கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய விருந்து

Page 1

鄭麟 *玖 * |-霸變警· 壽

Page 2

இலக்கிய விருந்து
P. M. L46ör Gifuu Túßsör, B.A. (cey.)

Page 3
LAKKIYA WIRUNTHU (Literary feast)
An evaluation of thirty books published by Thamil Manram
by P. M. PUNIYAMEEN, B.A. (Cey.) 13, Udatalawinna Malige, Katugastota, Sri Lanka.
author of
THEVAKA (mini stories) NLALIN ARUMA (short stories)
LAKKIYA ULAA (biography) ADIVIAANATHTHU OLIRWUKAL (novel) All rights reserved First published in April, 1987 Thirty fourth publication of :
THAM!L, MANRAM,
Galhinna, Kandy
Distributors :
P. S. SUNDARAM 8 SONS,
75, Barber Street, Colombo-13. Phone: 28549
Printed at :
Pasungadir Pathippakan 43, Muthumari Street, Madras-600 001

முன்னுரை
அழகான மலையொன்றின் அடிவாரத்தில் அமைத் துள்ளது, இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம், ஹந்தானை என்றழைக்கப்படுகின்ற மலைத்தொடர் எழும் இடத்தில், கண்ணைக் கவரும் சூழலில், வரலாற்று முக்கியத் துவம் பெற்ற கண்டி மாநகருக்கருகிலுள்ள இந்தப் பல்கலைக்கழகம் சரித்திரம் படைத்துள்ளது என்ருல், அதன் பிரசித்தம் பற்றி வேறு கூறத் தேவையில்லை. எமது நாட்டின் நலனுக்கான எண்ணற்ற திட்டங்கள் பேராதனையில் உருவாகியுள்ளன. அதே போல், இலங்கை யின் இலக்கிய வளர்ச்சியில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் ஒன்று, 1953 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் அங்கு நிகழ்ந்தது.
இலங்கைப் பல்கலைக் கழகம், 1942 ம் ஆண்டில்தான் கொழும்பில் நிறுவப்பட்டது. 1950 ம் ஆண்டளவில் சில பிரிவுகள் பேராதனைக்கு மாற்றப்பட்டு, 1952 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெரும் பகுதி மாறியது. அப்படி, கொழும்பிலிருந்து பேராதனைக்கு 1952 ம் ஆண்டு அக்டோ பரில் மாறியவர்களில் ஒரு மாணவர்தான், 1953 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதச் சம்பவத்திற்குப் பொறுப்பாயிருந்தார், எவரின் உதவியுமின்றி, தன்னந்தனியாகவே அவர் அந்தச் சம்பவத்தை நிகழ்த்தினர். அவரின் அச் செயலால், இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற இடங்களிலும் பிரபல்யம் அடைந்துள்ள நூல் பிரசுர சபையான தமிழ் மன்றம் தோன்றியது. 1953, ஆகஸ்ட்டிலிருந்து 1956 ம் ஆண்டு வரை நாலு நூல்கள் வெளிவந்தன.
அதன் பின்னர், இருபதாண்டு காலம் இந்தப் பிரசுர சபை செயலற்றிருந்தது. அத்ற்கு ஈடு செய்யும் விதத்தில் 1976 ல் மீண்டும் செயல்படத் தொடங்கி, இச்
3

Page 4
சபை பத்தாண்டு காலத்தில் இருபத்தைந்து நூல்களை வெளியிட்டுள்ளது. இன்றுவரை முப்பத்தொரு நூல்களைப் பரிசுரித்துள்ள தமிழ் மன்றம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அன்று பிரசுர அலுவலை ஆரம்பித்த அதே தனிமனிதன் இன்றும், பிரசுர நிர்வாக வேலைகளுக்குத் தொடர்ந்தும் பொறுப்பாயிருக்கிருர் என்ருல், அது அதிசயச் செய்தியொன்றுதான்.
தமிழன்னையின்மீது கொண்ட தணியாத காதலினல் ஒரு தனி மனிதன், அந்த அன்னைக்கு ‘இலக்கிய விருந்து" அளித்து “யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்" எனும் பழம் கூற்றுப்படி உலகளாவிய தமிழ் அறிந்தோரின் நன்மை கருதியே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனுல் அவர் பெற்ற இலாபம், மனத் திருப்தி ஒன்றுதான். பலர் பயன்பெற, ஏதோ ஒரு நற்பணி செய்துள்ளேன் என நினைத்துப் பூரிப்படையுமொருவரின் விருந்துப் படையல், சுவைதரும் செய்தியாய் இங்கு உங்கள் முன் வைக்கப்படுகிறது. அவரைப் பற்றிய மேலும் தகவல்கள், "இலக்கிய உலா' எனும் நூலில் வழங்கப்படு கிறது. அவர் வெளியிட்ட நூல்கள் பற்றிய விபரங்களை மாத்திரமே **இலக்கிய விருந்து' தருகிறது. -
பிள்ளைப் பிரசவத்தை விடவும் பாரிய பணி, நூல் பிரசுரித்தல், என்ற கருத்து பரவலாக நிலவும் இக்காலத் திலும் கூட ஒரே ஒரு மனிதன் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களைப் பிரசுரித்துள்ளார் என்பது வியப்புக்குரியதாகத் தான் இருக்கும். அந்த வியப்புக்கான செயலின் வரலாறு தான் இந்நூல். இத்தகைய பாரிய பணி பற்றிப் பலரும் அறியவேண்டும்; அது பற்றிய விபரங்கள் பிற்காலச் சந்ததியின் நலனுக்காகப் பதிந்து வைக்கப்படுதல் வேண்டும் என்ற உந்துதலினல் எழுந்ததே இந்நூல். இனியும் அந்தச் சுவையான வரலாற்றுக்கும் வாசகருக்குமிடையில் நிற்க விரும்பவில்லை. ' உள்ளே நுழைங்கள்" என உங்களை அன்பாய் வரவேற்கிறேன்.
மார்ச், 1987 பி. எம். புன்னியாமீன்

உவகையின் சிகரம்
அகமகிழ்வு ஏற்படும் வேளைகள் பலவுளவெனினும் அதன் உச்சம் ஒருவரின் பணி பிறரால் அங்கீகரிக்கப்படும் சமயம் வருவதுதான் எனல் தவறல்ல. உதாரணமாக, ஒரு தாய் தான் பெற்ற மகன் சாதனையாளன் எனப்படும் பொழுது, பெரிதும் மகிழ்ச்சியடைகிருள். அதாவது, பத்து மாதம் சுமந்து பல இன்னல்களைக் கடந்து பெற்றெடுத்த தன் மகன் உச்சநிலை எய்திவிட்டான் என்னும்பொழுது, தாய்க்கு வரும் மகிழ்வு எல்லையில்லாதது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச், சான்றேன் எனக்கேட்ட தாய் என்று, இந்நிலையை திருவள்ளுவர் எடுத்துக் கூறியுள்ளார். அத்தகைய இன்பம் எனக்கு வந்தது எப்பொழுதெனில், *தமிழ் மன்றம் வெளியிட்டுள்ள முப்பது நூல்களையும் பற்றி நான் ஒரு ஆய்வை மேற்கொள்ளப்போகிறேன்" என்று பி.எம். புன்னியாமீன் அவர்கள், கூறியபோதுதான். முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பெரிதும் சிரமப்பட்டு வெளியிடப்பட்ட நூய்களைப் பற்றி ஆய்வு நடத்து வதற்குத் துணிந்த ஒருவர், என் பணியை அங்கீகரித்து விட்டார் என நினைத்து, நினைத்து உவகையுற்றேன்.
ஒவ்வொரு நூலும் வெளிவந்தவுடன், எனக்குப் பெரிய மனநிறைவு ஏற்படும். திருப்தியாக அமைந்து விட்டது" என நினைத்து (ஈன்ற பொழுதில் தாய் பெரிதுவப்பது போல்) நானும் மகிழ்ச்சியடைவேன். அது மாத்திரமல்ல, நூல்வெளியீட்டு விழாக்கள் நடக்கும்போதெல்லாம், பேசுபவர்கள் என்ன வாயாரப் புகழ்ந்து, என் பணி. சிறந்தது எனக்கூறும்பொழுதும், மகிழ்ச்சி வரும்.
s

Page 5
எமது நூல்களைப் படிக்காதவர்கள் அவை என்ன கூறுகின்றன என எளிதில் அறிந்து கொள்வதற்கு இந்நூல் ஒரு வழிகாட்டி, வெளியாகும் நூல்களைப் பற்றிய வரலாறு எழுதி வைக்கப்படுதல் வேண்டும் என்பதற்கு, இந்நூல் ஒரு முன்னேடி. பிற்காலத்தவர்கள், இக் காலத்தில் வெளியான நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இப்படியான பணி அவசியம் பெரிதும் அவசியம்.
ஆற, அமர இருந்து எல்லா நூல்களையும் படித்து, அவை பற்றி முழு விபரங்களையும் திரட்டி எழுதுவதற்கு, நிறையப் பொறுமை வேண்டும். எத்தனையோ இரவுகள் கண் விழித்திருந்து, பாடசாலைக்குக் கடமைபார்க்கச் செல்லாமல் லீவும் எடுத்து, இப்பணியைத் திறம்படச் செய்து முடித்துள்ள புன்னியாமீன் அவர்களுக்கு வார்த்தை களால் நன்றி சொல்லிப் போதாது. இன்றுள்ள வாசகப் பெருமக்கள் மாத்திரமல்ல, இனிப் பிறக்கப் போகின்ற வாசகர் கூட, அவருக்கு நன்றி செலுத்துவார்கள் என்பது திண்ணம். மிகுந்த ஆர்வத்துடன், அவர் பெரிதும் சிரமப்பட்டு எழுதித் தந்ததை, பல்லாயிரக் கணக்கானவர் களின் நன்மை க்ருதி, அச்சில் கொண்டு வருகிருேம்.
நாம் வெளியிடுகின்ற நூல்களின் தாக்கத்தினுல் நல்ல குணமுள்ளவர்கள் தோன்ற வேண்டும், அவர்கள் என்றும் நல்லவர்களாக வாழ வேண்டும். ஈற்றில், ஒரு 'நல்லவர்கள் சமுதாயம்" அமைய வேண்டும் என்பதே எமது பெரு, விகுப்பம்.
இந்நூலை எழுதித் தந்த ஜனப் பி. எம். புன்னியாமீன் இதை வெளியிடுவதில் உதவியாயிருந்த அச்சகத்தினர், வினியோகஸ்தர் அனைவருக்கும், எமக்குக் காலகாலமாக, ஊக்கம் தந்து வருகின்ற வாசகப் பெருமக்களுக்கும், இதயங் கனிந்த நன்றிகள்.
தமிழ்மன்றம், எஸ். எம். ஹனியாத கல்ஹின்ன, கண்டி, நிர்வாகச் செயலாளர்

நேர்ச்சைகள் இல்லாது ஒரு வரம்
அல்ஹாஜ்-ஹனிபா இனியவர்,பழகுவதற்கு நல்லவர். பண்பாளர். அவரோ பணம் படைத்தவர். அதனுல்தான் அவரினல் நூல்கள் வெளியிட முடிகின்றது, விற்பனைப் பணத்தை எதிர்பார்க்கும் பழக்கம் கிடையாது. தமிழ் பேசும் மக்கள் தமிழின் இன்பங்களைச் சுவைக்க வேண்டும். தமிழில் பல நூல்கள் வெளிவர வேண்டும். தமிழ் வளர வேண்டுமென்ற பாங்கினையுடையவர் ஹனிபா.""
-ஆர். சிவகுருநாதன், எம்.ஏ. சட்டத்தரணி, சட்டக் கல்லூரி விரிவுரையாளர் பிரதம ஆசிரியர், 'தினகரன்' -வீரகேசரி, 16.6.1982
மேற்கத்திய நாடுகளில், பிரபல இலக்கிய கர்த்தாக் களின் படைப்புகளைப் பிரசுரித்து இலட்சக் கணக்கில் இலாபமுழைக்கும் பல வெளியீட்டு நிறுவனங்களைக் காண்கிருேம். அநேகமாக, இந்நிறுவனங்கள் சர்வதேச மொழியான ஆங்கில இலக்கியங்களையே வெளியிட்டு வருவதுடன், இலக்கியப் படைப்பாளிகள் சர்வதேச அரங்கில் கொடிகட்டிப் பறப்பதற்கும் வழியமைத்து வருகின்றன.
சர்வதேச மொழியாக ஆங்கிலம் திகழ்வதென்ருல்கூட, உலகளாவிய ரீதியில், இன்று ஆயிரக்கணக்கான மொழிகள் காணப்படுகின்றன. இந்த மொழிகள் ஒரு பிரதேசத்தின் அல்லது ஒரு நாட்டின் தேசிய மொழிகளாகவன்றி குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு மட்டும் உரித்தானவை களாக அமைந்துள்ளன. ஆகவே, இம்மொழிகளின் மூலம் உருவகிக்கப்படும் படைப்புகளுக்கு சர்வதேச ரீதியில் இயங்கும் நிறுவனங்கள், சந்தர்ப்பம் வழங்கும் என எதிர்
7

Page 6
பார்ப்பதற்கில்லை. எனவே இம்மொழிகள் வளர்க்கப்பட வேண்டுமெனில் இம்மொழிகள் வியாபித்திருக்கும் இடங் களிலேயே கரிசனை செலுத்தப்படவேண்டியது இன்றியமை ዚዛTዽኝöl•
தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் எடுத்து நோக்கினல்,அதன்பரப்பு பல நூற்ருண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டம் வரை வியாபித்துச் செல்வதைக் காணலாம். இதனுல்தான் “கல்தோன்றி மண் தோன்றக் காலத்தின் முன் தோன்றிய தமிழ்" என்று அழகுற வர்ணித்திருக்கிறர் கள், சான்றேர்கள். ஆனலும் தமிழ் மொழியின் வியாபகம் சில ஆசிய நாடுகளில் மட்டுமே இன்று காணப்படுகின்றது. பரந்துபட்ட ரீதியில் இம். மொழியைப் பேசுபவர்கள் வாழ்ந்தாலும்கூட எண்ணிக்கையில் அடங்கக்கூடிய சில ஆசிய நாடுகளிலேயே தமிழ் தாய் மொழியாகக் காணப்படு கிறது.
தென்னிந்தியாவை எடுத்து நோக்கும்போது, அங்கு தமிழ் மொழி இன்று கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளது. தென்னிந்தியாவின் தமிழ்நாட்டுப் பிரதேசத் தில் செந்தமிழை வளர்க்கவும் தமிழிலக்கியங்களை ஊக்கு வித்துச் செம்மைப் படுத்தவும் பல நிறுவனங்கள் செயற்படு கின்றன. ஆனல், எமது நாட்டைப் பொறுத்தவரையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பவர்கள், சொற்ப அளவினரே இருக்கின்றனர். 1981ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி, இலங்கை மக்களின் இனரீதியான பரம்பல் பின்வருமாறு அமைந்திருக்கின்றது !
சிங்களவர் 73.98%, இலங்கைத்தமிழர் 12.6% இந்தியத்தமிழர் 5.5% இஸ்லாமியர் 7.1% ஏனையோர் 9.8%. இலங்கையில், தமிழைத் தாய்மொழியாகக் கொண் டிருப்பவர்கள் இலங்கைத் தமிழர், இந்தியத்தமிழர், இஸ்லாமியர், அதாவது முஸ்லிம்களுமாவர். எனவே, இங்கு தமிழை வளர்த்தெடுக்கும் பங்கு இம் மூன்று சாராரையுமே சார்ந்து நிற்கின்றது.

இலங்கைபில், தமிழ் வளர்ப்பதில் விரல் விட்டெண்ணக் கூடிய ஒரு சில நிறுவனங்களும் தனிப்பட்ட ஒரு சிலரும் முன் வந்த போதிலும், தமிழிலக்கியப் படைப்புகளை வெளியிட்டு படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நிலையங்கள் மிக மிகக் குறைவு. ஆகவேதான் இலங்கைத் தமிழ்ப் படைப் பாளிகள் பொதுசனத் தொடர்புச் சாதனங்களின் துணையை நாடவேண்டிய நிலையிலிருக்கின்றனர்.
வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படும் இலக்கியப் படைப்புகளைப் பாதுகாத்துப் பத்திரப்படுத்துவதில் அநேக சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இச் சாதனங்களால் ஏற்றுக் கொள்ளப்படு கின்ற இலக்கியப் படைப்புகள், ஜனரஞ்சகத் தன்மையைப் பெற்ருலும்கூட, காலப்போக்கில் அவை உரிய முறையில் பேணப்படாமல் மறந்து, மறைந்து விடுவதுமுண்டு.
இவ் அவல நிலைக்கு மாற்றுவழி காணும் பொருட்டு, தரம்வாய்ந்த படைப்பிலக்கியங்கள்ை நூலுருவில் பாதுகாக்க முனைந்தனர் சிலர். இத்துறையில் நாட்டம் கொண்டவர் களுள் செயலில் இறங்கி கையைக்கடித்துக்கொண்டவர்கள்” பலர் இருந்தும், எத்தனை நட்டங்கள் எத்தனை சிரமங்களை எதிர் கொண்ட போதிலும் மனம் சலியாமல், தம் முயற்சி களைத்தொடர்ந்து வருபவர்கள் ஒரு சிலர். இத்தகையோர்தான் தமிழினதும் இன்பத் தமிழ் இலக்கியங்களினதும் அறக் காவலர்கள்.
இந்த ரீதியில் பார்க்கும்பொழுது கல்ஹின்னைத் தமிழ் மன்றம் என்ருே முத்திரை பதித்துவிட்டது.
கல்ஹின்னைத் தமிழ் மன்றம் எனும்போது இதனை ஒரு நிறுவனம் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் தமிழ் மன்றம் எனும் பெயரில் செயல்படுபவர் ஒரு தனிமனிதர். அவர் தமிழ்கூரும் நல்லுலகு நன்கறிந்து வைத்திருக்கின்ற அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களேதான்.
9

Page 7
இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழில் நூல் வெளி பீட்டு முயற்சிகளை மேற்கொள்பவர்கள் அதனை வர்த்தக இலாபம் கருதிச் செய்யமுடியாதென்பது நாடறிந்த உண்மை. ஏனெனில், தற்போது இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்ற மலிவுப் பதிப்புகளுடன், அவைகளால் போட்டி போட முடியாது. தமிழ் வாசகரிடையே பெரு வரவேற்புப் பெற்றுள்ள இந்த மலிவுப் பதிப்புகளின் ஜனரஞ்சகத் தன்மையை, உள்ளூர்ப் பதிப்புகளால் சுலபமாகப் பெற்றுக்கொள்ள இயலவில்லை. இந்நிலையில், நிறுவன ரீதியில் வெளியீட்டுப் பணியை மேற்கொண்ட சிலர், தமது வெளியீட்டு முயற்சிகளை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த வகையில் சொந்தமான அச்சகமின்றி, சொந்த செலவிலேயே தனது படைப்புகளை மாத்திரமின்றி, பிற எழுத்தாளர்களது படைப்புகளையும் அச்சுவாகனமேற்றி, இலக்கிய அன்னைக்குக் காணிக்கையாக்கிப் பெருமகிழ் வெய்திக்கொண்டிருக்கும் பெருந்தகை ஹனிபா அவர்களை நேர்ச்சைகள் எதுவும் செய்யாமலேயே நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்று, நாம் கருதுவதில் எதுவிதத் தவறுமில்லை.
எஸ். எம், அவர்கள் தமது தமிழ் மன்றம் மூலம் இதுவரை முப்பது நூல்களை வெளியிட்டு விட்டார். இலங்கையைப் பொறுத்தவரை, இதுவொரு தனிமனித சாதனையேயன்றி வேறில்லை. அதே நேரம், இவரது அயராத இலிக்கியப் பணியின் மகுடம்போல் திகழ்வதும், இந்த வெளியீட்டுப் பணியே.
1982.lib. ஆண்டிலிருந்து இ வ. ர் சராசரியாக, ஆண்டொன்றுக்கு ஐந்து புத்தகங்களை இலக்கிய உலகுக்குச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றர். பிரபல வெளியீட்டு நிறுவனங்கள் கூடத் தயங்கும் வேளையில், இவர் துணிவுடன் தனது பயணத்தைத் தொடர்தல், விதந்துரைக்கப்பட வேண்டிய விடயம். இலாப நோக்கத்தை மட்டும் இவர்
10

மனதிற் கொண்டிருந்தால் இக்குறுகிய காலளல்லக்குள் இந்தளவு நூல்களே இவரால் வெளியிடப்பட்டிருக்க முடியாது என்று துணிந்து கூறலாம். தம் பணி சிறந்தோங்குவதற்காக, எத்தனை நட்டங்களையும் தாங்கிக் கொள்ளக்கூடிய தளரா மனவுறுதி இவருக்குண்டு.
எஸ். எம். அவர்களின் வெளியீட்டுப் பணியானது இன, மத பேதங்களுக்கும் பிரதேச வாதங்களுக்கும் அப்பாற். பட்டது. இலக்கியம் என்பது மக்களுக்காகவே படைக்கப்படு கின்றது. உலகத்தின் அந்தரத்தில் வாழ்ந்தாலும், மக்கள் யாவரும் ஒரே குலம் என்ற உணர்வு மேலிட செயற்படுபவர் தான் எம். எஸ். இதனுல்தான் இஸ்லாமியன், தமிழன் என்ற பேதங்களின்றி மலையகம், தென்னகம், வடக்கு, கிழக்கு என்ற வேறுபாடுகளின்றி இலக்கியத்தில் அனுபவ சாலி, அனுபவமற்றவர் என்ற வித்தியாசமின்றிச் சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கியிருப்பது இவரது பயணத்தின் வெற்றிக்கு அத்திவாரம். பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமின்றி இலங்கை வானெலியின் பிரதான செய்தியறிக்கையில் கூட, ஒலிபரப்பப்படுமளவிற்கு இவரின் சேவை இலக்கிய வானில் மிளிர்ந்து நிற்கின்றது.
நான்கு இலக்கிய ஆய்வு நூல்கள், மூன்று சமய நூல்கள், நாட்டார் பாடல்கள், சிறு வ ர் கவிதை நூல்களை உள்ளடக்கியவாறு பத்துக் கவிதை நூல்கள், நான்கு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு நினைவு நூல் என மொத்தம் முப்பது நூல்கள், இலக்கிய நேசர் உறனிபா அவர்களின் அமைதியான வெளியீட்டுப் பணியின் பிரதிபலன்கள்.
கலாநிதி உவைஸ், கலாநிதி சு. வித்தியானந்தன், கவிஞர் எம். ஸி. எம். ஸுபைர் ஆகிய முன்னணி எழுத்தாளர்களின் படைப்புக்குத் தமிழ் மன்றம் மூலம் முதன் முதலாக அச்சுருக்கொடுத்த பெருமையும் இவரையே சார்ந்து நிற்கின்றது. கூடவே, வளர்ந்து வரும் ஒரு பெண் எழுத்தாளரின் கன்னி முயற்சியை இலக்கியத் தடாகத்தில்
1.

