கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 1

Page 1

nyipus til Y staba A,

Page 2


Page 3

aAmiñ
파
சிறுபான்மை சமூகத்தின்
பிரச்சினைகள்
B.A. (Hgņā.)
(paърф) -
eta 4th Dip-in-Ed, TEPEt3d) 料 (Retired Director of Edueatibn Sri Lanka)
RZANA PUBLISHERS ABDULLA SHOPPING COMPLEX SYMONDS ROAD
MARAD ANA
COLOMBO - TO

Page 4
முதற்பதிப்பு
ලී
விலை ரூபா
TITLE
SUBJECT
AUTHOR
SIZE OF BOOK
No. of Pages
Type
Paper
Binding
Price
Sales in India
Printer
நவம்பர் 1997
50/-
: ORUSIRUPANMAI
SAMUGATHIN PIRACHANAIKAL
PROBLEMS OF A
MINORITY COMMUNITY
SOCIALHISTORY
MOHAMED SAMEEM
125X18 cm
214
11 point
11.6 cream wove
Art Board
Rs. 50/-
KUMARAN, PUB LISHERS 79, Ist Street, Kumaran Colony, Vadapalani, Chennai- 600026

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினிைகள்
நன்றி
இக்கட்டுரைத் தொடரை 65 IT JITs) u IT fih தினகரன் வார மஞ்சரியில் வெளியிட்டு வந்த 'தினகரன்’ ஆசிரியரும், எனது நீண்ட நாளைய நண்பனுமான சிவகுரு நாதனுக்கு எனது மனமார்ந்த நன்றி. பத்திரிகையில் வெளிவந்த இக்கட்டுரைகளைச் சேர்த்து எனக்குதவிய நண்பன் நிசாருக்கும் அவரது மனைவிக்கும் எனது சகோதரி சித்தி ஹலிமாவுக்கும் அவரது கணவன் மொகிதீனுக்கும் எனது நன்றி உரித்தாகுக. இந்நூலை அச்சிட்ட நண்பன் செகணசலிங்கனுக்கும் அச்சுக் கொப்பியைத் திருத்திய நண்பன் செ.யோகநாதனுக்கும் டாக்டர் ந. தெய்வசுந்தரம் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
முகம்மது சமீம்

Page 5
முகம்மது சமீம்
சமர்ப்பணம்
என்னை எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் என்னை எழுதத் தூண்டியவருமான காலஞ் சென்ற எனது சர்வகலாசாலைக் கால நண்பன்
கைலாசபதிக்கும்
தினகரன் வாரமஞ்சரியில் வாராவாரம் தொடர்ந்து எனது கட்டுரைகளை வெளியிட்ட தினகரன் ஆசிரியராயிருந்து ஒய்வு பெற்ற எனது நண்பன்
சிவகுருநாதனுக்கும்
இந்நூலை சமர்ப்பிக்கிறேன்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஒரு சிறுபான்மை
சமூகத்தின் பிரச்சினைகள்
II.
III.
IV.
VI.
- இலங்கை முஸ்லிம்களைப்
பற்றிய ஓர் ஆய்வு
உள்ளடக்கம்
பக்கம்
என்னுரை i
முன்னுரை viii
அறிமுகம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுத முற்படும்போது எழும் பிரச்சினைகள் 1 இலங்கை வரலாற்றாசிரியர்களும் அவர்களின் கருத்துக்களும் 7
வரலாறு எழுத உதவும் ஆதாரங்கள் 17
கிரேக்க-உரோம ஆதாரங்களும் இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்பும் 27
இலங்கையைப் பற்றிக்கூறும் அரபிய இலக்கியங்கள் 36
அரபிய-பாரசீக நூல்களின் தராதரங்கள் 46

Page 6
முகம்மது சமீம்
சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
1.
2.
10.
11.
12.
13.
உலகின் முஸ்லிம் சிறுபான்மை இனங்கள்
முஸ்லிம் சிறுபான்மை இனங்கள்
தோன்றிய வரலாறு
பிறநாட்டு சிறுபான்மை முஸ்லிம்கள்
முஸ்லிம் சிறுபான்மை இனம் இலங்கையில் தோன்றிய வரலாறு
இலங்கை முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சி
இலங்கை முஸ்லிம்களின் மதவழிபாடு
இலங்கை முஸ்லிம்களிடையே வளர்ந்த சமயக்கல்வி
பெரும்பான்மை இனங்களின் பொதுவான
கொள்கை
இந்திய சமூகத்தில் தென்னிந்திய முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சி
போர்த்துக்கீசரின் வருகையினால்
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் வர்த்தகம்
முஸ்லிம்களுக்கெதிராகச் செயல்பட்ட ஒல்லாந்தரின் ஆட்சி
ஒல்லாந்தரின் அடக்குமுறை ஆட்சியில் அல்லற்பட்ட முஸ்லிம்கள்
55
60
65
70
74
78
84
91
96
101
106
111
118

14.
15.
16.
17.
18.
9.
20.
21.
22.
23.
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த முஸ்லிம்களின் நிலை
கண்டிச் சிங்கள சமுதாய அமைப்போடு ஒன்றிணைந்த முஸ்லிம்கள்
சிங்கள சமுதாய அமைப்பில் முஸ்லிம்கள் வகித்த உயர்ந்த இடம்
அரச சேவையில் முஸ்லிம்கள் வகித்த இடம் இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சியின் ஆரம்பம்
ஆங்கிலேயரின் ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற அந்தஸ்து
19ኒh நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சி
முஸ்லிம்கள் தொன்றுதொட்டு பாதுகாத்து
வரும் சமூக அமைப்பு
19ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய முஸ்லிம்களின் மறுமலர்ச்சி இயக்கம்
Bibliography
125
31
137
142
147
153
159
164
171
179
185

Page 7
முகம்மது சமீம் i
என்னுரை
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' என்ற இந்நூல் கட்டுரைத் தொடராக 1992ஆம் ஆண்டு முதல் 'தினகரன்' வார மஞ்சரியில் எழுதப்பட்டது. இத்தலையங்கத்தை நான் தேர்ந்தெடுப்பதற்குப் பல காரணங்களிருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பற்றி எழுத வேண்டுமென்பது எனது நீண்ட நாளைய ஆசை. 1960ஆம் ஆண்டில் கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்தில் தொடர் கட்டுரைகளாக தினகரன் ஞாயிறு இதழில் எழுதி வந்தேன். 905 விபத்தின் காரணமாக என் பெருவிரல் பாதிக்கப்பட்டமையால், இக்கட்டுரைத் தொடர் துரதிருஷ்டவசமாக, ஆறு கட்டுரைகளுடன் நின்று விட்டன. இந்நூலின் முன்னுரையாக, முதற்பகுதியில் இக்கட்டுரைகளைச் சேர்த்துள்ளேன். அரசாங்கத்திலிருந்தும் வெளிநாட்டு உத்தியோகத்திலிருந்தும் நான் ஒய்வு பெற்ற பிறகு தான் திரும்பவும் இந்தப் பணியில் ஈடுபட என்னால் முடிந்தது.
1984ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் 'சிறுபான்மை முஸ்லிம்களின் பிரச்சினைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் பங்கு பற்றுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையொட்டி எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் விரிவாக்கம் தான் இந்நூல். ஆங்கிலத்தில் எழுதிய இவ்வாய்வுக் கட்டுரை ஏற்கனவே நூலுருப் பெற்றுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை இத்தலையங்கத்தில் எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
இலங்கையிலுள்ள சிறுபான்மை சமூகத்தினர், வந்தேறு குடிகளென்றும் அவர்களுக்கு இந்நாட்டில் எவ்வித உரிமையுமில்லை யென்று பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில இனவாதிகள்,

ii ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
நினைப்பது மட்டுமல்ல அதற்கு ஒரு தத்துவ விளக்கத்தையும் கொடுக்க முன்வந்தனர். சிங்கள சமூகம்!'எலு'என்று இலங்கையில் இருந்த பூர்வீகக் குடிகளின் சந்ததியினரென்றும், பிறகு 'சிஹல" என்ற பெயர் வந்தது என்றும், அவர்களுக்குத் தான் இந்நாட்டில் முழு உரிமையும் இருக்கிறதென்றும், கூறினர். இதை 'எலு உறுமய என்று கூறினர். இந்த பூர்வீக உரிமை என்ற அடிப்படையில் தோன்றியதுதான் 'பூமி புத்ர இயக்கம். இந்தப் பூமி இதன் புத்திரர்களான சிங்களவருக்கு மாத்திரமே சொந்தம் என்றும் கூறினர். புத்தபிரான் இத்தீவுக்கு மூன்று முறை விஜயம் செய்தாரென்றும், தன்னுடைய விசேஷ அருளை இந்நாட்டுக்கு வழங்கினார் என்றும் அதனாற்றான் இதற்கு ஜம்புத்துவீப்" என்ற பெயர் வந்ததென்றும், பெளத்த நாடாகிய இத்தீவு பெளத்தர்களுக்கு மாத்திரமே சொந்தம் என்றும் கூறினர். இக்கருத்தின் படி வேறு இனத்தவருக்கு இந்நாட்டில் இடமில்லை, என்ற கருத்தும் தொனிக்கிறது. இல்லையா?
இவ்வினவாதிகள் 'ஜாத்திக சிந்தனய' என்று கூறியது தேசிய சிந்தனை என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டாலும், இது 'சிங்கள இனத்தின் சிந்தனை யென்று விளங்கிக் கொள்ளாதது எம்முடைய தவறு. இந்தியத் தமிழர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டதும், தமிழ் மக்களுக்கெதிராகக் கிளப்பப்பட்ட இனக்கலவரங்களும், 1915ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட கலவரமும், இந்தக்கருத்தின் அடிப்படையில் தோன்றியவையே. ஆகவே இந்தப்பிழையான கருத்தை நாம் திருத்த வேண்டுமானால் எம்முடைய வரலாற்றை நாமே எழுத வேண்டும். நாம் வந்தேறு குடிகளல்ல, இந்நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் எமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்பதை நிரூபிக்க வேண்டும்.
இது மட்டுமல்ல. இலங்கையின் வரலாற்றை எழுதிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள்

Page 8
முகம்மது சமீம் iii
தம்முடைய இனத்தின் வரலாற்றைத் தான் எழுதினார்கள். வெளியுலகத் தொடர்பு எதுவுமில்லாமல், கோயில்களிலும், விகாரைகளிலும், பன்சலைகளிலும் வாழ்ந்த பெளத்த பிக்குகளினால் எழுதப்பட்ட வரலாற்றுக் கோவைகளையே தமது ஆதார நூல்களாகக் கொண்டனர். ஆகவே சிறுபான்மையினங்களைப் பற்றிய வரலாற்றை முழுமையாக நிதர்சனமாக, பாகுபாடற்ற முறையில் இவர்கள் எழுதவில்லை என்பது எனது கருத்து.
தமிழர்களைப் பற்றிக் கூறும் போது இவர்கள் இந்நாட்டின் மேல் அடிக்கடி படையெடுத்து வந்தவர்களென்றும் கூறினர். ஜி.சி.மென்டிஸ் என்ற வரலாற்றாசிரியர் இலங்கையின் வரலாற்றைக் கால அடிப்படையில் பிரிக்கும் போது பாண்டியர் காலம்' சோழர் காலம்' என்று இவர்களின் படையெடுப்புகளை அடிப்படையாக வைத்துப் பிரிக்கிறார். எனவே, வரலாற்றுச் சம்பவங்களை, சிங்கள சமூகத்தின் வரலாற்று சம்பவங்களாகவே இவ்வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர்.
இவ்வரலாற்றுச் சம்பவங்களைப் பற்றிய சிறுபான்மை இனத்தவர்களின் பார்வை எப்படியிருக்கும்? இச்சம்பவங்களை வேறுவிதமாகவும் பார்க்கலாம்தானே. இச்சம்பவங்கள் சிறுபான்மை யினத்தவர்களை எப்படிப்பாதித்தன? ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவன் இச்சம்பவங்களுக்கு எப்படி விளக்கம் கூறுவான் என்ற எண்ணம் என் மனத்தில் தோன்றியது.
வரலாற்றுக்கு விளக்கம் கூறும் போது, வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் தங்களுடைய கண்ணோட்டத்திலிருந்தே விளக்கம் கூறுவர். உதாரணமாக நெப்போலியனை தோற்கடித்தது, வெலிங்கடன் பிரபு என்று ஆங்கில வரலாற்றாசிரியர்களும் புளூச்சர் என்று ஜெர்மன் வரலாற்றாசிரியர்களும் கூறுவதில் எவ்வளவோ வித்தியாசமிருக்கிறது. இதே போலத்தான் அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் ஒரு

iv ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
விதமாகவும், இங்கிலாந்தின் வரலாற்றாசிரியர்கள் வேறுவிதமாகவும் கூறுவதிலிருந்து இவ்வரலாற்றாசிரியர்கள் தமக்குச் சாதகமான விளக்கங்களையே கொடுக்கின்றனர் என்பது வெளிப்படையாக எமக்குத் தெரிகிறது.
இரண்டாம் உலக மகாயுததத்தைப் பற்றிய ஆங்கிலேயரின் விளக்கத்திற்கும் ரஷ்யர்களின் விளக்கத்திற்கும் ஜெர்மனியர்களின் விளக்கத்திற்கும் எவ்வளவோ, வேறுபாடுகள் இருக்கின்றன. இது இவ்வாறிருக்க, பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும் பான்மையினத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயலும் வரலாற்றாசிரியர்களின் விளக்கங்களில் எவ்வளவு பாரபட்சம் இருக்கும் என்பதை நான் கூறத்தேவையில்லை.
வரலாற்றுக் கண்ணோட்டம் - Historical Interpretation என்பது, பலரால் பலகோணங்களிலிருந்து எழுதப்பட்ட ஒரு தத்துவ விளக்கம். இது நாட்டுக்கு நாடு, வரலாற்றாசிரியனுக்கு வரலாற்றாசிரியன், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் வேறுபட்டிருக்கிறது. ஆரம்பத்தில் அரசர்களைப் பற்றியும், அரச பரம்பரையினரைப் பற்றியும் அவர்களுக்குள்ளே ஏற்பட்ட யுத்தங்களைப் பற்றியும் எழுதினார்கள். சாம்ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்பட்டதும் சாம்ராஜ்யங்கள் அழிக்கப்பட்டதுமே வரலாறு என்று கணிக்கப்பட்டது. பாமர மக்கள் இவ்வரலாற்றில் இடம் பெறவில்லை. அவர்களைப் பற்றிய செய்தி கூட இல்லை.பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுளில் ஜனநாயகக் கருத்து பரவிய போதுதான் மக்களைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் எழுதத் தொடங்கினர். இங்கிலாந்தில் அரசனுக்கெதிராக மக்களின் வெற்றியைப் பற்றியும், பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றியும் ஆசிரியர்கள் எழுத முற்பட்டார்கள். நாடுகளின் வளர்ச்சி பற்றியும், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் தோற்றத்தைப் பற்றியும், அந்நாடுகளின், சமூக பொருளாதார வளர்ச்சி பற்றியும் எழுத முனைந்தார்கள் பண்டைய நாகரிகங்களைப் பற்றியும்

Page 9
முகம்மது சமீம் V
அந்நாகரிகங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் பற்றி பல, ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்கள். 'ஹோவாட் பாஸ்ட்’ என்ற நாவலாசிரியர் ரோம சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு அன்றைய g|ഞഥ சமுதாயத்தின் உழைப்பே காரணம் என்ற கருத்தை முன் வைத்தார். வரலாற்றாசிரியர்கள் காணாத ஒரு புதிய உண்மையை இவர் கூறுகிறார்.
பொருளாதார அடிப்படையில்தான் மக்கள் வரலாற்றை நோக்க வேண்டும். அப்பொழுதுதான் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குச் சரியான விளக்கம் கொடுக்க முடியும், என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ் ஒரு புதிய கண்ணோட்டத்தை வரலாற்றுத் தத்துவத்திற்கு அளித்தார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போதுதான் சமுதாய அடிப்படையையே நாம் பார்க்கிறோம் என்று கூறினார். இந்தக் கண்ணோட்டத்திற்றான், கோசாம்பியும், சட்டோ பாத்தியாயரும். இந்திய வரலாற்றை அணுகினார்கள். இப்பொருள் முதல் வாத அடிப்படையில் இலங்கை வரலாறு இன்னும் எழுதப்படவில்லையென்றே கூறலாம்.
இவ்வரலாற்று விளக்கத்திற்கு ஒரு புதிய கோணம் இருக்கிறது. அது தான் சிறுபான்மை சமூகத்தின் பார்வை: வரலாற்றுச் சம்பவங்களால், எப்படி ஒரு சிறுபான்மை சமூகம் பாதிக்கப்படுகிறது, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்களின் விளக்கத்திற்கும், ஒரு சிறுபான்மை யினத்தைச் சேர்ந்த ஒர் ஆசிரியனின் விளக்கத்திற்கும் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன என்ற உண்மையை விளக்குவதுதான் இந்நூலின் நோக்கம். என்னுடைய முடிவுகள் சிலரால் ஏற்றுக் கொள்ளப்படாமலிருக்கலாம். ஆனால், இதுதான் என் பார்வை,
உதாரணமாக முஸ்லிம்களின் வரலாறு என்ற நூலை எழுதப் புகுந்த பேராசிரியை லோர்னா தேவராஜா 1818ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட சிங்கள மக்களின் தேசிய எழுச்சி தோல்வியுறுவதற்குக் காரணம் முஸ்லிம்கள் ஆங்கில ஆட்சிக்கு

vi ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
விஸ்வாசமாக இருந்ததே என்று கூறுகிறார். (Muslims of Sri Lanka. A Thousand Years of Ethnic Harmony. - 1996 - Published by Islamic Foundation, Sri Lanka.) இப்படிக் கூறும் போது முஸ்லிம்கள் இந்நாட்டின் துரோகிகள் என்ற கருத்து தொனிக்கிறது. இல்லையா? உண்மையில் எழுகோறளைகளுக்கும் அதிபதியாக விருந்த மொல்லிகொட திசாவ பிரித்தானிய அரசாங்கத்திற்கு உதவியாயிருந்த காரணத்தினாற்றான், இவ்வெழுச்சி தோல்வியடைந்தது. பேராசிரியர் கே.எம்.டி சில்வா போன்றவர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
‘முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் வழங்கியதும், அவர்களை சிங்கள அதிகாரிகளின் அதிகாரத்திலிருந்து நீக்கி, ஆங்கிலேயே அதிகாரிகளின் கீழ் கொண்டு வந்ததும் பிரித்தானிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி. இதன்காரணமாக சிங்கள மக்களிடையே முஸ்லிம்களைப் பற்றிய ஒரு கசப்புணர்ச்சியும், வெறுப்பும் வளர்ந்தது. இந்த வெறுப்புதான், முஸ்லிம்களுக்கெதிராக 1915ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு மூல காரணம். முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்குமிடையே ஏற்பட்ட வியாபாரப் போட்டிதான் இக்கலவரம் ஏற்படுவதற்குக் காரணம். இதில் சமயஉணர்ச்சி எள்ளளவும் இருக்கவில்லை". இதுதான் இவருடைய விவாதம். ஆனால் உண்மையென்னவென்றால், ஆங்கிலேயருடைய பிரித்தாளும் கொள்கை சிங்கள மக்களை கரையோரச் சிங்களவர் என்றும் கண்டிச் சிங்களவர் என்றும் பிரிப்பதே. 1857ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் கலகத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கெதிரான ஒரு கொள்கையையே, ஆங்கில அரசாங்கம் இந்தியாவிலும் ஏனைய காலனித்துவ நாடுகளிலும் கடைப்பிடித்து வந்தது. இலங்கையில் முஸ்லிம்களை, ஆங்கில அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு அவர்கள் 1818ம் ஆண்டின் கலகத்தில் ஒரு பக்கமும் சாராதிருந்ததும், இஸ்லாமிய சட்டங்களை ஆங்கிலேயர், ஏற்கனவே அறிந்திருந்ததால், அவர்களுடைய நிர்வாகத்தின் கீழ் தங்களைக்

Page 10
முகம்மது சமீம் vii
கொண்டு வரவேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கைக்கு இணங்கியதுமே காரணம். 1915ம் ஆண்டு இனக்கலவரம் தோன்றுவதற்கு கரையோரச் சிங்களவர்க்கும், இந்திய முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட வர்த்தகப் போட்டி காரணமாயிருந்தாலும், அது ஒரு மத அடிப்படையில் இஸ்லாத்திற்கு எதிராகத் தீட்டப்பட்ட ஒரு சதித்திட்டம். இதை என்னுடைய இரண்டாவது பாகத்தில் விளக்கமாகக் கூறியிருக்கிறேன். இல்லாவிட்டால் ஒரே காலத்தில் இலங்கை பூராவும், (கிழக்கு மாகாணத்தைத் தவிர) முஸ்லிம்களைக் கொன்றதும், பள்ளிவாசல்களை உடைத்ததும் ஆகிய செயல்கள், ஒரு திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லாமல் ஆங்காங்கே நடந்த தனிப்பட்ட சம்பவங்களல்ல. எனவே தான் முஸ்லிம்களைப் பற்றிய பாரபட்சமற்ற நடுநிலைமை விளக்கம் தேவை. இத்தேவையைப் பூர்த்தி செய்வதே இந்நூலின் நோக்கம்.
மடிகே, கலகெதரை முகம்மது சமீம் இலங்கை 1-5-1997

viii ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
முன்னுரை
திரு. முகமது சமீமின் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள் என்ற இந்த நூலைப் படிக்கும்போது அன்னாரை ஓர் வரலாற்று மாணவன் என்றே கூறத் தோன்றுகிறது. மாணவன் என்றால் அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கல்ல. அவர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகக் கற்று பட்டம் பெற்றவர். மற்றவர்கள்போல பல்கலைக்கழகப் பட்டத்தோடு வரலாற்றுக்கல்வி ஆய்வை விட்டுவிடவில்லை. தொடர்ந்து வரலாற்று ஆய்விலேயே ஈடுபட்டு வருகிறார் என்பதற்கு இந்நூல் ஒன்றே போதிய சான்றாகும்.
நூலின் ஆரம்பத்திலேயே வரலாறு என்பதற்கும் அதை எழுத முற்படுபவரின் நடுவுநிலைமை பற்றியும் குறிப்பிட்டு அதன் வரைவிலக்கணத்தையும் மறைமுகமாக வகுத்துக் கூறியுள்ளார். பல்வேறு வரலாற்றாசிரியர்கள் மொழி, இனம்,மதம், சாதி, நிற பேதம் சார்ந்து, நடுநிலைமையை விட்டு எவ்வாறு வரலாற்றை எழுதித் தந்துள்ளனர் என்பதை உதாரணங்களுடன் கூறியுள்ளார். அத்துடன் நடுநிலைமையாக வரலாறு எழுத நேரும்போது ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ள இக் குறிப்புகள் இதுவரை நாம் கற்ற வரலாற்று நூல்களை மறுமதிப்பீடு செய்யத் தூண்டுவனவாகவும் உள்ளன.
அடுத்து வரலாறு எழுதுவதற்குத் துணை நிற்கும் முதல் நிலை ஆதாரங்கள் துணைநிலைச் சான்றுகள் பற்றி விரித்துக் கூறிய பின்னரே இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழும் முஸ்லிம்களின் ஆய்வைத் தொடங்குகிறார். அவ்வேளையும் இலங்கையில் சிறுபான்மையினராக ஆங்காங்கே பரந்து வாழும் முஸ்லிம்களைப் பற்றி ஆராயத் தொடங்குமுன்னர் உலக வரலாற்றில் முஸ்லிம்களின் பரந்த அரசியலாதிக்கம், வணிக விரிவாக்கம் அதன்

Page 11
முகம்மது சமீம் ix
பின்னர் ஆங்காங்கே சிறுபான்மையினராக மத்திய கிழக்கிலும் பிற நாடுகளிலும் குடியேறி வாழ நேரிட்ட சரித்திரங்களைத் தக்க ஆதாரங்களுடனும் உரிய காரணங்களுடனும் விளக்கியுள்ளார். அரபிய, பாரசீக நூல்கள், கிரேக்க, உரோம தரவுகளை முன் வைத்தே இலங்கை முஸ்லிம்களது ஏற்றம், வீழ்ச்சி, எழுச்சி ஆகியவற்றை ஆசிரியர் ஆராய்ந்துள்ளார்.
வணிகர்களாக அராபிய நாடுகளிலிருந்து வருபவர்கள் மற்றைய நாடுகள் போலவே இலங்கையிலும் கரையோரங்களிலே குடியேறியிருப்பர். ஆயினும் காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் உள்நாடுகளில் குடிபெயர்ந்து வாழ நேரிட்ட காரணங்கள், சூழல்களை ஆசிரியர் கால, நேர, நோக்கங்களுடன் விரித்துள்ளார்.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும் வரலாற்று ரீதியாக ஆசிரியர் குறிப்பிட்டார். பலர் இஸ்லாம் மதமே காரணம், கிறிஸ்தவ மதத்தை அவர்கள் ஏற்கவில்லை என எண்ணலாம். அது தவறு. வணிகப் போட்டியே முதற் காரணம். ஏற்கெனவே முஸ்லிம்களின் ஆதிக்கத்திலேயே உள் நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம் நிலவியது. போர்த்துக்கீசரும் ஒல்லாந்தரும் வணிக நோக்குடனேயே இலங்கைக்கு வந்தனர். நாடு பிடித்து அரசியலாதிக்கத்துடன் வணிகத்தை விஸ்தரிக்க முயன்ற வேளை தமக்குப் போட்டியாக இலங்கையிலிருந்த முஸ்லிம்களை ஒடுக்கினர். எவ்வாறெல்லாம் போர்த்துக்கீசர், ஒல்லாந்தரால் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டனர் என்பதை ஆசிரியர் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
பிரிட்டிஷார் 1796ல் இலங்கையைக் கைப்பற்றிய பின்னரே இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரளவு விடிவு ஏற்பட ஆரம்பித்தது. அவ்வேளையும் முஸ்லிம்கள் வணிகத்தொழிலே போதும் என இருந்தனர். கிறிஸ்தவ மிஷன் பள்ளிக்கூடங்களுக்குச்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
சென்று ஆங்கிலம் கற்றால் மத மாற்றமும் நேரலாம் என ஆங்கிலம் கற்பதையும் ஒதுக்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் காட்டாத போக்கு, அரசியலில் பங்கு பெறாத நிலை முஸ்லிம்களை எவ்வாறு பாதித்தது என்பதையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். பின்னர் எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு வந்த எகிப்திய வீர புருஷன் அரபிபாஷா தூங்கியிருந்த முஸ்லிம்களை விழித்தெழச் செய்து ஆங்கிலத்தைக் கற்கச் செய்தான் என திரு. சமீம் கூறுகிறார்.
இந்த நூலின் தனிச்சிறப்பு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பொருளாதார அடித்தளத்தை முன்வைத்து ஆராய முற்பட்டதேயாகும். வரலாறு என்பது வெறும் மன்னர்களது தொடர்ந்த ஆட்சி மாற்றமல்ல. உற்பத்தி உறவில், பொருளாதார அடிப்படையில் ஏற்படும் மாற்றங்கள் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தொகுப்பதுவாக அமைவதுவே சிறந்த முயற்சியாகும்; விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாகும்.
முஸ்லிம்களின் வணிகச்சிறப்பை மட்டுமல்ல அவர்களிடை நிலவும் ஏற்றத்தாழ்வு, பணக்காரர் ஏழைகள் என்ற நிலைகளையும் ஆசிரியர் பிரித்துக்காட்டத் தவறவில்லை.
சுதந்திரம், சமத்துவம் , ஜனநாயகம், மனித உரிமைகள் சார்ந்து அரசியல் சமூக வாழ்வை ஆராயும் கால கட்டத்திற்கு நாம் இன்று வந்துள்ளோம். ஆசிரியர் இப்போக்குகளையும் தன் ஆய்வில் முன்வைக்கத் தவறவில்லை. சமுதாய விழிப்புணர்வுடனேயே இந்நூலை ஆக்கியுள்ளார்.
திரு. சமீமின் இப்பணி என்றும் இலங்கை முஸ்லிம்களது நடு லையான வரலாறாகக் கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.
D )

Page 12
முகம்மது சமீம் xi
இந்நூலை எழுத திரு. சமீம் தேடிய ஆதாரங்களைப் பின்னிணைப்பில் மட்டுமல்ல ஆங்காங்கே நூலில் தரப்பபட்ட தரவுகளிலிருந்தும் காணலாம்.
திரு. சமீம் தொடர்ந்து பல வரலாற்று, சமூகவியல் நூல்களை எழுதி வெளியிடவேண்டும் என விரும்புகிறேன்.
சென்னை செ. கணேசலிங்கன்
4.11.1997

1 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
அறிமுகம்
1. இலங்கை முஸ்லிம்களின்
வரலாறு எழுத முற்படும்போது எழும் பிரச்சினைகள்
இன்று இலங்கையில் பல இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் இனத்தால் ஒன்று பட்டாலும் சில சமயங்களில் மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டிருக்கிறார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்று நாம் பொதுவாக இவர்களைப்பிரிக்கலாம். இந்தபிரிவில் கூடச்சில உட்பிரிவுகளை நாம் காணத்தான் செய்கிறோம். மத அடிப்படையில் பிரிப்பதென்றால், பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என நாம் பிரிக்கலாம். இனி, சிங்களவரிடையே மலைநாட்டுச்சிங்களவர், கரை யோரச்சிங்களவர் என்றும் தமிழர்களிடையே யாழ்ப்பாணத்தைமிழர், மட்டக்களப்புத்தமிழர், மலைநாட்டுத்தமிழர் என்றும் பல உட் பிரிவுகளையும் நாம் காண்கிறோம். இனி இந்தப் பிரிவுகளுக்குள்ளே எத்தனையோ பிரிவுகள்) சாதிவேற்றுமைகள் எத்தனையோ,
உயர்ந்தசாதி,கீழ்ச்சாதிஎன்றுபலவகையான சாதிகள்சமூகத்தை ஊடுருவிச் செல்கின்றன. இனத்தால் ஒன்றுப்பட்டால் மொழியால் வேறுப்படுகிறார்கள். இனம் மொழி மதம் என்ற இந்த மூன்றாலும் ஒற்றுமைப்பட்டால் சாதியால் வேறுபடுகிறார்கள். இது மனிதகுலத்தின் சாபக்கேடோ என்னவோ! மனிதனுக்கு மனிதன் சமம், ஒரே இனத்தவன் என்ற எண்ணம் பிறப்பதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் செல்லவேண்டுமோ? தானேவகுத்துக்கொண்ட இந்த வேறுபாடுகளுக்கு அடிமையாகித் தன்னையே அழித்துக்கொள்கிறான் மனிதன். இந்த வேறுபாடுகள் தான் ஒரு நாட்டில் பிளவுகளைக் கொண்டுவருவதற்கு

Page 13
முகம்மது சமீம்
2
அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. காலகதியில் தோன்றிய இந்த வேறுப்பாடுகளுக்கு அடிமையாகி, பிளவுபட்டு, தன்னையே அழித்துக்கொள்ளும் மனிதனுக்குச் சில வரலாற்றுண்மைகளைக் காட்டி இந்த வேறுபாடுகளைக் களைந்தெறிய உதவுவதுதான் ஒரு வரலாற்றாசிரியனின் கடமை
மனித சுபிட்சத்துக்கும், நல்வாழ்வுக்கும் உதவ வேண்டிய இந்த வரலாறு, மனித குலத்தின் நாசகருவியாகவும், உபயோகிக்கப்படுகின்றது. இனம், மொழி, மதம், ஆகிய உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட வரலாற்றாசிரியர்கள் வரலாற்றையே மாற்ற முனைந்திருக்கிறார்கள். இனத்துக்கு இனம் பகைமையையும், நாட்டுக்கு நாடு குரோதத்தையும் வளர்ப்பதற்கு இத்தகைய போக்குடைய வரலாற்றாசிரியர்கள் காரணம் என்றால் மிகையாகாது. இனவேற்றுமை உலகில் பரவுவதற்கு வரலாற்றாசிரியர்களும் தூண்டுகோலாயிருந் திருக்கிறார்கள். ஹிட்லர் போன்ற நாசகாரர்களுக்கு ஹெகெல் போன்றவர்களின் தத்துவ விளக்கம் பெரிதும் பயன்பட்டது. அறுபது இலட்சம் யூதர்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதற்கு நாஜி ஜெர்மனியின் சரித்திராசியர்களும் காரணர்களே. இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்குமிடையே சமீபகாலம் வரையில் இருந்த மனஸ்தாபத்திற்கு அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் பரப்பிய பிழையா ன கருத்துக்களே காரணமாயிருந்தன.
இன்றைய Ꭷ 6u600Ꭶ5 , நாளைய மக்களுக்கு எடுத்துக்காட்டுபவன் ஒரு வரலாற்றாசிரியனே, என்பது முக்கியமான ஒரு கருதுகோள்.
இனங்கள், தேசங்கள், சாம்ராச்சியங்கள், நாகரிகங்கள் எல்லாமே காலதேவனின் இரும்புப்பிடியில் அகப்பட்டுச் சுக்குநூறாகி, மடிந்து மறைந்து போகின்றன. சமூகத் தலைவர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கவிஞர்கள் எல்லோருமே கால வெள்ளத்தில் அழிந்து போகின்றனர்.

3 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
மனித வரலாற்றில் இவர்களுடைய உண்மையான இடத்தை எடுத்துச் சொல்பவன் வரலாற்றாசிரியனே. ஆகவே, ஒரு வரலாற்றாசிரியன் வரலாறு எழுதும் போது நடுநிலைமையிலே இருக்க வேண்டும்.
சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு வரலாற்றை மாற்ற அவன் முயலக்கூடாது. ஆகவே, மனித சமுதாயத்தில் ஒருவனாக வாழ்ந்தாலும் சமூகத்தைத் தூர இருந்தே பார்க்க வேண்டும். வரலாற்றுண்மைகளை மறைக்காமல் அப்படியே எடுத்துக் காட்டுவதுதான் ஒரு வரலாற்றாசிரியரின் கடமை. வருங்காலச் சமுகம் தீர்ப்பளிக்கட்டும். ஒரு நாட்டிலோ அல்லது ஒரு சமுதாயத்திலோ, ஒரு குறிப்பிட்ட இனம் சுயகெளரவத்துடனும், மற்ற இனத்தவர்களுடனும் சம அந்தஸ்தோடும், பூரண உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு, அதன் வரலாறு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஒரு மரத்திற்கு வேர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஓர் இனத்திற்கு அதன்வரலாறு. வரலாறில்லாத இனம் வேரில்லாத மரத்தைப்போன்றது. ஓர்இனம் தனது உண்மை நிலையைச் சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு வரலாறு இருக்க வேண்டும். அதற்கு வரலாறு இல்லையென்றால் அவ்வினம் பலருடைய கேலிக்கு ஆளாகலாம்.
இலங்கையில் வாழும் மக்களில், குறிப்பாக, முஸ்லிம்களுக்கு ஆதாரபூர்வமான ஒரு வரலாறு இன்னும் எழுதப்படவில்லை, இலங்கை முஸ்லிம்களுடைய வரலாறு, ஆராயப்படவில்லை. ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் முஸ்லிம்கள் வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்று எழுத முற்படும்போது, சில கேள்விக்குறிகள் எழுகின்றன. முஸ்லிம்கள் எங்கிருந்து, எப்படி, எப்போது ஏன் வந்தார்கள்? அரேபியாவிலிருந்து வியாபாரம் காரணமாகப் பல நூற்றான்டுகளுக்கு முன்பு

Page 14
முகம்மது சமீம் 4
வந்தார்களென்றால், ஏன் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கின்றனர்? அரேபியாவிலிருந்து வந்தவர்களென்றால், அரேபியர்களின் உடல் வண்ணத்திற்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமிடையில் ஏன் இத்தனை வேறுப்பாடுகள் இருக்கின்றன? இலங்கை முஸ்லிம்கள் அரேபிய வழித்தோன்றல்கள் என்றால் ஏன் சமூகப்பழக்கங்களில் இவர்கள் வேறுபடுகின்றனர்? இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றால், எப்போது எப்பாகத்திலிருந்து வந்தனர் என்ற கேள்வி எழுகின்றது? இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றால்-ஏன் இவர்களின் அநேகர் கொச்சைத் தமிழில் பேச வேண்டும்? பல நூற்றாண்டுகளுக்கு முன் வந்த யாழ்ப்பாணத்தமிழர்கள், தமிழ் மொழியை அப்படியே காப்பாற்றி வர ஏன் முஸ்லிம்கள் கொச்சைத் தமிழில் பேசுகின்றனர்?
ஆகவே, இலங்கை முஸ்லிம்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு இக்காரணம் முட்டுக்கட்டையாக இருக்கின்றது. மேலும், கற்பிட்டி, வேருவலை, அளுத்காமம், காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் உடல் வண்ணத்திற்கும் பழக்கங்களுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்குமிடையில் ஏன் இத்தனை வேறுப்பாடுகள் இருக்க வேண்டும்? இலங்கை முஸ்லிம்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றால், அவர்களின் மொழி உர்து மொழியாக அல்லவா இருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை காண்பதே எமது நோக்கம். இந்நூலில் வரும் சில முடிவுகள் ஒரு சமயம் ஒரு சிலரின் உணர்ச்சிகளைப் பாதிக்கலாம். ஆனால் வரலாற்றுண்மைகள் சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். இந்நூலில் வரும் முடிவுகள் ઈી6u சமயங்களில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படாமலிருக்கலாம். இம் முடிவுகள் மாற்ற முடியாத முடிவுகள் என்று நான் சொல்லவில்லை. மேலும், மேலும் ஆராய்ச்சி செய்யும்

5 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
போது மேலும் சில உண்மைகள் தென்படலாம். அதனால் முடிவுகளும் மாறலாம்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப்பற்றி சில குறிப்புகள் பற்பல இடங்களில் இருக்கின்றன. இவைகளை சேகரிப்பதற்கே பல ஆண்டுகள் செல்லும். முஸ்லிம்களின் வரலாற்றில் அக்கறை கொண்டு இவர்களைப்பற்றிய சில உண்மைகளை எடுத்துக்காட்டிய பெருமை செனட்டர் அல்-உறாஜ் ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்களையே சாரும். இவரைத்தவிர முஸ்லிம்களின் சரித்திரத்தை ஆராய்ச்சிபூர்வமாக வேறுயாரும் எழுத முற்படவில்லை. ஒரு சிலர் கட்டுரைகளை வரைந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றியும், அவர்கள் தெரிவித்த கருத்துக்களைப்பற்றியும் ஆராய வேண்டியதவசியம்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப்பற்றி எழுதப்புகும் ஒருவர் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. முதலாவதாக, அவர் பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். பண்டைய அரபு மொழி தெரிந்தால்தான், அக்காலத்திலிருந்த நூல்களிலுள்ள இலங்கையைப் பற்றிய குறிப்புக்களை அறியலாம். மேலும் பாளி, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளையும் கற்றிருக்க வேண்டும். பண்டைய இலங்கையின்வரலாற்றுக் குறிப்புக்களெல்லாம் பாளியிலும், சிங்களத்திலும் எழுதப்பட்டிருகின்றன. பண்டைய இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களா என்று அறிவதற்கு இந்நூல்களைப் படித்தேயாக வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் இந்திய தொடர்புடையவர்களா என்று அறிவதற்கு இந்திய நூல்களைப் படிப்பதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். மேலும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பிறகு இலங்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், முஸ்லிம்களைப்பற்றியும் அறிவதற்கு போத்துக்கீசிய, ஒல்லாந்த, ஆங்கில மொழிகளாகிய இம் மூன்றிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால்,

Page 15
போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்ததனால், இக்காலக் குறிப்புக்களெல்லாம் இவர்களுடைய மொழிகளிலேயே
எழுதப்பட்டன. மொழியைப்பற்றிய பிரச்சினையே இவ்வளவு சிக்கலானதென்றால், ஏனைய கட்டங்களை நினைத்தால், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
எழுதப்படுவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் செல்ல வேண்டியிருக்கும்.

7 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
11. இலங்கை வரலாற்றாசிரியர்களும் அவர்களின் கருத்துக்களும்
ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் போது அவ்வரலாற்றாசிரியனைப் பற்றியும், அவனது சமூக அமைப்பைப் பற்றியும் அறிதல் அவசியம். அவ்வாசிரியனின் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிவதற்கு அவனது சமூகப் பின்னணியை அறிந்திருத்தல் வேண்டும். வரலாற்றை வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து வரலாற்றாசிரியர்கள் அணுகியிருக் கிரார்கள், என்பதை முன்னரே அறிந்தோம். இலங்கை வரலாற்றைப் பலர் பல கோணங்களிலிருந்து எழுதியிருக்கிறார்கள்.
இலங்கை வரலாற்று நூல்களை, நாம் பண்டைய வரலாற்று நூல்கள், இன்றைய வரலாற்று நூல்கள் என்று பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம். பண்டைய வரலாற்றுக்கோவைகள், அரசாங்கக் குறிப்புக்கள், இலக்கிய நூல்கள் ஆகியனவற்றையும் எமது ஆதார நூல்களாக நாம் கொள்ளலாம். இலங்கையைப் பற்றிய பண்டைய வரலாற்றுக் குறிப்புக்களை நாம் வெளிநாட்டவரின் குறிப்புக்கள், உள்நாட்டவரின் குறிப்புக்கள் என்று பிரிக்கலாம். வெளிநாட்டவரின் குறிப்பிக்களை ஆராயும்போது சில உண்மைகள் வெளியாகின்றன. இவ்வாராய்ச்சியின் விளைவாக, நாம் இலங்கைக்கு யாத்ரீயர்களாக வந்து போனவர்கள் எழுதிய குறிப்புக்கள், இலங்கைக்கு வராமலேயே வர்த்தகர்களின் முலம் பெற்ற சில குறிப்புக்களை வைத்து எழுதியவர்களின் கருத்துக்கள், இலங்கை பற்றிய குறிப்புக்களை வாசித்துவிட்டுத் தாங்கள் கண்டதாக எழுதியவர்களின் உரைகள், இலங்கையின் ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பின்பு, தங்கள் கொள்கைகளை வெளியிடுமுகமாக எழுதிய விளக்கங்கள், இலங்கையில் கைதிகளாக இருந்தவர்களின் வாசகங்கள், என இவைகளைப் பொதுவாக வகுக்கலாம். ஆகவே

Page 16
முகம்மது சமீம் 8
இவர்களுடைய கருத்துக்களில் உண்மை சில சமயங்களில் மறைக்கப்பட்டிருக்கலாம். உள்நாட்டவர்களின் வரலாற்றுக் கோவைகளிலும் சில குறைகள் நாம் காணத்தான் செய்கிறோம். எனினும், இந்த வரலாற்றுக் கோவைகளையும், குறிப்புக்களையும் ஆதாரங்களாக வைத்துக் கொண்டு தான் நாம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எழுத வேண்டியிருக்கிறது.
இலங்கையின் மூலவரலாற்று நூல்களில் மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம், ஆகியன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. மேல் நாட்டவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னுள்ள காலப்பகுதிக்கு இவ்வரலாற்று நூல்கள்தான் ஆதாரமாக இருக்கின்றன. இவ்வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் பெளத்த பிக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் “மனித வரலாறு”- “பெளத்த சமயத்தின் வரலாறு'- என்ற அடிப்படையில் வரலாற்றை அணுகினார்கள். இவர்கள் பெளத்த சமயத்தின் வரலாற்றைத்தான் வரலாறாக எழுதினார்கள் என்றால் மிகையாகாது. பெளத்த சமயத்தின் வரலாற்றை எழுதப் புகுந்த இவர்கள், பண்டைய இலங்கை மக்களின் பொருளாதார, சமூக வாழ்கையை அடியோடு மறந்து விட்டார்கள். அக்கால அரசர்களைப்பற்றி எழுதும் போதும், பெளத்த சமயத்துடன் தொடர்புள்ள அரசர்களையே பெரும்பாலும் எழுதினார்கள். சமூகத்திற்காக உழைத்த ஒருசில அரசர்கள், இதனால் வரலாற்று நூல்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்டார்கள். நாட்டின் பொருளாதார நிலைமையைச் சீர்படுத்திய மகாசேனன் என்ற அரசன் அவர்களுடைய வரலாற்று நூல்களில் முக்கிய இடத்தைப் பெறவில்லை. ஆகவே இவ்வரலாற்று ஆதார நூல்களிலிருந்து பிறநாட்டவர்களைப் பற்றிய குறிப்புக்களை நாம் எதிர்பார்க்க முடியாது.
பண்டைய இலங்கையுடன் வர்த்தகம் செய்து வந்த மேற்கு நாட்டவர்களைப் பற்றிய குறிப்புக்கள் இவ்வாதார நூல்களில் இல்லாவிட்டால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும்,

9 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இவ்வாசிரியர்கள் பெளத்த பிக்குகளாயிருந்தமையால், வாணிபம் செய்ய வந்த வெளி நாட்டவருடன் பழக வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்படவில்லை. மதவாழ்க்கையில் ஈடுப்பட்டிருந்த இவர்களுக்கு ஆவலும் இருக்கவில்லை. ஆகவே, பண்டைய இலங்கையுடன் தொடர்பு வைத்திருந்த கிரேக்கர்கள், உரோமர்கள். பாரசீகர்கள், அரேபியர்கள் ஆகியவர்களைப் பற்றிய குறிப்புகள் இவ்வாதார நூல்களில் இல்லாதது வருந்தத்தக்கது. என்றாலும், இலங்கையைப்பற்றிய, குறிப்புக்கள் கிரேக்க, உரோம, பாரசிக, அரேபிய நூல்களில் இருப்பதை நாம் பார்க்கிறோம். பிற நாட்டவர்களின் குறிப்புகளைக் கொண்டும் புதைப்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சான்றுகளைக் கொண்டும், “இலங்கையுடன் இந்நாட்டவர்கள் தொடர்பு வைத்திருந்தனர்”, என்ற முடிவுக்கு நாம் வரலாம். இதற்கு மகாவம்சத்தில் குறிப்பு இருக்கிறது. இதை விரிவாகப் பின்னால் ஆராய்வோம்.
. மகாவம்சத்தைப் போன்று ஒரு வரலாற்று நூலை எழுதப்புகுந்த தர்மகீர்த்தி என்ற ஆசிரியர், வடமொழியின் காவிய இலக்கியங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டமையால், வரலாற்றை வரலாற்றுக் கண் கொண்டு பார்க்கத் தவறிவிட்டார். சமஸ்கிருத மொழியின் காவியலக்கணத்தின்படி வரலாற்றை எழுத முனைந்த இவ்வாசிரியர் ஒரு காவியத்தைத்தான் படைத்தார். மகாவம்சம் ஒரு புராணமென்றால் சூளவம்சம் ஒரு காவியம். வரலாற்று ஆதார நூல்கள் என்று இவற்றைக் கொண்டாலும் வரலாற்று நூல்கள் என்று நாம் இவற்றைக் கொள்ள முடியாது. ஆகவே, பிறநாட்டவர்களைப் பற்றியோ, முக்கியமாக அரேபியர்களைப் பற்றியோ எவ்வித குறிப்புக்களையும் இவ்வாதார நூல்களில் காண முடியாது என்பதை இன்னும் விளக்கத் தேவையில்லை.
பாளி நூல்களுக்குப் பிறகுதான் சிங்கள இலக்கிய நூல்கள் பிறந்தன. இச்சிங்கள இலக்கியங்கள் ஆரம்பத்தில் பாளி நூல்களின் விளக்கங்களாகவும் உரைநூல்களாகவும் தோன்றின. பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக மதசார்பற்ற

Page 17
முகம்மது சமீம் 10
ஆசிரியர் ஒருவருடைய இலக்கியப் படைப்புக்களைக் காண்கிறோம். இதுவரை இலக்கியத்திலும் வரலாற்றிலும் ஈடுப்பட்டிருந்தவர்கள் பெளத்த பிக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, சமூகம், பொருளாதாரம் ஆகிய மனிதனுடைய பெளதீக வாழ்க்கைப்பற்றிய குறிப்புக்களை பதின்மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இலக்கியங்களில் தான் காணமுடியும். இந்தக் காலத்திற்குப் பிறகும் “குருலுகோமி” போன்ற ஒரு சில ஆசிரியர்களைத் தவிர்த்த மற்றைய ஆசிரியர்கள் எல்லோரும் பெளத்த பிக்குகளாகவே இருந்தனர். இவர்கள் மதசம்பந்தமான பொருள்களை விடுத்து பிற விஷயங்களைப்பற்றி எழுத முனைந்தாலும் வடமொழியின் செல்வாக்கு அவர்களிடம் அதிகம் இருந்துள்ளமையால், வடமொழி நூல்களைப் பின்பற்றி, யாப்பிலக்கண நூல்களையும், அகராதிகளையும் எழுதத்தலைப்பட்டார்கள். இந்த நூல்களிலும் வெளிநாட்டவர்களைப் பற்றியோ குறிப்பாக முஸ்லிம்களைபற்றியோ எந்தவித குறிப்புக்களையும் நாம் எதிர்பார்க்க முடியாதல்லவா? பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் தோன்றிய சிங்கள இலக்கியங்கள் மத சார்புள்ள இலக்கியங்களாகவே இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் சிங்கள இலக்கியத்தில் ஒரு திருப்பத்தைக் காண்கிறோம் - தூது இலக்கியம் தோன்றியது. இத் தூது இலக்கியங்களில் ஆங்காங்கே முஸ்லிம்களைப்பற்றிய சில குறிப்புக்களையும் நாம் முற்றாக நம்பிவிட முடியாது. என்றாலும் இக்குறிப்புக்கள் சில வரலாற்றுண்மைகளை நிலை நாட்டுவதற்கு உதவும்.
பதினாறாம் நூற்றாண்டு தொடக்கம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய மாறுதல் ஏற்படுகிறது. கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இந்தியக் கலாச்சாரத்தினாலும், பண்பினாலும் பாதிக்கப்பட்டு வந்த இலங்கை நாகரிகம், மேல் நாட்டவரின் செல்வாக்குக்கு இரையாகிறது. ஐரோப்பிய ஆட்சியாளர்களின் ஆதிக்கம் இலங்கையில் தலைவிரித்தாடத் தொடங்கியது.

11 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இவ்வாட்சியின்கீழ் மக்கள் நலிவுற்றனர். இக்காலப்பகுதிக்கு வேண்டிய ஆதார நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. ஐரோப்பிய ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள் என்ற முறையில் இலங்கை வரலாற்றைப் பார்த்தனர். இவ்வாட்சியாளரான ஆசிரியர்களின் கூற்றுக்கள் மாசற்றிருக்கும் என்று கூறமுடியாதல்லவா? இனி, முஸ்லிம்களைப் பற்றி இவர்கள் கூறிய கருத்துக்களைச் சிறிது கவனிப்போம்.
இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசர் தங்கள் பரம வைரிகளான இஸ்லாமிய சமயத்தவரை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர். வட ஆபிரிக்காவிலுள்ள“மூவர்ஸ்”என்ற முஸ்லிம்கள் தான் இங்கும் வந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்களை மூவர்ஸ் என்று அழைக்கத்தொடங்கினர். “மூவர்ஸ்” என்ற நாமகாரணத்தின் ஆரம்பம் இதுதான்.
போர்த்துக்கீசருடைய ஆட்சிக்காலத்துக்கு குவறோஸ், EUCTT, y e GLT, y Gubpraiu (Queyroz, Rebeiro, De Couto, De Barros) ஆகியவர்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் தான், எமது ஆதார நூல்கள். இவ்வாசிரியர்களில் பெரும்பான்மையோர் தங்கள் அனுபவங்களை மாத்திரமே எழுதிவைத்தார்கள். அவர்களுடைய குறிப்புக்கள் ஒரு வரம்பிற்குள்ள காலகட்டத்தை ஆராய்வதற்கே உதவுகின்றன. இக் காலப்பகுதிக்குள்ள ஆதார நூல்களின் ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் போர்த்துக்கீசியப் படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கருத்துக்கள் ஒரு படை வீரனின் கருத்து என்பதை நாம் மறக்கக்கூடாது. சிங்களவர்களைத் தூண்டிவிட்டு போர்த்துக்கீசியருடன் சிங்கள மக்கள் யுத்தம் செய்வதற்குக் காரணகர்த்தாக்கள் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் என்பது இவர்களின் கருத்து. ஆகவே, முஸ்லிம்களைப் பற்றி எந்த இடத்திலாவது இவர்கள் குறிப்பிட நேர்ந்தால் அக்கூற்று

Page 18
முகம்மது சமீம் 12
பாரபட்சமாக இருக்க முடியாது. நல்ல வேளையாக இவர்கள் முஸ்லிம்களைப் பற்றி அதிகம் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் அவர்களுடைய கூற்றுக்களை நாம் கருத்தாழம் பொதிந்த வாசகங்கள் என்று கொள்ளமுடியாது. இப்படைவீர ஆசிரியர்களை புறக்கணித்தால் எஞ்சியிருப்பவர் குவறோஸ் மட்டுமே. குவறோஸ்ருடைய வரலாற்று நூலில்தான் முஸ்லிம்களைப்பற்றிய குறிப்புக்களை அதிகம் காண்கிறோம். இவருடைய கருத்துக்கள் சரியா பிழையா என்று விமர்சிப்பதற்கு முன் இவ்வாசிரியரின் தராதரத்தை நிர்ணயிப்பது அவசியம்.
குவரோஸ் ஒரு கிருஸ்தவ பாதிரி. கிருஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட மதப் போராட்டத்துக்கு காரணமாக இருந்தவர்கள் மதகுருமார்கள் என்றால் மிகையாகாது. இவ்விரு மதத்தாருக்குமிடையே தோன்றிய பகைமை வளர்ந்து கொண்டிருந்ததேயல்லாது, இது தனியவில்லை. குவறோஸ் போன்ற பாதிரிமாரிடம் தான் இந்த பொறுப்புணர்ச்சி அதிகமாக இருந்தது. போர்த்துக்கீசிய ஆட்சியாளர்கள் இலங்கையை இழந்தபிறகுதான்குவறோஸ் தனது வரலாற்று நூலை எழுத முற்பட்டார். “இலங்கையை திரும்பவும் எப்படி கைப்பற்றலாம் என்பதற்கு விளக்கங்கள் கொடுக்கவே இவ்வரலாற்று நூலை தான் எழுதுவதாக ஆசிரியரே முன்னுரையில் கூறுகின்றார். போர்த்துக்கீசியர் இலங்கையை விட்டு விரட்டப்படுவதற்கு “இலங்கை மூவர்ஸ்” தான் காரணம் என்பது இவரது தளராத நம்பிக்கை, வரலாற்றை ஆராய்வதற்கு முன்னே இப்படி ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு வரலாற்றை அணுகினால் வரலாறு என்ன போக்கில் போகும் என்பது சொல்லாமலே விளங்கும். ஆகவே, முஸ்லிம்களைப்பற்றி 96 (560)- Lu கருத்துக்களை நாம் கொஞ்சம் நிதானமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் - உதாரணமாக, அவருடைய பின்வரும் கூற்றைக் கவனிப்போம்.

