம்: மெய்ப்பொருள் நெறிமுறைநேர்மை இருக்க வேண்டும் இஸம்களின் தமிழ் விளக்கம் இலக்கியத் தழுவல் ஆங்கிலத்தில் கவிதை எழுதும் பெண்மணி கே.வி.சிவா சிவசுப்பிரமணியம் இளங்கீரன் என்ற ஆய்வறிவாளன் ஹாஷிம் ஒமர் எதிரிவீர சரச்சந்திரா என்னை அரவணைத்த 'தினக்குரல்"
128
135
139
143
152
155
161
165
170
175
18O
186
192
198
2O3
2O7
212
219
223
226
229
234

39.
40.
41.
42.
43.
44.
45.
46.
நினைவுக் குமிழ்கள் - 01 நினைவுக் குமிழ்கள் - 02 நினைவுக் குமிழ்கள் - 03 வான் அலையில் தமிழ் மணம் எஸ்.பி.மயில்வாகனன்
வி.ஏ.திருஞானசுந்தரம் மனத்திரை - 01 மனத்திரை - 02
W
239
244
247
250
256
261
268
272

Page 6
vi
யார் இந்த
இவர் பெயர் கே.எஸ்.சிவகுமாரன். இலங்கையில் மட்டக்களப்பு என்ற இடத்தில் பிறந்து, கொழும்பில் 1953 முதல் வசித்து வருபவர். 1936ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாந்திகதி பிறந்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். இதுவரை 20 புத்தகங்களைத் தமிழிலும் இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். மூன்றாவது ஆங்கிலப் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இலங்கை Daily News ஆங்கில நாளிதழின் Features Editor ஆகப் பணிபுரிந்தவர். முன்னர் மற்றொரு ஆங்கில 5T6fggrgoT The Island BIT6fghair Culture Editor 956);h கடமை பார்த்துள்ளார்.
தமிழ் தினசரியான வீரகேசரி, வாரப் பத்திரிகையான நவமணி என்ற இதழ்களிலும் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இலங்கை
 

vii
வானொலியில் தமிழ்ச் செய்தி ஆசிரியராகவும், தமிழ் அறிவிப்பாளராகவும், ஆங்கில அறிவிப்பாளராகவும், தமிழ், ஆங்கிலச் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றி இருக்கிறார்.
மாலை தீவு, அமெரிக்கா, ஒமான் ஆகிய நாடுகளில் ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம் ஆகியன பற்றி உயர்நிலைப் பாடசாலைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
இலங்கையிலும் உயர்நிலை சர்வதேசப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் M.A. (ஆங்கிலம்) பட்டப் பரீட்சைக்கு எழுதவிருக்கிறார்.
உலக இலக்கியக் களஞ்சியங்கள் இரண்டில் இலங்கை இலக்கியம் பற்றி இவர் எழுதிய சிறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
gaori Goes Press Institute, College of Journalism géluGOT இவரை 2008ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கிலப் பத்தி (Column) எழுத்தாளராகப் பாராட்டிப் பரிசளித்தது. அத்துடன் OCIC என்ற கத்தோலிக்க நிறுவனம் இவரைச் சிறந்த திரைப்படத் திறனாய்வாளராக மதிப்பிட்டுப் பரிசளித்துள்ளது.
கனடாவின் 'தமிழர் தகவல் ஏடு இவரைப் பாராட்டிக் கேடயம் வழங்கியுள்ளது.
இலங்கை வடகிழக்கு மாகாண ஆளுநர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

Page 7
Viii
இன்னும் சில கெளரவங்களும், பரிசுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.
1966இல் மணம் முடித்த இவருக்கு ரகுராம் (அமெரிக்கா), அனந்தராம் (அவுஸ்திரேலியா) ஆகிய இரு புதல்வர்களும், அவர்களுடைய துணைவியர்களும், நான்கு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றனர்.
இலங்கையில் இவர் தமிழ்/ ஆங்கிலத் திறனாய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அமெரிக்காவில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய Subiminal Assault Tsirp is alsogág, The Poetry Society of America விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. w
இலங்கை தணிக்கை சபையில் ஓர் அங்கத்தவராகவும் இவர் இருந்து வருகிறார்.
இந்தியாவின் தேசிய அனைத்துலகத் திரைப்பட விழாக்களிலும், கேரள அனைத்துலகத் திரைப்பட விழாக்களிலும் அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் - 1991ஆம் ஆண்டு முதல் கலந்து கொள்கிறார்.
இந்தியாவிலுள்ள பூனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இரசனைத் திறனாய்வுப் பயிற்சியை 1990இல் மேற்கொண்டு சான்றிதழ் பெற்றிருக்கிறார்.
ரூபவாஹினி மற்றும் போட்டி நிகழ்ச்சிகளின் நடுவர்களில் ஒருவராகவும் கடமையாற்றியிருக்கிறார். இவருடைய கட்டுரைகளில்

iX
சில சிங்கள மொழியில் தரப்பட்டு உயர்தர ஏடுகளிலும் நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.
இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான இருமை சென்னையில் ஒரு பிரசுரத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கவிதைகள் சிலவும் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.
இவருடைய எளிமையான ஆங்கில, தமிழ் எழுத்து நடை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
இவருடைய பெற்றோரும் இரு சகோதரர்களும் காலமாகி விட்டனர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் இந்திய எழுத்தாளர்களுள் சிலர் இவரின் நண்பர்களாயிருக்கின்றனர்.

Page 8
தமிழில் எழுதப்பட்ட நூலாசிரியரின் பிரசுரங்கள்
மணிமேகலைப் பிரசுரம்
திறனாய்வு என்றால் என்ன? - (2004) இந்திய இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம் - (2005)
சொன்னாற்போல - 03 - (2008)
ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை - (2008)
ஈழத்துச் சிறுகதைகளும், ஆசிரியர்களும் (பாகம் - 1) -2008 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் (பாகம் - 2) - (2008) ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை - (2009)
காலக் கண்ணாடியில் கலை இலக்கியப் பார்வை - (2010)
ப்ரைட்டன் வெளியீடு
ஈழத்து இலக்கியம் - ஓர் அறிமுகம் (1998)
கொழும்பு மீரா பதிப்பகம் வெளியீடுகள்
ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - (1996)
திறனாய்வுப் பார்வைகள் - (1996)
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில - (1999)

xi
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - (1999)
மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் - (2000)
அசையும் படிமங்கள் - (2001)
சொன்னாற்போல - 01 - (2008)
சினமா சினமா ஒர் உலக வலம் - (2006)
பிறமொழிச் சிறுகதைகள் சில - (2007)
சொன்னாற்போல - 02 - (2004)
பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள் - (2009)
வடகிழக்கு மாகாணசபை பிரசுரம்
மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் - (1999)
தேசிய கலை இலக்கியப் பேரவை / சவுத் ஏசியன் புக்ஸ்
இருமை (சிறுகதைத் தொகுதி - (1998)
ஆசிரியரின் தனி வெளியீடு: ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில - (1999)
VAM

Page 9
Xii
 

○
20-ஆம் நூற்றாண்டின் அழச்சுவடுகள்
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
0 பேராசிரியர் திஸ்ஸ காரியவஸம்
9 கே.எஸ். சிவகுமாரன்
இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றி விரிவாக ஆராய்தல் கடினமானது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. மூலாதாரங்கள் அரிதாக இருப்பது அவற்றுள் ஒன்று. வடக்கு, கிழக்கு மலையகப் பிரதேசங்களில் தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடைய இலக்கியம் காணப்பட்டது எனும் நம்பிக்கையே மற்றையதாகும். எனவே, பேராசிரியர் கே. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி, மற்றும் கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரும் சில்லையூர் செல்வராஜன், பேராசிரியர்

Page 10
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ28
எஸ்.தில்லைநாதன் போன்ற கல்விமான்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துக்கள் தவிர, விரிவான, ஆழமான ஆராய்ச்சிகள் நடத்தப்படும் வரையில் மேற்படி சுருக்கமான கட்டுரைகளைக் கொண்டு திருப்தியடைய வேண்டிய நிலையில் உள்ளோம். இரண்டாவது அபிப்பிராயத்தை மறுதலிக்கும் சிவகுமாரன், 18 ஆம் நுாற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் நூால் சார்ந்த மூலப்பொருள்களுக்காக வடக்கு, கிழக்கு மலையக மக்கள் தென்னிந்தியாவை நாடியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
1812-இல் இந்நாட்டை அடைந்த அமெரிக்க மிஷனரியுடன் தொடர்புடைய கிறிஸ்தவப் பாதிரிமார், வட மாகாணத்தில் சமயத்தைப் பரப்பும் பணிகளுக்கு மேலாக கல்வி இயக்கங்களை முன்னெடுத்தனர். மேலும் வடக்கில் தமிழ் மொழி, இலக்கிய மற்றும் சைவ மறு மலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராகிய ஆறுமுக நாவலர் தோன்றினார். பிரித்தானிய ஆட்சியாளரும் கிறித்தவ மிசனரிமாரும் வடக்கில் ஏற்படுத்திய சேதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இது உருவெடுத்தது. ஆறுமுக நாவலர் ஏடுகளைத் தேடிப்பிடித்து அவற்றை வாசித்து, சைவ சமயத்தை நன்கறிந்து, அவற்றை அச்சு வழி வெளியிட்டார். போர்த்துக்கேயர்கள் கோவாவில் அச்சுப்பொறியை அறிமுகஞ்செய்தனராயினும் இலங்கையில் அதனை அறிமுகஞ் செய்யவில்லை என்பதையும் மறந்து விடலாகாது. பிரித்தானியர் காலத்தில் அச்சுப்பொறியையும் நூால் அச்சிடலையும் தமிழ் மக்களுக்கு அறிமுகஞ் செய்த பெருமை ஆறுமுக நாவலரையே சேரும்.

கே.எஸ். சிவகுமாரன் 3ے
அதுவரையில் மேன்மக்களுக்கு மாத்திரம் வரை யறைப்பட்டிருந்த நுாற் பயன்பாட்டை பொதுமக்களுக்கு வழங்கி, ஏடுகளில் காணப்பட்ட தொல்லரு தமிழ் நுால்களுக்கு விளக்கங்கள் வழங்கி அவற்றைப் பொது மக்களின் கைகளை அடையச் செய்து பாரிய மலர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக திருக்குறள், கடிகாப்பியம் போன்ற நூால்கள் பொதுமக்களிடையே பயன்பாட்டுக்கு வந்தது. அவர் பெரிய புராணம் நூாலையும் அச்சிட்டார். சேது புராணம் நூாலுக்கு விளக்க மெழுதினார். மிகக் கவனமாக, தெரிவு செய்து கொள்ள வேண்டிய நூால்களுக்கு ஆறுமுகநாவலர் குறிப்பு எழுதி வெளியிட்டார். அவருக்கு தமிழ் கைவந்தகலையாகும். அவருக்கு எதிராகவும் அபிப்பிராயங்கள் முன்வைக்கப் பட்டன. அவர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. சமயப் பித்துப் பிடித்த தமிழ் மக்களை உருவாக்காது ஏனைய மொழிகள் பற்றி அறிந்து கொள்வதற்காகச் செயற்பட்டார். விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்தமைக்குக் காரணம், அதனை வாசித்து சத்திய சமயத்தை விளங்கிக் கொள்வதே யன்றி, சிங்கள எழுத்தாளர்கள் போன்றும் சமயத் தலைவர்கள் போன்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதல்ல. நாவலரின் இந்த அச்சு இயக்கத்தைப் பிற்காலத்தில் சீ.டபிள்யு. தாமோதரம் பிள்ளை, கலாநிதி. சுவாமிநாத் ஐயர் ஆகியோர் முன்னெடுத்தனர். ஏ.தேவராஜன், “நிவ்ஈரா” எனும் பெயரில் ஒரு சஞ்சிகையும் வெளியிடத் தொடங்கினார்.
19-ஆம் நுாற்றாண்டின் பின்னரைப்பகுதியில்
இவ்வாறாக விருத்தியடைந்த மொழி, தொல்லரு இலக்கியம் பற்றிய ஆவலும் சைவ சமயம் பற்றிய பக்தியும் உடைய,

Page 11
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 4
தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் விருத்தி செய்வதற் காகத் திரண்ட தமிழ் மக்கள் வடக்கில் வாழ்ந்தனர். எனவே இந்நாட்டில் 20 ஆம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் சிங்கள இலக்கியத்தின் போக்குக்கும் இடையே வேறுபட்ட இடைவெளி காணப்பட்டது.
தமிழ் நாவல் வளர்ச்சி தொடர்பாக சில்லையூர் செல்வராசன் கூறுவதற்கமைய திருகோணமலையில் வாழ்ந்த எஸ். சின்னத்தம்பி 1891 இல் முதலாவது தமிழ் நாவலை எழுதியுள்ளார். போர்த்துக்கேயரிடம் பெறப்பட்ட ஒரு “சுள்ள” நாவலாகிய இது ஒரிசொன், பாலெந்தன கதையாகும். இக்கதை வெவ்வேறு வடிவங்களில் நாடகமாகவும் நூர்தி. யாகவும் இலங்கையின் சிங்களப் பிரதேசங்களில் வியாபித்தது. இது இலங்கையில் எழுதப்பட்ட முதலாவது தமிழ் நாவலாகும். அதற்கு முன்னர் தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஒரேயொரு நாவலே உள்ளது. அது 1879இல் தென்னிந்தியாவில் வெளியிடப் பட்ட எஸ்.வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் எனும் நாவலாகும்.
தென்னிந்தியாவில் தமிழ் மொழியில் முதலாவது தமிழ்நாவல் எழுதப்பட்டு 12 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கையில் முதலாவது தமிழ்நாவல் எழுதப் பட்டமை ஒரு விசேட நிகழ்வாகும். சில திறனாய்வாளர்கள், இந்த முதலாவது நுாலை ஒரு முழுமையான நாவலாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர். எனவே தென்னிந்தியாவில் ராஜமையர் 1893இல் வெளியிட்ட *கமலாம்பாள்'தான் முதலாவது முற்று முழுதான தமிழ்நாவல் எனக் கொள்வது

கே. எஸ். சிவகுமாரன் ക് 5
நியாயமானது எனக் கூறுகின்றனர். முதலாவது சிங்கள நாவல் தொடர்பாகவும் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
1891இல் எழுதப்பட்ட நாவலின் பின்னர் இரண்டாவது தமிழ் நாவலும் திருகோணமலையிலே எழுதப்பட்டது. 1895இல் ரீ. சரவண முத்துப் பிள்ளை எழுதிய 'மோகனாங்கி இரண்டாவது நாவலாகும். பெண் எழுத்தாளரின் முதலாவது நாவல் 1924இல் வெளி யாகியது. எஸ். செல்லம்மாள் எழுதிய ‘புன்சீலி எனும் நாவல் எழுதப்படும் வரையில் தமிழ் மொழியில் இலங்கையில் எழுதப்பட்ட நாவல்கள், வெளிநாட்டு இலக்கியங்களின், கதைகளின் மொழிபெயர்ப்புகள் அல்லது தழுவல்களாக வெளிவந்தவையாகும். 1929இல் யாழ்ப்பாணத்தின் இதயத் துடிப்பாக, இலங்கையின் மரபைப் பின்பற்றிய சில தமிழ்ப் படைப்புக்கள் இலக்கியத்துடன் சேர்ந்து கொண்டன. அதே வருடத்தில் எஸ்.ராஜம்மாள் எனும் பெண் எழுத்தாளரால் "சரஸ்வதி எனும் ப்ெயரிலான இரண்டாவது நாவல் வெளியானது.
இரண்டாம் நூற்றாண்டின் முன்றாவது தசாப்தத்தில் சேர் வோல்டர் ஸ்கொட் என்பவரது கெனில்வேர்த் எனும் துப்பறியும் நாவல், 'அரங்கநாயகி’ எனும் பெயரிலும் துர்கினிவ் எனும் ருசிய எழுத்தாளரின் படைப்பொன்றின் மொழிப்பெயர்பாக எஸ்.வைத்தியலிங்கம் எழுதிய ‘மாலைவேளையில்’ எனும் நுாலும் பிரபல்யம் பெற்றன. இறுதி தசாப்தத்தில் படிப்பினைதரும் வகையிலாக பல நாவல்கள் வெளியாகின. சமகால சமுகப் பிரச்சினைகள் எம்.ஏ.செல்வரத்னம் எழுதிய நாவல்களில் பேசப்பட்டன.

Page 12
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܥܠ ܘ 6
அவரது சில நாவல்களின் கருப்பொருள்கள் முற்போக்கானவை. இலங்கையரிடையே உருவாக வேண்டிய, தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு எச். நல்லையா எழுதிய ‘சோமாவதி 1940இல் வெளியாகியது.
ஐம்பதுகளில் வரலாற்று, துப்பறியும், காதல் நாவல்கள் பல எழுதப்பட்டன. அவை காரணமாக நாவல் வாசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. பேராசிரியர் கே.கணபதிப்பிள்ளை ஐரோப்பிய கதைக்கருக்களைப் பெற்று அவற்றை சுதேசமயப் படுத்தினார். எஸ்.எம்.பீர் மொகம்மட் எழுதிய நாவல்களில் மலையக மக்களின் உப துணை மொழி, இயல்புகளைக் காணலாம். முல்க் ராஜ்ஆனந்த் எழுதிய "அன்ரசபள்ஸ்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கே.கணேஸ் ஆவார்.
நியமமான அர்த்தத்தில் நோக்கும்போது நாவல் எனக் கருதத்தக்க தமிழ் இலக்கிய வகையொன்று 1956இன் பின்னரே எமக்குக் கிடைத்தது. இலங்கை எழுத்தாளர்கள், சமகால சமுக கருப்பொருள்களை நன்கு எடுத்துக்காட்டும் நாவல்கள் எழுதினர். வ.அ.இராசரத்தினம், இளங்கீரன், எஸ்.கணேசலிங்கன், நந்தி, பெனடிக்ட் பாலன், சீ.வீ.வேலுப் பிள்ளை, எஸ்.பொன்னுத்துரை, யாழ்ப்பாணம் தேவன் போன்ற எழுத்தாளர்கள் இவ்வகையில் அடங்குவர்.
இது தொடர்பாக மூலாதார நுாலொன்றை சில்லையூர் செல்வராசன் எழுதினார். அவர் 1891 தொடக்கம் 1962 வரையில் இலங்கையில் தமிழில் எழுதப்பட்ட சகல நாவல்களையும் பெயர்ப்பட்டியற்

கே. எஸ். சிவகுமாரன் _ 7ے
படுத்தினார். அவர் அவற்றிலிருந்து பெற்ற பகுதிகளை உதாரணமாகவும் காட்டினார். சில்லையூர் செல்வராசன் புகழ்பெற்ற வானொலி தொடர்பாடலாளரும் திறமை மிக்க பத்திரிகையாளரும் கவிஞருமாவார். இவ்வாறான ஒரு நூாலை வெளியிட அவ்விடயங்கள் துணையாகியுள்ளதாகத் தெரிகின்றது.
கூடவே இலங்கை கலாசாரப் பண்பாட்டுச் சபையின் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆலோசனைச் சபை, டொனமுர் காலப்பகுதி தொடக்கம் 1940ஆம் தசாப்தம் இறுதி வரையிலும் இந்நாட்டில் எழுதப்பட்ட தமிழ்க், கவிதைகள், சிறுகதைகள் இலக்கிய திறனாய்வு என்பன தொடர்பான ஒரு விவரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நாவல்களும் நாடகங்களும் ஏன் உள்ளடக்கப் படவில்லை என்பதை எம்மால் கூற முடியாது. பண்பாட்டுச் சபை, இலங்கை முஸ்லிம் கவிஞர்கள், நாவலர் இயக்கத்தின் படிமுறை வளர்ச்சி, கூ கூ துாது இலக்கியம், பண்டைய இலக்கியங்கள், நவீன இலக்கியத்தில் செலுத்தும் செல்வாக்கு, தமிழ்மொழியில் வெளியாகும் சஞ்சிகைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கை இலக்கிய மரபுப்படி எழுதப்பட்ட கவிதைகள் ஆகியவற்றில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ܀
சிறுகதை
பேராசிரியர் கே.கைலாசபதி தமிழ்ச் சிறுகதை பற்றிப் பிரஸ்தாபிக்கையில், நாவல் ஊடாக அரசியல், சமுக, பொருளாதார மாற்றங்கள் தொடர்பாக அதிகமதிகமாகப் பேச சந்தர்ப்பம் கிடைப்பதால் சிறுகதை தொடர்பாக

Page 13
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 8
பெரும்பாலானோர் கவனஞ் செலுத்தவில்லை எனக் குறிப்பிடுகின்றார். மேலைத்தேய இலக்கியங்களின் செல்வாக்குக்கு உள்ளாகிய இலங்கையர்கோன், என். சிவ ஞான சுந்தரம், எஸ். வைத்தியலிங்கம், எஸ். சிவபாத சுந்தரம், சம்பந்தன் ஆகியோரை சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகள் எனக் குறிப்பிடலாம். இவர்கள் மேலைத்தேய இலக்கியங்களை மட்டுமன்றி இலங்கையின் ஊர்களையும் தமது கதைகளுக்குப் பின்புலமாக்கிக் கொண்டனர். இந்த எழுத்தாளர்கள் தமது ஆக்கக்திறனை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான மனப்படங் களைப் பயன்படுத்தி தமிழ் உரைநடை இலக்கியத்தை நன்கு போசித்தனர். இவர்கள் சுதேச கதைக்கருக்களைவிட உலகப் பொதுக் கருப்பொருள்களை விவரிப்பதே தமது பொறுப்பு என்பதை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை ஏற்கவில்லை. சிறுகதை என்பது, இலக்கிய கலைத்துவ அலகு என்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அவர்கள் சிறுகதை தொடர்பாகக் காட்டிய மனப்பாங்கு, அணுகுமுறை ஆகிய இரண்டும் கீதம் சார்ந்ததாக இருந்தது.
அடுத்ததாகத் தோன்றிய சிறுகதை எழுத்தாளர் சந்ததி, கலை என்பது ஒர் அழகியற் பண்டமே எனக்கருதி விடயம் தொடர்பாக கரிசனை காட்டாத ஒரு அணியினராக புதியதொரு சிறுகதை இலக்கியத்தை உருவாக்கினர். துரதிஷ்ட வசமாக அவர்களது கட்டுரை ஆக்கங்கள் அதிக காலம் நின்று பிடிக்க முடியாமற் போன, மறுமலர்ச்சி எனும் சஞ்சிகையிலேயே வெளிவந்தன. பாரிய அளவில் வாசகர்களைச் சென்றடையாத இச்சஞ்சிகைக்கு, நாவற்குழியூர் நடராஜன், கே.எஸ். பஞ்சாட்சர சர்மா,

கே. எஸ். சிவகுமாரன் ക 9
ஏ.எஸ். முருகானந்தன் ஆகியோர் அனுசரணை வழங்கினர். தமிழ் மொழியில் சிறுகதை எழுதிய சிரேஷ்ட எழுத்தாளர்கள் பலர் இச்சஞ்சிகையூடாக வெளிக் கொணரப்பட்டனர். ஏ.எஸ். முருகானந்தன், ஏ.என். கந்தசாமி, ராஜநாயகம் சொக்கன், வீ.ஏ.ராஜரத்னம், தாழையடி சபாரத்தினம் ஆகியோர் அவர்களாவர். 1960 ஆகும்போது உயர்கல்வி மொழி மூலம் தமிழாக மாறியமையால் இளம் எழுத்தாளர்கள் சிறுகதை எழுத முன்வந்தனர். துரதிஷ்டவசமாக இந்த எழுத்தாளர்கள், தமது ஆக்கங்களுக்காக, தென்னிந்திய சஞ்சிகைகளில் வெளிவந்த சனரஞ்சகமான கதைக்கோலத்தையே அனுசரித்தனர். இக்கதைகளில் இந்நாட்டு தமிழ்ச் சமூகம் விவரிக்கப்படாத தன்மையே காணப்பட்டது. எனினும் அப்போக்கு குறுகிய காலத்துக்கே நிலவியது.
இந்த இளைஞர்களுக்கு மொழி தொடர்பான வரையறையொன்று இருந்தது. அத் தருணம் வரையில் அவர்கள் தென்னிந்திய இலக்கியத்தையே அறிந்திருந்தனர். அவற்றை அனுசரித்து உயர் தரத்திலல்லாத இடைத் தரமான, தாழ்வான தரமுடைய சிறுகதைகள் இவர்கள் எழுதினர். பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகம் இதைவிட வேறுபட்ட ஒரு பாதையில் செயற்பட ஆக்கபூர்வமான இலக்கியக்காரர்களுக்கு களமாகியது. இவர்களிடையே எஸ்.கதிர்காமநாதன், எஸ். யோகநாதன், செம்பியின் செல்வன், நந்தி, செங்கை ஆழியன், துருவன், முத்து சிவலிங்கம், கோகிலா, அங்கையன் கைலாசநாதன், இமயவன், சாரல்நாடன், எம்.பொன்னம்பலம், வாமதேவன், ஆகியோர் அடங்குவர்.

Page 14
10୫ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
மேலும், பல்கலைக்கழகத்துக்கு வெளியே இருந்த, பெனடிக் பாலன், ஜோர்ஜ் சந்திசேகரன், அப்துஸ்ஸமது, மருதூர்க்கொத்தன், சாரல்நாடன் ஆகியோரும் அடங்குவர். இவர்களின் ஆக்கங்கள், தரமிக்க இலக்கியப்படைப்புக்கள் எனும் நிலையை அடைந்திருந்தன. பேராசிரியர் கே. கைலாசபதி, இந்த ஆக்கங்களின் தன்மை தொடர்பாக முன்வைத்த விவரணம் இன்றும் கூட குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. இந்த நிலைமைக்கான ஒரு காரணம், தமிழ் மொழியில் உயரிய இலக்கியக் திறனாய்வு காணப்படாமையாகும். எஸ். சிவபாத சுந்தரம், எஸ்.வைத்தியலிங்கம், இலங்கையர் கோன் ஆகிய எழுத்தாளர்கள் இலக்கியத் திறனாய்வு பற்றி எழுதியிருபபினும் இலக்கியமும் சமுகப் பணியும் பற்றிக் கவனஞ் செலுத்தியோர், கே.கணபதிப்பிள்ளை, அ.ந. கந்தசாமி, கே.கணேஷ் ஆகியோராவர். எனவே, 1956இன் பின்னரே நியாயமான தரத்திலான இலக்கியத் திறனாய்வு உருவாகியது. நவீன திறனாய்வு தொடர்பான விற்பனினர் களாக, பிரேம்ஜி, கே. கைலாசபதி, கே. சிவத்தம்பி, முருகையனர், ஏ.ஜே. கனகரத்ன, எம். ஸமீம், எம். தளையசிங்கம், சில்லையூர் செல்வராஜன், காவலூர் ராஜதுரை, கனக செந்திநாதன், ஈழத்துச் சோமு ஆகியோர் இடம் பெறுகின்றனர். 1960களினர் பின்னர் உயர்ப்புப்பெற்ற திறனாய்வாளர்களுள் பேராசிரியர் கே.கைலாசபதி, செம்பியின் செல்வன், கே.எஸ்.சிவகுமாரன், எம்.பொன்னம் பலம், சணர்முகம் சிவலிங்கம், வீ. கந்தவனம், எஸ்.எம். ஜே.பாயிஸ்தீனர் ஆகியோர் அடங்குவர். இவர்களுள் கே.எஸ். சிவகுமாரன், தமிழ் இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் ன்முதிய ஒரு மூத்த ஊடகவியலாளராவார். அவர் தமிழ் இலக்கியத்தினர் சகல துறைகளையும் தமிழ் மொழி

கே. எஸ். சிவகுமாரன் 11 سے
தெரியாதோருக்கு அறிமுகஞ் செய்த வலிமைமிக்க ஒருவராவார். தமிழ் மொழி பேசுகின்ற, தமிழில் எழுதுகின்ற முஸ்லிம் எழுத்தாளர்களும் திறனாய்வில் கவனஞ் செலுத்தினர். அவர்களுள் எம். எஸ். கமால்தீன், ஜே.எம்.எம். அப்துல்காதர், ஏ.எம்.ஏ. அஸிஸ் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் தவிர கிராமிய தமிழ் இலக்கியம் தொடர்பாக கவனஞ் செலுத்தியோருள் எம்.ராமலிங்கம், எஸ்.மெளனகுரு, எம். சற்குணம் ஆகியோரும் அடங்குவர்.
தமிழ்க் கவிஞர்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கும் முருகையன், இலங்கையின் பெரும்பாலான கவிஞர்களுக்கு தமிழ் நாட்டுக்கதைகளில் இருந்து விடுபட முடியாது எனக் குறிப்பிடுகின்றார். கூடவே, மரபுரீதியாக அறிவு, சமூக பிரக்ஞை ஆகியவற்றைக் கொணர்ட கவிஞர்களாக கே.எஸ்.நடராஜா, எஸ்.நடராஜா, ஏ. எனி. கந்தசாமி ஆகியோர் பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுகிறது. அடுத்த சந்ததியைச் சேர்ந்த கவிஞர்களுள் பெரும்பாலானோர் இனவாத உணர்வுகளைக் கொணர்டிருந்த போதிலும், பின்னர் உறுத்துணர்வுடைய கவிஞர்களாக மாறினர் என்பதைக் கூறியாக வேண்டும். மகாகவி, நீலாவணன், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் உயர்தர கவிஞர்களாவர். எம்.ஏ. நுஃமான், சண்முகம், சிவலிங்கம், மெளனகுரு, சுபத்திரன், ஆர்.சிவானந்தன், எம். பொன்னம்பலம் ஆகியோர் புதிய கவிஞர்களுள் அடங்குவர்.
மரபு ரீதியான கவிதையையும் தற்கால உலகையும் தொடர்புபடுத்துவதே தமிழ்க் கவிஞர்கள் எதிர்நோக்கிய பிரச்சினையாகும். மரபு ரீதியான கவிதை மொழி நிலையான ஒன்றாகும். மரபை தலைமேற் சுமத்தி யபிருப்பதோ புதுமை யை கண்மூடித்தனமாகப்

Page 15
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܬ12
பின்பற்றுவதோ நன்மை பயக்கப் போவதில்லை. தமிழ் இலக்கியங்கள், மிகக்குறைவாகவே திறனாய்வாளர்களதும் கல்விமான்களதும் கவன்த்திற்கு உள்ளாகியுள்ளன. அந்த வகையில் முருகையனர் போன்ற திறனாய்வாளர்களின் சேவை அளப் பரியது. அவர் தமிழ் கவிதைத் திறனாய்வுக்காக சில நியமங்களை அறிமுகஞ் செய்தார். அவர் எழுதிய ‘ஒரு சில விதி செய்வோம்’ எனும் நூால் அப்பணியை ஆற்றுகின்றது. அவர் முதலில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு புதிய தமிழ் இலக்கியங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்து சோமசுந்தரப் புலவர், நாவற் குழியூர் நடராஜன், மஹாகவி ஆகியோரின் நுால்களைப் பகுத்தாய்ந்தார்.
அடுத்து 1956இன் பின்னர் கவிதை எழுதிய புதிய கவிஞர்களின் ஆக்கங்களுள், நீலாவணன், காசி ஆனந்தன், ராஜபாரதி, தான்தோன்றிக் கவிராயர், முருகையன் ஆகிய கவிஞர்கள் பற்றிப் பகுப்பாய்வு செய்து அவர்கள் சமகால, சமுக வரலாற்றுப் பின்புலத்தில் கவிதையை ஓர் ஆயுதமாக்கிக் கொண்டனர் எனக் குறிப்பிடுகின்றார். மேலும், இளைஞர் இலக்கிய திறனாய்வின் போது கவிதையானது மனித இனத்துக்கும் பயன்தரக் கூடிய ஆக்கப்பூர்வமான நேர்கணியமான விழுமியத் தொகுதி யொன்றினைக் கொணருதல் வேண்டும் எனக் கூறும் திறனாய்வாளர் முருகையன், மனித வர்க்கத்தின் வரலாறு என்பது ஒரு சோகாந்தமாக அமைதலாகாது எனக் கூறுகிறார். காதல் காரணமாக உருவாகும் வேதனையும் உணர்வு ரீதியான நல்லது நடவாமையையும் கவிதையின் ஊடாக வெளிக் கொணர்தல் அவசியமில்லை எனவும் கூறுகின்றார்.

கே. எஸ். சிவகுமாரன் 13 كص
கவிதையின் எதுகை மோனை பற்றியல்லாது கவிதை யின் உள்ளடக்கம் பற்றியே அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். கலை ஆக்கங்களை வடிவமைக்கும் உத்திகள் உள்ள போதிலும், கட்டுரையொன்றுக்கு உத்திகளை சேர்ப்பதனால் அதனைக் கலை ஆக்கமாக மாற்ற முடியாது. சொற்களை சிக்கனமாக உபயோகிப்பதன் மூலம் மனதில் பிம்பங்களை உருவாக்கும் சக்தி இருத்தல் அவசியம். தனது கருத்தைத் தெளிவாகக் கூறுதல் நவீன கவிதையின் அடிப்படை இலட்சணமாக வேண்டும். இவை தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட காலந்தாழ்த்திய அறிவுரைகளாகத் தோன்றிய போதிலும் உண்மையிலேயே, சமகால சிங்களக் கவிதைகளுடன் நோக்கும் போது தமிழ்க் கவிதைகள் பின்தங்கிய நிலையில் நிலவிய காரணத்தினால் இவ்வாறு அறிவுரை வழங்கல் கட்டாயத் தேவையாகும்.
1948-ற்கு முன்னர், தமிழ் இலக்கியகர்த்தாக்களின் பாதை எவ்வகையிலும் இலங்கையின் தனித் துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை. தமிழ் மொழி பேசும் இலங்கையில் உரிமை பற்றிக் கூறும் போது அது தென் இந்திய கலை சம்பிரதாயத்தின் நீடசியாகக் கூறப்படுகின்றது. எனினும் 1948இன் பின்னர் இந்நிலை மாறியது. இம்மாற்றம் முழு தமிழ் இலக்கியத்திற்கும் ஒரு முக்கிய தடைக்கல்லாகும். சுதந்திரத்திற்கு முந்திய காலப்பகுதியில் தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் கவனம் முழுமையாகத் தமிழ் மொழி வளர்ச்சியிலும் சமய வளர்ச்சியிலும் சமய வளர்ச்சியிலும் திரும்பியிருந்தது. 1948-1970 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி விசேட கவனம் செலுத்தும் போது

Page 16
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܦ14
அப்போதைய போக்கின்படி அக்காலகட்டத்தினை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1948 தொடக்கம் 1955 வரையான கால கட்டம்
1956 தொடக்கம் 1965 வரையான கால கட்டம்
1966 தொடக்கம் 1970 வரையான கால கட்டம்
இந்நாட்டு அரசியல் மாற்றத்துடன் இணைந்த ஒரு மாற்றமாகவும் இதனை எடுத்துக் காட்டலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் இந்நாட்டு முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அளித்த ஊன்று கோலாகவும் இதனைக் குறிப்பிடலாம். மேற்படி முற்போக்கு இலக்கியப் போக்கு முக்கியமாக 1956 தொடக்கம் 1963 வரையான காலகட்டத்தில் நன்கு தெளிவாகின்றது. இக்காலகட்டத்தில் வெளியாகிய ஆக்கங்கள் யாவும் இந்நாட்டு தமிழ் இலக்கியங்களின் தன்மை மைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இக்கொடியின் கீழ் இந்நாட்டு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் ஒரு நிழலாகத் திரண்டனர். இவ்விலக்கிய கர்த்தாக்களின் சேவை தேசிய தனித்துவத்தைப் போன்றே இலக்கியத்தின் யதார்த்தத்தையும் வெளிப்படுத்தியது. முற்போக்கு தமிழ் இலக்கியத்திற்கு அரசியல் மேற்பூச்சு இருப்பது போன்றே பிறபோக்கு தமிழ் இலக்கியத்திற்கும் அதனைப் போன்ற அரசியல் போக்கு இருந்ததென்பதை மறந்துவிடலாகாது. 1965 ஆண்டளவில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஒரு பக்கம் ஒதுங்கிக் கொள்ள நேரிட்டது. ஒற்றைக் கோபுரவீடுகளில் வாழப் பயில

கே.எஸ். சிவகுமாரன் 5 عليكم
அவர்களுக்கு நேரிட்டது. இதில செல்வாக்குச் செலுத்தியது அரசியலன்றி கோட்பாடுகள் பற்றிய பிரச்சினைகளல்ல.
இலங்கையின் தமிழ் நூால் இலக்கியம் பிரபல்யமைடைவதிலுள்ள ஒரு தடை தென்னிந்திய சஞ்சிகைகளும், மலிவான நுால்களும் இந்நாட்டிற்குத்
வரை இந்நாட்டில் எழுதப்பட்ட தமிழ் நாவல்களின் எண்ணிக்கை 71 ஆகும். சிறுகதைத் தொகுதிகள் 49 ஆகும். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கிருந்த முக்கிய தடை ஆக்க இலக்கியங்களை வெளியிடும் வெளியீட்டு நிறுவனங்கள் இன்மையாகும். ஒரு நிறுவனம் தவிர ஏனைய நிறுவனங்கள் அதற்கு விருப்பப்படவில்லை. ஒரு ஆக்கத்தின் 1000 பிரதிகளே வெளியிடப்பட்டன. தமிழ் நாட்டில் இருப்பது போன்ற விநியோக வலையமைப்பு இல்லாமை அவற்றை விநியோகிப் பதற்குள்ள தடையாகும். சில ஆக்கங்கள் எழுத்தாளரின் வெளியீடாகவே வெளியாகின. தமது நுாலை தாமே விநியோகிக்கும் முறை அதிக பிரபல்யமடைந்தது. அவை எமது கல்வி ஒழுங்கமைப்புடன் எந்த ஒரு தொடர்பையும் கொண்டிராமை ஆக்க இலக்கிய விநியோகத்திற்குள்ள தடையொன்றாகும்.
ஒரு சில இலங்கையரின் ஆக்கங்கள் மாத்திரம் பாட நுால்களாகும். எமது நாட்டுத் தமிழ் ஆக்க இலக்கியங்கள் ஒன்றாவது பாடநூால் சோதனைக்கு உட்படுத்தப்பட வில்லை. நூலகங்களில்கூட தமிழ் நூால்கள் வாசகர்களுக்கு காட்சிப்படுத்தப்படுவதில்லை. மேலும் நாவல்கள் வாசிக்கும் பழக்கமும் இல்லை. அவற்றில் இலக்கிய பெறுமானம் இன்மையும் மற்றுமொரு பண்பாகும். தென்னிந்திய நுால்

Page 17
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 10
சம்பிரதாயத்திற்குப் பழக்கப்பட்டுள்ள வாசகர்களுக்கு இந்நூல்களினால் பயன் ஏதுமில்லை. தென்னிந்தியாவில் வெளியிடப்படும் நுால்கள் மிக மலிவானவை. அவற்றுக்கு பாரிய ஒரு சந்தையுமுண்டு. 15 நாவல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. அவற்றில் 7 ஒரே ஆசிரியருடைய நாவல்களாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்கள் எட்டு பேர் எழுதியிருந்தனர். புதுமை என்னவென்றால், 1948 தொடக்கம் 1955 வரையான காலப்பகுதியில் ஒரு சிறுகதை தொகுதி மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தன. 1955 தொடக்கம் 1965 வரையான காலப்பகுதியில் 40 சிறுகதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டிருந்தன. 17 கவிஞர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைத் தொகுதி நுால்கள் வெளியிடப்பட்டிருந்தன. 1965-1970 இடைப்பட்ட காலப் பகுதியில் 43 கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டிருந்தன.
இவற்றுள் இரண்டு மட்டுமே இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்தன. வெளியிடப்பட்ட பெரும்பாலான நாடகங்கள் வரலாற்று ரீதியிலான நாடகங்களாகும். சமூக நாடகங்கள் ஒரு சிலவே காணப்படுகின்றன. 6 நாடகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஓரங்க நாடகமாகும். 1948 தொடக்கம் 1966 வரையான காலப்பகுதியில் ஒன்பது கிராமிய நாடகங்கள் வெளியிடப்பட்டன. கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் அதன் பின்னணி சக்தியாக விளங்கினார். இலங்கையின் தமிழ் எழுத்தாளர்கள் சமூக அர்ப்பணிப்புடன் செயலாற்று கின்றனர்.
தென்னிந்தியாவிலிருந்து ஜனரஞ்சகமான தமிழ் சஞ்சிகைகள் பெருமளவில் கிடைப்பதும் அவற்றை

கே.எஸ். சிவகுமாரன் 17 کے
வாசிப்பதற்கு காரணமும் அவற்றில் பேணப்படும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துச் செல்லும் தன்மையாகும். பெரும்பாலான தென்னிந்திய எழுத்தாளர்கள் கதைகளை எழுதுவதோ கற்பனை செய்வதோ இல்லை. கதைகளை உருவாக்குவர். அவற்றின் கதை வடிவத்தை வாசகர்கள் விரும்புவர். அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளும் ஜனரஞ்சகத் தன்மையை கைகாட்டி அழைப்பவையாகும்.
இலக்கியத்தை ஆழமான ஒரு கலையாக ஏற்றுக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியாததாயினும், ஜனரஞ்சகமான எழுத்தாளர்களின் பெயர்கள் வீடுகளில் நன்கு பிரபல்யமாகவுள்ளன. குமுதம், ஆனந்த விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், கலைமகள், தினமணி கதிர் ஆகியன இலங்கையில் நடுத்தர வகுப்பு வீடுகளில் எப்போதும் வாசிக்கப்படும் குடும்ப சஞ்சிகைகளாகும். ஜனரஞ்சகமான இந்த சஞ்சிகைகளை குடும்ப சஞ்சிகைகள் என அழைப்பர். உண்மையில் இவற்றை அதிகமாக வாசிப்பவர்கள் பெண்களாவார்கள். இவற்றுள் இரண்டு சினிமா சஞ்சிகைகளாகும். இவை மூவர்ண கவர்ச்சிகரமான சஞ்சிகைகளாகும். இவற்றில் படங்கள் நிறைந்து காணப்படும். வரலாற்று நிகழ்வு, காதல் கதைகள், மேல் நடுத்தர வகுப்பினரின் க்ாதல் கனவுகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பேசும் எழுதும் விடயங்கள், சமய கட்டுரைகள் ஆகியனவும் இங்கு காணப்படும். இவையாவும் பிரச்சினைகளை மறக்க வைக்கும் இலக்கியமாகும். ஆசிரியத்தலையங்கங்கள் இந்திய அரசியல் பற்றிக் கூறுபவையாகும்.

Page 18
18 ^৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
மனிதன், தாமரை, தீபம், ஞானரதம், கணையாழி, செம்மலர் ஆகிய தமிழ் நாட்டு இலக்கிய சஞ்சிகைகள் உள்ள போதிலும் அவற்றைப் பற்றி ஒரு சிலரே கேள்விப் பட்டுள்ளனர். சமகால யதார்த்தம் அரசியலை மறக்கடிக்கும், தப்பிச் செல்லும் கற்பனை உலக இலக்கியம் ஒரு வகையில் கலாச்சார சீரழிவாகும். இலங்கையில் பிரசுரிக்கப்படுகின்ற தமிழ் சஞ்சிகைகளில் மேற்படி தென்னிந்திய ஆக்கங்கள் இல்லாதிருத்தலை காண முடியாது. துரதிஷ்டவசமாக அவற்றை எழுத்தாளர்கள் மாத்திரமே வாசிக்கின்றனர்.
நடுத்தர வகுப்பு தமிழ் குடும்பத்தினர் இரண்டு முன்று தென்னிந்திய தமிழ் சஞ்சிகைகளை வாங்க முற்பட்ட போதிலும் இலங்கையில் வெளியாகும் சஞ்சிகையொன்றை வாங்க முற்படுவதில்லை. சில காலத்திற்கு முன்பாக தேனருவி, கற்பகம், ஈழச்சுடர், அஞ்சல் மலர், விவேகி, மரகதம் போன்ற சமகால இலக்கிய சஞ்சிகைகள் காணப்பட்டன. தற்போது இலங்கையின் ஆறுகளின் பெயர்களைக் கொண்ட சஞ்சிகைகளும் வெளி வருகின்றன. மகாவலி, களனி ஆகிய சஞ்சிகைகள் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுகின்றன. முதலாவது சி.வி. வேலுப்பிள்ளை நெறிப்படுத்தலின் கீழ் வெளிவரும் சஞ்சிகையாகும். இரண்டும் கிளிநொச்சியிலிருந்து வெளிவருகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக அனு, சூரணி, குமரன், தமிழ், அமுது, சிரித்திரன், மல்லிகை, தாயகம் ஆகிய இலக்கிய சஞ்சிகைகளும் கலசம், கீதா, கதம்பம், மானிதம் போன்ற இளைஞர்களுக்காக வெளிவரும் சஞ்சிகைகளும் உள்ளன.

கே.எஸ். சிவகுமாரன் ർ 19
இவை யாவற்றையும் கீழே தள்ளியபடி விற்பனையாவது தமிழக சஞ்சிகைகளான குமுதம், கல்கி, ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளாகும். இந்நாட்டு தமிழ் இளைஞர் யுவதிகளின் திறமைகளை வளர்ப்பதற்கும் அரச உதவி தேவைப்படுகின்றது. பத்திரிகை அச்சுத் தாள்களை மலிவு விலையில் கிடைக்கச் செய்தல். புத்தகங்களையும் நூால்களையும் பதிப்பிக்கவும் விநியோகிக் கவும் உதவுதல், நுாலகங்கள் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குதல் ஆகியன இலக்கிய வளர்ச்சிக்கான உதவிகளாகும்.
தென் மாகாணத்தில் மாத்தறையிலிருந்து 12 மைல் கிழக்கே அமைந்துள்ள திக்வல்லையில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் சிங்களத்திலும் தமிழிலும் நன்கு பேசும் திறமையுள்ள இரு மொழித் திறமையுள்ளவர்களாவார்கள். திக்வல்லை எழுத்தாளர் , சங்கம், பூ, மலர் எனும் பெயரில் தமிழ் தொகுப் பொன்றை சமர்ப்பித்தது. அதில் சிங்கள இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களினால் ஆற்றப்பட்ட சேவை, இலங்கையில் வியாபாரத்திலீடு பட்டுள்ள முஸ்லிம்களின் சிறுகதைகள், கவிதைகள் ஆகியன வெளிவந்தன. எம்.எச்.எம். ஸம்ஸ், எம்.ஹம்சா முஹம்மது, எஸ்.ஐ.எம். ஹம்ஸா, திக்வல்லை கமால், பீ.எம். அப்துல் சத்தார், யோனகபுர ஹம்ஸா, வல்லை சீலன், எம். ஜே. எம். அன்வர்கான் ஆகியோர் இவ்வெழுத்தாளர்
566 IITT96.
மலையகப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இலக்கியத்தைப் பிரபல்யமடையச் செய்த பிரபல

Page 19
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 20
எழுத்தாளராக சி.வி. வேலுப்பிள்ளையைக் கருதலாம். அவர் ஆங்கில மொழியில் எழுதுபவராகவிருந்த போதிலும் அவற்றில் பெரும்பாலானவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாகச் செயற்பட்டார். மலைநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களது ஒரு குற்றச்சாட்டு நாட்டின் ஏனைய பிரதேச எழுத்தாளர்களும் வாசகர்களும் அவர்கள் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பதாகும். உண்மையில் அவ்வாறு மதிப்பிடக் கூடியளவு நுால்கள் மலையகத்தில் எழுதப்படாமையே இதற்கு காரணமாகும். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இலங்கை தமிழர்கள் எதிரானவர்கள் எனக் கருதுவதும் ஒரு பொய்யாகும்.
இருபதாம் நுாற்றாண்டு நடுப்பகுதியின் பின்னர் மலையகத்தில் வெளியிடப்பட்ட லோக உபகாரி, அமிர்த குணபோதணி, ஆனந்த போதினி, மகா விகரபூதன், "மொடர்ன் ரிவியூ, இன்டியன் ரிவியூ போன்றவை இந்திய சஞ்சிகைகளாகும். பெரும்பாலும் மலையக வாசகர்களே இவற்றை வாசித்தனர். மேலும் சீ.சுப்பிரமணியம், ஆர்.இராமையா, வெற்றிவேல் ஆகியோர் தென்னிந்திய சஞ்சிகைகளிலும் கட்டுரை எழுதினர். மாத்தளை அப்துல் காட்ஸ் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளராவார். தென்னிந்திய தமிழ் காவியங்களினால் ஒளி பெற்றிருந்த மெரியம் பிள்ளை, எஸ்.எஸ். நாதன், ஜமார், கந்தசாமி, எம்டன் ஏ.விஜேரத்ன ஆகிய கவிஞர்கள் சிவனொளி பாதலை, நுவரெலியாவின் குதிரை பந்தயம், தல்லை, பேராதெனிய ஆகியன பற்றிக் கவிதை எழுதினார். சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ் ஆகியோர் ரவீந்தரநாத் தாகூர் சரோஜினி நாயுடு ஆகியோரிடமிருந்து

கே. எஸ். சிவகுமாரன் ക21
வழிகாட்டலைப் பெற்றனர். 1943இல் வீரகேசரி பத்திரிகை வெளியிடப்பட்டமை தமிழ் இலக்கியத்தில் முக்கிய மானதொன்றாகும்.
ஏ.சிதம்பரநாதன் புத்ததியானம் என்ற பெயரில் புத்தரின் வாழ்க்கைப் பாதையையும், கே.கணேஷ் இந்திய எழுத்தாளரான முல்க் ராஜ் ஆனந்தின் நாவல்களின் மொழி பெயர்ப்புகளையும், சி.வி. வேலுப்பிள்ளை பத்மாவதி என்ற பெயரில் ஆங்கில கவிதை நாடகமொன்றையும் எழுதினார்கள். 40களில் இவ்வறிவும் எழுத்தாலும் பரவின. சி.வி.வேலுப்பிள்ளை, பி.கிருஷ்ண சாமி, திரு வேந்திரன், ரபீக், எம்.எஸ்.எம். இராமையா, தியாகராஜன், பனிர் செல்வம், தெளிவத்தை ஜோசப், தமிழ் ஒவியன் ஆகியோர் மலையக தேயிலைத் தோட்ட வாழ்க்கையையும் தமது ஆக்கங்களின் கருப்பொருளாகக் கொண்டனர். தேயிலைத் தோட்டத்திலே வாழ்வற்றோர், வாழ்வு, வழிப்போக்கன் ஆகிய ஆக்கங்கள் யாவும் வேலுப் பிள்ளையினதாகும். கே.கணேஷின் ஆங்கிலக் கவிதைகள் யப்பானியப் பேரரசின் பாராட்டையும் பெற்றது.
1957இன் பின்னர் முன்னேற்றகரமான தொனிப் பொருள்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஆக்க இலக்கியத்தில் பிரவேசித்த, ரீ.எம்.பீர் முஹம்மது, அப்பாஸ், என்.எஸ். நாதன், பெரியசாமி ஆகியோர் தேயிலைத் தோட்ட மக்களின் வாழக்கையை கருப்பொரு ளாகக் கொள்கின்றனர். எஸ்.கணேசலிங்கன் நாவலாசிரியர் என்ற ரீதியில் பிரபல்யமானவர். அவர் யதார்த்த சமூகத்தின் நாவலாசிரியராவார். அவை தென்னிந்திய சமுதாய எழுத்தாளர்களது ஆக்கங்களிலும் தரமானது. சமுதாயப்

Page 20
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܣܛ22
பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணங்கள் இவற்றில் அடங்கியுள்ளன. ஆகவே இந்நாவல்கள் புத்திசாலியான அனுபவமாகும். கணேசலிங்கன் எழுதிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் மூலம் வெளியாகும் சமூக யதார்த்தம் அவருக்கு தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொடுக்கிறது. அவர் எழுதிய சிறுகதைத் தொகுதிகளுள் நல்லவன், ஓரினம், சங்கமம் ஆகியன முக்கியமானவை. நாவல்களுள் நீண்ட பயணம், சடங்கு, செவ்வானம், தரையும் தாரகையும் ஆகியனவும் முக்கியமானவையாகும். அவர் இடதுசாரி மாதப்பத்திரிகை யான 'குமரனின் ஆசிரியராவர்.
யாழ்ப்பாணத்தில் சிறு கிராமமொன்றில் நடைபெறுகின்ற மாற்றங்கள் பற்றி நீண்ட பயணத்தில் கூறப்படுகின்றது. பெரும்பாலான மாற்றங்கள் அரசியல் ரீதியானதும் சமுக ரீதியானதுமாகும். கிராமத்திலுள்ள தாழ்ந்த குலத்தவர் முன்னேறுவது பெரும்பாலான இம்மாற்றங்களின் அடிப்படையாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகளை உடைத்துச் சென்று தாழ்ந்த குலத்தவரான இம்மக்கள் கிராம சபைகளிலும் பதவிகளைப் பெறுகின்றனர். சில காலமாகப் பெற்ற இந்நிலைகளைப் பற்றி போராட்டம் எனும் நாவலில் கூறப்படுகின்றது. இது சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டது.
சாதி பேதத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது. சமுதாயத்திலுள்ள எல்லா வகுப்பினரின் மத்தியிலும் கூடிக்குறைந்தளவில் இது காணப்படுகின்றது. விசேடம் யாதெனில், தாழ்ந்த குலம் எனப்படும் குலத்திலுள்ளும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும் பேதம்

கே. எஸ். சிவகுமாரன் ക23
நிலவுகின்றது. ஆசிரியர் இச்சமுகத்தைப் பற்றி யதார்த்த ரீதியில் நன்கு விளக்குகிறார்
கோவில் விழாவின் போது வேளாளர் குலத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் படுத்த குற்றத்திற்காகச் சிறுவனை வேளாளர் குல இளைஞர்கள் நையப் புடைக்கின்றனர். கதாநாயகனுக்கு மூன்று பெண்கள் உள்ளனர். ஒருத்தி உயர் குலத்தவள், இரண்டாமவள் ஒத்த குலத்தவள், மூன்றாவது பெண் தாழ்ந்த சம்பட்டு பள்ளவர் குலத்தவள். கதாநாயகன் மூன்றாமவளை மணந்து கொள்கின்றான். சமுதாய மாற்றம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என கதாசிரியர் இதன் மூலம் எடுத்துக்காட்டு கின்றார். காதல் கட்டங்களின் வருணணை கவிதை யுருவானது. நடைமுறை தமிழ்மொழி நன்கு கையாளப் பட்டுள்ளது. சில விடயங்கள் பற்றிய கதாசிரியரின் வருணனை கவர்ச்சிகரமானது.
சடங்கு என்பது பழக்க வழக்கமாகும் அல்லது சமயக் கிரியைகள் எனலாம். இங்கு மணவிழா பற்றிக் கருதப்படுகின்றது. இங்கு பல வணக்க வழிபாடுகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண தமிழ்க் கலியாண வீடொன்றில் நடைபெறும் எல்லா பூசை முறைகளும் பழக்க வழக்கங்களும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. மேற்படி பழக்க வழக்கங்கள் பற்றி அக்கறையுடன் செயற்படும் மணவாளர்கள் தமது பொருத்தம் பற்றி அக்கறைப்படாதது பற்றி, ஆசிரியர் சமுதாயத்தை எள்ளி நகையாடுகின்றார். புதிய பரம்பரை உருவாவதை ஏற்க மறுக்கும் மூத்த பரம்பரையினரை ஆசிரியர் குறை கூறுகின்றார். பெற்றோர் தமது பிள்ளைகளுக்குத்

Page 21
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܬ݂ܶ24
தீங்கிழைப்பதாக இங்கு ஆசிரியர் கருதுகின்றார். 1956ஆம் ஆண்டுக்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பின்னணியை இது அடிப்படையாகக் கொண்டது.
இந்நூலுக்கு நீண்ட முன்னுரையொன்றை எழுதும் பேராசிரியர் கா.சிவதம்பி அவர்கள், இந்திய நிலச்சுவாந்தார் முறையில் குலம் முக்கிய இடத்தை எடுக்கின்றதென்றும், வைதிக ஆரியர்கள் மத்தியில் காணப்பட்ட நிறம் அன்று வாழ்ந்த கோத்திரங்களிடையே காணப்பட்ட போதிலும் இலங்கை தமிழ் மக்கள் மத்தியிலும் மேற்படி மாற்றங்கள் உள்ளதாகக் கூறுகின்றார். யாழ்ப்பாணத்தில் காணப்படும் கோத்திர முறைகள், மட்டக்களப்பின் கோத்திர முறை களிலும் வேறுபட்டது. பிராமணர்களுக்குப் பொருளாதார முக்கியத்துவமில்லை. ஆகவே விவசாய இந்துக்களுக்கு முக்கிய இடம் உள்ளது. அது தென்னிந்தியாவையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கும் பண்பாகும். யாழ்ப்பாணத் திலுள்ள சில குலங்கள் தென்னிந்தியாவிலும் இல்லை. ஆகவே இந்நாவல் மாற்றமுறும் முன்னேற்றகரமான ஒரு சமுகம் பற்றிப் பேசுகின்றது.
அரசியல் நிகழ்வுகள் இப்பாத்திரங்கள் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளனவா என்று கூறுதலும் சிரமமானதாகும். ஏனெனில், மேற்படி பாத்திரங்கள் நடுத்தர வகுப்புப் பாத்திரங்களாகும். கணேசலிங்கனின் நாவல்களில் உளவியல் பக்கமும் உள்ளது. தென்னிந்திய எழுத்தாளர்கள் (உயர் வகுப்பு) பணக்கார வகுப்பு இலக்கியத்தை உருவாக்கினராயினும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் அதற்கு முற்றிலும் மாற்றமான வழியைப் பின்பற்றினர் என்பதற்கு இந்த நாவல் ஒரு சான்றாகும்.

கே.எஸ். சிவகுமாரன் 25 محے
செவ்வானம் ஒரு அரசியல் சமுதாய நாவலாகும். அது சமகால வரலாற்று நாவல் எனின் அது மிகப் பொருத்தமாக அமையும். சமூக அரசியல் காரணங் களினால் மேல் மத்திய வகுப்பு பணக்கார வியாபாரியாக மாறும் பிரதான பாத்திரத்தின் நடவடிக்கையினடிப் படையில் சமூகத்தின் குறைபாடுகளைக் களைவதற்கு விடை மார்க்ஸ்சின் கோட்பாட்டிலேயே அடங்கியுள்ளது என்கிறார். ஒழுக்கம், பாலியல் நடத்தைகள், காதல், பணம், திறமைகள், அரசியல் ஆகிய யாவும், இச் சமுதாயத்திற்குள்ள தடைகளாகும்.
தரையும் தாரகையும், சமகால சமூக வரலாற்றிலிருந்து பெற்ற சில காட்சிகளைப் பின்னணியில் விவரிக்கும் நாவலாகும். 1958 சிங்கள - தமிழ் கலகமும், இடம்பெயர்வும், தொழிலாளர் வர்க்கமும், கீழ் நடுத்தர வகுப்பும் தேவையற்ற விதத்தில் மேல் வகுப்பினரைப் பின்பற்றுவது கதாசிரியரின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகிறது. கொழும்பில வசிக்கும் வேலையற்ற இளைஞன் ஒருவன் இங்கு கதாநாயகனாவான். கிராமத்தில் வதியும் பணக்காரப் பெண் ஒருத்தியுடன் அவனுக்கு அரச அலுவலகமொன் றில் தற்காலிகமாக எழுதுவினைஞர் பதவி கிடைக்கின்றது. அவன் நடுத்தர வகுப்பிற்குச் செல்கின்றான். இம்முயற்சி யின்போது அவன் செல்லும் துக்ககரமான வாழ்க்கையை ஆசிரியர் விவரிக்கின்றார். இவ்வாக்கத்தை மிகவும் வலிமையான ஒரு நாவலாகவும் சில தமிழ் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இளங்கீரன் மற்றுமொரு பிரபல நாவலாசிரியரா வார். இலங்கையைப் பின்னணியாகக் கொண்டு அவர்

Page 22
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
எழுதிய முதல் நாவல் தென்றலும் புயலுமாகும். ஏனைய நாவல்கள் யாவும் வெளிநாட்டைப் பின்னணியாகக் கொண்டவையாகும். 1956ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை விவரிப்பது இப்புதிய நாவல்களின் நோக்க மாகும். (இங்கிருந்து எங்கே?, காலம் மாறுகிறது, அவளுக்கு ஒரு வேலை வேண்டும்.) இவை முதலில் பத்திரிகைகளில் தொடர்கதையாக வெளிவந்தவை. பின்பு நாவலாக வாசகர்களுக்குத் தரப்பட்டது. “நீதியே நீ கேள்’ புத்தகமாக வெளிவந்தது. அவர் அரசியல் விமர்சகராகவும் செயற் பட்டார். அவர் தொழிலாளி, ஜனவேகம் எனும் சஞ்சிகைகளின் ஆசிரியராய் இருந்தவர்.
வகுப்பு போராட்டத்தின் விளைவாக இளங்கீரன் கடும் முற்போக்குவாதியாகவும் மார்க்ஸ்வாதியாகவும் பாட்டாளி மக்களின் எழுத்தாளராகவும் அறியப்படு கின்றார். இளங்கீரன், நாவலாசிரியர் என்ற வகையில் சக தென்னிந்திய எழுத்தாளர்களிலும் முன்னேற்றகரமானவர். கருத்து அடிப்படையில் நோக்கியபோதிலும் கலை ஆக்க மொன்றின் அடிப்படையிலும் அவர் முக்கியமானவர். சஞ்சிகைகளுக்கு எழுதுபவர் என்றவாறு அவரைக் குறைவாக கருதுவது சிரமமாவது இதனாலேயே. அவரது ஒவ்வொரு நாவலும் நாவலாசிரியர் என்ற வகையில் அவரது முதிர்ந்த தன்மையைக் காட்சிப்படுத்துகின்றது.
திென்றலும் புயலும் - சமகால சமுகத்தைத் தமிழ் எழுத்தாளன் என்ற வகையில் விவரிக்கின்றது. ஆழமாக சமுகத்தை அவதர்னிக்கும முற்போக்குவாதியின் பார்வையை இந்த நாவல் வெளிப்படுத்துகின்றது.
 