Page 8
வெள்ளோட்டம் விட்டு ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலாக சோதரி ரிஸாயா ஆப்தீன் எனும் புது முகத்தை **கரை சேராத அலைகள்" எனும் தலைப்பில் இலக்கிய நெஞ்சங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றர்.
இந்த முப்பது நூல்களைப் பற்றியும் தனித் தனியாக விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது தமிழ் மன்ற வெளியீடுகளின் திறனுய்வல்ல-ஓர் அறிமுகமே.
இந்த அறிமுகத்தில், நூல்களின் பதிப்பாசிரியரான இலக்கியப் பெருந்தகையின் உளக்கருத்துகளை, அவரது உளந்தொட்டு உருப்பெற்ற பதிப்புரையிலிருந்து சில கருத்து களையும் கோடிட்டுள்ளேன். இக் கருத்துக்களிலிருந்து இந்நூல்களின் வெளியீட்டு நோக்கங்கள் யாதென உங் களால் புரிந்து கொள்ள முடியும்.
இலகுவான காரியமல்ல.
"நூல் வெளியீட்டுத் துறையில் ஈடுபடும் பொழுது எதிர்நோக்கும் நேர ஒதுக்கீடு, பணமுதலீடு, வினியோகம் என்பனவற்றைத் தனி மனிதனெருவன் தொடர்ந்து எதிர் கொண்டு வெற்றியடைதல் இலகுவான காரியமல்ல: இயக்கரீதியாக ஒன்று சேரும் பொழுது இவை இலகுவா |கின்றன."
எஸ். எச். எம். ஜெமீல், எம்.ஏ. பணிப்பாளர், இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்த மருது, கல்முனை. பதிவாளர், கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம்
12

1. MUSLIM CONTRIBUTION TO TAML
LITERATURE t
(தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டு-ஆங்கிலம்)
நூலாசிரியர் : எம். எம். உவைஸ் எம். ஏ முதற்பதிப்பு : ஆகஸ்ட், 1953 அச்சிடப்பட்ட பிரதிகள் ; 1000 அளவு : கிரவுண் எட்டு தாள் : வைட் பிரிண்ட். பக்கங்கள் : 1.10 அச்சாளர் : லக்ஷ்மன் அச்சகம், கண்டி விலை : 2, 00
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் எனும் போது உமறுப்புலவரின் சீருப்புராணமும், மஸ்தான் சாகிபு பாடல்களுமே அனேக இ லக் கி ய ஆய்வாளர்களின் பார்வைக்கு தெரிந்திருந்தன. இது 1950 ம்.ஆண்டுக்கு முற்பட்ட நிலை.
ஆனல், இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள், தமிழ் இலக்கிய உலகை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை 1951 ம் ஆண்டில் ஜஞப். எம். எம். உவைஸ் அவர்கள் தனது முதுமாணிப் பட்டத் தேர்விற்காகச் சமர்ப் L ägs Muslim Contribution to Tamil Literature (35Lóþ இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டு) எனும் ஆய்வு நூலின் மூலம் நிரூபித்தார்.
13

Page 9
ஜஞய் உவைஸ் அவர்களுக்கு முதுமாணிப் பட்டம் கிடைக்க ஏதுவாக இருந்த இவ்வாய்வு நூல் ஏட்டுவடிவில், இரண்டாண்டுகளாகப் பல்கலைக்கழக வாசிகசாலையிலே கிடந்தது. இதனல், இதைப்படிக்கும் ஒரு சிலரே, பல காலமாகத் தமிழ்மொழித்தொண்டு புரிந்து வந்துள்ள பல முஸ்லிம் புலவர்களைப்பற்றித் தெரிந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் தமிழ் தொண்டினைப்பற்றி முதல் முதலில் உலகிற்கு எடுத்துக் கூறிய பெருமை, ஐனப் உவைஸ் அவர்களையே சாரும் என்ருல் ஒரு சிலரின் Luntrie)6/dig5 மட்டுமே இவ்வுண்மைகள் தெரிந்து கொள்ளாமல், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்வரிய நூலை அச்சுருப்படுத்தித் தமிழ்கூரும் நல்லுலகுக்குச் சமர்ப்பித்த பெருமை ஜனுப் ஹனிபா அவர்களையே சாரும்.
இதைப்பற்றி கலாநிதி உவைஸ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்ருர்: "எனக்கும் கல்ஹின்னைக்கும் தொடர்பு ஏற்படக் காரணமாயிருந்தவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா அவர்களாவர். அவர் கல்ஹின்னையில் ஒரு தமிழ் மன்றத்தை ஆரம்பித்தார். தமிழ் வளர்த்தார். எனது முதல் நூலான “முஸ்லிம் கொன் றி பி யு சன் ரு ரமிள் லிட்ரேச்சர் என்னும் ஆங்கில நூலைத் தமது செலவிலே வெளியிட்டார். இந்த நூலுக்குத்தான் எனக்கு முதுமாணி (எம்.ஏ) பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. ஏட்டு வடிவில் இருந்த எனது இந்த நூலை அன்று பெரும் புள்ளிகளாக இருந்தவர்கள், பாராட்டியதோடு நின்று விட்டனர். அவலை நினைத்து உரலை இடித்தனர். விளம்பரங்கள் பெற்று, சஞ்சிகை போன்று வெளியிடலாம் என்று ஆலோசனை கூறினர். இந்த மாற்ருந்தாங் மனப்பான்மைக்கு என்மீது அத்தகையோர் கொண்ட பொருமைதான் காரணமாக இருந்திருக்கலாம் என்று எனக்கு இப்பொழுதுதான் ஞானம் , பிறந்திருக்கிறது, இந்தச் சூழ்நிலையில்தான். அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா

அவர்கள், எனது ஆங் கி ல நூலைத் துணிந்து
வெளியிட்டார்."--ஏப்ரல் 1982
தமிழ் மன்றத்தின் கன்னி வெளியீடாக இந்நூல் வெளிவந்ததன் பின்னர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனும் ஒரு பிரிவு தமிழ்மொழியில் ஓர் அங்கமாக உள்ளது என்பதைப் பலரும் உணரத் தொடங்கினர். இதனல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையிலேயே ஒரு மறுமலர்ச்சி ஏற்படலாயிற்று.
முஸ்லிம் கொன்றிபியூசன் ரூ ரமிள் லிட்ரேச்சர் வெளிவந்த பிறகு ஈழத்து-இந்தியப் பத்திரிகைகள் பல வாழ்த்துக்களையும், விமர்சனங்களையும் வெளியிட்டு உவைஸ் அவர்களின் முயற்சியைப் பாராட்டின. அவ்விமர்சனங்கள் சிலதிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன்;
*தமிழின் பெருமை இதனல் ஒரு படி உயருகின்றது. மொழி பல்வேறு சமயத்தினரையும் ஒன்று சேர்க்கும் இயல்பினது என்பதற்கு இது ஓர் உதாரணம், இதை சர்வகலாசாலை மாணவர், பொதுஜனங்கள் ஆகிய அனைவருக்கும் சிபாரிசு செய்கிருேம்."
சுதேசமித்திரன் (சென்னை) 1954.
The book shows the significant and worthy -Contribution and ought to go a long way to prove the fundamental unity of the Muslims and the Hindus in this part of the world-Federated india-February, 1954.
*தமிழிலக்கியத் துறையில். கவிதையிலாகட்டும், வசனத்திலாகட்டும் எத்தனையோ முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கம்பனையும், கவி ஒட்டக் கூத்தனையும் புழேந்தியையும் இன்னும் பலப்பல தமிழ்க்கவிவாணர் களையும் மிகைத்துவிடும் வண்ணம் தமிழ் நாட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்கள் விட்டுச் சென்ற சாசுவதமான
15

Page 10
தமிழிலக்கிய நூல்கள் இன்றுகூடக் கம்பராமாயணத்தையும் திருப்புகழையும் பல பிள்ளைத்தமிழ்களையும் அனேகவிருத்தங் களையும் வெண்பாக்களையும் மிகைப்பனவாய் ஒளி வீசி வருகின்றன. ஆனல் நம் தமிழ் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் அந்த முஸ்லிம் கவிஞர்களின் நூல்களிலிருந்து பாடங்கள் எடுத்தாளப்படுவதில்லையாகையால், நம் ந (ா ட் டி ல் எத்தனை தமிழ் முஸ்லிம் புலவர்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் என்னென்ன நூல்களை இயற்றிச் சென்ருர்கள் என்னும் விஷயமே பல படித்த மேதாவிகளுக்குத் தெரிவ தில்லை. எனவே, ஜனப் உவைஸ் இந்தத் துறையிலிறங்கி, முஸ்லிம் தமிழிலக்கியங்களனைத்தையும் பயின்று, ஒவ்வொரு கவியும் வேறு முஸ்லிம் அல்லாத தமிழ்க் கவிஞர்களின் செய்யுள்களை எப்படி நிகர்த்திருக்கின்றன அல்லது மிகைத் திருக்கின்றனவென்பதை விஷயவாரியாகவும் விளக்க முறை பாகவும் அணிவகுத்து ஒருங்குதிரட்டித் தந்திருக்கிருர், தமிழ்நாட்டு முஸ்லிம் அறிஞர்களின், கவிஞர்களின் தொண்டுகளை இவ்வளவு சிறப்பாக இந்நூலாசிரியர் திரட்டித் தந்திருப்பதை எல்லாத் தமிழ் மகனும் மெச்சித் தான் தீர வேண்டும். தமிழ்ப்பெரியார்களின் அரும்பெரும் தொண்டுகளைப் பாராட்டும் இந்த அபூர்வமான நூல் தமிழிலும் வெளிவரவேண்டும்."
-தாருல் இஸ்லாம் (சென்னை) நவம்பர், 1953 2. இலக்கியத் தென்றல் (தமிழ் இலக்கிய வரலாறு) நூலாசிரியர் : கலாநிதி சு. வித்தியானந்தன். முதற்பதிப்பு : நவம்பர்-1953 அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000 அளவு : கிரவுண் எட்டு தாள் : வைட் பிரிண்ட் Luissštissir : 141 அச்சாளர் : அருணு அச்சகம், கண்டி eaky : 5. OO
16

தமிழ் மன்றத்தின் இரண்டாவது வெளியீடும், முதலாவது தமிழ் பிரசுரமுமான தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலபகுதிகளை விளக்கும் 'இலக்கியத் தென்றல்" ஆய்வுநூல்-கலாநிதி சு. வித்தியானத்தன் பீஏச். டீ (லண்டன்) அவர்களினல் எழுதப்பட்ட முதலாவது நூலுமாகும்.
இலக்கியத் தென்றலில் தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆறு பகுதிகளாகப் பிரித்து, நூலாசிரியர் விளக்க முற்படு கின்ருர், முதற்பகுதி தமிழ் இலக்கியப் பரப்பினைப் பற்றி எடுத்துக் கூறுகின்றது. இங்கு சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர்காலம், சோழர் காலம், விசயநகர நாயக்க மன்னர் காலம், ஐரோப்பியர் காலம், தற்காலம் என ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டு, இக்காலப் பிரிவுகளின் அரசியல் நிலை, தோன்றிய நூல்கள் அவற்றின் முக்கிய பண்புகள் முதலியன அழகுற எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.
இரண்டாவது பகுதி, தமிழ் இலக்கண நூல்களைப் பற்றியும் மூன்ரும்பகுதி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றியும் நான்காம் பகுதி இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டு பற்றியும் குறிப்பிடுகிறது. இங்கு முஸ்லிம்களால் தமிழில் இயற்றப்பட்ட நூல்கள், காப்பியங்கள். பிரபந்தங்கள், இசைப்பாடல்கள், ஞானப் பாடல்கள், உரை நடை போன்றவைகளை நூலாசிரியர் எடுத்துக் கூறுகின்ருர்,
தொடர்ந்து ஐந்தாம், ஆரும் பகுதிகள் முறையே ஈழநாட்டுப் பெரியார் தமிழ்மொழிக்காற்றிய தொண்டு, இருபதாம் நூற்ருண்டுத் தமிழ்க் கவிதை எனும் தலைப்புகளில் அமைந்துள்ளன. ... : :
தமிழ் இலக்கிய வரலாற்றினைப் பற்றி ஒரளவு தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவும் இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள புலவர்கள், நூல்கள், பத்திரிகைகள்
蟹7

Page 11
போன்றவைகள். அகர வரிசையில் பிற்சேர்க்கையாக இடம் பெற்றிருப்பது, வாசகர்களுக்கு மேலும் இலகுபடுத்துவதாக அமைந்து நிற்கின்றது.
பல்கலைக்கழக மாணவனக இருந்து கொண்டே இலக்கியத் தென்றலை வெளியிட்ட எஸ். எம். ஹனிபா அவர்கள், தனது பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிடு கின்ருர், 'கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின் நூல்களுள் ஒன்ருகிய இலக்கியத் தென்றலை வெளியிடுவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்ருேம். தலைசிறந்த தமிழ் எழுத்தாளருள் கலாநிதியவர்களும் ஒருவர். இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் விரிவுரையாளராகக் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கடமை ஆற்றிவரும் இப்பெரியார் (1953) உயர்திரு விபுலானந்த அடிகளிடமும் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர் களிடமும் தமிழ்க் கல்வி கற்று, முதுமாணிப்பட்டத்தில் தேறியவர். இலண்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, தமிழர் பண்பாட்டினப்பற்றி ஈராண்டுகளாக ஆராய்ச்சி செய்து கலாநிதிப்பட்டம் பெற்றவர். இவர் சஞ்சிகை களிலும் கிழமைப்பத்திரிகைகளிலும் எழுதி யுள்ள கட்டுரைகள், இவரின் ஆராய்ச்சித் திறனுக்கும் தெளிவான நடைக்கும் தக்க சான்று பகரும்.
'..co. இந்நூலிலுள்ள இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு என்னும் பகுதி இதுவரை தமிழில் எழுதப்பட்ட இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெருததொன்று. தென்னிந்தியாவிலுள்ள அறிஞர் பலர், ஈழத்துப் பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டினை உணர்வதில்லை. அவர்களுக்கு ஓர் அறிவுக் கட்டுரையாக அமைந்துள்ளது, ஈழ நாட்டுப் பெரியார் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு, பகுதி
**.இலக்கியச் சுவை நுகரும் மனப்பான்மை இப்பொழுதுதான் தமிழர் உள்ளத்தில் தோன்றியிருக்
8

கின்றது. அவ்வியல்பை மேன்மேலும் வளர்ப்பதற்கு இதைப் போன்ற வெளியீடுகள் துணையாகும். இவ்வாசிரியர் எழுதிய இலக்கிய வரலாற்றுத் தொடர்பான வேறு பல நூல்களையும் அடுத்து வெளியிட எண்ணியுள்ளோம். அதற்குத் தமிழ்மக்களின் ஆதரவு கிடைக்குமென எதிர் பார்க்கின்ருேம். ..."
3. தமிழர் சால்பு
(சங்க காலம்) நூலாசிரியர் : கலாநிதி சு. வித்தியானந்தன். முதற் பதிப்பு : அக்டோபர்-1954 அச்சிடப்பட்ட பிரதிகள்: 1000 அளவு : வன்போர்த்
பக்கங்கள் : 323 அச்சாளர் : சாரதா விலாஸ் அச்சகம், கும்பகோணம் ଶଖିଅର) : 4. 0 0
கலாநிதி சு. வித்தியானந்தன் தனது கலாநிதிப்பட்டப் படிப்பிற்காக இலண்டன் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்த ஆங்கில ஆய்வு நூலின் தமிழாக்கமே "தமிழர்சால்பு" எனும் மகுடத்தின் கீழ் தமிழ் மன்றத்தின் மூன்ருவது வெளியீடாக வெளிவந்தது.பதினன்கு இயல்களைக் கொண்ட இந்நூல் சங்ககாலத் தமிழரின் சால்பினைப் பற்றிக் கூற எழுந்ததாகும்.
தமிழர் சால்பில், முதலாம் இயல் சங்க நூல்கள் தோன்றிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட சோழ, சேர, பாண்டிய அரசர்களின் வரலாற்றினைச் சுருக்கமாகக் கூறுகின்றது. சங்க காலத்தைப் பற்றிக் கூறும் இரண்டாவது இயல், இவ்வரசர்கள் கி.மு. முதலாம் நூற்ருண்டு தொடங்கி, கி.பி. மூன்ரும் நூற்றண்டின் முற்பகுதிவரை
19

Page 12
ஆண்டார்கள் என்பதை நிறுவுகின்றது. மூன்ரும் இயல் அக்கால அரசியல் அமைப்புப்பற்றியும் நான்காவது இயல்: போரும் போர்முறைகள் பற்றியும் குறிப்பிடுகின்றன.
ஐந்தாவது இயலில், தமிழ் மக்களுக்குச் சிறப்பான சமயக் கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும் உண்டு என்பதை தெளிவுபடுத்திவிட்டு, ஆருவது இயலில் முருகன் கொற்றவை, சிவன், விட்டுணுவும் கண்ணனும், இந்திரன், வருணன், இலக்குமி போன்ற தெய்வங்கள் பற்றி எடுத்துக் காட்டப்படுகின்றது.
தொடர்ந்து ஆரியர் நம்பிக்கைகளும் சமயச்சடங்கு களும் வழிபாட்டு முறைகளும், சமணமும் பெளத்தமும், சமய வாழ்க்கை, நம்பிக்கை, சமூக அமைப்பு போன்ற விடயங்கள் 7,8,9,10,11ம் இயல்களில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.
பன்னிரண்டாம் இயலில், சங்க கால மக்களின்
தொழிலும் வணிகமும் பற்றியும், அடுத்த இயலில் பெண்
களைப்பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இறுதி இயலாகிய பதினன்காம் இயல் கல்வியும் கலையும் பற்றியது. நுண்பெருங் கலையாகிய வானநூல், அக்காலத்தில் ஒப்புயர்வற்ற நிலையில் இருந்தது. ஒவியக் கலையும் சிற்பக்கலையும், நடனமும், இசையும் அதிக வளர்ச்சியுற்றிருந்தன. இவற்றை இவ்வியல்
கூறுகின்றது.
பல்லாண்டு செய்த ஆராய்ச்சியின் பயணுக கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களால் எழுதப்பட்ட தமிழர் சால்பு எனும் இச் சிறந்த நூல் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்ருல் அது மிகையாகாது.
20

4. மலர்ந்த வாழ்வு
நூலாசிரியர் : எம். ஸி. எம். ஸ"ாபைர் முதற்பதிப்பு : ஜனவரி, 1956. அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000
அளவு கிரவுன் எட்டு
பக்கங்கள் :45 அட்டைப்படம் : வீ.கே. அச்சாளர் : வீரகேசரி அச்சகம், கொழும்பு ଗ୍ଯା ଅର) : 1.00
தமிழ் மன்றத்தின் முதல் மூன்று பிரசுரங்களையும் இலக்கிய ஆய்வு நூல்களாக வெளியிட்டு மகிழ்ந்த எஸ்.எம். அவர்கள், தமது நான்காவது பிரசுரத்திற்காக ஒரு கவிதை நூலைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தனது மாறுபட்ட ரசனையை வெளிப்படுத்தியிருக்கின்ருர்,
கவிஞர் எம்.ஸி.எம். ஸ"பைர் அவர்களினுல் இயற்றப் பெற்ற கவிதை நூல்தான் மலர்ந்த வாழ்வு" இதனைக் கவிதை நூல் என்பதனைவிட, ஒரு சிறு செந்தமிழ்க் காவியம் என்று கூடக் கூறலாம். ஏனென்ருல் இது பல கவிதைகளின் தொகுப்பாக அல்லாது சின்னச் சின்னத் தலைப்புகளுடனுன ஒரு தனிக் கவிதையாக இருக்கின்றன.
ஏழ்மையிலும், இன்பங்கண்ட பெற்றேர் தம் ஏகபுதல் வனைக் கல்வியில் முன்னேறச் செய்யும் பொருட்டு, பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். புதல்வனின் கல்வி மீதிருந்த ஆர்வமும் ஆற்றலும், ஆசிரியப் பெருந்தகைகளின் ஆதரவும் அவனை, மழலைச் செல்வத்தை மட்டும் பெற்றிராத ஒரு வள்ளலிடம் சேர்ப்பிக்கின்றன. அன்னவரின் பெருந் தன்மையினுல் அவன் படித்துப் பட்டதாரியாகின்றன்.
தன்னை வளர்த்து ஆளாக்கி, உயர்ந்த அந்தஸ்தைத் தேடிக் கொடுத்த அந்த உத்தமரின் இலக்கியத் தாகத்தையும்
21

Page 13
செந்தமிழார்வத்தையுமுணர்ந்து, தமிழ் வளர் கழக மொன்றை உருவாக்கி ஆலோசனை வழங்குகிருன். அந்தக்
கழகத்தின் காரியதரிசியாகவும் செயலாற்றி, வள்ளலின்
தலைமையில் ஊரிலுள்ள தனவந்தர்களினதும் அறிவிற் சிறந்தவர்களினதும் ஒத்துழைப்புடன், கேட்பாரின்றித்
தூசு மண்டிக் கிடக்கும் நல்ல இஸ்லாமியத் தமிழ் இலக்கியங் களையும் ஏனைய செந்தமிழ் நூல்களையும் திருத்திப் பதிப்பிப் பதற்கும் அறிவு தரத்தக்க பிறமொழி நூல்களைத்
தமிழிலும் தமிழின் சிறப்பையுணர்த்தும் நூல்களைப்
பிறமொழிகளிலும் மொழிப்ெயர்த்துத் த மி பூழி ன்
பெருமையை உலகறியச் செய்வதற்கும் ஆவன செய்வதில்
தன்னை ஈடுபடுத்திக் கொள்கிருன், கூடவே, இனிய
இல்லறமும் தொடர்கிறது.
இதுவே "மலர்ந்த வாழ்வு" கவிதை நூலின் கவி(கதை)ச் சுருக்கம். உண்மையில் இத் தொடர் கவிதையைப் படிக்கும் போது சங்க காலக் காவியமொன்றைப் படிப்ப தைப் போன்ற உணர்வு மேலிடுகின்றது. இதனையே நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை அவர்கள் செய்யுள், இக்காலத்து எழும் அகவற் பாக்களைப் போலல்லாது, ஆற்ருெழுக்காகப் போகின்றது." என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மன்றம் பிரசுரமாக மலர்ந்த வாழ்வு நூலை வெளியிட முன்வந்த எஸ். எம். அவர்கள், இக் கவிதை நூலின் அடிப்படைக் கருவின் மூலமாகவே தனது அவா வினைத் துல்லியமாக வலியுறுத்தியிருப்பது, மிக வும் பொருத்தமாக இருக்கின்றது. அதாவது, இஸ்லாமியச் செந்தமிழ் இலக்கியங்கள் மூலைக்குள் முடங்கிக் கிடக்காமல், தமிழ்பேசும் மக்கள் கரங்களில் என்றும் தவழ வேண்டும் என்ற இவரது இலட்சிய வேட்கையினையே மலர்ந்த வாழ்வு கவிதை நூலும் எடுத்தியம்புகிறது.
22

இதனையே தமது பதிப்புரையில் ஹனிபா அவர்கள் பின்வருமாறு விதந்துரைக்கின்ருர்:
*3.மலர்ந்த வாழ்வு கவிதை நயம் மாத்திரம் அமைந்த நூலாய் விடாது, ஒரு இலட்சியத்தைக் கொண்ட நூலாகவும் இருக்கின்றது. இதைப் படித்த ஒருவர், பாடலின் கவர்ச்சியில் மயங்கி விடுவதோடு, செயலில் இறங்கு என்று ஒரு சக்தி தன்னைத் தூண்டுவதையும் காண்பார். இத்தகைய ஓர் அரிய கருத்தமைந்த நூலை வெளியிடுவதில் நாம் பெரிதும் பெருமையடைகிருேம்."
5. உலகம் புகழும் உத்தமத் தூதர்
நூலாசிரியர் : அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா முதற்பதிப்பு : மார்ச்-1978 அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000 அளவு : கிரவுண் எட்டு தாள் : டிமை பிரிண்ட் பக்கங்கள் : 52
அட்டைப்படம் : ஹஜூஞ
කෙර්‍ර්ශ) : 2.00
எம்பெருமானர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறும் தமிழ்நூல்களோ மிகவும் குறைவு. அதிலும் பள்ளிச்சிருர்களைக் கருத்தில் கொண்டு இலகுநடையில், இன்பத்தமிழில் எழுதப்பட்ட நூல்கள் மிகமிக அரிது. இந்நிலையில் உலகம் புகழும் உத்தமத் தூதர்' நூலை வெளியிட்டதன் மூலம் ஒரு புது வீச்சினை ஏற்படுத்தி வைக்கின்ருர் நூலாசிரியர். எம்பெருமானரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தினை பள்ளிச்சிருர்களின் இதயங்களில் பதிப்பதற்கென எழுதப்பட்ட முதலாவது தமிழ் நூல் இது.
23

Page 14
முதல் அத்தியாயத்தில் அரபு நாட்டைப்பற்றி நூலாசிரியர் குறிப்பிடுகிமுர். அரபு நாட்டின் புவியியல் அமைவு மக்கள்தொகை, காலநிலை முக்கிய நகரங்கள், வருமான மூலங்கள் போன்றவற்றினை மிகவும் இலகு தமிழில் எடுத்துக் காட்டுகின்ருர்,
இவரின் இலகு தமிழுக்கு ஒரு சிறு உதாரணம் - நூலாசிரியர் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிருர்: 4.அரபு நாட்டில் அதிகமான ஒட்டகைகள் இருக்கின்றன - ஒட்டகையின் மேலே ஏறி அரேபியர்கள் பிரயாணம் செய் கின்றனர். ஒட்டகையிடமிருந்து பாலும் பெறுகின்றனர். அங்கு குதிரைகளும் இருக்கின்றன. அரேபியக்குதிரைகளை ஏனைய நாட்டவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கு Saip60Tit...... *’ சிருர்களின் மனநிலை அறிந்து அவர்களது மனதில் இலகுவாகப் பதியக்கூடியதாக எழுதப்பட்ட இது போன்ற நடையினை நூலில் முழுமையாகக் காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்விலகு நடை நூலாசிரியரின் திறமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
இரண்டாம் அத்தியாயத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவில் நிலவிவந்த அய்யாமுல்" ஜாஹிலியா" எனும் அறிவிலிகளின் காலத்தைப்பற்றி விளக்குகின்றர். மூன்ரும் அத்தியாயத்தில் உத்தமர் பிறந்தார்" எனும் தலைப்பின் கீழ் எம்பெருமானரின் பிறப்பினைப் பற்றியும், தொடர்ந்து பெருமானரின் குழந்தைப்பருவம், வாலிபப் பருவம், நடவடிக்கைகள், நல்ல குணங்கள், நபித்துவம் இஸ்லாத்தைப் பரப்புவதில் எம்பெருமானர் பட்ட இடையூறுகளும் இன்னல்களும், இதன் விளைவாக அன்னரின் மதீனப் பயணம், போதனைகள், யுத்தங்கள் போன்ற வற்றினையெல்லாம் மிகத்தெளிவாகவும் அதே நேரம் சுருக்க மாகவும் குறிப்பிட்டுக் காட்டுகிருர், பத்தாம் அத்தியாயம் பெருமானுரின் மறை வினை க் காட்டியிருக்கின்றது. அன்னவரின் வாழ்க்கை வரலாற்றில் அடங்கவேண்டிய
24

சகல அம்சங்களையும் இலகுவான முறையில் இச் சிறுநூலில் அடக்கியிருப்பது நூலைப் பூரணபடுத்துவதாக அமைத் துள்ளது.
நூலின் பதினேராம், பன்னிரண்டாம் அத்தியாயங் களி ல் எம்பெருமானரின் போதனைகளைப்பற்றியும், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் பற்றியும் விளக்குவ துடன் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம் சமத்துவம் போன்றவற்றினையும் சுட்டிக்காட்டுகின்ருர்,
பதின்மூன்ரும் அத்தியாயத்தில் இஸ்லாம் காட்டும் வாழ்க்கை முறையினை நல்ல பழக்கங்கள் எனும் தலைப்பில் விளக்கமுனைகின்ருர். இறுதி யாக சில விளக்கங்களை தருகின்றர். அதாவது அல்லாஹ்வை, நாம் ஏன் அவன்" என்று அழைக்கின்ருேம்? ஸலவாத் என்ருல் என்ன? எம்பெருமானரின் பெயரைக்கேட்டால் நாங்கள் ஏன் ஸலவாத் சொல்ல வேண்டும்? போன்ற வினக்களுக்கான விளக்கங்களை இவர் இணைத்துள்ளார்.
இந்நூலில், நூலாசிரியர் எடுத்துக்கொண்ட விடயங் களை விளக்குவதற்காக குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களையும், வரலாற்று ஆதாரங்களையும் பயன்படுத்தி இருப்பது சிறப் பாக அமைந்துள்ளது.
தொகுத்து நோக்கும் போது பள்ளிச்சிருர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று இந்நூலைக் குறிப் பிட்டால் அது மிகையாகாது.
ஒரு சாதனை இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நூலொன்று நான்கு பதிப்புக்கள்ைக் காண்பதென்றல், அதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதி விடமுடியாது. உலகம் புகழும் உத்தமத் தூதரின் முதற் பதிப்பு 1976 - ம் ஆண்டு பங்குனி மாதம் கல்ஹின்னை தமிழ்
25

