கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.02

Page 1


Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
Με
Design Manufactu Sovereign
JeU
101, Colombc Te: O81
(SÈ CENTIR SU
SUPPERS TO CONF
Dealers in all in Food Colours, Food Chern
76 B. Kings Te : O81-222.4187, 08
 

AMIS
zvesters
ers and
rers of 22T 3old Quality ellery
Street, Kandy - 2232545
RAL ESSENCE
|PPLIERS
ECTIONERs a BAKERs
ds of Food Essences, icols, Coke Ingredients etc.
Street, Kandy 1-2204480, O81-4471.563

Page 3
பகிர்தலின் மூலம்
of flob
ஆழமும்
பெறுவது
ஞானம்
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் ஓவியர்
கெளதமன்
தலைமை அலுவலகம் : கண்டி தொடர்புகளுக்கு.: தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06. தொலைபேசி: 01 -2586013
O777-306506
+61 02 80077270 தொலைநகல்: 011-2362862 E-mail : editorOgnanam.info Web : www.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: Swift Code:- HBLLKLX T. Gnanasekaran Hatton National Bank - WellaWatte Branch AIC NO. 009010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துக புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 

இதழினுள்ளே . o ažýkag2íř
குறிஞ்சி நாடன் 12 கண. மகேஸ்வரன் 17 கல்வயல் குமாரசாமி 22 க. கலாமணி 23 அரவிந்தன் சுப்பிரமணிய சர்மா 25 கணக்காயன் 33 வெ. துஷ்யந்தன் 36 அலெக்ஸ் பரந்தாமன் 47 அல்வாயூர் சி. சிவநேசன் 54
O ab Gangsaboř
செ. ஞானராசா Α 04 கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் 08 கந்தையா சண்முகலிங்கம் 13 ச. முருகானந்தன் མ་ 24 மொழிவரதன் - 25 சந்திரகாந்தா முருகானந்தன் 26 சாரணா கையூம் w 39 கலாநிதி நா. சுப்பிரமணியன் 43
O
பவானி சிவகுமாரன் O5 உ. நிசார் 18
0 நேர்காணல்
தெளிவத்தை ஜோசப் தி. ஞானசேகரன் 37 e பர்மியமிக்குசொன்னகதைகள்
கவிஞர் சோ.ப. 9 நூன் மதிப்புரை
குறிஞ்சி நாடன் 51 o சமுகநூ ைகலை இனக்கிய
கே. பொன்னுத்துரை 40 O utilagigs/
பிரகலாத ஆனந்த் 31 மானா மக்கீன் 34 கலாநிதி துரைமனோகரன் 41 கே. விஜயன் 48 e வாசகர்பேசுகிறார் 54
ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு பூசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
சர்வதேச தமிழ் எ உணர்த்தும் வ
இதயசுத்தியுடனும், தீர்க்கதரிசனமான எண்ணங்களு செயற்பாட்டின் நோக்துங்களை பிசகின்றி நெறிப்படுத்தும் பணி ஆக்கமுயற்சியும் வெற்றியடையும் என்பதற்கு - தமிழ்ச்சூழலில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.
கடந்த ஜனவரி 6 ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரையில் படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், ! பேசுபொருளாகிவிட்டது.
மாநாட்டுக்கான பணிகள் தீவிரமடைந்ததும் தமது பெ நச்சுவாயுவை பரப்பியவர்கள் - அந்த வாயுவிலேயே மூச்சுத்தின் பதில்.
இலங்கை அரசு மாநாட்டு ஏற்பாட்டாளர்களை தனக்குச் அரசை பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே அமைதியாக கற்பித்திருக்கிறது.
அவர்கள் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. மாநா ஈடேறியிருக்கிறது. வரலாறு கற்றுத்தரும் பாடல்களிலிருந்து எதிர்வினையாற்றியவர்களும் மாநாட்டிற்காக தமது ஆதரை பலபாடல்களை கற்றுக்கொண்டிருப்பார்கள் என்றே நம்புகின்றே ஒரு பொதுப்பணியில் - சமுதாயநலன்குறித்து இயங்குட இம்மாநாடு பெற்றுத்தந்துள்ளது.
இம்மாநாடு கனதியாகவும் தரமாகவும் அமைய வேண்டு மாலை மரியாதைகளோ-பொன்னாடை போர்த்தல்களோ இட ஏனைய மாநாடுகளுக்கு முன்மாதிரியாகிவிட்டது.
பங்கேற்ற பேராளர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மாநா இரவுபகல் ஊண் உறக்கம்பாராது மாநாட்டின் நோக்கங்கள்ை இளம்தலைமுறையினர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன் மாநாட்டின் ஆய்வரங்குகள் வடிவமைக்கப்பட்டமுறையிலி முன்னுதாரணமாகயிருக்கிறது என்பதுதான் பரவலான அபி மனதிலிருத்தி-இனிவரும் காலங்களில் நடைபெறப்போகும்ம ஏற்பாட்டாளர்கள் கற்றுக்கொண்ட பாடமாகும்.
அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள தலைமுறையினரின் சந்திப்பும் ஒன்றுகூடலும் அனுபவப்பகிர் வித்திட்டிருப்பதாகவே கருதுகின்றோம்.
இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் செறிந்து வாழும் பிர தமிழைப்பேசி-தமிழைவாழவைத்துக்கொண்டிருக்கும் முஸ்லி எழுத்தாளர்களும் கணிசமாகக் கலந்து கொண்ட வரலாற்று மு அமைந்திருந்தது.
இனிவரும் காலங்களில் மத நல்லிணக்கத்திற்கும் இனவுற நல்கும் என்ற நம்பிக்கையும் தோன்றியுள்ளது.
எதிர்காலத்தில் இம்மாநாடு- இலங்கையின் ஏனைய நம்பிக்கையையும்- பேராளர்களும் வெளிநாட்டுபிரதிநிதிகளும்
2
 

தின் பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் விப்பெருக்கும் மேவுமாயின், தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார். ழத்தாளர் மாநாடு லுவான செய்தி
ன் எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும் பின்வாங்காமல் - களில் ஈடுபடும் தீவிரத்துடனும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்திருக்கிறது-இலங்கையில்
நடைபெற்ற இம்மாநாடு இலங்கையின் நாலாதிக்கிலுமிருக்கும் கலைஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அண்மைக்கால
ாறாமை பொச்சரிப்புகளை எதிர்வினைகளாக்கி அதனூடாக னறினார்கள் என்பதுதான் மாநாடு அவர்களுக்கு வழங்கியுள்ள
சாதமாக பயன்படுத்தும் அல்லது - மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அவதூறுகளை பொழிந்தவர்களுக்கு-மாநாடு தக்க பாடத்தை
ட்டில் நம்பிக்கைவைத்து செயலாற்றியவர்களின் எண்ணம் து சமுதாயம் முன்னேறும். எனவே இம்மாநாடு தொடர்பாக வ பலவழிகளிலும் வழங்கியவர்களும் இம்மாநாட்டின் ஊடாக Th.
|வர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற அனுபவத்தையும்
ம் என்பதற்காக - தனிமனித புகழாரம் சூட்டும் சடங்குகளோம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தி. இச்செய்தி
ட்டுக்கு நிதிப்பங்களிப்புச்செய்த அன்பர்கள், ஸ்தாபனத்தினர்நிறைவேற்ற கடினமாக உழைத்த சகோதரர்கள், சகோதரிகள், றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம்.
நந்தே அதன் கனதிபேணப்படும் என்பதற்கும் சர்வதேச மாநாடு ப்பிராயமாகியது. அத்துடன் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை நாடுகளில் முடிந்தவரையில் தவறுகளை தவிர்ப்பதும் மாநாட்டு
முயல்தல் என்ற நோக்கத்துடன் இயங்கிய இம்மாநாட்டில் வும் விருந்தாடலும்- சகோதர வாஞ்சைக்கு ஆரோக்கியமாக
தசங்களில் இருந்தும் மலையகத்திலிருந்தும் நாலாதிக்கிலும் மக்களிடையே கலை,இலக்கியதமிழ் ஊழியம் செய்யும் முஸ்லிம் க்கியத்துவமான மாநாடாகவும்-இந்த சர்வதேச ஒன்றுகூடல்
புகளுக்கும் இத்தகைய ஒன்றுகூடல்கள் சிறப்பான பங்களிப்பை
பாகங்களிலும்- உலக நாடுகளிலும் நடைபெறும் என்ற தெரிவித்து உற்சாகமூட்டியுள்ளனர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 5
மாநாடு தொடர்பாக தமிழகத்தில் எதிர்ப்பலைகளும்இந்தியாவிலிருந்து வருகைதந்து மாநாட்டு நிகழ்ச்சிகளில் க நிலையையும் ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சியையும் தமது சிந்
கனடா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிர பிரதிநிதிகள்- மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன்- த ஆக்கபூர்வமாக வலியுறுத்திவரும் கொடகே நிறுவன அதிபை மாணவர்களையும் சந்தித்துகலந்துரையாடியுள்ளனர்.
முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டுமு கலைப்பீட மாணவர்களின் கலை, இலக்கியம் சார்ந்த ஒன் தலைமுறையினரையும் இம்மாநாடு உள்வாங்கியவாறே இயங்கி
இளம்தலைமுறையினரே எதிர்காலத்தின் சிற்பிகள். மூத்த மாநாடாக முதலாவது மாநாடு நடைபெற்றது போன்று- இனி முன்னெடுக்கப்படும்.
தமிழ்சர்வதேச மொழியாகிவிட்டது. படைப்பிலக்கியவாதிக மேலும் மேலும் வளம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை துளிர்விட்ட வலுவான செய்தியாகும்.
O O O ( சர்வதேச தமிழ் எழுத்
O பேராளர்
மேற்படி மாநாட்டில் பேராளர்களாகத் தம்மைப் பதிவு ெ ரூபா 25: க்கான தபால் முத்திரை அனுப்பிசர்வதேச தமிழ் எழு
சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். அனுப்பவேண்டிய விப அனுப்பவேண்டிய முகவரி: செயலாளர், சர்வதேச தமிழ் எழு ܢܠ
2011 gegoor *ஞானம் ? புதிய உள்நாடு தனிப்பிரதி : eti5 L IIIr 85/= ஆண்டுச் சந்தா : еш5шш 10OO/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/- ஆயுள் சந்தா : BLIT 20000/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகே அனுப்பலாம். மணியோடர் வென்ன7வத்தை தபால் நிலையத் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாக மேலதிகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழி உங்கள்பகுதியில்உள்ள ஹட்டன் நஷனல்வங்கியில் Gnanasekaran, Hatton National. Bank - Wellawa நடைமுறைக்கணக்கு இலக்கம்-009010344631என்ற கணக் வைப்பு செய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
6262/672/76 ஓராண்டு Australia (AUS) 40 Europe (e) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada ($) 40 UK (£) 25 Other (US $) 35
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 
 

எதிர்வினைகளும் தோன்றிய போதிலும்- சுமார் 52 பேர் பந்து கொண்டனர். அவர்கள் எமது தாயகத்தின் யதார்த்த தனையில் உள்வாங்கியவாறே விடைபெற்றுச் சென்றனர்.
ான்ஸ், ஜெர்மனி முதலான நாடுகளிலிருந்தும் வருகைதந்த ழ்- சிங்கள-முஸ்லிம் இன ஒற்றுமையை தொடர்ச்சியாக ாயும்- பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட முதுகலைமாணி
ற்பகுதியில்-இந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை றுகூடலை நடத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இளந் பிருக்கிறது.
தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் ஒன்றிணைந்த வரும் காலங்களிலும் இந்த அந்நியோன்யம் புரிந்துணர்வுடன்
ளும், விமர்சகர்களும்,பேராசிரியர்களும் இச் சர்வதேசமொழிக்கு மாநாடு, தொடரும் என்பதே-முதலாவது மாநாடுஉணர்த்தும்
நாளர் மாநாடு - 2011 )
சான்றிதழ்
lசய்தவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு தபாற்செலவாக த்தாளர் மாநாடு-201ல்பேராளராகப்பங்குபற்றியமைக்கான ரங்கள் 1பெயர் (தமிழில்)2.முகவரி (ஆங்கிலத்தில்).
த்தாளர் ஒன்றியம், 3-8, 46ஆவது ஒழுங்கை,கொழும்பு- o6.
oń முதல் ப சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப ! Swift Code: HBLILKLX அனுப்ப வேண்டிய பெயர் முகவரி :
T. Gnanasekaran Gnanam Branch Office
6) IIT 3-B, 46th Lane, Wellawatte. தில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : euur 10000/ T. முன் உள் அட்டை : ரூபா 8000/- te பின் உள் அட்டை : ரூபுர 8000/- கில் உள் முழுப்பக்கம் : egLIT 5000/
உள் அரைப்பக்கம் : ரூபா 3000/-
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 80 950 1400 120 170 80 110 50 70 70 100
ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்

Page 6
இலக்கியத்திலும் ஒவியத்திலும் கலைஞர்தா.பி. சுப்பி
திருகோணமலையில் 22.11.1937இல் பிறந்து திருகோணமலைப்பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் தாமோதிரம்பிள்ளை பிரான்சிஸ் சுப்பிரமணியம் இலக்கியத்துறையிலும் ஒவியத்துறையிலும்ஈடுபாடுஉடையவர். இவர் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர் எனக் கல்வித்துறையில் பணியாற்றிஒய்வுநிலையிலுள்ளார்.
2006 ஆம் ஆண்டு திருமலை செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலயத்தில் கணிதபாட ஆசிரியராகக் கடமையாற்றிவரும்திருதா.கேதீஸ்வரன் அவர்கள்மூலம்தாபி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
“கலாபூஷணம்"வீணைவேந்தன்'த. சித்திஅமரசிங்கம் (அமரர்) இவரைப்பற்றிய அறிமுகத்தகவல் 2001 இல் தந்த போதிலும் 2006 இல் நேரடியாக இவரது இல்லத்தில் சந்தித்து உரையாடசந்தர்ப்பம் அமைந்தது.
ஆடம்பரமின்றிஅமைதியாக ஆனால், நகைச்சுவைததும்ப கதைத்து உறவாடும் இவரது பாங்கு ஒரு தனிரகம்.1954ஆம் ஆண்டு சுதந்திரன்’ பத்திரிகையில் நேர்த்திக்கடன்' என்ற தலைப்பில் இவரது முதல் ஆக்கம் பிரசுரமாகியது. அதே ஆண்டில் ஈழகேசரியிலும் இவ்வாக்கம் பிரசுரம் ஆகியது. அதனைத் தொடர்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் எழுதிவருகின்றார்.
சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை என்பன எழுதிவருவதுடன் ஒவியம் வரைவதிலும் ஈடுபாடு காட்டுகின்றார்.
இவருடைய தந்தையார் தாமோதிரம்பிள்ளை, தாயார் பரஞ்சோதி, மனைவி F.S. அஞ்சலின், பிள்ளைகள் F.S. திருமரூபன்(BSc) நிலஅளவையாளர், யூடி ரூபவதனிஅமல்ராஜ் (B. Com) விரிவாக்கல் திட்த்தியோகத்தர், F.S. கிரூபகரன் (தொழில்நுட்ப உதவி அதிகாரி) ஆகியோராவர். இவருடைய மனைவியும் பாடசாலை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் எழுத்துலகில் தாபி சுப்பிரமணியம், சு. பிதா, புத்தமுருகன் ஆகிய பெயர்களில் எழுதிவருகின்றார். இவர் தனது கல்வியை தி புனித சூசையப்பர் கல்லூரி, யாழ்! கொழும்புத்துறை ஆசிரியர் கல்லூரி, மட்/ ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் பெற்றுள்ளார். இவரது இலக்கியத்துறை ஈடுபாட்டிற்குக்காரணகர்த்தாக்களாக இருந்தவரென ஆரையூர் அமரன்,சித்திஅமரசிங்கம்,ஆகியோரைக்குறிப்பிடுகின்றார்.
தாபி சுபிரமணியம் அவர்களின் நூலுருப்பெற்ற ஆவணங்களாகப்பதிவாகியுள்ளவை 1விபாமுயற்சி(சிறுவர்கதைத் தொகுப்பு-1959) 2.சந்தனக்குச்சு (சிறுகதைத்தொகுதி-1960) 3.இதயங்கள் அழுகின்றன.(நாவல்-1977)
வீரகேசரி வெளியீடு:61 4ஒற்றைப்பனை(சிறுகதைத்தொகுதி)
4.

இக்ைகிணைப்பதித்த fuzzfuti)
- 68F. gay
5.நடையிலே நாமூன்று நாட்கள் (குறுநாவல் 2000)
பிரான்ஸ் தமிழ் ஒலி மன்றம் நாடாத்திய அனைத்துலக வானொலி நாடக எழுத்துப்பேழைப் போட்டியில் 1998 ஆம் ஆண்டு முதல் பரிசாக ஐம்பதினாயிரம் (50.000l) ரூபா பெற்றக்கொண்டார். 22111998ஞாயிறுதினக்குரலில் இவரது பரிசு விபரம்புகைப்படத்துடன் பிரசுரமாகியது.
சிங்களநாளேடான'சிலுமினபத்திரிகையில்29.06.2003 இல் இவரது இலக்கிய சேவை பற்றிய கட்டுரையை புகைப்படத்துடன் திரு. கமல்பேரேரா என்பவர் எழுதிப்பிரசுரம் செய்து பாராட்டிக் கெளரவித்தார். இவர் இதுவரை பெற்ற கெளரவங்கள்/விருதுகளாக குறிப்பிடத்தக்கவைபின்வருமாறு 1. மூத்த கலைஞர் விருது (2000) 2. ஆளுனர் விருது (வடக்குகிழக்கு மாகாணம் 2001) 3. கலாபூஷணம் (2002)
அகில இலங்கை எழுத்தாளர் சங்க உறுப்புரிமை, ஒவியக் கலைஞர் ஒன்றிய உறுப்புரிமை,திருகோணமலைநகராட்சிமன்ற உறுப்புரிமை பெற்றவராக விளங்குகிறார். அத்துடன் திருகோணமலை கலை இலக்கிய ஒன்றியம் (2003) இலும், திருகோணமலை பிரதேச சாகித்திய விழா (2006) இலும், திருகோணமலைமாவட்டநூலக அபிவிருத்திச்சங்கம்நபாத்திய தேசிய வாசிப்புத் தினம் (2008) இலும் கெளரவிக்கப்பட்டு சான்றிதல்களும்பெற்றுக்கொண்டார்.
காலி மாவட்டம் - லபுதுவ பூரீ தம்ம தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற ஐந்துநாள் தேசிய கடேற்பாசறை2001 இல் திருகோணமலை மாவட்ட கடேற்குழு அகில இலங்கையிலே சிறந்ததாகத் தெரிவுசெய்யப்பட்டது. இலங்கை புனித ஜோன்ஸ் அம்புலன்ஸ் சங்கமும் படையும் நடாத்திய இத்தேசியகடேற்பாசறையில்நாட்டின்காலிகொழும்புகண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலை, கம்பஹா,குருனாகல், பதுளை ஆகியமாவட்டங்களைச் சேர்ந்த 450 இற்கு அதிகமான கடேற்களும் நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளும்பங்குபற்றினர். 0108:2001-05.08.2001வரை இப்பாசறைநடைபெற்றது.திருகோணமலைமாவட்டகடேற்குழு நான்கு வெற்றிக்கேடயங்களைச்சுவீகரித்தது.தேசிய பிரிவில் சிறந்தபடைப்பாளிக்கான பாடலைதா.பி.சுப்பிரமணியம்இயற்றி பாராட்டையும்பரிசையும்பெற்றுக்கொண்டார்.
திருகோணமலைபுனிதவளனார்வித்தியாலய(அதிபர்-தரம் 1)தாயிசுப்பிரமணியம்37வருடஆசிரியசேவையைப்பூர்த்திசெய்து தமது 60 ஆவது வயதில் ஒய்வுபெற்றார். 15 வருடங்கள் உதவி ஆசிரியராகவும் 22 வருடங்கள் அதிபராகவும் பணிபுரிந்தார். திருமலையின்நகரசபைஉபதலைவராகவும்,திருகோணமலைபல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், இலங்கை தமிழ ஆசிரியர் சங்கத்தில் உபதலைவராகவும்கிழக்குமாகாணக்கொத்தணிப்பாடசாலைகளின்
ബ്രrങ്ങb - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 7
Uதட்டமில்லாமல், அவசரப்படாமல் நிதானமாய் நடக்க முடிந்தது. தயாளினிபஸ்ஸில் இருந்து இறங்கி, வர்ண உடை 'ஷோகேஸ் பொம்மைகளை நோட்டமிட்டவாறு சென்று கொண்டிருந்தாள். மனம் உல்லசமாய் சினிமாப்பாடலொன்றை நெருடிக் கொண்டிருந்தது.
லிப்ட்டில் ஏறி, வெளியே காலெடுத்து வைக்கும் முன் இரைச்சல் காதை அடைத்தது. முதலில் சிரிப்பும், பிறகு பயமும் வந்தது. மற்ற ஃப்ளட்ஸ்காரர் கெம்பிளைன்ட் பண்ணினமோ தெரியேல்ல. அழைப்பு மணியில் கை வைக்கும் முன் கதவு திறந்தது. உடனே கெம்பிளைன்ட்
‘மாமி ஆதிபூச்சாடியை உடைச்சிட்டான்."இது அருணா உண்மைல ஆதியா உடைச்சது? மனதில் சந்தேகம். மகனைத் தேடினாள். சுழல் நாற்காலியின் பின்னால் மறைந்து கண்ணில் கலவரமும், உதட்டில் வெடிக்கத் துடிக்கும் அழுகையுமாய் நிற்கும் மகன் ஆதித்யா தெரிந்தான். அம்மாவின் கோபம் அவனுக்குத் தெரியும். எதற்கெடுத்தாலும் பயப்படும் மகனைக் கண்டதும் கோபம் சட்டென்று வடிந்து பரிதாபமும், பாசமும் பிரவாகிக்க, ག
“ஆதீதீ.நீங்களா 'பொட்டை உடைச்சது?” குரல் கொஞ்சலாக வெளிப்பட்டது. ஆதித்யா ஒடி வந்து தாயின் காலைக் கட்டிக்கொண்டான்.
"அம்மா ஆ. போல் ஐ பேட் டால் அடிச்சன். உடைஞ்சிட்டுது”
குரலில் இன்னமும் மழலை போகவில்லை. மகனைத் தூக்கிக் கொண்டு பல்கனிக்குப் போனாள்.சாடி உடைந்து மண் வெளியேறி மொட்டும், பூவுமாய் விழுந்து கிடக்கும் ரோஜாச் செடியைக் கண்டதும் இவ்வளவு நேரமும் இருந்த உற்சாகம் காணாமற் போயிற்று
“மச்சாள். போய்ச்சாப்பிடுங்கோ'ஆனந்திவந்தாள். “ஆதி சாப்பிட்டானா?” “ஒ. ஓ, அம்மா ப்ரோன் கறி நல்ல டேஸ்ட்” ஆனந்தி, ஆதித்யாவைத்தூக்கிக்கொண்டுடீவியின் முன்அமர்ந்தாள் செட்டியில்கால்களைத்தூக்கிவைத்துக்கொண்டுகார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனந்தியின் பிள்ளைகள் அருணும், அரவிந்த்தும் தயாளினிக்கு எரிச்சலாக இருந்தது. ஆனந்தி இவற்றைக் கவனிப்பதேயில்லை.
“அருண்.நல்ல பிள்ளை காலைக் கீழவிடுங்கோ' “காலைக் கீழ விடு அருண் . உன்னைப் பார்த்து அரவிந்த்தும் பழகிறான். மச்சாள் நான் இவன்களுக்குச் சொல்லிச்சொல்லிக்களைச்சுப் போட்டன்.” பழையபடி ஆனந்தி டி.வி யில் மூழ்கினாள். எப்பிடி பிள்ளைகளுக்குப் போட்டியா இவளுக்கு கார்ட்டூன் பார்க்க முடியுது? தயாளினிக்குச் சிரிப்பு வந்தது. தயாளினியின் கணவன் கேசவனின் அம்மாவும், ஆனந்தியின் அம்மாவும் சகோதரிகள். ஆனந்திகேசவனுக்கு இரண்டு வயது மூத்தவள். ஆனந்தியின் கணவன் கனடாவில் இருக்கிறான். கணவன் சென்று ஏழுவருடங்களின் பின், கனடா செல்வதற்காக எட்டு வயதிலும், ஆறு வயதிலும் இருந்த இரு பிள்ளைகளுடன் இங்கு வந்திருக்கிறாள். மூன்றுமாதங்களில் போய்விடுவதாய் வந்தவள், எட்டு மாதமாகியும் போகவில்லை.
அவள் இருப்பதில் பிரச்சனை ஒன்று மில்லைத் தயாளினிக்கு. பிள்ளைகள் தான். சாப்பிட்டு விட்டுப் படுத்தாள் தயாளினி. முன்பு என்றால் இப்படித் தலை சாய்ப்பதற்கு நேரம் கிடையாது.
இப்பொழுதும் காலையில் எழுந்து மதியச் சாப்பாடு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

oooOoOOOO
U20്(മമ്
தயாளினியே செய்துவிடுவாள்.ஆனந்திதான் சமைப்பதாய்க் கூறிய போதும், கேசவனுக்கு மதியச் சாப்பாடு காலையில் கொடுத்துவிடவேண்டியிருந்தது.
'ஹோல்லில் டீவி பார்த்து முடிந்து விளையாட்டுத் தொடங்கியிருந்தது.
“டேய் அருண் அண்ணா. என்னைத்தூக்கு” டேய், வாடா போடா என்று ஆதித்யா கதைக்கப் பழகியிருப்பதுவேறுதயாளினியைக் கலவரப்படுத்தியது.
6.
அப்பா ஆஆ.
ஆதித்யா அழைப்பதும், மற்றவர்கள் ஆர்ப்பளிப்பதும் கேட்டுத்
தூக்கம் கலைந்தது. கேசவன் வந்துவிட்டான்.
"மாமா!நான் சொன்னசிடிவாங்கிவந்தனிங்களா?” “ஒ.இது டிவிடி இதில் நாலு படம் இருக்கு” "மாமா இண்டைக்கு ஆதி பூச்சாடியை உடைச்சுப் போட்டான்.”
“சும்மா இரடாகோள்மூட்டி" ‘மாமி எங்க?" "நித்திரை” “கேசவா. நீ உடுப்பை மாத்து. நான் தேத்தண்ணி கொண்டுவாறன்’
அப். ப். பாடி ஊத்துற வேலை மிச்சம். தயாளினி சுவர்
பக்கமாய்த்திரும்பிப்படுத்தாள். இரவுச் சமையல் வழமைபோல் ஆனந்தியின் பொறுப்பு.
ஆனந்தி சமைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவுவதாக தயாளினி அங்கே நின்றுகொண்டிருந்தாள். “மச்சாள்!றால் பொரியல்பான்ட்ரிகபேர்ட்டிலவச்சிருக்கன். மறக்காமல் கேசவாக்கு குடுங்கோ. இவன்கள் கண்டால் விட மாட்டான்கள். க்ளிங் என்ன சத்தம்? தயாளினியும், ஆனந்தியும் ஹோல் க்கு விரைந்தனர். பந்துபட்டுக் கண்ணாடியன்னலில் விரிசல் ஆனந்திதிகைத்துப்போய்தயாளினியையும்,பிள்ளைகளையும் மாறிமாறிப்பார்த்தாள். “டேய்!உங்களையெல்லாவீட்டுக்கபந்துவிளையாடக்கூடாது என்டு சொன்னான்.” பிள்ளைகளின் முதுகில்
வைத்தாள். நிச்சயம் சிறுகதை
5

Page 8
வலித்திருக்காது. கேசவன்தயாளினியின் பக்கமே திரும்பாமல் மற்றப் பக்கம் பார்த்துக் கொண்டு நின்றான். "ஆனந்தி . ஏன் அடிக்கிறாய்?. பிள்ளைகளென்டா அப்பிடித் தான பிள்ளைகளாம் பிள்ளைகள். சரியான குரங்குகள். தாயும், பிள்ளைகளும் சரியான பட்டிக்காடுகள். குமுறிக் கொண்டு வந்தது தயாளினிக்கு. அவ நோகாம சாட்டுக்கு அடிக்கிறா இவர் பரிஞ்சு கொண்டு வாறார்.
தயாளினி காத்துக் கொண்டிருந்தாள். எத்தினையை உடைச்சிட்டான்கள். க்ளாஸ், பாத்ரூம் டப், பிளேட்ஸ், வாஸ், யன்னல் கண்ணாடி.
வெளியே'ஹோல்'லில் ஒரு ஆரவாரம். கேசவன் எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். ஆனந்தி பாவமாம். கணவனைப் பிரிந்து எழு வருசமாம். ஆனந்தி வந்து இறங்கியதும்ஸ்கைப்வகையறாக்கள் செய்துகொடுத்ததில், இரவு ஒரு மணிவரை விழித்திருந்து ஆனந்தியும், பிள்ளைகளும் கதைப்பார்கள். கேசவா அத்தான்
و هم
கூப்பிடுறார். வந்து கதை 6ї біт д)
راست .
இடைக்கிடைகேசவனையும் . அழைப்பதில் அவனுக்கும் சிவராத்திரிதான்.கதைத்து முடிந்து கேசவன் வந்தான்.
“ எ ன் ன வ T ம் t அத்தான்?”
“வழக்கம் போல தான் . எல்லா உதவிக்கும் தாங்க் பண்ணுறார்”
“எப்பவாம் வைஃப், பிள்ளைகளக் கூப்பிடப் போறார்?” மூன்டு மாதத்தில் போறம் என்டு வந்து, இப்ப எட்டு மாசமாச்சு”
“விசா எந்த நேரமும் வரலாம்”
“அதுக் கிடையில் இவன்கள் வீட்டையே புரட்டீடுவாங்கள்”
“த யாளி னி , , , , பெரியம்மா என்னை வளர்த்தவ. ஆனந்திக்கு நான் என்றால் உயிர்”
உண்மை தான் பிறந்து ஒரு வருடத்தில் தாயை இழந்தவன் கேசவன். அருகில் வசித்ததாயின் மூத்த சகோதரி ஆனந்தியின் அம்மா - கேசவனின் அப்பா வேலைக்குச் சென்று விடும் நேரங்களில், அவர் இல்லாத போது கேசவனையும், அவனின் மூத்த இரு சகோதரர்களையும் பார்த்துக் கொண்டாள். கஷ்ட ஜீவனத்திலும் தன்னால் இயன்றதை, இயன்றபோது செய்துகொடுத்தாள்.
“ஆனந்திக்காகத் தான் நான் பேசாமலிருக்கிறன். ரெண்டுகுட்டிச்சாத்தான்களும்”
“தயாளினி. அப்படிச் சொல்லாதேயும். அதிலும் நீர் ஒரு டீச்சர்பிள்ளைகளைப் பார்த்து அப்பிடிச்சொல்லக் கூடாது"
குரலில் கடுமை தெறிக்கக் கேசவன் சொன்னதும் தயாளினிக்குக் கோபம் வந்தது. தன் தொழிலை இழுத்தது பிடிக்கவில்லை. சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்துவிட்டாள்.
6
 

“தயாளினிகோபமா?” "இல்ல சந்தோசம்” “உமக்குத் தெரியுமா? சின்ன வயசில ஊர்ப்பள்ளிக் கூடத்தில் படிக்கேக்க வகுப்பில ஒருத்தன் எனக்கு அடிச்சுப் போட்டான். நான் அடுத்தநாள் பள்ளிக் கூடம் போகமாட்டன் என்டு அழுதன் நீகாட்டு அவனை என்டு ஆனந்திகேட்டாள். பூவரசம்தடியாலடிச்சர்வரமுதல் வகுப்பில அவனுக்கு அடிச்சுப் போட்டாள்? அண்டைக்கு முழுக்க அவளைப் பிரின்சிபல் ஒபிசில நிக்க வைச்சார்”
“இந்தக் கதையை எத்தினை தரம் சொல்லிட்டீங்க? ஆதி இவன்களைப் பார்த்துவாடா, போடா என்றுகதைக்கிறான்.” “அதவிடும். ஆதியைப் பாரும் எவ்வளவு சந்தோசமா இருக்கிறான்”
தயாளினி சமாதானமானாள். காலை ஆறரைக்கே பாடசாலைக்குப்புறப்பட்டு விடுவாள். தயாளினி முதல் நாளிரவே ஆதித்யாவை டே கெயார் இல் )விடுவதற்குத் தேவையான உடைகள் அனைத்தையும் அயர்ன் செய்து வைத்து விடுவாள். அதிகாலை நாலுமணிக்கு எழுந்து மதிய உணவைத் தயார் செய்து பெட்டியில் அடைத்து விடுவாள்.
அவன் சென்றதும், கேசவன் & மகனைக் குளிப்பாட்டி WS உணவூட்டி மதியச் சாப்பாடு, ட்ரிங்க் போத்தல், உடைகள் * சகிதம் வரமறுத்து அழும் ஆதித்யாவை டே கெயார் ரில் எட்டு மணிக்குச் சேர்த்து விட்டு வேலைக்குச் செல்வான். - தயாளினி வேலை முடிந்து `வர இரண்டரை ஆகிவிடும். வரும் போது
மகனையும் அழைத்துவருவாள்.
இயல்பாகவே ஆதித்யா நோஞ்சான். அவனுக்கு உணவூட்டுவதென்பது பகீரதப் பிரயத்தனம். மெலிந்து கொண்டே செல்லும் മൃ(" அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் ༄ ༦ ༥ རྒྱལ་ மனதில் கலவரம் எழும். கொடுத்து விடும் உணவை அவனுக்கு முழுவதும் ஊட்டி விடுகிறார்களா? அல்லது வேண்டாம் என்றதும் விட்டு விடுகிறார்களா?
இப்பொழுதுநிலைமை மாறிவிட்டது. “மச்சாள் நான் வீட்டில தான இருக்கிறன் நான் பிள்ளையப் பார்த்துக்கொள்ளுறன் ஆதித்யா இப்பொழுது நேர்சரிக்குச் செல்கிறான். ஆனந்தி தான் அழைத்துச் செல்கிறாள். தயாளினி டென்ஷன்' இல்லாமல் வேலைக்குக் சென்று வருகிறாள்.
ஒரே தட்டில் உணவை வைத்துக் கொண்டு, ஆனந்தி மாறி மாறி மூவருக்கும் ஊட்டுவது தயாளினிக்குப் பிடிக்கவில்லைத் தான். ஆனால் ஆதித்யா, அருண், அரவிந்துடன் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவதைக் கண்டதும் பேசாமலிருந்து விட்டாள். முன்பில்லாதவாறு ஆதித்யாவின் முகத்தில் எந்நேரமும் தெரியும் சிரிப்பிலும், கன்னச் செழுமையிலும், சிகப்பிலும் பல குறைகள்
د. "أمير
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 9
தயாளினியின் பார்வையில் மறைந்து போயின. ஆனந்தி தன்னை விடத் தன் பிள்ளையை மேலாகப் பார்ப்பாள் என்று நம்பிக்கை வந்தது. பிள்ளையை மட்டுமா? “டேய் கேசவா என்ன கொறிக்கிறாய்? வடிவாய்பொரியலைப் போட்டுச் சாப்பிடு” "நீயும் என்னோட இருந்து சாப்பிடு”
ஆனந்தியின் முன் தன் கணவன் குழந்தையாய் மாறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள் தயாளினி. அது மட்டுமா? மச்சாள் என்று இவ்வளவு பாசத்தோடு முறை சொல்லி அழைக்க இவளுக்கும் யாருமில்லை.
தயாளினி தான் அதை உடைக்கிறார்கள், இதை உடைக்கிறார்கள் என்று கணக்குப்பார்க்கிறாள். ஆனந்திக்கு இவை ஏதும் தெரியாது. எப்பொழுது வெளியே சென்றாலும், வரும் போது வீட்டிற்கு ஏதாவது வாங்காமல் வர மாட்டாள். தயாளினி சமைத்து வைத்து விட்டுப் போனாலும் மீன், இறைச்சி என்று ஏதாவது வாங்கிச் சமைத்து வைப்பாள். அதிகாலையில் வேலைக்குச் செல்லும் தயாளினிக்கு இவை சாத்தியப்படுவதில்லை.இவ்வளவும் ஏன் ஆதித்யாவின் பிறந்த நாளைக் கூடச் சண்டையிட்டுத் தன் செலவில் ஆனந்தி செய்திருக்கிறாள்.
அன்று தயாளினி வீட்டிற்கு வந்ததும், வழமைக்கு மாறாக ஆனந்திகதவைத் திறந்தாள்முகத்தில் பூரிப்பு
“மச்சாள் விசா வந்திட்டுது. ‘மாமி! நாங்கள் போய் ஆதியையும் கூப்பிடுவம் பாவம் அவனுக்கு விளையாட யாருமில்ல'
புறப்படும் நாள் வந்து விட்டது. காலை மூன்றுமணிக்கு எயார்போர்ட்போகவேண்டும் எட்டுமணிக்கு ஃபிளைட் இரவு தண்ணீர் குடிக்கத் தயாளினி எழுந்து வந்தாள். வெளியே லைட்'எரிந்துகொண்டிருந்தது.ஆனந்திபல்கனியில் நிற்பது தெரிந்தது. “ஆனந்தி அக்கா இன்னும் நித்திரை கொள்ளேல்லையா? நேரத்தோடபடுத்தாத்தானே வேளைக்கு எழும்பலாம்” அருகே வந்ததும் தான் கவனித்தாள், ஆனந்தியின் கண்களில் ஈரத்தின் பளபளப்பை “என்ன அழுகிறிங்களா?”
இல்ல மச்சாள், சந்தோசமாகவும் இருக்கு தனியப் பிள்ளைகளோட போறதை நினைக்கப்பயமாயுமிருக்கு.
“இவர் போகேக்கை அரவிந்த் வயித்தில. அவனுக்கு அப்பாவைத்தெரியாது நான் தனியப் பிள்ளைகளோட சண்டைக்க எவ்வளவு கஷ்டப்பட்டன். ஏ. ஏழு வருசம், இவ்வளவுநாள் பிரிஞ்சிருப்பம் என்று நினைக்கேல்ல.”
“நீங்கள் இல்லாட்டா நான் கொழும்பில கஷ்டப்பட்டிருப்பன். நானோ,பிள்ளைகளோ தெரியாமஏதாவது பிழைவிட்டிருந்தாமனசில வைச்சிருக்காதேங்கோ”
“ச்சீய். ச்.ச் அப்பிடி ஒன்டுமில்ல”
நூல் மதிப்பு > ஒருவருடத்திற்குள் வெளிவந்த நூல்
ஏற்றுக்கொள்ளப்படும். நூல் மதிப்புரைக்கு இரண்டு பிரதிகள் அனுப் > ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் நூல் மதிப் > சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறப்பு ம
>
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

“மச்சாள் கேசவாக்கு கல்யாணம் நிச்சயமாய்ட்டுது என்று கேள்விப்பட்டோடன யார் அந்த அதிஸ்டசாலி என்டு பார்க்க ஆசைப்பட்டன். ஒரு நாள் அவன் கோவப்பட்டு நான் பார்க்கேல்ல சின்ன வயசில எங்கட வீட்டில் தான் எப்பவும் இருப்பான். நான் எங்க போனாலும் என்னோட வருவான். மாட்டுக்கு புல்லுவெட்ட, கோயிலுக்கு.
அவள் அதுக்குப் பிறகு கதைக்கவில்லை. அழுகையை அடக்க முயற்சி ப்பது தெரிந்தது. அன்றிரவு தயாளினிக்கு நித்திரை வரவில்லை.
மறுநாள் காலை புறப்படும் போது,கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யா எழுந்து விடாமல் ஆனந்தியும், பிள்ளைகளும் முத்தமிட்டார்கள். ஆனந்தி தயாளினியை அணைத்துவிடைபெற்றபோது அழுதாள்.ஏனென்றுகாரணம் தெரியாமல்தயாளினியும் அழுதாள்கேசவன்'எயார்போர்ட்ற்கு அழைத்துச் சென்றான்.
நித்திரை விட்டெழுந்து ஆதித்யா வீடு முழுக்க உறவுகளைத்தேடினான்.அவர்கள் தங்கள் அப்பாவிடம்சென்று விட்டதாக தயாளினிசமாதானப்படுத்தினாள்.
கேசவன்'எயார் போர்ட்டிலிருந்து அப்படியே வேலைக்குச் செல்வதாகக் கூறியதால், அழும் ஆதித்யாவை தயாளினியே டேகெயார்க்கு அழைத்துச் சென்றாள். பாடசாலையில் மனம் ஒரு நிலையிலிருக்கவில்லை.
பாடசாலை விட்டதும், ஆதித்யாவிடம் விரைந்தாள். வாகன நெரிசல், மணி மூன்றாகிவிட்டது.
“யார் ஆனந்தி மாமி? ஆனந்தி மாமியிடம் போகப் போகிறேன் என்று ஒரே அழுகை. டெம்பரேச்சர் கொஞ்சமிருக்கு தன்னிச்சையாய் கைகள் ஆதித்யாவின் நெற்றியைத் தொட்டன காய்ச்சல் தான். முகத்திலிருந்த சிரிப்பும், செழுமையும் போய் சோர்வு குடிகொண்டிருந்தது.
வீடு வந்தாள். வீட்டில் தெரிந்த வெறுமையும், நிசப்தமும் வெறுப்பேற்றின. காலையில் சமைத்து விட்டு வைத்த பாத்திரங்கள் அப்படியே கிடந்தன. வீடு கூட்ட வேணும். உடுப்புத் தோய்க்க வேணும். இரவுச் சமையல்படுக்கும் வரை ஓய்வில்லை. மனம் சலித்துக் கொண்டது.
“வேலைக்குப் போக வேண்டாம். என்னோட இருங்கோ.இதை தயாளினி எதிர்பார்க்கவில்லை. காரணமின்றிக் கண்கள் கலங்கின.
“அம்மா வேலைக்கு போனாத்தானே பிள்ளைக்கு வடிவான டீசேர்ட், ஷூஸ் ஸ்கூல் பாக் எல்லாம் வாங்கலாம். பிள்ளையின்ரறுமுக்கு ஏஸி போடுவமா?. கார் வாங்கலாம் ராகவ் அண்ணா மாதிரிபிள்ளை நிறையப்படிக்கலாம்.
தயாளினி தனக்கும் சேர்த்து சமாதானம் கூறிக்கொண்டாள்.
ரை
oகளே நூல்மதிப்புரைக்கு
பப்படல் வேண்டும்.
புரை இடம்பெறாது.
லர்கள் நூல் மதிப்புரைக்கு - ஆசிரியர்

Page 10
= கல்விதி மனோன்மணிசண்முகதாஸ்
ஜப்பானியக் காதற்பாடல்கள் அறிமுகம்.
பிறமொழி இலக்கியங்கள் பற்றிய செய்திகளைத் தமிழர் அறிய வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். ஜப்பானிய மொழியும் தமிழ்மொழியும் ஒரு மொழிக் குடுப்பத்தைச் சேர்ந்தவை என்ற கோட்பாடு உலக அரங்கிலே பேராசிரியர் சுசுமுஒனோவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒலிநிலை, சொல்நிலை, பொருள்நிலை, பண்பாட்டுநிலை, இலக்கிய நிலை எனப் பல்வேறு நிலைகளில் ஜப்பானிய மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்து இம் முடிவை அவர் தெரிவித்துள்ளார்.இதுபற்றியபல கட்டுரைகளும் பல நூல்களும் எழுதியுள்ளார், அவரோடு ஏறக்குறைய 20 ஆண்டுகள் உடனிருந்து ஒப்பீட்டாய்வைச் செய்வதற்கு வாய்ப்புக்கிடைத்தமையால் ஜப்பானிய மொழிப்புலமைபெற்று ஜப்பானியக் காதற் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளிவரச் செய்யமுடிந்தது. இந்நூல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் ஜப்பானியக் காதற் பாடல்கள் என்ற தலைப்பில் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கூடும் இவ்வேளையில் பிற மொழி இலக்கியமொழி பெயர்ப்புகள் பற்றிச் சிந்திக்க முற்படுகையில் ஜப்பானிய இலக்கிய மொழி பெயர்ப்பு பற்றிய செய்திகள் சிலவற்றைக் கட்டுரை வடிவில் தருவது பயனுடைத்து. செவ்வியில் மொழியான தமிழ்மொழி இலக்கியக் காதற்பாடல்களையும் ஜப்பானிய மொழிக் காதற் பாடல்களையும் ஒப்பீட்டாய்வு செய்யும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. எனவே தமிழ்மொழிக்குப் புதியதொரு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு மேலும் வளர்ச்சியடைய இக்கட்டுரை வழிகாட்டும் என நம்புகிறோம்.
ஜப்பானிய மொழியின் பண்டைய இலக்கியத் தொகுப்பான மன்யோக வில் இரண்டு தொகுதிகளில் காதற்பாடல்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மன்யோசு (Manyoshu) என்பது பத்தாயிரம் இலைத் தொகுப்பு எனத் தமிழில் அமையும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் கி.பி. 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை 450 புலவர்களால் பாடப்பட்ட 4536 பாடல்கள் இத் தொகுப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் யாவும் வாய்மொழி மரபிலே பேணப்பட்டு வந்து பின்னர் சீனமொழியின் வரிவடிவத்திலே எழுத்துருப்பெற்றவை. எனினும் சீனமொழி
8
 

