கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 3

Page 1


Page 2


Page 3

(U சிறுபான்மை சமூகத்தின்
பிரச்சினைகள்
மூன்றாம் பாகம்
இலங்கை அரசியலில் உயர்சாதிக் குடும்பங்களின் ஆதிக்கமும் சிறுபான்மை இன மக்களின் தவிப்பும்
அ. முகம்மது சமீம் B.A. (Hon) Dip-in-Ed. TEFL (London) முன்னை நாள் கல்விப்பணிப்பாளர் (இலங்கை)
றிசானா பப்ளிஷர்ஸ்
மருதானை, கொழும்பு - 10
இலங்கை, -

Page 4
நூல் பற்றிய விபரம்
முதற்பதிப்பு 1998
 ேஉரிமை ஆசிரியருக்கே
விலை : இந்தியா : ரூ. 50
இலங்கை : ரூ. 100/-
Title ORU SIRUPANIMA SAMUHATHIN
PIRACHINAIGAL
- Volumell
Subject : Political Science
Author : A.M. Sameem
No. of Pages : 184
Paper : 16.0 kg Creamwove ? .
Size : | 22 cm x 14 C
Types : 12 point
Binding Art Board
Printer Kurmaran Publishers
... 79, lst Street, Kumaran Colony, Vadapalani, Chennai-600026.
Publisher : Rizana Publishers & Book Sellers
Rizana Book Centre Abdullah Shopping Complex Maradana, Colombo - 10 Sri Lanka.
ISBN : 955-8138-03-7

சமர்ப்பணம்.
எனது கருத்துக்களுக்குத் தளம்
அமைத்துத் தந்த
இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்திற்கு
அட்டைப்பட விளக்கம்:
இலங்கையில் நடப்பது
ஜனநாயக ஆட்சியா?
குடும்ப ஆட்சியா?

Page 5
ஆசிரியரின் ஏனைய நூல்கள்
இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள்
இஸ்லாமிய கலாச்சாரம்
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் முதலாம் பாகம்
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் இரண்டாம் பாகம்
Marriage Customs of the Muslims of Sri Lanka
Problems of a Minority Community

கலாநிதி சி.க. சிற்றம்பலம் எம்.ஏ. பி.எச்.டி. பேராசிரியர், வரலாற்றுத் துறை, யாழ். பல்கலைக் கழகம்.
நூல் அறிமுகம்
ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள் என்ற நூற்றொடரின் மூன்றாவதுபகுதியாக இந்நூல் அமைகிறது. இது சமகால இலங்கையில் அரசியலாதிக்கத்தை எவ்வாறு பெரும்பான்மைச் சமூகமாகிய சிங்கள மக்களில், உயர்ந்தோர் குழாம் எனப்பட்ட "கொய்கம சாதியினர், தமது இனத்தின் பிற சாதியினரைக் கூட ஓரங்கட்டி அரசியலதிகாரத்தைச் சுவைத்து வந்துள்ளனர் என்பதைப் புள்ளி விபரங்களுடன், ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் தமிழில் வெளிவரும் முதல் நூலாகவும் அமைகிறது என்றால் புனைந்துரையன்று. இத்தகைய 'கொய்கம சாதியினர் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட, சிங்கள - பெளத்த பேரினவாதத்தை நல்ல கருவியாகவும் பயன்படுத்தினர். இதனால் இங்கே சிங்கள - பெளத்த பேரினவாதத்தின் வளர்ச்சி பற்றியும், அது ஏற்படுத்திய சவாலைச் சிறுபான்மைச் சமூகத்தினர் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதையும் தொட்டுக் காட்டுவது அவசியமாகின்றது.
இலங்கையில் பெளத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்து அறிமுகமானதும், இந்துக்களாக விளங்கிய சிங்கள மக்களின் மூதாதையினர் பெளத்தத்தை தழுவினர். பெளத்த மதம் முதன்மை மதமாக வளர்ச்சி பெற, அதன் காவலர்களாக அதனைப் பரப்பிய குருமார் எழுச்சி பெற்றனர். இதனால் அன்று தொடக்கம் இக்குருமார் நாட்டின் வரலாற்றில் காத்திரமாக பங்கினை வகிக்கத் தொடங்கினர். பெளத்தத்தின் வரலாறும், சிங்கள மக்களது வரலாறும் ஐதீகங்களைக் கொண்டு இவர்களால் எழுதப்பட்டது. இவ் ஐதீகங்களில் புத்த பிர்ான் இலங்கைக்கு

Page 6
Vi
வந்தமை, சிங்கள மக்களின் மூதாதையினனான விஜயன் கதை ஆகியன சிலவாகும். இவற்றின் மூலம் புத்தரின் அடிபட்ட இந்நாடு 'தர்மதீபம்’ என்பதும், இத்தர்ம தீபத்தின் சிங்கள மக்கள் மட்டுமல்ல, அவர்களில் பெளத்தர்களேதான் ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள் என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது. இதனால், பெளத்தமும், அதன் காவலர்களாகிய குருமாரும் அரசியலில் இணையத் தொடங்கினர். சுருங்கச் சொன்னால் அகிம்சா தர்மமாகிய பெளத்த நெறி அரசியல் மயமாக்கப்பட்டது வரலாறாகும். இதனால் 'வாழு, வாழ விடு" என்ற புனிதக் கோட்பாடுடைய இம்மதத்தின் கொள்கைகள், மக்கள் மத்தியில் நன்றாக வேரூன்றவில்லை. அதற்கான வாய்ப்பையும், குறிப்பாக கொய்கம சாதியினரால் வழி நடிாத்தப்பட்ட பெளத்த பீடங்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. எவ்வாறு சிங்கள மன்னர் காலத்தில் அரசும் - பெளத்த பீடமும் இணைந்திருந்தனவோ, அவ்வாறு சுதந்திர இலங்கையிலும் அரசர்களாகிய கொய்கமச் சாதியினரும், இச்சாதியினரினால் வழி நடத்தப்பட்ட பெளத்த பீடங்களும் இணைந்ததன் மூலம் சிங்கள - பெளத்த பேரினவாதம் விஸ்வரூபமெடுத்தது. இதனால் சிறுபான்மையினரின் உரிமைகளைக் கொடுப்பதற்குக் கூடப் பெளத்த பீடங்களின் அங்கீகாரம் அவசியம் என்பது தவிர்க்க முடியாததாயிற்று.
இத்தகைய சிங்கள பெளத்த பேரினவாதத்தை வளர்த்தெடுப்பதில் புத்தி ஜீவிகளின் பங்கும் கணிசமாக, இருந்தது. சிங்கள மக்கள்ை ஆரியர் என அழைத்து அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும், இவ்வாரியக் குடியேற்றங்கள் தான் ஈழத்தின் ஆதிக் குடியேற்றங்கள் என்றும், மேற்கு நாடுகளில் பயிற்சி பெற்ற வரலாற்று ஆசிரியர்களாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழர்கள் எடுப்பாளர்களாகவும், ஆக்கிரமிப்பாளர்களாகவும், வியாபாரிகளாகவும் பின்னர் தான் வந்தனர் என்ற பாளி நூல்களின் கருத்துக்கள் இவர்கள்

W
ஆய்வில் முன்னிலை பெற்றன. ஒருவகையில் பார்க்கும் போது சிங்கள மக்களே பூமிபுத்திரர்கள் என்ற கணிப்பும் இவர்கள் மத்தியில் காணப்பட்டது. கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிங்கள கலாசாரத்தின் மையப் பிரதேசமாக விளங்கும் அநுராதபுரம் உட்பட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இலங்கையின் ஆதிக் குடியேற்றம் பற்றிய புதிய தகவல்களைத் தந்துள்ளன. அதாவது இலங்கையில் ஆதிக்குடியேற்ற வாசிகள் தென்னிந்தியர்களே என்பதாகும். பெளத்தத்துடன் வந்த வட இந்திய கலாசாரத்தின் பரம்பலால்தான் தென்னிந்திய கலாசாரம் வட இந்திய கலாசாரச் சாயலைப் பெற்றுள்ளது என்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்து வதுதான் சிங்கள - தமிழ் மொழிகளிடையே வசன அமைப்பில் நிலவும் அடிப்படை ஒற்றுமையாகும். இவற்றோடு இணைந்தவைதான் சிங்கள - தமிழ் சாதி அமைப்பில் உள்ள ஒற்றுமை, உறவுப் பெயர்களில் காணப்படும் ஒற்றுமை ஆகியனவாகும். இருந்தும் ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட இப்புதிய தகவல்களைக் கூடப் பரிமாற்றம் செய்து, மக்கள் மத்தியிலும், பாடசாலைப் பாடப் புத்தகங்களிலும் இடம் பெற வைப்பதற்குப் புத்தி ஜீவிகளோ, அன்றி அரசோ முன்வராததொன்றே சிங்கள பெளத்த பேரின வாதத்தால் இவற்றை ஜீரணிக்க முடியவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இத்தகைய பின்னணியிற்றான் சிறுபான்மையினர் ‘தேசியம்’ என்ற போர்வையில் இயங்கிய சிங்கள பேரினவாதம் ஏற்படுத்திய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவில் காணப்பட்டது போன்று சுதந்திரப் போராட்ட காலத்தில் இலங்கையர் தேசிய வாதம்" என்ற ஒன்று வேரூன்றவில்லை. இங்கே தேசிய வாதம் என்பது சிங்கள பெளத்த பேரின வாதமாகவே கருதப்பட்டது. இதனை வளர்த்தெடுப்பதில் அநகாரிகா தர்மபாலா போன்றோரின் பங்கு கணிசமாக

Page 7
Vil
அமைந்திருந்தது. துர் அதிர்ஷ்டவசமாக இத்தகைய போக்கினைச் gFfuts இனங்கண்டு கொள்ளாத சிறுபான்மைச் சமூகத்தினர் அனைத்திலங்கையர் தேசி யத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
எனினும் இவர்களது கணிப்புத் தவறானது என்பதைப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் உறுதி செய்தன. உதாரணமாக 1918 இல் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த ஒரு நிறுவனத்தை இலங்கையில் அமைத்து இதன் சுதந்திரத்திற்காகப் போராட சேர் பொன் அருணாசலம் முயன்றார். இந்நிறுவனம் இலங்கைத் தேசிய காங்கிரசானது. அவர் இதன் முதல் தலைவரானார். பின்னர் இவ்வமைப்பு மேற்கு மாகாணத்திலுள்ள தமிழருக்கு ஒரு பிரதிநிதியைப் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்காத்தால் அவர் தாம் அமைத்த அமைப்பிலே இருந்து வெளியேற வேண்டி இருந்தது.
உண்மையிலேயே 1920 களிலிருந்து சிங்களத் தலைவர்கள் அரசியலில் முன்னிலை பெறத் தொடங்கியதோடு தமது சமூகத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கினர். இதற்குத்தக்க உதாரணங்களாக அமைவதுதான் அரசியல் சீர்திருத்த காலத்தில் தங்களது பிரதி நிதித்துவத்தை, உறுதிப்படுத்த இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகும். ஜனநாயகம் என்பது மக்களாட்சியாக அமைந்தாலும் கூட, உண்மையிலேயே இது பெரும்பான்மையினர் ஆட்சிதான். சிறுபான்மையினர் மன மகிழ்ச்சியில் தான் உண்மையான ஜனநாயகம் அமைந்து விடுகின்றது என்ற கோட்பாடு இலங்கை போன்ற நாடுகளில் பேணப்படவில்லை. டொனமோர் அரசியல் சீர்திருத்தம், சிறுபான்மையினருக்குப் பதுகாப்பாக அமைந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தையும், சர்வசன வாக்குரிமையையும் நல்க,

ix
பெரும்பான்மைச் சமூகத்தினரின் அரசியல் மேலாதிக்கம் உறுதி பெற்றுள்ளது.
அரசியல் ஆதிக்கத்தைச் சுவைக்க இக்காலச் சிங்களத் தலைவர்கள், குறிப்பாக கொய்கம சாதியைச் சேர்ந்தவர்கள் விரும்பினார்கள். இவர்களில் பலர் ஏற்கனவே பிரித்தானியர் ஆட்சியில் சலுகை பெறுவதற்காக மதம் மாறிப் பதவி பெற்ற குடும்பத்தினர் ஆகும். இப்போது அரசியலதிகாரமும் பழைய எஜமானர்களிலிருந்து தமக்கே கைமாறப் போகிறது என்பதை உணர்ந்ததும் விடிய விடிய பெளத்தர்களாகவும் மாறப் பின்னிற்கவில்லை. இவர்களை வரலாற்றாசிரியர்கள் 'டொனமோர் பெளத்தர்கள் என அழைக்கின்றனர்.
இவ்வாறு மதம் மாறியதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட சிங்கள - பெளத்த தேசியவாதத்தின் காவலர்களாக இவர்கள் தம்மை இனங்காட்ட விரும்பினர்.
இவ்டொனமோர் பெளத்தர்கள்தான் சிறுபான்மை யினரை ஒதுக்கி 1936 இல் தனிச் சிங்கள மந்திரிசபையை
அமைத்தவர்கள். சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கும் பிரேரணையை 1944 இல் சட்டசபையில் கொண்டு வந்தவர்கள். சிங்கள DSIF6
அமைத்தவர்கள் பிரித்தானியர் சுதந்திரம் வழங்கும் காலகட்டத்தில் தமது ராஜதந்திரத்தாலும் சூழ்ச்சியாலும், சிறுபான்மையினரைப் பிரித்து, 95 pel கொய்கம? மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திச் சோல்பரி அரசியற்றிட்டத்தை நிறைவேற்றியவர்களும் இவர்கள்தான்.
பின்னர் சுதந்திர இலங்கையில் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்களும் இவர்கள்தான். இவர்களது முயற்சியால் பின்னர் பெளத்த மதம் மட்டும் அரசியல் திட்டங்களில் அரச மதமாகியது.
மாறாக, பிரித்தானியரும் சுதந்திரம் வழங்கியபோது சிறுபான்மையினரின் நலன்களை உறுதிப்படுத்தும் ஒரு அரச

Page 8
X
அமைப்பை விட்டுச் செல்லவில்லை. இத்தகைய தவறைத் தாம் விட்டதைப் பின்னர் சோல்பரிப் பிரபுவே ஒப்புக் கொண்டுள்ளார். இத்தகைய சோல்பரி அரசியற் திட்டத்தில் சிறுபான்மையினர் பிரதிநிதிகள் 9Cl5 கணிசமான இடத்தினைப் பெறுவதன் மூலம், தமது கொய்கம அரசியல் ஆதிக்கத்திற்குச் சவாலாக அமைந்து விடுவார்கள் என எண்ணிய திரு. டி.எஸ். சேனநாயக்கா குழுவினர், மலைநாட்டுத் தமிழரின் பிரதிநிதித்துவத்தை அகற்ற, பிரஜா உரிமைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். இத்தகைய சட்டமும் சில தமிழ்த் தலைவர்களின் அனுசரணையுடன் நிறைவேறியது.
சுதந்திர இலங்கைப் பாராளுமன்றம் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கை மலையகத் தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கியது. % அதுமட்டுமல்ல, சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சனத் தொகையை மட்டும் கணக்கிடாது அவர்கள் வாழ்ந்த பரந்த பிரதேசங்களின் அளவைக் கொண்டும் பிரதிநிதித்துவம் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் வட கிழக்கு மாகாணங்களில், வாழ்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரவேசத்திற்கான வாய்ப்புக் கிட்டியது. இவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிப்பதற்குத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் திரு. டி.எஸ். சேனநாயக்கா அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் பாரம்பரியமாக இவர்கள் வாழ்ந்த பூமிகள் பறிபோயின. புதிய சிங்களத் தொகுதிகள் உருவாகின. திருகோணமலை மாவட்டத்தைத் தமிழரும், அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் மக்களும் இழந்தனர்.
சிங்கள பெளத்த பேரினவாதம் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்த முழு நிருவாக இயந்திரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நடவடிக்கைகளையும் மிகக் கச்சிதமாகச் செய்து வந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புப்

xi
படைகளில் சிறுபான்மையினரின் விகிதாசாரத்திற்கேற்பக் கூட இடமளிக்கப்படவில்லை. நிருவாகத்தின் முக்கிய துறைகளின் எஜமானவர்களாக, அரச சட்டங்களை அமுல்
நடாத்துபவர்களாக, பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பிரதான பங்காளிகளாக விளங்கினர். இவர்களின் நடவடிக்கைகள் "தெய்வம் விடை
கொடுத்தாலும் பூசாரி விடான்’ என்ற பாங்கிலேயே அமைந்துள்ளன. சிங்கள - தமிழ் மொழிகளை அரசாங்க மொழிகளாக நாட்டின் சட்டம் அங்கீகரித்தாலும் நடைமுறையில் இது அமுலாக்கம் பெறாததொன்றே இதற்கு நல்ல உதாரணமாகும்.
மாறாக, மிக ராஜதந்திரத்துடனும், விழிப்புடனும் செயற்பட்ட சிங்கள - கொய்கம ஆதிக்கவாதிகளின் போக்கினைச் சிறுபான்மைச் சமூகத்தினர். சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதனால் ஒன்றுபட்டுச் செயற்படவும் முடியவில்லை. 1924 இல் கண்டியர் தேசிய சங்கம் ஒரு சமஷ்டி அமைப்பை டொனமோர்க் கொமிஷனர் முன்னிலையில் கோரியபோது சிறுபான்மையினர், சிங்கள பேரினவாதத்தைத் தடுக்க உதவும் அமைப்பே இது என உணர்ந்து அதைப் பற்றி நிற்கவில்லை.
சிறுபான்மையினரின் "மரண ஓலை’ 6 வர்ணிக்கப்பட்ட டொனமோர் அரசியல் திட்டத்தை அரச சபையில் வாக்கெடுப்பில் நிறைவேற உதவியவர் ஒரு தமிழரே. 1936 இல் அமைக்கப்பட்ட தனிச் சிங்கள மந்திரி சபையின் ஆக்கத்திற்குக் கணக்குப் போட்டுக் கொடுத்தவரும் ஒரு தமிழ்ப் புத்தி ஜீவியே. சோல்பரிக் குழுவினர் முன்னிலையில் திரு. ஜி.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் ĝ95lfĝ5l 50:50 என்ற திட்டத்தை முன்வைத்திருந்தாலும் கூடச் சிறுபான்மைச் சமூகத்தவர் அனைவரையும் ஒரே கொடிக் கீழ் அணைத்துச் செல்லும் தகமை அவரிடம் இருக்கவில்லை. மாறாகச் சிறுபான்மைச்

Page 9
xii
சமூகத்தினரைப் பிரித்து, தமது சாதியின் மேலாண்மையை மேலும் உறுதிப் படுத்துவதில் திரு. டி.எஸ். சேனநாயக்கா போன்றவர்களின் ராஜ தந்திரம் வெற்றி கண்டது.
சுதந்திர இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தினர் வெவ்வேறு அணுகு முறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். மலையகத் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதோடு அவர்களின் அரசியல் அஞ்ஞாத வாசம் உறுதியாயிற்று. எஞ்சியிருந்த சிறுபான்மைப் பிரிவினரில் முஸ்லிம்கள் மாறி மாறி வந்த இரு தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமது சமூக நலன்களைப் பாதுகாக்கலாம் என எண்ணினர். எனினும் இவர்களின் எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்த 666 அளிக்கவில்லை என்பதை முஸ்லிம் காங்கிரசின் எழுச்சி கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழர்களின் தலைமைத்துவமும் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடமிருந்து திரு. எஸ்.ஜே.வி. செல்வ நாயகத்திடம் மாறியது. இதுவரை காலமும் பாராளுமன்றித்தில் தமது எண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் தமது சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கலாம் எனத் தமிழ்த் தலைவர்கள் நம்பினர். இப்போது காலங்கடந்த நிலையில், முதல் முதலாக ஒரு சமஷ்டி அமைப்பில்தான், தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேறும் என உணரத் தொடங்கினர். திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நேர்மை, நாணயம், விசுவாசம் தமிழரின் வரலாற்றில் ஒரு திருப்புமுனைாக அமைந்தது. தமிழ் மக்கள் தனியான தேசிய இனம், அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் ஒரு தேசிய சின்னத்திற்குரிய பண்புகளுடன் வாழும் தகுதி அவர்களுக்குண்டு என்பதை எடுத்துக்காட்டிய திரு. செல்வநாயகம் அவர்கள், சிங்கள பெளத்த பேரின வாதத்தின் சூழ்ச்சிகளையும் நன்கறிந்திருந்தார். இதனால் கால் நூற்றாண்டாக அவரது தலைமை மேலோங்கிய காலத்தில் பேரினவாதிகளின் ராஜதந்திரத்தில் சிக்காத ஒரே

xiii
ஒரு தமிழ்த் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவரானார். மாறி மாறி வந்த அரசுகளுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கைகள், போராட்டங்கள் ஆகியன இப்பேரின வாதிகள் சிறுபான்மைச் சமூகத்தவருடன் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதையும் எடுத்துக் காட்டியது. முதல் முதலாகச் சிறுபான்மையினரின் அரசியல் அகராதியில் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற பதத்தைப் புகுத்தி முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழர் ஆகியோரை ஒரே அணியில் திரள வைக்க முயன்றவரும் திரு. செல்வநாயகம் அவர்கள்தான். இருந்தும் திரு. செல்வநாயகத்தினையும், தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தேசிய வாதத்தையும் சரியாக இனங்காண மறுத்த சிங்களப் பேரினவாதிகள் இவர்களை வகுப்புவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் நாமமிட்டு, வகுப்புக் கலவரங்களைத் தூண்டி விட்டும் பலாத்கார நடவடிக்கைகள் மூலமும் தமிழ்த் தேசியத்தை அடக்க முற்பட்டனர். இதன் விளைவே இன்று நாம் காணும் யுத்தமாகும். Y
இவ் யுத்த சூழலில் திரு. முகமது சமீம் அவர்கள் எழுதிய இந்நூல் சிறுபான்மைச் சமூகத்தினர் இந்நாட்டு அரசியல் போக்கினைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் கடந்தகால தமது நடவடிக்கைகளைச் சுயவிமர்சனம் செய்யவும் மதிப்பீடு செய்யவும் நல்ல ஒரு சந்தர்ப்பம் அளிக்கும் ஒரு வரலாற்றுப் பொக்கிசமாகிறது என்றால் மிகையாகாது. ஆசிரியரின் தளராத முயற்சியைப் பாராட்டுவதோடு இன்னும் இதுபோன்ற நூல்களை எழுதிச் சிறுபான்மைச் சமூகத்தினரை விழிப்படையச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திருநெல்வேலி, யாழ்ப்பாணம், 19.10, 1998

Page 10
xiv
என்னுரை
1948 -ம் ஆண்டு இலங்கை ஒரு சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்ற ஜனநாயக முறையை ஒட்டி இலங்கையும் ஜனநாயக அரசியலில் காலடி எடுத்துவைத்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களுக்காக செயல்படும் ஒரு மக்கள் அரசாங்கம் என்று ஜனநாயகத்திற்கு வரைவிலக்கணம் கூறினார் அமெரிக்க ஜனாதிபதி அப்பிரகாம் லிங்கன். ஒரு பொதுத் தேர்தலின் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து ஆளும் உரிமையை அவர்களுக்கு மக்கள் வழங்கினார்கள். இப்பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு அதிகமான தொகுதி களில் வெற்றிபெற்ற, அரசியல்கட்சியே ஆட்சி உரிமையைப் பெற்றது. இதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால் உண்மையில் நடப்பதென்ன?
இப்புத்தகத்தின் முகப்பில் இலங்கையின் சுதந்திரக் கொடி வரையப்பட்டிருக்கிறது. பெரும் பான்மைசமூகத்தைப் பிரதிபலிக்கும் சிவப்பு நிறத்தில், ஒரு சிங்க உருவமும், தமிழர்களைச் குறிக்கும், மஞ்சள் நிறமும், முஸ்லிம்களைக் குறிக்கும் பச்சை நிறமும் இக்கொடியில் காட்டப்பட்டுள்ளது. எனவே, எல்லா சமூகங்களையும் பிரதிபலிக்கும் முகமாக இக்கொடி அமைந்திருக்கிறது. இல்லையா? இலங்கையில் ஜனநாயகம் என்பது ஒரு பம்மாத்து.
இவ்வரசியலை உன்னிப்பாக ஆராய்ந்தால், பெரும்பான்மையினமான சிங்கள இனத்தின் ஆதிக்கத்தையே நாம் காண்கிறோம். இவ்வாட்சி வர்க்க அடிப்படையில் அமைந்திருப்பதையும் நாம் காணலாம். இலங்கை அரசியலில், வர்க்க அடிப்படையோடு, வர்ண அடிப்படையும் பின்னிப் பிணைந்திருப்பதையும் நாம் அவதானிக்கலாம். உயர் வர்க்கத்தைச் சேர்ந்த உயர் சாதிக்குடும்பங்களின் ஆதிக்கத்தை நாம் காணத் தவறமாட்டோம்.

XV
இந்நூலின் அடிப்படைக் கருத்து, என்ன வென்றால் ஜனநாயகம் என்ற பெயரால், இங்கே நடத்தப்படுவது ஒர் அரசியல் பித்தலாட்டம் என்பதே. முதலாளித்துவ அடிப்படையில் தோன்றிய அரசியல் கட்சிகள்தான் இச்சாதி முறையைக் கையாள்கிறார் களென்றால் மார்க்சிய கொள்கையைக் கொண்ட மார்க்சியக் கட்சிகளும் இச்சாதி அடிப்படையிலேயே இயங்குவதையும் நாம் காணலாம்.
சாதி உணர்வில் ஊறிப்போயிருக்கும் சிங்கள சமுதாயம், சாதி அடிப்படையில்தான் சிந்திப்பார்கள், என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. எனவேதான், மார்க்சீயக் கட்சிகள் கூட தமது வேட்பாளர்களைத் தொகுதிகளுக்குத் தெரிவு செய்யும் போது, அத் தொகுதியிலுள்ள மக்கள் எச்சாதியைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே தெரிவு செய்வார்கள். கொள்கை அடிப்படையிலல்ல. சிங்கள சமூகத்திலுள்ள உயர் சாதியைச் சேர்ந்த கொய்கம சாதியினர் எப்படி தமது சாதியின் அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு அரசியல் அமைப்பைத் தமக்குச் சாதகமாகப் பாவித்தார்கள் என்பதை இந்நூல் விளக்கமாகக் கூறுகிறது. உயர் சாதியைச் சேர்ந்த மூன்று குடும்பங்களே இந்த ஐம்பது வருட காலத்தில் ஆட்சியை நடத்தின என்ற உண்மையும் இதில் தெளிவாக்கப் பட்டுள்ளது. இம் மூன்று குடும்பங்களில் ஒன்று, முன்னை நாள் ஜனாதிபதியாக விருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால், அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டது. ஆகவே, இன்று இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்யும் பொறுப்பு இரண்டு குடும்பங்களுக்கே விடப்பட்டிருக்கிறது.
மிதவாதக் கட்சிகளிடையே இந்த நிலை யென்றால், மார்க்சீய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு புரட்சியின் மூலம் அரசியலைக் கைப்பற்ற முனைந்த ஜனதா விமுக்தி பெரமுனையிலும் கூட இச்சாதி வேற்றுமை இருக்கத்தான் செய்தது. இந் நூலின் கடைசி அத்தியாயம் இதனை விளக்குகிறது.

Page 11
xvi
ஜே.வி.பி. இயக்கத்தைப் பற்றி கடைசி அத்தி யாயம் எழுதுவதற்கு முக்கிய காரணம் இவ்வியக் கத்தினர் தங்களுடைய நடவடிக்கைகளில் ஒரு புதிய முறையைக் கையாள்வதே. 1970 -ம் ஆண்டுகளில் இந்திய எதிர்ப்பு என்று தொடங்கினர். 1988 -ம் ஆண்டில் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமெதிராகப் பிரச்சாரம் செய்தனர். இப்பொழுது முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி சிங்கள பாமர மக்களின் அனுதாபத்தைப் பெற முயல்கின்றனர். சமீபத்தில் கலகெதரை என்ற கிராமத்தில் முஸ்லிம்களின் வீடு களையும், கடைக ளையும் உடைத்து முஸ்லிம்களைத் தாக்கினர். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஏறக்குறைய 69 லட்சம் என்று கணிக்கப்பட்டது. ஜே.வி.பி. திரும்பவும் தலை தூக்கினால் முஸ்லிம்கள் வெகுவாகக் பாதிக்கப் படுவார்கள் என்பதற்கு இது ஒர் அறிகுறி:
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சாதிப்பிரிவினை இல்லையென்றாலும் பணக்காரக் குடும்பங்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தென்கிழக்குப் பிரதேசத்தில் இது காலவரையும் காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்த வர்களே அரசியல் தலைவர் களாகவும் பாராளுமன்றப் பிரதிநிதிகளாகவும் இருந்து வந்திருக்கின்றனர். இப் பிரதேசத்தில் பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறையின் முழு பரிமாணங்களையும் காண்கிறோம். ஒரு விவசாய - பொருளாதார அடிப்படையில் வாழ்ந்து வரும் ஒரு சமுதாயத்தோடு பின்னிப் பிணைந்திருப்பதுதான் பிரபுத்துவ சமுதாய அமைப்பு என்பதை வரலாற்றிலிருந்து அறிகிறோம். இங்கே, பெருநிலச் சொந்தக் காரர்களாகவும், ஆட்சியாளர் களாகவும் இருக்கும் இவர்கள் விதானை, வட்ட விதானை, போடியார் என்றெல்லாம் நாம கரணங்களைச் சூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் உள்ள குடும்பங்களிலெல்லாம் அதிக செல்வாக்குள்ள குடும்பம்தான் காரியப்பர் குடும்பம்.

xvii
இவர்கள், அரசியலில் மட்டுமல்ல, கல்வி, நீதி, பொருளாதாரம் ஆகிய துறைகளிலெல்லாம் தமது செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். சுதந்திரத் திற்குப் பின், முதலாவது பாராளுமன்றத்தில் ஒரு காரியப்பர் அங்கத்தவராயிருந்தார். பிறகு வந்த பாராளுமன்றங்களில், அங்கத்தவர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் இக்குடும்பத்தினரே. முன்னை நாள் நிதி அமைச்சர் முஸ்தபா, விவசாய அமைச்சர் மன்சூர் அஹம்து, இக்குடும்பத்தில் பெண்ணெடுத்தவர்கள், சட்டத்தரணி களாகவும், நீதிபதிகளாகவும், பேராசிரியர்களாகவும், டாக்டர்களாகவும், பொறியிலாளர்களாகவும் இன்று நாட்டில் பெரிய அந்தஸ்துடன் வாழ்பவர்கள் ஏதோ ஒரு வகையில் இக்குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர்களே. ஏனைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாதாரண தொழில்களோடு திருப்தியடைய வேண்டும். சமீபத்தில் தோன்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபும் இக்குடும்பத்தைச் சேர்ந்தவரே. புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களைக்கூட இக்குடும்பத்தினர்தான் அதிகாரம் செய்கின்றனர். பாமர முஸ்லிம்கள் இதனை அறியாதது தான் விந்தையிலும் விந்தை.
அட்டைப் படத்திலுள்ள இல க மக்களைப் பிரதிபலிக்கும் தேசியக் கொடி ஒரு/பழ்மர்த்து என்பது விளங்கவில்லையா? இனி நூலை ਜੋ ஜனநாயகம்
என்ற பொய்மை விளங்கும்.
மடிகே, கலகெதர ஆF முழுமேg95I சமீம் 10-7-98

Page 12
Wiiא
10.
11.
12.
13.
பொருளடக்கம்
இரண்டாவது உலக மகா யுத்தத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட நன்மை இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய பணி இலங்கை அரசியலில் சாதிப்பிரிவினையின் பாதிப்பு சிங்கள சமூகத்தவரிடையே இருக்கும் சாதி வேற்றுமை இலங்கை அரசியலில் கொய்கம சாதியினரின் ஆதிக்கம் கொய்கம சாதியினரின் அதிகாரத்தைப் பலப்படுத்திய தேர்தல் ஆணைக்குழுக்கள் 1930 -க்குப் பிறகு கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் தேர்தல் ஆணைக்குழுக்களின் ஒருதலைப் பட்ச சிபாரிசுகள்
கண்டி கொய்கம சாதியினரின் அரசியல் ஆதிக்கம் தோன்றியமை
தாழ்த்தப்பட்ட சாதியினரின் அரசியல் வளர்ச்சி
இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும்
இரு உயர்சாதிக் குடும்பங்கள்
15
23
40
48
58
65
72
78
சேனாநாயக்க - விஜயவர்தன - பண்டாரநாயக்க
ரத்வத்தைக் குடும்பங்களின் ஆட்சி புதிய ஆட்சியாளர்களின் முதலாளித்துவப் போக்கு
88
95

xix
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
இலங்கை தேசியம், சிங்கள - பெளத்த தேசியமாக உருவெடுக்கிறது
மார்க்சியக் கட்சிகள் மக்கள் மத்தியில்
செல்வாக்கிழந்தமை ஐக்கிய தேசியக் கட்சியின் உருமாற்றம் ஜேஆர். ஜயவர்தனாவின் அரசியல்
சாணக்கியம்
சுதந்திரத்திற்குப் பின், கூட்டு அரசாங்கம் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் அரசியல் யாப்பு மாற்றம் - சில ஆலோசனைகள் ஜேவிபி இயக்கத்தில் சாதிவேறுபாடு
உசாத்துணை நூல்கள்
103
11O
117
124
131
137
148
161

Page 13

ஒரு சறுபானமை சமூகததின பிரசசினைகள் 1
1. இரண்டாவது உலக மகாயுத்தத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட நன்மை
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில், அரசியல் பொருளாதார் சமூகத்துறைகளின் வளர்ச்சியைப் பற்றியும் இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமை இலங்கையரால் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்புள்ள அரசாங்கம் வேண்டும், என்ற பெரும்பான்மை இலங்கை மக்களின் கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் தட்டிக்கழித்தே வந்திருக்கிறது. ஆனால் உலக சம்பவங்கள் இலங்கையை சர்வதேச அரசியல் வியூகத்தின் மத்தியில் நிறுத்தின. உலக அரசியல் அரங்கத்தில் இலங்கை முக்கியத்துவம் பெற்றது.
1941 -ம் ஆண்டு இரண்டாவது உலக மகாயுத்தத்தில், கிழக்கு நாடுகளுக்கு எதிராக ஜப்பான் பிரவேசித்த காரணத்தால், கிழக்குப் பிராந்தியம் வல்லரசுகளின் ஒரு முக்கிய யுத்தத்தளமாக அமைந்தது. பேர்ள் துறைமுகத்தில் இருந்த அமெரிக்காவின் கப்பற்படை ஜப்பானினால் நிர்மூலமாக்கப்பட்டது. இதை அடுத்து ஜப்பான் கொரியாவையும், சீனாவின் ஒரு பெரும்பகுதியையும், இன்றைய வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, லாஒஸ், மலேசியா, சுமத்ரா ஆகிய கிழக்கிந்தியத் தீவுகளைத்தன் ஆதிக்கத் தின் கீழ் கொண்டு வந்து, சிங்கப்பூரையும் கைப்பற்றித் தனதுஅடுத்த இலக்காகிய இலங்கையையும் தாக்குவதிற்கு ஏற்பாடுகளைச் செய்து வந்தது. இலங்கை ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் வந்தால், மத்தியகிழக்கு நாடுகளின் எண்ணெய்த்தளங்களைக் கைப்பற்றும் நோக்குடன், வட ஆப்ரிக்காவில், துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கும், ஜெர்மன் படைக்ளுக்கும், ஜப்பான்

Page 14
2 அ. முகம்மது சமிம்
படைகளுக்குமிடையே தொடர்பு ஏற்படும் பட்சத்தில் நேசநாடுகளின் தோல்வி உறுதியாகி விடும் என்ற பயத்தில் பிரித்தானியா இலங்கையின் மீது அதிக கவனத்தைச் செலுத்தத் தொடங்கியது. இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரசின் சுதந்திரப் போராட்டத்தினாலும், சுபாஸ் சந்திரபோசின் தலைமையில் ஜப்பானுடன் இணைந்து இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற இயக்கத்தினாலும் இங்கிலாந்தின் இந்திய சாம்ராஜ்யம் ஆட்டம் காணத்தொடங்கியது. எனவே இலங்கையின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்தது. இலங்கையின் திருகோணமலை இயற்கைத் துறைமுகம், இங்கிலாந்தின் யுத்தக்கப்பல்களுக்கு ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
இந்திய சமுத்திரத்தின் கப்பற்போக்குவரத்தில் ஒரு கேந்திர தளமாக அமைந்த இலங்கைய்ை பிரித்தானிய அரசாங்கம் தனது கிழக்குப் பிராந்திய யுத்தகளத்தின் ஒரு முக்கிய தளமாக அமைக்க முடிவெடுத்தது. கிழக்குப் பிராந்திய யுத்த நிர்வாகத்தின் தலைவரான மெளன்ட் பேட்டன் பிரபு, தனது தலைமைக்காரியாலயத்தை பேராதெனியாவில் அமைத்துக் கொண்டார். கப்பற்படைத் தளபதி லேய்ட்டன், இலங்கையின் ஆங்கிலப் படைகளுக் கெல்லாம் தலைவராக நியமிக்கப்பட்டார். சிவில்நிர்வாகம் கவர்னரின் கையிலிருந்தாலும் பெரும்பாலும் எல்லா நடவடிக்கைகளும் தளபதி லெயிட்டனின் கீழ்வந்தது. இலங்கையை யுத்த முஸ்தீபுக்குத் தயாராக்குவதற்கு இலங்கையின் பொது நிர்வாகத்தையும் யுத்த நடவடிக்கை களையும் மேற்பார்வை செய்வதற்கு ஒரு யுத்த சபை நிறுவப்பட்டது. தளபதி லெயிட்டனின் தலைமையில் இருந்த இந்த யுத்த சபையில் கவர்னரும், முப்படைத் தளபதிகளும், அமைச்சர்களும் இருந்தனர். சிவில் பாது காப்புக் கமிஷனராக ஒஈ. குணத்திலக்க நியமிக்கப்பட்டு, இச்சபையில் அங்கத்தவராகவும் கடமையாற்றினார்.

rrLiAJ SAATAAS LL LLL LLLLL LA AAHLH AHL AA AA AALL LLLLL L LLLLL LLLLLLLLS
இலங்கையின் யுத்த நடவடிக்கைகளை நிர்வகிப் பதன் மூலம் இலங்கை அரசியலைத் தாமே ஏற்று நடத்துவதற்குத் தமக்கு அறிவும் ஆற்றலும் இருக்கிற தென்று பிரித்தானிய ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதை உணர்ந்த டி.எஸ். சேனாநாயக்கா யுத்த சபைக்குத் தமது முழு ஆதரவை அளித்ததுடன் தன்னுடைய சகாக்களுக்கும் இதன் நன்மையை விளக்கிக் காட்டினார். 1945 -ம் ஆண்டில் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வேண்டுமென்று இங்கிலாந்து காலனித்துவ அமைச்சருடன் தொடர்பு கொண்ட போது இவ்வுண்மையை, சேனாநாயக்கா எடுத்துக் காட்டினார். 1945 -ம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக்கா அமைச்சர் சபைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் பின்வருமாறு கூறினார். டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதற்கு நாம் தகுதியுடையவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு, டொனமூர் அரசியல் அமைப்பில் எமக்குக் கிடைத்த அரசியல் அனுபவத்தையும் அரசியல் முதிர்ச்சியையும், பிரித்தானிய அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டினேன். பிரிட்டனின் யுத்த நடவடிக்கைகளுக்கு எமது முழு ஆதரவையும் கொடுத்ததன்மூலம், பிரித்தானிய காமன் வெல்த்தில் எவ்வளவு நம்பிக்கையும் பற்றும் வைத்திருக் கிறோம் என்பதையும் எடுத்துக் காட்டி யுள்ளேன். ஆகவே, எமக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க மறுப்பதற்கு பிரிட்டனுக்கு எவ்வித நியாயமுமில்லை.
பிரித்தானிய அரசாங்கத்திற்கு டிஎஸ். சேனா நாயக்கா தன்னுடைய அறிக்கையில் மேலும் கூறியதாவது யுத்தம் இறுதி வரையிலும் அமைச்சரவை யுத்த சபையில் அங்கத்துவம் வகித்துக் கடமையாற்றியது, தென் கிழக்காசிய யுத்த முஸ்தீப்புக்கு இலங்கை ஒரு மூலதனமாக உபயோகிக் கப்பட்டது. யுத்தத்துக்கு அத்தியாவசிய பொருளானறப்பர் தேவையில் 90% சதவிகிதம் இலங்கையே வழங்கியது யுத்தத்திற்குத் தேவையான கரிவங்கத்தையும் இலங்கைதான்

Page 15
p 9. (PċitbLDLoġb) 9 LULJU
கொடுத்துதவியது. இலங்கையின் சிவில் பாதுகாப்பைத் திட்டமிட்டு வழிநடத்தியவர்களும் இலங்கையரே. எனவே, இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவதற்கு இங்கிலாந்து கடமைப் பட்டிருக்கிறது என்பதை இங்கிலாந்து அரசாங்கத்தின் காலனித்துவ அமைச்சருக்கு உணர்த்தினார்.
இலங்கை டொமினியன் அந்தஸ்தைப் பெறும் தகுதியை அனுபவத்தால் பெற்றது. மூலோய சம்பவத்திற்கு பிறகு கவர்னரும் தன்னுடைய அதிகாரங்களில் சிலவற்றை மந்திரி ச்பைக்கு விட்டுக் கொடுத்தார். முன்னைய நிலைமையான நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட சபைகளின் தலைவர்தான் அமைச்சரவையில் தம்முடைய விருப்பம் போல் செயலாற்றாமல் கபினட் முறைபோல் ஒரு தலைவரின் கீழ் அமைச்சர்கள் இயங்கத் தொடங்கினார்கள். நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட சபைகளின் அங்கத்தவர்களும் ஒரு பாராளுமன்றத்தில் பின் வரிசை யிலுள்ள அங்கத்தவர்கள் போல் நடக்கத் தொடங்கி னார்கள். சுருங்கக் கூறின் பாராளுமன்ற அரசியல் அமைப்பு முறை உருவம்பெறத் தொடங்கியது. 1942 -ம் ஆண்டில் இலங்கையின் முதுபெரும் தலைவராக இருந்த டி.பி. ஜயத்திலக்க, அரசியலிலிருந்து ஒய்வுபெற்று இந்தியாவுக்கு உயர் ஸ்தானிகராக சென்ற காரணத்தினால் இலங்கை அரசியலில் தனிப் பெருந்தலைவராக டி.எஸ். சேனா நாயக்கா பொறுப்பேற்கிறார். நிறை வேற்றும் அதிகாரம் கொண்ட சபைகளின் கூட்டங்களும் அருகியே வந்தன. யுத்த சபை யுத்த அமைச்சரவையாக மாறியது. டொனமூர் அரசியல் காலத்தில் கடந்த இருபது வருடங்களாக அரச சபை உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற இனவாத விவாதங்கள் மறைந்து ஜப்பானிய படையெடுப்புக்குப் பயந்து எல்லா இனமக்களும் நாட்டைப் பாதுகாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டார்கள். ஜி.ஜி. பொன்னம்பலம் கூட உணவு உற்பத்தியில் இறங்குமாறும் யுத்த நிர்வாகத்திற்கு

чуUy vy-u u ovi ov LL CUJUozogotovo uy crorrow rou Cool VV
உதவுமாறும் தன்னுடைய யாழ்ப்பாணத்து மக்களுக்குக் கூறினார். எதிர்கால வரலாற்றாசிரியர்கள் 1942 -ம் ஆண்டை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிப்பார்கள்; ஏனென்றால் இவ்வருடம் தான் எல்லா இனமக்களும், தம் வேற்றுமைகளை மறந்து நாட்டின் பாதுகாப்பிற்காக ஒற்றுமையோடு ஒத்துழைத் தார்கள்” என்று கவர்னர் 1942 -ம் ஆண்டு மே மாதம் கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறினார். ஆனால் இந்நிலை நிரந்தரமானதல்ல என்பதை பாவம் கவர்னர் அன்று உணரவில்லை.
சிங்கள இன மக்களை உறுத்திக் கொண்டிருந்த ஒரு முக்கியமான பிரச்சினை தற்காலிகமாக நீக்கப்பட்டது. இதுதான் இந்தியத் தமிழர்கள் மீது சிங்களவர் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி. ஜப்பானின் படை யெடுப்புப் பீதியினால் கொழும்பில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த இந்திய வியாபாரிகள் நாட்டை விட்டும் ஓடினார்கள். தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த இந்தியத் தொழிலாளர்களில் பலர் இந்தியாவுக்குச் சென்றனர்.
இந்திய வர்த்தகர்கள் சென்றதனால் உணவுப் பொருட்களுக்கும் துணிமணிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிங்கள சிறுவியாபாரிகள் இந்திய வர்த்தகர் களிடமிருந்து பெற்ற கடனுதவிகளும், பொருளுதவியும் இப்போது நின்றுவிட்ட படியால், வர்த்தகத்திலும் ஒருவித ஸ்தம்பித நிலையேற்பட்டது. ஆகவே அரசாங்கத்திற்கு உணவு வினியோகிப்பதில் முழுப் பொறுப்பேற்று நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன.
யுத்தத்திற்குத் தேவையான பொருட்களில் றப்பரும்
ஒன்றானபடியால் இலங்கை றப்பருக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. உலகிலேயே றப்பர் உற்பத்தியில் முதலிடம்

Page 16
VV یحجi۰ یست ساسا س میu است امتت
வகித்த மலேயா ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் வந்தபடியால் இலங்கை றப்பரின் தேவை இன்னும் அதிகரித்தது. றப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அதிகமான இந்தியத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்திருந்தபடியால், றப்பர் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. தேயிலை றப்பர் தோட்டங்களில் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சி காரணமாக இலங்கை அரசாங்கத்தின் இந்தியர்களை தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் கொள்கை இப்பொழுது நேர்மாறாக மாற்றப்பட்டது. திரும்பவும் இந்திய தொழிலாளர்களை இலங்கைக்குத்தருவிக்க வேண்டும் என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய தொழிலாளர்கள் இலங்கை வருவதை இந்திய அரசாங்கம் தடை செய்தது. இத்தடையை நீக்கும் படி இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத் திடம் வேண்டுகோள் விடுத்தது. இலங்கை இந்தியத் தமிழர்களின் அரசியல் அந்தஸ்து நிர்ணயிக்கப்படாத நிலையில் இருக்கும் வரையில் இத்தடையை நீக்க முடியாது என்று இந்திய அரசாங்கம் நிபந்தனைகளை விதித்தது. இந்நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்கமறுத்த காரணத்தினால் இந்தியத் தமிழர்களின் அரசியல் அந்தஸ்து நிர்ணயிக்கப் படாமலேயே இருந்தது. இத்தொழிலாளர் பற்றாக் குறையை நிவர்த்திக்க அரசாங்கம் உள்ளூரிலிருந்து சிங்களத் தொழிலாளர்களை தேயிலை றப்பர் தோட்டஉங் களில் வேலைசெய்வதற்கு அமர்த்தியது. யுத்த காலத்தில் இந்தியத் தொழிலாளர்களின் முக்கியத் துவத்தை உணர்ந்த இல்ங்கை அரசாங்கம் இந்தியத் தொழிலாளர்களின் மேல் கொண்டிருந்த கடுமையான கொள்கையை மாற்றிக் கொண்டது.
இரண்டாவது உலக மகாயுத்தம் உலகில் பல பாகங்களில் வாழும் மக்களுக்குத் தீமையையே விளைவித்ததென்றாலும் இலங்கையைப் பொறுத்த