13 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
பார்பரியம் என்ற ஒரு கிராமம் இருக்கிறது. உண்மையில் அதை “பார்பரி” (நாகரிகமற்ற) என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் அங்கே வசிப்பவர்கள் எல்லோரும் அப்படிபட்டவர்கள். ஒரு கிருஸ்தவ பாதிரி அந்த வழியால் போகும் போதுஒரு சிங்களவர் அவரை அணுகித் தன்னுடைய நிலத்தை வாங்கி கிறிஸ்த்தவ கோயில் ஒன்று கட்டுமாறு வேண்டிக்கொண்டார். ஏனென்றால் தந்திரத்தில் கைதேர்ந்த இந்த முஸ்லிம்கள் எப்படியாவது குறுக்குவழியில் தன்னுடைய நிலத்தை இலஞ்சம் கொடுத்தாவது, சொற்ப விலைக்கு வாங்கிக் கொண்டு தன்னைத் துரத்தி விடுவார்கள் என்று அச்சிங்களவர் பாதிரியிடம் முறையிட்டார்” இப்படிச் செல்கிறது அவருடைய கூற்றுக்கள். முஸ்லிம்களின் மேல் ஆசிரியருக்கிருந்த வெறுப்பு இக்கூற்றிலேயே தெள்ளத்தெளிய விளங்குகிறது. இக்கூற்றுக்களில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதவசியமில்லை.
போர்த்துக்கீசிய ஆதார நூல்களில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் றிபேரோ போன்ற ஒருசில படைவீரர்களைத் தவிர, மற்ற வரலாற்றுக் குறிப்புக்களை எழுதியவர்கள் இலங்கையை எட்டிப்பார்த்ததேயில்லை. டிபெற்றோஸ், ஆப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டார். குவறோஸ9ம், டிகூட்டோவும் இந்தியாவோடு நின்றுவிட்டார்கள். ஆகவே இவர்கள் இலங்கைக்கு வந்து போனவர்கள் சொன்னதையே ஆதாரமாகக் கொண்டார்கள். போர்த்துக்கீசியருடைய ஆதார நூல்களின் தராதரம் இதுவென்றால் வியாபார நோக்கத்துடன் கிழக்கு நாடுகளுக்கு வந்த ஒல்லாந்தரின் குறிப்புகள் எப்படியிருக்கும் என்பதை நாம் ஒருவாறு ஊகிக்கலாம்.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திற்குரிய ஆதார நூல்களாக எமக்கு உதவுபவை, அவர்களது தேசாதிபதிகள் எழுதிவைத்த வாழ்க்கைக் குறிப்புகளும், அரசாங்கக் குறிப்புகளுமேயாம். ஒல்லாந்தர் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளால் இலங்கையில் கடமையாற்றிய தேசாதிபதிகள், தாங்கள் பதவியை விட்டு நீங்கிப்

Page 19
முகம்மது சமீம் 14
போகிற காலத்தில் தங்களுக்குப் பிறகுவரும் தேசாதிபதிகளுக்கு உதவும் பொருட்டு தங்கள் குறிப்புக்களை எழுதிவைத்தனர். அப்படி எழுதும்போது இவர்கள், உண்மையான வரலாற்றுக் குறிப்புக்களை எழுதிவைத்தனர். அப்படி எழுதும்போது இவர்கள், உண்மையான வரலாற்றுக் குறிப்புக்களை எழுதுவதை விட தங்கள் சாதனைகளையும், பெருமைகளையுமே எழுதிவைத்தார்கள். இவர்களுடைய கூற்றுக்களில் ஒரு சில வரலாற்றுண்மைகள் பொதிந்திருந்தாலும், வீண் புகழ்ச்சி காரணமாக அவை மறைந்துவிடுகின்றன. அவர்கள் தங்களைப்பற்றிப் புகழ்ந்து எழுதுவதற்கு உயர்பதவி மோகமும் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். மேலும் தங்கள் தவறுகளை மறைப்பதற்கு பிறர்மேல் பழி சுமத்தினார்கள். இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களின்மேல் எல்லாப் பழியையும் போட்டார்கள். தங்கள் வியாபாரத்தில் மந்தம் ஏற்படுவதற்கு இந்த முஸ்லிம்கள் தான் காரணம் என்றும், கண்டியரசர்களுக்கும் தங்களுக்குமிடையில் ஏற்பட்ட பூசல்களுக்கும் தங்கள் இராச்சியத்தில் தோன்றிய கலகங்களுக்கும் இவர்களே காரணகர்த்தாக்கள் என்றும் எழுதிவைத்தார்கள். உதாரணமாக தேசாதிபதி ஷறொய்டர் எழுதிவைத்த குறிப்பொன்றையும் காட்ட விரும்புகின்றேன்.
“மூவர்ஸ்” முஸ்லிம்கள்) என்ற இந்த வகுப்பினர் மிகவும் தந்திரசாலிகள். வஞ்சனையும், சூழ்ச்சியும் வியாபாரத்தில் புகுத்தாவிட்டால் இவர்களுக்கு திருப்தியேயில்லை. எமது பிரஜைகளைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் பொருட்களின் விலை உயர்வதற்கும் அவர்கள்தான் காரணம். குள்ளநரித் தன்மையுள்ள இவர்கள் கண்டி மக்களைக் கெடுத்ததுமல்லாமல், கள்ளத்தனமாக வியாபாரமும் செய்து வருகின்றனர் என்று இப்படியெல்லாம் எழுதிவைத்திருக்கின்றார்கள். இவைகளை உண்மையென்று கொண்டு வரலாற்றை எழுதினால் வரலாறு எந்த போக்கில்போகும் என்பதை விளக்கத்தேவையில்லை.

15 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இதே காலத்துக்குரிய ஆதார நூல் ஒன்றுதான். றொபட் நொக்ஸ் (Robert Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய “இலங்கையுடன் ஏற்பட்ட வரலாற்றுத் தொடர்பு” என்ற நூல். இருபது வருடங்களாக கண்டிராச்சியத்தில் கைதியாக இருந்த இவர் தன் அனுபங்களை எழுதி வைத்தார். எந்த விதிகளின் சார்புமற்ற இவர் எழுதிய குறிப்புக்களை நாம் பெரும்பாலும் உண்மையென்றே கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் இலங்கை, ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் வருகிறது. “கல்வியில் புலமைவாய்ந்தவர்கள்” என்ற மரபு வழிவந்தவர்களாகையால், இவ்வாங்கிலேயர்களில் அநேகர் இலங்கை வரலாற்றை எழுத முற்பட்டனர். என்றாலும் இவர்களைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இக்காலகட்டத்தின் ஆரம்பத்தில் எழுதியவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள். இவர்கள் தங்கள் உத்தியோகத்தினால் ஏற்பட்ட அதிருப்தியினால் பாதிக்கப்பட்டு, தேசாதிபதியின்மீது வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் அன்றைய இலங்கை வரலாற்றை எழுதினார்கள். அரசாங்க நிர்வாகத்தில் தேசாதிபதி செய்த பிழைகளைத்தான் அதிகமாக எழுதினார்கள், வரலாறு எழுதவில்லை. இப்படி எழுதியவர்களில் பர்ஸிவல், கோர்டைனர், பிலலதீஸ், மேஜர் போர்பஸ், கெம்பல் (Perceival, Cordiner, Philalathes, Major Forbes, Campbell) g,5u6) is 6061T முக்கியமாக குறிப்பிடலாம். ஆகவே அன்றைய ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இவர்களுடைய நூல்களில் நாம் காணமுடியாது. பத்தொன்பதாம் நுற்றாண்டின் இடைக்காலப் பகுதியிலும், கடைப்பகுதியிலும் தோன்றிய மேஜர் ஸ்கின்னர், பர்கசன் போன்ற ஆசிரியர்கள் ஆங்கில மூலதனத்தை என்ன வகையில் இலங்கையில் உபயோகித்தால் பயனளிக்கும் என்ற எண்ணத்துடன் இலங்கையைப்பற்றி எழுதினர். அவர்களுடைய நூல்களில் தேயிலை தோட்டத்தையும் றப்பர் தோட்டத்தையுமே காண்லாம். மனிதர்களை

Page 20
முகம்மது சமீம் 16
காணமுடியாது. ஆகவே, முஸ்லிம்களைப்பற்றிய இந்த நூல்களிலிருந்தும் ஏதாவது அறிய முடியுமா என்றால் அதிலும் ஏமாற்றம் தான். சர். இமர்ஸன் டெனன்ட் போன்ற சிறந்த வரலாற்றாசிரியர்கள் இருக்கத்தான் செய்தனர்.
உள்நாட்டை சேர்ந்த ஒரு சில ஆசிரியர்களும் வரலாற்றை எழுதத்தான் செய்தார்கள். சேர்பொன்னம்பலம் இராமநாதன் “இலங்கை முஸ்லிம்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்களல்ல” சிங்களவர் “ஹம்பயர்கள்” என்றார்கள் என்றும் கூறினார். சைமன் காசி செட்டி, போன்றவர்கள் “இலங்கை கரையோர முஸ்லிம்கள் மலையாளத்திலிருந்து வந்தவர்கள்” என்றும் அவர்களில் அனேகர் “முக்குவ” வகுப்பைச் சேந்தவர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சில வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம்களின் பூர்வீகத்தைப்பற்றி அக்கறையே எடுக்கவில்லை. முஸ்லிம்களும் இலங்கையில் வாழ்கிறார்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எழுத முற்படும் ஒருவருக்கு எத்தனை படுகுழிகளும், பாதாளங்களும் காத்திருக்கின்றன என்பதை வாசகர்கள் இப்பொழுது ஒருவாறு ஊகிக்கலாம். மூல ஆதாரங்கள் கல்வெட்டுச் சான்றுகள் புதைப்பொருள் ஆராய்ச்சிசான்றுகள் ஆகியவை எமது உதவிக்கு வராது. ஏனென்றால் முஸ்லிம்களைப்பற்றி குறிப்புக்கள் இவை எதிலும் இல்லாதே காரணம். ஆனால் முஸ்லிம்களின் சமூக பழக்கவழக்கங்களையும், உடல் வண்ணத்தையும், அவர்கள் எங்கெங்கு குடியேறினார்கள் என்று ஆராய்ந்தால் ஒருவாறு அவர்கள் பூர்வீகத்தை ஊகிக்கலாம். இவைகளில் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன்.
ஆகவே முஸ்லிம்களின் வரலாறு எழுதும் ஒருவர் வரலாற்று முடிவுகளை கூறமுடியாது தனது ஊகத்தால் சில கருத்துக்களை மாத்திரம் தெரிவிக்கலாம்.

17 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
II. வரலாறு எழுத உதவும் ஆதாரங்கள்
வரலாறு எழுதும் போது ஒரு வரலாற்றாசிரியன் நடுநிலைமையில் இருந்து எழுத வேண்டும். வரலாற்றாசிரியனும் மனிதன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சமூகத்தில் அவன் ஒரு அங்கம். அவன் வாழும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால் பாதிக்கப்படுகின்றான். சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் முழுமையாக அடிமையாகின்றான் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவைகளினால் பாதிக்கப்படுகின்றான். என்பது மட்டும் உண்மை. அவன் வரலாற்றை எந்த கண்ணோட்டத்திலிருந்து பார்க்கின்றான் என்று அறிவதற்கு இவன் வாழ்கின்ற சமுதாய அடிப்படையை அறியவேண்டியது அவசியம். சமுதாயத்தின் கருத்தோட்டத்தை அறிந்தால் அவ்வரலாற்றாசிரியரின் வரலாற்றுக் கண்ணோட்டத்தையும் நாம் அறியலாம். உதாரணமாக கிரேக்க வரலாற்றை எழுதப்புகுந்த ஹிரடோட்டஸ் கதைகளையும் கற்பனைகளையும் வரலாற்றில் புகுத்தினார். கிஸ்தவ சமயம் மேன்மையுற்றிருந்த காலத்தில் இதன் தத்துவத்தை எழுதும் முகமாக வரலாற்றை எழுத முனைந்த செயின்ட் ஆகஸ்டின் செயின்ட் அக்வைனாஸ் போன்றவர்கள் வரலாற்றை கிஸ்தவக் கண்கொண்டு பார்த்தார்கள். இஸ்லாமிய வரலாற்றை எழுதமுற்பட்ட இப்னுகல்துன் வரலாற்றை இஸ்லாமிய மதக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தார். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் தொழிலாளர் இயக்கம் மும்முரமாக இருந்த காலத்தில் தான் வாழ்ந்த கார்ல் மாக்ஸ் பொருளியல் அடிப்படையில் தோன்றிய வகுப்புகளுக்கிடையே ஏற்பட்ட வர்க்கப் போராட்டம் தான் மனித வரலாறு என்ற தன்னுடைய கண்ணோட்டத்துடன் வரலாற்றை ஆராய்ந்தார். நீதி, நெறி, தர்மம் இவைகளைத்தான் மனித வரலாறு எமக்கு கற்பிக்கிறது

Page 21
முகம்மது சமீம் 18
என்பது வரலாற்றாசிரியர் டோயின்பீயின் கருத்து. இப்படி வெவ்வேறு கண்ணோட்டத்திலிருந்து இவர்கள் வரலாற்றை அணுகியிருக்கிறார்கள். ஆகவே ஒரு வரலாற்றை படிக்கும்போது அவ்வரலாற்றாசிரியன் வாழ்ந்தகாலத்தையும் அறிய வேண்டியது அவசியம்.
ஆகவே ஒரு வரலாற்றாசிரியன் தன்னுடைய சமுதாய சூழ்நிலையாலும் மரபு வழிவந்த பாரம்பரியத்தாலும் பாதிக்கப்படுகின்றான் என்பதும் உண்மை. எனவே வரலாற்றாசிரியன் எழுதும் எல்லாவற்றையும் நாம் தெய்வ வாக்கு என்றோ தீர்ப்பு என்றோ கொள்ள வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றை படிக்கும் போது அவ்வரலாற்றாசிரியனுடைய சமுதாய அமைப்பையும் அச்சமூகத்தின் கருத்தோட்டத்தையும் அவ்வாசிரியனின் சொந்த விருப்பு வெறுப்புக்களையும் அறிந்தால் அவன் விட்ட தவறுகளை நாம் அறியலாம். உதாரணமாக இந்திய வரலாற்றை எழுத முற்பட்ட ஆங்கில வரலாற்றாசிரியர்கள் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் என்ற முறையில் இந்திய வரலாற்றை எழுதினார்கள். இங்கிலாந்தின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு வக்காலத்து வாங்கினார்கள். சுதந்திரத்துக்காக உயிர்நீத்த கட்டபொம்மனை கொள்ளைக்காரனாக்கினார்கள். இந்தியா முழுவதிலும் பொங்கி எழுந்த முதல் சுதந்திர இயக்கத்தைச் சிப்பாய்க்கலகம் என்றார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் குலைத்து நாட்டை இரு கூறாக்கினார்கள். 1857ம் ஆண்டில்நடந்த முதல் சுதந்திர இயக்கத்தில் சுதந்திர இந்தியாவிற்கு ஒரு முஸ்லிமையே சக்கரவர்த்தியாக பிரகடனம் செய்யும் அளவிற்குப் பக்குவப்பட்டிருந்த இந்திய மனப்பான்மையை ஆங்கில வரலாற்றாசிரியர்கள் எழுதிய நூல்களை பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் திணித்து அவர்கள் கருத்துக்களை வளர்த்துவந்த இந்திய சமுதாயத்தின் மேல் பதித்து 1947ம் ஆண்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொல்லும் அளவிற்கு இந்தியர்களின் மனப்பக்குவத்தைச் சீர்குலைத்து குரோதத்தை

19 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
வளர்த்தார்கள். ஆகவே ஒரு வரலாற்றாசிரியனுடைய விருப்பு வெறுப்புக்கள் ஒரு சமுதாயத்தை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதை இதிலிருந்து நாம் அறியலாமல்லவா? இப்படிப்பட்ட தவறுகளைத் தவிர்ப்பதற்கு அவ்வரலாற்றாசியரின் பின்னணியையும் அறிதல் அவசியம். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எழுதுவதற்கு உதவியாக இருக்கும் மூல நூல்களிலிருந்து ஆதாரங்களைப் பெறும் போது இவ்வுண்மைகளைக் கருத்திற் கொள்ளுதல் நல்லது. இம் மூல நூல்களைப் பற்றி ஆராயும் போது இந் நூல்களை எழுதிய ஆசிரியர்களின் சொந்த விருப்பு வெறுப்புக்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் அவர்களின் சமுதாயத்தையும் அறியும் போது சில உண்மைகள் தெளிவாகின்றன.
ஒரு வரலாற்று நூலை எழுதுபவன் யார்? ஒரு கேள்வி எழுகின்றது (கண்டதையும் கேட்டதையும் வைத்து வரலாறு என்ற நினைப்பில் எழுதுவது வரலாறு ஆகமுடியாது. எழுதத் தெரிந்த எல்லோராலும் வரலாறு எழுதமுடியாது.) வரலாற்று நாவல்களுக்கு மவுசு ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் வரலாற்றை வரலாற்றுக் கண் கொண்டு பார்க்கிறவர்கள் மிகச் சிலரே. இந்த வரலாற்று நாவல்களால் சில சமயங்களில் வரலாறே சின்னாபின்னம் செய்யப்படுகிறது. ஆகவே வரலாறு எழுத முனையும் எவரும் தங்கள் ஆதாரங்கள் சரியா பிழையா என்று அவதானிப்பது அவசியம். புத்தகத்தில் இருக்கிறது என்ற காரணத்தினால் ஒரு விஷயத்தை உண்மையென்று நாம் கொள்ள முடியாது அல்லது கர்ணபரம்பரையாக வந்த கதைகளை வைத்துக் கொண்டு மாத்திரம் வரலாறு எழுதுவதும் கூடாது. வரலாற்றைப் பற்றிய முடிவுகளை வரலாற்று ஆசிரியனிடம் விடுவதே நல்லது. இங்கே இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்த பிறகு இங்கிலாந்தில் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த தொழிற் கட்சியைச்

Page 22
முகம்மது சமீம் 20
சேர்ந்தவர்கள் கடந்த மகாயுத்தத்தில் கன்ஸர்வேட்டிவ் கட்சியினர் செய்த பிழைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள். மகாயுத்தத்தில் கன்ஸர்வேட்டிவ் கட்சியினரின் கொள்கைளைப்பற்றியும் அரசாங்கக் கட்சியினரும் எதிர்க்கட்சினரும் விவாதிக்கத் தொடங்கினர். விவாதம் காரசாரமாக நடந்துக்கொண்டிருக்கையில் 69 (5 மூலையிலிருந்து ஒரு சிம்மக்குரல் கேட்டது. எல்லோரும் ஸ்தம்பித்து குரல் வந்த திசையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் வரலாற்றைப் பற்றிய முடிவுகளை சொல்ல உங்கள் எவருக்குமே தகுதியில்லை. அதை வரலாற்றாசிரியனிடம் விட்டு விடுங்கள். வரலாற்றில் நடந்த சம்பவங்களுக்கு முடிவு சொல்ல அவனுக்குத் தான் தகுதியுண்டு. நானே இந்த வரலாற்றைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது இதைப் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டு அந்த மனிதர் இருந்து விட்டார். இடி இடித்து ஓய்ந்தது போல் இருந்தது. அதற்குப் பிறகு இப்படிப்பட்ட விஷயங்கள் சபையில் விவாதிக்கப்படவே இல்லை. இவ்வளவு அதிகாரத்துடன் கூறிய மனிதர்தான், இரண்டாவது மகாயுத்தத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தவரும் இங்கிலாந்தின் பிரபல வரலாற்றாசிரியருமான சர்ச்சில் பிரபு. எனவே வரலாற்றைப் பற்றிய தீர்ப்பை வரலாற்றாசிரியனிடம் விட்டுவிடுவதே நல்லது.
அடுத்து வரலாறு எப்படி எழுதப்படுகிறது என்ற கேள்விக்கும் விடை கூறுவது நல்லதல்லவா? வரலாறு எழுதும் போது ஒரு வரலாற்றாசிரியன் இரு வகையான ஆதாரங்களை உபயோகிக்கின்றான். ஒன்று மூலாதாரங்கள். மற்றது துணை ஆதாரங்கள். இவ்விரு ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் ஒரு வரலாற்றாசிரியன் வரலாற்றை எழுதுகின்றான். மூலாதாரங்கள் என்ற பட்டியலில் புதைபொருள் ஆராய்ச்சிசான்றுகள், கல் வெட்டுச்சாதனங்கள், வெள்ளி, பித்தளைத்தகடுப்பட்டயங்கள், நாணயங்கள், வரலாற்றுக்குறிப்புக்கள், காலக் கோவைகள், தனிமனிதனின் வாழ்க்கை வரலாறுகள், இலக்கிய நூல்கள், யாத்திரிகரின் குறிப்புக்கள், என்பவையடங்கும். துணை

21 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஆதாரங்கள் என்று சொல்லும்போது காலத்துக்குக் காலம் இவைகளை வைத்து எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், நாடோடிக் கதைகளின் கோர்வைகள், இவைகளை குறிக்கிறோம். மேலும் ஒரு சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையும் அதன் சம்பிரதாயங்களையும் நுணுக்கமாக ஆராய்வதிலிருந்து அச்சமுதாயத்தின் வரலாற்றைப் பற்றிய உண்மைகளை நாம் அறியமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட மக்களின் உடல் வண்ணத்தை ஆராய்ச்சி செய்யும்போது சில வரலாற்றுண்மைகள் தெளிவாகின்றன. இந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் ஒருவாறு வரலாற்றை எழுத முனையலாம்.
இவ்வாதாரங்களை நாம் உபயோகிக்கும் போதும் இவைகளின் குறைபாடுகளையும் அவதானிக்க மறக்கக்கூடாது. புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்து கிடைக்கும் சான்றுகள் சில சமயங்களில் கருத்துவேறுபாடுகளுக்கும் காரணமாயிருக்கலாம். கருத்துவேறுபாடு இருக்கும் போது ஒரு தெளிவான தீர்க்கமான உண்மை வெளியாகாமலே இருக்கலாம். உதாரணமாக பொலன்னறுவையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிலையை ஒருசிலர் அகத்தியமுனிவர் என்றும் வேறு சிலர் மகா பராக்கிரமபாகு என்றும் கூறுகிறார்கள். இந்த கருத்து வேறுபாடு எவ்வளவு தூரம் வரலாற்றை மாற்றமுடியும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.
மூல ஆதாரங்களை நாம் உபயோகிக்கும் போது நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இவ்வாதாரங்களிலேயும் சில சமயம் பிழைகள் இருக்கக்கூடும். இவ்வாதாரங்கள்ை வரலாற்று பின்னணியில் வைத்து உரைத்து பார்த்தபிறகு தான் அவைகளின் தராதரத்தை எடைபோட வேண்டும். கல்வெட்டுச் சாஸனங்கள் எம்மை பிழையான வழியில் இட்டுச்செல்லக்கூடும். உதாரணமாக பொலன்னறுவையில் இருக்கும் சில கல்வெட்டுச் சாஸனங்களை ஊன்றி கவனிக்கும் போது அவைகளில் எழுதப்பட்டுள்ளது வெறும் பொய்யென்பது வெளியாகின்றது. நிஸ்ஸங்கமல்லன் என்ற

Page 23
முகம்மது சமீம் 22
அரசனுடைய கல்வெட்டுச் சாஸனங்களை ஆராயும் போது இந்த உண்மை புலப்படுகிறது. மகாபராக்கிமபாகுவின் சாதனைகளையெல்லாம் தன்னுடைய சாதனைகள் என்று எழுதிவைத்திருக்கின்றான் இவ்வரசன். எனவே இக்கல்வெட்டுச் சாஸனங்களில் இருப்பவையெல்லாம் உண்மையென்று நாம் கொள்ளமுடியாது. வருங்காலச் சந்ததியினர் தம்மைப் போற்றட்டும் என்ற எண்ணத்தினால் ஒரு சில பச்சோந்தியரசர்கள் இப்படி எழுதியிருக்கலாம். ஆகவே ஒரு வரலாற்றாசிரின் இவ்வகையான படுகுழிகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
மூல நூல்களில் எழுதப்பட்டிருப்பவைகளையும் நாம் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது நல்லது. இந்நூலை எழுதும் ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட அரசனை சரித்திரக் கதாபாத்திரமாகக் கொள்ளாது, கதாநாயகனாக்க முயலும் போது சில வரலாற்றுண்மைகள் மறைக்கப்படுகின்றன. இலங்கையின் பண்டைய வரலாற்றுக் கோவைகளில் ஒன்றான மகாவம்சம் என்ற நூலை எழுதப் புகுந்த மகாநாம என்ற ஆசிரியர், துட்ட காமினியைச் சரித்திர கதாநாயகனாக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மற்றைய அரசர்களுடைய பெருமைகளைக் குறைத்தும் சில சமயங்களில் மற்றைய அரசர்களுடைய சாதனைகளைத் தன்னுடைய கதாநாயகனின் சாதனைகளாகக் காட்டியும் வரலாற்றுருவத்தையே மாற்ற முனைந்திருக்கிறார். சதாதீசனுடைய சாதனைகளைத் துஷ்ட காமினியின் சாதனைகள் என்று சாதிக்கப் புகுந்த ஆசிரியர் இக்கருத்து கர்ணபரம்பரையாக வந்துள்ள வரலாற்றுக்கு முரணாக இருக்கிறதே என்ற காரணத்தினாலும் தனது முதல் நூலாகிய தீபவம்சையிலுள்ள கருத்துக்கு எதிராக இருக்கிறதே என்ற காரணத்தினாலும் தன்னுடைய குறிப்பில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். துஷ்ட காமினி, கட்டிய கட்டிடங்களைச் சதாதீசன் திரும்பவும் கட்டினான் என்றும், காமினி முடிக்காமல் சென்ற கட்டிடங்களை கட்டிமுடித்தான் என்றும்

23 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
எழுதியிருக்கிறார். இக்கூற்றில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதைப் பற்றி நான் இன்னும் விளக்க வேண்டியதவசியமில்லை.
பண்டைய வரலாற்று மூல நூல்களை ஆராயும் போது இன்னும் சில குறைப்பாடுகள் இருப்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். பண்டைய வரலாற்றுக் குறிப்புக்கள் விசேஷமாக இலங்கையில் மதகுருமார்களாலேயே எழுதப்பட்டன. இலங்கையின் வரலாற்றுக் கோவைகள் கூட பெளத்த பிக்குகளாலேயே எழுதப்பட்டன.
வரலாற்றுக் குறிப்புக்களில் சில சமயங்களில் சில உண்மைகள் பூதாகாரமாகக் காட்டப்பட்டுள்ளன. சிறு விஷயங்கள் மலையளவு பெரிதாகக் காட்டப்பட்டுள்ளன. இச் சாதாரண விஷயங்களை மிகைப்படுத்தி சரித்திரத்தின் முக்கிய சம்பவங்களாகவும் எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக, கடைசி கண்டி அரசனுடைய காலத்தில் ஆங்கிலப் பெரும்படை கண்டி இராச்சியத்தில் வதைத்துக் கொல்லப்பட்டது என்ற வரலாற்றுச்சம்பவத்தை நாம் முழுமையாக நம்பிவிடக்கூடாது. நடந்தது இதுதான். ஆங்கிலப்படை கண்டிராச்சியத்தை அடைந்து அதன் இராஜதானியாகிய கண்டியை கைப்பற்றிய பிறகு படைவீரர்களின் அனேகம் பேர் மலேரியா காய்ச்சலால் தாக்கப்பட்டமையாலும் வீரர்களுக்கு உண்பதற்கு போதிய உணவு போதாமையாலும் தளபதி டேவி, படையின் பெரும்பாகத்தை கொழும்புக்கு அனுப்பிவிட்டு, எஞ்சியுள்ளவர்களை கிழக்கிலுள்ள ஆங்கிலக் கோட்டைக்கு இட்டுச் சென்றார். போகும் வழியில் மகாவலிகங்கையைக் கடக்க வேண்டியிருந்ததாலும் அதில் வெள்ளப்பெருக்கு மிகுந்திருந்ததாலும் அதைக்கடக்க சில நாட்கள் சென்றன. அக்கரையைச் சேர்ந்த படைவீரர்கள் உதவி தேடிவரும்வரைக்கும் ஒரு சில வீரர்களுடன் காயமுற்றவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும், பார்த்துக் கொண்டிருந்தார். உதவி வருவதற்கிடையில் நோயினால் வாடிய

Page 24
முகம்மது சமீம் 24
வீரர்களையும், காயமுற்றவர்களையும் இவர்களைக் காத்துநின்ற அந்த சொற்ப வீரர்களையும் கண்டி அரசனின் படை வீரர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கி கொன்று குவித்தார்கள். இந்தச் சம்பவத்தைத்தான் பெரிதாக்கி ஆங்கிலப் பெரும்படை கண்டி இராச்சியத்தில் முறியடிக்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்தர்கள்.
கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு ஒரு காரணம் அவர்களுக்குத் தேவையாயிருந்தது. தங்களுக்கு வேண்டிய ஆதாரம் கிடைப்பதற்கு இச் சம்பவத்தை மிகைப்படுத்தியிருக்கலாம். வங்காளத்தை கைப்பற்றுவதற்கு எப்படி கல்கத்தாவின் கருப்பு அறை என்ற ஒரு ஆதாரமற்ற கதையைப் பரப்பினார்களோ அப்படியே இலங்கையிலும் அவர்கள் செய்திருக்கக்கூடும்.
அரசாங்க குறிப்புக்களை ஆராயும் போதும் ஒரு வரலாற்றாசிரியன் கவனமாயிருக்கவேண்டும். அரசாங்கப் பதிவுகளைக் குறிக்கும் பதிவாளர்கள் சில சமயங்களில் மிகைப்படுத்தி கூறுவதுண்டு. சில அரசாங்கங்கள் தங்கள் சாதனைகளையும் செய்திகளையும் பிற்சந்ததியினருக்கும் உலகத்தாருக்கும் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் சம்பவங்களை பெரிதாக்கி கூறுவதே தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கலாம். உதாரணமாக போர்த்துகீசியர்களின் அரசாங்கக் குறிப்புக்களில் மல்வானை உடன்படிக்கையைப் பற்றிய குறிப்பில் இலங்கை மக்கள் போர்த்துகீசிய மன்னரைத் தங்கள் மன்னராக ஏக மனதாக ஏற்றுக்கொண்டனர் என்றிருக்கிறது. அந்தக்காலத்தில் வாக்குரிமையிருக்கவில்லை. ஆகவே இலங்கை மக்கள் அத்தனை பேரும் ஒரே இடத்தில் கூடினார்கள் என்பதுதானே இதன் அர்த்தம். நவீன சாதனங்கள் இருக்கும் இந்தக் காலத்தில்கூட இது நடக்கமுடியாது என்றால் நானூறு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் யாராவது நம்புவார்களா? நடந்தது இதுதான். மல்வானையை

25 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
அடைந்த போர்த்துக்கீசிய தளபதி அஸ்விடோ அங்குள்ள கிராம அதிகாரிகளை அழைத்து அங்குள்ள மக்களைக்கூட்டச் சொன்னான். அவர்களும் கிராமத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் வயலில் வேலைசெய்து கொண்டிருந்தவர்களையும் அழைத்துக் கூட்டம் கூட்டினார்கள். இவர்களுக்கு விளங்காத போர்த்துக்கீசிய மொழியில் ஒரு பத்திரத்தை தளபதி வாசிக்க ஒருவர் மொழிபெயர்க்க பாமரமக்கள் விளங்கியோ விளங்காமலோ தலை அசைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும். இதைத்தான் இலங்கை மக்கள் போர்த்துக்கீசிய மன்னரைத் தங்கள் மன்னராக ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள் என்று நாம் போர்த்துக்கீசிய அரசாங்கக் குறிப்புக்களில் படிக்கிறோம். இதே போலத்தான் ஆங்கிலேயர் 1818ம் ஆண்டில் நடத்திய உடன்படிக்கையும் இருந்திருக்கும். இவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்மையெனக் கொண்டு நாம் வரலாறு எழுதப் புகுந்தால் எவ்வளவு தவறுகள் நேரும் என்பதை நான் விளக்கத் தேவையில்லை.
ஒரு வரலாற்றாசிரியன் குறிப்பிட்ட சில ஆதாரங்களில் அளவுக்கு மீறி சார்ந்திருந்தால் அவன் எழுதும் வரலாறு பாரபட்சமாக இருக்கும். அவ்வரலாற்றாசிரியன் தன்னையறியாமலேயே ஒரு தலைப்பட்சமாக எழுதத் தலைப்படுவான். உதாரணமாக ஆங்கில ஆட்சியின் கீழ் இலங்கை என்ற வரலாற்று நூலை எழுத முற்பட்ட டாக்டர் கொல்வின் ஆர்டிசில்வா ஆங்கில வரலாற்று ஆதாரங்களின் மேல் அதிகமாகச் சார்ந்திருந்தபடியால் அவருடைய நூலில் ஆங்கில ஆட்சியாளர்களின் கருத்து வாசனை அடிக்கிறது. ஆங்கிலேயர்களின் கருத்தை தெரிவித்தாரேயொழிய இலங்கை மக்களின் கருத்தைத் தெரிவிக்கத் தவறிவிட்டார். இதற்குக் காரணம் அவர் இலங்கை மக்களின் ஆதாரங்களை அறியாததே. இதற்கு நேர்மாறாக இருக்கிறார் டாக்டர் பரண வித்தாரன. அவர் இலங்கை ஆதாரங்களை மட்டுமே ஆராய்ந்ததால் அளவுக்கு மீறிய

Page 25
முகம்மது சமீம் 26
தேசிய உணர்ச்சி வரலாற்றையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு அவர் கருத்துக்களில் தென்படுகிறது. இலங்கையைப் பற்றிய வெளிநாட்டவரின் கருத்துக்களை ஆராயாவிட்டால் சில வரலாற்றுண்மைகள் மறைக்கப்பட ஏதுவாயிருக்கிறது. ஆகவே ஒரு வரலாற்றாசிரியன் ஒரு குறிப்பிட்ட ஆதாரங்களை மாத்திரம் ஆராயாமல் எல்லாவகையான ஆதாரங்களையும் ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுத உதவும் மூல ஆதாரங்களின் குறைபாடுகளை அறிந்தோம். இவைகளின் குறைகளை அறிந்தால்தான் வரலாற்றை எழுதும்போது அதில் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில் இவ்வாதாரங்களின் முக்கியத்துவத்தையும் நாம் குறைப்படுத்தக்கூடாது. இவ்வாதாரங்களை வைத்துக்கொண்டுதான் நாம் வரலாற்றை எழுத வேண்டியிருக்கிறது.

27 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
IV. a6GJdsat5-0 GJITLD ஆதாரங்களும் இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்பும்
ஒரு வரலாறு எழுத உதவும் மூல ஆதாரங்களையும் துணை ஆதாரங்களைப்பற்றியும் மேலே குறிப்பிட்டோம். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுத உதவும் மூல நூல்களையும் வரலாற்றுக் கோவைகளையும் வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களையும் ஏலவே ஆராய்ந்தோம். இலங்கை முல்லீம்கள் மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்ற கர்ணபரம்பரையான கதையை மனதில் வைத்துக்கொண்டு எமது ஆராய்ச்சியைத் தொடர்வோம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே முஸ்லிம்கள் மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து வந்து குடியேறினார்கள் என்றால், அப்பகுதி மக்களுக்கு இலங்கையைப் பற்றி எவ்வளவு தெரிந்திருந்தது என்ற அடுத்த கேள்வி எழுகின்றது. அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் வந்தார்கள் என்றால் அரபிய இலக்கியங்களில் இலங்கையைப் பற்றிய குறிப்புக்கள் இருக்கத்தானே வேண்டும். அரபிய இலக்கியங்களில் இலங்கையைப் பற்றிய குறிப்புக்களை ஆராய்வதே இவ்வத்தியாயத்தின் நோக்கம். இக்குறிப்புக்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று ஆராய முற்படும்போது ஒரு கேள்வி எழுகிறது. அரபியர்களுக்கு முன்பே, மத்தியதரைக்கடல் பகுதிகளிலுள்ள வேறு யாருக்காவது இலங்கையைப் பற்றி தெரிந்திருந்ததா? அப்படியே வேறு யாருக்காவது தெரிந்திருந்திருந்தால் அவர்களிடமிருந்து அரபியர்கள் எவ்வளவு செய்திகளைக் கடன் வாங்கினார்கள் என்ற

Page 26
முகம்மது சமீம் 28
கேள்விக்கும் நாம் விடை காண்பதவசியம். ஆகவே அரபியர்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றித் தெரிந்திருந்த மக்கள் யார் என்பதை முதலில் ஆராய்வோம்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதிகளில் தோன்றிய பபிலோனிய, ஆசீரிய, எகிப்திய நாகரிகங்கள், வெளிநாட்டுத்தொடர்பு கொள்ளாமல் காலகதியில் காலாவதியாகி மறைந்தன. வரலாற்றுடன் தொடர்புகொண்ட முதல் நாகரிகங்களுள் கிரேக்கநாகரிகமும் ஒன்று. இக்கிரேக்கமக்கள் இலங்கையை ‘தப்ரோபேன்’ என்ற பெயரிலேயே வழங்கி வந்தார்கள். மகாவம்சத்திலிருக்கும் தம்பன்னி' என்ற பெயரே இப்படி தப்ரோபேன்’ என்று கிரேக்கமக்களிடம் பரவியிருக்கலாம். சமஸ்கிருத மொழியின் “தாம்ரபர்ணி” என்ற வார்த்தையே பாளி மொழியில் 'தம்பபன்னி' என்று திரிந்திருக்கலாம் என நாம் கருத இடமிருக்கிறது. தாம்ரபர்னி என்ற வார்த்தை தாமரைத்தடாகம் என்ற பொருளைக் கொடுக்கிறது. இலங்கையில் இருந்த ஏரிகளையும், குளங்களையும் இது குறிக்கிறது என்று நாம் கொள்ளலாம். தெப்ரோபேன் என்ற பெயர் கைவிடப்பட்டு, சிமுண்டு, பளை-சிமண்டு, சளிக்கே, போன்ற பெயர்கள் கிரேக்க மக்களிடம் வழங்கப்பட்டு வந்தன என்பதற்கு ஆதாரமாக கிரேக்க நிலநூல் ஆசிரியரான 'தொலமி எழுதிய “பெரிப்ளள்' என்ற நூலிலிருந்து நாம் அறியலாம். குஹரக்ளியாவின் மார்ஷியானள் என்ற இன்னொரு ஆசிரியர் இலங்கையை'பளை சிமுண்டு என்று குறிப்பிடுகிறார். இது சமஸ்கிருத மொழியின் பாளி-சிமந்த்த'என்ற வார்த்தையின் திரிபாயிருக்கலாம் என்று லாசன் என்ற வரலாற்றாசிரியர் கருதுகிறார். இலங்கை பெளத்த சமயத்தின் இருப்பிடம் என்பதைக் குறிக்க பாளி-சிமந்த்த-புனிதமான சட்டத்தின் தலைப்பீடம்-என்று சமஸ்கிருத மொழியாளர்கள் குறிப்பிட்டிருக்கலாம். சிங்ஹள-அல்லது சிங்கங்கள் வசிக்கும் நாடு - என்ற வார்த்தைகளே சளிக்கே என்று மருவி கிரேக்க மக்களிடம் பரவியிருக்கலாம்.ழரீலங்கா என்ற பெயரே இப்படி திரிந்திருக்கலாம்

20 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
என்று பர்னொஃப் என்ற வரலாற்றாசிரியர் கருதுகிறார். சிங்ஹள வார்த்தையுடன்த்வீப அல்லது தீவு - என்ற அடைமொழி சேர்ந்து சிங்ஹளத்வீப, அல்லது சிங்கஹளதீவு - என்ற பெயர் பெற்று, 'செரன்ந்தீவு -என்று மாறி, செரன்திப் என்று அராபிய மக்களிடம் வழங்கப்பட்டு வந்தது. இந்த வார்த்தை போர்த்துக்கீசியரால் செய்லான்’ என்று மாற்றப்பட்டு ஒல்லாந்தரால் சிலான்’ என்று திருத்தப்பட்டு ஆங்கிலேயரின் கையில் 'சிலோன்’ என்று உருவெடுத்தது.
அலக்சாந்தரின் படையெடுப்புக்குப்பிறகே, கிரேக்க மக்கள் இந்தியாவைப் பற்றியும் இலங்கையைப் பற்றியும் அறிய நேர்ந்தது. அலக்சாந்தரின் சகாக்களான 'ஓனெசிகிறீட்டஸ், மெகஸ்தினிஸ் ஆகியவர்களின் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டே கிரேக்க உரோம ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களைப்பொறித்து வைத்தார்கள். இலங்கையைப் பற்றி இவர்களுக்குத் தெரிந்திருந்தவை மிகவும் சொற்பமானவை, என்பது இவர்கள் நூல்களிலிருந்தே அறியக்கிடக்கின்றது. செங்கடலிலிருந்த வர்த்தகத்தை பாரசீக குடாக்கடலுக்கு திருப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் அலக்சாந்தர், ஒனெசிகிறீட்டஸ், நியார்க்கஸ் என்பவர்களை சிந்து பிரதேசத்திலிருந்து யூப்ரடிஸ் நதிக்கரை வரைக்கும் கடல்மார்க்கமாக செல்லக்கூடிய பாதையை ஆராயும்படி அனுப்பிவைத்தார். இந்தப் பயணத்தின் மூலம் கிடைத்த குறிப்புக்களைத் தான் இவர்கள் கிரேக்க ஆசிரியர்களுக்குக் கொடுத்தார்கள்.
வரலாற்றின் ஆரம்பகாலத்திலிருந்த பீனிஷியர்கள் செங்கடலுக்கும் இந்தியாவுக்குமிடையே வர்த்தகதொடர்பை ஏற்படுத்தினார்கள் என்றும் 'தொலமி'அரச பரம்பரை காலத்தில் எகிப்து இவ்வர்த்தகத்தின் இருதய பீடமாக அமைந்தது என்றும் இவ்வர்த்தகத்தைத் தான் அலக்சாந்தர் பாரசீகக் குடாக்கடலுக்கு திருப்ப முயன்றார் என்றும் ஆங்காங்கே வரலாற்றுக்குறிப்புக்கள்

Page 27
முகம்மது சமீம் 30
இருக்கின்றன. இந்த காரணத்திற்காகத் தான் அலக்சாந்தர் பெரனீஸ், அலெக்சாந்திரியா ஆகிய நகரங்களைக் கட்டுவித்தார் என்றும் இருக்கிறது.
ஒனெசிகிறீட்டஸ் போன்றவர்களின் மூலம் கிடைத்த விபரங்களைத் தவிர வேறு தகவல்கள் கிரேக்க ஆசிரியர்களுக்குக் கிடைக்க வில்லை. கிறிஸ்து சகாப்தம் தொடங்கிய பிறகு தான், இலங்கையைப்பற்றிய அறிவு மேல் நாட்டவரிடையே பரவத்தொடங்கியது. ஆகஸ்டஸ் சீசர் எகிப்தை கைப்பற்றிய பிறகு தான் இந்தியாவுடன் இருந்த வர்த்தகத் தொடர்பு அதிகரித்தது. ரோமாபுரியின் படாடோப வாழ்வுக்கு இந்தியாவின் பொருட்கள் தேவைப்பட்டன. இப்பொருட்களை பெறுவதற்கு ஹிப்பேலஸ் என்பவன் கடல்மார்க்கமாக இந்தியாவை அடைந்தான். இந்தியாவின் மேற்கு கரையோரப்பகுதியிலுள்ள முசிரிஸ் - இன்று இது மங்களூர் என்றழைக்கப்படுகின்றது - என்ற இடத்தில் தான் வந்திறங்கினான். ஹிப்பேலஸின் இந்த தீரச் செயலுக்குப் பிறகு இந்தியாவுடன் வர்த்தகம் இன்னும் அதிகரித்தது. இவரிடம் இருந்து கிடைத்த சில குறிப்புக்களை வைத்துக்கொண்டு தான் பிளினி, என்பவர் தனது நூலில் இலங்கையைப்பற்றியும் இந்தியாவைப்பற்றியும் எழுதிவைத்தார்.
பிளினியினுடைய காலத்திற்றான் (கி.பி.72) இலங்கையிலிருந்து ரோமாபுரிக்கு ஒரு தூது கோஷ்டி வந்ததாக அறிகிறோம். இந்த தூது கோஷ்டியின் மூலம் தான் பிளினி தெப்ரபேனை (இலங்கை)ப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும். பிளினியின் நடையில் மயக்கம் இருப்பதால் அவருடைய விளக்கங்களிலிருந்து எதையும் பெற முடியாத நிலையிலிருக்கிறோம்.
அன்னியஸ் ப்ளொகாமஸ் என்பவன் இலங்கைக்கு விஜயம் செய்த காரணத்தினாற்றான் இலங்கையிலிருந்து ரோமாபுரிக்கு ஒரு தூது கோஷ்டி வர நேர்ந்தது என்று பிளினி குறிப்பிடுகிறார்.

31 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
செங்கடலோடு ஒட்டியிருக்கும் அரேபியக் கிராமங்களில் வரிசூலிக்க வந்த ப்ளொகாமஸ், புயலில் சிக்கி இலங்கை வந்தடைந்தான் 6T60 அறிகிறோம். ப்ளொகாமசை நன்கு உபசரித்து வரவேற்று அவனிடமிருந்த தங்க நாணயங்களைக் கண்டு அதிசயித்த இலங்கை அரசன், ராச்சியா' என்ற தலைவனின் கீழ் ஒரு தூதுக் கோஷ்டியை அனுப்பியதாக பிளினி கூறுகிறார் ஆராச்சி என்ற சிங்கள வார்த்தையையே தப்பாக விளங்கி, ராச்சியா என்று பிளினி குறிப்பிட்டிருக்க வேண்டும். ப்ளொகாமஸ், ஹிப்புறோஸ் என்ற இடத்தில் வந்திறங்கியதாக பிளினி குறிப்பிடுகிறார். கிரேக்க மொழியில் ஹிப்பொஸ் என்பது குதிரையையும் ஒறோஸ் என்பது மலையையும் குறிக்கும். குதிரைமலை என்ற பெயரின் நேரடியான மொழி பெயர்ப்பே 'ஹிப்புறோஸ்' என்ற வார்த்தை. ஆகவே மன்னாருக்கு அருகிலுள்ள குதிரை மலையைத்தான் பிளினி ஹீப்புறோஸ் என்று குறிப்பிடுகிறார் என்று கருத இடமிருக்கிறது. பிளினியினுடைய குறிப்புக்களில் மன்னாரைப்பற்றியும் அதன்சுற்று வட்டாரங்களைப் பற்றியும் உள்ள குறிப்புக்கள் பெரும்பாலும் உண்மையோடு ஒட்டிச் செல்கின்றன. இலங்கையைப்பற்றிய மற்றக் குறிப்புக்களில் பிழைகள் அதிகமாக இருக்கின்றன.
பிளினிக்குப் பிறகு வாழ்ந்த தொளமியின் - கி.பி.139 - குறிப்புக்களில் முன்னைய பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால் இந்த இடைக்காலப் பகுதியில் உரோமாபுரிக்கும் இலங்கைக்குமிடையேயிருந்த வர்த்தகத்தொடர்பு அதிகரித்திருக்க வேண்டும். தொளமியின் நூலை பிளினியின் நூலுடன் ஒப்பிடும்போது, தொளமியின் காலத்தில் ரோமர்கள் இந்தியாவைப்பற்றியும் இலங்கையைப் பற்றியும் அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். தொளமியின் நூலிலிலுள்ள கிழக்கு நாடுகளைப் பற்றிய குறிப்புக்களை ஆராயும்போது அவர் இவ்விபரங்களை இந்நாடுகளுடன் வர்த்தகம் செய்து வந்த எகிப்திய அரபிய வர்த்தகர்களிடமிருந்து பெற்றார் என்பது தெளிவாகிறது.

Page 28
முகம்மது சமீம் 32
தொளமியின் நிலப்படத்தையே மாலுமிகள் வெகுகாலமாகப் பாவித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் நாட்டவரின் கப்பல் பிரயாணத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டதும் இந்த இடைக்காலத்தில்தான். இதுவரையில் மேற்குநாட்டவர் தங்கள் கடல் பிரயாணங்களைக் கரையோரங்கள் மூலமாகவே நடத்தி வந்தனர். கடலில் தெரியும் பாம்புகளையும் பறவைகளையும் திசைக்கருவிகளாக்கொண்டே அவர்கள் கடல் பிரயாணங்களை நடத்தி வந்தார்கள். ஹிப்பேலஸ் இலங்கைக்கு வந்துபோன பிறகுதான் பருவக்காற்றின் உதவியைக் கொண்டு கடற்பிரயாணம் செய்யலாம் என்பதை மேற்கு நாட்டவர் அறிந்தனர். ஆனால் இந்தப் பருவக்காற்றின் உபயோகத்தை அராபியர்களும் பாரசீகர்களும் ஏற்னெவே தெரிந்திருந்ததுதான் விசேஷம். 'மன்சூன்ஸ்' என்ற பருவக்காற்றின் ஆங்கிலப் பதமே அரபிய மொழியிலிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மெளஸ்-எம்-எ-பிஹொர் என்பது அரபுமொழியில் நாள்நிலையில் ஏற்படும் மாறுதல் என்று அர்த்தம். ஆகவே பருவக்காற்றின் உதவியைக் கொண்டு இந்து சமுத்திரத்தில் வர்த்தகம் செய்து வந்தவர்கள் அரபியர்களும், பாரசீகர்களும் என்பது பெறப்படுகிறது.
வேறு சில ரோம ஆசிரியர்களும் இலங்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏலியன் (கி.பி.260) என்பவர் இலங்கை ஒரு பெரிய தீவு என்று வர்ணித்திருக்கிறார். இவருடைய விளக்கங்களை வாசிக்கும்போது இவர் மெகஸ்தீனிஸ் மூலம் கிடைத்த ஆதாரங்களை வைத்துக் கொண்டே எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அகத்தமேருஸ் (கி.பி.272) என்பவர் இலங்கையை, ‘சிமுண்டு என்று பெயர் பெற்ற இந்தத் தீவு இப்பொழுது சளிக்கே என்று வழங்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். இவருடைய நூலில் இலங்கையர்களைப் பற்றிய ஒரு முக்கிய குறிப்பைக் காண்கிறோம். இலங்கையில் வாழ்பவர்கள் தங்கள் தலைமுடியைச் சேர்த்து ஒரு முடிச்சு போட்டிருப்பார்கள்.

33 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
என்று குறிப்பிடுகிறார். இந்தக்குறிப்பு எவ்வளவு உண்மை வாய்ந்தது என்பதை இலங்கை மக்களைத் தெரிந்தவர்கள் அறிவார்கள்.
யூஸ்டேதியஸ் என்ற பாதிரி ஒருவர் இலங்கை மக்களின் ஒழுக்கமற்ற வாழ்க்கையை சைப்றஸ் மக்களுக்கு ஒப்பிடுகிறார். பின்னால் வந்த அரபிய ஆசிரியர்களுள் ஒருவரான அபூ செயித் என்பவரும் இதே கருத்தைத்தான் தெரிவிக்கிறார். இன்னும் சில ஆசிரியர்களும் இலங்கையைப் பற்றி எழுதத்தான் செய்திருக்கிறார்கள். இவர்களிலெல்லாம் முக்கியமானவர் கொஸ்மாஸ் இன்டிகோ புளுய்ஸ்டஸ் என்பவரே. இவர் சக்கரவர்த்தி ஜஸ்டினியன் (கி.பி.535) காலத்தில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த ஒரு வணிகர். இந்தியாவுடன் வர்த்தகம் செய்த காரணத்தினாற்றான் இவருக்கு இன்டிகோ புளுய்ஸ்டாஸ் - 'இந்தியக் கப்பலோட்டி' என்ற காரணப்பெயர் வந்தது. அவர் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பதற்கு அவருடைய குறிப்புக்களே சான்று பகரும். அவருடைய குறிப்புக்களில் சிலவற்றைக் கவனிப்போம் :-
“தெப்ரபேன் என்பது இந்திய சமுத்திரத்திலுள்ள ஒரு பெரிய தீவு. இந்தியர்கள் இதை சீலதீப என்றழைக்கிறார்கள். செம்மணிக் கல்வகை இங்கு ஏராளமாகக் கிடைக்கும். இத்தீவை இரண்டு அரசர்கள் ஆண்டு வருகிறார்கள். இவர்களிடையே அடிக்கடி யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். செம்மணிக்கற்கள் விளையும் நாட்டை ஒரு அரசனும், ஏனைய பகுதியை மற்ற அரசனும் ஆண்டு வருகிறார்கள். பின்னால் குறிப்பிட்ட அரசனுடைய நாட்டில் பல நாடுகளிலிருந்தும் வர்த்தகர்கள் வந்து வியாபாரம் செய்கிறார்கள். பாரசீகத்திலிருந்து வரும் வர்த்தகர்களுக்கு இங்கு ஒரு கிறிஸ்தவ கோயிலும் இருக்கிறது. இக்கிறிஸ்தவர்களுக்கு உதவியாக பாரசீகத்திலிருந்து ஒரு மதத்தலைவரும் வந்திருக்கிறார். உள்நாட்டுவாசிகள் உண்மை மதத்தில் நம்பிக்கையில்லாதவர்கள். இவர்களுக்கும் கோயில்கள்

Page 29
முகம்மது சமீம் 34
இருக்கின்றன. செலதீபாவுக்கு, இந்தியா பாரசீகம், எத்தியோப்பியா ஆகிய இடங்களிலிருந்து வர்த்தகர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். கொஸ்மாஸ் குறிப்பிட்ட இந்தக் காலப் பகுதியில் பாரசீகர்களுக்கும் அரபியர்களுக்கும் இலங்கையில் அறுநூறுக்கு மேற்பட்ட கப்பல்கள் இருந்தனவாம். பாரசீகத்திலிருந்து இலங்கை அரசர்கள் குதிரைகள் இறக்குமதி செய்தனர் என கொஸ்மாஸின் நூலிலிருந்து அறிகிறோம்.
கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையே இருந்த வர்த்தகம் அதிகரித்த காரணத்தாலும் சீனாவுக்கும் அரபியாவுக்குமிடையே இலங்கை ஒரு கேந்திர ஸ்தானமாக இருந்த காரணத்தினாலும் இவ்வர்த்தகத்தின் மையமாக அமைந்தது இலங்கை, ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகராகக் கொன்ஸ்தான்தினோப்பிள் இருந்த காலத்தில் இந்தியாவுடன் இருந்த வர்த்தகத் தொடர்பு நில மார்க்கமாகவும் வளரத்தொடங்கியது. இவ்வர்த்தகப்பாதை பாரசீகத்தின் ஊடாகச் சென்ற காரணத்தினால் பாரசீகர்களுக்கும் அரபியர்களுக்குமிடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இவ்வர்த்தகத்தைச் செங்கடலிலிருந்து பாரசீகக்குடாக்கடலுக்குத் திருப்பமுயற்சித்தனர் பாரசீகர்கள். ரோம சாம்ராஜ்யம் உச்ச ஸ்தானத்தில் இருந்த காலத்தில், ரோமாபுரி கப்பல்கள் அரபிய துறைமுகங்களுக்கு வந்து, கிழக்கு நாடுகளிலிருந்து வந்த அரபிய கப்பல்களிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். ரோம வர்த்தகர்கள் தாங்களாகவே கிழக்கு நாடுகளுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பொருட்களை அரபியர்கள் தான் மத்திய தரைக்கடல் நாடுகளுக்குக் கொண்டுவந்தனர். முசிறிஸ் (மங்களூர்), நெல்கிந்தா (நெலிசேரம்), கூலாம் (குவைலோன்), கள்ளிக்கோட்டை ஆகிய இந்தியத் துறைமுகங்கள் அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தன.
 

