கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சர்வதேச நினைவு தினங்கள் 1

Page 1


Page 2

சர்வதேச நினைவு தினங்கள்
LUITě5th — Ol
கலாபூஷணம்
புன்னியாமீன்
GoleausrflufG: ‘சிந்தனை வட்டம் த.பெ. இல - 01, பொல்கொல்லை, கண்டி. இலங்கை, தொலைபேசி: 0094-81-2493746 / தொலைநகல்: 0094-81-2493892 323/2010

Page 3
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 01
ஆசிரியர் :
பதிப்பு : பதிப்புரிமை : வெளியீடு :
அச்சுப்பதிப்பு :
ISBN : பக்கங்கள் : விலை :
கலாபூஷணம் புன்னியாமீன், B.A(Cey) Dip in Journ (Ind) SLTS 1ம் பதிப்பு - ஜூலை 2010
மஸிதா புன்னியாமீன்
சிந்தனைவட்டம். த.பெ. இல - 01, பொல்கொல்லை, கண்டி, இலங்கை, தொ.பேசி: 0094 812 493746
வெளியீட்டு எண் 321 சீவி. பப்ளிஷர் பிரைவெட் லிமிட்டட் த.பெ. இல - 01, பொல்கொல்லை, கண்டி, இலங்கை. தொ.பேசி: 0094 812 493892/0094 812 493746 978-955-1779-43-6
196
350/-
SARVATHESANINAIVUTHIINANKAL -PAAGAM 01 International Commemoration Days - Part-0
Author : KALABOOSHANAPUNYAMEEN
B.A (Cey) Dip in Journ (Ind) SLTS
Copyright: MAZEEDHAPUNTYAMEEN
Edition: 1" Edition July 2010 Language: Tamil Printers & Publishers: Cinthanai Vattam
CVPublishers (Pvt) Ltd, PBox-01, Polgola, Kandy. Sri Lanka. Tel: 0094 812 493746 / 0094 812493892
ISBN 978-955-177943-6
Pages : 196
Price : 350/.
(CMAZEEDHAPUNIYAMEEN, 2010
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without
the prior written permission of the author,

öFIDjúLJáMrið
என் இலக்கியப் பயணத்தில் நான் முகம் கொடுக்க நேர்ந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளின் போது மனம் நொந்து போயிருந்த சந்தர்ப்பங்களில்
ஆறுதலையும், அறிவுரைகளையும், தந்து, மன வலிமையை எனக்குள் ஊக்குவித்த ஜீவன்.
பேருக்காகவும், புகழுக்காகவுமில்லாமல் தன்னலம் கருதாது பொதுநோக்குடன் செயல்பட்ட ஒரு ஜீவன்.
சக நண்பர்களின் மனோநிலையைப் புரிந்துகொண்டு ஆறுதலளித்து வந்த ஒரு ஜீவன்.
2010.07.02 இல் இறையடியெய்திவிட்ட சகோதரன் ஏ. ஜஹலீம்டீன் அவர்களுக்கு
இந்நூல் காணிக்கை
*飘?
அன்னாருக்கு 'ஜன்னதுல் பிர்தெளஸ்’ எனும் கவனபதி கிடைக்கப் பிரார்த்திப்போம்.

Page 4

ஆழமான தேடலின் பெறுபேறு.
சர்வதேச ரீதியாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சிறப் புத் தினங்கள் பற்றிய தொகுப்பான ‘சர்வதேச நினைவு தினங்கள் என்ற இந்த நூலை புன்னியாமீன் அவர்கள் வெளியிட்டு வைப் பதையிட்டு மகிச்சியடைகின்றேன்.
புன்னியாமீன் அவர்களுடைய கடுமையான உழைப்பு மற்றும் தேடல் என்பன இந்த நூலின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. நூலாசிரியரின் ஆழமான தேடுதல் மூலமாகக் டைத்திருக்கும் தகவல்கள் வாசகர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் பயனுள்ளவையும், பெறுமதி வாய்ந்தவையுமாகும்.
விசேடமாக அக்கறை செலுத்தப்படவேண்டிய விடயங்கள் அல்லது மக்களில் ஒருபகுதியினர் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அதன் பால் மக்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காகவும் ஐ.நா. சபையினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ள தினங்களே சர்வதேச தினங்களாகும். குறிப்பிட்ட தினத் தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் தன் நோக்கம். ஐ.நா. சபையும் மற்றும் அதன் கீழ்வரும் அமைப்புக் களும் சமூக முன்னேற்ற நோக்கத்துடன் செயற்படும் அமைப்புக் களும் இந்த சிறப்புத் தினங்கள் தொடர்பிலான வேலைத்திட்டங் களையும் பிரகடனங்களையும் வெளியிடுகின்றன.
இந்த விசேட தினங்கள் தொடர்பில் மக்களுடைய கவனத்தைத் திருப்பி அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வதற்கு ஐநா சபையோ, அரசாங்கங்களோ எவ்வாறான திட்டங்களை
5

Page 5
வகுத்துக்கொண்டாலும் கூட, இவ்விடயத்தில் ஊடகங்களின் பங்க ளிப்பு இல்லாமல் எதனையுமே சாதித்துவிட முடியாது என்பதே உணர்மை. ஊடகங்கள்தான் இது தொடர்பான தகவல்களை மக்க ளுக்கு வழங்குகின்றன. அதன் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் இடம்பெறுகின்றது. சர்வதேச தினங்கள் தொடர்பில் ஊடகங்களில் குறிப்பாக அச்சு ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகள் இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த இடத்தில் தானி புன்னியாமீன் அவர்களுடைய ஆய்வுகள் மற்றும் தேடல்களின் மூலமாகக் கிடைக்கும் தகவல்கள் கட்டுரை வடிவில் மக்களைச் சென்றடைந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. சர்வதேச தினங்கள் தொடர்பில் வெறுமனே அடிப்படைத் தகவல்களைத் தெரிவிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் பெருமளவு பயனுள்ள தகவல்களைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் தான் ஞாயிறு தினக் குரலில் இந்தக் கட்டுரைகள் வந்தபோது வாசகர்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அவை பெரும் வரவேற்பைப் பெறத்தக்கவையாக அமைந்திருந்தன.
வெறுமனே நுனிப்புல் மேய்தலாக அல்லாமல் புன்னியாமீன எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் மத்தியி லுள்ள தேவையைப் பூர்த்தி செய்வதாகவும், அறிவியல் ரீதியில் அவர்களுக்குச் சரியான ஒரு பாதையைக்காட்டுவதாகவும் அமைந் திருந்தன என்பது உண்மை. இக்கட்டுரைகள் இப்போது தொகுக்கப் பட்டு அழகிய நூலாக வெளிவந்திருப்பது தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது நிச்சயம். புன்னியாமீன் அவர்கள் இதுபோன்ற நூல்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு தமிழ் வாசகர்கள் மத்தியில் காணப்படும் அறிவியல் சார்ந்த தேவைகளை நிறைவுசெய்வதற்கு நிச்சயமாக முன்வருவார் என நம்பலாம்
பாரதி ராஜநாயகம்.
ஆசிரியர், ஞாயிறு தினக் குரல். 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு - 15. ஜலை 07.2010

6T உங்களுடன்.
சிந்தனைவட்டத்தின் 323ஆவது வெளியீடாக என்னால் எழுதப்பட்ட "சர்வதேச நினைவு தினங்கள்” பாகம் 01 எனும்
நூலினை வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
*சர்வதேச நினைவு தினங்கள்” எனும் கருப் பொருள் இன்று உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகவே திகழ்கின்றது. பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும், இலங்கையில் நடைபெறக்கூடிய பல் வேறுபட்ட போட்டிப் பரீட்சைகளை எழுதுபவர்களுக்கும், நினைவு தினங்கள் பற்றிய வினாக்களும் இடம்பெறுவதுணர்டு. எனவே, இத்தகைய மாணவர்களைக் கருத்திற்கொண்டும், அறிவுத் தேட வில் ஈடுபட்டுள்ள வாசகர்களின் தேவையைக் கருத்திற் கொணி டும் இதுவரை என்னால் எழுதப்பட்ட 75 சர்வதேச நினைவு தினங்கள் பற்றிய கட்டுரைகளையும் தொகுத்து ஒரேநேரத்தில் மூன்று பாகங்களாக வெளியிட முடிவெடுத்தேன். அதன் முதற் பாகம் இதுவாம். இத்தொகுதிகளில் இடம்பெறாத ஏனைய தினங்களின் முக்கியத்துவத்தை சர்வதேச நினைவுதினங்கள் பாகம் 04இல் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
“சர்வதேச நினைவுதினங்கள்” எனும்போது ஒரு குறித்த விடயத்தை மையப்படுத்தி அவ்விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் அனுஸ்டிக்கப்படுவதுடன், குறித்த விட யத்தை நினைவுகூருவதாகவும் அமைகின்றது. இத்தினங்களில் பல ஐ.நா. சபையினால் அங்கீகரிக்கப்பட்டவை. சில குறித்த விடயம் தொடர்பான சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படுபவை.
7

Page 6
*சர்வதேச நினைவு தினங்கள்” எனும் இக்கட்டுரைகளை எழுதுவதற்கு மூலவேராக விளங்கியவர் தமிழ் நாட்டைச்சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் மு. இளங்கோவன் அவர்களாவார். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் மாணவர்களின் தேவையைக் கருத்திற் கொண்டு இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபடும்படி தொலைபேசியில் நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொள்ளும்பொழுது அடிக்கடி என்னை வலியுறுத்துவார். இதனடிப்படையில் பேராசிரியர மு. இளங்கோவன் அவர்களின் கருத்து எண் மனதில் ஆழமாகப் பதிந்தது.
இது விடயமாக நான் நூற்றுக் கணக்கான நூல்களையும், உத்தியோகபூர்வமான இணையத்தளங்களையும் வாசித்து தகவல் களைத் தேடலானேன். “சர்வதேச நீர் தினம்” தொடர்பாக நான் ஓர் ஆக்கத்தை எழுதி முதலில் அவருக்கு அனுப்பி வைத்தேன். இக்கட்டுரையைப் படித்த பேராசிரியர் என்னை வெகுவாகப் பாராட்டி இம்முயற்சியைத் தொடரும் படி அறிவுரை வழங்கினார். அக்கட்டுரையை இந்தியாவில் முக்கிய இணையத்தளங்களில் ஒன்றான ' ஒன்இந்தியா - தட்ஸ் தமிழ்’ இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொணிடதுடன், ‘ஒன் இந்தியா - தட்ஸ் தமிழ்’ இணையத்தள ஆசிரியர் திருவாளர் கான் அவர்களையும் எனக்கு அறிமுகஞ் செய்துவைத்தார். இத்தகைய பின்னணியிலேயே எனது இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும், 'ஒன்இந்தியா - தட்ஸ்தமிழ் இணையத்தள ஆசிரியர் திருவாளர் கான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவடைகின்றேன். நிச்சயமாக இவ்விருவரின தும் ஆலோசனைகளும், உந்துதல்களும் இல்லாதிருந்தால் இப்பணி யினை என்னால் மேற்கொள்ள முடியாதிருந்திருக்கும். எனது கட்டு ரைத் தொடர் இந்தியாவில் "ஒன் இந்தியா - தட்ஸ் தமிழ்' இணையத்தளத்தில் வெளிவரத் தொடங்கியதும் அதற்கு பூரண வரவேற்பிருந்தது. இதனை ஆசிரியர் மூலமாகவும், கட்டுரைப் ன்னூட்டங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
பின்பு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தேசம்நெற் இணையத்தள பிரதம ஆசிரியர் த. ஜெயபாலன் அவர் களின் வேண்டுகோளின் பிரகாரம் தேசம் நெற் இணையத்தளத் திலும் இக்கட்டுரைகள் இடம்பெற்றன. அத்துடன், திருவாளர் த. ஜெயபாலனை ஆசிரியராகக் கொண்டியங்கும் "லண்டன் குரல்"
8

பத்திரிகையிலும் இடைக்கிடையே இக்கட்டுரைகள் பிரசுரமாகின. இதனூடாக புலம்பெயர் தமிழ் மக்களிடையே என் கட்டுரைகள் வரவேற்புப் பெறத்தொடங்கின. திருவாளர் ஜெயபாலன் அவர் களுக்கும் இவ்விடத்தில் என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சர்வதேச நினைவு தினங்கள் கட்டுரைத் தொடர் ‘ஒன் இந்தியா - தட்ஸ் தமிழ்’ இணையத்தளத்திலும், தேசம் நெறி இணையத்தளத்திலும் வெளிவரத் தொடங்கியதையடுத்து பல இணையத்தளங்கள் (சுமார் 35க்கும் மேல்) அக்கட்டுரைகளை மறுபிரசுரம் செய்தன. இதனூடாக உலகளாவிய ரீதியிலான இணை யத்தளங்களுடனான என் உறவுகள் அதிகரித்தன. எனது கட்டுரை களை மீளப்பிரசுரம் செய்த அனைத்து இணையளத்தள ஆசிரியர் களுக்கும். என் கட்டுரைகள் இடம்பெறும் போது பின்னூட்டங் களின் ஊடாக வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவித்த வாசகநெஞ்சங்களுக்கும் எண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் இணை யத்தளப் பாவனை குறைவாகும். எனவே, இலங்கை வாசகர்களி டத்தேயும் இக்கட்டுரைகள் சென்றடைய வேண்டுமாயின் அச்சு ஊடகங்கள் ஊடாகவே செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து இலங்கையில் முன்னணி தேசிய பத்திரிகையில் ஒன்றான ஞாயிறு தினக் குரல் ஆசிரியர் திருவாளர் பாரதி இராஜநாயகம் அவர் களுடன் தொடர்பு கொண்டேன். எனது கட்டுரைகளை பிரசுரிக்க அவரும் விருப்பம் தெரிவித்தார். அநேகமான கட்டுரைகளை ஞாயிறு தினக்குரலில் பத்திரிகையிலும் பிரசுரித்தார். திருவாளர் பாரதி இராஜநாயகம் அவர்களுக்கும் இவ்விடத்தில் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய தினம் வரை (03.07.2010) மொத்தமாக 75 சர்வதேச நினைவு தினங்கள் பற்றிய கட்டுரை என்னால் எழுதப் பட்டு பிரசுரமாகிவிட்டன. இதுவரை பிரசுரமான 75 கட்டுரை களையும் மூன்று புத்தகங்களாக(பாகங்களாகப் பிரித்து ஒரே நேரத்தில் வெளியிட முடிவெடுத்ததன் விளைவாகவே இம்முதலாவது பாகம் உங்கள் கைகளில் தவழ்கின்றது.
அதேநேரம், சர்வதேச நினைவு தினங்கள் தொடர்பான எனது முயற்சி மேலும் தொடர்ந்து கொணி டேயிருக்கின்றது. தற்போது என்னால் எழுதப்படும் புதிய ஆக்கங்களையும், ஏற்கனவே 9

Page 7
வெளிவந்த மீளமைக்கப்பட்ட ஆக்கங்களையும், பிரான்ஸிலிருந்து இயங்கும் இலங்கைநெட் இணையத்தளத்திலும், பிரித்தானியாவிலி ருந்து இயங்கும் தமிழ் நிருபர் இணையத்தளத்திலும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. இவ்விடத்தில் இலங்கை நெட், தமிழ் நிருபர் இணையத்தள ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் சர்வதேச நினைவு னங்கள் பற்றி தற்போது என்னால் எழுதப்பட்டு வரும் கட்டுரை களைத் தொகுத்து, இறைவன் நாடினால் இதன் நான்காவது பாகத்தையும் எதிர்காலத்தில் வெளியிடுவேன்.
சிந்தனைவட்டத்தின் ஏனைய முயற்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் வாசகநெஞ்சங்கள் இம்முயற்சியையும் ஆதரிப் பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மிக்கநன்றி அன்புடன்
கலாபூஷணம் பீஎம். புன்னியாமீன்
சிந்தனைவட்டம் த.பெ.இல; 01 பொல்கொல்லை 20250, கண்டி,
இலங்கை. 07.07.2010
10

உள்ளே.
10.
11
சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) LDmjé 8 சர்வதேச மனித உரிமைகள் தினம் (International Human Rights Day) igsLibLij 10 உலக சிக்கன தினம் (Word Thrift Day) scis(3LTuj 31 ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day) es(3LTuj 24 உலக வறுமை ஒழிப்பு தினம் (International Day for the Eradication of Poverty) sids(3LTuj 17 உலக உணவு தினம் (World Food Day) sis(3LITLuj 16 சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது G6.6frg96T hybl 607b (International Day of the White Stick Blindness) sis(3LTuj 15 உலகப் பேரழிவுத் தடுப்பு தினம் (International Day for Natural Disaster Reduction) sis(SLITuj 15 உலக தபால் தினம் (World Post Day) sis(3LTuj 15 ‘அனைத்துலக ஆசிரியர் தினம்’ (Teacher's Day) si(SLTuj 06
13
20
36
45
57
64
72
81
90
100

Page 8
.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
12
உலக அகிம்சை தினம்:
(International Day of Non-Violence)
அக்டோபர் 02 சர்வதேச முதியோர் தினம் (International Day for the Elderly) அக்டோபர் 01 உலக கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day) gigs 27 உலக நடன தினம் (World Dance Day) glugs) 29 உலக இதயநோய் தினம் (world heart day) செப்டம்பர் இறுதி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) gigs) 29 சர்வதேச நீர்வள தினம் (world water day) LDIT & 22 நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஏப்ரல் 22 சர்வதேச மருத்துவிச்சிகள் தினம்
(International Midwives Day) (3LD 5
அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) (IFFD) (SLD 04 சர்வதேச தொழிலாளர் தினம் (International Labor Day) (3LD 01 சர்வதேச நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வு தினம் (International Day for Landmine Awareness and Assistance) 6jugs) 04
உலக சுற்றுலா தினம்
(World Tourism Day) Galilibuj 27 உலக அமைதி தினம் (World Peace Day) Q&LLbu) 21 உலக ஓசோன் தினம் (World Ozone Day) Galill buj 16
உசாத்துணை நூல்கள்
107
16
24
126
131
140
143
149
153
157
159
165
168
176
183
192

O1
சர்வதேச மகளிர் தினம் (International Women's Day)
மார்ச் 8
ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமை களைக் கேட்டு போராடியதை நினைவுகூரத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இத் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனை களை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். இக்கொண்டாட்டங்களில், குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட் டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும், அமைப்புக்கள் சார்ந்தும் ஆக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின் 13

Page 9
சர்வதேச மகளிர் தினம்
மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.
மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப் பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ் வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது.
1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்து வம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க் கொடி உயர்த்தினர்! "ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமை களாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும்” என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!
ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண் கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் ‘விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும்வர்க்கம் அசைந்து கொடுக் கத் தொடங்கியது. ܫ
பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ்ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங் களுக்கு வெற்றிகிடைத்த அந்த நாளே, “மகளிர் தினம்” உருவாக வித்திட்டது.
14 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமின்

சர்வதேச மகளிர் தினம்
1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப் போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தனர். உலகநாடு கள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்பேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARAZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டா டும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்து ரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத்திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து 1911 மார்ச் 19ம் திகதி க்ளாரா ஜெட்கினால் சர்வதேச மகளிர்தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
GagjLD6isi) “The Vote for Women” LDipb serigiC365urrois) “Women's Day” என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு "பெண்கள் உரிமைகள்', 'பாராளுமன்றத்தில் பெண்கள் உட்பட பல கட்டுரை கள் வெளியிடப்பட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், 1913 முதல், மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்தது. ஆனாலும் அது உத்தியோகபூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ஆந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தை யடுத்து 1921ஆம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றி லிருந்து மார்ச் 8ஆந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புணர்னியாமினி 15

Page 10
சர்வதேச மகளிர் தினம்
ஐ.நா சபை பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்களின் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சி களை எடுத்துள்ளது. 1945இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கை கள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்துள்ளது.
1975ஆம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 1977இல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் பெண் கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது. சர்வதேச ரீதியில் பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்கு வித்தது.
இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணு ரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்த முள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந் தது. குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை (Biological Foundation) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிர்களையும் பெண்’ என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல் லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
16 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மகளிர் தினம்
முதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்சிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இது தான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்க சியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.
பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத் துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டான்.
பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். அதனால் சமூகத் தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங் கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுய சிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்கு வதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.
பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, s(55gs(56. Lib (IDEOLOGY), a luifluus) (BIOLOGY), Fepas6 u6) (SOCIOLOGY), வர்க்கம் (CLASS), பொருளாதாரமும் கல்வி uß (ECONOMY AND EDUCATION), Fig (FORCE), LDIT60L Ghusl) (ANTHROPOLOGY), a 6T65u6) (PSYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 17

Page 11
சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள் மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்க ளுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேச மகளிர் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடிந்த போதிலும்கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக் கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனி டமிருந்து அனுமதி கிடைத்துவிட்டால் அதுதான் பெண் விடுதலை என்று, இந்த அறியாமை மாற வேண்டும்.
பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட் சமின்மை. இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மன உணர்வுகள். வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள், அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.
பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண் டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறைப் படுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும், உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.
இவ்விடயம் குறித்து 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில் “அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். “பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது
18 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச மகளிர் தினம்
மட்டும் இலக்கு அல்ல இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல ஆழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும்” என்ற அவர், ‘அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தி ருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித் தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற்கொள்வது பயனுடையதாக இருக்கும்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகைகளும்,
இணையத்தளங்களும்
0 ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : மார்ச் 07.2010
«» லண்டன்குரல் (பிரித்தானியா) : மார்ச் 2010
0 http://thatstamil.oneindia.in/ci/puniyameen/2010/
international-women-s-day.html (@sbgslu IT)
{ http://www.ilankainet.com/2010/03/international-womens
day.html. (ystoirot)
0 http://thesamnet.co.uk/?p=19403 (if 55T6fuT)
0. http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/cj/
puniyameen/2010/international-womem-s-day.html (Göguur)
(d http://sangamamlive.in/index.php?/content/view/7206/
(இந்தியா)
d http://www.oodaru.com/?p=744
d http://ustamil.blogspot.com/p/obituary 3243.html
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 19

Page 12
02
சர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day
டிசம்பர் 10
சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப் படுகொலைகள், அட்டூழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப் பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.
1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட் டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் “மனித உரிமை ஆணைக்குழு" உதயமாகியது. 53 அங்கத்துவ நாடுக ளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக்குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal
20 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
Declaration of Human Rights) ilga5L6OT Lò gaišóluu 5 TG6a56ñ சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையி னால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின.
இந்தப் புனிதநாள் 1950ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) Qasi.T60iiLITLUG 6hl(5&lpg. 3856) LD6igs பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்ற னர்’ என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப் படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத் துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.
இந்நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்ககில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலை மையகத்தில் நடைபெறும். அதேநேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளை யொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக் கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ் வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப்பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டுக் கான தொனிப் பொருள் “எங்கள் அனைவருக்குமான கெளரவமும் 5guib (dignity and justice for all of us) 6T6 rugb(Tg5ub.
1776ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத் தின், “எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார் கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைக
சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 21

Page 13
சர்வதேச மனித உரிமைகள் தினம்
ளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதில் அடங்கு வதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமான வையாகக் கருதப்படுகின்றது.
மனித உரிமைகளின் சுருக்க வரலாறு
மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சி களினால் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கி.மு. 539இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட 'நோக்கப் பிரகடன மும்’ கி.மு. 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட "அசோகனின் ஆணையும்’ கி.பி. 622இல் முகம்மது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மதீனாவின் அரசியல் சாசனமும்’ விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச்சட்ட வரலாற்றில் 1215ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்’ (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.
மறுமலர்ச்சிக் காலத்தில் 1525ஆம் ஆண்டில் விவசாயிக ளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதற்பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “பிரித்தானிய உரிமைகள் சட்ட மூலமும்”, 1789 ஆகஸ்ட் 26ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்’, 1776ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்’, 1789ம் ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள்”
22 சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமின்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
அறிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு நிறுவப்பட்டமை, 1864ஆம் ஆண்டின் “லிபர் நெறிகள்”, 1864ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படை யாக அமைந்ததுடன், இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச்சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.
முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வோர்ஸோ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் ‘சர்வதேச சங்கம்” உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் நடை பெறக்கூடாது, என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக்களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல், நாடுகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளைப் பற்றி கலந்து பேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்பு களைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமை கள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்
1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளை உள்ளடக்கியது. உலக ளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமை கள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைத்துள்ளன. மேலும், இவ்வுறுப்பு ரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டு பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத் திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால்
சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமின் 23

Page 14
சர்வதேச மனித உரிமைகள் தினம்
அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.
மனித உரிமைப் பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும், நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடு மின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித் தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத் தொன்று (321) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சம் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல்பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22-27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமி டம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதில் இறுதி உறுப்புரைகளான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச்சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.
24 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
சர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
உறுப்புரை 1 சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக் கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமான வர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண் பாகப் பெற்றவர்கள்.
உறுப்புரை 2 ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!
உறுப்புரை 3 வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் அனைவருக் குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
உறுப்புரை 4 அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல “யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.
உறுப்புரை 5 சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்து கைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
உறுப்புரை 6 சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு
சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 25

Page 15
PRIGSF மனித உரிமைகள் தினம்
உறுப்புரை 7 சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.
உறுப்புரை 8 ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத் தினால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாயசபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப் படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
உறுப்புரை 9
சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப் படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலா காது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.
உறுப்புரை 10 நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
உறுப்புரை 11
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப் படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்க ளுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்க ளும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.
2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச் செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன் றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய் யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்து டன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்பு டையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.
26 சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
உறுப்புரை 12 அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.
உறுப்புரை 13
ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை.
உறுப்புரை 14 ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
1. வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலி லிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மை யாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.
உறுப்புரை 15 鲁
1. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்
கும் உரிமை உண்டு.
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.
உறுப்புரை 16 விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்பப் பாதுகாப் பிற்கான உரிமை
1. பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும் இனம்,
சர்வதேச நினைவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 27

Page 16
சர்வதேச மனித உரிமைகள் தினம்
தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும், ஒரு குடும்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவ ராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படை யானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசி னாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.
உறுப்புரை 17
சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
1. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக
வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான
வகையில் இழக்கப்படுதல் ஆகாது. -
உறுப்புரை 18 மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையி னுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற் கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனிப் பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.
உறுப்புரை 19 கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும்
28 சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமை யானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.
உறுப்புரை 20
எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுப்பினராக
உரிமை உண்டு.
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்கு
மான சுதந்திரத்துக்கு உரிமை உண்டு.
2. ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டா
யப்படுத்தப்படலாகாது.
உறுப்புரை 21
அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில்
பங்குபற்றவும், பொதுச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான
உரிமை
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியா கவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப் பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமை պ60մ(6. e
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவை யில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
உறுப்புரை 22 சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை,
சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 29

Page 17
சர்வதேச மனித உரிமைகள் தினம்
உறுப்புரை 23 தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை
1.
ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலி னைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வ தற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோ ராயிருப்பதற்கான உரிமையை உடையர்.
ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழி லுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவ ராவர்.
வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத் தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அனுகூல மானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறை களினால் குறை நிரப்பப்படுவதாயிருத்தல் வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற் கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.
உறுப்புரை 24 இளைப்பாறுவதற்கும், ஒய்வெடுக்கவும் உரிமை.
இளைப்பாறுவதற்கும், ஒய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.
உறுப்புரை 25 நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
1.
ஒவ்வொருவரும் உணவு, உடை, உறையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினதும், உடனலத்துக்கும் நல் வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையு டையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை,
30
சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமின்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரண மாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங் களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப் பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினும் சரி அத்த கைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.
உறுப்புரை 26 கல்விக்கான உரிமை
1.
ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டா யப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற்கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயி ருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படுத்து முகமா கவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.
உறுப்புரை 27 தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்ச்சியை பகிர்ந்து கொள்ளும் உரிமை.
1.
சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவி யல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடுப் பதற்கும் எவருக்கும் உரிமையுணடு.
சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 31

Page 18
சர்வதேச மனித உரிமைகள் தினம்
2. அறிவியல், இலக்கிய, கலைப்படைப்பின் ஆக்கியற கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, கருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகை யோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.
உறுப்புரை 28
மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்கு பற்றும் உரிமை. இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும், சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வதேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.
உறுப்புரை 29 ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1.
எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமை யின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்க ளையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரி மைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண் டுமெனும் நோக்கத்துக் காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படு பவராய் அமைதல் வேண்டும். இவ்வுரிமைகளும், சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.
உறுப்புரை 30 இந்த பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது.
32
சர்வதேச நினனவு தினங்கள் - தொகுதி 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட் டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றை யும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவ தற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட் டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித் தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத் தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே. இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர் பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது “சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய், சித்திரவதை, பாகு பாடு ஆகிய பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”
1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995இல் எல்சல் வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ.நா. தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜூன் 14இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.
மனித உரிமைகள் பிரகடனம் ஆரம்பத்தில் ஐக்கிய நாடு கள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 33