கே. எஸ். சிவகுமாரன்
அந்தந்தப் பாத்திரத்தின் சம்பாசனைகள், செயற்பாடுகள் மூலம் நாவலின் கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சிறிய நடுத்தர வகுப்பு குடும்பத்தில் அலைக்கழியும் பண்பாட்டு முரண்களினால் ஏற்படும் பிரச்சினைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. பாலு எனப்படும் மகன் கொழும்பில் பணக்காரப் பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றான். அவனால் தொழில் ஒன்றைத் தேடிக் கொள்ள முடியவில்லை. அவள் அவனை நேசிப்பதாகக் கூறுகிறாள். இதற்கிடையே அவள் அவனால் தாய்மையடைகின்றாள். அவளது கருவைக் கலைத்துவிட்டு அவளை மாமாவின் மகனுக்கு மணம் முடித்துக் கொடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். பணத்திலும் சமுக அந்தஸ்திலும் அவன் அவளை ஒத்தவன். இந்த பிரச்சினை களுக்கு முகங்கொடுக்க முடியாத பாலு உடல் உள ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டு உயிர் துறக்கின்றான். நாவலில் வருவது இரு வகுப்புக்கள். பணக்கார - ஏழை வகுப்புக்கள், இரண்டுக்கிடையிலான முரண்களாகும்.
இங்கு மற்றொரு கதையும் உண்டு. அது பாலுவினது சகோதரியான கனகத்தின் கதையாகும். அவள் தாழ்குலத்தவனான பூபதியை நேசிக்கின்றாள். ஏனை யோரின் எதிர்ப்பைக் கருதாது அவர்கள் மகிழ்ச்சியுடன் மண முடிக்கின்றனர். நடராஜன் எனும் நண்பன் மூலம் இக்குடும்பங்களுக்கிடையிலான சிக்கல்கள் முன்வைக்கப் படுகின்றன. அவர், பூபதியினதும் பாலுவினதும் நண்பரா வார். நடராஜன் கதாசிரியரின் கருத்தைக் கூறும் கதை யாகும். கொழும்பு வாழ்க்கை மாயமானது. இலஞ்சமின்றி அரச துறையிலோ தனியார் துறையிலோ தொழிலைப் பெற

Page 23
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ28
முடியாது. கொழும்பில் வாழும் உயர் வகுப்பு தமிழ் மக்கள் பெயரளவில் தமிழராவார். அவர்கள் ஆங்கிலத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர். வெளியில் தமிழ் கலாசாரத்தைப் பேண அவர்கள் உரையாடுகின்றனர். எனினும், வீட்டில் அண்ணா, அம்மா போன்ற இனிய தமிழ் வார்த்தைகளைக்கூட வாயால் கூறுவதில்லை.
உண்மையான தமிழ் கலாசாரம் வளர்ந்து உருவாவது ஏழை தமிழ் மனிதரிடமே. சமுகத்தில் நிலவும் மேற்படி வகுப்பு இடைவெளி பற்றி கதாசிரியர் விமர்சன நோக்கு டன் பார்க்கிறார். நடுத்தர வகுப்பின் மாயை அவரது விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகிறது. நியாயம், கலாசாரம், ஒழுக்கம் ஆகியவற்றில் எமது சமுகத்தில் நிலவும் வகுப்பு வேறுபாடு உடனடியாக அகற்றப்பட வேண்டும். என்றோ ஒருநாள் வகுப்புகள் அற்ற சமுதாயம் உருவாகும் போது நாம் சுதந்திரம் பற்றிய பாடல்களைப் பாடலாம். கனகம்பூபதி திருமணத்துடன் நாவல் முடிவடைகின்றது. அதனைக் கேள்வியுறும் பரம்பரை வாதியான தந்தை இறந்து விடுகிறார். தனது தாயைப் பார்த்துக் கொள்ளுமாறு நடராஜனை சம்மதிக்க வைத்தபின் பாலுவும் இறந்து விடுகின்றான்.
கே. டானியலின் சிறுகதை தொகுப்புக்கள் இரண்டு உள. அவரது முதல் சிறுகதை தொகுதி பஞ்சமராகும். இது சமகால வரலாற்று நாவல் போன்றதொன்றாகும். அது 70 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண மக்கள் பற்றிய மாதிரியாகும். யாழ்ப்பாணத்தில் பின் தங்கிய மக்கள் ஆயுதமேந்தி நிலச் சுவாந்தார் சமூகத்திற்கு எதிராக எழுந்து நின்றனர். ஒலைவேலிக்கு மறுபக்கத்தில்

கே.எஸ். சிவகுமாரன் 29یگر
வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றி நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்நாவல் அறியத் தருகிறது. வன்னி மக்களின் வாழ்க்கை பற்றி விவரிக்கின்ற நாவல் ஒன்றை ஏ. பாலமனோகரன் எழுதியுள்ளார். தண்ணிர் முறிப்பு மக்களின் வாழ்க்கையை மிக நுண்ணியமாக விவரிக்கும் வகையில் கதாநாயகி பதஞ்சலியை கதாசிரியர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் அவர் தேவைக்கதிகமாக கவனம் செலுத்தியுள்ளார். இது இவ்வாசிரியரின் முதல் நாவலாகும். இங்கு விவரிக்கப்படு கின்ற சூழல் நாகரிக தமிழ் எழுத்தாளரினால் செயற்பட முடியாத ஒரு சூழலாகும். நாவலானது, பதஞ்சலியை அவளது விபச்சார வாழ்க்கைக்காக குறை கூறுவதிலிருந்து காப்பாற்ற முயல்கிறது. கதாசிரியர் அவளை நிலக்கிளிக்கு உதாரணம் கூறுகிறார். பதஞ்சலி அப்பறவை போல் வாழ வேண்டும். சஞ்சிகையிலிருந்து பெறும் அறிவு அவளது தீர்வுக்கு விடை அளிக்கிறது.
நிலக்கிளி, சுவாரஸ்யமான ஒரு நாவலாகும். பால மனோகரன் மிகவும் துாய ஒரு உலகை எதிர்பார்க்கின்றார். கடந்த காலத்தின் மேல் காதல் கொண்டுள்ள இச்சரிதை இளைஞர் உலகின் வலிமையை எடுத்துக் காட்டுகின்றது. 1970இன் பின்னர் தமிழ் ஆக்க இலக்கியத்தில் காணப்படும் ஒரு விடயமாக நாவலை விட சிறுகதையை நோக்கி ரசிகர்கள் ஆவல் காட்டுவது தெளிவாகின்றது. நல்ல சிறு கதையை ஆக்குவது சிரமமானதாகும். அதற்கு எல்லைகள் உண்டு.
ஒருவகையில் அவை நாவல் வகையைச் சேர்ந்தவை எனலாம். எஸ்.யோகநாதன் அத்தகைய ஐந்து நாவல்களை

Page 24
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
எழுதியுள்ளார். மேற்படி ஐந்து நாவல்களிலும் உள்ள தொனிப்பொருள் “ஒளி நமக்கு வேண்டும்” என்பதாகும். 1963இலிருந்து 1972 வரையான காலப் பகுதியில் எழுதப்பட்ட இந்நாவல்களின் பெயர்கள், இருபது வயதும் மூன்று ஆசைகளும், சகோதரத்துவம் எனும் சொல், ஜானகி, அவர்கள் வரட்டும், திருச்சிற்றம்பலம்' ஆகியன. தமிழ்மொழி மூலம் பட்டம் பெற்ற இளைஞர்கள் மத்தியில் கற்பனைவளமிக்க எழுத்தாளர்கள் பலர் இருந்தனர். துரதிஷ்டவசமாக அவர்கள் பல்கலைக்கழகம் பற்றி மாத்திரமே எழுதி வந்தனர். யோகநாதனும் கதிர்காம நாதனும் பல்கலைக் கழக சமூகத்தையும் வெளிச் சமூகத்தின் ஒரு வெட்டு முகமாகவே நோக்கினர். தனிநபர் வாதமல்ல சமூகமாக கொண்டு செல்லும் போராட்டம். அது சமூக நீதியை நிறைவேற்றும் என அவர்கள் நம்பினர்.
அவரது ஜானகி நாவல் தனது தாயைக் காப்பாற்று வதற்காக சமூகத்தடைகளை உடைத்துச் செல்லும் ஒரு பிராமணப் பெண் பற்றியதாகும். அவளது சகோதரன் பூசை வழிபாடுகளிலிருந்து விலகி ஒரு லொறிக் கிளினராக வேலை செய்கிறான். தாதிக்கல்லுாரியில் சேரும் ஜானகி வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்கிறாள். அங்கு அவளுக்கு வாழ்வளிப்பவள் ஒரு தாழ்ந்த வகுப்பு நண்பி யாவாள். இருவது ஆண்டுகளில் அவள் கூறுவது தம்மிகா. சுமணதாச, தர்மபால, சிவகுமார் பற்றியாகும். சமூகத் திலுள்ள பல்வேறு தரத்திலான பாத்திரங்கள் பற்றியாகும். தம்மிகா நடுத்தர வகுப்பு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். சுமணதாசவின் தாயார் கட்டடம் கட்டும் இடத்தில் கூலி வேலை செய்பவர். தர்மபாலவின் தகப்பன் ஒரு விவசாயி. சிவகுமாரின் தந்தை ஒரு சில்லறைக்கடை
 

கே.எஸ். சிவகுமாரன் 31 *گھصر
வியாபாரி. தம்மை மையமாகக் கொண்டு சிந்திப்பதும் குறுகிய வழியில் சிந்திப்பதும் அவர்களது சோகத்திற்குக் காரணமாகும். ஆசிரியர் பெரும்பாலும் இந்நிலையை விவரிக்க முயலுகின்றார். சகோதரத்துவம் எனும் பெயர் யதார்த்தமான கல்வி முறையொன்றின் தேவை பற்றியே கூறுகின்றது. திரு சிதம்பலம் பச்சாதாபமின்றி நேர் சிந்தனையுடன் மனிதன் வாழ வேண்டும் என்கின்றார்.
காவலுார் இராசதுரையின் ‘வீடு யாருக்கு ஒரு குறு நாவலாகும். அது நகரத்துத் தமிழரது வாழ்க்கையை கேலிக்குள்ளாக்குகிறது. இந்தியர்களாயினும் இலங்கை யாாயினும் தமிழ்க் குடும்பமொன்று இந்தியத் தமிழ்க் குடும்பத்துடன் ஒன்றாக ஒரு சிங்கள முதலாளியின் வீட்டில் கொழும்பில் வசிக்கின்றனர். தற்காலிக விலாசத்துடன் வசிக்கும் இந்தியத் தமிழ்க்குடும்பம் சுங்க அதிகாரிகளுக்குப் பயந்து வேறு இருப்பிடத்திற்குச் செல்கின்றனர். இச்சந்தர்ப்பத்தை யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பம் பயன்படுத்திக் கொள்கின்றது. சிங்கள முதலாளியின் செயற்பாட்டின் மூலம், இது வகுப்புப் போராட்டமேயன்றி தமிழ் விரோத செயற்பாடு அல்லவென வெளிக் amL-05pgy.
அருள் சுப்பிரமணியத்தின் "அவர்களுக்கு வயது வந்து விட்டது" சீரான பாத்திர அமைப்புடன் கூடிய, வாசிப்ப தற்குச் சுவையான, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒன்றாகும். திருகோணமலையிலிருந்து வரும் ஆரியன் எனும் தமிழ் இளைஞன் பிரதேச அரசியல் அலைக்கு உட்படுகின்றான். சிங்களவர்கள் கெட்டவர்கள் அல்லவென அவன் படிப்படியாக உணர்ந்து கொள்கிறான். அவன்

Page 25
82a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
தங்கியிருக்கும் வீட்டிலுள்ள மெனிக்கா எனும் யுவதியுடன் உடலாலும் உள்ளத்தாலும் வாழும் அவன் இறுதியில் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். இதுபற்றி பெற்றோரிடம் கூறுவது எப்படி என்பதைத் தீர்மானிக்க முடியாது அவன் தடுமாறுகிறான். இந்நூாலை சிங்களத்தில் மொழி பெயர்க்க வேண்டும் எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறியிருக்கின்றார்.
தமிழ் சிறுகதையாசிரியர்களுள் முதன்மையானவர் இலங்கையர்கோன் எனும் புனைப் பெயருடன் எழுதும் கே. சிவஞான சுந்தரமாகும். மணிக்கொடி, சூறாவளி சக்தி, சரஸ்வதி, கலைமகள் போன்ற சஞ்சிகைகளில் அவரது பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவை தென்னிந்திய சஞ்சிகைகளாகும். வெள்ளிப் பாதசரம் எனும் தொகுதியில் 15 கதைகள் உள்ளன. இவற்றுள் அனுலா, மரியாமலேனா, மேனகா, சீகிரியா ஆகியன சமகால தமிழ் சமூகம் பற்றிக் கூறுபவையலல.
தாழை நிழலிலே, 12 வயதான சிறுமியொருத்தியின் கவிதை வெளிப்பாடுகளுக்கு எழுத்தாளன் களம் அமைக்கின்றான். மச்சாள், தன்மையில் எழுதப்பட்ட ஒரு கதையாகும். வெள்ளிப்பாதசரம், புதிதாகத் திருமணம் செய்த சோடியின் காதல் பற்றிக் கூறுகின்றது. மனிதக் குரங்கு, அழகிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட விகார உருவமுடைய ஒருவனின் திறந்த தன்மையையும் மனித நேயத்தையும் பற்றிக் கூறுகின்றது. நாடோடி, புதியவற்றைத் தேடுபவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ்ப் பண்டிதர்களைக் கேலி செய்யும் ஒரு கதையாகும். தேடுபவன் அல்லது நடப்பவன், எழுத்தாளனின்

கே. எஸ். சிவகுமாரன்
முன்னேற்றகரமான கோட்பாடுகள் பற்றிக் கூறுகின்றது. அனாதை, திருமணத்திற்கு முன்பே பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையைத் துார எறியும் உயர் வகுப்புப் பெண்களின் மனநிலையை கேலி செய்யும் ஒரு நாவலாகும்.
சிறுகதை பற்றி நோக்கும் போது அ.முத்துலிங்கத்தின், பக்குவம் அழகிய மாதிரியுடன் கூடிய சுருக்கமான கதையாகும். ஒரே குடும்பத்திலுள்ள இரு சகோதரிகள் பூப்படைதலினால் எழும் அசிங்கத்தினால் உருவாகும் தாழ்வு பற்றி இங்கு கூறப்படுகின்றது. ஒரு இளைஞன், அவளது உளச்சிக்கல்களிலிருந்து மீட்டு, அவளது அழகைப் பற்றி கூறுகின்றான். கலையுருவாக நன்கு கட்டி யெழுப்பப்பட்ட போதிலும், கதையில் கூறப்படுவது போன்று இவ்வளவு விரைவாக ஏற்படும் மாற்றங்களுக்கு மருத்துவ துறை சார்ந்த சான்றுகள் உண்டா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
1960இல் வெளியான இச்சிறுகதை தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். திருச்செந்தூரன்
பிரசா உரிமையைப் பெற எடுக்கும் முயற்சியைக் காட்டு கின்றது. இங்கு கதை வடிவத்திற்கு மொழி நன்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் வாழும் மக்களின் திடீர் மாற்றம் பற்றிக் கூறும் மலையும் மடுவும், சசிதேவி கந்தையாவின் சிறுகதையாகும்.
செம்பியன் செல்வன் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு நாவலாக இதயக் குமுறலைக் குறிப்பிடலாம். ஒரே நேரத்தில் தாயும் மகளும் குழந்தையைப் பெறலும் தாயின் பிள்ளை இறந்து

Page 26
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
போனதால் மகளின் குழந்தையை அவள் வளர்த்தலும் இங்கு கதையாகும். மகள் சட்டப்படி விவாகம் செய்யவில்லை. அப்பிள்ளை அவளைத் தனது தாய் என அறியாது சகோதரியாகக் கருதுகிறாள். 1958இன் இனமோதலை கருவாகக் கொண்டு நவம் எழுதிய நந்தாவதி இனபேதத்தின் பொய்மையை எடுத்துக் காட்டுகின்றது. இக்கதையில் சுபாவமற்ற இடங்களும் உண்டு. தேடி வந்த கண்கள்- உதயனின் ஆக்கமாகும். ஒரு சிங்களப் பெண் தன்னை நேசித்த குருட்டு தமிழ் இளைஞனைக் காப்பாற்ற செய்த தியாகம் இங்கு காட்டப்படுகின்றது. அவள் செய்த தவறு தமிழ் இளைஞனைக் காதலித்ததாகும். சஞ்சிகைக் கதைகளுக்குத் தேவைப்படும் நம்பமுடியாத நிகழ்வுகள் இக்கதையிலும் வருகின்றது. மறுமணம் - இதுவும் ஒரு சஞ்சிகைக் கதையாகும். சிற்பி இதனை எழுதியுள்ளார். சில சிறுகதைகள் அரசியல் பிரச்சாரத் தகைமையைக் கொண்டிருப்பன. செங்கை ஆழியனின் நாட்டுக்கு இருவர் அத்தகைய ஒன்றாகும்.
சில எழுத்தாாளர்கள் பல்வேறு உத்திகளை உப யோகித்துச் சிறுகதைகளை எழுதுகின்றனர். ஏறகுமானின் 'பூ' ஒருவன் கூறுவதாகும். கதை குறியீட்டுடனான ஒப்பீட்டுடன் முடிவடைகின்றது. திருமணம் செய்த பெண்களின் உள்ளத்தில் வேறொருவன் பற்றி எழும் தன்மை பற்றி இங்கு கூறுப்படுகின்றது. செம்பியன் செல்வன் எழுதும் உணர்வுகள் ஒரே தன்மை உள்ள கதையல்ல. ஒரு தாயினுள் தந்தைக்கு எதிராக எழும் உணர்வுகள் இங்கு கூறப்படுகின்றன. சிதம்பரபத்தினியின் அண்ணா ஆசிரியருக்கும் மாணவிகளுக்குமிடையே தோன்றும் காதல் பற்றியது. மணிமேகலை எழுதிய 'இந்து சீனா பாய் பாய் தீவிரவாத இனப்பற்று பற்றிய ஒரு
 

கே. எஸ். சிவகுமாரன் 435
கதையாகும். ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய வேள்வி, கப்பெடிபொலவின் இனப்பற்று பற்றிய கதையாகும். தான் பிறந்த நாட்டிலேயே தனக்கு வாழ இடமில்லையைக் கூறும் எஸ். பரமசாமியின் கதை நீரோடையாகும். கோமதியின் உறுதி, தாய் தன் மகனை மறுமணம் செய்து கொள்ளத் தயாராகும் கதையாகும். சுசிலா எழுதிய யாருக்குப் பெருமை, ஒரு இளைஞர் ஆபத்தான நிலைமைகளுக்கு முகங் கொடுக்கும் விதத்தைக் கூறுகின்றது.
சோசலிஸ் வாதத்தை நம்பும் எஸ். யோகநாதன் தனது அயலிலுள்ள வாழ்க்கை பற்றி எழுத மறக்கும் பொய்யான கலைஞர்கள் பற்றித் தனது “கலைஞன்” சிறுகதையில் குறை கூறுகின்றார். யாழ்ப்பாண மனிதர்களின் ஏழ்மை, கர்ப்பிணி ஆசிரியையின் எதிர்கால ஆவல்கள் ஆகியன பற்றி விவரிக்கும் யோகநாதனின் மொழி காவிய நடையாகும்.
வ. அ.இராசரத்னம் யதார்த்த ரீதியான கதை கூறுபவர். அவர் தனது கதைகளில் மாதிரியையும் உள்ளடக்கத்தையும் நன்கு கலக்கின்றார். அவரது சிறுகதைகள் தோணி எனும் தொகுப்பாக வெளி வந்துள்ளன. இவை கிராமிய வாழ்க்கையை விவரிக்கின்றன. இங்கு மொழி நன்கு கையாளப்பட்டுள்ளது. பொன்னுத் துரை எழுதிய பூக்கும்பூ எனும் சிறுகதைத் தொகுதிக்கு மேலதிகமாக தீ, சடங்கு ஆகிய இரு நாவல்களையும் எழுதியுள்ளார். கதிர்காமநாதன் சமகால வியட்நாம் போரை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கர்கள் காசகன் நகரைக் கைப்பற்றியதை ஒரு வியட்நாம் பெண்ணின் நோக்கில் எழுதுகிறார். “வியட்நாம் உனது தேவதைகளின் தேவ வாக்கு” இதுவாகும். தேச பக்தி மூலம் சர்வதேச பக்தி உருவாகும் என இவர் நம்பினார்.

Page 27
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܧ 36
அவர் தனது அரசியல் கோட்பாடுகளை கலைக்குப் பலி கொடுக்கவில்லை. மனிதனுக்கு ஆத்மவிமோசனம் உள்ளது என மு.தளையசிங்கம் தனது போர்ப்பறை மூலம் கூறுகின்றார். அவரது சிறுகதைத் தொகுப்பான புதுயுகம் பிறக்கிறது என்ற கதைகளிலும் தனது நம்பிக்கைக்கும் கலைக்குமிடையிலான வேற்றுமையை விளக்குகின்றார். தனது அன்றாட நடவடிக்கை பற்றி கோபமடையும் இளைஞன் அதிலிருந்து விடுபட முயற்சித்து வாழ்க்கையில் தோல்வியுறுவதைக் கூறும் வீழ்ச்சி மூலம் அறிவுடையவர் வீழும் போது தனது ஆத்மாவையும் அழித்துக் கொள்கின்றனர் எனக் கூறுகின்றார். குடும்ப வாழ்க்கையின் போது இடது சாரியை நோக்கி மனைவி கூறுகின்ற உங்கள் முன்னேற்றத்தை எங்கள் கடவுள் கொன்று விட்டார் என்பது கடவுளுக்கு குற்றம் சாட்டும் வகையில் கூறப்பட்டதாகும்.
உபதேசக் கதையின் சாயலைக் கொண்டுள்ள தேடல் மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மையை எடுத்துக் கூறுகின்றது. கோட்டை பழைய கொள்கைகளுக்கும் நவீன கொள்கைகளுக்குமிடையிலான மோதலைச் சித்திரிக் கின்றது. யாழ்ப்பாணக் கலாசார வாழ்க்கையின் மீது வெறுப்படைந்துள்ள இளைஞர் பற்றி இரத்தத்தில் கூறப்படுகின்றது. கோயில்கள், இறப்பு பற்றி கூறுகின்றது. எஸ்.வேலுப்பிள்ளையின் ‘மண் வாசனை'யும் கே.சொக்கலிங்கத்தின் “கடல்" உம் சிறந்த சிறுகதை யாசிரியர்களின் ஆக்கங்களாகும். இருவரும் தற்கால மொழியில் எழுதுபவர்கள். மல்லிகை ஆசிரியரான திரு டொமினிக் ஜீவாவின் சிறுகதைத் தொகுதிகள் மூலம் வாசகர்கள் மேலும் முன்னேறிச் செல்வது, சமூகத்தில் இம்சைக்கு ஆளான ஏழைப் பாட்டாளி மக்கள் பற்றிக்

கே. எஸ். சிவகுமாரன் 437
கூறும் குலபேதத்தாலும் சமூக அநியாயங்களினாலும் செல்வந்தர்களினாலும் இலக்கியத்திற்குத் துணையாகக் கொண்டு வாழ்க்கையிலிருந்து தப்பிச் சென்று, செல்வந்தச் சிந்தனையினால் பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிக் கூறும் கதைகளாகும். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றியும் அவர் எழுதினார். பாதுகை, தண்ணிரும் கண்ணிரும், சாலையின் திருப்பம் முதலியன அவ்வாறான சிறுகதைத் தொகுப்புக்களாம். காயிதக்கூடு, பொய்யான அறிஞன் ஒருவரைப் பரிகசிப்ப தாகும். கைவண்டி சகோதரர்களினதும் குடும்பங்கள் தற்பெருமை காரணமாகப் பிரிந்திருந்து விட்டு கூலித் தொழிலாளியொருவரின் முயற்சியினால் ஒன்றிணையும் விதத்தைக் கூறுகின்றது. செருப்புத் தைப்பவனின் வாழ்க்கை பற்றிக் கூறும் பாதுகை, மனித நேயம் பற்றிக் கூறும் வாய்க்கரிசி, நடைமுறையிலுள்ள மொழியில் இணையும் பாத்திரங்கள் பற்றிக் கூறும் சவாரிவண்டி ஆகியன வாசகரின் வரவேற்பைப் பெற்றவையாகும்.
டானியல் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளராவார். அவரது கொள்கை தொழினுட்பத்தை மறந்து விடுகிறது. “மானம் ' அவ்வாறானதொன்றாகும்.
தண்ணிர் - பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் பக்கச் சார்பாக நடந்து கொள்கிறது. இறந்து கொண்டிருக் கும் தனது தலைவனுக்கு மருந்து வாங்க தனதுடலை விற்கும் பெண், மணமுடித்த ஒரு பெண் ரயிலில் இளைஞன் ஒருவனின் பணத்தைப் பறித்தல், உயர்குலப் பெண் ணொருத்தியின் மகிழ்ச்சிக்காக உடைகளை அகற்றி விட்டு ஆடையின்றி இருக்கும் பெண், இவ்வாறான கதைகளினால் தனது கதைகள் பாலியல் சார்பானவை எனக் குற்றம் சாட்டப்படுகின்றன.

Page 28
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
பொருளாதாரத் தொடர்புகளும் விவாகத் தொடர்பு களும் சமமானவையாகும். வேலை செய்யும் வகுப்பினரின் தொடர்புகளும் தன வந்தர்களின் தொடர்புகளும் அவ்வாறானவையல்ல. அது மனிதரை அதிருப்தியுறச் செய்யும் ஒன்றாகும். குடும்பத்திட்டம் அவசியமானதே. தோட்டத் தொழிலாளரின் அறியாமை அவர்களை வீதிக்கு வர வைக்கிறது. கே.சதாசிவத்தின் கதைத் தொகுதியான யுக பிரவேசத்தின் மொழி உயிரோட்டமுடையது. 20 ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை பண்டைய இலக்கியங்களிலிருந்து வேறுபடுத்தும் ஒரு காரணியாக நவீன என்ற பதம் உதவுகின்றது. திக்வல்லை கமாலின் காவியங்களில் விவரிக்கப்படுகின்ற கற்பனை உருவங்களுடன் ஒன்றித்துச் செல்லும் சமூக விவரணங் களும் முக்கியமானவையே.
எலிக்கூடு அத்தகைய ஒன்றாகும். இக்கவிஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை யாதெனில், கற்றோர்கள் இவற்றை கவிதை என ஏற்றுக்கொள்ளக் காட்டும் தயக்கமாகும். வடிவத்திலும் பார்க்க உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தல் கவிஞர்களின் பழக்கமாகும். அன்பு ஜவஹர்சாவின், பொறிகள், பூ நகர் மரியதாஸின் அறுவடை, என்.லோகேந்திர லிங்கத்தின் போலிகள் அவ்வாறான வேறு சில காவியங்களாகும். தென்னிந்தியா வில் வெளிவரும் பெண்? எனும் சஞ்சிகையின் ஒரு மலரில் இலங்கையின் புதுக்கவிஞர்கள் 200 பேர் வரையுள்ளனர். அதற்கான ஆழமான விமர்சகர்கள் அவசியமாகின்றனர்.
கே.கணேஷ் முதன் முதலில் ஹோசிமின் இன் சிறைக்
கூடத்தின் குறிப்புக்கள் என்பதை தமிழில் கவிதையாக்கி னார். ஹோசிமின் கவிதைகள் தென் சின் சிறைக்
 

கே. எஸ். சிவகுமாரன் 39ے
கூடத்திலிருந்த போது எழுதியவையாகும். கருத்துக்களும் பாவங்களும் கே. கணேஷினால் சிறப்பாக வரையப் பட்டுள்ளது. அதற்கு கவிதை ஊடகமும் உதவியுள்ளது. பேராசிரியர் கே.கைலாசபதி கூறியுள்ளபடி 1950ற்கு முன்னர் செக் நாட்டு எழுத்தாளர் யூலிசஸ் பூசிக்கை நாட்சிகள் 1942 இல் கொன்ற போது எம். இஸ்மத் பாஷா எனும் எழுத்தாளர் பூசிக்கின் கருத்துக்களை மொழி மாற்றம் செய்ததாகவும் ஒஸ்கர் வைல்ட் இன் குறிப்புக்களையும் மொழி மாற்றம் செய்ததாகவும் கூறியுள்ளார். ஏ.என். கந்தசாமி, கே.கணேஷ், எச்.எம்.பி. மொகிதீன் ஆகியோ ரும் அத்தகையோரே.
ஈழவாணனின் கவிதைகள் அதிகமாகக் கூறுவது சமூக அநீதிகள் பற்றியாகும். அவர் அழகிய கவிதைகள் எழுது வோரைத் தாக்குகின்றார். அழகியல்வாதிகளுக்கு தேவை பற்றிய உணர்வில்லை. அவரது அக்கினிப் பூக்கள், கட்டுப் பாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளானோர் பற்றிக் குறிப்பிடுகின்றது. தோட்டத்தொழிலாளர் பற்றி அவர் எழுதிய கவிதைகளும் உள. உருத்திர மூர்த்தி என்ற இயற்பெயரைக்கொண்ட மஹா கவி என்ற பெயரில் கவிதை எழுதிய கவிஞர் இளம் கவிஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்திய ஒருவராவர். தமிழ் இலக்கியத்தின் பலமான சக்தியாக அவரை ஏற்றுக் கொண்டுள்ளது. அவரது கவிதை நூல்களாக, வள்ளி, வீடும் வேலையும், கண்மணியின் கதை, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ஆகியனவும் அடங்கும்.
சுய பாவ கீதங்களை இயற்றுதலும் அவரது விஷேட மாகும். பெண்கள் விடுதலைக்காக வழிகாட்டும் கவிதை களையும் அவர் இயற்றினார். த. ராம லிங்கத்தின்

Page 29
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ:40
காணிக்கையில் பெரும்பாலும் பாலியல் கருத்துக்களே வெளி வருகின்றன. யாழ்ப்பாணத்தின் உலோபி சமுகத்தினைப் பற்றியும் அவர் கவிதை வரைந்தார்.
தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் சிக்கலாக அமைந்தது விமர்சகர்கள் இல்லாமையாகும். தமிழ்மொழி உயர் கல்விக்கான மொழியாக மாறியமை இதற்கொரு தடையாக அமைந்தது. இங்கு கே.கைலாசபதியின் தமிழ் நாவல்கள், சிறுகதையின் மூலமும் வளர்ச்சியும், பேராசிரியர் கே.சிவதம்பியின் ஆக்கங்களும் விஷேட மானவையாகும். கே.எஸ்.சிவகுமாரன் ஆங்கிலத்தில் நவீன தமிழ் இலக்கியம் பற்றி விவரிக்கின்றார். பேராசிரியர் எஸ்.தில்லைநாதனும் பேராசிரியர் மெளனகுருவும் இத்துறையில் விஷேடமானவர்கள். நாடு பாதுகாப்பற்றதாக மாறியமையும் சிங்களத் தமிழ் ஆங்கில எழுத்தாளர் இடைவெளிக்குக் காரணமாகும்.
கவனிக்க : சிங்கள இலக்கியப் பேராசிரியர் திஸ்ஸ காரிய வாசம் தமது மொழியில் ஈழத்துத் தமிழிலக்கியம் தொடர்பாக ஒரு கட்டுரையை தமது நூல் ஒன்றில் சேர்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் கே.எஸ். சிவகுமாரன் எழுதிய ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளிலிருந்து சில தகவல்களைப் பெற்று கே.எஸ்.சிவகுமாரனின் இணக்கத்துடன் எழுதப்பட்ட தமிழாக்கமே இது. - இந்த நீண்ட சிங்கள மொழிக் கட்டுரையைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர் முகமது யாக்கூப் ஆவர்.

○
இன ஒற்றுமை - இலக்கிய வழி
பல்லின நாடாகிய நமது நாட்டில், ஒவ்வோரினத் தினதும் தனித்துவம் பேணப்படுதல் அடித்தளமாக அமைதல் வேண்டும். அதே வேளையில், அவற்றிடையே ஐக்கியம், இருந்தாலன்றி, எந்த இனமோ நிரந்தரமாய் கூட்டாக முன்னேற முடியாது. இது நிதர்சனம்.
இன ஒற்றுமையைப் பல வழிகளில் மேற்கொள்ள முடியும். அவற்றிலொன்று இலக்கிய வழியில் இலக்கியத்தின் வாயிலாக ஒற்றுமையைக் காண்பது. இது எவ்வாறு சாத்தியமாகும்? மொழி பெயர்ப்புகள் மூலம், ஒரளவுக்கு புரிந்துணர்வுகளைக் கொண்டு வரமுடியும்.
மொழியடிப்படையில் பார்க்கும்பொழுது, இந்த நாட்டின் பிரஜைகளை மூன்று வகைகளுக்குள் அடக்கலாம். சிங்களம் பேசுவோர், தமிழ்மொழி பேசுவோர், ஆங்கில

Page 30
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
மொழி பேசுவோர். இனரீதியில் நோக்கும்பொழுது, சிங்கள, தமிழ், முஸ்லீம், மலாய, பறங்கியர், பிறஇன மக்கள் நம்மிடையே உளர். இவர்களில் சிங்களவர் ஏறக்குறைய முக்கால் பங்கினராயும் ஏனைய இனத்தவர் காற்பங்கினரா யும் இருப்பதனை நாம் மறந்துவிடலாகாது. விகிதாச்சாரமாக இந்த நிலை இருப்பதனால், பேரினவாதமும், ஆதிக்கமனப்பாங்கும் சிங்கள மக்கள் சிலரிடையே மாத்திரம் காணப்படுவது இயல்பே. அதிர்ஷ்டவசமாக, இவ்வாறு குணவியல்பு கொண்டு இயங்குபவர்கள் வெகு வெகு அற்ப தொகையினரே. உதாரணமாக 18 மில்லியன் (ஒரு கோடி எண்பது லட்சம்) மக்களில் ஒரு லட்சம் பேரே (அண்ணளவாக) இத்தகைய மனப்பாங்கினர் என்பதைத் தேர்தல்கள் மூலம் அறியமுடிகிறது. எனவே, இன செளஜன்யம் இல்லாதிருப்பதை நீக்க ஒற்றுமையுணர்வைப் பலப்படுத்தல் வேண்டும்.
சிங்கள மொழி இலக்கியங்கள் தமிழில் ஏற்கெனவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில் தமிழ் மொழியாக்கங்கள் அதே அக்கறையுடன் சிங்களத்தில் வருவதாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி என்று கருதப் பட்டால், அச்சமூக உணர்வுகளையும், சிந்தனைகளையும் சித்திரிக்கும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. தமிழ் பேசும் மக்களின் அவலங்களைப் பெரும்பாலான சிங்களமக்கள் நேரடியாக அறியாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், நாமே நமது வாழ்க்கை நிலையை, பெரும்பாலான மக்கள் பேசும் சிங்கள மொழியில்
 

கே. எஸ். சிவகுமாரன் 43 کے
எடுத்துக்கூறத் தவறியமையே. அவர்களாகவே நமது இலக்கியங்களை மொழிபெயர்க்கும்வரை காத்திராமல், உடனடியாகவே நமது அபிலாஷைகளை, மனப்பாங்கு, பாரம் பரியம், தனித்துவங்கள் போன்றவற்றில் வெளிப்படுத்தும் இலக்கியங்களை நாமே சிங்களத்தில் மொழி பெயர்த்தல் வேண்டும். அதேபோன்று, வேற்று மக்களின் வாழ்க்கை நிலை, பயம், அபிலாஷைகளை நாம் புரிந்து கொள்ளும் பொருட்டு, அவர்களுடைய இலக்கியங்களை நமது மொழியில் கொண்டுவர வேண்டும்.
இருசாராரும் படைக்கும் இலக்கியங்கள், பொதுவாக மனிதத்துவத்தையும், ஒற்றுமை அவாவையும் சித்திரிப்பனவை யாக இருந்தால், அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில், மனித இயல்பு சாந்தி, சமாதானம், ஒற்றுமை, செளஜன்யம், பரஸ்பர புரிந்துணர்வு / மதிப்பு போன்ற நல்லம்சங்களை விரும்புவதுதான்.
ஈரினத்தவர்களின் பொதுப் பிரச்சினைகளை ஈரினத்தவரும் இலக்கிய வழியாக அறிந்து கொள்ளும்போது, ஒற்றுமை ஏற்பட வேண்டிய அவசியம் உணரப்படும். இவ்வாறு உள்ளிருந்து முகிழும் இந்த உணர்வை இலக்கியங்கள் வெளிப்படுத்தும் பொழுது, நடைமுறையில் இனஒற்றுமை சாத்திய வகை ஏற்படுகிறது. எனவே, இலக்கிய வழியாகவும் இன ஒற்றுமையை நாம் வளர்க்க முடியும். முயல்வோம். முயற்சி திருவினையாக்கும் என்பது எனது நம்பிக்கை.
(வவுனியா மாவட்ட சாகித்திய விழா (1994) மலர் - அரச மாவட்ட செயலகம்)
る。
4)
•
0.

Page 31
G3)
நமக்குள்ளே புதுக்கதைகள்.
நமக்குள்ளே நாம் பழங்கதைகள் பேசி மகிழ்வதுண்டு. தொடர்ந்தும் பேச வேண்டும். பேசியும் வருகிறோம். பழமை யின்றிப் புதுமையில்லை. பழையதைத் தேடுதல்தான், தேடல் முயற்சி. ஏன் தேட வேண்டுமென்றால் புதுமையின் பிறப்பு டழமையின் அடித்தளத்திலிருந்துதான் ஏற்படுகிறதென்பது வரலாற்றுக் கண்ணோட்டமுடையவர்கள் கண்ட முடிவு. எனவே, நாம் இடைக்கிடை பழைய விபரங்களைத் தருவதுடன், புதியவற்றில் புறக்கணிக்கப்பட்டவற்றைக் கணக்கிலெடுக்கும் பொருட்டு அவை பற்றியும் இப் பத்தியில் பார்ப்போம்.
புதுக்கதைகள் (சிறுகதை, நாவல்) போன்றவற்றையும், கவிதைத் தொகுப்புகள் பற்றியும் நாம் கவனம் செலுத்து மளவுக்கு, வசன இலக்கியம் தொடர்பாகக் கணிப்பது மிகக் குறைவாகத்தான் இருக்கிறது.

கே. எஸ். சிவகுமாரன் 45 گیص
ஒவ்வொரு எழுத்தாளரும் தாமோ அல்லது பிறரைக்கொண்டோ தமது பங்களிப்புகளைப் பதிவு செய்தல் அவசியமாகிறது. குறிப்பாகக் கணனியில் பதிவு செய்வது பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த விதத்தில் சில பதிவுகள் இப்பொழுது தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மறைந்தவர்கள் தொடர்பான அவ்வாறான பதிவுகள் நூல் வடிவில் கொண்டு வரப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
மலையக எழுத்தாளர் இருவர் ப. ஆப்டீன், கே.பொன்னுத்துரை ஆகியோர் கொழும்பு சேமமடு பதிப்பகத்தின் ஊடாக ஒரு நூலைத் தந்துள்ளனர். இலக்கியத்துறை பேராசிரியராக விளங்கிய செ. சிவஞானசுந்தரம் ‘நந்தி’ என்ற புனைபெயரில் ஈழத்து இலக்கிய உலகுக்குச் செலுத்திய பங்களிப்பைப் பலர் அறிந்திருக்கவில்லை. மலையகம் தொடர்பாக அவர் சம்பந்தப்படும் விஷயங்களைத் தொகுத்து நூலாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தின் பெயர் "பேராசிரியர் நந்தியும் மலையகமும்' என்பதாகும். நிழற்படங்களுடைய இந்த 148 பக்க நூல், இலக்கிய மாணவர்களுக்கும், தேடிப் படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கும் பயனளிக்கிறது. இலங்கையின் தமிழ் ஆய்வறிவாளர்களுள் ஒருவராக விளங்கிய அமரர். இரா.சிவலிங்கம் அவர்களுக்கு இந்நூல்
d:FLDfTLJLH6OOTLD.
பழங்கதைகள் பேசுவதிலும் சுவையுண்டு என்பதற்கு டொமினிக் ஜீவா எழுதிய முன்னுரை - குறிப்பாக முற்பகுதி - வாழ்வில் எத்தனை எத்தனை இன்பங்கள் உண்டென்பதை எமக்குக் காட்டி நிற்கிறது.

Page 32
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
தொகுப்பாசிரியர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
மலையக இலக்கிய வரலாற்றில் 'நந்தி காலம்’ ஒன்றிருந்ததை மனதிற் கொண்டு பல தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. 'அறுபதுகளில் முகிழ்த்த மலையக இலக்கிய மறுமலர்ச்சி இன்று தனித்துவம் பெற்றுத் திகழ்வதற்கு நந்தியின் ஊக்குவிப்புகள் அடிப்படையாக இருந்தன என்பதில் ஐயமில்லை’ என்கிறார்கள் ஆப்டீனும் பொன்னுத்துரையும்.
பதிப்பாளர் பத்மசீலன் சரியாகவே குறிப்பிடுகிறார்: 'வளரும் பரம்பரைக்கு வாழும் பரம்பரையினர் விட்டுச் செல்வது இவ்வாறான உறவுப் பாலமே'. இலங்கையில் பிரசித்தி பெற்ற 15 பேர் நந்தி தொடர்பாக எழுதிய கட்டுரைகள், மலையக இலக்கிய வரலாற்றையும், நந்தியின் பங்களிப்பையும் எமக்குத் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு எழுதியவர்கள் யாவர் என்பதும் பதிவு செய்யப்பட வேண்டியதொன்று.
சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ப.ஆப்டீன், சு.முரளிதரன், கே.பொன்னுத்துரை, ச.சந்தனப் பிச்சை, தி.ஞானசேகரன், இரசந்திரசேகர சர்மா, நா.நடேசன், பர்சானா நமீம், குறிஞ்சி நாடன், பத்மா சோமகாந்தன், ச.முருகானந்தன் - இவர்கள் எழுதிய கட்டுரைகளுடன் மூன்று அனுபந்தங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவை எவை என்பதை நூலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
நந்தி என்ன, எப்படி எழுதினார் - அவை பற்றிய திறனாய்வு எப்படி என்பதையறிய தெளிவத்தை ஜோசப், தி. ஞானசேகரன், சாரல் நாடன், நந்தி ஆகியோர் எழுதியவற்றைப் படித்துப் பார்க்கவும்.
 

கே. எஸ். சிவகுமாரன் .47 ص
நந்தியின் விபரக் கோவை - 1960 முதல் 2005 வரை இவர் எழுதியவையும், இவர் தொடர்பான பதிப்புகளும் பற்றிய பட்டியல் 125 - 126 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.
1960களில் இலங்கை வானொலி தேசிய சேவையில், ஒரு வாரம் திரைப்படம் பற்றியும், ஒருவாரம் நூல்கள் பற்றியும் மதிப்புரைகளை வழங்குமாறு நான் கேட்கப்பட்டேன். இந்த ஒலிபரப்பின் தயாரிப்பாளராக மறைந்த அருள் தியாகராஜா இருந்தார். அந்நாட்களில் நான் வளரிளம் பருவத்தினனாக இருந்தேன். மதிப்புரைக்காக வந்த புத்தகங்களில் சிவற்றை வாசித்து ஒலிபரப்புக்கான மதிப்புரைகளை எழுதி வாசிக்குமாறு அருள் தியாகராஜா என்னைப் பணித்ததன் பேரில், நான் சில நூல்களை, மதிப்புரைக்காக ஏற்றுக் கொண்டேன். அந்நூல்களில் ஒன்று நந்தி எழுதிய ‘மலைக்கொழுந்து. அந்த மதிப்புரையில் மூன்று நூல்களை 15 நிமிட நேரத்தில் நான் நேயர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். விரிவான திறனாய்வாக அது அமையாவிட்டாலும், மலைக் கொழுந்து பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
இது ஒரு மலைநாட்டுக் கதை. இங்கு காதலுக்குத் தடையாக இருப்பது தோட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களுக் கிடையிலான போட்டா போட்டியாகும். கதையை விட மலையக மக்களின் வாழ்க்கை முறையை ஏனைய பிரதேச மக்களுக்குத் தெரியப்படுத்த உதவும் விதத்தில் அமைந்த விவரணை பாராட்டுக்குரியது.
(தினகரன் வாரமஞ்சரி - பெப்ரவரி 1, 2009)
4X «», «»
•

Page 33
G1)
பண்பாட்டு வேர்களை
அறிந்துணர உதவிய பயணம்
blனும் ஒரு தமிழன் என்றிருந்த எனக்கு, நான் ஒரு தமிழனே' என்ற உணர்வை எழுப்பியது எனது தென்னகப் பயணம். இதற்கும், மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. அது ஒரு சமகால நிகழ்வு மாத்திரமே.
தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும், பதினெட்டு நாட்களை, கடந்த ஜனவரி 1 முதல் 18 வரை கழிக்க நேர்ந்தது. இதுவே எனது முதல் வெளி நாட்டுப் பயணம்.
முதற் பயணமே எனது பண்பாட்டு வேர்களையறிந் துணர உதவிற்று. உள்ளூரப் படிந்திருந்த தமிழுணர்வு

கே.எஸ். சிவகுமாரன் 49 كم
திடீரெனக் குமுறி என்னகத்தே புளகாங்கிதத்தை ஏற்படுத்திற்று.
எனது பயணத்தின் நோக்கம்: சுற்றுப் பயணியாக தமிழ் நாட்டின் சில பகுதிகளுக்காவது சென்று மகிழ்தல், தமிழில் எழுதும் எழுத்தாளர்களை சந்தித்தல் ஆகியனவே.
தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே பெங்களூர் வரை சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பஸ் ஸிலும், ரயிலிலும் பயணஞ் செய்து அளவை செய்திருப்பேன்.
நான் பயணஞ் செய்த இடங்களில் முக்கியமானவை:
திருச்சி, மேலுரர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, பழநி, கோயம்புத்தூர், பேரூர், சென்னை, பெங்களூர், தஞ்சாவூர் - தென்னிந்திய திராவிட மக்கள் வாழும் பிரதேசங்களில் ஒட்டமும் நடையுமாக பதினெட்டு நாட்களைக் கழித்துக் களிப்புற்றிருக்கிறேன்.
அங்குள்ள மக்களுடன் நான் பழகியபோது பெற்ற இன்ப அனுபவம்: அன்பு, விருந்தோம்பும் பண்பு, எளிய ஆடம்பரமற்ற வாழ்க்கைக் கோலங்கள், கூரிய சிந்தனை வீச்சு ஆகியனவாம். பலதரப்பட்ட குணமுடையோர், வெவ்வேறு அரசியற் கலைக் கோட்பாடுடையோர், வெவ்வேறு சமூக மட்டத்தில் உள்ளோர் ஆகியோரைச் சந்தித்து உரையாடினேன்.
இலங்கையில் உள்ள முந்நூற்றுக்கும் அதிகமான
எழுத்தாளர்களில் அடியேனும் ஒருவன் என்ற அறிமுகம் எனக்குத் தேவைப்பட்டது. நான் முக்கியமானவனோ,

Page 34
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܡܶ50
அல்லவோ, அது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஓர் இலங்கை எழுத்தாளன் என்றறிந்ததும் அவர்கள் உளமார மதிப்பளித்தார்கள்.
நமது நாட்டு எழுத்தாளர்களில் அவர்களுக்கு கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, கணேசலிங்கன் ஆகியோரை நன்கு தெரியும். சிலருக்கு தளையசிங்கத்தில் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. வேறு சிலருக்கு அருள் சுப்பிரமணியம், நுஃமான், மகாகவி முருகையன், யோகநாதன், கதிர்காமநாதன், அந்தனி ஜீவா, எச்.எம்.பி. முகிதின் ஆகியோரைத் தெரிந்திருக்கிறது.
நான் சந்தித்த எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதினரே. அவர்கள் வயதில் சிறியவர்களானாலும் அனுபவத்தில் முதிர்ந்தவர்கள். சுந்தரராமசாமி, சி.சு, செல்லப்பா ஆகிய இருவர் மாத்திரமே இருபது வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டில் வெளிவந்த "எழுத்து” பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைகளை நினைவில் வைத்திருந்தனர். எனவே அங்குள்ள இளைய சந்ததியினருக்கு ஈழத்து இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள பலரில் ஒரு சிலரை மாத்திரமே தெரியும்.
அண்மைக் காலமாக பத்மநாபன் யேசுராசா, பாலேந்திரா போன்றவர்கள் பற்றித் தெரிய வந்துள்ளது. பொதுவாக ஈழத்து இலக்கிய விமர்சன நெறி பற்றி நல்ல அபிப்பிராயமே கொண்டுள்ளனர்.
நான் சந்தித்துச் சில நிமிட நேரமாயினும் உரையாடிய எழுத்தாள நண்பர்கள்: பி.யூ.அய்யூப், எம். பசீர் அகமது, விஜயகுமார், ஈ. காதர் முகைதீன், கவிஞர் மீரா,

கே.எஸ். சிவகுமாரன் 51گھص
ஆர்.குமாரசாமி, சி.மோகன், எஸ்.சிவராம கிருஷ்ணன், என்.சிவராமன், பேராசிரியர் பி.வி.சுப்பராவ், பேராசிரியர் கே. நாராயணன், எம்.ராமசாமி, தமிழவன், வி.கிராசதுரை, செண்பகம், இலக்கிய வெளிவட்டம் க.நடராஜன், சிற்பி, அப்துல் ரகுமான், இரா.மோகன், சி.கனகசபாபதி, கோ.சிவபாத சுந்தரம், சிட்டி, சி.சு.செல்லப்பா, நா.பார்த்த சாரதி, நீல.பத்மநாபன், தி.சு.நடராஜன், சுந்தரராமசாமி, எம். வேத சகாயகுமார், ஞானி, இரா.எழிலண்ணல், க்ரியா ராமகிருஷ்ணன், ந.முத்துசாமி. பூரீராம், அசோகமித்திரன், ஜெயகாந்தன், பரிமாணம் ஞானி, சா.கந்தசாமி, அகிலன், சோமு, நடராஜன், துறைவன், ஞானக்கூத்தன், ரவீந்திரன், படிகள் சிவராமன், சீனி. விசுவநாதன், கே.தண்டபாணி, மலர்மன்னன், பிரகாஷ், வி.ஜி.பன்னீர்தாஸ். பெ.வரதராஜன், ஆனந்தவிகடன் உதவி ஆசிரியர் வரதராஜன், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஆசிரியர் சேஷாத்திரி, கோவை ரத்தினம், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு, தியோடர் பாஸ்கரன், தருமு, சிவராமு.
இவர்கள் இத்தனைபேரும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியமானவர்களே.
இலங்கை எழுத்து பற்றி கவனஞ் செலுத்துபவர்களில் தி.சு.நடராஜன், சுந்தரராமசாமி ஆகிய இருவரையும் குறிப்பிட்டேயாக வேண்டும். க்ரியா ராமகிருஷ்ணன் இலங்கை சம்பந்தமான எழுத்துக்களுக்கென தனியாகவே ஓர் கோவையை வைத்திருக்கிறார். ஈழத்தில் நண்பர் ஆர்.பத்மநாபன் ஈழத்து நூல்களையும் குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள், விமர்சகர்கள் போன்றவர்கள் படித்துப் பார்க்க வகை செய்து

Page 35
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܝܵ52
வருவதுடன் அங்குள்ள நல்ல எழுத்துக்களை நாம் படித்துப் பார்க்கவும் உதவிவருகிறார். அவர் மூலமே தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் சில சிற்றேடுகள் பற்றி நான் அறியக்கூடியதாக இருந்தது.
இந்தச் சிற்றேடுகளின் ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்தேன். "வைகை” குமாரசாமி, "வானம்பாடி” சிற்பி, இலக்கிய வெளிவட்டம் நடராஜன், “மானுடம்” விஜயகுமார், “பரிமாணம்” ஞானி, "படிகள்” சிவராமன், "பூ" இணை யாசிரியர் ஆர்.ராஜகோபாலன், 1/4 மலர் மன்னன் ஆகியோர் சிலர். 'மானுடம்' இனிக் காலாண்டுப் பத்திரிகையாக வருமாம். “கவனம்’ என்ற பெயரில் ஞானக்கூத்தன் ஓர் ஏட்டை நடத்தவிருக்கிறார்.
சில தமிழ் எழுத்தாளர்களின் தாய்மொழி தமிழல்ல என்பதையும் இங்கு குறிப்பிடலாம். உதாரணமாக, க்ரியா ராமகிருஷ்ணனின் தாய் மொழி தெலுங்கு. ஞானக்கூத்தனின் தாய் மொழி கன்னடம். சில எழுத்தாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திராவிட மொழிகள் நன்கு தெரியும். ராமகிருஷ்ணனின் (இவர் கசடதபற ஏட்டை நடத்தியவர்) க்ரியா நிறுவனத்தின் பங்காளியாகிய ஜெயலக்ஷமி அவர்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார்.
சென்னையிலும், பெங்களூரிலும் திராவிட மொழிகள் பல உச்சரிக்கக் கேட்டேன். நல்ல தூய தமிழ்ச் சொற்கள் இம்மொழிகளில் சாதாரண பேச்சு வழக்கில் இருப்பதை அவதானித்தேன். உதாரணமாக உறங்கு (மலையாளம்), மனை (கன்னடம்), செப்பு (தெலுங்கு) ஆகியன தமிழில் வரும் அதே அர்த்தத்திலேயே பயில்கின்றன.

கே. எஸ். சிவகுமாரன் 53 ص
தெலுங்கு மொழியின் இன்னிசை வர்ணங்களைக் கேட்டு மகிழ ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து வைத்தேன். கே.பாலசந்தர் நெறிப்படுத்திய “மரோ சரித்ரா” என்ற இந்தப் படத்தில் கமலஹாசனும், சரிதாவும், மாதவியும் நடித்தார்கள். தெலுங்குப் பெண்ணுக்கும் தமிழ்ப் பையனுக்கும் காதல் ஏற்படும் சமூக - இனப் பிரச்சினை இத்யாதி- இருந்தாலும் சுவாரஸ்யமான படம். இந்தப் படத்தை பெங்களுரில் நண்பர் வரதராசனுடன் பார்த்தேன். கர்நாடக மாநிலத்தின் தலைநகராகிய பெங்களூரில் நிறைய தமிழர் வாழ்கிறார்கள். அங்கு பெரும் வர்த்தகஞ் செய்யும் ஈரோடைச் சேர்ந்த நண்பர் வரதராஜன் ஒரு பரம ரசிகர். இலங்கை வானொலியில் பதில் அறிவிப்பாளராக வர்த்தக சேவையில் (1966-1972) நான் பணியாற்றிய பொழுது ஏற்பட்ட தொடர்பு, எனது இந்தியப் பயணத்தின்போது முதன் முதலில் நேரிற் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அவர் பெங்களூரின் பலபாகங்களை எனக்குக் காட்டினார். அங்குள்ள ம்க்கள் பொழுது போக்கே சினிமா பார்ப்பதுதானாம். பெங்களூரில் மாத்திரம் அறுபத்தைந்து திரைப்பட மாளிகைகள் இருக்கின்றன. தினமும் 5 காட்சிகள். கொழும்பில் லிபர்ட்டி அல்லது சவோய் பெரிய தியேட்டர் என்றால், இந்தியாவின் சாதாரண தியேட்டரே நமது சிறந்த தியேட்டர்களை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு பெரியவை.
(வீரகேசரி வார வெளியீடு- பெப்ரவரி 15 1981)
8 t t •

Page 36
○
திருவனந்தபுரப் புனைகதைகள் மூன்று
UIரத நாட்டின் தென்னக மாநிலங்களில் ஒன்று கேரளம். அங்கு வாழ்பவர்கள் திராவிடர்கள். பேசும் மொழி கவின் மலையாளம். கேரளத் தலைநகராம் திருவனந்த புரத்தில் சுமார் ஒரு லட்சம் தமிழ் மக்களும் வசிக்கிறார்கள். அங்கு கேரளத் தமிழ்ச் சங்கம் செல்வாக்கான ஓர் அமைப்பு.
திருவனந்தபுரத்திலிருந்து தமிழ் இலக்கியம் படைப்பவர்கள் பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர். ஆராய்ச்சியாளர் முதல் எழுத்தாளர் வரை தத்தம் வழிகளில் தமிழியல் ஆய்வாளர் கவனத்தைக் கவர்ந்து வந்துள்ளனர்.
எழுத்தாளர்களைப் பொறுத்த மட்டிலே நீல.பத்ம
நாபன், ஆ.மாதவன், டி.கே.துரைஸ்வாமி, காசியப்பன், ஹெப்ஸியா ஜேசுதாசன் போன்ற படைப்பாளிகள் பல

கே. எஸ். சிவகுமாரன் 55صر
பரிசோதனை முயற்சிகளைத் தந்துள்ளனர். இவர்களிலே மூவர் பற்றிய சில அறிமுகத் தகவல்களைத் தருகிறேன்.
நவீன இலக்கியப் பரிச்சயங் கொண்டவர்களுக்கு இத்தகவல்கள் ஒன்றும் புதியனவாயிரா. ஆயினும் இன்றைய இளஞ்சந்ததியினர் இவ் விபரங்களை முற்றாக அறிந் திருப்பார்கள் என்றும் கூறுவதற்கில்லை. எனவேதான் இத்தகவற்களம்.
● KO
•XW • OXO
ஹெப்ஸியா ஜேசுதாசன்
ெ ஹ ப்ஸியா ஜேசுதாசன் ஒரு ஆங்கிலப் பேராசிரியை. ஆங்கிலத்தில் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
"புத்தம்வீடு", "டாக்டர் செல்லப்பா", "அனாதை” ஆகிய நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. இவர் கணவர் பேராசிரியர் ஜேசுதாசன். இருவரும் இணைந்து தமிழ் இலக்கிய வரலாற்றையும் எழுதியுள்ளனர்.
ஹெப்ஸியா பாரதி கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அதற்காகத் தங்கப்பதக்கம் வழங்கியது.
தமது மூன்று நாவல்களில் ஹெப்ஸியா ஜேசுதாசன் என்ன கூறுகிறார்?
“புத்தம் வீட்டில் கிராமாந்தரத்தில் வாழும் ஒரு பேதைப் பெண்ணின் ஆசைகள், அபிலாசைகள், போராட்டங்கள், இவைகளை வரைய முயன்றேன். அந்தப்

Page 37
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ܊56
பெண் சூழ்நிலையை விட்டுத் தப்புகிறது இலகுவல்ல என்பதைக் கண்டேன். பனைவிளையிலிருந்தே (நாவல்களக் கிராமம்) உற்பத்தியான இரண்டு உயிர்களின் ஒட்டத்தைத் தொடர்ந்து பார்த்தாலென்ன என்ற ஆசை உதித்தது. முதலாமவன் நடுத்தர நிலையிலுள்ள, கண்ணியமுள்ள, ஒரு பனையேறும் தொழிலாளியின் மகன்.
புத்தம் வீட்டுக் கதாநாயகியின் கணவன் தம்பி, உலகத்தில் படித்து முன்னேற ஆசையுள்ள வாலிபன். அவன்தான் டாக்டர் செல்லப்பா. வாழ்க்கைப் பாறைகளில் மோதிச் சுக்குநூறாகத் தகர்ந்து விட்டான். புத்தம் வீட்டாரோடு இன்னொரு விதத்தில் தொடர்பான வாலிபன் இரண்டாமவன். சமூகத்தின் வெறொரு வகுப்பிற் பட்டவன். மிகவும் கீழ்மட்டமான ஒரு குடும்பத்தில் உதிக்க நேர்ந்த அபாக்கியவான். புத்தம் வீட்டுக் கதாநாயக நாயகியர் மூலமாகவே சமுதாயத்தின் நடுநிலைமைக்கு உயர்த்தினேன். (அவன்தான் தங்கப்பன் என்ற அனாதை)”
ஆசிரியை தமது மூன்று நாவல்கள் பற்றி பொதுவாகக் கூறியதை அவர் வாய் மூலமே படித்தீர்கள். மனிதன் தன்னையே - தன் உணர்ச்சிகளை- நம்பும் பொழுது தன்வாழ்வில் தோல்வியே அடைகிறான் என்பது ஹெப்ஸியா ஜேசுதாசனின் கண்ணோட்டம்.
"அன்னம்" வெளியீடாகச் சுமார் ஏழு வருடங்களுக்கு முன் வெளியாகிய "அனாதை” என்ற நாவலில் ஆசிரியை தற்பாவிதம், கடிதம், படர்க்கையிட விவரணை போன்ற உத்திகளைக் கொண்டு தமிழும் மலையாளமும் உறவு கொள்ளும் மொழிநடையிலே எழுதுகிறார். புதிய
அனுபவங்களை வாசகர்கள் பெறக்கூடும்.
● 8 * x

கே.எஸ். சிவகுமாரன் 57
டி.கே.துரைஸ்வாமி
மணிக்கொடி கால எழுத்தாளரும் விமர்சகருமான சி.சு.செல்லப்பா, 1959 முதல் சில ஆண்டுகள் வரை தொடராக ‘எழுத்து" என்ற விமர்சன ஏட்டை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகை மூலம் அறிமுகமாகிய விமர்சகர்கள் வெங்கட் சாமிநாதன், தருமு சிவராமு.
(தருமலிங்கம், சிவராமலிங்கம், பிருமிள், பானுச்சந்திரன் - இதெல்லாம் சிவராமுவின் பெயர்கள்தான். இவர் வேலணையில் பிறந்து திருகோணமலையில் வாழ்ந்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்த ஒரு கலைஞர்) சி.கனகசபாபதி, டி.கே.துரைஸ்வாமி ஆகியோர் சிலர். "எழுத்து” விமர்சன ஏட்டிலே முருகையன், வ.நடராசா, கே.எஸ்.சிவகுமாரன், பெனடிக்ட் பாலன் போன்ற நமது நாட்டு எழுத்தாளர்களும் எழுதியமை இன்றைய பரம்பரையினருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
டி.கே.துரைஸ்வாமி ஆங்கில இலக்கிய விரிவுரை யாளராக இருந்து இளைப்பாறிய ஒரு படைப்பாளி. "நகுலன், நவீனன்’ போன்ற புனைப்பெயர்களைப் பயன்படுத்தியவர். “குருஷேத்ரம்” என்ற தொகுப்பை ஆசிரியராக நின்று வெளியிட்டவர். இத்தொகுப்பிலே பலரின் பல பரிசோதனை எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
நமது நாட்டுக் கவிஞர்களில் ஒருவரான சண்முகம் சிவலிங்கன் இவரிடம் இவர் இன்னார் என்று அறியாத நிலையிலே பரிச்சயம் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். சிவலிங்கன் கேரளத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போது இத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறினார்.