ஒரு சிறுபான்மை சமூகதத்ன பிரசசனைகள f
வரையில் இலங்கை சுதந்திர இயக்கத்திற்கு அது நன்மையாகவே பயன்பட்டது. 1938 - 39 -ம் ஆண்டுகளில் கவர்னர் கல்டிகொட்டும் அமைச்சரவையும் இலங்கை யருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த பிரித்தானிய அரசாங்கம் அதே அதிகாரங்களை, யுத்தத்துக்கப் பின் அமைச்சரவை ஸ்வீகரித்துக் கொண்ட உண்மையை 1945 -ம் ஆண்டில் கண்டு அதிர்ச்சியுற்றது, இதுகாலவரை ஆங்கிலேயருக்கே உரித்தான நிதி அமைச்சின் காரியதரிசி பதவி இலங்கையரான குணத்திலகாவிற்கு கொடுக்கப் பட்டது. டிஎஸ். சேனாநாயக்காவும் இலங்கையின் பிரதமராகவே நடந்துகொண்டார்.
இலங்கை அரசியலில்வேறுசில மாற்றங்களும் ஏற்பட்டன. இலங்கை தேசிய காங்கிரசின் பழமை வாதக் கொள்கைகளை எதிர்த்த ஒரு குழுவிற்குத் தலைமைதாங்கிய ஜே.ஆர். ஜயவர்த்தனாவும், டட்லி சேனாநாயக்காவும், முற்போக்குதிட்டத்தையுடைய ஒரு சமூக பொருளாதார கொள்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தனர்.
1942 -ம் ஆண்டில் களனியாவில் நடந்த தேசிய காங்கிரசின் வருடாந்திர மகாநாட்டில் இக்குழு எமக்கு டொமினியன் அந்தஸ்து தேவையில்லை, பூரண சுதந்திரம்தான் தேவை என்ற பிரேரணையை முன்வைத்து அதை நிறைவேற்றியது. 1943 -ம் ஆண்டில் டாக்டர் விக்கிரமசிங்கவினதும் பீட்டர் கெனமனிதும் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சி இலங்கையின் சுதந்திரத்திற்காக தேசிய காங்கிரசுடன் ஒத்துழைத்தது. இக்கட்சிக்கு ஜே.ஆர். ஜயவர்த்தனாவும் டட்லி சேனாநாயக்காவும் தங்கள் முழு ஆதரவையும் அளித்தார்கள், இதே காலகட்டத்தில் பண்டாநாயக்காவும் சிங்கள பாமர மக்கள் மத்தியில் சிங்கள மகா சபாவை ஒரு பலமுள்ள கட்சியாக அமைந்தார். 1944 -ம் ஆண்டில்

Page 17
VV S). (up&LOLOg &LðLð
ஜி.ஜி. பொன்னம்பலமும் இலங்கைத் தமிழர்களின் தனிப்பெருந்தலைவராக தன்னை ஆக்கிக் கொண்டார். தன்னுடைய 50க்கு 50 கோரிக்கை பிரச்சாரத்தை வடக்கிலும் கிழக்கிலும் இந்தியத் தமிழர் வசிக்கும் மலை நாட்டுப் பிரதேசங்களிலும் நடத்தினார். பொன்னம் பலத்தின் கொள்கையில் விரக்தியடைந்த முஸ்லீம் தலைவர்கள் சிங்களத்தலைவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.
1945 -ம் ஆண்டில் இலங்கையின் அரசியல் சூழ்நிலை இந்தப் பின்னணியில்தான் அமைந்திருந்தது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 9
2. இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய பணி
‘சிறிலங்கா’ மசோதா சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட சமயம் ஒரேயொரு காரணத்திற் காகத்தான் இம்மசோதாவை ஆதரிப்பதென சபையிலுள்ள முஸ்லீம் அங்கத்தினர் முடிவெடுத் தார்கள். இந்நாட்டின் அரசியல் சுதந்திரம் பொறுத்த வரையில் எமது இச்செய்கையினால் எம்முடைய சமூகத்திற்குக் கிடைக்க இருந்த நன்மை களையும் நலன்களையும் நாம் தியாகம் செய்யத்தயார் என்பதே அக்காரணம்’. இவ்வாறு அரச சபையில் இலங்கையின் முஸ்லிம்களின் பிரதிநிதியான றி.பி. ஜாயா கூறினார். இந்தியாவில் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தியின் தலைமையில் மக்கள் ஒரு பெரும் போராட்டத்தையே நடத்தினார்கள். இலங்கையில் அப்படியொரு போராட்டம் எதுவும் நடக்கவில்லை, மக்கள் மயமான போராட்டம் நடைபெறாவிட்டாலும் இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலைமையில் ஒரு தேசிய இயக்கம் இருக்கத்தான் செய்தது.
1943 -ம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசசபையின் அமைச்சரவை பிரித்தானிய அரசாங் கத்திடமிருந்து இலங்கையின் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வருவதென்ற வாக்குறுதியைப் பெற்றது. அமைச்சரவை யினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் மாற்றங்களைப் பரிசீலனை செய்வதற்கும் இலங்கையின் எல்லா சமூகங் களினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது அபிப்பிராயங்களையும் அறியும் பொருட்டும் ஒர் ஆணைக்குழுவை நியமிப்ப தென பிரித்தானிய அரசாங்கம் முடிவெடுத்தது. இலங்கையின் சுதந்திரப் பாதையில் அடுத்த

Page 18
10 அ. முகம்மது சமீம்
கட்டமாகிய டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதில் எல்லாச்சமூகங்களும் கட்சிகளும் இயக்கங்களும் ஆர்வத் தைக் காட்டின. ஆனால் இங்கிலாந்தின் காலனித்துவ அரசாங்கம் ஒரு முக்கிய விதியை விதித்தது. அதாவது அமைச்சரவையின் அரசியல் மாற்றத்திற்கான பிரேரணையை அரச சபையிலுள்ள அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பேர் ஆதரிக்க வேண்டுமென்பதே அது. அரசசபையிலுள்ள அரச நியமன அங்கத்தவர்களான சபாநாயகரையும் மூன்று அரசாங்க உத்தியோகத்தர் களையும் கழித்தால் குறைந்தது 42 அங்கத்தவர்களாவது இப்பிரேரணையை ஆதரிக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவில்லாமல் சபையில் இப் பிரேரணையை அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெற முடியாதென்ற உண்மையைச் சிங்களத் தலைவர்கள் உணர்ந்தார்கள்.
சிறிலங்கா மசோதா அரச சபையில் எடுக்கப்பட்ட சமயத்தில், “அகில இலங்கை சோனகர் சங்கத்தின்’ தலைவரும் அரச சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருந்தவருமான சர். ராசிக் பரீத் பின் வருமாறு உரையாற்றினார்.
“1936 -ம் ஆண்டை ஞாபக மூட்டவிரும்புகிறேன். இந்த அரசபைக்கு அன்று நடந்த பொதுத் தேர்தலில் சோனகர்கள் ஒரு பிரதிநிதியையாவது அனுப்ப முடியவில்லை, தமிழ் சமூகம் 40,000 சோனகர், வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளான மன்னார், மட்டக்களப்புத் தெற்கு, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து தமிழ்ப் பிரதிநிதிகளைத்தான் அனுப்பி னார்கள். இருந்தும், நாம் தமிழ் அங்கத்தினர்களை ஒன்றாகவே கருதிவந்தோம்.
இந்த நாட்டில் வாழும் ஐந்து லட்சம் சோனகர்களை ஐம்பதுகிளைகளைக் கொண்ட அகில இலங்கை சோனகர்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 11
சங்கம் கெளரவ தலைவருடைய இந்தத் தீர்மானத்திற்கு எமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது. எனக்கு இதைவிட இன்பம் தரக் கூடியது வேறொன்றுமில்லை. எனது மனப்பூர்வமான ஆதரவை கெளரவ சபைத் தலைவரின் பிரேரணைக்கு அளிக்க விரும்புகிறேன். என்னுடைய சமூகமும் நானும் அவருக்கு உறுதுணை யாகவே இருந்து வந்திருக்கிறோம். வெற்றிபெறும் இத்தருணத்தில் அவரோடு கை கோர்த்துக் கொண்டு டொமினியன் அந்தஸ்தை நோக்கி நாம் முன்னேறத் தயார் என்பதைக் கூறவிரும்புகிறேன்” மேலும் சர். ராசிக் பரீத் முஸ்லீம்களின் வரலாற்றைக் கூறிவிட்டு “சிங்கள சகோதர சகோதரிகளைப் போல் இலங்கை சோனகர்கள் இலங்கைத் தாய் நாட்டின் தவப்புதல்வர்கள் ஆவர். இத்தவத்திரு நாட்டில் கடந்த பல நூற்றாண்டுகளாக சிங்கள மக்களும் சோனகர் களும் ஒற்றுமையுடனும், பரஸ்பர அன்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் பல தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். நான் அதைப் பற்றி இப்பொழுது பேச விரும்பவில்லை. இன்றைய அறிவு யுகத்தில் எந்தப் பிரச்சனையும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதல்ல. எப்பிரச்சனையும், நல்லெண்ணத் துடனும், ஒற்றுமையுடனும் நாம் அணுகினால், அதைத் தீர்க்கமுடியும். எனவே எம்முடைய "சிநேகக் கரங்களை எமது சிங்கள சகோதரர்களுக்கு நீட்டுகிறோம். தமிழ்த்தலைவர்கள் 50க்கு 50 என்ற தூண்டில் மூலம் முஸ்லீம்களைப் பிடிக்க முயன்றார்கள். சிங்கள மக்களில் வைத்த நம்பிக்கையை சோனகர் இழக்கவில்லை. வெற்றி வாகைசூடும் இத்தருணத்தில் சிங்கள மக்களுக்கு நான் இதை ஞாபக மூட்ட விரும்புகிறேன்.”
தம்முடைய கோரிக்கைகளுக்கு முஸ்லீம்களின் உதவியை நாடிய தமிழ்த் தலைவர்கள் முஸ்லீம்களின் உரிமைகளை உதாசீனம் செய்தது. தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் தன்னுடைய திட்டத்தில்

Page 19
12 / அ. முகம்மது சமீம்
“இலங்கைத் தமிழர்களுக்கு 17 ஆசனங்களும், இந்தியத் தமிழர்களுக்கு 13 ஆசனங்களும், பறங்கியர்களுக்கும் ஐரோப்பியர் களுக்கும் 8 ஆசனங்களும் (நியமனம்) எஞ்சியிருந்த 12 ஆசனங்களை ஏனைய எல்லா சிறுபான்மை இனமக்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்’ என்றார். இப்பிரேரணை சம்பந்தமான கூட்டத்தில், இவ்வேற் பாட்டையறிந்த டாக்டர்கலில் முஸ்லீம்களுக்கு ஆசனங்கள் கொடுக் கப்படல் வேண்டும் என்ற தமது கோரிக்கையை எடுத்துரைத்ததோடு, “எங்களை நீங்கள் என்னவென்று எண்ணினிர்கள். ஏனையோருக்கு வழங்கும் எஞ்சியுள்ள ஆசனங்களைத்தான் நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டுமா?’ என்று கூறிக் கொண்டு கூட்டத்திலிருந்தும் வெறியேறினார்.
தமிழர்களின் இந்த போக்கினால், விரக்தியடைந்த முஸ்லீம்கள், சிங்களத் தலைவர்களை ஆதரிக்க முன் வந்தார்கள். இதே கருத்தைத்தான் சர். ராசிக் பரீத் அரசசபையில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
“காங்கேசன்துறை அங்கத்தவரும், மன்னார் அங்கத்தவரும் ஆற்றிய இரங்கத்தக்க சொற்பொழிவு களுக்குப் பிறகு, சோனகர்களாகிய நாம், சிங்கள வரைத்தவிர்ந்த ஏனைய சமூகங்களினால், எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூற கடமைப் பட்டுள்ளேன். தமிழ் சமூகத்திற்குத் தேறுதல் கூறும் வகையில் தான் நான் இச்சொற்பொழிவை ஆற்றுகிறேன். எங்களுடைய பிரதிநிதித்துவம், இல்லாமலேயே எங்களைப் பற்றிய குறிப்புகள் கூறப்பட்டிருக்கின்றன. சோனகர்கள் தமிழ் பேசும் மக்களாகையால், தமிழர்கள் எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்தலாம், என்று ஒரு காலகட்டத்தில் கூறப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு நிலைக்கும், நாம் தலைவணங்க வேண்டியிருந்தது” என்று சர் ராசிக் பரீத் கூறினார். மேலும் அவர் பின்வருமாறு கூறினார்.

(V" VM صحیح Vy r-~ r
“நாங்கள் பல துயரங்களை அனுபவித்திருக்கிறோம். சோனகர்களாகிய நாம் பட்ட கஷ்டங்களில் பத்தில் ஒரு பங்காவது நீங்கள் அனுபவிக்கவில்லை. சிறுபான்மையின மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்ற இங்கிலாந்து அரசாங்கத்தின் நிபந்தனை, புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டுமென்பதே’ 1944 -ம் ஆண்டு சோல்பரி பிரபுவின் தலைமையில், அமைச்சரவையின் பிரேரணையைப் பரிசீலனை செய்வதற்கும், இலங்கையின் எல்லா இன மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்கும், அதற் கேற்ப, இலங்கையின் அரசியல் அமைப்பில் பல மாற்றங் களைக் கொண்டுவருவதற்கும், ஒர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில், அதாவது 1944 -ம் ஆண்டில், சிங்கள மொழி அரச மொழியாகப் பிரகடனப் படுத்தப்படல் வேண்டும் என்ற ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் மசோதாவை எதிர்த்து தமிழ் மொழிக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும் என்ற சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதிகளின் திருத்தங்களோடு இம்மசோதா அரசசபையில் அதிகப்படி வாக்குகளால் அங்கீகரிக்கப் பட்டது. இருந்தாலும் சிறுபான்மையின மக்களுக்கு ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது. பெரும்பான்மையின மக்களின் அதிகப்படியான வாக்குகளால், நிர்மாணிக் கப்படும் ஓர் அரசாங்கத்தில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம், இப்புதிய அரசியலமைப்பில் இருக்க வேண்டும் என்பதை சிறுபான்மையின மக்கள் உணர்ந்தார்கள். ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் சிங்களம் மட்டும் மசோதா, எதிர்கால சுதந்திர இலங்கையில் வரக்கூடிய மாற்றங் களுக்கு ஒர் அறிகுறியாகவே சிறுபான்மையின மக்களுக்குத் தென்பட்டது. ஆகவே, பெரும் பான்மையின மக்களின் ஆட்சியில், சிறுபான்மையின மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு

Page 20
-9 (pbLDLDg5 FDLD
அரசியலமைப்பில் இருக்கவேண்டும் என்ற அடிப் படையில், சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் தங்கள் பிரேரணைகளை ஆணைக்குழுவின் முன் சமர்ப்பித்தார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் தான் ஜி.ஜி. பொன்னம்பலத் தின் தலைமையில் இயங்கிய தமிழ் காங்கிரஸ், 50க்கு 50 என்ற கோஷத்தை ஆணைக் குழுவின் முன்வைத்தது. இக்கோஷத்திற்குத் தம்முடைய கொள்கைகளினாலும், செய்கைகளினாலும், தமிழ்த் தலைவர்கள் இலங்கையின் முக்கிய சிறுபான்மையினங்களின் ஒன்றான முஸ்லீம்களின் ஆதரவைப் பெறத் தவறினர்.
“டொமினியன் அந்தஸ்தை வேண்டி நிற்கும் சிங்கள
மக்களின் நியாய பூர்வமான கோரிக்கைக்கு நாம் பக்கபலமாக இருக்கிறோம். எனவே, சிங்களவர் தமிழர் சோனகர் ஆகிய நாம் எல்லோரும், டொமினியன் அந்தஸ்தை நோக்கி முன்னேறி பிரித்தானிய காமன் வெல்த் நாடுகளின் சங்கத்தில் ஒர் அங்கத்தவராக, எமது தாய்திருநாடாம் இலங்கை பெருமையுடன் வீற்றிருக்கச் செய்வோமாக’ என்று சர். ராசிக் பரீத் பேசிமுடித்தார்.
சோல்பரி குழுவினரின் அறிக்கையின் விவாதத்தில், அகில, இலங்கை சோனகர் சங்கத்தின் - பிரதிநிதியாக சர். ராசிக் பரீதும், டி.எஸ். சேனா நாயக்கவின் தலைமைத் துவத்தை ஏற்று, இலங்கையின் சுதந்திரத்திற்காகத் தமது முழு ஆதரவையும் வழங்கினார்.

gri Lu TTSLL LLLLLL GG LLL LLuiTAAAqeTHTLHCHH AHA LLLLLL G LL LLC0 VV
3. இலங்கை அரசியலில் சாதிப்பிரிவினையின் பாதிப்பு
இலங்கை சுதந்திரம் அடையும் காலகட்டத்திற்கு வந்துவிட்டோம். மிகவும் உயர்ந்த, உன்னத கொள்கைகளை வைத்தே இச் சுதந்திரத்தைக் கோரினர் நம் அரசியல் தலவர்கள். எல்லா இனங்களுக்கும் விகிதாசாரப்படி பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும். சில இனங்கள் வாழும் தொகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்கள் அளிக்கப்படல் வேண்டும். குறிப்பிட்ட சில இனங்களுக்கோ வகுப்புகளுக்கோ பிரதிநிதித்துவம் கிடைக்காதபட்சத்தில், அவர்களுக்குப் பாராளு மன்றத்தில் நியமன அங்கத்துவம் கிடைக்க வேண்டும் என்ற இவ்வுயரிய கொள்கைகளை முன்வைத்தே சுதந்திரயாப்பை அமைத்தனர். ஆனால், நடை முறையில் நடந்ததென்ன? தொன்று தொட்டு, சாதிப் பிரிவினையிலும் இன வேறுபாட்டிலும் ஊறித் திளைத்திருந்த மக்களுக்கு மேல்நாட்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒர் அரசியல் அமைப்பைப் புகுத்தும்போது, இவ்வேறுபாடுகள்தான் வெளிப்படுகின்றன. முக்கியமாக சிங்களச் சமூகத்திலும் தமிழ் சமூகத்திலும் இச்சாதிப் பிரிவினை அரசியலில் தலை தூக்குவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இப்பிரிவினை சாதாரண மக்களிடம் மாத்திரமல்லாமல், படித்தவர்கள் மத்தியிலும் சமயக் குருமார்கள் மத்தியிலும் பிரதிபலிப்பதை நாம் காணலாம். கொய்கம சாதியைச் சேர்ந்த பெளத்த பிக்குகள், ஒரு சங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள், வேறொரு சங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதை நாம் காண்கிறோம்.

Page 21
صیم سمسمت سمیت یسمع مسح صحہ صبیح ۔ 1 ہوتیجs אאה" . ים
சிங்களச் சமூகத்திலிருக்கும் இச் சாதிப் பிரிவினையை நாம் அறிய வேண்டியதன் அவசியம் என்ன? சிறுபான்மை இனங்களான தமிழர்களும், முஸ்லீம்களும் இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். 1915 -ம் ஆண்டில் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரத்தில் தாழ்ந்த சாதியினர் வாழும் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். கராவ துராவ சாதியைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களைப் பெரும்பாலும் தாக்கி னார்கள். இத்தாழ்ந்த சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தான் இவ்வின வெறியைத் தூண்டிவிட்டவர்கள். பிறகு நடந்த சிங்கள - தமிழ் இனக் கலவரங்களில் கூட அதிகமாகப் பங்கெடுத்தவர்கள் இத்தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களே. இதற்கு ஒரு சில உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் விதிவிலக்காக இருக்கலாம். தமிழர்கள் மத்தியில் கூட தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களே முஸ்லிம்களைக் கொன்று அவர்களது உடமைகளைப் பறித்து தாம் பிறந்த பூமியை விட்டே துரத்தியவர்கள்.
தேர்தல் காலங்களில் சிங்கள மக்களிடையே எப்படி இச்சாதி வேற்றுமை தலை தூக்குகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான பொருள். கொய்கம சாதியாகிய உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர்தான் இந்நாட்டில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரமுடியும். ரணசிங்க பிரேமதாச இதற்கு விதிவிலக்காக இருந்தார். அகஸ்மாத்தாகத்தான் அவருக்கு இப்பதவி கிடைத்தது. அவருடைய ஆளுமையும் இதற்கொரு காரணம். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவரை உயர்சாதியினர் எதிர்த்தே வந்தனர். ஜெர்மனியில் எப்படி உயர் வகுப்பினரான யூங்க்கர் வகுப்பினர், ஜெர்மனியின் படைகளில் தளபதி பதவிகளைப் பெற்றார்களோ அதே போல இலங்கைப் படைகளிலும் இவ்வர்க்க வேறுபாட்டை நாம் காண்கிறோம். சிங்கள சமூகத்தில் ஒருவர் எவ்வளவுதான் மக்களுக்குச் சேவை செய்தாலும் தேர்தலில் அவர்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 17
போட்டியிட நேரும்போது அவரைச் சாதிக் கண்ணோட்டத்துடன் தான் அம்மக்கள் பார்ப்பது வழக்கம். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் கட்சி அடிப்படையை விட சாதி அடிப் படையில்தான் தங்கள் வாக்குகளை வழங்கியிருக்கின்றனர் என்ற உண்மை தெளிவாகிறது. அரசியல் கட்சிகள் கூட இச்சாதி அடிப்படையை வைத்துத் தான் தங்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றனர். உதாரணமாக, கராவ சாதியைச் சேர்ந்த மக்கள் ஒரு தேர்தல் தொகுதியில் அதிகமாக இருந்தால், அச்சாதியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமித்தால்தான் அக்கட்சி அங்கே வெற்றிபெறும். கடந்த பொதுத்தேர்தல்களின் முடிவுகளை நாம் உன்னிப்பாய் ஆராய்ந்தால், இவ்வுண்மை விளங்கும். பின்வரும் அத்தியாயங்களில் இதனை விளக்குவோம்.
டொனமூர் அரசியலமைப்பிலிருந்த 1931 -ம் ஆண்டு அரசசபையிலுடம் 1936 -ம் ஆண்டு அரசசபையிலும் அங்கம் வகித்த பிரதிநிதிகளின் சாதிகளைப் பின்வரும் அட்டவணையிலிருந்து நாம் அறியலாம்.
சிங்கள அங்கத்தவர்கள்
சாதி 1931 1936
கொய்கம 26 28
கராவ 4 3
F6Os TLD 2 1
ஹின்ன 1 1 டோபி (வண்ணான்) 1 1
குயவன் 1 1
சுண்ணாம்பு O O
துராவ O 1. தெளிவில்லை 3 3
3
9
மொத்தம் 38

Page 22
18 அ. முகம்மது சமீம்
இவ்வட்டவணையை நாம் கூர்ந்து நோக்கினால் கொய்கம சாதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தை அவதானிக்கலாம். இவ்வுயர் சாதியினரின் ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த இயக்கங்கள்தான் பண்டார நாயக்காவின் சிங்கள சபா இயக்கமும் லங்காசமசமாஜக் கட்சியும், லங்கா கம்யூனிஸ்ட் கட்சியும், பண்டாரநாயக்காவும் டாக்டர் என்.எம். பெரேராவும், டாக்டர் விக்கிரம சிங்காவும் கொய்கமச் சாதியைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் இதயபூர்வமாக சோஷலிசக் கருத்துக்களிலும் சமதர்மக் கொள்கையிலும் நம்பிக்கை வைத்தார்கள். இவ்வுயர் சாதியினரின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று மும்முரமாயிருந்தவர்கள். 1971 -ம் ஆண்டிலும், 1988-89 -ம் ஆண்டுகளிலும் அரசாங்கத்திற்கு எதிராகத் தோன்றிய ஜாதிக்க விமுக்தி பெரமுனையின் புரட்சிகள் பெரும்பாலும் தாழ்ந்த சாதியினரைக் கொண்டவர் களாலேயே நடைபெற்றன. இவ்வுண்மையை பின்னர் இந்நூலில் விளக்குவோம்.
அரசியல் வாழ்க்கையில் சாதிப்பிரிவினை ஒரு பெரும் பங்கை வகிக்கிறது. 1970 -ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கொய்கம சாதியினர் 4,500,000 ஆகவும் சலாகமகராவ-துராவ சாதியினர் 800,000 ஆகவும் பத்கம்-வகும்புர சாதியினர் 3,000,000 ஆகவும், ஏனையோர் 600,000 ஆகவும் இருந்தனர். சிங்களவரின் மொத்த சனத்தொகை 8,900,000 - 71.2% இருந்தது. இச்சாதிப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத எந்த அரசியலமைப்பும் நிரந்தரமாக நிலைக்க முடியாது. இவ்வுண்மையை உணர்ந்துதான் 1944 -ம் ஆண்டில் அரசியல் யாப்பைத் தயாரித்த அமைச்சரவை தம்முடைய விளக்க உரையில் குறிப்பிட்ட சில சாதியினருக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினார்கள். சோல்பரி குழுவினர் கூட தம்முடைய அறிக்கையில் சிங்கள சமூகத்திலுள்ள இச்சாதி வேற்றுமையை உணர்ந்துதான்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 19
ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களையுடைய தொகுதிகளை நிர்ணயித்தார்கள். இக் குழுவினர், தம்முடைய அறிக்கையில் 273 -ம் பந்தியில் “சாதிப் பிரிவினை மிகவும் கூர்மையாக இருக்கும் பிரதேசங்களில் நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களை வழங்கியிருக்கிறோம்” என்று கூறினார்கள். 1946 -ம் ஆண்டில் அமுலுக்கு கொண்டுவரப் பட்ட இலங்கை அரசியல் யாப்பில், 4(4) வது பிரிவின்படி, குறிப்பிட்ட சில சாதியினருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. ஆனால் 1946 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியான முதற் தொகுதி நிர்ணய சபையின் அறிக்கை, “நாம் இச்சாதி வேற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது; ஆகவே, எமது சிபாரிசுகளைச் செய்யும் போது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்” என்று கூறியது.
தேர்தல் தொகுதி நிர்ணய கமிஷனர்கள், கரையோரச் சிங்களவர் வதியும் அம்பலாங்கொடை பலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் கராவ சாதியினர் தம்முடைய சாதியில் ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பும் வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் நாம் இத்தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகளைக் கொண்ட தொகுதியை சிபாரிசு செய்கிறோம் என்று கூறினர். இப்பிரதேசத்தில் சலாகம சாதியினருக்கும் கராவ சாதியினருக்கும் இடையே இருந்த சாதி வேற்றுமையின் தீவிரத்தை உணர்ந்தே இவர்கள் இச்சிபார்சினைச் செய்தார்கள். முக்கியமாக, தேர்தல் காலங்களில் இப்பிரிவினை மிகவும் உக்கிரம் அடைவதை உணர்ந்துதான், இரு சாதியினருக்கும் தத்தமது பிரதிநிதிகளை சட்டமன்றத்துக்கு அனுப்பும் வாய்ப்பினை ஏற்படுத்தினார்கள்: கண்டிச் சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தில், தாழ்ந்த சாதியினர், தம்முடைய சாதியினர் ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தான், தேர்தல் தொகுதி

Page 23
20 - அ. முகம்மது சமீம்
நிர்ணயக் குழுவினர், கடுகன்னாவைத் தேர்தல் தொகுதிக்கு, இரண்டு ஆசனங்களை சிபார்சு செய்தார்கள். தாழ்ந்த சாதியினரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்த குழுவினர், ஏனைய தொகுதிகளில் இவ்வித எற்பாட்டைச் செய்யவில்லை. சாதிகளின் சனத் தொகை விபரம் பற்றிய சரியான தகவல் இல்லாதபடியால், இவ்வேற்பாட்டைச் செய்யமுடியாது என்று காரணங்காட்டினர். என்றாலும், தேர்தல் மாவட்டங்களை நிர்ணயிக்கும் போது, குறிப்பிட்ட சாதியினரைப் பிரிக்காமல், தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கும் போது, அச்சாதியினர் தம்முடைய ஒரு பிரதிநிதியை அனுப்பும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். இந்த அடிப்படையில்தான், கரையோரச் சிங்களவர் வாழும் கம்பஹா தொகுதியிலும் கண்டிப் பிரதேசத்தில், கேகாலை, கம்பொளை, குருநாகலை, பிங்கிரிய ஆகிய தொகுதிகளிலும் தாழ்ந்த சாதியினர் தம்முடைய பிரதிநிதிகளை அனுப்பும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். 1956 -ம் ஆண்டில், எஸ்.டபிள்யுஆர்டி பண்டார நாயக்காவும், 1960 -ம் 70 -ம் ஆண்டுகளில், திருமதி. சிரிமாவோ பண்டாரநாயக்காவும், 1946 -ம் ஆண்டின் அரசயாப்பில் பிரதமருக்கிருந்த அதிகாரத்தை வைத்து, பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஆறு அங்கத்தவர்களுக்கு நியமன அங்கத்துவம் வழங்கும்போது தாழ்ந்த சாதியினருக்குப் பிரதி நிதித்துவம் அளிக்கும் வகையில் கவர்னர் - ஜெனரலுக்குத் தம்முடைய சிபார்சைச் செய்தனர். இந்த அடிப்படையில் தான் செனட் சபைக்கு அங்கத்தவர்களை நியமிக்கும் போதும் தங்கள் சிபாரிசுகளைச் செய்தனர். இதே அடிப்படையில்தான் பிரதமர்கள், அமைச்சர்கள் நியமனங்களிலும் உதவி அமைச்சர்கள் நியமனங்களிலும், நியமனங்களைச் செய்தனர். பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் கொய்கம சாதியைச் சேர்ந்தவர்கள்தானதிகமாக இருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 21
அரசியல் திறமையிலும் அரசாங்க நிர்வாகத்திலும் கொய்கம சாதியினருக்கே முதலிடம் இருந்தது. ஆனால், இரண்டு முக்கிய சாதிகளான, கராவ சாதியினருக்கும் சலாகம சாதியினருக்கும், ஏனைய தாழ்ந்த சாதியினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. முக்கியமாக, பண்டார நாயக்க தம்பதிகள், தம்முடைய அமைச்சரவையை நிறுவும் போது, சிங்கள சமுதாய அமைப்பிலுள்ள சாதி வேற்றுமைகளை மனதிற் கொண்டு, எல்லா சாதியினருக்கும் தகுந்த இடத்தைக் கொடுத்தனர். பெரும்பாலும் எல்லாப் பிரதமர்களும், (பிரேமதாசாவைத் தவிர) கொய்கம சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். சலாகம சாதியைச் சேர்ந்த சி.பி.டி. சில்வா பிரதமராக ஆவதற்கு இரண்டு முறை முயன்றும் வெற்றி பெறவில்லை. சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள், தம்முடைய சாதியைச் சேர்ந்த ஒருவருக்குப் பிரதமர் பதவியை வழங்க, கொய்கம சாதியைச் சேர்ந்தவர்கள் இடம் கொடுக்கவில்லையென்று குற்றஞ்சாட்டினர். 1971 -ம் ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த கிளர்ச்சியில், கண்டிப்பிரதேசத்திலுள்ள கண்டி, கேகாலை மாவட்டங்களில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த வஹஜூம்புர சாதியைச் சேர்ந்தவர்களும், கரையோரப் பகுதிகளிலுள்ள பிரதேசங்களில் கராவ, துராவ சாதியினரும்தான் முக்கிய பங்கெடுத்தார்கள். கொய்கம சாதியினரின் ஆதிக்கத்திற் கெதிராகவும், பொருளாதாரத்துறையிலும், உத்தியோகத்துறையிலும் தமக்கு ஏற்பட்ட விரக்தியினாலும், சமூகத்தில் ஒர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாத காரணத் தினாலும் தான் இக்கிளர்ச்சி தோன்றியது என்பதை நாம் அறிவோம்.
சோல்பரிக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பிரெடரிக் ஹீஸ் பிரபு இச்சாதிப் பிரிவினையைப் பற்றிக் கூறும் போது, மீன் பிடித் தொழிலைச் செய்பவர்கள் தமக்கு, மீன்பிடித் தொழில் அமைச்சு ஒன்று ஏற்படுத்தித் தரும்படி கோரினார்கள். அதற்கு அவர்கள் கூறிய

Page 24
22 அ. முகம்மது சமீம்
காரணங்கள், அரசாங்கம் விவசாயத் திற்குக் காட்டும் அக்கறை மீன்பிடித் தொழிலுக்குக் காட்டவில்லை யென்றும் மீன்பிடித் தொழிலுக்கு ஊக்கமளித்தால் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதிக்கலாம் என்றும், பெளத்த சமயத்தில் உயிர்க் கொலை பாபமாகக் கருதப்பட்டதாலும், இத் தொழிலைச் செய்யும் கராவ சாதியைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கணிக்கப்பட்டதாலும் சட்டமன்றத்தில் கொய்கம சாதியைச் சேர்ந்தவர் பெரும்பான்மையாக இருப்பதாலும், கராவ சாதியினர் பணம் சம்பாதித்தால் தம்முடைய உயர் அந்தஸ் திற்குப் பாதகம் விளையும் என்ற காரணத்தினாலும் தான் தாம் இப்படியொரு நிலைமைக்குத் தள்ளப் பட்டிருக் கிறார்கள் என்று கூறினார்கள் என்று றிஸ் பிரபு கூறுகிறார்.
இலங்கை மக்களில் பெரும்பாலோர் தம்முடைய வாக்குகள் எந்த ஒரு அரசியல் கொள்கைக்காகவும் பதியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, 1947 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், ஏறக்குறைய 18 சுயேச்சை வேட்பாளர்கள், இத்தேர்தலில் போட்டியிட்டார் களென்றால், அதற்குக் காரணம் இவ்வேட்பாளர்கள், தம்மைச் சார்ந்த சாதியினர் தமக்குத்தான் வாக்களிப் பார்கள், என்ற நம்பிக்கையே, என்று லுடொவைக் தன்னுடைய நவீன இலங்கை வரலாறு என்ற நூலில் கூறுகிறார்.
சிங்கள மக்களிடையே இருக்கும் சாதிகளின் தோற்றம், தேர்தல் காலங்களில் அவர்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பவைகளைப் பின்வரும் அத்தியாயங் களில் ஆராய்வோம்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 23
4. சிங்கள சமூகத்தவரிடையே இருக்கும் சாதி வேற்றுமை
சிங்கள சமூகத்தவரிடையே இருக்கும் சாதி வேற்றுமை எவ்வளவு தூரம் அச்சமூகத்தினரின், அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கையைப் பாதித்தது என்பதையும் இச்சாதிப் பிரிவினை எப்படித் தோன்றியது என்பதையும் நாம் ஒரளவு அறிதல் அவசியம். சிங்கள சமூகத்தவரிடையே வாழும் முஸ்லிம்களை அவர்கள் எப்படிக் கணித்தார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளல் வேண்டும்.
மேஜர் ஜோன் டேவி தான் எழுதிய இலங்கையின் உள்ளூர்ப் பிரதேசங்களையும், அதன் மக்களையும் பற்றிய நூலில் முஸ்லிம்கள் ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவு என்ற பகுப்பில் அடங்கா விட்டாலும், பெரும்பாலும் அவர்களைக் கராவ சாதியினருடன்தான் சிங்களவர் கணிப்பது வழக்கம் என்று கூறுகிறார். ஆனால் முஸ்லிம் கள் இதை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. முஸ்லிம்கள் சிங்களவரிலிருந்தும், ஒரு தனிப்பட்ட சமுதாயமாகவே தம்மைக் கருதிவந்திருக்கின்றனர். இலங்கையைப் பற்றி எழுதிய றொபர்ட் நொக்ஸ் கூட முஸ்லிம்களைக் கராவ சாதியினருடன் சேர்த்துத்தான் கொய்கம சாதியினர் கணிக்கிறார்கள் என்று கூறுகிறார். (நொக்ஸ் - பக்கம் 136) ஒரு பணக்கார முஸ்லிம், நிலவுடைமைக்கார முஸ்லிம், இவர்களை, உயர்ந்த சாதியென்ற மரியாதையைச் சிங்களவர் கொடுப்பர் என்றும், சாதாரண தொழில் செய்து சம்பாதிக்கும் முஸ்லிம்களை, அச்சாதியைச் சேர்ந்தவர்களோடு கணிப்பர், என்றும் பிரைஸ் றையன் என்ற சமூகதத்துவப் பேராசிரியர் கூறுகிறார்.

Page 25
24 அ. முகம்மது சமீம்
ஒரு காலத்தில், இந்தியாவிலிருந்து வந்து, இலங்கையில் குடியேறியவர்கள் சிங்களவர் என்ற வரலாற் றுண்மையை ஏற்றுக் கொண்டால், ஆரியர்களுடைய வர்ண அடிப்படையில் தோன்றிய சாதிப் பிரிவினையும் சிங்களவர்களைப் பாதித்திருக்கலாம் என்ற உண்மை யையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பிராமணர், ஷத்திரியர், வைஸ்யர், சூத்திரர் என்ற சாதிப்பிரிவினை ஆரியர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயத்தில் இருந்தது. கராவ சாதியினர் தாம் கொய்கம சாதியினரைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற நிலையை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. அவர்கள், இந்தியாவின் “கரு” என்ற பிரதேசத்தில் வாழ்ந்த ‘குரு வம்சத்தைச் சேர்ந்த ஷத்திரியர்கள் என்றும் தம்மைக் கூறிக்கொள்கின்றனர்.
இலங்கையின் இரு பெரும் இனங்களான சிங்கள சமூகத்தவரிடையேயுள்ள சாதி அமைப்பையும் தமிழர் சமுதாயத்திலுள்ள சாதி அமைப்பையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கையில், தமிழர் சமூகத்திலுள்ள சாதிப்பிரிவினை பெரும்பாலும் தென்னிந்திய சமுதாயத்திலுள்ள சாதிப் பிரிவினையை ஒட்டியிருப் பதையும் சிங்களச் சமூத் தவரிடையே இருக்கும் சாதிப்பிரிவினை, இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள சாதிப்பிரிவினைகளின் செல்வாக் கினால் ஏற்பட்ட ஒரு புதிய சாதி அமைப்பையும் காண்கிறோம்.
இலங்கையில், 15 -ம் நூற்றாண்டில், ஒரு பெளத்த பிக்குவினால் எழுதப்பட்ட ஜனவம்ச என்ற நூலில் சாதிப்பிரிவினைகளைப் பற்றிய விவரங்களை அறிகிறோம். நீதி நிகந்துவ என்ற நூல் ஆரியர்களுடைய நான்கு வர்ணப் பிரிவுகளைப் பற்றிக் கூறுகிறது. ஒர் அரசியல் அமைப்புக்கு சாதி அடிப்படையில் எழுந்த ஒர் சமுதாயம் அவசியம் என்பதை இந்நூல் கூறுகிறது. ஆனால் இதற்குப் பிறகு தோன்றிய ருவன்மல் நிகந்துவ என்ற நூலும்

чучу о учи оu ovu о сусрggotov. - 1у стог об о01a. ol. 4. KO
இப்பிரிவினைகளை வலியுறத்துகிறது. ஆனால் சிங்கள சமூகத்தில், பிராமணர்களுக்குப் பதிலாக, ஷத்திரிய வம்சமே உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதைக் காண்கிறோம். சிங்கள சமூகத்தில், ஆரியர்களுடைய அமைப்பில், நான்காவது ஸ்தானத்தில், இருந்த சூத்திரர்களாகிய விவசாயிகள் முதலாவது இடத்தில் இருப்பதைக் காண்கிறோம். இந்திய சமூகங்களைப் போலல்லாமல் சிங்கள சமூகத்தின் சாதி அமைப்பு, பெளத்த சமயத்தின்
ஆதரவில் வளர்ந்தது. விவசாயிகள் முதலாம் இடத்தைப் பெறுவதற்கு, நிலப்பிரபுத்துவ அமைப்பும் ஒரு முக்கிய காரணம், கரையோரப் பகுதிகளைவிட, கண்டிப் பிரதேசத்தில் தான் இச் சாதிப்பிரிவினையின் கூர்மையை நாம் காண்கிறோம். இலங்கையில் அடிக்கடி ஏற்பட்ட தென்னிந்திய படையெடுப்புக்களினாலும், தென்னிந்திய மக்களின் குடிப் பெயர்ச்சி காரணமாகவும் அச்சமுதாயத்தின் சாதிப் பிரிவினையின் தாக்கத்தை சிங்கள சமூகத்திலும் காணலாம். தென்னிந்திய சமுதாயத்திலுள்ள விவசாயிகள், வெள்ளாள - சாதியினரைப் போல இலங்கை சிங்கள சமூகத்திலும், உயர்ந்த ஸ்தானத்திலுள்ள கொய்கம சாதியினர் ஏனைய சாதிகளைவிட அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். சிங்கள சமூகத்திலுள்ள சாதியமைப்பு தொழிலோடு சம்பந்தப்பட்டிருத்தலையும் நாம் காணலாம்.
இச்சாதிப் பிரிவினைகளின் தாக்கம் பெளத்த பிக்கு சங்கங்களிலும் இருப்பதை நாம் காணலாம். புத்தருடைய போதனைகள், ஆரிய சமுதாயத்திலுள்ள சாதிப் பிரிவினைகளுக்கு எதிராக இருந்தாலும், இலங்கை சிங்களச் சமுதாயத்திலுள்ள சாதி வேறுபாடுகள் பெளத்த பிக்கு சங்கங்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்.
உண்மையில் ஆரிய சமுதாயத்திலுள்ள பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகத் தோன்றிய இயக்கம்தான் பெளத்த

Page 26
49 See9H- (-ebULULLg) C* LIULU
மதம். பிராமணர்களின் மாயாவாத தத்துவத்தை எதிர்த்து நடுநிலைமைப் பாதையைக் காட்டியவர்தான் புத்தர். ஆரிய சமுதாயத்தில் பிராமணர்கள் மதகுருமார்களாகவும், புரோகிதர் களாகவும் விளங்கினார்கள். ஆனால் பெளத்த சமயத்தில் பெளத்த பிக்குகள், துறவிகள் என்ற "ஸ்தானத்திலேயே இருந்தார்கள். இந்திய சமுதாயத்தில் ஹிந்து தர்மத்தையும், ஹிந்து தத்துவத்தையும் அறியாமல், சாதியமைப்பை அறிய முடியாது. ஆனால், பெளத்த
மதத்தைப் பொறுத்தவரையில், சாதி என்ற நிறுவன அமைப்பும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பும் ஹீனயான பெளத்தத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். உலகில் பெளத்த மதத்தைப் பின்பற்று பவர்களில் இலங்கையில் மாத்திரம்தான் பெளத்தமதம் சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. பெளத்த தர்மத்திற்கு இது முரண்பட்டதென்றாலும் இங்கேதான் இவ்விரு நிறுவனங்களும் ஒன்றோடொன்று கலந்திருக் கின்றன. இதற்கு நியாயம் கூறும் வகையில் ஒரு ஜாதகக் கதையையும் அவர்கள் கூறத்தவறவில்லை. பெளத்த தர்மத்தில் மோட்சம் அடைவது ஒரு தனிப்பட்ட சாதியினரின் ஏகபோக உரிமையல்ல என்று ‘பிக்’ என்ற ஆசிரியர் கூறுகிறார். சமுதாயத்திலுள்ள சாதி வேற்று மைகளை ஏற்றது மட்டுமல்லாமல், அதை வழிநடத்தும் ஒரு வாகனமாகவும் பெளத்த சங்கங்கள் அமைந்தன. பெளத்த சங்கங்கள் சாதி அடிப்படையில் அமைந்ததோடு, கோயில் காணிகளைப் பராமரிப் பவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட சாதியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாதி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட இம்மத குருமார் களின் சங்கங்கள், உயர் சாதியினரின் சமுதாய ஆதிக்கத்தை நிலை நாட்டியதுடன் அதனை வளர்க்கவும் தலைப் பட்டனர்.
இலங்கைக்கு பெளத்த சமயத்தை அறிமுகப் படுத்திய மஹிந்த தேரோ எப்படி பெளத்த பிக்கு சங்கத்தை

ஒரு சறுபானமை சமூகததன பரசசனைகள Z /
அமைத்தாரோ தெரியவில்லை. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில், பெளத்த பிக்கு சங்கம் ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரின் ஏகபோக உரிமையாக மாறியிருப்பதைக் காண்கிறோம். கண்டியை ஆட்சி செய்த கீர்த்தி சிறி ராஜசிங் கனுடைய காலத்தில் சியாம் நிக்காய - சயாம் சமயக்கட்சி என்ற பெளத்த பிக்கு சங்கம் கொய்கம சாதியினரின் ஏகபோக உரிமை என்று ஒர் அரச கட்டளை பிறப்பிக்கப் பட்டது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் மேல் நாட்டவர் ஆட்சியின் கீழ் வந்தபிறகு இப்பிரதேசத்தில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த கறுவாபட்டை உரித்தல் தொழிலைச் செய்த சலாகம இந்தியாவில், சாலியர் என்ற பெயருடைய சாதியைச் சேர்ந்தவர்களே, பின்னர்
சலாகம் என்ற பெயரைப் பெற்றனர். பொருள் வசதிகளைப் பெற்று சமூகத்தில் ஒர் அந்தஸ்தை பெற்றதன் காரணமாக கொய்கம சாதியினரின், பெளத்த பிக்குகள் சங்கத்திலிருந்த இவ் வேகபோக உரிமையை எதிர்த்தனர். சாதி வேற்றுமையற்ற தூய்மையான பூர்வீக பெளத்த பிக்குகள் சங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டுமென்ற நோக்குடன், அமரபுர நிக்காய என்ற சங்கத்தை இச் சலாகம சாதியினர் தோற்றுவித்தனர். அமரபுர நிக்காயிவிலும் சாதி வேற்றுமை தோன்றத் தொடங்கியதன் பின், ராமான்ய நிக்காய என்ற ஒரு புதிய பெளத்த சங்கம் தோன்றியது. சலாகம சாதியினரின் அமரபுரநிக்காயவிலி ருந்தும் வேறுபட்டு, இன்னொரு அமரபுர நிக்காயவை தோற்றுவித்தனர் கராவ சாதியினர் இதனின்றும் வேறுபட்ட வஹ"ம்புர, சாதியினரும் இவர்களுக்குக் கீழ்மட்டத்திலுள்ள துராவ சாதியினரும் தத்தமது சாதிக்குரிய அமரபுர நிக்காய சங்கங்களைத் தோற்று வித்தனர். கண்டிப் பகுதியிலுள்ள மிகவும் கீழ் மட்டத்திலுள்ள பத்கம சாதியினர் அமரபுர நிக்காயவில் ஒரு பகுதியில் சேர்ந்தனர். பெளத்த பிக்கு சங்கங்களின் அமைப்பை நாம் கூர்ந்து அவதானிக்கும் போது,