வரிவடிவ உச்சரிப்பு மட்டுமே பாடல்கள் படியாக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. சீனமொழி வரிவடிவ பொருள் பயன்படுத்தப்படவில்லை. பொருள் நிலையில் சிறப்பாக ஜப்பானியப்பொருள் பேணப்பட்டுள்ளது. எனவே மன்யோசுப் பாடல் எழுதப்பட்ட வரிவடிவத்திற்கு மன்யோகந எனச் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.
மன்யோசுப் பாடல்கள் 20 தொகுதிகாளாக இன்று நூல்வடிவில் உள்ளன. இவை பல்வேறு காலங்களில் பலரால் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பு முறைக்கென வரையறை எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. மன்யோசுப் பாடல்கள் அவற்றுக்குமுன்னர் தோன்றிய கொஜிகி, நிகொன் சொகி போன்றவற்றின் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இன்னும் இத்தொகுப்பு நூல்களிலே மாமன்னர்கள், இளவரசர்கள், இளவரசியர், நிர்வாகப் பணியாளர், புலவர் போன்ற பலருடைய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 539 பெயர் அறியப்படாத பாடல்களும் உள்ளன. பாடல்கள் பிற்காலத்தில் ஜப்பானிய மொழி வரிவடிவத்திலும்படியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உரைகளும் எழுதப்பட்டுள்ளன.
பாடல்கள் பெரும்பான்மையும் கூற்று நிலையில் அமைந்துள்ளன. சிறப்பாகக் காதற் பாடல்கள் வகுக்கப்படாமையால் பொருள் நிலையில் மயக்கந்தரும் நிலையும் காணப்படுகிறது.அகமாந்தர் உணர்வுகள் இயற்கைப் புலத்தில் இணைத்துப் பாடப்பட்டுள்ளன. மன்யோசுக் காதற் udiosfģi TANKA, CHOKA, SEDOKA T60r 3 பாவடிவங்கள் கையாளப்பட்டுள்ளன. ஜப்பானிய மொழிப் பாடல்கள் தொடக்க காலந்தொட்டே 5-7-5-7-7 என்னும் அசைகளைக் கொண்ட வடிவிலேயே அமைந்துள்ளன. குறும்பாடல், நெடும்பாடல் என்ற வேறுபாட்டை இந்த அசைகளின் அமைப்பே விளக்கி நிற்கிறது. பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாகப் பேணப் பட்டமையால் ஒரே சொற்றொடர் திரும்பத்திரும்பப் பயன்படுத்தும் முறைமையும் காணப்படுகிறது. மேலும் மரபு வழியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களும் பாடல்களிலே பயன்படுத்தப்பட்டுள்ளன. 96D6J MAKURA KOTOBA, KALEKOTOBA STGOT இருவகையாக உள்ளன. தற்கால ஜப்பானிய மொழியின் இலக்கண அமைப்பு மன்யோசு மொழி இலக்கண அமைப்பினின்றும் வேறுபட்டது. எனினும் பொருட் புலப்பாட்டிற் காகத்தற்கால மொழியமைப்புஉரையாசிரியரால் KAKARI MUSUBlஎன்ற பெயரால் இணைக்கப்பட்டுள்ளது.
இயற்கைப் புனைவு
மன்யோகப் பாடல்களில் இயற்கைப் புனைவு சிறப்புற இணைக்கப்பட்டுள்ளது. கால நிலையைக் குறிக்கின்ற சொற்கள் பாடல்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. தனிச் சொற்களாகவும் தொடர் நிலையாகவும் காலநிலை பற்றிய விளக்கம் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. வேனிற்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம், பனிக்காலம் என்ற நான்கு பருவகாலங்களும் பாடல்களிலே மிகவும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பருவங்களோடு தொடர்புற்ற மக்கள் வாழ்வியலும் நடைமுறைகளும் ஒழுங்குபடப் பாடல்களிலே சிறப்பாகப் பதிவு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 11
செய்யப்பட்டுள்ளன. பருவகாலங்களின் வரவு, கழிவு என்பன மக்கள் வாழ்வியலோடு தொடர்புற்றிருந்த நிலைகளும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. குறும்பாடல்களிலும் நெடும் பாடல்களிலும் வாய்மொழி மரபில் இயற்கைப் புனைவு சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.
பணி, புகார், மழை, உறைபனி, முகில், பனித்துளி, கதிரவன், காற்று, ஆறு, புல், இரவு, நிலா எனப் பல இயற்கை நிலைகள் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் நிலவு பற்றிய பாடற் செய்திகளே எடுத்துக்காட்டப்படவுள்ளன. விரிவஞ்சியே இவ்வரையறை மேற்கொள்ளப் படுகிறது. மன்யோசு தொகுதி பத்தில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களுள் நிலவு பற்றிய பாடல்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.13பாடல்களில் இயற்கைப்புனைவு உத்தியில் நிலாபற்றி செய்திகள் இணைந்திருக்கும் பாங்கு விரிவாக விளக்கப்படவுள்ளது. வேனில், கார் என்னும் இருகாலப் பகுதிகளைப் பற்றிய பாடல்தொகுப்புள் இப் பதின்மூன்று பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்கை நிலையில் இருபருவ நிலைகளில் நிலவு பற்றிய இயற்கைப் புனைவு நடைபெற்றுள்ளது.
வேனிற் கால நிலா:
வேனிற் கால நிலவு பற்றி 3 பாடல்கள் உள்ளன. குறும்பாடல் வடிவில் அமைந்த இப்பாடல்கள் மிக ஆழமான பொருளுடையவை.உலகில் இருசுடரெனக் கதிரவனும் நிலவும் போற்றப்படுகின்றன. இரு சுடரும் வழிபாட்டு நிலையிலும் சிறப்புப் பெற்றுள்ளன. கதிரவன் பகலில் ஒளி தருவது நிலவு இரவில் ஒளி தருவது எனினும் நிலவு மக்களின் அகவுணர்வுகளுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுவது தமிழலக்கியத்திலும் பல புலவர்கள் அகவுணர்வை நிலவுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுவது. தமிழலக்கியத்திலும் பல புலவர்கள் அகவுணர்வை நிலவுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். மன்யோசுவில் பின்வரும் பாடல் தலைவன் கூற்றாக அமைந்துள்ளது. மன்யோசுப் பாடல்களுக்கு ஜப்பானிய மொழியில் பொருள் இலக்கணம் வகுக்கப்பட வில்லை. அதனால் பாடல்களின் ஆழமான பொருளை வெளிக் கொணர்வதில் ஜப்பானிய உரையாசிரியர்கள் பெரிதும் இடர்ப்பட்டுள்ளனர். கட்டுரையாளர் தொல்காப்பிய அகப்பொருள் மரபுஜப்பானியக் காதற்பாடல்களை விளங்கிக் கொள்வதற்குப்பெரிதும் உதவும் என்ற கருத்தை மலேசியாவில் நடைபெற்ற ஆறாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிலே விளக்கிக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். ஜப்பானியக் காதற் பாடல்களைத் தமிழிலே மொழி பெயர்ப்புச் செய்தபோதும் தொல்காப்பியருடைய அகப்பொருள் மரபைப் பயன்படுத்தியுள்ளார்.அந்த வகையில் நிலவுபற்றிய அகப்பாடல் எவ்வாறமைந்துள்ளது என்பதை விரிவாக நோக்குவது பயனுடைத்து. வேனில் புகார் தவழ்கிறது இந்த மாலைநிலாவும் நான்கு ஒளிவீசிடும் தகமதுசாரலே if (LOGörGLITEK 1874)
வேனிற் காலத்தில் புகார் தவழ்கிறது. இந்த மாலை நேரத்திலே தகமது மலைச் சாரலில் நிலவும் நன்கு ஒளி விசி நிற்கும் பாடலில் காலமும் பொழுதும் வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பொழுதுவேனில்.சிறுபொழுது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

மாலை வினைகாரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். அவனிருக்குமிடத்தில் தோன்றும் நிலவைக் கீண்டு பிரிவுத்துயர் கொள்கிறான். எனினும் தன் உள்ளத்துக்கினிய தலைவி வாழும்தகமது மலைச் சாரலினும் இந்த நிலவு ஒளிவீசுமே என்பதையும் நினைந்து உள்ளம் வருந்துகிறான். இருவரும் இணைந்து நிலவிலே இன்பமாக உரையாடவாய்ப்பில்லையே என ஏங்குகிறான். மாலை வேளை காதலர்க்குப் பெருந்துன்பம் தருவது தலைவியின் நினைவு இயற்கை நிலையால் ஏற்படுவதைப் புலவர் காட்டியுள்ளார் வேனிற் புகாரிடையே தோன்றும் நிலவு சற்று மங்கலாக உள்ளதைப்பற்றிப்பேசும் அவனுக்குத்தன்காதலியின் திங்கள் போன்ற முகமும் புகாரிடையே தோன்றும் நிலவும் போலப் பொலிவழிந்து காணப்படுவதை மனக் கண்ணிலே கற்பனை செய்து காண்கிறான். ஆண் பெண் மீது கொண்டிருந்த ஆழமான அன்பைப் புலப்படுத்த வந்த புலவர் இயற்கைப் புனைவைத் துணையாகக் கொண்டுள்ளார். இப்பாடல் ஆண் கூற்றாக அமைந்த பாடலாகும். நன்கு ஒளிவீசிடும் என்ற தொடர் முழுநிலவு என்றபொருளைத் தந்து நிற்கிறது.
இதையடுத்துவருகின்றபாடல்திவருமாறு அமைந்துள்ளது.
வேனில் வந்ததே
மரக்கிளை அடர்வில்
மாலைநிலாவே
மங்கிக்கலங்கிடுமோ
மலையின் நிழலிலே (மன்யோசு:1875)
வேனிற் காலம் வந்துவிட்டது. மரக்கிளைகளின் அடர்விலே மலையின் நிழலில் மாலைக் கால நிலவு மங்கித் தெரிகிறது. இக்காட்சி தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு மனக் கலக்கத்தைக் கொடுக்கிறது. பிரிந்து சென்றவன் வரும் வரை நிலாவைப் பார்த்து அவனுடைய கடமைக் காலத்தைக் கணித்திருந்தாள். ஆனால் இப்போது காலம் கடந்து வேனிற்கால நிலாவும் வந்துவிட்டது. அந்த நிலவும் மரக்கிளைகளின் அடர்வில் மறைந்து நிற்கிறது. மலையின் நிழலிலே மங்கித்தோன்றுகிறது. என்னைப்பற்றிய நினைவும் அவர் நினைவில் மங்கி விட்டதோ' என அவள் கலங்கி நிற்கிறாள். பெண்ணின் அகவுணர்வு நிலையை இப்பாடல் இயற்கைப்புனைவில் இணைத்துக்காட்டும்பாங்கு சிறப்பாயுள்ளது.
தொடரும் பாடல் அவள் துன்ப நிலையையும் செயற்பாட்டையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
காலைப் புகாரின்
வேனில் கதிர்மடியும்
மரங்களிடை
நகர்ந்திடுநிலவை
என்றுவரை காத்திடும்?
(மன்யோசு: 1876)
காலைவேளையிலே புகார் ப்டிந்திருக்கும் வேனிற்காலத்தில் கதிர் ஒளி மங்க மரங்களிடையே நிலா நகர்ந்துகொண்டிருக்கிறது.இனிமேல்காலைச் சூரியஒளியில் அதுவும் மறைந்துவிடும். மீண்டும் முழுமையான நிலாவைக் காண்பதற்கு எவ்வளவுநேரம்நான்காத்திருக்கவேண்டுமோ? என்ற கவலை அவளை வாட்டுகிறது. ப்லநாட்களாக இரவு முழுவதும் தலைவன் வரவைக்காத்திருக்கும் தலைவியின் மனநிலை இப்பாடலில் இயற்கைத்தோற்றத்தோடு இணைத்துக் காட்டப்பட்டுள்ளது. பண்டைக்காலத்தில் நிலவை வைத்துக் காலத்தைக் கணிப்பிடும் ஒரு முறைமை ஜப்பானிய
9

Page 12
மக்களிடையே இருந்ததையும் இந்த நிலவு பற்றிய அகப்பாடல்கள் உணர்த்திநிற்கின்றன. தமிழிலக்கியத்தில் ஆண்டாளின் திருப்பாவையில் வரும் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் என்ற தொடர்காலத்தை உணர்த்தி நிற்பது ஜப்பானிலும் பெண்களிடையே இவ்வாறு காலத்தைக் கணிப்பிடும் முறைமை இருந்துள்ளது. மேற்காட்டிய பாடலில் காலைப்புகார்என்ற சொற்றொடர்தலையணைச்சொற்றொடர் ஆகும். இப்பாடலில் வேனில் என்ற சொல்லோடு இணைந்து சிறப்புப் பொருள்தரும் வேனிற் காலத்தில் காலைப்புகார் இயற்கையான தோற்றப்பாடு. அந்தத் தோற்றத்திடையே நிலாவைக் காண்பது கடினம். நிலவுகாலக்கடப்பைக் காட்டும் இயற்கையின் தோற்றமாகவும் குறியீடாக ஆணையும் குறித்து நிற்கிறது.
கார்கால நிலா:
கார்காலத்துநிலவைக் கண்ட காதலரின் உணர்வுநிலை 7 பாடல்களில் தொடர் நிலையில் கூறப்பட்டுள்ளது. (2223 - 2229) ஒருவரையொருவர் பிரிந்திருக்கும் ஆணும்பெண்ணும் -எத்தகைய உணர்வு நிலையில் இருப்பார்களெனப் புலவர் கற்பனை செய்துபாடியுள்ளனர்.இப்பாடல்களினூடாக அக்கால மக்கள் வாழ்வியலைப் பதிவு செய்யும் முயற்சியும் நடைபெற்றுள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுநிலையிலும் செயற்பாட்டிலும் உள்ள வேறுபாடும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறப்பாக நிலவின் ஒளி பற்றிய குறிப்பு உணர்வுநிலையோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
“உள்ளம் இல்லாத
கார் நிலவு இரவில்
பொருள் நினைந்து
துயிலின்றி வருந்த
தெளிர் ஒளிசெய்யுதே
(மன்யோசு 2226)
இப்பாடலில் நிலவுக்கு மனிதனுடைய உணர்வுநிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய உள்ளம் இல்லையெனப் பெண் கூறுகிறாள். அவள் இங்கு குறிப்பிடும் பொருள்' என்பது அவளுடைய காதலனைக் குறிப்பது. நிலவின் தெளிந்த ஒளியால் காதலன் நினைப்புக் கூர்மையடையத் தூக்கமின்றி இரவு முழுவதும் துன்பப்படும் தன் நிலையை வெளிப்படையாகக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
ஜப்பானிய மக்களிடையே நிலாவைப் பற்றிய நிலவும் பண்டைய மரபான நம்பிக்கையொன்றையும் 2 பாடல் காட்டுகிறது.
“விண்ணது கடல்
நிலாப்புணை தள்ளி
கதுர சவள்
இணைத்துச் செலுத்தக்காண்
நிலவின் நல் ஆண்மகன்”
(மன்யோக:2223)
விண்ணாகிய கடலிலே நிலவென்னும் புனை தள்ளிக் கதுரமரத்தின் சவளை இணைத்துச்செலுத்துகின்றநிலாவின் நல்ல ஆண்மகன் ஒருவன் பற்றிய குறிப்பு இப்பாடலில் அமைந்துள்ளது. நிலாவின் தோற்றம் இங்கு முழுமையானதல்ல. தமிழர் பண்பாட்டில் நிலவிலே மூதாட்டி ஒருத்தியின் தோற்றமிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஜப்பானியர் ஆண்மகன் தோற்றத்தையே காண்பதாகக் கருதப்படுகிறது. வானமென்னும் பெருங்கடலில் செல்லும்
10

நிலவென்னும் புணையைக் கண்ட பெண்ணின் காதில் காட்டுத்தாராவின் ஒலிப்பும் கேட்கிறது. நீண்ட இராப்பொழுதில் வானத்தில் சென்று கொண்டிருக்கும் நிலவுப் புணையைத் தள்ளிச் செல்லும் ஆண்மகள் தாராவின் குரலையும் கேட்டுச் செல்வான் என்பது ஒரு குறிப்புப் பொருளையும் தந்து நிற்கிறது. இரவுநேரத்தில் வினைமேற்கொண்டு சென்றுள்ள தனது காதலன் இந்த இயற்கைத் தோற்றத்தையும் கண்டு செல்வான் என நம்புகிறாள்.
நிலவிலே காதலன் நடந்து செல்லும் காட்சியை
நினைத்துப்பார்க்கிறாள். காதலன் தலையிலே சூடிச்செல்லும் பகிமலரின் மேல் விழும்பனியை நன்றாகப்பார்க்கும்படியாக நிலவு ஒளிதரும் எனக் கற்பனை செய்கிறாள்.
“என் காதலரே
தலையில் சூடுபகி
விழுபனியை
நன்றாகப் பார்க்கவென
நிலவே ஒளிருமே”
(மன்யோசு 2225)
ஆண்களும் மலர்சூடிச் செல்லும் வழக்கம் ஜப்பானியரிடையே இருந்ததையும் இப்பாடல் காட்டுகிறது. பாடலைப்பாடிய புலவர் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து பெண்மொழியிலே பெண்ணின் அகவுணர்வைப் புலப்படுத்தியுள்ளார். தன் விருப்பத்திற்குரிய காதலன் தன்னைப் பிரிந்திருக்கும்போது அவன் சென்ற இடத்தினை நிலையையும் அவள் தோற்றத்தையும் கற்பனையிலே பெண் காண்பதாகப் புலவர் பாடலையாத்துள்ளார். V−
அகப்பாடல்களில் காலம் பற்றிய குறிப்பைப் புலவர் இணைப்பதற்கு ஒரு காரணமுண்டு.ஆண் தன் கடமைக்காகப் பெண்ணைப்பிரிந்துசெல்லும்போது திரும்பிவரும் காலத்தைக் குறிப்பிட்டுச் செல்வான். அந்தக்காலம் வரும்வரை பெண் அவன் வரவைப் பொறுமையுடன் காத்திருப்பாள். அவ்வேளையில் காலத்தின் கடப்பை அவள் வெகு நுட்பமாகக் கவனிப்பாள். கடிகாரமோநாட்காட்டியோபயன்பாட்டில்இல்லாத மன்யோசுக்காலத்தில் இயற்கையின் துணைகொண்டே மக்கள் காலக்கடப்பை அறிந்தனர். ஆண்களும் பெண்களும் இதனால் இயற்கையின் மாற்றங்களைக் கவனிப்பதில் வல்லுனராயிருந்தனர்.
இக்கால மாற்றத்தின் தோற்றமும் இயற்கையான தோற்றங்களில் வேறுபடுத்திக் காணக்கூடியதாக இருந்தது. அதனைப் புலவர்கள் தமது செய்யுட்புனைவிலே எடுத்தாண்டுள்ளனர். கார்காலம் மழை பெய்யும் காலம். அக்காலத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் பிரியாமல் உடனுறைவர். ஆனால் சிலவேளைகளில் மழைமுகில் கலைந்து விடுவதும் உண்டு. காதலர் உடனுறையும் நிலையும் தடைப்படுவதுண்டு.அதனை நிலவுபற்றிய பாடலொன்றுபதிவு செய்துள்ளது.
“எதிர்பாராமலே
பெரும்பெயல் மழையே
பொழிந்ததுவே
மழை முகில் கலைய
நிலா இராஒளிரும்”
(மன்யோசு 2227)
கார் காலம் வந்துவிட்டதை உணர்த்தப் பெருமழை பொழிந்தது. காதலனுடன் உடனுறையும் கார்காலம் வந்துவிட்டதென அவள் மனம் பெரும் மகிழ்வெய்திற்று. ஆனால் அந்தமழை திடீரென நின்றுவிட்டது. மழைமுகிலும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 13
கலைந்துவிட்டது. வானத்திலே நிலவு ஒளிரத் தொடங்கியது. இது காலத்தைக் கணிக்கும் நிலையில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஆனால் பிறிதொருபாடல் கார்கால நிலவைப் பார்த்திருக்கும் காதலியின் மனநிலையைப் பற்றிக் கூறுகிறது.
வெண்பனியையே
முத்துப் போலாக்கிடுமே
நீண்டமாதத்து
விடியலின் நிலவே VM
பார்த்தும் நிறைந்திடுங்கொல்
(மன்யோசு 2229)
பனித்துளி இறுகிய நிலையில் முத்துப்போல உருண்ட மணிகளைச் செய்து பொழுதைப்போக்கிடும் நிலையை அவள் குறிப்பிடுகிறாள்.
காதலன் பிரிவால் வருந்தும் அவள் நிலாவை வைகறைக் காலம்வரை பார்த்திருக்கிறாள். 'கார்காலத்தில் திரும்பி வருவேன்' என்ற சொல்லை நம்பிக் காத்திருக்கிறாள்.
கார்காலத்தில் அமைந்த ஒன்பதாம் மாதம் பற்றிப்பிறிதொரு பாடலிலும் குறிப்பு உண்டு.
“ஒன்பதாம் மாதம்
தோன்றும் காலைத்திங்களின்
தொடர்ந்திடவே
நீவாராதிருப்பினே
நானும் நலிந்திடவோ”
(மன்யோசு 2300)
கார்காலத்து ஒன்பதாம் மாதத்தின் நீட்டம் காதலியைப் பெரிதும் வருத்துகிறது. நிலவு வந்த போதும் காதலன் வாரதிருப்பது பெருங்கவலை தருகிறது. பிரிவின் தாக்கம் பெண்மொழியின் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முழு இரவும் காதலன் வரவுக்காகக் காத்திருந்தவள் விடியற்காலை வரை வானில் தோன்றும் நிலவையும் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியைப் புலவர் சொல்லோவியமாகப் பாடலில் அமைத்துள்ளார்.
மொழிப்பயன்பாடும் புலமைச் சிறப்பும்:
ஜப்பானியக் காதற்பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியமைப்புதற்கால மொழியமைப்பிலிருந்து வேறுபட்டது. மன்யோசுவில் எழுத்துருப் பெற்றுள்ள மூலமொழிப் பாடல்களைப்படிப்பது மிகவும் கடினமாக உள்ளது.பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தொடர்கள் அக்கால மொழிநடையின் பண்பை உணர்த்தி நிற்கின்றன. சிறப்பாகப் பாடல்களில் பயன்படுத்தப்படும் தலையணைச் சொற்கள் பாடலின் பொருளைத்தெளிவுற உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன. அதேபோன்று சிறப்பான சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலவைக்குறிக்கும் TUK என்ற சொல் தற்காலத்தில் TSUK என வழங்கப்படுகிறது. இடைச்சொற்களின் பொருள் நிலையிலும் வேறுபாடு உண்டு.
(சமகால கலை இல்
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கி
அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதிக்
இடம்பெறும். 200 சொற்களுக்கு மேற்படில் அச்செய்தி பிர
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

பழைய இலக்கண அமைப்பை அறிந்தால்தான் பாடல்களின் தெளிவான பொருளை நன்குணரமுடியும்.
காலநிலையோடுதொடர்புறுத்தப்பட்டுள்ள அகவுணர்களை விளங்கிக் கொள்வதற்கு ஜப்பானியப் புலமையாளரிடம் ஓர் இலக்கண அமைப்பும் இல்லை. எனவே தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் சங்க அகப்பாடல்களுக்கு வகுத்துள்ள பொருள் இலக்கணத்தின் அடிப்படையில்மன்யோசுக்காதற்பாடல்களைப் பொருத்திப் பார்க்கும் போது தெளிவைப் பெற முடிகின்றது. எனவே பண்டைய ஜப்பானிய மொழியின் காதற்பாடல்களைப்
பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக அகப்பாடல் களில் இணைக்கப்பட்டுள்ள இயற்கைப்புனைவு புலவர்களின் புலமைச் சிறப்பிற்குச் சான்றாக உள்ளது. அகப்பாடல்கள் எனத் தொல்காப்பிய ர் வகுத்துக்கொண்ட போது அதனை இயற்கையோடு இணைத்துப் புனைவு செய்த புலவர்களின் புலமைத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார். பாடல்களில் அமைந்துள்ள மொழிநடைப்பயன்பாட்டினால்கூற்றுநிலைகளை வகுத்துக்கொண்டார். அவ்வாறு வகுப்பதற்குப் புலவர் பயன்படுத்திய சிறப்பான சொற்களும் சொற்றொடர்களும் பெரிதும் உதவியுள்ளன. ஜப்பானியக் காதற் பாடல்களிலும் இப்பண்பு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக “WAGA SEKO” என்ற தொடர் என் காதலரே எனப் பெண்மொழிக் கூற்றாக இருப்பதால்பாடல்பெண்கூற்றாக அமைந்திருப்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.
தொல்காப்பியருடைய அகப்பாடற்புனைவில் செய்யப்பட்ட முதல், கரு, உரி பற்றிய விளக்கம் ஜப்பானியக் காதற்பாடல் களுக்கும் முற்றிலும் பொருந்துவதாக உள்ளது. இப்பண்பு நிலை விரிவான ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டும். இக்கட்டுரை ஆய்வுக்கான சிறுகுறிப்பு ஒன்றையே தந்துள்ளது. தமிழர், ஜப்பானியர் வாழ்வில் மட்டுமல்ல ஏனைய நாட்டு மக்களிடையேயும் காதற்பாடல்கள் தோன்றியுள்ளன. ஆனால் இயற்கைப்புனைவு மக்கள் ஒழுக்கத்தோடு சிறப்பாகத் தொடர்புபடுத்தப்படவில்லை. ஆனால் பண்டைய தமிழ்மக்களும்பண்டைய ஜப்பானியமக்களும் இயற்கையோடு ஒட்டிய வாழ்வியலுடையவர்களாக இருந்ததைப்புலவர்கள் தமது புலமைத்திறனால் பாடல்களிலே பதிவுசெய்து வைத்துள்ளனர். இயற்கைப்புனைவினூடே பண்பட்ட ஒரு மனிதவாழ்வியல் இருந்ததை உலகம் அறிய வேண்டுமென எண்ணியுள்ளனர். அது மட்டுமன்றி ஆணும் பெண்ணும் அன்புகொண்டு இருவருமாய் இணைந்து விாழும் ஒழுங்குபட்ட வாழ்வியலாக அன்று இருந்ததையும் சுட்டிச் சென்றுள்ளனர். பிரிந்தவரை நினைந்து வாழும் ஒரு பண்பட்ட காதல்வாழ்வை இருமொழிப்புலமையாளரும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே பாடல்களில் பதிவுசெய்து வைத்துள்ளனர். இப்பண்புநிலை இருமொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட்டு ஏனையோரும் அறியும்படி செய்யவேண்டும்.
மக்கிய நிகழ்வுகள்)
ய நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு குமுன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத்துவரும் இதழில் fagfasslin LuoT'LTg. - கே.பொன்னுத்துரை
11

Page 14
புதியதோர் ஈழத்தை நானும் கண்டு
பூரித்து உள்ளத்தால் மகிழ்ந்போனேன் அதிசயமோ அற்புதமோ என்று எண்ணி
அகம்மகிழவியப்போடுநாட்டைப்பார்த்தேன் அதிரடியில் மாற்றங்கள் பலவும் தோன்றி
அழகான ஈழத்தைச் சிருஷ்டி செய்து மதிமயங்க வைத்திட்ட திறத்தினாலே
மாநிலமும் கைகூப்பிவணங்கக்கண்டேன்.
எல்லோரும் மும்மொழியைப் பேசுகின்றார்
மொழிப்பகையோஇனப்பகையோஏதுமில்லை நல்லவராய் இலங்கையர் நாம் என்று எண்ணி நாட்டுநலம்ஒன்றேதான்மனதில்கொண்டார் செல்வரென்றும்வறியரென்றும் பேதமில்லை
செல்வமெலாம் நாட்டுக்கே உரியதென்பார் பொல்லாத தீச்செயல்கள் அற்றுப்போக
பொங்கிமனம் இன்புற்று வாழுகின்றார்.
திருடர்களும் திருட்டுகளும் மறைந்ததாலே
தெருவெல்லாம் பயமின்றி மக்கள் கூட்டம் திருமகளாய் நகைக்கடையைச் சுமந்து கொண்டு
பொன்னகையும் மார்பினிலே தவழ்ந்து ஆட வரும் மகளிர் கூட்டத்தால் தெருக்கள் மின்னும் வரும்பள்ளி மதலையுடன் வீலர் ஏறி பொருள் பண்டம் வாங்குதற்கும் தனியே செல்வார்
வம்புகளும் வழக்குகளும் அற்ற தாலும்
முறைப்பாடு செய்வாரும் இன்மையாலும் நம்காவல்நிலையங்கள் காலியாகி
நம் நாட்டு பாலகரின் பள்ளியாச்சு எம்நாட்டுச்.சிறைக்கூடம் வெறுமை யாகி
இறைவனது கோயிலாய் மாறிப் போச்சு நம்மக்கள் நிலைகண்டு விண்ணோர் வாழ்த்தும் ஒப்பரிய காட்சியினை நானும் கண்டே
12

மொழிவாரி இனவாரி பள்ளிக் கூடம்
மும் மொழியும் பயிலுமொரு U66fo (Ufféß? அழியாத ஞானத்தைப் பெறுவதற்காய்
அனைவருமே ஒரிடத்தில் கற்கலானார் மொழி வெறியை இனவெறியைத் தூண்டிவிட்டு இடைநடுவில்குளிர்காய்வார்எவரும்இல்லை பழிபாவம் செய்தாரின் நிழலுங் கூட
பள்ளியிலே மாணவரைத் தொட்டதில்லை
உழைப்பாளர் கைப்பட்ட கழனி எல்லாம் ஒத்தபடி தானியத்தால் குவியலாச்சு உழைப்பாளர் அனைவருக்கும் உணவு தந்து உயிர்குடிக்கும்வறுமையினைவிரட்டிவிட்டார் உழைப்பதனால் எல்லோரும் கொடுப்போராகி
ஏற்பதற்கு இங்கெவரும் இல்லையானார் கலைவளமும் இசைவளமும் வளர்ந்து நாட்டில்
கலைஞர்களும்கவிஞர்களும்பெருகலானார்.
இரத்தினமும் தேயிலையும் தெங்கினோடும்
இறப்பரும் மீன்வளமும் கனிய உப்பும்
மரமுயர்ந்த காட்டோடுதுறைமுகங்கள்
மதிப்பார்ந்தகைத்தொழில்கள்வளர்ந்ததோடு
திரைகடலும் மொழிகின்ற முத்தும் பெற்று
தேனோடும் நாடாகத் திகழ்ந்ததாலே
கரம் நீட்டும் நிலைமாறி கவலை தீர்ந்து
காசினியும் கையேந்தக்களிப்புங்காண்டார்.
(XXIX)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 15
பத்தினத் தெய்வ கிழக்கிலங்கையின்
பற்றிய ஒ
பொத்துவிலிற்குத் தெற்கே உள்ள பாணமை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவர்களும் ஒருங்கே வாழும் கிராமம். இவ்விரு சமூகத்தினரும் அங்கே ஒருங்கே வாழ்கின்றார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் திருமண உறவு மூலம் தொடர்புபட்டவர்களாய் இரத்த உறவுடையவர்களாயும் இருந்துவந்துள்ளார்கள். இதனைவிட பத்தினித்தெய்வ வழிபாடும் சிங்கள, தமிழ் மக்களைப்பிணைக்கும் பண்பாட்டு அம்சமாக இருந்துவந்துள்ளது. கிழக்கு மாகாணத்தை பற்றி ஆய்வுசெய்த மானிடவியலாளர்களில் மூவர் சிறப்பிடம் பெறுகின்றனர். நூர்யல்மன், மக்ஜில்வ்ரே,கணநாத்ஒபயசேகர ஆகியோரே இம்மூவர். நூர்யல்மன்1950க்களின் முற்பகுதியில் கண்டி,மொனராகலை, கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளில் களஆய்வு நிகழ்த்தியவர். அவர் அரசமரநீழலில் (UNDER THEBOTREE)என்றநூலை எழுதினார். பாணமை என்ற பெயரை உலகின் புலமையாளர் மட்டத்திற்கு தெரியப்படுத்தியவர் நூர் யல்மன்தான். அவருக்குப் பின் கணநாத் ஒபயசேகரா 1960க்களின் பிற்பகுதிகளில் கிழக்கு LDITST600Tiflics& Gls Girpiti. THE CULT OF GODDESS PATTN1 (பத்தினித்தெய்வ வழிபாடு) என்றும் அவரது பெரும்படைப்பில் பாணமையின் பத்தினி வழிபாடு பற்றியும் அங்கு நடைபெறும் கொம்பு விளையாட்டுப் பற்றியும் விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். 1970க்களின் முற்பகுதியில் அக்கரைப்பற்றுக்கு வந்து களஆய்வை நிகழ்த்திய மக்ஜில்வ்ரேயும் பாணமைபற்றிய பல தகவல்களைத்தருகிறார். மட்டக்களப்பைச்சேர்ந்த நாட்டாரியல் ஆய்வாளரான க. மகேஷ்வரலிங்கம் கண்ணகி வழிபாடு பற்றி எழுதியுள்ளார். கொம்புவிளையாட்டுஎன்ற சடங்கியல் விளையாட்டைப்பற்றியும் தமிழில் இவர் விரிவாக எழுதியிருக்கிறார். கொம்பு விளையாட்டின் சிறப்பான வடிவம்பாணமையில் இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்களின் வரிசையில் இன்னும் பலரைப்பற்றிசொல்லலாமேனும் இவ்விடயம் இக்கட்டுரையின் நோக்கு எல்லைக்கு அப்பாற்பட்டதாகையினால் நான் எடுத்துக்கொண்ட விடயத்திற்கு வருகிறேன். அத்துல சிறிகுமார சமரக்கோன் என்னும் ஆய்வாளர் சுனாமிக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காகப் பாணமைக்குச்சென்றார். சுனாமி அடித்த ஓரிருவாரங்களுக்குள்ளேயே அங்கு சென்று ஆய்வுகளைத் GigiTLiéu stoyd Gsstir FEMALE GODDESS AND TSUNAMI’ என்றொரு சிறுநூலை எழுதியுள்ளார். பத்தினித்தெய்வமும் சுனாமியும் என்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். நூலின் உபதலைப்பு இலங்கையின் தென்கிழக்குக் கரையோரக் கிராமமான பாணமையில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

ypti strøymruhuyub umayappażatéJmupunib ர் ஆய்வு
aഞ്ഞുകൃun (ഗ്രaംീaംb
சுனாமிக்குப்பிந்திய மறுவாழ்வுநடவடிக்கைகளில் பெண்கள் என்றுள்ளது. நூலின் பிரதான தலைப்பு நாட்டார் தெய்வ வழிபாடு பற்றியதென்ற தோற்றத்தை தருகின்றதேனும் இச்சிறுநூல் சமூகமானிடவியல் நோக்கில் பாணமைக் கிராமத்தின் பின்னணியில்
* தமிழர், சிங்களவர் இனஉறவுகள் * அரசியல் அதிகாரத்தின் செயற்பாடு * பால்நிலை வேறுபாடுகாரணமாக எழும் பெண்
அடிமைத்தனம் .ܝܰܕ݂ * சாதியடிப்படையிலான பேதங்கள் * கோவில்களும் சமயமும் கிராமத்து நிர்வாகமும் ஆகியவற்றை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இவற்றோடு இணைந்ததாகத்தான்பத்தினித்தெய்வமும் சுனாமியும் என்ற விடயப்பொருளும் அலசப்படுகிறது.
பத்தினித்தெய்வ வழிபாடு
பத்தினித் தெய்வவழிபாடுபற்றி சமரக்கோன் கூறுவதை மேற்கோளாகத் தருகிறேன். “இலங்கையில் பெளத்தர்கள் வழிபடும் தெய்வங்களுள் பத்தினித்தெய்வம் மிகவும் பிரசித்தமானது என்று ஒபயசேகர கூறியிருக்கிறார் (1984) கிழக்கு மாகாணத்தில் பத்தினித் தெய்வவழிபாடு சிங்களவர், தமிழர் என்ற இருபிரிவினரிடமும் பரவலாக உள்ளது. பாணமையின் பத்தினிகோவில்பழமைமிக்கது. பாணமையின் தென்பகுதியில் உள்ள மேட்டுநிலத்தில் அருகருகே இருகோவில்கள் உள்ளன. ஒன்று பத்தினிகோவில், மற்றது சுளுபண்டார என்ற தெய்வத்தின் கோவில். இக்கோவில்களில் தமிழரான பூசகர் ஒருவரும் சிங்களவரான கப்புரால ஒருவரும் பூசை செய்கின்றனர். நாட்டார் கதைகளில் இவ்விரு தெய்வங்களும் கணவன்,மனைவிஉறவுஉடையவர்கள் என்று கூறப்படுகின்றது. இத்தெய்வங்களின் உறவை இங்கே ஆண்டு தோறும் நிகழும் கொம்பு முறித்தல் சடங்கு வெளிப்படுத்துகிறது. பெரஹராவிலும், ஆண்டுத்திருவிழாவிலும் இங்கே சிங்கள வரும், தமிழரும் இனபேதமின்றிக் கலந்து கொள்கின்றனர். இம்மக்கள் இத்தெய்வங் களின் நோய்தீர்க்கும் ஆற்றலிலும், அற்புதச்செயல்களிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். இங்குள்ள இரு தெய்வங்களில் பெண்தெய்வம்தான் மிகுந்த சக்திஉடையது. பத்தினித்தாய்த்தெய்வம்தான் பாணமையை பேரிடர்களில் இருந்து காப்பாற்றி வருகிறாள் என்று மக்கள் நம்புகின்றனர்” (மேற்குறித்தநூல்பக்10-fஎனதுமொழிபெயர்ப்பு)
மானிடவியலாளர்களில் பெரும்பாலானோர் பகுத்தறி வுவாதிகள். சமரக்கோனும் அப்படிப் பட்டவரே, என்று
13

Page 16
ஊகிக்கக்கூடியதாய் உள்ளது. இருந்தாலும்மானிடவியலாளர் களுக்கும் ஆபிரகாம் கோவூர் போன்ற பகுத்தறிவாளர் களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. கோவூர் (இவர் 1960க்களிலும் 1970க்களிலும் இலங்கையில் பிரபலம்மிக்க வராய் இருந்தவர்) போன்றவர்கள் நாட்டார் சமயம் உட்பட்ட எல்லாவகைச் சமய வழிபாடு களையும் மூடத்தனம் என்று ஒதுக்குபவர்கள். மானிடவியலாளர்கள் சமயவழிபாடுகள், சடங்குகள் ஊடாக மனிதரின் அகநிலைக் கருத்துக்களை பகுத்தாய்ந்து அவற்றின் சமூக அர்த்தத்தை (SOCIAL MEANING) துலக்குவதில் அக்கறையுடையவர்கள். மூடத்தனம் என்று எதையும் கூறுவதால் மக்கள் மனதைப் புண்படுத்த விரும்பாதவர்கள்.
பத்தினியின் அருட்செயல்கள்
பத்தினியின் அருட்செயல்களை பாணமை மக்கள் போற்றித் துதிக்கிறார்கள். பாணமையில் இன்று மக்கள் மனத்தில் ஆழப்பதிந்துள்ள அற்புதச்செயல்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று சுனாமி அலைகளில் இருந்து பாணமையைப் பாதுகாத்தது.
“சுனாமி அலை வந்தபொழுது பத்தினி கடலுக்குள் தோன்றினாள். தன் விஸ்வரூபத் தைக்காட்டினாள். தன் கைகளை நாலாபக் கமும் சுழற்றி சுனாமி அலைகளைத் தடுத்தாள்"
பத்தினிகோவிலில் கொம்புவிளையாட்டின் போது மேளம் அடிப்பவரான ஒருவர் பத்தினித் தெய்வம் எப்படிப் பாணமையைக் காப்பாற்றினாள் என்பதை மேற்கண்டவாறு விளக்கினார். கிழக்கு மாகாணத்தின் கடற்கரைக் கிராமங்களை சுனாமி அலைகள் தாக்கி அழித்தன. இருந்த போதும் பாணமையில் இழப்புக்கள் எதுவும் பெரிதாக இல்லை. ஒரு முதியவர் மட்டும் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டார். வேறு யாரும் சுனாமிக்குப் பலியாகவில்லை. (பாணமைக் கடற்கரையை அடுத்துமணற்குன்றுகள் அரணாக உள்ளனவாம். இவைதான் சுனாமி அலைகளின் வேகத்தை தணித்தன என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லக்கூடும்) பாணமை மக்களிற்கு பத்தினித்தெய்வந்தான் துணையாக நின்று காப்பாற்றினாள் என்பதில் அசையாத நம்பிக்கை உள்ளது. ஒரு தடவை பயங்கரவாதத் தாக்குதல் பாணமையில் இடம்பெறவிருந்தது. அப்போது அதிரடிப்படையின் தலைமை அதிகாரியின் கனவில் தோன்றிய தெய்வம் பாணமைக்கு இராணுவத்தை அனுப்பிவைத்து அதனைக் காப்பாற்றியது. இது இரண்டாவது அற்புதம் பத்தினியின் வீரம், மாண்பு, நேர்மை ஆகிய உயர் குணங்களை கிராமமக்கள் அனைவரும் போற்றுவர். கிராமத்தின் காவல் தெய்வம் பத்தினியே என்பது அவர்களது
நம்பிக்கை.
பாணமைப்பற்றுசமூகபண்பாட்டுநிலை
பாணமை சிங்கள பெளத்தர்களின் பலம் வாய்ந்த இடமென்று கருதப்படுகிறது என்றுகூறும் சமரக்கோன் மக்கள் தொகைப்புள்ளிவிபரங்கள் கொண்டு இதனை உறுதியாகக் கூற முடியாது என்கிறார். சமரக்கோன் கூற்றாக வரும் ஒரு பந்திவருமாறு,
14

