கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.01

Page 1

(~) G) 尽D Q 心 而 印

Page 2
EXPORTERS & IMPOR
S94 11] 曰
 

REDFS

Page 3
N NANN
Cხტზრა არც
arဂ်မှိဇ်ဇာq4 23
وشاناكان
Arts ്ര
KNS Nà སྡུ་
ဖဲ့
སྲི
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே இலங்கை நாடாளு மன்றத்தில் மாத்திரம்தான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப்பட்ட பெறுமதி மிக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப் பட்ட சஞ்சிகை மல்லிகை. இதனை நாடாளு மன்றப் பதிவேடான HANSARD (04.02.2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததி யினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது. རྫ་རྫ་རྫ་རྫ་རྫ་རྫ་རྫ་རྔ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་། சருத்து முரண்பாடுகள், அபிப்பிராய பேதங்கள், கொள்கை வித்தியாசங்கள் நம்மிடையே இருப்பது இயல்பானதே! அதே சமயம், மல்லிகையின் இலக்கிய நேர்மையையும், தொடர் அர்ப்பணிப்பு உழைப்பையும், கனம் பண்ணி மதிக்கத் தெரிந்த வர்களைத் தான், மல்லிகையும் கனம் பண்ணி நேசிக்கும். 縱。
$S忒於公 S&$ ડ્રે N 注
§§§§န္တိ §§§§§
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ཅུ་་་་་་་་་་་་་་་་་་་་་སྔགས་ལེགས་ S “ဒို့နှီး
9မ်ခံ့မှိ2& aဇ် No N Das Pse/O N N b \{-ödali ပ်၇A N S პზS ۶۲لملyncyهٔ b)
SS
வானத்திலிருந்து தேவதூதர்கள் இறங்கி வந்து பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை!
கடந்த மூன்று தஸாப்தங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தக் கெடுபிடிக்குள்ளாகி முடங்கிப் போயிருந்த, பெரும்பாலான பொது மக்களின் தினசரி வாழ்க்கை, இன்று சற்று விடுபட்டு நிலையில் அதனது அறிகுறிகள் தேசத்தின் பல்வேறு கட்டங்களில் அதனது எதிரொலிகளும் அடிக்கடி எதிரொலிக்கவே செய்கின்றன.
இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென் றால், இந்தப் பாரிய யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை மாத இதழ் ஒழுங்கு தவறாமல் வெளிவந்து, தனது ஆரோக்கியமான இலக்கிய இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டதுதான்.
நாட்டில் பரந்துபட்டு வாழும் பெரும்பா லான தமிழ் மக்கள் இத்தனை பெரிய நிஷ்டு ரங்களுக்கு மத்தியிலும்- நெருக்கடி இடைவே ளைக்கிடையிலும் கூட- இந்த மண்ணின் கலை இலக்கியங்களை நெஞ்சார நேசித்து, ஆதரவு செலுத்தியதே முக்கியமான காரணமாகும்.
தங்களது இருப்பின் ஆதார ஸ்திரத்திற்காக வும், தமது எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எத்தனையோ கஷ்டநிஷ் டுரங்களைக் கண்டு அனுபவித்துக் கடந்து வந்தவர்கள் நமது பொது மக்கள். இருந்தும், தங்களது இந்தச் சொந்த மண்ணின் மீதுள்ள வற்றாத பாசத்தினாலும்

Page 4
பற்றுதலினாலும் அத்தனை கஷ்டங்களையும் தாங்கி ஏற்றுக் கொண்டு இன்றுவரை பல வகைகளிலும் சமாளித்து வருபவர்கள் தான் இந்தப் பாமரப் பொதுமக்கள்.
இந்தத் தாங்கிக் கொள்ளும் பற்றுதியும் சகிப் புத் தன்மையும் தான் நாளை இந்தப் பூமியை சொர்க்கப்புரியாக மாற்றியமைக்கும் என மெய் யாகவே நம்புகின்றோம்.
இரண்டாவது உலக மகாயுத்தில் முடிவுகட் டத்தை அடைந்த வேளையிலும் தமது தரப் புக்குத் தான் இறுதி வெற்றி கிடைக்கும் என்ற கால கட்டச் சூழ்நிலையிலும் அமெரிக்க அரசு தனது ராணுவ வல்லமையை உலகிற்கு நிரூப் பிக்குமாற் போல, ஜப்பானிய நகர்களான ஹிரோஷிமா, நாகஷாகி என்ற இப்பிரதேசங்கள் மீது அணு குண்டுகளை வீசி. உலகையே திடுக்கிட வைத்தது. வெற்றியும் பெற்றது.
ஜப்பானிய நாட்டுப் பொதுமக்கள், அந்தச் சர்வ நாசத்தைச் சொல்லிச் சொல்லியே வாழ வில்லை.
அந்த அநுபவத்தை அடியாதாரமாகக் கொண்டு இன்று புதியதொரு ஜப்பானையே உலகின் முன் சிருஷ்டித்துக் காட்டிப் பெருமித மடைகின்றனர்.
அந்தச் சர்வதேச நாசத்தை விடா, நாம் பெரிய பேரிழப்பை அடைந்துவிட்டோம்?
எனவே நமது இளம் பரம்பரை இன்று இந்த மண்ணில் மாத்திரம் வாழவில்லை.
இன்று நம்மவன் உலகெங்கும் பரந்து விரிந்து வாழுகின்றானே.
முன்னொரு காலத்தில் நம்மவனுக்குத் தெரிந்ததொரு சர்வதேச மொழி, ஆங்கிலம் மட்டுமே. அதில்தான் படித்தான், எழுதினான், பேசினான். இன்றோ உலகத்தில் புழங்கி வரும் பல பல பாஷைகளில் படித்து, அந்த அந்த மொழிகளிலேயே படைக்கிறான், படிக்கிறான்.
வரப்போகும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் முன்மாதிரியாக நடைமுறையில் நடந்து காட்டுவோம்.
சும்மா சும்மா அடிக்கடி பழைய துயரம் மிக்கதான அவலச் சுவை நிரம்பிய சம்பவங்

களை நினைத்து நினைத்து மனச் சுமையைப் பெருப்பிக்காமல், நாட்டில் நடந்து வரும் ஆரோ க்கியமான நிகழ்ச்சிகளையும் சம்பவங்க ளை யும் பரஸ்பரம் கலந்துரையாடியே ஒரு புதிய நல இலங்கயை உருவாக்க ஆவன செய்வோம்.
இரண்டாவது உலக யுத்ததினால் அழிவுக் குள்ளான அவலப்பட்ட தேசத்து மக்கள், தொடர்ந்து தொடர்ந்தே அழுது கொண்டே இராமல், தமது நாட்டைப் புதியதொரு தேச மாக மாற்றியமைத்ததை நாம் முன்னுதாரண மாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, புதியதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுதான் இனிமேல் நமக்குரிய தொண்டாக அமையட்டும்!
உலகப் பரப்பெங்குமுள்ள ஒவ்வொரு தேசத் தையும் எடுத்துக் கொண்டாலே, அந்தந்த நாடுக ளுக்கேயுரிய பல பல தேசிய இனங்களுக்கேயு ரிய சிக்கலான பிரச்சினைகளும் தேசியச் சங்க டங்களும் இயல்பாக இருந்து வருவதை நாம் அவதானித்து தெளிந்து கொள்ளலாம்.
அந்ததந்த நாடுகளில் வாழும் தேசிய இனங் கள் பேசிப் பேசி, கலந்துரையாடியே பெரும் பாலான தத்தமது பாரிய பிரச்சினைகளுக்கு முடிவு கண்டுள்ளன.
- கடந்த காலக் கசப்புக்களை இனிமேல் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதில் வேலை இல்லை!
- இனங்களுக்கிடையிலான யுத்தம் ஒரு முடிவேயல்ல!
ஒரு நவ இலங்கையை உருவாக்குவோம். இந்த நாட்டில் வாழ்ந்து வரும் சிறுபான்மை இனமக்களான தமிழ், முஸ்லிம் மக்கள் நெஞ்சு நிமிர்த்தி, இது எங்களது சொந்த மண்' சொல் லத்தக்கதான சூழலை ஏற்படுத்துவோம்!
- கடந்த காலக் கசப்புக்களை இனிமேல் தொடர்ந்து, பேசிக் கொண்டிருப்பதில் வேலை இல்லை!
- இதைப் பாதிக்கப்பட்ட நாம் மாத்திரம் புரிந்து கொள்ளக் கூடாது. பேரினத்தின் புத்தி சாலிகளாக அரசியல்வாதிகளும் புரிந்து கொள் வதே, எதிர்கால இலங்கைக்கே நல்லது!
Ki-1a

Page 5
வரலாற்றில் பதிய 6 முக்கியமானதொரு
இலங்கைத் தலைநகரான \ இருக்கும் உலகத் தமிழ் எழு: பரந்துபட்டு வாழ்ந்து வரும் ஆர்வலர்களும், உட்படப் ப விசாரித்த வண்ணமே இருக்கி
இந்தத் துறையில் ஆழம
உழைத்து வந்த பல இலக்கி மாநாட்டில் தாமும் கலந்து கொண்டு, தத்தமது பா
இந்த மாநாடு நமது மண்ணைப் பொறுத் வைத்துவிடும் என நிச்சயமாகவே நம்புகின்றோப்
இந்தப் பெருவிழாவுக்கான ஆயத்த வேலை தலைநகரிலும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
-விழா நடந்தேறுவதுதான் பாக்கி!
பல பல இலக்கியச் சந்திப்புக்கள் நாடு பூராளி இலக்கிய ஆர்வலர்களும் மாதாமாதம் ஒழுங்காகச் அடிப்படையானதுமான பல பல திட்டங்களைத் செய்து வந்திருக்கின்றனர். இந்தச் சர்வதேச எ( ஒப்பேற்றி முடிக்க, தேசத்தின் பலப் பல ஊர்களி கருத்துப் பரிமாறல்களும் ஏற்கனவே நடந்தேறி மு
இது இந்த நாட்டுப் படைப்பாளிகள் முன்னும்
இதை வெற்றிகரமாகவும் ஆக்கபூர்வமானதாக இலக்கியக் கடமை என நாம் சுட்டிக் காட்டுகின்ே
இன்று சர்வதேசமெங்கும் நம்மவன் செறிந்: உண்மையாகும்.
அதிலும் பெரும்பான்மையான எழுத்தாளர்க ரஸிகர்கள் பலர். இவர்களில் இன்று புலம் பெப இலக்கிய விழாக்களை வெற்றிகரமாகவும் ஆே எதார்த்த உண்மையாகும்.
முப்பது ஆண்டுக் காலக் கடும் போர்ச் சூழ்நிை சார்ந்த எழுத்தாளர்களினது மனத் துயரைப் ( இழைப்பையும் மனச் சங்கடத்தையும் நிவிர்த்தி வுமே இந்த மாநாடு, குறிக்கோளாகக் கொண்டு,
 

வைக்கத் தக்கதான இலக்கிய மாநாடு
ா கொழும்பில் ஜனவரி முற்பகுதியில் நடைபெற த்தாளர் மாநாட்டைப் பற்றி, இன்று உலகெங்கும்
நமது சகோதரப் படைப்பாளிகளும் இலக்கிய ல்வேறு வகைப்பட்ட ரசிக உள்ளங்களும் தினசரி ன்றனர்.
ாக ஈடுபட்டுக் கடந்த காலங்களில் மெய்யாகவே யச் சகோதரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ங்களிப்பை நல்க முன்வந்துள்ளனர்.
த வரை, மகத்தான சரித்திரப் பதிவைப் பதிய b.
}கள் ஏற்கனவே வெளிநாடுகளிலும் இலங்கைத்
புமே நடந்தேறியுள்ளன. படைப்பாளிகள் பலரும் சந்தித்து, ஆழமாக விவாதித்து, ஆக்கபூர்வமானதும் தீட்டி, தத்தமது இலக்கியப் பணிகளைச் செவ்வனே ழத்தாளர்களினது ஒன்று கூடலை வெற்றிகரமாக லும் விழாச் சம்பந்தமான கலந்துரையாடல்களும் மடிந்துள்ளன.
எழுத்தாளர்களது முன்னுமுள்ள பாரிய பணியாகும்.
வும் ஒப்பேற்றி முடிப்பது சகல எழுத்தாளர்களினது றோம்.
து பரந்து, வாழ்ந்து வருவது எதார்த்தமானதொரு
5ள், கலைஞர்கள், கவிஞர்கள், தரமான இலக்கிய பர்ந்து, தாம் தாம் வாழ்ந்துவரும் நாடுகளில் தமிழ் ாக்கியமாகவும் சந்துஷ்டியுடனும் நடத்தி வருவது
லயால் நொந்து பட்டுப் போயுள்ள இந்த மண்ணைச் 3பாக்கவும், பாமரப் பொது மக்களினது பாரிய செய்யவும், ஒரு புதிய தன்னம்பிக்கையை ஊட்ட கூட்டப்படுகின்றது. நடத்தப்படுகின்றது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 6
இந்த மண்ணைச் சார்ந்த பல்வேறு வகைப் பட்ட எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் மனச் சோர்வு தட்டி, இயங்க மறந்தே போய்விட்டனர்.
பலர் எழுதுவதையே நிறுத்திக் கொண்டு விட்டனர்.
கடந்த காலங்களில் நாம் இழந்ததைப் பற் றியே கதை அளந்து கொண்டிருப்பதை அப்ப டியே விட்டு விட்டு, ஒரு புதிய நவ இலங்கைத் தமிழனை உலகின் முன் உருவாக்கி நிறுத்திக் காட்ட நமது பேனா முனைகளை இன்னுமின் னும் கூர்மைப்படுத்தி, தமிழ் மொழிக்குப் புதிய சர்வதேசப் பரிமாணங்களை உருவாக்கிக் காட்டு வதே நமது கடமையாகும்!
முன்னரெல்லாம் தமிழன் எனக் குறிப்பிடும் போது, தமிழகத் தமிழன், இலங்கைத் தமிழன் எனக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டு, அடையா ளம் காணப்பட்டவன் தான், பொதுத் தமிழன்!
- இன்றோ, சர்வதேசமெங்கிலும் தமிழனும் தமிழ் மொழியும் அடையாளம் காணப்படுவ துடன், ஏனைய மொழியினரால், தமிழ் மொழி ஒன்று, இப்பூப்பந்தில் பேசப்பட்டு வருகின்றது என்பதை உலகறியச் செய்து, நிலை நாட்டிக் கொண்டவன் தான், நமது மண்ணில் பிறந்து வளர்ந்து, இன்று பல தேசங்களிலும் வாழ்ந்து, இயங்கி வரும் நம்மவன்!- நமது சகோதரன்!
தேசம் பூராவும் பரந்துபட்டு இயங்கி வரும் படைப்பாளிகளைப் பற்றி ஆழமாக யோசிக் கும் வேளைகளில் எல்லாம் மனசை என்னமோ நெருடத்தானே செய்கின்றது.
வடக்கென்றும் தெற்கென்றும் மலையக மென்றும் கிழக்குப் பிரதேசமென்றும் பரஸ்ப ரம் குற்றஞ்சாட்டிக் கொண்டு, ஒருவரை ஒருவர் தப்பித்துக் கொள்ளத்தானே இதுவரை நாம் முயற்சித்து வந்துள்ளோம்.
நாடு முழுவதும் செறிந்து வாழ்ந்து கொண்டு, இன்று சதா இயங்கிக் கொண்டே யிருக்கும் எழுத்தாளர்களினது நல உரிமைகள் பற்றி நம்மில் யாராவது ஆழமாகச் சிந்திந்திப் பார்த்ததுண்டா?- அதைத் தீர்க்கத்தக்கதான வழி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

முறைகளையாவது ஆக்கபூர்வமாக யோசித்துச் செயற்பட்டதுண்டா?
உலகத்திற்கே புத்தி சொல்லப் பேனா பிடித்த படைப்பாளி, "தனது பிரதேசத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு எழுத்தா ளனைக் கண்டவிடத்தில் சிரித்துக் கதைத்துப் பரிவு காட்டியதுண்டா?
சகோதர எழுத்தாளனை வழி தெருக்களில் திடுகூறாகச் சந்திக்க நேரிடும் வேளைகளில் எல்லாம், முகத்தை 'உம்'மென்று உப்ப வைத் துக் கொண்டு தலையைத் திருப்பி, எங்கேயோ பார்த்த வண்ணம் நடையைக் கட்டுவதைத் தான் நாம் நடைமுறையில் பார்த்து வருகின்றோம்.
இத்தகைய பாராமுக அலட்சியங்கள், சிரிக்க மறந்து போன சம்பவங்கள், சகோதர எழுத்தாள னது சுகதுக்கங்களில் பங்கு கொள்ளாத அலட் சிய மனோபாவங்கள், அடுத்த தலைமுறை யினருக்கும் நாம் விட்டுச் செல்லப் போகின் றோமா, என்ன?
ஒரு கால கட்டத்தில் 60-களில் ஏதோ இரண் டொரு புத்தகங்கள் தான் வெளிவந்திருந்தன. அதுவும் தமிழகத்தில் தொடர்பு கொண்டு, தனிமனித செல்வாக்கைப் பயன்படுத்தி, சென் னைப் பதிப்பகங்கள் ஊடாகவே அந்தக் காலத் தில் நமது படைப்பாளிகளின் புத்தகங்கள் வெளி வந்தன- அருமையான ஒன்று.
ஆனால், இன்று?
வாரம் ஒரு புதிய நூல், இலக்கியப் புத்தகம் வெளி வந்து கொண்டிருக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துதவிய சகோ தரப் படைப்பாளிகளைப் பற்றியாவது நாம் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா?
எதற்கெடுத்தாலும், கலை இலக்கியம் சம்பந் தப்பட்ட மட்டில் 'தமிழ் நாட்டைப் பார்!’ என விழல் கோஷமெழுப்பிக் கொண்டிருந்தவர்கள் தானே, நாம்!
இந்த இறக்குமதி அவல நிலையை மாற்றிய மைத்தவர்களின் கடந்த கால உழைப்பின் பெறு மதி, இன்றைய இளந்தலைமுறையினருக்குத் தெரியுமா, என்ன?

Page 7
ஈழத்து இலக்கியத் தனித்துவ வளர்ச்சிக்காகக் கடந்த காலங்களில் சிற்றிலக்கிய ஏடுகளைத் தொடர்ந்து நடத்தி, அதனால் பெரும் பொருளா தார நெருக்கடிக்கு ஆட்பட்டுத் தொய்ந்து தேய் ந்து போன முன்னோடிகளின் அயரா உழைப்புப் பற்றியாவது, இன்றைய இளஞ் சந்ததிக்கும் முற்று முழுதாகத் தெரிந்திருக்குமா, என்ன?
அவர்கள் இந்த முன்னோடி நடவடிக்கைக ளினால் பட்ட நிரந்தரச் சிரமங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். விட்டு விடுவோம்!
அன்னாரது நாமங்களைக் கூட, இந்த மண் ணில் இயங்கும் உயர் கல்விக் கூடங்கள்- பல் கலைக்கழகங்கள்- அங்கு உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்குச் சொல்லி வைத்திருக்கின்ற னவா, என ஆய்ந்தோய்ந்து தேடிப் பார்த்தால், கிடைக்கும் விடைகள் கூட, முழுமையாக இருப்பதில்லையே!
- ஏன் இந்த இலக்கிய அவல நிலை?
புதிதாக வளர்ந்து வரும் இன்றைய இளந் தலைமுறைக்குப் பாரிய பொறுப்புக்கள் உண்டு. கடமைகள் உண்டு.
செய்திப் பரிவரித்தனையில்- தகவல் பரி மாற்றத்தில்- இன்று அதிசயிக்கத் தக்க மாபெ ரும் மாற்றங்களும், புதுப் புதுச் சாதனங்களும் உட் புகுந்துள்ளன.
உலகத் தகவல்கள் எங்குமே வியாபித்துப் பரந்து, பூமியே கைக்குள் சுருங்கிப் போயிருப் பது போல, உருவாகியுள்ளது.
இந்தச் சர்வதேச விஞ்ஞான சாதனைகளை யும், சாதனங்களையும் நாம் நமது தாய் மொழி யின் வளர்ச்சிக்கும், இலக்கியப் புரிந்துணர்வுக் கும் மாற்று மொழியினர் நமது தமிழ் மொழி யில் உள்ள தனிச் சிறப்பு மிக்க படைப்பு ஆக் கங்களைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்தாக வேண்டும்.
நவீன சாதனங்களுக்கு ஏற்ப வளைந்து, நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய ஒரு மொழியாக,
5

நமது தமிழ் மொழி அநுபவரீதியாகக் கண்டறி யப்பட்டுள்ளதே, மிகப் பெரிய மொழி வெற்றி நம் தமிழுக்கு!
. எனவே, கடந்த கால உள்நாட்டு நெருக்கடி களையும் யுத்த நாசங்களையும் சும்மா சும்மா பேசிக் கொண்டேயிராமல், உலகத் தரத்திற்கும் உலகம் எமது உணர்வுகளையும் கருத்துக் கருவூ லங்களையும் செவ்வனே புரிந்து கொள்வதற் கும், ஆக்கபூர்வமான திசைவழிகளில் தொடர்ந் தும் இயங்கி வர, இத்தகைய உலகத் தமிழ் எழுத் தாளர் மாநாடு நிச்சயம் வழி வகுக்கும் என சர்வ நிச்சயமாக நம்பிக்கை வைக்கின்றோம்.
நடைபெறப் போகும் இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி உலகம் பூராவும் இன்று வசித்து வரும் தமிழர்களிடமிருந்து பல்வகைப்பட்ட விமரிசனங்களும் ஒருவகைப் பட்ட கண்டனங்களும் வரவே செய்கின்றன.
- ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு, செய்பவர்களின் செயற்பாடுகளைப் பார்த்துத் தூரத் தூர இருந்து கொண்டு, வாய் வலிக்க விமரிசிக்கும் யாருடைய எந்தவொரு விமரி சனத்தையுமே நாம் கவனத்தில் எடுத்துக் கொள் ளவே கூடாது! அது தேவையற்றதும் கூட்!
இந்த உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இந்த மண்ணில் நடத்த வேண்டு மென முன்கூட்டியே முடிவெடுத்துச் செயற்பட் டவர்கள், வெறுமனே வாய்ச் சவடால்காரர் களல்ல!
- கடந்த காலங்களில் நமது தாய் மொழி தமிழுக்காகப் பல்வேறு வகைகளிலும் கஷ்ட ப்பட்டவர்கள் தான். நஷ்டப்பட்டவர்களும் கூட- துணிந்து முன்நின்று உழைக்கின்றனர்.
- எனவே இதன் விழைவுகளைக் காலத்தின் கரங்களுக்கே சமர்ப்பித்து விட்டுத் தொடர்ந்து தொழிற்படுவோம்!
εί
4ùፋኋ﷽ ,ሖዟ..ጳጎ{ ህዞዳió
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 8
மார்சிசமும் வ
சமூகத்தை மீள் : பராமரித்துக் கொள்வதற்கு வெகுசன சாதனங்களி
கையளிப்புக்கு உள்ளாக் வழியாகத் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு வருகின் தோற்றமாகவே சித்திரிக்கப்படுகின்றது.
வெகுசன சாதனங்களைத் தம் வசம் வைத்திருட் உற்பத்தி தொழிற்பாட்டில் ஈடுபடுகின்றனர். பண்பாட்டு படுகின்றது. பண்பாட்டுக் கைத் தொழில்கள் விளம்பர கூறுவோர் அவையும் முதலாளியத்தின் தொழிற்பாடுக
சில ஆய்வாளர்கள் பண்பாட்டின் இருமைத் தன்மை இணைக்கின்றனர். அதாவது முதலாளியம் வெகு மல கங்களை உருவாக்கிய வண்ணமுள்ளது. அதே வேை உருவாக்கப்படுகின்றன. பண்பாட்டு உற்பத்தியில் இல்
பண்பாடு என்பது பொருண்மிய அடித்தளத்தை மார்க்சியத்தின் முக்கியமான குறிப்பாகவுள்ளது. கிர அடித்தளத்தில் நின்றும் ஒரளவு சுயாதீனமாக இயங்கு
ரேமன் வில்லியம்ஸ் அவர்கள் பொருண்மியப் ட இதழ்கள் பற்றி விளக்கியுள்ளார். இல்லத்தை அடிப்பன தொலைக்காட்சி மற்றும் வானொலி முதலியவற்றை வி பிரத்தியேக வாழ்வுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த பதிவுகளற்ற மேலோட்டமான வழங்கலே கலை விளைவுகளைக் காட்டிலும் பொறிமுறையான ெ இங்கே தொழில் நுட்பத் தீர்மானிப்பு வாதம்" (Technolo வாதமும் முதலாளியத்தோடு இணைந்ததென்பதை 1
வெகுசனத் தொடர்பு சாதனங்களின் செய்திக் கை பட்டு வருகின்றன. செய்திகளைப் பொறுத்தவரை, நடு ன்றது. வெகுசன நிறுவனத்தின் கருத்தியலுக்கு
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 

தாடர்பாடலும்
-әОл Cl&ғылләл
உற்பத்தி செய்வதற்கும் சமூக அடுக்கமைப்பைப் கும் வெகுசனத் தொடர்பாடல் பயன்படுத்தப்படுகின்றது. ன் உடைமையாளர்களின் கருத்தியல் தொடர்ந்து கப்படுகின்றது. அதாவது வர்க்க ஆதிக்கம் சாதனங்கள் 1றது. கட்டற்ற தொடர்பாடல் என்பது ஒரு மாயைத்
போர் "உளக் கைத்தொழில்’ (Mind Industry) என்ற }க் கைத்தொழில்' என்ற தொடராலும் அது அழைக்கப் வருமானங்களிலே பெருமளவு தங்கியுள்ளன என்று ள் என்பதைத் தொடர்பு படுத்தத் தவறி விடுகின்றனர்.
) பற்றி விளக்கி அதனை வெகுசனத் தொடர்பாடலுடன் பினமான, மேலோட்டமான, பிற்போக்கான கலையாக் ள, கனங்காத்திரமான ஆக்கங்கள் ஒடுக்கப்படுவோரால் பவாறான முரண்படும் கோலங்கள் காணப்படுகின்றன.
த அடியொற்றி மேலமைந்த வடிவமைப்பு என்பது ாம்சி மற்றும் அல்துஸ்ஸர் போன்றோர் பொருண்மிய நகின்றதென்று குறிப்பிடுகின்றனர்.
பண்பாட்டை அடியொற்றித் தொலைக்காட்சி மற்றும் டயாகக் கொண்டு நுகர்ச்சியியலை அடியொற்றி அவர் lளக்கியுள்ளார். தொலைக்காட்சி வழங்கல் இல்லத்தின்
வெகுசன ஊடகங்களினாற் கையளிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப விளைவுகளே அங்கு மேலோங்கியுள்ளன. gycal Determinism) என்பதே மேலோங்கியுள்ளது. இந்த Dறந்துவிடலாகாது.
யளிப்புப் பற்றியும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் நிலை' என்பது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகி அமையவே செய்திகள் ஒழுங்கமைப்படுகின்றன.
6

Page 9
ஒடுக்கப்பட்டவர்களதும், ஒரங்கட்டப்பட்டவர்களதும் கருத்தியலுக்கு அங்கு இடமில்லாமற் போய் விடுகி ன்றது. தாம் பக்கச்சார்பற்ற நடுநிலையை மேற் கொள்வதை நிறுவுவதற்கு அவை பல்வேறு நுட் பங்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலே பக்கச் சார்பை வெளிப்படுத்தும் தீட்டுப் புள்ளி'களும் காணப்படும், நுண்மதி மிக்கத் துலங்கும் நுகர்ச்சியா ளரால் அந் தத் தீட்டுப் புள்ளிகளை இலகுவிலே கண்டு கொள்ள முடியும்.
மேலாதிக்கம் செலுத்துவோரின் கருத்தியல் 95&iás as(56Surts (Ideological State Appratuses) வெகுசனத் தொடர்பு சாதனங்கள் செயற்படும் பொழுது, நடப்பியல் திரிபுக்கு உள்ளாக்கப்பட்டு விடு கின்றது. அதனோடு இணைந்த மொழிச் செயல் முறையும் உளவியற் செயன்முறையும் நுகர் வோரை உறு பொருள் (Subject) ஆக்கிவிடுகின் றன. மேலாதிக்கக் கோடல்களை (Codes) அவை உருவாக்கிய வண்ணமுள்ளன.
மேலைப் புல முதலாளியம் முன்வைக்கும் மக்க ளாட்சி, சுதந்திரம், தனிமனித தனித்துவம் முதலி யவை சொல்வழி அலங்காரமாக அமைந்து, ஒடுக்கு வோரைப் பாதுகாக்கும் கவசங்களாகின்றன. அவ் வாறே கீழைத்தேய முதலாளித்துவம் முன் வைக் கும் தேசிய இனங்களின் பன்மைத்துவம் மற்றும் சிறுபான்மையினரின் காப்பீடு முதலியவை அவ் வாறான கவசங்களாக அமைகின்றன.
வெகுசனத் தொடர்பாடலை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தமது நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டுச் செய்தி வீக்கத்தை (NeWS Inflation) ஏற்படுத்துகின்றன. செய்திகளை மிகைப்படுத்துகை யில் அதன் நடப்பியல் தரம் குன்றி விடுகின்றது.
ஹேப்பர்மஸ் அவர்கள் தொடர்பாடல் சார்ந்த நியாயித்தல் என்ற எண்ணக் கருவை முன் மொழிந் தார். இடை வினைகளின் வழியான நியாயித்தலை அடியொற்றிய தன்னிலை வளர்ச்சியைக் குறிப்பிடு கின்றது. மனிதர்கள் மொழியைப் பயன்படுத்துவோ ராய் இருக்கின்றனர் என்பதன் பொருள், தொடர் பாடல் வழியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர் என்பது பொருளாகும். அந்தத்

தொடர்பாடலின் பெறுமானத்தையும் நம்பகத்தன் மையையும் மூன்று வழிகளில் அணுகி நிற்கின் றோம். அவை:
1) வழங்கப்படும் மெய் பொருளின் Propositiual
Claims
2) செய்தியின் பொருத்தப்பாடு தொடர்பான நடை
முறைப் பாங்கு
3) செய்தியின் நம்பகத் தன்மை
இவற்றின் வழியாகவே இலட்சிய வழியான பேச்சுச் சந்தர்ப்பம் உருவாக்கப்படுகின்றது. தடை யின்றிப் பேச்சு நிகழ்வதற்கு இலட்சிய வழியான பேச்சுச் சந்தர்ப்பம் அவசியமானது.
உயிர் உலகைக் காலனித்துவப்படுத்தல் என்ற எண்ணக் கருவை ஹர்ப்பமஸ் முன் வைத்துள்ளார். பண வலிமையின் செயற்பாடுகளால், உயிர் உலகம் வெற்றிகரமாகக் காலனித்துவ மயமாக்கப்படுகின் றது. கருவி சார்ந்த காரணப்படுத்தல் நீதியற்ற சமூ கச் செயலமைப்புக்கு ஆதரவு வழங்குகின்றது. அந் நிலையிற் கருசாரா செயற்பாடுகளை முன்னெ டுத்துச் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது.
வர்த்தகப் பண்பாடும் ஊடகப் பண்பாடும் இணை ந்து மேலாதிக்கத்தை வளர்ப்பதுடன், மூலதனக் குவிப்பை உச்ச நிலைக்கு இட்டுச் செல்கின்றன. அந்நிலையில் மேலும் கூர்மையான திறனாய்வு களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
பொதுசன பொதுமக்கள் தளம் (Public Sphere) என்ற எண்ணக் கருவை முன் வைக்கின்றார். தீவிர மக்களாட்சியில் இடம் பெறவேண்டிய நிறுவனங்கள் பற்றிய பிரக்ஞையை உருவாக்குதல், அங்கே முக்கி யத்துவம் பெறுகின்றது. தொடர்பாடல் தொடர்பான பொதுமக்கள் தொகுதியைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் தளம் முக்கியமானது.
தகவற் கையளிப்பு மட்டுமன்றி சமூகத்தின் பல் வேறு தளங்களிலும் வாழ்வோர் எவ்வாறு பொருள் கோடல் செய்கின்றனர் என்பதும் முக்கியமானது. நுகர்ச்சி என்ற வினைப்பாடு பொருள் கோடலுடன் இணைந்தது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 10
தொடர்பாடல் என்பது குறியீட்டுப் பரிமாற்றமாகி ன்றது. ஆழ்ந்து நோக்கும் பொழுது குறியீட்டுப் பரிமாற்றமும் சமூகத்தின் பொருண்மியத் தொடர்புக ளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல நிலை உறவுகளைக் கொண்டிருக்கும். வாழ் நிலை இருப்பின் உறவுகளும் உணர்வுகளும் மொழிக் குறியீடுகளால் வெளிப்பட்ட வண்ணமிருக்கும்.
தகவல் யுகம்' பற்றி மனுவேல் காஸ்ரெல்ஸ் எழுதிய நூல் சமகாலத்தைய சமூக விஞ்ஞானிகளி னடத்துப் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேற்கொண்ட இருபத்தைந்து ஆண்டுக் கால ஆய்வுகளை அடியொற்றி அந்நூல் மேலெழுந்தது. சமகாலப் பண்பாட்டின் பன்முகப் பரிமாணங்க ளையும் அந்நூல் விபரிக்கின்றது.
ஒரு விதத்தில் மார்க்சியத் தளத்தில் நின்றும், இன்னொரு விதத்தில் அதிலிருந்து விலகியும் தமது கருத்துக்களை அவர் முன்வைத்தார். மூன்று பாகங் களைக் கொண்ட அவரது நூலிலே பின்வரும் அறி பொருட்கள் எடுத்தாளப்படுகின்றன.
1) தொழில்நுட்பம், பொருளாதாரம், உழைப்புச் செயல்முறை முதலியவை தகவல் யுகத்திற்குரிய அடிப்படைகளாக அமைதல்.
2) வலைப் பின்னலாகிய சமூகத்தின் சமூகவியல்அவ்வாறு உருவாகும் புதிய சூழமைவில் நிகழும் சமூக இயக்கங்கள்.
3) பழைய சோவியத் யூனியனில் இருந்து புதிய ஐரோப்பா வரை நிகழும் அரசியல் உள்ளீர்ப்பும், வெளி ஒதுக்கலும் பசுபிக் சமுத்திரத்தைச் சூழவு ள்ள நாடுகளின் இயல்பும், கோளமயக் குற்றவியல் வலைப்பின்னலும் ஆராயப்படுகின்றன.
மார்க்சிய முறையியலும், அமைப்பியற் கண் ணோட்டமும் அவரது சிந்தனையிலே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பொருளாதாரம், சமூகம், முதலி யவற்றை அவர் முழுமைப்புல நோக்கிலே தரிசித் தார். சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினதும் ஒவ் வோர் உறுப்பினதும், முரண்பாடுகள் மற்றும் உராய் வுகள் மீது அவரது கவனம் விசாலித்து நின்றது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

தொழில் நுட்பப் புத்தாக்கங்களும் பொருண்மிய நிலவரங்களும் குடும்ப இயல்பிலும் அடுக்கமைப்பி லும் மாற்றங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவற்றோடிணைந்த பெண்ணியம் ஒரு கோளமயச் செயல் முறையாக எழுச்சி கொண்டுள்ளது. சமூகத்தில் நிகழும் பல்வேறு இயக்கப்பாடுகளோடி ணைந்ததாகத் தகவலியம்' (Informationalis) என்ற எண்ணக் கரு முன்வைக்கப்படுகின்றது.
'அறிவின் மீது அறிவு வினைப்பாடு கொள்ளலும் அதுவே உற்பத்தித் திறனுக்கு மூல ஊற்றாக அமைதலும் தகவலியத்தால் விளக்கப்படுகின்றது. அதுவே புதிய பொருளாதாரத்தினதும் புதிய சமூகத் தினதும் அறிவிப்பாக அமைகின்றது. அதனோடு தொடர்புடையதாகத் தனிச் சொத்துரிமை, இலாப நோக்கு முதலியவை தொடர்ந்து இயங்குகின்றன. இவற்றை அடியொற்றி தகவல் சார்ந்த முதலாளி யம்' என்பது விளக்கப்படுகின்றது. முன்னைய முத லாளியத்திற் காணப்படாத நெகிழ்ச்சிப் பாங்கும், உலகம் தழுவிய வலைப் பின்னல் வியாபகமும் தகவல் முதலாளியத்திலே காணப்படுகின்றன. முத லாளியம் தலையாய வகிபாகத்தை மேலும் எடுக்கத் தொடங்கியுள்ளது.
அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்ற த்தை ஏற்படுத்துவதிலே தகவல் வலைப் பின்னல் அமைப்பு சிறப்பார்ந்த இடத்தை வகித்தலை மனங் கொள்ள வேண்டியுள்ளது. முதலாளிய சமூகத்தை மாற்றியமைப்பதிலே தகவலின் பங்கு முக்கியமா னதாக அமைகின்றது.
மனிதரும், நிறுவனங்களும், நாடுகளும், தொடர் பாடல் வலைப் பின்னலால் இணைக்கப்படுகின் றன. முதலாளியம் தன்னை வளப்படுத்திக் கொள்வ தற்கும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் தொடர்பாடல் வலைப் பின்னலை வினைத் திறனுடன் பயன்படுத் தத் தொடங்கியுள்ளது.
தகவல் சார்ந்த மனித உழைப்புத் தீவிர சுரண்ட லுக்கு உட்படுத்துதல் நவீன முதலாளியத்தின் முக்கியமான செயற்பாடாக அமைந்து வருகின்றது. முதலாளியம் புதிய வடிவை எடுக்கத் தொடங்கியுள் ளது. முகத்தை வெளிப்படுத்தாத கோலத்தை

Page 11
வெளிப்படுத்துகின்றது. அதேவேளை மூலதனத் தைச் சந்தை எலத்திரன் வழி நெறிப்படுத்தப் படுத லைக் கண்டறியக் கூடியதாகவுள்ளது.
தகவல் சார்ந்த முதலாளியம் பற்றி விளக்க வந்த காஸ்ரெல்ஸ் முன் வைக்கும் தவறான கருத்துக்கள் பற்றி எச்சரிக்கை கொள்ள வேண்டியுள்ளது.
அ) அவர் குறிப்பிடும் முதலாளிய வர்க்கமற்ற சமூகம் என்பது ஒரு மாயைத் தோற்றமாகவேயுள்ளது.
ஆ தொழிலாளர் வர்க்கம் என்பது இல்லா தொழிகின்றது என்ற கருத்தும் ஒரு போலியான சித்திரிப்பாக இருப்பதுடன், முதலாளியத்தைப் பாதுகாக்கும் கருத்தியல் அரணாக்கப்படுகின்றது.
இ) தகவல் தொழிலாளர் என்ற ஒரு புதிய வகுப்பினர் உருவாக்கப்பட்டு வருகின்றனர். செல் வத்தை உருவாக்குவதிலே அவர்களின் பங்கு முக் கியமானதாகக் கருதப்படுகின்றது. அவர்களது உழைப்பும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுதலை காஸ்ரெல்ஸ் குறிப்பிடத் தவறி விடுகின்றார்.
கல்வியால் மனித மூலதனம் உருவாக்கப்படு கின்றது. மனித மூலதனத்தை உருவாக்குவதிற் கலை இலக்கியங்களின் பங்கு முக்கியமானது. அறிவிலே செறிவை உண்டாக்குவதில் விஞ்ஞா னம் மட்டுமல்ல, கலை இலக்கியங்களும் பங்கேற்க வேண்டியுள்ளது. அறிவின் மீது அறிவு வினைப்படல் போன்று, கலை இலக்கியங்கள் மீது அறிவு வினைப்படல் என்ற செயற்பாட்டையும் வலியுறுத்த வேண்டியுள்ளது.
உலக வரலாற்றில் விவசாயப் புரட்சி நிகழ்ந்தது. கைத் தொழிற் புரட்சி நிகழ்ந்தது. இப்போ தகவற் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் மனித உழைப்பையே அடிப்படையா கக் கொண்டவை. புரட்சிகள் அனைத்திலும் தகவற் பொருட்களின் உற்பத்தியும் நுகர்ச்சியும் நிகழ்ந்து வந்துள்ளன. தகவலை உருவாக்குதலும், நுகர்ச்சி செய்தலும் என்பவை முன்னரிலும் கூடுதலான அளவு நிகழ்த்தப்படுதல் தகவற் புரட்சியின் சிறப்புப் பரிமாணமாகக் குறிப்பிடப்படுகின்றது.
தகவற் சமூகத்திலே, கலை இலக்கியங்களின்

எண்ணளவு பெருக்கம் நிகழத் தொடங்கியுள்ளது. வெளியீட்டுத் தளங்களின் பெருக்கம், ஆக்கங்களின் பெருக்கத்துக்கு வழி வகுக்கின்றது. புதிய வளர்ச்சி ஊடகங்களின் பெருக்கமும் நிறைவெழலும்' என்று குறிப்பிடப்படும் தகவற் சமூகத்திலே புதிய புதிய குறியீடுகளின் உற்பத்தியும் பெருக்கமடையத் தொடங்குகின்றது. அத்தகைய சூழமைவு குறியீடு களின் பிரவாகம்' என்று அழைக்கப்படுகின்றது. அவ்வகையான பிரவாகத்தைப் பின்னைய முதலா ளியம் தமக்குச் சார்பான நிலைகளிலே பயன்படுத் தலை பெருநிலை ஊடகங்களின் தயாரிப்புகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மேலும் மேலும் தகவல்கள் பெருக்கெடுக்கும் பொழுது கருத்தாழம் கொலை செய்யப்படுகின்றது. குறியீடுகள் தொடர்ந்து மாற்றமடைவதுடன் முரண்பட்டும் கொள்கின்றன. தரத்துக்கும் எண்ணப் பெருக்கத்துக்குமிடையே முரண்பாடு வலுவடைகின்றது.
அடிப்படைப் பொருண்மியக் கட்டமைப்பு மாற்ற மடையும் பொழுதுதான், வாழ்க்கையின் இயல்பு மாற்றமடைய முடியும். மறுபுறம் தகவலின் பெருக்கத்தால் வாழ்வின் இருப்பு மாற்றமடையும் என்று கூறுதல், நடப்பியலுக்கு ஒவ்வாத புனைவா கின்றது.
கருத்தேற்றத்துடன் கலந்த தகவலில் முதலாளி Այւb தொடர்ந்து கவனம் செலுத்தி வருதல் சுரண்டப் படுவோரின் ஐக்கியப்பாட்டுக்குத் தொடர்ச்சியான இடையூறாகின்றது. பெறுமதியற்றவற்றைப் பெறு மதியாக்கும் முயற்சியைப் பெரும் ஊடகங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருக்கின்றன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழலும் நிகழ் த்தப்படும் விளையாட்டாக இலக்கியங்களை உரு வாக்கும் முயற்சிக்குப் பெரும் ஊடகங்கள் உற்சா கமளிக்கின்றன. மனிதத்துவத்தைக் காட்டிலும் தொழில்நுட்பமே மேலானது என்ற வலியுறுத்தல் முன்னெடுக்கப்படுகின்றது.
தகவற் சமூகம், தகவல் முதலாளியம் ஆகிய பின் னல்களுக்கிடையே சுரண்டப்படுவோரும் ஒடுக்கப் படுவோரும் கலை நுட்பங்களை மேலும் செறிவுடன் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 12
Malikai 46 year I
i Ramesh
0773085
importers of Wholesale Indian Sarongs, All Kinc
CHANDR | No.151-B/7, Keyze
Te; O
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 
 
 

SSU 169
Zulfikar
0773205377
& Dealers in Batiks, is of Bed Sheets, To
10

Page 13
உறக்கம்
நிம்மதியாக அவள்
ஏதேதோ தொட
f
இல்லையில்லை.
கண் விழித்துப் L விட்டதோ?
இல்லை.
அது நிலவொளி
எப்போது விடியு
இனி உறக்கம் அமைதி தேடி அவ
யாரிடமாவது ெ எதைச் சொல்ல அ
முட்டுவது போலிரு
‘சிறிது நேரம் நித்திரை வரும்
'கணேச சரண
பிள்ளையாரிடம்
நேற்றிரவு பிள்ை
யைச் செய்திருக்கி கள். சாத்துப்படி
தப்பிவிட்டன.
மனம் பிள்6ை
போகிறது.
இப்போ உலக துச் சாப்பிடாமல் செய்கிறார்கள். அ தற்காக ஒர் உயில்
எப்படி அவர்க பேரனை அடிக்கக் றார்களோ? கொன கிறது? கொலைை தூக்கிச் சென்றுவி
毅
1
 
 
 
 
 
 
 
 

வருவதும் போவதுமாக அவளை அலைக்கழித்தது.
உறங்கிப் பலமாதங்கள்.
ர்பற்ற கனவுகள். அவை தொடர்பற்றவைதானா? வாழ்வில் சந்தித்த பயங்கரங்களின் கலவைகள்.
பார்த்த போது, வெளியே ஒளி பரவியிருந்தது. விடிந்து
b?
வராது. வரவே வராது. அது அவளுக்குத் தெரியும். 1ள் அலைகிறாள். கிட்டவில்லையே!
சால்லிச் சொல்லி அழ வேண்டும் போலிருக்கிறது. வாவுகிறாளென்பது அவளுக்கே புரியவில்லை. மூச்சு க்கிறது. அவள் எழுந்து உட்காருகிறாள்.
பிள்ளையாரை நினைத்துக் கும்பிடுவோம். அப்ப
ம். கணேச சரணம்'
) சரணாகதியடைய மனம் சிறிது ஆற.
ளையார் கோயிலிலே போய், திருடர்கள் தம் வேலை றார்கள். கோயில் உண்டியலை உடைத்திருக்கிறார் நகைகள் எல்லாம் கோயிலிலே இல்லாதபடியால்
ாயாரை விட்டுவிட்டுத் திருடர்களின் பின்னால்
ம் கெட்டுப் போய்விட்டது. உடலை வருத்தி உழைத் சுலபமாய் குறுக்கு வழியிலே பணந்தேட ஏதேதோ தில் ஒன்று திருட்டு. ஒரு சங்கிலியை களவெடுப்ப ரையே எடுத்து விடுகிறார்கள்.
ளால் கொலை செய்ய முடிகிறது? அவளுக்குப் 3 கூடக் கைவராது. எப்படித்தான் கொலை செய்கி லெ செய்து விட்டு, அவர்களால் எப்படி உறங்க முடி யப் பற்றிய கற்பனையே அவளுடைய தூக்கத்தைத் ட, அவள் இப்படித் தவிக்கிறாளே!
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 14
கள்ளன்!
அந்த நினைவினாலேயே பதற்றம் அதிகரிக் கிறது.
'வீட்டில் ஆண் துணை இல்லை. இருந்துதான் என்ன? இருந்தவனையே அவங்கள் வந்து கொண்டு போட்டாங்களே”
ஓ! வாய் 'கணேச சரணம் சொல்ல மனம் எங் கெங்கோ.
படுக்கையிலே சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டு உறங்க முயல்கிறாள்.
ஆந்தையின் அலறல்
அருகே, மிக அருகே.
அப்படி ஒரு சத்தந்தான் அவளுடைய அரை உறைக்கத்தைக் காவு கொண்டிருக்க வேண்டும்.
அந்தச் சத்தம் அவளை எதுவோ செய்தது. மருமகனின் நினைவு அவளுக்குள்ளே உயிர்ப்புற்று நடைபயில்கிறது.
அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னரும் சில நாட்களாக இப்படித்தான் ஆந்தை அலறியது. அது நடந்த பின்னர் இந்த அலறல் சத்தம். அப்பப்பா அவளைப் படுத்தும் பாடு
ஆந்தையா அவளுடைய மருமகனை இரவில் வந்து அழைத்துச் சென்றது?
விசாரித்துவிட்டுக் கொண்டு வந்து விடுவோம் என்ற வாக்குறுதியை அதுவா தந்தது?
அவனுக்கு என்ன நடந்ததென்பதை இதுவரை சொல்லாமலே போனது அதுவா?
இல்லையே.
பின்னர் எதற்காக ஆந்தையின் அலறலுக்கு அவள் பதற வேண்டும்?
அவளுடைய அறிவுக்கு இவையெல்லாம் வெட்ட வெளிச்சந்தான். ஆனால், ஏதோ ஒன்று அறிவை
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

அலட்சியஞ் செய்துவிட்டு, அவளை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
அவளுக்கு உறக்கம் வரவில்லை.
Lás..... L-5....... L-5......
இதயத்தின் படபடப்பு மிகத்துல்லியமாக அவ ளுக்குக் கேட்கிறது. இதுவும் இப்பொழுது சிறிது காலமாக அவளுக்குள்ள பிரச்சினை.
இதயம் வேகமாகத் துடிக்கும் போது, ஒரு பதற்றம் உடல் முழுவதும் பரவிவிடுகிறது.
அவளுள் ஒரு பயம். இல்லையில்லை. ஒரு வேதனை. இல்லையில்லை. ஒரு தவிப்பு. அது என்ன?. ஏதோ ஒன்று அவளைக் கெளவிக் கொள்கிறது.
நான் ஏன் பயப்பட வேண்டும்?
இப்படி எண்ணி அவள் தனக்குள் ஊரும் அந்த ஒன்றை விரட்டியடிக்க முயன்றாலும் அது உள்ளே புகுந்திருந்து குலுகுலுக்கிறது.
கைகள் நடுங்கவில்லைத்தான். ஆனால், உள்ளே நரம்புகள். இல்லையில்லை. ஒவ்வோர் அணுவுமே பதறுவது போன்றிருக்கிறது. எதையும் உருப்படியாகச் செய்ய முடியாது ஒரு வித பதற்றம். உள்ளே உதறும் உதறல், சில மணித் துளிகளில் உடல் முழுவதும் வெளிப்படையாக நடுக்கமாக மாறி விடுமோ? என்று தோன்றுகிறது.
இப்போது ஏனிப்படிப் பதறுகிறது? முன்பு பதற் றமடையக் காரணமிருந்தது.
வீட்டின் மிக அருகிலிருந்து சீறிப் புறப்படும் ஷெல்களின் அதிர்வினால் அலைந்த காற்று அவர் களில் மோத, வெடிப்பின் காரணமாக வீடு அதிர, எங்கே வீடு ஒருநாள் உடைந்து விழுமோ என்ற பயம் மேலெழும்பும். மேலே வெடித்து வேகங் கொள்ளும் ஷெல் அவர்களின் வீட்டின் மேலேயே விழுந்து விடுமோ? என்ற ஏக்கம் பிறக்கும். இந்தப் பயங்களெ ல்லாம் அவளுள் வியாபித்து, வியாபித்து சிறிது காலத்துக்கு முன் பதற்றத்தை உருவாக்கியது உண்மைதான்.
12

Page 15
இப்போது அவை இல்லையே! அப்படியிருந்தும் ஏணிப்படி? வீதியில் விரையும் கனரக வாகனங்க ளின் அதிர்வே மண்டையை விறைக்க வைக்கிறது. ஒலி பெருக்கியில் பாடல்களைக் கேட்கக் கூடப் பிடிக்கவில்லை. சத்தங்களைக் கேட்க தலையிடிக் கிறது.
பேரன் உறக்கத்தில் சிணுங்குவது கேட்கிறது. அணைத்துப் படுத்திருக்கும் அவனது அம்மா எழு ந்து செல்ல முற்பட, அந்தச் சிணுங்கல் கேட்பது வழக் கம். மணி அதிகாலை நான்கிற்கு மேலாகியிருக் கும். அதுதான் கார்த்திகா எழுந்து விடிகாலை அலுவல்களைச் செய்யப் புறப்பட்டிருக்க வேண்டும்.
பாவம் அவள். கணவனும் அகாலத்தில் போய் விட, வீட்டு வேலைகளையும் அலுவலக வேலைக ளையும் தனியனாகக் கவனித்துக் குடும்பத்தினைக் கொண்டிழுக்கும் பொறுப்பையும் சுமக்க வேண்டிய தாகிவிட்டது. இப்போது இவள் எழுந்து உதவப் போனாலும் அவள் விடமாட்டாள்.
அவள் பணியகத்திற்குப் போன பின்பு இருக்கும் சில சின்னச் சின்ன வேலைகளைத்தான் இவள் செய்வாள்.
படுத்திருந்தும் என்ன செய்வது? எழுந்து முகங் கழுவிவிட்டு முற்றத்தைக் கூட்ட ஆரம்பித்தாள்.
'நான் கூட்டுவன் அம்மா. நீங்கள் விடுங்கோ." உள்ளேயிருந்து கார்த்திகா கூறியது கேட்டது.
“பறவாயில்லை. நான் கூட்டுறன்’ என்று கூறும் போது, இப்பிடி ஒண்டும் செய்யாமல் உம்மென்டிருக் கிறதாலைதான் என்னென்னவோ செய்யுது. விசர் வரப் போகுதோ தெரியேல்லை என்றும் கூறுவதற்கு வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
அவளுக்குள்ளேயிருக்கும் பயத்தையும் அவள் இப்படித்தான் வெளியே கூறாது விழுங்கிக் கொண்டி ருக்கிறாள்.
அவளுக்கேதாவது மனநோயோ? என்ற ஐயம்
அவளுள்ளே எழுந்து சில காலமாகிவிட்டது. ஆனால்,
13

அதை வெளியே கூற ஒரு தயக்கம். வேறு வருத்த மென்றால் கூறிவிடலாம். இதை...?
இதுதானோ என்பதும் சரியாகப் பிடிபடவில்லை. யாரிடம் மனம் விட்டுக் கதைப்பது? மகள் கார்த்திகா இவ்வளவையும் தாங்குவதே பெருங் காரியம். இதையுங் கூறி.?
மனம் விட்டுப் பேசக் கூடியவர்கள் யாரிருக்கிறார் கள்? அவள் பொதுவாகத் தன் மனப்பாரங்களை இற க்குவது குஞ்சு மச்சாளிடந்தான். ஆனால், இதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் அவளிடமில்லை. அதற்கு வழிவகை கூறவும் அவளாலியலாது.
புவனேஸ்வரி ரீச்சருக்கு விளங்கும். ஆனால் தேவையில்லாமல், வேறை ஆக்களுக்குச் சொல்லி விட்டால்? இதை மற்றவர்களுக்குச் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை.
யாரிட்டைச் சொல்லலாம்?
கூட்டி முடிஞ்சுது. செய்யவும் வேலையில்லை.
கார்த்திகா ஆட்டைக் கொண்டு போய்ப் பின் வளவுக்குள் கட்டுவது தெரிந்தது. ஆட்டடியைக் கூட் டுவதற்குச் சென்றாள். கார்த்திகாவுக்கு இனி இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவும் நேரமிருக்காது. பறந்து கொண்டு பணியகத்திற்குப் புறப்பட வேண்டும்.
மகள் பணியகத்திற்கும் பேரன் பாடசாலைக்கும் போய்விட, அவள் தனித்துவிட்டாள்.
எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எதிலாவது மனதை ஈடுபடுத்தினால் சிறிது பதற்றந் தணியலாம்.
வானொலியைக் கேட்டுக் கொண்டே புளியம் பழம் உடைக்க ஆரம்பித்தாள்.
வானொலியில் எழுந்த அந்த இனிய பாடல் இத மான வருடலாக. அவள் அதிலே இலயித்தாள்.
பாடல் முடிய கேட்ட விளம்பரங்கள், உரையா டல்கள் எதுவுமே அவளுக்கு உவப்பாக இல்லை.
வானொலியை நிறுத்த வேண்டும் போலொரு வேகம்,
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 16
அவள் எழமுன் அந்தப் பாடல்.
வேதனையைப் பிழிந்தெடுத்து, அதற்கேற்ற இரா கத்துடன் அது செவியைத் தொட்டதும் மனம் வேதாளமாக ‘ஓ’ வென்று கதறியழ வேண்டுமென்ற தவிப்பு கிளம்பிக் கொதிக்கிறது. தேம்பிக் கொண்டி ருந்த மனம் விம்மி வெடிக்கிறது. ܫ
எங்கேயாவது குந்தியிருந்து வாய்விட்டு அழ வேண்டும் போல இருந்தது.
அப்படி அழுதால் என்ன நினைப்பார்கள்?
முன்பு சின்னச் சின்ன விடயங்களுக்குக் கூட அவள் அழுவாள். எல்லோரும் கேலி செய்யக் கேலி செய்ய அவள் தன்னைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டாள். இப்போது அப்படி அழுவதில்லை.
சில காலமாகத்தான் அழவேண்டும் போலிருக் கிறது. ஆனால், அவள் அழுவதில்லை.
அவள் சட்டென்று எழுந்து வானொலியை நிறுத்திவிட்டாள்.
தனியே உட்கார்ந்து வேலை செய்து கொண்டி ருந்தாலும், கைதான் புளியம்பழத்தைத் தட்டிக் கொண்டிருந்தது. மனமோ பழைய நினைவுகளுக் குத் தூசு தட்டிக் கொண்டிருந்தது.
மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வேண்டுமென்கிறார்கள். நினைவுக்கு வருவன
எல்லாம் வேதனையானவை தான்.
தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கலாம். அதைப் பார்த்தால் இந்த நினைவுகள் வராது.
தொலைக்காட்சியில் ஒர் இளம்பெண்ணும் ஆணும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீ ரென அவன் அவளைப் பாலியல் வல்லுறவுக்குப் பலவந்தப்படுத்த. அவள் கதறித் துடிக்க.
இரு நிமிடங்கள் தான் பார்த்திருப்பாள். இதயத் துடிப்பு உச்சமாக.
சீ.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

அடுத்ததை மாற்றுகிறாள். அவளுக்கு வியர்த்து உடை முழுவதும் ஈரமாகித் தாங்க முடியவில்லை.
மின் விசிறியைப் போட்டுவிட்டு அமர்கிறாள்.
இருவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதை அவதானித்துக் கதையை ஊகிக்க முயல்கி றாள்.
அவர்கள் ஒருவரைக் கொலை செய்தவற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கொலை நடக்கப் போகிறது. கொலை நடக்கப் போகிறது"
நாடகமென்பது நினைவிலிருந்து நழுவிவிட, அதிலே இலயித்த மனம் அந்தரிக்கிறது.
மின் விசிறி வாரி வழங்கிய காற்றையும் மீறி உடல் வியர்வையில் கசகசக்க மனம் கசக்கிறது.
இது நாடகம், இப்படிப் பயப்படுவதைப் பார்த்தால் மற்றவர்கள் சிரிப்பார்கள். அதுதானே இதைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லவே கூச்சப்படுகிறேன்.
அவள் இப்படியெல்லாம் கூறிக் கொண்டாலும் அச்சம் அவளை ஆட் கொண்டிருக்கிறதே. செய்தி களை வாசிப்பதையோ கேட்பதையோ கூட அவள்
தவிர்க்க முயல்கிறாள்.
இடி மின்னலென்றால் ஏதோ நடக்கப் போவதா 5Ü juulib.
மகளும் பேரனும் வெளியே சென்றால் ஏதாவது விபத்து நடந்துவிடுமோ என்ற கற்பனை.
இனிப் பேரன் வந்துவிடுவான். வரும் நேரமாகி விட்டது.
ஏதோ வாகனம் திடீரென நிறுத்தப்படும் கிறிச் ஒலி.
பயங்கரக் காட்சியொன்று, மனதுள் விரிய.
ஐயோ என்ரை பேரன், அவனைக் கொண்டு போட் டாங்களே அவள் அழுது கொண்டேயிருக்கிறாள்.
4

Page 17
i நவீன இலக்கிய வ
திருந்த நிலைப்பாட்டில், வியப்படைய வைக்கின்ற6
சில கவிதைகளை, அபூர் வெளியிடுகின்றன. வியாபா நாடகம் என்பவற்றை சினிமாவிலும் மூழ்கிப் பே களை வாசிக்கும் பழக்கம் அருகி வருகின்றமையை சஞ்சிகைகள் தான் நவீன கலை இலக்கிய வடிவங்க
நவீன இலத்திரனியல் தொடர்பு சாதனங்களின் வரு இணையத்தில் வரும் பத்திரிகைகளுக்கு அப்பா6 எழுதுகிறார்கள். கவிதைகளோ எண்ணிலடங்கா சிறுக வீழ்ச்சி அடைந்து விடுமோ என்ற அச்சத்தினிடையே மேற்கத்திய நாடுகளில் இன்னமும் லட்சக் கணக்கில் பி போவதே பெரும்பாடு. எனினும், வெளியீட்டு எண்ணிக் வரவினால் ஏற்பட்ட இலகுத் தன்மையினால் பலரும் பு பன்னிரண்டு சிறுசஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவந்த 6 மல்லிகையுடன், ஞானம், ஜீவநதி, செங்கதிர், சுவைத்த சில சஞ்சிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கி: தாண்டாவிட்டாலும், தமக்கென ஒரு தரமான வாசக
பல்கிப் பெருகியுள்ள தொலைக்காட்சி அலைவரிசைக
புத்தாயிரம் ,
gഞ്ഞ്
இயந்திர மயப்பட்ட துரிதகதி வாழ்வில் பணந் தே நேரங்கள் குறுகிவிட்டன. கோளமயமாதலுடன் பெரு வெள்ளம் தமிழ்ப் பண்பாட்டு வாழ்வைச் சிதைத்தது பே பாழடித்துள்ளது எனலாம்.
கணினியே கடவுளாக மாறிவிட்ட உலகில், அை தரையே பூமியாகவும், யன்னல் திரைச் சீலைகளே சூ வாழ்க்கை என்ற பிரமையில், வாழ்வையே தமக்குத் பார்க்கிறோம். அறிவுத் தேடலே பணத்திற்காகத்தான் பண்ணும் பதவிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள வாழ்வின் வசந்தங்களை, உறவுகளை, கலை இலக்க தான் அரசியல் அதிகாரம், என்று மாறி வருகிறது. எப தான் என்றாகிவிட்டது. படிப்புக்கேற்ற பட்டம், பட்டங்க
தையே மையமாகக் கொண்டு சுழல்கிறது எமது வாழ்
15
 
 
 

டிவங்கள், பத்திரிகை, சஞ்சிகைகளை ஆக்கிரமித் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ண், பத்திரிகைகளின் வாரமலர்கள் ஒரு சிறுகதையை, வமாகத் தொடர் நாவல்களை ஏனோ தானோவென்று ரச் சஞ்சிகைகள் எல்லாம், சிறுகதை, கவிதை, நாவல், முற்றாக மறந்துவிட்டு பத்தி எழுத்துக்களிலும், ாயுள்ளன. பத்திரிகைகளில் நவீன கலை இலக்கியங் இதற்குக் காரணம் கூறுகின்றனர். இன்னமும் சிறு ளை உள்ளடக்கி வருகின்றன.
கை, மக்களின் ஒய்வு நேரத்தை விழுங்கி விடுகின்றன. ல் பலரும் தமது சொந்த இணையத்தில் நிறைய தைகளும் வெளிவருகின்றன. புத்தகங்களின் வருகை பல புத்தகங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. ரதிகள் விற்பனையாகின்றன. இங்கே ஐநூறு பிரதிகள் கையில் அதிகரிப்புத் தொடரவே செய்கிறது. கணினி த்தகம் போடவே செய்கிறார்கள். எமது நாட்டில் பத்துப் வண்ணம் இருக்கின்றன. நீண்ட பயணத்தில் தொடரும் திரள், படிகள், இருக்கிறம், கொழுந்து உட்பட இன்னும் ன்றன. விற்பனையில் வெறும் ஆயிரம் பிரதிகளைத் ர் வட்டத்தை பேணுவதால், தாக்குப் பிடிக்கின்றன. 5ள் மறுபுறம்!
6) V (X (X ” இலக்கியம்
,A( ஆெசிர்دميهو8-
டி உழைப்பதற்கே நேரம் போதாமலிருப்பதால், ஒய்வு க்கெடுத்து வரும் ஸ்டேலிங் பவுண், யூரோ, டொலர் ாலவே, பெரும்பாலானோரின் இலக்கிய ஆர்வத்தையும்
ற முகடே சூரியனாகவும், அறையின் மாபிள் பதித்த ழலாகவும் பலருக்கு மாறிவிட்டது. பணம் மட்டும் தான் தெரியாமல் தொலைத்துக் கொண்டிருக்கும் பலரைப் என்றாகிவிட்டது. கல்வியின் பாடத் திட்டங்களும் பணம் ன. பணம் எனும் மாயையில் எமது நிஜமான வாழ்வை, யெங்களை எல்லாம் இழந்து விட்டோம். பணம் என்பது து பண்பாடு கலாச்சாரம், கெளரவம் எல்லாமே பணம் ளுக்கு ஏற்ற பதவி, பதவிக்கேற்ற ஊதியம் எனப் பணத் க்கை. மரியாதை, மதிப்பு என்று ஆகிவிட்டது உலகு.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 18
இம்மையில் வாழும் எவருக்கும், மறுமை பற்றிய நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நிஜ வாழ்விலேயே இன்பத்தைத் தள்ளிவிட்டு பணம் பண்ணுவது ஒன்றுதான் இன்பம் என்று நினைப்பவர்கள் பேரின் பம் சொர்க்கம் என்றெல்லாம் ஏன் கவலைப்படப் போகிறார்கள்? பணத்தை ஈட்டும் மாபெரும் கலையில் மினைக்கெடும் உலகுக்கு கலை இலக்கியம் என்பதெல்லாம் வேலை மினைக்கெட்ட வர்களின் வேலை என்பதாகிவிட்டது. எல்லாத் தெரிவுகளும் பணத்தையே மையம் கொண்டதாகி விட்ட உலகில் காதலி, காதலன், குடும்பம், பிள்ளை குட்டி எல்லாமே பணம் தான் என்றாகிவிட்டது. ஒய்வுக்கு மட்டும் ஒதுக்கும் நேரம் ஒன்று தவிர, மீதமிருக்கும் நேரம் எல்லாமே பணத்தை ஈட்டும் நோக்கத்திற்காக செலவிடப்படும் போது ரசனைக்கு என ஒதுக்கும் நேரம் சுருங்கிவிட்டது.
அப்படிப் பொழுது போக்கு ரசனைக்கு என நேரத்தை ஒதுக்கும் போதும், அதையும் நவீன இலத்திரனியல் ஊடகங்களும், தொலைக்காட்சி களும், சினிமாவும் விழுங்கி விடுகின்றன. வாசிப்பு க்கு என, அதிலும் நவீன இலக்கிய வாசிப்புக்கு என ஒதுக்கப்படும் நேரம் அரிதாகிவிட்டது. இன்று புத்தகங்களை, சஞ்சிகைகளை வாசிப்போர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை நாம் (pLQ மறைக்க முடியாது.
ஈழத்தின் பல பகுதிகளைப் பொறுத்த வரை இன்று வாழ்வும், வாழிடமும், வசதிகளும் கேள்விக் குறியாகி உள்ளன. மலையக சூழலில் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் சுரண்டப்படும் தொழிலாளர் கள். இவர்களுக்கு ஏது வாசிப்பு நேரம்?
புதிய தலைமுறையில் ஒரு சாரார் புற உலகைத் தள்ளிவிட்டு, அறைக்குள் கணினிகளே தஞ்சம் என முடங்கிப் போயுள்ளார்கள். இணையத்தளங்களை வாழ்வின் உயர்ச்சிக்குப் பயன்படுத்தும் அதே வேளை, இவற்றின் இன்னொரு கசப்பான பக்கத் தையும் மறுப்பதற்கில்லை. விளம்பரங்களால் எதை யும் மக்கள் தலையில் கட்டி வியாபாரம் செய்ய முடியும் என்ற துரதிர்ஸ்டமான நிலையும் உருவாகி யுள்ளது. இணையத்தளங்கள் வழியாக இளைய தலைமுறையினரின் அக உலகம் நெருக்கடிக ளைச் சந்திக்கிறது. சினிமாக்களும், ஆபாசப் படங்க
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

ளும், மெகா தொடர்களும் ஒய்வு நேரத்தை முற்றாக ஆக்கிரமித்துள்ளமையால் வாசிப்பைப் பற்றி, புத்தகங்களைப் பற்றி பலர் சிந்திப்பதே இல்லை. வாழ்வில் முன்னேற தனிமனித முயற்சிகள், சமூக கூட்டிணைவை புறந்தள்ளியுள்ளன. கையடக்கத் தொலைபேசிகள் காதை விட்டு அகல மறுக்கும் போது, புத்தகவாசிப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. இவ்வாறான போக்குகள் இன்றைய இலக்கியத்தைப் பாதித்துள்ளன.
இப்பாதிப்புகளால் நவீன இலக்கியம் நலிவடை ந்து விட்டதான கூற்றை சிலர் மறுக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் நவீன இலக்கியப் போக்கு சிறப்படைந்திருப்பதாக கூறுகிறார்கள். வாசிப்போ ரின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், தரமான ஆழமான வாசகர்கள் உருவாகியுள்ளார்கள் என்ற கூற்றை நிராகரிக்க முடியவில்லை. பின்நவீனத்துவ மீள் வாசிப்புகள் புத்தொளி தருகின்றது. கேளிக்கை களும், உல்லாசமும் இலவசமாகக் கிடைத்தாலும் தரமான இலக்கிய உருவாக்கங்களை தேடி வாசிப்போர் வட்டம் இருக்கவே செய்கிறது. சமூக மாற்றங்களை இலக்கியங்களால் உருவாக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் தொடர்ந்து இலக்கியத்தைப் படிக்கிறார்கள்; படைக்கவும் செய்கிறார்கள். மேலைத் தேசங்களில் இன்றும் புத்தக வாசிப்பு நலிவடையவில்லை என்பதை, புத்தகங்களின் விற்பனை எடுத்துக் காட்டுகிறது. மின் நூல்களும் இன்று நவீன இலக்கிய படைப்புகளைத் தாங்கி வருகின்றன. இவை ஒரளவுக்கு புதிய தலைமுறை யினரால் வாசிக்கப்படுகிறது.
இன்றைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட இணையத்தள பதிப்பாகவும் வருகின்றமையினால் புதிய தலைமுறையினர் பத்திரிகை வாசிப்புக்கு இணையப் பதிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இலக்கிய வாசிப்புக்கள் ஓரளவுக்கேனும் தொடரவே செய்கின்றது. இன்னொரு புறம் நாவல்க ளும் அறுவடையாகின்றன.
இலக்கியம், காலத்தின் கண்ணாடி என்பதுடன், காலமாற்றத்திற்கும் வித்திடக் கூடியது. மனித மனங்களை சென்றடைந்து உள்ளத்தில் பதிவாகின் றன. இது மனரீதியான ஆய்வுக்கும் சிந்தனைக்கும்
16

Page 19
வழிவகுக்கின்றன. இதனால் தான் வெறும் பொழுது போக்குக்கென இருந்த இலக்கியம், சமூகக் கண்ணோட்டத்துடன் மாறியது. இலக்கியப் படைப்பு கள் வாசிக்கப்படும் போதோ அல்லது வாசித்து முடித்த பின்னரோ மனதை ஊடறுத்து மனிதனின் சிந்தனைகளுக்கு வித்திடுமானால் அது சிறந்த இலக்கிய வார்ப்பாகக் கொள்ளப்படுகிறது. வெறும் பொழுது போக்கு ரசனை என்பதைத் தாண்டி, மனித சிந்தனைகளில் தாக்கத்தை அல்லது மாற்றத்தை நல்ல திசையில் நகர்த்தும் போது அதன் சமூகப் பெறுமானம் அர்த்தமுள்ளதாகிறது. நச்சு இலக்கியங்கள் இதற்கு நேர் எதிரானவை.
புத்தாயிரம் ஆண்டின் முதற் கூற்றில் எழுத்தின் வார்ப்பில் நிறையவே மாற்றங்களை காண முடிகி Dgs. வாசகனின் ரசனை மட்டத்திலும், வாசிப்பு கிரகிப்பு முறைகளிலும் கூட, நிறைய மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. பின்நவீனத்துவ வரவுக்குப் பின்னர், நேரிடையான எழுத்து முறையும், யதார்த்த வாத பண்பும் படைப்புகளிலிருந்து ஒதுக்கப்பட்டு, புதிய முறையில் எழுதும் வழக்கம் கணிசமான புதிய தலைமுறையினர் மத்தியில் ஏற்படலாயிற்று. கோட்பாடு ரீதியிலான எழுத்துகளும் இவர்களால் ஒரம் கட்டப்பட்டன. எதையும் பட்டும் படாமல் சொல்வதும், நேரிடையான வார்ப்புகளின்றி புதிய முறையில் வாசகனின் சிந்தனைக்கே பல விடயங் களை விட்டு விடும் பாங்கும் புத்தாயிரம் ஆண்டுக் குப் பின்னர் பிரபலமடைந்த எழுத்துக்களாகின. இன்னொரு அம்சம் பேசாப் பொருளைப் பேசும் எழுத்துக்கள் தரிசனமாகின. பெண் பற்றிய பிரமைகள், மாயைகள் கட்டுடைக்கப்படுகின்றன. ஏனைய விடயங்களைப் போலவே பாலியல் விடயங்கள் மறைக்கப்படாமல் பந்தா இன்றி படைப் புக்களில் அலசப்படுகின்றன. பெண்ணியம் தொடர் பான கருத்துக்கள், படைப்புகளில் துணிச்சலோடு பேசப்படுகின்றன. படைப்பு வீச்சும், புரிதலும் மாறு பட்டன. இவையே சிறந்த படைப்புக்களென ஒரு சாராரினால் உரைக்கப்பட்டாலும், இன்னொரு சாரார் யதார்த்தவாத இலக்கியங்களே சிறந்ததென்ற கருத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விமர்சகர்களை தூர நிறுத்தும் பின்நவீனத்துவப் படைப்பாளிகள் ஒருபுறம், பின்நவீனத்துவப் படைப்பு
17

களை நிராகரிக்கும் சில விமர்சகர்கள் மறுபுறம் என இலக்கியத் தரம் பற்றிய சர்ச்சைகள் புது வடிவம் பெற்றன. கோட்பாடு இல்லாத பின் நவீனத்துவத் தால் எந்தக் கோட்டையையும் பிடிக்கவோ அன்றி தகர்க்கவோ முடியாதென்ற கருத்தும் சிலரால் முன் வைக்கப்படுகிறது.
நவீன தகவல் யுகம் வாசிப்பினை நலிவடையச் செய்துள்ள இன்றைய கால கட்டத்தில் உலகமய மாதலின் உந்துதலினால் ஏற்பட்டுள்ள மனிதனின் துரிதமான செயற்பாடுகளும் இலக்கியத்தின் மீது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது. இலக்கி யப் படைப்புகள் கூட வெறும் வணிகப் பொருளாக்கப் பட்டுள்ள மாய உலகில் இலக்கியம் நலிவடைகின் றமையைத் தடுக்க முடியாதிருக்கிறது.
இன்றைய தலைமுறையினரால் ஒரு விடயத் தில் தரித்து நிற்க முடிவதில்லை. பல்வேறு ஊடகங்கள் வழியாகப் பெறும் மூளைக் கிளர்ச்சி ஒரு நிரந்தரத் தேவையாகிவிட்டது. விளையாட்டு, கலை இலக்கிய ஈடுபாடு என்பன குறைவடைந்த ஒரு நிலையை நாம் எதிர்கொள்கிறோம். இன்று பல எழுத்துக்களும் எழுத்தாளர்களும் இணையதளம் மூலம் மட்டுமே அறியப்படுகிறார்கள். எதைப் படிப்பது என்று தெரியாமல் எண்ணிக்கையில் அதிக மான படைப்புகளும் இணையங்களில் தரிசனமாகி ன்றன. நிலைத்து நின்று வாசிப்பவர்கள் குறைவு. நுனிப்புல் மேய்தல் போன்ற வாசிப்பே பரவலாகவுள் ளன. தேடல் மிக்க, பயன் மிக்க வாசிப்போர் குறை வாகவே உள்ளனர். எழுத்தாளர்களே வாசகர்களாக வும் இருக்கின்றனர். மேலோட்டமான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அரட்டைகளில் உள்ள ஈடு பாடு, புதிய தலைமுறையினரில் கணிசமானோருக்கு இலக்கியத்தில் இல்லை என்றே கூறலாம்.
மித மிஞ்சிய தகவல் திணிப்பும் தொடர்பறுத்த லும், சுருங்கும் காலம் மற்றும் நவீன தொழில் நுட்பம் இன்று மனிதனது காலம் மற்றும் வெளியை அழுத்திக் குறைத்துவிட்டது. இதன் எதிர்வினை இயல்புக்கு மீறிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் யாருடனும் ஆறுதலாக அமர்ந்திருந்து பேசு வது குறைவு. அப்படிப் பேசும் போதும் கவனக்கு விப்பின்றியும், தொலைபேசி, தொலைக்காட்சி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 20
குறுக்கீட்டுடனும் தொடர்வதை நாம் காணலாம். வாசிப்பு என்பது கவனக் குவிப்புடன் செய்யும் ஒரு தொழிற்பாடு என்பதால் இலக்கிய ஈடுபாட்டில் தளம்பல் நிலையை எதிர்பார்க்கலாம். மிதமிஞ்சிய தகவல் சுமையின் அதிகபட்ச சாத்தியப்பாட் டுக்குள்ளே இலக்கியச் சுவை அசாத்தியமாகிப் போய்விடுகிறது. புத்தகம் விற்ற இடமெல்லாம் சீ.டி., வீடீயோக்கள் விற்கும் இடங்களாக மாறிவிட்டது. தொடர்பாடல் நிலையங்களும் பல்கிப் பெருகிவிட் டன. ஒவ்வொருவரும் தனித்தனி கைபேசி, லப்டப் என வைத்திருப்பது இயல்பாகி வருகிறது. காலம் மேலும் மேலும் சுருக்கப்பட்டு அதிக தகவல்கள் திணிக்கப்படுவதால் நவீன மனிதன் எதையும் கவனிக்கும் நிலையை இழந்து விடுகின்றான். மின் அஞ்சல், குறுந்தகவல், மெசன்சர்கள், வலைத் தொடர்பு தளங்கள், நுண்பேசி வாயிலாகப் பல தகவல்கள் நம்முடன் பேசிக் கொண்டே இருக்கின் றன. இவற்றின் பழுவை உதற மூளை கொள்ளும் பிரயத்தனங்கள் அசாதாரணமானவை.
நவீன உலகின் மனிதனின் நேரமின்மைக்கு வேலைப்பளு மட்டும் காரணமில்லை. மட்டுப்படுத்த முடியாதளவுக்கு தகவல்களை குறுகிய நேரத்தில் செரிக்கும் மூளைக்கு ஏற்படும் நெருக்கடியும் காரண மாகிறது. ஆழமான ஈடுபாடுகளில் உறவாடல்களில் மனிதனால் பங்கு கொள்ள முடிவதில்லை. அத்து டன் மனிதன் தனது வரலாற்று பிரக்ஞையை இழக் கிறான். மனதில் எதையும் அதிக நேரம் தக்கவைத் துக் கொள்வதில் சிரமப்படுகிறான். நினைவாற்றலும் குறைவடைகிறது. சிதறுண்ட ஒரு சமூக ஆற்றலு க்கு, மிதமிஞ்சிய புலன் தூண்டுதல்களால் அடைந் துள்ள மனிதன், மனதைக் குவியப்படுத்த அமைதி யான இசையும், கலை இலக்கியங்களும் பெரிதும் பயன்படும் என்பதை உணர வேண்டும்.
இன்றைய நவீன இலக்கியங்களான கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்பவற்றோடு பத்தி எழுத்துக்கள் போட்டி போட்டு மேலெழுகின்றன. அத்துடன் காலா காலமாக தமிழ் நவீன இலக்கியத் தைச் செம்மைப்படுத்தி வளர்த்தெடுத்த ஆய்வு விமர்சனத்துறையும் ஆக்க இலக்கியங்களுடன் நவீன இலக்கியத்துறையாகக் கொள்ளப்படுகின்
றது. படைப்பிலக்கியம் குறித்து முன்வைக்கப்பட்ட
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

விமர்சனங்களில் அநீதியும், சுரண்டலும் அவை பற்றிய படைப்புருவாக்கங்களும் சுவைத் தன்மை யும், இடம் பெற்றன. இலக்கிய விமர்சனம் என்பது சாராம்சத்தில் சமூக அரசியல் விமர்சனமாகவே இருந்து வந்திருப்பதைக் கடந்த நூற்றாண்டின் விமர்சனப் போக்கினை கூர்ந்து கவனிப்பவர்கள் அறிவர். படைப்பாளிகளின் ஆக்க இலக்கியங்களு டன், தமிழ் நவீன இலக்கியத்தைச் செழுமைப்படுத் தியதில் சிற்றிதழ்கள் பெரும் பங்காற்றின. பல சந்தர்ப்பங்களில் விமர்சனம் படைப்பிலக்கியத்தின் போக்கை மாற்றியமைக்கும் சான்றுகள் இருப்பி னும், விமர்சகன் இரண்டாம் பட்சமானவையே எனக்கருதி எழுதுபவர்களும் உண்டு. இவ்வாறா னவர்களில் பலர், வாசகனின் ரசனை வெளிப்
பாட்டை பெரிதும் பின்பற்றுவர்.
நவீனத்துவமும் மார்க்சியமும் கோலோச்சிய 1960களுக்குப் பின்னர் அறிமுகமான தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம், பின் மனிதத்துவம் என்பன நவீன இலக்கியத்தின் அடையாளங்களைப் பன்முகப்படுத்தி, பல மாற்றங்களையும் உருவாக்கி யிருக்கின்றன. இலக்கியம் சார்ந்து கட்டமைக்கப் பட்ட கருத்தியல்களின் புனிதம் தகர்க்கப்பட்டி ருப்பதுடன், இலக்கிய சமூக விமர்சனங்களுக்கிடை யேயான கோடு அழிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதுவரை தமிழ் படைப்பிலக்கியம் கவனம் கொள் ளாதிருந்த வாழ்வின் பல்வேறு கூறுகள் அறிவுலகக் கவனம் பெற்றிருக்கின்றன.
முந்தைய நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட் டிருக்கும் தற்கால நவீன தமிழ் இலக்கியம் முன் னெப்போதையும் விட அதிக முனைப்புடன் தனக் குரிய இடத்தை விரிவு படுத்தியபடி செயலாற்றத் தொடங்கியிருக்கிறது. ஈழத் தமிழர் போராட்டத்தின் விளைவாக, ஏற்பட்ட புலப் பெயர்வும் இன்னொரு புறம், குண்டுச் சட்டிக்குள் தேங்கியிருந்த நவீன தமி ழிலக்கியத்தைப் பரம்பலாக்கியதில் பங்காற்றியுள் ளது எனலாம்.
பலர் இன்று மேலோட்டமான வாசகர்களே. ஜனரஞ்சக வாசகர்களும் குறைவடைந்த போதி லும், தரமான வாசிப்புகள் அதிகரித்துள்ளமையைக் காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த தசாப்தத்தில்
18

Page 21
வெளியான படைப்புகள் இதற்குச் சாட்சியாக உள் ளன. சேற்றில் மலர்ந்த தாமரையாய் பல தரமான
படைப்புக்கள் உருவாகியுள்ளன.
சமீபத்திய வருடங்களில் கவிதைப் பெருக்கம் மிகவும் அதீதமாக உள்ளது. புதுக் கவிதையின் வரவால், கவிதை படைப்பது இலகுவானது என்ற தப்பான புரிதலினால் பலர் கவிதையே அல்லாத கவிதை படைக்கிறார்கள். மறுபுறம் மிகவும் சிறப் பான கவிதைகள் இந்த புத்தாயிரமாம் ஆண்டில் பிரசவிக்கப்பட்டுள்ளமையையும் மறுப்பதற்கில்லை. இணையத்தின் வரவும் கவிதைப் பெருக்கத்திற்கு இன்னொரு காரணம். ஆயிரக் கணக்கானோர் தமிழில் கவிதை படைக்கிறார்கள். இவர்களில் நூற்றுக் கணக்கானோரே கவிஞராகத் தேறுகிறார் கள். கவிதை எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் ஒரே பிரிவினராக இருக்கின்றார்கள்.
நவீன தமிழ்க் கவிதை வெவ்வேறு கட்டங்களில் பெரும் அலை வீச்சாக எழுந்திருக்கின்றன. அதே போன்ற ஒரு எழுச்சியை இப்போதும் காண முடிகிறது. கணிப் பொறியின் வரவு களம் அற்ற பல கவிஞர்களும் தமது கவிதைகளை நூலுருவாக்கும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இது ஏனைய நவீன இலக்கியத் துறைகளுக்கும் பொருந்தும். ஆயினும், கவிதை முன் நிற்கிறது. ஒரளவு கணிச மான சிறுகதைகளும் வருகின்றன. நாவல்கள் குறைவடைந்து விட்டாலும், காத்திரமான படைப்பு கள் அறிமுகமாகின்றன. நாடகத்தில் ஒரு தேக்க நிலையைக் காண முடிகிறது.
இன்றைய நவீன இலக்கிய உருவாக்கங்கள் வாழ்வின் கணங்களை ஆழமாக வேரோடி சித்தரித் தும், மனத்தின் ஆழங்களை வெளிப்படுத்தியும், மனித இருப்பின் சிக்கல்களை ஆராய்ந்தும் வேட்கை கொண்டு பிரசவமாகிறது. அத்துடன் புதுப்புது விதமான வாசகர்களையும் பிறப்பிக்கிறது.
புத்தாயிரம் ஆண்டில் இலக்கிய உலகில் ஏற்பட்ட இன்னொரு அம்சம் மீள் வாசிப்பு ஆகும். எந்த ஒரு படைப்பும் ஒற்றைத்தன்மையுடையவை அல்ல என்ற கருத்தும் மீள் வாசிப்புக்கு உத்வேக மளித்தது. இதனால் நவீன இலக்கியங்கள் மாத்திர
19

மன்றி பண்டை இலக்கியங்களும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. நேராகச் சொல்லப்பட்டிரு ந்த கருத்துக்களை விட, சொல்லாமல் தொக்கி நிற்கும் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் LIL'G6 வருகிறது. இராமனை நேர்மையற்ற ஆக்கிர மிப்பாளனாகவும், பெண்ணியத்திற்கு மாறானவனா கவும் வாசிக்கப்படுகிறது. அவ்வாறே கந்தக் கடவு ளும் மேலோர் வட்டமான தேவர்களுக்காக அசுரர் களை அநியாயமாக அழித்ததாக வாசிக்கப்படுகிறது.
போருக்குப் பின்னராக, வெற்றி பெற்றவர்களின் இலக்கியங்கள் யாவும் அவர்களுக்கே சார்பாகப் படைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. கந்த புராணத்தையோ, இராமாயணத்தையோ அசுரர்கள் அல்லது கெளரவர்கள் எழுதியிருந்தால் வேறுவித மாக இருந்திருக்கும் என்ற வாதங்களும் முன் வைக்கப்படுகின்றன. இன்னொரு புறம் குந்திதேவி ஆறுபேருக்குப் பிள்ளை பெற்றதும், பாஞ்சாலி ஐந்து பேரை மணந்ததும் அன்றைய பெண்ணின் பால் சமத்துவமான வாழ்வைப் பகர்வதாக வாசிக்கப்படுகி றது. நிலவுடமை காலனித்துவக் குடும்ப அலகினது வரவினால் தான் பெண்ணுரிமை சரிவுற்று, பெண் ணடிமை நிலை ஏற்பட்டதற்கு ஆதாரமாக அன் றைய இதிகாசக் குந்தியும், பாஞ்சாலியும் இருப்பதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். கற்புப் பற்றிய மீள்பார்வையும் படைப்புகளில் இடம் பெறுகின்றன. மேலும் எது நல்லது, எது கெட்டது என்கிற பார்வை யின் பல்பரிமாணம் அலசப்படுகிறது. ஒற்றைப் பார்வையில் கெட்டதாகத் தெரியும் எல்லாம் கெட்ட வையுமல்ல, நல்லவையென கருதப்பட்டவை எல் லாம் நல்லவையும் அல்ல எனும் மீள் பார்வை புதிய வாசிப்பு முறையில் முனைப்புப் பெறுவதைக் காணலாம். கோட்பாடுகளும் கேள்விக்குறியாக் கப்படுகின்றன. கோட்பாடுகளுக்குள் அடங்காத விமரிசனங்களும் முன்வைக்கப்படுகின்றன. விமர்ச னங்களைப் பொருட்படுத்தாத படைப்புகளும் தரிசன மாகின்றன.
தேவையானவர்களையும், விழிம்பு நிலையின ரையும் இன்றைய இலக்கியங்கள் சென்றடைகின்ற னவா, என்பது கேள்விக் குறியே. எது எப்படியோ, இலக்கிய உருவாக்கங்கள் வாசகனின் மேம்பாட்டுக்
காகவும் படைக்கப்பட வேண்டும்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 22
வெள்ளவத்தை
Great Products
நம்பிக்கையே எட
541, காலி வீதி
TP:O11
Since 1978
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 
 
 

ہوتی
* في "خمير * في లో *ليلاټ تړني
"السيمفونيه
Best Price
மது பாரம்பரியம்
வெள்ளவத்தை. ம்பு - 06.
2353392
20

Page 23
i.e., it is; if its
ஒய்வு நிலை கணித பத்து மணிக்கு. அதற்கு முன்னதாகவே நாலு லட்சம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது வைத்தியசாலையின் நிபந்
ஆனால், இரண்டுமே இன்னமும் வழங்கப்படவில்லை. நாலும் நாலா பக்கமும் பறந்தோடி இரத்தமும், பணமும் ரொக்கமும், 4 Point இரத்தமும் ஒழுங்கு செய்யப்பட்டு விட
பற்றாக்குறையை நிரவு செய்வது எப்படி..?
இரத்தக் குழாக்குள் காணப்படும் பெரிய தடைகள் அறுை உயிருக்கே எந்நேரமும் ஆபத்து வரலாம் என வைத்தியர் எ சிவசக்தியும் விழி பிதுங்கியபடி நின்றனர்.
சிவசக்தி தமது குலதெய்வம் நல்லூர் முருகனை கெ வராமல் காப்பாற்றி ஐயனே!” என அழாக்குறையாக வேை
காலை ஒன்பது மணி
Chief Sister 6 (56.g. Qg5flib.5g).
தாங்கள் சொல்லுவதென்ன? செய்வதென்ன? என்பன ஆ அறிந்து, ஓடோடி வந்த ஒரு சில உற்றார் உறவினரும் ை
இந்த நிலையில், தாங்கள் அறுவைச் சிகிச்சைக்கு மு இறுதி முடிவு எடுத்தாகிவிட்டது.
Chief Sister சொன்னார்: “சொன்னபடி சரியாகப் பத்து போக இப்ப Strecher வரும்"
"நாங்க இரண்டரை லட்சம் ரூபாதான் இப்ப கட்ட ஆயத்த
"முழுக் காசும், ரத்தமும் குடுத்தாச்சு. ஆரோ மாஸ்டரி: காசும் கட்டிப் போட்டினம்"
இந்நேரம் மாஸ்டரின் கல்லூரிக் கால நினைவுகள் சில மாணவர்களுக்கு இலவசமாக ரியூசன் சொல்லிக் கொடுத்
செய்தவர் மாஸ்டர்.
இந்நேரம் தனது காரிலிருந்து இறங்கிய டாக்டர் கதிரt அறை நோக்கி மளமளவென ஓட்டமும் நடையுமாக வந்து
21
 
 

SGO)CO) -Gasar
மாஸ்டர் சிவசம்பு அவர்களுக்கு By PaSS Surgery காலை
tii (Lpsbu600Typlb, 5 Pont Group 'A' Negative gy 55uplb
தனை.
நேரம் காலை மணி எட்டு. மாஸ்டருக்கு நாலு பிள்ளைகள்.
புரட்ட முயற்சிக்கிறார்கள். ஒருவாறு இரண்டரை லட்சம்
L-6T.
வச் சிகிச்சையால் உடன் அகற்றப்படாவிட்டால், மாஸ்டரின் ச்சரித்ததால், பிள்ளைகளும், சிவசம்பு மாஸ்டரின் மனைவி
ஞ்சி, "அப்பனே! எனது மாங்கல்யத்திற்கு எந்த ஆபத்தும் ԾTւԶաւյլգ.
ح}
ஆருக்கும் எதுவும் தெரியவில்லை. மாஸ்டருக்கு ஆபத்தென கயாலாகாத் தனத்தால் கவலைப்பட்டனர்.
ழு ஆயத்தமில்லை என உண்மையைச் சொல்லுவது என
LD60onsists Opretion. Patient 60y Theatre isgá, Qasr 600TG
மாக இருக்கிறம்" சிவசக்தி அழாக் குறையாகச் சொன்னாள்.
ன் மாணவர்களாம். டாக்டர் கதிரவேலாம். அவை ரத்தமும்
பசக்தியிடம் பளிச்சிட்டன. அந்நாட்களில் சில ஏழை A/L தமையும், தேவை ஏற்படும் வேளை, போதிய நிதியுதவியும்
வேலுவும், டாக்டரின் வேறு இரு நண்பர்களும் மாஸ்டரின்
கொண்டிருந்தனர்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 24
.ജ
تھا ۔ o "صمسسسسسس |ള0/0ിശ്ശ
奏
ፈፉ !ኸo "!!!!!!!!!!!!!!!!!!!! !!; }{&:
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகை நிலைப் பேற்றால் அ.ந.கந்தசாமி குறிப்பிடப்படுக இலக்கியங்கள் படைத்தாலும், மார்க்ஸிய சித்தாந்த இலக்கியப் படைப்புக்கள் மேலோங்கி நிற்பதைச் சி தொடுகிறார்கள். ஆனால், விரித்துப் பார்க்க முனைகி ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ எழுதிய சி.மெளனகுரு, டெ எவரும் அ.ந.கந்தசாமியை இலக்கிய உலகில் விரித்
அவரது குடும்பச் சூழல் கற்ற ஆசிரியர்கள், நண்பர்க ஒன்று. இலக்கிய உலகம் இன்றும் அதில் முயலவில்
மணிக்கொடிக் காலத்தின் தாக்கம் நவீன இல எழுப்பியது. அதன் உத்வேகம் தான் 1940களின் பின் ஆர்வம் மிகுந்த நவீன இலக்கியப் படைப்பாளிகள் ஒன் நிறுவனர். தி.ச.வரதர், அ.செ. முருகானந்தன், அந சரவணமுத்து, து.உருத்திரமூர்த்தி (மகாகவி), கன முதன்மையானவர்கள். பின்பு இலங்கையர்கோன் இன் படைப்புகளும் இலக்கிய மதிப்புப் பெறுமளவு இவர்கள்
மறுமலர்ச்சி இளைஞர்களால் நவீன கவிதைப் பான அ.ந.கந்தசாமி, மஹாகவி, சாரதா முதலியோர் இதி இடதுசாரி, முற்போக்கு, மார்க்ஸியச் சிந்தனையுடன் குவித்தார். சிறுகதை வளர்ச்சியை மட்டுமே பார்த்து நின் அவரது கவிதைகள் தந்ததைக் காணாமல் நின்றன காரணமாகியதோ தெரியவில்லை. அக்காலம் அவர கவிதைகள் மிகப் பிரபல்யம் வாய்ந்தவை. பிற்காலத் ஒரு முற்போக்கு இலக்கிய மாநாட்டின் கவியரங்கி அதிசயித்து நோக்கினர். நானறிந்த அளவில் அக்கவில் கவிதையாக்கினார். இக்கவிதை போன்று சிந்தனைத் குஷ்டரோகியும்’, ‘சத்திய தரிசனம்', 'எதிர்காலச் சித்த
"ஈழத்து சிறுகதை வரலாறெழுதிய கலாநிதி கணக்கெடுப்பில் அ.ந.க.வைக் குறைத்தே மதிப்பிடுக பற்றி அவர் கணிப்பீடு ஒரு கதை எழுதியவர், என்ட நாயிலும் கடையார் மிக மேன்மை பெறுகின்றன. ம
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 
 
 
 

தை, கவிதை, விமர்சனம் மட்டிலும் தவிர்க்க முடியாத
கிறார். முற்போக்குச் சிந்தனையில் நிலை நின்று த்துள் இச்சிந்தனைகள் வலுப் பெறுவதாலும் இவரது லர் சகியார். அதனால் தான், என்னவோ இவரைத் றார்கள் இல்லை. என்றாலும் இருபதாம் நூற்றாண்டு Dள.சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான் விரித்துப் பார்த்தளவு துப் பார்க்க முனையவில்லை.
5ள் பற்றிய விபரங்கள் பூரணமாக ஆராயப்பட வேண்டிய லை; முனைய வேண்டும்.
க்கியத்தின் சிந்தனையாளர்களை இலங்கையிலும் எழுந்த மறுமலர்ச்சிக் காலம்'. 1943களில் இலக்கிய ாறிணைந்து ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தை கந்தசாமி, க.கா. மதியாபரணம், கே.எஸ்.நடராசன், ாக செந்திநாதன், ஏரம்பமூர்த்தி ஆகியோரே இதில் ானும் பலர் இணைந்தனர். சிந்தனை எழுச்சியும், நவீன ாால் எழுந்தன.
ரியில் கவிதைகள் எழுந்தன. நாவற்குழியூர் நடராசன், ல் முக்கியம் பெற்றனர். 'கவீந்திரன்’ எனும் பெயரில் ஏராளமான கவிதைகளை அ.ந.கந்தசாமி எழுதிக் ாறவர்களுக்கு, அ.ந.கந்தசாமியின் இலக்கிய ஆழத்தை ார். அதற்கு அவரது புனைப்பெயராகிய கவிந்திரன்' து வில்லூன்றி மயானம்', "துறவியும் குஷ்டரோகியும் தில் 'கடவுள் என் சோர நாயகன்’ எனும் கவிதையை ல் பாடினார். அக்கவியின் நுணுக்கம் பற்றி அநேகர் தையை அவர் ஆங்கிலத்தில் எழுதிய பின்தான் தமிழ்க் தூண்டலை எழுப்பிய அவரது கவிதைகளில் துறவியும் ன்பாட்டு' என்பன மிக முக்கியமானவை.
க. குணராசா- செங்கை ஆழியான் சிறுகதைக் றொர். அறுபது சிறுகதைகளை எழுதிய அ.ந.க வைப் துதான். விமர்சன உலகில் இவரது இரத்த உறவு, றுமலர்ச்சி ஏட்டில் ஒருகதை எழுதிய போதும், எழுதிய
22

Page 25
கவிதைகள் அநேகமானவை. மறுமலர்ச்சிச் சங்கத்தை விரிவுபடுத்தும் எத்தனத்தில் அ.ந.க. மிகவும் ஈடுபட்டார். 1946களில் யாழ்ப்பாணத்தில் தோன்றிய மறுமலர்ச்சிக் குழுவின் முக்கிய படைப் பாளிகளான தி.ச.வரதராசன், அ.செ.முருகானந் தன், அ.ந.கந்தசாமி ஆகியோரின் கடித முயற்சிகள் தனக்கு உந்துதலாக விளங்கியது' என வ.அ. இராசரத்தினம் அவர்கள் குறிப்பிட்டதாகச் செங்கை ஆழியான் 2001 வெளியான 36வது ஆண்டு மலர் மல்லிகை"யில் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு மறு மலர்ச்சிச் சங்கத்தை விரிவுபடுத்தும் அ.ந.க.வின் முயற்சிக்கு அத்தாட்சியாகும்.
நாடகத்துறையில் அ.ந.கந்தசாமியின் பங்கு மிக அளப்பரியது. "மதமாற்றம்’ எனும் அவரது நாடகம் பல்கலைக்கழக மட்டத்தில் உயர்த்திப் பேசப்படு வதை அவதானிக்கலாம். வரலாறு அவ்விதம் கூறி வியப்படைகிறது. இந்நாடகம் மேடையில் நடிப்பதற் காக எழுதப்பட்ட போதும், படித்துச் சுவைப்பதற் காகவும் அமைந்துள்ளது. புதிதாக நாடகம் எழுத எண்ணுவோர் இதிலுள்ள காட்சியமைப்பு, கருத்தின் ஆழம், அதனைக் கையாளும் முறை என்பனவற் றைப் படிப்பினையாகக் கொள்ள முடியும்.
அ.ந.கந்தசாமியின் அறிவை அளப்பதற்கு அதிக ஆக்கங்களிருந்த போதும் "மதமாற்றம்' நாடகம் மிக நுணுக்கங்களைத் தருகின்றது. சைவ, கிறிஸ்தவ மதங்கள் பற்றிய அ.ந.கவுக்குரிய அறிவை இந்நாடக மூலம் அறியலாம். கதாநாயகன் அசல் கிறிஸ்த வன், கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவிக் காதலைக் கைவிடுகின்றனர்' இதுவே கதையின் கரு. காதலும் மதமும் படும்பாடு கந்தசாமியின் திறமையின் வெளிப்பாடாகயிருப் பதை உணர முடிகின்றது. இந்நாடகம் எழுதிய காலம் தொடக்கம் அவர் இறந்த பின்னும் மேடை யேறிய வரலாறு நோக்கத்தக்கது.
ஆரம்பகாலத்தில் அரசாங்க உத்தியோகத்தை விட்டெறிந்து, பொதுவுடைமைத் தத்துவத்துள் ஈர்க்கப்பட்டு தேசபிமானி பத்திரிகையில் பணியாற் றினார். ‘சுதந்திரன்’, ‘வீரகேசரியிலும் பணியாற்றி னார். வீரகேசரியில் பணியாற்றிய காலம் அங்குள்ள அச்சுத் தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம்
23

அமைத்துப் போராடினார். மீண்டும் தகவல் பகுதியில் உத்தியோகம் பெற்று ‘ழுநீலங்கா அரச ஏட்டின் ஆசிரியரானார். உத்தியோகத் தோரணையி லிருந்து வழுவாது, அரசாங்கக் கொள்கையுடன் ‘ழுநீல்ங்கா ஏட்டை நடத்தினார். சிங்களத் தேர்ச்சி பெறாத காரணத்தால் வெளியேறி ‘ட்றிபியூன்' ஆங்கிலப் பத்திரிகையில் கடமையாற்றினார்.
சுதந்திரன் தினப் பத்திரிகையாயிருக்கும் காலம் அதைத் திறம்பட நடத்தினார். எமிலி சோலாவின் நாநா'வை மொழி பெயர்த்து சுதந்திரன் தினப் பத்திரிகையில் வெளியாக்கினார். இயற்கை வாதம் பேசும் எமிலி சோலாவின் அக்கதையைப் படித் தோர், இவர் யதார்த்தவாதியல்ல எனவும் முடிவெடு த்தனர். அ.ந.க வின் ஆங்கிலப் புலமையை எடுத் துக் காட்டவும், இலக்கியக் கொள்கையின் மாறு பாட்டை விளக்கவுமே அந்நாவலை அவர் மொழி பெயர்த்து ‘சுதந்திரன் வாசகர்களுக்களித்தார்.
'சில்லையுர்’ செல்வராசன் தான்தோன்றிக் கவி ராயர் எழுதும் கவிதைகள் பிறிவேர்ஸ் 'Freeverse என எஸ். பொன்னுத்துரை முழங்கித் திரிந்தவர். Freeversc ன் இலக்கணம் கூறி, தான்தோன்றிக் கவி ராயரின் ஒரு கவிதை கூட, இவ்விலக்கணத்துள் உட்பட்டதல்ல எனக் குமரன்’ பத்திரிகையில் எழு தித் தன் ஆங்கிலப் புலமையை அ.ந.க வெளி யாக்கினார்.
முதலாளித்துவ அமைப்பில் பேசுவது, பிறருடன் பழகி வெற்றி கொள்வது, பண்டங்களை விற்பனை செய்யும் விவேகம் பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. டேல் கார்னேஜி, நெப்போலி யன் ஹில்', 'ஹேர் போர்ட்கசன்', 'நேலர் வின்சன்ட் பீல்' ஆகியோரின் நூல்களே அதிகம் உலாவின. இவற்றைப் படித்த உணர்வில்தான் தமிழ்வாணன், அப்துர்ரஹீம் போன்றோர் நிறைய இத்தகைய நூல்களை எழுதினர்.
அ.ந. கந்தசாமி இவர்களது நூல்களோடு, நாவலாசிரியர் 'ஆர்னோல்ட் எழுதிய "24 மணி நேரத்தில் வாழ்வதெப்படி?’, ‘மனத்திறன்' நூல் களையும், "அப்டன் சிங்க்வெயர் எழுதிய வாழ்க்கை நூல்" ஐயும், நோபல் பரிசு பெற்ற பேர்ட்றன் ரசல் எழுதிய 'இன்பத்தை வெற்றி கொள்ளல் நூலையும் கரைத்துக் குடித்து, இவர்களது நூல்களின் பரிச்சி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 26
யத்தால் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல் ஒன்று எழுத வேண்டும் என எண்ணினார். அதன் விளை வுதான் வெற்றியின் இரகசியங்கள்’ எனும் அவரது அறிவுத்துறை நூலாகும். உளவியல், அறிவியல் கலந்ததாகவே இந்நூல் உள்ளதால், தமிழ்வாணன், அப்துர்ரஹீம் போன்றோரது நூல்களிலும் இது வேறுபடுகின்றது. இந்நூலை இன்றைய உளவியல், அறிவியலாளர்கள் உற்று நோக்குதல் அவசியம். பாரி நிலையம் 1966 டிசம்பரில் 298 பக்கங்களையு டைய GrOW Size ஆன இந்நூலை வெளியிட்டது.
1966, 67 காலப் பகுதிகளில் தினகரன் வாரமஞ்ச ரியில் வெளியான அ.ந. கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் நாவலுலகில் மிக அற்புதமானது. இக்கதை யின் பகைப்புலனாக இலங்கை நாட்டின் இரு பிராந் தியங்கள் தோற்றமளிக்கின்றன. தேசிய நாவலெ னப் பதிவாகும் நாவல்களில் இதுவும் ஒன்று. இயல்பு நவிற்சி- யதார்த்தம் மாறுபடாத நாவலிது.
உயிருடன் இருக்கும் போது கண்தானம் சட்டப் படி செய்ய முடியாது’ எனும் உண்மையும், வைத் திய சம்பந்தமாக பிரஞ்சு டாக்டர் பீயரே ரோலன் என்பவர் எழுதிய நூல், வைத்திய நுணுக்கங்க ளைப் பற்றியெல்லாம் உண்மைக்கு மாறில்லாது நாவல் தருகின்றது.
இக்கதையுடன் ஒரு வாசகன் கிரேக்க நாடகா சிரியரான "செபாக்கிளியஸ்' எழுதிய ‘ஈடிப்பிஸ் ரெக்ஸ்’ நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாரிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலிக்கும் ஏற்பட்ட காதல், அரிச்சந்திர புராணம், காந்தி மகான் வாழ்க்கையை மாற்றிய காரண நிகழ்வு, இளவரசன் அலிகான் ரீட்டா றேவேர்த் அந்நியோன்யம், ஷேக்பிய ரின் ரோமியோ ஜூலியத், அரபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பேனார்ட் ஷாவின் கூற்றுக்கள், புறநானூறு 'ஈ' என இரத்தல் செய்யுள், இராமாய ணக் கதை, நளன் தமயந்தி தூது, சுவாமி விபுலான ந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள், நீட்சேயின் தத்துவங்கள், விளக்கங்கள், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டன் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- (துரியோதனன் தந்தை திருதராஷ்டிரர், மாளவ தேசத்தின் சத்தியவானின்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

தந்தை, தேபஸ் மன்னன், ஈடிப்பஸ், யாழ்ப்பாடி, மில்டன் (ஆங்கிலக் கவிஞன்), இளவரசி மாக்கிரட் காதல், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பில் தன் கண்களைத் தானே குத்திக் கொண்ட வைஷ்ணவ பக்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல் போன்ற தமிழிலக்கிய பழைய புதிய நூற்கள் பற்றிய விளக்கம் யாவும் கதாபாத்திர மூலம் 'மனக்கண்' நாவலில் அறியலாம். உலக Lélas& épbg5 6T(p55IT6T66T Somerset Margham சமசெட்மாம் என்பவருடைய நூலொன்றைப் படிப்பதால் உலக அறிவே பெறலாம் என்பது போல் 'மனக்கண்' நாவல் படிப்பதால் ஏற்படும் எனும் உயர்வை அது பெறுகிறது. சங்க இலக்கியக் கட்டுரைகளை திருமலை ராயன்' எனும் பெயரில் அ.ந.க. எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய இலக்கியம்’ எனும் தலைப்பில் கைலாஷ், ஏ.ஜே.கனகரத்னம் எழுதிய காலம் மூன்றாமவராக அ.ந.க வும் எழுதியுள்ளார்.
பாரதியார் கூறிய யாழ்ப்பாணத்துச் சாமி யாரென ஆராய்ந்து யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பலத் தேசிகன் என்பதை உறுதி செய்த பெருமை அ.ந.க வையே சாரும். படைப்பாற்றல் சிறப்புப் பெற்ற முற்போக்கு எழுத்தாளர் அ.ந. கந்தசாமியின் படைப்புகள் பதியப்பட வேண்டும்.
வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும்.
நீங்கள் மெய்யாகவே குனி முனிதி இலக்கிய உழைப்பை நேசிப்பவரானால், முல்லிகைப் பூந்தல் வெளியீடுகளுைத் ஞாடர் ந்து வாங்கிப் படியுங்கள். நன்பர்களுக்கும் சொல்லுங்கள்.
இந்த மண்ணில் முரும் ஒரு பூத்தத்தை முல்லிகைப் பூந்தல் வெளியிடு வருகின்றது.
நீங்கள் முல்லிகைப் பூந்தல் வெளியீடுகளுக்குச்
செலவிடும் ஒவ்வொரு ரூபாவும் ஆரோக்கிய மான எதிர்கால ஈழத்து இலக்கியத்திற்கும் இந்த முண்ணின ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு0ே சுவறும்.
24

Page 27
ராஜீவ் ஹோட்டலின் இடது பக்கம் முன்பு கொத்துெ பாவிக்கப்பட்டது. கொத்து ரொட்டி போடுவதை நிறுத்த பகுதி பாவனையற்றுக் கிடந்தது. ஒரு "குக்கர் வைப் வெங்காயம், முட்டை, இறைச்சிக் கறி, ரொட்டி போன் தேவையான பொருட்கள் வைத்து எடுக்கக் கூடியதொ
ராஜீவ் ஹோட்டலின் முதலாளியின் கருணை போடப்பட்ட அந்தச் சிறிய பகுதி காந்தராசனு க்குக் கிடைத்தது. இப்போது அந் தப் பகுதி காந்தராசனின் மிக்சர்’
கடையாக இயங்கிக் கொண்டி ருக்கின்றது.
கொத்து ரொட்டி போடப் பட்ட காலத்தில் பாவிக்கப்பட்ட ஒரு மேசையையும், இரும்புக் கம்பியில் செய்யப்பட்ட வட்டவடிவி லான பலகைகள் பொருத்தப்பட்ட இரண்டு ஸ்ரூல்களையும் காந்தராசனின் பாவனை அவைகளை விட, சிறிய அளவிலான மூன்று கண்ணாடி பெட்டியையும் காந்தராசன் வாங்கிக் கொண்டான். வறுத்த, பொரித்த கடலைகள் போடப்பட்டிருக்கு நிறைந்திருக்கும். ஒரு ஸ்ரூலில் காந்தராசன், அமர்ந்தி போடப்பட்டிருக்கும். காந்தராசனின் நண்பர்கள் யாரா
காந்தராசனுக்கு இப்போது இருபத்திநாலு வயது, தி எண்ணை தேய்த்து விடுவாள். கண்ணாடி பார்க்காமே சேட். ராஜிவ் ஹோட்டலில் கிடைத்ததொரு வட்டவடி பணத்தைப் போட்டு வைத்துக் கொள்வான்.
காந்தராசனின் பெற்றோருக்கு இவன் ஒரே மகன். இ தகப்பன் மாரடைப்பால் இறந்து விட்டார். தகப்பனின் விட்டது.
தகப்பன் இருந்த காலத்தில் அத்திவாரம் போட்( மட்டும் இப்போது அவர்களுக்குச் சொத்தாக இருந்தது
காந்தராசனையும் அவனது தாயாரையும் வறுமை கம்பியில் சிக்கிக் கிழிந்து. காற்றில் ஆடுகின்ற பட்
இரைப்பை ஒன்று இருக்கும் வரை, பசி இருந்து ெ தேடி ஒடத் தான் வேண்டும். அந்த ஓட்டத்தில் நித
இரைப்பை. அது மனித இயக்கத்தின மையப்புள் ஏளனமாகச் சிரிக்கும். இவைகள் இரண்டிற்கும் காலத்தால் அழியாத அநுபவங்கள்!
 