Page 27
28 அ. முகம்மது சமீம்
இங்கேயும் நாம் சாதி வேற்றுமையைக் காணலாம். ஒரு கோயிலின் தர்மகர்த்தாவைத் தேர்ந்தெடுக்கும் போது சாதி அடிப்படையிலேயே தேர்ந்தெடுப்பது வழக்கம். இப் பதவிக்குரியவர்கள் பெரும்பாலும் ஒரே குடும்பத் தவராயிருத்தலையும் நாம் காண்கிறோம். சமயத்தில் இருக்கும் இவர்களுடைய ஆதிக்கம் சில சமயங்களில் அரசியல் ஆதிக்கமாகவும் மாறுவதை நாம் காணலாம். இதற்குக் காரணம் இலங்கையின் பெரும்பான்மை பெளத்த மக்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கும் கொய்கம சாதியினரின் ஏகபோக உரிமையான சியாம் நிக்காய என்ற சங்கமே. இதனால் இச்சாதியினரின் அரசியல் சக்தியும் வலுவடைகிறது.
சிங்கள சமூகத்தில் ஒருவருடைய சாதியை சிங்கள மரபுப்படி, அவருடைய பரம்பரையிலிருந்தும், குடும்பங் களிலிருந்தும் கணிப்பது வழக்கம். கொய்கம சாதியைச் சேர்ந்த உயர் குடிப்பிறப்பினரை வங்க அதிபதியென்றும், குடும்பத்தைக் குறிப்பதற்கு (Ge - வீடு) என்றும் வாசகம் என்றும் அடை மொழிகளைப் பாவிப்பது வழக்கம்.
கொய்கம சாதியினரிலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அரசனிடம் உயர் பதவிகளிலிருந்தோர் ரதல என்றும், மக்கள் தலைவர்கள் என்றும், அரசனுடைய மந்தைகளைப் பார்ப்போர் முதலி, பட்டி என்றும், லிகிதர்கள் கட்டுப்புள்ளை என்றும் கோயில் சேவகர்கள், நிலமக்கார என்றும் அழைக்கப்பட்டனர். சிங்கள சாதியினரில் கொய்கம சாதியினர்தான் உயர் சாதியினர். இவர்களுடைய அரசியல் ஆதிக்கத்தை அரச பதவிகளிலிருந்தும், அமைச்சர்கள் பதவிகளிலிருந்தும் நாம் அறியலாம்.
இலங்கைக் கரையோரப் பகுதிகளில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைத்தான் கராவ சாதியினர் என்றழைக்கின்றனர். இக் கராவ சாதியினரில் பெரும் பான்மையானோர், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 29
சமயத்தைத் தழுவினர். இவர்களில் பெரும் பாலோர் தம்முடைய மீன்பிடித் தொழிலை விட்டு, வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் பொருள் சம்பாதித்தனர். இவர்களிலும் தாழ்ந்த சாதியினர், கொய்கம சாதியினருக்குக் கொடுக்கும் மரியாதையைக் கராவ சாதியினருக்குக் கொடுத்தனர். கராவ சாதியினர் தாம் கொய்கம சாதியினரைவிட, தாழ்ந்த சாதியினர் என்பதை ஏற்றுக் கொண்டிருக் கின்றனர். இலங்கைத் தமிழர்களிடையே இருக்கும் கரையார் என்ற சாதியினருக்கும், கராவ சாதியினருக் குமிடையே எவ்வித சம்பந்தமுமில்லை.
இன்னொரு முக்கிய சாதியினர்தான் சலாகம சாதியினர். இவர்கள் சாலியா என்று அழைக்கப் பட்டனர். கறுவாபட்டை உரிப்பதற்காக இவர்கள் தென்னிந்தியாவிலி ருந்து பதினேழாம் நூற்றாண்டில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் பலப் பிட்டிய பகுதியிலேயே குடியேறினர். இவர்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் பொருள் குவித்து சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றனர்.
கீழ் மட்டத்திலுள்ள சாதிகளில் ஒரு சாதியினர் தான் துராவ சாதியினர். இவர்கள் கள் இறக்கும் தொழிலைச் செய்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் தென்னிலங்கைப் பகுதியிலேயே அதிகமாக வாழ் கின்றனர்.
இன்னொரு முக்கிய சாதியினர்தான் வஹ"ம்புர சாதியினர். இவர்கள் ஹக்குரு - (கருப்பட்டி வடிப்பவர்கள்) சாதியினர் என்று அழைக்கப்படுவர். இவர்கள் ரதல உயர் வகுப்பினரின் வளவைகளில் சமையலறைகளில் வேலை செய்வதும் உண்டு.
சிங்கள சமூகத்தில் பறை யடிப்பவர்களை பெராவ சாதியினர் என்றழைப்பது வழக்கம். இவர்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினராகவே கணிக்கப்படுவது வழக்கம்

Page 28
30 அ. முகம்மது சமீம்
இவர்களைப் போல இன்னொரு தாழ்த்தப் பட்ட சாதியினர்தான் பத்கம் அல்லது பது என்ற சாதியினர். ரொடி சாதியினர்தான் சாதிகளிலே மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்.
சிங்களச் சமூகத்திலுள்ள சாதிகள் தேர்தல் காலங்களில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. இச் சாதியினர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராயிருந்தாலும் தமது சாதியைச் சேர்ந்தவர்களுக்கே தமது வாக்குகளை அளிப்பது வழக்கம். அரசியல் கட்சிகள் கூட எங்கெங்கு ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக இருக்கிறார்களோ
அங்கெல்லாம் அச் சாதியினரைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுவுவார்கள். பின்வரும் அத்தியாயங்களில்
இதனை ஆராய்வோம்.
ஒரு சமூகத்தில், உயர்ந்த சாதியினரென்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றும் அவரவர்களுடைய தொழிலைக் கொண்டுதான் கணிக்கப் படுகிறார்கள் என்பதை மேலேயுள்ள ஆய்விலிருந்து அறிகிறோம். முஸ்லிம் சமூகத்தினரும் தாம் செய்யும் தொழிலைக் கொண்டே கணிக்கப்படுவார்கள் என்ற உண்மையை அறியவேண்டும். அதற்கேற்ப தம் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டும்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 31
5. இலங்கை அரசியலில் கொய்கம சாதியினரின் ஆதிக்கம்
இலங்கை முஸ்லிம்களிடையே சாதிப் பிரிவினை இல்லை. ஆனால் பிரதேச வேறுபாடுகள் இருக்கின்றன. பேருவளை மாணிக்க வியாபாரக் குடும்பத்தினர், பிந் தெனைப் பகுதியில் உள்ள பக்கினி கஹவெல என்ற ஊரிலுள்ள குடும்பத்துடன் திருமண உறவை வைக்கமாட்டார்கள். அதே போல கண்டியிலுள்ள அக்குறணைப் பகுதியில் வதியும் பணக்காரக் குடும்பங்கள் மஹியங்கனையிலுள்ள பங்கரகமன என்ற கிராமத்துடன் எவ்வித சம்பந்தமும் வைக்க மாட்டார்கள். காரணம், முன்னையவர்கள் மாணிக்க வியாபாரமும், பெருந் தோட்டப் பயிர் செய்கையும் செய்து பணம் சம்பாதித்த குடும்பங்கள். பின்னையவர்கள், ஆடு மாடுகளை வளர்த்தும் கூலி வேலைகளைச் செய்தும், விவசாயம் செய்தும் வறுமையில் வாடுபவர்கள். ஆகவே, இங்கே பிரதேச வேறுபாடு வர்க்க வேறுபாட்டுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. திக்குவலை கமாலின் கதைகளிலும், மொயின் சமீனின் கதைகளிலும் ஒரே கிராமத்திலுள்ள முஸ்லிம்களிடையே இருக்கும் வேறுபாடுகளை நாம் அவதானிக்க முடிகிறது. இதற்கு வர்க்க வேறுபாடு ஒரு புறமிருக்க, சிங்கள மக்களின் சாதி வேற்றுமையும் இவர்களுடைய எண்ணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கலாம். சிங்கள சமுதாய அமைப்பிலும், அரசியலிலும் உயர்சாதியினரான கொய்கம சாதியினரின் ஆதிக்கத் தினால் ஏற்பட்ட தாக்கம் அவர்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்களையும் பாதித்திருக்கலாம் என்பதை மறுப்பதற் கில்லை. 1946 -ம் ஆண்டின் தொகுதி நிர்ணய குழுவினரதும்

Page 29
32 அ. முகம்மது சமீம்
1959 -ம் ஆண்டின் தொகுதி நிர்ணய குழுவினரினதும் சிபாரிசுகளினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் தேர்தல் தொகுதிகளில் ஏற்பட்ட வாக்காளர் தொகையில் ஏற்பட்ட மாற்றங்களும், முஸ்லிம்களுடைய அரசியல் வாழ்க்கையையும் ஒரளவு பாதித்தது எனலாம். எனவே இச்சாதிப்பிரிவினை எவ்வளவு தூரம் இலங்கையின் அரசியலைப் பாதித்தது என்பதை அறிதல் அவசியம்.
கண்டி சிங்களவர், கரையோரச் சிங்களவர் என்ற பிரிவினையை நாம் சாதி அடிப்படையில் பார்த்தால் உயர் குடிப்பிறப்பினர், ஆட்சிக்குரியவர் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் கண்டி கொய்கம சாதியினருக்கும் கரையோரச் சிங்கள உயர்குடிப் பிறப்பினர் ஆகிய கொய்கம சாதியினருக்குமிடையே உள்ள வேறுபாட்டைக் காணலாம். 1815 -ம் ஆண்டு வரையில் கண்டி இராச்சியத்தின் ஆட்சியாளர்களாக இருந்த கண்டி கொய்கம சாதியினர் மேல் நாட்டவரின் ஆட்சியின் கீழ், அவர்களது நாகரிகத்தைப் பின்பற்றி, கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி சிங்கள பெளத்த மதத்தின் மரபை மறந்த கரையோர கொய்கம சாதியினரைப் பற்றி, தாழ்ந்த எண்ணத் தையே வைத்திருந்தனர். ஆனால், படிப்படியாக பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரம், இலங்கை யருக்கு மாறிவருவதை அவதானித்த கண்டிச் சிங்கள-கொய்கம சாதியினர், தாம் கரையோரச் சிங்கள-கொய்கம சாதியினரின் ஆதிக்கத்தின் கீழ் வர நேரிடும் என்று பயந்து, இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஸ்தாபிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னமேயே 1918 -ம் ஆண்டில், ஜே.ஏ. ஹலங்கொடவின் தலைமையில், கண்டிச்சிங்கள சங்கத்தை ஸ்தாபித்து பிரித்தானியரின் அரசியல் சீர்திருத்தங்களை எதிர்த்தனர். தேசிய காங்கிரஸை ஆதரித்த ஒரு சில கண்டித் தலவர்களும், 1924 -ம் ஆண்டில் கண்டித் தேசிய சங்கத்தில் சேர்ந்தனர்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 33
கண்டிச் சிங்களவர், தம்முடைய அரசியல் - சமூக அந்தஸ்தை ஒரளவு பாதுகாத்தே வந்தன்ர் எனலாம். முதலாவது அரசசபை காலத்திலிருந்து, 1956 -ம் ஆண்டு வரை, 1:1 விகிதாசார முறைப்படி, சட்ட மன்றத்தில் இடம் பெற்ற கண்டிச் சிங்களவர், 1970 -ம் ஆண்டில், தம்முடைய பிரதிநிதித்துவத்தை 3:2 ஆகக் கூட்டினர். ஆனால் சனத்தொகை அடிப்படையில் பார்த்தால் கரையோரச் சிங்களவர், கண்டிச் சிங்களவரை விட 32 அதிகமாகவே இருந்தனர். கீழே உள்ள அட்டவணை இதைத் தெளிவாக்கும்.
1970 -ம் ஆண்டு
பிரதேசம் சனத்தொகை விகிதாசாரம் ஆசனங்கள் விகிதாசாரம்
கரையோரம் 45 மில்லியன் 3 54 2
கண்டி 30 மில்லியன் 2 73 3
கண்டிச் சிங்கள - கொய்கம சாதியினரின் அரசியல் ஆதிக்கம் இங்கே அதிகரிப்பதைக் காணலாம். சட்ட மன்றத்தில் இவர்களுக்குக் கிடைத்த பெருவாரியான ஆசனங்களின் காரணமாக அமைச்சரவையிலும் இவர் களுடைய ஆதிக்கமே வலுப்பெற்றது. இனி பின்வரும்
அட்டவணையைப் பார்ப்போம்.
1970 -ம் ஆண்டின் அமைச்சரவையிலும் சாதிப் பிரிவினையைப் பார்ப்போம்.
1970 -ம் ஆண்டின் அமைச்சரவை
கண்டி கொய்கம சாதியினர் கரையோர கொய்கம சாதியினர் சலாகம சாதியினர் கராவ சாதியினர் வகும்புர சாதியினர்

Page 30
34 அ. முகம்மது சமீம்
முஸ்லிம் 1 தமிழர் 1 பறங்கியர் 1
மொத்தம் 22
கொய்கம சாதியினரின் அரசியல் அதிகாரம் வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம் பிரித்தானிய ஆட்சியின் அரசியல் கொள்கையே. கண்டியைக் கைப்பற்றிய பிரித்தானியர்கள் சிங்கள மக்களோடு உறவு வைப்பதற்கு அவர்களை ஆட்சி செய்து வந்த கொய்கம சாதியைச் சேர்ந்த தலைவர்களையே உபயோகித்தார்கள். நீதி பரிபாலனத்தில் நீதிக்கு முன்னால் எல்லோரும் சமம் என்ற தத்துவத்தைக் கடைப்பிடித்தாலும் பிரித்தானிய அரசாங்கம் சிங்கள சமூகத்தில் ஏற்கனவே இருந்துவந்த சாதிப் பிரிவினையைத் தம்முடைய ஆட்சியை நிலை நாட்டுவதற்குச் சாதகமாகப் பாவித்தார்கள். 1832 -ஆம் ஆண்டில், இலங்கைக்கு வந்த கோல்புரூக் குழுவினரின் சிபாரிசின்படி “ராஜகாரிய’ என்ற நில பிரபுத்துவ ஆட்சியின் கட்டாய சேவையை ஒழித்ததின் பின், பிரித்தானிய அரசாங்கம் மக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பிருந்த அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய பட்டங்களை வழங்கியது. கண்டித் தலைவர்களுக்கும் முதலியார்களுக்கும் அதிகாரங்களை வழங்கினர். உயர்குடிப் பிறப்பினராகிய இத் தலைவர்கள் ஆங்கிலக் கல்வியைப் பெற்று, கண்டிப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெருந்தோட்டப் பயிர் செய்கையினால் பொருள் சம்பாதிக்கத் தொடங்கினர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரும் இதனால் பயன்பெற்றனர். 1845 -ம் ஆண்டில் 'சலாகம சாதியைச் சேர்ந்த கிரகெறி டி சொய்சா ‘முதலியாராக நியமிக்கப்பட்டார். 1853 -ம் ஆண்டில் கராவ சாதியைச் சேர்ந்த ஒருவரும் கொய்கம சாதியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் முதலியாராக நியமிக்கப்ட்டார்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 35
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்காவின் தந்தை ஏற்கனவே மகா முதலியார் பதவியிலிருந்தார். டி.எஸ். சேனாநாயக்காவின் தந்தை டொன்ஸ்பேட்டர் சேனாநாயக்கவும் முதலியாராக ஏற்கனவே நியமிக்கப் பட்டிருந்தார். இவர்களுடைய வாரிசுகள்தான் இன்றும் அரசியலில் தலைமைத் துவத்தை வகிக்கின்றனர். முன்னைய ஜனாதிபதி பிரேமதாச சமூகத்திலிருந்து இந்த படி நிலையைத் தகர்க்கப்பாடுபட்டாரென்றாலும் அந்த வம்சப்படி நிலைதான் இன்றும் தலைமைத்துவம் தாங்கி யிருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி யினால் பயன்பெற்ற கராவ சாதியைச் சேர்ந்த டிமெல், குடும்பமும், டி. சொய்சா குடும்பமும் வகும்புர சாதியைக் சேர்ந்த மெத்தியு குடும்பமும் பெரும் பொருளைச் சம்பாதித்ததோடு அரசியலிலும் செல்வாக்குப் பெறத் தொடங்கின.
பிரித்தானியர்களுடைய செல்வாக்கும் சாதிகளி டையே போட்டியையும் பொறாமையையும் வளர்த்தது. காலனித்துவ ஆட்சியின் ஆவணங்களிலிருந்து நாம் இதை அறிய முடிகிறது. 1910 -ம் ஆண்டில் கவர்னர் சர். ஹியு கிளிப்பர்ட் “படித்த ஒரு இலங்கையரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலைப் பற்றிக் கூறும்போது, படித்த இலங்கையரைத் தேர்ந் தெடுப்பதில் தமிழர் சிங்களவர் என்ற இனவேறுபாடு இல்லாமல், தமிழர் உயர் சாதியினரும், சிங்கள உயர்சாதியினரும் சேர்ந்த ஒர் உயர் சாதியினரையே தெரிவு செய்தார்கள்” என்று கூறுகிறார்.
இலங்கையில் நடந்த முதலாம் இரண்டாம் பாராளுமன்றத் தேர்தல்களில் கூட, கண்டி இராச்சியத்தில் உயர்பதவி வகித்த அதிகாரிகளும், திசாவைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராதபுர தொகுதியில், புலாங்குலம திசாவவும்

Page 31
36 அ. முகம்மது சமீம்
ஹொரொவ பொத்தானையில், பொஹொலியத்த திசாவவும் மினிப்போயில், ரம்புக் வெல்ல திசாவவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். 1964 -ம் ஆண்டுக்குப் பிறகுதான் கிராமப் புறங்களிலிருந்து, மேல்நாட்டு நாகரிகத்தின் செல்வாக்கே இல்லாத சுய பாஷையில் கல்வி கற்ற, சாதாரண தொழில்களைச் செய்யும் மத்தியதரவர்க் கத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினரான சிங்களபெளத்தர்கள், பாராளுமன்றத்தில் அதிகமாக இடம் பெறுவதைப் பார்க்கிறோம். 1947 -ம் ஆண்டுக்கும் 70 -ம் ஆண்டுக்கு மிடையில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பாராளுமன்ற அங்கத்தவர்களின் சாதிகளைப் பற்றிய விபரங்களைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
1947-70 -ம் ஆண்டுக்கிடையில் உள்ள அங்கத்தவர்களின் சத விகித சாதிப் பிரிவினை
தேர்தல் கொய்கம சலாகம கராவ துராவ வகும்புர பத்கம்
ஆண்டு %. % % 9% 1947 SOS 4.5 94 ፲.1 1.1 1.1
1952 6OO 42 8.4 1.1 1.1 1.1
1956 - 589 5.3 84 21 11 1960 57.6 6.6 86 1.3 1.3 26
(ஜூலை)
1965 61.6 3.3 7.3 1.3 20 40
1970 624 3.3 Z9 1.3 26 13
இவ்வட்டவணையிலிருந்து நாம் அறியக்கூடியது என்னவென்றால், கொய்கம உயர் சாதியினர் தம்முடைய சாதியின் அங்கத்தவர் தொகையைக் கூட்டிக் கொண்ட துடன், தாழ்த்தப்பட்ட சாதியினரின் தொகையில் எவ்வித மாற்றமுமில்லாததால், தம்முடைய அரசியல் செல்வாக் கையும் வளர்த்துக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பதெல்லாம் வெளிவேஷம்,

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 37
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமாயிருந்தாலென்ன, சுதந்திரக்கட்சியின் அரசாங்கமாயிருந்தாலென்ன, கொய்கம சாதியினரின் ஆதிக்கத்தைத்தான் நாம் காண்கிறோம். இச்சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தோன்றிய இயக்கம்தான் ஜனதாவிமுக்தி பெராமுனை. இப்பாராளுமன்ற முறையில் தமக்கு அரசியலில் பங்கு இல்லை என்பதை உணர்ந்த இத்தாழ்த்தப்பட்ட சாதியினரின் விரக்திதான்கிளர்ச்சியாக மாறியது.
பாராளுமன்றப் பிரதிநிதிகளின் நிலை இப்படி யென்றால், கொய்கம சாதியினரின் கட்டுப் பாட்டில் இருக்கும் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அமைத்த அமைச்சரவையின் சாதிப் பிரிவினையின் விகிதாசாரத்தைப் பார்ப்போம்.
அமைச்சரவை
1947 1956 1960 1965 1970 * ஐதேக ம.ஐ.மு. சிறில.சு.க. ஐ.தே.க, சிறிலசுக/ஐ.மு.
கொய்கம 8 9 Z 2 13
ga.) To 2 1 2
கரTவ r 2 1 1. 2
துராவ - -- 1 -
வகும்புர -- - - 1
பத்கம - 1 -
ஐ.தே.க. - ஐக்கிய தேசியக் கட்சி
Լ089.(ԼՔ. - மக்கள் ஐக்கிய முன்னணி
சிறிலசு.க. - சிறிலங்கா சுதந்திரக் கட்சி
சிங்கள சாதியினர் தமக்குள்ளேயே இவ்வேறு பாட்டைக் காட்டும்போது சிறுபான்மையினங்களான

Page 32
38 அ. முகம்மது சமீம்
தமிழர்களும் முஸ்லீம்களும் எவ்வகையில் நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.
சமயத்திலும், அரசியலிலும், கொய்கம சாதியினரின் ஆதிக்கத்தைப் பார்த்தோம். பொருளாதாரத் துறையிலும், இவர்களுடைய ஆதிக்கமே தலைதூக்கி நிற்பதை நாம் அவதானிக்க முடிகிறது.
பெரும் கம்பெனிகளின் முகாமையாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போதும், கொய்கம சாதியினரின் செல்வாக்கைத்தான் காண்கிறோம்.
1971 -ம் ஆண்டில் கம்பெனிகளின் முகாமையாளர்கள் எண்ணிக்கை
கொய்கம 76
கராவ 67
dቓ-6ስ)†ዝrd}5ዚ ር) 10
துராவ 2
பஞ்சிகாவத்த முதலாளிகளின் சங்கத்தில் இருக்கும் 134 முதலாளிகளும் கொய்கம சாதியைச் சேர்ந்தவர்கள். பத்திரிக்கைத் தொழிலில் லேக்ஹவுஸ் பத்திரிகை, குணசேன கம்பெனியின் பத்திரிகை, மலிபன் கம்பெனி, மெக்கலம் ஸ்தாபனம் இவையெல்லாம் கொய்கம சாதியினரின் வர்த்தக ஸ்தாபனங்களே, கராவ சாதியினர் மாத்திரம்தான் கொய்கம சாதியினருக்குப் போட்டியாக இருக்கின்றனர். டிமெல்களும், பீரிஸ்களும், டிசொய்சாக் களும் பெரும் வர்த்தகக் கம்பெனிகளை ஸ்தாபித்தனர் - மெக்வூட்ஸ், பிரெளன்ஸ் குரூப், ரிச்சர்ட் பீரிஸ், ஜேள்ல்எம். பர்னாந்து குரூப் - ஆகியவையே இவை. சலாகம சாதியைச் சேர்ந்த சர். சிரில் டி சொய்சா போன்றவர்களும், துராவ சாதியைச் சேர்ந்த என்.யு. ஜயவர்த்தன போன்றவர்களும் சமீபத்தில்தான் பொருளாதாரத் துறையில் தலையெடுக்கத்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 39
தொடங்கினர். ஆகவே கொய்கம சாதியினரின் செல்வாக்கு எல்லாத் துறைகளிலும் - அரசியல், பொருளாதாரம் சமயம் - இருப்பதைக் காணலாம். தேர்தல் நிர்ணயக் குழுக்கள் கொய்கம சாதியினரின் அரசியல் ஆதிக்கத்தை எப்படி மேலும் வலுப்படுத் தினர் என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.
* - Handbook of Rupee companies - 1971

Page 33
40 அ. முகம்மது சமீம்
6. கொய்கம சாதியினரின் அதிகாரத்தைப் பலப்படுத்திய தேர்தல் ஆணைக்குழுக்கள்
1947 -ம் ஆண்டு பிரித்தானியர்கள் இலங்கை மக்களுக்குச் சுதந்திரம் வழங்கினர் என்பது உண்மையில் பிரித்தானிய அரசாங்கம் தனது அதிகாரத்தை இலங்கையின் மத்தியதர வர்க்கத்தினருக்கே வழங்கியது. அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே வழங்கியது. இலங்கையின் உயர் சாதியினராகக் கணிக்கப்படும் கொய்கம சாதியினர் அரசியலில் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். இலங்கையின் முக்கிய இருகட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் சேனாநாயக்க குடும்பத்தினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பண்டார நாயக்கா குடும்பத்தினரும் கொய்கம சாதியைச் சேர்ந்தவர்களே. இவ்விரு குடும்பத்தினரும் உயர் மட்டத்திலிருந்து வந்தவர்களே. கரையோர கொய்கம சாதியைச் சேர்ந்த சேனா நாயக்க குடும்பத்தினர் பிரித்தானிய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்து, பொருள் சம்பாதித்து உயர் மட்டத்தை அடைந்தவர்கள். பண்டாரநாயக்கா - ரத்வத்தை குடும்பத்தினர் கண்டி இராச்சியத்தில் உயர் பதவிகளை வகித்து, மிகவும் பழமைவாய்ந்த நிலப்பிரபுத்துவ குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். இவ்விரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியே இவ்விரு அரசியல் கட்சிகளாக உருவெடுத்தது.
1946 -ம் ஆண்டில், இலங்கைத் தேசிய காங்கிரஸ"ம் எஸ்.டபிள்யு. ஆர்டி பண்டார நாயக்காவின் சிங்கள மகா சபாவும் இவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட சிறுபான்மைக் கட்சிகளும் தனிநபர்களும் சேர்ந்து உருவாக்கியது தான் ஐக்கிய தேசியக் கட்சி. இலங்கைக்கு,

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 41
ஒரு மக்களால் ஆட்சி செய்யப்படும் ஒரு பொறுப்புள்ள சுய நிர்ணய அரசாங்கம் தேவை என்ற நோக்கத்தோடு ஸ்தாபிக்கப்பட்ட, தேசிய காங்கிரசின் கடமை முடிந்து விட்டது. எனவே இலங்கைக்கு சுதந்திரம் பெற்று, அச் சுதந்திரத்தை அமுல் நடத்த ஒரு புதிய ஸ்தாபனம் தேவைப்பட்டது. அதன் காரணமாகத் தான், ஐக்கிய தேசியக் கட்சி என்ற இப்புதிய கட்சி தோற்றுவிக்கப் பட்டது. எல்லா சாதியினரையும், எல்லா இனத்தவரையும், எல்லா சமயத்தினரையும் ஒன்று சேர்த்து நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் சமாதானத்திற்காகவும், நல்லுறவுக்காகவும் ஏற்படுத்தப் பட்டதே இக்கட்சி. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கட்சியுடன் சேர மறுத்தன.
முதலாவது பொதுத்தேர்தலில் அதிகமான ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, டி.எஸ். சேனநாயக்காவின் கீழ் அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் 1951 -ம் ஆண்டில் பண்டார நாயக்கா தன்னுடைய சிங்கள மகாசபாவுடன் அரசாங்கத்தை விட்டும் வெளியேறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மாதாம்பேயில் நடந்த வருடாந்த மகாநாட்டில் தன்னுடைய பிரேரணை களான, சிங்கள மொழி அரச மொழியாக்கப்படல் வேண்டும், பெளத்த சமயம் அரச மதமாக்கப்படல் வேண்டும், என்ற பண்டார நாயக்காவின் பிரேரணைகள் நிராகரிக்கப் பட்டபடியால் அவர் அரசாங்கத்தினின்றும் விலகினார். இன வேற்றுமைக்கான அடித்தளம் போடப் பட்டுவிட்டது. சிங்கள-பெளத்த பாமர மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதும், ஆங்கில கல்விகற்ற மேல்நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றும் உயர் வர்க்கத்தினரின் அரசியல் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, சிங்களமக்களின் பாரம்பரிய மரபுகளைப் பேணிக்காக்கும் ஒரு பண்பாட்டைத் திரும்பவும் இந்நாட்டில் கொண்டு

Page 34
42 அ. முகம்மது சமீம்
வருவதும்தான் தன்னுடைய நோக்கம் என்று பண்டாரநாயக்க கூறினார்.
பண்டார நாயக்கா, லங்கா சமசமாஜக் கட்சியி னின்றும் பிரிந்துவந்த பிலிப் குணவர்த்தனவுடனும், தஹநாயக்காவின் லங்கா பாஷா பெரமுனையும் சேர்ந்து, “மஹாஜன எக்சத் பெரமுனை (மக்கள் ஐக்கிய முன்னணி) என்ற ஒரு புதிய கட்சியைத் தோற்றுவித்து, 1956 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று ஒரு புதிய அரசாங்கத்தை நிலைநாட்டினார்.
கொய்கம சாதியைச் சேர்ந்த டி.எஸ். சேனா நாயக்காவும் பண்டார நாயக்காவும் தத்தம் அரசாங் கங்களை அமைப்பதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரின் உதவியை எப்படிப் பெற்றார்கள் என்பதைப் பார்ப்போம். சிங்கள - கொய்கம சாதியினரும் - தமிழர் வெள்ளாள சாதியினரும் இணைந்து சேர்ந்து அமைக்கப்பட்டதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது அரசாங்கம் ஆனால் ஏனைய தரம் குறைந்த சாதியினரின் உதவியையும் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர்களுக்கும் முக்கிய பதவிகளைக் கொடுத்தார் சேனாநாயக்க. ஹென சாதியினரின் ஜோர்ஜ்ஈ டி. சில்வா , ஹ"னு = (சுண்ணாம்பு) சாதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். குணவர்தனா, சலாகமசாதியைச் சேர்ந்த எல்.ஏ. ராஜபக்ச, நவந்தென்ன சாதியைச் சேர்ந்த யு.ஏ. ஜயவர்த்தன, பத்கம சாதியைச் சேர்ந்த கீர்த்திரத்ன, துராவ சாதியைச் சேர்ந்த என்.யு. ஜயவர்த்தன போன்றோருக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளைக் கொடுத்ததன் மூலம் இச் சாதிகளின் ஒத்துழைப்பைப் பெற்றார். -
1956 -ம் ஆண்டில் பண்டார நாயக்கா வெற்றி பெற்றதற்குரிய முக்கிய காரணம் ஜனநாயக சோஷலிச ஆட்சியை எற்படுத்தி, சிங்கள-பெளத்த தேசிய வாதத்தின் மூலம் இந் நாட்டில் உள்ள எல்லா சாதியினருக்கும் சம

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 43
உரிமை வழங்கப்படும் என்ற அவரது கோஷமே. இந்த உயரிய நோக்கங்களை வைத்துத்தான் பண்டார நாயக்கா 1956-ம் ஆண்டில் தன்னுடைய அரசாங்கத்தை அமைத்தார். இவ்வரசாங்கம் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்ததென்றாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் அபிலாஷைகளைத் தீர்த்துவைப்பதில் வெற்றி கண்டதா என்றால், அதுதான் இல்லை.
இத்தாழ்த்தப்பட்ட சாதியினர், இவ்வரசாங்கத் தின் வெற்றிக்குக் காரணமாயிருந்தவர்கள் என்ற எண்ணத்தில், தமக்கும் உயர் பதவிகள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தனர். ஆனால் பண்டார நாயக்கா ೧॰: சமாளிப்பதற்காக ஒரு சில பதவிகளை ಲಜ್ಜಿಗಿತ! வற்புறுத்தலின் பேரில் கொடுத்தார். என்.கியூ ட்யஸ் என்பவருக்குகலாசார அமைச்சின் பணிப்பாளர் பதஜிய்ை மட்டும் வழங்கினார். சுயபாஷை இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களான எப்.ஆர். ஜயசூரிய, கேம்.எம்.பி. ரஜரட்ண போன்றவர்களுக்கு எவ்வித பதவியும் கிடைக்கவில்ண்ஸ் 1959 -ம் ஆண்டில் பிலிப் குணவர்த்தனாவை கடைசி
நேரத்தில்தான் அமைச்சரவையில் சேர்த்துக் கெர்ண்டங்i. பிலிப் குணவர்தனாவும், வில்லியம் சில்வீர்வும் அமைச்சரவையிலிருந்து விலகியபோது, கராவ சாதியைச் சேர்ந்த நீதி அமைச்சர் எம்.எச். டபிள்யு.டி. சில்வாவும் மிகவும் தந்திரமாக வெளியேற்றப்பட்டார். ஏனைய சிறுபான்மை சாதியினரைத் திருப்திப்படுத்துவதற்காக பத்கம சாதியைச் சேர்ந்த அசோகா கருணாரத்தினவுக்கு நியமான அங்கத்தவர் பதவியை வழங்கினார்.
மூன்றாம் மண்டல நாடுகளில் வர்த்தக முன்னேற்றத் தினாலோ நிர்வாகப் பதவிகள் வகிப்பதன் மூலமாகவோ சமூகத்தில் உயர் அந்தஸ்தைப் பெறுவதைவிட, அரசியல்

Page 35
44 அ. முகம்மது சமீம்
அதிகாரத்தைப் பெறுவதால்தான், சமூகத்தில் உயர் அந்தஸ்தைப் பெறலாம் என்று வளர்முக நாடுகளில் அரசியல் என்ற கட்டுரையில் மைறன் வெய்னர் என்பவர் எழுதுகிறார். சாதிப் பிரிவினையில் ஊறிப் போயிருக்கும் இலங்கை போன்ற நாடுகளில், அரசியல் அதிகாரம் பெறுவதன் மூலம்தான், தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் சமூகத்தில் உயர் அந்தஸ்தைப் பெறலாம். ஆகவே, எல்லா சாதியினரும் இவ்வரசியல் அதிகாரத்தைப் பெற முயல்வதில் ஆச்சரியமில்லை. இன்று அரசியல் கட்சியினருடன் உழைக்கும் போது தாழ்ந்த சாதியினர் கூட சமூகத்தில் அந்தஸ்தைப் பெறுகின்றனர். இன்று கிராமங்களில், மரபு வழிவந்த சாதியடிப்படையிலான கிராமத் தலைவர்களின் மூலமல்லாது, கட்சி சார்புடைய நபர்களின் மூலம்தான் அரசாங்கங்கள் தமது திட்டங்களை அமுல் நடத்துகின்றன என்று சிங்கள கிராமத்தில் ஏற்பட்டுவரும் அரசியல் அமைப்பு மாற்றங்கள் என்ற ஆராய்ச்சி நூலில் எம்.எஸ். ரொபின்சன் கூறுகிறார். அரசியல் கட்சிகளின் பொருளாதார அரசியல் கொள்கை களுக்காகத் தமது ஆதரவைத் தெரிவித்தாலும், பெரும்பாலும் இச்சாதிகள் தனிப்பட்ட முறையில் லாமல் தமது ஆதரவைக் குழுவாகவே ஒரு கட்சிக்குக் கொடுப்பதையும் நாம் கடந்த பொதுத் தேர்தல்களில் காணமுடிகிறது. இலங்கையின் அரசியல் அதிகாரம் உயர் மட்டத்திலுள்ள சாதியின் குடும்பங்களிடையே மாறி வருவதையும் அவர்கள் சிறுபான்மை சாதியினரின் ஒத்துழைப்பைப் பெறுவதிலும் தங்கியிருக்கிறது என்பதை இப்பொதுத் தேர்தல்களின் மூலம் நாம் அறியலாம். இடது சாரிக் கொள்கைகளையுடைய லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட தம்முடைய அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட சில முக்கிய சாதிகளைத்தான் நம்பியிருக்கின்றன. இலங்கையில் அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்குரிய காரணங்களை நாம் அவ்வக்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 45
கட்சிகளுடைய கொள்கையினால் ஏற்படுவதா அல்லது அவர்கள் செல்வாக்குள்ள சாதிகளோடு ஏற்பட்ட ஒப்பந்தத் தினாலா, என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.
1946-ம் ஆண்டில், தொகுதி நிர்ணய கமிஷன் செய்த சிபாரிசினால், தம்முடைய அந்தஸ்துக்குரிய ஆசனங்கள் தமக்குக் கிடைக்கவில்லையென்று கண்டிச் சிங்களவரின் முறையீட்டின் காரணமாக, 1956 -ம் ஆண்டில் நிறுவப்பட்ட மக்கள் ஐக்கிய முன்னணி, 1959 -ம் ஆண்டில் ஒரு தொகுதி நிர்ணய கமிஷனை நியமித்தது. கண்டிச் சிங்களவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை விலக்குவது தான் இக்குழுவின் நோக்க மாகவும் இருந்தது. மக்களின் சனத்தொகைக்கேற்ப சமமான ஆசனங்களை வழங்குவதே இவர்களின் குறிக்கோளாயிருந்தது. 1948 - 1949 ஆண்டு களுக்கிடையில், மலைநாட்டுப் பிரதேசத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த பிரஜா உரிமை பெற்ற இந்தியத் தொழிலாளர்கள், தங்கள் பிரஜா உரிமையை இழந்தனர், சனத் தொகையின் அடிப்படையிலும் நிலவிஸ்தீரண அடிப்படையிலும் ஆசனங்கள் வழங்கப் பட்டதால், கண்டிப்பிரதேசத்திற்கு மேலதிகமாக ஆசனங் கள் வழங்கப்பட்டிருந்தன. உண்மையில் இலங்கையில் முழு சனத்தொகையின்படி, கண்டிச் சிங்களவருக்கு 51 ஆசனங்களும் கரையோரச் சிங்களவருக்கு 76 ஆசனங்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால் 1959 -ம் ஆண்டின் தேர்தல் நிர்ணய கமிஷன் கரையோரச் சிங்களவருக்கு 54 ஆசனங்களையும், கண்டிச் சிங்களவருக்கு 73 ஆசனங்களையும் வழங்கியது. இதனால் பாதிக்கப் பட்டவர்கள், மேற்குக்கரையோரப் பகுதிகளிலும் தெற்குக்கரையோரப் பகுதிகளிலும் உள்ள நகர்ப் புறங்களைத் தமது அரசியல் பீடமாக அமைத்துக் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினருமே. அன்றைய ஆட்சியாளர்கள். உண்மையில்

Page 36
46 அ. முகம்மது சமீம்
நிலப்பிரபுத்துவ மரபில் வந்தவர்களாதலால் இப்புதிய அமைப்பு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. சாதி அடிப்படையில் பார்த்தால் மேற்கு, தெற்குக் கரையோரப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இது கண்டிப் பிரதேசத்தில் சிறுபான்மையாக வாழும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குச் சாதகமாக அமைந்தது என்று கூற முடியாது. இது எதைக் காட்டுகிறதென்றால் நாட்டின் நடப்புக்கேற்ப, தாழ்த்தப்பட்ட சாதியினரின் உதவியுடன் முற்போக்குக் கோஷங்களால் மக்களை மயக்கி, பிற்போக்கு எண்ணத்திலேயே ஊறிப் போயிருக்கும் கண்டி கொய்கம உயர் சாதியினரின் குடும்பத்தினர் மக்கள் மேலுள்ள ஆதிக்கத்தை வலுப்படுத்துவதே.
இக்குழுவினரின் சிபாரிசினால் சிறுபான்மை இனங்களாகிய இலங்கைத் தமிழருக்கோ, முஸ்லிம் களுக்கோ எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களுக்குச் சில தொகுதிகளில் இரு ஆசனங்கள் வழங்கப்பட்டன. தம்முடைய சனத்தொகைக்கேற்ப, தமக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட சாதியினரின் முறையீட்டை நிராகரித்த கமிஷனர்கள், “அவர்களுடைய கோரிக்கை நியாயமானது என்று எமது அனுதாபத்தை நாம் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், ஜனநாயக அரசியலில் எல்லா மக்களும் சமம் என்ற கொள்கையைக் கொண்ட நாம், சாதி அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயிப்பதனால், இக்கொள்கைக்கு முரணான உயர் சாதி "கீழ்சாதி’ என்ற பகுப்பினை உண்டாக்கிய குற்றத்திற்கு ஆளாவோம் என்பது மட்டுமல்ல, இன்று சாதிப் பிரிவினையை ஒழித்து, மக்கள் எல்லோரும் சமம் என்ற மக்களின் கொள்கைக்கும்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 47
முரண்பட்டவர்களாவோம்” என்று கூறினர். இக் கூற்றினை கொய்கம அல்லாத சாதியினர் நியாயம் என்று ஏற்றுக் கொண்டாலும், தமக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவத்தின் அடிப் படையில் தான் தம்முடைய கோரிக்கைகளை ஆளும் சாதியினரான கொய்கம சாதியினரின் முன்வைப்ப தோடு, தம்முடைய பிரதி நிதித்துவ பலத்தை முன் வைத்துத்தமக்கும் அரசாங்க அதிகாரத்தில் ப்ங்குண்டு என்று கேட்கலாம் என்று கூறினர்.
இந்நாட்டு மக்களிடையே அரசியலில் வலதுசாரி, இடதுசாரி என்ற பாகுபாட்டில் அரசியல் முதிர்ச்சி ஏற்படாதவரையில் சாதி, சமயம், இனம் ஆகியவை தான் தேர்தல் காலங்களில் மக்களின் முன்நிற்கின்றன. இவைகள் தான் தேர்தல் முடிவுகளுக்கும் காரணமாகின்றன. பொருளாதாரம் அரசியல் கொள்கைகளல்ல.

Page 37
48 அ. முகம்மது சமீம்
7. 1930 க்குப் பிறகு கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்
இன உணர்வும் இன வேற்றுமையும் இனங்களிடையே குரோதத்தை வளர்ப்பதுடன் நர்ட்டைப் பிளவுபடுத்தி, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதை உணர்ந்த சில முற்போக்கு எண்ணம் படைத்தவர்கள் இலங்கையின் இருபெரும் சமூகங்களாகிய சிங்கள வருக்கும் தமிழருக்குமிடையே பரஸ்பர சமூக நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வளர்ப்பதற்காக கல்வித் துறையில் ஒரு முக்கிய திட்டத்தை மக்கள்முன் வைத்தார்கள். சிங்களவர் தமிழைக் கற்க வேண்டும் என்றும் தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும் என்பதே அத்திட்டம். இத்திட்டத்தை அமுல் நடத்தவும் செய்தார்கள்.
வர்க்கங்களிடையே உள்ள வேற்றுமையைக் குறைப்பதற்காக உயர்வர்க்கத்து மாணவர்கள் கல்வி கற்கும் ஆங்கில பாடசாலைகளில் தாய்மொழியை ஒரு பாடமாகவும், பாமரமக்கள் கற்கும் பாடசாலைகளில் தாய்மொழியோடு ஆங்கிலத்தையும் ஒரு பாடமாகவும் கற்பிக்கும் திட்டம் தோல்வியடைந்தது. இத் தோல்விக் குரிய காரணத்தை 1937 -ம் ஆண்டு வெளியான இந்து ஒர்கன் என்ற பத்திரிகை,
"ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் தம்மை ஆங்கிலப் பிரபுக்கள் என்ற நினைப்பில் ஏழை கிராம மக்களையும், தொழிலாளர்களையும், மிகவும் ஏளனத்துடனும், அகங்காரத்துடனும் நோக்குவது மல்லாமல், அவர்கள் மேல் எவ்வித அனுதாபமும் காட்ட முன்வரவில்லை.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 49
இவர்கள் கொச்சை மொழியில் பேசும் சிங்களமும், தமிழும் கேட்பதற்கு விர சமாயிருக்கிறது என்று கூறுகிறது. ஆங்கிலம் கற்ற இவ்வகுப்பினருக்கும், ஏனைய மக்களுக்கு மிடையே இருந்த சமூக ஏற்றத்தாழ்வுடன், பொருளாதார வேற்றுமையையும் சேர்த்தால், இவ்வர்க்க வேறுபாடு தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. கட்டணம் செலுத்தி, மிஷனரி பாடசாலைகளிலும், தனியார் பாடசாலை களிலும் ஆங்கிலக் கல்வி கற்று, அரசாங்கத்தின் உயர் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்ட இவ்வுயர் வர்க்கத்தினருக்கும், தாய் மொழியில் அரசாங்க பாட சாலைகளில் இலவசமாகக் கல்வி கற்று, அரசாங்கத்தில் உத்தியோகம் பெறும் வாய்ப்பில்லாமல், தொழிலாளர் களாகவே காலம் கடத்திய ஏழை மக்களுக்குமிடையே இருந்த இடைவெளி பெரிதாகிறது. 1935 -ம் ஆண்டில் கொழும்பு றோயல் கல்லூரியில் அரசாங்கம் பாலர் வகுப்பில், சிங்கள மொழி மூலம் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்த போது, பெரும்பான்மையான பெற்றோர் தம் பிள்ளைகளை விலக்கிக் கொண்டார்கள். ஆங்கிலக் கல்வி பணக்காரவர்க்கத்துக்கும், தாய்மொழிக் கல்வி ஏழை களுக்கும் என்ற ஒரு நிலை ஏற்பட்டது. இந்நிலையை விளக்கிய பேராசிரியை சுவர்ணா ஜயவீர, “சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் தான் தாய்மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் நிலை ஏற்படுவதற்குக் காரணம், தாய் மொழியின் மூலம் கல்வி பெறுவதினால் எவ்வித பொருளாதார நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற யதார்த்த நிலையும், தாய்மொழி மூலம் கல்வி கற்றவர்கள், தொழில் வாய்ப்புப் பெறும் நிலையில் மிகவும் அடித்தளத்தில் உள்ள தொழில்களையே பெறலாம் என்ற நிலையுமே” என்று கூறுகிறார்.
1920 -ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில் சுயபாஷை இயக்கம் பரவியதன் தாக்கத்தை இலங்கையிலும் காண்கிறோம். 1934 -ம் ஆண்டில், ஒஸ்மானிய

Page 38
50 அ. முகம்மது சமீம்
சர்வகலாசாலை உபவேந்தரின், “ஒரு நாடு தன் முழு நிறைவை அடையவேண்டுமானால் அதன் கல்வித் திட்டம் அந்நாட்டு மக்களின் தாய் மொழியில்தான் அமைய வேண்டும்” என்ற கூற்றை, இந்து ஒர்கன் பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்தது. இவ்வியக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு பயந்த ஆங்கிலக் கல்வி கற்ற உயர் வர்க்கத்தினரின் கருத்தை பிரதிபலிக்குமுகமாக, அன்றைய இலங்கை சர்வகலாசாலை கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மார்ஸ், “தாய்மொழி மூலம் தான் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையென்றால், இலங்கையின் கல்வித் திட்டத்தையே நாம் மாற்றியமைக்க வேண்டும். சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட வேண்டுமானால், சிங்கள மொழியில் ஒரு சர்வகலாசாலையும், தமிழ் மொழியில் ஒரு சர்வகலாசாலையும் ஏற்படுத்தப்படல் வேண்டும். அப்படி யேற்பட்டால் இவ்விரு இனங்களும், ஒன்றையொன்று அறிய முடியாத நிலையேற்படும். இதனால் இலங்கை அரசியலிலும், மொழியடிப் படையில் இரு பிரிவுகளைக் காணலாம். வெளியுலகத் தொடர்பிற்கு ஆங்கிலம் ஒரு முக்கிய கருவியாக இருக்கும் பட்சத்தில், இலங்கையின் இன ஒற்றுமைக்கும் படித்தவர்களின் மத்தியில் கருத்துப் பரிமாறல்களுக்கும் ஆங்கில மொழி அவசியமானதால், இலங்கைச் சர்வகலாசாலையின் போதனா மொழி ஆங்கிலமாகவே இருக்கும்”, என்று கூறினார். ஆங்கில மொழி மூலம்தான், இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவிகளைப் பெறும் வாய்ப்பும், அரசாங்க சகாய நிதி பெற்று இங்கிலாந்தின் சர்வகலாசாலைகளில் பட்டம் பெறும் தகுதியும் இருப்பதனால், ஆங்கிலம் கற்ற இவ்வுயர் வர்க்கத்தினர் சுய பாஷை இயக்கத்திற்குத் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
“1939 -ம் ஆண்டில், அரசாங்கம் அரசாங்கப் பதவிகளுக்குரிய பரீட்சைகளில் தாய்மொழி ஒரு கட்டாய