“தமிழர், சிங்களவர் என்ற வகைப்பிரிவு பற்றிய சரியான புள்ளிவிபரக்கணக்கு இங்கு கிடையாது. இங்குள்ள ஐந்து கிராமசேவகர் களின் கருத்துப்படி இங்கு தமிழர்களும் சிங்களவர்களும் எண்ணிக்கையில் சம அளவினராக உள்ளனர். பாணமை வடக்கில் பெரும்பான்மை தமிழர் (இவர்கள் சாதியில் கீழ்ப்பட்டவர்கள் எனக் கருதப்படுவர்) பாணமை மத்தியில் தமிழர்களும் சிங்களவர்களும் கலந்து உள்ளனர் (பாணமை மத்தியின் தமிழர்கள் உயர்சாதியினர் எனக் கருதப்படுவர்) பொதுவாகப் பாணமையில் ஒருவரைத் தமிழர் என்றோ சிங்களவர் என்றோ அடையாளம் கண்டு புள்ளிவிபரம் தொகுப்பது கடினம்” (மேற்குறித்தநூல் பக் 6)
50க்கு 50 மக்கள்
பாணமை மக்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கும்போது இராணுவத்தினர் அவர்களை50க்கு 50 மக்கள்’ என்று கேலியாக சொல்வதாக சமரக்கோன் குறிப்பிடுகிறார். காரணம் ஒருவரின் அடையாள அட்டையைப்பார்த்து சிங்களவரா தமிழரா என்று சொல்லமுடியாது. பாணமை மக்களும் தங்களை 50க்கு 50 மக்கள் என்று சொல்வதை ஏற்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். கிராமத்தில் வாழும் சிங்களவர்களும்,தமிழர்களும் தமிழையும் சிங்களத்தையும் சரளமாகப்பேசுகிறார்கள். இதனைவிட இன்னொரு சிக்கல் ஒருவரின் தாய் சிங்களவராக இருப்பார். தந்தை தமிழராக இருப்பார். தாய் தந்தை இருவரும் சிங்களவராய் தென்பட்டாலும் அவர்களின் பெற்றோர், பாட்டன், பாட்டி சிங்களவரா தமிழரா என்பது தெளிவில்லாமல் இருக்கும். பழைய பிறப்புப்பதிவுகள், அடையாள அட்டைகள் பெரும்பாலும் தமிழில் இருக்கும். கிழக்கிலங்கையின் எந்தக் கிராமத்திற்கும் ஆய்வுக்குச்செல்லும் ஒருவர் கிராமத்தின் சனத்தொகைக் கட்டமைப்பை சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்று பாகுபடுத்திஎடுத்துக்கொள்ளலாம். சமரக்கோன் பாணமைப் பற்றின் ஐந்து கிராமசேவகர்பிரிவுகளின் புள்ளிவிபரங்களைத் தருகிறார். ஆனால் இன அடிப்படையிலான பகுப்பை அவரால் தர முடியவில்லை. பாணமையின் நிலைமையை பாணமை மத்தியின் கிராமசேவகரை உதாரணம் காட்டி விளக்குகிறார். இக்கிராமசேவகர்தமிழும் பேசுவார்,சிங்களமும் பேசுவார். தாம் தமிழரா அல்லது சிங்களவரா என்பது தனக்கே தெரியவில்லை என்கிறார். ஏனெனில் அவரது முன்னோர்களான ஆண்களிலும் பெண்களிலும் தமிழர்களும் உள்ளனர்,
சிங்களவரும் உள்ளனர். தம்மை ஏதாவது ஒரு இனக்குழுவுடன் சேர்த்து அடையாளப்படுத்துவதில் இவர் அக்கறை அற்றவராகவும் உள்ளார்.
எதிர்காலம்
பாணமையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் சமரக்கோன் சூசகமாகச் சுட்டிக்காட்டுகிறார். பாணமையில் சிங்கள மகாவித்தியாலயம் உள்ளது. ஆனால் தமிழ் மகாவித்தியாலயம் கிடையாது. தமிழ் ஆரம்ப பாடசாலையே உள்ளது. இங்கு 5ஆம் ஆண்டுவரை மட்டும் படிக்கலாம். அதற்குப்பின் தமிழில் படிப்பதானால் தமிழ்ப்பிள்ளைகள் அக்கரைப்பற்றுக்குப் போக வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 17
இராணுவ பரிசோதனைக் கடவைகளைத்தாண்டிச் செல்லும் பயணம் ஆபத் தானது. ஆகையால் தமிழ் பிள்ளைகளும் சிங்களப் பாடசாலைகளிலேயே படிக்கிறார்கள். கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். பெற்றோர் களும் இதனையே விரும்புகிறார்கள். ஆதலால் எதிர்காலத்தில் பாணமை சிங்களமயமாதல் உறுதியானது. 1950க்களில் நூர் யல்மன் இங்குவந்த போதோ அல்லது 1960க்களின் பிற்பகுதியில் கணநாத் ஒபயசேகரா இங்கு வந்தபோதோ காணப்படாத புதிய அம்சங்களையும் சமரக்கோன் குறிப்பிடத்தவறவில்லை. சிங்கள இராணுவம்,புத்தகோவில், சிங்களமொழிப்பாடசாலை, சிங்களவர்களின் தலைமைத்துவம் என்ற நான்கு விடயங்களின் பின்னணியிலேயே இனக்கலப்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று சமரக்கோன் தெரிவிக்கிறார்.
ஆணாதிக்கம்
சுனாமியால் இறந்தவர் ஒரு சலவைத் தொழிலாளி. அவருக்கு ஒரு குடிசை வீடு சொந்தமாக இருந்தது. இவரின் மனைவியான விதவைப்பெண் வீடு தரும்படி கேட்டாள். கிராமத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் “விதவைக்கு எதற்கு வீடு?”என்கின்றனர். இந்தச்சம்பவத்தைக் காட்டி women as Nobodies without husbands' 6TsiréprisLoyá, GasTsir. கணவன் இல்லாத பெண் நடைப்பிணம் என்று இதனை மொழிபெயுர்த்துக்கொள்வோம். பாணமையில் மறுவாழ்வுத் திட்டத்தில் மூன்று வீட்டுத்திட்டங்கள்தொடங்கப்பட்டன. எந்த வீட்டுத்திட்டத்திலும் இவளுக்கு இடம் இல்லை. சாதியில் குறைந்தவளான இப்பெண்ணிற்கு உதவி மறுக்கப்படுகிறது. பிரதேச சபையில் ஒரு பெண் உறுப்பினர் தானும் இல்லை. கீழ்மட்டத்தில் நிறைவேற்று அரசியல் அதிகாரம் எப்படிச் செயற்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளர் கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களிற்கு மறுவாழ்வு உதவி மறுக்கப்பட்ட பெண்களை களஆய்வின் போது சந்தித்ததாகச் சமரக்கோன் தெரிவிக்கிறார். மக்கள் குறிப்பாக ஆண்கள், இரண்டு பிரதான கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் அடையாளப் படுத்தப்படுவர். பாரபட்சமும், பழிவாங்கலும் கட்சிபேத அடிப்படையில் நடைபெறுகிறது. இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு உதவமாட்டார்கள் என்று ஒரு ஆண் தெரிந்துகொண்டால், அவன் பிரதேசசபைத் தலைவரிடமோ வேறுயாரிடமோ உதவிகேட்டுப் போகமாட்டான், கெஞ்சமாட்டான். இந்த நிர்வாகம் நெகிழ்ந்து கொடுக்கவே மாட்டாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மனைவிமார் தங்கள் குடும்பக் கஷ்டத்தையும்,பிள்ளைகளின் எதிர்காலத் தையும் நினைத்து, மானத்தையும் விட்டு அலுவலகங்களில் போய் மன்றாடிக் கெஞ்சும் நிலைதான் உள்ளது. சுனாமி நிவாரணத்தில் பெண்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள் என்கிறார் சமரக்கோன். உள்ளூர் மட்டத்தில் பெண்களுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. சுனாமிக்குப் பிந்திய மறுவாழ்வு மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் கிராம மட்டத்தின் ஆணாதிக்க அதிகாரக்கட்டமைப்பு ஊடாக செயல்படுவதையும் பெண்கள் விளிம்பு நிலையினராக இருப்பதையும் சமரக்கோன் பல உதாரணங்களைத் தந்து விளக்குகிறார். இவற்றை அவர் கூறும்போது பெண்தெய்வத்தை போற்றும் ஒரு கிராமத்திலா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

இதெல்லாம் நடக்கிறது என்ற நகைமுரண் வாசகர் மனதில் உறைப்பாகப் பதிகிறது.
சமய வழிபாடு, சடங்குகள் அதிகார உறவுகள்
பாணமையில் அரசியல் அதிகாரக் கட்டமைப்பு அங்குள்ள பண்பாட்டு அம்சங் களினதும், சமூக உறவுகளினதும் வெளிப்பாடு தான் என்பதை சமரக்கோன் விளக்குகிறார். அநியாயமாகக்கொலையுண்டதன்கண வனுக்கு நீதிகேட்டுப் போராடியவள் பத்தினி (கண்ணகி). பெண்மையைப்போற்றும் வழிபாடு தான் பத்தினி வழிபாடு. ஆனால் நடைமுறையில் பெண்மையை இழிவுபடுத்தும் கேவலப் படுத்தும் நடைமுறைகளே இங்கு உள்ளன என்கிறார் சமரக்கோன். ஆண்டுத்திருவிழா விலும் பெரஹராவிலும், கொம்பு விளையாட்டு போன்ற சடங்குகளிலும் ஆணாதிக்க மரபுகள், கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஆன்மிக மட்டத்தில் வெளிப்படும் இதே கருத்தியல் தான் பிரதேசசபை முதலிய அலுவலகங்களிலும் வெளிப்படுகிறது என்று சமரக்கோன் கூறுகிறார். அவர் தரும் விபரங்கள் யாவற்றையும் தருவதை இங்கு விரிவஞ்சிதவிர்த்துக்கொண்டு இரண்டு விடயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். அவை:-
1. ஆண்டுத்திருவிழா, கொம்பு விளையாட்டு என்பன நடைபெறுமுன் நிகழும் ஊரைச்சுத்தப்படுத்தும் சடங்கியல் நடவடிக்கைகள்.
1.கொம்பு விளையாட்டு
ஊரைச்சுத்தப்படுத்தல்
ஆண்டுத்திருவிழா, கொம்பு விளையாட்டு என்பன நடைபெறும் காலங்களில் இச்சடங்குகளில் ஈடுபடுவோரான ஆண்கள் தம்மை புனிதப்படுத்திக்கொள்வர். இக்காலத்தில் விரதம் இருப்பார்கள், புலால் உணவு உண்ண மாட்டார்கள், பாலியல் புணர்ச்சியில் ஈடுபடமாட்டார்கள். இப்புனிதம் பேணலின் காரணமாகதீட்டுக்குரிய பெண்கள் அனைவரையும் ஊரைவிட்டே துரத்தி விடுவார்கள். அயல் கிராமத்திற்கு அவர்கள் போய்விடவேண்டும். அல்லது அருகே உள்ள காட்டில் போய்தங்க வேண்டும். காட்டில் இதற்கென விசேட குடிலிகே (குடிசை என்ற கருத்துள்ள சிங்களச்சொல்) அமைக்கப்படும் என ஒபயசேகர கூறுவதை சமரக்கோன் மேற்கோள் காட்டுகிறார். இங்கே ஒபயசேகரவின் மேற்கோளை மொழி பெயர்ப்பதை விடுத்து ஆய்வாளர் க.தங்கேஸ்வரி அவர்களை மேற்கோள்காட்ட விரும்புகிறேன்.
“(கண்ணகி கோவில்) கதவு திறப்பதற்கு முன்னே ஊர்மக்கள் கூடிச் சகல ஏற்பாடுகளையும் தீர்மானிப்பர். கதவு திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே இரவு வண்ணான்கூய் போடுதல் இடம்பெறும். பிரசவம் ஆனோர், பூப்படைந்தோர், வீட்டுக்குத் தூரமானோர் ஊரைவிட்டு வெளியேறும்படி கூப்பாடு போடப்படும். அவர்கள் ஊரைவிட்டு வேறிடம் செல்வார்கள். இந்நிகழ்வுடன் புலால் உணவு உண்ணுதலும் விலக்கப்படும். இதனால் ஊரே சுத்தமடை யும். ஊர்மக்கள் கூடி ஆலயவளவு தொடக்கம் அயல் முழுவதையும் சுத்தம் செய்வர். (க.தங்கேஸ்வரி கிழக்கிலங்கை வழிபாட்டுப்பாரம்பரியங்கள் பக்171 மணிமேகலைப் பிரசுரம் (2008)) க. தங்கேஸ்வரி அவர்கள் மட்டக்களப்பு படுவான்கரையின்
15

Page 18
கண்ணகி அம்மன் கோவில் வழமைகள் பற்றியே எழுதுகிறார். கோவில் திருவிழாவின்போதுபேணப்படும்புனிதம் தொடர்பான இந்த நடைமுறைகள் ஏறக்குறைய பாணமையை ஒத்தனவாகவே உள்ளன. சமரக்கோன் பாணமையின் இந்தச் சடங்கியல் தூய்மையை பெண்ணை இழிவுபடுத்தும் அருவருப்பான நடைமுறையாகக் கருதுகிறார். (க.தங்கேஸ்வரி ஊரேசுத்தமடையும் என்று கருதுவதாகத் தெரிகிறது)
கொம்பு விளையாட்டு
கொம்பு விளையாட்டு கண்ணகியும் கோவலனும் ஆடிய விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டில் கண்ணகியே வெற்றி பெறுகிறாள். ஆனால் பாணமையில் ஆடப் படும் சடங்கு விளையாட்டில் பெண்தளிற்கு இடம் கிடையாது. கொம்பு விளையாட்டு நடை பெறும் இடத்திற்கு பெண்கள் வரவே கூடாது. ஆண்களே விளையாடும் இந்த விளையாட்டில் அப்பட்டமான ஆபாசமும், ஆபாசப்பேச்சும் வெளிப்படும். கொம்பு விளையாட்டில் ஈடுபடும் ஆண்கள்' உடபில'யடிபில என்ற பிரிவினராக பிரிந்து ஆட்டத்தில் ஈடுபடுவர். உட என்றால் மேல் என்ற பொருள் உடையது.'யட'என்றால் கீழ் என்ற பொருள் உடையது. உட’பிரிவுகோவலன் (சுளுபண்டார) என்ற ஆணையும்,'யட பிரிவு கண்ணகி (பத்தினித்தெய்வம்) என்ற பெண்ணையும் குறிப்பன. மேலே ஆண் கீழே பெண்’ என்ற ஆபாசத்தை வெளிப்படுத்தும் மறைபொருள் இங்கே வெளிப்படையானது. இந்த விநோத விளையாட்டுப்பற்றி கணநாத் ஒபயசேகர விரிவாக எழுதியிருக்கிறார். அலுப்புத்தட்டும் இந்த விபரிப்புக்களில் இருந்து சமரக்கோன் ஒரு முக்கியமான பந்தியை தேர்ந்து எடுத்து மேற்கோள் காட்டுகிறார்.
கொம்பு விளையாட்டினை நடத்தும் முக்கியஸ்தர்கள் சிலர் உள்ளனர். கோவிலின் நிலமே என்ற உத்தியோகத்தர் (தமிழில் 'வண்ணக்கர்’ எனப்படுவார்) சிங்களத்தில் பெத்மரலா' என்ற பெயரும் இவருக்கு உண்டு (இது பழைய வழக்கு) ஒருவர், மற்றவர் 'கப்புரால' இன்னொருவர் 'வட்டாண்டி இம்மூன்று பேரும் ஒவ்வொரு பிரிவுக்கும் இருப்பர். (மொத்தம் ஆறு பேர்) பாணமையில் இரண்டு கோவில்கள் உள்ளன. அவற்றின் நிலமேக்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொருவராகத் தலைமை வகிப்பர். கப்புரால (கப்புகனார்) இக்கோவில்களின் பூசகர்கள். வட்டாண்டிகள் என்போர்கோவில் வளவிற்குள் நடைபெறும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவோர்.(ஒபயசேகர 1984,386)
(மேற்குறித்த நூல் பக் 8-9)
இந்த மேற்கோளை ஆதாரம்காட்டி சமரக்கோன் நிறுவ விரும்பும் கருத்து முக்கியமானது. கோயில் நிலமே, கப்புரால, வட்டாண்டி இவர்கள் உலகியல் அதிகாரமும் ஆன்மிக அதிகாரமும் உடையவர்கள், யாவரும் ஆண்கள். இவர்கள் நிகழ்த்தும் சடங்குகள் ஆணாதிக்க அதிகார கட்டமைப்பின் வெளிப்பாடு. பண்பாட்டு மட்டத்தில் வெளிப்படும் அதிகாரம் கருத்தியல் மேலாண்மை உலகியல் மட்டத்திலும் ஒரே விதமாக வெளிப்படுகிறது என்று சமரக்கோன் கூறுகிறார். அவரது கூற்றாக வரும் பந்தி ஒன்றை எனது மொழிபெயர்ப்பில் தருகிறேன்.
16

“கொம்பு விளையாட்டு பற்றி ஒபயசேகரவின் வருணிப்பில் குறிப்பிட்டது போல் பசநாயக்க, கப்புரால, குருக்கள், வட்டாண்டி, பெத்மரல்ல ஆகிய ஆண்கள் குழு சடங்கின் நிகழ்த்துகையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த 'உத்தியோகத்தர்கள் சடங்கின் போது பெண்களை ஒதுக்கி வைக் கின்றனர். இதேபோலவே சுனாமிப் பேரிடர் நிகழ்ந்து முடிந்தவுடன் இன்னொரு ஆண்கள் குழு பெண்கள் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கியது. உணவு, மருந்து,உடை, வாழ்விடம் முதலியன இந்த அதிகாரக் குழுவின் தலைமையின் கீழ் விநியோகிக் கப்பட்டன. கிராமத்தின் சாதாரண ஆண் களும் பெண்களும் இந்த நிலைமை பற்றி எனக்கு களஆய்வின் போது எடுத்துக்கூறினர். புத்தகோவிலின் பிரதம குரு இந்தக் குழுவின் தலைவர். பாடசாலை அதிபர், நான்கு கிராமசேவகர்கள்,பிரதமகுருவின் சகோதரரும்பிரதேசசபைத் தலைவருமாக இருந்த அரசியல்பிரமுகர்(அக்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த இவரேபிரதேசசபையில்தலைவராக இருந்தார்) கிராமத்தின் வேறு முக்கியமானவர்களான ஆண்கள் சிலர் என்போர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். பாண்மையின் ஒரே ஒரு பெண் கிராமசேவகரை இவர்கள் இக்குழுவில் சேர்த்துக்கொள்ளவில்லை. பிரதம குருவும் அவரது சகோதரருமே தீர்மானங்கள் எடுப்பதில் பெரும்பங்கு கொண்டனர்”
(பக் 14-15)
கிராமத்தில் இயங்கும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், மரண உதவிச்சங்கம் முதலிய அனைத்து அமைப்புக்களும் இக்குழுவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கத்தொடங்கியதையும் சமரக்கோன் எடுத்துக் கூறுகிறார்.
நூலில் குறிப்பிடப்படும் பிற விடயங்கள்
நூலில் குறிப்பிடப்படும் ஏனைய விடயங்கள் சிலவும்
முக்கியமானவையேனும் இக் கட்டுரையில் அவற்றை
விரித்துரைக்க முடியாமையினால் சுருக்கிக் கூறுகிறேன்.
1. சுனாமி உதவி கிராமத்தில் குவியத்தொடங்கியதும்பெண்களின் கூலி உழைப்புமுறையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது. இதுவரை விவசாயக் கூலிகளாக இருந்தோர், கட்டிடம், நிர்மாணத் துறைக் கூலிகளாக மாறினர்.தமிழர்களிலும்,சிங்களவர்களிலும் சாதி அந்தஸ்தில் குறைந்த பிரிவினரின் பெண்களே பெரும்பான்மை கூலித் தொழிலாளர்களாக உழைத்தனர்.
2. சிங்கள மக்களில் அடித்தட்டில் உள்ள சாதி
பது சாதி இச்சாதியினர் பெரும்பாலோர் வறியவர்கள். இச்சாதிப்பெண்கள் கடற்கரையோரத்தின் மரநடுகைத்திட்டம் போன்ற NGOதிட்டங்களில் கூலி
உழைப்பாளர்களாக வேலைசெய்தனர்.
3. சுனாமியின் பின்னர் பெருமளவுநிதி
கிராமத்திற்கு வந்தது. இதன் பயனாக மீள்முதலாக்கம்(Recapitalisation) என்னும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 19
செயல்முறை பாணமையில் தொடங்கியது. விவசாய முறைமைக்கு மாறுபட்ட முதலாளித்துவ முறை புகுந்தது. பெண்களின் உழைப்பு கூலி உழைப்பு என்ற வடிவத்தில் பெறப்பட்டது. விவசாய முறையில் தீட்டு சிலவேலைகளில் இருந்து பெண்களை ஒதுக்கியது. அத்தோடு பெண் வீட்டுக்கு உரியவள் என்றும் கருதும் நிலை இருந்தது. இவையாவும் உடைத்தெறியப்பட்டு பெண் உழைப்பாளியாக மாறும் செயல்முறை ஆரம்பித்தது.
4. NGO மூலதனம் சமூக உட்கட்டமைப் புக்களில் முதலிடப்பட்டது. இது கிராமத் தின் உட்கட்டமைப்புகளில் முன்னேற் றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இத்திட்டங்களின் 70% செலவு நிர்வாகம், அமுலாக்கம் என்பனவற்றிற்கு செலவா கியதால் கிராமம் பெற்ற நன்மையின் அளவு ஒப்பீட்டளவில் குறைவே.
5. தாய்வழி உரிமை நிலவும் சமுதாயம்,எனக்கருதப்படும் பாணமையில் ஆணாதிக்கமே இருந்துவருகிறது. சுனாமிக்கு பிந்திய மறுவாழ்வு நடவடிக்கைகளிலே NGOக்கள் புகுந்ததன்மூலம் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அ) பெண்கள் பற்றிய மனப்பாங்கு. ஆ) பெண்களிடமும் திறன்களும் ஆற்றல்களும் உண்டு. இ) ஆண்களோடு இணைந்து பெண்களாலும் பலவேலைகளைச் செய்ய முடியும். சமதையாக பணியாற்ற முடியும். ஆகியன குறிப்பிடத்தகுந்த புதிய மாற்றங்கள். இம்மாற்றங்களை NGO மூலதனம் கொண்டு வந்தது. கொம்பு விளையாட்டு போன்ற மரபுவழிச் சடங்குகளில் காணப்படாத புதிய விடயங்கள் இவை.
ஆய்வுகூடப் பரிசோதனை
இரசாயனம், உயிரியல், பெளதீகம் போன்ற துறைகளில் ஆய்வுகூடப் பரிசோதனைகளை நிகழ்த்தலாம். சமூக விஞ்ஞானங்களில் இவ்வாறான ஆய்வுகூடப் பரிசோதனை கள் சாத்தியமில்லை. இருந்தபோதும் பாணமை இலங்கையின்
பருவமழை பொழிவதனால் வேை பயிரெல்லாம் செழிக்கிறது. வேை பருவமகள் பூத்திருந்தாள், பெரு பலகாலம் காத்திருந்தாள்! பெரிய
சிறுகுடில்தான் அவள் வீடு அறிே சிறகடித்துப் பறப்பதெப்போ? ஆசிரி அழகிருந்தும் அறிவிருந்தும் இந்த வறுமைதனில் வாடுகிறாள்! 66
மணவினையோ முயற்கொம்பு பருவ மனதளவில் மறுகுகிறாள். நரைதி பேதைமனம் பேதலித்தாள், கனவி பெருந்துயரில் மூழ்குகிறாள்! கன்னி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

இன்றைய பிரச்சினைகளைப் பரிசோதிப்பதற்கு ஒரு சிறந்த ஆய்வுகூடமாக உள்ளது. இனங்களின் ஒற்றுமை, சகவாழ்வு, ஐக்கியம் மூலம் நாட்டைக் கட்டி எழுப்புதல் ஆகியவற்றை செயல்முறையில் பரிசோதிப்பதற்கு 50க்கு 50மக்கள் வாழும் பாணமையை விட சிறந்த இடம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா? இனங்களின் சகவாழ்வுக்கான இருமாதிரிகள் நம்முன்னே உள்ளன. 1) சிறுபான்மைப்பண்பாடு மேலாதிக்கப் பண்பாட்டில் தன்னைக்கரைத்து சுயத்துவத்தை இழத்தல். இதனை
gift 6Gassir' (ASSIMILATION) Dirff
என்பர். i) பன்மைப்பண்பாட்டுமாதிரி
பன்மைப்பண்பாடுகள் அருகருகே
சுயத்துவத்தை இழக்காமல் செழுமையுடன் வளர்தல். இதனை insiflessibiglycósio (Multi-Culturalism) என்பர். అ* பாணமையில் முதல் மாதிரிதான் இடம் பெறுகிறது. தமிழ்மொழிக் கல்விக்கான ஆரம்ப பாடசாலையின் நிலை குறியீட்டு வடிவில் இதனை வெளிப்படுத்துகிறது. பாணமையில் இதுதான் மிகப்பொருத்தமான வழி என்றும் நடைமுறைச் சாத்தியமானது என்றும்கூடவாதிட இடமுண்டு. இருந்தாலும் இலங்கை முழுமைக்குமான முன்மாதிரி என இதனைக் கருதமுடியாது. ஒரு பிரதியை (Text) வாசிக்கும் போது அதன் ஆசிரியர் கருதாத விடயங்களையும் வாசகன் வர்சிக்கலாம் என்று பின் நவீனத்துவ வாதிகள் கூறுவர். சமரக்கோன் கருதாத விடயங்களை நாம் வாசிப்பதற்கும் இந்தப்பிரதிஉதவுகிறது.
ஆதாரம் ATHULASRIKUMARASAMARAKOON FEMALEGODDESSANDTSUNAMI,SSA COLOMBO(2010)
லயில்லா ஆடவர்க்கும் லசெயும் பேரழகி. நிதியில் சீதனமும் தொரு கல்வீடும்!
基
வாடு எழில் சிந்தும் யை அவளுக்கே ைெல என்றிருந்தால் தான் என்செய்வாள்?
மெலாம் கரைகிறது; ரையும் வருகிறது! ல் தான் கல்யாணம் யிவள் கணியாதகாயாக.
17

Page 20
மன்சூர்துரை மண்ணாசை மிக்கவராக இருந்தார். அதனால் அவரின் காணிகளுக்குப் பக்கத்துக் காணிச் சொந்தக்காரர்களுடன் அவருக்குச் சதா பிரச்சினைகள் இருந்தன. அவற்றுள் ஒரு சில, வேலிகள் சம்பந்தமானதாக இருந்திருக்கலாம். அல்லது, பக்கத்துக் காணிகளில் உள்ள உயர்ந்த மரம்மட்டைகளின் நிழல் சம்பந்தமானதாக இருந்திருக்கலாம். அதுவும்இல்லாவிடின் பக்கத்துக்காணியை அல்லது அதில் ஒருபகுதியை தனதாக்கிக்கொள்வதற்காகப் பேசிய பேரம் சம்பந்தமானதாக இருந்திருக்கலாம். இப்பிரச்சினைகளுக்காக அவர் சில நேரங்களில் அடுத்தவர்களுடன் முரண்பட்டிருக்கிறார். சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறார். வழக்குப் பேசியிருக்கிறார். அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்திருக்கிறார். இவை பலிக்காத சந்தர்ப்பங்களில் தந்திரமாகச் செயற்பட்டு, சுமுகமான முறைகளில் மற்றையவர்களின் காணிபூமிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றார்.
இவற்றையெல்லாம் செய்வதற்கு அவருக்குப்பண பலம் இருந்தது. ஆட்பலம் இருந்தது. அரசியல் பலம் இருந்தது. அத்துடன் பள்ளிவாசல் நிர்வாகசபையின் அங்கத்துவமும் இருந்தது. அதனால் அவரை எதிர்த்துப் பேச அங்கு எவரும் முன்வரவில்லை. ஆனால் மன்சூர் துரையின் மனைவி மக்களும் குடும்ப உறவினர்களும் அவரை நல்வழிப்படுத்த சதா முயற்சிசெய்துகொண்டே இருந்தனர்.
ஒரு நாள் மன்சூர் துரையின் மகன் அகீல் மிகவும் ஆத்திரத்துடன் தனது தாயிடம் வந்தான்.
“உம்மா, வாப்பா செய்யிர வேலகளால எகளுக்கு ஊர்ல மொகம் நீட்டஏழாமஈக்கு. அதனால், அவர இந்த மொறயாவது ஹஜ்ஜுக்கு அனுப்பி வச்சப் பாருங்கோ. அவர் ஹஜ்ஜு செஞ்சிட்டு வந்ததுக்குப் பிறகாவது திருந்துவாரா என்டு செல்லிப்பாப்போம்”
அதன்படி ஒருநாள் இரவு, மன்சூர் துரை உணவருந்தி விட்டு ஒய்வாக இருக்கும்போது, அவரது மனைவி ஆத்திபா நோனா அவரிடம் வந்தாள். அவளுடைய கைகளில் சுடச்சுட கோப்பி ஒரு கோப்பை இருந்தது. அதை அவள் மேசை மீது வைத்து விட்டு, அவருக்கு எதிரே இருந்த கதிரையில்
18
 

உட்கார்ந்துகொண்டாள்.
“கூலிவேல செய்ற ஜெமால் நானா கூடஹஜ்ஜுசெய்யப்போறாராம். அதனால அடுத்த வருஷமாவது நாங்களும் ஹஜ்ஜுக்குப் போக நிய்யத்துவச்சிக் கொள்வோமே.”
“இன்ஷா அல்லா போவோம், போவோம்”
“நான் எப்ப ஹஜ்ஜுக்குப் பயணத்த ஞாபகப்படுத்தினாலும் நீங்க இதே பதிலத்தான் செல்லுரீங்க. இங்க கேளுங்கோ, நாங்க மகள் ரெண்டு பேரயும் நல்ல எடங்களுக்குக் கலியாணம் கட்டிக் குடுத்திட்டோம். மகனுக்கும் கலியாணம் முடிச்சி வச்சிட்டோம். பேரன் பேத்திகளயும் கண்டுட்டோம். இந்த உலகத்துல எத்தனயோ வசதிவாய்ப்புகள அனுபவிச்சிட்டோம் மறுமக்கிச் செய்யவேண்டிய எத்தனையோ கடமகளயும் செஞ்சிச்டோம். அதனால ஹஜ் கடமயையும் நெறவேத்தினாத்தான் அதெல்லாம் சம்பூர்ணமாகும்.”
“சரி, ஆத்திபா சரி. தீர்ப்பு வாரத்துக்கு இன்னும் மூனே மூணு வழக்குத்தான் ஈக்கு. அந்த மூனு தீர்ப்பும் வந்ததுக்குப் பொறகு நாங்க ஆறுதலா ஹஜ் பயணத்த வச்சிக் கொள்வோமே”
நீங்களும் ஒங்கட வழக்குத் தீர்ப்புகளும் அது சரி இப்ப ஈக்கிற மூனுவழக்கும் யார் யாருக்கு எதிராவேன்?”
“ஏன்ட தம்பி ஈக்கிறானே மம்ம ஹசீம். அவனுக்கும் எனக்கும் எடயிலஎகடஊட்டுப்பங்குகளுக்கு ஈக்கிறவழக்கு. அடுத்தது, அக்கரேல ஈக்கிறானே சாதிகீன் அந்தக் கபுரு வெட்டித் திரியிறவன். அவன, அவன்ட, ஊட்டுள ஈந்து வெளியே போடுற வழக்கு. மத்த வழக்கு, ஒன்ட தங்கச்சி அனீசாவோடஈக்கிறரோட்டு வழக்குத்தான்.”
“யா அல்லா இது என்னத் தென் நீங்க? தான் விரும்புறத்தத்தான் தன்டசகோதரனும் விரும்புறான்' என்டு சசூல் நாயகங்கள்ட ஹதீஸ் ஒன்டும் ஈக்க, எங்களுக்குள்ளேயே நாங்க வழக்குக் கணக்குப் பேசினா எப்பிடியென்? ஒகட தம்பி நாலஞ்சி கொமரு குட்டி உள்ள மனிஷன். அந்தக் கபுருவெட்டுறசாதிகீன் நானா, கூலிவேல செஞ்சிகுடும்பம் காப்பாத்துறவரு.எகடதங்கச்சிதான். பெரிய சீமாட்டியா? என்னமோ அவட மகன் ஒத்தன் சவூதீல ஈக்குறான். அவளவுதானே. எகளுக்கு ஈக்குற காணி பூமி, சொத்து சொகம், காசி பணம் போதாதா? அதனால இனி வழக்குக் கணக்கு ஒன்டும் தேவ இல்ல. எல்லாரோடயும் சமாதானம் ஒன்டுக்கு வந்து, வழக்குக் கணக்குப் பேசுறத்த உட்டுப் போடுங்கோ. அப்ப அல்லா எங்களுக்கு இன்னும் பரகத்துச் செய்வான். நாங்க அடுத்த வருஷமாவது ஹஜ்ஜுக்குப்போக நிய்யத்துவச்சிக் கொள்வோம்.
"அல்லாட கிருபயால அடுத்த வருஷமாகக்குள்ள இந்த மூணு வழக்குகளுக்கும் தீர்ப்புவந்திடும்.ஆத்திபா, ஒனக்கொரு விஷயம் தெரியுமா? நான் இதுவர அறுபத்தேழுவழக்குப்பேசி அறுபத்தேழு வழக்குலயும் வெத்தி எடுத்த ஆள். இந்த ஊர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 21
ஜனங்கள் என்ன சென்னாலும் நான் வழக்குப் பேசுற விஷயத்துல அல்லா என்னோட தான் ஈக்கிறான். அதனால இந்த மூனு வழக்கிலயும் நான்தான் வெத்தி எடுப்பேன். அப்ப, நான் எழுபது வழக்குப் பேசி, எழுபது வழக்குலயும் வெத்தி எடுத்த ஆளாயிடுவேன். இதுல ஈந்து நீ ஒண்டு வெலங்கிக் கொள்ள வேணும், நியாயம் ஏன்ட பக்கத்துலதான் ஈக்கு என்டத்த, அது எனக்குப்போல ஒனக்கும் பெருமதான்.
“காசி பணத்த வீசிக் செலவழிச்சிறத்தாலயும் பெருக்கோர்மார்ட் கெட்டித் தனத்தாலயம் பொய்ச்சாச்சி செல்லவச்சிறத்தாலயம் நீங்க எடுத்த வெத்திகளுக்கு நான் பெருமப்படுறத்த விட, இந்த ஊர்மனிஷர் கதச்சிறகதகளுக்கு வெக்கப்படுகிறேன்.”
ஊருவாய மூட ஒல மூடி இல்ல என்டது, ஒனக்குத் தெரியாதா? அதுசரி,ஊருலஎன்னப்பத்திஅப்பிடிஎன்னதான் கதச்சிறாங்க?”
"நாங்க மவ்தானா எங்களக் கொண்டத்து அடக்கம் செய்யிறது ஆரடிநீட்டமுள்ள கபுரொன்டுக்குள்ளயாம் அப்பிடி ஈக்க, நீங்கஊருமனிஷர்டகாணிபூமிகளவழக்குக் கணக்குப் பேசி அபகரிச்சுக் கொண்டது,அல்லா ரசூலுக்குப்பொருத்தம் இல்லியாம். இன்னுமொரு விஷயமும் செல்லுறாங்க. ஒகட மொகத்தப் பாத்துக் கொண்டு நான் அந்த விஷயத்த எப்பிடித்தான் செல்வேனோ எனக்குத் தெரியா?”
இங்க பாரு ஆத்திபா, நான் ஊரு மனிஷர்ட கதகளுக்கெல்லாம் பயப்புடுற ஆள் இல்ல. அதனால அவங்க கதச்சிறஎந்த விஷயத்தயும் எனக்கிட்டதாராளமாகச்செல்லு” அதைச் சொல்வதற்கு ஆத்திபாவின் வாய் கூசியது. அதனால் அவள் ஒருமுறை தனது கணவரின் முகத்தை கீழ் கண்களால் நோட்டமிட்டுக்கொண்டாள்.
"ஆத்திபா, என்ன இன்னும் யோசிச்சிறாய்? இப்ப நீ செல்ல வந்த விஷயத்த இனிபயப்புடாமச் செல்லுபுள்ளே”
“நீங்கமல்தாகி கபுரொன்டுல அடக்கம் செஞ்சா, அந்தக் கபுரு ஒகள நாலு பொறத்தாலயம் நெருக்குமாம். அப்ப ஒகட இரு பொறத்து விலா எலும்புகளும் ஒன்டோடு ஒன்டு மோதுமாம், கபுரு செய்யிற அந்த ஆச்சினய ஒகளாலதாங்கிக் கொள்ள ஏழாமப் போகுமாம். அடுத்த வங்கட காணிபூமிகள அபகரிச்சிறவங்களப் பத்தி ஹதீஸ்ல அப்பிடிச் செல்லப்பட்டு ஈக்குதாம்”
“ஹதீஸ்ஸ அப்பிடிச் செல்லப்பட்டு ஈந்தத்துக்கு நான் யார்ட் காணி பூமிகளயும் அபகரிச்சிக் கொள்ள இல்லயே. அந்தக் கபுருவெட்டி சாதிகீன்தான் இந்தக்கதயெல்லாத்தயும் கதச்சிக்கொண்டு திரியுறான் போல”
"ஐயோ, பாவம் அந்த மனிஷன். அவர் கூலிவேலசெஞ்சி குடும்பம் காப்பத்துறவரு”
"ஆத்தியா, அளவுக்கு மிச்சமா நீ அவனுக்கு வெள்ள வெச்சிறாய்.சாதிகீன, அவன்டஊட்டஉட்டுவெரட்டாட்டி நான் மன்சூர் தொரயல்ல."
மன்சூர் துரை அன்று சபதமிட்டது போல் அவருக்குச் சாதகமாகவே சாதிகீனுக்கு எதிராக இருந்த வழக்கில் தீர்ப்புக் கிடைத்து விட்டது. அதன்படி பிஸ்கல் அதிகாரிகளை வரவழைத்து, சாதிகீன் வீட்டுச் சாமான் சட்டிகளை வெளியே தூக்கி எறிந்து, அவனின் குழந்தை குட்டிகள் பதறப் பதற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

அவனை வீட்டை விட்டு வெளியே துரத்துவதற்கே, மன்சூர் துரை திட்டம் வகுத்துஇருந்தாலும் வழக்குத் தீர்ப்புக் கிடைத்த ஒரு சில தினங்களில், சாதிகீன் தனது வீட்டை விட்டு அமைதியாக வெளியேறிவிட்டான்.
மன்சூர் துரையின் சூழ்ச்சியொன்று பழிக்க, பரம்பரை பரம்பரையாக சாதிகீன் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் இருந்து அவன் வெளியேறும்போது, அவனின் மனைவி, மக்கள் கதறி அழுததை அவனால் சகிக்கமுடியவில்லை. ஏற்கனவேமன்சூர் துரையை எவ்வாறு சரி பழி தீர்க்க, அவன் வைத்திருந்த வைராக்கியம் அந்தக் காட்சியைக் காண மேலும் ஒருபடி கூடி விட்டது.
“மன்சூர் தொர, நீங்க பணக்காரன். நான் ஏழ. கருங்கல்லுல தலய மோதினா தலதான் ஒடஞ்சி போகும். அதனால நான் வெலகிப்போறேன். எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும். அப்பநான் பாத்துக் கொள்றேன்.”
வீட்டை விட்டு வெளியேறும்போது அவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்ட சாதிகீன், ஊர் மக்கள் சேர்ந்து மையவாடியின் ஓர் எல்லையில் அமைத்துக் கொடுத்த சிறு குடிசையொன்றில் தனது மனைவி மக்களுடன் அன்று குடியேறிவிட்டான்.
அன்றிரவுமன்சூர்துரை, ஆத்திபா மூலமாகவே அந்தச் செய்தியை அறிந்துகொண்டார்.
19

Page 22
'பாவம், சாதிகீன் நானா. அவர் ஈந்த ஊட்ட அவருக்கே உட்டுக் குடுக்க ஈந்திச்சி. இப்பமையவாடியில பெய்த்துபுள்ள குட்டிகளோட அவர் என்னபாடுபடுகிறாரோ தெரியா?
“ஆத்திபா, கபுரு வெட்டுறவணுக்கு மையவடிதான் பொருத்தமான எடம். அதனால நாங்க என்னத்துக்கு அதப்பத்திக்கவலப்படவேணும்.”
சாதிகீன் மையவாடியில் குடியிருந்ததைப் பற்றி மன்சூர் துரை கவலை கொள்ள வில்லை என்பது உண்மைதான். எனினும், அங்கே சாதிகீனின் குடிசையில் குடியிருந்தவர்களுக்கு அது கவலை அளிப்பதாகவேஇருந்தது. அன்றுமாலை இருளோடு குளிரும் சேர்ந்து வந்து அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டது. இடையிடையே வீசிய காற்றோடு குப்பி விளக்கின் சுடர் போராடிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு வெட்டுக் கிளிகளின் சத்தம் காதைத் துளைத்தது. ஆந்தையொன்று தொடர்ந்து அலறிக் கொண்டிருக்க இடையிடையே நரியொன்று ஊளையிட்டது. அவற்றுக்கு மேலதிகமாக அவர்களது பிள்ளைகளின் உள்ளங்களில் பயம் குடிகொண்டு விட்டது.
“உம்மா, எனக்குப் பயமா ஈக்கு உம்மா. பேய், பிசாசுகள் வந்து எகட கழுத்த நெறிச்சிக் கொன்டு போடுமோ தெரியா உம்மா?”
சாதிகீனின் மனைவியிடம் ஓடி வந்த அவர்களது மூத்த சிறுவன், அவளது கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். அப்போது அவள் ஈரமான சமையறையில், பச்சை விறகுக் கட்டைகளுடன் அடுப்பு நெருப்புக்காகப் போராடிக் கொண்டிருந்தாள். -
"ஏன்டவாப்பா,நீஒன்டுக்கும் கவலப்படாதேவாப்ப படச்ச நாயன் எகளக் காப்பாத்துவான். நீ வா, நான் ஒனக்கு ஆயத்துக்குரிஷி சூரத்த ஓதி ஊதிவிடுகிறேன்.”
அவள் தனது மைந்தனை மடியில் அமர வைத்து, ஆயத்துக் குரிஷி சூரத்தை மூன்று முறை ஒதி, தலையில் இருந்து கால் வரை ஊதி விட்டாள். அதன் பிறகு அவள் மீண்டும் அடுப்புடன் போராட அங்கே சாதிகீனின் துணைக்கு வந்திருந்த அவனின் நண்பர்கள் இருவர், அவனுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.
“மன்சூர் தொர அடுத்தவனஏமாத்திவழக்குப்பேசி,பொய் சாக்கி செல்லி இப்பிடிக் காணி பூமி சம்பாரிச்சத்துக்கு, போகக்குள்ள அவர் அதெல்லாத்தயும் கபுருள்ளுக்குக் கொண்டுபோவாரா?”
"அவர்மவ்தான அன்டெய்க்குநாங்க, நீங்கஹயாத்தோட ஈந்தா, அவரக்கபுருநெறுக்கிறத்த எகடகண்ணாலயே பாக்க ஏழுமாயிக்கும்.”
“இப்பிடி மனிஷர் உலகத்துல ஈக்கத்தான் வேணுமா? மன்சூர் தொர, அவர்டதம்பி ஹாசீம் காக்காவோடயும் காணி வழக்குப்பேசுறாரு”
"நான் அஸரு நேரம் பள்ளிக்குப் போகக்குள்ள ஹாசீம் காக்கா, மன்சூர் தொர ஊட்டுப்பக்கமா பெய்த்துக் கொண்டிக்குறத்தக் கண்டேன்”
அவர்கள் கதைத்துக் கொண்டாவாறு, அன்று மன்சூர் துரை வீட்டுக்கு, ஹாசிம் செல்வதற்கு காரணமொன்று இருந்தது.
20