ாட்டி போடும் பகுதியாகப்
க் கொண்ட பின் அந்தப்
தற்கும், பிஞ்சு மிளகாய் ற கொத்து ரொட்டிக்குத் ந சிறிய இடம்.
யால், கொத்துரொட்டி "
--கே. ஆர். டேவிட்
ாக்கென்றே ஹோட்டல் முதலாளி விட்டுவிட்டார். ஓப் போத்தல்களையும், நீள் சதுரமான ஒரு கண்ணாடிப் சிறிய அளவிலான கண்ணாடிப் போத்தல்களுக்குள் ம். நீள் சதுரக் கண்ணாடிப் பெட்டிக்குள 'மிக்சர்’ ருப்பான். இரண்டாவது 'ஸ்ரூல்" கடையின் முன்னால் வது, வந்தால் அமர்ந்து கொள்வார்கள்.
.காத்திரமான உடல், இப்போதும் தாய்தான் தலைக்கு லயே, தலையைச் சீவிக் கொள்வான். ஒரு களிசான், விலான தகரப் பேணி. இதற்குள்த் தான் வியாபாரப்
}வன் ஓ.எல் படித்துக் கொண்டிருக்கும் போது, இவனது ா மரணத்தோடு காந்தராசனின் படிப்புத் தடைப்பட்டு
சுவர்கள் கட்டப்பட்ட, அரைகுறையான வீடு ஒன்று
l
|விகாரம் செய்து கொள்ள. முற்சை அறுந்து, ‘கறண்ட்” த்தின் நிலை?
ாண்டு தான் இருக்கும். பசி இருக்கும் வரை தீனியைத் னமும் இருக்கும், நிதானமின்மையும் இருக்கும்.
ளி ஒரு புறம் வறுமை துரத்தும். மறுபுறம் கெளரவம் டுவே மனிதன் படுகின்ற அவலங்கள். அவைகள்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 28
காந்தராசனும், தாயும் பெரும் அவலப்பட்டனர். இறு தியில் ஒரு மிக்சர் கடைக்கு வேலைக்குப் போனார் கள். தாய் மிக்சர் பொரிப்பாள். காந்தராசன் பொரித்த மிக்சரை பக்கற்றுகளில் போட்டு ஒட்டுவான்.
காலை, எட்டுமணிக்கு வேலைக்குப் போக வேண்டும், அடுப்பும் விறகும், எண்ணைத் தாச்சியும் பொருட்களும் தயாராகவே இருக்கும். பத்துமணி க்கு ஒரு "ரீ கொடுப்பார்கள். மத்தியானம் சாப்பாடும் கொடுப்பார்கள். ஆறு மணிக்குப் பிறகுதான் வேலை, முடியும் பல்லி முட்டையளவில் ஏதோ வொரு சம்பளமும் கிடைக்கும்.
காந்தராசனுக்கு வேலை இலகு. ஆனால் தாய், நெருப்புக் குளித்தாள். ஒன்று இரண்டு நாட் களல்ல, இரண்டு வருடங்கள் நெருப்புக் குளித்தாள்.
அகநிலைப்பட்ட இரைப்பை வெக்கையை, புற
நிலைப்பட்ட நெருப்பு வெக்கையால் ஈடு செய்தனர்.
ஒவ்வொரு மனிதனும் இந்த இரைப்பை வுெக் கையை உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற் காகவோ என்னவோ, பெண்களின் வயிற்றில் இரை ப்பைக்குப் பக்கத்திலேயே கருப்பையும் அமைந்தி ருக்கின்றது!
ஒரு மனித உருவத்தின் கருவிலேயே அதன் வாழ்வியல் கருவுபூலத் தத்துவமும் உணர்த்தப்படு கின்றது.
“. காந்தன் தினசரி நெருப்புக் குளிச்சு இன் னொருவனுக்குக் குடுப்பதை விட. நாங்களொரு மிக்சர் கடையைச் சின்னனாய் போட்டாலெ ன்ன..? இப்படி ஒரு நாள் இரவு காந்தராசனிடம் தாய் கேட்டாள். காந்தராசனை ‘காந்தன்' என்று தான் தாய் அழைப்பாள்.
பெரியளவிலானதொரு இரும்புத்தாச்சி, எண் ணெய், கடலை, மிக்சர் பொருட்கள், கடை போடு வதற்குப் பொருத்தமானதொரு இடம் இன்னும் சில g56TTUTL1556it......
அத்தனைக்கும் பணம் வேண்டும்.
இந்த நிலையில்த்தான் ராஜீவ் ஹோட்டல் முத லாளி காந்தராசனுக்குக் கைகொடுத்தார். மிக்சர் கடை திறக்க இடமும் கொடுத்து, உதவியும் செய்தார். மிக்சர் கடை திறக்கப்பட்டது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

யாழ்ப்பாண நகரத்திலிருந்து மானிப்பாய்க்குச் செல்லும் பிரதான வீதியில் மூன்றாவது கிலோமீற் றர் கல்லு நாட்டப்பட்டிருக்கும் இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில், இடது பக்கமாக ராஜீவ் ஹோட்டல் அமைந்திருந்தது. இக் ஹோட்டலிலி ருந்து ஏறத்தாழ பதினைந்து மீற்றர் தூரத்தில், கொக்கு வில் சந்தியிலிருந்து இக்கிராமத்தை ஊடறுத்து வரும் குறுக்கு வீதியொன்று மானிப்பாய் பிரதான வீதியுடன் இணைகிறது. சிறியதொரு முற் சந்தியிது. இந்த முற்சந்தியில், பிரதான வீதிக் கரை யோடு மேரி மாதாவின் சிலையொன்று நிறுவப்பட் டுள்ளது. ஏறத்தாழ நாலு மீற்றர் உயரமான 'கையில் யேசுபாலனை ஏந்திய நிலையிலுள்ள இந்த மேரிமாதா சிலை மிகவும் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்தது. சிலுவையைச் சுற்றி வட்டவடிவில் மாபிள் பதிக்கப் பட்ட அடித்தளம் அமைந்திருந்தது.
சமய வேறுபாடுகளின்றி அனைவருமே இந்த மேரி மாதா சிலைக்குப் பூ வைத்து வணங்கினர்.
இந்த மேரி மாதா சிலை இங்கு நிறுவப்பட்டதற் கான ஒரு வரலாறும், இக்கிராமத்தில் பேசப்படுகின்
D5).
இக் கிராமத்தைச் சேர்ந்த கிறீஸ்தவ மாண வனொருவனை இராணுவத்தினர் இதே இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும், அவனது புத்தகங்கள் இர த்த வெள்ளத்தில் தோய்ந்து நடுறோட்டில் கிடந்ததா கவும் அந்த மாணவனின் நினைவாகவே இந்தச் சிலை நிறுவப்பட்டதாகவும் பேசிக் கொள்கின்றனர்.
யேசுநாதர் ஒரு ஆத்மீகப் போதனையாளர். இவ ரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்ய வேண்டுமெனத் தீர்ப்பிட்டது பெத்தலகேம் நாட்டு அரசே தவிர, மதத் தலைவர்களல்ல!
இந்த மேரி மாதாவின் சிலையே இச் சந்திக்குக் குறியீடாகி, ‘மேரி மாதாச் சந்தி என்றே இச் சந்தி வழங்கி வருகின்றது.
சகலரையும் போல காந்தராசனும் காலையில் இந்தச் சிலைக்குப் பூவைத்து விட்டுத்தான் கடை க்கு வருவான்.
காகங்கள் தங்கள் தங்குமிடத்தை நோக்கிப் பறப் பது போல், மக்கள் தங்கள் வீடுகளை நோக்கிச் செல் கின்ற நேரம், பிற்பகல் ஐந்தரை மணிக்கு மேலிருக் கும். மிக்சர் கடையில் வியாபாரம் நடக்கின்ற நேரம்.
26

Page 29
காந்தராசன் கடைக்குள் நிற்கின்றான். கடை வாச லில் சிறிய ஸ்ரூலில் சிவநாதன் அமர்ந்திருக்கி றான்.
சிவநாதன் கனடாவைத் தன் செவிலித் தாய் நாடாகக் கொண்டவன். கனடா நாட்டில் பிரஜா உரிமை பெற்று, அந்த நாட்டிலேயே திருமணம் செய்து, பெண்சாதி பிள்ளைகளுடன் வாழ்பவன்.
அவனது தொப்புள் கொடி உறவான அவனது தாய் அன்னம்மா இலங்கையில் தான் இருந்தாள். சில தினங்களுக்கு முன் அன்னம்மா இறந்து விட் டாள். அவளது உடலுக்குத் தீமூட்ட இருந்த ஒரே வாரிசு இவன்தான். அதற்காகத்தான் அவன் வந்தி ருந்தான்.
நேற்றைய தினம் அன்னம்மாவின் அஸ்தியும் காக்கைதீவுக் கடலில் கரைக்கப்பட்டு எட்டுச் செலவும் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் சிவநாதன் கனடாவுக்குப் புறப்பட்டு விடுவான். பெரும்பாலும் இதுவே இவனது வருகையின் இறு திச் சந்தர்ப்பமாகவும் இருக்கலாம்.
சிவநாதன்- இவனது தோற்றம் சற்று வித்தியாச
மானது.
சராசரியை விடக் குறைந்த உயரம். மருந்தடித் துப் பழுத்த விலாட்டு மாம்பழத்தின் மஞ்சள் நிறம். உரல் போன்ற உருண்ட தசைப் பிடிப்பான உடல், சற்று விரிந்த நாரிப் பக்கம்.
மட்டத்தெகிழ் போன்ற தடித்ததொரு பவுண் சங்கிலி அவனது கழுத்து மடிப்புக்குள் புதைந்து கிடக்கும். கைச் சங்கிலி, மோதிரங்கள். முளங் கால் சில்லைத் தாண்டி நிற்கும் ஒரு களிசான். வட்டக் கழுத்து பெனியன். இவனைப் பார்ப்ப வர்களுக்கு, இவன் வெளிநாட்டுக்காரன் என்பது மிகச் சுலபமாகப் புரிந்து விடும்.
சிவநாதன் இந்த ஊரைச் சேர்ந்தவன் மட்டு மல்ல, காந்தராசனுக்கு ஏதோ ஒரு வகையில் உறவுக்காரனாகவும் இருந்தான். பத்து ஆண்டுக ளுக்கு முன்பு அப்போது இவனுக்கு இருபது வயது. எதிர்பாராத விதமாக ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுக் கனடாவுக்குச் சென்றுவிட்டான்.
கனடாவுக்குச் சென்ற அடுத்த வருடம் தகப்பன் இறந்து விட்டான். சிவநாதன் வரவில்லை.
27

பத்து வருடங்களின் பின்பு குடலெடுத்து, சருகா கிப் போன தாயின் பிணத்தைப் பார்க்க வந்திருக் கிறான்.
அன்னம்மாவின் மரண வீட்டில் காந்தராசனும் சிவநாத்னோடு கூட நின்று சகல உதவிகளையும் செய்து கொடுத்தானே தவிர, சிவநாதனின் நடவடி க்கைகளைக் காந்தராசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் சிவநாதனோடு பழகினான்.
காந்தராசனுக்கு வயது குறைவுதான். ஆனால், விரிந்த அனுபவமுள்ளவன். வறுமையால் கொடுர மாகத் துரத்தப்பட்டதால் ஏற்பட்ட பட்டறிவோ, என்னவோ!
எல்லோரோடும் சரளமாகப் பழகமாட்டான். ஆனால், தேவையானளவு, பழகிக் கொள்வான். தேவையற்ற விதமாக சொற்பிரயோகங்கள் செய்ய மாட்டான். ஆவலாதிப்படவும் மாட்டான். ஒட்டுத் தாழ் போல், சகலதையும் உள்வாங்கிக் கொண்டு மெளனமாக இருப்பான்.
“காந்தன் ஒரு மிக்சர் பைக்கற் தா.’ கேட்டபடி நூறு ரூபாத் தாளை நீட்டுகிறான், சிவநாதன்.
"சில்லறை இல்லை. பிறகெடுப்பம், வைச்சுக் கொள்." இப்படிக் கூறியபடி மிக்சர் பைக்கற்றைக் கொடுக்கிறான், காந்தராசன். காந்தராசனைக் காந் தன் என்று சுருக்கமாகவே ஊரில் அழைப்பார்கள்.
கனடாவுக்குப் போன சிவநாதன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு இடையிடையே தாய்க்குப் பணமனுப்பிக் கொண்டிருந்தான். இரண்டாவது வருஷம் சிவநாதனுக்குக் கனடாவில் திருமணம் முடிந்து விட்டதாக அன்னம்மா கூறி வேதனைப்பட் டாள். திருமணமான பின்பு தாய்க்குப் பணமனுப்பும் ஒழுங்கில் தாமதங்கள் ஏற்பட்டு, அன்னம்மா ரெலி போனில் கத்திக் குளறினால், ஏதாவது அனுப்பும் நிலை ஏற்பட்டு, நாளடைவில் கத்திக் குளறுவதும் பயனற்றுப் போய்விட்டது. கடந்த ஐந்து வருடங் 356TTS அன்னம்மாவுக்கு சிவநாதன் எதுவுமே அனுப்பவில்லை...!
அன்னம்மா பாவம். ! ஒரு வேளைச் சாப் பாட்டிற்கு வீடு வீடாக அலைந்தாள்.
கலியான வீடு நடந்தால், அந்த வீட்டு வாசலில்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 30
நிற்பாள். பிறந்த தினம் நடந்தால் அந்த வீட்டு வாச லில் நிற்பாள். எட்டுச் சிலவு நடந்தால் அந்த வீட்டு வாசலில் நிற்பாள். கோயில்களில் அவியல் என்றால் அங்கே நிற்பாள்.
மேரி மாதா சிலைக்குப் பின்னாலுள்ள சீமெந்துத் திண்ணையில் அன்னம்மா சுருண்டு போய்ப் படுத்தி ருந்ததைக் காந்தராசன் எத்தனையோ நாள் கண்டு வேதனைப்பட்டிருக்கிறான். சிறியளவில் உதவிக, ளும் செய்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அன்னம்மாவைக் கூட்டிக் கொண்டு வந்து, தனது வீட்டில் சாப்பாடு கொடுத்திருக்கிறான்.
மிக்சர் கடையில் கிடைக்கின்ற பல்லி முட்டை வருமானத்தில் கிள்ளித் தெளிக்கத்தான் முடியுமே தவிர, அள்ளிக் கொடுக்க முடியுமா?
“.. அம்மா. சிவநாதன் எப்படியும் நடந்து கொள்ளட்டும். அதைப் பற்றியெல்லாம் நாங்கள் அக் கறைப்படத் தேவையில்லை. அன்னம்மா எங்க ளுக்குச் சொந்தக்காரி. எந்த ஆதரவும் இல்லாமல் அலைஞ்சு திரியிறா. நாங்கள் எங்களுக்கெண்டு சமைக்கிறதிலை ஒரு நேரச் சாப்பாடு அவவுக்கும் குடுத்தாலென்ன..? ஒரு நாள் இரவு காந்தராசன் சாப்பிடும் போது தாயிடம் கேட்டான்.
காந்தராசனின் தாயின் மனம் பூரித்து. நெஞ்சு விம்மித் தணிந்தது. தனது மகனின் தாராளப் பண்பை நினைத்துப் பெருமைப்பட்டாள். காந்தராச னுக்கு ஏற்பட்ட உணர்வு தாய்க்கும் ஏற்பட்டிருந் தது. ஆனால், அது பற்றி மகனிடம் இதுவரை அவள் பேசிக் கொள்ளவில்லை.
தாய் முழு மனத்தோடு ஏற்றுக் கொண்டாள்.
அன்று தொடக்கம் அன்னம்மா மத்தியானச் சாப்பாட்டைக் காந்தராசனின் வீட்டில் சாப்பிட்டாள். மூன்று வருடங்களுக்கு மேலாக அன்னம்மா காந்தராசன் வீட்டில் சாப்பிட்டு வந்தாள்.
ஒரு மணியளவில் காந்தராசன் கடை ந்க சாப் பிட வீட்டுக்கு வருவான். அப்போதுதான் அன்னம்மா வும் வருவாள். மூவரும் சேர்ந்திருந்தே சாப்பிடுவார்கள்.
அன்னம்மாவுக்கு இப்போது ஐம்பத்தைந்து வயது; முதிர்வை அண்மித்த வயது. வறுமை வெக்கையில் வரண்டு செத்தலாகி. இப்போது அன்னம்மாக் கிழவி' ஆகிவிட்டாள்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

ஆனால், காந்தராசனும் தாயும் அன்னம்மாவை 'அன்னம்மாக்கா என்றுதான் அழைத்தனர்.
"அன்னம்மாக்கா. நீங்கள் குடியிருக்கிற காணி எத்தினை பரப்பு வரும்.?’ ஒரு நாள் கடை க்கு வந்த அன்னம்மாவிடம் காந்தராசன் கேட்டான்.
‘ஏழு பரப்பு. எங்கடை அப்பப்பா வாங்கின காணி. ஏழு பவுணுக்குத்தான் அப்பப்பா வாங்கி னவரெண்டு எங்கடை அப்பா சொல்லுறவர்." அன் னம்மா பெருமையோடு கூறினாள்.
"உங்கடை காணிக்கு முன்னாலையுள்ள பனங் காணி பரப்பு நாலு லட்சமாய் விலைப்பட்டிருக்கு." காந்தராசன் தான் அவதானித்ததை அன்னம்மாவுக் குக் கூறினான்.
"உந்தக் காணியை ஒவ்வொரு பரப்பாய் வித்துப் போட்டு வசதியாய் இருக்கச் சொல்லி பலபேர் எனக்குச் சொல்லிப் போட்டினம். அது என்ரை முது சம். அந்த முதுசத்தை வித்துச் சாப்பிட என் னாலை முடியாமல் இருக்கு. ’ அன்னம்மா மிகவும் வேதனையோடு கூறினாள்.
அதற்கு மேலும் அன்னம்மாவிடம் அந்தக் காணி யைப் பற்றிக் கதைப்பதைக் காந்தராசன் நிறுத்திக் கொண்டான்.
இப்போது.
அதே ஏழு பரப்புக் காணியையும் அந்தச் சிறிய வீட்டையும் விற்பதற்காக சிவநாதன் விளம்பரம் கொடுத்துள்ளான். பலர் வந்து பார்த்துவிட்டுப் போயு ள்ளனர். '
ஒரு பரப்பு ஐந்து இலட்சப் படி ஏழு பரப்பும், முப் பத்தைந்து இலட்சம். வீடும் கிணறும் ஒரு இலட் சம். முப்பத்தாறு லட்சம் பெறுமதி.
"காணியும் வீடும் எப்ப விலைப்படுகிதோ அடுத்த நாளே நான் போகிடுவன்.” கடைக்கு முன்னால் ஸ்ரூலில் இருந்து மிக்சரைக் கொறித்துக் கொண்டி ருந்த சிவநாதன், காந்தராசனைப் பார்த்துக் கூறிகிறான்.
காந்தராசன் சில விநாடிகள் கண் வெட்டாமல் சிவ நாதனைப் பார்க்கின்றான். இரைப்பையில் பசி வலி ப்பு எடுத்தபோதும், தான் குடியிருந்த அந்த ஏழு பரப் பையும் "அது என்ரை முதுசம்” என்று கூறிய அன்ன த்தின் குரல் அவனது காதுகளில் ஒலிக்கிறது.!
28

Page 31
காந்தராசன் எதுவுமே பேசாமல் தனது வேலை யில் ஈடுபட்டிருக்கிறான். அவனது இதயம் அவனுக் குள் அசை போட்டுக் கொண்டிருக்கின்றது.
மனித இதயங்கள் மட்டும் பார்வைப் பொருளாக இருந்திருந்தால்..? மனிதனோடு மனிதன் மோதி. இப்போது இந்த உலகம் அழிந்து போயிருக்கும்!
மனித இதயங்களை மறை பொருளாக்கியது படைப்பின் தீர்க்க தரிசனச் சூட்சுமம்
நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. சிவநா தன் இன்னமும் அதே ஸ்ரூலில்த்தான் இருக்கி றான். இப்போது அவனிடம் ராஜிவ் ஹோட்டலில், வாங்கிய கூல் செய்யப்பட்டதொரு சிறிய "நெக்ரோ போத்தலும் இருக்கிறது!
அன்னம்மா, இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்பு, ஒருநாள் காந்தராசனின் கடைக்கு வந்தாள். கண்கள் குளி விழுந்து. பஞ்சடைந்து. ஒரு தடிக் குச் சீலை சுத்திவிட்டது போல. கழுத்துதெலும் புக் குளிகள் துடிக்க. சருகாகி அவள் நின்றாள்.
". . . . . . . தம்பி காந்தன். என்னாலை நடக்க முடியாமல் இருக்கு. கிறுதியாய்க் கிடக்கு. நீ சாப்பிட்டிட்டு வரயுக்கை என்ரை சாப்பாட்டையும் கொண்டுவாய்ா!. நான் இஞ்சை வந்து சாப்பிடுகி றன்’ அன்னம்மா இப்படிக் கூறினாள்.
"..எங்கை இருந்து சாப்பிடப் போறாய்...? கோட்டலுக்கை இருந்து சாப்பிட அவங்கள் சம்மதி க்க மாட்டாங்கள்." காந்தராசன் தற்போது உள்ள நிலவரத்தை விளக்கினான்.
"..... அதை நான் எப்படியோ சமாளிப்பன்." அன்னம்மா சர்வசாதாரணமாகக் கூறினாள்.
இப்போது அன்னம்மாவின் மகனான சிவநாதன் அமர்ந்திருக்கிறானே. அதே இடத்தில்தான் அன்று அன்னம்மா நின்று இக்கதையைக் கூறினாள்.
அன்று தொடக்கம் காந்தராசன், தான் சாப்பிட்டு விட்டு வரும் போது, அன்னம்மாவின் சாப்பாட்டை யும் கொண்டு வருவான். அன்னம்மா நடுங்கி நடுங்கி வருவாள். காந்தராசனிடம் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு போய் மேரி மாதா சிலைக்குப் பின்னாலு ள்ள சீமந்துத் திண்ணையில் வைத்துச் சாப்பிடு வாள். பல சந்தர்ப்பங்களில் சாப்பிட்டு விட்டு பொழுது
29

சாயும் வரை அதே இடத்தில் படுத்திருப்பாள்! கடற்கரைத் தாளங்காய் வாழ்க்கை.!
சில தினங்களுக்கு முன்பு. மணி வண்டிக் காரின் இந்த வீதியால் வந்த போது, காந்தராசன் பதினைந்து ரூபாவுக்கு ஒரு பிளாஸ்ரிக் சாப்பாட்டுக் கோப்பையை வாங்கிக் கொண்டான். அத்தோடு ராஜீவ் ஹோட்டலில் வெறுமையானதொரு நெக்ரோ போத்தலையும் எடுத்துக் கழுவி நீர் நிரப்பி வைத்துக் கொண்டான்.
அதன் பின்பு அன்னம்மாவின் சாப்பாட்டை அந் தப் பிளாஸ்ரிக் கோப்பையில் வைத்துத் தண்ணிர்ப் போத்தலையும் கொடுப்பான். அப்படிக் காந்தராசன் சாப்பாட்டைக் கொடுக்கின்ற போது, அன்னம்மா தனது பஞ்சடைந்த கண்களால் காந்தரசானை ஒரு பார்வை பார்ப்பாள். அந்தப் பார்வையைக் காந்தராசன் உணர்ந்து கொள்வானே தவிர, அதை விளக்க அவனால் முடிவதில்லை!
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அன்னம்மா வருவதும், காந்தராசன் பிளாஸ்ரிக் கோப்பையில் வைத்து சாப்பாட்டையும் தண்ணிர் போத்தலையும் கொடுப்பதும். அன்னம்மா அந்த மேரி சிலையின் பின்னாலிருந்து சாப்பிடுவதும் வழமையாகிவிட்டது.
அன்னம்மா இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் னர் தொடக்கம் சாப்பிட வரவில்லை. போய் விசாரி ப்பதற்கும் காந்தராசனுக்கும் நேரம் வரவில்லை.
மூன்றாம் நாள் காலையில் அன்னம்மா இறந்த செய்தி வந்தது. காந்தராசன் தான் சிவநாதனுக்கு அறிவித்தான்.
நான்காம் நாள் சிவநாதன் வந்தான். அதுவரை அன்னம்மாவின் பிணத்தை காந்தராசனும், ஊரவர் களும் பாதுகாத்தனர். சிவநாதன் வந்த பின்னர், அவனது எண்ணப்படி மரணவீடு மிகவும் சிறப்பாக நடந்து. எட்டுச் சிலவும் முடிந்துவிட்டது.
காசைக் காசென்று பாராமல் அள்ளி விசுக்கி. அன்னம்மாவின் செத்தவீட்டை சிவநாதன் நடத்தி முடித்து விட்டான். கிராமமே மூக்கில் கைவைத்து ஆச்சரியப்பட்டது.
கடந்த சில நாட்களாக சிவநாதனுக்கும் இதே கதைதான். சிவநாதன் மிகவும் வாயாடித்தனமான
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 32
வன். யாரோடும் கூச்சமில்லாமல் பழகுவான். இப் போது, யாரைச் சந்தித்தாலும் அன்னம்மாவின் செத்த வீட்டுக் கதையைத்தான் கதைப்பான்.
காந்தராசன் தனது வாய் சவடாலுக்கு மசிய மாட்டான் என்பது சிவநாதனுக்குத் தெரியும். அத னால் காந்தராசனோடு அளவாகவே அவன் பழகிக் கொள்வான். காந்தராசனும் சிவநாதனோடு நெருக்க மாகப் போவதில்லை.
சிவநாதன் இன்னும் கடைக்கு முன்னால் தனி த்தே இருக்கிறான். யாராவது ஒருவரைப் பிடித்து விட்டால், நேரத்தைப் போக்காட்டலாம் என்ற எண்ணத்தில் வந்த நேரம் தொடக்கம் அவனது பார்வை அலைந்து கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து மானிப்பாய் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர், மேரிமாதா சிலையடியில் மோட்டார் சைக் கிளை நிறுத்தி, திரும்பி வருகின்றனர். சிவநாதனை நோக்கித் தான் அவர்கள் வருகின்றனர்!
"நீங்கள் சிவநாதன் தானே..?" மோட்டார் சைக் கிளை ஒட்டி வந்தவன், மோட்டார் சைக்கிளால் இறங்கியபடி கேட்கின்றான்.
"நான் சிவநாதன் தான். #....... ஜொனத்தன் தானே.” சிவநாதன் வந்தவனை இனங் கண்டு கொள்கிறான். ஜொனத்தனும் இதே ஊரைச் சேர்ந்த வன். இப்போது கச்சேரியில் வேலை செய்கிறான்.
இருவருக்கும் பெரும் மகிழ்ச்சி.
இருவரும் சிறுவயதில் குண்டடித்த கதை, கள்ள இளநீர் பிடுங்கிக் குடித்த கதை. காய்ந்த பனம் வேரை வெட்டி பீடி குடித்த கதை. இப்படிப் பல கதைகளும் கதைத்து முடித்து. அன்னம்மாவின் செத்த வீட்டுக் கதை ஆரம்பமாகுகின்றது.
"உன்ரை அம்மா செத்தது எனக்குத் தெரியாது மச்சான். தெரிஞ்சால் நிட்சயமாய் வந்திருப்பன். சகல உதவியளையும் செய்திருப்பன்.” ஜொனத் தன் கூறுகிறான். தான் இப்போது மானிப்பாயில் குடியிருப்பது பற்றி ஏற்கனவே அவன் கூறிவிட்டான்.
*. பேப்பரிலை மட்டும் போட்டனான். அம்மா வின்ரை போட்டோ கிடைக்கயில்லை." சிவநாதன் கூறுகிறான்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

காந்தராசன் இவர்களின் பேச்சுக்களை அவதா னித்தபடி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறான்.
"செத்த வீடு சிறப்பாய் நடந்திதா..?’ சம்பிரதாய த்துக்காக ஜொனத்த்ன் கேட்கிறான்.
'.இந்தக் கிராமம் இப்பிடியொரு செத்தவீட் டைக் கண்டிருக்காது." சிவநாதன் கர்வத்தோடு கூறுகிறான்.
சிவநாதன் இப்படிக் கூறியதும், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த காந்தராசன் தனது பார்வையைத் திரும்பி சிவநாதனைப் பார்க்கிறான்.
'. வீட்டிலை இருந்து றோட்டு மட்டும் தகரப் பந்தல். கதிரை. சிவநாதன் மிக்சரைக் கொறித் தபடி, சர்வசாதாரணமாகக் கூறுகிறான்.
காந்தராசனின் மனம் கொதிக்க ஆரம்பிக்கின்றது.
'வீடியோ.. பான்ட் வாத்தியம். வைற் ஹவுஸ் கார்."
காந்தராசனின் மனம் கொதித்து ஆவி பறக்க ஆரம்பிக்கின்றது.
'சுடலை மட்டும் நிலபாவாடை விரிப்பு. கோர்வை கோர்வையாய் வெடி. சுடலைக்கு வந்த எல்லாருக்கும் சோடா. சிகரட். Gi(bl-G....... yy ஒரு முறடு நெக்ரோ சோடாவை வாய்க்குள் விட்டபடி சிவநாதன் கூறுகிறான்.
காந்தராசனின் மனம் கொதித்து, ஆவி கிளம்பி, நீர்க் குமிழிகளின் சளசளப்பு.
சதை வற்றி, எலும்புந் தோலுமான தனது கை களில் தன்னிடம் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு நடுங்கி நடுங்கி நடந்து போய். மேரி மாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து, மூக்கடி வியர்க்கச் சாப்பிட்ட அன்னம்மாவின் அனாதைக் கோலம் காந்தராசன் மனத்திரையில் நிழலாடியது.
“பிரேதப் பெட்டியுக்கை உச்சமான பெட்டிதான் எடுத்தன். பெட்டி மட்டும் அறுபதுணாயிரம் ரூபா..." சிவநாதன் அறுபதுணாயிரத்தை அறுபது சதம் போன்ற பாவனையில் மிகவும் "சிம்பிளாய்" கூறுகிறான்.
காந்தராசனின் மனம் கொதித்து, ஆவி பறந்து, நீர் குமிழிகள் சளசளத்து, அவனிடம் இயல்பாக உள்ள அடக்கப் பண்பு அடங்கிப் போகும் எல்லை.
30

Page 33
"நீ சொல்றதைப் பாத்தா. எப்பிடியும் நாலை ஞ்சைத் தாண்டியிருக்கும்." நாலைந்து இலட்ச த்தைச் சுருக்கி, “நாலைஞ்சு' எனக் கூறுகிறான் ஜொனத்தன்.
"பெத்த தாய்க்குச் சிலவழிக்கையுக்கை கணக் குப் பாத்துச் சிலவழிக்க முடியுமா, என்ன?. எவளவு முடிஞ்சிதெண்டு எனக்குத் தெரியாது." சிவநாதன் கூறுகிறான்.
காந்தராசன் தன்னை மறக்கிறான்.
ஒரு விநாடிதான்.
அன்னம்மாவின் மரணத்திற்குப் பிறகு பாவனை யற்று கடை மூலை சலாகை இடுக்கில் செருகி வைத்திருந்த அந்தப் பிளாஸ்ரிக் சாப்பாட்டுக் கோப் பையை எடுத்து றோட்டில் வீசி எறிகின்றான், காந்த ராசன்..!
UIDLI666b
6|}ത0I ഖത്
எத்தனை விதம்
எத்தனை படைப்பு
எத்தனை உருவம்
இந்த உலகம் சாம்பலுக்காகப் படைக்கப்பட்டது அனைத்தும் இங்கே சாம்பலுக்கான சமர்ப்பணம்
எரிவனம்
6606)6OUIETé585 LII (b
31
 

நடுறோட்டில் விழுந்த அந்தப் பிளாஸ்ரிக் சாப்பாட் டுக் கோப்பை. தெறித்து. அடிப்பக்கம் வெடித்து பிளந்து. மீண்டும் றோட்டில் விழுந்து கிடக்கின்
‘என்னடா காந்தன். சாப்பாட்டுக் கோப் பையை இப்பிடி எறியிறாய்...? அதிர்ந்து போன சிவநாதன் கேட்கிறான்.
“ஒரு அனாதை சோறு சாப்பிட்ட கோப்பை, அந்த அனாதை செத்துப் போச்சு. இனிமேல் அந்தக் கோப்பை தேவைப்படாது." காந்தராசன் தலை யைக் குனிந்தபடி கூறுகிறான்.
சிவநாதன் காந்தராசனின் பேச்சை விளங்கிக் கொண்டானோ. என்னவோ. QLD6T60TLDITE நிற்கிறான்.
தில்லைநாதன் பவித்ரன்
கனவுகளின் தேசம் கசக்கிப் பிழியப்பட்டு சதைகளின் சாத்திரக்
E5ELGOIDssilso
ஒருதுளி நீரில் ஒரு பிடிச் சாம்பல் முற்றுப் பெற்றுள்ளது. இந்த உலகை
9ILDII8585 (86.16d) (bib என்ற இலசிய
சொப்பனத்தில்,
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 34
*溪)~,
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 

----۔ ۰سم۔۔۔۔۔عیس۔ --سسس۔۔۔۔۔۔۔۔.'
vo- 06 Inka. | 4892044
32

Page 35
பின்றி, அர தெளிவு. முன்னெ வரப்பட்டமையினால் இனிே கிழக்கினைத் தமிழ், சிங்கள, முஸ்லி மாற்றி எடுத்துவிட்ட கடந்த கால ஐம்பது வி
குடியேற்றங்களால் தமிழ்ப் பெரும்பான்மை என்னு றனர். இந்த மண்ணில் நிலவும் அடிப்படைப் பிரச்சிை கோரிக்கைகளையும் போராட்ட மார்க்கங்களையும் வ படுத்த எடுத்த முயற்சிகளே கடந்த காலத் தமிழ்த் தேசி றைய அவல நிலை; இன்றும் நாடுகடந்த ஈழம் என்ற ெ இழப்பது தவிர்க்கவியலாததே எனும் நிலையே ஏற்படுத் காட்டிக் கொண்டு அவசரகால நிலையை நீடித்தபடி தேசியர்கள் இழைக்கும் தவறுகள் இவ்வகையில் பாத டிருப்பதில் பயனில்லை. இந்த மண்ணில் வாழும் உ6 னைக்கான தீர்வை வென்றெடுக்கும் மார்க்கத்தைக் கe றிந்து செயற்பாட்டுக் களம் விரிவாக்கப்படும் போது மட் டித்து மக்களைச் சாத்தியப்படும் உண்மையான விடுதை
அத்தகையதான அனைத்து வழிமுறைகளையும் அதற்கு உதவும் வகையில் எமது தேசிய இனப்பிர உதவும் ஒரு இடம் குறித்த அறிமுகத்தை முன்ன மார்க்சியர்கள் அக்கறையற்றவர்களாயும், தெளிவான பரவலாக உண்டு. மக்கள் விடுதலைக்கும் அடிப்பை வழிகாட்ட முடியும் என்ற உண்மையை மறுக்கும் ெ கொள்ள வேண்டியதில்லை. மார்க்சிய வழியில் தேசி குறித்து ஆதங்கம் உடையவர்களாய் உள்ளனர். அந் தொடக்கத்தில் (வெளியீடு டிசெம்பர் 2009) வந்துள்ள 6 பற்றிய மார்க்சியக் கோட்பாடு சோவியத் தகர்வின் முன் அவசியமானது என்ற வகையில் மு. வசந்தகுமாரினா வெளியிடப்பட்டுள்ளது. தேசியத்தின் தோற்றம் முதல் எ செல்நெறிகளை உள்வாங்கி மார்க்சிய நோக்கில் கட்ட
33
 
 
 

- فاكل ஆ&ரி کرک
«تأی\
இன்று இலங்கை எதிர் நோக்கும் அடிப்படைப் பிரச்சினை, தேசிய
இனங்களின் சுயநிர்ணயம் எவ்வாறு வென்றெடுக்கப் லாம் என்பது தொடர்பிலானது. அதற்கான கவன ஈர்ப் "சு திசை திருப்பும் முயற்சிகளில் இறங்கியுள்ளமை டுக்கப்பட்ட பிரிவினை யுத்தம் முடிவுக்குக் கொண்டு மல் இனப்பிரச்சினை எழ இடமில்லை எனக் கருதுவர். பிம் மக்கள் சம அளவில் வாழும் விகிதாசாரத்துக்கு பருடங்களின் முயற்சி போல, வடக்கிலும் திட்டமிட்ட ம் அடையாளம் அற்றதாக்க முடியும் என்று நம்புகின் னகள் பற்றிய தெளிவின்றி, அதற்கான தீர்வுக்கு ஏற்ற குக்காமல், அவ்வப்போதைய தமது இருப்பை உறுதிப் சியத் தலைமைகளுக்குரியன என்ற காரணத்தால் இன் வற்றுக் கனவு மேலோங்கி வரும் சூழலில் வடக்கையும் தப்படுகின்றது. அரசும் நாடு கடந்த ஈழப் பூச்சாண்டியைக் தனது திட்டங்களை ஈடேற்றும் முனைப்பில், தமிழ்த் கங்களை வளர்க்கும் என ஆரூடம் சொல்லிக் கொண் ழைக்கும் மக்களின் விடுதலை நோக்கில் இனப் பிரச்சி ண்டடைவது இடதுசாரிகளது கடமை. அதனைக் கண்ட டுமே தமிழ்த் தேசியர்களின் கபடத்தனங்களை முறிய லை மார்க்கத்தில் அணிதிரட்டி முன்னேற இயலுமாகும்.
தேடும் முயற்சியிலானது அல்ல, இந்தக் கட்டுரை. ச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் அலச வக்க இங்கு முயற்சிக்க முடியும். தேசியம் பற்றிய புரிதலற்றவர்களாயும் உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுப் டப் பிரச்சினைகளின் தீர்வுக்கும் மார்க்சியம் மட்டுமே பாருட்டாக இதனைக் கூறுகிறவர்கள் பற்றி அலட்டிக் |யப் பிரச்சினைத் தீர்வினை விரும்புகிறவர்களும் இது தக் குறையினைத் தீர்க்கும் வகையில் இந்த ஆண்டின் ஒரு நூல் ஹொரேஸ் பி. டேவிஸ் எழுதியுள்ள தேசியம் ானர் 1978 இல் எழுதப்பட்ட இந்த நூல் இன்று இன்னும் ல் மொழிபெயர்க்கப்பட்டு விடியல் பதிப்பகம் வாயிலாக ழுபதுகள் வரையில் உலக அளவிலான அதன் மாற்றச் டமைத்துத் தரும் நூல் 367 பக்கங்களில் அடங்குகிறது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 36
இதுவரை
நூலினுள் நுழைவதற்கு முன்னதாக, எத்தகைய சக்திகள் இது தொடர்பில் ஈடுபாடு கொண்டுள்ளன என்பது குறித்து அலசுவது அவசியம். ஈழத் தமிழ்ப் பிரச்சினையும், அதன் மீதான அக்கறையுடைய மார் க்சிய நோக்குகள் குறித்தும் ஒரு பார்வை பெறப் படுமாயின் அது இந்த நூலினை உள்வாங்குவதற்கு உதவிகரமானதாய் அமையும். அண்மித்த உலகப் பிரச்சினைகளில் ஒன்றாகக் கவன ஈர்ப்பைப் பெற்ற ஈழயுத்தம் பயங்கரவாத ஒழிப்புக்கான ஒன்றாக அக் கறை கொள்ளப்பட்ட அளவில், தேசிய இனப் பிரச் சினையின் இருப்பாகப் பார்க்கப்படவில்லை. அத னைத் தலைமையேற்று முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அரசியல் செயற்பாடுகளில் பாரிய பலவீனங் களுடன், ஆயுதத்தின் மீதே முழு நம்பிக்கை கொண் டிருந்த நிலை காரணமாக, இந்த அவலம். முன்ன தாக தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் மக்களது அடிப்ப டைப் பிரச்சினைகளை இனங் கண்டு அதன் தீர்வுக் கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கியப்பட வேண்டிய சக்திகளை இந்த மண்ணில் தேடி அடை வதற்கு முயன்றவர்களில்லை; பழம் பழுத்தால் வெளவால் வரும் எனக் கூறி, அந்நிய சக்திகளின் ஊடுருவலுக்கான வாய்ப்பான களமாகவே தமிழீழக் கோரிக்கையைக் கட்டமைத்தனர். மாற்றுக் கருத்துக் களை எழவொட்டாமல் தடுத்து, ஆரோக்கியமான விவாதங்களை முன் வைக்கக் கூடியவர்களைத் துரோகிப் பட்டம் கட்டித் தனிமைப்படுத்தும் முயற் சியே காணப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி யின் தலைவர், துப்பாக்கி ஏந்தாத பிரபாகரனாயும், விடுதலைப் புலிகளின் தலைவர் துப்பாக்கி ஏந்திய அமிர்தலிங்கமாகவும் செயற்பட்டனர்.
அதன் பெறுபேறு இத்தகைய கழித்தல் பெறு மானத்தில் முடிவெய்துவதில் ஆச்சரியப்பட ஏதுமி ல்லை. பிந்திய வழி அடைக்கப்பட்டதால் முந்திய வழியினால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கண்ட டையப்பட இடமுண்டு எனக் கருதுவது இந்த அடிப் படை அம்சம் கவனிக்கப்படாதமையினால் ஆகும். பாராளுமன்றம் மற்றும் ஆயுதப் போராட்ட வழிகள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விருப்பம் அந்நிய சக்திகள் மீது நம்பிக்கை கொள்வதோடு தொடர்பானது. மிகப் பெரும் ஆயுதபாணியாகத் தரை, கடல், ஆகாய வழித் தாக்குதல்களில் உல
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

கின் எந்தவொரு விடுதலைப் போராட்ட அமைப்பு களுக்கும் குறைவில்லாத வலுவோடு போராடிய விடுதலைப்புலிகள் இறுதியில் காவாந்து பண்ண அந்நியர் வருவர் என மயங்கி நின்றது என்பது கவ னிக்கப்பட வேண்டிய ஒன்று. என்னதான் சொந்தப் பலத்தில் பூதாகரமாக வளர்ந்தாலும், அதன் அடிப் படை அந்நிய உறவு சார்ந்தது. இந்த மண்ணுக்குரிய தமிழர் பிரச்சினை முன்னெடுக்கப்பட்டிருப்பின் சிங் கள-முஸ்லிம் மக்களோடு ஐக்கியப்பட ஏற்ற வாய் ப்புக்களைத் தேடும் போராட்டங்கள் கண்டறியப் பட்டு செயல் வடிவம் பெற்று, தமிழர் தாயகம் தனக் கான சுயநிர்ணயத்தை வென்றெடுத்திருக்க முடியும். ஆக, மக்கள் விடுதலையின் அடிப்படைகள் மீது அக்கறை கொள்ளாது, ஏகாதிபத்திய சக்தியின் பகுதி யாக அமைந்த தமிழீழப் போராட்டம் தேசிய இனப் பிரச்சினை தொடர்பில் கனதியான படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது. அதனைக் கற்றுக் கொள்ள முனையாமல் இனியும் அதே இருள் சூழ்ந்த அகங் காரங்களில் மூழ்குவது மேலும் மோசமான கழித்தல் பெறுமானப் பள்ளத்தாக்குகளுக்கு இட்டுச் செல்லும், ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது சார்ந்து முன்னெடுக்கப்பட்ட யுத்தம் போன்றே நாடு கடந்த ஈழமும் அதே உயர் சாதிய வர்க்கத் திமிரோடு ஆயுதமேந்தாத பிரபாகரன் வழியை மேற்கொள்ள முனைவது பாராமுகமாக விட்டொதுக்கத் தக்க ஒன்றல்ல. அதன் மீதான வலுவான விமரிசனங்கள் அவசியம். இனப் பிரச்சி னைத் தீர்வுக்கான முன் முயற்சிகளை முன்னெடுத் தவாறே அத்தகைய விமரிசன முயற்சிகள் தொட ரப்பட இயலும்.
யுத்தத்தை முன்னெடுத்த தலைமையின் மீது விமரிசனக் கண்ணோட்டமற்று அதீத நம்பிக்கை கொண்டிருந்து, அது நம்ப முடியா வகையில் தகர் ந்துவிட்ட அதிர்விலிருந்து இன்னமும் பெரும்பா லான மக்கள் மீளவில்லை. களத்தில் இடர்ப்பட்டு இன்னல்களுக்கு உள்ளாகி, பல்வேறு இழப்புகளு டன் உறவுகளைக் கண் முன்னே பறிகொடுத்த உள்தாக்கங்களிலிருந்து மீள முடியாது திகைப்பிலி ருக்கும் மக்கள் பல்லாயிரம். அவர்களது மெளனமே விமரிசனம் தான். மக்களுக்கான இந்த அமுக்கப் பட்ட உளப்பாங்கு செயலற்ற நிலையை உருவாக் கிய சூழலில் சமூக அக்கறை மிக்க சக்திகளாலும் நம்பிக்கையுடனான மார்க்கத்தை முன் வைக்க முடியாத கையறு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
34

Page 37
இத்தகைய செயலற்ற நிலையில் சில மார்க்சிய நிலைப்பாட்டினர் இன்னமும் அந்த ஆயுத மோகம் கலையாமல் விட்டுக் கொடுக்காத போராட்டம் பற்றிக் கதை பேசுவர். இன்னும் சிலர் ஈழப் பிரிவினை வேறுவடிவில் தொடர முடியும் என்பர். வெளிப்படை யாக இவை பேசப்பட முடியாத இறுக்கம் மக்களி டம் ஏற்பட்டிருப்பதனால், இவற்றை மனத்தில் இருத்தியபடி பிராக்காட்டும் தேவையற்ற வேலை கள் முன்னெடுக்கப்படும். மக்களது உறை நிலை யைத் தகர்த்து, ஏற்ற தீர்வுகளுக்குரிய சாத்தியப்ப டும் வழிமுறைகளைத் தேடும் அக்கறை இன்னமும் மேற் கிளம்புவதாக இல்லை.
இதனை வாய்ப்பாக்கிக் கொண்டு இலங்கைஇந்திய ஆளும் தரப்புகள் சுய நிர்ணயக் கோரிக்கை க்கான அடிப்படைகளைத் தகர்க்கும் செயல் ஒழுங்குகளை நிறைவேற்றியுள்ளன. தமிழகத்தில் இயங்கும் தமிழீழ ஆதரவாளர்களில் ஒரு பகுதியி னர் "மீட்பர் மீண்டும் வருவார்’ என முழங்கியபடி புலம்பெயர்ந்தோர் வரும்படியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பகுதியினர் எப்பாடு பட்டும் ஈழம் அமைப்போம் எனும் பக்கப்பாட்டை விடாமல் எழுப்பி உள்ளூர் அரசியலில் அது ஆதாய மாக என்ன பண்ணலாம் என்று அங்கலாய்த்தபடி. இவற்றுக்கும் அப்பால் விலை மதிப்பற்ற போராட்ட அநுபவம் ஒன்று அவமாய்க் கழிந்து போகாமல் உரிய வரலாற்றுப் படிப்பினையாக்கப்பட்டு எதிர்கால விடுதலைக்கான மார்க்கம் கற்றுக் கொள்ள அவசி யமான ஆய்வுகளில் இறங்கியுள்ள ஒரு சக்தியும் தமிழகத்தில் கணிசமாக உள்ளது. அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தமிழீழம் அமைவதை விட, மாற்று வழி எது எனத் தேடும் முயற்சியில் முனைப் பாவதன் விளைவாக தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு குறித்த தெளிவினைப் பெற முயல்வர்.
இவ்வாறு மார்க்சியத் தேடல் பற்றிக் கூறும் போது, அதன் வழி நாடுவோர் அனைவரும் ஒரே வகைப்பட்டவர் என்பதற்கு இல்லை என்பது தெளிவு. மார்க்சியம் எதனை அடிப்படையாகக் கொண்டது எனும் நிலைப்பாடு ஒரு புறமாக, எத்தகைய தேவை ப்பாட்டிலிருந்து மார்க்சியத்தை எவ்வகையில் அணுகி, என்ன வடிவில் புரிந்து கொள்கிறார்கள் என்பது சார்ந்து பல்வேறு வடிவ மார்க்சியங்கள் நிலவு கின்றன. இவற்றில் எது மார்க்சியம் எனக் குழம்பி ஆளைவிட்டால் போதும் என ஒதுங்குகிறவர்களும் உண்டு. உண்மையில் நிலவுகின்ற மார்க்சியங்கள்
3
5

என்பவை பலரும்- பல நாடுகளும் தத்தம் வழிகளில் புரிந்து கொண்ட செயற்படுத்திய வடிவங்களே: அதற்காக அடிமுடி காணவொட்டாத சூட்சுமமானது அல்ல, மார்க்சியம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதலாளித்துவம் வெற்றி பெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளிவர்க்கம் மிக மோசமாக சுரண்டப்படலா யிற்று. அதற்கு எதிரான போராட்டங்களிலும் பாட்டாளிகள் ஈடுபட்டனர். அதேவேளை தனது மூல தனத் திரட்சிக்காகத் தனது நாட்டில் தொழிற் சாலைகளைப் பெருக்குவது மட்டுமன்றி உலகம் முழுவதும் பரந்து சென்று குடியேற்ற நாடுகளை ஆட்படுத்தும் வகையில் விஞ்ஞான தொழில்நுட்ப விருத்தியை ஊக்கப்படுத்தும் தேவை முதலாளித்து வத்துக்கு. இதன் பேறாக விஞ்ஞான நோக்கும் தேட லும் புதிய புதிய அறிவுத் துறைகளை வளர்த்தெடுத் தன. அதன் ஒரு பகுதியாக அரசியல் சமூக விஞ் ஞான விருத்தியும், தத்துவத் தேடல்களும் புதிய ஒளி பெறலாயின. விஞ்ஞான மயப்பட்ட அரசியல்பொருளாதார- சமூக- தத்துவார்த்தத் தேடல்கள் ஆகியன கொந்தளித்து எழுந்த பாட்டாளி வர்க்கப் புரட்சிகளைக் கவனத்தில் எடுத்து அலசியாய்ந்து கண்டறிந்த சிந்தனை முறையே மார்க்சியம். தத்து வத் தேடலில் திளைத்த ஜெர்மனியில் தனக்கான உலகப் பார்வையை வரித்துக் கொண்டு, பாரிஸ் கம்யூனை வென்றெடுத்து மூன்று மாதங்கள் ஆட் சிக்குட்படுத்திய பிரான்சியப் பாட்டாளிவர்க்க இயக்க அனுபவங்களால் செழுமை பெற்ற சோஷலிஸ் த்தை உள்வாங்கி, பொருளாதார ஆய்வுக்களமான பிரித்தானியாவின் அரசியல் பொருளாதாரத்தால் வளமூட்டப்பட்டது மார்க்சியம். ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த மார்க்ஸ் நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் சென்று, அங்கிருந்தும் நாடு கடத்தப்பட்டு பிரித்தா னியா சென்று இவ்வகையில் ஐரோப்பிய சிந்தனைச் செல்நெறியை அனைத்துப் பரிமாணங்களுடனும் உள்வாங்கி வெளிப்படுத்தவல்லவரானார். பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் பேறான அந்த மார்க்சியச் சிந்தனை மார்க்ஸ் எனும் தனிமனிதருக்குரியதல்ல. அதற்கு முன்னிருந்தும், அன்றும் வளர்ந்த சிந்த னைக் களஞ்சியங்கள் பாட்டாளி வர்க்க இயக்கங் களால் மறுவார்ப்புச் செய்யப்பட்டு மார்க்ஸ் என்ற மனிதரால் உள்வாங்கப்பட்ட உருவில் படைக்கப் பட்டது மார்க்சியம், அத்தனை அர்ப்பணிப்போடு ஒய் வொழிவின்றி இயங்கி- கற்று ஒருமுகப்படுத்திய
46வது ஆண்டு மலர். ஜனவரி 2011

Page 38
வடிவில் மார்க்சினால் வழங்கப்பட்டமையினால் அந்தப் பாட்டாளிவர்க்க சிந்தனை முறைமை மார்க்சியம் எனப்படுகிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சி மையம் மேற்கு ஐரோப் பிய நாடுகளிலிருந்து நகர்ந்து ருஷ்யாவை அடைந்த நிலையில் ருஷ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சியானது மார்க்சியத்தை பிரயோகித்து வளர்த்தெடுத்தது. அந்த ருஷ்யப் பாட்டாளிவர்க்க செயலாற்றலுக்கூ டாக வெளிப்பட்ட மார்க்சியத்தின் விரித்தி லெனினி ஸம் எனப்பட்டது. மார்க்சிசம்- லெனினிசம் பின்னர் ஆசிய- ஆபிரிக்க- தென்னமெரிக்க நாடுகளில் பிர யோகிக்கப்படுகையில் மேலும் வளரலாயிற்று. குறிப்பாக, விவசாய நாடான சீனாவின் தேசிய விடுத லைப் போராட்டத்தை சோஷலிஸம் நோக்கி முன் னெடுத்த சீனாவில் மார்க்சிசம்- லெனினிசம், மாஒ சேதுங் சிந்தனை எனும் வடிவத்தைப் பெற முடிந் தது. அவ்வாறே, பிடல் காஸ்ரோ, சேகுவேரா, ஃபனான், கப்ரால் எனப் பலரும் பல்வேறு நாடுக ளின் மக்கள் போராட்டங்களில் மார்க்சிசம்- லெனி னிசத்தை பிரயோகித்து விருத்தி செய்தனர்.
இவ்வகையில் மார்க்சிசம் பாட்டாளி வர்க்கப் புர ட்சி அநுபவங்களது தொகுப்பாக உருவாகி தேசிய விடுதலைப் போராட்டங்களில் பிரயோகிக்கப்பட்ட செழுமைப்பாட்டினை வந்தடைந்தது வரையிலான வளர்ச்சிகளைப் பெற்று வந்துள்ளது. கால தேச வர்த்தமானங்களுக்கு அமைவாக மக்கள் விடுத லையை வென்றெடுக்கும் சிந்தனை முறையாகவே மார்க்சியம் விளங்குகிறது. இருப்பினும் அது வர்க்கப் போராட்டம் குறித்து மட்டுமே அக்கறையு டையது; தேசிய, பாலின, சாதிய, நிறபேத முரண் பாடுகள் குறித்தோ அவற்றின் தீர்வுக்கான போராட் டங்களிலோ நாட்டங் காட்ட விரும்பாதது என்ற விமரிசனம் மார்க்சியத்தின் மேல் வைக்கப்படுகிறது. பாட்டாளிவர்க்கப் புரட்சி வாயிலாக வென்றெடுக்கப் படும் சமத்துவ சமூகத்தில் இரண்டாம் பட்சமான தேசிய, பாலின, சாதிய, நிறபேத முரண்பாடுகள் தீர்க்கப்படும் எனச் சொல்கிற வறட்டுத் தனம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு. அதனை முறியடித்து ஏனைய முரண்பாடுகளின் தீர்வுக்கு ஏற்ற போராட்டங்களுக்கான மார்க்சியப் பிரயோ கத்தை சாத்தியப்படுத்தி வெற்றிகள் மூலமாக முன்னேறி வளர்ந்த சந்தர்ப்பங்களும் அனந்தம்.
இவ்வாறு சிற்சில தவறுகளும், அவற்றிலிருந்து
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

கற்றுக் கொண்டு புற நிலையின் இருப்பு முரண் களைக் கவனத்தில் எடுத்து அவற்றின் தீர்வுக்கான பிரயோகமாக மார்க்சிய சிந்தனை முறை வளர்க்கப் பட்டமையுமே எப்போதும் நடந்து வந்திருக்கிறது என்பதற்கில்லை. அவ்வப்போது பாரிய திரிபுவா தங்கள் தலைதூக்கி மார்க்சிய தோற்றம் காட்டிய வாறு மார்க்சிய விரோத நிலைப்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் நடைமுறைகளும் இடம் பெற்றுள்ளன. அவையே மார்க்சியத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. புரட்சிகரச் செயற்பாடுகளைக் கை விட்டு சமாதான வழியெனக் கூறி முதலாளித்து வத்துடன் சமரசங்களுக்கு ஆட்படும் வலதுசாரி திரிபுகளும், அதி தீவிர புரட்சி அதிர்வேட்டுகளுடன் மக்கள் தயாரில்லா நிலையில் வலிந்த வன்முறைப் போராட்டங்களை முன்னெடுத்து ஆயுத வியாபாரிக ளுக்கும் முதலாளித்துவத்துக்கும் உதவும் இடது சாரி திரிபுகளும் மார்க்சியத்தின் பேரால் நடந்தேறி யுள்ளன. வலதுசாரித் திரிபுக்கு எதிராகப் போராடும் போது அதிதீவிர இடதுசாரித் திரிபு வாதம் கரந்து றைந்து செயற்படுவதும், இடது திரிபுக்கு எதிராகப் போராடும் போது வலது திரிபுவாதம் கரந்துறைவதும் கூடப் பிரச்சினையாக அமைவதுண்டு. ஒருவேளை யில் எது அதிக தீங்கின்ன ஏற்படுத்துமோ அதற்கு எதிரான போராட்டம் முனைப்பாகியிருக்கும். அதே வேளை மற்றையது இடம் எடுத்து வளர்ந்த நிலை யில் பின்னர் அதற்கு எதிராகவும் விட்டுக் கொடுக் காத போராட்டத்தை நடாத்த வேண்டியிருக்கும். அந்தவகையில் வலது- இடது திரிபுவாதங்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்பட்டதன் வாயிலாகவே மார்க்சியம் விருத்தி பெற்று வந்துள்ளது. பிரயோகச் சந்தர்ப்பம், போராட்ட வடிவம் ஆகியன சார்ந்து பல்வேறு வகை ப்பாடுகள் காணப்படினும் மார்க்சியம் ஒன்றேதான்.
ஒன்றரை நூற்றாண்டுகளின் முன் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் எழுச்சியுடன் திகழ்ந்த சூழல் இன்று இல்லை. ருஷ்யப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் விவசாயி வர்க்கத்துடன் கைகோர்த்து 1917 இல் பெற்ற வெற்றியின் பின்னர், தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாகவே மார்க்சிய அணிகள் சோஷலிஸத்துக்கான சாத்தியங்களைக் கண்ட டைய முடிந்தது. ஒக்டோபர் புரட்சியின் மூலமாக சோவியத் ருஷ்யா உதயமான பின்னர் முதலாளித் துவம் தனது போர்த் தந்திரங்களை மாற்றிக் கொண்டுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்தின் இயங்
36

Page 39
காற்றலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அமைவாகப் பாட்டாளிவர்க்கச் சிந்தனை முறை யாகிய மார்க்சியப் பிரயோகத்திலும் மாற்றங்கள் தவிர்க்கவியலாது. தேசியப் பிரச்சினையைக் கையா ளுதல் அந்தவகையில் பிரதான கவனத்துக்குரியது.
திருப்புமுனை
தேசியப் பிரச்சினையை மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் ஒரளவு கவனத்திலெடுத்தது பற்றியும், மார்க்ஸ் அது குறித்து எழுத விருப்பம் கொண்டிருந்தும் இயலாமற் போனது பற்றியும் ஹோரேஸ் பி. டேவிஸ் “தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு' எனும் (இங்கு முழு தாகப் பேசப்படவுள்ள) அவரது நூலில் குறிப்பிட்டுள் ளார். மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவம் பூரண வெற்றி பெற்று தேசிய அரசுகளை வடிவமை த்துக் கொண்டிருந்த நிலையில் அது குறித்து மார் க்ஸ் எழுதியிருப்பின் பயனுள்ளதாயிருக்கும். அதை விடவும் பாட்டாளிவர்க்க இயக்கங்கள் முன்னுரிமை கோரிய நிலையில் அவருக்குத் தேசியப் பிரச்சினை யில் அதிகம் ஈடுபாடு காட்ட முடியாமல் போயிற்று.
ருஷ்யப் புரட்சியை எதிர்நோக்கிய நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தேசியக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியிருந்த சூழலும், ஜாரிஸ் ருஷ் யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகள் குறித்தும் ஐரோப்பிய நாடுகளது குடியேற்ற நாடுகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும், லெனின் சுயநிர்ணய உரிமை குறித்துப் பேச முனைந்தார். அவ்வப்போது முனைப்படைந்த பிரச்சினைகளுக் குத் தீர்வு நாடும் அளவில் அவரது ஈடுபாடு இருந் ததேயன்றி, அரசும் புரட்சியும்- ஏகாதிபத்தியம் முத லாளித்துவத்தின் உச்சகட்டம் என்பன குறித்து ஆழ மான ஆய்வுக்குட்படுத்தியது போன்று தீர்க்கமான பார்வையை தேசியப் பிரச்சினை மீது லெனின் காட் டியிருக்கவில்லை; தேசியப் பிரச்சினை மீது லெனி னின் சுருக்கமான சித்தரிப்பு முதலாளிகளின் பாத்தி ரத்தை அளவுக்கு அதிகமாக வலியுறுத்துகிறது; எதிர்கால சோஷலிச சமூகத்தில் தேசியத்திற்கான இடம் என்பது பற்றி எந்த வழிகாட்டலும் தரவில்லை’ (ஹோரேஸ் பி. டேவிஸ், தேசியம் பற்றிய மார்க் சியக் கோட்பாடு ப.124)- (இனி வரும் அடைப்புக் குறிக்குள் உள்ள இலக்கம் மேற்படி நூலின் பக்கத் தைக் குறிப்பிடுவதைக் கவனத்திற் கொள்ளவும்.)
மார்க்சியத் தேசியக் கோட்பாட்டைப் பயன்படுத்
37

தும் முயற்சி சமீபத்தில் சீனாவில் மேற்கொள்ளப்பட் டது (பக். 124-125) எனக்காட்டும் டேவிஸ் எழுபது களின் பிற்கூறு நிலவரத்தில் சோவியத் யூனியனை விட சீனா பாராட்டத்தக்க வகையில் இவ்விடயத் தில் நடந்து கொள்வதைக் கூறும் போது அவரை சீன சார்பினர் என இனங்காண இயலும். சீனாவின் பல சாதனைகளை அவர் விதந்துரைத்து வந்த போதிலும், அவர் சோவியத் யூனியனை ஒரு சமூக- ஏகாதிபத் திய நாடாக அடையாளப்படுத்தவில்லை; தொடர்ந்தும் சோஷலிஸத்தைப் பின்பற்றுவதாகவே காண்கிறார். இது மிகப் பிரதான அம்சமாகும். சோவியத்- சீன சார்பு என 1964இல் உலக கம்யூனிஸ்ட் அமைப்பு கள் பிளவுபட்டமை மார்க்சியத்துக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும். அடிப்படையான கோட்பாட்டு பிரச்சினைகள் மீதான விவாதத்தின் விளைவாகவே சோஷலிஸ் முகாம் பிளவடைந்து சோவியத் சார்பெ னவும் சீன சார்பெனவும் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளை வேறுபடுத்தின. அந்தக் கோட்பாட்டுத் தளத்தையும் கடந்த தேசிய உணர்வு சோஷலிஸ் நாடுகளான சோவியத்திலும் சீனாவிலும் காணப் பட்டிருக்கிறது என்பது மெய். உண்மையில் தேசியவாதத்தை இருநாடுகளது கம்யூனிஸ்ட்டுக ளும் பூரணமாகத் தகர்த்திருப்பின் அந்தக் கோட் பாட்டுப் பிரச்சினையை ஒத்திப் போட்டு இயங்கி யிருக்க முடியும். அவ்வாறு செய்திருப்பின் கால வோட்ட்த்தில் தவறுகளைக் களைந்து தொடர்ந்து பாட்டாளிவர்க்க இயக்கம் உலகின் தலைமை சக்தியாக முன்னேறியிருக்க முடிந்திருக்கும்.
இவ்விடயத்தில் தேசியம் பற்றிய லெனினின் போதாமையைக் காட்டுகிறார் டேவிஸ், சோஷலி ஸத்தின் கீழும் தேசிய உணர்வு ஒரு கட்டம் வரை தொடர்ந்து நிலவும் என லெனின் கூறியிருக்கிறார்; பாட்டாளி வர்க்கத்திடமே (அதன் முன்னேறிய படை யணியினராகிய கம்யூனிஸ்டுகளிடமே) இந்த அள வுக்கு தேசிய உணர்வு தாக்கம் செலுத்தும் என லெனின் கருதியிருக்கவில்லை. நடைமுறைப்படுத் தலில் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட, சரி யாக விளக்கமளிக்கப்பட்டால் லெனினினுடைய தேசியக் கொள்கைதான் உலகின் நம்பிக்கையாக உள்ளது (பக். 218) என டேவிஸ் குறிப்பிட்டிருப்ப தும் கவனிப்புக்குரியது. பாட்டாளிவர்க்கப் புரட்சியை வெற்றி நோக்கி முன்னெடுப்பதிலும், சோஷலிஸத் தின் முதல் அனுபவங்களில் தலைமைப் பாத்திரம் வகித்ததிலும் பல விடயங்களில் நடைமுறையூடா
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 40
கவே கோட்பாடுகளை வகுக்க வேண்டியவராக லெனின் காணப்பட்டார்.
'வர்க்க சுரண்டல்தான் சுரண்டலின் ஒரே வடிவம் என வலியுறுத்திய மார்க்சியர்கள் கூட, தேசிய இனச் சுரண்டலும் வர்க்கச் சுரண்டலைப் போலவே தீவிர மானதும், நீண்டகாலம் நீடிக்கக் கூடியதும் என்பதை நீண்ட காலத்திற்குப் பிறகு, அங்கீகரிக்கிறார்கள் (பக். 218-219). அவ்வாறன்றி லெனின் தேசியப் பிரச்சி னையின் தாக்கத்தை முன்னதாக போதிய அளவு க்கு கவனத்தில் எடுத்திருந்தார் என்பதே பிரதானம். முதலாளித்துவத்தின் உருவாக்கம் தேசியத்தைக் கட்டமைத்த போதிலும், பல்வேறு வர்க்கங்களும் தேசிய உணர்வுக்கு ஆட்படும் என்பது கவனத்துக் குரியது. நிலவுடைமை வர்க்கம் தேசியத்தைக் கட்டமைத்திருந்தமை போலந்தின் அனுபவத்திலிரு ந்து காட்டுகிறார் டேவிஸ் (ப.83). தேசிய இயக்கத் தின் இயல்பான தலைவராக ஒரு வர்க்கத்தை குறிப் பிட முடியாது (ப.111). அந்த வகையில் பாட்டாளி வர்க் கத் தேசியம் பின்னாலே ஏற்படுத்தப் போகும் பாதி ப்பை லெனினினால் முன்னனுமானித்திருக்க முடிய வில்லை. அது குறித்த எச்சரிக்கை உணர்வு உரிய வகையில் வலியுறுத்தப்பட்டிருப்பின் சோவியத்- சீன பாட்டாளிவர்க்க முன்னணிப் படைகள் ஏற்படுத்திய பாதகமான விளைவு குறைக்கப்பட்டிருக்க இயலும், அதேவேளை அந்தப் பிளவுக்கு அடிப்படையாக அமைந்த கோட்பாட்டுப் பிரச்சினையும் இரு அணி களுக்கும் பாதகங்களையே ஏற்படுத்துவதாயிருந் தது. சோஷலிஸ் முகாம் வலுவான சக்தியாக முன் னேறி வருவதனால் ஏனைய நாடுகளில் பாராளு மன்ற ஜனநாயக முறை வாயிலாகவே சோஷலிஸ த்தை எட்ட முடியும் எனச் சோவியத் யூனியன் முன்வைத்த போது, சீனா அதனை மறுத்து பலாத் காரத்தின் அவசியம் தவிர்க்கவியலாதது என வலியு றுத்தியது. இந்த விவாதம் இரு கட்சிகளுக்குள் நிலவியதைக் கடந்து 1963இல் பகிரங்கப்பட்ட நிலையிலேயே உலகெங்கிலுமான கட்சிகளிடை யேயான விவாதங்களாகிப் பிளவுகள் ஏற்படலாயின. சோவியத் சார்பு கட்சிகள் பூரணமாக பாராளுமன்ற வாதம் சார்ந்த வலது சாரிச் சந்தர்ப்பவாதத்துக்கு உட்பட்டன; பாராளுமன்றத்தில் வெற்றி சாத்தியப் பட்டு நெருக்கடி ஏற்பட்டபோது சோவியத் படையை உள்வாங்கும் அடுத்த தவறும் நடைமுறையானது. சோவித் யூனியனின் இராணுவ முனைப்பு இறுதி யில் அதன் அழிவுக்கு வழிகோலியது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

புரட்சிகர எழுச்சி சமாதானமாக அமையினும் அதிகார வர்க்கம் தானாக ஆட்சியிலிருந்து இறங்கி விடாது. ஆயுதத்தை முன்னிலைக்குக் கொணரும்; அத்தகைய சூழலில் பலாத்காரத்தை புரட்சிகர சக்திகள் பிரயோகிப்பது தவிர்க்க முடியாமல் இருக் கும். மார்க்ஸ், லெனின் ஆகியோர் இதனை வலியு றுத்தினர் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்த விவாதம் இறுதியில் ஆயுதப் போராட்டம் மட்டுமே என்கிற அளவில் வன்முறை வழிபாடாக ஒடுங்கியது. ஆயுதப் போராட்டத்துக்கு அப்பாலான, பாராளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்தும் தேவை என்பது உள்ளிட்ட பல்வேறு போராட்ட வடிவங்களும் புரட்சிகரமற்றது' எனக் கூறி ஓரங்கட்டப்பட்டன. பாராளுமன்ற வழியினால் மட்டுமல்ல, சீனச்சார்புக் கம்யூனிஸ்டுகளாலும் புரட் சியை வெற்றியீட்டி நிலை நிறுத்த முடியவில்லை.
மாறாக, ஜனநாயக வழியின் அனைத்து சாதகங் களையும் கையாண்டாலும் மார்க்சிய வழிகாட்ட லில் தென்னமெரிக்க நாடுகள் புரட்சிகரமான வளர்ச்சிகளை எட்டி வருவதனை அவதானிக்க முடிகிறது. இதற்கான தொடக்கம் உணரப்பட்ட நிலையிலேயே தென்னமெரிக்க கம்யூனிஸ்ட்டான டேவிஸ் இந்த நூலினை எழுதுகிறார். அந்தவகை யில் எந்தச் சார்பினையும் கொள்ளாமல் மார்க்சிய நிலை நின்று யூகோஸ்லவாக்கியா, சோவியத் யூனியன், சீனா, தென்னமெரிக்க நாடுகள், ஆபிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் போன்றனவற்றின் தேசிய இனப் பிரச்சினைகளை மார்க்சிய அணிகள் கையா ளுமாறினை முன்னிறுத்தி தேசியம் பற்றிய மார்க்சி யக் கோட்பாட்டினை முன் வைக்கிறார் ஹொரேஸ் பி. டேவிஸ். யூகோஸ்லவாக்கியாவும் சோவியத் யூனியனும் தகர்வுறுவதற்கு முதல் வரை சோவடி லிஸத்தைப் பேணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்; தகர்வுக்கான காரணிகளுள் ஒன்றாகத் தேசியத்தை சரியாகக் கையாளத் தவறியமையும் அடங்கும். ஏனைய திரிபுகளும் அந்தக் கையாளுகைக் குறை பாட்டுக்குக் காரணமாக முடியும்; அதேவேளை, அவற்றிடம் காணப்பட்ட சோஷலிஸக் கூறின் அள வில் முதலாளித்துவ நாடுகளை விட அந்நாடுகளில் சுயநிர்ணயம் போற்றப்பட்டிருந்தது. முழுதான முதலாளித்துவத்தை வரிக்கும் போது தேசிய இனங்கள் பிளவடைந்து பல நாடுகளாகச் சிதற நேர்ந்தது. அந்த நாடுகள் மார்க்சியத்திலிருந்து வில கிச் சென்றவாறிருந்தமையும், உலக மேலாதிக்க
38

Page 41
மான அமெரிக்க முயற்சியும் வகித்த பாத்திரங்க ளைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. அதே வேளை, கொர்பச்சேவினால் கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்ட வரையில் சோவியத் யூனியனின் சோஷலிஸத்துக்கான கூறுகள் காணப்பட்ட மையை மறுத்து விடவும் முடியாது.
மார்க்சிய அடிப்படைகளைப் பாதுகாக்க முனை யும் விவாதத்தில் ஈடுபட்ட மக்கள் சீனம் கூடியவரை, மார்க்சிய வழிநடத்தலை முன்னெடுக்கும் உறு தியை வெளிப்படுத்தியவாறு இருந்தது. இருப்பினும் வலது விலகலுக்கு எதிரான அந்த விவாதத்தினுள் புகுந்த அதி தீவிர இடது விலகல் சீனாவை இன்னொ ருவகையில் பாதித்தது. சர்வதேச செல்நெறியில் வன்முறை வழிபாட்டை ஏற்படுத்தியது போல, சீனா வினுள் நவீன மயப்படுத்தலை நிராகரித்துக் கடின உழைப்பே சோஷலிஸம் எனச் சொல்லிக் கொள் வது உள்ளிட்ட அதிதீவிர இடதுசாரித் திரிபுகள் முன்னெடுக்கப்படலாயிற்று. சீன மக்களின் உற்பத் தித் திறன் வீழ்ச்சிக்கும் பண்பாட்டு விருத்திக்குலை வுக்கும் காரணமாய் அமைந்த கலாசாரப் புரட்சி தவ றான் திசைகளில் சென்ற நிலையில் மாஒ சேதுங் கினாலேயே அது நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. மார்க்சிச- லெனினிச- மாஒ சேதுங் சிந்தனை குறி த்த தொடர்ச்சியான கற்றலும், ஏனைய சோசலிச நாடுகளினது அனுபவப் படிப்பினையும் உள்வாங்கப் பட்டமையினால் 1978 இலிருந்து மாற்றுவழிகள் வாயிலாக சோசலிசத்தைப் பாதுகாத்து முன்னெ டுக்க சீனாவுக்கு இயலுமாயுள்ளது.
இத்தகைய மாற்று வழியை முன்னதாக பின் பற்றிய ஒரு சோஷலிச நாடு யூகோஸ்லவாக்கியா. அதனை முதலாளித்துவம் நோக்கிய விலகல் என ஐம்பதுகளின் பிற்கூறிலும் அறுபதுகளின் தொடக் கம் முதலாகவும் சோவியத் யூனியனும் சீனாவும் தாக்கியிருந்தன. அப்போதே சோவியத்தின் வலது விலகல் தொடக்கம் பெற்றிருந்தமையினால் யூகோஸ்லவாக்கியாவை தாக்கும் முனைப்பில் சோவியத் யூனியனையும் அம்பலப்படுத்துகிற வேலை சீனா செய்திருந்தது. இந்தத் தாக்குதலைத் தவிர்த்து சோஷலிஸ் நாடுகள் தமக்குள் ஒத்துழைத் திருப்பின் யூகோஸ்லவாக்கியாவின் சோசலிச முன்னெடுப்பை வளர்த்திருக்க முடியும். “சோசலிச மில்லியனர்கள் உருவாகும் பொருளாதார முன்னெ டுப்பை மேற்கொண்ட யூகோஸ்லவாக்கியா (ப.203) "லெனினின் தேசிய இனக் கொள்கையை நடை
39

முறைப் படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிரு ந்த ஒரு சோசலிச நாடாக" திகழ்ந்தது (ப. 212) என மதிப்பிட வல்லதாயுள்ளது. வேறு எந்தச் சோசலிச நாட்டையும் விட, யூகோஸ்லவாக்கியாவில் பல் வேறு தேசிய இனங்களும் அதிக அளவு சமநிலை யில் வைக்கப்பட்டுள்ளன எனக் கூறும் டேவிஸ், அதனை ஒரு சோசலிச நாடாக ஏற்பதற்குப் பலரும் மறுத்த போதிலும், அது தன்னை ஒரு மார்க்சிய அரசாகக் கூறிக் கொள்வதை எடுத்துக் காட்டுவார். பல்வேறு முரண்பட்ட தேசிய இனங்களைக் கொண் டிருந்த போதிலும் ஒரு தேசம் என்பது மக்களைப் போராட்டத்திற்குத் திரட்டுவதற்கான ஒரு வழி என் றால் யூகோஸ்லேவியா ஒரு தேசம்’ என்பார் டேவிஸ் (பக்.188). எழுபதுகள் வரையில் தனது சோசலிசத்தைப் பாதுகாத்து வந்ததோடு, சக்திமிக்க தேசமாகவும் அந்நாடு தலைநிமிர்ந்து நிற்க முடிந் தது. உயர்ந்த ஜனநாயகப் பண்புகளுடன், தேசிய இனங்கள் சமத்துவமாக இயங்க முடிந்த போதிலும், சோசலிசத்தைக் கைவிட்ட போது பகையுடன் மோதிக் கொலைவெறி வஞ்சம் தீர்த்த பகை நாடுகளாய்ப் பிளவுபட்டுப் போயுள்ளது யூகோஸ்லேவியா.
இருந்த போதிலும், அங்கு தேசிய இனங்களுக் கான தேசிய உணர்வை டிட்டோ கண்டித்துள்ளார். அவற்றைக் குறுகிய தேசியவாதமாகக் கணித்து யூகோஸ்லேவியா முழுவதன் மீதும் தேசப் பற்றுக் கொள்ளும் விசுவாசத்தையே வேண்டி நின்றார் (பக். 78-79). தேசிய இனங்கள் மறைய வேண்டும் என்று கருத்து டிட்டோவிடம் இருந்தது (ப. 200). இயல்பில் பாட்டாளிவர்க்கம் சர்வதேசக் குணாம்சம் உடையது என முடிவு செய்து, சோஷலிஸ் நாட்டில் தனித் தேசிய உணர்வு அவசியமற்றது என மார்க்சியர்கள் கருதினர். ஆயினும், சோவியத்- சீனப் பிளவில் இரு நாடுகளினது தொழிலாளர்களும் ஒன்றை மற்றை யது பிரதான எதிரியாகக் கருதியது எனக் காணும் போது, "பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசத் தன்மை மீது ஆரம்பகாலத்தில் வைத்திருந்த குருட்டு நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய உறுதியான காலம் இது என்கிறார் டேவிஸ் (ப. 79). சோவியத் யூனியன், மக்கள் சீனம் ஆகிய நாடுகளி னுள் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் அங்கீக ரிக்கப்பட்டிருந்த போதிலும், சோஷலிஸ் நிர்மாண வளர்ச்சியின் போது தேசிய இனங்களின் தேசிய உணர்வு கடந்து புறந்தள்ளப்பட்டு சர்வதேச உண ர்வு மேலோங்கும் எனக் கருதப்பட்டது. பெரிய ருஷ்ய,
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 42
ஹான் சீன மொழி சார்ந்த கலப்புக்கு ஊக்கமளி க்கப்பட்டதும் உண்டு. யூதர்கள் சுயாட்சி கோராத போதிலும் தனித் தேசிய இன அங்கீகாரத்தைக் கோரிய போது லெனின் காலத்திலே கூட ஆரம்பத் தில் ஏற்றுக் கொள்ளப்படாதிருந்து பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இஸ்லாமிய உணர்வு சார்ந்த தேசி யம் மறுக்கப்பட்டு முரண்பாடு கூர்மையாவதிலும், ருஷ்ய மேலாதிக்கம் செயலுருப்பட்ட போதும் லெனின் கண்டு கொள்ளாதிருந்தார்; பின்னாலே ஸ்டாலின் அதனை ஒடுக்க முனைந்ததில் இஸ்லா மியர்களுடனான முரண்பாடு பகைத் தன்மையான தாக மேலும் கூர்மையடைந்தது (ப.139). அத்தகைய மத உணர்வு சார்ந்த தேசியவாதங்கள் இயல்பான வையல்ல என மறுக்கப்பட்ட போதிலும், அங்கீகரிக் கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணயம் போற்றப் படும் வகையில் சம உரிமையோடு மதிக்கப்பட்டது. ஸ்டாலின் சிறு தேசிய இனங்கள் மீது கடும் போக் கைக் கடைப்பிடிப்பதான கண்டனம் லெனினிடம் இருந்த போதிலும், தொடர்ந்து சோவியத் யூனியனில் சுயநிர்ணய உரிமை மதிக்கப்படும் நிலை நிலவியது. பின்னாலே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சோவியத் தின் தேசிய இனக் கொள்கை பற்றிப் பரந்த அளவி லான அதிருப்தியைக் காண முடியவில்லை" (ப. 157). மக்கள் சீன உதயத்தின் போது தேசிய இனங்க ளின் சுயநிர்ணயம் பெரிதும் போற்றப்பட்டது. அனை த்து தேசிய இனங்களும் சம உரிமை உடையன என்ற வலியுறுத்தலுடனான 1955ஆம் ஆண்டு அரசியலமைப்பு தேசியத் தன்னாட்சிப் பகுதிகள் சீன மக்கள் குடியரசின் பிரிக்க முடியாத பகுதிகள் என வலியுறுத்தியிருந்தன. இவ்வகையில் சீன நிலவரத்துக்கு அமைவாக சுயநிர்ணயக் கோட்பாடு மாற்றிப் பிரயோகிக்கப்பட்ட போதிலும், சிறு தேசிய இனங்களின் சம உரிமையும் விருத்தியும் திருப்திகர மான முறையில் கையாளப்பட்டன. அதற்கு அமைவாக 1957இல் தேசிய இனங்களுக்கான மைய அமைப்பு பீகிங்கில் (இன்று பெய்ஜிங்) அமைக்கப்பட்டுச் சிறு தேசிய இனங்களின் மாணவர் களுக்குத் தலைமைப் பண்புப் பயிற்சியும், சொந்தப் பண்பாட்டு உணர்வு விருத்தியும் பெருக வகை செய் யப்பட்டன. அந்த அமைப்பில் 48 சிறுபான்மை இனங்கள் இடம்பெற்றன. அது போன்ற பத்து அமைப்புகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நிறுவப்பட்டன (பக். 242- 243).
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

ஆயினும் 1966 இல் எழுச்சி பெற்ற கலாசாரப் புரட்சி இச் செல்நெறியில் சில பாதகங்களை ஏற் படுத்தின. தேசிய இன மக்களிடையில் புரட்சிகர ஒற் றுமை எனும் பெயரில் ஒன்று கலத்தலுக்கான அதிக அழுத்தம் வலுப் பெற்று தேசிய இனங்களின் சுயநிர்ணயம் பாதிக்கப்படும் நிலை தோன்றியது. இவ்வகையில் பெரும் ஹான் தேசியம் மேலாதிக்கம் கொள்ளும் போது சிறு தேசிய இனங்கள் மத்தி யிலும் தேசியவாதம் மேலோங்கியது. சோஷலிஸ் நவீனப்படுத்தல் ஹான் மேலாதிக்கத்தோடு ஏற்படு வது சிறு தேசிய இனங்களுக்குக் கடும் சிரிமங்களை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆயினும் எங்கு பெரும் ஹான் தேசியவாதம் அகற்றப்பட முடிகிறது என்பதைச் சீனா புரிந்து கொண்டது. அந்தப் புரிதலு டன் சுயநிர்ணயத்துக்கான சம உரிமை பேணப்பட்டு சோஷலிஸ் மாற்றியமைத்தலை முன்னெடுக்கை யில் பிரிவினை வாதங்களை முறியடித்து சீனாவி னால் முன்னேற முடிகின்றது. சீனாவில், லெனினி யத் தேசிய இனக் கொள்கை பெரும் வெற்றியடை ந்து உள்ளது. ஆனால் அப்பாதை சில நேரங்களில் கரடு முரடாக இருந்தது' என்பார் ஹொரேஸ் பி. டேவிஸ் (பக். 245-246).
மக்கள் சீனக் குடியரசை நிர்மாணிப்பதில் தலை மைப் பாத்திரம் வகித்த மாஒ அடிப்படையில் தேசிய உணர்வைக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வதேசத்தை வரிப்பவராக இருந்தார். அவரும், மக்கள் சீனமும் தேசிய உணர்வுக்கு ஆட்பட்ட போதிலும் சோஷலிஸத்தின் மீதான பற்றுறுதியும், பாட்டாளிவர்க்க சர்வதேச உணர்வைப் பயிற்சிக ளால் வரிக்கும் ஆர்வ மேலீடு கொள்ளப் பெற்றிருந் தமையினால் கரடுமுரடான வழிகளூடாயினும் மக் கள் சீனம் தன்னைத் தகவமைத்து முன்னேற இய லுமாகியுள்ளது. இவ்வகையில் தேசிய உணர்வை உரிய அளவில் மதித்து வளர்ப்பதும் அதனைச் சோஷலிஸத்தோடு இணைப்பதும் சாத்தியப்படும் போது மட்டுமே ஒரு நாட்டின் முன்னேற்றம் வாய்க் கப் பெறும். தேசிய உணர்வு என்னும் போது சோவடி லிஸ் தாயகத் தேசியமும் அவரவரது சொந்தத் தேசிய இன உணர்வு என்பதும் சரிவிகிதத்தில் கலந்து அமைவது என்பதைக் கடந்த கால சோவடி லிஸ் நாடுகளது அனுபவம் உணர்த்தியுள்ளது.
இவ்வகையில் தேசியத்துக்கும் சோசலிசத்துக்கு மான உறவை கியூபா துலக்கமாக வெளிப்படுத்தி
40