Page 38
58 காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
திருவனந்தபுரத்திலே சில மணி நேரம் இவருடன் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இவருடைய பல பரிசோதனைப் படைப்புகள், கவிதை, நாவல் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் ஒன்று “நினைவுப்பாதை” என்ற பரிசோதனை நாவலாகும். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த நாவலுக்கு "அசோகமித்திரன்' (ஐதியாகராஜன்) ஒர் அறிமுகம் எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் பற்றி பத்தி எழுத்தாளனாகிய நான் தரும் விமர்சனத்தைவிட ஒரு படைப்பாளி, இன்னொரு படைப்பாளி பற்றிக் கணிக்கும் முறை வாசகர்களாகிய உங்களுக்குச் சுவை கூடியதாக அமையக் கூடும்.
எனவே, அசோகமித்திரன் விமர்சனத்திலிருந்து சில பகுதிகள்:
“நினைவுப்பாதை தமிழ் நாவல் பரிணாம கதியினின்று சிறிது விடுபட்டு, தமிழில் அதன் காலத்திற்கு முன்பு வந்திருக்கிறது.
தமிழ் உரை நடை இலக்கியத்திற்கு நினைவுப்பாதை ஒரு புது மரபை அளிக்கிறது. இது ஒரு எழுத்தாளனின் நினைவுப்பாதை. இதில் வேறு பல எழுத்தாளர்கள் வருகிறார்கள். மனிதர்கள், கருத்துக்கள்.
இவைகளைவிட
சில தன்மைகள்தான் இந்த நாவலில் முக்கியத்துவம் பெறுபவை. மனித இயல்பின் சில அடிப்படைகளை இது விவாதிக்கிறது. முடிவுகள் வாசகனுக்கு விடப்படுகின்றன.
ஸ்தூலமான கதையும் இல்லை; ஸ்தூலமான

கே.எஸ். சிவகுமாரன் 59 مجھے
கருத்தோட்டமும் இல்லை. ஆனால், படைப்பிலக்கியத்தில் சிறப்பிடம் பெறும் நாவலாக நினைவுப் பாதையை உருவாக்கியிருக்கிறார்."
டயரி வடிவத்தில் எழுதப்பட்ட இந்த நாவலைப் படித்துப் பாருங்கள். சுபானுபவம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக "கடைசி அத்தியாயங்கள்” என்ற நகுலனின் புதிய பரிசோதனை நாவல் போல் நினைவுப் பாதையும் ஒரு பரிசோதனைப் படைப்பு.
காசியபன்
‘நகுலன்' என்ற டி.கே.துரை ஸ்வாமியின் “நினைவுப்பாதை’ பற்றிய சில அவதானிப்புகளை "அசோகமித்திரன்” கண்களூடாகக் கண்டோம்.
இந்த "நகுலன்” காணும் சாளரக் காட்சியை நாமும் பார்க்க வேண்டாமா?.
காசியபன் ஆறு வருடங்களுக்கு முன் எழுதிய "அசடு” என்ற பரிசோதனை நாவலுக்கு நகுலன் எழுதிய அறிமுகத்திலிருந்து சில பகுதிகள்:
“படைப்புகளைப் பற்றி எழுதுவது என்பதே ஒரு சிக்கலான பிரச்சினையாக முடிந்து வருகிறது. ஒரு வெகுஜன மொழியை ஆழச் சிந்தித்துப் பார்த்தால் ருசி என்பதே பின்னமுடையது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், இலக்கியத்தைப் படித்தல்,

Page 39
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܬ60
படிப்பித்தல், படைத்தல், ஏன் இந்த மாதிரிக் கட்டுரைகள் எழுதுவதுகூட ஒரு வியர்த்தமாகத்தான் படுகிறது. ஏன் சற்று மிகைப்படுத்திச் சொல்வதென்றால் ஒரு கட்டத்தில் நாம் நம்பிக்கை வைத்த எழுத்தாளர்கள் மறுகட்டத்தில் நம் நம்பிக்கையைப் பறிமுதல் செய்து விடுகிறார்கள். “கிரகங்கள்” ஆசிரியரின் முதல் நாவல். கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார். பட்டதாரி. 53ஆவது வயதில் தமிழில் எழுதத் தொடங்கினார்.
"முகம்மது கதைகள்” கணையாழியில் வந்தது. “அசடு” நாவலில் வரும் கணேசன் பாத்திரம் முதலிலிருந்து முடிவுவரை ஒரு குரலாக இயங்குகிறது.
குரல் மூலம் ஒரு பாத்திரம் சிருஷ்டிக்கப்படுவது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன்.
இந்த நாவலில் முதலில் இருந்து கடைசி வரையும் தொடரும் ஒரு செத்து - நாறிக் கிடக்கும் எலி வர்ணனைக்கு
ஒரு ஆழம் உண்டு.
நமது செத்து - நாறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைப் பற்றிய ஒரு பரிசீலனை. இந்நாவலின் அடித்தளமாக இயங்கும் ஒரு வாழ்க்கை நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் “அசடு” என்ற நாவல் ஒரு வெற்றிகரமான படைப்பு என்பது குறித்து யாருக்கும் ஐயமிருக்காது.”
KM. ΚΣ ΚΣ Xo Xo Xo

கே.எஸ். சிவகுமாரன் 61ے
தமிழ் நாட்டுக்கு வெளியே அதாவது கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், வங்காளம், ஆந்திரா, புதுடில்லி, ஈழம் போன்ற பிரதேசங்களில் இருந்து தமிழில் எழுதுபவர்களின் எழுத்து தமிழ்நாட்டு எழுத்தை விடப் புதிய பரிமாணங் கொண்டதாக இருப்பதில் வியப்பெதுவும் இல்லை.
பல் கலாசார வீச்சுகள், சமுதாயப்படுதாவிலே புதிய சாளரங்கள் ஊடாக ஆளுகை செலுத்துகின்றன.
(வீரகேசரி வார வெளியீடு - மே 13 1984)
0 0 d. 0x8 0x8 ex

Page 40
பாரதியும் சீனி விசுவநாதனும்
சீர்ப்பிரமணிய பாரதியாரை நினைத்தவுடன் சீனி விசுவநாதன் பெயரும் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. இவர்போல பாரதி மீது மிகவும் பயபக்தி கொண்ட ஒர் எழுத்தாளரை இந்த எண்பதுகளில் இதுவரை நான் காணவில்லை. பாரதியின் எழுத்துக்களைப் பதிப்பித்து வெளியிடுவதில் முன்னணியில் அவர் நிற்கிறார்.
பாரதியின் இளைய சகோதரர் சி.விசுவநாத ஐயர் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதை வாசகர்களில் ஒரு சிலரே அறிந்திருக்கக்கூடும். பாரதியின் இளவலே சீனி விசுவநாதனைப் பாராட்டி மகிழ்கிறார். பாரதி இலக்கியத்தில் உண்மையாகவே ஈடுபாடு கொண்ட சீனி விசுவநாதன், மகாகவியின் நூல்களைத் திருத்தமாகவும், செம்மையாகவும், பிழைகள் இல்லாமலும், சுத்தமாகவும் பதிப்பிக்க வேண்டும்
 

கே. எஸ், சிவகுமாரன் ക്കു63
என்ற நோக்கத்துடன் ஏழு நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
'தமிழகம் தந்த மகாகவி என்பது 456 பக்கங்களைக் கொண்ட ஒரு ரசனைத் திரட்டு. வ.வே.சு.ஐயர், எஸ்.வையாபுரிப்பிள்ளை, அ.பூரீநிவாச ராகவன், ப.ஜீவானந்தம், கமில் ஸ்வலபில், நா.வானமாமலை உட்பட பல அறிஞர்களின் திறனாய்வுகள் அடங்கியது இத் தொகுப்பு. உயர்கல்வி மாணவருக்குப் பெரிதும் பயனளிக்கத் தக்க நூலிது. பாரதியின் வரலாறு உட்பட தொடர்புடைய பல்வேறு விஷயங்களையும் பதிப்பாசிரியர் திரட்டித் தந்துள்ளார். நூலமைப்பு, அச்சமைப்பு, கட்டுரைத் தேர்வு, களஞ்சியப் பயன்பாடு போன்ற பலவற்றிலும் பாராட்டும் படியாக இந்நூல் அமைந்துள்ளது.
பாரதியின் கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு தமிழருக்கு. மகாகவி சமூகம், சமயம், இலக்கியம் ஆகியன தொடர்பாக எழுதிய கட்டுரைகள், மற்றொரு தொகுப்பு 'ஊருக்கு நல்லது. “சில சிந்தனைகள்” என்ற பெயரில் அடுத்த தொகுப்பை வெளியிட்ட சீனி விசுவநாதன், “நாடும் வீடும் விளக்கம் பெற, மகிமை பெற, மகாகவியின் சீரிய சிந்தனைகள் - சிறந்த இலட்சியங்கள் மக்கள் மனதிலே பதியவேண்டும். அதற்குத் தூண்டுகோலாக அமையவே இத்தகைய நூல்கள் வெளியிடப்படுகின்றன. தங்க விளக்குக்கும் ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறதல்லவா?” என்கிறார்.
“யோகம்” என்ற தலைப்பில் பாரதி எழுதியிருப்பது: "நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடுமென்று கருதி நமது துர்ப்பலங்களை எழுத லஜ்ஜை உண்டாயிற்று. பராசக்தி

Page 41
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ64]
என் மனதில் அந்த லஜ்ஜையை நீக்கி விட வேண்டும்”. நானும் அதைத்தான் வேண்டுகிறேன். நேர்மை அமைய வேண்டுமாயின், பலவீனங்களை மறைக்கலாமோ?
சீனி விசுவநாதன் பாரதியார் கவிதைகளை தொகுத்துப் பதிப்பித்துள்ளார்.
‘சக்கரவர்த்தினி என்ற பத்திரிகையின் ஆசிரியராக விருந்த பாரதியார், அப்பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. சீனி விசுவநாதனே இதனை முதன்முறையாகப் பதிப்பித்துள்ளார். இவருடன் டி.வி.எஸ்.மணியும் சேர்ந்து ஆதாரபூர்வமான முறையில் அழகாகவும், சுத்தமாகவும் இந்த அரிய நூலை வெளியிட்டுள்ளனர். "சக்கரவர்த்தினி” பற்றிய முழுவிபரங் களையும் சீனி விசுவநாதன் திரட்டித் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. “வுெல்லிதாஸ்” என்ற புனைபெயரில் “துளளeபாயி” என்ற நீண்ட சிறுகதையையும் இப்பத்திரிகை யில் பாரதி எழுதினார். அக்கதையின் முற்பகுதியைத் தவிர பிற்பகுதி இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இப்பதிப்பாளரின் மற்றொரு பணி, "மும்மணிகள்” என்ற தலைப்பில் வெளியாகிய நூலாகும். பூரீபுவனேஸ்வரி பதிப்பகத்தின் ஒன்பதாவது வெளியீடாக "மரணத்தை வென்ற மகாகவி' என்ற நூல் வெளிவந்துள்ளது. இதுவரை எந்தவொரு தொகுப்பு நூலிலும் இடம் பெறாத கட்டுரைகள் முதன்முறையாக இந்நூலில் சேர்க்கப்ட்டுள்ளன. வழக்கம் போலவே அழகான முறையில் சீனி விசுவநாதன் இதனைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை முறையாகத் தொகுப்பதற்கு இந்த நூலில் உள்ள சில கட்டுரைகள் உதவும்.

கே.எஸ். சிவகுமாரன் 65 ص
சீனி விசுவநாதனை சென்னையில் நேரிற் கண்டு பழகினேன். நடுத்தர வயதை நோக்கிச் செல்லும் இளைஞர். அடக்கமானவர். ஆனால் பாரதி பற்றி உற்சாகமாகப் பேசுவார். பாரதி பற்றிய ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் இவர். இவர் பதிப்பித்துள்ள “பாரதியார் கவிதைகள்” பற்றி, "இரு மகாகவிகள்” என்ற நூலை எழுதியிருப்பவரும், பாரதி இலக்கியத்தில் ஈடுபாடுடையவருமான நமது நாட்டு விமர்சகர் பேராசிரியர் க.கைலாசபதி, "இது பலவழிகளிற் சிறந்த பதிப்பு என்பதை ஏற்றுக் கொள்வதில் தடையில்லை. இதுவே ஒரு பெரிய சாதனை எனினும், பதிப்பாசிரியர்களின் பேரார்வத்தையும் பெருமுயற்சியையும் பாராட்டும் அதேவேளையில், நூலிலே முறையியல் குறைபாடுகள் உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மூலத்திறனாய்வுக் கோட்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்கும்போதே பாடபேத ஆய்வு சிறப்பாக அமையும்” எனக் கூறியிருப்பதும் அவதானிக்கத் தக்கது. (கைலாசபதியின் கட்டுரை வசந்தம் ஜன - பெப் 1981 இதழில் பிரசுரமாகியிருக்கிறது. பல விஷயங்கள் மறுபிரசுரமாக இவ்வேட்டில் வெளிவந்திருக் கின்றபோதிலும், பயனுள்ளவையாக அவை அமைந்திருக் கின்றன. நல்லூர் மூத்த விநாயகர் வீதி, 4/4 இலக்க இல்லத்திலிருந்து வசந்தம் வெளியாகிறது.)
சீனி விசுவநாதனின் பணி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. பாரதி இலக்கியத்தில் நாட்டமுடைய அனைவரும் அவருடன் தொடர்பு கொள்வது அவசியமெனக் கருதி அவரது முகவரியை வாசகர்களுக்குத் தரட்டுமா? இதோ: சீனி விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை - 600035.

Page 42
# காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
பாரதி இலக்கிய ஆய்வில் ஈடுபட்டோர். கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன், புதுமைப்பித்தன், ரா.பூரீதேசிகன், வி.ஆர்.எம்.செட்டியார், சு.முத்துசிவன், வ.ரா., பூரீ பூரீ ஆச்சார்யா, பரலி சு. நெல்லையப்பர், வி.சர்க்கரை செட்டியார், சோமசுந்தர பாரதியார், கோ.கேசவன், துமூர்த்தி, இளசை மணியன், ஏ.வி.சுப்ரமணிய ஐயர், எஸ்.ஜி.இராமானுஜ நாயுடு, சீனி விசுவநாதன், டி.வி.எஸ்.மணி, பெ.துரன், ரா.சு.பத்மனாபன், சிதம்பர ரகுநாதன். (நன்றி - பேராசிரியர் கைலாசபதி)
மேற்சொன்னோரைவிட ‘மணிஜி என்பவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன் வெளியிட்ட “பாரதியார் இதயம்” என்ற மதிப்பீட்டு நூலையும் குறிப்பிட வேண்டும். (பாரதி நினைவுகள்) யதுகிரி அம்மாள், ரா.கனகலிங்கம், வெ.சாமிநாதசர்மா, கல்கி, க.கைலாசபதி, இளங்கீரன் (பாரதி கண்ட சமுதாயம்), பிரேமா நந்தகுமார், மு.கோவிந்தசாமி ஆகியோரும் பாரதி பற்றிய திறனாய்வுகளைச் செய்துள்ளனர்.
பாரதியை ஒரு மகாகவி என்று அறிந்த அளவிற்கு அவன் ஒரு வசன நடை வல்லாளன் என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. அது மாத்திரமல்ல அவன் நவீன உத்திகளைப் பயன்படுத்தும் ஒரு ஆக்க, வசன கதாசிரியனுந்தான் என்பதைக் காட்ட அவனுடைய ஆறில் ஒரு பங்கு' கதை விளங்குகிறது. உண்மையில், பாரதி, புதுமைப்பித்தன், மெளனி, லா.ச.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் புனைகதை எழுத்தாளர்களாகத் தமிழ்நாட்டில் சோபிப்பதற்குக் காரணங்களில் ஒன்று அவர்கள் தமிழைக் கையாளும் முறைதான். இலங்கையில் இலங்கையர்கோன்,

கே. எஸ். சிவகுமாரன் 67 كر
செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன், நீர்வை பொன்னையன், சண்முகம், சாந்தன் யேசுராசா, எழிலோன் செங்கை ஆழியான் போன்றவர்கள் வித்தியாசமாகத் தமிழைக் கையாள்வதையும் குறிப்பிட வேண்டும். "ஆறில் ஒரு பங்கு” கதையில் இருந்து ஒரு பகுதியைப் பாருங்கள்:
"வசந்த காலம், நிலாப் பொழுது நள்ளிரவு நேரம். பாக்கம் முழுவதும் நித்திரையிலிருந்தது. இரண்டு ஜீவன்கள் தான் விழித்து இருந்தன. நான் ஒன்று, மற்றொன்று அவள்” இந்த கதையும், ஜாதிக் குழப்பம், கிளி, மூடப்பக்தி, வாசகஞானம், கொள்கைக்கும் செயலுக்கும் உள்ள தூரம் ஆகிய கட்டுரைகளும் "ஆறில் ஒரு பங்கு” நூலில் இடம் பெற்றுள்ளன. இதனைப் பதிப்பித்து வெளியிட்டிருப்பது ஞானபாரதி. டாக்டர் விஜீவானந்தம், 18, பெரியண்ண வீதி, ஈரோடு 638001 என்ற முகவரியில் இருந்து இந்நூலை வாங்க முடியும். கீழ்வெண்மணி முதல் பெல்கி வரை உயிர் நீத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்நூல் காணிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய பாரதியாரின் ஆழமான கருத்துக்களில் எனக்குப் பிடித்தவை சில: “புல்லாக்கப் பாதகரின் பொய்யையெல்லாம் இகழ்ந்து, மனிதர் யாவரும் அன்பினால் பண்பினால் இன்புற்று வாழ வேண்டும்.” “நீணிலம் வாழ்பவரெல்லாம் நிகர்”, “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்”, “கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், ஒரு நடு வயதிற்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உற்சாகமும் - தேவர்களே எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க”
(தினகரன்- பெப்ரவரி 19 1981)
O. D. O. 0x8 8x8

Page 43
○
வோல்ட் விட்மன் பற்றி மகாகவி பாரதியார்
Uத்தொன்பதாம் நூற்றாண்டில் (1819-92) வாழ்ந்த அமெரிக்க கவிஞரின் பெயர் வோல்ட் விட்மன் என்பதாகும். இந்தக் கவிஞரின் கவிதைகள் தமிழ் நாட்டுக் கவிஞர்கள் பலரைக் கவர்ந்திருக்கின்றன. தமிழில் இன்று “புதுக்கவிதை" எழுதுபவர்களில் வெற்றி காண்பவரான ந. பிச்சமூர்த்தி (இவர், "பிக்ஷ ”, “ரேவதி” போன்ற புனை பெயர்களில் “புதுக்கவிதை” படைப்பவர். சொந்தப் பெயரில் சிறுகதைகள் எழுதுபவர். நல்ல தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் இவரும் ஒருவர்). இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியார் போன்றவர்கள், வோல்ட் விட்மனின் கவிதைகளில் இலயித்துள்ளனர்.
வோல்ட் விட்மன் பற்றி ‘சுப்பிரமணிய பாரதியார் எந்தவிதமான அபிப்பிராயம் கொண்டிருந்தார்? இஃதோ!

கே. எள்). சிவகுமாரன் _69ے
"வோல்ட் விட்மன் என்பவர் சமீப காலத்தில் வாழ்ந்த அமெரிக்க தேசத்துக் கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசன நடை போலதான் இருக்கும். எதுகை, மோனை, தளை ஒன்றுமே இல்லை. எதுகை, மோனை இல்லாத கவிதைதான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால் தளையும், சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை. வோல்ட் விட்மன், “கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமேயல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை”யெனக் கருதி ஆழ்ந்த ஒன்று மாத்திரம் உடையதாய், மற்றப்படி வசனமாகவே எழுதிவிட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாசன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்குச் சமமான பதவியுடையவராக மதிக்கிறார்கள்.
குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர ரிஷிகளில் ஒருவராக இந்த வோல்ட் விட்மனை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.
எல்லா மனிதரும், ஆணும் பெண்ணும் குழந்தைகளும், எல்லாரும் சமானம் என்ற சத்தியத்தைப் பறையடித்த மகான்களில் இவர் தலைமையானவர். "
சர்வ ஜகத்தும் ஒரே சக்தியை உயிராக உடையது. ஆதலால், எல்லாம் ஒன்று. ஆதலால் பயத்தை விடு. பிறருக்குத் தீங்கு செய்யாதே. மற்றப்படியெல்லாம், உன் சொந்த இஷ்டப்படி நடந்துகொள். எல்லாரும் சமானம். யாருக்கும் பயப்படாதே. கடவுள் ஒருவருக்கே பயப்பட வேண்டும். மனிதர், கடவுளைத் தவிர வேறொன்றுக்கும்

Page 44
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 70
பயப்படக்கூடாது. இதுதான் அவருடைய மதத்தின் முக்கியமான கொள்கை. "எல்லாரும் பரஸ்பரம் அன்பு செய்யுங்கள்” என்ற கிறிஸ்துவின் போதனையை அவர் கவிதையாகப் பலவகைகளில் சொல்லியிருக்கிறார்.
இந்த மகான் ஒரு நகரத்தைக் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத்திலே ஆணும் பெண்ணும் சபதத்திலே துஞ்சார். அங்கே அடிமையில்லை, ஆண்டையுமில்லை. அங்கே ஸ்தானிகர்களின் முடிவற்ற செருக்கைப் பொதுஜனம் உடனே சினந்து எதிர்க்கிறது. அங்கே, நகர்தான் தலை, நகரந்தான் பிரமாணம்; அவனுடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மேயர், கவர்னர் எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதி செய்துகொள்ளவும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே பெண்கள் வீதிகளில் ஆண்களைப் போலவே கூட்டங்கூடி ஊர்வலம் வருகிறார்கள். அங்கே, பொதுக் கூட்டங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம் பெறுகிறார்கள்.
இவ்வாறு வோல்ட் விட்மன் கற்பனை பண்ணின நகரத்தைக் கண்முன்னே பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இப்போது கூடப் பல ராஜ்ய தந்திரிகளும், மந்திரிகளும், சாஸ்திரிகளும் முயற்சி செய்துகொண்டு வருகிறார்கள்.”
வோல்ட் விட்மன் பற்றிய பாரதியாரின் மதிப்பீடு அவரது அக்காலத்திய சமூகப் பார்வைக்கு இணங்கியதாக இருக்கிறது. அத்துடன் பாரதியின் வசன நடையில் காம்பீர்யமும் இருக்கிறது. வால்ட் விட்மனின் கவிதைகள் பற்றிய மதிப்பீடாய் பாரதியின் அவதானிப்புகள் இல்லை.
Κ. Xo X (Xo

கே.எஸ்.சிவகுமாரன் 71 ص
டி.எஸ்.சொக்கலிங்கம் பற்றி கு.அழகிரிசாமி
டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் சமீபத்தில் இயற்கை எய்திய ஒரு தமிழ் நாட்டெழுத்தாளர். அவரைப் பற்றி கு.அழகிரிசாமி (இவரும் ஒரு பிரபல சிறுகதை, நாவல், கவிதை ஆசிரியராவார்) என்ற வாழும் எழுத்தாளர் ஒருவர் தரும் சில தகவல்கள் இதோ:
‘டி.எஸ்.சொக்கலிங்கம், சர்வ கலாசாலைப் பட்டம் பெறாமல், தகுதியின் காரணமாகவே பேராசிரியர் என்று போற்றப்படுகிறவர். சுதந்திரம் பெறுவதற்கு முன் சுமார் கால் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டில் சுதந்திர உணர்ச்சியை எழுத்துமூலம் ஊட்டியவர்களில் முதல்வர் களாகச் சொல்லத்தக்கவர்கள் கவியரசர் சுப்ரமணிய பாரதியாரும், ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஆவார்கள். தமிழ் மறுமலர்ச்சியின் தந்தை பாரதியின் யுகம் இது. பாரதியார் தோற்றுவித்த மறுமலர்ச்சியை நாடு கண்டுணரவும், அந்த வழியில் தொடர்ந்து பணி செய்யவும் வழி வகுத்துக் கொடுத்த முதல்வர் சொக்கலிங்கம். “பற்றாக்குறை” என்பது தமிழுக்கு இவர் கொடுத்த சொல். "ஹைகம்மாண்ட்' என்பதை “மேலிடம்’ என்று தமிழாக்கியவர் இவரே. 'அட்ரோஸிட்டி” என்பதை “அட்டூழியம்” என்று முதலில் மொழிபெயர்த்தார். “மின்னல் தாக்குதல்", "கிடுக்கிவியூகம்", "அதிர்ச்சி வைத்தியம்", "அச்சு நாடுகள்”, “பருந்துப் பாய்ச்சல் விமானம்’ போன்றவை இவரது வார்த்தைகள்.”

Page 45
72 a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
மேனாட்டு சாஸ்திரிய சங்கீதம் பற்றி தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் என்பவர் ஒரு பிரபல எழுத்தாளரும், தலைசிறந்த திரைப்பட நெறியாளருமாவார். அவர் எழுதிய நாவல் ஒன்றில் வரும் ஒரு கதாநாயகனூடாக, மேனாட்டுச் சாஸ்திரிய சங்கீதம் பற்றியும், கர்நாடக சங்கீதம் பற்றியும் தனது கருத்துக்களை ஜெயகாந்தன் தெரிவித்திருக்கிறார். அவற்றுள் சில :
“எல்லாச் சங்கீதமும் உலக சங்கீதம்தான். நமது கர்நாடக சங்கீதத்தை உலக மக்கள் அனைவருக்கும் இணக்கமாக நாம் கொண்டு சென்றுவிட்டால் போதும்; அது சாத்தியமும்கூட. மேற்கத்திய இசை - அதாவது ஐரோப்பிய இசை - அந்தக் காரியத்தை 18ம் நூற்றாண்டிலேயே செய்துவிட்டது.
ஜெர்மானியர்களின் சங்கீதம் இத்தாலிய முறைகளைப் பின்பற்றுவதும், ஜெர்மானியர்களின் நுணுக்கங்களை இத்தாலிய இசைவல்லுநர்கள் தேர்வதும், அவை பாரிஸிலும், லண்டனிலும் அமோகமான கரகோஷங்களுடன் வரவேற்கப்படுவதும், ருஷ்யாவின் இசை மேதையை அமெரிக்க மக்கள் ரசித்துப் பாராட்டுவதும், ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த இசை வேர்கள் தென் அமெரிக்காவின் விளைவாவதும், அந்த விளைச்சலின் நேரிடையான ஏற்றுமதியும், இந்திய சினிமாக்களில் அது (இலத்தீன்அமெரிக்கச் சங்கீதம்) கள்ளக்கடத்தலால் உட்புகுவதும், 18ஆம் நூற்றாண்டிலேயே உலக சங்கீதம் என்ற தரத்துக்கு பாக்கும் ஷ"பர்ட்டும், மோட்ஸாட்டும், பீத்தோவனும் -

கே.எஸ். சிவகுமாரன் 73 كل
பின்னர் ஷைக்காவ்ஸ்கியும், மேற்கத்திய இசையை உயர்த்தி விட்டார்கள். அந்த நூற்றாண்டு எல்லாத் துறையிலும் உலகுக்கு குறிப்பாக ஐரோப்பாவுக்கு ஒரு பொற்காலம்! அந்த நூற்றாண்டுதான் எல்லாத்துறையிலும் ஓர் உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கிற்று. 18ம் நூற்றாண்டு ஒரு "கொஸ்மோ பொலிடன் ஏஜ்"
“நமது சங்கீதத்தில் இருப்பதுபோல் வாத்தியக்காரனின் உரிமைகள் மேற்கத்திய இசையுலகில் தங்கு தடையற்றது அல்ல. அவனுக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரமே உண்டு. அவர்களின் சங்கீதக் குறியீடுகளே (நோட்டேஷன்ஸ்) முழுமையான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. அதன் காரணமாகவே வாத்தியக்காரனின் சுதந்திரம் வரம்பிட்டு விடப்படுகிறது. அவர்களது “நோட்டேஷன்ஸ்' "அப்ஸலியூட் நோட்டேஷன்ஸ்”. அங்கே வாத்தியக்காரன் என்பவன் வாத்தியக்காரன்தான். சங்கீதம் அங்கே எழுதப்படுகிறது. சங்கீதத்தைக் கற்பனை செய்து, ஏதாவது ஒரு வாத்தியத்தில் இசைத்துப் பார்த்து அவர்கள் எழுதி வைக்கிறார்கள். அதில் எந்தெந்த இசைப் பகுதிகள், அது எவ்வளவு பெரிது அல்லது சிறிது எனினும் தனித்தனியே ஒவ்வொரு வாத்தியத்துக்கும் என்றே பிரித்து எழுதுகிறார்கள். அவ்விதம் உணர்ச்சியும் நயமும் மிகுந்த கற்பனைத் திறனில் சங்கீதம் அங்கு கருவுற்று எழுதிவைக்கப்படுகிறது. அவ்விதம் எழுதுகிறவனைத்தான் “கம்போஸர்” என்கிறோம். அவனே பிரதம சிருஷ்டி கர்த்தா. அதன் பிறகு அதனை உருவாக்குகிறவன், அவன் அந்த சிருஷ்டிகர்த்தாவின் கற்பனா சிருஷ்டிகளைப் புரிந்து கொண்டு வாத்தியக்காரர்களை வைத்துக் கொண்டு அவற்றை அவன் விரும்பியவாறு, சிருஷ்டிகர்த்தாவின் கற்பனைகளைச் செயல்படுத்துகிறான்.

Page 46
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠܬ742
அவனை “கண்டக்டர்’ என்கிறோம். “கம்போசர்கள்’ மன்னர்கள் என்றால் “கண்டக்டர்கள்” சேனாதிபதிகளாவர். இதனால்தான் “ஒக்கேஸ்ட்ரல் மியூஸிக்” என்பது நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்தோங்கியுள்ளது.
நமது இசையின் ராக வின்னியாசங்கள் அவர்கள் பார்த்துப் பிரமிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது ஒரு பெருமைக்குரிய விஷயம். அதன் விளைவுதான் இங்கே வாத்தியக்காரர்களுக்குக் கிட்டும் அதிகபட்ச சுதந்திரம். நம்மால் மேற்கத்தியர்களைப் போல ஒரு சங்கீத நிகழ்ச்சியை எழுதி வைக்க முடிவதில்லை. நமது சங்கீதமே ஒரு ராகத்தின் நுணுக்கங்களையெல்லாம் ஒரு பாடகன் அல்லது வாத்தியக்கார் நுணுகி வெளியிடுவதில்தான் இருக்கிறது. மேற்கத்திய இசையில் பல ஸ்தாயிகள் பல “ஸ்கேல்"களில் குறுக்கும் நெடுக்கும் தறியில் நெய்யப்படுவதுபோல் அநந்த மான இழைகளால் ஊடும் பாவுமாய் உருவாக்கப்படுகிறது.
இங்கே சங்கீதத்தை அற்புதமான வாத்தியங்களில் காதுக்கு ரம்மியமாய் இசைக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒரு ராகத்தை ஆலாபனை செய்துவிட்டு அதே ராகத்தில் ஒரு சாஹித்தியத்தின் ஸ்வரங்களை அந்த வாத்தியத்தில் வாசித்து விடுகிறார்கள்.
அவற்றில் கற்பனையைவிட, கலையைவிட தற்போது கணக்கே மிஞ்சிவிட்டது. நமது சங்கீதம் உணர்ச்சிமயமாய் இருப்பதைவிட, கணக்கு மயமாய் மாறிவிட்டது. அதுவும், நமது இசைக்கு அடிப்படையாய் இருக்கும் தத்துவத்தின் விளைவாகவும் நமது இசை இப்படியாகிவிட்டது.

கே. எஸ். சிவகுமாரன் 75 كل
இறைவனின் பாதார விந்தத்தை அடைவதுதான் இசையின் பலன் என்று கருதிவிட்டால், அதில் ரெளத்திரம் சிருங்காரம், மனித வாழ்க்கையின் குண வசீகரங்கள் - முதலியவற்றை வெளிப்படுத்துவது எங்ங்னம்! இவற்றை விலக்கிவிட்டு என்ன கலை எஞ்சி நிற்கும்? கணக்குத்தான் பக்தி தான்? இசையில் பக்திக்கும் ஓர் இடம் உண்டு.
பாஷையின் துணையோடு, சாகித்தியத்தின் கலப்போடு இசைக்கப்படும் ஒரே நிலையில் நிலைபெற்றுவிட்டது நமது கர்நாடக இசை,
அரங்கேறாத வாத்தியங்கள் பல நமது கிராம மக்களிடம் இருக்கின்றன. அதேபோல் பாடல்களும் இசை மரபுகளும் கூட இருக்கின்றன. நமது சங்கீதத்தில் உள்ள ஆரோகண - அவரோகண முறைகள் மிகவும் சிறந்தவை. நமது இந்த முறையை உலகம் நம்மிடமிருந்தே கற்றுக்கொண்டது.
அதுபோல் வளர்ச்சி குறைந்து தேங்கி நிற்கும் நமது இன்றைய சங்கீதத்தில் ராகங்களையும் ராகினிகளையும், “ஹார்மனி”யோடு அமைத்து “ஒர்கெஸ்ட்ரல் மியூஸிக்"கைச் சிறப்பாக உருவாக்க முடியும். இன்று நமக்கும் அது தேவை. அந்தத் தேவை பற்றிய பிரக்ஞை இல்லாமல் எப்படியோ முறையற்ற வழியில் அந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று - தற்கால சினிமாப் பாடல்களின் - சங்கீதங்களின் மூலம் நான் உணர்கிறேன்.”
d 0 (0.
• X •

Page 47
GsD
போதை தரும் எழுத்துநடை
நீங்கள் ஒரு சிறுகதை இலக்கிய மாணவர் என்றால் நிச்சயமாக லா.ச.ரா, “மெளனி” என்ற சிறுகதை ஆசிரியர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கள் கதைகளைப் படித்துமிருப்பீர்கள். நீங்கள் வெகுஜன அல்லது ஜனரஞ்சகப் பத்திரிகைகளை மாத்திரம் படிப்பவர்கள் என்றால், இந்தப் பெயர்களைக் கேட்டதும் விழியைப் பிதுக்குவீர்கள்.
லா.ச.ராமாமிருதம், ஜனனி, இதழ்கள்', 'பச்சைக்கனவு போன்ற தொகுதிகளையும், ‘புத்ர" என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். மெளனியின் சிறுகதைகள், 'அழியாச்சுடர்', 'மெளனிகதைகள்’ ஆகிய தொகுப்புகளில் வெளியாகி யிருக்கின்றன.

கே.எஸ்.சிவகுமாரன் 77ے
இவர்கள் இருவரும் எழுதும் கதைகளைப் படித்தால், அங்கு பெறப்படும் அனுபவமும், கிரகிக்கும் உள்ளடக்கமும் அப்படி ஒன்றும் நிஜவாழ்வை ஒட்டியதாக இல்லை. ஆனால், அவர்கள் எழுத்து நடையில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அந்தக் கவர்ச்சியை மகோன்னதமானது என்று நான் கூறமாட்டேன். இருந்தாலும் சொற்ப நேர லாகிரி மயக்கம் போன்ற உணர்வை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மைதான்.
எதனையும் சுருங்கச் சொல்லி நேரடியாக விளக்கும் இந்தக் காலத்தில், நேர்மையற்ற, சொற்சிலம்பங்களாலான, அடுக்கு மொழிகளையும், அன்மொழித் தொகைகளையும் கொண்ட வசன நடையை விரும்பும் வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு ரசிகர் நேரிலேயே என்னிடம் கேட்டார்: "என்ன ஸார், இலங்கை எழுத்தாளர்கள் என்கிறீர்களே, சாண்டில்யன் போன்று அழகாக விபரிக்க முடிகிறதா அவர்களால். என்ன வருணனை! அப்படியே சொக்கிப் போயிடலாம் ஸார்”. இதற்கு என்ன பதில் சொல்வது? அந்த வாசகருக்கு சொக்கிப் போவதுதான் அனுபவமாகப் படுகிறது. என்ன இருந்தாலும் லா.ச.ராவும், மெளனியும், சாண்டில் யனைவிட கவித்துவத்தில் எவ்வளவோ தேவலை.
விமர்சனக் கண்ணோட்டத்தில் படிக்கும் வாசகர்கள் நடையையும் நுணுக்கமாக ஆராய்வார்கள். ஆசிரியர், தான்
கூறவந்ததைக் கூறுவதற்கு ஏற்ப நடை அமைந்திருக்கிறதா என்பதை அவர்கள் அவதானிப்பார்கள்.

Page 48
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை -ܠ 78
இதோ உங்களுக்கு ஒர் அப்பியாசம்: லா.ச.ராவின் 'பச்சைக் கனவு தொகுதியில் இடம்பெற்ற ஒரு கதையிலிருந்து ஒரு பகுதி. இந்த நடைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“உடல்மேல் உரோமம் அடர்ந்ததுபோன்று, பசும் புற்றரை போர்த்துநின்ற நான்கு மண்குன்றுகள், அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம். சில்லிட்ட தண்ணிரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும். சப்பாத்தியில் இரத்தக் கட்டிபோன்ற பூவின்மேல், ஒரு பச்சை வண்டு ரீங்கரித்துக் கொண்டே வந்து மோதிற்று. ʻpJtntLort pJrfTLDIT JJtnTLDfT, இன்னிக்கு என்ன உங்களுக்கு? இப்போத்தானே கூடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறீர்களே! உங்களுக்கென்ன நிலாக் காயறதா?”
மற்றுமொரு பகுதி:
“கஷ்டத்தைப் பெண்கள் ஒரு தினுசாய் அநுபவிக்கிறார் கள் என்றால், புருஷர்கள் அதைத் தாங்குகிறது இன்னொரு தினுசாய் இருக்கிறது. பெண்கள் மனக்கஷ்டம் வெளிப்படையாய் எரிந்தால், புருஷர்களை அது ஸ்புடம் போட்டுத் தின்கிறது. அன்றையிலிருந்தே அவர் உள்ளுற ஒடிந்துவிட்டாரென்று சொல்லலாம். நாள் ஆகஆக அவர் உடம்பு தேயத் தேயத்தான் அந்த உள்ஒடிப்புத் தெரிகிறது. இத்தனைக்கும் அவர் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறதுசுட இல்லை. ஆனால் அதுதான் அவரைக் கவ்விக்கொண்டிருந்தது. அவர் உடம்பின் கோளாறே அதனால்தான்: அதுவேதான்.

கே. எஸ். சிவகுமாரன் ക 79
தம் ஆண்மையை எந்தக் கஷ்டத்துக்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது, தாம் எதையுமே சட்டை செய்யக்கூடாது என்கிற வீறாப்புத்தான் இருந்ததே தவிர தாங்குவதற்கு வேண்டிய பலம் இல்லை.
அதனால் அவருடைய சிறுசிறு கோபங்களும் சீண்டல்களும் I GR) சமயங்களில் பொறுக்க முடியாதனவாகவே இருக்கும். ஆனாலும் வெயிலோ குளிரோ மழையோ சேர்ந்து இருந்து இருவரும் இவ்வளவு தூரம் கூடவே வந்துவிட்டோம். கலி முற்றமுற்ற ஆயுசு நிலவரங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்தால் இதையே பெரிதாய்த்தான் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம் குழந்தைகள் ஒற்றுமையோ வேற்றுமையோ அவர்கள் அவர்கள் இருக்கிற இடத்தில் சுகமாயிருக்கிறார்கள் என்கிற செய்தி கேட்டுக் கொண்டிருக்கும்போதே நாம் கண்மூடிவிட்டால் போதும்,”
மேற்கண்ட இரு பகுதிகளிலும் நீங்கள் காணும் நடை பேதம் என்ன என்று பரிசீலித்துப் பாருங்கள். வேடிக்கையான பொழுது போக்காகவும் அது அமையும்.
(வானொலி மஞ்சரி - ஆகஸ்ட் 15 - 31, 1970)
Ο
4X0 08 0.
0.
O

Page 49
G9)
பழைய தாமரை இதழ்களிலிருந்து
60களின் பிற்பகுதியிலும், 70களின் முற்பகுதியிலும் வெளிவந்த தாமரை இதழ்களில் சிலவற்றையே படிக்கக் கூடியதாய் இருந்தது. அவற்றிலே எனக்கு உடன்பாடான கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளும், மாறுபட்ட கருத்துடைய கட்டுரைகளும் இடம்பெற்றன. பிடித்த கருத்துக்களை இங்கு இரை மீட்பதன் நோக்கம் இரண்டு: என்னுடைய விமர்சன அளவுகோல்கள் எவை என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கக்கூடிய வாய்ப்பு; புதிய பரம்பரையினர் சம்பந்தப்பட்ட கட்டுரையைத் தேடிப் படித்துப் பார்க்க உதவுமுகமாகச் சில தகவல்களைத் தருதல். 'மல்லிகை வாசகர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.
8 ●
• x• Ko

கே. எஸ். சிவகுமாரன் 81ے۔
தாமரை நவம்பர் 1972 இதழிலே தமிழவன் (கார்லோஸ்) விவாதத்திற்குரிய ஒர் அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறார். “ஞானக்கூத்தனும் கசடதபறவும் - தத்துவமும் உளவியலும்' என்பது கட்டுரைத் தலைப்பு. தமிழ் நாட்டுப் புதிய விமர்சகர்களிலே குறிப்பிடத் தகுந்த ஒருவர் தமிழவன். கவிதை, கதைகளுடன் பல விமர்சன நூல்களை எழுதியிருக்கிறார். இருபதில் தமிழ்க் கவிதை', 'ஸ்டரக்ஷரலிஸம் போன்றவை அவற்றில் சில. பெங்களூரிலிருந்து வெளிவரும் சிற்றேடான "படிகள்’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார் தமிழவன்.
சம்பந்தப்பட்ட கட்டுரையிலே புதிய கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதைகளைத் தமிழவன் விமர்சிக்கிறார். அவருடைய விமர்சனக் கருத்துக்கள் ஒரு புறமிருக்கட்டும். ஆனால் மேலைநாட்டு நவீனத்துவ இலக்கியச் சிந்தனைகள் பற்றித் தெளிவாக அறிமுகஞ் செய்திருப்பது பாராட்டத்
தக்கது.
(மல்லிகை)
80 KM2 KM (X- 0x

Page 50
Go)
‘ஆராய்ச்சி ஆரம்ப இதழ்களில் எனக்குப் பிழத்தவை
Dறைந்த பாளையங்கோட்டை அறிஞர் நா.வான மாமலை அவர்கள் 1969 முதல் ஒர் காலாண்டுப் பத்திரிகை நடத்தினார். 'ஆராய்ச்சி என்ற அந்தக் காலாண்டு ஏட்டிலே இரண்டாவது இதழை மீண்டும் படித்துப் பார்த்தேன். அதில் சில பகுதிகள் எனக்குப் பிடித்தன. பிடித்த அப்பகுதிகள் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். அதை முன்கூட்டியே படித்திராத நேயர்கள் அவற்றைத் தேடிப்படிக்க இப்பத்தி உதவும் எனக் கருதுகிறேன்.
பத்தி எழுத்தாளனாகிய எனக்கு ஆராய்சிக் கட்டுரைகளை எழுத விருப்பமே வருவதில்லை. ஆய்வாளர்

கே. எஸ். சிவகுமாரன் ക 83
கள் எழுதும் 'ஆழமான கட்டுரைகளைப் படிப்பதுண்டு. அதேசமயம் பொதுவாசகனுக்கு எழுதுவதனால் அடிக்குறிப்பு கள், மேற்கோள்கள் விரிவுரைகள், வியாக்கியானங்கள் சகிதம் 'ஆழமான பாசாங்கு செய்து எழுத முற்படுவதேயில்லை. பொதுப்படையாகவே பத்தி எழுத்துக்களை எழுத விரும்புபவன். எனவே என்னிடமிருந்து "ஆழமான' திறனாய்வுகளை வாசகர்கள் எதிர்பார்ப்பது நியாயமில்லை. எனது அபிப்பிராயங்களும், அவதானிப்புகளும் ஒரு பத்தி எழுத்தாளனின் (கொலமினிஸ்ட்) குறிப்புகள் என்று மாத்திரமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
•
1969 ஒக்டோபரில் வெளிவந்த ஆராய்ச்சி ஏட்டின் இரண்டாவது இதழிலே எழுதியிருப்பவர்கள் இந்தியாவின் ஆய்வறிவாளர்களில் சிலர்: எம்.பி.குருசாமி, மயிலை சீனி வெங்கடசாமி, கே.பி.அருணாசலம் (அறவாணன்), கலாநிதி என்.சுப்பிரமணியம், எஸ்.ஏ.டாங்கே, கலாநிதி அமலேந்து குஹ, ஏ.சிவசுப்பிரமணியம், கே.ஜெகநாதன், கலாநிதி எஸ்.வி.சுப்பிரமணியம், கலாநிதி எஸ்.அகஸ்தியலிங்கம், ஏ.என்.சட்டநாதன், நா.வானமாமலை.
மணிமேகலையில் பெளத்தம், சங்ககாலத்து நடுகற்கள், வள்ளுவரின் பொருளியல் கருத்துக்கள், யாளி, பண்டைத் தமிழகத்து மகளிர் நிலை, சங்கச் செய்யுளில் யாப்பு வளர்ச்சி, 6560607Gujaffids6it, Tholkappiyars Treatment of Syntax, gigsu வரலாற்றை உருவாக்கும் சக்திகள், இந்திய வரலாறும் மார்க்சியக் கண்ணோட்டமும், வாசற்படி மறியல், சங்கரரும்

Page 51
84 NA காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
சநாதனமும், வரலாற்றில் பொருள் முதல் வாதம் ஆகிய கட்டுரைகளும், “தமிழ் நாவல் இலக்கியம்", “தமிழ் இலக்கியத்தில் அணிகலன்கள்” ஆகிய புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகளும் இந்த ஏட்டில் இடம்பெற்றுள்ளன.
0. o
எஸ்.ஏ.டாங்கே எழுதிய “இந்திய வரலாற்றை உருவாக்கும் சக்திகள்” என்ற கட்டுரையிலிருந்து:
"வரலாற்று ஆசிரியனுக்கு மனிதனும் சமூகமுமே கருப் பொருள்களாகின்றன. வரலாற்றை விஞ்ஞானமாக வரலாற்றாசிரியர் கொள்கிறான். மனிதன் - அவனது சமூகத்தின் அவனுடைய முழுவரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் புரட்சிகரமான பெரும் பங்கு வகித்தது உற்பத்திக் கருவிகள்தான். அவற்றைப் பயன்படுத்துவதில் பெருக்குவதில் உற்பத்திப் பொருள்களைப் பங்கீடு செய்வதில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உறவுகளில் ஈடுபடுகிறார்கள். உற்பத்திச் சாதனங்களிலும் உற்பத்திச் சக்திகளிலும் மாறுதல்கள் ஏற்படும்போது இந்த உறவுகளும் மாற்றம் பெறுகின்றன. உற்பத்திச் சக்திகளின் இந்த மாற்றங்கள்தான் உற்பத்தி உறவுகளுக்கு அடிப்படை, மனிதனின் சக வரலாற்றையும் அரசியல், மதசார, அறநெறி இலக்கிய விஞ்ஞான பிரச்னைகளையும் ஒரு யுகத்திலிருந்து இன்னொரு யுகத்திற்கு இடைப்பட்ட பெயர்ச்சி முறையையும் அது தீர்மானிக்கிறது".
ox

Gas. 6T6io. 6.5LDTT66T 85ے
அமலேந்து குஹ எழுதிய “இந்திய வரலாறும் மார்க்சியக் கண்ணோட்டமும்” என்ற கட்டுரையிலிருந்து.
“இந்தியாவில் உண்மையான நிலப்பிரபுத்துவம் தோன்றவில்லை. இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை ஐரோப்பியச் சொற்களைக் கொண்டே
அறியமுயல்வது தவறானதாக இருக்கும்.”
(ஈழ முரசு, 2.12.1984)
8, 0, 0. 0. «ҳ» 々

Page 52
86 Ya காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
Gn)
பழத்தவற்றுள் மனதில் நிற்பவை - 01
ஜனவரி - மார்ச் 2007
Uழங்குடியினர் ஒவ்வொருவருக்கும் பரம்பரைப் பெருமை என்பது முன்னோர்கள் கட்டிக்காத்து வரும் தன் தோன்றலின் தோற்ற வரலாறு (Origin myth) என்றால் மிகையாகாது. ஏனெனில் பழங்குடியினர் தொன்மங்களின் எச்சங்கள் அவர்களால் நடத்தப்படும் முக்கிய சடங்கார்ந்த விழாக்கள் ஆகும். ஒவ்வொரு பழங்குடியினரும் தம்முடைய மூதாதையர் இனத்தோற்ற வரலாற்றை வாய்மொழிக் கதைப் பாடலாகவும், பழ மரபுக் கதைகளாகவும், நாட்டார் கதைகளாகவும் அடுத்த தலைமுறைக்கு வாய்மொழி (Oral) இலக்கியமாகப் பயிற்றுவித்து வருகின்றனர். புராணம், இதிகாசம், பழமரபுக் கதை, உண்மையானதா

கே.எஸ். சிவகுமாரன் 2 87
புனைவா என்ற கருத்து நேரிடலாம். உண்மையானதாக இல்லாவிட்டாலும், இவை வழங்கப்படும் சமூக, பண்பாட்டு வரலாற்றுச் சூழல்களின் தர்க்க உறவுகளைக் கருத்தாடல் செய்கின்றன. பழங்குடியினரின் பரம்பரைக் கதைகள் மேலெழுந்தவாரியாக புனையப்பட்ட கதைகள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவை அந்த மக்களின் வாழ்வில் ஊறிப்போயிருப்பவை.
ஐதீகங்களால் கண்ட அம்சங்கள் அனைத்தும் வாழ்வின் நடைமுறைகளில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். அவை கவிதை, சொல்நடை, நாடகம், உரைநடை என எந்த மொழிசார் வடிவமாக இருந்தாலும் அனைத்துமே பழங்குடி மக்களின் வாழ்வனுபவங்களாக, அறிதிறன் சார்ந்த செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன.
தொன்மங்களை ஆழ்ந்து நோக்கும் போது அதன் பன்முகச் செயற்பாடுகள் விரிந்து போவதை காண முடியும். வாழ்தளத்தின் முரண்பாடுகளையும் யதார்த்த வாழ்வில் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் எதிர்கொள்வதற்குத் தொன்மங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு பழங்குடியினருக்கும் தான்தோன்றிய இன வரலாறும், இனப்பரவல் மற்றும் தாம் வழிபடும் தெய்வ நம்பிக்கை, சட்டதிட்டம் அனைத்தும் வாய்மொழி இலக்கியமாகப் புனிதத்தன்மை வாய்ந்ததாக உள்ளன. கூட்டு மனதின் வெளிப்பாடான தொன்மங்களின் மூலப் பிரதிக்களமானது ஒவ்வொரு கட்டத்திலும் மக்களின் வாழ்வானுபவங்களைத் தொடர்ந்து தனி அர்த்தத் தளத்தில் துணைப் பதிவுகளாகக் கூட்டிக் கொண்டே இருக்கும்.