சகோதரர்களான தமக்குள் வழக்குவம்புகள் இருந்தாலும் தனது வீட்டில் நடக்கும் முதலாவது திருமணத்திற்கு, தனது சகோதரனுக்கு அழைப்பு விடுப்பதை ஹாசீம் பெருமிதமாக் கொண்டார். அதன் படி, அவர் தனது சகோதரன் ஒய்வாக இருக்கும் ஒரு நேரம் பார்த்து, மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக மன்சூர் துரையின் வீட்டுக்குச் சென்றார்.
“காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.” “வஅலைக்கு முஸ்ஸலாம். ஆ. இது மம்மஹாசீம் அல்லேன். ஹயாத்துக்கு ஹஜ்ஜு செய்ய வந்தீக்குறாய் போல. ஆத்திபா இங்கே வா. வந்தீரது ஆரெனென்டுசெல்லிப்பாக்க ஓடி வா.”
அஸர் நேரத் தொழுகையை முடித்து. துஆ ஒதிக் கொண்டிருந்த ஆத்திபா, ஓடிவந்து கதவுத்திரைக்குப்பின்னால் நின்ற வண்ணம் வந்திருப்பது யார் என்பதை அவதானித்தாள். “காக்கா மூத்த மகள்ட கலியாணத்துக்கு நாள் குறிச்சி அதுக்கேத்தஎல்லாஏற்பாடுகளையும் செஞ்சிட்டோம். நீங்களும் மதினியும்புள்ளகளும் நேர காலத்தோடவந்து கலியாணத்தை செறப்பா நெறவேத்தித்தர வேணும்.”
"மம்மா ஹாசீம், ஒன்டஊட்டுக்கலியாணத்த செறப்பாக செய்ய நான் வராம வேறுயாருவரவென். அதுசரி,கலியாணம் ஒன்டு எடுக்கிறத்துக்கு ஒனக்கு எங்கால அவளவு காசிபணம்?”
“காக்கா, ஏன்டா ஊட்டுப் பங்க ஈடுவச்சி, ஒரு தொகப் பணம் கடனுக்கு எடுத்துத்தான். நான் மகன்ட கலியாணத்துக்கு செலவழிச்சிறேன்.”
அதன் பிறகு ஹாசீமைத் தீர விசாரிக்க மன்சூர் துரை, வீட்டை ஈடெடுத்தவர்,கடன்தொகை, வட்டி வீதம் என்பவற்றை அறிந்துகொண்டார்.
“தம்பி, நானும் நீயும் வழக்குப் பேசுறது உண்ம. ஆனா ஊட்டஈடுவச்சிறத்துக்கு முந்திஎனக்கிட்ட ஒருவாத்த கேக்க ஈந்திச்சி அந்த உம்மா,வாப்பாவாழ்ந்த ஊடு.அத எழக்கிறதாக ஈந்தா அது எகடஉம்மா, வாப்பக்குச் செய்யிறதுரோகம்,தம்பி, அதனால நாங்க இப்பிடிச் செய்வோம். நீ ஊட்ட ஈடு வச்சி எடுத்த பணத்தப்போலநாலுமடங்குப்பணத்த,நான் ஒனக்குத் தாரேன். நீ ஈட்ட மீண்டு ஊட்டுப் பங்க எனக்குச் சொந்தமா எழுதித்தா.அதுக்குப்பொறகுநாங்க வழக்க வாபஸ் வாங்கிக் கொள்வோம்.உம்மா,வாப்பா வாழ்ந்த ஊட்டுக்குகாக்கா, தம்பி அடிச்சிப்புடிச்சிக் கொள்றதும் வழக்குக் கணக்குப் பேசுறதும் பாக்கிற மனிஷருக்கு அழகில்ல ராஜா. அதோட, நான் ஒன்னோட வழக்குப் பேசுறத்துக்கு ஒன்ட மதினியும் என்னக் கொற செல்லுறா. இந்த வழக்குக் கணக்குப் பேசுற விஷயங்களுள் ஈந்துநானும் விடுபட்டு, அடுத்த வருஷமாவது ஹஜ்ஜுக்குப்போக வேணும்”
“காக்கா, ஒகட யோசன என்டா நல்லம். ஏன்ட ஊட்டுப்பங்க ஒங்கட பேருல எழுதித் தந்திட்டு நான் எங்க போகவென்?”
"ஐயோ தம்பி, நீநல்ல கதகதச்சிறாய நானும் நீயும் ஒரு உம்மாடகொடலப்பிச்சிக் கொண்டுபொறந்த சகோதரங்கள். அப்பிடிஈக்க, ஒன்னநான் ரோட்டுலனறக்குவேனா?ஊடுதான் என்டபேருலஈக்கும். மத்தப்படி ஊட்டுட ஆட்சிஒன்டகையில
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 23
தான் ஈக்கும். அதனால் ஒனக்கு விருப்பமான காலம் வர, நீ அந்த ஊட்டுல, புள்ள குட்டியோட சந்தோஷமா இரி.அதோடநீ புள்ள குட்டிக் காரன். கஷ்ட நஷ்டப் பட்டவன். ஒன்ட நன்மக்கித்தான். நான் இதெல்லாத்தயும் சென்னேன். கடன் பட்டா வட்டி குடுக்க வேண்டி வரும். அந்த வட்டி குட்டி போடும் என்டொரு கதயும் ஈக்கு. அதனால ஊட்டுக்குப் பெய்த்து, மதினியிடமும் இது சம்பந்தமாக கதச்சி, ஆர அமர யோசிச்சி, ஒரு நல்ல முடிவுக்கு வந்த எனக்கிட்ட செல்லு. அதுக்குப் பொறகு நாங்க விஷயங்கள முடிச்சிக்கொள்வோம்.”
அப்போது ஆத்திபா வாழைப்பழம், பலகாரம் என்பவற்றுடன் தேநீர் ஒரு கோப்பையையும் தட்டொன்றில் வைத்து எடுத்துக்கொண்டு அங்கே வந்தாள்.
“ஆத்திபா, தம்பிக்கும் எனக்கும் இனி வழக்குக் கணக்குஇல்ல. இப்பநாங்க ரெண்டு பேரும் சுல்ஹாயிட்டோம்” அதைக் கேட்ட ஆத்திபாமகிழ்ச்சியில்பூரித்துப்போனாள். “அல்ஹம்துவில்லா” அப்ப இனி எகட தங்கச்சியோட ஈக்கிறறோட்டு வழக்கு மட்டுந்தான் ஈக்கு. அவவோடயும் ஒரு சமாதானத்துக்கு வந்து, வழக்குப்பேசுறத்த இனி உட்டுப்போடுங்கோ. நாங்க ரெண்டு பேரும் அடுத்த வருஷம் ஹஜ்ஜுக்குப்போக நிய்யத்துவச்சிக் கொள்வோம்.
ஹசீம், தேநீர் விருந்துபசாரத்தின் பின் மிகவும் சந்தோசத்துடன் அவருடைய வீட்டுக்கு வந்தார். தனது சகோதரன் சொன்ன விடயங்களை, மனைவிநூஹாவுடனும் கலந்துரையாடினார். அவளும் அதற்கு விருப்பப்பட, மகளின் திருமணத்துக்கு முன்பே, அவர்கள் முடிவெடுத்ததன் பிரகாரம் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது. வீட்டை அடகு வைத்த பணத்தைப் போல நான்கு மடங்கு ஹாசீமுக்குக் கிடைக்க, வீட்டுப் பங்கு மன்சூர் துரைக்குக் கைமாறியது. பெருந்தொகைப்பணம் தமக்குக் கிடைத்ததையிட்டு ஹாசீம் மகிழ்ந்ததை விட, மொத்த வீடும் தனக்குக் கிடைத்ததையிட்டு மன்சூர் துரைமகிழ்ச்சியடைந்தார்.
“ஊர் மனிஷர் ஒவ்வொரு கதகதச்சத்துக்கு, மன்சூர் மச்சான் நல்ல மனிஷன். இந்த ஊட்ட நாங்க அவருக்கு வித்ததுக்கு பொறகும் ஊட்டுளளங்களுக்கு தொடர்ந்துஈக்கச் சென்னது எவளவு பெரிய விஷயம்.”
“நூஹா, அது மட்டுமல்ல, ஊட்ட ஈடுவச்சத்தப் போல நாலு மடங்குப் பணமும் எகளுக்குக் கெடச்சீக்கு. அதனால ஊட்ட மீண்டுட்டு, மிஞ்சிற பணத்துக்கு யாவாரம் தொழில் ஒன்டச் செஞ்சி சரி, பொழச்சித்தின்னலாம். நாங்க நெனச்ச மாதிரி இல்ல, எங்கடகாக்க நல்ல மனிஷன்”
ஹாசீமும் தனது சகோதரனைப்பற்றிபெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் அந்தப் பெருமை வெகுநாட்கள் நீடிக்க வில்லை.
“நூஹா, காக்கா பெருக்கோர்நோட்டீஸ் ஒன்டு அனுப்பி வச்சீக்குறார்.”
“நோட்டிஸ்ல என்ன ஈக்கு என்டு அவசரமாப் படிச்சிப்பாருங்கோ’
“நூஹா. இதுல ஈக்கு, நாங்க இன்னும் மூணு மாசத்துக்குள்ள இந்த ஊட்டுளஈந்துவெளியேறவேணுமாம்.
“அல்லாட காவல், நாங்க இந்த அவசரத்துல எங்க போகவென்?”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

“நான் காக்காவச் சந்திச்சி, இது என்ன, ஏது என்டு. ‘கேட்டிட்டு ஓடி வாரேன்.”உடனே ஹாசீம், மன்சூர் துரையின்
வீட்டுக்குச் சென்றார்.
“ஆ. இது. மம்ம ஹாசீமல்லேன். வார. வா. நான் நெனெச்சேன் நீ வருவாயென்டு.”
“காக்கா,என்ன இது? நீங்கபெருக்கோர் மூலம் எனக்கு நோட்டீஸ் ஒன்டு அனுப்பி வச்சீக்கிறது?”
“தம்பி, நீஈக்கிற ஊடு இப்பனனக்குச் சொந்தமான ஊடு நீஇன்னும் மூனுமாசத்துல ஊட்ட உட்டு வெளியேற வேணும் என்டு, அந்த நோட்டீஸ்ல ஈக்கும்தான். அதப்பத்தி நீ கவலப்படாதே. நீ என்னோட கூடப் பொறந்த தம்பியல்லென். அதனால மூணு மாசத்துக் கதய மறந்திடு. நீ இன்னும் ஆறு மாசத்துல எனக்கு ஊட்டக்காலிபண்ணித்தந்திடு
“காக்கா, நான் புள்ள குட்டிகளோடஎங்க போகவென்?” “தம்பி போறத்துக்கா எடமில்ல. அந்த கபுரு வெட்டி சாதிகீனே மய்யவாடியில பெய்த்து ஊடுகட்டிக் கொண்டு சந்தோசமா ஈக்குறான். அதுபோல ஒனக்குப் புரிச்ச எடமொன்டு, இந்த ஊரில எங்க சரிஈக்காதென்?”
“ஐயோகாக்கா, நான் அன்டு ஒகட பேச்ச கேட்டத்தால இன்டுமோசம் பெய்த்திட்டேன்.”
“தம்பி அல்லா ஈக்கிறான்.அதனாலநீஒன்டுக்கும்கவலப் பாதேதாயும்புள்ளயுமாய்ஈந்தாலும்வாயும்வயிறும்வேறஎன்டு கதயொன்டு ஈக்கு, நாங்க அது மாதிரி நடந்து கொள்வோம். அது எனக்கும் நல்லம், ஒனக்கும் நல்லம்"
தனது சகோதரனிடம் அதற்கு மேல் எதயும் கதைக்க ஹாசீம் விரும்பவில்லை.அதனால்மிகவும் மனவேதனையுடன் அவர் வீடு நோக்கி வந்தார். அது அவ்வாறிருக்க மன்சூர் துரைக்கும் ஹாசீமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை, ஆத்திபா திரை மறைவில் நின்று அவதானித்துக் கொண்டுதான் இருந்தாள். அங்கிருந்து ஹாசீம் அகன்று செல்ல, ஆத்திபா மன்சூர் துரைக்கு முன்னால் வந்துநின்றுகொண்டாள்.
“பூசணிக்காய வெட்டின கத்தியால சொறக்காயயும் வெட்டிட்டீங்க பாவம், ஹாசீம் மச்சான். நாலஞ்சி புள்ள குட்டிகளோட அவர் இப்ப எங்க போவாறே தெரியா?”
“ஆத்திபா, கடல்ல பெரிய மீனும் ஈக்கு. சின்ன மீனும் ஈக்கு. பெரிய மீனுக்குச் சின்ன மீன் எரயாக வேணுமே தவிர, சின்ன மீனால பெரிய மீன ஒரு நாளும் எரயாக எடுக்க முடியாது. அதுபோலத்தான் காணி,பூமிவிஷயங்களும், அதை நீ வெளங்கிக் கொண்டா அடிக்கடி வந்து இப்பிடி என்னோட பிரச்சினப்படமாட்டாய்.
“நீங்கசெல்லுரபெரிய மீன், சின்னமீன் கதையெல்லாம் எனக்கு வெலங்க இல்ல பாவம் அந்த ஏழ எளிய மனிஷர்.”
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. மன்சூர் துரை, ஹாசீமுக்குக்கொடுத்த ஆறுமாத சலுகைக்காலமும் நெருங்கி விட்டது.அதனால் எங்கு போவேன். என்ன செய்வேன். என்ற நிலைஹாசீமை வருத்தியது.அவர்களின் நிலை அவ்வாரிருக்க, மன்சூர் துரை திடீரென ஒருநாள் நோய் வாய்ப்பட்டுவிட்டார். அவருக்கு வந்ததோ மாரடைப்பு தனியார் வைத்தியசாலை யொன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், அன்றேகாலமாகிவிட்டார். அவர் என்ன குறை குற்றங்களை ஊர் மக்களுக்குச்
21

Page 24
செய்திருந்தாலும் ஊர் வழமைக்கு ஏற்ப, அன்று ஊரே அவரின் வீட்டுக்கு திரண்டு வந்து விட்டது. மய்யத்தைக் குளிப்பாட்ட, கபனிட சந்தூக்கை கொண்டுவர,கபுருவெட்டமீசான்பலகை செய்ய என மக்கள் நான்,நீஎன முந்திக் கொண்டனர்
சாதிகீனும் அவனுடைய சகாக்களும் கூட அங்கு வந்து விட்டனர். அவர்களுக்கு சாதிகீனே தலமை தாங்கவும் செய்தான்.கயுருவெட்டுவதற்காக அவர்களுக்குகூலியொன்று கொடுக்கப்படுவதில்லை. அதேபோல அதற்காக அவர்கள் கூலியொன்றை எதிர்பார்ப்பதுமில்லை. இறந்தவர்களுக்கு செய்யும் ஒரு நன்றிக் கடனாகவே அவர்கள் அந்தக் கடமையைக் கருதினார்கள். சாததிகீன் எப்போதும் செய்வதும் போல, மன்சூர் துரையின் மையத்தின் நீளத்தை அளந்து கொண்டு, தமது சகாக்களுடன் மையவாடியை நோக்கிச் சென்றான். குறிப்பிட்ட நேரத்துக்குள்.கபுரு வெட்டும் பணி முடிய, மையத்து ஊர்வலம் மையவாடியை வந்தடைந்துவிட்டது. ஊர் வழமைப்படி கபுருக்கு மேலால் மேல்கட்டி பிடித்து, பன்னீர் தெளிக்க குடும்பஉறவினர்கள் மையத்தைகபுருக்குள் வைக்க ஆயத்தமானார்கள்.அவர்களுடன்ஹாசீமும்இருந்தார்.
என்ன புதுமை மையத்தை உள்வாங்குவதற்கு கபுரு போதுமானதாக இருக்கவில்லை. கபுரைச் சுற்றியிருந்தவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, அங்கு சலசலப்பொன்று ஆரம்பித்துவிட்டது. அதை மீறிக்கொண்டு ஹாசீமின் குரல் ஒலித்தது. தனது சகோதரன் தந்திரமாகச் செயற்பட்டு, தனக்குத்துரோகமிழைத்திருந்தாலும் அவரின் சகோதரபாசம் அவரை விட்டுக்கொடுக்கவில்லை.
“கபுருவெட்டுறத்துல ஏதோ தப்புத்தவறு நடந்தீக்கலாம். அதனால நாங்க கபுருட நீள அகலத்த கூட்டிமய்யத்த அடக்கிப் போடுவோம்.
“உலகத்துல அவரவர் செஞ்ச காரியங்கள, அவரவர் அனுபவிச்சத்தான் வேணும். அதனால, கபுருட நீள அகலங்களைக் கூட்டி கபுரத் திரும்ப வெட்ட ஏழாது.
இரைதேடும் சாரை
ஓடிக் குடங்கரை
அரைகிறது போய் நின்று கத் வீட்டு சுவர் ஒரமாக அச் சாரையோ கடகம் கிடந்த கோழி அடைவச் கரை ஓரம் கடகம் கிடந்த இ ஓர் பெரிய இரைதேடும் கொட்டு மஞ்சள் சாரை சுவர் ஒரம் வந்து கோழி அடை கிடந்த அடைவைச்ச மு வாடை வரும் திக்கில் அத்தனையையு தேடி அலைகிறது கிடந்து புரள்கிற அந்த அடைவைச்ச அடைகிடந்த கே கோழி குடம் கரையில் சாரை வரும் அசப்பில் எச்சமிட்டு செட்டை சிலுப்பி செட்டை சிலிப்பி
உதறிப் பின் கொக்கரிக்கும்
22
உதறித்தினவெ

அதுக்கெல்லாம் எங்கலுக்கு நேரமில்ல. அதனாலகபுருஈக்கிற மாதிரிதான் மய்யத்த அடக்கம் செய்ய வேணும். அது மத்தவங்களுக்கும் ஒரு பாடமாக ஈக்க வேணும்.”
பெரிய மத்திசத்தின் பேச்சை எதிர்த்துப்பேச அங்கு எவரும் முன் வரவில்லை. அதனால் ஏற்கனவே வெட்டிய கபுருக்குள் மன்சூர் துரையின் மையத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் ஆயத்தமானார்கள். அந்தக் காட்சியைக் காண பலரும்முயற்சிசெய்ய, மையவாடி அல்லோலகல்லோலமடைந்து விட்டது. அதுமட்டுமல்ல அவர்கள் பலதையும் பத்தையும் கதைத்துக்கொள்ளவும் முற்பாட்டார்கள்.
“அல்லா கண்முன்னே காரணிக்க காட்டுறான்.” “இது அல்லாடசோதன. மத்தவங்களுக்கு ஒரு பாடம்” “மனிஷர் மண்ணுக்கு ரெண்டகம் செஞ்சா, மண் மனிஷருக்கு ரெண்டகம் செய்யும்."வியப்பு அதிர்ச்சி, எள்ளல், பரிதாபம் என பல்வேறு உணர்ச்சிகள் அங்கிருந்தவர்களின் முகங்களில் துள்ள, உறவினர்கள் மையத்தை கபுருக்குள் வைக்க சிரம்ப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சியைக் கண்ணுற்ற மன்சூர் துரையின் மாமனாரான அப்துல் காதர் ஹாஜியாரை ஒருபுறம் கோபமும் வாட்ட, அவரின் குரல் ஓங்கி ஒலித்தது.
“மருமகன் மத்தவங்கட காணி பூமிய அபகரிச்சி, மனிஷருக்குச் செஞ்ச அநியாயங்கள இப்ப அனுபவிச்சிறாரு. டேய், இனி கையக் கால ஒடச்சிச்சரி அவன கபுருக்குள்ள வைங்கடா”
அதனால் மையத்து அரைகுறையாக கபுருக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அந்தக் காட்சி, மன்சூர் துரையின் உறவினர்களுக்கு ஒரு குறையாக இருந்தாலும் அது சாதிகீனுக்கு ஒரு நிறைவாகவே இருந்தது. அவன் மண் வெட்டியை தனது கழுத்தில் வைத்தவாறு கூட்டத்தோடு கூட்டமாக கலைந்து சென்றான்.
கபுரின்நீல அகலம் குறைந்ததா? இல்லை குறைக்கப்பட்டதா? என்பதை அவர்களுல் சாதிகீன் மட்டும்தான் சரியாக அறிந்து வைத்திருந்தான்.
யில் தும்
. மதிவிதித்த விதிஅல்லது a2uglaffdia5ü
- கல்வயல் குமாரசாமி
FN
டுக்கும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 25
அந்த ஆலமரம்!
சடைத்துப் பருத்து விழுதுகள் “விழுத்தி’ நிமிர்ந்து நின்றது
நாடி வருவோர்க்கு குடை நிழலும் தந்தது.
பரந்த அந்த நிழலில் அண்டி நின்று நீயும் தான் சுகம் அநுபவித்தாய் சமர்த்துப் பிள்ளையாய் பாசாங்கும் செய்தாய்.
ஊரான் பிள்ளையென உதறாமல் உன்னையும் தான் அந்தப் பெருவிருட்சம் அரவணைத்துக் கொண்டது
விழுதுகளோடு விழுதாய் நீஆடியோடி விளையாடினாய். எதிலும் எப்போழுதும் முதலிடம் நாடினாய் உனக்கு மட்டும் 'இரண்டு’ வேண்டுமென்று அடம்பிடித்தாய்.
விழுதுகளில் தொங்கிக்கொண்டு நீபுரிந்த சேட்டைகளையும் சகோதர வாஞ்சையோடு
9j6Ꮱ06ᎧᎫ
சகித்துக் கொண்டன ஆலமரத்தின் விழுதுகள் ‘தாம்’ என்ற உணர்வோடு.
மனவிருத்தி காணாத பிள்ளையாய் நீ, ‘பேய் வளர்த்தி’ கொண்டாய்
56,60)6CUs) (Og 60T60)60TO பேணி வளர்த்ததால்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

i
உன் வளர்த்தி’ கண்டு ஆலமரம் அகமகிழ்ந்தது.
தீய சகவாசம் உன்னைச் சூழ்ந்தது. குரோத உணர்வு உன் உள்ளத்தில் குதிர்ந்தது.
உனக்கு நிழல் தந்த அந்த ஆலமரத்தின் விழுதுகளையே நீ வீழ்த்த எண்ணினாய்.
ஆலமரத்தின் அருகாய் நின்று ஓங்கி வளர்ந்த அரசமரத்திலும் விழுதுகளைத் தேடினாய் வேரிலிருந்து முளைத்த கன்றுகளைக் கண்டு அரசமரமும் விழுதுவிடும் என்று ஆர்ப்பரித்தாய்.
விழுதுகளை வீழ்த்திவிட்டால் ஆலமரமும் அதன் அயல் நின்ற அரசமரமும் சரிந்துவிடும் என்றே வீண்கற்பனை செய்தாய்.


Page 26
சிறப்புட சர்வதேச எழு
一 &F。
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு சிறப்புற நடந்து முடிந்தமை இலக்கிய உலகுக்கு மனநிறைவைத் தருகிறது. தூற்றுவார் தூற்றட்டும், வாழ்த்துவார் வாழ்த்தட்டும் என முன்வைத்த காலை பின் வைக்காது பலவித நெருக்கடிகள் மத்தியிலும் துணிவுடன் நடாத்தப்பட்ட மகாநாடு பலவித சந்தேகங்களுக்கும் முடிவு கட்டியுள்ளது.உலகெங்கும்பரந்து வாழும்தமிழ்எழுத்தாளர்கள் ஒன்று கூடி தமிழ் இலக்கியப் போக்கினை அலசி, அதன் நோக்கையும் போக்கையும் பற்றி கலந்துரையாடி, எடுக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி ஆரோக்கியமான திசையில் அலசியுள்ளமைமனப்பூரிப்பைத் தருகிறது.
இருமுனை அழுத்தங்களுக்குட்பட்டமத்தளமாகி எழுந்த எதிரலைகளை பொய்மையாக்கி நடுநிலை நின்று எதுவித அரசியல் பின்னணியுமற்ற மகாநாடாக வெற்றிகரமாக நடந்துள்ளமை, பெருமைப்பட வைக்கிறது. எழுத்தாளர் மகாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் துரோகிகள், சந்தர்ப்பவாதிகள் என ஒரு புறமும், புலிகளின் ஆதரவாளர் என இன்னொருபுறமாக சேறுஅள்ளிவீசப்பட்டது. ராஜபக்ஷ அரசின் அடிவருடிகள் என புலம்பெயர்ந்துதமிழகத்தில் வாழும் எமது எழுத்தாளர் ஒருவர் கிளப்பிவிட்ட புரளிதமிழகத்திலும், சர்வதேச மட்டத்திலும் எதிரலைகளை ஏற்படுத்திமகாநாட்டை முடங்க வைக்கும் நிலையை ஏற்படுத்திய போதிலும், ஏற்பாட்டாளர்களின் உன்னத செயற்பாட்டால் இறுதியில் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
எதிர்ப்பலைகளினால் இந்திய மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும், மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலிருந்தும் பேராளர்களின் வருகையை மட்டுப்படுத்த முடிந்ததேயன்றி தடுக்க முடியவில்லை. கணிசமான பேராளர்கள் வந்திருந்தார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் தமிழ்முஸ்லிம் என்ற பேதமின்றி பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். காத்திரமான அரங்குகளின் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கருத்தரங்குகளும் இடம் பெற்றன. பேராளர்கள் எழுத்தாளர்களுடன் பெரும்எண்ணிக்கையில் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். இதனால் இட நெருக்கடியும் ஏற்பட்டது.
ஏற்பாட்டாளர்களின் திட்டமிடலையும் செயற்திறனையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இம்மகாநாட்டை உலகறிய செய்து நிதிஏற்பாடு செய்த முருபூபதி ஒருபுறம், இலங்கையில் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் ஞானசேகரன் அணியினர் மறுபுறம் இந்த மகாநாட்டை வெற்றிபெறச் செய்தனர். ஞானசேரன் குடும்பத்தினர் அஷ்ரப் சிகாப்தீன், பூரீதரசிங் உள்ளிட்டஏனையோரின் அயராத உழைப்பும்,தமிழ்ச் சங்கத்தினரின் செயற்பாடும், குறிப்பாக கந்தசாமி ராஜகுலேந்திரா தம்பதியினர்ஜின்னா ஷெரிப்புதீன்,பாஸ்கரர்,
24

* நிகழ்ந்த தாளர் மாநாடு
ܓܸܠܝ̈ܠ
முருகானந்தன்
ஆகியோரின் பங்களிப்பும் விதந்து *ప్య கூறப்படவேண்டியதாயினும், இம்மகாநாட்டின் ܐܶܠܺܠ ܐ வெற்றி பலரின் கூட்டு முயற்சியிலும் ஒத்துளைப்பாலுமே வெற்றிகண்டது எனலாம்.
நிதிப் பற்றாக்குறை, இடநெருக்கடி, பேராளர்களின் கவனிப்பு மாநாட்டு நாளின் உணவு மற்றும் ஒழுங்குகள் என்பவற்றை ஒருங்கிணைந்த கரங்களால் பலரும் செயற்பட்டு நிறைவேற்றினர்.பெயர்களைப்பட்டியலிடுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் அப்பால் செல்வோம்.
இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்த பேராசிரியர்கள் அரங்குகளுக்குத் தலைமை வகித்ததோடு, ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பித்தனர், அவ்வாறே சர்வதே நாடுகளிலுமிருந்தும் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஈழத்து எழுத்தாளர்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது.மக்கள் எழுச்சி பெறவும் சுபீடசமாக வாழவும் இலக்கியம் வழிசமைக்கிறது.போருக்குள் சிக்குண்டதேசங்களில் மிளிர்ந்த இலக்கியங்கள் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்தமை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. இலக்கியம் வெறும் கலாரசனைக்கு அப்பால் சமூக மாற்றங்களுக்கு வித்திட வல்லவை என்ற கருத்து பல ஆய்வரங்குகளில் ஒலித்தது.
ஒரு பிரமாண்டான வெற்றியை இந்த மகாநாடு பெற்றதென்றால், அதற்கு முக்கிய காரணம், ஆய்வரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளே எனலாம். விழா மலரும், கட்டுரைத் தொகுதியும் சிறப்பான கருத்துச் செறிவான ஆக்கங்களைத் தாங்கி வந்தது. வி. ஜிவகுமாரன் தொகுத்த புலம் பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுதி ஒன்றும் பேராளர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் புலம் பெயர் இலக்கியத்தின் இன்றைய போக்கு பற்றி மதிப்பிட முடிந்தது. புலம் பெயர் இலக்கியம் தொடர்பான பேராசிரியர் யோகராஜாவின் ஆய்வுக்கட்டுரைபலமுனைகளில் புலம்பெயர் இலக்கியம்பற்றிய தகவல்களைத் தந்தது.
விழாவில் நடந்த கருத்தரங்குகள் யாவற்றிலும் காத்திரமான கருத்துப்பரிமற்றங்கள் இடம்பெற்றன. குறிப்பாக நலிவுற்றவர்களுக்கான இலக்கியங்கள் போதியகவன ஈர்ப்பைப்பெற்றது இந்தக் கருத்தரங்கில்பார்வையாளர்களின் கருத்துப் பரிமாறலின் போது சூடான விவாதங்கள் இடம் பெற்றன. குறித்த நேரத்திற்கு கருத்தரங்கை நிறைவுசெய்ய முடியாதளவு வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தன. கருத்தரங்குகளில் கலந்த பார்வையாளர்கள், பேராளர்களின் எண்ணிக்கை உற்சாகமூட்டுவதாக இருந்தது. பகட்டு சமாச்சாரங்களும், கேளிக்கைளும் இல்லாவிட்டாலும் விழா சிறப்புறநடந்தது. நவீன கணனி இலக்கியம்,குறுந்திரைப்படம் பற்றிய அரங்குகள் புதியனவாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தன. பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஆய்வு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 27
கட்டுரைகளும் பயனுள்ளவையாக அமைந்திருந்தன.
இயல், இசை, நாடகம் என்ற மூன்று அம்சங்களிலும் நிகழ்வுகள் இடம் பெற்றன. இசை நிகழ்ச்சிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும், நாடகங்களும் நிறைவைத் தந்தன. மக்கள் காட்டிய ஆர்வம் சிறப்பாக இருந்தது. அரசியல் கலப்பற்றதாக மாநாடு அமைந்திருந்ததும் சிறப்பம்சமாகும்.
மக்கள் அவலப்பட்டு நொந்திருக்கும் வேளையில் இந்த மகாநாடு தேவையா என்று கேட்டவர்கள்,மக்கள்தொடர்ந்தும் துன்பத்துடன் அமிழ்ந்திருக்க வேண்டும் T6 எண்ணுகிறார்களா? மக்கள்பட்ட அவலங்களை இலக்கியங்கள் தான் வெளிக்கொண்டுவருகின்றன. என்பதை அறிவீர்களா? முரண்பட்டுக்கொண்டு அர்த்தமில்லாமல் ஒதுங்கிநின்ற படைப்பாளிகள் எதிர்வரும் ஆண்டுகளில் இந்த சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டுக்கு கை கொடுப்பார்கள் என நம்புகிறேன்.
இந்த மகா நாட்டின் மூலம் முகம் தெரியாத பல எழுத்தாளர்கள் பரஸ்பரம் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் ஏற்பட்டது. அடம்பன் கொடியும் திரண்டால்மிடுக்கு என்பதை இந்த மகாநாடு உறுதிசெய்துள்ளது.
சர்வதேஎழுத்தாளர்மாநாடு2011
- மொழிவரதன்இவ்வெழுத்தாளர் மாநாடு தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பல அறிக்கைகள் இணையம் ஊடாகவும் பிற வெகுஜன ஊடகங்கள் ஊடாகவும் வெளிவந்த வண்ண மிருந்தன. எனினும் தளரா மனதுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்தேர்ச்சியாக"மாநாட்டுக்குழு"தாங்கள் தலைமையில் கூடி செயற்பட்டு இறுதியில் அது அதன் நோக்கத்தை அடைந்தது. முதற்கண் இவர்கள் யாவருக்கும் எனது வாழ்த்துக்களையும்பாராட்டுதல்களையும் தெரிவிப்பதில் உளம் மகிழ்கிறேன்
மாநாட்டின் நேரடியாக வந்து கலந்துகொண்டவன் என்ற வகையில் சில விடயங்களை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
இம்மாநாட்டுக்கான ஒழுங்கமைப்பு, மண்டப ஒழுங்கமைப்பு, ஆய்வாளர்களைத் தேடி தலைப்புக்களை உரியவர்களுக்கு வழங்கியமை, பேராளர்களையும், அதிதிகளையும் வரவேற்பதற்கான,அழைப்பதற்கான ஒழுங்கு, நிதி, விடயம், உபசரிப்பு (விசேடமாக வெளிநாட்டு விருந்தாளிகளுக்கான ஒழுங்கு) நல்ல தலைப்புக்களை தெரிந்தெடுத்தமை, ஓர் ஆய்வரங்கினை ஒழுங்கமைக்கும் போது உள்ளடங்கவேண்டியவிடயங்களை கவனித்தமை. (உ+ம் இணைத் தலைமைகள், மதிப்பீட்டாளர்கள், இணைப்பாளர்கள்)
விழாமலர்க்குழுஅமைத்தமை மலருக்கான விடயங்கள் கூடிய போது அவைகளை கட்டுரைகளாகி வெளியிட்டமை, அனைத்து தரப்பினருடனான “தொடர்பாடல்" முறைமை போன்ற இன்னோரன்ன விடயங்கள்மாநாட்டுக்குழு எவ்வாறு செயற்பட்டுள்ளது என்பதற்குசான்றாகின்றது.
எந்தக் களத்தையும் தத்தமது கருத்துக்களை முன் வைக்கும்தளமாக சர்வதே எழுத்தாளர்பயன்படுத்திக்கொள்ள விழைதல் வேண்டும் என்பதே தமிழையும் தமிழ்மொழியையும் நேசிக்கும், வளர்க்கும் ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

அனைத்து தரப்பினரும் ஒன்று கூடுதல் அவசியம் என்பது சர்வதேசரீதியாக தமிழ்இனத்திற்கும் சமூகமேம்பாட்டுக்காக இலக்கியம் படைக்கும் முற்போக்கு பிற அணியினருக்கும் தமிழுலகம் கூறும் செய்தியாகும்.தத்தமது தனித்துவஇலக்கிய போக்குடனும் ஆளுமையுடனும் பொதுவான சர்வதேச செயற்பாடுகளில், முன்னெடுப்புக்களில் தமிழ் எழுத்தாளர் தார்மீகப் பங்களிப்பு செய்ய வேண்டியது. காலத்தின் தேவையாகிஉள்ளது.
இலங்கைப்பிரச்சினை தொடர்பாக அண்டைய தமிழகம், சர்வதேசம் எடுக்கும் நிலைப் பாடுகள் பற்றி இலங்கையில் வாழும் நாம் காய்தல் உவத்தலின்றி நோக்கு தல்வேண்டும். காலம் கற்றுத் தந்த பாடங்களால் காயப்பட்டுப் போன நாம் தந்துரோபாயமாகவும், விவேகமாகவும், “இனி', சில விடயங்களை தொடங்க’ வேண்டி உள்ளது. “வெள்ளவத்தையில் இலங்கையில் சர்வதேச மாநாடு 2011 வெற்றிகரமாக இனிதே நிறைவெய்தியது"இது விழுந்தவன் எழுந்ததற்கான குறியீடு/அடையாளம் நாம் வாழ்கின்றோம், எதிர்காலத்திலும் வாழ்வோம். தமிழ்வளர்ப்போம்என்பதற்கான குரல். வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தவர் அனைவரும் ஒன்று கூடியதற்கான அடையாளப் பதிவு இம்மாநாடு. சொந்தங்களை சுகங்களை யுத்த வடுக்களை மீண்டும் மீட்டிட்ட அதே வேளை மீண்டும் எழுவோம் என்ற தொனிப்பொருள் அது. எனவே பல்தரப்பினரும் பங்களித்த இம்மாநாடு என்றும் சர்வதேசத்தால் பேசப்படும்.
மீண்டும் வேண்டுகிறேன். சர்வதேச எழுத்தாளர்களே! நீங்கள் புதிய ரீதியில் சிந்தியுங்கள்; ஒன்றிணைந்து இயங்க ஒன்றிணையுங்கள். கிடைக்கும் களத்தில் உங்களை நீங்கள் அர்ப்பணியுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஆனால் என்றோ எங்கோ"ஒர்நாளிலாவது'ஒன்றாய் இருங்கள்.
மனித நேயம்
ཡོད།
உலகில்நாம் பிறந்தோம் ஒழுங்காகநாம் வாழ்வோம் இறைவனை வணங்குவோம் மனிதநேயத்தை வளர்ப்போம்
செய்த பயன் தொடர முன்னைய பாவம் அழிய எமக்கு இருக்கும் ஆயுதம் மனிதநேயம் ஒன்றே
உலகில் உள்ள மனிதரை ஒன்றாக சேர்த்திடும் இதுவே. அதுவேமனிதநேயம் புரிந்துகொள்ளபாமானிபா
لر  ܼܲܢܠ
25

Page 28
நவீன தமிழ் இலக்கியத்தில்
ஆவீன தமிழ் இலக்கியத்தை பரம்பலுறச் செய்து உலகறியச் செய்ததில் ஈழத்து தமிழரின் இன விடுதலைப்போரும் புலம் பெயர்வும் முக்கிய காரணிகள் எனலாம். பத்துக்குக் குறைவான நாடுகளில் அடையாளப்படுத்தக் கூடியளவு தொகையினராக வாழ்ந்து வந்த தமிழர்கள், கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஈழப்போரின் அகதிகளாக இடம்பெயர ஆரம்பித்த பின்னர் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் கணிசமான அளவு கால் பதித்தனர். இதனால் இன்று தமிழர் வாழும் தேசங்கள் உலக
வரைபடத்தில் கணிசமாக உள்ளன. இவர்களின் இடப்பெயர்வானது இவ்வாறான பல தேசங்களில் தமிழரின் இன அடையாளத்தை ஏற்படுத்தியது.
இலங்கைப் பேரினவாத அரசின் கொடூரமான இன அடக்கு முறை ஆக்கிரமிப்பை புரிந்து கொண்ட பல மேற்கு நாடுகள் தமிழர்கள் பால் அனுதாபம் கொண்டு அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டதுடன், காலப்போக்கில் கணிசமானோரை தமது நாட்டின் நிரந்தரவாசிகளாக ஏற்றுக்கொண்டன. இதில் கனடா முதன்மை வகிக்கிறது.
இவ்வாறு புலம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றவர்கள் பிரதானமாக தமது உயிரைக் காப்பதற்காகவே சென்றனர். காலப்போக்கில் இந்நிலை மாறி வேலைவாய்ப்பு என்ற குறிக்கோளுடன் செல்லும் நிலையும் அவதானிக்கப்பட்டது. எது எப்படியோ இங்கிருந்து சென்றவர்கள் பலரும் போரின் கொடுமைகளை அனுபவித்தவ்ர்கள். தமது உறவுகளை இழந்தவர்கள். வீடு, வாசல், பொருள்பண்டம், கலாசாரம் பண்பாடு என்பவற்றை எல்லாம் பறிகொடுத்தவர்கள். பொருளாதர்ரரீதியிலும், கல்வி மற்றும் மருத்துவ ரீதியிலும் புறக்கணிக்கப்பட்டுவறுமையிலும், துன்பத்திலும் வாடியவர்கள். வேலை வாய்ப்புகளும் இன்றி, செய்து கொண்டிருந்த விவசாயம், கடற்றொழில் மற்றும் சிறுதொழில்கள், வியாபாரம், மூலதனம்என எல்லாவற்றையும் இழந்துபோய்,உள்ளூரிலேயே இடம்பெயர்ந்து வாடியவர்கள்.
முன்னைய காலங்களில் கல்வி, வேலைவாய்ப்பு என்று வெளிநாடுகளுக்குச் சென்றவர்களிலிருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். இப்போது புலம்பெயர்ந்தவர்கள் வசதி படைத்தவர்கள் அல்லர். வசதி படைத்தவர்கள் கூட அனைத்தையும் இழந்தவர்கள். புலம்பெயர்ந்தவர்களில் எல்லா வகையினரும் அடங்குவர். எல்லா மட்டத்தினரும் அடங்குவர். இவர்களது முன்னைய அடையாளங்கள் எவையாக இருந்தாலும் தற்போது அகதிகள் என்ற பொது அந்தஸ்த்துடனேயே இடம் பெயர்ந்தவர்கள். இவர்களது மனதில் சொல்லமுடியாத சோகம் குடிகொண்டிருந்தது. இந்த மனத்தாக்கம் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோரை எழுத்தாளர்களாக்கியது. அத்துடன் ஏற்கெனவே தாய் மண்ணில் எழுத்தாளர்களாக
26

புலப்பெயர்வின் தாக்கங்கள்
சந்தரகாந்தn முடுகானந்தன்
இருந்தவர்களும்புலம்பெயர்ந்தார்கள். புலம்பெயர் இலக்கியம் என தனியான கவனிப்புப்பெறும் அளவுக்கு இவர்கள் நிறைய எழுதினார்கள். இவர்களது எழுத்தில் அனுபவப்பகிர்வும், உண்மையின் பிரதிமையும் இருந்தமையினால் இவை கவனிப்பைப் பெற்றதில் வியப்பில்லை.
இதேகாலகட்டத்தில் தாய் மண்ணிலிரு ந்தும் உத்வேகத்துடன் இலக்கியங்கள் படைக் கப்பட்டன. சுதந்திரமாக எழுதமுடியாத சூழ்நிலை இருந்தபோதிலும் தாம் வாழ்ந்த கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தனர். எனினும் எப்போதும் உயிர் அச்சுறுத்தல் இருந்தமையினால் சுதந்திரமாக தாயக எழுத்தாளர்களால் எழுதமுடியவில்லை. ஆயினும் இவர்களது படைப்புகளில் மக்கள் படும் அவலங்கள், இழப்புகள், அகதிவாழ்வு அனுபவப்பகிர்வுடன் தரிசனமாகின. இன் னொருபுறம் புலம்பெயர் நாடுகளில் வசித்த எழுத்தாளர்கள் புதிய களங்களில் எழுதினர். அகதிவாழ்வின் அவலங்களும், பண்பாட்டுச் சிதைவுகளும்,தாயகத்துடனான தொப்புள்கொடி உறவுகளும், பிரிவுகளும்,மேற்கத்தய கலாசார பண்பாடுகளின் தாக்கமும் இவர்களது எழுத்துகளை அலங்கரித்தன. சுதந்திரமாக எழுதிய புலம்பெயர் எழுத்தாளர்களின் முதல் தொகுதியினரிட மிருந்து வித்தியாசமான படைப்புகளை தரிசிக்க முடிந்தது. பெண் படைப்பாளர்களின் ஆக்கங்களில் பெண்ணியம் உரத்துப் பேசப்பட்டதுடன் தாயக பெண்கள் போருள் எதிர்கொண்டபாதிப்புக்களும்பேசப்பட்டன. எதையும் தமது படைப்புகளில் சுதந்திரமாகவும் தைரியத்துடனும் இவர்களால் எழுத முடிந்தது.
புலம்பெயர் எழுத்தின் வரவின் பின்னரே தாயகத் தமிழ் எழுத்தாளர்களும் அதிக கவனஈர்ப்பைப்பெற்றனர். குறிப்பாக இந்திய தமிழ்நாட்டு இலக்கிய உலகம் ஈழத்தமிழரின் படைப்புகளை வியப்புடன் நோக்கினர்.
தமிழக புத்தக வெளியீட்டாளர் களுக்கும், சினிமாக்காரர்களுக்கும் பரந்த வியாபார வட்டத்தை ஈழத்தமிழரின் புலப்பெயர்வுஏற்படுத்திக்கொடுத்தது. தமிழ்ப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படலும் அதிகரித்தது. எனினும் புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் தமிழ்மீது காட்டும் குன்றிய ஆர்வமானது, தமிழ் இலக்கிய படைப் பாக்கத்தையும்பாதிக்கும் வாய்ப்பு தென்படுகிறது. சர்வதேச அளவில் குறைந்துவரும் வாசிப்பு பழக்கமும் கூட
இவ்வீழ்ச்சிக்கு காரணமாகின்றது. இவ்வீழ்ச்சியிலிருந்து
மீள்வதற்கான முன்னெடுப்புகளாக இலக்கிய கர்த்தாக்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சர்வதேச எழுத்தாளர் மகாநாடு போன்றவற்றின் ஊடாக, தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டு வரும் சாதகமான மாற்றங்களை முன்னெடுத்து செல்ல முடியும் என நம்பலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 29
TIP IIIIIIIIIIIIIIII
 

W " կ

Page 30
I
(G-20.
HH || ||||||||||||||
|T
-* 下
 


Page 31

*
LULWINIAI

Page 32
IR GAN 鳕上
1 - it."
H
॥ சாரி வா
 
 
 
 
 
 
 
 
 


Page 33
JT8
(519
உலகெங்கும் சுமார் மூவாயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் எந்திரன் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஒருமாதம்கடந்தபின்னர்தான் திரையரங்குக்குச் சென்றேன். அன்று கூட்டம் அலை மோதியதால் எண்ணத்தை மாற்றி “மைனா” என்ற புது முகங்களின் திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். எதிர்பாராத மனத்திருப்தியையும் உயர் ரசனையையும் தந்தது அந்த திரைப்படம். பின்னர் ஒருவாரம் கழித்து ரஜினியின் எந்திரன் திரைப்படத்தையும் பார்த்தேன். மிகப் பிரமாண்டமாக ஆங்கிலத் திரைப்படப் பாணியில் தயாரிக்கப்பட்ட மயிர்க்கூச்செறியும் காட்சிகள் நிறைந்த எந்திரன் திரைப்படம் வியப்பை ஏற்படுத்திபிரமிக்க வைத்தது. எனினும் மைனா மனதில் ஏற்படுத்திய அதிர்வுகளை எந்திரனால் ஏற்படுத்த முடியவில்லை. ண்மனாவுடன் நாம் மூழ்கிப்போகிறோம்.
இலங்கையில் எந்திரன் பத்து திரையரங்குகளில் வெளிவந்தது. ஆனால் மைனா ஒரே ஒரு திரையரங்கில் வெளியாகி அதிக கூட்டமின்றி ஒடிக் கொண்டிருக்கிறது. நாயகன் படம் முழுவதும் லுங்கியுடன் தான்!
இந்திய சினிமா, ஆடல்,பாடல்.சண்டை அபத்தமான நகைச்சுவ்ை, அதீதமான உணர்ச்சிக் காட்சிகள் போன்ற வழக்கமான மசாலா அம்சங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கும் அதேவேளை, அண்மைக் காலமாக சற்று வித்தியாசமான படங்களையும் வெளிக்கொணர்கின்றமை ஒரு ஆரோக்கியமான அம்சம். கலைப்படங்கள், மாற்றுப்படங்கள், என்று உயர்ரசனையுடன் முன்னர் வெளிவந்த சிலபடங்கள் பெரும் தோல்வியைக் கண்டன. அக்கிரகாரத்துக் கழுதை போன்ற சில உயர்ரசனைமிக்கபடங்கள் திரையிடமுடியாமலே உறங்கிப் போயின. இந்த நிலையில் சில புதியவர்கள் உயர் ரசனைமிக்க சில படங்களை மக்களின் உளம் அறிந்து வெளியிட்டு வெற்றியும் கண்டனர். வழக்கமான மசாலாத் தனங்கள் இல்லாமல் இப்படங்கள் ரசிகர்களை ஈர்த்தன. திரைப்படகல்லூரிகளின் வருகை,புதிதாக முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கின. உலக சினிமா பற்றிய அறிதலும், உலக திரைப் பட விழாக்கள் பல
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 