Page 15
ழன்றத்தின் ஐந்தாவது வெளியீடாக மொத்தம் 2000
filosofia %8.
பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து 1977 - ம் ஆண்டு பங்குனி மாதம் இந்நூலின் இரண்டாவது பதிப்பாக 3000 பிரதிகள் வெளி விடப்பட்டன. இந்தியாவில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த மர்ஹஜூம் அல்ஹாஜ் விளக்கு முஹம்மது முஹிய்யித்தீன் ஆலிம் ஹாபிஸ் அவர்களது ஞாபகார்த்தமாகக் காயல் பட்டண மீலாது பிரசுரக்கமிட்டியால் இலவசமாக வெளி யிடப்பட்ட இவ்விரண்டாம் பதிப்பு ஹொங்கொங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனிஷியா, இலங்கை, மத்தியகிழக்கு நாடுகள் போன்ற தமிழ் கூறும் இஸ்லாமியர்கள் வா மும் பிரதேசங்களிளெல்லாம் விநியோகிக்கப்பட்டது.
இந்நூலின் மூன்ரும் பதிப்பு 1982 - ம் ஆண்டு மார்கழி மாதம் தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையில் ‘திரீயம் பப்ளிஷர்ஸினல்" வெளியிடப்பட்டது. இப் பதிப்பில் 3000 பிரதிகள் அச்சிடப்பட்டன.
இறுதியாக 1984 -ம் ஆண்டு பங்குனி மாதம் இந்நூலின் நான்காம் பதிப்பை கொழும்பு இஸ்லாமியக் புக் டிரஸ்ட்” வெளியிட்டது. நான்காம் பதிப்பின் போது 5000 பிரதிகள் அச்சிடப்பட்டு, மீண்டும் நாடு பூராவும் விநியோகிக்கப் till-gil.
*உலகம் புகழும் உத்தமத் தூதர்" இதுவரை தமிழ்
மொழியில் மட்டும் மொத்தமாக 13,000 பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
26

6. உதும் நபித்துமாணுே
(உலகம் புகழும் உத்தமத்தூதரின் சிங்களமொழிபெயர்ப்பு) மூலம் : அல்ஹாஜ். எஸ்.எம். ஹனிபா மொழிபெயர்ப்பு : எம்.எம். முசிக் முதற்பதிப்பு : ஜனவரி-1980 அச்சிடப்பட்ட பிரதிகள் : 5000 அளவு : கிரவுண் எட்டு தாள் : வைட் பிரிண்ட் பக்கங்கள் : 56 அட்டைப்படம் ஹஜூன அச்சாளர் : இந்திக அச்சகம், கொழும்பு-10 விலை : 4.00
எம்பெருமானுர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை இனிக்கும் தமிழில் கூறிய உலகம் புகழும் உத்தமத் தூதர் "நூலின் சிங்களமொழி பெயர்ப்பே, தமிழ் மன்றத்தின் ஆருவது வெளியீடாக வந்துள்ள உதும் நபித்துமாணுே" எனும் நூலாகும். m
மூலநூலில் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இலகு நடையில் கூறிய அதே விடயங்களை எதுவித மாற்றங் களுமின்றி ஜனப். எம்.எம். ருஸிக் பீ.ஏ. (இலங்கை) அவர்கள், இலகு சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
உதும்நபிதுமாணுே" சிங்களமொழிபெயர்ப்பில் இறுதி யாக இரண்டுஅத்தியாயங்களை நூலாசிரியர்சேர்த்துள்ளார். இவ்விரு அத்தியாயங்களும் முறையே அல்குர்ஆன் என்ருல் என்ன? அல்-ஹதீஸ் என்ருல் என்ன? என்ற வினக்களுக் குரிய விளக்க விடைகளாக அமைந்துள்ளன. இஸ்லாத்தின் அடிப்படையினைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் சிங்களச்சிருர்களுக்குப் பயன்தரத்தக்க விதத்தில் இவ்விரு,
27

Page 16
அத்தியாயங்களும் பொருத்தமான முறையில் இணைக்கப் பட்டுள்ளன.
1980 - ம் ஆண்டு தை மாதம் இச் சிங்கள மொழி பெயர்ப்பின் 5000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது. இம்மொழிபெயர்ப்பு வெளிவந்து இரண்டொரு மாதங்களிலே கணிசமானதோர் தொகை விற்பனையாகி விட்டதிலிருந்து, சிங்களமொழியில் கற்கும் சிருர்கள் இந்நூலின் மூலம் நியாயமான பயனை அடைந்திருக்கிருர்கள் என்பது புலனுகின்றது. ஏனென்ருல் சிங்களமொழி மூலமும் சிருர்களுக்காக எம்பெருமாளுரின் வாழ்க்கை வரலாற்றினைக் கூற வெளிவந்த முதல் நூலாக இம்மொழி பெயர்ப்பு முத்திரை பதித்துள்ளது.
7. உத்தமர் உவைஸ்
சரிதை நூல் நூலாசிரியர் : அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா, முதற் பதிப்பு : மார்ச்-1981 அச்சிடப்பட்ட பிரதிகள் : 5000 அளவு : கிரவுண் எட்டு தாள் : வைட் பிரிண்ட் பக்கங்கள் : 172 அட்டைப்படத் தயாரிப்பு : லியாகத் அச்சாளர் : ஐ.பீ.சி, பிரிண்டிங் பிரஸ். கொழும்பு . 9 ଘ2)) * 2.0.0.0
உத்தமர் உவைஸ்" எனும் இச்சரிதை நூல், தமிழ் வளர்க்கும் தமிழ் மன்றத்தின் ஏழாவது வெளியீடாக 1981- ம் ஆண்டு பங்குனி மாதம் வெளிவந்துள்ளது.
இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கூட தமிழைச் சிறப்புப்பாடமாக ஏற்று தமிழ்ச் சிறப்புக் கலைமாணித்
28

தேர்வில் சித்தியெய்திய முதல் முஸ்லிம் என்ற பெருமைக் குரியவர்; தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டு எனும் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, முஸ்லிம்களும் தமிழ்த் தாய்க்குத் தம்மாலான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றர்கள் என்ற அரிய உண்மையைத் தமிழ் கூரும் நல்லுலகுக்கு முதன்முதலாக எடுத்துக்காட்டி, அதன் மூலமே தமிழ்த்துறை முதுமாணி (எம்.ஏ.)த் தேர்வில் முதன்மையாகத் தேறிய முஸ்லிம் எனும் பெருமையைத் தட்டிக்கொண்டவர், இவை இரண்டையும்விட "இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க்காப்பியங்கள்" எனும், விரிவான ஆய்வு நூலைச் சமர்ப்பித்ததன் மூலம் தமிழ்த் துறையில் கலாநிதி (Ph.D.) பட்டம் பெற்று வாகை சூடிய முதல் முஸ்லிம் பெருமகன் எனும் பெருமை பெற்றவர், அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கள்.
இத்தகைய பெருந்தகையாளரின் இல்லறம் உட்பட. இலக்கியம் வரையிலான வாழ்வின் பலதரப்பட்ட அம்சங் களையும் சுவைபட எடுத்துரைக்கும் நூலாக “உத்தமர் உவைஸ்" திகழ்கிறது. தலைசிறந்த கல்விமானும் நாடறிந்த கவிஞருமான அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர் களின் வாழ்க்கை வரலாருேடு தமிழ் இலக்கியத்தில் அவரின் மேலான பங்களிப்பீனையும் தெரிந்துகொள்ள விழையும் இலக்கிய அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்நூல்ை முன்வைக்கின்ருர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள். இதன் மூலம் சகலவிடயங்களிலும் முஸ்லிம் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கின்ற கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களை கெளரவிப்பதோடு, அவரின் முன்மாதிரியை முன்வைத்து முஸ்லிம்களின் எழுச்சிக்கு வழி கோலுகின்ற மகத்தாண்தொரு பணியை மேற்கொண்ட பெருமையினை அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்கள் ஈட்டிக் கொண்டுள்ளார்கள்.
மொத்தம் 172 பக்கங்களில் 15 அத்தியாயங்களை உள்ளடக்கிக் கவர்ச்சிகரமான அ  ைம ப் பில் வெளி வந்துள்ளது உத்தமர் உவைஸ்."
29

Page 17
அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களினல் எழுதப் பட்ட "உத்தமர் உவைஸ்" வெறும் சரிதை நூல் மட்டுமே என்று எம்மால் சொல்லிவிட முடியாது. இந்நூலில் கலாநிதி உவைஸ் அவர்களை இலக்கிய நெஞ்சங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுதே, எமது சமூகத்தில் அவ்வப்போது உறைந்து கிடந்த சில அவல நிலைகளையும் இவர் படம் பிடித்துக்காட்டத் தவறவில்லை. இதிலிருந்து சமூகத்தைப் பற்றி இவரின் உள்ளத்தில் இழையோடிக் கொண்டிருக்கும் உணர்வுகளின் வெளிப்பாட்டினையும் எம்மால் இனங்கான முடிகிறது.
எமது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் அண்மைக்காலமாக உயர் கல்வியில் ஒரளவு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வ ரு கி ன் ற போதிலும் கூட இருபதாம் நூற்றண்டின் முதல் அரைப்பாகத்தில், உயர்கல்வி கற்பதில் பெரும் சிரமங்களை நம் முஸ்லிம்கள் அனுபவித்திருக் கிருர்கள். ஆரம்பத்தில் முஸ்லிம்களின் உயர் கல்வி வளர்ச்சிக்கு இடையூருக இருந்த சில கசப்பான உண்மைகளை *உத்தமர் உவைஸ்" நூலில், அரசியல் தலையீடு, மூடநம்பிக்கை, சமூகத்தினரிடையே காணப்பட்ட குழி பறிப்பு, வறுமை போன்ற பின்னணிகளினூடாக எமக்குத் துலாம்பரப்படுத்துகின்ருர்,
இங்கு சமூகத்தின் அவலநிலைகளை வெளிப்படுத்தி, இளைய தலைமுறையினருக்கு இறந்தகால நிஜங்களைத் தரிசனம் செய்ய வைப்பதோடு, சமூக உணர்வுகளை இளம் நெஞ்சங் களிடையே ஊட்ட முயலும் பாங்கு வரவேற்கத்தக்கது. மறுபுறமாக, சரிதை நூலொன்றில் சமூக அவலங்களையும் படம்பிடித்துக்காட்டும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத் தக்கது.
30

8. துஆவின் சிறப்பு
உருதுமூலம் ஆரிபு பில்லாஹ் மெளலான அஷ்ரப் அலி தானவி(ரஹ்) தமிழ் மூலம் : மெளலவி ஹாபிஸ் ஷாஹ"ல் ஹமீது (பகாவி) தொகுப்பாசிரியர் : அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 1981 அச்சிடப்பட்ட பிரதிகள் : 3000 அளவு : கிரவுண் எட்டு
தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் : 40
அட்டைப்படம் : ஹஜூன அச்சாளர் : ருஹ"னு பிரிண்டர்ஸ், கொழும்பு-10 விலை : 4.00
துஆ" என்னும் அரபுப்பதம் தமிழில் பிரார்த்தனை" என்பதனைக் குறித்து நிற்கின்றது. **பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும்." என எம்பெருமானுர்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். எனவே பிரார்த்தனையின் ஒழுக்கங் களையும், முறைகளையும் தெரிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாக இருக்கின்றது.
இதைக் கருத் தி ல் கொண்டு பிரார்த்தனையின் சிறப்புகளை விளக்குவதற்காக ஆரிபு பில்லாஹ் மெளலான அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் உருது மொழியின் *ஆதாபுத் துஆ எனும் சிறு நூலை எழுதிவெளியிட்டார். இவ்வுருது மூலத்தினை தமிழ்பேசும் நல்லுலகும் அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக வேண்டி பள்ளப்பட்டி உயர்நிலைப் பள்ளியின் அரபு ஆசிரியரான மெளலவி ஹாபிஸ் ஷாஹசல் ஹமீது (பாகவி) அவர்கள் தமிழ் மொழியில் துஆவின் சிறப்பு" எனும் தலைப்பில் மொழி பெயர்த்து இந்நூலை 1961 - ம் ஆண்டில் பிரசுரித்தார்.
31

Page 18
இச்சிறு நூ லி ல் பிரார்த்தனையின் சிறப்புகள் பிரார்த்தனையின் விளக்கங்கள்; பிரார்த்தனையை எவ்வாறு புரிவது? அதன் ஒழுக்கங்கள் யாவை? மற்றும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்; ஏற்றுக்கொள்ளப்படும் இடங்கள், எம்பெருமானுர் (ஸல்) அவர்கள் தம் தோழர் களுக்குக் கற்றுக் கொடுத்த பிரார்த்தனைகள் போன்ற தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மெளலவி ஷாஹ"ல் ஹமீது அவர்களின் இம்மொழி பெயர்ப்பினைத் தொகுத்தும் அவசியமான மேலும் சில அம்சங்களைப் புதிதாகச் சேர்த்தும் அல்ஹாஜ் எஸ்.எம், ஹனிபா அவர்கள் துஆவின் சிறப்பு" நூலின் இரண்டாவது பதிப்பை 1981 - ம் ஆண்டில் வெளியிட்டு வைத்தார்.
இவ்விரண்டாம் பதிப்பில் 28 - ம் பக்கத்திலிருந்து தொகுப்பாசிரியர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர் களினல் பல துஆக்களும் விளக்கங்களும் இணைக்கப் பட்டுள்ளன. மூலநூலில் இடம்பெருத பிரார்த்தனைகளான அஹது நாமா, தஸ்பீஹ்முகர்ரம், பிரார்த்தனைகள் பற்றிய எம்பெருமானரின் பொன்மொழிகள், ஆயிரம் ஸலவாத். துக்குச்சமஞன பிரார்த்தனை, ஸலாத்துன் நாரியா, நோய் வந்தால் ஒதும் பிரார்த்தனை, யாசீன் சூரா பற்றிய விளக்கம் போன்ற விடயங்கள் இடம் பெறுவது இத்தொகுப்பை இன்னும் கனதிப்படுத்துகின்றது.
மேலும் இந் நூ லில் அரபு மொழியிலும் தமிழ் மொழியிலும் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. அரபு மொழியில் உள்ள பிரார்த்தனைகளுக்குத் தமிழ்மொழிக் கருத்துக்களும் கூறப்பட்டிருப்பது சிறப்பம்சங்களில் ஒன்ருகும்.
தொகுத்து நோக்கும் போது துஆவின் சிறப்பு எனும் இத்தொகுப்புநூல் ஒவ்வொரு முஸ்லிமும் படித்துப் பயன் பெறத்தக்க விதத்தில் அமைந்திருப்பது பாராட்டக் கூடிய தொன்ருகும்
32

9. காலத்தின் குரல்கள்
நூலாசிரியர் : கவிஞர் எம்.ஸி.எம். ஸ"பைர்
முதற்பதிப்பு : நவம்பர்.1981
பிரதிகள் : 1000
அளவு : பிரிவுன் எட்டு
தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் : 50
அட்டைப்படம் : ஹஜூன
அச்சாளர் : ஆரிய பிரிண்டர்ஸ் கண்டி
விலை : 6.00
இலங்கைத் திருநாட்டின் பாரம்பரியப் புகழ் பூத்த சமூகங்களுள் முஸ்லிம் சமூகமும் ஒன்று. அதனுல் முஸ்லிம் சமூகமும் இந்நாட்டின் அரசியல் சுதந்திரம், பொருளா தாரம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றின் வளத்துக் காகத் தியாகம் பல புரிந்து, தளராது உழைத்து வருகிறது.
*.இந்த நிலையில் இந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் பொதுவான உரிமைகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்துக்கும் உரித்தாகும்; இந்த உரிமைகளுக்கு எந்த உருவில் இடர்கள் வந்தாலும் விழிப்பாக இரு ந் து காத்துக்கொள்ள வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். இத்தகைய சூழ்நிலைகள் உருவாகும் போது அதனை உணர்த்திக், காக்கும் நடவடிக்கையில் எனது பங்களிப்பாக எழுந்த உணர்வுக் குரல்களின் வடிவங்களிற் சிலவே இந்தக் காலத்தின் குரல்கள்." حی s
11.11 1981-ல் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மண்ட பத்தில் நடைபெற்ற கவிஞர் ஸ"பைர் பாராட்டு விழாவை முன்னிட்டு த மி ழ் மன்றத்தினுல் வெளியிட்ப்பட்ட காலத்தின் குரல்கள் கவிதை நூலின் என்னுரையில், நூலாசிரியர் கவிஞர் எம்.ஸி.எம். சுபைர் அவர்கள் மேற் கண்டவாறு தனது நூலைப்பற்றி அறிமுகம் செய்து வைக்கின்றர்.
3S

Page 19
சமூகத்து உரிமைகளில் விழிப்புணர்ச்சி பெறத்தக்க சிந்தனையில் மோதிப்பயன் விளைவிக்க முனையும் காலத்தின் குரல்கள் பதினேழையும் இலக்கியவானில் எதிரொலிக்க விட்டவை.அருள்ஜோதி, மலைமுரசு, முஸ்லிம் உதயம், தினகரன், பிறை, ஹ"ஸைனியா மகாவித்தியாலய மீலாத் மலர், பேராதனை ஆங்கில ஆசிரியர் கலாசாலை மலர் ஆகியவைகளே.
பலதிசைகளிலும் ஒலித்த உரிமைக்குரல்களை ஒருமுகப் படுத்தி,ஒரே குரலாக **காலத்தின் குரல்கள்' மூலம் ஒலிக்க விட்டபெருமை இலக்கியப் பெருந்தகை எஸ்.எம். ஹனிபா அவர்களையே சார்ந்து நிற்கின்றது. இக்குரல்கள் பற்றி அணிந்துரை வழங்கிய மூத்த எழுத்தாளரின் உளக் கருத்துக்களை செவிமடுப்போம்!
* இந்தியப் பத்திரிகைகளில் பெரிதும் அறிமுக மானவர் ஸுபைர். ஈழத்துப் பத்திரிகைகளிலும் மலர் களிலும் அவ்வப்போது எழுதிய கவிதைகள் தேனின் இனிமை, மானின் மருட்சி, மலரின் மென்மை, நிலாவின் தெளிவு ஆகியன ஒன்றுபட்ட அழகோவியமாகும். அதனைப் படித்தின்புறும் பாக்கியம், இன்று நமக்குக் கிடைத்துள்ளது. இவரது கவிதை வெறும் கற்பனைக் கோலமல்ல. சமுதாய வீறும், நாட்டுப்பற்றும், இன எழுச்சியும் மிகுந்து அருமறை வழியிலும் பெருமறை வாழ்விலும் தோய்ந்து தனிச் சுவை பெற்று விளங்குவன." அ. ஸ். அப்துஸ் ஸ்மத், B. A. (Hons) விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, அட்டாளச் சேனே.
10. என் சரிதை நூலாசிரியர் : கவிஞர் அப்துல் காதர் லெப்பை முதற் பதிப்பு : ஜனவரி, 1983 பிரதிகள் : 1100
34

அளவு : கிரவுண் எட்டு தாள் : வைப் பிரிண்ட்
பக்கங்கள் 96 அட்டைப்படம் , எம். ஆர். எம். அச்சாளர் : மில்லத் பிரிண்டர்ஸ்-சென்னை. ଗର୍ଭେ ଅନ୍ନ) : 15-00
**.ஈழத்தில் மணக்கும் தமிழ் மணம், இன்பத் தமிழகத் தில் சிறப்பதையும் தமிழகத்தில் அனுபவிக்கும் தமிழ்ச்சுவை இலங்கையில் இனிப்பதையும் உலகம் அறியும். அந்த வண்ணத்தமிழில் ஆழ்ந்த புலமையும் அறிவின் கூர்மையும் பல்துறை நலமும் அமைய அறிவுலகத் திலகம் அப்துல் காதிர் லெப்பை அவர்களின் வாழ்க்கையை அவரே எழுதி வழங்கி இருக்கின்ற வெற்றியைக் கண்டு பெருமைப்படு கின்றேன். பண்புகளின் இருப்பிடமாய் பாப்பொழியும் கவிமுகிலாய் உள்ள பெரியார் தானே எழுதியதால் அடக்கமாகவும் உண்மையாகவும் தன் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் படவும் இந்நூல் படைத்து வழங்கப்பட்டிருக்கின்றது."
கவிதைத்துறையில் ஈழத்தின் வழிகாட்டி என்று நன்றி யுள்ள சமுதாயம் கருதுகின்ற கவிஞர் திலகம் அப்துல்காதிர் லெப்பை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்ற என் சரிதை நூலுக்குரிய மனமுவ்ந்து வழங்கப்பட்ட அணிந்துரையில் அல்ஹாஜ் ஜீ. எம். எஸ். ஸிராஜ் பாகவி அவர்கள் ஓரிடத்தில் மேற்கண்டவர்று குறிப்பிடுகின்றர்.
தமிழ் மன்றத்தின் பத்தாவது வெளியீடாக இந்திய மண்ணில் அழகுற அச்சாகியுள்ள இச்சுய்சரிதை நூல்ஸ் மன உறுதி, சோகம், காதல் பாசம் போன்ற பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாடுகளின் இலகு தமிழில் இனிமை கமழ, தன் வரலாற்றினைக் கூறும் பாங்கில் நூலாசிரியரின் அனுபவ முத்திரை ஜொலிக்கின்றது.
霹5

Page 20
இந்நூலை அச்சுவாகனமேந்திய இலக்கியப் பெருந்தகை. சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்களின் பதிப்புரையில் இருந்து சில வார்த்தைகளை இனி நோக்கு, G6hurtub.
*அறிவு, ஆத்மீகம் என்ற துறைகளுக்கு அதி முக்கியத்துவமளித்து வந்துள்ளது இஸ்லாமிய சமூகம். இன்றும் பெரும்பாலானுேர் இதே அடிப்படையில் செயலாற்றி வருகின்றனர். ஒரு சிலர் நினைப்பதுபோல பணமிருந்தால் போதும். எல்லாமே நிறைவு பெற்றுவிடும் என்ற எண்ணம் கொண்டவர்களின் எண்ணிக்கை குறை வானதுதான். அவர்களையும், அறிவு வளர்ச்சிக்கும் ஆன்மீக வழிக்கும் திருப்பிவிட வேண்டும் என்ற நன் நோக்கில்தான் முப்பதாண்டுகளாகப் பல பயனுள்ள நூல்களை வெளியிட்டுள்ளோம்.
18.எமது நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சி மறையத் தொடங்கிய காலத்தில் ஆசிரியராகப் பயிற்சி பெற்று, நாற்பதாண்டுகள்வரை ஆயிரமாயிரம் மாணவர்களுக்குக் கல்வி புகட்டி அரிய இலக்கியப் பணியும் புரிந்துள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு, சமூகத்திற்குப் பயனளிக்கும் என்பதனல், "என் சரிதை"யைப் பிரசுரிக்க முன்வந்தோம். இதனைப் படிப்பதால் இன்றைய இளைஞர் பெரும்பயனை அடைவர். இதுபோன்ற நற்பணி புரியப் பலர் தூண்டப் படுவார்கள்.
6 எம்மால் இப்படிப் பயனுள்ள பணி செய்யமுடியாமற் ஒ விட்டதே' என்று வயதானவர்கள் கவலைப்பட்டு எஞ்சியுள்ள கொஞ்ச நாட்களிலாவது நல்லன செய்ய முன் வருவார்கள். *.சிறந்த நடையில் கவிஞர் அப்துல் காதர் லெப்பை எழுதியுள்ள 'என் சரிதை" " இஸ்லாமியரையும் அல்லாதாரையும் தமிழ் தெரிந்த எல்லோரையுமே கவரும் முறையில் அமைந்திருக்கிறது. கலியாணம், கந்தூரி, கத்தம் போன்ற வைபவங்களின் போது அறிவு நூல்களை
36

அன்பளிப்பாகக் கொடுப்பதனல், கொ டு ப்ப வரும் பெறுபவரும் பெரிதும் பயனடைவர். நூலை எழுதிய வருக்கும் அதனல் ஊக்கம் ஏற்படும். அந்த நல்ல பழக்கம் சமூகத்தின் உயர்ச்சிக்கு அதி முக்கியமானதாகும்."
11. இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி
நூலாசிரியர் : அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா முதற்பதிப்பு : ஏப்ரல் 1982 அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000 அளவு : கிரவுண் எட்டு தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் , 80
அட்டைப்படம் ஹஜூன அச்சாளர் : ஃபெயா பிரிண்ட், கொழும்ப்-12 விலை: 12.00
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்ற இலட்சியவேட்கையின் மற்றுமொரு வெளிப்பாடாக அமைந்த நூலே, அல்ஹாஜ்.எஸ்.எம். ஹானிபா அவu களின் “இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி" எனும் ஆய்வு நூாத ஆகும்.
இஸ்லாமிய இலக்கியம் பற்றி இவரால் அவ்வப்போது இலங்கை, மலேசிய வானுெலிகளில் நிகழ்த்தப்பட்ட உரை களினதும் சஞ்சிகைளில், பிரசுரமான இவரது சில கட்டுரை களினதும், மற்றும் இந்நூலுக்கென்றே பிரத்தியேகமாக எழுதப்பட்ட கட்டுரைகளினதும் தொகுப்பாக மொத்தம் எட்டு இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கிய இந்நூல், தமிழ் மன்றத்தின் பதினுேராவது வெளியீடாகப் பிரசுரமாகி யுள்ளது.
இவ் ஆய்வு நூலின் அணிந்துரையை மதுரை காமராஜ் பல்கலைக்கழக இஸ்லாமிய இலக்கியத்துறைப் பேராசிரியர்
37