35 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஆதிகாலந்தொட்டே சிங்களவர் கடற்பிரயாணத்தை விரும்பவில்லை. கடற்பிரயாணத்திலிருந்த வெறுப்பின் காரணமாக அவர்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை. ஆகவே, பண்டைய இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் அந்நியரின் கையிலேயே இருந்தது வந்தது. மலையாளத்தை சேர்ந்த ஒரு சில இந்தியர்களும் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும் இவ்வர்த்தகம் பெரும்பாலும் அரபியர்களின் கையிலும் பாரசீகர்களிடமுமே இருந்து வந்தது. இவ்வர்த்தகம் காரணமாக இவர்களில் ஒரு சிலர் இப்பிரதேசங்களில் தங்கவும், பிறகு இவ்விடங்களையே தாயகமாகக்கொள்ளவும் தலைப்பட்டனர். இதைப்பின்னர் விரிவாக ஆராய்வோம்.
கொஸ்மாஸ் தன் நூலை எழுதிய காலத்தில் உலக வரலாற்றையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. அரபியாவில் நபிகள் நாயகம் ஸல், அவர்கள் அவதரித்தார்கள். நாயகத்தின் தோற்றத்திற்குப் பிறகு அரபிய மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் வரலாற்றிலேயே ஒரு புது திருப்பம் ஏற்படுகிறது. எட்டுத்திக்குகளிலும் அரபியர்களின் கொடி பறக்கத் தொடங்கியது. கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையே இருந்த வர்த்தகம் அவர்களின் ஏகபோகச் சொத்தாக மாறியது. அரபியர்களுக்கும் இலங்கைக்குமிடையே இருந்த வர்த்தகத் தொடர்பும் அதிகரித்தது.
ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு அன்றைய உலகத்தின் பெரும்பாகத்தைத் தன்னுள்ளடக்கி, மகோன்னத நிலையிலிருந்த அரபிய சாம்ராஜ்யத்தில், வெளிநாட்டு வர்த்தகம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. இவ்வர்த்தகத்தின் வளர்ச்சியையும் இலங்கையுடன் ஏற்பட்ட தொடர்பையும் இனிவரும் அத்தியாயங்களில் ஆராய்வோம்

Page 30
முகம்மது சமீம் − 36
V இலங்கையைப் பற்றிக் கூறும் அரபிய இலக்கியங்கள்
அரபியர்களுக்கு முன்பே கிரேக்கர்களும் உரோமர்களும் இலங்கையைப் பற்றி அறிந்திருந்தனர். இஸ்லாம் தோன்றுவதற்கு முன் இவ்வின மக்களின் சாம்ராஜ்யங்கள் தான் அன்றைய மத்திய தரைக்கடல் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அன்றைய நாகரிக வாழ்வும் இவர்களால் பாதிக்கப்பட்டது என்றால் மிகையாகாது. இருந்தாலும் கிழக்கு நாடுகளுடன் இவர்களுக்கு நேரடியாக வர்த்தகத்தொடர்பு இருக்கவில்லை. ஒரு சில கிரேக்க உரோம வர்த்தகர்கள் கிழக்கு நாடுகளுக்கு வரத்தான் செய்தார்கள். ஆனால் கிழக்கு நாடுகளுக்கும் மத்தியதரைக்கடல் பகுதிகளுக்குமிடையே இருந்த வர்த்தகத்தைப் பாரசீகர்களும் அரபியர்களும் தான் நடத்தி வந்தார்கள் என்பது சரித்திர உண்மை. இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அரபியர்கள் ஒருவித “குல” வாழ்க்கையையே நடத்தி வந்தனர். கரையோரங்களில், வாழ்ந்த ஒரு சில அரபியர்கள் தான் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டனர். ஆனால் பாரசீகர்களைப்பொறுத்த வரையில் கிரேக்கர்களுக்கு முன்பே நாகரிகமடைந்திருந்த பாரசீகர்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு அவர்கள் சக்கரவர்த்திகள் கிரேக்கர்களுடன் செய்த யுத்தங்களில் உபயோகித்த கப்பல்களின் தொகையே போதுமான சான்று. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பு இவ்வர்த்தகம் பாரசீகர்களின் கையிலேயே இருந்தது என்பதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன. இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பிறகு தான் இவ்வர்க்கத்தில் அரபியர்கள் முழு மூச்சுடன் ஈடுபடுகின்றனர். இஸ்லாமிய நாகரிகம் பல துறைகளிலும் வளர்ந்தது. குறிப்பாக அராபிய இலக்கியம் வளம் பெறத்தொடங்கியது வெளிநாடுகளைப் பற்றிய தகவல்களை

37 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
அராபிய நூலாசிரியர்கள் எழுதிவைத்தார்கள். இவர்களின் இலக்கியங்களில் இலங்கையைப்பற்றிய குறிப்புக்கள் எவ்வளவு இருக்கின்றன என்றறிய வேண்டியதவசியமாகிறது.
பாரசீகர்களும் அரபியர்களும் இலங்கையைப் பற்றிக் குறிப்பிட்டபோதெல்லாம் இலங்கையின் இரத்தினக் கற்களைப் பற்றியும் முத்துக்குளிப்பைப் பற்றியுமே அதிகமாகக் குறிப்பிட்டார்கள். பாலைவனத்தின் வறட்சியையும், சூரிய கிரணத்தின் வெப்பத்தையும் மட்டுமே அறிந்திருந்த அரபியர்களுக்கு இலங்கையின் இயற்கைக் காட்சிகளும் தென்றற் காற்றும் இன்ப உணர்ச்சியை ஏற்படுத்தின. ஆகவே இரத்தினக் கற்களையும் முத்துக்களையும் விட இலங்கையின் இயற்கை வளம் அவர்களைப் பெருமளவாகக் கவர்ந்தது. இலங்கையைப் பற்றிய கதைகளும் அவர்களிடம் ஏராளமாகப் பரவியிருந்தன.
மனித சமுதாயத்தின் ஆதிபிதாவாகிய ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்தினின்றும் நீக்கப்பட்டபோது இயற்கை வளம் பொருந்திய இலங்கையில்தான் புகலிடம் தேடினார்கள் என்ற கதை அரபியர்களிடமும் பாரசீகர்களிடமும் பரவியிருந்தது. வஸ்ஸாப் என்ற பாரசீகக் கவிஞர், ஆண்டவன், ஆதம் (அலை) அவர்களை சுவர்க்கத்தினின்றும் நீக்கியபோது இலங்கைக்கு ஏன் அனுப்பினான் என்பதற்குக் காரணம் கூறுகிறார். சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவித்த ஆதம் (அலை) ஒரு கஷ்டமான பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டால் இறந்து விடுவாரோ என்ற பயத்தினாற்றான் அவரை இலங்கைக்கு அனுப்பினான் என்கிறார்.
உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் (அலை) ஆண்டவனால் சுவர்க்கத்தினின்றும் நீக்கப்பட்ட கதை அரபியர்களிடையே பல உருவத்தைப் பெற்றிருந்தது. அரபியர்களிடையே ஆதம் (அலை) இலங்கைக்கும் ஹவ்வா (அலை) ஜித்தாவுக்கும் தூக்கி எறியப்பட்டார்கள் என்பதும் இருநூறு

Page 31
முகம்மது சமீம் 38
வருடங்களின் பிரிவுக்குப் பிறகு இவர்கள் ஜிப்ரீலின் (அலை) உதவியால் அரஃபாத் மலையில் சந்தித்தார்கள் என்பதும், பிறகு ஆதம் (அலை) இலங்கைக்குத் திரும்பி வந்தார்கள் என்பதுமேயாகும். வேறு சிலரின் அபிப்பிராயப்படி இலங்கைக்குத் தூக்கி எறியப்பட்ட ஆதம் (அலை) அங்குள்ள ஒரு மலையின் சிகரத்தில் பல வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று வணக்கம் செய்தார்களாம். இன்னும் சிலரின் கூற்றுப்படி, சைத்தான் முல்தானுக்கும், ஆதம் (அலை) இலங்கைக்கும், ஹவ்வா ஜித்தாவுக்கும் அனுப்பப்பட்டனர்.
ஆதம் (அலை) இலங்கைக்குத்தான் அனுப்பப்பட்டார்கள் என்ற கதையின் மூலம் அரபியர்களிடம் தோன்றியதா அல்லது கிறிஸ்தவர்களிடம் தோன்றியதா என்று முடிவாகக் கூற முடியாவிட்டாலும் இக்கதை பற்றிய குறிப்பு முதன் முதலாக அலக்ஸாந்திரியாவில் கி.பி. 864ம் ஆண்டில் வாழ்ந்த யூட்டிஷியஸ் என்ற கிறிஸ்தவ மதத்தலைவரால் எழுதப்பட்டது என்பது ஒரு சிலரின் முடிவான கருத்து.
பிற்காலத்தில் இலங்கைக்கு வந்த யாத்திரீகர்களும் எழுத்தாளர்களும், கர்ண பரம்பரையாக வந்த இக்கதையை ஏற்றுக்கொண்டு இலங்கையின் மிக உயர்ந்த மலையை பாவா ஆதமலை’ என்று குறிப்பிட்டார்கள். இம்மலை இன்று சிவனொளிபாதமலை, பூரீபாத, ஆதம்லை என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டிருக்கிறது. இலங்கையின் சாரல்களில் இருக்கும் இரத்தினக்கற்கள் ஆதம் (அலை) அவர்கள் விட்ட கண்ணீரினால் உருவாகினதென்றும் அவர் விட்ட மூச்சுதான் கறுவாவின் வாசனையாக மாறியதென்றும் ஒரு சில யாத்ரீகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இலங்கையைப் பற்றிய இனிய கதைகளின் மூல ஆசிரியர்கள் அரபியர்களும், பாரசீகர்களும் தான் என்பதை இவர்களின் இலக்கியங்களிலிருந்து நாம் அறிய முடிகிறது.

39 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இலங்கையைப் பற்றிக் கூறும் அரபிய இலக்கிய நூல்களின் பட்டியலைக் கொடுப்பதை விட ஒரு வரலாற்றுச் சம்பவத்தை இவ்விலக்கிய நூல்கள் எப்படிக் கூறுகின்றன என்று ஆராய்வதிலிருந்து இவைகளின் தராதரங்களை நாம் கணிக்க முடியும். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி போன்றவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அரபிய இலக்கிய நூல்கள் பலவாறாகக் கூறுகின்றன.
அச்சம்பவத்தின் சாராம்சம் இது தான் - 8ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஈராக்கின் தேசாதிபதியாகிய ஹஜ்ஜாஜ் என்பவருக்கு இலங்கை அரசன் பரிசாக இலங்கையின் பொருள்களை ஒரு கப்பலில் அனுப்பினான். அத்துடன் இலங்கையின் அனாதைகளாக விடப்பட்ட முஸ்லிம் பெண்களையும் தங்கள்நாடாகிய அராபியாவுக்கு அனுப்பிவைத்தான் என்றும் இந்திய கடற் கொள்ளைக்காரன் ஒருவன் இவர்களை வழியில் தாக்கிச் கைப்பு றிச் சென்றான் என்றும் அறிகிறோம். அப்போது இப்பெண்களில் ஒருவர்'ஓ'ஹஜ்ஜாஜ் எங்களைக் காப்பாற்று என்று கதறியதாகவும், இதைக் கேள்விப்பட்ட ஈராக் தேசாதிபதி ஹஜ்ஜாஜ், முகம்மது பின்காசீம் என்ற தளபதியின் தலைமையில் இக்கொள்ளைக்காரனின் வாசஸ்தலமாகிய சிந்துப்பிரதேசத்தைக் கைப்பர் றுவதற்கு ஒரு பெரும் படையை அனுப்பிவைத்தார் என்றும் சிந்துவெளிப்பிரதேசம் அராபியரின் ஆட்சிக்கு வருவதற்கு இந்தச் சம்பவம்தான் காரணம் என்றும் ஒருசில வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பிலாதுாரி என்ற பாரசீக வரலாற்றாசிரியர் இச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். இரண்டாவது தளுபியதிஸ்ஸ என்ற அரசன் தான், இம் முஸ்லிம் பெண்களை அனுப்பிவைத்தான் என்றும் இவர்கள் தெயல் என்ற ஊரைச் சேர்ந்த மதுஸ் என்ற கடற் கொள்ளைக்காரர்களால் கைப்பற்றப்பட்டனர் என்றும் பாறபு என்ற வம்சத்தைச் சேர்ந்த ஒரு

Page 32
முகம்மது சமீம் 40
பெண்தான் ஓ ஹஜ்ஜாஜ் என்று கதறியதாகவும், தாஹிர் என்ற தேசத்தின் அரசன்தான் இவர்களைச் சிறை வைத்தான் என்றும் பிலாதுாரியின் நூலிலிருந்து நாம் அறிகிறோம். இதே சம்பவத்தைக் குறிப்பிடப் புகுந்த துஷ்றபத்துல்-கிரான் என்ற நூல் இச்சம்பவம் அப்துல் மாலிக் என்ற கலீபாவின் காலத்திற்றான் நடந்தது என்கிறது.
தரீக் - பிரிஷ்டா என்ற நூலிலிருந்து இச்சம்பவத்தைப் பற்றிய விரிவான கருத்தை அறிகிறோம். இந்நூலில் ஆதம் (அலை) அவர்களுக்குப்பிறகு மக்காவுக்கும் இலங்கைக்கும் அதிக தொடர்பு இருந்தது எனவும் சரந்தீப் அரசன் இஸ்லாத்தைத் தழுவியதனால் உமய்யா கலீப்ாவான வாலித் என்பவருக்குத் திரவியங்களும் அடிமைகளும் காணிக்கையாக அனுப்பியதாகவும் தாஹிர் என்ற தேசத்து அரசனின் கூட்டத்தாராகிய லோமாக்கர்கள் இக்கப்பலைத் தாக்கி இதிலிருந்த முஸ்லிம் பெண்களைக் கட்த்திச் சென்றனர் எனவும் இப்பெண்களை மீட்பதற்காகவே ஹஜ்ஜாஜ் ஒரு பெரும் படையை சிந்து வெளிப் பிரதேசத்திற்கு அனுப்பினார் எனவும் அறிகிறோம்.
இதே சம்பவத்தை ஃபத்தே நாமா' என்ற நூலும் கூறுகிறது. இந்நூலுக்குசச் நாமா' என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. இதில் கடற்கொள்ளைக்காரர்களை நிக்கமாராஹ் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதே சம்பவத்தைக் கூறப்புகுந்த ஃபத்ஹ9ல் புல்தான் என்ற நூலின் ஆசிரியர், இலங்கையை "ஜஸிறத்துல் யாக்கூல்’ (இரதினத்தீவு) என்றும், இதன் அரசனின் பெயர் முகம்மது பின் ஹரூன் அல் நுமாரி என்றும் குறிப்பிடுகிறார்.
இந்நூல்களில் கருந்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஓர் உண்மையை மட்டும் மறுக்க முடியாது. விரிவான உரைகளில் ஒருசில மாற்றங்கள் இருந்தாலும் இந்நூல்கள் இச்சம்பவத்தை அப்படியே கூறுகின்றன என்ற உண்மை இவைகளை வாசிக்கும்போது எமக்குப்படுகிறது.

41 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
'கித்தாபுல்'அஜாபிஹ9 என்ற நூலில் இலங்கையைப் பற்றிப் பின்வரும் குறிப்பைக் காண்கிறோம்.
“சரந்தீப் என்ற தீவில் வாழும் பைக்கூர் என்ற மக்கள் முஸ்லிம்களின் மேல் அதிக பரிவும் சிநேகமும் கொண்டிருக்கின்றனர். நபிகள் நாயகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது நாயகத்தின் நற்போதனைகளை அறிவதற்காக ஒரு தூதுவரை மக்காவுக்கு அனுப்பி வைத்தனர். இத்துTதுவர் பல இன்னல்களைக் கடந்து மதீனாவை அடைந்தபோது நபிகள் நாயகமும் அவர்களுக்குப் பிறகு இருந்த கலீபாவாகிய அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் மெளத்தாகியிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) போதித்த இஸ்லாத்தைப் பற்றி உமர் (ரலி) இடம் கேட்டறிந்தபிறகு நாடு திரும்பினார். வழியில் மக்ரான்’ என்ற இடத்தில் இவர் மெளத்தாகினார். இவருடன் சென்ற அடிமை, சரந்தீபை அடைந்து நாயகம் (ஸல்) அருளிச் சென்ற புனிதவேதமாகிய இஸ்லாத்தை அங்குள்ள மக்களுக்குப் போதித்தார். அதோடு அரபிய சாம்ராஜ்யத்தின் தலைவராகிய உமர் (ரலி) அவர்களின் எளிய வாழ்க்கையையும் எடுத்துக் கூறினார். இதன்பிறகுதான் சரந்தீபின் மக்களும் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டனராம்”
என்ன ஆதாரத்தை வைத்து இந்நூல் எழுதப்பட்டது என்று எம்மால் முடிவாகக் கூறமுடியாது. தாபரி, அல்பத்தனி, இப்னு குர்தாத்பா ஆகிய புவியியல் ஆசிரியர்களும் தங்கள் நூல்களில் இலங்கையைப் பற்றிக் குறிப்பிடத்தான் செய்தார்கள்.
எட்டாம் நூற்றாண்டுதொடக்கம் அரபியர்களும், பாரசீகர்களும் இலங்கையுடன் அதிக வர்த்தகத் தொடர்பு வைக்கத் தொடங்கினர். புவியியல் முதன்முதலாக அரபியர்களின் கையில்தான் ஒரு சாஸ்திரமாக பரிணமிக்கத் தொடங்குகின்றது. அல்மன்சூர், அல்மாமூன் ஆகிய கலீபாக்களின் காலத்திற்றான் புவியியல் சாஸ்திரம் வளரத் தொடங்குகின்றது. கிரேக்க

Page 33
முகம்மது சமீம் 42
ஆசிரியர்கள் பிறர் சொல்லக் கேட்டு எழுதியதைப் போலல்லாமல் இவ்வராபிய ஆசிரியர்கள் அறிவுப் பசியால் உந்தப்பட்டு தாங்களாகவே வெளிநாடுகளுக்குச் சென்று விஷயங்களைச் சேகரித்து எழுதிவைத்தார்கள். இதனாற்றான் கிரேக்கர்களைவிட இவர்களுடைய குறிப்புக்களில் அதிக உண்மையைக் காண்கிறோம். கிரேக்கர்களைப் போலல்லாமல் இவர்கள் எழுதும்போது மிகவும் கவனமாகவே உண்மைகளை எழுதிவைத்தார்கள்.
மேலும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சிபுரிந்த கலீபாக்கள் தங்கள் ஆட்சியைச் செவ்வனே நடத்துவதற்கு வெளிநாடுகளைப் பற்றிய உண்மைகளை அப்படியே எழுதி வைக்குமாறு இவ்வாசிரியர்களைப் பணித்தார்கள்.பலதரப்பட்ட சமூகங்களையும், பல்வேறுபட்ட நாடுகளையும் தன்னுள்ளடக்கிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பரிபாலனத்திற்கு இப்படிப்பட்ட உண்மைகள் இன்றியமையாததாயிருந்தது. ஆகவே, அரபிய ஆசிரியர்களின் குறிப்புக்களில் சில விஷயங்கள் அபரிமிதமாகக் கூறப்பட்டாலும் அவை உண்மைக்கு முரணாக இருக்க முடியாது என்று நாம் துணிவாகக் கூறலாம். வர்த்தகர்களிடமிருந்து கிடைத்த செய்திகளை கதாசிரியர்கள் தங்கள் கதைகளுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. சிந்துபாதின் தீரச் செயல்கள் போன்ற கதைகள் வர்த்தகர்களின் அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட கற்பனை ஒவியங்கள் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர்.
இனி இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை எழுத உதவும் ஒரு சில அரபிய இலக்கியங்களை ஆராய்வோம். இலங்கையுடன் வியாபாரஞ் செய்த வர்த்தகர்களின் குறிப்புக்களும், இலங்கைக்கு வந்து போன யாத்திரீகளின் வாசங்களுமே இவ்வாதார நூல்களில் பெரும்பான்மையானவை. இதோடுபிறர் சொல்லக் கேட்டு எழுதியவர்களும் உண்டு. இவ்வாதாரநூல்களில் ஒரு சிலவற்றை இனி ஆராய்வோம்.

43 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இரு முகம்மதியர்களின் யாத்திரைகள் என்ற நூலில் இலங்கையைப் பற்றிய குறிப்புக்களைக் காண்கிறோம். இந்நூலின் முதல் பாகம் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுலைமான் என்பவராலும், இரண்டாம் பாகம் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபூ-செயித்-அல்-ஹசன் என்பவராலும் எழுதப்பட்டது என்பது சரித்திராசிரியர்களின் கருத்து 1718ம் ஆண்டில் பிரான்சில் வாழ்ந்த ரேனோடோ என்ற பாதிரியாரால் முதன் முதல் வெளியிடப்பட்டது. பிறகு 1845ம் ஆண்டில் ரேனோட் என்பவர் இந்நூலைப்பதிப்பித்தார். வெவ்வேறு குறிப்புக்களாக இருந்தவைகளை ஒன்று சேர்த்து இரு முகம்மதியர்களின் யாத்திரைகள் என்றுதலையங்கள் இடுவதற்கும் இவர்கள் தான் காரணம். இலங்கையைப் பற்றிய விரிவான குறிப்புக்களை இந்நூலில் காண்கிறோம். இலங்கையில் உடன் கட்டையேறுதலைப் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது. இலங்கையில் இப்பழக்கம் இருந்ததாக இதுவரையில் எந்த வரலாற்றாசிரியரும் கூறவில்லை. இந்தியாவிலுள்ள இப்பழக்கத்தை இலங்கையரின் பழக்கம் என தவறுதலாகக் கூறுகிறார் நூலாசிரியர். ஆனால் இதேவிஷயத்தைத் தான் அல்-மசூதி என்ற யாத்திரிகரும் குறிப்பிடுகிறார். இவ்விரு நூலாசிரியர்களும் அல்மசூதியும் ஏறக்குறைய ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள். இந்நூலின் இரண்டாம் பாகத்தை எழுதிய அபூ-செயித் என்பவரும் அல்மசூதியும் பாஸ்ரா நகரத்தில் சந்தித்தார்களென்றும், மசூதியிடமிருந்து, அபூசெயித் சில உண்மைகளைப் பெற்றார் என்றும் நாம் அறிகிறோம். ஆகவே இத்தவறான கருத்தை, இந்நூலாசிரியர் மசூதியிடமிருந்து பெற்றிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. அபூ-செயித் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்ற உண்மையை மனதிற் வைத்துக் கொண்டு அவருடைய இன்னொரு கூற்றை ஆராய்வோம். முஸ்லிம் வர்த்தகர்கள் இருக்குமிடத்திற்கு சுதேசி ஒருவன் வந்து ஒரு பணக்கார முஸ்லிம் வர்த்தகரைப் பயமுறுத்திக் கடத்திச் சென்று பணம் பெற்ற பிறகுதான் அப்பணக்காரரை விடுவிப்பான் என்ற அபூ-செயித்தின்

Page 34
முகம்மது சமீம் 44
கூற்று இலங்கையரசர்களின் பழக்கவழக்கங்களுக்கு முரணாக இருக்கிறது. ஆனால் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் வர்த்தகர்கள் ஒருவித பாதுகாப்புமில்லாமல் வாழ்ந்தார்கள் என்பதற்கு அக்காலத்திய ஒரு கல்வெட்டுச் சாசனம் சான்றாக இருக்கிறது. இக்கல்வெட்டுச் சாசனம் மூலம், பாகயா என்ற முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் 939ம் ஆண்டில் தம் இனத்தவருக்குப்பாதுகாப்பு பெற்றுக்கொடுத்தார் என அறிகிறோம். இப்னு வஹாப் என்ற யாத்திரீகரின் அனுபவங்களைத் தான் அபூ-செயித் என்ற புவியியல் ஆசிரியர் எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபூ-செயித் இலங்கையிலுள்ள பிரம்மாண்டமான கோயில்களைக் குறிப்பிடுகிறார். தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய விக்கிரகத்தையும் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த இப்னு பத்தூதாவினுடைய இச் சிலையைப் பற்றிய குறிப்பைக் கொண்டு இவர் தென்மாகாணத்திலிருக்கும் “டொன்றா” என்ற இடத்திலுள்ள புத்தர் சிலையைத்தான் குறிப்பிடுகிறார் என நாம் ஊகிக்க இடமிருக்கிறது. இலங்கையில் யூதர்கள் இருந்ததாகவும் இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்நூலாசிரியர் இலங்கையின் நீர் நிலவளத்தைப் பற்றியும் இங்குள்ள பொருள்களின் மலிவைப் பற்றியும் மக்கள் உபயோகிக்கும் மதுபானத்தைப் பற்றியும் குறிப் பிடுகிறார். இலங்கை மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் குறிப்பாக அவர்களுக்குக் கோழிச்சண்டை போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் இருந்த ஆர்வத்தையும் பெண்களின் சிற்றின்ப வாழ்க்கையையும் வர்ணிக்கிறார். இதனாற்றானோ என்னவோ சுராத் என்ற துறைமுகத்திலிருந்து இளைஞர்கள் கடற்பிரயாணம் செய்யப்புறப்படும்போது இலங்கைக் கரையோரங்களுக்கு இவர்கள் போகக்கூடாது என்று அங்குள்ள நகரத்தலைவர்கள் விதித்தனர். இலங்கையைப் பற்றி எழுதப்பட்ட அரபிய நூல்களுள் இருமுகம்மதியர்களின் யாத்திரை என்ற இந்த

45 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
நூல் மற்றவைகளைவிட இலங்கையைப்பற்றி அதிகமாகக் கூறுகிறது. இக்குறிப்புக்களெல்லாம் உண்மையோடு ஒட்டிச் செல்கின்றன என்பது இந்நூலின் இன்னொரு விசேஷம்.
அரபிய இலக்கியங்களிலுள்ள இலங்கையைப் பற்றிய குறிப்புக்களை நாம் ஆராயும் போதுதான் அவர்கள் இலங்கையைப் பற்றி எவ்வளவு அறிந்திருந்தனர் என்ற உண்மையை அறியமுடிகிறது. இந்நூலிலுள்ள குறைகளை அகற்றிவிட்டு அவைகளின் தராதரத்தை எடைபோட்ட பிறகுதான் அந்நூல்களை நாம் ஆதாரநூல்களாகக் கொள்ள முடியும். ஒரு நூலை நாம் ஆதாரமாகக் கொள்ளும்போது எவ்வளவு தூரம் அந்நூல் உண்மையைக் கூறுகின்றது. அதன் தராதரம் என்ன என்று முதலில் ஆராய்வது அவசியம். அப்பொழுதுதான் வரலாற்றை எழுதும்போது பிழையான கருத்துக்களை நாம் வெளியிடாமல் தடுத்துக் கொள்ளலாம். எமது ஆதார நூல்களின் தராதரங்களை எடைபோட்ட பிறகுதான் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தைப் பற்றிய உண்மையான ஆராய்சிக்கு இறங்கலாம்.

Page 35
முகம்மது சமீம் 46
V. அரபிய பாரசீக முலநூல்களின் தராதரங்கள்
வரலாறு எழுதுவதற்கு மூல நூல்களாயமைவன பிரயாணிகளின் குறிப்புக்களும், செய்திக் கோவைகளும், வரலாற்றுக் குறிப்புக்களும், கர்ணபரம்பரையாய் வந்த கதைகளும், அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களுமே. வரலாற்றில் நடந்த சம்பவங்களை இம்மூலநூல்கள் பதிவு செய்யாதிருந்தால் இவைகளைப் பற்றிய உண்மைகள் பிற்காலச் சந்ததியினருக்குப் பயன்படாமலேயே காலத்தோடு புதைந்து போயிருக்கும். நிகழ்காலம் என்ற அறைக்கும் இறந்த காலம் என்ற அறைக்குமிடையேயுள்ள ஒரு யன்னலைப் போன்றவை இம்மூல நூல்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றிய வரலாற்றாசியர்கள் இம்மூல நூல்களின் மூலம், தமக்கு முன் நடந்த சம்பவங்களைப் பார்க்க எடுத்துக் கொண்ட முயற்சிகளே வரலாறு எனப்படும். வரலாறு எழுத உதவும் ஆதாரங்கள் தான் இம்மூல நூல்கள். ஒரு வரலாற்றின் பரப்பையும் அதன் எல்லையையும் மட்டுமல்ல, அதன் அமைப்பையும், வரலாற்றாசிரியனின் மன நோக்கத்தையும் நிர்ணயிக்கும் சக்தி இம்மூல நூல்களுக்கிருக்கின்றன. எனவே இம்மூலநூல்களைப் பற்றிய உண்மைகளை அறியவேண்டியது அவசியமாகின்றது. என்றாலும், இம்மூலநூல்களின் தராதரங்களை எடைபோட்ட பின்புதான் இவைகளை நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.
இரு முகம்மதியர்களின் யாத்திரைகள் என்ற நூலைப்பற்றி ஆராய்ந்தோம். அடுத்து எதிரிஸி எழுதிய நூலை ஆராய்வோம். இவருடைய இயற்பெயர் 'அபூ அப்தல்ல முகம்மத், ஸ்பெயின் தேசத்தில் போய்க் குடியேறிய முஸ்லிம்களின் பரம்பரையைச் சேர்ந்தவர் இவர். இவருடைய வம்சத்தினர் - கோர்டோவாவிலி ருந்து மலாக்காவுக்குப் போய் அந்நாட்டின் தலைவர்களாய் கட

47 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
மையாற்றினார்கள். 'எதிரிஸி தன்னுடைய ஆதரவாளரான சிசிலியின் அரசன் ரோஜர், என்பவருக்கு, கி.பி.1154ம் ஆண்டில் ஒரு புவியியல் நூலை இயற்றினார். இவருடைய நூலை ஆராயும்போது இவர் மத்தியதரைக் கடலைத் தாண்டி பிறநாடுகளுக்குச் சென்றார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ரோஜர் பிற நாடுகளுக்கு அனுப்பிய தூதுவர்களின் மூலம் கிடைத்த செய்திகளை வைத்துத்தான் இவர் இந்நூலை எழுதியிருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. இலங்கையைப் பொறுத்த வரையில் இவர் அரபியர்களின் நூல்களிலிருந்துதான் தனக்கு வேண்டிய குறிப்புக்களை பெற்றிருக்கிறார் என்று கருதவும் இடமிருக்கிறது.
எதிரிஸியின் குறிப்பு பின்வருமாறு
ஹர்கந்த் என்ற கடலின் மத்தியிலுள்ள பிரசித்தி பெற்ற தீவுதான் செரன்ந்தீப். ஆதம் (அலை) முதன்முதல் அந்தத் தீவிலுள்ள மலையொன்றில்தான் இறங்கினார். இந்த மலை, கடலில் வெகுதூரம் வரைக்கும் தெரியும், ஆதமுடைய பாதம் பட்ட இடம் ஒளிவிட்டுப்பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. மலைச்சாரல்களில் நறுமணம் வீசும் ஒருவித மரங்கள் வளர்கின்றன. அந்நாட்டு மக்கள் நெற்பயிர் செய்கிறார்கள். அத்துடன் தென்னை கரும்பு முதலியவைகளையும் உண்டாக்குகிறார்கள். அங்குள்ள நதிகளில் பளிங்குக் கற்களையும் கரையோரங்களில் முத்துக்களையும் காணலாம்.
“அவ்வூர் அரசன் அக்னா என்ற தலைநகரத்திலிருந்து அரசு செலுத்துகிறான். அரசன் நீதி வழுவாமல் தன்னுடைய பிரஜைகளைப் பரிபாலித்து வருகிறான். அவனுக்குப் பதினாறு மந்திரிகள் இருக்கின்றனர். உள்நாட்டவர்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய நால்வகை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாகக் கடமையாற்றுகின்றனர். அறிஞர்களின் உதவியைக் கொண்டு அரசன் நீதியைப் பரிபாலித்துவருகிறான். இவ்வரசனிடம் இருக்கும் மணிக்கற்களைப்

Page 36
முகம்மது சமீம் 48
போன்று வேறு எந்த இந்திய அரசனிடமும் இல்லை. சீனர்களும் இங்குவந்து வியாபாரம் செய்கிறார்கள். செரந்தீப், பட்டு, மணிக்கற்கள், வைரக்கற்கள், வாசனைப் பொருள்கள் முதலியவைகளை ஏற்றுமதி செய்கின்றது”
இப்படிச் செல்கிறது எதிரிஸியின் குறிப்புக்கள். செரந்தீப் அரசன் பாரசீகத்திலிருந்து ஒருவகை மதுபானம் இறக்குமதி செய்ததாகக் குறிப்பிடுகிறார். இம்மதுபானத்தை ஏலக்காய் கொண்டு பக்குவப்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இங்கே எதிரிஸியின் குறிப்புக்களில் மயக்கம் தட்டுகிறது. இலங்கை மக்கள் தென்னையிலிருந்து ஒருவித மதுபானம் செய்து ஏலக்காயைக் கொண்டு பக்குவப்படுத்துகிறார்கள் என்று அபூ செயித் எழுதிய குறிப்பையும், இலங்கை அரசன் பாரசீகத்திலிருந்து முந்திரியத் தேறல் இறக்குமதி செய்கிறான் என்ற இப்னுகுர்தாத்பாவின் குறிப்பையும் பிழையாக விளங்கியதால்தான் இவ்வாசிரியரிடம் இந்த மயக்கம் ஏற்படுகிறது என்று எண்ண இடமிருக்கிறது. இவைகளுடன் தன்னுடைய சொந்த கற்பனைகளையும் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். தென்னையிலிருந்து செய்யும் மதுபானம் பற்றி இப்னுபத்தூதாவும் குறிப்பிடுகிறார். அதை இல்-குர்பானி என்கிறார் இப்னுபத்தூதா, இதிலிருந்து அபூசெயிதின் குறிப்பில் ஒரளவு உண்மை இருக்கிறதென்பது புலனாகின்றது.
மேலும் முந்திரியத் தேறல் இலங்கை மக்களால் மதுபானமாகப் பாவிக்கப்பட்டதாக வேறு எந்த நூலிலும் நாம் காணமுடியவில்லை.பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்ததைக் கூறும் ராஜாவலி என்ற நூல் போர்த்துக்கீசர் பாவித்த மதுபானத்தைக் கண்டசிங்கள மக்கள் கோட்டை அரசனிடம், சிவப்பு இரத்தம் குடிக்கும் ஒருவகை மனிதர் வந்திருப்பதாகச் சொன்னார்கள் என அறிகிறோம். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இலங்கை மக்கள் முந்திரியத் தேறலைப்பற்றி அறிந்திருக்கவில்லை

49 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
என்பதே. இலங்கையிலேயே செய்யப்படும் சாராயம் போன்ற ஒருவகை மதுபானத்தைத்தான் அரபிய யாத்திரிகர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதைத் தப்பாக விளங்கிய காரணத்தாலோ என்னவோ எதிரிஸி இப்படிப் பிழையான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். பிறர்மூலமும் பிற நூல்களிலிருந்தும் பெற்ற விபரங்களை வைத்துத்தான் எதிரிஸி தனது நூலை எழுதியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். எனவே எதிரிஸியினுடைய நூலை நாம் ஆதாரமாகக் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையுடனேயே செய்யவேண்டும்.
அடுத்து ரஷீத்-உத்தீன் என்ற வரலாற்றாசிரியரின் நூலை ஆராய்வோம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பாரசீக அரசர்களின் வரலாற்றாசிரியராக இருந்தார்.இவர் அபாகாகான் என்ற அரசனுடைய வரலாற்றை எழுதியதோடு ஒரு புவியியல் நூலையும் இயற்றினார். இவருடைய நூலை ஆராயும்போது இதனிலுள்ள குறைகளை நாம் பாராமுகமாக விட முடியாது. இவர் அல்-பிருஸி என்பவருடைய நூலை ஆதாரமாக வைத்துத்தான் எழுதினாரோஎன்ற சந்தேகம் ஏற்படுகிறது.இலங்கையைப்பற்றிய அவருடைய அறியாமை அல்-பிரூனியின் நூலைப் பார்த்தெழுதியிருக்கிறார் என்ற முடிவுக்கு வருகிறோம். ஓர் இடத்தில் ஆசிரியர் 'மாபாரிலிருந்து சீனாவுக்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழி கடல்மார்க்கமாக சீலான் என்ற தீவைக் கடந்து செல்லவேண்டும்’ என்கிறார்.
இன்னோரிடத்தில் “ஜூம் என்ற மலையின் அடிவாரத்தில் சொந்தீப் இருக்கிறது. அங்குள்ள மக்களெல்லோரும் பெளத்தர்கள். இந்திய மொழியில் சாந்தீப் என்பது ‘சிங்கம் நித்திரை செய்யும் இடம்' என்று பொருள்படும். இத்தீவில் மாணிக்கக் கற்கள் இருக்கின்றன. காடுகளில் ஓநாயும், யானையும் வசிக்கின்றன. ‘றுாக்' என்றொரு பறவையும் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 37
முகம்மது சமீம் 50
இலங்கையில் ஓநாய் இல்லாததைப் பற்றி நாம் யாரிடமிருந்தும் அறிய வேண்டியதவசியமில்லை.
றுாக் என்பது ஒரு ராட்சசப் பறவை. இப்பறவையைப் பற்றி நாம் சிந்துபாதின் தீரச் செயல்கள் என்ற நூலில் மட்டும்தான் காண்கிறோம். இக்குறிப்புக்களைப் படித்த பிறகு இந்நூலாசிரியர் இலங்கைக்கு வராமலேயே பிறரிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார் என்ற முடிவுக்கு வருகிறோம். எனவே இவருடைய நூலையும் நாம் ஆதார நூலாகக் கொள்ள முடியாது.
வஸ்ஸாப் என்ற ஒரு பாரசீகக் கவிஞரும் இலங்கையைப் பற்றிப் பாடியிருக்கிறார். இவருடைய கவிதைகளில் எல்லா கவிஞர்களையும் போல் உண்மையை விட கற்பனை தான் அதிகம். ஆதம் (அலை) இலங்கைக்கு ஆண்டவனால் அனுப்பப்பட்டதையும் இங்குள்ள பொருள்களைப் பற்றியும் குறிப்பாக வாசனைப் பொருள்களையும் மாணிக்கக்கற்களையுமே அதிகமாகக் கூறுகிறார். இவருடைய நூலையும் நாம் எமது ஆதார நூல்களின் பட்டடியலிலிருந்து நீக்கிவிடவேண்டும்.
அடுத்து கஸ்வீனி சக்கறி பின்-முகம்மத் என்ற புவியியல் ஆசிரியருடைய கித்தாப் அல்ஜெய்ப் என்ற நூலை ஆராய்வோம். கள்வீனியின் கூற்றுப்படி இலங்கை என்பது இரண்டு பெரும் தீவுகளைக் கொண்டது. ஒன்று இந்தியாவின் தெற்கே இருக்கிறது. மற்றது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கிறது. அவர் குறிப்பிடும் பொருள்கள் கிழக்கிந்திய நாட்டின் பொருள்களா அல்லது இலங்கையின் பொருள்களா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஏனைய அரபிய ஆசிரியர்களைப் போல் இவரும் இலங்கையின் முக்கிய விளைப்பொருளான கறுவாவைக் கூற மறந்துவிடுகிறார். கறுவாவை இவர் குறிப்பிட்டாலும் இது கிழக்கிந்திய தீவுகளில் விளையும் பொருள் என்று தவறாகக் கூறுகிறார். ஓரிடத்தில் இவர் “சரந்தீப் என்பது ஹர்கந்த் என்ற

51 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
கடலின் நடுவே இருக்கும் ஒரு தீவு. அங்கே பல்வகையான வாசனைப் பொருள்களும் தங்கம், வெள்ளி, முத்து போன்ற திரவியங்களும் கிடைக்கின்றன”என்று கூறுகிறார். பிறிதோரிடத்தில் கிழக்கிந்தியத் தீவுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது “செய்லான் என்பது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மிடையேயுள்ள ஒரு பெரிய தீவு. இத்தீவைப் பல அரசர்கள் ஆண்டு வருகிறார்கள். இங்கு கறுவா, இலவங்கம், சந்தனம் போன்ற பொருள்களும் மணிக்கற்களும் கிடைக்கும்” என்கிறார். இவருடைய குறிப்புக்களிலிருந்து நாம் ஓர் உண்மையை அறியலாம். இவரும் இலங்கைக்கு வரவில்லை என்பதே அது. பிறர் சொல்லக் கேட்டும் பிறருடைய நூல்களைப் பார்த்தும் எழுதியவற்றை நாம் எமது ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இனி கடலோடிய சிந்துபாத்” என்ற நூலிலும் நாம் இலங்கையைப் பற்றிய குறிப்புக்களைக் காண்கிறோம். இந்நூல் ஒரு கற்பனைச் சித்திரம் என்பது எல்லோரும் அறிந்ததே. சிந்துபாத் தன்னுடைய வீரச் செயல்களுக்கு இலங்கையை மையமாகப் பாவிக்கிறான். தான் கலீபாவின் அறிமுகக் கடிதத்துடன் பாஸ்ராவிலிருந்து கப்பலேறி செரந்தீப் அரசனிடம் வந்ததாகக் கூறுகிறான். இனி இலங்கையின் இயற்கை வளங்களையும் இங்குள்ள பொருள்களையும், மக்களின் கமத்தொழிலைப் பற்றியும் குறிப்பிடுகிறான். இதே செய்திகள் அபூசெயித், மசூதி, கஸ்வீனி, என்பவர்களுடைய நூல்களில் இருப்பதனாலும், இந்நூல் ஒரு கற்பனைச் சித்திரம் என்ற காரணத்தினாலும் இதையும் முதல் நூல் என்று நாம் கொள்ளமுடியாது.
அடுத்து நாம் ஆராயவேண்டிய நூலாசிரியர் இப்னுபத்தூதா என்ற பிரசித்திபற்ற யாத்திரிகரே. இவர் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்னு பத்தூதா இந்தியாவுக்குப் போகும் வழியில் இலங்கைக்கும் வந்தார். மஹல்லதீவிலிருந்து இந்தியாவுக்குப் போகும்போது பலமான காற்று

Page 38
முகம்மது சமீம் 52
வீசினதால் அவர் வந்த கப்பல் இலங்கைக் கரையை அடைந்தது. அவர் வந்த சமயம் இலங்கையின் வடக்குப் பகுதிகள் தமிழர்களின் கையில் இருந்தன. சிங்கள அரசர்கள் கம்பளையைத் தங்கள் தலை நகரமாகக் கொண்டு அங்கிருந்து ஆண்டுவந்தார்கள். இப்னு பத்தூதா புத்தள என்ற இடத்தில் வந்திறங்கினார். சர் டெனன்ட் போன்ற வரலாற்றாசிரியர்கள் இது புத்தளத்தைக் குறிக்கிறது என்று ஊகிக்கின்றனர். அங்கு கறுவா வளர்வதாகவும் ஒரு நதி ஒடுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். சிலாபத்துக்கு வடக்கே கறுவா வளர்ந்ததாகவோ புத்தளத்தில் வெள்ளப் பெருக்குடன் ஒரு நதி ஓடுவதாகவோ நாம் இதுவரையில் கேள்விப்படவில்லை.
நிற்க, இங்கு ஆண்ட தமிழரசன் இப்னு பத்தூதாவுக்குப் பாதுகாப்பு அளித்து, அவரை ஆதமலைக்கு அனுப்பி வைத்தான். முதல்நாள் அவர் ஒரு நதியைக் கடந்ததாகக் குறிப்பிடுகிறார். புத்தளத்திலுள்ள கடலின் ஒரு பகுதியைத்தான் இப்னு பத்தூதா இப்படித்தவறாகக் குறிப்பிடுகிறார் என நாம் திருத்திக் கொள்ளலாம். பிறகு 'மனார் மண்டல் என்ற நகரத்தையடைந்ததும், தான் தமிழ் அரசனுடைய எல்லையை அடைந்துவிட்டதாக எழுதுகிறார். அதன்பிறகு சலாவத் என்ற நகரத்தைக் கடந்து சிங்கள அரசனுடைய இராஜதானியாகிய கங்க சிறீபுரவை சலாவத் என்று அவர் குறிப்பிட்டது சிலாபத்தையும் கங்கர் என்றது, கங்க-சிரிபுர- என்று அன்று பெயர் பெற்றிருந்த கம்பளையைத் தான் என நாம் திருத்திக் கொள்ளலாம். அவர் இந்நகரின் சுற்றாடலை வர்ணிப்பதை ஆராய்ந்தால், கம்பளைப் பகுதியைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது தெரிய வருகிறது. மலையிலிருந்து திரும்பி வரும் வழியில் கலங்கா என்ற கிராமத்துக்கருகில் அடக்கம் செய்யப்பட்ட யாத்திகர் அபூ அப்துல்லா இப்னு காலீப் என்பவருடைய கல்லறையையும் தரிசித்து வந்தார். இலங்கையைப் பற்றியும், இலங்கையில் விளையும் பொருள்களைப் பற்றியும், இலங்கை மக்களை பற்றியும் அவர் குறிப்பிடுவதிலிருந்து அவை உண்மைக்கு மாறாக

53 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இல்லை என்ற முடிவுக்கு வருகிறோம். எனவே இப்னு பத்தூதா எழுதிய நூல் எமது ஆதார நூல்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
இனி குவாத்திரமியரின் நினைவுகள் என்ற நூலை ஆராய்வோம். இந்நூலாசிரியர் எகிப்தைப்பற்றியும் அந்நாட்டை அரசாண்ட மாமெலுக் சுல்தான்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். கி.பி.1304ம் ஆண்டில் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு இலங்கையிலிருந்து ஒரு தூதுக்குழு வந்ததாக இவர் குறிப்பிடுகிறார். எகிப்தை அரசாண்ட மெலக் மன்சூர்கெலெளன். என்பவருடைய காலத்தில்தான் இச்சம்பவம் நடந்ததென இந்நூலிலிருந்து அறிகிறோம். இலங்கை அரசனை'அபூ-நொக்பாலெபாபா' என்று கூறுகிறார். அச்சமயம் இலங்கையில் அரசனாயிருந்த புவனேக்கபாஹூவைத்தான் இவர் இப்படிக் குறிப்பிடுகிறாரோ என்று ஒரு சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இதனைப்பின்னர் விரிவாக ஆராய்வோம். இலங்கைக்கும். எகிப்துக்கும் இடையே ஒரு வர்த்தகத் தொடர்பை உண்டாக்குவதே இக்கோஷ்டியின் நோக்கம் எனவும் அறிகிறோம். இலங்கையின் விளைப்பொருள்களில் கறுவாவைப் பற்றிய குறிப்பை முதன்முதல் இந்நூலில் தான் நாம் காண்கிறோம். இத்தூதுக்குழுவை சுல்தான் வரவேற்று இலங்கை அரசனக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பியதாகவும் அறிகிறோம். இத்தூதுக்குழு எந்த விதமான பயனளித்ததாகவோ தெரியவில்லை. ஒரு சில வரலாற்றாசிரியர்கள் இங்கே குறிப்பிடப்படும் இலங்கை அரசன் புவனேக பாஹூ அல்லவென்றும் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் அரசனையோ அல்லது தென்னிந்திய பாண்டிய அரசனையோதான் இது குறிக்கிறது என்று கருதுகின்றனர். இலங்கை அரசனைத்தான் குறிப்பிடுகிறது என்று பேராசிரியர் லோர்னா தேவராஜாவின் “கண்டி இராச்சியம்’ என்ற நூலிலிருந்து அறிகிறோம்.

Page 39
முகம்மது சமீம் 54
பாகசி, இப்னுல் வார்தி' என்ற அரபிய ஆசிரியர்களது நூல்களிலும் இலங்கையைப் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. இக்குறிப்புக்கள் ஏற்கனவே கூறப்பட்ட நூல்களில் இருப்பதனால் இவைகளை நாம் ஆராய வேண்டியதவசியமில்லை.
அல்பத்தனி, அல்மசூதி ஆகிய ஆசிரியர்கள் இரு முகம்மதியர்களின் யாத்திரைகள்' என்ற நூலின் ஒரு பாகத்தை எழுதிய அபூசெயித் என்பவருடைய காலத்தவர்கள். இவர்கள் தங்கள் நூல்களில் எழுதிய குறிப்புக்களுக்கும், அபூ-செயித் எழுதிய குறிப்புக்களுக்கும் அநேக ஒற்றுமையிருப்பதை நாம் காண்கிறோம். "இரு முகம்மதியர்களின் யாத்திரைகள்" என்ற நூலிலிருப்பதைவிட மேலதிகமாக இவர்கள் ஒன்றும் கூறவில்லை. மசூதி தான் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் இங்கு நடந்த ஒரு அரசனின் பிரேதக் கிரியைகளைத்தான் நேரில் கண்டதாகவும் எழுதியிருக்கிறார். இதே விபரம் இரு முகம்மதியர்களின் யாத்திரைகள். என்ற நூலிலிருப்பதால், இதிலிருந்து இவர் இக்குறிப்புக்களை பெற்றிருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது.
அரபிய பாரசீக மூல நூல்களின் தராதரத்தை எடைபோட்ட பின்னரே இவைகளை நாம் ஆதார நூல்களாகக் கொள்ளவேண்டும். இலங்கை, வெளிநாட்டு நூல்களை ஆதாரங்களாகக் கொண்டு தான் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை ஆராய வேண்டும்.

55 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
1. உலகில் முஸ்லிம் சிறுபான்மை இனங்கள்
மனித இன ஆராய்ச்சியில் மதம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. பல இன பண்பாடுகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் சமயத் தேவைகள் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. சிறுபான்மை சமூகங்களாக வாழும் இனங்களுக்கு தம்முடைய மதமும், மொழியும் பண்பாடும், தம் தனித்துவத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. பெரும்பான்மை இனத்தினதும் ஏனைய இனங்களினதும் பண்பாட்டு முறைகள் ஒரு சிறுபான்மை சமூகத்தின் இயல்புகளைப் பெரிதும் பாதிக்க வல்லது. தனி இனத்தைக் கொண்ட நாடுகள் மிகவும் அரிது. அரசியல் கொந்தளிப்பு காரணமாக இன்று மக்கள் தம் நாட்டை விட்டு பல நாடுகளில் குடி பெயர்ந்து வாழ்கிறார்கள். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய பல இனமக்கள் தத்தம் இனத்தின் தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். பெரும்பான்மை இன மக்கள் தம் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்காக, தமது அதிகார செல்வாக்கை உபயோகித்து சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வருகிறார்கள். பெரும்பான்மை இனத்தோடு ஒன்றுபட்டிணையாத சிறுபான்மை சமூகங்களை இப் பெரும்பான்மை சமூகத்தினர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். சமுதாயத்தில் உள்ள கூட்டுணர்வும் அமைதியும் சிறுபான்மை சமூகங்களின் தனிப்பட்ட பண்பாட்டு முறைகளினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது என்று பெரும்பான்மை இனத்தவர் கருதுகின்றனர். ஒரு சமுதாயத்திலுள்ள சமூகத் தொடர்புகளும் இதனால் பாதிக்கப்படுகின்றது என்று எண்ணுகின்றனர். பெரும்பான்மை இனத்தவர் தம்முடைய பண்பாட்டு முறைகளை ஏற்று சிறுபான்மையினர் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களோ தம்முடைய இனம்

Page 40
முகம்மது சமீம் 56
பெரும்பான்மை இனம் வாழுகின்ற சமுதாயத்துடன் தேசிய அடிப்படையில் ஒன்றிணைந்து வாழ்வதென்பது தம்முடைய இனத்தின் தனித்துவதைப் பெரும்பான்மை இனம் ஏற்றுக் கொண்டுள்ளது என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். இவ்விரு கருத்தோட்டங்களையும், சமூக இயலாளர்கள் பல் இனத்தவர் வாழும் சமூக ஒன்றிணைப்பு என்று கூறுகின்றனர். இச்சமுதாய அமைப்பில் பல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தத்தம் பண்பாட்டு முறைகளைப் பேணிக்காப்பதோடு பெரும்பான்மை சமுகத்தவருடன் சேர்ந்து வாழ்வதையே இது குறிக்கும். ஒரு முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில் இஸ்லாம் அவர்களுடைய சமூக வாழ்க்கையின் அடித்தளமாக அமைகிறது. இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறை; அதனின்றும் தோன்றியதுதான் அவர்களுடைய பண்பாடும். அப்பண்பாட்டு முறையை ஒட்டி வளர்ந்ததுதான் சமய அனுட்டானங்கள், குடும்ப வாழ்க்கை திருமண முறைகள், குழந்தை வளர்ப்பு, கல்வி, வியாபாரம் ஆகியன. இஸ்லாத்திற்கு முரண்பட்ட எந்தப் பழக்கத்தையும் அவர்கள் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இஸ்லாத்திற்கு முரண்படாத எந்தவொரு பழக்க வழக்கத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தவறியதில்லை. இதனடியாகத் தோன்றியதுதான் மொழியும்.
முஸ்லிம்கள் எந்த மொழியைத் தம் மொழியாகக் கொண்டாலும் எந்த பண்பாட்டு முறையைப்பேணி வந்தாலும் தங்கள் மதத்தில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
முதலாம் மகா யுத்தத்தின் பின் கிலாபத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பிறகு உலகத்தில் வாழ்ந்த எல்லா முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம் சமூகங்களும், பிற சமயத்தவர் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர். இரண்டாம் மகா யுத்தத்திற்குப்பிறகுதான் முஸ்லிம் பெரும்பான்மை சமூகங்களாக வாழ்ந்த நாடுகளும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த ஏனைய நாடுகளும் சுதந்திரம் பெற்றன. சுதந்திரம் பெற்ற முஸ்லிம்

57 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
நாடுகள் ஷரீயத் முறையை அடிப்படையாகக் கொண்டே தத்தம் ஆட்சியை நிலை நாட்டினர். ஏனைய நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்களாக வாழும் முஸ்லிம் சமூகங்களுக்குத் தங்கள் சமுதாயத்தையும் தங்கள் பண்பாட்டு முறையையும், தம் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய ஒரு நிலை வந்தது. நாம் மேலே கூறியதுபோல அந்நியர் ஆட்சியில் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த பெரும்பான்மை இனத்தவர் தம்முடைய மொழிகளுக்கும் மதத்திற்கும் பண்பாட்டிற்கும் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் செயல்பட முற்பட்டார்கள். இதில் எவ்விதத் தவறுமில்லை. சிறுபான்மை யினங்களுடைய அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் பெரும்பான்மை இனம் உதாசீனம் செய்வதினால் சமுதாயத்தில் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு இடமிருக்கிறது. பெரும்பான்மை இனத்தவரின் சில இரக்கமற்ற செயல்களினால் சிறுபான்மை இனத்தவர், தம்முடைய தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அரசியற் காரணங்களுக்காக இவ்வினப் பிரச்சினையைத் தூண்டி. பதவிக்கு வரநினைக்கும் அரசியல் வாதிகளின் செய்கைகளினாற்றான் சமூகத்தில் அமைதி குலைகிறது. தனிநாடு அடைவதன் மூலம் தான் தம் இனத்தின் தனித்துவத்தைக் காப்பாற்றலாம் என்று சிலர் நினைக்கின்றனர். "மதம், மக்களைப்பிழையான வழியில் கொண்டுசெலுத்துகின்றது , என்றார் கார்ல் மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ் மக்கள் மதம் அபினைப் போன்றது' என்று கூறுவதற்குக் காரணம், மக்களின் இம்மத வெறியைச் சிலர் பயன்படுத்தி அவர்களைப் பலாத்கார முறைகளைக் கையாள்வதற்குத் தூண்டிவிடுதே. இதனால் பாதிக்கப்படுவது பாமரமக்களே.
சிறுபான்மை இனத்தவராக வாழும் முஸ்லிம்கள் பொதுவான சில பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள். இஸ்லாத்தையும் இஸ்லாமிய ஷரியத் (ஷரியத் = சட்டம்) முறையையும் அடிப்படையாகக் கொண்டு வாழும் முஸ்லிம் மக்கள் பிற

Page 41
முகம்மது சமீம் 58
சமுகத்தவருடன் வாழும்போது, தமக்கே உரித்தான விசேஷ பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். நூறுகோடி முஸ்லிம்களில் ஏறத்தாழ 20 கோடி முஸ்லிம்கள் உலகில் பல பாகங்களிலும் சிறுபான்மை இனத்தவர்களாக வாழ்கிறார்கள்.
முஸ்லிம் சிறுபான்மை இனங்கள் தோன்றுவதற்குக் காரணம் வர்த்தகம் நிமித்தம் இவர்கள் நாட்டுக்கு நாடு சென்றதே. இந்தியா, இலங்கை, சீனா, கிழக்காபிரிக்கா, இந்தோனேஷியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்கு வர்த்தகம் செய்வதற்காக சென்ற முஸ்லிம்கள் அவ்வப்பிரதேசங்களிலேயே வாழத்தலைப்பட்டனர். காலப்போக்கில் இவ்வர்த்தகர்கள் உள்ளூரிலேயே திருமணஞ் செய்து குடும்பங்களாக வாழ முற்பட்டனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமயத்தவர் இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களாக வாழ்ந்த காரணத்தினால் பெரும்பான்மை இனங்களாக மாறினர். இதற்கு உதாரணமாக மலேசியாவையும், இந்தோனேஷியாவையும் குறிப்பிடலாம். இஸ்ஸாமிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம்கள் பெரும்பான்மை இனங்களாக வாழ்ந்த பிரதேசங்கள் அந்நியர்களின் ஆட்சிக்குள் வந்த பிறகு சிறுபான்மை இனங்களாக மாற்றப்பட்டனர். பால்கன் நாடுகளான யுகோஸ்லாவியா பல்கேரியா ருமேனியா போன்ற நாடுகளையும் சோவியத் ரஷ்யாவையும் உதாரணங்களாக குறிப்பிடலாம்.
சிறுபான்மை இனங்களாக வாழும் முஸ்லிம்களின் எதிர்காலம் ஒரு பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. இஸ்லாத்தில் அவர்களுக்கிருக்கும் பற்றுதலும் இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பிற சமூகத்தினர் மத்தியில் அவர்களுக்கிருக்கும் மதிப்பும் அரசியல் பொருளாதார சமூக செல்வாக்கும்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும். இஸ்லாத்தைப் பேணி வளர்க்கும் எண்ணம் குன்றினால் சிறுபான்மை இனங்களாக வாழும் முஸ்லிம்கள் நாளடைவில் மறைந்து விடுவார்கள். தம்

59 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் தம் மதத்தில் உள்ள பற்றுதல் வேரூன்ற வேண்டும். அதோடு தம் சமூக அந்தஸ்தையும் உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சிறு பான்மையாக வாழும் முஸ்லிம்கள் எதிர் காலத்திலும் முஸ்லிம்களாக வாழலாம்.

Page 42
2. முஸ்லிம் சிறுபான்மை இனங்கள் தோன்றிய வரலாறு
இலங்கை முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி அறிய முற்படும்போது உலகில் வாழ்ந்த, இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் எப்படி அடிமைகளாக்கப்பட்டார்கள், எப்படி நாடு கடத்தப்பட்டார்கள், எப்படி தங்கள் உடமைகளை இழந்தார்கள். எப்படி பூண்டோடு அழிக்கப்பட்டார்கள், என்ற வரலாற்றுண்மையை நாம் அறிந்தாற்றான் நமது எதிர்காலத்தை நாம் நிர்ணயிக்கலாம். எமது சகோதர முஸ்லிம்கள், வரலாற்றில் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்ற உண்மையை அறிந்தால் எமது அழிவை நாம் தடுத்துக் காக்கலாம். வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் ஆரம்பத்தில் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனிமனிதராகவே நின்று இஸ்லாத்தைப் போதித்தார்கள். அன்னாரைப் பின் தொடர்ந்த தோழர்களும் முதலில் சிறுபான்மையராகவே இருந்தார்கள். இதனால் பல இன்னல்களை அனுபவித்தார்கள். நாட்டைவிட்டும் வெளியேறி வேற்று நாட்டில் குடிபுகுந்தார்கள். தாம் நம்பிக்கை வைத்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக நாட்டை விட்டு வெளியேறி பிற நாட்டில் குடிபுகுதல் சமயத்திற்பாற்பட்டது. பெரும்பாலும் இதை சமயத் தொண்டு என்றும் கூறலாம். இவர்களை நாம் முஹாஜிரீன்கள் என்று அழைக்கிறோம். ஒரு முஹாஜிரீன் அகதியல்ல. ஒரு முஹாஜிரீன் கடுமையாக உழைத்துத் திரும்பவும் தன் நாட்டுக்குச் செல்வதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயம் இவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். தம்முடைய குறிக்கோளை அடைவதற்கு பலாத்காரமான முறையைக் கூட அவர்கள் கைக்கொள்ளலாம்.