Page 19
சர்வதேச மனித உரிமைகள் தினம்
நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் உறுப்புரையில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள் ளார்கள் என்ற வினா எழுகின்றது. சர்வதேச மனித உரிமை பிரகடனததில் குறிப்பிட்டுள்ள பல உறுப்புரைகளை இலங்கை மீறியுள் ளமைக்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.
மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப் புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ.நா. ஸ்தாபனம் இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒருமையமாகச் செயற்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக்கூறும் 21ஆம் உறுப்புரையை மீறியது. அதாவது மலை யகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1956ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் உறுப் புரை 2உம் 3உம் மீறப்பட்டன. 1956ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் உறுப்புரை 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964ஆம் ஆண்டு ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் உறுப்புரை 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப் பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் உறுப்புரை 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம்மூலம் உறுப்புரைகள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடுக்கிக் கொண்டு Gustasoost Lib.
இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது. இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப் படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவநிலை, எதேச்சை யாகக் கைது செய்யப்படல், காணாமற்போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை
34 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமீன்

சர்வதேச மனித உரிமைகள் தினம்
மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர்நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும்,
இணையத்தளங்களும்
Ο ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : டிசம்பர் 06.2009
() லண்டன்குரல் (பிரித்தானியா) : டிசம்பர் 2009
() http://thesamnet.co.uk/?p=18076 (Sfig5ITGofurt)
() http://thatstamil.oneindia.in/c/puniyameen/2009/
1210-international-human-rights-day1.html (Sjögus)
Κ) http://www.ilankainet.com/2009/12/international
human-rights-day.html (JT6örgb)
0 http://sangamamlive.in/index.php?/content/view/6612/32/
(இந்தியா)
() http://www.neruppu.com/?p=14277(LishugL)
() http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/c/
puniyameen/2010/- (f6irLigiiL)
() http://www.penniyam.com/2009/12/10.html
(மீள்பதிப்பு)
() http://www.karuthurimai.net/news/dec-9-2009-5-35
13-am-13 (மீள்பதிப்பு)
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 35

Page 20
03
உலக சிக்கன தினம் (Word Thrift Day)
அக்டோபர் 31
“சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி உலக சிக்கன $60TLb (Word Thrift Day) Qa5|T606, LITLLu(6&pg.
சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924 இல்
இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்க ளிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் ‘உலக சிக்கன தினம்’ என ஒரு தினம் கொண் டாடப்பட வேண்டும் எனவும், இத்தினத்தில் சேமிப்பு, சக்கணம் போன்றவை பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத் தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.
இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார்.
36 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சிக்கன தினம்
“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது. பணமில்லா விட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை’ என்று (குறள் 759).
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றனர் ஆன்றோர். இந்தக்கூற்று பொருள் தேடுவதற்கான அவசியத்தை உணர்த்து கின்றது. இருப்பினும் சிலர் கூறுவார்கள் “சம்பாதிக்கிறேன் ஆனால் வரும் வருவாயோ மிகக் குறைவு. வாழ்க்கையை எப்படிச் சமாளிப் பது எனறு தெரியவில்லை.” இதற்கு வள்ளுவர் பின்வருமாறு பதில் கூறுகிறார். “ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை. போகாறு அகலாக் கடை” (குறள் 478). வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை. அதாவது வருவாய்க்குள் செலவு செய்பவனுக்குத் தீங்கு இல்லை, கவலைகள் இல்லை. எனவே மேற்படி கருத்துகளில் இருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறையிலுள்ள பழக்கமாகும். பிடியரிசி எமது தாய்மாரிடையே பண்டைக்கால முதல் இருந்துவந்த பழக்கமாகும். இப்பழக்கம் சிக்கனத்தையும், அதேநேரம் சேமிப்பையும் வழியுருத்தி நிற்கின் றது. மனிதன் தனது வருமானத்தின் ஒரு பகுதியை நுகர்வுக்கும் இருபகுதிகளை முதலீடுகளுக்கும். எஞ்சும் பகுதியை திடீர் அவசரத் தேவைகளுக்குமாக சேமிக்க வேண்டுமென கெளதம புத்தர் உப தேசித்துள்ளார். சிக்கனமாக வாழ்ந்து சேமிப்பின் மூலம் சுபீட்சம் பெறலாமெனும் சிந்தனை புராதன காலத்திலிருந்தே நிலவி வந்துள்ளது.
ஆதி மனிதன் வேட்டையாடிய மாமிசத்தைக் காயவைத் தும், தேனில் ஊறவைத்தும் தேவைக் கேற்ப நுகர்ந்தான். விவசாய யுகத்தில் “நெற்கதிர்’களை அமைத்து சிக்கன முறையால் நெல்லைச் சேகரித்து வைத்தான். பின்பு விவசாயத்திற்காக நீரைச் சேமிக்கவும் பழகினான். ‘வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் கடலில் பாயவிடாது பயன்படுத்தவேண்டும்’ என மன்னன் பராக்கி ரமபாகு கூறினான்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 37

Page 21
உலக சிக்கன தினம்
கி.பி. நாலாம் நூற்றாண்டில் (கி.பி 303-331) ஆட்சிபுரிந்த கீர்த்திஸ்ரீ மேகவர்ன மன்னனால் பொறிக்கப்பட்ட தோனிக்கல் சிலாசனத்தில் பயறு, உளுந்து, சாமை, இறுங்கு போன்ற தானியங் கள் சேமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தோமஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞா னிகளில் ஒருவராவார். பல விஞ்ஞான சாதனங்களைக் உலகுக் குத் தந்தவர். அவர் தனது சக்திகளை ஒரு முனைப்படுத்திய தோடு, பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இந்த சேமிப்பு மட்டும் இல்லாதிருந்தால் அவர் வெளியுலகத்திற்குத் தெரியப்படாமலேயே இருந்திருப்பார் என தற்போதைய சில ஆய்வா ளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், சேமித்த பணமே அவரின் சாதனைகளை உலகம் அறியச் செய்தது. அவரைப் புகழேணிக்கு ஏற்றியது. தோமஸ் ஆல்வா எடிசனின் இந்த அனுபவம் அனைவ ருக்கும் ஒரு படிப்பினையாகும்.
“சிக்கனம் என்பதை முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனை யை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே, இந்த முறை யிலே அந்தச் சிக்கனம், சிந்தனை, சிறந்த பண்பு, சீர்த்திருத்த முடன் வாழ்வு, துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா? போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக்கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப் பொழுது தான் குடும்பத்திலே அமைதி இருக்கும், சீர்திருத்தம் பரவ முடியும், சிக்கனம் நிலைக்க முடியும், நலம்பெற முடியும். எனவே, அந்த முறையிலே சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால், அந்தச் சிந்தனை யாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்”, என்று ஒரு முறை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டார்கள். இது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும். தனிப்பட்ட நபராகவன்றி குடும்பமாக வாழ்பவர்கள் அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.
செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.
38 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சிக்கன தினம்
(1) கஞ்சத்தனம் (2) சிக்கனம் (3) ஆடம்பரம் (4) ஊதாரித்தனம்
கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக் குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது குறித்த மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.
சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரி கமும், பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன். தேனி, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்ப தும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவ தும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை கொடுக்கப் போதுமாகும்.
ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்கா ரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியா மல் நடை உடை பாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவவாயிலாக நாம் காண்கின்றோம்.
ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக் திக்கு மீறிச் செலவிடுவது. ஒருமுறை அமெரிக்க "போர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், “சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார்,
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 39

Page 22
al-Abas fis8561 isotb
தாங்கள் ஏன்.? உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இது தான். “அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!” சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை, போது மென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள் ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்துவிட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தா லும் ஒவ்வொன்றாய் அவற்றை இழந்துவிட நேரும்.
ஆடம்பரம், ஊதாரித்தனம் என்பன மனிதனை அழித்துவிடக் கூடிய சக்திமிக்கவை. தமது வருமானத்தை விட அதிகமான செலவுகள் செய்யும்போது மனிதன் ஒரு கடனாளியாக அல்லது சட்டத்தால் நிராகரிக்கப்பட்ட விடயங்களை செய்யக்கூடிய ஒருவராக மாறி விடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளை வுகள் மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். பொதுவாக நாட்டார் வழக்கில் 'விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும்’ என்பார்கள். ஆடம்பரம், ஊதாரித்தனம் அதிகரிக்கும்போது விரலை மிஞ்சிய வீக்கம் சில சமயங்களில் விரலையே செயலிழக்கச் செய்துவிடலாம்.
இந்த நவீன காலகட்டத்தில் பணத்திற்கு பதிலாக கிரடிட் அட்டை (CREDIT CARD) முறை புழக்கத்திற்கு வந்துவிட்டது. சில கிரடிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது வரையறையில்லா மல் பயன்படுத்துவதையும் இதனால் பின்பு அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம். பணத்தைப் பணமாக வழங்கும்போது ஏற்படக்கூடிய பக்குவம் சிலருக்கு கிரடிட் அட்டை களை பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை. இந்த கிரடிட் அட்டை கள் பாவனையிலுள்ள எல்லா வெளிநாடுகளிலும் CREDTCARD HISTORY என்று சொல்லப்படும் அட்டையைப் பயன்படுத்திய பின் உரிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தி இருக்கிறார்களா என்ற கடன் வரலாற்றைப் பார்க்கிறார்கள். இந்த அட்டைகளுக்கான பணத்தைத் தருவதில் தாமதம் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட் டால் அவர்கள் அட்டை செல்லா அட்டைகளாக ஆகிவிடும். ஆகவே பொருள்களை இப்படி வாங்குபவர்கள் பலமுறை யோசனை செய்து அவற்றை வாங்குவதோடு, பணம் திருப்பித் தருவதை உறுதி செய்ய வேண்டும்.
40 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக சிக்கன தினம்
நவீன உலகில் முறைகள் மாறினாலும் அடிப்படையை நோக்கினால் நாம் காண்பது மனிதனின் மனோநிலையைத் தான். ஊதாரித்தனமான செலவு என்ற மனோநிலையை மாற்றி, தேவைக் கேற்ற செலவு என்ற மனோநிலையைக் கொண்டால் சேமிப்பது நிச்சயம். இதை மீறி கடனுக்கு நாம் பழகிவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி நேரிடும்.
உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறி usism Tj:- “NEITHER A BORROWER NOR A LENDER BE; FOR LOAN OF IT LOSES BOTH ITSELF AND FRIEND; IT ALSODULLS THE EDGE OF HUSBANDRY” asL6 61st Elgiugi னாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில் பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அத்தோடு குடி வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.
தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச் சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகை
கள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன.
தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பு எனும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், பொருளா தார சுதந்திரத்திற்கும் மிக அடிப்படையான காரணிகளுள் ஒன்றா கும். சேமிப்பு சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. சிக்கனம் என்பது வளங்களை மிக கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வ தைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கணம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, குடும்ப மட்டத்திலும் சரி, தேசிய மட்டத்திலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும்.
பிரான்ஸ் நாட்டவரான ஹியூக் டெலர்ஸ்ரே என்பார், 1611ல் முதன் முதலாக சேமிப்பு பற்றிய எண்ணக் கருக்களைக் கொண்ட
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 41

Page 23
உலக சிக்கன தினம்
ஒரு கருத்திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைத்துள்ளார். சேமிப்பு வங்கியென ஏற்றுக்கொள்ளத்தக்க முதலாவது வங்கி 1778ல் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1810இல் ஸ்கொட்லாந்தவரான ஹென்றிடிக்கள் சேமிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபித்தார். சமூகத்தில் நிலவிய வறுமை, நிதிமுடக்குகள் போன்ற வற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக இந்நிறுவனத்தை அவர் நிறுவினார். நாளடைவில் உலகளாவிய ரீதியில் சேமிப்பு வங்கிகள் கணிசமானளவு நிறுவப்பட்டுச் செயற்படலாயின.
பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் அவசியமென உணரப்பட்டது. 19ம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு நிறுவனங்கள் உருவாகின. இலங்கையில் சேமிப்பு வங்கிகளை நிறுவிய முன்னோடியாக ஆளுநர் சேர். ரொபர்ட் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர் பொன்னம்பலம் இராம நாதன் போன்றோர் கருதப்படுகின்றனர். 1832.08.06ம் திகதி ஸ்தா பிக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி, இலங்கையின் முதலாவது சேமிப்பு வங்கியாகும். இவ்வங்கி கொழும்பு நகரில் உயர்மட்டப் பிரமுகர்களையும் சில வர்த்தகர்களையும் கொண்டமைந்தது. சேமிப்புக் கணக்குகள் தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டன. வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே இவ்வங்கி இயங்கியது. இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும் வங்கி யின் வளர்ச்சி குன்றியே காணப்பட்டது. ஒரேயொரு கிளை மட்டுமே செயற்பட்டது. வைப்புக்கள் கச்சேரி மூலம் ஏற்கப்பட்டன. சேர் பொன. இராமநாதன் 1885.04.16ல் அஞ்சல் நிருவாகத்தினுள் அஞ் சலக சேமிப்பு வங்கியை அறிமுகஞ் செய்தார். 1938 செப்டெம்பரில் அஞ்சல் தலைமை அதிபரின் கீழ் சேமிப்புப் பத்திர நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. 1942ல் இம்முறை விஸ்தரிக்கப்பட்டு இரண்டாம் உலக மகாயுத்தத்துடன் இலங்கை யுத்த சேமிப்பு இயக்கமெனும் ஓர் அமைப்பு உதயமானது.
மறைந்த நிதியமைச்சர் யூ.பி. வன்னி நாயக்காவினால் தேசிய சேமிப்பு வங்கி பற்றிய மசோதாவொன்று 1969.08.31ல் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டதெனினும் மறைந்த கலாநிதி என்.எம்.பெரேரா கொண்டு வந்த மசோதாவின் பிரகாரம் 1971ம் ஆண்டின் 3ம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கமைய இலங்கை சேமிப்பு வங்கி சேமிப்புச் சான்றிதழ் நிதியம் தபாலக சேமிப்பு என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1972.03.16ம் திகதி முதல்
42 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சிக்கன தினம்
தேசிய சேமிப்பு வங்கி அமைக்கப்பட்டது. பாடசாலைப் பிள்ளைக ளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக பாடசாலை வங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனைய வர்த்தக வங்கி களிலும் சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
மூன்றாம் உலக நாடு என்ற வகையில் பொருளாதார ரீதி யில் எமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு நாம் எமது உள்நாட்டு மூலதனத்தைப் பெருக்கும் வழிவகைகளைத் தேடவேண்டும். நாட்டின் எதிர்காலத் தேவைக ளுக்குத் தேவையான முதலீட்டில் ஒரு பகுதியையேனும் சேமிப்புக் கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்தக்காலில் நிற்பதற்கு (Self Reliance) எமது சிக்கன நடத்தைகளும் சேமிப்பும் எவ்வளவு துணைபுரியும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டுச் சிக்கனமும், சேமிப்புமே நாட்டின் முதலீட்டை அதிகரிக்கும் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு கவர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
சிக்கனம் சேமிப்பு எனும்போது நவீன உலகில் பரந்துபட்ட ரீதியில் சிந்திக்கையில் பணச் சேமிப்பு என்பதைவிட அதன் பொருள் மேலும் பலதாக பிரிந்து செல்வதை அவதானிக்கலாம். உதாரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு எரிபொருள் சிக்கனம் சில பிரதேசங்களில் நீர் சிக்கனம் சில பிரதேசங்களில் உணவுப் பொருட்கள் சேமிப்பு என பலதுறைகளுடனும் தொடர்புபடுகின்றது. தண்ணிரை சிக்கன மாக பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக சில எளிய வழிமுறைகளைக் கொண்ட சி.டி.க்களை பள்ளிகளுக்கு இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு விநியோகித்து வருகிறதாகவும், சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு தண்ணிர் விழிப்புணர்வு மற்றும் சிக்கனம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. தண்ணிர் வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட தண்ணிர் சிக்கனம் குறித்த கல்விப் பாடங்கள் அடங்கிய சி.டி.க்களே அவை.
தற்போதைய பொருளாதார சமூக சூழலில் எரிபொருள் சிக்கனம் என்பது சமூக தன்மை வாய்ந்த மிக முக்கிய பிரச்சினை யாகும். எரிபொருள் சிக்கனம் நன்றாக கையாளப்பட்டால் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது வெளிப் படை. கட்டுப்பாட்டான எரிபொருள் அளவை முழுமையாக பயன்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின் 43

Page 24
உலக சிக்கன தினம்
படுத்தினால் அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த நன்மை தரும். முழு சமூகத்திலும் எரிபொருள் சிக்கனத்தை முன்னேற்றி அதன் பயன்பாட்டுப் பயனை உயர்த்தும் வகையில் சீன அரசு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் நாள் எரிபொருள் சக்கனம் பற்றிய சட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் தூரநோக்குத் திட்டத் திற்கு இது மிக சிறந்த முயற்சியாகும். எரிபொருள் சிக்கனம சீனாவின் அடிப்படை கொள்கையாக கருதப்பட்டுள்ளது. அதேநேரம் 2010ம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களின் எரிபொருள் செலவினை 20 வீதத்தால் குறைப்பதென்ற குறிக்கோளை சீன அரசு முன்வைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இன்று பேணப்படுகின்றது. அத்துடன், இத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. எதிர்கால சந்ததிக்கான தற் போதைய சேமிப்பு நடவடிக்கைகளாக இவைகள் கருதப்படுகின்றன.
இவ்வாறாக நாட்டுக்கு நாடு பல்வேறுபட்ட வகைகளில் பல்வேறுபட்ட கோணங்களில் சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. இது மட்டுமன்றி சிறு வயதிலே சிறார்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தனிப்பட்ட சேமிப்பினையும், சிக்கனத்தையும் புகட்டக் கூடிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரத் தில் மாணவர்களின் பாடப்பரப்புகளினூடாகவும் சேமிப்பினதும், சிக்கனத்தினதும் முக்கியத்துவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நவீன இக்காலகட்டத்தில் சிக்கனம், சேமிப்பு எனும் வார்த்தைப் பதங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை அலகில் அல்லா மல் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப் படுவதை நாம் அவதானிக்கின்றோம். மேற்குறிப்பிட்ட நிலைப்பாடு களை உலக சிக்கன தினமான இத்தினத்தில் கருத்திற் கொள்வோமாக!
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகைகளும்,
இணையத்தளங்களும்
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : நவம்பர் 01.2009
() http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/1102-word
thrift-day.html (6)'báluIII)
() http://thesamnet.co.uk/?p=17344 (fig55Tasium)
44 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

04
ஐக்கிய நாடுகள் தினம்
(United Nations Day)
ஒக்டோபர் 24
முதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.
ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனை விட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலகமகாயுத்தம் ஏற்பட்டது. அதுவே 2ம் உலக மகாயுத்தமாகும்.
2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமினி 49

Page 25
ஐக்கிய நாடுகள் தினம்
நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற் றும் நோக்கோடு 1945இல் தோற்றுவிக்கப்பட்டது. 2ம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவுசெய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்தஅமைப்பு ஜனவரி1. 1942 முதல் போர்க்கால கூட்டணியாகச் செயற்பட்டது.
இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஸ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்று கூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனிநிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன. இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான் ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கு பற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 ஒக்டோபர் 24ம் திகதி இச்சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திட்ட பின்பே அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10, 1946இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960 இல் 100 நாடுகளும், 1980ஆம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்த இவ்வமைப்பில் 2009 ஆண்டு தரவுகளின் படி தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளாக அரபு, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யமொழி, எசுப்பானிய மொழி என்பன காணப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வ ருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை
46 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின்

ஐக்கிய நாடுகள் தினம்
வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத் தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவை களே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப்
பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
QuTg513 g60)u (General Assabbly), LITg535|TL3 g60L. (Security Council), GUIT(56TTg5 TD, Feup85 F60L (Socio Economic Council), gbiblis605 Gurg L& F60)u (Trustieship Council), dj6(353 figud6örplb (International Court of Justice), Qsu6).5lb (The Secretariat)
பொதுச்சபை
192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தான வர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64-வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விடயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியுயோர்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும், எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 47

Page 26
ஐக்கிய நாடுகள் தினம்
முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.
இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறை வேற்றப்படும் அவையாவன: அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தர்மகர்த்தா, நீதி, நிர்வாகம், சிறப்பு அரசியல் குழு என்பனவாகும். பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களை யும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களை யும், பொதுச் செயலாளரையும் பொதுச்சபையே தெரிவு செய்யும்.
பாதுகாப்புச்சபை
இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15 ஆகும். நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா, அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தெரிவு செய்யும். பாது காப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்து வதற்கும் யப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத் துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேநேரம் இந்தி யாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெற முயன்று வருகிறது.
பாதுகாப்புச்சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண் டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேர ணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் ‘வீட்டோ” எனப்படும். இந்த “வீட்டோ” அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதேநேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஸ்யா, சீனாவிடம் இல்லா விடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்துவிட்டிருக் கும் எனவும் கூறப்படுகிறது.
பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்
ஐ.நா.வின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப
உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்
களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல்,
48 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் ! ; கலாபூஷணம் புனினியாமீனி

ஐக்கிய நாடுகள் தினம்
இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழி முறைகளை முன்வைத்தல்
இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக் கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப் படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா. மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ் வாகவே கருதப்படுகிறது.
பொருளாதார சமூக சபை
அங்கத்துவ நாடுகள் 54 ஐக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக் கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயோர்க்கிலும், ஜூலை மாதத்தில் ஜெனிவா விலும் கூடும்)
இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக் கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர் புகள்குழு, புள்ளிவிபரக்குழு, சனத்தொகைக் குழு, சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்குழு, பெண்கள் நல பாதுகாப்புக்குழு மேலும் ஐரோப்பிய ஆசிய, லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
நம்பிக்கைப் பொறுப்புச்சபை
சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுக ளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறு வர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு
சர்வதேச நினனவு தினங்கள் . பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 49

Page 27
ஐக்கிய நாடுகள் தினம்
இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கின்றது.
சர்வதேச நீதிமன்றம் V−
இது ஹெய்க் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குக ளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்)
செயலகம்
ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற் றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் ‘பன்- கீ மூன்” ஆவார். செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விட யத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவ தாகும். ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.
சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியா மற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண் டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதி யில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்று விக்கப்பட்டன. எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டு மாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப் பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்தவில்லையென்று முற்று முழுதாகக் கூறமுடியாது.
50 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீனி

ஐக்கிய நாடுகள் தினம்
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுக ளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியா மல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவ டைந்துள்ளமை. 1967ஆம் ஆண்டு ஐ.நா.வின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, 1968ஆம் ஆண்டில் சோவியத் - செக்லோஸ்லாவியா பிரச்சினை, 1974ஆம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991ஆம் ஆண்டு அமெரிக்க ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க - ஈராக், அமெரிக்க - ஆப்கான் யுத்தம். இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா.சபை உலக சமாதானத்தைப் பேண வில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதா னத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
பிரச்சினை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை, சட்ட அதிகா ຫມໍ பொருந்தியதாக இன்மை, வல்லரசுகள் ஐ.நா.சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல், அமைப் பினுள் வல்லரசுகளின் தலையீடு, இத்தகைய தலையீடுகளுக்கி டையே ஐ.நா. சபை செயற்பாடு சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா.சபை தவறி விட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக் காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரித்தானியா 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவி யத் ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரித்தானியாவின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம், பொருளாதாரச் சுரண்டல், இராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 கலாபூஷணம் புன்னியாமீன் 51

Page 28
ஐக்கிய நாடுகள் தினம்
நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர, மறை முகமர்க ஐ.நா. சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா? இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதா னத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான கருமங் களை இது ஆற்றிவருவதை எம்மால் மறுக்கமுடியாது.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளங்களும்
0 ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : அக்டோபர்25. 2009
() http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/24-united
nations-day1.html (Sbóluura)
() http://thesamnet.co.uk/?p=17303 (îlfjögörGaffluum)
() http://nayanaya.mobi/v/http/thatstamiloneindia.in/comment/
2009/10/-/cj/puniyameen/2009/24-united-nations-day1.html (மீள்பதிப்பு) -
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் Member State, Date of Admission ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளும், உறுப் புரிமை பெற்ற தினங்களும் வருமாறு: ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை. ஆங்கில அகரவரிசைப்படி நாடுகள் இடம்பெற்றுள்ளன.
1. Afghanistan 19-11-1946 2. Albania 14-12-1955 3. Algeria 08-10-1962 4. Andorra 28-07-1993 5. Angola 01-12-1976
52 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமினர்

ஐக்கிய நாடுகள் தினம்
Antigua and Barbuda Argentina
Armenia
Australia
Austria
Azerbaijan
Bahamas
Bahrain
Bangladesh Barbados
Belarus
Belgium
Belize
Benin
Bhutan Bolivia (Plurinational State of) Bosnia and Herzegovina Botswana
Brazil Brunei Darussalam Bulgaria Burkina Faso Burundi
Cambodia
Cameroon
Canada
Cape Verde Central African Republic Chad
Chile
China
Colombia
Comoros
Congo
Costa Rica Côte D’Ivoire
Croatia
Cuba
Cyprus Czech Republic
Democratic People's Republic of Korea Democratic Republic of the Congo
Denmark Djibouti
Dominica Dominican Republic
Ecuador
11-11-1981 24-10-1945 02-03-1992 0-1-1945
14-12-1955.
02-03-1992 18-09-1973 21-09-1971 17-09-1974 09-12-1966 24-10-1945 27-12-1945 25-09-1981 20-09-1960 21-09-1971 14-11-1945 22-05-1992 17-10-1966 24-10-1945 21-09-1984 14-12-1955 20-09-1960 18-09-1962 14-12-1955 20-09-1960 09-11-1945 16-09-1975 20-09-1960 20-09-1960 24-10-1945 24-10-1945 05-11-1945 12-11-1975 20-09-1960 02-11-1945 20-09-1960 22-05-1992 24-10-1945 20-09-1960 19-01-1993 17-09-1991 20-09-1960 24-10-1945 20-09-1977 18-12-1978 24-10-1945 21-12-1945
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்
53

Page 29
ஐக்கிய நாடுகள் தினம்
53. Egypt 24-10-1945 54. El Salvador 24-10-1945 55. Equatoral Guinea 12-11-1968 56. Eritrea 28-05-1993 57. Estonia 17-09-1991 58. Ethiopia 13-11-1945 59. Fiji 13-10-1970 60. Finland 14-12-1955 61. France 24-10-1945 62. Gabon 20-09-1960 63. Gambia 21-09-1965 64. Georgia 31-07-1992 65. Germany 18-09-1973 66. Ghana 08-03-1957 67. Greece 25-10-1945 68. Grenada 17-09-1974 69. Guatemala 21-11-1945 70. Guinea 12-12-1958 71. Guinea Bissau 17-09-1974 72. Guyana 20-09-1966 73. Haiti 24-10-1945 74. Honduras 17-12-1945 75. Hungary 14-12-1955 76. Iceland |19-11-1946 77. India 30-10-1945 78. Indonesia 28-09-1950 79. Iran (Islamic Republic of) 24-10-1945 80. Iraq 21-12-1945 81. Ireland 14-12-1955 82. Israel 11-05-1949 83. Italy 14-12-1955 84. Jamaica 18-09-1962 85. Japan 18-12-1956 86. Jordan 14-12-1955 87. Kazakhstan 02-03-1992 88. Kenya 16-12-1963 89. Kiribati 14-09-1999 90. Kuwait 14-05-1963 91. Kyrgyzstan 02-03-1992 92. Lao People's Democratic Republic 14-12-1955 93. Latvia 17-09-1991 94. Lebanon 24-10-1945 95. Lesotho 17-10-1966 96. Liberia 02-11-1945 97. Libyan Arab Jamahiriya 14-12-1955 98. Liechtenstein 18-09-1990 99. Lithuania 17-09-1991
54 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

ஐக்கிய நாடுகள் தினம்
100. 101. 102. 103. 104. 105. 106. 107. 108. 109. 110. 111. 112. 113. 114. 15. 16. 117. 118. 19. 120. 121. 122. 123. 124. 25. 126. 127. 128. 129. 130. 131. 32. 133. 134. 135. 136. 137. 138. 139. 140. 14. 142. 143. 144. 145. 146.
Luxembourg Madagascar Malawi Malaysia Maldives Mali
Malta Marshall Islands Mauritania Mauritius Mexico Micronesia, Federated States of Monaco Mongolia Montenegro Morocco Mozambique Myanmar Namibia Nauru Nepal Netherlands New Zealand Nicaragua Niger Nigeria Norway
. Oman
Pakistan
Palau
Panama Papua New Guinea Paraguay
Peru
Philippines
Poland
Portugal
Qatar Republic of Korea Republic of Moldova Romania Russian Federation Rwanda Saint Kitts and Nevis Saint Lucia Saint Vincent and the Grenadines Samoa
24-10-1945 20-09-1960 01-12-1964 17-09-1957 21-09-1965 28-09-1960 01-12-1964 17-09-1991 27-10-1961 24-04-1968 07-11-1945 17-09-1991 28-05-1993 27-10-96 28-06-2006 12-11-1956 16-09-1975 19-04-1948 23-04-1990 4-09-999 4-12-1955 10-12-1945 24-10-1945 24-10-1945 20-09-1960 07-10-1960 27-11-1945 07-10-1971 30-09-1947 15-12-1994 13-11-1945 10-10-1975 24-10-1945 31-10-1945 24-10-1945 24-10-1945 4-12-1955 2-09-1971 17-09-1991 02-03-1992 14-12-1955 24-10-1945 18-09-1962 23-09-1983 18-09-1979 16-09-1980 15-12-1976
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்
55