} எந்திரனும் ഞ1ഞ്ഞ ாவும
حیبر
- பிற்லைnத ஆனந்த் -
* * ##్య 444 రో
இடங்களில் நடத்தப்படுகின்றமையும்,சினிமா கோட்பாடுகள், அழகியல் பற்றிய புத்தகங்கள் முதலானவை தமிழ்ச் சினிமாவையும் குண்டுச் சட்டிக்குள்ளேயிருந்து வெளிக்கொண்டுவந்தன. கூடவேதமிழ்ச்சிறுசஞ்சின்ககள் புதிய சினிமா பற்றிய சிந்தனைகளை விதைத்தன. சில இயக்குனர்களுக்கு அவர்கள் கொண்டிருந்த சினிமா பற்றிய பரந்துபட்ட அறிவும், வேட்கையும் சினிமாவில் புதிதாக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தின.
சினிமா முதலில் ஒரு வியாபாரம் அல்லதுதொழில் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் ரசிகர்களுக்கு அதுபொழுதுபோக்கு அம்சம் என்பதையும் நாம் நிராகரிக்க முடியாது. இவற்றை மனதில் தாங்கி கடந்த சில ஆண்டுகளாக குண்டுச்சட்டிக்குதிரைஒப்பாமல் அதேவேளை தயாரிப்பாளர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றாமல் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டனர். பாலா, வசந்தபாலன், சேரன் போன்ற சில இயக்குனர்களை முன்னுதாரணமாக குறிப்பிடலாம். பாலசந்தர், பூரீதர், பாலுமகேந்திரா, மகேந்திரன், துரை போன்றவர்களுக்குப் பின்னர் பெயர் சொல்லும்படியான படங்களை இவர்கள் அறுவடையாக்கினர். பின்னர் தங்கப்பச்சான்,அமீர், சீமான், வசந்தபாலன் என்று ஆரோக்கியமான தலைமுறை தொடர்ந்தது. அந்த வகையில் மைனா இயக்குனர் பிரபுசொலமனையும் வைத்துப் பார்க்கலாம். வெக்கட பிரபு இன்னொருவர்.
இன்னொருபுறம் வியாபார நோக்கில் பெருவெற்றி அடையக்கூடிய ஹொலிவூட் படங்களுக்கு ஒப்பான
31

Page 34
படங்களைத்தயாரிக்கும் அணியும் உருவானது.இவ்வருடத்தில் முன்னர் வெளியாகி சக்கை போடு போட்ட சிங்கம் இப்போது எந்திரன்!நடிகர் சூர்யா, கமல் போன்றோரையும் இவ்வகையில் குறிப்பிடாமலிருக்க முடியாது.
எந்திரன்! ஆம் மிகப்பெரிய பிரமாண்டமான படம். ரஜினி, ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரகுமான் இவர்களின் பிரபல கூட்டோடு, கலாநிதி மாறனின் வியாபார உத்தி, அற்புதமான கிராபிக்ஸ் என்பவற்றையும் இப்பிரமாண்ட வெற்றியின் பின்னணியில் குறிப்பிடலாம்.
இதுவரை இந்தியாவிலேயே மிக அதிகமான வசூலைச் சுட்ட எந்திரன் ஒருமாதத்திற்குள்ளாகவே கொழுத்த லாபத்தைக் கொட்டியுள்ளது. கோடிகோடியாக கொட்டி பெரும் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இன்னும் பல கோடிகளை குவித்துள்ளமைக்கு இப்படத்தின் பிரமாண்டமே காரணம். அண்மைக் காலத்து ஆங்கில திரைப்படங்களைப் பார்த்திராத எவரும் எந்திரனைக் கண்டு வியந்து மயிர்க் கூச்செறிந்து போவார்கள். ரஜினியின் இயல்பான நடிப்பு ஜஸ்வர்யாராயின் அழகுத்தோற்றம், எழிலான பின்புலம் நிறைந்த பாடல்காட்சிகள்,கிராபிக்ஸ் நிறைந்த விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் இவற்றுடனான விஞ்ஞான “சோபா" கதை புதிய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்ததில் வியப்பில்லை. படத்தின் வேகம் அசத்தலாக உள்ளது. தொய்வில்லாத காட்சிகள், இயக்கம், எடிற்றிங், இசை, ஒளிப்பதிவு என எவையுமே சோடை போகவில்லை. பழைய தலைமுறையினர் படத்துடன் ஒன்ற முடியாமல் தடுமாறுகின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.
குழந்தை பிரசவம், நுளம்புடன் உரையாடல், ரயில் காட்சிகள், எந்திரனின் இறுதிஉருப்பெருக்கம் என கிராபிக்ஸ் பற்றி நிறையவே பாராட்டலாம். பாடல்கள் ஆங்கில ரசம். வரிகளைக் கிரகிக்க முடியாதிருந்தது. பிரமாண்ட எந்திரன் வியப்பையும் மயிர்க்கூச்செறிவையும் ஏற்படுத்தியது.தமிழுக்கு இது ஒரு புதிய புதுமைப் படம். அறுபது வயதிலும் ரஜினி அசத்துகிறார்.
குட்டி மைனாவுக்கு வருவோம். நல்ல கிராமியக் காதல் கதையும், யதார்த்தவாதம் பற்றிய அக்கறையும் காட்சிக்குக் காட்சி மெருகூட்டுகிறது. எமது மலையக பெருந்தோட்டப்புறத்தை போன்ற களத்தில், அவர்களது வறுமையோடும் அறியாமையோடும் நகர்ந்து செல்லும் காதல் கதையுடன் நாமும் ஒன்றிப்போகும் வண்ணக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெற்றோர்களின் வறுமை,பொறுப்பற்ற தந்தையால் சீரழியும் மகன், கல்வியின் மகிமையை அறியாத பெற்றோர், மலை, பள்ளத்தாக்கு, சீரழிந்து போன குடியிருப்புக்கள்,தெருக்கள் எல்லாமே நமது மலையகத்தையும்,
விவாதங்கள், வாசகர் & விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்படாமல் இரு கடிதங்கள் 200 சொற்களுக்குள் அடங்குதல் வே பிரசுரிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்துவரும் இதழ் சொந்தப் பெயர் முகவரியை வேறாக இணைத்த கொள்ளப்படின் 翌 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்
32

மலையக மக்களின் வாழ்வையும் நினைவூட்டுகின்றன. பிள்ளைப் பருவத்துக் காதல் அழகியை நினைவூட்டினாலும் அநுபவித்து ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிறுவயதிலிருந்து படிப்பைக் குழப்பி சண்டித்தனத்துடன் வளரும் நாயகன், நாயகியின் குடும்பம் நடுத்தெருவுக்கு விரட்டப்பட்ட போது உதவிபுரிகிறான். பின் நாயகியின் படிப்புக்காக மூட்டைசுமந்துஉழைத்துஉதவுகிறான்.நாயகியின் தாயும் அவனைச் சிறுவயதிலிருந்தே மருமகனே என்று அழைத்து அன்பாக இருக்கிறாள். வளர்ந்து வரும் போது காதலாக மாறுகிறது. நாயகி தன் காதலை வெளிப்படுத்திய பின்னர் நாயகன் மகிழ்கிறான். நாயகியின் தாயோ இவனை நிராகரித்து வேறுமாப்பிள்ளை பார்க்கிறாள். நன்றியுணர்வற்ற அவளது செயலைக்கண்டு நாயகன் அவளைத்தாக்கநாயகன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்படுகின்றான். நாயகி நாயகனுக்காக ஏங்குகிறாள். கால்வாசிப்படம் இப்படிக் கதையோடு நகர்கிறது. அதன் பின்னர் நாயகன், நாயகி, பொலிஸ் அதிகாரி, பொலிஸ் அலுவலர் என்ற நான்கு பாத்திரங்களுடன் மீதிப் படம் நகர்கிறது. நால்வரின் நடிப்பும் அபாரமாக உள்ளது. அதிலும் அந்த பொலிஸ் அலுவலரின் ஆரம்ப நகைச்சுவைநடிப்பும், பிற்பகுதி குணசித்திர நடிப்பும் மனதை உருக்குகிறது. தப்பியோடும்நாயகன் அவனைத்தேடிப் போகும் பொலிஸார், மீண்டும் கைதாகும் நாயகனோடு கூடி வரும் நாயகி, எனகதை பயணங்களினூடே தொடரும் போது நாமும் முழுமையாக ஒன்றிவிடுகிறோம். பஸ்விபத்துக் காட்சி திகிலூட்டும்படி அமைந்துள்ளது. விபத்தில் அதிகாரியையும் அலுவலரையும் காப்பாற்றும் நாயகன். அவர்கள் மனதைத் தொட்டுவிடுகிறான்.இருவரையும் தாமே பிணையில் எடுத்து திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார்கள்.
மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்து விடுகிறது. இறுதி முடிவு குரூரமானது. மனதைப் பிழிந்துசோகத்தைத் தருகிறது. முதற்கொலையுடனும் அடுத்த தற்கொலையுடனும் படத்தை முடித்திருக்கலாம் என்று தோன்றியது.இறுதிமூன்றுகொலைகள் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது.நிறைவைத்தரும்ஒரு திரைப்படம்.சுதார்த்,அமலா (நாயகன், நாயகி) உட்பட மற்றையவர்களும் புதியவர்களாக இருந்தாலும் நிறைவாக நடித்துள்ளனர்.
எந்திரன் ஒற்றைவரிக்கதை இயந்திரங்களுக்கு உணர்வுஊட்டப்பட்டால் காதல்வரும் என்ற ஞானம் நூறாவது இதழ் சிறுகதையான மேகலாவின் கம்யூட்டரை ஒத்த கதை. இயந்திரரோபோக்கு வரும் காதலால் ஏற்படும் அனர்த்தங்கள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. எந்திரன் ரஜினி கூட மைனாவை பெரிதும்பாராட்டியுள்ளார். மைனாதிரைப்படத்திற்கு சர்வதேச திரைவிழாவில் விருதுகிடைத்துள்ளது.
கடிதங்கள், படைப்புக்கள் நத்தல் வேண்டும். வாசகர் பேசுகிறார்" பகுதிக்கான் ண்டும். இவ்வரையறைகளுக்கு மேற்படின் அவை 20ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும் ல்ெ இடம்பெறும். புனைபெயரில் எழுதுபவர்கள், தமது ல் வேண்டும். படைப்புக்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக் - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 35
ராஜா
வால்பிடிகளே வல்லரசாயினர் வருந்துமப் பாவிகள் விதியென் றேற்றனர் ஏர்பிடித்திடும் சங்கத் தலைவரும் எழுத்தினை ஆண்டிடும் இன்றழிழ் வாணரும் வால்பிடிப்பதும் வாளி வைப்பதும்
606) JOOS உயர்வெனப்
பாழ்வழிச் சேர்ந்தனர்.
துப்பல் பேணிகள் தூக்கத் துடிப்பவர் துண்டுச் சால்வையின் முழம் பெரிதென்பவர் எச்சில் தட்டினை ஏந்தி அலைபவர் எம்மவர் வாழ்வினில் செம்மைகள் செய்வராம்?
சிந்தனை வலிமையால்
நந்தமை அடைந்தவர் ‘மீட்பர் தாமெனத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 
 

ikiક્ટોરેિ
- கணக்காயன்
தரிசனம் தருகிறார்
நொந்த மனங்களை
நோகச் செய்துமே
பந்தம் எரித்துப்
பகலில் பிடிக்கிறார்
வந்த வாழ்வென
வையகம் உரைக்கிறார்.
வயிறு எரிந்தனம்
வாய் உரைத்தனம்
வால்பிடிகளே!
சிந்தை செய்யுமின்
சீர்மிகு நும்பணி நும்தளத்தினில் நின்று ஆற்றுமின் உன்னை நீயாய் உன்வழி வாழ்ந்திடு
உண்மையை உயர்வை உறுதியைப் பற்றிடு
மாழ்க வால்பிடி மங்கலம் ஓங்குக ஆழ்க தீயவை
அனைவரும் வாழ்கவே.
33

Page 36
மூத்த படைப்பாளி முணுமுணுப் பைக் கேட்டால்வயப்பே'தான்! அந்த மூத்த படைப் பிலக்கியக்கார அய்யாவுக்கு 2010 வரை நல்லபிமானம் நாலுபேரிடம் இருக்கத் தான் செய்தது. ஞானம் ஒரு சிறப்பு மலரையே வெளியிட்டு உயர்த்தியது. இவருக்கு இவர் ஒரு தனிமலர் வெளியிட்டுக் கெளரவித்தார் என்று பலர் பலமாதங்கள் ஒசை எழுப்பினார்கள்.
x^ భకుళ్ల 黎 落 ठू அத்தகையவர் ஞானம் குடும்பத்தினர் அனைத்துப் பேனாக்காரர்களையும் சங்கமிக்க சிலருடன் கூட்டுச் சேர்ந்த போது ஆஸ்திரேலியக் குளிரில் அவதிப்பட்டும், தமிழக உஷ்ணத்தில் தகிதகித்தும் வணிக இதழ்களின் வலைகளிலும் இணையதளங்களிலும் சிக்கிக்கொண்டார்.
இலங்கைப் பேரினவாத அரசு வழங்கும் பிச்சையால் நடக்கிறது.
“கொலைக்களம் கண்ட பூமியில் எழுத்தாளர் மாநாடு நடக்கலாமா?” என அவர் எழுப்பிய எதிர்வினைகளால் தமிழக இலக்கிய உலகம்தான் அதிகம் தடுமாறியது.
இம்முறை நான் 33 நாட்கள் அங்கிருந்தேன் நிழலின் வியாபிப்புடன் வெளிவீதியில் தலை காட்டுகிற ஒவ்வொரு வினாடியிலும் சொல்லம்புகளால் துளைத்தெடுக்கப்பட்டேன். பலரிடம் பதில் கணைகளும் விட்டேன்.
வீழ்ந்தவன் வீழ்ந்தே கிடக்க வேண்டுமா? அவன் எழும்பவே கூடாதா? ஒரு வீதியில் (பகுதியில்) சாவு என்றால் அங்கே வாழ்பவர்கள் அத்தனைபேரும்துக்கம்கொண்டாடுவது ஆண்டுக் கணக்கிலா? அவர்கள் ஒரு நல்லதை நடத்த எத்தனிக்கக்கூடாதா?
ஊஹூம்'என் போன்றோர் ஒசைகள் செவிப்புலனற்றவர் கதைக்கு ஊதிய சங்கு
04 லில் அங்கிருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்த போது திருச்சி வழியாக நாவலாசிரியர் தோப்பில் முதும்மது மீரான் தமிழ் இதழ்களின் காப்பாளர். அரிமா பட்டாபிராமன் எனப்பலர் புறப்பட்டுவிட்ட செய்திதித்திப்பானது. நள்ளிரவில் சென்னை மீனம் பாக்கத்தில் ஸ்பைஸ் ஜெட்டில் ஏற20-30 பேர் எங்களுடன் நிற்க, அவர்களுக்கு நான் பத்திரங்களைப் பூர்த்தி செய்து கொடுக்க, ஓர் அன்பர் ஒரு நல்ல “விவேக் நகைச்சுவை விட்டார்.
“சார் உங்க ஜனாதிபதி வருவாரில்லே?” மூத்த படைப்பாளி விட்ட விஷ ஊசியின் தாக்கமே இந்த முட்டாள்தனமான கேள்வி.
34
 
 
 
 
 

- Vaacsa リ
Goba r1
M|
8@@=
06 ந்தேதி காலை மாநாட்டு ஊர்வலத்தில் கலந்த சமயத்திலும் கலக்கம்தான்.
எந்த அரசியல்வாதிதலைகாட்டுவானோ? ஒருவேளை என்பள்ளிசாகாநாடாளுமன்றஉறுப்பினர்அஸ்வர் தனக்குள்ள தணியாத இலக்கியதாகத்தால் ஒரு தமிழ் வாழ்த்தை மேலிடத்திலிருந்துகொண்டுவந்த விடுவாரோ?
நல்ல வேளை அந்தப் பரம் பொருளின் எண்ணப்படியும் திட்டப்படியும் அவர் பாகிஸ்தான் பறந்துவிட்டார்.
ஆக எந்த அரசியல்வாதியின் நடமாட்டமும் அரங்குகளில் இல்லை.
ஆளுங்கட்சி அனுசரணை கிடையவே கிடையாது. அதிபர்சார்பிலோ ஆளுநர் சார்பிலோ யாரும் வரவில்லை, வாழ்த்துக்களும் வாசிக்கப்படவில்லை.
திசைக்கு ஒரு காவல் காரர் (பொலிஸ்) எங்கேயாவது நின்றமாதிரியும் தெரியவில்லை.
2010 ஜனவரியில் எந்தத் தமிழ்ச் சங்கத்தில் இம்மாநாட்டிற்கான அடிக்கல்லை நமது படைப்பாளி ஊடகவியலாளர் லெ. முருகபூபதி நாட்டினாரோ அதே மண்டபத்தில் அவருக்குத் தோன்றாத்துணைகளாக ஞானம் தம்பதியினரும், அவர் தம் செல்வன் கணினியாளர் திரு. பாலச்சந்திரன், தமிழ்ச்சங்கத் தலைவர் கதிர்காமநாதன், பொதுச் செயலர் ரகுபதி பால பூரீதரன், துணைப்பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, துணைப்பொருளாளர் பாஸ்கரா செயற்குழு அங்கத்தவர் மகாதேவா போன்ற விரல் விட்டெண்ணத்தக்க தமிழ் உள்ளங்கள் இணைய முஸ்லிம் இலக்கிய முதுசம்களும் கைகோர்க்க எங்களைப் போன்ற சாமான்யர்கள் அந்தத் தமிழச் சங்க வளாகத்தில் நான்கு நாட்கள் (கவனிக்க ஒரே ஒரு நாளல்ல!) வளைய வளைய வந்தோம், ஒருவரையொருவர் வரவேற்றுக்கொண்டோம்.
ஒரு குடும்பத்திருமணத்தில் எவ்வாறு உற்றமும் சுற்றமும் கலந்து சங்கமிப்பார்களோ அவ்வாறு அமைந்து துலங்கிய நிகழ்வு
நான்கு நாட்களிலும் அதிசயங்களுக்கும் அற்பு தங்களுக்கும் குறைவில்லை
இடநெருக்கடியை உத்தேசித்து ஓரிரண்டு ஒசைகள் மட்டும்.
'யாத்ரா அஷ்றஃப் சிஹாப்தீன் மாநாட்டுச் செயலாளர் முதல்நாள் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்தார். அப்போது ஓர் அற்புதம் செய்தார்.
நிகழ்வின் தொடக்க விழா ஊர்வலம் சரியாகக் காலை10 க்கு ஆரம்பித்துமுதற்பகுதி நிகழ்வுகள் பிய,2க்கு முடிவதாக இருந்தது."மூன்று மணிக்குத்தான் முடியும் பகலுணவு பாழ் தான்' என்று பலரும் யூகித்திருந்ததை பொய்யாக்கி 135 அளவிலேயேநிறைவாக்கிஅன்னத்திற்கு வழிகாட்டினார் அவர்
八
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 37
மிகவும் நேர்த்தியான ஒருமுன்மாதிரி அவருக்குபக்கபலம் கவிஞர் ஜின்னா ஹஷ்ரீஃப்தீன் மாநாட்டுமலரையும், ஆய்வுக் கோவைகளையும்கொணருவதிலும் அதேதிருமதிஞானசேகரன் உதவிக் கரங்களுடன் நம்ப முடியாத ஓர் அதிசயமும் 3 ஆம் நாளில் நடந்தது. தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில்கலையரசுசொவர்ணலிங்கம் அரங்கில்மாநாட்டின் இசை நிகழ்வுகளில் சான்றாக சங்கீ பூஷணம் இந்திரா குமார சிவம் அவர்களின் வீணைக்கச்சேரி அதற்குதலைமைவகித்து சிறப்புரை ஆற்றல் தமிழறிஞர் எஸ்.எச்.எம். ஜெமீல்
வெறும்உரையன்றுவீணையின் பல்வேறுநாத ஒலிகளின் ஆய்வு இதுபோலவே"திப்புசுல்தானின் மனிதாபிமான"த்தை ஒரு கவிதை நாடகமாக டீ. எஸ். சேனநாயக்க கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றிஒருமுஸ்லிம்மாமன்னனின் உண்மை உருவத்தைவெளிச்சமிட்டார்கள்.
என் பேனா அறிந்தளவில் தமிழக மாநாடுகளில் கூட நடந்திராத ஒன்றென்பேன்.
(சரியாகக் கணக்கிட்டால்பார்வையாளர்களாக அல்லாமல் பலதரப்பட்ட நிகழ்வுகளின் (கலைநிகழ்ச்சிகள் உட்பட) கலந்து கொண்ட205 பேரில் 30பேர் முஸ்லிம்கள்!ஒருவர் சிங்களவர்
கடந்தாண்டு கலைஞர் நடத்திய மாபெரும் செம்மொழி மாநாட்டிலும் கூட முஸ்லிம் இலக்கியவாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம்ஐந்தோ!ஆறோ
அங்கே
எந்தவொருமுஸ்லிம்தமிழறிஞரின்பெயரிலும் அரங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அத்தோடு மறைக்கப் பட்ட மறக்கப்பட்டவணபிதாதனிநாயகம் அடிகளார்,ஆறுமுகநாவலர், சோமசுந்தரப் புலவர், சுவாமி விபுலானந்தர், புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை,சு வித்தியானந்தன்,அருள்வாக்கி அப்துல் காதர்,சித்திலெப்பை,அல்லாமாம.மு. உவைஸ் அத்தனைபேரும் ஒவ்வொரு அரங்கையும்இங்கே அலங்கரித்தனர்,
ஒரு வகையில் ஒரு "மினி” இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் தோற்றத்தை இவ்வேற்பாடுகள்வழங்கின.அத்தோடு அந்த செம்மொழி மாநாட்டு முதல்நாள் ஆரம்ப விழாவில் சிறப்புரையாற்றுகையில் வண. பிதா, தனிநாயகம் அடிகளாரை நினைவுகூரத் தவறிப்போன பேரா. கா. சிவத்தம்பி அவர்கள் இங்கே தொடக்க விழா அடிகளாரின் அரங்கிலே ஆரம்பமான பொழுது அவர் திருவுருவப் படத்திற்கு நேர் கீழ் அமர்ந்தே வாழ்த்துரை வழங்கினார்.
ஆக இந்த அருமையான தமிழ்முஸ்லிம் இலக்கியசங்கமம் எதிர்கால அனைத்து மாநாடுகளுக்கும் ஒர் எடுத்துக் காட்டாகவும் முன்மாதிரியாகவும் அமைவதாக,
நதிகளுக்கும் கடல்களுக்கும் மட்டுமன்று சங்கமம் அனைத்துத் தமிழ்ப் பேசும் தமிழ் எழுத்துக்களில் ஊறித் திளைக்கும் ஆத்மாக்களுக்கும் காலத்தின் கட்டாயமும்கூட
என்ற f f 5 O ( 瞬 பாரதிவிருது
கலைஞர் கணிப்பில் அவர் கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு (ஜனவரிதிங்கள்)சமயத்திலும் திருவள்ளுவர் விழாவிலும் சென்னையில் அவரால் சில நற்காரியங்கள் நடக்கும்.
இவ்வாண்டு சிறந்த நூலுக்கான பரிசு முப்பதாயிரம், மூவருக்கு (ஜெயகாந்தன் இதில் முதன்மை) ஓர் இலட்சம் பொற்கிழி முக்கிய சிலருக்கு மறைந்த மாமணிகளின் பெயரில் விருதும் கையில் காசும் கிடைத்திருக்கின்றன.
ஞானம் -கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

இதில் க்க கிடைக்கள்ள . கெளரவம் அதிமுக்கியம் நா. மம்மது என்ற ஒரு எம்.ஏ. பட்டதாரிமுஸ்லிம் அன்பருக்குப்பாரதியார் விருதும் ஓர் இலட்சம் பரிசும் (ஏன் எதற்கு என ஆராய்கிற பொழுது அவர் ஆற்றியுள்ள பணியைத் தமிழிசை அறிஞர்கள் ஆய்வாளர் கள் ஆற்றாமல் போனார் களே என ஆதங்கம் யாருக்கும் வரும்.
சிலப்பதிகாரத்தை வைத்து தொல்காப்பியர் தெளிவாக்கியுள்ள தமிழ்பண்ணின் தொன்மை, தமிழிசையின் இனிமை, கடன் பெற்ற ஓர் நாடக இசை என விலாவாரியாக ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் “தமிழ் இசைப் பேரகராதி தொகுத்த மேதாவி மம்மது அவர்கள் தமிழ் இசைத் தளிர்கள் வேர்கள் என்றும் ஏற்கனவே வெளிச்சமிட்டுள்ளார்.
இந்த இசைத் தமிழ் அறிஞரையும் துணைவியாரையும் நானும் நிழலும் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக் கருத்தரங்க மேடையில் இசையும் தங்கத் தமிழும் பற்றிய ஆய்வுரையின் டிசெம்பரில் 20ல் சந்தித்த 25 நாட்களுக்குள் கலைஞர் அடையாளம் கண்டிருப்பது அவருடைய குழாம் காலங்கடந்த கண் திறந்துபார்ப்பதை உணர்த்துகிறது.
உண்மையில் இந்த மம்மது என்ற மனிதர் செம்மொழி மாநாட்டில் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த அன்பருடன் தொ. பே. தொடர்புகொண்டு வாழ்த்து வழங்கிய பொழுது, “இந்த விருது எனக்குக் கிடைத்ததை நம்ப முடியவில்லை. நான் முஸ்லிம் என்னில் ஊறியுள்ள தமிழால் தமிழிசையை ஆய்ந்து அதன் நிலைக்காக ஆதங்கப்பட்டேன். நூலாக வடித்தேன். சொற்பொழிவுகளும் ஆற்றிவருகிறேன் அவ்வளவுதான்” என்றார்.
இரசிகமணி டி.கே.சி யின் மண்காரரான (தென்காசி - குற்றாலம்) இவர் தற்சமயம் மதுரையில் இன்னிசை அறக்கட்டளை உருவாக்கி தமிழ்ப்பண் (தமிழிசை) இல்லம் நடத்துகிறார். அவருடன் மேலும் இரு இயக்குநர்கள்.
ஆனால் மாணவர் தொகையை விரல் விட்டெண்ணி விடலாமாம்.
யாழ் மாணவர்களைப்பெரிதும் எதிர்பார்க்கிறார். அதற்கு வசதியாக, இவரையும் இவரது ஆய்வையும் விவரமாகத் தெரிவிக்கும் தமிழ் இசைப் பேரகராதியை யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்திருக்கிறார்.
எனது வடபகுதி வாசகர்கள் ஒரு முறை அதைப் புரட்டி இந்த மம்மதுவைவாயாரவாழ்த்துங்கள். அடிக்குறிப்பு:பேரா.கா.சிவத்தம்பிஅவர்களுக்கும்மாநாட்டில் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.அன்னார் இவ்வாய்வு நூலை வெளிச்சத்திற்குக் கொணருவது காலத்தின் கட்டாயம்
எண்பத்தெட்டாவது வயதில் அறுத்தமாபிரியாவிடை
இந்தக் காலப்பெண் எழுத்தாளர்கள் அறியாத, புரியாத பெயர்தான் 'அநுத்தமா' என்ற இராஜேஸ்வரி
35

Page 38
டிசெம்பர் 03ல் பிரியாவிடைபெற்ற அவர். "கலைமகள்” எழுத்தாளர் வித்துவான் கி. வா. ஜ. வாய்ப்பில் வளர்ந்து உச்சிக்குப் போனவர்.
சிறுகதைகள் மட்டுமன்றி, ‘கேட்டவரம்' , 'நல்லதோர் வீணை, மணல் வீடு, நைந்த உள்ளம், 'தவம் போன்ற நாவல்களால் பெண்ணியம் வளர்த்தார்.
12 அகவையில் திருமணம், அரச அதிகாரியான கணவர் பத்மநாபனின் ஊக்குவிப்பால் படைப்பிலக்கியவாதி. முதல் கதையான ஒரேயொரு வார்த்தையை எழுதி மாமனாரிடம் கொடுத்து ஆசிர்வதிக்கச் சொன்ன பொழுது கசஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்த அவர், தாம் உச்சரித்துக் கொண்டிருந்ந 'அநுஸ்தமா’ என்ற பெயரையே சூட்டி அப்பெயரிலேயே எழுதச்சொன்னாறாம்.
இவரது உற்ற தோழியாக இருந்தவர் ஆர். சூடாமணி இவரும்பிரபல எழுத்தாளர். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட இவரது மறைவு இவரை பெரிதும் பாதித்திருந்ததாம்.
என் இளமைக்கால அபிமான எழுத்தாளருக்கு ஆழ்ந்த இறைஞ்சுதல்கள்.
பேசா மட
எனக்குள் குவிந்து கிடக்கும் உனக்கான வார்த்தைகள் - உன்னோடு பேசிக்கொள்வதற்கான ஆயத்தங்களை
என்னுள்
நிகழ்த்திக்கொள்கின்றது. நம்மிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் உறவுநிலையின் மீது ஏதும் தெரியாதவளாய்
go
கேள்விக் கணைகளை தொடுத்துக் கொள்கின்றாய் எதுவித முன்னறிவிப்புக்கள் ஏதும்இன்றி என்னுடனான பேச்சொலிகளை நீரீயாகவே தடைசெய்திருக்கிறாய் என் கண்முன்னே விரிந்து வியாபகம் கொள்ளும் அத்தனைஇடங்களிலும் பிரதிபலிப்பாய் உன் விம்பம் என்னை சமரசம் செய்து கொள்கிறது. பேசா மடந்தையாய் தினமும் சென்று கொண்டிருக்கிறாய்
36

புத்தகக் காட்சிக்கு புதிர்
விளம்பாப்
ஆண்டு தோறும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் “சென்னை புத்தகக் காட்சி” ஜன 04 லிருந்து 17 வரை நடந்தேறியுள்ளது. துவக்க நாளில் அங்கே செல்லக்கிடைத்தது நான் கேட்டவரம்"தாழைமதியவன்" என்ற பிரபல படைப்பிலக்கிய வாதியின் காட்சி அரங்கம் எனது தலைமையில், கவிஞர் தர்ஹாநகர் ஸபா நாடா வெட்டித்திறந்தார். சிறப்பதிதிகளாக நமது தமிழ்ச்சங்கப் பொதுச் செயலர் ரகுபதி பாலழநீதரனும் துணைவியார் சுமதியும் திகழ்ந்தனர்.
ஒரு நெருடல் ஒரு நாளேட்டில் வந்த விளம்பரம் அதில் பாதி ஆங்கிலம் மற்றது தமிழ் இதன் மர்மம் புரியாமல் தவிக்கிறேன்.அபிமானிகளும்பார்வையிடுங்கள்.
ந்தையாய்
- வெ. துஷ்யந்தன்
"TODAY AT 5 PM
bramekła swołał .......6Itill:6bằ}đjịH-ööffI--- தகவல்கற்றும் ஒன்டிப்புத் துறை, கிந்திய அரசு sæåæson ::: plis Rött köl-ll-.
Tesocksellersand Phishers' Associalios doutinia
என்னைக் கடந்து செல்கின்ற 6ിഗ്ഗ്ഗക്രമണി உன்னை அறியாமலேயே என்னை நோக்குகின்ற உன் விழிகளை நீவலிந்து சிறைப்படுத்திக் கொள்கின்றாய் உன்னோடு பேச எத்தனிக்கும் என் உணர்வுகளை புரிந்தும் புரியாதவளாய் பாசாங்கு செய்து கொள்கிறாய் ஒவ்வொரு விடியல்களும் உன்னோடான பேச்சொலிகளுக்கான எதிர்பார்ப்பினூடே விடிந்து விடுகின்றது. என் மீதான கோபதாயங்களையோ, நம்பிக்கையினங்களையோ
ിസ്ത്രഞ്ഞമണ0് മ് என் முன்னே சமர்பிக்கும் வரை என் மீது உனது இந்த நடவடிக்கை உன்னையறியாமலேயே தொடர்ந்து விடப் போகின்றது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 39
சந்தில் தி. ஞானசேகரன்
6.02.2009ல் அகவை எழுபத்தைந்தை நிறைவு செய்து 16.
அவர்களின் இலக்கியப் பணிகளைக் கெளரவிக்கும் முகம்
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரியின் தோட்ட மஞ்சரியூடாக நடத்தியநான்கு சிறுகதைப்போட்டிகளில்(19631970)முதல்மூன்றுபரிசுகள் பெற்ற சிறுகதைகளைத்தொகுத்து நூலாக்கும்பணியினை மேற்கொண்டிருந்தது.
வீரகேசரிப் பிரசுரம், மலை நாட்டு எழுத்தாளர் மன்ற வெளியீடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். முழுக்க முழுக்க அமரர் எஸ். எம். கார்மேகத்தின் உழைப்பு இது. அமராகிவிட்டகே.கோவிந்தராஜுவும்,மாத்தளைசெல்வாஎன்று அறியப்பட்டிருந்தH.H.விக்கிரமசிங்கவும்இந்தநூல்வெளியீட்டில்
அந்தஎழுபதுகளில்இன்றைக்கு40ஆண்டுகளின்முன்ஒரு சிறுகதைநூலைவெளியிடுதல்என்பதுலேசுப்பட்டகாரியம்அல்ல. அதைக் கார்மேகம் செய்து காட்டினார். வீரகேசரியின் எழுபதுகள்காலஓவியர் பூரீகாந்த்'இரண்டுமூன்றுஒவியங்கள் வரைந்திருந்தார் அட்டைப் படத்துக்காக. நானும் கார்மேகம், கோவிந்தராஜ், விக்கிரமசிங்கவுடன் நீண்டநேரம் இரவிரவாகக் கிடந்திருக்கின்றோம் வீரகேசரிமெஸ்ஸில்.
கார்மேகம் ஒவியங்களைக் காட்டினார்.இருவருமாக ஒரு ஒவியத்தை தெரிவுசெய்துகொண்டோம்
தொகுதியின் தலைப்பு பாட்டி சொன்ன கதை முதல் இரண்டு போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றவர் நீங்கள். உங்களுடையமுதல்கதையின் பெயரையேஇந்தத்தொகுதியின் பெயராகவும்வைப்போம்என்றார்கார்மேகம்
எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனாலும் நான் அவரிடம் கூறினேன்'இந்தப்பெயர்வேண்டாம்கார்,உள்ளேபன்னிரண்டு கதைகளும்பத்துப்படைப்பாளிகளும்இருக்கின்றனர்.அதனால் வேண்டாம் என்றேன்.
சாரல்நாடன்,எம்.வாமதேவன்;குன்றவன்;மு.சிவலிங்கம் பரிபூரணன், சி. பன்னீர் செல்வம் மாத்தளை வடிவேலன், அ. சலமன்ராஜ், தங்கபிரகாஷ் என்று என்னுடன் பத்துப்பேரின் பன்னிரண்டுகதைகள் இருக்கின்றதொகுதிஇது
கார்மேகம் உடனே கூறினார் அப்படி என்றால் நீங்களே ஒரு பெயர் கூறுங்கள் என்று. நான் இரண்டு பெயர்கள் சொன்னேன்.கதைக்கனிகள் அல்லதுமலையகப்பரிசுக்கதைகள் என்று வைப்போம்என்றேன்.
கதைக்கனிகள் என்னும்பெயர்ஒத்துக்கொள்ளப்பட்டது. மலையகப் பின்னணியில் கொழுந்தாயும் கைகளும் ஒரு கூடையுமாகரீகாந்ஒரு அருமையான ஓவியம்வரைந்திருந்தார். எங்களுக்குநன்றாகப்பிடித்திருந்தது.ஆனால்புத்தகம்வந்தபோது அந்தஒவியம்வரவில்
ஒரு விரித்து வைத்த புத்தமும் அருகே நாலைந்து பழங்களுமாக ஒரு அட்டை ஓவியம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 
 

5.2010ல் பவள விழா கொண்டாடிய தெளிவத்தை ஜோசப் க இந்த நேர்காணல் தொடரை ஞானம் வழங்குகின்றது.
என்ன்வாயிற்றுகார்என்றேன்.ஒருவிகடப்புன்னகையுடன் கூறினார்'எங்கள்பெரியவர்களுக்குப்பிடிக்கவில்லை.ஒவியரைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டு, கதைக்கனிகள் என்று பெயர் வைத்திருக்கிறது வேர் இஸ்த கதை. வேர் இஸ்த கனிகள் என்றாராம் ஓவியர் போட்டுக்கொடுத்தகதையும்கனியும்தான் இது என்று. Na
1971ஜனவரியின் அட்டன் புனித்பொஸ்கோஸ்கல்லூரியில் பொங்கல் நாளன்றுகதைக்கனிகள் வெளியீட்டுவிழா நடந்தது. அமரர் எச். எம். பி. மொகிதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மலை நாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் ரா.மு.
நிகழ்த்ததிருவாளர்கள் அமரர்இரா.சிவலிங்கம்,செந்தூரன்,ஏபி விகோமஸ் ஆகியோர்நூல்விமர்சன உரையாற்றினர்.
கதைக் கனிகள் என்ற தொகுதி மலையகச் சிறுகதைகளுக்கு ஒரு பதமாக அமைந்துள்ளது. என்றார் பேராசிரியர்கைலாசபதி,
இலங்கைச்சிறுகதையின் சிலபோக்குகளையும்ஒருபுதிய பகுதியினர் தமிழ்ச் சிறுகதைத்துறைக்குள் வந்திருப்பதையும், அவர்களது வருகை தமிழ் எழுத்துத் துறைக்கு நல்ல நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருக்கிறது என்ற ஒன்று போதும். க்கனிகள்என்னும்இச்சிறுகதைத்தொகுதியின் வளத்தைக் காட்டுவதற்கு என்றுகுறித்தார் இரா. தண்டாயுதம் அவாகள.
கதைக்கனிகள் சிறுகதைத் தொகுப்பு மலைநாட்டை சிறப்பாகப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்று எழுதிவைக்கின்றார் செம்பியன் செல்வன்.
எஸ். எம். கார்மேகம், கே. கோவிந்தராஜ், எச். எம். பி. இர.சிவலிங்கம், செந்தூரன், கோமஸ், கைலாசபதி, இரா. தண்டாயுதம் செம்பியன் என்ற அனைவருமே இன்று நம்முடன் இல்லை! ஆனாலும் நம்முடன் வாழ்கின்றனர். அவர்களை அவர்தம் பணிகளை நினைவு கூர்கின்றோம். எழுதி மகிழ்கின்றோம்பேசிக்களிக்கின்றோம்.
1971ல் வெளியிடப்பட்ட இந்த நூலின் இரண்டாம்பதிப்பை இருபது வருடங்களின் பின் 1991ல் மாத்தளை கார்த்திகேசு அவர்கள் வெளியிட்டார்.
அவர் குறிஞ்சி வெளியீடு என்று ஒன்றை ஆரம்பித்த புதிதில் குறிஞ்சிவெளியீட்டின்முதல்நூலாக கதைக்கனிகளை வெளியிடவிரும்பிஎன்னிடம் வந்தார். சரிபோடுவோம்,என்றேன். வீரகேசரி வெளியீடு என்பதால் தான் அச்சமாக இருக்கிறது. நூலை வெளியிட்ட பிறகு ஏதாவது பிரச்சினை பண்ணினால்.என்றார்.
37

Page 40
திருவென்சஸ்லாஸ் அவர்க்ள் வீரகேசரியின் எம்.டி.யாக இருந்த நாட்கள் அவை,
ஒன்றும்யோசிக்காதீர்கள்.கதைக்கனிகள் தேடப்படுகின்ற ஒரு காலத்தில் அது யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவேபுதியபதிப்பொன்றுவருவதுஅத்தியாவசியம்பேடுங்கள் வீரகேசரியை நான்பார்த்துக்கொள்ளுகின்றேன்'என்றேன்.
கிணற்றில் விழுந்த கல்என்பார்களே. அதைப்போல இந்த இரண்டாம் பதிப்புக் கதையும் ஆழத்தில் விழுந்து விட்டதைப் போன்று பேச்சே இல்லை.
திடீரென ஒருநாள்மாத்தளை கார்த்திகேசுவந்துநின்றார். கையில் கதைக்கனிகள் இரண்டாம்பதிப்புநூல் இருந்தது. மிகவும் மகிழ்வாக இருந்தது. மறக்கமுடியாதமனிதர் மாத்தளை கார்த்திகேசு அவர்கள்.
அவருடைய வழி பிறந்தது நாவல், மு. சிவலிங்கத்தின் மலைகளின்மக்கள்;மாத்தளைரோகினிஎன்னும்பெயரில்எழுதிய ஐயாத்துரையின்'உரிமைப்போராட்டத்தில்உயிர்நீத்ததியாகிகள் மற்றும் இதயத்தில் இணைந்த இருமலர்கள் நாவல், இளங்கீரன், அருணாசெல்லத்துரை,சோமகாந்தன் என்றுபத்துக்குமேற்பட்ட நூல்களை தனது குறிஞ்சி வெளியீட்டின் மூலம் வெளியிட்டு சாதனை படைத்தவர் இவர்.
தொண்ணுறுகளில் நான் துரைவியவர்களுடன் நெருக்கமாகப்பழகியகாலங்களில்ஒருதடவைதுரைவிஎன்னிடம் கேட்டார்'நான்கு போட்டிகள்மும்மூன்றுபரிசுக்கதைகள்என்றால் பன்னிரெண்டு இருக்கவேண்டுமே. நீங்கள் பதினொரு கதைகளைத்தானே தொகுத்துள்ளீர்கள் என்று
ஆஹா கண்டுபிடித்துவிட்டீர்களா'என்றேன். இரண்டாவது போட்டியில் (1965) மூன்றாவது பரிசு பெற்ற குன்றவனின் சுவை என்ற கதை இந்தத் தொகுதியில் இடம் பெறவில்லை. -
காரணம் கதைகிடைக்கவில்லை. 1965ல் வீரகேசரியில் வெளிவந்த கதையை ஒரு ஐந்தே வருடங்களின் பின் (1970ல்) வீரகேசரியின் பிரதம துணை ஆசிரியரான கார்மேகம் அவர்களால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது எதைக் காட்டுகிறது. வீரகேசரி போன்றதொருபலம்வாய்ந்தபத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகப் பலவீனத்தையா!
1983க்குப் பிற கென்றால் இனக்கலவரத்தீயின் மேல் பாரத்தைப்போட்டுவிடலாம்.
இந்த இன அகங்காரத்தின் கோர அடையாளங்கள் பெருந்தீயாக மட்டுமல்லாமல் சின்னச் சின்ன பொறிகளாகவும் செயற்படுவதை நம்மால் வெகு சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.
களஞ்சியப் பொறுப்பாளர் தமிழறியாதவராக பெரும்பான்மையினத்தவராக இருப்பார்.
அவருடைய பணியாட்களும் அப்படியே களஞ்சிய அறை நிரம்பிக்குவிந்து கிடக்கும்.வைப்பதற்கு இடமில்லாமல்,
இவைகளைளங்கே அடுக்குவது.இடம்எங்கே இருக்கிறது என்னும்பணியாளர்களின் முனகல்களுக்குகளஞ்சியமேலாளர் முகாந்திரம் தேடியாக வேண்டும் ஆண்டைப் பார்ப்பர். அடேயப்பா
பின்னுக்குப்போடுஎன்பார்.
பின்னுக்கு அனுப்பிவிட்டால் அவ்வளவுதான். யாருக்கும் தேடமுடியாது.
தமிழ்ப்பேப்பர்தானே என்னும் அசட்டைமனப்பான்மை, பிந்திய அறுபதுகளில் காதலினால் அல்ல என்று வீர கேசரியின்துணைவெளியீடானமித்திரன்வாரமலரில்ஒருநாவல் எழுதினேன். என்னுடைய முதல்நாவல் அது -
38