61 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இஸ்லாத்தின் எதிரிகளின் அடக்கு முறையை எதிர்க்க சக்தியில்லாமல் முஸ்லிம்கள் மக்காவை விட்டு அபிசீனியாவில் குடியேறினார்கள். இதுதான் முஸ்லிம்களின் முதற் குடியேற்றம். பிறகு மக்காவில் வாழ்ந்த முஸ்லிம் சமூகமே எம்பெருமானாரின் தலைமையில் மதீனாவுக்குக் குடியேறியது. இதைத்தான் 'ஹிஜ்ரா என்று கூறுகிறோம். இஸ்ஸாமிய வரலாறே இந்தச் சம்பவத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் திரும்பவும் தம் நாட்டுக்கு வரவேண்டும் என்ற தம்முடைய குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
ஒரு முஸ்லிம் தன்னுடைய சமயக் கடமைகளை ஒழுங்காக நடத்துவதற்கு தடைகள் ஏதும் இருக்குமேயானால் அத்தடைகளை அகற்றுவதற்கும் தன்னுடைய மதத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்த் தும் போராட வேண்டும். இதைத்தான் நாம் 'ஜிஹாத்' என்று கூறுகிறோம். அந்தச் சமயப் போராளியை நாம் முஜத்தித் என்றழைக்கிறோம். ஒரு முஜத்தித் தன் போராட்டத்தில் வெற்றிகாண முடியாத பட்சத்தில்தான் 'முஹாஜிராக மாற வேண்டும். இவ்விரண்டும் முடியாவிட்டால் இரகசியமாக தம்முடைய சமயத்தைப் பேணி பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு அளிக்க வேண்டும். ஒரு முஸ்லிம், கல்வி கற்பதற்காகவோ அல்லது பொருள் தேடுவதற்காகவோ பிற நாட்டுக்குச் சென்றால் தன்னுடைய நடத்தையினால்தான், ஒரு சிறந்த முஸ்லிம் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் போது, இஸ்லாத்தின் தூதுவனாக அவன் மாறுகிறான். பிற சமயத்தவர் வாழும் நாட்டில் தன்னுடைய மத அனுஷ்டானங்களை செவ்வனே செய்யும் போது அவன் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல அல்லாஹ்வுக்கும் சேவை செய்கின்றான். சில நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினத்தவர்களாக இருந்த போதிலும் சிறுபான்மையினத்தவர்களாகவே கணிக்கப்படுகிறார்கள். கல்வியறிவும் பொருளும், அரசியல் அதிகாரமும் இல்லாத காரணத்தினால் அவர்கள் சிறுபான்மை இனத்தவர்களாக

Page 43
முகம்மது சமீம் 62
வாழ்கிறார்கள். எத்தியோப்பியா, தன்சேனியா, லெபனான் போன்ற நாடுகளில் நிலவும் நிலை இதுதான். இதே நிலைதான் சிசிலியிலும் இருந்தது. அங்கே அவர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள்.
ஐரோப்பாவில் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். ஏறக்குறைய இரண்டு கோடி முஸ்லிம்கள் ஐரோப்பாவில் இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டிலும் சிசிலியிலும் தென்கிழக்கு ஐரோப்பாவிலும் ஒரு காலத்தில் கொடி கட்டி வாழ்ந்தார்கள். இன்று, தாம் ஆட்சி செய்த நாடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சிதறுண்டு வாழ்கிறார்கள்.
மேற்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் பரவியபிறகு முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையேயிருந்த பகைமை மேலும் வளர்ந்தது. இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவ சமயத்திற்குமுள்ள வேறுபாடு என்னவென்றால், திருக்குர் ஆனின் கூற்றுப்படி, மதம் மாற்றுதலில் கட்டாயப்படுத்துதல் கூடாது (11:256) என்பதே. இஸ்லாத்தைத் தழுவியர்கள் தாமாகவே தழுவினார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள், ஆட்சியாளர்களின் மதத்தை மக்கள் தழுவவேண்டும் என்றும் எதிர்த்தால் பலவந்தமாக அவர்களை மதம் மாறச் செய்யவேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்கள் 'உலமாக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது முஸ்லிம்கள் மதம் மாற்றுவதற்கு வன்முறையைக் கையாண்டார்களேயானால் இதை முஸ்லிம்'உலமாக்கள்'வெகுவாகக் கண்டித்தார்கள். இதனாற்றான் இஸ்லாம் ஐரோப்பாவில் மிகவும் மெதுவாகவே பரவியது. யெஹுதிகளைத் தவிர வேறு எந்த மதத்தவரையும் ஐரோப்பியர்கள் விட்டு வைக்கவில்லை.
உரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஸ்பெயின் தேசம் ஜெர்.ன் இனத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினரின் படையெடுப்புக்கு ஆளாகியது. அங்கு வாழ்ந்த மக்கள் வட ஆபிரிக்காவில் இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டிய மூசா இப்னு நுசெயிர் தளபதியின் உதவியை நாடினார்கள். மூஸா தன்னுடைய

63 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
உதவி தளபதியான தாரிக் பின் சையித்தின் தலைமையில் ஒரு முஸ்லிம் படையை அனுப்பி வைத்தார். இரண்டு வருடங்களிலேயே ஸ்பெயின் தேசம் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வந்தது. எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிவரை ஸ்பெயின் தேசத்தை முஸ்லிம்கள் ஆட்சி செய்தார்கள். கி.பி. 1492ல் கர்ணாதாவின் (Granada) வீழ்ச்சிக்குப்பிறகு ஸ்பெயின் தேசத்தின் முஸ்லிம் ஆட்சி முடிவுற்றது. இன்று முஸ்லிம்கள் என்று கூறுவதற்கு அங்கு யாருமே இல்லை. சமீபத்தில் சில பணக்கார அரபிகள் அங்கே பெரும் வாசஸ்தலங்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். எண்பது லட்சம் சனத்தொகையில் இருபது லட்சம் முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது? ஆட்சி மாறியிருந்தாலும் 20 லட்சம் முஸ்லிம்கள் என்ன ஆனார்கள்? எழுநூறு வருடங்களாக ஒரு நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் எப்படி வேரோடு அழிக்கப்பட்டார்கள்? இந்தக் கதி ஏனைய நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும் நடக்காது என்பது என்ன உத்திரவாதம்? இதற்குரிய காரணங்களை நாம் அலசி ஆராய்ந்தாற்றான் எமது எதிர்கால வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளலாம்.
'அல் அந்த லூஸ்' என்றழைக்கப்பட்ட ஸ்பெயின் தேசத்தில் முஸ்லிம்கள் இன ரீதியாக பிளவுப்பட்டிருந்தார்கள். அரபியர்கள் என்றும் வட ஆபிரிக்காவிலிருந்து வந்த ‘பர்பர்கள்' என்றும் சிசிலியிலிருந்து வந்த முஸ்லிம் படைவீரர்கள், என்றும் வேறுபட்டு வாழ்ந்தார்கள். உமைய்யா அரச பரம்பரையினரின் வீழ்ச்சிக்குப் பின் ஸ்பானிய இஸ்ஸாமிய ஆட்சி, சிற்றரசர்களின் ஆட்சிக்குட்பட்டது. கிறிஸ்தவ அரசர்கள் ஒன்று சேர்ந்து இச் சிறு இராச்சியங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றினார்கள். புதிய ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கு முஸ்லிம்கள் ஆளாகினார்கள். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தம்முடைய மதக்கோட்பாடுகளுக்கு முரண்பட்ட கோட்பாடுகளைக் கொண்டவர்களை மிகுந்த தண்டனைக்குள்ளாக்கினார்கள். அதிகமானேர் பொது இடங்களில் ஸ்தம்பங்களில் கட்டப்பட்டு

Page 44
முகம்மது சமீம் 64
தீக்கிரையாக்கப்பட்டார்கள். மற்றும் சிலர் அவயவங்கள் வெட்டப்பட்டு மிகவும் கொடுரமான் முறையில் இம்சிக்கப்பட்டார்கள். அவர்களுடைய காணிகளையும் உடைமைகளையும் அபகரித்து நாடு கடத்தப்பட்டார்கள். இந்த வன்முறையைத்தான் இன்று பாலஸ்தீன் மக்கள் மேல் இஸ்ரேலியர்கள் நடத்திக் காட்டுகிறார்கள். பர்மாவில் ஆயிரக்கணக்கான ரொஹிங்கா என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் நாட்டை விட்டே துரத்தப்பட்டார்கள். ஸ்பெயின் தேசத்தில் இந்த நாடு கடத்தப்படும் படலம் ஐந்து ஆண்டுகள் நீடித்தது. ஒன்பது நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்ந்த நாட்டில் இன்று பாங்கு ஒலிகேட்பதற்கும் கூடவாய்ப்பில்லாதுபோய்விட்டது. இந்த நிலை ஏற்படுவதற்குரிய காரணம் என்ன? தம் முன்னேயே பிளவுகளை வளர்த்து ஒருவரையொருவர் எதிர்த்து வாழ்ந்த காரணத்தினாலும் மத நம்பிக்கை குறைந்த காரணத்தினாலும் தான் முஸ்லிம்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

65 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
3. பிறநாட்டு சிறுபான்மை
O O முஸ்லிம்கள்
ஐரோப்பாவின் தென்கிழக்குப் பிரதேசத்தில் உள்ள நாடுகளான, யுகோஸ்லாவியா, அல்பேனியா, ரூமேனியா பல்கேரியா ஆகிய நாடுகளில் வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் கதியும் ஸ்பானிய நாட்டு முஸ்லிம்களுக்கு நடந்த அதே கதிதான். இந்நாடுகள் கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னே அந்நியப் படையெடுப்புகளுக்கு ஆளாகின. இள்ளிரியர்கள் என்று கூறப்படுகிறவர்கள் மாத்திரமே இப்பிரதேசத்தின் பூர்விக குடிகள். ஏனையோர் அந்நியப் படையெடுப்புகளின் பின் வந்து குடியேறிய பிற நாட்டவர். இள்ளிரியர்கள் என்பவர்கள் அல்பேனிய மக்களின் மூதாதையர்கள். அல்பேனிய மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். பூர்வீகக் குடிகளான இவர்களை, இஸ்லாம் மதத்தைத் தழுவிய ஒரே காரணத்திற்காக, அந்நிய மதத்தினர் கொடுமைப்படுத்தவும், நாட்டை விட்டே துரத்தவும் முயற்சிப்பது, எவ்வளவு தூரம் இவர்கள் முஸ்லிம்களை வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பதினான்காம் நூற்றாண்டில், இப்பிரதேசம் துருக்கியர்களின் கைவசம் வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கே பரவியது. கிலாபத் ஆட்சி முடிவுற்ற பிறகு, இப்பிரதேசத்திலுள்ள நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையின மக்களாக வாழத் தலைப்பட்டனர். யூகோஸ்லாவியாவிலும் பல்கேரியாவிலும் நூற்றுக்குப் பதினேழு வீதமாக இருக்கின்றனர் முஸ்லிம்கள். இன்று ஏகாதிபத்திய வாதிகளின் சூழ்ச்சியினால், யூகோஸ்லாவியாவில் இருக்கும் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். நாற்பத்தி நான்கு முஸ்லிம் நாடுகள் இருக்கிறதென்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் பொஸ்னியா முஸ்லிம்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிற உண்மை தெரிந்திருந்தும் இவர்களின் நிலையைப் பற்றிப் பேச இந்த இஸ்லாமிய நாடுகளுக்குத் திராணியில்லை.

Page 45
முகம்மது சமீம் 66
இஸ்லாமிய ஆட்சி ஒரு காலத்தில் எல்லா இன மக்களையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தது. ஐரோப்பியர்கள் தேசியவாதம். என்ற ஒரு புதிய கருத்தை இஸ்லாமிய மக்களிடையே புகுத்தி; இஸ்லாத்தின மனித இன முழுமைக் கோட்பாட்டை உடைத்து, தனிநாடுகளாகப் பிளவுபடச் செய்தனர். கிலாபத் ஆட்சி வீழ்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ஈராக், ஈரான்; துருக்கி; சிரியா) குவைத் ஜோர்தான்; சவூதி அரேபியா என்பன போன்ற தனித்தனி இராச்சியங்களாக இவை தோன்றின. எனவே இஸ்லாமிய மக்களிடையே இருந்த ஒற்றுமை பாதிக்கப்பட்டது. இஸ்லாமிய ஆட்சியின் ஓர் அங்கமாக விளங்கிய மத்திய ஆசிய முஸ்லிம் மக்கள் ரஷ்ய ஏகாதிபத்திய ஆட்சிக்குட்பட்டார்கள். கம்யூனிஸ்ட் நாடாக சோவியத் யூனியன் தோன்றியும் இம்மக்களுக்கு விமோசனம் கிடைக்கவில்லை.
1917ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிஸ புரட்சிக்கு முன் கம்யூனிஸ்ட்டுகள், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெகுவாகப் புகழ்ந்தார்கள். ஆனால் புரட்சிக்குப் பின் முஸ்லிம்கள் தாங்கொணாத துன்ப நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். 1917 ஆண்டுக்கும் 1921ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். கிரைமியாவிலிருந்த முஸ்லிம்கள் எல்லோரும், பலவந்தமாக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். 1926 ஆம் ஆண்டில் விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் முஸ்லிம்களுடைய காணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பத்துலட்சம் முஸ்லிம்கள் உண்ண உணவில்லாமல் மடிந்தார்கள். முஸ்லிம்களுடைய கலாசாரத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கொள்கையைக் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்தார்கள். முஸ்லிம்களின் மொழியாகிய அரபு மொழி ஒழிக்கப்பட்டது. ஆனால் அதே வேளையில், ஆர்மீனிய மக்களினதும், ஜார்ஜிய மக்களினதும் மொழி

67 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
பாதுகாக்கப்பட்டது. ஸ்பெயின் தேசத்தில் முஸ்லிம்கள் என்ன சித்திரவதைக்குள்ளானார்களோ அதே சித்திரவதையை முஸ்லிம்கள் கம்யூனிஸ் சோவியத் யூனியனில் அனுபவித்தார்கள். ஏறக்குறைய நான்கு கோடி முஸ்லிம்கள் இப்பொழுது சுதந்திரம் பெற்று, சுதந்திர நாடுகளில் பெரும்பான்மை இனமாக மாறியிருக்கிறார்கள்.
சீனா
எட்டுக் கோடி முஸ்லிம்கள் வாழும் சீனாவில் அவர்களுக்கு எந்தவித உரிமையும் அளிக்கப்படவில்லை. ஒரு கோடி முஸ்லிம்கள்தான் சீனாவில் இருக்கிறார்கள் என்ற சீன கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு காலத்தில் சீனாவை ஆட்சி செய்த மங்கோலிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். அவர்களுடைய வீழ்ச்சிக்குப்பிறகு, ஆட்சியைக் கைப்பற்றிய மாஞ்சு அரசு பரம்பரையினர் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தினார்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம்கள் சுதந்திரம் வேண்டி போர்க் கொடி உயர்த்தினார்கள். தோல்வியடைந்த முஸ்லிம்கள் யூனான், கான்சு, சிங்கியாங் ஆகிய பிரதேசங்களிலிருந்தும் நாடு கடத்தப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனாவில் தேசிய எழுச்சி தோன்றியதோடு முஸ்லிம்களிடையேயும் இஸ்லாமிய மறுமலர்ச்சி தோன்றியது. இந்த மறுமலர்ச்சி சீனா கம்யூனிஸ ஆட்சிக்குள் வந்த பிறகு அடங்கி ஒடுங்கியது. முஸ்லிம்களின் பள்ளி வாசல்களும், இஸ்லாமிய பாடசாலைகளும் மூடப்பட்டன. முஸ்லிம்கள் பேரினவாதமக்களுடன் ஒன்றிணைய வேண்டுமென்று கூறப்பட்டது. முஸ்லிம்கள் தங்களுடைய மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மை 1967ஆம் ஆண்டில் பீக்கிங் நகரில் நடந்த கலாசார ஊர்வலத்தில் தெரிய வந்தது.

Page 46
பிலிப்பீன்ஸ்
பிலிப்பீன்ஸ் நாட்டில் எண்பத்தைந்து சதவிகிதமாக இருந்த முஸ்லிம்கள் இன்று பதினைந்து சதவிகிதமாக மாற்றப்பட்டார்கள் என்றால், யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பெயின் தேசத்தவர்கள், பிலிப்பீன்ஸ் தீவுகளைக் கைப்பற்றிய பின்னர், தம் நாட்டில் கடைப்பிடித்த அதே மதக் கொள்கையைத் தான் இங்கேயும் கடைப்பிடித்தார்கள். முஸ்லிம்கள் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டார்கள். அநேகமானோர் கொல்லப்பட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் பிலிப்பீன்ஸ் வந்த பிறகும், முஸ்லிம்கள் இம்சிக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த மிந்தனாவோ தீவுகைப்பற்றப்பட்டு ஏனைய பிலிப்பீன்ஸ் தீவுகளுடன் சேர்க்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகும் பிலிப்பீன்ஸ் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தினார்கள். அமெரிக்கர்களினால் தங்கள் நாடு பிலிப்பீன்ஸ் ஏனைய தீவுகளுடன் பலவந்தமாக சேர்க்கப்பட்டது என்ற வரலாற்றுண்மையைக் காட்டி முஸ்லிம்கள் சுதந்திரம் கோரினால், அவர்கள் பயங்கரவாதிகள் என்று அவர்களுக்குப் பட்டம் சூட்டி அவர்களை அழிக்க முற்படுகிறார்கள் இன்றைய பிலிப்பீன்ஸ் ஆட்சியாளர்கள்.
இந்தியா
இஸ்லாத்தின் ஆரம்ப காலந்தொட்டே இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மை இனத்தவராக வாழ்ந்திருக்கிறார்கள். தில்லி சுல்தான் அரசம்பரம்பரையினரும், முகலாய அரச பரம்பரையினரும், இந்தியாவின் பெரும்பாகத்தை ஆட்சி செய்தார்கள் என்றாலும், கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த பலவந்தமாக மதம் மாற்றுக் கொள்கையை முஸ்லிம்

69 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ாளர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதனாற்றான் எழுநூறு ட்சிக்குப்பின்னும் முஸ்லிம்கள் சிறுபான்மைச் சமூகமாக இருக்கிறார்கள். 1875ம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்குப் பின், முஸ்லிம்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களால் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். முஸ்லிம்களுடைய தரத்தைக் குறைப்பதற்காக அவர்களைக் கல்விக் கூடங்களிருந்தும் வெளியே வைத்தார்கள். முஸ்லிம்களிடையே கல்வி கற்போர் தொகை குன்றத் தொடங்கியது. அரசாங்கத்தின் பதவிகள் முஸ்லிம்களுக்குமறுக்கப்பட்டன. ஒரு தாழ்ந்த சாதி என்ற நிலைக்கு முஸ்லிம்கள் கொண்டு வரப்பட்டார்கள்.1937ம் ஆண்டில் மாந்தெகு செம்ஸ்டபோர்டு (Montague-Chemsford) சீர்திருத்த அமைப்பின் பிரகாரம், இந்தியா ஒன்பது பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் மந்திரி சபை நிலைநாட்டப்பட்ட போது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்த ஏழு பிரதேசங்களில் ஒரு முஸ்லிம் கூட மந்திரி சபையில் இடம்பெறவில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த பஞ்சாப் பிரதேசத்திலும், கிழக்கு வங்காளப் பிரதேசத்திலும் மட்டும் தான் முஸ்லிம்கள் மந்திரி சபையில் இடம் பெற்றார்கள். இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட முஸ்லிம்கள் இந்திய காங்கிரஸிலிருந்து விலகி முஸ்லிம் லீக் அமைத்து, முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.

Page 47
முகம்மது சமீம் 70
4. முஸ்லிம் சிறுபான்மை இனம் இலங்கையில் தோன்றிய வரலாறு
பல மதத்தவர்கள் வாழும் ஒரு சமுதாயத்தில் ஒரு சிறுபான்மை சமூகம் தனது மதத்தையும் மதத்தின் அடிப்புடையில் தோன்றிய கலாசாரத்தையும் பாதுகாக்கும் அதே வேளையில் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சியில் எப்படி தன்னை ஈடுபடுத்த முடியும் என்பது தான் இன்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை. முஸ்லிம்கள் தம்முடைய மதக்கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரண்படாத கருத்துக்களையும் பழக்க வழக்கங்களையும் தாம் ஏற்றுக்கொள்ளத் தவறியதில்லை. தாம் குடியேறிய நாடுகளில் பிற இனத்தவர்களினதும் பிற சமயத்தவர்களினதும் மொழியையும் பண்பாட்டுமுறைகளையும் ஏற்ற அதேவேளையில் தமதுமதத்தையும் மதக் கொள்கைகளையும் பேணிக்காக்கத் தவறியதில்லை. தம்முடைய மத அனுஷட்டானங்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்தவொரு கருத்தையும் பழக்கத்தையும் எதிர்க்கத் தவறியதுமில்லை. இதனாற்றான் முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைக் காப்பாற்ற முடிந்தது, இலங்கை முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்ட ஒரு சிறுபான்மை சமூகம், இனத்தால் அல்ல.
இலங்கை முஸ்லிம்களை பதினாறாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் மூர் என்றழைத்தனர். இலங்கை முஸ்லிம்களைப் போர்த்துக்கேயர் வட ஆபிரிக்காவில் இருக்கும் முஸ்லிம்கள் எனத் தவறாக நினைத்து இப்பதப் பிரயோகத்தை உபயோகித்தனர். இலங்கை முஸ்லிம்களுக்கும் வட ஆபிரிக்காவிலுள்ள முஸ்லிம்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இலங்கை முஸ்லிம்களின் பண்டைய வரலாறு சரியான முறையில் ஆராயப்படாததால் இன்றும் அவர்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இல்லை.

71 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இருந்தாலும் அராபியர்கள் இலங்கைக்கு எக்காலப் பகுதியில் வந்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எவ்விதக்கருத்து வேறுபாடும் இல்லை. சர் அலெக்சாந்தர் ஜொன்சன் என்பவர், முஸ்லிம்கள் எட்டாம் நூற்றாண்டில் வந்தார்கள் என்றும் அவர்கள்'ஹாஷிம் கிளையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். ஆனால் சர் எமர்சன் தெனன்ட்ட என்ற வரலாற்றாசிரியர் அரபியர்கள் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்று கூறுகிறார். ஆகவே கணிசமான தொகை அரபியர்கள், எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இலங்கை வந்தடைந்தார்கள் என்பதற்குச் சரித்திர சான்றுகள் இருக்கின்றன. அரபியர்கள் தென்னிந்தியாவுடனும் இலங்கையுடனும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு இக்கால பகுதியில் இலங்கைக்கு வந்த வர்த்தகர்களின் பிரயாணக் குறிப்புகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. பத்தாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்ட 'சூபிக் எழுத்து வடிவத்தில் உள்ள ஒரு கல்வெட்டு சாஸனத்தின் முஸ்லிம்களின் அடக்கதலத்தைப் பற்றிய குறிப்பின் மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் பத்தாம் நூற்றாண்டில் இருந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாம்
6 JJ6) TLD.
முஸ்லிம்கள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ‘சோனகர்’ என்றே தமிழர்களால் அழைக்கப்பட்டார்கள். 1834ம் ஆண்டில் வெளியான நோட்டியர் தமிழ் அகராதியில், முஸ்லிம்களைக் குறிப்பிடும் போது ‘சோனகர் என்றே குறிப்பிடுகிறார்கள். மகா அலெக்சாந்தருடைய கட்டளையின் படி கிரேக்கக் கடல் தளபதி ஒனஸ் கிரீட்டஸ் கி.மு. 327ல் தயாரித்த பூகோள படத்தில் மன்னார் புத்தளம் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களைக் குறிப்பிடுகையில் ‘சோனி என்ற வார்த்தையையும் இப்பிரதேசத்துக்கு ‘சோனி பொட்டோமஸ் என்ற பதத்தையும் பிரயோகிக்கிறார். எனவே

Page 48
முகம்மது சமீம் 72
2300 வருடங்களுக்கு முன் அரபியர்கள் இலங்கைக் கரையை வந்தடைந்திருக்கலாம் என்றும் நாம் யூகிக்க இடமிருக்கிறது.
கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பிருந்தே இலங்கையுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த அரபியர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு புதிய உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கினார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் அஜாபியுல் ஹிந்த் என்ற பிரயாண நூலை எழுதிய இப்னு ஷஹர்யர் என்ற அரபியர் ஹசரத் உமருடைய காலத்தில் இஸ்லாத்தைப் பற்றி அறிவதற்காக இலங்கையிலிருந்து ஒரு தூதுக் குழு சென்றதாகக் குறிப்பிடுகிறார். அரபியர்கள், நாடு பிடிக்கவோ தமது மதத்தைப் பரப்புவதற்கோ இலங்கைக்கு வரவில்லை என்ற காரணத்தினால் அவர்களை இலங்கை வாழ்மக்கள் வரவேற்றார்கள். சிங்கள் மக்கள் தம்முடைய பொருளாதார வளர்ச்சிக்குத் தாம் அரபியர்களோடு வைத்திருந்த வர்த்தகத் தொடர்பு மிகவும் அவசியமானது என்றுணர்ந்த காரணத்தினால் அரபியர்களை மிகவும் கண்ணியமான முறையில் உபசரித்தார்கள்.
அரபியர்கள் கடல் கடந்த வியாபார நோக்கமாகப் பல நாடுகளுக்குச் சென்றார்கள். அவர்களுடைய அரசியல் செல்வாக்குப் பெருகப் பெருக அவர்களது வர்த்தகமும் வளர்ந்தது, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் இந்து சமுத்திரத்தில் அரபியர்களின் வர்த்தகமும் மேலோங்கியிருந்தது. அவர்கள் வர்த்தகம் செய்த நாடுகளில் குடியேறினார்கள். சீனாவின் கன்டன் பிரதேசத்திலும் மலாயாவிலும், இந்தொனேஷியாவிலும் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அரபுக் குடியேற்றங்கள் இப்படித்தான் தோன்றின. இப்படித் தோன்றிய குடியேற்றங்கள்தான் காலியிலும், பேருவளையிலும் புத்தளத்திலும் முஸ்லிம் கிராமங்களாக வளர்ந்தன.பதின்மூன்றாம் நூற்றாண்டில் அப்பாசிய கலீபாக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய சமுத்திரத்தில்

73 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
அரபியர்களின் ஆதிக்கம் குறைந்தது. இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சாம்ராச்சியத்துடனிருந்த தொடர்பும் குன்றியது.
தென்னிந்தியக் கரையோரங்களில் குடியேறிய அரபியர்கள் வர்த்தகத்தில் மேம்பட்டு விளங்கினார்கள். இந்திய சமுத்திரத்தின் வர்த்தகம் இவர்கள் கைவசம் வந்தது. மத்திய கிழக்கு நாடுகளுடன் இருந்த வர்த்தகத் தொடர்பு குன்றியதின் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்திய முஸ்லிம்களுடன் அதிகமாகத் தொடர்பு வைக்கத் தொடங்கினார்கள்.வர்த்தகம் காரணமாகத் தென்னிந்திய முஸ்லிம்களுடன் வைத்த தொடர்பு நாளடைவில் அவர்களுடைய மொழியாகிய தமிழையும் தமது தாய்மொழியாக இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு மதமும் ஒரு முக்கியகாரணம். தென்னிந்திய முஸ்லிம்கள் தமிழைத் தாய் மொழியாக ஏற்றபிறகு அரபு லிபியிலேயே ஆரம்பத்தில் தமிழை எழுதத் தொடங்கினார்கள். அரபுத் தமிழ் மூலம் இஸ்லாமிய நூல்களை எழுத முற்பட்டார்கள். நாளடைவில் இவ்வரபுத் தமிழ் மறைந்து தமிழ் லிபியிலேயே தமிழை எழுத முற்பட்டார்கள். தமிழ் மொழியில் ஏராளமான இஸ்லாமிய இலக்கியங்கள் தோன்றிய காரணத்தினாலும் இஸ்லாமிய அறிஞர்கள் அடிக்கடி இலங்கை வந்த காரணத்தினாலும் இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டார்கள். இலங்கைப் பள்ளிவாசல்களில் பெரும்பாலும் தென்னிந்திய கதீப்மார்களே கடமையாற்றினார்கள். இலங்கையின் பெருந்தோட்டப் பயிர் செய்கையின் வளர்ச்சிக்குப் பிறகு தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் செல்வாக்கும் பெருகியது. கொழும்பிலும் மற்றும் மலை நாட்டுப் பிரதேசத்திலும் தென்னிந்திய வர்த்தக நிலையங்கள் தோன்றின. தென்னிந்திய முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சி இலங்கை முஸ்லிம்களிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கும் பெருகியது. எனவே இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்திய முஸ்லிம்களுடன் வைத்திருந்த தொடர்பும் உறவுமுறையாக வளர்ந்தது.

Page 49
முகம்மது சமீம் 74
5. இலங்கை முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சி
இலங்கை முஸ்லிம்கள் தமதுமதத்தையும் தனித்துவத்தையும் காப்பாற்றுவதற்காக மொழியை ஒரு கருவியாக உபயோகித்தார்கள். தமிழ் மொழியைத் தாய் மொழியாக இலங்கை முஸ்லிம்கள் கொள்வதற்குத் தென்னிந்திய முஸ்லிம்களின் செல்வாக்கு ஒரு காரணமாகும். வட இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யம் மகோன்னத நிலையில் இருந்தும் கூட, அவர்களுடைய செல்வாக்கு இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படவில்லை. தென்னிந்திய முஸ்லிம்களோடு இலங்கை முஸ்லிம்களுக்கு இருந்த வர்த்தகத் தொடர்பு இச்செல்வாக்கு வளர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 1946 ஆம் ஆண்டில் இலங்கை சனத்தொகைக் கணக்கெடுப்பில் சர் ஆர்தர் ரணசிங்க எழுதிய அறிக்கையில் முஸ்லிம்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
“இலங்கையில் குடியேறிய அரபிய வர்த்தகர்கள் இலங்கையின் பிற மதத்தவர்களுடன் திருமணத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்றாலும் அவர்கள் தாய்மொழியாகக் கொண்ட தமிழும் தங்கள் மதமும் அவர்களுடைய தனித்துவத்தைக் காப்பாற்ற உதவியதோடு தம்முடைய இன ஒற்றுமைமையும் பேணிப் பாதுகாக்க உதவின.”
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பே இலங்கையுடனும் ஏனைய கிழக்கு நாடுகளுடனும் மேற்கு ஆசிய மக்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பிறகும் கலீபாக்களின் ஆட்சிக் காலத்திலும் இவ்வர்த்தகம் மேலோங்கி வளர்ந்தது. எனவே பண்டைய காலந் தொட்டே இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் முஸ்லிம்களின் கையில் இருந்ததுமட்டுமல்லாமல் இலங்கை அரசர்கள் தம்முடைய நாட்டின்

75 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் வெளிநாட்டு வர்த்தகத்தையே நம்பி இருந்தார்கள். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுபிட்சத்துக்கும் பாடுபட்ட முஸ்லிம்களின் வெளிநாட்டு வர்த்தகத்தை அழிப்பதற்குச் சூழ்ச்சிகள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
பொலநறுவை அரசர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்தது. அரபிய முஸ்லிம்கள் இலங்கைக் கரையோரப் பகுதிகளில் அதிகமாகக் குடியேறத் தொடங்கினார்கள். இலங்கையில் குடியேறிய முஸ்லிம்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு இன்னுமொரு பெரும் பணியை ஆற்றினார்கள். மேற்காசியாவில் பிரபல்யம் அடைந்திருந்த வைத்திய முறையை இலங்கைக்குக் கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்களே. சர் அலெக்சாந்தர் ஜொர்ன்டன் 1827ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்க செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் 'அவிசென்னாலின் (இப்னுசீனா) வைத்தியக் கருத்துக்களை இலங்கையில் புகுத்தியவர்கள் முஸ்லிம்களே. அரபியர்களின் வழித்தோன்றல்களான இலங்கை முஸ்லிம்கள் என்னிடம் அடிக்கடி கொண்டு வந்த நூல்களில் கிரேக்க தத்துவ ஞானிகளான பிளேட்டோ, அரிஸ்டோட்டல், யூக்லிட் கேலன், தொலமி போன்றவர்களுடைய நூல்களின் அரபு மொழி பெயர்ப்புக்களை என்னிடம் வந்து காட்டுவார்கள்” என்று எழுதியிருந்தார். இலங்கையின் அறிவியல் வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பணியைப் பற்றிக் கூறுவதற்கு இதைவிட ஆதாரம் ஏதும் தேவையில்லை.
அப்பாசிய ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பிறகு எகிப்தில் பாத்திமீய கலீபாக்களின் ஆட்சி தலையெடுத்தது. மேற்காசிய நாடுகளுடன் இலங்கைக்கிருந்த வர்த்தகமும் இவர்கள் கைவசம் வந்தது. இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் ஓரளவு பாதிக்கப்பட்டது. அப்போது யாப்பாஹுவயிலிருந்து ஆண்ட இலங்கை மன்னன் முதலாம்புவனேகபாகு எகிப்தின் சுல்தானுக்கு வரைந்த ஒரு மடலில்

Page 50
முகம்மது சமீம் 76
பின்வருமாறு கூறுகிறார். இலங்கை தான் எகிப்து. எகிப்து தான் இலங்கை. எனது நாட்டில் ஏராளமான வைரம் வைடூரியக் கற்கள் இருக்கின்றன. யானைகள் யானைத் தந்தங்கள் கறுவா ஆகியனவும் எனது நாட்டில் ஏராளமாக இருக்கின்றன. சுல்தானுக்கு ஒவ்வொரு வருடமும் இருபது கப்பல்கள் என்னால் கொடுக்க முடியும். யெமெனிலிருந்து வந்த தூதுவரைத் திருப்பி அனுப்பி விட்டோம். தங்களோடு தொடர்புகொள்ள ஆவலாயிருக்கிறோம்” இலங்கை மன்னர்கள் வெளிநாட்டுவர்த்தகத்தில் எவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.
பதினான்காம் நூற்றாண்டில் இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தில் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த மலபார்கரையோரப் பகுதியில் வாழ்ந்த கேரள முஸ்லிம்களும் குஜராத்தியைச் சேர்ந்த கோஜா போரா, மேமன் ஆகிய ஷியா முஸ்லிம்களும் பெரும்பங்கை ஏற்றார்கள. அவர்கள் கம்பே வளை குடாவிலிருந்து கொண்டு வந்த துணிமணிகள் இலங்கையிலும் மற்றும் நாடுகளிலும் கம்பாய என்ற பெயர் பெற்றது.
தென்னிந்திய முஸ்லிம்கள் இலங்கையுடன் மட்டுமல்ல, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்றார்கள் என்பதற்கு அங்கே சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மரக்கலாயர் மணி சான்று பகரும். இந்த மணி முகையத்தீன் வக்குக் என்பவருடைய கப்பலில் இருந்ததாக அதில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் கூறுகின்றன.
குஜராத்தி முஸ்லிம்களும் மாப்பிள்ளைகளென அழைக்கப்படும் கேரள நாட்டு முஸ்லிம்களும் கொழும்பைத் தம்முடைய வர்த்தக ஸ்தலமாக அமைத்துக் கொண்டார்கள். இந்திய முஸ்லிம்களின் வருகையினால், குறிப்பாக தென்னிந்திய முஸ்லிம்களின் தொடர்பினால், அரபிய வழித் தோன்றல்களான இலங்கை முஸ்லிம்களின் இன பண்பிலும் மாற்றம் ஏற்பட்டது. எனவே இலங்கை முஸ்லிம்கள் பெரும்பாலும் தம்முடைய

77 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
வர்த்தகத்திற்கும் மதத் தொடர்பிற்கும் இந்திய முஸ்லிம்களையே நம்பியிருந்தனர். அரபிய முஸ்லிம்களின் கலாசாரத்தைப்பின் பற்றி வந்த இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு முறைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரபியர்களின் வழித்தோன்றல்கள் என்ற நிலை போய் இந்திய அரபியர்கள்' என்ற இனமாக முஸ்லிம்கள் மாறினார்கள். வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை வைத்துத்தான் சில இனத்துவேசிகள் இலங்கை முஸ்லிம்கள் அரபியர்கள் அல்ல தென்னிந்தியத் தமிழர்கள் என்று கூறுகின்றார்கள். அப்பாசிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களோடு வைத்த வர்த்தகத் தொடர்புதான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ற வரலாற்றுண்மையை மறைத்து, இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் என்று கூறி அவர்களின் உரிமையைப் பறிக்கப் பார்கிறார்கள்.
பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தோன்றிய சிங்கள சந்தேச காவியங்களான ‘கிரா சந்தேசய,திசா சந்தேசய, ராஜாலிய போன்ற நூல்கள் காயல்பட்டணத்திலிருந்து வந்த முஸ்லிம்களின் கடல் ஆதிக்கத்தைப் பற்றியும் அவர்களது வர்த்தகத்தைப் பற்றியும் கூறுகின்றன. தமிழ் மொழி காயல்பட்டணத்தின் முஸ்லிம்களின் வர்த்தக மொழியாக இருந்த காரணத்தினால் இலங்கை முஸ்லிம்களும் தமிழ் மொழியைத் தாய் மொழியாக ஏற்றனர். ஆரம்பத்தில் அரபு மொழியில் எழுதப்பட்டு அரபுத் தமிழ் என்று பெயர் பெற்ற இம்மொழி கிழக்காபிரிக்காவின் ‘சுவாஹிலி மொழியைப் போன்று வளர்ச்சி பெற்றது என்ற கருத்தை கலாநிதி சுக்ரியும், ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்களும் வெளியிட்டிருக்கிறார்கள். சுவாஹிலி மொழியுடன் நெருங்கிய தொடர்பு அரபுத் தமிழுக்கிருந்தது என்று கலாநிதி சுக்ரி கருதுகிறார். து.ஆ’குத்பா, மெளத், ஹயாத் போன்ற பதங்கள் இரு மொழிகளிலும் காணக் கிடைக்கிறது என்று கூறுகிறார். தென்னிந்திய முஸ்லிம்களின் வருகையினால் இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

Page 51
முகம்மது சமீம் 78
6. இலங்கை முஸ்லிம்களின் மதவழிபாடு
சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்த முஸ்லிம்கள் சிங்கள மொழியைத் தாய் மொழியாக ஏற்காதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையே. சிங்கள மொழி பெளத்த பிக்குகளால் வளர்க்கப்பட்ட ஒரு மொழி. பெளத்த கோயில்களின் சூழ்நிலையில் வளர்ந்த மொழி. பெளத்த மதம் பிராக்கிருத மொழியில் ஆரம்பித்து பாளிமொழியாக வளர்ந்து பிறகு சிங்கள மொழியாகப் பரிணமித்தது. பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சிங்கள மொழி பூரணத்துவம் பெறுகிறது. கல்விமான்களாகவும் அறிஞர்களாகவும் விளங்கியவர்கள் பெளத்த பிக்குகளே. அவர்கள் எழுதிய நூல்களிலும் பெளத்த மதத்தின் செல்வாக்கு அதிகமாக இருந்தது, அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களிலும் இச் செல்வாக்கைக் காண்கிறோம். தமிழ் இலக்கியத்தில் இத்தகைய மதச்செல்வாக்கை நாம் காணமுடியவில்லை. சங்க இலக்கியங்களிலோ அதற்குப் பிற்பட்ட காலங்களில் மதச் செல்வாக்கு இருக்கவில்லை. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலுள்ள காலப்பகுதியில் தான், பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்தில் நாயன்மார்களினதும் ஆழ்வார்களினதும் செல்வாக்கை நாம் தமிழிலக்கியத்தில் காண முடிகிறது. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தியாவில் இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பிறகு இஸ்லாமிய இலக்கியங்கள் இந்தியாவில் தோன்றத் தொடங்கின. முஸ்லிம்களின் ஆட்சி, இந்தியாவில் பரவிய பிறகு முஸ்லிம்களின் மொழி இந்தியாவில் பிரதேசவாரியாக எழுந்தது. கேரளப் பிரதேசத்துமுஸ்லிம்கள் மலையாள மொழியிலும், கன்னடப் பிரதேச முஸ்லிம்கள் கன்னடத்திலும், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழ் மொழியிலும் இஸ்லாமிய இலக்கியங்களைப் படைத்தார்கள். எல்லா

79 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
மொழிகளிலும் இந்தச் செல்வாக்கை நாம் காண முடிகிறது. தென்னிந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மேற்காசிய நாடுகளுடன் தமக்கிருந்த தொடர்பு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு குன்றத் தொடங்கியது. இதன் பயனாக தாம் குடியேறிய நாட்டு மக்களுடைய மொழியைக் கற்பதுடன் அம்மொழியிலேயே மத நூல்களையும் எழுதத் தொடங்கினார்கள். தென்னிந்திய முஸ்லிம்களுடன் வர்த்தகத் தொடர்புகொண்டிருந்த இலங்கை முஸ்லிம்கள் தம் மதத்திற்கு தேவையான மதநூல்கள் தமிழ் மொழியில் இருப்பதைக் கண்டார்கள். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியையேற்பதற்கு இதுவே முக்கிய காரணம். எனவே இலங்கை முஸ்லிம்களிடையே பண்பாட்டு முறையில் தென்னிந்திய முஸ்லிம்களின் செல்வாக்கை நாம் காணலாம். திருக்குர் ஆனின் மொழி அரபு மொழியான காரணத்தினால் எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்கள் அரபு மொழியைக் கைவிட விரும்பவில்லை. இஸ்லாமிய ஆட்சி ஐரோப்பாவிலிருந்து மத்திய ஆசியா வரையிலும் பரவியிருந்த காரணத்தினால் பல நாட்டு மக்கள் இவ்வாட்சியின் கீழ்வந்தார்கள். பல மொழி பேசும் மக்கள் இஸ்லாத்தைத் தழுவிய காரணத்தினால் தமது மொழிக்கும் அரபு மொழிக்கும் பொதுவாக ஒரு மொழியைத் தோற்றுவித்தார்கள். தம்முடைய மொழியை அரபு லிபியில் எழுதத் தலைப்பட்டார்கள். இப்படித் தோன்றிய ஒரு மொழிதான் உருதுமொழி. பாரசீக மொழியும் துருக்கி மொழியும் அரபு லிபியிலேயே எழுதப்பட்டு வந்தன. ஆபிரிக்காவில் சுவாஹிலி மொழியும் தமிழ் நாட்டில் அரபுத் தமிழும் இப்படித்தான் தோன்றின. அரபுத் தமிழ் அதிக காலம் நீடிக்கவில்லை. தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழ் லிபியிலேயே தமது மத இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினார்கள். அரபுப் பதங்கள் முஸ்லிம் எழுத்தாளர்களுடைய எழுத்துக்களில் அதிகமாக இருப்பதற்கு அரபு மொழியின் செல்வாக்கும் இஸ்லாத்தின் செல்வாக்கும்தான் காரணம்.

Page 52
முகம்மது சமீம் 80
தமிழ்நாட்டு முஸ்லிம்களுடைய பண்பாட்டு முறைகளும் இலங்கை முஸ்லிம்களிடையே பரவின. தெற்கு அரேபியாவின் யெமன், ஹத்ரமாத் பிரதேசங்களின் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் தென்னிந்திய-இலங்கை முஸ்லிம்களிடையே அதிகமாக இருப்பதற்கு இவர்களிடையே இருந்த வர்த்தகத் தொடர்பே காரணம். தெற்கு அரேபிய முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஷாபி மத்ஹப்பை பின்பற்றினார்கள். இவர்களுடன் தொடர்புவைத்திருந்த தென்னிந்திய இலங்கை முஸ்லிம்களும் ஷாபி மத்ஹப்பை பின்பற்றினார்கள். யெமன், ஹத்ரமாத் பிரதேசங்களில் சூபித்துவக் கொள்கைகள் பரவத் தொடங்கின. அப்பாசிய ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இஸ்லாத்தைப் பரப்பும் கைங்கரியத்தை சூபித்துவ ஞானிகள் மேற்கொண்டார்கள். சூபித்துவஞானிகள் இஸ்லாத்தைப் பரப்புவதற்கு அமைத்த ஸ்தலங்கள் தக்கியாக்கள் என்றும் சாவியாக்கள் என்றும் பெயர் பெற்றன. சூபித்துவ தரீக்காக்களான காதிரியா, ஷாதுலியா, ரிபாயா, ஜின்திஸா நக்சபந்தியா ஆகிய தரீக்காக்கள் தென்னிந்திய இலங்கை முஸ்லிம்களிடையே uly 660T.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஈராக் தேசத்தில் வாழ்ந்த ஷேக் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய த்ரீக்கா பதினைந்தாம் நூற்றாண்டில் முஹம்மத் கெளத் என்பரால் இந்தியாவில் பரப்பப்பட்டது. காதிரியா தரீக்கா தென்னிந்தியாவில் பரவுவதற்கு ஹத்ரமாத்தைச் சேர்ந்த ஷேக்முஹம்மத் ஜிப்ரி காரணமாயிருந்தார். காயல்பட்டணத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதிர் தைக்கா சாஹிப், காதிரியா தரீக்கா தென்னிந்தியாவில் பரவுவதற்குப் பெரிதும் பாடுபட்டார். இலங்கையில் காதிரியா தரீக்கா பரவுவதற்கு, காயல்பட்டணத்தைச் சேர்ந்த ஷேக் உமர் தைக்கா சாஹிப், கீழக்கரையைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதிர் தைக்கா சாஹிப் மாப்பிள்ளை ஆலிம் என்று பலராலும் கூறுப்படுகின்ற ஷேக் செய்யித் முஹம்மத் இப்னு அஹமத்

81 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
லெப்பை ஆகிய சூபித்துவ ஞானிகளே காரணமாயிருந்தார்கள். இவ்வறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய தத்துவ நூல்கள் இலங்கை மக்களிடையே பிரபல்யம் அடைந்தன.
இலங்கை முஸ்லிம்களிடையே பரவிய இன்னொரு தரீக்காதான் ஷாதிலியா தரீக்கா, மஃரிப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஹசன் அஷ்ஷாதுலி அவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஷாதுலி தரீக்காவை தோற்றுவித்தார்கள். இத்தரீக்கா வட ஆபிரிக்காவில் மொரக்கோ முதல் எகிப்து வரையிலும் பரவியது. பிறகு சிரியாவிலும் அரேபியாவிலும் பலர் இத்தரீக்காவைப் பின்பற்றினார்கள். ஷேக் ஷாதுலியைப் பற்றிய வரலாற்று நூல்கள் அரபுத் தமிழில் தோன்றின. காயல் பட்டணத்தைச் சேர்ந்த நூஹ9லெப்பை ஆலிம் அவர்களும் நாகப்பட்டணத்தைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மாயில் என்பவரும் ஷேக் ஷாதுலியைப் பற்றிய வரலாற்று நூல்களை எழுதினார்கள். ஷாதுலியா தரீக்கா இலங்கையில் பரவுவதற்கு இந்நூல்கள் காரணமாயிருந்திருக்கலாம். ஜிஸ்தியா, நக்சபந்தியா ஆகிய தரீக்காக்களும் தென்னிந்தியத் தொடர்பினால் இலங்கையில் பரவின என்றால் யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்படுவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த இம்மதப் பெரியோர்களே. யெமென் தேசத்தைச் சேர்ந்த அரபி அப்பா என்று புகழ் பெற்ற ஷேக் இஸ்மாயில் இஸத்தீன் என்பவரும் அவருடைய மகன் ஷேக் யஹ்யா அவர்களும் இலங்கையில் ஏற்பட்ட இஸ்லாமிய விழிப்புணர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்கள். இலங்கையில் அஹதாலியா என்ற இயக்கம் பரவுவதற்கு பெரிதும் காரணமாயிருந்தவர்கள் யெமென் தேசத்தைச் சேர்ந்த சையத் அப்துல் ரஹ்மான் அப்துல் பாரி அல் அஹ்தால் என்பவராவர். ஆலவியத்துல் காதிரியா இயக்கத்தைத் தோற்றுவித்த ஷேக் அல்ஜிப்ரி அவர்கள் ஹத்தாத் ராதீப்போன்றவைகளை

Page 53
முகம்மது சமீம் 82
இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரவுவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவர்கள். எனவே இலங்கையில் இஸ்லாம் வலுவடைவதற்கும் பரவுவதற்கும் சூபித்துவ ஞானிகளின் பணி மிகவும் உதவின என்றால் மிகையாகாது.
மஸ்ஜித்கள் தொழுகைக்கு அமைந்தது போல இஸ்லாமிய கருத்து வெளிப்பாட்டிற்கு சாவியாக்களும் தைக்காக்களும் முக்கிய இடங்களாக அமைந்தன. ‘ஹிஸ்புல் பஹர் போன்ற விர்துகள் இலங்கை முஸ்லிம்களிடையே ஜனரஞ்சகமானவை. இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய அறிவு வளர்வதற்கும் இத்தரிக்காக்கள் பெரிதும் உதவின. சூபித்துவ அறிஞர்களான இமாம் கஸ்ஸாலி இப்னு அராபி, 'அப்துல் கரீம் ஜிலி' போன்றவர்களுடைய ஆக்கங்கள் இலங்கையில் பரவுவதற்குத் தமிழ் அறிஞர்கள் பெரிதும் காரணமாயிருந்தார்கள். கீழக்கரையைச் சேர்ந்த சையத் அஹமத் ஆலிம் அவர்கள் இமாம் கஸ்ஸாலியின் பிதாயத்துல் ஹிதாயா' என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்கள். காயல் பட்டணத்தைச் சேர்ந்த நூஹலெப்பை ஆலிம் அவர்கள் ஹத்தாது ராத்தீப்பை தமிழில் மொழி பெயர்த்தார்கள். திருக்குர் ஆன் தப்ஸிர்கள் தமிழில் இருந்த காரணத்தினால் முஸ்லிம்கள் தமிழை விரும்பிக்கற்றார்கள். கஹவத்தை ஆலிம என்ற புகழ்பெற்ற அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் சாஹிப் அவர்களும் மாப்பிள்ளை ஆலிம் அவர்களும் இலங்கையில் இஸ்லாம் வளர்வதற்குப் பெரிதும் பாடுபட்டார்கள். அன்னார் எழுதிய பத்ஹுத் தையான்’ என்ற நூல் இன்னும் மக்கள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்றிருக்கிறது.
எனவே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினாற்றான் முஸ்லிம்கள் இன்றும் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள். ஒரு மொழியைக் கற்கும் போது அம்மொழி பேசும் மக்களின் கலாசாரமும் நம் மத்தியில் பரவுகிறது. அம். மக்களின் கருத்துக்களும் செல்வாக்குப் பெறுகின்றன சிங்கள இலக்கியங்களில் பெளத்த கருத்துக்கள் அதிகமாக

83 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இருக்கின்றன. வெறும் லெளகீக வாழ்விற்காகவும் தொழிலுக்காகவும் நாம் ஒரு மொழியைக் கற்கப் புகுந்தால் நாம் நம்பிக்கை வைத்திருக்கும் எமது இஸ்லாமிய மதத்தின் கதி என்னவாகும்? சிங்கள மொழியைத் தாய் மொழியாக ஏற்கும் முஸ்லிம்கள் இன்னும் இரண்டு தலை முறைகளில் இஸ்லாத்தையே மறந்து விட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆகவே எம்முடைய இன்றைய பாரிய பிரச்சினை என்னவென்றால், தமிழா, சிங்களமா எமது தாய் மொழி என்பதே. இது பற்றி பின்னர் ஆராய்வோம்.