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 51
பாடமாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவந்த பிறகு தான், தனியார் பாடசாலைகளிலும் தாய் மொழி கற்பதில் ஒர் ஆர்வம் ஏற்பட்டது” என்று கல்விப்பணிப்பாளர் தம்முடைய அறிக்கையில் கூறுகிறார்.
சுயபாஷை இயக்கத்திற்கு முழு ஆதரவையும் கொடுத்தவர்கள் வடமாகாண ஆசிரியர் சங்கத்தினரும், தென்மாகாண கல்விச் சீர்திருத்தவாதிகளுமே. யாழ்ப் பாணத்துத் தமிழரின் கருத்தைப் பிரதிபலித்த இந்து ஒர்கன் பத்திரிகை “தாய்மொழியைத் தன்னுடைய உரிய ஸ்தானத்தில் வைக்காத விடத்து, நாம் நிரந்தரமாக எதையும் சாதிக்க முடியாது. ஒரு நூற்றாண்டு காலமாக ஆங்கிலக் கல்வியை நாம் கற்பித்ததின் பலனாக, ஒரு கர்வம் படைத்த அகங்காரம் கொண்ட, மமதை எண்ணமுள்ள ஒரு வர்க்கத்தைத் தான் நாம் உருவாக்கியிருக்கிறோம்” என்று கூறியது.
இரு இனங்களிடையேயும் ஒற்றுமை வளர்ப்பதன் நோக்கத்துடன், அன்றைய அரசசபையில், மட்டக்களப்பு தமிழ் அங்கத்தவரான எஸ்.ஒ. கனகரத்தினம் 1937 -ம் ஆண்டில் தமிழ் பாடசாலைகளில் சிங்களமும் ‘சிங்களப் பாடசாலைகளில் தமிழும் கட்டாய பாடங்களாகக் கற்பிக்கப் படல் வேண்டும்’ என்ற பிரேரணையைக் கொண்டுவந்தார். இப்பிரேரணைக்கு வட மாகாண ஆசிரியர் சங்கமும், யாழ்ப்பாணத்து இளைஞர் மன்றமும் தமது முழு ஆதரவையும் அளித்தன. ஆனால் நடைமுறையில் இது சாத்தியப்படவில்லை. இதனை விளக்கிய வண. பீட்டர் பிள்ளை பொருளாதார நன்மையைக் கருதி சில தமிழர்கள் சிங்களத்தைக் கற்க முன்வரலாம், ஆனால் தமிழைக் கற்பதனால், எவ்வித பொருளாதார நன்மையையும் அடைய முடியாத பட்சத்தில், சிங்களவர்களில் எத்தனை பேர் தமிழை கற்க முன்வருவார்கள்”, என்ற யதார்த்த நிலையைச் சுட்டிக்

Page 39
52 அ. முகம்மது சமீம்
காட்டினார். எனவே இத்திட்டம் வெற்றி பெறவில்லை. நாட்டில் இன ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கு யாழ்ப்பாணத்து முற்போக்குவாதிகள் முயன்றும் அது பலனளிக்கவில்லை.
‘இலவசக் கல்வித் திட்டத்தின் மூலம்தான், ஆங்கிலக் கல்வி கற்ற உயர் வர்க்கத்தினருக்கும், தாய் மொழி மூலம் கல்வி கற்ற பாமர மக்களுக்குமிடையே உள்ள வேற்றுமையை அகற்றலாம்’ என்று நம்பிய சி.டபிள்யு. கன்னங்கரா, 1944 -ம் ஆண்டில், அரசசபையில் ஒரு மசோதாவை சமர்ப்பித்தார். இம்மசோதா பின்வருமாறு அமைந்தது. இதுதான் இலவசக் கல்வித்திட்டம்.
1. எல்லா அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளிலும் அரசாங்க, ஆரம்ப உயர் கல்விப் பாடசாலைகளிலும், ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைகளிலும், அரசாங்க, பொறியியல், விவசாய, வர்த்தகப் பாடசாலைகளிலும், சர்வகலா சாலையிலும் கல்விக் கட்டணம் அறவிடப்படக் கூடாது.
2. அரசாங்க நன்கொடை பெறும் ஆரம்ப, உயர் கல்விப் பாடசாகைளிலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி களிலும் கடமையாற்றும் ஆசிரியர் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்களுடைய கல்வித் தகுதிக் கேற்ப, அவர்களது சம்பளம் அரசாங்க நிதியிலிருந்து கொடுக்கப்படும்.
3. அரசாங்க நன்கொடை பெறும் பாடசாலை களுக்கு தளவாடங்களுக்கென்று ஒரு தொகையை அரசாங்கம் கொடுக்கும். ஆனால் இப்பாட சாலைகள், விளையாட்டுக்கு, ஒரு சிறிய கட்டணத்தை அறவிடலாமேயொழிய வேறு எவ்விதக் கட்டணத் தையும் அறவிட முடியாது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 53
இம் மசோதாவை அரச சபையில் சமர்ப்பித்த *கன்னங்கரா, பணம் செலவு செய்து ஆங்கிலக் கல்வியைப் பெற்று அரசாங்க பதவிகளை ஆக்கிரமித்து இக்கல்வியின் மூலம் பணம் சம்பாதித்த பண்க்கார வர்க்கத்தின் பராமரிப்பிலிருந்த இக்கல்வியை பாமர மக்களின் உரிமைச் சொத்தாக, நான் மாற்றி விட்டேன்’ என்று கூறினார்.
இத்திட்டத்தை டிஎஸ். சேனாநாயக்க உட்பட தேசிய காங்கிரஸ் தலைவர்களில் சிலர் எதிர்த்தார்கள். இம் மசோதாவின் விவாதத்தைப் பிற்போட அவர்கள் எத்தனித் தார்கள். டி.எஸ். சேனாநாயக்கா நாட்டில் இல்லாத சமயம் பார்த்து இவ் விவாதத்தை நடத்திய கன்னங்கரா இம்மசோதாவை வெற்றி கரமாக அமுலாக்கினார்.
இத்திட்டத்தினால் பெரும்பலனையடைந்தவர்கள் பணக்கார வர்க்கத்தினரே என்பதை கன்னங்கரா அப்பொழுது உணரவில்லை. 1945 -ம் ஆண்டு வரை கல்விக் கட்டணம் செலுத்தி கல்வி கற்ற உயர் வர்க்கத்தினர், இப்பொழுது கட்டணம் செலுத்தா மலேயே இக் கல்வியைப் பெற்றனர். கொழும்பிலுள்ள பிரசித்தி பெற்ற கல்லூரிகளைப் போல கிராமங்களிலும் மத்திய கல்லூரிகளை நிறுவி, பாமர மக்களுக்கும் உயர் கல்வி கொடுக்க வேண்டும் என்ற கன்னங்கராவின் உயரிய நோக்கம், அரசாங்கத்தின் பணமின்மை காரணமாக நிறைவேறவில்லை. கல்விக்காக ஒதுக்கீடு செய்த அரசாங்கத்தின் பணத்தின் பெரும்பகுதி, இப்பொழுது, பணக்கார வர்க்கத்தின் பிள்ளைகளுக்காக செலவிடப் பட்டது. ஏழை மக்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய பணம் பணக்கார வர்க்கத்திற்குச் செலவு செய்யப்பட்டது.
பாமர மக்களும் ஆங்கிலக் கல்வி பெறுவார்களே என்ற பயம் சில பழமைவாதிகளிடையே தோன்றியது. பெளத்த அரசாங்கததின் நிர்வாகத்தின் கீழ் தம்முடைய

Page 40
54 அ. முகம்மது சமீம்
கல்வி நிறுவனங்கள் வரும் என்ற பயத்தினால் கிறிஸ்தவ மதச் சங்கங்கள் எதிர்த்தனர். கிறிஸ்தவர்களின் வாக்குகளை நம்பியிருந்த ஜி.ஜி. பொன்னம்பலம், மகாதேவா, சிறி பத்மநாதன் போன்றவர்களும் இம் மசோதாவை எதிர்த்தார்கள். முக்கியமாக வெள்ளாள சாதியைச் சேர்ந்த தமிழர்கள், தாழ்ந்த சாதியினரும் ஆங்கிலக் கல்வியைப் பெறுவார்களே என்ற பயத்தினால் இத்திட்டத்தை எதிர்த்தார்கள். ஆங்கிலக் கல்வி பெற்றதனால், அரசாங்க உயர் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வெள்ளாள சாதியைச் சேர்ந்த உயர்வர்க்கத் தமிழர்கள், ஆங்கிலக் கல்வியின் பரவலாக்கத்தின் மூல்ம், பாமரசிங்களவரும் அரசாங்க உயர் பதவிகளைப் பெறுவார்கள் என்ற பயத்தினால் இத்திட்டத்தை எதிர்த்தார்கள். யாழ்ப்பாணத்து மிஷனரி பாடசாலைகளில், கல்வி கற்றவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களான படியால், இவர்களும் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து இத்திட்டத்தை எதிர்த்தார்கள். பெளத்த சமய இயக்கங்களும் பெளத்த பிக்கு சங்கங்களும் இத் திட்டத்திற்கு ஆதரவு நல்கியதனால் இது இனவாதத் திட்டம் என்ற எண்ணத்தில், கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இத்திட்டத்தை எதிர்த்தார்கள்.
“ஆங்கிலக் கல்வி கற்ற கிறிஸ்தவர்களுக்கும் தாய்மொழிக் கல்வி கற்ற பெளத்த இந்துக்களுக்கு மிடையே தோன்றிய முரண்பாடு, பெளித்த - சிங்களவருக்கும் இந்து - தமிழர்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடாக வளர்ந்து இவ்விரு இனங்களுக்குமிடையே உள்ள அரசியல் - பொருளாதார உறவுகள் மோசமடை வதற்குக் காரணமாயமைந்ததோடு, நாட்டின் எதிர்கால வாழ்க்கையே பாதித்தது” என்று ஜேஆர். றசல் கூறுகிறார்.
மற்றைய இனத்தவர்கள், தத்தமது, பொருளாதார நிலையையும் சமூக அந்தஸ்தையும் பாதுக்ாப்பதில் மும்முரமாக இருந்த வேளையில் முஸ்லிம் சமூகத்தில்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 55
எவ்வித சலசலப்பும் ஏற்படவில்லை. ஏனைய சமூகத் தலைவர்கள் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அளவு அன்றைய முஸ்லிம் தலைவர்கள் உணரவில்லை. அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக யாசகம் கேட்டு நின்றதெல்லாம், அரசாங்க தமிழ்-கலவன் பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்பதே. இலவசக் கல்வித் திட்ட விவாதத்தின் போது, தனியார் பாடசாலைகளை நடத்துவதற்கு அரசாங்கப் பொதுப் பணம் செலவிடப் படவேண்டும் என்று முடிவானபோது, இந்நாட்டில் வரி செலுத்தும் ஒரு சிறுபான்மையினமாகிய முஸ்லிம்களுக்கு, இத் தனியார் பாடசாலைகளில் ஒரு கணிசமான அளவு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று ஏன் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் கேட்க வில்லை? ஆங்கிலக் கல்வி மூலம்தான் உயர் பதவிகளையும் உயர் அந்தஸ்தையும் ஏனைய சமூகத்தினர் பெற்றார்கள் என்ற உண்மையை நாம் அறிந்தோம். அன்றைய முஸ்லிம் தலைவர்கள் உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாயிருந்த காரணத்தினாலா, தம்முடைய இனத்தைச் சேர்ந்தவர் களுக்கு ஆங்கிலக் கல்வி தேவை என்று வாதாட முன் வரவில்லை? அல்லது ஆங்கிலக் கல்வியின் தாத்பரியத்தை உணரும் சக்தி அவர்களுக்கு இல்லையென்ற காரணமா யிருக்கலாமா? அரசாங்க தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்ற முஸ்லிம் மாணவர்கள், தமிழ் ஆசிரியர்களாக மட்டும்தான் வரமுடிந்தது. சிறந்த அறிஞர்களாக, உயர்ந்த பதவிகளை வகிக்க வேண்டிய அறிவுள்ள முஸ்லிம்கள் வெறும் அரசாங்க ஆசிரியர்களாகத்தான் தம் வாழ்நாளை முடிக்க வேண்டியிருந்தது. எல்லா வசதிகளையும் படைத்த தனியார் பாடசாலைகளை அரசாங்கம் கையேற்ற பிறகும் கூட, முஸ்லிம்கள் இப்பாட சாலைகளுக்கு அனுமதிக்கப் படுவதில்லை. இதைத் தட்டிக் கேட்பதற்கு இன்றும் கூட ஒரு முஸ்லிம் தலைவர் தோன்றவில்லை.
முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட சர். ராசிக் பரீத் அரச சபையில் சமர்ப்பித்த புள்ளிவிபரங்களின் படி

Page 41
56 அ. முகம்மது சமீம்
1930 -ம் ஆண்டில் முஸ்லிம் மாணவர்கள் பெரும் பான்மையாக உள்ள 195 பாடசாலைகளில் 25 முஸ்லிம் ஆசிரியர்களே இருந்தனர். 1948 -ம் ஆண்டில், அரசாங்க தமிழ் பாடசாலைகளில் 253 பாடசாலைகளில் 50% விகிதத்துக்கு மேலாக முஸ்லிம் மாணவர்கள் இருந்தார்கள். இப்பாடசாலைகளில் 50 முஸ்லிம் தலைமை ஆசிரியர் களும், 238 முஸ்லிம் ஆசிரியர்களும் இருந்தார்கள். இத் தொகையில் 125 ஆசிரியர்களே பயிற்சி பெற்றவர்களாக இருந்தார்கள் என்ற புள்ளி விபரங்கள் இலங்கை செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐந்து லட்சம் சனத் தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் 125 ஆசிரியர்களே இருந்தார்களென்றால் முஸ்லிம் சமூகத்தின் பிற்போக்கு நிலையைக் காட்ட இதைவிட ஆதாரம் தேவையா?
ஆங்கிலக் கல்வி பெறாத காரணத்தினால், முஸ்லிம் களில் பெரும்பான்மையானோர் சமுதாயத்தின் அடிமட்டத்திலேயே இருக்க நேர்ந்தது. அரசாங்கத்தில் ஒரு சில முஸ்லிம்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புக் கிடைப்பதற்குக் காரணம், அவர்களுடைய ஆங்கிலக் கல்வியே. இக்கால கட்டத்தில்தான் மர்ஹ"ம் ஏ.எம்.ஏ. அளபீஸ் அவர்களின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. முஸ்லிம் சகாய நிதியின் மூலம் உதவி பெற்ற முஸ்லிம் மாணவர்கள், ஆங்கிலக் கல்வி கற்று அரசாங்கத்தில் உயர் பதவிகளைப் பெறும் தகுதியைப் பெற்றார்கள்.
முஸ்லிம்களில் 95% விகிதமானோர் இன்று சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பதற்குக் காரணம் இவர்கள் ஆங்கிலக் கல்வி பெறாமையே. அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளில் வசதியில்லாமை காரணமாக, எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்தினர் பொருளாதார வளர்ச்சி பெறுவார்கள் என்று கூறுவதற்கில்லை. எல்லா வசதிகளையும் படைத்த, அரசாங்கத்தினால் கையேற்கப்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 57
பட்ட தனியார் பாடசாலைகளில் ஏன் முஸ்லிம் மாணவர்கள் சேருவதற்கு மறுக்கப்படுகிறார்கள்? அரசாங்கத்தினதும் மற்றைய இனத்தவர்களினதும் இந்த ஒரவஞ்சகச் செயல்களினால் முஸ்லிம்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்பின் காரணமாக, முஸ்லிம் சமூகத்தின் உண்மை நிலை மறைந்திருக்கிறது. இந்த செயற்கை நிலை அதிக காலம் நீடிக்காது.
முஸ்லிம்களின் எதிர்கால சுபிட்சத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இது பற்றி சிந்திக்க வேண்டும். பெற்றாரின் தலையீட்டினாலும், சில முஸ்லிம் ஆசிரியர்களின் பொறுப்பற்ற போக்கினாலும், இன்றைய முஸ்லிம் பாடசாலைகள் ஒரு சிறந்த முஸ்லிம் சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்குமென்று எப்படிக் கூறமுடியும்?

Page 42
58
அ. முகம்மது சமீம்
8. தேர்தல் ஆணைக் குழுக்களின் ஒருதலைப்பட்ச சிபாரிசுகள்
1959 -ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக் குழுவின் சிபாரிசினால் இலங்கையில் தேர்தலிலும், அரசாங்கத்திலும் பாரிய மாற்றம் ஏற்பட்டது என்பதை ஏலவே. அறிந்தோம். இனி, 1959 -ம் ஆண்டில் தேர்தல் தொகுதிகளின் மாற்றத்தினால் சாதிகளின் அரசியல் செல்வாக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும்
பார்ப்போம்.
1959 -ம் ஆண்டிற்கு முன்னும் பின்னும் கட்சிகளின் வேட்பாளர்களின் சாதியில் ஏற்பட்ட
தொகுதி
ஜாஎலை நீர்கொழும்பு
மீரிகம
கம்பஹ
அத்தனகல்ல
கெலனிய
வத்தல
கட்டான
மினுவங்கொட திவுலபிட்டிய
மஹார தொம்பே
மாற்றங்கள்
1959 -க்கு
முன் கொய்கம/சலாகம
சலாகம/கராவ கொய்கம
கொய்கம
கொய்கம
கொய்கம
1959 -க்குப்
Lar
கொய்கம/சலாகம
கராவ
கொய்கம
கொய்கம
கொய்கம
கொய்கம
சலாகம/கொய்கம
சலாகம/கராவ
சலாகம/கராவ
கொய்கம
கொய்கம
கொய்கம

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 59
மேலே உள்ள அட்டவணையை நாம் ஆராய்ந்தால், பின்வரும் முடிவு எமக்குத் தெளிவாகும். கொய்கம சாதியினர் தமக்கு ஏற்கனவே இருந்த 4 ஆசனங்களைப் பாதுகாத்ததோடு மேலதிகமாக 3 ஆசனங்களைப் பெற்றனர். மொத்தம் 7 ஆசனங்கள். கராவ சாதியினருக்கு 1 ஆசனம்தான் மேலதிகமாகக் கிடைத்தது. சலாகம சாதியினருக்கு 1959 -ம் ஆண்டுக்கு முன் 2 ஆசனங்களில் தான் வெற்றிபெறும் வாய்ப்பிருந்தது. 1959 -ம் ஆண்டுக்குப் பின் இவர்களுக்கு 4 ஆசனங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், இம்மாற்றம் கொய்கம சாதியினருக்கே சாதகமாயமைந்தது என்பது புலனாகிறது அல்லவா?
இனி இடதுசாரிக் கட்சிகள், தங்களுடைய வேட்பாளர்களைக் தெரிவதில் எவ்வளவு தூரம் சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்தன என்பதைப் பின்வரும் அட்டவணையின் மூலம் நாம் அறியலாம். கரையோரத் தொகுதிகளான மீரிகம, நீர்கொழும்பு, வத்தல, கட்டான சிலாபம், அம்பலாங்கொட, பலபிட்டிய, உள்ளூர் தொகுதிகளான கேகாலை, கடுகன்னாவை, கொலன்ன, பொலன்னறுவ ஆகிய 17 - தொகுதிகளை நாம் அவதானித்தால், பின்வரும் முடிவுகள் தெளிவாகும்.
1947-70 -ம் ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்ற தேர்தல்களில், கம்யூனிஸ்ட், ல.ச.ச. கட்சி வேட்பாளர்களின் சாதி
கொய்கம சலாகம கராவ துராவ வகும்புற பத்கம மொத்தம்
6፯).dም.‹ቻ.dm5, 4 2 8 1. 2 1. 18 கம்யூனிஸ்ட் - - 1 2 - - 3 மொத்தம் 4 2 9 3 2 1 21
ல.ச.ச. கட்சியினரின் அரசியல் சக்தி, கராவ சாதியில் தங்கிருக்கிறது என்பதும் கம்யூனிஸ்ட் கட்சி, சலாகம,

Page 43
60 அ. முகம்மது சமீம்
துராவ, சாதிகளை நம்பியிருக்கிறது என்பதும் புலனாகிறது. எனவே இடது சாரிக்கட்சிகள் கூட தாம் வேட்பாளர்களை நியமிக்கும்போது, சாதியடிப் படையிலே நியமிக்கின்றன என்பதும் தெளிவாகிறது. இதை இன்னும் தெளிவாக்குவதற்குக் கீழே உள்ள இரண்டு அட்டவணைகளையும் நோக்குவோம்.
1972 to ஆண்டில், கலவான, கொலன்னை தொகுதிகளில் சிங்கள மக்களின் சனத் தொகையின் சாதி அடிப்படையிலான
விகிதாசாரம்.
கொய்கம பத்கம வகும்புற பெராவ  ேஹ ன நவந்தென்ன
666 SS 38 Z 5 கொலன்னை 32 59 9 S
மேலே உள்ள அட்டவணையின் புள்ளி விபரங்களோடு கீழே உள்ள அட்டவணையை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சாதி
ஜூலை 1960 1965 1970
சாதி - கட்சி சாதி - கட்சி சாதி கட்சி st கொய்கம - பூநீலசுக கொய் - ஐதேக. கொய் - கம்யூ கொலன்னை வகும்புற, ஐதே.க. வ, ஐதேக. 6u,6u.55.5。
எனவே பொதுமக்கள், பெரும்பாலும், சாதி அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்த அரசியற் கட்சிகளும் தம்முடைய வேட்பாளர்களைத் தெரிவதில் சாதியையே முக்கியமாக எண்ணுகிறார்கள் என்பது மேலே காட்டியுள்ள அட்டவணைகளின் மூலம் நாம் அறியலாம்.
கேகாலை மாவட்டத்திலுள்ள, சனத் தொகையையும் வெற்றி பெற்றவர்களுடைய சாதிகளையும் நாம் பின்வரும் அட்டவணையிலிருந்து அவதானிக்கலாம்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 61
1972 -ம் ஆண்டு கேகாலை மாவட்டத்தின் சிங்கள சனத்தொகையின் சாதி அடிப்படை
சாதி
தொகுதி கொய்கம பத்கம வகும்புற ஏனையோர் மொத்தம் தெடிகம 56 26 12 6 100 கலிகமுவ 48 3O 16 6 IOO கேகாலை 46 22 24 8 100 றம்புக்கனை 47 30 16 カ 100 மாவனல்லை 55 18 16 11 100 யட்டியாந்தொட்டை 46 43 8 3 100 ருவன்வெல்லை 46 21 27 6 100 தெஹியோவிட்ட 47 28 19 6 100
மேலே உள்ள அட்டவணையோடு கீழே உள்ள அட்டவணையைப் பார்ப்போம்.
1960, 65, 70 -ம் ஆண்டுகளில், நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின்
சாதி
தொகுதி 1960 1965 1970 தெடிகம கொய்-ஐதேக கொய்-ஐதேக. கொய்-ஐ.தே.க. கலிகமுவ கொய்-பூரீலசுக, கொய்-ஐதேக கொய்-பூரீலசுக. கேகாலை கொய்-பூரீலசுக, கொய்-பூரீலசு.க. கொய்-பூரீலக்க. றம்புக்கனை புத்கம-பூணூல.சு.க. பத்கம-ஐதேக வகும்புற-பூgலசு.க. யட்டியந்தொட்டகொய்-லசச.க. கொய்-லசசக. கொய்-லசசக.
ருவன்வெல்ல கொய்-ஐதேக கொய்-ஐதேக > கொய்-லசசக
தேஹியோவிட்டகொய்-லசச.க. கொய்-லசசக கொய்-லசசக.
மேலே உள்ள இரண்டு அட்டவணைகளின்படி, லங்கா சம சமாஜக் கட்சியின் யட்டியந்தொட்ட, தெஹியோவிட்ட தொகுதிகளில் தாழ்ந்த சாதியினரான, பத்கம, வகும்புற சாதியினர், கொய்கம சாதியினரைவிட

Page 44
62 அ. முகம்மது சமீம்
அதிகமாக இருப்பதைக் காணலாம். கொய்கம சாதியினர் அதிகமாக இருக்கும்/தெடிகம, கலிகமுவ, கேகாலை ஆகிய தொகுதிகளில், கொய்கம சாதியைச் சேர்ந்த ஒருவரே வெற்றிபெற்று வந்திருக்கிறார். அரசியல் அலை வீசும் போது அவர்கள் கட்சி மாறினார்களேயொழிய சாதி மாறவில்லை.
கரையோர சிங்களவர் மத்தியில், தாழ்ந்த சாதியினர், மார்க்சீய கொள்கைகளின் மூலம் இடதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் தமது அரசியல், பொருளாதார, சமூக அந்தஸ்தை உயர்த்தலாம் என்று எண்ணிச் செயல்பட்ட அதே வேளையில் கண்டிப் பிரதேசத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதியினரான பத்கம, வகும்புற, பெராவ சாதியினர் தாம் கொய்கம சாதியினருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்த காரணத்தினாலோ என்னவோ தாங்கள் கொய்கம சாதியைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் கொய்கம வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதைக் காணலாம். அதனாற்றான் றம்புக்கண தொகுதியைத் தவிர்ந்த ஏனைய தொகுதிகளில், இவர்கள் இப்படி வாக்களிப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
1976 -ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவும் இச்சாதி வித்தியாசத்தை ஏற்றுக் கொண்டதுடன், மக்களின் இடம் பெயர்தலையும் கருத்தில் கொண்டுதான் தேர்தல் தொகுதிகளையும் ஆசனங்களையும் வகுத்தது. மேலும் சனங்கள் அதிகமாக வாழும் இடங்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை வழங்கியது. மத்திய கொழும்பு, வேருவலை ஹாரிஸ் பத்துவ, நுவரெலிய-மஸ்கெலிய, மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய தொகுதிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்கள் வழங்கப்பட்டன. முக்கியமாக, மத்திய கொழும்புக்கும் நுவரெலிய - மஸ்கெலிய தொகுதிகளுக்குத்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 63
தலா மூன்று அங்கத்தவர்களை அனுப்பும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. இக்குழு 25-5-1976 -ம் ஆண்டு பத்திரிக்கைக்கு வெளியிட்ட அறிக்கையில், “47 -ம் பந்தியில் 1959 -ம் ஆண்டின் தொகுதி நிர்ணய ஆணைக்குழு தாழ்த்தப்பட்ட சாதியினர் எங்கெல்லாம் வசிக்கின்றார் களோ, அங்கெல்லாம், அவர்கள் தங்கள் சாதியில்
ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பும் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் நாம் தொகுதிகளை நிர்ணயித்தோம் என்ற ஒழுங்கினை, நாமும் கடைப்பிடித்தோம்” என்று கூறினார்.
இக்குழுவினரின் சிபாரிசின்படி, 151 அங்கத்த வர்கள் 220 ஆகக் கூடியிருப்பர். அரசாங்கச், செலவு அதிகமாகும் என்ற காரணத்தினால் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கம் ஒரு திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. இதன்படி 141 அங்கத்தவர்கள், சனத் தொகை அடிப்படையிலும், 25 அங்கத்தவர்கள் நிலப்பரப்பு அடிப்படையிலும் மொத்தம் 168 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது. 75,000 சனங்களுக்கு ஒரு அங்கத்தவர் என்பதை மாற்றி 90,000 க்கு ஒரு அங்கத்தவர் என்றாகியது. இந்தத் திருத்த மசோதாவை முஸ்லிம்களும், இந்தியத் தமிழர்களும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் எதிர்த்தனர். காரணம் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அங்கத்துவம், இதனால் கிடைக்காமல் போகும் என்பதே.
இந்த ஆய்வில் நாம் கண்ட உண்மை என்ன வென்றால், சிங்கள மக்கள் பெரும்பாலும் எந்தக் கட்சியில் இருந்தாலும் தமது சாதி ஒருவருக்கே வாக்களித்ததைப் பார்த்தோம். முஸ்லிம்கள், ஏன் முஸ்லிம் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இஸ்லாமிய அடிப்படையில் திருக்குர் ஆனையும், எம்பெருமானின் ஹதீசையும் மையமாகக் கொண்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் தீர்த்து வைக்கும்

Page 45
64 அ. முகம்மது சமீம்
கொள்கையைக் கொண்ட, முஸ்லிம்களின் அபிலாஷை களை நிறைவேற்றும் வல்லமையும், தகுதியும் உணர்வும் பெற்ற ஒரு இஸ்லாமிய கட்சிக்கு எல்லோரும் வாக்களிப்பதில் எந்தவிதத் தயக்கமும் இருக்கக்கூடாது என்ற கருத்தும் முஸ்லிம்களிடையே பரவலாக்கப்பட்டது.
முன்னைய அத்தியாயத்தில் 1959 -ம் ஆண்டு தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு செய்த சிபாரிசைப் பார்த்தோம். இவர்களுடைய சிபாரிசு கண்டி கிராமப்புற சிங்கள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதனாற்றான் 1960 -ம் ஆண்டுக்குப் பிறகு தோன்றிய அரசாங்கங்கள் பெரும்பாலும் கிராமப்புற மக்களின் அரசியல் பலத்தையே நம்பியிருக்க வேண்டியிருந்தன. இதனாற்றான் மேலே கூறப்பட்ட பிரதேசங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதியினரான பத்கம, வகும்புற சாதியினரின் அரசியல் செல்வாக்கும் வளர்ந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் பரம்பரை, பரம்பரையாக கொய்கம உயர் சாதியினருக்கு சேவை செய்துவந்த காரணத்தினால், கொய்கம உயர்சாதியினரின் அரசியல் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நடக்கத் தொடங்கினர்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 65
9. கண்டி கொய்கம சாதியினரின் அரசியல் ஆதிக்கம் தோன்றியமை
1947 -ம் ஆண்டில் இலங்கைக்கு ஜனநாயக ஆட்சி கிடைத்ததென்று இந்நாட்டு மக்கள் குதூகலித்தனர். மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒர் அரசாங்க முறை இலங்கைக்கும் வந்துவிட்டது என்று மக்கள் ஆர்ப்பரித்தனர். அந்நிய நாட்டவரின் ஆட்சி முடிந்து, இந்நாட்டின் உயர் சாதியினரின் ஆட்சி ஆரம்பித்து விட்டதென்று பாவம் பாமர மக்கள் அறியவில்லை. இவ்வுயர் சாதியினரின் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட போட்டிதான் அரசாங்கங்கள் அடிக்கடி மாறுவதற்குக் காரணம் என்று எப்படி மக்கள் அறிவார்கள்? இன்றும் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இக்குடும்பங்கள் மும்முரமாக இருக்கின்றன. அதற்காக ஒரு தேர்தலும் நடக்கிறது. காலம் காலமாக உயர் சாதியினரின் ஆதிக்கத்தில் அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த பாமர மக்கள் சீக்கிரத்தில் தமது அடிமை மனப்பான்மையை மாற்ற முடியாது. வளர்ச்சி பெற்ற நாடுகளான, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட படி முறை மரபு இருக்கிறதென்றால் அறியாமையிலும் மூட நம்பிக்கை களிலும் மூழ்கியிருக்கும் நாம் எம்மாத்திரம்? ஐரோப்பா வின் நிலப் பிரபுத்துவ ஆட்சி முறையில் மரபு வழிவந்த குடும்பங்களின் ஆதிக்கம் முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்களுடன் அஸ்தமித்து விட்டது. அந்நாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வருவதற்குரிய காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், இலங்கையில் மக்கள் இன்றும் இப் படிமுறை மரபின்படி உயர் சாதியினரின் ஆட்சியில்தான் மோகம் கொண்டிருக்

Page 46
66 அ. முகம்மது சமீம்
கிறார்கள். சேனாநாயக்கா - கொத்தலாவலைக் குடும்பங் களின் ஆதிக்கத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார் ஜே.ஆர். ஜயவர்த்தனா என்றாலும் விக்கிரமசிங்க - விஜயவர்தனா குடும்பங்களின் ஆதிக்கத்தை அவர் முறியடிக்கவில்லை. அரசியல் ஞானமே இல்லாதிருந்த ரத்வத்தை குடும்பத்தினர் அரசியல் சாணக்கியம் பெறுவதற்குக் காரணம் பண்டாரநாயக்காவின், குருகுலத்தில் அரசியல் ஞானம் பெற்றதே.
இலங்கையின்சனத் தொகைக்கேற்ப, தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அரசியல் உரிமையைத் தமதாக்கிக் கொண்ட கொய்கம சாதியினரின் அரசியல் தந்திரத்தை தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக் குழுக்களின் சிபாரிசுகளை ஆராய்வதன் மூலம் நாம் அறியலாம்.
1970 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 45 இலட்சம் கொய்கம சாதியினர் 1947 -ம் ஆண்டுக்கும் 1970 -ம் ஆண்டுக்குமிடையில் பெற்ற ஆசனங்கள் 624% இருந்த அதே வேளையில், 44 இலட்சம் ஏனைய சாதியினர், 1947-1970 -ம் ஆண்டுகளுக்கிடையில் பெற்ற சராசரி ஆசனங்கள் 197% ஆகவே இருந்தது. இவ்வநிதியை இன்னும் தெளிவாக அறிய வேண்டுமானால், 30 இலட்சம் வகும்புற, பத்கம (பது) என்ற தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கிடைத்த சராசரி ஆசனங்கள் 3.9% ஆக இருக்கும் அதே வேளையில் 30 இலட்சம் கண்டி கொய்கம சாதியினருக்கு 1970 -ம் ஆண்டில் கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை 73(42.7%) என்பதை அறியும் போது இவ்வநிதி இன்னும் தெளிவாகிறது. இல்லையா?
இதுவரையில் ஐந்து தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அக்குழுக்கள் செய்த சிபாரிசுகளை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 67
தேர்தல் தொகுதி ஆணைக்குழுக்களின் சிபாரிசுகள்
ஆண்டு சனத்தொகை பிரஜைகள் வாக்காளர்கள் வாக்காளர்
மாவட்டம்
1946 6,633,617 6,484,409 3,045,145 89 1950 9.361,300 8,213,800 . 3,740667 145
1976 12,711,143 11,605,903 6,666,674 16O 1981 12711143 11,605,903 7,573,214 22 (மாவட்டம்) 1988 14,846,750 14,211,600 9,122,267 22-15
(வட்டாரம்) 9-வது பாராளுமன்றம் (1989)
விகிதாசார முறைப்படி 29 தேசிய அடிப்படையில்
196 மாவட்ட அடிப்படையில்
மொத்தம் 225
மாவட்ட அடிப்படையில்
(1) 160 (2) 36 ஒவ்வொரு மாகாணத்திற்கும் 4 ஆசனங்கள் வீதம்.
மேலேயுள்ள அட்டவணையில் 1946 -ம் ஆண்டு புள்ளி விபரங்களை 1959 -ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 1946 -ம் ஆண்டில் 66 இலட்சம் சனத் தொகையில் 64 இலட்சம் பிரஜைகள் இருந்தார்கள். இந்த 64 இலட்சம் பிரஜைகளில் வாக்காளர் தொகையினர் 30 இலட்சம் பேர். 1959 -ம்ஆண்டில் 93 இலட்சம் சனத் தொகையில் 82 இலட்சம் பேர் பிரஜைகள், இத் தொகையில் 37 இலட்சம் பேர் வாக்காளர்கள். 1959 -ம் ஆண்டில் 11 இலட்சம் பிரஜைகள் வாக்காளர் பட்டியலி ருந்து நீக்கப் பட்டிருக்கிறார்கள். அதுவும் 82 இலட்சம் பிரஜைகளில் 37 இலட்சம் பேர்தான் வாக்காளர்களாகப்

Page 47
68 அ. முகம்மது சமீம்
பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். 1946 -ம் ஆண்டு மொத்த சனத் தொகையில் 97% பேர் பிரஜைகளாகவும் பிரஜைகளில் 47% பேர் வாக்காளர் களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால் 1959 -ம் ஆண்டில் மொத்தசனத் தொகையில் 88% விகிதமானோர் பிரஜா உரிமை பெற்றவர்களாகவும், இத்தொகையில் 45% விகிதமானோர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப் பட்டிருந்தார்கள். இலங்கையின் மொத்த சனத் தொகையில் 1946 -ம் ஆண்டில் பிரஜைகளாக இருந்தவர்கள், பிரஜா உரிமைப் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டதோடு வாக்காளர் பட்டியலிலிருந்தும் அகற்றப்பட்டிருக்கிறார்கள். இப்படி அகற்றப்பட்டவர்களில் பெரும்பாலோர் இந்திய வம்சாவளியினர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருந்த இந்திய முஸ்லிம்களும் இதில் அடங்கியிருந்தார்கள். ஆகவே இலங்கை மலை நாட்டுத் தமிழர்களும், இலங்கை முஸ்லிம்களும் அன்றைய அரசாங்கத்தின் ஒரவஞ்சகக் கொள்கை யினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினரில் எத்தனை பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனரோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், வாக்காளர் தொகுதிகளை நிர்ணயிக்கும்போது, பிரான்ஸ் தேசத்தில் எப்படி கம்யூனிஸ்டுகள் எல்லா தேர்தல் தொகுதிகளிலும் சிறுபான்மை வாக்காளர்களாக மாற்றப் பட்டார்களோ, அதே போல இலங்கையிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் எங்கெல்லாம் பெரும் பான்மையாக வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் இவர்கள் சிறுபான்மையாக மாற்றப் பட்டார்கள்.
இது ஒரு புறமிருக்க, கீழேயுள்ள அட்டவணை யைக் கூர்ந்து நோக்குங்கள், பின்வரும் எமது ஆய்வுக் குறிப்புகளுக்கு இது பயன்படும்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 69
இலங்கையின் பாராளுமன்றங்களின் விபரங்கள்
ஆண்டு ஆசனங்கள் தெரிவுசெய்யப் நியமன மொத்தம்
பட்ட அங்கத்தவர்கள்
பிரதிநிதிகள்
1 வது பாராளு 1947 89 95+ 6 101
மன்றம்
2 வது 1952 89 95- 6 101
3 வது 7956 89 95- 6 101
4 வது 1960 (upTië) 145 151-- 6 157
5 வது 1960 (ஜூலை) 145 151+ 6 157
6 வது 1965 145 151+ 6 157
7 வது 1970 145 157 6 157
8 வது 1977 168 168- 168
9 வது 1989 196 196+ -- 225
1974 -ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பொதுத் தேர்தல் நிர்ணய ஆணைக்குழு, முன்பிருந்த 75,000 சனத்தொகைக்கு ஒரு பிரதிநிதி என்பதை மாற்றி, 90,000 சனக்தொகைக்கு ஒரு பிரதிநிதி என்று மாற்றியது. மேலும் 1977 -ம் ஆண்டு நடந்த தேர்தலில், நியமன அங்கத்தவர்கள் என்ற பிரிவு நிறுத்தப்பட்டது. 1989 -ம் ஆண்டில் நடந்த தேர்தல் விகிதாசார முறைப்படி நடந்தபடியால் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தொகையினரோடு 29 பேர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டார்கள். இதனால், முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பை அவதானிக்கும் போது எல்லா அரசியற் கட்சிகளிலிருந்தும் 20 முஸ்லிம் அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இது மொத்த தொகையில் 8.9% விகிதம். இதில் 5 அங்கத்தவர்கள் மாத்திரமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள், 8

Page 48
70 அ. முகம்மது சமீம்
அங்கத்தவர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லாத இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள். தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களின் தொகை 7. ஆகவே, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் தொகுதிகளிலிருந்து. தெரிவு செய்யப்பட்ட 8 முஸ்லிம்கள் இவ்விடங்களில் வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய செல்வாக்கும் பணப் பலமும் கட்சியில் அவர்களுக்கு இருக்கும் அந்தஸ்தும், முக்கியமாக அவர்களுடைய ஆளுமையுமே காரணம் என்றால் அது பிழையாகாது. அதனாற்றான் அவர்களுக்கு முஸ்லிம்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குச் சக்தியில்லை. தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கக் கட்சிக்கு எதிராகவோ, சிங்கள மக்களை எதிர்த்தோ அவர்கள் பேசுவதற்குத் தயங்குவதில் ஆச்சரியமில்லை. சிங்கள மக்கள் இன ரீதியாக வாக்களிக்கத் தொடங்கினால் என்னவாகும் என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். தேசியப் பட்டியலிலிருந்து திரும்பவும் 7 பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது என்ன நிச்சயம்? அப்படி வரும்போது, முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் பிரதிநிதித் துவம் 22% ஆகக் குறைந்து விடும்.
நிற்க, மேலே உள்ள அட்டவணையை நுணுக்கமாக ஆராய்ந்தால், இலங்கையின் தேர்தலிலும் ஆசனங்களின் தொகையிலும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது 1959 -ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு என்பதில் சந்தேகமில்லை.
1959 -lb. ஆண்டின் தேர்தல் நிர்ணய ஆணைக் குழுவின் சிபாரிசுகள் எப்படி கொய்கம சாதியினரின், அதுவும் முக்கியமாகக் கண்டிப் பிரதேச கொய்கம சாதியினரின்அரசியல் ஆதிக்கம் வளர்வதற்கு உதவியது என்பதையும் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சம சமாஜக்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 71
கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் அவைகளை ஆதரித்த மேல்மாகாண, தென் மாகாணங்களில் வதியும் சிறுபான்மை சாதிகளான கராவ, சலாகம சாதியினரின் அரசியல் சக்தியைக் குறைத்து அதே வேளையில் தாழ்ந்த சாதியினரான வஹ"ம்புற பத்கம (பது) சாதியினர் கண்டிப் பிரதேசத்தில் கொய்கம சாதியினரின் அரசியல் ஆரிக்கத் திற்கு உடந்தையாவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தியதை பின்னர் ஆராய்வோம்.

Page 49
72 அ. முகம்மது சமீம்
10. தாழ்த்தப்பட்ட சாதியினரின் அரசியல் வளர்ச்சி
1959 -ம் ஆண்டில், தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் முக்கிய காரணம், 1946 -ம் ஆண்டுக்கும், 59 =ம் ஆண்டுக்குமிடையில் இலங்கையின் சனத்தொகையில் ஒரு பெரும்மாற்றம் ஏற்பட்டதே. எனவே தேர்தல் தொகுதிகளை மாற்றி அமைக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. இக்குழுவின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு மாகாணத்திலும், வாழும் மக்களிடையே அரசியல் அந்தஸ்தில் சமமான உரிமை இருக்க வேண்டு மென்பதே. இக்குழுவினர் தங்களுடைய முடிவுரையில், “எங்கெல்லாம் ஒவ்வொரு குறிப்பிட்ட வகுப்பினரின், பொருளாதார நிலை, அவர்களுடைய சாதி, சமயம் போன்றவற்றோடு, ஒத்துப் போகிறதோ அங் கெல்லாம், அவர்களுக்குத் தனித்தனியான தொகுதிகள் அமைப்பதன் மூலம் நாம் அவர்களுக்கு இந்த சம அந்தஸ்தை அளித்திருக்கிறோம்”, என்று கூறினர்.
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் 1970 -ம் ஆண்டுவரையில் உள்ள காலப்பகுதியில், இலங்கைச் சனத் தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. மக்கள் குறைவாக வாழ்ந்த பகுதிகளான, வட மத்திய வடமேற்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்களினால், இப்பகுதிகளில் ஒரு கணிசமான அளவு மக்கள் இடம் பெயர்ந்து வாழத்தலைப்பட்டனர். இக் குடியேற்றத் திட்டங்களுக்குப் பொறுப்பான அதிகாரி களும், அரசியல்வாதிகளும், தங்கள், தங்களுடைய சாதிகளுக்கு உதவி செய்வதன் மூலமும், புதிய தேர்தல் தொகுதிகளை அமைப்பதன் மூலமும் தங்கள்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 73
சாதியினருக்கு அரசியல் அந்தஸ்தைக் கொடுப்பதன் மூலமும், தமக்கென்றே நிரந்தரமான தொகுதிகளை உண்டாக்குவதன் மூலமும், தங்களுக்கு அரசியல் உலகில் ஒரு நிரந்தரமான இடத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினர். இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக சி.பி.டி. சில்வாவின் குடியேற்றத் திட்டங்களைக் காட்டலாம். காணி அபிவிருத்தி இலாகாவின் பணிப் பாளராகக் கடமையாற்றிய சி.பி.டி. சில்வா தன்னுடைய சாதியினரான சலாகம சாதியினரை மக்கள் குறைவாக வாழ்ந்த பொலன் னறுவைப் பிரதேசத்தில் குடியேற்றினார். 1953 -ம் ஆண்டு நடந்த சனத்தொகைக் கணக்கெடுப்பில், இப்பிரதேசத்தில் தென்னிலங்கைக் கரையோரப் பகுதி மக்களின் எண்ணிக்கை 20% விகிதமாக அதிகரித்தி ருக்கிறதென்று சுட்டிக்காட்டப்பட்டது. 1952 -ம் ஆண்டுக்கும் 1956 -ம் ஆண்டுக்குமிடையில், இப்பகுதியில் தேர்தல் போட்டியேதும் நடக்கவில்லை. 1956 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக நின்ற சிபிடி சில்வா மிகவும் இலகுவாக வெற்றி பெற்றார். பூனரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு நிரந்தரமான தொகுதி யாகவும் இது கணிக்கப்பட்டது. 1959 -ம் ஆண்டின் தேர்தல் தொகுதி நிர்ணய் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில், இத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
மின்னேரிய என்ற ஒரு புதிய தேர்தல் தொகுதி உண்டாக்கப்பட்டது. 1960 -ம் ஆண்டு நடந்த தேர்தலில், சி.பி.டி சில்வா பொலன்னறுவ தொகுதியை விட்டு மின்னேரிய தொகுதிக்கு மாறுவதை நாம் காண்கிறோம். காரணம், அவரால் குடியேற்றப்பட்ட தனது சாதியினரான சலாகம சாதியினர், மின்னேரிய பகுதியில் குடியேற்றப்பட்டதே. 1964 -ம் ஆண்டு அவர் சுதந்திரக் கட்சியை விட்டும் வெளியேறி, ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்த பிறகும், 1965 -ம் ஆண்டில் நடந்தபொதுத்

Page 50
74 அ. முகம்மது சமீம்
தேர்தலில் வெற்றி பெற்றார். 1970 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியுறுவதற்கு மக்கள் ஐக்கிய முன்னணிக்கு வீசிய தேர்தல் அலையும், இத் தொகுதியில் ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் குடியேறி யமையும் காரணமாயமையலாம்.
சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் சனத் தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டதென்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். 1934-35 -ம் ஆண்டுகளில் இலங்கையின் சனத் தொகையை அழித்துக் கொண்டிருந்து மலேரியா என்னும் கொள்ளை நோய் 1944-45-ம் ஆண்டுகளில் அரசாங்கத்தின் டி.டி.ரி. திட்டத்தினால் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 1945-ம் ஆண்டுக்கும் 1951 -ம் ஆண்டுக்குமிடையில், ஆயிரத்துக்கு 215 ஆக இருந்த மரண வீதம், 125 ஆகக் குறைக்கப்பட்டது. 1955 -ம் ஆண்டில், இது ஆயிரத்துக்கு 10.8 விகிதமாகக் குறைந்தது. இதன் காரணமாக இலங்கையின் சனத்தொகை இரட்டிப்பாகியது. 1960 -ம் ஆண்டு இலங்கை சனத் தொகைக் கணிப்பின்படியும், 1970 -ம் ஆண்டின் சமூகபொருளாதார மதிப்பீட்டின்படியும் இலங்கை சனத் தொகையில், 15 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்டோரின் எண்ணிக்கை 1,322,000 லிருந்து 2610,000 ஆகக் கூடியது. அப்படியென்றால் 1970ம் ஆண்டில் 89 இலட்சம் சிங்கள மக்களில் 60 இலட்சம் பேர் இக்காலகட்டத்தில் 1946 -ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களென்று நாம் மதிப்பிடலாம். ஆகவே பழைய தலைமுறையினர் மறைந்து, புதிய தலைமுறையினர் தோன்றுவதையும், அதனால் இலங்கையின், அரசியல் சமூக - பொருளாதாரத் துறைகளில் பெரும் தாக்கம் ஏற்படுவதையும் நாம் காணலாம்.
மலேரியாவினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிர்தேசங்களில்தான் இச்சனத் தொகையின் வளர்ச்சியை

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 75
நாம் அதிகம் காண்கிறோம். பீட்டர் நிவ்மன் எழுதிய “மலேரிய ஒழிப்பும் சனத்தொகை வளர்ச்சியும்” என்ற நூலில், எங்கெல்லாம் மலேரியா நோயினால் மக்கள் பாதிக்கப்ட்டார்களோ, அங்கெல்லாம் இச் சனத்தொகை யின் வளர்ச்சியை நாம் காணக் கூடியதாயிருக்கிறது என்று கூறுகிறார். அவர் கூறிய பிரதேசங்கள் பெரும்பாலும் Lug55 D, வகும்புற சாதி மக்கள் வாழும் பிரதேசங்களான கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, குருநாகலை, அநுராதபுரம், ஹம்பந்தோட்டைகளில் தான் இவ்வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இச்சாதியினரிடையே ஏற்பட்ட சனத்தொகை வளர்ச்சி, இவர்களுடைய அந்தஸ்து வளர்வதற்குரிய காரணங்களாக அமைந்தன.
இச் சாதிகளிடையே சனப் பெருக்கம் அதிகரித்த தனால், அவர்களிடையே பொருளாதாரப் பிரச்சினைகள் தோன்றத் தொடங்கின. வீடு, காணி, தொழில் வாய்ப்பு இல்லாமை காரணமாக அரசியலிலும் தொழிலிலிலும் பொருளாதாரத்திலும் உயர் நிலையிலிருந்த உயர் சாதியினரைப் பொறாமையுடன் பார்க்கத் தொடங்கினர். தாம் தாழ்ந்த சாதியைச் சேர்ந்ததனால்தான் ஒதுக்கப் பட்டிருக்கிறோம் என்ற உணர்வு வந்ததனால் சாதி களிடையே போட்டியும் பொறாமையும் வளர்வதைக் காண்கிறோம். எனவே, தம்முடைய எண்ணிக்கையைத் தேர்தல் காலங்களில் உபயோகிக்கத் தொடங்கினர். ஆகவே, இச்சாதியினர் தம்முடைய சாதியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கமும் 1959 -ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக் குழுவுக்கு இருந்திருக்கலாம். இனி, இவ்வாணைக்குழு செய்த சிபார்சுகளைப் பின்வரும் அட்டவணையில் பார்ப்போம்.