Page 30
ஐக்கிய நாடுகள் தினம்
147. San Marino 02-03-1992 148. Sao Tome and Principe 16-09-1975 149. Saudi Arabia 24-10-1945 150. Senegal 28-09-1960 51. Serbia 01-11-2000 52. Seychelles 21-09-1976 53. Sierra Leone 27-09-1961 54. Singapore 21-09-1965 55. Slovakia 19-01-1993 156. Slovenia 22-05-1992 57. Solomon Islands 19-09-1978 158. Somalia 20-09-1960 159. , South Africa 07.11-1945 160, Spain 14-12-1955 16. Sri Lanka 14-12-1955 162, Sudan 12-11-1956 163. Suriname 04-12-1975 164. Swaziland 24-09-1968 165. Sweden 19-11-1946 166. Switzerland 10-09-2002 167. 器 Arab Republic 24-10-1945 68. ajikistan 02-03-1992 69. Thailand 16-12-1946 170. The former Yugoslav Rep.of Macedonia 08-04-1993 71. Timor-Leste 27-09-2002 72. Togo 20-09-1960 173. Tonga 4-09-1999 174. Trinidad and Tobago 18-09-1962 75. Tunisia 12-11-1956 176. Turkey 24-10-1945 177. Turkmenistan 02-03-1992 178. Tuvalu 05-09-2000 179. Uganda 25-10-1962 180. ine 24-10-1945 181. United Arab Emirates 09-12-1971 182. United Kingdom, Northern Ireland 24-10-1945 183. United Republic of Tanzania 14-12-1961 184. United States of America 24-10-1945 185. Uruguay 18-12-1945 186. Uzbekistan 02-03-1992 187. Vanuatu 15-09-1981 88. Venezuela, Bolivarian Republic of 15-11-1945 89. VietNam 20-09-1977 190. Yemen 30-09-1947 191. Zambia 01-12-1964 192. Zimbabwe 25-08-1980
Source : Press Release ORG/1469 of 3 July 2006
sBaiti : http://www.un.org/
http://erc, unesco, org/portal UNESCOMember States.asp?language=en
56 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமினி

05
உலக வறுமை ஒழிப்பு தினம் International Day for the Eradication of Poverty
அக்டோபர் 17
d 603s 6 p.60LD gll piT6ft (International Day for the Eradication ofPoverty) ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 17ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் மிகவும் அடி மட்டத்தில் வாழ்கின்றார்கள். இவர்களின் நாள் வருமானம் 1.25 டொலர் ஆகும்.
சர்வதேச ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வறுமை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 1992ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புத் தினத்தை உத்தியோகபூர்வமாக அறி வித்தது. "வறுமைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வேண்டுகோள்”, 2009ஆம் ஆண்டின் சர்வதேச வறுமை ஒழிப்பு நாளின் தலைப்பாகும்.
இந்நாள் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை,
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன் 57

Page 31
உலக வறுமை ஒழிப்பு தினம்
பயம் என்பவற்றுக்குப் பழியானோரை கெளரவிக்கும் வகையில் சுமார் பத்தாயிரம் மக்கள் “டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினர். இவர்கள் உலகளா விய ரீதியில் வறுமை நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோசத் தினை முன்வைத்தனர்.
வறுமை நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப் படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப் படுகின்றது. தீவிர வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25 டாலர்களுக்கும் குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்து வது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். பொதுவாக வறுமை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.
உலகளாவியரீதியில் வறுமை சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் (2009) எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, வறிய நாடுகளுக்கான உதவிகளை செல்வந்த நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் 185 உறுப்பு நாடுகளினதும் அமைச்சர் கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் நிதி நெருக்கடி நீண்டகாலத்திற்கு நீடிக்கும்பட்சத்தில் உலக வங்கிக்கான வளங்களை
58 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக வறுமை ஒழிப்பு தினம்
மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாமெனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. 2015ற்குள் வறுமையை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா.வின் இலக்குகளை இந்நிதி நெருக்கடி தடம்புரளச் செய்து விடுமெனவும் இதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தமை இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும்.
மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள உலக வங்கியின தலைவர் (2009) ரொபேர்ட் ஷோலிக் ஐ.நா.வின் மிலே னியம் அபிவிருத்தி இலக்குகளான வறுமை, பட்டினி, கல்வி, சமத்துவம், தொற்று நோய் மற்றும் சிசுமரணம் போன்றவற்றில் பெரும்பாலானவையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்ப தாகத் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடியால் வறிய நாடுகளில் உள்ள சமூகங்களுக்கு செலவிடப்படும் தொகை கள் பாதிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்துள்ள ஷோலிக் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடனை 100 பில்லியன் வரை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் அங்கீகரிக்க வேண்டு மெனவும் கோரியுள்ளார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்து வதை விட்டு அது வறுமையை எவ்வாறு பாதிக்குமென்பதில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். ஷோலிக் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண் டும் செய்யக் கூடாதெனச் சுட்டிக் காட்டியுள்ளார்.
வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட புத்தாயிரம் sa,60iiq6i (3LDbLITG 36) is608 (Millennium Development Goals - MDG) திட்டமிட்டபடி எட்டுவதற்கான முயற்சிகளை பலப்படுத் துவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனும் ஒப்புக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதற்குப் பின்னர், 2009 மார்ச்சில் முதல் முறையாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனை
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 59

Page 32
உலக வறுமை ஒழிப்பு தினம்
ஐ.நா. அவை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய போதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பட்டது. 2000ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். மூன்றாம் உலக நாடுக ளில் நிலவும் உணவுப் பஞ்சம், பிணி, வறுமை, வேலையின்மை ஆகியவற்றை ஒழிக்க அபிவிருத்தியடைந்த நாடுகள் வழங்க ஒப்புக் கொண்டுள்ள நிதி உதவிகளை நிறுத்தக்கூடாது என்றும், உறுதியளிக்கப்பட்ட உதவிகளை தொடர்வதன் மூலமாக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது, புவி வெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் உலகில் தற்பொழுது நிலவும் பொருளாதார பின்னடைவின் காரணமாக முன்னேறிய நாடுகளில் நிலவும் பொரு ளாதாரச் சூழல் புத்தாயிரம் முன்னேற்ற இலக்குகளை எட்டுவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர் கள் கூறுகின்றனர். பொருளாதார பின்னடைவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உச்சக்கட்டத்தை சந்திக்கப்போகும் 2009ஆம் ஆண்டில் ஒன்று “செய் அல்லது விடு’ என்ற உறுதிப்பாட்டுடன் சிக்கலை எதிர் நோக்கிச் செயல்படப்போவதாக ஒபாமா அரைகூவல் விடுத்தமையையும் இவ்விடத்தில் நினைவு கூரல் வேண்டும்.
இவ்வாறாக திட்டங்கள் தீட்டப்பட்டாலும் கூட, அரைகூவல் கள் விடுக்கப்பட்டாலும்கூட வறுமை காரணமாக பளளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கு மேல் என சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் இராணுவ தளபாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால் கூட உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்து விடலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் அனைவருக்கும் கல்வி என்பது உலகளாவிய ரீதியில் இன்று வரை கனவாகவே உள்ளது.
வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வரவர அதிகரித்துக் கொண்டே வருகிறது. அபிவிருத்தி யடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின்
60 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக வறுமை ஒழிப்பு தினம்
முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள் ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.
ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. வரிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும், ஒப்பந்தங் களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. வறுமையும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில், வன்முறையையும், குற்றங் களையும் தவிர்க்க முடியாது.
உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை கூடிய நாடான சீனாவில் வறுமை ஒழிப்பு சாதனை, உலகின் வறுமை ஒழிப்பு முன்னேற்றப் போக்கைத் தூண்டி, உலக வறுமை ஒழிப்புப் பணிக் குப் பெரிய பங்காற்றியது. என சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழுவின் அலுவலகத் தலை வர் Fan Xiaojian அண்மையில் வெளியிட்டி கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தார். ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக் குகளில், வறிய மக்கள் தொகையைப் பாதியாகக் குறைப்பது என்ற இலக்கை முன்கூட்டியே நனவாக்க முனையும் ஒரு நாடா கவே சீனா உள்ளது.
அதே நேரம் இந்தியாவும் வறுமை ஒழிப்புக்காக வேண்டி பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. வறுமையில் வாடும் குடும்பங்களை ஒரே தேவையுள்ள குழுக்களாக (Common Interest Groups - CIG) 96ögÓ60p600īgög, 96nuja56f6 (pup60oDuumt6oT மேம்பாடடிற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவர்களை அளிக்கும் மாவட்ட வறுமை ஒழிப்புப் திட்டத்தை உலக வங்கியின் ஆலோச னையின் பேரில் 2000ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேச அரசு
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின் 61

Page 33
உலக வறுமை ஒழிப்பு தினம்
செயல்படுத்தி வருகின்றது. மத்தியப் பிரதேசத்தின் 14 மாவட்டங்க ளுக்கு உட்பட்ட 2,900 கிராமங்களில் வாழும் 3,25,000 மக்களை 52,000 குழுக்களாக ஒன்றிணைத்து உதவிகள் வழங்கப்பட்டுவரு கின்றன. வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் வருவாய் 65 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும், விவசாய உற்பத்தி 149 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும், விவசாயத்திற்கான பாசனப் பரப்பு 27 விகிதமாக அதிகரித்துள்ளது என்றும் சில புள்ளி விபரங் கள் எடுத்துக் காட்டுகின்றன.
அதே அடிப்படையில் மாவட்ட வறுமை ஒழிப்புத்திட்டம் - 2 என்ற பெயரில் 5000 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே உலக வங்கியின் தனி நபர் மேம்பாட்டு கணக்குத் ill-gigai dip (Individual Development Account - IDA) 100 மில்லியன் டாலர் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கியின் இந்தியக் கிளையின் இயக்குனர் ராபர்ட்டோ ஜாகா மும்பையில் அண்மையில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு சுய உதவிக் குழுக்களைப் போல கூட்டுத் தொழில் செய்யவும் இக்குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பல குழுக்கள் செய்து பலன் பெற்றும் உள்ளன என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
மக்களை பசிக்கொடுமையிலிருந்து வெளிக்கொண்டுவர வளர்முக நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் அக்ஸன் எய்ட் நிறுவனம் 2009 இறுதிப்பகுதியில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்திருந் தது. ஆனால் அந்த அறிக்கை பிரேசிலையும், சீனாவையும் பாராட் டியிருந்தது.
உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்க ளில் ஒன்றாக இந்தியா அமைந்திருந்தாலும், தொண்ணுாறுகளின் மையப்பகுதியிலிருந்து நாட்டில் போஷாக்கின்மையால் வாடுவோ ரின் எண்ணிக்கை 3 கோடியால் அதிகரித்துள்ளது என்று அக்ஷன் எய்ட் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரேசில் அரசாங்கத்தை, அதன் நிலச்
62 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக வறுமை ஒழிப்பு தினம்
சீர்திருத்த திட்டங்களுக்காகவும், ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டங்களுக்காகவும் இந்த அறிக்கை பாராட்டி யுள்ளது. சீனா தனது விவசாயிகளுக்கு உதவித்திட்டங்களை அறிவித்து 5 கோடியே 80 லட்சம் பேரை பசிக் கொடுமையிலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னைய நிலைகளுடன் ஒப்பு நோக்கும்போது ஆசியா வின் வறுமை ஒழிப்பு ஓரளவு முன்னேற்றம் இருந்த போதிலும்கூட ஆபிரிக்க நாடுகளில் நிலமை மிகமிக மோசமாகவே இன்று வரை காணப்படுகிறது. 2008ஆம் ஆண்டு உலக வறுமை ஒழிப்பு தினத் தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் “உலக நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படலாம்” என்று அச்சம் தெரிவித்திருந்தது. தற்போது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ. நா. உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
“வறுமையை ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். 2015-ற்குள் வறுமையை ஒழிப்பதாக ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழைநாடுகள் பல இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதாக அவர் தெரிவித்த கருத்தை இவ்விடத் தில் மீட்டிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
() http://thatstamiloneindia.in/cj/puniyameen/2009/1018
international-day-for-eradication-of-poverty.html
() http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/ci/
puniyameen/2009/1018-international-day-foreradication-of-poverty.html
() http://thesamnet.co.uk/?p=17207
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 63

Page 34
06
உலக உணவு தினம் World Food Day
அக்டோபர் 16
உலக உணவு தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐக்கிய நாடுகள் இந் நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
இத்தாலியில் உரோமைத் தலைமையகமாகக் கொண்டி யங்கும் பொதுவாக உணவு, விவசாய அமைப்பென அறியப்படும் ‘ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின போஷாக்கினை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த் துவதற்கும், விவசாயத்தையும், உணவுப் பொருட்கள் தயாரிப்பி னையும், சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங் களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது “ரொட்டி (இலங்கையில் பாண்) ஆவது மனிதனுக்கு இருக்கவேண்டும்” என்பதாகும்.
ஐக்கியநாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம்
64 சர்வதேச நினனவு தினங்கள் . பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமீன்

உலக உணவு தினம்
1945 ஆம் ஆண்டு கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது ஐக்கிய அமெரிக் காவில் இருந்து உரோமுக்கு மாற்றப்பட்டது. ஆண்டு தோறும் உரோமில் உணவு விவசாய நிறுவன தலைமையகத்தில் பிரதான வைபவம இடம்பெறுவது வழமையாகும். 11 ஏப்ரல் 2006இல் 190 அங்கத்துவ நாடுகளைக் கொண்டிருந்த இவ்வமைப்பில் தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் முதன்மை இலக்குகளை நோக்குமிடத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல், இந்நாட்டு மக்களின் போஷாக்கினை அதிகரித்தல், உணவு, விவசாயம், காடுகள், மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல், இவை குறித்து அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல், உணவு மற்றும் விவசாயப் பிரச்சினை களை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அவை தொடர்பாக பக்க சார்பற்ற கொள்கைகளை உருவாக்குதல் போன்றனவாகும்.
உலகளாவிய ரீதியில் உணவு விவகாரம் தொடர்பிலான ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் உலக உணவுதினம் அனுஷ்டிக் கப்பட்டு வந்திருக்கிறது. இவ்வாண்டு(2009) அக்டோபர் 16ம் திகதி 29 வது உலக உணவு தினமாகும். “நெருக்கடியைச் சமாளித்து, தானியப் பாதுகாப்பை நனவாக்குவதை” ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இவ்வாண்டின் உலக உணவு நாளின் தலைப் பாக அறிவித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இத்தினத்தின் கருப்பொருள் “உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்” என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 20வது பொது மாநாட்டில் அதாவது நவம்பர் 1979ஆம் ஆண்டில் இத்தினம் சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட வேண் டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வமைப்பின் ஹங்கேரி யின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது இந்நாள் கொண்டா டப்படுகிறது.
நிதி நெருக்கடி, தானிய நெருக்கடியைத் தீவிரமாக்கியது என்று ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகளும்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 65

Page 35
உலக உணவு தினம்
நிபுணர்களும் குறிப்பிட்டிருந்தனர். குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து, நிதி நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியளித்து, நெருக்கடியைக் கூட்டாகச் சமாளிக்குமாறு பல்வேறு நாடுகளுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் விளைவாக தானியப் பாது காப்பு நனவாக்கப்பட முடியும் என்று அது கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினி யில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட் டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுக ளைக்கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளதை இவ்விடத்தில் கவனத்திற் கொள்ளு தல் வேண்டும்.
ஐ.நா.ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவின் தலைவர் ஓடிவ் இக்பஸார்(2009) இது பற்றிக் கூறுகையில், உல கம் முழுவதும் 30 நாடுகளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆபிரிக் காவைச் சேர்ந்தவையாகும் என்றார். உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது. தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளை யும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டியது காலத்தின் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
66 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமீனி

உலக உணவு தினம்
உணவு கிடைக்காமலும், போதிய போசாக்கின்மை காரண மாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் முன்ன ணியில் இருக்கும் இந்த யுகத்தில் ஆச்சரியப்பட வேண்டிய ஓர் தகவலாகும். அதே நேரம் பல பில்லியன் கணக்கான டொலர்களை சந்திரனையும், வான்வெளியையும் ஆராய மேற்குலக நாடுகள் செலவழித்துக் கொண்டிருக்கிறன.
உலகின பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துள் ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க்கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவை யான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும், கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலர் களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டொலராக அதிகரித்துள்ளதெனவும் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும், உடை கள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது எனக்கூறப்படுகிறது. ஆபிரிக்கா முழுவதிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.
கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய்விட்டன. இந்த நாட்டில் 30 இலட்சத் நிற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் பட்டினி மற்றும் போசாக்கான உண
சர்வதேச நினனவு தினங்கள் . பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 67

Page 36
உலக உணவு தினம்
வின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசா யம் முக்கியமிழந்து போய்விட்டது.
1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரி யாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளில் இது இலேசான உயர்வைக் காட்டி நிற்கின்றது. ஆனால் போதுமா னதாக இல்லை. உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினி யை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவ தும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.
2009ஆம் ஆண்டு உலக உணவு தினத்தின் கருப்பொருள் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதும் உணவு பாதுகாப்பை நனவாக்குவதும் ஆகும். உலகப் பொருளாதார நெருக்கடி வளரும் நாடுகள் உள்ளிட்ட முழு உலகின் உணவுப் பாதுகாப்பு நிலை மைக்கு மாபெரும் சவாலையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில், உலக உணவு அமைப்பு முறையிலான சீர்திருத்தத்தை வெகுவிரைவில் மேற் கொள்ள வேண்டும் என்று ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட 2009ஆம் ஆண்டு உலக உணவு நெருக்கடி நிலைமை பற்றிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதலாவதாக, பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக் கடியும் கூட்டாக ஏற்பட்டன. 2006ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு வரையான காலத்தில், உணவுப் பிரச்சினை முழு உலக தானிய விலையை உயர்த்தியுள்ளது. 2008ம் ஆண்டில் இருந்ததை விட தற்போதைய தானிய விலை தணிந்துள்ள போதிலும், இன்று வரை ஒப்பீட்டளவில் உயர் நிலையிலேயே இருந்து வருகின்றது.
இரண்டாவதாக, உலகளவில் மிகப் பெரும்பாலான நாடுக ளை இந்த பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளது. எனவே, நாணய
68 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக உணவு தினம்
மதிப்பிறக்கம், கடன் மற்றும் சர்வதேச உதவி ஆகிய முறைகள் பெருமளவிற்கு இப்பாதக நிலையை ஊக்குவிக்கின்றன.
மூன்றாவதாக, உலகப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கு தொடர்ந்து விரிவடையும் நிலையில் குறிப்பாக அபிவிருத் தியடைந்து வரும் நாடுகளின் சர்வதேசச் சந்தை பாதிப்படைகிறது. தற்போது, பல நாடுகளின் வர்த்தகத் தொகையும் முதலீட்டு பழக்கமும் பன்முகங்களிலும் குறைவதுடன், வணிக நிலுவை, வெளிநாட்டு நேரடி முதலீடு, வளர்ச்சி உதவி ஆகியவையும் குறை வடைந்துள்ளன. இதனால் வேலைவாய்ப்பு மற்றும் வருமான பிரச்சி னைகள் முனைப்பாயுள்ளன. அத்துடன், உணவுப் பாதுகாப்பில் பல்வேறு நாடுகளின் அரசுகள் வழங்கிய நிதியளவும் தொடர்ந்து குறைந்தே வருகின்றன.
உணவு பாதுகாப்பை நனவாக்குவதற்கு சர்வதேசச் சமூகம் மேலதிக முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். குறுகிய காலத்தில் பார்க்கும் போது, தற்போதைய உலகின் பட்டினி மக்கள் தொகையின் பரவல் நிலைமையை அறிந்து தெளிவுபடுத்துவது, உணவு பற்றாக்குறைக்கான உதவி மற்றும் நிதி ஆதரவை முன் கூட்டியே வழங்குவது, வேலை வாய்ப்பை அதிகரிப்பதுடனான திட்டங் களை வகுப்பது, விவசாய அதிகரிப்பையும் தானிய உற்பத்தியை யும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றுவது, விவசாயத்தை நவீனமயமாக்க விவசாய உற்பத்திச் சாதனங்களையும் தொழில்நுட் பத்தையும் வழங்குவது உள்ளிட்ட வகையில் உணவுப் பாதுகாப்பு அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும்.
நீண்டகாலத்தில், வளரும் நாடுகளின் வேளாண்மை உற்பத் தித்திறனை உயர்த்தும் வகையில், முதலீட்டை மேலும் அதிகரிப் பது, பொருளாதார அதிகரிப்பை தூண்டி, வறுமை மற்றும் பட்டினிப் பிரச்சினையைக் குறைக்க முக்கியமாக பங்களிக்கும். 2008ம் ஆண்டு, முழு உலக தானியங்கள் உற்பத்தியளவு 224 கோடியே 50 இலட்சம் தொன்களைப் பிடித்துள்ளது. இது வரலாற்றில் கூடிய அதிகரிப்பாகும். ஆனால், வளர்முக நாடுகளின் உற்பத்தியளவு 1.1 விகிதத்தால் மட்டுமே உயர்ந்துள்ளது. சீனா, இந்தியா, பிரேசில் உள் ளிட்ட விவசாய வல்லரசுகளை கருத்தில் கொள்ளாத நிலையில்,
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 69

Page 37
உலக உணவு தினம்
இதர அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் தானிய உற்பத்தி யளவு 0.8 வீதத்தால் குறைந்துள்ளது.
தற்போது, உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையிலான சார்பளவு மேன்மேலும் நெருக்கமாகி வருகின்றது. உணவு பாதுகாப்பு அமைப்பு முறையிலான தொடர்பு தொடர்ந்து ஆழமாகி வருகின்றது. உலக உணவு பாதுகாப்பை பொருளாதார நெருக்கடி கடுமையாக பாதிக்கும் வேளையில், பல்வேறு நாடுகளின் அரசுகள் நிதி நிர்ப்பந்தத்தை எதிர்நோக்கிய போதிலும், விவசாயத்துறை மீதான ஆதரவு ஆற்றலை குறைக்கக்கூடாது என்று அந்த அறிக் கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தைப் போன்று உலக உணவு தினம் முன்னென்றுமே கூடுதலான அளவுக்கு அர்த்தம் பொதிந் ததாக இருந்திருக்க முடியாது. உலகில் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பதன் விளைவாக பட்டினி யில் வாடுவோரின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்திருக் கிறது. தாராளமாக வளங்கள் இருக்கின்ற போதிலும், உலகிலே சுமார் 85 கோடி 40 இலட்சம் மக்கள் நீடித்தபட்டினியில் உழலுகி றார்கள் என்று 2007ஆம் வருடத்தைய உலக உணவு தினத்தை முன்னிட்டு விடுத்த செய்தியில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கிமூன் தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கை தற்போது மேலும் சில கோடிகளினால் நிச்சயம் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை. உணவு விவசாய நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாடொன்றில் ஐ.நா.செயலாளர் நாயகம் முன்னிலையில் 181 அரசாங்கங்களின் தலைவர்களும் பிரதிநிதி களும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கங்கள் குறித்தும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்தனர். உலகமானது அதிவேகமாக அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் வகையில் விவசாய உற்பத்திகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியுள் ளது எனவும், இல்லையேல் அபிவிருத்தியடைந்து வரும் நாடுக ளின் ஸ்திரத்தன்மைக்கு அது அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துளளார். 2007ஆம் ஆண்டு மத்தியிலிருந்து உணவுகளுக்கான செலவினமானது உலகளாவிய ரீதியில் 40 சதவீதமளவில் அதிக ரித்துள்ளது. இந்நிலையில் கமரூன், புர்கின்கா பஸோ, ஹெயிட்டி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணவு விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
70 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக உணவு தினம்
“நாங்கள் தவறு எதனையும் செய்யவில்லை. பிரச்சினை பாரிய தாக உள்ளது. நாங்கள் சரியான உதவி வழங்கினால் தீர்வுகள் கிட்டும்” என பான் கீமூன் தெரிவித்திருந்தார். கடந்த மூன்று வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் உலகமானது அது உற் பத்தி செய்வதைவிட கூடுதலான அளவு நுகர்கிறது என்பது மட்டும் நிச்சயம்” என பான் கீமூன் குறிப்பிட்டிருந்தார். எண்ணெய் விலைகள் உயர்ந்தமை, அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, இயற்கை அனர்த் தங்கள் என்பனவே உலக உணவு விலையேற்றத்திற்கு காரண மாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டமானது 80 நாடுகளிலுள்ள 73 மில்லியன் மக்களுக்கான உணவுகளைப் பெற்றுக்கொடுக்க வருடாந்தம் 750 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக பான் கீ மூன் கூறினார். உலக பொருளாதார வரைவிலக்கணங்களுக்கு அமைய அல்லா மல் உலகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டிய நிர்ப்பந் தம் உள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார். 2015 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை அரைவாசியாகக் குறைப்பது என ஐக்கிய நாடுகள் சபையில் 2000 ஆம் ஆண்டு உச்சி மா நாட்டில் எடுக்கப்பட்ட மிலேனியம் இலக்குகள் எட்டப்படாத நிலையி லேயே உள்ளன என பான் கீ மூன் குறிப்பிட்டார். “நாம் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமா னால் பன்மடங்கு முயற்சிக்க வேண்டியுள்ளது” என அவர் தெரி வித்தார்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகையும், இணையத்தளமும்
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : அக்டோபர் 18 2009 ( http://thesamnet.co.uk/?p=17183 (ijgg5TGosuT)
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின் 71

Page 38
O7
சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினம் International Day of the White Stick Blindness
அக்டோபர் 15
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமா கவும், தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால்கூட, சிலசந்தர்ப்பங்களில் அவ னின் சில கவனயீனங்கள் மற்றும் அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங் குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக் கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கை யிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப் பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவிஊனம், பார்வைஊனம், மந்தபுத்திநிலை போன்ற பல நிலை கள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல்: விபத்துக்கள், கவனயீனங்கள், அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக் கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறை வான நிலையில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனி தப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.
72 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத் தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர் போன்ற எண்ணக்கருக் களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதா னிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவ ரும் தாம் பெறும் அறிவு, அனுபவம், ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.
இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறை பாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கெளரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் எனபது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டி யதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிப லிப்பவை கணகளே. கண்களில் உண்டாகிற பிரசசினைகள் ஆரோக் கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் உகந்ததல்ல.
இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப் பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்கூடியவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண் டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன.
சர்வதேச நிரனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமினர் 73

Page 39
சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே இரு கண்களும் வெவ் வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையினத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையினம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள், நோய்கள் காரணமாக அமையலாம்.
நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப் போன்று இயங்குகி றது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண் ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்பட லம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப் புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.
கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. வெள் ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப் பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரி யதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்
மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவ தைக் காண்கிறோம். “வெள்ளைப் பிரம்பு” உலக விழிப்புலனற்ற
74 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோ மாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.
இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெ ரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணு குண்டை வீசியது உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தை கள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமள வினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந் தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலை மையை எதிர்நோக்கிய வைத்தியர் மனிதர்கள் என்ற வகை யில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடி னார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Orientation) உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.
வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற் றோராவர். இவ்விழிப்புலனற்றோர், ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற் கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்ப டுத்திவரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும், அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணை யாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 75

Page 40
சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமா கவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாத மாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969இல் கிடைத்தது.
கண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத் தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.
முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்
கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களிலுள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட் கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால் அதன் மூலமாக வரும் தலை வலி, தொற்றுநோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண் பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையிலுள்ள வேற்றுமை சில சமயங்களில், ஒரு கண் கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோ பியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து, மூளைக்குப் போதுமான அளவு தூண்டு தல் இல்லாத நிலையில், வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியாவினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு, இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.
ஆரியனிலிருந்து வெளிப்படும் UVB கதிர்வீச்சு கண்ணின் வெளிப்பாகங்களைத் தாக்குகிறது. இதனால் கண்களில் எரிச்சல், வறட்சி, வீக்கம் அல்லது புண், வயதுக்கு மீறிய தோற்றம் ஆகிய வை ஏற்படலாம். UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது, தோலுக்கும் கேடு விளைவிக்கிறது.
76 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமீன்

சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக் கூடியவை. அமெரிக்காவில், ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும். இது உலகம் முழுவதும் கண்பார்வை இன்மைக்கு இரண்டாம் காரணமாக விளங் குகிறது. (முதற் காரணம் “காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில், பெருவாரியாகக் காணப் படுகிறது (57%). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் - வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தொழிற் சாலைக் குப்பைகள், பாட்டரி அமிலம், விளையாட்டின்போது ஏற்படும் விபத்துகள், வாணவேடிக்கை, UVB- கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது, சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட் களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை. அவற்றுள் 95% காயங்கள் கட்டுமா னப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.
‘மயோபியா’ என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக் கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது, இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.
'ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால், ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு, அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளா கும். கண்களிலுள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன்படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 77