Page 21
அல்ஹாஜ் டாக்டர் ம.மு. உவைஸ் அவர்கள் எழுதி புள்ளார். இவர் ஓரிடத்தில் நூலாசிரியர் அல்ஹாஜ் ஏஸ்.எம். ஹனிபா அவர்களை அறிமுகம் செய்து வைக் கையில்..'பள்ளிப் பருவம் முதல் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புவரை தமிழை ஒரு பாடமாக கற்றுத் தேரியிருப் பதில் இருந்து இத்தகைய ஒரு நூலை இயற்றுவதற்கு அவருக் குள்ள தகைமை தெற்றெனப் புலனுகிறது." என்று குறிப் பிட்டுள்ளார். தமிழில் சிறந்த தேர்ச்சியும், இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றி ஆழ்ந்த அறிவும் இணைந்தே இஸ்லாமிய வளர்ச்சி ஆய்வு நூல் அமைந்துள்ளது என்பதற்கு பேராசிரியரின் மேற்கண்ட கூற்று நல்லதோர் எடுத்துக்காட்டு.
இனி, அல்லாஹ்வே துணை' எனும் மகுடத்தில் நூலாசிரியரால் எழுதப்பட்டுள்ள முன்னுரையில்°.மிக எளிய நடையில் அத்தியாவசியமான தகவல்களை மாத்திரமே இதில் சேர்த்துள்ளேன். மிக விரிவாக, எழுதினல் எனது நோக்க ம் நிறைவேறமாட்டாது என்பதனுல், பழைய புதிய இலக்கியங்களைப் பற்றிய ஆழமான ஆராய்ச்சி விபரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன." என்று குறிப்பீட்டுள்ளார்.
இஸ்லாமிய இலக்கிய வரலாற்றினை ஒரு சிறிய நூலினுள் அடக்குவதென்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும். ஆனல் நூலாசிரியர் தனது முன்னுரையிலேயே இது ஒரு விரிவான ஆய்வல்ல என்றும், இருபதாம் நூற்ருண்டின் இடைக்காலத்தினை மட்டுமே கருத்திற்கொண்டு ஆராயப்பட்டது என்றும் எடுத்துக் காட்டுவதன் மூலம் இது பூரணத்துவமான இலக்கிய ஆய்வல்ல என்பதனை ஒப்புக்கொள்கின்றர்.
அப்படியாயின், இந்நூல் ஏன் எழுதப்படவேண்டும்? என்ற வினவும் எம்முன் எழுவது நியாயம்தான். இதற்கான விடையினையும் முன்னுரையிலேயே தெளிவாக வரையறுத்து விடுகிருர். அதாவது, 9.கற்றறிந்தவர்கள் மாத்திரமல்ல
38

சாதாரண மக்களும், குறிப்பாக இளவயதினரான மாணவ, மாணவிகள் எமது இலக்கியச் செல்வங்களைப்பற்றி ஒரளவு, அறிவேனும் பெறுவதற்கு ஏற்ற விதத்தில் இந்நூலை அமைத் துள்ளேன். இந்நூலைப் படிக்கின்றவர்கள் நாலு பேர் இலக்கிய ஆர்வம் பெற்று இலக்கிய வளர்ச்சிக்கு பணிபுரிய முன் வருவார்களானல், இதனை எழுதியதற்கு நல்ல பயன் கிடைத்துவிட்டதாக நினைத் துப் பூரிப்படைவேன்." என்கிருர், ஆதலால் இதனை ஓர் அறிமுக நூல்" எனலாம். முதலாம் அத்தியாயத்திலேயே, "ஆல் போல் வளர்க ஆர்வம்" என்று இஸ்லாமிய இலக்கியத்தினைப் பற்றிய ஆர்வத்தினை இளம் நெஞ்சங்களிடையே பதிப்பதில் அவர் பிரயத்தனப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் 1953 ம் ஆண்டில் வெளியிட்ட இஸ்லாமிக்கா ஸெய்லானிக்கா" எனும் சஞ்சிகையில் நூலாசிரியரால் எழுதப்பட்ட ‘முஸ்லிம் தமிழ் இலக்கியம் என்ன நிலையிலிருக்கின்றது? எனும் கட்டுரை இரண்டாவது அத்தியாயமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
அதில் ஓரிடத்தில் *.முஸ்லிம் புலவர்களால் எழுதப் பட்ட நூல்கள் பலவகை. ஐநூறுக்கு மேற்பட்ட புலவர்கள். தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் சமீப காலத்தில் வாழ்ந்திருக்கிருர்கள். அவர்கள் எழுதிய நூல்கள் பல இறந்து விட்டபோதிலும் இன்னும் சில எங்கள் மத்தியில் இருக்கின்றன. அவற்றைப்பற்றி நாங்கள் நன்ருக அறிந்து கொள்ளவில்லை. அதற்குக்காரணம் அந்த நூல்கள். கவனிப்பாரற்று வீட்டு அலுமாரிகளில் இருப்பதும் அவற்றைப்பற்றி இன்றுள்ள முஸ்லிம் சஞ்சிகைகளாவது முஸ்லிம்களிடையே ஒருவிழிப்புணர்ச்சியை உண்டாக்காமல் இருப்பதுமேயாகும்." எ ன் று குறிப்பிட்டுவிட்டு செயலிலும் இறங்குகின்றர். இலங்கையில் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள மக்கூன்" எனுமிடத்தில் வாழ்ந்து மறைந்த அப்துல் ஹமீதுப் புலவர் அவர்கள் சேர்த்து வைத்
39

Page 22
திருந்த நூல்களிலிருந்து குவாலிர்க் கலம்பம்" என்ற சிறுநூலை இஸ்லாமிக்கா ஸெய்லானிக்காவில்" பிரசுரித்து ஏனையோருக்கு முன்மாதிரியாக நிற்கின்றர்.
ஆகவே எழுத்துருவில் இருக்கும் அரிய பல படைப்பு களுக்கு அச்சுருக்கொடுக்க வேண்டும் என்று அன்றிலிருந்தே இருக்கும் நூலாசிரியரின் இலட்சிய வேட்கையை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ந்து மலேஷிய வானெலியில் 1970 மே மாதம் நூலாசிரியரால் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு, இஸ்லாமிய இலக்கியங்கள் எனும் இரண்டு உரைகளும் நூலின் மூன்ரும் நான்காம் அத்தியாயங்களை அலங்கரிக்கின்றன. நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் *சிறந்த வளர்ச்சி" எனும் தலைப்பில் அண்மைக்கால இலக்கிய கர்த்தாக்கள் சிலர் பற்றிக் குறிப்பிடுகிருர்,
“ஈற்றில் எதிர்கால நலனுக்காக" எனும் தலைப்பில் **தற்கால இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி எதிர்கால நலனுக்காகவும், இன்றைய சமுதாயம் படித்தறிவதற் காகவும் விரிவான அடிப்படையில் நூல்கள் வெளிவருதல் மிக அவசியம்" என்றும். 8*1950 லிருந்து பத்தாண்டு, பத்தாண்டுகளுக்குத் தனித்தனி நூலாக எழுதப்படுதல் நல்லது. தென்னக இலங்கை இலக்கியங்களெனப் பிரித்துக் காட்டலாம். இஸ்லாமிய இலக்கியம்" என்ற பொது நோக்கில் வெவ்வேறு துறைகள் பற்றிய பிரிவுகளைக் கொண்ட இந்நூல்கள் அமைதல் சாலச் சிறந்ததாகும்." என்றும் இளம் இலக்கிய ஆய்வாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிருர். இஸ்லாமிய இலக்கியம் பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு, இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி ஒரு கை நூலாக அமைந்துள்ளது.
40

12. மகாகவி பாரதி (சிங்களம்)
தமிழ்மூலம் : சட்டத்தரணி எஸ். எம். ஹனிபா
மொழிபெயர்ப்பு : அமரர் கே. ஜீ. அமரதாஸ்
முதற்பதிப்பு : 1982-டிசம்பர்-11
அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000
அளவு : கிரவுண் எட்டு
தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் : 40
அட்டைப்படம் : சாமு
அச்சாளர் : ஷாமர அச்சகம் கொழும்பு-6
விலை : 5.00
திறனுய்வு செய்தவர்: - மொஹம்மட் வைஸ்
( B A cey)
இந்நூல் பற்றிய என் அபிப்பிராயத்தை எழுத வேண்டு மென்ற நோக்கில் நூலைக் கையில் எடுத்ததும், என்னில் ஒரு கவிதை அதிகாரம் காட்டத் தொடங்கியது.
'பிறநாட்டு கல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்." இந்த நினைப்புடன் நூலை அணுகினேன்.
ஏன், தமிழ்நூல்கள் மட்டுமென்ன பிறமொழிகளில் பெயர்க்கத் தரமில்லையா? என்ன குறை எம் தமிழுக்கு.
என உருகி,
*தமிழ் கல்லறிஞர் சாத்திரங்கள்
பிறமொழியில் பெயர்த்தல் வேண்டும்." எனத் துணிந்து இறங்கியிருக்கிறர், இதன் ஆசிரிய்ர்
அல்ஹாஜ் எஸ். எம். ஹனீபா அவர்கள். இந்த முயற்சியும், அதன் வெற்றியும், பாராட்டப்பட வேண்டியவைகள்தான்
நூலின் அட்டை,
41

Page 23
அழகானது, எளிமையானது. அன்று பாரதி விரும்பிய எளிமை இங்கு மிளிர்கிறது. பாரதியின் எண்ணம் இங்கு பிரதிபலிக்கிறது.
உள்ளே;
இலகு சிங்களமிங்கே செல்வாக்கு செலுத்துகின்றது. இதனல் சாதாரண மக்கள் மத்தியிலும் மகாகவி பாரதி உலவி வரச் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர்.
இந்த இடத்தில் தமிழுலகம் என்றுமே மறக்கக்கூடாத அமரர் கே. ஜி. அமரதாஸவை நான் மறந்தேனென்ருல் நன்றி கொன்ற மகனக ஆகிவிடுவேன். சிங்களப் பெருமகன் கே. ஜீ. அமரதாஸ் மொழி பெயர்ப்புத் துறையில் ஆற்றி யுள்ள சேவையை தமிழுலகம் மறக்காது. அவரது இலகு. நடை என்னை மிகமிகக் கவர்கிறது. அவர்தான் **மகாகவி பாரதி'யை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்த் துள்ளார். ܗܝ
தொடர்ந்து புரட்டுகிறேன்
முன்னுரையோடு, அறிமுக உரையும் தொடர பாரதியின் படம் தொடர்ந்து ஆரம்பம் தென்னிந்தியாவின் அன்றைய சூழ்நிலையானது இங்கு தெள்ளத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அதனை எழுதியுள்ள நடை எம்மை அக்காலத்திற்கு - ஆம் பாரதியார் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.
திறமை என்பது இயற்கையிலேயே வருவது. பாரதியோ பாடசாலை செல்வதில் அக்கறையின்றி, வீட்டிலே க்ற்று பதினெரு வயதிலே கவியெழுதத் தொடங்கிவிட்டார். இக்கவித்திறமை, பின் பாடசாலை செல்லும்போது அதிகரித்து அரசவைச் சேவையில் ஆஸ்தான கவிஞஞ்க அவரை இணைக்கிறது. அரசவைப் புகழைத்துறந்து பின் ஆசிரியர் சேவை பத்திரிகைத்துறை போன்றவற்றில் ஈடுபடுகிருர் பாரதி.
42

இந்நூலிலே நான் சுவைக்கும் இன்னேர் அம்சம் பாரதியின் தேசப்பற்றும் சமுதாயப்பற்றுமாகும். அரசவைப் புகழை உதறித் தள்ளி சமுதாய சேவையில் ஈடுபட்ட அவரது செயல் இன்று அனேகருக்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.
பொதுவாக பாரதியின் வரலாறு கூறும் நோக்கில் நூலாசிரியர் அனேக படிப்பினைகளை இந்நூலின் மூலம் எமக்குத் தந்துள்ளதை நன்குணர முடிகிறது.
நூலின் கடைசிப்பகுதி என்னை மிகமிகக் கவர்ந்து விட்டது. ஆம் . பாப்பா பாட்டு இதன் சிங்கள மொழி பெயர்ப்பு! இப்பாப்பாப்பாட்டினை தமிழில் வாசிக்கும் போது எவ்வளவு இன்புற்றேனே அதே இன்பத்தை நான் இந்த போப்பா கீத்தய" என்ற பகுதியில் பெற்றேன். இதனுல், நான் மீண்டும், மீண்டும் வாசித்தேன்.
இதுவரை நூலில் நான் சுவைத்தவைகளை எழுதினேன். என்ரூல் ஓர் ஆசை. ஆம் அது எனக்குக் குறையாகவும் Lull-gil.
என்ன..?
இன்னும் சில கவிதைகளை எமது சிங்கள வாசகர் களுக்குத் தந்து மகிழ்வித்திருக்கலாம். அவ்வாருயின் எம் மகிழ்ச்சி எல்லை கடந்திருக்கும்.
இறுதியாக
இந்நூலாசிரியரின் முயற்சி, மலையகத்தில் இருந்து தமிழொளி பரப்பும் தமிழ் மன்றத்தின் சேவை, உடனிrைந்த அமரர் அமரதாஸாவுடன் சேர்ந்து பிரசவித்த இக்குழந்தை தனது பணியினைச் சிறப்பாகச் செய்துவிட்டது என்றமுடிவோடு, மகிழ்ச்சிகள் தொடர வாழ்த்துகின்றேன்.
பாராட்டு விழாவில்.பிரதேச அபிவிருத்தி
அமைச்சர் செ. இராசதுரை
43

Page 24
மகாகவி பாரதியின் வரலாற்றை நூல்வடிவில் வெளி <யிட்ட எஸ்.எம். ஹனிபாவையும் மொழிபெயர்த்த திரு கே.ஜீ. அமரதாஸாவையும் கெளரவிக்கு முகமாக, பிரதேச அபிவிருத்தி அமைச்சில் விழாவொன்று நடத்தப் பட்டது. இவ்வுழாவில் உரையாற்றிய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் திரு செல்லையா இராசதுரை அவர்கள் கூறியதாவது:-
* பெளத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மதங் களில் மட்டுமன்றி இலக்கியங்கள் மதச் சம்பிர தாயங்கள் ஆகியவற்றிலும் இந்த ஒற்றுமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.தமிழ் கவிதைகளை சிறந்த முறையில் எழுதிய பாரதி உறங்கிக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பினர்.
“இத்தகைய தமிழ் கவிதைகளை சிங்களவர் ஒருவர் மொழிபெயர்த்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நூல்வடிவில் வெளியிடுவது பாராட்டத் தக்கதே. இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாத தால் ஏற்பட்டதாகும். இவ்வாருன மொழிபெயர் புக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிங் கள மக்களிடையே புரிந்துணர்வையும் நல்லெண்ணத் தையும் ஏற்படுத்த முடியும். *.தமிழ், சிங்கள மக்களிடையே இலக்கிய பாலம் அமைக்கும் விதத்தில், நல்லுறவு வளரக்கூடிய விதத்தில், மொழிபெயர்த்து சிங்கள மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்திய ஹனிபாவும், அமரதரஸாவும் தமிழுக்கு ஆற்றிய சேவை மகனத்தானதாகும். இத்தகைய சேவையில் இவர் களைப்போல பலர் ஈடுபட முன்வந்ததால் நாட்டில் சாந்த சமாதானம் நிலவுவதோடு, இரு இனங்களுக்கு இடையில் இருந்து வரும் தப்பபிப்பிராயமும் நீங்குவது உறுத்."
தினபதி 11-5-1984
44

13. Tus)
சிறுகதைத் தொகுதி நூலாசிரியர் : ஜே. எம். சாலி (தமிழ்நாடு, இந்தியா) முதற்பதிப்பு : மே-1983 அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000 அளவு கிரவுண் எட்டு தாள் : டிமை பிரிண்ட் பக்கங்கள் : 68 அச்சாளர் : டெவலோ பிரிண்ட் கொழும்பு.9 விலை : இலங்கையில் 10.00
இந்தியாவில் 5.00
தற்போது இலங்கையில் பிரபலமான தமிழ் எழுத் தாளர்கள், தம் இலக்கியப் படைப்புகளை நூலுருவில் கொணருவதற்காக வேண்டி தமிழ்நாட்டுக்குப் படையெடுப் பதை நாங்கள் காண்கிருேம். இந்த எழுத்தாளர்களை நேசக்கரம் நீட்டி, ஆதரவு வழங்க தமிழகத்தின் சில பிரசுர நிறுவனங்களும் முன்வந்து கொண்டிருக்கின்றன.
இது இப்படி இருக்கையில், இந்தியாவில் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகள் இலங்கையில் நூலுருப் பெறுவதென்றல், அது ஓர் அபூர்வமான திகழ்வு, என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்ருல், இந்தியாவில் காணப்படும் அச்சக வசதிகளை விட இங்குள்ள வசதிகள் குறைவு. மறுபுறமாக அச்சக செலவும் இந்தியாவுடன் ஒப்பிடுகையில், இங்கு அதிகம்.
இந்நிலையில் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒன்று இங்கு நூலுருப் பெறுமாயின், ஒன்றில் அது சமயம் சம்பந்தப்பட்ட பிரபலமான நூல்களில் மறு பிரசுரமாக அல்லது மொழிபெயர்ப்பாக இருக்கலாம். அன்றேல் அறிவியல் சார்ந்த நூல்களின் மொழிபெயர்ப்பாக அல்லது மறுபிரசுரமாக இருக்கலாம். மாருக இலக்கிய நயம் கொண்ட சிறுகதைகள், க்விதைகள் போன்றவற்றின்
45

Page 25
தொகுப்புக்களோ நாவல்களோ தமிழில் இங்கு நூலுருப் பெறுவதென்றல் அது நம்மை வெகுவாகச் சிந்திக்கத் தூண்டுகின்ற ஒரு நிகழ்வுதான்.
இஸ்லாமும், இன்பத்தமிழும் வளர்க்கும் இன்றைய தமிழக எழுத்தாளர்களில் சிறுகதைச் சிற்பி" என்னும் சிறப்பிற்குரியவரான ஜனப் ஜே. எம். சாலி, எம். ஏ அவர்களின் சிறுகதைத் தொகுதியொன்றை ஈழத்து மண்ணில் வெளியிட்டதன் மூலமாக அல்ஹாஜ். எஸ். எம். ஹனிபா மகத்தானதோர் சாதனையை நிகழ்த்தியிருக் கின்ருர்,
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வு எனும் போது, அது பொதுப்படையாக அமைய வேண்டும் என்றும் உலகளாவிய தமிழ்பேசும் இஸ்லாமிய எழுத்தாளர்களைப் பற்றிய திறனுய்வு ஒரே கூரையின் கீழ் இடம்பெற வேண்டும் என்றும் உயர்நோக்கினைக் கொண்டிருக்கும் எஸ். எம். அவர்கள், கடல்கடந்த இஸ்லாமியத் தமிழ் சிறுகதை இலக்கிய கர்த்தா ஒருவரின் திறமையினைச் "சாயல்" சிறு கதைத் தொகுதி மூலம் இலங்கை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தி இருப்பது இவரின் இலட்சிய வேட்கையில் ஓர் உயர்ந்தபடி என்று கூடக் கூறலாம்.
*சாயல்" சிறுகதைத் தொகுதியில் தீர்ப்பு, ஒட்டு? குர்பானி, நோன்பு கிளி, முள், கிணறு, சாயல் ஆகிய தலைப்புக்களில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகள் ஏற்கனவே தினமலர், குமுதம், இதயம் பேசுகிறது, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் பிரசுரமானவைகளாகும்.
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளின் கரு, அழுத்தமானவை. கற்பனைவளம், சிந்தனைத்தெளிவினையும் சீர்திருத்தப் போக்கினையும், கொண்டவை; நடை-சலன மற்ற நீரோடைக்கு ஒப்பானது.
46

சாயலை அரங்கேற்றிய அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களின் பதிப்புரையிலிருந்து சில வரிகள்:
*.சிறுகதை இயல் பெருமைப்படக்கூடிய விதத்தில் அழகழகாக சிறுகதைகளை அமைத்து தமிழகத்தில் வெளி வருகின்ற > பிரபல சஞ்சிகைகள் அனைத்தையும் தனது படைப்புக்களினல் அலங்கரிக்கச் செய்தவரான சிறுகதை மாமன்னர் ஜே.எம். சாலி, எம்.ஏ. அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதியொன்றை முதன் முதலில் இலங் கையில் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிருேம்.
*.களுக் கண்டேன் தோழி" எனும் நாவ்ல் எழுதி தமிழ் நாடு அரசாங்கத்தின் பரிசு பெற்றுள்ள பிரபல எழுத் தாளரான ஜனப் சாலி பல துறைகளிலும் தன் கைவரிசை யைக் காட்டியுள்ளார், இஸ்லாமிய இலக்கியம், தமிழக தர்காக்கள் பற்றியெல்லாம் நூல்கள் எழுதியுள்ள இவர், குத்துச்சண்டை வீரர் முஹமது அலி, கால் பந்து வீரர் பெலே, புரூஸ் லீ, இடிஅமீன் போன்ருேர் பற்றியும் எழுதி யிருக்கிருர்,
*.சிறுகதைச் சிற்பி என்றும் அழைக்கப்படுகின்ற ஜனப் சாலியின் முழுக்கை வண்ணம் காணப்படுபவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்புத்தான் சாயல்" பெருமானுர் முஹம்மது (ஸல்) அவர்களின் அமுத மொழிகளை அடிப்படையாக வைத்து, இக்கதைகள் புனையப் பட்டுள்ளதணுல் அவை மேலும் சிறப்புப் பெறுகின்றன கதைகளில் வரும் கருத்துக்கள் மனதில் ஆழப்பதியக்கூடிய ஆற்ருெழுங்கான நடையில், ஒவ்வொரு கதையும் எழுதப் பட்டிருப்பதனல் மீண்டும் ஒரு முறை படித்தாலென்ன எனும் எண்ணத்தை மனதில் எழுப்பி, பலமுறைகள் திருப்பிப் படிக்கும்படி தூண்டுகின்றன. சாயல்" நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் எமக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது."
47

Page 26
14. சிறுவர் பாட்டு
நூலாசிரியர் : சாரணு கையூம், முதற்பதிப்பு : மே-1983 அச்சிடப்பட்ட பிரதிகள்:-2000 அளவு : கிரவுண் எட்டு
தாள் : டிமை பிரிண்ட்
பக்கங்கள் : 48
அட்டைப்படம் : சாமி அச்சாளர் : டெவலோ பிரிண்ட் - கொழும்பு-9 விலை : 5,00
பதுளையில் பிறந்து, தொடர்ந்து அங்கேயே வாழும் கவிஞர் சாரணுகையூம் குழந்தை இலக்கியத்துறையில் அதிக ஈடுபாடுடையவர். ஏற்கனவே குழந்தைகளுக்காக எழுதப் பட்ட சில கவிதைத் தொகுதிகளை இவர் வெளியிட்டுள்ளார்.
குழந்தை இலக்கியம் படைப்பதும் குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றி வெளியிடுவதும் எல்லா இலக்கியவாதி களாலும் செய்ய முடியாததொன்ருகும். ஏனென்ருல் குழந்தைகளுக்கான இலக்கியங்களைப் படைக்கும்போது இலகுவான முறையில், பிஞ்சு உள்ளங்களில் பதியத் தக்க தாகவும், எழுத்து நடைமுறைக்கவர்ச்சியில் எடுத்துக் கொண்ட இலக்கியத்தின் மீது வளரும் குருத்துக்கள் மையல், கொள்ளத்தக்கதாகவும் அமைதல் மிக முக்கியமானதாகும்.
இதையுணர்ந்து மிகவும் எளிய மொழி நடையிலும், குழந்தைகள் விளங்கிக்கொள்ளத்தக்கதாகவும் தம்பிரதேசத் தில் நடைமுறையிலுள்ள பேச்சுவழக்கிலும்; கவர்ச்சி கரமாக-அதே நேரம் அழுத்தமான கருத்துகளின் வெளிப் பாடாக கவிதைகளை வடித்திருப்பது, இவரின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டுமாகும். எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான் பாடல்கள், இந்நூலில் அடங்கியுள்ளன.
48.