Page 53
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
அத்தோடு மூலத்தையும் தேவைக்கேற்ப புதுப்பித்துக் கொண்டேயிருக்கும்.
- ரெங்கையா முருகன்
ΚΣ Ο X «X «Xo
தெரிதல் - இதழ் 12 கார்த்திகை - மார்கழி 2005
ஆபாசம் என்பது திணிக்கப்படுவது. அதில் இயல்புத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. தூஷண வார்த்தைகள் எனக் கருதப்படுபவற்றைக் கூட இயல்பாக எழுத்தில் கொண்டு வருவது ஆபாசமாகாது. உமா வரதராஜன் தனது அவதானிப்புகளிலிருந்து மனதில் தோன்றும் தர்க்க நியாயங்களை எளிமையாக அடுக்குகிறார்கள். அந்த நியாயங்களை அடுக்கும் முறை வெகு இயல்பானது. இடைக்கிடையே அவர் செய்யும் பிரகடனங்களில் தொனிக்கும் எள்ளல் கலைத்துவமானது. கதையின் திருப்பங்களில் மனம் வெதும்புகிறார். எனினும் இக்கட்டுக்களுக்குள் சிக்கிவிடாமல் சுயாதீனமாக இயங்குகிறார். தன்னைத்தானே உன்னதமானவராகக் கருதும் எவரையும் உணர்வு ரீதியாக தர்க்க நியாயங்களுடன் வன்மையாக நிராகரிப்பது இவரது இன்னொரு தனித்துவம்.
- ச.இராகவன்
&
Φ
ex

கே.எஸ். சிவகுமாரல் 89ے
கொழுந்து 21
சிறுகதையில் சிறப்பான சாதனைகள் புரிந்துள்ள புதுமைப்பித்தன் கூட்டுரை, நாடகம், நூல் விமர்சனம், மொழி பெயர்ப்பு, கடிதக் கலை போன்றவற்றிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். அதேபோல அவர் கவிதையிலும் தனது முத்திரையைப் பஇத்திருக்கிறார்.
புதுமைப்பித்தன் கவிதை குறித்து தீர்க்கமான நோக்கும் திட்டவட்டமான கருத்துக்களும் கொண்டிருந்தார்.
‘கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்இதை கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிவதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கியமான பாகம், அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள் மனதின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
“கவிதை மலரிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை. உள்ளப் பாற்கடலிலே பிறந்த அமிர்த கலசம்..மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்று பட்டோ, பிரிந்தோ கண்ட கனவு. அது உள்ள நெகிழ்ச்சியிலே, உணர்ச்சிவசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுகிறது" என்றும் அவர் விவரிக்கிறார்.
- வல்லிக்கண்ணன் (தாமரையில்)
0. KO 9.
•x- ex ox

Page 54
GeD
பழத்தவற்றுள் மனதில் நிற்பவை - 02
அகசலனம் நவீன கவிதைக்களம் டிசம்பர் - பிப்ரவரி 2006
இன்றைய தமிழ்க் கவிதையின் உட்பொருள் தெரிவும் வார்ப்பும் தற்காலக் கவிதையின் பெரும்பாலான கவிஞர் களின் நியதிகளை நிறைவேற்றுவதாகவே அமைந்துள்ளன. ஒருசில கவிஞர்களைத் தவிர பெரும்பாலான கவிஞர்களின் கவிதைகள், அந்தரங்கமான அனுபவத்தின் துல்லியமான விளக்கமாகவே நின்று விடுகின்றன. இதற்கப்பால் இவை நீட்சி பெறுவதில்லை. செம்மையான சொற்கள், படிமங்கள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் கவிதை தன் ஆதார அனுபவத்தை வாசகர் மனதிற்குத் தளமாற்றம் செய்வதிலும் அதைத் தொடர்ந்து உணர்வுபூர்வமான விகCப்பை ஏற்படுத்துவதிலும் வெற்றியடைய வேண்டும்.
- திலீப்குமார்

கே.எஸ். சிவகுமாரன் 91 ص
யாத்ரா - மே 1 ஒக், 2006
தொல்காப்பியர் கூறிய இலக்கணங்களுக்கு அடங்காத புதிய யாப்பு வடிவங்கள் பின்னால் தோன்றியதால்தானே அவற்றை விளக்க யாப்பருங்கலம் முதலிய புதுப்புது இலக்கண நூல்கள் எழுந்தன. இந்நூல்களுக்குப் பிறகும் புதிய வடிவங்கள் தோன்றவில்லையா?
“விருந்தேதானும் புதுவது கிளந்தயாப்பின் மேற்றே" என்ற தொல்காப்பியரே புது வடிவங்களுக்கு இடமும் கொடுத்துப் பெயரும் சூட்டவில்லையா? காலப் போக்கில் வடிவங்கள் மட்டுமா மாறின? உள்ளடக்கமும்தான் மாறியிருக்கிறது. அகம், புறம் என்றிருந்த சங்ககால உள்ளடக்க மரபை புறமொதுக்கிவிட்டு இகம் - பரம் என்று பக்தி இலக்கியங்கள் வேறு திசையில் திரும்பவில்லையா? மானுடம் பாடிய சங்க காலக் கவிஞனை எதிர்க்கும் குரல் அல்லவா, மகனிடம் பாடல் என்னாவதே என்று கேட்ட ஆழ்வாரின் குரல்?
இலக்கணத்திற்காக இலக்கியம் இல்லை. இலக்கியத்திற் காகத்தான் இலக்கணம் தோன்றுகிறது.
இலக்கிய உணர்வோ, விடய ஞானிமோ படைப் பாளனுக்குரிய பொறுப்போ எதுவும் இல்லாதவர்கள் கூடச் சிரமம் இல்லாமல் புதுக் கவிதையாளர்கள் ஆகி விடுகிறார்கள்.
கவிதை என்று அழைப்பதற்கு எந்தவித அருகதையுமற்ற துண்டு துக்கடா வசனங்கள், கலை வடிவமற்ற வெறும் கருத்து நவிற்சிகள், வாக்கியங்களை ஒடித்து முறித்து

Page 55
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 92
அடுக்கிய கட்டுரைகள், வெற்றுக் கோஷங்கள், வார்த்தை வாந்திகள், கக்கூஸ் சுவரின் கிறுக்கல்கள், வாய் வெருவல்கள், வார்ப்படங்கள் இவையெல்லாம் கூட புதுக் கவிதை என்ற பெயரில் வெட்கமில்லாமல் பவனி வருகின்றன.
- அப்துல் ரகுமான்
இனிய நந்தவனம் - பெப்ரவரி 2006
இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுப்புகளாக வெளிவருவது மிகவும் குறைவாகும். 5ள் தாயின் மறைவையொட்டி அவர் நினைவாக ‘அம்மா’ என்ற மகுடத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் 25 கதைகளை தொகுத்து வெளியிட விரும்பினேன். எனது அவாவை எந்தவித கைமாறும் கருதாது தமிழகத்தில் கலைஞன் பதிப்பகத்தினர் வெளியிட்டனர். இதற்கு இலங்கையிலும் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'திசைகள்' மாலன் ஒர் அறிமுக விழாவை சென்னையில் நடத்தி உதவினார். இலங்கையிலுள்ள அனைத்து பிரதேசங்களைச் சார்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளும் 'அம்மா தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
- அந்தனி ஜீவா
• * *

கே.எஸ்.சிவகுமாரன் 93ے
நிவேதினி பால்நிலை கற்கைநெறிச் சஞ்சிகை
- இதழ் 6 மலர் 1.2 இரட்டை இதழ் 1999
Post Modernism என்ற பதம் பின் நவீனத்துவம் என்று மொழி பெயர்க்கப்பட்டு பிரயோகத்திலிருக்கிறது. இம்மொழி பெயர்ப்புச் சரி போல எனக்குத் தோன்றவில்லை. Post என்ற ஆங்கிலச் சொல் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. காலத்தால் பிந்தியது. அப்படி ஒரு காலம் குறிக்கப்படும் பொழுது Pre என்ற பதத்திற்குரிய அர்த்தம் காலத்தால் முந்தியது என்பதையும் உள்ளடக்க வேண்டும்.
நவீனத்துவம் என்று ஒன்றிருந்தது. அதற்குப் பின், காலத்தால் பிந்திய ஒரு கோட்பாட்டை - ஒரு கொள்கையை குறிப்பதற்கு நவீனத்துவப் பின்னயம்' என முருகையனால் எடுத்தாளப்பட்ட பதம் சரியானதாக எனக்குத் தோன்றுகிறது.
- செல்வி திருச்சந்திரன்
Κ * ** Ve
மல்லிகை
வழமையாக மொழிபெயர்ப்பை நான்கு வகையாகப் îrfii Irr.
1. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு
2. நேருக்கு நேர் மொழி பெயர்ப்பு
3. சுதந்திரமான மொழிபெயர்ப்பு

Page 56
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 94
4. மாற்றுப் படைப்பு
மூலப் பிரதியை அப்படியே பிரதிபண்ணுதல் பயனற்ற ஒன்றாகி விடும். எனவே ஒரு மொழி பெயர்ப்பாளரால் மூலப் பிரதியை மொழி பெயர்க்கும் பொழுது மூலப் பிரதி குறித்த அறிவார்ந்த பின்புலமும் தான் செய்வது என்ன என்பது பற்றிய தெளிவும் அவசியம்.
வேறொரு பண்பாட்டுத் தளத்தில் வேறொரு மொழியில் மிகவும் வேறுபட்ட பின்புலங்களை உள்ளடக்கிய மூலப் பிரதியை மொழி பெயர்க்கும் போது கீழ்க்காணும் செயற்பாடுகளை (எல்லாவற்றையும் அல்லது சிலதை) செய்ய வேண்டிய கடமை மொழி பெயர்ப்பாளனுக்கு உண்டு.
சுருக்குதல், விரிவாக்கல், மாற்றுதல், நீக்குதல், சேர்த்தல், விளக்குதல்.
- இன்கா (வீரகேசரி வார வெளியீடு, 19032007)
000 0x8 8X- 0x8

(9)
எழுபதுகள் வரை புனைகதைகள் பற்றிய நூல்கள்
திமிழிற் புனைகதை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வளர்ந்து வருகிறது. தற்கால தமிழ் இலக்கிய மாணவரும், புதிய எழுத்தாளர்களும் புனை கதையின் உறுதிப் பொருள்களைக் கற்றுணரல் விரும்பற்பாலதெனக் கருதி அவை பற்றி தமிழில் கிடைக்கக்கூடிய நூல்களை அறிமுகம் செய்து வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் இலக்கிய வரலாறுகளில் புனைகதை பற்றி இடம் பெற்ற பகுதிகளைப் பார்ப்போம். தமிழ் இலக்கிய வரலாறு, விமர்சனம் போன்ற துறைகளில் ஈழத்தவர்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக மறைந்த விபுலாநந்த அடிகள், பேராசிரியர் வீசெல்வநாயகம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

Page 57
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ 96
செல்வநாயகம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலின் முதலாவது பதிப்பு 1951ஆம் ஆண்டிலேயே வெளிவந்துவிட்டது. அந்தச் சிறுநூல் இன்றும் மதிப்பிழக்கவில்லை. அதில் சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வகைகள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற பேராசிரியர் மு.வரதராசன் தமது இலக்கிய மரபு (1960) என்ற நூலில் புனைகதை பற்றி அழகாக விவரித்து இருப்பதையும் குறிப்பிடலாம்.
சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய சி.பாலசுப்ரமணியன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு (13ஆம் பதிப்பு - 1978) என்ற நூலிலும் தமிழ்ப் புனைகதைகள் பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை (1964) எழுதிய காலஞ்சென்ற ரசிகமணி கனகசெந்திநாதன், ஈழத்துச் சிறுகதை, நாவல் போன்றவற்றில் எடுக்கப்பட்ட முயற்சிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதியில் பணிபுரிந்த கலாநிதி இரா. தண்டாயுதம், தற்காலத் தமிழ் இலக்கியம் (1973) என்ற தமது நூலில் தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் பற்றியும் இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் ஈழத்துச் சிறுகதைகள், நாவல்கள் பற்றியும் தகவல் தருவதுடன் செ.கணேசலிங்கனின் சடங்கு என்ற நாவல் பற்றிய விமர்சனத்தையும் எழுதியுள்ளார்.
எழில் முதல்வன் என்ற புனைபெயரில் பிரபலமான விமர்சகர் கலாநிதி மா.ராமலிங்கம் தமது 20ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் (1973) என்ற நூலில் தமிழில் புனைகதை

கே. எஸ். சிவகுமாரன் 97 ص
பற்றிய பயனுள்ள விமர்சன நோக்குகளை வெளிப்படுத்தி யிருக்கிறார்.
யாழ்ப்பாண வளாக தமிழ்த்துறை வெளியிட்ட ஆக்க இலக்கியமும் அறிவியலும் (1977) என்ற நூல் புதிய கண்ணோட்டங்களில் புனைகதைத் துறையை அணுகுவதைக்
disГГ60бT6) ПГLO.
பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய ஈழத்தில் தமிழ் இலக்கியம் (1978) வரலாற்றுப் பின்னணியில் புனைகதை பற்றியும், சில செய்திகளைக் குறிப்பிட்டுச் செல்கிறது. கலாநிதிகள் சி. மெளனகுரு, மெள. சித்திரலேகா, எம்.ஏநுஃமான் ஆகியோர் எழுதிய 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (1979) என்ற நூலில் ஈழத்துப் புனைகதைகள் பற்றி குறிப்புக்கள் காணப்படுகின்றன.
மேற்கண்ட நூல்கள் சிறுகதை, நாவல் பற்றி பொதுவாகவும் போக்கோடு போக்காகவும் கூறுபவை. இவற்றைவிட, சிறுகதை பற்றியும், நாவல் பற்றியும், குறிப்பாக எழுதப்பட்ட சில நூல்களும், தமிழில் வெளிவந்துள்ளன.
சிறுகதை பற்றி, சிறுகதை ஒரு கலை (1958) என்ற நூலை ப.கோதண்டராமன் வெளியிட்டிருந்தார். ஆரம்ப எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது மிக பயனுள்ள நூல் எனலாம். வளரும் தமிழ் (சோமலே), இலக்கிய விமர்சனம் (சிதம்பரரகுநாதன்), இலக்கிய கலை (அ.ச.ஞானசம்பந்தன்) படித்திருக்கிறீர்களா / விமர்சனக்கலை / எதற்காக எழுதுகிறேன். (க.நா.சு.) கலைக்களஞ்சியம், கதையின் கதை (கலைமகள் வெளியீடு) கதையுலகில் உல்லாச யாத்திரை (பியூரீஆச்சாரிய) போன்றவற்றில் சிறுகதை பற்றிய

Page 58
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
ஒரளவு விரிவான குறிப்புகள் அடங்கியுள்ளன. ஆயினும் தமிழ்ச் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட முதலாவது சிறுகதை விமர்சன நூலை - தமிழிற்சிறுகதை (1966)- சாலை இளந்திரையன் எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுகதைச் செல்வம் (1966) மற்றும் ஒரு பயனுள்ள நூல். பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1967) தலைப்புக்கு ஏற்ப அதன் நோக்கத்தை விமர்சன நோக்கில் ஆராய்கிறது. செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்து சிறுகதை மணிகள் (1973) ஈழத்துச் சிறுகதைகளை விமர்சிக்கும் நூலாகும். இவற்றைவிட எண்ணற்ற விமர்சனங்களும் கட்டுரைகளும் நூல்வடிவம் பெறாமல் உள்ளன. இவற்றையெல்லாம் இலக்கிய மாண வரும் எழுத்தாளர்களும் தேடிப்படித்துப் பயனடையலாம்.
சிறுகதை பற்றிய நூல்களை விட நாவல்கள் தொடர்பான நூல்கள் எண்ணிக்கை கூடியதாக இருக்கின்றன. க.நா.சுப்பிரமணியம் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957) ஒர் புதிய விமர்சன முயற்சியாக அமைந்துள்ளது. ஆயினும் நாவல்-இலக்கியம் பற்றியதாக தனியான ஒரு நூலாக முதலில் வெளிவந்தது, சில்லையூர் செல்வராசனின் ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி (1957) ஆகும்.
ஆயினும் தமிழ் நாவல் இலக்கியம் (1968) என்ற பேராசிரியர் க.கைலாசபதியின் நூலும் இன்றும் இத்துறை பற்றிய தலைசிறந்த நூல் எனக் கருதப்படுகிறது. கலாநிதி மா.இராமலிங்கம் எழுதிய ,ாவல் இலக்கியம் (1975) என்ற நூலும் விதந்து 'டறப் ட்டத்தக்கது. தமிழ நாவல் முன்னோட்டம் (கலாநிதி தா.வே.இராமசாமி) நாவல் வளம்
 

கே.எஸ். சிவகுமாரன் ക99
(கலாநிதி இரா.தண்டாயுதம்), தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் (கி.வா.ஜகந்நாதன்) ஆகியன பற்றியும் இங்கு குறிப்பிடலாம். விமலா மனுவா எழுதிய நவீன புனைகதையில் மனிதன் (1973) என்ற ஆங்கில நூலையும் இங்கு குறிப்பிட வேண்டும். தி.பாக்கியமுத்து பதிப்பித்த விடுதலைக்கு முன் தமிழ் நாவல்கள் (1974), ஒன்பது நாவல்களின் விமர்சனங்களையும், அவற்றிற்கு நாவலாசிரியர்கள் அளித்த பதில்களையும் கொண்டவை. தி.பாக்கியமுத்து பதிப்பித்த மற்றொரு தொகுதியான தமிழ் நாவல்களில் மனித விமோசனம் (1976) நல்ல விமர்சனங்களைக் கொண்டுள்ளன. கலாநிதி நா.சுப்பிர மணியம் எழுதிய வீரகேசரி பிரசுர நாவல்கள் (1977) ஈழத்து தமிழ் நாவல்கள் நூல் விவரப்பட்டியல் (1977) ஆகியனவும் தகவல் தருபவை. பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய நாவலும் வாழ்க்கையும் (1978) சமூகவியல் ஆய்வாக அமைந்துள்ளது. இரா.இராஜசேகரன் பதிப்பித்த தமிழ்நாவல்-ஐம்பது பார்வை (1978) என்ற நூலும் சுவாரஸ்யமானதுடன், சுமார் ஐம்பது நாவல்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது. கலாநிதி தா.வே.வீரசாமி எழுதிய தமிழ் சமூக நாவல்கள் (1978) என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. சோ.சிவபாதசுந்தரம், என்.சிட்டி ஆகியோர் எழுதிய தமிழ்நாவல் - நூற்றர்ண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) பயனுள்ளது. ஈழத்து தமிழ் நாவல்கள் பற்றிய பல செய்திகளை ஈழத்து நாவல் இலக்கியம் (1978) என்ற கலாநிதி நா.சுப்பிரமணியத்தின் நூலில் காணலாம். பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்த தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு (1978) மற்றும் ஒரு தரமான விமர்சன நூல் ஆதலால் யாவரும் படிக்க வேண்டியுள்ளது.

Page 59
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை -ܠ100
இருபதில் சிறுகதை (செல்வி பியூலா மேர்ளி), கு.ப.ராவின் சிறுகதைகள் ஆய்வு (ரா.மோகன்), தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது (சி.சு.செல்லப்பா) விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள் (கலாநிதி மா.ராம்லிங்கம்), தமிழ்ச்சிறுகதை முன்னோடிகள் (கலாநிதி இராதண்டாயுதம்) போன்றவை வேறுசில.
இந்நூல்கள் அனைத்தையும் தமிழிலேயே படித்துப் பார்க்கும் ஓர் இலக்கிய மாணவன் பகுத்தறிவு பெற்று
புனைகதைத் துறையை நன்கு அறிந்து கொள்வார்.
(வீரகேசரி, 25 1997)

(14)
ஈழத்து வானம்பாழகள் பாடும் கவிதைகள்
தமிழ்நாடு பொள்ள7ச்சியிலிருந்து வெளியாகிய "வானம்//7டி"2வது இதழிலே ஈழத்துக் கவிஞர்கள் சிலரின் படைப்புகள் வெளியாகின. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1922 டிசம்பர் இதழ் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ7கவே
ിഖബീബഗ്ഗ്ജുബ്ര
Ο Ο Ο * % *
மஹாகவி, முருகையன், நீலாவணன், மு.பொன்னம் பலம், தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், எம்.ஏநுஃமான், அ.யேசுராசா, சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெய பாலன், கவியரசன், மு.புஷ்பராஜன், சு.வில்வரத்தினம், உமா வரதராஜன், ஏஎச்எம் பாரூக், ஹம்ஸத்வனி, ஊர்வசி, ஆதவன், பாலசூரியன், நா.சபேசன் ஆகியோரின் கவிதைகள் இவ்விதழிலே இடம்பெற்றன. இவர்கள் எல்லோருடைய

Page 60
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܥܠ102
கவிதைகளுமே எனக்குப் பிடிக்கின்றன. எனக்குப் பிடித்த வேறு சிலருடைய கவிதைகளும் இடம்பெற்றிருந்தால் எனக்குப் பரம திருப்தியாக இருந்திருக்கும். அந்தச் சிலரில் சபா ஜெயராசா, மேமன்கவி, பார்வதி நாதசிவம், கல்வயல் குமாரசாமி, ஜீவா ஜீவரத்தினம், சாருமதி, செ.குணரத்தினம், ஈழவாணன், புதுவை இரத்தினதுரை, கந்தவனம், சடாட்சரன், பாண்டியூரான், சத்தியசீலன், தான்தோன்றிக் கவிராயர், ஏ.இக்பால், சபேசன், ரவி, அன்பு முகைதீன், பஸில் காரியப்பர், சொக்கன், திமிலைத் துமிலன், அ.கெளரிதாசன் போன்றவர்களும் அடங்குவர்.
Ο Ο Κ X Y Xo
தமிழ் நாட்டிலும் ஒரு சிற்பி இருக்கிறார். இவர் வானம்பாடிக் கவிஞர். வானம்பாடிக் கவிஞர்களுள் என்னை அதிகம் கவர்ந்தவர் சிற்பிதான். எனக்குக் கவிதையின்பம் அளிக்கிறார். இந்த 'சிற்பி தான் இப்பொழுது "வானம்பாடி’ இதழை நடத்துகிறார்.
ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் நுண்ணிய கவிதை விமர்சகராகவும் அவர் இனங் காட்டியுள்ளார். தாமரை பழைய இதழ்களில் அவருடைய விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அந்த விமர்சகர் ஈழத்துக் கவிதைகளைப் பற்றி எவ்வாறு கணிக்கிறார்?
"நேருக்கு நேர் பேசும் எளிமை இதன் சிறப்பியல்பு. தேவைக்குமேல் படிமங்களையும் குறியீடுகளையும் திணிக்காமை இன்னொரு சிறப்பு. குழந்தைத் தனமாகச் ச்ெய்யாமல் சாதாரணச் சொற்களுக்கு வலிமை ஏற்றுதல் மற்றொரு தன்மை. எல்லாவற்றுக்கும் மேலாக, சுற்றிலுமுள்ள

கே.எஸ். சிவகுமாரன் 103ك
வாழக்கைத் தளத்தோடு ஒன்றித்து நிற்பது மேலுமொரு அம்சம்” - இவ்வாறு நிரற்படுத்திய சிற்பி, இவைகள் எல்லாம் தமிழகத்துக் கவிஞர்களையும் சிந்திக்க வைக்கும் என்பது வானம்பாடியின் நம்பிக்கை' என்றும் எதிர்பார்க்கிறார்.
d Ο 40 - 9
ஈழத்துக் கவிதைப் போக்கு பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. எழுதியிருப்பவர் செ.யோகராசா. இவர் அதிக விளம்பர மின்றித் தன்னடக்கமாகப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருப்பவர்.
யோகராசாவின் கருத்துப்படி வரதர் 1943லேயே ஈழகேசரியில் எழுதிய “ஓர் இரவிலே" என்பதே ஈழத்தின் முதலாவது புதுக்கவிதையாகும். ('புதுக்கவிதை' என்ற பிரயோகத்தையே நான் வெறுக்கின்ற போதிலும் மேற்கோள் காட்ட வேண்டி அவ்வாறு குறிப்பிட்டேன்) கட்டுரை யாசிரியர் கூறுகிறார்: "தென்னிந்தியாவிலே வானம்பாடிக் குழுவினர் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தைச் சமுதாயச் சார்புடையதாக மாற்றுவதற்கு முன் ஈழத்திலே அத்தகைய முயற்சிகள் ஆரம்பித்துவிட்டமை குறிப்பிடத்தக்கதேயாகும்.
1959லே தமிழ் நாட்டில் "எழுத்து” என்ற பெயரிலே ஒரு விமர்சன ஏடு வெளிவரத் தொடங்கியது. அதிலே புதுக்கவிதை என்ற பெயரில் சில முயற்சிகளும் வெளியாகின. வசன கவிதை என்று முன்னர் அறியப்பட்டவற்றை (பாரதி, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றவர்கள் எழுதினர்) "புதுக்கவிதை' என்று மகுடமிட்டு ந.பிச்சமூர்த்திக்காக ஓர் இயக்கத்தையே மேற்கொண்டார்,

Page 61
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ102
‘மணிக்கொடி' எழுத்தாளரும், ‘எழுத்து ஏட்டின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா. அந்த ஏட்டின் மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகியவர் திருகோணமலை வாசியான தருமலிங்கம் சிவராமலிங்கம் (தருமுசிவராமு). கட்டுரையாசிரியர் யோகராசா கூறுவதுபோல, “எழுத்து ஈழத்தவர்கட்கு, புதுக்கவிதை பற்றிய கட்டுரைகள் மூலம் உந்து சக்தியளித்தது மட்டுமன்றிச் சிலர் எழுதுவதற்குக் களமமைத்தும் கொடுக்கிறது எனலாம். சி.முருகையன், தருமசிவராமு, தா.இராமலிங்கம், மு.பொன்னம்பலம், யோ.பெனடிக்ட் பாலன், அபயன் (காவலூர் ராசதுரை) போன்றோர் அப்போது இப்புதுமாதிரியான கவிதைகளை எழுதினர். சில பத்திரிகைகளில் எனது பெயரின் இனிஷியல் மாற்றியவர் தருமசிவராமு. நானும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு பார்த்தேன்.
‘வசனத்தன்மை மிக்க ஈழத்துப் புதுக்கவிதையின் போக்கினை மாற்றி, படிமம், குறியீடு முதலியவற்றைக் கையாண்டு, ஈழத்துப் புதுக்கவிதையை இன்னொரு பாதையில் மாற்றியவர் தருமு சிவராமு’ என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
தா.இராமலிங்கம் திறமை கூடிய ஒரு கவிஞர். அவருடைய ‘புதுமைக் கவிதைகள்’ 60களிலே மிகுந்த பாராட்டுப்பெற்றன.
70களிலும் 80களிலும் ஈழத்துக் கவிதை முயற்சிகள் எவ்வாறு அமைகின்றன என்றறிய செ.யோகராசாவின் கட்டுரையை நீங்களே படித்தாக வேண்டும். நன்கு அலசி ஆர்ாய்ந்திருக்கிறார்.

கே.எஸ். சிவகுமாரன் 105 هك
சேரன் எழுதிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இவருடைய கருத்துப்படி கவிதை கட்புல நுகர்வுக்குரியதாக இப்பொழுது மாறியிருக்கிறது. சேரனின் கருத்துக்கள் மீளாய்வுக்குரியன. ஆயினும் அவருடைய பின்வருங் கூற்றை ஏற்றுக் கொள்ளலாம். "கிட்டத்தட்ட வசனம் போன்ற ஒன்றை மிகவும் சுலபமாக அரங்கில் வாசித்துவிட முடியும். ஆனால் அது கட் புலனுக்கூடாக வரும்போது ஏற்படுத்து கின்ற பாதிப்பு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அக்கவிதை எல்லா அர்த்தங்களிலும் கவிதையாக உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.”
Φ 0x8 x• *
இந்தச் சிறப்பிதழிலே இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்துமே எனக்குப் பிடித்தவை. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். இரசனைக்கு மாதிரிகள்:
மக்களுக்கு அருகிலிலா அறிவும் அறிஞர்களும் தொலைவில் ஒளிர்கின்ற தாரகைகள் போன்றனவே' (சி.சிவசேகரம்)
'மனிதனைவிடவுமோர் மகத்துவம் உண்டோ ? வாழ்வை மிஞ்சு மோர் இழப்பும் உண்டோ ?” (வ.ஐ.ச.ஜெயபாலன்)
'காலையில் எழுந்ததும் கைகள் ஒருபுறம், கால் ஒரு திசையில், முகமும்தான் எங்கோ சிதறிக் கிடக்கும். அனைத்தையும் பொருத்தி நிமிர்ந்து வந்து எனது பகலை உன்னிடம் விற்கிறேன்’ (கவியரசன்)

Page 62
|106ଧ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
'ஒளியிலோ அமைதியின் சிதைவு (மு.புஷ்பராஜன்)
‘ஓர் நக்ஷத்ர ராவில் ஒரு கணம் உள்ளுருவிச் செல்லும் கேரள முட்டிகளின் கள்ளிரைச்சல்' (க.விஸ்வரத்தினம்)
‘சாம்பல் பறக்க விழித்துக் கொண்ட நெருப்பு மாதிரியும் அட - இது என் நெஞ்சா, மத்தளமா?(உமா வரதராஜன்)
இளம் பச்சை! பொடித் தூவலாய் மண் உரோமக் கண் சிலிர்ப்பாய் அந்த இடத்தில் குழந்தைப் புல்லுகள் தலைவந்த பிரசவம் (எச்.எம்.பாரூக்)
கருக்கு மட்டைகளால் வரியப்பட்ட யாழப்பாணத்தின் வேலிகளை மீறி வெளியே பார் (ஹம்சத்வனி)
'பழைய பஞ்சாங்கங்களில் நம்பிக்கை தருவதாய் ஒரு சொல்லைத் தேடிப் பார்த்தபடி (ஊர்வசி)
இது என்ன இருப்பு? இதில் என்ன இருப்பு? (ஆதவன்)
‘எமக்குள் ஏதோ இன்னதான் மனதுள் உருக்கொள்ளும். ஆனாலும் சருகுகள் நசிந்து நொறுங்கிய ஒலிதான் எழுந்துதேய விடைபெறுவோம்' (பாலசூரியன்)
திருவிழாபோய் பூசை மட்டுமே நடக்கத் தொடங்கியது; அதுவும் போயிற்றுப் போ’ (நா.சபேசன்)
'ஆழ்ந்த காற்றிலும் அச்சம் பரவும் முந்நூறு ஆண்டுகள் கழிந்தனவாயினும் நிறந்தான் மாறியது; மொழிதான் மாறியது (அ.யோகராசா)

கே.எஸ். சிவகுமாரன் 107ھر
இன்றைய வாழ்வை நாங்கள் இழந்தோம். இன்றைய மாலையை நாங்கள் இழந்தோம் (எம்.ஏநுஃமான்)
நுனியில் வரவர சிறிய நலிந்து நீண்ட மொட்டுகள், நண்டின் பூப்போல ஆமாம் நண்டின் பூப்போல. அம்மா சொன்னாள்; நண்டு சினைக்க பூக்கும் முள்முருக்கு, முன் முருக்கு பூக்க சினைக்கும் நண்டுகள். நாளைக்குக் காலை சந்தைக்குப் போவோம்' (சண்முகம் சிவலிங்கம்)
‘தூரவிடக்கூடாது துரவுகளைத் தூண்டிடுவோம். மண்ணை வளப்படுத்திச் சத்துப் பயிர் விளைப்போம். சத்துப் பயிர் விளைப்போம் நெத்துப் பரப்பிடுவோம்' (நா.இராமலிங்கம்)
'மனித இருப்பே கலை, கலை எனப்பட்ட நிழல் இருப்பெடுக்கப்பட்டுக் கணக்கு முடிக்கப்படுகிறது. கலைப் பேரேடு மூடப்படுகிறது. சுயவாழ்க்கை தொடங்குகிறது’ (மு.பொன்னம்பலம்)
"செத்தாலும் செந்நீர் நம் செல்வக் குடும்பத்தைப் பத்தியமாய்ப் பார்த்திந்தப் பாரில் வழங்கவரும் உண்மை உறவறியும் ஊர்' (நீலாவணன்)
'முந்தை நாட் கட்டிய கதைகளை நாமே இன்று நம்பிவருகிறோம் (முருகையன்)
கிட்டப் போய் மெல்லக் குனிந்து இடுக. இல்லையெனில் உன்பாட்டில் செல்க. இதுவே சிறப்பு, (மஹாகவி)

Page 63
108a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
வானம்பாடி ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழுக்கு முகப்பு ஓவியம் வரைந்திருப்பவர் கைலாசநாதன். அர்த்தபுஷ்டியான, நவீனத்துவ கேந்திர கணிதவியல் சார்ந்த வரைகோடுகள் அடங்கிய ஒரு கலை வடிவம் இது. ஒவியரும் நம்மவரே என்னும் பொழுது தமிழ் நாட்டுச் சிற்றேடான "வானம்பாடி’ ஈழத்துக் கலைஞர்களை, கவிஞர்களைக் கெளரவப்படுத் தியமை புளங்காகிதமளிக்கிறது.
தினகரன் 25.1.1983)
0 0 8. 0XP & (X-

டு5)
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
ெ சின்னை க்ரியா நிறுவனத்தினர் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' என்ற தலைப்பிலே ஓர் அருமையான கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கின்றனர். தொகுத்தவர்கள் - எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா. இத்தொகுப்பிலே இடம்பெற்ற பதினொரு கவிஞர்களும் வருமாறு - மஹாகவி, முருகையன், நீலாவணன், மு.பொன்னம்பலம், எம்.ஏநுஃமான், சண்முகம் சிவலிங்கம், தா.இராமலிங்கம், சி.சிவசேகரம், அ.யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன். இத்தொகுப்பிலே பழைய கவிஞர்களாகிய நாவற்குழியூர் நடராசன், நவாலியூர் நடராசா, தான் தோன்றிக் கவிராயர் அ.ந.கந்தசாமி, ராஜபாரதி, சொக்கன், திலைத்துமிலன் போன்றவர்களையும் வேறு சிலரையும் சேர்த்திருந்தால் மேலும் திருப்தி தந்திருக்கும்.

Page 64
a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
ஆயினும் தொகுப்பாளர் நோக்கம் வேறு. அவர்களே கூறுகிறார்கள்:
“ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் சில முக்கியமான போக்குகளைப் பிரதிபலிக்கும் பதினொரு கவிஞர்களின் 55 கவிதைகளைக் கொண்டது இத்தொகுதி. 1960 முதல் இன்று வரையுள்ள சுமார் இருபது ஆண்டுக் காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. மஹாகவி முதல் சேரன் (கவியரசன்) வரை ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அவ்வகையில் இருபது ஆண்டுகளையும் ஐந்து தலைமுறைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்குகிறது எனலாம்.”
இன்று ஈழத்திலே எழுதும் எல்லாவகையான கவிதை களையும், கவிஞர்களையும் இத்தொகுப்பு பிரதிபலிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட தொகுப்பாளர்கள் மிகப் பிரபல மான ஈழத்துக் கவிஞர்கள் பலர் இத்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை' என்றும் ஒப்புக் கொள்கின்றனர்.
நமது நாட்டிலே நவீன தமிழக் கவிதை 1940லிருந்து தான் ஆரம்பமாவதாகக் கூறும் இவர்கள், ஐந்து தலைமுறைக் கவிஞர்கள் வந்துவிட்டார்கள் எனவும் இனங்கண்டுள்ளனர். “மஹாகவி (முதல் தலைமுறை) முருகயைன், நீலாவணன் (2வது) மு.பொன்னம்பலம், எம்.ஏநுஃமான், சண்முகம் சிலவலிங்கம், தா.இராமலிங்கம் (மூன்றாவது) சி.சிவசேகரம், அ.யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன் (நான்காவது) சேரன் (ஐந்தாவது) முதலிரு தலைமுறையினரும் செய்யுள் வழிக் கவிஞர்கள், ஆயினும் பேச்சோசைக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்காலத் தேவைக்கேற்ப மரபுவழிச் செய்யுளை

கே. எஸ். சிவகுமாரன் لکھےij
நவீனமயப்படுத்தியவர்கள். மூன்றாவது தலைமுறையின ரிடையே அதிக நெகிழச்சி காணப்படுகின்றது. ஐந்தாவது தலைமுறையினரிடம் செய்யுள் பற்றிய மனப்பாங்கு நெகிழ்ச்சியுற்று வந்திருக்கிறது
“ஈழத்து நவீன தமிழ்க் கவிதை தனித்துவமான ஆளுமைகளாலேயே வளம் பெற்றுள்ளது' என்று தொகுப்பாளர் அவதானிக்கின்றனர். இவர்களின் மதிப்பீட்டின்படி -
“மஹாகவி - யதார்த்த நெறிநின்று மனிதனின் தன்னுணர்வுக்கு - அவனது ஆற்றலுக்கு அதிக அழுத்தம் கொடுப்பவர். காட்சிப் படிமங்களினூடு அதைக் கவிதையில் வார்ப்பவர். படிமங்களினூடு வாசகனை ஒர் உணர்வுச் சுழலுக்குள் கொண்டு போவது மஹாகவியின் பாணி.
முருகையன் - கருத்து அல்லது சிந்தனை வெளிப்பாடு தான் அவரது கவிதையின் பிரதான அம்சமாகும். விஞ்ஞானத்துக்குரிய பொதுமைப் படுத்தும் சிந்தனை முறையை அவரது பெரும்பாலான கவிதைகளில் காணலாம். முருகையனின் கவிதைகள் வாசகனை அறிவுச் சுழல்களுக்குள் கொண்டு செல்வன.
நீலாவணன் - மஹாகவியிடம் காணப்படும் யதார்த்த நெறியும், மரபு சார்ந்த ஆன்மீகக் குறியீட்டு நெறியும் இவர்
கவிதைகளில் காணலாம்.
ஏனையவர்களுட் பெரும்பாலோர் மார்க்சீயச் சார்பு
நிலையாளர்கள். ஆயினும், இவர்கள் மார்க்சியத்தை
உயர்வாக்கிக் கொண்ட முறையிலும் அதை வெளிப்படுத்தும்

Page 65
12a- காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
முறையிலும் ஆளுக்கு ஆள் வெவ்வேறு அளவில் வேறுபடுகின்றனர். அதுவே அவர்களது தனித்துவம். மு.பொன்னம்பலத்தை இங்கு தனியாகக் குறிப்பிட வேண்டும். ஈழத்துக் கவிதையிலே அவர் வேறு ஒரு போக்கைப் பிரதிபலிக்கின்றார். கவிதையில் யதார்த்தத்தை விட ஆத்மார்த்தத்தை வலியுறுத்துபவர், இராமலிங்கமும் ஆன்மீக நோக்குடையவரே. ஆயினும் சமூக யதார்த்தத்தில் அவரது கால்கள் பதிந்துள்ளன'
பொதுப்பண்புகள் -
ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களிடம் சில பொதுப் பண்புகள் இருக்கின்றனவா?
ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் பிரதான பண்பே அதன் சமூகச் சார்புதான் என்கிறார்கள் தொகுப்பாளர்கள். மேலும் விளக்குகையில் - “கவிதைகள் சமூக, அரசியல் பிரச்சினைகள் தொடர்பான கவிஞனின் பார்வையை, அனுபவத்தை, சமூக நிலைப்பட்ட சிந்தனைகளை வெளிப்படுத்துவதையே நாம் இங்கு சமூகச் சார்பு என்று கருதுகின்றோம். இதிலே சமகாலப் பிரக்ஞை முக்கியமானது" எனக் குறிப்பிடுகின்றனர். அதே சமயம் "அது முற்றிலும் தனிமனிதச் சார்ப்பற்றது என்று பொருளாகாது' என்பதையும் தொகுப்பாளர் சுட்டிக் காட்டுகின்றனர்.
'திட்டவட்டமானதாக, நேரடியான பொருட் புலப்பாடுடையதாகக் கவிதைகள் அமைகின்றன. எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவை. வாசகர்களின் உணர்வில் நேரடியாகத் தைக்கக் கூடியவை. வாசகனுடன் பேசுபவை. கவிஞனின் அனுபவம், உணர்வு ஆகியன வாசகனுக்குள்ளும்

கே.எஸ்.சிவகுமாரன் 21:13
இறக்கிவிடப்படுகின்றன. கவிஞனுக்கும் வாசகனுக்கு மிடையே எளிமையான, உண்மையான செய்திப் பரிமாற்றம் நிகழ்கிறது. பெரும்பாலான கவிதைகள் உண்மையான அன்றாட வாழ்க்கை அனுபவத்துடன் அறிவுடையவையாக இருப்பதும் அன்றாட வழக்கில் உள்ள இயல்பான மொழி யமைப்பைப் பயன்படுத்துவதும் இதன் காரணமாகலாம் என்று புகழ்ந்துரைக்கின்றனர் தொகுப்பாளர்கள்.
Ο 9xo oxo Xo
இனி இக்கவிதைகளில் நான் இரசித்த சில வரிகளை மாதிரிக்கு ஒன்றாகத் தொகுத்து தருகிறேன். அவை முழுக் கவிதைகளையும் நீங்கள் படித்துப் பார்க்கத் தூண்டுமானால் இந்த அறிமுகத்தின் நோக்கம் நிறைவெய்துவதாக அமையும்.
சேரன் -
ஓவென்று நிலத்தின் ஆழத்துள் விரிந்திருக்கும் கிணறு, சலனமற்று உறங்கியது என் மனம் போன்று பிழைபட்ட
தமிழ், நெஞ்சம் நெருட எழுந்துவரும். தாழம்பூ சிந்தியிருக்கும் தண்ணீர் ஊற்றவும் பாலாய் மாறுகிற நிலவில் இரவு.
நிலவு தெறித்த இலைகள் சுவரில் மிதக்கின்றன. விளக்கில்லாத தெருவில் விட்டில்களுமில்லை. எண்ணிக் கொள்ள வார்த்தைகள், அவற்றிடையே மிகப் பெரிய மெளனம் உறைந்திருந்தது.
冷 Xo X Xo

Page 66
a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
சு.ஐ.ச.ஜெயபாலன் -
மஞ்சட் பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளமாகிறது. இதயத்தைக் கொண்டிட வண்ணத்துப் பூச்சி வழிமறிக்கும். பொற்குருவி ஒன்று மரக்கிளையின் நுனிக்கு வந்து அதட்டும். அங்கும்
சி.சிவசேகரம் -
* கம்பளி உடைக்குள் மேனி நடுங்கிலும் வெண்பனி
அழகை மறுத்தற்கில்லை. மரங்கள் மீது இலைகள் போர்த்தன. ’
சித்திரை வெயிலில் மேனி உலர்த்தும்.
ஆற்றின் பழுப்பு உடலின் மீது தேமல் போன்று தேங்கிய நீரில்.
பகலின் நலிவு இருளின் வலிவு.
வாணவெளியில் நிலவு தடுக்கி மேகக் குளத்தில் வீழ்ந்து மூழ்கும்.
இருளை மீறி இரண்டு அடிதான் முன்னே போக முடியினும் போவேன், விடியலைக் காத்து நிற்குமோ காலம்.
வான் மேட்டில் பூச்சொரியும் என் மரமோ இன்னோர் இரவுக்காய் இரகசியமாய் மொட்டுவிடும்.
பனியுதிர்க்கும் என் வான நெடுமரமோ மறுநாள் மலர் பொழிய முழுநாளும் நீருறிஞ்சும்.

கே.எஸ். சிவகுமாரன் 115 كص
தா.இராமலிங்கம் -
அடைப் பேட்டைத் தூக்கி எறிந்து துரத்தினால் இடப்போகுதோ முட்டை ஏனாக்கும் துரத்தினான்? எரிந்து அலை கழுவும் கடல் முற்றத்தில் எழுந்து நின்றது ஒர் சிவனின் கோவில்.
& X. X
சண்முகம் சிவலிங்கம் -
கதறி அழுகையில் கடல் இரத்தம் ஆயினதே. விம்மி அழுகையிலே வீடெல்லாம் பற்றியதே.
வாழ்வின் ஆராத காதலுக்குக் கீழே அடிவேராய் பின்னிக் கிடப்பதுவும் வாழ்வு முனையின் மறுதலையாய உள்ளதுவும் இந்த நிராசைகளே எனது நிசங்கள் நிராசையின் கீதமும் வாழ்வின் ஒரு முனைப்பே வெண்பனியின் துளி சொட்டும் பூங்கொத்தைப் போன்று விம்முகின்ற என் நெஞ்சில்.
d
நீலாவணன் -
அன்புமன ஆழ்குழியுள் அமைந்தடங்கி ஒளிர்வது போல.
இளம் தென்னையின் ஒலை பண்ணிய இன்பப் பாட்டுகள் ஓயவில்லை. என் கடை வாயில் உன்னிதழ் ஊட்டிய ஈரம் காயவில்லை. எழில் மின்னிடும் என்றன் எமக்கிலை தானும் பின்னே சாயவிலை.
O
• &

Page 67
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ116
முருகையன் -
மண்டலமிட்டு வளைந்தது தொடுவான். பாதிக்கோளக் கவிழ்ப்பே வானமாம். 'உய்ய்' என்றே மின் விசிறி சுழன்றது. வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவோ குறைவு. ஒர் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு. பண்பாட்டின் பேராற் பல சோலி எங்களுக்கு. ஓயாத ஒட்ட உழற்சியாம் காலத்தின் நட்ட நடுவே நடுபட்டு, நாடுகளாய், கண்டங்கள் ஆகி, கடல் போர்த்த பூமியாய், வெட்ட வெளியாய், வெறு விண்ணாய், கோள்களாய், நட்சத்திரக் குலையாய், நாகப் பெரும் பாழாய் அப்பால் விரையும் நெடிலம் புகைச் சுருளாய், உண்மை பொய்மை கூடி ஒருங்கே குழம்புகிற விண்குளத்தின் சேறாய், விசிறலுள்ள வாயுவாய், சிறலாய், மாறலாய், சீர்ப்பாட்டுச் செவ்வானத்தின் தேறலாய் எல்லாம் திகழ்கின்றாய், இன்பமே எங்கள் இலக்கெனினும், நாம் நீதிப் பண்புகளை நாடும் LJ60L LILI.
வேலிக்குப் பயிர்கள் மேலே வெறுப்புத்தான் இருக்கும்
என்றால் - வேலி ஏன் ? காவல் ஏனோ ? காவலோ வேலியாலே?
மஹாகவி -
சின்னவாயில் உதிரம் வழிந்தது. சிரித்தபோதங்கு பாலே பொழிந்தது. கன்னத்தே இன்கனிகள் கனிந்தன.
செவ்வரத்தைப் பூ நிலத்தில் சேலையில்லை கண் மணிக்கே, அவ்வளவு தூரத்தும் அவளுதடு மின்னிடுமோ?
(தினகரன், 23 1284)
0 0 0X- •x 0x8

(6)
அக்னி என்றொரு கவிதை ஏடு
நவீன தமிழ்க் கவிதையைப் ‘புதுக் கவிதை' என்றும் சிலர் அழைக்கிறார்கள். கவிதை எப்பொழுதுமே கவிதைதான். ‘புது' என்ற அடைமொழி, பொருளிலும், உருவிலும் வித்தியாசமான போக்குடைய கவிதைகளையும், கவிதை என்ற பெயரில் இடம்பெற்ற விடுகவிகளையும், சுலோகங்களையும் இனங்காட்ட சில தசாப்தங்களுக்கு முன் உதவிற்று. ஆனால் காலத்தின் தேவையையொட்டி, காலத்தின் போக்கிற்கேற்பப் புதிய மரபுகள், பழைய மரபுகளைத் தழுவி வளர்ச்சி பெறத் தொடங்கியதும், ‘புதுக் கவிதை' என்ற அடைமொழிக்கு அவசியமில்லாது போய்விடுகிறது. இருந்தபோதிலும், சிலர் விடாப்பிடியாகப் ‘புதுக் கவிதை' என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இப் பிரயோகம் பற்றியல்ல இக்கட்டுரையில் நான் பேசப்போவது - கவிதைக்கான ஏடுகளே வரத்

Page 68
118৯২_ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
தொடங்கியுள்ள இக்கால கட்டத்தில், கவிதை சார்ந்த ஏடு ஒன்று பற்றியும், அதில் இடம்பெற்ற சில கவிதைகள் பற்றியும் சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கம்.
நமது நாட்டிலே, வரதரின் ‘தேன்மொழி (ஓரிதழ்தான் வெளிவந்ததாக வரதர் என்னிடம் கூறினார்) எம்.ஏநுஃமான் குழுவினரின் 'கவிஞன்”, இ.இரத்தினத்தின் 'பா', ஈழவாணனின் ‘அக்னி" ஆகியன குறிப்பிடத்தக்கன. இவற்றை விட எனது பார்வைக்கு வராத வேறு பல கவிதை
இதழ்களும் வெளிவந்திருக்கலாம். 1975 இல் முதல் இதழ்
"அக்னி" என்ற பெயரில் 1975ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஐந்து இதழ்கள் மாத்திரமே, கவிதை ஏடு ஒன்று சுடர்விட்டணைந்தது. இந்த ஏட்டின் ஆசிரியராக தர்மராஜா( ஈழவாணன்) இருந்து வந்தார். இவர் 'சாரல்’ என்ற மலைநாட்டுப் பருவ ஏடு ஒன்றுடன் தொடர்பு கொண்டிருந்தார். 'அக்கினிப் பூக்கள்' என்ற கவிதைத் தொகுப்பில், "கடப்பாடு கொண்ட அரசியற் கவிதைகளை அதில் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் 'வானம்பாடி' என்ற பெயரில் முன்னர் ஒரு கவிதை ஏடு கீதம் பாடி ஓய்ந்தது. அக்கவிதை ஏட்டிலும் கடப்பாடு கொண்ட (கொமிட்டட்) அரசியற் கவிதைகளும் சுலோகங்களும் இடம் பெற்றன. மீரா, சிற்பி, அக்கினி புத்திரன் போன்ற பலர் இவ்வேட்டின் மூலம் தெரியவந்தனர். "வானம் பாடி பல கால இடைவேளைக்குப் பின் இப்பொழுது “சிற்பி’யை ஆசிரியராகக் கொண்டு

கே. எஸ். சிவகுமாரன் 19
வெளிவருகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் சிற்பியின் "வானம்பாடி' இதழ் பற்றிப் பார்ப்போம்.
"வானம்பாடியின் செல்வாக்கினால் கவரப்பட்ட ஒரு சில புதிய ஈழத்துக் கவிஞர்களில் ஈழவாணனும் ஒருவர் எனலாம். ‘மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக் களம்' என்று தமது ஏடான "அக்னி’யை ஈழவாணன் அழைத்தார்.
அரசியற் கவிதை ஈடு
முதலாவது இதழிலேயே மனோரதியப் பாங்கில் அமைந்த வாசகங்களுடன் அவர் எழுதினார் . “நாங்கள் தீர்த்தக் கரையில் ஞானப் பிச்சை கேட்ட பிஞ்சுகள் அல்ல. ஒரு புதிய சகாப்தத்தின் இளைய ரத்தங்கள். பிரபஞ்ச வீதியில் சமுதாயக் கூரை முகடுகளை உலுப்பிவிடும் கொடுமைகளைக் காணும்போது எங்கள் ஆவேசம் கவிதையாகின்றது. புனருத்தாரணத்துக்காகவன்றிப் புது யுகத்திற்காகவே நாங்கள் எழுதுகின்றோம்”. இவ் வாசகத்தின் மூலம் அவர் ஏடு அரசியற் கவிதை ஏடு என்பது தெளிவாகிறது. “புள்ளிகள், பொட்டுகள், பூஜ்யங்கள்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கத்தில், ஏட்டின் நோக்கம் மேலும் தெளிவாக்கப்படுகின்றது.
இனி, இந்த இதழ்கள் ஒவ்வொன்று பற்றியும் சிறிது பார்ப்போம்.
முதலாவது இதழிலே, "திக் கவிதைகளும் திகம்பரக் கவிதைகளும்" என்ற தலைப்பில் ஈழவாணன் ஒர் அறிமுகக் கட்டுரையை எழுதியிருக்கிறார். திகம்பரக் கவிகள் என்ற

Page 69
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ120
இந்தத் தெலுங்கு மொழிக் கவிஞர்கள் இன்றும் அதே மூச்சுடன் எழுதுகிறார்களா? அல்லது அவர்களுடைய ஆவேசம் தணிந்துவிட்டதா? தெரியவில்லை. அவர்களுடைய படைப்புகள் கவிதைகளாக (மொழி பெயர்ப்பில்) அமையவில்லை என்பது எனது அனுபவம். வல்லிக் கண்ணன் 'தீபம்’ இதழில் எழுதிய கட்டுரைத் தொடர் ஒன்றிலே, "ஈழத்தில் புதுக் கவிதை” என்னும் சில பகுதிகளைச் சேர்த்திருந்தார். அக்குறிப்புகளைத் தீபகாந்தன் மறுபரிசீலனை செய்கிறார். நியாயமான கேள்விகளை அவர் எழுப்பியிருக்கிறார். வல்லிக்கண்ணனின் கட்டுரைத் தொடர் நூலாகவும் வெளிவந்து பரிசும் பெற்றுள்ளது. ‘புதுக் கவிதை' என்ற பிரயோகம் இல்லாமலே, ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி பற்றி யாரேனும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் (அக்காடமிக் விமர்சகர்கள்) ஆராய்ச்சி செய்தால் பயனுள்ளதாக இருக்குமே!
சுவடுகள், ‘விடிவு', ‘சமுதாய வீதியிலே', நூன் கவிதைகள்' என்ற தலைப்புகளில் வெளிவந்த படைப்புகள் பற்றிய ஒர் அறிமுகமும் இந்த இதழிலே இடம்பெற்றுள்ளது. இக்கால கட்டத்தில் எழுந்த கவிதைகளை இப்பொழுது பார்க்கும்பொழுது கவிஞர்/விமர்சகர் முருகையனின் கூற்று ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. அவர் கூறினார். முருகையனின் கூற்று
"தமிழோசையுணர்வுத் தட்டுப்பாட்டினால், மட்டமான ஒலிக் குழம்பல்களாகவும், காது ராவிகளாகவும் உள்ள இவை
புதிர்களாகவும், நொடிகளாகவும், தந்திரக் கணக்குகள் போலவும் உள்ளவை" நானும் சேர்த்துச் சொல்கிறேன்.

கே.எஸ். சிவகுமாரன் 121ے
“அரை வேக்காட்டு அரசியலறிவுடன் எழுதப்பட்ட எழுத்தாளரின் அனுபவம் உந்தாத அரசியற் சுலோகங்களை உள்ளடக்கியவை’ ‘அக்னி முதலாவது இதழில், டானியல் அன்ரனி, வ.ஐ.ச.ஜெயபாலன், குப்பிளான் ஐ.சண்முகன், அகசி, பண்ணாமத்துக் கவிராயர், தர்ம - புவனா ஆகியோரின் கவிதைகள் பாராட்டும்படியாக இருந்தன. வேறு பலரும் ‘கவிதைகள்' என்ற பெயரில் ஏதோ வரிகளை எழுதி "ஆழமாய் எழுதிவிட்டதாகப் பிரகடனஞ் செய்து கொண்டனர்.
“பிரகடனம்” என்ற பண்ணாமத்துக் கவிராயரின் கவிதை, ஒரு நல்ல அரசியற் கவிதைக்கு உதாரணமாக அமைகிறது. கவிஞனும், கவிதையும், கருத்தும் பிரித்துப் பார்க்க முடியாத விதத்தில் ஒருமை கொண்டுள்ளன. "நானொரு கருத்து, நானொரு கவிதை” என்று தொடங்கி, அதே வரியுடன் கவிதையை கவிஞன் முடிக்கிறார்.
அறிஞர் இ. இரத்தினம்
இரண்டாவது இதழிலே மாயகோவ்ஸ்கி பற்றிய அறிமுகம் ஒன்றை மறைந்த அறிஞர் இ. இரத்தினம் எழுதியிருக்கிறார். அரசியற் கவிஞர் பேர்டோல்ட் பிரெச்டின் கவிதை ஒன்றையும் 'மொழிவளவன்' என்ற புனைபெயரில் அவர் தமிழாக்கித் தந்துள்ளார். இரண்டுமே பயனுள்ள முயற்சிகள். இவர் பெயர்த்த மற்றொரு கவிதையும் "ஆபிரிக்கா” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆழமான விமர்சனம் என்றால், ஒருவரைத் தாக்கி எழுத வேண்டும் என்று சில எழுத்தாளர்களே கருதுகின்றனர். இத்தகைய அறியாதோர் பற்றி தீபகாந்தன், நல்லதொரு கட்டுரையை

Page 70
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ122
இரண்டாவது இதழில் எழுதியிருக்கிறார். கண்டனமே விமர்சனம் என்று மருளும் சிலர் இவர்களை விமர்சகர் களாகத் தம்மை உயர்த்திக் கொள்ள இன்னும் பலகாலம் படிக்க வேண்டும் போலிருக்கிறது.
‘புதுக்கவிதை' பற்றிய ஒரு குறிப்பும், "கடுகு' என்ற நூல் பற்றிய மதிப்புரையும் இடம் பெற்றுள்ள இந்த இதழில், அன்பு டீன், திக்குவல்லை கமால் ஆகியோர் எழுதிய இரு நல்ல கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. ச.வாசுதேவன், சபா. சபேசன், ஜவாத் மரைக்கார், அ.த.சித்திரவேல், மு.பவிர், பண்ணாமத்துக் கவிராயர், என், சண்முகலிங்கன், ஈழத்து நூன், பாலமுனை பாரூக் ஆகியோரின் முயற்சிகளும் ‘கவிதை நிலையைத் தொட முற்படுகின்றன.
மூன்றாவது இதழிலே - வ.ஐ.ச.ஜெயபாலன் "பாலி ஆறு நகர்கிறது” என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதையை எழுதியிருக்கிறார். ஜவாத் மரைக்கார், திக்குவல்லை கமால், மருதூர் மதி, சரவணையூர் சுகந்தன் ஆகியோர் கவிதைகளும் குறிப்பிடும்படியாக இருக்கின்றன. நவீன கவிதைக்கு, குறிப்பாக அரசியற் கவிதைக்கு வக்காலத்து வாங்குவது போல எஸ். வாசுதேவன் எழுதுகிறார் - “பசியால் வாடும் பாமரக் கவிஞர். எங்கள் தேவைகள் இலக்கணமற்றவை. அடக்க, அடக்க மீறுவோம் நாங்கள். ஆமாம்! நாங்கள் மீறல்கள்”.
ர்சகர் நஃமான் விமர்சகர் நுஃமான்
கலைஞர்/விமர்சகர் எம்.ஏநுஃமான் சிங்கள நிசந்தஸ் கவிதைகள் பற்றிய அறிமுகம் ஒன்றை மொழிபெயர்ப்பு களுடன் தந்துள்ளார். அத்துடன், பாலஸ்தீனக் கவிஞர்

கே.எஸ். சிவகுமாரன் 123ص
ஒருவரின் கவிதைத் தமிழாக்கத்தையும் தந்திருக்கிறார். பயனுள்ள முயற்சிகள். இ.இரத்தினம் நெருடா பற்றிய அறிமுகத்தையும் அவர் கவிதை ஒன்றின் தமிழாக்கத்தையும் தந்துள்ளார். பாரதி பற்றி மறு பரிசீலனை செய்துள்ள தீபகாந்தன் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கேள்விகளில் நியாயம் இருந்தாலும், பார்வையில், வரலாற்றுப் பின்னணியும், கவிஞனின் தனித்துவமும் திறனாற்றலும் சரியான முறையில் கிரகிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயினும் விமர்சனத்துக்குரிய விமர்சனக் கட்டுரை ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். நெல்லை நடேஸ், நெல்லை க. பேரனின் சிறுகதைத் தொகுப்பை விமர்சிக்கிறார். தனது தொகுப்பை விமர்சித்த திருமலை நவத்துக்கு சாந்தன் பதில் அளிக்கிறார். விமர்சனத்துக்குப் பதில் விமர்சனம் எழுதுவதாயிருந்தால், நாம் எல்லோருமே விமர்சகர்களாகத் தான் செயற்படுவோம். படைக்கத்தான் ஆள் இல்லாமல் போய்விடும். விமர்சனம் என்பதே தனிநபர் அபிப்பிராயந் தான். அது அவர் அபிப்பிராயம் என்று அமைதி காண்பதே பொருத்தமுடையது. விமர்சனத்துக்குப் பதில் எழுதிய சாந்தன், தான் ஒரு மேதை என்ற தொனிப்பட எழுதி யிருக்கிறார். ஆனால் உண்மைத் தரிசனமோ வேறாக இருக்கிறது.
வெறும் ஊர்வலக் கவிதை
“புதுக் கவிதை” வெறும் ஊர்வலக் கவிதையாக மாறுவதை அக்னி இதழ் நான்கில் ஆசிரியர் இனங் கண்டுகொண்டார். “சரி சரி இனி என்ன?” என்ற தலைப்பில் கவிஞர் முருகையன் சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார். கவிஞரின் கருத்துப்படி, “கவிஞர்கள்

Page 71
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܥܠ122
வாழ்க்கையை ஊன்றி நோக்கி ஆழ்ந்து பார்க்கும் தெளிவைப் பெறுதல் வேண்டும். கலைத்தன்மை பெற்று நெஞ்சத்தில் நிலைக்கத்தக்க ஆற்றலோடு கூடிய படைப்புகளை இயற்ற வேண்டும். துண்டு துணுக்கு ஆக்கங்களில் மாத்திரமே புலனைச் செலுத்தாது, சற்று நெடிய முயற்சிகளிலும் ஈடுபடுதல் இவ்வழியில் உதவி செய்யக்கூடும். கவிதைகளின் பின்னணியின் அடிநாதமாக ஒடும் குறைந்தபட்ச ஓசைகள் சுருதியாகத் தம் கவிதைகளில் இழைய விடத் தெண்டிக்க லாம். கவிதை வாசகர்களாகிய மக்களின் புலனொருமைப் பட்டுத் தம்பூரா மீட்டும் பாங்கிலே உரிப்பொருளின் வேகத் அதுக்கும் பண்புக்கும் ஒரு பிற்புலமாகும் வகையிலே, இந்த ஒசைக் கோலத்தை அமைத்துக் கொள்ளலாம்”.
நான்காவது இதழிலே சபா ஜெயராசா, சாந்தன், கல்முனை பூபால், ஆத.சித்திரவேல் ஆகியோரின் முயற்சிகள் கவிதையாக மிளிர்கின்றன. தி.க. சிவசங்கரனின் நையாண்டிக் கவிதை ஒன்றும் மறு பிரசுரஞ் செய்யப்பட்டுள்ளது. ‘வெளிச்சத்தில்' என்ற பகுதியில்,"இன்றைய பிரச்சினைகளை ஒரு பமாமூலாகவன்றி அதன் உண்மையான தாக்கத்தின் ஏதுக்களாகக் கவிதைகள் அமைய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "அக்னி முதல் மூன்று இதழ்களையும் யோ.பெனடிக்ட் பாலன் தமக்கே, அதாவது ஈழத்து மார்க்சிய விமர்சகர்களிற் சிலருக்குரிய விதத்திலே விமர்சிக்கிறார். "வானம்பாடி" வெளிவருமுன் எழுதிய ‘எழுத்து கவிதைகளை அறிஞர் வானமாமலை புறக்கணித்தாராம். பெனடிக்ட் பாலனும் இதனை மனங்கொள்ள வேண்டும் என்கிறார். இவ்வாறு செய்வதனால் மனித அனுபவத்தின் ஒரு பகுதியை இவர்கள் நிராகரிக்கிறார்கள். கிஸ்டோபர் கோல்ட்வெல், ரால்ப்பொக்ஸ், அலிக் உவெஸ்ட், ரேமண்ட் வில்லியம்ஸ்,

கே.எஸ். சிவகுமாரன் 125صر
ஆர்நல்ட் கெட்டில், டேவிட் க்ரெய்க் போன்ற பிரிட்டீஷ் மார்க்சிய விமர்சகர்கள் இவ்வாறு மனித அனுபவத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிவிட மாட்டார்கள்.
ஞானி' நூல் விமர்சனம்
நான்காவது இதழிலே “ஞானி’ என்ற தமிழ்நாட்டு மார்க்சிய விமர்சகர் ஒருவரின் நூலை, ஜவாத் மரைக்கார் விமர்சித்திருக்கிறார். அதாவது "ஆழமாகத் தாம் பார்த்துக் கண்டிக்கிறார். உண்மையில் தொனியிற் காணப்படும் ஆழத்தை இனங் கண்டுகொள்ள முடியாமல், ஜவாத் மரைக்கார் தமது முதிர்ச்சியின்மையைக் காட்டியிருக்கிறார் எனலாம். ஞானியின் நூலை, ஜவாத் மரைக்கார் மதிப்பிடுகிறார் - "சுருக்கமாகச் சொல்வதாயின், ஆழமான பார்வையோ அல்லது முழுமையான பார்வையோ அற்றதாக இப்பிரசுரம் இருந்தபோதிலும் கலை, இலக்கியம் பற்றிய முழுமையான பார்வைகள் ஏற்பட இது அடிப்படையாக அமையக் கூடும்.” ஆறு வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்த மதிப்புரை செல்லாக் காசாயிற்று. காரணம், இன்று ஒரு முக்கியமான நவீன விதமான அணுகுமுறைகளைக் கொண்ட “பரிமாணம்” என்ற ஏட்டை ஞானி நடத்தி வருவதுதான். ஞானி அன்றும் இன்றும் ஆழமாகத்தான் எழுதுகிறார். ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் தான் பிறரின் எழுத்துக்களை ஆழமற்றவை எனக்கூற முற்படுகிறார்களோ எனக் கருத வேண்டியிருக்கிறது.
நல்ல சிறுகதையாசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசின் கதைத் தொகுதியை சு.வே. நல்ல முறையில் விமர்சிப்பதும், "அக்னி’ நான்காவது இதழில் இடம்

Page 72
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
பெற்றுள்ளது. இ.இரத்தினம் பிரஞ்சுக் கவிஞன் ரம்போவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
கறுப்புக் கவிஞர்கள்
அக்னி ஐந்தாவது இதழ், கறுப்புக் கவிஞர்களின் ஆக்கங்களைக் கொண்டு வெளிவந்தது. நல்ல முயற்சி. பலரும் இக்கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தனர். கறுப்புக் கவிஞர்கள் பற்றிய குறிப்புகளும், விளக்கங்களும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. இ. இரத்தினம் இத்தாலியக் கவிஞர் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். யோ.பெனடிக்ட் பாலன் அக்னி முதல் மூன்று இதழ்கள் பற்றிய தமது தொடர் விமர்சனத்தில், கவிதைகள் என்று கருதப்படக் கூடியவற்றை, கவிதைகளே இல்லை என்று கூறி, தொழிலாள வர்க்க உச்சாடனங்கள் மாத்திரமே கவிதை களாக வேண்டும் என்று இலக்கிய அம்சங்களை உதறித் தள்ளிவிட்டு, சுலோகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். ஆனால் இவை இலக்கியமாகுமா? உலக இலக்கியப் பரப்பில், இந்தவிதமான வரட்டுப் பார்வைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. ஹியூ மக்டயர் மாட்டின் கவிதைகள் கூட வரட்டுச் சுலோகங்களின்றியே உருப் பெற்றுள்ளன.
இலங்கையில் வெளிவந்த நல்ல சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று அ.யோகராசாவின் தொகுதி. “இருப்பியல்” (எக்சிஸ்டென்சலிசம்) பாங்கில் எழுதப்பட்ட இக்கதைகளை, இனங்காண மறுத்த "மாக்ஸி” என்பவர், யோகராசாவின் அனுபவங்களைச் சிறுபிள்ளைத்தனம் என ஒதுக்கி விடுகிறார். ஆர்னல்ட் கெட்டில் போன்ற மார்க்சிய விமர்சகர்கள் ஜேம்ஸ் ஜொய்ஸ், எமிலி புரொண்டே
 

கே. எஸ். சிவகுமாரன் 127
போன்றவர்களை உரியமுறையில் விமர்சிக்கையில், நமது மார்க்சிய விமர்சகர்களில் சிலர் தமது அனுபவத்தையும், பார்வையையும் வேண்டுமென்றே குறுக்கிக் கொள்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதாய இல்லை. "மரபுக் கவிதையும் புதுக் கவிதையும்” என்ற தலைப்பில் இராஜ தர்மராஜா ஒரு தொடரை எழுதத் தொடங்கினார். ஆனால் ‘அக்னி" ஐந்தாவது இதழுடன் நின்றுவிட்டது. மொத்தத்தில் நவீன கவிதை பற்றிய சிந்தனைகளை உருவாக்க "அக்னி’ இதழ்கள் நிச்சயம் உதவின.
“புதுக் கவிதை” என்ற பிரயோகம் இனி வேண்டாம். தற்காலக் கவிதை என்றே அழைப்போம். முதலில் கவிதையாக அமையட்டும். “ஏதாவது ஒன்றை உன்னதமான முறையில், அனுபவ வெளிப்பாடாக, தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு, ஒசை லயத்துடன் கூறுவது கவிதை” என்பேன்.
(தினகரன், 2007 1981)
0, 0. 0x8 w 8

Page 73
@
நுஃமானின் கவிதைகள்
1964 - 1979 ஆண்டுகளில் கவிஞர் நுஃமான் எழுதிய தனியுணர்வு சார்ந்த கவிதைகளின் தொகுப்பு 'அழியா நிழல்கள்' (நர்மதா வெளியீடு). கவிஞர் கூறுகிறார்
“சமூகக் கொடுமைகளுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு இயல்பானதோ அதுபோல் தனக்கே உரிய தனி அனுபவ உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இயல்பானதுதான்'. நாமும் ஏற்றுக் கொள்கிறோம். இவர் எழுதிய "காலி வீதியில்” என்ற கவிதை உண்மையிலேயே ஒரு துரித படிமக்காட்சி. திரைப்படங்களில் ‘மொன்டாஜ்’ (தனித்தனியாக எடுக்கப்பட்ட படங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி முழுத் தொடராக இணைத்தல்) என விவரிக்கப்படும் தன்மை கொண்ட ஒர் உணர்வுப் பரிமாற்றுக் கோலம்.