Page 43
நிற்கக் காணலாம். மக்களின் பலமான ஆதரவுடன், உறுதியுடன் உருவாக்கப்பட்டிருந்த ஆட்சி இல்லா மலிருந்திருந்தால், 1960களில் உள்நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளின் அழுத்தத்தால் அந்த ஆட்சி பாதிக்கப்பட்டிருக்கும். இந்த ஒற்றுமையைச் சாதித்ததில் சோசலிசத்துக்குப் பெரும் பங்கு உண்டு. கியுபாவில் தேசிய சுதந்திரம் அதனுடைய சோசலிச அமைப்பால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், மக்களின் உணர்வுபூர்வமான தேசியத்தினாலேயே கியூபாவின் சோசலிச அமை ப்பு நிலவி வருகிறது என்பார் டேவிஸ் )262 .لا).
தொடர்ந்து தென்னமெரிக்காவில் தேசியமும் சோசலிசமும் கைகோர்த்தவாறு புரட்சிகர எழுச்சி ஏற்பட்டு வருவதனை பிரேசில், பொலிவிய அனுப வங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார் டேவிஸ். அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பொருளுற்பத்தி முறையின் மாற்றப் போக்குகளும் அந்நியத் தொடர் பாடல்களும் சார்ந்து தேசியத்தில் வெவ்வேறு வர்க் கங்கள் முனைப்புக் காட்டியமையை வெளிக் கொணர்கிறார். தேசியத்துக்கான விரிந்த பொருள் கொள்ளலுக்கு தென்னமெரிக்கா அடிகோலியுள் ளது. தேசியத்தின் வர்க்க அடிப்படை பற்றிய லெனி னின் பகுப்பாய்வு- ஸ்டாலினால் பின்பற்றப்பட்டதுமறுவரையறை செய்யப்பட வேண்டிய அவசியத்தை இலத்தீன் அமெரிக்கா ஏற்படுத்தி உள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கத்தின் படையணியாகப் பாட்டாளி களும் விவசாயப் பகுதியினரும் தான் இருக்க முடி யும். மொத்தத்தில் நகரங்களில் இப்பொழுது தான் உருவாகிக் கொண்டிருக்கிற நடுத்தர வர்க்கமும் ஒரு வெற்றிகரமான சோசலிஸ்- தேசிய இயக்கத் திற்கு இன்றியமையாத கூறுகளைக் கொண்டுள்ள தால், அவ்வர்க்கம் பற்றிய இன்னும் கூடுதலான ஆய்வை இலத்தீன் அமெரிக்க மார்க்சியர்கள் மேற் கொள்ள வேண்டும்’ என்பார் டேவிஸ் (ப. 272). கடந்த மூன்று தசாப்தங்களில் அத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டு வருவதை தென்னமெரிக்க மார்க்சிய எழுச்சி காட்டி நிற்கிறது.
இந்நூலில் எமக்கு மேலும் பயனுள்ள தரவுகளை வழங்குவதாக ஆபிரிக்க அநுபவங்கள் அமைகின் றன. இனக்குழு மோதல்களும் இணைவுகளும் சார்ந்த தேசிய உருவாக்கங்களைக் காணும் போது, வர்க்க அமைவுக்கு ஏற்ப சாதிகளாக்கப்பட்ட இனக் குழுப் பண்பு சார்ந்த சாதிய வரலாறைக் கொண்டு
41

இயங்கும் எமது சமூக முறைமையையும் மாற்றச் செல்நெறிகளையும் மேலும் துலக்கமாக அறிய வாய்ப்பாகிறது. ஆபிரிக்க சூழலில் ஒடுக்கும் வெள் ளையர்கள் ஒடுக்கப்படும் ஆபிரிக்கர்கள் எனும் இருவர்க்கங்களையே இனங் காண முடிவதாய்க் கருதுவார் கப்ரால் (ப. 299). முன்னேறிய தொழிற் துறைகளில் இயங்கிய ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தவரை ஒரு புரட்சிகர சக்தியாக ஏற்க முடி யாதவராக ஃபனான் காணப்பட்டார். அல்ஜீரியாவில் இருந்த பிரெஞ்சு தொழிலாளர்கள் அல்ஜீரிய விடு தலைப் போராட்டத்தின் எதிரிகளாக இருந்த அதே வேளை, தேசிய விடுதலை இயக்கத்தில் பங்கெடு த்த ஆபிரிக்க தொழிலாளர்களும் புரட்சிகர சக்திக ளாய் இல்லையென்பார் ஃபனான் (ப.289).
'ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க் கத்தைக் குறைத்து மதிப்பிடுவதில் காப்ராலும், ஃபனானும் ஒத்துப் போகின்றனர். ஆனாலும், தேசிய விடுதலைப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் காலனிய நாடுகளிலுள்ள அந்நாட் டுத் தொழிலாளர்களுக்கு மிகவும் வேறுபட்ட பாத்தி ரங்களை வழங்குகின்றனர். இந்த வேறுபாட்டிற்குத் தெளிவான முதல் காரணம், அல்ஜீரியா மற்றும் கினி ஆகியவற்றில் வளர்ச்சிக் கட்டத்தில் இருந்த வேறுபாடுதான். அல்ஜீரியாவில் இருந்த தொழிலாள ர்கள் ஒரளவு அமைப்பாக்கப்பட்டும், சில தொழிலா ளர்கள் பாதுகாப்புச் சட்டங்களையும் வென்றெடுத்து இருந்தனர்; அதனால் அவர்களைச் சலுகை பெற்றவர்கள், புரட்சிகரமானவர்கள் அல்ல எனப் ஃபனான் குறிப்பிடுகிறார்; கினியில் இருந்த தொழி லாளர்கள் எந்தச் சலுகையும் பெற்றிருக்கவில்லை; அவர்களிடம் இழப்பதற்கு ஏதும் இல்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர; அவர்கள் உண்மையான பாட்டாளிகளாக இருந்தார்கள், ஆற்றல் மிக்கப் போராளிகளாகவும், சோசலிசக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்பாட்டாளி ப்ற்றிய மார்க்சின் கருத்தாக்கத்திற்கு நெருக்கமாக இருந்தார்கள் (ப. 306) எனக் கூறும் டேவிஸ், ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க் கத்தினர் தவறுகளுக்கு ஆட்பட்ட போதிலும், பல் வேறு சந்தர்ப்பங்களில் சர்வதேச உணர்வுடன் ஒடுக் கப்பட்ட தேசங்களின் மக்கள் விடுதலைப் போராட் டங்களுக்கு ஒத்தாசை புரிந்த சந்தர்ப்பங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 44
ஆக, பாட்டாளிவர்க்க இயக்கச் செல்நெறியின் வளர்ச்சி நிலைகளில் அவ்வப்போது தடைகள் ஏற் பட்ட போதிலும், அதுமட்டுமே உலகப் பிரச்சினை களுக்குத் தீர்வைக் காட்ட முடியும் என்பதனை அதன் தத்துவ வீச்சான மார்க்சியம் தேசிய இயக் கங்கள் மூலம் பெற்றுள்ள புத்தாக்கச் செழுமை காட்டி நிற்கிறது. தேசியத்தை நிராகரிக்கும் சோவடி லிஸமோ, சோசலிசத்தை நிராகரிக்கும் தேசியமோ விடுதலைக்கான மார்க்கமாகவியலாது எனும் துலக் கமான உண்மையை இந்நூல் காத்திரமான முறை யில் அழுத்தி முன் வைத்திருப்பது ஒர் திருப்புமுனை.
I எங்கிருந்து
ருஷ்யச் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் அங்கு புரட்சி எழுச்சியைச் தட்டியெழுப்பவும் ‘எங்கி ருந்து தொடங்குவது என்ற ஆய்வு வாயிலாக வெளிக் கொணர முயன்றார், லெனின். அவ்வாறே சீன சமூ கத்தின் வர்க்கங்கள் பற்றிய ஆய்வு சீனப் புரட்சியை வழி நடாத்திய மாஒவின் முதல் நிலைத் தேடல்க ளில் ஒன்றாக அமைந்தது. தேசியம் பற்றிய மார்க்சி யக் கோட்பாட்டினை தெளிவாக முன்வைக்கும் இந் நூலினைப் படித்து முடிக்கும் போது எங்கிருந்து தொட ங்குவது? எனும் வினா தவிர்க்கவியலாது எழும்.
ரோசா லக்சம் பேர்க், ஸ்டாலின், ட்ரொட்ஸ்கி, கிராம்ஸ்கி உட்படப் பலரது தேசியக் கோட்பாடு களை முன்னிறுத்திய ஆய்வாக இந்நூல் அமைந் துள்ளது. சிற்சில சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவரது பங்கேற்பும் தேசியத்தை மார்க்சிய நிலைப்பாட்டில் புரிந்து கொள்வதற்கான சரியான திறவுகோலை வழங்கக் காணலாம். அதேவேளை, லெனினது நிலைப்பாடு சில போதாமைகளுடன் காணப்பட்ட போதிலும், அதிகம் சரியானதாக அமைந்துள்ள மையை நூல் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. மார்க்சோ லெனினோ அனைத்துப் பிரச்சினைகளுக் குமான சர்வரோக நிவாரணிகளை முற்று முழுமைப் பாடுகளுடன் முன் வைக்க முயன்ற தீர்க்கதரிசிகள ல்ல; பாட்டாளி வர்க்க இயக்க அநுபவங்களைச் சுர ண்டும் வர்க்க எல்லைப்பாடுகளால் வரையறைப் படுத்த இடமளிக்காது தொடர்ந்து மக்கள் விடுத லைப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அமை வான அனுபவத் திரட்சிகளாக்கி வழங்கிய சிந் தனை முறைமையே மார்க்சியம்- லெனினியம்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

அத்தகைய லெனினிசப் பிரயோகத்தை முதலா வது சோசலிச நாடான சோவியத் யூனியனில் முன் னனுபவமற்ற பல சந்தர்ப்பங்களில் முன்னெடுத்த வேளைகளில் ஸ்டாலினிடம் தவறுகள் ஏற்பட்டது மெய். அத்தகைய தவறுகளைக் காய்தல் உவத்த லற்ற வகையில் விமரிசனப் படுத்துவது அவசியம். எத்தகைய தனிநபர் வழிபாடுகளுக்கும் மார்க்சியலெனினிய அமைப்புகள் இடமளிக்க முற்படுவதி ல்லை. பல்வேறு ஆளுமைகளது பங்கேற்பு என்பது உண்மையில் மக்கள் சக்தியின் இயங்காற்றலினது பிரதிநிதித்துவமாகுமேயன்றி, எந்தவொரு தனிநபர்க ளது செயற்பாடு மட்டும் வரலாற்றைப் படைத்து விடுவதில்லை எனும் தெளிவு மார்க்சியர்களிடம் உண்டு. அதேவேளை தனிநபரது வரலாற்றுப் பாத் திரம் எத்தகைய தாக்குறவைக் கொண்டுள்ளது எனும் புரிதலும் மார்க்சியர்களுக்கு அவசியம்.
அந்த வகையில் இராணுவச் சுற்றி வளைப்பால் எப்போதும் அச்சுறுத்தப்பட்டு, கையூட்டு பெற்ற சதி யாளர்களால் உள்நாட்டில் சோசலிசத்தை நாசப்ப டுத்த இயலுமாக இருந்த சூழலில், இன்னும் உச்ச மாக பாசிச ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு சோசலிச நிர்மாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்த நிலையில் ஸ்டாலினின் பங்களிப்பும் அவ்வாறே தவறுகளும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் அதி கமாகவே இருந்தது.”அவரது பங்களிப்பை மிகைப் படுத்துவது எவ்வளவு தவறோ அதேயளவுக்குத் தவறுகளைப் பூதாகரப்படுத்துவதும் தவறாகும். பல சந்தர்ப்பங்களில் லெனின் வழியைக் கூடியவரை யில் ஸ்டாலின் பின்பற்றியமையை டேவிஸ் எடுத் துக் காட்டியுள்ளார்; அதே வேளை "ஸ்டாலின் பயங் கரம்' குறித்தும் கூறியுள்ளார் (ப. 179). பல்வேறு விட யங்களை மிகுந்த நிதானத்துடன் மார்க்சிய நிலை நின்று முன் வைக்கின்ற இத்தகைய ஒரு நூலில் இதனைத் தவிர்த்திருக்க முடியும்.
ஸ்டாலினாக அல்லாமல் லெனின் தொடர்ந்து வாழ்ந்து தலைமை வகித்திருப்பின் அத்தகைய தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்க இயலுமாயிருந்தி ருக்கும் எனும் கூற்றினை பிரிட்டிஷ் மார்க்சிய வர லாற்றியலாளரான கார் மறுத்திருந்தார். லெனினிடம் சற்றுக் குறைவாக வெளிப்பட்டிருக்குமே அன்றி முற் றாக அவராலும் தவிர்த்திருக்க இயலாது என்பார் கார். அத்தகைய நெருக்கடிச் சூழலின் மத்தியி
42

Page 45
லேயே சோவியத் சோஷலிசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது என்பது கவனிப்புக்குரியது.
லெனின் போதாமை குறித்த சொல்லாடல்களும் முதல் வாசிப்பில் நெருடலாக அமைந்த போதிலும், தொடர்ந்த வாசிப்பிலும் தொடர்புபடுத்தற் சிந்தனை வயப்பாட்டிலும் ஏற்புக்குரியதாக அமைந்துள்ளன. எவ்வாறெனினும், பல்வேறு நாடுகளது அநுபவங் களை உள்வாங்குவதனை அவசியப்படுத்தும் அதே வேளை, சோவியத் யூனியன்- மக்கள் சீனம் வழங் கியுள்ள பங்களிப்புகளது செழுமையையும் நிரா கரித்துவிடலாகாது. முன்னர் சோவியத்- சீன நிலைப்பாடுகளுக்கு (அல்லது அவற்றில் ஏதாயினும் ஒன்றுக்கு) மிகை அழுத்தம் கொடுத்தவாறினைப் போன்று, அவை இழைத்த தவறுகளை முன்னி லைப்படுத்தி நிராகரிப்பதும் ஏற்புடையதாகாது. அந்தவகையில் எங்கிருந்து தொடங்குவது என்பதற் கான தேடலை ஒரு முனைவாத முடக்கத்துக்கு ஆளாக்காது பன்முகப் பரிமாணங்கள் சார்ந்த விரிவான தளத்துக்குரியதாக்குதல் அவசியமானது. சில சொல்லாடல்கள் நெருடலாக அமைந்த போதி லும், அத்தகைய முழுப் பரிமாணங்கள் சார்ந்த ஆய்வினை ஹொரேஸ் பி. டேவிஸ் இன் தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு' எனும் இந்நூல் முன்வைத்துள்ளது.
IV இனி
மாஒ மற்றும் ஆபிரிக்கர்கள் போன்ற மூன்றாம் உலகச் சிந்தனையாளர்கள் தேசியத்தின் மீது செலுத்திய தாக்கம் தேசியக் கோட்பாட்டின் மையம் ஐரோப்பாவிலிருந்து விலகிச் சென்று விட்டமை யைக் காட்டுகிறது (325). பழங்குடி மக்கள் ஏற்றத் தாழ்வுக்கு உட்படும் போது ஆக்கிரமிப்புக்கு உள் ளாவது முதல் தேசம் சுரண்டப்படுவது வரை கவ னிப்புக்குரியன. பழங்குடிகள் மற்றும் பழங்காலத் திய நகர- அரசுகள், மத்திய காலக் கம்யூன்கள், மற்றும் நிலப் பிரபுத்துவ ஆட்சி ஆகியவற்றிலிருந்து நவீன தேசங்கள் வரை உபரிக்கான போராட்டத் தின் செயல் பரப்பை உழைப்பின் சமூகப் பிரிவினை யில் உள்ள அளவே தீர்மானித்துள்ளது' எனும் கர் தேல்ஜ் கருத்தை முன்வைத்த டேவிஸ் தொடர்ந்து கூறுவார். இவ்விதமாக உழைப்பின் சமூகப் பிரிவினையால் தீர்மானிக்கப்பட்டுள்ள எல்லைக் குள் சமூக உபரியின் பொருத்தமான பகுதியின் மீது
43

மக்கள் தமது உரிமையை வெற்றிகரமாக நிறுவு வதை சாத்தியமாக்கும் பணியைத் தேசம் செய்கி றது எனக் கர்தேல்ஜ் கருதுகிறார். இந்த உழைப் பின் சமூகப் பிரிவினை ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும் போது, ஈ.எச். கர் கூறியதைப் போல மக் கள் நேரடியாக உலகின் மக்களாக மாறிவிடுவர். (ஆனால் அவரைப் பற்றி கர்தேல்ஜ் அறிந்திருக்க வில்லை); இதற்கிடையில், மக்கள் தம்முடைய உரிமைகளை நிறுவவும், ஒடுக்குமுறையை எதிர்க் கவும் பயன்படும் மிகவும் பொருத்தமான வடிவமாக தேசம் உள்ளது"(220). தேசியப் பிரச்சினை வெறும் முதலாளிவர்க்கத்துக்கானதல்ல, முழுச் சமூகத்துக் குமுரியது (221). அந்த வகையில் மார்க்சியர்கள் தேசிய இயக்கங்களில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுப் பது அவசியம்; அதேவேளை சோசலிசப் பதாகை யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பதும் அவசியம்; இல்லாவிட்டால் தேசிய இயக்கங்களுக்குள் ஈர்க் கப்பட்டு, அவர்களுடைய தெளிவான அடையாள த்தை இழக்கும் பெரும் ஆபத்துக்கு உள்ளாவார் கள்" (ப. 333).
இன்று மற்றும் இன்றைய கால கட்டத்தில், தேசி யம் பற்றிய ஒரு மார்க்சியக் கோட்பாடு என்பது சர்வ தேச அளவிலான, சமூகம் முழுமைக்குமான ஒரு கோட்பாடாகும். முதன்மையான பணியிலிருந்து திசை திருப்பும் ஒரு தொல்லை, ஒரு கிளைப் பிரச் சினை எனத் தேசியத்தைக் கருதுவதற்குப் பதிலாக, மார்க்சியர்கள் போராட்டத்தின் புதிய தன்மையில் தம்மை மீண்டும் பொருத்திக் கொள்ள வேண்டும், அப்போராட்டம் பெரும்பாலும் மற்றெல்லாவற்றையும் விட முதலாவதாகத் தேசியத் தன்மை கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம், வர்க்கச் சுரண்டலுடன் தேசியச் சுரண்டலையும் மார்க்சியக் கோட்பாட்டின் ஒரு அடிப்படைப் பகுதியாக இணைக்கும் முக்கிய மான அடியை எடுத்து வைத்த லெனினுடைடிண ர்வில் தொடர்ந்து செல்வார்கள்’ என்பது ஹெரேஸ் பி. டேவிஸ் நூலின் இறுதிப் பந்தி (ப. 334).
முன்னேறிய இனக்குழு/ குழுக்கள் ஏனைய வற்றை ஆக்கிரமித்து சுரண்டலுக்கு உட்படுத்திய எமது சாதியச் சமூகத்தில் இப் புரிதலுடனான எமது வரலாற்றின் மீதான மறுவாசிப்பு அவசியம். இனி, அது எமது பணி; ஏற்கனவே இவை தொடர்பில் எழுதப்பட்ட போதிலும், இன்னமும் பயணம் தொடர அவசியமான வெளி விசாலமாயுள்ளது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 46
பாத்திரங்கள் படைக்கப்
அடிப்படைகளிலே நன்ன
விபரிக்கப்பட்டுள்ளன. நா
: : : يعة في إن "ه به غرة" ، مينية فين ) أو
பாத்திரங்களின் படைப் . லேயே சமூகச் சார்பு கெr
பாத்திரங்களும் சமூகத்தைப் பிரதிபலிப்பவையாக அ அப்பழுக்கற்ற நல்லவர்களையும், நன்மை கலவாத தீமையுமாகிய இரு பண்புகளையுடைய சேர்க்கையின் படுகின்றதோ, அதன் அடிப்படையிலேயே மனிதர் முடிகின்றது.
சமூகத்திலே முழுமையற்ற மாந்தர்களே கான முழுமையற்ற மாந்தர் இடம் பெறின், நாவல் சிறப்பு சமூகத்திற் காண்கின்ற முழுமையற்ற மாந்தர் படைப்பாற்றலின் வெற்றி தங்கியுள்ளது. நாவலாசிரிய தொடக்கத்திலே அறிமுகப்படுத்தலாம். எனினும், நாவ மூலமாக முழுமை பெறுவதாகக் காட்டும் போதே, உன் வேறொரு வகையிற் கூறுவதாயின், ஒரு பாத்திரத்தி கொணரப்பட்டு நிறைவேற்றப்படுகின்றனவோ, அதற்ே இத்தகைய பாத்திர முழுமை தொடர்பாகப் பின்வரும்
சில வேளைகளிலே நாம் பாத்திரத்தை முதலி படிந்ததாகவும் தோன்றலாம். ஆனால், காலவரையறை பிரதிபலிப்புகளிலிருந்து அது உயிருள்ள ஓர் ஆளு தொடக்கத்திற் பாத்திரத்தைப் பற்றி விபரிப்புத் தரப்ட எமக்கு முன் கூட்டியே தெரியும். பின்னர், பாத்திரத்தி விரிவுபடுத்தி நிரப்புவதாக அமைகின்றன. தொட வேலையை நாம் ஒப்பிட்டு, இதன் இயைபைச் சுவை
பாத்திரப் படைப்பிலே இன்னொரு குறிப்பிடத்தக்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 
 
 
 

நாவல் இலக்கியத்தில் கதையம்சத்துக்கு அடுத் ததாக முக்கிய இடத்தினைப் பெறுவது, பாத்திரப் படைப்பாகும். நாவலின் கதையம்சத்தை வாசக ரோடு தொடர்புப்டுத்துவதற்குப் பாத்திரப் படைப்பு அவசியமானது. கதையம்சத்திலே இடம்பெறும் நாவலாசிரியனின் நோக்கங்களை வெளிப்படுத்தப் பாத்திரங்கள் சிறந்த கருவிகளாகப் பயன்படுகின் றன. மனிதனுக்குள்ளேயே இடம்பெறும் அக முரண் பாடுகளும், அவனுக்கும் புற நிலைச் சூழலுக்கும் இடையே நடைபெறும் புற முரண்பாடுகளும் பாத்திரப் படைப்பினை முக்கியத்துவப்படுத்து கின்றன.
காவியத்திலும் பாத்திரப் படைப்பு முக்கியத்து வம் பெற்றுள்ளது. ஆயினும், அதிலே அறிவியல் மையும், தீமையுமாகிய பண்புகளைக் கொண்டனவாகப் பட்டுள்ளன. இப்பண்புகள் மிகையாகவே காவியத்திலே ாவலின் பாத்திரப் படைப்புக் காவியத்திலே இடம்பெறும் பினின்றும் பெரிதும் வேறுபடுகின்றது. நாவல் இயல்பி ாண்டதாகும். இவ்வகையிலே, இதிலே இடம்பெறுகின்ற அமைய வேண்டியது அவசியமாகின்றது. சமூகத்திலே மிகத் தீயவர்களையும் காண்பது அரிது. நன்மையும், 1 அடிப்படையிலே எப்பண்பு ஒருவரிடம் மிகுந்து காணப் களை நல்லவரெனவும், தீயவரெனவும் பாகுபடுத்த
ண்ப்படுகின்றனர். ஆயினும், நாவலிலே இத்தகைய |ப் பெற முடிவதில்லை. எனவே, நாவலாசிரியர் தாம் களை முழுமையாகப் படைப்பதிலேயே அவரது ர் ஒருவர் முழுமையற்ற பாத்திரம் ஒன்றைக் கதையின் லின் முடிவிலே, குறிப்பிட்ட இப்பாத்திரம் அநுபவத்தின் iண்மைக் கதாபாத்திரமாக உருப் பெறுகின்றது. இதனை ன் உள்ளார்ந்த ஆற்றல்கள் எந்த அளவுக்கு வெளிக் கற்பவே ஒரு பாத்திரத்தின் முழுமையை மதிப்பிடலாம்.
கருத்து அவதானிக்கத்தக்கது:
ற் பார்க்கும் போது, அது தெளிவற்றதாகவும், நிழல் ]ப்படி ஏற்படும் நிகழ்ச்சிகள் அப்பாத்திரத்திலேற்படுத்தும் விமயென நாம் உணர்கின்றோம். சில நாவல்களிலே டுகின்றது. ஆதலால், பின் நடைபெறப் போகின்றவை ன் செயற்பாடுகள், பிரதிபலிப்புகள் இந்த விபரிப்பினை கத்திலே தரப்படும் விபரிப்பினோடு இந்த நிரப்பல் iss6)Tib.
5 அம்சமும் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாத்திரப் படைப்
44

Page 47
பிலே, சமூகத்திலே வாழும் அதே தன்மை கொண்ட பல்வேறு மாந்தர்களின் சாயல் இடம் பெறுவதுண்டு. இவ்வாறு பல்வேறு சமூக மாந்தர்களின் இயல்பு களை ஒரே பாத்திரத்திலே படைத்துக் காட்டுவது ஒருங்கிணைப்பு முறை (Act of conflation) எனப்படும். இம்முறை, குறிப்பிட்ட ஒரு பாத்திரப் படைப்பை வாசகர் மனங்களிலே நன்கு பதிய வைக்கின்றது.
பாத்திரப் படைப்பின் சிறப்புக்கு நாவலாசிரிய னின் திறமை மட்டுமே போதுமானதொன்றன்று. இத் திறமையுடன் அநுபவமும் இணையும் போதே பாத் திரப் படைப்பிலே ஒர் ஆசிரியர் வெற்றி பெற்றவராவர். திறமையையும், அநுபவத்தையும் கொண்டு குறிப்பி ட்ட ஒரு பாத்திரத்திலே தான் கலந்து எழுதும் போது பாத்திரப் படைப்பின் பெறுமானம் அதிகரிக்கின்றது. இத்தகைய புறநிலையுண்மைகளைக் கருத்திற் கொள்ளாமல், படைப்புத் திறனைப் பிரமனின் சிருஷ் டித் தொழிலோடு ஒப்புமை கூறி, இதனை இயற்கை யின் அருட் கொடையெனச் சிலர் கருதுவதுண்டு.
பாத்திர உரையாடல், பாத்திரப் படைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஏனெனில், பாத்திரங்களின் பண்பு, அவற்றின் உரையாடல் மூலமே பெருமளவு வெளிப்படச் சந்தர்ப்பம் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் இயல்பு, செயல்கள் பற்றி ஆசிரியர் விளக்கமாக விபரிக்கக் கூடிய வாய்ப்பு நாவலிலே இருப்பினும், பாத்திரங்களை உரையாட விட்டுத் தாம் ஒதுங்கிக் கொள்வதே சிறந் தது. இத்தகைய தன்மையைத் தி.ஜானகிராமனின் நாவல்களிற் காணலாம்.
பாத்திரப் படைப்பிற் பிறிதொரு அம்சம், குறிப் பிட்ட ஒரு பாத்திரத்தைப் படைக்கும் போது, தேவை யையொட்டி அப்பாத்திரத்தின் கடந்தகால வாழ்க் கைச் சம்பவங்களைக் குறிப்பிட்டுச் செல்வதாகும். அவ்வம்சத்தைக் குறிப்பிடாமற் செல்வதோ, அளவுக் கதிகமாகக் குறிப்பிடுவதோ பாத்திரப் படைப்பைப் பாதித்துவிடும்.
நாவலிலே இடம்பெறும் எந்தவொரு பாத்திரமும் பொருளாதார ஏற்றத் தாழ்வின் அடிப்படையிலேயே அமைகின்றது. இவ்வாறு வர்க்க பேதத்தினைப் பிரதிபலிக்கின்ற பாத்திரங்கள், யதார்த்த பூர்வமான வையாக அமைய வாய்ப்பேற்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு பாத்திரம் சார்ந்துள்ள வர்க்கத்தின் இயல்புக் கேற்பவே, அதனது உறவு நிலைகளும் பாதிக்கப்ப டுகின்றன. இதனைக் க. கைலாசபதி பின்வருமாறு
45

குறிப்பிட்டுள்ளார்: "நாவலில் வரும் ஒவ்வொரு பாத் திரமும் சமூகத்திலே ஒவ்வொரு நிலையிலே உழைப்பின் அடிப்படையிலே உள்ள பிரிவிலே, வர்க் கத்திலே இடம் பெற்றுள்ளது. அதன் காரணமாகச் சமூகத்திற் சில உறவுகள் அவ்வப் பாத்திரத்துக்கு ஏற்படுகின்றன. அந்த நிலையிலே தான் அந்தப் பாத் திரத்தின் வாழ்க்கை இயங்குகின்றது; வளர்கிறது. அந்த வளர்ச்சியிலேயே அப்பாத்திரத்தின் சிந்தனை களும், உணர்ச்சிகளும் தோன்றுகின்றன. பல்வேறு மனிதரிடையேயுள்ள சமூக உறவுகளினுடாக ஒர் பாத்திரம் இயங்குவதைக் கவனிக்கும் பொழுதுதான் அது ஏன் அவ்வாறு இயங்குகிறது, அல்லது இயங்க வேண்டும் என்னும் பேருண்மை நமக்குப் புலப்படு கின்றது. சுருங்கக் கூறின் பாத்திரங்களின் உணர்ச் சிகளையோ உணர்ச்சி மோதல்களையோ சிந்த னைகளையோ ஒவியமாக அப்படியே தீட்டி விடுவ தல்ல, நாவல். அவ்வுணர்ச்சிகளும், சிந்தனைகளும் எந்தச் சந்தர்ப்பத்திலே எப்படித் தோன்றுகின்றன, அவற்றைத் தோற்றுவிக்கும் வாழ்க்கை நிலை யாது, அந்த வாழ்க்கை நிலைக்கும் குறிப்பிட்ட பாத் திரத்தின் குணவளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம், அக் குணங்களினால் அவன் வாழ்க்கை எவ்வாறு பாதி க்கப்படுகின்றது என்பனவற்றையெல்லாம் அடக்கி யமைத்துக் கோடிட்டுக் காட்டும் பொழுதுதான் உண் மையான முழு மனிதனை நாம் உணர முடிகின்றது. இத்த்கைய முழுமனிதனை நாவலிற் படைப்பத ற்கு நாவலாசிரியர்க்குத் தனியானதொரு தத்துவப் பார்வை இருப்பது அவசியமானதாகும். விஞ்ஞான பூர்வமான வகையிற் சமூக இயக்கங்களை அவ தானிக்க முடிந்தால் மட்டுமே, நாவலிலே முழு மனி தனைப் படைக்கவியலும். சில நாவலாசிரியர்க ளாலே இத்தகைய விஞ்ஞானபூர்வமான வகையிற் சமூக இயக்கங்களை அவதானிக்க இயலாமையி னாலேயே சமூகம் இயக்கமற்று இருப்பதாகக் கற் பனை செய்து கொண்டு, யதார்த்ததுக்கொவ்வாத பாத்திரங்களைப் படைத்தளிக்கின்றனர்.
நாவலிலே இடம் பெறும் கதாபாத்திரங்களை இ.எம். போஸ்ரர் (E.M.Forster) இருவகையாகப் பகுப் பர். (அ) முழுநிலைப் பாத்திரங்கள் (Round Characters), (அ) ஒரேநிலைப் பாத்திரங்கள் (Flat Characters). இவ் விருவகைப் பாத்திரங்களிலே, முழுநிலைப் பாத்திர ங்கள் உருவத்திலும், கருத்தளவிலும் சிறிது சிறி தாக வளர்ச்சி பெற்று முழுமையடைவனவாக
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 48
அமையும். இத்தகைய முழுநிலைப் பாத்திரப் படைப்புக்கு உதாரணமாகத் தமிழ் நாவலிலே ந. சிதம்பரசுப்பிரமணியத்தின் இதயநாதம்' நாவலிலே இடம்பெறும் கிருஷ்ண பாகவதரைக் குறிப்பிடலாம். நாவலின் ஆரம்பத்திலே இளஞ் சிறார்களோடு விளையாடித் திரியும் கிட்டு என்ற சிறுவன் உடல் வளர்ச்சியும், குரல் வளர்ச்சியும் பெற்றுக் கிருஷ்ண பாகவதராகின்றான். பின்னர் மனோவளர்ச்சியும் பெற்று, குரலினிமையினாலே பிறரை வசீகரிக்கும் திறமையைத் துறந்த ஆத்மஞானியாகின்றான்.
ஈழத்து நாவல்களிலே முழுநிலைப் பாத்திரத்துக் குச் சிறந்த உதாரணமாக அமைந்திருப்பது, க. அருள் சுப்பிரமணியத்தின் "அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1974) நாவலிலே இடம்பெறும் அரியம் என்ற பாத்திரமாகும்.
ஒரே நிலைப் பாத்திரங்கள் நாவலிலே இடையி டையே வந்து செல்வனவாக அமைவன. நாவலிலே எத்தகைய முறையிலே அறிமுகம் செய்யப்பட்ட னரோ, அம்முறையினின்றும் பிறழாமல் நாவல் முழுவதும் இடம் பெறுவர். அவர்களிடத்துப் பண் படிப்படையிலான பரிமாண வளர்ச்சியைக் காண்ப தற்கில்லை. ஆயினும், அவரவர்களுக்குரிய சில தனியியல்புகள் அவர்களிடத்திலே அவதானிக்கத் தக்கதாக இருக்கும். கல்கியின் "தியாக பூமியிலே தீட்சிதர், மு. வரதராசனின் கயமையிலே வெங்கடே சன் முதலான பாத்திரங்களை உதாரணங்களாகக் கொள்ளலாம். ஈழத்து நாவல்களிலே, நந்தியின் மலைக்கொழுந்து' (1965) நாவலில் இடம் பெறும் டிஸ்பென்சர் பதியையும், சி. சுதந்திரராஜாவின் 'மழைக்குறி (1975) நாவலில் வரும் முதலாளி நாக லிங்கத்தையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
இப் பாகுபாட்டின் அடிப்படையிலே, இத்தகைய பாத்திரப் படைப்புக்களை நோக்கும் போது, முழு நிலை பாத்திரங்களைத் தலைமைப் பாத்திரங்களா கவும், ஒரேநிலைப் பாத்திரங்களைத் துணைப் பாத் திரங்களாகவும் கொள்ள முடிகின்றது. ஒரே நிலைப் பாத்திரங்கள் சிறந்தனவன்று எனவும், முழுநிலைப் பாத்திரங்களே நாவலிலே இடம்பெறத் தகுந்தன வெனவும் கருதப்படுவதற்கான முக்கிய காரணம், தற்காலத் திறனாய்விலே முழுநிலைப் பாத்திரங்க ளின் மீதே அதிக அக்கறை செலுத்தப்படுவதாகும். காலப் போக்கிற் பாத்திரப் படைப்புப் பற்றிய தற்போதைய கொள்கையிலே மாற்றம் ஏற்படலாம்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

பாத்திரப் படைப்புத் தொடர்பான தமது கட்டுரையொ ன்றிலே, எட்வின் மூர் ஒரே நிலைப் பாத்திரமே நாவ லாசிரியரின் நோக்கத்தினைக் காப்பாற்றவல்லது என்கின்றார். வாழ்க்கை பற்றிய ஒருவகையான பார்வையினைத் தெரிவிப்பதற்கு அவசியமான கருவியாக இப் பாத்திரப் படைப்பு விளங்குகின்றது என்பது அவரது கருத்தாகும்.
பாத்திரப் படைப்புப் பற்றிய இத்தகைய கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இக்கருத்து வேறுபாடுக ளின் அடிப்படையிலே ஒரு முடிவுக்கு வரமுடிகின் றது. நாவலிலே எந்தவொரு பாத்திரமும் முழுமையு டன் சித்திரிக்கப்பட வேண்டும். அவை தலைமைப் பாத்திரங்களாகவோ இருக்கலாம். நாவலாசிரியரது நோக்கத்தை நிறைவு செய்வதிலே ஒவ்வொரு பாத்திரமும் தன்னளவிற் பங்கு பெற வேண்டும். இதே வேளையிலே, ஒவ்வொரு பாத்திரமும் அடிப் படையிலேயே யதார்த்த பூர்வமாகப் படைக்கப்பட வேண்டும். யதார்த்த பூர்வமான பாத்திரப் படைப்பு எனக் கூறும்போது, பின்வரும் அம்சங்களை அடிப் படையாகக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட பாத்திரம் பொருளாதார ஏற்றத் ({9ع) தாழ்வு அடிப்படையிலான சமூக மாந்தரின் இயல்புக ளைக் கொண்டிருத்தல். குறிப்பிட்ட பாத்திரத்தின் சமூகச் சூழ் (ول9ی) நிலைக்கேற்பப் பின்னண் அமைந்திருத்தல்.
நாவலிலக்கியத்திற் கதைக்கருவுக்கு அடுத்து முக்கியத்துவம் பெறுவது பாத்திரப் படைப்பு என்பது முன்னர் கூறப்பட்டது. பாத்திரப் படைப்பிலே முத ன்மை வகிக்கும் பாத்திரமாகக் கதைத் தலைவன் (Hero) பாத்திரம் விளங்குகின்றது.
காவியத்திலும் கதைத் தலைவன் பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருப்பினும், நாவலிலே இடம் பெறும் இப்பாத்திரம், காவியக் கதைத் தலைவ னினின்றும் பெரிதும் வேறுபட்டதாகும். காவியத் திலே இடம்பெறும் கதைத் தலைவன் 'தன்னிகரி ல்லாத தலைவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
ஆனால், நாவலிலே இடம்பெறும் கதைத் தலைவன் சமூகத்திலே வாழும் மாந்தரிலே ஒருவ னாகவே இனங் காணப்படுகின்றான். அவனது வாழ்வும், வாழ்விலே ஏற்படும் பிரச்சினைகளும், பிறருக்கும் அவனுக்குமிடையே ஏற்படும் உறவு நிலைகளும் சமூகச் சார்பானவையாகும். சமூகத்
46

Page 49
தின் தொடர்பினை அறுத்து, தனிமனிதச் சார்புக் கதைத் தலைவர்களாகப் படைக்கப்படுவோரும் முற்று முழுதாகச் சமூகத்திலே தாம் வகிக்கும் பங்கினை இழந்துவிட முடிவதில்லை.
நாவலிலே இடம்பெறும் கதைத் தலைவனின் பண்புகள் யாவையென்பது ஆராயப்பட வேண்டிய தொன்றாகும். நாவலின்-கதைப் போக்கிலே அடிக் கடி தோன்றுவதால் மட்டுமே ஒரு கதாபாத்திரம் கதைத் தலைவன் பாத்திரமாக அமைந்துவிடுவ தில்லை. ஏனெனில், அடிக்கடி இப்பாத்திரம் தோன் றினாலும், வாசகருக்கு எதையுமே உணர்த்தாமற் போய்விடலாம். சம்பவக் கோவைகளினுடாகக் கதையை நடத்திச் செல்ல ஒரு பாத்திரம் உதவ லாம். ஆயினும், கதைப் பின்னலுக்கு ஒரு கருவி யென்ற அளவில் மாத்திரமே குறிப்பிட்ட அப்பாத்தி ரத்தின் சேவை அமைந்து விடுதல் கூடும். நாவலிலே உதிரியாக இடம்பெறும் துணைப்பாத்திரங்களுக்கும் மேலானதாகச் சில தகைமைகளைப் பெற்றுத் தலைமைப் பாத்திரமாக அமைவதினாலே மட்டும் ஒரு பாத்திரம் கதைத் தலைவனாகி விடுவதில்லை. கட்டழகும், காதல் செய்யும் வல்லமையும், இலட்சிய நோக்கும் கொண்டமையினாலேயே கதைத் தலை வன் என்னுந் தகுதியை ஒரு பாத்திரம் பெற்று விடுவதில்லை. கூரிய மதியும், உயர்ந்த கல்வியும், சிறந்த மனப் பண்பும் கொண்ட பாத்திரமே கதைத் தலைவனாக அமையுமென்ற நியதியுமில்லை.
இவ்வகையிலே நோக்கும் போது, மேற்குறிப் பிடப்பட்ட பண்புகளினின்றும் வேறானதொரு பண்பே ஒரு பாத்திரத்தைக் கதைத் தலைவன் என்ற தகுதியைப் பெறச் செய்கின்றது என்று கொள்ள வேண்டும். உண்மையிலே, ஒரு பாத்திரம் வாழ்கி ன்ற சமூகத்துடன் எவ்வகையிலாவது முரண்பட நேரிடின், அப்பாத்திரமே கதைத் தலைவன் பாத்தி ரமாகும். இத்தகைய முரண்பாட்டின் அடிப்படை யிலே தோன்றும் தனித்துவமே, கதைத் தலைவன் பாத்திரத்தின் சிறப்புத் தகுதியாகும்.
கதைத் தலைவன் பாத்திரம் தொடர்பான பின்வரும் கருத்து மனங் கொள்ளத்தக்கதாகும்.
சமூக வாழ்வில் ஏதோ ஒரு முனையுடன் முரண் படுகிற போதுதான் அவனுக்குத் (கதைத் தலைவ னுக்கு) தனித்துவம் ஏற்படுகின்றது. அந்தத் தனித் துவமே கதாநாயகனை உருவாக்கும் அடிப்படை. இங்ங்னம் சமூதாயத்தோடு முரண்படுகிறவர்கள்
47

பழங்காலத்து வீரதீரர்களாகவோ, இக்காலத்துக் கொள்ளைக்காரர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கடப்பாடில்லை. ஒரு நல்ல மனிதனும் கூட, ஏதோ ஒரு காரணம் பற்றிச் சமூக முனையுடன் முரண்படலாம். மரபு, கட்டுப்பாடு, சநாதனம், சம்பி ரதாயம் முதலிய எவற்றோடும் முரண்பட நேரலாம். அப்படிப் போராடுகின்றவன் உயர்குடிச் செல்வ னாகவோ, அல்லது நகரசுத்தித் தொழிலாளி யாகவோ கூட இருக்கலாம். அவனுடைய முரண், போராட்டம், வெற்றி சாதனை, தோல்வி எல்லாமே அவனைக் கதாநாயகனாக ஆக்கி விடுகின்றன.
ஆரம்பகாலத் தமிழ் நாவல்களிலே இடம் பெற்ற கதைத் தலைவர்கள் காவிய காலத்துக் கதைத் தலைவர்களினின்றும் முற்றிலும் வேறுபட முடியாதவராயிருந்தனர். பிரதாப முதலியார் சரித்திரத்திலே (1879) இடம்பெறும் கதைத் தலைவரான பிரதாப முதலியார் ஒரளவு காவிய மரபின் அடிப்படையிற் படைக்கப்பட்டுள்ளார். பாலப் பருவம் முதலாக இவரது வாழ்க்கை வரலாறு கூறப்படுகின்றது. இக் கதைத் தலைவர் கூர்த்த மதியும், நகைச்சுவையுணர்வும், கல்வியறிவும் கொண்டவராகக் காட்டப்படுகின்றார். இவரது உயர்குடிப் பிறப்பு, முன்னோரின் பெருமை, திரு மணம் முதலானவை ஓரளவு காவியப் பார்வையி லேயே கூறப்பட்டுள்ளன.
தமிழ் நாவல்கள் தொடர்பான முதன் முயற்சிக ளிலே இடம் பெற்ற கதைத் தலைவர்கள் ஆங்கிலம் கற்று முன்னேற விரும்பிய மத்தியதரவர்க்கத்தி னராவர். சமூக அந்தஸ்துப் பெறுவதே இத்தலை வர்களது உழைப்பின் பயனாகக் கொள்ளப்பட்டது.
நாவலிலக்கியத்தில் தனிமனிதக் கொள்கை கூடிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மேலைப்புலத் திலே தனிமனிதக் கொள்கையின் தோற்றத்துடன் நாவலிலக்கியம் தோன்றியது. ஆயினும், காலப் போக்கிற் சமூக உணர்வு கொண்ட நாவலாசிரி யரால் தன்மனிதன் சமூகத்தின் ஓர் அங்கத்தவன் என்பது எடுத்துக் காட்டப்பட்டது. இதனால், தனி மனிதக் கொள்கை சமூக இயக்கக் கொள்கையுடன் இணைத்துக் காட்டப்பட்டது. М
தமிழ்நாட்டு நாவலாசிரியரான ஜெயகாந்தன், தி. ஜானகிராமன் போன்றோரின் எழுத்துக்களிலே தனிமனிதக் கொள்கையின் வளர்ச்சி நிலையை அவதானிக்க முடிகின்றது. இவர்களது நாவல்களிற்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 50
பாத்திரங்களே மிக முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றன. இதுவே மேற்குறிப்பிடப்பட்ட கொள்கையின் உச்சகட்ட வளர்ச்சி நிலை எனலாம்.
தனிமனிதக் கொள்கையின் இவ்வுச்சகட்ட வளர்ச்சி நிலையினையடுத்து, 1970ஆம் ஆண்டின் பின்னர் கதைத் தலைவன் பாத்திரம் படைப்பிற் புதிய இயல்புகள் புகுத்தப்பட்டுள்ளன. தீவிரப் போக் கும், செயல் திறனுமே கதைத் தலைவன் பாத்திரத் திற் புகுத்தப்பட்ட இப்புதிய இயல்புகளாகும். நாவ லாசிரியர் ஒருவரின் பின்வரும் கூற்று இதற்குச் சான்று பகருகின்றது.
இந்நாவலை 1970க்குப் பிறகு எழுதியிருந்தால் எனது கதாநாயகன் தீவிரமான போக்குள்ளவனாக இருந்திருப்பான். இலவசக் கல்வியினால் ஒரளவு முன்னேற்றம் பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்து வாலி பரும் போராட்டங்களில் குதித்திருப்பார்கள். நாவ லும் வேறுவிதமாகப் போயிருக்கும். மாசிலாமணி யில் உணர்ச்சி இருக்கும் அளவுக்குச் செயல் திறம் இல்லை, என்பது உண்மை. கிராமத்து மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியரால் அந்தக் கால கட்டத்தில் இருந்த சூழ்நிலையில் அவ்வளவுதான் செய்ய முடியும்.'
ஐம்பதுகளில் தொடர்கதையாக எழுதப்பட்ட தமது நாவல் 'விதியின் கை' 1977 இல் நூல் வடிவிற் பிரசுரமாகியபோது, அதன் ஆசிரியரான கனக செந்திநாதன் மேற்கண்டவாறு முன்னுரையிற் குறிப்பிட்டுள்ளார்.
மேற் குறிப்பிட்டவாறு, தீவிரப் போக்குக் கொண் டவர்களாகக் கதைத் தலைவர்கள் படைக்கப்படு வது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்திற் கதைத் தலைவன் பாத்திரத்திற்குரிய சிறப்பியல்புகள் குறையத் தொடங்கியுள்ளன.
சமூகத்திற் பொருளாதார அடிப்படையிற் பாதிக் கப்பட்ட சகலரும் ஒன்று திரண்டு போராடத் தொடங் குவதாகப் பாத்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின் றன. இத்தகைய, சமூகத்தின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மட்டுமே ஒரு தலை வன் தேவை என்ற அளவுக்குக் கதைத் தலைவன் பாத்திரத்தின் சிறப்பியல்புகள் மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. டி. செல்வராஜின் தேனிர் (1973), கே. டானியலின் பஞ்சமர் (1973), "போராளிகள் காத்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

திருக்கின்றனர்" (1975) முதலிய நாவல்களில் இத் தகைய போக்கினை அவதானிக்கலாம். இந்நாவல் களிற் கதைத் தலைவன் என எப்பாத்திரத்தையும் சிறப்பாகக் குறிப்பிடுவதற்கில்லை.
கதைத்தலைவன் பாத்திரத்தின் ஒருமித்த பண் புகளைக் கூறுபோட்டு இருபாத்திரங்களுக்கு வழங் கும் முயற்சியையும் காண முடிகின்றது. இதற்குத் தகுந்த உதாரணமாக யோ. பெனடிக்ற் பாலனின் "சொந்தக்காரன்" (1968) நாவலைக் குறிப்பிட வேண்டும்.
கதைத் தலைவன் பாத்திரம் தொடர்பான மேற் கூறப்பட்ட கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத் துக் கூறலாம்.
காவியத்திலே இடம்பெறும் கதைத் தலைவன் தன்னிகரில்லாத தலைவனாகப் படைக்கப்பட்டுள் ளான். ஆனால், நாவலிலே இடம்பெறும் கதைத் தலைவன், ஏதோவொரு வகையிற் சமூகத்துடன் முரணுபவனாகப் படைக்கப்பட்டுள்ளான். காலப் போக்கிலே, தனிமனிதக் கொள்கை உச்ச வளர்ச் சியை அடைந்த நிலையிற் சமூகத்தினின்றும் உறவை முறித்துக் கொண்டு வாழ முனைபவர் களாகக் கதைத் தலைவர்கள் படைக்கப்பட்டுள் ளனர். இன்னொருபுறம் கதைத் தலைவன் பாத்தி ரத்தின் முக்கியத்துவமும், சிறப்பியல்புகளும் குறை ந்து, சமூகத்தின் போராட்டவுணர்வை முன்னெடுத் துச் செல்பவனாகக் கதைத் தலைவன் அமைக்கப் பட்டுள்ளான். எனினும், இரண்டாவது போக்கே முக் கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இன்றைய கால கட்டத்திற் கதைத் தலைவனுக்கிருக்கின்ற சில சிறப்பியல்புகள் எதிர்வரும் காலங்களில் குறை ந்து, நாவல் இலக்கியத்தில் கதைத் தலைவன் பாத் திரத்தின் முக்கியத்துவம் இல்லாமல் போகலாம்.
தமிழ் நாவல்கள் சிலவற்றில் புதுமையான கதைத் தலைமைப் பாத்திரங்கள் இடம்பெற்றி ருப்பதைக் காணலாம். சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை"யில் புளியமரமே கதைத் தலைமைப் பாத்திரமாக விளங்குகின்றது. சா.கந்த சாமியின் "சாயாவனம்' நாவலில் ஒரு காடே கதைத் தலைமைப் பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. டி.என்.சுகி.சுப்பிரமணியத்தின் "உழைக்கும் கரங் கள்' என்ற நாவலில் ஒரு கூட்டுறவுச் சங்கமே கதைத் தலைமைப் பாத்திரம் ஆகும்.
48

Page 51
தமிழ் இலக்கிய வ ளின் பயன்பாடு அறிமுக துண்டுப்பிரசுரங்கள் வாயி
அவர்கள் செயற்படுத்திய சைவ சமயத்தினதும் பெருமையினை உலகிற்கு அ செல்பவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனு போன்ற அறிஞர்களும் பதிப்பு முயற்சிகளில் தீவிரமாய் பழந்தமிழ் நூல்களை பதிப்பிக்கும் போது, மூலச்செ பல்வேறு ஏட்டுச்சுவடிகளைப் பெற்று ஒப்பிட்டு ஆரா தவறுகளையும், திரிபுபடுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டமை அக்கால பதிப்பு முயற்சியி
ஆனால், இன்றைய காலப்பகுதியில் மேற்கொ சர்ச்சைகளை தோற்றுவிக்கும் படியாக இருப்பது க எதிர்காலச் சந்ததியினர் மேற்கொள்வதற்கும், இல அறிந்து கொள்வதற்கும் அப்படைப்பாளியி: அவசியமானவை.தமது படைப்புக்களை தாமே ஆவி முயற்சிகள் ஆகும்.அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு நூலாக வெளியிடுகின்ற பொழுது அதை 6 அறிந்து கொள்வதற்கும் அது ஏதுவாகின்றது. L பிரசுரமானபோது அவை குறித்து வெளிவரும் வி படைப்பினை செவ்விதாக்கம் செய்து பதிப்பி உயர்வடைகின்றது. ஒரு படைப்பாளியின் ஒட்டுமெ இலக்கிய வரலாற்றில் முடிந்த முடிவாக எதனையும் அந்த வகையிலேயே பதிப்பு முயற்சிகள் முக்கிய
ஈழத்தைப் பொறுத்தவரையில் முற்போக்கு அணி ஓர் அங்கமாக விளங்கிய எழுத்தாளர் கூட்டுறவுப் தன.அவ்வாறே முற்போக்கு அணி எழுத்தாளரான தமிழ்நாட்டு "பாரி நிலையம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தன. தமிழ்நாட்டு பதிப்பகமான 'த விருது பெற்ற மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீ வெளியிட்டிருந்தது. தொடர்ந்து தமிழ்நாட்டு பதிப்பகா பதிப்பகம், செ.கணேசலிங்கனின் “குமரன்’ பதிப்ப பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களின் ‘இலங்கை ( நூலினை வெளியிட்ட கீழைக் காற்று பதிப்பகம். என்பவற்றோடு தற்போது ஈழத்து நூல்களை மாத்த
49
 
 

-சின்னராஜா விமலன்
ரலாற்றில் ஐரோப்பியர் வருகையோடு அச்சியந்திரங்க மாகியது. கிறிஸ்தவ மதத்தினை பரப்பும் நோக்குடன் லாகவும், நூல்கள் மூலமாகவும் பதிப்பு முயற்சிகளை ம் வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக தமிழினதும் அறியச் செய்வதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் ம் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை செயற்பட்டனர்.இவர்களில் சி.வை.தாமோதரம்பிள்ளை ய்யுள் பிரதியை பதிப்பிக்க வேண்டுமென்ற அவாவில் ாய்ந்தே இதனை மேற்கொண்டுள்ளார்.படியெடுத்தல் ) இயலுமானவரை தடுக்கும் நோக்கில் இவை ன் உண்மைத்தன்மையை எடுத்துக்காட்டியது. ள்ளப்படும் பதிப்பு முயற்சிகள் பல்வேறு விதமான வலைக்குரியது. ஒரு படைப்பாளி பற்றிய ஆய்வை க்கிய உலகில் அவர் பெற்றிருக்கும் வகி பங்கை னுடைய நூலினை பதிப்பிக்கும் முயற்சிகள் பணமாக்கிக் கொள்ளும் ஒரு நடவடிக்கையே பதிப்பு உதிரியாகக் காண்ப்படும் படைப்புக்களினை திரட்டி எழுதிய படைப்பாளியின் படிமுறை வளர்ச்சியினை பத்திரிகைகளிலோ, சஞ்சிகைகளிலோ படைப்புகள் மர்சனங்களை, கருத்திற்கொண்டு அவற்றிற்கேற்ப னை மேற்கொள்ளும்போது படைப்பின் தரமும் ாத்தப் படைப்புக்களும் நூலுருப் பெறாத வரையில், அறுதியிட்டு கூறமுடியாத ஒரு நிலையே காணப்படும். ந்துவம் பெறுகின்றன. யினர் முன்முயற்சி செலுத்திய அறுபதுகளில் அதன் பதிப்பகம்’ ஊடாகப் பல நூல்கள் பிரசுரம் கண்டிருந் செ.கணேசலிங்கன் அவர்களின் செல்வாக்கினால் முற்போக்கு அணியை சேர்ந்த பலரது நூல்கள் ழிழ்ப் புத்தகாலயம் ஈழத்தில் முதன்முதல் சாகித்திய வா அவர்களின் ‘தண்ணிரும் கண்ணிரும் நூலினை பகளான மறவன்புலவு சச்சிதானந்தத்தின் ‘காந்தளகம் கம், ‘மணிமேகலை பிரசுரம்', ‘விடியல் பதிப்பகம், தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் எஸ்.பொவின் ‘மித்ர' பதிப்பகம், க்ரியா வெளியீடு திரம் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் வடலி’
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 52
வெளியீடும் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்ற பதிப்பகங்களில் தவிர்க்க முடியாத பங்களிப்பை செய்து வருபவை. வடலி வெளியீடாக அண்மை யில் வந்ததே ஷோபாசக்தி, தியாகு ஆகியோரின் முரண் அரசியல் குறித்த உரையாடல் நூலான “கொலை நிலம்' ஆகும்.
இன்று பல பதிப்பகங்கள் தாமாகவே முன்வந்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும் சந்த ர்ப்பத்தில் தங்களது வணிகரீதியான நலன்களை கருத்திற்கொண்டு வாசகர் வட்டத்தில் எந்த எழுத் தாளரின் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக் கின்றது என்பதனையும் அவற்றைச் சந்தைப்ப டுத்தும் மூலோபாயங்களையும் மனதிற் கொண்டே அவர்களால் நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன. *காலச்சுவடு’, ‘உயிர்மை' போன்ற பதிப்பகங்கள் இன்று இதனையே மேற்கொண்டு வருகின்றன.
அண்மையில்கூட, 'காலச்சுவடு கவிஞர் சண் முகம் சிவலிங்கம் உட்பட எட்டு ஈழத்தவர்களின் நூல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் தமது வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு உத்திகளை கையாளவும் தவறுவதில்லை. குறிப்பாக காலச்சுவடு வாசக ர்கள் குறிப்பிட்டதொரு தொகைப் பணத்தினை செலுத்தினால் தம்மால் வெளியிடப்படும் அனைத் துப் புத்தகங்களையும் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதில் சோகம் என்னவென்றால் இத்தகைய நிலைக்கு இந்திய எழுத்தாளர்கள் மட்டுமல்லாது ஈழத்து எழுத்தாளர்களும் குறிப்பாக புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும் பலிக்கடா ஆவதுதான். புலம் பெயர் தேசங்களில் புத்தகங்களை அச்சிடுவதற்கு பெருந்தொகைப் பணம் செலவாவதால் இந்தியா வில் அவற்றை அச்சிடுவதோடு அதன் விற்பனை உரிமையையும் அவர்களுக்கே விற்று விடுவதான துர்லாப நிலையும் காணப்படுகின்றது. பெரும்பா லான புலம்பெயர் எழுத்தாளர்கள் வணிக ரீதியில் ஆதிக் கத்தை நிலைநாட்டி வரும் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளுக்கு தமது படைப் பினை அனுப்பி ஜனரஞ்சக எழுத்தாளர்கள் எனத் தம்மை முத்திரை குத்த விரும்பாத போதிலும் *காலச்சுவடு, ‘உயிர்மை' போன்ற வணிகரீதியில் இன்று செல்வாக்கு செலுத்தும் பதிப்பகங்களுக்கு அவர்கள் தம்மை ஒப்புக்கொடுப்பது கூட, ஒரு வகையில் ஜனரஞ்சகரீதியான அங்கீகரிப்பை பெற்றுக் கொள்வதற்கான ஒரு எத்தனமாகவே கொள்ள வேண்டும்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

*காலச்சுவடு’ பதிப்பகம் 1998ஆம் ஆண்டில் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத படைப்புக்களை 'அன்னை இட்ட தீ என்ற தலைப்பில் வெளியிட் டிருந்தது.பின்னர் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ முழுத்தொகுப்பினையும் 2000ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தது. இவ்விரண்டு நூல்களுக்கும் பதிப் பாசிரியராக ஆ.இரா.வேங்கடாசலபதி இருந்தார். 1989ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளி யிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள்’ எந்த ஒழுங்கி லும் அமையாமல் தாறுமாறாக வெளிவந்திருந் தமை உண்மையானாலும் 'காலச்சுவடு வெளி யிட்ட மேற்படி ‘புதுமைப்பித்தன் கதைகள்’ நூலில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படவில்லை என்பதும் வாஸ்தவமே. இருப்பினும் அந்நூல் தொகுக்கப்பட்டபோது வேதசகாயகுமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் கண்டனத்திற்கும் ஆளான தோடு 'காலச்சுவடு நிறுவுனர் சுந்தர ராமசாமி இவ்விடயத்தில் நடுநிலை நின்று செயற்படாமல் மகன் கண்ணனுக்காக பக்கச் சார்பாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட் டிருந்தது.
மேலும், பதிப்பகங்களினால் ஆராய்ந்து அறியா மல் விடப்படுகின்ற கவனக் குறைபாடுகள் கூட படைப்பாளிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடுகி ன்றன. இதற்கு சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மாப்பசானின் கதைகளையும் அவர் எழுதிய கதையாகக் கருதி வெளியிட்ட போது, அது பலத்த வாதப் பிரதிவாதங்களை உண்டு பண்ணி இருந்தது. இன்னொருவர் எழுதிய கதையை தன்னுடையது என உரிமை கோருவது ‘சோரம் போன மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு கணவன் தான் தந்தை என உரிமை கொண்டாடு வதை போன்றது என புதுமைப்பித்தன் ஒரு சமயம் கூறியதை புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்த தொ.மு.சி.ரகுநாதன் எடுத்துக்காட்டி இப்பிரச்சினை க்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பதிப்பு முயற்சிகளின் போது காணப்படும் இன் னொரு குறைபாடு, நூல் ஒன்று ஒருவரது முன்னு ரையுடன் வெளிவந்து சில வருடங்களின் பின்னர் இரண்டாம் பதிப்பாக வெளிவருகின்ற போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதற்பதிப்பிற்கான முன்னுரை என்ற வகையில் அவை பிரசுரமா னாலும், சில நூல்களில் முதற்பதிப்பில் வெளிவந்த முன்னுரை இடம்பெறுவதில்லை.இதற்குதாரணம் மெளனியின் அழியாச்சுடர்' சிறுகதை தொகுப்பு தருமு சிவராமு வினி முன் னுரையுடனி
50

Page 53
முதற்பதிப்பாக வெளிவந்தாலும், இரண்டாம் பதிப் பாக வெளிவந்த அந்நூலில் அம்முன்னுரை இடம் பெறவில்லை. மெளனி பற்றி தருமு சிவராமுவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமும் பதிப்பகங்களி னால் விதிக்கப்பட்ட பக்க வரையறையும் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
அத்தோடு ஒரு நூலுக்கெனக் குறிக்கப்பட்ட தொரு எழுத்தாளரிடமிருந்து முன்னுரையை பெற்றுவிட்டு, அந்நூலினைப் பதிப்பிக்கின்ற பதிப்பகம் மாறுகின்ற போது, அம்முன்னுரையினை தவிர்த்து விட்டு அப்பதிப்பகத்திற்கு வேண்டிய வேறு ஒரு எழுத்தாளரிடமிருந்து முன்னுரையினை பெற்று நூலைப் பதிப்பிக்கின்ற முறையும் காணப்படுகின் றது.குந்தவை எழுதிய ‘யோகம் இருக்கிறது’ சிறுகதை தொகுப்பிற்கு முதலில் குப்பிளான் ஐ.சண்முகன் அவர்களே முன்னுரை எழுதிக் கொடுத்த போதிலும், பல்வேறு தடங்கலினால் இறுதியில் அந்நூல் வெளிவரவில்லை. சில வருடங் களின் பின்னர் எஸ்.பொவின் ‘மித்ர' வெளியீடாய் அந்நூல் வெளிவந்த போது, அதில் எஸ்.பொவின் முன்னிடே இடம்பெற்றிருந்தது.இது எழுத்தாளரின் சுதந்திரத்தில் பதிப்பகங்களின் தலையீடு எந்தள விற்கு காணப்படுகின்றது என்பதற்கான ஒரு உதார ணம். பதிப்பகங்களினால் விதிக்கப்படுகின்ற பக்க வரையறைகள் கூட, ஒரு படைப்பின் பூரணத்துவம் குறித்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதற்கு ப.சிங்காரம் எழுதிய * புயலிலே ஒரு தோணி’ நாவல் பாதியாக சுருங்கியமை சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த படைப்புக்க ளையும் சேர்த்து ஒரு தனிநூலாக வெளியிடுகின்ற போது சம்பந்தப்பட்ட எழுத்தாளர் காலமாகிய சந்தர்ப்பத்தில் அந்நூலுக்கான பதிப்புரிமையை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி வரு வதே மரபாக உள்ளது.டானியலின் அனைத்து நாவல்களையும் தனிநூலாக பதிப்பித்து வெளியிட்ட 'அடையாளம்’ பதிப்பகம் அதன் பதிப்புரிமையை டானியலின் மகனான வசந்தனுக்கு வழங்கியிரு ந்தது. இதற்கு மாறாக பதிப்புரிமைகளைச் சம்பந் தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்காமல் மூன்றாம் நபருக்கு வழங்கும் முறையற்ற கைங்க ரியங்களும் இலக்கிய உலகில் நடைபெற்றுத்தான் வருகின்றன.
இன்று பெரும்பாலான பதிப்பகங்கள் எழுத்தா ளர்களின் நூலை வெளியிடுகின்ற போது, கணிச மான தொகையை எழுத்தாளர்களிடமிருந்து
51

பெற்றுக்கொண்டே பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின் றன. தனது நூல் குறிப்பிட்ட பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்தால் கிடைக்கும் பிரபல்யம் மற்றும் விற் பனை என்பவற்றை கருத்திற் கொண்டு எழுத் தாளனும் அதற்கு உடன்பட்டுக் கொள்கிறான். அதேசமயம் நூலை வெளியிடுங்கள். பணத்தினை பின்னர் தருகின்றோம் என்று கூறி நூல் வெளிவந்த பின்னாலும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பணத் தினை பெற்றுக் கொள்ள முடியாத துயரத்தி னையும் சில வெளியீட்டகங்கள் சந்தித்துள்ளன. இவற்றிற்கு விதிவிலக்காக அமைவது ஈழத்தில் புரவலர் புத்தகப் பூங்காவின் வெளியீடுகள். புத்தக ங்கள் வெளியிடப்படுகின்ற தினத்தில் விற்பனை யாகும் புத்தகங்களின் பணத்தினையும் எஞ்சிய நூலின் பிரதிகளையும் எழுத்தாளர்களுக்கே வழங் கும் தாராள மனப்பான்மை தனித்துவமானது. இருப்பினும் இதுவரை அவர்களால் கடைப் பிடிக் கப்பட்டு வரும் தம்மால் வெளியிடப்படும் நூல் எழுத்தாளரது முதல் நூலாக இருப்பது அவசியம் என்ற கொள்கையை சற்றுத் தளர்த்தி, சகல எழுத்தாளர்களினதும் தரமான படைப்புக்களை பதிப்பிக்கும் முயற்சிகளையும் கைக்கொண்டால் அது இன்னமும் சிறப்புப் பெறும்.
ஈழத்தில் சஞ்சிகைகள் நடாத்திய பெரும்பா லான ஆசிரியர்கள் அச்சஞ்சிகையின் பெயரிலேயே பதிப்பகங்களையும் நடாத்தி வெற்றி பெற்றுள்ளனர். மல்லிகைப் பந்தல்’, ‘மூன்றாவது மனிதன்', "ஞானம் பதிப்பகம் என்பவற்றை உதாரணத்திற்கு வகை மாதிரியாக எடுத்துக்காட்டலாம். தேசிய கலை இலக்கியப் பேரவை தனித்தும் சவுத் ஏசியன் புக் சென்ரர் உடன் இணைந்தும் புதியயூமி வெளி யீட்டகத்துடன் இணைந்தும் வெளியிட்ட நூல்கள் காத்திரம் வாய்ந்தவை. அதேபோன்றே இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், தற்போது அதிகளவான கல்வியியற்துறைசார் நூல்கள் உள்ளடங்கலாக பல்வேறு நூல்களை வெளியிட்டு வரும் சேமமடு பதிப்பகம், பூபாலசிங்கம் புத்த கசாலை வெளியீடாக வந்த ழரீபிரசாந்தன் அவர்க ளால் தொகுக்கப்பட்ட ‘இருபதாம் நூற்றாண்டு தமிழ் கவிதைகள்’ நூல் உட்பட சில நூல்களும் வாசகர் கவனத்தை ஈர்த்தவை. ‘அரசு வெளியீடு, “அலை வெளியீடு’, ‘சுதந்திரன் சிறுகதைகள்’ அடங்கலாக யாழ் இலக்கிய வட்டம் வெளியிட்ட பல காத்திரமான வெளியீடுகள், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், மலையகச் சிறுகதைகள்', ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ சிறுகதைத்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 54
தொகுதிகளை வெளியிட்ட ‘துரைவி' பதிப்பகம், ‘நாமிருக்கும் நாடே மற்றும் ‘ஒரு கூடைக் கொழுந்து நூல்களை வெளியிட்ட நித்தியானந்த னின் ‘வைகறை வெளியீடும், திருகோணமலை மண்ணில் வெளிவந்த சித்தி அமரசிங்கத்தின் ‘ஈழத்து இலக்கியச் சோலை' வெளியீடுகள் ஆகியனவும் குறிப்பிடத்தகுந்தவை.
இவை மாத்திரம் அல்லாமல் படைப்பாளிகளாக இருந்து கொண்டே பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களில் புலோலியூர்ஆ.இரத்தினவேலோனின் “மீரா பதிப்பகம் ஆதிப்புத்துறையில் சதமடிக்கும் நிலையில் உள்ள்து, செங்கை ஆழியானின் *கமலம் பதிப்புகழ், தாராஜின் ‘தேனுகா’ பதிப்ப கம் போன்றவை ஈழ்த்துப் பதிப்பு முயற்சிகளுக்கு வளம் சேர்ப்பவையாகும்.
கலாசார அமைச்சினாலும், பண்பாட்டலுவல்கள் திணைக்களங்களினாலும் நடாத்தப்படும் இலக்கிய விழாக்களில் வாசிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் மகளிர் தினம், முதியோர் தினம், சிறுவர் தினம் என்பவற்றை முன்னிட்டும் சம்பந்தப்பட்ட திணைக் களங்களினால் பல்வேறு பதிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில்கூட, திணைக்களப் பணிப்பாளரின் ஆளுமை வேறுபாட்டுக்கமைய நூல்களின் தரமும் நிர்ண யிக்கப்படுகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த கால கட்டத்தில் பண்பாட்டலு வல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மறுமலர்ச்சிக் கதைகள்', 'ஈழகேசரி கதைகள்’ முக்கியம் வாய்ந்தவை. ‘ஈழநாடு சிறுகதைகள்’ உள்ளடங்கலாக பாரிய தொகுப்பு முயற்சிகளுக்கு அரசநிதி கிடைப்பது வரப்பிரசாதமானாலும், இவ்வாறு வெளியிடப்படும் நூல்கள் இலவசமாக வழங்கப்படுவதனால் அதன் பெறுமதி தெரியாதோ ரின் கைகளுக்கும் சென்று விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இன்று வரை காணப்படு கின்றது.
பதிப்பு முயற்சியின் இன்னொரு பரிமாணமாக கிடைத்தற்கரிதான புத்தகங்களை காலத்தின் தேவை கருதி மீளவும் பதிப்பு செய்வது. இதற்கு உதாரணமாக பேராசிரியர் சிவலிங்கராஜா அவர் களை பதிப்பாசிரியராகக் கொண்டு மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்' நாவல் மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஈழத்தில் வெளிவருகின்ற சில சஞ்சிகைகள் தமக்கான இடத்தையே இன்னமும் ஸ்திரப்படுத்தாத சூழ்நிலையில் சஞ்சிகை
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

வெளியீட்டுப் பணியோடு தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்வதான தோரணையில் வெளியீ ட்டு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இவர் கள் முதற்கட்டமாக தமது சஞ்சிகைகளில் வெளி வந்த கவிதைகள், சிறுகதைகளினைத் தொகுத்து வெளியிடுகின்றனர்.மேற்படி கவிதைகளோ, சிறுகதைகளோ சஞ்சிகை வெளிவந்த காலங்களில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தால், அவற்றை நூலாக்கிப் பதிப்பிப்பதில் ஒரு பெறுமதி இருக்கும். ஆனால், சஞ்சிகையில் வெளிவந்த போதே கவனிப் புப் பெறாதவற்றையெல்லாம் நூல்களாகப் பதிப் பிப்பவர்களால் நாங்களும் வெளியீட்டு முயற்சிக ளில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற பெயரைத் தவிர, வேறு எந்தப்பலனும் கிடைக்கப் போவதில்லை.
இன்றைய உலக மயமாக்கல் சூழலில் பதிப்பு முயற்சிகளின் தரம் சோடை போனதற்கு சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் அள்ளிக் கொடுக்கப்பட்ட வெள்ளிப் பணமும் காரணம் என் றால் அது மிகையில்லை. இப்பணத்தை வைத்து சரியான திட்டமிடலும் செயற் திறனும் இல்லாத காரணத்தினால் இவர்களால் வெளியிடப்படுகின்ற பல நூல்கள் தரங் குறித்த கேள்விகளை எழுப்பு வதோடு அவை தீவிர வாசகர்களை சென்ற டைவதிலும் பலத்த பின்னடைவுகளை சந்திக்கி ன்றன.
பெரும்பாலான சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பன பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவற்றிற்கென தனியான பதிப்பகங்கள் இல்லாமல் வேறொரு அச்சகத்தில் பிரதிகளை அச்சடித்தே வெளியீட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின் றன. குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் போன்ற வணிக ரீதியான சஞ்சிகைகள் தமக்கென சொந்தப் பதிப்பகங்களை வைத்துள்ளன. ஈழத்தில் "வரதர்' வெளியீடுகளில் பெரும்பாலானவை வரதர் அவர்க ளினால் நடாத்தப்பட்ட 'ஆனந்தா' அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தன. பத்திரிகைத் துறையை பொறுத்தவரையில் ‘வீரகேசரி’ தனது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் ‘வீரகேசரி' வெளி யீடுகள் மற்றும் ஜன்மித்ரன்' வெளியீடுகள் என வெளியிட்ட நூல்கள் கணிசமானவை.
எழுத்தாளர்களின் மறைவையொட்டியோ அல் லது அந்தியேட்டி, சிரார்த்த தினங்களின் போதோ இப்போது பல நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன. இவை தவிர எழுத்தாளர்களின் மணிவிழா, பவள விழா, அமுத விழா என்பவற்றை முன்னிட்டும் வெளி யீட்டு முயற்சிகள் கைகூடுகின்றன. இவ்வாறு
52

Page 55
வெளியிடப்படுபவற்றுள் பெரும்பாலானவை தனி மனித புகழ்பாடும் நூல்களாகக் காணப்பட்டாலும் அபூர்வமான சில நூல்களும் வெளிவராமல் இல்லை.
தற்போது ‘கொடகே நிறுவனம் மற்றும் இனங்க ளுக்கிடையிலான புரிந்துணர்வை கட்டியெழுப்பும் நோக்கோடு அண்மையில் ஒன்று கூடிய சிங்கள - தமிழ் - முஸ்லீம் எழுத்தாளர் ஒன்றுகூடல் என்ப வற்றின் மூலம் தமிழ் நூல்கள் சிங்களத்திலும், சிங்கள நூல்கள் தமிழிலும் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. சிங்கள - தமிழ் இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒருவழிப் பாதை யாகவே இருந்து வந்துள்ளது என்ற கருத்துரு வாக்கத்தை மறுதலிக்கும் விதமாக இதனை நோக்க முடியும். முன்னதாக எம்.டி.குணசேன நிறு வனமும் சில தமிழ் எழுத்தாளர்களினது நூல்களை வெளியிட்டிருந்தது.
பதிப்பு முயற்சிகளில் அவதானித்த இன்னொரு விடயம், ஒரு சில ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களை தமிழ்நாட்டில் வெளியிடும் பொழுது தமது முதற் பதிப்பினையே இரண்டாம் பதிப்பென
சுமைகளைச் சுமக்க முடியாதவா
சுமந்திரும்பிரயாணிகளின்
ຜູ້ທີ່ຕົວເລກຜູ້ນີ້ຫຼາຍ.
ýế கும்
... ::.
53
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அச்சிட்டு பதிப்பிப்பது அதாவது, ஏற்கனவே முதற் பதிப்பு ஈழத்தில் வெளியிடப்பட்டு குறுகிய காலத் தில் அவை விற்றுத் தீர்ந்து விட்டதான ஒரு மாயையை இதன் மூலம் அவர்கள் உருவாக்குகி ‘ன்றனர். பின்னர், அவற்றை ஈழத்துப் போட்டிகளு க்கு அனுப்பும் போது இரண்டாம் பதிப்பினை மறை த்து நூல்களை அனுப்பும் செயலும் நடை பெற்றிருக்கின்றன. அத்தோடு ஒரே நூலினையே வெவ்வேறு தலைப்புக்களில் இலங்கையிலும் இந்தி யாவிலும் வெளியிடும் செயல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இறுதியாக சாகித்திய விருதினைப் பெற்றுக் கொள்ளும் முனைப்பில் சில அநாகரிகமான முயற் சிகள் நமது எழுத்தாளர்களினால் இன்றும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இதுபோன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளை களைவது இலக் கியத்தின் வளர்ச்சியினை ஆரோகணித்த பாதை யில் இட்டுச்செல்வதற்கான உபாயமாக இருக்கும். இதற்கு விருதுகளுக்கும் அப்பால், சிறந்த படைப் புக்களை காலங்காலமாக வாசகர்கள் அங்கீகரி த்தே வந்துள்ளார்கள் என்பதை நமது எழுத்தாளர் கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெறும் அரச ஹெஜியனாய் மற்றவரை நசித்து, கிதித்த அரங்கேறும் நாடகங்கள். கசியமாய்ப்பெண்ணுடல் தீண்டும் இன்பமாய் காற்று மெலியதாய்
இருப்பிடங்களை நோக்கிச்செல்லும் இப்பிரயாணங்கள் எப்போதும் தவிப்புடன்தான். தரிப்பிடம் நீக்கி இறக்கிவிடும்,
அவலத்துடன் வாழ்வி லும் என்றும் நியதிகளைறிேயபடி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 56
'With Best Complimen
M
POOBALA
BOOK
IMPORTERS, EXPORTERS OF BOOKS, STATIONE
Head office:
202, Sea Street, Colombo l l , Sri Lanka. Tel : 2422321 Fax : 23373 13 E-mail : pbdho(a).sltnet.lk
பூபாலசிங்கம்
VğHgHass cíðHVGOMGorwa இறக்குமதிலாளர்கள், !
basayasato : இல, 202, செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை. தொ.பே. 2422321 தொ.நகல் : 2337313 Sligotégé : pbdho(a).sltnet.lk
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

ί Το
Mallikai 46 year Issue
SINGHAM
DEPOT
, SELLERS & PUBLISHERS RS AND NEWSAGENTS
Branches :
340, Sea Street, Colombo l ll, Sri Lanka. Tel: 2395665
309A - 2/3, Galle Road, Colombo 06, Sri Lanka. Tel: 4-515775, 2504266
4A, Hospital Road, Jaffna. Te: O21 2226693
புத்தகசாலை ாளர்கள், ஏற்றுமதி, நூல் வெளியீட்டாளர்கள்.
இைை :
இல. 340, செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை, தொ.பே. 2395665 இல. 309A - 2/3, காலி வீதி, கொழும்பு 06, இலங்கை. தொ.பே. 4-515775
இல, 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 0212226693
54

Page 57
بسسسسسسسات "
ఖగోళి ܕܗ̇ܬ݁ܰܦ݁ܳܢܶܘ
ତ୯୬ %
ಟ್ಲಿ' హా
*సి
స్ధగో
{
*ళ
"119.6%. "శ్మ_ "" فقتصاسی است. - سمسمه. ممنوع به""
**w-awwam. ܐܸܢ”
story
அப்போது அப்பா பரிச்சயம் “யாழ்ப்பாணத்தி ܫ
லாம். அவ்வாறு அந்த வட்டாரத்திலேயே அப்பாவிடம் வீட்டினுள் அவனது கைக்கு எட்டாத உயரமாக 8 அது அப்பாவுக்கு எட்டும் உயரம். அதற்காகவென்றே சுல் ஒன்றில் அதன் விசைப் பகுதியைக் கொழுவி, சற்று பொறுக்க வைத்துவிட்டால். துவக்கு எடுப்பாகத் ே திறந்திருந்தால் வெளிவிறாந்தையில் நின்றே துவக்ை விளையாட வரும் நண்பர்களைக் கூட்டிவந்து, அவன் சக மாணவர்களையும் இதற்காகவென்றே விளையாட அவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய. ‘அ வீட்டிலிருக்கும் துவக்கைப் பற்றி அவன் நண்பர்களி தவறாமல் சரியாகச் சுடும் லாவகம் பற்றி விளக்கமள தூக்குவாய்?’ எனப் பிரமிப்புடன் கேட்பார்கள். அது அ
எப்படிச் சுடுவது என அப்பா தனது நண்பர்களுக்கு தட்டி வெடி தீரும்போது ஒரு எதிர்த் தாக்கம் இருக்கும். அதனால் துவக்கின் பிடிப் பகுதியை வாகாக தோள்மூ தன் நண்பர்களுக்குக் கொடுத்த பயிற்சியை எல்லாம்
இதனால் அவனுக்கு நண்பர்களிடையே ஒரு மு விளையாடும்போதும் சரி, அவன்தான் லீடர். அவன் இட்ட அவனது பக்கம் சேர்ந்து கொள்ளத்தான் யாரும் விரு கூட அவனுக்கு அடி விழுவதில்லை! அதற்கெல்லாம் நம்பியிருந்தான்.
ஒரு வகையிற் பார்த்தால், அவன் கெட்டிக்கார ம கொண்டிருந்த அன்புக்கு அதுவும் ஒரு காரணம். அ செய்யமுடியாது திணறினால். கணக்குப் பாடம் எடு வகுப்பிலிருந்து அவனை அழைத்து வரச் சொல்வார். இந்தக் கணக்கை இவங்களுக்குச் செய்து காட்டு!’ என் அவர் அவனை அழைப்பது வழக்கம். அந்த அளவிற்கு கரும்பலகையில் அவன் கணக்கைப் போட்டு வ கனகசபாபதி வாத்தியார் உற்சாகமூட்டுவார். வகுப்பு 1 பெரிய வகுப்பு மாணவர்களிடையேயும் அவனது பிரப6
அந்தக் கதைகளை அப்பாவிடம் வந்து கூறினால் “அப்பிடித்தான். நல்லாய்ப் படிச்சு பெரிய இன்ஜின்
55
 

பிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய ல் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்க ல் லைசன்ஸ் பெற்றவர்கள்தான் துவக்கு வைத்திருக்க மட்டும்தான் துவக்கு இருந்தது. வரில் துவக்கு மாட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பெரிய ஆணிகளில். உயரமாக உள்ள மற்ற ஆணியில் சுடு குழாயைப் நாற்றமளித்துக்கொண்டிருக்கும். அறையின் ஜன்னல் கக் காணலாம். ஜன்னலுடாகத் துவக்கைக் காட்டுவான். வகுப்பிலுள்ள வருமாறு வீட்டுக்கு அழைத்து வருவான். ட அது உண்மைதான்!’ எனப் பார்த்திருப்பார்கள். டம் பல கதைகளை அளந்திருக்கிறான். இலக்குத் ரித்திருக்கிறான். ‘இந்தப் பெரிய துவக்கை எப்படி நீ |ப்படித்தான்..!’ எனச் சமாளித்து விடுவான்.
விளக்கும்போது கவனித்திருக்கிறான். ‘விசையைத் அப்போது கை தழும்பி இலக்குத் தவற வாய்ப்புண்டு. ட்டில் பதியி வைத்துக் கொள்ளவேண்டும்’ என அப்பா அவன் தனது நண்பர்களுக்கு எடுத்துவிடுவான். க்கியத்துவம் ஏற்பட்டிருந்தது. வகுப்பிலும் சரி. துதான் சட்டம், விளையாடும்போது கன்னை பிரித்தால், ம்பினார்கள். அவ்வளவு ஏன். ஆசிரியர்களிடமிருந்து அந்தத் துவக்கின் மகிமைதான் காரணம் என அவன்
ாணவனாகவும் இருந்தான். ஆசிரியர்கள் அவன்மேற் றாம் வகுப்பு மாணவர்கள், கொடுத்த கணக்கைச் $கும் கனகசபாபதி வாத்தியார் ஆள் விட்டு நாலாம் கரும்பலகையில் கணக்கை எழுதிவிட்டு, “சிவகுரு. Tர். அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் எப்போதும் த் துவக்கு அப்பாவுக்கு விலாசம் கொடுத்திருந்தது! டையை எழுதியதும், “கை தட்டுங்கோடா..!” என ாணவர்கள் எல்லோரும் கை தட்டுவார்கள். இவ்வாறு யம் பரவியது.
கிழ்ந்து போவார்.
பராய் வரவேணும்.!” என அப்பா ஊக்கப்படுத்துவார்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 58
அப்பா அப்படி மகிழ்ந்து இலகுவாக இருக்கும் சந்தர்ப்பங்களில், "துவக்குச் சுடப் பழக்கிவிடுறீங்களா?” என்று கேட்கலாமா எனத் தோன்றும். சுடும் போது எதிர்த்தாக்கம் இருக்கும் என்று அப்பா சொல்லியிரு க்கிறார். அது தன்னையே தள்ளி விழுத்தி விடுமோ தெரியவில்லை. அப்படியானால் இன்னும் வளர்ந்த பின்தான் அந்தத் துவக்கைத் துக்கலாம். ஆனால் ஒருபோதும் அப்பாவிடம் அதுபற்றிக் கேட்ட தில்லை. அப்பா கண்டிப்பானவர். காலையில் நேரத்துக்கு எழும்பவேண்டும். அந்த விடிகாலையிலேயே கண் தூங்காமற் படிக்க வேண்டும். பிறகு பாடசாலைக்குப் போவதற்கு முதல் தோட்டத்திற்குத் தண்ணிர் விடவும் வேண்டும். பழக்க வழக்கங்கள் சரியாக இருக்க வேண்டும். இவை கொஞ்சமும் பிசகக் கூடாது. பாட சாலைத் தவணைப் பரீட்சையில் பின் தங்கினாற் கூட, ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு விளாசல்தான்! பூவரசங் கதியாலில் தடியை இழுத்துப் பிடுங்கினால், அது தும்பாகப் போகும்வரை அடிதான்! அம்மா அழுது மன்றாடினாலும் விடமாட்டார். அதனாற்தானோ என் னவோ அவன் எப்போதும் வகுப்பில் முதல் மாண வனாகவே வந்து கொண்டிருந்தான். பாவம் , அண்ணன்தான் வேண்டிக் கட்டுவான். இதெல்லாம் அப்பாவிடம் இயல்பாகவே ஒரு பயம் ஏற்படக் கார ணமாயிருந்தது. ஏதாவது தேவையென்றால் அம்மா மூலம்தான் தூது அனுப்பிக் கேட்க முடியும்.
அம்மாவிடம் கூறினால், “அந்தத் துவக்கை உன் னாலை தூக்கவே ஏலாதேடா..!’ எனச் சிரித்து மழுப்பி விடுவாள்.
சில நாட்களில் அப்பா தனது நண்பர்களுடன் வேட்டைக்குப் போவார். அப்போது தன்னையும் கூட்டிப் போகமாட்டாரா என அவனுக்கு ஆவலாயி ருக்கும். துவக்கு அப்பாவின் காரில் முன் இருக்கை யில் மேல் நோக்கியவாறு சாய்த்து வைக்கப்பட்டி ருக்கும். போவோர் வருவோர் எல்லோருக்கும் அது கண்களிற் படும். இரவில் சாமத்திலோ, அடுத்த நாட் காலையிலோ திரும்ப வரும்போது அப்பா ஏதாவது மிருகங்களைச் சுட்டுக்கொண்டு வந்திருப்பார். அதைக் கட்டித் தூக்கித் தோலுரித்து அக்கம் பக் கத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்குமாக, இறைச்சி பங்கு போடப்படும்.
அயலட்டையில் உள்ளவர்களெல்லாம் அப்பாவி டம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையென்றால் தீர்வு காண்பதற்கு அப்பாவிடம்தான் வருவார்கள். துர இடங்களிலிருக்கும் நண்பர்கள் கூட அப்பாவைத் தேடி வருவார்கள். அவரது பேச்சை மறு பேச்சின்றிக்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

கேட்பதற்கு யாரும் தயாராக இருந்தார்கள். காதல் பிரச்சனைகள் கல்யாணப் பிரச்சனைகளைக் கூட அப்பா தீர்த்து வைத்திருக்கிறார். சீதனப் பிரச்சனை யில் இழுபடும் திருமணங்களுக்குப் பண உதவியும் செய்வார். வீட்டில் கண்டிப்பானவரென்றாலும், வெளி யில் அட்டகாசமாகச் சிரித்துப் பேசிக் காரியங்களைச் சாதிப்பதில் சமர்த்தர். யாராவது குடிமனைகளுக் கிடையில் அல்லது சாதிப் பிரச்சனைகளில் சண்டை சச்சரவு ஏற்பட்டாலும், அந்த வட்டாரத்து விதா னையார்கூட அப்பாவைத்தான் கூட்டிப் போவார். சில இடங்களுக்குப் போனால் திரும்ப வர இரவாகிவிடும். ஊரிலுள்ள சண்டியர்களெல்லாம் அப்பாவுக்கு மடக்கம்! சில விசர் நாய்களைச் சுட்டுத் தள்ளும் வேண்டுகோளும் அப்பாவுக்கு வரும். ஆனால் அப்பா ஒருபோதும் மனிதர்களைச் சுட்டதில்லை.
சில வேளைகளில் அப்பா அவனையும் அண்ண னையும் வேட்டைக்கென்று கூட்டிப் போவதுண்டுதான். ஆனால் பெரிய அடர்ந்த காடுகளையும் காட்டு மிரு கங்களையும் காணலாம் என்ற எதிர்பார்ப்புடன் போக முடியாது!
“காடுகளுக்குள்ள உங்களைக் கூட்டிக் கொண்டு போகேலாது. ஒரு தடைவ நாங்களே வழி தவறி அலைஞ்சு திரிஞ்சனாங்கள்.” என அப்பா ஞாயமும் சொல்வார்.
பாடசாலை விடுமுறை நாட்கள் அல்லது சில சனி ஞாயிறுகளில் சும்மா வேடிக்கை காட்டுவதற்காக, சிறியதும் பெரியதுமான பற்றைகள் நிறைந்த தரவை வெளிகள். போன்ற இடங்களுக்குத்தான் கூட்டிப் போவார். அவனுக்கு பெரிய மிருகங்களை, துவக்கு எப்படிச் சுட்டு விழுத்துகிறது என்று பார்க்க ஆசை! ஆனால் பற்றைகளுக்குள்ளிருக்கும் முயல்கள் அல் லது ஏதாவது நீர்ப் பறவைகள்தான் அம்பிடும்.
எவ்வளவு உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளைக் கூட கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு விழுத்திவிடுகிறது துவக்கு! வெடி வைத்தபின், அப்பா துவக்கை மடக்கித் திறந்து தட்டிவிட்டதும். தோட்டா வெறும் கோதாக வெளியே விழும். ஒரு விளையாட்டுப் பொருளைப் போலத் தோன்றும் அந்தச் சிறிய சிவந்த உருளையை அவன் எடுத்துச் சேர்த்துக் கொள்வான். புகை மனத்துடன் அதன் வாய் திறந்திருக்கும். அதனுள்ளிருந்து அவ்வளவு விசையுடன் சென்று பறவையைத் தாக்கியது என்ன என்று பார்க்க வேண்டுமென மனம் குருகுருக்கும்.
அப்பா வீட்டிலில்லாத ஒரு தருணத்தில் அந்தக் கள்ள வேலையைத் தொடங்கினான். அண்ணனை யும் அதற்குக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான். அப்படி
56

Page 59
யானாற்தான் விஷயம் வெளியே கசியாமற் தப்பிக் கொள்ளலாம்.
தோட்டாக்கள் போட்டு வைக்கும் பெட்டியிலிருந்து ஒரு தோட்டாவை எடுத்துக் கொண்டு கோடிப் பக்கம் போனான். பக்குவமாக அதன் வாய்ப் பகுதியை நீக் கித் திறந்து பார்த்தபோது. சிறிய குண்டுகளாக இருந் தன. அதன் பிறகுதான் பயம் பிடித்துக் கொண்டது. அதை என்ன செய்வது? திரும்பவும் உள்ளே குண்டு களைப் போட்டு, பக்ட் பண்ணி ஏற்தனவே இருந்த மாதிரி ஒரு அசுகையும் தெரியாமல் வைத்துவிடு வோமா? ஆனால் சரியாக பக்ட் பண்ணாவிட்டால் அந்த வித்தியாசத்திலேயே அப்பாவிடம் பிடிபட நேரி டும். அல்லது அதைத் துவக்கிலே போட்டுச் சுடும் போது, அது சரியாக வெடிக்காமல் அப்பாவுக்கு ஏதா வது ஆபத்து நேரிடவும்கூடும்.
செய்வதறியாது அண்ணனிடம் கேட்டான்! “என்னடா. செய்வம்?”
“எனக்குத் தெரியாது. நீதானே உடைச்சது..!’ அண்ணன் ஒரே ஒட்டமாக ஓடிவிட்டான்.
அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. குண்டு களைத் திரும்பவும் தோட்டாவிற்குள் போட்டு நிரப்பி. அடைத்து அப்படியே நிலத்தைத் தோண்டிப் புதை த்துவிட்டான். அண்ணனை ஒருமாதிரி வளைத்து. யாருக்கும் சொல்ல வேண்டாமென்று தடுத்துவிடலா மென்றுதான் நினைத்தான். ஆனால் அண்ணன் அரச தரப்புச் சாட்சியாக மாறி அம்மாவுடன் சம்பவ இடத்தி ற்கே வந்து சேர்ந்தான்!
அம்மா பதறிப்போனாள். அது நிலத்துக்குள்ள கிடந்து . ஆராவது தெரியாமல் மிதிச்சிட்டால் வெடிச் சிடுமோ தெரியாது.!’ எனப் பயந்தாள்.
“அப்பிடியொண்டும் வெடிக்காதம்மா. சும்மா பயப் பிடாதையுங்கோ.!” என அம்மாவைச் சமாதானப் படுத்தினான்.
ஆனால் அம்மா பயத்தில், அப்பா வந்ததும் விஷயத்தைக் கூறிவிட்டாள். அப்பாவிடமிருந்து விளாசல்தான் கிடைக்கப் போகிறது என அவனுக்கு மூத்திரமே போகும் போலிருந்தது! அப்பா அடிக்கவுமில்லை. ஏசவுமில்லை!
“நல்ல காலம். அது வெடிச்சிருந்தால். என்ன நடந்திருக்கும்.” என எச்சரிக்கை மட்டும் செய்தார். உண்மையில் தனக்கு அன்றைக்கு நல்ல காலம் தான். அதுதான் அப்பாவிடமிருந்து அடி விழவில்லை என நினைத்துக் கொண்டான். தோட்டாவைத் திரும்ப வும் தோண்டி எடுத்து, கொஞ்சம் சரி செய்து, வானத்தை நோக்கிச் சுட்டு அதை செயலிழக்கச் செய்தார் அப்பா.
57