கவிஞர் சாரணு கையூமின் "சிறுவர்பாட்டு" கவிதைத் தொகுதியில் மொத்தம் 40 பாட்டுக் கள் இடம் பெற்றுள்ளன. இவை, அவ்வப்போது இலங்கை, இந்திய பொதுசனத் தொடர்பு சா த ன ங் களி ல் இடம் பெற்றவைகளே. இன்றையத் தேவை
குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்திவரும் எஸ். எம். ஹனிபா அவர்கள், இந்நூலை வெளியிட்டுத் தன் பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிடு கின்ருர்,
6. அதிகம் அதிகமான சிறுவர் நூல்கள் இன்று தேவைப்படுகின்றன. கால் நூற்ருண்டுக்காலமாக சிறுவர் இலக்கியம் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்ற கவிஞர் சாரணு கையூம் காலத்தின் தேவையை உணர்ந்து சிறுவர் பாடல் நூலை எழுதியுள்ளார்.
*.பாடசாலையில் படித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர், பிள்ளைகள் ஓய்வாய் இருக்கும் நேரத்தில் பெற்ருேரும் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கக்கூடிய விதத்தில், இப்பாடல்கள் அமைந்துள்ளன. குறிப்பாகத் தாய்மார்கள், தனியாக இருக்கும் சமயத்தில் பிள்ளைகளுக்கு இப்பாடல்களைப் படித்துக் காட்டலாம்: சேர்ந்து பிள்ளை களையும் படிக்கச் சொல்லலாம். தமது இளமைக் காலத்தில் இனிய நினைவுகள் திரும்புவதற்கு அதனல் வழியாகும். சிருரும் கல்வியில் ஊக்கம் கொள்வதற்கு வகை ஏற்படும்.""
49

Page 27
15. கனவுப் பூக்கள்
நூலாசிரியர் : அ.ஸ. அப்துஸ் ஸமத்
முதற்பதிப்பு : அக்டோபர் . 1983
பிரதிகள் : 2000
அளவு : கிரவுண் எட்டு
தாள் : டிமை/பிரிண்ட்
பக்கங்கள் : 202
அட்டைப்படம் : ஹஅணு
அச்சாளர்: டெவலோ பிரிண்ட், கொழும்பு.9
விலை 1500
கிழக்கிலங்கை தந்த மூத்த எழுத்தாளர்களுள் முத்திரை பதித்தவர் அ.ஸ். அப்துஸ் ஸ்மத் அவர்கள். கலைத்தாய்க்குத் தன் உணர்வுகளை அர்ப்பணித்த தன் மூலம் ஆராதனை செய்யப்பட்ட முதன்மைப் படைப்பாளி . தமிழ் மன்றத்தின் நாவல் வெளியீட்டு வரிசையில், கனவுப் பூக்கள் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒரு தலைசிறந்த மூத்த எழுத்தாளருக்குரிய மதிப்பைத் தமிழ் மன்றம் அளித்திருக்கின்றது.
பொதுவாக, சமூகத்தில் பரவலான வழக்கமாக இருந்து வருகின்ற முறைப் பெண், முறை மாப்பிள்ளை என்ற அடிப்படையில் சிறுவயதிலிருந்தே ஒரு ஆடவனும் பெண்ணும் மனதால் பிணைக்கப்படுகின்றனர். அவர் களிடையே காதல் மலர்ந்ததோ இல்லையோ இருவரும் கணவன் மனைவியாக இணைய வேண்டியவர்கள் என்பது தான் இருதரப்புப் பெற்றேர்களினதும் திட்டவட்டமான எதிர்பார்ப்பு. இந்நிலையில், ஆடவன் படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்காக உத்தியோகத்தைத் தேடியலைந்து அது கைகூடாத நிலையில், உடலுழைப்பே தஞ்சம் எனக் களத்தில் இறங்குகிருன். படித்தவர்கள் வியர்வை சிந்த உழைப்பது அந்தஸ்துக்கு இழுக்கு என்ற மலட்டு எண்ணங் கொண்ட பணக்கார மாமனரின் அடாவடித்தனமான செய்கைகளினல் மனம் நொந்த அவன் கூடுதலான
50

பணத்தைச் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டு ஊரை விட்டே விலகி விடுகிறன். வந்த இடத்தில் தன் உடலுழைப்பு, திறமை, நேர்மை இவற்றினல் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறிய அவனை நாடிவந்த கலை வாழ் வையும் அவன் நேசிக்கிறன். அந்தக் கலைவாழ்வு, அவனுக்கு ஒரு நடிகையின் நட்பைக் கொடுக்கிறது. வழக்கம் போல அந்த நட்பு காதலாகக் கனிந்தபோது கலையா? வாழ்வா என்ற பிரச்சினை எழுகின்றது. ஈற்றில் இடையில் வந்த காதலுக்காக கலையை உதறித்தள்ள, அந்த நடிகை மறுத்த போது - இல்லறம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தனக்காகவே காத்திருக்கும் மாமன்மகளைக் கரம்பிடிக்க அவன் ஊருக்குச் செல்கிருன். இது கனவுப் பூக்களின்
கதைச்சுருக்கம்.
1981ம் ஆண்டில் தினகரன் நாளிதழ் வெளியிட்ட **கண்ணிர்ப் புஷ்பங்கள்" தொடர் நாவலின் மகுடத்தை மாற்றி, 'கனவுப் பூக்கள்' எனப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சமூக நாவல். இந் நாவல் வெளியீடு குறித்து வெளியிட்டவரின் உளக் கருத்துக்களை இனி நோக்குவோம். *அ.ஸ். அப்துஸ் ஸ்மத் அவர்களின் எழுத்து வன்மை யைப் புற்றி, வாசகப் பெருமக்களுக்கு எவரும் எடுத்துக் கூறத் தேவையில்லை. சாகித்திய மண்டலப் பரிசுகள், பிராந்திய நாவல் பரிசு என்றெல்லாம் அவர் பெற்றுள்ள பரிசுகளும், பத்திரிகைகளில் வெளி வந்துள்ள பாராட்டுக் களும் அவரின் திறமையைப் பற்றிக் கூறுகின்ற நற்சாட்சிப் பத்திரங்கள். மாண்புள்ள மக்களால் மதிக்கப்படுகின்ற, நாடு போற்றும் எழுத்தாளரின் கனவுப் பூக்கள்” எமது முதலாவது நாவலாக வெளிவருவதைப் பற்றி நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிருேம். இதுவரை நாம் பிரிசுரித் துள்ள நூல்களின் பட்டியலிலிருந்து, வாசகப் பெருமக்கள் எமது பணியை மட்டிடலாம். இலாபம் சம்பாதிப்பது எமது நோக்கமல்ல. எனவே, மிகக்குறைந்த விலையில் மக்கள் மத்தியில் பிரபல்யம் வாய்ந்துள்ள சிறந்த அறிஞர். களின் நூல்களையே தொடர்ந்தும் பிரசுரித்து வருவோம்."
5.

Page 28
16. எங்கள் தாய்காடு
நூலாசிரியர் : கவிமணி எம். ஸி. எம். ஸுபைர் முதற் பதிப்பு : ஜனவரி, 1984 அச்சிடப்பட்ட பிரதிகள் : 2, 000 அளவு : வன் எய்ட்
தாள் : டிமை பிரிண்ட்
பக்கங்கள் : 80
அட்டைப்படம் ஹஜூன அச்சாளர் : டெவலோ பிரிண்ட் , கொழும்பு.9 698եծ : 10-00
88.எங்கள் வீடு இன்பம் நிரம்பியது; அம்மா, அப்பா சகோதரர் அனைவரும் அன்பிற் கலந்துறவாடி வாழ்கிருேம்.
*எங்கள் நாடும் இன்ப வீடுதான் ; இங்கும் பல இனமக்கள் வாழ்கிருேம். நாம் சகோரர்பெரும்பான்மையினர் மூத்தவர் ; சிறுபான்மையினர் இளையவர்.
இலங்கைத் தாயின் மக்களாகிய நாம் ஒருவரை ஒருவர் மதித்து, விட்டுக் கொடுத்துப் பிரச்சினைகளைத் தீர்த்து, ஒன்றுபட்டு உழைத்து வாழவேண்டும்,
அப்போதுதான், நம்மிடையே நிம்மதியான வாழ்வு மலரும்; வளம் பெரும்.
இதனை உங்களுக்கும் உணர்த்த விரும்பினேன். அதன் விளைவுதான் எங்கள் தாய்நாடு"-இனிக்கும் சுவை யோடு.""
இப்படிக் கலைநயத்துடன் கவிமணிஎம். ஸி. எம் சுபைர் அவர்கள் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட தன் இனிக்கும் சுவையேட்டினைப்பற்றி அறிமுகம் செய்து வைக்கின்றர்.
எங்கள் தாய்நாட்டில், காலத்தின் தேவையுணர்ந்து குழந்தைக்ளுடன் குழந்தையாகிவிட்ட ஓர் உள்ளத்தின்
52

உணர்வுகளைக் காண்கின்ருேம். அங்கே, தேசப்பற்று இருக்கின்றது; இன ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப் படுகிறது; மனிதாபிமான உணர்வுகளின் வெளிப்பாடு மிளிர்கின்றது.
தமிழ் மன்றத்தின் பதினருவது வெளியீடான எங்கள் தாய்நாட்டை, மொத்தம் நாற்பத்தியேழு கவிமுத்துக்கள் அலங்கரிக்கின்றன. அவைபற்றி இரு ஆய்வாளர்களின் உளக்கருத்துக்களை உங்களுக்குத் தருகின்றேன்;
மனிதாபிமான உணர்வுக்கு முக்கியத்துவம் வேண்டும் என வலியுறுத்துகின்ற இலங்கைத் தேசிய சர்வோதய சிரமதானச் சங்கத் தலைவர் கலாநிதி ஏ. ரி. ஆரியரத்ன கூறுவதாவது :
18.நிம்மதியாக வாழ விரும்பும் மக்கள் நிறைவு தரும் அவ்விலக்கை அடைய இன, மத மொழி வேதங்களைக் கடந்து, மனிதாபிமான உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்ய வேண்டும்.
பயன் மிகத்தரும் இந்த மனிதாபிமான உணர்வு பால்யப் பருவத்திலேயே சிறுவர்களிடம் வளர்க்கப்படல் வேண்டும்.
இந்த அடிப்படையில் கவிமணி எம். ஸி. எம். ஸ"பைர் ‘எங்கள் தாய்நாடு" என்ற நூல் இயற்றியிருப்பது, பாராட்டுக்குரியதாகும்."
மாத்தளை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு. S7. வி. கோமஸ், B. A. (cey) Dip in Edஅவர்களின் கருத்து.
சின்னஞ்சிறு குழந்தைகள் இறைவன் தந்த வண்ண மலர்கள் வண்ண மலர்கள்மேல் தங்கி மிளிரும் பணித் துளிகள்; அப்பணித்துளிகளில் பட்டுத தெறிக்கும் ஒளிக் கதிர்கள்; மாசு மறுவற்று விளங்கும் மாணிக்கங்கள்:
53

Page 29
அவர்கள் பிறக்கும்பொழுது தூய உள்ளத்தோடு பிறக்கின்றவர்கள். எதுவும் கிறுக்கப்படாத தூய வெள்ளைத் தாள்களைப் போன்ற மனத்தைக் கொண்டவர்கள்.
இவ்வாருன மனத்தாள்களில் எழுத்தாளன் எனும் சிற்பி தன் நல்ல கருத்துகளை ஓவியங்களாகத் தீட்டுகிருன்.
இவ்வாருண நல்லவைகள் சிறுவர்களுக்கு நலன் விளைத்து, சமூகத்துக்கு வளம் கூட்ட வேண்டும் என்ற காரணத்தால்தான், குழந்தைக் கவிஞர் எம். ஸி. எம். ஸுபைர் அவர்கள். மாணவமணிகள் பாடிப் பயன் பெறக் கூடியதாக எங்கள் தாய்நாடு என்ற் பெயரில் பாடல் நூல் ஒன்றை எழுதியிருக்கின்ருர்."
17. மாதுளம் முத்துக்கள்
நூலாசிரியர் : கவிச்சுடர் அன்பு முகையதின் முதற்பதிப்பு ; ஏப்ரல்-1984 அச்சிடப்பட்ட பிரதிகள் 1500 அளவு : கிரவுண் எட்டு
பக்கங்கள் 80 அட்டைப்படம் : ஹ9ஞ அச்சாளர் : டெவலோ பிரிண்ட், கொழும்பு.9 விலை 15.00 இலக்கியவானில் கவிதைப் புல்லாங்குழலால் இதய கீதம் இசைத்துக் கொண்டிருக்கும் கிழக்கிலங்கை ஈன்ற கவிஞர் திலகங்களுள் ஒருவரான அன்பு முகையதினின் கட்டுக்கோப்பான கனிரசம் பொருந்திய கவிதை முத்துக் களின் சரமே மோதுளம் முத்துக்கள்'"
மாதுளம் முத்துக்களில் கோர்க்கப்பட்டுள்ள முத்துக்கள் தினகரன், தினபதி, தினகரன் வாரமஞ்சரி, சிந்தாமணி, வீரகேசரி, மல்லிகை, பரணி, தேன்மணி ஆகிய இதழ்களை அலங்கரித்தவைகளே.
54

மனிதாபிமான உணர்வுகளின் கலைவெளிப்பாடாகச் செறிந்து நிற்கும் மாதுளம் முத்துக்கள், உறங்கிக் கிடக்கும் மானிட உணர்வுகளை வீறு கொண்டெழுப்ப உந்துதலளித் துக்பொண்டிருக்கின்றது.
இது மாதுளம் முத்துக்களைச் சரம் கோர்த்த அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபாவின் பதிப்புரையில் இருந்து.
''. . . . . . தமிழ் மன்றம் தனது வெளியீட்டுப் பணியை விரிவுபடுத்த விரும்பியது. முதலில் கிழக்கிலங்கையில் எமது பார்வை நிலைத்தது. கிழக்கிலங்கை, இலங்கையின் நெற் களஞ்சியமாக மட்டுமல்ல, நிறைந்த கலைஞர்களைக் கொண்ட கலைக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.
88.அங்குள்ள எழுத்தாளர்களுடைய படைப்புக்களை வெளியிட வேண்டுமென்று நாம் விரும்பியபோது அ. ஸ் அப்துஸ்ஸமத் அவர்களே எம் கண்முன் காட்சி அளித் தார்கள். கடந்த கால் நூற்ருண்டுக்கு மேலாக அ. ஸ். செய்து வரும் இலக்கியப் பணியை கெளரவிக்கும் வகையில் அவரது கனவுப் பூக்கள்" என்ற நாவலை வெளியிட்டு வைத் தோம். கனவுப் பூக்கள்" எமக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது.
*. அடுத்து கவிஞர் ஒருவரின் கவிதை நூல் ஒன்றையும் வெளியிட ஆசைப்பட்டோம். கவிஞர் அன்பு முகையதின் அவர்களை எம்மால் மறந்திருக்க முடியவில்லை. கிழக் கிலங்கை கவிஞர்களுக்குள் அவர் தனித்து நிற்கிருர், அவருடைய கவிதைகளில் காணப்படும் சொல்லழகு, பொருளழகு, எளிமை, கவி சொல்லும் பாங்கு என்பன எம்மை ஈர்த்தன. அவர் எழுதிய கவிதைகளுள் இருபத்தேழு கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து மாதுளம் முத்துக் களாக உங்களுக்கு சுவைக்கத் தருகிருேம்.
55

Page 30
18. Rausi f (fiasrib)
மூலம் : அவ்ஹாஜ். எஸ்.எம். ஹனிபா மொழி பெயர்ப்பு : கே.ஜி. அமரதாஸ் முதற்பதிப்பு : ஏப்ரல் 1984 அச்சிடபட்ட பிரதிகள் : 1000 அளவு : கிரவுண் எட்டு தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் : 84 அச்சாளர் : ஷாமர பிரிண்டர்ஸ், கொழும்பு-6 விலை : 20.00
மகாகவி பாரதியை சிங்கள மொழியில் அரங்கேற்றிய எஸ்.எம். ஹனிபாஅமரதாஸ் இருவரினதும் மற்றுமோர் கூட்டு வெளிப்பாடுதான் உவைஸ் சிரித" எனும் சிங்கள மொழி பெயர்ப்பு நூலாகும்.
**சரிதை"த் துறையில் இன்னும் குழந்தைப் பருவத் திலேயே இருக்கும் சிங்கள இலக்கியத்தில் உவைஸ் சிரித” எனும் இவ்வரிய படைப்பினைச் சேர்ப்பதன் மூலம் எஸ்.எம். ஹனிபா அவர்கள், சிங்கள வாசகர்களின் கீர்த்திக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை." என அணிந்துரை வழங்கிய பேராசிரியர் விமல் பி. பலகல்ல இந்நூல் பற்றிக் கூறியுள் HffrII",
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் புது வாழ்வு கொடுத்த கலாநிதி உவைஸ் அவர்களின் சரிதையை 1981ம் ஆண்டில் எஸ்.எம். ஹனிபா அவர்கள் நூலுருப்படுத்தி உத்தமர் உவைஸ்" எனும் பெயரில் வெளியிட்டார். அதே நூல் 1984-ம் ஆண்டில் உவைஸ் சிரித" எனும் பெயரில் அமரர் கே.ஜி. அமரதாஸ் அவர் களினல் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் மன்ற வெளியீடாக வெளியிடப்பட்டது.
மூலநூலை விட, மொழி பெயர்ப்பு நூல் சில சுருக்கங் களைக் கண்டுள்ளது. இருப்பினும் தேவையான விடயங்
56

களனைத்தும் மொழிபெயர்ப்பில் அடங்கியிருப்பதிஞல், மூலநூலின் கனதியையே மொழி பெயர்ப்பு நூலும் தருகின்றது.
*உவைஸ் சிரித நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப் பவர் நுகேகொடை பூரீ ஜயவர்தணப்புர பல்கலைக்கழக கலை பீடத்தலைவர் பேராசிரியர் விமல் பி. பலகல்ல அவர்
களாவர். இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் பேராசிரியர் அவர்கள், தனக்கும் சரிதை நாயகன் கலாநிதி
உவைஸ்"க்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர் பினையும் கலாநிதியின் இஸ்லாமிய இலக்கிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள் பற்றியும், அழகாகக் கோடிட்டுக் காட்டி யுள்ளார். நூலை நுகருமுன் அணிந்துரை சிறப்பு முத்திரை யாகப் பரிணமிக்கின்றது.
அமரர் அமரதாஸ் அவர்கள் சிங்கள தமிழ் இலக்கிய இணைப்புப்பாலமாக நின்று செயலாற்றி வந்தவர். இது இலக்கிய உலகம் நன்குணர்ந்தோர் உண்மை. உவைஸ் சிரித நூலை இலகு சிங்களத்தில் அழகுற மொழிபெயர்த் திருப்பது இப்பிணைப்பின் மற்றுமோர் பொற்கல்லாக அமைந்துள்ளது.
பாராட்டுக்குரியவர்கள் - பாராட்டப்படவேண்டியவர் களே. ஹனிபா - அமரதாஸ் இருவரினதும் கைவண்ணத்தில் மிளிர்ந்துள்ள உவைஸ் சிரித"வை சிங்கள இலக்கிய வானில் உலாவிட்டிருப்பதிலிருந்து இருவரும் பாராட்டுக் குரியவர்களே என்பது வெள்ளிடை மலை.
19. துணைவேந்தர் வித்தி" நூலாசிரியர் : பேராசிரியர், கலாநிதி அ. சண்முகதாஸ் முதற்பதிப்பு : 1984 மே, 8. அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000
57

Page 31
அளவு : கிரவுண் எட்டு தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் ; 134 அச்சாளர் : ஷாமர பிரிண்டர்ஸ்-கொழும்பு-6 விலை : 25.00
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியைச் சிறப்பு பாடமாகப் பயின்று முதல் தரத்தில் சித்தியெய்தி யதை தொடர்ந்து, தமிழ்மொழி முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுப் பின், லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆராய்ச்சியை மேற்கொண்டதினல் கலாநிதிப் பட்டம் பெற்ற நாடறிந்த தமிழறிஞரும், ஆராய்ச்சியாளரும், தலைசிறந்த கலையார்வலருமான யாழ், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி க. வித்தியானந்தன் அவர்களின் சரிதையைக் கூறும் நூலே துணைவேந்தர் வித்தி" ஆகும்.
ஆழ்ந்த பாசமும், மரியாதையும், கெளரவமும், நன்றி யுணர்வும் கலந்த உயரிய குருபக்தி வைத்திருக்கும் ஆயிரக் கணக்கான மாணுக்கர்களுள் இரு மாணவரின் கூட்டு வெளிப்பாடே துணைவேந்தர் வித்தி" எனும் நூல்.கலாநிதி சு. வித்தியானந்தனின் அறுபதாவது பிறந்த தினத்தன்று வெளிவந்தது. இதை எழுதிய பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் கலாநிதி வித்தியின் ஒரு மாணவர். அதே போல இதைவெளியிட்டவர் சட்டத்தரணி எஸ்.எம். ஹனிபாவும் கலாநிதி வித்தியின் ஒரு மாணவரே
இந்த இரு மாணுக்கர்களினதும் இணைப்பில், இலக்கியத் தடாகத்தில் பூத்த துணைவேந்தர்" வித்தி ஒரு வைரம். விலைமதிக்க முடியாத அந்த வைரத்தை எடை போட நான் வரவில்லை. பாராட்டுரை, புகழுரை, முன்னுரை போன்ற வற்றில் இருந்து முக்கியமானவற்றை அப்படியே உங்களுக் குத் தருகின்றேன். அவை சிறிது விரிவாக இருந்தாலும், இந்நூல் வெளிவந்ததன் நோக்கத்தை உங்களுக்குத் தெளி
58

வாகப் புரிந்துகொள்ள ஏதுவாக அமையுமென நான் எதிர்பார்க்கிறேன். *தினகரன்' பீரதம ஆசிரியர், சட்டத்தரணி திரு ஆர். சிவகுருநாதனின்
பாராட்டுரையிலிருந்து :
18. கல்ஹின்னை தமிழ் மன்றத்தினர் வெளியிட்ட முதற் தமிழ் நூல் இலக்கியத் தென்றல்" பேராசிரியர் எழுதிய முதல் நூலும் இதுவே. பேராசிரியரின் அறுபது வயது நிறைவைக் குறிக்கும் மணிவிழாவின் போதும் இதே கல்ஹின்னை தமிழ் மன்றம், இந்நூல் வெளியிடுவதனுலே இம்முயற்சி சிறப்பு அடைகிறது. பேராசிரியரின் அபிமான மாணவரான எஸ். எம். ஹனிபா அவர்களின்குருபக்தியை, நாம் பாராட்டாதிருக்க முடியாது. பேராசிரியரிடம் பயின்று, இவரின் கீழேயே விரிவுரையாளராகவிருந்து பேராசிரியராகிவிட்ட கலாநிதி அ. சண்முகதாஸ், பேராசான் வித்தியரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் இன்ப துன்ப நினைவுகளையும் நன்கு அறிந்தவர். இவரது உணர்வு அலைகளில், மிதந்து சென்றவர். அன்றும் இன்றும் பக்தி யுடன் அருகே உறுதுணையாக நிற்பவர். இவர்மீது அன்பும் பாசமுமிக்கவர் பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்பைத் திறம்பட எழுதவல்லவர். கலாநிதி சண்முகதாஸே என்று ஹனிபா நூாஜியார் செய்த முடிவு, மெச்சத்தக்கதாகும். இம்முடிவு நல்ல முடிவே என நிரூபிக்கின்றது, இந்நூலின் பொருளடக்கம். கலாநிதி சண்முகதாஸனுக்கு எங்கள் பாராட்டுக்கள் உரித்து."
பேராசிரியர், கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையிலிருந்து :
**.எமது சமூகத்துக்கும் மொழிக்கும் சேவை புரியும்
பெரியார்களை அவர்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களுடைய சேவை நலனுக்குரிய நன்றியினை
59

Page 32
நாம் செலுத்திவிட வேண்டும். இத்தகைய கோட் பாட்டுடன் பல காலமாக இயங்கி வருகின்றது.கல்ஹின்னை தமிழ் மன்றம். இம் மன்றத்தின் சார்பாகப் பேராசிரியர் அல்ஹாஜ் எம். எம். உவைஸ் அவர்களின் சேவை நலன் களைக் குறித்து சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா எழுதிய 'உத்தமர் உவைஸ்" வெளிவந்தது.
இத் தமிழ் மன்றமே பேராசிரியர் சு. வித்தியானந்த னுடைய முதல் நூலாகிய இலக்கியத் தென்றல் என்பதை யும், அடுத்து அவரின் தமிழர் சால்பு" எனும் ஆய்வு நூலை யும் பிரசுரித்தது. தமிழ் மன்றத்தின் சார்பாக, நம்மிடையே சேவையாற்றி வரும் கலைஞரும் அறிஞருமாகிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் பற்றிய இந்நூல் வெளிவருகின்றது.
*.பேராசிரியரின் அன்புக்குரிய பழைய மாணவராகிய் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்கள் 10.12.83ல் என்னுடைய முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். யான் *யப்பான் நாட்டில் அவ்வேளை இருப்பதை அவர் அறிய வில்லை. எனினும், திருவருள் கைகூட அடியேன் 17-12-83ல் திடீரென யப்பானிலிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்ந் தேன். நண்பர் ஹனிபா அவர்களுடைய கடிதம் எனக்காகக் காத்திருந்தது. அவர் தன்னுடைய கடிதத்தில், am a firm believer in honouring those to whom honour is due, during thir life time, if it is possible. As much, wrote 'Uththamar Uvise 'which was very much we comed by the Tamil literary world. Now, may have the pleasure of inviting you to write the biography of our beloved Vitti' for publication. 6T6irgi (5 fill 9 lig-coigntti. எனக்குத் தமிழ் பயிற்றி என்னை ஆளாக்கிய என் மதிப்புக்குரிய பேராசானுக்கு என்னுலான குருதட்சணை யைச் செலுத்தும் ஒரு வாய்ப்பினை அன்பர் ஹனிபா அவர்கள் எனக்கு வழங்கியுள்ளமை பேருவகை ஊட்டியது. இந் நல்ல பணியினைச் செய்கிறேன் என அவருக்கு மறு மொழி எழுதினேன்; அத்துடன், இவ்வாண்டு (1984) மே
60