Page 41
சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக்
கண்டறிதல். 1) வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது
களைப்பாக இருப்பது. 2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது. 3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது. 4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது. 5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ
கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக் கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக் களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.
கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.
விட்டமின் ‘ஏ’ கண்பார்வைக்கும் கண்ணுடன் தொடர்பு டைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக் கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அவரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக்கூடிய பப்பாளிப்பழம் போன்றவற்றில் விட்டமின் ‘ஏ’ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம், கரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.
78 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமினி

சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக் கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்த மான தண்ணிர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன் படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக்கூடாது. கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும், அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றிமறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.
1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும், ஒவ்வொரு
கண்ணாக பாதிப்பு தொடங்கும். 2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள்
நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும். 3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ, இளஞ்
சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும். 4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும், தூங்கி விழிக்கும் போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும். 5. கண் எரிச்சலோ, வலியோ ஏற்படும். 6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.
இத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அணுகி சிகிச்சை பெறல் வேண்டும். நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள். சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வா மையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.
கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்றுகருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் sigsflugs Acute Angle Closure Glaucoma 6T60TLIGib. 3560TTg) b கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 79

Page 42
சர்வதேச விழிப்புலனற்றோர் தினம்
பூரண குணமடையும், தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள்; பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல், வெளிச்சத்தில் பார்க்க முடியாமை.
சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி. காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக்கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றி லும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத் தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடிய படி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப்படாவிட்டால், அது எரிச்சலை உண் டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகைகயம்,
இணையத்தளங்களும்
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : அக்டோபர் 18:2009
0 http:ll thatstami.oneindia.in/cj/puniyameenl2009/
1016-day-of-the-white-stick-blindness-p1.html (இந்தியா)
() http:llwww.tamilsguide.com/katturaidetails.php?
gallid=19&tid=6461
http://thesamnet.co.uk/?p=17157 (úlfsgnsflum)
() http:llnayanaya.mobilwl.http/thatstami.oneindia.in/ rlclpuniyameenl2009/1016-day-of-the-white-stickblindness-p3.html
Ο
80 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

08
உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
international Day for Natural Disaster Reduction
அக்டோபர் 14
உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து காலத்துக்குக்காலம் ஏதோவொரு வகையில் மனித குலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பா டுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக் காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவு கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத் திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலக ளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முன்னைய காலங் களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 81

Page 43
உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
இயற்கை அழிவுகள் எனும்போது மனிதனின் சக்திக்கு அப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள், சூறாவளிகள், நில அதிர்வு கள், எரிமலை வெடிப்புக்கள், கடும்மழை, வெள்ளம், கடும் வரட்சி. இவ்வாறு இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரேநேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிடினும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும், அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆண்டுதோறும் உலகப் பேரழிவுத் தடுப்புதினம் ஒக்டோபர் 14ஆம் திகதி அனுஷ்டிக் கப்படுகின்றது. இயற்கையை வெல்ல முடியாவிடினும்கூட, இயற் கையால் ஏற்படக்கூடிய அழிவுகளிலிருந்து ஓரளவாவது பாதுகாப் பைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இத்தினத் தின் குறிக்கோளாகவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான உலக பேரழிவுக் குறைப்புத் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய பேரழிவுகளால் பாதிப்பு ஏற்படக்கூடிய மக்களுக்கு வைத்திய வசதிகள் செய்து கொடுப்பதை விசேட அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருந்தன.
இயற்கைப் பேரழிவுகளை எடுத்துநோக்கும்போது அண்மைக் காலங்களில் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இயற்கை நிகழ்வாக சுனாமிப் பேரலைத் தாக்கம் அமைந்திருந்ததை அவதா னிக்கலாம். இக் கட்டுரையை எழுதப்படும் நேரத்திலும்கூட, (2009 ஒக்டோபர் இல்) சிட்னி, பசிபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக 194க்கும் அதிகமானோர் பலியானதுடன், பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு வட கிழக்கே இருக்கும் இந்த குட்டித்தீவின் தென் கிழக்கே 120 கிமீ. தொலைவில்
82 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
கடலுக்கடியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவானதாக குறிப்பிடப்படு கின்றது. அருகில் இருக்கும் “டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி பலர் பலியானார்கள். இந்த சமோவா தீவு அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள நாடாகும்.
எனவே, சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத் தில் பெற்றுக்கொள்வது பொருத்தமானதாக இருக்கலாம். ஜப்பா னிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. ‘ட்சு” என்றால் துறைமுகம், “னாமி” என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அது வும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக் கூடியது தான் சுனாமி.
இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும்வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத் திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட பூகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப் பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ள வை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகு தியில் ஏற்படக்கூடிய அதிர்வு சில நேரங்களில் சுனாமிப் பேரலைக ளைத் தோற்றுவிக்கின்றன. மலைப் பிரதேசங்களில் ஏற்பட்டால் மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 83

Page 44
உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப் பிரிய அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம், கடல் எல்லா வற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் “டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறிய முடிகின்றது. அதேநேரம், சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின் போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும், கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும், மலை யில் எரிமலைகள் தோன்றும் போதும், வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும், (இது இன்னும் உறுதிப்படுததப்பட வில்லை) கடலில் பெளதீக மாற்றங்கள் ஏற்படும் போதும், விண்ணி லிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும். கடலில் காணப்படும் பனிப்பாறைகள் உருகுவதால் நீர்மட் டத்தின் அளவு வேறுபடும் போதும், தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப் பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோத னைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.
கி.மு. 365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட் பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், முதன்முத
84 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
லில் 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்த்துக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமிப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஜாவா, சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. 1883ம் ஆண்டளவில் அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட் டது. அதன் விளைவாக, அலஸ்கா, வான்கூவர்தீவு (பிரிட்டிஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளைத் தாக்கியது.
21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26ஆம் திகதி சுனாமியே இதுவரை பாரதூரமாகப் பதிவாகியுள்ளது. இச்சுனாமி இலங்கை வரலாற்றிலும் பாரிய அழிவை ஏற்படுத்திதொன்றாகத் திகழ்கின்றது. 2004 டிசம்பர் 26ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத் தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் இச்சுனாமியின் கொடுர அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின.
இச்சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வ ருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள், உட்கட்டமைப்புச் சேதங்கள், வாழ்வாதாரத் தொழிற் சேதங்கள். இச்சேதங்கள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே உரியன.
இலங்கையில் மாத்திரம் உத்தியோகபூர்வ தகவல்களின்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 85

Page 45
உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
படி 30,977 பேர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5,644 பேர் காணாமற் போயுள்ளனர். 15,197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புகளுக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறை வாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவா கவே உள்ளது. இச்சுனாமியில் மாத்திரம் மொத்தமாக 2 இலட் சத்து 75 ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவுகொள்ளப்பட்டுள்ளன.
உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற் பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78,387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60,197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலநிமிடங்களில் இம்மக்கள் இழந்தனர். கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலான வற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, காலி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங் கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலைகள், மக்கள் மண்டபங்கள், பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும், பகுதிகளாகவும் அழிந்துபோயின. மின்சாரம், தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர் குலைந்தன. விதிகள், பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன.
மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித் தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண் மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.
ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154,963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235,145
86 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவை இலங்கை அரசு சந்தித்தது.
சுனாமி என்றால் ஜப்பான் தான் என்ற நிலைமாறி 2004ஆம் ஆண்டில் சுனாமி உலகளாவிய நாடுகளுக்கே ஓர் எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூக மும், சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும் கூட, இழப்புகளை ஈடுசெய்ய முடியாது போயிற்று. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.
சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம். அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பதினாலாகும்.
அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம்பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் “சுனாமி மிதவைக் கருவி’.
1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கு எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண் டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச நினனவு தினங்கள். பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன் 87

Page 46
உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டாரிகா, தென்கொரியா, வடகொரியா, ஈக்வடோர், எல்சல் வடோர், பிஜி, பிரான்ஸ், கெளதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகாரோகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத் தப்பட்டுள்ளது.
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நில நடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப்பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
நிலநடுக்கம ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ் டெக், ஆபிரிக்க - ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடு களை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
88 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்
உலக பேரழிவு விழிப்புணர்வு தினமான 2009 ஒக்டோபர் 14ஆம் திகதி ஒரேநேரத்தில் 18 நாடுகளில் இந்த சுனாமி முன்னெச் சரிக்கை ஒத்திகையை மேற்கொண்டன. இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையிலும் அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சுனாமி முன்னெச்சரிக்கை பயிற் சிகள் நடத்தப்பட்டன. உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்றன.
இந்தோனேஷியாவிலிருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்
தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும், எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது எவ்வ ளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் இவ்வொத்திகையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உருவானால் மாத்திரமே இவை வெற்றியளிக்கலாம். அண்மைக் காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காணமுடிகின்றது. சிலர் இவற்றைப்பற்றி இன்னும் விளக்கமே இன்றி காணப்படுகின்றனர். கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் ச்ெயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகைகயும்,
இணையத்தளங்களும்
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை): அக்டோபர் 18.2010 {) http:lithatstamil.oneindia.in/cj/puniyameenl2009/1014
international-day-for-natural-disaster1.html (SQögulum) () http://thesamnet.co.uk/?p=17129 (îfigraiun)
0. http:llnayanaya.mobilwlhttp/thatstamil.oneindia.in-lcjl
puniyameenl2009/1014-international-day-fornatural-disaster3.html(Spöfuun)
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 89

Page 47
09
உலக தபால் தினம் World Post Day
அக்டோபர் 09
உலக தபால் தினம் 09ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1874ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union) தாபிக்கப்பட்டது. இதனை நினைவுகூரும் முகமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 09 ஆம் திகதி 'உலக தபால் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலக தபால் தின பிரகடனம் பின்வருமாறு “உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களை யும் பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது, அவற்றைப் பாது காத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையா ளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்றிறமையுடனும், நேர்மையுடனும், பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய
90 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக தபால் தினம்
தகவல்களையும், பொருட்களையும், உரிமைகளையும் ஒப்படைப் பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நேற்றைய தினத்தைவிட நன் றாக இன்றைய தினத்திலும், இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங் குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக’ என்பதாகும்.
தபால் சேவையென்பது இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக தபால் சேவை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதனால் இதன் முக்கியத்துவம் அவ்வளவாக உணரப்படுவதில்லை. ஆனால், தபால் சேவை இன்றியமையாதது என்பதில் எந்த விதமான வாதப்பிரதிவாதங்களும் இல்லை.
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோ ருக்குப் பரிமாறிக் கொள்ள ‘புறாக்களைப் பயன்படுத்தினான்’ என்றும், உலகில் முதல்தர விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு விளைவின் ஞாபகார்த்த மாகவே ஆரம்பிக்கப்பட்டதென்றும் வரலாறு சான்று பகர்கின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப் பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.
நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிய போதிலும்கூட இன்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு தபால் மிகவும் இன்றியமையாததொன்றாகக் காணப்படுகின்றது. உத்தியோகபூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு அஞ்சல் முறை அவசியப்படவே செய்கின்றது.
ஆரம்ப காலங்களில் தபால்நிலையங்கள் கடிதப் பரிமாற் றங்களுடன், தபால் சேவைகளுடன் இணைந்த வகையில் தந்தி சேவைகள், தொலைபேசி சேவைகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டிருந்தன. இன்றைய காலத்தில் கடிதப் பரிமாற்றங்களுக்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 91

Page 48
உலக தபால் தினம்
கப்பால் நானாவித சேவைகளை வழங்கும் நிலையமாக தபால் நிலையங்கள் மாறிவிட்டன. இலங்கையைப் பொருத்தமட்டில் பிரதான நகரங்களில் அமைந்துள்ள தபால் நிலையங்கள் தனது சேவையினை பல துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருப்பதை அவதா னிக்கலாம். இவ்விடத்தில் தபால்துறையின் வளர்ச்சிப் பரிணாமங் கள் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட் டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர் களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653ம் ஆண்டு Longueville LDITST600T Minister Fouqet 6T6irp g5urts) slgiufsir LD606016 luigi யோசனையின் பேரில்தான் தபால்பெட்டி அறிமுகமாகியதென கூறப் படுகின்றது.
சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இலண்டன் மற்றும் இதர நகரங்கள் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய தபால்பெட்டி களை வைக்க அந்தோணி ட்ரோலோபி (AnthonyTrolope) என்ற பிரித்தானிய தபால்துறையின் பணி மேம்பாட்டு அதிகாரியை 1851ல் அரசு நியமித்தது. இவர் ஒரு நாவலாசிரியரும்கூட. அவரது ஆய்வின் முடிவில் பிரான்சில் உள்ளது போல் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் தபால்பெட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்க லாம் என முடிவாயிற்று. பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான தபால் பெட்டிகள் பிரித்தானியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளால் பின்பற்றப்பட்டன. தபால்பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்ட வையாகவே வடிவமைக்கப்பட்டன.
1852-ல் அமெரிக்காவில் செவ்வகவளைவு கொண்ட தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன. அதே ஆண்டு ஜெர்சி மாகாணத்தில் 4 தூண் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855-ல் குர்னெசி மாகாணத்தில் (Guernse) 3 தபால் பெட்டிகளும், இலண்டனில் 6 தபால் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இலண்டனில் வைக்கப்பட்ட தபால் பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும்
92 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக தபால் தினம்
ஈர்த்தன. தபால்பெட்டிகளில் பிரித்தானிய அரசின் சின்னமும், அதற்கு கீழ் பிரித்தானிய தபால் துறையான “ரோயல் மெயில்’ சேவையின் சின்னமும் முகப்பில் இருந்தன. தபால்பெட்டியின் மேற்பகுதி விக்டோரியா மகாராணியின் கிரீட சின்னத்தையும் கொண்டிருக்கும். தபால் பஸ்கள், தபால் புகையிரதங்களிலும் கூட அக்காலத்தில் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் தபால்பெட்டிகளுக்கு சிவப்பு வண்ணம் பூசலாம் என பிரித்தானிய அரசு அறிவுறுத்தியது. இது “போஸ்ட் ஆபீஸ் ரெட்” (Post Office Red) என ஒரு வர்ண பெயின்டாகவே பிரபலமாயிற்று. பச்சை நிறத் தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுக மாயின. ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களைப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.
தபால் சேவையுடன் ஒன்றிணைந்த வகையில் முத்திரை பயன்பாட்டைப் பற்றியும் இவ்விடத்தில் சற்று நோக்குதல் அவசியம். ஒட்டும் தன்மையுள்ள முத்திரைகளும், ஒரே அளவைக் கொண்ட தபால் கட்டணமும், “ஜேம்ஸ் சாமேர்ஸ் (James Chalmers) என்பவ ரால் 1834 ஆண்டளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் “ரோலண்ட் ஹில்’ என்பவரால் வெளியிடப்பட்ட, “தபால் துறையின் சீரமைப்பும் அதன் முக்கியத்துவமும், செயற்படுதன் மையும்” என்னும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தபாலைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர் கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம். எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும் பார்க்க தபாலை அனுப்புவரிடமிருந்தே அறவிடுவது சிறந்தது என அந்த அறிக்கையில் அவர் தெளிவு படுத்தியிருந்தார். தபால் பகிர்வின்போது எவ்வளவு தூரத்திற்கு வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒரு சீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்துப்பட்டி ருந்தார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவிட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒரு சீரான கட்டணமுறையில் ரோயல் தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் இக்கருத்துக்கள் இறுதியாக 1839 ஆகஸ்டில் பிரித்தானிய நாடாளு
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 93

Page 49
உலக தபால் தினம்
மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவ லகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது.
மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் (Penny Black) என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப்பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, ஐக்கிய இராச்சியத்துக்கு, “சர்வதேச தபால் 66 fujib' (Universal Postal Union) 6ia)disg, si6sgs.g6ft 6iTg). இன்றுவரை முத்திரையில் நாட்டுப் பெயரைக் குறிப்பிடாமல் அச்சிடும் ஒரே நாடு பிரித்தானியாவாகும். “சர்வதேச தபால் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள் ளார்கள். ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந்நாட்டு நாணயத்தில் கொண்டிருக்க வேண்டும். சில நாடுகள், ஒரு எழுத் தையோ அல்லது "First Class” என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. “சர்வதேச அஞ்சல் ஒன்றிய விதி காரணமாக இது உள்ளுர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்கள் அதிகம் கவனிக்கப் படுவதில்லை. (ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் “E" தபால்தலையும், தென்னாபிரிக்காவின் “international Letter Rate" தபால்தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்.)
சர்வதேச ரீதியில் தரமான தபால் சேவையினை வழங்கு வதை நோக்காகக் கொண்டு “சர்வதேச தபால் ஒன்றியம்’ அமைக்கப் பட்டது. சர்வதேச ரீதியில் இயங்கும் பழைமை வாய்ந்த அமைப்புக் களில் ஒன்றான இவ் ஒன்றியம் உலக நாடுகளின் ஒத்துழைப்பின்
94 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

உலக தபால் தினம்
பலனாகவே இன்றும் தனது நோக்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
*சர்வதேச தபால் ஒன்றியம்’ பற்றிய எண்ணக்கரு 1863இல் ஐக்கிய அமெரிக்காவில் தபால் அதிபர் நாயகமாகவும், ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் கடமை யாற்றிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் வெளிப்பட்டது. பின்னர் பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெ ரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத் துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் கடந்த நிலையில் ஜேர்மன் நாட்டின் தபால் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிற்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளா லும் ஏற்றுக்கொள்ளப்பட்டு “அஞ்சல் பொது ஒன்றியம்’ உருவாக்கப் பட்டது. இப்பெயரானது 1878இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட் 96) "sj6658 surf6) 66rguib' (Universal Postal Union) 6T607 பெயர் மாற்றம் பெற்றது.
ஒன்றியம் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்திற்கு இணங்க உறுப்பு நாடுகள் அனைத்தும் தபால் பொருட்களை பரஸ்பர நம்பிக்கையுடன் கையாள்வதன் மூலம் அகில உலக நாடுகளும் ஒரு தபால் வலயமாகக் கருதப்பட்டு நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் சுதந்திரமான தபால் போக்குவரத்துக்கு வழி திறந்ததுடன் ஒரு தபால் நிர்வாகத்தி னால் இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் இடைநிலை தபால் நிர்வாகத்தினால் பொறுப்புடன் கையாளப் படுகின்றமையினை உறுதிப்படுத்தியது. மேலும், தபால் பொருட்களின் நிறைக்கமைய விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட துடன், 1875 தொடக்கம் 1971 வரையான காலப்பகுதியில் தபால் பொருட்களை அனுப்பும் மூல நிர்வாகங்கள் தான் பெறும் கட்டணங் களைத் தமக்குரியதாக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், விநியோகத்தினை மேற்கொள்ளும் தபால் நிர்வாகத்திற்கு வேதனம் எதுவும் கிடைப்பதில்லை. இந்நிலையில் 1969ல் டோக்கியோ
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 95

Page 50
உலக தபால் தினம்
நகரில் இடம்பெற்ற மாநாட்டுத் தீர்மானப்படி குறிப்பிட்ட ஒரு தபால் நிர்வாகம் (நாடு) இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு (வேறொரு நாட்டிற்கு) அனுப்பும் தபால் பொருட்களின் நிறைக்கும் அந்நாட் டிலிருந்து முதற்குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பப்படும் தபால் பொருட் களின் நிறைக்கும் உள்ள வித்தியாசம் கணக்கிடப்பட்டு கூடுதலான தபால் பொருட்களை அனுப்பிய நாடு மற்றைய நாட்டிற்கு ஒன்றியத் தினால் குறித்துரைக்கப்பட்ட நியதிகளுக்கு இணங்க ஒரு தொகை யினை வழங்குதல் வேண்டும். 1971ம் ஆண்டு நடை முறைப்படுத் தப்பட்ட இம்முறையானது எதிர்காலத்தில் மாற்றமடைவதற்கான சாத்தியப்பாடு உள்ளது.
தபால் பொருட்கள் என்ற பதம் தபால் அட்டைகள், வான் கடிதங்கள், அச்சடித்த விடயங்கள், கண்பார்வை அற்றோர்க்கான இலக்கியம், சிறிய பைக்கற்றுகள் என்பனவற்றை உள்ளடக்கியதா கும். ஒன்றியத்தின் அமைப்பு விதி இப்பொருட்களின் கட்டண வீதம், அதியுயர், அதிகுறைந்த நிறை, பருமன் அத்துடன் பதிவுக் கடித சேவை, காப்புறுதிக் கடித சேவை, விமான மூலமான தபால் சேவை, கப்பல் மூலமான தபால்சேவை விஷேட பாதுகாப்புடன் அனுப்ப வேண்டிய பொருட்கள் சம்பந்தமாகவும் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பொதுச்சபை, நிறைவேற்றுச் சபை, தபால் கல்விக்கான ஆலோசனைச்சபை, சர்வதேச பணியகம் ஆகியன ஒன்றியத்தின் முக்கிய பகுதிகளாகும். ஒன்றியத்தின் ஆரம்பத்திலிருந்து மத்திய அலுவலகம் “சர்வதேச பணியகம்’ என்ற பெயரில் பேர்ன் நகரில் இயங்கி வருகின்றது. சர்வதேச தபால் ஒன்றியம் சர்வதேச தபால் சேவை தொடர்பான வெளியீடுகள், பிரசுரங்கள் என்பனவற்றை வெளியிட்டு வருவதுடன் ஒருங்கிணைப்புப் பணியையும் புரிகிறது.
தபால் முத்திரைகளை வெளியிடுதல், விற்பனை செய்தல் உறுப்பு நாடுகளின் சொந்த விவகாரமாகும். அதனால்தான் முன்பு முத்திரை வெளியிடுதல் ஒன்றியத்துடன் தொடர்பற்ற விடயமாக இருந்தபோதும் உறுப்பு நாடுகளின் நலனில் ஒன்றியம் அக்க றையுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலத்தில் இக்கொள்கையில் முத்திரைகள் ஒரு நாட்டின் கலாசாரம், சரித்திரம்,
96 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமினர்

உலக தபால் தினம்
கலை வளர்ச்சி என்பவற்றினைப் பிரதிபலிப்பதுடன் வரியினை ஈட்டிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் காரணமாக சில மாற்றங் களை மேற்கொண்டன. ஐ.நா.சபையுடன் 1947 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க ஒன்றியமானது 01.07.1948 தொடக்கம் ஐ.நா.வின் விசேட அந்தஸ்துடன் கூடிய உறுப்பினர் வரிசையில் உள்ளது.
சர்வதேச தபால் வலையமைப்பு மூலம் பின்தங்கிய கிரா மங்கள் கூட தபால் சேவையினைப் பெறக்கூடியதாகவுள்ளன. தற்போது உலகில் ஏறத்தாழ 670,000 நிரந்தர அஞ்சல் அலுவலகங் கள் இயங்குவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு மில்லி யன் பேர் வரையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் சர்வதேச ரீதியில் 430,000 மில்லியன் தபால் பொருட்கள் வருடந் தோறும் பரிமாற்றப்படுகின்றன. இத் தபால் அலுவலகங்கள் அஞ்சற் சேவையுடன் காசுக்கட்டளை, அஞ்சற் காசோலை, சேமிப்பு வங்கிக் கணக்கு போன்ற சேவைகளையும் தேசிய, சர்வதேச ரீதியில் மேற் கொண்டுவருகின்றன. உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து இந்திய தபால்துறையிடம் மொத்தம் 154,000 தபால் அலுவலகங் கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகிலே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியாவும், அடுத்ததாக சீனாவுமுள்ளது. இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியா வின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய தபால் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின்படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய தபால் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.
தபால் சேவையை இலகுபடுத்தும் முகமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் தபால் குறியீட்டு முறைகளைப் பயன்படுத்து கின்றன. தபாலை இலகுவாகவும், சரியான முறையிலும் பிரித் தெடுக்க தபால் நிலையங்களுக்கு உதவும் பொருட்டு முகவரியில் சேர்க்கப்படும் எண்களையும், எழுத்துக்களையுமே தபால் குறியீடு என்கிறோம்.
இந்த தபால் குறியீட்டு முறையின் பாவிப்பு முதன்முதலில்
சர்வதேச நினனவு தினங்கள் . பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 97

Page 51
உலக தபால் தினம்
1941 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைய டுத்து ஐக்கிய இராச்சியம் 1959ஆம் ஆண்டிலும், ஐக்கிய அமெ ரிக்க நாடுகள் 1963ஆம் ஆண்டிலும் இம்முறையைப் பின்பற்றியது. 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாத கணிப்பீட்டின்படி “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union) இணைந்துள்ள 190 நாடுகளில் 117 நாடுகளில் இந்த அஞ்சல் குறியீட்டு முறையை தற்போது பின்பற்றுகின்றன.
பொதுவாக தபால் குறியீடுகள் ஓர் குறிப்பிட்ட நிலப்பரப் பிற்கு வழங்கப்பட்டாலும், சிறப்பு காரணங்களுக்காக அரசு அலுவ லகங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் போன்ற அதிகமான தபால் பெறும் தனி முகவரிகளுக்கோ, நிறுவனங்களுக்கோ கொடுக்கப்பட லாம். உதாரணமாக பிரெஞ்ச் செடெக்ஸ் முறையைக் குறிப்பிட லாம். தபால் சேவைகள் அவர்களுக்கென்று தனி வடிவமைப்பை யும் தபால் குறியீடுகளை இடவேண்டிய முறைகளையும் சீர்படுத்து கின்றன. பெரும்பாலான ஆங்கிலம் பேசும் நாடுகளில் இக்குறியீடு முகவரியின் இறுதியில் இடப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுக ளில் இது ஊர் அல்லது நகரின் பெயருக்கு முன்னால் இடப்படுகி றது. இந்தியாவில் தபால் எண்கள் தபால் பெட்டி எண்கள் அல்லது தபால் குறியீடு எண் (PIN) என வழங்கப்படும். ஆறு எண்களைக் கொண்டிருக்கும் இவ்வெண். உதாரணமாக 606000. இலங்கையிலும் தற்போது தபால் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகின்றது. இது 5 இலக்கங்களைக் கொண்டதாகும். இலங்கையில் முதல் எண் மாகாண இலக்கமாகும். ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் துணை தபால் நிலையங்களுக்கும் இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தபால் குறியீட்டு முறை கடந்த ஒரு தசாப்த காலமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும்கூட, தபால் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டாமையை விசேடமாக அவதானிக்க முடிகின்றது. அனுபவ ரீதியாக நோக்கு மிடத்து இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரச சார்ந்த நிறுவனங்கள் கூட தபால் குறியீட்டு முறையை முறையாகப் பயன்படுத்துவதில்லை. எனவே தபால் குறியீட்டு முறையை விரிவு படுத்த விசேட திட்டங்கள் எடுத்தல் அவசியம். தற்போதைய தபால் தினங்கள் கலைவிழாக்களுடனும், வரலாற்றைப் பிரதிபலிக்கும் நிகழ்
98 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின்

உலக தபால் தினம்
வுகளுடனும் சுருங்கிவிடுகின்றன. மாறாக இத்தினத்தில் தபால் குறியீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய வேலைத்திட்டங் களை முன்னெடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.
இருபத்தியிரண்டு நாடுகளின் உறுப்புரிமையுடன் ஆரம்பிக் கப்பட்ட “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union) இன்று 192 நாடுகளின் உறுப்புரிமையினைக் கொண்டுள்ளது. இலங்கை குடியேற்ற ஆட்சி முறையின் கீழ் 01.04.1877இலும் பின்னர் 13.07.1949இல் சுதந்திர நாடாகவும் ஒன்றியத்தில் இணைந்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் புராதன காலத்தில் அரசர்களிடையே தூது வர் மூலம் செய்திப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போதும் போர்த்துக்கேயர் ஆட்சியில் (1517-1640), ஒல்லாந்தர் ஆட்சியில் (1640-1794), ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1815 வரை தபால் சேவை நடைபெற்றதற்கான பதிவுக் குறிப்புகள் கிடைக்கக் கூடியதாக இல்லை. 1815இல் முதன் முதலாக 6 தபால் அலுவல கங்கள் கொழும்பு, காலி, மாத்தறை, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டன. 22.08.1872 இல் முதன் முதலில் தபால் அட்டை அறிமுகமானது. 01.02.1893 இல் முதலாவது தபால் முத்திரை இலங்கை நாணயத்தில் வெளியி டப்பட்டது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
http://thesannet.co.uk/?p=16952
http:Ithatstami...oneindia.in/clipuniyameen 2009/1010-Worldpost-day.html
http:Inayanaya.mobivlhttpithatstami.oneindia.inricil puniyameenl2009/1010-world-post-day.html
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 99