Page 51
76 அ. முகம்மது சமீம்
1959 -ம் ஆண்டு தேர்தல் ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
மாகாணம் மொத்த மொத்த 75,000 நிலப் தொகுதிக்கேற்ப மொத்த
சனத்தொகை பிரஜைகள் ஒருவர் பரப்புக்கு jfJnTerrf தொகுதி
வீதம் தேர்தல் ஏற்ப பிரஜைகள் கள்
தொகுதிகள் மேல் 2547,500 2392.200 34 1 68,438 36
மத்திய 1552,600 1,000,700 21 2 43,508 23
தென் 1258,700 1237,700 17 2 65,110 19
6- 664,300 638,600 9 4. 49123 12
கிழக்கு 492,200 487,300 7 4 44,300 ij
வட-மேற்கு 1000900 977,700 13 3 61,106 16
seasurf 549,900 359,300 六 3. 35,930 1O
வட-மத்திய 275,100 270,600 4 4 33,825 - 8
சபரகமுவ 1,016 100 850,300 14 2 56,686 16
மொத்தம் 9,361,300 8,213,800 126 25 - St
மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தால் கண்டிச் சிங்களவர் அதிகமாகவாழும் பிரதேசங் களான, மத்திய வட-மேற்கு, ஊவா, வட-மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கு நிலப்பரப்பு அடிப் படையில் 14 கூடுதலான ஆசனங்களும், ஏனையோருக்கு 11 ஆசனங்களுமே இருப்பதைக் காணலாம். மேல் மாகாணத்தில் சராசரி பிரஜைகளுக்கு ஒர் ஆசனம் என்ற ரீதியில் ஊவா மாகாணம், வட-மத்திய மாகாணம், இவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிராமங்களில் வாழும் கண்டிச் சிங்களவர் ஒருவருக்கு கரையோர நகர்ப்புறங்களில் பொருளாதார, கல்வி வசதிகளைப் பெற்ற சிங்களவர் இருவருக்கு சமம் என்பதை அவதானிக்கலாம்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 77
இதனாற்றான், 1960 -ம் ஆண்டுக்குப் பிறகு தோன்றிய அரசாங்கங்கள், பெரும்பாலும் கிராமப் புற மக்களின் அரசியல் பலத்திலேயே தங்கியிருக்கத் தொடங்கின. இதனால், மேலே கூறப்பட்ட பிரதேசங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதியினரான பத்கம, வகும்புற சாதியினரின் அரசியல் செல்வாக்கும் வளர்ந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் பரம்பரை பரம்பரையாக, கொய்கம உயர் சாதியினருக்கு சேவை செய்து வந்த காரணத்தினால் கொய்கம சாதியினரின் அரசியல் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நடக்கத் தொடங்கினர் என்பதே.

Page 52
78 அ. முகம்மது சமீம்
11. இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு உயர் சாதிக் குடும்பங்கள்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் 1994 -ம் வருடம் ஒரு மைல் கல்லாக அமைகிறது. இந்நாட்டில் பலபாகங்களிலும் சிதறிக் கிடந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், இலங்கையின் முழு சனத் தொகையில் 74 சதவிதமாக இருக்கும் ஒரு சமூகம், பதினேழு வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் முழுப் பங்கெடுத்து, 1994 ம் ஆண்டில் பெரும்பான்மை பாமர மக்களின் ஒர் அரசாங்கம் ஏற்படுவதற்கு முக்கிய பங்காளியாக இருக்கும் நிலை சந்தர்ப்பவசமாக, இச் சமூகத்திற்குக் கிடைத்தது. பதினேழு வருடங்களாக அடக்கி ஒடுக்கப்பட்டு பேச்சு, எழுத்துச் சுதந்திரம் இல்லாமல் தவித்த மக்களின் உணர்ச்சிகளும் ஆவேசமும் அபிலாஷைகளும் இத் தேர்தலின் மூலம், ஏற்பட்ட அரசாங்கத்தில் கரைபுரண் டோடுவதில் ஆச்சரியமில்லை.
இந்நாட்டில் முஸ்லிம்களின் ஆயிரத்து இருநூறு வருட கால வரலாற்றில் ஒர் அரசாங்கத்தின் முக்கிய பங்காளியாக இருப்பது இதுதான் முதல் தடவை. இலங்கையின் ஒர் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கும், முஸ்லிம் சமூகம் பல தியாகங்களைச் செய்யவேண்டி யிருந்தது. பல இன்னல்களையும் தடைகளையும் முட்டுக் கட்டைகளையும், எதிர்கொண்டு இன்று ஒர் அரசியல் சக்தியாக மலர்ந்திருக்கிறது.
சிங்களப் பேரினத்திலுள்ள சாதி வேற்றுமைகளும் கட்சிப் பேதங்களும் குடும்பப்பகைகளும் முஸ்லிம் களுக்குத் தாம் இன்றிருக்கும் இந்நிலையை ஏற்படுத்திக்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 79
கொடுத்திருக்கலாம். பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழும் முஸ்லிம்கள், பெரும்பான்மை மக்களுடைய இச்சாதிப் பிரிவினைகளையும் கட்சி முரண்பாடுகளையும் குடும்பப் போட்டிகளையும் அறிந்திருந்தல் அவசியம். இவைகளைத் தமக்கு அனுகூலமாய்ப் பாவிப்பதுதான் அரசியல் சாணக்கியம். பெரும்பான்மை சமூகத்தில் இருக்கும் சாதி வேற்றுமைகளைப் பற்றியும் அவை அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றியும் முன்னைய அத்தியாங்களில் அறிந்தோம். இச் சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ள குடும்பப் போட்டிகளும் பொறாமையும் குரோதங்களும் முரண்பாடுகளும் எப்படி ஒரு சிறுபான்மை சமூகத்தை ஒர் அரசியல் சக்தியாக மாற்றியது என்பதை இனி வரும் அத்தியாங்களில் விளக்குவோம்.
இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அரசியல் வரலாறு, இரு பெரும் குடும்பக் குழுக்களிடையே ஏற்பட்ட அரசியல் போட்டியின் வரலாறு என்றால் அது மிகையாகாது. இலங்கைக் குடும்பங்களிடையே உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் அது விஸ்தரிக்கப்பட்ட குடும்பமாக இருப்பதே. இவ்வம்சம் பெரும்பாலும் எல்லா நிலப் பிரபுத்துவ ஆட்சியில் இருக்கும் ஓர் அம்சமாகும்.
விஸ்தரிக்கப்பட்ட இந்தக் குடும்ப முறை, அரசியல் இணைப்புக்கும் அரசியல் ஆதரவிற்கும் ஒரு மையமாக அமைகிறது. இலங்கை போன்ற மரபு வழிவந்த பழமை வாய்ந்த சமுதாயங்களில் தம்முடைய சொந்த நலனுக் காகவும் அரசியல் செல்வாக்கிற்காகவும் கட்சிக் கொள்கைகளையும் அதன் தத்துவங்களையும்விட குடும்ப உறவை சிலர் உபயோகிப்பது ஆச்சரியமல்ல. இலங்கை சுதந்திர மடைந்த பிறகு சர்வஜன வாக்கெடுப்பு, ஜனநாயக பாராளுமன்ற அமைப்பு முறை, அடிக்கடி ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இவையெல்லாம் இரண்டு

Page 53
80 அ. முகம்மது சமீம்
குடும்பங்களுக்கிடையே ஏற்படும் அரசியல் போட்டி யென்றால் அதை மறுப்பதற்கில்லை.
பின்வரும் அட்டவணையைக் கவனியுங்கள்:
சேனாநாயக்க - விஜயவர்த்தன குடும்பம் பிரதம மந்திரிகள்
டிஎஸ். சேனாநாயக்க - 1947 - 1952 டட்லி சேனாநாயக்க (டிஎஸ்ஸின் மகன்) 1952 - 1953 சர்ஜோன் கொத்தலாவலை (டி. எஸ்ஸின் மருமகன்) 1953 - 1956 டட்லி சேனாநாயக்கா - மார்ச் - ஜூலை 1960 டட்லி சேனா நாயக்க - 1965 - 70 ஜேஆர். ஜயவர்த்தனா - (விஜயவர்த்தன குடும்பம்) 1977 - 1988 ரணில் விக்கிரமசிங்க - 1993 - 94 (ஜே. ஆரின் தாய்மாமனின் மருமகனின் மகன்)
பண்டார நாயக்கா - ரத்வத்தை குடும்பம்
எஸ்.டபிள்யுஆர்டி பண்டாரநாயக்க - 1956 - 1959 சிரிமாவோ பண்டாரநாயக்கா (பண்டார நாயக்காவின் மனைவி) - 1960 - 65 சிரிமாவோ பண்டார நாயக்க - 1970 -77 சந்திரிகா பண்டார நாயக்க - 1994 (பண்டார நாயக்க தம்பதிகளின் மகள்)
நிறைவேற்றும் அதிகாரம கொண்ட ஜனாதிபதி 1978
1988 ஜே.ஆர் ஜயவர்த்தன. 1994 (இன்றுவரை) சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்க
மேலே உள்ள விவரங்களை நோக்கும் போது, இவ்விரு குடும்பங்கள் எப்படி இலங்கையின் ஆட்சியை

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 81
மாறி மாறிப் பெற்றன என்பது விளங்கும். தஹ நாயக்கா 6 மாதங்களும், ரணசிங்க பிரேமதாச 5 வருடங்களும் ஆண்டது இதற்கு விதிவிலக்கு பண்டார நாயக்காவின் கொலைக்குப் பிறகு தஹநாயக்கா பதவியேற்றதும், ஜேஆருக்கு அடுத்தபடியாக இருந்து ஜே. ஆரின் ஒய்வுக்குப் பிறகு பிரேமதாச பதவியேற்றதும் அகஸ்மாத்தாக நடந்த சம்பவங்கள். அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் அவர்கள் குடும்பங்கள் செல்வாக் கிழந்ததும் சமீபகால வரலாறு. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட குடும்பங்கள், அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் போக, அதே குடும்பத்தில் உள்ள இன்னொருவர் பதவியேற்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். ஆகவே, மேலே கூறியது போல இவ்விரு குடும்பங்களின் ஆதிக்கம் கை மாறினாலும் இவைகளே இன்றுவரை ஆட்சியை நடத்துவதைக் காணலாம்.
இக் குடும்பங்களின் விளக்கப்படங்கள், கீழே தரப்படுகின்றன. இவைகளை உற்று நோக்கினால் இக்குடும்பங்களின் செல்வாக்கு எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பது விளங்கும். பெரும் பெரும் உத்தியோகங்களும் பதவிகளும், கட்சியோடு சம்பந்தப் பட்ட அல்லது சம்பந்தப்படாத நெருங்கிய உறவினர் களுக்கே கொடுத்திருப்பதை, இவ் விளக்கப்படங்களின் மூலம், நாம் அவதானிக்கலாம். உயர் பதவிகளைப் பெறுவதற்கு தொடர்பு - கனெக்ஷன் - குடும்பத் தொடர்பு இருக்க வேண்டும். தண்ணியைவிட இரத்தம் மிக நெருக்கமானது. ஆனால், உறவினர்களை உயர்பதவிகளி னின்றும் தூரவைத்த ஒரேயொரு அரசியல்வாதிதான் கொள்கை வாதியான, எஸ்.டபிள்யு. பண்டார நாயக்கா, ஆனால் திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவுடன் ரத்வத்தைக் குடும்பத்தினர் அரசியலில் அதிக பங்கெடுப்பதைப் பின்வரும் விளக்கப் படத்தில் காணலாம்.

Page 54
82 அ. முகம்மது சமீம்
மேலே உள்ள குறிப்பிட்ட சில பெயர்களை நுண்மையாக அவதானித்தால் அவர்கள் வகித்த பதவிகளை நினைவு கூரலாம். இவைகளைப் பின்னர் விளக்குவோம். இக்குடும்ப விஸ்தரிப்பு இன்னும் நீண்டு கொண்டே போகிறது. சென்ற அரசாங்கத்திலும் இன்றைய அரசாங்கத்திலும் உயர் பதவிகளை வகிப்பவர் எதோ ஒரு வகையில் இக்குடும்ப விஸ்தரிப்பில் தொடர்புடையவர்களே. எவ்வித தொடர்போ கனெக்ஷனோ இல்லாத நபர்களாகிய நாம் இவ்வுயர் பதவிகளை நினைத்துக் கனவு காண்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபட்டதற்கு ஒப்பாகும்.
இங்கே கொள்கைவாதியான எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்க தன்னுடைய உறவினரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவைக் கூட ஒதுக்கியே வைத்தார். அதே வேளையில் தன்னுடைய மனைவி சிறிமாவோவின் உறவினர்களாகிய ரத்வத்தைக் குடும்பத்தினருக்கும் அரசியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சிறிமாவோ ஆட்சிக்குப் பின்னர் தான் ரத்வத்தைக் குடும்பத்தினர் அரசியலில் அதிக செல்வாக்குப் பெறுகின்றனர்.
இனி, ஜே.ஆர். ஜயவர்தனாவின் விஜயவர்தன குடும்பத்தினரின் குடும்ப விஸ்தரிப்பைப் பார்ப்போம்.
ஜேஆர். ஜயவர்தன தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நேரடியாகத் தன்னுடைய உறவினர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கவில்லையென்றாலும் இதிலுள்ள பெயர்களை உற்று நோக்கும் போது அவர்கள் வர்த்தகத் துறையில் பெரும் புள்ளிகள் என்பது விளங்கும். சென்ற ஆட்சியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜேஆர். ஜயவர்த்தனாவின் உறவினர்களில் ஒருவர் என்பது இவ்விளக்கப் படத்திலிருந்து நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. சர். பிரென்ஸிஸ் மொலமுரே, ஈ.டபிள்யு.
விஜயவர்த்தன, எட்மன்ட் விக்கிரமசிங்க போன்ற

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 83
பெயர்கள், சட்டத்துறையிலும் வர்த்தகத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் இருக்கும் ஜாம்பவான்கள். ஆனால், ஜே.ஆர். ஜயவர்த்தனா அரசியலில் தன்னுடைய உறவினர்களுக்கு அதிக இடம் கொடுக்கவில்லை யென்பதும் இவ்விளக்கப் படத்திலிருந்து நாம் அறிய முடிகிறது. அவர் தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவர் களுக்குத்தான் அதிக இடம் கொடுத்திருந்தார். இன்றைய ஆட்சியைப் பார்க்கும் போதுகூட இக்குடும்பங்களின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு இன்றும் உயர் பதவிகளையும் அதிக வாய்ப்புக்களையும் கொடுப்பது தவிர்க்க முடியாதவை. எம்மைப் போன்ற உறவுத் தொடர்பில்லாதவர்கள், பண்டைய நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையிலுள்ளதைப் போல குட்டிக் கரணம் அடித்தாலும் அதே நிலையில்தான் இருக்க வேண்டிய சாபக்கேடு எம்மைப் பற்றிக் கொண்டுள்ளது. தண்ணிரைவிட இரத்தம் மிகவும் நெருக்கமானதல்லவா?

Page 55
84
- ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய
ஆர்.ஜி
சேனா எரின்
மீ தெனிய (அதிகார்)
டாக்டர்
நாயக்கா =சுபசிங்கஹ
சர். பிரான்சிஸ் - எடிலோன் - மொலமுரே
சீதா
4 செல்வி டொன்றிச்சர்ட் ఫి
டொன் எட்மண்ட் = சுபசிங்ஹ
ஜி.பி.எஸ்கோமஸ்
ஹேமா பஸ்நாயக்க = மகள்
பஸ்ந்ாயக்க = ஹிமாலி
வருண பஸ்நாயக்க ம்கள் டி.எஸ் சிங்ஹ விஜேய
ബ
ஜோர்ஜ் - ம்கள்
வர்தன - மகள்
குணசேன
ஒருகோடு கிறிடப்பட்டவர்கள் பிரதமர்களாக இருந்தனர். இருகோடு கிறிடப்பட்டவர்கள் ஜனாதிபதியாக இருந்தனர்.

85
டும்பங்கள் = விஜேயவர்த்தன, ஜயவர்த்தன, விக்கிரமசின்ஹ குடும்பங்கள்
(முகந்திரம்) டொன்பிலிப் டொன் ஹெலனா டெப்
விஜேயவர்த்தன வீரசிங்க
பிள்ளைகள்
எக்னஸ் ஈ.டபிள்யூ ஹெலன் - ஜயவர்த்தன
O i. G o آگے ۔T ஜேஆர். 6了夺。 டபிள்யு யவர்தன 226,660 ஜயவாததன கர்னல் றி.ஜி.
ஜயவர்த்தன
சல்வி மேஜர் றி.எப் ஜயவர்த்தன ஜயவர்த்தன
ரஞ்சித் : மகள் = ரஞ்சினி லால் நளின்ரி- எஸ் மன்ட்
சேன குணரத்ன விக்கிரமசிங்ஹ e நாயக்க = Gasto விஜேயசிங்ஹ லகஷமன விக்கிரமசிங்ஹ ரணில்விக்கிரமசிங்ஹ |
எல்லா பிள்ளைகளும், உறவினர்களும்) காட்டப்படவில்லை

Page 56
possingle)a mugęurs@-w mewự...so ymwoo meowo – 199șụrlsruấ3,9 oặpos = Jogos·pæ·șov •u••p•qui sewaer-waraeos uso so opowyws
1çourgo,org.pnjo oqyo,9 =1øsąjąğụromặegs jissør.119 1990-ų9 || Toput | org/prio 199ụ19=
&9년TT7ıyrılıgı9'= Vosgi星 – 象 \~~~~;Ꭾa gfᏑum Gíslovo |Joogilio į Togiri o pruugiú11-ilogon dų9mT sı19 =urműlovo 되예되國편되연T園되행행폐1,7 yņ = ass19 ựriouT org/sąžígif@o prijusīúır-ışgsosnovas@oğuovo = 1,9901tụorn-ı uliĝąjøletidae
·登į as stos@šsējusq9oy9 = opsprijusī£1,71çon원평7테되력되행åsigtiņsử= wormuojuseo assin i = |gooi 龟되어대래,Jusq9oy9sfĚ 'si19 asętris, –asusitslasoțuolo ||assows@o1991,39
... ||-|
oopmusĩ1999 prijing)dụs 1991, 109
 

87
·ņaesaeos •m•noussas seosow-rwxriae? gaeaeg-susaeg wuswydraen soosoT;, soof? (orosomaeo
umís@fő”되원혁펼해uffiaegae
„asgow-rŲijologoșqysogo||-| =:seșăgoɖowo uwosopon = Tığrıņģuso
*현" = 데확려되m守터행되gyássas = opmusiúl. Tion
|||-| --·!”, (usos șœșrwę,|trụ sở hulpgı-ı rapisdų9googi
Z)ooooặroof Israegu *e
solo = ∞fessoyşơi grapiyae fo@origoylovo ogqolo =子 |* gos įreșú oặcoortosíșcoặrești ș« șroș6
fts@ong)ņuolorowskiego
dispaīšapışırıu-Toyo·ąşıyapıs y-jogaīšı9omogyvo ||| | -øgruusu-ilogonogrnuofırılợn |apm-ı ışması els ------------ apm-ı ols også sný5

Page 57
88 அ. முகம்மது சமீம்
12. சேனாநாயக்க - விஜயவர்த்தன, பண்டாரநாயக்க - ரத்வத்தைக் குடும்பங்களின் ஆட்சி
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கையின் அரசியல் ஆதிக்கம், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கையில் அதுவும் குறிப்பிட்ட ஒரு சில குடும்பங்களின் கையில் இருக்கிறதென்பதை முன்னைய அத்தியாயத்தில் ஆராய்ந்தோம். இது பெரும்பான்மை சமூகத்திற்கு மாத்திரமல்ல, சிறுபான்மை சமூகங்களுக்கும். பொருந்தும். ஒரு காலத்தில் மாக்கான் மார்க்கார் குடும்பமும், அப்துல் கபூர் குடும்பமும், அப்துல் காதர் குடும்பமும் பெரும் பாலும் முஸ்லிம் சமூகத்தின் தலைமைப் பீடத்தை சுவீகரித்துக் கொண்டிருந்தன. பிறகு வந்த குடும்பங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மிகவும் நிதானமாக நுணுக்கமாக ஆராய்ந்தால், இன்று அரசியல் உலகில் ஜாம்பவான்களாக இருக்கும் முஸ்லிம் தலைவர்களுடைய குடும்பங்களும் அரசியல் உலகில் உள்ள அந்தஸ்தினால் பெரும் பதவிகளை அனுபவித்து வருவதை நாம் காணலாம். இது நிற்க, சுதந்திரத்திற்குப் பிறகு பெரும்பான்மை சமூகத்தில் நடந்த குடும்ப ஆட்சியைச் சிறிது விளக்குவோம். இக்குடும்ப ஆட்சி பண்டார நாயக்காவின் ஆட்சியோடு அஸ்தமித்தது.
புராதன சிங்கள அரசர்களின் காலத்தில் இரு குடும்பங்கள் ஆட்சி செய்தன. லம்பகர்ன குடும்பமும் மோரிய குடும்பமும், முதலாவது லம்பகர்ன அரசபரம்பரை, வசப அரசனுடன் (கி.பி. 67 - கி.பி. 11) அனுராதபுரத்தில் ஆரம்பமானது. கி.பி. 428 -ம் ஆண்டு

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 89
மஹாநாமவின் ஆட்சியுடன் இப்பரம்பரையின் முதல் கட்டம் முடிந்தது. இவனுடைய மரணத்திற்குப் பிறகு தென்னிந்திய படையெடுப்பினால், சிங்களவரின் ஆட்சி உறுகுணைப் பிரதேசத்தில் மாத்திரம் அடக்கி ஒடுக்கப்பட்டது. சிங்கள ஆட்சி திரும்பவும் தென்னிந்திய ஆட்சியை முறியடித்த மோரிய வம்சத்தைச் சேர்ந்த தாது சேனனால் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மோரிய வம்சத்தைச் சேர்ந்த இரண்டாவது சங்கதிஸ்ஸ (614) வின் காலத்தோடு இவர்களுடைய ஆட்சி முடிவு பெற்றது. மூன்றாவது, முகலான (614-17) சங்கதிஸ்ஸ வை முறியடித்துத் திரும்பவும் லம்பகர்னர் களுடைய ஆட்சியை ஏற்படுத்தினான். லம்பகர்னர்கள் அறுபது வருடங்கள் யுத்தம் செய்து, தமது குடும்ப ஆட்சியை நிலைநாட்டினர். இவர்களைப் போல் உயர்குலத்தைச் சேர்ந்த இன்னும் பல குடும்பங்கள், சில காலங்களுக்கு ஆட்சி செய்தன. காலிங்கர்கள், தாராச்சர்கள், பாலி போஜகர்கள் ஆகியனவே இவை. ஆனால், இலங்கைக்குப் போதிமரம் கொண்டுவந்த தேவனம்பியதிஸ்ஸவின் பரம்பரை, லம்பகர்னர்கள் என்று இவர்கள் கூறிக்கொண்டு, அரசாளும் உரிமை இவர்களுக்கு மாத்திரமே இருக்கிறதென்ற உரிமையையும் இவர்கள் ஸ்தாபித்திருந்தனர்.
இதேபோல, சுதந்திர இலங்கையை ஆட்சி செய்த சேனாநாயக்க குடும்பத்தினர், முதலாம் பராக்கிரம பாகுவைத் தமது மூதாதையர் என்று கூறிக் கொள்கின்றனர். ஆகவே ஆட்சிப் பொறுப்பு தங்களுக்குத் தான் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களது வாதம். அதே போல, அந்நிய நாட்டு வம்சமான நாயக்கர்களின் கண்டி ஆட்சி பிரித்தானியர்களால் முடிவுக்குக் கொண்டு வந்தபிறகு, கண்டி இராச்சியத்தில் முக்கிய அரச ஊழியர்களாக இருந்த அதிகார் திசாவை போன்ற பிரதேச ஆட்சிக்குப் பொறுப்பாயிருந்த ரதல, முதலி குடும்பங்

Page 58
90 அ. முகம்மது சமீம்
களுக்கும் சுதந்திர இலங்கையை ஆட்சி செய்யும் உரித்துள்ளது என்பது இக்குடும்பங்களின் வாதம். பிலி மதலாவ, எஹெலபொல, கெப்பிட்டி பொல, மொல்லி கொட குடும்பத்தினர் அழிந்தபிறகு சிங்கள வம்சத்தின் உயர் குடியினரான ரத்வத்தை குடும்பத்தினருக்குத்தான் அரசாட்சி செய்யும் உரிமையும் பொறுப்பும் இருக்கிறது என்பது இவர்களது கட்சி. ஆகவேதான் இன்று ரத்வத்தை குடும்பம் திரும்பவும் ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்றிருப்பது, இலங்கை அரசியல் தங்களது பிதுரார்ஜித சொத்து என்ற மமதையினாலேயே.
கரையோர சிங்கள இனத்தைச் சார்ந்த டொன் ஸ்பேட்டர் சேனநாயக்கவுடன் ஆரம்பமாகியது. சேனநாயக்க ஆட்சி. இவர் 19 -ம் நூற்றாண்டில் நிலச் சொந்தக்காரராக இருந்த காலத்தில் மீரிகமவிலுள்ள கரிவங்கம் சுரங்கத்தின் மூலம் பெரும் பொருள் ஈட்டினார். இருவருடைய மூன்றாவது மகனாகப் பிறந்தவர்தான் டிஎஸ். சேனாநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் உண்மையில் ஸ்பேட்டர் சேனாநாயக்கா தன்னுடைய முதலாவது மகனான எப்.ஆர். சேனாநாயக்காவை இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையில் கல்வி பயிலவைத்து இன்ஸ்கோர்ட்டில் சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணம் செய்து இலங்கையின் அரசியல் தலைமைப் பீடத்திற்குத் தயார் செய்தார். அவர் இலங்கையின் மது ஒழிப்பு இயக்கத்தின் தலைவரா யிருந்தார். 1926 -ம் ஆண்டில் அவருடைய அகால மரணத்தினால் இலங்கையின் முதல் பிரதமராக வரும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இது பற்றி, பேராசிரியர் கே.எம்.டி. சில்வா தன்னுடைய ஜே.ஆர். ஜயவர்த்தனா வின் வாழ்க்கை வரலாறு முதலாம் பாகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
“பெருநிலச் சொந்தக்காரரும், கரிவங்க சுரங்கத்தின் சொந்தக்காரருமான ஆட்டிகல்ல தனது மூன்று

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் - 91
பெண்களை மூன்று முக்கியஸ்தர்களுக்குத் திருமணஞ் செய்துவைத்தார். இந்த மூன்று தாய்மார்களும் இந்த நாட்டின் ஆட்சியை 1956 -ம் ஆண்டுவரைக்கும் அதற்குப் பின்னும் தங்களுடைய குழந்தைகளின் மூலமும் வாரிசுகள் மூலமும் இலங்கையை ஆட்சி செய்தனர். ஆட்டிகல்லவின் மூத்த மகள், எப்.ஆர். சேனாநாயக்காவைத் திருமணம் செய்தார். எப்.ஆர். சேனாநாயக்காவுக்கு அகால மரணம் ஏற்படாவிட்டால், அவர்தான் இலங்கையின் முதலாவது பிரதமராயிருந்திருப்பார். ஆனால், சந்தர்ப்பவசமாக அவருடைய தம்பி டி.எஸ். சேனாநாயக்காவுக்கு இப்பதவி சென்றது. டி.எஸ்ஸின் மகன் டட்லி இலங்கையின் இரண்டாவது பிரதமராகக் கடமையேற்றார். ஆட்டி கல்லவின் மகள் அலிஸ் ஜோன் கொத்தலாவலையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த சர். ஜோன் கொத்தலாவலை இலங்கையின் மூன்றாவது பிரதமராகக் கடமை யேற்றார். மூன்றாவது மகள் றி.ஜி. ஜயவர்த்தன என்பவரை மணமுடித்தார், றி.ஜி. ஜயவர்த்தனாவின், அண்ணனுக்குப் பிறந்தவர் தான் இலங்கையின் பிரதமராகவும் முதல் ஜனாதிபதியாகவும் வந்த ஜே.ஆர். ஜயவர்த்தனா. ஆகவே, இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஒருசில உயர்குடிக் குடும்பங்கள் ஏற்று வந்திருக்கின்றன என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்.
கேகாலை மாவட்டத்தில் பெலிகல் கோறலாவில் பிறந்த முதலாவது மகாபராக்கிரபாகு தம்முடைய மூதாதையர் என்று கூறிக் கொண்ட சேனாநாயக்கா குடும்பத்தினர் தம்முடைய மூதாதையரைப் போல் மஹறியங்கனவின் கோவிலைத் திருத்தி அமைத்தனர். டட்லி சேனாநாயக்காவின் மரணத்திற்குப் பிறகு நடந்த இடைத் தேர்தலில், ருக்மன் சேனாநாயக்காவின் புகைப்படத்தைக் கொண்ட விளம்பர ஒட்டிகளில் டட்லியின் மருமகன் என்றும் பின்னால் டி. எஸ்ஸின் நிழற் படமும் மகாபராக்கிரம பாகுவின் நிழற் படங்களும் இருந்தன.

Page 59
92 அ. முகம்மது சமீம்
சேனா நாயக்கா குடும்பத்தினர் ஏனைய சில உயர் குடும்பங்களோடு திருமண உறவு வைத்ததனால் அவர்களுடைய செல்வாக்கு இன்னும் வளர்ந்தது. விஜயவர்த்தன, விக்கிரமசிங்க, கொறயா, கொத்தலாவலை ஆகிய குடும்பங்களுடன் உறவு வைத்த காரணத்தினால் இவர்களுடைய சமூக அந்தஸ்து இன்னும் கூடியது. அரசாங்கத்தை இவர்கள் பொறுப்பேற்ற பிறகு குடும்ப உறவினர்களும், பயனடைந்தனர். இக்குடும்பங்களின் உட்புற உறவினர்கள் அரசாங்கத் துறைகளில் எல்லா வற்றிலும் உயர் பதவிகளைப் பெற்றனர். இவர்களுடைய அதிகாரம் நிர்வாகத்துறை, நீதித்துறை, படைத்துறை, வாணிபத் துறை, தொழிற் துறை, சட்டமன்றத் துறை ஆகியவைகளுக்குப் பரவியது. ஆசியாவின் மிகப் பெரிய செய்திப் பத்திரிகையும், வெளியீட்டுத் திணைக்களமுமாகிய, இலங்கையின் அசோசியேட்டஸ் செய்தி ஸ்தாபனம் சமீப காலம்வரை இவர்களுக்கே சொந்தமாயிருந்தன. எனவே அரசியல் அதிகாரம்தான் எல்லா நன்மைகளையும் பெறுவதற்கு மூலகாரணமாயமைகிறது.
இக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் பாலும், ஐ.தே. கட்சியைச் சேர்ந்தவர்களே. எச்.ஈ. தென்னகோன், ஹேமா பஸ்னாயக்கா போன்றவர்கள், தனிப்பட்ட காரணங்களினால் பண்டாரநாயக்கா அரசாங்கங்களிலும் சேவை செய்தனர். நிர்வாகத் துறையிலும், நீதித் துறையிலும், காவல் துறையிலும் இவர்களுடைய அதிகாரம் எவ்வளவு தூரம் பரவியிருந்ததென்றால் பண்டார நாயக்கா அரசாங்கத்திலும் கூட சில உள்ரகசியங்கள் ஐ.தே.க. யினருக்கு அடிக்கடி கிடைத்துக் கொண்டிருந்தன. 1956 -ம் ஆண்டில் பதவியேற்ற பண்டாரநாயக்க அமோக வெற்றி பெற்றிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரின், அரசியல் அதிகாரமும் அரசியல் செல்வாக்கும் இன்னும் குறையவில்லை என்பதை உணர்ந்தார்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 93
1956 -ம் ஆண்டில், மக்கள் அரசாங்கத்தை நிறுவிய முற்போக்குக் கொள்கையுடையவரும் பெரும் சோஷலிச ஜனநாயகவாதியுமான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா இக்குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளிவைத்தார். மக்கள் அரசாங்கத்தை ஸ்தாபித்த பண்டார நாயக்கா, 1957 -ம் ஆண்டில் பேராதெணியசர்வகலாசாலையின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையில் தன்னுடைய கொள்கையை விளக்கிக் காட்டினார். “பொது மனிதனின் சகாப்தம்” என்ற தலைப்பில் பேசிய அவர், “நாம் இன்று மனிதவரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றில், தன்னை உயர்த்திக் கொள்ளவே மனிதன் பாடுபட்டு வந்திருக்கிறான். மனித வரலாற்றில் இன்றைய காலகட்டம் ஒரு புதிய சகாப்தம் என்று கூறுகிறோம். ஒரு புதிய சமுதாயம் உருவாவதற்குரிய காரணிகள் என்ன? என்னைப் பொறுத்தளவில் இது ஒரு புதிய சகாப்தம் அல்ல. மாறிவரும் ஒரு சமுதாயம், சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்குப் பதிலாக உத்வேகமுள்ள, உணர்ச்சியுள்ள ஒரு புதிய சமுதாயம் தோன்றப்பார்க்கிறது. இன்று மாறுதலடைந்துவரும் ஒரு சமுதாயத்தில் எமக்கு ஒரு பெரும் பொறுப்பு இருக்கிறது. நாம் நிதானமாகச் சிந்தித்து, சரியான முறையில் செயலாற்றினால் ஒரு புதிய சகாப்தத்தை - ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கியவர்களாவோம். ஆல்டுஹஸ் ஹக்ஸ்லி கூறியது போல, ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது, மற்றது பிறந்து கொண்டிருக்கிறது”
மேலே குறிப்பிடப்பட்ட பண்டாரநாயக்காவின் கருத்துக்கள் அவருடைய அரசியல் சிந்தாந்தத்தையே எடுத்துக்காட்டுகிறது. பொதுமக்களின் சகாப்தத்தை உருவாக்கிய பண்டார நாயக்கா குடும்ப ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்கவில்லை. அவர் உயர் குடிப்பிறப் பாளராயிருந்தாலும் பரந்த மனப்பான்மையுடையவர்.

Page 60
94 அ. முகம்மது சமீம்
கண்டிய பெளத்த சமயத்தைச் சேர்ந்த உயர் குடிபரம்பரையைச் சேர்ந்தவரென்றாலும் அவர் சாதாரண மக்களுடனேயே பழகினார். இங்கிலாந்தில் ஆங்கிலக் கல்வி கற்று நாடு திரும்பிய பண்டார நாயக்காவுக்கு சிங்கள மொழியில் பரிச்சயம் இருக்கவில்லை. சிங்களவருடைய உடையை அணிந்தார். சிங்கள மொழியில் பேசத் தொடங்கினார். ஆங்கில மொழி பேசி, ஆங்கில உடை அணிந்து, ஆங்கில பழக்கவழக்கங்களை மேற்கொண்டிருந்த ஏனைய இலங்கைத் தலைவர்களினின்றும் வேறுபட்டேட் காணப்பட்டார். ஆங்கிலேயர் இந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை படித்த உயர் வர்க்கத்தினிடம் கொடுப்பதை அவர் விரும்பவில்லை. இந்த நாடு ஏழை சிங்கள மக்களுக்குத்தான் சொந்தம் என்ற கொள்கையை வலி யுறுத்த சிங்கள மகாசபா என்றொரு மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். பாமர மக்கள் பேசும் சிங்கள மொழிதான் இந் நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், சிறுபான்மையின மக்கள் தங்களுடைய மொழியை நியாயமான முறையில் பாவிக்கலாம் என்றும் கூறினார். உயரிடத்திலிருந்த ஆங்கிலேயரின் கிறிஸ்தவ மதத்திற்குப் பதிலாக, சிங்கள மக்களின் பெளத்த மதம் அரியாசனம் ஏறவேண்டும் என்று விரும்பினார். தான் கண்ட கனவுகளை, 1956 -ம் ஆண்டில் நனவாக்கினார். துரதிர்ஷ்ட வசமாக அவருடைய அகால மரணத்தினால் அவர் தன்னுடைய எண்ணங்களை அவரால் செயலாற்ற முடியவில்லை. இப்பொழுது இலங்கையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. சந்திரிகா சகாப்தம், புதிய தலைமுறையினரின் தலைவி சந்திரிகா தன்னுடைய தகப்பனின் கொள்கைகளைச் செயலாற்றுவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வாரா, அல்லது குடும்ப பாரம்பரியத்தைப் பாதுகாப்பாரா? காலம்தான் இதற்குப் பதில் சொல்லும்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 95
13. புதிய ஆட்சியாளர்களின் முதலாளித்துவப் போக்கு
சமகாலத்து வரலாற்றை எழுதும் ஒரு வரலாற்றாசிரியனை, அவன் எழுதியவைகளுக்கும் குற்றம் காண்பார்கள், எழுதாதவற்றுக்கும் குற்றம் காண்பார்கள் என்று பிரெஞ்சு எழுத்தாளர் வோல்டயர் கூறினார். சமகாலத்து வரலாற்று வாயிலில் இருக்கிறோம். 1945 -ம் ஆண்டில் அரச சபையில் இலங்கையின் சுதந்திரம் பற்றிய விவாதம் தொடங்கியது. இக்காலகட்டத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை ஆராயுமுன், இக்காலத்துக்குப் பிறகு இலங்கையின் அரசியல் ஒட்டத்தை, அரசியல் போக்கை ஒரு முன்னுரையாக, மேலெழுந்த வாரியாக அறிவது அவசியம்.
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தும் ஆட்சிப் பொறுப்பையேற்ற ஆங்கிலக் கல்வியைப் பெற்ற மத்தியதர வர்க்கத்தினர், தமது முன்னைய தலைவர் களான பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கீழ்ப்படிந்தே நடந்து வந்திருக்கிறார்கள். ஆங்கில அரசாங்கத்தின் மரபு பாதுகாக்கப்பட்டது. இலங்கை அரசகருமங்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்துவரும் நிர்வாக அமைப்பு, ஏகாதிபத்திய வாதிகளின் சுரண்டல் திட்டத்தை அமுல் நடத்தி வந்ததால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக் குமிடையே உள்ள இடைவெளி இன்னும் பெரிதா கியது. இன்றைய அரசியல் சிக்கல்களுக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கும் இது ஒரு காரணம் என்றால் அதை மறுக்க முடியாது. இது பொருளாதாரத்திற்கு பொருந்துவது மாத்திரமல்ல, கல்வித் துறையிலும், நீதித் துறையிலும் இந்நிலையைக் காணலாம். இலங்கை

Page 61
96 அ. முகம்மது சமீம்
நீதிமன்றங்களில் இன்றும் ரோமன்-டச் சட்டமே இயங்கிவருகிறது. மக்களைக் காவல் காக்கவேண்டிய போலிஸ்கர்ரர்கள் மக்களைத் துன்புறுத்துவதிலும் அவர்களுக்கு அடிக்கடி தொல்லைகளைக் கொடுத்தும் அந்நியர்களுக்கு சேவகம் செய்ய அதே நிலைப்பாட்டில் முன்பு அடக்கி ஆளும் ஒரு கூட்டத்தினராகக் கிராம மக்களின் முன் காட்சியளித்தார்கள். இவர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்களைக் காப்பாற்றுபவர்கள் என்று பாமர மக்களுக்குத் தோற்றம் அளித்தார்கள்.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள், பழைய உலகத்தை அழித்துவிட்டு, இலங்கையில் சிங்கள பாமர மக்களைத் தவிர்த்த ஒரு புதிய உலகை ஸ்தாபித்துவிட்டுச் சென்றார்கள். ஆங்கிலக் கல்வி கற்ற, பணம்படைத்த ஒரு சிறு கூட்டத்தினருக்கு உகந்ததாக ஒரு புதிய உலகை ஏற்படுத்திவிட்டுச் சென்றனர். இந்தப் புதிய உலகில் சிங்கள கிராம மக்களுக்கு இடமில்லை. இப்புதிய முதலாளித்துவ அமைப்பில், பழைய உலகத்தில் வாழ்ந்த ஒரு சிலருக்குத் தான் இடம் இருந்தது. ஏழை விவசாயிகளும் ஏழைத் தொழிலாளர்களும் இப்புதிய உலகிற்கு அப்பாற்பட்டே இருந்தனர். வேறுபட்ட, ஒன்றுக் கொன்று முரண்பட்ட இவ்விரு உலகங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தான், பின்னால் வந்த அழிவுகளுக்குக் காரணம். உயர் குடியினருக்கு ஏற்றவகையில் இலங்கையின் பொருளா தாரமும், அதற்கேற்ப அரசியலமைப்பும் அமைந்தன.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், ஒரு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு ஏற்பட்டதென்று கூறுவது தவறு. மேல் நாடுகளில், கைத்தொழிற் புரட்சியின் காரணமாக தொழில் வளம் பெருகி, வியாபாரம் வளர்ந்து, பிற நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்த காரணத்தினால், பொருள் குவிந்தது. அப்பொருள் தொழிற்சாலைகளின் சொந்தக் காரர்களுக்கும் உற்பத்திச்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 97
சாதனங்களின் உரிமையாளர்களுக்கும் சென்றடைந்த தனால் தோன்றிய பொருளாதார அமைப்புதான் இம் முதலாளித்துவ அமைப்பு. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார அமைப்போ, உருக்குலைந்த, தலைகீழான ஒரு பொருளாதார அமைப்பே. ஒர் அந்நிய ஆட்சிக் குழுவின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு தலைநகரின் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் ஏற்பட்ட ஒரு பொருளாதார அமைப்பையே காண்கிறோம். பெருந் தோட்டப் பயிர் செய்கை, அந்நியரால் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினாலும், அவர்களுடைய ஏஜெண்டுகளின், கட்டுப்பாட்டில் இருந்த காரணத் தினாலும், உள்ளூர் மரபு வழிவந்த உற்பத்தியோடு இவை இணையாமலேயே இருந்தன. ஆகவே, இத் தோட்டங் களைச் சுற்றி வளைத்திருந்த சிங்கள கிராமங்களில் வசிக்கும் ஏழைச் சிங்கள மக்கள், இப் பொருளாதார அமைப்பிற்கு வெளியே இருந்தனர்.
எனவே, சுதந்திரம் கிடைத்த பிறகு, இப் பொருளாதார அமைப்பை மாற்றி சுதந்திர இலங்கைக்கு ஒரு புதிய, வேகமுள்ள பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவதற்கு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இப்புதிய வர்க்கத்தினர் தவறிவிட்டனர். உயர் வர்க்கத்தைச் சேர்ந்த இக்குழுவினர், நாட்டின் தேசிய வளர்ச்சியில் அக்கறை காட்டுவதைவிட, தம் சுற்றத்தாருக்கும், தம் குழுவினருக்கும் பணம் சம்பாதிப்பதில் முக்கிய கவனம் செலுத்தினர். மக்களுடைய தேவைகளுக்கேற்ப சமத்துவமுள்ள ஒரு புதிய சமுதாயத்தை நிலை நாட்டுவதற்குரிய அத்திவாரத்தை எழுப்பத் தவறி விட்டனர். இதனால் உலக நாடுகளிடையே, அதுவும் மூன்றாம் மண்டல நாடுகளிடையே மிகவும் ஏழ்மையான நாடு என்று இலங்கை கணிக்கப்பட்டது. வளர்ச்சியுறாத நாடுகளில் மிகவும் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை என்றும் குறிப்பிடப் பட்டது. இப்பொருளாதார அமைப்பின் தாக்கத்தினால்

Page 62
98 அ. முகம்மது சமீம்
இலங்கையின் அரசியல் வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆட்சியாளர்களுக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்குமிடையில் இருந்த இடைவெளி, மேலும் மேலும் விரிவடைந்தது. பொருளாதாரத் துறையில் தமக்கிருந்த இந்த உயர் நிலையை அரசியலிலும் ஸ்திரப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள், ஏழை எளியவர் களுக்குப் பணத்தை வழங்கியும் தம் பேச்சுத் திறனைப் பயன்படுத்தியும் சட்ட மன்றத்தில் இடம் பிடிக்க முயன்றனர். பொருளாதார ஆதிக்கத்துடன் அரசியல் அதிகாரமும் சேர்ந்தவுடன், இவ்வாட்சியாளர்களின் அதிகாரமும் ஆணவமும் கட்டுக்கடங்காமல் போகத் தொடங்கின. ஆட்சியாளர்களின் இந்த எதேச்சாதிகாரப் போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்சி செய்யப் பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலேயே முக்கிய கவனஞ்செலுத்தினர்.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை இலங்கையின் ஒரு சிறு குழுவினருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றதனால், இலங்கையின் சாதாரண மனிதனுக்கு எவ்வித பாதிப்பும் எற்பட வில்லை. இலங்கையின் அரசியல் மாற்றம் ஏற்பட்டது கூட அவனுக்குத் தெரியாது. சில குடும்பங்களின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கை அரசியல், அக்குடும்பங்களின் நல்வாழ்வுக்காகவே பயன்பட்டது. நாளுக்குநாள் மக்களின் அதிருப்திவளர்ந்தது. பொதுத் தேர்தல்களில் அவர்கள் அளித்த வாக்குகள் இதனைப் பிரதிபலிக்கிறது. 1956 -ம் ஆண்டுக்குப் பிறகு ஏழு அரசாங்கங்கள் மாறி, மாறி ஆட்சி செய்தன. சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை யேற்று வந்த குழுவினரின் கட்சி, 1956 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 8 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டது. 66 ஆசனங்களைக் கொண்டிருந்த ஆளும் கட்சி 1970 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் 17 ஆகக் குறைக்கப் பட்டது. 1977 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 99
அன்றைய ஆளும்கட்சி 90 ஆசனங்களிலிருந்து 8 -க்குக் குறைக்கப்பட்டது. பொதுமக்களின் அதிருப்தியைத்தான் இது காட்டுகிறது. கட்சிகள் மாறினாலும், பொது மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. பாராளுமன்ற முறையில் இளந் தலைமுறையினர் தம் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். இவ்வரசியல் மாற்றங்களால் ஒரு புதிய ஆட்சியாளர் குழு தோன்றத் தொடங்கியது. ஆட்சிப் பொறுப்பையேற்றவர்களுடைய முகங்கள்தான் மாறினவேயொழிய, அவர்களுடைய போக்கில் எவ்வித மாற்றமுமிருக்கவில்லை. மக்களோடு நன்றாகப் பழகிக் கொண்டிருப்பவர்கள் பதவியும் அதிகாரமும் வந்ததும் மக்களினின்றும் வேறுபட்டு, மக்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் மிகவும் தொலைவிற்குச் சென்றுவிடுகின்றனர். இக்குழுக்களின் ஆட்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டு, நாட்டில் பெரும் மாற்றம் ஏற்படாதிருப்பதைத் தடுக்கவே, ஜே.ஆர். ஜயவர்த்தனா விகிதாசாரமுறைப்படி என்ற ஒருபுதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன்படி நாட்டு மக்களிடையே எத்தகைய மாற்றமேற்பட்டாலும், ஆட்சியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள். அப்படி மாற்றப்பட்டாலும், அவர்களுடைய அரசியல் செல்வாக்கு இருந்து கொண்டுதான் வரும். இந்த நிலையை நாம் இன்[DI காண்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்று முன்னைய நிலை இருந்திருந்தால் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு 196 ஆசனங்களில் குறைந்தது 160 ஆசனங்களாவது கிடைத்திருக்கும். இது எதைக் காட்டுகிறதென்றால், ஆட்சியாளர்களின் மேல் மக்களுக்கிருந்த அதிருப்தி எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டது என்பதையே. அதே நேரத்தில் ஆட்சிப் பொறுப்பையேற்றிருக்கும் இப்புதிய ஆட்சியாளர்கள் மக்களின் மனநிலைக்கு ஏற்ப நடக்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் நிலைமை விபரீதமாக மாறிவிடும்.