மாதம் எட்டாம் திகதி பேராசிரியர் வித்தியானந்தனுக்கு, அறுபதாண்டு பூர்த்தியாகின்றது. அவ்வேளையில் இந்நூலை வெளியிடுதல் பொருத்தமாயிருக்குமெனவும் அவருக்கு எழுதினேன். என்னுடைய வேண்டுகோள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
**.பேராசிரியரைப்பற்றிய முழு விபரங்களையும் இங்கு நான் தந்துள்ளேன் என்று கூறுதற்கில்லை. எனக்குத் தெரிந்தவற்றையும் நண்பர்கள், ஏனையோர் மூலமாக அறிந்தவற்றையும் நூல்களிலும், சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் காணப்படும் தகவல்களால் அறிந்த வற்றையுமே இந்நூல் மூலமாக என் குருதட்சணையைச் செலுத்த எனக்கு ஓர் அரிய வாய்ப்பளித்த அன்பர் எஸ். எம். ஹனிபா அவர்களுக்கு என்னுடைய உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக. '
சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபாவின் புகழுரையிலிருந்து:
அரை நூற்ருண்டின் பின்னர் ஈழத் தமிழின் வளர்ச்சி பற்றி வரலாறு எழுதும் ஒருவர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின் அரும்பெரும் தொண்டு பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பொழுது போதுமான தகவல்களைப் பெற. முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். ஏனெனில், அவரின் அளப்பரிய பணிகள் பற்றி இதுவரை விரிவாகக் கூறுகின்ற கட்டுரைகளே வெளிவந்ததில்லை. ஆதலால், கலாநிதி வித்தியானந்தனைப் பற்றி ஒரளவேனும் பூரணமான நூலொன்று வெளியிடவேண்டுமென நாம் சில காலமாக, முயற்சி செய்தோம். கலாநிதி அ. சண்முகதாஸ் அவர் களிடம் விரும்பிக் கேட்டுக்கொண்டதன் பயணுக இப்பொழுது இந்நூல் உருவாகியுள்ளது கலாநிதி சண்முகதாஸ் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு குறுகிய கால எல்லைக்குள் இதனை எழுதியதுடன் நாம் வெளியிடும். வாய்ப்பையும் தந்ததற்காக அவருக்கு மனதின் அடிதளத்தி
61

Page 33
லிருந்து ஆழிய நன்றியை முதன் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
1 . 1951ம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இலங் கைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவனுகச் சேர்ந்த பொழுதுதான் முதலில் கலாநிதி வித்தியானந்தன் அவர்கrை ஒரு விரிவுரையாளர் என்ற ரீதியில் சந்தித்தேன். முதல் ஆண்டிலேயே தமிழ்ச்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலும் அந்த ஆண்டில் மேடையேறிய சங்கிலி நாடகத்தில் ஒரு பாத்திரமாக நானும் நடித்ததால் நாடகத்தை நெறிப்படுத்திய வித்தி" அவர்களுடன் ஒரளவு நெருக்கம் ஏற்பட்டது. பின்பு, தமிழ்ச்சங்க சஞ்சிகையான இளங்கதிர்” ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் கிட்டியதால், மேலும் எமக்குள் தொடர்புகள் நெருக்கமாயின. 1952ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், நாமெல்லாம் பேராதனைக்கு மாறிய பொழுது நான் வதிந்த ஜயதிலக்க மண்டபத்தின் பிரதி அதிகாரியாக *வித்தி வந்ததால் நாளாந்தம் நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயற்பட நேரிட்டது.
அவரின் பரந்த மனப்பான்மையும் எல்லோரும் நல்லவரே என்ற உயரிய நோக்கும் என்னைப் பெரிதும் கவர்ந்த இரு தன்மைகள். இந்த இரண்டும் நான் அவருடன் நெருங்கிப் பழகியதால் எ ன க் கும் தாவியுள்ளதை இப்பொழுது என்னல் அவதானிக்கக்கூடியதாயிருந்தது, எல்லோரும் ஓரினம். எல்லோரும் ஒரே குலம், நாமெல் லாம் ஒரு தாய் மக்கள் என்னும் உயிரிய இலட்சியம், அவரிடம் அச்சாணியாகப் பதிந்துள்ளது. இந்தப் பண்பு பெரும்பாலான மக்களிடம் அமைந்து விடுமானல், எந்த ஒரு நாட்டிலும் பூசல்கள் தலைதூக்க முடியாது. குழப்பங்கள் தொல்லைகள் எழுவதற்கு நியாயமில்லை.
62

1.இந்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் அவருக்கு நன்றி செலுத்துகின்ற உள்ளங்கள் ஆயிரமாயிரம் உண்டு. அரிய பணி புரிந்துள்ள அருமையான மனிதர் ஒருவரின் நலன்களை எடுத்துக்கூறுகின்ற இந்த நூலை வெளி யிடுவதில் நாம் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிருேம். முப்பத்திமூன்ருண்டு காலமாக கலாநிதி வித்தியானந்தன் அவர்களின் உயர்ச்சியை அவர் புகழ் ஏணியில் படிப்படி யாக ஏறுவதைக் கண்டு மனதால் மேலுமுயரப் பாராட்டிய என்னுள்ளம், இந்த நூல் வெளிவருவதற்கு வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி, பேருவகை கொள் கிறது. அவருடைய பணி மேலும் வளர வேண்டும். அவரின் தகுதி மேன்மேலும் உயரவேண்டும் என மனப்பூர்வ மாக வாழ்த்துகிறேன்"
இலங்கை உயர்நீதி மன்றத்தின் முன்னுள் நீதியரசர் கலாநிதி எச். டப்ளியு. தம்பையா, பிஎச்.டி. எல். எல். டி., (லண்டன்) அணிந்துரை வழங்கியுள்ள இந்நூலுக்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியர் கலாநிதி அல்ஹாஜ் ம. மு. உவைஸ், கவிதையில் வாழ்த்து வழங்கியுள்ளார்.
20. முத்தாரம்
தூலாசிரியர் : மெளலவி எம். எச். எம். புஹாரி முதற்பதிப்பு : மே, 1984 அச்சிடப்பட்ட பிரதிகள் : 1000 அளவு : கிரவுண் எட்டு பக்கங்கள் : 63 அச்சாளர் : அல்ரா எண்டர்பிரைஸஸ்-கொழும்பு 2 விலை : ரூபா 10.00 சமூகத்தில் புரையேறிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன் உறங்கிக் கிடக்கும் சமூக உணர்வுகளைத் தட்டியெழுப்பி நெஞ்சில்
63

Page 34
உரமூட்ட முனையும் ஒரு சமூகக் கவிஞனின் எழுச்சி கீதங்கள் அடங்கிய தொகுப்பே 'முத்தாரம்" ஏறத்தாழ இத் தொகுதியில் உள்ள எல்லாக் கவிதைகளும் இஸ்லாமிய சமயச் சார்புடையனவாகக் காணப்பட்டாலும், அவை தமிழிலக்கிய மரபுகளை மீறவில்லை. நிகழ்வுகளைத் தரிசனம் செய்யும் செயல்களின் மட்டு மல்லாமல் கற்பனை கலந்த அழகிய வர்ணனை, உவமை களுடன் இலக்கிய நயம் பொருந்த உள்ளத்து உணர்வுகளை உலுப்பும் பாங்கு கவிஞரின் எழுத்தாளுமைக்கு, நல்ல தொரு எடுத்துக்காட்டு.
கவியரங்குகளிலும், பாராட்டுவிழாக்களிலும் இசைக்கப் பட்ட இதயகீதங்களுடன்; 1982ல் முஸ்லீம் சமய கலாசார விவகாரத் திணைக்களம் அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதையையும் சேர்த்து, இலங்கை வானெலி, தினகரன், தினபதி, அல்ஹசனத் முதலிய இதழ்களில் இடம்பெற்ற முப்பத்து மூன்று கவி முத்துக்களின் தொகுப்பாகவே ‘முத்தாரம்" பரிணமிக்கின்றது.
மெளலவி எம். எச். எம். புஹாரி (பலாஹி) அவர் களின் முத்தாரத்தில் இடம்பெற்றுள்ள வைரமுத்துக்களைச் சரம் தொடுத்த சட்டத்தரணி எஸ். எம். ஹனிபா அவர்களின் பதிப்புரையிலிருந்து சில நிஜங்களைச் சந்திப்போம் :
*அரபு மொழியைப் பல வருடங்களாகப் பயின்று, மார்க்க அறிவு நிரம்பியவர்களாகத் திகழ்பவர்களில் பெரும் பாலானேர் நல்ல பேச்சாளர்களாயிருக்கின்றனர். ஒருசிலர் எழுத்துத் துறையில் பிரபல்யமடைந்து விளங்குகின்றனர். ஆனல் கவிதை புனைவதில் திறமையுடையவர்களின் தொகை விரல்விட்டு எண்ணிவிடக் கூடியதுதான் என்பதை எவரா லும் மறுக்க முடியாது. இப்படியான் அரிய திறமை வாய்க் கப்பெற்ற ஒருவரை ஊக்கப்படுத்துதல் அவசியம் என்பதை உணர்ந்ததனுல்தான், மெளலவி எம். எச். எம். புஹாரி
64

அவர்களின் முத்தாரம்" வெளிவருதல் வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டேன். சுமார் இரண்டரை வருட்மாக அவருக்குக் கொடுத்த அன்புத் தொல்லையின் பின்னர் தான் அச்சிடுவதற்கான பிரதி கிடைத்தது.
8.மௌலவி புஹாரியின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒருமுறை படித்தபின் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன. படித்துப் பல மணி நேரத்தின் பின்னரும் கூட கவிதைகளின் சந்தம், சொற்கள், கருத் துக்கள் படித்தவரின் மனதில் நிழலாடிக் கொண்டிருப் பதைக் கவனிக்கலாம். இப்படியான கவிதைகளை எழுது வதும் எளிதான காரியமல்ல. பலமணி நேரமாகச் சிந்தித்து, இருந்த இருப்பிலேயே எழுதிவிட்ட பின்னரும், கவிதையைச் செப்பனிடுவதில் மேலும் நேரம் செலவிடுதல் அவசியமாகின்றது. இப்படியெல்லாம் பிரயாசை எடுத்து படிப்பவர் பயனடைய்த் தக்க விதத்தில் இக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளதைப் பார்த்தால், கவிஞரின் முயற்சி பெரிதும் பாராட்டபட வேண் டி யது என்பதை உணரலாம்."
21. காலத்தின் கோலங்கள்
நூலாசிரியர் : கவியரசு எம்.எச்.எம். ஹலீம்தீன்
முதற்பதிப்பு : டிசம்பர், 1984
அளவு : வன் ஸிக்ஸ்
தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் : 139
அட்டைப்படம் : ஹஜூன
அச்சாளர் : வட் பிரிண்ட், கொழும்பு-2
62) : . 20.00
காலத்தின் கோலங்களை இலக்கிய நெஞ்சங்களில் கோல மிட்டு நிதர்சனங்களைத் தரிசிக்க வைக்கும் கல்ஹின்னை தந்த மூத்த கவிஞர் ஒருவரான கவியரசு எம்.எச்.எம். ஹலீம்தீன்
65

Page 35
களமாக்கிக் கொண்டிருப்பது எண்ணச் சிதறல்களை மட்டு
மல்ல. விழிப்பு உணர்ச்சியையுந்தான்.
பொதுசனத் தொடர்புச் சாதனங்களில் அவ்வப்போது இடம்பெற்ற கவிதைகளும்; பிரத்தியேகமாக எழுதப்பட்ட கவிதைகளுமாக, மொத்தம் 103 கவிதைகள் காலத்தின் கோலங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இங்கு மூடநம்பிக்கையால் உழலும் சமூகத்துக்கு கோபக் கனல்களையும், போலிப் பகட்டுக்களில் போர்வை போட்டுக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஆழ்ந்த நிதர்சனங் களையும், அவ்வப்போது அருமையான கருத்தாழத்தையும், து டி. க் கி ன் ற சொற்ருெடர்களையும் அள்ளித்தரும் கவிதைகளை அழகுறத் தரும் முயற்சி, கவிஞரின் எழுத்துத் திறமையின் வெளிக்காட்டல்களே.
காலத்தின் கோலங்கள் பற்றி சில ஆய்வாளர்களின் உளக்கிளர்வுகளைப் பார்ப்போம்.
கல்வி அதிகாரி, நாடறிந்த கல்விமான் அல்ஹாஜ் எஸ்.எம்.எ. ஹஸன் அவர்களின் கருத்துப்படி **காலத்தைக் கண்ணுடியாக மக்கள் முன் வைக்கும் பண்பான கவிதைகள், அவரது இதயக் குமுறல்களாக வெளிவருகின்றன. பாரம் பரியத்தையும் பகட்டான வாழ்வின் ஜாலங்களையும் பண்பான வாழ்க்கை முறைகளையும் கூறத் தவறவில்லை. சமூகத்தின் துயரங்களை.துன்பங்களைச் சீர்கேடுகளைக் காணத் தவறவில்லை. மனிதாபிமானத்தையும் அ னை வ ரு ம் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அடிநாதமான அன்பின் மகத்து வத்தையும் அவர் மறக்கவுமில்லை. அண்மையில் வெளியான அவரின் காலத்தின் கோலங்கள்," "Blossoms ஆகிய தமிழ், ஆங்கில நூல்கள் இவற்றுக்குத் தக்கதோர் சான்றுகும். எனவேதான், இன்று இவர் ஒரு கவியரசாகவும், கலைமணி யாகவும் தலைநிமிர்ந்து நிற்கின்றர்.
பிரபல எழுத்தாளர் மோனு' மக்கீனின் கூற்று வருமாறு: *.கதையும் கட்டுரையும் கூட இவருக்கு கைவந்த கலை.
66

வானெலி பேச்சிலும் கவியரங்கிலும் நிறைய ஈடுபாடு; மேடைப் பேச்சிலும் வல்லவர். அருந்த்மிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் கவிதைகளைப் படைத்திட்ட முஸ்லீம் இலக்கியவாதிகளில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களுள் கவிஞர் எம். எச்.எம், ஹலீம்தீனும் ஒருவர்."
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் அப்துஸ் ஸ்மத் கூறும் கருத்து;
6.சமுதாய முன்னேற்றத்தையும் தனிமனிதன் சீர்திருத்தத்தையும் தத்துவச் சிந்தனைகளையும் தாங்கி, மலரும் கவிஞர் கல்ஹின்னை எம்.எச்.எம். ஹலீம்தீனின் காலத்தின் கோலங்கள்" என்ற கவிதைத் தொகுதி நிதர்சனங்களையும் நியாயங்களேயும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தில் நிச்சயம் ஒரு தனி இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை."
22. கனிந்த காதல்
நூலாசிரியர் : புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தின்
முதற்பதிப்பு : மார்ச் 1985
அச்சிடப்பட்ட பிரதிகள் : 1000
அளவு : கிரவுண் எட்டு
தாள் : டிமை பிரிண்ட்
பக்கங்கள் : 72
அட்டைப்படம் : பெஸில்
அச்சாளர் : ஷாமர பிரிண்டர்ஸ், கொழும்பு-6
af2 : 10.00
தேன் பாயும் மட்டக்களப்பு எனப் பண்டு தொட்டுச் சான்றேரால் அழைக்கப்பட்டு வருகின்ற இப் பிரதேசத்திலேயே.முஸ்லீம்கள் பெருந்தொகையினராக வசிக்கின்றனர். தேன்பாயும் மட்டக்களப்பு மட்டுமல்ல; இது மீன்பாடும் மட்டக்களப்புங்கூட.
67

Page 36
.மீன்கள் மட்டுமென்ன. இங்குள்ள மைந்தரும் மகளிரும் இயல்பாகவே பாடும் திறன் படைத்தவர்கள்." அவர்கள் நம் உள்ளங்கிளர்ந்தெழும் கருத்துக்களைக் கவிதை, மூலம் வெளிப்படுத்துவர். அவர்கள் கூறும் கவிதைகள் *கிராமியப் பாடல்கள்" என்ற பெயரால் அழைக்கப்படு. கின்றன. எழுத்து வாசனையறியாத அவர்களின் கவிதைகள் பெரும்பாலும் பேச்சு மொழியிலேயே அமைந்துள்ளன. அவற்றிற்கு ஒரு தனியோசையுண்டு. அவ்வோசையோடு பாடினுற்ருன் அவை சுவைக்கும். அவற்றில் இலக்கண வழிகாண முயலக்கூடாது. இன்னிசை கெட்டுவிடும். கேட் பவர்களுக்கும் பொருள் புலனுவதால், அவற்ற்ை. வழுவமைதியாகக் கொள்ளல் வேண்டும். அவை பெரும் பாலும் அகப்பொருட் துறைகளிலேயே அமைந்துள்ளன. கர்ண பரம்பரையாகப் பாடப்பட்டு வரும் அவை, ஏடறியா இலக்கியங்களாகும். யார் பாடினர்,எப்போது பாடினர் என்று தெரியாது. எச் சந்தர்ப்பத்திற் பாடினர் என்று மட்டும் கூற முடிகிறது."
இவ்வாருக, *கனிந்த காதல்" முன்னுரையில் மட்டக் களப்புக் கிராமியக் கவிதைகள் பற்றி அறிமுகம் செய்து வைக்கின்றர் நூலாசிரியர் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன், அவர்கள்.
பொதுவாக கிராமியக் கவிதைகளில் காதல் சுவை ததும்பும் பாடல்களே அதிகமாக இடம் பெற்றுள்ளன. குணதாபங்களின் வெளியீடாகவும் தூதுவிடு கானங் களாகவும் எதிர்ப்பாட்டுக்களாகவும் அமைந்து தனிப் பொழிவு பெற்றுள்ளவை. இப்படியான சுவைமிக்க பாடல் களைத் தொகுத்து நூலாசிரியர் தன் கனிந்த காதல்" மூலமாக கதவுதிற கண்மணியே, கதைத்திருக்க வாங்க மச்சான் என்று இரண்டு இனிய கதைகளாக இலக்கிய வானிலே உலாவிட்டிருக்கின்றர். நூலைப் பிரசுரித்த எஸ்.எம். ஹனிபா அவர்களின் உளக்கருத்துக்களைச் சற்று நோக்குவோம்:
68

இனிமை மூட்டும் முதுசொம் : "அனைவரும் விரும்பு கின்ற கிழக்கிலங்கையின் முதுசொம்களில் ஒன்றன கிராமியக் கவிதை என்றுமே இளமையுடன் மிளிரும் இலக்கியமாகும். கிராமியக் கவிதைகளைப் பின்னணியாக வைத்துப் பின்னப்பட்ட கதைகள் சுவை நிரம்பியவை. இவற்றை வாசிக்கும்பொழுது, மனதில் இனிமை உணர்வு தான் ஏற்படுகின்றது. இத்தகைய சிறந்த இலக்கியப் பொருளை அடிப்படையாக வைத்துப் பல ர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவிதைகள்,கட்டுரைகள் எழுதியுள்ளனர் சிலநூல்களும் வெளிவந்துள்ளன.
*எனினும், கிழக்கிலங்கையின் மற்றுமொரு முதுசொம் எனக் கருதக்கூடிய புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் எழுதியுள்ள **கனிந்த காதல்", அவர்களின் பல்லாண்டு கால வாழ்க்கை அனுபவத்தைப் பினைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் படிப்பவர்கள் நிச்சயம் இந்த உண்மையை உணர்வார்கள். ஆதலால் இந்த நூல், இன்றைய இலக்கிய உலகினல் நிச்சயம் வரவேற்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முதன்முதலில், படித்தவுடனேயே இதனைத் தாமதமின்றி அச்சாக்கிவிட வேண்டுமெனத் துணிந்தோம். நாம் கண்ட சுகத்தை மற்றவர்களும் காணவேண்டும் என்ற உயரிய நோக்குடனேயே இந்த நூலை விரைந்து வெளியிடுகிருேம்.
"கனிந்த காதல்" மூலப் பிரதியை முதலில் பார்த்த போது இத்தனைப் பழசு பட்டிருக்கிறதே என்ற எண்ணம் எழுந்தது. புலவர்மணி அவர்கள் இதனை 1978ம் ஆண்டில் எழுதியுள்ளார்கள் என்பது பின்புதான் புலணுகியது. ஆருண்டு காலம் எழுத்துப் பிரதியாக இருந்து, எழுதிய தாள்கள் எழுதியவரைப் போன்று முதுமைத் தோற்றம் தந்தபோதிலும் எழுதியவரின் ஏழு தசாப்தத்தைத் தாண்டி விட்ட உருவம் அவரின் வயதைக் காட்டாமல் மறைத்து, அவரின் மனநிலையை இன்றும் இளமையுடன் கூடியதாகக் காட்டுகிறதே போல், நூலின் உள்ளடக்கத்தில் துள்ளி
69

Page 37
விக்ாயாடும் இனிமை சொரிந்த நடையையே காணலாம். ஒவ்வொரு வாக்கியத்திலும் கவிதை மணம் கமழ்கிறது என்ருல் அது மிகையல்ல.**கனிந்த காதல்" பிரசுரிப்பதை முதிர்ந்த அனுபவசாலி ஒருவருக்கு நாம் காட்டுகின்ற மரியாதையாகவே கணித்துப் பெருமிதமடைகிருேம்."
23. சோனக் கூறை?
நூலாசிரியர் : ஜுனைதா ஷெரீப் முதற்பதிப்பு : மார்ச் 1985 அச்சிடப்பட்ட பிரதிகள் : 1500 அளவு : கிரவுண் எட்டு
தாள் : டிமை பிரிண்ட் பக்கங்கள் : 226
அட்டைப்படம் : பெஸிஸ் அச்சாளர் : கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு 62) ; 23.00
கிழக்கிலங்கை தந்த பிரபலமான இஸ்லாமியத் தமிழ் நூலாசிரியர்களுள், தனக்கென ஒரு தனிநடையினை வகுத்துக்கொண்டு இலக்கியவானில் தெம்போடு பவனி வருகின்ற ஜுனைதா ஷெரீபின் நூலுருப்பெற்ற முதல் நாவலே, சாணக் கூறை.
மழலைப் பிராயத்திலேயே தன் மகனின் முறைப் பெண்ணுக்கு சாணைக் கூறை அணிவிப்பதின் மூலம், விபரம் புரியாத அக் குழந்தைகளுக்குத் திருமணத்தை நிச்சயித்து: விடுகின்றர்கள் பெற்றேர்கள். இதனல், பேதங்களே யறியாது களங்கமற்ற அப்பிஞ்சு உள்ளங்கள் பாச உணர்வு களால் பிணைக்கப்பட்டு வளர்ந்த பின், காதல் உணர்வு களால் அழிக்கப்படுகின்றன. இயற்கையின் நிர்ணயப் படி தவிர்க்கமுடியாத சில நியதிகளினுல் இணைந்த இரு உள்ளங்களும் பிரிக்கப்படும்போது உருவாகின்ற அனர்த்
70

தங்களை பாரதூரமான விளைவுகளை அழகிய முறையில் சித்தரிக்க முனைகின்ருர் இந்நூலாசிரியர், ஜுனைதா ஷெரீப் அவர்கள்.
வானெலியில் நாடகமாக ஒலிபரப்பாகி, பின் *தினகரன்’ நாளிதழில் 40 அத்தியாயங்களாகத் தொடர்ந்து பிரசுரமாகி, ஆயிரக்கணக்கான வாசக நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்று நிலைத்து நிற்கும் சாணைக் கூறையில் கிழக்கிலங்கை மண்வாசனை கூடவே கமழ்கிறது. இது நாவலாசிரியரின் சிறப்பம்சங்களில் ஒன்று.
இனி, சாணைக் கூறையில் மனம் லயித்து கருத்துமழை பொழிந்த வாசகர்களிடையே ஏகோபித்த பாராட்டினைப் பெற்ற இந்நாவல் பற்றி சில வாசகர்களின் கருத்துக்களை இங்கு பார்ப்போம்.
கலைஞர் நோக்கிலே அ ண்  ைம யில் 'தினகரன்' பத்திரிகையில் தொடர் நவீனமாக வெளிவந்த 'சாணக் கூறை" குறித்து எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். பல வருடங்களுக்கு முன்னர், இலங்கை வானுெலி முஸ்லீம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டு, பலருக்குக் கண்ணிர் வரவழைத்த கதை பின்னர் நாவலாகப் பத்திரிகையில் வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சி.
மேல் நாடுகளில், மக்களைக் கவரக்கூடிய நல்ல நாவல் ஒன்றை எழுதிவிட்டால் போதும். பணம் வந்து சேரும். ஆனல், நமது நாட்டில் ஆத்ம திருப்திக்காகவே எழுது கிருர்கள். பாராட்டு ஒன்றுதான் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசு. அந்த வகையில் **சாணைக் கூறை' எழுதிய தங்களுக்கு கிடைத்த பரிசு அபரிமிதமானது என்பதை கதாசிரியரின் பேணுமுனை" என தினகரன் வெளியிட்ட பகுதி கூருமலே கூறுகிறது.
-ராளியா ஸியாத் ஷேக் மதார் ருேட், தர்காடவுண்.
71

Page 38
எத்துணைச் சிறப்பு வாய்ந்த எழுத்தாளர் தாங்கள் என்பதற்கு, இக்கதை நல்லதொரு சான்றகும், கதையில் ஆரம்பம் முதல், முடிவு வரை காட்டப்பட்டுள்ள அனைத்தும் வாசகர்களுக்கு உணர்த்தப்படும் அறிவுரையாக பளிச் சிடுவது போற்றத்தக்கது. இஸ்லாமியக் கடமைகள் கொள்கைகளை வரம்பு மீறுவதனல் கிடைக் கும் தண்டனைகள் பல இடங்களில் தெளிவாகச் சேர்க்கப் பட்டுள்ளதணுல், கதையின் தரம் மேலும் ஒருபடி உயர்கிறது.
-ஏ.எம். ஹஸன்பிரதான வீதி நிந்தாவூர்
உங்கள் சாணக் கூறை என்னைச் சிரிக்க வைத்ததுடன், அழவும் வைத்துவிட்டது. சாணக் கூறை நூலுருப் பெற கன் வாழ்த்துக்கள்.
-ஐ உம்முல் பஜிரியாஹம்பாந்தொட்டை
தினகரன் நாளிதழில் இத்தொடர் நாவல் பிரசுரமாகும் போதே, இது நூலுருப் பெற வேண்டும் என்ற நூற்றுக் கணக்கான வாசகர்களின் அபிலாசையைப் பூர்த்தி செய்யு முகமாக, அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் தனது இருபத்து மூன்ருவது வெளியீடாக" சானைக் கூறை'யைப் பிரசுரித்தார்.
24. யூஸுப் இஸ்லாம்
நூலாசிரியர் : எம்.இஸட். அஹ்மத் முனல்வர்
முதற்பதிப்பு : ஜூன்.1985
அச்சிடப்பட்ட பிரதிகள் : 2000
அளவு : கிரவுண் எட்டு
தாள் : வைட் பிரிண்ட்
பக்கங்கள் : 84
அட்டைப்பட அமைப்பு : கலைவாதிகலீல்,
பெஸில் செபஸ்தியன்
அச்சாளர் : குமரன் அச்சகம், கொழும்பு-12
ග9ශීඩා : 12.50
72

துள்ளலிசையில் இசைமழை பொழிந்து கொடி கட்டிப் பறந்த கட் ஸ்டீவன் மேலை நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கிலேயே இளவட்டங்களின் கனவுநாயகன்*பொப்" உலகின் முடிசூடா மன்னன். இது இப்போதல்ல; ஒரு தசாப்தத்துக்கு முந்திய கதை இது.
இன்று அதே கட் ஸ்டீவன், யூஸுப் இஸ்லாமாகி, நவ இஸ்லாமிய சிந்தனையாளர் என வர்ணிக்கத் தக்களவிற்கு தீவிர மதப் பிரசாரத்துடன் தத்துவ மழை பொழிந்து கொண்டிருக்கிருர். நம்ப முடியாவிடினும், இதுதான் உண்மை. இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்துவ குடும்பமொன்றில் 1948ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் திகதியன்று பிறந்த கட் ஸ்டீவன். அல்குர் ஆனின் ஞான மழையில் நனைந்து தனது 29வது வயதில் புனித இஸ்லாத் தைத் தழுவி, யூஸுப் இஸ்லாமானர்.
அன்றிலிருந்து இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆகியவற்றை நன்கு விளங்கித் தெளிவு பெற்று பெயரளவில் முஸ்லீம்களாக வாழ்ந்து கொண்டிருப்போரையும் முஸ்லிம் அல்லாதோரையும் இஸ்லாத்தின் பால் அழைக்கும் ஓர் உதாரண புருஷராக திகழ்ந்து கொண்டிருக்கின்ருர்.
1985ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ததிலிருந்து, 12ம். திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது வரை, சுமார் 96 மணி நேர, இனிய நினைவுகளை இன்பத்தமிழில் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் யூஸுப் இஸ்ஸாம்சிலநினைவுகள் நூலின் மூலம்,அழகுறத் தொகுத்து தருகின்றர். இந் நினைவுத் தொகுப்பில் யூஸுப் இஸ்லாம் அவர்களினல் இலங்கை மண்ணில் பகிரங்கமாக நிகழ்த்தப் பட்ட சொற்பொழிவுகள், பத்திரிகையாள்ர் மகாநாட்டுச் செய்திகள் பேட்டிகள் போன்றன இடம்பெற்றுள்ளன.