கே.எஸ்.சிவகுமாரன்
கவிதையைப் பாருங்கள்
காலி வீதியில் அவளைக் கண்டேன் ஐந்து மணிக்குக் கந்தோர் விட்டதும் கார்களும் பஸ்களும் இரைந்து கலந்த நெரிசலில் மனிதர் நெளிந்து செல்லும் காலி வீதியில் அவளைக் கண்டேன் சிலும்பிய கூந்தலைத் தடவியவாறு பஸ் நிறுத்தத்தில் அவ்வஞ்சி நின்றதைக் கண்டேன் அவளைக் கடந்து செல்கையில் மீண்டும் பார்த்தேன் "Very nice girl'
66 மனம் முணுமுணுத்தது வழியில் நடந்தேன் அவசர காரியமாகச் செல்கையில் நினைவும் அதிலே நிலைத்து நிற்கையில் காலி வீதியில் கண்டேன் அவளை கார்களும் Lബ്ദബ്രഥ இரைந்து கலந்த நெரிசலில் நானும் நெரிந்து நடந்தேன்
令 8x8 X

Page 74
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
நுஃமானுக்கு மகத்தான கவிதைகளைப் படைப்பது நோக்கமல்ல. தனது அனுபவம், உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் கவிதையாகப் பரிவர்த்தனை செய்கிறார் அவ்வளவுதான். ஆனாலும் அவர் பரிவர்த்தனை நமக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது.
“ஏ பொயம் பிகின்ஸ் வித் டிலைட் அன்ட் என்ட்ஸ் வித் விஸ்டம்’ என்றான் அமெரிக்க கவி ரொபர்ட் ப்ரொஸ்ட். அதுபோல நுஃமானின் கவிதைகள் எல்லாமே திருப்தியளிக்காவிட்டாலும், சிலவேனும் மகிழ்ச்சியைத் தருகின்றன.
'ரொமான்டிக் (மனோதிய) கவிஞர்கள்' என்றழைக்கப் பட்ட 19ம் நூற்றாண்டு ஆங்கிலேயக் கவிஞர்கள் உண்மையிலேயே இயற்கையைப் பாடிய மனிதாபிமானக் கவிஞர்களுமாவர். அவர்களுள் ஒருவர் உவிலியம் உவேர்ட்ஸ் வர்த். நமது மஹாகவியும் ஒரு தரமான மனோதியக் கவிஞராவார். மனோதியக் கவிஞர் என்று ஒருவரை அழைத்தால், அது இழிவானதல்ல. “ரொமாண்டிக்' என்பது 'கற்பனாலயம்' என்றும், யதார்த்தத்துக்குப் புறம்பானது என்றும் ஒர் அர்த்தத்தில் சிலர் வியாக்கியானம் கூறு வதுண்டு. வெறும் சிருங்காரக் கதைகளையும் “ரொமாண்டிக் என்பர். ஆயினும் கவிதையைப் பொறுத்தமட்டில், குறிப்பாகக் கடந்த நூற்றாண்டு ஆங்கிலக் கவிதையைப் பொறுத்த மட்டில் “ரொமாண்டிக் பொயட்ரி (மயக்கத்தைத் தவிர்க்க தமிழில் மனோதியம் என்போம்) என்பது குறிப்பிடத்தக்க சத்தான கவிதைகளைக் குறிக்கும். உலகின் சிறந்த கவிஞர்களான உவேர்ட்ஸ்வர்த், ஷெலி, கீட்ஸ், ப்ளேக் போன்றவர்கள் எல்லாம் மனோதியக் கவிஞர்கள்தாம்.
 

கே. எஸ். சிவகுமாரன் 131 كم
அத்தகைய கவிஞர்களின் படைப்புகளிற் காணப்பட்ட பண்புகள் சிலவற்றைத் தமிழில் எழுதும் பல கவிஞர்களிடத்திலும் நாம் காணக் கூடியதாக இருக்கிறது. மஹாகவியிடம் கவித்துவப் பாங்கையறிந்து தனது சொந்தக் கவிதானுபவத்தைச் செப்பமாகப் பரிவர்த்தனை செய்யப் பழகிக் கொண்ட நுஃமான் தனது ஆரம்பகாலக் கவிதை களில் ‘மனோதியச் சூழலுடன் எழுதியதில் வியப்பில்லை.
'கவிதை உள்ளம்' என்ற தலைப்பிலே ஓர் அருமையான இயற்கைக் கவிதையை நுஃமான் தந்துள்ளார்.
பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வைரமுத்து ஒரளவுக்கு வாலி மற்றும் சிலர் போன்றோர் திரைப்படப் பாட்டுக்கள் மூலம் கவிதைப் பரிவர்த்தனை செய்துள்ளன ராயினும், இறுக்கமான படிமங்களில் நுஃமான், சில்லையூர் செல்வராசன், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ர.ஜெயபாலன், சிவசேகரம், சேரன், மஹாகவி, நீலாவணன், முருகையன் போன்றோர் (இது பூரணமான பட்டியல் இல்லை. வரிசைக் கிரமப்படிதான் திறனாற்றல் முக்கியத்துவம் என்றும் இல்லை என்பதைக் கவனிக்க) கவிதையையே தருகின்றனர்.
செயலையும், விசாரணையையும் ஒரே வரியில் கவித்துவமாகத் தீட்டுகிறார் நுஃமான் “களவும் காரியமும்” கவிதையிலே, அதில் வரும் ஒரு வரியைப் பாருங்கள். "குளிர்ந்த நீர் மொண்டு வண்ண நுடக்குடன் அசைந்தசைந்து நொசிகிறாள்'.
மஹாகவியின் கவிதைகளுக்கே உரித்தான பேச்சு
வழக்கு ரீதியில், இலகுவான சம்பாஷணைப் போக்கு மற்றும் மெல்லிய கிண்டல், நுண்மையான அவதானிப்புகள்,

Page 75
132\, காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
சிலேடை போன்ற பண்புகளை நுஃமானும் தமது ஆரம்பகாலக் கவிதைகளில் உள்வாங்கியிருக்கிறார் என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகள் சான்று. அவற்றுள் ஒன்று ‘மழையில் நனைபவர்களுக்காக,
நுஃமானின் உவமைகளும், உருவகங்களும் பெரும் பாலும் புதுப்புனைவானவை. பொதுவாக கிழக்கிலங்கைக் கவிஞர்கள் எல்லோருமே அணிச் சிறப்புக்களை உள்ளடக்கித்தான் கவிதை எழுதுகிறார்கள். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை முதல் செ.குணரத்தினம் வரை, ஏன் புதிதாகப் ‘புதுக்கவிதை' என்ற பெயரில் எழுதுபவர்கள் கூட கூடியவரை புதுப்புனைவாகவே ஒப்புவமைகளைக் கொண்டு வருகின்றனர்.
'வைகறை நிலவு வாசலில் விழுந்தது நெய் உறைந்தது போல் நீண்ட வானில் மேற்கே கவிழ்ந்து விழப் பார்க்கிறது
என்பது ஒரு கவிதையின் ஆரம்பம். ஒசை முறிவு காணப்பட்டாலும் 'நெய் உறைந்தது போல்' என்பது புதுப்புனைவுதான்.
மற்றொரு பாராட்டும்படியான ஆக்கம்_
"சின்னதொரு மழைத்துளியும்
கீழ்நோக்கிச் சிப்பியினுள் வீழ்ந்து
சேர்ந்து
தன் இயல்பை அதனோடு கலப்பது போல்
நானும் உனைச்

கே. எஸ். சிவகுமாரன் 133ك
சார்ந்து நிற்பேன்" "புள்ளியளவில் ஒரு பூச்சியினைத் தற்செயலாய்ச்
தவித்துக் கலங்கிய"
மஹாகவி இறந்துபோன பொழுது, நுஃமானின் நெஞ்சமும் பதறியது. நேர்மையான உணர்ச்சி வெளிப்பாடாக நான் வளர்த்த கருப்பையை நுஃமான் எழுதியிருக்கிறார்.
மஹாகவி ஊக்கிகளிலும் ஒருவராக இருந்ததுபோல, நீலாவணனும் நுஃமானின் வளர்ச்சிக்கு உதவியிருப்பதை பின்னவரின் வரிகள் மூலமே அறிந்து கொள்கிறோம்.
நுஃமானின் சமூகப் பிரக்ஞை எத்தகையது, சமூகப் பணிக்காக தமது கவிதையாற்றலை அவர் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார் என்றறிய அவருடைய “மழை நாட்கள் வரும்” கவிதைத் தொகுப்பைப் பார்த்தேன். ஏமாற்றமாயிருந்தது.
1967-1981 காலப் பகுதியில் இவர் எழுதிய சமூக/ அரசியல் சார்பான கவிதைகளின் தொகுப்பிலே முதல் ஆறு கவிதைகளும் சப்பென்றிருக்கின்றன. ஏனைய கவிதைகள் பல கவிதைத் தன்மையிழந்து வெறும் கூற்றுக்களாகவே இருக்கின்றன.
“சமூக, அரசியல் நடவடிக்கைகள் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி” என்கிறார் நுஃமான். மெத்தச்சரி.

Page 76
134a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
“சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு படைப்பாளி அதில் அக்கறை காட்டுவது தவிர்க்க முடியாதது” என்கிறார். அதுவும் சரிதான். ஆனால், அவருடைய பிற்காலக் கவிதைகள் இலக்கியத் தன்மையை இழந்துவிட்டன என்றே கூற வேண்டும்.
இலைக்காரி (பேச்சோசையும் பழகு தமிழும்), துயில் கலைந்தோர் (மார்க்சியக் கோட்பாடு), மே முதல் திகதி (கிண்டல்), கண் விழித்திருங்கள் (மார்க்சிய இலட்சியம்) அவர்களும் பூனைகளும் நாய்களும் (இழிவரல்), நேற்றைய மாலையும் இன்றைய காலையும் (நடைமுறை வாழ்வு) புத்தரின் படுகொலை (பேரினவாதம்) ஆகியன உள்ளடக்கச் சிறப்புக் கொண்ட கவிதைகள் எனலாம்.
எம்.ஏ நுஃமான் மொழியியலின் எம்.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த கால் நூற்றாண்டாக கவிதை, கட்டுரை (ஆழமான விமர்சகர் எனக் கருதப்படுபவர்) எழுதி வருபவர். பல்கலைக்கழக விரிவுரையாளர், 'கவிஞன் (1969 - 70) ஏட்டின் ஆசிரியர். "தாத்தாமாரும் போர்களும்", "பலஸ்தீனக் கவிதைகள்”, “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்” ஆகியன இவருடைய தனி/கூட்டு முயற்சிகளாகும்.
(தினகரன் வார மஞ்சரி - பெப்ரவரி 19 1984)
Kw 40 2.0 8x ex- 0x8

(s)
இஸ்லாமிய பக்திப் பாடல்கள்
சிIய்ந்தமருது (கிழக்குப் பிராந்தியம்) என்ற இடத்தைச் சேர்ந்த வைத்தியர் ஏ.எம்.அபூபக்கர், “மதுக்கலசம்', 'கவிதாஞ்சலி, நான்', ‘நீ', 'நம்பிக்கை மணிகள், போன்ற செய்யுள் நூல்களையும், வேறு பல இஸ்லாமிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதிக் கவனத்தைக் கவர்ந்துள்ளவர். "ஆன்மீக உலகிலே". உயர் பதவியை அடைவதில் ஆர்வங்கொண்ட அபூபக்கர், முறையீடு' என்ற தனது புதிய புத்தகத்தைத் தந்திருக்கிறார். இதுவும் ஒரு சமயச்சார்புடைய பாடல் நூல். ‘சுயம்', 'சமூகம்' என்ற இரு பிரிவுகளில் ஆசிரியர். 1960லும் 1981லும் எழுதிய இரு நீண்ட பாடல்கள் இப்புத்தகத்தில் அடக்கம். அரபுப் பதங்கள் பாடல்களில் இடம்பெறுகின்றன. இஸ்லாமியத் தத்துவக் கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றிற்கான விளக்கத்தையும் ஆசிரியர் சேர்த்திருக்கிறார்.

Page 77
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
“சமூகம்’ பகுதியில் முதல் மூன்று பாடல்களும் அல்லாஹ்வின் பெருமை பாராட்டப்படுகிறது. “புத்தகம் ஒன்றுதனைப் படைத்துத் தாராய்” என்று அல்லாஹ்வை வேண்டும் பாடலாசிரியர், இஸ்லாம் மதத்தினரின் செயற்திறனாற்றலை தொடர்ந்து வரும் பாடல்களில் எடுத்துக்காட்டுகிறார். அதேசமயம் 13வது பாடலில், “அரிய பொருள், ஆட்சியுடன் அவனி எல்லாம் அனைத்தையுமே இரட்சிக்கும் அல்லாஹ்வுக்கே உரிமையென உணர்ந்திருந்த காரணத்தால் உலகத்தைப் போரிட்டு வென்றெடுத்தோம்” எனவும் காரணங் காட்டுகிறார். “பண்டமென்டலிஸம்" என்ற ஈரானியச் சமகாலத் தத்துவக் கருத்துக்களின் பிரதிபலிப்பை கவிஞர் அபூபக்கரிடம் காணமுடிகிறது. இதனைத்தான், இப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியும் சுட்டிக் காட்டியுள்ளார்.
"அண்மைக் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கிளம்பியுள்ள "இஸ்லாமிய மீட்பு இயக்கம்", "இஸ்லாமிய அடிப்படை வாதம்” ஆகியவற்றின் தாக்கச் சாயைகளை இக்கவிதையில் காண முடிகின்றது. எனினும் சுய முறையீட்டின் கருத்து நிலைத் தொடர்ச்சியையும் இதிலே காணக்கூடியதாகவேயுள்ளது.” என்கிறார் சிவத்தம்பி.
இஸ்லாமிய உணர்வைத் தட்டியெழுப்ப முனைகிறார் ஆசிரியர். அன்றைய நிலையை எடுத்தோதிய அவர் 21ஆம் பாடலிலே, “இன்றெமது நிலைபாராய். இழிவு சூழ்ந்த எம்மினத்தின் படுதோல்விக்காதை கேளாய்.” என்று முறையீடு செய்கிறார். “தலைநிமிர்ந்து நின்றிருந்த முஸ்லிம் இன்று தோல்விகளின் பாசறையாய் விளங்குகின்றன” (23ம் பாடல்) என்பதே அபூபக்கரின் முறையீடு. ‘தங்களுக்குள்
 

கே. எஸ். சிவகுமாரன் 137ك
ஒரு நூறு பிளவு செய்து தசை சார்ந்த இஸ்லாத்தைப் பிரித்து விட்டார்” (33), "மக்களுக்கு வழிகாட்டும் மணிவிளக்காய் மாநிலத்தில் வாழ்ந்திருந்த முல்லா இன்று தக்கவழி தெரியாமல் தடுக்கி வீழ்ந்து தலை தூக்க முடியாமல் திணறுகிறார்"(41) என்பது கவிஞரின் அவதானிப்பு. “அற வாழ்வின் பரிசாகச் சுவனமொன்றை அவர்க்காக இப்புவியில் அமைத்து வைப்பாய்” என்று இறைவனை வேண்டுவதே கவிஞரின் மாற்றாலோசனை.
ஆசிரியர் சமூகத்தில் நின்று ஒதுக்கி வாழ்கிறாரோ என்ற ஐயம் எழுகின்றது. அவரே பாடுகிறார், "தன்னினத்தைப் பிரிந்திட்ட குயிலாய் நின்று துயர் படிந்த சிறு குரலிற் கூவுகின்றேன்."(53)
“சமூகப்' பகுதியிலே ஒர் இலட்சியவாதியின் (ஐடியலிஸ்ட்) கதைகளையும் விண்ணப்பங்களையுந்தான் கண்டோம். 'சுயம்' பகுதியிலே, 'விறகை உண்ணும் செந்தீயாய் வளரும் என்தன் மாசுக்களைக் குறைய உன்தன் அருளொளி யால் குன்றச் செய்தே அழித்திடுவாய் (19) என வேண்டி இருக்கிறார் ஆசிரியர். அங்கும் 'சமூகம்” பகுதியில் வந்த அதே தோரணைதான். கவித்துவமான கலைப்பகுதிகளும் இங்கே காணப்படுகின்றன. உதாரணமாக விட்டில் போல தானும் இறைவனின் ஒளிச் சுடரில் வந்து விழவேண்டும் என்று (20) கவிஞர் விண்ணப்பிக்கிறார். விண்மீன்கள் அழகூட்டுவதுபோல தனது பணிகளும் தானும் நாட்டிற்கு அழகாய் அமைய ஆசிரியர் விருப்பம் தெரிவிக்கிறார். (51)
தமிழில் நிறைவாகக் காணப்படும் பக்தி இலக்கியம் தொடர்பாக பேராசிரியர் சிவத்தம்பி, இந்த நூலில் தரும்

Page 78
13৪৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
விளக்கம் ஒரு புதுமைக் கருத்தாக மனத்தில் பதிகிறது. சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.
“கடவுளை 'ஒளி'யாக விளங்கிக் கொள்ளும் நான் அனுபவத்தைவிட இன்னொரு நிலைப்பட்ட மத அனுபவமும் உண்டு. சூழவுள்ள சமூகத்திற் காணப்படும் சமூக உறவுகளுக்கிடையே அந்தச் சமூக உறவுகளின் அச்சில் இறைவனை விளங்கிக் கொள்ளும் அல்லது இறைவனோடு உணர்வு நிலைத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைமை அது. சமூக உறவினடியாக வரும் கருத்துக்களைக் கொண்டு இறைவனை "உணர முனையும் எத்தணிப்பு அது. தமிழின் பக்திப் பாரம்பரியம், தமிழில் இவ்வகை இலக்கிய வெளிப்பாட்டை மிகச் சிறப்புடைய ஒன்றாக்கியுள்ளது.”
வழக்கம் போலவே நல்ல கருத்துக்களை பேராசிரியர் சிவத்தம்பி இந்த நூலில் வழங்கியுள்ளார். அவை சிந்தித்துச் செயற்படுத்தப்பட வேண்டியவை. கவிஞர் அபூபக்கரே இந்த பணியையும் செய்து உதவுவார் என்பது எனது நம்பிக்கை.
(தினகரன் வாரமஞ்சரி)
0 KM 44) 0. 0. 0:

(9)
மன்னாரிலிருந்து ஒரு மனிதாபிமானக் குரல்
கிலைவாதி கலீல் மன்னாரைச் சேர்ந்த ஒரு கலைஞர். கவிதை, சிறுகதை, ஓவியம் ஆகியன அவர் கலைவடிவங்கள். பயிற்றப்பட்ட சித்திர ஆசிரியர், ஒலிபரப்பாளர். “ஒரு வெள்ளி ரூபாய்” அவர் சிறுகதைத் தொகுப்பு. தமிழ் மொழியைச் செயற்பாட்டுத் தன்மை கொண்டதாகப் பயன்படுத்துபவர். பெரும்பாலானவர்களைப் போலவே ஒரு கால கட்டத்தில் அதி தீவிரவாதம் பேசி, முதிர்ச்சி காரணமாக மிதவாதியாகப் போய்விட்டார்.
இவருடைய 50 சொற் சித்திரங்களின் தொகுப்பு 'கருவறையிலிருந்து கல்லறைக்கு. இச்சித்திரங்களைக் கவிதை' என்றே கலைவாதி கலீல் அழைக்கிறார். அக்கூற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் ‘கவிதை நயத்தைவிட சொற் சாதுரியமே தலைதூக்கி நிற்பதுதான்.

Page 79
140৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
கலீலின் இத்தொகுப்பிலே, சமுதாயக் கிண்டல், பெண்களின் (குறிப்பாக விலை மாதர்களின்) அவலநிலை, மன்னார் பட்டணக் குறைபாடுகள் ஆகியன சித்திரிக்கப்படுகின்றன. இவருடைய இந்த 'முயற்சியிலே, எனக்குப் பிடித்த சில பகுதிகளைத் தருகிறேன். இவை உங்களுக்கும் பிடிக்கக் கூடும்.
y * 古
என்ன இருந்தாலும் இரவுப் பெண்
நாணக்காரிதான்
இல்லையேல் செக்ஸ் சேட்டைகளைப் பார்க்கக் கூசிக் கண்ணை மூடிக் கறுப்பாக்கி விடுவாளா?
* 火
கணவனுடன் இல்லறம் நடத்தியே கல்லில் துவைத்த 'பெட்ஷிட்டாய் மனைவி கிழிந்துபோனாள் ஆண்களில் எத்தனை பேருக்கு இரவு தெரிகிறது எத்தனை பேருக்கு இரவுமட்டும் தெரிகிறது. பகல் வாழ்க்கையில் பங்கில்லையாம்
அவளுக்கு கூலியற்ற வேலைக்காரி.
* 火》

கே. எஸ். சிவகுமாரன்
எங்கள் தலைவிதிகளை நாங்கள் சுமக்கிறோம். எங்கள் தந்தை,
எங்கள் தாத்தா, தாத்தாவின் தாத்தா
எல்லோரும் இதையேதான் சொன்னார்கள் நாங்களும் நம்பி வாழ்ந்தோம் ஏனெனில் மூதாதையர் மொழி இது பள்ளி சென்றோம் அங்கும் அதே பல்லவிதான் தற்செயலாகத் தாடிக் கிழவனின் தத்துவம் படித்தோம். உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய்
வெளிச்சம் காட்டின பல்லவி தன்னை இப்படி மாற்றினோம் "எங்கள் தலைவிதி இனிமேல் மாற நாங்கள் செய்வோம் புது விதி"
紫 瓷 安
உன்னையே உலகின் சக்தி மிக்கவன் என்கிறார்கள் எம் மூரில் நீயேன் நீர்க்கடுப்பு நோய்கண்டு நிலைகுலைந்து போனாய்.
营
எங்கள் தெருக் குழந்தைகள் ஒடிப் பதுங்கி விளையாடத்தானே எங்கள் வீதிகள்

Page 80
142a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
குண்டும் குழியுமாய் அமைக்கப் படுகின்றன. மன்னார் நகர பைப்புக் குழாய்கள் முதலைமார்க்கா? இல்லையேல் எங்கள் குழாய்கள் காலையும் மாலையும் முதலைக் கண்ணிர் வடிப்பது ஏனாம்
கலைவாதி கலீல் ஆற்றலுடையவர். ஆயினும், 'கவிதை' என்று நான் எதனைக் கருதுகிறேனோ அது மாதிரியான படைப்புகள் இத்தொகுதியில் அதிகமில்லை. இத்தொகுப்பில் இடம்பெற்றவை மரபுக் கவிதைகளுமல்ல, 'புதுக்கவிதைகளு மல்ல என்கிறார் கலீல். ‘புதுக்கவிதை' என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 60களில் பிரபலமான இத்தொடர் இன்று அர்த்தமற்றதாகி விட்டது. இது பற்றித் தனியாக நாம் ஆராய வேண்டும்.
வைரமுத்துவின் நகல் என்று கூறிக்கொள்வதில் கலீல் வெட்கப்படவில்லை. ‘இந்த அவசர யுகத்திலே சில நியாயபூர்வமான கருத்துக்களைச் சொல்ல இத்தகைய ஓர் இலக்கிய வடிவமே உபயோகமானது என்பதே நான் இவைகளை எழுதியதன் பிரதான உண்மையாகும்' என்கிறார் கலைவாதி கலீல். இது ஒரளவுதான் உண்மை. ஏனெனில் புதுக்கவிதை எனப்படுபவை புதிய வடிவமாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக அவை இலக்கியம்' அல்ல. இது பற்றியும் பின்பு தனியாக ஆராய்வோம்.
(தினகரன் வார மஞ்சரி)
· A LO & ex

(බ්‍ර
றஷ்மி ஊடாக உளவியல் சமூக யதார்த்தம்
OIன்னைப் பொறுத்தமட்டில் நல்ல கவிதைகள் திருவாசகம் போன்று என்னை நெக்குருக வைக்கின்றன. ஆக்க இலக்கியங்களுள் என்னைப் பரவசப்படுத்தும் வடிவம் கவிதைதான்.
நமது நாட்டு எழுத்தாளர்கள் சிறுகதைகளை எழுதுவதைவிடக் கவிதைகளை (புதுக் கவிதை என்ற
களையும் கூற்றுக்களையுமல்ல) எழுதினால் பயனளிக்குமென நினைக்கிறேன்.
ஏனெனில், ஒரு நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்து
விடலாம். ஆனால், சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறும் ஒவ்வொரு சிறுகதையையும் படித்துப் பகுப்பாராய்வது

Page 81
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
நீண்ட நேரம் எடுக்கும் பணி. தவிரவும் எழுதப்படும் சிறுகதைகள் அனைத்துமே இலக்கிய ரீதியாக சுவை பகிர்வது மாயுமில்லை. எனவேதான் கவிதையில் பெருவிருப்புடை யனாய் இருக்கிறேன்.
அண்மைக்காலங்களில் நமது புதிய பரம்பரை எழுத்தாளர்களின் கவிதைத் தொகுப்புகளைப் படிக்க நேர்ந்தது. எனக்கும் பக்கச் சார்பு உண்டு. அதாவது உள்ளடக்க ரீதியாக சமூக விமர்சனங்களை வெளிப்படுத்தும் கவிதைகளை அவற்றின் தரங்கண்டு லயிக்கும் அதே வேளையில் எனக்கு உளரீதியாக அகவுணர்வுப் பாடல்களே அதிகம் பிடிக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தனி மனித உணர்ச்சிக் கவிதைகளே (Personal Poems) என்னை அதிகம் ஆட்கொள்கின்றன.
அத்தகைய கவிஞர்களுள் ஒருவர் - கிழக்கைச் சேர்ந்த (கிழக்கிலுள்ள கவிஞர்களிடம் சூழலுக்கேற்ப கற்பனை நயம், லயம், நாளாந்த வாழ்க்கைக் கோலங்கள் மற்றைய பகுதிக் கவிஞர்களைவிட அதிகம் காணப்படுகின்றது என்பேன்) றஷ்மியின் முதலாவது கவிதைத் தொகுதி “காவு கொள்ளப்பட்ட வாழ்வு' முதலாய கவிதை எக்ஸில் வெளியீடாக 2002இல் அழகிய முறையில் வெளிவந்தது. 106 பக்கங்களைக் கொண்டு கவிஞர் சேரனின் பின்னுரையுடன் இத்தொகுப்பு வெளிவந்தது.
றஷ்மியின் கவிதைகள் எவ்வகைப் பட்டன? ஆங்கில இலக்கியவகை மரபில் வகைப்படுத்துவதாயின் இவற்றை கதை நிகழ்ச்சி விபரம் சார்ந்த Narative கவிதைகள் எனவும் உாைர்ச்சி வெளிப்பாடு சார்ந்த Lyrical உணர்ச்சிக் கவிதைகள்
 

கே.எஸ். சிவகுமாரன்
என்றும் சமூக அங்கதம் சார்ந்த (Satirical) கவிதைகள் எனவும் பெயர் சூட்டலாம்.
கவிதையின்பம் நுகர வேண்டுமாயின் கவிதைகளை நாம் லயத்துடன் வாய்விட்டுப் படிக்கவும் பாடவும் வேண்டுமன்றோ? கவிதை முதலிலே எமக்கு உவகையை மகிழ்ச்சியைத் தரவேண்டும். அதன்பின் கவிதையைப் படித்து முடித்ததும் எம்மளவிலாகுதல் புத்தறிவு பெற்றிருத்தல் வேண்டும் என்பது எனது சார்பு நிலை.
அந்தப் பாயிர உரை (Preamble)யுடன் றஷமியின் நீண்டதும் குறுகியதுமான 30க்கும் மேற்பட்ட கவிதைகளை அணுகுகிறேன். சொற்செட்டான செந்தமிழைப் படிக்கும் பொழுது நீரோட்டமான லயத்தை என்னுள்ளேயே தொற்றவைக்கையில் பெருங்களிப்படைகிறேன். தமிழும் கிழக்கிலங்கைத் தமிழ்ப் பிரயோகமும் அவர் எண்ணக் கோர்வையில் வார்த்தைகளாக வந்து அமைகின்றன. அவருக்குச் சேவகமும் புரிகின்றன என்பேன்.
கவிஞரின் வயது வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக அவரது வளரிளம் பருவக் காதலும் காமமும், ஏக்கமும், களிப்பேருவகையும் பின்னிப் பிணைந்து வார்த்தைகளிலான புணர்வுப் படிமங்களாகின்றன. அது ஒருவகையான கவிதை வெளிப்பாடு. அது மட்டுமல்ல.
கவிஞன் தனியனாக ஒதுங்கி நின்று வெகு மனோ ரதியப் பாங்கான கவிஞனாக நிலைத்து நிற்க முடியுமா? 21ஆம் நூற்றாண்டில் அது சாத்தியமாகவும் அமையாது. சமூகப் பின்னணியிலேயே அவன் தன்னை இனங்கண்டு

Page 82
a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
ஒன்றில் மேலோங்குகிறான் அல்லது விரக்தியாய் தன்னம்பிக்கையற்றவனாய் சோர்ந்து போகிறான்.
றஷ்மியின் ஒவ்வொரு கவிதையையும் மீளவும் வாய்விட்டுப் படித்து என் லயிப்பை வெளிப்படுத்த முயன்றாலும் அது பூரணமாகாது. ஏனெனில் திறனாய்வு என்ற பெயரில் அல்லது விமர்சகர்கள் என்று தம்மையே கருதிக்கொள்ளும் அரசியல் சார்ந்த விரிவுரை செய்பவர்கள் கூறுவது போன்று இரசிக விமர்சனம் செய்வது ஒரு வசதிக்காகவே. ஊடகமே உள்ளடக்கம் என்பது போல (Medium is the Message) 3565,605uSait 2 6ft 6TL-diasopli வடிவமும் பின்னிப் பிணைந்துள்ளதால் பகுத்தாய்தல் முழுமையான தரிசனமாகா.
நூல் நயம் போன்று படிக்கப் படிக்கத் தெவிட்டாத உணர்வலைகளையும் எண்ணக் கோவைகளையும் நல்லிலக்கியங்கள் தருவதனாலேயே நீடித்து நிற்கின்றன.
றஷ்மியின் கவிதைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பகுத்தாராய்வது சாத்தியமில்லை. அவருடைய ஆக்கங்களை ஆய்வு செய்யும் மாணவர்கள் நீண்டதோர் கட்டுரையை எழுதக்கூடும். இங்கு வாசகர்களுக்குப் பரிச்சயம் செய்து வைப்பதற்காக இத் தொகுப்பில் நான் ரசித்த வரிகளை அங்கொன்றும் இங்குமாகத் தருகிறேன். முடியுமானால் அத்தகைய வரிகள் உள்ளடங்கிய கவிதை முழுவதையுமே மீண்டும் எடுத்துக் காட்டாக இங்கு தரவேண்டும். அது இத்தகைய பத்திகளில் சாத்தியமில்லை என்பதை வாசகர்கள் அறிவீர்கள். தலைப்பில்லாத முதற் கவிதையில் முதல் செய்யுள் பந்தி (Stanza)யைப் பாருங்கள்.

கே.எஸ். சிவகுமாரன் 147ك
“வலிந்து இமை பொத்தி, புலன் அயர்த்தி உறங்கும் முனைப்பில் தோற்று, கூரையில் காற்றுக்கு ஆடும் ஏதாவதொன்றை பிரக்ஞையற்று வெறித்திருப்பேன்.”
“புலன் அயர்த்தி’ புதுப்புனைவான வார்த்தைச் சேர்க்கையல்லவா? முதற் கவிதையில் வரும் மற்றொரு கவித்துவ வரி
"உன்திக்காய் உத்தியெனை உயிர்பொசுக்கும் அகவிசைகள் ஏதுமற்று"
"ஆண்டவ” என்ற கவிதையில் வார்த்தை ஒழுங்கின் மூலம் கதை நிகழ்வின் விறுவிறுப்பான ஒட்டத்தை எமது கண்முன் கொண்டு வருகிறார் கவிஞர். கிழக்கிலங்கை யுத்தகால நிலைமையின் சோகச் சித்திரம் இது. இக்கவிதையில் கடைசியில் பந்தி இவ்வாறு அமைகிறது.
"உங்களில் யாருணர்வர்? நொடிக்கு ஒரு நூறு முறை அறுபட்ட கோழியொன்று பதறித் துடிதுடித்துச் செத்தேபின் மீள உயிர்ப்பதை சாகவென்றே"
"மோகித்த துயர்மிகு கொடுயிரவு" என்ற கவிதையில் சில பகுதிகள்.
ஆளுயர யன்னலில் பணிபடியக் கசிந்தொழுகும் இந் நிலவின் களிப்பை என்னவென்று நீயுணரல் கூடுமங்கு என்போல உனக்குமது கனன்று தீயெறியுங்

Page 83
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܥ148
கோளமென்று ஆயிடுமோ! நம்பியிரு உனது நற்றை நான் தான் அது நானே தான்
கிராமிய சூழலை “மலர்களின் பெயரால்” என்ற கவிதையில் யதார்த்தப் படப்பிடிப்பாகக் கொண்டு வரும் கவிஞர், “காவு கொள்ளப்பட்ட வாழ்வு” என்ற கவிதையில் (இது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.) போர்கால நிகழ்வுகளைக் கொண்டு வருகிறார். இன்னொரு காதல் கவிதையான
"இழந்த காதலை நினைவு கூரல்"
இந்த வரியைக் கொண்டுள்ளது.
"காற்றில் ஒரு நூறு பளிங்கு குவளைகள் விழுந்து உடைந்து சிதறுகின்றனவே அது உன் சிரிப்பொலி ஒம்." "காதல் எவ்வளவு மோசமானதொரு பொய் நீ சொன்ன."
yr 背
ஒரு எதிர்கால யதார்த்தம் கவிஞரின் கற்பனையில் இவ்வாறு படிகிறது.
எங்கள் முன்னோர்களிடமும்
எங்களுக்கு இல்லாதது போலவே
எங்கள் குழந்தைகளிடமும்
அவர்களின் குழந்தைகளுக்குக்

கே. எஸ்.சிவகுமாரன் 149ك
கூறவொன்றும் ஆச்சரியமிக்க கதைகள் இருக்கப் போவதில்லை. சாவுகள் பற்றியதான
s:
“சூரிய குழம்பும் செத்த சாரைப் பாம்பின் வாலும் என்பது ஒரு கவிதையின் தலைப்பு. கவிஞர் சோலைக் கிளியின் கவிதைத் தலைப்புகளும் இவ்வாறு தான் பெரும்பாலும் அமையும். கவிஞர் றவுமி சோலைக் கிளியின் கவிதைகளிலும் ஈடுபாடு கொண்டவராயிருக்கக்கூடும். இக்கவிதையின் முதற் பந்தியில் வரும் உவமையைப் பாருங்கள்.
"காய்ந்து பதங்கெட்ட ரொட்டித்
துண்டதுபோல்
உலர்ந்து
ஒட்டிப்பிரிய மறுத்தன உதடுகள்"
இக்கவிதை முழுவதுமே அசாதாரணமான சொற்பிரயோகங்களையும் உவமான உவமேயங்களையும் கொண்ட ஒரு குறியீட்டுக் கவிதை, ஆண் கவிஞரான ஒருவர் பெண்ணிலையினின்று பாலுறவை ஆபாசமின்றி கவித்துவமாகச் சித்திரமாக்கும் கவிதைகளை பத்தாவதும் ஈற்றானதுமான “முத்தம்” என்ற கவிதையிற் காணலாம்.
இனக் கவர்ச்சியை வேறு ஒரு கோணத்தில் நின்று கவிஞர் “பிறிது ஒரு நாள்” என்ற கவிதையில் வரைகிறார்.
க்கவிதையில் இவ்வா வரிகள்.
DJ S9(05

Page 84
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ150
"மாரி பெய்ய நிறம் வெளித்த
இலைமுதுகின் பச்சையின் பல்வகைமை
அறிந்திலேன்"
கவிஞரின் கூர்மையான அவதானிப்புகள் இயற்கை நிகழ்வுகளைப் புதுமையான முறையில் நினைவூட்டுகின்றன. சிரிப்பை விபரிக்கும் பாங்கைப் பாருங்கள்.
"மீளவும் என் கடை வாய்களில் பற்களை நீள வைக்கிறபடியான சிரிப்பு"
இந்த விபரிப்பையும் படியுங்கள்
“காற்றுக்குக் கலைக்க ஆடைகளைக் கொடுத்திருந்தோம்”
றஷ்மியின் கவிதைகளைப் படிக்கும் பொழுது எனக்கு பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவுகளைப் பார்த்து ரசிக்கும் அனுபவமே ஏற்படுகிறது. அவை அசையும் படிமங்களாக இல்லை என்பதே ஊடகத்தின் வேறுபட்ட தனிமை.
கவிதை மூலம் பாலியல் இயல்பூக்கத்தை libido கவித்துவமாகி றவுமி அனுபவ வெளிப்பாடாகச் சில கவிதைகளில் தந்து நம்மைப் பிரமிக்க வைக்கின்றார்.
இவையெல்லாம் தனிமனித அம்சங்கள் என்று வாய்ப்பாடாகச் சிந்திக்கும் சில விமர்சகர்கள், கண்டனக்காரர் புலம்பக்கூடும். இவ்வாறு அவர்கள் செய்யும் பொழுது மனிதானுபவங்களில் முக்கியமானவற்றை ஒதுக்கி விடுகிறார்கள் அல்லவா? இங்கு உளவியலும் சமூகவியலும் சம்பந்தப்படுகிறது என்பதை அவர்கள் அறியாரோ?

கே.எஸ். சிவகுமாரன் 151 صر
வானம்பாடிக் கவிஞர்களுள் சிற்பி பாலசுப்பிரமணியம், வைரமுத்து, அக்னிபுத்திரன் போன்றோரின் கவிதைகள் பிடிக்குமளவிற்கு, அப்துல் ரகுமானோ, மேத்தாவோ, மீராவோ, இன்குலாபோ பிடிப்பதில்லை. இது ஏனெனில் உள்ளார்ந்த நேர்மையை அவர்கள் ஆக்கங்களில் காண முடிவதில்லை. சுலோகங்களினாலான (முருகையன் கூற்றைப் பயன்படுத்துவதாயிருந்தால்) அவை வெளியொதுக்கிய வெற்றுச் சொற்கள் எனலாம்.
றஷ்மி சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் அறிமுகமாகிய திறனாற்றல் மிக்க நேர்மைக் கவிஞர்களில் முக்கியமானதொருவர் என்பது இந்த கவிதைத் தொகுப்பு மூலம் நிரூபிக்கப்படுகிறது. நான் மிகையாகக் கூறவில்லை. நீங்களே தீர்மானியுங்கள்.
(தினக் குரல்)
0 0 0. oKo oKo ex

Page 85
GED
பழைய இலக்கிய வழவங்கள்
முற்றாக அழிந்துவிடுவதில்லை
Uழைய இலக்கிய வடிவங்கள் முற்றாக அழிவதில்லை. பரணி, பிள்ளைத் தமிழ், கோவை போன்ற வடிவங்களில் 'ஈழத்துப்பூராடனார்’ என்ற க.தா.செல்வராஜகோபால் (கிழக்கிலங்கை ஆசிரியர்) சில நூல்களைத் தந்துள்ளார். விபுலானந்த வெளியீடுகள் என்ற வரிசையில் இரண்டாவது நூலாக 'விபுலானந்த பிள்ளைத் தமிழ்' என்ற நூலை 'ஜீவா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. திரு.வி.க. நூற்றாண்டு நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் முதலாவது நூலாக வை.கா.சிவப்பிரகாசம் எழுதிய 'விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள்' வெளிவந்தது. பிரபந்த இலக்கிய வரிசையில் இரண்டாவதாக இப்பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை 59 நூல்களை அவர்கள் கொண்டுவந்துள்ளனர்.

கே. எஸ். சிவகுமாரன் 153
56 வயதுடைய க.தா.செல்வராஜ கோபால் திக்குவல்லை யோனகபுர அரசினர் முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கி அண்மையில் அவருடைய சொந்த ஊரான தேற்றாத்தீவில் (கிழக்கு மாகாண களுவாஞ்சி குடிப்பகுதி) ஆசிரியர் பணி செய்துவிட்டு அண்மையில் இளைப்பாறியவர். பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள ஈழத்துப் பூராடனார் இந்த நூலை திக்குவல்லை பாடசாலை முன்னாள் தலைமை ஆசிரியர் அல்ஹாஜ் ஏ.எச்.எஸ்.முகம்மது அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
பல நூல்களைச் செல்வராஜ கோபால் குடும்பத்தினர் ஜீவா பதிப்பகம் என்ற நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளனர். இவருடைய இல்லத்தரசியும் ஓர் ஆசிரியை. சில நூல்களைத் தானே பதிப்பித்துள்ளார்.
எழுத்து நூல், மட்டக்களப்புச் சொல் நூல், புயற்பரணி, புலவர் மணிக்கோவை, நீரார் நிகண்டு, யாரிந்த வேடர், பிசாசின் புத்திரர்கள், சிந்தனைச் சரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள், பாவலர் பாச்சரம் போன்ற பல நூல்களின் ஆசிரியர் ஈழத்துப் பூராடனார் ஆவர்.
இந்நூலுக்கு விளக்கக் குறிப்பு எழுதிய திருமதி ப.செல்வ
ராச கோபால் கூறுகிறார் -
பிள்ளைத் தமிழ் இனிமையுங் கனிவும் மிக்கவொரு பிரபந்த இலக்கியம். தெய்வங்களையும் மதிப்பிற்குரிய மாந்தர்களையும் பிள்ளை வடிவிற் கண்டு பேரானந்தங் கொண்டு தமிழமுது மாந்தி மகிழத்தக்க அமைப்புடன் ஆக்கப்படும் தகைமையுடையது.

Page 86
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ154
பிள்ளைத் தமிழின் சொல்லமைப்பு நிறுவல், யாப்பு முறை எடுத்துக் கொண்ட நாயகத்தை வருணிக்கும் பாங்கு என்பவற்றிலுள்ள கருகளான அமைப்பு நியதிகளால், தற்காலம் பிள்ளைத் தமிழ் என்றால் தள்ளி நிற்க வைத்துவிடுகிறது.
எனவே இப்பிரபந்தமுறையில் காலத்துக்கேற்ற நெகிழ்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய முயற்சியில் ஒன்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு கவிதையிலும் மட்டக்களப்பு வளம், துறவின் அவசியமும் யாக்கை நிலையாமையும், அடிகளாரின் வாழ்க்கை வரலாறு என்பன மூன்று பகுதிகளாக அடங்கியுள்ளன. இதனால் முன் பின் போன்றிருந்தாலும் அனுவயப்படுத்துங்கால் ஒன்றிணைவதைக் காணலாம்.
காப்புப் பருவம், செங்கீரை, காலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம், சிறு தேர்ப் பருவம் என்ற பகுதிகளில் - 90 ஆசிரிய விருத்தங்களில் இப் பிள்ளைத் தமிழை ஆசிரியர் பாடியிருக்கிறார்.
பாடல்களுக்கு நல்ல முறையில் விளக்கக் குறிப்புகளை திருமதி செல்வராசா கோபால் எழுதியிருக்கிறார். விபுலானந்தர் தொடர்பான வரலாற்றைச் சான்றுகள் சகிதம் இந்நூல் தருகிறது.
ஆராய்ச்சியாளருக்கும், மாணவருக்கும், பழைய பாடல் வகைகளை விரும்புபவர்களுக்கும் நன்கு பயனளிக்கும் ஒரு நூல் இது.
(தினகரன்)
-4 0x ه%ه

(22)
கன பரிமாணம் - 01
சென்ற 23.9.1962ல் "சிக்மண்ட் பிராய்ட்" என்ற மனோதத்துவவாதி இறந்த 29வது வருடமாகும். இவர் சாகும்போது இவருக்கு 83 வயது. மொறேவியா என்ற இடத்தில் பிறந்து, வியன்னா நகரில் வளர்ந்த இவர், யூத இனத்தைச் சேர்ந்தவர். தமது 25ம் வயதில் வைத்தியராய்ப் பட்டம் பெற்றார். அதன் பின்பே, இவர் தலைசிறந்த மனோதத்துவவாதியாகப் புகழ் பெற்றார். இவரது சித்தாந்தங்களுள் பல இப்பொழுது சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.
மனோதத்துவம் இன்று விரிவாக வளர்ந்து, பல உட்கிளைகளையும் உருவாக்கி விட்டிருக்கின்றது. மனித வாழ்வின் எந்தச் செயலுக்குமே காரணங்கள் காட்டக் கூடுமளவிற்கு, மனோதத்துவ இயல் வளர்ந்துள்ளது. மனோவுணர்வை மனித சிந்தனையின் ஒட்டத்தைக்கூட

Page 87
15ଠିn காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
அணுவணுவாகப் பிரித்து இனங்கண்டு கொள்ள முடிகின்றது. இலக்கியங்கள் கூட மனோவியல்பிற்குப் பொருந்துவனவாகவே அமைகின்றன.
“உணர்வு கடந்த உள்நிலை ஆய்வியல்” எனப்படும் கணிப்பு முறையைக் கண்டுபிடித்த சிக்மண்ட் பிராய்டின் சித்தாந்தங்களை யொட்டியே நவீன உளவியல் வளர்ந்துள்ளது. உள்ளுணர்ச்சி சார்ந்த அல்லது உள்ளுறு நினைவு சார்ந்த அல்லது உள்மனது அல்லது அகநோக்கு அல்லது அடிமனப் பிரக்ஞையின் காரணங்களையும், கிரியைகளையும் காரணகாரியங் கொண்டு பிராய்டு விளக்கினார். அவருடைய விளக்கத்தின் அடிப்படையில் ஜுங் அட்லர், வில்லியம் ஜேம்ஸ் (இவர் பிரபல அமெரிக்க நாவலாசிரியரான ஹென்றி ஜேம்ஸின் சகோதரர்) வேர்தீமர், ஊல்ப்காங்கோலர் போன்ற நவீன மனோதத்துவவாதிகளின் சித்தாத்தங்கள் உருப்பெற்றிருக்கின்றன.
மனித மனதின் தன்மை பற்றி நிலவிய கருத்துக்களை யொட்டியே அவ்வக்காலங்களில் இலக்கியம் பற்றிய சித்தாந்தங்கள், கோட்பாடுகள் முன்னர் எழுந்தன என்பதற்கு டேவிஞ்ஹாட்லி லொக் என்பவர் எழுதிய "மனோ-தத்துவம்” என்ற நூல் காரணமாகக் காட்டப்படுவது வழக்கம். 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூலில் இலக்கிய விமர்சனம் பற்றிய வியாக்கியானங்கள் இருக்கின்றனவாம்.
இலக்கியக் கோட்பாடுகளும், இலக்கிய விமர்சன முறைகளும், இலக்கிய உருவ அமைப்புகளும், இலக்கிய உள்ளடக்கப் பண்புகளும் காலத்துக்குக்காலம் மாறுபடுவது போல், மனோதத்துவம் பற்றிய சித்தாந்தங்களும்

கே. எஸ். சிவகுமாரன் 157ك
மாறுபடுபவன. இதனாலேயே மனோதத்துவ சித்தாந்தங் களைச் சார்ந்து எழுதப்படும் இலக்கிய விமர்சனங்கள் காலப்போக்கில் மதிப்பை இழக்கின்றன.
இலக்கிய விமர்சனம் சம்பந்தமான சில அருமையான நூல்கள் கூட காலாவதியான மனோதத்துவக் கோட்பாடு களின் அடிப்படையில் எழுதப்பட்டதால் மதிப்பிழக்கின்றன. உதாரணமாக, ஹென்றி ஹோம் என்பவர் 18ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கூறப்படும் “விமர்சனத்தின் உறுதிப் பொருட்கள்", ஆர்ச்சிபோல்ட் - அலிஸன் என்பவர் எழுதிய "இரசனையின் தன்மையும், கோட்பாடுகளும்", ஈ.எஸ்.டலஸ் என்பவர் சென்ற நூற்றாண்டில் எழுதிய “களிப்புமிகு சாஸ்திரம்' போன்றவை இக்குறைபாட்டினாற் செல்வாக்கிழந்து நிற்கின்றன என்று கூறப்படுகின்றது. பிரபல ஆங்கில இலக்கிய விமர்சகரான டாக்டர் ஐ.ஏ.ரிச்சட்ஸ் எழுதிய “இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள்” என்ற நூலையும், இவ்விதமே கூற வேண்டிய நிலை ஓரளவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
உளவியலில் “நடத்தை அவதானிகள்” என்போரின் கருத்துக்களுக்கு மாறாக, “ஜெஸ்டல்டிஸம்" என்ற வாதத்தை நிலைநாட்டி கோலர் எழுதிய நூல், தற்பொழுது அற்புதமான ஆக்கம் என்று கருதப்படுகின்றது. சித்தாந்தங்கள் - இலக்கிய விமர்சனங்களில், விமர்சகர்கள் தெரிவித்திருப்பவை - யாவும் முடிந்த முடிபல்ல.
சிந்தனையையும், மனக்கவலைகளையும் குறைத்தல், மன எழுச்சிகளை ஒழுங்குபடுத்துதல், வெளிப்படையாகப் போதிக்காமல்- ஆனால் மனப்போராட்டப் பிரச்சினை

Page 88
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܥܠ158
களின்- நல்ல முடிவுகளை உணர்த்துதல், மனோ நிலையைக் குழப்பமின்றி வைத்திருத்தல் போன்றவை “உண்மைக் கவிதையின் பயன்' என்று சொல்லப்படுகின்றது. கவிதைபோன்ற இலக்கிய ஆக்கங்கள் மனோவனுபவத்தைக் கொண்டு உருவாவதால், மனோதத்துவ விமர்சன முறையைக் கையாள்வதிலும் தவறில்லை.
லேனாடோ டா வின்ஸி, லூயிடகரோல் போன்றோரின் ஆக்கங்களை மதிப்பீடு செய்யும் பொழுது அவர்களின் சித்தசுவாதீனத்தையும், மனோவியாதியையும் அலசி அலசி ஆராய்ந்தே தம் விமர்சனங்களை மேனாட்டு விமர்சகர்கள் சிலர் தீட்டியிருக்கின்றனர்.
(Great Wits are sure to madness near allied)
பெரிய அறிஞர்கள் சித்தசுவாதீனமின்மைக்குக் கிட்டிய நிலையை நிச்சயம் அடைவர் என்பது ஒரு கருத்து. சில இலக்கியக் கலைஞர்கள், தனி வாழ்க்கையில் இயற்கைக்கு மாறாக நடந்திருக்கின்றனர். அவர்கள் பழக்க வழக்கங்கள், போக்குகள் போன்றவை மீது பிறர் சந்தேகம் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய செயல்களுக்கான காரணங்களை மனோதத்துவ அடிப்படையில் விளக்கிக் கூறுவது விமர்சகர்களின் கடமையாகும். இந்த விதத்திலும் மனோதத்துவ விமர்சன முறை விரும்பத்தக்கதாக அமைந்துள்ளது.
வரலாற்று ரீதியில் மாத்திரம் நின்று விமர்சனஞ் செய்பவர்களைப் போலவே, மனோதத்துவ விமர்சன முறையைக் கையாள்பவர்களும், ஒரு படைப்பை - அதன்

கே. எஸ். சிவகுமாரன் 159
தன்மையைக் கொண்ட - மதிப்பை உதாசீனஞ் செய்பவர்கள் ஆவார்கள். இதனை ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம்.
தற்கால ஆங்கிலப் புதுக்கவிதைகள் (தமிழிற் சிலவும்) எளிதில் விளங்கிக் கொள்ள முடியாதவை என்பதை நாமறிவோம். அத்தகைய கவிதைகளில் ஒன்றை எடுத்து நாம் விமர்சிக்கும்பொழுது அதை எழுதிய கவிஞரின் மனோ நிலை, அக்கவிதையை இயற்றும்பொழுது எவ்வாறிருந்தது? அவ்வாறிருப்பதற்கு அவர் அகவாழ்விலும், புறவாழ்விலும் என்ன என்ன சம்பவங்கள் நடைபெற்றன போன்ற கேள்விகளைக் கேட்டு, அவர் சரிதையை நாம் ஆராயப் புகுகிறோமேயன்றி, படைப்பைப் பற்றிய விமர்சனத்தை நாம் செய்யத் தவறிவிடுகிறோம். சரிதை ரீதியாக, ஒரு கலைஞனை விமரிசிக்கும்பொழுது மாத்திரம் இம்முறையை நாம் கையாளலாம். படைப்பாளி படைத்த படைப்பையும் விட்டுவிட்டு, அவன் நடமாட விட்டிருக்கும் பாத்திரங்களின் மனோநிலையை நுணுகி ஆராயும் பணியில் சில விமர்சகர்கள் இறங்கிவிடுகின்றனர்.
இலக்கிய விமர்சனம் என்பது பல்வேறு முறைகளைக் கையாண்டு சிருஷ்டிக்கப்படும் ஒரு புதிய இலக்கியமாகும். ஒரு புதிய படைப்பாளியின் சிருஷ்டியை மதிப்பீடு செய்யும் பொழுது வெளிப்படுத்தும் முறையையே கையாள்வது உசிதமானது. (அதாவது எல்லாவிதமான விமர்சன முறைகளையும் கையாள்வது பொருத்தமல்ல; பொருத்திப் பார்க்கவும் இயலாதது) அதனால் "இலக்கிய விமர்சனம்” என்ற அர்த்தத்தில் அங்கு விமர்சனம் இடம்பெறுவதில்லை. "விமர்சனப் பார்வை' கொண்ட கட்டுரை என்ற முறையிலேயே அவ்விமர்சனம் அமைந்திருக்கும்.

Page 89
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ160
பாரதி, நாவலர், புதுமைப்பித்தன், கு.ப.ரா., வ.ரா, திரு.வி.க. போன்றவர்களின் ஆக்கங்கள், தொண்டுகள் பற்றிய வெளிப்படுத்தும் முறைகொண்ட விமர்சனப் பார்வைக் கட்டுரைகள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன; இன்னும் வெளிவந்து கொண்டுமிருப்பதால், இனி அவர்களைப்பற்றி, வரலாற்று ரீதியிலோ, மனோதத்துவ ரீதியிலோ, தற்பொழுது நிலவும் சித்தாந்தங்களையொட்டி இலக்கிய விமர்சனத்தை முழுஅர்த்தத்தில் செய்யலாம். இலக்கிய விமர்சனத்தில் மனோத்த்துவ முறை விமர்சனமும் இன்றியமையாததாக இடம் பெற்றுவிட்டது.
O
X
இம்பிரஷனிஸம்
இலக்கியத்தில் "இம்பிரஷனிஸம்" என்றால் என்ன? நிதர்சனமான பொருள்களை அப்படியே சித்திரியாது (புகைப்பட ரீதியில்), அப்பொருட்கள் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களை ஒர் ஆசிரியர் எழுத்தில் வடிக்கும் பொழுது, அப்பண்பை “இம்பிரஷனிஸம்" என்பார்கள். இதனை, “பிரத்தியட்சப் பிரதிபலிப்பு வாதம்” அல்லது "அக உலக நோக்கு” என்று தமிழில் அழைக்கலாம். பொதுவாக, ஒரு கதாபாத்திரத்தின் மனோநிலையைச் சித்திரிப்பதையே இவ்வாதம் தனது முக்கியப் பண்பாகக் கொண்டுள்ளது. புறுாஸ்ட், ஜோய்ஸ், வர்ஜீனியா ஊல்ப்ஃ போன்றோர் “இம்பிரஷனிஸ் வாதிகள்” என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
(தினகரன் வார மஞ்சரி)
0 0 (0. 0x8 8- 0.

(29)
கன பரிமாணம்- 02
தருக்க முறை
அண்மையில் "மேனாட்டுச் சிந்தனாமரபு” என்ற நூலில், காண்ட், ஹெஜல் என்ற இரு தத்துவ ஞானிகளின் கோட்பாடுகளைப் பற்றி விரித்துரைத்திருந்த சில பகுதிகளில், ஒரு சில குறிப்புகளைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக, தருக்க முறை பற்றிய ஒரு சிறிய விளக்கமும், ஹெஜல் சம்பந்தமான குறிப்புகளும் கீழே கொடுக்கப்படுகின்றன.
* “மனிதன் அறிய விரும்புகின்றான்’ என்பது பிரதிஞ்ஞை, “உலகு அறிய விரும்புகின்றவனைத் தடுக்கின்றது' என்பது எதிர்ப் பிரதிஞ்ஞை. அதாவது பிரதிஞ்ஞைக்கும் எதிர்ப் பிரதிஞ்ஞைக்கும் இடையே போராட்டம். இவற்றின் சேர்க்கையால் கலப்புப் பிரதிஞ்ஞை ஏற்படுகின்றது. “அறிய விரும்புபவனதும், அறிய விரும்பியதினதும் கலப்பால் அறிவு பிறக்கின்றது”.