Page 63
100 அ. முகம்மது சமீம்
I
இன்றைய ஆட்சியாளர்கள் பண்டைய அரசர்களைப்
போல் காவல் அரண்களை வைத்துக் கொண்டு, துப்பாக்கி ஏந்தியவண்ணம் காவல் படை வீரர்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களிட மிருந்து தம்மை பாதுகாப்பதற்காக இவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகள்?
இவ்வாட்சியாளர்களை அடிக்கடி மாற்றுவதற்கு
மக்களின் அதிருப்திக்கு ஒரு முக்கிய காரணம்தான்
வேலையில்லாத் திண்டாட்டம் - வேலையில்லாதோர் தொகையைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
1945 -ம் ஆண்டில் 21,336
1955 99 71,010 1965 99 74.6ss
1969 9. 341,286
1971 99 700,000
இந்த அரசியல் மாற்றங்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு காரணமென்று கூறினாலும் சனத்தொகை பெருக்கமும் சமூக தேவைக்கேற்ப கல்வியின் குறைபாடும் ஆட்சியாளர்களிடையே இருந்த ஊழல்; இவைகளையும் நாம் காரணங்களாக எடுத்துக் கொள்ளலாம். இம்மாற்றங்களினால், பலனேதும் இல்லாமற் போய்விட்டதை உணர்ந்த இளைய தலைமுறையினரின் அதிருப்திதான் 1971 -ம் ஆண்டிலும் 1987-89 -ம் ஆண்டுகளிலும் இலங்கையில் பூகம்பமாக வெடித்த பயங்கரவாத இயக்கங்கள். இன்றைய அரசியல் மாற்றத்திலும் மக்கள் நம்பிக்கையிழந்தால், இனி வரப்போகும் நிலையைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் (ԼՔԼգ-ԱIIT5].

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 101
நாட்டின் தேவைக்கும், சமூக மாற்றத்திற்குமேற்ப கல்வியின் குறைபாடும் மக்களின் அதிருப்திக்கு ஒரு முக்கிய் காரணம். பிரித்தானியர்களுக்குப் பிறகு, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இவ்வுயர் வகுப்பினர், தாம் உருவாக்கிய இப்புதிய உலகிற்கு வெளியே இருந்த பாமர மக்களையோ, அவர்களில் கல்வியறிவுள்ளவர்களையோ, இணைக்கவோ, அல்லது அவர்களையும் அனைத்துச் செல்லும் ஒரு கொள்கையையோ கொண்டிருக்கவில்லை. பாமர மக்களையும் இணைத்த ஒரு புதிய உலகை உருவாக்கும் அவசியத்தைக் கூட உணரும் சக்தி இவர்களுக் கிருக்க வில்லை. தாம் அமைத்துக் கொண்ட உலகிற்கும் பாமர மக்களுக்கும் இருந்த இடைவெளியைக் கல்வியின் மூலமாவது ஒரளவு நிவர்த்தி செய்திருக்கலாம். அதையும் செய்யத் தவறிவிட்டார்கள். கிராமத்து ஏழை மக்கள் கல்வியின் மூலம் இந்த முதலாளித்துவ உலகில் புகுவதற்கு எண்ணினார்கள். ஆனால், அதிலும் ஒரு சிலரால்தான் உள்ளே போக முடிந்தது. பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகள் தம்முடைய ஏகாதிபத்தியத் திற்கு உடந்தையாக இருக்கும் கல்வித்திட்டத்தைத் தான் புதிய ஆட்சியாளர் களும் கடைப்பிடித்தார்கள். நாட்டுக்குத் தேவையான, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு கல்வித் திட்டத்தை அமைத்திருக்கலாம். பிரித் தானியர்கள் விட்டுச் சென்ற ஏகாதிபத்திய நோக்கங்களைக் கொண்ட அதே கல்வி அமைப்பையே கடைப்பிடித்தார்கள். அரசாங்க உத்தி யோகம் பெறும் ஒரே நோக்கத்திற்காகவே ஏழை கிராம மக்களும் இக்கல்வியைப் பயிலத் தொடங்கினார்கள். இதனால் வேலை வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின. வேறு தொழில் ஏதும் செய்ய இயலாத ஒரு கல்வியைப் பெற்ற இவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தது. மேலே காட்டிய அட்டவணை இதனை நிரூபிக்கிறது. ஆகவே கிராமிய - படித்த இளைஞர் மத்தியில் ஒரு விரக்தி பரவத் தொடங்கியது. இந்த விரக்திதான் 1971 -ம் ஆண்டில் வெடித்த இளைஞர் பூகம்பம்.

Page 64
102 அ. முகம்மது சமீம்
இப்படியொரு நிலை திரும்பவும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அன்றைய மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பல திட்டங்களை வகுத்தது. ஆனால், இத் திட்டங்கள் பரிபூரணமாகச் செய்யப்படாத காரணத்தி னாலும் ஆட்சியாளர்களிடம் தீர்க்க தரிசன பார்வை யில்லாமையினாலும் மக்களின் அதிருப்தி வளரத் தொடங்கியது. இவ்வதிருப்தியைத் தமக்குச் சாதகமாகப் பாவித்த ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவாளர்கள், முற்போக்கு எண்ணம் படைத்த அன்றைய அரசாங்கத்த்ை 1977 -ம் ஆண்டில் தோற்கடித்தனர்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 103
14. இலங்கை தேசியம், சிங்கள - பெளத்த தேசியமாக உருவெடுக்கிறது.
1945 -ம் ஆண்டுக்குப் பிறகு இந்நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் அரசியல் மாற்றங்களும், எவ்வாறு சிறுபான்மையின மக்களைப் பாதித்தன; முக்கியமாக முஸ்லிம்களைப் பாதித்தன என்பதனை நாம் அறிவதாயிருந்தால், இச் சம்பவங்கள் ஏற்படுவதற்குரிய காரணிகள் யாவை? இவைகளின் அடிப்படைத் தத்துவங்கள் என்ன? இச்சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யாவை? இக்காலப் பகுதியின் வரலாற்று நாடகத்தில் தோன்றிய முக்கிய கதா பாத்திரங்கள் யார்? அவர்களது கொள்கை என்ன? என்பதனை அறிந்தால், பின்வரும் அத்தியாயங்களில் இவைகளை விரிவாக ஆராயும் போது தெளிவாக இருக்கும்.
இக்காலப் பகுதியில் எழுந்த ஒரு.முக்கிய பிரச்சினை தான் மொழி சம்பந்தமான பிரச்சினை. இப்பிரச்சினை நாட்டை இரண்டாகப் பிளவு படுத்தியது. முஸ்லிம்கள் வெகுவாகப் பாதிக்கப் பட்டார்கள். சிங்கள தேசியம் நாட்டின் தேசியமாக உருவெடுத்தது. இதனை ஏற்க மறுத்த தமிழர் சமுதாயம், பிரிந்து செல்லத் தொடங்கியது. அதே நேரத்தில் சிங்கள மக்களின் வைராக்கியமும் அதிகரித்தது. அடுத்து, பெளத்த சமயம் அரியாசனத்தில் வைக்கப் பட்டது. ஏனைய மதங்கள், குறைவான ஸ்தானத்திலேயே வைக்கப்பட்டன. இப்பிரச்சினைகளோடு பின்னிப் பிணைந்து வளர்ந்ததுதான் இனப் பிரச்சினை. இக்காலப் பகுதியில் இனப் பிரச்சினைதான் ஏனைய பிரச்சினை களைவிட மேலோங்கியிருப்பதை நாம் காணலாம்.

Page 65
104 அ. முகம்மது சமீம்
அரசியல் வானில், ஆரம்பத்தில் கொடிகட்டிப் பறந்த மார்க்சிய அரசியற் கட்சிகள் அரசியல் உலகிலிருந்தும் அஸ்தமிப்பதைப் பார்க்கலாம். இதே நேரத்தில், இந்திய வம்சாவழியினரின் அரசியல் செல்வாக்கும் வளர்வதைக் காண்கிறோம். முஸ்லிம்கள், மொழி அடிப்படையில் இரண்டாகப் பிரிந்திருந்தாலும், அவர்களுடைய அரசியல் செல்வாக்கும் ஒரளவு வளர்வதைக் காணலாம். முன்பு அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த கிறிஸ்தவ மக்கள், தமது அரசியல் அந்தஸ்தை இழந்து, மொழி, அடிப்படையில் இரு சமூகங்களிலும் சங்கமமாவதைக் காண்கிறோம். முஸ்லிம்களிடையே ஓர் அரசியல் கட்சி உருவாவதைக் காண்கிறோம்.
பிரித்தானியரிடமிருந்து இலங்கையருக்கு அரசியல் அதிகாரம் மாறிய காலப்பகுதியில் (1946 - 48), இலங்கையின் தேசியத் தலைவராயிருந்த டி.எஸ். சேனாநாயக்காவின் நடைமுறைப் போக்கையும் அவரது பழமைவாதக் கொள்கையையும் பலர் கண்டித்தனர். ஆனால் 45 வருடகால வரலாற்றைப் பார்க்கும் போது, பத்து வருடங்களாக இந்நாட்டில் ஏற்பட்ட இனப் போராட்டத்தையும், அதனால் ஏற்பட்ட உள்ளூர் யுத்தத்தையும் நோக்கும் போதும் எல்லா இனமக்களையும் அணைத்து ஒர் ஆட்சியை நிறுவவேண்டுமென்ற அவருடைய கொள்கையைப் பாராட்டாமலிருக்க முடியாது.
இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்வதை ஒரு பலமாகக் கருதினாரேயொழிய ஒரு பலஹினமாக அவர் எண்ணவில்லை. எல்லா இனமக்களுடைய உணர்வுதான் இலங்கை தேசியம் என்று இனங் கண்டார். மொழி, மதம், இனம் ஆகிய பிரிவினை சக்திகளுக்கு அப்பாற்பட்டதுதான் இலங்கைத் தேசியம் என்பதை வலியுறுத்தினார். அரசியல் மாற்றத்திற்கு எல்லா இன மக்களின் ஒத்துழைப்பும் தேவையென்பதை மக்களுக்கு உணர்த்தினார். புதிய

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 105
பாராளுமன்றத்தில், மத அடிப்படையில் எந்த ஒரு சலுகையோ, பாதகமோ ஏற்படும் சட்டங்கள் இயற்றப்படக் கூடாது என்பதனை முன் கூட்டியே அரசசபை அமைச்சர்கள் தயாரித்த மாதிரி அரசியல் அமைப்பில் புகுத்தினார்.
சேனநாயக்காவின் புதிய அரசியலமைப்பில் மூன்று முக்கிய அம்சங்களைக் காண்கிறோம். முதலாவது, இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து கிடைக்க வேண்டு மென்பது, இரண்டாவது நாட்டின் பாதுகாப்பிற்காக பிரித்தானியாவுடனும் அமெரிக்காவுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது, மூன்றாவதாக, சிங்கள் மொழியும் பெளத்த மதமும் அரியாசனத்தில் ஏற்றப்படல் வேண்டுமென்ற சிலரது கொள்கையை பல்லின மக்களின் நலன் கருதி எதிர்த்து நிற்பது. ஆனால் அவருக்குப் பிறகு பிரதமராகிய சர்ஜோன். கொத்தலாவலை, இச்சக்திகளுக்கு இடம் கொடுத்து, அவைகளோடு ஒத்துப் போனால் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் விட்டுக் கொடுத்தார். ஆனால், 1954 -ம் 55-ம் ஆண்டுகளில், இதுகாலவரை அடக்கியொடுக்கி வைக்கப் பட்ட சிங்கள பெளத்த உணர்வு திரும்பவும் தலை யெடுக்கத் தொடங்கியது. பல்லின மக்களின் அபிலா ஷைக்கு அமைய இலங்கைத் தேசியம் என்பது சிங்கள - பெளத்த தேசியமாக உருவெடுத்தது.
மக்களிடையே பரவி வந்த இவ்வுணர்ச்சி வேகத்தை பண்டாரநாயக்கா தனக்குச் சாதகமாகப் பாவித்தார். 1956 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் இதை நன்றாகப் பயன்படுத்தினார். அதனால் ஏனைய இனங்களுடைய அபிலாஷையான இலங்கை தேசியம் புறக்கணிக்கப் பட்டது. சிங்கள - பெளத்த இயக்கம் பொதுமக்கள் இயக்கமாக மக்கள் மத்தியில் பரவிய காரணத்தால் இதுகாலவரையும், ஏழை தொழிலாளர்

Page 66
106 அ. முகம்மது சமீம்
களினதும் பாமர மக்களினதும் ஆதரவைப் பெற்றுவந்த மார்க்சிய அரசியல் கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை இழக்கத் தொடங்கின. 1956 -ம் ஆண்டு பண்டாரநாயக்கா ஈட்டிய வெற்றி இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எல்லா இன மக்களையும் பிரதிபலிக்குமுகமாக ஜனநாயக அடிப்படையில் தோன்றிய இலங்கை தேசியவாதத் திற்குப் பதிலாக, பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஜனநாயக இயக்கமாகிய சிங்கள - பெளத்த இயக்கம் தேசிய இயக்கமாக உருவெடுத்தது. இதனால் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்பட்டதோடு இலங்கையின் சிறுபான்மை இனங்கள் வெவ்வேறாகப் பிரியத் தொடங்கின. 1950 -ம் ஆண்டில் புத்தரின் 2500 வருட பிறந்ததினக் கொண்டாட்ட மாகிய புத்த ஜயந்தி கொண்டாடப்பட்டதன் மூலம் இப்பெளத்த உணர்வு மக்கள் மத்தியில் உத்வேகத் துடன் பரவியதோடு பண்டைய பெளத்த மரபு திரும்பவும் புதுப்பிக்கப்பட்டு ஒரு புத்துயிர் அளித்த சமூகமாக பெளத்த சமூகம் காட்சியளித்தது. சிங்கள மொழியின் அடிப்படையில் இத்தேசியம் அமைந்ததால் இது உருமாற்றம் பெற்று, பெருபான்மை சமூகத்தை மாத்திரமே பிரதிபலித்ததால் சிங்கள சமூகத்திற்கும் தமிழர் சமூகத்திற்கு மிடையே இருந்த உறவு பெருமளவும் பாதிக்கப்பட்டது.
மொழி அடிப்படையில் தோன்றிய இத்தேசிய வாதம் ஏனைய அரசியற் கட்சிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியது, மக்கள் இயக்கமாக மாறிய இவ்வியக்கத்தின் பாதிப்பினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும் தத்தமது கொள்கையை மாற்றிக் கொண்டன. மார்க்சீய கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த அதே வேளையில், ஏனைய பெரும் பான்மையின கட்சிகள் அதற்குப் பணிந்து நடக்கத் தொடங்கின. இந்த மொழி அடிப்படை யிலான தேசியம் எவ்வளவு தூரம் நாட்டைப் பாதிக்கப் போகிறதென்று அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. மொழி

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 107
அடிப்படையிலான தேசியம் ஒரு நாட்டைப் பிளவு படுத்துவது மட்டுமல்ல, அதை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர் நேமியர் ஐரோப்பாவின் வரலாற்றை எழுதும் போது கூறுகிறார். இந்திய உபகண்டத்தில் இம்மொழி அடிப் படையிலான தேசியம் எவ்வளவு தூரம் அந்நாட்டைப் பாதித் திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
பெரும்பான்மையினமான சிங்கள மக்களின் சிங்கள
பெளத்த தேசியம் நாட்டின் தேசியமாக உருவெடுத்ததோடு, அம்மக்களின் உணர்ச்சியையும் தூண்டிவிட்ட அதே நேரத்தில் ஏனைய இனமக்களை இத்தேசிய அமைப்பிற்கு வெளியே வைத்ததுமல்லாமல் அவர்களைப் பிரித்து எண்ணவும் தூண்டியது. இதனால் சிறுபான்மை மக்கள் தாம் இந்நாட்டில் உரிமையோடு வாழலாம் என்ற நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். தமிழர் சமுதாயமும் இம்மொழி அடிப்படையிலான தேசியத்தை நிராகரித்தது மல்லாமல் அதற்கெதிராகப் போராடவும் முற்பட்டது. . . . .
பெளத்த மதத்தை அரசாங்க மதமாக ஆக்க வேண்டுமென்று ஒரு சில சக்திகள் "அரசாங்கத்தை வற்புறுத்தினாலும் இலங்கையின் இருபெரும் கட்சிகளும் ஆரம்பத்தில் எதிர்த்தன. ஆனால், 1972 -ம் ஆண்டின் அரசியல் யாப்பு, பெளத்த மதத்திற்குப் பிரத்தியேக அந்தஸ்தைக் கொடுத்தது - அரச அந்தஸ்தைக் கொடுத்தது. 1978 -ம் ஆண்டின் அரசியல்யாப்பும் பெளத்த சமயத்துக்கு அரச அந்தஸ்தைக் கொடுத்தது. 1989 -ம் ஆண்டு பெளத்த சாசன அமைச்சொன்று நிறுவப்பட்டு ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆகவே 1972 -ம் ஆண்டு, 1978 -ம் ஆண்டு அரச யாப்புகளின்படியும் 1989 -ம் ஆண்டு ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் பெளத்த சாசனம் கொண்டு

Page 67
108 அ. முகம்மது சமீம்
வரப்பட்டதனால் ஏனைய எல்லா மதங்களையும்விட பெளத்த மதத்திற்கு ஒர் உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப் பட்டது. இலங்கை அரசியல் அமைப்பு, மதச் சார்பற்ற ஒரு ஜனநாயக அமைப்பு என்ற ஸ்தானத்திலிருந்தும் இறங்கிவிடுகிறது.
1956-b ஆண்டு பண்டார நாயக்காவின் வெற்றிக்குப் பிறகு சிங்கள - பெளத்த மக்கள் இயக்கம் அரசியலில் ஒரு பெரும் சக்தியாகத் தன்னை நிலை நாட்டிக் கொண்டது. படித்த உயர் மட்டத்திலிருப்பவர்களுக்கெதிராக செயல்பட்ட இவ்வியக்கம் பொது மக்களின் நன்மைக்காக உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி நிலங்களையும், மக்கள் மயமாக்கப்படல் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்ததனால் இதே கொள்கையைக் கொண்டிருந்த மார்க்சீய அரசியல் வாதிகளின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்தது. இவ்வியக்கம் தன்னுடைய ஆதாரத்திற்காக பெளத்த தத்துவத்திலிருந்து கருத்துக்களைப் பெற்றது. பண்டார நாயக்காவின் தலைமைத்துவத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இவ்வியக்கத்தை ஆதரித்ததோடு சிங்கள - பெளத்த மக்களை அவர்களுடைய எண்ணிக்கைக்கேற்ப அரசி யலில் பிரத்தியேக உரிமை உள்ள ஒரு சமுதாயமாக மாற்றியது. பண்டாரநாயக்காவின் மத்திய போக்கு என்ற கொள்கை பொதுமக்களுக்கு சமூக மாற்றத்தையும் சமூக நியாயத்தையும் வல்லரசுகளின் ஆதிக்கத்திலிருந்து பொருளாதார சுதந்திரத்தையும் அரசுரிமையையும் கொடுத்ததோடு இதுகாலவரை அந்நியர்களாலும் உயர் வகுப்பினராலும் அடக்கி ஒடுக்கப்பட்ட சிங்கள - பெளத்த பாமர மக்களுக்கு ஒரு கெளரவத்தையும் தன்மான உணர்ச்சி யையும் கொடுத்தது.
பெரும்பான்மை மக்களுக்கு இவ்வுயரியஸ்தானம் கொடுக்கப்பட்டதால், சிறுபான்மை மக்கள் ஒரு

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 109
தாழ்த்தப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறுபான்மை இன மக்களிடையே பிரிவினைகளும் வேற்றுமைகளும் இருந்தபடியால் அவர்களால் ஒருமித்து இயங்க முடியவில்லை. ஆதலால் அவர்களுடைய அரசியல் செல்வாக்கு குறைந்ததோடு அரசியல் உரிமை பெறும் சக்தியையும் அவர்கள் இழந்தனர். பண்டார நாயக்காவின் அரசியல் சித்தாந்தத்தில் இருந்த ஒரு குறைபாடு என்னவென்றால், சமூக பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு காத்திரமான திட்டமில்லாமையே. அதே நேரத்தில், பண்டாரநாயக்கா, தான் அமுலுக்குக் கொண்டு வந்த சமூக பொருளாதார மாற்றங்களை நிலைநாட்டுவதற்காக, உற்பத்தியை வளர்ப்பதைவிட உற்பத்தி செய்யப்பட்ட வெளிநாட்டுப் பொருட்களை விநியோகம் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார். ஆனால் அவர் ஆற்றிய பெருஞ் சாதனை, சாதாரண மனிதனுக்கு ஒர் அரசியல் அந்தஸ்தையும், பொருளாதார உரிமையையும் கொடுத்ததுதான்.

Page 68
110 அ. முகம்மது சமீம்
15. மார்க்சியக் கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்தமை
1935-36 -ம் ஆண்டுகளில், சூரிய மலர் இயக்கத்தின் மூலம் இந்நாட்டின் அரசியல் உலகில் அமோகமான முறையில் பிரவேசித்த மார்க்சீய கொள்கையை அடிப்படையாகக் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சியினர் இலங்கையின் அரசியலுக்கு ஒரு புதிய தத்துவத்தைக் கொண்டு வந்ததுடன், பாமர மக்களின் உரிமைகளுக்காக, முக்கியமாக தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராட்டத்தை முன்வைத்ததனால், அரசியலில் ஒரு புதிய எழுச்சியைக் காண்கிறோம். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததோடு, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து சேவகம் செய்யும், ஆங்கிலேயரின் நடையுடை பாவனைகளை மேற்கொண்டு அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிட மிருந்து பெற யாசகம் கேட்டுக் கொண்டிருக்கும் உயர்வர்க்கத்தினரையும் எதிர்த்தனர். இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் மறியலுக்குச் சென்று, மக்கள் மனதில் தியாகிகள் என்ற பெயரைச் சூட்டிக் கொண்ட மார்க்சீய வாதிகள், 1947 -ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில், கணிசமான அளவு வெற்றியீட்டியதால், அன்றைய ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்று அரசாங்கம் அமைக்கும் தகைமையைப் பெற்றிருந்தனர். 1956 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பண்டாரநாயக்கா அரசாங்கத்திற்கும், மாற்று அரசாங்கம் அமைக்கும் ஸ்தானத்தில் இருந்தனர். லங்கா சம சமாஜக்கட்சியின் தலைவர் டாக்டர் என்.எம். பேரேரா, எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். 1960 -ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், அரசாங்கத்தை அமைக்கும்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 111
நோக்கத்துடன், இலங்கையின் எல்லாத் தொகுதிகளிலும் போட்டி யிட்டனர். ஒர் அரசாங்கம் அமைக்கும் அளவிற்கு இவர்கள் ஆசனங்களைப் பெறவில்லை. இலங்கையில் ஒர் அரசாங்கத்தை அமைக்கவேண்டுமானால் குறைந்தது 35% - 40% விகிதமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். 10% சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாத லங்கா சம சமாஜக் கட்சியினர், இப்படி ஒர் ஆசையை எப்படித்தான் வளர்த்தனரோ? ல.ச.ச. கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் பெற்ற முழுத்தொகையான வாக்குகளை ஒருங்கு சேர்த்தாலும், 15% க்குக் குறைவாகவே இருந்தது. பிலிப் குணவர்த்தனாவின் மகாஜன எக்சத் பெறமுனைக் கட்சி பெற்ற வாக்குகளையும் சேர்த்தால், 25% விகிதத்துக்குக் குறைவாகவே இருந்தது. தேர்தலின் முடிவுகள், ஒரு மார்க்சியக் கட்சி அரசாங்கம் அமைக்கும் எண்ணத்தை அடியோடு தகர்த்தெறிந்தது. அவர்களுடைய ஆசை கானல் நீராகவே போய் விட்டது.
கீழே உள்ள அட்டவணையைக் கவனித்தால் இது நன்கு புலப்படும்.
1947 -ம் ஆண்டுக்கும், 1977 -ம் ஆண்டுக்குமிடையில் மார்க்சியக் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம்.
1947 1952 1956 196O. 1960 1965 1970 1977 1989
(மார்ச்)(ஜூலை) f
ஸ்.ச.அ.க. 10.8 1311 10.48 10.5 ア.36 7.45 8.75 3.6 0.88 ககட்சி* 372 5.72 4.57 4.62 2.96 2.71 3.42 1.8 - S6T6.L.S.5.99 -- − - vM - . -
மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தால் லங்கா சமசமாஜக் கட்சியினர் சராசரி 10% விகிதத் துக்குக் குறைவாகவே வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
* லங்கா சம சமாஜக் கட்சி

Page 69
112 அ. முகம்மது சமீம்
* கம்யூனிஸ்ட் கட்சி * போல்ஷேவிக் லெனினிஸ்ட் கட்சி. இதன்
தலைவர் டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா
இந்த நிலையில் உள்ள ஒரு கட்சி எப்படி ஓர் அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும்? சிங்கள - பெளத்த நாடாக இலங்கையில், அதுவும் பெளத்த மதத்தில் ஊறிப் போயிருக்கும் ஒரு ச்முதாயத்தில், மதத்தையே ஒதுக்கித் தள்ளும் ஒர் அரசியற் கட்சி, எப்படிதான் அரசாங்கத்தை அமைக்க வேண்டும், என்று எண்ணியதோ? 1960 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தல் மார்க்சீயக் கட்சிகள் முன்னைய தேர்தல்களில் ஈட்டிய வெற்றியை அழித்ததோடு, எதிர்கால நம்பிக்கையையும் உடைத்தெறிந்துவிட்டது. சிங்கள - பெளத்த ஜனரஞ்சக இயக்கம், வர்க்கப் பிரிவினையை ஊடறுத்துச் சென்றதோடு, சிங்கள தொழிலாளர்களிலும், விவசாயிகளிலும், சிங்கள புத்தி ஜீவிகளின் மத்தியிலும் ஒரே விதமான பாதிப்பை ஏற்படுத்தியது. இனப்பிரச்சினையில் தமிழர்களுக்கு அவர்களுடைய உரிமையை வழங்க வேண்டுமென்ற அவர்களது கொள்கை, சிங்களவர் மத்தியில் அவர்களுடைய செல்வாக்கைக் குறைத்தது. இக் கொள்கையில் இவர்கள் பிறகு விட்டுக் கொடுத்தாலும், அதனால் எவ்வித பலனும் இவர்களுக்குக் கிடைக்க வில்லை. -
1960 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் போதிய வாக்குகள் இல்லாமையினால் அரசாங்கத்தின் கொள்கை விளக்கப் பிரேரணையில் தோற்றது. இதனால் மூன்று மாதத்தில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற்றது. மார்ச் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த மார்க்சீயக் கட்சிகள், தனித்துப் போட்டியிடும் கொள்கையை விட்டு,

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 113
சிறிலங்கா சுந்திரக் கட்சியுடன் தேர்தல் ஒப்பந்தத்தைச் செய்தது. இதன் காரணமாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்தது. தேர்தல் ஒப்பந்தத்தினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தன்னுடைய அரசியல் பலத்தை அதிகரித்த அதே வேளையில் மார்க்சீய கட்சிகள் மக்கள் மத்தியில் தமக்கிருந்த செல்வாக்கை இழந்தனர். மேலே உள்ள அட்டவணையின்படி 15% இருந்த மார்க்சீயக் கட்சிகளின் வாக்குகள், ஜுலை மாதத்தில் 10% விகிதமாகக் குறைவதைக் காண்கிறோம். தன்னுடைய அரசியல் நிலையை ஸ்திரப்படுத்தும் நோக்கத்துடனும் தொழிற் சங்கங்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடனும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் 1964 -ம் ஆண்டில் மார்ச்சீயக் கட்சிகளை அரசாங்கத்தில் சேர்த்தது. இடதுசாரிக் கட்சியினர் தம்முடைய சோஷலிசக் கொள்கைகளை அமுல் நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட வில்லை.
லேக்ஹவுஸ் பத்திரிகையை அரசுமயமாக்கும் இவர்களுடைய திட்டம் தோல்வியுற்றதனால், அரசாங்கம் வீழ்ந்தது. மார்க்சீயக் கட்சிகள், திரும்பவும், தேர்தல் ஒப்பந்தங்களை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் செய்ததனால், 1970 -ம் ஆண்டில், ஐக்கிய முன்னணி, பதவிக்கு வந்தது. இவ்வொப்பந்தங்களினால், மார்க்சீயக் கட்சிகள் தங்கள் தனித்துவத்தை இழந்தன. 1977 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் முற்றாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். மொழிக் கொள்கையிலும், இனப் பிரச்சினையிலும், தாம் கொண்ட கொள்கையைக் கைவிட்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண் டார்கள். தம்முடைய தனித்துவத்தையும், அரசியல் செல்வாக்கையும் இழந்த இக்கட்சிகள், 1975 -ம் ஆண்டில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால், அரசாங்கத்திலிருந்து தள்ளப்பட்டார்கள். தம்முடைய கொள்கை மாற்றத்தினால், அரசியல்

Page 70
114 அ. முகம்மது சமீம்
செல்வாக்கு இழந்த இக்கட்சிகள் அரசியலிலிருந்தே ஒதுக்கப் பட்டார்கள். கொள்கை மாற்றத்தினால் இக்கட்சிகள் எவ்வித பயனையும் அடையவில்லை.
மார்க்சீயக் கட்சிகள் சிங்கள - பெளத்த இயக்கத்தோடு நெருங்கி இயங்கியதால், ஒரு நன்மை ஏற்பட்டது. இதுகாலவரை மார்க்சீய கருத்துக்களுக்கு எதிராக இருந்த பெளத்த இயக்கம், மார்க்சீய சோஷலிசக் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டன. பெருந் தோட்டப் பயிர் செய்கையும், பெரும் தொழில் ஸ்தாபனங்களும், கைத்தொழில் நிலையங்களும், பெரும் வர்த்தகக் கம்பெனிகளும், அந்நியர்களின் கையிலும், சிறுபான்மை இனத்தவர் களின் கையிலும் இருந்ததனால், அரசாங்கததின் பெயரால் இவைகளை அபகரிப்பதற்கு, பெளத்த இயக்கத்தினர், சோஷலிசத்தை ஓர் ஆயுதமாகப் பாவிக்கத் தொடங்கினர். இத்தொழில் நிலையங்களை பெரும்பான்மை இனமக்களின் கைவசம் கொண்டு வருவதால், பொருளாதாரத் துறையில், அந்நியர் களதும், சிறுபான்மை இனத்தவரதும் தனி உரிமையை சமப்படுத்தலாம்என்று இவர்கள் எண்ணினார்கள். 1956 -ம் ஆண்டுக்குப் பிறகு, கைத்தொழில் ஸ்தாபனங்களும், வர்த்தக நிலையங்களும், அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதால், இத்துறை களில், அந்நியர்களினதும், குறிப்பாக, சிறுபான்மை இனத்தவர்களினதும், செல்வாக்கைக் குறைப்பதோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் அடித்தளத்தையே உடைத்துவிடலாம் என்பது, ஒரு நோக்கமாகும். 1956 -ம் ஆண்டில், தனியார் துறை அரசாங்க மயப்படுத்தல் என்று ஆரம்பிக்கப்பட்ட இக் கொள்கை, 1964 -ம் 1970 -ம் ஆண்டுகளில் மார்ச்சீயக் கட்சிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தோடு இணைந்ததால் துரிதப்படுத்தப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குப் பக்க பலமாக இருந்த சிங்கள- பெளத்த முதலாளித்துவவர்க்கம், இத்துறையில் தங்களுடைய

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 115
தனிநலம் பாதிக்கப்படாத வரையில், அரசாங்கத்தின் சோஷலிசக் கொள்கைகளை எதிர்க்க வில்லை.
ஆரம்பத்திலிருந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உட்புற சக்திகள், தமக்கு ஆதரவாக இருந்த சிங்களபெளத்த முதலாளித்துவ வர்க்கத்தினரின் தனிநலம் பாதுகாக்கப்படும் வேளையில் சோஷலிசம் என்ற பெயரில் அரசாங்கம் தனியார் துறையை அரசாங்க மயமாக்கப் படுத்தல் கொள்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அரசாங்க மயமாக்கப்படுதல் என்னும் இவ்வரசாங்கக் கொள்கைக்கு, முதலாளி வர்க்கத்தினரின் எதிர்ப்பு, சக்தியில்லாமலிருந்ததற்குக் காரணம், மதத்தினாலும், இனத்தினாலும், இவ்வர்க்கம் பெரும்பான்மை இன வர்க்கத்தினின்றும் வேறுபட்டவர்களாக இருந்ததே. சிறுபான்மை இன மக்களின் மதத்திற்கு எதிராகவும், இனத்திற்கு எதிராகவும், செயல்பட்ட பெரும் பான்மையின மக்களின், சிங்கள-பெளத்த சக்திகளின் ஒருதலைப் போக்கான கொள்கையின் விளைவாக, தென்னாசிய நாடுகளிலேயே தனியார் துறை அதிகமாக அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த ஒரே நாடு இலங்கை என்றால் அது மிகையாகாது. சோஷலிசம் என்ற பெயரால் 1960 -ம், 1970 -ம் ஆண்டுகளில், அரசாங்கம் தனக்கு எதிராக யார் யாரெல்லாம் இயங்குகிறார்கள் என்ற தப்புக்கணக்கின் பேரில், எதிர் சக்திகளின் பொருளாதார அரசியல் பலத்தைத் தகர்த்தெறியும் நோக்கத்தில், அவர்களுடைய உடைமைகளையும், நிலங்களையும், தொழில் ஸ்தாபனங்களையும், சொத்துக்களையும், அரசாங்க மயமாக்கல் என்ற சோஷலிசத்தின் பெயரால், பறிமுதல் செய்ததன் விளைவாக, சிறுபான்மை இனமக்கள், தம்முடைய எதிர்கால வாழ்க்கையிலேயே நம்பிக்கை இழந்தனர்.
சிங்கள - பெளத்த இயக்கத்தினரின், சிறுபான்மை மக்களுக்கெதிராக ஒருதலைப் போக்கினால் அல்லற்பட்ட

Page 71
116 அ. முகம்மது சமீம்
சிறுபான்மை இனத்தவர்கள், பெரும் பான்மை இனமக்களின் மத்தியில், தோன்றிய தீவிர போக்குடைய, ஈவிரக்கமின்றிய, இன்னொரு மக்கள் இயக்கத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 1930 -ம் 40 -ம் ஆண்டுகளில் ஏ.ஈ. குணசிங்காவின் தொழிற் சங்கத்தையும், தொழிற் கட்சியையும் மார்க்சீயக் கட்சிகள் எப்படி ஒதுக்கித் தள்ளினவோ, அதே போல, 70 -ம் 80 -ம் ஆண்டுகளில் மார்க்சீயக் கட்சிகள் ஜனதா விமுக்திப் பெறமுனை என்ற ஒரு புதிய இயக்கத் தினரால், அரசியல் வானிலிருந்தும், ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இவ்வியக்கம், பெரும்பான்மை இன, பாமர, ஏழை மக்களிடையே குறிப்பாக, இளைஞர்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வையும், தீவிர போக்கையும் ஏற்படுத்தியது. அரசாங்கங்களை, இயங்கவைத்துக் கொண்டிருந்த மத்தியதர - முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக இவ்வியக்கம் செயல்படத் தொடங்கியது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 117
16. ஐக்கிய தேசியக் கட்சியின் உருமாற்றம்
மார்க்சீய தத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுந்த மார்க்சீயக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், அரசியல் உலகிலிருந்து மறைந்தன என்பதை முன்னைய அத்தியாயத்தில் அறிந்தோம். 1977 -ம் ஆண்டில் அதிகமான ஆசனங் களைப் பெற்ற காரணத்தினால், சிறுபான்மை சமூகங்களை உதாசீனம் செய்த ஒர் அரசாங்கத்தின் எதேச்சாதிகார் போக்கு, சமாதானத்தையே விரும்பிய தமிழர் சமுதாயத்தை வன்முறையில் இறங்க வைத்ததோடு, முஸ்லிம் சமுதாயத்தில் ஒர் அரசியல் கட்சி தோன்றுவதற்குக் காலாக இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு 1947 -ம் ஆண்டு தொடக்கம், 1956 -ம் ஆண்டுவரைக்கும், இலங்கை அரசியலில் ஏகபோக உரிமை கொண்டாடிய ஐக்கிய தேசியக் கட்சி, 1956 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஆனால், 1956 -ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அரசாங்கம் ஆறுமுறை கை மாறியது. ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் தோல்வியுற்றாலும், நாட்டின் வாக்குகளில் ஒரு கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றுக் கொண்டே வந்தது. 1956 -ம் ஆண்டிலும் அதன் பிறகும் இரு முறை ஆட்சியைக் கைப்பற்றிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அதிகமான ஆசனங்களைப் பெற்றாலும், அதிகமான வாக்குகளைப் பெற்றது என்று கூற முடியாது. 1960 -ம் ஆண்டு மார்ச் மாதம் அது தனித்து நின்று போட்டியிட்டபோது அதனால் வெற்றி பெறமுடிய வில்லை. இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்த காரணத்தினாற்றான் அதனால் வெற்றி பெறமுடிந்தது.

Page 72
118 அ. முகம்மது சமீம்
இனி, பின்வரும் அட்டவணையைக் கூர்ந்து நோக்கினால், இக்கூற்றின் உண்மையை அறியலாம்.
1947 - 77 -ம் ஆண்டுவரைக்கும் நடந்த பொதுத் தேர்தல்களில் கட்சிகளின் விபரம் -
விகிதாசாரப்படி
1947 1952 1956 1960 1960 1965 1970 1977 1989
(மார்ச்)(ஜூலை)
ஐதே.க. 39.8 44.1 27.4 29.6 37.6 389 379 50.9 507. ' சில.சு.க. - 155 399 211 335 302 366 297 30 5 60&子リ.ó。 10.8 131 104 105 73 7.4 8.7 3.6 - கம்யூனிஸ்ட் 37 - 57 .45 . . 4.6 2.9 - 2.7 - 34 1.8 எம்.இ.பி. - ... r - 10.6 3.3 2.7 0.94. O.3 12 தமிழ் காங்கிரஸ் 4.3 2.7 0.34 12 15 2.4 2.3 - சமஷ்டிக்கட்சி 4.3 2.7 0.34 12 15 24 2.3 - த.வி. முன்னணி --- - - - 6.7 337 சி. முஸ்லிம்
காங்கிரஸ் - - M -- - 3.6 சுயேச்சை 297 141 111 8.8 4.6 5.8 4.5 5.8 22
மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டில் வாக்கு வங்கி இருப்பதை அவதானிக்கலாம். இக்கட்சி 1956 -ம் ஆண்டில், 8 ஆசனங்களுக்குக் குறைக்கப்பட்டபோது கூட 274 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் அவர்கள் ஐ.தே.க.யுடனேயே வாக்களித்திருக்கிறார்கள்.
முஸ்லிம்கள், சி.ல.சு. கட்சிக்கு தமது முழு ஆதரவையும் கொடுக்காமலிருப்பதற்கு, சி.ல.சு. கட்சி மார்க்சீய தத்துவத்தைக் கொண்ட இடதுசாரி கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தது ஒரு காரணமா யிருக்கலாம். 1970 -ம் ஆண்டில் ஐ.தே.க, ன்யவிட

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 119
குறைவாகவே வாக்குகளைப் பெற்ற சி.ல.சு. கட்சி அமோகமான வெற்றி - மூன்றில் இரண்டு - பெற்றது. திரும்பவும் இப்படியொருநிலை ஐ.தே. கட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் ஜே.ஆர். ஜயவர்த்தனா விகிதாசார முறையைக் கொண்டு வந்தார்.
இவ்வட்டவணையிலிருந்து நாம் இன்னொரு உண்மையையும் அறிந்து கொள்ளலாம். அதாவது சிலசு, கட்சி, இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதனால் மாத்திரம்தான் பொதுத் தேர்தல்களில் வெற்றிபெறலாம் என்பதே. 1960 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அது தனியாக போட்டியிட்டதால் தோல்வியடைந்தது என்ற உண்மையையும் நாம் மறக்கலாகாது. 1994 -ம் ஆண்டில் கூட ஐதே. கட்சிக்கு எதிராக எல்லா கட்சிகளையும் ஒன்று சேர்த்ததனாற்றான், விகிதாசார முறை இருந்தும், சிலசு, கட்சியினால் வெற்றிபெற முடிந்தது. ஜனாதிபதி தேர் தலில் வெற்றி பெறுவதற்கு, சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க எல்லா சிறுபான்மையின மக்களினதும், இடது சாரி மக்களினதும், ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.
இலங்கை அரசியலில், சிங்கள தீவிரவாதத்தைக் கொள்கையாகக் கொண்ட மகாஜன எக்சத் பெறமுனை மக்கள் மத்தியில் செல்வாக்கையிழந்து, இம்முறை ஒர் ஆசனம் கூட பெறமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது. ஒரு காலத்தில் தமிழர்களைப் பிரதி நிதித்துவப் படுத்திய தமிழ் காங்கிரஸ், தமிழர்கள் மத்தியில் செல்வாக்கிழந்து இன்று தனியொருவரைக் கொண்ட கட்சியாக தேய்ந்திருக்கிறது. அரசியல் வானிலே இன்று இக்கட்சி தேய்ந்து மறைந்துவிட்டது. தமிழரசுக் கட்சி, தன்னுடைய பெயரை மாற்றி, தமிழர் விடுதலைக் கூட்டு முன்னணி என்ற பெயரில் 67% வாக்குகளை 1977 -ம் ஆண்டு நடந்த தேர் தலில் பெற்றது. 1989 -ம் ஆண்டில் அது 337% வாக்குகளை மாத்திரமே பெற்றது. தமிழர்கள் மத்தியில், தேர்தலைவிட

Page 73
E120 அ. முகம்மது சமீம்
போரின் மூலம் தான் தம் உரிமைகளைப் பெறலாம், என்றஇயக்கம் மக்கள் மத்தியில் பரவிய காரணத்தி மூனாலேயே தமிழர் விடுதலை முன்னணி, குறைந்தளவு *வாக்குகளைப் பெறுவதற்குக் காரணம் எனலாம்.
முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி, 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 361 வாக்குகளைப் பெற்று, அரசியல் கட்சிகளில் மூன்றாவதாகத் திகழ்ந்தது. 1994 -ம் ஆண்டு நடந்த தேர்தலில், பொதுஜன ஐக்கிய, முன்னணி, முஸ்லிம் காங்கிரஸின் உதவியுடன் தான் அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. முஸ்லிம்கள் ஓர் அரசியல் சக்தியாக மாறுவதைக் காண்கிறோம்.
1956 -Lib ஆண்டுக்குப் பிறகு, மார்க்சீய கட்சிகளின் தாக்கத்தினால், அரசாங்கம் மக்களின் பொருளாதார சமூக வாழ்க்கையில் நேரடியாக ஈடுபட்டது. 1960 -lb 70 -lb ஆண்டுகளில், அரசாங்கத்தை ஸ்தாபித்த சிலசு, கட்சியும், மார்க்சீய கட்சிகளும், அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவே எண்ணின. தேர்தலில், ஐதே கட்சியைத் தோற்கடித்தது, சாதாரண பொதுத் தேர்தல் வெற்றியாகக் கருதாமல், நாட்டின் பொருளாதார மூல வளங்களைத் தமது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரும் ஒரு வாய்ப்பாகவே கருதினர். தமது பரம எதிரியை-பிற்போக்கு சக்திகளின் பிரதிநிதியைத் தோற்கடித்து, நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்து வதற்குரிய வாய்ப்பாகக் கருதினர். அதனாற்றான், 1956 -ம், 60 லும், 70 -லும் லங்கா சுதந்திரக்கட்சி, பொருளாதார சமூக மாற்றங்களைக் கொண்டுவரும் சட்டங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. போக்குவரத்து சாதனங்கள், உற்பத்தி ஸ்தாபனங்கள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள் போன்ற வற்றை அரசாங்க மயமாக்குதலின் மூலம், மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. பொருளாதார, சமூக ஸ்தாபனங்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 121
கொண்டுவரப்பட்டதால், மக்களும் தம்முடைய அன்றாடத் தேவைகளுக்கும் அரசாங்கத்தையே நம்பி வாழும் ஒரு நிலை ஏற்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், மக்களின் அன்றாட வாழ்க்கையே அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால் அரசியலில் மக்களுக்கு அதிக அக்கரையேற்பட்டது. கீழே உள்ள அட்டவணை, மக்கள் எவ்வளவு தூரம் பொதுத் தேர்தல்களில் ஈடுபட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், பங்கு பற்றிய மக்களின் தொகை அதிகரித்துவந்திருப்பதை நாம் காணலாம்.
வாக்களித்த தொகையினர் - சதவிகிதத்தினர்
1947 1952 1956 196O 1960 1965 1970 1977
554 697 684 769 75.4 813 849 86.4
பொதுத் தேர்தல்களின் மூலம் அரசாங்கங்களை மாற்றுவதில் எவ்வளவு அக்கறை மக்கள் காட்டுகின்றனர் என்பதை மேலே உள்ள அட்டவணை காட்டுகிறது. 1947 -ம் ஆண்டு 554% சனத்தொகை வாக்களித்தனர். 1977 -ம் ஆண்டில் 864% பேர் வாக்களித்தனர். இலங்கை மக்கள் ஒர் அரசியல் உணர்வுள்ள சமுதாயம் என்பதை இது காட்டுகிற தல்லவா? ஆகவே, பதவிக்கும், அதிகாரத்திற்கும் வருவோர், எமக்கு அமோகமான வெற்றி கிடைத்து விட்டதே என்ற மமதையில் செயலாற்றினால், முடிவு என்னவாகும் என்பதை முன்னைய பொதுத் தேர்தல்கள் எமக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றன.
1959 -ம் ஆண்டில் தேர்தல்களில் சில முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பணக்காரர்கள் தங்கள் பணப்பலத்தை உபயோகித்து வெற்றிவாகை சூடியதுண்டு. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளுக்கு மாத்திரம்தான் கூட்டங்கள் கூடி தமது கொள்கைகளை விளக்கலாம். சுயேச்சையாகப் போட்டியிடுபவர்களுக்கு