Page 54
முகம்மது சமீம் 84
7. இலங்கை முஸ்லிம்களிடையே வளர்ந்த சமயக்கல்வி
ஒரு சமூகம் வாழ வேண்டுமானால் அச் சமூகத்தில் அறிவு வளர்ச்சி ஏற்பட வேண்டும். அறிவு வளர்ச்சி இல்லாத சமூகங்கள் காலக்கிரமத்தில் அழிந்து போயின என்ற உண்மையை நாம் வரலாற்றிலிருந்து அறிகிறோம். அமெரிக்காவில் செவ்விந்தியர்கள்; அவுஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள்; நியூசீலந்தின்மயோரிகள் என்று கூறப்படுகின்ற ஆதிவாசிகள் என்று சில சமூகங்களை நாம் உதாரணத்திற்குக் காட்டலாம்.
அரபு நாட்டிலிருந்து வர்த்தகம் காரணமாக இலங்கையில் குடியேறிய முஸ்லிம்கள் தாய்நாட்டுடன் தமக்கிருந்த தொடர்பு பன்னிரண்டாம் நூற்றாண்டுடன் அற்று விட்டது என்பதை ஏற்கனவே அறிந்தோம். தம்முடைய தாய்மொழியாகிய அரபு மொழியைப் பயில்வதற்கும் கற்பதற்கும் இருந்த வாய்ப்புகள் குறைந்துவிட்டன. மொழியைக் கற்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டிருந்தாலும் தம்முடைய மதத்தைப் பேணிக்காப்பதில் அவர்கள் தீவிரமாயிருந்தார்கள். தம் ஐநேர தொழுகைக்காக மஸ்ஜிதுகளை அமைத்துக் கொண்டார்கள். தம்முடைய சிறுவர்களுக்கு மார்க்கக்கல்வி புகட்டுவதற்காக மஸ்ஜிதுகளில் மக்தாப் என்று கூறப்படுகின்ற கல்விக் கூடங்களையும் அமைத்துக் கொண்டார்கள். மேற்காசிய நாடுகளில் இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் கல்விக் கூடங்கள் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு ஏற்றன. ஆரம்பப் பாடசாலைகளான மக்தாப்களும் உயர்கல்வி நிலையங்களான மத்ரசாக்களும் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியின் கேந்திர ஸ்தானங்களாக அமைந்தன.
உரோம, சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட அழிவைக் குறிக்கும் முகமாக வரலாற்றசிரியர்கள் இக்காலப் பகுதியை இருண்ட சகாப்தம் என்று அழைத்தார்கள். ஐந்தாம்

85 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த மக்கள் அறியாமையில் மூழ்கியிருந்தார்கள். இக்காலப்பகுதியில் தான் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் கல்வி என்னும் ஒளி சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
ஸ்பெயின் தேசத்தில் அல்ஹம்ராவும் ஆபிரிக்காவில் கைரவானும் எகிப்தில் அல்அஸாரும் பாக்தாதில் நிசாமியாவும் அக்காலத்தில் சிறந்த கல்விக் கூடங்களாக விளங்கின. கிரேக்க உரோம காலத்திலிருந்த அறிவுக் களஞ்சியங்களை அரபு மொழிக்கு மொழி பெயர்த்துக் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றினார்கள் முஸ்லிம்கள். பாக்தாத்தில் இருந்த மத்ரசாக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அல் ஜாபர், முகியத்தீன் அப்துல் காதர் ஜிலானி, இமாம் கஸ்ஸாலி, இமாம் ஷாபி, இமாம் ஹனபி போன்ற மார்க்க அறிஞர்கள் இக் கல்விக் கூடங்களின் மூலம் தான் இஸ்லாத்தைப் பாதுகாத்து வந்தார்கள். இதே முறையையொட்டித்தான் இலங்கையில் குடியேறிய அரபிகளும் மக்தாப்களையும் மத்ராசாக்களையும் அமைத்தார்கள். அறிவுக் கூடங்களாக விளங்கிய இம் மத்ரசாக்கள் நாளடைவில் அறிவுக் கல்வியையும் விஞ்ஞானக் கல்வியையும் விட்டு வெறும் மார்க்கக் கல்வி நிலையங்களாக மாறின. இஸ்லாமிய மக்களின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாயமைந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஐரோப்பியர்கள் அறிவு வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருந்த அதே வேளையில் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளை ஆழ்ந்த நித்திரையில் கழித்தார்கள்.
இது இவ்வாறிருக்க-இலங்கையில் குடியேறிய முஸ்லிம்கள் தமது மதத்தைக் காப்பதற்காக தென்னிந்திய முஸ்லிம்களின் உதவியை நாடினார்கள். தென்னிந்திய முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளிலிருந்த மக்தாப்களைப் போலவே தாம் குடியேறிய இடங்களில் மக்தாப்களை அமைத்தார்கள். அப்பொழுது இந்தியாவிலிருந்த திண்ணைப் பள்ளிக் கூடங்களைப் போலவே மக்தாப்களை அமைத்து இவைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் என்ற

Page 55
முகம்மது சமீம் 86
பெயர் நாமத்தையும் சூட்டினார்கள். இவர்களுடைய செல்வாக்கின் காரணமாக இலங்கையில் இருந்த மக்தாப்கள் பள்ளிக்கூடம் என்ற பெயரைப் பெற்றன. இஸ்லாமிய உயர் கல்விக்காக நிறுவப்பட்ட கல்வி நிலையங்கள் மத்ரசாக்கள். என்றே அழைக்கப்பட்டன. பாக்தாதில் இருந்த மத்ரசாக்களின் அமைப்பு முறையையும் பாடத் திட்டங்களையும் இம்மத்ரசாக்கள் பின்பற்றின. மக்தாப்களில் எழுத்தும் வாசிப்பும் கணக்கும் படிப்பிக்கப்பட்டன.
மத்சாக்களில் இலக்கணம், இலக்கியம், இஸ்லாமிய சட்டம் திருக்குர் ஆசூன் தப்சீர், இஸ்லாமிய தத்துவம் ஆகியவை புகட்டப்பட்டன. இலங்கையில் மத்ரசாக்கள் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய உயர்கல்விக்காக இலங்கை முஸ்லிம்கள் இந்திய மத்ரசாக்களுக்குச் சென்றார்கள். இவ்வழக்கம் சமீபகாலம் வரையில் இருந்தது.மார்க்கக்கல்விதமிழ்மொழியில் இருந்த காரணத்தினால் தமிழ் மொழியிலேயே இலங்கை முஸ்லிம்கள் கல்வி கற்றனர். இம்மார்க்கக் கல்வி மூலம்தான் முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைப் பாதுகாத்து வந்தனர். எனவே முஸ்லிம்கள் தமிழ் மொழியை அகஸ்மாத்தாகக் கற்கவில்லை. தமது மதத்தையும் தமது சமூகத்தையும் காப்பாற்றும் எண்ணத்துடன் தான் தமிழ் மொழியைக் கற்றார்கள்.
இலங்கை அந்நியர் ஆட்சியில் இருந்த காலத்தில் மேல்நாட்டுக் கல்வி பரவி முஸ்லிம்களைத் தவிர்ந்த ஏனைய சமூகங்கள் இக் கல்வியினால் பயனடைந்து அரசாங்கத்தில் பெரும் பதவிகளைப் பெற்ற சமயத்தில் கூட முஸ்லிம்கள் இக் கல்வி நிலையங்களை நாடவில்லை. இக்கல்விக் கூடங்களின் மூலம் மேல்நாட்டார் தமது மதமாகிய கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் முஸ்லிம்கள் மேல்நாட்டு கல்வியை வெறுத்தார்கள். 1840ம் ஆண்டில் இலங்கை கவர்னர் மெக்கன்சி இங்கிலாந்தின் அரசாங்க செயலாளருக்கு எழுதிய அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்

87 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
“தாங்கள் கூறியது போல் முஸ்லிம்களுக்குக் கிறிஸ்தவ சமயத்தின் போதனைகளை மாத்திரமாவது புகட்ட எத்தனித்தால் அவர்கள் எம்முடைய கல்விக் கூடங்களில் நின்றும் ஒதுங்கியே இருப்பார்கள்.”
1895ம் ஆண்டில் கல்விப்பணிப்பாளர் தாம் எழுதிய அறிக்கையில் 1891ம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் தம்முடைய கல்வி வளர்ச்சிக்காக எவ்விதத் திட்டத்தையும் வகுக்கவில்லை. அவர்களில் ஒரு சிலர் மேல்நாட்டுக் கல்வியின் முக்கியத்துவத்தை ஏற்றிருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தமது பிள்ளைகளைப் பள்ளிவாசல்களில் அமைந்திருக்கும் திண்ணைப் பள்ளிக் கூடங்களுக்கே அனுப்புகிறார்கள். இப்பள்ளிக்கூடங்களில் சமயம் மாத்திரமே புகட்டப்படுகிறது.
“அவர்களுடைய முக்கிய பிரச்சினை என்னவென்றால் தம்முடைய மதக்கோட்பாடுகளும் தமது பண்பாடும் சமூக மரபுகளும் மேல்நாட்டுக் கல்வி கற்பதனால் பாதிக்கப்படுமா என்ற சந்தேகமே. முஸ்லிம்கள் தமது குழந்தைகளுக்கு அரபு மொழியையும் குர்ஆனையும் கற்பிப்பதுதான் மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று கருதுகிறார்கள்” என்று கூறுகிறார்.
1891ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு ஆங்கிலக்கல்வி புகட்டும் எண்ணத்துடன் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் ஸ்தாபித்த முதல் கல்வி நிலையமாகிய சாகிராக் கல்லூரியும் 'மத்ரசா' என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு முஸ்லிமுக்குத் திருக்குர்ஆன் தான் எல்லாக் கருத்துக்களுக்கும் மூலம் எந்தவொரு கருத்து வெளிப்பாட்டிற்கும் திருக்குர்ஆன்தான் ஆதாரம். எனவே எந்தவொரு தத்துவமும் திருக்குர்ஆனிலிருந்து தோன்றியதாய் இருக்க வேண்டும். ஆகவே குர் ஆனை ஓதுவதும் அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பின்பற்றுவதும் தான் ஒரு முஸ்லிமின் கடமை. திருக்குர் ஆனை

Page 56
முகம்மது சமீம் 88
ஒதும் போது ஒருவனுக்குள்ளே உயர்ந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. குர் ஆனை ஓதும் போது ஒருவனுடைய இருதயமும் அறிவும் ஒன்றோடொன்று இணைந்து செல்ல வேண்டும்" என்று இமாம் கஸ்ஸாலி கூறுகிறார்.
“உதடுகள் வார்த்தைகளை உச்சரிக்கும்போதுஅறிவு அதன் அர்த்தத்தைப் புரிந்து ரசிக்கிறது”என்று மேலும் அவர் கூறுகிறார். மக்தாப்களிலும் மத்ரசாக்களிலும் இஸ்லாமிய நல்லொழுக்கமும் மாணவர்கள் பெறுகிறார்கள். ஆசிரியர்களான மெளலவிகள் சிறுவர்களுக்குத் தொழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். மத்ரசாக்களில் கற்பிக்கப்படும் ஒரு பாடம் தான் அதப் அதப் என்பது இஸ்லாமிய ஒழுக்க நெறியைப் பற்றியும் அது எப்படி சமூகத்தில் வாழும் போது கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கற்பிக்கிறது. ஒரு முஸ்லிமுக்கு ஒழுக்கம் தான் முக்கியம். இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இப்னுகல்தூன் கூறுகிறார். “ஒரு முஸ்லிமின் அறிவின் மூலாதாரமே குர் ஆன்தான். அவனுடைய அறிவு குர் ஆனிலிருந்துதான் வளர்ச்சி பெற வேண்டும். இந்த அறிவு ஒருவனிடம் சிறு வயதிலிருந்தே ஆழமாகப் பதிந்து விட்டால் அவனுடைய வாழ்நாள் பூராவும் அது அவனுக்கு வழிகாட்டியாக அமையும்” “ஒரு மதத்தின் ஒழுக்க நெறியால் வளராத ஒழுக்கம் வெறும் கடல் மண்ணினால் கட்டப்பட்ட வீட்டுக்குச் சமானம்”என்று காந்தி கூறுகிறார்.
மார்க்க அறிவு வளராமல் ஒருவன் தன்னுடைய மார்க்கத்தைப் பேணி நடக்க முடியாது. இன்று எம்மில் சிலர் அறிவை வளர்க்காமல் சமயத்தைப் பின்பற்றச் சொல்கிறார்கள். ஐநேர தொழுகையையும் தொழுது நோன்பு பிடித்து, சக்காத் கொடுத்து மற்றும் இஸ்லாமியக் கடமைகளைச் செய்தால் மட்டும் போதும் என்று கருதுகிறவர்களும் இருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பற்றிய அறிவு அவ்வளவு முக்கியமல்ல என்று இவர்கள் கருதுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாமிய ஞானம் இருக்க

89 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
வேண்டும். இஸ்லாமிய அறிவு இருக்க வேண்டும். எப்படி எம் மூதாதையர்கள் எமது சமூகத்தின் தனித்துவத்தை மக்தாப்களின் மூலமும் மத்ரசாக்களின் மூலமும் காப்பாற்றினார்களோ அதே போல சமயக் கல்வி மூலம் எம்முடைய சமயத்தையும் சமூகத்தையும் நாம் காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி சமயக் கல்வி.
இன்று மஸ்ஜிதுகளில் பயான்கள்' (பயான் = சொற்பொழிவு) நடைபெறுகின்றன. சமயத்தைப் பற்றிய கருத்துகள் கூறப்படுகின்றன. ஆன்ால் இதில் ஒருவராவது சமயக் கல்வியைப் பற்றிக் கூறவில்லை. ஒரு சீனப்பழமொழி இருக்கிறது. ஒருவனுக்கு மீன் வாங்கிக் கொடுத்தால் அவனுடைய ஒருநேரப்பசியைப் போக்கி விடலாம். ஆனால் அவனுக்கு நீ மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் ஏற்படும் பசியை நீ போக்கிவிடுவாய். நாமும் சமயக் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்தாப்களையும் மத்ரசாக்களையும் பேணி வளர்க்க வேண்டும். இஸ்லாமிய ஞானம் ஏற்படுவதற்கு இஸ்லாமிய இலக்கியங்களைக் கற்க வேண்டும். சிங்கள மொழியில் இஸ்லாமிய இலக்கியங்கள் இன்னும் தோன்றவில்லை. அரபு மொழியில் உள்ள அத்தனை இலக்கியங்களும் தமிழ் மொழியில் இருக்கின்றன. தமிழ் மக்கள்மேல் எம்மவர் சிலருக்கு இருக்கும் வெறுப்புக் காரணமாக தமிழ் மொழியை நாம் ஒதுக்கிவிட முடியாது. அல்லது அரசியற்காரணங்களுக்காக நாம் தமிழ் மொழியை ஒதுக்கி சிங்கள மொழியைக்கற்கக் கூடாது. எம்முடைய இஸ்லாமிய மதம் . எமக்கு முக்கியம். எம்முடைய மதத்தையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாக்க வேண்டுமானால் இஸ்லாத்தில் ஆழந்த அறிவு எமக்கிருக்க வேண்டும். இந்த அறிவு ஞானம் இஸ்லாமிய இலக்கியங்களைக் கற்பதன் மூலம்தான் ஏற்படும். அது எந்த மொழியில் இருந்தாலும் சரி, அந்த மொழியைக் கற்பதனாற்றான் எமது இஸ்லாமிய அறிவை வளர்க்க முடியும் என்றால் அதை நாம் கற்கத்தான் வேண்டும். இதில் வாசிப்பதற்கொன்றுமில்லை. இஸ்லாமிய அனுஷ்டானங்களை நாம் கடைப்பிடிக்கத்தான்

Page 57
முகம்மது சமீம் 90
வேண்டும். ஆனால் அதே வேளையில் இஸ்லாமிய அறிவு வளர்ச்சியை நாம் ஒதுக்கிவிட முடியாது. நாம் இன்று சிந்தித்துச் செயலாற்றினால்தான் எமது வருங்கால சந்ததியினரை வழி கெடாமல் காப்பாற்றலாம்.

91 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
8. பெரும்பான்மை இனங்களின் பொதுவான கொள்கை
ஒரு சிறுபான்மை சமூகம் தன்னுடைய எல்லைகளை உணர்ந்து செயல்படவேண்டும். இன்று உலகில் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் பல இனமக்களும், பல சமயத்தைச் சேர்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கிறார்கள். சிறுபான்மைச் சமூகங்கள் இல்லாத நாடு இன்று உலகில் இல்லை. தனி இனமாக இருக்கும் நாடுகள் அரிது. ஆனால் பெரும்பான்மை இனம் தனது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். எந்தவொரு சிறுபான்மை சமூகத்தினால் ஒரு பெரும்பான்மை சமூகம் தனது பாதுகாப்புக்கும் அதிகாரத்திற்கும் பங்கம் ஏற்படும் என்று எண்ணும் பட்சத்தில் அச்சிறுபான்மைச் சமூகத்தின் வளர்ச்சியைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கும். தன்னுடைய அரசியல் அதிகாரத்தையும், தனது சமூக பலத்தையும் இந்நோக்கத்திற்காகப் பயன்படுத்த அது தவறுவதில்லை. அச்சிறுபான்மைச் சமூகத்தை அடக்குவதற்கோ அல்லது நாடுகடத்துவதற்கோ பலாத்கார முறையைக் கையாள لتلك தயங்காது. எனவே சிறுபான்மை சமூகங்களின் வளர்ச்சியை சந்தேகக் கண் கொண்டே ஒரு பெரும்பான்மை சமூகம் நோக்கும். இலங்கையின் சமீப வரலாற்றில், இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமையைப் பறித்து, அவர்களை அரசியல் அனாதைகளாக்கக் காரணமாயிருந்தது, அவர்களின் வளர்ச்சியினால் பெரும்பான்மை சமூகத்தின் அரசியல் அதிகாரம் பறிபோய்விடுமே, என்ற பயம்தான். அதற்காக ஏனைய சிறுபான்மை சமூகங்களின் உதவியைப் பெற்றது; சோஷலிசம் என்ற போர்வையில் சிறுபான்மையின மக்களின் வர்த்தக நிலயங்களும் பெருந்தோட்டங்களும் அரசாங்க மயமாக்கப்பட்டதும் பெரும்பான்மை இனமக்களுக்கு இருந்த பயத்தினாற்றான். இன்று நாட்டில் இருக்கும் பொதுத் தேர்தலும்

Page 58
முகம்மது சமீம் 92
பாராளுமன்றத் தொகுதிகளை ஒழித்து மாவட்ட ரீதியில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நயவஞ்சகமான செயலும், சிறுபான்மை இனத்தவரின் அரசியல் பலத்தைக் குறைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டன. கல்விநிறுவனங்கள் சமீபத்தில் அரசாங்க மயமாக்கப்பட்டது கல்வியின் நன்மைக்காகவோ அல்லது நாட்டின் நன்மைக்காகவோ அல்ல. கிறிஸ்தவ மிஷனரி சங்கங்களின் பலத்தை ஒடுக்கவும், அவர்கள் தங்களின் கல்வி நிறுவனங்களின் மூலம் அதிகார வர்க்கமாக மாறிவிடக்கூடாது என்ற பயமும்தான். இது எமது நாட்டில் நடக்கும் புதினங்கள் அல்ல. பெரும்பான்மை சமுகங்கள் எந்த நாட்டிலும் இப்படித்தான் நடக்கின்றன.
வரலாற்றில்கூட பெரும்பான்மை சமூகங்கள் இப்படித்தான் நடந்திருக்கின்றன. பதினாறாம் நூற்றாண்டில் பிரான்ஸ் தேசத்தின் முடியுரிமையைக் கைப்பற்றிய நான்காம் ஹென்றி, பிரான்ஸ்தேசத்தின் பொருளாதாரத்தையே தம் கைக்குள் வைத்திருந்த ஹியுகனோஸ் என்ற சமூகத்தை பூண்டோடு அழித்ததுமல்லாமல் எஞ்சியவர்களை நாடு கடத்தியதற்குக் காரணம், கத்தோலியர்களுக்கும் புரோட்டஸ்தான்சியருக்கும் (Protestants) இருந்த பகைமையல்ல, பொருளாதாரத்தில் இச்சமூகம் உயர்ந்த நிலையில் இருந்த காரணமே. முதலாவது உலக மகாயுத்தத்திற்குப்பிறகு ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜெர்மனியினதும் பொருளாதாரத்தையே தமது ஆதிக்கத்தில் வைத்திருந்த யூதர்களைக் காரணம் காட்டியே ஹிட்லர் பதவிக்கு வந்தான். அதுமட்டுமல்ல, அவர்களைக் கொன்று குவித்ததோடு, நாட்டிலிருந்தும் விரட்டியடிக்கவும் செய்தான். வரலாற்றிலிருந்து நாம் சில உண்மைகளை அறியலாம். எனவே, ஒரு சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் பொறாமையை வளர்க்கும் அளவிற்கு வாழக்கூடாது. பெரும்பான்மை சமூகத்தினர் வறுமையில் வாடும்போது சிறுபான்மை சமூகத்தினர், படாடோப வாழ்க்கையில் பகிரங்கமாக ஈடுபடும்போது, பெரும்பான்மை சமூகத்தினரின் வெறுப்பைப் பெறுகிறார்கள். எமது உடம்பில்

93 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
கிருமிகள் சிறிதளவாக இருக்கும்போது, அவைகளுக்கு ஆபத்தில்லை. ஆனால் வளர்ந்து வரும்போது எமது உடம்பிலுள்ள சத்துக்கள் அவைகளைத் தாக்கி அவைகளை அழிக்கின்றன. இதுதான் இயற்கை நியதியும் கூட. ஒரு பெரும்பான்மை சமூகத்தின் பொருளாதாரம், சிறுபான்மை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியினால் பாதிக்கப்படும்போது, பெரும்பான்மை சமூகத்தினர் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி அச்சிறுபான்மை சமூகத்தினை அடக்க முற்படுகின்றனர். இல்லாவிட்டால் சுதந்திரம் கிடைத்தபிறகு, எல்லா இனமக்களும் ஒன்றிணைந்து நாட்டின் சுபிட்சத்துக்காகப் பாடுபடாமல் ஒருவரையொருவர் ஏன் வெட்டிக் கொல்கின்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு, வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த தமிழர்கள் ஏன் இன வெறிக்குப் பலியானார்கள்? சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே தெய்வங்களை வழிபட்டு ஒரே கோயிலுக்குச் சென்று தங்கள் மதஅனுஷ்டானங்களைக் கடைப் பிடித்தாலும், தமிழர்கள் தனியாக்கப்பட்டு இனவெறியர்களின் தாக்குதல்களுக்கு ஏன் பலியானார்கள்? அரசாங்க பதவிகளிலும், கல்வியிலும், தனியார் துறையிலும் தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவர்களுடைய தரத்தை விட உயர்ந்திருந்தமையே இதற்குக் காரணம். பொருளாதாரத்தில் ஏற்பட்ட பொறாமை இன வெறியாக மாறியது. ஒரு சிறுபான்மை இனம் தனது தனித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது இனத்தவரை மட்டுமே வளர்த்து வருமேயானால் பெரும்பான்மை இனத்தின் வெறுப்புக்கு ஆளாகும். சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்களும், பெரும்பான்மை இனத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் அளவிற்கு வாழக்கூடாது. பெரும்பான்மை இனத்துடன் ஒன்றிணைந்து நடப்பதுதான் சிறுபான்மை இனங்களுக்கு உகந்தது.
1915ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட இனக்கலவரம், கரையோர சிங்களவர்கள் முஸ்லிம்களுடையவியாபார

Page 59
முகம்மது சமீம் 94
வளர்ச்சியைக் கண்டு அதனால் ஏற்பட்ட பொறாமையே முக்கிய காரணம். பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை வளர்ச்சியடைந்த காலத்தில், மலைநாட்டுப் பிரதேசங்களில் வியாபாரஞ் செய்யவந்த கரையோரச் சிங்களவர்கள், இப்பகுதிகளில் ஏற்கனவே முஸ்லிம்கள் வியாபார ஸ்தலங்களை அமைத்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களை இங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்திய கலவரமே பெரும் இனக்கலவரமாக மூண்டது. இதுபற்றி பின்னர் விரிவாக ஆராய்வோம்.
இந்தியாவின் அயோத்திப் பிரச்சினையும் பன்னிரண்டுகோடி முஸ்லிம்களை அரசியல் அனாதைகளாக்கி அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தச் செய்த சதியின் விளைவே. இஸ்லாத்திற்குக் குந்தகம் விளையும் என்று வந்தால், அத்தனை முஸ்லிம்களும், தமது மதத்தைப் பாதுகாக்க ஜிஹாத்போர் செய்ய முன்வரவேண்டும். :
பதினான்காம் நூற்றாண்டு வரையில் இலங்கையில் உள்நாட்டு-வெளிநாட்டு வியாபாரத்தில் ஏகபோக உரிமை கொண்டாடிய முஸ்லிம்கள் ஐரோப்பியர்களின் வருகையினால் பாதிக்கப் பட்டார்கள். பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் பேருவளையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்குச் சிங்கள அரசன், சில சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கினான் என்று அறிகிறோம். “முஸ்லிம்கள் தங்கள் கப்பல்களை பேருவளைத்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி தங்கள் கப்பல்களின் மூலம் வெளிநாட்டுப் பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வருவதனாலும் உள்நாட்டுப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதனாலும் இலங்கைக்குப் பெரும் சேவை செய்கிறார்கள்” என்று இவ்வரசன்தான் முஸ்லிம்களுககு இவ்வுரிமைகளை வழங்குவதன் காரணத்தை விளக்கிக் காட்டியிருக்கிறான். பிறகு பதினான்காம் நூற்றாண்டில் தம்பதேனியாவை தலை நகராகக் கொண்டு இலங்கையை

95 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஆண்டுவந்த மூன்றாவது விஜயபாகுவின் வேண்டுகோளுக் கிணங்கி, பேருவளையைச் சேர்ந்த மீராலெப்பை, இலங்கையில் நெசவுத் தொழிலை ஆரம்பிப்பதற்காக இந்தியாவிலிருந்து எட்டு நெசவாளிகளைக் கொண்டுவந்தார் என அறிகிறோம்.
பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய சிங்கள இலக்கியங்களின் சந்தேச காவியங்களின் மூலம் அன்று இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்வாறு சிங்கள மக்களுடன் சாமாதானத்துடனும் செளஜன்யத்துடனும் வாழ்ந்தார்கள் என அறிகிறோம். பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இலங்கை முஸ்லிம்களுடைய வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

Page 60
முகம்மது சமீம் 96
9. இந்திய சமுகத்தில் தென்னிந்திய முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சி
இன்று சிலர் பெரும்பான்மை இன மக்களைக் குறிப்பிடும்போது 'பேரினவாதிகள்’ என்ற வார்த்தையைப் பிரயோகிக்கிறார்கள். இதுதவறு. பெரும்பான்மை சமூகத்தில் குறுகிய வெறிகொண்ட நாட்டுப்பற்று உள்ளவர்களைத்தான் நாம் பேரினவாதிகள் என்று குறிப்பிடலாம். இந்த உணர்ச்சியிலிருந்து பிறந்ததுதான் பெரும்பான்மை இன சிந்தனை'
பெரும்பான்மை இன சிந்தனை (ஜாதிக சிந்தனய) என்ற கருத்தோட்டமும் ஜாதிக சிந்தனய, என்ற இந்த நினைவலையிலிருந்து தர்க்க முறையிலான வாதப்போக்குதான் சிறுபான்மை மக்களை வளரவிடாமல் ஒடுக்கி அவர்களின் மொழியையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் மதத்தையும் அடக்கியாளும் எண்ணப் போக்கு. இந்த கருத்தோட்டத்திலிருந்து தோன்றியது தான் 'ஹெல உருமய - பாரம்பரிய உரிமை என்ற வெறியார்ந்த கொள்கையும். இந்தக் கொள்கையின் பிரதிபலிப்பு அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஏற்படுமானால் சிறுபான்மை சமூகங்களுக்கு இந்நாட்டில் இடமேயில்லாமல் போய்விடும். இந்தக் கொள்கை பொருத்தமாக வாதிக்கப்பட்டால், சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லாமல் போய்விடும். சிறுபான்மை மக்களின் சாதாரண தேவைகளைக்கூட பேரினவாதிகள் உதாசீனம் செய்த காரணத்தினால்தான் இன்று இலங்கையில் இனப்போராட்டம் இவ்வளவு உக்கிரமாக வளர்ந்திருக்கிறது. அந்நியர் ஆதிக்கத்தில் அடக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரம் கிடைத்தபின் இனவெறியினால் பாதிக்கப்பட்டு ஓர் இனம் மற்ற இனத்தை அழிக்கும் அளவிற்கு இவ்வெறித்தன்மை

97 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
வளர்ந்திருக்கிறது. பரஸ்பர ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்த மக்கள் இன வெறுப்புக்கு ஆளாகியதற்குக் காரணம், ஐரோப்பியர்களின் வருகையும் அவர்களுடைய இனக்கொள்கையுமே.
போர்த்துக்கீசரின் வருகையினாற்றான் தென்னிந்திய முஸ்லிம்களும், இலங்கை முஸ்லிம்களும், ஐரோப்பியரின் மதவெறிக்கும் இனவெறிக்கும் பலியானார்கள். பதினாறாம் நூற்றாண்டில் கிழக்கு நாடுகளுக்கு வந்த போர்த்துக்கீசர் முஸ்லிம்களை வெறுக்கக் காரணம், முஸ்லிம்கள் இந்திய சமுத்திரத்தின் வர்த்தகத்தில் ஏகபோக உரிமை கொண்டாடியதே. கி.பி. 1000லிருந்து 1500ம் ஆண்டுவரையிலுள்ள காலப்பகுதியில் இந்திய சமுத்திரத்தை ஒட்டியிருந்த நாடுகளின் வர்த்தகத்தை நடத்திய முஸ்லிம்கள் இந்நாடுகளின் கரையோரப் பகுதிகளில் சிற்சிறு குடியேற்றங்களையும் அமைத்துக் கொண்டார்கள். இந்திய உபகண்டத்தின் கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த ஹிந்து வர்த்தக சமூகங்களுடன் அரபிய, பாரசீக முஸ்லிம்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். இத்தொடர்பு காரணமாக இங்கு வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இதன் காரணமாக தென்னிந்திய கரையோரங்களில் மிகவும் சக்திவாய்ந்த முஸ்லிம் வர்த்தகக் குடும்பங்கள் தோன்றின. குஜராத்திலிருந்து கேரளகரையோரம் வரையில் இருந்த கரையோரப் பகுதிகளில் முஸ்லிம் சமூகங்கள் வளர்வதற்குக்காரணமாயிருந்தன. அரபு நாட்டிலிருந்தும் ஈரானிலிருந்தும் வந்த புதிய குடியேறுதல்களும், உள்ளுர், மக்களின் மத மாற்றலுமே மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்த அரபியர்களும் ஈரானியர்களும் உள்ளூர் சமூகங்களிலேயே திருமணம் செய்யக்காரணமாயிருந்தன. இதனால் முஸ்லிம் சமூகங்கள் மேலும் வளர்வதற்கு இவர்களுடைய வழித்தோன்றல்கள் முஸ்லிம்களாக இருந்ததே காரணம். இப்படித் தோன்றியவர்கள்தான் கோஜாக்களும், போராக்களும், மேமன்களும். இந்தியாவில் ஆட்சிசெய்த ஆப்கானியர்களும்,

Page 61
முகம்மது சமீம் 98
முகலாயர்களும், இக்கரையோரமுஸ்லிம் சமூகங்கள் வளர்வதற்குக் காரணமாயிருக்கவில்லை. இக்கரையோர முஸ்லிம் சமூகங்கள் வளர்வதற்கு வர்த்தகமே காரணமாயமைந்தது. இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட்டதனால் கரையோர முஸ்லிம்களின் வர்த்தகம் வளரவுமில்லை பாதிக்கப்படவுமில்லை. இம்முஸ்லிம் வர்த்தக சமூகங்கள் வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்தார்களேயொழிய தில்லியுடன் எவ்வித தொடர்பும் வைக்கவில்லை என்பதை வரலாற்று நூல்களிலிருந்து அறிகிறோம்.
இவ்வர்த்தக முஸ்லிம் சமூகங்களை குஜராத்தி முஸ்லிம்கள், கேரளமுஸ்லிம்கள், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் என நாம் பிரிக்கலாம். இம் முஸ்லிம் வர்த்தக சமூகங்கள்தான் பதினான்காம், பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் இந்திய சமுத்திரத்தில் மிகவும் செல்வாக்கைப் பெற்றிருந்த சமூகங்களாவர். இம்முஸ்லிம் வர்த்தக சமூகங்கள் பரதேசி முஸ்லிம் வர்த்தகர்கள் என்றும் உள்ளுர் முஸ்லிம் வர்த்தகர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். அரபியர்களும், எகிப்தியர்களும், ஈரானியர்களும் பரதேசி வர்த்தகர்கள் என்ற பிரிவில் அடங்கினார்கள். போர்த்துக்கீசர் இப்பிரதேசத்தின் துறைமுகங்களில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு இம்முஸ்லிம் வர்த்தகக் குடும்பங்கள் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டார்கள். பதினையாயிரம் முஸ்லிம் வர்த்தகர்கள் கள்ளிக்கோட்டையில் மட்டும் இருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து குடியேறிய முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி போர்த்துக்கீச தளபதி வஸ்கோடகாமா சமோரினிடமிருந்து கேட்டபோது தன்னுடைய அரசாங்கத்துக்குப் பெரும் இலாபத்தைக் கொண்டுவரும் முஸ்லிம்களைத் தாம் இழக்கத் தயாராயில்லை என்று கூறி அந்த வேண்டுகோளுக்கிணங்க மறுத்துவிட்டான். சமோரினின் கடற்படைக்குத் தலைமை தாங்கும் அளவிற்கு கள்ளிக்கோட்டை முஸ்லிம்களின் செல்வாக்கு இருந்தது. கேரள முஸ்லிம்கள் மாப்பிள்ளை' என்று அழைக்கப்பட்டார்கள்.

99 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இவர்களில் ஒரு பிரிவினரைத்தான் மரக்காயர்’ என்று அழைத்தார்கள். போர்த்துக்கீசரின் உதவியை நாடிய கொச்சின் ராஜா மரக்காயர்களைப்பல வழிகளிலும்
இம்சை செய்தான். இவர்கள் கொச்சினை விட்டுச் சமோரினின் ஆட்சியின் கீழ் இருந்த பொன்னானியில் குடியேறினார்கள். இவர்களின் ஒருவர்தான் போர்த்துக்கீசரை எதிர்த்த குஞ்சலி மரைக்கார் என்பவர்.
கிழக்குக் கரையோரத்தில் ஆந்திராவின் மேட்டுப்பள்ளியும், தமிழ்நாட்டின் காயல்பட்டணமும் முஸ்லிம்களின் முக்கிய துறைமுகங்களாக இருந்தன. காயல் (கெய்ரோ) என்று பிரசித்திபெற்ற நகரத்திலிருந்ததுதான் காயல்பட்டணத்தைச் சேர்ந்த முஸ்லிம் வணிகர்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர். இலங்கையின் பெரும்பாலான முஸ்லிம் வியாபார குடும்பங்கள் காயல்பட்டணத்தைத் தமது பிறப்பிடமாக கருதுகின்றனர். இலங்கை சிங்கள இலக்கியங்களிலும் காயல்பட்டணம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அரபுநாட்டுக் குதிரைகள் காயல்பட்டணம் ஊடாக இலங்கையின் வடக்குக் கரையோரத் துறைமுகமாகிய ஊர்காவற்றுறைக்குக் கொண்டுவரப்பட்டன என்று பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதலாம் பராக்கிரமபாகுவின் நைனாதீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுச் சாசனத்தின் மூலம் அறியமுடிகிறது என்று கலாநிதி இந்திரபாலா கருதுகின்றார். முஸ்லிம்கள் தாம் வியாபாரஞ்செய்த பிரதேசங்களில் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள் என்று முன்பு அறிந்தோம். எனவே முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தின் வடக்குக் கரையோரப் பகுதிகளில் பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடக்கமே இருந்திருக்கிறார்கள் என்று நாம் கருத இடமிருக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு காயல் பட்டணம், இந்திய சமுத்திரத்தின் ஒரு முக்கிய துறைமுகமாக வளர்ச்சி பெற்றது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு இலங்கை, மலாயா, ஜாவா, சுமத்ரா, போன்ற

Page 62
முகம்மது சமீம் 100
நாடுகளுடன் வாணிபஞ்செய்துவந்த இந்து வணிகக் குடும்பங்களின் செல்வாக்கு குறைந்து அரபியர்களினதும் தென்னிந்திய முஸ்லிம்களினதும் செல்வாக்கு ஓங்கியது. பதின்மூன்று, பதினான்காம், பதினைந்தாம், நூற்றாண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் பெரும்பாலும் தென்னிந்திய முஸ்லிம்களின் கையில் இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இந்து சமுத்திரத்தின் எல்லையில் இருந்த நீாடுகளில் வெளிநாட்டு வர்த்தகத்தில் தென்னிந்திய முஸ்லிம்கள் ஏகபோக தனியுரிமை கொண்டாடினார்கள்.
முஸ்லிம்களுடைய இவ்வர்த்தகம் ஐரோப்பியர்களின் வருகையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்திய சமுத்திரத்தின் வாணிபத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லிம்கள் ஏன் தமது இடத்தை இழந்தார்கள்? பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சி துருக்கியரின் தலைமையில் மத்திய கிழக்காசியாவிலும் ஐரோப்பாவிலும் மகோன்னத நிலையில் இருந்த காலத்தில் கிழக்குப்பிரதேச முஸ்லிம்கள் ஏன் செல்வாக்கிழக்கிறார்கள்?

101 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
10. போர்த்துக்கீசரின் வருகையினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
இந்திய கடற்பிரதேசத்தின் வாணிபத்தில் ஏகபோக உரிமை கொண்டாடிய முஸ்லிம்கள் ஐரோப்பியர்களின் வருகையினால் இவ்வர்த்தகத்தை இழந்ததோடுதாம் குடியேறிய இட்ங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள். கிழக்கு நாடுகளுக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முக்கிய காரணம் வியாபார நோக்க்ழும் தம்முடைய கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதுமே.
கிழக்குப் பிரதேசத்திற்கு வந்தபிறகுதான் இந்தியக் கடற்பிரதேச வர்த்தகம் முஸ்லிம்கள் கைவசம் இருந்தது என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருந்த மதக்குரோதம் கிழக்கு நாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தபொழுது இங்கேயும் முஸ்லிம்கள் இருந்ததைக்கண்டு இவர்களை மெளரோஸ்'. என அழைத்தார்கள். வட ஆபிரிக்காவில் மொரொக்கோ நாட்டைச்சேர்ந்த முஸ்லிம்களைத்தான் அவர்கள் 'மெளரோஸ். என அழைத்தார்கள். அவர்கள்தான் இங்கேயும் இருக்கிறார்கள் என்று தவறாக எண்ணி இங்குள்ள முஸ்லிம்களையும் மெளரோஸ். என அழைத்தார்கள். மெளரோஸ் தான்'மூவர்ஸ்'என்று மருவியது.
பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை பெருகியது. போர்த்துக்கீச ‘தோபோஸ்' என்று கூறப்படுகின்ற குறிப்பேடுகளின் படி முஸ்லிம்கள் மேற்குக்கரையோரப் பகுதிகளான புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, களுத்துறை, பேருவளை, அளுத்தகமை, காலி, வெலிகமை, மாத்தறை, கொழும்பு ஆகிய இடங்களில் வசித்தார்கள்

Page 63
முகம்மது சமீம் 102
என அறிகிறோம். பதினைந்தாம் நூற்றாண்டில் கொழும்பு ஒரு முஸ்லிம் நகரம் என்று சொல்லுமளவிற்கு இங்கே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.
இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் முஸ்லிம்களுடைய கையில் இருந்ததைப் போன்று உள்நாட்டு வர்த்தகமும் பெரும்பாலும் அவர்கள்கையிலேயே இருந்தது. கண்டிப்பிரதேசத்திலுள்ள ஹிங்குல, மாவனல்ல, கம்பொள, கண்டி போன்ற இடங்களில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு வர்த்தகமே முக்கிய காரணம்.
1505ம் ஆண்டில் இலங்கைக்குப் போர்த்துக்கீசரின் வருகை முஸ்லிம்களைப் பெரிதும் பாதித்தது. தென்னிந்தியாவிலிருந்து வர்த்தகம் காரணமாக இலங்கையில் குடியேறிய தென்னிந்திய முஸ்லிம்கள், போர்த்துக்கீசரின் வருகைக்குப்பிறகு தாய்நாடு செல்வதற்கே தயாரானார்கள். தம்முடைய வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுமே என்று பயந்த போர்த்துக்கீசியர் தம்மால் முஸ்லிம்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று உறுதியளித்தார்கள். இந்த சமாதான நிலை அதிக நாள் நீடிக்கவில்லை.
போர்த்துக்கீசர், இலங்கை வர்த்தகத்தைத் தம் கைக்குள் கொண்டுவருவதை மட்டுமல்ல, நாட்டைக் கைப்பற்றும் எண்ணத்துடனும் செயல்பட்டார்கள். இந்திய சமுத்திர எல்லைக்குட்பட்ட நாடுகளின் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய முஸ்லிம்கள் தம்முடைய வர்த்தகத்தை இழப்பதற்கு ஒரு முக்கிய காரணம் தமக்கு ஆயுதபலமின்மையே. மத்தியதரைக் கடலிலும், செங்கடலிலும், பாரசீகக்குடாவிலும், முஸ்லிம்களுடைய வர்த்தகத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்ற எத்தனித்தபோது துருக்கிய சுல்தானின் கடற்படையினால் விரட்டியடிக்கப்பட்டார்கள். பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் உலகில் பெரும் பகுதின்ய மூன்று பெரும் முஸ்லிம் சாம்ராஜ்யங்கள் ஆண்டுவந்தன. கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு

103 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஆசியாவிலும் துருக்கி சாம்ராஜ்யமும் மத்தியதரைப் பகுதியிலும் ஈரானிய சபாவித் சாம்ராஜ்யமும், இந்திய உபகண்டத்தில் முகலாய சாம்ராஜ்யமும் இஸ்லாமியகொடியைப் பறக்கவிட்டிருந்தன. இச்சாம்ராஜ்யங்களுடன் மோதமுடியாமல் கடல்மார்க்கமாக இந்தியக்கடற்கரையைவந்தடைந்தனர் ஐரோப்பியர்கள்.
இந்திய சமுத்திரத்தில் வியாபாரஞ் செய்து வந்த முஸ்லிம்களின் கப்பல்களில் பீரங்கிகளோ வேறுநவீன ஆயுதங்களோ இல்லாத காரணத்தினால் போர்த்துக்கீச யுத்தக்கப்பல்கள் இவர்களுடைய கப்பல்களை வெகுவிரைவில் கடலில் மூழ்கடித்தன. இந்திய சமுத்திரத்தில் வியாபாரஞ் செய்த முஸ்லிம்கள் நாடுபிடிக்கும் நோக்கத்துடன் வரவில்லையாதலால், அவர்களிடம் ஆயுதம் இருக்கவில்லை.
இலங்கைக்குவந்த போர்த்துக்கீசர் இலங்கையில் இருந்த முஸ்லிம்களைத் தமது எதிரிகளாகவே கருதினர். முஸ்லிம்களை உடனடியாக நாடுகடத்தினர். தம்முடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் ஆரம்பத்தில் முஸ்லிம்களுடன் நேச உறவையே வைத்திருந்தனர். கோட்டை ராச்சியம் தம் ஆட்சிக்கு வந்தபிறகு தம்மை எதிர்த்த சீத்தாவக்க மன்னன் மாயாதுன்னைக்கும் அவன் மகன்இராஜசிங்கனுக்கும் உதவிசெய்த முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படத்தொடங்கினர் போர்த்துக்கீசர்.
கொழும்பிலிருந்து நாடுகடத்தப்பட்ட முஸ்லிம்கள் மாயாதுன்னையின் அதிகாரத்திலிருந்த சீதாவக்கப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தார்கள். 1580ம் ஆண்டு போர்த்துக்கல் ஸ்பானிய அரசனால் கைப்பற்றப்பட்ட பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதமடைந்தன. நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் முஸ்லிம்களினாற்றான் பங்கம் ஏற்படுகிறது என்ற தவறான கொள்கையைப் போர்த்துக்கீசர் கொண்டிருந்தனர். போர்த்துக்கீசரின் தளபதி, கொன்ஸ்தைன் டிசா 1626ம் ஆண்டு முஸ்லிம்களை கொழும்பைவிட்டும்

Page 64
முகம்மது சமீம் 104
வெளியேற்ற உத்தரவிட்டான். போர்த்துக்கீசரின் ஆட்சிக்குபட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்குக் கண்டி அரசன் சேனரத் ஆதரவளித்தான். இவ்வளவுக்கும் முஸ்லிம்கள் போர்த்துக்கீசருக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. கோவாவின் கவர்னராக இருந்த பர்ணண்டோ அல்பர்கர்க் தன்னுடைய கொழும்பு அனுபவத்தை வைத்துத்தமது தலைநகரான லிஸ்பனுக்கு எழுதிய குறிப்பில், ‘முஸ்லிம்கள் எவ்விதத்திலும் போர்த்துக்கீசருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மாறாக போர்த்துக்கீச வர்த்தகத்துக்குப் பெரிதும் உதவுகிறார்கள். போர்த்துக்கீசரின் வெளிநாட்டு வர்த்தகத்துக்குத் தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் கொண்டுவருபவர்கள் இவர்களே. இவர்கள் வருவதை நிறுத்தினால் எம்முடைய வர்த்தகமும் ஸ்தம்பிதமாகிவிடும். அவர்கள் யுத்தத் தளபாடங்களையோ படைவீரர்களையோ ஏற்றிச் செல்வதில்லை. அவர்களுடைய வர்த்தகத்தால் கொழும்பு மக்கள் பெரிதும் பயனடைகிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.
தமது வர்த்தகத்திலேயே முழுக்கவனம் செலுத்திய முஸ்லிம்கள் போர்களிலோ, நாடுபிடிப்பதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை. போர்த்துக்கீச ஆட்சியிலிருந்த பகுதிகளிலோ, கண்டி அரசனின் பிரதேசங்களிலோ எவ்வித கிளர்ச்சிகளிலும் ஈடுபடாமல் தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருந்தார்கள். இப்படி சமாதானத்தையே விரும்பியிருந்த முஸ்லிம்களை போர்த்துக்கீசர் வெறுப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. கரையோர சிங்களவர் மத்தியிலும் யாழ்ப்பாணத்துத் தமிழர் மத்தியிலும் தமது கிறிஸ்தவ மதத்தைப்பரப்பும் போர்த்துக்கீசருக்குத் தடைகள் ஏதும் இருக்கவில்லை. எவ்வளவு முயன்றாலும் போர்த்துக்கீசரினால் முஸ்லிம்களை மதம் மாறச் செய்யமுடியவில்லை. கத்தோலிக்க பாதிரிமார்கள் எண்ணத்தில் முஸ்லிம்கள் மதவெறியர்கள் என்று கணிக்கப்பட்டார்கள்.

105 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
போர்த்துக்கீச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான குரோதத்தை வளர்ப்பதற்கு இவர்கள்தான் முக்கிய காரணமாயிருந்தார்கள். முஸ்லிம்களினால் நன்மை பல ஏற்பட்டாலும். அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள். இயேசுநாதரின் பரம விரோதிகள்' என்றெல்லாம் கூறி முஸ்லிம்களைப் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கினார்கள்.
கண்டி இராச்சியத்தை வென்று அப்பிரதேசத்தைக் கைப்பற்றினாற்றான் இலங்கையில் நிலைகொண்டு இருக்கலாம் என்ற எண்ணத்தில் கண்டியைக் கைப்பற்றுவதைத் தமது பிரதமநோக்கமாகக் கருதினார்கள். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடியாமைக்கு முஸ்லிம்கள் ஒரு பெரும் தடையாக இருந்தார்கள். கண்டி இராச்சியத்தின் செல்வத்துக்கு முஸ்லிம்களின் வர்த்தகம் ஒரு பெரும் காரணமாக இருந்த காரணத்தினால் முஸ்லிம்களை அழித்தாற்றான் கண்டியைக் கைப்பற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். கண்டி மக்களின் பொருட்கள் கரையோரப் பகுதிகளில் விலையாவதையும் வெளிநாட்டுப் பொருட்கள் கண்டிக்கு வருவதையும் தடுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தபோதும் முஸ்லிம்களுடைய வர்த்தகத்தையோ கண்டியின் பொருளாதாரத்தையோ அழிக்க முடியவில்லை. கண்டியின் பொருளாதார வளர்ச்சியே கண்டி மன்னன் தம்மை எதிர்ப்பதற்குக் காரணம் என்று போர்த்துக்கீசர் நம்பியிருந்த காரணத்தினால் முஸ்லிம்களையும் அவர்களுடைய வர்த்தகத்தையும் அழிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். ஆனால் தோல்வியுற்றவர்கள் போர்த்துக்கீசரேயன்றி முஸ்லிம்களல்ல. முஸ்லிம்களுடைய தன்னம்பிக்கையும் ஈமானின் பலமுமே அவர்களைக் காப்பாற்றின.

Page 65
முகம்மது சமீம் 106.
11. ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் வர்த்தகம்
இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களை அழிப்பதற்கும் நாட்டை விட்டே துரத்துவதற்கும் போர்த்துக்கீசர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. முஸ்லிம்கள் எத்தனை துன்பத்தை அனுபவித்தாலும் தம்முடைய மதத்தையும் தமது தனித்துவத்தையும் பாதுகாக்கத் தவறியதில்லை. போர்த்துக்கீசருக்கு அடுத்ததாக இந்திய சமுத்திரப் பிரதேசத்திற்குப் பிரவேசித்த ஐரோப்பியர்கள் ஒல்லாந்தர்களாவர். அவர்களும் வர்த்தக நோக்கத்திற்காகத்தான் இப்பிரதேசத்திற்கு வந்தார்கள். வர்த்தகக் கொம்பனியாக வந்தவர்கள் நாட்டைப் பிடித்து ஆட்சி செய்யவும் முற்பட்டார்கள். ஒல்லாந்த கிழக்கு- இந்திய கொம்பெனிக்கு, ஒப்பந்தங்கள் செய்வதற்கும், குடியேற்றங்களை ஸ்தாபிப்பதற்கும் கோட்டைகளைக் கட்டுவதற்கும் ஆயுதப் படைகளை வைப்பதற்கும் ஒல்லாந்த அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் ஒல்லாந்தர் வந்தபோது இங்கே போர்த்துக்கீசர், இப்பிரதேச மக்களின் புனித வணக்கஸ்தலங்களை அழித்தும், அவர்களைத் தம்முடைய கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றியும் மக்களைக் கொடுமைப்படுத்தியும், தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தார்கள். இவர்களுடைய இந்த கொடுங்கோன்மையினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. பதினேழாம் நூற்றாண்டில் இந்தியப் பிரதேசத்திற்கு வந்த ஒல்லாந்தரும் முஸ்லிம்களைத் தமது எதிரியாகத்தான் கணித்தார்கள். தம்முடையவர்த்தக வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் போட்டியாக மட்டுமல்ல தடையாயும் இருந்தார்கள்.
ஒல்லாந்தார் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு முக்கிய சமூகமாக இருந்ததை

107 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
அவர்கள் அவதானித்தார்கள். வர்த்தகம் காரணமாக தென்னிந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் அடிக்கடி இலங்கைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் நூலான யாழ்ப்பாண வைபவமாலை' முஸ்லிம்களுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே இருந்த U6)56060) எடுத்துக்காட்டுகிறது.
ஒல்லாந்தருடைய காலத்தில் சோனகர், காயில்பட்டணத் திலிருந்தும் மற்றும் தென்னிந்திய பிரதேசங்களிலிருந்தும் வந்து, தென் மிருசுவிலில் குடியேறினார்கள். இந்த இடத்துக்கு 'உசன்' என்ற பெயரை இட்டார்கள். இவர்கள் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவில் போன்ற ஊர்களுக்குச் சென்று வியாபாரஞ் செய்தார்கள். பிறகு உசனைவிட்டும் வெளியேறி நல்லூரில் குடியேறினார்கள். நல்லூர் கந்தஸ்வாமி கோயிலுக்கு அருகாமையில் இவர்கள் குடியேறியதை யாழப்பாணத்துத் தமிழர்கள் விரும்பவில்லை. இங்கிருந்து இவர்களை அகற்றுவதற்கு அவர்களின் கிணறுகளில் பன்றி இறைச்சியைப் போட்டார்கள். அசுத்தமாக்கப்பட்ட இத்தண்ணிரைப் பாவிக்க முடியாத காரணத்தினால் இவ்விடத்தை விட்டும் வெளியேறி, யாழ்ப்பாணத்தில் நாவாந்துறைக்குக் கிழக்கே உள்ள பிரதேசத்தில் குடிபுகுந்தார்கள். தம்முடைய இடத்தில் கோயில் கட்டப்பட்டாலும், தமது மத அனுஷ்டானங்களுக்காக இப்பிரதேசத்திற்கு வருவதற்குரிய உரிமையைத் தமிழர்களிடமிருந்து பெற்றார்கள்.
இக்காலத்தில் தோன்றிய மற்றும் பல நூல்களிலிருந்தும் இலங்கையின் உள்நாட்டு வியாபாரம் பெரும்பாலும் முஸ்லிம்கள் கையிலிருந்தன என அறிகிறோம். தென்னிந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்தபெரியதம்பி மரைக்கார் இலங்கையின் வர்த்தகத்தில் பெரும்பங்கைப் பெற்றிருந்தார். இராமநாதபுரத்தை ஆட்சி செய்த தேவரின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரியதம்பி மரைக்கார் பெரிதும் காரணமாயிருந்தார்.

Page 66
முகம்மது சமீம் 108
ஒல்லாந்தருடைய வியாபாரம் பெரியதம்பி மரைக்காரினால் பெரிதும் பாதிக்கப்பட்டதால் அவருக்கெதிரான நடவடிக்கைகளில் ஒல்லாந்தர் ஈடுபட்டனர். ஒல்லாந்த கவர்னர் மாட்சுக்கரின் வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து இலங்கை தென்னிந்திய வர்த்தகம் முஸ்லிம்கள் கையிலேயே இருந்தது என அறிகிறோம். கவர்னர் வான்கோயன்ஸ் “பேருவளை, மக்கொனை, அளுத்கம முஸ்லிம்கள் கண்டி இராச்சியத்துடன் மிகவும் ஆதாயமுள்ள வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள்” என்று தனது வரலாற்றுக் குறிப்பில் கூறுகிறார்.
இவருடைய குறிப்புக்களிலிருந்து “கண்டி அரசன் யாழ்ப்பாணத் துறைமுகங்களிலிருந்து தென்னிந்தியாவுடன் வர்த்தகம் செய்தான் என்றும், யாழ்ப்பாண முஸ்லிம்கள் தான் இவ்வர்த்தகத்தைச் செய்தார்கள் என்றும் அறிகிறோம். வான் கோயன்ஸ், யாழ்ப்பாணக்கோட்டைத் தளபதிக்கு எழுதிய கடிதத்தில் “முஸ்லிம் வியாபாரிகள், கண்டி, மன்னனுடைய பெருமதிப்பைப் பெற்றிருந்தப்டியால் இவர்கள் மூலம் கண்டி இராச்சியத்தின் இரகசியங்களை அறியலாம்” என்று கூறுகிறார். கண்டி மன்னன் யாழ்ப்பாணத்துக்கோட்டத் தளபதிக்கு எழுதிய கடிதத்தில் “முஸ்லிம்களுக்கு சுங்கவரி விதிக்கக்கூடாது”என்று கூறுகிறான்.
முஸ்லிம் வர்த்தகர்கள், கண்டி இராச்சியத்தின் உயர் அதிகாரிகளின் எத்துணை மதிப்பைப் பெற்றிருந்தார்களென்றால், அபூபக்கர் புள்ளை என்பவரின் 300 அமுனம்பாக்கை ஒல்லாந்தர் பறி முதல் செய்ததை எதிர்த்து அதனை உடனே விடுவிக்குமாறு தும்பரதிஸாவ, கொழும்பு கொம்பெனித் தளபதிக்கு எழுதினான். ஒல்லாந்தருக்கு எதிராகக் கண்டி மன்னனுக்கு உதவுமாறு, மத்ராசிலிருந்த ஆங்கிலேயரிடம் கண்டி மன்னனின் தூதுவராகச் சென்றதும் ஒரு முஸ்லீமே. கண்டிப் பிரதேசத்திற்கு யூனானி வைத்திய முறையைக் கொண்டு வந்ததும் முஸ்லிம்களே. இவர்கள் கண்டி மன்னனதும், உயர் அதிகாரிகளினதும் கண்டி

109 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
மக்களினதும் பெருமதிப்பைப் பெற்றிருந்தார்கள். கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வைத்தியருக்குக் கண்டி அரசன் “வைத்திய திலக ராஜகருண கோபால முதலியார்” என்ற பட்டத்தை வழங்கியதோடு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் உரிமையையும் அளித்தான். ஒல்லாந்தர் கரையோரப் பகுதிகளின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பிறகு முஸ்லிம்களைக் கிராமத்தலைவர்களாகவும் நியமித்தார்கள். மக்களிடமிருந்து வரிப்பணம் வசூலிக்கும் உரிமையையும் இவர்களுக்கு வழங்கினார்கள். கொழும்பு முஸ்லிம்களின் தலைவராக உதுமான கந்தி மீஸ்திf ஐத்ரூஸ் லெப்பை மரிக்கார் 1762ம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நியமிக்கப்பட்டார். வருடா வருடம் நடைபெறும் ஏலத்தில் பெரும்பாலும் முஸ்லிம்களே வரிவசூலிக்கும் உரிமையைக் குத்தகைக்கு எடுப்பார்கள். நாட்டில் விளையும் பொருட்களைக் கூட முஸ்லிம்கள் தான் வாங்கி ஒல்லாந்தர் கம்பெனிக்கு விற்றார்கள்.
இவ்வரிவசூலிக்கும் உரிமையைத் தாங்களே நேரடியாகக் குத்தகைக்கு எடுத்தார்கள். மற்றும் வேறுயாராவது இவ்வுரிமையைப் பெற்றால், அதற்கு இவர்கள் உத்தரவாதமளித்தார்கள். ஒல்லாந்தர் வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட்டபோது உள்ளூர் வாசிகள் அவர்களுக்குத் தம் பொருட்களை விற்க மறுத்தார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விலை அவ்வளவு குறைவாக இருந்ததாலேயே. ஒரு சமயம் காலி, மாத்தறை மாவட்டங்களில், பாக்கு மரங்களிலிருந்து காய்கள் விழுந்து அழுகிக் கொண்டிருந்தபோதும் பொதுமக்கள் இதைக் கம்பெனிக்கு விற்க மறுத்தார்கள். அப்போது சில முஸ்லிம் வர்த்தகர்கள், இதனை வாங்கி அதற்குரிய வரியையும் செலுத்தி கம்பெனிக்கு விற்றார்கள். ஒல்லாந்தரின் கவர்னர் முஸ்லிம்களின் இந்தச் செய்கையை வரவேற்றார். இதன் பிறகு ஆடைகள், மீன், நெல், இரத்தினக்கற்கள் போன்ற பொருட்களை மக்களிடமிருந்து வாங்கி, கொம்பெனிக்கு விற்கும் உரிமையையும் ஒல்லாந்தர் முஸ்லிம்களுக்கு வழங்கினார்கள். 1790ம் ஆண்டு

Page 67
முகம்மது சமீம் 10
யாழ்ப்பாணக் கோட்டை தளபதி, சேகுநயினார்புள்ளை சேவகடியார் என்பவருக்கு யாழ்ப்பாணத்தில் விளையும் ஆடைகளுக்கு சாயம்பூச உதவும் ஒரு வகைசாய வேரை மக்களிடமிருந்து வாங்கி, கம்பெனிக்கு விற்கும் உரிமையை அளித்தான். இதேபோன்று 1791ம் ஆண்டு மன்னாரின் மீன்பிடித் தொழிலுக்கு விதிக்கப்பட்ட வரியை சுடெனவி மரைக்கார் என்பவருக்கு ஒல்லாந்தர் விற்றுவிட்டார்கள். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த மன்னான் மாப்பிள்ளை மாலி நயினார் என்பவருக்கு மன்னாரின் சுங்க வரி வசூலிக்கும் உரிமையையும் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த இன்னொரு முஸ்லீமுக்குக் கம்பெனி ஒட்டுமாப்பனையில் விளையும் நெல்லை வாங்கும் உரிமையையும் அளித்தனர். எனவே ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அதிகாரத்திலிருந்த பிரதேசத்தின் வர்த்தகத்தின் பெரும்பகுதியையும் வரிவசூலிக்கும் உரிமையையும் முஸ்லிம்கள் பெற்றிருந்தார்கள். பொருள் படைத்த முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில் ஏழை முஸ்லிம்கள் கம்பெனிக்கு 'ஊழியம்' என்னும் சேவையைச் செய்ததோடு தலைவரியையும் செலுத்தினார்கள்.