Page 90
62a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
* ஹெஜலின் தருக்கமுறையில் இரண்டு அம்சங்கள்
26T.
(1) யதார்த்தத்தின் தன்மை
(2) யதார்த்த உலகின் முன்னேற்றமும் வளர்ச்சியும்.
* “யதார்த்தம்தான் அறிவுடைமை; அறிவுடைமைதான் யதார்த்தம்” என்று ஹெஜல் கூறினார். மனது சிந்திப்ப தனாற்றான் பொருள்கள் உருப்பெறுகின்றன. சிந்திப்பத னாற்றான் மனது இயங்குகின்றது அறிய விரும்புபவர்க்கும் அறிந்ததற்குமிடையே விளைவது அனுபவமாகும்.
புதிய இலக்கிய விமர்சனம்
மேனாட்டு இலக்கிய விமர்சன வரலாற்றில் 1920ம் ஆண்டு ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் கூறலாம். "புதிய இலக்கிய விமர்சனம்” என்றோர் இயக்கம் அவ்வாண்டில் ஆரம்பமாகியது. அவ்வியக்கத்தின் மூலம் வளர்ந்த இலக்கிய விமர்சன வரலாற்றைப் பற்றி, டி. லேணர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் இலக்கிய விமர்சனம் ஐந்து கோணங்களிலிருந்து செய்யப்படலாம் என்று கூறுகிறார். அவையாவன; சமூகப் பார்வை, செயல்முறைப் பார்வை, விளக்கப் பார்வை, தத்துவார்த்தப் பார்வை, வரலாற்றுப் பார்வை ஆகியவையாம். தாம் உபயோகிக்கும் பதங்களுக்குத் திரு. லேணர் பின்வருமாறு விளக்கம் கொடுக்கின்றார்.
ஆசிரியனை ஊக்குவிக்குமுகமாக எழுதப்படும் வழமையான.“ஞாயிறு பத்திரிகை’க் கட்டுரைகளும், மதிப்புரைகளும் சமூகப் பார்வை கொண்டவை. படைப்புகள்

கே. எஸ். சிவகுமாரன் 163ك
எழுதப்பட்டிருக்கும் முறையைச் சுட்டிக்காட்டி வாசகனுக்கு வழிகாட்டியாக அமையும் கட்டுரைகள் விளக்கப் பார்வை கொண்டவை. புத்தகம் என்ன கூறுகின்றது? எப்படிக் கூறுகின்றது? அது நல்ல புத்தகமா? போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கும் கட்டுரைகள் செயல்முறைப் பார்வை கொண்டவை. இலக்கியம் என்றால் என்ன? இலக்கிய விம்ர்சனம் என்றால் என்ன? போன்ற கேள்வி களுக்கு விடையாக அமைந்த கட்டுரைகள் தத்துவார்த்தப் பார்வை கொண்டவை. இலக்கிய, சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றின் அடிப்படையைக் கொண்டு எழுதப்படும் கட்டுரைகள், வரலாற்றுப் பார்வை கொண்டவை.
இலக்கிய வரலாற்றாசிரியரும், இலக்கிய விமர்சகரும் ஒருவரோடொருவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விஷயம் ஒன்றென்னவெனில், குறிப்பிட்ட ஒரு விமர்சனப் பார்வை கொண்ட கட்டுரையிலோ, ஒரு குறிப்பிட்ட கதையைப் பற்றியோ, நாடக எழுத்துப் பிரதி பற்றியோ, நாவலைப் பற்றியோ, கவிதையைப் பற்றியோ, கட்டுரையைப் பற்றியோ மேற்சொன்ன எல்லாவிதமான பார்வைகளையும் கொண்டு இலக்கிய விமர்சனஞ் செய்வது சாத்தியமற்றது. பிரயோசனமற்றது என்பதாகும்.
மொழி பெயர்ப்பு நாவலுக்கு மவுசு
1950க்குப் பின்னர் குறிப்பிடத்தக்க விசேட படைப்புகள் பிரெஞ்சு மொழியில் வரவில்லை என்று பிரெஞ்சு இலக்கிய

Page 91
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ164
வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால், சமீபத்தில் வில்லியம் ஸ்டைரன் என்ற அமெரிக்கர் ஆங்கிலத்தில் எழுதிய “இவ் வீட்டிற்கு நெருப்பு வை” என்ற நாவலின் பிரெஞ்சு மொழியாக்கம் பெரிய பரபரப்பை உண்டுபண்ணி, ஒரு மாதத்தில் 20,000 பிரதிகள் விற்றதாம். இது மிக நீண்ட, எளிதிற் புரிந்துகொள்ள முடியாத நாவலாம். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இந்நாவல் பற்றிக் கண்டனங்கள் எழுந்தபோதிலும் பிரெஞ்சு மக்கள் இதனை விரும்பி, விழுந்து, விழுந்து படிக்கிறார்களாம்.
எக்ஸ்பிரஷனிஸம்
யதார்த்தமாக அல்லது நிதர்சனமாக எமக்குத் தோற்றும் பொருள்கள் பற்றி அக்கறை கொள்ளாமல், அப்பொருள்கள் அப்படியிருக்கக் காரணமாயுள்ள யதார்த்த நிலையை விளக்கும் பண்பை எக்ஸ்பிரஷனிஸம்" என்பார்கள். இதனை “உட்பொருள் வெளிப்பாட்டுவாதம்” என்று தமிழில் கூறலாம். அங்ங்ணம் செய்யும் பொழுது நிதர்சனப் பொருள்களைத் திரித்தும் சித்திரிப்பதுண்டு. இவ்வியக்கம் இந்நூற்றாண்டின் முதற் கந்தாயத்தில் எழுந்தது.
(தினகரன் வார மஞ்சரி)
KM KM2 K) (x- (X- ox

(32)
கன பரிமாணம்- 03
மக்ஸிம் கோர்க்கி
ரிச்சட் ஹெயார் என்பவர் மக்ஸிம் கோர்க்கியைப் பற்றிச் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அலெக்ஸி பெஷகோவ் என்ற ரஷ்யர் எழுத்துலகில் “மக்ஸிம் கோர்க்கி” என்ற புனைப் பெயரிலேயே அறிமுகமானார். “சோஷலிஸ் யதார்த்தவாதம்” என்ற பதத்தை அறிமுகப்படுத்தியவரும் கோர்க்கிதான். இவர் மரணமடைந்து இப்பொழுது 26 வருடங்களாகின்றன. 1868ல் இவர் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தார். சிறுகதை, நாவல், நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியபோதும், அவர் எழுதிய சுயசரிதையே, இலக்கிய இரசிகர்களையும், மனிதாபிமானிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இவர் எழுதிய நாவல்களுள், தாய் என்பது பிரசித்தி பெற்றது. இதனை சிதம்பர ரகுநாதன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். “கோர்க்கியைக் கண்டேன்” என்றொரு சிறு புத்தகத்தையும், “தினகரன்' 15.1.61, 22.161

Page 92
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ166
இதழ்களில் அறிமுகக் கட்டுரைகளையும், திரு.எச்.எம்.பி. முகைதீன் எழுதியிருக்கிறார். “மிக ஆழமான தாழ்ப்பம்” என்ற கோர்க்கியின் நாடகம் வெற்றிபெற்றது. எழுத்துலகில் கோர்க்கியை மனிதாபிமானப் படைப்பாளியாகவே மதிப்பிடுவதுண்டு. 1917ல் ருஷ்யப் புரட்சி ஏற்பட்ட பொழுது, அதற்குத் தக்கபலமாக நின்று, “கம்யூனிஸம்” வளர இவர் உதவி செய்தமையால், இவருக்கு ருஷ்ய இலக்கியத்தில் மகத்தானதோர் இடத்தைச் சோவியத் விமர்சகர்கள் கொடுக்கிறார்கள். உலக இலக்கியப் பரப்பில் இவரது "சுயசரிதை” உரிய இடத்தைப் பெற்றுவிட்டது. தாழ்வுற்ற, அல்லது தொழிலாள வர்க்க அல்லது வறிய, கீழ்த்தளத்து மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருதலைப்பட்சமான முறையில் என்றாலும் பிரச்சாரம் செய்து, இலக்கியம் படைக்க வேண்டும் என்ற "தீவிர முற்போக்கு’க் கோட்பாடு கோர்க்கியுடன்தான் ஆரம்பமாகின்றது.
திரையில் 20ம் நூற்றாண்டின் சிறந்த நாவல்கள்:
இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த இரு நாவல்களில் “யூலிஸஸ்”, “விசாரணை’ ஆகியவை விமர்சகர்களால் புறக்கணிக்கப்படாதவை. “யூலிஸஸ்" என்ற அந்த ஆங்கில நாவலை எழுதியவர் ஜேம்ஸ் ஜோய்ஸ். “விசாரணை” என்ற அந்த ஜெர்மானிய நாவலை எழுதியவர் பிரான்ஸ் கப்ஃகா. முன்னையவர் ஐரிஷ்காரர். பின்னையவர் செக்கோஸ்லோ வாக்கியர். இவ்விரண்டு நாவல்களுமே சம்பிரதாய நாவல்களை ஒட்டி எழுதப்பட்டவையல்ல. அவை முற்றிலும் உள்ளடக்கத்திலும், உருவத்திலும் புதுமாதிரியானவை. அவற்றின் சிறப்புகளை விரிக்கின் பெருகும். "யூலிஸஸ்” "விசாரணை” ஆகிய இரு நாவல்களையும் திரைப்படமாக்கு

கே. எஸ். சிவகுமாரன் 167 صـ
வது மிக மிகக் கடினம் என்பதை இவற்றைப் படித்தோர் கூறுவர். ஆயினும் இப்படங்கள் வெளிவருவதால், மேற்கூறப்பட்ட நாவல்களையும் படமாக்கத் துணிந்திருக் கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.
கொழும்பில் சில மாதங்களுக்குமுன் “குரூரக் கண்” என்ற ஒரு பரிசோதனைப் படம் காட்டப்பட்டதை நேயர்கள் அறிந்திருக்கலாம். அப்படத்தில் கதை என்று ஒன்றில்லை. ஒரு பெண் பாத்திரத்தின் சென்றகால, வருங்கால (கனவிலும் கற்பனையிலும்) நிகழ்ச்சிகள் உதிரி உதிரியாகக் காட்டப்படுகின்றன. அப்பாத்திரமோ வாய் திறந்து ஒன்றும் பேசுகிறாளில்லை. அவளைப் பற்றிய செயல்கள் திரையில் காண்பிக்கப்படும்பொழுது, பின்னணியில் அவள் மனச் சாட்சியுடன் உள்ளுணர்வில் பேசுவது மாத்திரம், இரசிகர்கள் கேட்கும்படியாக ஒலிக்கின்றது. பாத்திரத்தின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த சம்பவங்கள், சமுதாயத்தின் எதிரொலிப்பு என்பதைப் படம் பிடித்தவர்கள் உணர்த்த முற்படுகிறார்கள். மேலை நாட்டு நகரங்களில் உள்ள நாகரீகம் எப்படி சீர்கெட்டுப் பிற்போக்கான வழிகளில் செல்கின்றது என்பதை முதல் நோக்கமாகக் கொண்டு, இதனை எடுத்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் 'குரூரக் கண்' என்ற திரைப்படத்தின் போக்கிலேயே "யூலிஸஸ்”, “விசாரணை” ஆகிய படங்களும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “விசாரணை"யைத் தயாரிப்பவர் பிரபல டைரக்டரும் நடிகருமான ஓர்ஸன் வெல்ஸ். ஹொவேட் பாஸ்ட் என்ற முன்னைநாள் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் எழுதிய “ஸ்பாட்டக்ஸ்” என்ற நாவல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது அல்லவா? சர். லோரன்ஸ் ஒலிவியோ, கேர்க் டக்ளஸ், டோனி கேட்டிஸ்,

Page 93
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ168
ஜீன் சிமன், பீட்டர் உஸ்டினோவ், சார்லஸ் லோட்டன் போன்ற சிறந்த நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள்.
"தீவிர முற்போக்கு இலக்கியம்'
அண்மையில் “முற்போக்கு இலக்கியம்” பற்றிய பொதுவான சில பண்புகள் பற்றி ஜெயகாந்தனின் மேற்கோள்கள் மூலம் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது, “நாவலின் வருங்காலமும், பரிசோதனையும்” என்ற கட்டுரையில் பிலிப் டொயின் பீ என்பவர் குறிப்பிட்டிருப்பதைத் தருகிறேன்:
“குறிப்பிட்ட சில பொருட்கள் பற்றி, குறிப்பிட்ட தொனி”யில், குறிப்பிட்ட சிபாரிசுகளுடன் தமது படைப்பு களைக் கலைஞர்கள் படைக்க வேண்டும் என்றும், அவர்கள் இடதுசாரியைச் சேர்ந்தவர்களாய் - கம்யூனிஸ்டுகளாக விருப்பது விரும்பத்தக்கது - இருக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்கள் நாவல்களில் இடதுசாரிக் கருத்துக்களை விரித்துக்கூறவேண்டும் என்றும், தமது கொள்கைகளுக்கு எதிரான கருத்துடையவர்களை எதிர்த்து, வெறுத்து, ஒதுக்கும் விதத்தில் தமது நாவல்களைச் சிருஷ்டிக்க வேண்டும் என்றும், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை மதித்துப் போற்ற வேண்டும் என்றும் மாக்ளீயவாதிகள் சட்ட திட்டஞ் செலுத்துகின்றனர். இவை கொலை பாதகமான கட்டளைகள். இவை எழுந்து இப்பொழுது 30, 40 வருடங் களாகியும், இதுவரை மதிப்புப் பெறத்தக்க ஒரு நாவலிலாகுதல், இச்சட்ட திட்டங்களுக்கிணங்க அமையப் பெறவில்லை.”

கே.எஸ். சிவகுமாரன் 169ك
இப்பொழுது எல்லாம் “தீவிர முற்போக்கு இலக்கியக் கோட்பாடு” தளர்ந்து வருவதை, ருஷ்யா, ஹங்கேரி போன்ற சோவியத் நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் காண முடிகிறது. பொறிஸ் பஸ்டனேக் எழுதிய “டாக்டர் ஷிவாகோ” ருஷ்யாவில் இப்பொழுது பிரசுரமாகின்றது
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(தினகரன் வார மஞ்சரி)
Kda x 24. 0x8 * o

Page 94
(25)
மேலைக் கலையுலகம்
6 6 த மெசஜ் பெயரர்ஸ்” (செய்தி காவிகள்) என்ற பெயரில் ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. அந்த நூலின் உபதலைப்பைத் தமிழில் வாசித்தால் இப்படித்தான் இருக்கும்; “தென்னிந்தியாவின் தேசியவாத அரசியலும் களியாட்ட வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும் (1880-1945) இந்த நூலை எழுதியிருப்பவர் தமிழிலும் எழுதும் தமிழ்நாட்டு எழுத்தாளர் எஸ்.தியடோர் பாஸ்கரன். இவர் இந்திய தபாற் சேவையில் ஒர் உயர் அதிகாரி. எம். ஏ. (வரலாறு) பட்டதாரியான பாஸ்கரன், ‘கசடதபற' என்ற தமிழ நாட்டுச் சிற்றேடு உட்பட பலவற்றிற்கு எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இவரை நான் சென்னையில் சந்தித்திருக்கிறேன்.
தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத் தின் ஆலோசனைக் குழுவில் இவர் அங்கம் வகித்திருக்கிறார். தமிழ்நாடு சுவடிக் கூடத்திலும் சிலகாலம் பணியாற்றினார்.

கே. எஸ். சிவகுமாரன் 171
பூனாவிலுள்ள தேசிய திரைப்படச் சுவடிக் கூடத்தின் ஆலோசனைக் குழுவில் அங்கத்தவரா இருந்துள்ளார். வரலாற்று ஆராய்சிக்கான தமிழ்நாடு மன்றத்தின் புலமைப் பரிசிலராக 1974-76 காலப் பகுதியில் பயின்றிருக்கிறார். இத்தகைய தலைமைகளைப் பெற்ற தியடோர் பாஸ்கரனின் நூல், முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரியமில்லை. தவிரவும் தென்னிந்திய வரலாற்று நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படும் கலாநிதி கிறிஸ்டபர் பேக்கர், இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பலதரமான நூல்களை வெளியிட்டு வரும் க்ரியா நிறுவனத்தினர் முதல் தடவையாக ஓர் ஆங்கில நூலை வெளியிட்டிருக்கிறார்கள். பாஸ்கரனின் இந்த நூல், அரசியல், சினமா மற்றும் கலைகளைப் பற்றி ஆராயும் மாணவர்களுக்கு அரிய பல தகவல்களைத் தருகிறது. உதாரணமாக: மக்கள் விரும்பும் நாடகமும் தேசியவாத எழுச்சியும், சனரஞ்சகப் பாடல்களும் குடியுரிமை சட்டமறுப்பு இயக்கமும், புதிய ஊடகமான மெளனப் படங்களின் உதயம், சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அம்சமான நாட்டுப் பற்றுணர்வான திரைப்படம், திரைப்படத் தணிக்கையும் பிரிட்டிஷ் இந்தியாவில் அரசியல் கட்டுப்பாடும் ஆகிய தலைப்புகளைக் குறிப்பிடலாம்.
மக்கள் விரும்பிய சில பாடல்கள் தமிழில் தரப்படுகின்றன. அடிக் குறிப்புகள், நூலகராதி, அருஞ் சொல் விளக்கம், அட்டவணை போன்றவையும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Page 95
172a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
“மேலைக் கலையுலகம்” என்ற இந்தப் பத்தியில், தென்னிந்தியக் கலை பற்றிய நூலை எவ்வாறு குறிப்பிடலாம் என்று நீங்கள் கேட்கலாம். இரண்டு காரணங்கள்; மேலை மொழியாகிய ஆங்கிலத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது ஒன்று. மேலைக் கலையுலகத்தையும் சம்பந்தப்படுத்தி இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இரண்டு.
நாடகம், இசைத் தட்டுகள், சனரஞ்சகப் பாடல்கள், திரைப்படம் போன்றவை இந்திய தேசியவாத எழுச்சிக்கு எவ்வாறு தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்குவதே இந்த நூலின் நோக்கம்.
வெகுசன அரசியல் வேகத்தில், வெகுசன தொடர்புச் சாதனங்கள் மக்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டிருந் தன என்பது நூலில் சுட்டிக் காட்டப்படுகிறது.
தமிழ் நாட்டு இலக்கிய, கலை முயற்சிகளை சம்பந்தப்பட்ட காலவரனுக்குள் (1880-1945) மிக மிகத் தெளி வாகக் கலாநிதி பேக்கர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். தமிழ் தெரியாத பிறமொழியினருக்கும் தமிழ்க்கலை, இலக்கியங்கள் பற்றிய வரலாற்றுச் சங்கதிகள் இந்த முன்னுரையில் தெரிவிக்கப்படுகின்றன.
தென்னிந்திய மேடையின் ஆரம்பக் கட்டம், தெலுங்கு மேடையும் ஒத்துழையாமை இயக்கமும், நாட்டுப்பாடல்கள், இசைத் தட்டுக்கள், திரைப்படைத் துறையின் ஆரம்பக்கட்ட அம்சங்கள் போன்ற பல விஷயங்கள் பற்றிய தகவல்கள் தரப்படுகின்றன.

கே. எஸ். சிவகுமாரன் 173
தென்னிந்தியாவில் வெளிவந்த முதல் மெளனப்படம் என்ன தெரியுமா? "கீச்சகவதம்’ (1916). 1932 வரை 108க்கும் மேலாக மெளனப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனின் இந்த நூல் அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய போதனை
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தை சிறப்புப் பாடமாகப் பயிலும் பி.ஏ., எம்.ஏ. மாணவர்கள் வேண்டுமானால் “சிங்கள, தமிழ் இலக்கிய அறிமுகம்” என்ற ஒரு விடைத்தாளையும் பரீட்சையில் சமர்ப்பிக்கலாம்.
பண்டைக்கால, இடைக்கால, நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஆங்கிலத்திலே இந்தப் பல்கலைக் கழகத்தில் போதிக்கப்படுகிறது. அதாவது மேற்குக் கலை இலக்கியங்களைப் பயிலும் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தையும் ஆங்கில மொழி மூலம் பயிலும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். "தமிழ் ஹெரோயிக் பொயட்ரி" என்ற ஒப்பியல் ஆங்கில நூலை (தமிழ் வீரயுகப் பாடல்கள்) எழுதிய பேராசிரியர் க.கைலாசபதியே இந்த வகுப்புகளை நடத்துகிறார் எனத் தெரிய வருகிறது.
தமிழ் இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் சில நூல்கள் இருப்பதை நேயர்கள் அறிந்திருப்பீர்கள். இவை மொழிபெயர்ப்புகளாகவும், அறிமுகங்களாகவும், விமர்சனங்களாகவும் அமைந்துள்ளன. ஜே.வி.செல்லையா, ஏலெய்ன் டேனியலோன், க.கைலாசபதி, நல்லடை ஆர்.பாலகிருஷ்ண முதலியார், ஏ.கே.ரமணியன், ரா.பி.சேதுப்பிள்ளை, தனிநாயக அடிகள், வ.வே.சு.ஐயர்,

Page 96
17A காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
கிங்ஸ்பரி, பிலிப்ஸ், எஸ். மகாராஜன், ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை, ஜி.யூ.போப், ராஜாஜி, கமில் ஸ்வலபில், பி.நந்தகுமார், அஷர், ஜேசுதாசன், வி.கனகசபை, பி.மகா தேவன், கே.ஏ.மீனாட்சி சுந்தரம், பூர்ண விஸ்வம்பிள்ளை, ஏ.கே.ராமானுஜம், ந.சஞ்சீவி, கே.எஸ்.சிவகுமாரன் போன்றோர் எழுதியவை இவற்றில் சில. இவற்றை விட பல தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன. தொகுப்பில் இடம் பெறாத பல தமிழ் ஆக்க இலக்கியங்களும் ஆங்கில விமர்சனக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன.
(தினகரன், 146 1981)
4 - 0 o (x- o

(28)
கவிதையும் விமர்சனமும்
கிவிதை, விமர்சனம் ஆகிய துறைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பதற்கு மேலாக நான் ஒன்றும் புதிதாகக் கூறிவிடப் போவதில்லை. ஆயினும், இரு துறைகளிலும் தலைசிறந்து விளங்கும் இரண்டு ஈழத்து அறிஞர்கள் எழுதிய நூல் ஒன்றை இப்பகுதியில் அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன்.
விமர்சகர் கைலாசபதியும், கவிஞர் முருகையனும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் “கவிதை நயம்” என்ற நூலில் வெளியாகியிருக்கின்றன. இந்த நூல், செய்முறை விமர்சனம் (பிறக்ரிக்கல் கிரிட்டிஸிஸம்) என்ற பாங்கில் அமைந்திருக் கிறது. அவர்கள் கூறியிருக்கும் இத்துறைகள் பற்றிய கருத்துக் களை இப்பத்தியில் வெளியிடுகிறோம்.
கவிதைபற்றி : கவிதை என்பது, முதலாவதாக மிகப் பழமை வாய்ந்த இலக்கிய வடிவம். எனவே அது நன்கு மெருகேற்றப்பட்டுள்ளது. இரண்டாவதாக எந்தப்

Page 97
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ10 11
பொருளையும் கவிதையாக்கலாம். கவிதைக்கென்றே பிரத்தி யேகமான - சிறப்பான - பொருள் கிடையாது. மூன்றாவ தாக சொற்கள்தான் கவிதையிலே அதிமுக்கியமாக விளங்குகின்றன. கவிதையின் கதையானது சொற்களின் கதையாகும். நான்காவதாக கவிதையிலே இசைத் தன்மை அல்லது ஒசைச் சிறப்பு உண்டு. கவிதை என்றால் வாய்விட்டுப் பாடக்கூடியதே. அதன்காரணமாக பாட்டு என்றும் கவிதையைக் குறிப்பிடுகிறோம். “உரையும் பாட்டும்” என்றே பழைய தமிழ் ஆசிரியரும் கூறுவர். பொதுவாகக் கூறுமிடத்து எல்லாக் காலத்திலும் கவிதையின் பொருள் வேறுபட்டுக் காணப்படினும், அது படிப்போருக்கும், கேட்போருக்கும் இன்பத்தையும் உயர்ந்த இலட்சியங்களையும் அளிப்பதாக இருக்கிறது. கவிதையின் பண்பும் பயனும் அது எனலாம். இதனை அனுபவிக்க உதவுவதே கவிதை நயப்பின் நோக்கமாகும்.
விமர்சனம் பற்றி : “சேரவாரும் செகத்தீரே" என்று ஒரு கவிஞன் பாடியதைப்போல், கவியின்பம் காணவாரீர் என்று அழைப்பதே திறனாய்வாளரின் முக்கிய நோக்கம். கவிதையைச் சித்திரவதை செய்வது அன்று. திறனாய்வு என்பது அறுவை வைத்தியம் போன்றது என சிலர் தவறாகக் கருதுவது உண்டு. புறத் தோற்றத்தைக் கொண்டு அவ்வாறு கருதுகின்றனர் என்றும் கூறலாம்.
கவிதை என்பது பல கூறுகளினால் ஆகிய கூட்டுப் பொருள். சொல், பொருள், ஒசை, அலங்காரம், சொல்லுக்கு அப்பால் குறிப்பாக நிற்கும் உணர்வு ஆகிய பல அம்சங்கள் அதனுள் அடங்கியுள்ளன. இத்தகைய பல உறுப்புகள் அளவாகக் கலந்து பிரிக்க முடியாவண்ணம் இயைந்து

கே. எஸ். சிவகுமாரன் 17
இருப்பதுதான் கவிதை. தனிக் கவிதையில் அல்லது காவியத்தில் பல்வேறு அம்சங்களின் பொருத்தப்பாடு ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இப்பொருத்தம் அல்லது பொருத்தமின்மை ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி ஒரு முடிவுக்கு வர உதவுவதே திறனாய்வின் நோக்கமாகும்.
கற்பனை, ஒலிச்சிறப்பு, யாப்பு, அமைதி, அணிநலம், தொடைநயம், குறிப்புப் பொருள், சுவைகள் ஆகியவை வளம்பொலியுமாறு கவிதை படைக்கப் படுகிறது என்று கூறுகிறோம். இவையெல்லாம் சொற்களின் அமைப்பிலும், அவற்றை புலவன் கையாளும் வகையிலும் தங்கியுள்ளன. சொற்களை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதிலும், அவற்றிடையே மண்டிக்கிடக்கும் உயிராற்றலை வெளிக்கொணர்வதிலுமே கவிஞனின் தனிச் சிறப்புக் காணப்படுகிறது. சிறந்த சொற்கள், சிறப்பான ஒழுங்கில் அமைந்தது கவிதை என்பர்.
கற்பனை : கற்பனை என்பது ஒரு கவிதையை ஆக்கும்போது கவிஞன் ஆற்றுகின்ற படைப்புத் தொழிலின் ஒரு பகுதியாகும். இப்படைப்புத் தொழில் மூன்று படிகளில் அல்லது கட்டங்களில் நிகழ்வதென நாம் கருதலாம். அனுபவம் - கருத்து - படிமம் என்பனவே அம்மூன்று கட்டங்களிலும் முறையே இடம்பெறும் அம்சங்களாகும். அனுபவம் புற உலகிலிருந்து ஈட்டப்படுவது. ஐம்புலன்களின் வாயிலாகக் கிட்டுவது. பலதரப்பட்ட புலப்பாடுகளின் சேமநிதியாக உள்ளது. கருத்து அனுபவங்களினின்றும், சிந்தனையாலும், உள்ளுணர்வாலும் வடித்தெடுக்கப்படுவது. பொதுமைப் பண்பு கூடியது. மன நிகழ்வாகவே பெரும்பாலும் நிற்பது. படிமமோ கருத்துக் கட்டி கருத்துக்களை உணர்த்தக்கூடிய ஒரு சில புலப்பாடுகளின்

Page 98
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ178
கூட்டுச் சேர்க்கை. படிமங்களை ஆக்கும் செயல்முறையே கற்பனையாகும்.
மிகையுணர்ச்சி : மிகைஉணர்ச்சி என்பது கேவலம் உணர்ச்சியின் தோற்பகட்டு மாத்திரமன்று; அல்லது அளவுக்கு மீறிய உணர்ச்சிப் பரவசம் அன்று. ஆனால், எத்தகைய செய்கைகளுடனும் தொடர்பற்ற முறையில் உணர்வுகளை வெறுமனே வளர்த்தலாகும். ஓர் உணர்வையோ கருத்தையோ வரையறுத்து கூர்மையாக்கிக் கூறமுடியாத ஒருவன் இலக்கிய வழக்குச் சொற்களிலே தஞ்சம் புகும்போது மிகை உணர்ச்சி தோன்ற வழிபிறக்கிறது. கூற முற்பட்ட அனுபவத்திற்கு உகந்த சொற்கள் வந்து பொருந்தாமையால் வேறு சொற்களால் கூறி முடிக்கப்பட்ட அனுபவம் உண்மையாக இருக்காமற் போவதில் வியப்பெது வும் இல்லை. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலே அளவுக்கு அதிகமாக ஒருவரது ஏற்புடமை இருப்பின் அதனையே மிகையுணர்ச்சி என்கிறோம்.
இலக்கியத்தில் காணும் மிகையுணர்ச்சி வாழ்க்கை யிலிருந்துதான் ஊற்றெடுக்கிறது. வயதுபோனவர்கள் சிறிது உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக்கொண்டு இருக்கும்போது கண்கலங்குகின்றனர். மது அருந்தியதும் சிலருக்கு உளம் நெகிழ்ந்து விடுகிறது. சில்லறை விஷயங்களுக்கெல்லாம் தளதளத்து விடுவதைக் காண்கிறோம். இத்தகைய சந்தர்ப்பங்களில் மிகையுணர்ச்சி கழிவிரக்கத்தின் சாயலிலோ அன்றிப் பச்சாதாபத்தின் சாயலிலோ அதீத பற்றாகவோ இருக்கிறது. உளவியல் அடிப்படையில் நோக்குமிடத்து சாதாரணமாக ஒருவர் உணர்ச்சிவசப்பட்டால் அவ்வுணர்ச்சியே செயலுக்கு தூண்டுதலாக அமைவதைக் காணலாம்.

கே. எஸ். சிவகுமாரன் 179ك
உரிப்பொருள் : கற்பனையின் செயற்பாட்டினால் உருவாக்கப்படும் உவமை, உருவகம், குறியீடு முதலாயின கவிதையின் அக உறுப்புகள். சொற்களின் பொருட்பேறு, ஒசை நயம் முதலாயின கவிதையின் புறக் கருவிகள் அணிகலன்களாகும். இத்தகைய உருவ அமைதியைப் பெற்றுத் திகழும் கவிதையின் உயிர்போல மிக முக்கியமாக விளங்குவது அதன் உள்ளுறை அல்லது உரிப்பொருளாகும். இந்த உரிப்பொருள் ஒர் எண்ணமாகவோ உணர்ச்சியாகவோ இருக்கலாம். எண்ணமும் உணர்ச்சியும் பிரிக்க இயலாதவாறு ஒன்றி முயங்கி இரண்டறக் கலந்த கலவையாகவும் இருக்கலாம். ஒன்றை அறிவிப்பதன்று கவிஞனின் நோக்கம், ஒன்றை உணர்த்துவதே.
உலகு பற்றிய நோக்குகளும், கருத்துக்களும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமையினும், மிகப் பொதுவான வகையிலே ஒரு குறைந்தபட்ச முரண்பாடு காண்பது, இயலக்கூடிய காரியமே.
ஆரோக்கியமாக உயிருடன் நடமாடும் அவயவி கவிதை. அந்த அவயவியின் மகோன்னதத்தைக் கண்டுணர் வதே திறனாய்வின் தேறிய நற்பலனாகும்.
மேற்சொன்னவை “கவிதை நயம்’ என்ற நூலில் காணப்படும் வரிகள். உயர் வகுப்பு மாணவர்கள் உட்பட கவிதைப் பிரியர்கள் அனைவரும் கவிதைபற்றி குண கூடார்த்தமான (அப்ஸ்ராக்ட்) முறையில் அல்லது திட்டவட்டமாக அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.
(வானொலி மஞ்சளி 1/1408 1970)
d, 8, 8. 0x8 0x8 0.

Page 99
(27)
சிறப்புச் சித்திராம்சங்கள்
இதழியல் வளர்ச்சியில் செய்திகளை யடுத்து முக்கியம் பெறுபவை சிறப்புச் சித்திராம்சங்கள். இதனை Feature Writing என்பார்கள். ஒரு சிறப்புக் கட்டுரையில் பின்வரும் எழுத்துச் சாயல்களும் அடங்கும். பத்தி எழுத்து, செய்தி சார்ந்த தகவல்கள், ஆசிரியத் தலையங்கம் போன்ற பாங்கு, வருணனை, விவரணை, படங்கள், விவரங்கள டங்கிய ஆதாரங்கள்.
இத்தகைய சிறப்பம்சங்கள் தமக்கேயுரிய பண்புகளைக் கொண்டவை. முக்கியமான ஒரு பிரமுகர், முக்கியமான தொரு சம்பவம், ஓர் செயற்பாட்டின் சுவாரஸ்யமான அல்லது நாடகத்தன்மை கொண்ட விவரணை இவற்றில்
9 LP51856)ITLD.

கே.எஸ். சிவகுமாரன் 181ك
இத்தகைய கட்டுரைகள் இவற்றை எழுதியவர்களின் பெயர்கள் அல்லது புனைப்பெயர்களுடன் பிரசுரமாகும்.
செய்திகளில் அடிபடும் முக்கியப் பிரமுகர்கள் அல்லது நிகழ்வுகள், பற்றிய பின்னணித் தகவல்களை இந்தச் சிறப்புச் சித்திராம்சக் கட்டுரைகள் தரும்.
இத்தகைய கட்டுரைகளை எவருமே எழுதலாம். நிபுணர்கள் தான் எழுதவேண்டும் என்றில்லை. ஆயினும் ஒவ்வொரு துறையிலும் ஆர்வமுள்ளவர்களும் குறிப்பிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் எழுதும்பொழுது நம்புந்தன்மை அதிகமாகிறது. உதாரணமாக, சிலர் கலை இலக்கியங்கள் தொடர்ச்சியாகச் சிறப்பான முறையில் எழுதுவார்கள். வேறு சிலர் அரசியல் பகுப்பாய்வுக் கட்டுரைகளை எழுதுவார்கள்.
சமூகத்தில் ஓர் அந்தஸ்தைப் பெற்றவர்கள் தாமே தமது அனுபவம், அறிவு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வர். உதாரணமாக முன்னாள் உலக கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பத்திரிகைகளில் விசேட பத்திகளை எழுதுவார்கள்.
செய்திகளை அறிக்கையாகச் சமர்ப்பிப்பதற்கான அவசரத் தேவை, சிறப்புச் சித்திராம்சங்களுக்கு அவசியம் இல்லை எனலாம். சாவகாசமாக இக்கட்டுரைகளை எழுதலாம.
சிறப்புச் சித்திராம்சக் கட்டுரைகளை எழுது முன்னர், எழுதுபவர் ஒரளவு தேடல், ஆய்வு முயற்சிகளை முதலில்

Page 100
182a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
மேற்கொண்டு பின்னர் எழுதும்பொழுது கட்டுரை கதையும், கனதியும், சுவாரஸ்யமும் அழகும் பெறுகிறது.
ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதுவது இலகுவாக அமையும். எப்போது என்றால், முன்கூட்டியே திட்டமிட்டு எழுதும்போதாகும். அதாவது ஒரு நிகழ்வு நடை பெறுவதற்கு முன்னரே பல தரவுகளைத் தேடிக் கோவையாக்கிச் செப்பனிட்டு வைத்துக்கொண்டு பின்னர் மேலதிகமான தகவல்களையும் சேர்த்து உரிய நேரத்தில் பிரசுரிக்கலாம்.
வாசகர் வேண்டி நிற்கும் பல தகவல்களையும் உள்ளடக்கியதாகச் சிறப்புச் சித்திராம்சக் கட்டுரைகள் அமையவேண்டும். தகவல் நிரம்பியதாக, சுவாரஸ்யமான முறையில் எழுதப்பட்டதாக, தெளிவாகவும், உரிய முறையிலும் வாசகர் அறிவையும் அனுபவத்தையும் பெறக்கூடியதாக இச்சிறப்புக் கட்டுரைகள் அமைய வேண்டும்.
ஒரு நல்ல சிறப்புக் கட்டுரையின் ஒரு பகுதி குறுகிய வழிகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். நீண்ட கட்டுரை வடிவில் அமைந்ததாகவும் இருக்கலாம். அளவு முக்கியமல்ல; அதில் இடம்பெறும் கதையே முக்கியமான தாகும். Columnist எனப்படும் 'பத்தி எழுத்தாளர்கள் சுருங்கக் கூறி விளக்க வைக்கும் பணியை மேற்கொள்பவர்களாவர். சுருங்கக் கூறுவதனால், அவர்கள் எழுத்தில் 'ஆழமிருக்காது' என்று முற்சார்பாக எண்ணுவது தவறு.

கே. எஸ். சிவகுமாரன் 183ك
இத்தகைய கட்டுரைகள் முதல், இடை, கடை கொண்டதாக படிப்பதற்கு இலகுவானதாக, சுவாரஸ்யமாக எழுதப்படல் வேண்டும். இக் கட்டுரைகளின் முக்கியத்துவம் கருதி, இவை உரிய முறையில் வாசகர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரசுரிக்கப்படும்.
செய்திகளை எழுதும் முறைக்கும் சிறப்புச் சித்திராம்சக் கட்டுரைகளை எழுதும் முறைக்குமிடையே வித்தியாசங்கள் உள. செய்தி வெறுமனே தகவல்களை நேரடியாகத் தருபவவை. எனவே அதன் நடைவேறு. சிறப்புக் கட்டுரைகள் எழுதப்படும் நடை வேறு.
செய்தியின் பின்னணியான விபரங்களடங்கிய சிறப்புக் கட்டுரைகள், மனித நலன் ஆர்வம் சம்பந்தமான கட்டுரை கள், ஆளுமை சார்ந்தவர்கள் தொடர்பான கட்டுரைகள், அரசியல் (உள்ளூர் தேசிய அனைத்துலகம் சம்பந்தமானவை), நிதி, வணிகம், கைத்தொழில், உடல்நலம், மருத்துவம், பயணம், விளையாட்டு, கலை, இலக்கியம், நாகரிக மோஸ்தர்கள், மகளிர், சிறுவர், வளரிளம் பருவத்தினர், சூழல், கப்பற் போக்குவரத்து என்று பற்பல துறைகள் பற்றிய கட்டுரைகள் யாவுமே சிறப்புச் சித்திராம்சக் கட்டுரைகள் எனலாம்.
சிறப்புக் கட்டுரையாளரோ, செய்தியாளரோ எவருக்குமே “வாசிப்பு' மிக மிக அவசியம். வாசிக்காத வர்கள் இதழியலாளர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ, திறனாய்வாளர்களாகவோ மிளிர முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, வாசித்தல், உரையாடல்,

Page 101
184a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
கூட்டங்களுக்குச் சென்று பகுத்தறிவைப் பெறுதல் போன்றவையெல்லாம் முக்கியமானவை.
அடுத்ததாக மொழிவளம் மிக முக்கியம் பெறுகிறது. இலக்கண அறிவு, நல்ல தமிழில் எழுதுதல் போன்றவற்றை நாம் புறக்கணித்தலாகாது. சரியான சொல்லை சரியான இடத்தில் பயன்படுத்தும் முறைமையைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். இலகு தமிழில் யாரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் ஆழமான விஷயங்களை மெருகுடன் எழுதுதல் வரப்பிரசாதமாகக் கருதப்படும்.
நீங்கள் அக்கறைகொண்ட விஷயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த பொருள்கள் பற்றி எழுதலாம். உங்கள் விருப்பு வெறுப்பு எவ்விதமாயிருந்தாலும், நீங்கள் பிரமுகர்களை செவ்வி காணும் பொழுது அவர்கள் நாட்டங்கொண்ட துறைகளூடாக அவர்களை அணுகுங் கள். வாசகரை திக்முக்காட வைக்காமல், சந்தேகம், சம்சயம் கொள்ளவைக்காமல் நேரடியாகவே விஷயத்தைச் செவ்வனே சொல்லிவிடுங்கள். தெரிந்தவற்றுடன் ஆரம்பித்து படிப்படியாக தெரியாதவற்றை அறிமுகப்படுத்தி வாசகரின் சிந்தனைப் போக்கு வளர்ச்சிக்கு உதவுங்கள். உதாரணங்களுடன் விளக்குங்கள். சுவையான கதைத் துணுக்குகள், நகைச்சுவைச் சிதறல்கள் இவையெல்லாம் உங்கள் சிறப்புக் கட்டுரைக்கு வனப்பளிக்கும். உங்கள் வாசகர்களை மதித்து, அவர்களுக்குரிய கெளரவத்தைக் கொடுத்து, அவர்களுக்குப் புரியும்படி எழுதுங்கள்.
தேவைக்கு அதிகமான சொற்களைத் தவிர்த்தல் நன்று. அர்த்தம் புரிந்து கொள்ளப்படக்கூடிய விதத்தில்

கே. எஸ். சிவகுமாரன் 185ك
சொற்தேர்வு அமைதல் வேண்டும். நன்கு பழக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்துங்கள், குணகூடாரத்தனமான சொற்களைத் தவிர்த்து, திடமான சொற்களைப் பயன்படுத்துங்கள். கூடியவரை செயற்பாட்டு வினையைத் தவிர்த்துச் செய் வினையில் எழுதுங்கள். சுற்றிவளைக்காமல் நேரடியாகவே சம்பந்தப்பட்ட பொருளின் விளக்கத்தைத் தாருங்கள்.
(தினகரன், 01.04.2001)
0 0 0 0x8 •

Page 102
(චූලි)
உடனிகழ்கால தமிழ் இலக்கியப் போக்கின் சில கூறுகள்
லங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் “தமிழ்பேசும்” மக்கள் வசிக்கிறார்கள். மேற்கோள் குறிக்குள் அடங்கிய இந்த அடைமொழி பின்வருபவர்களைக் குறிக்கும்.
இலங்கையின் பூர்வீகத் தமிழர், கடந்த நூற்றாண்டில் இலங்கையில் குடியேறிய இந்திய (தமிழ் நாட்டு) வம்சாவளியினர், இஸ்லாமிய மதத்தைத் தழுவிய சோனகர், மலேயர், சிங்களவர்களாகத் தம்மை இனங்காட்டிக் கொண்டு, வீடுகளில் தமிழ் பேசும் சிலர் (இவர்கள் நீர் கொழும்பு, சிலாபம் போன்ற வடமேல் பகுதியில் வகிப்பவர்கள்), தமிழிலேயே பேசும் போர்த்துக்கேய,

கே. எஸ். சிவகுமாரன் 187
ஒல்லாந்து வம்சா வளியினர் (இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர்).
இலங்கையின் பூர்வீகத் தமிழர், வடக்கு மாகாணத் திலும் (யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் இம்மாகாணத்தில் அடங்கும்) கிழக்கு மாகாணத்திலும் (மட்டக்களபு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் இம்மாகாணத் தைச் சேர்ந்தவை) மேல் மாகாணத்திலும்(கொழும்பு, நீர்க்கொழும்பு), மத்திய மாகாணத்திலும் (கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, நுவரேலியா, நாவல்ப்பிட்டி, புதுளை, பண்டாரவளை) அதிகம் வசிக்கிறார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்துக்குள் வரும் கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் தென் மாகாணத்திலுள்ள டிக்வெல் என்ற இடத்திலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இவ்வாறு ஈழத்தின் பல பகுதிகளிலும் பரந்து வசித்துவரும் தமிழ் பேசும் மக்கள், தமிழில் தமது இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர்.
ஈழத்து இலக்கியம் என்று திட்ட வட்டமாக இனங்காணக்கூடிய இலக்கிய முயற்சிகள், இலங்கை சுதந்திரமடைந்த பின் (1948) எழுந்தனவாயினும், 1956க்குப் பின்னரே துரிதமாக வளரத் தொடங்கின. கடந்த பத்தாண்டுகளில் (1985 - 1996) தமிழில் எழுதப்படும் இலக்கிய முயற்சிகளை நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், விமர்சனம், ஆய்வு என்ற வகைகளுக்குள் அடக்கலாம்.
கடந்த தசாப்த காலத்தில் கணிசமான எண்ணிக்கை யுடைய புதிய ஈழத்து எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்

Page 103
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
கள். இவர்களில் பெரும்பாலானோர், இலங்கைக்கு வெளியேயிருந்து ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களிலிருந்தும், கனடாவில் இருந்தும் எழுதுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களாகவும், சார்புள்ளவர்களாகவும் இயங்கி வருகின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்றேடுகள் ஈழத்து இலக்கியத்தைப் பிரகடனஞ் செய்து வெளிநாடுகளில் ஒரு கட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தன. நூல் வடிவமாகவும் பல புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றை வகுத்துத் தொகுத்து மதிப்பீடு செய்தாலன்றி முழுமையாக ஈழத்து இலக்கியம் எவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் வெளிப்படுத்தப்படுகின்றது என்பதை மதிப்பிட முடியாது.
தமிழ் நாட்டில் செ.யோகநாதன், செ.கணேசலிங்கன் ஆகிய இருவரும் நிறைய நூல்களை வெளியிட்டிருக் கிறார்கள். எனவே, இவர்களுடைய பெயர்கள் தமிழ்நாட்டு வாசகர்களில் சிலருக்குப் பரிச்சயமானவை. இவர்களை விட இன்னும் பலரின் நூல்கள் தமிழ் நாட்டிலேயே வெளியாகிய போதும், வாசகர்களிடத்தில் பிரபல்யம் பெறவில்லை.
இலங்கையைப் பொறுத்தமட்டில், அங்கு உடன் நிகழ்கால (Contemporary) இலக்கிய முயற்சிகள், பருவகால ஏடுகள், பல்கலைக்கழக ஏடுகள், சஞ்சிகைகள், தினசரிகளின் வார இதழ்கள் ஆகியவற்றில் வெளியாகி வருகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்சமயம் வசிக்கும் எழுத்தாளர்கள், அங்கு வெளியாகிய மல்லிகை, ஈழநாதம், ஈழநாடு, ஈழமுரசு, அலை, கவிதை, உதயன், சஞ்சீவி, கலை

கே. எஸ். சிவகுமாரன் 189ك
மஞ்சரி போன்றவற்றிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியேயுள்ள எழுத்தாளர்கள் மேற்குறிப்பிட்ட சாதனங்கள் உட்பட கொழும்புத் தினசரிகளான தினகரன், சிந்தாமணி, மித்திரன், வீரகேசரி ஆகியவற்றின் வாரப்பதிப்புகளிலும் எழுதினர். சிலர் தமது ஆக்கங்களை நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலான எழுத்தாளர்கள் யாழப்பாணப் பகுதிக்கு வெளியேதான் வசித்து வருகின்றனர். ஈழத்து எழுத்தாளர்களில் பெரும் பாலானவர்கள் பல்கலைக் கழகங்களிலோ, பாடசாலை களிலோ ஆசிரியத் தொழில் புரிந்து வருகின்றனர். வேறு சிலர் அரசாங்க, தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு, கொழும்பு போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்குக் கிட்டுவதில்லை. அதுபோல், கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் வசிப்பவர்களின் எழுத்துக்களை யாழ்ப்பாண வாசகர்கள் படிக்கக்கூடிய வாய்ப்பும் இல்லை. அரசியல் காரணமாகத் தொடர்பு அற்றுப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். "செங்கை ஆழியான் (செ.குணராசா), நந்தி (டாக்டர் செ.சிவஞான சுந்தரம்), டானியல் (மறைந்து விட்டார்), டொமினிக் ஜீவா (மல்லிகை இதழின் ஆசிரியர்) கா.சிவத்தம்பி போன்றவர் களின் எழுத்துக்களைச் சில வேளைகளில் படிக்கும் வாய்ப்பு, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள வாசகர்களுக்குக் கிடைக்கிறது.
இலங்கையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஈழத்து இலக்கிய முயற்சிகளை 60களிலிருந்து நெறிப்படுத்தி

Page 104
190a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
வந்துள்ளனர். கடந்த தசாப்த காலத்தில் இவர்களின் செல்வாக்கு குறைந்த போதிலும், ஓர் அரை நூற்றாண்டாக இந்தப் பல்கலைக் கழக மட்டத்தினர் சுவாமி விபுலானந்தர் காலம் தொட்டு அளப்பரிய சேவை செய்து வந்துள்ளனர். கிழக்கு மாகாண, மத்திய, ஊவாமாகாண, கொழும்பு மாநகர எழுத்தாளர்கள் தமது பங்களிப்புகளைச் செய்து வந்துள்ளனர். இவர்களில் மறைந்த மு.தளையசிங்கம் மற்றும் எஸ்.பொன்னுத்துரை (இவர் இப்பொழுது அவுஸ்திரேலியா வில் வசிக்கிறார்) ஆகிய இருவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எல்லைக் கட்டான அனுபவங்களையே எழுத்தாளர்கள் எதிர் நோக்கவும், அனுபவிக்கவும் நேரிடுவதனால் அந்தந்த மாவட்ட இலக்கியங்களின் அடிநாதமாக சில அம்சங்கள் தென்படுகின்றன. உதாரணமாக, யர்ழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினை, ஆயுதப்படையினரின் (அரசாங்க/ போராளி மோதல்கள்) அட்டகாசங்கள் காரணமாக மக்கள் படும் துயரங்கள் போன்றவை சித்திரிக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு எழுத்தாளர்கள், தமிழ்நாட்டு ஜனரஞ்சக எழுத்தாளர்களின் கற்பனைகளை ஆதர்சமாகக் கொண்டு எழுதுகின்றனர்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் சற்றே ஆழமாக வாழ்க்கையை நோக்கி எழுதுகின்றனர். மலைநாட்டு (மத்திய, ஊவா மாகாணங்கள்) எழுத்தாளர்கள் தேயிலைத் தோட்டம் வாழ் மக்களின் துயரங்களை வடிக்கின்றனர்.

கே. எஸ். சிவகுமாரன் 191 كص
கொழும்பு மாவட்ட எழுத்தாளர்கள் நகர வாழ்க்கையைச் சித்திரிக்கின்றனர். பெண்ணியம் தொடர்பாக செ.கணேசலிங்கன் மற்றும் ஒருசில பெண் எழுத்தாளர்கள், நிறைய எழுதி வருகின்றனர்.
இந்த எழுத்தாளர்கள் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டால், இக்கட்டுரை மிகமிக நீண்டுவிடும். எனவே, பெயர்களைக் குறைத்துள்ளேன்.
ஆக்க இலக்கியத்துறையில் கலை நுட்பம், அனுபவச் செறிவு, ஆழமான தத்துவம் போன்றவை குறைவாகக் காணப்பட்டாலும், ஆய்வுத் துறையில் ஈழத்து விமர்சகர்கள் முன்னோடிகளாக விளங்கி வருகின்றனர்.
World Literature in English (giisa) Qi c1, ... su 2 a.5 இலக்கியங்கள்) என்ற படுதாவுக்குள், ஆங்கிலேய, அமெரிக்க, கனேடிய, அவுஸ்திரேலிய, கரீபிய, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய எழுத்தாளர்கள் எவ்வாறு எழுதி உலகளாவிய ஸ்தானத்தைப் பெறுகிறார்களோ, அதேபோல் தமிழ் கூறும் நல்லுலகத்திலிருந்து, தமிழ் மொழியில் பல படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, தமிழ் கூறும் நல்லுலகில் இலங்கையும் இடம் பெறுவதனால், இன்னமும் தமிழ்நாட்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் ஈழத்து இலக்கியம்
தொடர்பாக அறிவற்றிருக்க இயலாது.
நவமணி. 28.10.1996)
0 d, . 4X 0. •

Page 105
(29)
மேலை இலக்கியம் / மெய்ப்பொருள்
bண்பர்களும் ஆய்வாளர்களுமான க.சண்முக லிங்கம், ராஜரத்தினம், மதுசூதனன் ஆகியோர் அண்மைக்கால மேலைத் தத்துவப் போக்குகள் தொடர்பாக குறிப்பாக நவீனத்துவம், நவீனத்துவத்தைத் தொடர்ந்து வந்த எதிர்ப்புத் தத்துவம் - தமிழில் கிடைக்கக்கூடிய நூல்கள் பற்றிய விபரங்களை வழங்கினார்கள். பேராசிரியர் சபா ஜெயராசாவின் நூல் விமர்சனம் தொடர்பாக அவர்கள் பங்கெடுத்தனர். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை/ கைலாசபதி ஆய்வு வட்டம் ஆகியன நூலை வெளியிட்டுள்ளன. நூலின் பெயர்: பின் நவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல். இந்த விமர்சன அரங்கு 15 பேர் மத்தியில் கடந்த 24.02.2007 இல் நடைபெற்றது.

கே.எஸ். சிவகுமாரன் 193
நண்பர்கள் தெரிவித்த இந்தத் தமிழ் நூல்களைப் படித்துப் பயன்பெற எனக்கு ஆசையாய் இருக்கிறது. இவற்றைத் தேடிப் படித்து அறிவைப் பெருக்க அவகாசமும் இல்லாமற் போய்விட்டது. ஆயினும், சுமார் 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த இரு தமிழ் நூல்களை அண்மையில் மீளப் படித்துப் பார்த்தேன். எமது வாசகர்கள் இந்நூல்களினின்றும் பயன்பெறலாம் எனக் கருதி, இவை பற்றிய சிறு மதிப்புரைகள் தொடர்கின்றன.
முதலிலே, மேலை இலக்கியச் சொல்லகராதியை எடுத்துக் கொள்வோம். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஆங்கில - ஒப்பியல்துறையின் தலைவராக விளங்கிய வை.சச்சிதானந்தன் இந்த நூலினை ஆக்கியோன். 1983இல் வெளியாகிய இந்த நூலை இந்திய மக்மிலன் நிறுவனத்தினர் வெளியிட்டிருந்தனர். மூதறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நினைவாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல அறிஞர்கள் நூலாசிரியருக்கு உதவியுள்ளனர்.
வை.சச்சிதானந்தன் தமது முன்னுரையில் கூறும் விபரங்கள் நமக்கும் பயனளிக்கும்;
“நம் நாட்டில் (இந்தியாவின்) ஆங்கிலக் கல்வி சட்டப்பூர்வமாக 1835இல் கல்விக் கழகங்களில் நுழைக்கப்பட்டாலும் ஆங்கில இலக்கியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்தில் 1879ஆம் ஆண்டு முதல் ஊடுருவத் தொடங்கியிருக்கலாம் என்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை தன்னுடைய முதல் நாவலுக்கு எழுதிய

Page 106
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை -ܠܬ792:
முன்னுரையிலிருந்து நாம் அறிகிறோம். ஆனால், இரண்டாவது உலகப் போருக்குப் பிறகுதான் தமிழ் அறிஞர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் மேலை இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளையும் முறைகளை யும் உத்திகளையும் தமிழ் இலக்கியத்தின் நுட்பதிட்பங்களை ஆராய்வதற்கு பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர் எனலாம்.
“இதற்கு ஆங்கில மூல நூல்களும் இலக்கியச் சொல்லதிகாரங்களும் பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கில இலக்கியத்தில் நேர்முகப் பயிற்சியின்மை காரணமாக, திறனாய்வுச் சொற்களைக் கையாளும்போது, சிக்கல்களும் கருத்து வேறுபாடுகளும் தோன்றி நுட்பமான இலக்கிய மதிப்பீட்டிற்கு இடையூறுகளை விளைவிக்கத் தலைப்பட்டன. இக்குறையை ஒரு விதத்தில் நீக்குவதற் காகவே, தமிழில் ஒர் இலக்கியச் சொல்லதிகாரத்தினை, ஆக்கும் பணியை நானும் ஆங்கில இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் ஒருசேர புலமையுடைய ஒரு சிறிய நண்பர் குழாமும் மேற்கொண்டோம்.”
இந்த பயனுள்ள அகராதியில் ஆங்கில அல்லது மேலைத்தேய கருத்தியல்களுக்கு ஏற்ப ஆங்கிலத் திறனாய்வுச் சொற்களுக்கு நல்ல முறையில் விளக்கங்கள் தரப்படுகின்றன. உதாரணமாக, Aesthetic Attitude என்ற தொடருக்கு “முருகியல் சார்புணர்வு” என்று தமிழாக்கம் செய்யப்படுகின்றது. அதேபோல, “முருகியல் அயன்மை (Aesthetic Distance), (possup G siTLLJITG) (Aestheticism), முருகியல் (Aesthetics)" ஆகியன பற்றிய விளக்கங்கள், என்னைப் பொறுத்தமட்டில் சரியாகவே இருக்கின்றன.

கே. எஸ். சிவகுமாரன் 195
Avant Grade என்ற பிரெஞ்சுச் சொல்லுக்கு “முன்னணி இலக்கியம்" என்று கூறுவது பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். நூலாசிரியர் தரும் விளக்கம்: ‘அமைப்பிலோ (Form) உத்தியிலோ (Technique) புதிய முறைகளைக் கையாளும் இலக்கியத்தை இச்சொல் குறிக்கும்.”
Beles Letters (கவின்கலை) “தற்காலத்தில் எளிய இலக்கியக் கட்டுரைகளை மட்டும் குறிக்கின்ற தொடராகப் பயன்படுத்தப்படுகிறது.’ எனது பெரும்பாலான பத்திகள் இந்த வகைகளுக்குள் அடங்கும்.
Cliche (வழக்கடிபட்ட சொற்றொடர்) என்பது இவ்வாறு விளக்கப்படுகிறது.
"திரும்பத் திரும்பவும், அடிக்கடி சொல்லிச் சொல்லி காலத்தால் தேய்ந்து போய், தனது வார்த்தையையும் ஒரளவுக்கு தனது முதல் பொருளையும் இழந்துவிட்ட சொற்றொடர்கள் இவை”.
இந்த நூலாசிரியர் (Criticism) என்ற சொல்லைத் தமிழில் “திறனாய்வு” என்றே பெயரிடுவது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. “விமர்சகர்கள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் தயவுசெய்து, இலக்கியத் திறனாய்வு தொடர்பாகத் தரும் விளக்கங்களைப் படித்துப் பாருங்கள்.
ஆங்கில இலக்கியத் திறனாய்வுப் பதங்களில் நுழைந்துவிட்ட மற்றொரு பிரெஞ்சுச் சொல் Denouement. இதனை “கரை முறுக்கவிழ்வு” என நூலாசிரியர் தமிழாக்கம் செய்கிறார்.

Page 107
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ196
அடுத்ததாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதங் களுக்கான தமிழாக்கங்களைக் கீழே தருகிறேன்.
Empathy and Sympathy (6.5g/600Tsfath Lurfaya,00Tiraylib), Genre (gaud Su Q1605), Hubris (gp1LDITILI) (Humanism) (மனிதநலக் கோட்பாடு), (Imagism) (உருவக்கவிதை), impressionism (2) Git GMTL'ulugSÚL), (Pathos) (26MTGp6gp6), Romance (அற்புத நவிற்சி), Sublime (மேதகைமை).
to 8
● ex
அடுத்த நூல் “மேலைநாட்டு மெய்ப்பொருள் (சொக்கிரட்டிஸ் முதல் சாத்தர் வரை)”. இதனை எழுதியவர் பேராசிரியர் க.நாராயணன். இவர் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக விளங்கியவர். இந்த நூலும் 1989இல் வெளிவந்தது.
இந்த நூலில் முன்னுரை உட்பட 14 அதிகாரங்கள் இருக்கின்றன. அவையாவன:
சொக்கிரட்டிஸ-ஸுக்கு முன், சொக்கிரட்டிஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டில், நால்வகைக் கோட்பாடுகள், பிளேட்டோனிய மறுமலர்ச்சி, இடைக்காலச் சிந்தனைகள், கிறித்துவமும் தத்துவமும், புதுயுகம் பிறக்கிறது. பகுத்தறிவுச் சிந்தனைகள். பட்டவியச் சிந்தனைகள், ஜேர்மனிய கருத்தியல், பொருளியல் சிந்தனைகள்.
இவற்றைவிட அணிந்துரை, முன்னுரை என்பனவும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலிலே 14 ஆங்கில நூல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை “கருவி நூற்

கே. எஸ். சிவகுமாரன் 197ص
பட்டியல்' என்கிறார் நூலாசிரியர். தமிழ் நூல்களும் தரப்படுகின்றன. அ.இ.எத்திராசலு மொழி பெயர்த்த “ஐரோப்பிய தத்துவ இயல்' என்ற இராகுல சாங்கிருத்தியாயனின் நூல் அவற்றுள் ஒன்று. மற்றையது ச.இராதாகிருஷ்ணன் தொகுத்த "கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் வரலாறு தொகுதி 1, 11.” அடுத்தது TMP மகாதேவன், சண்முகசுந்தரம் ஆகியோர் எழுதிய "மேல்நாட்டுத் தத்துவ வரலாறு'.
0. Xo Xo ex
தமிழில் மெய்யியல் தொடர்பாக ஆரம்பகாலத்தில் வெளிவந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்கள் இலங்கையராவர். மறைந்த கி.லசுஷ்மண ஐயர் எழுதிய “இந்திய தத்துவஞானம்”, ந.கதிரவேற்பிள்ளை எழுதிய “மேனாட்டுத் தரிசன வரலாறு” ஆகியன குறிப்பிடத்தக்கன.
(தினக்குரல் - 18.02.2007)
Ο 0.
0.
●
KM 40K)

Page 108
கருத்துக்களை தெரிவிக்கும்
பாங்கில் ஒரு நெறிமுறைநேர்மை இருக்க வேண்டும்
திறனாய்வு அல்லது விமர்சனம் அல்லது புத்தக மதிப்புரை அல்லது நூல் நயம் அல்லது நூல் ஆய்வு என்றெல்லாம் மகுடமிட்டு, நூல்கள் பற்றி நமது அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகிறோம் அல்லவா? ஆயினும், இப்பதங்களுக்கும் தொடர்புள்ள வேறுசில பதங்களுக்கும் இடையிலே சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்வதில்லை.
உதாரணமாக, ஆராய்ச்சி, ஆய்வு, இலக்கிய வரலாறு போன்றவை மிகமிக உயர்மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திறனாய்வு முயற்சிகளாகும். இலக்கியத் திறனாய்வும் அவ்விதமானதே. புத்தக மதிப்புரை/ நூல்நயம்/ நூல்

கே.எஸ். சிவகுமாரன் V ക199
விமர்சனம் போன்றவை ஒருபடி கீழே செயற்படும் எழுத்து ஆகும். பத்தி எழுத்துக்கள் அதிலும் கீழ்மட்டமுடையவை.
இவ்வாறிருக்க, நம்மில் பலர் திறனாய்வுப் போக்குடைய சகல எழுத்துக்களையும் திறனாய்வென்றோ, விமர்சன மென்றோ கவனக் குறைவாகக் கணித்து விடுகின்றனர். இது தப்பு.
இன்னும் கேலிக் கூத்தான கணிப்பு எதுவெனில் நையாண்டி, நக்கல், மொட்டைக் குறிப்புகள், கண்டனம், கிளுகிளுப்பான செய்திகள் போன்றவையும் விமர்சனம் என அழைக்கப்படுவதுதான். இது மிகவும் பரிதாபத்திற்குரிய சங்கதி. திறனாய்வு/விமர்சனம் என்று எதை அழைப்பது என்பது பற்றிச் சரியான விளக்கம் பெறாதவர்கள்தான் இந்தப் புதிய கண்டனப் போக்கை விமர்சனம் என்று மருளுவர்.
இந்தக் 'கன்னா பின்னா' எழுத்துக்கள் 'விமர்சனம் என்று தவறாகச் சிலரால் கருதப்படுவதனால், திறனாய்வுச் சாயல்கள் இருந்தபோதிலும், கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக நான் எழுதும் எழுத்துக்களை "பத்தி எழுத்துக்கள்" என்று சுருக்கிக் கொள்கிறேன். நெல்லுக்கும் பதருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாத சூழலில், “திறனாய்வு” என்ற புனிதமான அர்த்தம் பொதிந்த வார்த்தைக்குக் கொச்சை ஏற்படுத்தாமல், 'பத்தி எழுத்து' என்று எனது எழுத்துக்களைக் கூறிக்கொள்வதில் நான் சங்கடப்படவில்லை. அங்கு நேர்மையுண்டு என்று நினைக்கிறேன்.

Page 109
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ200
கலை, இலக்கியத்துறைகளில் உண்மையாகவே ஈடுபாடு கொண்டுள்ள வாசகர்கள், திறனாய்வுத்துறை தொடர்பாக வெளிவந்துள்ள சில நூல்களைக் கற்க வேண்டும். படித்துப் பார்க்க வேண்டும். சுவாமி விபுலானந்தர் முதல் கைலாசபதி, சிவத்தம்பி, முருகையன், மு.தளையசிங்கம் ஊடாகப் பல்கலைக்கழக மட்ட ஆசிரியர்கள் வரை பல நல்ல நூல்களைத் தந்துள்ளனர். எமது பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் அனைவருமே நல்ல திறனாய்வுகளை எழுதி வருகின்றனர். இவர்களுக்குத் திறனாய்வு என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது.
அதேவேளையில், பல்கலைக் கழகங்களுக்கு வெளியேயிருந்தும் பல நல்ல திறனாய்வுக் கட்டுரைகள், மதிப்புரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் திறனாய்வு தொடர்பான பல நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை நமது இளைய புதிய விமர்சகர்கள் (குறிப்பாக “புதிய வாசிப்பு"களை மேற்கொள்பவர்கள்) தேடிப்படித்து, அறிந்து, உணர்ந்து விட்டார்களாயின் பின்னர், தமது நக்கல்/ கண்டனப் பாணியான 'விமர்சனங்கள்' எழுதத் துணிய மாட்டார்கள்.
திறனாய்வு தொடர்பான நூல்களை நானும் எழுதியுள்ளேன் என்று கூறுவது எனக்கு விளம்பரம் தேடுவதற்காக அல்ல; மாறாக, நிறையத் தகவல்களை நீங்கள் இந்நூல்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவே.