Page 39
பாக்கியம் பெற்றவர்கள்
பயனுள்ள இந்நூலை, அழகுற அச்சேற்றி வெளியிட்ட சட்டத்தரணி ஹனிபா ஹாஜியாரின் பேணு முனையிலிருந்து ஊற்றெடுத்துப் பிரவாகிக்கும் உணர்ச்சிகளின் வெளிப் பாடுகளை உங்கள் உணர்ச்சிகளிலும் கலக்க முனைகின்றேன். *அல்லாஹ்வின் ந ல் ல ருள் பெற்றவர்கள்தான் நல்வழியில் நடக்கும் பாக்கியம் பெற்றவர்கள். அப்படியான வர்கள், முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரமன்றி, முஸ்லிம் அல்லாதார்களிடையிலும் தோன்றியுள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பலப்பல நூற்றண்டு காலமாக முஸ்லீமல்லாதார் இஸ்லாத்தைத் தழுவி வருகிருர்கள். இன, நிற வேறுபாடற்ற இஸ்லாத்தில், பல இனங்களைச் சேர்ந்தவர்களும் பல நிறங்களையுடையவர்களும் சேர்த் துள்ளார்கள். ஆபிரிக்கக் கண்டத்தில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்புநிறத்தவர். இன்று ஆபிரிக்கா ஒரு முஸ்லீம் கண்டம்" எனக் கூறுமளவிற்கு அங்குள்ளவர் களில் எண்பது சத விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் இஸ்லாத்தின் வழி நிற்கிருர்கள். பல பிரசித்திவாய்ந்த, ஆங்கிலேயர்கள்-பிரபுகள் எனப்படும் சிலர் கூட - இஸ்லாத் தைத் தமது வாழ்க்  ைகப் பாதையாகத் தேர்ந் தெடுத்துள்ளனர்.
. சமீப காலத்தில், அமெரிக்க நீக்ரோ சமூகத்தவரான குத்துச்சண்டை வீரர் கஸியஸ் கிலே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு முஹம்மது அலி ஆனதுடன் நின்றுவிடாமல், இஸ்லாத்தின் சிறப்புப்பற்றி வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று எடுத்துக் கூறிவருகிருர். இந்த வரிசையில் ெேபாப்" இசைப்பாடகரான ஆங்கிலேயர் கட் ஸ்டீவன், குர்ஆனின் க வர் ச் சி யால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் QF tig5 Tit...
**மத்தியகிழக்கு அருபியர்களின் பணத்துக்கு ஆசைப் பட்டு நீங்கள் இஸ்லாத்தைத் தழுவினிர்களா?" என்று
4.

இங்கு அவரிடம் ஒருவர் கேட்டார். 'இல்லவே இல்லை. எனக்கு யார் பணமும் தேவையில்லை, என்னிடம் போதிய அளவு பணம் இருக்கின்றது; எனப் பதிலளித்தார். இஸ்லாத்தில் மாருத பற்றுக்கொண்டுள்ளார் யூஸ"ப் இஸ்லாம். ஆனல், அவருக்கு ஒரு பெரும் கவலை பரம்பரை யாக முஸ்லீம் என்று வாழ்பவர்கள் சரியான இஸ்லாமிய வாழ்க்கை நடத்தினல் ஏனையவர்கள் இஸ்லாத்தில் தாமாகப் புகுந்துவிடுவார்கள். எது வித பிரசாரமும் தேவையில்லை" என்பதுதான் அவரின் சித்தாந்தம்.
*.யூஸுப் இஸ்லாம் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது அவருடன் செய்தியாளர் என்ற முறையில் நெருங்கிப் பழகிய சகோதரர் அஹ்மத் முனஷ்வர், தனது நினைவுகளை இந்நூலில் தந்துள்ளார். இதனல் தமிழ் தெரிந்த அனைவரும் பயனடைவர் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை"
25. அன்னை இந்திரா
நூலாசிரியர் - அந்தனி ஜீவா
முதற்பதிப்பு - மே - 1985
அச்சிடப்பட்ட பிரதிகள் - 2000
அளவு - கிரவுண் எட்டு
தாள் - வைட் பிரிண்ட்
பக்கங்கள் - 64
அட்டைப்படம் - எஸ். துரைசாமி
அச்சாளர் - குமரன் அச்சகம் -
கொழும்பு 12
விலை - இலங்கையில் - 10.90
இந்தியாவில் - 7.00 81. 10, 1984
இது பாரத வரலாற்றிலே ஒரு கறைபடிந்த தினம்.
75

Page 40
அத்தினத்தில் எண்ணியெட்டுச் சன்னங்களால் பூமா தேவி இழந்தது - இ ந் தி ர |ா  ைவ மட்டுமல்ல.ஒரு
யுகத்தையே.
**இத்தேசத்துக்காக இறப்பது எனக்குப் பெருமை. என் இறுதித் துளி இரத்தம் கூட - நாட்டின் உயர்வுக்கே உரமிடும்." ஒரிசாவில் ஒரு நாளைக்கு முன்பு கூறியதை நிரூபிப்பதற்கோ என்னவோ, காலதேவனும் துடுப்பைப் பறித்துக்கொண்டான்.
பாரதத்தில் மட்டுமென்ன, அணிசேரா நூற்றியொரு நாடுகளின் உலக சனத்தொகையிலேயே ஐந்தில் மூன்று பேருக்குத் தலைவியாகத் திகழ்ந்த பாரதத்திலகத்தின் மறைவினை ஜீரணிக்க முடியாமல் சோக கீதமிசைத்த குயில்கள் ஆயிரமாயிரம்.
தாயே.
உனக்காக. அஞ்சலி செலுத்தும் போது பெருக்கெடுக்கும் எம் விழித்தடாகத்தால். பொங்கிவிடுவது
கங்கை மட்டுமல்லஇங்கே
மலை மண்ணின்
மகாவலி"யும் தான்.
ஈழமாதாவின் புத்திரர்களின் சோக நினைவுகளின் வார்த்தைப் புலம்பல்களில் ஒரு சிறு வெளிப்பாடே அந்தணி ஜீ வா வின் அன்னை இந்திரா" எனும் வரலாற்று நூல்.
ஆசிய ஜோதியின் மறைவு கேட்டு, சகிக்க முடியாத சோகத்தில் ஆழ்ந்து எழுதி தினகரன்' வாரமஞ்சரியில் தொடர்ந்து சில வாரங்கள் இடம் பெற்ற அந்தணி
76

ஜீவாவின் இதயக் குமுறல்களின் தொகுப்பான அன்னை இந்திரா"வை வெளியிட்ட எஸ்.எம். ஹனிபா அவர்களின் இதயக் கருத்துக்களை இங்கே அசைபோடுவோம்.
நியதிக்கு அப்பால் “அரசியல், தமிழ் மன்றத்தின் இலட்சியத்திற்கு அப்பாற்பட்டது. அரசியல் பற்றியோ, அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள், முன்பு ஈடுபட்டவர்கள் பற்றியோ நூல் வெளியிடவேண்டும் என்று நாம் எப்பொழுதும் விரும்பியதில்லை. ஆளுல் எல்லா நியதி களுக்கும் விதிவிலக்கென ஒன்றுண்டல்லவா? அந்த அடிப் படையில்தான் அன்னை இந்திரா" பற்றிய நூலை வெளியிட வேண்டுமென விரும்பிளுேம்.
1962ம் ஆண்டில் இந்திரா காந்தி தனது தந்தை பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் இலங்கைக்கு வந்தார். அப்போது அவர் கொழும்பு, மகளிர் கல்லூரி மண்டபத்தில் பகிரங்கச் சொற்பொழிவாற்றியதைக் கேட்டு மகிழும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்றி லிருந்து அவரின் மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது.
1939ம் ஆண்டில், எனது சின்னஞ்சிறு வயதில் பூg ஜவஹர்லால் நேரு இலங்கை இந்திய காங்கிரஸை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக இலங்கை வந்த போதே கண்டி, போகம்பர மைதானத்தில் பெருந் திரளாகக் குழுமியிருந்த இலட்சக் கணக்கானவருடன் சேர்ந்து அவரின் சொற்பெருக்கைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் கொம்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் 1962-ம் ஆண்டில் நிகழ்த்திய பேச்சையும் கேட்டேன். இவற்றினல், இளமையிலிருந்தே இந்தியத் தலைவர்களின் மீது எனக் கிருந்த மதிப்பு மேலும் வலுப்பட்டது.
ஆசியாவின் சமீபகாலச் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட பாரத விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவரான மோதிலால் நேரு அவர்கள்
77

Page 41
பெரும் தியாகி. வழக்கறிஞராகத் தொழில் நடாத்திப் பெரும் பணம் சம்பாதித்திருந்த அவர், அலஹபாத்தின் மிகச்சிறந்த மாளிகையெனக் கருதக்கூடிய விதத்தில் அமைந்திருந்த தனது இல்லத்தையே தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்கு நன்கொடையாக வழங்கவிட்டு, சாதாரண வீடொன்றில் குடிபுகுந்தார்.
அவரின் ஒரே புதல்வர் ஜவஹர்லால் நேரு, முதலில் சுதந்திரப் போராட்டத்திற்கும் பிறகு தாய்நாட்டுப் பணிக்கும் தன்னை முற்ருக அர்ப்பணித்தவர்; அவரின் ஒரே பிள்ளையான இந்திரா, தந்தையின் அடிச்சுவட்டைப் பூரண மாகப் பின்பற்றியவர். அது மாத்திரமல்ல, நவீன உலகின் மிகச்சிறந்த பெரும் தலைவர்களில் ஒருவரான மகாத்மா காந்தியின் நிழலில் வளர்ந்தவர், இந்திரா. மெளலான அபுல் கலாம் ஆஸாத், ராஜேந்திரப் பிரஸாத், டாக்டர் சாக்கீர் ஹ"ஸைன் போன்ற பெருந்தலைவர்களின் நல்லாசி பெற்ற அம்மையார். இந்த அடிப்படையில் பார்க்கும் போதுகூட, அளப்பரிய அரும்பணிபுரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் மிகப் பிரசித்தமான தலைவர் களின் அன்புக்குப் பாத்திரமானவர் என்பதாலும் அன்னை இந்திரா பற்றிய நூல் பிரசுரிக்கப்படுதல் மிகப் பெரும் பணியொன்று எனக்கருதலாம்."
வெளியீட்டு விழாவில் அமைச்சர் தொண்டைமான்
அந்தனி ஜீவாவின் “அன்னை இந்திரா" நூலின் வெளியீட்டுவிழா 21.5. 1985ல் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கிராமியத் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் தி. எஸ். தொண்டை மான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார் :
19.மிகவும் பொருத்தமான சமயத்தில் அன்னை இந்திரா" நூல் வெளிவந்திருப்பதாக நான் கருதுகிறேன். பிரதமராக இருந்து, பின்னர் தேர்தலில் தோல்வி கண்டு,
78

பதவி இறங்கியவர் இந்திரா. ஆணுல், அவர் அதற்காக துவண்டு விடவில்லை. துணிவுடனும் நம்பிக்கையுடனும் முயன்று, மீண்டும் அதிக செல்வாக்குடன் பிரதமரானர். இதேபோல் நாமும் பல இடர்களைச் சந்தித்த போதும், சோர்வடைந்து விடாமல் பயந்துவிடாமல், முயற்சி செய்யவேண்டும். இதற்கு ஒரு முன்மாதிரியாக பிரதமர் இந்திராவை நோக்க வேண்டும். சகல அதிகாரங்களையும், வசதிகளையும் கொண்ட பிரதமராக இருந்தும் திருமதி இந்திராவினுல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடிய வில்லை. எனவே பாதுகாப்புத்தான் எல்லாம் என்று நாம் எண்ணிவிடலாகாது. பாதுகாப்பு இருந்தால் போதும் என நினைத்து இடம் மாறக்கூடாது; தன்னம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும்.
*.இன்று தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை சிதைக்க சிலர் முனையும் சந்தர்ப்பத்தில், அந்தனி ஜீவாவும், ஹனிபாவும் இணைந்து இந்நூலை வெளியிட்டிருப்பது பாராட்டுக் குரியது. மக்கள் ஆதரவுடன்தான் நாம் முன்னேற முடியும்." தினகரன், 24, 5. 1985.
26. அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்
நூலாசிரியர் : ஏ.பி.வி கோமஸ், பீ.ஏ., பக்கங்கள் : 60 அட்டைப்படம் : பஸில் செபாஸ்தியன் அச்சாளர் : வட் பிரிண்ட், கொழும்பு 6&n 10.00
மட்டக்களப்புக் கிராமியக் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட தமிழ் மன்றம், மலையகக் கிராமியக் கவிதை களை மறந்துவிடவில்லை. ஏனென்றல், தமிழ்மன்றத்தாரே மலையகத்தார் தானே.
79

Page 42
மலையகக் கிராமிய மட்டத்திலும், பெருந் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகியிருந்த, இப்பாடல்கள் காலகெதியில், அழிவுற்று வந்த சந்தர்பத்தில் அவற்றை உயிர்ப்பிக்க நாடறிந்த எழுத்தாளரான ஏ.பி.வி. கோமஸ் முயற்சி மேற்கொண்டது பாராட்டத் தக்க தொன்ருகும்.
இந்நூலில், பெருந்தோட்டப் பின்னணியில் அமைந்த இனியதொரு காதல் கதையை தொகுப்பாசிரியர் நயக்கத் தக்க வகையில் எமக்குத் தருகின்ருர்.
27. இதய மலர்
நூலாசிரியர் : கவியரசு கல்ஹின்னை
எம்.எச்.எம். ஹலீம்தீன்
முதற்பதிப்பு : ' 1985 செப்டம்பர்
பக்கங்கள் : 185
அட்டைப்படம் : “ஹாலினு"
அச்சாளர் : டெவலோபிரிண்ட், கொழும்பு-9
ଭୋଗ ଅର) : 20,00
காலத்தில் கோலமிட்ட கவியரசு எம். எச். எம். ஹலீம்தீன் அவர்கள் இளைய பள்ளிச் சிருர்களின் இதயங் களில் கோலமிட இசைத்த இதய கானங்களின் சேர்க் கையே, இலக்கியத் தடாகத்தில் பூத்துள்ள வாடா மலர் இதய மலராகும்.
இனிய தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏகநேரத்தில் கவி புனையக்கூடிய திறன் படைத்த கவியரசின் ஆற்றல் இங்கிதமான இதயமலரில் புலப்படுகின்றது. தமிழிலும் சரியே, ஆங்கிலத்திலும் சரியே கவியரசின் கவிமலர்கள்வாசம்பரப்பும் அதே நேரம்,என்றும் வாடா மலர்களாகவே பரிணமித்து மலர்ந்துள்ளன.
80

இதயமலரை மூன்று-பகுதிகளாக வகுத்துத் தருகின்ருர் கவிஞர். முதற்பகுதியில் 'இஸ்லாமிய மணம் கமழும் 45.இனிய மலர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் தமிழ் மணம் பரப்பும் 40 புதுமை மலர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மூன்ருவது பகுதி ரோஸஸ் (Roses) எனும் மகுடத்தில் ஆங்கில மணம் வீசும் 51 வாசமலர்கள் தொடுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இதயமலரை 136 கவிமலர்கள் அலங்கரிக்கின்றன.
இந்த வாடா இதய மலர்களைத் தொகுத்து இலக்கியப் பொய்கையில் மணம் கமழ விட்டவர் சட்டத்தரணி எஸ்.எம். ஹனிபா. இதய மலரின் சுகந்தத்தை நுகர்ந்து, மலையகத்தைச் சேர்ந்த இலக்கியவாதி அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களின் இனிய அணிந்துரையி லிருந்து இதயம் கவர்ந்த சில இனிக்கும் துளிகள்,
**பள்ளிக்கூட மாணவர்களுக்கான Littl laid, air, இதய மலர்" என்ற பெயரில் இதழ் விரிகிறது. இஸ்லாமிய மணம், தமிழ் மணம், ஆங்கில மணம் என்ற முப் பிரிவு களைத் தாங்கி மலர்ந்து நறுமணம் வீசுகிறது. பால்ய வயது தொட்டே பள்ளி மாணவர்களின் உள்ளங்களில் சன்மார்க்க உணர்வு சரியான முறையில் ஊட்டப்பட வேண்டும். சன்மார்க்க நெறியோடு பெறப்படும் கல்வி யறிவே மாணவர்களின் நல்வாழ்வுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். கல்விப் போதனையின் முக்கிய அம்சம் இதுவாகும்.
. இஸ்லாமிய மணம்” என்ற பகுதி உண்மையிலேயே இளம் சிருர்களின் நெஞ்சங்களில் இஸ்லாமிய உணர்வை நன்கு பெருகச் செய்யும் அங்கொன்று இங்கொன்ருய் இஸ்லாமிய மணம் கமழும் சிறுவர் பாடல்கள் இருந்தாலும், இதுவரை இத்தகைய சிறந்த பாடல்கள் வெளிவரவில்லை என்றே கூறலாம். எங்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். . “தமிழ் மணம்" தனிப் பொலிவோடு திகழ்கிறது. ஆங்கில மணத்தையும் இணைந்
8.

Page 43
துள்ளமை இதய மலருக்கு" மேலும் புதுமெருகூட்டுகிறது. பொதுவாக சொன்னூல் இன்றுவரை எவரும் செய்யாத ஓர் அரிய சாதனையை கவியரசு கல்ஹின்னை ஹலீம்தீன், சிறுவர் இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ளார்.
மாணவர் சமுதாயத்தின் கண்கள். கவிதாரசனை களின் மூலம் அவர்களது வாழ்க்கையைப் பண்படுத்தும் பணி நல்லாசிரியர்களைச் சார்ந்ததாகும். மாணவர்களின் மனே வளர்ச்சிப் படிகளை நன்குணர்ந்த கவிஞர் தாமும் முன்னுள் ஆசிரியர் என்பதை மனதிற் கொண்டு, நாட்டிலுள்ள நல்லாசிரியர்கள் மூலம் மாணவ சமுதாயத் தையே பண்புள்ள சமுதாயமாக மாற்றியமைக்க தமது கவிதா உணர்வுகளை உரிய முறையில் பயன்படுத்த முயன் றுள்ளார். இதுவே இவரது இந்தப் படைப்பின் முக்கிய மான முதன்மையான குறிக்கோள் என்பது புலனுகின்றது.
28. rigssir sesamo
நூலாசிரியர் : புன்னியாமீன் முதற்பதிப்பு :- மார்ச், 1986
பக்கங்கள் :- 73 அட்டைப்படம் :- எஸ். துரைசாமி அச்சாளர் : கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு ଶୋଥି) : 15,00
இச்சிறுகதைத் தொகுதியில், சின்னச் சின்ன கோபங்கள், சலனங்கள், குருடர்கள், அர்த்தமற்ற வாதங்கள், நிழலின் அருமை, புதிய நம்பிக்கைகள், முழுமையைத் தேடும் முழுமையற்ற உள்ளங்கள், ஓர் உதயம் அஸ்தமிக்கிறது, சில ஏக்கங்களும் ஓர் எதிர்பார்ப்பும் ஆகிய தலப்புகளில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவை, ஏற்கனவே சிந்தாமணி, தினகரன், இபம் சென்னை, அஷ்ஷ"ரா, அறிவு ஒளி ஆகிய இதழ்களில்
32

பிரசுரமான வைகள், சில இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லீம்சேவையில் ஒலிபரப்பானவைகள்.
நிழலின் அருமை" சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டு, கடல்கடந்த இடமொன்றிலிருந்து இரு வாசக அபிமானிகள் உளம்தொட்டு வ டி த் து அனுப்பிய கருத்துக்கள் வருமாறு:
நிழலின் அருமை சிறுகதைத் தொகுப்பைப் பக்கம் 1 முதல் 73 வரை ஒன்றுவிடாமல் ரசித்துப் படித்தேன். இவரது கதை ஒவ்வொன்றும் சமூகத்தில் நடக்கும் உண்மை நிகழ்ச்சிகளே.இவர் கையாண்டுள்ள உவமைகளும், உருவகங்களும் உத்திகளும் மிகவும் அருமை. அந்தந்த இடங்களில் இயற் கை யி ன் வர்ணிப்பும், குழந்தை உள்ளத்தை அறிந்து எழுதப்பட்டுள்ள இந்தத் கதைகள் அனைத்துமே அனுபவித்து எழுதியன போல் மிகவும் அருமை யாக எழுதப்பட்டுள்ளன. இவரது கதையின் எளிய நடையும், சமுதாயத்தில் பிறரை பாதிக்காவண்ணம் எழுதப்படும் நிதான ப் போக்கும், சமுதாயத்தைச் சீர்திருத்தும் கருத்துக்களை உள்ளடக்கிய கதைப் போக்கும் மிகவும் பயனுள்ளஒன்று.
--செல்வி ஜே. பிரேமாவதி, எம்.ஏ நாடகத் துறை 闵 ܗܝ தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். தமிழ்நாடு
கற்பனை உலகிலே சிறகடிக்கும் கதாசிரியர்களின் மத்தியில் கண்முன்னே தென்படும் மனிதர்களின் உள்ளத்து 'உணர்வுகளை "நிழலின் அருமை" மூலம் படம் பிடிக்கும் இக் கதாசிரியரின் யதார்த்த போக்கு பெரிதும் பாராட்டற் குரியதே. இளமை தொட்டு, முதுமை வரை நமக்குள்ள பிரச்சினைகள் இன்று ஏராளம், ஏராளம். பிரச்சினைகளின் நாடி தொட்டு உணரும் போக்கும்; அதனை எழுத்தில்
83

Page 44
வடிக்கும் பாங்கும், நம்மைச் சிந்திக்க வைக்கும். நோக்கும் இவரது தனிப்பாணியென கூறலாம்" தொல் அறிவியற்றுறை தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-தமிழ்நாடு
-கலாநிதி பரிமளா சம்பந்தம்
29. அவள் நெஞ்சுக்கு தெரியும்
நூலாசிரியர் : எஸ்.ஐ. நாகூர் கனி (அமுதன்) முதற்பதிப்பு : ஏப்ரல் 1986
பக்கங்கள் : 163 அட்டைப்படம் : எஸ். துரைசாமி அச்சாளர் : கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு விலை : 20.00
ஈழத்துத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் படைப் பிலக்கியங்களை வெளியிட்டு ஊக்கமளிப்பதில் மிக முக்கிய பங்களிப்பினைச் செலுத்தி வருபவை தேசிய பத்திரிகை களாகும். இத்தேசிய பத்திரிகைகள் இல்லாமலிருப்பின் அநேக படைப்பாளிகள் படைப்புக்கள் இருட்டு அலுமாரி களில் தவம் கிடக்க வேண்டியிருக்கும். இது ஒரு பொதுப் படையான உண்மை. ஏனென்றல், தேசிய பத்திரிகைகள் தான் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மூலவேர்.
பிரபல தேசிய தமிழ்ப் பத்திரிகைகளில் ஒன்ருன தினகரன்' நாளிதழில் 25.4.1983 முதல் 11.6-1983 வரை *அமுதன்" எழுதிய ஜானகிக்கென்று ஒரு நெஞ்சம்" தொடர் நவீனம் இடம்பெற்றது. 40 அத்தியாயங்களைக் உள்ளடக்கிய இந் நவீனம் பிரசுரமானபின் பல நூற்றுக் கணக் கா ன வாசக நெஞ்சங்களின் ஏகோபித்த பாராட்டினையும், சீராட்டினையும் சுவீகரித்துக் கொண்டது.
84