Page 52
10
‘அனைத்துலக ஆசிரியர் தினம்’ TEACHERS DAY
அக்டோபர் 06
“குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத் திற்குச் சமம்” என்பர். இதுபோல் தான் மாணவ சமூகமும் குறிக் கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவர் மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவ தில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. தன்னிடம் ஒப்படைக் கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதேபோல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உரு வாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.
அக்டோபர் மாதம் 6ஆந் திகதி - அனைத்துலக ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.
100 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

அனைத்துலக ஆசிரியர் தினம்
1994ஆம் ஆண்டு முதல் ‘உலக ஆசிரியர்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆசிரியர்களின் மேன்மையை எதிர் கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின் றது. அதேநேரம், சில மேற்கத்தைய நாடுகள் அக்டோபர் 5ஆந் திகதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றன. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முனைவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் திகதியை இந்தியா ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றது. பொதுவாக ஆசிரியர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும் கூட, இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே. இலங்கையில் அக்டோபர் 6ஆந் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடை யது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும்.
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப்படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல என்றும் சிலர் வாதிடுவர். ஏனெ னில், இவர்களின் பணி நாள்தோறும் பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட பரிணாமங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக் கின்றன. எனவே, இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 101

Page 53
அனைத்துலக ஆசிரியர் தினம்
படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப் படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். உலகில் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருந்தார், இருக்கிறார், இருப்பார் என்பதே யதார்த்தமாகும்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள் குணங்களை பார்க் கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக்கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்று வதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதாரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.
ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்தத் துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப் படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறி களும். இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்கு வதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு
102 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின்

அனைத்துலக ஆசிரியர் தினம்
யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்டவேண்டும். சிறு குழந்தை களுக்குப் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர் களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது ஆசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிடவேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல் லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர் உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதேபோல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும், ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.
ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைக ளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும், சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதேபோல் மாணவர்களை சிறந்த பண்போடு உரு வாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணர்ந்து செயற்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.
பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும், தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 103

Page 54
அனைத்துலக ஆசிரியர் தினம்
இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஒர் யாதார்த்த உண்மை.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவர்களுடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணிரில் நீந்திச் செல்வதைக் கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், “குருவே சுழல்கள் இல்லை. நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம்” என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், “இந்த அலக்சாண்டர் போனால், ஆயி ரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம்” என்றான். அப்படி ஆசிரியர் - மாணவர் உறவு அமை வது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
ஆசிரியர் பணி எவ்வளவு தூய்மையாகக் காணப்பட்டாலும் கூட, அண்மைக்காலங்களில் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறை வான சில சம்பவங்களும் ஊடகங்களில் வெளிவருவதை நாம் காண்கின்றோம். விசேடமாக சில பாடசாலை ஆசிரியர்கள், அதி பர்கள் தமது மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்ப டுத்தும் செய்திகளையும் சில மேற்கத்தைய நாடுகளில் சில ஆசிரியைகள் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் செய்திகளையும் காண்கின்றோம். அதேபோல மாணவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பல்வேறு சம்பவங்களையும் காண்கின்றோம். உண்மையிலேயே இது வேதனைப்படக்கூடிய ஒரு விடயமே. இத்தகைய சம்பவங்கள் மிக மிக சொற்பமாக இடம் பெற்றாலும்கூட, ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தும் இத்தகைய ஈனச் செயல்களை உதாசீனம் செய்துவிட முடியாது. “ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம” என்பர். எனவே, இத்தகைய ஆசிரியர் களை இனங்கண்டு சட்ட ரீதியாக கடுமையான தண்டனைகளை வழங்கி ஆசிரியத் தொழிலின் மாண்பினை பேண வேண்டியது சட்டத்துறையினரதும், நீதித்துறையினரதும் கடமையாகும்.
104 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

அனைத்துலக ஆசிரியர் தினம்
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டி யது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகி றோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும். ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முகபாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.
ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதி யான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80% ஆசிரியர்களின் நடத்தை, செயற் பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக்கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாட விதானச் செயற்பாடுகள், சமூகத் தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளி லும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர் களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளை யும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உளநிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ் வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.
நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 105

Page 55
அனைத்துலக ஆசிரியர் தினம்
பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப்பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.
ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமா னவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாத தாகும். ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் “ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விஷமாக” ஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண் டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
(d http:llthesamnet.co.uk/?p=16926 (îfjöğrafluum)
d http:ll thatstamil.oneindia.in/cj/puniyameenl2009! 1006-world-teachers-day1.html (Sögum)
0. http:llnayanaya.mobilvihttp/thatstamil.oneindia.inl
r-lojpuniyameenl2009/1006-world-teachersday1.html (Bögölum)
106 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

11
உலக அகிம்சை தினம்: International Day of Non-Violence
அக்டோபர் 02
ஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுஷ்டிக்கப்படு கின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் திகதியாகும்.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007 இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத் திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட் டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் திகதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில்
ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன் 107

Page 56
உலக அகிம்சை தினம்
இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களை யும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.
வன்முறையாலும், போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார். இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போனறவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர். “அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள், வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை” என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலா வது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப் பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது "சகிப்புத்தன்மை இன்மை யாலும், மோதல்களாலும் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எண்ணற்ற மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திர இந்தியா பிறப்பதற்குக் காரணமான மாகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்திருந்தார்.
அந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் “அதிகரித்துவரும், கலாசாரக் கலப்பால் ஏற்படும் பதற்றத்தையும், சகிப்புத்தன்மை இன்மையால் ஏற்படும் மோதல்களையும் உலகம்
108 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

● உலக அகிம்சை தினம
உணர்ந்து வருகிறது. இதனால் தீவிரவாதத்தின் ஆதிக்கமும், வன்முறையைத் தூண்டும் கருத்துக்களும் பலமடைந்து வருகின் றன. மியான்மாரில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அமை தியான முறையில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்கு முறைத் தாக்குதல்களைக் குறிப்பிட்ட அவர், மகாத்மாவின் கொள் கைகளைப் பின்பற்றி அகிம்சை முறையில் ஆயுதங்களைத் தொடா மல் போராடுபவர்களின் மீது ஆயுதப்படைகள் பயன்படுத்தப்படு வதை நாம் காண்கிறோம். உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் குடியுரிமைகளுக்காக மிகப்பெரிய இயக்கத்தை முன்னின்று நடத்தி யவர் மகாத்மா காந்தி. அவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்வில் அகிம்சையைப் பின்பற்றினார், அதன் மூலம் எண்ணில டங்கா மனிதர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தார்’ என்றார்.
அக்கால கட்டத்தில் காந்திஜியின் அகிம்சை வழி போராட் டங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியி லும் கூட பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும் கடைசிவரை தனது கொள்கையிலிருந்து அவர் விலகவேயில்லை. அவரின் மன அழுத் தத்தினால் அகிம்சை முறையில், எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய முடியும் என்பதை உணர்த்தினார். இன்றைய சூழலிலும் காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அமெரிக்கா போன்ற மேலைத் தேய நாடுகளில் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதால், காந்தியக் கொள்கைகளை பின் பற்றி அகிம்சைக் கல்வியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள் ளனர.
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்ப்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி “குஜராத்தி’. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இத்தம் பதியினர் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). காந்தி தனது 16வது வயதில் தன் தந்தையை இழந்தார்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 109

Page 57
உலக அகிம்சை தினம்
தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு “பாரிஸ்டர் (barrister)” எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்று தன் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் தாயகம் திரும்பி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணி யாற்றினார். பின்பு ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் அவ்வேலையும் பறிபோ னது. அச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியாகியிருப்பதாக அறிந்த காந்தி அங்கு பயணமானார்.
அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாபிரிக் காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென் னாபிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி ஆங்கிலேயரின் நிற வெறி அடாவடித்தனத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
தனது ஒப்பந்தக்காலம் (1906) முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரி மையைப் பறிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நடவடிக்கை எடுப்பது பற்றி அறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, “தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லை” எனக்கூறி, காந்தி யின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக் கொண்டு அத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு “ஜோகார்னஸ்பேக்” நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக்கிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழை யாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள்
110 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமினி

உலக அகிம்சை தினம்
இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்தக் காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். ஆரம்பத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத் தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பி னார். தாயகத்தில் மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். இதனால் கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தலைமையை ஏற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். சத்தியாகிரக வழிமுறைகளை யும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
அகிம்சைப் போராட்டத்தின் பலம் எத்தகையது என்பதற் கான ஒரு உதாரணமாக இந்தியாவில் 1930 இல் காந்தி மேற் கொண்ட “உப்பு பேரணி” காணப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத் தினால் உருவாக்கப்பட்ட “உப்பு சட்டங்களையும்” பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்தையும் சீர்குலைக்கப் போவதாக காந்தி கூறியபோது, அவரது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட சந்தேகப்பட்டனர். ஆனால், தான் தீர்மானித்தபடி, 247 மைல்கள் தூரம் காந்தி
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புர்ைனியாமீன் 11

Page 58
உலக அகிம்சை தினம்
பவனி சென்றார். காந்தியின் இந்த செய்கை மக்களின் மனதை உலுக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டதுடன் உப்புச் சட்டத்திற்கெதிராக எதிர்ப்பு செய்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிரவைத்தது. 1942ல் நடைபெற்ற “வெள்ளை யனே வெளியேறு!” என்ற போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி ‘நாதுராம் கோட்ஸே என்பவனால் புது டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப்பொருள்) என்பவையே அவை. இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.
1. இது தைரியசாலிகளின் ஆயுதம், ஒருபோதும் கோழை
களின் ஆயுதம் அல்ல.
2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்
தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.
3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை
காட்டிக்கொள்.
4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல்,
காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பி னுாடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண் பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.
5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்.
என்பவையே அவை.
சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த் தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000ஆம் ஆண்டு சேர்பியாவில் 'ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர்,
112 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமினர்

உலக அகிம்சை தினம்
“வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத் திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியி லான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநா யக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.
1999இல் சான்பிரான்ஸிஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட சிவில் உரிமையாளரும் சமாதான செயற்பாட்டாளருமான டேவிட் ஹார்ட்சோ மற்றும் சென் போல் சமூக அமைப்பாளர் மெல் டுன்கன் ஆகியோர் ஹேக் நகரில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு பின்னர் மேற் கொண்ட முயற்சியால், உலகம் பூராவும் தொண்டர்களை ஏற்படுத்தி, ஒரு அஹிம்சை வழித் தலையீட்டு படைக்கான தொடக்கத்தை இட்டனர். வன்முறையில் இருந்து உலகத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். ஒரு சமாதான இராணுவத்தை” (சாந்தி சேவா) ஸ்தாபிக்கும் மகாத்மா காந்தியின் கனவின் நிறைவேற்ற ஆரம்பம் என்று இதனைக் கொள்ளலாம்.
காந்தியின் அகிம்சை போராட்டத்தின் அடுத்த அம்சம் சர்வோதய’ ஆகும். பெரும்பான்மையினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நன்மை பெறுதலை இது குறிக்கிறது. இதனை மனதிற்கொண்டு தான், வினோபா பாவே மூலம் மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தை” ஸ்தாபித்தார். தொண்டர் படைகளை அமைத்த காந்தி, ஆச்சிரமங்களில் இருந்து அவர்களை கிராமங்க ளுக்கு அனுப்பி சமூக சேவையில் ஈடுபடுத்தினார். வினோபா பாவே காந்தியின் வழிகாட்டியால் அமைத்த "சர்வோதய இயக் கம்” இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தொடர் கிறது. இந்தியா முழுவதிலும் ஆச்சிரமங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, கிராமப்பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிமனை வசதிகள் வழங்கப்படுகின்றன.
“சுவராஜ்’ என்பதற்கு ஹிந்தி மொழியில் “சுதந்திரம்” என்று பொருள். ஆனால், காந்தியைப் பொறுத்தவரையில் “சுவராஜ்”
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் ! ; கலாபூஷணம் புன்னியாமீன் 113

Page 59
உலக அகிம்சை தினம
கோட்பாடானது, சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விடவும் கூடுதல் அர்த்தத்தை கொடுக்கிறது. “எம்மை நாமே ஆளுவதற்கு கற்றுக் கொள்ளுதல் சுவராஜ் ஆகும். சுவராஜ் (சுதந்திரம்) என்ற எனது கனவானது. ஒரு ஏழை மனிதனின் சுவராஜை குறிக்கிறது” என்று காந்தி கூறினார். அதனால், காந்தி கிராமிய பொருளாதாரம், உள்ளூர் பொருளாதாரம் என்பவற்றை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தொழில் செய்வதற்கு வசதியளிக்கப்படுகிறது. இதனால், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு முடிகிறது.
தனிநபர்களையும் சமூகங்களையும் அவற்றின் அடி மட்டங் களில் பலப்படுத்தும் பொழுது, தமது சமூகங்களில் பிரதான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் காத்திரமான முறையில் ஈடுபடுவதற்கும் பங்குபற்றுவதற்கும் அவர்கள் அனுமதிக் கப்படுகிறார்கள். முரண்பாட்டு மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது மிக அவசியமானது. இதனை மகாத்மா காந்தி அப்போதே கூறிவிட்டார்.
காந்தியின் சுவதேசி கோட்பாட்டினை நோக்குமிடத்து உளளூர் பொருளாதாரம், தேசிய மற்றும் இன உணர்வு, ஒருவருக் கொருவர் உதவுவதை ஊக்கப்படுத்துதல் மற்றும் உள்ளூர் வளங்கள், திறமைகளை கட்டியெழுப்புதல் என்பதையே வெளிப்ப டுத்துகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துவதற் கான திறமை மற்றும் மக்களின் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையிலானது இது. சுவதேசி, அதாவது பொருளாதார விவகாரங்களில் சுய ஒழுங்குபடுத்தலை இது குறிக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், காந்தியின் கொள்கைகள் “முரண்பாடுகளுக்கான தீர்வு” என்ற நவீன மேலைத்தேய கோட் பாட்டின் அடிநாதமாக இருக்கிறது. காந்தியைப் பொறுத்த வரை யில், ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளினூடாக வெறுமனே தீர்வைக் காணுவது அன்றி, சுய புரிதலை எய்துவதும் தான். ‘வாழ்க்கையில் ஒருமைப்பாடே” அவரது அடிப்படை.
அகிம்சையானது மிகவும் பலம்மிக்கதொன்று. இந்த பலத்தின்
114 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக அகிம்சை தினம
பின்னால் இருப்பது ஆயுதம் அல்ல, அது மக்களாதரவு முரண்பாடு பற்றிய மரபு சார்ந்த சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு அடிப்படை விலகலை சமூக போராட்டத்திற்கான அகிம்சை அணுகுமுறை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. பொது மக்களின் அங்கீகாரத்தின் மீதே ஆட்சியாளர்களின் அதிகாரம் சார்ந்திருக்கின்றது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அகிம்சைப் போராட்டம் மேற் கொள்ளப்படுகிறது. சமூக போராட்டத்திற்கான ஒரு தொழில்நுட்ப மான, அகிம்சையுடன் தொடர்புபட்ட ஒத்துழையாமையானது, மகாத்மா காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் பரிச்சயமானது. “மனித குலத்தின் பயன்பாட்டிற்காக கிடைப்பவைகளில் உயர்வானது அகிம்சை, மனிதனின் புத்தி சாதுரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட அழிவு ஆயுதங்களின் பலத்தை விடவும் இது பலமானது” என்று காந்தி அகிம்சை பற்றிக் கூறியிருந்தார்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
()
http://thesamnet.co.uk/?p=16803 (figstofurt)
() http://thatstami.oneindia.in/cj/puniyameen/2009/1002
international-day-of-non-violence1.html (@sbgu IT)
() http:llnayanaya.mobilvihttpithatstamil.oneindia.in/
news/2010/02/011-ur-loj/puniyameen/2009/1002
international-day-of-non-violencef.html (SößQuum)
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமினர் 115

Page 60
12
சர்வதேச முதியோர் தினம் International Day for the Elderly
அக்டோபர் 01
ஒக்டோபர் 1ம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ் வொரு சமூகமும் கண்ணியமாகவும், கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் ஒக்டோபர் 1ம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள் ளது. 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டுவரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற் கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதன் முதலாக 1991ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளிளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக் கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கெளரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுஷ்டிக்கப்படுகின்றது.
116 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச முதியோர் தினம்
இவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும்கூட, முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். ஒரு குழந்தையா னது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத நிலையாகும்.
முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளையின் நரம்புமண்டல அணுக் களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது. இழையச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மை குறைவு, இனப் பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடலி யல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக் கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. இவர்களின் ஞாபகசக்தி குறைவடையும், புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வ திலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.
60 வயதிற்கு மேல் முதுகுத் தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியானது படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுக்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது. குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை அதிகளவில் முதுமைப்படுதலின் காரண மாகவே ஏற்படுகிறன.
வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஓர் உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நல்வாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கியிருக் கிறது. சமுக அரசியல் சூழலும், பொருளாதார வளர்ச்சியும் வாழ் நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுட் காலம் 81 வருடங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு நாடு
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 117

Page 61
சர்வதேச முதியோர் தினம்
இந்த கணிப்பீடு வேறுபடலாம். பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் வாழ்ந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ் நாள் கூடி வந்திருப்பினும், மிகக் கூடிய வாழ்நாளின் அளவு கூட வில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின்படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.
முதுமை தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பது படிவளர்ச்சிக் கோட்பாட்டின் (Evolutionary Theory) சாரம். காலம் செல்லச் செல்ல ஒர் உயிரினத்துக்கு இயற் கையால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட் டாக உயிரினம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. உயிர் உற்பத்தித்திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உடல் வலு இழந்து போகின்றது.
மேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகை கூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் வழித்தோன்றள்களே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
மரபணு முதுமைக் கோட்பாட்டின்படி (The Genetic Theory of Aging) மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக் கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது என்பது அடிப்படையாகும். பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்டகாலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர் களைவிட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இதைப் போன்று மேலும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.
118 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின்

சர்வதேச முதியோர் தினம்
ஐ.நா.வின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050 ஆம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150 இல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க் கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2050ம் ஆண்டளவில் 200 கோடியாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது இதற்கு அடிப்படைக் காரணமாகக் கூறப்படு கின்றது. ‘குழந்தை பிறப்பு வீதம் அதிகம். அதே போல் இறப்பு வீதம் அதிகம்' என்ற நிலைமாறி தற்போது பிறப்பு - இறப்பு எண் ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்ப டுகிறது. இதன்கீழ் முதியோரின் சுதந்திரம், அவர்களின் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உலக முதியோர் தினத்தில் இத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமெனவும், அவர்களின் தேவைகள் முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும், சமூக, கலாசார, அரசியல் ரீதியில் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றன.
முதியோர் தினத்தை உலகமே அனுஷ்டிக்கின்ற நிலை யில் எமது முதிய பெற்றோர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் நாம் உள்ளோம். எம்மை வளர்த்து ஆளாக்கியவர் கள் தமது வாழ்நாளில் பல்வேறுபட்ட தியாகங்களைப் புரிந்து எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். நவீன உலகமய மாக்கல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொருளாதா ரத்தை மையமாகக் கொண்டே எமது வாழ்க்கைத் திட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருவதனால் எமது பெற்றோரை பராமரிக்க
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 119

Page 62
சர்வதேச முதியோர் தினம்
எமக்கு கால அவகசம் கிடைப்பதில்லை. அண்மைக்கால ஆய்வு களின்படி கடந்த ஒரு தசாப்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் முதியோர் இல்லங்களில் தமது பெற்றோரை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையை நாம் ஆத்மார்த்த வாக்குமூலங்களாக இதயங் களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும்.
நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்ற முன்னோர் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றைய காலகட்டத்தில் பெற்றோராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நாட்களை நகர்த் திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோருக்கு மதிப்பு தர வேண்டு மென்பது நம் எல்லோருடைய கலாசாரத்திலும் ஊறிப் போன விடயம் என்றாலும், தற்போதுள்ள ஆழலில் பெற்றோருக்குரிய மதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறதென்பது வருத்தமளிக்கும் விடயமாகவே உள்ளது.
இயந்திரமான வாழ்க்கை, மேலைநாடுகளின் கலாசார தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தை களுடன் கொஞ்சி விளையாடும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் தற்போதெல்லாம் பிஞ்சுக் குழந்தை களை மணிக்கணக்கில் பாதுகாக்க குழந்தைப் பராமரிப்பு இல்லங் களையும், ஆயாக்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய ஆழல் உருவாகிவிட்டது.
இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் பிற்காலத்தில் பெற்றோராக மாறும் போது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தை யர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதென்பது என்ன வோ தற்போது பேஷனாகி விட்டது. பணம் கட்டிவிட்டால் போதும் முதியோர் இல்லங்களில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பும் இன்றைய பிள்ளைகள், முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர் படும் துன்ப துயரங்களை எண்ணுவதில்லை.
வளரும் வரைதான் பெற்றோர் சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய
120 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச முதியோர் தினம்
இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால், தாமும் ஒரு காலத்தில் முதியவர் களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் ஒப்புநோக்கும்போது கூடிய முதியோர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெ டுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜை கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இக்கணிப்பீட்டின்படி இத் தொகை 2011ஆம் ஆண்டளவில் (60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை) 27 இலட்சமாகவும், 2031ஆம் ஆண்டில் 50 இலட்சமா கவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் முதியோர்கள் எண் ணிக்கை அதிகரித்திருப்பதால், பெரும்பாலும் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர். 70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதேவேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற் றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராம ரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமா னங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புணர்னியாமீன் 121

Page 63
சர்வதேச முதியோர் தினம்
இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, எனினும் இலங்கையில் மிக அதிக மான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந் தோட்டப்பகுதி முதியோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது கூடியளவில் சிந்திக்கவேண்டிய விடயமே.
பெரியோர்களை மதி, கவனி என்று அறிவுரை வழங்கும் போது நம் பிற்காலத்தைக் கவனத்தில் கொண்டுதான் இப்படிக் கூறுகின்றோமோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. பிரபல்யம் மிக்க ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் முதுமை எவ்வாறு உருவாகின்றது? அதனை வரவேற்பது எப்படி? என்பதை இவ்வாறு குறிப்பிட்டார். “ஒருமனிதன் தன் வாழ்நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை, பிறகு மாணவன், பின்னர் விடலைப் பருவம், தொழில் வாய்ப்பை பெற்றபின் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமித சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்குகண்ணாடி அணிந்து முகம் சுருங்கி, உடல் மெலிந்து பல், கண்பார்வை எல்லாம் அற்ற நிலையில் கூன் விழுந்து முதுமையாகி மறைவது தான் சரித்திரம்” என்றார்.
இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாக இயங்கும் குடும்பங்க ளையே பெரிதும் சார்ந்துள்ளது. “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள் என்றால் இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை. புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே நேரத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுடன் இணைந்த எமக்கு இது சற்று சிரமத்தைத் தந்தாலும்கூட, இவற்றை நடுநிலைமைப்படுத்திக் கொள்ளக்கூடியளவில் எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாத விடத்து முதியோராகப்போகும் எம் நிலையைப் பற்றி நாம் ஓரளவுக் கேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளோம்.
122 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

சர்வதேச முதியோர் தினம்
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009).
() http:lthesamnet.co.uk/?p=16773
() http:/Ithatstami.oneindia.in/cjpuniyameenl2009!
1001-international-day-of-older-persons2.html
() http:Inayanaya.mobilwl.http/thatstamil.oneindia.in/
sur-lojpuniyameen/2009/1001-international-day-ofolder-persons2.html
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 123

Page 64
13
உலக கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் World Graphic Design Day
ஏப்ரல் 27
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து வரைபட அலங்காரத்திற்கான உலக அமைப்பு இத்தினத்தை ஏப்ரல் 27ஆம் திகதி கொண்டாடி வருகின்றது.
ஆரம்ப காலங்களில் வரைபடக்கலை என்பது தற்போதைய காலகட்டத்தைப் போல பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக Graphic Design வளர்ச்சியானது அண்மைக்காலத்திலேயே மிகவும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. Graphic Design எனும்போது இது ஒரு கலை. நவீன தொலைத் தொடர்பு சாதன வளர்ச்சியுடன் இக்கலையானது வேறு கோணத்தில் வளர்ச்சியடைந்து இன்று நவீன தொழில்நுட்பத்துடன் கணனித்துறையில் இணைந்து முக்கி யத்துவம் பெற்று விளங்குகின்றது. ஆரம்ப கட்டங்களில் Graphic என்பது வரைபடத்துடன் சுருங்கிக் காணப்பட்டாலும் கூட, எதிர் காலத்தில் இத்துறையானது ஒரு இன்றியமையாத் துறையாக விளங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
124 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம்
Graphic தினம் எனும்போது இத்துறையில் ஈடுபடக் கூடியவர்களை கெளரவித்து, மதிப்பளிக்கும் அதேநேரத்தில் இத் துறையின் தொழில் ரீதியான முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இத்தினத்தின் முக்கியத்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதைப்போல இலங்கை, இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படு வதில்லை. 1990களில் இணையத்தள அறிமுகத்துடன் Graphic என்பது ஒரு அத்தியாவசியமான துறையாக பரிணமித்துள்ளது. குறிப்பாக இணையத்தள வடிவமைப்புகள் வெப் பேஜ் வடிவமைப் புகள் Graphic உடன் இணைந்தவை.
இத்தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இத்தினத்தை அனுஷ்டித்துக் கொண்டாடுமிடத்து Graphic வடிவமைப்புத் துறை யில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகள் மக்கள் மத்தியில் உணர்த் தப்படக் கூடியதாக அமையலாம். குறிப்பாக இத்தினத்தன்று Graphic வடிவமைப்பு தொடர்பான பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மேலும் போட்டி நிகழ்ச்சிகள் ஈடுபட்டோருக்கான கெளரவிப்பு நிகழ் வுகள் என்பன முக்கியத்துவப் படுத்தப்படுகின்றன.
எதிர்காலத்தில் இத்துறையின் முக்கியத்துவத்தினுாடாக இத்தினம் பற்றிய கொண்டாட்டங்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுமென எதிர் UT58556)|Tib.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம் (2009)
() http://thesamnet.co.uk/?p=10607
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமினர் 125

Page 65
14
உலக நடன தினம் World Dance Day
ஏப்ரல் 29
இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட, உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுஷ்டிக்கப்படுவதில்லை. உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.
நடனம் (Dance) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத் துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக ‘பரதம் தென்னிந்தியாவுக்குரிய, குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் ‘பரதம்’ என்ற பெயர் வந்ததா கக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல் ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
126 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமினி

உலக நடன தினம்
இதில் 'பாவம் உணர்ச்சியையும், ‘ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் "தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணரு தலைக் காணலாம். ஆனால் மேற்கத்தேய நாடுகளில் முக்கியத் துவம் பெற்றுள்ள பாலே (மேற்கத்திய மரபு நடனம்), டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.
பரத நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப் பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் *ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மை யான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் "லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன. பரதநாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவி களின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங் கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றிற்சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டி யத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளை யும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
இதேபோல இந்தியாவில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் நடனக்கலை வேறுபட்ட வகைகளின் பிரபல்யம் அடைந்து காணப் படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது. உதாரணமாக மாநில வாரியாக
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமீன் 127

Page 66
உலக நடன தினம்
புகழ் பெற்ற நடனங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
தமிழ்நாட்டில் - பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் - சாக்கியார் கூத்து, கதகளி மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்: ஆந்திராவில் - குச்சுப்பிடி, கோட்டம், விதி பகவதம்: கர்நாடகாவில் - யக்ஷகானம்: ஒரிசாவில் - ஒடிசி மணிப்பூரில் - மணிப்புரி, லாயப்-ஹரோபா. பஞ்சாப்பில் - பாங்ரா, கிட்டா பீகாரில் - பிதேஷியா, ஜட்டாஜட்டின், லாகூய், நாச்சாரி அஸ்ஸாமில்பிகு : ஜம்மு-காஷ்மீரில் - சக்ரி ருக்ப் என்றவாறு அமைந்துள்ளன. அதேபோல நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை பின்வருமாறு சுருக்கமாக வகுக்கலாம். பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி.
இந்தியாவின் கிராமிய நடனங்கள்
இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தா ராயலாம். தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் - தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம் வடஇந்தியக் கிராமிய நடனங்கள் - டும்ஹால் இருவிப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி .
கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள் நாகா நடனம், ஹஸா கிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் விரிதா, ஹர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் . மேற்கிந்திய நடனங்கள் - கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மணர்டோ
இனி உலக நடனதினம் பற்றி சற்று நோக்குவோம். பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து
128 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமினர்