கே.எஸ். சிவகுமாரன் മ01
அத்தகைய நூல்களில் சில:
கலை/இலக்கியத் திறனாய்வு, கைலாசபதியும் நானும், திறனாய்வுப் பார்வைகள், ஈழத்து இலக்கியம்; நூல்களின் அறிமுகம், ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள்; திறனாய்வு, திறனாய்வு; அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள், மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்.
இந்நாட்களில், சில சிற்றேட்டுப் புதிய விமர்சகர்கள் அமைப்பியல் வாதத்தின் பின் எழுந்த போக்கை (POST STRUCTURALISM) பின்பற்றுகிறார்கள். 80களிலேயே மேற்கில் (குறிப்பாக பிரான்ஸில்) செயலிழந்துபோன இந்தத் திறனாய்வுப் போக்குகளை (கட்டவிழ்ப்பு, சுயவாசிப்பு போன்றவை) இப்பொழுதுதான் தமிழ நாட்டுச் சிற்றேட்டு விமர்சகர்கள்’ மூலம் அறிந்து, நையாண்டியும், மேம்போக்கான அவதானிப்பு அடங்கிய குத்தலுமாக சில ‘விமர்சனங்களை இந்தச் சிற்றேட்டு எழுத்தாளர்கள் எழுதிவருகின்றனர். இவர்களுடைய குறைபாடு என்னவென்றால், நூல்களை முழுமையாகப் படித்து நூலாசிரியனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமை, இலக்கிய வரலாறு முழுமையாகத் தெரியாமை, பல்நெறி சார்ந்த பார்வை இல்லாமை, ஆழமின்மை, விஷமத்தனம், இளந்தாரிகளுக்குரிய கேலிச்சேட்டை, மொட்டையாக அபிப்பிராயம் தெரிவித்தல், கண்டனமும் ஹாஸ்யமும் தொனிக்கும் சுய திருப்தி (Sadism), ஒழுங்கான/ கட்டுக்கோப்பான முறையில் கருத்துக்களைத் தெரிவிக்க இயலாமை போன்றவையாகும்.

Page 110
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ202
ஜனநாயகக் கோட்பாட்டில் கருத்துச் சுதந்திரமுண்டா யினும், அதனைத் தெரிவிக்கும் பாங்கில் ஒரு நெறிமுறை, நேர்மை வேண்டும். அடிப்படைகளைப் புறக்கணித்து விட்டுக் கண்டனமே விமர்சனம் என்று மருளுவது அறியாத்தன்மை யாகும்.
ஒரு மூத்தவன் (வயது 62) என்ற முறையில் நமது இளைய சந்ததியினருக்குச் சரியான பாதையை வழிகாட்டுவது எனது கடமை என நினைக்கிறேன். தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால், தம்பி சண்டைப் பிரசண்டன்' என்பதுபோல, நமக்குச் சொந்தமான இந்த இளைய விமர்சகர்கள் தமது தப்புக்களைச் சிறிது சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற அன்பு நோக்கத்தினாலேயே இக்கருத்தைத் தெரிவிக்கிறேன். முதலில் படியுங்கள். பின்னர் வேண்டுமானால், நூல் ஆசிரியரை மறந்துவிட்டு, உங்கள் “வாசிப்புகளை" மேற்கொள்ளுங்கள். எதனையும் அரைகுறையாகச் செய்யாதீர்கள்.
(தினக்குரல் - 09.05.1999)
0 0 (X- 4. 0x8

GD
இஸம்களின் தமிழ் விளக்கம்
நமது நாட்டிலே புதிய பரம்பரையினர் சிலர் துரதிருஷ்டவசமாக ஆங்கில மொழியில் பரிச்சயம் செய்து கொண்டிருக்கவில்லை. விமர்சனம் அல்லது திறனாய்வுத் துறையிலே பயன்படுத்தப்படும் சில பதங்கள் சில 'ஆழமுள்ள விமர்சகர்களுக்கு மலைப்பையே தந்தது. இந்த 'இஸம்கள் பற்றி தமக்கு ஒன்றுமே தெரியாது எனப் பகிரங்கமாகக் கூறியதுடன் ஏனையோர் ஆழமற்ற, மேலோட்டமான கட்டுரைகளையே எழுதுவதாகக் குற்றஞ்சாட்டினர். இத்தகைய விமர்சகர்கள் மீது பரிதாபப்படுவதுடன் அவர்கள் நலன்கருதி இந்த 'இஸம்' பற்றிய விளக்கத்தைத் தருவதே இப்பத்தியின் நோக்கம்.
நானாகத் தருவதைவிட்டு இந்த ஆழமுள்ள விமர்சகர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முற்போக்கு

Page 111
204a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
விமர்சகர்களின் வியாக்கியானங்களிலிருந்து தொகுத்துத் தருவது அவர்களுக்கே திருப்தி தரக்கூடும். எனவே 1972ஆம் ஆண்டு வெளிவந்த மலர் - 3, இதழ் - 1 “ஆராய்ச்சி” ஏட்டில் இடம்பெற்ற ஒரு கட்டுரையிலிருந்து இந்த விளக்கத்தைப் பெற்றுக் கொள்வோம்:
வெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் எழுதிய “கிருத்திகா வின் இரண்டு நாவல்கள்” என்ற கட்டுரையிலிருந்து சில மேற்கோள்கள்:
ப்ரொய்டிஸம்: மூலப்பிதா சிக்மன்ட் ப்ரொய்ட். மனிதனுடைய உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகளை அவனது 'அன்கொன்ஷஸ்” எனப்படும் ஆழ்உணர்வே நிர்ணயிக்கிறது என்று கூறினார்.
மனித மனத்தின் அடிப்படை உணர்ச்சிகளாக இன்ப நாட்டமும் (லிபிடோ) இறப்பு மற்றும் அழிவு அச்சமும் உள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து “இட்' என்று ப்ரொய்ட் அழைத்தார். இவை தவிர “ஈகோ” எனப்படும் உணர்வும் அவரால் குறிப்பிடப்பட்டது. இது புற உலகோடு மனிதனைத் தொடர்புபடுத்துவது. “இட்" ஆழ் மனதைச் சேர்ந்தது. அதுகொள்ளும் வேட்கை நிறைவேறச் சமூகக் கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன. இக்கட்டுப்பாடுகள் விலங்குகளுக்கு இல்லை. மனித சமுதாயத்தால் “டபூ” எனக் கருதப்படுபவை மனிதனது இன்ப நாட்டத்திற்குத் தடையாக இருக்கின்றன. அவனது வேட்கை தடுக்கப்படும் பொழுது “கொன்ஷஸ்" உணர்விலிருந்து 'அன்கொன்ஷஸ்' நிலைக்கு அது சென்று விடுகிறது.

கே. எஸ். சிவகுமாரன் 205ے
அடக்கப்பட்ட உணர்ச்சிக்கும் உணர்வு நிலைக்கு முள்ள முரண்பாட்டிற்கு “கொம்பிளெக்ஸ்’ என்று பெயரிட்டு அவைகளில் பலவற்றைப் ப்ரொய்ட் வகைப்படுத்திக் கூறினார். தன்னைத்தானே காதலிக்கும் “நார்ஸிஸஸ் கொம்ப்ளெக்ஸ்", தாய்மீது கொண்ட பரிவு மனத்தில் சரித்திரமாகப் பதிந்து நிற்கும் “ஈடிப்பஸ் கொம்ப்ளக்ஸ்', பிறரை அடக்கியாள எண்ணும் “ஹேர்குலிஸ் கொம்ப்ளெக்ஸ்” போன்ற சிக்கல்களை அவர் வகைப்படுத்திக் கூறினார்.
இக்கொள்கை தனிமனிதனின் செய்கைக்கு மட்டுமன்றி சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான செய்கைக் கும் விளக்கம் தரப் பயன்படுத்தப்பட்டது. ‘லிபிடோ' என்ற இணைவிழைச்சு, உணர்வு, வரலாறு, சமுதாயம், பண்பாடு, மக்கள் தொகை தவிர எல்லாவற்றிற்குமே பொருந்தும் என்றும் ப்ரொய்ட் எழுதினார்.
8 Xo X Xo
60களின் பின்பகுதியில் கண்டியிலிருந்து “செய்தி” என்றொரு வாரப்பத்திரிகை வெளிவந்தது. அந்தப் பத்திரிகையிலே மறைந்த மு.தளையசிங்கம், காசிநாதன், “பிரம்மஞானி’ என்ற ஸ்டனிஸ்லோஸ் ஜோர்ஜ் சந்திரசேகரம், மறைந்த பெரி.சுந்தரலிங்கம், ரா.மு.நாக லிங்கம் போன்றவர்களும் நானும் எழுதிவந்தோம். ப்ரொய்டின் கோட்பாடுகளை “பிரம்மஞானி’ அப்பொழுது அற்புதமாக விளக்கி நீண்ட கட்டுரைகளை எழுதிவந்தார். அக்கட்டுரைகளைப் படித்தாகுதல் "இஸம்" பற்றி இந்த ஆழமுள்ள விமர்சகர்கள் அறிந்திருக்கலாம். போகட்டும்.

Page 112
206> காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
குறிப்பிட்ட இந்த 'ஆராய்ச்சி' இதழிலே “கமலாம்பாள் சரித்திரம்', இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள், நீல.பத்மநாபனின் நாவல்கள், கிருத்திகாவின் நாவல்கள், மீராவின் “கதைகள்+கற்பனைகள் = காகிதங்கள்” ஆகிய விஷயங்க்ள் பற்றிய "ஆராய்ச்சிக் கட்டுரைகள்” வெளிவந்துள்ளன. மிகவும் பயனுள்ள விளக்கங்கள். ஆசிரியர் நா.வானமாமலை தானும் தனது விளக்கத்தை ஒவ்வொரு கட்டுரைக்கும் எழுதியுள்ளார்; இவற்றை நா.வானமாமலை, கா.சுப்பிரமணியன், எஸ்.தோதாத்திரி, தி.சு.நடராஜன், பி.எஸ்.கே.பக்தவத்சலன், வெ.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் எழுதியுள்ளனர். “மாதவியும் வசந்த சேனையும்”, “காவிரிப்பூம்பட்டினத்தில் புதை பொருள் ஆராய்ச்சி” போன்ற கட்டுரைகள் பல தகவல்களைத் தருகின்றன.
“ஆரியர் - திராவிடர்” பற்றிய சு.நீதிகுமார் சட்டர்ஜி கட்டுரை, “வரலாறும் வக்கிரங்களும்” பற்றிய ரொமிலா தப்பாரின் கட்டுரை ஆகியன மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றுடன் சோவியத் ஆராய்ச்சிக் கழகங்களில் தமிழ் திராவிட மொழிகளின் ஆய்வுகள், மொஸ்கோவில் திருக்குறள் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
ஆராய்ச்சி ஒரு சமூகவியல் பார்வையில் இலக்கியத்தை அணுக வழி சமைத்தது.
(ஈழநாடு - 30.12.1984)
KM MK2 20. ox- 0x ex

(32)
இலக்கியத் தழுவல் (Literary Adaptation)
லக்கியங்கள் திரைப்பட வடிவமாக வெளிவந்த போது முன்னாட்களில் பின்பற்றப்பட்ட அணுகுமுறை தொடர்பான ஒரு விளக்கக் குறிப்பு.
திரைக்கதை (வசனம் உட்பட நல்ல சினமாவில் வசனங்கள் அதிகம் இரா) என்பதனை "சீனாரியோ’ என ஆங்கிலத்தில் அழைப்பர். எட்டு தசாப்தங்களுக்கு முன்னரே திரைக்கதையாக்கம் என்ற எழுத்து வகை பிரபல்யம் அடையத் தொடங்கியது எனலாம்.
தமிழைப் பொறுத்தமட்டில் எழுத்து வடிவத்திலிருந்த பழம் பெரும் காவியங்கள், புனைகதைகள், நாடகங்கள் திரைவடிவம் பெற்றன. ஆயினும் இவை வளமாக அமையாமல் ‘கரடுமுரடு'தனமாக உருப்பெற்றன.

Page 113
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ208
சினமா முன்னர் வெறுமனே சலனப் படங்களாக வெளிவந்தன. அவற்றை “பயஸ்கோப்' (Bioscope) என்று அழைத்தனர்.
பின்பு ஒலியும் சேர்க்கப்பட்ட பின் அவை அசையும் படிமங்களாக (Moving images) வெளிவரத் தொடங்கின.
கதைப் பாத்திரங்களுக்கிடையில் இடம்பெறும் உரையாடல்கள் முன்னர் எழுத்துத் தலைப்புகளில் காட்டப்பட்டன. இப்பொழுதும் பிறமொழிப் படங்களில் இடம்பெறும் உரையாடல்கள், உப தலைப்புகளாக (Subtitles) காட்டப்படுவதையும் நாமறிவோம்.
மேடை அல்லது வானொலியில் இடம்பெறும் உரையாடல்கள் (சம்பாஷனைகள்) திரையில் முக்கியத்துவம் பெறுவதில்லை. நீங்கள் நல்ல சினமா எனக் கருதப்படும் படங்களைப் பார்த்திருக்கையில் அங்கே கதை வசனம் அருந்தலாகவே இடம்பெறுவதை அவதானித் திருப்பீர்கள்.
இதற்கு என்ன காரணம்?
பாடலாசிரியரின் பாட்டிலுள்ள கவிதை சார்ந்த கருத்துக்களும், சந்தங்களும் இணையும்போது திரைப்பட இசை உருவாகுதல் போலவே, திரைக்கதை வசனத்தில் எழுதப்பட்டுள்ள செயல்களும், சம்பவங்களும் பார்ப்பதற் குரிய நிகழ்ச்சிகளாகப் படம் பிடிக்கப்படுகின்றது.
இன்னும் விளக்கமாகக் கூறினால், கதையிலுள்ள செயல்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கே.எஸ். சிவகுமாரன் മ09
பார்வையாளன் கதையின் போக்கை உரையாடல்கள் மூலம் அறிந்து கொள்கிறான் என்பதைப் பார்க்கிலும், நடிக/ நடிகைகளின் நடிப்பினாலும், முக பாவங்களினாலும் உடனடியாகவே புரிந்து கொள்கிறான். ஆனால், பெரும்பாலான தமிழ்ப் படங்களும், தெலுங்குப் படங்களும் அனாவசியமாக வசனங்களைத் திணிப்பதனால், சினமா என்ற ஊடகத்தின் தன்மையை இழக்கின்றன.
புத்திக் கூர்மையுள்ள, கலை நுட்பமறிந்த, அழகியல் ரசனையுடைய பார்வையாளன் படத்தில் இடம்பெறும் குறியீடுகள் (Symbols) மூலமும் படத்தின் அழகியல் தன்மையைப் புரிந்து கொள்கிறான். திரைப்பட நெறியாளர் கையாளும் உத்திகள் (Techniques) படத்தின் செய்நேர்த்திக்கு உதவுகின்றன. திரைப்படக் கதாபாத்திரம் உயிர்த்துடிப்புள்ள வெளிப்பாட்டைக் கொண்டுவர சில செயற்பாடுகள் உதவுகின்றன. நடிகர்களின் சடரீதியான சலனங்கள் (நடிப்பு), சிறிய சிறிய சம்பவக்கோவை (Sequence), (5 d5u5G LILLD is gir (Symbolice Images) போன்றவையாகும்.
இன்னும் விளக்கமாகக் கூறினால், திரைக்கதையில் காணப்படும் தர்க்க ரீதியான செயல்களைப் பாத்திரங் களிடையே நடைபெறும் உரையாடல்கள் (வசனங்கள்) மாத்திரமன்றி, சடfதியில் இயங்கும் செயல்களும் புலப்படுத்துகின்றன. உறுதுணை புரிகின்றன.
இதனால்தான், நிழற்படக் கருவியின் எல்லைக்குள்
(கட்டுக்கோப்புக்குள்) அடங்கக் கூடிய வருணனைகளையும் (description) விவரணங்களையும் (Narration) சிக்கனமாகத்

Page 114
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ210
தேர்ந்தெடுப்பது திரைக்கதை, வசனம் எழுதுபவரின் பணியாகின்றது.
ஆக்க இலக்கியப் படைப்பாளி (Creative Writter) கற்பனை வளமும், கவிதை நயமும் படைத்தவனாகவே இருப்பான் என்பது பொது விதி. அதனால் தான், அனேக எழுத்தாளர்கள் கதையில் உள்ள சம்பவங்களைச் செயல்கள் மூலம் புலப்படுத்தாமல் அதிக வருணனைகளில் இறங்கி விடுகிறார்கள். எனவே, திரைக்கதை வசனம் எழுதுபவருக்குப் பொறுப்பான பணி காத்திருக்கிறது.
வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜு, கல்கி, தேவன், அண்ணாதுரை, கருணாநிதி, அகிலன், ஜானகிராமன், மு.வரதராசன், சாண்டில்யன், சுஜாதா போன்ற தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் புனைகதைகள் அந்நாட்களில் தமிழ்த் திரைப்படங்களாக வெளிவந்த பொழுது, “சினமா” என்ற பிரத்தியேக வடிவிலமையாமல், "நாடக” வடிவமாகப் படம் பிடிக்கப்பட்டதை நாமறிவோம். இவற்றின் கதைகள் தமிழ் இரசிகர்களை அந்தக் காலத்தில் களிப்பூட்டின என்பதையும் நாம் மறக்க இயலாது.
கண்ணகி, மஹாமாயா, சகுந்தலை, மந்திரிகுமாரி, பராசக்தி, மர்மயோகி போன்ற எத்தனையோ படங்கள் தமிழ் நாட்டு ரசிகர்களையும், ஈழத்து ரசிகர்களையும் அந்நாட்களில் பரவசப்படுத்தின. இருந்த போதிலும், அந்நாட்களில், “சினமா' வேறு 'நாடகப்பாணி' திரைப்படம் வேறு என்பதை நாம் உணரவில்லை.
அக்காலத் திரைக்கதாசிரியர்களில், அரு.ராமநாதன், பி.எஸ்.ராமையா, பூரீதர், மு.கருணாநிதி, ஏ.பி.நாகராஜன்

கே.எஸ். சிவகுமாரன் ര1
போன்றோர் சினிமாவுக்கான தழுவல் உத்திகளை ஒரளவு அறிந்திருந்தார்கள். குறிப்பாக பூரீதரிடமும், கோபால கிருஷ்ணனிடமும், ஜெயகாந்தனிடமும் இத்திறனைக் காண முடிந்தது. அவர்களிடம் ஒரு லாவகம் இருந்தமையை மறக்க முடியாது. ஓர் இலக்கியத்தைத் திரைப்படமாகத் தழுவும்போது, திரைக்கதை வசனத்தில் இடம்பெறும் இலக்கிய நயங்களை நாம் இரசித்தாலும், முழுமையாகத் திரைப்பட நெறியாளரின் பங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
பீம்சிங், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்தினம், பாசில் போன்றவர்கள் சிறிது சிறிதாக தமிழ் திரைப்பட செல்நெறியை “சினமா”வாகத் தருவதில் முன்னின்றனர்.
அண்மைக் காலங்களில் பல புதிய தமிழ் நெறியாளர் கள் “சினமா' என்றால் என்ன என்ற பக்குவத்தை அடைந்து, நல்ல முறையில் உருக்கொண்ட வணிகப்
படங்களைத் தந்து கொண்டிருப்பது உற்சாகமளிக்கிறது.
தினகரன் - 15.06.2008)
KO 10 20 0x8 (x- 0x8

Page 115
(9)
ஆங்கிலத்தில் கவிதை எழுதும் பெண்மணி
ஆக்க இலக்கியத்துக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ்
இனத்தவர்களுள் ஜெகதீஸ்வரி நாகேந்திரனும் ஒருவர்.
“சொற்கள், படிமம், எண்ணங்கள் ஆகியவற்றில் காதல் கொண்ட சுதந்திர ஆக்க இலக்கியப் படைப்பாளி” என்று கூறும் ஜெகதீஸ்வரி நாகேந்திரன் 70 களின் பிற்பகுதியிலே 'தி இன்டிபெண்டன்ட்' என்ற வாராந்தச் சிறுவடிவப் பத்திரிகையில் கவிதைகளை எழுதிவந்தார். தமிழினத்தைச் சேர்ந்த, மறைந்த ஆங்கிலப் பத்திரிகையாளரான ஆர்.எல். (ரெஜி) மைக்கல், "டெய்லி மிரர்’ என்ற ஆங்கிலத் தினசரியிலிருந்து ஒய்வு பெற்றதும் 'தி இன்டிபென்டன்ட் பத்திரிகையை நடத்தி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதே.

கே. எஸ். சிவகுமாரன் ര13
ஜெகதீஸ்வரியின் கவிதைகள் பல தடவை, பிரிட்ட னிலிருந்து ஆண்டுதோறும் வெளிவரும் அனைத்துலகக் கவிதைத் தொகுதிகளில் வெளிவந்துள்ளன. நியூசிலாந்தி லிருந்து வெளியாகும், கலைகள் தொடர்பான அனைத்துலக மதிப்பீடாகிய "மோவானாவில் இந்து சமுத்திர நாடுகளின் மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக்கும் பொருள்கள் பற்றிய இரு கவிதைகளை எழுதியிருக்கிறார்.
அமெரிக்க மாநிலமாகிய இலிநோய்ஸின் தலைநகரான சிக்காகோவில் ட்ரைடன் கலைகள்/அறிவியல்கள் கல்லூரி இயங்கி வருகின்றது. அக்கல்லூரி ஒவ்வொரு ஆண்டிலும் அகில நாடுகள் கவிதைப் போட்டியை நடத்தி ‘பஸஜ்" என்ற தமது ஏட்டிலே சிறந்த கவிதைகளைப் பிரசுரித்து வருவது வழக்கம். அவ்வாறு நடைபெற்ற எட்டாவது போட்டியிலே ஜெகதீஸ்வரியின் கவிதை சிறப்புப் பாராட்டைப் பெற்றது. சென்னையிலிருந்து வெளியாகும், ‘அனைத்துலக கவிதைக் கொத்து' என்ற ஏட்டிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி உள்ளன. அமால்கோஸ் இதனை "ஆக்கப் படைப்புகளுக்கான தாகூர் நிலையத்துக்காக வெளியிடு கிறார். இலங்கையில் ஆக்க இலக்கியம்' என்ற ஏட்டிலும் இவருடைய கவிதைகள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தன.
இவர் ஓர் ஓவியரும் கூட. இலங்கை தேசிய ஒவியச்சாலையில் இவருடைய இயற்கைச் சித்திரிப்பு ஒவியங்கள் ஓவியக் கண்காட்சிகளில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவும் இடம் பெற்று வந்துள்ளன.
மானிப்பாயில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து கல்வி கற்ற இந்துவான ஜெகதீஸ்வரி தனது 17 வயதில் இளந்தாயை

Page 116
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை -ܠ212
(38 வயது) இழந்தார். பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிக்க முடியாமற்போனாலும் சி.பா.த.ப. பரீட்சையில் ஆங்கிலம், உலக வரலாறு, இலக்கியம், பண்டைய பண்பாடு போன்ற பாடங்களில் அதிசிறப்பாகப் புள்ளிகள் எடுத்துச் சிறப்படைந்தார். தாயிறந்ததும் ஒராண்டுக்குப் பின்னர் தம்மிலும் 13 வயது கூடிய உறவினரான ஒரு வைத்திய கலாநிதிக்குத் திருமணஞ் செய்து வைக்கப்பட்டார். இவர்களுக்கு ஆறுபிள்ளைகள் பிறந்தன. நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும். பிள்ளைகள் வெளிநாடுகளில் உயர்தொழில் பார்க்கிறார்கள்.
ஆண் ஆதிக்கம் நிலவிய சமூகச் சூழலில் தனது ஆற்றல்களை முன்னர் வெளிப்படுத்த முடியாதிருந்தது என்றும், தான் 40 வயதிலேயே எழுதவும்; சித்திரம் தீட்டவும் தொடங்கியதாகவும் ஜெகதீஸ்வரி கூறுகிறார். முதலில் பத்திரிகைகளுக்கு கவிதைகள், கட்டுரைகள் (மனித உரிமைகள், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் அநீதிகள்) எழுதி வந்ததாகவும் இவர் குறிப்பிடுகிறார். ஒரு மனைவியோ தாயோ தனக்கென்று ஒரு பண்பாட்டு வாழ்க்கையை நடத்த முடியாது ஆணின் உடைமை விருப்பு, பொறாமை, ஆணவம் ஆகியன இன்றும் தடையாக இருக்கின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார்.
ஈழத்துத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் ஆக்கங்களைப் படித்துவரும் ஜெகதீஸ்வரி, கோகிலா மகேந்திரன், கமலா தம்பி ராஜா போன்றவர்களின் படைப்புகளைச் சிலாகித்துப் பேசுகிறார்.
1981 ஜூன் மாதம் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதையிட்டு ஆக்ரோஷமான கவிதையொன்றை

கே.எஸ். சிவகுமாரன் 215ے
ஜெகதீஸ்வரி" ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். சிங்கள மொழியைப் படிக்கத் தெரியாததனால் ஆங்கில மொழயாக்கங்கள் ஊடாகச் சிங்கள இலக்கியங்கள் பற்றித் தாம் அறிந்து வைத்திருப்பதாக இவர் கூறுகிறார். 1984ல் சிறந்த நாவலாகப் பரிசு பெற்ற சிங்கள நாவல் (பெயரையும், ஆசிரியர் பெயரையும் ஜெகதீஸ்வரி குறிப்பிடத் தவறிவிட்டார்) பற்றி ஜெகதீஸ்வரி நாகேந்திரன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“மூன்று பாகங்களைக் கொண்ட புனைகதை. கதாநாயகி, ஒர் இளம் டொக்டரை மணம் புரிகிறாள். இவன் முன்னர் ஒருத்தியை மணம் முடித்திருந்தான். அவள் இறந்து போனாள். இறந்துபோன அவள் வேறுயாருமல்லர் கதாநாயகியின் அக்காவே. “வானத்திலிருந்து பூமிக்கு”, “கொந்தளிக்கும் கடல்களில்”, “ஆர்ப்பரிக்காத கடல்நீர்” ஆகியன இந்த நாவலின் மூன்று பகுதிகளின் தலைப்புகள். இந்த நாவலில் சம்பிரதாயமான, நைந்துபோன சொற் பிரயோகங்கள் இருக்கின்றன. இரண்டு பிள்ளைகளின் தாயும், காவல் அரண்கொண்ட மனைவியுமான ஒரு மத்தியதர வர்க்கப் பெண்ணின் மனதின் எதிரொலிகள் இந்நாவலில் தீட்டப்படுகின்றன. சம்பிரதாய இலங்கை டொக்டர் கணவன் எப்படி நடந்து கொள்வானோ அதை முன்கூட்டியே அனுமானிக்கும் விதத்தில் அசட்டுத்தனங்கள் நாவலில் தீட்டப்பட்டுள்ளன.
“நினைவுச் சின்னம் ஒன்றின் பொறுமை போன்று” "ஆணின் சுதந்திரம்" "முரண்படும் பிறவிகள்” “கொந்தளிக்கும் கடலில் பயணஞ்செய்யும் தொந்தரவுகளில் நான் இன்னமும் ஈடுபட்டேன்’ போன்ற புளித்துப்போன பிரயோகங்கள்

Page 117
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ216
பழைய விக்டோரிய காலத்துச் சிந்தனைப் போக்குகளை
நினைவூட்டுவன.
இந்தக் கதாநாயகி ஒரு பசு. அவளுடைய டொக்டர் கணவரின் நண்பன் ஒர் இலங்கையன். அவன் அவளிடம் கேட்கிறான்; திருமணத்துக்குப் புறம்பான அனுபவம் (Extra Marital) ஏதும் உண்டா? “இல்லவே இல்லை” இது பதில். “உங்களுக்கு அது விருப்பமாயிருக்குமா ?’ அவள் தயங்குகிறாள். பின்னர் “இல்லை” என்கிறாள்.
வேஷதாரிகளும், பரத்தன்மைத் தரகர்கள் கொண்ட எமது சமுதாயத்திலே இது துணிவான விபரிப்பு எனக்கருதப்படுகிறது. சுய-இரங்கலில் கதாநாயகி மழுங்கிப் போகிறாள். பெண்தியாகம் தொடர்பாக மனநோயுற்றவள் போல் தன்னை மறந்து விடுகிறாள். அவளுடைய விரக்தியான எண்ணங்கள் எனக்கு ஒரு ஜப்பானியப் படைப்பை நினைவூட்டுகின்றன. The GrossmerYears என்ற 10ஆம் நூற்றாண்டுச் சரிதை நூலின் சில பகுதிகள் சுய இரங்கல், எரிச்சல், பொறாமை இலங்கை மத்தியதர வர்க்கத்தினரின், எளிதில் இனங்கண்டு கொள்ளக்கூடிய பெண் உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியன இவை எனலாம்.
இலங்கையிலே பெரும்பாலான ஆங்கில தமிழ் எழுத்தாளர்கள் புத்தக மொழியில் எழுதுவதுடன் சலிப்பூட்டவும் செய்கிறார்கள் என்பது ஜெகதீஸ்வரி நாகேந்திராவின் கணிப்பு. சுயத்தன்மை வெறும் மனஅவலங்கள் சுய இரங்கல் தன்மை போன்றவை ஈழத்துத் தமிழ் படைப்புகளில் காணப்படுகின்றன.

கே.எஸ். சிவகுமாரன் 217ے
தமிழில் எழுதாவிட்டாலும் ஆங்கிலத்தில் சில தமிழ்க்கவிதைகளை மொழியாக்கஞ் செய்திருப்பதாகக் கூறுகிறார். அகநானூறு கவிதை ஒன்றை அருமையாக ஆங்கிலத்தில் நான் படித்துப் பரவசப்பட்டேன். புறப்பொருள் வெண்பா மாலையிலும் ஒரு கவிதையை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார் ஜெகதீஸ்வரி. புராதன கிரேக்க இலக்கியங்களுக்கும் தமிழ் இலக்கியங்களுக்குமிடையே நெருங்கிய ஒற்றுமையிருப்பதையும் அவர் நினைவுபடுத்து Spitfir.
ஈழத்துச் சமகால மனிதரோவியங்களும், சிற்பங்களும், தென்னிந்தியக் கோயில்கள், ஜைனப்பண்பாடு, கஜீராஹோ காமஞ்சார்ந்த சிற்பங்கள், இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள எலிபன்டா குகை ஓவியங்கள், மற்றும் அஜந்தா, எலோரா சுவர்ச் சித்திரங்கள் போன்றவற்றைப் பிரதிபலிப்பதாகக் கூறுகிறார் இக்கவிஞர்.
ஜோர்ஜ் கீட், ஹரி பீரிஸ், டொனல்ட் ராமநாயக போன்ற இலங்கை ஒவியர்களின் படைப்புகளை வியந்து பாராட்டுகிறார். ஜோர்ஜ் கீட் தனது 84 வயதில் ஒர் ஒவியக் கண்காட்சியை நடத்தியபோது தனது மனப்பதிவுகளை, ஜெகதீஸ்வரி ஒரு கவிதையாக வடித்துள்ளார்.
மறைந்த மலையக ஆங்கில எழுத்தாளர் சி.வி.வேலுப் பிள்ளை பற்றியும் சாதகமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.
ஷேக்ஸ்பியரும் ஈழத்து ஆங்கிலமும் இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது. ரெஜிமைக்கல், மேர்வின் டி.சில்வா (லங்கா கார்டியன் ஆசிரியர்), எஸ்.பி.அமரசிங்கம் (ட்ரிபியூன் என்ற முன்னைநாள் ஆங்கில

Page 118
218৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
அரசியல் விமர்சனப் பத்திரிகையின் ஆசிரியர்), லூசியன் ராஜ கருணநாயக போன்ற ஆங்கிலப் பத்திரிகையாளர் பற்றி ஜெகதீஸ்வரி நாகேந்திரன் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளார்.
நமது தமிழ் வாசகர்கள் இவரைப் பற்றி அறிந்திராதது துர்ப்பாக்கியமே.
நங்கை, 1995)
S» XX. XX ox 0x0 ox

(33)
மும்மொழி பரிச்சயமுள்ள இதழியலாளர் கே.வி.சிவா சிவசுப்பிரமணியம்
'தினகரன்' நாளிதழ், வார மஞ்சரியின் தற்போதைய பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியத்தைக் கடந்த 10 ஆண்டுகளுக்குள் மாத்திரமே நேரில் அறிவேன். அதற்கு முன்னர் 'மல்லிகை மூலமும் தினகரன்’ மூலமும் அவர் எழுத்துக்களுக்கூடாக அவரை அறிவேன். அவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர் என்பது அவருடைய எழுத்துத் திறனுக்கு ஒர் அத்திவாரம். சிங்கள மொழிக் கதைகளை, குறிப்பாக குணசேன விதான, கே.ஜயத்திலக்க, ஏ.வி.சுரவீர போன்ற சிங்கள எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தமிழில் படிக்கும் வாய்ப்பு எனக்குச் சிவா சுப்பிரமணியத்தின் வாயிலாகவே கிடைத்தது. 'சிவா’ அவர்கள் மொழி வன்மை கொண்ட தமிழாக்க எழுத்தாளராக இருந்தமையுடன்,

Page 119
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ220
அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை "முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார். இவருடைய சிங்கள இலக்கிய அறிமுகம் தவிரத் தன்னளவில் தமிழ் மூலமும், மிகவும் சுவாரஸ்யமான கதைகளைத் தந்திருக்கிறார். இவருடைய ஆக்க இலக்கியத் திறனை நம்மில் பெரும்பாலானோர் மதிப்பீட்டுக்கு இன்னமும் உட்படுத் தாததற்கான காரணங்களுள் ஒன்று, இவருடைய ஆக்கங்கள் நூல் வடிவில் இற்றைவரை வராததே.
சிறுகதை தவிர, பயனுள்ள தகவல் தரும் பகுத்தாய்வுக் கட்டுரைகளையும் இவர் தந்துள்ளார். குறிப்பாக இவருடைய அரசியல் கட்டுரைகள் தெளிவாகவும், தர்க்க ரீதியாகவும் அமைவதை நாம் காண்கிறோம். இதற்கான காரணம் இவரிடத்தில் காணப்படும் சிந்தனைத் தெளிவாகும்.
சிவா சிவசுப்பிரமணியம் வெளிப்படையாகவே இடதுசாரிச் சிந்தனையுடையவர். இவருடைய கருத்துக்கள் சில, என் போன்ற மார்க்சியர் அல்லாத முற்போக்காளர்' களுக்கு விவாதப் பொருளாக அமையக்கூடும். ஆயினும் இவர் எழுத்தில் துலாம்பரமாகத் தெரியும் மனித நேயமும், பல்துறை அறிவும், சொல் நயத்துடன் தெரிவிக்கும் பாங்கும் இவரைப் புறக்கணிக்க (ufD Lq- uLI fTg5 ஒருவராக ஏற்படுத்தியுள்ளன.
இவருடைய யாழ்ப்பாண வாழ்க்கையின் ஆரம்பகாலச் செய்திகளை நான் அறியேன். ஆயினும், இவர் அரசாங்கத்தில் ஒர் எழுதுவினைஞராகச் சேர்ந்து, பல இடங்களிலும் தொழில் பார்த்து, உயர் பதிவு பெற்றுத் தனது 45 வயதில் ஒய்வு பெற்றார் என்று அறிகிறோம். அதன்

கே.எஸ். சிவகுமாரன் 221ے
பின்னர் 1960களில் தன்னந் தனியனாக நின்று தேசாபிமானி என்ற இடதுசாரிக் கட்சி வாராந்த இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார் என்றும் அறிகிறோம்.
எந்தவிதமான பரபரப்பும் காட்டாத, அமைதியான சுபாவம் கொண்ட இவர் பழகுவதற்கு இலகுவானவர்.
இவரை அடிக்கடி தமிழ்க் கூட்டங்களில் காணலாம். கலை, இலக்கியம் சம்பந்தமான கூட்டங்களில் இவர் உரையைக் கேட்டுப் பயனும், பரவசமும் பெற்றிருக்கிறேன். சினமா முதல் தமிழ் இலக்கிய மரபுச் செல்வங்கள் வரை எடுத்துக் காட்டாகப் பல சுவையான தகவல்களைத் தந்து வருகிறார், சிவா சிவசுப்பிரமணியம்.
இவரை முன்பின் தெரியாத காலம் முதல் இவரைச் சந்திக்க விரும்பினேன். ஆயினும் வெகு அண்மைக் காலத்திலேயே இவரை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.
'தினகரன்’ பத்திரிகையின் ஆசிரியர்களுள் நான் பரிச்சயம் கொண்டவர்கள் வி.கே.பி.நாதன், க.கைலாசபதி, ராஜ பூரீகாந்தன், சிவா சிவசுப்பிரமணியம் ஆகியோரே. இந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தத்தம்மளவில் தனித்தன்மை கொண்டவர்களாக விளங்கினர். 'தினகரன்' பத்திரிகை அரசாங்கத்தின் ஆதரவில் வெளிவரும் ஒரு "தேசியப் பத்திரிகை. எந்த அரசாங்கம் பதவியில் இருக்கிறதோ, அந்த அரசாங்கத்தின் சார்பாகவே தினகரன்' வெளிவரவேண்டிய ஒரு நிலைமை இருக்கிறது. வி.கே.பி.நாதனைத் தவிர, ஏனையோர் யாவருமே இடதுசாரிச் சார்புடைய இதழியலாளர்களாகவே விளங்கினர்.

Page 120
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ222
சிவா சிவசுப்பிரமணியம் மார்க்சியத்தை முற்று முழுதாக ஏற்றுக் கொண்டு, கட்சி அரசியற் பிரதிநிதியாக எந்தவொரு பத்திராதிபரும் இருக்கவில்லை என்றுதான் அனுமானிக்கிறேன்.
சிவா சிவசுப்பிரமணியம் காலத்திற்கு ஒவ்வா "முற்போக்கு' என்று மகுடமிட்ட ‘வாய்ப்பாடான சுலோகங்களை உதிர்க்காமலே சிறந்த முற்போக்கு நோக்கங்களைக் கொண்டவர் என்பது அவருடைய எழுத்துக்கள் மூலம் (அரசியல், கலை இலக்கியங்கள் தொடர்பானவை) தெரியக் கூடியதாக இருக்கிறது.
சிவா சிவசுப்பிரமணியம் காலத்தின் வளர்ச்சிப் போக்கின் முன்னேற்றச் சிந்தனைகளையும் தமதாக்கிக் கொள்வதனால், அவர் வாழ்விலும், எழுத்திலும் வாய்மை வலம் வருகிறது. வாழ்த்துக்கள்.

(35)
இளங்கீரன் என்ற ஆய்வறிவாளன்
சீர்பைர் ஒரு யாழ்ப்பாணத்து முஸ்லிம். அவரைச் சந்திப்பதற்காக வண்ணார்பண்ணை பிரப்பம்பழம் வீதியிலுள்ள அவர் வீட்டுக்குச் சென்றேன். முதல் சந்திப்பு. பேச்சோ யாழ்ப்பாணத்துப் பேச்சு நடை, கட்டையான உருவம், விசாலமான நெற்றி, சிவந்த நிறம், ஆழமான கண்கள், புன்சிரிப்பு. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனது எழுத்துக்களைப் படித்தாரோ தெரியாது. ஓர் இலக்கிய மாணவன் தன்னைச் சந்திக்க வந்திருக்கிறான் என்ற அடிப்படையில் மரியாதை குறித்து உரையாடினார். சிறிது நேரம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு விடை பெற்றோம். இது நடந்தது 60களின் முற்பகுதியில்.
இந்த சுபைர் வேறுயாருமல்லர். அண்மையில் நம்மைவிட்டுப் பிரிந்து போன இளங்கீரன் அவர்கள்தான்.

Page 121
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ224
இளங்கீரன் அவர்கள் கொழும்பில் தங்கியிருந்து மரகதம் என்ற மாதாந்த சஞ்சிகை ஒன்றை வெளிக் கொணர முனைந்தார். நான்கோ ஐந்தோ இதழ்களும் வெளிவந்தன. அந்தத் தரமான ஏட்டில் நமது நாட்டு ஆய்வறிவாளர்கள் பலர் சொந்தப் பெயர்களிலும், புனைப் பெயர்களிலும் எழுதினர். அவர்களுள் ஒருவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி. அவருடைய கட்டுரைகளில் ஒன்று "திரைதந்த இசை”. பண நெருக்கடி காரணமாக இதழ் நின்று விட்ட போதிலும், இளங்கீரன், தமது முத்திரையை பக்குவமான ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பதிவு செய்தார். மரகதம், தொழிலாளி, ஜனவேகம், தேசாபிமானி ஆகியன இளங்கீரன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பத்திரிகைகளிற் சில.
இளங்கீரனின் ஏனைய நாவல்கள் நன்கு அறியப்பட்ட அளவுக்கு அவருடைய தென்றலும் புயலும் என்ற நாவல் அதிகம் தெரியப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த நூல் கிடைக்காமையே. என்னிடம் அதிர்ஷ்ட வசமாக ஒரு பிரதி கிடைத்தது. பிரபல எழுத்தாளரும், குமரன் ஏட்டின் ஆசிரியராக இருந்தவருமான செ. கணேசலிங்கன், வெள்ளவத்தையில் ஒரு புத்தகக் கடையை வைத்திருந்தார். அக்கடையிலிருந்துதான் அப்பிரதியை நான் வாங்கினேன். அந்த நாவலை, Community என்ற ஆங்கில ஏட்டில் அறிமுகம் செய்து வைத்தேன். இது நடந்தது 1964ல். இந்தக் கட்டுரையில், நாவலில் இடம் பெறும் சில சம்பாஷணைகளைத் தமிழில் ஆக்கி, அக்கட்டுரையை எழுதியிருந்தேன். இதற்கிடையில் இளங்கீரனின் தென்றலும் புயலும் நாவலை இரவல் வாங்கிச் சென்ற நண்பர், அந்த நூலை எங்கேயோ தவறவிட்டதாக எந்தவிதப் பரபரப்பும்

கே.எஸ். சிவகுமாரன் മ25
இல்லாமல் கூறினார். எனக்கு வந்த ஆத்திரத்துக்கோ அளவில்லை. பின்னர் Community கட்டுரையைத் தமிழில் அறிமுகஞ் செய்ய முனைந்த போது, சம்பாஷணைகளை மூல (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டுப் பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்படும் பொழுது) வாசகங்களாக, அச்சொட்டாக, தமிழில் இருந்தவாறு எழுத முடியாமல் போய்விட்டது.
இளங்கீரனின் மற்றொரு குறிப்பிடத்தக்க நூல் பாரதி கண்ட சமூகம். அந்த நாட்களிலேயே, இளங்கீரன்ரின் ஆய்வறிவுப் பாங்கு தெற்றெனப் பளிச்சிட்டது.
இளங்கீரனிடம் விதண்டாவாதம் இருக்கவில்லை. மறுபக்கத்துக் கருத்துக்களையும் செவிமடுத்துக் கேட்டுக் கொள்வார். நல்ல கருத்துக்கள் என்று பிறர் கூறுபவற்றையும் உள்வாங்கித் தனது பார்வையைச் செலுத்தும் பக்குவம் அவரிடம் இருந்தது.
இளங்கீரன் தொடர்பான விரிவான ஆய்வு, ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவர் பங்களிப்பை நிர்ணயிக்கப் பெரிதும் உதவும்.
நவமணி)
Κ
e
{
Xo

Page 122
இ6)
ஹாசிம் ஒமர் - ஓர் அறிமுகம்
இவர் பிறப்பால் மேமன் இனத்தைச் சேர்ந்தவர். மதத்தால் - இஸ்லாமியர். இவ்ர் தாய்மொழி குஜராத்தி ஆயினும் உணர்வால் தமிழ்ப் பற்றுடையவர். தமிழ் மொழியில் இலங்கையிலே கல்வி பயின்றவர். தமிழில் சரளமாக உரையாடக் கூடியவர். சிங்களமும், ஆங்கிலமும் தெரிந்தவர். நிறையத் தமிழ் நூல்களைப் படித்த அறிஞர். கூட்டங்களில் இவரைக் காணலாம். எந்தவொரு இலக்கியக் கூட்டங்களிலும் இவர் அழைக்கப்படும் பட்சத்தில், அங்கு புதிய புத்தகம் அறிமுகமாகவிருந்தால், இவர்தான் முதற்பிரதியை வாங்குவார். புத்தகத்தின் விலையிலும் அனேகமாக 10 மடங்கு கூடுதலாக விலை கொடுத்து ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். இதனால்

கே. எஸ். சிவகுமாரன் 1227
இவரை “இலக்கியப் புரவலர்”, “கொடைவள்ளல்" என்று நன்றியுடையவர்கள் அழைக்கிறார்கள்.
இவை தவிர இப்பொழுதெல்லாம் “புரவலர் புத்தகப் பூங்கா’ என்ற அமைப்பின் மூலம், இதுவரை நூல்களை வெளியிட முடியாது தவிக்கும் ஆற்றல்மிகு எழுத்தாளர் களின் எழுத்துப் பிரதிகளை வாங்கிப் பெற்று இலவசமாகத் தமது செலவில் அச்சிட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடமே கையளித்து விடுவார். அந்த எழுத்தாளர்களும் தாமே அந்நூல்களை விற்று பணத்தைப் பெற்றுக் கொள்வர். காலத்துக்குக் காலம் இவ்வாறு நூல்களை அவர் வெளியிட்டு வரும் பணி மகத்தானது. இந்தப் பரோபகாரி சகல ஈழத்து எழுத்தாளர்களின் நெஞ்சங்களின் மனதைக் கவர்ந்தவர். இவர் பெருமை பதியப்படத்தக்கது.
அண்மையில் ஹாஷிம் ஓமரின் கலை/இலக்கிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக “புரவலர் சில பதிவுகள்’ என்ற நூல் வெளிவந்தது. இவரைப் பற்றி ஏனையோர் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை உள்ளடக்கும் இப்புத்தகம். மும்மொழிகளிலும் இவர் சம்பந்தமாக எழுதப்பட்டவையின் தொகுப்பை “கலைச்செல்வன்” (நாடக/சினிமா நடிகர்/எழுத்தாளர்/ பேச்சாளர்) தயாரித்துள்ளார். நிறையப் படங்களும் அடங்கியுள்ளன.
புரவலர் ஹாஷிம் ஒமர் அவர்களுக்கு என்னையும்
ஒரளவு தெரியும். இருந்தபோதிலும் அவருடன் நான் அதிகம் நெருங்கிப் பழகவில்லை.

Page 123
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܥܠ228
இவர் ஓர் அற்புதமான மனிதாபிமானி. பெரும் செல்வந்தர். வர்த்தக நிறுவனங்களின் நிர்வாக அதிபர். இவர் நீடூழி வாழ்ந்து தமது அளப்பரிய பணிகளைத் தொடர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
(தினக் குரல்)
KM. KM 02 �X» �X• �X8

(32)
சிங்களக் கலாசாரத்தின் கொடு முழகளில் ஒருவர்
மறைந்த பேராசிரியர் எதிரிவீர சரச் சந்திர இந்த நாட்டின் அரிய கருவூலங்களில் ஒருவர். இவர் சிங்கள இலக்கியப் பேராசிரியராக விளங்கிய போதிலும் சிங்கள மொழிக்கப்பாலும் பரந்த கலை, இலக்கியப் பரிச்சயங் கொண்டவராக விளங்கினார். ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்ட அதே வேளையில், அவைக்காற்றும் கலைகளிலும் தனது பங்களிப்புகளைச் செய்தவர். சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாவல் எழுதியவர். பல பரிசுகளைப் பெற்றவர். கேரள குமரன் ஆசான் பரிசு இலங்கையரான இவருக்கு வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிட வேண்டும். மறைந்த பேராசிரியர் இலங்கையின் தூதுவராக பிரான்ஸில் செயற்பட்டவர். (UNESCO) என்ற ஐக்கிய நாடுகள் கல்வி,

Page 124
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
விஞ்ஞான, பண்பாட்டு நிறுவனத்துடன் நெருங்கிச் செயற்பட்டவர். இவர் தமது மொழி, இனம், நாடு போன்றவற்றில், நம்மில் பலரைப் போலவே மிகுந்த பற்றுடையவராக இருந்த அதேவேளையில், குறுகிய எல்லைகளினின்றும் விடுபட்டு எட்ட நின்று தனது கருத்துக்களைத் தெரிவித்தவர்.
ஆரம்பத்தில், கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் சிங்கள மொழியைக் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்து, அக்காலத்தில் அதாவது 40களில், தேசியத் தன்மைக்கு விளக்கம் கொடுத்து வந்தவர். மேனாட்டு மோகத்தினின்றும் பெரும்பான்மையான மக்கள் அப்பொழுது விடுபட்டிருக்க வில்லை. பேராசிரியர் சரச் சந்திர பின்னர் படிப்படியாக உயர்ந்து தமது ஆளுமையை நிலைநாட்டத் தொடங்கினார்.
மறைந்த நமது பேராசிரியர் க. வித்தியானந்தனும், சரச் சந்திராவும் லண்டனில் தமது மேற் படிப்பை மேற் கொண்டிருந்த பொழுது இருவருமே ஒரே அறையில் வசித்து மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனை இரு பேராசிரியர்களுமே என்னிடம் கூறியிருக்கின்றனர்.
பேராசிரியரின் பல பணிகளில் மிகவும் முக்கியமான தொன்று என்னவெனில் நாடகம் என்ற சிங்கள நாட்டிய நாடக வடிவத்துக்கு உயிர் கொடுத்தமை ஆகும். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, சரச் சந்திராவின் மனமே என்ற மரபு வழி சிங்கள நாடகம் தலைசிறந்த ஒன்றாகக்

கே.எஸ். சிவகுமாரன் 231ے
கருதப்பட்டு வருகிறது. சிங்கள நாடகத் துறையில் ஒரு மைற்கல்லாக மனமே 50களிலும் 60களிலும் கணிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த மரபுவழி நாட்டுக் கூத்துக்கு ஊற்றுக்கண் எமது தமிழ் வடமொழி, தென் மொழி நாட்டுக் கூத்துக்களும், அசைவுகளும், மெட்டுக்களுந்தான் என்பதைப் பேராசிரியர் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.
The Island நாளிதழ் சார்பாக அவரை நான் நேர்காணச் சென்றிருந்தபோது இதனை இவர் ஒளிவுமறைவுமின்றிக் கூறினார்.
ஆயினும் இவருடைய ஆங்கில கவிதை நாடகமான மேமத்தோ ஐயத்தி சோக்கோ (துன்பத்தைக் கொணரும் பிரேமை) பற்றியே இவர் குறிப்பாகப் பேசினார். இசையிலான பாடல்கள் இடம்பெறும் இசை நாடகமாகவே இவர் அதனை விபரித்தார். மனமே தன்னுணர்ச்சிப் பாடல்கள் சார்ந்த ஒரு நாடகம் என, அதாவது Lyrical Drama என இவர் கூறினார். இதனை எழுதுமுன்னர் நாடகம் என்று சிங்கள மொழியில் அழைக்கப்படும் இலக்கிய/அவைக்காற்று வகைப்பற்றித் தாம் நெடுங்காலமாக ஆராய்ந்ததாகக் குறிப்பிட்டார். தமிழ்ப் பகுதிகளிலிருந்து சிங்களப் பகுதிகளுக்கு அசைவியக்கம் காரணமாகச் சென்றடைந்த நமது நாட்டுக்கூத்து மற்றும் தெருக்கூத்து ஆகியனவே நாடகங் களுக்கு மூலதனம் எனவும் சரச் சந்திர வலியுறுத்தினார்.
நாடகம், உலகளாவிய கதைப் பொருள்களைக் கொண்டிருத்தல் வேண்டுமென சரச் சந்திர ஆசைப்

Page 125
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ232
பட்டார். அதனால், சமூகப் பிரதிபலிப்பு நாடகங்களை அவர் விரும்பவில்லை என்றாகாது.
மனமே எழுதுவதற்கு முன்னர் 50களில் சரச் சந்திர இயற்பண்புவாத (Naturalistic) நாடகங்களை எழுதினார். அண்மையிலுங்கூட கிரிமுட்டிய கங்கே கியா (பாற்பானை ஆற்றோடு போயிற்று) என்ற இந்த நாடகம் மத்தியக் கிழக்குக்கு இலங்கையர் தொழில் காரணமாகப் படை யெடுப்பதும், அதன் பலாபலன்களையும் பற்றிச் சித்திரிப்பதாகும்.
பேராசிரியர், சிங்கள நாவல் பற்றியும் நூல் எழுதியிருந்தார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திறனாய்வு, உலகளாவிய பார்வை, சமூகப் பொருத்த முடைமை, அழகியல் தன்மை போன்ற கோட்பாடுகள் கொண்ட சரச் சந்திர, மேலைத்தேய/ கீழைத்தேய பண்பாட்டு மரபுகளின் மிகச் செழிப்பான பண்புகளை உள்வாங்கியவர்.
பெளத்த மதத்தின் உளவியல் தன்மை, நவீன சிங்கள இலக்கியம் போன்ற துறைகளில் நூல்களை எழுதியிருக்கிறார். சிங்கள நாவல், சிங்கள நாட்டுக் கூத்து போன்றவற்றை மதிப்பிட அவர் மேலைநாட்டு விமர்சன அளவு கோல்களையும் பயன்படுத்தினார். ஜப்பானிய அனுபவங்களைக் கொண்டு இவர் எழுதிய ஒரு நாவலும் குறிப்பிடத்தக்கது. பல வானொலி நாடகங்களையும் எழுதியிருக்கிறார். பல சிறு கதைகளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தமது நாடகங்களில் பின்னணி

கே.எஸ். சிவகுமாரன் ര93
வாத்தியங்கள் சிலவற்றை, குறிப்பாக சித்தாரை இவர் இசைப்பார்.
பல விதங்களிலும் பார்த்தால், எதிரிவீர சரச்சந்திர ஒரு காலகட்டத்தின் பண்பாட்டுச் சின்னம். சிங்களக் கலாசாரத்தின் கொடுமுடிகளில் ஒருவர்.
(562/1060of)
0a 40- 29 0x8 0x8

Page 126
என்னை அரவணைத்த தினக்குரல்
இலங்கையின் தமிழ் மொழி நாளிதழ்கள் சில நாடளாவிய விதத்தில் அறிமுகமாவதனால் ‘தேசியப் பத்திரிகைகள்’ என்று மகுடம் பெறுகின்றன. அவற்றுள் கணிசமான அளவு செல்வாக்கைப் பெற்றுள்ள இதழ் 'தினக்குரல்" குறுகிய காலத்தில் 10 வருடங்களுக்குள் இந்த இதழ் பெற்றிருக்கும் வளர்ச்சி பாராட்டத்தக்கது. பத்தாவது அகவையில் தினக்குரல் பிரவேசிப்பதை முன்னிட்டு எனது பாராட்டுதல்கள்.
‘வீரகேசரி’ நாளிதழில் சிறிது காலம் நான் கடமையாற்றினேன். ஏற்கெனவே The Island என்ற ஆங்கில நாளிதழின் பண்பாடு துறை ஆசிரியனாகவும், சிறப்பம்சப் பகுதியின் துணை ஆசிரியனாகவும் பணிபுரிந்ததனால் முழு நேர உமைக்கம் பத்திரிகையாளர் என்ற அபைவ (மத்திரை

கே.எஸ். சிவகுமாரன் 235
கிடைத்திருந்தது. எனவே, அப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான திரு.கே.செளந்தரராஜனின் அழைப்பை ஏற்று, அப்பத்திரிகையின் இணை (Associate) ஆசிரியராகப் பொறுப்பேற்றேன்.
அச்சமயம் ஆ.சிவநேசச் செல்வன் வீரகேசரி ஆசிரிய ராகப் பணிபுரிந்தார். எனக்கும் கலை இலக்கியங்களில் ஈடுபாடு இருந்தமை போல, அவருக்கும் இலக்கியத்தில் நன்கு புலமை இருந்தது.
அவரும் நானும் பத்திரிகை அலுவலகத்தில் ஒன்றாகவே பணிபுரிந்தாலும், பதவி வழிச் சிக்கல்கள் காரணமாக நாம் இருவரும் ஒத்துப்போக முடியாமற் போனது. நான் சீக்கிரமாகவே அப்பத்திரிகைப் பணியிலிருந்து விலகிக் கொண்டேன்.
சிவநேசச் செல்வன், பொன்,ராஜகோபால், வீதனபாலசிங்கம், கரன், ஆர்.பாரதி, தேவகெளரி, சீவகன் போன்ற இதழியலாளர்களும் காலக் கிரமத்தில் ‘வீரகேசரி'யினின்றும் விலகி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 'தினக்குரல்" பத்திரிகையில் சேர்ந்து கொண்டார்கள்.
பின்னர் சிவநேசச் செல்வன் அவர்கள் 'தினக்குரலில் இருந்து வெளியேறித் தற்சமயம் இதழியல் போதனை தொடர்பான உயர் பதவி வகிப்பதாக அறிகிறோம்.
சிவநேசச் செல்வனைத் தொடர்ந்து தினக்குரல்" செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்த வீரகத்தி தனபாலசிங்கம், இப்பத்திரிகையின் ஆசிரியரானார்.

Page 127
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ236
தனபாலசிங்கம், ‘வீரகேசரி"யில் பணிபுரிந்த காலம் தொடக்கம், அவருடைய அரசியல் கட்டுரைகளை ஆர்வமுடன் படித்து வந்துள்ளேன். அவர் வாராந்தம் எழுதிய உலக நடப்புகள் பற்றிய பகுத்தாய்வுக் கட்டுரைகள் என்னை அவர் எழுத்தில் நாட்டமுடையவனாக ஆக்கியது.
‘வீரகேசரி’யில் நான் பணிபுரிந்தபோது, அவர் நடைமுறை இதழியல் பிரயோகத்தை நேரில் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
நட்புடனும் மரியாதையுடனும் (எனது வயது காரணமாக) பழகிய தனபாலசிங்கம் 'தினக்குரலுக்கு எழுதும்படி கேட்டுக் கொண்டார். அது காரணமாகவே “சொன்னாற் போல’, ‘மனத்திரை’ போன்ற பத்தி எழுத்துக்களை நான் எழுத நேர்ந்தது. இப்பொழுது, எனது எழுத்துக்களை ஏற்றுக் கொள்ளாத உதவி ஆசிரியர்கள், எனது எழுத்தைப் பிரசுரிக்கவில்லை போலும்.
'தினக்குரல்" பிரதம ஆசிரியர் தனபாலசிங்கத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். எனது 'பத்திக் கட்டுரைகளை மனமுவந்து பிரசுரித்தது மாத்திரமல்லாமல், 'சொன்னாற் போல_2 என்ற எனது நூலுக்கு முன்னுரையும் தந்து என்னை உற்சாகப்படுத்தியுள்ளார்.
‘வீரகேசரி'யில் நான் பணிபுரிந்த காலத்தில் எம்.பி.எம். அஸ்ஹர் என்ற பாராளுமன்ற நிருபர் பணிபுரிந்துவிட்டு, அப்பத்திரிகையில் நின்று விலகிக் கொண்டார். அவர், நவமணி என்ற வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக வரும்படி வற்புறுத்தியது காரணமாக அப்பத்திரிகையின் ஸ்தாபக அசிரியராகப் பணிபுரிந்த சிறிது

கே.எஸ். சிவகுமாரன் ര87
காலத்திற்குள்ளேயே ‘வீரகேசரி'யிற் போன்றே, நவமணியிலிருந்தும் விலகிக் கொண்டேன்.
கலை, இலக்கியப் பத்திரிகை எழுத்தாளனாக 50 வருடங்களுக்கும் மேலாக நான் எழுதி வந்தாலும் நாளிதழின் செய்தித் துறையிலும், அரசியலிலும் எனக்குப் பரிச்சய மிருந்ததை இதழியலாளர்களுள் பலர் அறிந்திருக்கவில்லை.
இலங்கை வானொலியின் செய்திப் பிரிவிலே மொழி பெயர்ப்பாளராக ஆரம்பித்து, தமிழ் செய்திப் பொறுப்பாசிரியனாகவும் நான் அனுபவம் பெற்றிருந்தேன். ஆயினும், என்னை ஓர் இலக்கியத் திறனாய்வாளனாக மாத்திரமே பலர் இனங் கண்டனர். இதழியலில் அனுபவம் பெற்றவன் என்பதைப் பலர் இன்னமும் அறிந்து வைத்திருக்காததனால் போலும் இலங்கைப் பத்திரிகை தமிழ்/ ஆங்கில எழுத்தாளன், இதழியலாளன் என்ற முறையில் யாருமே என்னை கணிப்பதில்லை. ஒரே ஒருவர் மாத்திரம்மறைந்த தலைசிறந்த இதழாசிரியர் எஸ்.டி.சிவநாயகம் மாத்திரம் - எனது ஆற்றல்களை அறிந்து உற்சாகப்படுத்தி வந்தார்.
திறன்களை நன்கு கணித்து, பல செய்தியாளர்களை அவர் உருவாக்கினார் என்பதை மறைக்க முடியாது.
'தினக்குரல்' பத்திரிகை, யாழ்ப்பாணத்திலும் பிரத்தியேக மாகாணப் பத்திரிகையை நடத்தி வருகிறது. இது இந்தப் பத்திரிகையின் செல்வாக்கு மக்களிடத்தில் பரவி வருவதைக் காட்டுகிறது.