சில நாட்களில் அப்பா துவக்கை அதன் இருப்பிட த்திலிருந்து எடுத்து சேவிஸ் பண்ணுவார். குழாய் வேறு பிடி வேறாகப் பாட்ஸ் பாட்ஸாகக் கழற்றித் துப்புரவு செய்து, எண்ணெயிட்டுத் துடைத்து வைப்பதுண்டு. அப்பேர்தெல்லாம் அவன் அப்பாவுடன் கூட இருந்து உதவி செய்வான். தையல் மெசினின் வீல்களுக்குப் பாவிக்கும் எண்ணெயை அப்பாவிடம் எடுத்துக் கொடு ப்பது, கழற்றப்பட்ட துவக்கின் பகுதிகளை பொலிஷ் செய்வது போன்ற தொட்டாட்டு வேலைகளைச் செய்வான். அவ்வேளைகளில் துவக்கின் ஸ்பரிசம் அவனுக்கு ஒருவித பரவசப்படுத்தை ஏற்படுத்தும்!
அந்தத் துவக்கு தனக்கே என்றாவது சொந்தமா குமா..?
இப்போது இல்லாவிட்டாலும் தான் வளர்ந்த பிற காவது, அப்பா அந்தத் துவக்கைத் தனக்குத் தரக் கூடும் என்றே நினைத்துக் கொள்வான். ஆனால், அப்பா அதைத் தனக்குத் தருவாரா அல்லது அண்ண னுக்குத்தான் கொடுப்பாரா என்றும் தெரியவில்லை. அண்ணன் தன்னைவிட மூத்தவனாகையால் தனக்கு முதல் வளர்ந்துவிடுவான். அவனுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று தோன்றும். ஒருவேளை அண்ணனிடம் கேட்டால். தனக்காக விட்டுத் தந்துவிடுவான் எனத் தனக்குத் தானே சமாதானமும் அடைந்து கொள் வான். தோட்டாவைக் கண்டதுமே அண்ணன் அந்த ஒட்டம் ஒடுகிறான், அண்ணனாவது. துவக்கை எடுத்துச் சுடுவதாவது!
நாட்டில் ஏதாவது குழப்பநிலை ஏற்பட்டால் அல் லது அப்படியான சாத்தியம் தென்பட்டால், துவக்குச் சொந்தக்காரர்கள் எல்லோரும் பொலிஸ் நிலையத் தில் துவக்குகளை ஒப்படைக்க வேண்டுமென அறி வித்தல் கொடுப்பார்கள். அப்பா அதற்காக வீட்டிலி ருந்து துவக்கைக் கொண்டு போகும்போது அவனு க்குக் கவலையாக இருக்கும்.
துவக்கு வைத்திருப்பவர்கள் கலவரத்தில் அவ ற்றை ஈடுபடுத்தாமல் கட்டுப்படுத்துவதற்காக அல் லது கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸ் காரர்களிடம் போதுமான துவக்குகள் இல்லாத கார ணத்தால் பெற்றுக் கொள்கிறார்களாக இருக்கும் என யோசித்திருக்கிறான்.
அப்போதெல்லாம் பொலிஸ்காரர்கள் சுடுவது குறைவு ஜிப் வாகனங்களில் துவக்குகளைச் சும்மா நிறுத்திப் பிடித்துக்கொண்டு வீதிவலம் போவார்கள். வெறுங்கையுடன் உள்ள மக்களெல்லாம் அந்தக் காட்சிகளைப் பார்த்தே அடங்கிப் போய்விடுவார்கள் என்பது அவர்களது எண்ணமாயிருக்கலாம். அவ னுக்கு அதெல்லாம் பெரிய விஷயமேயல்ல!
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 60
துவக்கைப் பொலிஸ் நிலையத்திற் கொடுத்தால் அதைத் திரும்பத் தருவார்களா என்ற கவலையே மேலோங்கி நிற்கும். அல்லது பொலிஸ்காரர்களின் அவதானமில்லாத கடுமையான பாவனையில் துவக்கு பழுதடைந்தும் போகலாம். ஒருவேளை திரும்பத் தரும்போது மாறுபட்டு வேறொரு துவக்குக் கிடைக்கவும்கூடும். இவ்வாறான சந்தேகங்கள் அவ னுக்குத் தோன்றிக்கொண்டேயிருக்கும். எனினும் அதையெல்லாம் அப்பாவிடம் கேட்கமுடியாது. பாட சாலை விட்டு வந்ததும், சுவரில் அதன் இருப்பிடத் தைப் போய்ப் பார்ப்பான். எப்போது துவக்குக் கிடை க்கும் என்ற கேள்வி அவனை விட்டுப் போகாது.
துவக்கு திரும்ப வரும்போது ஜெயிலுக்குப் போய் வந்ததுபோல சோபை இழந்து போயிருக்கும். தூசி படிந்தும் கீறல்கள் விழுந்துமிருக்கும். உடனேயே அதைத் துடைத்துத் துப்பரவு செய்து எண்ணெயிட்டு வைக்கும் வேலை தொடங்கிவிடும்.
சில தடவைகள் துவக்கு அப்படிப் போய் வந்த தில் அவனுக்கு அது பழக்கமாகப் போய்விட்டது. பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கொடுத்தால், சில வேளைகளில் ஐந்து ஆறு மாதங்க ளின் பின்னராவது திரும்பக் கிடைக்கிறது.
- அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் பின்னர் ஒரு தடவை வீட்டை விட்டுப் போன துவக்கு, திரும்ப வரவேயில்லை! அப்போது நாட்டில் கல வரமோ குழப்பங்களோ ஏற்பட்ட காலமும் அல்ல! இன்றைக்கு வரும் நாளைக்கு வரும் என அவன் பார்த்துப் பார்த்திருந்து ஏமாந்து போனான். துவக் கிற்கு என்ன கதி நடந்திருக்கும் என நினைத்து நினைத்து மாய்ந்து போனான். துவக்கு பற்றிய நினைவுகள் அடங்கிப்போக மறுத்தன.
அம்மாவிடம்தான் அவ்வப்போது கேட்பான்! “அப் பாவிட்டைக் கேளுங்கோ துவக்கு எங்கை யென்று.” - அம்மாவுக்குச் சரியான பதில் சொல்லத் தெரியவில்லை. அம்மா அதுபற்றி அப்பாவிடம் கேட்க வுமில்லை. உண்மையைச் சொல்வதானால் அம்மாவு க்கு அதைப் பற்றிய கவலையே இல்லை என அவனுக்கு அம்மாவின் மீது கோபம் கூட ஏற்பட்டது. “அப்பாவுக்கு உழைப்பில்லை. கஷ்டப்படுறார்.! துவக்கை ஒருவேளை வித்திருப்பார். அதைப்பற்றிக் கேட்கக்கூடாது. கவலைப்படுவார். பாவம்!” - அம்மா அவனைச் சமாதானப்படுத்தினாள்.
அந்தக் கவலை அவனையும் பற்றிக் கொண்டது. அந்த நாட்களில் அப்பா கஷ்ட நிலையிற்தான் இருந் தார். அன்றன்றாடம் வீட்டுச் செலவுகளைச் சமாளிப்ப
46வது ஆண்டு மலர்- ஜனவரி 201

தற்கே முடியாமலிருந்தார். அவனும் அண்ணன் தம்பி மார்களும் மேல் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந் தார்கள். படிப்புச் செலவுகளையும் சரிக்கட்ட வேண்டி யிருந்தது. எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்தா லும், முன்னர் இந்ந்த உற்சாகமும் அட்டகாசமும் அவரிடம் குறைந்துதானிருந்தன. நண்பர்களும் அவரைத் தேடி வருவது குறைவு! அப்பா அவர்களிட மிருந்து தானாக ஒதுங்கிக்கொண்டாரா அல்லது அவரிடமிருந்து சுவறுவதற்கு எதுவுமில்லாமற் போன தும் நண்பர்கள் எல்லோரும் விலகிக் கொண்டார் களா என அவனுக்குப் புதிராயிருந்தது.
துவக்கு அப்பாவிடமிருந்த பலத்தையும் உற்சாக த்தையும் கொண்டுபோய்விட்டது என்றே அவனுக்குத் தோன்றியது. அவர் அதை விற்றிருக்கக்கூடாது.
அவன் இப்போது சிறுவனல்ல. உயர்வகுப்பு மாணவன். நல்லவை கெட்டவைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவநிலை அவனுக்கு வந்திருந்தது. துவக்கை விற்றுச் சீவிக்க வேண்டிய நிலைமை அப்பாவுக்கு வந்ததே எனக் கவலையடைந்தான். அவர் அந்தத் துவக்கை எவ்வளவு விரும்பியிருந்தார் என்பது அவனுக்குத்தான் தெரியும்! அப்பாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவேண்டும். “ரேக் இற் ஈஸி. அப்பா. 1’ என்று சொல்ல வேண்டும்.
அப்பாவின் கடுமையும் கண்டிப்பும் வீட்டிற் கூட அற்றுப்போனது! அது அவனுக்கு மிகுந்த கவ லையை அளித்தது. பொருளாதார நெருக்கடிதான் அப்பாவை இந்த நிலைமைக்குத் தள்ளியிருக்கி றது. விரைவில் படித்து ஆளாகி, அப்பாவைக் கதிரையில் இருத்தி உழைத்துக் கொடுக்க வேண் டும் என நினைத்துக் கொள்வான். விரைவில் என் றால். அதற்கு ஒரு காலம் வேண்டாமா..? கடவுளே, அதுவரை அப்பாவின் நிலைமை இன்னும் மோசமாகி விடக்கூடாது! கஷ்ட நிலைமை சொல்லாமலே வந்து மனிதனைத் தள்ளி விழுத்திவிடுகிறது! அதைத் தாங்கும் சக்தி அப்பாவுக்கு இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்துக் கொள்வான். நிற்கும் போதும். நடக்கும் போதும். அப்பாவைக் காணும் போதும். கவலையும் பிரார்த்தனையும் மனதிற்குள் தோன்றி விடும். அப்பாவின் சோகமெல்லாம் தனக்குள்ளும் தொற்றிக் கொண்டது போல உணர்ந்தான்.
வளர்ந்தவனாகிவிட்டாலும் சிறு பராயத்து நினை வுகள் அவ்வப்போது வந்து ஊசியைப் போலக் குற் றும். அந்தத் துவக்கின் நினைவில் மனது விம்மும், அதைத் தொட்டுத் துடைத்து நெஞ்சோடு அணைத் துத் தூக்கிச் செல்லும் நினைவுகள் வந்து ஒத்தடமும் கொடுக்கும். அப்பாவின் துவக்கு இப்போது யாரு
58

Page 61
டைய கையில் இருக்கிறதோ என ஒருவித ஏக்க உணர்வும் படரும்.
அந்த நாட்கள் போயே போய்விட்டன!
{ { { } ) )
ஒரு நாள் அவன் ஊரை விட்டும் அப்பாவை விட்டும் பிரிய நேர்ந்தது. மேற் படிப்பு, தொழில் வாய்ப்பு எனக் காலம் அவனை வேறு வேறு இடங்களுக்குக் கொண்டுபோனது.
நாட்டுக்குள் விதவிதமான துவக்குகள் வந்து சேர்ந்தன. எங்கும் துவக்குகள். எவரிடமும் துவக் குகள். அவை எல்லா வல்லமையும் கொண்டவை யாயிருந்தன! ஜீப் வாகனங்களிற் போவோரும், துவக்குகளைச் சும்மா வடிவு காட்டுவதற்காக மட்டும் கொண்டு செல்வதில்லை! வேட்டையாடுதல் நாட்டுக்குள்ளே அமோகமாக நடந்தேறியது! எங்கும் மனிதர்களே வேட்டையாடப்பட்டார்கள்! மனித இறைச்சிகளை அவரவராகப் பங்கு போட்டுக் கொண்டார்கள்!
அப்போதெல்லாம் அவனுக்கு, சிறுவயதிற் தான் அப்பாவின் துவக்கு மீது ஒரு கவர்ச்சியுடன் கொண்டிருந்த பிரமை நினைவில் மேலேழுந்து வரும். எனினம் அது ஒரு பாதகமற்ற துவக்கு என்றே அவன் கருதினான். யாரையும் துன்புறுத்தாமல் சுவரில் மாட்டப்பட்டு எப்போதும் ஒய்வுநிலையில் இருக்கும் துவக்கு அது!
ஊரிலுள்ள தம்பியவர்களின் பாதுகாப்புப் பற்றி அப்பா கவலைப்பட்டு, அவனுக்கு அடிக்கடி வற் புறுத்திக்கொண்டிருந்தார்.
“தம்பியவங்களையும் எங்கையாவது கொண்டு போய்ச் சேர்த்துவிடு!. தப்பியொட்டி இருக்கட்டும்!” அவனைப் போலவே தம்பியவர்களும், அப்பாவை யும் அம்மாவையும் விட்டு ஒவ்வொரு திக்குகளாகப் பிரிந்து போயினர். ஊரை விட்டு எங்கு போனாலும், ஒரு நாளைக்கு அவன் ஊரோடு வந்து மணமுடித்துக் கொண்டு தங்களோடு இருப்பான் என அப்பா நம்பியிருந்திருக்கலாம். அதற்கு அவன் சம்மதிக்காது தனது காதல் விடயத்தை வெளிப்படுத்தியபோது அப்பா ஒதுங்கிக் கொண்டார்.
“உன்ரை விருப்பப்படி போய் செய்து கொண்டு. எங்கையாவது இரு.!”
( ( ( ) ) ) பத்துப் பதினைந்து வருடங்களைக் காலம் வலு கெதியாகக் கொண்டு போனது. எப்போதாவது ஊருக் குப் போய் அப்பா அம்மாவைப் பார்த்து வருவான். நாட்டு நிலைமைகள் மோசமடைந்து. பாதைத்
59

தடைகள் பயணக் கஷடங்கள் எல்லாம் அவனை நிரந்தரமாகவே ஊரிலிருந்து பிரித்துவிட்டது போலிருந்தது. தொலைபேசித் தொடர்பு மட்டும் அவ்வப்போது மகன் என்ற கடமையை ஈடு செய்தது.
6 & s
உட்ன்ரை பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டு.!’ என அப்பா கேட்டுக் கொண்டிருந்தார்.
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சேறு சகதிகளுக்குள்ளாகவும் கடலேரியூடாகவும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு பெரும் பயணம் போய் வரும் கஷடத்தை எண்ணிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.
ஒருநாள் அப்பாவே அவனது வீடு தேடி வந்துவிட் டார். அந்தத் தள்ளாத வயதில்! எது எப்படியோ அது அவனுக்குப் பெரிய பேறு பெற்றுவிட்ட மகிழ்ச்சியை அளித்தது. பிள்ளைகளுடனும் அவனது மனைவியுடனும் என்றும் யாருடனும் இல்லாத அன்னியோன்யத்துடன் பழகினார். பிள்ளைகளை மடியில் இருத்திக் கதைகள் கேட்பார். அந்த மாதிரித் தங்களை அரவணைத்து அப்பா வளர்த்ததில்லையே என அவனுக்கு ஆச்சரியமாயிருக்கும். ஆறதலாயி ருக்கும் போது தனது பழைய நாள் நினைவுகளைக் கதை கதையாகக் கூறுவார்.
பிள்ளைகளைப் பிரிந்திருந்த ஆதங்கத்தை, அந்த நாட்களை நினைவு கூர்வதன் மூலம் ஆறுதலடை கிறாராயிருக்கலாம் என அவன் எண்ணிக் கொள் வான். அப்போதுதான் அந்தக் கதையும் தெரிய வந்தது. .
... அப்பா வழக்கம்போல வேட்டைக்குப் போய் வந்திருக்கிறார். சுட்டுக் கொன்று வந்த கொழுத்த முயலைத் தோலுரித்து வெட்டியபோது. அதன் வயிற்றில் குட்டிகள்.!
“பிள்ளையஞக்கும் சொல்லயில்லை. தாய்க்கும் சொல்லயில்லை, நிலத்தைக் கிண்டி அப்பிடியே தாட் டுப்போட்டு, அண்டைக்கே துவக்கையும் கொண்டு போய் பொலிஸ் ஸ்டேசனிலை குடுத்திட்டு வந்திட்டன்!”
-மூச்சு நின்றுவிட்டது போல அப்பா சற்று நேரம் பேச்சற்று இருந்தார்.
அதைக் கேட்டு அவன் அதிர்ந்துதான் போனான்.
அந்தத் துவக்கின் கதையைக் கூறுவதற்கென்றே வந்தவர் போல, அடுத்தநாட் காலை அப்பா போய் விட் டார்! காலையில் எழுந்து வழக்கம் போலத் தேகப் பயிற்சி செய்து. உணவருந்திவிட்டு ஒய்வுக் கதிரை யிற் சாய்ந்தவர். அப்படியே கண்களை மூடி அமைதி யடைந்தார்.
{ { { } ) )
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 62
PJTGflujo fliflor
'சோக்கவு' நிசப்த எனும் நாத
5ண்கள் இருந்தும் மடையர்களாக நாம் வாழ்ந் சூழவுள்ள உலகிலிருந்து தெரியாத கலைஞானம் அ
இருந்தபோதும், காலையில் விழித்து எழும்போது எ பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதைப் படை மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளி மீட்டெடுத்துச் சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்த
வீதியில் ஒடும் வாகன இரைச்சலும், தொலைவில் சு அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்துப் பலரை வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஒசையுட அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஒசையிலும் ஒ எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா?
நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் கு தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாக என்ற குற்றச்சாட்டுக்களுக்கும் குறைவில்லை. அதில் ஆனால், ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களா? உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவயைா
கண்களால் காணும் காட்சிகளாவன, காதில்
உறைப்பதால் தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ர
குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்கை பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்ெ இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இரு அவனை ஈர்ப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையி அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 
 
 

ỗ (The Silence)
Κ (X-
5 வெள்ளம்
-6(b.685. @@85CEO క్రిత్రాకీbr
எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச்
எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் ற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.
ழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், .ப்புகளூடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு ந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை T6ծI (լpւգսկլճ.
கூவிச் செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் யும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக
ம், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், ரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது,
நலைக்கின்றன என எரிச்சல் படத்தான் பலருக்கும் Fடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ல் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான க இருக்கும்.
விழுபவற்றை விட, வேகமாக எமது மூளையில் சிக்கத் தெரியாது வாழ்கிறோம்.
STT (Surteo கலாஞான சூனியனாக இல்லை. அவனைப் வாரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் நக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் ல் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால்
16Հl6ծl.
60

Page 63
காலையில் இவனது வீட்டுக் கதவைக் கோபத் தோடு ஓங்கிய அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டுச் சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஒசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது.
վւb ւյլb ԼՆւք...... ւյլb ւյլք Լեւb.....
இசைக்கு அப்பாலும், அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது. ஆனாலும், ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும், அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.
10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல் இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரஷ்யாவிற்குச் சென்ற தகப்பனிட மிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால், மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.
அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற் பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிற்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கி றான். ஆனால், எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாரா வது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு 6 TEas வேண்டியவனாகிறான்.
வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலி
61

ருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுக ளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவ னாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவ னது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன், அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான்.
இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகி றாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட் டும் போது, அது சரியாக இருக்கிறதா? எனச் சரி பார்ப்பதும் அவள்தான். அவன் சுருதி மீட்டும் போது மெல் லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும். பின் தலைமுடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண்.
அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமா கக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால் தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஒசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காது காப்பாற்றுவது அவள்தான்.
அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவ ளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளி யைப் புரிந்து வைத்திருக்கிறான்.
குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஒசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணி யில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனிக் களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனி க்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவ தும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன்.
ஆனால், அவற்றைப் போலவே இவனும் நெறிப் படுத்தப்படாத தேனி. பதவி, பணம், அந்தஸ்து போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்ப
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 64
தில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்து விடு வான். அந்தக் கானகக் கானமும் இவனை வா வென அழைக்கும்.
நெரிசல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக் கும் ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகி றது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகி றாள். என்னவானானோ என நாமும் கலங்கி விடுகிறோம்.
ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கி றாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடிய லைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.
படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலி யிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம். ஒரு தடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும் போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர் பிடிக்கிறது. ஒடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கெனப் பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட் கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்?
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின் றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத் துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளடதமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.
எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன் களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி, சண்டை, சச்சரவு, குரோதம் எதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.
அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும் போதும், மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர் ந்த ஒவியனின் கன்வஸ் ஒவியம் போல கலைநயம் மிக்கது.
அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்கார்மான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங் களில் நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாகத் தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடை யாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.
மிகவும் மாறுபட்ட பார்வையில் மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ள த்தை அள்ளிப் பிடிக்கும் ஒவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.
62

Page 65
ஈரானின் L{spGuibo Moshen Mahmalbaf 6öT u 60)Ll'IL இது. இவர் திரைப்படத்துறையில் மிகப் பெரிய ஆளு மையாவார். நெறியாளர் மட்டுமல்ல, நல்ல கதா சிரியரும் கூட. ஈரானிய சினிமாவின் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும்.
இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதா யிற்று. 8 வயதிலேயே தந்தையை இழந்து பல சின் னச் சின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதள வில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச் சூடு பட்டு சிறைப்பட்டவராவார். 4 1/2 வருடத் தண்ட னையில் தன்னைப் புடம் போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு, இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந் தவர் ஆவார். இப்பொழுது பிரான்சில் வசிக்கிறார்.
25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.
ஏன் இது தடை செய்யப்பட்டது என்பதைப் படத்தை மனத்துள் மீள்வாசிப்புச் செய்தேன்.
குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்பதைக் காண்கிறோம்.'அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்' போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறு பாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஒரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கிய மான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத, கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்து களுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களைப் பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள். தங்கள் கருத்தை ஆயுதமுனையினால் திணிக்கிறார்கள்.
63

இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாட முடியும். நதீரா தெருப் பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதா கவே நான் கருதுகிறேன். மிக நாசூக்காகத் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்கு இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.
படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப் பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் அழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவ னின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற் கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசார த்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.
ഥrsളിധ ಫ್ಲಿಗಿ, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஒடம், தொலைவிலிரு ந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது, இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ் ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்து கொண்டு வருகிறது.
வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடி யாததால் பொருட்களைத் தூக்கி எறிந்து அவர்க ளையும். வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்க ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவ னது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசை கின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகிறது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன.
அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத் தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசைக் கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தி யங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள். சந்தை இசைக் கூடமாகிறது.
இசையில் மயங்கி மனக் கண்மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 66
ஒாண்டு மல்வகை
(2Oog las-tilisi– 20
ஆக்க இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ம6
ஐம்பது (50)க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், மாத மேற்பட்ட குறுங்கதைகளையும் வெளியிட்டு வருக களிலிருந்து தமிழாக்கச் சிறுகதைகளையும் வெளியி கள் அறிவார்கள். மல்லிகையில் எழுதும் சகல எழுத்த யும் வகையில் இடம் அளிக்கப்பட்டு வருவது ஒரு சி ஒரு சிலருக்கு மாத்திரம் விஷேட கவனிப்பு இருந்து வ வாயிலாக வாசகர்கள் குற்றம் சாட்டுவது நாம் அறி. தரத்துக்கு உரிய இடம் எப்பொழுதும் உண்டு. அதுத்
அந்தவகையில் 2010ம் ஆண்டு (2009 டிசம்பர்- 20 நோக்குவோமேயானால், சுமார் 52 சிறுகதைகை சிறுகதையையும் வெளியிட்டிருக்கிறது. இதிலே ஆ முருகானந்தனும் எழுதி முன்னணியில் திகழ்கின்ற6 எழுதியிருந்தார். ஏனைய எழுத்தாள்ர்கள் ஒவ்வொரு குறுங்கதையைப் பொறுத்தவரையில் வேல் அமு தந்து கொண்டே இருப்பார். கடந்த வருடம் வேல் அமு ஏ.எஸ்.எம். நவாஸ் ஒரு குறுங்கதையும், எம்.எம்.மன் மல்லிகை வாசக்ர்களுக்குத் தந்து இருந்தனர். "ே ஒவ்வொரு தலைப்பின் கீழ் "பரன் ஐந்து தொடர்களில் தவரையில் எம்.எம்.மன்ஸoர் எழுதிய ‘மயோ’ என்ற வெளிவந்துள்ளது.
2009 டிசம்பர் மாத மல்லிகையில் மூன்று சிறுகதை ச.முருகானந்தன், ஆனந்தி, ந.ஆதவன் என்போர் அவ எழுதியிருந்தார்.
சுனாமியும், யுத்தமும் வந்து அழிவுகளை ஏற்படு காதலாய் மணம் வீசிய சிவா- சுந்தரி காதல்தான் ெ இந்த உண்மையைப் புரிய வைக்கிறது ச.முருகானந்
மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் செத்ததன் 1 செத்ததன் பின்னர் கொடுக்கப்படுவதில்லை. யுத்தம் இ
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 

ச் சிறுகதை மதிப்பிடு:
10 15 шошf Бшылn)
'..
- 6(b.6(b.(Oకీ(ఈరోగ
லிகை வருடாந்தம் சுமார் ம் ஒன்று அல்லது அதற்கு கிறது. இதிலே, பிறமொழி டுவதை மல்லிகை வாசகர்
i
ாளர்களுக்கும் களம் அமை றப்பம்சமாகும். என்றாலும் ருவதாக மல்லிகை ஆசிரியருக்கு எழுதும் கடிதங்களின் பாதது அல்ல. அதில் எதுவித உண்மையும் இல்லை. 56ô 2 6tioT60)LD.
10 நவம்பர்) மல்லிகையில் வெளியான சிறுகதைகளை ளயும், 13 குறுங்கதைகளையும் ஒரு மொழிமாற்றச் ஆனந்தி 10 சிறுகதைகளையும், 8 சிறுகதைகளை ச. ணர். கெக்கிராவை ஸஹானா இரண்டு சிறுகதைகளை
சிறுகதைகளையே எழுதியிருந்தனர்.
தன் இதழ் தவறாமல் எப்படியும் ஒரு குறுங்கதையைத் தனின் 11 குறுங்கதைகள் இடம் பிடித்துக் கொண்டன. m)ர்ை ஒரு குறுங்கதையுமாக இரண்டு குறுங்கதைகளை பய்க் கூத்தும் ஆமணக்கம் தடியும்' என்ற தொடரில் தந்திருந்தார். மொழி மாற்றுச் சிறுகதையைப் பொறுத்
தாய்லாந்துச் சிறுகதை மொழிமாற்றச் சிறுகதையாக
களையும், ஒரு குறுங்கதையையும் தாங்கி வெளிவந்தது. ற்றை எழுதி இருந்தனர். குறுங்கதையை வேல் அமுதன்
3தியும் கூட, சாதிப் பாகுபாடு அழியவில்லை. மாறாத, த்துவிட்டதை எண்ணும் போது உள்ளம் கனக்கிறது. $னின் ஓர் ஆரம்பமும் அதன் முடிவும்" என்ற சிறுகதை.
ன்னால் அளிக்கப்படுகின்ற மரியாதை கூட, மனிதன் வற்றை எல்லாம் மலினமாக்கிவிட்டது. வீதியோரத்திலே
64

Page 67
செத்துக் கிடக்கின்ற மனிதனுக்குக் கிட்டப் போகவே அஞ்சுகின்றனர். ஏன்? அதனால் பல பிரச்சினைகள் உருவாகும் என்பதை விளக்குகிறது மரணித்துப் போனது மனிதம்' எனும் ந. ஆதவன் எழுதிய சிறு கதை. இச் சிறுகதை கரவெட்டி பிரதேச செயலகம் நடாத்திய பொதுப் போட்டியில் இரண்டா வது பரிசு பெற்றது என்பது-குறிப்பிடத்தக்கது.
+
மேலை நாட்டு நாகரிகத்தில் மூழ்கி கட்டழிந்து போகும் நம் நாட்டு நங்கையர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனத் தம்மையும் அதற்குள் நுழைத்துக் கொள்வதால் ஏற்படும் விபரீதங்களுக்கு நல்லதொரு உதாரணம் ஆனந்தியின் ஒரு வேத விருட்சமும், சில விபரீத முடிவுகளும்’ எனும்
சிறுகதை.
حب۔ حب۔ حب۔ حب۔ حلہ۔
2010 மல்லிகையின் 45வது ஆண்டு மலரில் பதினொரு சிறுகதைகளும், ஒரு குறுங்கதையும் வெளிவந்துள்ளன. இவற்றை கொற்றை.பி. கிருஷ் ணானந்தன், கெக்கிராவை சஹானா, க.சட்ட நாதன், ஆனந்தி, கம்பவாரிதிஇ.ஜெயராஜ், யோகே ஸ்வரி சிவப்பிரகாசம், தெணியான், மு.பவர், பரன், செங்கை ஆழியான், சந்திரகாந்தா முருகானந்தன் என்போர் எழுதி இருந்தனர்.
எஃகை விடவும் கடினமான உள்ளத்தையும் உருக்கக் கூடியது சகோதர பாசம் என்பதை விளக் குகிறது கொற்றை பி. கிருஷ்ணானந்தன் எழுதிய இரத்தம் தடிப்பானது' என்ற சிறுகதை. நேர்த்திக் கடனை நிறைவேற்ற முன்னம் உடல் வலிமையும், உள உரமும் கொண்ட மோகன், தன் மீது பறவைக் காவடியின் போது குத்தப்படும் கொழுக்கியினால் ஏற்படும் உடற்தசை வலியைப் பொறுத்துக் கொள்கி றான். அதே நேரம், தனது தமையன் வண்ணனுக் கும் அதே போல கொளுக்கிகள் இரு தோள்பட்டை களிலும், விலாவிலும், தொடைகளிலும் குத்தப்படப் போவதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகி றானோ? என எண்ணி மன வலிமையையும் மீறி சகோதர பாசத்தால் கண்ணிர் வடிக்கிறான், மோகன். சகோதர பாசத்துக்கு அவ்வளவு வலிமை ஒன்று உள்ளது என்பதை விளக்குகிறது இக்கதை.
+
65

முஸ்லிம் குடும்பங்களில் மாத்திரமல்ல, பொது வாக ஏனைய சமூகங்களில் உள்ளவர்களின் குடும் பங்களிலும் வறுமை தாண்டவமாடும் போது, அதனை விரட்ட ஒரே வழி வெளிநாடு சென்று பெண் கள் உழைப்பதுதான் என்ற கருத்தும், தைரியமும் பெண்களிடம் உள்ளது. அதனால் தானோ என் னவோ, ஆண்களும் தொழில் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளாமல் தமது மனைவிமார், மகள், உடன் பிறப்புக்கள் என வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக அனுப்பி வைக்கிறார்கள்.
வெளிநாடுகளில் அவர்கள் தமது இரத்தத்தை வியர்வையாக மாற்றி உழைத்து அனுப்பும் பணத் தில் கணவன்மார் உல்லாசமாக வாழ்ந்து விட்டு, தமது பிள்ளை குட்டிகளையும் கவனியாது தம்போக் கில் நடக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் வறுமை க்கு எப்பொழுதும் கதவு திறந்தே இருக்கும்.
அப்படியான ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள் ளப்பட்ட குடும்பம்தான் மாணவி நஸிஹாவின் குடும் பம். தாய் கட்டாரில் இருந்து கஷ்டப்படுகிறாள். தந்தை சம்பாதிக்கின்ற பணத்தை எல்லாம் குடியில் கரைத்து விட்டு வீட்டைக் கவனியாது விட்டு விடு கிறான், குடும்பமோ வறுமைப் பிடிக்குள் அகப்பட்டுக் கொள்கிறது.
நளிஹா எனும் பள்ளி மாணவி பெண்ணாகச் சமைந்தப்ோது சொல்லொணாக் கஷ்டம் நிலவு கிறது. மனித நேயம் கொண்ட ராஹறிலா ஆசிரியை முன் வராவிட்டால் அந்த மாணவிக்கு என்ன நேர் ந்து இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பய மாக இருக்கிறது. அவரின் முயற்சியால், அன்றைய தினம் மாணவி நஸிஹாவின் குடும்பம் நிம்மதி பெறுகிறது.
ராஹிலா ஆசிரியைப் போன்ற நல்லுள்ளம் படைத்த எத்தனையோ ஆசிரியைகள் நம்மத்தியில் இருப்பார்கள். அவர்கள் தமது ஆசிரியத் தொழிலை உத்தியோகமாகப் LITftësTLD6), e 676Të (8960)6juUT கவே செய்கிறார்கள். இவர்கள் இனங்காணப்பட்டு இத்தகைய சேவைகளை விரிவுபடுத்த முன்வந்து வியூகம் அமைப்பார்களேயானால் நஸிஹாவின் குடும்பம் போன்ற பல குடும்பங்களுக்கு உதவ முன்வர முடியும். மொத்தத்தில் சிறந்ததொரு சிறு கதை கெக்கிராவ ஸஹானாவின் அங்கும் இங்கும்' என்ற கதை.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 68
十
நட்பு நட்பாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, நண்பனின் காதலியைத் தனது காதலியாக வரித் துக் கொள்ளக் கூடாது. முரளியின் நிழலில் வாழும் சியாமளன் திடீரெனத் தன்னிலை மாறும் சுபாவம் கொண்டவன் என்பதால், அவனைச் சீண்டிப் பார் க்க எடுத்த எத்தனம் இறுதியில் நட்புக்கே களங்கம் விளைவித்து விடுகிறது. லதாவும் முரளியும் முன் னரே சியாமளனுக்கு சொல்லி வைத்திருந்தால், சியாமளன் அவ்வளவு தூரத்துக்கு ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்கமாட்டான். முக்கூடல் மூலமாக உண்மையிலேயே சிறந்ததொரு சிறு கதையைத் தந்திருந்தார் க.சட்டநாதன் அவர்கள்.
ح۔
மல்லிகையில் அதிகமான சிறுகதைகளை எழுதி வருபவர் ஆனந்தி என்பதை வாசகர்கள் நன்கு அறிவார்கள். 2010ம் ஆண்டு மல்லிகை ஆண்டு மலரிலும் குருதட்சணை என்ற பெயரில் சிறுகதை ஒன்றினைத் தரத் தவறவில்லை.
கல்வி கற்பது என்பதும், கல்வியைப் போதிப்பது என்பதும் புனிதமானதொரு பணி. அதற்கு களங்கம் என்பதே வரக் கூடாது. பணத்தையே குறியாகக் கொண்ட சில ஆசிரியர்கள் படிப்பையே கொச்சைப் படுத்தத் தொடங்கி விட்டனர். மேலதிக வருமானத் துக்காக எம்முயற்சியைச் செய்தாலும் ஏழை பணக் காரன் என்ற பாகுபாடு இன்றி நடு நிலை நின்று காரியமாற்ற வேண்டும். பணக்காரப் பிள்ளைகளு க்கு ஒரு கவனிப்பும், ஏழைப் பிள்ளைகளுக்கு மற் றொரு கவனிப்புமாகக் கற்பித்தல் நடவடிக்கைக ளில் ஈடுபடுவது நற்பண்பல்ல.
இத்தகை சூழ்நிலையில் அன்றாடம் வயிற்று க்கே வழி இன்றிக் கஷ்டப்பட்டு, வீட்டுழியம் செய்து குடும்பத்தை வாழ வைக்கும் கனிமொழியின் தாய், அந்த மகளிர் கல்லூரியின் தனது மகளுக்கான தவ ணைக் கட்டணத்தைச் செலுத்த வழியின்றித் தவிக் கிறாள். கனிமொழி பலபேர் முன்னிலையில் அவமா னம் அடைய, தவிர்க்க முடியாமல் தனது தாயைப் போல, தானும் வீடுகளுக்குச் சென்று மாவு இடிக்கும் தொழிலைச் செய்ய முடிவு எடுக்கிறாள். எக்காரணம் கொண்டும் சரளா டீச்சரின் நன்மதிப்பைக் குறைக் காமல் கட்டிக் காப்பதாக அவள் மனதில் கொள்ளும்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

உறுதி மொழி அவளது ஆசிரியைக்கு ‘குருதட் சணையாக அமைகிறது.
حہ۔
கம்பவாரிதி விதி என்ற பெயரில் அருமையான ஒரு கதையைத் தந்திருந்தார். இதனைத் தற்கால கவிதை வடிவில் எழுதி இருந்தார். அதனைக் கவிதை என்றும் சொல்லலாம்; சிறுகதை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இக்கதையிலே நடமாட விட்டிருக்கும் காதல் பாத்திரமான கலா-சித்தன் இருவருக்கும் இடையில் திருமணத்துக்குத் தடையாக நிற்கும் சொத்தும், சீதனப் பிரச்சினையும் மேலோங்கும் வேளையில் பரம்பரைப் பகையாகக் குடும்பத்தில் நிலவும் குடும் பப் பகை இருவரையும் ஒன்று சேர்க்கப் பின் நிற் கிறது. இவ்வேளையில் ‘கட்டினால் சித்தனைத் தான் கட்டுவேன்! அன்றேல் அரளி விதையை அரை த்துத் தின்று அழிந்து போவேன்! என்று உறுதியாய் நிற்கிறாள். உறுதியான காதல் உள்ளம் கொண்ட கலாவுக்குத் தனது வீட்டில் தந்தை முதற் கொண்டு சகோதரர்களால் இழைக்கப்படும் இன்னல்கள் அத்தனையையும் பொறுத்துக் கொண்டு சித்த னுக்காய்க் காத்திருக்கின்றாள்.
சவுதிக்கு பொருள் தேடச் சென்ற சித்தன் திரும்பி வந்து கலாவின் கழுத்தினிலே தங்கத் தாலி கட்ட சித்தமாய் இருக்கும் வேளையிலே கடலோரச் சந்தி ப்பு நிகழ்கிறது. அக்காதல் ஜோடி களித்துச் சிரித்து மகிழ்வதைப் பார்த்து கடலும் வழமைக்கு மாறாகப் பொங்குகிறது.
சங்க காலக் காதல் வாழ்க்கையை நினைவுக் குக் கொண்டு வரும் வகையில் சம்பவங்களைக் கம் பவாரிதி அழகாகக் கதையில் பிரதிபலிக்கச் செய் திருக்கிறார். அதனைப் பாராட்டாமல் இருக்க முடி யாது. சங்க காலக் கவிதை ஒன்றைப் படித்ததைப் போன்றதொரு மன நிறைவு ஏற்படுகிறது.
十
சிறு பராயத்திலேயே அருள்மொழியின் அப்பாச்சி கதைகள் கூறி வந்ததால், கதை கேட்பதில் ஆர்வம் மிகக் கொண்ட அவளுக்கு இராசா இராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை முகிழ்ந்ததில் ஆச்ச ரியம் ஒன்றுமில்லை. ஒரு காலத்தில் யாழ்ப்பாண த்தை அரசர்ண்ட சங்கிலியன் பற்றிய எண்ணத்தை
66

Page 69
அவளது மனதில் விதைக்காததால் அப்படி ஒர் அர சன் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறாரா? என்ற சந் தேகம் அவள் மனதில் பட்டதில் நியாயம் இருக் கிறது.
அவளுக்குப் புத்தகத்திலே காட்டப்பட்ட அரசன் போல, அந்தச் சிலையும் உடையணிந்து, தலை யிலே கிரீடம் தரித்து, கையிலே வீரவாள் ஏந்தி, கம்பீரமாகக் குதிரையில் சவாரி செய்வது போல, காணப்பட்டதால், இராசா என்றால் இப்படித்தான் இருப்பார் என ஒரளவு ஊகிக்க முடிந்தது.
யுத்தத்தினால் சின்னா பின்னமாக்கப்பட்ட இராசாவின் சிலை வேறு ஒரு தலையுடன் காட்சி தந்தது. இதனை அருள்மொழி ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். முதன் முதலில் பார்த்ததுதான் சங் கிலி அரசனின் கம்பீரமும், அழகும் நிரம்பிய முகம். நாம் எதனை முதன் முதலில் பார்க்கின்றோமோ அதுதான் மனதில் ஆழப் பதிந்துவிடும். அதன் பின்னர் எத்தனை போலிகள் வந்தாலும் நிஜமாவ தில்லை என்பதை உணர்த்துகிறது ‘தலை’ என்ற கதை. இது உண்மைச் சம்பவமாக இருந்தாலும் சிறுகதையின் பண்புகளைப் பெற்று யதார்த்தமாக மனதில் பதியும் வண்ணம் பின்னி இருக்கிறார், யோகேஸ்வரி சிவப்பிரகாசம்.
+
யுத்தத்தால் வன்னியில் கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் உயிர்களின் உறவுகளைத் தேடி ஆவிகள் எங்கும் அலைந்து திரிகின்றன என்பதை உறவுக ளைத் தேடும் ஆவிகள்’ என்ற கதையின் மூலம் தெணியான் அவர்கள் தத்துரூபமாக சித்திரித்து இருக்கிறார். முன் பள்ளிச் சிறார்கள் மூலம் நடா த்தப்படும் விநோத உடைப் போட்டியின் உந்நத கருவாக ஆவி உருவமேற்று வந்திருந்த விநோத உடை தரித்த உருவம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறது.
மோகனா டீச்சரின் முயற்சியினால் மேற் கொள் ளப்பட்ட முன் பள்ளி மாணவர்களின் விழாவை சகலராலும் பாராட்டமல் இருக்க முடியாது.
உண்மையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட மன நிறைவையும், சகல நிகழ்ச்சிகளையும் கண்டு களித்த திருப்தியையும் வாசகர் மனதில் பதிய வைக்கிறது, கதை.
67

十
ஏழைத் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ் சிக் குடிக்கும் அட்டைகளாகவும், மூட்டைப் பூச்சி களாகவும் விளங்கும் முதலாளி வர்க்கம், தமது பணச் செருக்கினால் எதையும் சாதிக்கலாம் என்று எண் ணுவதுண்டு. ஆனால், தொழிலாளி வர்க்கம் திரண் டெழுந்தால் தன்னால் எதையும் சாதித்து விடமுடி யாது என்ற உண்மையைத் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றார், மு.பவர் தனது 'உரிமைகள் உயிர்த்தெழும் போது என்ற சிறுகதை மூலமாக,
இச்சிறுகதை பீடித் தொழிலாளரின் வாழ்க் கையை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக் கிறது. ஒரு காலத்தில் மேலோங்கியிருந்த பீடிக் கைத் தொழில், இன்று சீரழிந்து போய்விட்டது. கதையில் கூறப்படுவது போல, தொழிலாளர்களை மிதித்து மேலெழுந்த முதலாளிகள்தான் இன்றும் இன்னும் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கையில் நொந்து போயுள்ளனர்.
முரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான் அதற்கெனத் தனியான தொரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மாறி மாறி வந்த அரசாங்கங்களால், அத்தொழில் தனியார் மயப் படுத்தலுக்கு உள்ளாகி, இன்று குற்றுயிரும் குலையிருமாக இருக்கிறது.*
அந்தக் காலத்தில் ஐந்து ரூபா கூலி என்பது இன்று பண வீக்கம் பெற்று 300-400 ரூபா கூலி என்ற விகிதத்தில் வந்திருந்தாலும் கூட, பீடித் தொழி லாளர் வாழ்க்கையில் அன்று நிலவிய அதே பொரு ளாதார நெருக்கடி இன்றும் தொடர்கிறது 616 g5teóT 2 600T60)LD.
பீடித் தொழிலாளர் வாழ்க்கையில் காணப்படும் அவலங்களையும் அடாவடித்தனங்களையும் அழ காக முன் வைத்து இருக்கிறார் மு. பவர் அவர்கள்.
・ +
ஆராய்ச்சி செய்யத்தான் அதன் விளக்கங்கள் விரிவுபடும். தமிழில் 'அ'னாவா முதல் எழுத்து 'ஃ'ன்னாவா முதல் எழுத்து? என்ற சந்தேகம் வந்த பிறகு, முடிவைக் காணாமல் இருக்க முடியுமா? முருகேசு வாத்தியாருக்குக் குழப்பத்தை ஏற்படுத் திய சந்தேகத்தை பிள்ளைகள் தீர்த்து வைத்து விட் டார்கள். என்றாலும் ‘ஓ’ என்ற எழுத்து முதல்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 70
எழுத்தாகுமா? என்ற கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இதனை விளக்குகிறது பரன் எழுதியள்ள 'யாரோடு நோவேன்? என்ற சிறுகதை.
གཞིས་
ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அப் பாவி மக்கள் அபலைகளாக அலைந்து திரிந்ததை எவரும் இலகுவில் மறந்து விட இயலாது. அப்ப டியான ஒரு கட்டத்தில் முல்லைத்தீவுக் கடலுக்கு அருகில் உள்ள நந்திக்கடல் நீரேரியைக் கடந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போராளிகளும் தம்மை உருமாற்றிக் கொண்டு, ஆளோடு ஆளாக அடுத்த கரைக்குச் செல்லத் தவற வில்லை.
அப்படிச் சென்ற போராளிகளில் மாணிக்கமும் கணபதிப்பிள்ளையின் குடும்பத்தினருடன் ஒழிந்து கொண்டு, ஆளோடு ஆளாக அடுத்த கரையை அடைந்தான். அடிப்படை வசதிகளோ, அரை வயிற் றுக் கஞ்சியோ கிடைக்காத நிலையில், பட்டினிச் சாவை எதிர்நோக்குவதை விட, இராணுவத்தின ரிடம் சரணடைவதால் ஒரளவுக்கேனும் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அகதிகள் மனதில் வேரூ ன்றி விட்டதால் எப்படியும் ஒரு முடிவோடு முன்னே றினர்.
அதேவேளை, இளம் போராளிகளைச் சேர்த்துக் கொள்வதில் மும்முரமாக இருந்த போராளிகள் வயது வித்தியாசம் பார்க்காமல் கண்ணில் பட்டவர் களை எல்லாம் அள்ளிச் செல்லத் தலைப்பட்டனர். இதன் காரணமாகப் பருவம் அடைந்த மறுமாதமே திருமணம் செய்து வைத்து கர்ப்பவதிகளாக சிறு பராயப் பெண் பிள்ளைகளை தாய்மை அடையச் செய்தமையானது கொடுமையிலும் கொடுமை.
போராளி மாணிக்கன் இராணுவ விசாரணை யின் போது, தப்பிப் பிழைத்தான். ஆயினும் அர சாங்கம் பக்கம் சாய்ந்து, அப்பொழுது தலை யாட்டிகளாகத் தமது போராளிகளைக் காட்டிக் கொடுக்கும் தனது சகாக்களிடம் தப்ப முடியாமல் போகும் என்றே மாணிக்கன் நம்பினான். ஆனால், அவர்களோ "இவன் பயங்கரவாதி அல்ல! எனத் தலை அசைத்து மறுத்துவிட்டனர். மாணிக்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

கத்தின் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.
மாணிக்கன் கண்ணிர் விட்டு அழுதான். ஏன் கோபுவும், வேணுவும் தன்னைக் காட்டிக் கொடுக் காமல் தப்ப விட்டு விட்டார்களே என்றா? அல்லது தான் இதுவரையில் செய்த கொடுமைகளை எண்ணியா? என்பது புரியவில்லை.
செங்கை ஆழியானின் நந்திக்கடல் அருகாக" என்ற கதையில் நந்திக் கடனிரேரியில் நாங்களும் அகப்பட்டுக் கொண்டதைப் போன்றதொரு உண ர்வை மனதில் ஏற்படுத்திவிடுகிறது.
ཕཞིས་།
நாலாம் கட்ட ஈழப் போரின் போது நடந்த மக்கள் அவலங்களை அழகாக அலசுகிறது ‘வாழ்க்கை யின் ரணங்கள்’ என்ற சந்திரகாந்தா முருகானந்த னின் சிறுகதை.
உண்மையில் யுத்த அரக்கனின் கொடுமை, அப்பாவி மக்களை ஒட ஓட விரட்டுகிறது. இடப் பெயர்வுகள் முடிவில்லாமல் தொடர்கின்றன. இடை யிலே ஏற்படுகின்ற உயிர் இழப்புக்கள், உறவுகளின் இழப்புக்களினால் எழும் அல்லோலகல்லோல அவலக் குரல்கள் குலை நடுங்கச் செய்கின்றன. மக்கள் செய்வதறியாது திக்கெட்டும் சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
சாரதாவும் உறவுகளையும், கணவனையும், பிள் ளையையும் இழந்த துக்கத்தில் கைக் குழந்தை யைக் கையில் சுருட்டிக் கொண்டு ஒடுகிறாள். இடையில் அவள் சந்திக்க நேர்ந்த இடர்கள் ஏரா ளம். அத்தனையையும் பொறுத்துக் கொண்டாலும் குழந்தையின் பசி போக்க அவளால் முடியவில்லை. சூம்பிப் போயிருந்த அவளது முலைக் காம்புகளில் பால் வராததால், குழந்தை பசியால் துடிக்கிறது. அது மாத்திரமா, தண்ணிர் இன்றி அவள் படும்பாடு கண்களில் நீரை வரவழைக்கிறது. தனது இரத்தக் கறை படிந்த துண்டுத் துணியைக் கழுவ அவள் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. பின்னர், காலைக் கடனை முடித்துக் கொண்டு சுத்தி செய்வ தற்குக் கூட இயலாமல், பற்றை இலைகளை உரு வித் துடைத்துக் கொள்கிறாள். எவ்வளவு பெரிய மனுக் குலக் கொடுமை?
அது மாத்திரமா? பிள்ளை பெற்ற தாய் ஒருத்தி
68

Page 71
குழந்தை இறந்தே பிறந்ததால், ஒட்டிய வயிற்றுடன் கட்டிய பால் மார்பை வலிக்கச் செய்ய வேதனை யோடு நடக்கையில் சாரதாவின் குழந்தையைப் பெற்று அந்தத் தாய் தனது மார்பைப் பருகக் கொடு க்க முன் வந்ததை எண்ணி நிம்மதிப் பெரு மூச்சுவிட்டாள், அவள்.
யுத்தகாலச் சூழ்நிலைகளை வைத்துப் பின்னப்ப டும் சிறுகதைகளில் அவலங்களை யதார்த்தமாக எடுத்து விளக்கும் சிறுகதைகளில் ஒரு சிறந்த சிறுகதையாக இதனைப் பாராட்டாமல் இருக்க (ԼpԼջԱIITՑl.
+++++
மல்லிகையின் ஆண்டு மலர் எப்பொழுதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வெளிவரு வதால், அதனை ஆண்டு மலராகவும், ஜனவரி இதழாகவும் கணிப்பீடு செய்து கொள்வது வழக்கம்.
பெப்ரவரி மாத இதழில் பதுளை சேனாதிராஜா, ஆனந்தி, தெ.ஈஸ்வரன், பரன் ஆகியோர் சிறுகதை களை எழுதி இருந்தனர். இதில் நான்கு சிறுகதைக ளும், ஒரு குறுங்கதையும் இடம்பெற்று இருந்தன. குறுங்கதையை வேல் அமுதன் எழுதி இருந்தார்.
இன்று தோட்டங்களில் சர்வசாதாரணமாக நடக் கும் தரகர்களின் திரு விளையாடல்களையும், தில் லுமுல்லுகளையும் அச்சொட்டாக எடுத்துக் காட்டி இருக்கிறார் பதுளை சேனாதிராஜா தனது "ஹிட்ல ரின் இடைவெளிகள்’ எனும் சிறுகதை மூலமாக,
ஒன்றுமே அறியாத அப்பாவித் தோட்டத் தொழி லாளர்களின் பருவமடையாத பெண் பிள்ளைகளை யும், சிறுமிகளையும் ஏமாற்றி ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்து, கொழும்பில் தனவந்தர்க ளின் வீடுகளில் வேலைக்குச் சேர்ப்பித்து, தமது பிழைப்பை மேற் கொள்ளும் ஈனமற்ற தரகர்கள் ஆயிரமோ, இரண்டாயிரமோ பெற்றுக் கொண்டு பலிக்கடாக்களாக ஆக்கி விடுகின்றார்கள். இந்த ஈனச் செயல் காலங் காலமாகத் தொடர்கின்ற தொடர் கதையாகவே இருக்கின்றது.
கொழும்பில் உள்ள தனவந்தர் வீடுகளில் மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும் வேலைக் காரர்கள், எவ்விதச் சுகத்தையும் பெறாத போதும், தரகராயிருந்து தொடர்பாடல் செய்கின்ற தரகர்கள் அவ்வப்போது பெற்றுக் கொள்ளும் பணத்தால் தமது
69

காலத்தை ஒட்டுகின்றனர் என்பதுதான் உண்மை. கதையில் வரும் தரகரின் மகளான பிரியாவுக்குத் தனது தந்தையின் செயற்பாடு தெரிய வந்த போது, வெறுப்பைக் கக்குகிறாள். ஏய்த்துப் பிழைப்பதை அவ்ஸ் ஏற்கவே இல்லை.
+
யுத்த தேசத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று கனவு காண்பவர்தான் சாரதாவின் அப்பா. ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு பழகுவதால் உறவுகள் தூரமாகுமே தவிர, இணைவது இல்லை. இதற்கு விதி விலக்காகாமல், அவர் இராணுவத் தினருடன் ஒன்றாகப் பழகி, அவர்களுடன் அவராக உறவைப் பேணி வருகிறார். பூரணமான அன்பின் வேள்வியே அவரது கனவு மெய்ப்பட வைக்கும். ஒரே ஒரு கருவியாகும் என்பதை விளக்குகிறது ஆனந் தியின் 'கனவு மெய்யப்பட வேண்டும்' என்ற கதை.
十
நோயென்று வந்து விட்டால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தான். டாக்டர்களின் ஆலோசனை யையும் மீறி கண்டபடி உணவு உட்கொள்ள முனைந்தால் பல பின் விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை தெ.ஈஸ்வரன் எழுதிய இரு வேறு பார்வைகள்' என்ற கதை சொல்லி
ب+-
பிள்ளை பிறந்தவுடனேயே அதன் எதிர்காலம் பற்றித் திட்டமிடுவது ஏற்புடையதுதான். என்றாலும் எதிர்காலம் என்பது எமது கையில் இல்லை என் பதை நாம் மனதில் இருத்திக் கொள்வது அவசியம். ஆனால், இக்கதையில் வரும் மோகன்- ஆனந்தி தம்பதியினர் குழந்தையின் ஜாதகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, எதிர்காலத்தில் எப்பொழுதோ நடக்கப் போகும் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்குத் தேவையான அத்திவாரத்தை இடுகின்றனர். பரன் எழுதிய அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்" என்ற கதை மூலமாகப் பொறுத்திருந்து பார்ப்போம் அரங்கேற்றம் நிறைவேறியதா என்று?
+++++
கடந்த வருடம் மார்ச் மாத இதழில் மூன்று சிறு
கதைகளும், ஒரு குறுங்கதையும், ஆண்டு மலரில் தொடங்கிய பரன் எழுதும் பேய்க் கூத்தும் ஆமணக்
வைக்கிறது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 72
கம் தடியும் என்ற தொடரின் மூன்றாவது பகுதியும் வெளிவந்து இருந்தது.
மூட நம்பிக்கையில் மக்கள் மூழ்கி இருந்த காலம் ஒன்று இருந்தது. மனித அறிவு வளர வளர, அதிணின்றும் விடுபட்டு யதார்த்தத்தைப் புரிந்து கொண்டான். விஞ்ஞான வளர்ச்சி மூட நம்பிக் கைகளை மூட்டை கட்டி கிடப்பில் போட்டு விட்டது.
அப்படியான மூட நம்பிக்கை வித்தை ஒன்றை விஞ்ஞானத்தின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் கதை ஒன்றுதான் உ. நிஸார் எழுதியிருந்த ‘உதிர்ந்த வேஷங்கள்’ என்ற சிறுகதை.
十
தமிழிலும், வடமொழியிலும் தேர்ச்சி பெற்ற பேராசிரியர் தாருண்ணியத்துக்காக ஒர் அப்பாவி மொட்டவிழா மலரான ஊமைப் பெண் மதுராவைத் திருமணம் முடித்து, அவளைக் காப்பாற்றுகின்றார் என்றால்; அதுவும் உடல் இன்பங்களைத் துறந்து அவளது உள இன்பங்களுக்காகத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார் என் றால், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் யாருக்குத்தான் மனம் வரும்? இதை எண்ணித் தான் அவரது சீடரான நந்தகோபால் ஆச்சரியப் பட்டான். பேராசிரியரைப் பார்த்து அவர் வாழத் தெரி யாத அசடு என்று உலகம் தூற்றுவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்பட்டதேயில்லை என்பதை பாத பூசை என்ற சிறுகதை மூலமாக விளக்கிக் செல்கிறார், ஆனந்தி.
ཕ---
மல்லிகையில் அதிகமான சிறுகதைகளை எழுதிவரும் சிறுகதை ஆசிரியர் டாக்டர் ச. முரு கானந்தன் முன்னணியில் திகழ்கிறார். ஆசிரியைக ளில் ஆனந்தி முன்னிலையில் இருக்கிறார் என் பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
தமிழ்- சிங்கள சமூகங்களுக்கிடையில் புரிந்து ணர்வு இல்லாமையினால் தான் இனப் பிரச்சினை இவ்வளவு தூரத்துக்கு நீண்டு சென்றது என்பது 2 -6cioT6op.
திரு ச. முருகானந்தனின் முடிவில்லா முடிவு கள் என்ற கதையும் இதைத் தான் வலியுறுத்து கிறது. இதில் நடமாடும் இந்திக்க போன்ற நல்ல
உள்ளம் படைத்த மனிதர்களும் இருக்கத்தான்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

செய்கிறார்கள். மனித நேயம் கொண்ட இந்திக்க, பிரியா டீச்சரைக் கைப்பிடிக்க நினைத்த போது, தன் எண்ணத்தைப் பிரியா சொல்லி முடிக்க சந்தர்ப்பம் வாய்ப்பதற்கு முன்னரே சந்தேகம் கொண்ட எவரோ அவளை முகவரி இல்லாமல் செய்து விட்டனர்.
十
உண்மையை உணராமல் உதவிக்கு வருப வனை உதைத்துத் தள்ளும் அவசரப் புத்திக்காரர் களால் முகுந்தன் போன்ற இளைஞர்களுக்கு எப் பொழுதும் ஆபத்துத்தான் என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதற்காக எழுதப்பட்ட கதைதான் எம்.எம்.மன்ஸர்ை எழுதி 'கைக்குட்டை' எனும் குறுங்கதை.
+++++
ஏப்ரல் மாத இதழில் மூன்று சிறுகதைகளும், ஒரு குறுங்கதையும் இடம் பெற்று இருந்தது.
கொண்ட குறிக்கோளை லட்சியமாகச் செயலாற் றும் போது, நிச்சயம் வெற்றி கிடைத்துவிடும் என்ப தற்கு நல்லதோர் எடுத்துக் காட்டு எம்.கே. முருகா னந்தனின் முருகுப்பிள்ளைப் பேய்" என்ற சிறுகதை,
தம்பித்துரைக்குச் சிறுவயதிலேயே, டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியம் மனதுக்குள் வேரூன்றி யது. தனக்குக் கல்வி கற்றுத் தருவதில் இடர்பாடு கள் செய்த நந்தன் வாத்தியாருக்கே பின்னாளில் டாக்டர் தம்பித்துரை வைத்தியம் பார்க்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.
ཕཞི།
ஒவ்வொரு வீட்டிலும் நிகழும் சம்பவங்களை
நினைவு படுத்துகின்றது முநிரஞ்சனியின் ஒரங்க நாடகம்' என்ற கதை.
حہ۔
தம்பட்டம் அடிப்பவர்கள் தமது வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்வது உண்டு என்பத ற்கு நல்லதொரு கதை வேல் அமுதனின் 'தம்பட் டம்" என்ற குறுங்கதை.
+++++
மே மாத மல்லிகை இதழ் நான்கு சிறுகதை களையும், ஒரு குறுங்கதையையும் தாங்கி வந்தது.
இதில் வேல் அமுதனின் "தறுதலை’ என்ற
70

Page 73
குறுங்கதை பத்திரிகை விளம்பரம் பார்த்துப் புத்திரி களுக்குத் திருமணம் செய்து வைக்கத் தேடும் தகப்பன்மார் அநேகம் பேர், இப்படித்தான் ஏமாந்து போவார்கள் என்பதற்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்து இருந்தது.
ཕཞིང་།
தன் உறவுகள் வெளிநாட்டில் இருக்க, தான் மாத்திரம் தாய் நாட்டில் இருந்து கொண்டு பத்திரி கையாளராகத் தாய் நாட்டுக்கும், தன்னினத்துக்கும் அளவற்ற சேவை செய்து வரும் ரதினி நாட்டுப் பற்றுள்ளவராக நின்று சேவை செய்து வந்தாலும், ஊடகவியலாளருக்கும், பத்திரிகையாளருக்கும் நடக்கும் கடத்தல், அச்சுறுத்தல், கொலை என்பன வற்றை நினைக்க அஞ்சியவர்களாகவே அவளது உறவினர்கள் அவளையும் தம்மோடு அழைத்துக் கொள்ளப் பாடுபட்டனர். என்றாலும் தாய் நாட்டிலே இருக்க வேண்டும் என்ற லட்சியமும் தகப்பனை இறுதிவரையில் கண் போல வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு மறக்காதவளாக ரதனி காணப்படுகிறாள். தகப்பன் வேலையை விட்டுவிட்டு உறவுகளுடன் போய் ஒட்டிக் கொள்ளும் படி வேண்டினாலும, ரதனியினால் அதனைச் செய்ய முடியவில்லை. ரதனியின் மனத் தைரியத் தையும், லட்சியத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மா.பாலசிங்கத்தின் வழியா இல்லை’ சிறுகதை அருமை!
--
வேண்டாத மனைவியின் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்றொரு வாக்கு 2 600TCB. உண்மையில் சந்தேகப் பிடியில் சிக்குண்டு கிடக் கும் பார்த்திபனிடம் மனைவியைப் பற்றி ஏற்பட்டிருக் கும் வெறுப்பு அவளை அடி உதை கொள்ளச் செய் கிறது. சற்றும் இரக்கம் இல்லாமல் நடந்து கொள் ளும் கணவன்மார்கள் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது ஆனந்தியின் ‘கவரிமான் சிறுகதை:
பொதுவாக மாமி மருமகளுக்கிடையில் பிரச்சி னைகள் எழுவது வழக்கம். ஆனால், மாமி மருமக னுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் வெறுப்புக்குக் காரணம், மாமி தனது மகளுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் உசுப்பேற்றிவிட்டுப் பிரச்சினைகளை
71

உண்டு பண்ணுகிறார் என்று பார்த்திபன் கருதுவது தான். மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமானாக சரளா உயிர் விடாவிட்டாலும் கூடப் பார்த்திபனிட மிருந்து பிரிந்து வாழ்வதாலேயே அந்நிலையை அடைந்து விடுவாள் என்பதை விளக்குகிறது ஆனந்தியின் ‘கவரிமான்'
--
வியர்வையை உழைப்பாய்ச் சிந்தி தேயிலைச் செடிகளுக்கு உரமாய்ப் போகும் தோட்டத் தொழி லாளரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்படாததற்குக் காரணம், அங்கு காணப்படுகின்ற தொழிற்சங்கங்க ளின் கையாலாகாத்தன்மையும் அரசியல்வாதிகளின் தலையீடும்தான் என்பதையும் சடகோபன் போன்ற உண்மையாய் உழைக்கும் தொழிற்சங்க நடவடிக் கைகளில் ஈடுபடும் இளைஞர்களின் முயற்சிகள் அடாவடித்தனங்களால் முறியடிக்கப்படுகின்றன.
அரசியல் கைக்கூலிகளால் சடகோபனும், நண்ப னும் தாக்கப்பட்ட வேளையில், தாய் தடுத்தாலும், சித்திராவின் தைரியமூட்டுதலால் சடகோபன் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க முன் வந்தது, உண்மையில் எதிர்காலத்தில் தொழி லாளர் வாழ்வு சிறக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவ தாய் அமைந்துள்ளது ச.முருகானந்தனின் முன் வைத்த காலை' என்ற சிறுகதை.
4. --
கடந்த வருடம் மல்லிகையில் தமிழாக்கச் சிறு கதைகள் அதிகம் இடம்பெறாத போதும், ஒரே ஒரு கதை மாத்திரம் வெளிவந்து இருந்தது. மாயோ' என்ற பெயரில் வெளியான தாய்லாந்துச் சிறுகதை யைத் தமிழில் எம்.எம்.மன்ஸ்லர் மொழி மாற்றம் செய்து தந்திருந்தார்.
+
‘பேய்க் கூத்தும் ஆமணக்கம் தடியும்’ என்ற பரனின் தொடர் இந்த இதழுடன் முற்றுப் பெற்று விடுகிறது. அத்தொடரில் மாதாந்தம் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஒவ்வொரு நிகழ்வைப் பற்றியும் சுவாரசியமான முறையிலே கதைவடிவில் தகவல் களைத் தந்திருந்தார், பரன்.
ஜனவரி இதழில் பரன் எழுதிய 'யாரோடு நோவேன்' என்ற கதையைத் தொடர்ந்து, பெப்ரவரி இதழில் 'அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்'
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 74
என்ற தலைப்பின் கீழ்-, இந்த விஞ்ஞான கணினி யுகத்தில், பிள்ளை பிறப்பு, வளர்ப்பு, எதிர்காலப் படிப்பு என்பனவற்றை முன் கூட்டியே செய்ய வேண் டியிருக்கிறது என்பதனால் குழந்தை கருவில் இருக் கும் போதே, அது ஆண், பெண் என இனங் கண்டு ஜாதகக் குறிப்பையும், பிறப்புத் திகதியையும் அறி ந்து பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும்,
மார்ச் மாத இதழில் மேய்ப்பவன் அவனே...! என்ற தலைப்பின் கீழ், இந்தியாவில் நடை பெற்று முடிந்த செம்மொழி மகாநாட்டில் பங்கு பெற்ற வரும் எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அலன் இளங்கோவை இந்திய விமான நிலைய அதி காரிகள் ஆங்கிலத்தில் பேசி, வரவேற்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எதிர்காலத்தில் ஆங்கிலம் மேலோங்கி செம்மொழியை மிகைத்து விடுமோ என் னவோ என்பது கேள்விக்குறிதான் என்பதையும்,
ஏப்ரல் மாத இதழில் 'எந்தையே ஈசா. என்ற தலைப்பின் கீழ்- கோயில் அர்ச்சனை செய்வதில் உள்ள கஷ்டங்களை தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். நாகலிங்கம் மாஸ்டர் வயதான காலத் தில் நெய்ச் சட்டியையும் எடுத்துக் கொண்டு, அர்ச் சனைக்குத் தயாராகும் விதம் மனதில் கவலையை வரவழைக்கிறது என்பதையும்,
மே மாத இதழில் 'ஆயகலை’ என்ற தலைப்பின் கீழ்- வியாபாரப் பொருட்களுக்கு விளம்பரம் தேவை ப்படுவது போல, ஒரு எழுத்தாளனின் புகழுக்கும், அவன் போடும் புத்தகத்துக்கும் விளம்பரம் இன்றிய மையாதது என்பதையும், செம்மை இல்லாத எத னையும் செம்மைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் வியாபாரத்தைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என் பதையும் சிவநேசன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் செம்மைப்படுத்தல் தேவை என்ப தையும் விளக்கிச் செல்கிறது.
மொத்தத்தில் ஐந்து தொடர்களுடன் முற்றுப் பெற்ற பரனின் "பேய்க் கூத்தும் ஆமணக்கம் தடியும்" என்ற ஆக்கம் சிறந்ததொரு முயற்சி எனப் பாராட்டா மல் இருக்க முடியாது.
གཞིས་། གཞིས་། གཞིས་། གཞིས་། གཞི
ஜூன் மாத இதழ் மூன்று சிறுகதைகளையும், ஒரு குறுங்கதையையும் உள்ளடக்கியிருக்கிறது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

யுத்தத்தின் மூலம், தனது உறவுகளை இழந்து விட்ட பிறகு, தனக்கு எதுவுமே தேவையற்றது என எண்ணிய வசந்தன் உலகப் பற்று அற்றவனாக மாறி, உளப் பாதிப்புக்குள்ளான போது உளநல மருத்துவரின் உதவியினால் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அந்த அகதிமுகாமில் இருந்து முழு மனிதனாக அவன் வெளியேறும் நாளை எண்ணி நல்ல செய்தி வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றான்.
வெறும் பிரச்சாரத்துக்காக மட்டுமே அகதிக் கூட்டத்தைப் பொருளாகக் கொள்பவர்கள் மத்தியில், விளம்பரம் தேடாமல் கடமையுணர்வோடு பணியா ற்றி வரும் உளநல மருத்துவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. யுத்தத்தினால் மனப் பாதிப்புக் குள்ளான வசந்தன் போன்ற இன்னும் எத்த னையோ ஜீவன்களுக்கு அந்த வைத்தியரின் பணி தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிறது ஆனந்தியின் நல்ல செய்தி
--
பெண்களைக் கண்டதும் தன்னிலை மறந்து போகும் ஆண்கள் தாம் ஆபத்தில் சிக்குவோம் என்பதை அறியாமல் விட்டில் பூச்சிகளாக மயங்கித் தனது நண்பனையும் ஏமாற்றுபவர்களுக்கு நல்ல தொரு உதாரணம் சிவசிவா எழுதிய நான் வகுத்த வியூகம்' என்ற கதை.
ح۔
மாமி மருமகள் பிரச்சினை இன்று நேற்று ஏற்பட் டதல்ல. பொறுமையும் திறமையும் தான் மருமகளை நல்ல மாமியார் மெச்சிய மருமகளாக்குகிறது.
அதே போல, மரியாதைப் பண்புகள் நிறைந்த மாமி யார்களை மருமகள்மாரிடம் மருமகள் போற்றும் மாமியார்களாக்குகிறது என்பதை 'கடைசி வீடு' என்ற தீட்சண்யாவின் சிறுகதை எடுத்துக் காட்டுகிறது.
+++++
ஜூலை மாத இதழில் நான்கு சிறுகதைகளும் வழமை போல ஒரு குறுங்கதையும் இடம் பெற்று இருந்தது.
யுத்த கால அவலங்களில் எதிர்நோக்கிய சம்ப வங்களில் மயூரனின் துயர நிகழ்வுகள் கவலையூட் டுவனவாக உள்ளது. தாயின் மீது கொண்ட
72

Page 75
அன்பின் காரணமாகத் தனது வாழ்க்கையையே சூனியமாக்கிக் கொண்ட தியாகி அவன் என்பதை விளக்குகிறது சந்திரகாந்தா முருகானந்தனின் 'உண்மை வலி என்ற கதை.
--
வல்லவன் எதனையும் வெல்லுவான். அடுத்தவர் கள் சொத்துக்களைத் தனது சொத்தாக மாற்றிக் கொள்ளும் தந்திரம் அவனுக்கு மாத்திரம்தான் தெரி யும் என்பதனையும், அவன் எதனைச் செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லாமல் அடங்கி ஒடுங்கிப் போவதைத் தவிர, வேறு வழி இல்லை என்பதை எடுத்து விளக்குகிறார் பிரமிளா பிரதீபன் தனது 'ஒற்றையடிப் பாதை' என்ற சிறுகதை மூலமாக.
十
டாக்டர் சுந்தரம், டாக்டர் என்ற பதவிச் சேவை செய்தது மாத்திரமல்லாமல், மக்களின் தேவை அறிந்து சமூக சேவைகள் பல செய்து பல பேரைக் கைதுாக்கி விட்டிருக்கிறார். அந்தக் கிராமமே அவ ரால் உயர்ந்திருக்கிறது. இப்படியான சமூக சேவை மனம் கொண்டவர்கள் இருந்தாலே போதும், குறுகிய காலத்துக்குள் யுத்தத்தால் தலைகீழாகப் புரட்டப் பட்ட கிராமங்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்பதை டாக்டர் ச.முருகானந்தன் தனது அநுபவத்தில் கண்டவற்றைக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அவரது ‘காலம் வெல்லும் நிச்சயம்.
ཕཞིས་། གཞིས་། གཞིས་། གཞིས་། གཞི།
மாதாந்தம் இரண்டுக்கும் மேற்பட்ட சிறுகதைக ளைத் தாங்கி வரும் மல்லிகை அதன் ஆகஸ்ட் இதழில் இரண்டே இரண்டு சிறுகதைகளையும், வழமைபோல ஒரு குறுங்கதையையும் தாங்கி வந்தது.
வாழ்க்கையில் ஏற்படும் அநுபவங்களில் இருந் துதான் ஞானம் பிறக்கிறது. என்னதான் உறவு முறைகள் என்று வந்தபோதும் அவமானங்கள் வந்து சேரும் போது ஆழமான அன்பு என்பது எல்லாம் புறம்போக்குத்தான் என்பதை விளக்குகிறது ஆனந் தியின் ஒளி தோன்றும் உயிர்முகம்" என்ற கதை.
--
எதற்கும் ஒரு காலம் உண்டு. உரிய காலம் கை நழுவிப் போகும் போது, பல சோதனைகளும், வேத னைகளும் ஏற்படுவது இயல்பு. இந்த நியதிக்குள்
73

சிக்குண்ட குமரன், மீண்டும் தனது பழைய காத லையே எண்ணி ஏங்குகின்றான். என்றாலும் காத லால் தனது எதிர்கால நடவடிக்கைகள் முடக்கப் பட்டதென்பது அவனைப் பொறுத்தவரையில் உண்மைதான். என்றாலும் காலம் கடந்த ஞானத் தால் மீண்டும் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவனுள் துளிர் விட்டாலும், நரிக்குணம் படைத்த நண்பர்களால் நல்லது நடக்கவில்லை. ஒன்பது வருடக் காதலால் கட்டுண்டு இருந்த மேகலாகவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்த செய்தி, அவனை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, கசக்கிப் பிழிந்துவிட்டது என்பதை விளக்குகிறது சீனா உதயகுமாரின் இவர்கள் நண் பர்களல்லர்’ என்ற கதை.
+++++
ஆகஸ்ட் மாதம் சிறுகதைகள் இரண்டே வெளி யானாலும் கூட, செம்படம்பர் மாதம் ஐந்து சிறுகதை களையும் வழமை போல ஒரு குறுங்கதையையும் ஏந்தி வந்தது மல்லிகை. ஆண்டு மலருக்குப் பிறகு கூடுதலான சிறுகதைகளைத் தாங்கிய மாதமாக இந்த செப்டம்பர் மாதத்தைக் குறிப்பிடலாம்.
வேலணையின் நினைவுகளை வாசகர்களுக்கு அழகாக நினைவுபூட்டி இருக்கிறார், அகில். யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்தவர்களில் ஆரம்ப காலத்திலேயே வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந் தவர்கள் குடும்பம், பிள்ளை குட்டிகளோடு அங்கு வசித்தாலும் இலங்கையின் பழங்கால நினைவு EB60)6II அழிக்காமல் இருக்கின்றனர். எத்தனை நாடு களுக்குச் சென்றாலும், அது நம் நாடு போல வருமா? அதிலும் நம்மூரு போல வருமா? என்பதை அழகாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அதே வேளை உறவு களை இழந்து தவிப்பது போல ரவியும் தவிக்கின்ற தவிப்பு, வாசகர் மனதை நெருடிச் செல்கிறது "பெரிய கல்வீடு'.
حلے
ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர் அவர்கள் சார்ந்த துணையுடன் விளையாடக் கூடாது. வாழ்க்கை என் பது வாழ்வதற்குள்ள வசந்தகாலம். இக்காலத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் தான் வாழ்க்கை இனிக்கும்; இல்லையேல் கதை யில் வரும் மணிமேகலையின் வாழ்வு போன்று இரு
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 76
ண்டு போய்விடும் என்பதைச் சொல்லி வைக்கிறார், ச.முருகானந்தன் எரிதணல் மூலம்.
--
சின்னஞ் சிறு வயது முதல் சேர்ந்து அவர்கள் பழகி வந்த காதல் ஆனந்தி வேறு ஒரு பையனுடன் ஒடிப் போனாலும், திரும்பவும் தான் அவளைக் கட் டிக் கொள்ளும் அளவுக்கு அவனது மனசு மாறாமல் இருக்கிறது. காதலின் ஆழத்தை மெய்ப்படுத்து கிறது மாறும் மனசுகள்’ என்ற சாவகனின் கதை.
ཞི།
பணத்துக்காகக் கொண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் ராசு போன்றவர்கள் சமூகத்தில் இருக்கும் வரையில் சபேசன் போன்றவர்களுக்குக் கிராக்கி இருக்கத்தான் செய்யும். என்றாலும் மைதிலி போன்ற பூப்பெய்திய புது மொட்டுக்கள் ஆசைகளைச் சுமந்து கொண்டு இறுதியில் கண் னிர் வடிக்கும் நிலைக்கு ஆளாக்கி விடும். இன்னும் உள்ள ராசுக்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று எச்சரிக்கிறது ஆனந்தியின் நிஜம் மாறும் மனிதர்கள்.
ح~
டாக்டரிடமும், புரொக்டரிடமும் உண்மையை மறைக்கக் கூடாது என்பார்கள். என்றாலும் பொய் சொன்னால், மனச்சாட்சி நம்மைக் கொன்றுவிடும் என்பதுதான் யதார்த்தம். விந்தனும் தனது தந்தை அக்ஸிடன் பட்டதில் பொய் சொல்லுவதும் தான் பயணம் செய்த பஸ்ஸில் வந்த யாசகனிடம் 50 ரூபாவைக் கொடுத்து மனச்சாட்சிக்கு ஒத்தடம் போடுவதாக உள்ளது. வந்தவன் ஏமாற்றுபவனா கவோ ஏமாறுபவனாகவோ இருக்கலாம். நமக் கென்ன? என்பதை எடுத்துக் காட்டுகிறது வெற்றி வேல் துஷ்யந்தனின் மரித்துப் போன மனிதர்கள்.
+++++
செப்டம்பர் மாதத்தைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதத்திலும் ஐந்து சிறுகதைகளும், இரு குறுங் கதைகளும் வெளிவந்து இருக்கின்றன.
யுத்த காலத்தில் ஏற்பட்ட அவலங்களில் ஆயிரம் ஆயிரம் முரளிகள் தமது வாழ்க்கையைத் தொலை த்திருப்பார்கள். அல்லது சுயநினைவிழந்த நிலை யில் பரதேசிக் கோலத்திலும், சித்த சுவாதீனம் அற் றவர்களாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

என்பதற்கு அன்புமணியின் நியதி' எனும் கதை நல்லதொரு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. நல் உள்ளம் படைத்தவர்கள் அவர்களது குடும்பத்தி னரை அரவணைத்து, ஆதரவளிப்பது ஆருயிர் நண் பர்களின் ஒப்பற்ற கடமை என்பதை எடுத்துக் காட்டு கிறார் அவர்.
--
வடபுலத்தில் நடந்த யுத்த நடவடிக்கைகளால் சொந்த பந்தங்களையும், சொத்து சுகங்களையும் துறந்து, இடம்பெயர்ந்த மகிழினி போன்ற எத்த னையோ யுவதிகள், இன்று கனடா போன்ற ஐரோ ப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து ஹோட்டல்களிலும், ஏனைய தொழிலகங்களிலும் தொழில் புரிகின்றனர் என்பதையும், சொந்த மண்ணைவிட, தஞ்சமடைந்த மண் நிம்மதியாகத் தம்மை வாழ வைக்கிறது என் பதையும் அ. விஷ்ணுவர்த்தினியின் சொந்தமண்' சொல்லி வைக்கிறது.
十
இஸ்லாம் மதம் போதிக்கும் கொள்கைகளை எடுத்து நடப்பவருக்கும், விடுத்து நடப்பவருக்கும் தாம் இறந்ததன் பின்னால் (கபுறு) மண்ணரையில் என்ன என்ன நன்மை தீமைகள் விளையப் போகி றது என்பதைப் புனித அல்குர்ஆன் எடுத்து இயம் பிக் கொண்டிருக்கிறது. அதனை மையமாக வைத்து மீளுதல்’ என்ற பெயரில் கற்பனைக் காட்சிகளை வைத்து அழகாகக் கதையைப் பின்னியிருக்கிறார் கெக்கிறாவ சஹானா.
ཕཞི།
யுத்தத்தால் அழிவுற்ற சொந்த மண்ணுக்குத் திரும்ப எத்தனையோ நெஞ்சங்கள் ஆவலாய்க் காத்திருக்க, சூனியமாய்ப் போன அந்நிலங்களில் பழைய விவசாய நிலங்களை மாற்றுவது கடினம் தான். அடிப்படைத் தேவைகள் இன்றி மீள் குடியேற் றம் என்பது சாத்தியமாகச் சில ஆண்டு காலம் எடுக் கலாம். என்றாலும், உட்ல் உரமும், மன உறுதியும் கொள்பவர்களுக்கு சாம்பல் மேட்டில் இருந்து உயிர்த் தெழுகின்ற பீனிக்ஸ் பறவை போலத் எழுந்து நிற்க முடியும் என்பதையும் மீளக் கட்டி எழுப்புவோம் என்ற லட்சியத்தோடு உழைத்தால் நிச்சயம் விடிவு உண்டு என்று விளக்குகிறது ச. முரு கானந்தனின் "பீனிக்ஸ் பறவைகள்’.
74

Page 77
→ト
இன்டர்நெற் வந்தாலும் வந்தது, பலபேருக்கு அது நன்மையாகவும், சிலபேருக்கு அது சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு கரு வியாகவும் ஆகிவிட்டது. இன்டர்நெட் காதலை நம்பி சொந்த மனைவியை விட்டுவிடத் துணியும் நகுலன் வெள்ளைத் தோலுக்கு ஆசைப்பட்டு மறைமுக உரு வத்துக்கு மனதைப் பறிகொடுக்க நினைப்பது பாரம் பரியக் கற்பு வாழ்க்கைக்கு களங்கம் கற்பிப்பதாய் அமைகின்றது என்ற முன் எச்சரிக்கையை விடுக் கிறார் ஆனந்தி தனது 'நிழலுலகின் நிஜ தரிசனம்
ep6)LD.
ཕཞི། ཕཞི། གཞིས་། གཞིས་། ཕཞི།
நவம்பர் மாத மல்லிகை நான்கு சிறுகதைக ளையும் ஒரு குறுங்கதையையும் தாங்கி வந்தது.
இதில், ஆனந்தி எழுதிய 'கானலில் ஒரு கங்கை வழிபாடு உண்மைக் காதல் நிறைவேறாமல் போன தால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. தேவனுக்கும் சுகந்திக்கும் இடையில் ஏற்பட்ட காதல், கலைக் காதல். அவர்கள் கட்டியெ ழுப்பிய கலைக் கோயிலுக்காக இருவரும் திரு மணத்தில் ஒன்று சேர்ந்து இருந்தால் இல்வாழ்க்கை இனிமையாக அமைந்திருக்கும். சுகந்தியின் தந் தையின் வினையால் குமாரைக் கைப்பிடிக்க நேர்ந் ததில் சுகந்தியின் வாழ்க்கை பாலைவனமாகவும், தேவனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட இழப் பினால், அவனது வாழ்க்கை மற்றொரு பாலைவன
மாகவும் மாறிவிட்டது. பாலைவனத்தில் காணப்ப
75
 

டும் கானல் நீராய் அவர்களது வாழ்க்கையும் ஆகி விட்டது.
அதே போன்று, தோட்டங்களில் நடக்கின்ற சில்மிச வேலைகளை இரா. சடகோபன் தனது சொல்லாமலே. சிறுகதை மூலம் எடுத்துக் காட்டியிருப்பதோடு, வறுமையால் வாடும் குடும்பத் தலைவி தனது பிள்ளைகளின் எதிர்கால நன்மை க்காக, அவர்களின் சுபீட்சத்துக்காக பல தியாகங்க ளைச் செய்து வெளிநாடு சென்று உழைக்க முற்படுகின்றாள்.
ஒரு சிறுமியின் எண்ணக் கருத்துக்கள் மூலம் அழகாக சிறுகதை நகர்த்திச் செல்லப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
ཕ
கா. தவபாலன் எழுதியிருந்த முறிப்புக் குளம்' என்ற கதை மூலமாக செல்வமும், செல்வாக்கும் நிறைந்த செல்லத்துரைச் சேர்மன் போன்றவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்குத் தண்டனைகள் எதிர்பாராத வழிகளில் வந்து சேரும் என்பதையும் எடுத்துக் காட்டியிருந்தார்.
+
'மனித மனங்கள் என்ற சீனா. உதயகுமாரின் சிறுகதை,இவ்வுலகில் ஊனம் என்பது ஒரு பிரச்சி னையேயல்ல! இருமனமும் ஒருமணமானால் இல்ல றம் சிறக்கும்" என்பதையும், திருமணத்துக்கு எதிர்ப் புகள் வந்தபோதும் ஆதரிப்பதற்கும் நண்பர்கள் இரு க்கின்றார்கள் என்பதையும் சித்திரிக்கிறது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 78
'With Best Compliment Io:
Mallikai 46 yea
TEX E MA
A9A
(
:B2/34, 3RID CSR COLOM
Te:Z23869
244 FaX: 2
ܠܠ
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

r Issue
S (DV) D.
Y
OSS STREET, BO — 11.
77, 2438494, 9 O5 钰38531
-----4/
76

Page 79
பிரித்தானியாவில் குறிக்கும் ஒரு குறியீட்டு தமிழ்நாட்டவரும் தம்ை தமிழர்கள் என்ற பெரும் இது புள்ளிவிபர அடிப் குறிப்பாக பொதுநூலக நூல்களுக்கான ஒது இக்கட்டுரையில் பிரித்தானியத் தமிழர் என்ற சொற் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் இலங்.ை
& #్ళ
:
‹}tioጁ
;િ }
இன்று உத்தியோகபூர்வமான திட்டவட்டமான எ ஈழத்தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள் லண்டன் மாநகரையும் அதனை அண்டிய பிரதேசா
2%57%i தமிழ் வெ%ரு
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களிடையே படைப்பாளிகளும், பல்துறைசார் எழுத்தாளர்களு கி.ஞானசூரியன், க.உமாமகேஸ்வரன், ஞானமை நா.சபேசன் (புதிசு ஆசிரியர்), புலவர் ந.சிவநாதன், ெ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அவரது சகோதரர் ஈ.கே.ராஜகோபால், தேசம்நெற் இணையத்தளத்ை பத்திரிகையாளர் பொன். பாலசுந்தரம், வி.சிவ சூயோ.பற்றிமாகரன், ரீற்றா பற்றிமாகரன், தமிழரசி மூன்றாவது மனிதன் பெளசர், ரஷ்மி, ஆர்.உதயன என்.செல்வராஜா, ஆவிசாகரத்தினம், கந்தையா நவ வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா, யுகசாரதி- எஸ் குணபாலசிங்கம், பாலரவி, உதயகுமாரி பரமலிங் நவஜோதி ஜோகரத்தினம், க.இராஜசிங்கம், வெ.செ. ஐதிசம்பந்தர், தமிழினி வ.மா-குலெந்திரன், கரவை ( சி.கிருஷ்ணானந்ததேவர், தமிழ் ஓலை வர்த்தக சுதுமலைக் கவிஞர் கந்தையா இராஜமனோகரன், வெளியிட்டுள்ளவர்களில் நினைவில் வந்தவர்க நாகேந்திரம், க.நவசோதி, டாக்டர் க.இந்திரகுமார், வி வைகுந்தவாசன் (ஐ.நா.சபையில் ஒக்டோபர் 5, 197 இந்த மண்ணிலேயே வாழ்ந்தும் மறைந்தும் விட்ட
77
 
 
 
 
 
 

தமிழர் என்ற பதம் பொதுவாக, ஈழத்தமிழரைக் }ச் சொல்லாக மருவிவிட்டது. மலேசியத்தமிழரும் மை இந்தியர் என்றே குறிப்பிடுவதால் அவர்கள் பிரிவுக்குள் தம்மை உள்வாங்கிக்கொள்வதில்லை. ப்படையில் மேற்கொள்ளப்படும் வசதிகளுக்கு, ங்களில் தமிழ் நூல்கள் வாங்கப்படும்போது, தமிழ் நுக் கீட்டை கணிசமாகக் குறைத்துவிடும். பிரயோகத்தை நான் மேற்கொண்டிருப்பினும் அது கத் தமிழரையே குறிப்பதாகும்.
ாண்ணிக்கை இல்லாதிருப்பினும் ஏறத்தாழ 175000 என்று கருதப்படுகின்றது. இதில் 80 வீதமானோர் ங்களிலும் வாழ்கிறார்கள்.
%ன் நூன்மிவ%கரம் விழாக்கரம்
என். செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்)
ஆங்காங்கே பல புலம்பெயர்ந்த இலக்கியப் ம், ஊடகவியலாளர்களும் வாழ்ந்துவருகிறார்கள். னியம், மு.நித்தியானந்தன், சு.மகாலிங்கசிவம், ச.சிறிக்கந்தராசா (வித்துவான் வேலனின் மருமகன்), ர விமல்குழந்தைவேல், புதினம் பத்திரிகை ஆசிரியர் த நடத்தும் த.ஜெயபாலன், முன்னாள் தினகரன் லிங்கம், பத்மநாப ஐயர், முல்லை அமுதன், சிவபாதசுந்தரம், எம்.என்.எம்.அனஸ், சையட் பரீர், ான், நூல்தேட்டம் தொகுப்பாளர் நூலகவியலாளர் ரேந்திரன், விமல் சொக்கநாதன், இ.நித்தியானந்தன், ).கருணானந்தராஜா, கு.அரசேந்திரன், தனபாக்கியம் கம் (கவிஞர் நிலா), அமரர் அகஸ்தியரின் மகள்குணரத்தினம், சுடரொளி வெளியீட்டுக்கழக அதிபர் மு.தயாளன், மு.நற்குணதயாளன், மாதவி சிவலிலன், விபரப்பட்டியல் தயாரிப்பாளர் தி.ழரீகந்தராஜா, ஆகியோர் லண்டனில் வாழ்ந்து, நூல்களை எழுதி கள். இப்பட்டியல் முழுமையானதல்ல. கவிஞர் பித்துவான் க.ந.வெலன், அமுதுப் புலவர், கிருஷ்ணா 8இல் ஈழம் பற்றி பிரஸ்தாபித்தவர்), போன்ற சிலர் ார்கள்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 80
மேற்குறிப்பிட்ட அனைவரும் ஈழத்தமிழ்ப் படைப்புலகில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர்கள். சிலர் அவர்களது நூலை லண்டன் மண்டபங்க ளில் வெளியிடக்கண்டவர்கள். பலர் தாயகத் திலும், தமிழகத்திலும் வெளியிடப்பெற்றவர்கள். படைப்பிலக்கியம் மாத்திரமல்லாது, சமயம், சமூகவியல், ஊடகவியல், விஞ்ஞானம், கலை, வரலாறு என்று பல்வேறு துறைகளிலும் தமது நூல்களை இவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
லண்டனில் இலக்கிய வளர்ச்சி பற்றி உற்று நோக்கினால் அது எவ்வகையிலும் காத்திரமான தும், சுதந்திரமானதுமான விரிவான கருத்தாடல் களத்தினுடாக வளர்ந்ததல்ல என்பது கவனத் திற்குரியது. தாம் கற்றதும் பெற்றதுமான அறிவை வைத்து உருவாக்கப்பட்டவையும், தான்தோன்றிக் கவிஞர்களாக இயற்றப் பெற்ற துமே இவர்களது பிரதான படைப்பகளாயின. கட்புல செவிப்புல ஊடகங்களோ, பத்திரிகை களோ ஆரோக்கியமான இலக்கியப் பரிவர்த்த னையை மேற்கொள்ள இவர்களுக்குக் களம் அமைத்துத் தரவில்லை. முழுமையாக ஈழ விடுத லைப் பேராட்டத்தை குவிமையமாகக் கொண்டு 30 அண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த ஒரு சமூகத்தில் சமயம், சமூகவியர், இலக்கியம் என்ற அனைத்தத் துறைகளும் அரசியலினுா டாகவெ பார்க்கப்படவேண்டிய சூழல் உருவாகி யிருநதது. இது பிரித்தானியாவுக்கு மாத்திரமல் லாது, ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்த அனை த்து மேலைத்தேய நாடுகளுக்கும் பொருந்துவ தாகவே உள்ளது.
தமிழகத்தைப் போலல்லாது, இலங்கையிலோ அல்லது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களிடமோ முழுநேர இலக்கியப் பங் களிப்புக்கான வாய்ப்புகள் காணப்படவில்லை. அவரவர் தமது தொழில்சார் பணிகளுக்குக் காலத்தை ஒதுக்குவதுடன் எஞ்சிய காலத்தில் பகுதிநேர அடிப்படையிலேயே இலக்கியங்களி லும் பிற துறைப் படைப்புகளை உருவாக்குவதி லும் அக்கறைகொண்டிருந்தனர். அதற்கான தீவிரமான வாசகர் சந்திப்புகள் இடம்பெறுவதி ல்லை. லண்டனைப் பொறுத்தளவில் வேலன்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

இலக்கிய வட்டம். பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் ஆகியவை சிறியதொரு வட்டத்திற்குள் தமது இலக்கியச் செயற்பாடுகளை வரைய றுத்துக்கொண்டன. இலக்கியவாதிகள் தமது இலக்கியப் படைப்புகளையிட்ட திறந்த மனதுட னான விமர்சனத்துக்கு ஏங்கும் நிலையே இன்று பொதுவாக லண்டனில் காணப்படுகின்றது.
ஒரு நூல் பற்றிய விமர்சனமானது அந்த நூலின் வெளியீட்டு மண்டபத்துடன் நின்று விடு கின்றது. அந்த விமர்சனம்கூட, நூலின் படைப் பாளியை நோக்கிய மென்மையான தட்டிக் கொடுக்கும் போக்கிலேயே அமைந்து விடுகின் றது. மாற்றுக்கருத்தாளர்களைத் தமது நூலை விமர்சிக்க அழைப்புவிடும் ஒரு படைப்பாளியை இன்றளவில் லண்டன் மேடைகள் அறியவில்லை என்பது கசப்பான விடயமாகும். அப்படி அழைப்பு விடுத்தாலும் அவர்கள் திறந்த மனதுடன் கலந்து கொள்வாரா என்பதும் கேள்விக்குரியதே.
வெளியீட்டு விழாக்களைப் பொறுத்தளவில், லண்டனில் சைவக் கோவில்களின் மண்டபங் களே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. டுட் டிங் சிவயோகம் மண்டபம், என்பீல்ட் நாகபூஷணி அம்மன் ஆலயம், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் என்பன முக்கியமான நூல்வெளியீட்டு விழா அரங்குகளாகும். வாடகை அடிப்படையில் குறைந்த செலவினம் ஏற்படுவதாலும் இலகுவில் கோவில் மண்டபங்களை சென்றடைய முடிவ தாலும் இத்தேர்வு உசிதமாகின்றது. மேலும் கோவில் திருவிழாக்கள், விஷேட பூஜைகள் இல்லாத காலங்களிலேயே மண்டபங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன.
இவ்வழியில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபம் நூல் வெளியீடுகளுக்குப் பெயர் பெற்றது. இந்த மண்டபத்தில் 700க்கும் அதிக மான தமிழ் நூல்களுட்ன் ஒரு நூலகத்தை உரு வாக்க பல ஆண்டுகளுக்கு முன்னர் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு, வெற்றிகரமாகத் திறந்தும் வைக்கப்பட்டது. லண்டன் தமிழ் இலக் கியகர்த்தாக்களின் சந்திப்புக்கும் கலந்துரையாட லுக்கும், விரிவான தேடலுக்கும் இந்த நூலகம் வழிசமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. துர் அதிர்ஷ்டவசமாக குறுகிய காலத்தில் நிர்வாகச்
78

Page 81
சண்டை காரணமாக நூலகம் திறந்த வேகத்தி லேயே மூடப்பட்டு விட்டது. கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டப மேடையில் அமர்ந்து இலக்கியம் பற்றியோ, நூல்கள் பற்றியோ பேசும் எவரது கண்ணையும் இந்த சோபையிழந்து சிறைப்பிடிக்கப்பட்ட நூலகத் தட்டுக்கள் ஒரு சில மணித்துளிகளாவது பேச்சாளர்களின் மனதை உறுத்தவே செய்யும். இருந்தும் இன்றளவில் எவருமே இந்த நூலகத்தை திறந்து மக்களுக்கு இலக்கியப் பசியாற வாய்ப்பை வழங்கும்படி ஈலிங் கனகதுர்க்கையம்மன் கோவில் நிர்வா கத்திடம் கேட்டதாகத் தகவலில்லை. நிர்வாக மும் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. இதுவே எமது லண்டன் தமிழரின் அறிவியல்சார் சுயரூபத்தைப் புரிந்துகொள்ளப் போதுமானது.
இன்றைய நூல்வெளியீட்டுவிழாக்கள் பெரும் பாலும் பிரதேசப் பற்றுள்ள விழாக்களாகவும், குடும்ப விழாக்களாகவும் அமைந்துவருவதையும் காணமுடிகின்றது. இந்த வழிமுறைகள் ஆரோக்கியமற்றதானாலும், தமிழ் எழுத்தாளர் தனது நூல் வெளியீட்டுவிழாவை நடத்தி சிறிய தொகை நூல்களையாவது அன்றைய தினத்தில் விற்றுத் தனது முதலீட்டின் சிறுபகுதியையேனும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற அங்கலாய்ப் பினால் இத்தகைய நிலைக்குத் தள்ளப்படுவதை காணமுடிகின்றது. மண்டப வாடகை, புகைப்பட வீடியோ ஒலிபெருக்கி வாடகை, வருகைதருவோ ருக்கான வயிராற உணவு என்று பல செலவு களும் போக, எஞ்சிய கொஞ்சநஞ்சப்பணம் படை ப்பாளியின் புத்தக வெளியீட்டின் சிறுபகுதியை ஈடுசெய்தாலே அது பெருவெற்றியாகிவிடும். இதன் காரணமாக புத்தக வெளியீட்டு விழாக்கள் பெரும்பாலும் பணச்சடங்குகளாகவே மாறிவிடுவ தால் பெரும்பாலான படைப்பாளிகள் வெளியீட்டு விழாவில்லாமல் தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகளின் வாயிலாகவும், தனிப்பட்ட கடிதத் தொடர்பின் வாயிலாகவும் தமது நூல்களை அறிமுகம்செய்துகொள்கின்றார்கள்.
ஈழவிடுதலைப் போராட்டம் இராணுவரீதியி லான தோல்வியைத் தழுவிய 2009 மே 18இன் பின்னர் லண்டனிலும் பிற ஐரோப்பிய மண்ணிலும் நூல் வெளியீட்டு விழாக்களில் ஒரு மந்த
79

நிலையைக் காணமுடிகின்றது. முன்னாள் வரை கணிசமான அளவில் வெளிவந்த படைப்பிலக் கிய (கவிதை, சிறுகதை இலக்கியப் படைப்புக ளின்) வரவு முற்றாக நின்றுவிட்டது. விடுதலைப் பேர்ராட்டம் பற்றிய ஆக்க இலக்கியங்களே அது வரைகாலமும், நீண்டகாலமாகப் புகலிடத்தில் மேலோங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. போராட்டத்தின் எதிரபாராத முடிவு தந்த அதிர்ச்சி இக் கவிஞர்களின் கற்பனை ஊற்றுகளை ஸ்தம்பிதமடைய வைத்திருக்கலாம்.
2009 மே 18இன் முன்னதாக எழுதி அச்சிடக் கொடுத்த சில ஈழவிடுதலைப்போராட்டம் சார்ந்த கவிதைத் தொகுதிகளை வெளியிடும் சூழ்நிலை அற்றநிலையில் சில படைப்பாளிகள் அவற்றை வெளியிடமுடியாது திணறுவதையும் அறிய முடிகின்றது. இந்நிலையில் படைப்பிலக்கியம் அல்லாது, அறிவியல் மற்றும் வரலாற்று நூல்கள் சில எதிர்வரும்காலங்களில் வெளிவரும் சாத் தியம் காணப்படுகின்றது. மாற்று அரசியல் வாதிகளினதும், விடுதலைப்புலிகளல்லாத போராளிகளின் போர்க்கால இலக்கியங்களும் இனி படிப்படியாக நூலுருவாகும் வாய்ப்புகள் இங்கு காணப்படுகின்றன.
அண்மைக் காலத்தில் 2009 மே 18இன் பின்னர் லண்டனில் வெளிவந்த சிறியளவு எண்ணிக்கையிலான நூல்களைப் பார்க்கும் போது எமது ஸ்தம்பிதநிலை புலப்படும். கவிஞர் பாலரவியின் வண்ணங்கள் எண்ணங்கள் கவிதைத் தொகுப்பு (2009), அவுஸ் தி ரேலியாவிலிருந்து வி.எஸ்.துரைராஜாவின் யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது (2009), ஐ.தி.சம்பந்தரின் கறுப்பு ஜூலை 1983 குற்றச்சாட்டு (2009), நோர்வே யிலிருந்து வைத்தியரட்ணம் பத்மானந்தகுமார் எழுதிய சூழல்சார் சுற்றுலாத்துறை (2010), சூ.யோ.பற்றி மாகரனின் திருக்கோளறு பதிகம்: விளக்கமும் உரையும் (2010), இவை தவிர தமி ழாசிரியர் வேந்தனாரின் நான்கு தமிழ் இலக்கணஇலக்கிய நூல்கள் 2010இல் லண்டனில் உள்ள அவரது மகனால் மீள்பிரசுரமாகியுள்ளன. அது பற்றிய விபரமான தகவல் கிடைக்கவில்லை.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 82
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 