Page 74
122 அ. முகம்மது சமீம்
எவ்வித சலுகையும் கொடுக்கப்படவில்லை. வாக்களிக்கும் நிலையங்களுக்கு யாரையும் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது. வாக்குச் சாவடிகளின் பக்கத்தில் எவ்விதத் தேர்தல் ஆதரவும் கோரல் கூடாது. அரசியற் கட்சிக் கொடிகளோ, துண்டுப் பிரசுரங்களோ, சுவரொட்டிகளோ, விளம்பரங்களோ செய்வது தடை செய்யப்பட்டது. இப்படிப் பலவாறாக தேர்தல் நியாயமான முறையில், நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. இலங்கையின் சனத் தொகையில் ஒரு கணிசமான அளவு வாக்களிப்பதற்குத் தகைமை பெற்றனர். இந்த இளம் வயதினர் பெரும்பாலும், இடதுசாரிக் கட்சிகளுக்கோ நடுவிலுள்ள கட்சிகளுக்கோ வாக்களிப்
பார்கள் என்று எதிர்பார்க் கப்பட்டது.
பண்டார நாயக்காவின் குடும்பம், இலங்கையின் பிரித்தானிய அரசாங்கம் இருந்த காலத்தில் பெரும் பதவிகளை வகித்து, காலனித்துவ அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்று, பெரும் சீரும் சிறப்புடனும், செல்வாக்குடனும் வாழ்ந்து வந்தது. இலங்கையின் இரு அரசியற் கட்சிகளிடையே இருந்த மோதல், சேனாநாயக்கா - பண்டார நாயக்க குடும்பங்களிடையே இருந்த மோதல் என்றால் அது மிகையாகாது. சமுதாயத்தின் உயர்வர்க்கத்தினால், ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு, அல்லற்பட்டுக் கொண்டிருந்த, பாமர மக்களின் தலைவனாக, பண்டாரநாயக்கா, 1956 -ம் ஆண்டில் பெரு வெற்றியை ஈட்டினார். ஐக்கிய தேசியக் கட்சி, உயர் வர்க்கத்தினரதும், பிற்போக்கு சக்திகளினதும், கட்சியென்றால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஏழை எளியவர்களினதும், முற்போக்குவாதிகளினதும் கட்சி என்று பண்டாரநாயக்க பறைசாற்றினார். அவரது மனைவி

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 123
சிறிமாவோ பண்டார நாயக்கா தனது கணவனின் கொள்கைகளை அமுல் நடத்துவதாக மக்களுக்கு வாக்களித்தார். 1970 -ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி பெற்ற பெரு வெற்றி இனிமேல் ஐதே. கட்சி பதவிக்கு வரமுடியாத ஓர் அபிப்பிராயத்தை மக்கள் மனதில் பதியவைத்தது.
ஆனால், டட்லி சேனாநாயக்காவின் மறைவுக்குப் பிறகு ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் தலைமையில் ஐ.தே. கட்சியின் தன்மை மாறுபட்டது. ஒரு குடும்பத்தையும், உயர் மட்டத்திலுள்ளவர்களையும் பிரதிநிதித்துவப் படுத்திய இக்கட்சி, மாற்றம் பெற்றது. உயர் வர்க்கத்தையோ உயர் சாதியையோ சேராத சாதாரண "மக்களும் இக் கட்சியில்சேர்ந்து, உயர் பதவிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தில் எப்படி பிரபுக்களின் கட்சியாக இருந்த றோரி கட்சி கன்சவட்டிவ் கட்சியாக மாறியதோ, அதேபோல ஐ.தே.க. மாற்றம் பெற்றது. உயர் வர்க்கத்திற்கோ, உயர் சாதிக்கோ சேராத மிகவும் தாழ்ந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சாதியினின்றும் தோன்றிய பிரேமதாச தலைமைப் பதவியைப் பெற வாய்ப்பேற் பட்டது. எனவே, இவ்விரு அரசியற் கட்சிகளினதும் போட்டி வேறுதிசையில் சென்றது. சிலெசு கட்சி ஐதேக. யின் இம்மாற்றத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. לי ע

Page 75
124 அ. முகம்மது சமீம்
17. ஜே.ஆர். ஜயவர்தனாவின் அரசியல் சாணக்கியம்
ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் தலைமையில் ஐ.தே.க. புத்துயிர் பெற்றது. 1973 -ம் ஆண்டு, டட்லி சேனாநாயக்காவின் மறைவுக்குப் பிறகு, ஜே.ஆர். ஜயவர்த்தனா, ஐ.தே.க. -யின் தலைமைத்துவத்தை ஏற்றார். இதுகால வரையும், சேனாநாயக்காவின் குடும்ப ஆதிக்கத்திலிருந்த ஐதே. கட்சியை, குடும்ப ஆதிக்கத்திலி ருந்தும் விடுவித்தார். ஆனால், தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கவில்லை யென்றாலும், விஜயவர்த்தனா, விக்கிரமசிங்க குடும்பங் களுக்கு, தனியார் துறையில், பொருள் சம்பாதிப்பதற்குப் போதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இவர்கள் தனியார் துறையில் பெரும் ஜாம்பவான் களாகத் திகழத் தொடங்கினர்.
தன்னுடைய அரசியல் பிரசாரத்தை, ஜயவர்த் தனா, அரசியலில், ஆதிக்கம் செலுத்தி வந்த இரு குடும்பங் களுக்கெதிராகவே ஆரம்பித்தார். 1988-89 -ம் ஆண்டில் அவர் ஒருபடி மேலே சென்று பெருங் குடும்பத்தைச் சாராத உயர் குடி சாதியைச் சேராத, படித்த கல்வி கற்று உயர்ந்தோர் குழாத்தைச் சேராத, வம்ச பரம்பரையே இல்லாத, ஏழைச் சூழலில் வாழ்ந்த ஏழை ஒருவரைத் தனது வாரிசாக நியமித்தார். கொய்கம சாதியியைச் சேர்ந்த உயர் குடிப்பிறப் பினரே இது காலவரையும், நாட்டின் ஆட்சிப் பொறுப்பையேற்று வந்திருக்கின்றனர். முதன் முறையாக, இச்சாதிக்கும், உயர் வர்க்கத்தினருக்கும் அப்பாற்பட்ட ஒருவரை - ரணசிங்க பிரேமதாசாவை - கட்சியின்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 125
தலைவராகவும், பிரதம மந்திரியாகவும், ஜனாதிபதி வேட்பாளராகவும் நியமித்தார். புலி தன் வெளிப்புற உருவத்தைத்தான் மாற்றியதேயொழிய, தன் குணாதிசயங் களை மாற்ற வில்லை. ஜனரஞ்சகமான ஒரு கட்சியாக அது காட்சிதந்தாலும், முதலாளித்துவ, பணக்கார வர்க்கத்தினரின் கட்சியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. பிரேமதாசாவும் ஒரு பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவரைப் போலவே செயலாற்றத் தொடங்கினார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு, ஏழை எளியவர்களினதும், பொது மக்களினதும், ஆதரவு இருக்கிறதென்றாலும், ஐ.தே. கட்சியின் இவ்வுருமாற்றத்தை அது மறந்து செயலாற்றத் தொடங்கியது. 1951 -ம் ஆண்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்ற பண்டாரநாயக்காவின் குடும்பத்தினர், இன்றுவரைக்கும் 40 வருடங்களுக்கும் மேலாக, இத் தலைமைத்துவத்தை ஏற்றே வந்திருக்கின்றனர். பொதுமக்கள் இத்தலைமைத்துவத்தை ஏற்று, இதற்குத் தமது முழு ஆதரவையும் வழங்க முன் வந்திருக்கிறது. பொதுமக்களின் ஞாபகசக்தி மிகவும் குறுகியது என்று ஒரு தத்துவ ஞானி கூறியிருக்கிறான். ஆரம்ப உணர்ச்சிகள் நாளடைவில் மறைந்துவிடும். தங்க ளுடைய பொருளாதார சமுதாய நிலையில் பாரிய மாற்றம் ஏதும் ஏற்படா விட்டால், மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். இத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்திக் கொள்வது, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல.
இலங்கை அரசியலில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், பலதரப்பட்ட சிறிய கட்சிகளை, ஒரு பெரிய கட்சி, அணைத்துக் கொண்டு, கூட்டு அரசாங்கத்தை அமைப்பதே. 1931 -ம் ஆண்டு இலங்கை மக்களுக்கு, சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட பிறகு, இலங்கையின் அரசியல் வரலாற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

Page 76
126 அ. முகம்மது சமீம்
1. முதலாவது, 1931 -ம் ஆண்டிலிருந்து 1956 -ம் ஆண்டு
வரைக்கும்
2 இரண்டாவது, 1956 -ம் ஆண்டிலிருந்து 1977 -ம்
ஆண்டுவரைக்கும்
3. மூன்றாவது 1977-ம் ஆண்டிலிருந்து 1994 -ம் ஆண்டு
வரைக்கும்
இப்பொழுது நான்காவது கட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
முதலாவது கட்டத்தில், இலங்கைத் தேசிய காங்கிரசும், அதன் வாரிசான ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையை ஆட்சி செய்தன. இதில் சேனாநாயக்க குடும்பத்தினரின் ஆதிக்கத்தைக் காண்கிறோம். இரண்டா வது கட்டத்தில், பண்டாரநாயக்காவும், அவருக்குப் பிறகு, அவருடைய மனைவியார், சிரிமா பண்டாரநாயக்காவும் இடது சாரிக் கட்சிகளின் ஆதரவுடன் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினார். இக்கட்டத்தில் பண்டாரநாயக்காவின் குடும்பத்தின் ஆதிக்கத்தைக் காண்கிறோம்.
1965-ம் ஆண்டிலிருந்து 1970-ம் ஆண்டு வரைக்கும் ஐக்கிய தேசியக்கட்சி, ஆட்சி செய்தாலும், பண்டார நாயக்காவின் குடும்பத்தினரதும், இடதுசாரி கட்சி களினதும், இக்கால கட்டத்தில் செல்வாக்குக் குறைய வில்லை. பத்திரிகைகள் பிரதமர் டட்லி, சேனாநாயக்கா வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததோ அதே அளவு முக்கியத்துவம் சிறிமாவோவுக்கும் கொடுத்தன. மூன்றாவது கட்டத்தில் ஐ.தே.க, 1977 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டுக்கு மேல் ஆசனங்களைப் பெற்று, எதிர்க்கட்சிகளை வேரோடு அழித்து, தனிக் காட்டு ராஜா போல், ஆட்சியை நடத்தியது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 127
அவர்கள் வெற்றி பெற்றதற்கு, அவர்களுடைய பிரசாரம் காரணமில்லை, ஐக்கிய முன்னணியின் மேல் சனங்களுக்கு இருந்த வெறுப்பைத்தான் காட்டுகிறது. எப்படி 1977 -ல் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இதே ஐதே. கட்சி 1994 -ல் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியதோ அதேபோல் 2000 -ல் மக்களின் வெறுப்புக்கு பொது ஜன ஐக்கிய முன்னணி ஆளாகலாம். 1977 -ம் ஆண்டைப் போல, ஆட்சியாளர்களின் மேல், மக்களுக்கு இருந்த வெறுப்புத் தான் இன்று பொதுசன ஐக்கிய முன்னணிக்கு ஆதரவைக் கொடுத்தது. இவ்வாதரவைப் பாழாக்காமல் இருக்க வேண்டும். 1982, 1988-89 ஆம் ஆண்டுகளில் ஐதே. கட்சி பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்றது சர்ச்சைக் குரியவிஷயம். என்றாலும் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தைத் தான் இது காட்டுகிறது. எதிர்க்கட்சியினருக்கு மக்கள் ஆதரவு இருந்தபோதிலும் ஆளும் கட்சியினரின் அடாவடித் தனத்தையும், வாக்கு மோசடிகள் செய்ததையும் நேரடியாக எதிர்க்கும் சக்தி அவர்களுக்கிருக்கவில்லை.
பதினேழு வருடங்களாக ஐதேக இலங்கையை ஆட்சி புரிந்தது. “ஜப்பானின் லிபரல் கட்சியைத் தவிர, ஒரு ஜனநாயக அமைப்பில் இவ்வளவுகாலம், ஒரே கட்சி ஆட்சி செய்தது, ஒரு வரலாற்றுச் சாதனையாகும்” என்று பேராசிரியர் கிங்ஸ்டி. சில்வா கூறுகிறார். பொதுத் தேர்தலுக்குப் பதிலாக அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம், தனது ஆட்சிக்காலத்தை நீடித்ததும் ஒரு வரலாற்று சாதனைதான். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும், சட்டமன்றத்திற்கோ அல்லது, நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கோ, அவர்களுடைய ஆட்சிக் காலம் முடிந்ததும், ஒரு பொதுத் தேர்தலின் மூலம் அடுத்த தவணைக்குரிய ஆட்சியாளர்களை மக்கள் தெரிவு செய்வார்கள். ஒரு ஜனநாயக அமைப்பில், இலங்கையில் மட்டும்தான் இப்படி நடந்தது. ஒரு நாட்டின் ஆட்சியுரிமை மக்களுக்குத்தான் இருக்கிறது. உரிய காலத்தில், மக்கள்

Page 77
128 அ. முகம்மது சமீம்
தங்கள் ஆட்சியாளர்களைப் பொதுத் தேர்தல் மூலம்தான் தெரிவு செய்வார்கள். மக்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்காமல், மாற்றுவழிகளைக் கையாள்வது மக்களுடைய இந்த பிறப்புரிமையை அபகரிப்பதாகும். அப்படிச் செய்வது ராஜ துரோகம் அல்லது தேசத் துரோகமாகும். அபிப்பிராய வாக்கெடுப்பது, மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மக்கள் முன்வைத்து, அவர்களுடைய அபிப்பிராயத்தை அறிவதற்காகவே, இங்கிலாந்து, ஐரோப்பிய பொருளாதார பொதுச் சந்தையில் சேர்வதைப் பற்றி மக்களின் கருத்தை அறிவதற்கு அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தியது. ஆனால், ஆட்சியிலிருப்பவர்கள், தம்மை ஆட்சியிலேயே நிலைத்து நிற்பதற்குக் காவல் படைகளின் பலத் துடனும் ஆயுதம் தாங்கிய குண்டர்களின் பலத்துடனும் இப்படியொரு வாக்கெடுப்பு நடத்துவது, ஜன நாயக தத்துவத்திற்கே விரோதமானது. மக்களில் யாராவது எதிர்த்திருந்தால் வன்முறையில் இறங்குவதற்கும் அரசாங்கம் தயாராயிருந்தது. ஆகவே இப்படியொரு நாடகமாடி தம்மை ஆட்சியிலேயே நிலைத்திருக்கச் செய்வது, மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செல்லும் ஒரு செய்கையாகும். இத்தகைய ஆட்சி யாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எது எப்படி இருந்தாலும், பதினாறு வருடங்கள் மக்கள் தங்கள் ஆட்சியுரிமையை இழந்திருந்தனர். இதனாற்றான் ஜாதிகவிமுக்தி பெற முனை என்ற இயக்கத்தினர், பாராளுமன்ற முறையில் நம்பிக்கை யிழந்து, வன்முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். அவர்களில் பலர் அழிக்கப் பட்டாலும், ஆட்சியாளர்கள் சரியான முறையில் நடக்கா விட்டால், இவ்வியக்கம், அல்லது இதற்குப் பதிலாக இன்னொரு மக்கள் இயக்கம் மிகவும் பூதா காரமான முறையில் எழக்கூடும். இன்றைய ஆட்சியாளர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதில்தான் எமது எதிர் காலம் தங்கியிருக்கிறது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 129
நாஜி ஜெர்மனியில் நடந்ததைப் போல, இவ்வியக்கத்தினர், சிறுபான்மை மக்களை, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாட்டின் ஊழல்களை அகற்றுவதற்கு, பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் காட்டி, பலிக்கடாவாக சிங்கள மக்கள் முன்வைக்கலாம். இன்றைய ஆட்சியாளர்கள், நாட்டின் - சமூகத்தின் - பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், சிறுபான்மை இனமக்கள் தான் முதலில் பலியாவார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு அதன் அரசியல் வரலாற்றில் இருமுக்கிய அம்சங்களை நாம் காண்கிறோம். ஒன்று ஐதே. கட்சி, சிறு அரசியல் கட்சிகளின் உதவியுடன், கூட்டு அரசாங்கத்தை 28 வருடகாலம் நடாத்தியது. இதற்கு இணையாக இந்திய காங்கிரசையும், ஜப்பானின், லிபரல், ஜனநாயகக் கட்சியையும் நாம் ஒப்புதலாகக் காட்டலாம். ஆனால், அந்நாடுகளில் இல்லாத ஒருமுக்கிய அம்சம் என்னவென்றால், இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு இன்னொரு கட்சி என்றும் தயார் நிலையில் இருப்பதே. இக்கட்சி - சிறிலங்கா சுதந்திரக்கட்சி 16 வருடங்கள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தியிருக்கிறது. அடுத்த அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், ஆளும் கட்சியை மக்கள் தோற்கடித்து, மற்றைய கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்ததுதான். ஆறு முறை மக்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். 1960 -ம் ஆண்டு மார்ச் மாதம், 1960 -ம் ஆண்டு ஜூலை மாதம், 1965 -ம் ஆண்டு, 1970 -ம் ஆண்டு, 1977 -ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் மக்கள் ஆளும் கட்சியைத் தோற்கடித்து ஆட்சி செய்யும் பொறுப்பை எதிர்க் கட்சியிலிருந்தவர்களுக்கு வழங்கியிருக் கிறார்கள். 1994 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலிலும், ஆளும் கட்சியினரைத் தோற்கடித்து, எதிர்க் கட்சியினருக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக் கிறார்கள். தேர்தல் வரலாற்றை நாம் ஆராய்ந்தால், ஐ.தே. கட்சி 30%

Page 78
130 அ. முகம்மது சமீம்
சதவிகிதத்திற்கு மேலேயே மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தோல்வியுற்ற காலங்களில் கூட இச்சதவிகித வாக்குகள் இக் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. ஆசனங்களில், மிகக் குறைவான அளவு ஆசனங்களைப் பெற்ற காலங்களில் கூட இச்சதவிகிதம் 30 -க்குக் கீழ் போகவில்லை. வெற்றி பெற்ற காலங்களில், 50% சதவிகிதத்துக்கு மேல் சென்றிருக்கிறது. இதற்கு மாறாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி, வெற்றி பெற்ற காலங்களில் - 1956 -ல், 399% விகிதம், 1960 ஜுலையில் 335% விகிதம், 1970 – 6b 366% விகிதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஐ.தே. கட்சி என்றைக்குமே ஆட்சியிலிருக்க வேண்டு மென்பதற்காக, ஜே.ஆர். ஜயவர்த்தனா, விகிதாசார முறையை மிகவும் சூட்சுமமாகக் கொண்டு வந்தார். மக்கள் முன் இவருடைய அரசியல் சாணக்கியம் பலிக்கவில்லை. 1994 -ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் இவ்வரணைத் தகர்த்தெறிந்துவிட்டார்கள்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 131
18. சுதந்திரத்திற்குப் பின் கூட்டு அரசாங்கம்
நடத்தவேண்டிய நிர்ப்பந்தம்
1947 -ம் ஆண்டுக்குப் பிறகு - அதாவது சுதந்திரத் திற்குப் பிறகு - இலங்கை அரசாங்கத்தை நடத்திய கட்சி பெரும்பாலும், சிறிய கட்சிகளைச் சேர்த்து கூட்டு அரசாங்கமாகவே நடத்தியது. 1960 -ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்ற ஐ.தே.க. அதே ஆண்டு ஜூலை மாதம் நடந்த சி.ல.சு.க. அரசாங்கம் - முற்பகுதியில் - தனிக் கட்சிகளாகவே நின்று ஆட்சியை நடத்த முயன்றது. சிறு கட்சிகளுடன் கூட்டுச் சேராததனால், ஐதேக அரசாங்கம் மூன்று மாதங்களிலேயே தனது பதவியை இழந்தது. அதே போல சி.ல.சு. கட்சியும் தனியாக நின்று ஆட்சியை நடத்துவதில் உள்ள அபாயத்தை உணர்ந்து, 1964 -ம் ஆண்டில், லங்கா சமசமாஜக் கட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் தன் அரசாங்கத்தோடு சேர்த்தது.
இலங்கை சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தேசிய காங்கிரஸ், பல அரசியற் கட்சிகளையும் சேர்த்து - பாஷா பெறமுனை, சிங்கள மகாசபா, முஸ்லிம் லீக், சோனகர் சங்கம் - ஐக்கிய தேசியக் கட்சி, என்று உருமாற்றம் பெற்றது. பிறகு அரசாங்கம் அமைத்த நேரத்தில், தமிழ் காங்கிரஸ், தொழிற் கட்சி இவைகளையும் தன் அரசாங்கத்தோடு இணைத்தது. இதே போலத்தான், 1956 -ம் ஆண்டில் சிலசு.க. ஏனைய சிறிய கட்சிகளுடன் சேர்ந்து மஹாஜன எக்சத் பெறமுனை என்ற பெயரில் அரசாங்கத்தைக் கைப்பற்றியது. ஐ.தே.க. 31-வருடங்களும், சிலசு, கட்சி 16 வருடங்களும் ஆட்சியை நடத்தின. கடந்த நாற்பது வருடங்களாக, ஐ.தே.க. ஆறு தலைவர்களைக்

Page 79
132 அ. முகம்மது சமீம்
கொண்டிருந்ததுடன், 1947-52 வரைக்கும், டி.எஸ். சேனாநாயக்காவும், 1952-53 வரைக்கும் டட்லி சேனாநாயக்காவும், பிறகு 1965 - 70 வரைக்கும் டட்லி, 1953 - 56 வரைக்கும் சர். ஜோன் கொத்தலாவலை, 1973 - 88 வரைக்கும் ஜேஆர். ஜயவர்த்தனாவும், 1988 - 93 வரைக்கும் பிரேமதாசவும், 93 - 94 வ்ரைக்கும் விஜயதுங்கவும், தலைமைப் பதவியை ஏற்று கட்சியை நடத்தினர். சிலசு, கட்சி, எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவையும் அவரது பாரியார் சிறிமாவோ பண்டாரநாயக்காவையும், அவர்களது மகளார் சந்திரிகா பண்டாரநாயக்காவையும் கொண்டு கட்சியை நடத்தி வந்திருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பின் பொதுமக்களின் அரசியல் உணர்வும் நாளுக்கு நாள் வளர்வதைக் காண்கிறோம். 1947 -ம் ஆண்டில், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 545% சதவிகிதமாக இருந்தது. 1977 -ம் ஆண்டில் 86.4% சதவிகிதமாக வளர்ந்தது. எனவே, மக்களின் வாக்கினால் பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும், மக்களின் அபிலாஷைகளை உதாசீனம் செய்ய முடியாது. 1977 -ம் ஆண்டில், சிலசு, கட்சியின் வேட்பாளர்களில் இருவரைத் தவிர, ஆட்சியிலிருந்த மற்றைய அத்தனை பேரும் பொதுத் தேர்தலில் தோல்வியுறுவதற்குக் காரணம், பாராளு மன்றத்தின் காலத்தை ஒரு வருடமாக நீடித்ததுதான் என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 1977 -ல் பதவிக்கு வந்த ஐதேக 1982 -ம் ஆண்டில் பொதுத்தேர்தலை வைத்திருந்தால், படுதோல்வி யடைந்திருக்கும். இதற்குப் பதிலாகத்தான், மக்களின் பிறப்புரிமையை அபகரித்து, அதற்குப் பதிலாக, அபிப்பிராய வாக்கெடுப்பு என்ற ஒரு கண்துடைப்பு விளையாட்டை அன்றைய அரசாங்கம் செய்தது. அதே நேரத்தில், ஜனாதிபதியும், இன்னுமொரு தவணைக்குத் தன்னுடைய ஆட்சியை நீடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், முன்னைய அரசாங்கத்தில் பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 133
பண்டாரநாயக்காவை ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அவருடைய பிரஜா உரிமையைப் பறித்தார். உலகத்தில் எந்தவொரு ஜனநாயக ஆட்சியிலும் நடக்காத ஒன்றை இந்த நாட்டில் நடத்தினார். அன்றைய ஜனாதிபதி. தன்னுடன் போட்டிபோட இருந்த எதிர்க்கட்சித் தலைவியைப் போட்டியிடாமல் செய்துவிட்டார். ஆகவே, தன்னுடைய வெற்றியை உறுதிப் படுத்திக் கொண்டார். காவல் படையினரைக் கொண்டும். ஆயுதம் தாங்கிய குண்டர்களைக் கொண்டும், நாஜி ஜெர்மனியில் நடந்ததைப் போல, மக்களை அடக்கி ஆண்டார். அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்களும் கல்லடிக்குள்ளானார்கள் என்றால் சாதாரண மக்களின் கதி என்னவாயிருக்கும். இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் சிரச்சேதம் என்ற நிலையில் மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய நேரங்களிலெல்லாம், போலிஸ் படையினராலும், மக்களைக் காக்க வேண்டிய படையினராலும், அடக்கி, நொறுக்கப் பட்டார்கள். அன்று நடந்தது ஜனநாயகம் அல்ல, அராஜக ஆட்சி மக்கள் வாய்மூடி மெளனிகளாயினர். ஏன்? என்று கேட்ட இளைஞர்கள், சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அவர்களுடைய கழுத்துகளில் டயர் மாட்டப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார்கள். ஆயிரமாயிரம் இளைஞர்கள், கொல்லப்பட்டும், சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டும், சித்திரவதைக் குள்ளானார்கள். இதுதான் அன்று ஜனநாயகத்தின் பெயரால் நடந்த ஜயவர்தனாவின் தர்ம ஆட்சி.
வலதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடித்தவர் களைக் கொண்ட ஐ.தே. கட்சியுடன், இந்தியத் தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஜனநாயகக் கொள்கையைக் கொண்ட லிபரல் கட்சியும் சேர்ந்ததுதான் விந்தையிலும்

Page 80
134 அ. முகம்மது சமீம்
விந்தை. அரசியல் லாபத்திற்காக இக்கட்சிகளின் தலைவர்கள் எப்படித் தங்கள் மக்களைப் பலியிடுகிறார்கள் என்பது தெரியவருகிறது.
1977-ம் ஆண்டில் ஐ.தே. கட்சிக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்ததனால், தங்களுக்குக் கிடைத்த விகிதாசார வாக்குகளின் எண்ணிக்கைக்கு அதிகமான ஆசனங்களே கிடைத்தன. தங்களுக்கு எதிராக இப்படியொரு நிலை ஏற்பட்டால், ஐ.தே.க. அரசியல் உலகிலிருந்தே அஸ்தமித்துவிடும் என்ற பயத்தினாற்றான், ஜேஆர். ஜயவர்த்தனா விகிதாசார முறையை அமுலுக்குக் கொண்டுவந்தார். இந்த விகிதாசாரப்படி நடந்த 1989 -ம் ஆண்டு தேர்தலில் சிலசுக. 30% சதவிகித வாக்குகளைப் பெற்றதனால் 66 ஆசனங்களைப் பெற்றது. முன்னைய முறைப்படி தேர்தல் நடத்தியிருந்தால் 196 ஆசனங்களில் சிலசு, கட்சிக்கு ஐந்து அல்லது ஆறு ஆசனங்கள்தான் கிடைத்திருக்கும். 1994 -ம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க. அரசியல் உலகத்திலிருந்து மறைந்தே போயிருக்கும். அக்கட்சியைக் காப்பாற்றியதே இந்த விகிதாசார முறைப்படி வாக்குகள் இருந்ததனாற்றான்.
சுதந்திரத்திற்குப் பிறகு, ஏற்பட்ட அரசாங்கங்கள் பெரும்பாலும் கூட்டு அரசாங்கங்களாகவே இருந்தன. ஆனால், கட்டாயத்தின் பேரில் நடைபெற்ற கூட்டு அரசாங்கங்கள் என்று கூறமுடியாது. 1980 -ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஐ.தே. கட்சியும், 1960 -ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிலசு, கட்சியும் தனியாகவே அரசாங்கத்தை நடத்தின. ஆனால் விகிதாசார முறைப்படி, கூட்டு அரசாங்கங்கள் நடந்தே ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாது. சிறுபான்மை இனக்கட்சிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. எப்படி, ஐ.தே.க., தொண்டமானுடைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை நம்பி யிருந்ததோ, அதேபோல, இன்று பொதுசன ஐக்கிய

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 135
முன்னணி, முஸ்லிம் காங்கிரசை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இதேபோல நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனமக்களின் ஆதரவு கிடைத்த காரணத்தினால் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகமுடிந்தது.
கூட்டு அரசாங்கங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பாராளு மன்றத்தில் தமக்கு போதிய அங்கத்தவர்களில்லாமை, அல்லது தேர்தல் தொகுதிகளில் போதிய ஆதரவு இல்லாமை. இரண்டாவதாக தமக்குச் சாதகமான நேசக்கட்சிகளுடன் சேர்வதால் தோல்வியைத் தவிர்த்தல், மூன்றாவதாக தத்துவார்த்த ரீதியாக சிலகட்சிகள் ஒன்று சேர்தல். 1956 -லும், 1970 -லும் தத்துவ அடிப்படையில் பல கட்சிகள் சேர்ந்து ஒர் அரசாங்கத்தை அமைத்தன.
சுதந்திரத்திற்குப் பின் தோன்றிய முதலாவது அரசாங்கமே, கூட்டு அரசாங்கம்தான். 1947 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 95 ஆசனங்களில் ஐ.தே.கட்சிக்குக் கிடைத்தது, 42 ஆசனங்களே. ஆகவே டி.எஸ். சேனாநாயக்கா சுயேச்சை அங்கத்தவர்களுடைய ஆதரவை நாடவேண்டி இருந்தது. பாராளுமன்றத்தில் தமக்குப் போதிய அங்கத்தவர்களில்லாததனால், இப்படியொரு யுக்தியை சேனாநாயக்கா கையாள வேண்டி இருந்தது. 1960 -ம் ஆண்டிலும் ஐ.தே.க, தனக்குப் போதிய அங்கத்தவர்களில்லாமையினால், கூட்டுச் சேர்வதற்குப் பல கட்சிகளை நாடியது. அது வெற்றி பெறாததால், பாராளுமன்ற விவாதத்தில் தோல்வியுற்று பதவி இழக்க நேர்ந்தது.
1956 -ம் ஆண்டில் சி.ல.சு. கட்சி, இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மகாஜன எக்சத் பெறமுனை என்ற பெயரில், தேர்தலில் வெற்றி பெற்றது.

Page 81
136 அ. முகம்மது சமீம்
1964 -ம் ஆண்டிலும், இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, சில.சு. கட்சி 1970 -ம் ஆண்டிலும் 1994 -ம் ஆண்டிலும், எல்லா இடது சாரிக்கட்சிகளையும் ஐ.தே. கட்சிக்கு எதிரான ஏனைய கட்சிகளையும் தன்னுடைய தலைமைத் துவத்தின் கீழ் ஒன்று சேர்த்து, வெற்றி பெற்றது. எனவே, இக்கட்சி, தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறமுடியுமா என்ற சந்தேகம் எழ இடமிருக்கிறது.
1947 -ம் ஆண்டிலிருந்து, 1956 -ம் ஆண்டு வரைக்கும், இலங்கைத் தமிழர்கள், அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றினார்கள். 1956 -ம் ஆண்டுக்குப் பிறகு தமிழர்கள், சில சமயங்களில் 1965 -ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தார் களேயொழிய கூட்டுச் சேரவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம், சிங்கள - பெளத்த இனவாதமே. முஸ்லிம்கள், ஐ.தே. கட்சியுடன் சங்கமமாகிவிட்ட படியால், கூட்டு அரசாங்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
இக்காலப் பகுதியில், ஏற்பட்ட இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவருக்குமிடையே இருந்த நேச உறவு குறைந்ததே. வடமாகாணத்தில், ஒரே ஒரு முறையைத் தவிர, சிங்கள தேசியக் கட்சிகள் ஒன்றும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. 1950 -ம் ஆண்டில், கம்யூனிஸ்ட் கட்சி பருத்தித் துறையில் வெற்றி பெற்றது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தலைமையில், தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்குப் பிறகு, எந்தவொரு சிங்களக் கட்சியும், யாழ்ப் பாணத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது. எந்தவொரு தேசியக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் இன்றும் வெற்றி பெறமுடியாது. இதுதான் உண்மை. எனவே தேசியக் கட்சிகள் தமிழர்களுடைய ஆதரவைப் பெற்றால்தான், முழு இலங்கையையும் ஆட்சி செய்யும் தகைமையுண்டாகும்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 137
19. அரசியல் யாப்பு மாற்றம் - சில ஆலோசனைகள்
பதினேழு வருடக் கொடுங்கோலாட்சிப் பிறகு மக்களின் ஏகோபித்த முடிவினால் ஒரு மக்கள் ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சர்வாதிகார ஆட்சி அமைவதற்கு ஆதாரமாக அமைந்தது, 1978 -ம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பு என்றால், அதை யாரும் மறுக்கமாட்டார்கள். இவ்யாப்பமைதியை மாற்ற வேண்டும் என்ற மக்களின் எதிரொலிதான் இன்றைய அரசாங்கம். ஆகவே இவ்யாப்பமைதியை மாற்றி ஒரு புதிய அரசியல் யாப்பை நிலை நாட்டுவதென்பது அரசாங்கத்தின் கொள்கை என்றால் அதில் வியப்பொன்றுமில்லை. இவ்யாப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற அரசாங்கத் திட்டம். இலங்கையின் சிறுபான்மையினங்களை - முக்கியமாக முஸ்லிம்களை - எப்படிப் பாதிக்கப் போகிறதென்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் முழுத்திட்டமும் இன்றும் வெளியாகாத இக்கால கட்டத்தில், சிறுபான்மையின மக்களுக்கு ஏற்றவாறு ஓர் அரசியல் திட்டத்தைப் பற்றி நாம் ஆராய்வதில் எவ்விதத் தவறுமில்லை. கீழே வரும் ஒரு புதிய திட்டத்தை முஸ்லிம்கள் அரசாங்கத்தின் முன்வைக்கலாம். இதற்குரிய காரணங்களை நாம் ஆராய்வதற்கு முன், இப் பிரேரணைகளை ஆராய்வோம்.
1978 -ம் ஆண்டில் இந்நாட்டில் நிறுவப்பட்ட இரண்டாவது குடியரசின் அரசியல் யாப்பு, ஜனநாயகத்தின் ஆணிவேரான, சட்டமியற்றும் தொழிலைச் செய்யும் பாராளுமன்றத்தின் தரத்தைக் குறைத்தது. ஒரு பொதுத்

Page 82
138 ہقے முகம்மது சமீம்
தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும் சபைக்குத்தான் சட்டமியற்றும் கடமை இருக்கிறது. மக்கள் பிரதிநிதியின் சுதந்திரம் பறிக்கப் பட்டது மட்டு மல்லாமல் அவர்களது அதிகாரமும் பறிக்கப்பட்டது. முன்னைய பாராளுமன்றங்கள் போலல் லாமல் மக்களின் பிரதிநிதி, எந்தத் தேர்தல் தொகுதியைப் பிரதிநிதிக்கிறார் என்பது கூட, மக்களுக்கும் தெரியாது, பிரதிநிதிக்கும் தெரியாது. ஒரு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரதிநிதிகள் இருப்பதால்,
மக்களது நலன் பேணப்பட வாய்ப்பில்லை.
1. எனவே, பாராளுமன்ற அங்கத்தவரின் அதிகாரமும் சுதந்திரமும், உறுதிப்படுத்தப்படல் வேண்டும். ஒரு பிரதிநிதி, தான் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சியிலி ருந்து இராஜினாமாச் செய்தாலும், அல்லது கட்சியிலிருந்து விலக்கப் பட்டாலும், அவர் இன்றுள்ள நிலைமை போலல்லாமல், பாராளு மன்றத்திலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் விலக்கப்படக் கூடாது.
2. ஒரு பாராளுமன்றத்தின் காலம் 5 வருடமாக இருத்தல் வேண்டும். பாராளுமன்றத்தின் கால எல்லையை, மூன்றிலிரண்டு வாக்குகளால் மாத்திரமே நீடிக்கலாம். அதற்கும் விசேஷ காரணங்களிலிருக்க வேண்டும்.
இரண்டாவது - உயர் சபைக்கு - மக்களின் வாககுக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் 7 வருட காலத்திற்கு அங்கத்துவம் வகிக்கலாம்.
3. பாராளுமன்றம் இருசபைகளாக இயக்க வேண்டும். தேர்தல் தொகுதிகளின் மூலம் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை அல்லது கீழ்சபையென்றும் மற்றையது செனட்சபை

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 139
அல்லது மேல் சபையென்றும் இரு சபைகளாக இயங்கலாம்.
மேல் சபை
1.
மேல்சபை அங்கத்தவர்கள், மாகாண ரீதியில் அல்லது மாவட்ட ரீதியில், மூன்றில் இரண்டு அங்கத்தவர்கள், விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படலாம். இதில் குறிப்பிட்ட எண்ணிக்கை வாக்குகள் எடுக்கவேண்டும் என்றிருக்கக் கூடாது.
10 அங்கத்தவர்கள், உயிருள்ளவரை அங்கத்தவர்களாக இருக்கலாம். இவர்கள் பல முக்கிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு தேர்தல் குழுவினரால் தெரிவு செய்யப்படல் வேண்டும். இக்குழு, ஜனாதிபதி, பிரதம மந்திரி எதிர்க்கட்சித் தலைவர், பொதுத் தேர்தலில் 5 வீத வாக்குகளைப் பெற்ற அரசியற் கட்சித் தலைவர்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதியாகக் கடமையாற்றியவரும், பிரம மந்திரியாகக் கடமையாற்றியவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராகக் கடமையாற்றி யவரும், செனட்சபையில் அங்கம் வகிக்கலாம். ஆனால், நீதி மன்றத்தில் குற்றவாளியாக இவர்களில் எவரும் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மூன்றில் ஒரு பங்கு அங்கத்தவர்கள், சிறு பான்மையின மக்களிலிருந்தும், குறிப்பிட்ட சில மதக்குழுக்களிலிருந்தும் தெரிவு செய்யப்படுதல்
வேண்டும். சிறுபான்மையின மக்களின் சனத்
தொகையின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி
அவர்களுக்கு அங்கத்துவம் வழங்கலாம்.
நிதி சம்பந்தமான மசோதாக்களைத் தவிர ஏனைய மசோதாக்கள், நாட்டுக்குப் பாதக மாயமையும் என்று

Page 83
140 அ. முகம்மது சமீம்
செனட்சபை கருதினால், அம்மசோதாக்களைக்
குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க அதிகாரம் வழங்கப் படல் வேண்டும்.
5. காபினட் அந்தஸ்துள்ள இருவராவது, செனட்
சபையிலிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும்.
6. அமைச்சுகளின் செயல்களை மதிப்பீடு செய்வதற்கு இரு சபைகளிலிருந்தும், அரசாங்க தரப்பிலிருந்தும் எதிர்க்கட்சிகளிலிருந்தும், தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் நிறை வேற்று அதிகாரம் கொண்ட குழுக்களில் அங்கம் வகிக்கலாம்.
ஒரு ஜனநாயகக் குடியரசில், இன அடிப்படையில் சிறுபான்மை சமூகங்களாகக் கணிக்கப்படும் சமூகங்கள், பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஜனநாயக முறையில் எல்லா வழிவகைகளையும் கையாள வேண்டும். 1978 -ம் ஆண்டில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு, ஒரு தனி மனிதனுடைய மூளையிலிருந்து பிறந்தது. தன்னை ஒரு சர்வாதிகாரியாக ஆக்கிக் கொள்வதற்கும், நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நபராகத் தன்னை ஆக்கிக் கொள்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட யாப்பு என்றால் அது மிகையாகாது. இச்சர்வாதிகாரியான போக்கி னாற்றான் நாட்டில் அரசியற் குழப்பங்கள் ஏற்பட்டன. பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், ஜனநாயக முறையில் விரக்தியடைந்த இளைஞர்கள், அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு வன்செயல்களில் ஈடுபட்டதை இந்நாடறியும். யுத்தத்தின் மூலம்தான் தமது உரிமைகளைப் பெறலாம், என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் முக்கிய சிறுபான்மை யினமாகிய தமிழ்ச் சமூகம் இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கும் இதுவே காரணம். அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்தில் செயல்படும் இன்றைய

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 141
அரசாங்கம், எல்லா சமூகங்களுக்கும், எல்லா இனங் களுக்கும், இம் மாற்றத்தில் தமது கருத்துக்களை வெளியிடும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக, மத அடிப்படையில் ஒரு சிறுபான்மை சமூகமாகக் கருதப்படும் இலங்கை முஸ்லிம்கள், தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தம்முடைய எதிர்கால நல்வாழ்வுக்கு உத்தரவாதம் தேடிக் கொள்வதற்கும், இத்தருணத்தை நழுவ விட்டால், பின்னால் வருந்த நேரிடும். தம் சமூகத்தின் நலனைப் பாதுகாப்பது, அரசியற் தலைவர்களதும், சமூகத் தலைவர்களதும், அறிஞர் களினதும் கடமையாகும்.
பிரதிநிதித்துவம்
1. கீழ்சபைக்குப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் இன்றைய விகிதாசாரமுறை முற்றாக ஒழிக் கப்பட்டு, அதற்குப் பதிலாக, முன்பிருந்த, வின்செஸ்டர் முறையான தெரிவு, அமுலுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும். இன்று நாட்டிலுள்ள வாக்காளர் தேர்தல் தொகுதி களில், 40% விகிதத்திற்கும் மேலான தொகுதி களின் முடிவை நிர்ணயிக்கும் ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். ஆனால் மேற் சபைக்குத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், மாவட்ட அல்லது மாகாண அடிப்படையில் விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படல் வேண்டும்.
2. பாராளுமன்றத்தின் கீழ் சபை 200 அங்கத்தவர்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். இதில் 100 அங்கத்தவர்கள், தொகுதிவாரியாகத் தேர்ந்தெடுக் கப்படும் அதே வேளையில், ஏனைய 100 அங்கத் தவர்கள், அரசியற் கட்சிகளின் தேசிய அடிப் படையிலான பட்டியலின் மூலம் தெரிவு செய்யப் படல் வேண்டும்.

Page 84
142
அ. முகம்மது சமீம்
ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற
வேண்டும் என்ற நிபந்தனை, கீழ் சபைக்கோ
மேற்சபைக்கோ தெரிவு செய்யப்படும் முறையில் இருக்கக் கூடாது.
தேர்தலில் போட்டியிடும் எல்லா அரசியற் கட்சிகளும், தத்தமது தேசியப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தேசியப் பட்டியலில், சிறுபான்மையின் மக்களுக்குத் தகுந்த பிரதிநிதித்துவம், குறைந்தது, அவரவர்களுடைய விகிதாசார அடிப்படை யிலாவது, வழங்கப்படல் வேண்டும்.
இந்நாடு 100 தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் அங்கத்தவர் வின்செஸ்டர் முறைப்படி தெரிவு செய்யப்படல் வேண்டும். தேர்தல் நிர்ணய
ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு, தேர்தல் தொகுதி
எல்லைகளை அது நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாணைக் குழுவில் ஒரு முஸ்லிம் அங்கத்தவர்
இருக்க வேண்டும். தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப் படும்போது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முஸ்லிம்கள் தங்களில் ஒருவரைத் தெரிவு செய்து அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
செனட் சபைக்குத் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தவர்கள், மாகாண அடிப்படையில் விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படல் வேண்டும்.
கீழ் சபைக்கு நடக்கும் தேர்தலில், ஒரு வாக்காளருக்கு
இரண்டு வாக்குகள் வழங்கும் உரிமை இருக்க வேண்டும்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 143
1. ஒன்று தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் உபயோகிக்கப்படுதல் வேண்டும்.
2. இரண்டாவது வாக்கு, தேசியப்பட்டியலில்
இருக்கும் ஒருவரைத் தெரிவு செய்வதற்குப்
பாவிக்கப்படுதல் வேண்டும்.
தேர்தல் தொகுதி மூலம் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையோடு, எந்த அரசியல் கட்சி பட்டியல் மூலம் அதிகமான வாக்குகளைப் பெறுகிறதோ அந்த அரசியற் கட்சிக்கு அதற்கேற்ப ஆசனங்களை நிர்ணயித்து, இரண்டிலும் அதிகமான ஆசனங்களைப் பெறும் கட்சி அரசாங்கத்தை எற்படுத்தும் அதிகாரத்தைப் பெறும். வாக்காளர்கள், தாம் வாக்களிக்கும் போது, தங்கள் வாக்குகளைத் தேர்தல் தொகுதி மூலம் ஒரு கட்சிக்கும், பட்டியல் மூலம் இன்னொரு கட்சிக்கும் தமது வாக்குகளை வழங்கலாம்.
நிறைவேற்றும் அதிகாரம்
1.
இன்று அமுலிலுள்ள நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும். நிறைவேற்றும் அதிகாரம், அமைச்சர் அவைக்கு
வழங்கப்படல் வேண்டும். பாராளுமன்ற அங்கத்த
வர்களைக் கொண்ட இவ்வமைச்சர் அவைக்கு பிரதம
மந்திரி தலைமை தாங்குவார்.
அரசியல் யாப்பின் விதிகளுக்கமைய இவ் வமைச்சரவையும் பாராளுமன்றமும் இயங்க வேண்டும். அரசியல் யாப்பில் இணைக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்திற்கு எதிரான சட்டங் களைப் பாராளுமன்றம் நிறைவேற்றக் கூடாது. அத்தோடு, பாராளுமன்ற சட்டங்கள் அமுலாக்கப்

Page 85
142
அ. முகம்மது சமீம்
ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை, கீழ் சபைக்கோ
மேற்சபைக்கோ தெரிவு செய்யப்படும் முறையில்
இருக்கக் கூடாது.
தேர்தலில் போட்டியிடும் எல்லா அரசியற் கட்சிகளும், தத்தமது தேசியப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தேசியப் பட்டியலில், சிறுபான்மையின மக்களுக்குத் தகுந்த பிரதிநிதித்துவம், குறைந்தது, அவரவர்களுடைய விகிதாசார அடிப்படை யிலாவது, வழங்கப்படல் வேண்டும்.
இந்நாடு 100 தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் அங்கத்தவர் வின்செஸ்டர் முறைப்படி தெரிவு செய்யப்படல் வேண்டும். தேர்தல் நிர்ணய ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு, தேர்தல் தொகுதி எல்லைகளை அது நிர்ணயிக்க வேண்டும். இவ்வாணைக் குழுவில் ஒரு முஸ்லிம் அங்கத்தவர் இருக்க வேண்டும். தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப் படும்போது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முஸ்லிம்கள் தங்களில் ஒருவரைத் தெரிவு செய்து அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
செனட் சபைக்குத் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தவர்கள், மாகாண அடிப்படையில் விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படல் வேண்டும். கீழ் சபைக்கு நடக்கும் தேர்தலில், ஒரு வாக்காளருக்கு இரண்டு வாக்குகள் வழங்கும் உரிமை இருக்க வேண்டும்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 143
1. ஒன்று தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் உபயோகிக்கப்படுதல் வேண்டும்.
2. இரண்டாவது வாக்கு, தேசியப்பட்டியலில்
இருக்கும் ஒருவரைத் தெரிவு செய்வதற்குப்
பாவிக்கப்படுதல் வேண்டும்.
தேர்தல் தொகுதி மூலம் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையோடு, எந்த அரசியல் கட்சி பட்டியல் மூலம் அதிகமான வாக்குகளைப் பெறுகிறதோ அந்த அரசியற் கட்சிக்கு அதற்கேற்ப ஆசனங்களை நிர்ணயித்து, இரண்டிலும் அதிகமான ஆசனங்களைப் பெறும் கட்சி அரசாங்கத்தை எற்படுத்தும் அதிகாரத்தைப் பெறும். வாக்காளர்கள், தாம் வாக்களிக்கும் போது, தங்கள் வாக்குகளைத் தேர்தல் தொகுதி மூலம் ஒரு கட்சிக்கும், பட்டியல் மூலம் இன்னொரு கட்சிக்கும் தமது வாக்குகளை வழங்கலாம.
நிறைவேற்றும் அதிகாரம்
1.
இன்று அமுலிலுள்ள நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும். நிறைவேற்றும் அதிகாரம், அமைச்சர் அவைக்கு வழங்கப்படல் வேண்டும். பாராளுமன்ற அங்கத்த வர்களைக் கொண்ட இவ்வமைச்சர் அவைக்கு பிரதம மந்திரி தலைமை தாங்குவார்.
அரசியல் யாப்பின் விதிகளுக்கமைய இவ் வமைச்சரவையும் பாராளுமன்றமும் இயங்க வேண்டும். அரசியல் யாப்பில் இணைக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்திற்கு எதிரான சட்டங் களைப் பாராளுமன்றம் நிறைவேற்றக் கூடாது. அத்தோடு, பாராளுமன்ற சட்டங்கள் அமுலாக்கப்

Page 86
144
அ. முகம்மது சமீம்
படுவதற்கு முன்னர், இவைகளைப் பரிசீலனை செய்வதற்கு நீதி பரிசீலனை சபையொன்று நிறுவப் படல் வேண்டும். அரசியல் யாப்பு விதிகளுக்குப் புறம்பாக உள்ள எந்த ஒரு சட்டத்தையும் நிராகரிக்கும் உரிமை இப்பரிசீலனை சபைக்கு
வழங்கப்படல் வேண்டும்.
ஜனாதிபதி பிரதம மந்திரியினால் நியமிக்கப் பட்டு, இருசபைகளாலும் அங்கீகரிக்கப்படல் வேண்டும். (இந்திய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் மாதிரி அமைதல்) ஜனாதிபதியின் அதிகாரம், இங்கிலாந்தின் அரசருக்குரியது போன்றிருக்க வேண்டும்.
அதிகாரப் பொறுப்பு மாற்றல்
1.
மத்திய அரசின் பொறுப்புக்களில் சில மாகாண சட்டசபைக்கு பொறுப்பு மாற்றம் செய்யப்படல் வேண்டும். மாகாண சபைக்கு மாவட்ட அடிப்படையில் தேர்தல் நடைமுறை வேண்டும். சமஷ்டி ஆட்சி முறையில் இம்மாகாண சட்ட சபைகள் அமைதல் வேண்டும்.
ஒரு மாகாண சபையைக் கலைப்பதற்கு மத்திய அரசின் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு வாக்குகளால் மாத்திரம் தான் கலைக்க முடியும். இலங்கையில் 5 மாகாண சபைகள் இருத்தல் வேண்டும். வடகிழக்குக்கு ஒரு மாகாண சபையும் இலங்கையின் ஏனைய பாகங்களுக்கு 4 மாகாண சபைகளுமாக இருத்தல் வேண்டும். கண்டிச் சிங்கள வருக்கு 2 மாகாண சபைகளும், கரை யோரச் சிங்கள வருக்கு 2 மாகாண சபைகளும் இருத்தல் வேண்டும்.
வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில், முஸ்லிம் களுக்கும் சிங்களவருக்கும் தகுந்த பிரதி நிதித்துவம்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 145
வழங்கப்படல் வேண்டும். முஸ்லிம் களைக் கொண்ட ஒரு மாவட்ட சபை இம்மாகாணத்தில் அமையவேண்டும்.
அதிகாரத்தைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் அதிகாரமும், மாகாண சபையின் அதிகாரமும், தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
மாகாணங்களின் எல்லைகளும், மாவட்டங்களின் எல்லைகளும் திருப்பி மாற்றியமைக்கப்படல் வேண்டும். எல்லைகளைப் பரிசீலனை செய்வதற்கு ஒரு கமிஷன் நியமிக்கப்படல் வேண்டும்.
அரசியல் யாப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப் பட்டு, மாகாண சபைகளால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
நீதித்துறை
1.
நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும். நீதிபதிகளின் நியமனங்கள் நீதிக்குழுவின் சிபாரிசின் பேரில் இருக்கவேண்டும்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் இளைப்பாறும் வயது எல்லை 70 ஆக உயர்த்தப்படல் வேண்டும்.
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்கள் உயர் நீதிமன்றத்தின் அங்கீகாரம் பெறல் வேண்டும். எந்த ஒரு சட்டமும், அரசியல் யாப்பிற்கு முரணாக இருந்தால் அதை நிராகரிக்கும் அதிகாரம், உயர்நீதிமன்றத்திற்கு இருக்கவேண்டும். குறிப்பாக, ஒரு சிறுபான்மை சமூகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு சட்டத்தையும் நிராகரிக்கும் அதிகாரமும் இந்நீதிமன்றத்திற்கு இருக்கவேண்டும்.