அதன் பிறகு எழுதியது தான் காலங்கள் சாவதில்லை வீரகேசரி நூலாக வெளியிட்ட நாவல் (1974)
என்னுடையமுதல்நாவலைத்தேடிஎடுக்கநான்படாதபாடு இல்லை.
உள்ளே இருந்த கார்மேகத்துக்கே ஒரு சிறுகதை வந்தபேப்பரைத்தேடிஎடுத்துக்கொள்ளமுடியாதபோதுவெளியே இருக்கும் என்னால் ஒரு தொடர் நாவலை எப்படித்தேடி எடுக்க Մiջեւյն,
குன்றவன் என்னும் பெயரில் எழுதிய கே. முருககேசு என்பவருடைய இந்தப்பரிசுக்கதைக்காக கார்மேகம் மிகவும்
கதை வைத்திருப்பவர்களை அனுப்பி உதவுமாறு தோட்ட மஞ்சரியில் தொடர்ந்து அறிவித்தல் போட்டார் ஒன்றும் நடக்கவில்லை.
குன்றவனின் கதையான சுமை உரிய காலத்தில் வந்து சேராததால் இத்தொகுதியில் இடம் பெறவில்லை என்று தனதுரையில் ஒரு வரி எழுதிக் கொண்டார் கார்மேகம். ஒரு தனியார் கம்பெனியிலேயே இந்த நிலை என்றால் அரச நிறுவனங்கள்ல் தமிழ்என்ன பாடுபடும்.
இலங்கை வானொலியின் தமிழ்பிரிவுப்பொறுப்பாளர்கள் கிடைப்பதற்கரிதான முக்கியமான ஒலி நாடாக்கள் சீரான முறையில் பாதுகாப்பாகக் களஞ்சியப் படுத்தப்படாமையினால் பாவிக்க முடியாமல் பழுதடைந்துபோவது பற்றியும் அது பற்றி மேலிடத்துக்கு முறையிடும் போது காட்டப்படும் அலட்சியப் போக்குபற்றியும்விசனப்படுவதை நானறிவேன்.
தொலைக்காட்சி தேசிய சுவடிகள் கூடம் என்று சகல மட்டத்திலும் தமிழ் தானே என்னும் அலட்சியப் போக்கும் அசட்டையுமேநிலைநிறுத்தப்படுகின்றது.
இந்த நிலையிலிருந்துதமிழைமீட்சிபெறச்செய்யநிறைய பாடுகள்படவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
வென்றடக்கல்,கொன்றொழித்தல்என்றுஎதுவுமே சரிவரப் போவதில்லை என்பதை சரித்திரம் நமக்கு நன்றாகவே கற்பித்திருக்கிறது.
தேசிய மொழிகளின் இலக்கிய அபிவிருத்திக்காக வென்றும்; கலை, கலாசாரம் மொழி, இலக்கியம், சமயம் ஆகியவற்றின் மலர்ச்சிக்காக வென்றும் 1956ல் தனியாக ஒரு கலாசார திணைக்களம் அமைக்கப்பட்டது. அதே 1956ல் தான் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்னும் நிலைப்பாட்டை அமரர் பண்டாரநாயக்கா நிறுவினார். நாடாளுமன்றம் இம்மசோதாவைஏற்றுக்கொண்டது.
சிங்களமும் - தமிழும் சம அந்தஸ்துகொண்டவை என்று பேசியும்வாதாடியும்வந்தஅவர்திடீரெனசிங்களம்மட்டுமேஎன்று பிரச்சாரம்செய்துவெற்றியீட்டிநாட்டின் தலைவர் ஆனார்.
பெரும்பான்மைசிங்களமக்கள்மிகவும்தீர்க்கமாகஇதையே கோருகின்றனர் என்பது ஒரு உண்மை, அவர்களது கோரிக்கை நியாயமானதா என்பதுவேறொருபிரச்சினை'என்று விளக்கம் கூறினார் அவர்.
இது நியாயமற்றதுதான் என்பதையும்; நியாயங்களை எல்லாம்பார்த்துக்கொண்டிருந்தால்இந்த நாட்டின் தலைவராக முடியாதுஎன்பதையும்மிகவும் சூட்டிசுமமாகத் தெரிவிக்கின்றார்
96).T.
தமிழுக்கும்சமஅந்தஸ்துஎன்னும் அந்தநியாயத்துக்கான போராட்டமேதமிழின் இருப்பிற்கான, அடையாளத்துக்கான ஒரே வழிஎன்பதைத்தான்தமிழ்மொழிஒரு அரசமொழியாக அமைய
வேண்டும்என்றுகூறினேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 41
தஸ்லிமா விவகாரத்தில், இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நோக்கினேனே தவிர, மாக்ஸிச நோக்கில் அல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தஸ்லிமா இஸ்லாத்தை விமர்சித்த போக்கை ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ என்னால் முடியாது. ஏனெனில், இவர் தனிப்பட்டமுறையில் பாதிக்கப்பட்டவர். அந்த எரிச்சலை வெளிப்படுத்துவதற்காக இஸ்லாமிய கோட்பாடுகளைக் கொச்சைப் படுத்த நினைப்பது பொருத்தமானதல்ல. V XX
தஸ்லிமாவைப் போன்றவர்களைத்தான் மேற்குலக இஸ்லாத்தின் எதிரிகள் தட்டிக் கொடுத்து தங்க முலாம் பூசுகின்றார்கள்.
அண்மையில், நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களுக்கு விருது வழங்குவதாக அறிவிக்கப் பட்டிருந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். கேலிச் சித்திரம் தானே இதற்கேன் இவ்வளவு ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் என்று சிலர் பேசிக் கொள்ளலாம். எழுதவும் செய்யலாம். எழுத்துச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்றும் சொல்லலாம். இதன்பின்னணி என்ன? ஏன் இவ்வாறான சீண்டுதல்கள் என்பதை எவரும் சிந்திப்பதில்லை.
மேல் நாட்டில் சாராயப் போத்தல்களில் ஆன்மீக படம் போடப்பட்டிருப்பதை நியாயப்படுத்தமுடியுமா? அல்லது ஏதாவது கலைவடிவம் கொடுத்துரசிக்கலாமா?
மதிப்பிற்குரிய சசீதரன் “கருத்துச் சாரமே பிரதானமானது என்பது கவனிக்கப்படவில்லை” என்றொரு மெல்லிய குற்றச் சாட்டைச் சுமத்தியுள்ளார்.
தஸ்லிமாவின் ஆக்கங்களிலுள்ள கருத்துச்சாரம் என்ன? கெட்ட பெண்களின் கெட்ட கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில், திருமண அமைப்பைப் புறக்கணிக்கும் பெண்களின் கூடா ஒழுக்கங்களை விபரிக்கிறார்.
அப்ஸல் என்பவரின் மனைவியாகிய கதாநாயகிகாகன் என்ற ஆணுடன் தொடர்புகொண்டு ஒர் ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தன் கணவனைப் பழிவாங்க காகன் என்பவனுடன் எப்படித் தொடர்பு கொண்டாள், என்பதைத் திரையின்றிவிபரிப்பதேலோத்கதையாகும்.
“உங்கள் கணவன் உங்களுக்கு விசுவாசமாக இல்லை யென்றால், நீங்களும் உங்கள் கணவனுக்கு விசுவாசமாக இருக்காதீர்கள்"(நிமந்தரன்)
“ஒரு பெண் கணவனுடைய விந்தையோ வேறு எந்த
அதை முடிவு செய்யும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கவேண்டும்.(ஒரு நேர்காணல்)
தஸ்லிமாவுக்கு தேவைப்படும் பெண்ணுரிமை என்ன தெரியுமா? கருப்பை சுதந்திரம்
திருமணத்தைப்பற்றிக் கூறும்பொழுது"திருமணம் ஏன்?
உங்களைச் சமமாக மதிப்பவர்கள் யாரென்று நீங்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 

олалй5
- சாரணர் கையூம்
கருதுகிறீர்களோ அவர்களோடு உறங்குங்கள்.”
“இரக்கம் நிறைந்த சொற்களுக்கோ ஒழுக்கம் பற்றிய பேச்சுக்கோ இது நேரமல்ல எனவே கணவனை விட்டுக் கண்டவனுடன் உறங்கப்பழகிக்கொள்ளுங்கள்”
இதுவே, தஸ்லிமாவின் கருத்துச் சாரமாகும். இவரது உபதேசங்கள் நவீன உலகுக்குப்பிடித்தமாக இருக்கலாம்.
பேனா பிடிக்கும் ஒருவர் ஒழுக்க விதிகளைக் கருத்திற் கொள்ளாமல், ப்ளுபிலிம் போக்கில் எழுதுவதை ஏற்றுக்கொள்ளலாமா? விரும்பியவரின் விந்தைப் பெற்றுக்கொண்டு அநாமதேயங்கிளைப் பெற்றுநெறிபிறழ்வுக் கொள்கையைப் பிரகடனப்படுத்துவதா தஸ்லிமாவின் கருத்துச்சாரம்?
முஸ்லீம்கள்'லஜ்ஜநூலுக்காக எதிர்ப்புக்காட்டவில்லை. தஸ்லிமாவின் கீழ்த்தரமானகருத்துக்களை பிரதிபலிக்கும் எழுத்துக்களைத்தான் பங்களாதேஷ்மக்கள் சாடியிருந்தனர். நாங்கள் மேற்குலக கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் கொண்டவர்கள் அல்ல. எங்களுக்கென ஒழுக்க விழுமியங்கள் உண்டு. தஸ்லிமாவின் போதனைகள் கருத்துக்கள் மேற்கை வெகுவாகக் கவரக் கூடும்.
இஸ்லாத்தின் பெண்கள் நிலைபற்றி பேசுவதற்கு முன் ஏனைய சமூகத்திலுள்ள பெண்கள் நிலைபற்றிப் பேசுவது இங்குபொருத்தமானதென்று நினைக்கின்றேன்.
கிரேக்கர்கள்; பெண்களை விற்பனைப் பொருளாகவே கருதினர். அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. உரிமை அனைத்தும் ஆண்களுக்கே. பெண்கள் விஷ விருட்சத்திற்கு ஒப்பானவர் என்றனர்.
ரோமானியாப்பெண்கள் உயிரற்ற ஜடங்கள் என்றனர். சீனர் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் கழுவிவிடக்கூடியதண்ணீருக்கு ஒப்பாக்கினர்.
யூதர்கள், பெண்களை சாபத்திற்குரியவர் என்றனர்.
அரேபிய தீபகற்பத்திலும் இதுப்போன்றே பெண்கள் கருதப்பட்டு வந்தனர்.இவ்விழி நிலையிலிருந்து பெண்களை விடுவித்து பெருமை இஸ்லாத்திற்கே உண்டு. -
சொத்துரிமை உழைப்புரிமை திருமணத்தின் போது கணவனைத் தெரிவு செய்யும் உரிமை ஒவ்வாத கணவரிடமிருந்து விவாக விலக்குப் பெறும் உரிமை, கருத் துரிமை ஆகிய அனைத்து உரிமைகளும் இஸ்லாம் வழங்கியுள்ளது. தஸ்லீமா இதையெல்லாம் எவ்வாறு கொச்சைப்படுத்துவார்? தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை.
தஸ்லிமாவைப் பற்றி விமர்சிப்பவர்கள் இஸ்லாமியக் கொள்கைகோட்பாடுகள்ை அறிந்திருத்தல் அவசியமென்பதை மதிப்பிற்குரிய சசீதரனுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
தஸ்லீமா போன்றுவிலைபோகாதசாராமாலினிபெரேரா போன்ற பண்பான எழுத்தாளர்களும் இருக்கத்தானே செய்கின்றார்கள்.
39

Page 42
2-V22
a-ye
எழுத்தாளர் சின்னப்ப பாரதியுடன் ஓர் இல கண்டித் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டிYM.C.A இலக்கிய கர்த்தாக்கள் பலரும் ஒன்று கூடி தமிழகத்தின் ஒருவரான கு. சின்னப்பா பாரதி அவர்களுடன் கடந்த 19, 1 பொழுதினிலே இனிய இலக்கியச் சந்திப் பொன்றை ந தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகரும் பேராதனைப் பல்கலைக் தலைவரும் இலக்கிய கர்த்தாவுமான கலாநிதி துரை மனோக உரையைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தலைவரும் இலக்கியவாதியுமான திருஇரா.நித்தியானந்தன் இலக்கிய வாதியுமான திரு. இரா. அ. இராமன் .P ஓய்வு இலக்கியவாதியுமான திரு. கா. தவபாலன், தமிழ்ச் சங்க செ பாலறட்ணம் J. P சங்க செயற்குழு உறுப்பினரும், கவிஞரும மாசுகீன், ஊடகத்துறைப்பொறுப்பாளர் திருஇக்பால் அலி, :ெ அந்தனிஜீவா, ஒய்வுபெற்ற(தமிழக)சங்க இலாகா உத்தியோக சஞ்சிகையின் "சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்”பகுதியி “நூல் மதிப்புரை”பகுதியின் பொறுப்பாசிரியரும் கவிஞருமான திரு செல்லையா. J.P ஆகியோருடன் மற்றும் பல இலக்கிய சின்னப்பா பாரதி அவர்கள் தமிழகத்தின் இலக்கியப் போக்கு எடுத்துரைத்ததுடன்பார்வையாளர்களின் பல்வேறுகேள்விகளு அதன் செய்குழு உறுப்பினரும், நடனத்துறைப்பொறுப்பாளருப கொழுந்து சஞ்சிகையின் 32 வது இதழை அறிமுகம் செய்து செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து நிகழ்ச்சிஇனிதே
patibipu கண்டியைச் சேர்ந்த புகைப்படவீடியோக்கலைஞரான திரு.புவ மகளிர் கல்லூரி மாணவியும், நடன கலாவித்தகர்பூரீமதி உமா புவனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 211.2010 ஞாயிற்றுக்கிழ வழிப்பாடுகளுடனும், மங்கல விளக்கேற்றலுடனும் ஆரம்பமான கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜா அவர்கள் பிரதம மிஸ்ரா, கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரி அதிபர் அருட்ச விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பு கீர்த்தனம்,பத்ம தில்லானா ஆகிய உருப்படிகளை மிகவும் திற செல்வி சதுர்ஷனா. ஆடலுடன் பாடலும் சேர்ந்தால் கேட்கவ நடனங்களுக்கு சிறந்த முறையில் மெருகூட்டுவதாக அமைந் சதுர்ஷனாவுக்கு விதம் விதமான முறையில் ஆடை அலங்கா அந்த ஆடைஅலங்காரத்தைபளிச் பளிச் எனபின்னவைத்தஒள அணிசேர்த்த பின்னணி வாத்தியக் கலைஞர்களைப் பற்றியு ஜம்புநாதன், வயலின் திரு.எஸ்.திபாகரன்,புல்லாங்குழல் திரு. கூடாது எல்லாக் கலைஞர்களுமேதத்தம் கடமையினைச்சரிவு செல்வி சதுர்ஷனா நுண்கலைத்துறைப்பட்டப்படிப்பிற்க ஈண்டு குறிப்பிடத்தக்க ஒரு நற்செய்தி ஆகும். பிரதம விருந்தி மணியளவில் அரங்கேற்றம் இனிதே நிறைவுபெற்றது.
40
 
 
 

guesfl
惠 பொன்னுத்துரை
க்கியச் சந்திப்பு . மண்டபத்தில் பிரபலமான
முக்கிய எழுத்தாளர்களில் 2011 ஆம் திகதி மாலைப் -ாத்தினார்கள். கண்டித் கழகத்தின் தமிழ்த்துறைத் ரன் அவர்களின் தலைமை , கண்டித் தமிழ்ச் சங்கத் சங்கத்தின் செயலாளரும் பெற்ற வரிமதிப்பாளரும், யற் குழு உறுப்பினரும் இலக்கிய ஆர்வலருமான திரு PD. ான திரு பொன். பூபாலன், ஒவியத்துறைப் பொறுப்பாளர் திரு காழுந்து ஆசிரியரும்,மலையக இலக்கியமுன்னோடியுமான திரு த்தரும்,எழுத்தாளருமான திரு.கருப்பண்ணன்,ஞானம் இலக்கிய ன் பொறுப்பாசிரியரான திருகே. பொன்னுத்துரை, ஞானத்தின் திருகுறிஞ்சிநாடன், சமூகசேவகரும் வர்த்தகப்பிரமுகருமான ஆர்வலர்களும் பங்குப்பற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். கு. பற்றி அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து கருத்துக்களை க்குபதிலளித்தார்.இவருக்குகண்டித்தமிழ்ச்சங்கத்தின் சார்பாக, ான திரு மீராஹரிஸ் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். சங்கத் தலைவர் திரு இரா. நித்தியானந்தன் உரையாற்றினார். நிறைவுபெற்றது. தகவல்: கா. தவபாலன்
அரங்கேற்றம் ன்,திருமதிபுவன் தம்பதிகளின் ஏகபுதல்வியும்கண்டி நல்லாயன் நீதரன் அவர்களிடம் நடனம் கற்றவருமான செல்விசதுர்ஷனா மை இந்து கலாசாரமண்டபத்தில் பிய,330 மணியளவில் பூசை ğil. அதிதியாகவும், கண்டி இந்திய உதவிஹைகமிஷனர் திரு. R.K. கோதரி எம். அலெக்ஸான்றா மென்டிஸ் ஆகியோர் கெளரவ த்தார்கள்.புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம் வர்ணம், மையான முறையில் ஆடிக்காட்டிச் சபையோரை அசத்திவிட்டார் வேண்டும். திரு. அருணந்தி ஆரூரன் அவர்களின் பாடல்கள் நிருந்தன. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அந்த வகையில் ம் செய்த ஒப்பனைக் கலைஞர் திருமதிரம்பா சிவராஜாவையும் யமைப்பாளரையும் நிச்சயம்பாராட்டத்தான் வேண்டும். ஆடலுக்கு ம் இவ்விடத்தில் கூறி வைக்க வேண்டும். மிருதங்கம் திரு. ப. .தஸநாயக்கதபேலாதிரு.ரட்ணம்ரட்ணதுரை,கம்மா சொல்லக் ரச்செய்து அரங்கேற்றத்துக்கு அழகு சேர்த்தார்கள். கவிரைவில் பல்கலைக்கழகம் செல்லவிருக்கின்றார் என்பதும் னரின் உரை நன்றியுரை ஆகியவற்றைத் தொடர்ந்து பி.ப.730 தகவல்: கே. பாலா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 43
சாதனைநிகழ்த்தியமாநாடு
அண்மையில் இலங்கையில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. உண்மையில் அதனைப் பெரும் சாதனை என்றே சொல்லவேண்டும் முதலாவது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு இலங்கையில் நடைபெற்றமையையிட்டு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே பெருமைப்படலாம். இம்மாநாட்டைச் சிறுமைப்படுத்தவும் கொச்சைப்டுத்தவும் இலங்கைக்கு வெளியில் பல்வேறு முயற்சிகள் நடந்தன. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் இருந்து எழுத்தூழியம் செய்யும் சில ஈழத்து எழுத்தாளர்கள் இத்தகைய எதிர்ப்புமுயற்சிகளில் ஈடுபட்டமை, எழுத்துத் தர்மத்துக்கே இழுக்கைத் தேடித் தந்து விட்டது. எதிர்ப்பதற்கான உண்மைக் காரணங்கள் இருந்தால் எதிர்ப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் கலப்பு எதுவும் இல்லாது ஒழுங்கு செய்யப்பட்ட இம்மாநாட்டுக்கு அரசியல் சாயம்பூசமுற்பட்டமைபடுபாதகமான செயல்.ஈழத்துத் தமிழ் மக்கள் அவலங்களை எதிர்கொண்டபோது, ஒரு சிலபுலம்பெயர் எழுத்தாளர்கள் பேரினவாதிகளுடன் விருந்துண்டு மகிழ்ந்து சென்றமை கடும் கண்டனத்துக்கு உரியதே. அதை எவ்வகையிலும் நியாயப்படுத்தமுடியாது. ஆனால் இத்தகைய ஒரு சில எழுத்தாளர்களது செயலை மாநாட்டுடன் தொடர்புபடுத்துவது நியாயமாகாது. அல்லது அவர்கள் நடந்து கொண்டமை அவர்களது தனிப்பட்ட விடயமாகும். அவர்களுக்கு எவ்வகையிலும் மதிப்புமரியாதை கொடுக்காமல் இருப்பது வரவேற்புக்கு உரியது.
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் பொறுத்தவரை, இயன்றவரை அது சிறப்பாக நடைபெற்றது. பிற நாடுகளில் இருந்து (குறிப்பாக இந்தியாவில் இருந்து) இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டிருக்கலாமே என்ற ஆதங்கம் பொதுவாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால், கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் தம் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றினர், இலங்கையைச் சேர்ந்த பல பேராளர்களும், பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றிச் சிறந்த பங்களிப்பினை வழங்கினர்.
ஆய்வரங்குகள் பெரும்பாலும் சிறப்பாக இருந்தன. ஆனால், ஓரிரு ஆய்வுத்தலைப்புகள் மிகச் சாதாரணமானவையாக இருந்தன. ஆய்வாளர்களில் பெரும்பாலோர் தமது ஆய்வு அறிக்கைகளைத் திறம்படச் செய்தனர். ஒரு சில ஆய்வாளர்கள், தாம் ஆய்வரங்கில் பங்குபற்றுகிறோம் என்பதை மறந்து மேடைப் பிரசங்கிகள் போல நடந்துகொண்டனர். இவர்கள் திருந்துவதற்கு இன்னும் நீண்டகாலம் எடுக்கலாம். அல்லது திருந்தாமலே இருக்கவும் கூடும்.
இம்மாநாட்டின் இன்னொரு சிறப்பம்சம், கலை நிகழ்ச்சிகள் ஆகும். ஈழத்தின் கலை ஆற்றலைக் கலைநிகழ்ச்சிகள் அழகாகப்பிரதிபலித்தன.இந்நிகழ்ச்சிகளில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 

பங்குபற்றிய கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற பூதத்தம்பி நாடகத்தில் அழகவல்லி பாத்திரத்தில் நடந்து திரிந்த அந்த இளநங்கை, கொஞ்சம் நடித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் இந்த நிகழ்ச்சியை நட்டுவாங்கம் செய்த கலாநிதிகலாமணிஎன்னமாய்பாடுகிறார்கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. இந்த இளம் மனுஷனிடம் இவ்வளவுதிறமையா!
இச்சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியமை, மாநாட்டுக்குக் கிடைத்த பெருவெற்றியாகும். சிவத்தம்பி அவர்களைச் காட்டாகக் கொண்டு, மாநாடு தொடர்பாக முதலைக் கண்ணிர் வடித்தவர்களும் உளர். ஆனால், அந்தக் கண்ணிரைச் சிவத்தம்பி அவர்கள் வற்றச் செய்தமை, அவருக்கும் பெருமை, மாநாட்டுக்கும்பெருமை.
மாநாட்டின் பல அம்சங்களில் திறமையுடன் செயற்பட்ட ஏற்பாட்டாளர்கள் உணவுவிடயத்தில் மட்டும் சற்றுக்கோட்டை விட்டுவிட்டனர். “செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று நினைத்து விட்டார்களோ தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் உணவு விடயத்தில் சங்கடப்பட்டதையும், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதையும் நேரடியாக அவதானிக்க முடிந்தது. அவர்களது அதிருப்தியில் நியாயம் இல்லாமல் இல்லை.
இம்மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவரோடும் இருவரை மனம் திறந்து பாராட்ட வேண்டும். ஒருவர் முருகபூபதி, மற்றவர் ஞானசேகரன். இந்த இருவரும் உலகத் தமிழ் எழுத்தாளர் அனைவரதும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்கள்.
நிறைவேறாத கனவுகள்
நமது தமிழ் அரசியல்வாதிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.ஒருநேரம் ஒற்றுமையாக இணைந்து செயற்படவேண்டும் என்று சொல்வார்கள். இன்னொரு நேரம் தனித்துவமாகச் செயற்பட வேண்டும் என்று சொல்வார்கள் இவர்கள் என்னதான் சொல்கிறார்கள், என்னதான் செய்கிறார்கள் என்பது எவருக்கும் புரிவதில்லை.
ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்று இவர்கள் சொல்கிற போது மனங்குளிரும். ஆகா! தமிழ் மக்களுக்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று குடுகுடுப்பைக்காரன் பாணியில் தமிழ் மக்களின் மனங்கள் குதூகலிக்கும். ஒப்புக்காகச் சில கூட்டங்களையும் ஒன்றிணைந்து நடத்துவார்கள். செய்திகளும், படங்களும் பத்திரிகைகளில் வெளிவரும் ஆகா!தமிழ் மக்களுக்கு நல்ல காலம் பிறந்தே விட்டது என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். சிலநாட்கள் கழித்து, பிசாசுமீண்டும்முருங்கை மரத்தில் ஏறிய கதையாக எல்லாம் அமைந்துவிடும்.
4.

Page 44
தமிழ் அரசியல் வாதிகளுள் இருவகையினர் உள்ளனர். ஒருசாரார் தமது.தனித்துவத்தைப் பேணவேண்டும் என்ற கொள்கையினர்.இவர்கள் மீதுஓரளவுக்காயினும் தமிழ்மக்கள் மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளனர். இன்னொரு பகுதியினர் எசமான பக்தி மிகுந்தவர்கள். தமது எசமானர்களுக்கும், தங்களுக்கும் எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்படாதவாறு தமிழர் பிரச்சினைகளைக் கையாளவேண்டும் என்ற சுயநல நோக்குக் கொண்டவர்கள். தமிழ் மக்கள் இவர்களை மனத்தால் விரும்பாவிடினும், தமது, தேவைகளுக்காக இவர்களையே நாடுவர். இவர்களைவிட மூன்றாம் தரப்பிலும் ஒரு சாரார் உள்ளனர். இவர்கள் ஒரளவு முதல்வகையினரோடு ஒப்பிடக்கூடியவர்கள். ஆனால் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யமுயல்பவர்கள்.
பேரினவாதிகளுக்குத் தமிழ் அரசியல்வாதிகளின் உளவியல் நன்கு தெரியும். அதனால்தான் எல்லோரும் ஒற்றுமையாக ஒரேகருத்தோடு முன்வந்தால் தமிழர், பிரச்சினைகள் தொடர்பான தீர்வுபற்றிச் சிந்திக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசியல் வாதிகள் ஒருபோதும் ஒற்றுமையாக இயங்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே புரியும். என்னதான் ஒரு சாரார் உரிமைகள் பற்றிக் கத்தினாலும், இன்னொருசாரார் தமது எலும்புத் துண்டுகளுக்காக நாவூறி நிற்பர் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்த விடயம். கர்லத்துக்குக் காலம் ஒவ்வொரு எட்டப்பர் இருந்துகொண்டே இருப்பர் என்பது தமிழர் வரலாறு கற்றுத்தந்த பாடம்.
தமிழர்கள் எப்போதும் தங்களைப் புத்திசாலிகள் என்று கருதிக்கொள்வது வழக்கம். ஆனால், உண்மையில் பேரினவாதிகளே புத்திசாலிகள் என்பது வரலாறு கற்றுத்தந்த பாடமாகும். தமிழ் அரசியல் வாதிகள் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்குரல்கள் எழுப்பும்போது, பேரினவாதிகள் அவற்றைச் சமாளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வர் ஆனால், அதே தமிழ் அரசியல்வாதிகள் தமது நல்லெண்ணத்தைக் காட்டமுற்படும்போதெல்லாம் சுலபமாக ஏமாற்றிவிடுவார்கள். ஏமாந்தபிறகுதான் தமிழ் அரசியல்வாதிகள் மீண்டும் விழித்துக் கொள்வார்கள். இப்படி ஏமாறுவதும், விழிப்பதும்தான் தமிழர் அரசியலில் காலங்காலமாக நடந்துவருகிறது. ஆனால், பேரினவாதிகள் எப்போதும் ஒரேநிலைப்பாட்டிலே இருப்பார்கள். ஏமாற்றுவதும், தங்கள்பக்கத்தில் சிலரைத்துணையாக வைத்துக்கொள்வதும் அவர்களது இயல்பு:தமிழருக்கு ஒற்றுமை என்பது எப்போதும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தமிழ் நாட்டின் மூவேந்தர் காலத்தில் இருந்து இதுதான் கதை.
பொதுவாகவே பேரினவாதிகளுக்கும், அவர்களைச் சார்ந்தொழுகும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ்ப் பத்திரிகைகளைப் பிடிக்காது. அவைகள் உண்மைகளைச் சொல்லிவிடுகின்றன என்பதுதான் காரணம். பெரும்பாலான சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் பேரினவாதத்துக்குத் துணைபோகும்போது தமிழ்ப் பத்திரிகைகளே (கட்சிப் பத்திரிகைகள் அல்ல) உண்மைகளைத் தெரிவிக்கின்றன. உண்மை சுடும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகத்தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், கருணாநிதியும், ஜெயலலிதாவும் படும்பாடு சொல்லும் தரமன்று. யாருக்கு இலங்கைத் தமிழர் மீது அதிக அக்கறை என்று காட்டுவதில் அப்படியொரு போட்டி எல்லாம் சட்டசபைத் தேர்தல் செய்யும் திருவிளையாடல். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முன்னர் மத்திய
42

அரசுக்கு அறிக்கைகள் அனுப்பிக்கொண்டிருந்த கருணாநிதி, தற்போது தந்திகள் அனுப்பத் தொடங்கியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின் இலங்கைத் தமிழர் தொடர்பாக வாயே திறக்காமல் இருந்த ஜெயலலிதா, இப்போது எக்கச்சக்கமாக அறிக்கைகள் விடத் தொடங்கியுள்ளார். வை. கோ மூலமாகச் சீமானையும் தம்பக்கம் இழுத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்வரும்
சட்டசபைத் தேர்தல் கருணாநிதிக்குத் தகுந்ததொரு பாடத்தைக் கற்பிக்கவேண்டும் என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது. குடும்ப ஆட்சியின் தலைவராகவும், மத்திய அரசின் வாலாகவும் இருந்துகொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாடகம் ஆடும் கருணாநிதியின் அரசியல் எதிர்வரும் தேர்தலோடு அஸ்தமிக்கக் கூடும். ஆனால் அதே வேளை, கருணாநிதிக்கு மாற்றீடு ஜெயலலிதா அல்ல. என்ன செய்வது? நல்ல தலைமைகளை உருவாக்கத் தமிழ் நாட்டு மக்கள் தவறிவிட்டார்கள்.
இந்தியாவில் ஈழத்துத்தமிழ்நூல்கள்
ஈழத்து எழுத்தாளர்களைப் பொறுத்தவரை நீண்டகாலக் கவலையொன்று இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் இருந்து பல தமிழ்நூல்கள் இங்கு இறக்குமதியாகின்றன. தமிழ்நாட்டு எழுத்தாளர்களை நல்ல வாசகர்கள் தெரிந்துவைத்துள்ளனர். ஆனால்ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியபரிச்சயம்தமிழ்நாட்டில் குறைவாகவே இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே பிரசுரமாகும் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் வாயிலாகவே ஓரளவாவது இந்நாட்டு எழுத்தாளர்கள் பற்றிய பரிச்சயம் தமிழ்நாட்டில் உள்ளது. அது வரவேற்புக்குரியதே. அதேவேளை, இலங்கையில் இருந்து நேரடியாகத் தமிழ் நூல்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
இந்திய மத்திய அரசு ஒரு கொள்கையை வைத்திருக்கிறது.இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்பது அது தமிழும் இந்தியாவில் உற்பத்திசெய்யப்படுகிறது. அதனால் தமிழை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது. ஆனால், இது அநியாயமான ஒரு கொள்கை. இந்தியாவில் இருந்து தமிழ்நூல்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுவதைப் போல, இலங்கையில் இருந்தும் அவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட வேண்டும். உண்மையில் தமிழ்நாட்டு அரசு இதில்கவனம்செலுத்தியிருக்கவேண்டும். ஆனால் தமிழக ஆட்சியாளர்களுக்குத் தங்களது சொந்த வீட்டுப் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கேநேரம்போதாது.இதையெல்லாம் கவனிக்க எங்கேநேரம் இருக்கப்போகிறது?
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பலமுறை இது பற்றிக் குரல் எழுப்பியுள்ளனர். இந்நாட்டுக்கு வரும் தமிழக எழுத்தாளர்களிடமும் இது பற்றி இந்நாட்டு எழுத்தாளர்கள் முறையிடுவது உண்டு. தாங்கள் இதுபற்றிக் கவனிப்பதாகச் சொல்லிவிட்டு அவர்கள் போவார்கள். அங்கு தரை இறங்கியதும் அதையெல்லாம் மறந்து விடுவார்கள். அண்மையில், கண்டியில் இடம்பெற்ற எழுத்தாளர்கு, சின்னப்ப பாரதியுடனான சந்திப்பின் போதும் இதனை நாங்கள் வலியுறுத்தினோம்.தங்களதுமார்க்சீயக்கம்யூனிஸ்ட் கட்சிஎம். பிக்கள் மூலமாக இதுபற்றிநாடாளுமன்றத்தில் தெரிவிப்பதாக அவர் உறுதிமொழி கூறினார். பொறுத்திருந்துபார்ப்போம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 45
(அடிப்படைகள் - வரல
கடந்த கட்டுரைவரை இலக்கியத் திறனாய்வியலின் அனைத்துலக மட்டத்திலான பார்வைகள் அணுகுமுறைகள் என்பன கவனத்தைப் பெற்றன. இனி தமிழ்ச்சூழலின் திறனாய்வியல் இயங்குநிலை கவனத்துக்கு வருகின்றது. இதனை நாம் நான்கு வரலாற்றுக்கட்டங்களாக நோக்கலாம்.
அ. பண்டைய இலக்கிய உருவாக்கமுறைமைகள்
மற்றும் மதிப்பீட்டு முறைமைகள் என்பன சார் சிந்தனைகள் (பொருளிலக்கணம், மற்றும் பாயிரமரபு அரங்கேற்றமரபு, முதலியன) கி.பி.19ஆம் நூற்றாண்டின் இறுதி வரையான காலகட்ட வரலாற்றுப்பகுதி இது. ஆ திறனாய்வியலானது தமிழில் ஒரு தனி ஆராய்வுத்துறையாக உருவாகி நிலை பெற்ற சூழல். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஏறத்தாழ முதல் 50 ஆண்டுகளை உள்ளடக்கிய வரலாற்றுப்பகுதிஇது. இ. திறனாய்வுசார் பார்வைகள் மற்றும் அணுகு முறைகளில் அழகியல் மற்றும் மார்க்ஸியம் சார் சிந்தனைகள் எதிரெதிர் நிலைகளில் முனைப்புடன் வெளிப்பட்டுநின்றவரலாற்றுக்கட்டம்,1950கள் முதல் 80கள் வரையான வரலாற்றுநிலை இது. ஈ. அமைப்பியல் முதல் பின்நவீனத்துவம் வரையான சிந்தனைகளின் அறிமுகமும் அவற்றைத் தமிழ் இலக்கிய உலகம் எதிர்கொண்ட முறைமையும் 1980 களில் தொடங்கி இன்றுவரை தொடர்கின்ற வரலாற்றுக்கட்டம் இது. இவற்றில் நான்காவதான சமகால நிலையே தனிநிலையில் நுனித்து நோக்கப்படவேண்டியது.இவ்வாறான பார்வைக்குத் துணைநிற்கும் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே முதல் மூன்றுகட்டங்களின் வரலாற்றுச் செல்நெறிகளும் இங்கு கவனத்துக்கு இட்டுவரப்படுகின்றன. அவ்வகையில் மேற்படி முதலாவது கட்டம் தொடர்பான முக்கிய அடிப்படை அம்சங்களை முதலில் நோக்குவோம்.
3.1 பண்டைத் தமிழரின் இலக்கிய உருவாக்கம், மதிப்பீடுசார் சிந்தனைகள் மற்றும் செயன்முறைகள்
(கி. பி. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் இயங்குநிலை)
பண்டையத் தமிழ் மரபிலே இலக்கியத் திறனாய்வியல் பற்றிச்சிந்திக்க முற்படும்போது முதலில் நாம் கருத்துள் கொள்ளவேண்டிய வரலாற்றம்சம், இலக்கியம் என்ற ஆக்க
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 

- கலாநிதி நா. சுப்பிரமணியன்
முறையைச் சுட்டுவதற்கு பண்டையக்காலத்தில் செய்யுள் மற்றும்பாட்டு ஆகியசொற்களே வழங்கிவந்தன என்பதாகும். இவற்றுள்ளும் குறிப்பாக, பாட்டு இலக்கியம் என்பதனைக் குறிக்கும் முக்கிய சொல்லாக இக்காலப்பகுதியில் வழங்கிவந்தன. (இலக்கியம் என்றசொற் பயிற்சியின் ஆரம்பநிலையினைக் கி. பி. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சேந்தன் திவாகரன் மற்றும் கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குரிய யாப்பருங்கலக்காரிகை என்பவற்றிலேயே காண்கிறோம். இவற்றில் இச்சொல் எடுத்துக்காட்டு என்னும் பொருளில் வழங்கியுள்ளது)
செய்யுள்' என்ற சொல்லை இன்று நாம் பொதுவாக வெண்பா, விருத்தம் முதலான பாட்டுவடிவங்களைச் சுட்டவே வழங்கிவருகின்றோம். ஆயின் இச்சொல் பண்டையகாலத்தில் மொழிசார்ந்த பல்வேறுவகை ஆக்கங்களையும் குறிப்பதான ஒரு பொதுச் சொல்லாக வழங்கிவந்துள்ளது. அவ்வகையில் பாட்டுவடிவம் என்பதையும் உள்ளடக்கி, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல், பண்ணத்தி முதலிய பலவகை ஆக்கங்களையும் அச்சொல்குறித்துநின்றதுஎன்பது கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழைமையுடையதான தொல்காப்பியம் என்ற இக்கணநூல் மூலம் அறியப்படும் செய்தியாகும்.
பாட்டு என்பது பா எனப்படும் ஒசைச் சிறப்புடைய வடிவமைதியைக் குறிப்பது. உரை என்பது உரை நடையிலமைந்த வெளிப்பாடுமுறைமைகளைக் குறிப்பது நூல் என்பது இலக்கணம் மற்றும் தத்துவம் என்பனசார் அறிவுசார் ஆக்கமுறைகளைக் குறிப்பது. வாய்மொழி என்பது மந்திரச் சொல் எனப் பொருள் தருவது. முதுசொல் என்பது பழமொழி யாகும். இவற்றுள்பிசி என்பது விடுகதையையும்'அங்கதம் என்பது நகையுணர்வுடனான ஆக்கங்களையும்பண்ணத்தி என்பது இசை மற்றும் ஆடல் என்பனசார் பாடல்முறைமை யொன்றையும் சுட்டிநின்றன. இவை மேற்குறித்த தொல்காப்பியத்தில் உரைகளால் அறியமுடிகின்ற செய்தியாகும். سم۔۔
இவற்றுள் பாட்டு என்ற அமைப்பை முன்னிறுத்தியே தமிழிலக்கியப்படைப்பாக்கமுறைமைமற்றும்மதிபீட்டுமுறைமை என்பன 19 ஆம் நூற்றாண்டுடிறுதிவரை இயங்கிவந்துள்ளன. புனைகதை மற்றும் புதுக்கவிதை ஆகிய படைப்பாக்க முறைமைகள் தோற்றங்கொள்வதற்கு முற்பட்ட தமிழிலக்கிய வரலாற்றுக்காட்சிஇதுதான்.மேற்படிபாட்டுஎன்றவடிவநிலையில்
முறைமையில்உருவான சிந்தனைகளின் தொகுநிலைபேதமிழில் பொருளிலக்கணமரபுஎனவழங்கப்படுவதாகும்.மேற்சுட்டியவாறு
43

Page 46
கட்டமைக்கப்பட்ட ஆக்கங்களின் தகுதிப்பாடுகளை எடுத்துரைத்தல் மற்றும் சமூகவெளிக்கு அவற்றை இட்டுவரல் ஆகியவகைகள்சார் முயற்சிகளேபாயிரம்மற்றும் அரங்கேற்றம் முதலியனவாக வழங்கப்பட்டுவருவனவாகும். இவற்றுள் பொருளிலக்கண மரபைமுதலில் நோக்குவோம்.
3.1.1 தமிழ்ப் பொருளிலக்கண மரபு - வரலாறு, வளர்ச்சி, மாற்றங்கள்.
தமிழின் பொருளிலக்கணம் கூறும் முறைமையானது இலக்கியக் கட்டமைப்பின் உள்ளடக்கம், யாப்பு. அணி இலக்கியவகை ஆகிய நான்கு முக்கிய கூறுகளின் கவனம் செலுத்திவந்துள்ளது. உள்ளடக்கம் என்பது இலக்கியம்: அதாவது பாடல் உணர்த்த விழைந்த பொருள் பற்றியதாகும். இதனைப்பண்டைத்தமிழ்மரபில்உரிப்பொருள் எனச் சுட்டுவர். யாப்பு என்பது பொதுவாக அமைப்பு எனப்பொருள் தருவது. இலக்கியத்துறையிலே அது பாடலின் ஒசையமைப்பைக் குறிப்பது. ஒசைக்கூறுகளை அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியனவாக அதுவகைப்படுத்திஇலக்கணங்கூறுவதாக அது அமைந்தது. அணி என்பது உணர்த்த விழைந்தபொருளுக்குப் பொருத்தமான உணர்த்து முறைமைகளை - உத்தி முறைமைகளைப்பற்றியதாகும்.இதனை அலங்காரம் என்ற வட சொல்லாலும் சுட்டினர். இவை மூன்றும் பொதுவாக ஒரு தனிப்பாடலின் கட்டமைப்பு தொடர்பானவையாகும். நான்காவதான இலக்கிய வகை என்பது ஒரு தனிப்பாடல் மற்றும் பலபாடல்கள் தொடரும் நிலையிலான இலக்கிய கட்டமைப்பைச் சுட்டிநிற்பது.
இவ்வம்சங்கள் சார்ந்த செய்திகள் பலவற்றையும் பொருளிலக்கணம் என்பதாக ஒருசேரத் தொகுத்துப்பேசும் முயற்சிபண்டையக்காலத்தில்நிலவிவந்தது.என்பதைமேற்சுட்டிய தொல்காப்பியம் நூலின் பொருளதிகாரம் என்ற பகுதி உணர்த்தும். அதன் உட்பிரிவுகளான அகத்திணயியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல்,உவமையியல்மற்றும்செய்யுளியல் ஆகியவற்றில் மேற்படிபொருளிலக்கண மரபுசார்சிந்தனை அம்சங்கள் பலவும் தொகுத்து நோக்கப்பட்டமையை தெரிந்துக்கொள்ள முடியும். இவ்வாறு இலக்கியக்கட்டமைப்புக் கூறுகள் பலவற்றுையும் பொருளிலக்கணமாக தொகுத்துப் பேசும் முறைமையானது தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டகாலத்தில் அருகிவிட்டது. இலக்கியக் கட்டமைப்பின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் தனித்தனியாக இலக்கணம்கூறுவதானமுறைமைநாளடைவில் உருவாக்கிவிட்டது.இவ்வாறான உருவாக்கநிலைக்கு இறையனாரகப்பொருள், நம்பியகப்பொருள் (அகப்பொருள்), புறப்பொருள் வெண்பாமாலை (புறப்பொருள்), யாப்பருங்கலம்,யாப்பருங்கலங்காளிகை (யாப்பு), தண்டியலங்காரம், மாறனலங்காரம் (அணி)
பன்னிருபாட்டியல்,வெண்பாபாட்டியல்,நவநீதப்பாட்டியல் (இலக்கியவகை)முதலியனவாக அமைந்தபிற்கால இலக்கண ஆக்கங்கள் பல முக்கிய சாற்றுகளாகும்.
இவ்வாறான தனித்தனி இலக்கண ஆக்கமுறைமை யானது பொதுவாக இலக்கியம் தொடர்பான கருத்தாக்கங்கள் காலந்தோறும் எய்திவந்த வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் என்பவற்றை உணர்த்திநிற்பனவாகும். இவ்வாறான வளர்ச்சி
44