உலக நடன தினம்
செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவ தற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வழியுறுத்துவதும் சர்வதேச நடனதினத்தின் முக்கிய இலக்காகும்.
1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக் g56 tilisir Ep & j6(8958 plóOT F60)L International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப் படுகின்றன. 2003ம் ஆண்டு நடன தினம் பற்றிய செய்தியை G6116ful jou(355 plóOT F60LJuigi International Dance Council (CID) 56oo6d6huj (BuJFTóffluuij SÐ6ðaể6ð JTŮņ6ò (Prof. Alkis Raftis) அவர்கள் “உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங் கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக் கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை” என்றார்.
2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்காகக் கொண் டிருந்தது. தனிப்பட்ட நடனப் பயிற்சியாளர்கள், நடன நிறுவனங்கள் தமது பிரேரணைகளுடன் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைச்சுகளைத் தொடர்பு கொண்டு பாடசாலைகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல், நடனம் பற்றிய புகைபபடங்களை காட்சிப் படுத்துதல், வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல், நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுக ளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது. 2006ம் ஆண்டில் சர்வதேச நடனசபையின் International Dance Council (CID), தலைவர் தனது நடன தின உரையில் குறிப்பிட்ட விடயம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது “நடனக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நிறுவன ரீதியில் ஒன்றுபடாமையும், இது விடயமாக அக்கரை செலுத்தாமல் இருப்பதுமே சர்வதேச ரீதியில் நடனக்கலை அங்கிகரிக்கப்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீனி 129

Page 67
உலக நடன தினம்
படாமைக்கான காரணங்கள்’ என்றும் “இதற்காக நடனக்கலை ஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு”மெனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
2007ம் ஆண்டில் நடன தினம் பிள்ளைகளுக்காக அர்ப் பணிக்கப்பட்டது. 2008ம் ஆண்டில் நடன தினத்தின் போது மேற் குறித்த விடயங்களை சுட்டிக்காட்டி அரசாங்கங்களும், அனுசரணை யாளர்களும், ஊடகங்களும் இது விடயமாக ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 2009ம் ஆண்டிலும் நடனக் கலையை பிரபல்யப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு வேண்டப்பட்டது.
நடன தினத்துடன் இணைந்த வகையில் இது விடயமாக விழிப்புணச்சியை ஏற்படுத்து முகமாக ஐக்கிய அமெரிக்காவில் (8g5du BL6GT 6JTy$605 National Dance Week (NDW) ijsL60T படுத்தி நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 1981ல் நடனத் திற்கு முறையான அங்கிகாரத்தப் பெறுவதற்காக வேண்டி நடனங் கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடன வாரத்திற்கான Sin (6 Q6 psu GLDmgirp580)6OT Coalition for National Dance Week உருவாக்கியுள்ளனர்.
இந்திய இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நடனக் கலைஞர்கள், பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நடன அமைப்புகள் இவ்விடயத்தை எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009).
0 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0429
international-dance-day.html
http://thesamnet.co.uk/?p=10666
0. http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/cj/
puniyameen/2009/0429-international-dance-day.html
http://twitter.com/eelam/status/1644688069
0 http://www.abc.net/cgibin/ms/x.cgi?&NAVG-Main&page
=3&per page=50
()
0
130 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

15
உலக இதயநோய் தினம் world heart day
செப்டம்பர் இறுதி ஞாயிற்றுக்கிழமை
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை உலக இதயநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்ப டுகிறது. இதய நோய்களும், பக்கவாதமும் உலகில் இறப்புகளுக் கான முக்கியமான காரணம் என்பதையும் அது வருடமொன்றுக்கு 17.2 மில்லியன் உயிர்களைக் காவு கொள்கின்றது என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதற்காகவே உலக இதயநோய் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 领
2009 ஆண்டுக்கான உலக இதயநோய் விழிப்புணர்வு தினத்தின் தொனிப்பொருள் “இதயபூர்வமாக செயல்படு” என்பதா கும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழுமனதுடன், ஈடுபாட் டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும். எனவே இதயத் தோடு இணங்கி செயற்படுவோம் என்ற செய்தியை ஊட்டுவதற்காக 2009 உலக இதயநோய் தினம் உலகளாவிய ரீதியில் உணர்வ லைகளை அவிழ்த்துவிட்டது.
இதய நோய் பற்றி ஆராய முன்பு “இதயம்” பற்றிச் சிறு
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமீன் 131

Page 68
உலக இதயநோய் தினம்
விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதயம் முள்ளந்தண்டுளிகளில் காணப்படும் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவதா கும். இதயம், விசேடமான இயங்கு தசையால் ஆனது. இதயத் தைச் சுறறி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை, வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளி யில் ஒருவித பாய்மம் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சி களில் இருந்தும் பாதுகாக்கும்.
இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் இரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு சோணை அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக் கம் இருக்கும் இரண்டு இதயஅறைகளை, கீழ்ப்புற இதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.
இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும். அப்படி தள்ளப்படும் இரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் இரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன.
வலது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு முக்கூர் வால்வு என்றும், இடது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு இருகூர் வால்வு என்றும் வழங்கப்படும். வலது சோணை அறையில் இருந்து வலது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் வலது சோணை அறைக்குத் திரும்பாமல் “முக்கூர் வால்வு" தடுக்கிறது. அதேபோல், இடது சோணை அறையில் இருந்து இடது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் இடது சோணை அறைக்குத் திரும்பாமல் இருகூர் வால்வு” தடுக்கிறது.
132 சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமீன்

உலக இதயநோய் தினம்
வலது இதயவறை சுருங்கும்போது, அவ்வறையில் இருக் கும் இரத்தம் நுரையீரல் நாடியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் அரைமதி வால்வு என்று பெயர். அதேபோல், இடது இதயவறை சுருங்கும்போது, பெருநாடிவில்லி னுாடு செல்லும் இரத்தம் திரும்பிவராமல் தடுக்கும் வால்வுக்கு “பெருநாடி அரைமதி வால்வு” என்று பெயர்.
உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஒட்சிசன் போன்றவை அவசி யம். அதற்குத் தான் இதயத்துக்கே இரத்தத்தைத் தரும் இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத் தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை முடியுருநாடி எனப்படும். இதன்மூலம், இதயம் தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த இரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் “மாரடைப்பு” ஏற்படுகிறது.
உலகெங்கிலும் நாளாந்தம் பல்வேறு வகையான புதிய புதிய தொற்று நோய்கள் பற்றிக் கேள்வியுறுகின்றோம். பன்றிக் காய்ச்சல், டெங்கு, எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். பொதுவாக தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தொற்றாநோய்கள் என்பவை எவை என்பதை அறிந்திருப்பது முக்கியமானது.
இதயம் மற்றும் குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, நீண்டகாலம் நீடிக்கும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என்பனவற்றை தொற்றா நோய்க ளாக வகைப்படுத்தலாம். உலகில் ஏற்படும், மரணங்களுக்கான முதன்மைக் காரணியாக இருதய நோய்களும், பாரிசவாதமும் அமைகின்றன. முழுஉலகிலும் இந்நோய்களால் வருடாந்தம் 17.2 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலக இருதய கூட்டமைப் பானது அதன் அங்கத்தவர்களோடு இணைந்து இதயநோய்கள் மற்றும் மாரடைப்பு காரணமாகவும் பக்கவாதம் காரணமாகவும் நிகழும்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 133

Page 69
உலக இதயநோய் தினம்
அகால மரணங்களுள் குறைந்த பட்சம் 80சதவீதத்தை முக்கிய ஆபத்துக் காரணிகளான புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல், உடல் செயற்பாடின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும் எனும் செய்தியைப் பரப்புகின்றது.
நமது உடலில் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால், ஒய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருசில உறுப்புகளில் மிக முக்கிய மானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது? இதயம் “துடிக்கவில்லை” என்றால் அசுத்த இரத்தம் தூய்மையாகாது. உடல் இழையங்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் இழையங்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துபோகும்.
இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணை யாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது. இதயம் தன்னிச்சை யாகச் செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரிரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.
இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல் பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
134 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக இதயநோய் தினம்
அட்ரீனலின் -
இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும் போது, இரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
தைராக்ஸின் -
இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களை இது கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.
நாளக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் இரத்தத்தின் அளவைப் பொறுத்தும், இரத்த அழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும்.
இதயத் துடிப்பு என்பது இதயம் இயங்கும் போது ஏற்படு வது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருநாடியில் இரத்த ஒட்டம் ஏற்பட்டு இரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும். இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும். இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால் அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங் களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.
உடற்பயிற்சி செய்யும் போதும், கர்ப்பக் காலத்தில் பெண்க ளுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும் போதும், உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். தூங்கும் போதும், நீண்ட நேரம் படுத்து ஒய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சராசரி மனித னுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான
சர்வதேச நினைவு தினங்கள் - பாகம் கலாபூஷணம் புன்னியாமீன் 135

Page 70
உலக இதயநோய் தினம்
அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு (உயர்குருதி அமுக்கம்) என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு (தாழ்குருதி அமுக்கம்) என்றும் சொல்வார் கள். மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.
24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 வீதம் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 வீதம் 55 வயதுக்குள் இருக்கின்றனர்.
மாரடைப்பைத் தடுப்பதற்கு முன்னேற்பாடாக பின் வரும் வழிகளை கையாளலாம்.
ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளல்; பொதுவாக ஒரு சராசரி மனிதனில் “எச்டிஎல்” எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிரா முக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே கொழுப்புள்ள பொருள்களையும் எண்ணெயையும் தவிர்க்க வேண்டும். காய்கறி ள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.
சுறுசுறுப்பாக இருங்கள். இதயத்தைப் பேணுங்கள். 30 நிமிட நேர உடற்பயிற்சிகள் மாரடைப்புகளையும், பக்கவாதத்தையும் தவிர்க்க உதவும். அது உங்களது வேலையிலும் அனுகூலமாக அமையும். படிக்கட்டு வரிசையைப் பயன்படுத்துங்கள். இடை வேளைகளில் உலாவுங்கள்.
உப்பைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். உங்களது உப்பு பாவனையை நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவுக்கு மட்டுப்ப டுத்துங்கள். பதப்படுத்திய உணவைத் தவிருங்கள். அவை பெரும்பாலும் உயர் உப்பு அடக்கத்தைக் கொண்டவை. குறிப்பாக
136 சர்வதேச நினனவு தினங்கள் . பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக இதயநோய் தினம்
தந்தைக்கோ அல்லது தாய்க்கோ உயர் இரத்த அழுத்த நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உப்பு உட்பட உப்பு நிறைந்த உணவுப் பொருள்களை இளம் வயதிலிருந்தே குறைத் துச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலம் நோய் வராமல் பார்த்துக் கொள்ளமுடியும்.
புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள். முடியுரு நாடி செயலிழப்பு, இதய நோய், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் ஒரு வருடகாலத்துள் பாதியளவுக்குக் குறையும். காலப்போக்கில் சாதாரண நிலையை அடைந்துவிடும்
ஆரோக்கியமான உடல் நிலையைப் பேணுங்கள். குறிப்பாக உப்பு உள்ளெடுப்பைக் குறைப்பதால் ஏற்படும் நிறை குறைதலானது குருதியமுக்கம் குறைவடைய வழி செய்யும். பக்கவாதத்துக்கான முதன்மையான ஆபத்துக்குக் காரணம் உயர் குருதி அமுக்க LDTG51D.
உங்களது தரவு எண்களை அறிந்து கொள்ளுங்கள். உங்களது குருதி அமுக்கம், கொலஸ்ரோல் மட்டம், குளுக்கோசு மட்டம், இடுப்பு இடை விகிதம், உடல் திணிவுச் சுட்டி போன்ற வற்றை அளக்கக்கூடிய மருத்துவ நிபுணர் ஒருவரை நாடுங்கள். உங்களுக்கு ஒட்டு மொத்த ஆபத்து நிலையை அறிந்து கொள்வ தால் உங்களது இதயச் சுகாதாரத்தை மேம்படுத்தத்தக்க குறிப் பான திட்டத்தை நீங்கள் விருத்தி செய்து கொள்ளலாம். சவால் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பரபரப் புத்தன்மை உள்ளது. நன்கு சிந்தித்து அன்றாட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலம் பரபரப்பைக் குறைத்துக் கொள்ள முடியும். என்றைக்காவது ஒரு நாள் பரபரப்படைந்தால் தவறில்லை. தொடர்ந்து ஒருவர் பரபரப்படைந்தால் தொடர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல் நலன் கெடும். இரத்தக் குழாய்கள் சுருங்கும்.
முன்பு இதய நோய், மாரடைப்பு போன்றன குணப்படுத்த முடியாத நோய்களாக கருதப்பட்டன. ஆனால் இதய அறுவைச் சிகிச்சைமுறை இன்று விருத்தி கண்டுள்ளது. இதய அறுவைச்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 137

Page 71
உலக இதயநோய் தினம்
சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. துடித்துக்கொண்டி ருக்கும் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வது, மற்றொன்று இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே அறுவைச் சிகிச்சை செய்வது.
இதயத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது என்பது தான பரவலாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, இதில் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வார்கள். அப்போது இதயம் செய்யும் பணியை இதய - நுரையீரல் இயந்திரம் (HEART - LUNG MACHINE) செய்யும். இம்முறையில் வெளியிலிருந்து இரத்தம் செலுத்த வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்குப் பல்வேறு சிரமங்கள் வர வாய்ப்புகள் உண்டு.
இதயத்தை நிறுத்தாமல் துடித்துக் கொண்டிருக்கும் போதே அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்வது “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி” ஆகும். இச்சிகிச்சை முறையில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் தேவை 99 சதவீதம் இருக்காது. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை. சர்க்கரை நோய், நுரையீரல் நோய் ஆகியவற் றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும், முதியவர்களுக்கும் “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி”யில் ஆபத்து மிகவும் குறைவு. இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லோராலும் செய்துவிட (Մ91գԱ In 5l.
இத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து ஆயுளை நீடிக்க நவீன ESMR சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது அறுவை சிகிச்சை இல்லாமல், வலியினறி, அதிக செலவுபிடிக்காத ஒரு புதிய நவீன சிகிச்சை முறையாகும். ESMR 6T6trugs6 6flourTissib, Extracorporeal Shock - wave Myocardial Revascularization என்பது ஆகும்.
இந்த நவீன சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட இதயத் தசையின மீது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அதிர்வுகள் செலுத்
138 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக இதயநோய் தினம்
தப்படும்போது பல புதிய இரத்தக் குழாய்கள் உருவாகி இரத்த ஓட்டம் சீராகிறது. தீவிர நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, வாழ்க்கை யின் இறுதிக் கட்டத்தில் இருப்போருக்கு இந்த நவீன சிகிச்சை மூலம் முழு நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீர்பெற்று இதயம் நன்கு இயங்குகிறது.
மருந்துகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி போன்றவை இதயக் கோளாறுக்கு உதவும் என்றாலும் கூட, ESMR போன்று முழுமையான தீர்வை அளிக்காது என்று கூறப்படுகிறது.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகைகளும், இணையத்தளங்களும்
0 தினக்குரல் (இலங்கை) : செப்டெம்பர் 29.2009
() லண்டன்குரல் (பிரித்தானியா) : அக்டோபர் 2009
0 http://thesamnet.co.uk/?p=16696 (iflist6furt)
0 http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0929-world
heart-day1.html (@ögölu T)
() http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/cj/
puniyameen/2009/0929-world-heart-day1.html (Gibgu II)
0. http://singakkutti.blogspot.com/2009/09/blog-post 26.html
0 http://freer.info/browse.php?u...b-13
() http://ns3.greynium.com/search.html?topic-day&start-4
(இந்தியா)
0. http://tamilvelibkp.blogspot.com/2009 11 01 archive.html
d http://twitter.com/eelam/status/4421255245
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 139

Page 72
16
சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் World Intellectual Property Day
ஏப்ரல் 26
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ஆம் திகதி அறிவுசார் Q&ngg.f6OLD 560Tib (World Intellectual Property Day) Fij6(858 ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்புப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேசரீதியில் கண்டு பிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஒவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கெளரவிக் கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத் gifsoLD 960LDisoTT6) (World Intellectual Property Organization, WIPO) 2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 26 ஆம் திகதி இத்தினத்தின் நிகழ்வுகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தன்று கருத்தரங்குகள், கூட்டங்கள், விசேட நிகழ்ச்சித் திட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் போன்றவற்றினுடாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது.
140 சர்வதேச நினன்வு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம்
சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் எனும்போது மனிதனின் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து கண்டு பிடிக்கப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தை வழங்கி அக் கண்டு பிடிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கத்தை வழங்கும் அதேநேரத்தில் கண்டுபிடிப்பாளர்களை கெளரவித்து ஊக்கப் படுத்தும் நிகழ்வுகளும் இத்தினத்தன்று முக்கியத்துவப்படுத்தப்படு கின்றது. அதேபோல கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கெளரவிக்கவும் இத்தினத்தை பயன் படுத்திக் கொள்கின்றனர். விசேடமாக இத்தினத்தன்று மின் விளக் கைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன், கணனி மென் பொருளைக் கண்டுபிடித்த புலோரியென் மியுலர் மற்றும் பிரச்சினை களுக்குரிய விடயங்களை நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஹியுலெடி சுப்பர்மேன் ஜெரிமி பிரிப்ஸ் ஆகியோர் விசேடமாக நினைவு கூரப்படுவர்.
ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் பின்வரும் கருப்பொருட்களின் அடிப்படையில் கொண்டாடப் பட்டு வந்துள்ளது.
2001 - எதிர்காலத்தை இன்று அமைத்தல்
2002 - ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
2003 - அறிவுசார் சொத்துரிமையை உங்கள் வணிகமாக்குங்கள்
2004 - ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல் .
2005 சிந்தி, கற்பனை செய், ஆக்கு
2006 - கருத்துடன் இது தொடங்குகிறது
2007 ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
2008 - கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுதல், அறிவுசார்
சொத்துரிமையை மதித்தல்
2009ஆம் ஆண்டு இதன் கருப்பொருள் செழுமையான நவீனமயப்படுத்தல்' என்பதாகும்.
இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகக் குறைவு. இடைக்கிடையே ஒரு சில கருத்தரங்குகள், பதாதைகள் மூலம் நிகழ்ச்சித் திட்டத்தை
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீனி 141

Page 73
சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம்
முடித்துக் கொள்கின்றன. உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு தேவைப்படக்கூடிய ஒரு விடயத்தை கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபி டிப்பாளர் அல்லது சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு ஆக்கத்தை முன்வைக்கக்கூடிய கலைஞர் அல்லது ஓவியன் இத்தினத்தன்று பிரபல்யப்படுத்தப்பட்டு கெளரவிக்கப்படுபவனாக இருந்தான். இந் நிகழ்ச்சித் திட்டத்தில் யாதாவது ஒரு பயனையடைந்தால் திருப்தி இருக்கலாம்.
எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்று பொருத் திருந்து பார்ப்போம்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம்
() http://thesamnet.co.uk/?p=10583 (tilfighg;II6öflull)
142 சர்வதேச நினனவு தினங்கள் . பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாயினர்

17
சர்வதேச நிர்வள தினம் world water day
மார்ச் 22
மார்ச் 22 றியோ டி ஜெனிரோவில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வ தேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப்பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தலாகும்.
உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர், நீர் வளமானது சகல உயிரினங்களிதும் வாழ்க்கைக்கு அத்தியவசியத் தேவையாகும். அதனை பயன்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 ; கலாபூஷணம் புனினியாமினி 143

Page 74
சர்வதேச நீர்வள தினம்
படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பத னால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.
பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை எனக் கூறப்படுகின் றது. வேற்றுக் கிரகங்களில் மரம் செடி கொடி, ஆறு, குளம், ஓடைக ளும் இல்லை. இதன் காரணமாகவே அந்தக் கிரகங்களில் உயிரினங் கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன.
நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை தான் இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய்விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே (tplգեւIT5l.
மனித சமுதாயத்துக்கு நீரின் பயன் அளப்பரியது. பிறப்பி லும், வாழ்விலும், இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது தண்ணிர். நீரின்றி நிலமில்லை, நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணிரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.
ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. இன்றைய தினத்துக் கான தொனிப் பொருள் “எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளம் நீரைப்பகிர்தல், வாய்ப்புக்களைப் பகிர்தல், (Transboundary waters, Sharing Water, Sharing opportunities) 6T6trusTsib. 616)606)&(65iisg. அப்பாலான நீர்வளங்களை கூட்டாக முகாமைத்துவம் செய்வதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் நாடுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி அமைதி, சமாதா னம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகிய வற்றை மேம்படுத்துவதுமே இத்தொனிப்பொருளின் நோக்கமாகும்.
144 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புணர்னியாமீனி

சர்வதேச நீர்வள தினம்
நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து நதி, யூப்பிரடிஸ், தைகிறீஸ் போன்றன உலக நாகரி கங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.
பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத் தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்ப தில்லை. உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்புநீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30 சதவீதம் நிலக்கீழ் நீர். 3 சதவீதம் நன்னீர் ஏரிகளும், நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.
உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக் காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்து கின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக் கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.
நகரமயமாக்கல் பல்வேறு நீர்ப்பிரச்சினைக்குக் காரணமா கின்றது. குடிநீர் போதாமை, சுகாதாரம் பேணப்படாமை மற்றும் நீர் மூலம் உண்டாகும் வியாதிகள் என்பவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. உலகில் வறிய நாடுகள் நிலக்கீழ் நீரையும் பெற்றுக் கொள்ளும் அளவில் தாகமுள்ளவையாக இருக்கின்றன. காரணம் காடழிப்பு, வனாந்திரமாதல் ஆகியவற்றால் மழைவீழ்ச்சி குறைவடைந்து வருகின்றமையாகும்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் ! ; கலாபூஷணம் புண்னியாமீன் 145

Page 75
சர்வதேச நீர்வள தினம்
வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக் கின்றனர். நீர் தீர்ந்துபோகும் ஒரு வளம் என்பது பற்றிய உலக ளாவிய விழிப்புணர்வு றியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும், நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் (1992) மகா நாட்டிலும் பிரதிபலித்தது. றியோ - டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடு களின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத் துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப் பட்டன. வீட்டுப் பாவனையாளர் சங்கங்களும், கமக்காரர் அமைப் புக்களும் முறையே வீட்டுத்தேவை, விவசாயத்தேவை என்பனவற் றுக்காக நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப் பட்டார்கள்.
உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்ப வர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும் புவி வெப்பமய மாதலும் மனிதகுலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.
இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார் படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும் போது வேதனையே மிச்சமாகிறது. ஒரு குடம் நீர் வேண்டி மைல்கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப் புணர்வின்றி வாழக் கூடாது. “நீரின்றி அமையாது உலகு” என்று வள்ளுவர் சொன்னதை மனதிலிருத்திச் செயற்படுவோம்!
நீர்ப்பிரச்சினைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. விதப்புரைகள் 1977ல் ஆஜண்டீனாவில் நடந்த ஐ.நா.வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த றியோ மகாநாடு,
146 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின்

சர்வதேச நீர்வள தினம்
1994ல் றியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீர் வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.
உலக வானிலை அவதான அமைப்பும் (WMO) யுனெஸ் கோவும் 1997ல் உலக நீர்வள தினத்தைக் கொண்டாடுவதற்கான தலைமை முகவராகப் பணியாற்றின. சென்னை நீரியல்துறை அறிஞர் பேராசிரியர் ஏ.மோகனக்கிருஸ்ணன் கூற்றுப்படி உலகிலுள்ள 240 பெரும் ஆறுகள் உள்ளூர்ப் பாவனைக்கு போதுமானவையாகவே உள்ளன. பெருகிவரும் சனத்தொகையால் நீர்வளம் அருகி வருகின்றது. 21ம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் உக்கிரமடையும் உலகயுத்தம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்குமானால் அது நீருக்காகவே ஏற்படும். இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர, மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்பு ணரசசியை ஏற்படுத்தக் கூடிய உருப்படியான செயற்றிட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதில்லை. நீர்ச்சிக்கனம், நீர்த்துய்மை, நீர்ச்சேமிப்பு குறித்து விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப் பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயில் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறைகாட்டுகிறோம். நீர் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சை யாகவே அமைந்துவிடுகிறது.
இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன. இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானபொக்கே 'நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல். அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிரநே”ககவேண்டி ஏற்படும்” என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது. தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவ்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 147

Page 76
சர்வதேச நீர்வள தினம்
குடிநீரை விநியோகிக்கின்றது. நீர் பற்றி செவ்விந்தியத் தலைவர் Siyattle கூறியுள்ள கூற்று நீரின் அருமையைக் குறித்து எமது சிந்தனையைத் தூண்டுவதாகும். “இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும், ஒடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மை யையிட்டு அறிவுறுத்த வேண்டும்.”
உலக நீர் தினம் நினைவு கூரப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும் சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணிரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத் துக்கேற்ப, தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதேவேளை தூய நீரின் எல்லை அருகிவருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக் குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும், எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.
எனவே, நீர் எங்கள் உயிருக்கு சமனைன்று நாம் கருதி செயல்படவேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ளவேண்டும். நீர் இன்றேல் உலகம் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங் களுக்கும் தாய்வளம் தண்ணிர். “ஊர் வளம் பெற, பார் வளம் பெற நீர் வளம் காப்போம்” என இன்றைய தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள் (2009)
http://thesamnet.co.uk/?p=9039 (figs.Tosu T) http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0322world-water-day-today.html (6qgBgäuJIT) V− http://webjosh.com/One-India-Top-News-Tamil/article.php?title http://news.writeka.net/?lang-ta&item=3245&span=24 http://twitter.com/eelam/statuses/1369675420 (LigTairgrt) http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/ search.html?topic-celeberation (655urt)
http://search,webdunia.com/gujarati/tag/ (SigouT)
:
()
148 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

18
நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம International Day for Monuments and Sites
ஏப்ரல் 18
நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான sj6 (853 f60Tib (International Day for Monuments and Sites) assoir(6 தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனிசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச்சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங் களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ் வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன் 149

Page 77
நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச தினம்
எனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும், அவற்றின் இருப்புகள், வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும், விளக்கங் களும் மக்களுக்கு தேவைப்படுகின்றன. இத்தினத்தில் மக்களுக்கு இவைபற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) fissippi Lingol (p60pulls) pool முறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான 91606015g,6)& F60L (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலா ளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலா ளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச்சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல் லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடு பட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசு சாரா நிறுவனமும் இதுவேயாகும்.
1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர் பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடை பெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம்’ எனப் பரவலாக அறியப்படுகிறது.
உலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.
150 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச தினம்
இதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைம்ை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபா லனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர் பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடிவருகிறது
இன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts) தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாகப் பெற முடிகிறது.
தொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக்கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல், பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல், பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல், மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பன வெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கிய மான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற் காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம்,
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன் 151

Page 78
நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச தினம்
புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், இரசாயன வியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வ தற்கான கலையும், அறிவியலும் ஆகும். பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில் தளபாடங்கள், உற்பத்திப் பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும்.
ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணிப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்க LDT(ğ5LD.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம்: (2009)
() http://thesamnet.co.uk/?p=10243
...
152 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

19
சர்வதேச மருத்துவிச்சிகள் தினம் International Midwives Day
மே 05
ஒவ்வொரு மே மாதம் 05ஆம் திகதியும் சர்வதேச மருத்து விச்சிகள் தினமாக International Midwives Day அனுஸ்டிக்கப் படுகிறது. பொதுவாக மருத்துவிச்சிகள் தினம் எனும்போது நவீன உலகில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் சமூகக் கட்டமைப் பில் ஒரு முக்கிய பிரிவினர் தொடர்பான நினைவூட்டல் தினமாகவே அமைகின்றது.
3ம் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது தாய், சேய் மரண வீதம் அதிகமாகும். இந்த தாய், சேய் மரண வீதத்தை கட்டுப்படுத்த 3ம் உலக நாடுகள் கூடிய கரிசனை செலுத்த வேண்டுமென கடந்த சில தசாப்தங்களாகவே உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகின்றது. அதேநேரத்தில் இந்தியா, இலங்கை, பாகசிஸ்தான், மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பங்களாதேசம் போன்ற சார்க் நாடுகள் இவ் விடயத்தில் கூடிய கரிசனை காட்டி வருவதின் காரணமாக அண்மைக் காலமாக தாய், சேய் மரண வீதம் இந் நாடுகளிலும் வெகுவாக குறைந்து வருவதை அவதானிக்கலாம்.
இச்செயற்றிட்டத்துக்கு அரசாங்கங்களும், சுகாதார அமைச் சுக்களும், சுகாதார நிறுவனங்களும் கூடிய பங்களிப்பினை வழங்கி
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 153