Page 87
146 . . . அ. முகம்மது சமீம்
மனித உரிமைகள் சட்டம்
1. ஒரு பரந்த அளவிலான மனித உரிமைகள் சட்டம்
அரசியல் யாப்பில் இணைக்கப்படல் வேண்டும்.
2. சுதந்திரம், பாதுகாப்பு, முக்கியமாக, வாழும் உரிமை, இம் மனித உரிமைகளின் அடிநாதமாக அமைதல் அவசியம். -
3. அரசியல் யாப்பில் எந்தவொரு சட்டமும் மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணாக இருந்தால், பின்னையதுதான் வற்புறுத்தப்படல் வேண்டும்.
4. தனிமனித சுதந்திரத்திற்கும், ஒரு சமூகத்தின் சுதந்திரத்திற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டால், தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும்.
5. நாட்டில் அவசரகால நிலைமையேற்பட்டால் கூட மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணான சட்டங்கள் எதுவும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் படக் கூடாது.
மேலே குறிப்பிடப்பட்ட அமைதிகளுக்கேற்ப அரசியல் யாப்பு அமைக்கப்பட்டால், சிறுபான்மை சமூகங்களினதும், பொதுவாக பொதுமக்களினதும் நலன்கள் பாதுகாக்கப்படலாம். 1977 -ம் ஆண்டின் பாராளுமன்றம், வின்செஸ்டர் முறையிலான தேர்தல் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. அன்றைய அரசியல் யாப்பு மாற்றியமைக்கப்பட்டவிடத்து, அப்பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். புதிய அரசியல் யாப்பின்படி விகிதாசார முறைப்படி தேர்தல் அமைந்திருக்க வேண்டும். அன்றைய பாராளு மன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் அரசியல் சட்டத்திற்கு முரணாகவே செயல்பட்டிருக்கின்றனர். பொதுமக்களின் வாக்கெடுப்பின் மூலம் அன்றைய அரசாங்கமும்,

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 147
ஜனாதிபதியும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மக்கள் மன்றத்தின் முன் இவர்கள் குற்றவாளிகள். இன்றைய நிலையில், பாராளு மன்றத்தின் மூன்றில் இரண்டு வாக்குகளில்லாமல், வின்செஸ்டர் முறைப்படி தேர்தல் நடத்த முடியாது. இன்றைய ஜனாதிபதிக்குப் பாராளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் பொதுத் தேர்தல், விகிதாசார முறைப்படித்தான் அமைய வேண்டும். ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்கு ஜனாதிபதிக்குத் தனிப்பட்ட முறையில் அதிகாரம் இருக்கிறதா, அல்லது பாராளுமன்றத்திற்கு அதிகாரமிருக்கிறதா? ஒர் அரசியல் சாணக்கியனின் சூழ்ச்சியினால், இன்று இந்நாட்டு மக்கள் ஒரு கஷ்டமான சூழலில் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தைப்படுகிறார்கள்.

Page 88
148 அ. முகம்மது சமீம்
20. ஜே.வி.பி. இயக்கத்தில் சாதிவேறுபாடு
1971 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைகிறது. இம்மாதத்தில்தான் இலங்கை அரசாங்கத்துக் கெதிராக ஒரு புரட்சி தோன்றியது. இதுகால வரையும் மக்கள் புரட்சியைப் பற்றி மேடைகளில் பேசியும் எழுதியும் வந்த மார்க்சீய கட்சித்தலைவர்கள், பாராளுமன்ற ஜனநாயக முறையை ஏற்று, அம்முறைக்குக் கட்டுப்பட்டே வந்தனர். புரட்சி என்பது பேச்சளவிலேயே நின்றது. 1948 -ம் ஆண்டில் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த மார்க்சீயக் கட்சிகள், காலப்போக்கில், மிதவாத சக்திகளுடன் சேர்ந்து அரசியலில் இலாபம் பெறமுயன்றன. பொதுத் தேர்தல்களில் தமக்குக் கிடைத்த ஒரு சில ஆசனங் களைவைத்து பேரம் பேசினர். பாராளுமன்ற சனநாயக முறையில் ஒரு கட்சிக்குக் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அக்கட்சியின் அரசியல் பலமும் அமைந்திருக்கும். ஆகவே அதிகமான ஆசனங்களைப் பெறுவதிலேயே கண்ணும் கருத்து மாயிருந்த இடதுசாரிக்கட்சிகள், மிதவாதக் கட்சிகளுடன் கூட்டு ஒப்பந்தம் செய்வதிலேயே அக்கறை காட்டினர். இதனால் இடதுசாரிக்கட்சிகளின் ஒற்றுமையும் பாதிக்கப் பட்டது. தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. முதலாளித்துவ அரசாங்கங்களின் எதிரியென கருதப்பட்ட மார்க்சீயக் கட்சிகள் இவ்வரசாங்கங்களுடன் சேர்வதில் எவ்விதத் தயக்கத்தையும் காட்டவில்லை. 1965 -ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன், புரட்சி இயக்கத்தின் தலைவரெனக் கருதப்பட்ட பிலிப் குணவர்தனா சேர்ந்ததில் வியப்பில்லை.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 149
இதே போலத்தான், 1964 -ம் ஆண்டில் லங்கா சமசமாஜக்கட்சியினர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்துடனும், 1970 -ம் ஆண்டில், ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தில் ஒர் அங்கமாகச் சேர்ந்தனர். சுதந்திரத்திற்குப் பின், சமூக - அரசியல் உணர்வுள்ள ஒரு புதிய இளைஞர் பரம்பரை தோன்றியது. இலவசக் கல்வியின் மூலம் கல்வி கற்று, சர்வகலாசாலைகளிலிருந்து பட்டம் பெற்று பட்டதாரிகளாக வெளியேறிய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் அரிதாயிருந்தது. உயர் குடிப்பிறப்போருக்கும் அரசியல் செல்வாக்குமுள்ளவர் களுக்கும் மட்டும்தான் அரசாங்க பதவிகள் கிடைத்தன. நாட்டுப்புறங்களிலிருந்து வந்த பட்டதாரிகள் வேலை யில்லாமல் அலைந்து திரிந்தனர். சோஷலிசம் பேசி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசியல்வாதிகள் பொருளுக்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்பட்டு நியாயத் தையும் நீதியையும் மறந்தனர்.
மார்க்சீய சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் சோஷலிச வாதிகளின், சொல்லுக்கும் செயலுக்கும் இருந்த வேறுபாட்டைக் கண்ட இள்ைஞர்கள், இவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை இழந்தனர். 1969 -ம் ஆண்டில் இலங்கைச் சனத்தொகையில், இருபத்தைந்து வயதுக்குக் குறைந்தோர் 60% விகிதமாக இருந்தனர். 14 வயதுக்கும் 25 க்கும் இடையில் இருந்த இளைஞர்களில் 46% விகிதமானோர் பாடசாலை களிலிருந்து வெளியேறி உத்தியோகம் பெறும் வாய்ப்பில்லாமலிருந்தனர். சமுதாயத்தின் மேல் ஒரு வெறுப்புணர்ச்சி இவர்களிடையே வளரத் தொடங்கியது.
இலங்கைச் சனத்தொகையின் பரம்பரையை ஆராய்ந்தால், நூற்றுக்கு எழுபத்திரண்டு சதவிகிதத்தினர் கிராமப்புற வாசிகளாகவே இருந்தனர். இவர்களில் 75 சதவிகிதமானோர் கொழும்பு மாநகரை அடுத்த கிராமங்களில் வசிப்பவர்களாக இருந்தனர். போக்குவரத்து

Page 89
150 அ. முகம்மது சமீம்
சாதனங்கள் இருந்த படியால் நகரத்திற்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பும் இருந்தது. கொழும்பில் வாழும் மத்தியதர வர்க்கத்தினரின் படாடோப வாழ்க்கையைக் கண்டு பிரமிப்படைந்ததுடன், இவர்களுக்கு இவ்வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த, அரசாங்கங்களையும் அதன் தலைவர்களையும் வெறுத்தனர்.
லங்கா சமசமாஜக் கட்சியிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்த இளைஞர்கள் இக்கட்சிகளின் போக்கைக் கண்டு விரக்தியடைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட சமயத்தில், புரட்சிகர பாதையை வலியுறுத்திய சீனப் பிரிவில் அநேகம்பேர் சேர்ந்தனர் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்ட எல்லைப்புற யுத்தத்திற்குச் காரணம், இந்தியாவின் ஏகாதிபத்தியக் கொள்கையே என்ற கருத்தை சீனா பரப்பியது. சீனப் பிரிவில் இருந்த சிங்கள இளைஞர்கள், இந்தியா இலங்கையிலும் தனது ஏகாதிபத்திய போக்கைக் கடைப்பிடிக்கலாம் என்ற தவறான கருத்தைக் கொண்டிருந்தனர்.
1970 -ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு, ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜே.வி.பி. இயக்கத்தினர் பெரிதும் உதவினார்கள். ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு தங்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்காததை யிட்டு மனம் வெதும்பினார்கள்.
1970 -ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய அரசாங்கம் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று மக்கள் நம்பினார்கள். சோஷலிச சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்து, புதிய அரசாங்கத்தை ஆட்சிப் பீட மேற்றிய மக்கள், இவ் வரசாங்கம், மக்களுடைய வாழ்க்கைச் செலவைக் குறைக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். மக்களிடையே இருக்கும்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 151
பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்கும், மக்களின் ஏழ்மையைப் போக்கும்என்றெல்லாம் நம்பியிருந்தனர். ஆனால் வெற்றி பெற்ற ஆணவத்தினால், நாட்டில் கொந்தளித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசாங்கத்தை ஸ்தாபித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரும், மார்ச்சீய கட்சியினரும், ஒரு புதிய அரசியல் யாப்பினை ஏற்படுத்துவதில் மும்முரமாயிருந்தனர்.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அதிகாரத்தில் மூழ்கியிருந்த அரசாங்கத்தின் கொள்கை களினால் விரக்தியடைந்த இளைஞர்கள், ஜனதா விமுக்தி பெரமுனை, (மக்கள் விடுதலை இயக்கம்) என்ற புரட்சிகர இயக்கத்தை ஸ்தாபித்தனர். முதலில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். அதனாற்றான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக உருவாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்காசமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஐக்கிய முன்னணியை, 1970 -ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் ஆதரித்தனர். வெகுசீக்கிரத்தில், இவ்வரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கைக் கண்டித்த இவ்வியக்கத்தினர், இதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஜனநாயக முறையில் விரக்தியடைந்த இவ்விளைஞர்கள் வன்செயலில் ஈடுபட்டனர். கொய்கம சாதியினரதும், கத்தோலிக்க கராவ சாதியினரதும் குடும்ப ஆட்சியைக் கண்டு வெகுண்டெழுந்தனர். கொய்கம சாதியினருக்கும், கத்தோலிக்க கராவா சாதியினருக்கும் எதிராகத் தோன்றிய இவ்வியக்கம், இந்திய எதிர்ப்பு இயக்க மாகவும் உருவெடுத்தது. ஜனநாயக பாராளுமன்ற முறையை ஏற்றுக் கொண்ட மார்க்சீய கட்சிகளையும் இவர்கள் எதிர்த்தனர். ஜே.வி.பி. இயக்கத்தின் தலைமைத்துவம் மார்க்சீய சித்தாந்தத் திலும், மார்க்சீய புரட்சி நடை முறையிலும் ஓரளவு அறிவு இருந்தாலும், சிங்கள மொழியிலேயே கல்வி கற்று, வேறு எந்த சர்வதேச

Page 90
152 அ. முகம்மது சமீம்
மொழியிலும் பரிட்சயமில்லாத ஏனைய இயக்கத்தினர், மார்ச்சீய சித்தாந்தத்தை அறிந்திருக்க நியாயமில்லை.
சீனாவினதும் கியுபாவினதும் புரட்சியைத் தமது ஆதாரமாகக் கொண்ட இவ்வியக்கத்தின் தலைவர்கள், அப்புரட்சிகளின் தார்மீகத் தத்துவத்தை விளங்கிக் கொள்ளவில்லை. அப்புரட்சிகள் மக்களது அபிமானத் தையும் ஆதரவையும் பெற்றே புரட்சி அரசாங் கங்களை ஏற்படுத்தின என்ற உண்மையை இவர்கள் அறியவில்லை. ஜே.வி.பி. இயக்கத்தினர் தங்களுடைய நடவடிக்கை களினால், பாதுகாப்புப் படைகளையும், அரசாங்கத்தை விரோதித்தது மல்லாமல், மக்களின் விரோதத்தையும் சம்பாதித்தனர். பாமர மக்களைப் பல இன்னல்களுக்குட் படுத்தினர். அரசாங்க ஸ்தாபனங்களையும் வங்கிகளையும் கடைகளையும் மூடவேண்டும் என்று கட்டளையிட்ட இவர்கள், வீடுகளையும் மூடவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தனர். மக்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத் தினர். மக்களின் தலைவர்களையும் கொன்றனர். மக்களின் அபிமானத்தை வென்ற விஜயகுமாரதுங்க போன்ற தலைவர்களையும் இலங்கை சர்வகலாசாலை உபவேந்தர் விஜேயசேகர போன்ற அறிஞர்களையும் ஈவிரக்கமின்றி கொன்றனர். இலங்கை வானொலியின் பணிப்பாளர்களில் ஒருவரும், மக்களின் அபிமானத்தை வென்றவருமான, குருகே என்பவரையும் கொன்றதனால் மக்களின் வெறுப்புக்கு இவர்கள் ஆளாகினர். 1983-ம் ஆண்டிலிருந்து 1989 -ம் ஆண்டு வரையிலுள்ள இடைக் காலத்தில் இவர்கள் கொன்றவர்களில், முக்கியமாக மகிந்தபானு (NSSP) அமராவெல்லப்பிலி (LSSP), கலாநிதி நந்தசேன பர்ணான்து (NSSD) uITG)6vg;Lb (SLFP) L16ööTL)-sig (CPSL) JéB/Tuéq5 (CPSL) விஜேசூரிய (SLMP) பந்துல சேனாரத்தின (SU) என்பவர்களைக் கூறலாம்.
ஜே.வி.பி. இயக்கத்தினர் அரசாங்கத்திற் கெதிராக இரண்டு புரட்சிகளை நடத்தினர். 1971 -ம் ஆண்டிலும்,

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 153
1988 -ம் ஆண்டிலும் இவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க வன் செயல்களில் ஈடுபட்டனர். 1971 -ம் ஆண்டில் ஜே.வி.பி. இயக்கத்தினர், பாராளுமன்ற அரசியல் அமைப்பு என்ற பெயரில், பூர்ஷ்வா கட்சியினரும், உயர் சாதிக் குடும்பங்களும், மரபு வழியாக வந்த சமூக உறவுகளைத் தமக்குச் சாதகமாக ஆடிய நாடகத்தை அம்பலப்படுத்தினர். மக்களின் வெறுப்புக்கு உள்ளாகிய உயர்வர்க்கத்தினரின் ஆட்சியை இவர்கள் எதிர்த்ததனால் ஆரம்பத்தில் மக்களின் அபிமானத்தை வென்றனர். பல இளைஞர்கள் இவ்வியக்கத்தில் சேர்வதற்கும் இது ஒரு காரணம்.
இவ்வியக்கத்தில் சேர்ந்த இளைஞர்களுக்கு பல வகுப்புக்களை நடத்தினர். ஐந்து சொற்பொழிவுகள் என்ற பெயர் பெற்ற இவ்வகுப்புகளில் மார்க்சீய சித்தாந்தத்தைப் பற்றியும் புரட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றியும் கூறப்பட்டது.
முதலாவது சொற்பொழிவில், இலங்கையின்
பொருளாதார நெருக்கடியைப் பற்றி விரிவான ஒரு விளக்கம் கொடுக்கப்படும். இதில், காலனித்துவ ஆட்சியில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் நாட்டை சுரண்டியதும், மலைநாட்டு ஏழை விவசாயிகளின் காணிகளை பலாத் காரமாக அரசாங்கம் எடுத்து, பிரித்தானிய முதலாளி களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றதையும் (5 சதம், ஒரு ஏக்கர் என்று) முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையை இலங்கையில் திணித்ததையும் அதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் விளக்கமாகக் கூறப்பட்டது.
இரண்டாவது சொற்பொழிவில், பிரித்தானிய முதலாளித்துவ ஏகாதிபத்தியம், இலங்கையின் முதலாளி களுக்கு, சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அதிகாரத்தைக் கொடுத்து, முதலாளித்துவ பொருளாதார முறை தொடரப்பட்டதோடு, பிரித்தானிய முதலாளிகளின்

Page 91
154 அ. முகம்மது சமீம்
பொருளாதார முதலீடுகள் பாதுகாக்கப்பட்டதோடு, இலங்கை மக்களின் மேல் திணிக்கப்பட்ட அரசியல் துரோகம் என்று கூறப்பட்டது.
மூன்றாவது, சொற்பொழிவில், இந்திய - சீன எல்லைப்புற யுத்தத்தை உதாரணமாகக்காட்டி (இது கம்யூனிஸ்ட் சீனாவின் இராஜதந்திரம்) அருகிலுள்ள சிறிய நாடுகளில் இந்திய வியாபாரிகளினதும் தோட்டத் தொழிலாளர்களினதும் நடவடிக்கைகள் மூலம், இந்திய முதலாளித்துவமும், இந்திய ஏகாதிபத்தியமும், இலங்கை மேல் திணிக்கமுயல்கிறது என்று கூறப்பட்டது. இவ்வியக்கம் இந்தியர்களுக்கு எதிராக உருவெடுப்பதற்கு இதுதான் காரணம்.
நான்காவது சொற்பொழிவில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் தன்னுடைய புரட்சிகரக் கொள்கையைக் கைவிட்டு அரசியல் சலுகைகளுக்காக, முதலாளித்துவ பொருளாதார முறையை ஆதரித்து, மிதவாக அரசியலில் இன்று மையமாகிவிட்டது என்று கூறப்பட்டது.
எனவே, ஐந்தாவது சொற்பொழிவில், கியுபா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சியைக் கடைப்பிடிப்பதன் மூலம்தான் எதிர்காலத்தில் இலங்கை யில் ஒரு முற்போக்கு அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதற்கு இளைஞர்கள் புரட்சிப் பாதையைக் கையாள்வதன் மூலம் இதை ஸ்தாபிக்கலாம் என்று கூறப்பட்டது.
இவ்வியக்கம், சமூக அந்தஸ்து பெறமுடியாமல், பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாமல், அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்ட, அடிமை நிலையில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களையே அதிகமாகக் கவர்ந்தது. தங்களுடைய முன்னேற்றத்திற்குத்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 155
தடையாயிருக்கும் சாதி அமைப்பினையும், உயர்சாதி என்று கூறப்படுகிற கொய்கம சாதி யினரையும் தமது எதிரிகளாக இவர்கள் கணித்தனர். எனவே கொய்கம சாதிக்கு எதிராக இவ்வியக்கம் உருவெடுத்தது. கராவ சாதயினர் தம்முடைய பொருள் முதலீட்டினால், பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில், பொருள் சம்பாதித்தார்க ளென்றாலும், சமூக அந்தஸ்தில் கொய்கம சாதி யினருக்குக் குறைவாகவே மதிக்கப்பட்டார்கள். கல்வியறிவினால், பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளைப் பெற்றாலும், இவர்களுக்கு இந்த தாழ்வுச்சிக்கல் மனப்பான்மை இருந்து வந்தது. இது பெரும்பாலும் இளைஞர்களையே பாதித்தது. ஆகவேதான், இவ்வியக்கத்தின் தலைமைத்துவம் பெரும்பாலும் கராவ சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தது. இவ்வியக்கம் கொய்கம சாதியினருக்கு எதிரான இயக்கம் என்று நம்பிய அரசாங்கப் படையினர், தாழ்ந்த சாதியினர் வாழ்ந்த கிராமங் களிலுள்ள இளைஞர்களையே கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கொய்கம சாதியைச் சேர்ந்தவர்களும் இருந்தார்களென்றால், அதற்குத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சாதி, கொய்கம என்று கொடுத்ததுதான் காரணம். உதாரணமாக குளியாபிட்டிய மாவட்டத்தில் பெத்கம (பது) வாழும் கிராமத்து மக்கள், கொய்கம சாதியினரின் பெயர்களை வைத்திருந்தனர். கொய்கம சாதியினரை அடையாளம் காண்பதற்கு அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் குடும்பத்தைக் குறிக்கும் கே என்ற அடைமொழி இருக்கும். இங்கே வசிக்கும் பத்கம சாதியைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் கொய்கம சாதியினர் வழங்கும் முதியன்சலாகே என்ற அடைமொழியைத் தமது பெயர்களுக்குப் பின்னால் வைத்திருந்தனர்.
இவ்வியக்கத்தின் தலைவர் விஜேவீர கராவ சாதியைச் சேர்ந்தவர். இயக்கத்தின் அங்கத்தவர்களை அவர்களின்

Page 92
156 அ. முகம்மது சமீம்
பெயர்களின் மூலம், அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர், எந்த ஊர் என்று கூறும் தகுதி பெற்றவர் என்று கூறப் பட்டது. 1971 -ம் ஆண்டில் போராட்ட இயக்கத்தின் தலைவர்கள் பெரும்பாலும் தென்பகுதியைச் சேர்ந்த கராவ சாதியினரே என்று கணிக்கப்பட்டது. விஜே வீர தன்னுடைய கராவ சாதியினருக்கே அதிக சலுகைகள் கொடுத்தார் என்று அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது.
கண்டி பதுளை மாவட்டங்களின் இயக்கத்திற்குத் தலைமை தாங்க மேற்குக்கரையோரப் பகுதியிலுள்ள அம்பலாங் கொடையைச் சேர்ந்த கராவ சாதியைச் சேர்ந்தவர்களே தலைமைதாங்க அனுப்பப் பட்டார்கள். ஆனால் 87 - 89 -ம் ஆண்டுகளில் ஏற்பட்ட போராட்டத் தில் ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரில் சிலர் முக்கிய பதவிகளை வகித்தார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினரிடை யேயும் அந்தஸ்துப் போட்டி இருந்தது. கராவ, சலாகம, துராவ சாதியைச் சேர்ந்தவர்கள், வகும்புற (ஹக்குறு) பத்கம (பது) ரொடிய சாதியினரைக் குறைவாகவே மதிப்பிட்டனர். மரபு வழியாக வந்த இந்த சாதி அமைப்பு, கீழ்மட்டத்திலுள்ள சாதியினர் தம்மை அடிமைகளாகவும், மேல் மட்டத்திலுள்ளவர்களைத் தமது எஜமானர்களா கவும் மதித்து வந்தனர். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார கல்வி மாற்றங்கள், சமூக மாற்றங்களையும் கொண்டுவந்தது. ஜனநாயக அமைப்பு முறையில், அரசியல் அதிகாரம் எண்ணிக்கையில் தங்கியிருப் பதால், கொய்கம சாதியினருக்கும் அடுத்ததாக எண்ணிக்கையைச் கொண்டிருக்கும், வகும்புற, பத்கம சாதியினர் சமூக அந்தஸ்தில் சம உரிமை கேட்டு நின்றனர். அதனாற்றான், 1971 -ம் ஆண்டில் கராவ தலைமைத் துவத்தை ஏற்ற இச் சாதியைச் சேர்ந்தவர்கள், 88-89 -ம் ஆண்டுகளில், அவர்களது தலைமைத் துவத்தை ஏற்க மறுத்தனர். இவ்வியக்கம் தோல்வி யடைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 157
ஜேவிபி. இயக்கம் சாதி அடிப்படையில் தோன்றிய இயக்கம் என்பதற்கு ஆதாரமாக, தாழ்த்தப்பட்ட சாதியினர் வசிக்கும் கிராமங்களில்தான் இவ்வியக்கத்தினர், இருந்தனர் என்பது புலனாகியது. உதாரணமாக, மாத்தறை மாவட்டத்தில், வகும்புற சாதியினர் வாழும் எல்லேவல, கெட்டன்வல கிராமங்களில் ஜே.வி.பி. இயக்கத்திற்கு அதிகளவு ஆதரவு இருந்த அதே நேரத்தில் இக்கிராமங்களுக்கு அருகாமையிலுள்ள கொய்கம சாதியைச் சேர்ந்தவர்கள் வாழும் லெனாம கிராமத்தில் ஜேவிபிக்கு எவ்வித ஆதரவும் இருக்கவில்லை. கொய்கம சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும் இப்பகுதியிலிருந்து இவ்வியக்கத்தில்சேரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதே போலத்தான், காலி மாத்தறை மாவட்டத்தின் எல்லைப்புற வகும்புற கிராமங்களான, வெலிகெட்டிய பங்கம கிராமங்களில் ஜே.வி.பி. இயக்கத்திற்கு அதிக ஆதரவு இருந்த அதே வேளையில் இக்கிராமங்களுக்கு அடுத்தாற்போலிருந்த கொய்கம கிராமத்தில் ஜே.வி.பி. இயக்கத்திற்கு எவ்வித ஆதரவும் இருக்கவில்லை.
இதேபோலத்தான், மலைநாட்டுப் பகுதியிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் வசிக்கும் கிராமங்களில் தான் ஜே.வி.பி. இயக்கம் மும்முரமாயிருந்தது. கேகாலை மாவட்டத்தில் பத்கம கிராமங்களான தீவல, அட்டுகொட, கடாகம, தலம்பிட்டிய ஆகிய கிராமங்கள்தான் ஜேவிபி. இயக்கத்தின் கேந்திர ஸ்தானங்களாக அமைந்தன. கண்டி மாவட்டத்தில் கொய்கம சாதியினருக்கு எண்ணிக்கையில் அடுத் தாற்போலிருந்த வகும்புற சாதியினர்தான் இவ்வியக் கத்தில் முக்கிய பங்கை வகித்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதிகளை நவந்தென்ன, பெராவ சாதியைச் சேர்ந்தவர்கள் இவ்வியக்கத்தில் சேராதமை வியப்பாயிருக்கிறது. ஒலி சாதியினரும், ரொடிய சாதியினரும் வாழையடி வாழையாக கொய்கம சாதியினருக்கு அடிமைத் தொழில் செய்து வந்த காரணத்தினால், அவர்களுடைய பக்கத்திலுள்ள கொய்கம

Page 93
158 ; அ. முகம்மது சமீம்
சாதியினரை பயமுறுத்திவந்தனர். இவர்கள் பெரும்பாலும், தங்களை அடையாளம் காணாதிருக்க, முகமூடி அணிந்தே வந்தனர். கடைகள் மூடப் படவேண்டும் என்ற கடிதங் களைக் கொண்டுவந்த வர்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்துவந்ததினால், அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இவர்கள் தேசப்பிரேமி பலகாயா (நாட்டில் அபிமானம் கொண்ட இயக்கம்) என்று தம்மைக் கூறிக் கொண்டனர். சில இடங்களில், மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள ஒலி, ரொடிய சாதியினர், கொய்கம சாதியினருக்கு எதிராக மட்டும் செயல்படவில்லை. அவர்கள் கராவ, சலாகம, துராவ சாதியினருக்கு எதிராகவும் இயங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. கொய்கம சாதியைச் சேர்ந்த புத்தி ஜீவிகள் ஜே.வி.பி. இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார் களென்றால் அது அவர்களுடைய முற்போக்குக் கொள்கைதான் காரணம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் சீனகிளையின் தலைவர் சண்முகதாசன், இவ்வியக்கத்தைப்பற்றிக் கூறும்போது ஜேவிபி. இயக்கத்தினர், புரட்சிகர கோஷத்தோடு இந்திய எதிர்ப்பு என்ற கோஷத்தை எழுப்புவதற்குக் காரணம். இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் மூலம் இந்தியா தனது ஆதிக்கத்தை இலங்கையில் நிலை நாட்டலாம் என்ற சிங்கள மக்கள், மத்தியில் இருந்த பயத்தைக் தமது இயக்கத்திற்குச் சாதகமாகப் பாவித்ததே. இவ்வியக்கத்தின் தலைவர்கள் பெரும் பாலும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாயிருந்தனர்.
இவ்வியக்கத்தில் பெளத்த பிக்குகளும் முக்கிய பங்கெடுத்தனர். ஆரம்பத்தில் ஜே.வி.பி. இயக்கத்தினர் பெளத்த சங்கங்களையும் பெளத்த பிக்குகளின் அர்த்தமில்லா வாழ்க்கையையும் கண்டித்தனர். கோயில் காணிகளும், கோயில் சேவை பொன்ற வைகள், பிரபுத்துவ ஆட்சி முறையின் சின்னங்கள். கோயில்களில் இருந்து

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 159
கொண்டு கோயில் காணிகளை பராமரிக்கும் நாயக் கபிக்குகளை, பிரபுத்துவ ஆட்சிமுறையின் நிலச்சுவாந்தார்களுக்கு ஒப்பிட்டனர். சமூகத்தின் நல் வாழ்வுக்குப் பாடுபடாமல் நாட்டின் உற்பத்தியில் பங்கு கொள்ளாமல் வெறும் வாழ்க்கையை நடத்திவருகின்றனர் என்று கூறினர். தென் மாகாணத்தில் பாதையோரங் களிலுள்ள புத்தர் சிலைகளில், பெளத்த சங்கத்தின் இயலாமையை எடுத்துக் கூறும் விளம்பரங்களை ஒட்டினர். ஒரு விளம்பரம் புத்தர் நிஷ்டையில் இருந்தது போதும், இனியாவது எழுந்து காரியங்களை ஆற்றும், என்று எழுதப்பட்டிருந்தது.
கொய்கம சாதியினரின் பெளத்த சங்க மாகிய சியாம் நிக்காய, ஜே.வி.பி., இயக்கத்தைக் கண்டித்தது. கராவ சாதியைச் சேர்ந்த ராமான்ய நிக்காய, மெளனம் சாதித்தது. ஆனால் பேராதெனிய, வித்தியாலங்கார, வித்தியோதய சர்வகலாசாலைகளில் பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த இளம் பிக்குகளுக்கு ஜே.வி.பி. இயக்கத்தினது கொள்கையும் திட்டமும் விளங்கப் படுத்தப்பட்டன. சர்வகலா சாலைகளில் கல்விபயிலும் பட்டதாரி மாணவர்கள் இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். பன்சாலைகள், ஆயுதங்களின் மறைவிடமாக மாற்றப்படடன. வன்முறை செயல்களில் ஈடுபடும் இயக்க உறுப்பினர்கள், தங்குமிடமாக சங்கராமய (பிக்குகளின் வசிப்பிடம்) மாற்றப்பட்டன.
பெளத்த பிக்குகள் அதிகமாகப் பங்கெடுத்த, மெளயிம சுரகீம வியாபாரய - (தாய் நாட்டைப் பாதுகாக்கும் இயக்கம்), சிங்கள பல மண்டலய (சிங்கள அதிகார இயக்கம்) ஜாத்திக்க பெறமுன (சிங்கள இன முன்னணி) ஆகிய இன உணர்வை வளர்க்கும் இயக்கங்களாக உருவெடுத்தன. சிங்கள பல மண்டல என்ற சங்கத்தின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவர்தான் சோபித்த

Page 94
160 அ. முகம்மது சமீம்
தேரேர் என்பவர். இச் சங்கங்கள் ஜேவிபி இயக்கத்திற்கு ரகசியமாகன ஆதரவை அளித்தனர்.
இனவாத பிக்குகளை, தமது இயக்கத்தின் ஒரு பிரிவாகச் சேர்க்க ஜேவிபி. இயக்கத்தினர் முற்பட்டனர். ஜே.வி.பி. இயக்கத்தின் சமதர்மக் கொள்கை, தேசியம், தமிழர்களை எதிர்த்தல். (முக்கியமாக) இந்தியத் தோட்டத்தொழிலாளரை எதிர்த்தல் சிங்கள - பெளத்த யாப்பு, ஆகிய கொள்கைகள் இளம் பிக்குகளைக் கவர்ந்தன.
எண்பதுகளில் பெளத்த பிக்குகள் ஜே.வி.பி. இயக்கத்தாரின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கினர். வன் செயல்களில் ஈடுபட்டு அரசாங்க காவல் படைகளால் தேடப்படும், ஜேவிபி இயக்கத்தாருக்கு இப்பிக்குகள் புகலி டம் அளித்தனர். பெளத்த பிக்கு சங்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பை இவர்கள் அமைக்க முனைந்தனர். பெளத்த பிக்கு நிக்கா யாக்களில் இருந்த வேறுபாடுகளை, அகற்றுவதில் வெற்றி கண்டனர். ஜே.வி.பி. இயக்கத்தினர் இளம் பிக்குகளின் இந்த வன் செயல் போக்கினை அவதானித்த, சிரேஷ்ட பிக்குகள் இவ்வியக்கங்களி னின்றும் விலகி நடக்க முற்பட்டனர். தேசப்பிரேமி ஜனதா வியாபாரய (தாய் நாட்டில் பாசமுள்ள மக்கள் இயக்கம்) என்ற ஜே.வி.பி. இயக்கத்தின் படைப்பிரிவில் பிக்குகள் அதிகமாகச் சேர்ந்தனர். அமுனுகம எழுதிய புத்த புத்ர, பூமிபுத்ர என்ற நூலில் பிக்குகளின் இந்நடவடிக்கைகள் மிகவும் விரிவாக விளக்கப் பட்டிருக்கின்றன.
இலங்கை அரசியலில் சாதி அமைப்பு எவ்வளவு தூரம் செல்வாக்கை வகித்ததோ, அதேபோல, இக்குடும்ப - உயர்சாதிக்கு எதிராகத் தோன்றிய புரட்சி இயக்கமும் சாதி அமைப்பினால் பாதிக்கப் பட்டது. பெளத்த பிக்கு சங்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜனநாயகம் என்ற பெயரில் இங்கே உயர் சாதிக் குடும்பங்களின் ஆதிக்கத்தையே காண்கிறோம்.

BIBLIOGRAPHy
1. K.M.de Silva - A History of Sri Lanka (London 1981) 2. K.M. de Silva - Sri Lanka: A Survey (London 1977)
0.
11.
12.
13.
14.
15.
16.
17.
. Sir Charles Jaffries, Ceylon, The Path to Independence
(London 1962)
. S.J. Thambiah - Sri Lanka : Ethnic Fratricide and the
Dismantling of Democracy (New Delhi, Oxford University Press, 1986)
. Census Report - 1971 - (Colombo, Department of Census
and Statistics, 1972)
. W.H. Wriggins, Ceylon; Dilemmas of a New Nation (Princeton,
N.J. 1960)
. H.A.J. Hulugalle - Don Stephen Senanayaks (Colombo 1975) . Janice Jiggins - Caste and family in the politics of the Sinhalese
- 1947 - 1976
. Bryce Ryan - Caste in Modern Ceylon; The Sinhalese System
in Transition, (New Brunswich NJ 1953) M.N. Srinivas - Caste in Modern India and Other Essays (Bombay, 1962) E.R. Leach (ed) - Aspects of Caste in South India, Ceylon and North-West Pakistan, (Cambridge, 1969) D.C.R. Wickremasinghe - The Sinhalese Village, (Miami, Fla, 1958) - Ludowyck - The Modern History of Ceylon, (London, 1966)
Sir Frederick Rees, "The Soulbury Commission, 1944 - 1945 - Ceylon Historical Journal, D.S. Senanayake Memorial Number 5 (1955-6) M.D. Raghavan - The Karava of Ceylon: Society and Culture,
Colombo 1961) v Statistical Abstract of Ceylon, for the years 1960-9, (Colombo, Dept. of Census & Statistics, 1961-70) Ceylon Year Book, 1960 - (Colombo, Dept. of Census & Statistics, 1961)
161

Page 95
162
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
Macmillan Press Ltd., 1974
Preliminary Report on the Socio-Economic Survey of Ceylon,
1969-70 (Colombo, Dept. of Census & Statistics, 1971)
Ceylon: Report of the Commission on Constitutional Reform, (Soulbury Report) (London, 1946)
Sir Ivor Jennings, "The Constitution of Ccylon, (3rd edn. London, 1953)
Report of the Delimitation Commission, Sessional Papers XV, Colombo, The Government Press, 1959)
I.D.S. Weerawardana, Ceylon, General Election, 1956, (Colombo, 1960)
V. Samaraweera, Sri Lanka's 1977, General Election, the resurgence of the UNP, Asian Survey, 17, 12, (December 1977)
Hulugalle, The Life and Times of D.R. Wijewardane, (Colombo, 1960)
Sir. John Kotelawala, An Asian Prime Minister's Story, (London, 1956)
D.B. Dhanapala, Among Those Present, (Colombo, 1962)
K.P.Mukherjee, Madame Prime Minister, Sirimavo
Bandaramaike
J.A. Halangoda, Kandiyan rights and present politics, Kandy, Butler & Co., 1920
Handbook of the Rupee Companies, 1971, Colombo Broker's
Association, 1971
The Life and times of D.R.Wijawardana, Colombo, Lake House Press, 1960
International Labour Organisation, Matching employment opportunities and expectation: a programme of action for
Ceylon, 2 Vol. Geneva, 1971
Sir Charles Jeffries - O.E.G. A biography of Sir Oliver Goonetillake, London Pall Mall Press, 1969
R.N. Kearney, The politics of Ceylon, (Sri Lanka) London, Comell University Press, 1973
A.J. Wilson, Politics in Sri Lanka, 1947-1973. London,

35.
36.
37.
38.
39.
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
63
C.A. Woodward, The growth of party systems in Ceylon, Providence, R.I. Brown University Press, 1969
S.Arasaratnam, "The Ceylon Insurrection of April 1971; some causes and consequences, Pacific Affair, 45,3, (Fall 1972) Tissa Fernando "Elite politics in the new state: the case of post independence, Sri Lanka. Pacific Affair, 46, 3 (1973) Sir Ivor Jennings. The Ceylon General Elections of 1947, University of Ceylon Review, 6,3 (1948)
G. Obeysekere, "Some comments on the social backgrounds of the April 1971 insurgency in Sri Lanka (Ceylon), Journal
of Asian Studies 33, 3 (January 1969)
Urmila Pladoris, "Agalawatte by-election; a case study of the political behaviour of rural Ceylon. International Studies, 10, 3 (1969) Micheal Roberts, Caste conflict and Elite Formation. The Rise of Karava Elite in Sri Lanka 1500-1931, Navrang, Lake House Bookshop, 1995 Results of Parliamentary elections in Ceylon, 1947-1970, Colombo, Dept. of Election, 1971 Ambalavanar Sivarajah, Politics of Tamil Nationalism in Sri Lanka, South Asian Publishers, New Delhi, 1996 Janatha Vimukthi Peramuna, JVP on Tamil issue. Lanka Guardian, Vol.I., No.19, February 1979. V. Karalasingham, A left approach to the minority problem, Logos Vol.16, No.2, August 1977 A.S. Balasingham, Liberation Tigers and Tamil Eelam Freedom Struggle, Madras, 1983 Leslie Goonewardane, A short history of the Lanka Sama Samaja Party, Colombo, Lanka Sama Samaja Party, 1960 Stanley J.Thambiah, Levelling Crowds, Vistaar Publications, New Delhi, 1996 K.M. de Silva, Managing Ethnic Tensions in Multi - Ethnic Societies, University press of America, 1986
A.C. Allas, The JVP, 1969-1989, Lake House Investments (Ltd), (Publishing consultants, 1990)

Page 96
164
, N. Sanmugathasan, A Marxist Look at the History of Ceylon,
December 1974
52. K.M. de Silva (ed) Problems of Governance, International
Centre for Ethnic Studies, 1993
53. S.J. Thambiah, Buddhism Betrayed? Religion, Politics and
Violence in Srilanka, University of Chicago Press, Chicago and London, 1992
54. C.A. Chandraperuma, Sri Lanka: The years of Terror, The
JVP Insurrection, 1987-1989, Colombo, Lake Ilouse Bookshop, 1991 −
55. Tissa Fernando and Robert Kearney, (ed), Modern Sri Lanka:
A Society in Transition, Maxwell School of Citizenship and Public Affairs, Syracuse University, 1979
56. Satchi Ponnambalan, Sri Lanka: The National Question and
the Tamil Liberation Struggle, Zed Books Ltd., 57, Caledamian Road, London, 1983
57. Dayan Jayatilleka, Sri Lanka: The Travails of a Democracy,
Unfinished War and Protrated Crisis. ICES, 1995
58. Charcles Abeysekara, Newton Gunasinghe (ed) Facets of
Ethnicity in Sri Lanka, Social Scientist Association, Sri Lanka, 1987
59. T.D.S.A. Dissanayaka, The Agony of Sri Lanka: An Indepth
Account of the Racial Riots of July 1983, Colombo, Swastika (Pvt) Ltd., 1983. The Dilemma of Sri Lanka, Colombo, Swastika (Pvt) Ltd., 1993 The Politics of Sri Lanka, Colombo, Swastika (Pvt) Ltd., Colombo 1994
60. S.W.R.D. Bandaranaike, The Government and the People,
Dept. of Information, 1959
61. P.Lakshmi Narasu, A Study of Caste, Asian Educational
Services, New Delhi, Madras 1988


Page 97


Page 98
ஒரு சிறுபான்மை
இந்நூல், FLD55ITG. லாதிக்கத்தை எவ்வாறு சிங்கள மக்களில் உய கொய்கம சாதியினர், சாதியினரைக் கூட ஒர சுவைத்து வந்துள்ள விபரங்களுடன், ஆதார தமிழில் வெளிவரும் மு இது புனைந்துரையன்று சாதியினர் எனக் d மேலாதிக்கத்தை நிலை
பேரினவாதத்தை நல்ல க
இலங்கையின் இன் முகமது சமீம் அவர்க சமூகத்தினர் இலங்கை சரியாகப் புரிந்து கொள் நடவடிக்கைகளைச் மதிப்பீடு செய்யவும், ந6 ஒரு வரலாற்றுப் மிகையாகாது.
வரலாற்றுத்

மூகத்தின் பிரச்சினைகள்
இலங்கையில் அரசிய பெரும்பான்மைச் சமூகமாகிய
ர்ந்தோர் குழாம் எனப்பட்ட
தமது இனத்தினரின் பிற ங் கட்டி, அரசியலாதிக்கத்தைச்
னர் என்பதைப் புள்ளி பூர்வமாக எடுத்துக் காட்டும் முதல் நூலாகவும் அமைகிறது. இத்தகைய கொய்கம் உயர் கூறிக் கொள்பவர் தமது நாட்ட சிங்கள - பெளத்த
ருவியாகவும் பயன்படுத்தினர்.
ாறைய யுத்தச் சூழலில் திரு. ளின் இந்நூல் சிறுபான்மை பின் அரசியல் போக்கினைச் வதற்கும், கடந்த கால தமது செய்யவும், ஸ்லதோர் சந்தர்ப்பம் அளிக்கும் பொக்கிசமாகிறது என்றால்
- கலாநிதி சிக சிற்றம்பலம், பேராசிரியர்,
துறை, யாழ். பல்கலைக்கழகம்.