*அமுதன் வேறுயாருமல்ல. நமக்கு நன்கு அறிமுக மான எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள்தான். இவர் "அமுதன்" என்ற பெயரில் மறைந்து நின்று, பல அரியப்படைப்புக்களை இலக்கிய அன்னைக்குச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றர். அன்று ஜானகிக்கென்று ஒரு நெஞ்சம்" எனும் தலைப்பில் பிரசுரமான அதே நாவல், இன்று தமிழ் மன்றத்தின் வெளியீடாக அவள் நெஞ்சுக்குத் தெரியும்" எனும் தலைப்பில் இலக்கியத் தடாகத்தில் மலர்ந்துள்ளது.
ஒரு தனவந்தருக்கு இரு மகள்கள். இந்த தனவந்தரின் வீட்டுக்கு பத்திரிகையொன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் இளைஞன் ஒருவன் வந்து சேர்கின்ருன். இந்த இளைஞனுக்கும் தனவந்தரின் மூத்த மகளுக்குமிடையில் காதல் அரும்புகின்றது. இருப்பினும் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளினல் தன் காதலைத் தியாகம் செய்து தன் காதலனையே தங்கைக்கு மணுளனக்கி விடுகின்ருள்த மூத்தவள். இதன் பிறகு அக்குடும்பத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. ஈற்றில், மெழுகுவர்த்தி யான மூத்தவள் தன்னைதானே அழித்துக்கொண்டு அப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விளைகின்ருள், இதுதான் அவள் நெஞ்சுக்கு தெரியும் சமூக நாவலின் கதைச் சுருக்கம் ஆரம்பம் முதல் இறுதிவரை கனதிகுன்ரு மல் கதை கூறும் பாங்கும், அதிக பாத்திரங்களை கதையோட்டத்தில் நகர விடாமல் குறிப்பிட்ட நாலைந்து பாத்திரங்களுடனேயே கதையைக் கொண்டு செல்லும் நாவலாசிரியரின் திறமை யின் வெளிப்பாடு. திறமை எங்கிருக்கின்றதோ அதை வெளிக் கொணருவதுதான் எஸ்.எம். அவர்களின் ஒரே நோக்கம். “அவள் நெஞ்சுக்கு தெரியும்', தமிழ் மன்ற வாசகர்களுக்குப் பெரும் விருந்து.
நாவலின் அணிந்துரையில், முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்கள உதவிப் பணியாளர், எம்.எம்.எம். மஹ்ரூப், பீ.ஏ., (ஹானர்ஸ்) கூறும் கருத்துக்கள்:
85

Page 45
"இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாவல் எழுதுவது அவ்வளவு சாதாரணம் அல்ல. வேறு பல காரணங் களுக்கும் புறம்பாக, இரு இடர்பாடுகள் நாவல் எழுது வதற்குத் தடங்கல்களாக இருக்கின்றன. சிறுகதை எழுதுவது போன்று, ஒரே மூச்சில் நாவலைத் தொடங்கி முடிப்பது இயலாது. மாதங்களாகச் சிந்தித்து, பாத்திரங் களை உருவாக்கி, களன தயார் செய்வது எல்லோருக்கும் ஒத்துவராது. இரண்டாவதாகச் சொல்லப் போனுல், சிறுகதையை பிரசுரிப்பது கடினமான காரியமல்ல, தினசரிகள் இல்லாவிட்டால், சின்னஞ்சிறு வெளியீடுகள் இருக்கின்றன. அவையும் ஒதுங்கி அல்லது ஒதுக்கி விட்டால், நாமே கையெழுத்துப் பிரதிகளை வெளியிட லாம். ஆனல், நாவலுக்குத் தொடர்ந்து ஒரு பத்திரிகை ஆதரவு தர வேண்டும். அல்லது அதை வெளியீடாக வெளிக்கொணர வேண்டும்."
**அவள் நெஞ்சுக்கு தெரியும்" ug rrahju Lorror நாவல். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு திருப்பம், ஒரு திடீர் அதிர்ச்சி என நின்று, வாசகரைப் பதற வைக் கின்றது. அதனுல். இந்த நாவல், முதலில் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்திருக்கின்றது என நாம், சரியாக அனுமானித்துக் கொள்கின்ருேம்."
30. கரை சேராத அலைகள்
நூலாசிரியை செல்வி ரிஸாயா ஆப்தீன் முதற்பதிப்பு : ஜனவரி, 1987, Lăsăianeir :: 60 அட்டைப்படம் : எஸ். துரைசாமி அச்சாளர் பூரீ சக்தி பிரிண்டிங் இன்டஸ்ட்ரீஸ் விலை ; 10.00
86

கல்ஹின்னைத் தமிழ்மன்றத்தின் முப்பதாவது பிரசுர மாக வெளிவந்துள்ள கரைசேரா அலைகள்"-குறுநாவல்; இலக்கியக் கடலின் கரையிலிருந்து அதன் ஆழத்தை எடை போட முனைகின்ற ஒரு ஜீவனின் சிந்தனைத் துடிப்பில் உருவாகிய ஒரு கன்னிப் படைப்பாகும்.
ஆம், அந்த ஜீவன்தான் வெலிமடையைச் சேர்ந்த செல்வி ரிஸாயா ஆப்தீன். இலக்கிய உலகில் இவர் பெயர் போதியளவு பரிச்சயமில்லாதிருப்பதற்குக் காரணம்,இவரது படைப்புகள் இலக்கிய உலகில் வலம் வந்து கொண் டிருப்பது இன்று நேற்றுக்குள்ளாக இருப்பதுதான். பெண் எழுத்தாளர் வரிசையில் வயதில் குறைந்திருக்கின்ற இவர் தமது வயதுக்கு மீறிய கற்பனையனுபவங்களை இந்நாவலில் காட்ட முனைந்திருப்பது குறிப்பிடத்தக்கதொன்று.
பணக்கார வாலிபனுக்கும், ஏழைப் பெண்ணுக்கும், கற்கும் காலத்தில் அரும்புகின்ற காதல், பணபலம் கொண்ட பெற்ருேரின் தலையீட்டினல் மலராமற்போஞலும் கூட, நெஞ்சில் நீங்காத இடம்பெற்றவளைக் கல்வியில் கரை சேர்த்துவிட்டுத் தன்னையே தியாகம் செய்துகொண்ட ஓர் இளம் காதலனின் சோகக்காவியமே, இந்த 'கரை சேராத, அலைகள்"
அநேகமான ஆரம்ப எழுத்தாளர்கள் தம் கற்பனைக்கு கருப்பொருளாகக் கொள்ளும் காதலையே இவரும் இங்கு எடுத்தாண்டிருக்கின்ருர், நாவலில் அழுத்தம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லாவிட்டாலும், சரளமான நடை அந்தக் குறையை நிவர்த்தி செய்கின்றது.
இலக்கியத்தின் ஒவ்வொரு படித்தரத்திலும் ஆரம்ப எழுத்தாளர்கள் ஆய்ந்துணரக்கூடிய எத்தனையோ படிப் பினைகள் இருக்கின்றன. மிகவும் அண்மைக்காலத்தில் இலக்கிய உலகில் கால் வைத்த இவர், தனக்கென நிலையான ஓர் இடத்தைப் பெற்றுக்கொள்ள முன்பதாக எடுத்தி
87

Page 46
எடுப்பிலேயே நாவல் படைப்பதில் இறங்கியுள்ளார். துணிகரமான முயற்சிதான். என்ருலும் ஒவ்வொரு படியாக உயர்ந்திருக்க வேண்டிய வளர்ச்சி ஒரேயடியாக, உயர்ந்துவிட்டதில், சில குறைபாடுகளை நாவலில் antestavntlh.
இவைகளைக் குறைகள் என்று இங்கு சுட்டிக்காட்டுவது இலக்கிய மரபை மீறுகின்ற செயலாகும். ஏனெனில், இவர் ஒரு ஆரம்ப எழுத்தாளர். அதிலும் வளரத்துடிக்கும் ஒரு பெண் எழுத்தாளர், இவரின் அறிவு, வயது ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, இப்படி ஒரு முயற்சி
உண்மையிலே வரவேற்கத்தக்கதுதான் at air u 3) ay ஐயமில்லை.
அட்டைப்படம்
ஒரு படைப்பு புத்தகமாக உருப்பெறும் பொழுது, அதனை அழகுபடுத்த அட்டைப்படம் இன்றியமையாத தாகின்றது. இது பொதுப்படையான உண்மை. தமிழ் மன்றம்" இதுவரை முப்பது புத்தகங்களை வெளியிட்டு விட்டது. இவைகள் அனைத்தையும் பார்த்தவன் என்ற ரீதியில் என் கணிப்பைச் சொல்வதானல்-அத்தனை அட்டைப்படங்களையும்விட *கரை சேராத அலைகள்" அட்டைப்படம் தனித்துவமாக மிளிர்கின்றது. இதை நான் துணிந்து கூறுவேன்.
படத்தில் ஆர்பரிக்கும் கடல் அலைகள் தான்-என்ருலும் அட்டையில் ஆர்ப்பாட்டமில்லை. எடுத்த எடுப்பிலே பார்க்கும்போது அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து வந்து கொண்டிருக்கும் புதுக்கவிதைப் புத்தகமா இது." என்று எண்ணத்தூண்டுகிறது. இந்த ரீதியில் ஓவியர்
சாமி” நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்.
எஸ். துரைசாமி என்பது அனேகருக்குந் தெரியாத பெயர் ஆனல் சாமி என்ருல் எல்லோருக்கும் தெரியும். ஏனைய
88

ஒவியர்களுக்கு நாமும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிகளும் வகையில், கரைசேராத அலைகளின் அட்டைப் படத்தை வரைந்த ஓவியர் துரை.சாமியின் திரமை இமயத்தை எட்டி விடுகின்றது. ஆம் அது ஏ.வன்
எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல; திறமையான் ஓவியர் களுக்குச் சந்தர்ப்பம் வழங்கி, திறமை எங்கிருக்கிறதோ அதை வெளிக்கொணரத் துடிக்கும் ஹனிபா ஹாஜியாரின் சேவை காலத்தால் அழியாதது. அவர் இலக்கியச் சேவை மட்டும் புரியவில்லை. கலைச்சேவையையே புரிந்துகொண் டிருக்கின்ருர். இச்சேவையைக் கலைத்தாய் அங்கீகரித்து, நிச்சயமாகப் பெருமைப்படுவாள் என்பதில் துளிகூடச் சந்தேகமில்லை.
*கரை சேராத அலைகளை எம் பார்வைக்குத் தந்த ஹனிபா ஹாஜியாரின் பதிப்புரை என்ன கூறுகின்றது என்பதை இப்போது பார்ப்போம்.
வளரும் பயிர்.
*அபிமானிகளில் பெருந்தொகையானவர்கள், 'பெண் எழுத்தாளர்களின் புத்தகம் ஒன்றுகூட இத்தனைக் காலமும் நீங்கள் வெளியிடவில்லையே' என்று குறை கூறி வந்துள் ளனர். இன்றுமொரு குரல், 'இளந் தலைமுறையினருக்கு இடமளிக்க மாட்டீர்களா?" என்ற கேள்வியை எம்மிடம் எழுப்பி வந்துள்ளது.
*எழுத்துத் துறையில் பலகாலமாக ஈடுபட்டு, நல்ல அனுபவம் பெற்றுப் பக்குவநிலை அடைந்தவர்களுக்குத்தான் நாம் இதுவரை முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். எமது சேவையினல் அவர்கள் ஊக்கம் பெற்று, மேலும் ஆர்வத்துடன் இலக்கியப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதனை நினைத்துப் பூரிப்படையும் அதேவேளை
89

Page 47
புதிய எழுத்தாளர்களுக்கும் உற்சாகம் அளிக்கத்தான் வேண்டும் என்று எம்மிடம் வாதாடியவர்களுக்கு, நாம் வளந்து கொடுக்கத் தீர்மானித்ததால், செல்வி ரிஸாயா ஆப்தீன் எழுதிய கரை சேராத அலைகள்' எனும் சிறு நாவல் பிரசுரமாகியுள்ளது. இவர், சமீபத்தில்தான் எழுத்துத் துறையில் பிரவேசித்துள்ளார். பாடசாலையில் படிக்கும் காலத்தில் பல்வேறு வகையான புத்தகங்களை யெல்லாம் வாசித்து, உருசி கண்ட பின்னர், எழுதத் தொடங்கியுள்ள இவர், உள்ளூர் பத்திரிகைகளில் இடைக் கிடை கதை, கட்டுரை, கவிதை முதலியன எழுதி வந்தார். அவற்றின் போக்கை அவதானித்த நாம், இரு குறைகளையும் நிவர்த்தி செய்யும் நோக்குடன் எழுத்துலகுக் குப் புதியவரான செல்விக்கு, ஓர் இடமளித்தோம். அவரின் முதல் முயற்சி "கரை சேராத அலைகள்' எனவே, முதிர்ந்த மரத்தின் கனி போல், அத்தனைச் சுவையுடையதாக இளங்கன்றின் கனியுமிருக்கும் என எதிர்பார்த்தல் நியாய மாகாது. எனினும்.
"சுவை குன்றிய கனியிலுங்கூட ஒரு விதை இருக்கவே இருக்கிறது. அந்த விதை மீண்டும் ஒரு பெருமரமாக வளர்ந்து, கனி வழங்குவது போல், செல்வி ரிஸாயா நல்ல தேர்ச்சி பெற்றுப் பிற்காலங்களில் முதிர்ச்சியடைவார் என்பதற்கான அறிகுறிகள், இச்சிறு நாவலில் காணப்படு கின்றன. அவர் தொடர்ந்து எழுதவேண்டும் இன்னும் பல சிறந்த படைப்புக்களை விரைவில் நாம் வெளியிடும் வாய்ப்பைத் தரவேண்டும், எழுத்துத் துறையின் முதற் படித்தரத்திலிருக்கின்ற அவர், அயராது உழைத்து முன்னுக்குவர வல்ல இறைவன் வழிகாட்ட வேண்டும்.""
விரைவில் வெளிவரவுள்ள
தமிழ் மன்ற வெளியீடுகள்
தமிழ் மன்றம், 1987ம் ஆண்டு ஜனவரி மாதம்
31ம் திகதி வரை வெளியிட்டுள்ள முப்பது வெளியீடு
90

களையும் பற்றியே நான் அறிமுகம் செய்து வைத்தேன். விரைவில் வெளிவரக் கூடிய நிலையில் இன்னும் சில: புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவை களைப் பற்றியும் இவ்விடத்தில் சிறிது கூறவேண்டியது:
என் கடமையல்லவா
31. மலைக்குயில்: அல்அளிமத் கவிதைகளின் முதற் தொகுதி சுமார் நூறு பக்கங்களில் சிறந்த கவிதைகளை உள்ளடக்கிய நூல். விலை ரூபா 20/-
32.மகாகவி இக்பால்: கவியரசு கல்ஹின்னை எம்.எச். எம். ஹலீம்தீன் அழகிய வசன நடையில் எழுதிய நூல். டாக்டர் ஸர் முஹம்மத் இக்பால் அவர்களின் வாழ்க்கை வரலாறு; இலக்கிய சாதனைகள் பற்றிச் சுருக்கமாகக் கூறும் நூல் இது. விலை ரூபா : 10/-
33.வைகறைப் பூக்கள், நூலாசிரியை சுலைமா.ஏ.சமி தமிழ்மன்றம் வெளியிடவுள்ள மற்றுமொரு வளர்ந்துவரும் பெண் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுதி இது.
34-இலக்கிய விருந்து; தமிழ் மன்றத்தின் முப்பது வெளியீடுகள் பற்றிப் பரிசீலனை அடங்கிய நூல். பி.எம். புன்னியாமீன், பி.ஏ. எழுதியது விலை ரூபாய் 20/-
35-தீன் மாலை அறபுத்தமிழில் கசாவத்தை ஆலிம் அப்பா எனும் மார்க்க மேதை எழுதியதை தமிழில் விளக்க உரைகளுடன் தருகிருர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் அ.ஸ. அப்துஸ் ஸமத், பி.ஏ. (ஹானர்ஸ்)
38. வாழ்க்கைச் சுவடுகள்
நூலாசிரியை நயிமா சித்தீக் வாழ்க்கைப் பயனம்" நாவலேத்தந்த ஈழத்தின் முன்னேடிப் பெண் நாவலாசிரியை பின் முதலாவது சிறுகதைத் தொகுதி.

Page 48
அமைதியான எழுத்துப் பணியில் ஈடுபடுகின்ற வர்கள் அதிக நேரம் அமைதியாயிருந்து சிந்தித்துத் தம் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சூழல் அமைவது பெரிதும் அவசியம்.
இலங்கையின் மலைப் பிரதேசத்துத் தலை ககரான கண்டிக்கு அண்மையிலுள்ள உடதல வின்னை எனும் ஊர், எழத்தாளனுக்கே உகந்த
அமைதிகொண்டதோர் பிரதேசம். அங்கு பிறந்து வளர்ந்தவர்தான் இதுவரை, "இலக்கிய விருந்து" தங்த ஜனுப் பி. எம். புன்னியாமீன்; ஜனுப் பீர் முஹம்மத் தம்பதிகளுக்கு இவர்தான் ஒரே பிள்ளை. பட்டம் பெற்று பாடசாலை அதிபரா யிருக்கும் அவர், சமூகப் பணியில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறர். இதனுல தான
92
 

முதன் முதலில் தேவைகள்” எனும் மினிக், கதைகள் கொண்ட நூலை 1979ம் ஆண்டில் எழுதிய இவர், பின்பு நிழலின் அருமை என்ற பெயரில் சிறுகதைத் தொகுதியொன்றை 1986ல் படைத்து, பின்னர் 1987ல் 'அடிவானத்து ஒளிர்வுகள்” எனும் காவலை எழுதியதன் மூலம், தனது சமூக சேவை அனுபவங்களைப் பின்னணி யாக வைத்துத் தத்ரூபமான ஆக்கமொன்ற்ை தமிழ் வாசகர் மத்தியில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அத்துடன், தமிழ் இலக்கியப் பணியில் தன்னை முற்றக ஈடுபடுத்திக்கொண்ட ஒருவரின் வரலாற்றையும் சுவைபட இலக்கிய உலா"வில் எழுதியிருக்கிருர். இத்தனைக்கும்
இவர் எழுதத் தொடங்கி, இ ன் னும் பத்தாண்டுகள்கூட ஆகவில்லை. 1978ம் ஆண்டில் தான், முதன் முதலில் 'தினகரன்" வார மஞ்சரி யில் இவரின் உருவகக் கதையொன்று பிரசுர மானது. சில ஆண்டுகளுக்குள் இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் எழுபத்தைங்துக்கு மேற்பட்ட சிறுகதைகள், ஐம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகள், பற்பலபுதுக் கவிதைகளையெல்லாம் எழுதினர். இவரின் ஆக்கங்கள், தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளான கலைமகள்", தீபம்’ ஆகிய வற்றிலும் பிரசுரமாகியுள்ளன. 1980ல் வெளி யான 'ஈழத்துச் சிறுகதை மஞ்சரியில்" இவரின் சிறுகதை இடம்பெற்றுள்ளது, எனினும்
இத்தனைச் சாதனைகளையும் புரிந்துவிட்ட வருக்கு வயது இப்பொழுது இருபத்தாறுதான். 93

Page 49
தனதுபத்தொன்பதாவது வயதில் உடதலவின்ஆன வை. எம். எம். ஏ. யின் இலக்கியச் சஞ்சிகையான விடிவு'க்கு இவர் ஆசிரியராயிருந்தார். பின்னர், நீலங்கா இஸ்லாமிய காங்கிரஸ் மாதமிரு முறை வெளியிட்ட "அல்ஹிலால்" செய்திப்பத்திரிகை யின் ஆசிரியரானர். அத்துடன் பல்வேறு சமூக சேவை இயக்கங்களில் சேர்ந்து, சமூக முன் னேற்றம் கருதி இவர் இரவுபகலாக உழைத்து வருகிறர். கடுமையாக உழைப்பவருக்கு, வீட்டில் நிம்மதி வேண்டுமல்லவா? அதற்குத்தான்
சிறுகதை எழுதி, பரிசு பெறுவதற்குச் சென்ற சமயமொன்றில் மற்றுமொரு பரிசு பெற்றவருடன் கண்ணுேடு கண்நோக்கி", இருமணம் ஒன்ருய்க் கலந்து தன் *மனலி”யை, காட்டின் ெ தற்குக்கரையிலுள்ள காலி எனுமூரி லிருந்து, உடதலவின்ஆன மலை உச்சிக்கு அழைத்து வந்தார். அத்துடன் கின்றுவிடவில்லே தன் பெற்ருர் அகமகிழ மகவொன்றையும் பெற் றெடுத்துவிட்டார். என்ருலும்-ை
பல்வகைப் பணிகளுக்குமிடையில், தன் உயர் கல்வியையும் அவர் தொடர்ந்து வருகிருர், மிய விரைவில், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. முதுமாணி) பட்டம் பெற இருக்கிருர், அத்துடன் கின்றுவிடாமல் ஜனுப் புன்னியாமீன் பிஎச். டி. (கலாநிதி) பட்டம் பெறவும் முயலுதல் அவசியம் என வலியு றுத்துகிருேம். அதற்கான
94

வயது, வாய்ப்பு, தகுதி எல்லாம் அவருக்கிருக் கின்றன. அவரைப்பற்றி இன்னுென்று
அதுதான், அவர் பெயர். இந்தப் பெயருள்ள வேறெவரும் இலக்கிய வானில் மிளிர்வதை காம் அறியோம். ஆதலால், இந்தப் பெயர்பற்றிப் பலருக்கு மயக்கம் ஏற்படுவதுண்டு. "இது உங் கள் புனைப்பெயரா?” என்றும் சிலர் அவரை கேட் டுள்ளனர். இந்த அரிய பெயர், உண்மையான பெயர்தான்-புனைப்பெயரல்ல. திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தப் பெயர், கபி யாகூப் (அலை) அவர்களின் கடைசி மகனின்-கபி யூசுப் (அலை) அவர்களின் தம்பியின்-பெயர்.
-எஸ். ஐ. நாகூர் கணி
95

Page 50
குறிப்புகளை எழுதி வைப்போமா ?
எமது வரலாற்றைப் படிக்கின்ற போது பல வீர புருஷர்களைச் சந்திக்கின்ருேம். எமது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தம் உயிரையே தியாகம் செய்த பலரை நாம் காண்கின்ருேம். ஆனல் இவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் நாம் அறிய முடியாதிருக்கின்ருேம் என்பதனை மறுத்துரைக்கவியலாது. இவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் திருப்பங்களையும் முக்கிய சம்பவங்களை யுமே வரலாற்றேடுகள் கூறுவதுண்டு. இவர்கள் தியாகி களாகிய பின்னரே மக்களின் கவனத்தை ஈர்ப்பதுண்டு. இளமையிலிருந்து எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதனை அறிய முடியாது. பிற்காலச் சரிதைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தியாகிகளான தேசிய வீரர்களின் சிறப்பை அளவிடுகின்ருேம். இந்த அடிப்படை அறிவுடனேயே சிலை களும் நிறுவப்படுகின்றன. சங்கிலி மன்னன், பண்டார் வன்னியன், வீர புரான் அப்பு போன்றவர்களைப் பற்றி நாம் முழுமையாக அறிவோமா ? இவர்களின் வாழ்க்கை விவரங்களை அறிய ஆராய்ச்சி நடத்தவும் நேர்வதுண்டு.
எமது காலத்தில் எம்மோடே பலர் வாழ்கின்றர்கள், பல சாதனைகளை புரிகின்ருர்கள். வியப்படைகின்ருேம். பாராட்டி மகிழ்கின்ருேம். இவர்களைப் பற்றிய குறிப்புகளை ஒரு சிலரேனும் உடனுக்குடன் எழுதி வைத்தால் பயன் தருவதாயிருக்குமல்லவா : பிற் காலத்தி ல் ஆராய்ந்து அறியட்டும் என்று நினைத்து, நாம் பேசாதிருப்பது நன்றல்ல.
தினகரன் - வாரமஞ்சரி
8-3-1987


Page 51
இலக்கிய
:ஜ்
స్టోవ్లో
ಸಿದ್ಲಿது கொண் ஒரு தனி மனிதன், அந்த அன் ఆ6గీత త్రోస్లో LTష్ట్రr-Q hp வையகம்' எனும் பழம் , தமிழறிந்தோரின் நன்மை ஈடுபட்டுள்ளார். தனுல்
శొకైన్స్త్య எத் திருப்தி ஒன்றுதான்.
நற்பணி செய்துள்ஃ
திலும் භී– 1- 4) ஒரு மேற்பட்ட நூல்களைப் பிர8
வியப்புக்குரியதாகத் புககான் செயலின் வரல
"இலக்கிய விருந்து'க்கு இே மற்றுமோர் சிறந்த i GTI), ', எனும் பெயரில், இரண்டும் Liğ வேண்டியவைகள்
Σ
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܥܝ ܢ
క్షేప స్ట్రో కిష్కి
* స్ట్కో*్కహాల్
இ% ஆ
ட தணியாத காதலினுல், எனக்கு இலக்கியி விருந்து இன்பம், பெறுக இவ் கூற்றுப்படி உலகளாவிய கருதியே இந்தப் பணியி
蕊
ಇಂಗ್"ff"# * நினைத்துப் பூரிப்படையு ல் சுவைதரும் செய்தியாய் முன்னிலையில் வைக்க
வும் பாரியபணி, நூல் து நிலவும் இக்காலத்
மனிதன் முப்பதுக்கு" ஈரித்துள்ளார் என்பது
இருக்கும். அந்த வியப்
தான் இந்நூல்.
ண நூலாக வந்துள்ளது. பு - "இலக்கிய உலா" திரப்படுத்தி வைக்கப்பட
శ్లో