Page 79
சர்வதேச மருத்துவிச்சிகள் தினம்
வந்தாலும்கூட, இச்செயற்றிட்டத்தை நேரடியாக எடுத்துச் செல்வதில் மருத்துவிச்சிகள் என்றழைக்கப்படும் குடும்பநல உத்தியோகஸ் தர்களின் பங்களிப்பே முதன்மை பெற்றுள்ளது.
ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததிலிருந்து சிசுவைப் பிரசவிப்ப துவரை, பிறந்த சிசு சுமார் ஐந்து வயதை அடையும் வரை இந்த குடும்பநல உத்தியோகஸ்தர்களின் நேரடிப் பராமரிப்பும், அவதான மும், ஆலோசனைகளும் விசாலமானவை. மருத்துவிச்சிகளின் சேவை மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப் பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இவர்களின் பணி உயரியதாகவே கருதப்படுகின்றது.
இந்த அடிப்படையில் 1987ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவிச்சிகள் மாநாட்டில் International Confederation of Midwives 8Fj6)IG3ğ58F fgğ6uil6Ö LD(gibğöğ56ñlğféfaa56íT தினமொன்று பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும், மருத்து விச்சிகளுக்கு சமூகத்தில் உயரிய இடம் வழங்கப்படுவதையும், கெளரவிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தினம் அமைய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாகவே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் 1991ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதியை சர்வதேச LD(b$g,633s.6ft is0TLDITs International Midwives Day 6popsis கொண்டு தொடர்ச்சியாக அதனை ஒவ்வொரு மே மாதம் 05ஆம் திகதியும் அனுஷ்டித்து வருகின்றன. இன்று உலகில் பெரும்பாலான நாடுகள் இத்தினத்தை அனுஷ்டிப்பதை அவதானிக்கலாம்.
குடும்பநல உத்தியோகஸ்தர்களான மருத்துவிச்சிகள் பொதுவாக ஒரு தாய் கர்ப்பம் தரித்ததிலிருந்து பிரசவம் வரை சகல விடயங்களிலும் கர்ப்பினித் தாய்க்கு ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும், பராமரிப்பாளர்களாகவும் இருந்து வருகின்ற னர். குறிப்பாக ஒரு கர்ப்பினித் தாயின் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப நிலை தொடர்பான விபரங்கள் போன்றவற்றை அவதானித்து கர்ப்பினிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, மேற் கொள்ள வேண்டிய வைத்தியப் பராமரிப்புக்கான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர்.
154 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச மருத்துவிச்சிகள் தினம்
அதேபோல குழந்தை பிறந்ததும் மூன்றாம் உலக நாடுக ளில் யுனிசெப்பின் ஆதரவுடன் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேடு பேணப்படுகின்றது. இந்த ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேடு குடும்பநல உத்தியோகஸ்தர்களின் மூலமாகவே குழந்தை பிறந்ததி லிருந்து ஐந்தாண்டு காலம்வரை பராமரிக்கப்படுகின்றது. குறிப்பாக குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு பி.சி.ஜி. தடுப்பூசி வைத்தியசா லையிலேயே ஏற்றப்படுகின்றது. பிரசவத்தின்பின் தாய் வீடு சென்ற பின்பு குடும்பநல உத்தியோகஸ்தர் தாயின் வீட்டுக்கு வந்து குழந் தையை பரிசோதித்து தேவையான அறிவுரைகளை வழங்குவர்.
குறிப்பாக தாய்ப் பாலூட்டுதல், தொப்புள்கொடி பராமரிப்பு, குழந்தையின் உளவிருத்தியைத் தூண்டுதல், ஆபத்தான அறிகுறி கள், குழந்தைக்கான தடுப்பூசி விபரங்கள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற விடயங்களும், குழந்தை 06 மாதங்கள் நிறைவடைந்ததும் குழந்தைக்கு உணவூட்டுதல், குழந்தை நோய்வாய்ப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், குழந்தையின் உள விருத்தி யைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்குவர்.
பொதுவாக இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சுகாதார அமைச்சுக்களில் குடும்ப சுகாதாரப் பணியகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன இத்தகைய நடவடிக்கைகளுக்கு பூரண அனுசரணையாளர்களா கவும், ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்து வருகின்றன.
மேலும் இந்த குடும்பநல உத்தியோகஸ்தர்கள் தொற்று நோய்கள் பரவும் காலங்களில் கிராமங்கள் தோறும் சென்று அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவர். அத்துடன் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் மக்களை அறிவுறுத்தி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவர்.
பெரும்பாலான நாடுகளில் இன்று நகர, கிராமத்து வைத்தியசாலைகளுடன் இவர்களது பணி ஒருங்கிணைக்கப் படடுள்ளது. எவ்வாறாயினும் அளவிடமுடியாத சேவைகளை
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 155

Page 80
சர்வதேச மருத்துவிச்சிகள் தினம்
வழங்கிவரும் மருத்துவிச்சிகளாகிய குடும்பநல உத்தியோகஸ்தர்க ளின் தொழில் அந்தஸ்தை அதிகரிக்கக்கூடிய வகையில் இவர்க ளுக்கு கூடிய வசதிகளைச் செய்து கொடுப்பதுடன், இன்றைய அரசாங்கங்கள் இது விடயத்தில் கூடிய கரிசனைக் காட்டுவதி னுாடாக சமூகத்துக்கு இவர்களின் தொண்டு எத்தகையது என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம்
() http://thesamnet.co.uk/?p=10983
156 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

20
அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD)
G3LD 04
ஆண்டு தோறும் மே 4ஆம் திகதியன்று அனைத்துலக gué0600Tsisgub u60Luis0Tj BIT6f International Firefighters' Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது.
தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்க ளின் பணி மிக விசாலமானது. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.
இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களி னாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீ யினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரி யது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும், மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும், அதேபோல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 157

Page 81
அனைத்துலக தீயணைக்கும் படையினர் தினம்
இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினரின் சேவைக ளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் அங்கீகாரத் தன்மையை வழங்கி இவர்களை நன்றி கூறுமுகமாக இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகக் காணப்படுகின்றது.
அதாவது, சமூகத்தையும், சூழலையும் பாதுகாக்க முற்படும இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும், இவர்கள் கெளரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும், ஆழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் படையினரை நினைவு கூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.
வழக்கமாக ஐரோப்பிய நாடுகளிலே தீயணைப்புப் படையி னர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம் பெற்ற பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவு கூருவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகவே மே 4ஆம் திகதி அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாளாக பிரகடனப் படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
0. http://thesamnet.co.uk/?p=10944 (fig5IT6furt)
() http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0504-world
fire-fighters-day-today.html (@sögum)
() http://nayanaya.mobi/v/http/thatstamiloneindia.in/cj1-r/cj/ puniyameen/2009/0504-world-fire-fighters-day-today.html (இந்தியா)
158 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமினி

21
சர்வதேச தொழிலாளர் தினம் International Labor Day (May Day)
மே 01
ஆண்டுதோறும் மே 1ம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படு கின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப் படுகின்றது.
உலக கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஆலைகளின் பெருக்கம், இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய காரணி கள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒருபுறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர். தொழி லாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில் உற்பத்தியாளர் ஆர்வம் காட்டவில்லை. கால்வயிற்றுக் கஞ்சிக்காக தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளி கள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டனர். இதனால் தொழிலாளர் வாழ்க்கையை சிறுமையும், வறுமையும் ஆட்கொண் டன. அதேநேரம் தொழில் உரிமையாளர்களால் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்யவேண்டுமென தொழிலாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 159

Page 82
சர்வதேச தொழிலாளர் தினம்
இப்படிப்பட்ட பின்னணியில் கட்டாய வேலை நேரத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில் குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம் பித்தன. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய ‘ஆவணர் இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங் களை நடத்தியது. இதில் 10 மணி நேர வேலைக் கோரிக்கை முதன்மை பெற்றிருந்தது.
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இப்போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்தன.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் மெல்போர்னில் கட்டி டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856 இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். மெல் போர்ன் கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. மெல்போர்ன் தொழிலாளர்க ளின் வெற்றி தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மைல்கல்லாக அமைந்தது எனலாம்.
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்ததுடன் ரஷ்யத் தொழிலாளர் களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளி களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே 1917. ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
160 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 ; கலாபூஷணம் புணர்னியாமினி

சர்வதேச தொழிலாளர் தினம்
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டன் நகரில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல் 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பென் சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க முதலா ளிகள் ஆரம்பத்தில் இதனைக் கண்டு கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்க ளில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் அடிப்படையில் 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல போராட்டங் களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயோர்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் ஆரம்பமாகியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் எனக் கூறப்படுகின்றது. தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் மூடப்பட் டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத் தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக் கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோ வில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்த எழுச்சி சிக்காகோவிலும் ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தன. சிக்காகோவில் வேலை நிறுத்தப்போராட்டம் ஆடுபிடித்தது. மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 161

Page 83
சர்வதேச தொழிலாளர் தினம்
மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் பொலிஸாரின் துப் பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் நடத்தினர். ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறை யினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளை யில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீ சார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். இச்சம்பவத்தில் 7 பொலிஸாரும், 4 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 21, 1886 ஆரம்பமாகியது. இறுதியில் 7 தொழிலாளர் தலைவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’ கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முனனெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்த தோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர் கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
1890 மே 1 இலிருந்து இன்று வரை ஒவ்வோராண்டும் மே 1ம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
162 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமினி

சர்வதேச தொழிலாளர் தினம்
தொழிலாளர்களின் ஆற்றலின் தேவையை உணர்த்த வேண்டிய, போற்ற வேண்டிய இந்நாள் உண்மையான நோக்கத் திலிருந்து தலைகுப்புறப் புரண்டுவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற இந்நாளானது இன்று உருவாக்கத்தின் நோக் கத்தையே மறந்து ஒரு கேளிக்கை தினமாக மாறி வருவது சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும். தொழிலாளரின் ஒற்றுமையை உறுதிப்படுத்த சபதமேற்கும் இந்நாள், தொழிலாளரின் உரிமைகள் வெற்றிகொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டிய இந்நாள் பல்வேறு பிரிவினருக்கு உரமூட்டும் நாளாக அமைந்துவிட்ட அவலத்தை நாம் மூன்றாம் உலக நாடுகளின் காணக்கூடியதாக உள்ளது.
உழைப்பாளரின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையையே வெளிப்படுத்துகின்றது. இத்தினத்தின் நோக்கம் இன்று புறந்தள்ளப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளதும் ஆள்பலத்தை வெளிப்படுத்தும் தேசிய நாளாக அமைந்துவிட்டது என்றால் அதுவே யதார்த்தம். அதுவே உண்மை. பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்பது போல் தொழிலாளரின் உரிமை பற்றி குரல் கொடுக்க வேண்டிய மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் இன்று அரசியல் ஊர்வலங் களாகவும் அரசியல் மேடைகளாகவும் மாறிவிட்டன. ஜனநாயக நாடான நமது நாடுகளில் மேதினம் நடத்த, ஊர்வலம் செல்ல, கூட்டத்திற்கு ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.
மேதினத்தின் நோக்கத்தையே, அதன் உண்மைத் தாற்பரி யத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பது போன்றே இன்றைய காலத்தில் மேதினம் கொண் டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட உரிமைகளை வென்றெடு, நிலைநாட்டு என்று குரல் எழுப்ப வேண்டிய பெறுமதி மிக்க இத்தினத்தில் மூன்றாம் உலக நாடுகளின் நவீன சுரண்டல் கள் பற்றியும், நமது நாடுகளின் தொழிலாளர் நிலைபற்றியும் சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 163

Page 84
சர்வதேச தொழிலாளர் தினம்
பின்னிணைப்பு
சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ம் திகதியை அரசாங்க பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ள நாடுகள்
Albania, Argentina, Aruba, Austria, Bangladesh, Belgium, Bolivia, Bosnia, Brazil, Bulgaria, Cameroon, Chile, Colombia, Costa Rica, China, Croatia, Cuba, Cyprus, Czech Republic, Denmark, Dominican Republic Ecuador, Egypt, Finland, France, Germany, Greece, Guatemala, Haiti, Hungary, Iceland, India, Italy, Jordan, Kenya, Latvia, Lithuania, Lebanon, Malaysia, Malta, Mauritius, Mexico, Morocco, Myanmar (Burma), Nigeria, North Korea, Norway, Pakistan, Paraguay, Peru, Poland, Philippines, Portugal, Romania, Russian Federation, Singapore, Slovakia, Slovenia, South Korea, South Africa, Spain, Sri Lanka, Serbia, Sweden, Syria, Thailand, Turkey, Ukraine, Uruguay, Venezuela, Vietnam and Zimbabwe.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகைகளும்,
இணையத்தளங்களும்
d ஞாயிறு தினக்குரல். (இலங்கை) 25 ஏப்ரல் 2010
0. http://thesamnet.co.uk/?p=10821 (ijë5T6:fuT)
http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0501-day
of-the-international-solidarity-of-worker.html (8öğBuT) http://www.ilankainet.com/2010/05/blog-post 3732.html(syngiiGit) http://tamilnirubar.org/?p=14759 (iflis Tssur) http://www.tamilish.com/search.php?page-18 (if 55T6furt) http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/news/2009/ 12/22/~/cj/puniyameen/2009/0501-day-of-the-internationalsolidarity-of-worker.html'(SjögSuT) http://chat.oneindia.in/?topic (@sögum) http://masdooka.wordpress.com/2010/05/01 (Dßßluff) http://www.faroo.com/search?q=&qt=all&start (Sögölum) http://content.usatoday.com/topics/article/Places,+Geography/ Countries/Bolivia/0d321CTe2Pdxg/9 (SIGLDsášasm) http://sangamamlive.in/(3öálujT) index.php?/content/view/6438/32/ ('fist Guit)
() http://usa-learning.blogspot.com/archive.html (9OLjdasт)
::
164 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

22
சர்வதேச நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வு தினம் International Day for Landmine Awareness and Assistance
ஏப்ரல் 04
நவீன உலகில் யுத்தப் பிரதேசங்களில் பல்லாயிரக் கணக் கான உயிர்களைப் பறிக்கவும், அங்கவீனர்களாக்கவும் காரணமாக இருந்துவரும் ‘நிலக்கண்ணி வெடி’ பற்றி மக்கள் மத்தியில் அறிவு றுத்தல் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்து முகமாகவும், அதன் பிரயோகத்தை தடுப்பது தொடர்பாகவும் இத்தினம் அனுஸ்டிக்கப் பட்டு வருகின்றது.
பொதுவாக நிலக்கண்ணி வெடிவகைகளில் M14, Valmara 69,and VS-50A போன்றன இன்று அதிகளவில் பாவனையிலுள்ள தாகக் கூறப்படுகின்றது. ஒரு தனி நபரை அல்லது ஒரு சிறு குழுவினரை அல்லது ஒரு வாகனத்தை அல்லது மிருகங்களை இலக்குவைத்து ‘நிலக்கண்ணிவெடிகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவுள்ளன. பொதுவாக நிலத்தின் கீழும் நிலத்தின் மேலும் இக்கண்ணிவெடிகள் வைக்கப்படும். இக்கண்ணிவெடிகளை மிதிப்பதி னுாடாக வெடிக்கும் தன்மையும் அல்லது இக்கண்ணி வெடிகளை குறிவைத்து இயக்கி வெடிக்க வைக்கக்கூடிய தன்மையையும் இவை கொண்டவை.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 165

Page 85
சர்வதேச நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வு தினம்
நிலக்கண்ணிவெடி வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும் போது கிறிஸ்துக்குப் பின் 03ஆம் நூற்றாண்டில் சீனாவின் பிரதமர் ஆஞ்லியான் என்பவர் மூலம் ஹருலு பள்ளத்தாக்கு யுத்தத்தின் போது ஸிமா - ஈ படைக்கெதிராக பயன்படுத்தியதாக கூறப்படுகின் றது. இது தொடர்பாக பிற்காலத்தில் சில பதிவுகளின்படி கூறப்பட் டாலும்கூட, பொதுவாக வெடிமருந்தின் கண்டுபிடிப்பு 10ஆம் நூற் றாண்டுகளில் இடம்பெற்றதினால் மேற்படி தகவலினை உறுதிப் படுத்துவது கடினமாகவுள்ளது.
இருப்பினும், வெடிபொருள் கலக்கப்படாத முறையில் விச ஊசிகள் அன்றேல் விசத்தைப் பாய்க்கக்கூடிய ஏனைய உலோகங் களை நிலத்தில் புதைத்து எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு நிலக்கண்ணியென்றே இங்கு கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
அதேநேரம், 14ஆம் நூற்றாண்டில் சீனச்சட்டி குண்டுகள் வெடிமருந்து நிரப்பப்பட்ட முறையில் மொங்கோலியாவுக்கு எதிரான யுத்தத்தில் சீனா பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறா யினும் நிலக்கண்ணிப் பாவனை நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்பதை மேற்குறிப்பிட்ட தரவுகளிலிருந்து அறிய (լքlգեւյլb.
பொதுவாக எல்லைப்புற யுத்தங்களின்போது எல்லைப்புற பாதுகாப்பிற்கும், எதிரிகளை நகரவிடாமல் பாதுகாப்பிற்கும் பெருமளவு நிலக்கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படுகின்றன. நிலக் கண்ணிவெடி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் மாபெரும் குறை யுத்தங்கள் முடிந்த பின்பு உரிய நிலக்கண்ணிகள் அகற்றப் படாமையினால் சாதாரண மக்கள் அவற்றில் சிக்குண்டு பாதிப்புக்கு உட்படுவதாகும். உதாரணமாக கம்போடியாவில் யுத்தம் முடிந்த பின்பு 35,000 பொதுமக்கள் அங்கயினர்களாகியுள்ளனர். இதிலிருந்து இதன் அபாயத்தன்மையை உணர்ந்துகொள்ள முடியும். சில ஆய்வு களின்படி நிலக்கண்ணிவெடிகளை வைத்தவர்களுக்கு ‘தான் எந்த இடத்தில் வைத்தோம்' என்று கூற முடியாதளவுக்கு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
166 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

சர்வதேச 'நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வு தினம்
நிலக்கண்ணியின் ஆபத்தையுணர்ந்து நிலக்கண்ணி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 1992ஆம் ஆண்டு கனடா அரசு தீவிரமாக முன்வைத்தது. கனடாவில் ஜோடி வில்லியம் Jody Williams இதன் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். இவரின் முயற்சிக்காக 1997ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு நிலக்கண்ணிப் பாவனைக்கு எதிராக ஒட்டாவாவில் 122 நாடுகள் கைச்சாத்திட்டன. ஒட்டாவா Ottawa ஒப்பந்தம் Ottawa Treaty 1999ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. ஒட்டாவா ஒப்பந்தப்படி நிலக்கண்ணி பாவனை, களஞ்சியப்படுத்தல், உற்பத்தி செய்தல், கொண்டு செல்லல், விற்பனை செய்தல் என்பன தடைசெய்யப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தில் யுத்ததாங்கி அழிப்பதற்கான நிலக் கண்ணி, கொத்தணிக் குண்டுகள், கிளைமோர் குண்டுகள் தொடர் பாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தற்போது 155 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்று கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், 40 நாடுகள் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது.
கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் 64 நாடுகள் பயிற்றுவிப்புக் காகவும், தற்பாதுகாப்புக்காகவும் இதைப் பயன்படுத்துவோம் என்ற அடிப்படையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்துக்கு இதுவரை கைச்சாத்திடாத நாடு களாக சீனா, இந்தியா, இஸ்ரேல், பாக்கிஸ்தான், ரஸ்யா, ஐக்கிய அமெரிக்கா போன்ற பிரதான நாடுகள் இருப்பதும் அவதானிக்கத் தக்கதாகும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளம் (2009)
() http://thesamnet.co.uk/?p=11266 (iflist6 furt)
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 167

Page 86
23
உலக சுற்றுலா தினம் World Tourism Day
செப்டம்பர் 27
1980.b sgOiq65(553 -6)5 sigiboia ITBIT6ir (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்று லாத்துறையில் ஈடுபாடு கொண்ட உலகின் 51 நாடுகள் சுற்றுலா அமைப்புக்களின் சர்வதேச சம்மேளனத்தில் (IUOTO) 1925இல் இணைந்து கொண்டன. பின்னர் இந்த அமைப்பு, ஐ.நா.வின் கீழ் இயங்கும் ஓர் அதிகாரபூர்வமான அமைப்பாக உலகச் சுற்றுலா நிறுவனத்தை (WTO) தாபித்துக் கொண்டது. இத்தாபனத்தை அமைப்பதற்கான யாப்பு 1970 செப்டெம்பர் 27ஆம் திகதி மெக்ஸிக்கோ நகரில் கூடிய (UOTO) நிருவாகக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்
L-35.
1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொதுசபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொரு ளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்
168 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சுற்றுலா தினம்
டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகின் பல்வேறு இடங்களில், பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக சுற்றுலா நாளின் பிரதான கருப்பொருள் சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதா னம், சுபீட்சம் என்பவற்றை அடைதலும், எவ்வித பாகுபாடுமின்றி சகலரும் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்கவும், மதிக்கவும் உதவுதலும் இவற்றினுாடாக சுற்றா டலைப் பாதுகாத்தலும், தொழில்வாய்ப்பை உருவாக்குதலும் ஆகும்.
அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கமைய 2006 இல் ஐரோப்பாவிலும், 2007இல் இலங்கையிலும், 2008இல் அமெரிக்காவிலும் கொண்டா டப்பட்டன. 2009இல் ஆபிரிக்காவில் கொண்டாட ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டா டப்பட்டது. இதன் கருப்பொருள்; “சுற்றுலாக் கதவுகள் பெண்க (subsisg55 ipsis5LIG6f 6T60” (Tourism opens doors for women). என்பதாகும். 领
சுற்றுலா என்பதை வரைவிலக்கணப்படி நோக்கின் தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணிப்பதே என்று பொருள் கொள்ளலாம். போக்குவரத்தும் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் இக்காலத்தில் சுற்றுலா துறையும் மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்த வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக வசதிபடைத்த மேற்கு நாட்டினரும், ஜப்பானியரும் அதிகமாக சுற்றுலா செல்கின்றனர் என்றும் சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன என்றும் புள்ளி விபரத்தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றது.
வரலாற்று ரீதியாக இத்துறை பற்றி ஆராயும்போது போக்கு
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 169

Page 87
உலக சுற்றுலா தினம்
வரத்து, தொலைதொடர்பு, விருந்தோம்பல் துறைகள் போன்றன பழங்காலத்தில் விரிவுபெற்று இருக்கவில்லை. இதனால் பெரும் பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்க்கை யைக் கழித்தனர். குடியேற்றவாதக் கொள்கை தலைதுாக்கியதும் படைவீரர்கள், வணிகர்கள், சமய நோக்குடையோரும் தம்மிடத்தை விட்டுப் பிற இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை பெற்றனர்.
வணிக விருந்தோம்பல் விரிவு பெற முன்னர் உணவைத் தேடிச் சென்றவர்களே பயணிகளாகக் கருதப்பட்டனர். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாகக் கருதப்பட்டது. செல்வந்தர்கள் மடங்களை கட்டி, அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பலவற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நவீன காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக
பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரம் நாடு கடந்து வரும் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக வேண்டி பல்வேறு ஹோட்டல், தங்குமிட வசதிகள், உணவு, பாணவகைகள் இத்தியாதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படு கின்றன. இயற்கைவனப்பு, காடுகள், வனாந்திரம், வன ஜீவராசிகள், பறவைகள், கடற்கரைகள், சுண்ணக்கற்பாறைகள் (Corals), பளிங் குப் பாறைகள் (Crystala) மலைத்தொடர், நீர்வீழ்ச்சி, மாணிக்கம், தோட்டங்கள், பூஞ்சோலைகள், அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துக்கள் ஆகும்.
சுற்றுலாவுக்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை: ஒன்று நேரம், மற்றையது பணம் என்று பசுபிக் ஆசிய பிரயாண சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து தீவிர சேவையின் பின்னர் இளைப்பாறிய லக்ஷ்மன் ரத்தனபால ஐ.பி.எஸ்.ஸிடம் கூறினார். நேரம் உள்ளவர்களிடம் பணம் இல்லை. பணம் உள்ளவர்களிடம் நேரம் இல்லை என்று அவர் விளக்கி கூறினார். மிகச் சிலரிடமே இரண்டும் உண்டு. ஆனால், உயர்மட்ட செல்வத்தை அடையும்
170 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சுற்றுலா தினம்
அநேகமான நாடுகளிலேயே இந்த இரண்டும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உலக சுற்றுலா பயணிகளின் தொகை 2010ஆம் ஆண்ட ளவில் ஒரு பில்லியனுக்கு மேலாகவும் 2020 ஆம் ஆண்டளவில் 1.56 பில்லியனாகவும் அதிகரிக்குமென மட்றிட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மீட்சி குறிப்பாக, உலகிலேயே மிகவேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப் படும் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் சாத்தியமாகுமென நம்பப்படு கிறது. பிராந்திய சுற்றுலாத்துறையும் புதியதொரு நடுத்தர வகுப்பின் எழுச்சியும் இந்தத்துறையை ஊக்குவிக்கின்றன.
ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் அநேகமானோர் வறுமையி லிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார் கள். இந்த புதிய செல்வுந்தர்கள் இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வா றாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத் தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.
கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்று லாத்துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவிததனர். 2010ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இரண்டு புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா களிப்பிடங்கள், புதிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துதல் ஆகியவற்றுடன் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா சபையின் உதவிப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். மலேசியா சுற்றுலா என்ற பெயரில் தான் தங்கியுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத்துறையின் சர்வதேச சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர சோங் யோக் ஹார் தெரிவித்திருந்தார்.
வடகழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 171

Page 88
உலக சுற்றுலா தினம்
சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில் எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றிய மைத்துவிட்டார்கள். நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால், சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.
ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்ப்பாகும்.
மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும் பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத, கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு நாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற் காக அவர்களுக்கு தேவையான உயர் வசதிபடைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இவ்வாறன கட்டடங்கள் அத்தியவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்ச் சேர்வதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.
ஹோட்டல் கழிவுகள், நீர்மாசமடைதல், சட்டவிரோத குடிசை களும் விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றா
172 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக சுற்றுலா தினம்
டலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத் துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா, கடற்கரைச் சிறுவர் கள், போதை வஸ்து பாவனையும் கடத்தலும், அந்நியரின் அரைநிர் வாணப்பவனி, கசினோ சூதாட்டம் என்பன பெளதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன. இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்ட லில் ஈடுபடுவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார் கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் அவசியமாகும்.
இக்கால கட்டத்தில் மனிதன் நிலவுக்கே சுற்றுலா செல்ல துணிந்துவிட்டான். ஆகாய விமானங்களை அண்ணாந்து பார்த்து நாம் வியந்த காலம் இன்று மாறிவிட்டது. அதே வானத்தில் விமானத்துக்குப் பதிலாகப் பயணிகளை சுமந்து செல்லும் ராக்கெட் டுக்களைக் காணும் காலம் வந்து விட்டது. இதுவரை ஆராய்ச்சி யாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றன. தற்போது விமான நிலையங்கள் சாதாரணமாகி விட்டாற்போல் அடுத்த தலைமுறையில் விண்ணுலா நிலையங்களும் சாதாரண மாகி விடக்கூடும். இந்த திட்டத்தினை ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்று பெயரிட்டுள்ளனர். முதலில் இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்படுபவர்களுக்கு ஏதோ விண்வெளித் திரைப்படக் கதை கேட்டாற் போல் தான் இருக்கும். ஆனால் இந்தத்தட்டம் நடை முறைக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களை முன் கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார் கள். கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகளிடம் இப்போதே முன்பதிவு செய்து முன்தொகை வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். உலகில் மனித வரலாற்றில் இதுவரை மிகச் சிலரே சென்றுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத இந்த புதிய அனுபவம் தரும் பயணத்துக்கு மனிதர் சென்றுவரக் கடும் போட்டி நிலவுகிறது. எதிர்காலத்தில் விண்வெளிக்கான
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 173

Page 89
உலக சுற்றுலா தினம்
சுற்றுலா தினம் என்றொரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப் பட வேண்டிய அவசியம் இல்லை.
1980ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் பின்வரும்
கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
1980: Tourism's contribution to the preservation ofcultural heritage
and to peace and mutual ی understanding 1981: Tourism and the quality of life 1982: Pride in travel: good guests and good hosts 1983: Travel and holidays are a right but also a responsibility for all 1984: Tourism for international understanding, peace and
cooperation 1985: Youth Tourism: cultural and historical heritage for peace
and friendship 1986: Tourism: a vital force for world peace 1987: Tourism for development 1988: Tourism: education for all 1989: The free movement of tourists creates one world 1990: Tourism: an unrecognized industry, a service to be released
(“The Hague Declaration on Tourism”) 1991: Communication, information and education: powerlines of
tourism development 1992: Tourism: a factor of growing social and economic solidarity
and of encounter between people 1993: Tourism development and environmental protection: towards
a lasting harmony 1994: Quality staff, quality tourism 1995: WTO: serving world tourism for twenty years 1996: Tourism: a factor of tolerance and peace 1997: Tourism: a leading activity of the twenty-first century for
job creation and environmental protection
174 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

1998:
1999:
2000:
2001:
2002: 2003:
2004:
2005:
2006: 2007: 2008:
2009:
உலக சுற்றுலா தினம்
Public-private sector partnership: the key to tourism development and promotion Tourism: preserving world heritage for the new millennium (Host: Chile) Technology and nature: two challenges for tourism at the dawn of the twenty-first century (Host: Germany) Tourism: atoll for peace and dialogue among civilizations (Host: Iran) Ecotourism, thekeytosustainable development (Host:Costa Rica) Tourism: a driving force for poverty alleviation, job creation and social harmony (Host: Algeria) Sport and tourism: two livingforces for mutual understanding, culture and the development of societies (Host: Malaysia) Travel and transport: from the imaginary of Jules Verne to the reality of the 21st century (Host: Qatar) Tourism Enriches (Host: Portugal) Tourism opens doors for women (Host: Sri Tourism Responding to the Challenge of Climate Change and global warming (Host: India) Tourism - Celebrating Diversity (Host: Africa.)
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
()
()
http:lithesamnet.co.uk/?p=1 6661 http:litamil.net/aggregatori%20sources/22?page= 2382.640 of
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புனினியாமினர் 175