111 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
12. முஸ்லிம்களுக்கெதிராக செயல்பட்ட ஒல்லாந்தர் ஆட்சி
வர்த்தகம் காரணமாகக் கிழக்கு நாடுகளுக்கு வந்த ஒல்லாந்தர் நாடு பிடித்து ஆட்சியையும் கைப்பற்றினார்கள். இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யம் இருந்த காரணத்தினால் இங்கே தென்கிழக்காசிய நாடுகளான ஜாவா,சுமாத்ரா போன்ற நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். கிழக்கு நாடுகளில் தாம் நிலைநாட்டிய ஆட்சியை நிர்வகிப்பதற்கு ஜாவிலுள்ள பட்டேவியா என்ற இடத்தில் தமது தலைநகரை ஸ்தாபித்தார்கள். ஜாவாவை ஒரு பெரும்தோட்டமாக மாற்றியதுமல்லாமல் அந்நாட்டு மக்களை ஒரு பெருந் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களாகவும் மாற்றினார்கள்.
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் தமது ஆட்சியை நிலைநாட்டிய ஒல்லாந்தர், இலங்கையையும் ஒரு பெருந்தோட்டமாக மாற்றியிருப்பார்கள். நல்லவேளையாக இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களுடைய வர்த்தகத்திற்குத் தடையாயிருந்தது மட்டுமல்லாமல் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி முழு இலங்கையிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் அவர்களது எண்ணத்தை முறியடிப்பதற்குக்காலாக இருந்தார்கள். கண்டி அரசனுக்கு ஆங்கிலேயரின் உதவியைப் பெற்றுக் கொடுப்பற்குப் பெரிதும் உதவினார்கள். ஒல்லாந்தர் தம்முடைய வர்த்தகத்திற்கு முஸ்லிம்களின் உதவியை நாடினார்கள் என்றாலும் முஸ்லிம்களை அவர்கள் வெறுத்தார்கள்.
ஆங்கிலேயரின் உதவியைக் கண்டி அரசன் நாடுகிறான் என்ற செய்தியைக் கேள்வியுற்ற ஒல்லாந்தர் கண்டியைக் கைப்பற்றுவதற்காகக் கண்டி இராச்சியத்தின் மேல் 1762ம் ஆண்டில்

Page 68
முகம்மது சமீம் . 112
படையெடுத்தார்கள். கண்டியைக் கைப்பற்றும் முயற்சி ஆரம்பத்தில் தோல்வியில் முடிந்ததென்றாலும் 1765ம் ஆண்டில் ஒல்லாந்தர் கண்டியைக் கைப்பற்றினார்கள். கண்டியில் தமது ஆட்சியை நிலை நாட்ட முடியாமற்போய் விடவே கிரும்பவும் கொழும்புக்கே வந்தார்கள்.
ஒல்லாந்தர் கண்டியைக் கைப்பற்றித் தமது ஆட்சியை நிலை நாட்ட முடியாததற்கு ஒரு முக்கிய காரணம் தம் நாட்டையும் தம் மதத்தையும் சேர்ந்த ஒரு சமூகம் தமக்குப் பக்கபலமாக இல்லாமையே என்று எண்ணினார்கள். எனவே போர்த்துக்கீசர் தமது நாட்டைச் சேர்ந்தவர்களை இங்கே குடியமர்த்தியது போல் தமக்குச் சாதகமாக தம்மைச் சேர்ந்தவர்களை இலங்கையில் குடியேறுவதற்குப் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். தமது கம்பெனியின் பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு இச்சமூகம் பெரிதும் உதவும் என்று நம்பினார்கள். இச்சமூகத்திற்குப் பொருளாதார உதவியையும் அரசியல் உதவியையும் செய்தார்கள். முஸ்லிம்களிடமிருந்த வர்த்தகத்தையும் தையற் தொழிலையும் அவர்களிடமிருந்து அபகரித்து பறங்கியர் சமூகத்திற்குக் கொடுத்தார்கள். கொழும்பில் தனது ஆட்சியை நிலைநாட்டிய பிறகு ஒல்லாந்தர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். தமது தலைமைக் காரியாலயத்தின் உத்தரவுகளின் படி முஸ்லிம்களுக்குக் கொடுத்த வரிவசூலிக்கும் உரிமையை ரத்து செய்தார்கள். முஸ்லிம்களுடன் எவ்வித வர்த்தகத் தொடர்பும் ஒல்லாந்தர் வைத்திருக்கக் கூடாது என்றும் விதித்தார்கள். பறங்கியர்களுக்கு எல்லா வித சலுகைகளும் அளிக்கப்படல் வேண்டும் என்றும் அவர்கள் வர்த்தகத்தில் தோல்வியுற்றால், கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய உள்ளூர் வாசிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுடைய வர்த்தகத்தைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென்றும் பட்டேவியாவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம்களைப் பற்றி ஒல்லாந்தருடைய எண்ணம் எப்படியிருந்தது என்பதை அறிய கவர்னர்

113 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
வான்கோயனுடைய வரலாற்றுக் குறிப்பிலிருந்து பின்வரும் வாசகத்தைப் பார்ப்போம்.
“எமது அனுபவத்திலிருந்து நாம் அறிந்த உண்மையென்ன வென்றால் முஸ்லிம்கள் எமக்குப் பெருந்தொல்லையாக மட்டுமல்ல அவர்கள் எமது கம்பெனியின் வர்த்தகத்திற்குப் பெரும் இடையூறாகவும் இருக்கிறார்கள். வர்த்தகத்தில் எமது வருவாய் குறைவதற்கும் இவர்களே காரணம். எமது சமூகத்தினரதும் உள்ளூர் வாசிகளினதும் ஒழுக்கத்தையும் இவர்கள் கெடுத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் எமக்கு எதிராக துரோகச் செயல்களில் ஈடுபடுவதுடன் எமது வர்த்தகம் வளர்வதற்குப் பெரும் தடையாயும் இருக்கிறார்கள்.
காலிக் கோட்டையிலிருக்கும் முஸ்லிம்கள் கோட்டையிலிருந்து அகற்றப்படல் வேண்டும். அதற்கு முன் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் ஒரு விசேஷ பட்டியலில் பதிவு செய்யப்பட வேண்டும். வளவை கங்கையிலிருந்து பெந்தொட்ட வரையிலுள்ள பிரதேசத்தில் இருக்கும் குடும்பங்களின் தலைவர்கள் ஒரு பட்டியலில் பதிவு செய்யப்பட்டு ஒரு விசேஷ தளபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும். அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், என்ன வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களும் இப்பட்டியலில் இருத்தல் அவசியம். : வாழும் ஏழை முஸ்லிம்களிடமிருந்து தலைவரி h றுதல் அவசியம். அதே நேரத்தில் அவர்கள் கம்பெனிக்கு ஊழியம் செய்யவும் வேண்டும். இவர்கள் கம்பெனியின் பிரஜைகள் மட்டுமல்ல, கம்பெனியின் அடிமைகள் என்ற காரணத்தினால் :ಱ್ಣ: வேலைகளையும் கம்பெனி பெற வேண்டும். எமது வெளிநாட்டு வர்த்தகத்திற்குப் பெரும் நிறுவிளைவிக்கும் இவர்களுக்கு வாணிபம் செய்வதற்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படக்கூடாது. நான் நேரில் வந்து இவர்களைப் பற்றிய முழுவிபரங்களைத் தருவதற்கு முன்,'மூவர்ஸ் என்ற இந்த

Page 69
முகம்மது சமீம் 114
இனத்தவர்கள் கொழும்பிலிருந்து முற்றாக அகற்றப்படல் வேண்டும். இப்பிரதேசத்திலுள்ள ஏனைய முஸ்லிம்களைப் பிரித்து பல இடங்களில் இவர்கள் குடியமர்த்தப்படல் வேண்டும்.”
இந்த வரலாற்றுக் குறிப்பைப் பார்க்கும்போது, 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட நீக்ரோ அடிமைகளைப் பற்றிய குறிப்பு போல் இருக்கிறதல்லவா? தென்னாபிரிக்க பூர்வீகக் குடிகளான கறுப்பர்களுக்கு எதிராக வெள்ளையர்கள் எழுதிய சாசனமாகத் தென்படுகிறதல்லவா? ஒல்லாந்தர் இலங்கை முஸ்லிம்களை இப்படித்தான் கணித்தார்கள்
இலங்கை முஸ்லிம்களை ஒல்லாந்தர் இரு இனங்களாகப் பிரித்தார்கள். வங்காளத்திலிருந்தும் ஹிந்துஸ்தானத்திலிருந்தும் (வட இந்தியா) இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்து இலங்கைப் பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த கொம்பெனியின் வர்த்தகத்திற்குப் பெரிதும் உதவிய முஸ்லிம்களை ஒரு பிரிவாகவும் இலங்கையிலேயே வாழ்ந்து வந்த முஸ்லிம்களை இன்னொரு பிரிவாகவும் பிரித்தார்கள். முன்னைய பிரிவினருக்குச் சலுகைகளை வழங்கினார்கள். பின்னைய பிரிவினரை அடக்க முயன்றார்கள். முன்னைய பிரிவைச் சேர்ந்தவர்கள் நாட்டில் குடியேற மறுக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் ஒல்லாந்தர் முஸ்லிம்களைத் தமது மதவிரோதிகள் என்று தமது வரலாற்றுக் குறிப்புக்களில் குறிப்பிட்டார்கள். கவர்னர் வான் கோயன்ஸ் மாத்தரை திசாவவுக்கு அனுப்பிய கட்டளையில் 'மாத்தரை நகரத்திலோ அல்லது நகரத்தின், வெளியேயோ, முஸ்லிம்கள் தங்கள் வணக்க முறைகளில் ஈடுபடக்கூடாது என்று எழுதினான்.
முஸ்லிம்களுக்கு எதிரான இக்கொள்கைகளை ஒல்லாந்தர்களால் செயல்முறைப்படுத்த முடியவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்கள் செல்வந்தர்கள் என்றும் அவர்களிடமிருந்து வரி அதிகமாக வசூலிக்கப்பட வேண்டுமென்ற யாழ்ப்பாணத்துக் கமிஷனர் வான் றீடுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது மிகவும்

115 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
அனுபவசாலியான வான் றீட், வெளிநாட்டு வர்த்தகம் முஸ்லிம்கள் கையிலிருப்பதனாலும், உலகின் ஒரு பெரும் பகுதி முஸ்லிம்களின் ஆட்சியில் இருப்பதனாலும் இப்படிச் செய்தால், அது கம்பெனிக்குப் பாதகமாயமையும் என்று கூறி இக்கொள்கையைக் கைவிடச் செய்தான். ஆகவே யாழ்ப்பாண முஸ்லிம்களிடமிருந்து அதிக வரி வசூலிக்கும் கொள்கை கைவிடப்பட்டது.
ஒல்லாந்தர் பின்பற்றும் சமயச்சீர்திருத்தத் திருச்சபைகளைச் (Dutch Reformed Church) சேர்ந்த ஒல்லாந்த சமய மதத்தலைவர்கள் 1683ம் ஆண்டு யாழ்ப்பாணத்துமுஸ்லிம்கள், ஒரு தோட்டத்தில் கூடி குர் ஆனை ஒதுகிறார்கள் என்றும் "இதைத் தடை செய்ய வேண்டும்” என்றும் கவர்னரிடம் விண்ணப்பித்தபோது, கவர்னர் முஸ்லிம்கள் தொன்று தொட்டு இப்பிரதேசத்தில் வாழ்கிறார்கள். அவர்களால் பிற சமூகத்தவருக்கு எவ்வித இன்னல்களும் ஏற்படுவதில்லை. அவர்கள் பிற மதத்தவரை மத மாற்றம் செய்ய முனைவதுமில்லை என்றும் சமாதானத்தையே விரும்பும் இவர்களுக்கு எதிராக இயங்க முடியாது என்று கூறி இவ்விண்ணப்பத்தை ஏற்க மறுத்தான். இச்சம்பவத்திலிருந்து முஸ்லிம்கள் தம் மத நம்பிக்கையில் எள்ளளவும் தளராமல், பிற சமூகத்தவருடன் பழகும்போது சமாதானத்தையே விரும்பினார்கள் என்று அறிகிறோம்.
சில ஒல்லாந்த கவர்னர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். போயிலைப் பயிர்ச் செய்கையினால் யாழப்பாணத்து விவசாயிகள் பெரும் இலாபத்தைப் பெற்றார்கள். யாழ்ப்பாணப் போயிலைக்குக் கேரளப் பிரதேசத்தில் பெரும் கிராக்கி இருந்தது. முஸ்லிம் வர்த்தகர்கள் தான் இப்போயிலையை தென்னிந்தியாவில் விற்பனை செய்தார்கள். இவ்வர்த்தகத்தினால் முஸ்லிம்களின் வருகை அதிகரித்தது. தங்கள் எண்ணிக்கை கூடியதனால் தமது ஐவேளைத் தொழுகைக்காக வண்ணார் பண்ணையில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள்.

Page 70
முகம்மது சமீம் 116
யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் இதனை எதிர்த்து தங்கள் கோயிலுக்கு அருகாமையில் இது இருப்பதனால் தம்முடைய மதத்தின் புனிதம் கெட்டு விடும் என்றும், ஒல்லாந்தரின் கோட்டைக்கு அருகில் இருப்பதனாலும் இப்பள்ளிவாசலை உடைத்துத் தள்ளும்படியும் கவர்னரிடம் கேட்டபோது கவர்னரும் புதிய பள்ளிவாசலை உடைக்கும்படியும் முஸ்லிம்கள் பழைய பள்ளியிலேயே தொழவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தான். யாழ்ப்பாண மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்களது பொருட்களை பிற நாட்டில் விற்று அவர்களை செல்வந்தர்களாக்கிய முஸ்லிம்களுக்கு அவர்கள் செய்த கைமாறு இதுதான். முஸ்லிம்களுடைய பள்ளிவாசலை உடைப்பதற்கு அவர்கள் காரணமாயிருந்தார்கள்.
1790ம் 1794ம் ஆண்டுகளில் யாழப்பாணத்து அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப கவர்னர் பால்க் முஸ்லிம்களுடைய சட்டதிட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் ஒழுங்கு சேர்த்து அரபு மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழ் மொழியிலிருந்து ஒல்லாந்தர் மொழிக்கும் மொழிபெயர்க்க வேண்டும் என்று கட்டளையிட்டான். இதில் ஏதோ சூது இருக்கிறதென்று எண்ணிய முஸ்லிம்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்கள். பிற சமயத்தவர் இச் சட்டதிட்டங்களில் இடைச் செருகல்களைப்புகுத்தலாம் என்று சந்தேகித்து தாமாகவே குர்ஆனில் கூறப்பட்ட சட்டத்திட்டங்களை கோர்த்து ஒல்லாந்தர் கவர்னருக்குக் கையளித்தார்கள்.
ஒல்லாந்தரின் முஸ்லிம்களை அடக்கி ஆள வேண்டும என்ற ஆரம்பக்கொள்கை நாளடைவில் தளர்த்தப்பட்டது. முஸ்லிம்களின் வர்த்தகத்தால் பெரும் இலாபம் அடைந்த கம்பெனி, முஸ்லிம்களின் வர்த்தகத்தை அபகரித்துத் தாமாகவே நடத்த முற்பட்டபோதுபாரிய நஷ்டத்துக்குள்ளானார்கள். முஸ்லிம்கள் திரும்பவும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இடமளித்ததோடு முஸ்லிம்கள் காணிவாங்க முடியாது, என்ற

117 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
சட்டத்தைத் தளர்த்தி காணிவாங்கும் உரிமையையும் ஒல்லாந்தர் முஸ்லிம்களுக்கு வழங்கினார்கள். ஒல்லாந்தருடைய ஆட்சிக்குட்பட்ட மஹாரை, கெலனிய பிரதேசங்களில் ஆட்சிக்கு எதிராக எழுந்த புரட்சிகளை அடக்குவதற்கு முஸ்லிம்கள் ஒல்லாந்தருக்கு ஒத்தாசையாக இருந்தார்கள். எனவே ஒல்லாந்தருடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் முஸ்லிம்கள் பலராலும் மதிக்கப்பட்ட சமூகமாக விளங்கினார்கள்.

Page 71
முகம்மது சமீம் 118
13. ஒல்லாந்தரின் அடக்கு முறை ஆட்சியில் அல்லற்பட்ட முஸ்லிம்கள்
ஒல்லாந்தர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தென் கிழக்காசியாவின் இந்தொனேஷியத் தீவுகளான ஜாவா, சுமாத்ரா, சிலபீஸ், மொளுக்காஸ் ஆகிய நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள். மொளுக்காஸ் போன்ற தீவுகளில் நிலைபெற்றிருந்த போர்த்துக்கீசரை விரட்டுவதற்காக முஸ்லிம்களின் உதவியை நாடினார்கள். போர்த்துக்கீசரை இப்பிரதேசத்திலிருந்து அகற்றிவிட்ட பிறகு, முஸ்லிம்களைத் தமது எதிரிகளாகக் கணித்தார்கள். தம்முடைய வர்த்தக வளர்ச்சிக்குத் தடையாயிருக்கும் போட்டியாளர்களாகக் கருதினார்கள். இதே கொள்கையைத் தான் மற்ற இடங்களிலும் கடைப்பிடித்தார்கள். முஸ்லிம்கள் தம்முடைய இஸ்லாமிய மத நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சட்டம் மூலம் தடைவிதித்தார்கள். ஆனால் முஸ்லிம்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய முடியாது என்று வெகு சீக்கிரத்திலேயே உணர்ந்தார்கள்.
இலங்கையை வந்தடைந்த ஒல்லாந்தர் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களைத் தமது எதிரிகளாக எண்ணியதில் வியப்பில்லை. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒல்லாந்தர் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டார்கள். தென்னிந்தியாவில் தமது வர்த்தகத்திற்கு எதிராகச் செயல்பட்ட இராமநாதபுரம் தேவருக்கும், மதுரை நாயக்கர்களுக்கும் உடந்தையாக முஸ்லிம்கள் இருந்தார்கள் என்று சந்தேகித்தார்கள். ஆனால் இலங்கையில் தம்முடைய ஆட்சியை நிலை நாட்டும் வரையில் முஸ்லிம்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் ஒல்லாந்தர் ஈடுபடவில்லை.

119 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
போர்த்துக்கீசரை இலங்கையை விட்டும்விரட்டுவதற்குக் கண்டி அரசனுடைய உதவியையும் முஸ்லிம்களின் உதவியையும் நாடினார்கள். ஒல்லாந்தருக்கு முஸ்லிம்கள் உதவுகிறார்கள் என்று சந்தேகித்த போர்த்துக்கீசர் மாத்தறையில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களையும் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொன்று குவித்தார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கொழும்புக்கு அடிமைகளாக அனுப்பினார்கள். இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் போர்த்துக்கீசரை இலங்கையிலிருந்து விரட்டுவதற்கு முழுமூச்சுடன் ஒல்லாந்தருக்கு உதவினார்கள். போர்த்து கீசரை நாட்டை விட்டு விரட்டி, அவர்கள் ஆட்சிக்குப்பட்டிருந்த பிரதேசங்களில் தமது ஆட்சியை நிலை நாட்டியபிறகு ஒல்லாந்தர் திரும்பவும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட முற்பட்டார்கள்.
1647ஆம் ஆண்டில் கவர்னர் மாட்சூக்கர் பட்டேவியாவுக்கு எழுதிய அறிக்கையில் முஸ்லிம்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியதோடு இஸ்லாமிய மதம் இலங்கையில் பரவினால் ஒல்லாந்தருடைய ஆட்சிக்கே இவர்கள் ஊறு விளைவிக்கக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தான். ஆகையால் முஸ்லிம்களுக்கெதிராக சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தான். காலியிலுள்ள முஸ்லிம்கள் காலிக்கோட்டைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் வெளியில் அவர்கள் நடமாடக்கூடாதென்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம்கள் பாக்கு வியாபாரத்திலிருந்தும் முற்றிலும் அகற்றப்படுதல் வேண்டும் என்றும் தீர்மானமாயிற்று. இவனுக்குப்பிறகு வந்த கவர்னர் கிட்டன்ஸ்தைன் முஸ்லிம்கள் எல்லாவித வர்த்தகத்திலிருந்தும் முற்றாக அகற்றப்படல் வேண்டும் என்று தலைமைக் காரியாலயத்திற்கு எழுதியதற்கு, பட்டேவியாவிலிருந்து “முஸ்லிம்களை வர்த்தகத்திலிருந்து உடன்டியாக நீக்கிவிட்டால் அது தமக்குப் பாதகமாக முடியும் என்றும் படிப்படியாகத்தான் அவர்களை வர்த்தகத்திலிருந்து நீக்கிடவேண்டும்” என்றும் அறிவித்தார்கள். ஒல்லாந்தர் இலங்கையில் குடியேறவிரும்பினால் அவர்களுக்குப்

Page 72
முகம்மது சமீம் 120
பகிர்ந்தளிப்பதற்குக் காணி இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி பகிஷ்கரிக்கப்பட்டு அதைப் பறங்கியருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரகடனஞ் செய்யப்பட்டது. இந்தத் தீயவர்கள், “ஒல்லாந்தருடைய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் பரந்து வாழ்வதோடு சிறந்த காணிகளையும் தமதாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் சில கிராமங்களின் வருமானத்தைத் தாமே அபகரித்ததோடு, சிங்களப் பெண்களையும், கிறிஸ்தவ அடிமைகளையும் வைத்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் இலங்கைக்குத் தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதோடு உள்நாட்டு வர்த்தகத்திலும் ஏகபோக உரிமை கொண்டாடுவதனால் கம்பெனிக்கு வரவேண்டியவருமானம் குறைகிறது" என்று கவர்னர் வான் கோயன்ஸ் எழுதிவைத்தான்.
1658ம் ஆண்டில் யாழப்பாணத்தைக் கைப்பற்றிய காரணத்தினால் வான்கோயன்சுக்கு பெருமளவு அதிகாரம் வழங்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையில் கம்பெனி ஈடுபட்டதற்கு இவனே முக்கிய காரணம். இவன் யாழ்ப்பாணத்துக் கோட்டைத் தளபதி பவில் ஜோனுக்கு எழுதிய கடிதத்தில் இத்தீய சமூகத்தினர் பெருகுவதைத் தடுப்பதோடு, இவர்களை அடக்கிவைத்தல் வேண்டும்” என்றும் எழுதினான். இவர்கள் பகிரங்கமாகத் தொழுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தான். இவன் தலைமைக் காரியாலயத்திற்கு எழுதிய அறிக்கையில் “சிங்களவர் பெருமளவு இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படுகிறார்கள்” என்ற தவறான கருத்தை கம்பெனி உயர் அதிகாரிகளுக்கு எழுதியதோடு “1600 முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருவதனால், இவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், இவர்களுக்குத் தலைவரி விதிக்கப்பட வேண்டும்” என்றும் இவர்களுடைய எண்ணிக்கை பெருகினால், கம்பெனிக்கு ஆபத்தாக முடியும்” என்றும் அறிவித்தான்.

121 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
பட்டேவியாவின் அனுமதியுடன் வான்கோயன்ஸ் முஸ்லிம்களுக்கு எதிராகத் தீவிரமாக செயல்படத்தொடங்கினான். முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்த தையல் தொழிலைப் பறங்கியருக்குக் கொடுத்தான். அரசாங்க அனுமதியில்லாமல் வர்த்தகம் செய்யும் முஸ்லிம்களுடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “முஸ்லிம்கள் காடு வெட்டுவதிலும், நாடு திருத்துவதிலும், கம்பெனிக்குக் கட்டாய ஊழியம், செய்ய வேண்டும் என்றும் சிங்களப் பெண்களை முஸ்லிம்கள் வைத்திருந்தால், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அவர்கள் நாடு கடத்தப்படவேண்டும் என்றும், கிறிஸ்தவ சிங்களப் பெண்களை வைத்திருந்தால் மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் தான் அமுல் நடத்தப்போகும் சட்டங்களுக்கு அனுமதி வழங்கும்படி வான்கோயன்ஸ் பட்டேவியாவுக்கு எழுதினான். ஒல்லாந்தர் கம்பெனியின் கொள்கையினால் முஸ்லிம்களுடைய வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்பட்டதோடு அவர்கள் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது. கிறிஸ்தவப் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காரணத்தினால் சில முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சில உள்ளூர்வாசிகளின் முறையீட்டின் காரணமாகவும், கிறிஸ்தவ பாதிரிமார்களின் கோரிக்கைக்கும் இணங்கிய கம்பெனி, இத்தண்டனையூை இரத்துச் செய்தது.
கவர்னர் கோயன்ஸ் முஸ்லிம்களுக்கு எதிராக மேலும் சில சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வந்தான். கோட்டைக்கு வெளியே உள்ள வீடுகளோ காணிகளோ முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது என்று விதித்தான். இதன்காரணமாகத்தான் காலி போன்ற இடங்களில் முஸ்லிம்கள் கோட்டைக்குள்ளேயே வசிக்கத் தொடங்கினார்கள், 1670ம் ஆண்டில் கொழும்புக் கோட்டைக்கு

Page 73
முகம்மது சமீம் 122
வெளியே இருந்த முஸ்லிம்களை, அளுத்கமையில் குடியேறும்படி பணித்தான். இதே நேரத்தில், கண்டி மன்னனின் செயல்களை அறிந்து வருமாறு இரண்டு முஸ்லிம்களை மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தான்.
கோயன்சுக்குப் பிறகுவந்த கவர்னர், லோறன்ஸ் பீஜி என்பவன் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. உதாரணமாக, டச்சுப் ப்ரொட்டெஸ்தான் சபையின் சமயகுருவும் யாழ்ப்பாணத்து கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விண்ணப்பித்தபோதுமுஸ்லிம்கள் தமது சமய அனுஷ்டானங்களை நடத்துவதனால் யாருக்கும் எவ்வித கெடுதலும் வருவதில்லை என்று கூறி அவர்களுடைய கோரிக்கையை மறுத்து விட்டான். கவர்னர் பீஜிதனிப்பட்ட முறையில் சில சலுகைகள் முஸ்லிம்களுக்கு வழங்கினான். காலிமுஸ்லிம்களின் தலைவர், லெப்பை நைனார் மரிக்கார் என்பவருக்கு அலெக்சாந்தர் என்பவர் வயல் நிலம் வழங்கியதை அனுமதித்தான். இதேபோன்று, செய்யது காதர் என்பவருக்குத் தென்னந் தோட்டம் ஒன்று வழங்கும்படி உத்தரவிட்டான்.வெலிகமை முஸ்லிம்களின் தலைவருக்கும் இப்படி காணி வழங்கப்பட்டது. இதேபோன்று முஸ்லிம்கள் கம்பெனியில் எழுதுவினைஞர்களாகவும், கணக்காளர்களாகவும் வைத்தியர்களாகவும் கடமையாற்றினார்கள். முஸ்லிம்கள் கம்பெனிக்குப் பல விதத்திலும் உதவி செய்தார்கள் என்றாலும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் தளர்த்தப்படவில்லை. நீதி மன்றத்தில் முஸ்லிம்களுடைய சாட்சி ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முஸ்லிம்கள் கண்டிப் பிரதேசத்திற்குப் போவது தடை செய்யப்பட்டது. இச்சட்டம் முஸ்லிம்களை வெகுவாகப் பாதித்தது. உள்ளூர் வர்த்தகம் செய்து வந்த முஸ்லிம்கள் இவ்வியாபாரத்தை நடத்த முடியாத காரணத்தினால் தம் வருவாயை இழந்து பெரிதும் கஷ்டப்பட்டார்கள். ஆனால் கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள், பல மைல்களுக்கப்பால் இருக்கும் காடுகளிலிருந்து விறகு கொண்டு வந்து கம்பெனிக்குக்

123 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
கொடுக்க வேண்டும் என்று; இது அவர்களுடைய ஊழியம்' என்ற சேவையில் அடங்கும்; என்றும் விதிக்கப்பட்டது.
அடுத்து வந்த கவர்னர் ஹென்றிக் பெக்கர் என்பவன், முஸ்லிம்கள் காணி வைத்திருக்கக்கூடாது. என்ற சட்டத்தை திரும்பவும் அமுலுக்குக் கொண்டு வந்தான். முஸ்லிம்களுக்கு உரித்தான காணிகளையெல்லாம் பறிமுதல் செய்தான். இக்காணிகளைப் பகிரங்க ஏலத்தில் விற்றான். காலிக்கோட்டைத் தளபதிக்கு முஸ்லிம்களிடமிருந்து எவ்வித ஆட்சேபனைக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்றும், யாராவது அனுமதியின்றி கொழும்புக்கு வர எத்தனித்தால் அவரை சங்கிலியால் கட்டி சிறையில் தள்ளிவிடவேண்டும் என்றும் கட்டளையிட்டான். அடக்குமுறை ஆட்சியின் எல்லையையும் இவன் கடந்து விட்டான். இவனுக்குப் பிறகுவந்த ஆகஸ்டீன் றம்ப் என்பவன் பெக்கர் செய்த அட்டூழியங்களைத் தலைமைக் காரியாலயத்திற்கு எடுத்துக் காட்டினான். ஆகவே, இக்கொள்கை கைவிடப்பட்டது. என்றாலும் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் திரும்பவும் கொடுக்கப்படவில்லை. வேறு வழியில் முஸ்லிம்கள் இக்காணிகளைப் பெற்றார்கள். தம்முடைய சிங்கள நண்பர்களுக்கு ஏலத்தில் இக்காணிகளை வாங்க வைத்து, இவைகளைத் தமக்கு அடகுவைத்து, திரும்பவும் அக்காணிகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஜம்புருகொடை விதான, சேகு பரீது லெப்பை மரிக்கார் என்பவருக்கு ஒரு சிறு தொகைக்கு தாம் ஏலத்தில் வாங்கிய காணியை அடகு வைத்தார். அடகுகாலக்கெடு முடிந்த பிறகு மரிக்காருக்க்ே காணி சொந்தமாயிற்று. இதேபோன்று காலியைச் சேர்ந்த காசிலெப்பை மரிக்கார் என்பவர் 'தன்னுடைய தந்தையின் வேண்டுகோளின்படி, வெலிகமையிலுள்ள தமது தந்தையின் காணியை நவரத்தின முதலியார் ஏலத்தில் வாங்கி, தனக்கு 150 காசுக்கு அடகு வைத்தார் என்று 4.11.1730 திகதியிட்ட பத்திரத்திலிருந்து அறிகிறோம். எனவே எத்தனை இன்னல்கள் ஏற்பட்டாலும் அவைகளை சமாளிக்கும் சாதுர்யம்

Page 74
முகம்மது சமீம் 124
எமது மூதாதையருக்கு இருந்தது என்பதை இதன் மூலம் அறிகிறோம். அன்றைய இலங்கைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்குத் தாழ்ந்த இடத்தை ஒல்லாந்தர் கொடுத்திருந்தார்கள் என்றாலும் தம்முடைய விடாமுயற்சியின் காரணமாக ஒர் உயர்ந்த ஸ்தானத்தையும் பெருமதிப்பையும் முஸ்லிம்கள் பெற்றிருந்தார்கள்.

125 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
14. கண்டி இராச்சியத்தின் கீழ்
இருந்த முஸ்லிம்களின் நிலை
ஒல்லாந்தருடைய ஆட்சியின் கீழ் இருந்த கரையோரப் பகுதிகளில் வசித்த முஸ்லிம்களுடைய நிலையைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் ஆராய்ந்தோம். இனி கண்டி இராச்சியத்தின் கீழிருந்த முஸ்லிம்களின் நிலையைப் பற்றி ஆராய்வோம். இலங்கையின் வெளிநாட்டு, உள்நாட்டு வர்த்தகத்தை நடத்திவந்த முஸ்லிம்கள் ஐரோப்பியர்களின் வருகையினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.வர்த்தகம் காரணமாக இந்து சமுத்திர பிரதேச எல்லைக்குள் பிரவேசித்த போர்த்துக்கீசரும், அவர்களுக்குப்பிறகு வந்த ஒல்லாந்தரும் முஸ்லிம்களை தம் எதிரிகளாகவே கணித்தனர். போர்த்துக்கீசரும், பிறகு ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியபிறகு முஸ்லிம்களுடைய வெளிநாட்டு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. போர்த்துக்கீசரும் ஒல்லாந்தரும் முஸ்லிம்களைப் பல இன்னல்களுக்காளாக்கிய காரணத்தினால் முஸ்லிம்கள் கண்டிப் பிரதேசத்தில் குடியேறத் தொடங்கினார்கள். 1622ம் ஆண்டில் போர்த்துக்கீசத் தளபதி அசவிடோ முஸ்லிம்களைத் தம்முடைய பிரதேசத்திலிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டான். 1623, 1624, 1625ம் ஆண்டுகளில் திரும்பத் திரும்ப இப்பிரகடனங்கள் செய்யப்பட்டன. போர்த்துக்கீசரின் இம்சை பொறுக்கமுடியாமல் முஸ்லிம்கள் கரையோரப்பகுதிகளினின்றும் வெளியேறிகண்டி இராச்சியத்தின் எல்லைப் புறங்களில் குடியேறினார்கள். கண்டி அரசர்கள் முஸ்லிம்களை வரவேற்றார்கள். கண்டி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியிருந்தார்கள். தமது அன்றாட தேவைகளை விவசாயமே பூர்த்தி செய்தது. வர்த்தகத்தில் அதிகஅனுபவம் பெற்ற ஒரு புதிய சமுகத்தினர் தம் மத்தியில் வாழ்வதைக் கண்டி மக்கள் பெரிதும் பாராட்டினார்கள். இக்காலவரையில் தமது

Page 75
முகம்மது சமீம் 126
பொருட்களை வாங்கி வெளிநாடுகளிலும், கரையோரப் பகுதிகளிலும் விற்று வந்த முஸ்லிம்கள் தம்மிடையே வாழவந்ததையிட்டு குதூகலமடைந்தார்கள். போர்த்துக்கீசர் நாலாயிரம் முஸ்லிம்களைக் கரையோரப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றியபோது கண்டி மன்னன் செனரத் அவர்களுக்குப் புகலிடமளித்ததோடு அவர்களைக் கிழக்குக், கரையோரப் பகுதிகளில் குடியேற்றவும் செய்தான். போர்த்துக்கீசருடன் அடிக்கடி யுத்தம் செய்த காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டது. வயல்வெளிகளில் வேலை செய்வதற்கு ஆள்பஞ்சம் ஏற்பட்டது. கிழக்குப் பிரதேசத்தில் வெறிச்சோடிக்கிடந்த வயல்களைத் திரும்பவும் பொன்கொழிக்கும் பூமியாக மாற்றி கண்டிமக்களுக்குத் தேவையான உணவை இங்கே குடியேறிய முஸ்லிம்கள் அளித்தார்கள். போர்த்துக்கீசரின் யுத்த தந்திரங்களை அறிந்திருந்த முஸ்லிம்கள், கண்டி மன்னனின் சேனையில் சேர்ந்து, போர்த்துக்கீசருக்கு எதிராகப் போரிட்டார்கள். ஹேவபன்ன என்ற 69 (5 தனிப்பிரிவாக இருந்து யுத்தவீரர்களாகக் கடமையாற்றினார்கள். செனரத் மன்னனுக்குப் பிறகு அவனுடைய மைந்தன் இரண்டாவது இராஜசிங்கனுடைய காலத்திலும் முஸ்லிம்கள் கண்டிப் பிரதேசத்தில் குடியேறினார்கள். இவர்களுடைய சேவைகளுக்குப் பிரதிஉபகாரமாக இவர்களுக்குக் காணிகளை நன்கொடையாக வழங்கியது மட்டுமல்லாமல், சிங்களப் பெண்களைத் திருமணம் செய்ய ஊக்குவித்தான். இவர்களில் பெரும்பாலானோர் அக்குறணை என்ற கிராமத்தில் குடியேறினார்கள். 'அராபிய-இந்திய-இனத்தைச் சேர்ந்த, கரையோரப் பகுதியில் வர்த்தகம் செய்து வந்த முஸ்லிம்கள், அக்குறணையில் குடியேறி, கண்டிப் பெண்களைத் திருமணம் செய்து, கண்டி மக்களுடன் இரண்டறக்கலந்து, இலங்கைச் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழத் தலைப்பட்டார்கள்.
போர்த்துக்கீசருக்குப் பின் கரையோரப் பகுதிகளைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்த ஒல்லாந்தர், முஸ்லிம்களைப் பலவித

127 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இன்னல்களுக்குள்ளாக்கியதை ஏலவே அறிந்தோம். முஸ்லிம்களுடைய உள்நாட்டு வர்த்தகத்தை உடைப்பதற்கு சுங்கவரியை அதிகரித்ததோடு அவர்களை 5LLDITL65urt LD6) தடுத்தார்கள். இஸ்லாத்தில் அவர்களுக்கிருந்த துவேஷம் காரணமாக முஸ்லிம்களை வதைத்தார்கள். இதனால் விரக்தியுற்ற முஸ்லிம்கள் கண்டி இராச்சியத்தின் பிரதேசங்களில் தஞ்சம் அடைந்தார்கள். டச்சுக் கொம்பெனியார் கண்டி அரசனும் அவனுடைய பிரதானிகளும் கொம்பெனியிடம் மேலும் மேலும் சலுகைகள் கேட்பதற்குக் காரணம் இந்த முஸ்லிம்களே என்று எண்ணினார்கள். கவர்னர் கோயன்னிஸ் தன்னுடைய வரலாற்றுக்குறிப்பில் “மூவர்ஸ் என்ற இந்த நயவஞ்சகக்கூட்டத்தினர் கண்டிப் பிரதேசத்தில் குடியேறிய பிறகு, கண்டி அரசன், அவனுடைய பிரதானிகளும், எமக்கு எதிரான செய்கைகளிலேயே ஈடுபடுகின்றனர்” என்று குறிப்பிடுகிறான்.
பதினேழாம் நூற்றாண்டில் கண்டி மன்னர்களின் அதிகாரமும் செல்வாக்கும் வளர்ந்தது. ஆகவே தாம் வெளிநாட்டுத் தொடர்பு நேரடியாக வைத்திருக்க விரும்பியதோடு, வெளிநாட்டு வர்த்தகமும் தமது கைக்குள் வரவேண்டுமென்று விரும்பினார்கள். எனவே தமக்கென்றே ஒரு துறைமுகம் இருத்தல் அவசியம் என்று டச்சுக் கொம்பெனிக்கு உணர்த்தினார்கள். போர்த்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தருக்குக் கரையோரப் பகுதிகளின் ஆட்சி கைமாறிய போது கண்டி அரசர்கள், முஸ்லிம்களின் மூலம் மேற்குக்கரையோரத்தில் கல்பிட்டி, புத்தளம், ஆகிய துறைமுகங்களிலிருந்தும், கிழக்குக் கரையோரத்தில் திருகோணமலை, கொட்டியார், மட்டக்களப்பு ஆகிய துறைமுகங்களிலிருந்தும் தமது வெளிநாட்டு வர்த்தகத்தை நடத்தினார்கள். முஸ்லிம்கள் கண்டி மன்னர்களின் இவ்வர்த்தகத்திற்குப் பெரிதும் உதவினார்கள். மேற்குக் கரையோரத் துறை முகங்களான கல்பிட்டிய, புத்தளம், தென்னிந்தியாவின் கேரளப் பகுதியுடனும், கிழக்குக் கரையோரத் துறைமுகங்களான,

Page 76
முகம்மது சமீம் 128
திருகோணமலை கொட்டியார், தென்னிந்தியக் கிழக்குக் கரையோரத்துடனும் முஸ்லிம்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். கொட்டியார் துறைமுகத்தில் கப்பல் வந்து நங்கூரம் பாய்ச்சுவதற்கு சிறந்த வசதிகள் இருந்தன. கண்டி அரசனுடைய சுங்க இலாகாகாரியாலயம்,கிளிவெட்டியில் இருந்தது. இங்கேதான் பண்டமாற்றமும் நடைபெற்றது. கண்டி மன்னனைச் சந்திக்க வந்த ஆங்கிலேய தூதுவன் பைபஸ் கிளிவெட்டியில், தென்னிந்தியாவைச் சேர்ந்த கோழியர்கள் பண்டமாற்றம் செய்வதற்காக வந்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறான். கொட்டியாரிலிருந்த இப்பண்டங்களை, கண்டித் தலைநகரான மகாநுவரைக்கு எடுத்துச் சென்றவர்கள் முஸ்லிம்கள். மாடுகளின் மேல் பொதிகளை ஏற்றிச் செல்வதை தவளம் என்று கூறினார்கள். மகாவலி கங்கையை ஒட்டியே இவர்களது வர்த்தகப்பாதையும் அமைந்திருந்தது. “கொட்டியார் துறைமுகத்தை நோக்கி, இருபது அல்லது முப்பது மாடுகளின் முதுகுகளில் நெல் மூடைகளை ஏற்றிவரும் முஸ்லிம் வர்த்தகர்களைக் கண்டேன்” என்று ஆங்கிலேயத் தூதுவன் பைபஸ் தன் குறிப்பு புத்தகத்தில் கூறியிருக்கிறான். இவ்வர்த்தகப் பாதையிற்றான் ஆங்காங்கே முஸ்லிம் குடியிருப்புக்கள் தோன்றின. போக்குவரத்து குறைந்திருந்த அக்காலத்தில் கொட்டியாறிலிருந்து கண்டிக்குச் செல்வதற்கு ஒருதவளம், பல நாட்கள் எடுத்தபடியால், இரவைக் கழித்து செல்வதற்கு ஆங்காங்கே தங்குமிடங்களை அமைத்துக் கொண்டார்கள். இத்தங்குமிடங்கள் தான் நாளைடைவில் முஸ்லிம் குடியிருப்புக்களாக வளர்ந்தன. கொட்டியாறிலிருந்து கண்டிக்குச் செல்லும் வழியில் , முஸ்லிம் வர்த்தகர்களுடன் சென்ற பைபஸ், தான் இரு இரவுகளை, பங்குரான', 'நிக்கவட்டவான' என்ற இரு கிராமங்களில் கழித்ததாகக் கூறுகிறான். . .
கிழக்குக் கரையோரப்பிரதேசத்தில் வரண்டு கிடந்த தரிசு நிலத்தை நெற்காணிகளாக மாற்றிய முஸ்லிம்கள், தென்னிந்திய

129 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
கிழக்குக் கரையோர முஸ்லிம் நகரங்களான காயல் பட்டணம், கீழக்கரை போன்ற இடங்களுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். தென்னிந்திய முஸ்லிம்களின் சம்பான்கள் (தோணிகள்), (இலங்கையில் வியாபாரஞ் செய்து வந்த தென்னிந்திய முஸ்லிம்கள், இலங்கை முஸ்லிம்களால் 'சம்மான் காரர்' என்றழைக்கப்பட்டார்கள்.) கொட்டியார் மட்டக்களப்பு, ‘சம்பான்துறை (இப்பொழுது இது ‘சம்மாந்துறை என்றழைக்கப்படுகிறது) போன்ற துறைமுகங்களுக்கு பண்டங்களை ஏற்றிவருவதுடன், இலங்கையில் விளையும் பொருட்களான, பாக்கு, கராம்புபோன்றவற்றை ஏற்றிச்சென்றார்கள். வெளிநாட்டுப்பண்டங்களை, கிழக்குக் கரையோரத்தில் குடியேறிய முஸ்லிம்கள், தம்முடைய தவளங்கள் மூலம் வெல்லஸ் ' மினிபே போன்ற கிராமங்களினூடாகக் கண்டிப் பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றார்கள். கண்டி மன்னர்கள் தமது நாட்டில் விளையும் பொருட்களை வெளிநாட்டில் சந்தைப் படுத்துவதற்கும், வெளிநாட்டுப் பொருட்களை தமது பிரதேசத்தில் விற்பனை செய்வதற்கும் முஸ்லிம்களையே நம்பியிருந்தனர். முஸ்லிம்களும் அரசனுக்கு விஸ்வாசமாகவே நடந்தனர். இதேபோன்று மேற்குக் கரையோரப் பிரதேசமாகிய ஏழு கோறளைகள்' என்று கூறப்பட்ட வடமேல் மாகாணத்தின் பொருட்களை, முஸ்லிம்கள், மேற்குக் கரையோரத்துறைமுகங்களான கல்பிட்டிய, புத்தளம் ஆகிய இடங்களின் ஊடாக, தென்னிந்திய மேற்குக் கரையோரப் பிரதேசமாகிய கேரளாவில் சந்தைப் படுத்தி அப்பிரதேசத்தின் பண்டங்களைக் கொண்டுவந்து இங்கே விற்றார்கள். முஸ்லிம்கள் புத்தளத்திலும், கல்பிட்டியாவிலும் அதிகமாகக் குடியேறுவதற்கு இவ்வர்த்தகமே காரணமாயிருந்தது. குமாரவன்னியன் என்று கூறப்பட்ட ஒரு முஸ்லிமே, இப்பிரதேசத்திற்குத் தலைவனாக இருந்தான். இவன் புத்தளம் திஸாவவின கீழ் செயலாற்றினான்.
தெற்கும் தென்மேற்குக் கரையோரப் பகுதிகள் ஐரோப்பியர்களின் ஆட்சிக்குள்ளிருந்தபடியால் முஸ்லிம்களுக்கு

Page 77
முகம்மது சமீம் 130
இப்பிரதேசத்தின் மூலம் வெளிநாட்டு வர்த்தகம் செய்ய முடியாமலிருந்தது. ஆனால் கண்டி இராச்சியத்தின் எல்லைப் புறங்களான, சீத்தாவக்கை, ருவன்வல்லை, கட்டுவான போன்ற இடங்களில் முஸ்லிம்கள், ஐரோப்பியர்களுடன் பண்டமாற்றம் செய்தார்கள். தெற்கிலிருந்து பொருட்களை முஸ்லிம்கள் கொட்டபோவ, புத்தள, பங்கரசுமண போன்ற கிராமங்களினூடாக கண்டிப்பிரதேசத்திற்குதவளங்களின் மூலம் எடுத்துச்சென்றார்கள். கண்டி மன்னர்கள், முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் வர்த்தகம் செய்வதற்கு அனுமதியளித்ததோடு தமது திறைசேரியிலிருந்து முற்பணமும் கொடுத்து உதவினார்கள். கண்டி இராச்சியத்தின் பிரதானிகளும் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. அவர்களும் முஸ்லிம்களுக்கு முற்பணம் கொடுத்து வர்த்தகத்திலிருந்து வரும் இலாபத்தில் தமது பங்கைப் பெற்றார்கள். முஸ்லிம்கள் கண்டி மன்னர்களின் கீழ், பெருமதிப்புடனும், சிங்கள மக்களுடன் அந்நியோன்யமாகவும் பழகினார்கள் என்பதற்கு மேலே கூறப்பட்ட வரலாற்றுண்மைகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

131 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
15. சிங்கள சமுதாய அமைப்போடு ஒன்றிணைந்த முஸ்லிம்கள்
கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் அந்நியர் ஆட்சியில் பல இன்னல்களை அனுபவித்தார்களென்றாலும் கண்டி இராச்சியத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் சுமுகமாகவும் அந்நியோன்னியத்துடனும் பழகினார்கள். சிங்கள சமூகத்துடன் ஒன்றிணைந்து பழகினார்கள் என்றாலும், தமது மதத்தையும், மொழியையும், கலாசாரப் பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் பேணி வந்தார்கள். சுருங்கச் சொன்னால் தமது தனித்துவத்தைக் காப்பாற்றி வந்தார்கள். அன்றைய கண்டி மக்களின் சமூக-பொருளாதார வாழ்க்கை பத்த' என்றவொரு அமைப்பில் இருந்தது. முஸ்லிம்களும் இந்தபத்த' என்ற அமைப்பில் இரண்டறக் கலந்தார்கள்.
கண்டி மன்னன் தன்னுடைய பிரதானிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் மூலம் தனது இராச்சியத்தை நிர்வகித்தான். ஒவ்வொரு திசாவையின் கீழும் பல பிரிவுகள் இருந்தன. இதன் அடிமட்டத்தில் கிராமத் தலைவர் இருந்தார். இதே சமயத்தில் அரசாங்க அலுவல்களை மேற்பார்வை செய்வதற்கு நிலமே' என்ற பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். மக்கள் அவரவர்களுடைய தொழிலைக் கொண்டு சாதிகளாகப் பிரிக்கப்பட்டனர். அரசாங்கத்திற்கு ஊழியம் செய்வதற்கு இவர்கள் கடன்மப்பட்டனர். அரசாங்கத்தற்குத் தேவையான தொழில்கள் செய்வதற்கு அத்தொழிலைச் செய்பவர்கள் தமது சேவையை அரசாங்கத்திற்கு இனாமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதியின் சேவையைக் குறிப்பிட்டு அவர்களுடைய சேவையைத்தான் 'பத்த' என்று அழைத்தார்கள். நிலம்,

Page 78
முகம்மது சமீம் 132
மன்னனுக்கே சொந்தம். ஆகவே நிலத்தில் குடியிருப்போரும் நிலத்தைச் சாகுபடி செய்வோரும் அரசாங்கத்திற்குச் சேவை செய்யவேண்டும். இந்தச் சேவை பத்த, அமைப்பில் செயல்படுத்தப்பட்டது. விவசாயம் தான் மக்களின் பிரதான தொழிலாக இருந்தது. அன்றைய சமுதாயம் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டது. கொவிகுலம், என்ற சாதிதான் உயர்ந்த சாதியாகக் கணிக்கப்பட்டது. கொவிகுலத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்தார்கள். அவர்கள் வேறு ஒரு தொழிலையும் செய்யத் தேவையில்லை. மற்ற சாதிகளைச் சேர்ந்த எல்லோரும் விவசாயத்தோடு வேறு ஒரு தொழிலையும் செய்ய வேண்டும். கைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கொட்டல்பத்த, என்றும் குயவர்கள் 'ஹலபத்த என்றும் யானைப்பாகர்கள், குருவேபத்த' என்றும் நெசவுத்தொழில் செய்பவர்கள் 'ஹந்த பத்த, என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களை மேற்பார்வை செய்பவர்கள் நிலமே' என்றழைக்கப்பட்டார்கள். மாகாண அதிகாரிகளான திசாவை, சில சமயங்களில் நிலமே' களாகவும் கடமையாற்றினார்கள். இந்த சமூக அமைப்பு முறையில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டார்கள். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட கரையோரச் சிங்களவரும், முஸ்லிம்களும் மடிகே பத்த, என்ற பிரிவினை அடங்கினார்கள். இவ்விரு சாராரும் மன்னனுடைய வர்த்தகத்தைக் கவனித்து வந்தார்கள். வர்த்தகர் பொருட்களை ஏற்றிக் செல்வதும் தானியங்களை, அரச தானியக் களஞ்சியத்திற்குக் கொண்டு செல்வதும், கால் நடைகளைக் கொடுக்க வேண்டியதும் இவர்களது பொறுப்பாகும். கரையோரப் பகுதிகளுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால், மீன்பிடித் தொழிலைச் செய்பவர்களும் முஸ்லிம்களுடன் சேர்த்து ஒரு பிரிவில் சேர்க்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் வியாபாரத்தையே தொழிலாகக் கொண்டிருந்த காரணத்தினால், பொருட்களை ஏற்றிச் செல்வதற்குக் கால் நடைகளை வைத்திருந்தார்கள். எனவே அரசாங்கத்தின் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இவர்கள்

133 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
தங்களிடமிருந்த கால் நடைகளைக் கொடுத்தார்கள். அரச சேவை செய்பவர்களுக்குப் பெரும்பாலும் காணிகள் வழங்கப்பட்டன. முஸ்லிம்கள் ஓரிடத்தில் தங்கியிருக்காத காரணத்தினால் அவர்களை, சலன் பத்தமடிகே, என்றும் அழைத்தார்கள். காற்றைப் போல பல இடங்களுக்குச் செல்பவர் என்பது இதன் பொருள். ஆகவே அவர்களுக்குக் காணி வழங்கப்படவில்லை. ஆனால், நாளடைவில், அவர்கள் உடுநுவரை, அக்குறனை போன்ற இடங்களில் குடியேறிய பிறகு, அவர்களுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. முஸ்லிம்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். மடிகே பத்த' என்ற பிரிவில் அடங்கும் முஸ்லிம்களை மேற்பார்வை செய்வதற்கு அரசனால், மடிகே பத்த நிலமே' என்ற பதவிக்கு ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவார். சில சமயங்களில் இந்த அதிகாரி, பிரதேச ஆளுனரான திசாவையின் கீழ் இயங்குவார். கீர்த்தி பூரீ இராஜசிங்கனுடைய காலத்தில் (1747-1781) ஷேக் ஆலிம் என்ற ஒரு முஸ்லிம் மடிகே பத்த நிலமே' என்ற இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவருக்குப் பிறகு இவருடைய பேரன் ஷேக் அப்துல் காதிர் இப்பதவியை வகித்தார். பிறகு ஏழ தோறணைகள் என்ற பிரதேசத்தின் மடிகே திசாவ, என்ற உயர் பதவிக்குமாகுல முஹந்திரம்' என்ற ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டார். மடிகே பத்த என்ற இப்பிரிவில் சிங்கள மீனவர்களும் அடங்கியிருந்தார்களாதலால், சிங்களவர்களையும் மேற்பார்வை செய்யும் பதவிகளுக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டார்கள், என்பது புலனாகிறது. எனவே சிங்கள அரசர்களும், சிங்கள மக்களும், முஸ்லிம்களை, மதத்தையோ, இனத்தையோ காட்டி, வேறுபடுத்தவில்லை, என்ற இதிலிருந்து நாம் அறியலாமல்லவா? முஸ்லிம்களும் தமது வர்த்தகத்தினால், சிங்கள அரசாங்கமும், சிங்கள மக்களும் பயன் பெறும் வகையில் நடந்து கொண்டார்கள். அக்குறனை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மாத்திரமே வாழ்ந்தார்கள். தும்புளுவாவ, ஹிங்குல போன்ற கிராமங்களில், முஸ்லிம்கள் சிங்கள விவசாயிகள் மத்தியில் வாழ்ந்தார்கள்.

Page 79
முகம்மது சமீம் 134
முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தார்களென்றாலும், கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அத்தனை பேரும். மடிகே பத்த'என்ற பிரிவில் அடங்கினார்கள். மடிகே பத்தவை, பரியாலிக்கும் மடிகே பத்த நிலமே, என்ற முஸ்லிம் உயர் அதிகாரி தன் நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றுவதற்கு கிராம மட்டத்தில் 'முஹந்திரம்' என்றும், 'லேகம' என்றும் முஸ்லிம்களைக் கிராமத் தலைவர்களாக நியமித்தார். முஸ்லிம்களை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகளையே நியமித்த சிங்கள மன்னர்களின் பரந்த மனப்பான்மையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கு எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்தார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அன்றைய சிங்கள மன்னர்கள், இன, மத, மொழி இவைகளை வைத்து மக்களிடையே வேறுபாட்டை வளர்க்கவில்லை. சாதி வேற்றுமை அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கலாம். வாழையடி வாழையாக, மக்கள் சமுதாயத்தில் ஊறியிருந்த அடிப்படையைக் கொண்டு வளர்ந்திருந்தது. வேறு இனத்தவர் என்ற காரணத்தினாலோ அல்லது வேறு மதத்தைக் கணிக்கப்படவில்லை. சிங்களவர் நாட்டில் முஸ்லிம் குடியேறியதனால், அவர்களும் ஏனைய மக்களைப் போல் அரசாங்கத்துக்குச் சேவை செய்யக்கடமைப்பட்டார்கள். அரசனின் சார்பில் அவர்கள் வியாபாரஞ் செய்தார்கள். அரசாங்கத்தின் ஏகபோக உரிமையான பாக்கு வியாபாரம் மடிகே பத்தவுக்கு - முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டது. வீட்டுக்கு வீடு சென்று பாக்கு சேர்க்கும் உரிமை இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. திறைசேரியிலிருந்து முற்பணம் பெற்று உள்ளூர் மக்களிடமிருந்து பாக்கை வாங்கி, கண்டி இராச்சியத்தின் எல்லைப்புறமான ருவன் வெல்லையில் கொழும்பு வியாபாரிகளுக்கு விற்று, அதனால் வரும் இலாபத்தை திறைசேரிக்குக் கட்டவேண்டும் என்பது நியதி. இதைச் சரிவர முஸ்லிம்கள் செய்து வந்ததினால், அரசனின் பெருமதிப்பைப் பெற்றார்கள். எடுத்துச் சென்று, தென்னிந்திய வர்த்தகர்களிடமிருந்து உப்பு, கருவாடு, போன்ற பொருட்களை

135 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
வாங்கி வந்து, சிங்கள மக்களுக்குப்பாக்குப்பதிலாக பண்டமாற்றம் செய்து, உள்ளூர்ப் பொருட்களை வெளியூர் வியாபாரிகளுக்கு விற்று, அதனால் வரும் இலாபத்தை கண்டி அரசாங்கத்துக்கே கொடுப்பார்கள். அரசாங்க நிலங்களில் அவர்கள் கால் நடைகள் மேய்வதனால் அரசாங்கத்துக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள். உதாரணமாக நான்கு கோறளைகளில் உள்ள தும்புளுவாவ' 'ஹிங்குல கிராமங்களில் வசித்த முஸ்லிம்கள், நெற்றானியங்களை, அரசாங்கக்குதங்களுக்கு எடுத்துச் செல்லக் கடமைப்பட்டார்கள். ஊவா பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தெற்குக் கரையோரத்திலிருந்து உப்பு கொண்டு வரவேண்டும். இப்படி இன்னோரன்ன சேவைகளை முஸ்லிம்கள் அரசாங்கத்திற்குச் செய்து வந்தார்கள்.
கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொண்டார்கள். உதாரணமாக, ஒரு கிராமத்தில் விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை கிராமத்திலுள்ள கொல்லன் கொடுத்துதவினான். பண்ட மாற்றம் மூலம் மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். ஆனால் சில பொருட்களை அவர்கள் வெளியிடங்களிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கொல்லன், உபகரணங்களைச் செய்வதற்குச் சில மூலப்பொருட்களை வெளியூரிலிருந்து பெற வேண்டியிருந்தது. இதே போன்று, உப்பு, கருவாடு, துணிமணிகள் போன்றவற்றையும் வெளியூரிலிருந்தே பெற வேண்டியயிருந்தது. மக்களுடைய இந்தத் தேவையைத் தான் முஸ்லிம்கள் பூர்த்தி செய்தார்கள். தென்னிந்தியாவில் நெய்யப்படும் ஆடைகளுக்குக் கண்டியில் பெரும் கிராக்கி இருந்தது. இதேபோன்று கண்டியில் விளையும் பாக்கு போன்ற பொருட்கள் தென்னிந்தியாவில் உடனடியாக விற்பனையாகின. பண்டமாற்ற மூலமே முஸ்லிம்கள் இவ்வர்த்தகத்தை நடத்தி வந்தார்கள். எனவே கண்டி மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முஸ்லிம்களையே

Page 80
முகம்மது சமீம் 136
நம்பியிருந்தார்கள். வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுலன்பத்த மடிகே என்ற பிரிவில் அடங்கினார்கள். கண்டி இராச்சியத்தில் வியாபாரஞ் செய்ய உரிமை பெற்ற முஸ்லிம்கள் அரசாங்கத்திற்குச் சேவை செய்யக் கடமைப்பட்டார்கள். முஸ்லிம்கள் சிங்க்ள மக்களுடன் ஒன்றிப் பழகி சிங்கள சமுதாயத்தின் சமுதாய அமைப்பு முறையோடு ஒன்றிணைந்தார்கள்.