மற்றும் மாற்றநிலைகளைத் தெளிந்துகொள்வதற்கு முதற்கண் அடிப்படைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஊடாகப் புலப்பட்டுநிற்கும் பண்டைத் தமிழ் பொருளிலக்கண மரபின் முக்கிய அம்சங்களை இங்குநோக்குவது அவசியமாகிறது. இத் தொடர்பில் உயர்நிலை ஆய்வுகள் பல நிகழ்ந்துள்ளன. பல நூல்களும் கட்டுரைகளும் வெளிந்துள்ளன. எனவே இதனை இங்கு விரித்துரைப்பது அவசியமில்லை என்பதால் வரலாற்றுப் போக்கைபுரிந்துகொள்வதற்குப்பயன்படத்தக்கவகையில் சில முக்கியகூறுகளைமட்டும் இங்கு சுருக்கமாக நோக்கலாம்.
3.1.1.1 பொருளதிகாரத்தின் கோட்பாட்டு நிலை + முக்கிய அம்சங்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் சுட்டும் பொருளிலக்கண மரபானது தமிழில் தொன்மையான இலக்கியம் எனப்படும் சங்க இலக்கியச் சூழலுடன் மிக நெருக்கமான தொடர்புடையது என்பது பொதுவாக இலக்கியக் கல்வியாளர்கள் அறிந்த செய்தியாகும். சங்க இலக்கியம் என்ற வகையில் இன்று நமக்குக் கிடைக்கும் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களின் பாடல்கள் ஏறத்தாழ கி.மு. 300 ஆண்டுகள் முதல் கி.பி. 300 ஆண்டுகள் வரையான காலப்பகுதியின் ஆக்கங்கள் என்பது பொதுவாகப் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.இப்பாடல்களின் காலகட்ட சமூகத்தில் நிலவிய இலக்கியம் தொடர்பான சிந்தனைகளின் திரட்சியான இலக்கண முயற்சியாகவே மேற்படி பொருளதிகாரம் எனது கவனத்துக்கு வருகின்றது.
சங்கப் பாடல்கள் என்றவகையில் நமக்குக் கிடைப்பன புலவர்களின் ஆக்கங்களாக எழுத்து நிலையில் வெளிப் பட்டவையாகும். இவ்வாறான எழுத்திலக்கிய உருவாக்கத்துக்கு முன்னர் செழிப்பானதொரு வாய்மொழிப் பாடல் மரபு தமிழில் நிலவிவந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகம் ஆகும்.இவ்வாறான வாய்மொழிமரபிலிருந்து எழுத்துநிலைக்குத்தமிழிலக்கியம்மாற்றமடையத்தொடங்கிய காலக்கட்டத்தில் அவ்வாறான எழுத்திலக்கியக் கட்டமைப்பு களை இலக்கணநிலைப்படுத்தும் சிந்தனைகளும் படிப்படியாக உருவாகி வந்திருக்கும் என்பது உய்த்துணரக்கூடியதாகும். இவ்வாறான சிந்தனைகளின் ஒரு காலகட்ட நிலையையே மேற்படி தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் நமக்குக் காட்டிநிற்கின்றது. அதன் நூற்பாக்களின் இடம்பெற்றுள்ள என்ப,என்மனார்புலவர்,முதலியனவாக அமைந்த கூற்றுகள் சம காலத்திலும் முன்னரும் நிலவிய பல்வகைக் கருத்தாக்கங்களை அந்நூல் திரட்டித் தொகுத்து நோக்க முயன்றமையை உணர்த்துவன. இவ்வகையில் இவ்வாக்கம் தமிழ்ச் செவ்வியல் கவிதை மரபுக்கான பதிவாக நமக்குக் கிடைக்கும் முதல் நூலாக்கம் என்ற சிறப்புக் கணிப்புக்குரியதாகிறது.
இவ்வாறு தொல்காப்பியம் கூற முற்பட்ட பொருளிலக்கணத்தின் ஊடாகப் புலப்படும் அன்றைய காலகட்ட இலக்கியச் சிந்தனைகளின் மூன்று முக்கிய அம்சங்கள் இங்கு நமது கவனத்துக்குரியன. அவற்றுள் ஒன்று இலக்கியத்தின் உருவாக்க நிலை பற்றியது. இன்னொன்று இலக்கியத்தில் பொருளும் வடிவமும் இயைந்த நிலைபற்றியது. மற்றொன்று இலக்கியத்தின் பயன்பாட்டுநிலை பற்றியதாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 47
இலக்கிய உருவாக்க நிலை தொடர்பாக
இந்த அம்சத்தை உணர்த்தி நிற்பதாகக் கொள்ளப்படுவது.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறிவழக்கம் கலிபேபரிபாட்டாயிருபாங்கினும் உரியதாகும் என்மனார் புலவர்” என்ற அகத்திணையியல் நூற்பா (56).
இந்நூற்பாவிலே முதலிரு அடிகளே இங்கு கவனத்துக்குரியவையாகும். இவை “நாடகவழக்கு”, உலகியல் வழக்கு மற்றும் "புலனெறி வழக்கு'என மூன்று வழக்குகள் பற்றி பேசுவன. இவற்றுள் ‘உலகியல் வழக்கு என்பது இலக்கிய ஆக்கத்துக்கு அடிப்படையான உலகின் இயல்பான புறநிலை யாதார்த்தங்களை புறநிலையான உண்மைகளான வாழ்வியல் நிலைகளைக் குறிப்பது. நாடக வழக்கு என்பது அப்புறநிலை உண்மைகளை இலக்கியப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் உத்தி முறைமைகள் பற்றியதாகும். இவ்விருவகை வழக்குகளின் இணைப்பில் உருவாவதே புலனெறி வழக்கம் எனப்படுகின்றது. பாடல் என்ற அமைப்பில் இது உருவாவதால் பாடல் சான்ற அதாவது பாடல் சார்பு பெற்ற புலனெறி என அதாவது புலமைநெறி என இது சுட்டப்படுகின்றது.
இலக்கிய ஆக்கச் செயன்முறையை ஒரு உத்திமுறை எனச்சுட்டி விளக்கம் தருவதான இந் நூற்பாக்கருத்தானது ஐரோப்பியதிறனாய்வியல் வரலாற்றிலே ரஷ்யாவின் இபதாம் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் உருவான ஃபோமலிஸம் (Formalism) எனப்படும்.உருவவியல் கொள்கையை நமது நினைவுக்கு இட்டுவருவதாகும். இலக்கியம் என்பது ஒரு உத்திமுறையே என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த கொள்கை இது என்பதை முன்னைய கட்டுரைகளில் நோக்கியுள்ளோம்.
மேற்படி நூற்பாவிலுள்ள புலனெறி என்பதைப் புலன் நெறி எனப்பிரித்து நோக்கி புலப்பாட்டுநெறி எனப்பொருள் கொண்டு வேறுவகையில் விளக்கந்தரும் முறைமையொன்று உளது. உலகின் இயல்பான நடப்புகளை நாடக முறையாகப் பாத்திரங்களில் அமைப்பதான, போலச்செய்தலையே புலப்பாட்டுநெறி எனக்குறிப்பதாக இவ்விளக்கம் அமைகிறது. இவ்வகையில் புலநெறிவழக்கு என்பது கிரேக்க தேசத்தில் அரிஸ்டோட்டல் காலமுதலே வழங்கப்பட்டுவரும் Gustavớ67aFlüg6i 67e5ft6itamas (Mimetic Theory) uqusóT. தொடர்புறுத்திச் சிந்திக்கப்படுகிறது. இச்சிந்தனையை முன்வைத்தவர் காலஞ்சென்ற பேராசிரியர் சி. கனகசபாபதி அவர்களாவர். அவர் தனது இலக்கியக் காலங்களும் கொள்கைகளும் என்ற தலைப்பிலான கட்டுரையில் (வையைமலர்1.1973-74) இவ்வாறான விளக்கத்தைத் தந்துள்ளார்.
பொருள் மற்றும் வடிவம் ஆகியவற்றின் இயைபுநிலை தொடர்பாக.
இலக்கியக் கட்டமைப்பில் பொருளும் வடிவமும் இயைந்துள்ள நிலை பற்றிய கருத்தாக்கத்துக்கான சான்றாக அமைவது செய்யுளியலின் முதலாவது நூற்பாவாகும். இது செய்யுள் என்றால் என்ன என்பதுபற்றிக் கூறவில்லை. அதன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

கூறுகளாக மாத்திரை முதல் வனப்பு ஈறாக முப்பத்துநான்கு 毒 உறுப்புகளைப் பற்றியே குறிப்டுகிறது. இந்நூற்பாவுக்கு பேராசிரியர் எனப்படும்உரையாசிரியர் தந்துள்ள உரையானது. உறுப்புக்களும் உறுப்புகளையுடைய பொருளான செய்யுளும் வேறல்ல என்ற கருத்தை முன்வைக்கின்றது.
மற்றுச் செய்யுளுறுப்பு ஈண்டோதினார், செய்யுள் யாண்டோவதுய வெனில், அறியாதுகடாயினாய் உறுப்பென்பன, உறுப்புடையப்பொருளின் வேறெனப்படா. பொருள் எனப்படுவஉறுப்பே.
என ஆசிரியனொருவன் மாணவனுக்கு, விளக்கந்தரும் பாங்கில் பேராசிரியரின் இந்த உரை விளக்கம் தொடர்கின்றது. இவ்விளக்கத்தின் சாராம்சமாக உள்ள கோட்பாட்டுநிலையை பேராசிரியர்தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் மற்றும் கலாநிதி க.கைலாசபதி ஆகியோர் ஐரோப்பிய மரபின் gifassofidi fluf (Organic Theory) 6T situGg TG தொடர்புபடுத்தி விளக்கியுரைத்துள்ளனர். இவ்வகையில் க. கைலாசபதி அவர்கள் தந்துள்ள விளக்கம் இங்கு சுட்டிக்காட்டத்தக்க முக்கியத்துவம் உடையதாகும். மேற்படி ஒர்கனிக் தியரி என்பதை அவயவிக் கொள்கை எனத் தமிழாக்கம் செய்துள்ள கைலாசபதியவர்கள் அக்கொள்கையே சங்க இலக்கிய காலத்தில் செயற்பட்டுநின்றது என்பதையும் அக்கொள்கையையே மேற்படி தொல்காப்பியச்செய்யுளியலின் முதல்நூற்பா உணர்த்தியுள்ளதென்பதையும் பின்வருமாறு விளக்குகின்றார்.
"சங்ககாலம் என வழங்கப்பபடும் சான்றோர் இலக்கிய காலத்திலே கவிதைகள் இக்கொள்கையின் அடிப்படையிலேயே எழுந்தன என்பதற்கு, இவற்றுக்கு இலக்கணமாய்த் தோன்றிய தொல்காப்பியமே சான்று. அவயவிக்கொள்கையிலே பொருள் வடிவம் என்ற பாகுபாடு இல்லை. இரண்டும் கூறுகளாக - உறுப்புகளாக - இசைவுபட்டே உயிருள்ள கவிதைபிறக்கிறது. தொல்காப்பிய செய்யுளியல் முதற் சூத்திரத்தை நோக்குவோர்க்கு இது புலனாகும். மாத்திரை முதல் அளவியல் ஈறாகச் சொல்லப்படும் பன்னிரு உறுப்புக்கள் யாப்புச் சம்பந்தமானவை. திணை தொடக்கம் வண்ணம் வரை கூறப்படும்பதினான்கு உறுப்புகள் பெரும்பான்மை பொருள் சம்மந்தமானவை. இவ்விருபத்தாறு உறுப்பும். “ஒன்றொன்றினை இன்றியமையாவென்பது பெற்றாம்” அவயவிக் கொள்கையின் சாரத்தையே இரத்தினச் சுருக்கமாக விளங்கியிருக்கிறார்உரையெழுதிய பேராசிரியர். (க.கைலாசபதி இலக்கியமும் திறனாய்வும் 1972 பக் 71-72) இவ்வாறு சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியச் செய்யுளியலின் முதல்நூற்பா என்பவற்றுக் கூடாகப் புலப்படும். பொருள் - வடிவ இணைப்புநிலை பற்றி கொள்கையை, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் மற்றும் கலாநிதிக. கைலாசபதி ஆகியோர் ஒர்கனிக்தியரி(அவயவிக்கொள்கை) எனக்கொள்வது பின்வந்த ஆய்வாளர்களுள் ஒரு சாராருக்கு உடன்பாடுதான். குறிப்பாக, தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு (1991) என்ற நூலை எழுதிய டாக்டர் க. பஞ்சாங்கம் அவர்கள் மேற்படி தெ. பொ. மீ. மற்றும் கைலாசபதி ஆகியோரின் பார்வை மற்றும் விளக்கம் என்பவற்றைத் தனது
45

Page 48
நூலில் மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளார் என்பது இத்தொடர்பில் சுட்டத்தக்கது.
அவயவிக் கொள்கையா? போலச்செய்தல் கொள்கையா?
தமிழ் ஆய்வாளர்களுள் இன்னொருசாரார் மேற்படி கருத்துநிலையுடன் முழுநிலையில் உடன்படவில்லை. அதனை வலுவிளக்கச் செய்யும் வகையான கருத்துகளும் தமிழ் ஆய்வுலகில் முன்னோக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் மேலே நாம் நோக்கிய பேராசிரியர் சி.கனகசபாபதியவர்கள் தனது முற்சுட்டிய கட்டுரையில் முன்வைத்துள்ள அவதானிப்பொன்று இங்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடையதாகும். அவர் நாடக வழக்கினும்” என்று நூற்பா, போலச்செய்தல்கொள்கை சார்ந்த என விளக்கம் தந்தவர் என்பதை மேலே முன்னரே நோக்கியுள்ளோம். இத் தொடர்பில் மேலும் அவர் விளக்கம் தருமிடத்து, அக்கொள்கையே சங்க இலக்கியக் காலத்தில் முதன்மைப் பெற்றிருந்த கொள்கை என சுட்ட முற்படுகிறார். அதற்காக ஒர்கனிக் தியரியை ஒரு திணைநிலைக் கொள்கையாக்கி இரண்டாமிடத்துக்கு இட்டுவரவும் முயல்கிறார். ஒர்கனிக் தியரி என்பதை அவர் அவயவிக் கொள்கை எனச் சுட்டாமல் கட்டமைப்புக் கொள்கை என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இத் தொடர்பில் அவர் முன்வைத்துள்ள விளக்கமொன்று வருமாறு. “உண்மையிலேயே போலச்செய்தல் கொள்கைக்கு உதவும் துணையாக அமைகிறது கட்டமைப்புக் கொள்கை இந்தக்கட்டமைப்புக்கொள்கை அரிஸ்டாட்டிலுக்குப் பிறகும் ஹொராஸ், லாஞ்ஜினஸ் ஆகியோர் காலங்கள் வரைக்குங்கூட அவர்களின் வெவ்வேறுபட்ட இலக்கியக் கொள்கைகளுக்குத் துணையாகவே வந்துள்ளன. உண்மையில் தொல்காப்பியச் செய்யுளியல் முதல்நூற்பாவில் கட்டமைப்புக் கொள்கை இருக்கிறது என்றாலும் கவிதையின் அமைப்பையுங்கூட உலகியல் வாழ்வின் உணர்ச்சியின் போலச்செய்தலாகவே பாடவேண்டும் என்ற கோட்பாடு அங்கே ஆழ்ந்துகிடப்பதாகவே கொள்ள இடமுண்டு செய்யுளியலின் முதல் நூற்பாவை மட்டும் எடுத்துக்காட்டினால் கட்டமைப்புக் கொள்கை ஒரு இயந்திர இயக்கம் என்றே பட்டுவிட நேரலாம். அரிஸ்டாட்டில் குறித்த போலச்செய்தல் கொள்கை மனிதப்பொதுமைகளைக் கொண்டு ஆராயப்பட்டது. எனவே நாடகவழக்கு என்னும் அகத்திணையியல் நூற்பாவையும் மெய்யப்பாட்டியலையும் உவமவியலையும் கருத்திற்கொண்டே புலப்பாட்டியற் கொள்கையாகிய புலன் நெறியை விளக்கவேண்டும்
(வையைமலர்.1-1973-74)
இவ்வாறு செல்கின்ற பேராசிரியர் f. கனகசபாபதியவர்கள் தந்துள்ள விளக்கம். இவ்விளக்கம் பொருத்தமாகவே தெரிகின்றது. எனினும் முதல் நிலைக் கொள்கை, துணைநிலைக் கொள்கை என்று வேறுப்படுத்தும் முறையானது அவரால் வலிந்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி என்பதையும் உணரமுடிகிறது.
இத்தொடரில்நாம் கவனத்திற்கொள்ளவேண்டிய அம்சம் மேற்சுட்டியவாறான பலநிலைகளிலான பார்வைக்கும் இடமளிக்கத் தக்கவகையில் தொல்காப்பியப் பொருளிலக்கணமானது வளம் நிறைந்த ஒன்றாக திகழ்ந்துளது என்பதாகும்.
46

இலக்கியத்தின் பண்பாட்டுநிலை தொடர்பாக. தொல்காப்பியச் செய்யுளியலின் முதல்நூற்பாவிலே செய்யுளின் உறுப்புகளாகச் சுட்டப்பெற்ற முப்பத்துநான்கில் 'பயன்என்பது ஒன்று பயன் என்பதற்கான விளக்கத்தைபற்றி அவ்வியலின்,
“இது நனிபயக்கும் இதனானென்னும் தொகைநிலைக்கிழவி பயனெனப்படுமே” என்ற நூற்பா(செய்யுளியல்:195) தருகிறது. இதற்கு உரை கூறும் பேராசிரியர். “இது மிகவும் பயக்கும் இதனானால் எனத் தொகுத்துச் சொல்லப்படும் பொருள் பயன் என்னும் உறுப்பாம். என்பர். இதன்படி ஒவ்வொரு இலக்கிய ஆக்கமும் ஒரு பயன்பாடுடையது என்ற கருத்தாக்கம் தொல்காப்பியக்கால இலக்கியச் சூழலின் நிலவிவந்துள்ளமை புலப்படும். இவ்வாறு செய்யுளின் ஒரு உறுப்பாகச் சுட்டியதோடு அமையாமல் பயன்பற்றிய கருத்துகளை பல்வேறு இடங்களிலும் தொல்காப்பியம் பதிவுசெய்துள்ளது. இவ்வகையில்,
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடுபுணர்ந்த ஐந்திணை.(களவியல்) அந்நிலைமருங்கின் அறமுதலாகிய - மும்முதற்பொருட்கும் உரிய என்ப"செய்யுளியல் 102) எனவரும் நூற்பாக்களைச் சுட்டலாம். இவை அறம்,பொருள், இன்பம் என்ற மூவகைப் பயன்பாட்டு நிலைகள்பற்றிப் பேசுகின்றமை வெளிப்படை இலக்கியமானது இம்மூன்றையும் (அன்றேல் இவற்றுள் ஒன்றையோகூட) தரவல்ல பயன்பாடுடையதாகத் திகழ வேண்டுமென்ற கருத்து இந்நூற்பாக்களின் உறைந்துள்ளமை உய்த்துணரக் கூடியதாகும். இவ்வகையில் எம். எச். எப்ரம்ஸ் அவர்கள் குறிப்பிடும் பயன்வழிக் கொள்கை (Pragmatic Theory)5(5. பொருத்தமான ஒரு கருத்துநிலையாக தொல்காப்பியத்தின் பயன்பாட்டுச் சிந்தனை திகழ்வதை நாம் தெளிந்து கொள்ள முடியும்,
தமிழ்ப் பொருளிலக்கண மரபில் வரலாற்றை நோக்கும் செயற்பாட்டிலே குறிப்பாக தொல்காப்பியப்பொருளதிகாரத்தின் கோட்பாட்டு அடிப்படைகளுள் முக்கியமான சிலவற்றை இதுவரை நோக்கினோம். இவ்வாறு தனித்தனிக் கோட்பாடுகளாக, நோக்கும் பார்வைக்கு அப்பால் பொருளதிகாரத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பை கருத்துட்கொண்டு நோக்கும் முயற்சிகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக அதனையும் சங்க இலக்கியத்தையும் நமது காலப்பகுதியில் அமைப்பியலுடன் தொடர்புறுடுத்திப்பார்க்கத் தமிழ் ஆய்வுலகம் முற்பட்டுள்ளது.
அமைப்பியல் சார் நோக்கிலே.
அமைப்பியலின் மொழிசார்ந்த அடிப்படைகளிலொன்று அகவடிவம் இது லாங்யு (The Langue) எனப்படும். குறித்த மொழிபேசும் எல்லா மக்களுக்கும் பொதுவானது, இது இந்த அகவடிவம் கவிதையியல் (Poetics) எனச் சுட்டப்படுவது. மேற்சுட்டிய அமைப்பியலின் மொழிச்சார்ந்த இன்னொரு அடிப்படை புறவடிவம் இது பரோல்(TheParole) எனப்படும்.இது தனிமனித வெளிப்பாடு ஆக அமையும் இலக்கிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 49
ஆக்கங்களைக் குறிப்பது. இவை பல்வேறு வகைகளில் வெளிப்படுவன. ஆயினும் இவை தமக்கு அடிப்படையான மேற்படி பொதுவான அகவடிவிலிருந்து வேறுபடுவதில்லை. இந்த இருமைநிலைகள் பற்றிய சிந்தனையுடன் தொல்காப்பியப் பொருளதிகாரத்தையும் சங்க இலக்கியத்தையும் அணுகி விளக்கம்தரும் வகையிலான பார்வைகள் தமிழ் ஆய்வுலகில் கடந்த சில ஆண்டுகளில் வெளிப்பட்டுள்ளன. பொருளதிகாரத்தை லாங்யு எனப்படும் கவிதையியலாகவும் சங்க இலக்கியங்களைப் புறவடிவான பரோல் ஆகவும் ஒப்புநோக்கி விளங்கும் வகையில் இப்பார்வைகள் அமைந்துள்ளன. இத்தொடரிலே பேராசிரியர் அ.மணவாளன் அவர்கள் முன்வைத்துள்ள ஒரு விளக்கத்தை இங்கு நோக்கலாம்.
“அகப்பொருள் என்னும் தமிழ் இலக்கிய வகையில் கவிதையியல்தான் தொல்காப்பியம் காட்டும் அகத்திணை மரபுகள். சசூர் கருதும். the langue போன்றதுதான் தொல்காப்பியம். அவர் கருதும் 'heparold போன்றவைதான் சங்ககால அகப்பொருள் பாடல் தொகுதிகள். புறப்பொருள் தொடர்பான இலக்கியங்களுக்கும் இது பொருந்தும்.
இத்தகையதொரு (தொல்காப்பியப் பொருளதிகாரம் போன்றதொரு) இலக்கியப் பொதுவிதிச் சட்டத்தை
போர் தந்த ஒரு புனிதமான (
காலாவதியாகிப்போனநாட்களில் தேங்கிச்சென்றசிதைந்தஎன்கனவுகள் மீளவும்
கட்டியெழுப்பப்படக்கைகொடுத் ங்கள். எல்லோரையும்போலவே எனக்கும்வாழ்வின்மீதுபிரியம் இருந்தது. இயற்கையைரசிக்கவும். எல்லோரையும்நேசிக்கவும்.
கஜர்மத்துடன்வாழ்ந்திருந்தேன். ண்பற்றின்மீதான டுகளுக்குள்
வன்முறையைவெறுத்து
என்கண்ணெதிரெமூச்சிழந்துே நேற்றுநடந்துமுடிந்தமூர்க்கத்தனமான யுத்தத்தில்,
5 நிர்வில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

உருவாக்கும் முயற்சியைத்தான் இலக்கிய அமைப்பியல் வாதிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.மேலைநாட்டுஇலக்கிய மரபிலே தொல்காப்பியப் பொருளதிகாரம் போன்றதோர் கவிதையியல் இதுவரைத்தோன்றியுள்ளதாகத் தெரியவில்லை. கிரேக்க மேதை அரிஸ்டாட்டிலின் கவிதையியல் வேறு அமைப்பியல்வாதிகள் கருதும் கதையியல் வேறு அமைப்பியல் வாதக் கதையியல் கோட்பாடுகளின் பெரும்பாலானவை நம் பொருளதிகாரத்துள் பொருந்திக்கிடப்பதை எளிதில் உணரலாம். எனத் தொடர்கின்ற மணவாளன் அவர்களது விளக்கம். (இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள் -1995. U.61)
இதுவரை தொல்காப்பிய பொருளதிகாரம் கோட்பாட்டு நிலையிலே பெற்றுவந்துள்ள கணிப்புகள் தொடர்பான சிலமுக்கிய அம்சங்கள் சுருக்கமாக நோக்கப்பட்டன. அடுத்து மேற்படி பொருளதிகாரம் கட்டும் இலக்கிய ஆக்கக்கூறுகளின் குறிப்பாக நோக்கு முதலிய படையியற் செயற்பாங்குகளின் முக்கியத்துவம் தொடர்பான அம்சங்கள் கவனத்துக்கு வருகின்றன. *
(தொடரும்)
பரிசுகளும் வேண்டுகோளும்
- அலெக்ஸ் பரந்தாமன்
பாசம்பொழிந்த என்சகோதரங்கள். உரிமையான இல்லிடம். எல்லாமேஎனைவிட்டுநீங்கலாகிப்போனபோதும் தொடர்ந்துவாழவேமனம்விரும்புதல்கொள்கிறது. அரசியல்சதுரங்கத்தில் ஆடுகாய்களாகநகர்த்தப்பட்டமக்களில் நானும் ஒருவன். என்அறிவுக்கு அப்பாற்பட்டஅரசியலே என்னைஅகதியாக்கிஅழகுபார்க்கிறது. இப்பொழுது
தனித்துநிற்பதானஉணர்வுஎனக்குள்.
ஆயினும்,
எழுந்து நடக்கவும்.இருள்விலக்கவும். எவராவதுஒருவர்எழுந்துவாருங்கள்
பிழந்தணக்குஉதவுவதற்காய்
47

Page 50
“இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு” ஒரு நிகழ்வுக் கண்ணோட்டம்
தைத்திங்கள் 6,7,89 ஆம்நாள்களில் கொழும்புத்தமிழ்ச் சங்கம் பல அரங்குகளாக அவதாரமெடுத்தது.
காலிமுகத்தெரு வளைவிலிருந்து புறப்பட்டதோர் ஊர்வலம் கலைஞர்கள், அறிஞர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு நீரோடையென நகர்ந்துதமிழ்ச்சங்கத்தை வந்தடைந்தது.
தனிநாயகம் அடிகளார் அரங்குமுதல் எஸ்.டி.சிவநாயகம் இலங்கையர்கோன், மங்களநாயகியம்மாள்,சோமசுந்தரப்புலவர், ஆறுமுகநாவலர், டானியல், கோ. நடேசையர், சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் சு. வித்தியானந்தன், வரதர், சித்திலெப்பை, கலையரசு சொர்ணலிங்கம், அருள்வாக்கி அப்துல் காதர் ஆகிய திருநாமங்களில் அலங்காரம் கொண்டிருந்த அரங்குகள். சிருஷ்டிகர்த்தாக்களால் நிறைந்துவிட்டது.
கிளிக்கிளிக்குகளுக்கு முகம் கொடுப்பதையே கலையாகக் கொண்ட ஒரு கலைஞர் கூட்டமோ ஊர்வலத்தில் வந்த களைப்பில் தம் கலைத்தொண்டு முடிந்துவிட்டதாக நைசாக நழுவிவிட்டது.
ஈஸ்வராஒர் அரங்கை எழுதுகோல்கீறமறந்துவிட்டதே அதுதான்சுப்பாட்டுஅரங்கு அடப்பாவிமறக்கக்கூடியஇடமாஅது? இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று அங்கே ஒரே மல்லுக்கட்டல்தான். அவ்விடத்தில் “உவையள் என்னத்தை செய்து கிழிக்கப்போகினம்?” என்ற சொல் சப்பலுடன் ஒரு நக்கீரக்கூட்டம் வம்பளப்பு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது. விழாவிற்கு எதுவித பங்களிப்பும் என்ற அங்கலாய்ப்பில் இப்படியும் ஒரு பங்களிப்பு. எல்லாமே கண்கொள்ளாகாட்சிதான்.
தமிழ்தூதுதனிநாயகம்அடிகளார்.அரங்கில்தொடக்கவிழா மங்கல விளக்கு எரிந்தது. விழா நிகழ்வுகள் துளிர்ந்தன. தமிழ்வாழ்த்துடன் மாநாட்டு கீதம் “முரசே முழங்கு” என சங்கநாதமிட்டது.
வரவேற்புரை, தலைமையுரை, வாழ்த்துரை, மாநாட்டுமலர் அறிமுகவுரை, வெளியீட்டுரை என முறையே டாக்டர் ஞானசேகரன், எழுத்தாளர் லெ. முருகபூபதி, பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் கா. சிவத்தம்பி, கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கம்பவாரிதிஜெயராஜ் ஆகியோர் மங்களகரமாக முழங்கினர்.
தமிழ்த்தொண்டாளர் புரவலர்ஹாசீம் உமர் மாநாட்டின் சிறப்புமலரின் முதல் பிரதியைப் பெற்று பெருமை சேர்த்தார்.
திவ்யா நடேசனின் அமர்க்களமான வரவேற்பு நடனமுடன் விழா நிகழ்வுகள்களைகட்டவாரம்பித்தன.
48
 

இலங்கையின் முதல் தமிழ் எழுத்தாளர் சர்வதேச மாநாடு உயிர்ப்புடன் இயங்கவாரம்பித்தது.
“கணினியும் வலைப்பதிவுகளும் ஈழத்து தமிழ் இலக்கியம்-பெண் எழுத்து-சிறுவர் இலக்கியம்-உலகத்தமிழ் இலக்கியம்-பல்துறை- அவைக்காற்று கலைகள்-21-ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளலில் எமது கட்புல, செவிப்புல அவைக்காற்று கலைகள்-ஈழத்துதமிழ் இலக்கியம் சிற்றிதழ்மொழிபெயர்ப்பு- செவ்விதாக்கம்- நாட்டாரியல்எதிர்ப்பிலக்கியத்தின் வகிபாகம். நலிவுற்றமக்கள் இலக்கியப் பதிவுகள் போதிய கவனத்தை பெற்றுள்ளனவா-நவீன தமிழ் இலக்கியம் உலகதரத்தை எட்டியுள்ளதா?”
ஆகிய தலைப்புகளில் கருத்தாடல்கள் ஆரம்பமாகின. தொடர்ந்து நான்கு நாள்கள் படு அமர்க்களமான கருத்துமோதல்கள்.
கலந்துரையாடலுக்கு வழங்கப்பட்டிருந்த கருப் பொருள்கள் அனைத்தும், இன்று நவீன தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே. இலங்கையில் ஆகட்டும் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலாகட்டும் இக்கருதுகோள்கள் தவிர்க்க முடியாத விதமாக துளிர்த்து தழைக்க வாரம்பித்துள்ளன. அதனால் கருத்து பரிமாறல்கள் காரசாரமாகவே இருக்கிறது. இங்கு தலைதூக்கிய முரண்பாடுகள் இனிவரும்நாள்களில் கூர்மையடைவது உறுதி அதுவே நமது படைப்புகளை சர்வதேச தரத்திற்கு அழைத்துச் செல்வதற்கான அடிப்படை காரணிகளாவும் அமையும் என்ற கருத்து பரவலாக அடிபட்டது.
மாநாட்டு சிறப்பு மலரும், கட்டுரை கோவையும் இரு தொகுப்புக்களாக நூல்வடிவம்கொண்டுள்ளன. கட்டுரைகள் இலக்கிய அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.
“தமிழர் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். புகலிடத்தமிழ் இலக்கியம் என்றே தனி வகைப்பாடொன்று இன்று உருவாகியுள்ளது. இத்தகையதொரு சூழலில் எழுத்தாளர் ஒன்று கூடலும், பகிர்தலும் மிக முக்கியமானதாகும்” என்ற பேராசிரியரின் வாழ்த்துரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கூற்று இதனை வலியுறுத்துவனவாக அமைகின்றது.
இந்திய சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான், நாவலாசிரியர் திருமதி இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (இங்கிலாந்து) ஆகியோரின் சிறப்புச் சொற்பொழிவும் சி. சிறிசுக்கந்தராசா (கனடா), இணைப்பேராசிரியை முனைவர் மு. சு. தங்கம் (இந்தியா) இரா.உதயணன் (இங்கிலாந்து) ஏ.சி.எம். அமீர் அலி (அவுஸ்திரேலியா) எஸ். எம் எம். பஷீர் (இங்கிலாந்து) முனைவர்பட்ட ஆய்வாளர் த.முத்தமிழ்(இந்தியா) எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி, மேலாளர் கருப்பண்ணன், ரீ. ரெங்கசாமி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 51
(இந்தியா) எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) ஆகியோரின் கருத்தரங்கு பங்களிப்பு என்பனவற்றுடன் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம் (மூர்த்தி கனடா) அருண்மொழி (தமிழ் நாடு) ரவிபிரதீபன் (பிரான்ஸ்) ஆகியவற்றுடன் அரங்குகளில் இடம்பெற்ற கருத்தரங்குகள் காரசாரமாகவே அமைந்தன. எடுத்துக்கொண்ட கருப்பொருள் குறித்த ஆணித்தரமும், முரண்பாடுகளும் தாராளமாகவே இடம்பெற்றன.
“ஐயா சாமி! நீங்க உளறிகொட்டுனது போதும் நிறுத்துரீங்களா"
என்று கருத்துகளுக்கு தடைபோட அணைகள் எதிர்குரல்கள் சபையிலிருந்து எழவில்லை. 20 நிமிடங்கள் பேசலாம் அதற்கு மேலே போகக்கூடாது என்பது கட்டுப்பாடு. போனால்டங்கென்று மணி ஒலித்துவிடும். அட, என்னவே கட்டுப்பாடு என்று கடுப்புடன் காலத்தை கடந்தவர்களும் பேச்சுக்களும் இருந்தன. இப்படித்தான் மேடைக்கு வந்த ஒரு வெள்ளிவிழா முதுசம், எழுதிவந்த கவிதையை மூச்சுவிடாமல் பெல் அடிக்கும் நேரத்தையும் கடந்து பாடி'ஐயா பெரியவரே! போதும்போதும் என்று கைதட்டிமேடையைவிட்டு கீழிறங்கும் வரை போய்விட்டார்.
தமிழ் எழுத்துக்கள் உலகதரத்தை எட்டியுள்ளதா சிலர் மொழிதெரியாமல் எழுதுகிறார்கள். இவர்களுக்கு ஒரு கொப்பி எடிட்டர் வேண்டாமோ என்று ஆரம்பித்த அங்கலாய்ப்பு இன்று செவ்விதாக்கம் என்ற புதிய வடிவம் கொண்டுள்ளது. அது பற்றி ஓர் இழுபறி, சிற்றிதழ்கள் அவற்றுக்குரிய கனதியுடன் திகழ்கின்றனவா? அப்பச்சி போச்சு என்ற பிரதேச பேச்சு மொழி அப்பச்சிகோச்சியகியர் என்றவாறு சிங்களபெயர்ப்பில் அவலம் அடைந்துள்ள மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய குமுறல் மடுளுகிரிய விஜயரத்தினமிடமிருந்து கிண்டலாக வெளியானது.
மலையக தோட்டத்தொழிலாளர்களை தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற அடைமொழிக்குள் அடைத்து அழைக்கலாமா போன்ற ஆவேச வாதாட்டங்களும், எழுதியவன் எழுதியதோடு குளோஸ், அப்புறம் எல்லாம் வாசகன்தான் என்ற எதிர்ப்பிலக்கியக்காரர்களின் கிண்டல்களுமான கருத்து வெடிகள் அரங்குகளில் அதிர்வெடிகளின் அலைகளாகின.
முரண்பாடுகளும், கருத்தாடல்களும் ஒன்றின் நிலை நிறுத்தலுக்கும், இன்னொன்றின்வெளிப்படுத்தலுக்குமான போராட்டமாகும். இது ஆரோக்கியமானதே. சுமுகமான கருத்துகளின் மோதல்கள் இன்றி புதியன பிரசவமாவதில்லை. புதிய ஜீவன் என்பது தாயின் உதரத்திலுள்ள பன்னீர்க் குடத்தை உதைத்துக் கொண்டுதான் வெளியேறி உலகைக் காண்கிறது. இந்த இயங்கியல் தத்துவமே அனைத்து வளர்ச்சியினதும் சமூகவியல் விதியாகும்.
நவீன தமிழ் இலக்கியத்தை எட்டுவது எப்படி என்பதை விளக்குவனவாக வெளிப்படுத்தப்பட்ட சில சூத்திரங்கள் அடக்கடவுளே என்று தலையில் கைவைத்து வாய்விட்டுச் சிரிக்கச் செய்தன.ஈஸ்வரா நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணரச்செய்வதற்கு நாசியை கிள்ளிப்பார்க்க வேண்டியிருந்தது. s
“கோட்பாடுடன் எழுதவேண்டாம் அதுபிரச்சாரமாகிவிடும் என்று ஒருவர் ரொம்பவும் அங்கலாய்த்துக்கொண்டார். - “கோட்பாடு வேண்டாம்! என்று சொல்வதே ஒரு கோட்பாடுதானே”என்று பிரான்சிலிருந்து விழாவில் கலந்து உரையாற்றிய விரி இளங்கோவன் போட்டாரே ஒருபோடு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

“சபாஸ் பொருத்தமான பதில் என்று கைதட்டாமல் முடியுமா?”
“தமிழ்படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உலக தரத்தை எட்டமுடியும்” இப்படியும் சில குழந்தைகள் அழுதன. அதைக்கேட்ட சில முதுசங்கள் "அய்யோ எப்போ இங்கீலீசை படிப்பது, இங்கிலிசிலே எழுதுவது. என்று பரிதவித்தன.
எழுத்தாளன் ஒரு“சமூகப்போராளி'என்றுமுழங்கினார் நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான்.
பெரிய பெரிய விசயங்களை ரொம்பவும் நாசுக்காக சிரிக்கச் சிரிக்க சொன்னார். சபையோரின் கரவொலி பாராட்டுக்களாக உதிர்ந்தன.
‘புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமிழின் உச்சமான படைப்புகள் தோன்றும் என்கிறார்கள். என்ன வேடிக்கை. அங்கு தமிழே இல்லை. பின்னே எப்படி ஐயா உன்னத படைப்புக்கள் தோன்றும்"
என்று செண்டைபிடித்து உசுப்பினார் இலண்டன் நாவலாசிரியை இராஜேஸ்வரிபாலசுப்ரமணியம்.
"அப்புடியா சமாச்சாரம் ' என்று வாய்பிளந்தவாறு தலையாட்ட வேண்டியிருந்தது. ஏனென்றால் இங்கே வேறு எதனையோ அல்லவா எங்கள் மூளைக்குள் திணிக்கிறார்கள். “நமது படையாளிகளில் 90 சதவிகிதமானவர்கள் சமூக நேசிப்புடன் எழுதுபவர்கள். என்றாலும் அதில் சத்திய ஜீவன் உயிர்ப்புடன் இல்லை. சமூகப்போராளி எழுதுகோலை பயன்படுத்துகின்றபோதே அது உயிர்ப்பு கொள்ளும் உலகதரத்தை எட்டும்”
போன்ற கர்ஜ்ஜனைகளையும் கொண்டதாக அரங்குகள் கருத்துக்குவியல்களால் நிறைந்தன.
இத்தகையவித்தியாசமான முரண்பாடான கருத்துக்களை வெளிக்கொண்டு ப்ப்பளிச் 8 ட்டவேண்டும் அதன்தூண்களாகநின்றுசெயல்பட்டவர்கள்மதிப்பிற்குரியவர்கள். “அட இழவே கருத்து மோதல் என்கிறீர். இனிமேல் குடுமிச் சண்டைகளா?
அடப்பாவி மனுஷா. அதுக்கென்ன நடக்கட்டுமே அது ஆரோக்கியமரபை தாமே கட்சிகட்டிக்கொண்டு குழுகுழுவாக பிரிந்து உம்முனா மூஞ்சுகளாக நடந்தால் முன்னேற்றம் காணமுடியுமா?
நான்கு நாள் தொடர்ச்சியாக நடைபெற்ற விழா நிகழ்வுகளையும் 12 பேராசிரியர்கள், 11 கலாநிதிகள் உட்பட 200 க்கும் அதிகமாக கருத்தரங்குகளில் பங்கு பற்றிய எழுத்துலகைச் சேர்ந்தவர்களின் சொற்பொழிவுகளில் இடம்பெற்ற கருத்துக்களையும் ஒரு பந்திக்குள் அடங்கச் செய்வது ஒரு கடினமான பணியாகும். என்றாலும் ஒரு சில துளிகளை தொட்டுப்பார்த்து சுவைக்க அல்லது முகம் சுழிக்க வழங்கினேன்.
பேசமுடியும், திட்டங்கள் வகுக்க முடியும், எனினும் ஒரு நெட்வேர்க்காக செயல்படுவது கடினம். பேச்சும், திட்டமும் செயல்பாடும் செயல்திறன் மிக்கவர்களால் முன்னெடுக்கப்படுகின்றபோதுபூரண வெற்றி கிடைக்கிறது. இலங்கையின் முதன் முதலில் அரங்கேறிய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு வெற்றியடைந்தது என்றால் அதற்கு அடிப்படைக்காரணியாக அமைந்தது செயல்திறன் மிக்கவர்களின் ஒருங்கமைந்த,மனமொத்த செயல்பாடே.
மாநாட்டின் சர்வதேச அமைப்பாளர் லெ. முருகபூபதியும், இலங்கை இணைப்பாளரான டாக்டர் தி.ஞானசேகரனும்இந்த நெட்வேர்க்கின் முதுகெலும்புகள் என்றால், அழைப்பிதழை
49
琴

Page 52
வடிவமைத்தும், நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக கட்டமைத்தும் எவரும் தலைக்கேசத்தை பிய்த்துக்கொண்டும் அங்குமிங்கும் திரு திரு வென அலைந்து திரிந்து காலத்தை வீணடிக்கச் செய்ய இடம் வைக்காமல் ஒரே பார்வையில் புரிந்துகொள்ள வைப்பதற்கு அமைவாக செயல்படுத்தியிருந்த இளைஞர் ஞா. பாலச்சந்திரன் உட்பட இணைப்பாளர்களாகவும் தொகுப்பாளர்களாகவும் செயல்பட்ட அஷ்ரப்சிகாப்தீன், மேமன்கவி திருமதி வசந்தி தயாபரன், திருமதி ஞானம் ஞானசேகரன், ஒ. கே. குணநாதன், தெளிவத்தை ஜோசப், ப், க. மகாதேவா, திருமதிசுகந்தி இராஜ குலேந்திரா, அந்தனி ஜீவா, திக்வலை கமால், பூரீ.இராஜகுலேந்திரா, செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி.மு.தயாபரன், மு. பாஸ்க்கரா, கே. பொன்னுத்துரை ஆகியோர் நகையும் சதையுமாக இணைந்து செயலாற்றியமையினால் இந்த வெற்றி கிடைத்தது.
வெற்றி என்பது ஒருமுகப்பட்ட செயல்பாட்டினதும், கடும் உழைப்பினதும், சிறந்த தலைமையின் வழிகாட்டலின் பிரதிபலன்களே. அந்தகிரடிட் முழுவதும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் எழுத்தாளரும் டாக்டரும், மாநாட்டின் இலங்கை இணைப்பாளருமான தி. ஞானசேகரன், அவர்குடும்பத்தினர், மற்றும் மாநாட்டின் மூலவரும் சர்வதேச இணைப்பாளருமான எழுத்தாளரும் பத்திரிகையாளரும் அவுஸ்திரேலியாவை புகலிடமாகக் கொண்ட லெ. முருகபூபதியையும் சாரும். இவர்கள் அனைவருக்கும் ஒரு சபாஷைப்போட்டுவிட்டு, மாநாட்டின் ஆரம்பமுயற்சிகளுக்கான மூலவேரை அலசுவோம். மாநாட்டிற்கான மூலவித்தை விதைத்தவர் முருகபூபதி. அதற்கான எண்ணக்கருவை தூவியவர் மல்லிகை சஞ்சிகை ஆசிரியர், நமது இன்றைய முதுபெரும் எழுத்தாளர் ட்ொமினிக் ஜீவா. 5 வருடங்களுக்கு முன்னர் மல்லிகைப்பந்தல் உரையாடலில் இவ்வித்தை தூவினார். அவ்விதை ஞானம் சஞ்சிகை தோட்டத்தில் விழுந்தது. ஞானசேகரனின் வாசஸ்தலமும், குடும்பத்தினரும், அவ்வில்லத்தின் தொலைபேசி, நாற்காலி முதல் அனைத்துமே எருவாயின. ரொம்பவும் அகரத்தனமானதொருவளர்ச்சிஏற்படவாரம்பித்தது. விழா வெற்றிகரமாக சிறப்பாக நடந்தேறியது மறுக்க முடியாதது என்ற போதும் சில கடுப்பான மொழிச்சாடல்கள் தொடர்கதையாகவே இருந்தன இருக்கின்றன.
“நாட்டில் தமிழரின் இன்றைய துர்ப்பாக்கிய நிலையில் சர்வதேச எழுத்தாளர் விழாவொன்று தேவைதானா?” என்ற வினாவும் மெகா சீரியலாகவே முடிவில்லாமல் தொடர்கிறது.
ஞானசேகரனின் தொடக்க மற்றம் இறுதிநாள் உரைகளில் இவற்றுக்கான தெளிவான பதில்களை காணமுடிகிறது.
“நாட்டில் இடம்பெற்ற 30 வருட போரின் தாக்கம் கலை இலக்கிய முயற்சிகளிலும் அதன் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக புலம்பெயர் இலக்கியம் ஒன்றும் உருவாகியுள்ளது. போர்க்கால இலக்கியங்களும் படைக்கப்பட்டுள்ளன. போரின் அனர்த்தங்கள் பற்றிய இலக்கியமும்படைப்பிற்குள்ளாகியிருக்கிறது. இத்தகையதொரு சூழலில் புலம்பெயர்ந்தோரும் அவர்களின் தொப்புள் கொடி உறவுகளும் ஒன்று கூடி உரையாடவும் வீழ்ச்சியுற்ற மனநிலையிலிருந்து எழுச்சியுறவும் ஓர் இலக்கிய ஆரம்பம் வேண்டும். மாநாடு அதனை தேடும்பிரயத்தனத்தில் முனைப்பு கொண்டது.
50