Page 83
.* 兹
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்தவர்கள், கருத்து முரண்பாடெதுவும் இல்லை என்றாலும் - ‘இனங்காண முடிந்ததால்
இங்கிருந்து
வெளியேறினராம்!
மீளக்
குடியேற வந்ததாகக் கூறினார்கள்.
சிங்கள மக்கள் என்பதால் சிங்களத்தில் பேசினேன். என்னைவிட, அழகாகத் தமிழில் கதைத்தார்கள்
எப்படி?
“தாய்மொழியை நாங்கள் மறக்கவில்லை” என்றனர்.
"தமிழ் தாய்மொழி என்றால்?” நீங்கள் சிங்களவர்களா?” என்றேன் “இல்லை, நாங்கள் தமிழர்களும் அல்லர், சிங்களவர்களும் அல்லர்” என்றனர்.
"நீங்கள் சிங்களவர், தமிழும் பேசுகிறீர்கள் அப்படித்தானே?’ என்றேன்.
8
 

კch)«»f ஒர்.
-இப்னு அவUமதி
“இல்லைநாங்கள் சிங்களமும் பேசுவோம்” என்றனர்.
"அப்படி என்றால் நீங்கள் w தமிழ் - சிங்களவர்களா? இல்லைசிங்களத் தமிழர்களா?” எனக் கேட்டேன்.
"நாங்கள் தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கலந்தவர்கள்” என்றனர்.
கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர், “எனது பெயர் சந்திரசிறி, எனது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி கூழர்மா”
என்றார்.
“எந்த ராஜேஸ்வரி கூடிர்மா?” என்றேன் -
'மனித உரிமைகள் ஆணைக்குழு’ என்றார்.
“எங்கே அவர்?’
எனக் கேட்டேன்.
மோசம் போய் விட்டதாகக் கூறினார்.
நான் எதுவும் பேசவில்லை
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 84
நேரம் நள்ளிரவைத் தண்டிவிட்டி ருந்தது. நகரின் மத்தியில் அமைந்திரு ந்த பிரதான கலையரங்கத்தைத் தவிர, முழு "வீப்டெப்ஸ்க் மாநிலமுமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. புறநகர்ப் பகுதியான மொஸ்கோஸ்கி" யும் இதற்கு விதிவிலக்கல்ல. சாலை யின் இருமருங்கிலும் இருந்த மின் விளக்குகள், மங்கிய ஒளியைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன. சாலையோ ரத்தில் இருந்த பூ மரங்கள் பூத்துக் குலுங்கியிருந்தன. வானத்தில் நட்சத் திரங்கள் கண்சிமிட்டின. இவ்விடம் பார்ப்பதற்கு எழில் நிறைந்ததாக இருந்தது. வேனி சூழலில் பரவியிருந்தது. இவ்விடத்தால் செல்லும் தாமதப்படுத்தக் கூடிய சூழ்நிலை. ஆயினும் தமிழ் எவற்றிலுமே லயிக்கவில்லை. திறாம் சந்தியை நோக் கொண்டிருந்தான். அவனது தளர்ந்த நடையும், ஏமாற்ற உள்ளத்தில் ஏதோ ஒரு பிரச்சினை என்பதனை வெ அவனை வருடிச் செல்லும் இதமான காற்றைே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கு இலக்கியவாதி. இவன் இலங்கையன், வடபுல யாழ்ப்பா பொருட்டு பெலாரஸ்' வந்திருந்தான். இப்பொழுது இவ ‘இவன் யார் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டுLெ
சொல்லிக் கொண்டிருக்கும் நானேதான்! ஆம், என் ம பகல் பொழுது வேதனையைத் தந்திருந்தது. தனிை டிருந்தது. திரும்பவும் சென்று வீட்டிலும், ஆற்றங்கரை நடக்கத் தலைப்பட்டேன். அப்பொழுது எதிரே ஒருவன் துணைக் கண்டத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தூர போது, அட சுரேஷ்! எங்கிருந்து? என நான் வினா எழு ‘ஸ்லவென்ஸ்கி பஸார் நிகழ்ச்சி பாத்திடு வாறன்’ என இருக்கு, ஏதேனும் பிரச்சினையோ?” என்று கேட்டே "ஏன் ஸ்வெத்தாவிற்கு என்ன?" அதிர்ச்சி கலந் ங்களைக் கூறினேன்.
நான் கூறியதைக் கேட்டவுடன், தானும் என்னுட சற்று ஆறுதலாக இருந்தது. எனது நண்பர்களில் ஸ்வெ நோக்கி நடக்கலானோம். இருவரும் தீவிர சிந்தனையு என் மனத்திரையில் பழைய சம்பவங்கள் காட்சிகளாய் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் பயின்று கெ நானும் "வியெஸ்தா பல்பொருள் விற்பனை நிலையத் பாதையால் நடக்கத் தொடங்கினோம். அருகில் 'கார்ப் சிறிய இடத்தில் வழமை போல் ரஷ்ய மங்கையர் கூ
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

ல் கால இதமான குளிர் TV
அனைவரையும் சற்றுத் pநேசனின் மனம் இவை
43: "{{{ titાઈ
கி அவன் மெதுவாக நடந்து
மான பார்வையும் அவனது
ளிச்சம் போட்டுக் காட்டின. யா, கடந்து செல்லும் பூ மரங்களையோ அவன் ம் இவன் ஒர் தரமான ரசிகன். வளர்ந்து வரும் கவிஞன். ண மாவட்டத்திலிருந்து மருத்துவக்கல்வியைப் பயிலும் ன் இரண்டாம் வருடத்தில் கல்வி பயில்கின்றான். சரி, Dன்றால், அது வேறு யாருமல்ல, இந்தக் கதையைச் >னம் அமைதியை இழந்திருந்தது. கடந்து போயிருந்த ம வேதனையை பன்மடங்காக்கிக் காட்டிக் கொண் யிலும் தேட வேண்டும். எனது மனம் உந்த, வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் ஒர் இந்தியத் ாத்திலேயே கணித்துவிட்டேன். அவன் அருகே வந்த ப்ப முதலேயே, “பிரதான கலையரங்கிலே நடைபெறும் *றவன் நிறுத்தாமலேயே “என்ன முகம் ஒரு மாதிரியா பாது, "இல்லடா. ஸ்வெத்தா..” என்று இழுத்தேன். த முக பாவனையில் வினவியவனிடம் நடந்த விடய
-ன் கூட வருவதாக சுரேஷ் சொன்னபோது, எனக்கு த்தாவிற்கு நன்கு அறிமுகமானவன், சுரேஷ், வீட்டினை டன் மெளனமாக நடந்து கொண்டிருந்தோம். அப்போது விரிந்தன. அப்போது நாம் வீட்டெப்ஸ்க் பல்கலைக்கழக ாண்டிருந்தோம். மாலைப் பொழுதொன்றில் அவனும் திற்குச் செல்வதற்காக விடுதியை விட்டு வெளியேறிப் பார்க்கிற்கும், சிறிய கடைகளிற்கும் இடையில் உள்ள டியிருந்தனர். இவர்களில் அநேகர் கைகளில் "சிகரட்
82

Page 85
அல்லது மதுபோத்தல் இருப்பது வழமை. இவர்க ளில் அநேகர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். இவர்கள் வெளிநாட்டு மாணவர்களிடம் பணம் கேட்டு வருவர். மாணவர்களில் கணிசமா னோர் பணம் கொடுப்பர். இந்த மாணவர்களில் தொண்ணுாற்றைந்து சதவீதத்திற்கு மேற்பட்டோர் உதவும் நோக்கிலன்றி, சபல எண்ணங்களின் வழிப்படுத்தலில் தான் கொடுக்கின்றனர். கொடுப்ப தைக் கொடுப்பதுடன், அந்த நங்கையரின் கைத் தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொள்ளத் தவறுவதில்லை. அவர்களின் இப்படித் தொடங்கும் உறவு, எதனை நோக்காகக் கொண்டது, எந்தக் கட்டத்துடன் நிறைவுபெறுகின்றது என்பதனை இம் மாணவர்களின் பெற்றோர் அறிந்தால், தற்கொலைச் சம்பவங்கள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. உண்மையில் ரஷ்யப் பெண்களைப் போல, கட்டுக் கோப்பான உடல் வனப்பைக் கொண்ட பெண்கள் உலகில் வேறெங்கும் இல்லை என்பதே உண்மை. போதாக்குறைக்கு நான்கைந்து ‘இன்ச் அக லமுடைய துணிகளையே இருப்பில் கட்டுவதுடன் முன் அழகுகளைச் சரியாக மூடாத வண்ணம் மேலாடையை அணிவர். இந்த அழகுத் தோற்றம் பருவ வயது மாணவர்களின் உள்ளங்களில் ஆயிரம் தீக் கடல்களாய் ஆர்ப்பரிப்பதில் ஆச்சரியமும் இல்லை. என்னிடம் இந்த நங்கையர் பணம் கேட்டு வரும்போது, நான் அது காதில் விழாதது போல் சென்றுவிடுவேன். ஏனெனில் கேட்பவர்களின் எண் ணமும், கொடுப்பவர்களின எண்ணமும் தவறான தாகவல்லவா இருக்கிறது? மற்றப்படி மற்றவர்களி ற்கு கொடுத்துதவும் வகையில் என்னிடம் பண பலமும் இல்லை. தப்பான எண்ணத்தில் கொடுக் கும் நபர்களின் பட்டியலில் தவறியும் இணைந்து விடக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வும் தான். இன்றும் எங்களிற்கு அருகே ஒரு பெண் வந்து, “பிஜிஸ்தோ ரூபிளியே ஏஸ்த்" என்றவாறு நின்றிருந் தாள். அதாவது ஐந்நூறு பெலாரஸ் ரூபிள்கள் தரு மாறு ரஷ்ய மொழியில் கேட்டாள். இது இலங்கை ரூபாய்கள் இருபத்தைந்திற்கு சமனானது. இவளை ஒரு பதினாறு, பதினேழு வயது மதிக்கலாம். சாந் தமான முகம், துறு துறு கண்கள், அந்தக் கண்க ளில் ஒர் கனிவு, கவர்ந்திழுக்கும் சக்தி இவற்றிற்குப் பின்னால், அந்தக் கண்களில் ஓர் ஏக்கம். வழமை யாகப் பொருட்படுத்தாது சென்று விடுகின்ற நான்,
83

சற்றுத் தரித்து நின்று, ‘என்ன? என்ற பாவனையில் புருவங்களை உயர்த்தினேன். ஆயினும், அவளது விடைக்குக் காத்திருக்காது நகர முற்பட்டபோது, சுரேஷ் ‘மணி பர்சை" ஐத் திறந்தான். நான் தடுக்கலாமா என மனதில் நினைத்ததைப் புரிந்து கொண்டவள் மாதிரி, என்னை ஒரு மாதிரியாகக் கெஞ்சும் பாவனையில் பார்த்தாள். அந்தப் பார்வை என்னை என்னவோ செய்தது. இந்தப் பார்வைக்குக் கட்டுப்பட்டு விட்டேன். சுரேஷ் நீட்டிய பணத்தைப் பெற்றதும் 'ஸ்பசிபா’ என்று நன்றி கூறியவாறே, அந்த உணர்வைக் கண்களில் தேக்கிய படி, எங்க ளிடமிருந்து விடை பெற்றுச் சென்றாள். அப்போது தான் பார்த்தேன், அவள் பின்னே அழகிய நாய்க் குட்டி ஒன்று தாவிச் சென்றது.
அன்று படுக்கைக்குச் செல்லும் வரை, அவளும் அந்தச் சம்பவமும் என் நினைவில் அடிக்கடி குறு க்கிட்டன. படுக்கையில் கூட, என் மனக்கண்ணில் அவளது அழகு முகம் மீள மீள ஒளிபரப்புச் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. ‘என்னடா இது புதுசா இரு க்கே?' என என்னையே நான் கேட்டுக் கொண் டேன். எந்த ரஷ்யப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அது. எதுவோ இவளிடம் இருந்தது. அதை அறியா மல் விடமாட்டேன் என்று மனம் அடம்பிடித்தது. என் விழிகளோ இமையோடு இமை சேரத் துடித்தன. நானோ இவை இரண்டிற்கும் இடையில் நின்று தவித்தேன். இப்படி நான் நித்திரை இழந்து தவித்த நாட்கள் முன்னொரு காலத்தில் இருந்தது.
நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன், உயிரியற் பிரிவில் பயின்றேன். யாழ்ப்பாணத்தில் கணித, விஞ் ஞானப் பிரிவுகளில் கற்கும் மாணவர்கள் ஒரு அறு பது, எழுபது சதவீதமானவர்கள் தமது சிறப்புச் சிற ந்த பெறுபேறுகளைக் கருத்தில் கொண்டு மேலதிக படிப்பிற்கும், பயிற்சிக்குமாக 'சயன்ஸ் ஹோல்' என்ற தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்கிறவர் கள். அந்தவகையில் நானும் இந்நிறுவனத்தில் இணைந்தேன். மிகச் சிறப்பாகக் கற்கத் தொடங்கி னேன். முன்னணி மாணவர்கள் என்று கணித்தால் அந்தப் பிரிவிற்குள் அடங்கும் மாணவர்களில் நானும் ஒருவனாக வந்திருப்பேன்.
இக்கால கட்டத்தில் தான் என் விழிகளிற்குள் விழுந்தது ‘அர்ச்சனா'வின் விம்பம். சும்மா சொல் லக் கூடாது, பார்க்கின்ற அனைவரையும் மீண்டும்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 86
ஒரு தடவை பார்க்கத் தூண்டும். அழகு. உச்சி தொட்டு உள்ளங்கால் வரை வர்ணிக்கத்தக்க அழகி. அவள் அழகை வர்ணிக்க தமிழே திணறும். நான் எப்படி வர்ணிக்க முடியும்? சுருங்கச் சொல்லின் தேவதை வம்சம், தேனிலா அம்சம். அவளே அர்ச் சனா. நான் அவள் மீது காதல் வசப்பட்டேன். அது இயல்பு தான். ஆனால், எனது மிக நெருங்கிய நண் பன் சத்கெங்கன் மூலம் சொல்லப்பட்ட எனது காதலை அவள் ஏற்றுக் கொண்டபோது, என்னை என்னால் உணரமுடியவில்லை. நிஜமாகவே கிள் ளிப் பார்த்துக் கொண்டேன். எமது காதல் பயிரை பார்வை மழை மூலமே வளர்த்து வந்தோம். எனினும் வழமை போலவே இவ்விடயம் அவள் அப்பா காதிற்கு எட்டிவிட. விளைவு வேறென்ன? தொண்ணுாறு சதவீத பருவக் காதலர்களிற்குக் கிடைக்கும் முடிவு, எமக்கும் கிடைத்தது. நாம் வய தில் சிறியவர்களாக இருந்தபோதும், பெற்றோரிற் குக் கட்டுப்பட்டும், உண்மைக் காதலிற்கு மரியாதை கொடுத்தும் விடைபெற்றோம். ஆயினும் மனசிற்குள் விடைபெற முடியாது, தவித்தேன். நித்திரையின்றித் துடித்தேன். ஆனால், அவளைப் பிரிந்த போது தவித் தது மாதிரியல்ல, இவளைக் கண்ட இரவு தவித்தது. இன்றைய எனது இந்தக் குழப்பத்திற்குச் சரியான காரணம் தெரியவில்லை. அர்ச்சனாவின் அத்தியா யம் என் வாழ்க்கைப் புத்தகத்தில் இருந்து கிழிக்கப் பட்ட போது, வாழ்க்கைத் துணை என்ற அத்தியா யம் எனக்குத் தேவையற்ற ஒன்று என்று என் மன திற்குள் நினைத்திருந்தேன். ஆனால், இன்று என் வாழ்க்கைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கம் ஒன்றிலே வாழ்க்கைத் துணை என்ற அத்தியாயத்தை ஸ்வெத்தா என்று தலையங்கம் இட்டுக் கிறுக்கத் தொடங்கியதை அன்றைய இரவில் நான் அறிந்தி ருக்கவில்லை.
சில நாட்கள் சென்ற நிலையில் இவளை மீண் டும் ஒரு நாள் கண்டேன். இம்முறை நான் நண்ப ர்கள் யாருடனும் வரவில்லை. தனியே வந்திருந் தேன். இன்றும் பணம் கேட்டாள். ஒன்றும் பேசாது கொடுத்தேன். ஸ்பசிபா என்று சொன்னவளிடம் ‘ஹக் வாஸ்ஸவுத்" உங்க பெயர் என்ன? என வின வியபோது, "ஸ்வெத்தா” என்று கூறிவிட்டு, கன்னங் கள் குழிவிழச் சிரித்தவாறே, சிட்டாகப் பறந்தாள். பின்னர், அடிக்கடி காணத் தொடங்கினேன். இடை யிடையே பணம் கேட்பாள். நானும் கொடுப்பேன்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

நாளடைவில் நாம் நண்பர்களானோம். அவள் தனது கதைகளை எனக்குச் சொல்லுவாள். தனக்கு உறவென்று பாட்டியும் ஈவானும் தான் என்றாள். "ஈவான்? உன் சகோதரனா?" எனக் கேட்ட எனக் குச் சிரித்தபடிய்ே அருகில் நின்ற நாய்க்குட்டியைக் காட்டினாள், இவன் தான் ஈவான் என்று. அப்பா விபத்தொன்றில் இறந்து விட்டதாகவும், அதன் பின் அம்மா வேறொருவருடன் குடித்தனம் நடத்துவதாக வும், அவள் எங்கே என்று தெரியாதென்றும் சொன் னாள். அவளின் சொந்தக் கிராமம் லொஸ்விதாஸ்” என்ற ஆற்றங்கரையோரக் கிராமம். ஆற்றங்கரை யில் உள்ள சிறிய மரவீடொன்றில் இவளும் பாட்டி யும் வாழ்ந்து வந்தனர். இவளது பாட்டி இலகுவாகக் கிடைக்கும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி, கைவினைப் பொருட்கள் செய்வதில் தேர்ச்சி பெற்ற வள். அவள் கைவினைப் பொருட்கள் செய்து விற் பனை செய்வதன் மூலமே இவர்களின் நாட்கள் நகர் ந்து கொண்டிருந்தன. ஸ்வெத்தாவின் பாட்டனார் இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய இராணுவ வீர னாகப் பங்கு பற்றியிருந்தார். அப்போரில் அவர் இறந்துவிட்டார். அவரின் ஒய்வுபூதியப் பணம் பாட்டி க்குக் கிடைத்து வந்தது. ஆனால், பெலாரஸ் சோவி யத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தனிநாடான பிறகு, ஆவணப் பத்திரம் ஒன்றில் ஏற்பட்ட குளறுப டியால் அப்பணம் கிடைக்காமல் நின்று விட்டது. இப் படி இவள் தனது வாழ்க்கை வரலாற்றை முழுவது மாக எனக்குச் சொன்னாள். இப்பொழுது நாம் நல்ல நண்பர்களாக இருப்பதனால், அவள் என்னிடம் பணம் கேட்கத் தயங்குவாள். ஆனால், நானாக அவளிற்குப் பணம் கொடுத்து வந்தேன்.
ஒரு நாள் "நீ என்னைத் தவிர, வேறு யாரிடமும் பணம் கேட்க வேண்டாம்” என்று கூறினேன். சற்று யோசித்து சம்மதித்துத் தலையாட்டினாள். ஒரு நாள் திடீரென விடுதிப் பக்கம் தேடி வந்து விக்கி விக்கி -9I(ԱՔՑl கொண்டிருந்தாள். நான் அருகில் சென்ற போது, பாட்டி இறந்து விட்டதாகச் சொன்னாள். நான் அவளுடன் சென்று பாட்டியின் இறுதிக் கிரிகை களை ஒரு பாதிரியாரின் உதவியுடன் நிறைவேற்றி னேன். அடுத்த நாள் அவளுடன் அவள் வீட்டில் இருந்தபோது, அருகில் வந்து இருந்து கொண்டு ஒரு நிலைப்படாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
எதுவோ சொல்ல முற்படுகிறாள் என்பதனைப் புரிந்து கொண்டு, அவளது தலையிலே எதுவோ ஒர்
84

Page 87
உரிமையுடன் கை வைத்து, ‘என்ன?’ என வினவி னேன். சற்று நேரம் என் கண்களை ஊடுருவிப் பார்த் தவள், தன்னுடன் வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொண் டாள். அது ஒரு மக்கள் அரிதாக வாழும் கிராமம். அதனை விட, அவளிற்கு என்னைத் தவிர யாரு மில்லை. சிறிது நேரம் யோசனையின் பின்னர் சம்ம தித்தேன். எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வாழ் ந்து வந்தோம். எனினும் எனக்குப் பணப் பிரச்சினை சிறிது ஏற்பட்டு வந்தது. அந்நேரங்களில் என் நண்பர் கள் எனக்குப் பணம் தந்து உதவினார்கள். எனக்கு சிறிது கவிதை எழுதும் ஆற்றல் இருந்தது. அதிகமா கக் கவிதைகள், சிறுகதைகளை வாசிப்பேன்.
சுரேஷ் தான் எனக்கு ஒரு நல்ல யோசனை சொன்னான். "நீ ஏன் ஒய்வு நேரங்களில் கவிதை, சிறுகதை எழுதக் கூடாது? சந்தர்ப்பம் வரும்போது நீ அந்த ஆக்கங்களைப் போட்டிகளிற்கு அனுப்ப லாமே?” என்று கேட்டான். எனக்கெங்கே ஒய்வு? ஆயினும் நல்ல யோசனை என்று பட்டதனால், முயற்சி செய்வதென முடிவெடுத்தேன். பல்கலைக் கழகப் பாடங்களை முடித்து விட்டு இரவுகளில் நெடுநேரம் விழித்திருந்து சிறுகதைகள், கவிதைகள் எழுதினேன். நான் இவ்வாறு எழுதும் பொழுதுகளில் ஸ்வெத்தா அருகே வந்து இருப்பாள். நான் எழுதி விட்டு நிமிர்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம், என் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப் பாள். அவள் அப்படிப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் அர்ச்சனாவின் ஞாபகம் எனக்குள் வரும். நான் பிர மையில் சொல்லவில்லை. இவளது முகச் சாயல் அர்ச்சனாவின் முகச் சாயலை அப்படியே அச்சு அசலாக ஒத்திருந்தது. ஸ்வெத்தர் எனக்கு ஒரு தமிழ் பெண்ணாகவே தென்பட்டாள்.
அவளைச் செல்லமாக வெண்ணிலா என்று தமி ழில் அழைப்பேன். கள்ளங் கபடமற்ற இந்த வெண் னிலா, திருப்பி அதைச் சொல்லுவாள். ஆனால் அவளிற்குச் சரியான உச்சரிப்பு வருவதில்லை. வெள்ளிலா என்று சொல்லி தனது நயனங்களை அகல விரித்து, கன்னங்களில் குழி விழச் சிரிப்பாள். சில சமயம், அவள் எனது தோள்களில் தலை வைத்து என்னில் சாய்ந்து உறங்கி விடுவாள். அவ ளது தூக்கம் கலையாமல் அவளைத் தூக்கிச் சென்று அவளின் கட்டிலில் படுக்க வைப்பேன். நான் ஒரு ரஷ்யப் பெண்ணிடம் எதிர்பார்த்திராத குடும்பப்
85

பாங்கினை இவளிடம் தரிசித்த போது, எனது வாழ் க்கைப் புத்தகத்தில் வாழ்க்கைத் துணை என்ற அத் தியாயம் சிறிய ஒரு பெயர் மாற்றத்துடன் அழகாக மீள் பதிக்கப்பட்டிருப்பதனை உணர்ந்தேன். நினை த்துப் பார்த்தால், மனதை எதுவோ ஒரு திருப்தி நிறைத்திருந்தது.
ஒரு முறை நான் கதையொன்று எழுதிக் கொண் டிருந்த போது, பின் புறமாக வந்து தலையிலே யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்த போது, தனது முகத்திலே நிறத் தூரிகையால் பெரிய முறு க்கு மீசை வரைந்திருந்தாள். சிரித்தவாறே நின்றி ருந்த அவளைப் பார்த்த போது, சிரிப்புச் சிரிபாக வந்தது. திடீரென அவள் கைகளைப் பற்றினேன். பற்றிய கைகளைப் பேணியவாறே எழுந்து, அவள் கண்கள் அருகே எனது கண்களை நிறுத்தி மெது வாக, மென்மையாக “யா லுப்லு த்திவ்யா" நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றேன்.
முதன் முதலாக அவள் வெட்கப்பட்டதைப் பார்த் தேன். சிறிது நேர மெளனத்தின் பின் 'யா தோஷே லுப்லு த்திவ்யா" நானும் கூட உன்னைக் காதலிக் கிறேன் என்றாள். பின்னர் கலங்கிய கண்களுடன் என் கண்களைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அந்தப் பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்களைக் கண்டேன். சிறிது நேரத்தின் பின் கைகளை விடு வித்தவாறே வெட்கச் சிரிப்புடன் அறைக்குள் ஒடி னாள். இனிமேல் இவள் தான் என் வாழ்க்கை எனத் தீர்க்கமாக முடிவெடுத்துக் கொண்டேன்.
சென்ற புதன் கிழமை மாலை ஆற்றங்கரையில் இருந்து சிந்தித்த போது, எனக்கு அற்புதமான யோசனை ஒன்று மின்னல் கீற்றாய் பளிச்சிட்டது. ஆம் அது, ஸ்வெத்தாவை வைத்து ஒர் சிறுகதை வரைய வேண்டும். உடனே எழுந்து வீட்டை நோக்கி நடக்க முற்பட்ட வேளை, சுரேஷ் வந்தான்.
"மச்சான்! உனக்கு ஒரு அற்புதமான சந்தர்ப் பம்." சுவிஸ் வாழ் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமிழ்ச் சங்கம் சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்துகின்றது. ரண்டு பிரிவுகளிலும் முதற் பரிசு பெறுபவர்களிற்கான பரிசுத் தொகை தலா ஒரு லட்சம் இலங்கை ரூபாய்கள். போட்டித் தொடர்பான சகல விபரங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி எனச் சகல விபரங்களையும் இன்ரர்நெட்ல இருந்து பிரதி பண்ணிக் கொண்டு வந்திருந்தான்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 88
அவனுக்கு நன்றி கூறிவிட்டு அப்பொழுதே எழுதப் புறப்பட்டேன்.
கவிதை, கதை இரண்டிற்கும் கருப்பொருள் என் ஸ்வெத்தா தான் என்று முடிவெடுத்துக் கொண் டேன். ஒரு வாரம் இரவு பகலாக எழுதி, திருத்தங் கள் மேற்கொண்டு, கையொப்பமிட்டு அனுப்புவதற் குத் தயாராக வைத்திருந்தேன். எனினும் சுரேஷி ற்கு ஒருமுறை வாசித்துக் காட்டிவிடலாம் என்று எண்ணி விடுதிக்குப் புறப்பட்டேன்.
எனது ஆக்கங்களை மேசையில் வைத்துவிட்டு வந்திருந்தேன். விடுதியில் சுரேஷ் இல்லை. "சந்தை க்குப் போய்விட்டான்' என்று நண்பர்கள் சொன்னார் கள். அவனது கைத்தொலைபேசி திறந்த நிலையில் இருந்தது. நான் நண்பர்களிடம் விடைபெற்று வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். வழியில் கனவுகள். அந்த இரண்டு இலட்சம் ரூபாய்கள் கிடைத்தால் ஸ்வெத்தாவை சற்று வசதியாக வாழ வைக்கலாம். அவளது சங்குக் கழுத்திற்கு சங்கிலி தேவையி ல்லை என்றாலும், எனக்கோர் ஆசை, அவளிற்கு சங்கிலி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று. இத னைவிட, கஷ்டப்பட்டு பெரும் சிரமத்திற்கு மத்தியில் பணம் அனுப்பும் பெற்றோரிற்கும் சிறிய நிம்மதி கொடுக்கலாம்.
வீட்டிற்கு வந்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்வெத்தா பேப்பர்கள், மெல்லிய மட்டைகளில் சிறந்த கைவினைப் பொருட்கள் செய்யக் கூடியவள். நான் ஆக்கங்கள் எழுதி வைக்கும் தாளின் ஒரு பக் கத்தைத் தான் பயன்படுத்தியிருந்தேன். மற்றைய பக்கங்கள் வெறுமையாக இருந்தன. ஸ்வெத்தா என்ன செய்திருந்தாள், தெரியுமா? அந்த வெற்றுப் பக்கங்களில் படங்கள் வரைந்து, அவற்றை வெட்டி எடுத்திருந்தாள். அந்த அழகிய உருவங்களை என் னிடம் காட்டிய போது, உடனே அவளின் கைங் கரியத்தைப் புரிந்து கொண்டேன். எனக்கு வந்த ஆத்திரம், வேதனை, விரக்தியில் அவளது கன்னங் களில் மாறி மாறி அறைந்து விட்டான்.
அப்பொழுது நான் அவள் செய்த பிழையை அவளிடம் சொல்லிக் கத்திவிட்டுப் புறப்பட்டு விட்டேன். சில மணி நேரங்களில் மனம் ஒரு நிலை க்கு வந்தபோது, என்னை நானே நொந்து கொண் டேன். அவள் தெரிந்து கொண்டா அந்தப் பிழை யைச் செய்தாள்? அதற்கும் மேலாக நான் எழுதிய
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

ஆக்கங்களின் கருப்பொருளே அவள் தானே! எழுதியது கூட, அவளிற்குத் தானே? அட நான் ஒரு முட்டாள் ஒடிப் போய் அவளிடம் மன்னிப்புக் கேட்க . வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்கு விரை ந்து வந்தேன். வீடு திறந்து கிடந்தது. தேடிப் பார்த் தேன். சமைத்த உணவுகள் அப்படியே இருந்தன. கூப்பிட்டுப் பார்த்தேன். வீட்டில் இருந்தபடி, ஆற் றங்கரையில் கவிழ்த்துப் போடப்பட்டிருந்த படகைப் பார்த்தேன், அங்கும் அவள் இல்லை.
*வெண்ணிலா. ஸ்வெத்தா மாம' மாறி, மாறிக் கூப்பிட்டேன். அவள் இல்லை. அவள் எங்கே போனாள்? என்ன ஆனாள்? ஒன்றும் தெரிய வில்லை. துயரம் நெஞ்சை அடைத்தது. மீண்டும் வீட்டிலிருந்து புறப்பட்டேன், ஸ்வெத்தாவைத் தேடி. மாலை நான்கு மணிக்குப் புறப்பட்டிருந்தேன். நான் தேடாத இடமில்லை. சோர்ந்து போய் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த போது தான், சுரே ஷைக் கண்டேன். நாம் இருவரும் நடந்து வீட்டை அடைந்த போது, நேரம் இரண்டு ஐம்பதைத் தொட் டிருந்தது.
வீடு அப்படி அப்படியே இருந்தது. இருவரும் ஆற்றங்கரைக்கு வந்தோம். அங்கு யாருமே இல்லை. இப்பொழுது எனக்கு ஸ்வெத்தா இந்த உலகத்தில் இல்லையோ?” என்ற அச்சம் ஏற்பட் டது. உலகமே என் தலையில் வீழ்ந்தது போலி ருந்தது. வேனில் காலம் என்பதால் இப்பூமி சற்றுப் புலர்ந்திருந்தது. ஆற்றிலே என்னால் முடிந்தளவு தூரம் பார்வையைச் செலுத்தினேன். யாருமே யில்லை. அது இந்த உலகில் "உனக்கு யாருமே இல்லை' என்று உணர்த்துவது போலிருந்தது. இவ் வுலகில் இருந்து நானும் விடைபெறலாம் என நினைத்தபோது, ஒருவேளை ஸ்வெத்தா இருந்தால் அவளை அனாதையாக்கிடக் கூடாதே பெரும் மனப் போராட்டத்தில் இருந்த என்னை சுரேஷின் அழைப்பு சுய நினைவிற்குக் கொண்டு வந்தது.
“டேய் இந்தப் பக்கம் நாய் குலைக்கிற மாதிரி இருக்கு, ஒருவேளை ஸ்வெத்தாவின் நாய்க் குட் டியோ தெரியவில்லை?” என்றான். இப்பொழுது என் மனதில் ஒருவகைத் தெம்பு இருவரும் இடதுபுற மாக ஒடிப் போனோம். ஆற்றங்கரையில் நிறையச் சிறிய மரங்களும், செடிகளும் இருந்ததால் தூரத் திற்குப் பார்க்க முடியாதிருந்தது. என் பின்னால்
86

Page 89
சுரேஷ் ஓடி வந்து கொண்டிருந்தான். ஒரு மரத்தைத் தாண்டி நான் அப்பால் கால் வைத்தபோது, அந்த அதிர்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சி
தனது செல்ல நாய்க்குட்டியை அனைத்தவா றும், கண்களை மூடியவாறும் ஒரு மரவேரில் அமர் ந்திருந்தாள், ஸ்வெத்தா.
எம்மைக் கண்டவுடன் நாய்க்குட்டி குரைத்தது. உடனே, ஸ்வெத்தா கண் விழித்தாள். என்னைக் கண்டவுடன் நாய்க்குட்டியை இறக்கிவிட்டு, என்னை ஒரு விதமாக ஊடுருவிப் பார்த்தபடி நின்றாள். ஒரு சில விநாடிகள் தான் அப்படி நின்றவள். பின்னர் என்னை நோக்கி ஓடி வந்து என்மார்பிலே முகம் புதைத்தபடி கட்டி அணைத்தாள். எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டேன். பின்னர் வெடித்து அழத் தொடங்கிய வள், விக்கி விக்கிக் கதைத்தாள்.
'(ஸ்வினித்தி பஷாலுஸ்த) தயவு செய்து என்னை மன்னித்து விடு. எனக்கு அது என்னவெ ன்று தெரியாமல் செய்து விட்டேன். நான் உன்னோட
மகன் மழையை சிவழக்கொண்டிருந்தான் மழையின் கான்கரம் கைகரம்
வேடம்/eரு வி%டதையும் அவதானித்தன்
கற்றின் நதிரையும் அவன் துண்ழர் முயற்சித்தான் அவற்றையும் வெற்றிகண்டான்
இப்ழயாக அவனது விரதிரத்தை
நான் கண்ணரக் கண்டன்
87

வெள்ளிலா, என்னை மன்னித்து விடு. உன்னை விட எனக்கு வேறு யாருமில்லை!" என்று கூறி அழுதாள். "இல்லடா, என்றாலும் நான் உன்னை அடிச்சி ருக்கக் கூடாது, என்னோட ஸ்வெத்தா என்னை மன்னிச்சிடம்மா!” என்று கூறிய போது என் கண்க ளில் இருந்து நீர் கசிந்தது.
இப்பொழுது ஈர விழிகளுடன், என் கண்களை உற்று நோக்கியவள், சடாரென என் கண்மடல்க ளில் இதழ் பதித்தாள். எனது சுமைகள் எல்லாம் நீங்கியது போன்ற உணர்வு என்னுள் ஏற்பட்டது.
சந்தோஷமாக மார்பில் சாய்ந்தாள். பின்னே திரும்பிச் சுரேவுைப் பார்த்த போது, அவன் கண்க ளைத் துடைத்துக் கொண்டான். மூவரும் வீட்டிற்கு வந்து சமைத்து வைத்திருந்த உணவை உண்டு கொண்டிருந்த போது, சுரேஷ் ரஷ்ய மொழியில் கூறினான். “இன்று நடந்த இந்த சம்பவத்தை கதை யாக்கடா, உனக்குத் தான் அந்த ஒரு இலட்சம்”
அவள் கவிதையாக நின்று என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள்.
)
wsrY26)vsfw geflasgdïr
ஆயினும்
அவன் கவனிக்கவில்லை ாதம் அவதம் ஆணிவேர்கள் அவற்றான் அருர்ரம்மடதையும் கெழுத்தம்//தையும் வேர்மிதங்கம்மருவிழ்த்தம்/eட மகனின் குருதியின் வேடம்// மழையின் உறம்புக்கன் துணிந்தன கற்றின் நதிரம் மறழ இடர்ராடங்கின
மழையும் கற்றின் நதிகறும் சேர்ந்து ான் கருப்பையைப்மிறங்கிாருத்து தங்கர் இறந்தகால எதிர்காணப்பசினைத்திரத்துக்கொண்டன இன்னொரு மகன் எனக்கு
இனி பிறவாத பழத்து
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 90
துரித- சுலபமணமக்கள் தெரிவுக்குச்
INGETärang NOONGrgiske
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

Malikai 46 year Issue

Page 91
2 )%ဖ်))၊(၆)အငှါးနှဲ للال 2 یا ذره) (۱٫۱مگی 2
இலங்கையின் ஒர் LDT6hILL-35Élso 2 66T2 - லாற்றுச் சிறப்புக்களைக் பெயர்ந்த இவ்வூர்மாக்கள்
போன்ற பகுதிகளிலிருந்து
உடப்பூர் மக்கள் அங்கிருந்து புலம் பெயர்ந்த பொ நெறிமுறைகளுடனும், கலை செந்நெறி அம்சங்களுடனு வழக்கங்கள், சடங்கு சம்பிரதாய முறைமைகள், உற்ச6 கிரிகைகள், ஏன்? தமது ஜீவனோபாயத் தொழில் முை அதன் சாயலை, சார்பைக் கொண்ட மக்கள் குழுமங்
இம்மக்கள் புலம் பெயர்ந்து இலங்கை வந்தடைந்த இருப்பை அதன் தனித்துவத்தைப் பாதுகாத்தும், த அதேவேளை நல்லதண்ணிருக்கும், தொழில் நிலையில் தாம் உடப்பு' பிரதேசத்தை வந்தடைந்ததாக எமதுாரி ஆவணக்காப்புக் குறிப்புக்கள் எடுத்தேம்பி நிற்கின்றன
இம்மக்களின் ஜீவனோபாயத் தொழில் கூறுகளில் ஒ தொழிலாக இருந்து வந்துள்ளது, புகையிலைக் கான துக்குப் பின்னரே வருவாயைத் தரக் கூடியதாக இருந்து காலம் ஏற்புடையதாக அமைப்பாங்கைக் கொண்டதா
இதனால் இம்மக்கள் இத் தொழிலைக் கைவிட்டுக் கடற்றொழிலை மேற் கொண்டனர். '
ஆரம்பகாலத்தில் இவ்வூர் உடப்பங்கரை என்றே பாங்கே காரணம் எனச் சொல்லப்படுகின்றது. பின்ன வழங்கி வருகின்றது. வந்தாரை வாழ வைக்கும் சிங்க உடப்பங்கரை வாருங்கடி-' என்று கூட எமதூர் நாட்டார்
இவ்வூர் மக்கள் பரம்பரையினராகத் தமது கடற்றெ வழங்கி வரும் சொற்கள், சொல்லாடல்கள் தனித்துவ நயமும் தாற்பரியம் பூண்டது. அச் சொற்கள் சம்மாட் என்ற சொல்லுடன் முற்றுப் பெறும். அந்த வேலைத் த பாணியில் சிலேடைகளுடனும், வேடிக்கையாகவும், வி சொற்கள் யதார்த்தப் பாணியில் முனைப்புப் பெறும் மனங் கொள்ளத்தக்கது.
சம்மாட்டியார்:- பல பெறுமதியான சொத்து
89
 

A - CNT 2 V» ́ /y دخفض ضياله ديك للول (تمد إدم 2– ിക്കി ية
-உடப்பூர் வீரசொக்கன்
அங்கமாகத் திகழும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் டப்புப் பிரதேசம் ஏறத்தாழ முன்னூற்றம்பது வருட வர கொண்டிருக்கின்றது. இருவேறு காலச் சூழலில் புலம் தென்இந்தியாவில் உள்ள அக்காமடம், தங்கச்சி மடம் து இடம் நகர்ந்த மக்கள் கூட்டமே இவ்வுபூர் மக்களாவர்.
ழுது, தமக்கே உரிய தனித்துவத்துடனும், பண்பாட்டு றும் ஒன்றியே காணப்பட்டு வந்தனர். மக்களின் பழக்க வச் செந்நெறிகள், கலை வடிவங்கள், திருமண, மரணக் றமைகளில் கூட இன்னமும் அப்பழுக்கற்ற வகையில் களாகக் காணப்பட்டு வருகின்றார்கள். போதும், பல பிரதேசங்களில் தங்கியிருந்தாலும், தமது மது கலாசாரப் பின்புலத்தை மேன்மைப்படுத்தியும், ல் சிறந்த இடமாக இருக்க வேண்டுமென்ற நோக்குடன் ரின் மூதறிஞர் செம்பலிங்கம் சேதுபதியின் வரலாற்று
ஒன்றே கடற்றொழில். இவர்களின் ஆரம்பகாலக் குலத் னத் தொழில். இத்தொழிலானது மிக நீண்ட காலத் துள்ளது. அத்துடன் தட்பவெப்ப சூழலும் காலத்துக்குக் க இருக்கவில்லை.
குறித்த நேரத்துக்குக் கூடிய வருவாயைத் தரக் கூடிய
) வழங்கி வந்தமைக்குக் கடல் சூழ் நெய்தல் மணப் ர் அது மருவி "உடப்பு என்று அழகுடன் இப் பெயர் கார ஊரடி- வந்து பாருங்கடி- வாடைக் காற்று வீசுதடிபாடல் ஒன்று தொனித்து நிற்பதைக் காண்கின்றோம். ாழிலை மேற்கொள்ளும் போது கடலிலும், தரையிலும் b மிக்கது. சொல்நயம் கொண்டது. கவிநயமும், கலை டியார்’ என்ற சொல்லில் தொடங்கி, பட்டறை கட்டும் ளத்தில் பாவிக்கும் பல சொற்கள் தமக்கே உரித்தான ரஷம் கொண்டதாகக் காணப்படுவதுடன் பேச்சு மொழி
அச் சொற்கள் அர்த்தபுஷ்டியாக இருக்கும் என்பது
துக்களுக்கும், பொருட்களுக்கும் சொந்தக்காரன்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 92
சம்+ஆட்டியார். ‘சம்' என்றால் பெற்றுக் கொண்ட வன். 'ஆட்டியார் அணைத்துப் பிடிப்பவர். இவர் 'ஆர்' என்றும் விகுதி கொண்டு ‘சம்மாட்டியார்' என வழங்கப்படுகின்றது. கடல் தொழிலுக்குத் தேவை யான முதலீட்டைப் போடுபவர். தொழிலாளரை சேர்ப்பவரும், சொத்துக்களுக்கு அதிபதியாகவும், கடல் எல்லை கோட்டுக்கு உரிமை உடையவ ராகவும், அந்தஸ்தும், செல்வாக்கும் கொண்ட பிரகிருதியாகக் காணப்படுவார். இன்று பலர் சம்மாட்டியார் என்ற பட்டத்தைப் பெற்று அந்தஸ் துடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
மண்டாடி- சம்மாட்டியாரின் கரவலையின் முதன்மை வேலைக்காரன். தொழிலை வழி நடத்துபவன். சகல தொழிலாளர்களின் முதல் வீரன். இதனால் மண்டர் என்பது படைவீரன், டாடி’ ஆடுபவன். தொழிலாளர்களை ஆட்டி வேலை வாங் கும் முதன்மை வீரனாவான். கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலம். ஐந்து நிலங்களில் ஒன்று. நெய்தல் நிலம் மணல் சார்புடையது. மண்+ஆடி மண்ணை யும் ஆட்டிவிப்பவன். இதனால் என்னவோ மண்டாடி என்ற பெயரும் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. கடற்கரை மணலில் பிடிக்கப்படும் மீன்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறுப்பாளி.
தண்டுவலிப்பவன்:- தண்டு என்பது ஆடுதல், கடத்தல், பாய்தல், வெல்லுதல் என்பவனவற்றைக் குறிக்கும். தண்டுவலி தாண்டித் தாண்டிச் செல்லும் என்பதாகும். கடலுக்குச் செல்லும் இந்தத் தண்டுக் காரன் ஆறுபேர் இருப்பார்கள். இவர்கள் தான் பாதை வலித்துச் செல்லும் ஒட்டிகள். இவர்களில் ஆணியத் தண்டு, மார்த்தண்டு, மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் தண்டுக்காரர் எனச் செல்லமாக அழைப் பார்கள்.
இவர்களில் மூவர் இடதுபுறமாகவும், மூன்று பேர் வலது பக்கப் பார்வையில் இருந்து வலிப்பார்கள். முதலாம் தண்டுக்காரன் நங்கூரம் போடுபவனாக வும், அதை எடுப்பவனாகவும் இருப்பான். இது அவ னின் கடமைகளில் ஒன்றாகும். ஆறாம் தண்டுக் காரன் அவசரக் கடமை புரிகின்றவன்.
மேப்பங்கு:- தண்டுக்காரனின் மேல் பார் வையாளனாக இருப்பவன். மேல்+பங்கு. மேலான கொடுப்பனவுகளைப் பெறுபவன். பங்கு என்பது பணம் பெறுவதையும் குறிக்கும். இவர்கள் பாதை
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

யில் பன்னிரண்டு பேர் இருப்பார்கள். மற்றைய தொழிலாளர்களை விட, அரைப் பங்கு இரட்டிப்பா கப் பெறுபவர். பாதையில் வலை போடும் அதே வேளை, பொறுப்பாளிகள் இவர்கள்.
சவுல், துடுப்பு:- வலி தண்டு என்றும் மரக் கோள்கை எனவும் சொல்லப்படும். சவுல் பாதையை நேர் சீராக்கும் பயணக் கருவி. இது 10 அடி நீளம் கொண்டது. இதன் வடிவமைப்பு அடிப்பாகம் அகன் றும், கைப் பிடிக்கும் நுனிப்பாகம் குறுகியும் இருக் கும். சவுல் என்றால் அகலம் நீளம் கொண்ட பல கைத் துண்டு எனப்படும்.
பாதை:- தமிழ்மொழி அகராதியின் பாதையை அடிப்பாடு, மரக்கலம், மிதவைமுறை, வழிவகை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்பாதைகள் கடற் றொழிலை மேற்கொள்ளும் வள்ளம். இதில் கடற் றொழிலுக்கு ஏற்றமுறையில் சகல தொழில் உபகர ணங்களை ஏற்றிச் செல்லும் கடல் வாகனம். 8 அடி அகலமும், 22 1/2 அடி நீளம் கொண்டும், ஆனியம், கடையால் நீள் சதுர வடிவமைப்பைக் கொண்டதா கும். இங்கு பல பெயர்களைக் கொண்ட பாதைகள் இருக்கின்றன. அவையாவன; கட்டையன் பாதை, ஐவர் பாதை, பெரிய பாதை, பெரிய மூவர் பாதை, வண்டியன் பாதை, வளியாச்சி பாதை, சின்ன மூவர் பாதை, கிழவைடாபாதை, வி.எஸ்.பாதை, கப்பனா unté05, S.K.M. பாதை, V.R.S.Luteogs, V.K.V. Lurteogs, சின்னக்குத்தன் பாதை என்ற பெயர் கொண்ட பாதைகள் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளன.
தோணி:- தோணிகளிலும் மீன் பிடித்துள்ளார் கள். பாதைக்குப் பதிலாக இச் சொல்லைப் பாவித் துள்ளார்கள். தோணியை சிறுவழதுணை, அம்பு, சேறு, மரக்கலம் என்றெல்லாம் சொல்லப்படுகின் றது. தோணிக்காரனை சம்பானோட்டி என்றழைப் பார்கள். இதைத் தமிழ் மொழியகராதியும் சொல்லு கின்றது. இங்கு இருந்த தோணிகளான கப்பனா தோணி, கமலன் தோணி, சின்னத் தோணி, போத்தி தோணி, பாபா தோணி, பெரிய விதான தோணி என் பன கடற்தொழில் செய்த தோணிகளாகும்.
வலை- வலை என்பதைத் தமிழ் மொழி அக ராதியில் மீன் முதலிய வகைகளைப் பிடிக்கும் கருவிகள் என்று சொல்லப்படுகின்றது. வலைகள் மீன்களை இலகுவான முறையில் பிடிக்கப் பல வகையான வலைகள் பாவித்துப் பிடிக்கப்படும்.
90

Page 93
மூதாதைகள் கடைப்பிடித்த பொறிமுறையாக அமைந்த முறையில் வலையில் மீன்கள் பிடிக்கப் பட்டு வருகின்றன. பல நுட்பங்கள் கையாளப் படுகின்றன. பாவிக்கும் வலைகள் கரவலை, அடசி வலை, சாளைவலை, தோலி வலை, புரவலை, கட்டாவலை, பேந்த வலை, சவுக்கார வலை, குத்து வலை, மணலவலை, கொடுவா வலை, தூண்டி வலை, கூட்டு வலை, முரல் வலை, மடி வலை, தங்கூசி வலை, சிருவலை, டிஸ்கோ வலை போன்ற வலைகள் பாவிக்கப்படுகின்றன. இங்கு மீன் பிடிக் கும் முறை அறிவுபூர்வமான, ஆராய வேண்டியது. சிந்தித்துப் பார்க்க வேண்டியதாக இருக்கின்றது.
சம்மாம்பாக்கி:- இவர்களை கம்பான்காரர் எனவும் அழைக்கப்படுகின்றார்கள். தமிழ் மொழி அகராதியில் படகுக்காரர் எனப்படுகின்றார்கள். இவர்களின் பங்களிப்பானது கடலில் தொழில் செய்யும் போது, உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும்போது உதவி புரிபவர்கள். இவர்கள் மற்றைய சாதாரண தொழிலாளர்களை விடச் சற்று உயர்ந்த நிலையில் காணப்படுபவர்கள். பங்குப் பிரிவில் சலுகை பெறுபவர்கள்.
மெதப்பு (பொனை):- கடலில் மெதந்த நிலையில் காணப்படும் பொருள். இதைப் பேச்சு வழக்கில் பொணை எனவும் கூறுவார்கள். மேன் மைப்படுத்தலாகவும், பாதுகாத்தல் எனவும் சொல் லப்படுகின்றது. இனம் காட்டலைக் குறிக்கும். அதா வது, கடல் தொழில் செய்யும் போது வலையைப் பாதுகாத்து, இனம் காட்டி, அடையாளப்படும் பொருள். இப்பொருளை வலையின் மேற்பரப்பில் கயிற்றால் கட்டி விடுவார்கள். இந்த மெதப்பைக் கொண்டே தமக்குரிய எல்லையையும், வரையறை செய்வார்கள். இங்கு மெதக்கும் பொருளை, பொணை என்றும், குச்சி பொணை, பிளாஸ்டிக் பொனை, நெட்டி பொணை, காவி பொணை என்றெல்லாம் பெயர்கள் வைத்துத் தொழில் வசதிக்கு ஏற்றமுறையில் பாவிக்கப்படும்.
நீராட்டல்:- வருமானத்தைப் பெற்றுத் தரும் பாதையைப் பக்குவமாகப் பாதுகாத்து சுத்தமாகவும், நேர்த்தியான முறைமைகளில் நீராட்டல் மூலம் வைத்துக் கொள்வார்கள். கிழமை நாட்களான திங்கள், வியாழக்கிழமைகளில் பாதையைக் கடல் நீர் கொண்டு கழுவி பால், பன்னீர், மஞ்சள் கலந்து
91

தூப தீபங்கள் காட்டிப் பக்தியான முறையில் இடம்பெறும். இதை நீராட்டுதல் என்றழைப்பார்கள். இதை நீராட்டி மண்டாடியே செய்வார்.
நிந்தம்- சொந்தத்தைக் குறிக்கும், நிந்தப்பணம் தொழிலுக்காகக் கொடுக்கப்படும் ஆரம்பப் பணம். தொழில் மேற்கொள்ளப்படும் ஆறுமாதங்களில் கட் டாயம் செய்ய வேண்டும் பணமாகும். சொந்தத் தொழி லாகக் கரவலைத் தொழிலை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நிந்தப்பணம் வழங்கப்படும். பத்துவலி:- பத்து+வலி. பத்து என்பது ஒரென். வலி என்பது தொகைச் சொற்றொடர். பண்டாகக் கொடுப்பது. வல்லமையைக் குறிப்பதாகும். ஆனால் இந்தப் பத்து வலியானது தொழில் செய்தும் வருவாய் கிடைக்காவிட்டால் கடனாகக் கொடுப்பதா கும். தொழில் செய்தும் கூலிக்காகக் கொடுக்கப்படும் முதல். மீன் பிடிபட்டால் அந்தப் பணத்தை மீண்டும் வழங்கப்பட வேண்டும். இது நியதியாகும். இதை இங்கு பத்துவலி என்று கூறுவார்கள்.
uITUS:- கடல் செல்வம் பாதையில் தண்ணிர் நிறைந்தால், அந்நீரை வெளியேற்றப் பாவிக்கும் பொருள். இது பலகையினால் வடிவமைக்கப்பட்டிரு க்கும். இதை நேர்த்தியான முறையில் அமைப்பார்கள்.
மல்லம்- மல்லம், பாத்திரத்தையும், வலிமை யையும் குறிக்கும். கரவலைப் பாதையில் நடுப் பகு தியில் அமைந்திருக்கும். வலிமை கொண்ட மரத் தால் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது 15 அடி நீளம் கொண்டது. இந்த மல்லத்தை இடப்பக்கம் ஆறு பேரும், வலப்பக்கம் ஆறுபேருமாக இருந்து பாதை யைத் தண்ணிருக்குள்ளும், கரைக்கும் தள்ளவும் இழுக்கவும் பயன்படுத்துவார்கள். ஆணிவேர் போன் றதாகும் இது.
வலைக் கோப்பு:- வலை--கோப்பு வலை என்ற சொல் வழக்கத்தில் இருக்கின்றது. கோப்பு என்றால் கோத்தல், பெருமைக்குணம் என்ற கருத்தைத் தமிழ் மொழி அகராதி தெரிவிக்கின்றது. துண்டு துண்டாக இருக்கின்ற வலைகளைக் கோப் பார்கள். அதை இணைத்துக் கட்டுவார்கள். பல் வேறு வகைப்படுத்தப்பட்ட வலைகளை வரித்து ஒர் இடத்தில் கொண்டு வந்து அத்தனை துண்டுகளை யும் கோர்த்துப் பூரணப்படுத்தப்படும். இந்தக் கோப் புக்கள் இவ்வாறு அழைக்கப்படும். உ+ம்: தலை
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 94
வலைக் கோப்பு, முழியாத் துண்டு கோப்பு, அம்ப டையான் கோப்பு, தட்டு வலைக் கோப்பு, ஈரவலைக் கோப்பு என்று அழைக்கப்படுகின்றன.
அம்பாப் பாடல்:- அம்பா என்பதனை இனி மையையும், பசுமையான கதர்கின்ற ஒலியை ஒத்த கணிவையும் குறிக்கும். என்றாலும் இப்பாடல்கள் கூட்டு ஒற்றுமையின் தொனியை வெளிப்படுத்தும் இன்பரஸபாவத்தை தெரிவிக்கும் பாடலாகும்.
உடப்பின் கலை இலக்கிய வடிவங்களில் ஒன்றான இந்த அம்பாப் பாடல் வாய் மொழி இலக் கியமாகவும், நாடோடிப் பாடல்களாவும், நாட்டார் பாடல்களாகவும், பாமர கடல் தொழிலாளர் கூட்டத் தினரால் பாடப்படும் பாடல்களாகவும், இப்பாடல்கள் இருக்கும். இது உயிர்த் துடிப்புள்ளதாவும், சாகாவ ரம் பெற்றதாகவும், இன்ப, துன்ப உணர்வுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
இப்பாடல்களை கடற்றொழிலாளர்களே வலை இழுக்கும் போது பாடுவார்கள். இப்பாடல்கள் நீட்டம்பா, கட்டையம்பா, முறையம்பா, எதிர்த்தம்பா, விருத்தம்பா, ஒத்தம்பா, பக்கம்பா என வகைப்படுத் திப் பாடப்படும்.
கட்டம்பா:- இதைத் தொழிலாளர்கள் இப்படிப் பாடுவார்கள்.
Pl?. . . . . . . 6Ꭲ6Ꮱ6u) ...... ஒலை. ஏலை.
gPl2. . . . . . . ஏலே. Pl?..... ஏலே.
அரிஹரி. ஏலோ. நாராயணா. ஏலோ. அச்சுதனே. ஏலோ. பச்சமலை ஏலோ.
நெடுஅம்பா
பாத்து போரவளே பாவம் உன்னைச் சுத்தாதோ. சுத்திவர வேலியம்மா. சுடலை வர முள்வேலி.
ஒத்தம்பா:-
மாரியிட. ஏலோ. வாசலிலே. ஏலோ. மடியேந்தி. ஏலோ. நின்றமையா. ஏலோ. காளியிட. ஏலோ. வாசலிலே. ஏலோ. கையேந்தி. ஏலோ. நின்றமையா. ஏலோ. விருத்தம்பா
பச்ச உடலை வாட்டி. பழம் சுங்கான ஒட்டி. பொச்சி பொச்சி அடிகாரு
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

பிச்சை புள்ளையாரே.
பாடு- என்றால் அனுபவிக்கை, இடம், உண் டாகுகை, சுயகாரியம், ஒசை, கடமை, நடப்பு, பக்கம், வேலை போன்றவற்றைக் குறிக்கும். இது ஏழாம் வேற்றுமையாகும். இங்கு அங்கீகரிக்கப்பட்ட இடத் தில் கடற்றொழில் செய்யும் இடத்தைக் குறிக்கும். உடப்பில் 26 பாடுகளாகப் பிடிக்கப்பட்டு தொழில் மேற் கொள்ளப்படுகின்றது.
மந்தடித்தல்:- மந்து+அடித்தல், மந்து என்றால் காய்ந்த வேளை தப்பிதம் என்பதாகும். மந்து, கூட்டம், சகல வலைகளையும் ஒன்றாகக் கூட்டி, அடித்தல் அறைதலாகும். மீன் பிடித்தல் குறைந் தால் எல்லா வலைகளையும் கூட்டி அடிப்பதாகும். அதை மந்தடித்தல் என்று கூறுவார்கள்.
மாட்டுக்கட்டுதல்:- மாட்டுதல்+கட்டல் மாட்டுக் கட்டுதல் எனப்படும். மாட்டுதல் என்றால் அடித்தல், இயலுதல், கடாவுதல், கட்டுதல், செரு தல், பூணுதல் என்பதாகும். பிரிந்த வலைகளை ஒன்றாகச் சேர்த்து வலைகளை நீண்டகாலத்துக்கு இருக்க வேண்டி மாறி, மாறிக் கட்டிப் பாதுகாப்ப தாகும். மாடுகளைக் கட்டி பாதுகாப்பது போல மிக இறுக்கமாகவும், வலுவுள்ளதாகக் கட்டுவதை இப்பகுதி மீனவர்கள் மாட்டுக் கட்டுதல் என்பார்கள். சல்வாய்:- சல்வாய் என்பது ஒருவகை வலை. கரவலையில் வலை முடியும் இணைப்பை சல்வாய் என்பார்கள். செல்வாய் என்பதைத்தான் சல்வாய் எனப்படுகின்றது. இது ஒர் பேச்சு வழக்குச் சொல்லா கும். இது மீன்கள் உள்வாங்கும் முக்கிய கூறாகும். நீர்பாடு:- தொழில் செய்யும் போது, நீர் வழ மையை விடச் சற்று வேகமாக ஒடும் நீரை நீர்பாடு என அழைக்கப்படும். இங்கு வாடை நீர்பாடு எனவும், சோழ நீர்பாடு எனவும், மேம்புரி எனப் பல பெயர் கொண்டு அழைப்பார்கள்.
மடி- மடி என்றால் அடங்கல், மடங்குதல், மடிந்தது, வயிறு என்ற சொற்களைக் குறிக்கும். வலைக்குள்ளே உள்வாங்கப்பட்ட சகல மீனினங்க ளும் ஒன்றாகச் சேர்ந்து அடங்குவதைக் குறிக்கும். கம்மான் கயிறு:- மீன் பிடிக்கும் போது ஆரம்பத்தில் இழுக்கும் கயிற்றைக் கம்மான் கயிறு என்று சொல்வார்கள். 18 பாகம் நீளம் கொண்டது.
92

Page 95
கச்சால்:- மீன் பிடிக்கும் கூடு. பிடிபடும் மீனை
குறைக்க வேண்டி பாவிக்கப்படும் வலைக் கூடாகும்.
தொட்டாப்பு:- கரவலை தொழில் செய்யும் போது கடலில் வலைகளைச் சுத்திக் கட்டும் கயிறு. அத்துடன் வலைக்கு பாதிப்பு ஏற்படும் போது பாவிக் கப்படும். இது 13 பாகம் கொண்டதாகும்.
பங்குச்சல்லி- பங்கு+சல்லி= பங்கு என்றால் கூட்டு, கூறு, பாதி எனப்படும். ஆனால் இங்கு மீன் பிடிப்பதைக் கொண்டு பங்குகள் பிரிக்கப்படும். மொத்தப் பங்கில் 1/3 பங்கு சம்மாட்டியாருக்கும், மிகுதி இரண்டு பங்கு தொழிலாளர்களுக்கும் பிரிக் கப்படும். வாகனக் கூலி, சாப்பாட்டுச் செலவுகள், குடி வகைகளுடன் இதர செலவுகள் பொதுப் பங்காக ஏற்றுக் கொண்டு செலவு கழிக்கப்படும்.
கடற்கயிறு:- கடலில் தொழில் நிமிர்த்தம் ஆரம்பக் கயிற்றைக் கடற்கயிறு எனப்படும்.
தட்டுவலை:- கரவலைத் தொழிலின் இரண் டாம் பாகம் இந்தத் தட்டுவலை பாவிக்கப்படும். தட்டுவடிவில் கையால் பின்னப்படும் 120 அடியில் மேல், கீழான அமைப்பைக் கொண்டிருக்கும் இத ற்கு சின்னத்தட்டு, அம்படையான், மூனியா என்ற பெயர்களில் அழைக்கப்படும்.
அடக்கட்டை- அடக்கல்+கட்டை என்பது
மல்லிகை ஆண்டுச் சந்தாதாரதா
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்த வங்கித் தொ Dominic Jeeva 0720100042. Sea Street, C
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பி வேண்டியது, Dominie Jeeva என எழுதுவோர் இந்தப் டெ எழுதக் கூடாது. காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Domini
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூப
தொடர்பு கொள்ள 201/4, முறி கதிரேசன் வீதி, கொழு
V
93
 

ஒடுக்கல் கீழ்ப்படியப்பண்ணல், பாதையைத் தரையிலும், கரையிலும் இழுக்கும் போது அதைக் கட்டுப்படுத்தும் கட்டையே அடக்கட்டை எனப்படும். கூடு கட்டுதல் அல்லது பட்டறை:- தொழில் காலம் முடிந்து சகல பொருட்களையும் குவியல், குவியலாக கூடு வடிவிலும், பட்டங்கள் போன்று அறை அறையாகப் பாதையில் கட்டப்படுவதைக் குறிக்கும். மேற்படி பேச்சு மொழிச் சொற்கள் எமது பண் பாட்டு செல்நெறிகளைப் பறைசாற்றி நிற்கின்றன. அன்று தமிழன் ஐந்து நிலங்களை வகைப்படுத்தி, தமது தொழில் சார்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு அதனோடு ஒட்டிய வழக்குச் சொற்கள் பயன்பட்டு வந்ததாகப் பண்டைய இலக்கியங்கள் எடுத்தோம்புகின்றன.
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலம் வளங்களை தன்னகத்தே கொண்டது. இயற்கை அரண்களைக் கொண்ட துறைமுகங்கள், மண் கனிவளங்கள், இய ற்கை அரும்பெருங்காட்சிகள் சாகாவரம் பெற்றது. அலைகடல் ஒரத்திலே, நித்திலம் ஓங்கி ஒலிக்கும் கடற்பரப்பின் ஒரத்திலே தமிழரின் சிறப் பைப் பண்பாட்டு நெறி முறைகளைப் பாதுகாக்கும் உடப்பில் தமது தொழிலோடு சார்ந்த அருந்தமிழ்ச் சொற்கள் மங்காமல் மறையாமல் பேணப்பட்டு வருகின்றது என்பது வெள்ளிடைமலை,
கச் சேருபவர்கள் கவனத்திற்கு.
து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
டர்புகளுக்கு: {1- Hatton National Bank. olombo - 11.
டவும். காசோலை அனுப்புவோர் முக்கியமாகக் கவனிக்க பருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக : Jeeva. Kotahena, P.O. 6T60Tš (s.sijSLG 9gojL6.Lb.
தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
வேண்டிய முகவரி : ம்பு 13, தொலைபேசி : 2320721
ク
46வது ஆண்டு மலர். ஜனவரி 2011

Page 96
விழித்ததும் பக்கத்தில் பார்த்தான், அம்மாவைக்க என நினைத்தவன், எழுந்து வெளியே வந்தான். அம்பு
பிச்சி மரத்தைத் தாண்டி, முற்றத்தின் மேற்கு விளி
லேசான குளிர் காற்றிலிருந்தது. நடுங்கியவன், வானத்தை நிமிர்ந்து
பார்த்தான். வெளிப்புக் காட்டத்
தொடங்கிய வானில், திட்டுத் திட்டா 6)
கக் கருமுகில்கள் சில ஒட்டிக்
கிடந்தன.
'மழை வருமா..? வந்தால் நல்லது. மழையில்
நனைந்தபடி பள்ளிக்கூடம் போகேலுமா..?
அம்மாவுக்குச் சாட்டுச் சொல்ல, ஏதோ கிடைத்தது ே
கருமுகில்கள் செறிவடையாமல் அய்தாகக் கிட கலக்கமாக இருந்தது. மழை பெய்ய வேண்டுமெ6 பொங்கல் வைப்பதாக- வேண்டிக் கொண்டான். அலி வேண்டுதல்களில் இதுவும் ஒன்றா!
நினைப்பு வந்ததும் அவனுக்குச் சிரிப்புச் சிரிப்பாய்
இடது கன்னக் கதுப்பில் ஒரு துளி விழுந்தது. த துளிதான்!
அவன் திரும்பிப் பார்த்தபொழுது அம்மா வந்து ெ முகத்தில் முத்து முத்தாக நீர்த்துளிகள். நெருங்கி வந் அவளில் இருந்த நீர் அவனை ஈரமாக்கியது. சந்தர்ப்ப விட, அவளைப் பார்த்துச் சொன்னான்:
"இண்டைக்குப் பள்ளிக் கூடத்துக்குப் போகேலாது
'கள்ளமா..? வடுவா..! அடிபோட்டால் எல்லாம் (
'இல்ல, வேண்டாம்." என்றபோதே அவன் விம்ம
அவனது கண்ணிரைத் துடைத்த அம்மா 'ஏனடா.
"அந்தக் கண்ணாடிப் புடையன், தம்பு வாத்தி அடி வேணும். கணக்குப் பிழையெண்டு நேற்றுக் கை புளி
அவன் கைகளை விரித்துக் காட்டினான். அவனது
'படிப்பிக்கிற வாத்தியாரை அப்படியெல்லாம் சொல் படிச்ச, ஆத்திசூடி உனக்குப் பாடந்தானே..?” என்று
"இல்ல. கொஞ்சம் தடக்குது. கொன்றைவேந்
"நீ பள்ளிக்கூடம் போற.” அம்மா முடிவாகக் கூற
பள்ளிக்கூடம் போக அருக்கானியம் காட்டிய ரகு, விட்டு, தண்ணிரும் மாற்றி வைத்தான்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

ாணவில்லை. 'கொல்லைப் பக்கமாகப் போயிருப்பாள்.'
Dா கிணற்றடியில் நிற்பது தெரிந்தது.
ம்பில் ஒண்டுக்கிருந்தான்.
-க.சமடநாதன் பால இருந்தது அவனுக்கு.
ந்தன. அது அவனுக்குக் னப் பட்ட வேம்பானிடம்பனது நிறைவேற்றப்படாத
អំវិ}
4:து ஆண்i; ச்ே
வந்தது.
டவிப் பார்த்தான். மழைத்
காண்டிருந்தாள். அம்மா முகம் கழுவி வந்திருந்தாள். த அம்மா, அவனை அனைத்தபடி உச்சி முகர்ந்தாள். ம் பார்த்திருந்தவனுக்கு அவளது சொரிதல் சாதகமாகி
, மழை வரும் போலக் கிடக்கு.”
போவார்.”
க்ெ கரைந்தான். கண்களில் நீர் திரண்டு துடித்தது.
.? என்பது போலப் பார்த்தாள்.
க்கும். ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும் சொல்ல க்கப் புளிக்க அது அடிச்சது."
து உள்ளங்கைகள் நீலம் பாரித்து, சிவந்து கிடந்தன.
pலப்படாது, ராசா..!" என்ற அம்மா தொடர்ந்து: "இரவு று கேட்டாள்.
தன் சுத்தமாப் பாடமில்லை."
நிவிட்டு, நகர்ந்தாள்.
தனது வளர்ப்புப் புறாக்களுக்குத் தானியங்கள் விசிறி
94

Page 97
அப்பொழுது அம்மாவின் குரல் கேட்டது. அவளைப் பார்க்க அடுப்படிப் பக்கம் போனான்.
“முகம் கழுவினனி, ஏன் விபூதி பூசேல்ல.?”
அம்மாவின் அதட்டல்,
ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும், கண் ணாடி வாத்தியாரின் கைப்பிரம்பும் தான் அவனை இப்பொழுதெல்லாம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. அதனால், அவனுக்கு எதுவுமே ஞாபகத்தில் தங்குவதாயில்லை.
வாத்தியாருடைய பிரப்பம் பழம், கைகளோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது அவனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. முதுகிலும் குண்டியிலும் சிலருக்குக் கிடைப்பது, அவனுக்குத் தெரியும்.
மனதளவில் குழப்பங்களோடு இருந்த அவன், அம்மா சுட்டுப் போட்ட, கோதுமை ரொட்டிகளை ஏனோதானோ எனக் கொறித்து விட்டு, எழுந்தான்.
அம்மா சொன்னதற்காக சாமியறைவரை வந்த வன், விபூதி பூசிக் கொண்டான். சரஸ்வதிதேவியை மனதில் நிறுத்திக் கண்களை மூடியபடி மெளனமாக வணங்கினான்.
அவன் கண்விழித்துப் பார்த்த பொழுது அங்கு அந்த அதிசயம் நடந்தது.
சட்டமிடப்பட்டு, கண்ணாடியினுள் அடைபட்டுக் கிடந்த சரஸ்வதி அவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு, அவனுக்குப் பவளத்துண்டுகளுக் கிடையே முத்துக்கள் சிதறின மாதிரி இருந்தது. படத்தை விட்டு வெளியே வந்த தேவி, கையில் இருந்த ருத்திர வீணையைப் பக்கமாக வைத்தாள். வெற்றிலைப் பெட்டியுடன் இவனருகாக வந்தவள், இவனை அணைத்துக் கொண்டு, முன் திண்ணை யில் உட்கார்ந்தாள். அவளது பொன்னொளிர் மேனியின் தொடுகை அவனைப் பரவசம் கொள்ள வைத்தது. சொல்லிழந்து சொக்கிப் போன அவன், தேவியையே பார்த்தபடி இருந்தான்.
வெற்றிலைப் பெட்டியைத் திறந்த தேவி, தளிர் வெற்றிலையாகப் பார்த்தெடுத்து, தனது இடது தொடையில் துடைத்துக் கொண்டாள். வெற்றிலை யின் நுனியையும் அடிக்காம்பையும் அகற்றியவள், தனது சுட்டு விரல் நகத்தால் சிறிதளவு சுண்ணா ம்பை எடுத்து, வெற்றிலைச் செல்வத்தில் நீவினாள்.
95

கொஞ்சம் வாசனைப் பாக்கு, குங்குமப்பூ, கராம்பு, கறுவாப்பட்டை என்று ஏதேதோ சேர்த்து, மடித்து எடுத்துக் கொண்டாள்.
*தாம்பூலம் தரிக்கிறாயா..?"
"தாம்பூலம்.?
“பிள்ளைக்கு விளங்கேல்லையா..?
கேட்டவள், மடித்த வெற்றிலைச் செல்வத்தை ஒரு கடி கடித்துவிட்டு, மிகுதியை இவனது வாயில் இட்டாள்.
வெத்திலையின் தித்திப்பில் மறுகியவன், அவளு டன் சாய்ந்து, இன்னும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டான்.
வெற்றிலையைக் குதப்பிச் சாப்பிடுவதைக் கண்ட தேவி, அவனைப் பார்த்துச் சொன்னாள்:
"பயப்படாத. நானிருக்கிறன். வாத்தியார் இனி அடிக்கமாட்டார். படிப்புத் தானா வரும்.”
உடல் சிலிர்த்து, ரோமாஞ்சனம் கொண்டவன், இன்னும் நெருக்கமாக வந்து, தேவியின் மடியில் படுத்துக் கொண்டான்.
அம்மாவின் குரல் கேட்ட மாதிரி இருந்தது. அவன் சுதாகரித்துக் கொண்டான்.
‘ஏதுவெத்திலை.? சின்னப் பிள்ளையன் வெத் திலை போடலாமா..? கெட்ட பழக்கமெல்லாம், உனக்கு இப்ப தண்ணிபட்ட பாடாய்ப் போச்சு.”
அம்மா சத்தம் போட்டாள்.
சரஸ்வதி தரிசனம் பற்றி அம்மாவுக்குச் சொல் லலாமா..? என ஒரு கணம் நினைத்தவன்- இதை யெல்லாம் அவள் நம்புவாளா..? என விட்டு 6i LT6öT.
களிசானும் சேர்ட்டும் போட்டுக் கொண்டு, புத்த கப் பையுடன் அவன் பள்ளிக்கூடம் புறப்பட்டான்.
வெய்யிலின் காங்கை உள் நாக்குவரை வந்து சடவியது. தொண்டை வரட்சியால் நாக்குப் புரள மறுத்தது. பேச்சிழந்த நிலையில் அவன் மெளன மாக நடந்தான்.
மூந்தாய்க் குளம் வரண்டு, பொருகு தட்டிக் கிடந்தது. ஆலடி வைரவர் கோவிலைக் கடந்தவன், குளத்தின் குறுக்காக இறங்கி நடந்தான். கலடு
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 98
தட்டிக் கிடந்த குளத்தின் தரையில் தீ நாக்குகள். தீ அவனது கால்களைப் பற்றிப் படர்ந்து எரிந்தது. இடது கால் பாதத்தைப் பார்த்தான். அது அவன் கண்முன்னாலேயே மெழுகு போல உருகி வடிந் தது. வலது காலால் தெத்தித் தெத்தி நடந்தவன், சிரமத்துடன் குளத்தின் மறுகரையை அடைந்தான்.
மதவடி வயல்வெளி, ஈரக்கசிவு ஏதுமில்லாது பாழ் பட்டுக் கிடந்தது. அது உவர் நிலம். உவர் நிலப் பரப்புக்கே உரிய கோரை, சிறு அறுகு, முள்ளி, காரை, காட்டுச் செவ்வந்தி என வரண்ட தாவரங்கள் எங்கும் விரவிக் கிடந்தன. வயல்வெளியின் தெற்குக் கரையோரமாக, சதுரக் கள்ளியும் சப்பாத்துக் கள்ளி யும் எருக்கிலையும் உள் உயிர் அழிந்து உலர்ந்து கிடந்தன.
அவனது கால்கள் வயற்தடத்தின் ஒற்றையடிப் பாதையில் பட்டபோது, மீளவும் தீ நாக்குகளின் சட சடப்பு. தீயின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த வயற் தாவரங்கள் எல்லாமே பொசுங்குவதை அவன் கண் டான். 'பள்ளிக்கூடம் போகாமல் திரும்பி விடு வமா..? என ஒரு கணம் மறுகியவன், நெருப்புப் படராத இடைவெளிகளைப் பார்த்து நடந்தான்.
நவக்கைக்குளமும் வரண்டு கிடந்தது. குண்டில் மட்டும் சிறிதளவு நீர் தளதளத்தது. பாதரசம் மாதிரி 69(5 மினுமினுப்பும் பளபளப்பும் இருந்தது. குண்டை நெருங்கியவன், நீரை எடுத்து உள்ளங்கையில் விட்டுப் பார்த்தான். நீர் சிறு சிறு கோள வடிவ உருக்களாக மாறி, அவனது கையில் உருண்டது.
'இது பாதரசம் தான்..!
வியந்தவன்! குளத்தின் மறு கரை வந்து, நவக்கை வெளியில் நடந்தான்.
அவன் இதுவரை கண்ட புலக் காட்சிக்கு மாறாக இருந்தது நவக்கை வெளி. வெளியை அடுத்துஉயரப்புலம், புலவர்மேடு, பனங்கூடல் என்று விரி ந்த நிலப்பரப்பு, எல்லாமே பசுமை போர்த்திக் கிடந் தன. லேசான குளிருடன் ஒரு வெதவெப்புமிருந்தது.
"இந்த நிலப் பெருவெளிக்கு, குளிரூட்டியது யார்.? இது யாருடைய கொடை.?
கிளர்ச்சி மிகுந்தவனாய் நடந்தான்.
அவனது கால் தடங்கள் பதிந்த இடமெல்லாம் இப்பொழுது நீர் கசிந்தது. முன்னர், நெருப்பில்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

வெந்து போன அவனது பாதங்களுக்கு அந்த நீர் ஒத்தடம் இதமாயிருந்தது. தீக்காயங்கள்- அவன் பார்த்திருக்க- சடுதியாக ஆறுவதை அவதானித் தான். *
இது எப்படி. எப்படி நடக்க முடியும்.?
வியப்புடன் கூடிய பரபரப்பு அவனுக்கு.
வயல்வெளியில், மொட்டைக் கறுப்பன் நெற் பயிர்கள் மடல் வெடித்துக் கதிர் எறிந்திருந்தன. வர ம்பு மட்டத்துக்கு வெள்ளநீர் தளதளத்தபடி. அதில் நீர்ப் பூக்களும் தவளைகளும். அவனுடன் அவை சல்லாபமாகப் பேச முற்பட்டன. அவற்றின் கதையா டல் அவனுக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. சடைத்து வளர்ந்த பயிரொன்றின் குடலையை உருவி எடுத்தவன், அதனை வாயிலிட்டுச் சுவைத் துப் பார்த்தான். தேன் குடத்தை நாக்கில் சரித்தது போலொரு சுவை, அவனைக் கிறங்க வைத்தது.
வாய் பிசுபிசுக்க, சப்புக் கொட்டியபடி மேலே நடந்தான்.
உயரப் புலத்தைக் கடந்து, பனங்கூடலை அண் மித்தான். அங்கு, அவனுக்கு இன்னும் பல அதிச யங்கள் காத்துக் கிடந்தன.
கூடலில் உள்ள பனைகள் அனைத்திலும் பனங் கத்தாளை மலர்கள்! அவை, அவனை இழுத்து வைத்துச் சிரிப்பூட்டின. கரும் ஊதா மலர்களின் உள் வளைவுகளில், குட்டிக்குட்டி கபில நிறக் கோடு கள். இன்னும் கரும்புள்ளிகள். அம்மலர்கள் தொகையாய்த் தேன் சொரிந்தபடி இருந்தன. தரை யில் விழுந்த தேன்துளிகளின் தடத்திலிருந்து பல நூறு வண்ணத்துப்பூச்சிகள், சிறகு அசைத்துப் பற ந்து விந்தை காட்டின.
அங்கு குப்பை கொட்டியது போலப் பறந்த வண் ணத்துப் பூச்சிகளில் தான் எத்தனை வகைகள், வண்ணங்கள்!
கருமையும் வெண்மையும் கலந்தவை. ஊதா வில் கரும்புள்ளிகள் மட்டும் உள்ளவை. மென் சிவ ப்பு. குங்குமத்தில் பொன்னிழைகள் ஊடு பரவி யவை. மஞ்சள் புள்ளிகளுடன் இலைப் பச்சை, தளி ர்ப் பச்சை. தயிர் வெள்ளை. மஞ்சள் வண்ணத்தில் குங்குமம் பூசிக் கொண்டவை. மரகதக் கோடுகளுட னான கரு நீலம், பவளச் சிவப்பு. இன்னும் கணிதக்
96

Page 99
குறியீடுகளையும், தமிழ் எழுத்துக்களை- அதுவும் நெடுங்கணக்கு முழுவதையும் தாங்கிய சில பூச்சி களையும் அவன் கண்டான்.
அங்கு பறந்த வண்ணத்துப்பூச்சிகள் எல்லாமே ஒன்று திரண்டு, உருமாறி, ஒரு பெரிய பூச்சியாக வடிவெடுத்தது. அவனை நோக்கி அது பறந்து வந் தது. அதன் பறத்தலினால், அவனைச் சூழ ஆழ மான இருள்கவியத் தொடங்கியது. எதுவுமே அங்கு தெளிவாகத் தெரியாததால், அவன் அவஸ்தைப்
LILFT60.
அந்த மையிருட்டில், அவன் எதிர்பாராத தருண த்தில், அந்தப் பூச்சி அவனது தோளில் வந்து அமர் ந்து கொண்டது.
அமர்ந்த அந்தப் பூச்சி, அவனது காதுகளுக்கு அருகாகத் தனது பாரிய உணர் கொம்புகளை நகர் த்தி, உரசி உரசி, கிச்சுக் கிச்சு மூட்டியது. அத்துடன் அவனது காதில் ஏதேதோ புதினமும் சொல்லியது.
பூச்சியின் குரல் உரத்தும், சில வேளைகளில் விட்டு விட்டும் தொடர்பறுந்தும் ஒலித்தது.
"ஏய் உன்னைத்தான் நில், ஏன் சழிந்து பழைய துணி மாதிரி இருக்கிறாய்...? உனக்கு ஒரு தோழியா..? உதவி செய்ய அவள் ஏன் கங்கணங் கட்டிக் கொண்டு வருகிறாள்? கிழிஞ்சுது போ. அவ ளைச் சிக்கெனப் பிடித்துக் கொள். பிடித்துக் கொண் டால், எப்பொழுதும் உனக்கு முன்வரிசை தான். அவ ளது இருப்பும் இசைவும் தான் இனிமேல் உனது சீவியம். உனக்குச் சுக்கிர திசையடா..! இது நியதி. இந்த நியதியை யாராலும் மாற்ற முடியாது.”
எதிர்வு கூறிய அந்தப் பூச்சி, விர்ரென்று பறந்து சென்றது. அது பறந்து சென்ற போது, அதன் சிறகுகளின் உதைப்பு விசை அவனைச் சரித்து வீழ்த்தியது. அடிபட்ட நிலையில் அவன் மயங்கித் தரையில் சாய்ந்தான்.
அவன் விழித்தபோது அவனுக்கு அருகாக ஒரு சிறுபெண்- அவனுடனான ஜென்ம ஜென்மாத்திரப் பிணைப்பை உறுதி செய்வது போல- இருந்தாள். அவளின் நிறம் நீரின் நிறத்தை ஒத்திருந்தது. அவள் ஒரோர் சமயம் வதங்கிய குருத்திலை போலவும் காணப்பட்டாள். அவளது கண்கள் ஈரமாயும் மிகுந்த ஜீவக்களையுடனுமிருந்தன. இத்தனை இருந்தும்
97

மொத்தத்தில் அவள் சோர்வாதம் வந்தவள் போல, சவலை தட்டிக் கிடந்தாள்.
அவனது முகத்தைத் தனது கரங்களால் ஏந்திய வள்; அதை நன்றாகத் துடைத்து விட்டாள். அவனு க்குக் கைலாகு கொடுத்தவள், அவன் எழுந்து உட் கார்ந்து கொள்ளவும் உதவினாள்.
அவளது கைபட்ட இடமெல்லாம் வாச மல்லி கையின் தீண்டுதலாய் அவனுக்கு இருந்தது.
அவளது உதடுகளில் மலர்ந்த புன்னகையில் அவன் தெய்வத்தைக் கண்டான்.
தூரத்தில் வீசப்பட்டுக் கிடந்த அவனது புத்தகப் பையை எடுத்தவள், அவனிடம் தந்தபடி, அவனைப் பார்த்துக் கேட்டாள்:
"சரஸ்வதியிலயா படிக்கிற.? நானும் அங்க தான் புதிசாச் சேர்ந்திருக்கிறன். வா போவம்" கூறியவள், அவனது இடது கரத்தைப் பற்றியபடி நடந்தாள். அவளது வலது கரத்தில் சில புத்தகங்க ளும், பயிற்சிக் கொப்பிகளும் இருந்தன.
“எந்த வகுப்பு.?”
'மூண்டாம் வகுப்பு.”
"நானும் மூண்டுதான்”
“GLIs...'?'''
“ச.தமிழ்ச்செல்வி’
*வேலணை தானே..?”
“b....'
அவளது 'ம்'இல் ஏதோ ஒரு தயக்கமும் மறைப் பும் இருந்தது.
பேச்சொழிந்த நிலையில் பாடசாலை நோக்கி இருவரும் நடந்தார்கள். அப்பொழுது அவர்கள் இரு வரது கரங்களும் தாமாகப் பிணைந்து கொண்டன.
சிறிது தூரம் அவளுடன் நடந்தவன், கூச்சப்பட்ட வனாய்த் தனது கரத்தை அவளிடம் இருந்து விடு வித்துக் கொண்டான்.
அவனோடு இணைந்து நடந்து வந்தவளிடம் ஏதோ வாசனை!
காற்றில் விரவி வந்ததா. இல்லை, அவளி டமிருந்து வந்ததா..?
46வது ஆண்டு மலர். ஜனவரி 2011

Page 100
அவன் சிறிது குழம்பினான்.
வனங்களில் இருந்தும், வனதேவதைகளில் இருந்தும் இத்தகைய வாசனை வருவதுண்டு என் பது அவனுக்குத் தெரியும். அம்மா சொன்ன கதை களும்- இன்னும் அவன் படித்த தேவதைக் கதைக ளும் அவனுக்கு இவற்றைக் கற்றுத் தந்திருக் கின்றன.
அடர்ந்த காட்டுப் புதர்களில் குலுங்கிச் சிரிக்கும் மலர்களில் இருந்து ஈரலிப்புடன் வரும் வாசனை தான் அது என்பதை அவன் அறிந்திருந்தான். அதே நேரத்தில் 'வனங்களுக்கும் அவளுக்கும் அப்படி என்ன ஒரு நெருங்கிய உறவு இருக்க முடியும்.? எனும் கேள்வியும் அவனிடம் இருந்தது.
பள்ளிக்கூடத்தை நெருங்கிய அவர்கள் அது புதுப்பொலிவுடன் இருப்பதை அவதானித்தார்கள்.
பாடசாலை வெளி மதில், புதிதாகப் பெயின்ற அடிக்கப்பட்டிருந்தது. அதன் முன்பாக, வாசல் வரை பூப்பந்தல் வளைவு; அதில் போர்கன் விலா மரங் கள், வகை தொகையில்லாமல் கொட்டிக் கிடந்தன.
பள்ளிக்கூட நடை பாதைக்குத் தெற்காக, நீர்த் தொட்டி. அதில் அழகிய கருநீல அல்லிமலர்கள். இன்னும் சில வெள்ளைமலர்களும்.
வடக்குப் பக்கமாக விஸ்தாரமான விளையாட்டு மைதானம், மைதானத்தின் கிழக்குச் சாய்வில்தொங்கலில்- திரைச்சீலையும் குஞ்சலங்களும் அசைந்தாடும் திறந்தவெளி அரங்கு.
நேற்று வரை இல்லாத எல்லாமே இன்று உரு வாகி இருப்பதை அவனால் நம்பமுடியவில்லை.
கூடவரும் செல்வியைத் திரும்பிப் பார்த்தான். ‘இதெல்லாம் உனது சித்து வேலையா..? எனக் கேட்பது போலிருந்தது, அவனது அந்தப் பார்வை. அவள் மலர்ந்து சிரித்தாள். அந்தச் சிரிப்பில் பிடிபட மறுக்கும் அர்த்தங்கள் அதிகமிருந்தன.
இதுவரை பராக்குப் பார்த்தது போதும் என நினைத்தவர்களாய்- இருவரும், அவர்களது வகுப்பறையை நோக்கி நடந்தார்கள்.
வகுப்பறையில் கண்ணாடி வாத்தியார் ஏதேதோ சளசளத்தபடி நின்றார். இவர்களைப் பார்த்ததும்:
"ஆரது புதுப்பெட்டை.?” என்று கேட்டார்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

"தமிழ்ச்செல்வி. புதிசா வகுப்பில சேர்ந்திருக் கிறன் ஸேர்." கூறிய செல்வி, “ரகுவுக்குப் பக்கத் தில இருக்கட்டா..?" என அவரிடம் கேட்டாள்.
“இருந்து தொலை."
சலித்துக் கொண்ட ஆசிரியர், மாணவ, மாணவி களிடம் முறை வைத்து ஆத்திசூடி, கொன்றை வேந்தன் கேட்டார். கேட்டு வந்தவர், ரகுவைப் பார்த்தார்.
அவனும் ஆத்திசூடி சொன்னான்.
"சரி கொன்றை வேந்தன்.?
"கொஞ்சம் தடக்குது, ஸேர்."
பிரம்புடன் அவனுக்குக் கிட்டவாக வந்தவர், அவனது தோள்களைப் பற்றி இறுக்கமாக அழுத்தி னார். அவரது இரும்புக் கரம் பட்ட இடம் வலித்தது.
"சொல்லு. தடக்காமல் வரும்.”
அன்னையும் பிதாவும் எனத் தொடங்கியவன்மூச்சு விடாமல் சூதும் வாதும் வேதனை செய்யும்' வரை அவருக்கு ஒப்புவித்தான்.
"இருபத்தைஞ்சு போதும். நீ முப்பது வரை சொல்லிற. நல்லது. நல்லாப்படியடா...' கூறியவர் அவனது முதுகைத் தட்டிக் கொடுத்தார். ஆசிரியரின் பாராட்டு அவனைக் குளிர்வித்தது. ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் சொல்லும் போது, ‘வரி தவறுமோ..? என அவன் தயக்கம் கொண்ட சந்தர்ப்பங்களில் எல்லாம்- செல்வியின் குரல்தான் அசரீரி போல ஒலித்து அவனுக்கு உதவியது.
செல்வியை நன்றியுடன் நிமிர்ந்து பார்த்தான். இணக்கமாக, மிகுந்த பிரியத்துடன் சிரித்த செல்வி சொன்னாள்:
"பயப்படாத. நானிருக்கிறன். வாத்தியார் இனி அடிக்கமாட்டார். படிப்புத் தானா வரும்.”
காலையில, தேவி சரஸ்வதி சொன்ன மாதிரி இவளும் சொல்லிறாளே. தேவிதான் கூட வந்திருக்கிறாளோ..? வெளிறிய நீலப் பப்ளின் சட்டையில. ஒல்லிப்பாச்சானா இருக்கிற இவள் எப்படித் தேவியாக இருக்க முடியும்.?
98

Page 101
அவனது குழப்பங்கள் தீராமல் தொடரவே செய்தன.
புது மாணவி என்று செல்வியை எதுவும் ஆசிரியர் கேட்கவில்லை. அவள் அங்கு நடப்பவைகளுக்கு
மெளன சாட்சியாக மட்டும் இருந்தாள்.
பாடவேளை முடிந்து மணி அடித்தது.
'அடுத்த பாடம் என்ன...?' செல்விதான் (885 LT6T.
"கணிதம்."
அவனது பதிலில் சிறிது பதட்டமிருந்தது.
"என்ன பயமா இருக்கா..? பயப்படாத."
அவள் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளுடன், சில வசனக் கணக்குகளையும் ஆசிரியர் கொடுத்தார்.
எல்லாக் கணக்குகளையும் அவன் சுலபமாகச் செய்தான். இத்தகைய அநுபவம் அவனுக்கு முன்பின் இருந்ததில்லை.
செல்வியின் உடனிருப்பின் அவசியத்தை அந் தக் கணங்களில் அவன் அழுத்தமாகவே உணர்ந்து கொண்டான்.
“மூண்டாங்கணக்குப் பிழை; ஒண்டில சைவர் போனால் சைவரா.?”
‘விடை ஒண்டு." ரபராலை அழிச்சுத் திருத்து.
"நீ இப்ப செய்யிறது வசனக் கணக்கு. பிரித்தல். கேள்வியை நல்ல வடிவாப் படி. படிச்சுப் பாத்துச் செய். அவசரப்படாத,”
*எனது பயிற்சிக் கொப்பியைப் பார்க்காமலே, எப்படி. எப்படிச் செல்வியால் எனக்கு வழிகாட்ட முடியுது..?
எல்லாமே அவனுக்குப் புதிராய் இருந்தது.
அன்றைய தினம் எல்லாப் பாடங்களையும் பிழை ஏதுமில்லாமல் அவனால் செய்ய முடிந்தது. அவன் பயந்தது போல, எதுவும் நடக்கவில்லை. பிரம்புக்கும் ஆசிரியர் ஒய்வு கொடுத்தது அவனுக்கு
99

மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் கெட்டிக்காரன் என்ற பெயர் வாங்கிக் கொண்டான்.
அன்று மட்டுமல்ல, தொடர்ந்து வந்த நாட்களி லும் செல்வி அவனுக்குத் துணையாக இருந்தாள். அவனைப் பொறுத்தவரையில் இது ஒரு தேவ அநுக்கிரகம் ஆகும்.
அவனது இந்த அநுபவத்தையெல்லாம் வீட்டில் அம்மாவுக்கு- அவள் நம்புவாளா மாட்டாளா என்பதி லெல்லாம் அக்கறைப்படாது. சொல்லிச் சொல்லி மாய்ந்து போனான்.
★大★大大
செல்வி பாடசாலையில் சேர்ந்து இரண்டு
மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஒருநாள் பாட சாலை விட்ட பின்னர், மைதானத்தின் தென்புறமாக உள்ள வேப்பமர நிழலில், இருவரும் கெந்தியடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவள் தனது ஆளுமையின் முழுமையான விகதி ப்பை அவனுக்குக் காட்டினாள்.
அருகாக நின்றவளை, கண் அகற்றாது அவன் பார்த்தான். ஆரம்பத்தில் கோட்டுச் சித்திரம் போலக் கோலங் காட்டியவள், இரத்தமும் தசையும் கொண்ட மனித ஜீவியாகத் தோற்றம் கொண்டாள்.
அவளது முகத்தின் இடது பக்கக் கன்னத்தில், விநோதமான ரேகைகள் திடீரெனப் பரவின. கிட்டப் sபார்வையில், அவை ரேகைகள் அல்ல, இரத்த நாடி கள் என்பது புலனாகியது. அவை வெடிப்புற்று, பிளவு பட்டு விரிந்தன. முப்பரிமாண விசாலிப்புடன் விளங்கிய அந்த இரத்தம் சொரியும் பிளவுகளில், விதம் விதமான காட்சிகள். ஒன்றன் பின் ஒன்றாக அவனது கண்களுக்குத் தெரிந்தன.
அவளது வசீகரத்துக்கும், ஆளுகைக்கும் உட் பட்டு, வசமிழந்த அவன்:
இது எந்த இடம்.? காடும் மரங்களும் தறப்பாள் கூடாரங்களும். இடிபாடுகளுடனான ஒரு பாடசா லைக் கட்டிடமும் தெரியுது. குப்பை குப்பையாச் சனங்களும் கொட்டிக் கிடக்கினம்..!
மலைப்புடன் நின்ற அவனுக்கு அவள் விளக்கம் தந்தாள்:
“இது வள்ளிபுணம். எங்கட ஊர்’
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 102
“அட நான் உன்னைக் காட்டுப் பெட்டை எண்டு நினைச்சது சரி. வன்னியில இருந்து தான் நீ இஞ்ச யுத்தத்தோட இடம்பெயர்ந்து வந்திருக்கிற போல.”
'ம்." சொன்னவள், தொடர்ந்து பேசினாள்:
“பள்ளிக்கூடத்துக்கு முன்னாலை இருக்கிறது எங்கட வீடு...!"
'ഖീLIT...? குடிசை மாதிரிக் கிடக்குது.”
"சரி சரி. குடிசையாகவே இருந்திட்டுப் போகட் டும். அந்தக் குடிசைக்கு முன்னால நிக்கிறது எங்கட குடும்பம்; அம்மா, தங்கச்சி, அடுக்க நிக்கிற பெரிய பெட்டை நான்."
பெரிய பெண்ணை உன்னிப்பாகப் பார்த்த ரகு அவள் கூறுவதை ஆமோதித்தான்.
"அது சரி. உங்கட அய்யா..?”
"இரண்டு மாதத்துக்கு முந்திச் ஷெல்லடியில செத்துப் போட்டார். பள்ளிக்கூடத்தடியிலதான் ஷெல் விழுந்தது. அவரைக் கூழாய் அள்ளித்தான் அடக்கம் செய்தனாங்கள்"
அவளது குரல் கரகரத்தது. கண்ணிர் மல்க நின்றாள்.
பேசிக் கொண்டிருக்கும் போதே, காட்சியின் பிம்பங்கள் கரைந்து போவதை அவதானித்தான். கரைந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சில மாற்றங்களால் பிறிதொரு காட்சி புலனாகியது.
காட்டாற்று வெள்ளத்தின் வேகத்துடனும் உதைப்புடனும் மக்கள் திரள் அலைபுரண்டு போகி றது. முதியவர்கள், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என. திடீரென ஓசை அழிந்த பேரமைதி. வானத் தில் பொம்மர்கள். அதே சமயத்தில் ஷெல் மழையும் பொழிகிறது. அள்ளுண்டு சென்ற சனம் தரையில் விழுந்து படுத்துக் கொள்கிறது. தலை குத்தி, குண்டு மாரி பொழிந்த பிணந்தின்னி விமானங்கள் விலகவெடில் வீச்சும் ஒரளவு ஒய்வு கொள்கிறது.
தலைதுாக்கிப் பார்த்த சனங்களின் மத்தியில், சுரு ண்டு போய்க் கிடந்த செல்வியின் அம்மா, அருகில் கிடந்த செல்வியையும் அவளது தங்கையுைம் அணை த்துத் தூக்கியபடி எழுந்து கொள்ளுகின்றாள்.
ரகுவின் கண்கள் அந்தக் காட்சிகளில் நிலைத்த படி இடதும் வலதுமாய் அசைந்து கொள்கின்றன.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