137 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
16. சிங்கள சமுதாய அமைப்பில் முஸ்லிம்கள் வகித்த இடம்
கண்டி, சிங்களச் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழ்ந்த முஸ்லிம்கள், தமது மத அனுஷ்டானங்களையும், மதக்கோட்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கைவிடவில்லை. சிங்கள சமுதாயம் விகாரை அல்லது தமது கோயில்களை மையமாக வைத்தே வாழ்ந்து வந்தது. பெளத்த மதத்தில் ஊறியிருந்த சிங்கள மக்களது வாழ்க்கையில் பன்சல, விகாரை போன்ற மதவழிப்பாட்டுத் தளங்கள் முக்கிய இடத்தைப்பெற்றிருந்தன. பெளத்த பிக்குகள் சமுதாயத்தில் ஒரு பிரதான இடத்தை வகித்தார்கள். மக்களின் மதபோதகர்களாகவும் கல்வி கற்பிக்கும் குருமார்களாகவும், நோயைக் குணப்படுத்தும் வைத்தியர்களாகவும் இருந்தார்கள். சிங்கள மன்னர்களும், பெளத்த மதத்தை வளர்ப்பதையும், பெளத்த பிக்குகளைப் பேணிக்காப்பதையும் தம்முடைய முக்கிய கொள்கையாகக் கொண்டார்கள். விகாரைகளுக்குக் காணிகளை வழங்கினார்கள். இக்காணிகளிலிருந்து வரும் வருவாய் விகாரையின் தேவைகளுக்கும், பிக்குகளின் அன்றாட வாழ்க்கைக்கும் ஏழை மக்களுக்கு உதவுவதற்கும் பயன்பட்டன. சிங்கள சமுதாயத்தின் விகாரை அமைப்பில் முஸ்லிம்களும் ஒரு முக்கிய இடத்தை வகித்தார்கள். தம்முடைய மதக்கொள்கைகளும் மதக்கோட்பாடுகளும் பாதிக்காத முறையில் இவ்வமைப்புமுறையில் முஸ்லிம்கள் இயங்கினார்கள்.
சிங்கள மன்னர்களால் விகாரைகளுக்கு வழங்கப்பட்ட காணிகள் விகார கம' என்று வழங்கப்பட்டன. விகாரையின் பிரதான பிக்கு இவ்விகார கம'வைப் பரிபாலிக்கும் நில உடமையாளரானார். விகாரைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட கிராமத்தின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு தான் விகாரையின்

Page 81
முகம்மது சமீம் 138
நேரடி பரிபாலனத்தின் கீழ் இருந்தது. இதை முத்தெட்டுவ என்று அழைத்தார்கள். இந்த முத்தெட்டுவ என்ற நிலத்தில் அடங்காத ஏனைய நிலத்தின் விவசாயத்திற்குரிய காணியைப்பிரித்து விவசாயிகளுக்குக் கொடுத்தார்கள். இப்படிப் பிரித்துக் கொடுக்கப்பட்ட காணிகளை நில பங்கு என்றும் இதனைப் பெற்றவர்கள் பங்கு காரயா என்றும் அழைக்கப்பட்டார்கள். இக்காணிகளைப் பெற்றதற்குப் பிரதியாக இவர்கள் தங்கள் சாதிக்கேற்றவாறு தமது சேவையை விகாரைக்குச் செலுத்த வேண்டும்.
இந்த விகாரை அமைப்பு முறை அன்றைய சமுதாயம் பல சாதிகளாகப் பிரிந்திருந்தாலும் சமாதானத்துடனும் முரண்பாடில்லாமலும் வாழ்வதற்குப் பெரிதும் உதவியது. முஸ்லிம்கள் கோயிற் காணிகளில் குடியிருந்தார்கள் என்றாலும், தம்முடைய மதமும், மத நம்பிக்கையும் மதக்கோட்பாடுகளும் பாதிக்காத விதத்தில் இவ்விகாரை அமைப்பு முறையோடு இணைந்து வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுடைய தொழில் வர்த்தகமாயிருந்த காரணத்தினால் அவர்களுடைய சேவை பட்டவிலு பங்கு - வர்த்தக சேவை - என்றழைக்கப்பட்டது. விகாரைக் காணியில் குடியிருந்த காரணத்தினால் இவர்கள், விகாரைக் காணிகளிலிருந்து. அறுவடை செய்யப்பட்ட தானியங்களை விகாரையின் தானியக் களஞ்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். சில சமயங்களில் விகாரைக்கு உப்பு, கருவாடு போன்ற பொருட்களை முஸ்லிம்கள் வரியாகக் கொடுத்தார்கள் உதாரணமாக 'றம்புக்கந்தன என்ற கிராமத்தில் வசித்த முஸ்லிம்கள், அவ்வூர் விகாரையான 'றிதி' விகாரைக்கு சரக்கேற்றும் சேவையைச் செய்தார்கள். இதே போன்று திகல் தொடுவ என்ற பிரசித்தி பெற்ற விகாரைக்குச் சொந்தமான துணுவில என்ற கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பட்டவிலுபங்கு என்ற சரக்கேற்றும் சேவையை அவ்விகாரைக்குச் செய்தார்கள். ஒவ்வொரு முஸ்லிம் குடியிருப்பாளரும் வருடத்தில் ஏழு நாட்களுக்கு

139 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
நெற்களங்சியங்களை விகாரைக்கு எடுத்துச் செல்வதற்கு, மட்டக்காளைகளைக்கொடுத்துதவ வேண்டும். விவசாயம் செய்ய முடியாத உயர்மட்டக்காணிகளை வைத்திருந்தால் உப்பும், கருவாடும் இவர்கள் விகாரைக்குக்கொடுக்கவேண்டும்.'ஹிங்குல என்ற கிராமத்தில் இருக்கும் உடமாகடவர புரான விகாரையின்பிரதம பிக்குவான மொறதொட்ட ராஜகுரு தம்மகந்த தேரொ என்பவர் தன்னுடைய நாட்குறிப்புப்புத்தகத்தில் விகாரைக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்த முஸ்லிம்கள் என்னென்ன சேவையைச் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று, இந்துக்களும் விகாரைஅமைப்பு முறையோடு ஒன்றிணைந்தனர். இந்துக்களுக்குத்தனியாக 'தேவால'. அமைப்புமுறையிருந்தது. கண்டியை ஆட்சிசெய்த கடைசி நான்கு அரசர்களும் தென்னிந்திய நாயக்கர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களாதலால், அவர்கள் இலங்கை அரசை ஏற்குமுன்னர் இந்துக்களாகவிருந்த காரணத்தினால், இந்து மதத்திற்கு ஒரு சிறப்பு இடத்தை அளித்தனர். இந்துக்கோயில்களைப்பராமரிப்பதற்கு கண்டி மன்னர்கள் காணிகளை நன்கொடையாகவழங்கினர். இதை 'தேவாலகம என்றழைத்தனர். இதனை நிர்வகிப்பதற்கு கொவிகுல, சாதியைச் சேர்ந்த ஒருவரைக்கண்டி மன்னன் நியமித்தான். இவர் பஸ்நாயக்க நிலமே என்றழைக்கப்பட்டார். இவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒரு முக்கிய இடத்தை வகித்தார். தேவாலகம நிலத்தைக்குத்தகைக்கு எடுத்தோரும். அதில் வாழ்ந்தோரும் தேவாலயத்துக்குத் தத்தமது சாதிக்கேற்றவாறு ஊழியம் செய்யவேண்டும். தேவாலகம நிலத்தில் குடியிருந்த முஸ்லிம்கள் லுனுதென பங்குவ என்ற சேவையைத் தேவாலயத்துக்குச்செய்யவேண்டும். அதாவது தேவாலயத்தில் கடமையாற்றுவோருக்கு உப்பு தானமாகக் கொடுக்கவேண்டும். பமுனுவ என்ற கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் கதலாதெனிய தேவாலயத்துக்குச் சொந்தமான காணியில் இருந்த

Page 82
முகம்மது சமீம் 140
காரணத்தினால் பதினான்கு சேரு உப்பு இத்தேவாலயத்துக்கு வருடாவருடம் அளிக்கவேண்டும் என்றிருந்தது. முஸ்லிம்கள் எந்த அந்தஸ்தில் வைத்து மதிக்கப்பட்டார்கள் என்பதற்கு உதாரணமாக உடுநுவரையிலுள்ள அம்பககே தேவாலயத்திற்குச்சொந்தமான தொடந்தனிய என்ற இடத்தில் வாழ்ந்த அஹமது லெப்பை என்பவர் வருடாவருடம் நடக்கும் தேவாலயபெரஹராவில் பதினைந்து நாட்களுக்குப்பங்குபற்றவேண்டும் என்றிருந்தது. இவருடைய முக்கிய கடமையென்னவென்றால் தேவாலய நிகழ்ச்சிகள் நடக்கும் போது அவர் அங்கே பிரசன்னமாயிருக்க வேண்டுமென்பதே. பஸ்நாயக நிலமே தேவாலய நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கு விஜயம் செய்யும்போது இவர் அவரோடு கூட இருக்க வேண்டும். அதோடு தேவாலய நிலத்தை உழுவதற்கு வேண்டிய எருமைகளையும், கலப்பைக்கு வேண்டிய இரும்பு உபகரணங்களையும் முஸ்லிம்கள் கொடுத்துதவ வேண்டும். தேவாலய நிகழ்ச்சிகளுக்கு அஹமது லெப்பை வருவதை ஒரு பெருமதிப்பாகக் கணித்தார்கள். அஹமது லெப்பையும் இதை,
தனக்கு அளிக்கப்பட்ட ஒரு கெளரவமாகவே மதித்தார். எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தை மக்கள் முஸ்லிம்களுக்குக் கொடுத்திருந்தார்கள் என்பதை இதிலிருந்தே நாம் அறிகிறோம். விகாரைக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருந்த முஸ்லிம்கள் எப்படி தம்முடைய சேவையை விகாரைக்கு அளித்தார்களோ, அதேபோல, விகாரை நிர்வாகிகளும், முஸ்லிம்களின் பள்ளிவாசலில் கடமையாற்றும் கத்தீபின் செலவுக்காவும் பள்ளிவாசலைப் பராமரிப்பதற்கும் கோயில் காணியில் ஒரு பகுதியைத் தானமாக முஸ்லிம்களுக்கு வழங்கினார்கள். நம்புக்கந்தன என்ற கிராமத்தில் வசித்த முஸ்லிம்களுக்கு, றிதிவிகாரையைச் சேர்ந்த பிக்குகள் இப்படியொரு காணியை வழங்கினார்கள். முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையில் இருந்த இந்த செளஜன்ய உறவைக் கண்டு 1870ம் ஆண்டில் இலங்கையின் 'உடைமையுரிமையைப் பற்றி விசாரணை செய்ய வந்த பிரித்தானிய பொறுப்பாண்மைக் குழு,

141 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
மிகவும் வியப்படைந்தது. இதையே, பதினேழாம் நூற்றாண்டில் கண்டியில் இருந்த றொபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயன், கண்டி மன்னர்கள் எவ்வாறு விகாரைகளின் நிர்வாகத்திற்குக் காணிகளை வழங்கினார்களோ அதேபோன்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கும் காணிகளை வழங்கினார்கள் என்று கூறுகிறான். பள்ளிக்காணியில் குடியிருந்தவர்கள் பிரதிகூலமாக பள்ளியின் செலவுக்காகப் பணம் கொடுத்துதவினார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.
“கண்டியிலிருந்த பள்ளிவாசலுக்கு ஒவ்வொரு குடியிருப்பாளரும் ஒரு பணம் கொடுக்கவேண்டும் என்று அரசகட்டளையிருந்ததால் முஸ்லிம்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இந்தப்பணத்தைப்பெற்றுக்கொள்வார்கள். பணம் படைத்தவர்கள் முஸ்லிம் யாத்திரிகர்கள் தங்குவதற்கு நிலம் தானமாகக்கொடுத்தார்கள். நாளடையில் இந்நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தமாயின’ என்று றொபர்ட் நொக்ஸ் கூறுகிறான்.

Page 83
முகம்மது சமீம் 142
17. அரச சேவையில் முஸ்லிம்கள் வகித்த இடம்
சிங்கள அரசர்களுடைய காலத்தில் மன்னர்களும் பிரதானிகளும் சிங்கள மக்களும் எவ்வித உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து முஸ்லிம்களைக்கணித்தார்கள் என்பதை முன்னைய அத்தியாயத்திலிருந்து நாம் அறிந்தோம். கண்டி அரசனுடைய நிர்வாகத்தில் முஸ்லிம்கள் பல பொறுப்பான பதவிகளிலிருந்து அரசனுக்கு சேவை செய்தார்கள். கண்டி அரசனின் நிர்வாக சேவையில் மன்னனின் மாளிகையில் சேவைசெய்வதுதான் மிகவும் முக்கியமானதும் பொறுப்புவாய்ந்ததும் என கருதப்பட்டது. அரசனுக்கும் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாருக்கும் வைத்தியம் செய்வதில் முக்கிய பங்கை முஸ்லிம்கள் ஏற்றிருந்தனர். பெத்கே முஹந்திரம் நிலமே என்ற உயர் அதிகாரியின் கீழ் இவ்வைத்தியர்கள் செயல்பட்டார்கள். பெத்கே’ என்ற இவ்விலாகாவின் தலைவர்களாக முஸ்லிம்களே பெரும்பாலும் செயல்பட்டார்கள். ராஜபக்சவைத்தியதிலக கோபால என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இப்பதவியில் இருந்தார்கள். அரசனுக்குப் பணிவிடை செய்த காரணத்துக்காக உடுநுவரையிலுள்ள சிதுருவான மாவட்டத்தில் அமைந்த ஒரு காணியை 1747ம் ஆண்டு கண்டி மன்னன் ராஜபக்ச கோபால முதலியார் குடும்பத்துக்கு நன்கொடையாக வழங்கினான் என அறிகிறோம். 1786 ஆண்டு ராஜாதி ராஜ சிங்கவின் இரண்டாம் தாரமாகிய அளுகம துக்கன்ன உன்னான்சேவுக்கு வைத்தியம் செய்ததற்காக பூவெலிக்கடையைச் சேர்ந்த வெதராலகே அபூபக்கர்புள்ளே என்ற வைத்தியருக்கு தஸ்கரையிலுள்ள ஒரு நிலம் இனாமாக வழுங்கப்பட்டது. முஸ்லிம்கள் கண்டி இராச்சியத்தில் வைத்தியர்களாக இருந்ததோடு அரசசேவையில் உயர்ந்த பதவிகளை வகித்தார்கள் என்பதை மேற்கூறிய வரலாற்றுச்சான்றுகளிலிருந்து நாம் அறிகிறோம். இன்றும்

143 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
கண்டிப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வைத்தியர்களாகக் கடமையாற்றுவதை நாம் பார்க்கிறோம் . மேல்நாட்டு வைத்திய முறை இலங்கைக்கு வருமுன்னேயே முஸ்லிம்கள் யூனாணிவைத்திய முறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
அரசமாளிகைச்சேவையில் அரசகுளியல் சேவை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இச்சேவையில்சுமார் 500 குடும்பங்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இச்சேவையை உல்பங்கே என்றழைத்தார்கள். இச்சேவைக்கு அரசகாணிகள் இனாமாக வழங்கப்பட்டது. இச்சேவையிலும் முஸ்லிம்கள் தான் முக்கிய இடத்தை வகித்தார்கள். அரசனுடைய கால்களைக்கழுவும் சேவை உயர்சாதியினருக்கே கொடுக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கும் இப்பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் முஸ்லிம்களும் உயர்ந்த சாதியைச்சேர்ந்தவர்கள் என்று கணிக்கப்பட்டார்கள். உல்பங்கே என்ற இந்தச்சேவையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் அரச குளியலுக்குத்தேவையான விறகுகளைக் கொடுத்துதவினார்கள்.
அரசமாளிகைச் சேவையில் மிகவும் முக்கியமான இடத்தை வகித்ததுசமையலறைச்சேவை இதை முல்தங்கே என்றுகூறினார்கள். அரசனுடைய நம்பிக்கைக்குப்பாத்திரமானவர்களே இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஒருநாட்டை ஆளும் அரசன் தன்னோடு இருப்பவர்களை சந்தேகக்கண்கொண்டே பார்ப்பான். அதுவும் கண்டியை ஆண்ட நாயக்க மன்னர்கள் சிங்களப்பிரதானிகளை முழுமையாக நம்பவில்லை. சிங்களப் பிரதானிகள் தமக்கு எதிரான சதி முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற சந்தேகம் நாயக்க மன்னர்களிடம் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. பிற்கால வரலாறு எமக்கு இந்த உண்மையை எடுத்துக்காட்டுகிறது. எனவே உணவு தயாரிப்பதற்குத் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்தி மாணவர்களையே அரசன் வைத்திருந்தான். சமையலறைச் சேவையில் முஸ்லிம்கள்

Page 84
முகம்மது சமீம் 144
முக்கிய இடத்தை வகித்தார்களென்றால் முஸ்லிம்களின்மேல் எவ்வளவு நம்பிக்கை அரசன் வைத்திருந்தான் என்பதை நாம் இதிலிருந்தே அறிகிறோம். முஸ்லிம்கள் சுவையான உணவு வகைகளை தயாரிப்பதில் வல்லுனர்கள் என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
கண்டி அரசனுடைய படையில் 'ஹேவபன்ன' என்ற ஒரு பிரிவும் இருந்தது. முஸ்லிம் வீரர்களைக்கொண்ட இப்பிரிவு அரசனுடைய மெய்க்காப்பாளர் பிரிவில் ஒன்றாகக்கணிக்கப்பட்டது. ஆங்கிலேய தளபதி டீஒய்லியின் டயரியில் இருந்த குறிப்புப்படி 1810ம் ஆண்டில் 400 மலையாளிகளும் 200 மூர்மென் (முஸ்லிம்கள்)களும் 200 மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களும் கண்டி அரசனின் படையில் இருந்தனர் என அறிகிறோம். கண்டி இராச்சியத்தைச்சுற்றியுள்ள மலைக்கணவாய்களான பலானை, கலகெதரை, கன்னோருவ ஊறுகலை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வாழ்வதற்குக்காரணம், கண்டி இராச்சியத்தை முஸ்லிம் வீரர்கள் இப்பிரதேசங்களிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என நாம் ஊகிக்க இடமிருக்கிறது.
இலங்கையில் நெசவுத்தொழில் வளர்வதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்றால் அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. தென்னிந்தியாவிலிருந்து நெசவாளர்களை தந்திரமாக இலங்கைக்குக் கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்களே. முஸ்லிம்களும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக கண்டிக்கு விஜயம் செய்த ஆங்கிலேய தூதுவன் பைபஸ் தான் இரவு தங்கியிருந்த நிக்கவட்டவான என்ற கிராமத்தில் முஸ்லிம் விவசாயிகள் தமக்குத் தேவையான ஆடைகளை நெய்வதைக் கண்டதாகத் தன்னுடைய குறிப்புப்புத்தகத்தில் குறிப்பிடுகிறான். தம்மான்கடுவ என்ற கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் அப்பிரதேச ஆளுனராகிய திசாவைக்கு ஒரு முழத்துண்டு ஆடை கொடுக்கவேண்டும் என்றிருந்தது.

45 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
கண்டிப்பிரதேச மக்களுக்குத்தேவையான ஆடைகளை நெய்து கொடுத்தவர்கள் மட்டக்களப்புப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களே. முஸ்லிம்கள் தையல் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
வர்த்தகர்களாக இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் விவசாயத்திலும் ஈடுபட்டார்கள். கண்டி அரசன் செனரத்தின் காலத்தில் கிழக்குக்கரையோரத்தில் குடியேறிய முஸ்லிம்கள் அங்கு தூர்ந்து போயிருந்த குளங்களைத் திருத்தி, காடுவெட்டி, களனி திருத்தி புன்செய் நிலங்களை நன்செய்நிலங்களாக மாற்றி கண்டி மக்களின் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்தார்கள். சிங்கள மக்களுக்கு உணவளித்து நாட்டை வளமாக்கிய முஸ்லிம்களுடைய ஆயிரமாயிரம் ஏக்கர்வயல் நிலங்களை கரும்புப்பயிர்ச்செய்கைக்காக அரசாங்கம் பலவந்தமாக எடுத்தது எந்த விதத்தில் நியாயமானது? சிங்களப்பேரினவாதிகளின் ஹெல உருமய கொள்கையினால் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் தங்கள் வீடுகளைக்கூட இழக்க நேரிடலாம். வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் இந்நாட்டு மக்களுக்குத்தேவையான பொருட்களைக் கொண்டுவந்ததுடன் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப்பாடுபட்ட முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சில இனத்துவேஷிகள் கோஷம் எழுப்புகின்றனர். முஸ்லிம்கள் தங்களுடைய இன்றைய நிலை என்னவென்று உணராத பட்சத்தில் அவர்களுடைய எதிர்காலம் மிகவும் பயங்கரமாக அமையலாம். முஸ்லிம்கள் ஒரு முகப்பட்டு தம்முடைய உரிமையைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.
முஸ்லிம்கள் இந்நாட்டு மக்களுடன் போரிட்டு ஆட்சியைக்கைப்பற்றி ஆளுவதற்காக இங்கே வரவில்லை. நட்புறவோடு இந்நாட்டின் வியாபாரஞ்செய்வதற்காகவே இங்கே வந்தார்கள். முஸ்லிம்களைச்சிங்கள மக்கள் வரவேற்றார்கள். கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களைப் பல இன்னல்களுக்குள்ளாக்கிய போர்த்துக்கீச, ஒல்லாந்தர்

Page 85
முகம்மத சமீம் 146
ஏகாதிபத்திய வாதிகளின் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் கண்டிப்பிரதேசத்தில் குடியேறிய முஸ்லிம்களைச் சிங்களவர் பெருமனதுடன் வரவேற்றார்கள். முஸ்லிம்களுக்கும் காணிகளைக்கொடுத்ததோடல்லாமல் தமது பெண்களையும் அவர்களுக்கு மணமுடித்துவைத்தார்கள். சிங்கள அரசர்களும் பெளத்தபிக்குகளும் முஸ்லிம்களுடைய மதத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வண்ணம் அவர்களைப்பராமரித்தார்கள். முஸ்லிம்கள் தங்கள் வணக்கத்திற்குப் பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கு காணிகளைத் தானமாகக்கொடுத்ததுமட்டுமல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்கு வேண்டிய பணத்தைச் சிங்களவரிடமிருந்து அறவிடுவதற்குரிய உரிமையையும் சிங்கள மன்னர்கள் வழங்கினார்கள். விகாரை நிலங்களிலிருந்து வரும் வருவாயில் ஒரு பங்கை பள்ளிவாசல்களின் செலவுக்கும் கதீப்மார்களின் செலவிற்கும் பெளத்த பிக்குகள் வழங்கினார்களென்றால், பெளத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்களின் பெருந்தன்மையை என்னவென்று பாராட்டுவது. முஸ்லிம்கள் தம்முடைய ஷரியா முறைப்படி நீதி வழங்குவதற்கும் முஸ்லிம்களுக்கு முழுஉரிமையைச் சிங்கள மன்னர்கள் வழங்கினார்கள். மேல் நாட்டில் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதில் முஸ்லிம்களும் சிங்களவரும் ஒன்றுபட்டார்கள். முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் சிறுபான்மையினராக வாழ்கிற காரணத்தால் சிங்கள பெரும்பான்மை மக்களுடன் சமாதானத்தோடும் செளஜன்யத் தோடும் வாழப் பழ்கியிருக்கிறார்கள். இந்நிலை நீடித்து நிற்பதற்கு அரசியல் தடையாயிருக்கக்கூடாது.

147 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
18. இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சியின் ஆரம்பம்
1796ம் ஆண்டு இலங்கையின் கரையோரப்பகுதி ஆட்சி ஒல்லாந்தரிடமிருந்து பிரித்தானியருக்குக் கைமாறியது. 1796ம் ஆண்டிலிருந்து 1948ம் ஆண்டு வரையிலுள்ள காலப்பகுதி இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி எனக்கூறலாம். ஒல்லாந்தரைப் போலல்லாமல் பிரித்தானியர் ஒரு துளி ரத்தம் கூடச்சிந்தாமல் இலங்கையின் கரையோரப்பகுதி ஆட்சியை மிகவும் தந்திரமாகத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்கள்.
1789ம் ஆண்டில் பிரான்சில் ஏற்பட்ட புரட்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. பிரெஞ்சுப்புரட்சிக்காரர்கள் ஒல்லாந்திலும் ஒரு குடியரசை ஸ்தாபித்தார்கள். ஒல்லாந்து அரசன் ஸ்டாட் ஹோல்டர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்ததைத் தமக்குச்சாதமாகப்பாவித்து டச்சுக்கிழக்குக் கம்பெனியின். ஆட்சியிலிருந்த இலங்கையின் கரையோரப்பகுதியை தமக்குக்கையளிக்க வேண்டும்மென்று ஸ்டாட் ஹோல்டரின் கடிதத்தின் மூலம் இலங்கையின் கரையோரப்பகுதியை தமதாக்கிக்கொண்டனர் பிரித்தானியர்.
பிரித்தானியருடைய நூற்றி ஐம்பத்திரண்டு ஆண்டு ஆட்சியில் இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்குக் கம்பெனியின் ஆட்சியாளர்கள் மதராசிலிருந்த தமது தலைமைக்காரியாலயத்திலிருந்து இலங்கையின் கரையோரப்பகுதியை ஆட்சி செய்தார்கள். பிறகு ஆங்கிலேயரின் நேரடியான ஆட்சிக்குக் கீழ் இலங்கை கொண்டுவரப்பட்டது. 1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரின் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவரப்பட்டது.

Page 86
முகம்மது சமீம் 148
பத்தொன்பதாம்நூற்றாண்டில் உலக வரலாற்றில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இலங்கை முஸ்லிம்களையும் ஒரளவுபாதித்தது எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் துருக்கி சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, ரூமேனியா, போன்ற நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஐரோப்பாவில் புதிய ஏகாதிபத்தியம் தலைதூக்கியது. கிழக்கு நாடுகளை மிகவும் வேகமாக ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. முஸ்லிம்களின் பலத்தை உடைக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த இந்நாடுகள் துருக்கிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தார்கள். இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்த பிரித்தானியர்கள் 1857ம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய் புரட்சியின் பின்னர் முஸ்லிம்களின் பலத்தை ஒடுக்கவேண்டுமென்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். இன்னொரு புரட்சி வந்தால் முகலாய ஆட்சி திரும்பவும் இந்தியாவில் ஏற்படலாம் என்ற பயத்தினால் இந்திய முஸ்லிம்களைப் பெரும் இன்னல்களுக்குள்ளாக்கினார்கள். இதே கொள்கையைத்தான் இலங்கையிலும் கடைப்பிடித்தார்கள். இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார பலத்தைக்குறைத்து அரசியல் அனாதைகளாக்கி கல்வியறிவில்லாத ஒரு பின்தங்கிய சமூகமாக மாற்றினார்கள். துருக்கி சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு இந்தியாவில் தோன்றிய கிலாபத் இயக்கமும் தமக்கெதிரான இயக்கம் என்று சந்தேகித்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களைத் தமது எதிரிகளாகவே எண்ணினார்கள். பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் இந்தக் கொள்கைப் பின்னணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை இனி நோக்குவோம்.
இலங்கை முஸ்லிம்களைப்பொறுத்தவரையில் அவர்கள் தன்னம்பிக்கையுள்ள தன்னிறைவுடைய ஒரு சமூகமாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக பத்தொன்பதாம் நூற்றாண்டு

149 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஆரம்பகாலத்தில் இலங்கையின் தலைமை நீதிபதியாகவும்அரசியல் சபையின் தலைவராகவும் இருந்த அலெக்சாந்தர் ஜொன்ஸ்சன் பிரபுவின் முஸ்லிம்களைப்பற்றிய குறிப்பைக் கூறலாம். “முகம்மதியர்களின் எண்ணிக்கையை நாம் ஏறத்தாழ எழுபதாயிரம் என்று கணிக்கலாம். அவர்கள் இலங்கையின் பலபாகங்களிலும் வசிக்கின்றார்கள். முகம்மதிய வர்த்தகர்கள் கொழும்பு, காலி, புத்தளம், பேருவளை போன்ற இடங்களில் தமது வியாபார ஸ்தலங்களை அமைத்துக்கொண்டு தென்னிந்திய கரையோரப் பகுதிகளுடன் வர்த்தகம் செய்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலோர் தமது மூலதனத்தைக் கொண்டே வெளிநாட்டு வர்த்தகத்தையும் உள்நாட்டு வர்த்தகத்தையும் நடத்தி வருகிறார்கள். அதோடு அரசாங்கத்தால் ஏலத்தில் விடப்படும் வரிவசூலிக்கும் உரிமையையும் பெற்று அவ்வரி வசூலிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இமாம் ஷாபியின் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். இவர்கள் முகம்மதிய சட்டத்தையே பின்பற்றுகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாக்தாத் கலீபாக்களின் ஆட்சியிலிருந்த திருமண முறைச் சட்டத்தையும், மரபுவழியுரிமைச் சட்டத்தையுமே இன்றும் இவர்கள் பின்பற்றிவருகிறார்கள். இவர்களுடைய சட்டநூல் அரபு மொழியிலேயே எழுதப்பட்டு, அரபு மொழியிலேயே விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய கடல்சார்ந்த வர்த்தக சட்டங்கள் பெரும்பாலும், இந்திய ஹிந்து வர்த்தகர்களுடைய சட்டங்களைப் போன்றே. இருக்கின்றன. இச்சட்டங்கள், தென்கிழக்காசிய நாடுகளில் வர்த்தகம் செய்த வியாபாரிகள் கடைப்பிடித்த சட்டங்களை ஒத்திருக்கின்றன. நான்எடுத்த சில நடவடிக்கைகளை மதித்து இவர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது இவர்களுடைய அறிவையும் நற்பண்பையும் என்னால் பாராட்டாமலிருக்க முடியாது. 1806ஆம் ஆண்டு நான் முகமதியருக்கு ஒரு தனி சட்ட நுலொன்றை தொகுக்கும்

Page 87
முகம்மது சமீம் 150
எண்ணத்துடன் அவர்களது பழக்கவழக்கங்களையும் இஸ்லாமிய சட்டங்களையும் அறிவதற்கு அவர்களது தலைவர்களை அணுகியபோது, அவர்கள் எனக்களித்த உதவி, நான் அவர்கள் மேல் வைத்த மதிப்பு இன்னும் பன்மடங்காகியது. 1870ம் ஆண்டில் அவர்களுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமென்று நான் அவர்களிடம் கூறியபோது அவர்கள் தங்கள் செலவிலேயே மதக்கல்வி நிலையங்களை அமைப்பதற்கு முன்வந்தார்கள். 1816ம் ஆண்டு இலங்கையில் அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டு மென்று நான் கூறியபோது அவர்கள் தங்கள் மனிதாபிமானத்தோடு இதை ஏற்றுக் கொண்டதையிட்டு நான் பெருமிதமடைகிறேன். நான் அவர்களுடைய வரலாற்றைப் பற்றி அறிவதற்கு முற்பட்டபோது எனக்கு மிகவும் உதவியாயிருந்தார்கள். அலெக்சாந்தர் ஜொன்ஸறன் பிரபுவின் இக்குறிப்பு அன்றைய முஸ்லிம்களின் நிலையை எடுத்துக்காட்டுகிறது. 1833ம் ஆண்டு இங்கிலாந்தின் அரசாங்க செயலாளர் இலங்கை தேசாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் “இலங்கையின் கறுவா வியாபாரத்தில் ஏகபோக உரிமையைக் கம்பெனி பெற்றிருந்தாலும், தற்போது தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் இந்திய அரபு வர்த்தகர்களுக்கு இங்கே வர்த்தகம் செய்வதற்கு ஊக்கமளிப்பதன் மூலம் எமது வர்த்தகத்தை இன்னும் விரிவு படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து, முஸ்லிம்களின் வர்த்தகம் எவ்வளவுதூரம் இலங்கையின் பெருளாதாரத்திற்கு உதவியளித்து என்பதை நாம் அறியலாம்.
பிரித்தானிய ஆட்சியின் காலத்தில் இலங்கை ஒரு காலனித்துவ ஆட்சியிலிருந்து படிப்படியாக முன்னேறி ஒரு சுதந்திர நாடாக வளர்ந்தது. இக்கால கட்டத்தில் முஸ்லிம்களுடைய வரலாற்றில் சில முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் பிரித்தானியர்களின் முற்போக்குக் கொள்கைகளை ஆதரித்தும், அவர்களுடைய அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடுகளுக்கு ஒத்தாசை அளித்தும் முஸ்லிம்கள் பெரும்

15 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
பயன்பெற்றார்கள். 1830ம் ஆண்டுகளில் முற்போக்குக் கருத்துக்களின் செல்வாக்கினால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அரசாங்கம் இலங்கையின் அரசியலமைப்பை சீர்படுத்தும், நோக்கத்துடன் ஒர் அரசியல் சீர்திருத்தக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பியது. கோல்புரூக்-கெமரன் சீர்திருத்தக்குழு இலங்கை அரசியலிலும், சமூக-பொருளாதாரத்துறைகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்களுக்கு எதிராக இருந்த சமூக-பொருளாதார முட்டுக்கட்டைகள் அகற்றப்பட்டன. ஒல்லாந்த கம்பெனியால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'ஊழியம் அடிமைச் சேவை ஒழிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் மீதும் ஏனைய மக்களின்மீதும் விதிக்கப்பட்ட தலைவரி அகற்றப்பட்டது. இதை அகற்றுவதற்குக் காரணம், சமுதாயத்தில் மதிப்போடும், கெளரவத்தோடும் வாழ்ந்த ஒரு வகுப்பினர் இப்படியொரு இழிவான சட்டத்திற்கு ஆளாக்கப்பட்டது என்பதே. ‘வாணிபத்திலும் தொழிற்றுறையிலும் ஈடுபட்டிருந்த ஒரு சமுதாயம், கூலியாட்களைப் போல பாதை அமைப்பதில் வேலை செய்யவேண்டும் என்ற சட்டம் மனிதாபிமானத்திற்கே நேர் விரோதமானது” என்று இக்குழு எண்ணியது.
1833ம் ஆண்டுவரை முஸ்லிம்கள் கொழும்பில் நிலங்களோ வீடுகளோ வாங்குவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தார்கள். இவ்வாண்டில் இத்தடை நீக்கப்பட்டது. இத்தடை நீக்கப்பட்டதோடு முஸ்லிம்கள் புறக்கோட்டையில் நிலங்களையும் வீடுகளையும் டச்சுக்காரர்களிடமிருந்து வாங்கி அங்கே குடியேறினார்கள். போாத்துக்கீசரும் ஒல்லாந்தரும் பெரும் நீசத்தனமான முறையில் முஸ்லிம்களுக்கெதிராக செயல்பட்டர்கள். ஆனால் ஆங்கிலேயர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள். கொழும்பைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் முஸ்லிம்கள் காணிகளையும் வீடுகளையும் வாங்கி குடியிருந்தார்களென்றாலும், சட்டப்படி இவர்களுக்கு

Page 88
முகம்மது சமீம் 152
இந்த உரிமை வழங்கப்படவில்லை. பழைய சோனகத்தெரு புதிய சோனகத்தெரு என்ற இப்பெயர்களே முஸ்லிம்கள் ஆரம்பத்திலிருந்தே இப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதற்குப் போதுமான சான்று. கொழும்புத்துறைமுகமும் சமீபத்திலேயே இருந்த காரணத்தினால் இவர்கள் தங்கள் வர்த்தகத்தை இலேசான முறையில் செய்வதற்கு இவ்விடம் மிகவும் உகந்ததாயமைந்தது.

153 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
19. ஆங்கிலேயரின் ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற அந்தஸ்து
1833ம் ஆண்டில் இலங்கை வந்த கோல்புரூக்-கெமரன் ஆணைக்குழுவின் சிபார்சுப்படி இலங்கை அரசியல் அமைப்பிலும், பொருளாதாரத்திலும், சட்டத்திலும் பெரும்மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கையின் அரசியல் அமைப்பில் தேசாதிபதியின் நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஒரு சட்ட நிருபணசபை அமைக்கப்பட்டது. இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பமாகியது. இப்பயிர் செய்கைக்குதவியாக வங்கிகள் நிறுவப்பட்டன. அப்பெருந்தோட்டங்களுக்கு போய்வருவதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொண்டுவருவதற்கும் போக்குவரத்து சாலைகள் அமைக்கப்பட்டன. இத்தோட்டங்களில் வேலை செய்வதற்கென தென்னிந்தியாவிலிருந்து கூலியாட்கள் கொண்டு வரப்பட்டனர். இத்தோட்டங்களின் அருகாமையில் வியாபாரம் செய்வதற்கென இந்தியாவிலிருந்து வர்த்தகர்கள் வந்தார்கள். மலைநாட்டில் சிறு நகரங்கள் தோன்ற ஆரம்பித்தன. கொழும்பு நகரில் மேமன்களும், போராக்களும், சிந்திகளும் தமது வியாபார நிலையங்களை ஸ்தாபித்தனர். இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு வர்த்தகத்திலேயே கவனஞ் செலுத்தினர். காயில்பட்டணத்தையும், கீழக்கரையையும் சேர்ந்த முஸ்லிம்கள் மலைநாட்டில் பெருந்தோட்டங்களுக்குப் பக்கத்தில் தோட்டத் தொழிலார்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சிறு கடைகளை வைத்து வியாபாரஞ் செய்யத்தொடங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 32,000மாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1814ம் ஆண்டில் 55,000 மாக வளர்ந்தது. இச் சனத்தொகை படிப்படியாக வளர்ந்து 1871ம் ஆண்டில் 71,000மாகப் பெருகியது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 6.7% ஆக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டு இலட்சத்தைத்

Page 89
முகம்மது சமீம் 154
தாண்டியது. 1946ம் ஆண்டில் இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை ஏறத்தாழ நான்கு இலட்சமாக அதிகரித்தது. இதில் இந்திய முஸ்லிம்கள் என்று கணக்கெடுக்கப்பட்டவர் தொகை 35,000மே. முஸ்லிம்கள் இலங்கையின் முழுசனத்தொகையில் 6.6% மாகவே இருந்தனர். ஆகவே எண்ணிக்கையில் முஸ்லிம்கள் கூடினாலும் சதவிகிதத்தில் கூடவேயில்லை. சிலரின் கூற்றுப்படி இலங்கை முஸ்லிம்கள் பெரும்பாலும் இந்தியா விலிருந்தே வந்தவர்கள் என்பது எவ்வளவு தவறானது; இதிலிருந்தே புலனாகிறது. அல்லவா? சிறுதொகையாக இருந்த முஸ்லிம்கள் ஏனைய இன மக்களைப் போல நாளடைவில் பெருகிவந்தனர். இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகையில் 1946ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்திய முஸ்லிம்கள் 9% மாகவே இருந்தனர். இத்தொகையினரும் இலங்கை பிரஜா உரிமைச் சட்டத்தின் படி இந்தியாவுக்கே திருப்பியனுப்பப்பட்டார்கள். போர்த்துக்கீச, ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் ஒரு சில முஸ்லிம்கள் வியாபார நோக்கமாக இலங்கையின் கரையோரப் பகுதியில் குடியேறியிருக்கலாம். ஆனால் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் யெமென், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. சிறிய தொகையாக இருந்த முஸ்லிம்கள் நாளடைவில் பெருகியதை மேற்கூறப்பட்ட புள்ளி விபரங்களிலிருந்து நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. இந்திய பழக்கவழக்கங்களை மேற்கொள்வதற்கும், தமிழை தாய் மொழியாக ஏற்றுக்கொள்வதற்கும் காரணம் தென்னிந்திய முஸ்லிம்களுடன் அவர்கள் வைத்திருந்த வியாபாரத்தொடர்பும் தாம் பின்பற்றிவந்த இஸ்லாமிய மதமுமே. இது பற்றி முன்னைய அத்தியாயங்களில் விரிவாகக் கூறியிருக்கிறோம்.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது இலங்கை மக்கள் தத்தமது மத அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதற்கு எந்தவிதத் தடையும்

155 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இருக்கக் கூடாது என்ற பிரகடனம் முஸ்லிம்களுக்குத் தமது மதத்தைப் பின்பற்றுவதற்குப் பூரணசுதந்திரம் அளித்தது. ஆனால் வணக்கஸ்தலங்களை அரசாங்க அனுமதியின்றி அமைப்பதற்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் தமது மதக்கல்வி போதிப்பதற்கு வேண்டிய கல்வி நிலையங்களை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் பிரித்தானிய அரசாங்கத்தில் முஸ்லிம்களின் மேலிருந்த கொள்கை மாற்றத்துக்கு பல காரணங்களிருந்தன.
1802ம் ஆண்டு இலங்கைக்காலனித்துவ நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, பதினாறு வயதுக்கும் அறுபது வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய முஸ்லிம்களும், செட்டிகளும் தமது இராஜகாரியம் என்ற கட்டாய சேவைக்குப் பதிலாக பணம் கொடுத்து ஆறுமாதக் கால சேவையை மாற்றிக்கொள்ளலாம் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வடிமை சேவையிலிருந்து முஸ்லிம்கள் ஒரளவு விடுவிக்கப்பட்டார்கள். ஆகவே தம்முடைய வர்த்தகத்தை எந்தவித தடையுமின்றி நடத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
கண்டி இராச்சியத்திற்கும் பிரித்தானிய ஆட்சியிலிருந்த கரையோரப் பகுதிகளுக்குமிடையிலிருந்த வர்த்தகத்தை முஸ்லிம்களே செய்து வந்தனர். பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் முஸ்லிம்களுக்கு இருந்த செல்வாக்கைச் சில கண்டி பிரதானிகள் சந்தேகக்கண்கொண்டு பார்க்கலாயினர். கண்டி இராச்சியத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம்கள், உளவு பார்ப்பதற்காகவே இங்கே வருகிறார்கள் என்ற தவறான எண்ணத்தைச் சில கண்டி பிரதானிகள் கொண்டிருந்தனர். 1803ம் ஆண்டில் பிரித்தானியருக்கும் கண்டி இராச்சியத்துக்கும் இடையில் ஏற்பட்ட முதலாவது கண்டி யுத்தத்துக்கு உரிய காரணம், சில முஸ்லிம் வர்த்தகர்களுடைய வர்த்தகப் பொருட்களை பிலிமதலாவின் ஆட்கள் பறிமுதல் செய்ததோடு, அவர்களைப் பல

Page 90
முகம்மது சமீம் 156
இன்னல்களுக்குள்ளாக்கி, அவர்களை நாடு கடத்தியமையே. இச்சம்பவத்தை தேசாதிபதி நோத், தமது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறி, கண்டியின் மீது யுத்தம் தொடுத்தார். இவ் யுத்தம் பிரித்தானியர்களுக்கு வெற்றியை அளிக்கவில்லை என்றாலும் முஸ்லிம்களின் மேல் அவர்கள் எவ்வித நம்பிக்கையை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. 1814ம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கம் கண்டியின் மீது யுத்தப்பிரகடனம் செய்வதற்கு உடனடியான காரணம் தான் சில முஸ்லிம் வர்த்தகர்களைக் கண்டி அரசன் படுகொலை செய்தது. அப்பொழுதிருந்த கவர்னர் புரெளன்றிக் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இவ்வநீதி தமது அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன் செயல் என்று கூறி தமது படைகளை அனுப்பிக் கண்டியைச் கைப்பற்றினார். இந்த யுத்தத்திற்கு வேறு பல காரணங்கள் இருந்த போதிலும் முஸ்லிம்களைச் சாட்டாக வைத்துக் கண்டியின் மேல் யுத்தம் தொடுப்பதற்கு, அவர்கள் முஸ்லிம்களின் மேல் வைத்த மதிப்பே காரணம் என்று கூறலாம்.
1806ம் ஆண்டில் முகம்மதிய சட்டப்பிரிவு என்று தமது சட்டத்தில் முஸ்லிம்களுக்கென்ற தனிப்பிரிவு ஒன்றை அமைப்பதற்கு ஆங்கிலேயர் முஸ்லிம்கள் ஒரு தனி சிறுபான்மை இனமாகக் கணிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையே காரணம். முஸ்லிம்களுடைய திருமண முறைகளையும், மரபுரிமைச் சட்டத்தையும், பழக்கவழக்கங்களையும் ஆங்கில அரசாங்கம் ஏற்றுக்கொண்ட காரணத்தால் இவைகளைச் சட்டபூர்வமாக அமுல் நடத்தப்படவேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தனர். இச்சட்டக் கோவையில் குறைகள் இருந்த போதிலும் நூற்றிருப்பத்தைந்து வருடங்களாக இச்சட்டத்தின் பிரகாரமே முஸ்லிம்கள் நடத்தப்பட்டார்கள்.
1818ம் ஆண்டில் ஆங்கில அரசாங்கத்துக்கு எதிராக நடந்த கண்டிப்புரட்சியில் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு

157 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
விரோதமான செயல்களில் ஈடுப்படவில்லை. அரசாங்கத்திற்கு விசுவாசமுள்ளவர்களாக இருந்த காரணத்தால் முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. 1818ம் ஆண்டின் பிரகடனப்படி கண்டி மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் கண்டி பிரதானிகளின் சட்டநிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நேரடியாக ஆங்கிலச் சட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். முஸ்லிம்கள் ஏனைய மக்களோடு வழக்குகளில் சாட்சியாளர்களாக இருந்தால் இவ்வழக்குகளை ஆங்கிலேய நீதிபதிகளே தீர்த்துவைக்க வேண்டும் என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது. முஸ்லிம் தலைமை அதிகாரிகளும் கண்டியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரியால் மட்டுமே நியமிக்கப்படல் வேண்டும் என்றும் அமுலாக்கப்பட்டது. கண்டிப் பிரதானிகளின் கீழ் முஸ்லிம்கள் பலவித இன்னல்களுக்குள்ளாக்கப்பட்டார்கள் என்ற உண்மையை கேள்விப்பட்ட கவர்னர் பிரெளன்றிக் ஒரு முஸ்லிம் ஹாஜியாரை முஸ்லிம்களின் தலைமை அதிகாரியாக நியமித்தார். 1818ம் ஆண்டின் பிரகடனப்படி முஸ்லிம்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கப்பட்டது. எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர்கள் எல்லோரும் ஆங்கிலேய அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது. என்றாலும் முஸ்லிம்கள் தமது வணக்கத்தலங்களைக் கட்டுவதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது.
1830ம் ஆண்டின் பிரகடனப்படி முஸ்லிம்கள் ஊழியம் என்ற தலைவரியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 1832ம் ஆண்டு இலங்கை வந்த கோல்புரூக் கமிஷன் இராஜகாரிய என்ற இவ்வடிமைச் சேவையை முற்றாக ஒழித்து. இராஜகாரிய என்ற இந்த சேவை முற்றாக ஒழிக்கப்பட்டது என்றாலும், 1859ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 'கோயில் காணி குழுவினர்' முஸ்லிம்கள் பரவேனி' என்றும் 'மருவேன' என்றும் கட்டாய சேவைகளை கோவில்களுக்குச் செய்து வருகின்றார்கள் என்று தமது அறிக்கையில் கூறினர். முஸ்லிம்கள் எவ்வித ஆட்சேபனையுமின்றி

Page 91
முகம்மது சமீம் 158
இச் சேவைகளைச் செய்தார்கள் என்ற அபிப்பிராயம் ஆட்சியாளர்களிடேயே இருந்த போதும் இச் சேவைகளை ஒழிக்குமாறு முஸ்லிம்களின் வேண்டுகோளின்படி அரசாங்கம் இச் சேவையையும் ஒழித்தது. இனி முஸ்லிம்கள் எவ்விதத்தடையுமின்றித் தமது வியாபாரத்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

159 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
20. 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் சமுக மாற்றங்கள் ஏற்பட்டன. பிரபுத்துவ முறையில் ஊறிப்போயிருந்த மக்கள் இராசகாரிய' என்ற கட்டாய சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு எவ்வித சமூகக் கட்டுப்பாடும் இல்லாத ஒரு சமுதாயமாக மாறத்தொடங்கியது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களிருந்தன. ஒன்று பொருளாதார வளர்ச்சி, மற்றது கல்வி முன்னேற்றம். கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்தவர்கள் கிராமத் தலைவர்களாக இருந்த கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களே. இராசாங்க உத்தியோகத்திற்காகத் தமது பிள்ளைகளைக் கிறிஸ்தவ மத மிஷனரிமார்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிலையங்களுக்கும் வெளிநாட்டுக்கும் அனுப்பி மேல்நாட்டு ஆங்கிலக் கல்வியைத் தமது வம்சத்துக்குக் கொடுத்தார்கள். இதேபோல சலாகம கராவ சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கல்வி பெறுவதிலும் வர்த்தகத்திலும் தமது பிள்ளைகளுக்கு ஊக்கமளித்தார்கள். கோல்புருக் கமிஷன் இலங்கைக்கு வருவதற்கு முக்கிய காரணம் இலங்கையின் நிர்வாகத்தை மாற்றியமைத்து நஷ்டம் ஏற்படாமல் இலங்கையிலிருந்து வரும் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே. நெப்போலிய யுத்தங்களுக்குப் பிறகு இங்கிலாந்திலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி துரிதமடைந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ஐரோப்பிய சமூகம் பிரபுத்துவ ஆட்சிமுறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு சுதந்திர சமுகமாக வளரத்தொடங்கியது. புதிய முன்னேற்றக் கருத்துக்கள் மக்களிடையே பரவத் தொடங்கின. இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சியின் காரணமாக பொருள் முதல் வாதம் தளைக்கத் தொடங்கியது. கைத்தொழிற் சாலைகளின் வளர்ச்சியால் உற்பத்தி

Page 92
முகம்மது சமீம் 160
அதிகரித்தது. இத் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களைப் பெறுவதற்கும் இங்கே உற்பத்தி செய்யப்படும் மேலதிக பொருட்களை விற்பனை செய்வதற்கும் பிற நாடுகளைத் தேடினர்.
ஆசிய ஆபிரிக்க கண்டங்களின் நாடுகளைக் கைப்பற்றி தமது ஆட்சியின் கீழ் கொண்டுவரத்தலைப்பட்டனர் ஐரோப்பியர்கள். காலனித்துவ ஆட்சிமுறை உலகமுழுவதிலும் பரவத்தொடங்கியது. இலங்கையும் இங்கிலாந்தின் βς (5 காலனியாக பிரகடனப்படுத்தப்பட்டது. காலனித்துவ ஆட்சிமுறையை ஸ்திரப்படுத்துவதற்கு உள்நாட்டிலேயே மேல்நாட்டுக் கல்வியைக் கற்று மேல்நாட்டு பழக்கவழக்கங்களையும் மேல்நாட்டு சிந்தனையையும் கொண்ட ஒரு கூட்டத்தினரை வளர்த்தெடுக்க வேண்டுமென்று மெக்காலே பிரபு போன்றவர்களின் கருத்துப்படி மேல்நாட்டு ஆட்சியாளர்கள் செயல்படத் தொடங்கினர். இதன் காரணமாக ஆங்கிலக்கல்வியைக் கற்று ஆங்கில நடையுடைப் பாவனைகளைப் பின்பற்றி ஆங்கிலேயரைப் போல் சிந்திக்கும் ஒரு வர்க்கம் இலங்கையிலும் வளரத் தொடங்கியது. மேல்நாட்டு மோகம் கொண்ட இக் கூட்டத்தார் காலனித்துவ ஆட்சியாளர்களின் அடிவருடிகளாய் அவ்வன்னிய ஆட்சியின் கீழ்மட்டத்திலுள்ள இலிகிதர், காரியாலய சேவகர்கள், போன்ற உத்தியோகங்களைப் பெற்று தம் எஜமானர்களுக்கு விசுவாசமாக நடக்கத் தொடங்கினர். இக் கூட்டத்தார் பொதுமக்களினின்றும் வேறுபட்டு வாழ்ந்ததோடு தம்மை ஒரு வேற்று இனத்தவர் என்று கருதத்தொடங்கினர். பக்கா சாஹிம் என்ற ஆங்கில கூட்டத்தாருடன் தாமும் சேர விரும்பினர். இந்த சமுதாய மாற்றத்தின் பகைப்புலனிலிருந்துதான் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சியையும் நாம் அணுக வேண்டும்.
பத்தொன்பதாம் இருபதாம்-நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரின் முதலீடு காரணமாக பெருந்தோட்டப் பயிர்செய்கை வளரத் தொடங்கியது. அதோடு பொருள் முதல் வாதமும், முதலாளித்துவமும், தனியார் முறைப் பொருளாதாரமும்

161 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
இலங்கையில் தலைதூக்கத் தொடங்கின. இப் பொருளாதார வளர்ச்சியில் பல தரப்பட்ட வேலைவாய்ப்புக்கள் தோன்றின. இவ்வளர்ச்சியில் இலங்கையின் முதன் முதலாக ஆங்கிலக் கல்வி கற்ற ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிய ஒரு மத்தியதர வர்க்கத்தினர் தோன்றினர். இப் பொருளாதார வளர்ச்சியால் முதலீடு செய்து பணம் சம்பாதித்த இக்கூட்டத்தினர் அரசியல் நிர்வாகத்திலும் பங்கு கேட்க முற்பட்டனர்.
அரசாங்க உத்தியோகங்களிலும் வங்கிகளிலும் பெரும் கம்பனிகளிலும் பொறியியல், சட்டம் ஆகிய துறைகளிலும் ஏனைய சமூகத்தினர் பங்கெடுக்கத் தொடங்கிய அதைவேளையில் முஸ்லிம்கள் முதலீடு செய்வதற்குரிய எல்லா வசதிகளிருந்தும், ஒரு சில கோப்பிதோட்டங்களைத் தவிர இப்பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்கவில்லை. இவர்கள் பழைய முறைப்படியே வர்த்தகம் செய்து வந்ததோடு நகரங்களில் காணிகளை வாங்கினர். முஸ்லிம்கள் நகரங்களில் காணிகளையோ வீடுகளையோ வாங்க முடியாது என்ற தடையை அரசாங்கம் நீக்கியதோடு, முஸ்லிம்கள் நகரங்களில் காணிகளையும் வீடுகளையும் வாங்குவதில் முக்கிய அக்கறை காட்டினர். ஏனைய சமூகத்தினரும் நகரங்களில் காணிகளை வாங்கத் தலைப்பட்டனர் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளிலும் கொழும்பு, காலி போன்ற நகரங்களிலும் முதலீடு செய்த காரணத்தினால் ஒரு சில குடும்பங்களில் பணம் குவியத் தொடங்கியது. முஸ்லிம் சமுகத்தில் மாக்கான் மார்க்கர் குடும்பமும் வாப்பிச்சி மரைக்கார் குடும்பமும் இப்படி கொழும்பு நகரில் காணிகளை வாங்கி பொருளாதார செல்வாக்கைப் பெற்றனர். பணம் சம்பாதித்தால்தான் சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் செல்வாக்கும் பெறலாம் என்பதை ஏனைய சமூகத்தினரைப்போல் முஸ்லிம்களும் உணர்ந்தனர், ஆகவே கொழும்பு போன்ற நகரங்களில் வீடுகளையும், காணிகளை வாங்குவதோடு பெருந்தோட்ட பயிர் செய்கையிலும் பணம்படைத்த முஸ்லிம்கள் ஈடுப்படத் தொடங்கினர். தோட்டங்களையொட்டி பதுளை,

Page 93
முகம்மது சமீம் 162
பண்டாரவெளை, நுவரேலியா, ஹட்டன், மஸ்கெலியா, தலவாக்கல்லை போன்ற சிறு ‘பஸார் நகரங்கள்' தோன்றத் தொடங்கின. இச்சிறு நகரங்களின் வியாபரத்தில் முக்கிய பங்கெடுத்தனர். முஸ்லிம்கள். இத்தோட்டங்களில் விளையும் கோப்பியை விற்பனை செய்வதிலும் இத்தோட்டங்களுக்குத் தேவையான போக்குவரத்துச் சாதனைகளையும் தொழிலாளர்களையும் உணவுப்பொருட்களையும் கொடுப்பதில் முன்னணியில் நிற்கின்றனர் முஸ்லிம்கள். கொழும்பு கண்டி பிரதான வீதி கட்டப்பட்டபின் கண்டிப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இப் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையிலும் வர்த்தகத்திலும் ஈடுபடத்தொடங்கினர்.
மாணிக்கக்கல் வியாபாரத்திலும், தங்கநகை வியாபாரத்திலும் முஸ்லிம்கள் ஈடுபட்டு பொருள்குவிக்கத் தொடங்கினர். இப் பொருள் குவித்த காரணத்தினால் ஏனைய சிங்கள தமிழ் சமூகங்களைப் போல முஸ்லிம்களிடையேயும் சமூக அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்ற ஒரு மத்தியதர வர்க்கத்தினர் தோன்றினர். முதலாளித்துவ சமுதாயத்தில் உயர்மட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் ஏனைய சமூகங்களிலிருந்த மத்திய தர வர்க்கத்தினரின் ஓர் அங்கமாகவே தம்மை கருதினர். இதனால் முஸ்லிம் சமுதாயத்திலும் ஏழை, பணக்காரர் என்ற பிளவு ஏற்படத் தொடங்கியது.
கரையோரப் பகுதி நகரங்களில் முஸ்லிம்களிடையே தோன்றிய இவ்வர்க்கப்பிரிவு பகிரங்கமாகவே தென்படக்கூடியதாக இருந்தது. இவ்வுயர் வர்க்கத்தினர் பெரிய பங்களாக்களைக் கட்டி படாடோப வாழ்க்கையில் ஈடுபட்டனர். தங்களது திருமண வைபவங்களுக்கும் மற்றும் சமுக வைபவங்களுக்கும் ஏராளமான பணம் செலவழித்தனர். கந்திரிகளும், கத்தங்களும், தலைபாத்தியாக்களும், மெளலுதுகளும் மிகவும் விமர்சையாக நடைப்பெற்றன. இந்திய முஸ்லிம் வர்த்தகர்களும் இப்படிபட்ட

163 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
வைபவங்களையும் கொண்டாடினர். அதே நேரத்தில் இஸ்லாமிய ஷரியத் முறைப்படி வாழத்தவறியதில்லை. வருடாவருடம் தங்களுடைய சொத்துக்களிலிருந்து 2% வீதம் சக்காத் கொடுத்தனர். செட்டிகளும், ஏனைய பணக்காரர்களும் வட்டிக்கு பணம் கொடுத்து தம்முடைய மூலதனத்தை மேலும் அதிகரித்தனர். ஆனால் முஸ்லிம்கள் வட்டிக்கு பணம் கொடுக்கவில்லையாதலால் 1844ம் ஆண்டில் மரபுரிமைச்சட்டம் அமுலுக்குத் கொண்டு வரப்படுவதற்கு முன் பெரும்பாலான முஸ்லிம்கள் தமது இறுதிப்பத்திரத்தை எழுதாமலேயே இறந்தனர். இதனால் இறந்தவரின் சொத்துக்கு வாரிசுடையவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகினர். ஆகவே முஸ்லிம்களுடைய பணம் இப்படி விரயமாகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முஸ்லிம் சமூகத்தை நாம் ஆராய்ந்தால் இவ்விரு வர்க்கப்பிரிவினரை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். கொழும்பு நகரில் இருந்ததைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் நிலச்சொந்தக்காரர்களாக விளங்கிய விதானைமார்கள் தம்மை விவசாய மக்களிடமிருந்து வேறுபட்டே வாழ்ந்தனர். கண்டிப்பிரதேசத்தில் பெருந்தோட்டபயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டிருந்தவர்களை ஏனைய முஸ்லிம்களிலிருந்து தம்மை வேறுப்படுத்தியே கணித்தனர்.
எனவே முஸ்லிம்களிடையேயும் இரு வர்க்கப் பிரிவுகளைக் காண்கிறோம். ஒரு புறம் பணம்படைத்த முஸ்லிம் வர்த்தகர்களும், நிலச்சுவாந்தார்களும் மறுபுறம் தையல் வேலையிலும், கூலி வேலைகளிலும் சிறு கைத்தொழில்களிலும் சிறு கடைகளிலும் விவசாயத்திலும் ஈடுபடும் முஸ்லிம்களைக் காண்கிறோம். பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் மேல்நாட்டுக் கல்வியை ஒதுக்கியே வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் மேல்நாட்டுக் கல்வி முஸ்லிம்களிடையே பரவத்தொடங்கியது. மேல் நாட்டுக் கல்வியை கற்கத் தொடங்கிய பின்னர்தான் சிந்தனை செய்யும் புத்திஜிவிகளைக் கொண்ட ஒரு மத்தியதர வர்க்கத்தினர் முஸ்லிம்களிடையே தோன்றத் தொடங்கினர். M