Page 128
23৪৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
தினக்குரலில் கார்த்திகேசு சிவத்தம்பி, சி.சிவசேகரன், சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள் வாரப் பத்திரிகையில் தொடராக எழுதி வருவதிலிருந்தே, கற்றோர் மத்தியில் 'தினக்குரல்’ பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக இருக்கிறது.
(தினக்குரல் - 06.04.2006)
0 - 0 8X

Gae)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக ஒலிபரப்பு/தென்றல்
இன்றைய சந்ததியினருக்கு முந்தைய பரம்பரையினர் பற்றிய செய்திகள் முற்றுமுழுதாகத் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை. எனவே அவர்களுக்கான தகவற் பரிவர்த்தனை நலன்கருதி இத்தொடர் எழுதப்படுகிறது.
எஸ்.பி.மயில்வாகனன், கே.நகுலேஸ்வரன், சிலவெஸ்டர் பாலசுப்பிரமணியம் போன்றோர் அந்நாட்களில் நன்கு அறியப்பட்ட ஒலிபரப்பாளர்களாகத் திகழ்ந்தனர்.
வர்த்தக ஒலிபரப்பிற்கு ஜனரஞ்சகத் தன்மையை முதலில் ஏற்படுத்தியவர் 'மயில்' எனப்பட்ட மயில்வாகனன். இவருடைய குரல்வளம் தனித்தன்மையுடையதாக இருந்தது. முதற்தடவையாக இவர் ஒலிபரப்பில் பேச்சு மொழிப்

Page 129
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ240
பேச்சை அறிமுகப்படுத்தி ஒலிபரப்பை இலகுபடுத்தினார். தேசிய ஒலிபரப்பு அறிவிப்பாளர்கள் எழுத்துப் பிரதியிற் கண்டவாறு, உத்தியோகப்பூர்வமான முறையில் அறிவிப்புக் களைச் செய்துவர, மயில் வாகனன் முதற்கொண்டு வர்த்தகசேவை அறிவிப்பாளர்கள் இலகு தமிழில், எளியமுறையில், நேயருடன் நேரிற் சம்பாஷிப்பதுபோன்று, மிக அன்னியோன்னியமாக ஒலிவாங்கியின் பின்னாலிருந்து அறிவிப்புக்களைச் செய்தனர். ஆங்கிலத்தில் "அட்-லிப்” எனப்படும் பிரதியை வாசிக்காத, சமயசந்தர்ப்பத்திற்கேற்ப, விகடமாகச், சொந்த அனுபவங்களையும் கூறிய முறையிலான அறிவிப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் மயில்வாகனன் தான் என்றால் மிகையில்லை.
இவ்விதமான மக்கள் விரும்பும் பாணியில் அறிவிப்புக்களைச் செய்து, திரைப்படப் பாட்டுக்கள் அடங்கிய இசைத்தட்டு நிகழ்ச்சிக்குக் கவர்ச்சியை ஊட்டியதனால் மயில்வாகனன் தொடர்பாக நேயர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சிகரமான படிமம் உருவாகியதில் வியப்பில்லை. எனவேதான் மயில்வாகனன் மக்கள் விரும்பிய அறிவிப்பாளர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
நகுலேஸ்வரன் இனிய குரலையுடையவர். இவருடைய இசை ஞானமும், இரசனைத் தெளிவும் வர்த்தகசேவை நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்த உதவின. நகுலேஸ்வரன் மேலைத்தேச ஜனரஞ்சகப் பாடல்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மயில்வாகனனும் நகுலேஸ்வரனும் தமது வெவ்வேறு பாணியான அறிவிப்பு முறைகளினால் பலதரப்பட்ட ரசனையுடைய நேயர்களையும் திருப்திப்
படுத்தினர்.

கே.எஸ். சிவகுமாரன் ര41
இந்த அறிவிப்பாளர்கள் இருவரும் இப்பொழுது இலங்கை வானொலி மூச்சுவிடும் காற்றினிலே சஞ்சரிப்ப தில்லை. மயில் வாகனன் கனடா ஒலிபரப்பிலும், நகுலேஸ்வரன் யூகோஸ்லேவியா ஒலிபரப்பிலும் கலந்து கொள்கிறார்களாம். இவர்களைப் போன்றே வி.சுந்தரலிங்கம், விமல் சொக்கநாதன் ஆகிய இருவரும் பி.பி.சி. நிகழ்ச்சிகளில் ஒலிபரப்புகின்றனர். ஆனந்தி சூரியப்பிரகாஷனும் இங்கு தேசிய சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராக இருந்து இப்பொழுது பி.பி.சி. தமிழோசையில் கலந்து கொள்கிறார்.
வர்த்தகசேவையில் வி.ஏ.கபூர், என்.சிவராஜா ஆகிய இருவரும் சிலநாட்கள் அறிவிப்புக்களைச் செய்தார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக ஞாபகமில்லை.
இப்பொழுது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற் பணிபுரியாத மற்றொரு குரலுக்குரியவர் எஸ்.கே.பரராஜ சிங்கம். தனது கல்வி (இவர் ஒரு பி.எஸ்சி. பட்டதாரி) இசை ஞானம் (நமது நாட்டு மெல்லிசைப் பாடகர்களில் முன்னணியில் நிற்பவர்) இனிய குரல்வளம், கலை இலக்கியப் பின்னணி அறிவு (உடன் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், நாடகம், சினமா போன்றவை பற்றி நன்கு பரிச்சயமுடைய வேறொரு வர்த்தக ஒலிபரப்பு அறிவிப்பாளரை இதுவரை நான் சந்திக்கவில்லை) போன்ற விசேஷ தன்மைகளினால் ஒளிர்விடத் தொடங்கினார், "பரா" எனப்படும் பரராஜ சிங்கம். இவர் அளித்துவந்த நிகழ்ச்சிகளில் திரைதந்த இசை, ஒலிமஞ்சரி ஆகியன விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. தமிழ்ச் செய்திகளையும் இவர் கச்சிதமாக வாசிப்பார். வெளிநாட்டுச் செய்திகளின் தாற்பரியங்களை அறிந்துகொள்ள அவர் முயன்றதை அவதானிக்க முடிந்தது.

Page 130
242a காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
நெடுநாட்களாகவே வர்த்தக சேவையில் பணியாற்றி வரும் அறிவிப்பாளர்களில் மிகவும் சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம். இவர் பழந் தமிழிலக்கியப் பரிச்சயங்கொண்டவர்.
1966 ஏப்ரலில் சில பகுதிநேர அறிவிப்பாளர்கள் வர்த்தக சேவையில் சேர்ந்தனர். கே.எஸ்.ராஜா எனப்படும் கே.பூரீஸ்கந்தராஜா, புவனலோஜனி வேலுப்பிள்ளை (துரைராஜசிங்கம், நடராஜசிவம், யோகா சொக்கநாதன், தில்லைநாதன்), எஸ்.நாகராஜா, கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோர் தத்தம் வழிகளில் வர்த்தக சேவையில் கலகலப்பை ஏற்படுத்தினர். இவர்களில் கே.எஸ்.ராஜாவும், புவனலோஜனி யும் மாத்திரமே தொடர்ந்து கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் முன்னவர் ஒரு பகுதிநேர அறிவிப்பாளர். மற்றையவர் ஒரு நிரந்தர அறிவிப்பாளர்.
இவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் இருதய ஆனந்தன், இராஜேஸ்வரி சண்முகம், கோகிலா சுப்பிரமணியம் (சிவராஜா), பி.எச்.அப்துல் ஹமீட், எஸ்.நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். கோகிலாவின் குரலை அண்மைக் காலமாக நான் கேட்கவில்லை. இவர் மழலையாகவும், இனிமையாகவும், கண்ணியமாகவும் வானொலியில் அறிவிப்புகளைச் செய்தார். இவரும் ஒரு மெல்லிசைப் பாடகி. ஜோக்கிம் பெர்னாண்டோ ஒரு மேடை நடிகர், நாடக நெறியாளர், வானொலி நடிகர். ராஜேஸ்வரி சண்முகம் கற்பனை வளமுடைய ஒரு மேடை/வானொலி நடிகை. இருதய ஆனந்தன் பகுதிநேர அறிவிப்பாளராகச் சிலகாலம் கடமை பார்த்தவர். ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினத்தின்

கே.எஸ். சிவகுமாரன் 243ے
குரலும், அறிவிப்பு முறையும் இருதய ஆனந்தனின் குரலிலும் பாணியிலும் படிந்திருந்தது போலும். பி.எச்.அப்துல் ஹமீட் கனமான குரல்வளமும், கற்பனையும், விஷயஞானமும் கொண்ட அறிவிப்பாளராக ஜொலித்து வருகிறார். இவரும் ஒரு வானொலி/மேடை நடிகர். எஸ்.நடராஜசிவமும் ஒரு மேடை நடிகர். கவர்ச்சியான குரல் வளமுடையவர். எழுத்துப் பிரதிகளை, குறிப்பாகச் சிறுகதைகளை நன்கு 6aunto6Roul urtñr.
வர்த்தக ஒலிபரப்பு முன்னைய அறிவிப்பாளர்களில் சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம், வி.என்.மதியழகன் ஆகிய இருவரும் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் செய்தி வாசிக்கிறார்கள்.
இப்பொழுது புதிய புதிய குரல்களை வர்த்தக சேவையில் கேட்கிறோம். இவர்களைப் பற்றி நேயர்கள் அறிவீர்கள்தானே. பழையவர்களைப் பற்றித்தானே இங்கு நாம் கண்டோம்.
(தமிழ்ஒலி, ஜூலை/செப்டம்பர் -1982)
ŠKA ZA K) «Xo «Xo Xo

Page 131
(0)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் : எனது அறிமுகம்
நீண்டநாள் சேவை அனுபவம் கொண்டவர்களில் ஒருவரான சரா. இம்மானுவலின் பெயர் மறக்கப்படக் கூடியதல்ல.
சரா.இம்மானுவல் ‘கடமையின் எல்லை” என்ற ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்தில் பெண் வேஷம் ஏற்று நடித்தவர். கவர்ச்சியான குரலுடையவர். ஆங்கிலப் பெயர் களை ஒரளவு உச்சரிக்கக் கூடிய ஜோக்கிம் பெர்னாண்டோ, கே.எஸ்.ராஜா போன்று சரா.இம்மானுவலும் இதில் கவனம் செலுத்துபவர். இசையும் கதையும் போன்ற நிகழ்ச்சிகளில் நாடகத்தன்மையையும் உண்டு பண்ணியவர்.

கே. எஸ். சிவகுமாரன் 245 كم
எனது சொந்த அனுபவங்கள் சிலவற்றைத் தகவல் நலன் கருதி இங்கு தருகிறேன்.
பலதடவை முயன்று கடைசியாக 1966 ஏப்ரல் மாதம்
நானும் ஒரு பகுதிநேர அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டேன்.
நாகராஜா மாஸ்டர் (இவர் இப்போது ஒலிபரப்பு வதில்லை_ கனமான குரலுடையவர்), யோகா சொக்கநாதன் (இவர் விமல் சொக்கநாதனின் சகோதரி. திருமணம் முடித்த பின் யோகா தில்லைநாதன் ஆனார். இப்பொழுது ஒரு உயர்பதவி வகிக்கும் யோகா, ஒரு மேடை/திரைப்பட நடிகையும் கூட), புவன லோஜனி வேலுப்பிள்ளை (திரைக்கதம்பம் போன்ற நிகழ்ச்சிகளில் சோபித்த இவரது குரலும் பேசும் முறையும் போலவே ராஜேஸ்வரி சண்முகத்தினதும் குரலும், அறிவிப்புமுறையும் இருப்பதைக் கவனிக்க முடிகிறது), கே.பூரீஸ்கந்தராஜா (தனது பெயரை கே.எஸ்.ராஜா என குறுக்கிக் கொண்டு பிரபல்யமான இந்த அறிவிப்பாளர், மயில்வாகனன் எவ்வளவு புகழ் பெற்றாரோ அதேபோன்று வேறு காரணங்களுக்காகப் பிரபல்யம் பெற்றார். இவர் புது மாதிரியான முறைகளில் தமது அறிவிப்புக்களைச் செய்துவந்தார்.) இந்த நால்வருடன் நானும் சேர்ந்து பகுதி நேர அறிவிப்பாளராகச் சந்தர்ப்பம் பெற்றோம்.
உள்ளூராட்சிச் சேவை அதிகாரசபையிலே தமிழ் மொழிபெயர்ப்பாளராக (1961-69) நான் தொழில் பார்த்து வந்ததினால், சனி, ஞாயிறு தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் மாத்திரமே அறிவிப்பாளராகக் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

Page 132
246 N காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
வர்த்தக ஒலிபரப்பிலே இடம் பெற்ற சில விளம்பரங்களில் ஆங்கில உச்சரிப்புக் கொண்ட சில சொற்களும் இடம்பெறும். உதாரணமாக “கப்பிட்டோல்” (Capitol), “ப்ளாஸா' (Plaza) ஆகிய தியேட்டர்களின் பெயர்களை, ஆங்கில உச்சரிப்புக்கேற்றவாறே நான் உச்சரித்தேன். தலைநகரம்' அல்லது 'முதல்' என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Capital என எழுதப்படும். Capitol ஒரு இடத்தின் பெயர். இந்த வித்தியாசத்தைக் கொண்டுவர நான் தியேட்டரின் பெயரை “கப்பிட்டோல்' என்பேன். இவ்வாறு நான் உச்சரிப்பது சில சக அறிவிப்பாளர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. எனவே, "இவர் பிரான்சில் பிறந்து, இங்கிலாந்தில் வாழ்ந்த கறுப்பு வெள்ளைக்காரன்” எனப் பெயர் சூட்டினர். நானோ கவலைப்படவில்லை. ஏனெனில், ஆங்கிலப் பேச்சுத்துறையில் லண்டன் ட்ரினிட்டிக் கல்லூரியின் பேச்சுச் சான்றிதழ் களைப் பெற்றிருப்பதனால், சரியான உச்சரிப்பு எதுவென
எனக்கு நன்கு தெரிந்திருந்தது.
(தமிழ் ஒலி, ஜன/மார்ச் - 1983)
0x8 ox 0x

G21D
வானொலியின் நினைவுக் குமிழ்கள்
ர்ெத்தக ஒலிபரப்பில் பகுதிநேர அறிவிப்பாளராக இருந்தபொழுது ஆசிய சேவையிலே 5-நிமிடச் செய்திகளை யும் மொழி பெயர்த்து வாசிக்க வேண்டியிருந்தது. எந்த ஒரு நிகழ்ச்சியையும் நான் தயாரித்து ஒலிபரப்பும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. “ஸ்பொட்” விளம்பரங்களிலும் எனது குரல் ஒலிக்கவில்லை. இருந்தபொழுதிலும் கற்றவர் மத்தியில் ஒரளவு அபிமானத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.
பிறமொழிப் பாடல்களை ஒலிபரப்பிய சமயம், அறிமுகமாகச் சில தகவல்களை நான் கொடுப்பதைச் சில நேயர்கள் விரும்பினார்கள். அதுபோல, மேலைநாட்டு இசை தழுவிய தமிழ்ப் பாடல்களை அறிமுகம் செய்யும் பொழுதும் அக்கறை எடுத்துக் கொண்டேன்.

Page 133
24৪৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
தமிழ்ப் பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பற்றி 1954, 1955-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலத்திலே "சினிஃபிலிம்ஸ்” சினிமாஸ் லிமிட்டெட் ஆகிய பத்திரிகையை நடத்தினார்கள். "சிலோன் சினிமா” ஆகிய பத்திரிகைகளிலும் வீரகேசரி கலைக்கதம்பம் பகுதியிலும் (இதன் ஆசிரியர்களாக ஈழநாடு முன்னை நாள் ஆசிரியர் எஸ்.எம்.கோபால ரத்தினமும், இ.ஒ.கூ. அதிபர்களில் ஒருவரான வி.ஏ.திருஞான சுந்தரமும் பணிபுரிந்தனர்) எழுதி வந்ததனால் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இசை போன்றவை பற்றிய பின்னணித் தகவல்கள் எனக்குத் தெரிந்திருந்தன. எனவே, வர்த்தக ஒலிபரப்பில் நான் பணியாற்றும் வேளைகளில் இத்தகவல்களைச் சுவைபடக் கூறப் பழகிக் கொண்டேன். ஆகவே, நான் அறிவிப்பாளராகக் கடமை யாற்றிய நேரங்களில் ஒருவித கவர்ச்சி இருந்திருக்கலாம்.
எழுபதுகளின் முற்கூறில் எல்லா அறிவிப்பாளர்களுக் கும் மறு பரீட்சை நடத்தினார்கள். சேவை இரண்டை விட்டு சேவை ஒன்றிற்கு என்னை மாற்றினார்கள். சேவை ஒன்றின் பகுதிநேர அறிவிப்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கடமைக்கு அவர்கள் என்னை முதலில் அழைத்ததோ ஒருசில நாட்கள்தான். இப்பொழுது அதுவுமில்லை.
பின்னர் தமிழில் செய்தி வாசிக்கத் தேர்ந்தெடுத்தார்கள்; ஆனால் எனக்கு வாய்ப்பளிக்க ஒரு வருடமாயிற்று. தமிழ் செய்தி வாசிப்பவர்களில் ஒருவராக நானும் இருந்து செய்தி அறிக்கைகளை வாசித்து வந்த பின்னர், திடீரென ஒரு அரைகுறைப் பரீட்சை நடத்தி, எனது பெயரைச் செய்தி வாசிப்பவர்கள் பட்டியலிலிருந்து நீக்கினார்கள். இப்பொழுது

கே. எஸ். சிவகுமாரன் ര49
நான் தமிழில் செய்தி வாசிப்பதில்லை. ஆங்கிலத்தில் செய்தி வாசித்து வருகிறேன். அதுவும் எவ்வளவு நாட்களுக்கோ தெரியாது!
இ.ஒ.கூ. செய்திப்பிரிவில் மொழி பெயர்ப்பாளர், உதவி ஆசிரியர், பொறுப்பாசிரியர் ஆகிய பதவிகளை (1969-1979) வகித்து வந்தேன். 'கண்டதும் கேட்டதும்', 'செய்தி மஞ்சரி, ‘செய்தியின் பின்னணியில் போன்ற நிகழ்ச்சிகளையும் அளித்து வந்தேன்.
1953 முதல் இலங்கை வானொலியுடன் தொடர்பு கொண்டு, கலைக்கோலம், மற்றும் புத்தக திரைப்பட விமர்சனங்கள் (இவை முன்னர் தனித்தனியாக ஒலிபரப்பப்பட்டன), இளைஞர் மன்றம், கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.
ஆங்கிலத்தில் பகுதிநேரப் பயிற்சி அறிவிப்பாளராகவும் அனுபவம் உண்டு. ஆங்கிலத்தில் இந்துசமயப் பேச்சுக்கள், கலந்துரையாடல், கலை-இலக்கிய விமர்சனங்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் 1964 முதல் பங்குபற்றி வருகிறேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து நான் கற்றுக் கொண்டவை ஏராளம். ஒலிபரப்புத்துறையில் மாத்திரமன்றி உலக அனுபவத்தையும், நெருக்கடிகளைச் சமாளிக்க உதவக்கூடிய உத்தி முறைகளையும் இலங்கை வானொலி கற்றுத் தருகிறது.
(தமிழ் ஒலி, ஏப்ஜுன்-1983)
8 x 8.

Page 134
(32)
வான் அலையில் தமிழ் மணம்
“கொழும்பு ரேடியோ நிலையம்” - இது 40களின் பிற்பகுதியில். பின்னர் 'ரேடியோ சிலோனின் வர்த்தக ஒலிபரப்பு - இது 50களின் ஆரம்ப காலம். 'கலாவதி என்ற தமிழ்ப்படத்தில் பி.யூ.சின்னப்பாவும், ஏ.பி.கோமளாவும் இணைந்து பாடிய "நமஸ்தே நமஸ்தே" என்ற பாடலின் முகப்புடன் இந்த ஒலிபரப்பை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் தமிழரான ஆங்கில அறிவிப்பாளர் டான்துரைராஜ்.
அதன்பின்னர் "இலங்கை வானொலி, தேசிய/வர்த்தக ஒலிபரப்பு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தேசிய/ வர்த்தக சேவை இப்படி உருமாறி தற்போது “இலங்கை வானொலி வர்த்தக/தேசிய சேவை” என்று மருவி நிற்கின்றது.
அரசுக்குச் சொந்தமான இ.ஒ.கூ.தா. கடந்த பல தசாப்த காலங்களில் பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெற்று

கே.எஸ்.சிவகுமாரன் ര51
வருகின்றது. வானொலியின், தமிழ்ப்பகுதிகளில் நவாலியூர் சோ.நடராஜன், நாவற்குழி க.செ.நடராசா போன்ற ஈழத்தின் மூத்த கவிஞர்களும், சோ.சிவபாதசுந்தரம் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர், நாடக, ஓவியக் கலைஞர் “சானா' என்ற சண்முகநாதன், மறுமலர்ச்சி குழுவினருடன் சம்பந்தப்பட்ட விவியன் நமசிவாயம், தலைசிறந்த எழுத்தாளர் சுப்பிரமணியம் ஐயர், இசைக்கலைஞர் சு.சத்தியலிங்கம் (அரசியல்வாதியும், கணிதப் பேராசிரியருமான சுந்தரலிங்கத் தின் புதல்வர்), சமய அறிஞர் அருள் தியாகராஜா, கல்வியாளர் மோனி எலியாஸ் போன்றோரும் அன்று பின்னணியில் நின்று தமிழ் ஒலிபரப்பு சேவையில் பணியாற்றினார்.
அதேவேளையில் நேயர்களுக்குப் பரிச்சயமாக இருந்தவர்கள் அறிவிப்பாளர்களே. அக்காலத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் குறுகிய கால நேரங்களில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்தன.
“ஒலிபரப்புக்கலை' என்ற அருமையான நூலை எழுதியவர் யாழ்ப்பாணத்தின் முன்னோடிப் பத்தி எழுத்தாளர் (Columnist) - இந்தியாவில் புகழ்பெற்று பல விருதுகள் பெற்ற விமர்சகர், லண்டன் பி.பி.சி. நிலையத்தில் "தமிழோசை" என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தவர் அவர்தான் - கணிரென்ற குரலில் பிரபலம் பெற்ற சோ.சிவபாத சுந்தரம். அன்று இலங்கை வானொலியின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகவும் பணிபுரிந்து வந்த இவர் வானொலி நாடகங்கள் பலவற்றிலே நடித்தும் வந்தார். அதனால் இவருடைய குரல் நேயர்கள் மத்தியில் பரிச்சயமாயிற்று.

Page 135
252n காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
மற்றொருவர், பல திறமை வாய்ந்தவரும் “லாவண்யா" என்ற பெயரில் அந்தக் காலத்திலேயே வானொலி திறனாய்வுகளைப் பத்திரிகைகளில் எழுதியவரும், அருமையாகச் செய்தி வாசிப்பவருமான வி.என்.பாலசுப்பிர மணியம். நேயர்களைப் பெரிதும் கவர்ந்த இன்னுமொரு அறிவிப்பாளர் எஸ்.குஞ்சிதபாதம். இவரது இலங்கையில் இவ்வாரம்' என்ற வாராந்த நிகழ்ச்சித் தொகுப்பின் அறிக்கை (Presentation) அந்நாளைய இளம் சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இவர் செய்தி வாசிக்கும் முறையும் அலாதியானது.
இலங்கை வானொலியின் முதலாவது பெண் அறிவிப்பாளர் செந்தில்மணி. அந்நாள்களில் அறிவிப்பாள ராகவும், செய்தி வாசிப்பவராகவும், வானொலி நாடகங்களில் நடிப்பவராகவும் இவர் விளங்கினார்.
சென்னையில் பி.பி.சி. நிகழ்ச்சிகளின் தொடர்பாள ராகத் தற்போது பணிபுரியும் வி.சுந்தரலிங்கம் நல்ல செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் விளங்கியவர். வானொலி நாடகங்களிலும், தமது கணிரென்ற குரலினால் ஒளிர்விட்டவர் இவர்.
இலங்கையர்கோன் வெறுமனே சிறுகதை ஆசிரியர் மாத்திரமல்லர். தேசியத் தன்மையும், மண்வாசனை சித்திரிப்பும் வானொலியில் இடம்பெறச் செய்த முன்னோடி இலங்கையர்கோன்.
'சானா'வின் தயாரிப்பில் இலங்கையர்கோன் நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றவர் வி.சுந்தரலிங்கம் மாத்திரமல்லர். இவருடன் "ரேடியோ மாமா” என்று அன்று

கே.எஸ். சிவகுமாரன் ര53
எல்லோராலும் நன்கறியப்பட்டவரும், வானொலி விவரணங்களைச் செம்மையாகச் செய்தவரும், ஆழமான குரல் தொனி கொண்டவருமான சரவணமுத்துவும் சேர்ந்து கொணடார். விதானையார் வீட்டில், கொழும்பில் கந்தையா, லண்டன் கந்தையா போன்ற நாடகங்களில் இவ்விருவரும் நடித்தனர்.
“விதானை யார் வீட்டில்’ நடித்த மற்றொரு புலமையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி.
இவரைப்போன்று பேராசிரியர் க.கைலாசபதியும், வானொலியில் பல புதுமையான நாடகங்களை அளித்து வந்தவர்.
இவ்விருவரும் தமிழ் வானொலிக்குச் செய்துள்ள புதுமைப் பங்களிப்புகள் தனித்தனியாக ஆராயப்பட வேண்டும்.
ஒலிபரப்புத்துறையில், தனித்துவத்துடன் மிளிர்ந்த ஒரு செய்தி வாசிப்பாளர் மூதூரைச் சேர்ந்த வி.ஏ.கபூர். செய்தியின் முக்கிய அம்சங்களை நாம் இலகுவில் கிரகிக்கக் கூடிய வகையில் வாசிப்பது இவரது சிறப்பு.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு இஸ்லாமிய அறிவிப்பாளர் அப்துல் மஜித், கனமான சாரீரம் இவருடையது. எஸ்.நடராஜா, எஸ்.புண்ணியமூர்த்தி போன்றவர்கள் அறிவிப்பாளர்களாக ஜொலித்தனர்.
வர்த்தக ஒலிபரப்பு தென்னாசிய பிராந்தியத்துக்கே புதுமையானதாக இருந்த காலகட்டத்தில் மறைந்த

Page 136
25A காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
எஸ்.பி.மயில்வாகனனின் பங்களிப்பு முன்னோடியாகத் திகழ்ந்ததில் வியப்பில்லை.
வர்த்தக ஒலிபரப்பில் நகுலேஸ்வரன், பாலசுப்பிர மணியம், நாகலிங்கம், சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம், ராஜகுமார், இராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், கிறிஸ்டி தயாளன், கந்தையா, கே.சிறிஸ்கந்தராஜா (கே.எஸ்.ராஜா) மற்றும் சிலர் தத்தம் வழிகளில் தமது ஆளுமையைக் காட்டி வந்தனர்.
எஸ்.கே.பரராஜசிங்கம் என்ற கலைஞரின் வருகை யினால் வர்த்தக ஒலிபரப்பு வெறுமனே சினிமாப்பாட்டு ஒலிபரப்புச் சேவையாக இல்லாமல், கலைத்துவமான பரிமாணங்களைக் கொண்டதாக அமையத் தொடங்கியது.
தேசிய சேவையில் வி.பி.தியாகராஜா, வி.சிவராஜா, சுந்தரலிங்கம், (இவர் முன்னர் குறிப்பிடப் பட்ட சுந்தரலிங்கம் அல்லர்) சந்திரசேகரன் இன்னும் பலர் பணிபுரிந்து வந்த வேளையில் மற்றொரு தனித்துவ மிக்க பெண் அறிவிப்பாளர் அறிமுகமானார்.
கல்வி ஞானமும், பின்னணி அறிவும், பேச்சு, நடிப்புத் திறனும் கொண்டமைந்த சற்சொரூபவதி நாதன்தான் அவர். நல்ல செய்தி வாசிப்பாளர்களில் முன்னணியில் நிற்கும் ஒருவராக இருந்துவரும் அதேவேளையில் ஆங்கில சேவை, முறைசாராக் கல்வி ஒலிபரப்பு போன்ற துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்து வந்துள்ளார்.
பி.எச்.அப்துல் ஹமீட் இன்று உலக வானொலி நேயர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இவருடைய பங்களிப்புகள் ஏ7 ~ளம். நடராஜசிவம், ராஜேஸ்வரி

கே.எஸ்.சிவகுமாரன் 255ے
சண்முகம், இமானுவேல், கோகிலா சிவராஜா, புவன்லோஜினி, ஜோக்கிம் பெர்னாண்டோ மற்றும் செய்தி வாசிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த பிரபல எழுத்தாளர் ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆகியோரின் பங்களிப்புகளும் கணிப்பிட வேண்டியவையே.
வி.என்.மதியழகனின் பங்களிப்பு பிறிதாகப் பார்க்க வேண்டியதொன்று.
இப்பொழுது வான் அலைகளில் பல புதிய குரல்கள் ஒலித்து வருகின்றன. இவர்களைப் பற்றிய கணிப்புகள் செய்வது இலகுவானதல்ல. முழுநேரமும் வானொலியைக் கேட்டுவரும் ஒருவரே புதிய அறிவிப்பாளர்களின் பங்களிப்புகளை மதிப்பீடு செய்யலாம். அத்தகைய நேயர் ஒருவர் இருக்கிறார். அவர் அ.கனகசூரியர்.
(வீரகேசரி - வார வெளியீடு 31.08.1997)
0 0 8.
•X- 0x8

Page 137
(9)
வர்த்தக சேவை அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனன்
இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே புதுப்புதுத் திறமைசாலிகள் ஒலிபரப்புத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் தமது ஆற்றல்களைக் காட்டி வருகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுடைய வளர்ச்சி காத்திராப் பிரகாசமாய் நிகழ்வதொன்றல்ல. அடிப்படை மரபுகளைச் சிலர் ஸ்தாபித்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர்.அண்மையில் மறைந்த திரு.எஸ்.பி.மயில் வாகனன்.
‘மயில்' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த மயில் வாகனன் சில எல்லைக் கட்டுக்களைக் கொண்டிருந்தாலும், நேயருடன் கலந்துறவாடும் விதத்திலே அறிவிப்புகளையும், துணுக்குகளையும், ஹாஸ்யங்களையும்

கே. எஸ். சிவகுமாரன் ര57
மிக இலகுவான முறையிலும், கவர்ச்சியான முறையிலும், பிறரை ஈர்க்கக்கூடிய குரல்வளம் மூலமும் எடுத்துக் கூறியவாறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவருடைய அறிவிப்பு முறைகள் புதுமையாய் இருந்ததனாலேயே இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அவர் நேயர்கள் கவனத்தைப் பெற்றார். பிரபலமானார்; புகழடைந்தார். இன்று புதிய பரம்பரையினருக்கு மயில்வாகனன் பற்றி எதுவும் தெரியாதிருக்கலாம். ஆனால் 1950-1970 காலப்பகுதியில் வானொலி நேயர்களாய் இருந்தவர்கள் மயில் வாகனனின் புகழ் பாடாது இருந்திருக்க
DIT LITTERS6.
அவருக்கிருந்த பல இலட்சக்கணக்கான விசிறிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். பின் அவருடன் நேரிலேயே பழக நேர்ந்தது. நண்பர்களுள் ஒருவனானேன்.
அந்தக் காலத்திலேயே எனக்கு 'ரேடியோப்" பைத்தியம். சோ.சிவபாதசுந்தரம் (இன்று தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்), வி.என்.பாலசுப்பிர மணியம், எஸ்.குஞ்சிதபாதம், 'சானா' சண்முகநாதன், எஸ்.நடராஜா, எஸ். புண்ணியமூர்த்தி, வி.ஏ. கபூர், சரவணமுத்து, கே.எஸ்.நடராஜா, அருள் தியாகராஜா, விவியன் நமசிவாயம், போன்றவர்கள் தத்தம் வழிகளில் தமிழ் ஒலிபரப்புக்குப் புது நெறி காட்டியுள்ளனர். இவர்களுடன், செந்தில்மணி, மயில்வாகனன், வி.சுந்தர லிங்கம், மஜிட், எஸ்.கே.பரராஜ சிங்கம் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ்ச் சேவையில் எனக்குப் பிடித்த அறிவிப்பாளர்களாக எஸ்.குஞ்சிதபாதம், எஸ்.பி.மயில் வாகனன் ஆகிய இருவரையுமே நான் கருதிக்கொண்டேன்.

Page 138
25৪৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
ஒரு காலத்தில் அறிவிப்பாளராக நான் வரவேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொண்டேன்.
வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பமாகியதும் முதல் தமிழ் அறிவிப்பாளராக “மயில்” பதவி ஏற்கவில்லை. ஆங்கில அறிவிப்பாளர் ஒருவர்தான் முதல் தமிழ் அறிவிப்பாளராக வர்த்தக சேவையில் கடமையாற்றினார். டான் துரைராஜ்தான் அந்த ஆங்கில அறிவிப்பாளர். அவர் ஆங்கில நிகழ்ச்சிகளைக் காலை ஒலிபரப்பில் 10.00 மணிக்கு முடித்துவிட்டுத் தொடர்ந்து “கலாவதி” படத்தில் வரும் “நமஸ்தே, நமஸ்தே" பாட்டை ஒலிபரப்பி, "நமஸ்காரம். நேரம் 10.00 மணி. இது ரேடியோ சிலோனின் வர்த்தக ஒலிபரப்பு' என்று அரை மணி நேர நிகழ்ச்சியை ஆரம்பித்து வைப்பார். இந்த அரை மணி நேர சினிமாப் பாட்டு நிகழ்ச்சி, சனி, ஞாயிறு தினங்களில் அப்பொழுது ஒலிபரப்பாகவில்லை. பின்னர் படிப்படியாக ஒலிபரப்பு நேரம் அதிகரித்தது. இது ஐம்பதுகளின் பிற்பகுதியிலே.
டான் துரைராஜ், ஜஸ்டின் ராஜ்குமார், கிறிஸ்டி தயாளன் கந்தையா ஆகியோர்களைத் தொடர்ந்து மயில்வாகனன் தமிழ் அறிவிப்பாளராகப் பதவி ஏற்றார். அவருக்குப் பின் பல நிரந்தர அறிவிப்பாளர்களும் கடமையாற்றி ஓய்ந்தனர். பழையவர்களில் சிலர் இன்று தொடர்ந்தும் அறிவிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றனர். இருவர் - ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், சரா இமானுவல். நகுலேஸ்வரன், எஸ்.கே.பரராஜசிங்கம், பாலசுப்பிரமணியம், சில்வஸ்டர் பாலசுப்பிரமணியம், நாகலிங்கம், நாகராஜா, பி.சந்திரசேகரம் போன்றவர்கள் வர்த்தக சேவையின்

கே.எஸ். சிவகுமாரன் മ59
ஒலிவாங்கியின் பின்னால் இருந்து பல நிகழ்ச்சிகளை நடத்தித் தந்துள்ளனர். 1952 முதல் 1983 வரை பல வியக்கத்தக்க வளர்ச்சிகள் வர்த்தக சேவையில் ஏற்பட்டு வந்துள்ளன.
1954 அளவில்தான் 'மயில்' பதவி ஏற்றார் என்று நினைக்கிறேன். நேயருடன் நேரடியாகச் சம்பாஷிக்கும் விதத்தில் ஒலிபரப்புக் கலையை இலகுவாக்கிய முன்னோடி ஒலிபரப்பாளர்களில் 'மயிலு’ம் ஒருவர். கடினமான நெறிமுறைகளைக் கொண்ட தமிழ் ஒலிபரப்பு இலகுவான தாகவும் அமையலாம் என்பது மயில் வாகனனால் நிரூபிக்கப்பட்டதும், பல புதிய அறிவிப்பாளர்கள் வளரத் தொடங்கினர். நானும் ஒரு வர்த்தக சேவை அறிவிப்பாள ராகப் பல தடவை முயற்சி செய்தும் நிறைவேறவில்லை. இறுதியில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கே.பூரீஸ்கந்த ராஜா (கே.எஸ்.ராஜா), நாகராஜா, புவனலோஜனி வேலுப்பிள்ளை, யோகா சொக்கநாதன் (தில்லைநாதன்) கே.எஸ்.சிவகுமாரன் (நான்) ஆகியோர் பகுதிநேர அறிவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்குப் பின் பி.எஸ்.அப்துல் ஹமீட், எஸ்.நடராஜசிவம், ராஜேஸ்வரி சண்முகம், ஜோக்கிம் பர்னாந்து, கோகிலா சிவராஜா ஆகிய இன்றைய தலைசிறந்த வர்த்தக அறிவிப்பாளர்களும், மற்றும் பல புதியவர்களும் ஒலிபரப்பி வருகின்றனர்.
எஸ்.பி. மயில் வாகனன் வர்த்தக சேவையைப் பிரபல்யமாக்கித் தந்தமை, ஒலிபரப்பும், ஒலிபரப்பாளர் களும் மேலும் பிரகாசிக்க உதவியது எனலாம்.

Page 139
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ260
தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் மயில்வாகனன் தோன்றியிருந்தார். பத்திரிகை விளம்பரங்கள் சிலவற்றிலும் அவருடைய புகைப்படம் பயன்பட்டிருந்தது.
மயில்வானனின் அருமை மனைவி செந்தில்மணி தமிழ்ப் பெண் அறிவிப்பாளர்களில் ஒரு முன்னோடி. நல்ல செய்தி வாசிப்பாளர். வானொலி கவிதை - நாடக நடிகை.
(தினகரன் - வாரமஞ்சளி 18, 12 1983)
0 0 0 {X 8x8 (X-

வீ.ஏ.திருஞானசுந்தரம் மதிநுட்பமும் நிர்வாகத் திறனுமுடைய ஊடகவியலாளர்
1955ஆம் ஆண்டிலே, இரத்மலானை இந்துக் கல்லூரியில் சக மாணவராக 'திரு' எனச் செல்லமாக அழைக்கப்படும் வீ.ஏ.திருஞானசுந்தரம் என்ற நண்பரை முதலிற் சந்தித்தேன். ஆயினும், அப்பொழுது யாம் இருவரும் அந்நியோன்யமாகப் பழகவில்லை. எஸ்.எஸ்.ஸி.சித்தியடைந்த பின்னர், நான் கொழும்பு சென். யோசப் கல்லூரியில் உயர் படிப்புக்காகச் சென்று விட்டேன்.
1959இல், வீரகேசரி செய்தித்தாளிலே அவர் உதவி
ஆசிரியராகப் பணிபுரிந்த வேளை, அவரை மீண்டும் சந்தித்தேன். முதுநிலை பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபால

Page 140
262a- காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
ரத்தினமும், வீ.ஏ.தி.யும் ‘கலைக்கதம்பம்’ என்றொரு பக்கத்தைத் தயாரித்து வழங்கிய பொழுது திரைமறைவில் இசை வழங்குவோர்’ என்ற தொடரை நான் எழுதி வந்தேன். 'திரு’ அக்கறை எடுத்து எனது கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அக்காலம் முதல், அவரும் நானும் பரஸ்பர மதிப்புடன் நண்பர்களாக இருந்து வருகிறோம்.
வீ. ஏ. திருஞானசுந்தரம் இன்று நாடறிந்த ஒரு பிரமுகர். ஒரு இதழியலாளராக ஆரம்பித்து, இலங்கை 696.Suprlild al-G55mu60Tg55ait Deputy Director-General of Broadcasting ஆகப் பதவி உயர்ந்த இந்தத் தமிழனின் பங்களிப்பையிட்டு, நாம் பெருமைப்பட வேண்டும். ஒளி ஊடகமாகிய ரூபவாஹினியிலும், இவர் ஆலோசகராகப் பணி புரிந்திருப்பதுடன், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்களிலும், அமைப்புக்களிலும், தனது நிர்வாகத் திறமையை நிரூபித்து வந்திருக்கிறார்.
மதிநுட்பமும், நிர்வாகத் திறனும், சிறந்த முகாமைத்துவ அநுபவமும் வாய்க்கப்பெற்ற வீ. ஏ. தி. அவர்கள் சிறப்பாக மதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.
தமிழ் மொழி வளம், தமிழாக்கும் ஆற்றல், குரல் வளம், ஒலிபரப்பு அம்சங்களிலும் தமது முத்திரையைப் பதித்தல் ஆகியன அவரது தனித்தன்மையை இனங்காட்டி நிற்கும்.
இளைய பரம்பரையினர் இவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, இவருடைய சாதனைகளை நிழற்படுத்துவது பயனளிக்கும். ஏனெனில், பொறுப்புடைய பல பதவிகளை

கே.எஸ். சிவகுமாரன் ര63
அவர் வகித்திருப்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பதவிகளுக்கும், பணிகளுக்கு மிடையே தொடர்பு உண்டு.
ஆய்வறிவாளர் கா. சிவத்தம்பி அவர்கள் கூறுவது போல, “அவரது நட்பு நிலையினையே அவரது ஆளுமையின் திறவுகோலாகக் காண்பர். ஆனால், திரு'விடத்துக் காணப்படும் இந்த அணுகுதலெளிமைச் சிறப்பு, அவரது சாதனைகளை, திறமைகளை மறைப் பனவாகவே உள்ளன என்று சொல்லலாம்.”
வீரகேசரியின் செய்திப் பிரிவின் உதவி ஆசிரியர், காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இன்றியமையாத நிர்வாகி/ மொழி பெயர்ப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதி மா அதிபர், உலக இந்து மாநாட்டுச் செயலகப் பணிப்பாளர், பனை அபிவிருத்திச் செயலாளர், கொழும்பு பல்கலைக்கழக வருகை இதழியல் கற்கைநெறி விரிவுரை யாளர், வடகிழக்கு மாகாண சபையின் மறுவாழ்வு அபிவிருத்திச் சபையின் செயலாளர், ஜனாதிபதி அலுவலக ஒருங்கிணைப்பாளர், ABC துறையின் பத்திரிகையாளர், சுவர்ண ஒலி நிகழ்ச்சி/ செய்தி முகாமையாளர் ஆகியன அவரின் சில பதவிகள்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை உதவிகள் பணிப்பாளராகவும் அவர் பணிபுரிந்திருக் கிறார். அவருடைய வானொலிப் பங்களிப்புக்களைப் பார்க்கும் முன்னர், பேராசிரியர் கா.சி. குறிப்பிட்ட இன்னொரு அவதானிப்பையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Page 141
264৯২ காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
“வீ.ஏ.தி. இலங்கை வானொலி தேசிய சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தவர். ‘வளரும் பயிர்' நிகழ்ச்சியை நடத்தியவர். கிராம சஞ்சிகை, சிறுவர் மலர், வானொலி நாடகம், கலைக் கோலம், விசேஷ சித்திரங்கள் போன்றவற்றிற்குப் பிரதிகளை எழுதியவர். பல நேர்காணல்களை ஒலிபரப்பியவர். வர்த்தக சேவையில், தேன்கூடு, விடிவெள்ளி ஆகிய நிகழ்ச்சிகளுக்கான பிரதிகளை எழுதித் தயாரித்தவர், செய்திச் சுருளைத் தயாரித்து ஒலிபரப்பியவர், செய்தி வாசித்தவர், பல்வேறு அரச கூட்டுத்தாபன நிகழ்ச்சித் திட்டங்களுக்கான பிரதிகளை எழுதி ஒலிபரப்பியவர்.
ஒலிபரப்பாளராகவும், இருந்து வந்த வீ.ஏ.தி. 1980 முதல் இ.ஒ.கூ. தாபனத்திலே நிர்வாகப் பிரிவு உதவி அதிபர், வர்த்தக சேவை மேலதிக அதிபர், தமிழ்ச் சேவை பிரதிமா அதிபர் ஆகிய பதவிகளை வகித்ததுடன் லக்ஹந்த/ ITN ஆகியனவற்றின் பிரதிப் பொது முகாமையாளர் போன்ற பதவிகளையும் வகித்துச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.
ரூபவாஹினியின் தமிழ் நிகழ்ச்சிகள்/ செய்திகள் ஆகியவற்றிற்கான ஆலோசகராகவும், அதிபர்கள் சபை உறுப்பினராகவும், வேறு சில ஒளிபரப்பு நிலையங்களின் ஆலோசகராகவும் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
ஜப்பான், ஜேர்மனி, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஒலிபரப்புக்கள் சம்பந்தமான பயிற்சியைப் பெற்றதுடன், நேபாளம், டொயிச்சே வெலே ஆகிய ஒளி/

கே.எஸ். சிவகுமாரன் ക85
ஒலிபரப்பு நிலையங்களில், "பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும் அநுபவம் பெற்றார்.
கலைக்கழகம் தமிழ் நாடகத்துறைத் தலைவராகவும், மற்றும் பல தொழில் குழுக்களின் அங்கத்தவராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
தமிழ் ஒளி', 'கலைச் செம்மல்", "கலைஞான பானு', 'ஒலி அரசு', 'மதுர பாஷணை ஆகியன அவருக்குக் கிடைத்த பட்டங்கள்.
கார்ள்டுயிஸ்வேர்ச் அலுமினிய அசோஷியேஷன் செயலாளர்/ தலைவர் ஆகிய பட்டங்களும், பதவிகளும் அவருக்குக் கிடைத்துள்ளன.
துறைசார் உயர்மட்டத்தினர் இவர் ஆற்றலையும், திறமைகளையும் வியந்து பாராட்டியுள்ளனர்.
'கலாபூஷணம்’ தெரிவுக் குழுவின் தலைவர்/ உறுப்பினராக நான்கு தடவைகள் கடமையாற்றியுள்ளார். உத்தியோக மொழிகள் அலுவலகம் வெளியிட்ட தொழில் நுட்பப் பதங்கள் அகராதித் தொகுதியின் தொகுப் பாளர்களில் இவரும் ஒருவராகப் பங்களித்தார்.
வீ.ஏ.திருஞானசுந்தரத்தின் பங்களிப்புக்கள் நிர்வாகத் துறையில் மாத்திரமன்றி, குறிப்பிடத்தகுந்த நூல்களை எழுதி
வெளியிட்டவர் என்பதிலும் நாம் பெருமையடையலாம்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி தொடர்பான 'கரவையூற்று', 'காற்றைக் கருவி கொண்டு கலைபடைத்த

Page 142
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܥ266
வித்தகர்கள் (சிவாலயம், மனோலயம்) 'சாகா வரம் பெற்ற சான்றோன் (எம்.சிவசுந்தரம் பற்றியது) ஆகியன இவரது எழுத்து வடிவ படைப்புகள். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு பரிச்சயம் பெற்றவர் வீ.ஏ.தி.
அரச தொலைக்காட்சி விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும் அங்கத்தவராகக் கடந்த ஆண்டு செயற்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவருக்கு ‘பூரீலங்கா திலக' பட்டத்தைச் சூட்டியிருந்தமையையும் இங்கு குறிப்பிடலாம்.
இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டவரான நண்பர் வீ. ஏ. திருஞானசுந்தரம், தன்னலம் பாராமல், பிறர் நலன்களில் அக்கறை கொண்டவர் என்பது எனது நீண்ட நாள் அவதானிப்பு. இதற்கு உதாரணமாக இலங்கை வானொலித் தமிழ்ப் பகுதியின் முன்னோடி ஒலிபரப்பாளர் கள் பற்றிய விபரங்களை, அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டதை அவர் பெருந்தன்மை எனக் குறிப்பிடலாம்.
நான் ஆங்கிலத்தில் எழுதுபவற்றைப் படித்து உடனுக்குடன் பாராட்டுத் தெரிவிக்கும், தமிழ் பேசும் மக்களில், மூவரைக் குறிப்பிடலாம். அரசியல்வாதி அஸ்வர் அவர்கள், இளைப்பாறிய நிர்வாக அதிபர் மார்க்கண்டு, வீ. ஏ. திருஞானசுந்தரம் ஆகியோர் மாத்திரமே அவர்களாவர்.
எஞ்சியவர்கள் நான் எழுதுவதைப் பார்ப்பதுமில்லை. பாராட்டுவதுமில்லை. மாறாக ஒரு 'விமர்சகர்' ஆங்கிலப் பத்திரிகைகள் எனக்குக் கொடுக்கும் இடத்தை நான்

கே.எஸ். சிவகுமாரன் ര67
துஷ்பிரயோகம் செய்கிற்ேன் என்று தமது வயிற்றெரிச் சலைக் கொட்டியிருக்கிறார். இதுவும் பதிவு செய்யப்பட வேண்டும். வீ.ஏ.தி.யும் நம்மவர்கள் மத்தியில் உரிய கணிப்பைப் பெற வில்லை என்பதற்காக, 'மல்லிகை" ஆசிரியர், அட்டைப்படக் கட்டுரையை எழுதும்படி என்னைப் பணித்த பொழுது, மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று, இங்கு எழுதியிருக்கிறேன்.
(மல்லிகை - மே, 2008)
XX «X Kt» 0: (X 0x

Page 143
#88N
மனத்திரை-1
6 ஒலிபரப்பில் புரட்சி என்று நெவில் ஜய வீரா கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாநாயகர் அவ்வாறுதான் கூறினார். ஒலிபரப்பாளர்களுக்கு இந்நிலையம் பயிற்சி அளித்துவருகிறதல்லவா ? பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடும்போதுதான் திரு. ஜயவீரா அப்படிக் குறிப்பிட்டார்.
மாற்றமே இயற்கையின் நியதி என்பவர்கள் பாக்கியசாலிகள்தான். அவர்கள் வளர்ந்து விடுகிறார்கள். இந்தக் கருத்துக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்கள்- ஐயோ பாவம்! அவர்கள் சுதந்திரத்தை நாம் பறிப்பானேன்?
உலகத்திலுள்ள ஏனைய நாட்டு வானொலி நிலையங்களுடன் ஒப்பிடும்பொழுது, கால் நூற்றாண்டாகு

கே. எஸ்.சிவகுமாரன் 269ے
தல் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை வெளியிட்ட வானொலி மாநாயகர், "ஒலிபரப்பில் மாற்றம் வேண்டும்; ஒலிபரப்பப்படும் முறைகளிலும் ஒலிபரப்பு உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் வேண்டும்’ என்று வற்புறுத்தினார்.
வானொலி சக்தி மிகுந்த கருத்துப் பிரசாரச் சாதனம் என்பதால், நாட்டின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து அதனைக் கருத்துப் பிரசாரத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது கூட்டுத்தாபனத்தாரின் கொள்கை என்பது தெரிய வருகிறது.
ஒலிபரப்பு முறைகளில், மக்கள் மனதைக் கவரும் விதங்களில் எவ்விதம் புதுமைகளைப் புகுத்தலாம் என்று ஆலோசனை கூறுவதற்காக பிரிட்டீஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தபானத்தில் (பி.பி.ஸி.) இருந்து ஒர் ஆலோசகர் இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் கடமையாற்ற வந்திருக்கிறார் என்பது வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஸ்டூவர்ட்வேவல் என்ற இவருடைய தலைமையின் கீழ் இயங்கும் பயிற்சி நிலையத்தில், சி.வி.ராஜசுந்தரம், போன்ற போதனாசிரியர் கள், வானொலி நிலையத்தில் சேவிக்காத வெளி ஒலிபரப்பாளர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளித்தனர். பயிற்சி ஆங்கிலத்தில்தான் நடைபெற்றது. விரிவுரையாளர் ராஜசுந்தரம், பயிற்சியாளர்களுக்கு அளித்த “அதிர்ச்சி - வைத்தியம்”

Page 144
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
(Shock treatment)
நன்கு பிரயோசனப்படும் என்று நினைக்கிறேன்.
இதுகாலம்வரை, நேயரை மறந்து, சஞ்சிகைக் கட்டுரைகளைப் போல எழுதி, ஏனோதானோ என்று வானொலியில் ஒப்புவித்துவிட்டுப் போகும் வானொலிப் பேச்சுகள் - இனி மேல் ஒலிக்கமாட்டா. ஆரம்பம் முதல் இறுதிவரை நேயரைக் கவர்ந்து இழுக்கும் விதத்தில், எளிய பதங்களில், கடின விஷயத்தையும் சுவாரஸ்யமாக அளிக்கும் முறையே அனுசரிக்கப்படும் என்று நம்ப இடமுண்டு. இது வானொலி நிலையத்துக்கு வெளியே இருந்து ஒலிபரப்பும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடங்கி, சிறுவர் நிகழ்ச்சிகளை நடாத்தும் ஒலிபரப்பாளர்கள் வரை அனுசரிக்கப்படும்.
உள் ஒலிபரப்பாளர்கள், அதாவது அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்ற நிலைய உத்தியேகத்தர்கள் ஒலிபரப்பில் செய்யும் புரட்சி செயல் முறையில் இதுவரை வருவதாகக் காணோம். அப்படி என்ன அவசரம்? எதையும் நிதானமாக, சாவகாசமாகச் செய்வோமே என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்!
சிங்கள அறிவிப்பாளர்கள் செய்தி வாசிக்கும் முறைபற்றிய ஓர் அவதானிப்பும் பயிற்சியாளரிடையே இருந்து உதித்தது. எல்லா அறிவிப்பாளர்களும் ஒரே தொனியில், ஒரே பாணியில், ஒரே சுருதியில் செய்தி வாசிக்கின்றனர் என்ற குறை சுட்டிக்காட்டப்பட்டது.

கே.எஸ். சிவகுமாரன் ര71
ஒருவரையொருவர் பாவனை செய்கின்றனர் என்றனர். தி.மு.க. பேச்சாளர்கள் பேசும் பாணி ஒரே மாதிரியிருப்பது போல், நமது வானொலி அறிவிப்பாளர்களும் ஒரே பாணியில் அறிவிக்கும் பொழுது நேயர்களுக்கு அலுப்புத்தட்டத்தானே செய்கிறது!
தினகரன் - 03.03.1969)

Page 145
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ272
46
மனத்திரை-2
Iெனொலி அறிவிப்பாளர்/ எழுத்தாளர் ஜோர்ஜ் சந்திரசேகரன் சமீபத்தில் ஒரு விமர்சனஞ் செய்திருந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்த் தேசிய சேவை போயா கழிந்து, இரண்டாவது இரவு 8.30க்கு ஒலிபரப்பும் “கலைக்கோலம்" நிகழ்ச்சியில் அந்த விமர்சனம் இடம் பெற்றிருந்தது. அது ஒரு தரமான விமர்சனம். ஜ்ஷான் ஜெனே என்ற பிரெஞ்சு எழுத்தாளரைப் பற்றியும், அன்னவரின் கலை / இலக்கியக் கோட்பாடு பற்றியும், அவரின் “மரணக்காவல்' என்ற நாடகம் பற்றியும், அந்நாடகம் கொழும்பில் ஆங்கிலத்தில் மேடையேற்றப் பட்ட முறை பற்றியும் அவர் விமர்சித்திருந்தார். வெகு சரளமாக, சகஜமாக, எளிய முறையில் அவர் அறிமுகப்படுத்தியிருந்த விதம், இதுவரை “கலைக்கோலம்” நிகழ்ச்சி காணாத பிறமொழிக் கலைஞர் பற்றிய அறிமுகம் ஆகும். "மரணக் காவல்" நாடகத்தை நானும் பார்த்தேன்;

கே.எஸ். சிவகுமாரன் 273ے
ஆனால் சந்திரசேகரனின் விமர்சனம் அந்நாடகத்தின் நுட்பமான பகுதிகளைப் புரிந்துகொள்வதற்கு எனக்குப் பெரிதும் உதவிற்று.
Ο
X
இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் இருந்து வித்தியாசமான நிகழ்ச்சிகள் இப்பொழுது எல்லாம் ஒலிபரப்பாகி வருகின்றன. வர்த்தக சேவையில் “கடிதமும் பதிலும்” என்றொரு நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. வர்த்தக சேவை பொதுமக்களுடன் அந்நியோன்னிய உறவு கொண்டாடும் ஓர் ஒலிபரப்பு. அந்த வாசகத்துக்கேற்ற விதத்தில் "நிஜ/ நேரடி" (Live Broadcast) ஒலிபரப்பு எவ்விதம் ஒலிபரப்பாக வேண்டுமோ, அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்து வருகிறது. அகடவிகடமாகவும், சமயோசித மாகவும் பதில் அளிக்கும் விவியன் நமசிவாயம் கைதேர்ந்த ஓர் ஒலிபரப்பாளர். எல்லா விஷயங்களைப் பற்றியும் சிறிதளவேனும் அறிந்து வைத்திருக்கும் நமசிவாயம் முன்னாட்களில் தேசிய சேவை “கிராம சஞ்சிகை"யுடனும், "விவேகச் சக்கரத்துடனும் ஒன்றிப் போனவர். இவர் இப்பொழுது வர்த்தக சேவையின் உதவி நிகழ்ச்சி முகாமையாளர்களுள் ஒருவராகவும் அச்சேவையின் தமிழ்ப் பகுதிக்குத் தலைவராகவும் இருக்கிறார்.
Ο 0.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழில் "வானொலி மஞ்சரி” ஏட்டை இரு வாரத்துக்கொருமுறை வெளியிட்டு வருகிறது. வானொலி ஒலிவாங்கிக்குப்

Page 146
27A காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை
பின்னாலிருந்து ஒலிபரப்பும் கலைஞர்களையும், உத்தியோகத்தர்களையும் இந்த வெளியீடு அறிமுகப்படுத்தி வருகிறது. நிகழும் வாரத்துக்குரிய ஏட்டில், தேசிய சேவை - தரம் ஒன்று அறிவிப்பாளர் வி.ஏ.கபூர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளார். இந்த வெளியீட்டின் ஆங்கில இதழில் ஜிமிபரூச்சா என்ற வர்த்தக சேவை அறிவிப்பாளர் அறிமுகமாகியிருக்கிறார். இவர் இப்பொழுது உதவி நிகழ்ச்சி முகாமையாளராக இருந்து, வர்த்தக சேவையின் ஆங்கிலப் பகுதித் தலைவராகக் கடமை பார்க்கிறார்.
Ο &
நாடகம் என்றதும் நாம் “மேடை’ நாடகங்களையே பொதுவாகக் கருத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். வானொலி நாடகங்கள் சில எமது கருத்தைக் கவருவனவாக இருக்கின்றன. வானொலி நாடகம் "ஒலி"யைக் கொண்டே நாடகமாகிறது என்பதை நாமறிவோம். நகைச்சுவை நாடகங்களை மேடையிற் காணும் பொழுது, இளக்காரமாக நமக்குப் படுகிறது. ஆனால் வானொலியில் கேட்கும் பொழுது, சொற்களைக் கொண்டு நகையுணர்ச்சியை அத்தகைய நாடகங்கள் தருவதாலோ என்னவோ, அவை களிப்பூட்டுகின்றன. “சானா’ அளிக்கும் “மத்தாப்பு” நிகழ்ச்சியில் சண்முகம், வாணியூரான் போன்றோர் ஒலிபரப்பும் நாடகங்கள் சில தரமாக இருக்கின்றன. "சானா” ஒரு “வானொலி பெர்ஸனாலிட்டி" (தனித்தே யாளுமையாளர்)யாக இருப்பதனாலும், "மத்தாப்பு' கலகலப்பாக இருக்கிறது.
Ο 0x8

கே.எஸ்.சிவகுமாரன் 275ے
எழுத்துத் துறையும் வானொலித் துறையும் பொது சனத் தொடர்புடைய நவீன தொழில் நுட்பவியற் சாதனங்களாகிவிட்டன. இந்திய வானொலியில் அகிலன், சுகி சுப்பிரமணியன், தி.ஜானகிராமன் போன்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பணிபுரிவதுபோல, ஈழத்து வானொலி யிலும் சிங்கள, தமிழ், ஆங்கில எழுத்தாளர்களும் கடமை புரிகிறார்கள். தேசிய ஒலிபரப்பின் தமிழ்ப்பகுதி அதிபராக, கவிஞர் நாவற்குழியூர் நடராசன் கடமை பார்ப்பது நாம் அறிந்ததே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் புதுப்புது முறைகளில் நிகழ்ச்சிகளை அளித்து வருவதற்கு, இலக்கியத் துறைக் கலைஞர்கள் எவ்வாறு துணை செய்கிறார்கள் என்பதை நாம் மிகுந்த ஆவலுடன் அவதானித்து வருகிறோம்.
(தினகரன் - 02.04.1969)
Ο
0.
令
<

Page 147
காலக் கண்ணாடியில் ஒரு கலை - இலக்கியப் பார்வை ܠ27Q
குறிப்புகளுக்காக
 


Page 148


Page 149
െ தைரிய (B6)
தற்போதைய தொழில் - முய
எழுத்து ஒலிபரப்பு 9t இலக்கியப் போதனன். இ நிரந்தரமாக இயங்காமல் ச ஈடுபாடு கொண்டவராய் இய
ஆக்க இலக்கியங்களை சிறுகதைகளாகவும், கவிதை
சிறந்த திரைப்படத் திற இலக்கியப் பத்தி எழுத்த வடகிழக்கு மாகாண ஆ விருதுகளைப் பெற்றிருக்கிற
இவருடைய ஆங்கில 6 இணையத் தளத்திலும், தளத்திலும் வெளியாகி வரு
இவருடைய திறனாய்வு ஏடுகளில் வெளியாகியுள்ளன
 
 

மயா சமயம் சுயமாகத் தொழில் Iriggio. (Freelance Media
ாத் தமிழிலும், ஆங்கிலத்திலும் நகளாகவும் தந்துள்ளவர்.
னாய்வாளர். சிறந்த ஆங்கில ாளர். கம்பன் கழக விருது எநநர் விருது மற்றும் பல Iा.
rழுத்துகள் "பதிவுகள்" என்ற amilWeek என்ற இணையத் கின்றன.
க் கட்டுரைகள் சில சிங்கள
.
- மணிமேகலைப் பிரசுரம்