Page 90
24
உலக அமைதி தினம் World Peace Day
செப்டம்பர் 21
s 608 segOLDgs gaoTLb (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையின் சகல உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினம் 1981இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இருந்து இத்தினம் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக யுத்தம் பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட் டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். சர்வதேச ரீதியில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது
176 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமினி

உலக அமைதி தினம்
அமைதிக்கு அடிப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.
உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக் கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காவுகொண்டுள்ளன. 2ஆம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடு களிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க உயரிய பிரயத் தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கூட துப்பாக்கி களுக்கும், குண்டுகளுக்கும் ஒய்வு கொடுக்க முடியவில்லை. உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பாரிய பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலக சமாதான முயற்சியொன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தமை 1961 வரலாற்றுச் சுவடாகும். அவர் உயிர் துறந்து செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையிலாகும்.
யுனெஸ்கோவின் முகவுரை வாசகம் “மனித உள்ளங்க ளில் தான் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும்” என்ப தாகும். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் “படைகொண்டு அமை தியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் தான் அதனைப் பெற முடியும்” என்றார். இந்நோக்கத்தில் யுனெஸ்கோவின் பொறுப் பும் பணியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
யுனெஸ்கோவின் சட்டயாப்பின் 1வது உறுப்புரை பின்வரு மாறு கூறுகின்றது. உலக மக்களை இனம், பால், மொழி, அல்லது சமய பேதமின்றி ஐ.நா சாசனத்தின் உறுதி செய்யப்படுகின்ற நீதிக்கும், சட்ட ஆட்சிக்கும், மனித உரிமைகளுக்கும், அடிப்படை சுதந்திரங்களுக்கும், உலகளாவிய நன்மதிப்பினை வளர்ப்பதற் கென கல்வி, அறிவியல், பண்பாடு மூலமாக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும்
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 177

Page 91
உலக அமைதி தினம்
பாடுபடுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
அதாவது யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டுத் தொடர்களின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொதுநலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. அமையமும், ஐ.நா சாசனமும் இக்குறிக்கோள்க ளின் பேரிலேயே நிறுவப் பெற்றுள்ளது.
மனித உரிமைகளையும், கடமைகளையும் செயற்படுத்துவ தற்கு இன்றியமையாது தேவைப்படுவது சமாதானமாகும். அதா வது குடிமக்கள் அனைவரும் முதன்மை பெறும் ஒருங்கிணைந்து வாழும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்ட ஆட்சியுடைய சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானம் ஆகும்.
சமாதானம், மேம்பாடு, சனநாயகம் போன்ற மூன்றும் ஒன்றுக்கொன்று உருதுணைபுரியும் முக்கோணங்களாகும். அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.
மிக அண்மையில் வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை காரணமாக உலகின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்தி ருந்தார். இதுதொடர்பாக அவர், அணு ஆயுத வல்லமை மற்றும் ஏவுகணைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வடகொரியா மேற் கொள்ளும் முயற்சிகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவை விதிகளை மீறுவதாகவே உள்ளது. இதனால் சர்வதேச சமூகத்தின் அமை திக்கும், பாதுகாப்புக்கும் வடகொரியா பெரும் அச்சுற்றுத்தலாகவே விளங்குகிறது. சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி குறுகிய தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணையையும் அந்நாடு சோதித்துள்ளதாகத் தெரிகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக் கைகள் அனைத்து நாடுகளுக்கும் பலத்த கவலையை ஏற்படுத்தி யுள்ளதாக ஒபாமா கூறினார்.
178 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக அமைதி தினம்
ஒபாமா வடகொரியாவை மையமாகக் கொண்டு இக்கருத் தினை வெளியிட்டாலும் கூட உலகில் அணுஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான், போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன.
உலக அமைதியை வலியுருத்தும் நாடுகள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தி ருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்ற போர்வையில் அணு ஆயுதங்கள் உற்பட ஆயுத பலத்தை பெருக்குகின்றனவேயன்றி அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதைக் காணமுடியாமல் இருப்பது விந்தைக்குரிய விடயமே.
கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாதம் என்ற போர் வையிலும் அமைதிக்கான அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. சமாதானம் கோட்பாடு மட்டுமல்ல, அது செயற்பாடு செயல்பட்டால்தான் சமாதானம் அர்த்தமுள்ளதாகும். அறிஞர் கார்லோஸ் பியூண்டஸ் கூறுவது போல “சமாதானம் என்பது மாறுபாடுகளின் சேர்க்கை. கலாசாரங்களின் இனக்கலப்பு. அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக பண்பாட்டு, அரசியல், சமூக, பொருளாதார சூழல்களில் ஆழ வேரூண்றியதொன்றாகும்”.
இன்று தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விரல் நுனியின் சிறு அசைவினால் எண்ணற்ற தகவல்களைப் பெற்று பெருமிதம் அடைகிறோம். ஆனால், இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பலிகொண்டு அப்பாவி மக்களின் வாழ்வை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றீடாக அமையவில்லை. போரினதும், சமாதானத்தினதும் சொல் லொனாத் துயரங்களை வீடுவீடாகக் கொண்டு செல்லும் ஒலி, ஒளி ஊடகங்களால் போரின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்ற முடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் (Global Village) மிக உன்னத சாதனையாக அமையும்.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 179

Page 92
உலக அமைதி தினம்
நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த காலம் முதல் சமாதா னத்திற்காக பங்களிப்பு வழங்கியோருக்கும், நிறுவனங்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளன.
கடந்த மூன்று தசாப்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றோர் விபரங்கள் வருமாறு
2009 பராக் ஒபாமா 2008 LDTj9 s. 9grj (Martti Ahtisaari), 2007 ஆல் கோர் (AIGore), காலநிலை மாற்றல் பல அரசு
f60du (Intergovernmental Panel on Climate Change) 2006 (ypa5LDg5 uDJ6mù (Muhammad Yunus), délyról6ör 6 Išlé
(Grameen Bank) 2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic
Energy Agency), GLDITSLbLDg 6T6)uy (85u (Mohamed ElBaradei) 2004 6 hurbil.85Tyf LDITg6Tuil (Wangari Maathai) 2003 6f6 6TLumọ (Shirin Ebadi) 2002 Libó a6TjLj (Jimmy Carter) 2001 g.5T. (United Nations), (Ba5IT.”. SÐI6OOTT6ör (Kofi Annan) 2000 déb (3L-g"It (Kim Dae-jung) 1999 எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ்
5FIT60ôï6mû .'.ûJIT60öïquj6mö (Médecins Sans Frontières) 1998 : gT6ð MÓlub (John Hume),
GBL6îl subî6ð (David Trimble) 1997 கண்ணிவெடிகளை தடைசெய்யக்கோரி உலகலாவிய
iy&SITylb (International Campaign to Ban Landmines, G3gTọ 66ð6ólu uLb6ò (Jody Williams)
180 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக அமைதி தினம்
1996
1995
1994
1993
1992
1991
1990
1989
1988
1987
1986
1985
1984
1983
1982
1981
1980
1979
1978
கார்லோஸ் ஃபிலிபெ சிமினெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), (8gT6ú JT3DT6ö-gorjbr (José Ramos-Horta) (39Tomo. I (BJпLI6пт (Joseph Rotblat), 906ш6) шDjiboub உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs) uuTé 9JT..Lg5 (Yasser Arafat), 6glG8uDT6i Gu8y6rb (Shimon Peres), gu6gni Utilai (Yitzhak Rabin) Qpb6)56i LD60ör(8L6 ort (Nelson Mandela), F.W. Lọ ä56TTjaš (F.W. de Klerk) gyfa5GujjLT GD6ör6ço (GLib (Rigoberta Menchú Tum) sä 6moTäi (Aung San Suu Kyi) Lốl&Q5uil6ò qBITjLIQ6ạ6ù (Mikhail Gorbachev) 146g, g56Tmu GomLDIT (The 14th Dalai Lama) g-pit. 916OLD5 BITig5lb u60L (United Nations Peacekeeping Forces)
a6rðEBITỪ 5JfC3u6ið SFITGÖTGF6rð (Óscar Arias Sánchez) 6T6f G6JuuGasF6ð (Elie Wiesel) அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War) GlL6öloss60öL GuG (Desmond Tutu) SQsouš: 6.106vuigit (Lech Walesa) S6ð6nIsT LólbgBT6ð (Alva Myrdal), அல்.போன்ஸோ கார்சியா ரெளபிள்ஸ் (Alfonso Garcia Robles) ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees) அடோல்.போ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
ge660)6OT G.56J&IT (Mother Teresa) sigiouj si6) Fg5 Tg5 (Anwar al-Sadat), GLDGIGasib Guigi (Menachem Begin)
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 181

Page 93
உலக அமைதி தினம்
அண்மையில் வத்திக்கான் வானொலியில் அடுத்த ஆண்டு உலக அமைதிநாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத் தொன்றை வழங்கியிருந்தார். அக்கருத்தின்படி “அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும். இதனடிப்படையிலேயே 2010ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும்.”
இங்கு இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும், உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியு றுத்தியுள்ளார். சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் செயல்களும் இயற்கை யைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகை யும் தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.
இந்த சவால்களை நீதியின் அடிப்படையில், சமூகச் சமத்து வக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார். சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார். அதுவே அமை திக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ஆலோச னைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உயரிய கருத்தாகும்.
இக்கட்டுரை பிரசுரமான இணையத்தளங்கள்
() thesamnet.co.uk/?p=16469 (if gigstosum)
0 http://thatstamii.oneindia.in/cj/puniyameenl2009/0922
international-day-of-peace1.html (@sögum)
() http:llsearch.webdunia.com/gujarati/related/recent
news-articles- (Qsögu III)
() http:llnayanaya.mobilvlhttp/thatstamil.oneindia.inlart
culturelessays/2010/-lcj/puniyameen/2009/0922international-day-of-peace1.html (Gsbgfull)
182 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன்

25
உலக ஓசோன் தினம்
World Ozone Day
செப்டம்பர் 16
உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஒசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. எமது கண்ணுக்குப் புலப் படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று எம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலகநாடுகள் செப்டம்பர் 16ம் திகதியை உலக ஓசோன் தினமாக நினைவு கூருகின்றன.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி கனடா நாட்டின் தலைநகரில் ஒசோன் படையை அழிக்கும் இரசாயனங் களுக்கு எதிரான ‘மொன்றியல் உடன்படிக்கை கையெழுத் திடப் பட்டதையடுத்து அத்தினமே 1995ஆம் ஆண்டு முதல் உலக ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்துவரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 183

Page 94
உலக ஓசோன் தினம்
ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.
ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope)வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்துவிடும் தன்மை கொண்டது.
1840Q6ò é.6TŮ.6mò08aBT6örı6ði (Christian Friedrich Schönbein) என்பவர் ஒசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, “மணத்தல்”) ஓசோன் என்று பெயர் ஆட்டினார்.
ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஒசோன் என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் a5ýjög, 18656ð grTäs6mòTuî6ò GBEFATGJ (Jacques-Louis Soret) என்பவர் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி.எப்.ஸ்கோன்பின் அவர்களால் 1867இல் உறுதி செய்யப் பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுரு (allootrope) வாக அறியப்பட்டவற்றுள் ஒசோனே முதலாவதாகும்.
புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப் பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது.
ஆரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க்
184 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக ஓசோன் தினம்
கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும், தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய தீமை விளை விக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகின்றது.
ஓசோன் படைமண்டலத்தில் உற்பத்தியானாலும் இதன் 90 வீதம் படைமண்டலத்தின் தாழ்பகுதியில் உள்ளது.
படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், உயர் ஆற்றல்வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச லின் மூலமும் ஓசோன் உற்பத்தியாகின்றது. இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் ஒசோன் அடர்த்தி "டாப்சன்’ அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றில் சில டாப்சன ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஒசோன் மீட்டர் எம். 83, பில்டர் ஒசோன் மீட்டர் எம். 124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் போன்றனவாகும்.
அண்டார்டிகா பனிக் கண்டத்தில் ஒசோன் அளவு பருவ நிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவு கிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட், நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 வீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே ஒசோன் துவாரம்” (Ozone hole) என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய விஞ்ஞானி ஜே. போர்மன் தலைமையிலான ஆய்வுக் குழு அண்டார்டிகாவின் ‘ஹாலேயே’ என்ற நிலையத்தில் 1970ம் வருட மத்தியில் ஒசோன் அளவு குறைந்து காணப்பட்டதை முதன் முதலாகக் கண்டறிந்தது.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புண்னியாமீன் 185

Page 95
உலக ஓசோன் தினம்
துருவப் பிரதேசத்தில் ஒசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவப்படை மேகங்களாகும். இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான இரசாயனச் செயல் பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஒசோனுடன் தாக்கம் புரிந்து குளோரின் ஒட்சைட்டை வெளிப்படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகின்றது.
அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஒட்டை கடந்த 2007 இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள் ளதாக உலக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006 இல் இருந்ததை விட ஓசோன் துவாரத்தின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து உலக வானிலை ஆய்வுமையம் 2008ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக் கையில், அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படுகையில் 27 மில்லியன் சதுர கி.மீ. அளவு துவாரம் உள்ளது. இது கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 25 மில்லியன் சதுர கி.மீ. ஆகவும் 2000ம் ஆண்டில் 28.3 மில்லியன் சதுர கி. மீ. ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து விஞ்ஞானிகள் அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974இல் இரசா யனவியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர்.
இதனால் பல்வேறுபட்ட எதிர் விளைவுகள் ஏற்படுவதுடன் அதனைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக் கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை மக்களையே சார்ந்துள்ளது. 1995-ம் ஆண்டு ஒசோன் ஆய்விற்காக குரூட்சன்
186 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக ஓசோன் தினம்
மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப் பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் ‘இந்தப் பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும்’ என்பதுதான்.
ஓசோன் துவாரத்திற்குக் காரணம் ஒசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) எனக் கூறப்படுகிறது. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக் கப்படவில்லை. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது.
குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro Floro Carban), aBITju6oT g5mgibcg5036TIT60bJ" (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதைல் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்கு காரணமாக அமைகின்றன.
இவ்வூறு விளைவிக்கும் பதார்த்தங்கள் மேல் வளிமண்ட லத்தினை அண்மித்தவுடன் அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பதார்த்தங்களை உருவாக்கி யுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரண மாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற் பாட்டினூடாக ஓசோனபடை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தனவாக காணப்படும். ஒசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது பாரிய தாக்கங் கள் ஏற்படுகின்றன.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 187

Page 96
உலக ஓசோன் தினம்
புற ஊதாக்கதிர்வீசலின் UV அளவு அதிகரிப்பதினால் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலின் சம நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்ப நிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல்மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் ஆழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்துவிடும் அபாயம் பூதாகாரமானதாக தெரிகின்றது.
ஆய்வுகளின் படி UV கதிர்வீசலுக்கும், தோல் புற்றுநோய்க் கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின் றது. உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ் வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 வீதத்தினர் புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது.
UV கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தி யக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. UV தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்கு கின்றது.
உயர் புற ஊதாக்கதிர் மட்டமானது சில உயிர்வாழ் நுண்ணுயிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் நைதரசன் நிலை நாட்டுகை செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன.
இதன் காரணமாக பிளான்தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவுவலையின் முதல்நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவு குறைவடைதலானது (சமுத்திர உயிர் சூழலியல் செயற்பாட்டின் உணவு சங்கிலி முறைமையினுடாக) மீன்களின் அளவு குறைவடைவதற்கு வழிவகுக்கின்றது.
188 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக ஓசோன் தினம்
ஓசோன் படை தேய்வினை தடுப்பதும், ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முக்கிய விடயமாகும். எனவே ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்காக பூகோள ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினை யும் விளைவிக்கின்றது. எனவே இச்சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச் சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
ஓசோன் படை தேய்வினை நோக்கிய சர்வதேச பிரயத்த
னமாக விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து 1985 இல் ஒசோன் படையினை பாது காப்பதற்காக ‘வியன்னா மகாநாட்டினை உருவாக்கின. இச்சான் றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது 1987இல் “மொன்றியல் சாசனம்’ ஒசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவ தனை தடுப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட்து. CFC, HCFC LojbiDjib ஏனைய தேய்விற்கு பொறுப்பான பொருட்களை வெளியிடாது ஆழல்- நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
“மொன்றியல் சாசனப் பிரகாரம் ODS பொருட்களை உற் பத்தி செய்தல் நுகர்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்துதல், ODS இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல், ODS இன் வரு டாந்த உற்பத்தி தரவுகளைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன. அபிவிருத்தியடைந்த நாடுகள் பல்பக்க நிதியுதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழினுட்பங்களை ODS வெளியேற்றத்திற்கு
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 189

Page 97
உலக ஓசோன் தினம்
பயன்படுத்தக் கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளது டன் அதற்கான நிதிசம்பந்தமான விடயங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 7 அங்கத்தவர்கள் (அபிவிருத்திய டைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து) பொறுப்பு வகிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டது.
1992இல் லண்டன் சட்டம் அதிகப்படியாக ஓசோனை சேதப்படுத்தும் பொருட்களை வெளியிடும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்பானதாக இருந்தது. 1996இல் இச்சட்டம் விரைவு படுத்தப்பட்டது.
ஓசோன் படை தேய்வினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்குமிடத்து மானிடக்காரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஒசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதனால் இயற்கை சமநிலை குலைகின்றது. இந்த குளோபல் வார்மிங். (global warming), Q(8&IT6 Q60L.(oZone depletion), LugiGOLD 3656) விளைவு (greenhouse effect), ஆகிய மூன்றுக்கும் அதிகப்படியான வாகன, தொழிற்சாலை, அணுமின் நிலையம், மின் உற்பத்தி இவை களால் ஏற்படும் புகையே காரணமெனபபடுகிறது.
மொன்றியல் சாசனத்தின் மூலம் ஒசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப் படுகின்றன. ODS இரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங் களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் (CFC மற்றும் ODS பாவனையாளர்கள்) ஆழல்- நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்று திட்டங் களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல் படுத்துவ தனை ஊக்குவித்து வருகின்றன. மொன்றியல் சாசனமானது வழக் கத்தை மாற்றி புதுமையை புகுத்தும் விடயங்களையும் தொழில் நுட்பத்தினூடாக அவற்றின் வியாபித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவன ரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகின்றது.
190 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உலக ஓசோன் தினம்
2) L6bEffuUITE bECbib (g56ffieb'uQE56i (Mobile Airconditioner) ஆழல்- நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஒசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS, பொருட்களினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றது. (ODS, Ozone Depliting Substances) 1970 stepsilsilas6flo) காணப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓசோன் முறைமையினை மொன்றி யல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் 5 - 6 தசாப்தங்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டல கணினி மாதிரி கள் காட்டிநிற்கின்றன. அதாவது ஒசோன் படுகையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், வரும் 2075 ஆம் ஆண்டில் முற்றிலும் சீரடைந்த ஓசோன் படுகையை (அதாவது 1980ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழலை) ஏற்படுத்த முடியும் என உலக வானிலை ஆய்வுமைய மூத்த விஞ்ஞானி ‘கெய்ர் பிராத்தென்' கூறியுள்ளார்.
இக்கட்டுரை பிரசுரமான பத்திரிகைகளும்,
இணையத்தளங்களும்
() ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : செப்டம்பர் 27,2009
லண்டன்குரல் (பிரித்தானியா) : செப்டம்பர் 2009
() http://thesamnet.co.uk/?p=16236
() http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0916
international-ozone-day. htmlhttp://chat.oneindia.in/?topic-international&start-3
()
() http://nayanaya.mobi/v/http/thatstamil.oneindia.in/~/cj/
puniyameen/2009/0916-international-ozone-day2.html () http://twitter.com/eelamistatus/402721301
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 191

Page 98
உசாத்துணை நூல்கள்:
0 ஜோன் பி.பிராங், செஸ்டர் ஈஃபிள் (யூனியர்), மத்தியூ ஹனடல்,
எரிக் செனோவத் - சனநாயகம் என்றால் என்ன (தமிழ் மொழிபெயர்ப்பு) மார்கா நிறுவக வெளியீடு - 1994
0 பாலசூரிய ஏ.எஸ். சமாதானத்திற்கான வழியினைக் கற்றல.
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக் குழுச்சபை, கொழும்பு 08, நவம்பர் - 2003
() பாலசூரிய ஏ.எஸ். சமாதானக் கல்வி தேசிய கல்வி நிறுவகம்,
மகரகம - 1994
() நீலன் திருச்செல்வம், சனநாயகமும் மனிதஉரிமைகளும.
இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், கொழும்பு 1996
0 எஸ்.எம். மஹரூப். பொது அறிவுச் சுடரின் Current Afairs,
சிந்தனைவட்டம், பெப்ரவரி - 2005
() கி.ர. அநுமந்தன். பிரிட்டன் வரலாறு, தமிழ் வெளியீட்டுக் கழகம்,
தமிழ்நாடு அரசாங்கம், பெப்ரவரி - 1964
சோமலெ - உலகநாடுகள் வானதி பதிப்பகம், சென்னை 17 . டிசம்பர் 1987
0 வல்வை ந. அனந்தராஜ், வட்வெட்டித்துறை திருமதி வனிதா அனந்த ராஜ் - அறிவியல் உண்மைகள், நந்தி பதிப்பகம், நவம்பர் - 1992
d ஜெயரஞ்சினி இராசதுரை - ஈழத்துத் தமிழ அரங்கியலில் பெண்; ஒரு பெண் நிலைவாத நோக்கு, குமரன் புத்தக இல்லம். - 2003
0 புன்னியாமீன் -பொது நிகழ்காலத் தகவல் துளிகள - சிந்தனைவட்டம்,
உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN:1955-8913-58-3)
192 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்

உசாத்துணை நூல்கள்
() புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 06 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN 955-8913-57-X) புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 05 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN 955-8913-56-1) () புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 04 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2006 (ISBN:1955-8913-53-7) {d புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 03 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN:955-8913-52-9) { புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 02 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN 955-8913-51-0) ( புன்னியாமீன் - பொது அறிவுச்சரம் தொகுதி 01 - சிந்தனைவட்டம், உடத்தலவின்ன. 1ம் பதிப்பு செப்டம்பர் 2006 (ISBN:955-8913-50-2) () அலியார் யூ.எல். சர்வதேச நினைவு தினங்கள் டவிழிப்புணர்வுக்
கட்டுரைகள், பைத்துல்ஹிக்மாஹற், ஜூன் - 1998
மனோரமா இயர்புக் 1998 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 1999 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2000 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2001 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2002 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2004 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2005 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2006 கோட்டயம், கொச்சி
மனோரமா இயர்புக் 2009 கோட்டயம், கொச்சி
தயா பிர்னாந்து எஸ். தேசபாலன சிந்தனயே இதிஹாசய
(சிங்களம்) எஸ். கொடகே சக சகோதரயோ - 1980
() சமீர ரத்னாயக்க சித்த மெஹயவா ஜூவிதய ஜயகெனிம
- வாசனா பிரகாசகயோ, தன்கொட்டுவ - 2005
() சந்தன குணவர்தன மம ஹந்துனாகெனிம கொம்செப்ட் லங்கா பொத்கல, குசலதா சங்வர்தன ஹா நாயகத்வ புஹானு ஆயதனய,
(33505IL - 2008
(d சமீர ரத்னாயக்க சித்த மெஹயவா ஜீவிதய ஜயகெனிம
- வாசனா பிரகாசகயோ, தன்கொட்டுவ 2005
d சந்தன குணவர்தன மம ஹந்துனாகெனிம - கொம்செப்ட் லங்கா - புத்கல குசலதா சங்வர்தன ஹா நாயகத்வ புஹ"ணு ஆயதனய, நுகேகொட
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 193

Page 99
உசாத்துணை நூல்கள்
(d பத்மா குணசேகர வெட கிரிம சதுட்ட -
விஜேசூரிய கிரந்த கேந்திரய, முல்லேரியாவ - 2007
0. பிரதீப் பாலசூரிய ஒயே தியுணுவட்ட அண்யயன்வ
பொலம்பவண்னே கெசேத? பஹன் பிரகாசன, மரதான, கொழும்பு 10 - 2008
{ தயரரோஹன அகுகோரளா, சீக்சா மன்திர பிரகாசன துக தினா
ஜயகதி மினிஸிஸ் - பொரெல்ல - கொழும்பு 08 - 2008
{ ஹேம மாலி குணதிலக்க வெனச துளின் சங்வர்தனய கரா
விஜேசூரிய கிரந்த கேந்திரய - முல்லேரியாவ - 2004
0. எனட்மாரி ஜசிந்தா தைர்யய ஹா விஸ்வாசய கொடநகாகெனிமே
உபக்கிரம் பஹன் பிரகாசன, பொரெல்ல - கொலம்பு 8 - 2005
{ சந்தன குணவர்தன தன சிந்தனயே தச பாரமிதா சமத்கா பப்ளிகேஷன்ஸ் - நுகேகொட - 2003
() தயா ரோஹன, அத்துகோராள ஆத்ம அபிமானய வர்தனய
கரகத்த ஹெக்கி மக சீக்ஸா மன்திர பிரகாசன் - கொழும்பு 2003
0. லீலானன்த கமாச்சி ஜீவித்த ஜயகிரஹன உப்பகிரம் -
விஜேசூரிய கிரந்த - கேந்திர - முல்லேரியாவ - 2004
() (Report) United Nations Development Progamme-2008
Bauddhaloka Mawatha, Colombo - 7 (2008)
() (Report) United Nations Development Progamme-2009
Bauddhaloka Mawatha, Colombo - 7 (2009)
Ο Maslow, Abraham H. Towards a psyshology of being.
Second Ed. Van Nostrand Reinholf - 1968
() Pike, Graham and David Seiby, Global teacher- Global
learner. Hodder & Stoughton Ltd. Kondon - 1993
{ Mark and Engles. Selected works, Foreign Languages
Publishing House, Moscow - 1962
() jenny Natural Disasters - The Salariya Book Co. Ltd for
Macdonald, pub 2000
உத்தியோகபூர்வ இணையங்கள்
0 http://www.un.org/
{ http://www.internationalwomensday.com/about.asp
0 http://www.wherewomenwanttowork.com/women/default.asp
{} http://www.un.org/womenwatch/feature/iwd/
0 http://www.savings-banks.com/template/content.aspx?id=1816
194 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமின்

உசாத்துணை நூல்கள்
()
:
http://firstlanka.com/english/news/today-is-world-thrift-day/ http://www.un.org/depts/dhl/poverty/ http://www.un.org/esa/socclevssocial/intldays/IntlDay/ 2009intlday.html http://www.fao.org/getinvolved/worldfoodday/en/ http://www.worldfooddayusa.org/ http://www.un.org/News/Press/docs/2007/ga10601.doc.htm http://www.timeanddate.com/holidays/un/world-post-day http://www.hindu.com/2004/10/09/stories2004 10090368 1200.htm http://www.upu.int/ie6.html http://www.un.org/events/calendar/Edetail.asp?EventiD=1451 http://ibwest.blogspot.com/2008/10/white-cane-safety-day-funfacts.html http://www.tsunami2004.net/ http://www.un.org/apps/news/ story.asp?NewsID=4974&Cr-postal&Cr1= http://www.un.org/en/events/nonviolenceday/index.shtml http://www.unifem.org/
http://www.un.org/depts/dh/disaster/ http://www.hindustantimes.com/News-Feed/india/October-2-isInt-l-Non-Violence-Day/Article 1-230325.aspx http://www.un.org/apps/news story.asp?NewsID=22926&Crnon&Cr1-violence http://www.altiusdirectory.com/Society/2009/03/world-waterday-march-22nd.html http://www.altiusdirectory.com/Society/2008/04/may-1stinternational-labor-day.html http://www.altiusdirectory.com/Society/international-womensday.html http://www.altiusdirectory.com/Society/international-day-offamilies.php http://www.altiusdirectory.com/Society/2008/06/world-oceanday-june-8th.html http://www.altiusdirectory.com/Society/2008/09/world-tourismday-27th-september, htmlhttp://www.altiusdirectory.com/Society/2008/09/worldteachers-day-5th-october.
சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன் 195

Page 100
உசாத்துணை நூல்கள்
0. htmlhttp://www.altiusdirectory.com/Society/world-food
day.php -
0 http://www.altiusdirectory.com/Society/2008/10/united-nations
day-24th-october.html A
d http://www.altiusdirectory.com/Society/human-rights-day.php
0. http://www.altiusdirectory.com/Society/international-day-older
persons.php 10/17
d http://www.altiusdirectory.com/Society/international-day
eradication-poverty.php International Forum on the Eradication of Poverty, 15-16 November 2006
d http://www.google.lk search?hl=en&q=tsunami-2004&revid= 1166172586&sa=X&ei=NeEcTO64H4WGrOePodmow&ved= 0CFOQ1OIoAw
0 http://www.un.org/depts/dhl/disaster/
196 சர்வதேச நினனவு தினங்கள் - பாகம் 1 : கலாபூஷணம் புன்னியாமீன்


Page 101

|
ISBN: 978-955-1779-43-6