Page 94
முகம்மது சமீம் 164
21. 19ம் நூற்றாண்டில் இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சி
பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிய பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதை நாம் அவதானிக்க முடிகிறது. இங்கிலாந்தின் ஏகாதிபத்திய கொள்கைக்கமைய இப் புதிய காலனித்துவ நாடுகள் இங்கிலாந்தின் தொழிற்சாலைகளின் அசுரப் பசியை தணிப்பதற்கு இந் நாடுகளின் கணிப்பொருட்களைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்நாடுகள் சந்தைகளாக பாவிக்கப்பட்டன. இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுடன் போட்டி போடக்கூடிய தொழிற்சாலைகள் இந்நாடுகளில் இயங்கக் கூடாது. வங்காளத்தில் வாழையடி வாழையாக நெசவுத் தொழிலில் ஈடுப்பட்டிருந்த நெசவாளர்களின் பெரும் விரல்கள் வெட்டப்பட்டன. இப்படி எத்தனையோ தொழில்கள் அழிக்கப்பட்டன. இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்பட்டனவோ அவை மட்டும் இந்நாடுகளில் உற்பத்திசெய்யப்பட்டன. இந்தக் கொள்கைக்கமைய இலங்கையிலும், இந்தியாவிலும் பெருந்தோட்டப்பயிர்ச் செய்கை வளர்வதற்கு வேண்டிய எல்லா உதவிகளும் அரசாங்கத்தால் செய்யப்பட்டன. இலங்கையின் செழிப்பான பகுதியிலுள்ள காணிகள் ஏக்கர் ஐந்து சதம் விகிதம் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டன. ஆங்கில கம்பனிகளினால் நிறுவப்பட்ட வங்கிகள் இவர்களின் தோட்டப் பயிர்செய்கைக்கு பணஉதவி கொடுத்துதவியது. தென்னிந்தியாவிலிருந்து கூலியாட்கள் மிகவும் குறைந்த விலைக்கு இங்கே கொண்டுவரப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப் பெருந்தோட்டப்பயிர்செய்கை பெருமளவில் செய்யப்பட்டது. 1829ம்

165 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஆண்டுவரை கறுவா உற்பத்தியில் ஏகபோக உரிமை கொண்டாடிய பிரித்தானிய காலனித்துவ ஆட்சி அதன் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் நேரடியாகவே மேற்பார்வை செய்தது. 1830ம் ஆண்டுக்குப்பிறகு இந்த ஏகபோக உரிமை அகற்றப்பட்டு தனியார் துறைக்கு விடப்பட்டதும் இங்கிலாந்திலிருந்து அநேகம் பேர் வந்து கோப்பி, தேயிலை, றப்பர், கொக்கோ ஆகிய பொருட்களின் உற்பத்தியில் முதலீடு செய்தனர். இப்பொருளாதார முயற்சியில் இலங்கையரும் ஈடுபட்டனர். பெருந்தோட்டப் பயிர்செய்கையிலும், வியாபாரத்திலும், தொழில்துறையிலும் பங்கெடுக்கத் தொடங்கினர். இப்பொருளாதார வளர்ச்சியில் சிங்கள, தமிழ்சமூகங்கள் ஈடுபட்டளவு முஸ்லிம் சமூகத்தினர் ஈடுபட்டனரா என்பதை நாம் இனி ஆராய வேண்டும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இலங்கையின் ஏற்றுமதி பெரும்பாலும் கறுவா, புகையிலை, பாக்கு, தேங்காய், தெங்கு பொருட்கள், முத்து போன்றவையாக இருந்தன. இப்பொருட்களின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு கணிசமான அளவு முஸ்லிம்களின் கையிலிருந்தது. இவ் வர்த்தகம் பெரும்பாலும் தென்னிந்தியாவுடனேயே நடைபெற்றது. 1830ம் ஆண்டிற்குப்பிறகு பெருந்தோட்டப் பயிர் செய்கை காரணமாக கோப்பி வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியது. மேலும் சிலபொருட்கள் இந்தியாவுக்கு மட்டுமல்லாது பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஐரோப்பியரின் பங்கு அதிகரித்தது. கொழும்பில் பெரும் வர்த்தக கம்பனிகள் ஸ்தாபிக்கப்பட்டன. பழைய முறைப்படியே வர்த்தகம் செய்த முஸ்லிம் வர்த்தகர்களால் இப் புது கம்பனிகளுடன் போட்டிபோட முடியவில்லை. 1880ம் ஆண்டுவரையில் வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த கோப்பி செல்வாக்கிழந்ததுடன் தேயிலை, றப்பர், கொக்கோ போன்ற பொருட்கள் முக்கியத்துவமடைந்தன. ஒரு கிருமியினால் பாதிக்கப்பட்ட கோப்பிப் பயிர்கள் அழிந்தன. அவ்விடத்தை நிரப்பிய தேயிலைப் பயிர்கள்

Page 95
முகம்மது சமீம் 166
நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 1807ம், 1813ம் ஆண்டுகளில் 85% இருந்த கோப்பி 1890ம் ஆண்டில் 20%மாக குறைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தென்னையும், தெங்கு பொருட்களும் வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கின.
போர்துக்கீச ஒல்லாந்தருடைய காலத்தில் ஆட்சியாளர்கள் கறுவா ஏற்றமதியில் ஏகபோக உரிமை கொண்டாடினாலும் முஸ்லிம்கள் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இவ்வர்த்தகத்தில் ஒரளவு ஈடுபட்டிருந்தனர். போர்த்துக்கீச டச்சுக்கார உத்தியோகஸ்தர்களின் உதவியுடனும் கண்டி இராச்சியத்தின் காடுகளில் கறுவா பெருமளவில் பயிர் செய்யப்பட்டதால் இதனை முஸ்லிம்கள் வாங்கி வெளிநாட்டில் கொண்டுபோய் விற்றனர். 1830ம் ஆண்டில் கறுவா வியாபாரத்தில் அரசாங்கத்தின் ஏகபோக உரிமை ஒழிக்கப்பிட்டபிறகு வெளிநாட்டு வர்த்தகத்தில் தன்னுடைய முக்கிய இடத்தை கறுவா இழந்தது. இதோடு அதன் விலையும் குறைந்தது. அரசாங்கத்துக்கு சொந்தமான கறுவாத் தோட்டங்கள் விற்பனைக்கு விடப்பட்டன. கொழும்பு பிரதேசத்திலிருந்த தோட்டங்களை முஸ்லிம் செல்வந்தர்கள் வாங்கினார்கள் காலக்கிரமத்தில் தோட்டங்களில் வீடுகளைக் கட்டினார்கள். கறுவாத்தோட்டம் என்று புகழ்பெற்ற செல்வந்தர்கள் இன்று வாழும் இடம் ஒரு காலத்தில் உண்மையில் கறுவாத்தோட்டமாகவே இருந்தது கொழும்புக்கு வெளியே இருந்ததோட்டங்களில் கறுவாப் பயிர்ச்செய்கை தொடர்ந்தும் நடைப்பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சுமார் 36,000 ஏக்கர் பரப்புள்ள கறுவாத்தோட்டங்களில் 500 ஏக்கர் நிலம் பேருவளை, நீர்கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களுக்கே சொந்தமாக இருந்தது என்று 1886ம் ஆண்டு வெளிவந்த பெர்கசன் டிரெக்டரி கூறுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் முத்துக்குளிப்பு ஒர் முக்கிய தொழிலாகக் கணிக்கப்பட்டது. முத்துக்குளிப்புக் கூட அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாயிருந்தது. அரசாங்கம்

67 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
முத்துக்குளிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலத்தில் விற்கும். குறிப்பிட்ட சில மாதங்களில் குறிப்பிட்ட சில தோணிகளை மட்டும் தான் இவர்கள் உபயோகிக்கலாம். சில சமயங்களில் த்ென்னிந்தியாவைச் சேர்ந்த செட்டிகளும் முஸ்லிம்களுமே பங்குப் பற்றினர்.
இத் தொழிலில் ஈடுப்பட்டவர்கள் மட்டுமல்ல, முத்துக்களை விலைமதிக்கும் உத்தியோகஸ்தர்களாகவும் முஸ்லிம்கள் கடமையாற்றினார்கள். தென்னிந்திய முஸ்லிம்கள் பெரும்பாலும் மதுரை, நாகப்பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிராம் பட்டணம் போன்ற ஊர்களிலிருந்தே வந்தார்கள். டுபாய், ஒமான் போன்ற இடங்களிலிருந்து அரேபியர்களும் இம் முத்துக் குளிப்பில் ஈடுபட்டார்கள். பாரசீக வளைக்குடாவில் முத்துக்குளிப்பு ஒரு முக்கிய கைத்தொழிலாக இருந்தது. இலங்கை முஸ்லிம்களும் இத் தொழிலில் ஈடுப்பட்டார்கள். சில காலங்களில் முத்துக்கள் கிடைப்பதில்லை. இதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்தையும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் செயற்கை முத்துக்கள் உலக சந்தையில் மலிந்துவிட்ட காரணத்தால் இயற்கை முத்துக்களின் செல்வாக்கு குறைந்து விட்டது. ஆகையால் இக் கைத்தொழில் இன்று இலங்கையில் கைவிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிகமாக ஈடுப்பட்ட இன்னுமொரு வர்த்தகம்தான் புகையிலையும், பாக்கும். புகையிலை பெரும்பாலும் யாழ்ப்பாணக்குடா நாட்டில் தான் உற்பத்தி செய்யப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேல்மாகாணத்திலும், வட மேற்கு மாகாணத்திலும் இது பயிர் செய்யப்பட்டது. புகையிலை வர்த்தகத்தில் பெரும்பாலும் முஸ்லிம்களே ஈடுப்பட்டிருந்தனர். போர்த்துக்கீசருடைய காலந்தொட்டு இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் பாக்கு ஒர் முக்கியநிலையில் இருந்து வந்தது. கண்டிராச்சியத்தின் பொருளாதாரம் பெரும்பாலும்

Page 96
முகம்மது சமீம் 168
இப்பொருளிலேயே தங்கியிருந்தது. இப் பொருளைத் தென்னிந்தியாவில் போய் விற்று அதற்கு பதிலாக தானியங்களும் ஆடைகளும் அங்கிருந்து கொண்டு வந்து கண்டி மக்களுக்கு கொடுத்தனர் முஸ்லிம்கள். ஒல்லாந்தருடைய ஆட்சியில் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த இவ்வர்த்தகம் பிரித்தானியருடைய ஆட்சியில் தனியார் வசமாகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாக்கு ஒரு முக்கிய ஏற்றுமதி பொருளாக வளர்ந்தது. 1915ம் ஆண்டில் பாக்கின் ஏற்றுமதியினால் இலங்கை அரசாங்கத்துக்கு 33 இலட்சம் வருமானமாகக் கிடைத்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கோப்பியும் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு முக்கிய இடத்தை வகித்தது. உண்மையில் இலங்கைக்குக் கோப்பிப் பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்தியவர்கள் அரபியர்கள்தான். வெறும் கிராமப் பயிர்ச் செய்கையாகவிருந்த கோப்பி பிரித்தானியருடைய காலத்தில் தான் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாக மாறியது. கிராமப்புறங்களில் விளைந்த கோப்பியை ஏற்றுமதி செய்தவர்களில் கண்டியைச் சேர்ந்த இருமுஸ்லிம்களை குறிப்பிடலாம். சின்ன லெப்பைசகோதரர்களும், மீயாப் புள்ளையும் கண்டிப் பிரதேசத்திலுள்ள கோப்பியை வாங்கினது மட்டுமல்லாமல் இதன் விலையைக் கூட நிர்ணயிக்கும் தரத்தில் இருந்தார்கள். சின்ன லெப்பை சகோதரர்கள் கோப்பித் தோட்டங்களைக் கூட வைத்திருந்தார்கள். 1865ம் ஆண்டில் சின்ன லெப்பை 6,500 ஏக்கர் பரப்புள்ள கோப்பித் தோட்டங்களை வைத்திருந்தார் என அறிகிறோம். 1876ம் ஆண்டில் கண்டியில் 21 முஸ்லிம்கள் கோப்பித்தோட்டங்களை வைத்திருந்தார்கள் என பர்கசன் டிரெக்டிரியிலிருந்து அறிகிறோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் கோப்பி வீழ்ச்சியடையத் துவங்கியது தேயிலையும் றப்பரும் முக்கிய

169 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
ஏற்றுமதிப் பொருட்களாக வளர்ந்தன. தேயிலை, றப்பர் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஆங்கில கம்பெனிகள் மும்முரமாக ஈடுப்பட்டன. சிறுதோட்டங்களை முஸ்லிம்கள் வைத்திருந்தாலும் பெரும்பாலும் இதன் வர்த்தகத்திலேயே இவர்கள் ஈடுப்பட்டிருந்தனர். 1915ம் ஆண்டில் வர்த்தகக் குறிப்பின்படி கொழும்பில் றப்பர் வியாபரிகள் 14 பேர் முஸ்லிம்களாக இருந்தனர். கண்டியில் 31 றப்பர் வியாபாரிகளில் 23 பேர் முஸ்லிம்களாக இருந்தனர். தேயிலைத் தோட்டங்களை பெரும்பாலும் ஆங்கிலக் கம்பெனிகளிடமே இருந்தன. சிறு தோட்டங்களை முஸ்லிம்கள் வைத்திருந்தார்கள். தேயிலை வர்த்தகத்திலும் ஆங்கிலக் கம்பெனிகளே பெரும் பங்கை ஏற்றிருந்தார்கள்.
தென்னை உற்பத்தியில் முஸ்லிம்கள் ஒரளவு ஈடுபட்டிருந்தனர். புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தான் இப்பயிர் செய்கையில் பெருமளவு ஈடுப்பட்டிருந்தனர். மாக்கான் மார்க்கர், நெய்னா மரிக்கார், அப்துல் றஹ்மான் போன்றவர்கள் இப்பயிர்செய்கையில் முதலீடு செய்தார்கள் என நாம் 1919ம் ஆண்டில் வெளியான பர்கசன் டிரெக்டரிலிருந்து அறிகிறோம்.
புத்தளம், மன்னார், மட்டக்களப்பு போன்ற கரையோரப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தென்னைப் பயிர்செய்கையில் அதிகம் அக்கறை காட்டினர்.
மாணிக்கவியாபாரம் பெரும்பாலும் முஸ்லிம்களுடைய கையிலே இருந்தது. பேருவளை, காலி இரத்தினபுரி, எஹெதலியாகொட போன்ற இடங்களில் வசித்த முஸ்லிம் வர்த்தகர்கள் இவ்வியாபாரத்தையே தமது தொழிலாக கொண்டிருந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு ஒரு கணிசமான அளவாக இருந்தது.

Page 97
முகம்மது சமீம் 170
இப்பெருந்தோட்ட பயிர்செய்கையிலும் உள்நாட்டு, வெளிநாட்டு வாத்தகத்திலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தாலும் ஒருசில குடும்பங்களே பயனடைந்தன. பெரும்பான்மையான முஸ்லிம்கள் சிறு தொழில்களைச் செய்து ஏழைகளாகவே இருந்தனர். ஒரு சில முஸ்லிம்களின் பொருளாதார நிலையை வைத்தே ஏனைய சமூகத்தினர் முஸ்லிம்கள் ஒரு வியாபார சமூகமென்று கணித்தனர்.

171 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
22. முஸ்லிம்கள் தொன்றுதொட்டு பாதுகாத்து வந்த சமுக அமைப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம்களும் ஓரளவு பங்கு பற்றினர் என்றாலும் முஸ்லிம் சமூகம் இப் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் பொருளாதார வளர்ச்சியடைந்தது என்றால் அதுதான் இல்லை. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையினால் பெரிதும் பயனடைந்தவர்கள் ஐரோப்பியர்களே என்று கூறினால் அது மிகையாகாது. இப்பெருந்தோட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒரு சில முஸ்லிம்கள் பயனடைந்தார்கள். தோட்டங்களின் அருகாமையில் கடைகளை வைத்தும் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களின் தேவைகளுக்கேற்ப பொருட்களைத் தருவித்தும் வர்த்தகம் செய்தனர். சிறு சிறு தொழில்களான தச்சுவேலை, தையல் போன்ற தொழில்களையும் செய்தார்கள். மலைநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களில் அனேகமானவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த முஸ்லிம்களும் நாடார்களுமே. இப்பொருளாதார வளர்ச்சி காரணமாகக் கொழும்பு நகரமும் விருத்தியடைந்தது. கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் இதனால் பயனடைந்தார்கள். வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரஞ் செய்வதற்கு போதிய பணம் இல்லாமையால் இவ்வியாபார ஸ்தாபனங்களில் தொழிலாளர்களாக கடமையாற்றினார்கள். கொழும்பு துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் துரிதமடைந்தமையால் இவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தது. புறக்கோட்டைக்குப் பக்கத்திலிருந்த வாழைத்தோட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இச் சிறு தொழில்களைச் செய்தார்கள். கொழும்பில் அங்காடி வியாபாரிகளாக வியாபாரஞ் செய்தவர்களும் முஸ்லிம்களே. மாளிகாவத்தை, தெமட்ட கொட போன்ற இடங்களில் வாழ்ந்த

Page 98
முகம்மது சமீம் 172
முஸ்லிம்களும் இச் சிறு தொழிலைச் செய்து பயனடைந்தார்கள். கொழும்பின் பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் பயனடைந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்த மேமன்களும், போராக்களும் சிந்திகளுமே. இவர்களுக்குப் பம்பாய் போன்ற நகரங்களோடு தொடர்பிருந்த காரணத்தால் அங்கிருந்து பொருட்களைத் தருவிக்க வசதியும் இருந்தது.
1901ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களில் 21 சதவீதமே வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்தனர். 1911ம் ஆண்டில் கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களில் 35.5 சதவீதமானோர் விவசாயத்தில் ஈடுப்பட்டிருந்தனர் என்று அறிகிறோம். முஸ்லிம்களில் 45 சதவீதமானோர் ஏதோ ஒரு தொழிலைச் செய்து வாழ்ந்திருக்கிறார்கள் என நாம் கணிக்கலாம்.
இலங்கையில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுவந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் தம்முடைய மூதாதையர்கள் செய்து வந்த வர்த்தகத்தையே நம்பியிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பொருளாதார வளர்ச்சி முஸ்லிம் சமூகத்தில் ஒரு பணக்கார வகுப்பினரை தோற்றுவித்தது. இவ்வர்க்கமே பிறகு முஸ்லிம் சமுகத்தின் அரசியல் தலைமைத்துவத்தையும் ஏற்க முன்வந்தது. இவ்வர்க்கம் தான் ஆங்கிலக் கல்வியைக் கற்று சமுதாயத்தில் உயர்நிலையில் இருந்தது. இவ் வர்க்கத்திலிருந்து தான் சட்டத்தரணிகளும், டாக்டர்களும், பொறியியலாளர்களும் தோன்றினர். இவ்வுயர்நிலை மட்டத்திலிருந்த முஸ்லிம்கள் சமய வைபவங்களில் மாத்திரம் தான் ஏனைய முஸ்லிம்களுடன் கலந்தனர். தம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த பிற சமூகத்தினருடனேயே மற்றைய எல்லா சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். ஏனைய முஸ்லிம்கள் சிறு தொழில்களைச் செய்யும் ஏழைகளாகவும் சிறிய வியாபாரிகளாகவும், விவசாயிகளாகவும் இருந்த காரணத்தினாலும், மேல்நாட்டுக் கல்வியைக்கற்கும் வசதியில்லாத காரணத்தினாலும் சமுதாயத்தின் கீழ் மட்டத்திலேயே இருந்தனர்.

173 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
முஸ்லிம்களின் தொண்டு தொட்டு வந்த சமுதாய அமைப்பை நாம் அவதானித்தால் இந் நவீன மாற்றங்கள் முஸ்லிம் சமுதாய அமைப்பை எவ்வாறு பாதித்தது என அறியலாம். முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் பிற மதத்தவர் மத்தியில் குடியேறிய காரணத்தால் தம்முடையமதத்தையும் மதஅனுஸ்டானங்களையும், ஷரியா முறைகளையும் பாதுகாக்க வேண்டியிருந்ததால் ஒரு சமூக கட்டுப்பாட்டுடன் செயலாற்றினர்.
தம்முடைய சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியக் கிராமங்களிலிருந்த பஞ்சாயத்து முறைபோன்ற அமைப்பின் மூலம் தமது சமூகத்தை நிர்வகித்தனர். இம் முறை மூலம் அந்நியர்களின் தலையீட்டைக் குறைத்தனர். முஸ்லிம்கள் நகரப்புறங்களிலும் கரையோரப்பகுதிகளிலும், குக்கிராமங்களிலும் வசித்தபடியால், இவ்வமைப்புக்களில் சிறிது வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்தது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரேபியாவிலிருந்து பிற நாடுகளுக்குப்பரவிய பின் இந்நாடுகளில் குடியேறிய அரேபியர்களும் இஸ்லாத்தை தழுவிய பிற மதத்தினரும் மிக நெருக்கமாகவே வாழ்ந்தனர். பள்ளிவாசலும் அதனையொட்டிய மத்ரசாக்களுமே இக் குடியேற்றங்களின் கேந்திர ஸ்தானங்களாக அமைந்தன. முஸ்லிம் குடியிருப்புக்களும் பெரும்பாலும் இவைகளை யொட்டியே வளர்ந்தன. சாலையின் இருமருங்கிலும் வீடுகளைக் கட்டி பலகுடும்பங்கள் வாழக்கூடிய வாசஸ்தலங்களாக இவர்கள் வீடுகள் அமைந்தன. வீட்டின் இருபுறத்திலும் அறைகள் இருக்க மத்தியில் கூரையில்லாத ஒரு முற்றவெளி ஒன்றிருக்கும், பெண்களுக்கென்று ஒரு பிரிவும் அதற்கு ஒரு கதவும் இருக்கும். இதே முறையையே இலங்கையில் குடியேறிய முஸ்லிம்களும் கடைப்பிடித்தார்கள்.
நகரங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது சமூக சம்பந்தமான விஷயங்களை ஆராய்வதற்குக் கூடிய கூட்டங்களை ஊர்க்கூட்டம் என்றழைத்தனர். முஸ்லிம்கள் ஒருமித்து வாழ்ந்த இடங்களை

Page 99
முகம்மது சமீம் 174
கஸ்பா'என்றழைத்தனர். இப்படி வசித்ததனால் முஸ்லிம்களுடைய அன்றாட வாழக்கையை மேற்பார்வை செய்வதற்கு இவ்வமைப்பு முறை உதவியது. எவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறையினின்றும் பிறழாது வாழ இது உதவியது. ஆனால் சனப்பெருக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, இக் குடியிருப்புக்கள் சேரிகளைப் போலாகின. குடும்பங்கள் பெருகப் பெருக இவ்வீடுகளிலே இவர்கள் வாழ்ந்த காரணத்தால் தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பிருந்தது. கஸ்பாவிலிருந்து வெளியே சென்று வாழ விரும்பாத UgUT6ು இவர்களிடையே சண்டைச் சக்சரவுகள் அதிகரித்தன. இடவசதியின்மை காரணமாகப் பள்ளிக்கூடங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பாகவிருக்கவில்லை. இதனால் இவர்கள் அறியாமையிலேயே மூழ்கியிருக்க வேண்டிய ஒரு நிலையும் ஏற்பட்டது.
1907ம் ஆண்டில் நடத்தப்பட்ட வைத்திய கணக்கெடுப்பின் படி நகரபுறங்களில் வாழும் முஸ்லிம்களில் அநேகம் பேர் காசநோயால் பீடிக்கப்பட்டிருந்தனர்.
ஒரு பள்ளிவாசலின் ஜமாஅத்தை சேர்ந்தவர்களே ஊர்க்கூட்டத்தில் அங்கத்தவர்களாக இருந்தனர். பொதுவாக ஒவ்வொரு வீட்டின் தலைவரும் இவ்வூர்கூட்டத்தில் அங்கத்தவராக இருந்தார். என்றாலும் பெரும்பாலும் பணம்படைத்தவர்களே இதில் செல்வாக்குடையவர்களாக இருந்தனர். இக் கூட்டங்களில் பள்ளி நிர்வாகம், திருமணங்கள் மையத்துக் கிரியைகள் போன்றன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு எதிராக எவராவது நடந்தால் இஸ்லாமிய முறைப்படி அவருக்குத் தண்டனை வழங்கவும் இவ்வூர்கூட்டம் தயங்கியதில்லை. வழி தவறி நடக்கும் குடும்பங்களை விலக்கிவைக்கவும், அவர்களுடைய வைபவங்களில் பங்கு கொள்ளவும், மையத்து, திருமணம், போன்ற வைபவங்களை பகிஷ்கரிப்பு செய்யவும் அவ்வூர் கூட்டங்களில் முடிவு எடுக்கப்படும், அதோடு சமூக நலன் சேவைகளிலும் இவ்வூர்க்கூட்டம்

175 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
பங்குகொள்ளும். இப்படி முஸ்லிம் சமுகத்தில் ஒரு கட்டுப்பாட்டை இவ்வமைப்பு கொண்டுவந்தது. பிரிந்து வாழ்ந்த முஸ்லிம் சமுகத்தில் இஸ்லாமிய வாழ்கை முறைப்படி வாழ்வதற்கு இவ்வமைப்பு உதவியது. இவ்வூர்க் கூட்டங்களின் தலைவராக செல்வந்தர்களில் ஒருவரே இருந்தார். அவர் மரைக்கார், என்றும் நாட்டாண்மைக்காரர் என்றும் அழைக்கப்பட்டார். இக்கூட்டங்கள் பள்ளிவாசலிலே மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும். மரைக்கார் சமுகமளிக்காவிட்டால் கூட்டம் ஒத்திவைக்கப்படும். பள்ளிவாசலின் பிரதம நிர்வாகியாகவும் இவர் கடமையாற்றினார். பள்ளியின் இமாமை இத்தலைவரே நியமித்தார். பள்ளிக்குத் தேவையான பணத்தை முஸ்லிம்களிடமிருந்து அறவிடும் உரிமையும் இவருக்கிருந்தது. இமாமின் சம்பளத்தையும் பள்ளியின் செலவையும் அவரே பொறுப்பேற்று நடத்துவார். பள்ளிக்கு சேரும் பணம் போதாதென்றால் தன்னுடைய சொந்த பணத்தைக் கொடுக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. சமூகத்தில் இவர்களுக்கு பெரும் செல்வாக்கிருந்தது. பள்ளியில் சேவையாற்றும் இமாம்கள் தென்னிந்தியாவிலுள்ள மத்ரசாக்களில் ஏழெட்டுவருடங்கள் பெரும் பணச்செலவில் ஒத வேண்டியிருந்ததால் பணம்படைத்த குடும்பங்களிருந்தே இமாம்களும் வந்தார்கள். எனவே முஸ்லிம் சமூகத்தைத் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் இத் தனவந்தர்கள் வைத்திருந்தனர். பத்வா கொடுப்பது முதல் 'ஹத் போன்ற தண்டனை வழங்குவது வரை இவர்களுடைய அதிகாரம் முஸ்லிம் சமூகத்தின் மேலிருந்தது.
இமாமுக்கு அடுத்தபடியாக பள்ளிவிவகாரங்களில் கடமையாற்றியவர் முஅத்தின் பள்ளியில் பங்குக்கொள்வது முதல் வீடுகளில் நடைப்பெறும் வைபவங்களில் கலந்துக் கொள்வது, திருமணம், மையத்து போன்ற சடங்குகளில் முக்கிய பொறுப்பேற்று நடத்துவதும் இவருடையத் தொழிலாக இருந்தது. ஊர்க்கூட்டத்தின் தலைவர் சில சமயங்களில் பள்ளியின் நம்பிக்கையாளரையும் நியமிக்க அதிகாரம் பெற்றிருந்தார். சமய சம்பந்தமான

Page 100
முகம்மது சமீம் 176
விஷயங்களில் முடிவு எடுக்கமுடியாவிட்டால் பள்ளி இமாமின் ஆலோசனையைத் தலைவர் கேட்பார். ஒர் ஊரில் சமயக்கல்வி பெற்ற மெளலவிகள் இருந்தால் இவர்கள்தான் ஊர்க் கூட்டத்தின் முடிவுகளில் முக்கிய பங்கெடுப்பார்கள். முஸ்லிம் கிராமங்களில் இவ்வமைப்பு முறை மிகவும் கண்டிப்பாக நடைப்பெறும். இவ்வூர்க்கூட்டத் தலைவர்களை மத்திச்சம்' என்றழைத்தார்கள். பெரும்பாலும் நிலம் படைத்த செல்வந்தர்களே மத்திச்சங்களாக இருந்தனர். இவர்களில் அனேகம் பேர் புனித ஹஜ் செய்த காரணத்தினால் ஹாஜியார்களாக இருப்பார்கள். இவர்கள் வைத்ததுதான் சட்டம். இம்மத்திச்சம் பட்டம் பெறுவதற்குப் பணக்காரக்குடும்பங்களிடையே போட்டியும் இருப்பதுண்டு. வசதியற்றகுடும்பங்கள் கிராமங்களிலிருந்து வெளியேறி நகர்புறங்களில் வியாபாரஞ் செய்து திரும்பி வந்து தமது சொந்த கிராமங்களிலேயே நிலத்தை வாங்கி இத்தலைமைப் பதவிக்கு போட்டிபோடவும் செய்தனர். சில சமயங்களில் இவர்களுக்கெதிராக மத்திச்சம் செயல்படுவதுமுண்டு. கண்டிப்பிரதேசத்திலுள்ள மடிகே என்றழைக்கப்படுகின்ற முஸ்லிம் கிராமங்கள் பெரும்பாலும் வெளியுலகத் தொடர்பு இல்லாத காரணத்தினாலும் நிலப்பரப்பு அதிகமில்லாத காரணத்தினாலும் இங்கே நிலச் சொந்தக்காரர்கள் மிகவும் குறைவாக இருந்தனர். இக்குடும்பங்களின் தலைவர்கள் தான் பெரும்பாலும் பள்ளிமத்திசம்களாக இருந்தனர். இத்தலைமைப் பதவிகளுக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடிய இவர்கள் வேறு எவரும் இப் பதவியைப் பெறுவதை விரும்பவில்லை. இக்கிராம முஸ்லிம் சமூகங்கள் இவர்களது கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அறியாமையில் இருந்த மக்கள் இவர்களின் வாக்கை தெய்வ வாக்கேன மதித்தார்கள். மேல்நாட்டுக் கல்வியைப் பெற்று உயர்பதவிகளையடைந்த வறிய குடும்பங்களின் பிள்ளைகளின் வளர்ச்சியை இவர்கள் விரும்பவில்லை. ஒரு காலத்தில் இவ்வமைப்பு முறை முஸ்லிம் சமூகங்களின் சமய அமைப்பை விரும்பவில்லை. ஒரு காலத்தில் இவ்வமைப்பு முறை முஸ்லிம் சமூகங்களின் சமய

177 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
அமைப்பைப் பாதுகாத்தது என்றாலும் பொருளாதார வளர்ச்சியடைந்து வந்தபோது முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு ஒர் முட்டுக்கட்டையாகவும் இருந்தது. சர்வசன வாக்குரிமை மக்களுக்கு வழங்கப்பட்ட பிறகு, இம்மத்திசங்களின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்தது. இவர்களுடைய கட்டுப்பாட்டில் முஸ்லிம் சமூகங்கள் இருந்த காரணத்தினால் தேர்தல்களில் வெற்றிபெற விரும்புவோர் இவர்களுடைய உதவியை நாடி நின்றனர். ஆகையால் இவர்களை எதிர்த்த குடும்பங்கள் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகினர். ஒரு மத்தியத்தர வர்க்கத்தினர் முஸ்லிம்களிடையே இல்லாத காரணத்தினால் நிலச்சுவாந்தர்களாக இருந்த ஒரு சில முஸ்லிம் குடும்பங்களே முஸ்லிம் சமூகத்தை மதம் என்ற பெயரில் கட்டுப்படுத்தி வைத்தன.
கிழக்குக்கரையோரப் பகுதியில் குடி மரபு முஸ்லிம் சமுதாயத்தின் சமூக அமைப்பாக இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு குடியைச்சேர்ந்தவ்ர்களாக இருந்தார்கள். பதினெட்டு குடிகள் இருந்ததாகச்சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இக் குடிகள் தமது தொழிலை வைத்தோ அல்லது ஒரு பொருளை வைத்தோ தம் குடிகளுக்குப் பெயரிட்டார்கள். ஒடாவிக்குடி, மாம்புலியார்குடி, அல்லிக்குடி என்று குடிகள் வழங்கப்பட்டன. இக்குடிகளில் அதிக நிலம் வைத்திருப்போர்கள் தான் மத்திசங்களாகக் கடமையாற்றினார்கள். இவர்கள் போடியார் எனவும் அழைக்கப்பட்டனர். முஸ்லிம் சமுதாயத்தில் சாதிப்பிரிவினை இல்லையென்றாலும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இருக்கத்தான் செய்தது. இப் பணக்கார குடும்பங்கள் தான் முஸ்லிம் சமுதாயத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் இச் சமுதாய முறையை மாற்றியமைத்தது. இப்பொழுது ஊர்த்தலைவர்கள் என்று ஒருவர் இல்லை. வக்புச்சட்டப்படி இன்று பள்ளிநிர்வாகம் ஜமாஅத்தாரின் தெரிவில் நியமிக்கப்பட்ட ஒரு

Page 101
முகம்மது சமீம் 178
கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முன்னிருந்த சமூகக்கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் இன்று பல அரசியல் கட்சிகளின் பகடைக்காய்களாக ஆக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் அரசியல் செல்வாக்கிழந்து அரசியல் அநாதைகளாயிருக்கின்றனர்.

179 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
23. 19ம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம்களிடையே தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் மற்றைய துறைகளையும் பாதித்தது எனலாம். நெடுந்துாரச் சாலைகளும், ரயில்வேயும் விஸ்தரிக்கப்பட்டன. மேல்நாட்டு கல்வி வளர்ச்சியையும் நாம் காண்கிறோம். இக் கல்வியைக் கற்றவர்கள் அரசாங்கத்தில் உத்தியோகம் வகிக்கத் தொடங்கினர். இதன் காரணமாக ஒரு மத்திய தர வர்க்கத்தினர் உருவாவதையும் காண்கிறோம். மேற்கு நாடுகளின் முற்போக்கு கருத்துக்களாலும், குறிப்பாக இங்கிலாந்தின் லிபரல் கட்சியின் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்ட இம் மத்தியதர வர்க்கத்தினர் அரசியல் நிர்வாகத்திலும் பங்கு கேட்டனர். இதன் காரணமாக அரசியல் சட்ட சபையில் இலங்கையரின் செல்வாக்கு அதிகரித்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கம் தம்முடைய ஆட்சியைக் காலனித்துவ நாடுகளில் நிலைநாட்டுவதற்குக் கல்வியை ஒரு கருவியாக பாவித்தது. இக் கல்வியின் மூலம் தமக்குச்சாதகமான ஒரு கூட்டத்தை உருவாக்குவது இவர்களது நோக்கமாக இருந்தது. இக்கூட்டத்தார் தம்முடைய சமயமாகிய கிருஸ்தவ சமயத்தைத் தழுவினால் தமது ஆட்சி நிலைத்து நிற்கும் என்று இவ்வாட்சியாளர்கள் கருதினர். ஆங்கிலம் கற்ற கிறிஸ்தவ சமயத்தைச்சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. எனவே கிருஸ்தவ மிஷனரிமார் இலங்கையில் கல்வி நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் பெரிதும் உதவியது. தாய்மொழியின் மூலம்தான் தம்முடைய கிறிஸ்தவ மதத்தைப்பரப்பலாம் என்ற எண்ணத்தில் இக்கிறிஸ்தவ மிஷனரி சபைகள் சிங்கள, தமிழ் பாடசாலைகளையும்

Page 102
முகம்மது சமீம் 180
நிறுவினர். பிற சமயத்தவர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி ஆங்கிலக் கல்வி கற்று அரசாங்கத்தில் பதவிகளைப்பெற்ற சமயத்தில் முஸ்லிம்கள் தமது மதத்தில் தமக்கிருந்த நம்பிக்கைக் காரணமாக ஆங்கிலக்கல்வியை ஒதுக்கியே வாழ்ந்தனர்.
மிஷனரி மார்களின் இந்தக்கொள்கை பெளத்தர்களையும் இந்துக்களையும் பெரிதும் பாதித்தது. கீழத்தேய மக்களின் மதங்களையும் ஸ்தாபனங்களையும் பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் மேல்நாட்டார் இகழ்ந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட இவ்விரு சமூகங்களும் தம்முடைய சமயங்களையும், தம்முடைய வாழ்க்கை முறையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உந்தலின்பேரில் இவ்விருச் சமூகங்களுக்கிடையேயும் மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின. அந்நிய கலாசாரத்தை எதிர்த்து தமது மதத்தையும் பண்பாட்டையும் நிலைநாட்டுவதற்கு பெளத்தர்கள் மத்தியில் அநாகரிகதர்மபாலா, ஹிக்கடுவே பூரீ சுமங்கல தேரோ ஆகியோரும், இந்துக்கள் மத்தியில், ஆறுமுக நாவலர் போன்ற தலைவர்களும் தோன்றினார்கள். பெளத்தர்கள் பெளத்த பிரம்மஞான சங்கம் எனவும் இந்துக்கள் சைவபரிபாலன சபை எனவும் சங்கங்களை ஸ்தாபித்து கல்வியின் மூலம்தான் தமது மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கலாம் என்ற நோக்குடன். கல்வி நிலையங்களை ஸ்தாபித்தார்கள். இவர்கள் ஸ்தாபித்த ஆங்கிலக் கல்வி நிறுவனங்கள் தான் பிறகு கொழும்பில் ஆனந்தா கல்லூரியாகவும், யாழ்ப்பாணத்தில் இந்துக்கல்லூரியாகவும் வளர்ந்தன. கல்வியின் மூலம் இவ்விரு சமூகங்களும் அரசாங்கத்தில் உத்தியோகம் வகித்து வளர்ச்சிபெற்றன.
மேல்நாட்டுக் கல்வியை புறக்கணித்து வந்த முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கியது. இதை உணர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டினார்கள். ஆனால் முஸ்லிம்கள் இதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தொன்றுத்தொட்டு ஒரு வியாபார சமூகமாகவிருந்த முஸ்லிம்கள் தமக்கு அரசாங்க

181 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
பதவியோ மதமாற்றத்துக்கு பாவிக்கப்படும் ஆங்கிலக் கல்வியோ தேவையில்லை, என்ற எண்ணத்தில் ஆங்கிலக்கல்வியை ஒதுக்கியிருக்கலாம். மேலும் அரசியலில் தமக்கு பங்கு வேண்டும் என்று மற்ற சமூகங்கள் எண்ணியது போல் முஸ்லிம் சமூகம் அரசியல் விவகாரங்களில் அக்கரைகாட்டவில்லை. இலங்கையின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ்ந்த காரணத்தினால் தமக்கு ஒர் அரசியல் அமைப்பு தேவை என்பதை அவர்கள் உணரவில்லை. மற்றைய சமூகங்களில் இனம், மொழி, மதம், தேசிய உணர்வு போன்ற சக்திகள் அவர்களை ஒன்று சேர்க்கும் அளவிற்கு முஸ்லிம் சமூகத்தை ஒன்று சேர்க்கும் சக்திகள் அவர்களிடம் இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சிங்களவரும், தமிழரும் தம்முடைய வரலாற்றை ஆராய்ச்சி செய்து தம் மக்களிடையே உணர்ச்சியை ஊட்டிய அளவு முஸ்லிம்கள் தம்முடைய வரலாற்றைப்பற்றி எண்ணியது கூட இல்லை. முஸ்லிம்களுடைய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியவர் ஒரு முஸ்லிம் அல்ல. அவர் ஒர் இந்து. சார் பொன்னம்பலம் இராமநாதன், தென்னிந்தியத் தமிழர்களை அரேபியர்கள் இஸ்லாத்துக்கு மாற்றி அங்கிருந்து இலங்கைக்கு வந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் இலங்கை முஸ்லிம்கள் என்ற ஒரு புதுமையான கருத்தை அரசாங்கத்துக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் எடுத்துக்கூறினார். ஆகையால் அரச சட்டசபையில் முஸ்லிம்களுக்குகென்று, ஒரு தனிப்பிரதி நிதித்துவம் தேவையில்லையென்றும் ஒரு தமிழர் அவர்களைப்பிரதி நிதித்துவப்படுத்தலாம் என்ற கருத்தையும் அரசாங்கத்தின் முன் வைத்தார். தூங்கிவழிந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் இப்பொழுதுதான் விழிக்கத்தொடங்கியது. இக் கூற்று முஸ்லிம் சமூகத்தை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எகிப்திய வீர புருஷன் அல் அரபி பாஷாவை ஆங்கில அரசாங்கம் இலங்கைக்கு நாடு

Page 103
முகம்மது சமீம் 182
கடத்தியது. அராபி பாஷா ஒரு விடுதலை வீரர் மட்டுமல்ல இஸ்லாமிய மார்க்கப்போதகருமாவார். ஜமாலுத் தீன் அப்கானியினுடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமிய ஆட்சி திரும்பவும் உலகில் நிலைக்க வேண்டும் என்ற உணர்வுகொண்டவர். இலங்கைக்கு வந்த இந்த இஸ்லாமிய வீரர் கண்டதென்ன? இலங்கை முஸ்லிம்கள் அறியாமையில் மூழ்கியிருந்தது மட்டுமல்ல அரசியல் செல்வாக்கு ஏதுமில்லாமல் ஒதுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக இருப்பதைக்கண்டார். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டினார். முஸ்லிம்கள் கல்வியிலும், அரசியலிலும் முன்னேற வேண்டுமென்று உணர்த்தினார். அவருக்கு உறுதுணையாக நின்ற ஒருவர் தான் கண்டியைச்சேர்ந்த வழக்கறிஞர் சித்திலெப்பை அவர்கள். முஸ்லிம் நேசன் என்ற ஒரு பத்திரிகையின் மூலம் இஸ்லாமிய உலகில் நடக்கும் சம்பவங்களையும் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தையும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். ஆட்டுப்பட்டித் தெருவில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் அரசாங்க பொலீசார் முஸ்லிம்களை மிகவும் கொடூரமான முறையில் தாக்கி முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தியதைக் காட்டி முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த அநியாயத்தை எடுத்துக் கூறுவதற்கு சட்டசபையில் முஸ்லிம் யாரும் இல்லாத குறையை எடுத்துக்காட்டினார். இவருடைய அயராத உழைப்பினால் 1889ம் ஆண்டில் அரசாங்கம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியைச் சட்டசபைக்கு நியமித்தது. அரபி பாஷாவின் வருகை இலங்கை முஸ்லிம் மத்திய தர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனைய சமுகங்களைப்போல முஸ்லிம் சமுகத்திலும் ஒரு மறுமலர்ச்சி இயக்கம் தொடங்கியது. இவ்வியக்கம் கல்வியை மட்டும் தான் பாதித்தது என்பதற்கில்லை. பொதுவாக எல்லாத் துறைகளிலும் இவ்வியக்கத்தின் செல்வாக்கு பரவியது.

183 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைக் காப்பாற்றுவதற்காக பிற சமூகங்களிருந்தும் பிரிந்து தனித்தே வாழ்ந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களை தனித்து நடத்தவில்லை. 1806ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட முகமதிய சட்டக் கோவையை மாற்றியமைக்க முன் வந்தது. 1886ம் ஆண்டு முஸ்லிம் திருமணங்கள் அரசாங்கத்தில் பதியப்படவேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. முஸ்லிம்கள் இதை எதிர்த்தனர். இச்சட்டத்தின் 20ம் பிரிவின் படி, இப்படிப் பதியப்படாத எந்த ஒரு முஸ்லிம் திருமணமும் செல்லுபடியாகாது என்ற நிபந்தனையை முஸ்லிம்கள் எதிர்த்தனர். முஸ்லிம்கள் தம்முடைய வாழ்க்கை முறையில் அரசாங்கம் தலையிடுவதை விரும்பவில்லை. இருந்தாலும் அரசாங்கம் இச்சட்டத்தை அமுலாக்கியது. முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புக்களை உணராமல் அவர்களுடைய கோரிக்கைகளை உதாசீனம் செய்யுமளவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தம்முடைய உண்மை நிலையை முஸ்லிம் மத்திய தர வர்க்கத்திற்கு உணர்த்தியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலனிகளுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு எழுதிய விண்ணப்பங்களுக்குப் பிறகுதான், இச்சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முஸ்லிம்களுக்கு இன்னொரு உண்மை இதனால் தெளிவாகியது. ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்ந்தார்கள் இலங்கை மக்களுக்கு எதிராக சட்டங்களை அமுலாக்குவதை நிறுத்துவதற்கு ஒரே வழி இங்கிலாந்தின் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு விண்ணப்பித்து அவர்களுடைய உதவியை நாடுதலே என்ற உண்மையை இலங்கை மத்திய தர வர்க்கத்தினர் உணர்ந்தனர். ஆங்கில மொழியில் பரிச்சயமுள்ளவர்களால் மட்டும் தான் இதனைச் சாதிக்கலாம் என்ற உண்மையும் விளங்கியது. ஏனைய சமூகங்கள் இதைச் செயலிலும் காட்டினார்கள். ஆகவே முஸ்லிம் மத்தியதர வர்க்கத்தினரும் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை முஸ்லிம் சமூகத்திற்கு எடுத்துக் கூறினார்கள்.

Page 104
முகம்மது சமீம் 184
கல்வியறிவு இல்லாவிட்டால் முஸ்லிம்கள் பின்தங்கிய, ஒதுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் உணர்ந்தார்கள். இதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் இதனைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

10.
11.
185
BBLOGRAPHY
Ferguson - Ceylon in 1883.
Hobson-Jobson - Ceylon.
Taurus - The Greeks in Bactria and India.
Encyclopaedia Brittanica - chon. Anthropology.
Journal of Royal Asiatic Society -
Vol. X- no36-1888 Ramanathan - Ethnology of the Moors.
Al. Biladuri - Fatuhul Buldan.
Royal Asiatic Society of Ceylon
No 32, Vol. 9-1886Prof.Virchau - Ethnological Studies of the Sinhalese race.
Dr. Andreas Nell - Art and Architecture.
Sir James Emerson Tennent - Ceylon Vol. 1. Memoirs of Governor - Ryklof Van Goens - 1675.
JRAS-Ceylon Branch. No. 88-1930
for Place Names of Ceylon - Julius de Lanerolle.

Page 105
186
12. Codrington - Recent Find of Coins -
JRAS XXIII- no 66-1913.
13. Krishnaswamy Iyengar - South India and Her
Mohammedan Invaders
14. Mudaliyar Mendis Gunasekara -
Sabeans and Yavanas - JIRAS – Part IV - Vol 23. - also - No4 - Part II - for Ceylon Notes and Queries
15. JRAS- CB - Vol. XXXI - No. 82 - 1929
for Ancient Habitation
Inear Kudramalai
16. Ferguson - JRAS-Vol-xx - No. 60- 1908 for
Barros and Diego - de Couto.
17. JRAS XXIIL - No. 65 - 1912- Pieris - for
Bhuvanaika Bahu VII - The Date
18. JRAS - Vol. I - No. 3 - 1847 - for History
of Jaffna upto Dutch conquest.
19. JRAS-XXXI - No. 83 - 1930 - Proctor Mudaliyar -
The Invasion of Ceylon by the Muslims.
20. JRAS – XXIV - No. 68 - Part III - 1915.
Codrington - Ceylon Numismatics.

21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
187
JRAS - Notes & Queries - XXVIII - No. 72
Part I - IV - 1919 - for A Sinhalese Embassy to Egypt.
JRAS - XIX - No.58 - 1907
Still - Roman Coins found in Ceylon.
JRAS — N & Q – No. 26 – XXIII -
For Sabeans and Romans.
JRAS-II - No. 7-1853 - Casi Chitty
Historical Poem of the Moors
Entitled - Sheerah.
JRAS - VII - No. 24 - 1881. Neville -
The Ancient Emporium of Kalah.
JRAS - XIII - No. 45-1894
De Silva - Kostantine Hatanaby Alagiyawanna.
JRAS – IX – No. 32 - 1886 – Vanderstraaten -
Medieval History of Ceylon
De Queyroz - The Temporal and Spiritual
Y Conquest of Ceylon.
Book 4 — Ch. 19. Book I Ch. 2
Dr. Ariyapala, Society in Medieval Ceylon - Ch. 3
Fr. Legoc - Sketches of Church History

Page 106
188
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
C.W. Nicholas and Paranavitana -
A Concise History of Ceylon.
Memoirs of Ryk lof Van Goens - 1675 - 1679
Memoirs of Hendrick Zwaardecroon
The Diary of Gerrit De Heere -
Governor of Ceylon - 1697.
Memoirs of Thomas Van Rhee
Governor and Director of Ceylon - 1697.
Memoirs of Joan Simons - Governor - 1707
Memoirs of Hendrick Becker - 1716.
Memoirs of Jacob Christiaan Pielat
Governor - 1734
Memoirs of Van Imhoff - 1740
Memoirs of Maatsuyker - 1650
Instructions from the Governor
General and Council of India to the Governor of Ceylon - 1656 - 1665
Dr. Colvin R. De Silva -
Ceylon Under the British Occupation.

43.
45.
46.
47.
49. 50.
51.
52.
53.
54.
55.
56.
57.
189
Bernard Lewis - The Arabs in History
Paul E. Pieris - Dutch Power in Ceylon
1602-1670 (Documents)
Paul E. Pieris - The Portuguese Era Pridham - Ceylon and its Dependencies. Pannikkar - Malabar and the Portuguese. Perceival - Account of the Island of Ceylon Haafner - Travels in the Island of Ceylon Davy- Interior of Ceylon
Rebeirio - History of Ceylon
Robert Knox - An Historical Relation of Ceylon.
Casie Chitty - Manners and Customs
of the Ceylon Moors - Ceylon Gazeteer - 1834
Bertolacci - Ceylon. Parker - Ancient Ceylon
John Still - Ancient Capitals of Ceylon
Martin Wickremasinghe - Dress and Ornaments
in Ancient Ceylon.
Rasanayagam - Ancient Jaffna

Page 107
90
59.
60.
61:
62.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
Anthonisz - Dutch in Ceylon
Smith, James G - Anuradhapura
Van Sanden - Sonahar.
A.W. Codnington-Muhammadam and European
Coins in the Colombo Mueseum.
Paul E. Pieris - Ceylon and the Hollanders Paul E. Pieris - Sinhala and the Patriots
Dr. Arasaratnam - Dutch Power in Ceylon
- 1658 - 1687
Philalathes - 1817- History of Ceylon
Eugene Burnoff - Ancient Geography of Ceylon
- Ceylon Literary Register - Vol. I & Vol. III
Ceylon Literary Register (CLR)
Vol. 1 - 1931 - for Muslims in XIV and XVth Centuries
CLR XIII and XIV, II - for
Dambadeniya and Kurunegale Kings by Amarasekera
CLR. Vol. II - 1932 - The Ceylon Chronology
Ceylon Antiquary Vol. III
- Yonasabhagavatthu - by S. G. Pieris

72.
73.
74.
75. 76.
77
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
191
CLR - Vol. IV - Duarte Barbosas
Account of Ceylon
Tambiah - Customs of Jaffna Bell - The Maldive Islands.
Blaze - A History of Ceylon Schools
Dr. G.C. Mendis - A History of Ceylon
Mills and Lennon - British Rule
J.P. Lewis - Early British Times - Ceylon:
Brito - Mukkhuwa Law. Brito - Yalpana Vaipava Malai
Burrows - Buried Cities of Ceylon.
Stevenson, Smith and Madden -
Dictionary of Roman - Coins.
I.L.M. Abdul Azeez - A Criticism of
Ramanathan's "Ethnology of the Moors of Ceylon".
Sydney Bailey - Ceylon.
Baldens - Ceylon
Barrow - Ceylon Past and Present

Page 108
192
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
D.W.W. Kadramer - Landmarks of
Ancient Batticaloa
S.O. Canagaratnam - Manual of the
Batticaloa District
Toussaint - Batticaloa in Early British Times
Joao Rebeiro - The Historic Tragedy of the Island.
Dr. K.M. De Silva - A History of Sri Lanka.
Sir Alexander Johnstone - Transactions of the
Royal Asiatic Society (TRAS) Vol. I
A.M.A. Azeez - on The Moors - Encyclopaedia of
Islam (New Edition) - London 1965 — Vol II
Rotriers Tamil and English Dictionary - 1834
H.M.Z. Farouque - The Ceylon Muslim
Community - A Historical Sketch - in We Welcome Our Prime Minister'- A Felicitation Publication by the Muslims of Sri Lanka, Colombo - 1972
Dr. K.W. Gunawardane - Some Notes on the
History of the Muslims in Ceylon

193
before the British Occupation - University Majlis - Vol. IX -19
97. Donald Abeysekera - Moors in Ancient Ceylon - in Moorish Culture' - Quoted from Taprobane of April 1986.
98. C.R. De Silva - Portuguese Policy towards
Muslims - Ceylon Joಗ್ಗmq of Historical and SocialStudies. (CJ.H.S.S. Vol. 9-1d66)
99. L.S. Dewaraja – The Kandyan Kingom
100. L.S. Dewaraja - Muslim of Srilainkai
A ThousandYears of Ethnic Harmony - 1997
101. Dr. Sirima Kiribamune -
Muslim and the Trade of the Arabian Sea with Special Reference to Sri Lanka from the Birth of Islam to the Fifteenth Century in "The Muslim of Sri Lanka'Avenues to Antiquity - edited to by Dr. M.A. M. Shuken
102. The Mahawamsa - ed. W. Geiger -
LOIndon PTS-1950

Page 109
194
103
104
105,
106.
107.
108.
109.
110.
111.
12.
. G.F. Hourani - Arab - Seafairing
. B.J. Perera - The Foreign Trade and
Commerce of Ancient Ceylon in Ceylon Historical Journal Vol. I - No. 4 1952
S.A. Imam - 'Ceylon Arab Relations'-
Moors Islamic Cultural Home
Souvenir - 1944-45
Curlavamsa ed. W. Geiger
S.M. Yusuf - Studies in Islamic
History and Culture - London - 1970.
The "Rehila" of Ibn Batuta -
translated by Mahdi Husain - 1953.
Sri James Emerson Tennent - Ceylon Vol. I
M. Sameer"Archaelogical Evidence of Early
Arabs in Ceylon' - Moors Islamic Cultural Home 21st Anniversary Souvenir 1969.
H.A. J. Hulugalle - Ceylon of the Early
Dravellers - Colombo - 1965.
Rajavaliya - Translated by
G. Gunasekera - 1900-08

195
113. Kokila Sandesaya - ed. - Gunawardana
114. Gira. Sandesaya Vivaranaya
115
116
117
118
ed. V. Kumaratunge
. K. Indrapala - The Role of Peninsular Indian
Muslims Trading Communities in the Indian Ocean Trade -
Muslims of SrilankaAvenues to Antiquity ed, by Dr. M.A. M. Shukri.
. Dr. T.B.H. Abeysinghe - Muslims in Sri Lanka in
the Sixteenth and Seventeenth Centuries in "Muslims of Sri Lanka'- Avenues to Antiquity - ed. by Dr. M.A. M. Shurkri
Dr. K.W. Karl Gunawardana Muslims under
Dutch Rule up to the mid Eighteenth Century - in Muslims of Sri Lanka - Avenues to Antiquity ed, by Dr. Shukri
. Dr. Lorna Devaraja - The Muslims in the
Kandyan Kingdom in the Muslims of Sri Lanka - Avenues to Antiquity ed, by Dr. Shukri

Page 110
196
119. Dr. C.R. De Silva - Muslim Traders in the Indian Ocean in the Sixteenth Century and Portuguese Impacton Muslims of Sri Lanka -Avenues to Antiquity
ed, by Dr. Shukri
120. Dr. D.A. Kotelawala-Muslims under the Dutch
Rule in Sri Lanka - 1638-1796 - in Muslims of Sri Lanka -Avenues to Antiquity - ed. by Dr. Shukri

Other books publisbee by the author
1. Marriage Customs of the Muslims of Sri Lanka
2. The Problems of a Minority Community
3. இஸ்லாமிய கலாச்சாரம்
4. இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள்

Page 111


Page 112


Page 113
o.ot F^:
محل الللھایا گورئہ لہلہا
inför. جي بلاك ܬ݁ܶ%) لنبي یک مدل روانهایی) du ? بار به رنگ بيلة لسلص إع L عبيدر
Sf. 2 .عالم S
 
 
 
 

he cufic inscription on by Sir Alexander
B in the Transaction of atic Society" Vol. I