சிதறுண்டு கிடந்த சடலங்கள் மீது மிக நெருக்கமாக அவனது கண்கள் மொய்க்கின்றன.
அங்கு அவன் கைகால்கள் இழந்த உடல்களை, தலையில்லாத" முண்டங்களை, குண்டடிபட்ட நிலையில் துடிதுடித்த படி கிடக்கும் மனிதர்களை தழுவிய நிலையில் மரித்துக் கிடப்பவர்களை, தலை பிளந்து "க்ளுக்கெனக் கோழை வடிய வடிய வெளித் தள்ளிக் கிடக்கும் மூளைகளை, மார்பு பிளந்துவிட்ட நிலையில், வெளித் தெரியும்- துடிப்பு அடங்காத இதயங்களை, சரிந்து, வெளித்தள்ளிக் கிடக்கும் குட ல்களை அவன் பார்த்தான். இன்னும்- கருமையாக, களித்தன்மையுடன் உறைந்தும் உறையாமலும் படர்ந்து கிடக்கும் இரத்தப் பிசுபிசுப்பும் அவனை அசரவைத்தன.
“இது எந்த இடம் செல்வி..?"
"புதுக்குடியிருப்புச் சந்தி."
"இந்தச் சனச் சந்தடிக்கை உன்னை இப்ப காணேல்லை. அம்மாவும் தங்கச்சியும் தான் போகின போல."
"வடிவாப் பார். அம்மான்ரை வலது கைப் பக்கமாக நான் நடந்து வாறன்."
அவன் உற்று உற்றுப் பார்த்தான்.
"நீர்க் கோடுகளால கீறின மாதிரித் தெரியிற. வள்ளிப்புனத்தில ரத்தமும் தசையுமாய் வடிவாத் தெரிஞ்ச உன்ர உடம்பு உரு அழிச்சு தெரியுது. இப்ப இஞ்ச எனக்குப் பக்கத்தில நிக்கேக்க கூட அப்படித்தான் உன்ர உருவம் தெரியுது. இது நூதன மாயிருக்குது. இந்தக் கள்ளமெல்லாம் எதுக்கு.?”
‘இதெல்லாம் ஒரு காரணத்தோடதான். நான் எதுவும் சொல்லாமலே, கால முதிர்வு எல்லாத்தை யும் உனக்குச் சொல்லித்தரும்"
கூறிச் சிரித்தவள், 'பார். நல்லாப் பார். அது நானெண்டு தெரியேல்லையா..? எனக் கேட்டாள். அவளுக்குப் பதிலாக 'ம்.” என்றவன்- திடீரெ னக் காட்சி மாறியதை அவதானித்தான். மனம் பேதலித்த நிலையில், அக் காட்சியில் அவனது பார்வை தடைப்பட்டது.
“இது எந்த இடம்.? "புது மாத்தளன். அரசு அறிவிச்ச கடைசிப்
100

Page 103
பாதுகாப்பு வலயம். பக்கத்தில அம்பலவன், பொக்கணை, வலைப்பாடு, வலைஞர் மடம் எண் டெல்லாம் இடங்கள் இருக்கு. இஞ்ச தான் இயக் கப் பெடியளுக்கும் அரச படையஞக்குமிடையில யுத்தம் நடந்தது.”
அவன் அந்த இடத்தை மிக நெருக்கத்தில் பார்த்தான். அங்கு, அவன் உயிருள்ள மனிதர்க ளைக் கண்டான். அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கு தெரிந்த மனிதர்கள் அனைவரது முகங்களும் உலர்ந்து, உறைந்து போய்க் கிடந்தன. உதடுகள் வெடிப்புக் கண்டு, இரத்தப் பெருக்குடன் காணப்பட்டன. எதையோ இழந்து விட்டது போல் துடிக்கும் விழிகள் சூனியத்தைத் துழாவியபடி.
“நல்லாய்ச் சனம் செறிஞ்சு போய்க் கிடக்குது. இந்தச் சனத்துக்குச் சாப்பாடு, தண்ணி எண்டு ஏதுமில்லைப் போல."
குரல் உடைய அவன் கரைந்தான். “கந்தக நெடியோட கூடின காத்து மட்டும்தான் அங்க அப்ப இருந்தது. அந்தக் காத்தைக் குடிச்சுக் குடிச்சு உயிர் வாழிற கதைதான் அப்ப அங்க நடந்தது.”
துயரப்பட்ட செல்வி தொடர்ந்து சொன்னாள்: "கண்ணைத் திருப்பிக் கொஞ்சம் கிழக்குப் பக்கமாகப் பார் ரகு...!"
‘இதென்ன கிபிர் வருகுது, குண்டு வீசப் போகுதா..? ஷெல்லும் விழுகுது. அதோட கொத் துக் குண்டுகளும்."
"அங்க பார் செல்வி. சனம் பயத்தில உயிர் பிடிச் சுக் கொண்டு ஒடுறதை. சில ஆக்கள் சடலங்களுக்கு மேலால ஏறி மிதிச்சுக் கொண்டும் ஒடுகினம்.”
“எல்லாம் தெரியுது.”
'சனங்களோட சனங்களா சாறத்தை மடிச்சுக் கட்டிக் கொண்டு. ஒட்டவெட்டின தலையோட சில பெடியங்களும். இறுக்கமாய்ச் சட்டையும் ஜீன்சும் போட்டுக் கொண்டு, இரட்டைப் பின்னலோட பெட்டையஞம் போகினம். அவையின்ர கையில துப்பாக்கி இருக்கு. சிலபேர் வாழைப்பொத்தி மாதிரி ஏதோ ஒரு ஆயுதத்தையும் தோளில தொங்கப் போட்டபடி போகினம்."
101

"அது வாழைப் பொத்தியில்லை. கையில லேசா எடுத்துச் செல்லக் கூடிய ஆர்.பி.யி. ரொக் கெட் லோஞ்சர்."
அவள் திருத்தம் சொன்னாள். “சில பெடியளின்ர கையில் பச்சை மட்டையஞம் இருக்கு. அதேன்.? பென்னாம் பெரிய ஆயுதங் களோட வாற ஆமிக்காரரைப் பச்சை மட்டையால அடிச்சு விரட்டேலுமா..?”
அறியாப் பிள்ளையாய் அவன் கேட்டான். "இந்த மட்டையஞக்குப் பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு ரகு எல்லாத்தையும் சொல்லே லுமா..? சொல்லாமலிருக்கிறது தான் எனக்கு நல்லது. உனக்கும் நல்லது.”
கூறியவள், உதடுகளைச் சுழித்துக் கொண்டு மர்மமாகச் சிரித்தாள்.
"நீர் சொல்ல விரும்பாததையெல்லாம் சொல்லா மல் சிரிச்சுச் சமாளிச்சுப் போடுறீர்.”
"சொல்ல முடியாததை மட்டுமல்ல. காட்ட முடி யாத சிலதையும் நான் உனக்குக் காட்டேல்லை." 'நீ சொல்லாட்டிலும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அரச படையின்ர இரக்கமில் லாத கொடுமையை. வசதியள் ஏதுமில்லாத நிலை யில மல்லாடின சனங்களுக்குச் சேவை செய்த டாக்குத்தர்மார், நேர்ஸ்மார், அரச உத்தியோகத்தர், தொண்டு நிறுவன ஆக்கள் எண்டு எல்லாருமே நல்லது செய்திருக்கினம். பேப்பர் பார்த்து, அம்மா சொல்லச் சொல்ல நான் கேட்டிருக்கிறன்'
"இவையள் மட்டும்தானா..? 'இல்லை இன்னுமிருக்கு. எங்கட வீடு வாசலை, உசிரை, மரியாதையை எல்லாம் இயக் கப் பெடியள் தான் காப்பாத்தினவை எண்டு அம்மா சொல்லிறவ."
"இதுகள் மட்டுமில்ல. எங்கட உரிமை, தேசம் எண்டு கதைச்சு உண்மையா நடந்தவை. இப்ப அவையஞக்கு இறங்குமுகம். அவையிட கனவுக ளெல்லாம் கலைஞ்ச நிலையில், அவையஞம் அழி ஞ்சு நாமளும் அழிஞ்சு. மிஞ்சியிருக்கிற சில ஆக் கள் மட்டும் வேரும் விழுதும் இழந்து அலையிறம்." கொப்பளிக்கும் துயருடன் சொல்லி வந்த செல்வி, அவனை விட்டு, தூர விலகி விலகிப் போவது போல அவனுக்குத் தோன்றியது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 104
பனி மூட்டத்தின் அடர்த்தி அவளைச் சூழ ஒரு ஒளிப் பொட்டாய் மாறிவிட்ட அவள், நகர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து, விரைந்து சென்ற ரகு, அவளை அடைய முடியாத திகைப்புடன் நின்றான்.
*செல்வி. இனி. இனி. எனக்காக 6 JLDITL LT6TTIT....?'
படரும் துயரமும் ஏக்கமும் அவனுள் கவிந்து அவனை வருத்தியது.
★大★★大
கடந்த சில மாதங்களாக, அவனது இருப்புக்கும் உயிர்ப்புக்கும் ஆறுதலாயிருந்த செல்வி, காணா மலே போய்விட்டது போன்ற பிரமை அவனுக்கு. அது அவனுக்கு மிகுந்த துயரத்தைத் தந்தது.
இப்பொழுதெல்லாம் கணக்குப் பாடவேளைக ளில் செல்வி தந்த ஆட்டுப் புழுக்கைப் பென்சில் தான் அவனுக்கு உதவியாக இருக்கிறது.
அந்தப் பென்சிலால் அவன் போடும் கணக்குக ளெல்லாம் சரியாக வந்து விடுகின்றன. ஆனால், அவனது பென்சிலைத் தொட்ட மாத்திரத்தில் அவன் போடும் கணக்குகள் பிழைத்துவிடுகின்றன. அதனால் கண்ணாடிப் புடையனின் பிரப்பம் பழங்கள் அவனுக்கு இப்பொழுது தாராளமாகக் கிடைக்கின்றன.
சரஸ்வதி மாலையில் சில பாடல்களை, நாளைய தினம் அவன் ஒப்புவிக்க வேண்டும். அது முடியுமா? செல்வி வந்தால் தான் எதுவும் முடியும், போல அவனுக்கு இருந்தது.
அவளுடைய வீடு எங்கு இருக்கிறது என்பதை அவன் முன்னரே தெரிந்து வைத்திருந்தான். சாட்டி மண்கும்பான் வீதியில், பிரசவ ஆஸ்பத்திரிக்கு அப்பால், அழகருடைய பனங்காணியில் போடப்ப ட்ட கொட்டிலில் இருப்பதாகத்தான் அவள் இவனுக்குச் சொல்லி இருந்தாள். அழகர் அவளு க்குத் தூரத்து உறவு. யுத்தத்தின் பின்னர், வன்னி, இராமநாதன் முகாமிலிருந்து இடம்பெயர்ந்து வந்தபோது. இந்த இடமாவது கிடைத்ததே." என்ற திருப்தி செல்வியின் அம்மாவுக்கு.
பாடசாலை மணி அடித்ததும் புளியடியைக் கடந்து, ஆஸ்பத்திரியடிக்கு வந்தபொழுது: செல்வி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

வீட்ட போனாலென்ன..? அவளைப் பள்ளிக்கூடத் துக்கு வரச் சொன்னாலென்ன..? என்று அவனது மனதுக்குத் தோன்றியது. அவள்தான் அவனுக்கு எல்லாம் என்ற நிலையில் அவளது உடனிருப்பு அவனுக்கு அவசியமாக இருந்தது.
வீதியால் நடந்து, கிழக்கே திரும்பிய பொழுது, அழகருடைய வீடு தெரிந்தது. வீட்டுக்குத் தெற்குப் புறமாகப் பனந்தோட்டம். பனந்தோட்டத்தை நோக்கி நடந்தான். திறந்து கிடந்த வளவில், கிழக்குப் பக்க மாக பனை ஒலையால் வேய்ந்த குடிசை இருந்தது. முன்பக்க மறைப்பாக ஒரு சீமால் சீமாலுக்கும் பனை ஓலைதான் பயன்படுத்தப்பட்டிருந்தது.
குடிசைக்குக் கிட்டவாக வந்தவன், "செல்வி!” என்று குரல் கொடுத்தான்.
இவனது குரல் கேட்டு, முப்பது வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.
இவதான் செல்வியின்ரை அம்மாவா..? அவவு க்குப் பின்னாலை ஒரு புள்ளி நாய்க்குட்டியைத் தூக் கிக் கொஞ்சிக் கொண்டு வாறது ஆர்.? செல்வி யின்ரை தங்கச்சியா..? ஆனால் செல்வி. அவளெ ங்கே...? என்ரை குரல் கேட்ட உடன ஓடி வந்திருப் பாளே. ஏன் வரேல்லை.?
மனக்கிலேசத்துடன் அவன் அம்மாவைப் பார் த்து, "செல்வி..?" என்றான்.
குலுங்கியவள், கண்களிலிருந்து நீர் சேர:
'தம்பிக்கு.?
*செல்வியைத் தெரியும். என்னோடதான் படிக்
ஆச்சரியம் தாளாத செல்வியின் அம்மா
"இருக்காதே. அவள். அவளைப் புதுக்குடியி ருப்பில தவற விட்டிட்டு. நாங்க இங்க வந்திட்டம் ராசா. அவள் இங்க எப்படி..?”
"புதுக்குடியிருப்பா..? தவறிப் போனாவா..? கடந்த சில மாதகாலமா எங்கட பாடசாலைக்கு வாறாவே. நீங்கதான் பள்ளிக்கூடத்தில சேர்த்து விட்டதாக வேற சொன்னவ."
முட்டி வந்த அழுகையை நிறுத்த முயற்சித்த போதும் அம்மாவால் அது முடியவில்லை. குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
102

Page 105
ஆதரவாகப் பார்த்தவன், அவளைப் பார்த்துக் கேட்டான்:
"அவவின்ரை பயிற்சிக் கொப்பியள். புத்தகங் கள் ஏதாவது உங்களிட்டை இருக்கா..?
'கொண்டு வந்த கொஞ்சச் சாமான்களோட அவை கிடக்கு ராசா. அவதான் வள்ளிபுனத்தில இருந்து வெளிக்கிடேக்க சூட்கேசில ஏதேதோ எடு த்து அடுக்கினவ. இரண்டு சூட்கேசுச் சாமான். ஆனால் ஒண்டைத்தான் எங்களாலை கொண்டு வர முடிஞ்சது.”
உள்ளே சென்றவள், சில நிமிடங்களில் வெளியே வந்தாள். வந்தவள், அவனது கரங்களில்- சில புத்த கங்களையும் இரண்டொரு பயிற்சிக் கொப்பிகளை யும் குறுணிக் குறுணிப் பென்சில்களையும் வைத்தாள்.
கொப்பிகளைப் புரட்டிப் பார்த்தான். முதல் பக் கத்தில், பென்சிலால்- முத்து முத்தாக அவளது பெயர் எழுதி இருந்தது.
"இதுகளை நான் எடுத்துக் கொள்ளட்டுமா..?” செல்வியின் தாயாரிடம் அவன் கேட்டான்.
“தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளண்."
புத்தகங்களையும் பயிற்சிக் கொப்பிகளையும்ஏன் பென்சில்களையும் கூட அவன் வாங்கிக் கொண்டு புறப்பட்ட போது, அவள் ஓடி வந்து அவனை அனைத்தபடி "செல்வியை நீ பாத்த னியா..? இனிமேலும் பாப்பாயா..? வந்தால் இஞ்சை என்னட்டை வரச் சொல்லப்பு.!"
பதில் ஏதும் தராமல் கண்களில் நீர் மல்க நின்ற வன், அவளைப் பிரிய மனமில்லாதவனாய், தளர்ந்த நடையோடு, பனங்கூடலை விட்டு வெளியே வந் தான். அவனுடன், செல்வியும் வருவதான ஓர் உள் ளுணர்வின் உறுத்தல் அவனுக்கு.
திரும்பிப் பார்த்தான்; பார்த்தபொழுது, நிஜத்தில் அவள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. நெருக்க மாக வந்தபோது, அந்த அபூர்வ காட்டு மலர்களின் வாசனையும் அவளுடன் கூடவே வந்தது. அதன் வசப்பட்டு அதில் திளைத்தவன் அவளையே பார்த்த படி நின்றான்.
அவனது பார்வைக்கு, அவளது உருவம் இப்பொழுதும் தெளிவில்லாமலே தெரிந்தது.
103

‘புதுக்குடியிருப்பில், இவளது கன்னத்தில் பார்த்த காட்சிகளோடு தான் இவள். இவள் தனது சுயத்தை இழந்து, முதன் முதலாக நீரின் நிறமாக Longfoot Teitst...?'
நான் யாரென்பதை கால முதிர்வு தான் உனக் குக் கற்றுத் தருமென்றாளே. அந்த மந்திரச் சொல் லும் இப்பொழுது இவளது அம்மாவைக் கண்டு பேசியதும் உண்மையாகிவிட்டதே."
இவளது அம்மா கூறியது போல, புதுக்குடியிருப் பில் தான் இவள் காணாமல் போயிருக்கிறாள். இருந்தும், எனக்கும் என்னைச் சூழ உள்ளவர்களு க்கும் இவளால் எப்படி. எப்படிச் சிதைவுகளோடு கூடிய காட்சி ரூபமாக ஆகிவிட முடிகிறது..?
'இது ஏன். ஏன் இவள் இப்படி..? என்று குழம்பியவன், அவளைப் பார்த்து வாஞ்சையுடன் கேட்டான்:
"நாளைக்குப் பள்ளிக்கூடம் வருவியா..? இர ண்டு நாள் நீ வராதது எனக்கு எவ்வளவு கஷ்டமாப் போச்சு. கண்ணாடிப் புடையன் என்னை அடிச்சே கொண்டு போடும் போல கிடக்கு."
"வருவன். கட்டாயம் வருவன். வாழ் நாள் பரியந்தம் உனக்கு இனிய துணையாக இருந்து, எல்லாத்திலும் கை கொடுக்கப் போவது நான் தானே ரகு."
கூறியவளின் உதடுகளில் தவழ்ந்த சிரிப்பில் பல சாயல்களை அவன் கண்டான். அம்மாவைப் போல. ஆச்சியைப் போல அவள் இருந்தாள். அந் தச் சாயல்கள் எல்லாவற்றையும் விட, அவனுக்கு தாம்பூலம் தந்த தேவி சரஸ்வதியின் சாயலே சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது.
"செல்வீ!’ என்று பரிதவிப்புடன் கூவியவன், மீளவும் அவளைக் காணாதவனாய்த் துயருற்றான்.
தூரத்தில் அம்மா வந்து கொண்டிருப்பது தெரிந் தது. நேரமாகிவிட்டது என்ற பதைபதைப்புடன் அவள் வருகிறாளா..? ஒடிச் சென்றவன், அம்மாவின் கால் களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மினான்."
'அவனுக்கு வழிகாட்டி, அரவணைத்துச் செல்ல எத்தனை. எத்தனை தெய்வங்கள்.”
அழுகை, மெல்லிய சிரிப்பாக, அவனது உதடு களை மருவி மலர்ந்தது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 106
Vegọges 29
சர்வதேச தமிழ் நீண்டகாலமாக முன் கடந்த 2010 ஜனவரி
48க்து ஆண்டு பூர் இதயசுத்தியுடன்
அனுபவப் பகிர்வாக
முன்னெடுக்கப்பட்டன. நண்பர் ஜெயகாந்தனை இலங்கைக்கு
இற்றைவரையிலிருக்கிறது.
நானும் அவரை இறுதியாக சென்னை அப் மல்லிகை ஜீவாவின் விருப்பத்தை தெரிவித்தேன
இறுதியாக இலங்கை புறப்படுவதற்கு சில தின கொண்டு அழைத்தேன். தமது உடல் நலக்குை சொன்னார். அவர் மீது மிகுந்த அன்பும் அபிமா பணியாற்றும் நண்பர் கனடாமூர்த்தியின் உருவா! அதனை எமது மாநாட்டில் திரையிடுவதற்கு அனு
திரையிடுங்கள். எனது அனுமதி எதற்கு? மாந
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வரும்: நண்பர் மூர்த்தியுடனிருந்து குறிப்பிட்ட ஆவண குறும்படங்களும் ஆவணப்படங்களும் தயாரித்த மூர்த்தியிடமிருந்ததை அந்த இரண்டு நாட்களும்
ஒரு படைப்பை முடிந்தவரையில் தனக்குத் உறக்கமின்றி இயங்கும் அவரது இயல்பு என்ை எடிட்டிங்கில் அவர் மேற்கொண்டதும், அத ஆரம்பிக்கவிருப்பதையும்பற்றி அவர் சொன்ன பன்மடங்காக காட்டியது.
அவருடைய கடின உழைப்பு பற்றி சிங்கப்பு சொன்னபோது,
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 

லுத்தல்
-முருகபூபதி
எழுத்தாளர் மாநாடு தொடர்பான பணிகளை
னெடுத்துவந்த போதிலும் தீவிரமான இயக்கம் முதல் ஆரம்பமானது.
இறுக்கம் தளர்த்தி நெருக்கத்தை உருவாக்கும் வே மாநாட்டின் செயற்பாடுகள் மல்லிகை ஆசிரியருக்கு அவரது நீண்டகால
அழைக்கவேண்டும் என்ற விருப்பம்
பல்லோ மருத்துவமனையில் சந்தித்தபோதும் it.
ங்களுக்கு முன்னரும் ஜெயகாந்தனுடன் தொடர்பு ]றபாடுகளினால் வருகைதரமுடியாதிருப்பதாகச் னமும் கொண்ட சிங்கப்பூர் பொது நூலகத்தில் க்கத்தில் ஜெயகாந்தன் ஆவணப்படம் தொடர்பாக றுமதிகோரினேன்.
ாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றார் ஜே.கே.
வழியில் சிங்கப்பூரில் இறங்கி இரண்டு நாட்கள் ப்படத்தைப்பார்த்தேன். ஏற்கனவே அவர் சில வர். ஒரு நல்ல கலைஞனுக்குரிய இயல்புகள்
என்னால் அவதானிக்க முடிந்தது.
)திருப்தியாக உருவாக்கும் வரையில் ஊண் ன வியக்கவைத்தது. திருத்தங்களை நுட்பமாக
ன் இரண்டாம் பாகத்தை இலங்கை வந்து தும், அவருக்கு ஜே.கே. மீதுள்ள பாசத்தை
பூர் எழுத்தாளர் இராம. கண்ணபிரானிடம் நான்
104

Page 107
“அவருக்கு நாங்கள் ‘ஜெயகாந்தன் மூர்த்தி’ என்றுதான் புனைபெயர் சூட்டியுள் ளோம்” என்றார்.
ஜே.கே. ஆவணப்படத்தை எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்காகவே, அதற்குப் பொருத்தமாகவே கனடா மூர்த்தி இயக்கியிருக் கிறார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அதில் குறிப்பிட் டிருக்கும் 'முரண் அறுத்தல்’ என்ற சொற்பதம் இன்றைய காலகட்த்தில் முக்கிய பேசுபொரு ளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எமது மாநாட்டின் நோக்கத்திலும் ஊடுபாவாக இழையேடியிருப்பதும் இந்த முரண் அறுத்தல் தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்.
ஒவ்வொருவரதும் படைப்பு ஆளுமையும் தனிப்பட்ட ஆளுமையும் இந்த முரண்பாடு களை அறுப்பதிலும் பெரிதும் தங்கியிருக் கிறது. முற்போக்குச்சிந்தனை கொண்ட, ஒரே அணியிலிருந்து இயங்கிய பலரிடத்திலும் முரண்பாடுகள் நீடித்துக் கொண்டுதாணிருக் கின்றன. பேச்சுவார்த்தைகளின் மூலம் பல சிக்கல்களையும் முடிச்சுகளையும் அவிழ்க்க (UDIQU||D.
எமது மாநாட்டுக்கு எதிராகவும் சாதகமா கவும் பாதகமாகவும் இணையத்தளங்களில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்தும் விதமாக சொற்களை அள்ளி எறிந்தபோது, நான் மிகவும் கவலைப் பட்டேன். "இதற்குத்தானா இத்தனை நாட்கள் இரவுபகலாக நானும் என்னுடன் இணைந்த வர்களும் உழைத்தோம்” என்ற சலிப்புக்கூட வந்தது.
“எல்லாமே அனுபவம் தான்’ என்று எடுத்துக் கொண்டு தொடர்ந்து இயங்கும்’ என்று டொமினிக் ஜீவா உற்சாகப்படுத்தினார்.
10S

அனுபவம் சிறந்த பள்ளிக்கூடம்தான்.
மாநாட்டில் இடம்பெறவிருக்கும் அரங்குகள் யாவும் அனுபவப்பகிர்வுக்குரியவை. அத்துடன் கலந்துரையாடல்கள், இதுவரை காலமும் நீடித்த தப்பபிப்பிராயங்களை களைவதற்கும் வழிவகுக்கும். ஈழத்து கலை, இலக்கிய ஊடகத்துறையில் புதிய தலைமுறையினரின் பங்களிப்பு முக்கியத்துவமானது. அவர்கள் 21 ஆம் நுாற்றாண்டில் வாழ்பவர்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டிருப் பவர்கள். இலக்கியப் படைப்புகளில், ஊடகச் செய்திகளில் செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, சிற்றிதழ்கள், வலைப்பதிவுகள், சிறுவர் இலக்கியம், போர்க்கால மற்றும் புகலிட இலக்கியம், குறும்படம், நாடகம், கூத்து, இசை நாடகம் முதலான துறைகளில் புதிய தலைமுறைக்கும் மூத்த தலைமுறைக்கும் இடையே நீடிக்கும் கருத்து முரண்பாடுகளை பகிர்ந்து கொண்டு தெளிவுகளை தேடுவதற்கும் மாநாடு வழிகோலும்.
மாநாட்டு அரங்குகள் எவ்வாறு அனுபவப் பகிர்வாக மாறுகிறதோ அவ்வாறே, பணிகளில் ஈடுபட்டுழைப்பவர்களுக்கும் ஒரு Team Work இல் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற படிப்பினைகளும் கிட்டும். படைப்புகளுக்கும் செய்திகளுக்கும் செவ்விதாக்கம் இன்றிய மையா திருப்பது போன்று அமைப்புப்பணி களிலும் எமக்கு செவ்விதாக்கம் அவசியமா கியிருக்கிறது.
ஒரு ஆவணப்பட தயாரிப்பில் செவ்விதாக் கத்தின் (Editing) முக்கியத்துவத்தை அருகிருந்து பார்த்ததன் வெளிப்பாடே இந்தப்பத்தி.
திருப்தியின்மைகளும் முரண்பாடுகளின் மூலம், முரண் அறுத்தலின் ஊடாக திருப்தி யான புரிந்துணர்வை வளர்க்க முடியும் என நம்புகின்றேன்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 108
உணர்வுகளால் திறிேல் வலி
ஒரு புன்னகைச் சமிக்கையும் கடல் கடந்த உறவின் விசலும் உடலில் ஒரு(து)ங்கும் உணர்வுகளால் மோதிக் கொள்ள உயிர்த்திருக்கும் பொழுதுகள்
புவியாத இறுக்கங்களில் பிகின்ற வெடிகங்களில்
உணர்வுகள் திமிதி உடலை வலிக்கின்றன. 6čK. ബ
வெற்றுப் பறவையாய் இறக்கைகளை உதிர்த்து るア ി 6S) uறக்க முனைகின்ற
ஒறeடத்தில்
காதல் கவிதை
ஒறடல் கொள்ளும்.
விடுகைvபீன் நினைவுகள் கவிந்த \ιρτυαύ- Ο2
01. விeடுச் சுவரில் தொங்குகின்ற GV3 6val Gunság)
பின்புறத்தில் ைெது வளாக நினைவுகள் 9tuals 6VA6
ஒeடியிருக்கின்றன.
நண்Uர்கள் வாங்கித்தந்த uசில்களும் நினைவுச் சின்னங்களும் s N
அழகாக அடுக்கப்Ueட அலுமnfயின் R யன்னல்களைத் தeடி မှိ;့်””၊ (།།
Uழைய நினைவுகளுடன் ன்ெனை கைகுலுக்குகின்றன.
இறுதியாக ufமாநில விருந்துபசாரமும், நோன்புக் கஞ்சியும் நாக்கில் எச்சில் eெneடால் ஒஹறுகின்றது. కె.
நினைவுப் பதிவுப் புத்தகங்களில் y எழுதிய சொற்களும் na y இடிக்கடி விநோதமாய் ~گا۔ --مح ufமாநில குறுந் தகவல்களும் (ar இன்னும் சிலவும் ஒப்Uடியே
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

கல்வெட்டால் நெஞ்சில் இறைந்து கிடக்கின்றன.
9that day () மரநிழலில் விழுந்து கிடக்கும் ஐஸ்கிரீம் கோப்பைகளும்
منه"، ميزة فt 4،
கடலை வெற்றுப் பக்கeகளும் சக தோழர்களுடன் குதூகலித்த
ஹாஸ்ய uெnழுதுகளை
9ay நினைவுகள் நிரல்படுத்துகின்றன. இறப் போன சிநேகிதர்களின்
முகங்களை '9be6un89nü' Vub Gunay திரும்பி பார்க்கிறேன் பல்கலைக்கழக நினைவுகளை
02. சிலந்தி வலை பின்னில் பெத் uேncடோவில்
நெளிந்து செல்லும் நினைவுக் காவிக்ளின்
90ual6 அறையைச் ஆழ்ந்து ஒலிக்கிறது.
நeயில் ஆழவேரூன்றிய unடல்
இறுதியாக பரிமாநில
காதல் வார்த்தைகளைப் போல்
கட்டியனைத்துப் பகிர்ந்து கொண்ட
கண்ணித் தோரணங்களின்
உணர்வுப் பிற்க்ஞையை
விலைமதிப்பற்ற மொழியில்
நினைவூeடிச் செல்கிறது.
) P- **** XXX ஒரு காவில்ம் நிறைந்த 一、 8x8 x8 Uல்கலை வாழ்வின் விடுகையை
E சாந்தப்படுத்த முடியாமல்
இ W ஒறமைக் குயில் அலறுகிறது.
: ஜண seo é A சுவாலை விந்து கதறியஆரியன்
Uயங்கரமான இடிமின்னல்
யுயல்காற்று ஆறnவெளி பெரும் வறடீசி அல்லது
வெள்ளப் uெருக்கு
ပုပ့္်ဇံ၏ இப்படி ல்ெலாவற்றையும் கடந்து
இந்தப் பிரிவின் துயர் கவிந்த unடல்
ஒலிக்கிறது.
O6

Page 109
உள்ளே நுழையும் போதே அந்த இதமான மன பார்த்து முறுவலித்தாள். முன்னரைப் போல சடைத் நின்றது. குனிந்து சில பூக்களைப் பொறுக்கினாள். வருடங்களுக்கு முன்பான ஒரு காலப்புள்ளியில் குவி
பவளமல்லிகையை அண்டி வெளியாகக் கிட கொண்டிருந்தது. அவளும் நண்பிகளும் சிற்றில் க வீற்றிருந்தார்.
"அம்மா, ஒருவரையும் காணேல்லை’
"பரவாயில்லை, உள்ளே ஆக்கள் இருப்பினம்!”
கால்களுக்கு அது பழகிய பழைய தடம். கட் வேலையாட்கள் அங்குமிங்கும் ஒடித் திரிந்தார்கள். இ அறையும் சத்தம் இவற்றின் நடுவே, பாதி தகர்க்கப்ட நின்றது. 'கவின் கலாலயம் பெயர்ப்பலகை காணாமற் ஒய்ந்து போயிருந்தன. கமலா ரீச்சர் தட்டும் ஜதிக்கு பட்டுக் குரல்கள். நினைவில் வந்தன. அவற்றின் ச கோபம் வந்தது. பல வருடங்கள் ஒடித்தான் விட்டன!
"யார் நீங்கள்? சிங்களத்தில் அதட்டிய குரலில் ஒருவர். அனுமதி பெறாமல் நுழைந்தவர்கள் மீதான
"நாங்கள். ஆனந்தன் ஐயாவைப் பார்க்க வந்தி அலட்சியமாக அவர் கைகாட்டிவிட்டார். பழைய மண் செய்து கொண்டிருந்தார்.
‘என்ன விஷயமா வந்தீங்க?"
'ஆனந்தன் எண்டு. இங்க இருந்தார். அவரை
"அவர் இப்ப இல்லை. இறந்து போயிட்டார்”
“• = = = = 6τιIι 2’’
"ஒரு வருசத்துக்கு முதல் எண்டு சொல்லிச்சினம்
அவள் ஒருகணம் ஊமையானாள். தந்தை போ நினைத்து வந்தவை எல்லாம் ஒரு பெருமூச்சில் சரு
"நீங்கள் எங்க இருக்கிறீங்கள்?’ அந்த இளைஞர்
107
 

ாம் மூக்கைத் துளைத்தது. அவள், மகனை நிமிர்ந்து து இல்லாதபோதும், இன்னும் பவளமல்லிகை அங்கே ஆ.! நெஞ்சில் நினைவுகளின் வாசம். மனம், இருபது ந்தது.
ந்த இடத்தில் புதிதாக ஒரு கட்டிடம் முளைத்துக் ட்டி விளையாடிய இடத்தில் சின்னதாக ஒரு கடவுள்
-வசந்திதயாரன்
டிட வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இயந்திரங்களின் இரைச்சல், படார் படார்’ என்று ஓங்கி பட்ட நிலையில் அநாதையாக அந்த மண்டபம் தனியே போயிருந்தது. அங்கே சுநாதமாகக் கேட்ட சத்தங்களும் பரதம் ஆடும் பிஞ்சுப் பாதங்கள், சங்கீதம் பயில்கின்ற வடுகளை அழித்துவிட்ட காலத்தின் மீது அவளுக்குக்
அவள் திரும்பினாள். செக்யூரிட்டி சீருடையில் நின்றார் சிடுசிடுப்பு அவரது முகத்தைக் கோரமாக்கியது.
lருக்கிறம்” என்ன சொல்கிறார்கள் என்பது புரியாமலே டபத்தின் அலுவலக அறையில் ஒரு இளைஞர் வேலை
* சந்திக்க வேணும்"
ல் அன்பு காட்டிய அந்த மனிதர். அவரோடு பேச காகக் கருகின.
G8E85*LTñT.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 110
"ம். நாங்கள் இப்ப வெளிநாட்டில. முந்தி இங்க 'கலாலயத்தில் நான் படிச்சனான்’
அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். கால்களை மடக்கி உட்கார்ந்தபடி அன்றுபோலவே மகாத்மா காந்தி, நேருவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந் தார். அந்தப் பழைய காலப் போட்டோ பழுப்பு நிறமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கலைக்கூடத் தின் நடுநாயகமாக வீற்றிருந்த நடராஜர் சிலை, புழுதி பூசி இன்று பீடமின்றி வெறுந்தரையில் நின் றது. சந்திரா, மாலா, அவள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு பவள மல்லிகையைப் பொறு க்கி, ஒடோடிவந்து நடராஜரின் பீடத்தில் வைப்பது அவளுக்கு நினைவு வந்தது.
“இது பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் நவீன வசதி எல்லாம் வரும்'
அவர் அவளது பார்வைக்கு ஏதேதோ அர்த்தம் u600T600 6SLLITft.
அவள் மரியாதைக்காகப் புன்னகைத்தாள்.
't. . . . . இப்ப இங்க வகுப்புகள் நடக்கிறேல் 60)6but?”
'இல்லை. இப்ப நாங்கள் இந்த இடத்தை வாங்கிட்டம். ஒரு திறமான ஹொட்டல்தான் அங்கை எழும்புது”
இனி என்ன பேசுவது? இவருடன் பேச அவளி டம் ஒன்றுமில்லை. அவளது நினைவுகளின் சுகந்த த்தைப் பகிர்ந்து கொள்ள இங்கு எவருமில்லை.
ஒரு மனிதனின் மறைவு, விட்டுச் செல்லும் இடைவெளி புதைந்து போகும் பதிவுகள். புதைக்கப்படும் இனிய நினைவுகள். அறுந்து போகும் உறவுகள்
அவள் புறப்பட எழுந்தாள்.
பவள மல்லிகை, பூக்களைத் தூவி அவளுக்கு விடை கொடுத்தது. பொறுக்குவாரற்று மிதிபடும் அந்தப் பூக்களைப் போலவே, மனதில் பூத்த நினைவுகளும்!
'இதுதான் முந்தி இருந்த ஒரேயொரு பேக்கரி, பாணுக்குத் தட்டுப்பாடான காலத்தில் காலமை
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

மூன்று மண்ணிக்கு இதில கியூ நிக்கும். நாங்களும்
சொல்லச் சொல்ல முடியாத கதைகள்!
இந்த ஊரும் மக்களும் மகனுக்குப் புதிது. ஆனால், இந்தத் தெருக்களில் நடந்து போக ஆசைப்படும் அம்மாவின் உணர்வுகளை அவன் புரிந்து கொண்டிருந்தான்.
"இன்னும் இரண்டு றோட் தாண்டினால் எங்க வீடுவரும்'
இரண்டு தசாப்தங்களின் பின்னும், சொந்தமில் லாத வீட்டை ‘எங்கட வீடு' என்று உரிமையோடு சொல்லும் அவள்! மகன் உதட்டில் முன்முறுவலு டன் கூட நடந்தான்.
அந்த ஒழுங்கையில் ஆள் நடமாட்டமே இல்லை. முன்பெல்லாம் திறந்தே கிடக்கின்ற வீட்டுக் கதவு கள் சாத்திக் கிடந்தன. வீடு நவீனமாக உருமாறி இருந்தது. அவள் தயங்கி நின்றாள். நாயின் குரைப் பில், ஒரு வாலிபன் எட்டிப் பார்த்தான்.
'எக்ஸ்கியுஸ் மீ. மிஸ்டர் பாலேந்திராஸ் ബ്ബഖണ്ഡ..?
"அவர்கள் இப்போது இங்கில்லை. இது எங்கள் வீடு' என்று ஆங்கிலத்தில் பதில் தந்த அவன், உள்ளே போய்விட்டான். கதவு மூடிக் கொண்டது.
அவள் செய்வதறியாது நின்றாள்.
'g..... பாலேந்திரா மாமாவும் வீட்டை வித்திட் டார், போல.”
அந்த மூடிய கதவின் பின் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் பழைய வாசனைகளை முகர அவள் ஏங்கி நின்றாள். அந்தக் காற்றில் நுண்மை யாகக் கலந்திருக்கும் தன் உறவுகளின் குரல்கள், தனது மகனை வாழ்த்தி வருடக் கூடாதா? என்று ஆசைப்பட்டாள். மூடியிருந்த கதவுகள் அவளைத் துயரத்தோடு பார்த்தன. எத்தனையோ ஆண்டுகள் அவளது பெற்றோர் வாழ்ந்த வீடு. அவள் சிறுமி யாய்த் துள்ளித் திரிந்த வீடு இந்த வீட்டில் நுழைய அவளுக்கு இன்று அனுமதியில்லை.
காலம் ஆடிய குரூரமான தாண்டவங்கள் திடீர் காட்சி மாற்றங்கள், கைமாறல்கள், இழப்புக்கள்.
108

Page 111
அவள் முன் படமாய் விரிந்தன. பல்லாயிரம் மைல் கள் தாண்டி அவள் காவி வந்த கனவு வீசுகின்ற காற்றோடு அள்ளுண்டது.
"9|bLDIT...."
அவள் சுதாகரித்துக் கொண்டாள்.
“பக்கத்து வீட்டில அல்மேடா அங்கிள் குடும்பம் இருப்பினம். எட்டிப் பாத்திட்டுப் போவமா மகன்’
கதவைத் திறந்த பெண் மெரில்டாவின் முகச் சாடையில் இருந்தாள்.
"ggl..... மெரில்டா வீடுதானே?"
“é!!DT... ... நீங்க யாரு?"
"நான் அவட பிரண்ட், மெரில்டா இருக்கிறாவா?”
"மெரில்டா அத்தை குடும்பத்தோட இந்தியா போயிட்டாங்க. இப்ப நாங்கதா இருக்கோம்."
“ஒ. ! அப்ப ஜயசேகர வீட்டுக்காரர். இருக்கினமா?
"அவங்களா. வீட்டை வாடகைக்கு விட்டிட்டா ங்க. எங்கன்னு தெரியலை." அவள் யோசிப்ப தைக் கண்டு அந்தப் பெண் மீண்டும் கேட்டாள்.
'அத்தைக்கு ஏதாச்சும் சொல்லணுமா..?”
ஏதாச்சும்.? மண்வீடு கட்டியதும், ரேடியோவில் புதுவெள்ளம் கேட்டுக் கிளுகிளுத்ததும், பாடியதும் ஆடியதும். உனக்கு நினைவிருக்குமா மெரில்டா?
"b...... ஒண்டுமில்லை. பக்கத்துவீட்டுத் துரை சிங்கத்திட மகள் வந்தா எண்டு சொல்லுங்கோ'
ஒழுங்கையின் அடியில் கரும்பூதம் போல நின்ற புளியமரத்தைக் காணவில்லை. சுமனாதான் புளியங்காய் நிறைப் பொறுக்குவாள். ஒரு வீட்டு வாச லில் உட்கார்ந்து அதை வாயில் போட்டபடி கதைப் பார்கள். எட்டுக் கோடு விளையாடுவார்கள்.
அப்பா அவளுக்கு ஒரு சின்னச் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். அயலில் உள்ள பிள் ளைகள் மாறி மாறி சைக்கிளில் தொற்றிக் கொள்ள, அவள் பெருமையாக ஒடித் திரிவாள். சமிந்த, சும
109

ணாவின் அண்ணாதான். குழப்படி. அடிக்கடி சைக் கிளைப் பிடுங்கிவிடுவான். அவளும் சுமணாவும் அழுது முறையிட்டு. சைக்கிளை மீட்பதற்கிடை யில் அவன் நிறையத் தடவை ஆசைதீர ஒடிவிடு வான். சைக்கிள் கிடையாத நாளில் இரகசியமாகக் கிள்ளுவான். தலையில் குட்டுவான்.
‘லிலா அன்ரி. சமிந்த நுள்ளுறான்!”
தினமும் அம்மாவிடம் தமிழ்ப் பேப்பர் இரவல் வாங்கி எழுத்துக் கூட்டிப் படிக்கும் லீலாவதி அன்ரி, அவளது தலையை அன்போடு தடவுவாள்.
“சரி. சரி மவள். நான் அவனுக்கு நல்ல அடி போடுறது. நீங்க போய் வெளாடுங்க”
அன்று மாலை, அம்மாக்களின் மாநாட்டில் பிள்ளைகளின் இந்தக் குறும்புகளைப் பகிர்ந்து அவர்கள் சிரிப்பார்கள். சுமணாவின் அப்பா ஜயசேகர வும், அல்மேடா அங்கிளும், அவளின் அப்பாவும், ஞாயிற்றுக்கிழமைகளில் உலக நடப்புகளை அலசு வார்கள். பிள்ளைகள் நல்லநாள் பெருநாளில் கிரி பத், பொங்கல், வடைகளோடு வீடுகளுக்குப் போய் வருவார்கள்.
"சமிந்த போடா. உன்னை விளையாட்டில சேர்க்கமாட்டம்.” இரண்டு நாட்கள் கோபம் போட்டாலும், கள்ளன் பொலிஸ் விளையாட்டுக்கு சமிந்தவும் ராஜனும் கட்டாயம் தேவை. நன்றாக ஒடிப் பிடிப்பார்கள். அந்த ஒழுங்கையில் பல வீடுக ளுக்குள்ளும் அனுமதி இன்றி நுழையும் அதிகாரம், கள்ளனுக்கும் இருந்தது. பொலிசுக்கும் இருந்தது.
“சுமணா, மெரில்டா. வாங்கோ ஐயர் அன்ரி வீட்டுப் பின்பக்கம் ஒளிப்பம்"
சமிந்தவும் ராஜனும் வீடுவீடாக ஏறி இறங்குவார் கள். ஆனால், உருத்திராட்சமும் கையுமாக இருக் கும் பாட்டியம்மாவின் ஏச்சுக்குப் பயந்து அங்கே Lo”GSub 6 JJL DIT "LITTE56T.
எல்லா வீட்டாரும் கலைத்துவிட்டால். இருக் கவே இருக்கிறது பக்கத்துப் பள்ளிக்கூடம். அது எப்போதும் அவர்களுக்காகத் திறந்தே கிடந்தது. ஒடி விளையாட நிறைய இடம். அப்படி ஒருநாளில்தான், சமிந்த பொலிஸ்’ அவளைப் பிடிப்பதற்காகத் துரத்த. அவள் தலைதெறிக்க ஒடிப் படிகளில்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 112
உருண்டு விழுந்தாள். நெற்றியில் தையல் போட வேண்டியதாயிற்று.
"போவமா, அம்மா..?” மகன் கூப்பிட்டான்.
தெருவே முற்றாக மாறியிருந்தது. ஜம்புக்காய் பிடுங்கித் தின்ற வீட்டின் காணியில், உயர்ந்து நிற்கும் வியாபார நிறுவனம் கூழ் குடிக்க இலை தந்த பலாமரம், பேய் குடி கொண்டிருந்த ஆல மரம். ஒன்றையுமே காணவில்லை.
தெருவின் முடக்குகளில் புதிதாக எழும்பியிருந்த வணக்கத் தலம். கூப்பிடு தொலைவில் இன்னொரு வழிபாட்டிடம் பக்தியுணர்வின் பெருக்கத்தைப் பறைசாற்றிய விதம். அவளுக்குப் புதுமையாகத் தான் இருந்தது.
ஒருபோதும் கோபமே வராத, கடைக்காரச் சேகு தாவு நினைவில் வந்தார். ‘ஐந்து சதத்துக்குப் பல்லி மிட்டாய் கேட்டு அட்டகாசம் பண்ணும் சிறுவர்க ளைப் பொறுத்துக் கொண்ட அற்புதமான மனிதர் 96.fr
நீண்ட தெருவின் வழி, நினைவுத் தடங்களை மீட்டியபடி வந்த அவர்கள், சோதனைக் சாவடியைக் கவனிக்கவில்லை.
"எங்க இருக்கிறது.?” ஒருவன் கிட்டே வந்து கண்களால் துளைத்தான்.
தங்கி நிற்கும் விலாசத்தைச் சொன்னாள்.
“ėèb • • • • • • • அங்க இருக்கிற ஆள். இங்க என்ன சுத்திறது?. எங்க ஐடென்ரி.?”
அவள் கைப்பைக்குள் துளாவி, பாஸ்போட்டு களை நீட்டினாள். அவன் அவற்றை வாங்கி மேலும் கீழும் பார்த்துவிட்டு, பொறுப்பாளரை நோக்கி நடந் தான்.
தற்செயலாகத் திரும்பியவள், அந்த மனிதனைக் கண்டாள். அருகே கொம்யூனிகேஷன் கடைவாச லில் கையில் புகையும் சிகரெட்டோடு அவன், அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ னது பார்வை அவளுக்கு வெறுப்பூட்டியது. தானும் மகனும் காட்சிப் பொருள்களாக. எரிச்சலுடன் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பாஸ் போட்டுகளைப் புரட்டிய அதிகாரி, மகனை ஏதோ
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

கேட்டதும். அவளுக்குத் திடீரென்று பயம் கவ்வியது. மகனின் முகம் சிவந்திருந்தது. இந்தச் சோதனைகள், பேகம் தோரணைகள் எல்லாமே அவனுக்குப் புதியவை. மகன் வெடுக்கென்று ஏதும் சொல்லிவிடக் கூடாது என்று அவள் பக்கத்துத் தெரு மாரியம்மனை நேர்ந்து கொண்டாள்.
கேள்விகள். பதில்கள் அவள் சிறுமியாய், குமரியாய் நடந்த அதே தெருவில் கேள்விக் குறியாகி நிற்கும் அவளது அடையாளம். கேள்விகளால் வடி கட்டப்பட்டு, புதிய முத்திரைகளில் பொறிக்கப்படும் அடையாளங்கள்! மனங்களின் நட்பும், முகங்களின் அறிமுகமும் தொலைந்து போக. அச்சடிக்கப்பட்ட தாள்களில் உறைந்துவிட்ட அடையாளங்கள்
*சரி. சரி. போறது”
பாஸ்போட்டுகள் நீண்டன.
முன்னே நடக்கையில், இன்னும் அந்த மனித னின் பார்வை தன் முகத்தின் மீதே பதிந்திருக்கக் கண்டாள்.
சே. உற்றுப் பார்க்கிறான். பொட்டு வைச்சா இப்படித்தான் பார்ப்பாங்களோ..? எரிச்சலுடன் விலகிச் சென்றவள் காதுகளில் அது கேட்டது.
“ரூபி.!’
அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். அது. SS அவளுடைய வீட்டுப் பெயர்
சிகரட்டை எறிந்துவிட்டு அவன் கிட்டே வந்தான்.
"நீங்க ரூபிதானே..?
“ஓம். நீங்கள்?
அவன் சிரித்தான். அவனது தெத்துப்பல். நினைவில் ஒரு மின்னல் கீற்று.
“ரூபி என்னய மறந்திட்டதா. ?' அவன் மீண்டும் சிரித்தான்.
". சமிந்த."
அவளது நெற்றியில் இருந்த தழும்பை அவன் மீண்டும் உற்றுப் பார்த்தான்.
"ஓங்கட நெத்தியில. நாந்தான ஒடச்சது’
பழைய நட்பின் உரிமையும் நேசமும் அவனது
10

Page 113
வார்த்தைகளில் வழிந்தன. அவளுக்குள் பவள மல்லிகையின் வாசம்
சமிந்தவோடு பேச எவ்வளவோ விஷயங்கள் நெஞ்சுக்குள் முட்டி மோதின. சுமணாவைப் பற்றி. லீலா அன்ரியைப் பற்றி. இன்னும். ஆனால். அவள் பக்கவாட்டில் திரும்பி சோதனைச் சாவடி யைப் பார்த்தாள்.
அங்கே, சந்தேகத்தின் பேரில் விலங்கு பூட்டப்பட் டிருந்தன, அவளின் உணர்வுகள்! உணர்வற்ற உட லாக அவள் நின்று கொண்டிருந்தாள். எதிரே சமிந்த வின் கண்களில் தெரியும் அந்தக் களங்கமற்ற நட்பு இடையே. தொலைந்துவிட்ட அல்மேடாக்களும் துரைசிங்கங்களும்
சில நிமிடங்கள் சமிந்தவோடு உரையாடிவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்.
காரைக் கொண்டு வருமாறு மகன் கைப்பேசி யில் அழைப்பு விடுத்தான்.
நெற்றியில் இருந்த வடுவை அவள் விரல்கள் வருடிப் பார்த்தன. மகன் மெல்லச் சிரித்தான்.
“என்ன சிரிப்பு?
“ஒன்றுமில்லை"
"இன்னொரு நாளைக்கு வருவம், சமிந்தவோட கதைக்க, இண்டைக்கு மூட் குழம்பிப் போச்சுது”
"நான் வரமாட்டன்! மகனின் குரல் இறுக்கமாக ஒலித்தது.
"........ எனக்கு நெத்தியில அடையாளம் ஒண்டும் இல்லை!"
அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனது பார்வை கார்க் கண்ணாடி வழியே வெளியே நிலைத்திருந்தது.
சமிந்தவும் சுமணாவும் மெரில்டாவும் அவளும் விளையாடிய அந்தப் பாடசாலையைத் தாண்டிக் கார் விரைந்தது. இப்போது அதைச் சற்றி உயர மான மதில் எழும்பியிருந்தது.
1 11

Excellent Photographers Modern Computerized Photography For
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Tel: 2526345
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 114
LDTg5/E
மணிக் கன்
விட்டு விட்
6ોJITIgકં த்து என்று எல்லோரு கொள்ளவி
ஒதிப்ப போட்டு க
விட்டு குடிப்பதும் அகமகயீர் அனுமதிக்
-திக்குவல்லை கழால் gp(5 LDr 966.
ருந்தார்கள்.
குர்ஆன் ஒலியும் தேனின் இனிமையும் அவருக்குள் கண்களை மிகத் தெளிவாகவே திறந்தார், ஏதோ சொல்
ரவுற்மதுல்லா மச்சான் நெருங்கிக் குனிந்தார். அ6 கணவன், இறுதிப் படுக்கையாய்.
வலது கையை மெல்ல அசைத்துத் தூக்க முயன்ற
"மச்சான் செல்லுங்கொ’- கவலை தோய்ந்தபடி ை
“ஸித்தியைசவேம் மகளேம் பாத்துக்கோங்க.." கs
அதற்கு மேல் அவர் எதுவுமே பேசியதாக இல்லை வேகமாக மேலுயர்ந்து தனிந்தது.
ரூஹ ைமெல்ல அடங்கிவிட்டது.
மையத்துச் செய்தி ஊரில் பரவத் தொடங்கியது.
அகமகயீரின் மனைவியும் ஒரே மகள் நஸ்ரியாவும் ஒ கதறினர்.
இனசனத்தவர்களும் அக்கம் பக்கத்தவர்களும் ை விட்டனர்.
‘ஸ்லித்தியைசா மகள்ட விஷயத்த நான் ஒங்கட நா ரெண்டுபேரடேம் பேருக்குதானேயீக்கி’
இப்படிப் பல தடவைகள் அவன் சொன்னது இந் எதிரொலித்தது.
“மகள்ட விஷயத்தப்பத்தி ஒளிலியத்து சென்னாம். ரவு பொம்புளக்கி எவளவு கரச்சலன். ம். அல்லா லேச
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

ப்கள் வாரங்களாகி. நாட்களாகி. இப்பொழுது ணக்கு என்ற நிலை வந்துவிட்டது. எல்லோருமே கை டார்கள்.
சுருண்டு போய் கட்டிலில் கிடந்தார் அகமகபீர். ஸகரா சொல்வார்களே, இது அந்த நிலைதான் என்பதை நமே உணர்ந்தபோதும், அதை வெளிப்படுத்திக் வில்லை.
டித்த உமறுலெப்பை வந்ததும் கதிரையை இழுத்துப் ண்களை மூடிக் கொண்டு ஒத ஆரம்பித்தார்.
விட்டு வந்த காய்ச்சலைப் பெரிதுபடுத்தாமல் மருந்து எழுந்து தொழில்துறையென்று திரிவதுமாகவிருந்தார், பஸ்ஸ0க்குள் மயங்கி விழுந்து ஹொஸ்பிடலில் கப்பட்டுள்ளதாக ஒருநாள் செய்தி வந்தது.
ாத கால ஓயாத போராட்டத்தின் இறுதிக் கட்டம் அது.
ப்போது தேன்துளியை உதட்டில் தடவிக் கொண்டி
ஏதோ செய்தது போலும் ல முனைவது போல.
வரது ஒரே தங்கையின்
DITT.
கயைப் பிடித்துக் கேட்டார்.
ண்ணிர் பொல பொலத்தபடி அகமகயீர் சொன்னார்.
0. கண்கள் மீண்டும் மெல்ல மெல்ல மூடின. நெஞ்சு
ருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி உலகையே மறந்து
மய அடக்கம் தொடர்பான பொறுப்புக்களில் இறங்கி
னாக்கிட்டச் செல்லீக்கி, மச்சன் புரியம். ஊடும் ஒங்க
தக் கவலைக்கு மத்தியிலும் அவளது காதுகளிலே
ம்மதுல்ல நான பாரமெடுத்திட்டாம். இல்லாட்டி அந்தப் ாக்கின’
12

Page 115
ஒஸியத்துக்கு சரியான அர்த்தம் கொடுத்து வந்து போன சனங்கள் தங்களுக்குள் கதைத்துக் கொண்ட 6OTff.
GRDERGRONDERGNER
அகமது கபீரின் இரண்டாம் வருவடிக் கத்தம் கொடுத்து இரண்டொரு நாட்களே நகர்ந்திருந்தன. காலம் உதவி ஒத்தாசையோடு ஒடிக் கொண்டிரு ந்தது.
"மச்சன் சென்னது நானக்கு நெனவிக்கெனா?” ஸித்தியைசா அவ்வப்போது நினைவுபூட்டிக் கொள்
வாள்.
வாப்பா மெளத்தான கவலையிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு நஸ்ரியா படிப்பில் கவனம் செலுத் தினாள். சாதாரணதரத்தில் முன்பே சித்தியடைந் திருந்தாள். உயர்தர சோதனைக்கு மும்முரமாகப் படித்தாள்.
மகளது படிப்பில் அவள் குறுக்கீடு செய்யவி ல்லை. அதே நேரத்தில் படிப்புப் படிப்பென்று காலத் தைக் கடத்துவதை அவள் புத்திசாலித்தனமாகக் கருதவுமில்லை.
மதினிக்காரியின் பேச்சு சிலவேளை அவளைப் போட்டுக் குழப்புவதுண்டு. புதிது புதிதாக அங்கு யார் யாராவது வந்து போனால், அவள் பலதையும் எண்ணிக் குழம்புவதுண்டு.
மகளைவிட மருமகன் நான்கு வயது மூத்தவன். அவனுக்கும் கல்யாண வயஸதோன்.
“பெரிய பெரிய எடத்தாலயெல்லாம் பேசிப் பேசி வார மைனி, அவருதான் ஒன்டும் செல்லியல்ல"- நூர்னிஸா பெருமையோடு இப்படிச் சொல்வதுண்டு.
நானா பதில் சொல்லாதிருப்பதன் அர்த்தம் என்ன வென்று அவளுக்குத் தெரியும். மதினி தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பதும் அவளுக்குத் தெரியும்.
அன்று காய்ச்சலென்று மதினி மருந்துக்குப் போயிருந்தார்.
இதுதான் வாய்ப்பென்று நானாவுக்கு கோப்பியூற் றிக் கொண்டு போனாள், அவள்.
"நஸ்ரியாட சோதின முடிஞ்சேன்'
“GLDiuT?'
“இனிப் பாத்துப் பாத்தீக்காம விஷயத்த முடிக் கோமே நானா'
113

"ம்.”
"நீங்க எனத்தியன் செல்லிய?
"அதுதானே நானும் யோசிச்சி யோசிச்சி நிக்கிய, மகனுக்கும் வயஸ0 சரி. ம். நஸ்ரியாட விஷயத்து க்கு பொஞ்சாதி அவளவு புரியமில்லேன்'
"இனி நீங்க சென்னா மதினி கேக்காமீக்கியா..?
*செல்லிச் செல்லிப் பாத்த. அவட இருப்பாரு உடுகியல்லேன்'
அவள் பெருமூச்சுவிட்டாள்.
"அந்த மனிசன் ஸகராத்து ஹால்லேம் சென்ன விஷயம். அத நீங்க செய்யாட்டி அல்லா பொறுக்கி யல்ல, நானா'- தொண்டை கரகரத்தபடி சொன்னாள்.
"இங்க பாரு, நஸ்ரியாவ நான் கையுடுகியல்ல. நல்லோரு ஆளத்தேடி நானே செஞ்சி வெக்கியன்."
எப்போதோ எல்லாமே தொலைந்து போய்விட்ட விஷயம் இப்போதுதான் அவளுக்குத் தெளிவாகியது.
அதற்குமேல் ஒன்றும் பேசாமல் அவள் எழுந்து வந்துவிட்டாள். ஆனால், மனம் விடுமா? அது குரங்கு போல் அங்குமிங்கும் பாய்ந்து அல்லாடிக் கொண்டி ருந்தது. அவளுக்குத் தீன்தண்ணி ஒன்றும் இறங்க வில்லை.
‘ஏத்தியனும்மா தலக்குத்தா..? ஒரு மாதிரி நிக்கிய?’- நஸ்ரியா ஒன்றும் புரியாமல் கேட்டாள்.
“ஒன்டுமில்ல'
“செல்லுங்கும்மா?’- மகள் விடவில்லை.
மறைத்து என்ன பயன்? மகளிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது? அவளுக்குள் கேள்விக்
36656
"மாம செல்லீட்டாரு. கலியாண விஷயம் சரிவார
66 o'
இப்படியொன்றை நஸ்ரியா எதிர்பார்க்கவில்லை. வாப்பா தீர்மானித்துவிட்டுச் சென்றுள்ள காரிய மென்றே அவள் மனதில் அது பதிவாகியிருந்தது.
LDTLDT Lßg S96u6sit வைத்திருந்த மலை போன்ற மதிப்பு ஒரே நொடியில் இடிந்து தரைமட்டமாகியது.
"அல்லா இனுமொரு வழியக் காட்டுவானும்மா”
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
இரண்டு பெருமூச்சுக்கள் ஒன்றோடொன்று கலந்து வியாபித்தன.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 116
GINKRONRGDERGNER
ரவுற்மதுல்லாவின் மகனுக்கு கல்யாண ஏற்பாடு துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஊருக்கு வெளியே தான் பெண்வீடு.
மஸ்கத், தொதல், மற்றும் சிற்றுண்டிகள் செய்து, ஊரெல்லாம் தேடி அழைப்பிதழ் கொடுத்திருந்தார் கள். சந்தோஷம் தெரிவிக்க அலையலையாய் பெண்கள் படையெடுத்தனர்.
பெண்வீட்டுப் பெருமையை நூர்னிஸா வருவோர் போவோரிடமெல்லாம் அளந்து கொட்டிக் கொண்டி ருந்தாள்.
'அல்லாட நஸிபீந்தாத்தானே நடக்கிய" ஸித்தியைசா மீது அனுதாபம் கொண்டவர்கள் இல்லாமலில்லை. அவர்களது ஆறுதல் வார்த்தைக ளின் முத்தாய்ப்பு இதுதான்.
'கலியாணம் முடியங்காட்டீம் எங்க சரி பெய்த்து நின்டிட்டு வரோம் மகள்'- தாங்க முடியாததொரு கட் டத்தில் ஸித்தியைசா மகளிடம் இவ்வாறு சொன் 60TT61.
“சரிலும்மா. பாக்கிய மனிசரு கத காரணம் சொல் லியொன்டும். எங்கள கெட்ட மனிசராக்கத்தான் மாமி பாத்துகோ நிக்கிய"- நஸ்ரியா நிதானம் தவறவில்லை. ஒரே காணி, ஒரே வீடு, ஒரே கூரை. வந்து போய்க் கொண்டிருந்தார்களே தவிர, கல்யாணத்தின் பெயரில் ஒரு சொட்டுக் கோப்பி கூடக் குடிக்கவில்லை. உண்பது போலவும் பருகுவது போலவும் பார்ப்பவர்க ளுக்கு பாசாங்கு காட்டிக் கொண்டிருந்தார்கள்.
CDRCSRCORCDR
கங்கன் வளவு' என்றால் அந்தக் காலத்தில் மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பு. ரவற்மதுல்லா, ஸித்தியைசா ஆகியோரின் வாப்பா வின் வாப்பாவுக்குச் சொந்தமானது.
பரம்பரை பரம்பரையாகப் பிரிந்தும் விற்றும் இன்று வீடும் பேர்ச்சஸ் கணக்கு நிலமுமே எஞ்சியி ருக்கிறது.
பிள்ளைகள் இருவரும் என்றும் ஒன்றுபட்டு வாழ வேண்டுமென்றுதான், பெற்றார் அந்த அமைப்பைச் செய்தார்களோ என்னவோ? வீடும் வளவும் இருவர தும் பெயருக்கு எழுதப்பட்டிருந்தது.
இனி அதில் எந்தவித அர்த்தமுமில்லை என்ற
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

நிலை வந்துவிட்டது. சட்டப்படி பிரித்தெழுதிக் கொள்ள வேண்டிய கட்டம்.
இதனை எப்படி முன்னெடுப்பதென்று தெரியா மல் தவித்துக் கொண்டிருந்தாள், ஸித்தியைசா.
“ஸித்தியைசா’- என்றபடி முன்பின் எந்த மனத் தாங்கலும் இல்லாத விதமாக ஒருநாள் வந்து உள் கட்டிலில் அமர்ந்து கொண்டார்.
ஏதோ சொல்லப் போகிறார். இனி அவரிடமிருந்து எந்த மகிழ்ச்சியான செய்தியும் வருவதற்கில் லையே.
"ம். ஊட்ட முன்னால கொஞ்சம் ஒடச்சி புதிய பெஷனுக்கு கெட்டோனுமென்டு மகன் செல்லிய. அதுதான்." என்று ஆரம்பித்தார்.
அவளது எதிர்பார்ப்பு இப்படியொரு வடிவில். இவ்வளவு சீக்கிரமாக ஈடேறுமென்று அவள் நம்ப வில்லை.
"எனத்தியன் செல்லிய?’- மீண்டும் அவர்.
‘நல்ல மாதிரி செய்ங்கொ நானா. எங்கட உம்ம வாப்ப நெனச்சது நடக்கல்ல. நஸ்ரியாட வாப்ப நெனச்சதும் நடக்கல்ல. ம். நாளக்கி அவளட விஷ யங்களப் பாக்க ஊடு காணி வேறயா இருந்தா நல்லந்தானே."
தங்கையின் வார்த்தைகள் ஊசியாய்த் துளைத் தாலும் அதையவர் பெரிதுபடுத்தவில்லை. அவரது எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டதல்லவா?
'சரி அப்பிடிச் செய்யோம்'- என்றவாறு எழுந்து சென்றார்.
அவளுக்கும் மகிழ்ச்சிதான்.
CDRCORCDRCSR
நஸ்ரியா இப்பொழுது ஸ்டார் கொம்யூனிகேச னில் வேலை செய்கிறாள். ஏ.எல் எழுதியதும் அந்த வாய்ப்பு அவளுக்குக் கிட்டியது. நான்கு பெண் பிள்ளைகள் அங்கே வேலை செய்தார்கள். தொலை பேசி அழைப்பு, ரீலோட் செய்தல், ஃபோடோ கொபி, ஃபெக்ஸ் என்று பலவேலைகளும் அவளுக்குப் பரிச்சயமாகிவிட்டன. சம்பளம் கூட வாழ்வாதாரமாக அமைந்துவிட்டது.
'அல்லாதான் மொகம் பாக்கோணும்’- அடிக்கடி ஸித்தியைசா இப்படிச் சொல்லிக் கொள்வாள்.
வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு உட்சுவர் எழுந்தி
1 14

Page 117
ருந்தது. முன்பின் பக்கங்களில் காணியும் வேறாக் கப்பட்டிருந்தது.
இனி அவளது ஒரே இலக்கு மகளுக்கு கல்யா ணம் செய்து வைப்பதுதான்.
வீடு, காணி, படிப்பு எல்லாம் சேர்ந்து மகளுக்கு நல்லகாலம் வாய்க்குமென்று அவள் பலமாக நம்பி னாள். பார்த்த பார்வைக்கு எந்தக் குறைபாடும் அவளிடம் காணப்படவில்லை.
முதன்முறையாகப் பெண் பார்க்க வந்தவர்கள் பூரண திருப்தியோடுதான் சென்றார்கள். இருந்தும் அவர்கள் சொல்லியனுப்பிய செய்தி மாறாகவிருந்தது.
‘எல்லம் நல்லம் வயஸ0 கூட மாதிரி'
நஸ்ரியா அதற்காகக் கவலைப்படவில்லை. ஆனால், உம்மாதான் துடியாய்த் துடித்துப் போனாள்.
முயற்சி தொடர்ந்தது.
‘என்னத்துகனும்ம இப்பிடி அவசரப்படுகிய. இருவத்தஞ்சி முப்பது வயிஸில எங்களுக்குத் தெரிஞ்ச எத்தின பேரீக்கன்?’. நஸ்ரியா மனதைத் தைரியப்படுத்திப் பேசினாள்.
ஸித்தியைசா முயற்சியைக் கைவிடவில்லை. புரோக்கர் மாமியை நாள் தவறாமல் சந்தித்தாள்.
மூன்று மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. நலஞ்ச கோழிக்கு கூதல் இல்ல' என்று சொல்வார்களே! இப்பொழுது நஸ்ரியாவும் நனைந்த கோழிதான்.
‘எல்லம் நல்லம். எங்கட மகனப் பாக்க கொஞ்சம் ஒசரம் போலீக்கி. மகன் புரியமெண்டாச் சரி’. மாப்பிள்ளையின் உம்மா பிரஸ்தாபித்தார்.
“ஒ. இனி மாப்பிளேம் வந்து பாக்கோணேன்"- மெல்லிய எதிர்பார்ப்போடு ஸித்தியைசா சொன்னாள்.
இரண்டு வாரம் கடந்தும் அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.
காலையில் பார்க்க வருவதாகவிருந்த மூன்றா வது பேச்சுவார்த்தை இரவோடிரவாக ரத்தாகிவிட்டது.
'இங்க பாரு ஸித்தியைசா, அவசரப்படாதே. பொண்ணொன்டீந்தா மாப்பிளயொன்டு எங்கீந்து சரி வார பொறுதி செய்’- பக்கத்து வீட்டுப் பாத்தும்மா நாச்சியா, அமைதிப்படுத்தினாள்.
நஸ்ரியா இதையிட்டு ஒன்றும் அலட்டிக் கொள்ள வில்லை. அவள் கொம்யூனிக்கேசனுக்கு போவதும்
115

வருவதும் தொழிலுக்கு விண்ணப்பம் அனுப்புவ துமாக தோழிகளோடு குதூகலித்தாள். ஆனால், உம்மா படும்பாட்டைப் பார்க்க அவளுக்குப் பாவமா கவிருந்தது. யாராவது ஒருவனின் தலையில் அவ ளைக் கட்டிவிட்டால் சரி என்ற நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள்.
'அந்த மனிசன் நின்டா இப்பிடியெல்லம் நடக் கியா..? ம்.. எங்கட கெட்டகாலத்துக்கு அவர் ஹயாத்துக் கொறஞ்ச'- இப்படிச் சொல்லிச் சொல்லி அவள் அடிக்கடி புலம்புவாள்.
CSRGSSRGSRCSR
இப்பொழுது வீட்டின் முன்காணியை இரண்டா கப் பிரிக்கும் வகையில் நடுமதில் எழுந்திருந்தது. பின் காணியில் இப்போதைக்கு வேலியடைக்கப்பட் டிருந்தது.
வாழை, பலா, தென்னையென்று மரங்கள் தான் அவளுக்கு வரமாகவும் வருமானமாகவும் அமைந்தி ருந்தன. எல்லாப் பக்கத்தாலும் அடைக்கப்பட்ட அந் தக் குட்டி ராஜ்யத்தின் ராணி ஸித்தியைசா. இந்தப் புது அமைப்பு ஏதோவொரு திருப்தியை அவளுக்க ளித்தது.
பாகப் பிரிவினைக்குப் பின் முதற் தடவையாகப் பேரன் பிறந்த கதையைச் சொல்ல வந்த அவளது நானா, அன்று ஏன் வருகிறாரென்று அவளுக்கு விளங்கவில்லை.
‘ஸித்தியைச. மருமகளுட்டில நாளப் பகலக்கி புள்ளக்கி பேரு வெக்கிய சாப்பாடு. நாங்க இன்டக்கே போற. எல்லாருக்கும் செல்லீக்கி. கட்டாயம் வரோ 600)|lb.'
கடமைக்காக அவர் சொல்லிச் சென்றார் போலும். அவள் எந்த முகத்தோடுதான் செல்ல முடி யும்? இந்தச் செய்தியைக் கேட்டதும் நஸ்ரியாவுக்கு சிரிப்புச் சிரிப்பா வந்தது.
"நான் அதுக்கு மட்டும் சிரிக்கலும்மா’- அடுத்த போடு போட்டாள்.
“எனக்கொண்டும் வெளங்கல்ல புள்ள. நீ எனத் தியன் செல்லிய?’
'உம்மா எனக்கு கிளரிகல் வந்திருக்கும்மா”
“ஒபீஸ்ல கிளார்க் வேலயா?”
“ஒ gd Lib DIT'
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 118
அவள் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தாள். ஏதோ வொரு வகையில் குடும்பத்திற்கு நல்ல காலம் பிறக் கும் சமிக்ஞை தெரிந்தது.
"இனி நாங்க இன்னொத்தரப் பாத்துக் கொண் டீக்கத் தேவில்லும்மா. கிளரிகல் கெடச்சது, எனக்கு மாப்பிள கெடச்ச மாதிரிதான்’
மகள் சொன்னது அவளுக்கு நன்றாகவே விளங் கியது. வருமானத்திற்கு நிரந்தரமான வழி திறந்துள் ளது உண்மைதான். அது திருமண வாழ்வுக்கு எப்படிச் சமனாக முடியும்?
'நஸ்ரியா! நீ எனத்தியன் புள்ள செல்லிய?
“என்ன மாப்பிளேக் குடுக்கோணுமென்டு இனி நீங்க கரச்சல்பட வாண. என்ன தாரு சரி விரும்
மீண்டு உந்
தரவை நிலங்களிலும் காட்டு வழிப் பாதைகளிலும் நடந்து. நடந்து. கால் வலித்த பயணிகள் நாம் மிதிவெடிகளுக்கும் ஷெல் வெடிச்சத்தங்களுக்கும் இடையில் சிக்கிஎம் உறவுகளைத் தவறவிட்டு கண்ணிரோடும் கைக்குழந்தைகளோடும் கையில் கிடைத்ததையும் பொதிகளாக்கி சுமந்து வந்து அங்குமிங்குமாய் தடைகள் தாண்டினோம். பசிக்கு இலை குழைகள். குளத்து நீர் கூட, ஆகாரமாகியது யுத்த பீதியுக்குள் பித்தம் பிடித்தலைந்தோம் நச்சு வாயுக்கள் எம் நாசிக்குள் சென்று நம்மை உலுக்கின.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

பினா. எனக்கும் புடிச்சா சரி. கலியாமென்ட பேரில சும்ம சீரழிய நான் புரியமில்ல. அதப் பாக்க கலியா ணம் முடிக்காம எவலாவோ சந்தோஷமா ஈக்கேலும்’- நஸ்ரியா புது உற்சாகத்தோடு சொன்னாள்.
ഥങ്കബ് வித்தியாசமாக ஏதோவெல்லாம் சொல்வது அவளுக்குப் புரிவதுபோலவும், புரியாதது போலவுமி ருந்தது.
"LD...... ஏன்ட புள்ளய அல்லா கையுடமாட்டான். அவளுக்கு ஊடீக்கி. காணி பூமீக்கி. தொழிலி க்கி. ம். பஸ்லிந்துகாரர் மட்டுமா வாழிய ஒலகத் தில.
கலியாணச் சிந்தையிலிருந்து அவள் எப்படி விடுபடுவாள்? தாயல்லவா?
தநாட்கள்
- வதிரி. சி.ரவீந்திரன்
புன்மை கொண்ட மானுடராய் புழுதி படர நடந்தோம்! உடுத்த உடுப்புகளும் பசிக் களையும்மரண பயமும் சேர்ந்து எம்மைக் காட்டுமிராண்டிகளாய் காட்சிக்குத் தெரிந்தோம்!
அகதி முகாம் வாழ்வை அநுதாபமாகப் பார்த்தோர் ஏதிலிகளான எமக்கு ஏலுமான உதவிகள் செய்தனர்.
மீண்டு வந்த நாங்கள் சொந்தஇடம் மீண்டபோது எமது நிலம் ஆதியில் கிடந்தது. சொந்தங்களைப் போல் இப்போ இழப்பதிற்கெதுவுமில்லையென மீண்டுவந்த நாட்களின் வடுக்களோடு- வாழுகின்றோம்
116

Page 119
நிர்மலா மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாவு
நகருக்கு பஸ்ஸில் கூட்டிச் சென்று அவர்களுக்கும் தன் இப்போது தான் வந்திருந்தாள்.
பெரியம்மாவின் மகள் ரூபாவின் திருமணத்திற்கு தான் நிர்மலாவின் உள்ளத்தில் உற்சாக வெள்ளம் க இது நிர்மலா ஒழுங்கு பண்ணிய திருமணம். இத பண்ணிச் செய்து வைத்திருக்கிறாள் தான். அந்தக் கு பெருமிதம் அடைந்திருக்கிறாள்தான்.
ஆனால் இந்தக் கல்யாணத்தை அவள் ஒழுங்கு செ னையாகத்தான் நினைக்கிறாள். பெரியம்மாவின் குடுப் கிறார்கள்.
வெளிநாட்டு வருமானமுள்ள பெரியம்மாவின் குடும் ஆனால், முப்பத்தொரு வயது கடந்த ரூபா கன்னியாக பிறப்பிலேயே ரூபாவின் கால் சற்றுக் கூழை, அதனா யாக இருக்கும் போது, அவளும் அதைப் பெரிதுபடுத் பற்றுவதை மட்டும் தவிர்த்து வந்தாள்.
உயர் வகுப்புக் வந்ததும் அவள் சற்று நொண்டி ந வேண்டியிருப்பதும், பலர் முன்னிலையில் அப்படி நட தொடர மறுப்பதற்கு ஏதுவாக அமைந்துவிட்டன.
திருமண வயதை எட்டியதும் ரூபாவுக்கு மாப்பின ரூபாவுக்கு மாப்பிள்ளை தேடும் கல்யாணத் தரகர்களுக் ஆயிரம் இரண்டாயிரங்கள் இலட்சத்தைத் தாண்டிவிட் மூன்று அண்ணன்மார்கள் வெளிநாட்டில் நின்று உ பிரயோசனம்? எத்தனை இலட்சங்களைச் சீதனமாகக் யாப் பார்த்துச் செய்து வையுங்கள் என்று அவர்கள் தி மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே,
சீதனத் தொகையைக் கருத்திற் கொண்டாவது ரூ திருமணத்திற்கு யாராவது முன்வருவார்கள் என்ற நம் இந்த நிலைமையிற் தான் ஒருநாள் அந்தி நேரம் ெ "வாங்கோ பெரியம்மா. உதிலை இருங்கோ. கிட் அருமையாய்ப் போயிட்டுது'
"நீ இப்ப எங்கடை பக்கம் வாறதையே குறைச்சுப் போலை இருந்தது. ஒரு அலுவலும் உன்னோடை கள் “எங்கை பெரியம்மா நேரம்.? மூத்தவன் இந்த முை கடைக்குட்டி பிரிந்தி அவளும் எட்டாம் வகுப்பு. அதுகள் L
117
 

1ல்விகை (iišಟ್ಲಿ à: ä
滚
ம் இருந்தாள். பிள்ளைகள் மூவரையும் யாழ்ப்பாண
ாக்கும் விருப்பமான உடுப்புகளை வாங்கிக் கொண்டு
இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதனால்த் ரைபுரண்டோடிக் கொண்டிருந்தது.
ற்கு முன்னரும் நாலைந்து திருமணங்கள் ஒழுங்கு குடும்பங்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைப் பார்த்துப்
பது முடித்தது அவளைப் பொறுத்தவரையில் ஒரு சாத >பத்தினரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்
பம் பொருளாதார ரீதியாகப் பரவாயில்லாமலிருந்தது. வே இருப்பதற்குக் காரணம் இருந்தது.
ால் நடக்கும் போது வித்தியாம் தெரிந்தது. சிறுபிள்ளை தவில்லை. பாடசாலை விளையாட்டுக்களில் பங்கு
தடப்பது பற்றி கேட்பவர்களுக்குக் காரணம் சொல்ல ப்பதற்குத் தயக்கமாக இருப்பதும் அவள் படிப்பைத்
)ள தேடாத ஊரே இல்லை என்றே சொல்லலாம். கு ஊக்கமாத்திரையாக அவ்வப்போது கொடுக்கப்படும் டிருந்தன. ழைத்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தும் என்ன கொடுத்தென்றாலும் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை னமும் ரெலிபோனில் நச்சரித்துக் கொண்டிருந்தாலும்
பாவின் காலின் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் பிக்கையும் அடியோடு விட்டுப் போய்விட்டது. பரியம்மா நிர்மலாவைத் தேடி வந்தாள்.
டக் கிட்ட இருந்தும் ஒராளை ஒராள் காணுறதே இப்ப
போட்டாய். உன்னையும் ஒருக்கால் பாக்க வேணும் தக்க வேணும். அதுதான் வந்தனான்”
ற ஏ.எல் சோதினை எடுக்கிறான். அடுத்தவன் ஓ.எல். ள்ளிக்கூடம் ரியூசன் எண்டு போறதுக்கு ஏற்றதுகளைச்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 120
செய்து குடுக்கவே எனக்கு நேரம் சரியாய்ப் போயிடும். அதுக்கும் மேலாலை எனக்கும் பள்ளிக்கூட வேலை யள். பிறகு செமினார் அது இதெண்டு சனி ஞாயிறும் இடைக்கிடை செலவழிஞ்சு போயிடும். பிறகெங்கை சொந்தம் பந்தமெண்டு திரிய நேரங் கிடக்கு!”
நிர்மலா சற்று அலுத்துக் கொண்டாள். "அதுவுஞ் சரிதான். புருசன் பெண்டாட்டியெண்டு இரண்டு பேருமாய் உள்ளதுகளே வீட்டு வேலைக ளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுதுகள். நீ தனியன், அதுவும் கைம்பெண்டாடிச்சி, என்னெண்டு தான் சமாளிக்கிறது. அது பெரிய காரியந்தான்.’
“ஒம், பெரியம்மா! அவர் போய் பத்து வருசமாயிட் டுது. அவர் இல்லாத குறை தெரியாமல் பிள்ளை களை இவ்வளவுக்குக் கொண்டு வந்திட்டன். இனிமேலும் அப்பிடிச் சமாளிச்சுப் போடுவன் எண்ட நம்பிக்கை இருக்கு. இனிக் கடவுள் விட்ட வழி’
இதைக் காதில் வாங்கிக் கொண்டு பெரியம்மா, தான் வந்த விஷயத்தைத் தொடங்கினா.
“பிள்ளை நிர்மலா. ஊருலகத்திலை பல பேரு க்கு நீகலியாணம் பேசி முடிச்சிருக்கிறாய். உன்ரை தங்கச்சி, அதுதான் எங்கடை ரூபாவுக்கு ஒரு மாப் பிள்ளை பாத்துச் சரிப் பண்ணித் தாறாயில்லை. அவளுக்கும் வயது ஏறிக் கொண்டு போகுது'
‘என்ன பெரியம்மா கதைக்கிறியள்? நீங்கள் அதை எனக்குச் சொல்ல வேணுமே...? அவள் என்ரை தங்கச்சியல்லே. நானும் எனக்குத் தெரிஞ்ச ஆக்களிட்டை சொல்லி முயற்சி செய்து கொண்டுதா னிருக்கிறன். இன்னும் பலன் வரேல்லைப் போல கிடக்கு. எதுக்கும் நீங்கள் புறோக்கர்மார் மூலம் முயச்சி செய்யிறதையும் கைவிட்டிடாதையுங்கோ. அவளுக்கு வயதும் கூடிவிட்டதாலை, நானும் இனி முழுமூச்சாய் இறங்கிறன். எல்லாம் நல்ல மாதிரி நடக்கும். பயப்பிடாதையுங்கோ!”
மேலும் பலதும் பத்தும் கதைத்தார்கள். பிறகு பெரியம்மா விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டா. பெரியம்மா போனதும் கடைக்குட்டிக்குக் கொஞ்ச நேரம் கணிதபாடம் சொல்லிக் கொடுத்தாள். பின் னர் இரவு உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டுக் கொண் டிருக்க சிந்தனை மட்டும் பின்னோக்கி நகர்ந்தது.
நிர்மலா பக்கத்து ஊரில் உள்ள பாடசாலையில் இப்போது பிரதி அதிபராக இருக்கிறாள். அவள் உதவி ஆசிரியையாக இருக்கும் காலத்தில்தான் அந்தக் கொடுரம் நிகழ்ந்தது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. தபால் அதிபராக இருந்த அவளது கணவன் நாளாந்தத் தேவைக்கு ரிய சமையல் சாமான்கள் மற்றும் மரக்கறிகள் வாங் குவதற்காக வல்வெட்டித்துறைச் சந்தைக்குப் போயி ருந்தான். சந்தைக்கருகே இராணுவத்திற்கும் இயக் கத்திற்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாண்டு போன பொதுமக்களின் பட்டியலில் அவ னும் இடம்பெற்று, இவள் இளமையிலேயே விதவை
யாக்கப்பட்டாள்.
ஒரு வருடம் வேலையும் வீடுமாகத் தன்னை ஒடுக் கிக் கொண்ட நிர்மலா, நாளடைவில் தன்னைச் சுதா கரித்துக் கொண்டாள். தான் ஏற்கனவே ஈடுபாடு காட் டிச் செயற்பட்டுக் கொண்டிருந்த பெண் விடுதலை அமைப்பு, மாதர் சங்கங்கள் முதலியவற்றில் மீண் டும் உற்சாகமாகச் செயற்பட்டாள். தான் எல்லா வற் றிலும் ஒதுங்கிக் கொண்டிருந்தால், தனது பிள்ளை களும் தாழ்வுச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விடுவார் கள் என்பதை உணர்ந்து நல்லநாள் பெருநாட்களில் பிள்ளைகளைக் கோயில்களுக்குக் கூட்டிச் சென் றாள். ஊரில் நடக்கின்ற திருமணங்கள், புதுவிடுமுத லானவற்றுக்கு முறையான அன்பான அழைப்புக் கிடைத்தால் பிள்ளைகளுடன் போய்க் கலந்து
கொள்வாள்.
ஆயினும், விதவைகள் விஷயத்தில் பழமை பேணும் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மூட நம்பிக்கைகளில் தனக்கு நம்பிக்கையில்லாது விட் டாலும், மற்றவர்கள் விஷயத்தில் அவள் தன்னைத் தவிர்த்தே வந்தாள். திருமணத்தில் கலந்து கொண் டாலும், கல்யாண வீட்டுக்காரர் முற்போக்காகச் சிந் தித்து முழுமனதுடன் வந்து வற்புறுத்தி அழைத்தா லொழிய அறுகரிசி போட்டு வாழ்த்துவது முதலான வற்றுக்கு முண்டியடிக்கும் வரிசையில் அவள் சேர் ந்து கொள்வதில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தியுடன் வீட்டிற்கு வந்து விடுவாள்.
இது ஒரு புறம் இருக்க. பெரியம்மாவின் மகள் ரூபாவின் திருமண நாளில், அதே சுபவேளையில் நிர்மலாவின் பாட சாலையில் ஆசிரியராக இருக்கும் நிமலனின் புது மனைப் புகுவிழாவும் இருந்தது.
நிமலன் நிர்மலாவின் நேசத்துக்குரியவன் மாத்தி ரமல்ல, ஒரு உடன் பிறந்த சகோதரன் போலவே, நிர்மலாவின் நன்மை தீமை யாவற்றிலும் மனைவி சகிதம் வந்து முன் நிற்பவன். அதே போல, தன் வீட்டு
18

Page 121
விசேசங்கள் யாவற்றிலும் நிர்மலாவை முன்னுக்கு வைப்பவன். நிர்மலாவின் கையால் சித்திரை வருடப் பிறப்புப் போன்ற நல்ல நாட்களில் கைவிஷேசம் வாங்கித் திருப்தி கொள்பவன். பிரச்சினையான சந்தர் ப்பங்களில் நிர்மலாவை அக்காவாக நினைத்து, ஆலோசனை கேட்டு, அதன்படி நடப்பவன்.
நேற்றுத் தான் புதுமனைப் புகுவிழாவுக்குரிய அழைப்பிதழையும் கொண்டு நிமலனும் மனைவி யும் முதற் பத்திரிகை வைப்பதற்காக நிர்மலா வீட் டிற்கு வந்திருந்தனர். -
'அக்கா அந்த நேரத்துக்கு மட்டும் வந்திட்டுப் போகாமல் பிள்ளையளோடை வெள்ளண வந்து, எல்லாவற்றையும் முன்நிண்டு நீங்கள் தான் நடத்த வேணும்"
இவருவரும் ஏகோபித்த குரலில் வேண்டுகோள் விடுத்தனர்.
'இல்லை நிமல் இந்தமுறை எனக்கு நீங்கள் மன்னிப்புத் தர வேணும். உங்கடை கல்யாணம் முதற் கொண்டு பிள்ளையளின்ரை தொட்டிலாட்டு வைபவம் வரை எல்லாவற்றுக்கும் நான் நாள் முழுவதும் நிண் டனான். பெரியம்மா வீட்டிலை கனகாலத்திற்குப் பிறகு ஒரு நல்ல காரியம் நடக்குது. அது நான் பேசி முடித்த கல்யாணம். நான் நிற்காவிட்டால் பெரிய ம்மா கோவிப்பா. என்ரை நிலைமையை நீங்கள் ரண்டு பேரும் தயவுசெய்து புரிஞ்சு கொள்ள வேணும்' நிர்மலா இப்படிச் சொன்னதுமே அவர்களின் முகம் கறுத்துவிட்டது.
"நீங்கள் உரிய நேரத்திலை நிற்காவிட்டால் எங் களைப் பொறுத்தவரையிலை அது பெரிய குறை தான். சரி பரவாயில்லையக்கா. முதல் நாள் புது வீட் டுக்கு ஐயர் வந்து சாந்தி செய்யப் போறார். அதுக் காவது வந்து நில்லுங்கோ, பிறகு அடுத்தநாள் உங் கடை பெரியம்மா வீட்டுக் கல்யாணம் முடிஞ்சவுட னேயே எங்கடை வீட்டுக்கு வந்திடுங்கோ’
'முடிஞ்ச உடனேயே நிச்சயமாக நான் வந்திடு வன். நீங்க சந்தோஷமாகப் போயிட்டு வாங்கோ’
அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த நிர்மலாவு க்கு, அவர்களை நினைக்கவும் சங்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதைவிட, இந்தக் கல்யா ணம் அவளுக்கு முக்கியமானது. ஏனென்றால் ரூபாவுக்கு மாப்பிள்ளை தேடிக் களைத்துப் போய் கடைசியில் தனது தம்பியுடன் படித்து சமுர்த்தி உத்
119

தியோகத்தராக இருக்கும் தம்பியின் உயிர் நண்பன் முகுந்தனை அவனிடமே நேரில் கேட்டு சம்மதம் பெற்றாள். பின்னர் தாய் தகப்பனிடம் போய்ப் பேசிய போது, அவர்கள் ரூபாவின் குறைபாட்டை எடுத்துக் காட்டித் தயக்கம் தெரிவித்தனர்.
பின்னர் நிர்மலாவின் மேல் வைத்திருக்கும் அன் பையும் மதிப்பையும் கருத்திற் கொண்டு திருமணத் திற்குச் சம்மதித்தனர். சாதகப் பொருத்தங்களும் திருப்தியாக அமைந்தமை எல்லாவற்றுக்கும் சாதக மாகி விட்டது.
இப்படியாகப் பாடுபட்டு பேசி முடிவாக்கிய நிர் மலா கல்யாணத்திற்கு நிற்காமல் புதுவீடு வைபவத் திற்குப் போக முடியுமா, என்ன? நிர்மலா தனக்குள் திருப்திப்பட்டுக் கொண்டாள்.
நினைவில் மூழ்கியபடியே அன்று வாங்கி வந்த உடுப்புகளைச் சீராக அடுக்கி வைத்துக் கொண்டி ருந்தாள். யாரோ வருவது போல, உணர்ந்தவள் வாசற் பக்கம் பார்க்க, பெரியம்மா வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
'வாங்கோ பெரியம்மா. இருங்கோ’
“பிள்ளை. ஆறுதலாக நானிருக்க, எங்கை யடா எனக்கு நேரம்.? அங்கை பலகாரங்கள் சுட் டுக் கொண்டிருக்கினம். அதுக்கிடையிலை உன் னட்டை வந்து கதையொண்டு சொல்லிப் போட்டுப் போக வேணுமெண்டு ஓடி வந்தனான்’
"சொல்லுங்கோ, பெரியம்மா” "பிள்ளை! இது நீ பேசி முடிச்ச கல்யாணம். ஆனா, நீயோ புருசனை இழந்தவள். கைம்பெண் எண்டு நினைச்சு கல்யாணத்துக்கு வராமல் நிண் டிடுவாய். அந்தப் பயத்திலை தான் நான் இப்ப ஓடி வந்தனான். நீ வராமல் விட்டிடாதை. தாலி கட்டி மாப் பிளை பொம்பிளை கால்மாறி, அவை வீட்டை போய் வந்தாப் பிறகு பின்னேரம் நீ வரத்தான் வேணும். பிறகாவது நீ வரத்தான் வேணுமெண்டு சொல்லியிட் டுப் போகத்தான் இப்ப நான் வந்தனான்!’
நிர்மலா திகைத்துப் போய்ப் பெரியம்மாவைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
"சரி பிள்ளை நான் போயிட்டு வாறன்!" பெரியம்மா போய்க் கொண்டிருந்தா. திகைப்பிலிருந்து விடுபட்ட நிர்மலா, பிள்ளைக ளுடன் புதுவீட்டுக் கொண்டாட்டத்திற்கே நேரத் தோடு போய் நிற்பதற்கு முடிவு செய்து கொண்டாள்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 122
எண்பதுகள் தொடக்கமான காலப் பகுதி, ஈழத்து சமூக, அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்ட காலமாகக் க எண்பதுகளின் ஆரம்பத்திலே ஈழத்தில் தமிழ் மக் நேரிட்டமையாகும். அதற்கு நிகரான மற்றொன்று, த இடப்பெயர்வு வாழ்க்கையினைப் பல தடவைகள் எதி பற்றிப் புகலிட இலக்கியங்கள் உருவாகின. அவை பழ இடப்பெயர்வு பற்றி அவ்வப்போது இடப்பெயர்வு இலக் ஆய்வுகள் கூட, எதுவும் இன்றுவரை இடம்பெறவி இலக்கியங்களை இனங் காண்பதும் மதிப்பீடு செய்வ
எண்பதுகள் தொடக்கம் தமிழ் மக்களும் முஸ் உள்ளாகி வந்துள்ளனர்.
இத்தகைய இடப்பெயர்வுகளுள் முதலில் குறிப்பிட பிரதேசத்தில் 1987 இல் லிபறேஷன் ஒப்றேஷன் ( இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட அப்பகுதி மக்கள் அயலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமது : இரு மாதத்தின் பின்னர் திரும்பி வந்தனர். இவை தொ நெல்லை க.பேரன் முதலானோர் எழுதியிருப்பினும்,
pប្រែទាំm 孝 4tது ஆண்டு யூகிர்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 
 
 

தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியிலே சில முக்கியமான rணப்படுகின்றன. அத்தகைய பிரச்சினைகளுளொன்று கள் புலம்பெயர்ந்து வாழ்க்கைக்கு முகங்கொடுக்க மிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லீம் மக்களும் உள்ளூர் ர்கொள்ள நேரிட்டமையாகும். புலப்பெயர்வு வாழ்க்கை ]றிய பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. கியங்கள் எழுந்திருப்பினும் அவை பற்றி ஆரம்பநிலை ல்லை. ஆகவே, இவ்வாறெழுந்துள்ள இடப்பெயர்வு துமே இவ் ஆய்வின் நோக்கமாகின்றது.
மீம் மக்களும் பல தடவைகள் இடப்பெயர்வுகளுக்கு
த்தக்கதாகவிருப்பது யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சிப் Liberation Operation) என்ற பெயரில் இடம்பெற்ற தி மக்களது இடம்பெயர்வாகும். அவ்வேளை அப்பகுதி உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்துவிட்டு, ஏறத்தாழ டர்பான அநுபவங்களை இப்பிரதேச எழுத்தாளர்களான
'கருணையோகன்' எழுதிய சில கவிதைகள் மட்டுமே
உப்புவெளிக் காற்று உடலைச் சிலிர்த்திட உறைய வைக்கும் அச்சங்களால் உணர்ச்சியேதுமின்றி ஒரு பெரிய மலையை உருட்டி நடப்பதுபோல் தள்ளாடி தள்ளாடி தளர்வோடு நடக்கின்றேன்!
எப்போ ஆமிவரும் எப்போ ஹெலிகள் சுடும் என்றபேரச்சத்தால் ஏழெட்டு மூட்டையோடு எனது சைக்கிள் வண்டியை * உணர்ச்சி யேதுமின்றி
உருட்டி, நடக்கின்றேன்!
உயிர்வாழ்வு நீடிக்க உதவுகின்ற ஆவணங்கள், 闭、 உடுபுடவை சட்டைகள் fෂිණී உணவுகுடி தண்ணிர் * தட்டுமுட்டுச் சாமான்கள்
அன்றி வேறேதுமின்றி
120

Page 123
அச்சம் துரத்திவர அந்தஇருள் வெளியறுத்து கப்பூது ஊர்நோக்கி கால்துவள நடக்கின்றேன்!
என்று ஆரம்பிக்கும் அவரது கவிதை இடம்பெயரும் போது ஏற்படும் அச்ச உணர்வுகளை வெளிப்படுத்த முற்படுகிறது. இடம்பெயர்ந்து தங்கியிருந்த இடத்து அநுபவங்கள், ஊர் நினைவுகள், திரும்பி வரும் போது ஊரில் கண்ட மாற்றங்கள் என்பன அவரது வேறு சில கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன.
1990 இல் ஆரம்ப காலப் பகுதியளவில் மட்டக் களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தமிழ் மக்களது இடப்பெயர்வொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்கள ப்பு நகரின் சில பொது இடங்களிலும் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். இக்காலப் பகுதி யில் அகதிமுகாமொன்றில் இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவமொன்று ஓ.கே. குணநாதனின் 'அம்மா வலிக்குது என்ற சிறுகதையில் மட்டும் அது வும் நினைவு கூரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு:
வழமை போல செப்டம்பர் 5 ஆம் திகதி பொழுது புலரத் துடித்த நேரம்.
கனரக வாகனங்களின் பேரிரைச்சல்கள். சனங்கள் திடுக்கிட்டு விழித்தார்கள்அவர்களுடைய விழித்த
விழிகள் இமைக்க மறந்து போயின. வாசலிலே யானை தும்பிக்கையைத் தூக்கியபடி.
சுற்றிவர இலை குழை உடுப்புகளுடன். கையில்
சுடுகுழல்கள். தலையாட்டிப் பொம்மைகள் இரண்டு மணிநேரப் போராட்டம் 158 பேருடன் எல்லாம் ஒய்ந்தன.
எங்கும் ஒப்பாரிக் குரல்கள். அழுகையின் அலறல்கள்
அந்த 158 இனுள் சந்திரனின் தந்தையும் அண்ணனும்."
(இக்காலப் பகுதியில் இளைஞர்கள் பலர் விடு தலை இயக்கங்களில் இணைந்தமைக்கு மேற்கூறப் பட்ட நிகழ்வுகள் காரணமாகக் கூறப்பட்டன)
121