யுத்தம் இனங்களிடையேமனவிரிசலை ஏற்படுத்தியுள்ளது அகன்று செல்லும் விரிவுகளுக்கிடையே உறவுப்பாலத்தை ஏற்படுத்த வழிதேடுவது மாநாட்டின் இன்னொரு வேணவாவாகும்.
புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகளை பலதளங்களுக்கு இட்டுச் செல்லவேண்டிய அவசியம் குறித்துகருத்துபரிமாற்றங்கள் அவசியமாகின்றன. இங்கு அதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதேச இலக்கியம், வட்டார பேச்சுமொழி எனும் கூறுகளுடன் வளர்ச்சி கண்டுவந்த தமிழ் புனைகதை இலக்கியம் சர்வதேச தரத்தினை சென்றடைய ஒரு பொதுமொழியினைகையாள்வதுகுறித்துஆராயவேண்டியுள்ளது. கணனியின் வரவு ஏற்படுத்தியுள்ள பாய்ச்சல்கனவு கருத்தில் கொண்டு எமது இலக்கியச் செல்நெறியில் எதிர்ப்பு இலக்கியத்தின் வகிபாகம், நலிவுற்ற மக்கள் இலக்கியம், உலகதரம், மொத்தத்தில் நமது நவீன இலக்கிய முயற்சியினை அடுத்த வளர்ச்சி கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் கருத்துப்பரிமாறல்களை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு தலையாய அம்சம்மதை நாம் எதிர்கொள்ளும் இக்காலகட்டத்தில் அவற்றை இயக்கமுறச் செய்வதற்கான முன்னோடிக்களமாக மாநாடு அமைகிறது.
மாநாட்டினை நடத்துவதற்கான முன்னோடி கலந்துரையாடல் 2010 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் மெளனகுரு உட்பட நாட்டின் சகலபாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், புத்தி ஜீவிகள் என 180 பேருக்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர். பலரும் சுதந்திரமாக தமது கருத்துக்களை அன்று வெளியிட்டனர். முரண்பாடான கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக செல்வி தாக்கம் பற்றிய முரணான கருத்து வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஒரு விழா குழுசபையிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. உலகளாவிய ரீதியிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். அக்குழுவே ஒரு வருட காலத்திற்குள் செயல்பட்டு வெற்றிகரமாக மாநாட்டை நடத்திமுடித்தது.”
இவ்வாறான கருத்துக்களை ஞானசேகரன் தமது உரைகளில் வெளிப்படுத்தினார்.
எதிர்பார்ப்பின்படி வளர்ச்சிக்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன. அதனை வளர்த்தெடுப்பது தமிழ் சிருஷ்டி உலகின் பங்காளிகள் அனைவரினதும் பாரிய கடமையாகும்.
நலிவுற்றுவிட்டோம் இனி என்ன சடலம்தான்' என்ற விரக்தியின் எல்லைக்குள் நின்று தடுமாறாமல் இயங்குதல் வேண்டும் உயிர்த்தெழ முயலுதல் வேண்டும். எமது இலக்கியத்தை உச்சத்திற்கு இட்டுச் செல்வதற்கான பிரயத்தனங்களில் ஈடுபடுவதே எம்மை நிலை நிறுத்திக்கொள்வதற்கான சரியான வழிமுறையாகும். மாநாடுகள் அதற்கான உந்துகளங்களே. இம்மாநாடும் அவ்வாறே அமைந்துவிட்டது அதன் முதல் வெற்றியாகும் எனில் மிகையல்ல. இலக்கிய உலகில் கருத்துக்கள் ரீதியான குழுக்கள் இருக்கலாம். இயங்கலாம் ஆனால் நாம் நமக்குள்ளே குண்டுச்சட்டிக்குள்ளே குதிரையோட்டுவோம் என்றவகையில் ஓம் நமச்சிவாயா!ஓம் நமச்சிவாயா என்று அதனையே சுற்றிச் சுற்றி வருவது இயங்கியல் ரீதியான வளர்ச்சிக்கு ஆப்பு வைத்துவிடும் ஒடுகின்ற நீரும், இயக்கமுள்ள செயல்பாடும் களைகலைந்து தெளிவாகும்.
பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம் என்றசூத்திரத்தின் தாரகமந்திரம் அதுவே.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 53
நூல் : நவீன நாடகம் ஆசிரியர் :
லாபூஷணம்அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை வெளியீடு : விலை : ரூபாய் 100/=
X
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளையை உங்களுக்குத் தெரியும் தானே? அவர் எழுதியவை510 நாடகங்கள், 12 நாடக நூல்கள், நாடகம் எழுதுவது எப்படி? வானொலிநாடகம் எழுதுவது எப்படி? சிறு கதை எழுதுவது எப்படி? நவீன இலக்கியங்களை கற்பித்தல், 4இலக்கிய விமர்சன நூல்கள். எல்லாமாக 26.
இந்த நூலில் நவீன நாடகம் எப்படி இருக்கும் என்று விளக்கிக்கூறியிருப்பதுடன் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கணபதிப்பிள்ளையால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மண்வாசனை’ நாடகம் இலங்கைத்தமிழ் பேசும் மாணவர்களுக்குக் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார். நவீன நாடகத்திற்கு உதாரணமாக அவரது,வாத்தியார் கவனம்நாடகம் தரப்பட்டுள்ளது.
நூலில் உள்ள கட்டுரைகளையும் நாடகத்தையும் வாசித்தால், நவீன நாடகத்தையும் வானொலி நாடகத்தையும் எழுதிப்பழகலாம்.
S.பத்மராஜா
நூல் : செந்நீரும் கண்ணிரும் ஆசிரியர் : − சமரபாகு சீனா உதயகுமார் வெளியீடு:ஐங்கரன் பதிப்பகம் விலை : ரூபாய் 250/= நூலாசிரியர் சமரபாகு சீனா உதயகுமார் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர் 'உடைந்த நினைவுகள், வெற்றியுடன் என்று இரண்டு கவிதை நூல்களையும், மாணவர்க்கான புள்ளி விபரவியல்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். இப்போது செந்நீரும் கண்ணிரும் என்ற சிறுகதைத் தொகுதிஒன்றைநம்முன் கொண்டுவந்துள்ளார். உதயகுமாரின் சிறுகதைகள் குறித்து செங்கை ஆழியானும் விசு.கருணாநிதியும் கே.ஆர்.டேவிற்அவர்களும் தமதுமதிப்புரைகளை வழங்கியுள்ளனர்.ஒரு சிறுகதை எப்படி அமையவேண்டும் என்பதையும், அம்ைப்புப்பற்றியும் செங்கை ஆழியான் விபரித்துள்ளார். அவர் எண்ணத்துடன் எப்படி உதயகுமார் ஒத்துப் போகின்றார் என்பதையும் பேசியுள்ளார். மேற்படி நூலின் பதினெட்டுக் கதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது ஆக்கங்கள் ஞானம்,மல்லிகை, வீரகேசரி,தினகரன், ஜீவநதி, இருக்கிறம் போன்ற பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
இவரது கதைக் களங்கள் பாடசாலை, அலுவலகம், குடும்பம், சமூகம், போர்க்கால நிலை போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இவரது படைப்பில் சமூகத்தில் உள்ள நல்லவர்களையும், வஞ்சகர்களையும் தரிசிக்க முடிகிறது.சமூக முன்னேற்றத்தில் இவர் காட்டும் ஆர்வம் நமக்குப்புரிகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 
 
 
 
 
 
 
 
 

பதவிச் சுகம்தேடி என்ற சிறுகதை பொருத்தமில்லாதவர் பொருத்த மில்லாத பதவியில் ஒட்டிக் கொண்டு பொது மக்களுக்கு விரோதமாய் நடக்கும் நிகழ்ச்சி விபரணமாகின்றது. இன்றும் நாம் இவர் களைச் சந்திக்கலாம். அன்னையின் இறுதி ஆத்மா ஒரு குடும்பக் கதை. அவசரபுத்தியால் கெட்டுப்போன தங்கை மகளுக்கு திருமணம் நடைபெற வில்லையே என்ற ஏக்கத்துடன் நோயாளியாகி உயிர்விட்டதாயின் நிலையை தெரிவிக்கிறது. “சலனங்கள் ஊருக்கு உதவும் ஒரு உபகாரியின் மீது பழிசுமத்தும் நோக்குடன் போக்கிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கதைகளைக் கேட்டு உள்ளம் நொந்து நோவும் ஒரு மகளின் கதை. ‘மனித மனங்கள் ஊனமுள்ள ரகுவை காதலிக்கும் மதுவையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமூக நியதிகளை விளக்குகிறது. மோகனா தப்பிவிட்டாள் என்ற கதையில் அவளை அடைய விரும்பி தோல்வி கண்ட கழிசறைகள் கட்டவிழ்த்து விடும் கதைகள் அவமானத்தால் குன்றிப்போன மோகனா குண்டுவெடிப்பால் இறந்து அமைதி அடைகிறாள். மனநிறைவை ஏற்படுத்தும் கதைகள் உள்ளன.
நரல் : நிலவும் சுடும் ஆசிரியர் : ராணி சீதரன் வெளியீடு: யது வெளியீடு விலை : ரூபாய் 250/= நூலாசிரியர் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் பிரபல்யம் மிக்கவர். அவரது சிறுகதைகள் மூலம் தனக்கென தனியான இடத்தை இலக்கிய உலகில் சம்பாதித்துக் கொண்டவர். முதுமாணிமுதுகல்விமாணி ஆகிய
பட்டங்களை பெற்றவர்.
நிலவும் சுடும் என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி பதினான்கு சிறுகதைகளைக்கொண்டதொகுப்பாகும் அவரது பாத்திரப்படைப்புக்கள் நம்பிக்கையூட்டுவதாகவும் சமூக நல நோக்கோடும் கூடிவை. அவருக்கு வலியையும், வேதனையையும் ஊட்டிய சம்பவங்களே கதைகளாக வடிவம் பெற்றுள்ளன. சிலகதைகள் சமூகச்சீர்கேடுகளைச் சித்தரிக்கின்றன. சில இன முரண்பாடுகளால் ஏற்பட்ட போர்க்காலசூழல்களின் தாக்கத்தை விபரிக்கின்றன.
ஊசல் என்ற கதை சூழ்நிலை காரணமாக வயிற்றில் கருவைச் சுமந்து, மனதுக்குள்ளேயே வெந்து நொந்து அவஸ்த்தைப்படும் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது. மல்லிகா அவர்களில் ஒருத்தி
51

Page 54
மாற்றுஎன்றகதைஒருபுறம்கோயில்கோபுரம்என்றுகட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் வறுமையின் கொடுமை காரணமாக சிவலிங்கம் போன்றவர்கள் மதம் மாறுகின்றார்கள். விவேகானந்தர்முதலில்பசியைப்போக்குபின்னர்மதத்தைபோதி என்றார். மனிதனின் அடிப்படைத் தேவைபூர்த்தியானால் மதம் மாறும்நிலை வராது என்பது கதைபோதிக்கும் கருத்தாகும்.
கருகிடும் நிலைகள் விசாரணை என்னும் பெயரில் பெண்களை அவமானச் சின்னங்களாக்கும் காட்சி விபரணமாகிறது. மீண்டும் வருமா என்ற கதை 'புத்தர் சிலைகள் தோன்றும் சம்பவங்களால் ஏற்படும் அசம்பாவிதங்களை எடுத்துரைப்பதுடன் பாலனின் மனப்பதிவையும் காட்டுகிறது. புரியாமலே என்ற கதையில் தமிழ்ப்பெண்கள் பஸ்ஸில் பயணிக்கும்போது அவமானப்படும் காட்சி ஓவியமாகின்ற்து. 'பொன்னகரம் சாருமதியின் வறுமையின் கொடுமையை விபரிக்கிறது. பொய் புனைவு இல்லாத யதார்த்த வடிப்பு இக் கதை. ‘விடிவு என்னும் கதை வழி தவறிய மாணவனை நல்வழிப்படுத்தும் ஆசிரியை சாந்தியின் தாய்மையை சொல்கிறது. புது வாழ்வு தந்த புண்ணியவதி ஆசிரியரின் அனுபவப் பிழிவுகளாக கதைகள் மிளிர்கின்றன.
நூல் : பலே பலே வைத்தியர் ஆசிரியர் : கே. விஜயன் வெளியீடு வி. ஐ.புறோமோ 8 பதிப்பகம் விலை : ரூபாய் 200/= நூலாசிரியர் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளர். படிக்கப்படிக்க சிரிப்பை வெடிக்க வைக்கும் ஹாஸ்ய எழுத்தாளர். இவர் சிறுகதை நாவல் ஆஇஆபத்தி எழுத்துக்கள் தொடர் கதை . ၇-> RA 7 சிறுவர் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதியநாவல்கள் விடிவுகால நட்சத்திரம் (வீரகேசரிவெளியீடு)மனநதியின் சிறுஅலைகள்(பூபாலசிங்கம் பிரசுரம்) அன்னையின் நிழல் சிறுகதைத் தொகுப்பு (மணிமேகலைப்பிரசுரம்)என்பனவற்றோடுவீரகேசரி,சுடரொளி, தினகரன், ஈழநாடு, மல்லிகை, ஞானம், சிரித்திரன், தீபம், கணையாழி,செம்மண்,மேகம்,தமிழினிமுதலிய சஞ்சிகைகளில் நிறையவேஎழுதியுள்ளார். எழுதியும் வருகிறார்.
பலே பலே வைத்தியர் என்ற இந்த நூலின் கருப்பொருள் சில மலையாளம் ஆங்கிலம் முதலியவற்றைத் தழுவியதாகவும் நிகழிடசம்பவங்களை மாணவர் இலகுவில் விளங்கிக்கொள்ள சிறிது மாற்றம் செய்துள்ளதாகவும் நூல் மூலம் அறிய வருகிறோம்.
நூலின் உள்ளடக்கம் மாணவர் ஆற்றலுக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. தெளிவான பெரிய எழுத்துக்களில் நூலுரு பெற்றுள்ளதால் தடங்கலின்றி மாணவர்கள் வாசிக்க இது உதவும். கதைகளுக்கு ஏற்ப மாணவரைக் கவரக்கூடிய படங்கள் இடம் பெற்றிருப்பது மாணவர் சிறுவர் உள்ளத்தைக்கவரும் என்பதில் வியப்பில்லை. சிறுவர் கதைகள் போதனைகளாக இருக்க வேண்டும் என்பதில் முரண்பட்டாலும்பலகதைகள் மறைமுகமாக ஏதோ ஒரு போதனையை செய்தியைச் சொல்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.
::%8جعي " جيري
52
 
 
 
 
 

நூலில் அடங்கியுள்ள இருபதுகதைகளும் நல்லவையே. குட்டிக்கரணமடித்த குண்டு பயில்வான் கதை நண்பன் ஜிக்குவுக்கு கல்லெறிந்த பயில்வான்ன “சிக்குவஞ்சம் தீர்த்த செய்தி கூறப்படுகிறது. பலே பலே வைத்தியர் உடல் உறுதிக்கும் அழகுக்கும் உடற் பயிற்சி அவசியம் என்பதை உணர்த்துகிறது. பழுதான தொலைக்காட்சிப் பெட்டியை திருத்திக்கொள்ள கில்லாடி தாத்தா செய்த தந்திரம் ரசிக்கத்தக்கது.அச்சாண்டி பூதங்களிடமிருந்து தப்பச் செய்த சாமர்த்தியம் ஆபத்தில் காப்பாற்றிக்கொள்ள விவேகம் தேவை என்பதை காட்டுகிறது. பண்டிதரின் பரலோக யாத்திரை கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை நினைவு படுத்தும், சூரியனைப் பிடித்துவிட்டார்கள். கதை போரில் மக்களின் இறப்பைத் தவிர்க்க மந்திரி கையாண்ட நடவடிக்கையைக் கூறுகிறது. நூலை சிறியரும் பெரியரும் வாசித்துமகிழலாம்.
| tyle oჯზჯ | జీవః ఓటమిk# நூல் : னிக்கம் LJ
భ క్లబ్లిజ్ఞాశ్హ్ల్వా ಣ್ಣ: இரு து ஆசிரியர் : த. துரைசிங்கம் வெளியீடு உமா பதிப்பகம்
கொழும்பு 6 விலை : ரூபாய் 150/= நூலாசிரியர் த. துரைசிங்கம் அவர்கள் கல்வியமைச்சில் நீண்ட காலம் பணிப்பாளராக இருந்து ஒய்வு பெற்றவர். இலக்கியத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். சிறுவர் இலக்கியத்திற்காக சுமார் முப்பது நூல்களுக்கு மேல் எழுதியவர். சிறுவர் இலக்கியப் படைப்பிற்காக நான்கு முறை இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றவர். இந்நூல் சிறுவர்கள் தாம் விரும்பியபாடல்களைப்படிக்கவும் கவிஞர்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் உதவும்.
இந்நூல் 98 பக்கங்களைக் கொண்டது. முன் அட்டைப் பத்துக் கவிஞர்களின் நிழற்படத்தைத் தாங்கியுள்ளது. பின் அட்டையை அழகான மலர் அழகு செய்கிறது. பாடலுக்கு பொருத்தமான படங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறுவர்களுக்கான பாடல்களைத் தந்து இருபது கவிஞர்களின் இனியபாடல்களை கவிஞர்களின் குறிப்போடு தந்துள்ளார்நூலாசிரியர்.
இருபது கவிஞர்களின் பெயர்களும் வருமாறு. கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர், மகாகவிசுப்பிரமணியபாரதியார், கவிஞர் யாழ்ப்பாணன், பாவேந்தர்பாரதிதாசன்,புலவர் மு.நல்லதம்பி அழ.வள்ளியப்பா, வித்துவான் வேந்தனார்,டாக்டர்பூவண்ணன், கவிஞர்கள் இ. நாகராசன், செல்லக்கணபதி,எம்.சி.எம்.சுபைர், வாணிதாசன் அம்பிகைபாகன்,சத்தியசீலன், பொன்ராசன்,வ.இராசையா, சாரணாகயூம், திமிலைத் துமிலன், வாகரைவாணன் என்போராவர்.
கவிதைகள் மாணவர் விரும்பும்படியாக,இயற்கையிலுள்ள வீட்டுமிருகங்கள் பறவைகள்,கடல், கப்பல்பட்டாம்பூச்சிபட்டம் போன்ற பல்வேறு தலைப்புகளில் வந்துள்ளன. மாணவர்கள் அறநெறியில் வாழவும் உயிர்களிடம் கருணை கொள்ளவும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011 ஞா

Page 55
எவரையும் புண்படுத்தாமல் இருக்கவும் பெற்றோர் தெய்வம், பெரியோர் இவர்களிடம் பணிவாக நடந்துகொள்ளவும் அரிய அறிவுரைகளை வழங்கும் கருத்துக் களஞ்சியமாக இந்நூல் அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது. ஒரே நூலில் இருப்பது கவிஞர்களின் வரலாற்றையும் இனிய பாடல்களையும் அறியும் வாய்ப்பை வாசகர்களுக்குக் கொடுக்கிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பதில் மாறுபாட்டிற்கு இடமில்லை.
நூல்: மெளனப் பார்வை ஆசிரியர் : துறையூரான் வெளியீடு : கலைஞர் பேரவை
பேசாலை விலை : ரூபாய் 2001= மெளனப் பார்வை என்னும் இந்நூலின் ஆசிரியர் துறையூரான், இவரின் இயற்பெயர் எம். சிவானந்தன். மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகவிருந்து பாடசாலை அதிபராகவிருக்கிறார். யாழ் பல்கலைக்கழகம் பேராதனை பல்கலைக் கழகம் காமராஜர் பல்கலைக் கழகம் என்பவற்றில் பட்டம் பெற்றவர்.
பலசிறுகதைகளைப் படைத்தவர். திருவிழா வியாபாரம் என்ற சிறுகதைக்குப்பரிசு பெற்றவர்.முன்னுரையை அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் வழங்கியுள்ளார். அறிமுகவுரையை எழுத்தாளர்எஸ்.ஏ.உதயன் எழுதியுள்ளார்.சமூகசிந்தனையும் சமூகத்தில் நடைபெறும் அனுதாபத்திற்குரிய தீமைகளை ஒவியமாக்கியுள்ளார். மூட நம்பிக்கைகள் அநாவசியமான மூடச்சடங்குகள் அற்றுப்போகவேண்டும் என்று விரும்புபவர். பனையூர் கிராமத்தின் பின்னணியையும் அங்கு எவ்வாறு மக்கள் குடி பெயர்ந்தனர் என்று வரலாற்று உண்மையையும் கூறிமேற்படி கிராமத்தை வர்ணங்கள் மூலம் மனக்கன் முன் நிறுத்துகிறார்.
காத்தவராயன் கூத்து மக்களிடையே பிரபலமானது பற்றியும்மக்கள் சாமியிடம் எவ்வளவுபக்திகொண்டவர்களாக வாழ்ந்தார்கள் என்பதையும் நூலின் பரக்கக் காணலாம்.
சமூகத்தில் கட்டுப்பாடுகள் இல்லாத போதும் அல்லது கட்டுப்பாடுகள் தளர்ந்து விடும்போதும் எவ்வாறு ஒழுக்கக் கேடுகள் இடம் பெறுகின்றது என்பதை கந்தையா மனைவி செளந்தரி, கறுப்பண்ணன் மனைவி முத்தம்மா மூலம் அறிகிறோம்.
காதல் என்பது உள்ளத்தால் மலராமல் வெறும் உடற்பசியினாலும்,உணர்ச்சிமயக்கத்தாலும் ஏற்பட்டு எவ்வாறு சீரழிவை ஏற்படுத்துகிறது என்பதை லீலா கணேசன் காதலும், வதனி செல்வா காதலும் விபரிக்கின்றன.
ஐந்து பெண்களைப் பெற்ற தாய் ஒருவனோடு ஓடி ஏமாறுவதும், வறுமையைப் போக்கவும் உணர்வுக்கு தீனிப் போடவும் இனம் மதம் என்று பாராமல் காம இச்சையை தீர்க்கவும்நடைப்பெறும் சம்பவங்கள் விவரணப்படுத்திதிருந்தி வாழும் சமூகத்தை நூலின் மூலம் ஆசிரியர் எதிர்பார்க்கிறார். பத்து வயது மூத்த வதணி இளம் மாணவனிடம் கருவுற்றுத் தாயாகிமரணிக்கும் காட்சிமனதை நெகிழ்விக்கின்றது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 

நூல் : கூடு கட்டத்தேன்ாத
ஆசிரியர் : மணிப்புலவர்
மகுதூர் ஏ. மஜீத் வெளியீடு: எஸ். கொடகே
சகோதரர்கள் விலை : ரூபாய் 250= மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்கள் இதுவரை பன்னிரண்டு நூல்களை எழுதி இலக்கிய உலகிற்கு செழுமை சேர்த்துள்ளார். அவரது பன்னீர் வாசம்பரவுகிறது என்ற சிறுகதைத் தொகுதி 1979ல் வெளிவந்தது. அடுத்ததாக மறக்க முடியாத இலக்கிய நினைவுகள் 1990 பதிவாகியது.இன்றுவரை கவிதை நூல்கள் இரண்டு, சிறுகதை படைப்புகள் இரண்டு, அறிவியல் நூல்கள் மூன்று, கட்டுரை நூல்கள் இரண்டு, ஆய்வுநூல்கள் மூன்று வரலாறு ஒன்று என்றபடி பன்னிரண்டு நூல்கள் ஆகும்.
நூற்றிஇருபது பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் பன்னிரண்டு சிறுகதைகள் இட்ம் பெற்றுள்ளன. தினகரன் மல்லிகை, நவமணி, மணிமேகலைப் பிரசுரம் என்பனவற்றில் வெளிவந்தவை இவை. சிறுகதைப் படைப்பாளி வாசகனோடு எவ்வாறு ஒன்றி கதை படைக்க வேண்டும் என்பதையும், படைப்பாளி எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஆழமாகப் பார்க்கிறார். சிறுகதை ஜாம்பவான் புதுமைப் பித்தனையும் விமர்சனப்பார்வையுடன் நோக்கியுள்ளார்.
படைப்பில் பாத்திர வார்ப்புக்கள் மூலம்தான் இறைவன் மீது கொண்டுள்ள பக்தியையும், இரக்க குணத்தையும், சமுதாயத்தை நேசிக்கும் பான்மையையும் அறியமுடிகிறது. கற்பனை என்றாலும் கதைகள் சமுதாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகளாகவேதென்படுகின்றன.
கூடுகட்டத்தெரியாதகுயில்பரிசாரிக்குக்கீரையும்விற்று தன்னையும் விற்றுவிட்ட அவல நிலையைக் காட்டுகிறது. தங்கச்சியம்மாவின் கதையைஊர்மென்றுஜீரணிக்கிறது.அபுல் ஹாசிம் ஹாசியார் தன்னால் ஏற்பட்ட ஆகும்பாபாவின் மரணத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார். பெண்னை விட்டு சீதனத்தை கட்டிக் கொள்ள துடிக்கும் ஆண்களின் முகத்தில் கரிபூசுகிறார் ஆயிஷா பணம்பத்தும் செய்யும் என்ற முதுமொழிக்கு இலக்கணமாக இருக்கிறது. சுபைதாவின் கதை மைமூன்ஒருகுழந்தைக்குதாயாகிறாள்.ஜென்மவினை விட்டுப் போகாது என்பதை உணர்த்துகிறது. வர்ணனை ஊரார் வசை என்பன பதிகிறது. பனித்துளி பட்டு கருகிய மொட்டு இனக் கலவரங்களின் பாதிப்பைபடிப்பினையாகக் காட்டுகிறது.
எளிய நடையில் நல்ல உவமைகளுடன் ஆசிரியர் கதையை நடத்திச் செல்லும்பாங்கு கதைக்கு உயிரூட்டுகிறது.
குறிஞ்சிநாடன்
巒聳聳聳
being alive
Assi): (Being alive) மொழிபெயர்ப்புச்சிறுகதைகள் தொகுப்பு: லெ. முருகபூபதி வெளியீடு: சர்வதேச தமிழ்
எழுத்தாளர் ஒன்றியம் விலை : ரூபாய் 250=

Page 56
அவுஸ்திரேலியாவில் வதியும் சில சிறுகதை எழுத்தாளர்களினதும் அங்கு சிறிதுகாலம் வாழ்ந்த படைப்பாளிகளினதும் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டBeingative என்ற நூல் இலங்கையில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இடம்பெற்ற மொழிபெயர்ப்பு அரங்கில் வெளியிடப்பட்டது.
இந்நூலை லெ. முருகபூபதி தொகுத்துள்ளார். கனடாவில் வதியும் மொழிப்பெயர்ப்பாளர் திருமதி சியாமளா நவரட்ணம் 14 சிறுகதைகளையும் அவுஸ்திரேலியாவில் வதியும் மொழி பெயர்ப்பாளர் திரு. நவீனன் ராஜதுரை ஏழு சிறுகதைகளையும்மொழிபெயத்துள்ளனர்.
மொழிபெயர்ப்பு என்பது கடினமான பணி, இந்தப்பணியில் ஈடுபட்ட இரண்டுமொழிபெயர்ப்பாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். இதனை சிறப்பாக அச்சிட்டு பதிப்பித்துள்ளார்குமரன்பதிப்பகதிரு.குமரன்கணேசலிங்கன், உரியதொரு அரங்கில் இதன் அறிமுகம் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே அவுஸ்திரேலிய தமிழ்கலை,இலக்கிய சங்கம் (ATLAS) வெளியிட்ட 20 சிறுகதைகள் அடங்கிய 'உயிர்ப்பு என்ற தொகுப்பை தொகுத்திருந்த முருகபூபதி அதிலிருந்த அனைத்துக் கதைகளையும் கனடாவிலிருக்கும் சியாமளா நவரட்ணம் அவர்களிடம் வழங்கி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்துள்ளார். சியாமளாவும் தமக்கு
மண்ணிலோர் நிலவினைக் கண்டே முகிழ்த்திட மது மயக்கம் கொண் 657605/600fai உலவிடும் வேலை விலகியோ வந்தது விழிச்ச
கண்ணிலே காந்தத்தின் கக்கியே மாய்த்திடும் என்னையே மறந்தேன் தன்னுள்ளே சிறையிட்டாள்
தன்னுள்ளக் காதலைச் செ தன்னையே உயிரெனத் தந்: கண்ணுள்ளே நிலவாகி நின்
கலசத்துள் தமிழாகி நிை
சலங்கைச் சிலம்பலென அணைத்திட தென்றலை பல்சுகச் சுவையவள் பரவசப் பசிக்கவள்
கனவில் மிதக்கின்ற இரவில் இனித்துச் சுமந்ததவள் உறவை சின்னத் திரையிடும் சீரிய:ே சரச லீலைகளின் தொட
ரவில் கனவுகள்
னைவுகள் கண்ணுக்குள் வருவாளோ துயிலறை தருவாளோ சுவாசிக்கச்
54

வழங்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்துள்ளார் என்பதனை நூலை படிக்கும்போது உணரமுடிகிறது.
அவுஸ்திரேலியாவில்வதியும்ன்ஸ்.கிருஷ்ணமூர்த்தி,ரவி கல்லோடைக்கரன், அமரர். தெ. நித்தியகீர்த்தி, அ. சந்திரஹாசன், புவனா இராஜரட்ணம், நடேசன், ஆவூரான், சந்திரன், ரதி, ஆ. சி. கந்தராஜா, அருண் விஜயராணி, முருகபூபதி, ஆழியான் மதுபாஷினி ஆகியோரது ஏற்கனவே தமிழில் வெளியான சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் சிறிதுகாலம் வசித்த கலாநிதி த. கலாமணி, டொக்டர் தி. ஞானச்ேகரன் ஆகியோரது சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆழியான் மது பாஷினியின் சிறுகதையை மாத்திரம் நவீனன் இராஜதுரை மொழிபெயர்த்துள்ளார். ஏனையவை சியாமளநவரட்னத்தின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. தமிழ்ச் சூழலையும் புகலிடத்தமிழர்களின் வாழ்வுக் கோலங்களையும் யதார்த்தமாக சித்தரித்துள்ள இச்சிறுகதைகளை ஆங்கில வாசகர்களும் புகலிடத்தில் ஆங்கிலத்தில் கல்விபயிலும் இளம்தலைமுறையினரும் Uly5555(5.55 GigiTel L. Being alive. Sly 55,655(5:- international. twfes(ayhoo.com.au 0666393.081484
டன் - மையல் rடேன் ா - வழி */7670Ꭰ6ᎸᏗ
ஈர்ப்பு - கவர்ச்சி di,/TUL/ அவ்வேளை - என்னை அந்தவாலை
ான்னாள் - என்னுள் J5 TGIT ாறாள் - கவிதைக் றந்தாள்
நகைத்தாள் - தொட்டு உகந்தாள் மேனி - என்
தீனி
) - கண்கள்
Uா - அவள் Tg5GT
தொடருமோ - அவள் மலருமோ வசந்தம் - என்றும் சுகந்தம்
E・
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 57
ஞானம் டிசெம்பர் 2010 இதழ்கண்டேன். அத்தனை படை துரைமனோகரன் எழுதும் சிறப்பான அம்சங்களில், அரசியலும் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். செய்வார்களா பாணியுடன் கூடிய பக்கங்கள்தான். இன்னொருவரினால் இ ஞானம் தொடர்ந்து மேலும் சிறப்புடன் வெளிவர எல்லாம் வல்ல
★女儿 ஞானம் டிசெம்பர் இதழ் கிடைக்கப்பெற்றேன். நன்றி, ரூபா 16 இடம்பெற்றிருந்ததாக அவதானித்தேன்.
இலக்கிய சஞ்சிகைக்கு தபால் முத்திரை ஒட்டுவதில் முயற்சிக்கவேண்டியது இலக்கியமன்றங்களின் பொறுப்பு.இதற் கட்டாயம். இருக்கும் பிரதேச அமைப்புகள் சேர்ந்து ஒரு படைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும்.இந்தி சலுகை உள்ளது. 100 கிராம் நிறையுள்ள சஞ்சிகை புத்தகத் முன்பும், இப்போ சற்று உயர்ந்திருக்கக்கூடும். அதன்படி பார்த்த சர்வதேச எழுத்தாளர் விழாவில் எழுதப்படும் முன்மொ கொள்ளலாம்.
அதில் இலங்கை இலக்கிய அமைப்பு ஒன்றை உருவா வெளியிடுவோர் அச்சுத் தாள்கள் சலுகை நிலையில் வாங் நூலகங்களுக்குவிநியோகிக்கவும் கோரிக்கைஎடுக்கலாம்,தமிழ திட்டம் தெரிந்ததே.
★女丸 ஞானம் 128 ஆவது இதழில் (ஜனவரி 2011) வெளியான
யாத்திரையும் என்ற கட்டுரை படித்தேன். அதில்'90 களில் யாழ்
இது தவறாகும். யாழ் நூலகம் தீவைத்துப் கொளுத்தப்பட்ட தி
★ ★
சஞ்சிகை ஞானம்
சிறப்பிதழ் என் கைகளில்
அடடா. புதுமை
எழில் வதனம், விரியும்
இதழ்களின் வசந்தம்
தென்றல் தவழும் தமிழ்!
இலக்கிய வித்தகரின்
அரியழுத்துக்கள் பொதித்த
மாதுளமபழம
தமிழ் எனில் அமிழ்தம்
அழகு மலர் எனில் ஞானம்
எழுதுகோலும் ஏடும்
உலகப்பந்தும்
தமிழ் எழுத்தாளர்கைகளில்
இனித் தமிழ் இலக்கியம்
ஒளிரும். ஓங்கிடும்
இப்புவியெங்கும் - வேரற்கேணி
★yr
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011
 

ப்புகளும் முத்துக்கள். எழுதத் தூண்டும் எண்ணங்கள் கலாநிதி அறிவிப்பாளரும் என்ற பகுதி உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் கே. விஜயனின் படித்ததும் கேட்டதும் பகுதி அவருக்கே உரிய வ்வளவு சிறப்பாகச் செய்யமுடிமா என்பது கேள்விக்குறிதான்.
இறைவன் அருள் புரிவானாக.
W.L. LTGlory'60GTib r★★女 a
க்கு முத்திரை ஒட்டப்பட்டிருந்தது. இது கடந்த சில மாதங்களிலும்
ஒரு சலுகையை அரச திணைக்களத்திலிருந்து பெறுவதற்கு குஅகில இலங்கை இலக்கிய அமைப்பு ஒன்று இருக்கவேண்டியது ஒன்றியத்தை உருவாக்குதல் நல்லது. சிங்கள இலக்கியப் யதமிழ்நாட்டில் இலக்கிய சஞ்சிகைகள் அனுப்புவதற்கு முத்திரை துக்கு ரூபா ஒன்று மட்டுமே முத்திரை. இது 2003 லும் அதற்கு ால் ஒரு ஞானம் சஞ்சிகையை அனுப்பரூபா 51 முத்திரை.
றியப்படும் பிரேரணைகளின் இதனையும் ஆராய்ந்து சேர்த்துக்
க்கும் பிரேரணையும் சேர்த்துக் கொள்ளவும், அதன் மூலம் கவும், அச்சிட்ட நூல்களை கலாசார திணைக்களம் வாங்கி கத்தில் நூலகத்திற்கு வாங்கிபிறநூலகங்களில் விநியோகிக்கும்
எஸ். பி. கிருஸ்ணன் girl li கே. விஜயனின் உயிர்ப்பிற்கான துடிப்பும் கல்லறை நோக்கிய நூலகம்திகுதிகுவென தீப்பற்றியெரிந்து.”என்று வருகின்றது. னம் 16.1981 என்பதே சரியாகும். - தேவமுகுந்தன் 女女★
k女大
55

Page 58
சும்மா சொல்லக்கூடாது, உலகத் தமிழ் எழுத்தாளர் மாந “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.' என்ற பகவத் கீதை வாசகங்களே ஞாபகத்துக்கு வருகின் போதிலும் யாரும் யாருடனும் எதுவும் பேசாமல் கப்சிப் என்று நாலு பேரைச் சந்தித்துப்பேசியது மனசுக்கு ஆறுதலாக இருந் வேண்டாம் என்கிறார்கள். அவர்கள்’பிறந்த தின விழாக்கள் என்றே கேட்கத் தோன்றுகின்றது.
அரசியல் வாதிகளை மேடையில் ஏற்றாமல் விட்டது வேண்டாமென்று முடிவுசெய்ததும் மிகவும் நல்ல தீர்மானங்க ★女 மார்கழி மாத ஞான்ம் இதழை வாசித்த போது எனக்கு பேச விரும்புகிறேன்.
முதலாவது விடயம் திரு பரணிதரன் அவர்களின் சிறு சைவத் தமிழரின் வாழ்க்கை முறையில் மேற்கத்தேய நாகரீக அருந்துவதும் நடனம் ஆடுவதும் சர்வசாதாரண விடயமாக மா குடிக்காத அப்பாவிகளையும் வற்புறுத்திக்குடிக்கப்பண்ணுகின் கிளாஸ் குடித்துப்பார்” என்பார்கள். பின்னர் இன்னும் ஒரு நாளுக்கு குடிப்பது பியர் அல்ல, ஒரு கிளாஸ் சாராயம் ஆ பழகுகின்றனர். நகுதற் பொருட்டன்று” என்ற சிறுகதையி கதையின் படிமதன் பிடிவாதமாகவே குடிக்க மறுத்துவிட்டை இரண்டாவது விடயம் எழுத்தாளர் மாநாடு கருத்துச் சுத குரல் கொடுத்து வருபவர்கள் எழுத்தாளர்கள். இந்த எழுத்த கொள்வதும் காத்திரமான பொதுஜன அபிப்பிராயத்தை உருவி வாய் கிழியக்கத்துவோர்கத்திக் கொண்டே இருக்கட்டும். ஆ சிறப்பாக நடந்தேறும் என்பதே பெரும்பாலான தமிழ்ப் பேசும்ப 女女〕 சர்வதேச எழுத்தாளர் மகாநாடு என்னும் மிகப்பெரியச இணைந்து நின்றோரையும் பாராட்டி, நன்றிகூறவேண்டிய கட எதிர்ப்பு அலைகளின் நடுவே நிமிர்ந்து நின்று சிறப்பாக அமைந்திருந்தது. நாம் ஒருங்கு கூடி ஒருவருடனொருவர்க மகாநாட்டில் கலந்துகொண்டோருக்கு மட்டுமே புரிந்திருக்கு இவ்வாய்ப்புக்கிட்டியிருக்காது. கொழும்பு தமிழ்ச்சங்கத்தின உதவும்போதும் எப்படித்தான் சிரிப்புச் சற்றும் குறையாதிருக்க கருத்தரங்குகளுக்கு நேரம் போதவில்லையே என்பது எ6 என்பது அடுத்த குறை. செவ்விதாக்க அரங்கில் சகல பத்திரி இத்தனை வேலைகளின் நடுவே அருமையானதெ பாராட்டுக்குரியது. தங்கள் குடும்பத்தினர் அனைவருமே ஒ( இரகசியம் புரிந்தது.
திரு.ஜிவகுமாரனின் முகங்கள் சிறுகதைத்தொகுதியில் 6 அவரது வேண்டுகோளே வழியமைத்தது. அதற்காகவும் ஞா ß6öT(h LIffff"
Ÿk`ቋr`;
56

ாட்டை ஜாம் ஜாம் என்று நடத்தி அந்தமாதிரி அசத்திவிட்டீர்கள்.
喀
]ன. இறுதியுத்தம் முடிந்து இருபது மாதங்கள் முடிந்து விட்ட இருப்பதால் பயனேதும் ஏற்படப்போவதில்லை மாநாட்டின் போது தது. அகதிகள் அவதியுறும் போது விழாக்களும் விருந்துகளும் வைத்து விருந்துண்டு, மதுவுண்டு மகிழாமலா இருக்கிறார்கள்?
ம், மாலை மரியாதைகளும் பொன்னாடை போர்த்தல்களும் ள் ஆகும். - கா. தவபாலன், பேராதனை. 故★女★
ர் ஏற்பட்ட எண்ணங்களின் இரண்டைப் பற்றி வாசகர்களுடன்
கதை பற்றியது. தமிழன் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. கம் புகுந்து விளையாடுகின்றது. பிறந்த நாள் விழாக்களில் மது றிவிட்டது. இத்தைைகய பார்ட்டிகளின்போது பெருங்குடிமக்கள் ாறார்கள். முதலில்பியர் தானே மச்சான் ஒன்றும் செய்யாது ஒரு கிளாஸ் பியர். அடுத்து வரும் இன்னொரு நண்பனின் பிறந்த பூகும். இவ்வாறு தான் அனேகமான இளைஞர்கள் குடிக்கப் ல் இந்தப் பிரச்சினை நன்கு சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் மயானது கதைக்கு ஒரு நல்ல முடிவுரையாக அமைந்தது. ந்திரத்திற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து ாளர்கள் கொழும்பில் ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் செய்து பாக்க முயல்வதும் எந்த வகையிற் தவறாகுமோ தெரியவில்லை. னால் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு திட்டமிட்டமுறையில் 0க்களின் அபிப்பிராயமாக உள்ளது. - கா. தவபாலன். *女女★ ாதனையை நிகழ்த்தி முடித்துவிட்ட தங்களையும் தங்களுடன் ப்பாடு உள்ளதால் இக்கடிதத்தினை எழுதுகின்றேன். மகாநாட்டை நடத்திவிட்டீர்கள். மகாநாடு மிக்க பயனுள்ளதாக லந்துபேசமுடிந்தது எமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தந்தது என்பது ம். வேறெங்காவது இம்மகாநாடு நடைபெற்றிருந்தால் எமக்கு ரும் மிக உதவியிருந்தார்கள். ஒடியோடி உபசரிக்கும்போதும் திரு.பாஸ்க்கராவால் முடிகிறதே என வியந்தேன். எது குறை. எல்லாக் கருத்தரங்குகளையும் பார்க்கமுடியவில்லை கையாளர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ாரு சிறப்பு மலரையும் ஞானம் வெளியிட்டிருப்பது மேலும் நங்கே நின்று உழைத்ததைக் கண்ட பின்னர்தான் வெற்றியின்
‘ன்துகதையும் இடம்பிடிக்க முடிந்ததற்கு ஞானத்தில் வெளிவந்த ாத்திற்கு எனது நன்றிகள். டுகளும் நன்றியும்.
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
r★女★
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2011

Page 59
15 ចាL THD០០៣TF៣៣ fl]]ចាប់២
ப விவரம் விவரங்களுக்குத் தனிமனி
புகழ்பூத்த, சர்வதேச சகல குரும்பசிட்டியூர், மாயெழுே
夔
t வேல் முேதன் பாரிய சேவைக் கட்
சனி, ஞாயிறு நண்பகலிலே
- தொலைபேசி
23EOBEY 23BOB9 1875:
ப சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குமு
ப முகவரி 8-3-3 மெற்றோ மாடிம5ை 33ஆம் ஒழுங்கை ஊடாக
பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, 3
கா. தவபாலச்சந்திரன் - பேராதனை
பூபாலசிங்கம் புத்தகசாலை - 303A
பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆ
புக் லாப் - யாழ். பல்கலைக்கழக ெ
துர்க்கா - சுன்னாகம்,
ப, நோ கூ சங்கம் - கரவெட்டி, ெ
蚤
லங்கா சென்றல் புத்தகசாலை - 84
* மாரிமுத்து சிவகுமார் - பரீகிருஷ்ண
 
 
 
 
 
 

ಸ್ಲಜ್ಜಿಣ್ವ
|
Lணக் குறைப்பு
த நிறுவநர், "சுய தெரிவுமுறை முன்னோடி' மூத்த ருக்குமான திருமண ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர் வல் அமுதனுடன் திங்கள்,புதன், வெள்ளி மாலையிலோ,
பா தயங்காது தொடர்பு கொள்ளலாம்
29
]
ா (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள
55ஆம் ஒழுங்கை,
தளிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக்
மனமக்கள் தெரிவுக்குச் சுயதெவு முறையே
கிடைக்கும் இடங்கள்
40, செட்டியார் தெரு, கொழும்பு - 11
r. Glg|TEnEuGuál. 077 H2BBBC8
2/3 காலி வீதி, வெள்ளவத்தை
ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
Iளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
நல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ாஸ், இல 36. சைட் வீதி, ஹட்டன்,
امرے

Page 60
GINAMAMI Regiered in the Пepartпапо
% (o
গুলির
உலகCதவுைள்
LUCKYLAN MANUFAC
NATTARANPOTH.A.KU TEL: 0.094-08-2420.574. 2420 Email: luckyla
 
 

össismung.
72%zzezz//razz
ND BISCUIT CTURERS
NDASALE, SRI LANKA.
217. FAX: 0.094-08-242.074
ndalsltnet. Iki