1990 ஆம் ஆண்டு நடுப்பகுதிளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தும் வன்னி மாவட்டத்திலிருந்தும் முஸ்லீம் மக்கள் பலர் வெளியேற்றப்பட்டனர். இம் மக்களது இடப்பெயர்வு பற்றி பல படைப்புகள் பல் வேறு பார்வைகளில் வெளிவந்துள்ளன. இப்போதும் வருடந்தோறும் நினைவுகூரலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேற்கூறிய இடப்பெயர்வு பற்றிய கவிதைகள் இயற்றியோராக நுஃமான், அன்பு முகைதீன், றவுமி இளைய அப்துல்லாவற், ஓட்டமாவடி அரபாத், அஷ் ரஃப் வழிகாப்தீன், கலைவாதி கலீல், அனார், யாழ். அஸிம், எஸ்.எச். நிஃமத், வளிம் அக்ரம், நவாஸ் செளபி, திருமலை அஷ்ரஃப், வ.சிவசேகரம், வ.ஐ.ச. ஜெயபாலன், சு.வில்வரத்தினம், முல்லை முஸ்ரீபா ஆகியோரை இனங்காண முடிகின்றது. இவர்களுள் இடப்பெயர்வுக் கவிதைகள் என்ற விதத்தில் தனித் தொகுப்பைத் தந்தவராக முல்லை முஸ்ரீபாவும் அவருக்கடுத்த நிலையில் அதிக கவிதைகள் எழுதி யவராக இளைய அப்துல்லாவற்வும் காணப்படுகின் றனர். ஏனையோர் ஒவ்வொருவரும் ஓரிரு கவிதை கள் மட்டுமே எழுதியுள்ளனர்.
கலைவாதிகலில் என்பவர் எழுதிய கவிதையில் இடம்பெறும் பின்வரும் பகுதி குறிப்பிடத்தக்கது: துயில் நீங்கி எழுந்திட்ட போது- கொடுத்த துப்பாக்கிக் குழலுாமே தொடர்ந்ததே சேதி வட புலத்திலிருக்கின்ற முஸ்லீம்ஒன்றும் வாரிச் சுருட்டாமல் ஓடிவிட வேண்டும் இதுவல்ல உங்கள் தாயகம்- இது எங்களின் மூதாதை ஆண்ட மண்பதியே இருபத்தி நான்கு மணி நேரம்- இன்னும் இருக்கிறது இங்கிருந்து நீங்களோ டுதற்கே ஒரு பையில் மாற்றுதற்காடை- மற்றும் மறுகையில், பஸ்ஸ0க்கும் ரயிலுக்கும காசு. வேறொன்றும் தூக்குதல் தடையே- உங்கள் விரலிலே காதிலே நகையேதும் கண்டால் போர்ப்பறை முழங்கிடக் காண்பீர்- எங்கள் பொல்லாத உயர்பட்ச தண்டனை பெறுவீர் கடைகளின் சாவியைத் தருவீர்- நீவிர் கட்டிய இல்லத்தின் வாசலைத் திறவீர் பள்ளியை 'பாங்குடன் மறப்பீர்- அங்கு பயில்கின்ற "ஹெளளி னைக் குளித்தற்குத் தருவீர் சொல்லியவாறு நீர் நடப்பீர்- எங்கள் சொல்லினை அலட்சியம் செய்ய நீர் நினைத்தால்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 124
கொல்லுவோம் உமைக் கூண்டோடு- உங்கள் குமருகள் படும்பாடு சொல்லுதற்கில்லை மெல்லவே சிந்தித்துணர்ந்து- இந்த மேதினில் விட்டு நீர் அரண்டோடிப் போவீர் இல்லையேல். எம்குனம் அறிவீர்.” தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலிருந்து கற்பிட்டிக்குப் படகினிலே சென்றபோது ஏற்பட்ட அநுபவங்கள்மன உணர்வுகள் பற்றி கலைவாதி கலீல் கவிதை யில் விபரிப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய விடயங்கள் முற்குறிப்பிட்ட ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் பெருமளவு பேசப்பட வில்லை என்பது கவனத்திற்குரியது.
மேற்குறிப்பிட்ட சொல்லொண்ணா அவலங்களு க்கு இடமளித்த இடப்பெயர்வு இடம்பெற்றமைக் கான காரணங்கள் பற்றிய உசாவல் பலரது கவி தைகளிலும் இடம்பிடித்துள்ளது. இவ்விதத்தில் முஸ்லீம் மக்களை வெளியேற்றியோர் செயற்பாடு கள், அனாரின் கவிதையொன்றில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றது.
“எத்தனை வம்சங்கள் வேர்கொண்ட மண் அத்தனை தலைமுறையின் தலைவிதியும். துப்பாக்கிகளின் நிர்ப்பந்தத்தில் தலை கீழாயிற்று காலம் முழுவதற்குமாய் அந்த நிலத்தின் மீதுதான் எங்கள் உயிரை வைத்திருந்தோம் நாம் வாழ்ந்த வீடு, நம் தோட்டங்கள் நமது சந்தோசம். நம் உரித்து சகலமும் பறித்தெடுத்து வெறுங்கையுடன் விரட்டப்பட்டதும் சதிசெய்தவர்க் கென்ற சந்தேகப் பழிசுமந்து சதிகாரப் பழிவாங்கலுக்குப் பலியாகிப் போனதுவும். அதே நிலத்தில் இருந்தததுதான்! ஒலி பொருந்திய எங்கள் ஜீவிதத்தை ஒரு ஒலி பெருக்கியின் மூலம் இருட்டடிப்புச் செய்ததே தமிழ் மறவர் வீரம். தமிழை வரமாக நினைத்து வாழ்ந்திருந்த நன்றிக்கு ஆறாத சாபத்தை எமக்களித்தனர்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

வாழ்வையே துயர்களின் வதை கூடமாக்கினர் காடுகளை விட்டு விரட்டி குழிகளிலே தள்ளிரன். .
மேற்குறிப்பிட்ட விமர்சனத்தை விட, சிவசேகரத் தின் மெல்லிசைப் பாடல் விமர்சனமொன்று விதந் துரைக்கப்பட வேண்டியது. தமிழருக்கான நில உரிமை கோருகின்ற புதுவை இரத்தினதுரை எழு திய பிரபலமான எழுச்சிப் பாடலொன்றின் (இந்த மண் எங்களின் சொந்த மண்) அதே மெட்டில் இந்த மண் முஸ்லீம்களுக்கும் சொந்தமானது என்ற பொரு ளிலே அவர் எழுதியிருப்பது சுவாரஸ்யமான ஒன்று.
இடம்பெயர்வுக் காரணமாக முஸ்லீம் மக்கள்
சொந்த நிலத்தில் இழந்துபோய் விட்ட வாழ்வு, பற்றிச் சில கவிதைகளில் விபரிக்கப்படுகின்றன.
பால்யகால ஊர் நினைவுகளைச் சில கவிதை கள் அழகாக வெளிப்படுத்துகின்றன. எ-டு: முல்லை முஸ்ரீபாவின் நினைவலைகள்:
நீராவியில்
நீராடி மகிழ்ந்து பீலிக் கரையில் வீற்று மெல்லென இளங்காற்றில் மூழ்கி சிலாவத்தைச் சிறுகாட்டில் நாவற்பழம் கொய்து நாவினித்தது வன்னிக் கானகத்துள் வளமிகு பாலப்பழமும் வீரப்பழமும் அள்ளிச் சுவைத்து முறிப்புத் தோட்டத்து கச்சானவித்து மணக்கமணக்க உண்டு களித்து கடல் நந்தியுள் வலை விரித்து வாழ்வு பெருக்கி பாலைகட்டு வானில் எருமைகள் கட்டிப் பால் வார்த்து கறுத்தமடு கடந்து வயல் வெளிதனை
உழுது மறுத்து மாடுகளாயுழைத்து முத்தையன் கட்டுச் செத்தல் மிளகாய்ச் சிவப்பி வருமானம் கொளுத்து நீராவிப் பிட்டித் திடலில்
122

Page 125
காற்பந்தாடி ஹிஜ்ராபுர ரோட்டில் கிட்டிப் புள்ளடித்து மத்தியான வெயிலிலும் உத்தி பாய்ந்து ஆலமரத்தடி நிழலில் எட்டுக்கோடு கூடி விளையாடி மாலை நீளும் வரை கரப்பந்தாடி புளியடிச் சந்தையில் குழுமி கும்மாளமடித்து முல்லையாழிக் கரையில் காற்றோடு கவிதை பேசி பெளர்ணமிப் பாலமுதருந்தி நிலவுக்குள் குந்தியிருந்து இள நினைவுகள் மீட்டி எங்கள் தோட்டத்து மாமரக் கிளையிலுஞ் சலாடி நினைவுற நினைவுற தண்ணிரூற்றாய் மனதிலின்பமுறும் மென் நிலத்தில் நாமினிக் கூடிக்களித்திருப்பதெப்போ? உரையுங்காள் உளமகிழ்ந்திட."
பிரிந்த ஊரிலுள்ளோருடனான அந்நியோன்னிய மான உறவுகளை- நட்புகளை- நினைவு கூர்ந்து ஏக்கம் கொண்டிருக்கின்ற மன உணர்வுகளை வேறு சில கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இடம்பெயர்ந்து வாழ்கின்ற அகதிமுகாம் வாழ்க் கையின் அவலங்களையும் அவரது பல கவிதை கள் படம்பிடித்துள்ளன.
எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு, யாழ்ப்பா ணப் பிரதேசத்திற்குத் திரும்பச் செல்வது பற்றியும், மண் மீதான உரிமை பற்றியும் அவரது வேறு சில கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன.
மண் மீதான உரிமையை நிலைநாட்ட மக்களை ஒன்று திரளுமாறு கோரிக்கை விடுப்பது, அவரது வேறுசில கவிதைகளில் இடம்பெற்றுள்ளது.
இடப்பெயர்வு சார்ந்த கவிதைகளுள் இவ்விடப் பெயர்வு பற்றியே அதிக கவிதைகள் வெளிவந்திருப் பினும், அவை தனித்தனிக் கவிதைகளேயாகும். அதேவேளையில் இடப்பெயர்வு சார்ந்த அனைத்து
123

விடயங்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு வெளி வந்த முழுமையான தனித்தொகுப்பு, முற் குறிப்பிட்ட கவிஞருளொருவரான முல்லை முஸ்ரீபா வினால் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞரின் சொந்த அநுபவங் களாதலின் இதிலுள்ள கவிதைகளின் எடுத்துரைப்பு முறை பாராட்டத்தக்கதொன்றாக உள்ளது.
இவ்விடப்பெயர்வு பற்றிய சிறுகதைகளாகச் சிலவே அறியப்பட்டுள்ளன. இவை இளைய அப்துல்லாவற் வினால் எழுதப்பட்டவை. இவை சிறுகதைகள் என் பதைவிட, மன உணர்வின் வெளிப்பாடுகள் என்று கூறுவதே பொருத்தமானது. ஊர் பற்றிய நினைவு கள், ஏக்கங்கள் திரும்பிச் செல்லல் பற்றிய நம்பிக் கைகள் சார்ந்தனவாக அவை காணப்படுகின்றன.
1991 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் யாழ்ப் பாண மாவட்ட, வடமராட்சிப் பிரதேசத்தில் மற்று மொரு இடப்பெயர்வு நிகழந்தேறியது. வடமராட்சிப் பகுதி மக்கள் அங்கிருந்து அயல் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இது பற்றி வெளியான படைப்புக ளாக "சிதைவுகள்' என்றொரு குறுநாவல் மட்டும் இனங்காண முடிகின்றது.
தெணியான் எழுதிய இக்குறுநாவல், குறிப்பிட்ட இடப்பெயர்வின் போது, ஒடுக்கப்பட்ட சமூகஞ் சார்ந்த குடும்பமொன்று பட்ட சொல்லொண்ணாத பல்வேறு அவலங்களையும் "அப்பா' என்ற பாத்திர த்தை மையப்படுத்தி விபரிக்கின்றது.
1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் யாழ் ப்பாண மாவட்ட தீவுப் பிரதேச மக்களது இடப் பெயர்வு இடம்பெற்றது. இத்தகைய மக்களின் பல் வேறு அவலங்களைத் திறம்பட வெளிப்படுத்துவ னவாக உள்ளன, சு. வில்வரத்தினத்தின் "காலத் துயர், "காற்றுவழிக் கிராமம்' ஆகிய தொகுப்புகள். சற்று விரிவாகக் கூறுவதாயின் நூலாசிரியர் கூறுவது போன்று, பெயர்வு நிகழ்ந்த பின்னால் பெயர்வுற்ற வர்களின் துயரங்கள், துன்பங்களையும் பிறந்தகம் குறித்த ஏக்கங்களையும் காலத்துயர் பிரதிபலிக்கி றது. "காற்று வழிக்கிராமமோ மக்களில்லாத பாலை யாகிவிடும் கிராமங்களின் வெறுமை கொண்ட வாழ்வைப் பதிவு செய்கிறது. முற்குறிப்பிட்ட அல்லது இனிக் குறிப்பிடப்படவுள்ள இடப்பெயர்வுக ளில் இடம்பெறாத ஒரம்சம்- மக்கள் இடம்பெயர்ந்த பின் கிராமம் கைவிடப்படுகின்றமை- இவ்விடப் பெயர்வுச் சூழலில் காணப்படுகின்றது. இந்த ஒரே
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 126
நிகழ்வின் இருபக்க அவலங்களையும் பதிவு செய்ய முடிந்தமை காரணமாக ஈழத்துத் தமிழ் மக்கள் சார்ந்த இடப்பெயர்வு இலக்கியத்தின் சிறந்த வகை மாதிரி எடுத்துக் காட்டுகளாக இக்கவிஞரின் படைப்புகள் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1995 இன் நடுப்பகுதியளவில் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் பிரதேசத் தமிழ் மக்களது இடப்பெயர்வு இடம்பெற்றது. இம்மக்களில் ஒரு சாரார் அகதி முகாங்களிலோ, உறவினர் வீடுக ளிலோ, தாம் கட்டிய புதிய வீடுகளிலோ தங்கிவிட, மற்றொரு சாரார் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். முற்கூறப்பட்ட முஸ்லீம் மக்களது இடப்பெயர்வுக்கு நிகரான இவ்விடப்பெயர்வு பற்றியே ஏனைய அனை த்து இடப்பெயர்வுகளையும் விட, நாவல்கள் உட்பட முக்கியமான படைப்புகள் வெளிவந்திருப்பது விதந்துரைக்கத்தக்கது.
மேற்குறிப்பிட்ட இடப்பெயர்வின் நேரடி அநுபவங் களை அவலங்களை நுணுக்கமாகச் சித்திரிக்கின்ற விதத்தில் சோ. பத்மநாதனின் நெடுங்கவிதை குறிப் பிடத்தக்கதொன்று. வீதி வழிவந்த விருட்சங்கள் என்ற தலைப்பிலான அக்கவிதையின் ஒரு பகுதி, பின்வருமாறு:
'அடையாள அட்டை முதல் ஆவணங்கள், காசு, நகை, உடை, சாவி எல்லாம் ஒரு பை திணித்தவரும்தோளில் பசியால் துவண்டு கிடந்த இளம் வாழைக் குருத்தை சுமந்து நடந்தவளும் மூப்பால் தளர்ந்து முடங்கி கிடந்த தாய்- தேப்பனைக் காவி நடந்த திருமகனும் எள்போடக் கூட இயலாதவாறு இவர்கள் அள்ளுண்டு வந்தார் அகலத் தெரு நிறைந்தார் சோளகத்தில் அம்பிட்ட பஞ்சு சுழல்வதுபோல் வாழிடத்தை விட்டு வழிமாறி வந்தார்கள் வேர் ஆழப் பாய்ந்த விருட்சங்கள்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

வீதிவழி
буттөтшотд5 இடம்பெயர்ந்து வந்தன காண் நாக்குவரள நடையால் உடல் தளர, துாக்கச் சுமையும் துயரப் பெருஞ்சுமையும் ஏக்கச் சுமையும் எல்லாம் அழுத்த ஒரு போக்கிடத்தைத் தேடிப் புலம் பெயர்ந்து வந்தார்கள்.
மேற்கூறிய இடப்பெயர்வின் வெவ்வேறு சவால் களைச் சிறுகதைகள் சிலவும் நுணுக்கமாக விபரிக் கின்றன. குந்தவை எழுதிய பெயர்வு குறிப்பாகக் குழந்தைகள் அநுபவிக்கும் பசிக் கொடுமையையும், செங்கை ஆழியானின் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் முதியவரொருவர் படுகின்ற வேதனையையும், இராஜநாயகனின் சொந்த மண்' முதியவர் ஒருவரின் மண் மீதான பற்றினையும் வெளிக்காட்டுகின்றன.
ஊர் மீதான பற்றினை வெளிப்படுத்துகின்ற வடி வம் அல்லது பரிசோதனை முயற்சியிலான வடிவம் என்ற விதத்தில் நிலாந்தன் இயற்றிய "ஒ எனது யாழ்ப்பாணமே முக்கியமானதொரு படைப்பாகும். மேலும், இது யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் பற் றியதொரு விமர்சனமாகவுமுள்ளது என்பதற்குப் பின்வரும் பகுதி சான்றாகின்றது:
யுத்தம் அவனைச் செதுக்கியது சுயநலமியாய் சேமிப்பில் வெறியனாய் இருந்தவனை வீரனாக்கியது. இடப்பெயர்வுகள் அவனைப் பண்பு மாற்றம் பெற வைத்தன! கந்தபுராணக் கலாசாரத்திலிருந்து அவனைக் கட்டாயமாக இடம்பெயர் வைத்தன ஒவ்வொரு இடப்பெயர்வும் அவனுக்கு மனப் பெயர்வாய் மாறியது.
படிப்படியாய் மாறியது
இப்போதுள்ள யாழ்ப்பாணி
ஒரு யுத்தத்தின் கனி
ஒரு மகா அனுபவசாலி
ஒரு மகா தந்திரசாலி ஒரு மகா விவேகி.
124

Page 127
ஈழத்தமிழ் பேசும் மக்களது இடப்பெயர்வுகள் இக்காலப் பகுதியில் பல தடவைகள் இடம்பெற்றி ருப்பினும், அது பற்றிய நாவல்கள் இவ்விடப்பெயர் வின் போதுதான் வெளிவருகின்றன. மரணங்கள் மலிந்த பூமி, ‘போரே நீ போ' என்ற இவ்விரு நாவ ல்களும் செங்கை ஆழியானால் எழுதப்பட் டவை. இரு நாவல்களும் இவ் வலிகாமப் பிரதேச மக்களது இடப்பெயர்வு அவலங்களை விரிவாக எடுத்துரைக் கின்றன. இவற்றை நாவல்கள் என்பதனை விட, விவரணச் சித்திரங்களின் தொகுப்புகள் என்றுரைப் பதே பொருத்தமாயினும், மக்களது அவலங்கள் சிலவற்றை ஒரளவு பதிவு செய்துள்ளன என்ற விதத் திலும் அதனைவிட, யாழ்ப்பாணச் சமூக, அரசியல் நிலைமைகள் பற்றிய விமர்சனங்கள் சில முன் வைக்கப்படுகிறது என்ற விதத்திலும் விதந்துரை க்கத்தக்கது. நாவலாசிரியர் முன்வைக்கும் தமிழீழப் போராட்ட நடைமுறை பற்றிய விமர்சனமும் சாதி மேலாண்மை பற்றிய விமர்சனமும் இவ்விதத்தில் கவனத்திற்குரியவை.
செ. கணேசலிங்கத்தின் ‘செல்வி என்ற நாவ லின் ஒரு பகுதியாகவும் 'ஈனத் தொழில்' என்ற நாவ லின் ஒரு பகுதியாகவும் மேற்கூறிய இடப்பெயர்வு சித்திரிப்புக்குள்ளாகியிருப்பினும் அவை மேலோட்ட மான பின்னணியாக மட்டுமே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்சார்ந்த பால்யகால நினைவுகள் சிலவற்றை வெளிப்படுத்துவதாகவும் நிவாரணம் கிடைக்கும் அகதி நிலை வாழ்வை விமர்சிப்பதாகவும் தனசில னின் சில கவிதைகள் காணப்படுகின்றன.
2006 இன் ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற மூதூர் தமிழ் முஸ்லீம் மக்களது இடப்பெயர்வுகள் பற்றிய மிகச் சில படைப்புகளே வெளிவந்திருப்பதாகத் தெரி கின்றது. சுஜந்தனின் 'அன்றொரு நாள் இதே நிலவில் அகதி முகாமில் வாழ்கின்ற தமிழ் இளை ஞனொருவனது நினைவுகளை வெளிப்படுத்துகின் றது. இவ்வாறே, வளிம் அக்ரமின் 'சூரியனை மென்றுவிட்டு துயிலும் இருளில், மூதூர் முஸ்லீம்க ளின் இடப்பெயர்வு குறித்துப் பேசுகின்றது.
2007 இன் ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட படுவான்கரைப் பிரதேசத் தமிழ் மக்களது குறித்த கவிதைகளும் ஒரு சிலவே இனங் காணப்பட்டுள்ளன. இவ்விதத்தில் மேரா எழு
125

துவருட வாழ்த்துக்கள்
பிறக்கப் போகும் 2011 - புத்தாண்டு காலத்தில் மல்லிகைச் சுவைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சகல சந்தாதா ரர்கள், விளம்பரதாரர்கள், விற்பனவு நிறு வனங்கள், கலைஞர்கள், அனைவருக் கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வதில் மெய்யாகவே மெத்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
-மல்லிகை ஆசிரியர்
திய பதில் 06.03.2007 என்ற கவிதை இடப்பெயர்வு அவலம் பற்றிய வித்தியாசமானதொரு படைப்பாகும்.
சுருங்கக் கூறுவதாயின் தமிழ், முஸ்லீம் மக்க ளது இடப்பெயர்வுகள் பல தடவைகள் இடம் பெற்றிருப்பது யாமறிந்ததே. ஆயினும், இவை தொட ர்பாக வெளிவந்த அனைத்து ஆக்கங்களும் கிடை க்க முடியாத நிலையில், கிடைத்தவற்றை மட்டும் கவனத்திற்குட்படுவோமாயின் மேலே மூன்று குறிப்பிட்டவாறு மூன்று இடப்பெயர்வுகள் பற்றி மட்டுமே அதிகளவு படைப்புகள் வெளிவந்துள்ளன. இவ்வாறான படைப்புகளுள் சில, வாய்ப்பாட்டுத் தன்மை கொண்டவை. சில திட்டமிட்ட உற்பத்திக ளாக உள்ளவை. தவிர, கணிசமானவை கவனத் திற் கொள்ளப்படக் கூடியவை.
மிகச் சில படைப்புகளே இன உணர்ச்சிக்குட்ப டாமல் மனிதாபிமான நோக்கில் வெளிப்பட்டுள் ளன. இவ்விதத்தில் நுஃமானின் கவிதைகள் கவன த்திற்குரியவை.
எடுத்துரைப்பு முறையில் அழகியல் பண்பு மிளிர எழுதிய கவிஞர்களாக மூத்த தலைமுறையினருள் வில்வரத்தினத்தையும் இளைய புதிய தலைமுறை யினருள் முல்லை முஸ்ரீபாவையும் கருத முடிகின் றது. இவர்களுள்ளும் முல்லை முஸ்ரீபாவின் தொகுப்பு விரிவாக எடுத்துரைக்கப்பட வேண்டிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ள வகை மாதிரிப் படைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 128
அவள் இல்வாழ்வின் வெவ்வேறு தோல்வி நிை
அடுக்கடுக்காக வரும் அலைகளைப் போலப் பெருக் இனிமையாகத் தொடங்கிய இல்வாழ்வு, ஏன் இப்படி இழு இன்றுவரை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டது போ போக முடியாது. அநுசரித்துப் போவதற்கு ஒர் எல்லை
கவிதாவின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது.
அந்த இனிய காதல் எங்கே தொலைந்து போனது?
இதையே தான் இலக்கியனும் நினைத்தான். எவ்வ மல்லிகைப் பூவைப் போல பெண்மை என்றாலே மென் இப்படி மாறினாள்?
கவிதாவைச் சந்திக்க முன்னரும் அவன் கவிதை அவர்களில் யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. பார்த் கைகளுக்கு அனுப்பினான். பிரசுரமாகாமல் குப்பைக் மாபெரும் கவிஞன் தான்! எப்படி முடிந்தது?
எல்லாம் கவிதாவால் தான். அவளோடு பழக ஆ எழுதும் எல்லாக் கவிதைகளுக்கும் அவள் தான் முத த்தை விட, அவன் மனதிலுள்ள கவித்துவத்தை இன பின்னுள்ள வலிகளை, வேதனைகளை அவள் அறிந்:
தனக்காக, தன்னால் எழுதாமலிருக்க முடியாது ஆரம்பித்தான். கவிதைகளைப் படித்து, தட்டிக் கொடுக் அப்போதெல்லாம் அவளது அழகான கண்களையோ, இதழ்களையோ, இனிய குரலையோ அவன் கண்ட இதயத்தைக் கண்டு கொண்டான். இந்த அன்பு வெ நினைத்தானேயன்றி, காதலை இனம் காணாத அப்ப
கவிதாவோ அவனது கவிதைகளோடு அவனது அ றையும் ரசித்தாள். எனினும் மெல்ல மெல்ல தாமத எனினும் சொல்லவில்லை. கேட்கவுமில்லை. எனினும் அதன் பின் அவனது கவிதைகள் உச்சம் பெற்ற அலைக்கழிக்க ஆரம்பித்த பின்னர் தான்.
சொன்னால் தான், காதலா? கேட்டால் தான் காத
காதல் வசப்பட்ட கவிஞன் காதலை மட்டும் எழுதி எதை எழுதினாலும் அங்கு கவித்துவம் மிளிர்ந்தது. கன
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

சந்திரகாந்தா முருகானந்தன்- ލކީ 辭
னைவுகள், அடுத்தடுத்து $கெடுக்கத் தொடங்கின. ழபறியால் மாறிப்போனது? ாதும். இனியும் பொறுத்துப்
கிடையாதா, என்ன?
ளவு மென்மையானவளாக இருந்தாள். பனி தெளித்த ாமை என்பதற்கு இலக்கணமாய் இருந்த இவள், ஏன்
கள் எழுதியிருக்கிறான். நண்பர்களிடம் காட்டுவான். தவர்களும் உதட்டைப் பிதுக்கிச் சிரித்தனர். பத்திரி கூடைகளை நிறைத்தன. ஆனாலும் இன்று அவன்
ரம்பித்த பின்னர் தான் அவன் கவிஞனான். இவன் ல் ரசிகை ஆனாள். கவிதை வரிகளிலுள்ள கவித்துவ ம் கண்டாள். களம் காணாமல் போன கவிதைகளின் து கொண்டாள்.
என்பதற்காக எழுதியவன். அவளுக்காகவே எழுத கும் அவளது உற்சாகமூட்டலுக்காகவே எழுதினான். அந்தப் புருவ மயிர்களையோ பாராட்டுகின்ற வாயின் தில்லை. எனினும் படிப்படியாக அவளது அன்பான றும் நட்பல்ல. அதற்கும் மேலாக வேறொன்று என ாவியாக இருந்தான். பூண்மையை, உள்ளத்தை இயல்பை என எல்லாவற் Dாகவேனும் அவன் அவளைப் புரிந்து கொண்டான். அவனது கவிதைகளே அவற்றைப் பேச ஆரம்பித்தன. ன. காதல் என்ற மாயஜாலம் மனதைப் போட்டு
6)
ஒய்ந்து விடவில்லை. எல்லாவற்றையும் எழுதினான்.
ல் பறக்கும் கருத்துக்கள் எல்லாம் கவித்துவ வரிகளில்
126

Page 129
ஏற்றினான். அவன் கவிஞனாக அங்கீக ரிக்கப்பட்டான்.
அவன் கவிதைகள் சொன்ன காதலில் அவளும் கரைந்து உருகினாள்.
“உங்கள் எதிர்காலத் திட்டமென்ன?" ஒருநாள் அவள் கேட்டபோது, அவன் சிரித்தான்.
"எனது எதிர்காலம் நீர்தானே?"
அந்தப் பதிலில் அவள் மனம் நிறைந்தாலும், "நான் அதைக் கேட்கல. உங்கடை இலக்கியப் பயணம் பற்றி.?" என அவள் நோக்கினாள்.
அவனுக்குச் சப்பென்று இருந்தது. எனினும், தனது கவிதையில் அவள் கொண்டிருக்கும் அக் கறை மனதை நிறைத்தது.
‘புத்தகம் ஒண்டு போடுங்களேன்.?’ மீண்டும் அவள்.
அவன் விரக்தியுடன் சிரித்தான்.
"புத்தகம் போடுவது எண்டு சுலபமாகச் சொல்லி விட்டாய். புத்தகம் போடுவதென்றால் சும்மாவா..? பணத்துக்கு எங்க போறது?"
'ஏன், உங்களிட்டைப் பணம் இல்லையா?"
'அக்காவின் திருமணத்திற்காகப் பெற்ற கட னையே இன்னும் அடைக்க முடியவில்லை. இந்த நிலையில் தங்கையின் கலியாணப் பேச்சு." அவன் நெடுமூச்செறிந்தான்.
அவள் மெளனமாக இருந்தாள். இலக்கியனுக் குப் புத்தகம் போடுவதிலுள்ள ஆர்வத்தைக் கவிதா அறிவாள். அவளும் சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண். உழைக்கும் பணத்தை நம்பியே தம்பி, தங்கையரின் படிப்புச் செலவு. அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கேட்டான்.
“என்ன யோசிக்கிறீர்?"
"செய்ய நினைக்கிற எதையும் பின் போடக்
கூடாது.”
'நீர் சொல்லுறது சரிதான், கவிதா. ஆனா இரண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கு. இப்ப உடனே எண்டால் என்ன செய்யுறது?"
"நான் அதைச் சொல்லேல்லை. புத்தகம் போடு
127

றதைப் பற்றி தான் சொல்லுறன்." அவள் முகத் தில் நாணம்
"நானும் அதைத் தான் சொல்லுறன்." அவன் குறும்பாகச் சிரித்தான்.
மூன்று நாட்களின் பின்னர் கவிதா பணத்தோடு வந்தாள்.
“கவிதா, ஏது பணம்?”
"அதைப் பற்றி உங்களுக்கு என்ன? புத்தகம் போடுவதற்கான ஒழுங்கைச் செய்யுங்கள். அட் டைப்படம் பிரமாதமாக இருக்க வேணும்.”
'ஏன், என்னுடைய கவிதைகளின் தரம் போதாதா?”
"அழகான பெண்ணாக இருந்தாலும் மணவறை க்கு "மேக் அப்' தேவை. அப்படித்தான் இதுவும்."
“உமக்கு மணவறைக்கு போறப்போ எந்தவித அலங்காரமும் தேவையில்லை. இப்படியே வந் தால் அதுவே போதும்."
அவனது வார்த்தைகளில் அவள் குளிர்ந்தாள்.
'காசு எப்பிடிக் கிடைச்சதெண்டு சொன்னால் தான் கவிதைத் தொகுதி போடச் சம்மதிப்பன்."
“என்னுடைய சேமிப்பு." அவள் கண்களைச் சிமிட்டினாள்.
*Éir கெட்டிக்காரி தான். என்னிடம் ஒரு சதமும் சேமிப்பில்லை.”
"அது சரி, இண்டைக்கு உம்மிலை ஏதோ வித்தியாசம் தெரியுது?"
‘என்ன வித்தியாசமெண்டு கண்டு பிடியுங்கோ
பாப்பம்"
இலக்கியன் கவிதாவை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை நோக்கினான். அவள் முகத்தில் புதிதாக நாணம் படர்ந்தது.
"அதே கவிதா தான். ஆனால்.”
"ஆனா..?”
'96OTIT........ ம். புரியல்லையே."
“கண்டு பிடிச்சா உடனடியாக ஒரு பரிசு தரு வன்.”
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 130
“என்ன தருவீர்?
"உங்களுக்கு எது விருப்பமோ அதைத் தரு
6\l6ԾT.....''
'பிறகு ஏமாத்தக் கூடாது."
"முதல்லை கண்டு பிடியுங்க”
"ம்.”
“கண்டு பிடிக்காட்டி நீங்கள் எனக்கு ஒரு பரிசு தரவேணும்.”
‘என்ன பரிசு.?
"அதே பரிசு தான்.”
இருவரும் சிரித்தார்கள். சிரிக்கும் போது, அவள் கன்னத்தில் விழுந்த குழிவை ரசித்தான். கழுத்தில் இல்லாத சங்கிலியைக் கண்டு பிடிக்கவில்லை. அவள்தான் சொன்னாள். "என்னுடைய கழுத்தைப் பாருங்கோ.”
“என்ன, எங்கே சங்கிலி.?"
"அதை அடமானம் வைச்சிட்டன், புத்தகம் போடுறதுக்கு”
'உமக்கென்ன, பைத்தியமே?”
“ஓம் பைத்தியம் தான். உங்கட கவிதைக
'இல்லை. காதல் பைத்தியம். முத்திப் போச்சு..." என்ற இலக்கியன், சங்கிலியை அட மானம் வைத்ததற்காக அவளை ஏசினான். கவிதா சிரித்தாள். அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் புத்தகம் போடும்படி வற்புறுத்தினாள்.
பின்னர் அவன் புத்தகம் போட்டது, தமிழ்ச்சங்க் மண்டபத்தில் வெளியீட்டு விழா வைத்தது எல்லாம் கிடு கிடு என நடந்தன. அவள் தான் ஒடி ஒடி காரியம் பார்த்தாள்.
வெளியீட்டு விழாவுக்கு கணிசமான கூட்டம் வந் திருந்தது. புத்தகங்களும் ஒரளவு விற்பனையாகின. முதற் பிரதி பெற்று ஊக்குவிக்கின்ற புரவலர் வேறொரு நிகழ்வு இருந்தமையினால் அவரது ஊக்குவிப்புத் தொகையும் இல்லாமல் போயிற்று. மண்டப வாடகை, தேநீர்ச் செலவு, போஸ்டர், நோட்டீஸ் செலவு எனப் போனது போக பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை. இருந்தாலும் மனதில் நிறைவு. கலியாண வீடு ஒன்றை நடாத்தி முடித்தது போன்ற மனநிறைவு. நூலை வெளியிட்டு வைத்த
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

பேராசிரியர் ஆகா ஒகோ என புழுகித் தள்ளினார். உரையாற்றியவர்கள் நாலு சொற்களால் வாழ்த்தி னர். மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடினாலும், தீக்குள் விரலை வைத்துவிட்டோமா என்கிற தகி ப்பு. கவிதாவின் வெற்றுக் கழுத்தையும், விற்பனை யின்றி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை யும் பார்த்து நெடுமூச்செறிந்தான், இலக்கியன்.
புத்தக விற்பனையாளர்களிடமிருந்து எதிர்பார் த்த அளவுக்கு ஆதரவு கிட்டவில்லை. ஒரு சில பிரதி களை வாங்கிக் கொண்டு, விற்பனை செய்து முடி ந்த பின்னரே பணம் தருவதாகச் சொன்னார்கள்.
“இப்பதையிலை ஆர் தம்பி புத்தகம் வாசிக்கி 60?'
கடைக்காரர் நம்பிக்கையைச் சிதற வைத்தார்.
கவிதாவைச் சந்திக்கும் போதெல்லாம் அவளது வெற்றுக் கழுத்தை வேதனையோடு பார்ப்பான். அம் மாவின் அனுமதியுடன் அடமானம் வைத்ததாகக் கூறிய கவிதா, இப்போது வேறுவிதமாகக் கூறினாள்.
“வீட்டிலை என்னுடைய சங்கிலியைப் பற்றிக் கேட்பினமோ எண்டு கவலைப்படாதையுங்கோ. அதை அறுத்துக் கொண்டு ஒடீட்டாங்களெண்டு தான் சொன்னனான்."
அவனுக்கு பகீரென்றது. எனினும், அவள் அவன் மீது கொண்டுள்ள காதலை உணர்த்தியது.
இதற்குப் பின்னர் வழமையான காதலர்களைப் போல், அவர்களும் பல சிக்கல்களை எதிர்கொண் டார்கள். இறுதியில் தடை தாண்டி உறுதியோடு நின்று வாழ்வில் இணைந்தார்கள்.
திருமணமான புதிதில் எல்லாம் இனிமையா கத்தான் இருந்தது. அவளை மனைவியாகப் பெற்றதற்காக அவனும், அவனைக் கணவனாகப் பெற்றதற்காக அவளும் பூரித்து மகிழ்ந்தனர்.
ஆண்டுகள் ஐந்து. இரண்டு குழந்தைகள். அந்த மகிழ்ச்சிகளை எல்லாம் குடும்பப் பொருளா தார சுமை தட்டிப் பறித்துக் கொண்டிருந்தது. விலைவாசி ஏற்றமும், ஊதிய உயர்வின்மையும் பல குடும்பங்களைப் பாதித்தது போல் அவர்களையும் பாதித்தது.
காதல் என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு என இருவரும் சிந்திக்கத் தலைப்பட்டனர். காதல்
128

Page 131
என்கிற வார்த்தை மனதை முழுமையாக வசப்படு த்தி ஆக்கிரமித்து பிற உலகை அறியாத ஒருவித மயக்க நிலையில் வைத்திருந்ததோ எனக் கவிதா ஆழமாக யோசித்தாள்.
காதல் பற்றிய கற்பனாவாதத்தில் இருந்த அந்தப் பருவத்தில் எங்காவது எப்படியாவது ஒரு பொறி கிளப்பி, பற்றிக் கொண்டு அது பற்றி அதீத கற்பனை கட்டிவிட்டோமா என இலக்கியனும் யோசித்தான். தனது கவிதைகளில் காதல் பற்றிப் பாடியதெல்லாம் வெறும் கானல் நீர் தானோ என யோசித்தான்.
LD...... அன்று எப்படி ஒருவரை ஒருவர் காத லித்தோம். இந்தக் காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததெல்லாம், பொய்யா? அப்போது இருந்த உணர்வு உச்சம் வாழ்நாள் முழுவதும் நீடிக் கும் என்றல்லவா யோசித்தோம்? ஆனால் இன்று? அந்த உணர்வு உச்சத்தையே காதல் என்று நம்பி, காதல் தெய்வீகமானதென்றும், காலத்தால் அழி யாததென்றும் நம்பியது நிஜமே இல்லையா? கவி தாவின் மனதில் புயல் வீசியது.
அவள் கற்பனை செய்த இலட்சியக் கணவன் இலக்கியனுக்கும் இன்றைய இலக்கியனுக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு அவளும் தான் எவ்வளவு மாறிவிட்டாள்
'b..... நான் இவரை எவ்வளவு நேசித்தேன். என்னிடமுள்ள அனைத்தாலும் இவரைக் காதலித் தேன். மிகவும் நேசித்த என்னிடம், இவர் இப்போது இவ்வளவு மூர்க்கமாக தன்னிச்சையாக நடந்து கொள்ளுகிறார்? மனதில் ஏமாற்றம்
குடும்பத்தில் இப்போதெல்லாம் இருவருக்குமி டையே முரண்பாடுகள் அடிக்கடி வெடிக்கும். அவனது ஆதிக்கமான செயற்பாடுகளுக்கெல்லாம் அவள் இப்போதெல்லாம் விட்டுக் கொடுப்பதில்லை.
"கொஞ்சம் பொறுப்புள்ளவராக நடந்து கொள் ளுங்கள். குடும்பச் சுமையையே கொண்டிழுக்க முடியவில்லை! இப்போது புத்தகம் போட வேணும் எண்டு அடம் பிடிக்கிறீங்களே? எனக்கு தாங்க முடி யாத வயிற்று நோவு. நாரிப் பிடிப்பு. அரசாங்க ஆஸ்பத்திரியில மருந்தெடுத்து சரி வருகுதில்லை யெண்டு உங்களுக்கும் தெரியும். இந்த நிலையில பணப்புழக்கம் இல்லாததால வைத்திய நிபுணரிடம் தனியார் வைத்தியசாலையில் காட்டாமல் இருக்கி றன். ரண்டு புத்தகம் போட்டு என்ன நடந்தது?
129

எல்லாப் புத்தகங்களையும் அடுக்கி வைச்சிருக்கு. வீட்டில இடவசதி கூட இல்லை. உங்கட ஆத்மதி ருப்திக்குப் புத்தகம் போட்டுட்டியள். ஊருலகத்தில் நீங்கள் ஒரு கவிஞர் எண்டு பெயர் எடுத்திட்டியள். பேப்பரிலை எழுதுறியள் தானே?. அது போதும்.' கவிதா எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவி ல்லை. அவளது நகைகளைக் கேட்டான். இம்முறை அவள் பிடிவாதமாக நின்று உறுதியாக மறுத்து விட் டாள். இதனால் மூண்ட சண்டை தினமும் தொடர்ந்
函邑j·
முன்பு பேசுவதோடு நிறுத்திக் கொண்டவன், இப்பொழுது சில நாட்களாக அவளைத் தாக்கவும் முற்பட்டான். கவிதா மனமுடைந்து போனாள். நேற்றும் அப்படித்தான்! கன்னம் சிவந்து வலித்தது. ‘ம்.இனியும் இவரோடு வாழ முடியாது. பிரி ஞ்சு போகத்தான் வேணும். மனதில் கருக் கொண்ட எண்ணம் உருப்பெடுத்து வந்தது. வாழ்க் கையில் எல்லா இடையூறுகளும் திமிறி எழுந்தன. காதற் கணவன் இலக்கியனின் கூரிய சொல்லம்பு களால் துளையுண்ட அவள் இதயம் வலி எடுத்தது. விளைவு, இன்று கவிதா தனது முடிவை அவனி டமே கூறினாள்.
அவன் சற்று ஆடித்தான் போனான். ஆனாலும் ஆண் என்ற அகம்பாவம் அடிபணிய மறுத்தது.
"சரி உன் விருப்பப்படி செய்...!" என்று சொல்லி விட்டு அறையுள் வந்து கட்டிலில் விழுந்தான். வானத்தை வெறித்துப் பார்த்தான். கருமேகங்கள் திரண்டு வந்து ஒளியை மங்க வைத்தன. கண்களை இறுக மூடிக் கொண்டான்.
கவிதாவின் முரண்பட்ட முகத்தையும் மீறிக் கொண்டு அவளது அன்பு ததும்பும் கனிவான முகம் மனத்திரையில் தரிசனமானது. கவிதாவை நன்றி யோடு நினைத்தான்.
's........ இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு ஒன்றாகப் பயணித்து, எல்லா இடிகளையும் தாங்கிக் கொண்டவளாயிற்றே. அவனுக்காக அவள் எவ்வ ளவு விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கிறாள்! கடந்த ஒரு வாரமாக அவளுடனான முறுகல் தீவிர மடைந்த பின்னர் எனது உள்ளமே வெறுமையாக இருக்கிறதே! அவள் அருகில் வந்து உரையாடி துயி லாத இந்த நாட்கள் எவ்வளவு அமுக்கமாக இருக் கிறது. இவளைப் பிரிந்து நான் வாழத்தான் முடி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 132
யுமா? இலக்கியனின் மனதில் கவிதா தேவதை யாக மிதந்தாள்.
அதே வேளை அடுத்த அறையில் தனித்துப் படுத்திருந்த கவிதாவுக்கு வாழ்க்கையின் எல்லாத் திசைகள் மீதும் கோபம் பொங்கி வந்தது.
'Lb........... இந்தத் துன்பத்தோடு அடிமை போல இன்னும் எவ்வளவு காலம் தான் இணைந்து வாழ் வது.? காதலே பொய் என்று ஆன பின்னர், இணை ந்த போலி வாழ்வு எதற்கு? கவிதாவின் மனதில் ஆழத்திலிருந்து, ஏதோ ஒரு இரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது.
துணிந்து உறவை வெட்டி முறித்து வெளியேறி விட வேண்டியது தான்."
மறுகணமே மனதில் கேள்விக்குறி.
பிரிந்து தனித்துப் போய் வாழ முடியுமா..? வரும் இடர்களை எல்லாம் துணிந்து முறியடிக்க முடி யுமா?. துணையில்லாமல் வாழும் பெண்ணை இந் தச் சமூகம் நிம்மதியாக இருக்க விடுமா..? ம். தயங்கவே கூடாது. எதையும் சவாலாக எடுத்துக் கொள்கிறது தான் வாழ்க்கை. தெளிவான மன தோடு முடிவெடுக்க வேணும்'
மனது இருபக்கமும் தழும்பிக் கொண்டிருந்தது.
பிள்ளைகள்..? குடும்பச் சண்டைக்கு விவாகர த்துத்தான் பரிகாரமா..? பிள்ளைகளோடு நான் எங்கே போவது.? பிள்ளைகள் அப்பாவுக்காக ஏங்க மாட் டார்களா..? போன தடவை கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போனபோது, அங்கேயும் வரவேற் பில்லையே? “பொம்பிளைதான் அனுசரித்துப் போக வேனும்” என்ற அம்மாவின் ஆலோசனைகள். "நான் அவரிட்டை போய் கதைக்கவா?’ என்ற அப் பாவின் பரிதவிப்பு. நல்லவேளை அவரே வந்து கூப் பிட்ட போது, மறுப்பின்றிப் புறப்பட்டு விட்டேன்.
மறுபடியும் இப்போது ஒரு மாதத்திற்குள்ளாகவே வேதாளம் முருக்கை மரம் ஏறியுள்ளது. அவள் இருதலைக் கொள்ளியாகத் தவித்துக் கொண்டிரு ந்த போது கதவு தட்டப்பட்டது.
இலக்கியன் தான்.
“கவிதா. என்னை மன்னிச்சிடம்மா."
அவனது அந்த ஒரு வார்த்தையிலேயே அவள் உருகிக் கரைந்தாள் கண்கள் பெருக்கெடுக்க
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

விசும்பினாள். பெண்களுக்கு இவ்வளவு கண்ணிர் எங்கிருந்து வருகிறது என நினைத்தபடி அவளை அனைத்துக் கொண்டான்.
"நீங்கள் தான் என்னை மன்னிக்க வேணும்.” குரல் தளதளக்க அவள் கூறியபோது அவனும் அவளது அன்பை, காதலை எல்லாம் உணர்ந்தான்.
பின்னர் அவர்கள் நீண்டநேரம் உரையாடினார் 5ണ്.
"அத்தான். ஐஞ்சு வருசத்துக்கு முந்தி நாங்கள் இருவரும் இருந்தது போல, இப்ப ஏன் இருக்க முடியேல்லை?” கவிதா அவனை நோக்கினாள்.
“கவிதா. இப்பவும் எம்மிடையே காதல் இல் லாமலில்லை. காதல் என்பது காமமும் அன்பும் சேர்ந்த ஒன்று. அல்லது சரியான விளக்கம் சொல் வது கடினமானது. அந்தப் பருவத்தில் எமது காமம் தாமதமானபோது, ஒரு வடிகால். 95تکIT வது சமூக ஒழுக்க வரம்பை மீறாமல் அதே நேரம் மறைமுகமாகவேனும் மனதைப் பகிர முடிகிறதல் 6u6Ꮒjm? ..... உண்மையைச் சொல்லப் போனால் காமம் என்பதற்கு ஒரு கவசமாக காதல் இருந்த போது, இருவருக்கும் அது கட்டாய தேவையாக இருந்தது. கூடவே மனதில் எதிர்காலம் பற்றிய எதிர் பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. திருமண வாழ்வில் கிடைக்கப் போகிற சுகங்களைப் பற்றிச் சிந்தித்த நாம் அதன் மறுபக்கத்தைப் பார்க்க மறந்திட்டம்.”
அவன் சொல்லிக் கொண்டிருந்த போது, அவள் சிலிர்த்துக் கொண்டாள்.
"நீங்கள் சொல்லுறது உண்மைதான், அத்தான். அதனால்தான் கலியாணத்திற்குப் பிறகு வாற நேசம் தான் நிஜமானது என்று கூறுகிறார்கள்."
கவிதா கூறியதும் அவன் இடைமறித்தான்.
"அப்படியானால் கலியாணத்திற்கு அப்புறம் நீ இன்னும் என்னைக் காதலிக்க ஆரம்பிக்கவில் 60d6 Iouium?”
அவனது கேள்வியில் நாணமும் சங்கடமுமாக அவனை நோக்கினாள்.
"சும்மா போங்க. எப்ப பார்த்தாலும் உங்களு க்கு பகிடிதான்.”
அவள் சிரிக்க, அவன் சிரிக்க, இயற்கையும் சிரித்தது.
130

Page 133
R FRODCT
ثيسية
PLASTICCARDS, SCRATCH CARDS, VISITIN CATALOGUES, SOUVENIRS,BOOKMARKS, COLOURBIO DATA, STICKERS, NVITATIO MENu CARDS,GARMENT TAGS,THANKING CD STOMMER, TRANSPARENCY SHEET
(26 deur Él Sumanatissa Mawatta, Colc Web: www.happydigitalicentre. Ce
131
 
 

To:
Mallikai 46 year Issue
G CARDS, DAiABASE PRINT NG, BROCHIRES,
GREETING CARDS, NAME TAGS, CD/DVD COVERS N CARDS, PROJECT REPORTS,BOOK COVER,
CARDS,CERIFFICATES, BOOKS,POSTERS,
DIGITAL CENTRE(Pvt) Ltd tlh é Digitaaf ("Off" | Press mbo-12. Tel: 494 11 4937536, 11 4610652 yn email: info@happydigitalicentre.com
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 134
போக்குவரத்து நெரிசல கிடக்கின்றன.
அவன் வாரத்தில் யாவது இப்படிக் குடும்ப வேளை மெல்ல மெல்ல லகம். நகரத்தில்தான் இ நடுப்பகல் தாண்டி, இரு தடவைகள் நகரத்துக்கு வர் வேண்டியவைகளை வாங்கிப் போக அடிக்கடி நகரத் ஆரம்ப வகுப்புப் படிக்கின்றான்.
அவன் வீட்டிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வ வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே போய்வு மனதிலுள்ள எண்ணம்.
அவன் இன்னும் சற்றுத் தூரம் நடந்து வந்து, பின் தாஜ்மகாலுக்கு எல்லோரையும் அழைத்துப் போவான் வாங்கிக் கொடுப்பான். அங்கிருந்து புறப்படும்போது, ! ளைத் தவறாமல் பார்சல் கட்டி அவள் கையில் கொடு செலவாகின்றது என்பது பற்றி அவன் கவலைப்படுவ இவைகளே அவன் வாழ்வின் இலட்சியங்கள். அவள் சட்டென்று கண்டு கொள்வான். அவன் துடித்துப் பே அவள் முகந்தான் அவனுக்கு எல்லாம் சொல்லுப
அவன் மனவுணர்வுகளைப் புரிந்து கொண்டு ந கிடைத்த அதிர்ஷ்டம்.
அவன் மனைவி மாலதி, கணவனைப் போலவே
னையும் உள்ளவள்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

அவன் தன் அன்பு மகளை அணை த்து, தூக்கிய வண்ணம் மெல்ல நடந்து வந்து கொண்டிருக்கின்றான். அவன் பின்னே அவன் மனைவி. அவளைத் தொடர்ந்து, அவன் தங்கை துருதுருத்து அட்டகாசம் செய்யும் மருமகனை அட க்கிப் பிடித்துக் கொண்டு வருகின்றாள். இன்று விடுமுறை நாள்; ஞாயிற்றுக்கி ழமை. நகரத்துக் கடைகள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. ஹோட்டல்களும், இரண்டொரு மருந்துக் கடைகளும் திறந்து வியாபாரம் நடைபெறுகிறது. வீதியில் சன நடமாட்டம் குறைவு. தூர
இடங்களுக்குப் போய்வரும் ஒரு சில பஸ் வண்டிகளும் வான்களும் ஒடிக்
தியான்
கொண்டிருக்கின்றன. எப்பொழுதும் ாக இருக்கும் வீதிகள் பெருமளவு வெறிச் சோடிக்
ஒரு தடவை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை த்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டு நகரவீதியில் மாலை
நடந்து போவது வழக்கம். அவன் பணிபுரியும் அலுவ Nருக்கிறது. தினமும் காலை, மதிய உணவின் பின்பு துபோகின்றான். அவன் மனைவி வீட்டுத் தேவைக்கு துக்கு வந்து போவாள். மகன் நகரத்துக் கொன்வன்ரில்
ருவது தனது அருமைத் தங்கைக்காகத்தான். அவள் பந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவன்
னர் திரும்பி வரும்போது, நகரத்துப் பெரிய ஹோட்டல் ா. அவர்கள் விரும்பும் உணவுகள் அவரவர் விருப்பப்படி தங்கை விரும்பி உண்ணும் சுவையான தின்பண்டங்க க்காமல் விட்டுவிடமாட்டான். எவ்வளவு பணம் தனக்குச் தில்லை. தங்கையின் மகிழ்ச்சி, மனநிறைவு, ஆனந்தம் முகம் ஒரு கடுகளவு சுருங்கினால், கறுத்தால் அவன் Tertebt.
b.
டக்கும் மனைவி வந்து வாய்த்திருப்பது அவனுக்குக்
அவன் தங்கை மீது உள்ளத்தில் ஆறாத அன்பும் கரிச
132

Page 135
அவனுக்குப் பத்து வயதாகும் வரை குடும்பத்தில் தனிப்பிள்ளையாக அவன் வளர்ந்தான். அவன் பெற் றோர் ஒரளவு வசதியாக வாழ்ந்தார்கள். பிறகென்ன, சொல்லவா வேண்டும்? பிள்ளை இல்லையென்ற குறையைத் தீர்த்து வைத்தவன். அவன் எந்தக் குறைவுமில்லாது நல்ல செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தான். அவனைப் பெற்றவர்களுக்கு ஒரு மனக்குறை. அவன் தனித்துப் போனானே என்பது தான் அந்தக்குறை. கன்றுக்கும் புல்லுச் சேர்த்து வைத்துவிட்டுத் தான் சாகவேண்டுமென எண்ணும் தாய்ப்பசு மனப்பாங்கு கொண்டவர்கள் தானே இந்த மனிதர்கள். இவர்கள் மனங்கள் என்றுமே நிறைவு பெறுவதில்லை. அவன் அம்மா வாய் திறந்து இடை யிடையே சொல்லிக் கொண்டிருந்தாள். ‘என்ரை பிள்ளை தனிச்சுப் போனான். இளைச்சுக் களைச்சு வந்த நேரம். தாலி கட்டினவளோடை சரியில்லாத நேரம். ஆற்ரை நிழலில போய் ஆறப்போறான்? ஆத ரவாக ஆர் ஒரு சொட்டுத் தண்ணி வாத்துக் குடுக்கப் போகுதுகள்?’ என்பாள். அவனுக்கொரு பெண் சகோதரம் பிறக்க வேண்டும் எனக் கையெடுத்த கோயில்களில் எல்லாம் வேண்டி நின்றாள். நேர்த்தி வைத்தாள். உண்ணாது நோன்பிருந்தாள்.
அவள் வேதனையும் வேண்டுதலும் கடவுள் காதுகளில் சென்று வீழ்ந்ததோ என்னவோ! அவனு க்கொரு தங்கை வந்து பிறந்தாள். பிறக்கும் போதே அவள் அழகான குழந்தைதான். பின்னர் வயதுக்கு வந்து மலர்ந்து இன்று கன்னிப் பெண்ணாக செளந் தரியம் பூத்துக் குலுங்கும் அவள் எழில் உருவம். அப்பப்பா சிவந்த மெல்லிய பூங்கொடியாகத் துவ ளும் அவளைச் செதுக்கிய சிற்பி கண்ணுறுபடா மல் சின்னஞ்சிறிய ஒரு குறையாவது வைத்திருக்க வேண்டுமே அப்படி எந்த ஒரு குறையையும் எவரா லும் கண்டு கொள்ள இயலாது.
தாங்கள் விரும்பியது போல, இப்படியொரு அழகு தேவதையை அவனுக்குத் தங்கையாகப் பெற்றுக் கொடுத்தவர்கள், தங்கள் கடமை முடிந்ததென்று இருவரும் கண்களை மூடிக் கொண்டார்கள்.
இப்படியொரு பேரழகிக்குத் தான் அண்ணனாக இருப்பது அவன் மனதுக்குப் பெருமைதான். ஆனால், அவள் எதிர்காலத்தை எண்ணும் போது..? அவளை எண்ணி அவன் மனம் கலங்காத நாளி ல்லை. அந்தத் துயரத்துக்கான ஆறுதல் தேடியே,
133

அவள் மனம் மகிழ, அவளை இப்படி அழைத்துக் கொண்டு வருகின்றான்.
அவளை அழைத்துக் கொண்டு வீதியில் வரும் சமயங்களிலும் உள்ளத்தில் எத்தனை உறுத்தல் கள்.
அவளை விழிகளால் முழுமையாக விழுங்கும் கோரப் பார்வைகள். உடன் பிறந்த அண்ணன் அரு கில் நிற்கின்றானே என்பதையும் பொருட்படுத்தாத அநாகரிகங்கள்
அவர்கள் எதிரில் அட்டகாசமாக ஒருவன் வந்து கொண்டிருக்கின்றான். அண்மையில் தான் ஏதோ வொரு வெளிநாட்டில் இருந்து அவன் ஊருக்குத் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆடம்பரமான அவன் உடைநடைகள் மாத்திரமல்ல, ஆனைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, "ஃபொறின்காரன் வருவான் பின்னே கொலேசன் மணம் வரும் முன்னே என வாசனை நாசியில் வந்து அடிக்கின்றது.
வெளிநாட்டுக்காரன் அவனை நெருங்கி வந்து “ஹலோ!” என அழைத்து கையைப் பிடித்து குலு க்கி, பின்னர் நெஞ்சுடன் சேர்த்து ஒரு தடவை நெருக்கமாக அழைக்கின்றான்.
அவன் எதிர்பாராத திடீர் நெருக்கமும் அணைப் பும் கண்டு திகைத்து நிற்கின்றான்.
“ஹலோ. என்னைத் தெரியதா?”
அந்தப் புதியவன் யாரென்று உண்மையில் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு நெருக்கமாக உறவு கொண்டாடுகின்றவனைப் பார்த்து எப்படித் தெரியாதென்று சொல்லுவது? அப் படி நடந்து கொள்வது அநாகரிகமல்லவா!
அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாது, மனக் குழப்பத்துடன் அதிசயமாக அவன் முகத்தை நோக்குகின்றான்.
"நாங்கள் சந்தித்துக் கனகாலம். நீங்கள் தெய்வ ராசன் தானே?"
“gG3LDITLb'
"நான் அப்ப கீழ் வகுப்பில படிச்சுக் கொண்டிரு ந்த நான். எனக்குப் பேர் மோகன். பிறிபெக்ராக இருந்த நீங்கள். என்ரை குழப்படிக்கு ஒருநாள்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 136
அடிபோட்டது இப்பவும் நல்ல ஞாபகமாக இருக்கு” சொல்லிக் கொண்டு கலகல" என்று சிரிக்கின்றான்.
அவனோடு பேசிக் கொண்டு நின்றாலும் வெளி நாட்டுக்காரன் கண்கள் மாத்திரம் அவனுக்குப் பின்னால் நிற்கும் அவன் தங்கை மீது மொய்த்துக் கிடக்கின்றன.
அவன் தங்கை தலைகுனிந்து நிலத்தை நோக் கிக் கொண்டு நிற்கின்றாள்.
அவன் மனைவி முகத்தைச் சுழித்துக் கொண்டு, வெளிநாட்டுக்காரனைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு திசையில் திரும்பி நிற்கின்றாள்.
அவன் ‘இவன் யாராக இருக்கும்? என நினை த்துப் பார்க்கின்றான். அவன் நினைவுத் தடத்தில் மோகன் தட்டுப்படுவதாக இல்லை. அவன் சொன்ன தில் உண்மையும் இருக்கலாம். ஆனால், இவ்வளவு உரிமை எடுத்து நெருக்கமான உறவு கொண்டாடும் அளவுக்கு எந்தப் பழக்கமும் இருக்கவில்லை. அப் படி இருக்க, எதற்காக இந்த வேண்டாத திடீர் உறவு
இப்பொழுதும் மோகனின் பசித்த விழிகள் அவன் தங்கையின் அழகையே பருகிக் கொண்டு இருக்கி ன்றன.
அவனுக்கு உள்ளூரச் சினம் மெல்ல மூளுகிறது.
'திருமணம் ஆகாத அழகான ஒரு தங்கை இரு ந்து விட்டால் இப்படி ஆயிரம் உறவுகள் தேடிவரும்' என அவன் உள்ளே நினைந்து மெல்ல நகைக்கி றான்.
“சுவீற் பேபி” அவன் தூக்கி வைத்துக் கொண்டி ருக்கும் குழந்தையின் கன்னத்தில் மெல்லக் கிள்ளி யபடி, அவன் தங்கையையே பார்க்கின்றான்.
முகத்தில் அடித்தது போல எதையும் சொல்லிப் போடக் கூடாதென்று நினைத்து மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டு, "சரி போயிட்டு வாரும். நாங்கள் அவசரமாகப் போக வேண்டி இருக்கு" என்கிறான் அவன்.
"அப்பிடி என்ன அவசரம்? வாங்க தாஜ் மஹாலு க்குப் போவம்" மோகன் அழைக்கின்றான்.
"வேண்டாம். வேண்டாம். நாங்கள் போய் வந்திட்டம்' அவன் மறுக்கின்றான்.
“எத்தினையோ வருஷத்துக்குப் பிறகு சந்தித்தி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

ருக்கிறம், கூப்பிட்டால் வாறியளில்லை. நான் பிறகு சந்திக்கிறன்' என்கிறான் ஏமாற்றத்துடன்.
“சரி. சரி.." என உதட்டுக்குள் அலட்சியமா கச் சிரித்தவண்ணம், அங்கிருந்து அவன் நகர, மனைவியும் தங்கையும் பின்தொடர்ந்து வருகின் றார்கள்.
ஒரு சனியன் தொலைஞ்சது என அவன் மன தில் எண்ணிக் கொண்டு, மனைவிக்கு இரகசிய
மாகச் சாடை காட்டிவிட்டு நடக்கின்றான்.
அவன் எண்ணம் போல நடக்கவில்லை. அதைப் பொய்யாக்கிக் கொண்டு மறுநாள் மாலையில் “ஹலோ தெய்வராஜ்" என உரிமையோடு அழைத்த வண்ணம் அவன் வீடு தேடி வந்து சேர்ந்து விட்டான் மோகன்.
அவன் வரும்போது சும்மா வெறுங்கையை வீசிக் கொண்டு வரவில்லை. கை நிறைய அள்ளிக் கொண்டு வந்தான். அவன் குழந்தைகளுக்கு பிஸ் கட்டுகள், சொக்லேற்ருக்கள், அவனுக்கும் குழந் தைகளுக்கும் உடுப்புகள்.
இது என்ன கூத்து' எனத் தெய்வராசன் வியந்து போனான். வீடு தேடி வந்தவனை அலட்சியம் பண் னவோ, அவமதிக்கவோ அவன் விரும்பவில்லை. ஆனால், ஒருநாள் சந்தித்தவனுக்கு இப்படி ஒரு நெருக்கமா? என மனம் குழம்பாமலும் இருக்க முடிய
வில்லை. * ×
நீண்டகால நண்பன் போல் அல்லவா பழகுகின் றான்!
மோகனின் இந்த நெருக்கத்தில் ஏதோ ஒரு உள் நோக்கம் இருக்கிறது என்பதைத் தெளிவாக அவன் உணர்ந்து கொண்டான்.
அவன் எதிரில் அமர்ந்திருந்து உரையாடிக் கொண் டிருக்கும் சமயத்திலும் மோகனின் விழிகள் அவன் வீட்டுக்குள் அலைந்த வண்ணமே இருந்தன.
அவன் மனைவி வெளியே வந்து, கூடத்தில் அமர் ந்து பேசிக் கொண்டிருக்கும் அவனுக்குத் தேநீர் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கின்றாள். பின் அவள் “இருந்து பேசுங்கோ வாறன். கொஞ்சம் வேலை கிட க்கு" என நாகரிகமாகச் சொல்லிக் கொண்டு அங்கி ருந்து மெல்ல நழுவி உள்ளே போய்விடுகின்றாள்.
அவன் தங்கையின் நிழல்கள் மோகன் கண்களு க்குத் தென்படுவதாக இல்லை. அந்த வீட்டில் தான்
134

Page 137
அவள் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்பதை மோகனால் நம்பமுடியவில்லை.
மோகன் நீண்ட நேரம் அவள் தரிசனத்தை எதிர் பார்த்து, அங்கிருந்து பேசினான். பின்னர் ஏமாற்ற த்துடன் எழுந்து செல்லும் பொழுது, அவன் முகம் வாடிப் போனதை நுணுக்கமாகத் தெய்வராசன் கண்டுகொள்ளாமல் இல்லை.
இரண்டு தினங்கள் கழிந்து போயிற்று. மீண்டும் மோகன் அங்கு வந்து சேர்ந்தான்.
அவன் திரும்பவும் அங்கு வந்திருப்பது கண்டு, இங்கு இவன் வராமல் தடுப்பதற்கு என்ன வழி? என்றே தெய்வராசன் தனக்குள்ளே சிந்திக்கலானான்.
மோகன் வழமையிலும் இன்று அதிக மகிழ்ச்சியு டன் வந்திருப்பதாகத் தெய்வராசனுக்கு இப்பொழுது தோன்றுகிறது.
வந்தவன் அதிக நேரம் பொறுத்திருக்கவில்லை.
"இண்டைக்கொரு நல்ல நாள்' என்கிறான் மோகன்.
'எதுக்கு.?”
“நல்ல காரியங்கள் பேசிறதுக்கு”
"நோர்வேக்குப் போனாலும் நாள் பாக்கிறதை விடவில்லை’
‘எப்படி விடலாம்? எங்கடை கலாசாரம் பண்பாடு அழியாமல் பாதுகாக்க வேணும் தானே?"
“வெளிநாடுகளுக்குப் போய் இருக்கிறவைதான் இப்ப உதுகளைப் பெரிசாகத் தூக்கிப் பிடிச்சுப் பேசுகினம்’
'உண்மைதான். இழக்கும் போதுதான் அதி ன்ரை பெருமை தெரியும். அது போகட்டும். நான் வந்த காரியத்தைச் சொல்லலாமா?”
*சொல்லுங்கோ!"
"நான் கலியான விஷயமாக வந்திருக்கிறேன்"
"அப்படியா. ஆருக்கு.?" தெய்வராசனுக்கு வியப்பாக இருக்கிறது.
“உங்களின்ரை தங்கை. தெய்வமகளுக்கு"
*676761.?'
"ஆச்சரியமாக இருக்கா..?”
135

".... . . . . . . . . . * அவன் மெளனமாகக் கண் கலங் குகின்றான்.
"ஏன் பேசாமல் இருக்கிறியள்?
“இது நடக்கக் கூடிய காரியமா? அவன் குரல் கம்மித் தளதளக்கிறது.
"ஏன் நடக்காது?”
"சொல்லுங்கோ. ஏன் நடக்கக் கூடாது?"
"அவளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியும். நல்லாத் தெரியும்’
"அவள் ஒரு அழகுத் தேவதை. அதைக் கண்டு விட்டியள் மோகன்'
"அது உண்மை. அழகு மட்டுமல்ல அதுக்கு அப்பாலும் எனக்குத் தெரியும்"
"ஆரந்த மணமகன்?"
“வேறு ஆருமில்லை. நான்தான்”
"மிஸ்ரர் மோகன், உங்களுக்குத் கலியாணம் பேசி நீங்களா வந்திருக்கிறீர்கள். உங்கள் குடும்பத் தவர்கள் என்னுடைய தங்கையை நீங்கள் மணந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதி 6ზ60)6ზა!’’
"நீங்கள் சொல்வது உண்மை. ஆனா நான் எடு த்த முடிவுக்குத் தடையாக அவர்கள் இருக்க முடி யாது. என்ரை வழிக்கு வந்துதான் ஆகவேண்டும்"
“உங்களை அவர்கள் நிராகரித்து ஒதுக்கிவிட 6)rtib'
"அது தான் நடக்காது. பெற்றவர்களுடைய மூத் தவர்களுடைய சொல்லுக் கேட்டு நடந்த காலம் மாறிப் போச்சு. இப்ப வெளிநாட்டில் இருந்து உழை த்து லட்சம் லட்சமாக அனுப்பிக் கொண்டிருக்கிற எங் கடை சொல்லுப்படி எல்லாரும் நடக்க வேணும். அப் பிடி இல்லையெண்டால் இஞ்சை காசு வந்து சேராது"
"மிஸ்ரர் மோகன். உங்களை ஒண்டு கேட்க 6TLDIT?'
"தாராளமாகக் கேளுங்கோ!'
தெய்வராசனால் அப்படிக் கேட்க முடிந்ததே அல் லாமல், தான் நினைப்பதை வாய் திறந்து சொல்வ
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 138
தற்கு இயலவில்லை. மெளனமாகத் தலை குனிந்து இருக்கின்றான்.
“என்ன தெய்வா! கேட்க நினைப்பதை வெளியில் சொல்லமாட்டாமல் இருக்கிறியள்! நீங்கள் நினைக் கிறதை நான் சொல்லட்டுமா? உங்கள் தங்கைக்கு வாய் பேச இயலாது என்பது எனக்குத் தெரியும் தெய்வா’
*தெரிந்து கொண்டுமா..? “உங்கடை தங்கையை மணக்க விரும்புகிறேன் எண்டு கேட்கிறியள்! இங்கே இருந்து நோர்வேக்கு வாற பெண்கள் எல்லாம் அங்கை ஊமையள்தான். ஆருக்கு அந்த நாட்டு மொழி பேசத் தெரியும்?"
"இந்தக் கதையை வீணாக நீட்ட வேண்டாம். என்ரை தங்கையை என்ரை கண்ணுக்கு முன் னால வைச்சிருக்கிறது தான் என்ரை விருப்பம்"
"தங்கை மேலே எவ்வளவு பாசம் வைத்திருக்கி றியள் எண்டது நான் அறியாமல் இல்லை. பாசம் மட்டும் தங்கைக்கு வாழ்வு கொடுக்காது. உங்கடை தங்கையை விரும்பிக் கட்டுகிறதுக்கு ஊரில் ஆர் முன் வரப் போகிறான்? அதையும் கொஞ்சம் யோசி க்க வேணும். சரி. உங்களுக்கு ஒரு அவகாசம் தாறன். ஒரு கிழமைக்குப் பிறகு வருவன். முடி வைச் சொல்லுங்கோ! நல்ல முடிவாக அது இருக் கட்டும்' அவன் முடிவாகச் சொல்லிக் கொண்டு எழுந்து போய்விட்டான்.
தெய்வராசன் முற்றாக மனம் குழம்பிப் போனான். ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. மனைவி மால தியுடன் அந்தரங்கமாகக் கலந்து ஆலோசித்தான்.
“வாய் பேசத் தெரியாத பிள்ளை. அதைக் கண் காணாத் தேசத்துக்கு அனுப்ப வேண்டாம்” என அவள் மறுத்துவிட்டாள்.
'உங்கடை தங்கச்சியைக் கட்டிறதுக்கு ஆர் முன் வரப்போகிறார்கள்?’ என மோகன் கேட்ட கேள்வி க்கு என்ன விடை? தங்கைக்கு மணம் பேசிப் போவ தற்கு அவன் தயங்கிக் கொண்டுதான் இருக்கின் றான். ஊமைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்துவிட்டானே எனத் தன்னை அவமானப்படுத்து வார்கள் என்று உள்ளூர அச்சத்துடன் தான் வாழ் ந்து வருகின்றான்.
தங்கையிடம் போய் அவள் மனக்கருத்தைக் கேட்டறியலாம் என்றால். அது நடக்கிற காரி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

யமா? காலமெல்லாம் அவளைக் கன்னித் தெய்வம களாக வீட்டோடு காத்து வைத்திருப்பதா? அவள் உள்ளம், இளமை? பருவ உணர்வுகள் எவையுமே இல்லாத வெறும் ஜடமா?
அவன் மனம் குழம்பிக் குழம்பி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.
அவளுக்கென்று ஒரு வாழ்வு தேடி வரும்போது, அதற்குத் தடையாகக் குறுக்கே தான் நிற்கக்
&n Litg).
வலிந்து, இப்படி ஒரு வாழ்வு தேடி வருவது ஒரு வேளை, அவள் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்.
பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய சீதனங்கள் அத்தனையும் தன் தங்கைக்குத் தான் தருவதாக அவன் சொன்னான்.
சீதனங்கள் எதுவுமே தனக்கு வேண்டியதில்லை என முற்றாக நிராகரித்து விட்டான், மோகன். அவன் தங்கையை மட்டும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டான்.
இருவருக்கும் பதிவுத் திருமணம் மோகன் விருப்பம் போல எளிமையாகத் தெய்வராசன் தனது இல்லத்தில் செய்து முடித்தான்.
மணமக்கள் இருவரும் நோர்வே சென்று நண்பர் கள் மத்தியில் திருமணச் சடங்கு நடத்தப் போவதாக மோகன் பெருமையாகச் சொல்லிக் கொண்டான்.
இரண்டு வார காலத்தின் பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு ஊரில் இருந்து புறப்பட்டுக் கொழும்பு சென்றான். அதன் பிறகு ஒரு மாத காலம் கொழும்பில் கழித்துவிட்டு, மணமக்கள் இருவரும் நோர்வே போய்ச் சேர்ந்து விட்டார்கள்.
நோர்வேயில் இருந்து தினமும் தெய்வராசனுக் குத் தொலைபேசி அழைப்பு வரும். மோகன் பேசுவான் தெய்வராசனோடு, அவன் மனைவியோடு, அவர்கள் குழந்தைகளோடு பின்னர் மனைவி தெய்வமகளிடம் தொலைபேசியைக் கொடுப்பான். அவள் சிரிப்பொலி கேட்கும். தொடர்ந்து மொழி இல் லாத வெறும் உறுமல் ஒலி. அது வெற்றொலி. குழந்தைகள் அத்தை. அத்தை என அழைப் பார்கள். அவள் சிரிப்பொலி. பிறகு ஆனந்தமான வெற்றொலி.
அவர்களுக்கு முன் அவள் நேரில் இருந்தால்
136

Page 139
தனது உடல் மொழியால் எல்லாம் உணர்த்தி விடு வாள். இப்பொழுது அவளின் சிரிப்பொன்றுதான் அவள் உள்ளத்தைச் சொல்லுகிறது. மகிழ்ச்சி யைப் பேசுகிறது.
தன் உயிருக்கு உயிராக அன்புத் தங்கை சந் தோசமாக வாழுகின்றாள். அது ஒன்றே தனக்குப் போதும் எனத் தெய்வராசன் நினைத்துக் கொள்
6. IrreóT.
தினமும் பேசிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் வாரத்தில் ஒரு தடவை தொடர்பு கொண்டார்கள். பின்னர் மாதத்துக்கு ஒரு தடவையாகக் காலம் நீண்டுபோனது. வேலை நெருக்கடி நேரமில்லை என மோகன் பேசுவான். சில சந்தர்ப்பங்களில் மனைவியிடம் தொலைபேசியைக் கொடுத்து விட்டு அவன் மெளனமாக இருந்து விடுவான். சிரிப்பொலி இல்லாத அவளின் வெற்றொலி மாத்திரம் செவிகளு க்கு வந்து சேரும்.
தனது தங்கை முன்னர் போல இப்பொழுது மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவன் விளங்கிக் கொள்வான்.
தங்கையின் வாயில் இருந்து பிறக்கும் வெற்றொ லியைத் தானும் காலப் போக்கில் அவனால் கேட்ப தற்கு முடியாது போனது.
அவளுக்கு என்ன நடந்தது? அவள் இப்போது எப்படி இருக்கின்றாள்?
அவன் தங்கையை எண்ணிக் கலங்கிப்
போனான்.
யாரோடு தொடர்பு கொண்டும் அவளைப் பற்றி அவ னால் எந்தத் தகவலையும் அறிந்து கொள்ள முடிய வில்லை.
கனடா, சுவிஸ், லண்டன் என்றால் நண்பர்கள், அறிந்தவர்கள் எனப் பலர் இருக்கின்றார்கள்.
நோர்வேயில் அப்படித் தகவல் தரத் தகுந்தவர் என்று அவனுக்கு யாருமே இல்லை.
தங்கையின் எண்ணம் அவனைப் போட்டுப் பைத்தியமாக அலைக் கழிக்கிறது.
அலுவலகம் சென்றால் அவனால் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை. வீடு வந்து சேர்ந்தால் தங்கை நடமாடித் திரிந்த இடங்களில் எல்லாம் அவன்
137

முன்னே அவள் வந்து நிற்பது போன்ற பிரமை,
அவனால் ஒழுங்காக உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. ஒரு வேலை செய்ய முடிய வில்லை. மனைவி, பிள்ளைகள் மேல் போதுமான காரணமில்லாது, தொட்டத்துக்கும் பட்டதுக்கும் கோபித்துச் சீறி விழுந்து கொண்டிருக்கின்றான்.
‘என் அன்புத் தங்கையைக் கிளி போல வளர்த்து பூனை கையில் கொடுத்து விட்டேனே! எனச் சில சமயம் வாய் விட்டுச் சொல்லி ஏங்குவான்.
அவன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப் பல தடவைகள் முயன்றும் அது முடியா மல் போக ஏமாந்து, சோர்ந்து போனான்.
அவன் தங்கையின் சிரிப்புக் கேட்டு ஒரு வருட காலத்துக்கு மேலாகிப் போனது. இனி என்ன செய் வதென்று அறியாமல் அலைந்து கொண்டிருந்தான்.
அவன் எதிர்பாராத நிலையில் ஒரு தினம் திடீ ரென நோர்வேயில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்து சேர்ந்தது.
அவன் பரபரப்புடன் ஆவலாக றிஸிவரைக் கையில் எடுத்து, ‘தெய்வம் அண்ணா பேசுகிறேன்'
எனக்குரல் கொடுத்தான்.
அவன் எதிர்பார்த்த சிரிப்பொலி இல்லை.
"ஆ. ஆ. ஆ. அவள் சீறிச் சீறி அழுகிறாள்
“6T66T60T blot...... ஏன் அழுகிறாய்?"
'9...... etj........ Sèb • • • • • • ஆ” அவள் அழுகை ஒலி பெருகிப் பெருகி வருகிறது.
MVA ܓ“
‘தங்கச்சி. தங்கச்சி. 6J 6öT 6oT Lb LDT அழுகிறாய்?
'3...... ëobo ... . .. ويك . . . . . "
‘என்ரை. தெய்வம். ஒருக்கால் சிரி
யெணை. ஒருக்கால் சிரியெணை. இந்த அண் ணாவின்ரை மனம் குளிர ஒருக்கால் சிரி தாயே..!"
 ́éob...... éobo ... . . éob . . . . . . &b. . . . . . مرگ ....." "தங்கச்சி. தங்கச்சி. என்ரை தெய்வமே தங்கச்சி." அவன் குமுறிக் குமுறி பெரிதாகக் குரல் எடுத்து ஓவென்று அழுகின்றான்.
அழுவது ஒன்றைத் தவிர, அவனால் வேறு என்ன தான் செய்யமுடியும்?
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 140
“புனிதா. புனிதா. என்னடி கிணத்தடியிலை செய்க இன்னும் எத்தனை வேலை யஸ் கிடக்குது. அப்பப்பா! குடும்பத்தை சுமக்கிறன். எடியே தண்ணியைக் கொள்
கிணற்றடியில் நின்று சவர்க்காரத்தை முகத்துக்கு தாள், புனிதா. அது போன தடவை ஏதோ நிறுவனம் நி சாமான்களுடன் ராணி சோப், அதன் வாசனை அவ சுகமளித்தது. அந்த வாசனை உள்ளே பரவ, மனம் சி
"புனிதா!. கொண்டு வாடி..!” தாயின் அதட்டல் மீதும் வாலிப வயசுத் தவிப்பின் மீது இடி விழுந்தால் டே முகத்திலல் அடித்துக் கொண்டாள். இடையில் கட்டி
争 * , -மு. அநாதர
酱 鑑 繼 t • •
பால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள், அம்
“சரி. சரி. இந்தா வாறனம்மா..!"
சாயம் வெளிறிப் போய் பொட்டல் விழுந்த பாவா ணையை பல நாளாகக் காணாத சிலிம்பிய பரட்டைத்த வந்த மூத்த பிள்ளை அவள். அவளது தோற்றம் அக்கு
"சௌமி. தம்பிசெல்லம் இஞ்சை வாணை. கண் கால்கிலோ சீனி வாங்கி வாணை. நீ எங்கடை செல்ல
'BLTEGട്. நான் போக மாட்டன்!"
"ஏன் ராசா..?
"நேற்றும் தேங்கா வாங்கப் போய் பேச்சு வாங்கினை தேங்காய் கட்டி வந்து கடனுக்குத் தரேலாதாம். கடன் சொல்லிப் போட்டினம்!"
"தோட்டத்தாலை வரேக்கை பின்நேரம் எல்லாத்ை
“எனக்கெண்டா ஏலாது. அண்ணாவை எழுப்பி வி
இளையவனுக்கு மிஞ்சிப் போனாலும் பத்து வயன வாழ்க்கை பதித்து விட்ட அநுபவம் வார்த்தையாக ெ
அடுப்பிலிருந்து கேற்றிலை இறக்கி வைத்து தேயிலை
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

கிறாய்? கெதியிலை வாவன். ப்
நான் ஒருத்தி தான் இந்தக் oTGB 6nIsTç.”
குப் போட்டுக் கொண்டிருந் 46ઠ્ઠો ઈિt it:
வாரணப் பொதியாகத் தந்த |ளது மூக்கினுள் நிறைந்து சிலிர்த்து இதமானது.
மேலோங்க மனதுக்குள் இதமளித்த அந்த வாசனை பாலாயிற்று. வாளியிலிருந்த தண்ணிரை அவக்கென்று யிருந்த பாவாடை நழுவப் பார்க்கவே, அதனை ஒரு கையால் பிடித்தபடி எட்டிப் பார்த்தாள்.
s தேநீர் கேற்றிலை அடுப்பில் * வைத்துவிட்டு, மழையில் தெக் த கிப் போன விறகுடன் அம்மா அல் லாடிக் கொண்டிருப்பது தெரி ந்தது. புகைந்து புகைந்து பின் னர் பற்றி இடையில் நூர்ந்து போய் எரிச்சலூட்டியபடி இருந்த அடுப்பை, வாயால் ஊதிப் பற்ற
↔
வைத்து விட்டு சேலைத் தலைப்
DLOT
டையும் அதற்குத் தோதில்லாத ரீசேட்டுடனும் எண் லையுமாய் புனிதா காட்சியளித்தாள். வீட்டில் வயதுக்கு குடும்பத்தின் வறுமையைக் குறியீடாக காட்டி நின்றது.
ாணன்ரை கடையிலை போய் அம்மாவைச் சொல்லி மல்லே.” அம்மா இளையவளை அழைத்தான்.
ான். தின்னைவேலிச் சந்தையிலிருந்து சைக்கிளிலை கேட்டு இனிமேல் கடைப்பக்கம் வரவேண்டாம் எண்டு
தயும் சேர்த்துத் தாறனாமென்று சொல்லப்பன்'
GSIGest....'
தத் தாண்டாத பிஞ்சுப் பருவம், பஞ்சத்தில் அடிபட்ட வளிப்பட்டது.
)யைப் போட்டு தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தாள், அம்மா.
138

Page 141
'அம்மா, சீனி போட்டுத் தாங்கோ."
"9|bLDT....... எனக்கும்’ தாயின் முகத்தைப் பார்த்தாள், புனிதா.
அம்மா வாயில் ஏதோ முணுமுணுத்தவாறு அடு ப்புக் குந்தில் அடுக்கி வைத்திருந்த போத்தலைத் திறந்து இருவரின் உள்ளங்கைகளிலும் சிறிது கிள்ளி வைத்தாள்.
வெறும் தேநீர் சாயத்தைக் கையை நக்கிக் குடி த்துவிட்டு, வேலியில் சாத்தி வைக்கப்பட்ட விளக்கு மாறை எடுத்துக் கொண்டு கேற்றுக்கு வெளியே போனாள்.
"புனிதா நான் வெங்காய நடுகைக்கு உரும்பிராய் க்குப் போக வேணும். தோட்டத்திலை குறை வேலை கிடக்கு. கெதியாய்க் கூட்டிப்போட்டு வா"
கேற்றைத் தாண்டி ஒழுங்கையில் கால் பதித்த மகளின் காதில் விழுமாறு சற்று உரக்கக் கூறி னாள். வழக்கம் போல அன்றும் அந்த வீட்டின் விடி யல் பிரச்சினைகளுடன் உயிர் பெற்று விட்டதைக் காதில் போட்டபடி, அவன் விழிப்பாகத் தான் இரு ந்தான். முதல் நாள் இரவு சாப்பாடு வேண்டாமென்று கூறிவிடடுப் படுத்தவன், அதனால் காலையில் கண்விழித்த சிறிது நேரத்தில் வயிறு குடைய ஆரம் பித்து விட்டது. வயிறு போல, மனமும் தகித்தபடியி ருந்தது. அவனில் அவனுக்கு ஒருவித எரிச்சல் மேலிட்டது. அடுக்கடுக்காய் நேர்ந்து விட்ட தோல்வி களால் மனம் வெம்பிப் போயிருந்தது. சொந்த வீடு உறவுகள் எல்லாமே ஒருவித அசட்டையைத் தன் மீது திணிப்பதை உணர்ந்தான். காலையிலேயே குசுனிக்குள்ளிருந்து "அது இல்லை, இது இல்லை’ யென்ற பஞ்சப் பாட்டுடன் உயிர்பெறும் வீடு அவனு க்கு நரகமாகத் தோன்றியது.
அவன் குடும்பத்துக்கென சொந்த நிலம், வீடு இருந்தும், அதனை ஆண்டனுபவிக்க முடியாத நிலை அவர்களுக்கு, வளம் கொழித்த வசாவிளான் மண்ணிலிருந்து வேரோடு பெயர்க்கப்பட்ட குடும்பங் களில் அக்குடும்பமும் ஒன்று. காலங்காலமாக வாழ் ந்த இடத்தை விட்டு வந்து இருபத்து மூன்று வருட ங்களாகி விட்டன. இப்பொழுது சொந்த மண்ணின் வாசனை கூட அற்றுப் போய்விட்ட நிலை.
தகப்பன் சைக்கிள் கடையுடன் சதாகாலமும் மாரடித்து என்ன சுகத்தை அள்ளிக் கொடுத்து
139

விட்டார்..? அந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்க முடிந்ததா? காலையில் கடையைத் திறந்து, மாலையில் வீடு வரும் போது தனது சில்லறைச் செலவு போகக் கையில் சிறு தொகையுடன் வரு வார். அதனையும் மிச்சம் பிடித்து தனது பிரயாசை யால் தேறும் அற்ப வருவாயையும் கொண்டு எப் படியோ குடும்பத்தைச் செட்டாக நடத்தித் தன்னை யும், திருநெல்வேலி முத்துத்தம்பி பாடசாலை விடு தியில் சேர்த்து, பல்கலைக்கழகம் வரை படிக்க வைத் தும் தன்னால் இக்குடும்பத்துக்கு எதுவுமாகவில் லையே என்ற குற்ற உணர்வு அவனில் கனத்தது.
குடும்பத்துக்காக பாரச் சிலுவை சுமக்கும் தாயை எண்ணி மனம் குமைந்து கொண்டிருந்தது.
“எடே தம்பி செந்தூர் என்னடா நித்திரையே.? உனக்கும் ஏதும் வேலை வில்லட்டி எண்டு இருந் தால்தானே விடியிறது தெரியும். அரசாங்கம் கடன் தந்து படிப்பிச்சும் உனக்கு ஒரு வேலை தருகுதி ல்லை. நானும் வேண்டாத கடவுளில்லை. ஏழை யளை ஆார் கவனிக்கினம். எல்லாத்திலையும் பாகு பாடுதானே கட்டினம். எழும்படா முகத்தைக் கழுவிப் போட்டு வா. yy
இது அம்மாவின் தொணதொணப்பு. இனியும் தொடர்ந்து படுக்க முடியாது. எழும்ப வேண்டியது தான். எழுந்துதான் என்ன செய்வது? எந்த வேலை க்கும் போட்டிப் பரீட்சை தெரிவுப் பரீட்சையென்று தடைகளுடன் மல்லாட வேண்டியிருக்கிறதே.
பட்டம் பெற்று நான்கு வருடங்கள் ஒடிக் கழிந்து விட்டன. உரும்பிராய்ச் சந்தியிலும் தேநீர் கடைகளி லும் கூடும் நண்பர்களுடன் பயனற்றுக் கழிந்து போன நீண்டதான பொழுதுகள்.
மனம் சிந்தனையில் சிக்கித் தவித்த போது, கடந்து போன பல்கலைக்கழக வாழ்க்கை, அதன் எதிர்பார்ப்பு என அவனுள் பதித்து விட்ட சொப்பன மயமான நினைவுத் தடங்களின் நிழலாட்டம் முகம் காட்டியபடி இருந்தது.
பல்கலைக்கழகச் சூழலில் கிளரும் இயல்பான சபலங்கள், ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள். 6T6 அந்த நாட்களில் வாழ்க்கை என்பதே தெளிந்த நீரோ டையாய் இனிமையிலும் இனிமையாய் அவனுள் அர்த்தித்துக் கொண்டிருந்தது. அத்தனையும் நிஜ உலகில் தன்னை எதிர் கொள்ளவிருக்கும் வசந்த
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 142
ங்களாக அந்நாளில் நம்பிக்கையுட்டின. இன்று அவன் முன் விரியும் உலகின் தார்ப்பரியமோ நேர் மாறாய் மனதைச் சதா நெருடிக் கொண்டு புரியாத சூனியமாய்க் கிடக்கிறது.
“புனிதமும் முத்தமெல்லாம் கூட்டிப் போட்டாள். இவன் பாவி இன்னும் எழும்பேல்லை. டே. செந் தூரன்."
அவன் அதைக் கேட்கக் காத்துக் கிடந்தவன் போலக் கிடந்துவிட்டு எழுந்தான். கிணற்றடியில் முகம் கழுவி விட்டு குசினிக்குள் போனான். தேநீ ரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது, கடைக்குப் போன இளையவள் கீதா, கேற்றை இழுத்துப் படார் என்று அறைத்தபடி வந்தாள். அவளில் ஆவேசம் தெரிந்தது. அவளை நோகும்படியாக ஏதோ நடந்து விட்டது. அதன் முன்னறிவிப்பாகத்தான் இந்தப் பரபரப்பு இருக்க வேண்டும்.
வந்ததும் வராததுமாக சாமான்பாக்கை பக்கமாக வீசிவிட்டு, பக்கத்துவிட்டு அமுதாக்கா கடன்காசைக் கேட்டதாகவும், தன்னுடன் படிக்கும் பிள்ளைகளு க்கு முன்னிலையில் இன்னும் என்னென்னவோ பேசி அவமானப்படுத்தியதாகவும் முறையிட்டாள்.
இரண்டு மாதங்கிளுக்கு முன் பத்திரிகையில் வெளிவந்த முகாமைத்துவ உதவியாளர் தெரிவுப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பத்துக்காக இரு நூறு ரூபா செலவு செய்ய வேண்டியிருந்தது.
அயலவர், உறவுகள் எனப் பலரிடமும் வாய் விட்டு, கடைசியில் அமுதாக்கா மனமிரங்கிக் கொடு த்த அந்தக் காசை இன்னமும் திருப்பிக் கொடுக்க வில்லை.
அவளும் பல தடவைகள் முற்றத்தில் நின்று திட்டிவிட்டுப் போயிருக்கிறாள். பயனளிக்கவில்லை. இப்போது வெளியில் கண்ட இடங்களிலெல்லாம் கேட்கத் தொடங்கிவிட்டாள்.
அவன் கடுமையாக முயற்சித்து பரீட்சை எடுத் தும், வழமை போல இதுவும் கையை விரித்து விட்டது.
‘வேலை வில்லட்டி இல்லாமல் பாரமாக வீட்டிலை இருக்கிறதும் காணாமல்.’
அம்மா மனம் சினந்து புறுபுறுக்கத் தொடங்கிவிட் LT6T.
“முன்னமும் இப்படித்தான். அவருக்கு உத்தி
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

யோகம் வருகிறதெண்டு சொல்லி கொழும்புப் பயண த்துக்காக என்னை காதானையும் அடைவு வச்சி யள். அவரும் கொழும்பாலை வந்து எத்தினை மாத மாப் போச்சு. கடைசியிலை வேலையுமில்லை. என்ரை தோடுதான் மாளப் போகுது.”
சகோதரி புனிதா அவனைப் பார்வையால் எரித்த படி அபிசேகம் செய்தாள்.
"இந்த வயசிலையும் வீட்டுப் பொறுப்புக்களை
உணராமல். sy
இப்படி எத்தனையோ வசவுகளைக் கேட்டு அவனது மனம் பேதலித்து விட்டது.
'தம்பி. போன கிழமை சிவஞானத்தார், அவர் தான் உதயன்ரை தேப்பன் கடைக்கு வந்தவர். உன்னைப் பற்றியும் விசாரித்தவர். தன்ரை மகனை லண்டனுக்கு ஸ்ரூடன்ற் விசாவிலை அனுப்பின வராம். அவரை ஒருக்கால் கண்டு கதை. செல் வாக்குள்ள மனிசன். ஆரையும் பிடிச்சு உதவி செய் யிறன் எண்டவர். நீ வயது வந்த பிள்ளை. இவ்வள வும் படிச்சனி. உனக்கு நாங்கள் புத்தி சொல்லே லாது. ஏதோ எங்கடை நிலைமையைப் பார்த்து நட"
இது சலரோக நோய் முற்றி பாயும், படுக்கையு மாகி மூலையில் முடங்கிவிட்ட தகப்பனின் நம்பிக் கையான வார்த்தைகள்.
"அந்த மனிசன் நல்லவரெண்டுதான் ஊரிலை யும் கதைக்கினம். புடிச்ச பொடியளுக்கு வேலை எடுத்துக் குடுக்கிறவராம். அமைச்சரோடையும் நல்ல ஒட்டு எண்டு கேள்வி. நீ படிச்ச பெரிய படிப்பு க்கு கட்டாயம் ஏதும் செய்வார். அவரைக் கண்டு ஒருக்காக் கதைச்சுப்பார்”
அம்மா அப்பாவுக்கு இசைவாகக் கூறினாள்.
அரச உத்தியோகம் தேடும் வேட்டையில் நம்பி க்கையற்று விடுபட்டிருந்த அவனை, மீண்டும் தெம் பூட்டி அந்த வலைக்குள் ஈர்க்கப் பிரயத்தனப்படும் பெற்றோர்களின் வார்த்தைகளைக் கேட்க விசன மாக இருந்தது.
இருந்தும் ஏழ்மை, விரக்தி, வேதனை, ஏமாற்றம், அலைக்கழிவு அவமானம் என எத்தனையோ தளைக்களில் சிக்குண்டு போய் வாழ்க்கையே போராட்டமாகி விட்ட அந்தக் குடும்பத்தின் விடுத லைக்காக ஏதாவது வேலை செய்ய வேண்டுமென்ற
140

Page 143
ஒர்மம் அவனுள் இறுகியபோது, பெற்றோரின் வார் த்தைகளை அவனால் மறுதலிக்க முடியவில்லை.
'சிவஞானத்தாரோடை கதைக்கேக்கை எங் கடை கஷ்ட நிலைமையச் சொல்லிக் கதை"
அம்மா கூறியதைக் காதில் வாங்கிக் கொண்டு எழுந்தான்.
அவன் சிவஞானத்தாரின் வீட்டுக்கு வந்து முன் தாள்வாரத்தில் போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந் தான். அவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருப்ப தாக அவர் மனைவி கூறிச் சென்று அரைமணிநேரம் கடந்துவிட்டது.
வீட்டு முற்றத்தில் செம்மண்தரையில் நிரைநிரை யாக வரம்புகட்டி நின்ற பல வண்ணக் குரோட்டன் களும், அப்பால் குலை தள்ளியபடி மதாளித்து நிற் கும் வாழை மரங்களும் பார்ப்பதற்கு இதமளித்தது.
அந்த வீட்டின் ரம்மியமான சூழலில் லயித்த போது, கதவு திறக்கப்டும் ஒசை கேட்டு எழுந்து நின்றான்.
"ஆ. நீர் ஆர் தம்பி, என்ன விசயம்?"
"அப்பா உங்களோடை கடையிலை கதைச்சவ ராம். வேலை விசயமாய்."
*சரி. சரி. நீர் சைக்கிள் கடை மணியன்ரை மேனே" அவர் தன்னை இனம் கண்டு கூறிய விதம் அவனுக்கு எரிச்சலூட்டியது.
'உம்மோடைதானை என்ரை மேனும் படிச்ச வன். உதயனைத் தெரியுமல்லே. ஸ்ருடன்ற் விசா விலை லண்டனுக்கு அனுப்பிவிட்டன். இப்ப அவன் அங்கை படிப்போடை, பாட் ரைம் வேலையும் செய்து கொண்டிருக்கிறான்' அவரது வார்த்தைகளில் பெருமிதம் தெரிந்தது.
'தம்பி இந்தக் காலத்திலை வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் மலிஞ்சு போய் கிடக்கினம். நீர் படிப் பிலை மினைக் கெட்ட நேரம் வேறை வேலையள் ஏதும் செய்திருக்கலாம், உம்மடை குடும்பத்தையும் வளப்படுத்தியிருக்கலாம்"
பெரிய மனிதத்தன்தையான வார்த்தைகளின் சீண்டலின் வலியை தாங்கியபடி, "நான் உங்கள ட்டை வந்தது.”
141

பொறுமையிழந்து தனது மெளனத்தைக் கலைத் தான்.
"ஒமோம் தெரியும். பல்மேறா போட் வேலை விசயமாத்தானே. அந்த போட் பிறகிடென்ரோடை யும் கதைச்சனான். உம்மடை நிலைமையைச் சொல்லியும் எவ்வளவோ கதைச்சுப் பார்த்தனான். உம்மடை பெரிய படிப்புக்கு ஏத்த வேலையள் அங்கை இல்லையாம். அவரும் உங்கடையாள் தானை. தெரியுமே? அவையஞக்கு இப்ப பதவியள் வந்தாப்போலை தலைகால் தெரியிறகில்லை”
தொடர்பற்று அவர் பேசியதை உள்வாங்கிக் கொண்டு எழுந்தான்.
"சரி சரி. நீர் போட்டு வாரும். வேறையெங் கையும் வசதிப்பட்டால் பாப்பம். மணியனைக் கேட்டதாகச் சொல்லும். மனிசியின்ரை சைக்கிளொ ண்டும் கழுவிப் பூட்ட வேணுமாமெண்டு சொல்லும்.”
இதுபோல முன்னரும் வேலை ஒன்றுக்காக இப்படியான பேர்வழிகளை நாடி அவமானப்பட்டது, பட்டறிவில் உறைத்தது.
தீவிர சிந்தனையில் ஆழ்ந்து போய் எல்லையற்ற போராட்டத்தில் அவன் மனம் மூழ்கியது. நிர்ப்பந்தங் களின் பளுவை ஏற்கத்தயாரான வைரம் பாவித்த ஓர் வன்மம் அவனுள் உறுதிபெற்றது.
குறுக்குத் தெருவைக் கடந்து பலாலி வீதியில் மிதந்து நாற்சந்தியை அண்மித்த போது, கிழக்குப் பக்கமாக கோப்பாய் நோக்கி விரியும் வீதியில் பல நாளாக பூட்டியபடி இருக்கும் தகப்பனின் சைக்கிள் கடை எதிர்ப்பட்டது.
தகப்பனுக்கு கையுதவியாக லீவு நாட்களில் எடுபிடி வேலைகள் செய்த முன் அனுபவம் தலை
&frլ:-ւգաՑl.
சாவிப் பெட்டி. சொலிசன் பேணி. ரியூப் துண்டுகள்.
அவன் மனக்கண் முன் நிழலாடி நம்பிக்கை தந்தன.
மனதில் கவிந்திருந்த துயரங்கள் மெல்ல மெல்ல கலைந்து போயின. பிரதியட்ச உலகின் யதார்த்தம் அவனுள் உறுதிபெற ஒரு வேலை கிடைத்துவிட்ட திருப்தியில் மனம் இலேசானது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 144
நிமிர்ந்தும் இடைக் முட்கம்பி வேலியிலிருந்து சாய்த்தபடி இருக்கிறார்.பே கீறுகிறது கை, எதிர்த் தெ முழங்கால்களைக் கோர்த்
4:ன்றல்
இடம், வலமாகச் சுழன்று மையாக ஒரு குழந்தை சு மாடுகளைக் கொண்டு வந்து சுடலைக்குள் மேய விடுவதும்; பத்தர் எண்ணிப் பார்த்துக் கேற்றைத் திறந்து றோட்டுக்கு பத்தர் அள்ளிக் குவித்த சாணமும், ஒரு நாற்கடகம் கொ விற்றுக் கிடைக்கும் பணத்தில் இருவரும் குடித்துக் கொ6
அம்பலத்தாரின் நிலையைக் கணக்கிலெடுத்து, சில அவரோடு குந்துவதுண்டு. வழிப் போக்கர்களும் நடந்து க அரசியல் என்பன பேசு பொருளாக இருக்கும். இதில் அம் இருப்பார். இதில் பேசப்படுபவைகளைக் கேட்பதுக்காகப் கொதி வந்தால் டேய் உங்களுக்கு இதில என்ன வேலை? தேன் கூட்டில் கல்லெறிந்தது போல் அவர்கள் கலைந்து ஆவலாதியர், ஆறப்பம், குயிலர், அரிப்பார் இவர்கள் இச் ச வரும் கோயில்பிள்ளை போல் இவைகளும் இயற்பெயர் 'விஷயக்காரன்’ என அச் சமூகத்தின் கணிப்பைப் பெறும் கேட்டுக் கொண்டிருப்போரின் முழி பிதுங்கும் கம்பர் செரும காட்டி, வேட்டியை ஒதுக்கிச் சப்பணமிட்டபடி, மடியில் ே இப்படி அவர் தன்னை ஆயத்தப்படுத்துவதே இரசிக்கக் ச
பெருவிருட்சம் ஆல். ஓங்கி விழுதெறிந்து வளர்வது. கா காலையில் கூர்க் கம்பிகொண்டு வந்து கீழே விழுந்து கி கால் நடைகளுக்கு உணவு. பக்தர்கள் கோயில் குங்குமம் ஆலிலைகளைத் தேடித் திரிந்து பொறுக்குவர். வேலென் காக்கும் மூலிகை. வேப்பம் குச்சியால் பல் தேய்த்தால் ெ செய்ய வேம்பைத் தேடித் திரிவர்.
இவைகள் மட்டுமல்லாது இந்த விருட்சங்களுக்கு அ வேண்டுமெனக் குழந்தை கிடைக்காத பெண்கள் அரச ம சைவக் கடவுள்களும் எழுந்தருளி இருப்பதை நாமறிவோ கெளதம புத்தர் இதன் கீழேயே இருப்பன்த நாமெல்லோரு பிரதிஷ்டை செய்து அவ்விடத்தைப் பக்திக்குரிய ஸ்தலமாக் பெரியம்மை, சின்னம்மை, கூவைக்கட்டு, கண்ணோ பே வேப்பிலையைப் பிடுங்கி வீட்டின் வாசல் கூரையில் அக்கா இவைகளைப் போட்டு, பரத்தி வைப்பர். வேப்பமிலைச் சார் முழுகாட்டும் பழக்கமும் இருந்ததுண்டு. குளிர்ச்சிக்காக இ
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 
 

-நம்பி நழுவி
கிடை மேற்கே பாறியும் நிற்கும், பூவரச மரக் கறலேறிய தரைக்குப் படரும் நிழலில் அம்பலத்தார் குந்தி முதுகைச் மலாடை இல்லை. தோளில் சால்வை. வெறும் மணலைக் ருவோரக் கல்லில் பத்தர் தலைப் பாகையோடு, கைகளால் தபடி ஆற அமரக் குந்தி இருக்கிறார். இருவர் பார்வைகளும் கொண்டிருக்கின்றன. செழிப்பற்ற முகக் கோலம். ஒரு கிழ ட வரவில்லை! ஒரு சத வருமானமுமில்லை! அம்பலத்தார் மணி நான்கானதும் கேற்றடியில் வந்து நிற்கும் அவைகளை 5 விடுவதும், இப்படியாகக் கிழமையொன்று கடந்துவிட்டது. ள்ளக் கூடியதாகச் சேரவில்லை. எருவைக் குவித்து அதை ண்டாடுவதுண்டு. அவ்வேளை ‘கண, கணப்பாக நிற்பார்கள்.
வேளைகளில் அந்தப் பகுதிக் கிழடுகளும் அந்த இடத்தில் ளையாற இச் சபாவில் சங்கமிப்பதுண்டு. புராணம், சமயம், பலத்தார் அக்கறை கொள்ளமாட்டார். கேட்டுக் கொண்டே பாலன் போன்ற இளம் வட்டன்'களும் வந்து நிற்பதுண்டு. அம்பலத்தார் தனது ஊன்று கோல் பொல்லைத் தூக்குவார். து விடுவர். கம்பர், நாரதர், சவுதார், பொக்கர், ஒண்டுகாசு, பாவின் உறுப்பினர்கள். 'அரசி தொலைக்காட்சித் தொடரில் களென நினைக்கக் கூடாது. பட்டப் பெயர்கள். ஒரளவுக்கு ) கம்பர் சொல்வார், 'ஆலுக்கும் வேலுக்கும் ஆயிரம் கண்’ லொன்றைச் செருமி வெற்றிலையைக் கண்டிராத பற்களைக் தாள் சால்வையைப் போட்டபடி சொல்லத் தொடங்குவார். hடிய கலையாக மிளிரும்.
ல் நடைகளுக்கு ஆலிலை உணவு கால்நடை வளர்ப்போர், டக்கும் இலைகளைக் குத்திக் கொண்டு போவார்கள். இது , விபூதி, சந்தனம் என்பவைகளைச் சுற்றிக் கொண்டு போக பது வேம்பை, அதன் பயன்பாடு உச்சமானது. உடல் நலம் கதியில் பல் கொட்டுண்டாது, இறுக்கமாகும். தளபாடங்கள்
யூன்மீகக் கடாட்சமும் உண்டு. தாய்மைப் பேறு கிடைக்க ரத்தைச் சுற்றி வருவதுண்டு. இதன் கீழ் விநாயகர் போன்ற ம். அத்தோடு பெளத்தர்களுக்கு அரசு மிகவும் புனிதமானது. ம் காண்கிறோமல்லவா. வேம்பின் அடியில் சூலமொன்றைப் 5கும் முறைமை இன்னமும் சைவ மக்கள் மத்தியில் உண்டு. ான்ற நோய்கள் குடும்பத்தில் யாருக்காவது பிடித்திருந்தால் லத்தவர்கள் செருகி வைப்பதுண்டு. அத்தோடு படுக்கையில் ]றைப் பிழிந்து அம்மை நோயாளர்களின் தலையில் தேய்த்து இதைச் செய்வதாகக் கூறுவர்.
142

Page 145
இவைகளை மிகவும் சுவாரஸ்யமாகக் கூறி முடித்துவிறைத்த கால்களை கம்பர் முன்னே நீட்டி, சிரித்தபடி விறைப்பைப் போக்காட்டுவார். சூழவிருப்போர் வானொ லிச் செய்தியைக் கேட்பது போல் அமைதியாக இருப்பர். 'மங்கை சூதகமாகினால் கங்கை நீராடுவாள். கங்கை சூதகமாகினால் எங்கு நீராடுவாள்?’ தசுப்பையர் புதிர் போடுவார். மாதவிடாய் வந்த பெண் கங்கை நீரில் குளித்துத் துடக்கைப் போக்குவதுண்டு. "கங்கை' என்பது பெண்பாலைச் சேர்ந்தது. எனவே இந்தக் கங்கைக்கு மாதவிடாய் வந்தால் அவள் எங்கு நீராடித் தனது துடக் கைக் கழிப்பாள்? இதுவே புதிர். அந்தச் சபாவிலிருக்கும் கனதியான விஷயக்காரரே திணறித் தத்தளிப்பர். தசுப்பையருக்கும் இது சிதம்பர இரகசியந்தான்.
இந்த இடத்தில் கூட்டாளி ஒருவர் சொன்ன தகவ லொன்று தலையை நீட்டுகிறது. தமிழ்ப் புனைக்கதை யின் எல்லைகளை விஸ்தரித்தவர்களில் எஸ்.பொன் னுத்துரை (எஸ்.பொ)யும் ஒருவரென்பதைத் தமிழ்ப் புனைக்கதை இலக்கிய வரலாறு மறுக்காது. இந்த எஸ்.பொவின் மாணவராக எனது கூட்டாளியும் இருக்கும் பேற்றைப் பெற்றவர். வகுப்பின் கரும்புடிகையில், எஸ்.பொ சிவபெருமானின் படத்தை வரைவாரா, சிவன் புலித் தோலின் மேல் சம்மணமிட்டு இருக்கும் படமிது. அவரது சடாமுடியை உற்று நோக்கின் அதில் ஒரு பெண்ணின் முகத் தோற்றம் தெரியும். அதற்கு மேல் சிவனின் சடாமுடியிலிருந்து நீர் வழிந்தோடும். இதற்கு எஸ்.பொ. தனக்கேயுரியபாணியில் விளக்கம் கொடுப்பா ராம். அது தலையிலிருக்கும் கங்காதேவிக்குச் சூதகம் வந்துவிட்டது. அதுதான் அப்படி ஒடுகின்றதென அங்க தம் கொப்பளிக்கச் சொல்வாராம். இதையும் தசுப்பைய ரின் புதிரோடு பொருத்திப் பார்க்கலாந்தானே!
அம்பலத்தாரின் முகதாவில் இத்தகைய இலாபகர மான பொழுது போக்குகள் நிகழ்ந்து கொண்டிருக்க, சற் றுத் தள்ளி நிலத்தில் சாக்கு விரித்து நடுத்தர வயதாளி கள் கடதாசி விளையாட்டில் 304 விளையாடிக் கொண்டி ருப்பர். இவர்களுக்கும் பார்வையாளர் கூடி நிற்பர்.
இதெல்லாம் அம்பலத்தாருக்கு 'முஸாபாத்தி இல் லாத வேளைகளில் தான் நடக்கும். அவருக்கு முஸoப் பாத்தி எனக் கண்டால் ஒருவருமே அந்த இடத்தை நத்த LDITL Lrtfæ6n.
வில்லூன்றி மயானக் காவல்காரனாக இருந்தாலும் அம்பலத்தாரும் சாதிமான்தான்! அரிச்சந்திரன் கூட மயா னம் காத்துக் காப்பணமும் முழத்துண்டும் கேட்டவன் தானே! அவனைச் சனி பிடித்து ஆட்டியதாம் அம்பலத் தாருக்கும் அப்படியாக்கும்!
அம்பலத்தார் இரண்டாம் மகா யுத்தத்தில் வெள் ளைக்காரனோடு ஏதோ வேலை பார்த்ததாகக் கதை
143

அடிபட்டது. அந்தச் சேர்க்கையால் அவருக்கு ஆங்கில அறிவு உண்டென வில்லூன்றி மயானச் சூழலில் வசித்த அடிமட்ட மக்கள் நம்பி இருந்தனர். இதைப் பாலனின் அப்புவும் "விழுங்கி இருந்தார்.
மயானக் காவலுக்கு வரும்போது ஒருநாள் அம்ப லத்தார் தாடியுடனான வழுவழுப்பான கறுத்தக் கிடா யொன்றையும் கயிற்றில் கட்டிக் கொண்டு வந்தார். கிடா யைப் பூவரசொன்றில் கட்டிவிட்டுத் தனது வழமையான இடத்தில் குந்திக் கொண்டார். பூவரசங் கொப்புகளைப் பத்தர் முறித்து ஒன்றாகச் சேர்த்துக் கட்டிக் கிடாய்க்கு எட்டுந் தூரத்தில் தொங்கவிட்டார். அது மூத்திரம் பெய்து கொண்டு குழையைத் தின்று கொண்டு நின்றது. வழிப் போக்கர்கள் நடையைத் தளர்த்தி, அதை நின்று, நின்று பார்த்தபடி சென்றனர். கிடாயின் கழுத்தில் சதங்கையொ ன்றும் கட்டப்பட்டிருந்தது. அது அடிக்கடி நாதமெழுப்பிக் கொண்டிருந் து. ராட்டினம், அம்பலத்தாரின் வாடிக்கைக் கள்ளுக் கெர்ட்டில்காரன் கிடாயைக் கண்டு விட்டான்.
"சோக்கான் கிடாய் ஐயா. பதினைஞ்சு பங்குக்கு மேலே விழும்" நாவில்நீரூற ராட்டினம் பொச்சடித்தான். “GBLUTULT விழுவானிே.நிண்டியே LD600T60L 2-60Lulb." பக்கத்தே கிடந்த கல்லொன்றை அம்பலத்தார் தூக்கினார். “தவிடென்டு. புன்ன்னாக்கெண்டு. குழையளெ ண்டு தீத்தித் தீத்தி நான் இதை வளக்கிறன். அவர் பங்கு போடப் போறேராம் பங்கு. காழுவன் வயிரவ ருக்கு இது நேத்தியடா. அவருக்குத்தான். * இடைக் கிடை அம்மனங்களையும் கொட்டிச் சன்னதமானார். விசாரித்த ராட்டினம் எங்கு போனானோ தெரியாது. அவன் தலைக்கறுப்பையே காண முடியவில்லையே!
அம்பலத்தாருக்கு அன்றைக்கு நல்ல முழுவியளம். அத்தியடியிலிருந்து எரிக்கப் பிரேதமொன்று வருவதாகச் சொல்லிக் கட்டையடுக்குவதற்கு வண்டிலில் விறகு கொண்டு வந்தனர். அம்பலத்தாருக்கு முற்காசும் கிடைத் தது. பத்தரை அனுப்பி, அனுப்பி கள்ளைப் போத்தலில் எடுத்து அம்பலத்தார் அவனுக்கும் கொடுத்துச் சொட்டுச் சொட்டாகக் குடித்துக் கொண்டிருந்தார். செக்கல் பொழு தில் தண்டிகைப் பாடையில் நிலபாவாடை விரித்துப் பாட்டோடு பிரேதம் வந்து சேர்ந்தது. கைகுளிரக் காசும் அம்பலத்தாருக்குத் தேறியது. பத்தரை அனுப்பி அரைப் போத்தல் சாராயம் வாங்கி அதையும் வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டார். பெளர்ணமி முற் கூறு. எங்கும் கும் இருட்டு. வீதி விளக்கு அழுமூஞ்சியாக மின்னிக் கொண் டிருந்தது. இருந்த இடத்திலேயே அம்பலத்தார் சரிந்து விட்டார். பத்தரின் அசுமாத்தமும் இல்லை.
விடிந்து விட்டது. அம்பலத்தார் எழுந்து விட்டார். கை யில் சோடாப் போத்தல் பாலுடனும், சிறு பாசலுடனும் மனைவி நின்றார்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 146
"எங்க கிடாய். எட பத்தா. எங்கடா கொண்டு போய் கட்டின் நீ." அம்பலத்தார் பதகளித்தார். குரல் கேட்டு வழக்கம் போல் பத்தர் ஓடி வரவில்லை. எழுந்து அம்பலத்தார் மடத்துக்குப் போனார். கடல் காற்றை அநுபவித்தபடி பத்தர் கனகச்சிதமாகத் தூக்கி கொண்டி ருந்தார். கால்கள் பிழந்து கோவணம் தெரியக் கிடந்தார்.
"எங்கயடா என்ர கிடாய்..?’ கையிலிருந்த தடியால் அம்பலத்தார் பத்தரின் காலில் தட்டினார். பத்தர் முழித் துக் கொண்டார்.
"எங்கயடா கிடாய்."
"எனக்குத் தெரியாது.” மடத்துச் சீமெந்துத் தரை யில் கிடந்த சவுக்கத்தை எடுத்து, மேலைத் தட்டி, ஒட்டிக் கிடந்த தூசிகளைப் போக்கி விட்டுப் பத்தர் கொட்டாவி விட்டுச் செருமினார்.
"என்னடா தெரியாதா. நேத்தெனக்கு முசுப்பாத்தி யெண்டு தெரியுந்தானே. கிடாயைக் கொண்டு போய் உன்ர வீட்டிலயாவது கட்டி இருக்கலாமே.” தடி பத்த ரின் மண்டையைக் குறிவைத்தது.
"நானென்ன செய்யிறது.? எரியிறதப் பாக்கிறதா. கிடாயப் பாக்கிறதா. தனியனா நிண்டு தான் எரிச்ச 60ππ6ότ... அத்தியடியான்கள் காடாத்த வரப் போறா Sjab..... நான் போய் இன்னும் எரியாமக் கிடக்கிறதை பாக்க வேணும்' பத்தர் எழும்பி, விறகும் பிரதேமும் எரி ந்து சாம்பல் பூத்திருந்த புட்டியை நோக்கிச் சிறிது உட லாட்டத்தோடு சென்றார். நேற்றை போதை இன்னமும் உடலைத் தன் பிடிக்குள் வைத்திருந்தது.
'பத்தனுக்கும் இன்னும் முறியேல்ல. சொன்ன னான் கிடாயைக் கொண்டு போக வேணாமெண்டு. கேட்டாத்தானே. மேயோனும், காலாற வேணுமெண்டு ஒற்றைக்காலில நிண்டியள். இப்ப நடந்ததைப் பாத்தி யள. ஆராற்ற சட்டியிக்க கிடக்கோ. இறைச்சிக் கடைக் காரன்ர கடையிலதான் தொங்குதோ. பிலா இலை, மாவிலை, முருக்கமிலையைத் தீத்தித் தீத்தி வளத்தன். காழுவன் வயிரவரே உனக்கெண்டு வளத்தது. கொண்டு போனவையை நீ தான் பாக்க வேணும்." அம்பலத்தாரின் மனைவி பத்திரகாளியா கிச் சபித்தாள்.
"பொறடி கொஞ்சம். Lib..... நேத்தைக்கு அவன் ராட்டினம் தான் இறைச்சி அடிக்கக் கேட்டவன். ம். 6JT..... அந்த ராஸ்கலின்ர வேலைதான்” இடக்காலை எறிந்தெறிந்து பொல்லை ஊன்றி, ஊன்றி அம்பலத்தார் வேகமாக நடந்தார்.
“முகத்தைக் கழுவி இதைத் திண்டு குடிச்சுப் போட்டு போங்களன். ராத்திரியும் பட்டினி கிடந்தனியள்' பதக ளிப்பான அந்த நிலையிலும் மனைவி நிதானமிழக்காது அம்பலத்தார் மீது பரிவு காட்டினாள்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

"கிடாயான கிடாய் போய்ச்சுச் சாப்பாடாம் சாப்பாடு. இறைச்சிக் கடைக்காரன்ர கையில குடுத்தாலும் பத்துப் போண் தருவான். பாப்பம். கிடாய் தராட்டி, அந்தப் பொறுக்கி ராட்டினத்தானை என்ன செய்யிறனென்டு.” “6IIEl&ւ வளவுக்க சீவுறவன் அப்புடிச் செய்வானே. என்னப்பா உன்ர கதை.ராட்டினன் ஊரவனல்லே. ." மனைவி கணவனின் ஆத்திரத்தைத் தணிக்கப் பார்த் தாள். தனக்குத் தெரிந்த நியாயத்தைச் சொன்னாள்.
'இல்லையடி கிடாயிறைச்சி தின்னப் பல்லுக் கடுக் கிற மாதிரி அவன் தான்ரி கேட்டவன். குடல்ல பால்கறி வைக்கலாமெண்டும் சொன்னவன் அவன் தான்ரி.” அம்பலத்தார் கொதிதெழுந்தார். நேற்றைய மதுவின் போதை கீழிறங்க, கிடாய் களவு போன போதை அவரை ஆடவைத்தது. நடந்தார். மனைவி பின் தொடர. வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டார். தென்னங்குற்றி வழிப் பாதைக்குள் நுழைந்து.
“டேய் ராட்டினம். எங்கயடா என்ர கிடாய்..?
"ஐயா. என்னது? முட்டிக் கள்ளை; சாடிப் போத் தல் வாயில் புனலை பிடித்து பன்னாடையால் வடித்து கள் போத்தலுக்குள் நிறைத்துக் கொண்டிருந்த ராட்டி னம் பன்னாடையும் கையுமாக அம்பலத்தாரை நோக்கி வந்தான்.
“ÉLTui 6TEEuLJLT?”
"இதென்ன கோதாரி. எனக்கெப்புடித் தெரியும்." அப்பாவி போல் ராட்டினம், அம்பலத்தாரின் முகத்தை ஏறிட்டான்.
‘என்னடா தெரியாதிா..? பரிசுத்தவான் மாதிரியெ ல்லே கதைக்கிறான். நீ தான்ரா வலிய வலியக் கேட்டு நாண்டு கொண்டு நிண்ட நீ. எங்க ஒளிச்சுக் கட்டி வைச் சிருக்கிற. தராட்டி நடக்கிறது வேற.” பழக்கதோ வடிம் அம்பலத்தாரின் பேச்சில் ஆமிக்காரனின் அதட்டல் இழையோடி நின்றது. அந்தப் பெரு வளவுக்குள் குடியி ருந்த அத்தனை பேரும் குஞ்சு குருமான், குமரிகள் உட் பட வெளிவந்து இவர்களைச் சுற்றிக் குவிந்து விட்டனர். ஆட்டுக் கள்ளனென்று ராட்டினத்தைக் குற்றம் சாட்டுவது அவனுக்கு சீலை உரிந்து கீழே விழுவது போலிருந்தது. "சுடலை வயிரவராணை ஐயா எனக்கு அதப் பத்தி ஒண்டும் தெரியாது. தரச் சொல்லிக் கேட்டது உண்மை தான். தந்திருந்தா றெடிக் காசு தந்திட்டு கிடாயைக் கொண்டு போயிருப்பன்.”
"ஒ. றெடிக் காசாம். பணச் செருக்கைக் காட்டி றான். தண்ணியைக் கள்ளுக்கு ஊத்தி எங்களிட்ட உழைச்ச காசு. பவுள்செல்லே காட்டிறான். எனக்குத் தெரியுமடா நீங்கள் எப்புடியான ஆக்களென்டு. உன் னைக் கம்பி எண்ண வைக்காட்டி நான் அம்பலத்தான் இல்லை." உடம்பு பூராவும் அம்பலத்தாருக்கு ஆத்தி
144

Page 147
ரக் கொதிப்பு. சாறத்தைச் சிரைத்துக் குண்டிப் பக்கமாக உயர்த்திக் கையால் பிடித்தபடி மறுகையால் பொல்லை ஊன்றியபடி வேகமாக நடந்தார். சுப்பிறனின் ராக்ஸியை மறித்து, "பொலிசுக்குப் போ’ எனக் கூறி ராக்சிக்குள் அமர்ந்து கொண்டார்.
"பாத்தீங்களா அம்மா ஐயான்ர கதையை. இம்மட் டுக் காலமாப் புழங்கிறன். என்னைப் பற்றித் தெரியாதா? கேட்டது உண்மை தான். ஐயா இல்லையென்டோடன வந்திட்டன்”ராட்டினம் கெஞ்சுவதுபோல், பார்த்துக் கொண்டு நின்ற அம்பலத்தாரின் மனைவிக்கு முறையிட்டான்.
"பழியைக் காழுவன் வைரவரிட்டப் போட்டிட்டுப் பேசா மலிருக்கலாம். மனிசன் கேட்டாத் தானே.” சொல் லிக் கொண்டே மனைவி தனது வீட்டை நோக்கி நடந்தார். -ܛܼܲܝ -#ܝ -ܐܼܲܝ
ராட்டினத்தின் கள்ளுக் கொட்டிலின் முன் பொலீஸ் ஜீப் வந்து நின்றது.
'டேய் ராட்டினம் இங்க வா.." பொலிஸ்காரர் இறங் கிக் கூப்பிட்டனர். ராட்டினம் வரவில்லை. அவன் மனை விதான் வந்தாள்.
"வெள்ளாந் தெருவுக்குச் சீவப் போட்டேர்’ கலவரம் கொப்பளிக்கும் முகத்தோடு அடக்கமாகச் சொன்னாள். ஜீப் உறுமிக் கொண்டு புறப்பட்டது. உரத்த சத்தத்தால் அந்த வளவுக்குள் நின்ற நாய்களெல்லாம் குரைத்துக் கொண்டு ஓடி வந்தன. சிலதுகள் ஜீப்பை பின் தொடர்ந்து கலைத்துக் கலைத்தும் குரைந்தன.
"இதென்ன இவன்ர பேர் ராட்டினம். முருகன், கந் தன், சுப்பன் எண்டு தானே இவங்களுக்குப் பேர். சர்க சில சுத்துறது தான் ராட்டினம்." ஒரு பொலிஸ்காரன் சிரித் தபடி வேடிக்கையாகக் கேட்டான்.
"இவன் சரியான பிரயாசி. அணில் மாதிரி மரத்தில ஏறி இறங்குவான். ஒரு நிமிஷம் கூட சும்மா இருக் கமாட்டான். சுத்திச் சுத்தி என்னவும் செய்து கொண்டி ருப்பான். ராட்டினமும் அப்புடித்தானே. அதுதான் உவ னிட்டக் குடிக்க வாற உத்தியோகத்தர் இவனை ராட்டி னமெண்டு சொல்லிறவை. அதப் பாத்து எல்லாரும் உவனை ராட்டினம் எண்டினம்.” அம்பலத்தார், ராட்டி னம் வந்த கதையை விபரித்தார். நதி மூலம் கூறினார்.
உறுமிக் கொண்டு ஜீப் வெள்ளாந்தெருவுக்குள் நுழைந்தது. அதைப் பெரியொழுங்கை எனவும் கூறுவர். இப்போ சீனிவாசகம் வீதிதான் அந்தக் காலத்தில் இப்படி அடையாளப்படுத்தப்பட்டது.
"அந்தா மரத்தில் ஏறிறான் ஐயா.." காட்டிய இடத்து க்கு முன்னால் ஜீப் நின்றது. தலை மயிர் முகத்தில் விழாதிருக்க, ராட்டினம் லேஞ்சியை மடித்து றிபன் போல் தலையில் கட்டி இருந்தான். தென்னை மரத்தின் நடுப்
145

பகுதிக்கு ஏறிவிட்டான், அரையில் கட்டி இருந்த இயனக் கூட்டில் சுரைக் குடுவை தொங்கியது.
“டேய். ராட்டினம் இறங்கி வாடா..." பொலிஸ்கா ரன் பெரும் சத்தமெழுப்பினான். ஒரு நாளும் இல்லாத மாதிரி'அந்த றோட்டில் பொலிஸ் ஜீப் நிற்பதைக் கண்ட அந்தப் பகுதிக் கல்வீட்டுக்கார அம்மாமார் சமையல் அகப்பைகள், கரண்டிகளோடு ஓடி வந்து கேற்றுகளைத் திறந்து ஜீப் நின்ற இடத்தைப் பார்த்தனர்.
மரத்திலிருந்த ராட்டினத்துக்குக் கேட்டுவிட்டது. சத்தம் வந்த திக்கை நோக்கி, ஜிப்பைக் கண்டுவிட்டான்.
‘என்ன பாக்கிறது. இறங்கி வாடா..." மூன்று பொலிஸ்காரர் வளவுக் கேற்றைத் திறந்து, செழித்து வளர்ந்து நின்ற மாமரத்தின் அடியில் நின்றனர். மரத்தில் பழம் உண்டாவென ஒரு பொலிஸ்காரன் கடமையை மறந்தவனாக அண்ணாந்து பார்த்தான். கட்டில் கிடந்த வீட்டு நாய் அடைப்புக்குள் கிடந்து குரைத்தது.
ராட்டினம், அம்பலத்தாரையும் கண்டுவிட்டான். விஷ யம் புரிந்தவனாக மரத்திலிருந்து நழுவிக் கொண்டு அடி க்கு வந்தான். அக்கம் பக்கத்தில் மரத்திலிருந்து இதைப் பார்த்த சீவல்காரரும் அவசர, அவசரமாக இறங்கி ஜீப் நின்ற இடத்தில் கூடினர்.
"உவன் தான் ஐயா...' அம்பலத்தார் விரலை நீட்டி அடையாளம் காட்டினார்.
*சொல்லடா எங்க அந்தக் கிடாய்.” அருகில் வந்தவ னைப் பார்த்துப் பொலிஸ்காரன் கேட்டார். ஒருவன் பிடரியில் கையால் ஓங்கி அடித்தான். மற்றவன் கையில் வைத்திருந்த பற்றன் பொல்லால் வயிற்றில் குத்தினான். மூன்றாமவன் பூட்ஸ் காலால் தொடையில் உதைத்தான். ராட்டினன் விழுந்து நிலத்தில் கையை ஊன்றி எழுந்தான். கையிலிருந்த சுரைக் குடுவை நிலத்தில் விழுந்து சிதறி யது. நிலத்தில் சிந்திய கள்ளிலிருந்து எறும்புகள், வண்டு கள் ஊர்ந்து அங்குமிங்குமாகச் சஞ்சலத்தோடு ஓடின.
“என்ர பொஞ்சாதி புள்ளைகளானை எனக்குத் தெரி யாது ஐயா" கண்ணிலிருந்து நீரோட ராட்டினம் சொன் னான்.
‘ஏறடா ஜிப்பில. ஸ்ரேசனுக்கு வந்தா எல்லாம் சொல்லுவ’ ராட்டினத்தை ஏற்றிக் கொண்டு ஜிப் பொலிஸ் ஸ்ரேசனுக்குப் பறந்தது. தங்களது சகோதரத் தொழிலா ளிக்கு என்ன நடக்கப் போகுதென்றதை அறிய ஏனைய சீவல்காரரும் தொழில் செய்யாமல் இயனக் கூட்டோடு சைக்கிளில் ஏறிப் பொலிஸ் ஸ்ரேசனுக்குச் சென்றனர். களவெடுத்தவனுக்கும் மசுவாசில அம்பட்டனுக்கும் பொலிசில் மன்னிப்புக் கிடையாதாம். இந்த எழுதாச் சட்டத்துக்கு அமைய, பொலிஸ் நிலையத்தில் கடமையி லிருந்த அத்தனை பொலிஸ்காரரும் ராட்டினத்தின்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 148
உடலில் தங்களது புஜ பராக்கிராமங்களைக் காட்டினர்.
ராட்டினம் பொலிஸில் பிடிபட்ட விடயம் அந்தக் குறிச்சி முழுக்கப் பிரசித்தமாகிவிட்டது. தினசரி ராட்டி னத்தின் வாடிக்கைக்காரர், கொட்டிலுக்குப் போகாது ராட் டினம் அவர்கள் வீட்டில் வைக்கும் போத்தல்களை வீட்டி லிருந்து கொண்டே அமசடக்கமாகக் குடிக்கும் கெளரவ உத்தியோகத்தர்கள், ‘ஈழநாடு’ பத்திரிகை ரிப்போட்டர் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் குவிந்து விட்டனர். அன்று தான் ராட்டினம் மக்களுக்குள் தனக்குள்ள செல்வாக்கை அறிந்து கொண்டான். பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் பிரமித்து விட்டார். ராட்டினம் நிரபராதி. அவனை விடுதலை செய்ய வேண்டும். அல்லது தாங்கள் ஏஎஸ்பியைக் காணப் போவதாக ஆங்கிலத்தில் உத்தி யோகத்தர்கள் சொன்னார்கள். அவனுக்கு அடிக்கக் கூடாதென்றும் எச்சரிக்கை செய்வது போல் கூறினர். ராட்டினத்தின் வாய் முறைப்பாட்டைப் பதிவு செய்து, பொறுப்பாளர் அவனை வீட்டுக்குப் போகச் சொன்னார். அம்பலத்தாரின் இச்செயலால் நிரபராதியான ராட் டினம் பத்து நாட்களாகத் தொழில் செய்யாது "குத்தியன்’ சின்னையாவிடம் புக்கை கட்டிக் கொண்டு திரிந்தான். வாடிக்கைக்காரர் உரும்பிராய்ச் சாராயமும் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தனர். மனைவி ஊதுமாக் கூழ் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்தாள்.
‘இதெல்லாம் உன்ர வாயால வந்தது. வாயைச் சும்மா வைச்சிருந்தா உதெல்லாம் நடந்திருக்குமா..? மனைவி சீறினாள்.
'அத விடடி. பாத்தியாடி உவங்கள் எங்கள எப்புடி நம்புறாங்களெண்டு. அம்பலத்தான்ர முகம் காஞ்சிருந் ததைக் கண்டா, பானைக்க கிடக்கிற கள்ளை அள்ளிக் குடிக்கிறனான்."
"ஏன் அங்க பொலிசில வந்து குவிஞ்சு வெளியில எடுத்தது ஆரு? இப்புடி ஒருக்காலும் ஒர வஞ்சகமாக் கதைக்கப்படாது' மனைவி நியாயம் ஒரு தலைப்பட்ச மாக இருக்கக் கூடாதென வாதாடினாள்.
போன கிடாய் போனது தான். அந்தக் களவைச் செய்தது யாரென்பது இன்னமும் சிதம்பர ரகசியந் தான். ஆனால் அம்பலத்தார், ராட்டினத்துக்குக் கிடைத்த அடி, உதைகளின் நோ சுகமாவதுக்கு முன் மீண்டும் அவனிடம் வாய்' நனைக்கப் போய்விட்டார். ஒட்டகப்புலத்துக்குப் போவென்றும் ஆலோசனை சொன்னார்! குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
-- -- --
பாலன் குடும்பம் வாழ்ந்த பகுதியில் அந்தரம், ஆபத் தென்று ஒரு தந்தி வந்தாலும், அதை வாசித்து வந்திருக் கும் செய்தியைச் சொல்ல எவருமே இல்லை. தமிழையே இலக்கண, எழுத்துப் பிழையின்றி எழுதத் தெரியாத படிப்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

பறிவு குறைந்த அப்பகுதியின் உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு வெள்ளைக்காரன் கொண்டு வந்த ஆங்கிலம் எப்படித் தெரியப் போகுது? பெரும்பாலோர் கொட்டடி, நம சிவாய வித்தியாசாலையில் ஐயர் வாத்தியாடரிடம் கற்ற ஏ, பி, சி, டி யோடு தான் இருந்தனர். அதனால் தமிழ்ப் பெயர்களை வாசிக்கும் ஆற்றலைச் சிலர் பெற்றிருந் தனர். இதற்கு உதவியாக இருந்தது யாழ்ப்பாணம் பெரிய கடையில் அமைந்திருந்த கடைகளில் நிறுத்தப்பட்டி ருந்த கடைப் பெயர்ப் பலகைகளில் காணப்பட்ட கடை u6öT GALIuuras6iT. S.S. SANGARAPILLAI, POOBALASINGHAM BOOK DEPOT, SITTAMPALAM BOOK DEPOT, T THAMBI THURAE BOOK DEPOT, JOSEPH SALOONguuL9 D fleoLD யாளரின் பெயர்களோடு கடைகளின் முழுப் பெயரும் எழு தப்பட்டிருக்கும். வகுப்புத் தொழிலாளர், கை வண்டில் தள்ளுவோர், மாட்டு வண்டில்காரர் இப்படியான மூன்று அல்லது நான்காம் வகுப்போடு கல்விக்கு முழுக்குப் போட்டு, குடும்ப வருமானத்துக்காகத் தொழில் பார்க்கும் இளைய சந்ததி, இத்தகைய பெயர்ப் பலகைகளைப் பார்த்துப் படித்துப் படித்துத் தங்களது கெட்டித்தனத்தால் எழுத்துக்களின் உச்சரிப்பைக் கிரகித்து, ஏனைய பெயர் களையும், தமது பெயர்களையும் ஆங்கிலத்தில் எழுதும் வல்லமையைப் பெற்றுக் கொண்டது. இதே வழியாகத் தான் இதே வர்க்கத்தைச் சேர்ந்த பாலனின் சில சொந் தங்களும் ஆங்கில வழித் தமிழ்ப் பெயர்களை வாசிக்க வும் பிழையில்லாது எழுதவும் கற்றிருந்தனர். தமது கையெழுத்தை ஆங்கிலத்தில் பதியவும் ஏலுமானவர் களாகவிருந்தனர். ஆனால் வசனங்களை வாசிப்பது முடி யாமலிருந்தது. தந்தி வந்தால் யாரிடமாவது கொண்டு ஒடித் தான் திரிவர்.
ஐந்தாம் வகுப்பிலிருந்து புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் கற்கும் கடாட்சத்தைப் பெற்றவன் பாலன். ஒரு காலத்தில் இக் கல்லூரி வகுப்பறைகளில் SPEAK NENGLISH என்ற வாசகம் தடித்த எழுத்தில் கடதாசியில் பதித்து, ஆசிரியரின் மேடையி கதிரைக்குப் பின்னால் வகுப்பு மாணவர்கள் பார்க்கக் கூடிய வகையில் சுவரின் மேல்புறத்தில் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்கில வழிக் கல்வியே இதற்குக் காரணமாகியது. தமிழில் மாணவர் கள் உரையாடினால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் பாலன் சேர்ந்த பின்னரும் இந்த வாசகம் சுவரில் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டிருக்கிறான். ஆனால், இலங்கை அரசியல் சாசனத்தில் தமிழ் மொழி நலன் சார்ந்த விதிகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலையே பாலன் காலத்தில் இந்த வாசகத்துக்கும் ஏற்பட்டது. மாணவர்கள் தாய்மொழியில் உரையாடத் தொடங்கினர். காலக் கிரமத்தில் ஒட்டப்பட்ட அறிவிப்பும் காணாமல் போய்விட்டது, இதற்குக் காரணம், இலங் கைத் தமிழரசுக் கட்சியின் எழுச்சியே!
-தொடரும்
146

Page 149
கால நீட்சிய .2 ممبر
இத்தலைப்பில் கு குறுந்திரைப்டங்களை சிலவ!
ವಾಣಿ: í. Í
அதற்கு முன்னதாக ஒ பிஸ்தாபிப்பது பொருத்தமா
- o
iki': 'édiriliş
| (i ,j * * ift: 1. If
1.தமிழ்ச் சூழலில் சினிமா
சினிமா எனும் கலை வடிவம் ஒரு மொழியினை தனக்க பின்னணி இசை, படத்தொகுப்பு, போன்ற துறைகள் இணை படைப்பாளி படைக்கும் படைப்பே சினிமா என்ற கலையா ஒவ்வொரு துறையும் ஒரு கலையாக இருப்பதன் காரண மொழியைக் கொண்டு ஒர் இயக்குனர் தன் ஆற்றல் வழியாக
தமிழில் சினிமா என்னும் பொழுது இந்தியாவின் தமிழக கலை மேற்குலகில் கண்டுப்பிடிக்கப்பட்ட காலம் தொடக் பட்ட பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பல நல்ல திரைப்பட இந்தியாவில் சினிமா எனும் கலை வடிவம் அறிமுகப்படுத்த லானவர்களால் புரிந்துக் கொள்ளப்படாத சூழலில், ஏலவே நிலையில், மேற்குகில் அக்கலை வடிவம் கண்டுபிடிக்கப்பட் லது சினிமாவுக்கான அம்மொழியானது, இந்தியாவில் மிக தா பட்டது எனலாம்.அவ்வாறு புரிந்துக் கொள்ளப்பட்டவர்களாே அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்த வரை, இந்தியா மு அடைந்த நிலையிலும், இந்தியாவின் மற்ற மொழிச் சமூகங்: மொழிச் சமூகங்களில் சினிமா எனும் கலை வடிவத்தின் டெ ளுடன் ஒப்பிடும் பொழுது, தமிழகத்தில் அத்தகைய முயற்சிக த்தவரை சினிமா என்பது சினிமா கலையின் அறிமுக கால (அப்போக்கிலிருந்து முற்றும் முழுதுமாக விடுபட்டதாகத் ெ திருக்கின்றன. கே. பாலசந்தர், ஜெயகாந்தன், பாலுமகேந் மணிரத்னம்,அருண்மொழி,ஞானசேகரன் கமல'சன இவ்: சூழலைப் பொறுத்தவரை(தமிழகத்து வணிகச் சினிமாகளி பிறநாடுகளில் வாழும தமிழ்ச் சமூகச் சூழலையும் இணைத்
இன்னும் பரவலாகவும், சரியாகவும் சினிமா எனும் கன என்றே சொல்லவேண்டும், உதாரணத்திற்கு நடிப்பை பற்றி அவர்கள் முதற்கொண்டு கமலஹாசன் வரை பற்றி பேசப்படு நடிகர் அல்ல.அவர் ஒருநாடக நடிகர், கமலஹாசன் ஒரு சி: ளாத, தமிழ்ச் சினிமா துறைச்சார்ந்தவர்களும் இருக்கிறார்க னது வணிகச் சினிமாக்களை முதல் ஷோக்களை முதல் ஆ
தமிழ் சினிமா ஒரு நாற்றாண்டை நெருங்கிக் கொண்டி துக் கொண்டிருக்கிறது. தமிழகத்து சூழலிலிருந்து ஒரு ச
147
 
 
 
 
 
 

T " " . . . . "
(S కజ. " }
L LSSSSL SLLLSLSSLLLLLL LLLLLLLLLLSLSSSL
-மேமன்கவி.
றுந் திரைப்படங்களைப் பற்றி பேசி நான் ரசித்த சில
ற்றை பற்றியும் சந்தர்ப்பம் கிட்டும வேளையெலாம் பேசலாம்
ருசில விடயங்களை இச்சந்தர்ப்பத்தில் பேசுவது அல்லது கவும், தேவையாகவும் இருக்கிறது.
ாக கொண்டது. கதை வசனம், ஒளி-ஒலிப்பதிவு, நடிப்பு னந்து உருவாகும் மொழியைக் கொண்டு இயக்குனர் என்ற ாகும் . இன்னும் ஆழமாக சொன்னால் நாம் மேற்சொன்ன மாக, , பல்வேறு ஆற்றல்களின் சங்கமத்தில் உருவாகும்
தரும் கலைப் படைப்பே சினிமா எனும் கலையாகும்.
த்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. சினிமா எனும் கம், அந்த கலை வடிவம் புரிந்துக் கொள்ளப்பட்டு, பேசப் ங்களை அச்சூழல் வழியாக நமக்கு கிடைத்திருக்கின்றன. ப்பட்ட காலத் தொடக்கம், அதன் மொழியானது பெரும்பா இந்தியாவில் நாட கலையின் ஆதிக்கம் அதிகமாக இருந்த ட குறுகிய காலத்திற்குள் புரிந்துக் கொள்ளப்பட மாதிரி அல் மதமாகவும், மிக குறைந்த பகுதியினரால் புரிந்துக் கொள்ளப் லே இந்திய சினிமாத்துறை ஒன்று வளர்ச்சி கண்டது. ஆனால் முழுதும் அத்துறை ஒரு பெரும் தொழிற்துறையாக வளர்ச்சி களில் குறிப்பாக வங்காளம், கேரளம், மற்றும் ஹிந்தி போன்ற 2ாழி புரிந்துக் கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக 5ள் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தை பொறு கட்டத்தில் காமிராவுக்குள் அடக்கப்பட்ட் நாடகமாகவும், தரியவில்லைபெரும் வணிக சினிமா முயற்சிகளாகவும் முடிந் திரா, உதிரிப்பூக்கள் மகேந்திரன், ஜெயபாரதி, அசோக்குமார், வாறான பலரின் பங்களிப்பு இருந்தும் கூட, தமிழ் சமூகச் ன் தாக்கத்தினால் நல்ல சினிமா ரசனை வளராமல் போன துதான் சொல்லுகிறேன்.)
ல வடிவத்தை பற்றிய அறிதலும், ரசனையும் வளரவில்லை நமது சூழலில் பேசப்படும் பொழுதெலாம் சிவாஜி கணேசன் ம் பொழுதுதெலாம், சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு சினிமா விமா நடிகர் என நாம் சொன்னால், அக்கூற்றை ஏற்றுக் கொள் i. தீவிர சினிமா ரசிகர்களும் (நான் தீவிர ரசிகர்கள் என சொன் ளாக பார்க்கிறவர்களை சொல்லுகிறேன்.) இருக்கிறார்கள்.
நக்கும் இந்த காலகட்டத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுந் த்யஜித்ரே யோ, ஒரு மிருணாள் செனோ, ஒரு அடுர் கோபால
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 150
afqb6860OF(360III, Middle Cinema Libs (3 Jaith 69c. 62urth பெனகலோ தோன்றாமல் போனதற்கு காரணம் என்ன? இக்கேள்விக்கான பதில் தம்மை விரிவான ஆய்வுக்கு எடுத்துச் செல்லக்கூடியது.
2.தமிழ்ச் சினிமாவும் புனையாக்கங்களும்
சினிமா பற்றிய அறிதல் ரசனை பற்றிய வளர்ச்சியை நாம் கண்டறிந்த அந்த சூழலின் மத்தியில், தமிழில் தோன்றிய நவீன புனையாக்கங்கள் சினிமா அவதாரம் எடுத்துப் பின் எதிர்கொண்ட நிலை என்ன? என்ற கேள்வி ஒன்று நம் முன் நிற்கிறது.
இக் கேள்விக்கான பதில் - அத்தகைய சினிமாப் படங்கள் தோல்வி அடைந்த படங்களாகவே இனங் காணப்பட்டுள்ளன. தோல்வி அடைந்த படங்கள் எனும் பொழுது, வணிக ரீதியாக அப்படங்கள் எதிர்கொண்ட தோல்வியை மனங்கொண்டு சொல்லவில்லை. (வணிக ரீதியான தோல்வியே தமிழ்ச் சமூகச் சூழலின் சினிமா ரசனைக்கான எடுத்துக்காட்டு) மாறாக, நான் இங்கு தோல்வி என குறிப்பிடுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட புனை கதையாக்கப் பிரதி 'வாசிக்கப்பட்ட'பொழுது, கிடைத்த அனுபவபூரணத்துவம் சினிமா எனும் மொழியின் வழியாக வாசிக்கப்பட்ட பொழுது, அவ்வனுபவம் நல்ல சினிமா ரசிகனுக்கும் கிடைக்கவில்லை, அத்திரைப்படத்தைப் பார்த்த, இலக்கியப் பிரதியாக அப்பனையாக்கப் பிரதியை வாசித்த வாசகனுக்கும். கிடைக்கவில்லை.
இவ்விடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். அத்த கைய படங்களை இயக்கியவர்களளை பொறுத்த வரை, சினிமா எனும் வடிவத்தை ஒரளவுக்கு புரிந்துக் கொண் டவர்கள். இவ்வளவுக்கும் அத்தகைய படங்கள் வணிக தமிழ்ச் சினிமாக்கள் கொண்டிருக்கும் பண்புகளை கொண்டியிராது, Art Film அல்லது (சினிமாவில் வர்த்தக சினிமா மாதிரி இலக்கியத்தில் வணிக இலக்கியம் என்ற வகை உண்டு அத்தகைய இலக்கியப் பிரதிகள் -கூட சினிமாகளாக அவதாரம் எடுத்த பொழுது, தம் பிரதிகள் சரியாக சொல்லப்படவில்லை என குறைபட்டுக் கொண்ட சம்பவங்கள் உண்டு. உதாரணம் சுஜாதா) Middle Cinema அல்லது பரிசோதனை முயற்சிகள் என்ற பேரில் எடுக்கப்பட்டவை. அத்தோடு அத்தகைய படங்களை இயக்கிய இயக்குனர்களோ முற்றும் முழுதுமாக சினிமா எனும் கலை பற்றிய அறிதல் இல்ல தவர்கள் என்றுச்சொல்லி விட முடியாது. அதே வேளை Serious writing இனங் கொண்டு கொள்ள தெரிந்தவர் கள். (வேண்டுமானால், அத்தகைய படங்கள் எடுத்த படங்கள் வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்த பின் வணிக சினிமாக்களை இயங்கும் இயக்குனர்களாக அவர்கள மாறி இருக்கலாம்.)
பின் ஏன் அந்த தோல்விகள்? இக்கேள்விக்கான பதில் விரிவானது.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

இதே வேளை இந்தியாவின் மற்ற மொழிச் சூழலில் (உதாரணமாக வங்காளம்,மலையாளம்,ஹிந்தி) புனையாக் கப் பிரதிகள் நல்ல சினிமாக்களாக உருவாகி இருப்ப தையும், அதேவேளை நல்ல சினிமா வின் தன்மைகளை இழக்காதநிலையில் வர்த்தகரீதியான வெற்றி அடைந்த படங்களாகவும் அவை இருந்திருக்கின்றன. இது எப்படி சாத்தியமாகியது? இக்கேள்விக்கான பதில் மேலே தாம் சந்தித்த கேள்விக்கான பதிலுடன் இணைந்துப் பார்க்க வேண்டியது. ஆனால் இதையிட்டு ஒன்றுச் சொல்லத் தோன்றுகிறது.
சினிமா பேசும் மொழி வேறு. இலக்கியம் பேசும் மொழி வேறு.
ஒரு புனையாக்கத்தை சினிமாவாக மாற்றுவது என்பது, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்வது போலான ஒரு முயற்சி. அதாவது அதுவொரு மொழிபெயர்ப்பு முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இரு மொழி ஆற்றல் தேவையோ அதே மாதிரிதான் புனையாக்கப் பிரதியை சினிமாவாக மாற்றம் செய்யும் ஒர் இயக்குனரு க்கும் இரு மொழி (சினிமாXஇலக்கியம்) ஆற்றல் இருத்தல் வேண்டும். ஒர் இலக்கியப் படைப்பாளியே தன் இலக்கியப் படைப்பை சினிமாக இயக்குதல், அல்லது ஒர் இயக்குனர் இலக்கியப் படைப்பாளியாக இருத்தல் என்ற நிலைகள் அத்தகைய தோல்விகள் தவிர்க்க உதவி இருக்கின்றன. இந்தியவின் பிறமொழி சினிமாச் சூழலில் மேற்குறித்த நிலைகளின் காரணமாக புனையாக்கப் பிரதிகள் சிறந்த திரைப்படங்களாக படைக்கப்பட்ட சாத்தியங்களை உருவாகி இருக்கின்றன. (இவ்விடத்தில் தமிழ்ச் சூழலில் ஜெயகாந்தனின் சினிமா முயற்சிகள் நினைவுப் படுத்திக் கொள்ளலாம்)
3.தமிழில் குறுந்திரைப்படங்களும் சிறுகதைகளும்
நாம் இதுவரை பேசியதிலிருந்து தமிழ்ச் சினிமாச் சூழலில், முழுநீளத் திரைப்படங்கள் (Feature Film) எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் வணிகச் சினிமாக்களாக இருந்தமையும் , சினிமா என்ற கலையை முழுமையாக புரிந்துக் கொள்ளப்படாத நிலையில், ஒரளவுக்கு சினிமா கலை வடிவத்தை புரரிந்துக் கொண் டவர்களால் Serious writing பற்றி அறிந்த அவர்களால், தமிழில் புனையாக்கப்பிரதிகளை வைத்து ஆக்கப்பட்ட சினிமாக்கள் நல்ல சினிமாக்களாக ஆகாமால தோல்வி அடைந்தற்கான காரணத்தை பற்றி பேசனோம். அத்தைகைய தோல்விகளை தவிர்க்க அத்தகைய முயற்சிகளளில் ஈடுபடும் இயக்குனர்களே இலக்கியப் படைப்பாளிகளாக இருந்திருந்தால் அல்லது ஆழ்ந்த இலக்கிய உணர்வு உள்ளவர்களாக இருந்திருந்தால் அத்தகைய தோல்விகளை தவிர்த்து இருக்கலாம் என்ற லாம். யோசித்தோம்.
அவ்வாறு சினிமாக்களாக மாறிய புனையாக்கப் பிரதிகள் பெரும்பாலாக நாவலாகவே இருந்தமை இங்கு
148

Page 151
குறிப்பிடதக்கது. அதற்கு காரணம் அவ்வாறாக எடுக்கப் பட்ட சினிமாக்கள் முழுநீளத்திரைப்படங்களாக (Feature Film) இருந்தமையால் நாவல் அல்லது குறுநாவல் கொண்டிருக்கும் காலநீட்சி (Duration) தொடர்பு உடையதாகவே புரிந்துக் கொள்ளப்பட்டது.
இவ்விடத்தில்தான் காலநீட்சி குறைவாக கொண்ட எனும் சினிமா எனும் வடிவத்தின் இன்னொரு வடிவமான குறுந்திரைப்படத்தை (Short Film) பற்றி பேச வேண்டி யிருக்கிறது.
தமிழில் முழுநீளத் திரைப்படங்கள் வணிக முயற்சிக ளாக மாறி விட்ட நிலையில்
(இவ்விடத்தில் எனது இக்கருத்துடன் முரண்பட்ட வர்களும் இருப்பார்கள். அவர்களின் தெளிவுக்கு ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அதாவது சமீப காலமாக தமிழ்ச் சினிமாத் துறையில் பெரும் மாற்றம் நிகழ்வதாக கவனிக்கப்படுகிறது. அது உண் மையாயினும், ஆழ்ந்து கவனித்தால், அத்திரைப்படங்கள் பருத்தி வீரன், சுப்பிரமணிப்புரம், அங்காடித் தெரு, இப்படியாக) பேசிய விடயங்கள் இதுவரை காலம் வணி கத் தமிழ்ச் சினிமா பேசாத விடயங்களளை பேசி இருக் கின்றன. அல்லது முன்பு பேசப்பட்ட விடயங்களை மறு வாசிப்பு செய்து இருக்கின்றன என்ற வகையில், அத் திரைப்படங்கள் கவனித்துக்குரியவை என்பது உண்மை தான். ஆனால், நாம் பேசிக் கொண்டிருப்பது சினிமா எனும் கலை வடிவத்தை பற்றியது. அதற்குள் கட்ட மைக்கப்படும் மொழியை பற்றியது.அவ்வாறான நோக் கில் பார்க்குமிடத்து கவனிக்கப்படவேண்டிய எனச் சொல்லப்பட்டபடல்கள், ஏதோ விதத்தில் வணிகச் சினிமாக்கள் கொண்டிருக்கும் பண்புகளை தம்மகத்தே கொண்டிருக்கின்றன எனபதை அப்படங்களை ப் பற்றி விரிவாக மேகம் பொழுது புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.அத்தகைய தன்மைகள் அப்படங்களில் இடம் பெற்றமைக்கு சொல்லப்பட்ட காரணங்கள் விவாத்திற் குரியவை.).
அதிக அளவான பொருளிடு தேவைப்படாத, காரண மாக தமிழில் குறுந்திரைப்படத் துறை மிக சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.இக்கூற்று இந்தியா வின் வணிகச் சினிமாவின் வருகையின் காரணமாக வெற்றி பெற முடியாத ஈழத்து தமிழ் வர்த்தக் சினிமா சூழலிலும்,அல்லது கலைப்படங்கள், Middle Cinema முயற்சிகளுக்கான பொருளாதார பின்னணி இல்லாத சூழலில் ஈழத்து தமிழ் குறுந் திரைப்படத் துறையும், இங்கும், புலம்பெயர்தொர் மத்தியிலும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இங்கு நிலவிய போர் காலச் சூழல் அனுபவங்கள் மற்றும் வர்க்கம், சாதியம், சிறுவர்களின் உலகம் பெண்ணியம் என பல விடயங்களை இங்கு வந்த, வந்துக் கொண்டிருக்கும் தமிழ் குறுந்திரைப்படங்கள் பேச,ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் குறுந்
149

திரைப்பட முயற்சிகள் புலம்பெயர்வு வாழ்வுமற்றும் பெண் னியம் சார்ந்த விடயங்களை பேசி, தமிழகத்து சூழலில் குறுந்திரைப்படத் துறை அளவான வளர்ச்சியினை அடைந்திருக்கிறது.(அதற்கு சமீப கால ஆதாரமாக பாரக்க " விம்பம் - 2OIO 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா - தமிழ் சினிமாவின் இன்னொரு ufortsCOThi - http://www.oodaru.com)
பொதுவாக தமிழில் குறுந் திரைப்படத் துறை வளர்ச்சிக்கு (உலக மொழி குறுந்திரைப்பட வளர்ச்சிக் கும் பொருந்தும்) மேலதிகமான இரண்டு காரணங்கள் உண்டு.
1. குறுந்திரைப்படத்திற்கான கதை என்பது பெரும்பா லாக அக்குறுந்திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் படைப்பாக இருப்பது
2. அப்படியும் வேறு ஒருவரின் படைப்பை (அதாவது சிறுகதையை) இயக்கினாலும், இயக்கியவர் தீவிர இலக்கிய உணர்வுக் கொண்டவராகவோ, தீவீர இலக்கியவாதியாகவோ இருப்பது.உடனடியான உதார ணமாக நினைவுக்கு வருவது பாலு மகேந்திராவும், பலரது சிறுகதைகளை கொண்டு அவர் சின்னத்திரையில் இயக்கிய குறுந்திரைப்படத் தொடரான “கதை நேரம்” நினவுக்கு வருகிறது. “குறுந்திரைப்படங்களுக்குப் பொருத்தமான உருவம் சிறுகதையே' என அவரே குறிப்பிட்டுள்ளார்.)
ஆக சினிமா எனும் வடிவத்தை அதன் மொழியை குறுந்திரைப்பட இயக்குனர்கள் புரிந்துக் கொண்ட அள வுக்கு, (அதனால்தான தமிழ்ச் சூழலில், சிறந்த நாவல் கள், சிறந்த சினிமாக்களாக மாற முடியவில்லை. ஆனால் சிறந்த சிறுகதைகள் சிறந்த குறுந்திரைப்படங்களாக வெற்றி பெற்றுள்ளன.) வணிக முழுநீளத்திரைப்பட இயக்குனர்கள் பிரிந்துக் கொள்ளாத அல்லது புரிந்துக் கொண்டும் அந்த மொழியினை வணிக நோக்கத்திற்காக மலினமாக பயன்படுத்தியமை என்பதையும் இங்கு குறிப் பிட வேண்டும்.
இவ்வாறான இன்று உலகின் எல்ல மொழி வழியான குறுந்திரைப்படங்கள் தாக்கபூர்வமான பல செய்திகளை சினிமா என்ற ஆக்கத் திறனை கொண்டு, முன் வைத்து கொண்டிருக்கிறன என்பது கவனிபடவேண்டிய ஒரு செய்தியாகும். அந்த வகையில் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய, சமீபத்தில் பார்த்த இரு குறுந்திரைப்படங் களை பற்றி இனி சிறிது பார்க்கலாம்.
(அ) இன்றைய யுகத்தின் வெளிச்சம் Light (assig5)-6i55u IIT 6udath - Sameresh Kumar Shirvastava கால நீட்சி-2 நிமிடம 58 விநாடிகள்
இந்த குறுந் திரைப்படம் இன்றைய அறிவியல் தொழில் நட்ப உலகில,அவை மனித உறவுகளில் ஏற்ப
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 152
டுத்தும் உரசல்களையும், அந்தியத்தன்மையையும் மின் சாரத்தை வைத்துக் கொண்டு , மத்திரத்தர வர்க்க குடும்ப அங்கத்தினரை கதாபாத்திரங்களாகக் கொண்டு, 2 B filth 58 6.5IBITIpató (b5563 D Sameresh Kumar Shirvastava எனும் இந்திய இயக்குனர் இயங்கி ஒரு குறுந்திரைப்படமாகும்.
கணனியில் முழ்கிப் போய் இருக்கும் தந்தை ஒர் அறையில், தாயோ Cordlessதொலைபேசியுடன் சமையல் அறையில், அதிகம் நடமாட முடியாத நிலையில் ஒர் அறையில் பாட்டி தனிமையோடு, மகனோ தன் அறையில் Joystick &L61, n5(3GIT IIg56) Heard phone 6)UTCUrbit படியே தன் பாடல்களுடனும் பாடங்களுடனும், ஊன்றுக் கோலுடன்பாட்டிதன் அறையில் தனிமையில் இவர்கள் எல் லோரும் தம் இயக்கத்தில் மும்முரமாக இருக்கிறார்கள்.
திடீரென்று மின்சாரம் தடை படுகிறது. அப்பொழு தான் தெரிகிறது. அவர்கள் அனைவரது இயக்கத்திற்கு உயிராக மின்சாரம் இருந்திருப்பது என்று. இந்த மின்சா ரத் தடை பாட்டியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
தனிமைக்கு எதற்கு வெளிச்சம்?. மின்சாரமே மூச் சான வாழ்வியல் சிக்கியவர்கள் திணறிப் போகிறார்கள். இப்பொழுது அந்த வீட்டில் இயங்கும் அங்கத்தவர்கள் வெளிச்சம் தேடுகிறார்கள், அதற்காக மெழுகுவர்த்தி தேடப்படுகிறது. அதுப்ாட்டியிடம் இருக்கும் என யோசிக் கப்படுகிறது. எல்லோரும் பாட்டியின் அறைக்கு செல்கி றார்கள். ஆனால் பாட்டியோ அவர்கள் அறைக்குள் வருவ தற்கு முன்னதாகவே, தேவையான வெளிச்சத்தை மெழு குவர்த்தி மூலம் உருவாக்கி வைத்திருக்கிறார். முதலில் பேரப் பிள்ளைகள் வருகிறார்கள். பின் மகன் மருமகள் 6) CL535DTirapó, ceri (5 Key Board go 6O)6), Mouse 66606) Computer 66)6O)6) Joystick, Cordless 66.3606) பாட்டி ஏற்றிய வெளிச்சமே சரணம் !
அந்த தருணம் பேரப்பிள்ளைகள் பாட்டியோடு ஆற அமர பேசும். தருணம். துான் பெற்ற பிள்ளை உட்பட. தங்கள் தந்தையின் சிறு பிரயாத்து வாழ்க்கை பற்றி கேட்கிறார்கள். (மின்தடை வரவேண்டும். பாட்டிகள் சொல்லும் கதைகள் கேட்கும் யுகத்திற்கு போக) பாட்டி கடந்த காலத்தை மீட்டிப் பார்த்து, அதனை சமகாலத் தோடு ஒப்பிட்டவாறே, தன் மகனின் சிறுபிராயத்து கதையைத் தொடங்குகிறார்.
மின்சாரம் வருகிறது. எல்லோரும் அவரவர் பணிக் காக 'ஒடி' விடுகிறார்கள் பாட்டியுடனான உரையாடல் அனாதரவாய் விடப்படுகிறது பாட்டியை போல். இப்பொ ழுது பாட்டி மீண்டும் தனிமையில். அவள் அறை முழுதும் அனாதரவான நிலை பரவி இருக்கிறது வெளிச்சத்தை போல். மின் தடை ஒன்றுதான் அவளுக்கு சந்தோஷத் தைத் தருகின்ற ஒன்றாக இருக்கிறது. தனது உறவுகளின் அருகாமையை, அரவணைப்பை, இறந்த காலத்தை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அது தந்ததால்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

இனம் புரியாத சோகம் பாட்டியின் முகத்தில் பரவுகிறது.
இப்பொது மின்சாரத்தின் மீது பாட்டிக்கு வெறுப்பு, மின்சாரத்தின் வருகைக்கு பின்னும் பாட்டியின் அறையில் மொழுகுவர்த்தி தொடந்து எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த வெளிச்சமே தினக்கான வெளிச்சம் என அவள் எண்ணுகிறாள். தட்டுத் தடுமாறி, ஊன்றுக் கோலுடன் சென்று, விசையின் மூலம் மின்சாரத்தை அணைக்கிறாள், தொடரும் பாட்டியின் தனிமையும், மெழுகுவர்த்தியின் வெளிச்சமும் அறை முழுதும் தொடர்ந்து வியாபித்து நிற்க படம் நிறைவுப் பெறுகிறது.அருமையான சிறுகதை யான மாதிரியான கதை. தொழில் நுட்பரிதியான சிற்சில குறைகள், இக்குறுத்திரைப்படத்தில் உண்டு எனச் சொல்லப்பட்டாலும், இதயத்தில் அக்குறுந்திரைப்படம் சொல்லும் செய்தி ஆழமாக இறங்குகிறது. நடிப்பு என பார்க்குமிடத்து, குடும்ப அங்கத்தினர்களாக வருபவர்கள், அதிகம் நடிக்காவினும், இன்றைய யுக யதார்த்தத்தில் நடமாடும் மனிதர்களின் பிம்பங்கள் நினைவுப்படுத்துவ தில் அவர்கள் பின் நிற்கவில்லை.அதே பாட்டியாக நடி த்த முதிய பெண்மணி மிக சிறப்பாக தனது நடிப்பை தன் முகபாவங்கள் மூலம் வெளிக் காட்டி இருக்கிறார்.
இன்றைய வாழ்வு நேற்றைய வாழ்வை இழக்கச் செய்து விட்டது என்பது மட்டுமல்லாமல், இன்றைய வாழ்வு நேற்றைய வாழ்வுக்கான நினைவுகளை மீட்ட விட மாட்டேன் என்றுகிறது. ஆக, 2 நிமிடம் 57 விநாடிகள் ஒடும் இந்த குறுந்திரைப்படம் நீண்ட நேரம் நம்மை சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.
(ஆ) இந்த யுகத்தின் நிமிஷங்கள் 10 Minutes(Bosnia, 1994)
SLJėbē5th — Ahamed Imamovic கால நீட்சி -9 நிமிடம் 15 விநாடிகள்
10 நிமிடம் எனும் இக் குறுந் திரைப்படத்தை பொஸ்னிய இயக்குனர் Ahamed Imamovic இயக்கி இருக்கிறார் ஒரு கலத்தில் சில நிமிடங்களில், சில விநாடிகளில் உலகில் என்னவோ நடந்து விடுகிறது என்பதை பற்றி சொல்ல கேட்பது வினோதச் செய்திகள் கேட்பதாக இருந்தது. ஆனால் இன்றைய வாழ்விலோ அந்த விநாடிகளில், நிமிடங்களில்தான் அன்றட வாழ்வு நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஒவ்வொரு விநாடிகளிடையும், நிமிடங்களிடையும் நிலவும் நகை முரணை (அந்த முரண்நகைக்க வைக்கும் முரண் அல்ல என்பதுதான் நிஜம்.) நாம் காணத் தவறி விடுகிறோம். அத்தகைய முரண்தான் இயக்குனர் இப்படத்தின் மூலம் நாம் முன் வைக்கிறார். அவரது இக்குறுந்திரைப்படத் தில் 10 நிமிடத்திற்குள்ளான உல்லாசப் பயணத்தை பின்பு லமாக கொண்ட ஒரு நிகழ்வையும், இன்றைய வாழ்வில் போர் அரக்கனின் கரங்களின் கோரத்தையும் 9 நிமிடம் 15 விநாடிக்குள் சித்திரிக்கிறார்.
150

Page 153
முதல் காட்சி.
ரோம் நகருக்கு வரும் ஜப்பானிய உல்லாசப் பயணி ஒருவர், அந்த நகரின் ஒர் இடத்தில் 10 நிமிடத்தற்குள் புகைப்படங்கள் கழுவிக் கொடுக்கப்படும் என அறிவித் தலை கண்டு, அந்த ஸ்டுடியோவுக்குள் நுழைகிறார். 10 நிமிடத்திற்குள் படங்கள் கழுவிக் கொடுக்கப்படும் தொழில் நுட்பத்தைப் பற்றிய தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி தான் பிடித்த படங்களை அங்கு கொடு த்து, 10 நிமிடத்திற்குள் வருவதாக கூறிச் செல்கிறார், தெருவில் உள்ள கடிகாரம் 12.00 மணிக்கு இன்னும் 10 நிமிடம் இருப்பதாக காட்டுகிறது.
இரண்டாவது காட்சி
Bosnia- Sarajevo 6) fað BUITrië (gbygggjë. 35 IT GOI இடிப்பாடுகளுடன் கூடிய ஒரு சிறிய மாடித் தொகுதி ஒன்றின் ஒரு சிறிய அறையில் ஒரு தாய் தன் கைக்குழந் தையோடு, 10-12 வயது மதிக்கதக்க ஒரு பையன். ஒரு அறைக்குள் வாழ்ந்தாலும் அன்றாடத் தேவைகளின் அகதி வாழ்வு தெருவில் அன்றாடத் தேவையான நீரை வழங்க வரும் லாரியிலிருந்து நீரை எடுத்து வருமாறு பையனை தாய் பணிக்கிறாள். இரண்டு தண்ணிர் கேன்க ளுடன் புறப்பட, தந்தை வீடு திருப்புகிறார். நீர் எடுக்கப் போகும் வழி எங்கும் போர்ச் சூழலின் சுவடுகளையும், தொடந்து நிலவும் மோதல் நிலையையும் காமிரா காட்டிச் செல்லுகிறது. சோதனைச் சாவடிகள் முதற் கொண்டு தூரத்தில் கேட்கும் ஷெல்கள் விழும் சத்தம் வரை. உணவை, நீரை வழங்க வரும் வண்டிகளுடன் மக்கள் மன்றாடும் காட்சிகள் வரை. இப்பொழுது அச்சூழலிலும் ஷெல்கள் விழத் தொடங்குகின்றன. மக்கள் சிதிறி ஒடுகிறார்கள். அந்த பையன் உட்பட. புதிங்கி பதுங்கி விழுந்துக் கொண்டிருக்கும் ஷெல் தாக்குதல்களிலிருந்து தப்பி தான் அப்பையன் தான் வசிக்கும் அறைக்கான மாடிகளில் ஏறிக் கொண்டிருக் கும் பொழுது, அந்த கட்டிடத்தின் மீதும் ஷெல் தாக்கு தல் நடக்கிறது புகைப்படலம் சூழ்கிறது. அத்தாக்கு தலிலும் தப்பி, தன் அறைக்கு திருப்பும் அவனை பக்க த்து அறைவாசி இழத்து வைத்து அவன் தன் அறைக்கு போகாத வகையில் தடுக்கிறார். அவரை மீறி தன் அறைக்குள் பார்க்கிகிறான். துன் தாய் கைக்குழந்தை யோடும் தந்தையும் இரத்த த்தில் மிதந்ந நிலையில் இறந்து கிடக்கிறார்கள்.
இப்பொழுது - அந்த அறையின் மணிக்கூடு சரியாக 12.00 மணி என காட்டுகிறது. மூன்றாவது காட்சி.
ரோம் நகரில் அந்த ஜப்பானிய உல்லாசப் பயணி 10 நிமிடத்திற்கு முன் கழுவிக் கொடுக்கப்பட்ட தன் படங்களை அந்த ஸ்டுடியோ வாசலில் பெற்றுக் கொண் டிருக்கிறார் மிக சந்தோஷத்துடன்.
காமிரா மீண்டும் தெருவிலுள்ள மணிக்கூட்டைக் காட்டுகிறது. அது சரியாக 12.00 மணி என காட்டுகிறது
赣、
151

இன்றைய யுகத்தில் 10 நிமிடம் என்பது ஒரு வர்க்க த்திற்கு உல்லாசமானது என்றால், உலகின் இன்னொரு மூலையில் அதே 10 நிமிடத்தில் எத்தனையோ ஆயாரம் உயிர்களை பலி எடுத்துக் கொன்டிருக்கிறது என்பதை உணர்ச்சிபூர்வமாக காட்டிச் செல்லகிறது இக்குறுந் திரைப்படம்.
இக் குறுந் திரைப்படத்தை பற்றி இணையத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பில், "இயக்குனர் இப்படத்தில் உல்லாசப் பயணியாக நடிப்பதற்கு ஒரு ஜப்பானியரை தேடியதாவும், அதிஷ்ட்டவசமாக B0Snia வில் ஜப்பானிய தூதரகத்தில் பணியற்றும் ஓர் ஊழியரை அந்த பாத்திரத்தில் நடிக்க இயக்குனருக்கு அனுமதி கொடுத்தாகவும் 'என குறிப்பிட்டு இறுதியில் அக் குறிப்பில் இப்படம் பொதுமக்களையும், முதியோருளை யும், குழந்தைகளையும் கொன்றார்கள் என்பதை சித்திரிக்கிறது” என கிறிப்பிடிகிறது.
இக் குறுந்திரைப்படத்தின் நடிப்பை சொல்ல வேண்டுமானால், எனக்கு என்னவோ அவர்கள் எல்லோ ரும் நடிகர்களே அல்ல, நிஜ மனிதர்கள், இதற்கு மேல் அவர்களின் நடிப்பை பற்றிச் சொல்வதற்கில்லை அவ் வளவு யதார்த்தமானது இப்படத்தின் நடிகர்கள் என வந்தவர்களின் பங்களிப்பு.
இத்துணைச் சிறப்பான இப்படத்தில் எனக்கு இடறிய ஒரு விடயமும் உண்டு.
இப்படத்தில் உல்லாசப் பயணியாக நடிப்பதற்கு இயக்குனர் ஏன் ஒரு ஜப்பானியரைத் தேடினார்? 10 நிமிடத்திற்குள் நடக்கும் தொழில் நுட்ப ஆக்கத்தை அனுபவிப்பதில் முன்னோடிகள் ஜப்பானியர்கள் என்பதற் காக இருக்கும் என நோக்கில் அப்படத்தைப் பார்தோமா னால், உல்லாசப் பயணியாக வரும் அந்த ஜப்பானியர் 10 நிமிஷத்திற்குள் படங்கள் கழுவித் தரும் அந்த தொழில் நட்பத்தையிட்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறாரே அது எப்படி?
உல்லாசப் பயணத்தில் அதிக ஆர்வமிக்கவர்கள் என்பதை காட்ட வந்த இயக்குனர், 10நிமிட தொழில் நுட்பத்தையிட்டு ஜப்பானியர் வெளிப்படுத்தும் ஆச்சரிய த்தை ஏன் மறந்தார்?.
அதுவொரு வசனம் எழுதுதலில் ஏற்பட்ட பிழையா? அல்லது அந்த ஆச்சரியத்தில் இயக்குனர் ஏதோவொரு அரசியல்ை பேச முயல்கிறாரா? என்றும் கேட்க தோன்று கிறது. எது எப்புடியாயினும் 2002 ஆம் ஆண்டிக்கான ஐரோப்பாவின் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விரு தைப் பெற்றுக் கொண்ட, இக்குறுந்திரைப்படம் சிறப் பான ஒரு குறுந்திரைப்படம் எனலாம்.
இந்த மாதிரியான பல நூறு 10 நிமிடங்களை கண்டு, பல மனித உயிர்களை இழந்து நிற்கும் நம்மை பற்றியும ; இக்குறுந்திரைப்படம் பேசுகிறது என்ற வகையில், இது 'நம் படம் " என்றே சொல்ல வேண்டும்.
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 154
உடல்ரீதியான தாம்பத்ய உறவுக்கு முற்றிலும் ெ பெண்ணியல் சார்ந்த விழுக்காடும், அதனால் ஏற்பட்ட விபரீ மீண்டு வரமுடியாத அதளபாதாளத்திற்கே தள்ளிவிட்டாற் அவளுக்குக் கணவனாக வந்து சேர்ந்த ராகவனைப் பொறு ஒரு பழங்கதைதான். அவளோடு வாழ்ந்து கழித்த அந்த செய்தியாய் புரையோடிச் செல்லரித்துப் போய்விட்ட பின், அந் நினைவுக்கு ஏற்ப, அவளிடமிருந்து தலைமறைவ வெகுதூரத்திற்கு, அவன் விலகிப் போய்விட்டிருந்தான்.
ஆனால், அவள் நிலைமை அப்படியல்ல. உடல்- மன கொண்ட உறவும், அதன் விளைவாக ஏற்பட்ட அனுபவங்க அவள் இதில் குற்றவாளிதானாவென்பது, இன்னும் அனு அக்கினிப் பரீட்சையில், அவளே முற்று முழுதாக உள்வாங் விட்டுப் பிரிந்து, அவள் தாய் வீடே கதியென்று, வந்து சேர்ர் அவளை விடாப்பிடியாக அங்கு அழைத்து வந்து விட்டுச் ெ திரும்பி வராத அந்த நாட்கள், அவளுக்குப் பாலைவன அவனையே எண்ணி, உள்ளூர மனம் கரைந்து ஒடுங்கி அடைபட்டுப் போய்க் கிடந்தாள். அந்த நரக இருப்பின் 2 அழிந்து போய் விடுகிற நிலைமைதான்.
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அவளின் முன்னா6 காண்பதற்கு அவளின் காலடிக்கு வந்து சேர்ந்தார். அவை பிறக்குமென்ற நம்பிக்கையோடு, சீதா முகம் மலர்ந்து எதிர் அவர் முரட்டுத்தனமாகக் கூறினார்.
"நாங்க விவாகரத்து வழக்குப் போடப் போறம். நீ கையெழுத்து மட்டும் போட்டுத் தந்தால் போதும்"
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீதாவின் தந்தை அ சொன்னார்:
"அதெப்படிச் சரி பிழை அறியாமல் இதில் முடிவு எடுக்க நினைக்கிற மாதிரிச் சீதாவிட்டைக் குறையிருந்தால், இ த்தை நாங்களே நடத்தியிருக்க மாட்டம். எங்கேயோ தவ முதலில் அதைச் சரி செய்வம்’
"அப்படித்தானே பெடியன் சொல்லுறான். இதிலை அ தியிருந்தால், சாப்பாடு கூட இரண்டாம் பட்சம்தான். உங்கள் தான் குறையிருக்கு"
"அதை என்னவென்று, சொன்னால்தானே புரியும்’
"குடும்பம் நடத்த, முக்கியமாக ஒரு பொம்பிளைக்கு 6
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011
 

பாருந்தி வராத குறைபாடுகளைக் கொண்ட, அவனது தங்களும், சீதா என்ற அந்த அபலைப் பெண்ணை வாழ்வில் போன்ற ஒரு நிலைமை. அது அவளுக்கு மட்டும் தான். த்தவரை, அது கணக்கில் எடுபடாத காலாவதியாகிப் போன ஆறு மாதங்களும், இனி மீண்டு வர முடியாத ஒரு பழைய அவள் முகத்தில் விழிப்பதே பாவமென்று அவன் நினைவு. ாகிப் போன அவனது அஞ்ஞாதவாசம். அவளிடமிருந்து
ரீதியாக எல்லாம் அவனே என்றாகிவிட்ட பின், அவனோடு ளும், அவ்வளவு லேசில் மறந்து போகக் கூடிய ஒன்றல்லவே. மானிக்கப்பட முடியாத ஒரு சிக்கலான விவகாரம். இந்த ங்கப்பட்டு, ஒரு பலிக்கடா போலாகி விட்டிருந்தாள். அவனை 3து ஒரு மாதமாகிறது. அவளாக அங்கு வந்து சேரவில்லை. சென்ற பின், அவன் திரும்பி வரவேயில்லை. அப்படி அவன் ாமாகப் பற்றியெரியும் வெறுமையிலேயே கழிந்தன. சதா ச் சிறுத்து அவள் மீண்டு வர முடியாத ஒரு நரகத்தினுள் உச்ச வாடை பட்டு, அவ்வீட்டிலுள்ள அனைவருமே கருகி
ள் மாமனார், அதாவது ராகவனின் தந்தை நவம், அவளைக் ரக் கண்டதும் பட்ட துன்பமெல்லாம் விலகித் தனக்கு விடிவு கொண்ட போது,
ர் அதுக்கு ஒரு
|ழுது கொண்டே
ஏலுமே? நீங்கள் ந்தக் கல்யான று நடந்திருக்கு.
வனுக்குத் திருப்
ரின்ரை மகளிடம்
ாது அவசியமாய்
152

Page 155
தேவைப்படுகுதோ, அது உமது மகளிட்டை இல்லாம லிருக்கே!”
"ஒருவேளை, இது தவறான எண்ணமாவும் இருக் கலாம் தானே? வைத்திய சான்றிதழ் மூலம், பொய் யென்று, இது நிரூபிக்கப்பட்டால், அப்ப-சீதாவை நீங்கள் ஏற்கத்தானே வேணும்?”
"ஓ! அப்படியும் ஒரு யோசனை இருக்கே? நல்லாய் செய்யுங்கோ. உது சரியிலையெண்டால், பிறகு வழக்குத் தான்’ பிறகு அவர் போய்விட்டார்.
அவர்களைச் சதி செய்து, பிரிப்பதிலேயே அவர் குறி யாக இருப்பது போல்பட்டது. சீதாவைப் பொறுத்தவரை, தர்மத்திற்கும் நீதிக்கும் வளைந்து கொடுக்க மறுக்கிற, வரட்டுதனமான, அவரின் இந்த சுயநலப் போக்கிற்கு முன்னால், புனிதமான தனது பெண்மையின் பவுத்திர உணர்வுகள், பங்க முற்றுப் போய்விட்டதாக, அவள் மிக வும் கவலை கொண்டாள். இப்படியொரு நிலைமை அவ ளுக்கு வந்திருக்கக் கூடாது தான். மேலான ஒரு வம்சப் பெருமை அவளுடையது. அவளின் தகப்பன் சதாசிவம், உயர்நிலைப் பண்புகளையே, தனது உயிராகப் பேணும் ஒரு நல்லாசான். நீண்ட காலமாக ஒரு பண்பட்ட ஆசிரி யராக இருந்து, ஒய்வு பெற்றவர். அவரின் ஒரே மகள் தான் சீதா. அவராலேயே செந்நெறிகள் கொண்டு, மூளைச்ச லவை செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டவள். கற்பொன் றையே, தனது பிறவிப் பண்பாகக் கருதுபவள். அப்பேர்ப் பட்ட அவளுக்கு இப்படியொரு சோதனை. உன்னத தாம் பத்ய சுகம் பெறுவதற்கு, இடையூறாக நிற்கிற அவளின் உடற் குறைபாடு, உண்மையானதா? ராகவனின் மூளை தெளிவாகச் சிந்திக்கத் தெரியாத, மனக்குறை பாட்டினால் ஏற்பட்ட தவறாகக் கூட, அது இருக்கலாமல் லவா? இதை நிரூபிக்க அவள் தீக்குளிக்கக் கூடத் தயார்தான். அதற்கான நாளும் வந்தது. அவள் கற்பைச் சோதிக்கவல்ல, களங்கத்தைப் போக்க, கேவலம் ஒரு வைத்தியப் பரிசோதனை. அதுவும் ஓர் ஆண் டாக்டர் தான். யாராயிருந்தாலென்ன? இங்கு நீதி வாழ வேண் டும். அவள் வெறுமனே இல்லற சுகத்துக்கு எள்ளளவும் தகுதியற்ற ஒரு பெண் என்பது மட்டுமல்ல, அவளை வாய் கூசாமல் இருளி என்று கூடச் சொல்கிறார்கள். எல் லாம் கேட்டுக் காது புளித்து விட்டது. அவள் மீது, ஏகப் பட்ட பழிகள். இதைத் துடைத்தெறிய ஒரே வழி, மான த்தை மறந்துவிட்டுத் தீக்குளிக்க வேண்டியது தான்.
சீதா துணிந்துவிட்டாள். அவளுக்கு வேண்டும் ஒரே ஒரு வாழ்க்கை. அவள் வாழ்ந்தால் ராகவனோடு தான் என்னவொரு பச்சாத்தாபமான முடிவு. இதில் தோலுரிந்து போகவோ, மானமிழக்கவோ எதுவுமில்லையென்று அவள் நம்பினாள். அதுதான் இந்தத் தீக்குளிப்பு நாடகம். அது வும் எடுபடவில்லை. அது வெறும் நாடகமாகவே
153

ஒப்பேறியது நவத்தாரின் முன்னிலையில். அந்தச் சோதனையில் அவள் தேறியிருந்தாள். நீதி அவள் பக் கம் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. இருந்தும் என்ன? அவளிடம் குறையில்லையென்று, டாக்டர் கூறியபோது, நவம், அதை ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன ஒரே காரணம், டாக்டர் அவர்களுடைய ஆளாம். எப்படியென்றாலும், முறிந்த உறவு ஒட்டக் கூடாதென் பதே அவரது பிரார்த்தனை, விருப்பமெல்லாம். ஏனென் றால், ராகவனின் பணத்தை நம்பித்தான், அவரின் பெரிய குடும்பமேயிருக்கிறது. அவர் புகையிலைத் தரகர். நிலை யான வருமானம் கிடையாது. அதிலே குடி வேறு. அவர் முகத்தில் விழிப்பதே பாவமென்று சீதாவுக்குப்பட்டது. அந்த அக்கினிப் பரீட்சையிலும் அவளுக்குத் தோல்வி தான். எனினும் அவள் மனம் தளரவில்லை. காலம் வழி விடுமென்று காத்திருந்தாள். அது வீண் போகவில்லை. காலமென்ன- கடவுளே கண் திறந்துவிட்டார். அவள் வயிற்றில் ராகவன் பேரால், ஒரு குழந்தை கருக்கட்டத் தொடங்கியிருந்தது. கொஞ்ச நாட்களாக, அவளுக்கு ஒரே குமட்டல், வயிற்றைப் புரட்டி வாந்தி வேறு வந்தது. நான்கு மாதம் கழித்து டாக்டரிடம் போய்க் காண்பித்த போது, குழந்தை தான் என்று முடிவாயிற்று.
இது எப்படிச் சாத்தியமானது? தாம்பத்ய உறவுக்கே தகுதியில்லாத, அவளா இப்படி..? நாளை ஒரு தாயா? எப்படி விழுந்தது அந்த விந்தணு? புரியவில்லை. வாழ்வின் புதிர் விடுபடாத இது, ஒரு நெடுங்கணக்கு. அவளைச் சுற்றிய இருளை விலத்திக் கொண்டு, ஒளியின் வெளிப் பாடாய் எத்தனை முகங்கள். ராகவனை வளைத்துப்
போட, இதுதான் கடைசி விதி.
அப்படியும் அவர்கள் நம்பவில்லை. அவள் வயிற்றில் கட்டி ஒன்று, வளர்வதாகச் சொன்னார். அவர்கள் சொன் னதற்கு மாறாக அது கட்டியாகவல்ல, குழந்தையாகத் தான் பிறந்தது. இதில் அவளுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. குழந்தை பிறந்ததால் மட்டுமல்ல, இனி அவளைத் தட் டிக் கழிக்க முடியாமல் ராகவன் வந்து சேர்ந்தால் என்ன நடக்கும்? அவள் தரையிலல்ல, ஆகாயத்திலேயே மிதப் பாள். குழந்தை பிறந்தன்று ஆசுப்பத்திரியில் வைத்து, அப்பா அவளைக் கேட்டார்.
"சீதா, இனி அவன் வந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே?
“வேறு எப்படி நினைக்கிறியள்?"
"நான் வேறொன்றையுமே நினைக்கேலையம்மா. நீ நல்லாய் இருக்க வேணும்"
ராகவனால் தனக்கு இழைக்கப்பட்ட, பாரதூரமான
தும், துக்கம் தரக் கூடியதுமான அநீதிகள் குறித்து, சீதா வுக்கு எந்த மனக் கிலேசமும் இருக்கவில்லை. வயிற்
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 156
றில் ராகவனின் வாரிசாக அந்தக் குழந்தை ஜனனம் கொண்ட போதே, அதை அவள் அடியோடு மறந்து போனாள். குழந்தை பிறந்த பிறகு, ராகவன் வந்து சேர்ந் தால், அதை எப்படி எதிர்கொள்ளவதென்பதே அவளின் அப்போதைய கவலையாக இருந்தது. அவன் காலடியில் எதிர்மறையான தனது உணர்ச்சிகளையெல்லாம் புறந் தள்ளி, அடியோடு மறந்துவிட்டு, அவனிடம் பூரண சரணா கதி அடைவதே தனக்கு மகிழ்ச்சியைத் தருமென்று அவள் மனப்பூர்வமாக நம்பினாள். அவன் அப்படி வர நேர்வது, அவன் விரும்பி நடக்கக் கூடிய ஒரு காரிய மல்ல. எதிர்பாராத விதமாகக் குழந்தை பிறந்துவிட்ட நிர்ப்பந்தமே, அவனை அங்கு இழுத்து வரக்கூடும்.
இதையெல்லாம் அறியமுடியாமல் போன பேதை தான் அவள். அறிவுபூர்வமாக அதைப் பற்றி ஆராய்ந்து சிந்தித் திருந்தால், இந்தப் பூரண சரணாகதி தத்துவம், அவனிடம் எடுபடாமலே காற்றில் பறந்து போக நேரிட்டிருக்கும்.
அதற்கு மாறாக, அவனிடம் சரணாகதி அடைய அவள் ஏன் விரும்புகிறாள்? அதற்கு அவளைத் தூண்டுவது எது? தனது புனிதமான கற்பு களங்கப்பட்டு விடுமெ ன்றா? இனிக் களங்கப்பட என்ன இருக்கிறது? அவளிடம் கழுத்தை அறுத்துச் சிலுவையிலே தொங்கவிட்ட மாதிரி, அவளுக்கு அவர்கள் செய்த கொடுமைகள். இவ்வளவும் ராகவனை மையமாக வைத்தே அரங்கேறிய போதிலும், அதை அவள் கண்டு கொள்ளாமல் விட்டதுதான். ஒரு தார்மீகக் குற்றமாக அப்பாவை மட்டுமே பாதித்தது. அவர் கண் முன்னால், குழந்தை பிறந்த பிறகு கூட, வெகு இயல்பாகவே இருந்தாள் அவள். அவள் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆசுபத்திரியில் அவளைப் பார்ப்பதற்காக நிறையப் பேர் வந்து போனார்கள். மொட்டை மரமல்ல. பட்டமரமே, உயிர் எடுத்துக் காய்ந்து விட்ட கதை தான். கொஞ்ச நாட்களாக நாறிப் போயி ருந்த அவளின் கதை ஊருக்கே வெளிச்சம். ஆகவே, அவளை இந்நிலையில் வேடிக்கை பார்க்கவென, வந்து போனவர்களே அநேகம் பேர். அவள் அதைப் பற்றியெல் லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் வரவை எதிர்பார்த்தே ஒவ்வொரு விநாடியும் அவள் தவம் கிடந் தாள். அவன் நிச்சயம் வருவானென்று அவளுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், அந்தக் குழந்தை விவகாரம். அவளின் குற்றமற்ற பரிசுத்த நிலை க்கு, இன்று அவன் கண் முன்னால் அதுவே சாட்சி. ஆகவே அவன் வராமல் போய்விடுவானோ? நிச்சயம் வரத் தான் போகிறான். அவளுடைய சோகம் வரண்ட கண்க ளில், அந்தக் கனவின் மிதப்பே தெரிந்தது. அவளுக்கா கவல்ல. அவளது உணர்வுகளின் பொருட்டல்ல. குழ ந்தை பிறந்திருக்கிற நிர்ப்பந்தத்தின் பேரால், அவன் அப் படி அங்கு வர நேர்ந்தால், பிறகு வாழ்க்கை என்ன
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

வாகும்? பிறகும் அவளுக்குச் சோதனை தானென்றால், அவள் புரிந்து கொள்வாளா?
அப்பாவுக்கு அவளோடு நிறையப் பேச வேண்டும் போல் தோன்றியது. அம்மா அவளுக்காகப் பத்தியச் சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். அவள் சாப்பிட்டு முடிந்த பிறகு, அவர் மெதுவாகக் கூறத் தொடங்கினார். “பிள்ளை துண்டு வெட்டின பிறகு, நாங்கள் வீட்டை Gunts Lib'
"பொறுங்கோவப்பா, அவர் வந்த பிறகு யோசிச்சுச் செய்வம்"
"இவ்வளவும் நடந்த பிறகுமா, உனக்கு இந்த யோச னையெல்லாம் வருகுது?"
"அப்பா நான் தனிச்சுப் போனனென்பதையே என்னால் நம்ப முடியேலை. எனக்கு அவர் வேணும். அவரில்லா மல், ஒரு வாழ்க்கையை நினைச்சுக் கூடப் பார்க்க முடி யேலை. அவர் செய்த பிழைகளெல்லாம் என்ரை மனசிலை பதியேலை. அப்படி, அவரை நான் நேசிச்சிருக்கிறன்'
அதற்கு இடையிலே குறுக்கிட்டு அப்பா கேட்டார்.
"உன்ரை அன்பு முழுமையாக இருக்கலாம். அதை நான் மறுக்கேலை. இதுக்காக அவனை மன்னிப்பது கூட உனக்குச் சுலபமாகப்படலாம். ஆனால் இது வாழ்க் கையல்லே. குழந்தை பிறந்திட்டுதே என்ற நிர்பந்தத்தி ற்கு ஆட்பட்டு அவன் வந்து சேர்ந்தால், உன்ர நிலைமை என்னவாகும்? இதைப் பற்றியெல்லாம் யோசிக்கமா ட்டியே சீதா'
"அப்பா கலியாணமென்கிறது, ஒரு புனிதமான விட யம். அவரது செய்கைக்காக, இதை நான் கொச்சைப் படுத்த விரும்பேலை. நீங்கள் சொல்கிற காரணங்களு க்காக அவரைத் துறக்க நினைக்கிறது கூடப் பாவம். என்னை இப்படியே இருக்க விடுங்கோ' என்று கூறும் போது, அவளுக்குத் தொண்டையை அடைத்தது.
அவள் என்ன சொல்ல விரும்புகிறாள்? அவளது திட மான உறுதி குலையாத கற்பு நிலைக்கு உடன்பாடா கவே அவளின் பேச்சு வெளிப்பாடும். அவரைத் திணற டித்தது. அவள் இவ்வளவு உறுதியாக இருக்கும் போது, மேற்கொண்டு அவரால் என்னதான் செய்ய முடியும்? ஆண்கள் எப்படி அடி சறுக்கிப் போனாலென்ன? கற் பென்ற வியூகத்தினுள் அடைபட்டுக் கிடக்கும் வரை, அவள் மட்டுதல்ல, ஒவ்வொரு பெண்ணினதும், கடைசி வழி இதுவாகத் தானிருக்கும். இந்தக் குறைகள் பாராத அல்லது மறந்து போய்விடுகிற அவளுடைய இந்தப் பூரண சரணாகதி தத்துவப் பெருமைகளுக்கு முன் னால், ஆணின் குற்றங்களென்ன, வாழ்க்கையின் சிறு தூசு கூட, அவள் பார்வையில் ஒட்டாது என்பது காலங் கடந்த ஞானமாகவே அவருக்கு உறைத்தது.
154

Page 157

ons Lu Xury &
G co co Cid
46வது ஆண்டு மலர்- ஜனவரி 2011

Page 158
స్త్ర
تمها
மல்லிகைப் பந்தல் வெ
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) கார்ட்டுன் ஒவிய உலகில் நான் : சிரித்திரன் சந்தி கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் ஆ முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொ முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்ப ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் : டொமினிக் இப்படியும் ஒருவன் (சிறுகதை) : மா. பாலசிங்கம்
eDLL6OLI LILLIE 356
சேலை (சிறுகதை) : முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (மு மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)
நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை)
பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டு முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜி தரை மீன்கள் (சிறுகதை) : ச. முருகானந்தன் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப. அப்புறமென்ன (கவிதை) : குறிஞ்சி இளந்தென்ற சிங்களச் சிறுகதைகள் . 25 : தொகுத்தவர் செங் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் ப Undrawn Portrait for Unwritten Poetry - GLITL56d தலைப்பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை மல்லிகை முகங்கள் : டொமினிக் ஜீவா பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டெ எங்கள் நினைவுகளில் கைலாசபதி : தொகுத்தவ நினைவின் அலைகள் : எஸ்.வீ. தம்பையா முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் கு 90-களில் மல்லிகைச் சிறுகதைகள் (ஆய்வு) ; ம மல்லிகை ஜீவா அவர்கள் துணிந்து விட்டார்கள் : ச.முருகானந்தன பாக்குப் பட்டை: பிரமிளா பிரதீபன் வண்ணாத்திக்குளம் (நாவல்) என். நடேசன்
201/4, ரு கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை 3 விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshm
 

>
ந்தல் ளியிட்டுள்ள நூல்கள்
டொமினிக் ஜீவாவின்
தலாம் தொகுதி) செங்கை ஆழியான்
கை ஆழியான் திப்பு
ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்)
ELDFTG
மினிக் ஜீவா
டொமினிக் ஜீவா
அபூசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு i Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Page 159
Worldw
Time-definite Ex
Widest range of S Easy tracking an
Make the C. O finne C &
2337773/4
BRANCH OFFICE Biyagагna: 4814 Gade: A 3847482
Kandy: 44,73027 Katunayake: 48: Kuru negala: 465 Ratina ana: 421
Ups.com"
"Сопditions and te stric tiог 5
 

ide Delivery
press service" eΓνice options" d proof of delivery
ion, Call
703300
S:
O54.
3 O 92
223 O2
25 OO
apply

Page 160
ng Facities
t, Colombo 11.
Park
Sea Stree
ぎ
兹 哆 了。 *
 

ellers (Pvt) Ltd.
ous Expressions since 1965
Tei + 94 112 395OO1-5 infoadevjewelers.lk
Available
2011